கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து

Page 1

├- - - -
| |-|-|-––––––)

Page 2

ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
செழியன்
கனேடியன் நியூபுக் பப்பிளிகேசன் ரொறொன்ரோ

Page 3
Oru Manithanin Niatkuripilirindhu
Author : Chezhiyan
Publisher : Canadian New Book Publisher
Toronto, Canada.
1st Edition : June 1998
Cover Photo : Gugan

ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
சமர்ப்பணம்
எனக்குப்போராடக்கற்றுத்தந்த; பேராடமட்டுமின்றி
மனிதனாக வாழவும்
கற்றுத்தந்த என்தந்தைக்கு
இந்த நூலை
சமர்ப்பிக்கின்றேன்.
போராட மட்டுமல்ல மனிதனாக வாழவும் கற்றுக்கொண்டேன். சோகமும், துயரமும் நிறைந்த ஒரு நிழல் எங்கள் நிலங்களில் எழுதப்பட்டுக்கிடக்கின்றது.
காற்றுத் தயங்கி தயங்கி வீசுகின்ற திென்றல் மனிதர்களய்ை பற்றி இனி என்ன சொல்வது ? நீண்ட ஒரு மெளனம் நிலங்களின் மேலாக பரவிக் கிடக்கின்றது. இந்த நிலங்களினதும், மெளனங்களினதும் மறைவில் எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்வில் நிகழ்ந்ததைத் தான் "ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து "சொல்லப்போகின்றன.
இவன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம். உயிருக்கு ஆபத்தான நிலைமை இவனைத்தேடி தெருத்தெருவாக அவர்கள்’ அலைகின்றனர். தலைமறைவான ஒரு வாழ்க்கை. இந்நிலையிலும் இவன் தினமும் எங்கள் மண்ணில் தனக்கு நிகழ்ந்தவற்ைைற அன்றாடக் குறிப்புகளாய் எழுதி வெளிநாடு ஒன்றுக்கு இரகசியமாக கடத்துகிறான். இவ்வாறு எழுதி கடத்தப்பட்ட குறிப்புகளிலிருந்தே இந்த தொடர் எழுதப்படுகின்றது.
முன்னர் தாயகம்" (கனடா) இதழில் வெளிவந்தது.
ஒரு உண்மைக் கதையை தொடராக வெளியிட்ட ஆசிரியர் ஜோர்ச் குருசேவுக்கு என் இனிய நன்றிகள்.

Page 4
செழியன்
தோள்களில் சுமந்து திரிகின்றபோது அந்த முரட்டு இதயத்தில் கனிந்து கிடக்கின்ற பாசத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. தெருவில் கை கோர்ந்து அழைத்துச் செல்கையில் அந்த உள்ளத்தில் வழிகின்ற ஆனந்தத்தை எம்மால் உணர முடிவதில்லை.
குழந்தைகளுக்கு பலசமயங்களில் அப்பாக்கள்முரடர்களாகத் தான் தெரிகின்றார்கள்.
விரல்கள்பிரிக்கக்கூடத் தெரியாமல் கண்கள்மூடி, இதழ்களில் மட்டும் மெல்லத் தவழும் நமது வீட்டுத் தொட்டிலில் தூங்குவதைப் பார்க்கும் போது; ஆம் நாமும் அப்பாக்கள் ஆகின்றபோதுதான்நமது முரட்டு அப்பாவின் பாசத்தை நினைத்துக் கண்ணீர் துளிர்கின்றது. நமது குழந்தையைத் தோளில் சுமக்கின்ற போதுதான் எனது தந்தையின் ஏக்கங்களையும் துடிப்புகளையும் நினைத்துக் கண்ணிர் வழிகின்றது.
எனக்கும் ஒரு அன்பான அப்பா இப்போது இல்லை. அகரம் சொன்னது மட்டுமல்ல, மனிதனாக வாழவும் கற்றுத்தந்தார்.
'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாரதி பாடலை விதைத்தார்.
தோட்டத் துரைமார்களுக்கும், நிர்வாகத்திற்கும் எதிராகப் பேராடி எனக்கு அடக்கு முறைகளுக்கு எதிராகப் பேராடக்கற்றுத் தந்தார். "என்ன பயம்? சாகிறது ஒருதரம்தான்’ என்று அந்த மனிதன் எனக்குக் கூறிய வார்த்தைகள் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
என் தந்தையிடம் இருந்து போராடக் கற்றுக்கொண்டேன். பேராடமட்டுமல்ல அந்த மனிதனிடம் இருந்து மனிதனாக வாழவும் கற்றுக்கொண்டேன் அந்த தந்தைக்கு இந்த நாவல் சமர்ப்பணம்.
செழியன்
23-06-1998.

13 Lorriras 1986
எத்தனையோ நாட்கள் வருகின்றன போகின்றன. சில நாட்கள் மட்டும் எமது வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. மறக்க முடியாத நாட்களில் எனக்கு இந்த மார்கழி 13 முக்கியமான நாள்.
அன்று எனக்குப் பெரிதாக வேலை ஒன்றும் இருக்கவில்லை. மாலை முடிந்து இரவின் ஆரம்பம் இருட்டுப் படர ஆரம்பித்து விட்டது. எனது நண்பன்ஜெகனைசந்திப்பதற்காக நானும் பாலாவும் பழைய மோட்டார் சைக்கிளில் ஏறிப் புறப்பட்டோம். மோட்டார் சைக்கிளில் "லைட் இல்லை. எனவே ஒரு 'டோச் லைட்டை எடுத்துக் கொண்டோம். 'டோச் லைட்'டுக்கோ "பற்றரி இல்லை. "பற்றரியை கடையில் வாங்கிக் கொண்டு அப்படியே போவோம்” பாலா கூறினான் "கடையில் வாங்க காசு இல்லையே?’ நான் கூறிய போது அந்த நிலமையிலும் எமக்குச் சிரிப்புத்தான் வந்தது.
"கடனுக்கு வாங்கலாம்' பாலா கூறிய போது நம்பிக்கையுடன் நானும் புறப்பட்டுச்சென்றேன்.
இருட்டு வழி, வெளிச்சம் இல்லை. ஒழுங்கையூடாக மெதுவாக ஊர்ந்து சென்றது எமது மோட்டார்சைக்கிள். கண்ணுக்குள்

Page 5
செழியன் 2
விளக் கெண்ணெய் போட்டுக் கொண்டதைப் போல மிக அவதான மாகக்கூர்ந்து பாதையைப் பார்த்துக் கொண்டே சென்றோம். மெயின் ரோட்டில் ஏறியதும் அந்த பலசரக்குக் கடையில் 'டாச் லைட்” பற்றரிகளைக் கடனாகப் பெற்றுக் கொண்டோம். "நாளைக்குப் பணம் தருகிறோம்’ கடைக்காரருக்குக் கூறினோம். ஆனால் அந்தப் பணத்தை நாம் கொடுக்கப் போவதில்லை என்று எமக்குத் தெரியாது. கடைக்காரனுக்கும் எம்மிடம் அந்தப் பணத்தைக் கேட்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அப்போது தெரியாது.
எமது நண்பர் ஜெகன் வீட்டுக்கு நாம் சென்ற போது உற்சாகமாக வரவேற்றார். 'நல்ல கவிதை ஒன்று' எழுதினேன் என்றார் படித்தார் கேட்டோம். நண்பரின் மனைவி பக்கத்துக் ஆடையில் கடனுக்கு சீனி வாங்கித் தேனிர் தயாரித்துத் தந்தார். கவிதையோடு தேனீரையும் சுவைத்தோம்.
ஒரு மணிநேரத்தின் பின் நண்பரிடம் விடைபெற்று, நானும் பாலாவும் புறப்பட்டோம். "வழியெங்கும் ஒரே குன்றும்,குழியும் "லைட் வேறு இல்லை பார்த்துப் போங்கள்’ நண்பர் கூறினார். "வரும் போதும் இந்த டாச் லைட் வெளிச்சத்தில் தான் வந்தோம். போகும் போதும் சமாளித்துப் போய் விடுவோம்’ கூறி விட்டுப் புறப்பட்டோம். ஊர்ந்து சென்றது எமது வாகனம். "அதிகாலையில் யாழ் நகர் மீது பணி படிகின்றது, பனை மரம் உயரமும் பண்ணை வெளியும் கண் தொடுமிடமெல்லாம் மறை கிறது" இரவு நேரத்து பயணங்களின் போது பாடல்களும் சில வேலைகளில் எமக்குத் துணையாக வருகின்றன. கவிஞர் சேரனின் பாடலை பாடியபடி சென்று கொண்டிருந்தோம். எமக்குப் பெரியதோர் அதிர்ச்சியான செய்தி காத்திருப்பதை யார் அறிந்தார்கள்? இதனை முன் கூட்டியே அறியும் சக்திதான் மனிதனுக்கு இல்லையே.
இரவு நேரம் எட்டு மணி இருக்குமென நினைக்கிறேன். நானும் பாலாவும் எமது கிராமத்தை அடைந்ததும் நண்பன்பரதனை தேடிக்கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றோம்.
எங்களைக் கண்டதுதான்தாமதம் பதட்டத்துடன் எழுந்தோடி வந்தான். அதிர்ச்சியான செய்தியை அவன் எமக்கு கூறி முடித்த போது

3 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
அவனது பதட்டம் அதிகரித்ததேயன்றிக் குறையவே யில்லை. பரதனுக்கு அச்செய்தியைக் கொண்டு வந்ததாக. இயக்கத்தைச் சேர்ந்த நண்பரை அறிமுகம் செய்து வைத்தான். அந்த நண்பர்கையில் ஒரு 'கிரனைட்டுடன் இருந்தார். முகம் எல்லாம் சோர்ந்து பீதி படர்ந்திருந்தது. ஈழத்தில் இருந்த இயக்கங்களை ஒவ்வொன்றாக தடை செய்த அந்த இயக்கத்தவர்கள் சாவகச்சேரிப்பகுதியில் தமது இயக்கத்தின் எல்லாமுகாம்களையும் முற்றுகையிட்டிருப்பதாகவும் இரு பகுதியினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அந்நண்பர்கூறினார்.
சாவகச்சேரியில் ஆரம்பமான அவர்களின் முற்றுகை ஏனைய இடங்களுக்குப் பரவு முன்பே தமது முகாமில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் முகாமை விட்டு வெளியேறி உயிர் பாதுகாப்புத் தேடி வேறு இடங்களுக்குச் சென்று விட்டதாயும், இக்கிராமத்தில் தனக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்ததாய்க் கூறினார்.
உண்மையில் அவர் நினைத்ததைப் போல் இக்கிராமம் பாதுகாப்பானதல்ல. என்னையும் மற்றும் அக்கிராமத்தில் உள்ள சில நண்பர்களையும் தேடி அவர்கள் இனி எந்த நிமிடமும் இங்கு வரக்கூடும். அக்கிராமத்தில் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எமக்கு இனி ஆபத்துதான். போட்டியாக இருந்த கடைசி இயக்கமும் அவர் களால் தடை செய்யப்படுகிறது என்றால் இனிமனித உரிமைகளுக் காக குரல் கொடுத்தவர்கள், தொழிற்சங்கப்பிரமுகர்கள், கவிஞர்கள் எனபலதரப்பட்டவர்கள்மீதும் அவர்கள் கவனம் திரும்பும் எனவும் நான் எதிர்பார்த்தேன்.
அடுத்து என்ன செய்வது என ஆலோசிக்கு முன் பரதனின் பக்கத்து வீட்டில் இருந்த தொழிற் சங்க வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கந்தசாமிக்கு ஒரு அழைப்புக் குரல் கொடுத்தோம். இரண்டு வீடுகளையும் பிரித்த வேலிகளுக்கிடையே இருந்த இடை வெளிக் கூடாக போர்வையால் தன்னை போர்த்தபடி கந்தசாமி வந்தார். அவரிடம் செய்தியைக் கூற அவரும் அதிர்ச்சியடைந்தார்.

Page 6
செழியன் 4.
எமது அதிர்ச்சியையும் ஆராச்சியையும் ஒரு புறம் வைத்து விட்டு சில நிமிடம் தீவிர ஆலோசனை செய்தோம். எம்மைத் தேடி 'அவர்கள்’ எப்போதும் வந்து விடுவார்கள் என்பதால் நாம் ஐந்து பேரும் உடன் எமது வீடுகளை விட்டு வெளியேறி எமது கிராமத்தில் ஒரு இடத்தில் இரவு விழித்திருப்பது என்றும் அத்துடன் இச்செய்தியை உடன் வேறு சில நண்பர்களுக்கு அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்வதெனவும் முடிவு செய்தோம்.
யார் மூலமாக செய்தியை அனுப்பி வைப்பது என்ற சர்ச்சை வந்த போது பெண்கள் மூலமாயும், சிறுவர்களுக்கு ஊடாயுமே செய் தியை அனுப்பி வைப்பது புத்திசாலித்தனமாய் இருக்கும் என அச் சூழ்நிலையை ஒட்டித்தீர்மானித்தோம். செய்தியைக் கொண்டு செல் பவர்களும் ஆபத்தில் சிக்க நேரிடும் என்பது கவனத்திற்கு எடுக்கப் பட்டது. ஆனால் எப்படி இருப்பினும் செய்தியை உரியவர்களுக்கு அனுப்பி வைப்பது மிக மிக அவசியம் என்பதால் ஆபத்தினைக் கடந்து செய்தியை தெரிவிக்க ஒழுங்கு செய்தோம். மருத்துவ மனைக்கு ஒரு பெண்ணை அனுமதிக்கக் கொண்டு செல்வது போல எனதும் கந்தசாமி, பரதன் ஆகியோரது மனைவிமாருடன் கார்ட்ரைவ ராக எமது கிராமத்து பெரியவர் மகாலிங்கண்ணரும் புறப்பட்டுச் சென்றனர். இன்னோர்பகுதிக்குசெய்தி தெரிவிக்ககிராமத்துச்சிறுவர் கள் மூவர் உறவினர் வீட்டுக்குச் செல்வது போல புறப்பட்டுச் சென்றனர்.
இவர்கள் எல்லோரும் சென்ற பின் நாம் ஐவரும் அக்கிரா மத்தின் ஒரு வீட்டின் பின்பக்கத்தில் விழித்தபடி அமர்ந்திருந்தோம். சில விடயங்களைப் பற்றி மெதுவாக உரையாடிக் கொண்டபோதும் ஆழ்ந்த அமைதி அடிக்கடி நிலவியது.
நேரம் செல்லச்செல்ல நித்திரை வந்து எட்டி, எட்டிப்பார்த்துச் சென்றது. அது பின்னிரவுக் காலம். நிலவு வானத்தில் எழும்பத் தொடங்கியது. வெகு நேரமாய் ஒன்றுமே நிகழவில்லை. செய்தி கொண்டு சென்றவர்களும் இன்னமும் திரும்பி வந்து சேரவில்லை. அடிக்கடி சந்தேகங்கள் கூட முளைத்தன. இத்தகைய சஞ்சலங்களுக் கிடையில் நாம் ஊசலாடிக் கொண்டிருந்தோம்.

5 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
சிறிது நேரத்தில் எமது செய்தியைக் கொண்டு சென்ற கிராமத்துக் கார் மெல்ல ஊர்ந்து வந்து சேர்ந்தது. அவர்களிடம் செய்திகளை அறிந்து வரபரதன் சென்றான்.
காரில் சென்றவர்களை 'அவர்கள் துப்பாக்கியுடன் வழி மறித்து 'இந்நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்' என விசாரனை செய்தனராம். சுகவீனம் போல் படுத்திருந்த பெண்ணைக் காட்டி 'இவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்கிறோம்' எனக் கூறியதால் தொடர்ந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டதாம். தாம் சென்ற பிரதான வீதியில் அங்கும் இங்கும் என 'அவர்கள் வாகனங்களில் அவசரமாகத் திரிவதைக் கண்டதாயும் சில இடங்களில்துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்கள் கேட்டதாயும் கூறினர்.
இவர்கள் நாம் அனுப்பி வைத்த செய்தியை உரிய இடத்தில் தெரியப்படுத்தி விட்டே வந்திருந்தனர். இவர்கள் செய்தியைத் தெரிவிக்கும் வரை நமது நண்பர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. எமது செய்தி அவர்களை உசாரடையச் செய்துள்ளது.
சைக்கிளில் செய்தி கொண்டு சென்றவர்கள் செய்தியைத் தெரிவிக்க முடியாமல் தோல்வியுடன் வந்து சேர்ந்தனர். இவர்கள் சென்ற இடங்களில் ஏற்கனவே அவர்கள்" துப்பாகிகளுடன் சுற்றி வளைத்துவிட்டனராம். உள்ளே என்ன நடக்கிறது? என்பதைக் கூட அவதானிக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து அப்பகுதியில் நடம்ாடுவது தங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இவர்கள் பின்வாங்கி வந்து விட்டனர்.
நேரம் நள்ளிரவை நெருங்கியது நிலவு நன்கு எழுந்து நிலவொளி விரிந்து படர்ந்தது. நாம் ஐவரும் விழித்தே இருந்தோம். வீடுகளில் நமது மனைவிமாரும் உறவுகளும் விழித்துக் கொண்டு தான் இருப்பார்கள். 'அவர்கள் எம்மைத் தேடிக் கொண்டு வருவார்கள் என எமக்கு நிச்சயமாகத் தெரிந்தது. எப்போது? என்பது தான் எமக்குத் தெரியவில்லை இத்தகைய மனநிலையில் ஆபத்தினை எதிர்பார்த்து காத்திருப்பது எமக்குப் புதிய அனுபவம். மனதில் அச்சமுடன் ஆவலும் படபடப்பும் நிறைந்து போய்க்கிடந்தது.

Page 7
14 lonia) 1986
இரவு மணி பன்னிரெண்டைத் தாண்டி விட்டது. மழை ஒரு பாட்டம் பெய்து ஒய்ந்தது. தூக்கக் கலக்கம். சோர்ந்து போயிருந்த நாம் தூரமாக ஒரு வாகனம் வந்து நிறுத்தப்பட்ட ஓசையைக் கேட்டு உசாரடைதோம்.
நாம் எதிர்பார்த்தபடி அவர்கள் நம்மைத் தேடி வந்திருந்தால் அவர்களின் கையில் சிக்காமல் ஓடுவதற்கு தயாராகினோம். "அவர்கள்’ எங்களைத் தேடி கிராமத்தைச் சுற்றி வளைக்கக் கூடும் என்பதால் உடன் ஒடுவதற்கு நான் தயாரானேன். ஆனால் சில நிமிடங்கள் கரைந்து போயின. நாம் எதிர்பார்த்தபடி 'அவர்களின்" ஆரவாரச் சத்தங்கள், சந்தடிகள் எதுவும் எழவில்லை. அவர்கள்" வந்ததும் எமது வீடுகளைச் சுற்றி வளைத்து "வெளியில் வாங் கோடா” என்று முரட்டுக் குரலில் சத்தமிடுவார்கள். சில வேளைக ளில் துப்பாக்கியாலும் வெடிச்சத்தம் இடுவார்கள் என்றெல்லாம் மனம் எதிர்பார்த்திருந்தது. ஆனால், ஒரே அமைதியாய் இருந்தது. இந்த அமைதி வந்தவர்கள் யார்? என்ற சந்தேகத்தை எமக்கு எழுப்பியது. எமது கிராமத்தில் பாதுகாப்புத் தேடி எமது நண்பர்கள் யாரேனும் தான் வந்திருக்கிறார்களோ? என்ற ஐயமும் ஏற்பட்டது.

7 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
யார் வந்திருக்கிறார்கள் என்று அவதானித்து வருமாறு பாலாவை அனுப்பினோம். பாலாவும் மிக எச்சரிக்கையாக காலடிச் சத்தம் கேட்காதவாறு மெல்ல மெல்லச் சென்றான். பாலா சென்ற சிறிது நேரத்தில் "தட'தட” என கடும் காலடிச்சத்தங்களும் "பிடி' "பிடி’ என்ற கூக்குரல்களும் சிலர்தூரத்தில் செல்கின்ற சத்தங்களும் கேட்டன. இதயம் ஒரு கணம் அதிர்ந்தது.
அவர்கள் வந்து விட்டனர் என்று எமக்குப்புரிந்து விட்டது. எதிர்பார்த்திருந்த ஆபத்து வந்தே விட்டது. நாம் நால்வரும் ஒடத் தொடங்கினோம்.
அவர்கள்’ வந்தால் எங்கு போவது? ஏற்கனவே எம்மிடம் ஒரு திட்டமும் இருக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமே கிரா மத்தை விட்டு இந்த இரவு நேரத்தில் வெளியே நடந்தோ, ஒடியோ, சைக்கிளிலோ சென்றால் 'அவர்கள் கையில் அகப்பட நேரிடும் என் பதே. நோக்கம் எதுவுமின்றி ஒடினோம். ஒடும் போதே நாம் சிதறி GSLGLITE).
நான் பக்கத்து வளவுக்குள் ஒடினேன். அங்கு கிளுவை வேலிக்கு இடையில் ஏறி விழுந்து ஓடினேன். நான் ஓடும் போது நான் அணிந்திருந்த வெள்ளை சேட் பளீரென்று தெரிந்து கொண்டி ருந்தது. அப்போதுதான் வெள்ளைச் சேட்டின் அபாயம் உறைத்தது. இரவு நேரத்தில் இந்த வெள்ளைச்சேட் என்னைக்காட்டிக்கொடுத்து விடும். இரவில் பாதுகாப்பாகச் செல்ல கறுப்பு நிறமே பொருத்த மானது என்பது ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் இந்த நிமிடம் வரை இதைப் பற்றிச் சிந்திக்காமல் அசட்டையாக இருந்து விட்டேன். ஒடிக்கொண்டே 'சேட்டைக் கழற்றினேன். கழற்றிய சேட்டை வழியில் எறிந்தால் நாம் ஒடம் வழியை அவர்கள் பன் தொடரலாம் என்பதால் ஒரு குடிசையின் கூரைக்குள் செருகி விடுவ தற்காக ஒரு கணம் நின்றேன். கூரைக்குள் சேட்டை செருகி விட்டு நிலைமையை அவதானித்தேன்.
'அவர்களின் ஆரவாரச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. எம்மைப்பின்தொடர்ந்துதுரத்தி வருவது போலவும் இருந்தது. அந்த

Page 8
செழியன் 8
ஆரவாரங்களில் மக்கள் விழித்துக் கொண்டார்ளோ இல்ல்ையோ கிராமத்து நாய்கள் எல்லாம் விழித்துக் கொண்டு கூட்டாகவும் தனியாகவும் குரைக்கத் தொடங்கின.
இந்நிலைமையில் எங்கே போவது என்ற தெரியாமல் தொடர்ந்து ஓடுவதைவிட ஏதாவது ஒரு வீட்டுக்குள் புகுந்து அந்தக் குடும்பத்தில் ஒருவனாகப் படுத்து விடுவது புத்திசாலித்தனமாக எனக்குப் பட்டது. எனது யோசனையையிட்டு நானே என்னைப் பாராட்டிக்கொண்டு நான் நின்று கொண்டிருந்த முற்றத்திற்குரிய குடிசை வீட்டை நெருங்கினேன். சந்தடிச் சத்தங்களால் குடிசையின் படலையைத் திறந்து போர்வையால் போர்த்தியபடி தூக்கக் கலக்கத்துடன் ஒரு பெண்மணி முற்றத்தில் இறங்கினார். ஒரு நம்பிக்கையோடு 'அக்கா 'அவர்கள்’ என்னைத் துரத்துகிறார்கள். தொடர்ந்து ஓடினால் பிடிபட்டு போய் விடுவேன் உங்கள் வீட்டில் கொஞ்ச நேரம் படுத்து நித்திரை போல் இருக்கிறேன். பிறகு "அவர்கள் போனபின்... ". நான் முடிக்கவில்லை. மிரட்சியுற்ற அந்தப் பெண்முடியாது என்று தலையை மட்டும் அங்குமிங்கும் பல தடவைகள் ஆட்டினார். அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பேசுவதற்கோ விவாதிப்பதற்கோ அனுதாபத்தைத் திரட்டவோ உரிய நேரம் அதுவல்லவே. நான்தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எனக்க நானே ஆபத்தை தேடிக்கொண்டவனாவேன். பெண்மணிமுடியாது என்று தலையாட்டியதுமே நான் மறுபடி பாய்ந்து ஒடத் தொடங்கினேன். வேலிகளையும் கிணறுகளையும் தாண்டி நான் ஒடினேன். ஒடும் போது சற்றுதூரம் முன்பாக பரதனும் எமக்கு செய்தி கொண்டு வந்த நண்பரும் ஒடிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
நன்கு பருத்து சடைத்தும் உயரமாக வளர்ந்திருந்த வேலி ஒன்றுக்குள் புகுந்து செல்ல முடியாமலும் ஏறியும் செல்ல முடியாமல் பரதனும் புதிய நண்பரும் தடுமாறிக் கொண்டிருந்த போது அவர்கள் இருவரையும் நான் அண்மித்தேன்.ஒரு வேலிக் கதியாலை இழுத்து முறிப்பதற்கு பரதன் பிரயத்தனப்பட்டான். 'பரதா இதில் நின்று நேரத்தை வீணாக்காதே. இந்தப் பக்கமாவா’ என்று கூறி அவர்களை இன்னோர் பக்கமாக இழுத்துக் கொண்டு ஓடினேன். நாம் ஒடிய

9 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பாதை நெடுகலுமாய் நாய்கள் குரைத்துச்சத்தமிட்டன. ஒடியபடிநாம் அந்தக் கிராமத்தின் எல்லைவரை வந்து சேர்ந்தோம். அங்கு வந்ததும் ஓட்டத்தை நிறுத்தி நிதானித்து நின்றோம். எங்களைத் தொடர்ந்து 'அவர்கள் ஒடி வருவதாகத் தெரியவில்லை. கிராமத்தின் மத்திய பகுதியிலேயே அவர்கள் நடமாட்டம் இருப்பது போல் தெரிந்தது. நாம் ஓடிவந்த பகுதிகளிலும் நின்ற கொண்டிருந்த ப்குதிகளிலும் நாய் கள் குரைத்துச்சத்தமிட்டுக்கொண்டிருந்தன.
'கந்தசாமி எங்கே’’ எனக் கேட்டேன். அவர் இன்னோர் திசையில் ஓடியதைக் கண்டதாக பரதன் கூறினான். பாலாவுக்க என்ன நடந்தது என்று எமக்குச் சரியாகத் தெரியவில்லை. பாலா அவர் களிடம் பிடிபட்டு விட்டானா? அல்லது 'அவர்களின் கையில் அகப்படாமல் தப்பியோடிவிட்டானா? என்பதை எப்படியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என என்மனம் துடித்தது. ஆனால் அந்த இடத்தை விட்டகன்று பாதுகாப்பான ஏதாவது இடத்திற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் பாலாவின் நிலைமையை தெரிந்து கொள்ள எமக்கு அவகாசம் இருக்கவில்லை.
"இனித் தொடர்ந்து ஒட வேண்டாம். நாம் ஒடிப் போனால் கிராமத்து நாய்கள் சத்தம் கேட்டு குரைக்கத் தொடங்கி விடும் இத னால் நமது நடமாட்டத்தை 'அவர்கள் தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து வந்து விடுவார்கள்’ நான் கூறினேன். பரதனும் அதை ஆமோதித்தான். “கிராமங்கள் எல்லாம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. சத்தம் எழுப்பாமல் பதுங்கிப் பதுங்கி நடப்போம்’ என்றான்.
நாம் மெதுவாக பேசிக் கொண்டிருந்த போது எமது கிராமத்தில் அவர்களின் வருகையால் ஏற்பட்ட பதட்ட சத்தங்க ளால் பக்கமாக இருந்த வீடுகளில் இருந்து எமது கிராமத்துத்தலைகள் சில வெளியே வந்தன.
"என்னஆரவாரமாய்க்கிடக்கு. ஆமிக்காரன் ஏதும் திடீரென்று வந்துவிட்டானா?” என்ற விசாரிப்பு.
அவர்கள் வந்து விட்ட செய்தியை சுருக்கமாகக் கூறினோம். பாலா அவர்களிடம் பிடிபட்டிருக்கலாம் என்ற எமது சந்தேகத்தை

Page 9
செழியன் 10
யும் தெரிவித்து அவ்வாறு நடந்திருந்தால் 'அவர்களிடம் இருந்து பாலாவை விடுவிக்க முயற்சி ஏதாவது செய்யும்படி கேட்டுக்கொண் டோம். நான் 'சேட் இல்லாமல் வெறும் மேலுடன் நின்றபடியால் கிராமத்தவரிடம் இருந்து ஒரு கடும் கலர் சேட் வாங்கிக் கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறினோம்.
நிலவொளி நன்கு படர்ந்திருந்தது. பால் நிலவு என்று சொல்லார்களே? இது அந்த நிலாவாகத் தான் இருக்க வேண்டும். கால்களில் முட்களும் கற்களும் இடறிக் குத்திய கரடுமுரடான பாதையில் சென்றோம். பின்னர் பாதையை விட்டு விலகி முள்ளுப் பற்றைகளின் மறைவில் பதுங்கிப் பதுங்கிச் சென்றோம். வெகு தூரத்தில் இருந்தே யாரும் பார்த்தால் கூட நிலவொளியில் யாரோ பதுங்கிச் செல்வதைக் கண்டுவிடக் கூடிய அபாயம் இருந்தது. நிலாவைப் பார்த்துக்கூடமனிதர்கள் எரிச்சலடைகின்ற நேரங்கள் இருக்கின்றன. நிலைவை மனதுக்குள் கடுமையாக வசைபாடினேன்.
குளிர் வீசியது. ஏற்கனவே பெய்த மழையில் இலைகளில் படர்ந்திருந்த மழைநீர் உதிர்ந்து விழுந்து அசெளகரியத்தை ஏற்படுத்தியது. நேரம் அதிகாலை இரண்டு மணியைக் கடந்திருக்கும். பனை வடலிக்குள் முட்புதர்களும் செடிகொடிகளும் நிறைந்த ஒரு மறைவில் நானும் பரதனும் புதிய நண்பரும் பதுக்கிக் கொண்டு குந்தியிருந்தோம். நிலம் சமதளமாய் இருக்கவில்லை. குந்தி இருப்பது கூட சிரமமாய் இருந்தது. ஒருகால் உயரமான இடத்திலும் மறுகால்தாழ்வான இடமுமாய் இருந்தது. மழை காரணமாய் நிலமும் ஈரமாய்க்கிடந்தது.
அக்கம்பக்கங்களில் இருந்து பூச்சி, பூரான், தவளை என்று பல உயிரினங்களும் அடிக்கடி குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. சற்று வித்தியாசமான ஒலி விட்டு விட்டு எழும்பியது. பாம்பு சத்தம் போடுகிறது என்ற புதிய நண்பர் தன் பங்குக்கு மிரட்டினார். பாம்பு சத்தம் போடுகிறது, கொட்டாவி விடுகிறது என்று இதுவரைக்கும் பலர் பல சந்தர்ப்பங்களில் கூறி இருக்கின்றனர். அப்போதெல்லாம் ஏற்படாத அச்சம் இப்போ ஏற்பட்டது. ஏற்கனவே எங்களை அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கண்களில்

11 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
மண்ணைத் தூவி விட்டு இந்தப் பற்றைகளுக்கிடையில் பதுங்கி இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் பாம்பு கடித்தால் மருத்துவ உதவிக்கு எங்கு எப்படிப் போவது? மரணிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைத்தேன்.
குந்தி இருந்து கால்கள் உளைந்தன. கால்களை மாற்றி மாற்றிக் குந்தியிருந்தோம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந் தது. பயத்தினால்தான் இப்படியான உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது. இருந்த இடத்தில் குந்தியிருந்தபடியே சிறுநீர் கழித்தேன். எனது நிலையில்தான் மற்ற இரண்டு பேரும் இருந்திருக்கின்றனர். மூவரும் கழித்த சிறுநீரால் அங்குதுர்நாற்றம் எழுந்தது. நாம் இருந்த இடத்தை விட்டு மட்டும் நகரமுனையவில்லை.
இந்த பனம் காடு எமது வசிப்பிடத்திலிருந்து ஒரு மைல் தொலைவாக இருக்கலாம். இந்த இடமும் பாதுகாப்பானதல்ல என்பது எமக்குத் தெரியும். w
எமது கிராமத்தின் மக்கள் இரண்டு சமூகங்களாக் சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டு பிளவுண்டு இருந்தனர். அண்மைக்காலமாக போராட்டங்கள் கூட நடைபெற்று உயர்சாதியினர் என கருதப்படு பவர்களின் நிலங்களில் நம்மவர்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்று வேலைநிறுத்தத்தில் குதித்தனர். சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக வேலை நிறுத்தம் அமுலில் இருந்து வந்தது. இரு பகுதியின ருக்குமான முரண்பாடுகள் சாம்பல் பூத்த நெருப்பாக இருந் தது.இந்நிலையில் உயர் சாதியினர் எனக் கருதப்பட்டவர்கள் தமது ஆதரவை அவர்களுக்கு வழங்கத் தொடங்கியிருந்தனர்.
இப்போ நாம் பதுங்கி இருந்த பனங்காடும் அதனைத் தொடர்ந்து நீண்டு செல்கின்ற தோட்டங்களும் பயிர்களும் உயர் சாதியினர் எனக் கருதப்படுபவர்களுக்கே சொந்தமானது. இரவு நேரத்தில் தமது பயிர்களுக்கு காவலுக்கும் தண்ணீர் இறைப்பதற்கும் நிலச் சொந்தக்காரர்கள் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன.இத்தகைய நேரத்தில் நிலவொளியில் எமது நடமாட்டத்தைக் காண நேர்ந்தால் திருடர்கள் என்றோ, அல்லது

Page 10
செழியன 12
'அவர்களால் தேடப்படுபவர்கள் என்றோ எம்மைக் கருதி பிடிப்பதற்குரிய சந்தர்ப்பம் இருந்தது. எவ்வாறு எம்மைப் பிடித் தாலும் எம்மைத் தேடிக்கொண்டிருக்கும் அவர்களின் கையில்தான் ஒப்படைப்பார்கள் என்பது நிச்சயம்.
இந்த இடத்தை விட்டு எங்கே போவது? இது எமக்கு விடை தெரியாத கேள்வி. ஆனால் போவதற்கு முன் எமது குடியிருப்புப் பகுதிக்குச்சென்று என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வது என முடிவு செய்தோம். குறிப்பாக பாலாவின் நிலையை அறிய விரும்பினோம்.
வெகுநேரமாய் பனங்காட்டுக்குள் பதுங்கியிருந்தோம். பல சிந்தனைகளும் எமக்குள் அலைமோதின. என்மனம் என் உயிருக்கும் ஆபத்து என்று தெரிந்தும் உதவ மறுத்த நமது கிராமத்துப் பெண் மணியைப் பற்றிச் சிந்தனை செய்தது. அந்தப் பெண்மணியை நினைக்க எனக்குக்கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டது.
உண்மையில் நான் இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் இல்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இந்தக் கிராமத்தில் ஒருவனாக கிராமத்து மக்களோடு வாழ்ந்து இருக்கிறேன். இக்கிரா மத்தின் ஜனநாயக ரீதியான போராட்டங்களோடு ஐக்கியப்பட்டும் நன்மைகளிலும் தீமைகளிலும் கலந்து கொண்டு வாழ்ந்து கொண்டி ருக்கையில் நமது கிராமத்துப் பெண்மணி ஒருத்தி உதவ மறுத்தது கசப்பாய் இருந்தது. அப்பெண்ணை நினைக்க வெறுப்பு ஏற்பட்டது.
சிந்தனையில் இருந்த என்னை பரதனின் கிசுகிசுப்பான குரல் அழைத்தது. "கிராத்திற்குப் போய் பார்ப்போம்" "சரி’ நானும் நமது புதிய நண்பரும் தலையசைத்தோம்.
கிராமத்தில் சில வேளைகளில் 'அவர்கள் இன்னமும் சுற்றி வளைத்துக் கொண்டோ, தேடுதல் செய்து கொண்டோ அல்லது பதுங்கிக் கொண்டோ இருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்கு இருந் தது. இதனால் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் புதிய வழி ஒன்றை தெரிந்தெடுத்தோம். இந்த வழியைப் பற்றி எமக்குக் கூறியது பரதன்தான்.

13 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
Jease வடலிகளுக்குள்ளாக பதுங்கியபடி ஒரு முனையை அடைந்தோம். பனை வடலிகளின் முடிவில் இருந்து தோட்டக்காணி ஆரம்பமாகியது. இந்த ஆரம்ப இடம் பயிர் செய்யப்படாத உழுத நில மாய் இருந்தது. அதனைவேகமாகக் கடந்தால் பசுமையான வாழைத் தோட்டம் ஆரம்பமாகும். வாழைத்தோட்டத்தினுள் புகுவதே எமது முதலாவது திட்டம். இந்த வாழைத் தோட்டம் எமது கிராமத்தை நோக்கி வெகு தூரம் செல்கிறது. மூன்று புறமும் சுற்றிப் பார்த்துக் கொண்டு வளரந்த புற்களை விலக்கிக் கொண்டு பனங்காட்டை விட்டு தோட்டக் காணிக்குள் பரதன் இறங்கினான். கண நேரத்தில் "தொபீர் என்ற சத்தத்துடன் ஒரு ஆழக்குழிக்குள் பரதன் விழுந்தது எமக்குத் தெரிந்தது. எனக்குத் "திடுக்’கென்று இருந்தது. குழிக்குள் விழுந்த பரதன் அதிர்ச்சியடைவதற்குப் பதிலாக விக்கி விக்கி சிரிப்பை அடக்கியும் அடக்காமலும் சிரிப்பது கேட்டது. இப்படித் தான் பரதன் சமய சந்தர்ப்பம் தெரியாமல் சிரிப்பது கோபப்படுவது என்று எல்லாம் செய்யக்கூடியவன்.
"சிரிக்காதே’ எனக் கிசுகிசுத்தேன். பரதன் சத்தம் வராமல் சிரித்து அடங்குவதற்கு சில் நிமிடம் எடுத்தது. உண்மையில் அது குழியல்ல பனங்காட்டையும் தோட்ட நிலத்தையும் பிரித்து சுமார் ஆறு அடி ஆழத்திலும் மூன்று அடி அகலத்திலும் வெட்டப்பட்டகால் வாய். பனம் தோப்புகளுக்கு அண்மையாக பயிர்செய்கை செய்கின்ற இடங்களில் இரண்டையும் பிரித்து இப்படிக் கால்வாய் போல் வெட்டுவது வழமை. பனைமரத்தின் வேர்கள் பயிர்களுக்குச் செலுத் தப்படும் பசளைகளை உறுஞ்சாமல் தடுப்பதற்கே இவ்வாறான முறை கையாளப்படுகிறது. ஆனால் ஆழமானதும் நீளமானது 17ான கால்வாயை இப்போதுதான் பார்க்கிறேன்.
எதிர்பாராமல் பரதன் இந்த கால்வாய்க்குள் விழுந்தாலும் எமக்கு இந்தக்கால்வாய் வசதியாகப்பட்டது. கால்வாய்க்குள் நானும் புதிய நண்பரும் குதித்தோம். உள்ளே சேறும் சகதியுமாய் இருந்தது. கால்வாய் ஊடாக நாம் நகர்ந்து சென்று அதன் முடிவில் ஏறினோம். அது நாம் செல்ல நினைத்த வாழைத்தோட்டமாகும்.
வாழைத்தோட்டத்தினுள் புகுந்ததும் சற்று நேரம் நின்று கூர்ந்து அவதானித்தோம். வாழைத் தோட்டத்தைக் காவல்

Page 11
செழியன் 14
காப்பதற்கு யாரும் தோட்டத்துக்குள் இருக்கலாமல்லவா? அவ்வாறு யாரும் இருப்பதாக எமக்குப்புலப்படவில்லை. மெதுவாகப் பதுங்கி சத்தம் எழுப்பாமல் நடந்தோம். தவறுதலாக எமது கால்கள் வாழைச் சருகுகளில் பட்டு சத்தம் எழுந்த போதெல்லாம் ஒரு சில கணநேரம் நின்று அவதானித்து தொடர்ந்து சென்றோம். வாழைத்தோட்டத்தின் முடிவில் மரவள்ளித் தோட்டம் ஆரம்பமானது. அதனைக் கடப்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் மரவள்ளித் தோட்டத்தின் முடிவில் இருந்து சுமார் இருநூறு யார் தூரத்திற்கு பயிர் செய்யப் படாமல் வெட்டவெளியாக நிலம் இருந்தது. அதன்பிறகு மிளகாய் கன்றுத் தோட்டம் ஆரம்பமானது. இந்த இருநூறு யார் தூரத்தையும் நாம் கடந்தால்தான்மிளகாய்கன்றுத்தோட்டத்திற்குள் புக முடியும். நிலவு வெளிச்சம் அந்த வெறும் தரையில் பளிரென அடித்துக் கொண்டிருந்தது. அத்தோடு இந்த வெளிக்குஇடதுபுறமாக ஐநூறு அறுநூறு யார் தொலைவில் தோட்ட சொந்தக்கார்களின் குடிமனை கள் சிலவும் தெரிந்தன. அவர்கள் யாராவது நாம் வெளியைக் கடப் பதையோ, கடந்து மிளகாய்த் தோட்டத்திற்குள் புகுவதையோ கண்டால் ஆபத்தாய் அல்லவா முடியும்
சுமார்பத்து நிமிடங்களாக மரவள்ளித்தோட்டத்தின்முடிவில் பதுங்கி இருந்தபடி குடிமனைகளை நோட்டம் விட்டோம். எவருடைய நடமாட்டமும் இல்லை என்று பட்டதும் முதலில் பரதன் வெளியை வேகமாக கடந்து மிளகாய்த் தோட்டதிற்குள் புகுந்து பதுங்கிக்கொண்டான். அவனை அடுத்து நான் வேகமாக வெளியைக் கடந்து மிளகாய்க்கன்றுக்குள் பதுங்கினேன். கடைசியாக எமது புதிய நண்பர் வந்து சேர்ந்தார்.
மூவரும் வெளியைக் கடந்து மிளகாய் தோட்டத்திற்குள் புகுந்ததும் 'அப்பாடா” என்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எமது பயணத்தைத் தொடர்ந்தோம்.
வாழைத் தோட்டம், மரவள்ளித் தோட்டம் போல் அல்லாது மிளகாய்த் தோட்டத்திற்குள் நாம் தவழ்ந்தே நாம் செல்ல வேண்டி யிருந்தது. கன்றுகள் கிளைபரப்பி வளர்ந்திருந்ததால்சில நேரங்களில் நாம் கிளைகளுக்குள்ளோ, அடிமரத்துடனோசிக்குப்பட்டு முன்னேற

15 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
முடியாமலும் இருந்தது. ஒருவர்சிக்குப்பட்டால் அவர் வெளிவரும் வரை மற்றவர்கள் காத்திருந்து மூவருமாகத் தொடர்ந்து முன்னேறிச் சென்றோம்.
மிளகாய்த் தோட்டம் முடிவடைந்த போது எமது கிராம குடியிருப்பின் எல்லையை நாம் எட்டியிருந்தோம். அந்த எல்லைப் புறமான ஒதுக்குப்புறத்தில் நமது கிராமத்து மகாலிங்க அண்ணரின் குடிசை வீடு இருந்தது. மிளகாய் தோட்டத்தினை விட்டு 100 அடி நடந்தால் அவரது வீட்டு வளவுக்குள் சென்று விடலாம். அவரிடம் சென்று கிராமத்திற்குள் என்ன நடந்தது என்று அறிவதே எமது திட்டம்.
மகாலிங்க அண்ணர் நமது கிராமத்தில் ஒரு பிரமுகராய் இருந்ததால் அவரைப்பிடிக்கவோ விசாரிக்கவோ அவர்கள் அங்கு போயிருக்கலாம் என்பதால் மிளகாய் கன்றுக்குள் ஒளிந்தபடி மகாலிங்க அண்ணனின் வீட்டைச் சிறிது நேரம் நோட்டம் விட் டோம். சந்தேகப்படும்படியாக ஒருவித நடமாட்டமும் சத்தமும் இல் லாமல் வீடு அமைதியாக இருந்தது. இதனை அடுத்து பரதன் மகாலிங்க அண்ணரின் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை விசாரித்து வருவதாயும் அதுவரை நானும் புதிய நண்பரும் பதுங்கி இருப்ப தாயும் முடிவு செய்தோம்.
ஒன்று, இரண்டு, மூன்று என நிமிடங்கள் ஓடின. மனம் துடித்துக் கொண்டு இருக்க பரதனின் வரவையும் அவன் கொண்டு வரப் போகும் செய்திக்காகவும் காத்திருந்தோம். சற்று நேரத்தில் பரதன் எம்மை நோக்கி வரும் போது எனக்கு மேலும் மனம் பதட்ட மாய் அடித்துக் கொண்டது. பாலாவையும் எனது மனைவியையும் "அவர்கள் கைது செய்து வேனில் ஏற்றிக் கொண்டு போய்விட்ட செய்தியை பரதன் கூறிய போது சில நிமிடங்கள் வரை எதுவுமே என்னால் பேசமுடியவில்லை. நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன்.
நண்பன் பாலாவையும் எனது மனைவியையும் 'அவர்கள்" கைது செய்து கொண்டு சென்ற செய்தியோடு, நான் சரணடைந்தால் தான் எனது மனைவியை விடுதலை செய்வோம் என்று 'அவர்கள் கூறிச்சென்றதாக பரதன்கூறினான்.

Page 12
செழியன் 16
این ن۶
'நாம் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி மகாலிங்க அண்ணர் வீட்டில் வைத்து யோசிப்போம்.இப்போ இங்கிருந்து அவரது வீட்டிற்கு செல்வோம்’ என பரதன் கூறினான். நாமும் அதை ஏற்றுக்கொண்டு மகாலிங்க அண்ணர் வீட்டிற்குச்சென்றோம்.
அவர்கள் மறுபடியும் விடிவதற்குள் நமது கிராமத்திற்குள் வருகின்ற சந்தர்ப்பம் இல்லை என்றே நாம் கருதினோம். இந்த இரவில் இக்கிராமத்தை விட்டு வெளியேறிச் செல்வதில் உள்ள ஆபத்தை விட விடியும் வரை இக்கிராமத்தில் ஏதாவது ஒரு வீட்டில் தங்குவது ஓரளவுக்குப் பாதுகாப்பானதாக எமக்குப் புலப்பட்டது.
விடிந்ததும் அவர்களின் முகாமிற்கு சென்று பாலாவின் விடுதலைக்காக பாலாவின் பெற்றோர்களை முயற்சிக்கும் படி கூறுமாறு மகாலிங்க அண்ணரிடம் கூறினோம். அத்தோடு எனது மனைவியின் விடயம் தொடர்பாக செயல்படமனைவியின்தாயாரை குடாநாட்டிற்கு வெளியில் இருந்து அழைத்து வர செய்தி அனுப்புவதற்கும் மகாலிங்க அண்ணரிடம் ஒழுங்கு செய்தோம்.
எம்மை ஏதாவது ஒரு வீட்டில்தங்க வைப்பதற்கெனமாலிங்க அண்ணர் கூட்டிச் சென்றார். எமது கால் சேறாக இருந்த படியால் போகும் போது கிராமத்து கிணற்றடியில் எமது கால்களைக் கழுவிக் கொண்டோம். நாம் கழுவிக் கொண்டிருக்கும் போதே நாம் தங்குவதற்குரிய ஏற்பாட்டை மகாலிங்க அண்ணர் செய்துவிட்டு வந்து எம்மை அழைத்தார்.
மகாலிங்க அண்ணர் அழைத்துச் சென்ற குடிசை வீட்டை அடைந்ததும் எனக்கு பலத்த ஆச்சரியம் ஏற்பட்டது. "இந்த வீட்டிலா தங்கப் போகிறோம்" என மகாலிங்க அண்ணரிடம் கேட்டேன். "ஆம்" எனப் பதில் கூறினார். அந்த வீடுதான் முதலில் தப்பி ஓடும் போது உதவுமாறு கேட்ட பெண்மணியின் வீடு.
எங்கள் மூவருக்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அறையின் ஒருபுறம் வெங்காயம் குவிக்கப்பட்டிருந்தது. நாம் படுப்பதற்காக இரண்டு ஓலைப் பாய்களை வீட்டுக்காரர் கொண்டு வந்து தந்து விட்டுச்சென்றார். விடிந்ததும் தான் வருவதாகவும் தான் வரும் வரை

17 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து:
வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் மகாலிங்க அண்ணர் கூறிச்சென்றார்.
நித்திரைக்காகப் பாயில் சரிந்தோம். நித்திரை வர மறுத்தது. மனதில் பயம் சூழ்ந்து கிடந்தது. மனைவியின் நினைவு, பாலாவைப் பற்றிய எண்ணம். சிந்தனை தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்த போது நித்திரை எப்படி வரும்?
இந்த வீட்டுக்காரப் பெண்மணியை நினைக்கும்போது எனக்குத்தாளமுடியாத ஆச்சரியம். சில மணிநேரத்துக்குமுன் உதவ மறுத்த அதே வீட்டில் இப்போநாம் பாதுகாப்புக்காகத் தங்கியிருக்கி றோம். இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன? என யோசித்தேன். புரியவில்லை. ஆனால்தவறு எங்களிடம்தான் எங்கோஒட்டியிருப்ப தாகப் பட்டது.
மனைவியின் நினைவு வந்தது. அவளுக்கு என்னநிகழ்ந்ததோ என மனம் துக்கித்தது. எனக்காக என்னென்ன துன்புறுத்தல்களைத் தாங்கிக் கொள்கின்றாளோ? மனம் பதைபதைப்பாய் இருந்தது. பாலாவை உயிரோடு விடுவார்களா என்ற அச்சமும் எனக்கு ஏற்பட்டது.
எப்போ நித்திரையாகினேன் என்று தெரியாது. காலை கண் விழிக்கும் போதுசூரிய வெளிச்சம் கதவு இல்லாத ஜன்னலின் திரைச் சீலையின் இடுக்குவழியாக எமக்குச் சுள்’ என்று அடித்தது. தூரமாக நிலத்தை சாறிக் கொத்தும் சத்தம் கேட்டது. சில பறவைகளின் ஒலிகள் கூடக்கேட்டது. நேரம் எட்டு மணிக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன். எனது நண்பர்கள் இருவரும் கூட விழித்துவிட்டனர் காலையல்லவா? காலைக்கடன்களை முழுமையாக கழிக்க முடியாத நிலைமை என்றாலும் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாய நிலை. வீட்டை விட்டு வெளியேறிச் சென்றால் பலரும் எம்மைக் காணநேரும். இது பாதுகாப்புக்கு பங்கமாக இருக்கும்.
யன்னல் சீலையை மெதுவாக நீக்கிப் பார்த்தான் பரதன். தொலைவில் சிலர் மண்ணைச் சாறிக் கொத்திக் கொண்டிருந்தனர். பரதன் தனது யோசனையைக் கைவிட்டான். கடைசியாக அந்த்

Page 13
செழியன் 18
அறைக்குள் இருந்த, பயிர்களுக்குகிருமிநாசினிவிசுறுகின்ற மருந்து அடிக்கும் 'பம்பை அவசர உதவியாகப் பாவித்துக் கொண்டோம்.
நாம் எழுந்து கதைத்துக் கொண்ட சத்தங்கள் கேட்டு வீட்டுக் காரப் பெண் தேனீர் கொண்டு வந்து தந்தார். தேனீரைக் குடித்துக் கொண்டிருக்கும் போது மகாலிங்க அண்ணர் வந்தார். அவர் வரும் போது ஒரு செய்தியைக் கொண்டு வந்தார்.
எமது நண்பரும் யாழ். பல்கலைக்கழக மாணவர் தலைவர் களில் ஒருவருமான மணி 'அவர்களிடம் இருந்து தன்னைப் பாது காத்துக்கொள்ள இந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக கூறினார். எனக்கு அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை.
ஏற்கனவே இக்கிராமம் பாதுகாப்பில்லை என்று நாம் எங்கு போவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கையில் இதே கிராமத்திற்கு பாதுகாப்பு தேடி எமக்குச் சுமையாக நமது நண்பன் ஒருவன் வந்துள்ளான். அதுவும் இந்த நண்பன் சாதாரண ஆளா என்ன?
யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரனை காணவில்லை என்றும் அவனை உடன் விடுதலை செய்யமாறும் வேண்டி நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவன் அல்லவா? இவனைக் கண்டால் அவர்கள் குதறித்தள்ளி விடுவார்கள். எனவே இவன் பாதுகாப்பாய் இருக்க வேண்டியது மிக அத்தியாவசியம். ஆனால் ஆபத்தான இடத்திற்கு அல்லவா வந்திருக்கிறான். மணியை எம்மிடம் அழைத்து வருமாறு மகாலிங்க அண்ணரிடம் கூறினோம்.
மணி நிரம்ப பதட்டமாகக் காணப்பட்டான். திருநெல் வேலியில் இருந்து சைக்கிளிலே நமது கிராமத்திற்கு ஒழுங்கைகளின் ஊடாக வந்து சேர்ந்ததாகவும், தன்னை ஒருவரும் கவனிக்கவில்லை என்றும் கூறினான். காலையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங் களை அறிந்து தன்னையும் தேடி அவர்கள் நிச்சயமாக வருவார்கள் என்பதால் வீட்டைவிட்டு வெளியேறி இங்கு வந்து சேர்ந்துள்ளான்.
நாம் இங்கு நடந்தவற்றைக் கூறினோம். இந்தக் கிராமம் எமக்குப் பாதுகாப்பில்லை என்பதை விளக்கினோம். மணிக்குப்

19 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பதட்டம் அதிகரித்தது. ‘என்னடாப்பா உங்களை நம்பி வந்தால் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறியள். அப்ப இனி என்ன செய்யிறது?’ 'இந்த கிராமத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். நாம் எல்லோரும் ஒரே இடத்தில் தங்க வேண்டும் என எதிர் பார்க்காமல் தனித் தனியாவா வது தங்க இடம் ஏதும் இருக்கிறதா என யோசிப்போம். கூட்டாக இல்லாமல் தனியாக தங்குவது தான் பாதுகாப்பாயும் இருக்கும்’ நான் இவ்வாறு கூறியதை பரதனும் ஆமேதித்தான்.
பக்கத்து கிராமம் ஒன்றில் தனது உறவினர் ஒருவரது வீடு இருப்பதாயும் அங்கு போய் தங்கலாம் என்றும் பரதன் கூறினான். மணியின் அக்காதிருமணமாகி கோண்டாவிலில் குடியேறி இருந்தார். பெரியதோர் கல்வீடும் கூட. அங்கு போய் இரண்டு பேர் தங்கலாம் என நினைத்தேன். வீட்டுக்குள் போய் ஒரு அறைக்குள் தங்கிக் கொண்டால் நிலைமைகள் சீராகும் வரை வெளியில் வரத் தேவை யில்லை. ஆனால் என்னகாரணமோ தெரியாது. மணிக்க அது பொருத் தமான இடமாகப் படவில்லை. மணியின் அபிப்பிராயம், இந்தக் கிராமத்திலே ஒரு வீட்டில் தங்குவது பாதுகாப்பானதாய் இருக்கும் என்பதே.
எனக்கு தெரிந்த இடங்களைப் பற்றி யோசித்தேன். அந்த இடங்களெல்லாம் அவர்களால் சந்தேகப்படக்கூடிய இடங்களாய் இருந்தன. உறவினர்களின் வீடுகளைப் பற்றி யோசித்தேன். அதில் பெரியதொரு சிக்கல் இருப்பதை உணர்ந்தேன். மிகநீண்டகாலமாக இந்த உறவினர்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை. எங்காவது வழிதெருக்களில் கண்டால் உரையாடுவதுடன் சரி, யாழ்ப்பாணத்து நிலைமையின்படி பெரும்பாலான வீடுகளில் இருந்த இளைஞர்கள் ஒவ்வொரு இயக்கத்திலும் இணைந்திருந்தனர். இதில் எனது உறவினர்களின் நிலைமை, அவர்களது பிள்ளைகளின் நிலைமை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் பாதுகாப்பு என்று தங்கப் போக, அந்த வீட்டுக்காரருக்கும் 'அவர்களுக்கும் தொடர்பு இருந்தால் எனது நிலைமை என்னவாகும். நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது மகாலிங்க அண்ணர் மறுபடியும் ஒரு புதிய

Page 14
செழியன் 20
தகவலுடன் வந்தார். ஒலிபெருக்கியின் மூலமாக எல்லா இடங்களி லும் பொது அறிவிப்பு ஒன்றை அவர்கள்’ செய்வதாயும் அதன்படி எவருக்காவது தங்குவதற்கோ, மறைந்து இருப்பதற்கோ யாரும் உதவி செய்தால் உதவி செய்கிறவர்களும் கடுமையாக தண்டிக்கப்படு வார்கள் என்பபதாகும்.
இத்தகைய அறிவித்தலைக் கேட்ட பின் எம்மைப் போன்ற வர்களுக்கு உதவி செய்வதற்கு மக்களிடம் பயமும் பீதியுமே காணப் படும். இவ்வாறு மக்களை அச்சுறுத்துவதே இந்த அறிவித்தலின் நோக்கம் என உணரமுடிந்தது.
நேரம் சென்று கொண்டிருந்தது. இந்த கிராமத்தை விட்டு எங்காவது செல்வதற்கு மணி தயாராகவில்லை. இனியும் இந்த கிராமத்தில் தங்குவது ஆபத்து. எனவே முதலில் இந்த இடத்தை விட்டு நான்புறப்படுவது என்ற முடிவிற்கு வந்தேன்.
இந்த முடிவிற்கு நான் வந்த போது பஞ்சு என்ற பரதனின் நண்பன் கிராமத்திற்கு வந்திருப்பதாக மறுபடியும் மகாலிங்க அண்ணர் வந்து கூறினார். பஞ்சு . இயக்கத்தில் இருந்து அண்மையில் விலகி இருந்தான். எம்மீது இருந்த பற்றின் காரணமாக நமது நிலைமையை அறிந்து போக வந்திருந்தான். அவனை சந்தித்து வரபரதன் சென்றான். - .
சிறிது நேரத்தில் திரும்பி வந்த பரதன் 'பஞ்சு தன்னுடன் ஒருவர் வந்து தங்கலாம் என்று கூறுகிறான் விரும்பிய ஆள் போக லாம்’ என்றான் மணியோ, புதிய நண்பரோ பஞ்சுவுடன் செல்ல தயாராக இல்லை. எனவே நான் பஞ்சுவுடன் புறப்பட்டேன்
நான் புறப்படும் போது தங்கியிருந்த வீட்டுக்காரர் நான் இரவில் செருகி வைத்த எனது சேட்டை கொண்டுவந்துதந்தார். நான் அதுவரை அணிந்திருந்த கிராமத்தவரின்சேட்டைக்கழற்றிகொடுத்து விட்டு எனது சேட்டை அணிந்து கொண்டேன். நான் புறப்பட்டபின் மணியும் எங்காவது வேறு இடத்திற்குச் செல்வான் என எதிர் பார்த்தேன்.அவ்வாறு செல்வதற்கு உதவுமாறு பரதனிடம் கூறினேன். மணி விரும்பினால் பரதனுடன் அவன் கூறிய இடத்துக்கே

21 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
போகலாம். எதுவாக இருப்பினும் விரைவாக முடிவெடுக்குமாறு கூறி விட்டு நான்புறப்பட்டேன்.
பஞ்சு தனது சைக்கிளின் முன்னால் என்னை ஏற்றிக் கொண்டு அந்தக் கிராம்ததை விட்டு வேகமாகச் சென்றான். சைக்கிளில் செல் லும் போது எனக்கு பயமாகத்தான் இருந்தது. நிலச்சொந்தக்காரர்கள் யாரும் கண்டால் 'அவர்களுக்கு தகவல் தந்து விடுவார்கள் என்று ஆனால் அவர்கள் தகவல் கிடைத்து வருமுன் நாம் வெகுதூரம் சென்று விடலாம் என நம்பினேன். W
பஞ்சுவுடன் சைக்கிளை குறுக்கு ஒழுங்கைகளின் ஊடாக வேகமாக ஒட்டிச்சென்றான். "பயப்பட வேண்டாம்,தன்னோடு வந் தணல் சந்தேகப்பட மாட்டார்கள்’ என்று சுறினான் தான். இயக் கத்தை விட்டு விலகி இருப்பது அவர்களுக்கும் தெரியும் என்பதால் தன்னோடு ஒரு பிரச்சனைக்கும் வரமாட்டார்கள் என்றும் கூறினான்.
சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது இந்தப் பகல் பஞ்சுவுடன்தங்கி விட்டு இரவோடு இரவாக நல்லதோர் இடத்துக்கு பஞ்சுவின் உதவியுடன் மாறிவிட வேண்டும் என நினைத்தேன். பஞ்சுவுடன் தொடர்ந்து தங்குவது பாதுகாப்பில்லை என நினைத் தேன். தோட்டங்களுக்கு இடையாக சென்ற பாதையில் சைக்கிளை ஒட்டிய பஞ்சு அண்மையில் தெரிந்த சிறு குடிசையைக் காட்டி அது தான் தனது வீடு எனக்கூறினான். அவனது வீட்டைசைக்கிள் நெருங் கியபோது மரவள்ளித்தோட்டத்திற்குள் ஏதோ செய்து கொண்டிருந்த பஞ்சுவின் அக்கா பதட்டமாக ஓடிவந்து "டேய்பஞ்சு இப்பதாண்டா உன்னை தேடி அவர்கள் வந்து விட்டு போகினம். உன்னை உடனே கேம்புக்கு வரட்டாம்’ என்று கூறினார்.
பஞ்சு திகைத்து போனான் எனது நிலைமையும் இரண்டும் கெட்டான் ஆகியது. பஞ்சு தன்னை விட என்னைப் பற்றித்தான் கவலைப்பட்டான். என்னை என்ன செய்வது என்று தெரியாமல் அவன் குழம்பிப் போய் நின்றான். நான் சொல்கின்ற இடத்தில் என்னை விட முடியுமா? என பஞ்சுவிடம் கேட்டேன். “சரி” என்று ஒப்புக் கொண்டான் நான் கூறிய இடம் அங்கிருந்து சுமார் மூன்று மையில் தூரம் இருக்கும்.

Page 15
செழியன் 22
எனக்குத் தெரிந்த கிராமிய நண்பர்கள் சிலர் இருந்தனர். ஒரு காலத்தில் இவர்களுக்கு அரசியல் ஈடுபாடு அதிகமாய் இருந்தது. ஆனால் தற்போது ஆர்வம் இருந்தாலும் ஈடுபாடு குறைவு என்றே கூற வேண்டும். இவர்களிடம் சென்றடைவதே எனது எண்ணம். ஆனால் இதுவும் பாதுகாப்புக்கு முழுப் பொருத்தமான இடமாக நான் நினைக்கவில்லை. காரணம் இவர்கள் மீது அவர்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தனர். எனவே ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள்’ திடீர் முற்றுகை இடலாம்.
நாம் புறப்பட முன்னர் நாம் செல்கின்ற் பாதையில் 'அவர் களின் நடமாட்டம் ஏதும் இருக்கிறதா? முக்கியமாக சந்தியில் அவர் களின் நடமாட்டம் ஏதும் இருக்கிறதா? அல்லது சந்தேகப்படக் கூடியவாறு நிலைமைகள் ஏதும் உண்டா? என்பவற்றைத் தெரிந்து கொண்டு புறப்படுவது நல்லது என நான் பஞ்சுவிடம் கூறினேன். பஞ்சு தனது நண்பன் ஒருவனை நிலைமையை அவதானித்து வர அனுப்பினான். பத்து நிமிடங்களில் திரும்பிவந்த நண்பர் சந்தியில் அவர்கள் நடமாட்டங்கள் இல்லை என்று கூறினார். நான் பஞ்சு விடம் புறப்படுவோம் என கூறினேன். “சரி” என்று கூறிய பஞ்சு திடீரென வீட்டுக்குள் போய் எதையோ எடுத்துக் கொண்டு வந்தான். அது ஒரு கிரனைட், அதனை தனது இடுப்பில் செருகிக் கொண்டு "அவர்கள் இண்டைக்கு வந்தாங்கள் எண்டால் இரண்டில் ஒண்டு தான்’ என்று கறுவிக் கொண்டான்.
சைக்கிளின் முன் பக்கமாக என்னை ஏற்றிக் கொண்ட பஞ்சு தனது நண்பரிடம் 'நீ எங்களுக்கு முன்பாக போய் சந்தியில் நின்று கொள். அவர்கள்’ திடீரென்று ஏதும் வந்தால் தகவல் தா’ என்று கூறி அவரை அனுப்பிவைத்தான். அவர் போய் சில நிமிடம் கழித்து நாம் மறுபடி புறப்பட்டோம்.
சைக்கிளை மெதுவாக பஞ்சு ஒட்டினான். வந்த் போது நாம் ஒழுங்கைகளின் ஊடாக வந்தோம். எனவே வேகமாக வந்தோம். இப்போ பிரதான வீதியில் செல்வதால் சைக்கிளை மெதுவாக செலுத்தினோம். திடீரென்று 'அவர்களின் வாகனம் எதுவும் எம்மைக்கடந்து சென்றாலும் பார்ப்பதற்கு ஏதோ சாதாரண ஆட்கள் கைக்கிளில் செல்வதைப் போல இருக்க வேண்டும் அல்லவா?

23 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
எனக்கு நெஞ்சு "பட' 'பட' என்று அடித்துக் கொண்டது. சந்தியை நாம் அடைந்த போது ஒரு ஒரமாக நின்ற பஞ்சுவின் நண்பர் 'பிரச்சனையில்லை போகலாம்’ என்று சைகை செய்தார். சந்தியைக் கடந்தோம். சந்தியைக் கடந்தது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. ஆனால் அபாய நிலைமையை நாம் கடந்து விடவில்லை. பிரதான பாதை என்பதால் எப்போதும் அவர்கள் வாகனங்களில் வரலாம்.
சந்தியை கடந்து சென்று கொண்டிருக்கையில் எதிர் திசையில் இருந்து ஒரு தடியன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். 'சேட்" அணியாமல் சாரம் மட்டும் உடுத்தியிருந்தான். தூரத்தில் வரும் போதே அவன் எங்களையே பார்த்துக் கொண்டு வருவதைக் கண் டோம். ஆனால் நாம் பதட்டப்படுவதாகவோ, தப்பி ஓடிக்கொண்டி ருக்கிறோம் என்று அவன் நினைக்கக் கூடியதாகவோ காட்டிக் கொள்ளாமல் எங்களுக்குள் நாம் மெதுவாக உரையாடிக் கொண்டு சென்றோம். அந்த தடியன் எம்மைக் கடக்கும் போது பஞ்சு அவனைப் பார்த்து சின்னதாக தலையசைத்தான். எங்களையே உற்று நோக்கிக் கொண்டு வந்த தடியனும் பஞ்சுவைப் பார்த்து தலையை அசைத்துவிட்டுச் சென்றான். அவனது கண்களில் எங்களைப் பற்றிய சந்தேகம் எழுதி ஒட்டியிருந்தது போல் இருந்தது.
அவனைக்கடந்து சிறிது தூரம் வந்ததும் பஞ்சு, அந்தத்தடியன் தமது கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும் அவர்களின் தீவிரமான ஆதரவாளன் என்பதோடு தன்னையும் தெரிந்தவன் என்று கூறினான். "அப்ப அவனுக்கு எங்களைப் பற்றி சந்தேகம் வந்திருக்கும்’ என்று நான் கூற "நிச்சயமாக அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கும்’ என்று பஞ்சு கூறினான். இனி வேகமாய் போவம் என்று நானும் பஞ்சுவும் வேகமாக சைக்கிளில் போய் நான் கூறிய ஒழுங்கை ஒன்றில் சைக்கிளைத் திருப்பி கொண்டு தொடர்ந்து சென்றோம்.
சில பல வீடுகளையும் ஒரு வெளியையும் கடந்து பற்றைகளும் செடிகொடிகளும் நிறைந்த ஒரு பகுதி வந்ததும், சைக்கிளைநிறுத்தும் படி பஞ்சுவிடம் கூறினேன். சைக்கிளைநிறுத்திய பஞ்சுவிடம் நான் இந்த இடத்தில் இறங்கி கொள்வதாயும் பஞ்சுவைப் போகும்படியும் கூறினேன். w
நான் எந்த வீட்டுக்குப் போக வேண்டுமோ அங்கேயே என்னைக் கொண்டு போய் விட்டு விடுவதாக பஞ்சு கூறினான்.

Page 16
செழியன் 24
"இரண்டு பேரும் சைக்கிளில் போனால் யாரும் சந்தேகப்படலாம். எனவே நான் இனி நடந்து போகிறேன்' என்று பஞ்சுவிடம் பொய் கூறினேன். நான் எந்த வீட்டுக்குப் போகிறேன் என்பதை பஞ்சு தெரிந்துவிடக் கூடாது என்பதே எனது நோக்கம். என்மேல் அன்பும் அக்கறையும் கொண்ட பஞ்சுவிடம் பொய் சொல்வது எனக்கு மிகவும் மனவருத்தமாக இருந்தது. ஆனால் நான் போகுமிடம் பஞ்சுவுக்கு தெரிந்தால் சில சந்தர்பங்களில் பஞ்சுவை அவர்கள் கைது செய்து சித்திரவதைகள் செய்து விசாரித்தால் உண்மைகளை சொல்லிவிடக் கூடும். இதன் காரணமாகவே நான் பஞ்சுவுக்குப் பொய் சொல்ல வேண்டி ஏற்பட்டது. அரைமனதுடன் பஞ்சு என்னை இறக்கிவிட்டு புறப்பட ஆயத்தமானான். அவனிடம் வந்த வழியாகப் போக வேண்டாம். வேறு வழியால் போகுமாறு கூறினேன். என்னை நினைத்துத் தான் பயந்ததாகவும் இனி தனக்கப் பிரச்சனை ஒன்றும் இல்லைஎன்றும் கூறிவிட்டு பஞ்சு மறுபடியும் எனது நண்பர்களுக்கு உதவ பரதனின் கிராமத்திற்குப்புறப்பட்டான்.
பஞ்சு புறப்பட்டதும் தோட்டங்களுக்குள் இறங்கி ஒரு வாய்க்கால் வழிஊடாக நடந்தேன். அந்தப்பகுதியில் என்னை ஒருவ ருக்கும் தெரியாது. எனவே என்னை யாரும் கண்டாலும் 'யாரோ" என்று தான் நினைப்பார்கள். தோட்டங்களுக்கு இடையில் இருந்த குடிசை வீட்டை அடைந்ததும் எனது நண்பர் முத்துராசாவை மெது வாகஅழைத்தேன். பதில் இல்லை. உள்ளே சென்று பார்த்தேன்ஒருவ ரும் இல்லை. சில நேரங்களில் இந்நேரத்தில் வீட்டில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என முன்னரே எதிர்பார்த்திருந்தேன். அடுத்து எங்கு போவது என்று முன்னமே திட்டமிட்டிருந்தேன். மறுபடி தோட்டங்களுக்குள்ளாக சிறிதுதுரம் நடந்து எனது இன்னோர்நண்பர் பராவின் வீட்டுக்குப் பின்புற வளவுக்குள் புகுந்தேன். பரா வீட்டில் பலர் இருந்தனர். எல்லோரும் எனக்குத் தெரிந்தவர்கள்தான். முத்துராசாவும் அங்கு இருந்தார்.
என்னைக் கண்டதும் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும், கட்டிப்பிடித்தார்கள் 'நீ இங்க வரலாம் என்று எதிர்பார்த்தனான்'பரா சொன்னான்.
நடந்து கொண்டிருக்கும் நிலைமைகள் பற்றித்தான் அவர்கள் அதுவரை பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனக்கு என்ன நடந்

25 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
தது என்று தெரியாமல் கவலைப்பட்டுக் கொண்டும் இருந்திருக் கிறார்கள். "இங்கு இருப்பது நல்லதல்ல வேறு எங்காவது போய் பேசுவோம்’ என்று நடேசர் கூறினார். முத்துராசா என்னை அழைத் துக் கொண்டு தனது வீட்டுக்கு போவது என்றும், பராவுடன் நடேச ரும் சிறிது நேரத்தில் ஒவ்வொருவராகவருவதென்றும் முடிவாகியது.
முத்துராசர் வீட்டில் எனக்கு சாப்பாடு தந்தார். மனைவியும் பிள்ளைகளும் அண்ணர் வீட்டுக்குப் போய் இருப்பதாயும் இரவு வருவார்கள் என்றும் கூறினார். சிறிது நேரத்தில் பராவும் நடேசரும் வந்தனர். நடந்தவைகளைக் கூறினேன். அவர்களும் பல தகவல் களை கூறினார்கள். யாழ்ப்பாணம் முழுவதும் தேடுதல் வேட்டைக ளும் முற்றுகைகளும் தான் நடக்கிறது என்றும், மானிப்பாயில் இரு பகுதியினருக்கு நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் இறந்து விட்டதாகக் கேள்விப்படு வதாகவும் கூறினார். எனது நண்பர் ஜெகனைத் தேடி அவர்கள்’ போனதாயும் அவர்தப்பி விட்டதாயும் கூறினர்.
பொழுது சாய்ந்து நன்கு இருளத் தொடங்கியது. முத்துராசாவின் மனைவி பிள்ளைகளும் வந்து விட்டனர். மறுநாள் வருவதாகக்கூறி நடேசர் புறப்பட்டுச்சென்றார். அதற்கிடையில் நான் தங்கியிருந்த கிராமத்திற்கு சென்று பாலாவுக்கும் எனது மனைவிக்கும் என்ன நடந்தது என்றும் அறிந்து வருவதாயும் கூறினார். பராவும் சிறிது நேரத்தில் சென்று விட நானும் முத்துராசாவும் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு இரண்டு பாய்களை எடுத்துக்கொண்டு அண்மையில் இருந்த பனை வடலிகளுக்குள் புகுந்தோம்.அன்றைய இரவை அங்கு கழிப்பதே எமது நோக்கம். முத்துராசா வீட்டிற்கு அவர்கள் வந்துவிடலாம் என்ற ஒரு சிறு சந்தேகம் எமக்கு இருந்தது.
ஏதாவது சந்தேகப்படக்கூடிய நிகழ்வுகள் இருந்தால் எமக்குத் தகவல் தருமாறு முத்துராசா தனது மனைவிக்கு கூறி வந்திருந்தார். பனைகளுக்கு இடையில் இருந்த சிறு வெளியில் பாயைப் போட்டுப் படுத்தோம். நித்திரை வரவில்லை. வெகுநேரம் பேசிக்கொண்டிருந் தோம். நிலவு வானத்தில் வந்து நின்று சிரித்தது. யாருடைய நிலைமைக்காக இது சிரிக்கிறது. தேசத்தை நேசித்த என்னைப் பார்த்தா? தேசத்தைப் பார்த்தா? இல்லை இந்த மனிதர்களின் விசித்திரமான நடத்தையைப் பார்த்தா?

Page 17
15-Lorrifa 1986
காலை இருள் மெல்ல பிரியத் தொடங்கிய நேரம். கிழக்கில் சூரியன் வருவதற்கு கட்டியம் கூறுவதைப் போல ஒளி கீறிட்டுக் கிடந்தது. பனை வடலிகளுக்குள் நித்திரையாய் இருந்த என்னை முத்துராசா தட்டி எழுப்பினார். இருவரும் பாய்களை சுருட்டிக் கொண்டு முத்துராசாவின் வீட்டிற்குச் சென்றோம்.
காலைக்கடன்களை முடித்து, தேனீர்குடித்துக்கொண்டிருந்த போது பரா அவசரமாக வந்தான். அவன் ஏதோ முக்கியமான செய்தியோடு தான் வந்திருக்கிறான் என்பதை அவனது முகமும் நடவடிக்கைகளும் காட்டின. எமக்கு அருகில் அமர்ந்தவன் "இரவு எங்கட வீட்டை அவர்கள் வந்து சுற்றி வளைச்சிட்டாங்கள்’ என்று கூறினான். எனக்கும் முத்துராசாவிற்கும் அதிர்ச்சியாய் இருந்தது. நடு இரவில் 'அவர்கள் பராவின் வீட்டை சுற்றி வளைத்து யாராவது ஒளித்திருக்கிறார்களாஎனதேடினார்களாம். கோழிக்கூட்டுக்குள்ளும் யாரும் ஒளிந்திருக்கலாம் என தேடினார்களாம். அத்தோடு முதல் நாள் யார்? யார்? வீட்டிற்கு வந்தார்கள் என்ற விபரங்களையும் பராவிடம் கேட்டார்களாம். அவர்களால் தேடப்படுகிறவர்கள் எவரும் தனது வீட்டுக்கு வரவில்லை என்றும் ஏதோ பிழையான செய்திதான்

27 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றும் பரா 'அவர்களிடம்" கூறியதாகச் சொன்னான் சுமார் ஒரு மணி நேரம் தேடுதல் செய்து விட்டு போய்விட்டார்கள். 'நல்ல காலம் தப்பித்தேன்' என்று பெருமூச்சுவிட்ட பரா"பழையதுவக்கு ஒன்று கோழிக்கூட்டுக்குள்ள வைச்சிருந்தனான் கோழிக்கூட்டுக்க லைட் அடிச்சுப் பார்த்தவன் உள்ளுக்க மேற்பக்கமாக பாக்கவேயில்லை, பார்த்திருந்தால் என்னையும் கொண்டு போயிருப்பாங்கள்' என்று முடித்தான். சிறிது நேரம் வரை இருந்து விட்டு பரா சென்று விட்டான்.
பரா வீட்டுக்கு 'அவர்கள் வந்து தேடியது யாரை? நான் அங்கு போனதை மோப்பம் பிடித்து விட்டனரா? அல்லது யாராவது பரா வீட்டில் தங்கலாம் என்ற பொதுவான சந்தேகமா? எனக்கு உறுதியாக முடிவு செய்ய முடியவில்லை. இன்னமும் நிறைய எச்சரிக்க்ை வேண்டும் என்றும் மனம் கூறியது. முத்துராசா தனது முந்திரிகைத் தோட்டத்தில் அன்று முந்திரிகைக்கொடிகளின் கிளைகளை வெட்ட இருப்பதாகவும் என்னையும் அதில் வேலை செய்யும் ஆள் போல் காட்டிக் கொண்டு வேலை செய்யுமாறும் கூறினார். அவரது வீட்டோடுதான் அந்த பரந்த முந்திரிகைத் தோட்டம் இருந்தது.
முந்திரிகைத் தோட்டத்தின் இறுதிப் பகுதியில் நின்று இருவரும் வேலை செய்து கொண்டிருந்தோம். மத்தியான வேளை யின் போது 'ராசாண்ணை’ 'ராசண்ணை’ என்று அழைத்துக் கொண்டு ஒருவர் முத்துராசாவின் வீட்டுக்கு வந்தார். நான் அவருக்கு எனது முகத்தை இயன்றவரை காட்டாது ஏதோ வேலை செய்து கொண்டிருப்பதைப் போல் நடித்துக்கொண்டிருந்தேன். வந்த நபரோ முத்துராசாவுடன் ஏதோ கதைத்துக் கொண்டே என் மீது அடிக்கடி தனது பார்வையை எறிந்து கொண்டிருந்தார்.
அந்த நபர் போனதும் முத்துராசா அவர் வந்து விடயத்தை கூறினார். வந்திருந்தவரின் தம்பி. என்ற இயத்தில் சேர்ந்திருப் பதாகவும் அவரைக் கைது செய்ய அவர்கள் பல தடவைகள் கடந்த இரண்டு தினமாக வந்து திரிகிறார்கள் என்றும் தம்பியோ தலை மறைவாக ஊருக்குள்ளேயே இருப்பதாயும் இந்நிலைமையில் என்ன செய்வது என்று ஆலோசனை கேட்கவே அந்த நபர் வந்ததாக

Page 18
செழியன் 28
கூறினார். என்னைப்பற்றிவந்தவர் ஏதும் அடையாளம்கண்டுபிடிச்சு உங்களிடம் விசாரித்தவரா? என்று நான்முத்துராசாவிடம் கேட்டேன். அப்படி ஒன்றும் விசாரிக்கவில்லை என்றும் அடையாளம் கண்டிருந்தாலும் அவர்களிடம் காட்டிக்கொடுக்கமாட்டார் என்றும் கூறினார். எனக்கு ஒரளவு திருப்தி ஏற்பட்டது.
மாலை நடேசர் வந்தார். நான் இருந்த கிராமத்துக்கு போன தாகவும் முக்கியமான ஒருரையும் சந்திக்க முடியவில்லை என்றும் கூறினார். பாலாவின் பெற்றோர்கள் அவர்களின் முகாமுக்கு போன தாகவும் பாலாவை விடுதலைச் செய்ய முடியாது என அவர்கள்' கூறியதாகவும் சொன்னார் கிராத்து மக்கள் பீதி அடைந்து நன்கு பயந்துபோய் இருப்பதாகவும் 'இயக்கங்கள் எல்லாம் மக்களை அரசியல் மயம்படுத்துகிறோம் என்று சும்மாபம்மாத்துதான் விட்டுக் கொண்டிருந்தவை. இண்டைக்குதங்கடசக்தியைகூடமக்கள்உணரா மல் கூனி பயந்து நடுங்குகிற அளவுக்குத்தான் நிலமை இருக்கிறது. நடந்து கொண்டிருக்கிற அநீதீயை எதிர்த்துப் போராட மக்கள் வீதிக்கு வருகிறார்கள் இல்லை’ என்று நடேசர் இயக்கங்ளையும் என்னையும் திட்டினார். எனது மனைவியைப் பற்றி தகவல் ஏதுமில்லை ஆனால் கவலைப்படவேண்டாம் என ஆறுதல் கூறினார்.
இரவு அருகில் இருந்த ஒரு குக்கிராமத்தில் மக்களோடு கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்து இருப்பதாய் நடேசர் கூறினார். முத்துராசாவும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ப தால் என்னையும் அவர்களோடு வரும்படியும் அன்று இரவு அக்கிரா மத்தில் தங்கலாம் என்றும் கூறினார்கள். அக்கிராமத்துக்கு போகிற வழியில் எந்த வீடுகளும் இல்லை என்பதால் பற்றைகளும், மேடு பள்ளமும் நிறைந்த பாதையில் பாதுகாப்பாக போய் வரலாம். நானும் வருவதற்குசம்மதித்தேன்.
நன்கு இருண்ட பின்னர் நாம் மூவரும் சைக்கிளில் புறப்பட் டோம். முத்துராசா என்னைதனது சைக்கிளில் ஏற்றினார். புதிய கிரா மத்தில் ஒரு குடிசை வீட்டில் எனக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. கலந்துரையாடல் சன சமூக நிலையத்தில் நடைபெற இருந்தது. கூட்டம் ஆரம்பமாகும் நேரம் வந்ததும் என்னை அங்கு விட்டு

29 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
நடேசரும் முத்துராசாவும் சென்றனர். கலந்துரையாடல் முடிந்து அவர்கள் வரும் போது நடுச்சாமம் கழிந்து விட்டது அதன் பின்பு அங்கு உணவு உண்டு விட்டு அங்கேயே நானும் நடேசரும் உறங்கினோம். மறுநாள்வருவதாக கூறிமுத்துராசா சென்றுவிட்டார். மறுநாள் இயக்கம் மோதல்களை நிறுத்தும்படியும் ஐக்கியத்தை வலியுறுத்தியும் சாத்விகமான முறையில் மக்கள் வீதி மறியல் போராட்டம் செய்ய முடிவு செய்து இருப்பதாய் நடேசர் கூறினார்.
16 Lorriras 1986
காலையில் எழுந்து தேனீர் அருந்தியதும் நடேசர் புறப்பட்டு போய் விட்டார். அன்று நடைபெற இருந்த வீதி மறியல் போராட் டத்திற்கான ஒழுங்குகளை அவர் கவனிக்க வேண்டி இருந்தது.
பலாலி வீதியினை வழிமறித்து இப்போராட்டம் நடக்க இருந்தது. இப்போராட்டத்தில் அக்கிராமத்துகூலிஉழைப்பாளர்கள் கலந்து கொள்ள இருந்தனர். அன்றாடம் உழைத்து அந்த உழைப்பி னால் கிடைத்த ஊதியத்தில் அரிசி, காய்கறி என்று வாங்கி பொழுது சாய்ந்த பின் அடுப்பில் பானையை ஏற்றிவைக்கும் மக்கள் கூட்டம் இது. ஒரு நாள் உழைக்காவிட்டாலும் அவர்கள் வயிறுகாய வேண்டி வரும். இத்தகைய நிலைமையிலும் முதல் நாள் இரவு முடிவு செய்து மறுநாள் காலை போராட்டத்தில் கலந்து கொள்ளதயாராகிவிட்டதே இந்தச் சின்னஞ்சிறு கிராமம்? இதில் ஆச்சரியப்பட் என்ன

Page 19
செழியன் 30
இருக்கிறது? மனித வரலாறு பூராவும் புரட்டிப் பாருங்கள் கொடுமை களை, அநீதிகளை அடக்குமுறைகளை எதிர்த்து ஆக்ரோஷமாக போராடியதெல்லாம் இத்தகைய மக்கள் தொகுதியே.
நான்தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர் எனக்காகபத் திரிகை வாங்கி வந்தார். ஈழமுரசு பத்திரிகை மட்டும்தான் கிடைத்தது என்று அன்றைய ஈழமுரசையும் முதல் நாள் ஈழமுரசையும் தந்தார். 16.12.86 செவ்வாய் ஈழமுரசு பத்திரிகை
1000முன்னணியினர்சரண்,ஆயுதங்களும்புலிகளிடம் உள்ளூர் தளபதி கபூர் பலி? என்ற தலையங்கத்துடன் வெளியாகியிருந்தது. மேலும் அச்செய்தியில் இரு போராளிக் குழுக்களுக்கிடையிலான மோதலில் இதுரைநூற்றுக்கு மேலான போராளிகள் மாண்டு போன தாகவும் இந்திய வானொலிச்செய்தியும், ஐம்பது பேர்வரைமாண்ட தாக பிபிசி செய்தியும் தெரிவித்தன என்ற குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே பத்திரிகையில் பின்வரும் செய்திகளும் இடம் பெற்றிருந்தன.
நமக்குள் மோதிக்கொள்வதுநிலைமையை மேலும்மோசமாக்கும். அமைச்சர் தொண்டா கருத்து. தமிழ் மக்கள் வாழ்கின்ற துன்பமான சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கென போராடிக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர் குழுக்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்வது தமிழ் மக்களை மேலும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கவே வழிவகுக்கும். ஒரு இலட்சியத்துக்காக போராடுபவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
மற்றோர்செய்தியில் கிளிநொச்சி, பரந்தன்பகுதிகளில் இடம் பெற்ற கோஷ்டி மோதலில் பரவலாக துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தன. பரதன் பகுதிகளில் மிகுந்த பதற்றம் காணப்படுகிறது. ஞாயிறன்றும் பரந்தனில் துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் காவல் புரிந்தனர். கடைகள் ஒற்றைக் கதவுடன் காணப்பட்டன.

31 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பேசித் தீருங்கள் : ஐக்கியம் பேணுக. குருநகரில் ஊர்வலம் மோதல்களைத் தவிர்க்க வற்புறுத்தியும் ஐக்கியத்தைப் பேணக் கோரியும் நேற்றுக்காலை ஒன்பது மணிக்கு குருநகர் சவக்காலைச் சந்தியில் இருந்து பொதுமக்களால் ஊர்வலம் ஒன்று ஆரம்பித்து நகர வீதிகளில் சென்றது. பெரும்பாலும் பெண்கள் கலந்து கொண்ட இவ் வூர்வலம் கடற்கரை, வீதியூடாக திரும்பவும் சவக்காலைச்சந்தியை அடைந்ததுடன் நிறைவு பெற்றது. நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்துக்கு எந்த விதமான பாதுகாப்பும் வழங்கப்படாமல் சுயாதீனமாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
15.12.86திங்கள் ஈழமுரசு பத்திரிகையில் பின்வரும் செய்திகள் இருந்தன.
புலிகளின் செயல் இந்தியா தலையிட வழிவகுக்கும். ஈரோஸ் நேற்று நள்ளிரவில் யாழ்ப்பாண நகரின் சில பகுதிகளில் பரவலாக துப்பாக்கி வேட்டுக்கள்தீர்க்கும் சத்தங்கள் கேட்டவண்ணமிருந்தன.
யாழ்ப்பாணம்நேற்றுஅமைதி, மானிப்பாயில் இரண்டு பேர்பலி சந்திகளில் கண்காணிப்பு ஆயுதம் தரித்த இளைஞர்கள் வீதிகளில் முக்கிய சந்திகளிலும் நின்று கண்காணித்தனர் மோட்டார் சைக்கிள் களிலும் மற்றும் வாகணங்களிலும் சென்ற இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். சில பகுதிகளில் ஆயுதம் திரித்த இளைஞர்கள் வீடுவீடாக சென்று விசாரித்தனர். இதே சமயம் வடக்கில் நடைபெற்ற மோதலில் பதினோரு பேர் கொல்லப் பட்டதாக இலங்கை வானொலி தெரிவித்தது.
அவர்கள்’ பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட மறந்து விட்டனர். இதனால் பத்திரிக்கையில் ஒரளவு செய்திகள் வெளியாகி இருந்தன. இச்செய்திகளின் மூலம் மக்களுக்கு சில உண்மைகள்புரிய வாய்ப்பு ஏற்படும் என்று நினைத்தேன்.
அன்று பொழுது சாய்ந்ததும் மறியல் போராட்டத்தினை முடித்துக் கொண்டு முத்துராசா, பரா, யாழ் பல்கலைக் கழக மாணவரும் எனது இன்னோர் நண்பருமான ராம் ஆகியோருடன்

Page 20
செழியன் 32
அவர்களால் தேடப்படும் குலம் என்ற நண்பரும் வந்தனர். வீதி மறியல் போராட்டம் அமைதியாக நடைபெற்றதாகவும் ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாய் 150க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்றும் கூறினர்.
வீதிமறியல் போராட்டத்தின் போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றதாகக் கூறினர். அவர்களால் தேடப்பட்ட ஒரு இளைஞன் (வயது 18 இருக்கலாம்) வீதியால் 'சேட்" இல்லாமல் ஓடி வந்துகொண்டிருக்கிறான். வீதியில் நடந்து கொண்டிருந்த போராட் டத்தினைக் கண்டதும் அதற்குள் புகுந்து தன்னைக் காப்பாற்றும்படி கேட்டிருகிறான். மக்களோடு மக்களாக அவனை நமது நண்பர்கள் மறைத்து விட்டனர். அந்த இளைஞனைப் பின்தொடர்ந்து வந்த தாயோ “எனது மகனைக் கண்டீர்களா?’ என்று ஒப்பாரி வைத்து அழுது புலம்பியிருக்கிறாள். தாயின் ஒப்பாரியால் மகன் பிடிபட்டு விடலாம் என்ற நிலமை ஏற்பட்டு விட்டது. பிறகு ஒருவாறு தாயை சமாளித்து இப்படி சத்தம் போட்டு மகனைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் எனக் கூறி தாயின் அழுகையை நிறுத்தியுள்ளனர். எனது நண்பர்களின் பாதுகாப்பில்தான் தனது மகன் இருக்கிறான் என்பதை அறிந்த தாய் தான் மகனின் "சேட்டை" கொடுத்துவிட்டு 'மகனை கவனமாக பாதுகாக்கும்படி” கூறி விட்டுப் போய்விட்டாள்.
"அவர்களிடமிருந்து'தப்பி ஓடி வந்து எனது நண்பர்களிடம் தஞ்சம் புகுந்த இளைஞன் ஒரு தகவலையும் கூறியுள்ளான். அந்த இளைஞன். என்ற இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் அவர்கள்’ நமது முகாமைத்தாக்க வந்தபோதுதான் தனது துப்பாகியுடன் தப்பி ஓடியதாகவும் அந்த துப்பாக்கியை ஒரு பற்றை மறைவில் ஒளித்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளான் ராம், குலம் ஆகிய இருவருக்கும் அந்த இளைஞன் ஒளித்து வைத்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று விபரீத ஆசை ஏற்பட்டது. "வேண்டாம்' என்றும் 'தேவையில்லாத வேலை" என்றும் 'ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதைப் போன்ற செயல்’ என்றும் நானும் முத்துராசாவும் பலமாக ஆட்சேபித்தோம். எமது கருத்தையே பராவும் ஆமோதித்தான். ஆனால் அந்தத் துப்பாக்கியை நாம் எடுக்கா

33 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
விட்டால் அது 'அவர்கள் கைக்குப் போய்விடும். 'அவர்களின்’ கைகளில் துப்பாக்கிகள் போய் சேரக்கூடாது. அதைத் தடுக்க வேண்டும் என்று ராமும் குலமும் பிடிவாதமாக இருந்தனர்.
நாம் உரையாடிக் கொண்டிருக்கையில் நடேசரும் வந்து சேர்ந்தார். அவரும் ராம், குலம் ஆகியோரின் கருத்தை கண்டித்தார். இரவுகளில் அவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்றும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வருகையில் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேரிட்டால் பின்னர் உயிருடன் மீள்வது என்பதே கேள்விக்குறியானதாய் போய்விடும் என்றும் எச்சரித்தார். ஆனாலும் ராமும், குலமும் தமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களின் கையில் நாம் மாட்டிக் கொள்ளாமல் வந்து விடுவோம் என்று பீற்றிக் கொண்டனர். எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் ராமும், குலமும் பற்றைகளின் மறைவில் ஒளித்து வைக்கப்பட்டதுப்பாக்கியை மீட்டு வருவதற்காக சைக்கிள் ஒன்றில் சென்றனர்.
அன்று இரவு இந்தக் கிராமத்தில் தங்குவது உசிதமானதாக எனக்குப் படவில்லை. வீதிமறியல் போராட்டம் இக்கிராமத்து மக்களால் நடத்தப்பட்டதால் 'அவர்களின் கவனம் இந்தக் கிராமத்தின் மேல் திசை திரும்பி இருக்கும். எனவே நானும் நடேசரும் முத்துராசாவுடன் அவரது இருப்பிடத்திற்கு சென்றோம். நாம் இவ்வாறு முத்துராசா வீட்டிற்கு செல்வதை ராம், குலம் இருவருக்கும் கூறி இரவு எந்த நேரம் திரும்பினாலும் அங்கு வந்து சேரும்படி கூறியிருந்தோம்.
முத்துராசா வீட்டடியில் இருந்த புனைவடலிக்குள் பாய்களை விரித்து நாம் மூவரும் படுத்துக் கொண்டோம். நடுச்சாமம் கடந்துவிட்ட போதும் ராமும் குலமும் வந்து சேரவில்லை. அது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எப்படியோ அன்றைய இரவும் ஒருவாறு கழிந்தது.

Page 21
17 மார்கழி 1986
விடிந்த பின்னரும் கூட துப்பாக்கி மீட்கச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களிடம் இருவரும் சிக்கி விட்டார்கள் எனறே மனம் கூறியது. நடேசரும் அவ்வாறே நினைத்தார். அந்த இரண்டு நண்பர்களையும் நினைத்து மனம் துக்கித்தது. இவர்களது உணர்ச்சிவசப்பட்ட நடத்தையை எண்ணி கோவம் ஏற்பட்டாலும் அவர்களிடம் சிக்கி விட்டார்களே என்று நினைக்கையில் வேதனை ஏற்பட்டது. தகவலகளை அறிந்து வர நடேசர் புறப்பட்டு சென்றார்.
நண்பகலுக்குப் பின்னர் நடேசர் திரும்பி வந்தார். புதிய செய்திகள் கொண்டு வந்திருந்தார். எனது மனைவியின் தாயார் யாழ்ப்பாணம் வந்து விட்டார் என்று கூறினார். எனக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. எனது மனைவியின் விடயங்களில் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவுக்கு இவர் கவனித்துக் கொள்வார் என்று நினைத்தேன். அடுத்து ஒரு சிறுகடிதத்தை நடேசர் என்னிடம் தந்தார். கடிதத்தை பிரித்து வாசித்தேன். 'நிலைமைகள் மிக மோசமாய் உள்ளன. இந்த நிலைமைகளுக்குள் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயன்றவரையிலான ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளேன். உடன் என் மனைவியுடன் தொடர்பு கொள்ளவும்.’’ இப்ப்டிக்கு சூரியன்.

35 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
கடிதத்தை வாசித்ததும் எனக்குஆச்சரியமும் அத்துடன் சந்தோஷமும் ஏற்பட்டது. எவ்வாறு இந்தக் கடிதம் நடேசரின் கைக்கு வந்தது. எனக்கு ஆச்சரியமும் பாதுகாப்பான ஒரு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என சந்தோஷமும் ஏற்பட்டது.
13ம் திகதி இரவு நான் எனது மனைவி மூலமாக என் நண்பன் சூரியனுக்கு அனுப்பிய செய்தியை அடுத்து, பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு கார் ஒன்றின் மூலமாக தப்பிச் சென்ற சூரியன் தனது மனைவியின் மூலமாக இந்தச் செய்தியை எனக்கும் எமது நண்பர் களான ஜெகன், பரதன், மணி, பாலாஆகியோயருக்கு அனுப்பியிருந் தனர். சூரியனின் மனைவி நான் தங்கியருந்த கிராமத்துக்கு சென்று அங்கு இருந்த எனது மனைவியின் தம்பியுடன் தொடர்பு கொண்டுள் ளார். பின் மனைவியின் தம்பி மூலமாக செய்திகள் பரதன், மணி, ஜெகன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது. நான் இருக்கும் இடம் அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் சுமார் 24 மணி நேரமாக இச்செய்தியை என்னிடம் சேர்பிக்க முடியவில்லை. தற்செயலாக நடேசரைச் கண்ட எனது மைத்துனன் இந்தச் செய்தியை அவசரமாக என்னிடம் சேர்பிக்கவேண்டும் என்றும் ஆனால் நான் எங்கே இருக்கிறேன் என்பதை அறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அச்சமயத்தில்தான் நடேசர் அக்கடித்தை என்னிடம் சோர்ப்பதாக்கூறி வாங்கி வந்தார். கடிதத்தில் இருந்த விடயங்களை விட வேறு தகவல் களையும் நடேசர் கூறினார்.
பரதன், மணி, ஜெகன் ஆகியோர் செய்தி கிடைத்ததும் சூரிய னின் ஏற்பாட்டின்படி குறிப்பிட்ட பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டனர் என்றும் நான் மட்டும் தான் மிஞ்சியுள்ளேன் என்றும் கூறினார்.
சூரியன் குறிப்பிடுவதைப் போல இந்த ஒழுங்கு உண்மை யிலேயே எவ்வளவு தூரத்திற்கு பாதுகாப்பானது என எனக்குத் தெரியவில்லை. 'இந்த இடம் எங்கே இருக்கிறது? பாதுகாப்பானது தான் என நீங்கள் கருதுகிறீர்களா?' என நான் நடேசரைக் கேட்டேன்.
இந்த இடம் எங்கே இருக்கிறது என எனக்கும் தெரியாது. ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பின்னணியில் இருக்கும் சூத்

Page 22
செழியன் 36
திரதாரி எக்ஸ் என அறிவதாயும், எனவே அவர் ஏற்பாடு செய்கின்ற இடம் பாதுகாப்பானதாய் இருக்கும் என நடேசர்கூறினார்.
எக்ஸ் என்பவரிடமே நண்பன் சூரியன் பாதுகாப்பாய் உள்ளான் என்பதையும் அவரிடமே நானும் போய்ச் சேர வேண்டும் என்றும் அறிந்த போது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் துளிர்ந்தது. ஆனால் மிக இலேசாக அங்கு போக முடியாதே? அவர்களின் கண் காணிப்புகளும், சென்றிகளுக்கும் இடையில் எப்படிப் போய்ச் சேருவது? இதை நினைத்ததும் எனக்கு சோர்வு மட்டுமல்ல அச்சமும் ஏற்பட்டது.
அடுத்த நடவடிக்கைகளைப் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டு மறுபடியும் என்னை வந்து சந்திப்பதாக கூறி நடேசர் சென்றார். எக்ஸ் என்கின்ற பெரியவரைப் பற்றி இங்கு சற்று குறிப் பிட்டாக வேண்டும். இவர் என் நண்பன் சூரியனுக்கும் அவனது குடும்பத்திற்கும் மிகவும் வேண்டப்பட்டவர். ஒரு மதகுருவும் ஆவார். சூரியனுடன் சென்று அவரை சில தடவைகள் சந்தித் திருக்கிறேன். மிகுந்த மனிதாபிமானி. ஒரு சந்தர்பத்தில் 'அவர் களால் தேடப்பட்ட அப்பாவி இளைஞர்கள் சிலர் இவரிடம் உயிர் பிச்சை கோரி தஞ்சம் அடைந்த போது அவர்களைப் பாதுகாத்து அனுப்பியதாக அவரே ஒருதடவை நம்மிடம் கூறியிருந்தார். பொருள் மீது ஆசையோ சுயநல நோக்கங்களோ அற்ற ஒரு மனிதர். எப்போதும் நன்மையையே செய்ய விரும்பும் உள்ளம் கொண்டவர். ஒரு தந்தையைப் போன்ற மதிப்பை எனது மனதில் பெற்றிருந்தார்.
மாலை மறுபடியும் நடேசர் வந்தார். எனது மைத்துணனை சந்தித்தாயும் என்னை அழைத்துச் செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அன்று இரவே நான் புறப்பட வேண்டும் என்றும் கூறினார். ஏற்பாடு செய்யப்பட்ட ஒழுங்கின்படி நடேசர் என்னை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சரியாக இரவு எட்டு மணிக்கு. என்ற இடத்தில் இருக்கின்ற வாசிகசாலையடிக்கு வர வேண்டும். நேரம் முந்தவோ பிந்தவோ கூடாது. எனது மைத்துனரின் நண்பன் ஒருவன் நாம் செல்வதற்கு முன்பாகவே அந்த வாசிககாலையில் பத்திரிகை வாசிப்பதைப் போல நடித்துக்கொண்டு

37 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
நிலைமைகளை நோட்டம் விட்டுக் கொண்டு இருப்பான். நாம் சென்றடைகின்ற அதே நேரம் இரவு எட்டு மணிக்கு எனது மைத்து னன் அங்கு வந்து என்னைசைக்கிளில் ஏற்றிக்கொண்டு அண்மையில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் செல்வான். அங்கு நான் போய் சேர்ந்து விட்டேன் என்ற தகவல் கிட்டியதும் நண்பன் சூரியனின் மனைவி, பெரியவர் எக்ஸ் ஆகியோர் கார் ஒன்றின் மூலமாக வந்து என்னை அழைத்துச்செல்வார்கள். பெரியவர் எக்ஸ் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் நடேசர் கூறினார்.
ஏற்கனவே மிக மிக முக்கியமான ஒரு கடமை காரணமாக எக்ஸ் கொழும்புக்கு போயிருக்க வேண்டும். ஆனால் நண்பன் சூரியனுக்கு உதவுவதற்காகவும் பின்னர் சூரியனின் வேண்டு கோளுக்கு இணங்கதமது நண்பர்கள் சிலருக்கு உதவுவதற்காகவுமே அவர் தனது பயணத்தை சில தினங்கள் ஒத்திப் போட்டிருக்கிறார். கடைசியாக என்னையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்று விடுவதற்காகவே அவர் காத்திருக்கிறார். அன்றிரவு தான் கடைசி நாள். அன்றிரவு நான் போய்ச் சேராவிட்டால் பிறகு எக்ஸ் கொழும்புக்கு போய் வந்த பின்னர் தான் என்னை அழைத்துக் கொள்ள முடியும். கொழும்புப் பயணத்தை எக்ஸ் மேலும் ஒத்திப் போடமுடியாது. காரணம் பயணக்காலம் தாமதமாகி அதனால் ஏதும் பாதகமான விளைவு ஏற்பட்டால் எக்ஸ் மீது இவரது மேலிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம்.
பெரியவர் எக்ஸ் ஒரு தனி நபரல்லவே பலருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு உள்ளவர்அல்லவா? தன்னுடைய நிலைமையை எக்ஸ் சூரியனுக்கு தெளிவாக கூறிவிட்டார். எனவே அன்றிரவு எப்படியும் நான் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேர்ந்தே ஆக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டேன். இரவு சுமார் ஏழு மணிக்கு நானும் நடேசரும் புறப்பட்டடோம். முத்துராசா மற்றும் குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். அன்பாகக் கட்டித் தழுவி விடை தந்தார் முத்துராசா. மறுபடியும் முத்துராசாவை நான் சந்திப்பேன் என்று நான் நம்பவில்லை. முத்துராசாவும் நம்பவில்லை. அப்படியான சூழ்நிலைதான் யாழ்ப்பாணத்தில் உருவாகி இருந்தது.

Page 23
േ 38
என்னை சைக்கிளின் முன்பக்கமாக ஏற்றிக்கொண்டு நடேசர் சென்றார். முதல் நாள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று இறங்கி னோம். அங்கு நடேசர் செய்த ஒழுங்கின் படி இந்த கிராமத்து இளைஞன் பாபு காத்திருந்தான். நடேசர் பாபுவிடம் சந்திவரை சென்று நிலைமையை அவதானித்து வருமாறு கூறினார். பாபு சைக்கிளில் சென்றான். சுமார் பத்து நிமிடத்தில் திரும்பி வந்து சுமூகமான நிலைமை இருப்பதாகவும் 'அவர்களின் நடமாட்டம் ஒன்றும் இல்லை எனவும் சனங்கள் அங்கும் இங்கும் சைக்கிள் களிலும் நடந்தும் நடமாடுவதாயும் இந்த நேரத்தில் நாம் பாதுகாப் பாக போய்ச்சேர்ந்து விடலாம் என்றும் கூறினான்.
நாம் புறப்பட்டோம். சாதாரணமாக யாரோ இரண்டு பொதுசனம் சைக்கிளில் செல்வதைப் போல சம்பாஷணை செய்து கொண்டு மெதுவாக சென்றுகொண்டிருந்தோம். எமது சைக்கிளுக்கு 200 யார் முன்பாக சென்ற பாபு இடையிடையே தனது சைக்கிளை நிறுத்தி 'பிரச்சனை இல்லை போகலாம்' என்று கூறினான். பின்னர் எங்களை முந்திக்கொண்டு போய் வேறொரு இடத்தில் சைக்கிளை நிறுத்தி 'போகலாம்' என எமக்கு சைகை காட்டுவான். நாம் ஏற்கனவே பாபுவிடம் கூறி இருந்த இடம் வரை இவ்வாறு பாபு எமக்குத்துணையாக வந்துவிட்டுத்திரும்பிவிட்டான்.
இந்தப் பயணத்தில் நான் பிறந்து வளர்ந்த எனது ஊரையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. பிரதான ரோட்டின் ஊடாக செல்லாமல் எமது ஊரின் உள் வீதிகளின் ஊடாகச் சென்றோம். செல்லும் வழியில் ஒரு சனசமூக நிலையமும் இருந்தது. கிராமத்து இளைஞர்கள் பெரியவர்கள் முன்றலில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர். யாரும் எம்மைக் கவனிக்கவில்லை. எமக்குத் திருப்தியாக இருந்தது. முன்னிருட்டும் எமக்கு நல்ல வசதியாக இருந்தது.
புறப்பட முன்னர் எனக்கு உண்மையிலேயே சற்று மனம் பதட்டமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது எனக்கு திருப்தியாக இருந்தது. எப்பிடியும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது.

39 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
ஒழுங்கைகளினூடாக சென்றுகொண்டிருந்த எமது சைக்கிள் கோப்பாய் - மானிப்பாய் ரோட்டில் சென்று ஏறியது. இந்த ரோட்டில் ஒரு ஐந்து நிமிடம் கடந்தால் எமது ஊரையே கடந்து விடுவோம். அதற்குப் பிறகு வீடுகளும் சனநடமாட்டமும் இல்லாத பிரதேசம். பற்றைக்காடுகளும் நிறைய இருக்கிறது. ஏதாவது வாகனம் வருகிறது என்றால் கூட தூரத்திலேயே தெரிந்து விடும். சுலபமாக மறைந்து கொள்ளலாம். எனக்கு திருப்தி ஏற்பட்டது. இந்தத் திருப்தி ஒரு நிமிஷம் கூட நீடிக்கவில்லை.
கோப்பாய் - மானிப்பாய் ரோட்டில் ஏறிய எமது சைக்கிள் ஒரு ஐம்பது அடிதூரம் கூட போயிருக்காது. சுமார் ஐநூறு யார்தூரத்திற்கு அப்பால் ரோட்டின் ஓரமாக ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மினிவேனின் முன்லைட்டுக்கள் இரண்டும் பளிர் என்று எரிந்தன. எனக்கு மூச்சு நின்று விடுமாப் போல் அதிர்ச்சி ஏற்பட்டது. அது 'அவர்களின் மினிவேன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் ஏற்படவில்லை.
அந்த மினிவானில் இருந்து வந்த லைட் வெளிச்சம் மிகப் பிரகாசமாக நீண்ட தூரம் வந்து தாக்கியது. அவர்கள் தான் என்று அறிவுக்கு எட்டிய கணம் அந்த மினிவேன் நிறுத்தியிருந்த இடத்தி லிருந்து புறப்பட்டு கோப்பாய் - மானிப்பாய் ரோட்டில் எம்மை நோக்கிய திசையில் வந்தது.
"அவர்கள்'தான் வருகிறார்கள் இனி ஒன்றும் செய்ய இயலாது பதட்டப்படாமல் சைக்கிளை ஒட்டுங்கள்’ என நான் நடேசருக்குக் கூறினேன். ஏற்கனவே 'அவர்களின் வாகனம் தான் அது என்பது நடேசருக்கும் தெரிந்து விட்டது என்பதை அவரது சைக்கிளில் தெரிந்த பதட்டம் திடீரென எமக்கிடையில் ஏற்பட்ட அமைதி என்பன புரியவைத்தன.
'கண் இமைக்கும் நேரம்,” “மின்னல் அடித்தாற் போல** என்றெல்லாம் சொல்லுவார்களே அப்படியான சூழ்நிலைதான் இது. வேறு மார்க்கமே எமக்கில்லை. அவர்கள்’ எங்களைக் கடந்து சென்றே ஆக வேண்டும். கடந்து செல்கின்ற போது என்னைக் கவனிக்காமல் சென்றால் (அதிஸ்டம் ஏதாவது இருந்தால்) தப்பினேன் இல்லையேல் தொலைந்தேன்.

Page 24
செழியன் 40
எமது சைக்கிளுக்கு முன்பாக சில அடி தூரத்தில் இரண்டு மூன்று சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தன. மினிவேன் வேகமாக சீறிப்பாய்ந்து வந்தது. அதில் இருந்து வந்த லைட் வெளிச்சம் கண்ணுக்குள் விழுந்து கண்ணைக் கூசச் செய்தது. கண்ணுக்குள் லைட் வெளிச்சம் செல்வதைத் தடுப்பது போன்ற பாவனையுடன் எனது ஒற்றைக் கையால் எனது முகத்தை லேசாக மறைத்துப் பிடித்தபடி குனிந்தேன். வாகனம் எங்களைக் கடந்தது. கடந்து சென்ற வாகனம் பிரேக் அடித்து நிற்கின்றதா என முகத்தைத் திருப்பாமல் காதை மட்டும் கூர்மையாக்கி அவதானித்தேன். எங்களைக் கடந்து சில அடி தூரம் சென்ற மினிவேன் 'சடார் என பிரேக் அடித்து நின்ற சத்தம் கேட்டது. எனது தலைக்குள் மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்ச்சி. நடேசருக்குப் புரிந்து விட்டது. என்னை அடையாளம் கண்டு தான் அவர்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர் எனப் புரிந்து கொண்டு சைக்கிளை வேகமாக ஒட்ட முற்பட்டார். ஆனால் சாதாரண வேகத் தில் வந்தசைக்கிள் திடீரென வேகமாக ஓடாது. அப்படி வேகமெடுக்க சிலகண நேரம் எடுக்கும். ஆனால் அதற்குள் அவர்கள் வந்து பிடித்து விடுவார்கள். எனவே அவரது சைக்கிளில் இருந்து குதித்து ஒடுவது நல்லது என்று மூளை சொல்லியது. அவரது கையைத் தட்டி விட்டு கீழே குதித்தேன். எனது எண்ணத்தைப் புரிந்து கொண்டுதான் என நினைக்கின்றேன் நடேசரும் கையை எடுத்து வசதி செய்தார். கதைப்பதற்கெல்லாம் நேரம் இருக்கவில்லை.
சைக்கிளில் இருந்து குதித்து ரோட்டில் ஒடத்தொடங்கிய நான் வேனைத்திரும்பிப் பார்த்தேன். அதுவரையில் நிறுத்தி லைத்திருந்த வாகனத்திலிருந்து ஒருவரும் இறங்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன். எனக்கு அது சில கண நேர அவகாசத்தை கொடுத்து விட்டது. ஒடினேன் ஒடும்போது ரோட்டுக் கரை வேலிகளைப் பார்த்தபடியும் ஒடினேன்.
தொடர்ந்து நீளத்திற்கு ஒட முடியாது தானே. ஏதாவது உயரம் குறைந்த, ஒரே பாய்ச்சலில் பாயக்கூடியவாறு வேலி இருந்தாலோ, ஏதாவது ஒரு படலை திறந்து கிடந்தாலோ புகுந்து ஓடி விடலாம். வசதியான ஏதாவது நிலைமையை எதிர்பார்த்து ஓடினேன்.

41 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
எனக்கு முன்பாக போன சைக்கிள்களையும் நான் தாண்டி ஒடினேன். பின்னாலும் பல சைக்கிள்கள் வந்துவிட்டன எனத் தெரிந்தது. அப்போது 'டேய் ஓடாதே' 'ஒடினால் சுடுவோம்' 'அவனைப்பிடி’ 'வாகனத்தைத் திருப்படா’ என்றெல்லாம் பல சத்தங்கள் கேட்டதுடன் பலர்திபுதிபு’ என ஓடி வருவதும் கேட்டது.
ஓட்டத்தை நான் நிறுத்தவில்லை. ஒழுங்கை ஒன்று குறுக் கிட்டது. அதற்குள் நான் திரும்ப எத்தனிக்கும் போது 'டுமீல்" என்று துவக்கால் சுடும் சத்தம் கேட்டது. 'சர்' என்று குண்டு புகைந்தபடி என்னைக் கடந்தது. ஒரு தடவையல்ல இரண்டு மூன்று தடவை சுட்டார்கள். நான் ஒழுங்கையில் திரும்பி ஓடினேன். 'அவர்கள்' என்னை நெருங்கிவிட்டார்கள் என்பதை உணர்ந்தேன். ஒழுங்கை யால் தொடர்ந்து ஒட முடியாது. ஒடினால் என்னை சுலபமாக குறி பார்த்துச் சுடுவார்கள். எனவே ஒடியபடி ஏதாவது வேலியால் பாய லாமா என்று பார்த்தேன். பாயக்கூடியவாறு வேலி இல்லை. ஒரு வீட்டின் இரும்புக்கேற்கண்ணில் பட்டது. ஆனால் என்துரதிஷடம்? அது பூட்டிக் கிடந்தது. என்னாவது இனி நடக்கட்டும் என்று அப்படியே அங்கு நின்றேன்.
நான்நின்று கொண்டிருந்த வீட்டின் கேட், ஒழுங்கையிலிருந்து இரண்டு அடி உட்புறம் தள்ளி இருந்தது. இதனால் ஒழுங்கையின் ஆரம்பத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு நான் அங்கு நிற்பது தெரியாது. அவர்கள் ஒழுங்கையால் ஓடி எனக்குக் கிட்ட வரும் போது தான் என்னைக் காண்பார்கள். அவர்கள் வரும் வரை அங்கு நிற்பது எனத் தீர்மானித்தேன். எனக்கு மூச்சு வாங்கியது. உடம்பு நடுங்கியது. எவ்வளவு கஷ்டப்பட்டு இத்தனை நாட்களா பாதுகாப்பாக இருந்து விட்டு கடைசியில் வலியப் போய் அவர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டேனே என எண்ணும்போது ஆற்றாமை ஏற்பட்டது. இன்னமும் கொஞ்சம் அவதானமாக இருந்திருந்திருந்தால் 'அவர்களிடம் பிடிபட்டிருக்கமாட்டேன் என்று நிைைனக்கும் போது எனக்கு கண்ணிரே வந்து விட்டது. இனி என்ன? அடிப்பார்கள், சித்திரவதை செய்வார்கள் கடைசியில் கொண்றுவிடுவார்கள் அவ்வளதான்.

Page 25
செழியன் 42
நான் ஓடிவந்த ஒழுங்கையின் முகப்பில் ஒருவன் நின்று 'இதாலேதான் ஓடிவனவன்' என்று கத்தியபடி ஓடிவந்தான். இன்னும் சில கணநேரத்தில் என்னை கண்டு விடுவான் என மனதை திடப்படுத்திக் கொண்டு மரணத்தை எதிர்கொண்டு கால்கலை நிலத்தில் நிலைப்படுத்தி நிமிர்ந்து நின்றேன். என் ஒரு ஆச்சரியம்? என்னுடைய லேசான அசைவினால் அந்த இரும்பு கேட் சத்தமின்றி திறந்து கொண்டது. மேலும் "கேட்டை அகலமாக திறக்க முயற்சிக்க வில்லை . திறந்து கிடந்த இடைவெளிக்குள் புகுந்து சென்றேன். இப்போ நான் அந்த வீட்டின் முன்பாக நின்றேன்.
அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அடக்கமான ஒரு வளவு, சிறிய கல் வீடு வீட்டைச் சுற்றி நான்கு புறமும் வேலி "கேட்” மட்டும் இரும்பினால் ஆனது. அந்த கேட்ட்ை நிலைநிறுத்த சிமென்ட்டின்ாலான கொங்கிரிட் கற்கள். |
வீட்டின் முன்புறமான கூரையில் உயரமாய் நீட்டிக் கொண்டு ஒரு மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் முன்புறம் ஒருவரும் இல்லை இரவு நேரம் வீட்டின் கதவும் சாத்திக் கிடந்தது. நான் என்ன செய்வது என்று புரியாமல் வீட்டின் ஒருபுற வேலிக்கரை யோரமாய் ஒடிப்போய் படுத்தேன். நான் ஓடிவந்த ஒழுங்4கையுைம் வளவையும் பிரிக்கும் வேலி அது. வீட்டின் முன்புறம் இருந்த மின் விளக்கின் ஒளி என்மீது விழுந்து கொண்டிருந்தது.
தட" "தட' என இப்ப ஒழுங்கையால் பலர் ஓடி வந்தனர் முதல் ஒடிவந்தவன் ஒழுங்கையில் நேராக ஒடிப்போய்க்கொண்டிருந் தான். சிலர் ஒழுங்கையின் முகப்பில் நின்று கொண்டிருந்தனர். நான் நின்று கொண்டிருந்த வீட்டின் இரும்புக் கேட்டை காலால் இடித்துத் தள்ளிக் கொண்டு துப்பாக்கியும் கையுமாய் தலைதெறிக்க ஓடிவந்த ஒருவன் வீட்டின் பின்பக்கமாக ஓடினான். அவன் முன்பக்கம் பார்க்க வில்லை. பார்த்திருந்தால் என்னை நிச்சயமாக கண்டிருப்பான். மறுபடியும் ஒரு முறை நான் பிழைத்தேன். பின் புறம் சென்றவன் மறுபடியும் முன்பக்கமாக வரும் முன் எப்படி நான் மறைவது. நான் ஏறக்கூடியவாறு அடர்ந்த மரம் ஏதும் இருந்தால் ஏறலாம். ஆனால் அப்படி ஒன்றும் இருக்கவில்லை. வேலி ஏறிக்குதித்தால் ஒருபுறம்

43 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
ஒழுங்கை, அடுத்த வேலி ஏறினால் நான் வந்த கோப்பாய் - மானிப்பாய் வீதி. இரண்டு பக்கமும் அவர்கள் நின்று கொண்டிருந் தார்கள். மூன்றாவதான பின்பக்கமும் அவர்களில் ஒருவன் நிற்கி றான் நான்காவது பக்கமாக இருந்தது கேட்டுக்கு நேர் எதிர் திசைப் பக்கம். அதை அடைய சில நிமிடம் எடுக்கும். அதற்க்குள் அவன் வந்து விடுவான். அப்படியானல் என்ன 'அவர்களின் கையில் அகப்படுவதா? கூடாது நான்காவது பக்கம் ஒடுவதற்காக எழுந்த கண்ணில் அது தட்டுப்பட்டது.
அந்த வீட்டின் நான்கு புறமும் கிடுகு வேலியால் ஆனது என்றும் "கேட்" மட்டும் இரும்பினால் ஆனது என்றும் குறிப்பிட் டேன். அந்த இரும்புக் கேட்டை நிறுத்த கொங்கிரிட்தூண்கட்டியிருந் தார்கள். எப்போதாவது வீட்டை சுற்றியுள்ள வேலியை அகற்றி விட்டு மதில் கட்டவேண்டும் என்ற நோக்கம் அந்த வீட்டுக்காரர் களுக்கு நிச்சயமாய் இருந்தது. அதனால் அந்த கொங்கிரிட் தூணி லிருந்து ஒரு அடுக்கு சீமெண்டுக்கற்கள் ஆரம்பமாகி இருந்தன. அந்த சீமெண்ட்டு கற்களுக்கும் கிடுகு வேலிக்கும் இடையில் சிறு இடை வெளி. ஒரு ஆள் நிற்க்கலாம் போல் தோன்றியது. அடுத்த கணே அந்த இடைவெளிக்குள் நின்றேன்.
நான் நின்றுகொண்டிருந்த இடத்தை "கேட்” அடியில் இருந்தோ, வீட்டின் வாசலில் இருந்தோ பார்த்தால் காணமுடியாது. ஆனால் வீட்டின் முன்புறமாக சுமார் 10அல்லது 15அடிதூரம் சென்று நின்று பார்த்தால் என்னைக் கண்டு விடலாம்.
இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது. இரும்பு கேட்டைத் தள்ளிக்கொண்டு மற்றொருவன் துப்பாக்கியோடு வந்தான். வந்தவன் வீட்டின் வாசலை அடைந்து கதவைத் தட்டி னான். கதவு பூட்டியிருந்தது. கதவை பலமாக இடித்தான். அதே நேரம் பின்புறம் சென்றவன் திரும்பி வந்தான்.
"யார்கதவை இப்படி இடிக்கிறது’ என்று கூறிக்கொண்டு ஒரு வயதான அம்மா கதவை திறக்க ஒருவன் வீட்டுக்குள் புகுந்து சீென்றான் துப்பாக்கியும் கையுமாய் நின்றவர்களையும், ஒருவன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைவதையும் கண்டு அந்த வயதானதாயார் திகைத்துநின்றார்.

Page 26
செழியன் 44
"யார் நீங்கள்?? "ஏன் வீட்டிற்குள்ளே போறியள்’ 'அம்மா பயப்படவேண்டாம் ஒரு ஆளைத் தேடுறம்." "அதுக்கு ஏன் எங்கட வீட்டை வாறியள்’ "இந்த பக்கமாகதான் ஓடினவன்" "எங்கட வீட்டை ஒருத்தரும் வரேல்லை’ ஒரு பெண்ணின் குரலும் கேட்டது.
'அக்கா உங்களுக்குத் தெரியாமல் யாரும் வந்து ஒளிந்திருக் கலாம்"
'வீடு பூட்டியெல்லே கிடந்தது' தாயின் குரல் சினமாக ஒலித்தது.
"எங்க அவனை ஒளிச்சுவச்சிருக்கிறியள்’ வீட்டுக்குள் அத்து மீறிச் சென்று சோதனை செய்து விட்டு வந்தவன் அந்த தாயையும் மகளையும் பார்த்துகத்தினான்.
"நாங்கள் ஒருத்தரையும் ஒளிக்கல்ல. நீங்க வீட்டை விட்டு போங்க'தாயார் கத்தினாள்.
"அம்மாசும்மாஇருங்கோ' துப்பாக்கியோடு நிற்பவர்கள்தாய்க்கு ஏதும் செய்து விடலாம் என்ற அச்சம் போலும். மகளின் குரல் பரிதாபமாய் ஒலித்தது. இந்த களேபரத்தில் வீட்டுக்குள் எங்கோதுங்கிகொண்டிருந்த நாய் குட்டி ஒன்று குலைத்தப்படி வெளியே வந்தது. "சீ அங்கால போ’ நாய் குட்டியை அந்த அக்காதுரத்திவிடவும் அது விடாமல் குலைத்தது.
ஒரு வண்ணாத்தி பூச்சியாய் இருக்கலாம். கூரையிலிருந்த மின் விளக்கின் ஒளியில் பறந்து திரிந்தது அதனைக் கண்ட நாய் குட்டி வண்ணாத்திபூச்சியை துரத்தியது. வண்ணாத்துப் பூச்சி மேலும் கீழும், அங்கும் மிங்கும் என பறந்து நாய் குட்டிக்கு கண்ணாம்பூச்சி காட்டியது. இந்த வண்ணாத்துப் பூச்சி நான் இருந்த பக்கமாக வந்து தொலைத்தால் என்னை கண்டு நாய்க்குட்டி குலைக்க நான்

45 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
'அவர்களிடம் பிடிபட்டுவிடுவேன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இக்கட்டான நிலையில் இருந்தேன்.
“வீட்டுக்குள் வடிவாய் பார்த்தனியே' வெளியில் நின்றவன் கேட்டான்.
'ஓம்' உள்ளுக்குள் இருந்து வந்தவன் கூறினான்.
"பாத் ரூம்'
'எல்லா இடமும் பார்த்துவிட்டேன். நீ பின்பக்கமாய் வடிவாய் பார்த்தனியோ."
"அங்கு ஒரு இடமும் அவனை காணலை’ இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது 'அவர்களின் வாகணம் ஒளியைப் பாச்சியபடி உறுமிக் கொண்டு ஒழுங்கையால் வந்தது. நாலாபுறமும் அவர்களின் கூச்சல், துப்பாக்கி ஒன்று மறுபடியும் ஒரு தடவை வெடித்தது. வானத்தை நோக்கியாய் இருக்கலாம்.
"டேய் சிவா மரியாதையாய் சரண் அடைஞ்சு போடு" முதல் தடவையாய் எனது பேரைசரியாய் குறிப்பிட்டு அவர்களில் ஒருவன் எச்சரிக்கை செய்தான். 'உன்னை நாங்கள் கண்டிட்டம். தப்பி ஓட பார்த்தியெண்டால் சுட்டு போடுவோம். நீயாய் சரணடைந்தால் உண்ட உயிருக்கு ஒரு ஆபத்தும் வராது’ மறுபடியும் ஒருவன் கத்தினான்.
"டேய் சிவா சரண் அடைந்திடு. உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை’ மறுபடியும், மறுபடியும் கத்தினான். யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள் நன்றாக பதுங்கிக் கொண்டேன். எனக்கு முச்சு இரைத்தது. அந்த சத்தம் கூடக் கேட்டுவிடலாம். வாயால் மெதுவாக காற்றை எடுத்து மெல்ல வாயாலேயே காற்றை வெளியில் விட்டேன். வண்ணாத்திப் பூச்சி எனக்கு முன்னால் ஒரு அடிதூரம், பறந்து வந்து விட்டுப்போகநாய்க் குட்டியும் ஓடி வந்து விட்டு போனது.
திறந்து கிடந்த கேட்டின் வழியே இப்போது மூன்றாவதாக ஒருவன் வந்தான் "இங்கே அவனை காணலே ஒழுங்கையாலதான் நேரே ஓடியிருக்க வேண்டும்’ முதலில் வந்தவர்களில் ஒருவன்

Page 27
செழியன் 46
கூறிக்கொண்டு கேட்டைவிட்டு வெளியேறினான். அவனுடன் மூன்றாவது நபரும் வெளியேற எனது நெஞ்சு குளிர்ந்தது. அவர்கள்’ இந்த இடத்தை கவனிக்கவில்லை. இனி என்ன? இன்னமும் ஒரு நிமிடத்தில் கடைசியாலும் போய்விடுவான். அவன் போவதை ஆவலோடு எதிர்பாத்திருந்தேன். அவன் போவதற்குள் இந்த சனியன் பிடித்த நாய் குட்டி கண்டு தொலைத்துவிடுமோ என்றுதான் எனக்கு இப்பொழுது அச்சமாக இருந்தது.
“ அம்மா தொந்தரவு தந்தற்க்கு மன்னிக்க வேண்டும்’ கடைசியாள் கூறிக்கொண்டு டோர்ச்சு லைட்டை நாலாபுறமும் அடித்தான்.
"பரவாயில்'ைதயார் கூறினார்
"கேட்டை நல்லாபூட்டிக்கொண்டு உள்ளுக்குள் இருங்கோ’. அவன் கூறிகொண்டு நகர்ந்து கேட்டடிக்கு வந்தான். அவனைத் தொடர்ந்து கேட்டைப் பூட்டுவதற்காக அந்த தாயாரும் வந்தாள். எனக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி உள்ளம் துள்ளியது. அவன் போகப் போறான் இன்னும் கணநேரம்தான்.
"கேட்டை நாங்கள் நல்லா பூட்டித்தானே வைத்திருந் தனாங்கள்’ கேட்டை சாத்தியபடி அந்தத் தாய் கூறினாள்.
"என்ன கேட்டைபூட்டிவைச்சனிங்கள்?’ நான் வரேக்கை அது திறந்தல்லோ கிடந்தது. மச்சான் வாங்கோடா அவன் இங்கதான் எங்கையோ ஒளிஞ்சிருக்கிறான்கூவியபடியே கேட்டை மறுபடியும் தள்ளிக்கொண்டு அவன் வந்தான்.
'அவர்களின் தேடுதல் வேட்டை முடிந்து விட்டதென்று எண்ணிய கடைசி நேரத்தில் சற்றிலும் எதிர் பாராமல், எமது தமிழ் சினிமாவில் வருவதைப் போல இந்தத் திருப்பம் ஏற்பட்டது.
'இங்கதான் ஒளிஞ்சு இருக்கிறான்' என்று முதலாமவன் கத்தியதைத் தொடர்ந்து சுமார் ஏழு, எட்டுதுப்பாக்கி வீரர்கள் "திபு’ "திபு’ என கேட்டுக்குள்ளால் புகுந்து வந்தனர். இரண்டுபேர் பின் பக்கமாகவும் இரண்டு பேர் வீட்டுக்குள் செல்ல இன்னும் சிலர்

47 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
பக்கத்து வளவுக்குள் புகுந்தனர். ஒருவன் வீட்டு வாசலில் துப்பாக் கியை நீட்டியபடி நின்றான்.
இம்முறை தேடுதல் வேட்ட்ை சற்று மும்முரமாக நடந்தது. பக்கத்து வளவுக்குள் இருந்த ஒவ்வொரு மரங்களுக்கும் டோர்ச்லைட் அடித்து அவர்கள் தேடினார்கள். இந்த நாய் குட்டி மட்டும் மிக கவனமாக அந்த பூச்சியைதுரத்திக் கொண்டிருந்தது.
ஒழுங்கையின் முடிவு வரை சென்றிருந்த 'அவர்களின்" வாகனம் இரைந்தபடி பின்புறமாக விரைந்து வந்து வீட்டுக் கேட்" முன்பாக நின்றது. வீட்டுக்குள் தேடியவர்கள், பின்புறமாக சென்று தேடியவர்கள், பக்கத்து வளவுக்குள் சென்றவர்கள் என்று ஒவ்வொரு வராக திரும்பி வீட்டுக்கு முன் கூடினர். சிலர் 'அவர்களின்’ வாகனத்தில் ஏறியிருந்தனர். வாகனத்தில் 'அவர்களுக்கிடையில்" நடந்த உரையாடலின் சில பகுதிகள் தெளிவாகக் கேட்டது. கூர்ந்து கவனித்தேன்.
அவன் 'ஒடிட்டாண்டா’ என்று ஒரு குரல் சொல்லியது. "இதுக்குத்தான் உங்களுக்கு சொல்லுறது வாகனத்தின் பின் பக்க கதவை திறந்தே வைச்சிருக்கச் சொல்லி. ஒரு அவசரமென்றால் உடனே இறங்கறதுக்கு முடியல்லே' மற்றொரு குரல் அலுத்துக் கொண்டது. அவர்கள்’ என்னைக்கண்டு வாகனத்தை நிறுத்தியபின், இறங்கிவர அவகாசம் எடுத்தது என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். வாகனத்தின் பின்கதவை பூட்டிவைத்திருக்கின்றனர். அதை திறந்து வருவதற்க்குத்தான் நேரம் எடுத்து இருக்கிறது. அதனால் தான் என்னை கோட்டைவிட்டுவிட்டனர்.
"இனி பின் கதவை திறந்தே வச்சிருக்க வேணும்”
'இவனை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்த ஆளை பிடிச்சினிங்களோ?’ ஒரு குரல் கேட்டது. நான் பரபரப்பானேன். நடேசருக்கு என்ன நடந்தது. என் மனம் தவித்தது. அவர்களிடம் பிடிபட்டிருக்கக்கூடாது என வேண்டினேன்
"ஒரு கிழவனடப்பா. கிழவனுக்கு ஒன்டும் தெரியாது. வழியில ஏறி வந்திருக்கான் போல இரண்டு தட்டு தட்டிப் போட்டு

Page 28
செழியன் 48
விட்டுட்டன்." அவர்களின் ஒருவன்கூற எனக்கு நெஞ்சு குளிர்ந்தது. பலர் சைக்கிளில் செல்கையில் நடேசரைப் பிடிப்பதற்குப் பதிலாக யாரோ ஒரு கிழவனைத் தான் அவர்கள் பிடித்து விட்டு பின்னர் விட்டிருக்கிறார்கள். நடேசர் தப்பி விட்டார், மிக ஆறுதலாக இருந்தது. ஆனால் எனது நிலைமையை எண்ணி நடேசர்துடித்துக் கொண்டிருப்பார். “ஹலோ சிவாவைத் தேடுறம்’ வயர்லெஸ் மூலமாக ஒருவன் செய்தி அனுப்புவது கேட்டது.
& O
is a
"ஓ.கே'ஓவர்"
வயர்லஸில் கதைத்தவன் அந்த குழுவுக்கு தலைவனாக இருக்கலாம். "அவன்ட வீட்ட போய் பார்ப்பம்’ என்று கூறினான் அதைத் தொடர்ந்து எல்லோரும் வாகனத்தில் பாய்ந்து ஏறினார். பின்புறமாகவே இரைந்தபடி சென்று கோப்பாய் மானிப்பாய் வீதியில் ஏறிய வாகனம் ஒடி மறைந்தது.
'அவர்கள் போய் விட்டார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தாங்கள் போய் விட்டோம் என்பதைப் போல் அவர்கள் நாடகமாடலாம். இதை நம்பி ஒளிந்திருக்கும் நான் வெளியில் வரும் போது என்னை பிடிக்கவும் 'அவர்கள்’ திட்ட மிட்டிருக்கலாம். எனவே நான் அவசரப்படவேயில்லை. வெளியில் இருக்கும் நிலைமையை அறிந்து கொள்ளும் வரை அவசரப்பட்டு மறைவிடத்திலிருந்து வெளியில் வருவதில்லையென திடசங்கற்பம் பூண்டேன்.
சில சைக்கிள்கள் வரும் சத்தம் கேட்டது. சைக்கிளில் வந்தவர்கள் ஒழுங்கை முகப்பில் சைக்கிளை நிறுத்தி விட்டு சளசள

49 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
என சத்தமிட்டு ஏதோ ஏதோ உரையாடினார்கள். அவர்கள் டியூட்டரி முடிந்து வரும் மாணவர்கள் என்று தெரிந்தது.
வீட்டுக்கார அம்மாவும், அக்காவும் வீட்டு வாசலில் குந்தி யிருந்து ஏதோ பேசிக் கொண்டனர். நடந்து சம்பவங்களைப் பற்றித் தான் அவர்கள் பேசிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மாணவர் களின் சத்தத்தில் எனக்கு ஒன்றும் கேட்கவில்லை. நாய் குட்டி வாசலில் படுத்துக்கொண்டது. பூச்சி எங்கோ பறந்து போய்விட்டது.
நேரம் போய் கொண்டிருந்தது. இந்த இடத்தை விட்டு வெளியேறியதும் எங்கு? எப்படி போவது எனத் திட்டமிட்டேன். ஆனால் இந்த இரவில் நான் மட்டும் தனியாக நடமாட முடியாது. எனக்கு உதவிகள் தேவைப்பட்டது.
ஒழுங்கையின் முகப்பில் நின்று வம்பளந்த மாணவர்கள் இப்போ போய் விட்டிருந்தனர். வீட்டுக்கார அம்மாவும் அந்த அக்காவும் இன்னமும் வாசலில் குந்தியிருந்து உரையாடிக்கொண்டிரு ந்தனர். நான் மறைவிடத்தை விட்டு வெளியேறி வந்தால் திடுக் கிட்டுப் போவார்கள். அடுத்து என்ன செய்வார்கள்? இந்த இடத்தை விட்டு ஓடிப்போ என்று துரத்துவார்களா? காட்டிக்கொடுப்பார்களா? அல்லது எனக்கு உதவி செய்ய முன் வருவார்களா?
என்னை இவர்கள் காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என நிச்சயமாய் தெரியாமல் மறைவிடத்தை விட்டு வெளியே வருவது புத்திசாலித்தனமாய் தென்படவில்லை. எனவே மறைவிடத்தி லேயே மறைந்திருந்தேன்.
அரை மணிநேரம் கடந்து இருக்கும். சரியான சமயத்துக்காக காத்திருந்தேன். தொண்டை வரண்டு தாகம் தாகமாய் எடுத்தது. துளிநீருக்காக நாக்கு ஆலாய் பறந்தது.
"பாவம் அந்த பிள்ளை”
"துவக்காலை சுட்டது பட்டிருக்குமோ?"
''g...... பட்டிருக்காது. துவக்குச்சூடு பட்டிருந்தால் பிடிபட்டிருக்கும்"

Page 29
செழியன் 50
'நல்ல காலம், எப்படியோ இந்த பிள்ளை அவர்களிடம் இருந்து தப்பீட்டுது'
'தாய்க்கும் மகளுக்குமாய் நடந்த உரையாடல் இருந்து இந்தப் பகுதிகள் இலேசாக எனது காதில் வந்து விழுந்தன. இவர்கள் என்னை காட்டிக் கொடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்தது. இனியும் ஏன் தாமதிப்பான்? 'சரேல்' என்று மறைவிடத்திலிருந்து வெளியேறிதாய்க்கும் மகளுக்கும் முன்னால் போய் நின்றேன். திடுக் கிட்டுப்போய் நின்றார்கள். பேய் அறைந்ததுபோல் என்பார்களே. அந்த பேயிடம் இவர்களும் அறைவாங்கியது போல் அதிர்ச்சி தெரிந்தது.
'அம்மா. அக்கா. பயப்படாதையுங்கோ. நானும் இந்த ஊருதான். என்ட பெயர். சிவா. சில நேரம் என்னை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். உங்க வீட்டுக்குப் பக்கதில இருக்கிற .வதியும் என்னோட தான் படிச்சவ' நான் கள்ளனோ, பயங்கரவாதியோ இல்லை. உங்களவன்தான் என்பதை இவர்கள் மனதில் ஏற்படுத்த இந்த முன்னுரை. நாய் குட்டி எழுந்து குலைக்க தொடங்கியது.
'அக்கா’ நாய் குட்டியைப் பிடிச்சி விட்டுக்குள்ளை அனுப் புங்கோ. சத்தம் கேட்டால் சில நேரம் அவங்கள் வந்துவிடுவாங்கள்’ நாய் குட்டியைப் பிடித்து வீட்டுக்குள் தள்ளி முன் கதவை பூட்டினார் அக்கா. பக்கமாக இருந்த தண்ணிப் பைப் என் கண்ணில் பட்டது. பைப்பைத் திறந்து நிறையத் தண்ணிகுடித்தேன்.
'கோப்பி ஊத்தித் தரட்டே' என் மீது நிறைய இரக்கம் ஏற்பட்டிருந்தது.
‘'வேண்டாம் அக்கா. நான் இங்கிருந்து போக வேண்டும்’ என்று கூறிய நான் "ரோட்டாலை போனா பிடிபடுவேன். பக்கத்து வீட்டு வளவுக்குள்ளால போனா ஒழுங்கை வருமல்லவா, அது வரைக்கும் என்னை கொண்டு வந்து விட்டியள் என்றால் பெரிய உதவியாய் இருக்கும். " நான் கூறிமுடிக்கவும் எந்த மறுப்பும் இல்லாமல் அக்கா புறப்பட்டாள். என்னை தப்பிக்க வைக்க வேண்டும் என்ற உணர்வு நிறைய இருந்திருக்கிறது.

51 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
“ அம்மா இவரை கொண்டு போய் விட்டிட்டு வாறன்’ தாயிடம் அந்த அக்கா கூறினார். 'அம்மா மிக்க நன்றி போயிட்டு வாறன்’ நானும் அந்த தாயிடம் விடைப் பெற்றுக் கொண்டேன். 'ஓம்' என்றுதலையாட்டி விடைதந்தார்.அந்த தாய்.
அந்த அக்கா முன் செல்ல நான் பின் தொடர்ந்தேன். நான்
குறிப்பிட்ட ஒழுங்கையை அடைய நாலைந்து வீடுகளின் வளவு களைக் கடக்க வேண்டும்.
"டோர்ச்சு லைட் ஒன்று வாங்கிக் கொண்டு வாரன்’ அந்த அக்கா என்னிடம் கூறிவிட்டு பக்கத்து வளவில் இருந்த வீட்டின் பின்புறமாய்ச்சென்றார். நானும் சென்றேன்.
"மல்லிகா அக்கா, மல்லிகா அக்கா’
"யாரது?’ வீட்டுக்குள் இருந்து குரல் கேட்டது.
"அது நான் ராணி?
'வாருமன், ஏன் வெளியால நிக்கிறீர்?"
'அவசரமாய் போக வேனும் . ஒருக்கா உங்கட டோர்ச் லைட்டைதாறியளே.'
"இப்ப கொண்டு வந்துதாறன்’’.
"என்ன ராணி. உங்கட வீட்டுப்பக்கமாயும் ரோட்டிலையும் ஒரே களேபரமாய் கிடந்தது. என்ன சங்கதி?’ மல்லிகா டோர்ச் லைட்டை கொடுக்கும் போது கேட்டார்.
"அது பெரிய கதையக்கா, வந்து சொல்றன்’ ராணி அக்கா நிக்காமல் புறப்பட்டு வந்தார். மூன்று நான்கு வீடுகளின் வளவுகளைக் கடந்து சென்றதும் கழுத்தளவு மதில் ஒன்று குறுக்கிட்டு நின்றது. முன்னால் சென்றுகொண்டிருந்த அக்கா நின்று 'இந்த மதிலை தாண்டி வருகிற வளவை கடக்க அந்த ஒழுங்கை வரும்’ என்று கூறினார்.
'அக்கா போய்ட்டு வாறன். நீங்கள் செய்த உதவிக்கு நன்றி" அக்காவிடம் கூறிவிட்டு அந்த மதிலால் ஏறி மறுபக்கம் குதித்தேன்.

Page 30
செழியன் 52
அந்த பெரிய வீட்டின் கிணற்றடி பக்கமாக நின்றேன். வீட்டுக்குள் நடமாட்டங்கள் தெரிந்தன. நான் குதித்ததையோ எனது நடமாட் டத்தையோ கண்டிருந்தால் கள்ளன் என்று இந்த வீட்டுக்காரர்கள் கருதி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படலாம். ஆனால் அப்படியொன் றும் நிகழவில்லை. இவர்களின் முன் கேட் திறந்தே கிடந்தது ‘கேட்” டால் வெளியேறி ஒழுங்கையை அடைந்தேன்.
ஒழுங்கையால் வேகமாக நடந்தேன். ஏற்கனவே நான் திட்ட மிட்டபடி எனது கால்கள் நடந்தன. எச்சரிக்கையாய் இருந்தேன். வாகனச் சத்தம் ஏதும் கேட்டால் உடனேயே மதில் ஏறி குதிக்க தயாராக இருந்தேன்.
இரண்டு மூன்று குச்சு ஒழுங்கைகள் கடந்து எனது கல்லூரி வகுப்பு நன்பன் குமார் வீட்டை அடைந்தேன். சற்று ஒதுக்குபுறமான வீடு. வீட்டுக்குள் உரையாடல் கேட்டன. நான் “குமார்' 'குமார்’ எனஅழைத்தேன்.
"யார்’ என்று கேட்டபடி குமார் வந்தான். அவனுடன் அவன் தம்பியும் வந்தான். என்னை கண்டதும் சற்று அதிர்ச்சியும் ஆச்சரியமும்.
‘என்ன சிவா வாசலில் வெளிச்சம் விழுந்து கொண்டிருந்தது. குமாரை அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினேன். 'எனக்கொரு உதவி செய்யமுடியுமா” என்று கேட்டேன். எனக்கு உதவி செய்ய முன் வந்தான். நான் குறிப்பிடுகின்ற இடத்தை அடைய ஒழுங்கை களை பாவிக்காமல் தோட்டக் காணிகளின் ஊடாகப் போக வழி சொல்ல வேண்டுமென்றும் சிறிது தூரம் என்னோடு வந்து அந்த வழியைக்காட்ட வேண்டும் என்றும் கேட்டேன். குமாருக்கு அதைப் பற்றித் தெரியவில்லை. தம்பியாரிடம் கேட்டான். தம்பி தெரியும் என்று கூறினான். இருவரும் என்னோடு வருவதாகக் கூறினார்கள் இவ்வாறு நாம் உரையாடிக் கொண்டிருக்கையில் குமாரின் தாயார் கையில் "சிமினி விளக்குடன் வந்தாள். என்னைக் கண்டதும் பெரிய அதிர்ச்சி அவவுக்கு ஏற்பட்டது. அவர் எனது தாயரின் பள்ளித் தோழியும் கூட, 'சிவா செளக்கியமாக இருக்கிறாயா? உன்னைக்

53 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
கொல்லத் தேடித் திரியினம் என்று கேள்விப் பட்டனான். எனக்கு நெஞ்சிடிச்சிக் கொண்டிருந்ததுராசா’.
'அம்மா சத்தம் போடாதையுங்கோ, மெதுவாய் கதையுங்கோ’ குமார் கூறியதும் குரலை தணித்துக்கொண்டார்.
'அம்மா குமாரிடம் எல்லாம் சொல்லி இருக்கிறன். குமார் சொல்லுவார் நேரம் போச்சுது. இப்ப நான் அவசரமாய் போக வனுேம், போயிட்டு வாறன். 'நான்அவசரமாக அத்தாயிடம் விடை பெற்றுக் கொண்டேன். குமாரும், குமாரின் தம்பியும் என்னோடு வந்தனர். அந்த குச்சு ஒழுங்கைகுள் அங்கொன்றும் இங்கொன்று மாய்த் தான் வீடுகள் இருந்தன. சிறிது தூரம் சென்றதும் ஒரு ஒற்றை யடிப் பாதையை குமாரின் தம்பி காட்டினார். அதன் வழியாக சென் றோம். நான் எங்கே போய் கொண்டிருக்கிறேன் என்று குமார் கேட் டான். இந்த இரவு இதே ஊரில் தான் தங்க போகிறேன் என்ற உண்மையை நான் அவனிடம் சொல்லவில்லை.
வேறு ஒரு ஊருக்கு போய் கொண்டிருப்பதாக கூறிவிட்டேன். அவன் இதுபற்றி மேலும் ஒன்றும் கேட்காமல் விட்டுவிட்டான். நாம் பாதுகாப்பான இடங்களில் மறைந்து வாழ வேண்டிய நிலையில் எமக்கு உதவி செய்கிறார்கள் என்பதற்காக நமது நண்பர்களுக்கோ, உற்வினர்களுக்கோ எமது தங்குமிடங்களை கூறுவது எமது பாது காப்பிற்கு அபாயத்தை ஏற்படுத்தும். சில அதிக பிரசங்கிகள்துருவித் துருவி சில விடயங்களை அறிய முயற்ச்சிப்பார்கள். இவர்கள் தமக்கு தேவையில்லா விடயங்களை அனாவசியமாக அறிய முற்படும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
தோட்டவெளிகள் ஆரம்பமாகும் இடம் வரைக்கும் குமாரும் அவனது தம்பியும் வந்தனர். இருவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு இறங்கினேன் நீண்ட தோட்ட வெளியைக் கடந்து நான் அடையவேண்டிய வீட்டை அடைந்தேன். வீடு நிசப்தத்தில் மூழ்கிக் கிடந்து. படலை உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. படலைக்கு மேல் ஏறி உட்புறமாக குதித்தேன். அது எனது நண்பன் ஒருவனின் வீடு. நண்பன் வெளிநாடு சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

Page 31
செழியன் 54
எனது நண்பனின் குடும்பம் எனக்கு உதவிசெய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. குடிசை வீடு என்பதால் விட்டின் முன் கதவுக்கு பூட்டில்லை. சாத்திருந்த கதவை மெல்ல திறந்து வீட்டினுள் புகுந்தேன். மெதுவாகதட்டினேன். திடுக்கிட்டு அம்மா எழுந்தார்.
'அம்மா பயப்படவேண்டாம் அது நான் சிவா’
"ஆ. சிவாவோ. கடவுளே எங்கடபிள்ளையை காப்பாத்தி போட்டாய்"
"யாரம்மா’ சத்தம் கேட்டு எழுந்து வந்த நண்பனின் தம்பி கேட்டான். 'தம்பி அந்த விளக்கை கொழுத்து" தாய் மகனிடம் கூறினார் நான் அவசரமாக மறுத்தேன்.
"வேண்டாம் வெளிச்சம் வேண்டாம் அம்மா'
'சிவா அன்னையோ வந்தது?" அதிசய பிராணியைப் பார்ப்பது போல் நண்பனின் சகோதரிகள் வந்து என்னைப் பார்த்தனர். என்னை 'அவர்கள் சுட்டு கொலை செய்து விட்டனர் என்று ஏற்கனவே அந்த பகுதியில் கதை பரவி விட்டது. “சிவா இறந்து விட்டான்' என்று கூறி அங்கு நடை பெற்றுக் கொண்டிருந்த டி.வி சினிமா காட்சியை கிராமத்தவர்கள் பாதியிலேயே நிறுத்தி இருக் கிறார்கள். அதனால் நான் இறந்து விட்டேன் என்று பலமாக எல்லோரும் நம்பிவிட்டார்கள். அன்று இரவு அங்கு உறங்கினேன். அடுத்து என்ன செய்வது. எப்படி நண்பன் சூரியனுடன் தொடர்பை ஏற்படுத்துவது? பெரியவர் எக்ஸ் கொழும்புக்கு போவிட்டாரா? பல குழுப்பமான சிந்தனைக்கிடையில் உறங்கி போனேன்.

18 மார்கழி 1986
காலையில் எழுந்ததும் சவரக் கத்தி ஒன்று வாங்கி எனது மீசையை மழித்தேன். முன்னரே இதை செய்திருக்கலாம். என்னை திடீரென்று அடையாளம் காண முடியாமல் போவதற்கு மீசையை எடுப்பது உசிதம் என நினைத்தேன். தேனீர் வந்தது. அருந்தினேன். காலைச்சாப்பாட்டு வந்தது. சாப்பிடவில்லை. சாப்பிடக்கூடிய மன நிலை இல்லை. பசிக்கவும் இல்லை.
அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தேன். எனது தம்பி ஒருவன் இருக்கிறான், அவனுடன் தொடர்புகொண்டு இழந்து போன எனது தொடர்புகளை மீண்டும் சீர் செய்யலாம் என நினைத்தேன். எனது தம்பியை இரகசியமாக இங்கு அழைத்து வரும்படி நண்பனின் தம்பிக்கு கூறினேன். எனது அம்மா நான் இறந்து விட்டேன் என்று அழுது கொண்டிருப்பதாயும் முதல் நாள் இரவு அவர்கள்’ எனது வீட்டுக்குச்சென்று 'சிவாவை சுட்டுக்கொன்று விட்டோம். பிரேதம் வேண்டுமா?’ என்று கேட்டனர் என்றும் நண்பனின் அம்மா என்னிடம் கூறினார். "நீங்கள் செய்யிறதை செய்யுங்கோ’ என்று என் தாய் ஆத்திரத்துடன் பதில் கூறினாராம். ஒரு மணி நேரத்தில் என் தம்பி வந்தான். அவனுக்கு நான் ஒன்றும் சொல்ல வேண்டிய

Page 32
செழியன் 56
அவசியம் ஏற்படவில்லை. அவன் எனக்கு செய்தி கொண்டு வந்தான்.
'மறுபடி இரவு வந்து அழைத்துச் செல்கிறேன்’ என்ற நடேசரின் செய்தியுடன் எனது தம்பி என்னைச்சந்தித்தான்.
முதல் நாளிரவு என்னை அவர்கள் துரத்த ஆரம்பித்தபோது நடேசர் சாதுரியமாக 'அவர்களிடம் இருந்து தப்பி விட்டார். தப்பியவர் வெகுதூரம் செல்லவில்லை. அண்மையிலேயே ஒரு வீட்டிற்குள் சென்று நிலைமையைக்கூறியுள்ளார். அந்த வீட்டுக்காரர் களும் மிகுந்த அனுதாபத்துடன் நடந்து கொண்டுள்ளனர். நான் அவர் களிடம் பிடிபட்டுவிட்டேனா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டு போகவேண்டும் என்ற திடமான நிலையில் நடேசர் இருந் திருக்கிறார். அந்த வீட்டில் இருந்த இளைஞன் ஒருவன் 'அவர்கள்’ தேடிக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து நிலைமைகளை நேரில் அவதா னித்து விட்டு நடேசருக்கு தகவல் கூறியுள்ளான். அவன் கூறிய தகவலின் படி 'அவர்களிடம் நான் பிடிபடவில்லை என்பதை உணர்ந்து கொண்ட நடேசர் அன்றிரவு தானும் அதே ஊரில் தெரிந்த ஒரு வீட்டில் தங்கி விட்டு காலையில் எனது தம்பியை சந்தித்திருக் கிறார். அதே நேரம் எனது தம்பிக்கு நான்அனுப்பி வைத்த செய்தியும் கிடைத்திருக்கிறது. நான் பாதுகாப்பாக குறிப்பிட்ட இடத்தில் இருக் கிறேன் என்பதை என் தம்பி மூலமாக அறிந்து கொண்ட நடேசர் இருட்டிய பின் என்னை வந்து அழைத்துக் செல்வதாய் செய்தி அனுப்பி இருந்தார். இழந்து போன தொடர்பு மீளக் கிடைத்ததை யிட்டு மனம் தென்பாகக் காணப்பட்டது.
என் நண்பனின் தாயாரிடம் வெளிநாட்டில் வசித்த என் தம்பி யின் விலாசத்தையும் மற்றுமோர்நண்பனது விலாசத்தையும் பெற்றுக் கொண்டேன். அங்கிருந்து என் தம்பிக்கும், நண்பனுக்கும் கடிதம் எழுதினேன். நடந்த சம்பவங்களையும் சுருக்கமாக குறிப்பிட்டேன். கடிதங்களை நண்பனின் தாயாரிடம் கொடுத்து தபாலில் சேர்த்து விடும்படி கேட்டுக் கொண்டேன். w
மாலை ஐந்து மணி இருக்கும் மழை லேசாகத்தூற ஆரம்பித்து விட்டது. மறுபடியும் என்னைச் சந்திக்க எனது தம்பி வந்தான்.

57 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
மனைவியின் தம்பி என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பதாய் கூறினான். மறுபடியும் என்னை அழைத்துக் கொண்டு நடேசர் செல்கின்ற போது ஏதும் பிரச்சனை ஏற்படலாம் என்ற அச்சத்தில் தானே நேரடியாக என்னை அழைத்துச் செல்வதென்ற முடிவுக்கு அவன் வந்திருக்கிறான். தனக்கு உதவியாக அவனது நண்பன் ஒருவனையும் எனது தம்பியுைம் வைத்துக் கொண்டான். நான் இருந்த இடத்திலிருந்து 'தார் போட்ட ரோட்டில் ஏறாமலேயே குச்சு ஒழுங்கைகள், ஒற்றையடிப்பாதை வழியாக எப்படி குறிப்பிட்ட இடத்தை அடைவது என்று செல்கின்ற பாதையை கவனமாக திட்ட மிட்டிருந்தான். எனது நண்பனின் தாயாரிடமும் சகோதரர்களிடமும் நன்றி கூறி நான் விடைபெற்றுக் கொண்டேன். சைக்கிளின் முன்பக் கத்தில் என்னை ஏற்றிக் கொண்ட மனைவியின் தம்பி விர்ரென்று அம்பு போல் பறந்தான். அவனது சைக்கிள்களுக்கு முன்பாக சில யார் தூரத்தில் அவனது நண்பனின் சைக்கிலும் பின்னால் தூரத்தில் எனது தம்பியின் சைக்கிளும் வந்து கொண்டிருந்தன.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் ஒரு முறை கூட பார்த்தோ, அறிந்தோ இராத புதிய பாதையாக இருந்தது. பெரும் பாலும் ஒரு சைக்கிள் மட்டும் செல்கின்ற வழியாக இருந்தது. தோட் டங்களுக்கு செல்கின்றவர்கள் மட்டுமே இந்த வழியைப் பாவிப் பார்கள் என நினைக்கிறேன். சில இடங்கிளில் மட்டும் பிரதான பாதைகளை குறுக்கே கடந்தோம். இவ்வழியாகவே பரதன், மணி, ஜெகன்ஆகியோரை அழைத்துச் சென்றதாக மைத்துனன் கூறினான்.
சைக்கிளில் செல்கின்ற போது அவனிடமிருந்து சில தகவல் களைப் பெற்றேன். யாழ் குடாநாட்டின் சகல கடற்கரை பிராந்திய த்தையும் அவர்கள் மிக அவதானமாக கண்காணிப்பதாயும் கடலில் திரியும் மீன் பிடிப் படகுகள் உட்பட கரையிலிருந்து புறப்படுகின்ற சகல படகுகளும் தீவிர பரிசோதனைக்கு உள்ளாகின்றது என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டத்துக்குச் செல்கின்ற பஸ் வண்டிகள், லொறி, கார், வேன் என்பன 'அவர்களால் சோதிக்கப் பட்ட பின்பே அனுமதி அளிக்கப்படுகின்றது என்று மைத்துனன் கூறினான்.

Page 33
செழியன் 58
இந்த வழிகளால் ஒருவரும் தப்பி போக கூடாது என்பதற் காகவே கடுமையான கண்காணிப்பு அவர்களால் தீவிரப்படுத்தப் பட்டிருந்தது. சிறிது நேரத்தில் ஒரு கல்வீட்டில் கொண்டுபோய் இறக்கினான். வீட்டுச் சொந்தக்காரர்கள் ஒரு வயதான தம்பதிகள். என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அன்பாக வரவேற்றனர். அந்த அறையைக் காட்டி அதற்குள் இருக்கலாம் என்று வயதான பெரியவர் கூறினார். அந்த அறைக்குள் புகுந்தேன். இனிமையான அதிர்ச்சி. ஜெகன் உற்சாகமான சிரிப்புடன் வரவேற்றான். கட்டித் தழுவினோம் 'தப்பி விட்டாயா' என்று ஜெகன் என்னிடம் கேட்டான். துப்பாக்கிசூட்டு விவரகாரம் எல்லா இடமும் பரவி விட்டது.
என்னைக் கொண்டு வந்து விட்டதும் எனது மைத்துனன் விடை பெற்றுக் கொண்டான். அவனிடம் இருந்து அவனுக்கு தெரிந்த ஒரு வீட்டு விலாசத்தை பெற்றுக் கொண்டேன். இனி அவனைச் சந்திக்க முடியாது. எனவே அவனுக்கு அறிவிக்க வேண்டிய செய்திகள் இருந்தால் அவன் தந்த விலாசத்திற்கு கடிதம் மூலம் தெரிவிப்பதாய் கூறினேன். இரண்டு நாளுக்கு ஒருமுறை அங்கு போய் கடிதம் வந்திருக்கிறதா என்பதை கவனிக்கும் படி கூறினேன். என்னிடம் இருந்து விடைபெறும் போது எனக்காக ஏற்கனவே கொண்டு வந்திருந்த ஒரு சேட், ஒரு ஜீன்ஸ் என்பவற்றை என்னிடம் தந்தான். நடேசரிடம் நான் பாதுகாப்பாய் இங்கு வந்து விட்ட செய்தியை உடன் சென்று தெரிவிக்கும்படி கூறினேன். அறைக்குள் ருந்து நானும் ஜெகனும் உரையாடினோம். இடையில் வீட்டுப் பரியவர் வந்து இரவுச் சாப்பாட்டுக்கு என்ன தயாரிப்பது என்று கேட்டார். பாண் இருந்தால் போதும் என நானும் ஜெகனும் கூறினோம். பெரியவர் எப்போ வந்து எங்களை அழைத்துச்செல்வார் என்று ஜெகனிடம் கேட்டேன். ஜெகனுக்கு இது தெரியவில்லை. ஏற்கனவே ஒரு முறை காரில் வந்து பரதனையும், மணியையும் கூட்டிச் சென்று விட்டாராம். அதன் பின்பே ஜெகன் இந்த வீட்டிற்கு வந்துள்ளார். முதல் நாள் பெரியவர் எக்ஸ் வருவதாக இருந்தாராம். அனால் வரவில்லை வராததற்கு காரணமும் தெரியவில்லை. பெரியவர் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலைமையிலும்

59 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
இருந்ததால் கொழும்புக்கு போய்விட்டாரோ என்றும் யோசிக்க வேண்டி இருந்தது. அவ்வாறு பெரியவர் எக்ஸ் கொழும்பு
போயிருந்தால் இனி இரண்டு வாரத்தின் பின்பே வருவார்.
அப்படியொரு நிலமை ஏற்பட்டால் அவ்வளவு நாட்களுக்கும் இந்த
வீடு பாதுகாப்புத் தானா? சுற்றம் சூழலில் வாழ்கின்ற எந்த ஒருவரு டனும் எமக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆபத்து என்றால் ஓடி எங்கு
போவது என்று கூட தீர்மானிக்க முடியாத சூழல். எனக்கு சற்று
மனசோர்வு ஏற்பட்டது.
இரவு ஏழு மணி. ஒரு கார் வீட்டைக் கடந்து செல்கின்ற சத்தம் கேட்டது. இது பெரியவர் எக்ஸின் காராகத்தான் இருக்கும் என ஜெகன் அபிப்பிராயப்பட்டார். நாம் அறையை விட்டு வெளி ஹோலுக்குள் வந்தோம். வீட்டுக்காரரும் கார் சத்தம் கேட்டு 'உசார்? அடைந்திருந்தார். 'அண்டைக்கு வந்த கார் போ கிடக்குது. நீங்கள் ரெடியாகுங்கோ’ என எம்மிடம் கூறினார். எமக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது.
அறைகிைகுத் திரும்பினோம். இதுவரை நான் அணிந்திருந்த சாரத்தை விட்டு கால்சட்டைக்கு மாறினேன். இதுவரை எனது தலைமறைவு வாழ்க்கை கிராமப்புறத்திலேயே இருந்தது. இனி நகரத்தை ஒட்டியே போகப் போகின்றோம். எனவே அதற்கேற்ப உடுப்பும் மாறவேண்டும். ஜெகனும் தயாராகி விட்டார்.
மறுபடியும் கார்சத்தம் கேட்டது. கார் வீட்டின் முன்நிற்கிறதா என கூர்ந்து கவனித்தோம். அப்படி நிகழவில்லை. கார் சத்தம் மெல்லமெல்லமாய் தேய்ந்து போனது. "கார்போட்டுது. இது வேற யாருடையோகார்போல. "வீட்டுக்காரப் பெரியவர் வந்து எம்மிடம் கூறினார்.
நான் மனதை உறுதியாக்கிக் கொண்டேன். எப்போது வருவார்? எபபோது வருவார்? என்று மனதைப் போட்டு அலட்டிக் கொண்டிருக்காமல் வாற நேரம் வரட்டும் என முடிவு செய்தேன்.
இரவு எட்டு மணியைக் கடந்திருக்கும். நடந்து கொண்டிருக் கின்ற சம்பவங்களைப் பற்றி நானும் ஜெகனும் உரையாடிக் கொண்டிருந்தோம். “கார் வந்திட்டுது. கெதியாய் வாங்கோ’அறைக்

Page 34
செழியன் 60
கதவைத் தள்ளிக் கொண்டு வந்த வீட்டுக்காரப் பெரியவர் கூறினார். இன்ப அதிர்ச்சி ஒன்று மனதைத் தாக்கியது.
'காருக்குள்ள போய் உடுப்பை மாற்றலாம். இப்ப போய் ஏறுவம்' என்று ஜெகன் கூறினார். பையைத் தூக்கிக் கொண்டோம். வீட்டுக்காரப் பெரியவருக்கும் தாய்க்கும் நன்றி கூறினோம். மிக்க மகிழ்ச்சியாய் விடை தந்தார்கள். வீட்டுப் படலையைத் தள்ளித் திறந்தோம். கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. "பின்கதவை திறந்து கொண்டு ஏறுங்கோ' காரில் இருந்து ஒரு குரல் கூறியதும் பாய்ந்து காருக்குள் ஏறிக்கொண்டுடோம்.
பெரியவர் எக்ஸ் தான் காரை ஓடிக் கொண்டு வந்திருந்தார். அவர் அருகில் எமது நண்பன் மணி இருந்தான்.
"வேற யாரும் வர வேண்டுமோ??? பெரியவர் எக்ஸ் பின்னால் திரும்பி எம்மிடம் கேட்டார். 'இல்லை நாங்கள் இரண்டு பேரும் தான்' என ஜெகன் கூறினார். கார் மெல்ல ஊர்ந்து புறப்பட்டது.
"அப்ப சொல்லுங்கோ? எப்பிடி இருக்கிறியள்?’ பெரியவர் எக்ஸ் காரை ஒட்டியபடி எங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். என்ன பதிலைச்சொல்வது? அசட்டுச்சிரிப்பை உதிர்த்தோம்.
"என்னஜெகன், சிவா! பேசாமல் இருக்கிறியள்?' பெரியவர் மீண்டும் கேட்டார் 'இருக்கிறோம்’ என்று ஜெகன் அழுத்தம் கொடுத்து கூற மெல்லிய சிரிப்பு காரில் பரவியது. வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது. நானும் ஜெகனும் எமது தலையைக் காருக்கு வெளியே தெரியாதபடியே சரிந்திருந்தோம். அப்படியிருந்தபடியே உடுப்பை மாற்றிக் கொண்டோம்.
"உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. அதாலை தான் உங்களை இப்ப ஏற்றிக் கொண்டு வாறன்’ பீடிகையுடன் ஆரம்பித்தார் பெரியவர்.
மறுநாள் பெரியவர் எக்ஸ் கொழும்புக்குக் போகிறராம். திரும்பி வர இரண்டு வாரம் செல்லும். இன்று முழுக்க பெரியவருக்கு

61 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
ஒரே அலைச்சல். எப்படியும் எங்களை ஏற்றிக் கொண்டு ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்குள் இருந்திருக்கிறது.
கடந்த முறை அவர்பரதனையும் மணியையும் அழைக்க வந்த போது நண்பன்சூரியனின் மனைவி அவருக்கு வீட்டை அடையாளம் காட்டியிருந்தார். இப்போ எம்மிடம் வருவதற்கு பெரியவர் தயாராகிய போது நண்பன் சூரியனின் மனைவியை சந்திக்க முடிய வில்லை. தனியாகவே பெரியவர் வந்திருக்கிறார். இரவு ஏழு மணி போல காரில் வந்தது பெரியவர்தான். ஆனால் பெரியவரால் எமது வீட்டை அடையாளம் காண முடியவில்லை. ஒழுங்கையின் முடிவு வரை போய் விட்டு திரும்பி தனது இருப்பிடத்துக்குச் சென்றிருக் கிறார். ஆனால் அங்கு போனபின்னும் மனம் அவரை விடவில்லை. இன்று எங்களை மீட்காவிட்டால் பிறகு இரண்டு கிழமைக்குப் பின்னர்தான். ஆனால் அதற்குள் என்னென்ன நிகழுமோ?
சூரியனுடன் பெரியவர் கலந்து ஆலோசித்திருக்கிறார். நமது நண்பன் மணிக்கு ஒருவேளை தான் இருந்து வந்த இடம் அடையாளம் தெரியலாம் எனகுரியன் கூறியதால் மணியிடம் சென்ற பெரியவர், மணியை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார். ஒருநாள்தான் தங்கியிருந்தாலும் மணி வீட்டை அடையாளம் காட்டி விட்டான். அதனால் நானும் ஜெகனும் மீட்கப்பட்டோம்.
பெரியவர்கார் நகரத்தினை அண்மித்த தெருக்களில் ஓடியது.
"இந்தக் காரின் இலக்கத்தைப் பார்த்ததும் இது என்னுடைய கார் என்பது இந்தப் பகுதியைச் சேர்ந்த 'அவர்களுக்குத் தெரியும். பெரும்பாலும் எனது காரை 'அவர்கள் வழிமறிக்க மாட்டார்கள். தற் செயலாக அப்படி ஏதும் நிகழந்தாலும் நான்காரைநிறுத்த மாட்டேன். நீங்கள் தலையை வெளியே காட்டாமல் இருந்து கொள்ளுங்கள்’ பெரியவர் கூறினார். நன்கு சரிந்து இருந்து கொண்டோம்.
ஒருவித சிக்கலும் இல்லாமல் எமது கார் ஒரு வளவிற்குள் சென்றது. நாம் மூவரும் சற்று நின்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உரையாடிக் கொண்டிருந்தோம். ஒரு பாதுகாப்பு அரணுக்குள் வந்து விட்டது போன்ற உணர்வு எனக்கு இருந்தது.

Page 35
செழியன் 62
'பரதனும் சூரியனும் எங்கே?' என்று மணியிடம் கேட்டேன். சூரியன் எங்கே என்று தெரியாது என்றும் பரதன் பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டதாயும் அதன் பின் பரதன் எங்கே இருக்கிறான் என்று தனக்குத் தெரியாது எனவும் மணிகூறினான். நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போதே வீட்டின் உள்ளிருந்து பரதன் எமது காரை நோக்கி வந்தான். அவனை கண்டதும் எமது உற்சாகம் அதிகரித்தது.
பரதனுக்கு இருவாரத்துக்கு முன்னர்தான்வயிற்றில் ஒரு சத்திர சிகிச்சை நடந்திருந்தது. அந்த இடத்தில் சீழ் கட்டி விட்டதால், பெரியாஸ்பத்திரிக்கு எப்படியும் போக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. நகரத்தில் உள்ளவர்களுக்கு தன்னை குறிப்பாக அடையா ளம் தெரியாது. எனவே தான் பெரியாஸ்பத்திரிக்கு சென்று திரும்பி வருகிறேன் என்று பரதன் புறப்பட்டுவிட்டான். பெரியவரும் அரை குறை மனதோடு சம்மதித்து விட்டிருக்கிறார். பரதன் வெற்றிகரமாய் அலுவலை முடித்துக் கொண்டு பெரியவர் கூறியபடி அந்த இடத்திற்கு வந்திருக்கிறான். பரதனை அழைக்கத்தான் இங்கு நாம் பெரியவருடன் வந்திருக்கிறோம் என்பது புரிந்தது.
சில நிமிடங்கள் கழிய எமது நண்பன் சூரியனும் வீட்டுக்குள் இருந்து வந்து எமது காரினுள் ஏறினான். காருக்குள் இலேசான ஆரவாரம்.
'என்னப்பா நீரும் இந்த வீட்டுக்குள்ளேயே இதுவரை இருந்தனிர்?' பரதன் ஆச்சரியப்பட்டான். ஒருவருக்கொருவர் அங்கிருந்தது தெரியாது.
'கடைசியாய் எல்லேர்ரும் ஒன்று சேர்ந்திட்டம் போல’ ஜெகன்கூறிச்சிரித்தார். சிறிது நேரம் கலகலப்பாக இருந்தது.
"எங்களை எங்கு கொண்டு போய் பெரியவர் விடப் போகிறார்' என்று சூரியனிடம் நான் கேட்டேன். இரண்டு வார காலத்திற்கு நாம் தங்க ஒரு இடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாயும் அதற்குள் பெரியவர் கொழும்பு சென்று வந்துவிடுவார், வந்ததும்

63 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
எங்களைப் படகு ஒன்றில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பும் ஒழுங்கு செய்யப்படும் என சூரியன் கூறினான். “படகா. இந்தியாவிற்கு படகில் போறதா?’ எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும்.
"ஏன்?’ சூரியன் கேட்டான்.
'கடல் பாதகைளை மிக மிக முக்கியமாய் அவர்கள் கண்
காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாலே போனால் அவர்களின் கையில் பிடிபட வேண்டியதுதான்’ சற்று காரமாக கூறினான்.
"அப்படியெண்டால் எத்தனைநாளைக்கு இப்படியே இருப்ப தாக உத்தேசம் பெரியவருக்கு நாம் சிரமம் கொடுக்க முடியாது. கொழும்பிலிருந்து பெரியவர்திரும்பியதும் நாங்கள் ஏதாவது படகை ஒழுங்கு செய்து கொண்டு போக வேண்டும்’ சூரியன் கண்டிப்பாக கூறினான்.
'அட கரைச்சலே. இரண்டு வாரத்துக்குள் குடாவை விட்டு நாம் வெளியேற வழி கிடைக்குமா? எனக்கு அந்த நம்பிக்கை ஏற்படவில்லை. அவசரப்பட்டு வெளியேற நினைத்து அவர்களிடம் பிடிபடவே போகிறோம். இதற்குக்கிராமத்திலேயே இருந்திருக்கலா மெனநினைத்தேன்.

Page 36
19 மார்கழி 1896
ஒரு புதிய இடத்தில் எமக்கு இன்றைய காலை புலர்ந்தது. முதல் நாள் இரவு பெரியவர் எக்ஸ் எங்கள் ஐவரையயும் அழைத்து வந்து இங்குள்ள பொறுப்பாளரிடம் ஒப்படைத்தார். அவரை பெரியவர் என்று அழைப்பதால் இவரைச்சின்னவர் என்று குறிப்பிடு கிறேன். ஆனால் தோற்றத்திலும் வயதிலும் மனிதப் பண்புகளிலும் இவர் நமது பெரியவரைப் போலவே உயர்ந்தவர். ஒரு காலத்தில் நண்பர் ஜெகனுக்கும் சின்னவருக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்தில் கொழும்பிலிருந்து திரும்பி வந்ததும் எம்மை மறுபடியும் தனது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாயும் அதுவரை எங்களைப் பாதுகாப்பாய் வைத்திருக்கும்படி பெரியவர் எக்ஸ் சின்னவரிடம் கூறியிருந்தார். நாம் இப்போ தங்கியிருந்த இடம் பெரியதோர் மண்டபம். ஒரு பள்ளிக்கூடமாய்த் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அந்த மண்டபம் பல வகுப்பறைகளாக தட்டிவைத்துப்பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் சின்னவாங்கு மேசைகள் போடப்பட்டிருந்தன. சின்னவரின் இருப்பிடம் எமது கட்டிடத்துக்கு மிக அண்மையில்தான் இருந்தது. இவற்றை விடவும்

65 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பல கட்டடங்கள் அந்த வளவுக்குள் இருந்தன. அவை என்ன என்று நாம் விசாரிக்க முற்படவில்லை.
சிறிது நேரத்தில் சின்னவர் வந்தார். எமக்குத் தேவையான பற்பசை, சவர்க்காரக் கட்டி என்பவற்றை தந்தார். காலைக்கடன் களைக் கழிக்க கட்டடத்தின் பின்புறமாய் இருந்த குளியலறையைக் காட்டினார்
நாம் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்ததும் சின்னவர் எமக்காக பாணும் தேனீரும் கொண்டு வந்து தந்தார். மறுபடியும் வருவதாய் கூறினார். சின்னவர் மறுபடியும் வரும் போது கடிதங்கள் எழுதுவதற்கு எமக்கு பேப்பர் பேனா உறை என்பன வாங்கி வரும்படிக் கேட்டுக் கொண்டோம். நாம் இங்கு தங்கியிருப் பது சின்னவரைத் தவிர அந்த வளவுக்குள் இருந்த வேறு எவருக்கும் தெரியாது என்றும் எனவே எங்களை சத்தமில்லாமல் நடமாடும்படி யும் சின்னவர் கேட்டுக்கொண்டார். யாராவது இங்கு வந்து நம்மிடம் யார் நீங்கள் என்று கேட்டால், நாம் என்ன சொல்வது? என்று சின்னவரிடம் கேட்டோம். திருத்த வேலைகள் செய்ய வந்திருக் கிறோம் என்று பதில் கூறுமாறு எங்களுக்கு சின்னவர் சொல்லித் தந்தார். நாம் ஐவரும் எமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். எனது மனைவியின் நிலை பற்றி நண்பர்கள் கேட்டனர். நான் கிராமத்தை விட்டு இங்கு வருவதற்காகப் புறப்படு வதற்கு முன் எனது மனைவியை அவர்கள் விடுதலை செய்து விட்டனர் என்ற செய்தியை அறிந்ததாகவும் அதை விட வேறு விபரம் தெரியாது என்றும் கூறினேன். ~
மதியம் சின்னவர் எமக்கு உணவும் நாம் கேட்டுக் கொண்ட காகிதம் ஆகியவற்றையும் கொண்டு வந்து தந்தார். இவற்றோடு சுடச்சுடசெய்தியும் ஒன்று கூறினார்.
"அவர்களால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த இராணுவ வீரர்கள் இருவரை அவர்கள் விடுதலை செய்ய, இலங்கை அரசாங்கம் 'அவர்கள்’ கேட்டுக் கொண்ட இரண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது என்றும் பரஸ்பரம் இந்த அரசியல் கைதிகளின் பரிமாற்றம் யாழ் கோட்டைக்கும் யாழ்

Page 37
செழியன் 66
மத்திய கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றது என்றும் சின்னவர் கூறினார். அதுவரையிலும் தம்மால் கைது செய்யப்படுகின்ற இலங்கை இராணுவ வீரர்களையோ பொலிஸ்காரர்களையோ அவர்கள் கொல்வதைத் தான் வழமையாகக் கொண்டிருந்தார்கள். கைது செய்யப்படுபவர்களை அரசியல் கைதிகள் என்ற அந்தஸ்துடன் நடத்துகின்ற மனிதபிமானத்திலிருந்தும் அரசியல் வழிமுறையிலிருந் தும் தவறியே நடந்து வந்தனர். ஆனால் தாம் கைது செய்த இரண்டு இரணுவத்தினரையும் கொல்லாது தமது தோழர்கள் இருவருக்காக அரசுடன் பரிமாற்றம் செய்து கொண்டது ஒரு ஆரோக்கியமான செயல்முறையாக எமக்குப் பட்டது.
மதிய உணவுக்குப் பிறகு அனைவரும் கடிதங்கள் எழுதி னோம். நான் என் மனைவிக்கும் வெளிநாட்டிலிருந்த என் நண்பனுக் குமாய் இரண்டு கடிதங்கள் எழுதினேன். நான் பாதுகாப்பாய் ஒரு இடத்திலிருக்கிறேன், எனவே என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் மறுபடியும் அவர்கள் உம்மைக் கைது செய்ய லாம் என்பதால் பாதுகாப்பான இடம் ஒன்றில் இருக்கும்படியும் கூறி மனைவிக்கு கடிதம் எழுதினேன். நடந்து கொண்டிருக்கும் சம்பவங் களின் குறிப்பு ஒன்றை நண்பனுக்கும் அனுப்பினேன்.
இரவு மறுபடியும் சின்னவர் வந்தபோது நாம் எழுதிய கடிதங்களைத் தபாலில் சேர்த்து விடும்படி கூறிக் கொடுத்தோம். இரவில் தேவை என்றால் பாவிக்குமாறு கூறி எமக்கு தீப்பெட்டியும், மெழுகுதிரியும் சின்னவர் தந்தார்.
மேசைகளை அடுக்கி நித்திரைக்குச் சென்றோம். குளிர் வீசியது. சாரத்துக்குள் தலையையும் கால்களையும் முடக்கிக் கொண்டேன்.

1986 ופעיheח2O Lo
காலை மண்டபத்தின் முன் கதவு தட்டப்பட்டது. ஜெகன் சென்று கதவைத் திறந்தார். சின்னவர்தான் தேனீருடன் வந்து எம்மை எழுப்பினார். மதியம் வழமை போல் உணவு கொண்டு வந்தார். எமக்காக சின்னவர் தானே தேனிர் தயாரித்து எடுத்து வருகிறார் என்பதையும் எமக்காக வேறு வீடுகளில் இருந்தும் உணவு வாங்கி வருகிறார் என்றும் நாம்அறிந்து கொண்டோம். எமக்காக சின்னவர் படும் கஷ்டங்களை அறிந்து அவருக்கு எமது நன்றிகளைக் கூறினோம். இது தனது கடமை என்றும் அந்த மனிதர் பெருந்தன்மை யோடு கூறி எமது இதயங்களைத் தொட்டார்.
மாலை சின்னவர் வரும் போது ஒரு இனிய நண்பரையும் கூட அழைத்து வந்தார். அது வேறுயாருமல்ல, பிரபலமானவரும் கவிஞருமான சேரன் தான். கவிஞர் எமது இனிய நண்பர்களில் ஒருவர். ஆபத்தான நிலைமை களில் இருந்த எம்மை பார்த்துப் பேசுவதற்காக வந்திருந்தார். எமக்கு அவரைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. சுமார்அரைமணிநேரம் எம்முடன் இருந்து உரையாடினார். வெளியில் நிலைமை தொடர்ந்து அபாயகரமாக இருக்கிறது என்றும் குடாவை விட்டு யாரும் தப்பிக்கக்கூடாது என்ற

Page 38
செழியன் 68
நோக்கத்தில் கடுமையான கண்காணிப்பு நடைபெறுகிறது என்றும் கூறினார். கடல்வழி எவ்வாறு உள்ளது, அந்த வழியில் தப்பிப் போக முடியுமா என்று நாம் கேட்டோம். கடல் வழியாக யாரும் தப்பிப் போகக் கூடாது என்பதற்காக மட்டுமின்றி, இந்தியாவிலிருந்து ஆயுதங்களோடு தம்மைத் தாக்க யாரும் வரலாம் என்ற அச்சத்தில் அதைத்தடுப்பதற்காகவும் கடற்பிராந்தியம் அவர்களால் தீவிரமாய் கண்காணிக்கப்படுகிறது என்று கூறினார்.
அத்தோடு நிலைமைகள் சீராகும் வரை குடாநாட்டைவிட்டுத் தப்பிப் போவது பற்றி யோசிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். கவிஞர் கூறியது எனக்கு மிக உடன்பாடாய் இருந்தது. ஏனைய நண்பர்களும் கவிஞர்கூறிய தகவல்களின் பின்னால் இதே முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்த்தேன்.
பரதனுக்கு வயிற்றில் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் கடும் வலியாக இருப்பதாகவும் அத்தோடு சீழ் கட்டி இருப்பதாகவும் சின்னவரிடம் கூறினோம். மறுநாள் யாராவது மருத்துவ தாதியை அழைத்து வரமுயற்சிப்பதாய் கூறினார். அன்றிரவு முழுவதும் பரதன் வேதனைால் துடிதுடித்தான்.

21 Lorriras 1986
காலையில் சின்னவர் எங்களிடம் வரும் போது சிகிச்சைக்காக *-- . தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்ற ஒழுங்கோடு வந்தார். எங்களுக்கு இது பெரும் ஆறுதலாக இருந்தது. சின்னவரே தனது பொறுப்பில் பரதனை அழைத்துக் கொண்டு சென்றார்.
மத்தியானம் சின்னவர் மறுபடியும் எங்களிடம் வரும் போது பரதனை அழைத்து வரவில்லை. மருத்துவமனையிலே சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டத்தில் பரதன் இருப்பதாக டாக்டர் தெரிவித்ததாகவும் அவனை அவசர சிகிச்சைக்காக அங்கேயே நிறுத்திவிட்டதாகவும் கூறினார். மருத்துவமனையில் வைத்து அவர்களால் பரதனுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று நாம் பயந்தோம். ஆனால் அதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை சின்னவர் விளக்கமாய் எடுத்துக்கூறினார்.
சின்னவர் இன்னோர் விடயத்தையும் எமக்குச் சொன்னார். நாம் தங்கியிருக்கும் இந்த கட்டிடத்தில் திருத்த வேலைகள் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருப்பதால் எங்களை வேறு இடத்திற்கு

Page 39
செழியன் 70
இடமாற்றம் செய்ய வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறேன் என்றார். இடது சாரி அரசியல்வாதியும் எங்களுக்கு நீண்ட கால அறிமுகமான நண்பர் அண்ணாமலை எங்கள் நிலைமையை சின்னவர் மூலம் அறிந்து கொண்டதன் பின் தனது வீட்டில் ஒருவருக்கு அடைக்கலம் கொடுக்கத் தயாராய் இருக்கின்றார் என்பதையும் தெரிவித்தார்.
பரதன் ஏற்கனவே மருத்துவமனையில் இருக்கிறான். இந்த அரசியல் வாதியின் வீட்டுக்கும் ஒருவர் போனால் மிகுதி மூன்று பேருக்கும் தன்னால் வேறு ஒழுங்கு செய்வது செளகரியமாய் இருக்கும் என சின்னவர் குறிப்பிட்டார். இருட்டிய பின்னர் தான் வருவதாயும் எங்களில் ஒருவர் இந்த அரசியல்வாதியின் வீட்டுக்குப் போவதற்காகத் தயாராய் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பல கூட்டு வெகுஜன நடவடிக்கைகளின் போது நான் இந்த அரசியல் நண்பருடன் இணைந்து செயலாற்றியிருக்கிறேன். திட்ட வட்டமான கருத்துக்கள் உடையவர். அழகாகப் பேசுவார். நடுவே நகைச்சுவை இழையோடும். இலங்கை அரசினால் அரசியல் காரணங் களுக்காக சில காலம் தேடப்பட்டவர் இந்த தேடுதல் வேட்டையில் அகப்பட்டுக் கொள்ளாமல் தலைமறைவாய் இருந்தவர். இவரோடு தங்குவது பாதுகாப்பு குறைவானதே. அத்தோடு பலர் அங்கு வந்து போவார்கள் என்பதால் அவர்களுக்கும் இவர்மீது ஒரு சந்தேகக்கண் இருக்கலாம் என நினைத்தேன்.
மத்தியானம் சாப்பாட்டிற்குப் பின் நாம் நால்வரும் குட்டித் தூக்கம் போட்டோம். மாலை நித்திரை விட்டு எழுந்ததும் முகச் சவரம் செய்து குளித்து எனது உடுப்புகளை ஒழுங்கு பண்ணி நான் அந்த நண்பரின் வீட்டுக்கு போகத் தயாரானேன். எனது முடிவை ஜெகன், மணி இருவருக்கும் தெரிவித்தேன்.
சூரியன் இன்னமும் நித்திரையாய் இருந்தான். எங்கள் நால்வருக்கும் ஆபத்து ஒருவரை விட ஒருவருக்கு குறைவானதல்ல. எனவே யார் அந்த நண்பர் வீட்டுக்குப் போவது என்று கேள்வியை எழுப்பி விவாதித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. நானே போவதற்கு முடிவெடுத்தேன்.

71 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
சின்னவரின் வருகைக்காக நான் காத்திருந்தேன். சூரியன் உறக்கம் விட்டெழுந்தான். என்னைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம் கடந்த சில நாட்களாய் அழுக்காய் அரைகுறை தாடி மீசையுடன் இருந்தவன் குளித்து வெளிக்கிட்டு அழகாய் இருக்கிறானே என்று தான் ஆச்சரியம். என்ன விஷயம் என்று கேட்டான். நான் எடுத்த முடிவை சூரியனுக்கு கூறினேன்.
எனது முடிவை சூரியன் ஆட்சேபித்தான். "நீயா போகப் போகிறாய் வேண்டாம் வேறு யாரும் போகலாம்' என்றான். எல்லாருக்கும் ஒரே அளவு பிரச்சனை தானே என்று கூறினான். சூரியன் ஏனோ இதை ஏற்றுக்கொள்ளவில்லை. நீ போகக் கூடாது நான் போகிறேன். உனக்கு அந்த இடம் கூட பழக்கமில்லாதது. எனக்கு அந்த சுற்றுப்புறங்களும் ஓரளவிற்குத் தெரியும், திட்டவட்ட மாக சூரியன் கூறினான். மணி, ஜெகன் ஆகியோருக்கும் தனது முடிவை கூறினான். இவர்களும் சூரியனின் முடிவுதான் சரி என்றனர்.
நான் போவது என்று முழுமனதோடு முடிவு செய்திருந்தேன். ஆனால் என் உறுதி சூரியனினால் பலவீனப்பட்டுப் போனது. இருட்டிய பின் சூரியன் சின்னவரோடு புறப்பட்டுச் சென்றான். எனக்கு மிக்க மன வேதனையாய் இருந்தது. எனக்காதத் தான் ஆபத்தினை எதிர்கொண்டு சென்ற அந்த நண்பனை நினைத்து எனக்கு கண்ணிர் மல்கியது. அவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாதென வேண்டினேன். இரவு மெளனமாக ஊர்ந்தது.

Page 40
22 Lorriras 1986
இன்றைய நாளும் மெல்லக் கழிந்தது. இரண்டொரு வார்த்தைகளைத் தவிர நாங்கள் வேறு எதுவும் பேசிக் கொள்ள வில்லை. இதயங்களில் சோகம் பரவிக் கிடந்தது. மனைவியின் அன்பான முகமும் இனிமையான நினைவுகளும் எனக்குள் வந்து மோதின. என்னதுயரங்களைச் சுமந்து கொண்டிருக்கிறாளோ..?
தனது மனைவி குழந்தைகளைப்பற்றி மணியும் பெரிதும் கவலைப்பட்டான். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப் புக்குழுத் தலைவர்களில் ஒருவர் தான் நமது மணி என்பதை ஏற்க னவே குறிப்பிட்டிருந்தேன். அந்த மாணவர்அமைப்புக்குழு போராட் டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக வர்த்தக பீட மூன்றாம் ஆண்டு மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன், 1986 நவம்பர் நான்காம் திகதி இரவு அவர் தங்கியிருந்த திருநெல்வேலி பலாலி வீதி இடத்திலிருந்து திடீரென காணாமல் போய்விட்டார். இவரை விடுதலை செய்யும்படி கோரி போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்டது. விஜிதரனை கடத்தியது 'அவர்கள்’ என்ற விடயம் ஒரளவுக்கு அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் தாங்கள் விஜிதரனை கடத்தியதை மறுத்த தோடு மாணவர்களின் போராட்டத்தையும் அவர்கள் திட்டமிட்டு கண்டனம் செய்து வந்தனர்.

73 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
விஜிதரனைகடத்தியது யார் என்று தெரிந்தும் அதை மாணவர் அமைப்புக்குழு மக்களுக்குக் கூறவில்லை. கடத்தியவர்கள் விஜிதரனை விடுதலை செய்ய வேண்டும் என்றே அவர்கள் பொது வாகக் கூறி போராட்டம் நடத்தினார்கள். பல்கலைக்கழக மாணவர் களின் போராட்டத்திற்கு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களென்று ஆதரவு பெருகி வந்தது. இது 'அவர்களுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அவர்கள்’ யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற் கான வழிமுறைகளில் இறங்கினர். விஜிதரனை விடுதலை செய்யாத தன்காரணம் ஆரம்பத்திலேயே விஜியை அவர்கள் கொலை செய்து விட்டனர். இந்த உண்மையை "அவர்கள் ஒப்புக் கொள்ளவும் தயாராக இல்லை.
7.11.86ல் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினார்கள். இதன்பின் விஜிதரனை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர் உண்ணாவிரதத்தை நடத்தினார்கள். இப் போராட்டத்தை தொடர்கின்ற போது தமக்குத் தொலைபேசி மிரட்டல்கள் வருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்குழு பத்திரிக்கைகளுக்கு அறிக்கை வெளியிட் டது. தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த அவர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் எனபல வழிகளில் அமைப்புக்குழுவுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு சாகும் வரை உண்ணாவிரதப் போராட் டம் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பிரிவுகளாய் யாழ் குடாநாட்டுக்குள் கிராமம் கிராமமாய் விஜி தரனை விடுதலை செய்யக் கோரி பாத யாத்திரை மேற்கொண்டனர். இந்தப்பாத யாத்திரைக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். அவர்களோ? மாணவர் போராட்டத்தை கண்டித்து பகிரங்கமாய்கருத்து வெளியிட் டனர் மாணவர்களின் போராட்டம் தமிழ் மக்களின் போராட்டத்தை குழப்புகின்றது என்றும், விஜிதரனை கடத்தியவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களுக்கெதிராக போராடும் படியாக பத்திரிக்கை அறிக்கைவிடுத்தனர்.

Page 41
செழியன் 74
பாத யாத்திரையில் ஈடுபட்ட ஒரு பகுதி மாணவர்களின் ஒரு குழுவை கரவெட்டியில் வைத்து இனம் தெரியாத குண்டர்கள் கடுமையாகத் தாக்கினர். தீவுப் பகுதியில் பாத யாத்திரை செய்த பாத யாத்திரிகர்கள் மீது வன்முறை பாவிக்கப்பட்டது. தென்மராட்சியில் பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் மட்டுவில் மகா வித்தியாலயத் தில் இரவுதங்கியிருந்தபோது இரவு 11 மணியளவில் கைத்துப்பாக்கி, கைக்குண்டுகள் சகிதம் புகுந்த இருபதுக்கும் மேற்பட்ட குண்டர்கள் தடிகளாலும் பொல்லுகளாலும் பாத யாத்திரிகர்களை தாக்கினர். பாடசாலை சொத்துக்கள் யாத்திரியர்களின் உடமைகள், ஒலிபெருக்கி சாதனங்கள் சூறையாடப்பட்டன. தலையிலும் முகங்களிலும் முதுகுப் புறங்களிலும் பலமான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த யாத்திரியர்கள் மறுநாள் காலை பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கோப்பாய் பகுதியில் நடை பெற்ற பாத யாத்திரைபருத்தித்துறை வழியாக யாழ்ப்பாணம் நோக்கி வருகையில் கல்வியங்காடு கட்டப்பிராய் குளத்தடியில் 'பொது மக்கள்’ எனத் தம்மைக் கூறிக்கொண்ட சில காடையர்களால் வழி மறிக்கப்பட்டது. நமது மணியே இந்தப் பாத யாத்திரைப் குழுவுக்கு தலைமை தாங்கி வழி நடாத்தி வந்து கொண்டிருந்தான். மாணவர் களைகாடையர்கள்தடிகளாலும் காலாலும் தாக்கினர். இவ்வாறு பாத யாத்திரிகர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை காரணமாக ஆறாவது நாள், பாத யாத்திரைமுற்றாக நிறுத்தப்பட்டது.
தமது அடுத்த நடவடிக்கை என்ன? என்று யாழ் மாணவர் அமைப்புக்குழு ஆலேசனை நடாத்திக் கொண்டிருந்த வேளை மார்கழி13ம் திகதி வந்தது. அன்று அவர்கள் இயக்கம் ஒன்றை தடை செய்தனர். தன்னைத் தேடி அவர்கள் வருவார்கள் என்பதை விளங்கி வைத்திருந்த மணி வீட்டை விட்டு தப்பியோடி நம்மோடு தலை மறைவானான். அவன் எதிர்பார்த்ததைப் போல திருநெல்வேலியில் வைத்திருந்த மணியின் வாடகை வீட்டை அவர்கள் முற்றுகையிட் டனர். வீடு பூட்டப்பட்டுக்கிடந்தது. மணியின் மனைவியும் மகளும் கூட இருக்கவில்லை. வீட்டு உரிமையாளரிடம்தான் வீட்டுத் திறப்பு இருந்தது. அதை 'அவர்கள் வாங்கி வீட்டைச் சோதனை செய்து விட்டு மறுபடியும் வீட்டைப் பூட்டி திறப்பைக் கொண்டுபோய்

75 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
விட்டனர். மறுபடியும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்த மணியின் மனைவி வீட்டுக்குள் போக முடியாதவாறு வீடு பூட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருக்கின்றார். நிர்வாகத்தின் மூலம் தனது வீட்டுத் திறப்பை பெற்றுக்கொள்ள மணியின் மனைவி அலைந்து கொண்டிருப்பதாய் முன்பு செய்தி வந்திருந்தது. பின்னர் என்ன நடந்தது? அவர்களால் மனைவிக்கு பிரச்சனை ஏதும் ஏற்பட்டதா...? என்றெல்லாம் யோசித்து மணி குழம்பிக் கொண்டிருந்தான். அத்தோடு மணிக்கு ஏற்கனவே வயிற்றில் 'அல்சர் இருந்தது. உணவு உண்ணும் நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவனுக்கு வயிற்றில் மீண்டும் அல்சரினால் வலி ஏற்பட்டது.
இரவு எட்டு மணி. ஒரு வாகனம் இரைந்த சத்தம் எமக்கு மெல்லக் கேட்டது. நாம் உசாரடைந்தோம். எமக்கு ஏனோ ஒரு சந்தேகம் ஏற்பட்டது. கூர்ந்து கவனித்தோம். முதலில் கேட்ட இரைச்ச லின் பின் வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. ஆனால் எமக்கு சந்தேகம் தீரவில்லை.
எமது கட்டிடத்தையும் வெளி உலகையும் பிரித்து ஒரு உயரமான மதில் இருந்தது. இரண்டடி தூரத்தில் தான் இந்த மதில் இருந்ததால் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து பதுங்கிப்பதுங்கி மதிலால் எட்டிப் பார்த்தோம். இருட்டு. மரங்கள் கூடலாக வேறு இருந்தது. ஒன்றும் புலப்படவில்லை. ஜெகன் மெல்ல மதிலால் ஏறி மறுபுறம் இறங்கினார். நானும் மணியும் அவர் ஏறுவதற்கு உதவி செய்தோம். மறுபுறம் இறங்கிய ஜெகன்மரங்களின் மறைவில் சிறிது தூரம் நடந்து சென்று ஏதாவது புலப்படுகிறதா? எவருடைய நடமாட் டங்களாவது இருக்கிறதா? என நோட்டமிட்டார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். அவர் வரும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். எவ்வித சந்தேகப்படக் கூடிய நிகழ்வுகளும் இல்லை என ஜெகன் கூறினார். ஆனால் எமக்கு நித்திரை கொள்ள முடியவில்லை. இரவில் திடீர் திடீர் என கண்விழிப்பு ஏற்பட்டது.

Page 42
23 Lorriras 1986
சின்னவர் எம்மிடம் வந்த போது, இரண்டு பத்திரிகைகளும் அத்தோடு கவிஞர் எனக்கு எழுதிய கடிதத்தையும் தந்தார். கவிஞர் கடிதத்தில் மணியின்விடயம் பற்றியே குறிப்பிட்டிருந்தார்.
மணியின் பல்கலைக்கழகப் பட்டதாரிப் படிப்பு முடிய இன்னும் சில மாதங்களே இருந்தன. அப்படிப்பு முடியும் வரை யாழ்பாணத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் மணி இருந் தான். தன்னை பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பெடுக்குமாயின் அவர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என மணி நம்பினான். இதுபற்றிய சாத்தியகூறுகளை யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஆலோசிக்குமாறு கவிஞரை மணி ஏற்கனவே கேட்டிருந்தான். கவிஞரின் கடிதத்தில் 'மணியின் விடயம் தொடர்பான அலுவல் இன்னமும் முடியவில்லை’ என்று எழுதியிருந்தார். கடிதம் 22ம் தேதியிட்டு எழுதப்பட்டிருந்தது.
பத்திரிகைகளை நாம் ஒரு வரிகூட பாக்கியில்லாமல் வாசித்து முடித்தோம். 22ம் திகதி ஈழமுரசு 21ம் திகதி ஞாயிற்றுக் கிழமை வீரகேசரியுமே எமக்கு கிடைத்திருந்தன. முக்கியமான சில செய்திகளை குறித்துக்கொண்டேன்.

77 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
நடேசன் கியூ.சி. காலமானார் என்று ஈழமுரசு தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது.
இரு போராளிக் குழுக்கல் இடையில் மோல் இடம் பெற்ற தங்க வேலாயுதபுறத்திற்கு மூன்று நாட்களிற்கு முன் சென்ற திருக் கோயில் அதிரடிப்படை முகாமச் சேரந்த 200 அதிரடிப்படையினர் முகாம்புக்கு திரும்பாமலேயே போராளிகளை காடுகளில் தேடி வருகின்றனர். உடும்பன்குளம் தாமரைக்கேணிக்குளம், தங்கவேரா யுதபுரம் ஆகிய பகுதிகளில் படையினர் உள்ளனர் எனத் தெரிவிக்கப் படுகிறது. சங்கமான்கண்டிபிள்ளையார்ஆலயத்திற்கு அருகில் உள்ள காடுகளிலேயே தேடுதல் வேட்டை நடைபெறுவதாக தெரிய வருகிறது.
இயக்கங்களை ஒன்றுபடக் கோரி வீதிமறிப்பு போராட்டம் பலாலி வீதியில் நடைபெற்றது. பலாலி சந்திக்கு அருகில் இடம் பெற்ற இவ்வீதி மறிப்புப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இயக்கங்களே ஒன்று படுங்கள் மோதல்களை தவிருங்கள் பிரச்சனை இருந்தால் பேசித் தீருங்கள்! என்பன அடங்கிய சுலோக அட்டைகளை இவர்கள் தாங்கியிருந்தனர்.
போராளிதற்கொலை
பூநகரி ஞானிடமத்தைச் சேர்ந்த துரைசாமி கருஞாகரன் (26 வயது) தமறோன் நச்சு மருந்தை அருந்தி தற்கொலை செய்து கெண்டுள்ளார். ஈ.பி. ஆர். எல். எப் விடுதலை இயக்கத்தை சேர்ந்த வராவார். சில தினங்களுக்கு முன் இன்னுமோர் இயக்கத்தால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு முகாமில் வைத்து விசாரிக்கப்பட்ட பின் விடுதலை செய்யப்பட்டவராவர். இரண்டு தினங்கள் இவர் மரணத்தையொட்டி வாழை, தென்னைகளால் வீதியெங்கும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பெருந்திரளான மக்கள் மரணச்சடங்கில் கலந்து கொண்டனர்.

Page 43
செழியன் 78
மத்தியானம் சின்னவர் வரும் போது அச்சகம் ஒன்றிலிருந்து ஒரு சஞ்சிகையின் சில பக்கங்களை எடுத்துக்கொண்டுவந்து தந்தார். அதில் உலகப் புகழ் பெற்ற ஓவியனான மைக்கல் ஆஞ்சலோவைப் பற்றியும் எழுதியிருந்தது. கட்டுரையாளர் யசோதரன்.
மைக்கல் ஆஞ்சலோ 1475 பங்குனிம்ே திகதி பிறந்தவன். எழில் கொஞ்சும் அற்புதக் கலைப் படைப்புக்களினால் உலகை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்த 'புளோரன்ஸ் நகரத்திலிருந்து 40 மைல் தொலைவில் உள்ள 'கப்றீசல் என்ற இடமே அவன் பிறந்த இடம்.
எக்கலைப்பணியில் அவன் ஈடுபட்டாலும் ஒன்றிப் போய் விடும் இயல்பு கொண்டவன். 'தன் தாடி விண்நோக்கி வளர்வதை யும்' பொருட்படுத்தாது கலையோடு ஒன்றிப் போயிருந்தான். வளர்ப்புத் தாயின் பாலோடு சலவைக் கல்லின் தூசியும் கலந்து ஊட்டப்பட்டவனான இவன் சிந்தனைக்கு, தூரிகை சேவகம் செய்து கொண்டிருந்தது. இவன்தான் மறுமலர்ச்சிக்கால கலையின் ஒப்பற்ற சிற்பி.
இவனுக்குப் 13 வயது ஆகும் போதே அந்நாளில் புகழ் பெற்ற கிரிலாண்டியோவின் ஒவியக்கூடத்தில் சேர்க்கப்பட்டான். ஓர்ஆண்டு கழிந்த பின் ஒவியச் சாலையை விட்டு வெளியேறி பேர் டொல்டோவைத் தலைவனாகக் கொண்ட மெடிசியின் சிற்பக் கூடத் திற்கு வந்து சேர்ந்தான். மைக்கல் ஆஞ்சலோவின் வாழ்வில் மிகத் துயரமான சம்பவம் இங்குதான் நிகழ்ந்தது. சக மாணவர்களில் ஒரு வரான ரொறிகியாறோவுடன் ஏற்பட்டகைகலப்பில்மூக்கின்ஒரு பகுதி சிதைந்து அழிக்கவியலாததழும்பாகிஅதன்பூரணத்துவத்தில் வேட்கை கொண்டவன் வாழ்நாள் பூராவும் வருந்திக்கொண்டிருந்தான்.
குழந்தை இயேசுவை மடியில் வைத்து படிக்கட்டில் அமர்ந் திருக்கும் கன்னிமேரியின் சிற்பம் (Madonna of the stairs) சென்ரார் களின் யுத்தம் (Battle of Centaurs) மது தேவனின் சிற்பம் ஆகியவை களின் மூலம் தன் தன் திறமையை வெளிப்படுத்திய ஆஞ்சலோ உலகப் புகழ் பெற்றதும் அற்புதமான சிற்பமான பியற்றாசிற்பத்தை செதுக்கும் ஒப்பந்தத்தில் 26.08.1498ல் கையொப்பமிட்டான்.

79 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
இதற்கிடையில் புளோரன்ஸ் ஆட்சி மன்ற தலைவனாக பீரோ தேர்ந்தேடுக்கப்பட்டான். இவன் காட்டிய அசிரத்தையினால் அவமதிப்புக்குள்ளான மைக்கல் ஆஞ்சலோமெடிசி அரண்மனையை விட்டு வெளியேறி சான்ராகுறோசில் உள்ள தன் பூர்வீக வீட்டை அடைந்தான். இங்கு தான் சிற்பக்கலைக்கு இன்றியமையாத உடற் கூற்று சாத்திரத்தைக் கற்றுக்கொண்டான். மனித உடலின் தசை திரட்சிகளின் நூணுக்கங்களை அறிவதில் முழுமூச்சாக ஈடுபட்டான். பிணங்களை ஆராய்வது மரண தண்டனைக்குரிய குற்றங்களாக இருந்த போதிலும் சான்ராஸ் பேட்டா தேவாலயத்தின் தலைமைக் குருவின் உதவியால் மருத்துவ விடுதியின் பிரேதக் கிடங்குகளிலுள்ள பிணங்களையாருமறியாமல் இரவு வேளைகளில் மெழுகுவர்த்தியின் அல்லாடும் ஒளியில் பரிசோதித்து மனித உடலின் இரகசியங்களைக் கண்டறிந்தான்.
இந்த அனுபவங்களோடு தான் உலகப் புகழ் பெற்ற பியற் றாவை வடித்தெடுக்கமைக்கல் ஆஞ்சலோ ஆயத்தமானான். சிலுவை யில் இருந்து இறக்கப்பட்டு வியாகுல மாதா மடியில் வளர்த்தப்பட்ட நிலையில் இருக்கும் சிற்பத்தை செதுக்கி முடித்த போது ரோமா புரியே வியப்பில் ஆழ்ந்தது. அப்போது கலைஞனுக்கு வயது 24.
நீங்காத நித்திரை கொள்ளும் இந்த உடலைப் போன்றதொரு அற்புதமான திருக்காட்சியை வேறு எங்கு காண்பது? எத்தனை ஆழ்ந்த நித்திரை இது. சாட்டையும், சிலுவையும், ஈட்டியும் விளை வித்த புண்களைத் தாங்கிக் கிடக்கின்ற இத்தோற்றம் நித்திய சத்திய மாக அற்புதப் பேரொளியாகக் காட்சியளிக்கிறது. "தேவாலயத்தில் ஒலித்திடும் இனிய மெல்லிய இசை போல் அற்புதமான ஆன்மீக நித்திரை’ எனசிமென்ஸ் குறிப்பிடுகிறார்.
பியற்றா குறித்து மைக்கல் ஆஞ்சலோவின் மாணவனும் பிற் காலத்தில் மறுமர்ச்சிக் கலை வரலாற்றை எழுதியவருமான வசாரி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இந்தச் சிற்பத்தில் உருவம் கொடுப் பதில் மைக்கல் ஆஞ்சலோ வெளிப்படுத்திய கலைப் பேராற்றல் இருக்கிறதே அதற்கு இணையாக எதனைக் குறிப்பிடுவது. சலவைக் கல்லைச் செதுக்கி மெருகேற்றிய சாதுரியத்திற்கு ஒப்பாக எந்த ஒரு

Page 44
செழியன் 80
சிற்பியின் திறனை எடுத்துக் காட்டுவது. சிற்பக் கலையின் வலிமையை அதன் தேஜசைஅற்புதமாக வெளிப்டுபத்தியது பியற்றா. இதன் சிறப்பு அம்சமாகத் தெரிவது கிறிஸ்துவின் தோற்றமே. இது போன்றதோரு அழகிய மேனியை எலும்புக் கூட்டினுள்ளே முறுக்கேறித் திரண்ட தசைகளை, நரம்புப் பிணைப்புகளைக் கூடத் துல்லியமாகச் சித்தரித்த நிர்வாண உடலை வேறு எங்கே காண்பது? அழகிய பாவமும், அங்கங்களின் இசைவும், உடல் அமைப்பும், நரம்புகளின் நுணுக்கமான சித்தரிப்பும், மிகுந்ததொரு ஆற்றலும், விரைவும் முதலில் நம்மை வியப்புற வைக்கின்றன. இயற்கையால் கூட உருவாக்காத இத்தசைக்கோளங்களை வெறும் சலவைக்கல்லில் அவன் உருவேற்றியதை அற்புதம் என்று சொல்லாமல் வேறு எங்ங்னம் குறிப்பிடுவது."
மைக்கல் ஆஞ்சலோ முன்னர் செதுக்கிய பக்கசுவுக்கும் பியற்றாவுக்கும் உள்ள முரண்பாடுகள் உடல் எழுச்சியும், இரக்கம் கலந்த அன்பும் இவன் வாழ்வைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இரண்டையும் வெளிக்காட்டுவதற்காக இயற்கையின் உடல் நுட்பங்கள், காவிய அழகு, உயர்ந்த முடிவுகள் இவை எல்லாம் 15ம் நூற்றாண்டின் புளோரன்ஸ் சிற்பக்கூடத்தில் இருந்து ஊற்றெடு க்கின்றன. சிற்பக்கலை பற்றிமைக்கல் ஆஞ்சலோ குறிப்பிடும் போது "யதார்த்தம் பொருட்களின் உள்ளிருக்கும்சாரததில்தான்தங்கியிருக்கி றது. உருவம் என்பது ஏற்கனவே கல்லினுள்ளே கிடக்கிறது. தேவை யற்றதை வெளியே எடுத்து விடுதலே உள்சாரத்தை வெளிப்படுத்தும்" என்றான்.
இரவு எட்டு மணி. சின்னவர் இரவுச் சாப்பாடு கொண்டு வந்தார். அத்தோடு கவிஞரின்கடிதமும் கொண்டு வந்தார். கடிதத்தில் மணியின் பீடத் தலைவரைச் சந்தித்ததாகவும் அவர் கொழும்பிற்கு சென்று வந்ததும் மணியைப் பொறுப்பெடுக்கலாம் எனக் கூறியதா கவும் கவிஞர் எழுதியிருந்தார். அத்தோடு சுமார் 80 பேர் வரையில் பரவலாக அவர்களிடம் பிடிபடாமல் பாதுகாக்கப்படுவதாய்அறிவ தாயும் குறிப்பிட்டிருந்தார். தான் அனுப்பியுள்ள சிகரட் பார்சலை சூரியனிடம் கொடுக்கும் படியும் தான் அனுப்பிய மற்றப் பார்சலும் எமக்குத்தான் என்றும் எழுதியிருந்தார்.

8 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பார்சலைத் தான் தற்சமயம் கொண்டுவரவில்லை என்றும் மறுநாள் காலை கொண்டு வருவதாக சொன்ன சின்னவர், சிறுவர் களை அவர்கள் உளவு வேலையில் ஈடுபடுத்துவதாகவும், இந்த சிறுவர்கள் கூட்டம் கூட்டமாய் சுற்றித் திரிவதாய் அவர்களோடு ஒன்று இரண்டு பேர்மட்டுமே இணைந்திருந்த உரும்பிராயில் அனேக சிறுவர்கள் இத்தகைய வேலையில் ஈடுபடுவதாயும் கூறினார்.
இரவு உணவு உண்ணும் போது மணியுடன் அவனது முடிவு தொடர்பாக உரையாடினேன். மணிதனது பட்டப் படிப்பை முடிக்க வேண்டிய அவசியத்தை ஏற்றுக் கொண்ட நான் அவர்கள் தருகின்ற வாக்குறுதியை நம்பி தொடர்ந்து பல்கலைக்கழகத்திலே படிக்கின்றது என்பது ஆபத்தானது என்று கூறினேன். யாழ் பல்கலைக்கழகம் தன்னைப் பொறுப்பெடுத்து நிர்வாகமே அவர்களோடு பேசி இந்த முடிவு செய்யப்பட்டால், தான் தொடர்ந்து படித்து முடிக்கலாம் என மணிஉறுதியாக நம்பினான். நான்நம்பவில்லை. அவனுக்கு ஆபத்து ஏற்படாது என்று அவர்கள் வாக்குறுதி கொடுத்தால் அதனை இறுதி வரை காப்பாற்றியே தீருவார்கள் என்று நான்நம்பவில்லை.

Page 45
24 மார்கழி 86
இன்று காலை ஆறு மணியளவில் நித்திரை விட்டெழுந் தோம். இரவு முழுவதும் ஒரே நுளம்புக்கடி. காலை 6.30 - 7.00 மணிக் கிடையில் வந்து கதவுதட்டுகின்ற சின்னவரை8 மணிக்கு மேலாகியும் காணவில்லை. என்ன நடந்தது என எமக்குச் சற்று யோசனையாய் இருந்தது. 8.30 மணியளவில் கதவுதட்டுகிற சத்தம் கேட்டது. கதவைத் திறந்தோம் சின்னவர் தான் வந்திருந்தார். காலை உணவாக பாண், சட்டினி, மூன்று வாழைப்பழங்களும், சீனியும், தேனீரும் கொண்டு வந்திருந்தார். சட்டினியை தேங்காய் பூவுடன் தூதுவளம் இலையை யும் போட்டு தானே தயாரித்ததாயும் கூறினார். தூதுவளை இலை உடம்புக்கு மிக்க நல்லது என்றும் கொடித் தேசிக்காய் பிழிந்து விட்டிருப்பதால் சற்றுக்கசப்பாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சின்னவரிடம் முத்திரை, பற்பசை, நுளம்புத்திரி, பாட்டா ஒரு சோடி என்பன தேவையென ஒரு லிஸ்ட் கொடுத்தோம். வாங்கி வருவதாகக் கூறினார். முதல் நாள் கவிஞர் எம்மிடம் கொடுக்கும்படி குறிப்பிட்டு அனுப்பி "பேக் கை எம்மிடம் தந்தார். அதனுள் உடுப்பு கள் தான் இருந்தன. பெரும்பாலானவை சூரியனுடையதாய்த் தான் இருக்க வேண்டும் என நான் கூறினேன். ஒவ்வொன்றாக எடுத்துப்

83 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பார்த்தோம். ஜெகனுக்கும் சில உடுப்புகளும் அவரது பாஸ்போட் அடையாள அட்டை என்பனவும் இருந்தன. என்னுடைய மழைக் கோட்டும் இருந்தது. அது ஏன் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக் கிறது என எனக்குப் புரியவில்லை. கடிதங்கள் எதுவும் இருக்கின்ற னவா எனத் தேடினோம் காணவில்லை. உடுப்புகளோடு சேர்ந்து போய் இருக்காலாமெக அவற்றை விரித்துப் பார்த்தோம். இல்லை. உதறியும் பார்த்தோம். ஊகும். கடிதங்கள் எமக்கு வரவேயில்லை. சின்னவர் போய்விட்டார். கடிதங்கள் அனுப்பாததையிட்டு எங்கள் மனைவிமார்களை மூன்று பேரும் திட்டினோம். சாப்பிடத் தயாரானோம். சட்டினியை எடுத்து வாயில் வைத்தால் ஒரே பயங்கரமான உறைப்பு. உறைப்பு என்றால் கூடப் பரவாயில்லை. வாயில் வைக்க முடியாத கசப்பு.
மணி சட்டினி வேண்டாம் என்று வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டார். நான் இரண்டொரு முறை சட்டினியில் தொட்டுச் சாப்பிட்டேன். (தூதுவளம் இலை உடம்புக்கு நல்லது என சின்னவர் கூறியதைக் கவனிக்க) பின் சீனியும் ஒரு பழமும் எடுத்துக் கொண் டேன். ஜெகன் சட்டினியை வெளுத்துக்கட்டினார்.
மதியமும் சின்னவர் வர தாமதமாகி விட்டது. நான் சூரியனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். பி.ப. 2.15 அளவில் சின்னவர் வந்தார். இரண்டு சோற்றுப்பார்சல்களை எம்மிடம் தந்தார். மற்றொரு பார்சலை சிறிது நேரத்தில் கொண்டுவந்து தருவதாய்க் கூறினார். செய்திகள் ஏதும் எண்டா? எனக் கேட்டோம். சூரியனைச் சந்தித்ததா கவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார். தனியார் மருத்துவ மனையிலிருந்த பரதனை சூரியனின் மனைவி சென்று சந்தித்ததாயும் பரதன் குணமடைந்து விட்டார் என்றும் அறைக்கு வெளியில் எல்லாம் இப்போ உலாவித்திரிகிறார் என்றும் சிரித்தபடி கூறினார். எங்களுக்கு இந்தச் செய்தி மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தின. பத்திரிகைகள் இருக்கின்றதா? என சின்னவரிடம் கேட்டோம். உடன்கொண்டுவந்து தருவதாகக் கூறினார்.
நாம் மதிய உணவை சாப்பிட்டு முடிக்கின்ற போது, ஒரு பத்திரிகையும், சஞ்சிகையும் சின்னவர் கொண்டு வந்து தந்தார்.

Page 46
செழியன் 84
பத்திரிகை தலைப்புச் செய்தியாக இந்திய வெளியுறவுக் கொள்கைத் திட்டத்தலைவர்ஜி. பார்த்தசாரதியின்ராஜினாமாச்செய்தி இருந்தது. இலங்கைப் பிரச்சனை தொடர்பாக பார்த்தசாரதியின் ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டதும் பரிசீலனை செய்யப்படாததுமே இவரது ராஜினாமாவுக்குக் காரணம் என செய்தியில் இருந்தது. அதே செய்தியில் இந்தியாவைப் போல் மாகாணங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட உள்ளதாகவும் வடக்க கிழக்கு மாகாணங்கள் இணைக் கப்பட மாட்டாதென்றும் இம்மாத இறுதிக்குள் (இன்னமும் சில தினங்களுக்குள்) இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் உறுதியாக இருக்கிறார் என்றும் இதற்கான தீர்வு பற்றி இன்னம் சில தினங்களில் இலங்கை இந்திய அரசுகள் அறிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாளை கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி போர் நிறுத்தம் என மற்றோர் செய்தி கூறியது. தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி விடுத்த அறிவிப்பை புலிகளும் ஏற்றுக்கொண்டதாய் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றும் இரண்டு செய்திகள் எமக்க முக்கியமானதாய் இருந்தன.
★ அவர்களிடம் சரணடைந்து விடுதலை செய்யப்பட்ட மாற்று இயக்க உறுப்பினர்கள் மூன்று பேர்காங்கேசன்துறையில் கராஜ் ஒன்றில் நின்ற சமயம் லொறி ஒன்றைக் கொண்டு வந்த சாரதியுடன், முன்னைய இயக்க நடவடிக்கைகள் பற்றிதர்க்கம் நடந்ததாயும், சாரதி மூன்று இளைஞர்களினதும் இயக்க நடவடிக்கையை காரசாரமாகக் கண்டிக்க உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் சாரதியைத் தாக்கினர். தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத சாரதி லொறியை எடுத்துக் கொண்டு அவர்களிடம் சென்று லொறியிலேயே அவர்களை ஏற்றி வந்தார். இதனைக் கண்டு ஓடிய இளைஞர்களில் இருவர் அவர்களால் 'துரத்திப்பிடிக்கப்பட்டனர். மற்றவர்காங்கேசன்துறை ஹாபர் வியூ ஹோட்டல் முகாம் ராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் அங்குதற்கொலை செய்து கொண்டார்.
★ அரசியல் கொலைகள் மூலம் இலட்சியங்களையும் கொள்கைகளையும் சாகடித்து விட முடியாது என்பதை சம்பந்தப்

85. ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பட்டவர்கள் உணரவேண்டும். இழப்புகளால் சோர்வடையாமலும், அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாமலும் சுதந்திர மாணவர் அமைப் பானது தனது முற்போக்கான செயற்பாடுகளைத் தொடர்ந்தும் நடத்து மென எதிர்பார்ப்பதாய் ஈரோஸின் மாணவர் அமைப்பான கைஸ் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கொழும்பு பல்கலைக் கழக மாணவனும் சுதந்திர மாணவர் அமைப்பின் தலைவருமான தயாபத்திரனபடுகொலை செய்ய்பட்டதை வன்மையாகக் கண்டித்தே இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இவ்வறிக்கையை எழுதிய வர்கள் 'அவர்களையும் மனதில் வைத்துக் கொண்டுதான் அறிக்கையை எழுதியிருப்பார்கள் என எனக்குத் தோன்றியது. அறிக்கையை வாசிப்பவர்களுக்கு அவர்களின் செயற்பாடுகளும் நிச்சயமாக நினைவுக்கு வரும்.
மாலை நான்கு மணியளவில் நாங்கள் ஆடு புலி ஆட்டம் ஆடினோம். மணியும் நானும் விளையாடத் தயாரானோம். கோடு களைப் போட்டு, காய்களைத் தயார்படுத்தினோம். ஆனால் மணிக்கு இந்த விளையாட்டுத் தெரியாது. ஜெகனே என்னுடன் விளையாடி னார். இரவு வந்தது. மெழுகுதிரி இல்லை. தீக்குச்சியும் இல்லை. மழைமப்பாக இருந்தது. குளிர் வேறு வீசியது. வெளிச்சம் இல்லை என்பதால் ஜன்னலைத் திறந்து போட்டிருந்தோம். குளிர் தாங்க முடியாமல்சாரத்தை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தேன். ஜெகனும் மணியும் கூடப்படுத்துவிட்டனர். இரவு வெகுநேராமாகி விட்டது. கண்ணயர்ந்து தூங்கி விட்டேன் திடீரென்று விழிப்பு ஏற்பட்டபோது வாசலில் கதைத்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. சின்னவர்தான் வந்து ஜெகனுடன்கதைத்துக்கொண்டிருந்தார். இரவுச் சாப்பாடு, மெழுகுதிரி என்பன கொண்டு வந்திருந்தார். அத்துடன் சூரியன் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் எமக்குத்தந்தார்.
கடிதத்தில் முக்கிய செய்திகள் இருந்தன. சூரியன் இருக்கு மிடம் நாம் இருக்கும் இடத்தைப் போல பாதுகாப்பாய் இல்லை. ஆனால் அவர்கள் தேடி வந்தால் தப்பக் கூடியதாக இருக்கும் என்று கடிதத்தில் இருந்தது. தனது இடத்தில் நிறையப் புத்தகங்கள் இருக்கின் றன என்றும் இதனால் படிக்கக்கூடயதாக இருப்பதாகவும் எழுதியிருந்

Page 47
செழியன் 86
தான். பரதனின் மனைவி அதிர்ச்சியினால் பதிக்கப்பட்டிருப்பதாய் செய்தி வந்ததாயும் பரதன் மனைவிக்குக் கடிதம் போடும்படி அறிவிக்கும்படியும் முடியுமாயின் ஒரு முறை இருவரையும் சந்திக்க ஒழுங்கு செய்வது நல்லது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இளவாலையில் ஒரு கிராமத்தில் அறுபது இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்புக் கொடுத்துள்ளார்கள். பகலில் பெண்கள் தான் 'சென்றி இந்தப் பாதுகாப்பு வளையத்தினுள் 'அவர்கள் ஆயுதத்துடன் புகுந்துவிட்டனர். மக்கள்ஆயுதங்களைப் பறித்ததுடன் அவர்களை'யும் உள்ளே வைத்து விட்டனர். பின்னர் அவர்களின்’ யாழ் மாவட்டத்தளபதி 'அந்தக்கிராம்த்தினுள் இனிவரமாட்டோம்" என்று எழுதிக் கொடுத்த பின்னரே, "அவர்களும் ஆயுதங்களும் விடப்பட்டன என்றும் பிறகு இந்நிலைமை மாறி 'அவர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கி விட்டதாகவும் பலர் கைதாகியும் சிலர் சரணடைந்திருப்பதாயும் செய்தி கூறியது. வசந்த், இக்பால், ரஜனி, ஈஸ்வரன் ஆகியோர் பிடிபட்டுள்ளனர். ஈஸ்வரனுக்கு கை, கால் முறிக்கப்பட்டுவிட்டதாயும் தகவல் கிடைத்ததாய் சூரியன் குறிப் பிட்டிருந்தான்.
ஒரு கணிசமான காலம் இப்படியே வாழ வேண்டியிருப்பதால் இதற்கேற்ப அன்றாட வாழ்க்கையை ஒழுங்குபடுத்துங்கள். எதையா வது படியுங்கள் எழுதுங்கள் என்று சூரியனின்கடிதம் கூறியது.

25 Ιοπήσειρ) 1986
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன் கிறிஸ்தவ தேவலாய மொன்றிலிருந்து தொடர்ச்சியாக மணி ஒலித்தது. இரவு பன்னி ரெண்டு மணியாகத்தான் இருக்க முடியும். கிறிஸ்தவ மக்கள் நத்தார் தினத்தை கொண்டாடுகிறார்கள். மறுபடியும் நான் நித்திரையில் ஆழ்ந்துவிட்டேன். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நான் கதவுச்சத்தம் கேட்டு மீண்டும் திடுக்கிட்டு விழித்தேன். நுளம்புகள் இரைந்து கொண்டிருந்த சத்தம் காதைக் கிழித்தது. அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஜெகனைப் பார்த்தேன் காணவில்லை. சாலடிச்சத்த மும் கூட ஒரு சிறுவெளிச்சமும் நகர்ந்து வந்தது. ஜெகன்தான் வெளியே சென்று விட்டு திரும்பி வந்திருந்தார்.
நேரத்தைப் பார்த்தேன் காலை இரண்டு மணி. சரியான நுளம்புக்கடியாய் இருக்கிறதென்று ஜெகனிடம் கூறினேன். தண்ாக்கும் நுளம்புக்கடியாய் இருக்கிறதென்றும் இதனால் நித்திரை வரவில்லை யென்றும் கூறினார். நுளம்புகளை விரட்ட புகை மூட்டுவோம் என்று நான் கூறினேன் இருவரும் சேர்ந்து நெருப்பு மூட்டி புகைகயை உண்டாக்கினோம் உடைந்த பலகைத்துண்டுகள், வெளியில் நின்ற வேம்பில் இருந்து பறித்த இலைகள் என்பனவற்றை இதற்கு

Page 48
செழியன் 88
உபயோகித்தோம். சில நுளம்புகள் இரத்தத்தைக்குடித்துவிட்டு பறக்க முடியாமல் சட்டங்களில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தன. ஏழு எட்டு நுளம்புகளை கையால் அடித்துக்கொன்றேன். சில பறந்து போய்விட்டன. புகை கிளம்பியதும் நுளம்புத் தோல்லை குறைந்தது. எங்கள் நித்திரையைத் தொடர்ந்தோம்.
காலை ஏழு மணிக்கு கண்விழித்தேன். சற்றைக்கெல்லாம் கதவில் தட்டிச் சத்தம் கேட்டது. சின்னவர் வந்திருந்தார். நானும் ஜெகனும் கதவை திறந்து சின்னவரை சந்தித்தோம். மணி இன்னமும் கண் விழிக்கவில்லை. சின்னவர் எமக்குநத்தார் வாழ்த்துக்கள் கூறிக் கை கொடுத்தார். கை குலுக்கிகொண்டோம். முதல் நாள் நான் கவிஞருக்கும் பரதனுக்கும் எழுதிய கடிதங்களை அவரிடம் கொடுத் தேன். காலைக்கடன் முடித்து தேனீர் அருந்தியதும் எனது தலை மறைவு வாழ்க்கை பற்றிய குறிப்புக்களை எழுத ஆரம்பித்தேன். அதுவரை நடந்த சம்பவங்களை சிறு சிறு குறிப்புகளாக குறித்து வைத்திருந்தேன். காலை சாப்பாட்டை முடித்துக் கொண்டு மறுபடி எழுத ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் வெளியில் காகங்களின் சத்தங்கள் கேட்டன. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட காகங்கள் மாறி மாறிக் கரைந்தபடி பறந்து கொண்டிருந்தன. அந்தக் காட்சியைச் சென்று அவதானித்தோம். ஏன்காகங்கள் இப்படி ஆரவாரிக்கின்றன? என்று முதலில் எமக்குப் புரியவில்லை. பின்னர் புரிந்து கொண்டோம். முதல் நாள் இரவு மிஞ்சிய பழைய சோற்றையும் காலையில் சாப்பிட்ட பிறகு மிஞ்சிய முதல் நாள் கறியையும் வெளியில் எனது நண்பர்கள் எறிந்திருந்தனர். இவற்றிற்காகத்தான் காகங்கள் கூட்டம் போட்டு ஆரவாரித்துக் கொண்டிருந்தன. நானும் ஜெஅதனும் காங்களை துரத்திவிட்டு வந்தோம். இனி இவ்வாறு தேவையற்ற பொருட்களை வெளியில் எறிவதேயில்லை எனத் தீர்மானித்தோம். எறியப்படுகின்ற உணவுப் பொருட்களுக்காக காகங்கள் போடுகின்ற சத்தத்தால் வெளி நபர்களின் கவனம் திருப்பப்பட்டு எமது பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படலாம் என நாம் கருதினோம்.
மதியம் இரண்டு மணிபோல் சின்னவர் வந்தார். இன்று கிறிஸ்மஸ் பண்டிகை. விஷேடமான மதிய உணவு எமக்கு வந்திருந்

89 அருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
தது. புரியானிப் பார்சல்கள் கொண்டு வந்திருந்தார். பத்திரிகைகளும் வந்திருந்தன. விஷேடமான செய்திகள் ஏதும் உண்டா என வினவி னோம். சந்தேகத்திற்கிடமான இரண்டு பேர் வந்து சம்பந்தா சம்பந்த மில்லாமல் விசாரித்துப் போனதாகவும் நோட்டம் விடும் நோக்கத்தில் வந்தவர்களாக இருக்கலாம் எனசின்னவர்கூறினார். எம்மை அவதான மாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். பத்திரிகையில் காணப்பட்ட செய்திகள்
★ காங்கேசன்துறை ஹார்பர் வியூ ஹோட்டல் ராணுவ முகாமில் முதல் தடவையாக நேற்று மரண விசாரணை ஒன்று நடை பெற்றது. காங்கேசன்துறையைச் சேர்ந்த சஞ்சீவி சிவலிங்கம் (39 வயது) என்பவர் கடந்த 21ம் திகதி சரணடைந்ததும் அவர் நேற்று முன் தினம் மரணமானதும் தெரிந்ததே. இவரின் மரணம் குறித்துமல்லாகம் பதில் நீதிபதி திரு. ஜி.வி. பாலசிங்கம் தேற்று காங்கேசன்துறை இராணுவ முகாமில் விசாரணை நடத்தினார். இராணுவ தரப்பில் சாட்சியமளித்த ஏ.எஸ். பிரேமச்சந்திரா, கே. ரணதுங்க தெரிவித்த தாவது: இறந்தவர் எமது முகாமில் 21ம் திகதி வெளிக்கரைச்சல் காரணமாக சரண் அடைந்திருந்தார். பாதுகாப்புக் கைதியாக வைத் திருந்தோம். இரவு 3.15 மணியளவில் தாகமாக இருப்பதாகக் கூறி தண்ணிர் கேட்டார். ஒரு போத்தலில் தண்ணிர் கொடுத்தோம். அவர் தண்ணிர் குடித்த பின் போத்தலை நிலத்தில் அடித்து உடைத்துத் தன் மேலைக் கீறினார். பின் இரத்தப் பெருக்குடன் மரணமானார் என்று தெரிவித்தார்கள்.
இறந்தவரின் மனைவி மேரி புஷ்பம் இம்மரணம் குறித்து யாரிலும் சந்தேகம் இல்லை எனத் தெரிவித்தார். இதை அடுத்து பதில் நீதிபதி சடலத்தை தெல்லிப்ளைவைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று பிரேதப் பரிசோதனை நடத்தும் படி உத்தரவிட்டுத் தீர்ப்பு வழங்குவதை ஒத்தி வைத்தார். வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப் பட்டது. உண்மையிலேயே இது தற்கொலை தானா? என்ற சந்தேகம் நிறைய எனக்கு ஏற்பட்டது. கைதிகளுக்கு போத்தலில் தண்ணீர் கொடுக்கலாமா? கொடுத்திருந்தாலும் உடைந்த போத்தலால் கீறிக் கொண்டவரின் இரத்தப் பெருக்கை நிறுத்தி காப்பாற்ற முடியாமலா

Page 49
செழியன் 90
போய்விட்டது? ஆனால் இந்தக் கேள்விக்கெல்லாம் விடை கிடைக்கப் போவதில்லையே.
தமிழீழ கிராம நீதிமன்றினை அவமதித்த காரணத்திற் காக ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஏழாலை கிராம நீதிமன்றத்தில் நிகழ்ந்துள்ளது. கிணற்றினைப் பாவிப்பது சம்பந்தமான வழக்கொன்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அழைப்பாணைகள் பல அனுப்பப்பட்டும் பிரதிவாதி நேரில் வருகை தருவதற்கு தயக்கம் காட்டியபடியால் வலுக்கட்டாயமாக வரவழைக் கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. விசாரணையின்போது விசாரணை அங்கத்தவர்களை மதிக்காமல் நடந்து கொண்டது, செயலாளரின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தது, மன்றினை அவமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ரூபா ஐயாயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் கிணற்றுப் பிரச்சனைகள் இருபக்க சம்மதத்து டன் சமரசமாக தீர்த்து வைக்கப்பட்டன.
★ 22 லட்சம் இலங்கையர்கள் படிப்பறிவே இல்லாத வர்கள் என்று யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக் கப்பட்டுள்ளது என்ற செய்தியும் காணப்பட்டது.
சின்னவர் முதல் நாள் கொண்டு வந்த சஞ்சிகையை வாசித் தேன். அதில் ஒரு குறிப்பு காணப்பட்டது.
'ஏழைகளுக்கு நான் உணவளிக்கும் போது அவர்கள் என்னைப் புனிதன் என்றனர். ஏழைகளுக்கு ஏன் உணவில்லை என்று கேட்ட போது அவர்கள் என்னை ஒரு கம்யூனிஸ்ட் என்றனர்” . டொம் கெல்டர்கமறா(பிரேசில் நாட்டின்றெCபேயின்கத்தோலிக்க ஆயர்). கத்தோலிக்க திருச்சபை கம்யூனிசத்துக்கு எதிரானது என்பது தெரிந்து தான். ஆனால் அதற்குள்ளும் கம்யூனிசம் பற்றிய கருத்துக்கள் உட்புகுந்து இருப்பதை பலரால் ஏற்றுக் கொள்ளவோ, நம்பவோ முடிவதில்லை. சிலர் தமது சீருடைகளை கழற்றி வைத்து விட்டு கம்யூனிஸ்டாக மாறி விட்டனர். சிலர் சீருடைக்குள் கம்யூனிசக் கருத்தை மறைத்து வாழ்கின்றனர். இந்நிலைமைகளை கருத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். என்று ஜெகன் அடிக்கடி வலியுறுத்து வார். டொம் கெல்டர் கமறா கூறியதை வாசித்த போது இது எனக்கு நினைவிற்கு வந்தது.

91 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
இரவு ஒன்பது மணிபோல சின்னவர் வந்தார். மணிக்கு அவரது மனைவி எழுதிய கடிதத்தை தந்தார். பரதனைசந்தித்ததாயும்முதலாம் திகதி வரையாழ்ப்பாணத்தை விட்டு எம்மை வெளிக்கிடவேண்டாம் என்றும் அதற்கிடையில் அசம்பாவிதங்கள் நிகழலாம் எனவும் பரதன் கூறியதாய் கூறினார்.
சூரியனின் மனைவி, சூரியன் அனுப்பிய செய்தியுடன் பரதனை சந்தித்தார். அந்த செய்திகளையே சின்னவர் ஊடாக பரதன் எமக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் பூரீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வுக்கு வரமுயற்சிப்பதாகவும் இது ஒரு தமிழருக்கூடாகவே நடைபெறுவதாயும், இச்செய்தி இந்திய அரசுக்கு கிடைத்துள்ளதென்பதால் உடனடியாக ஒரு தீர்வை கொண்டுவர தலையீடு செய்யலாம். இந்நிலைமையில் பயணத்தைப் பற்றி தற்போது யோசிக்க வேண்டாம் என கூறி சூரியன் குறிப்பிட்டதாக செய்தி வந்தது. இயக்கங்களின் பலத்தைப் பொறுத்து அதிகாரத்தை பங்கிடலாமென்று இந்தியாகருதுவதாயும் இதற்கு இயக்கங்கள் ஒத்து வராவிடின் வடக்கு கிழக்கில் தேர்தலை நடத்தலாம் என இந்தியா கருதுவதாயும் குரியன் செய்து கூறியது.
மணிக்கு அவரது மனைவி எழுதிய கடிதத்தில் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தை நம்ப முடியாது என்று எழுதியிருந்தார். இரண்டு தினங்களில் தமது வீட்டுத் திறப்பை அவர்களிடம் இருந்து வாங்கித் தருவதாக வாக்களித்தவர்களால் அதை இன்னமும் செய்ய முடியாமல் இருக்கிறது. இதனையே செய்ய முடியாதவர்கள்? அதைவிட அதிகமான பிரச்சனைகளுக்காக எப்படி நம்பலாம்? என கணவனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். மறுநாள் ஒருவரை சந்திக்க இருப்தாயும் அவர் ஊடாக செய்திகளை அனுப்பி வைப்பதாகவும் எழுதியிருந்தார்.
முல்லைதீவு ஒட்டிசுட்டானில் ஐந்து மாற்று இயக்கப் போராளிகள் 'அவர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆயுதங்களுடன் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர் என்று தெரிவித்த சின்னவர் தொலைக்காட்சியிலும் இச்செய்தி ஒளிபரப்பப் பட்டதாகக் கூறினார்.

Page 50
26 Lorriras 1986
காலை நித்திரை விட்டு எழுந்ததுமே புதிய பிரச்சனை யொன்று தலை நீட்டியது. நாங்கள் தங்கியிருந்த கட்டிடம் முழுவது மாய் திருத்த வேலைகள் செய்வதெற்கென ஆட்கள் வந்திருப்பதாயும் நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் சின்னவர் வந்து கூறினார். எமக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை. எமது உடமைகளை எடுத்து உடன் தயார்படுத்துமாறு கூறி விட்டு சின்னவர் அவசரமாகச் சென்றார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.
நானும் மணியும் காலைக் கடன்களைக் கூட இன்னமும் முடிக்கவில்லை. பொருட்களையெல்லாம் அவசரஅவசரமாக எடுத்து இரண்டு மூன்று பைகளில் திணித்துக் கொண்டு இரண்டு மூன்று நிமிடங்களிலெல்லாம் நாம் தயாராகிவிட்டோம். சின்னவர் வந்தார். தான் குறிப்பிடும் அறைக்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றார். மழை நன்கு பெய்து கொண்டிருந்ததால் கட்டிடத்தின் வெளிப்பக்க ஒரமாய் வரிசையாய் நனைந்தும் நனையாததுமாய் அவர் குறிப்பிட்ட அறையைச் சென்றடைந்தோம். நாம் சென்றடைவதற்கு முன்னரே சின்னவர் வேறுசில ஒழுங்குகளைச் செய்து முடித்துவிட்டிருந்தார்.

93 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
அறையை நாம் அடைந்ததும் என்னையும் ஜெகனையும் இன்னோர் பகுதிக்கு அழைத்துச்சென்றார்.
மூன்று கதிரை போட்டு ஒரு சிறு வரவேற்பிடம். அருகில் மறைவு போட்டு ஒரு சமையல் இடம் அங்கு ஒருமேசை, மேசையில் பாண், கத்தி, சம்பல் இருந்தன. அதற்குள் நுழைந்ததும் ஒரு கதவு. கதவைத் திறந்ததும் ஒரு அறை. அறையைச்சுற்றித் தட்டுகளில் நிறையப் புத்தகங்கள். இரண்டு கட்டில்கள். கட்டில்களின் மேல் நுளம்புவலை காணப்பட்டது. இந்தஅறை உண்மையிலேயே ஒரு சமையல் அறையாகத்தான்கட்டப்பட்டது. ஆனால் இப்போபடுக்கை யறையாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இனிமேல் இந்த இடம்தான் எமக்கு என்று சின்னவர்கூறினார். 'நீங்கள் விரும்பிய நேரம் தேனீர் போட்டுக் குடித்துக்கொள்ளலாம். முட்டை இருக்கின்றது தேவையாயின் எடுத்துப்பாவிக்கலாம். இந்தச் சிறிய மேசையை எழுதுவதற்குப்பாவிக்கலாம். கட்டிலில் பெட்சிட் எல்லாம் வைத்துள்ளேன். அதைஎல்லாம் பாவிக்கலாம். வெளிக்கதவு பக்கமாக குளியல் அறை இருக்கிறது. வெளியில் ஆட்கள் இல்லாத நேரமாகப் பார்த்து அதைப் பாவிக்கலாம். சின்னவர் விளக்கிக் கூறினார். நானும் ஜெகனும் “சரி” என்று தலையை ஆட்டிக் கொண்டோம். மணிக்குஇன்னோர்இடத்தில் ஒழுங்கு செய்துள்ளேன்
என்று கூறிய சின்னவர் போய்விட்டார்.
சின்னவர் சென்றதும் காலைக்கடன்களை நான் முடித்துக் கொண்டேன். எமது காலை உணவாக பாணும் சம்பலும் சின்னவர் வைத்திருந்தார். எம்மிடம் முதல்நாளைய பாண் ஒரு ராத்தலும் பருப்புக்கறியும் மீதமாய் இருந்தது. நாம் பழைய பாணை துண்டு துண்டாக வெட்டி ‘ஹாட்பிளேட்" டில் வாட்டிஎடுத்தோம். பருப்புக் கறியையும் சூடாக்கி எடுத்துக் கொண்டு காலை உணவை முடித் தோம். அதன்பின் சமையலறையை ஒழுங்குபடுத்தி அந்த இடங்களைத்துப்புரவாக்கி மேசையை எழுதுவதற்குப் பயன்படுத்தக் கூடியதாக அமைத்துக் கொண்டோம்.
புத்தகங்களுக்கிடையே சில சஞ்சிகைகள் கிடைத்தன. சமர் என்ற சஞ்சிகை 1980 நவம்பரில் வெளியாகிஇருந்தது. யாழ்ப்பாணம்

Page 51
செழியன் 94
நாவாந்துறையில் இருந்து வெளியிடப்பட்டிருந்தது. அதில் இருந்த ஒரு பாலஸ்தீனக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. நாம் இருந்த சூழ்நிலையில் எங்கள் உணர்வுக்கு உரம் ஊட்டி புத்துணர்வை அக்கவிதை ஏற்படுத்தியது. எம். ஏ. நுஹ்மான் மொழிபெயர்ப்பு செய்திருந்தார்.
ஒருபேப்பரையும் பேனாவையும் அவர்கள் என் மூக்கெதிரே விசுக்கி எறிந்தனர். என் வீட்டின் திறப்பை என்கையில் திணித்தனர் என்னைக்கொண்டு மாசுபடுத்த அவர்கள் விரும்பிய பேப்பர் சொன்னது: எதிர்த்துநில்! என்னைக் கொண்டு அவமானப்படுத்த அவர்கள் விரும்பிய பேனை சொன்னது: எதிர்த்துநில்! என் வீட்டின் திறப்பு என்னிடம் சொன்னது: உன் சின்னஞ்சிறுவீட்டின் ஒவ்வொரு கல்லின் பேராலும் நீ எதிர்த்து நில்! சுவரில் ஒருதட்டு தறிக்கப்பட்ட ஒரு கையிலிருந்து சுவரின் குறுக்காக வந்த ஒரு செய்தி குறிப்பால் உணர்த்தியது எதிர்த்துநில்! சித்திரவதை அறையின் கூரை மீது சொட்டுச்சொட்டாய் விழும் ஒவ்வொரு மழைத்துளியும்அலறியது எதிர்த்துநில்! கவிதையை வாசித்துமுடித்தபோது அவர்களின் முகாம்களில் சித்திரவதைப்படுத்தப்படும் என்ஒவ்வொரு நண்பனின்காதுகளிலும் இக்கவிதையை உரக்கவே. மிக உரக்கவே பாடவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. இக்கவிதை என் நண்பர்களை இன்னமும் உரமூட்டும்.
மதியம் இரண்டுமணிஅளவில் சின்னவர் மதிய உணவுப் பார்சல்களுடன் வந்தார். அவர் சில செய்திகளையும் கூறினார். இலங்கை அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை

95 ஒருமின்னிதனின்நாட்குறிப்பிலிருந்து
நடாத்த இருப்பதாயும் இதற்காக மூன்று அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வரஉள்ளனர். இந்திய வானொலியும் "யாழ்ப்பாணத்தில் ஒரு இயக்கம் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது என்று ஒலிபரப் பியது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் எழுத்தாளர் களை இன்று வரும்படி 'அவர்கள் அழைத்துள்ளனர். ஏனென்று தெரியாது.
மதிய உணவை நாம் உண்டுவிட்டு மறுபடியும் படிப்பதற்கு ஆரம்பித்த போது நாம் சற்றும் எதிர்பாராத விதமாக பெரியர் எக்ஸ் வந்தார். கொழும்பிற்குப் போன பெரியவரைத்தான்நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்நேரத்தில் திடீரென அவரைக்கண்டபோதுஆச்சரியமே ஏற்பட்டது.
பெரியவர் எக்ஸ் எம்மிடம் சிறிது நேரம் உரையாடினார். எமது நலன்களை விசாரித்தார். பரதனைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். எமக்கு வேறு இடம் ஒன்றைத் தாம் ஒழுங்கு செய்துள் ளாகப் பெரியவர் கூறினார். இருட்டிய பின்னர் தான் வருவதாயும் எங்களைத் தயாராய் இருக்கும்படியும் கூறினார். அப்போது "நான் இங்கேயே சின்னவரோடு இருக்கிறேன்' என ஜெகன் கூறினார். 'ஜெகன் தன்னோடு இருக்கலாம்' எனச் சின்னவரும் கூறினார். பெரியவர் அதை ஏற்றுக் கொண்டார். ஜெகனைத் தற்காலிகமாக அல்ல இனி நிரந்தரமாகவே பிரியப்போகிறேன் என்பதை நான் உணர்ந்தேன். நான் எப்படியும் நாட்டைவிட்டுத் தப்பிப் போக வேண்டுமென்ற முடிவில் இருந்தேன். என்ன காரணத்தைக் கொண்டும் நாட்டை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவில் ஜெகன் இருந்தார். அந்த முடிவில் இருந்துகொண்டுதான் சின்னவ ரோடு தங்குகிறேன் என அவர் கூறினார். அதற்குக் காரணமும் இருந்தது. பெரியவர் எக்ஸ் செய்கின்ற ஏற்பாடுகள் தற்காலிக மானவை. சின்னவரோடு ஜெகன் ஒரு நீண்ட காலத்திற்குத் தங்க முடியும். அவ்வாறு இருந்து கொண்டு பின்னர் ஏற்படும் சூழ்நிலைக்கு ஏற்ப தனது நிலை பற்றி முடிவு செய்யலாம் என ஜெகன்நினைத்தார்.

Page 52
26 Lorriras 1986
மாலை நான்கு மணிக்கு சின்னவர் இரண்டு கடிதங்களைக் கொண்டு வந்துதந்தார். ஒரு கடிதம் சூரியனிடம் இருந்தும் மற்ற கடிதம் என் மனைவியிடமிருந்தும் வந்திருந்தது.
சூரியனின்கடிதத்தை வாசித்தேன்.
...நான்தங்கியிருக்கும் அரசியல்வாதி வெளியூர் செல்வதால், விரைவில் நான் இடம் மாற வேண்டிவரும். எமது இரண்டாவதுகட்ட தலைமறைவு வாழ்க்கை வரலாற்றுரீதியாகத் தொடங்கிவிட்டது. நிலைமைகள் எம்மைச்சாராமல் இயங்குபவன. அவைபற்றிய எதிர் பார்ப்புகளோடு காலத்தை வீணடிப்பது பொருத்தமாகாது. வேலை கள் பொருத்தமான வழிகளில் இந்நிலையிலேயே ஆரம்பிக்கப் படவேண்டுமென்றே நினைக்கிறேன். உடனடியாக என்னால் செய்ய முடிவது படிப்பது மட்டுமே. அதற்குரிய சூழலிலும் இருக்கிறேன். இரவில் நித்திரை குறைவு. இரவில் முழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. பிற்பகலில்தான் நித்திரை கொள்கிறேன். காலம் காலை,பகல்,இரவு என்பது போல இருக்கும். திடீரென் சில மாதம் உருண்டோடிவிடும். ஆயுள் நமக்கு அதிகமாக இல்லை. அடுத்த தலைமுறைக்கு எதைக் கொடுக்கப் போகின்றோம்.

97 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கையின் அரசியல் வரலாற் றில் பாராளுமன்ற அரசியல் தேர்தல்கள், அரசியல் கட்சிகள் (வலது, இடது) இயக்கங்கள், மலையக அரசியல் இயக்கங்கள், அரசியல் அமைப்புச் சட்டம், அரசியல் அமைப்புச்சட்டத் திருத்தம், ஒடுக்கு முறைச்சட்டம், தேசிய இனப்பிரச்சனையின் வளர்ச்சி இவை பற்றிய குறிப்புகளை அன்றாடம் தயார் பண்ணி எனக்கு அனுப்பிவைக்கும் படிநண்பன் மணியிடம் கூறவும்.
சாவகச்சேரியில் நமது பல நண்பர்கள் அவர்களிடம் பிடிபட்டுவிட்டனர். கபூரையும் கைது செய்து விட்டனர். இவ்வாறு சூரியனின்கடிதம் இருந்தது.
என் மனைவியின் கடிதத்தை வாசித்தேன். தலைமறைவு வாழ்க்கைத் தொடங்கியபின் அவளிடமிருந்து வந்த முதல் கடிதம். ஆறுதலாய் இருந்து வாசிக்கமுடியவில்லை. அவர்களிடம் பிடிபட்ட சில நண்பர்களின் பெயர்கள் இருந்தன. நான் குறிப்பிட்டு எழுதிய சிறுதொகை பணம் அனுப்பியிருந்தாள். நிறைய விடயங்கள் எனக்குக் கூறுவதற்கு இருப்பதாயும் நேரில் சந்திக்கும் போது கூறுவதாயும் எழுதியிருந்தாள். நாம் மறுபடியும் சந்திப்பது என்பது எப்போது? அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா?
மாலை ஆறுமணிபோல் சின்னவர் மறுபடி வந்தார். சின்னவர் பரதனைச்சந்தித்துவிட்டு வந்திருந்தார். பரதனின்காயத்தில் சீழ்கட்டி இருந்ததாகவும் அப்படியே விட்டிருந்தால் ஏற்பு வலி ஏற்பட்டிருக் கலாம் என்றும் தற்போது பெருமளவு சீழ் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால் காயம் இன்னமும் முற்றாக மாறாகவில்லை என்றும் சரியாகக் $வனிக்கா விட்டால் மறுபடியும் சீழ் கட்டலாம் என்பதால் காயம் மாறிய பின்னரே பரதன் பயணம் செய்வது நல்லது என்று வலியுறுத்தினார். நானும் ஜெகனும் சின்னவரின் கருத்தை ஏற்றுக்கொண்டு Sதுவரைப் பரதனை மருத்துவமனையிலேயே 9,663) வைத்திருக்கும்படிக் கேட்டுக்கொண்டோம்.
பரதன் ஒரு கடிதமும் கொடுத்தனுப்பியிருந்தான். அதில் அவர்களால் கைது செய்யப்பட்ட இரண்டு மூன்றுபேர் விடுதலை செய்யப்பட்டது பற்றியும் மேலும் இரண்டு பேர் கடும் சுகவீனமான

Page 53
செழியன் 98
வர்கள் என்பதால் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறித்தும் இருந்தது. இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களிடம் சூரியன், மணி, சிவா இந்த மூன்றுபேர்களையும் எங்கு கண்டாலும் சுடுவோம் எனக்கூறியுள்ளனர் என்றும் பரதன்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
கடும் மழை பெய்தது. இருள் சூழ்ந்து வெகு நேரமாகியது. வாகனம் ஒன்று வந்த சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பெரியவர் வந்தார். அவரோடு மணியும் வந்தார். ஜெகனைக் கட்டியணைத்து விடைபெற்றுக் கொண்டோம். கடிதத்தொடர்பை எம்முடன் வைத்திருக்கும்படியும் நாட்டில் இருக்கமுடியாத நிலைமை ஏற்பட் டால் எம்முடன் வந்து சேறும்படி நான் ஜெகனிடம் கூறியிருந்தேன். சின்னவருக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டு பெரியவருடன் சென்றோம். ஹோல் ஒன்றினைக்கடந்து பல படிக்கட்டுகளில் இறங்கி காரினுள் ஏறினோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் அதில் நனைய நேர்ந்தது. காரினுள் ஏறிக் கதவுகளைச் சாத்திக் கொண்டோம். பெரியவர் காரை இயக்கினார். கார். மெல்ல மெல்ல நகர்ந்து திரும்பியது. அப்போதுக்காரைநிறுத்தும்படிக்கூறிக் கொண்டு மழையில் நனைந்தபடி சின்னவர் ஒடிவந்தார். என்ன? ஏது? என்று ஒரு குழப்பம். பெரியவர் காரை நிறுத்தினார். தான் கொண்டு வந்த இடியப்பப் பார்சலை சின்னவர் எம்மிடம் தந்துவிட்டு "இது உங்களது இரவு சாப்பாட்டுக்கு’ என்று கூறினார். மறுபடியும் சின்னவருக்கு நன்றி கூறினோம். கார்புறப்பட்டது.
வெளியில் மனிதர்களது நடமாட்டம் இல்லை. இரண்டொரு வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. ஒரு பத்து நிமிட நேரத்தில் மற்றோர் புதிய இடத்தின் வாசலிற்குள்ளாக கார் சென்று நின்றது. எங்களைக் காரிலேயே இருக்கும் படிக் கூறிவிட்டுப் பெரியவர் இறங்கி அந்த வீட்டினுள் சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த பெரியவர் எங்களை வரும்படிக்கையசைத்தார். எமது இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றோம். அங்கு பெரியவர், சூரியன் இவர்களோடு இன்னோர் மனிதரும் இருந்தார். அந்தப் புதிய மனிதரை "மனிதர்" என்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

99 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
எங்களைப் பெரியவர் எக்ஸ் "மனிதருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதுதான் நாம் அடுத்துத் தங்க இருக்கும் இடம் என்று கூறினார். சம்பிரதாய பூர்வமான உரையாடலுக்குப்பின் மறுபடியும் எங்களைச் சந்திக்க வருவதாய்க் கூறிய பெரியவர் எக்ஸ் எம்மிடம் விடைபெற்றுச்சென்றார்.
நானும், மணியும், சூரியனும் செய்திகளைப் பரிமாரிக் கொண்டோம். 'அவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் கடும் சித்திரவதை செய்யப்படுகின்றனர். விடுதலை செய்யப்பட்ட சிலரும் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை யும் சூரிளன் கூறினான். தொடர்ந்தும் கண்காணிப்புகளும், திடீர் சோதனைகளும் நடைபெறுகின்றன. நிலைமைகள் சிக்கலாய் இருப்பது குறித்து ஆலோசித்துக் கொண்டோம்.
இரவு சாப்பாட்டிற்காக மனிதர் எங்களை வந்து அழைத்தார். இவர் நடுத்தரவயதைத்தாண்டிவயர். சமயப்பணிகள் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்.
ஒரு வயதான பெண்மணிஉணவு பறிமாறினார். அங்கு அந்தப் பெண்மணியும் வேலை செய்கிறார் என நினைக்கிறேன். மேசையில் பீங்கான்களில் உணவு பறிமாறப்பட கதிரையில் இருந்து சாப்பிட் டோம். சாப்பாட்டிற்குப்பின் சில சஞ்சிகைகள் புறட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். 'சூரியன் ஒரு சஞ்சிகையில் இருந்து சிறு துணுக்கைக்காட்டினார். ரசிக்கக்கூடியதாய் இருந்தது.
எங்களால் மனிதர்களை
மந்திரிகளாக்கமுடிகிறது.
மந்திரிகளைத்தான்மறுபடியும்
மனிதர்களாக்கமுடியவில்லை.
புதிய இடம் சிக்கல் நிறைந்த வெளிச்சூழ்நிலை வெகு நேரமாய் நித்திரை வரவில்லை. நுளம்புகள் ஆங்காங்கே இரையும் சத்தம் கேட்டது. ஆனால் அவற்றின் தொல்லையிலிருந்து மீளப் போர்வை உதவியாய் இருந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் பாய், தலையணை, போர்வை சகிதம் நித்திரைக்குச் சென்றிருந்தோம். எப்போ நான் உறங்கினேன் என்பது தெரியாது.

Page 54
28 மார்கழி 1986
இன்றைய முழுநாளும் கஷ்டமானதாய் கழிந்தது. வெளியி லிருந்து எந்தவிதத் தகவல்களும் கடந்த இரண்டு நாட்களாய் வரவில்லை. எமது தகவல்களை எதிர்பார்த்தவர்களுக்கு முதல்நாளே நாம் எழுதிய கடிதங்களை அனுப்பிவைக்க முடியவில்லை. எமது பயணம் தொடர்பாக நாம் ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். எனவே அது தொடர்பாகதுரிதமாக சில காரியங்களை முடிக்க வேண்டியிருந் தது. பெரியவர் எக்ஸின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தோம்.
இந்திய வானொலி காலைச் செய்தியில் தமிழீழ விடுதலை இயக்கச்செயலாளர் திரு. செல்வம் தலைமையில் 50 பேர்சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். கைது செய்யப்பட்டதமது இயக்கப் போராளிகளை விடுவிக்கக் கோரியே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறியது.
சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் திரு. பிரபாகரன் (தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்) ஆயுதங்களும், தொடர்பு சாதனங்களும் தமிழக போலிசாரால் கைப்பற்றிய போது சாகும் வரையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். உடனே தமிழக

101 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
முதல்வர் திரு. எம்ஜி.ஆர். அவற்றைப் பிரபாகரனிடம் திருப்பி ஒப்படைத்தார். முன்னர் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க முடியாமல் யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதலைப்புலிகள் மாணவர்களது உண்ணா விரதப் போராட்டத்தை சப்பாணிப் போராட்டம் எனக் கிண்டல் பண்ணி அறிக்கை வெளியிட்டது என் நினைவுக்கு வந்தது. பின்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டனர்.
பத்திரிகைகள் வந்திருந்தன. புலிகளுடன் நடத்திய பேச்சில்
முன்னேற்றம் என வின்சென்ட் பெரேரா குறிப்பிட்டுள்ளார் என்றும் இது இரகசியப் பேச்சுவார்த்தை பத்திரிகைகளுக்கு ஒன்றும் கூற முடியாது உள்ளது என்றும் அவர் கூறியதாக ஒரு செய்தி இருந்தது.
அரசகுழு புலிகள் சந்திப்பு இலங்கையின் உள்நாட்டு விவகாரம். இதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை என கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் பி.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளதாக இன்னொரு செய்தி கூற மற்றோர் செய்தி இவ்வாறு இருந்தது. எட்டியாந் தோட்டை எம்.பி. வின்சென்ட் பெரேரா தலைமையிலான நல்லெண்ணக்குழுவுக்கும் இலங் ைஅரசுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது சில தனிப்பட்டவர்கள் மேற்கொண்ட முயற்சி என திரு. அதுலத்முதலி கூறினார்.
ஆஹா என்ன பொறுப்பான அமைச்சர்கள்? தூதுக்குழுக்கள்?
குமுறும் நெஞ்சும்’ என்ற ஒரு இந்திய சிறு சஞ்சிகை. அதில் ஒரு பேட்டி. இதில் இந்தியப் பாமர மக்களின் சினிமா மாயைப் பற்றியும் சுய சிந்தனை இல்லாத இந்த மக்கள் கூட்டத்தின் பரிதாபகரமான நிலையையும் ஓரளவிற்கு வெளிக்காட்டியது. பேட்டியின் சில பகுதிகள்.
இடம் : செங்கை
பேட்டியளித்தவர்கள் : திருவாளர்கள் தங்கப்பன், ரஜனி பிரகாஷ், எல்லப்பன், நவனிதன், முத்துக்குமாரன் (பதினெட்டு வயதுடைய இவர்கள் அனைவரும் ரஜனிமன்ற ரசிகர்கள்)

Page 55
செழியன் 102
கேள்வி:நீங்க ரொம்யஜாலியா, சந்தோஷமாஇருக்கீங்க...!
தங்கப்பன் : ஆமா சார், சும்மாவா? தலைமை மன்றத்தில் இருந்து எங்களுக்கு நம்பர் எல்லாம் வந்திச்சு, நாங்க அதிகாரபூர்வமா ரஜனி மன்ற உறுப்பினராயிட்டோம். இதுக்கு மேல என்னசார் வேணும்? فر
கேள்வி: மன்றத்திலே சேர்ந்து என்ன செய்வீங்க?
ரஜனிபிரகாஷ் : என்னா செய்வோமா? பொன்னேரி, மீஞ்சூர், திருமுல்லைவாயில் தியேட்டர்ல எங்கஅண்ணன் படம் போட்டதும் கொடிகட்டுவோம், ஸ்டார்ஒட்டுவோம், தியேட்டர்லபூதூவுவோம், தூபம் சாம்பிராணி காட்டுவோம், படம் ரிலீஸ் அண்ணிக்கு ஏக கும்மாளம்தான்போங்க.
கேள்வி : தங்கப்பன், ரஜனி எங்கேயோ எந்த மூலையிலோ இருந்தாலும் ஏதோ சினிமாவிலே ஹீரோவா வந்து நடிச்சிக்கிட்டுப் போவாரு. இது வெறும் நிழல் படம்தானே? அவரோட பேரைப் பச்சைக்குத்திட்டு.
தங்கப்பன் : இதெல்லாம் ஒரு கேள்வியா சார்? அவரோட ஸ்டைலுக்கு ஈடுகட்ட முடியுமா? (விரல்களைக்கொடுத்து சவால் விடும்பாணியில்) அவருடைய ஸ்டைல்னா ஸ்டைல்தான்சார்.
முத்துக்குமாரன் : ஒரு சிகரெட்டை லாவகமாகச் சுழட்டி ஆகாயத்தில் எறிகிறார். கீழே விழும்போது உதடுகளில் பற்றிப் பிடிக்கிறார். இதேபோலதீப்பெட்டியில்தீயைக்கொளுத்தும்போதும் ஸ்டைல்மயம். -
ரஜனிப்பிரகாஷ்: இதைவிடதலைமை மன்றத்திலிருந்து நம்பர் வாங்கப் போனப்போ நேரடியா அவர் வீட்டுக்குப் போனோம்சார். அண்ணன் ரொம்ப பிரண்டு மாதிரி பேசுகிறார். (உணர்ச்சி பொங்கக் கூறுகிறார்)
கேள்வி: ரஜனிஉங்களுக்கென்று என்ன சேதி சொன்னாரு..?
தங்கப்பன் : மன்றம்னா சமூக சேவை செய்யணும்னு சொன்னாரு.

103 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
கேள்வி:சமூக சேவைன்னா? தங்கப்பன்: அதாவது பலதரப்பட்ட சமூக சேவை. கேள்வி: கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். எல்லப்பன் : உதாரணமாக, இப்படியிருக்கும். தியேட்டரில் கலவரம் கிலவரம் இல்லாமல் அமைதியாய் இருக்கிறது. தாய்மார்கள் கூடுமானவரை அதிகமாகப் படத்திற்குக் கூட்டிப்போக ஏற்பாடு பண்றது. இப்படி அப்படித்தான்.
கேள்வி : சரி. ஊர்ப்பிரச்சனை, கூலிப்பிரச்சனை, சாதிப்பிரச் சனையின்னு ஏதும் நம்ம இராம முன்னேற்றத்தைப் பற்றி நினைச்சுப் பார்த்தீங்களா?
ரஜனிபிரகாஷ் : இப்ப இருக்கிற வேலையைச் செய்யவே நேரமில்லைசார்.
கேள்வி : தமிழ் நாட்டு அரசியல் நிலைமை எப்படிப் போகும்னு நினைக்கிறீங்க?
தங்கப்பன் ; நம்ப அண்ணன் இதே லெவல்ல ஸ்டடியாப் போனார்னா எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக மந்திரியாகப் போறது அவரேதான்.
கேள்வி: எப்படிச் சொல்றீங்க? அவருவீட்ல பார்த்தப்போ எம்.ஜி.ஆர் படம் இருந்ததே. தமிழ்நாட்டில் இப்படி என்றால் யாழ்ப்பாணத்தில் ஒரு இயக்க நண்பரைப் பேட்டி கண்டால் எப்படி இருக்கும் என யோசித்தேன். சுவாரசிமாய் இருந்தது. நாளை அதை எழுத்தில் குறித்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். மாலையாகி இரவும் வந்தது. பெரியவர் எக்ஸ் வரவேயில்லை. எழுதிய கடிதங்களை எப்படியும் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து 'மனிதனின் உதவியை நாடினோம். சிறிது தயக்கத்துடன் கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.

Page 56
29 Lorriras 1986
காலை 6 மணிக்கு எமது அறைக்கதவு தட்டப்பட்டது. நான் எழுந்து கதவைத் திறந்தேன். தேநீர் வந்திருந்தது. சூரியனையும் மணியையும் எழுப்பினேன். நாங்கள் தேனீரைக் குடித்துக் கொண் டிருக்கும் போது வாகனச்சத்தம் ஒன்று கேட்டது. பெரியவர் வருகின் றாரோ என நான் நினைத்தேன். சின்னவர்தான் வந்திருந்தார். சில கடிதங்கள் முக்கியமான செய்தி ஒன்றையும் கொண்டுவந்திருந்தார்.
தனியார் மருத்துவ மனையில் இருந்த பரதன் அவனைப் பார்க்கச்சென்ற மனைவியோடு சேர்ந்துதனது சொந்தக் கிராமத்திற்குச் சென்றுவிட்டான் என்ற அதிர்ச்சியான செய்தியை அவர் எம்மிடம் கூறினார். எங்கள் எல்லோருக்குமோ குழப்பம். எப்படி இது நிகழ்ந் தது? எந்த அளவிற்குச் சாத்தியமாகும்? அதிர்ச்சியும் ஆச்சரியமும் எம்மைச் சூழந்து கொண்டது. சின்னவரே கூறினார். பரதனது கிராமத்தவர் சிலர் அவர்களின் தொகுதி மட்டத் தலைவர்களோடு பேசியுள்ளனர். பரதன் வயிற்றில் சத்திர சிகிச்சைஒன்று செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சுகவீனமாய் இருக்கிறான். தற்போதும் வைத்திய சாலையில்தான் இருக்கிறான். எனவே பரதன் மறுபடியும் வந்து வீட்டில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள்

105 ஒருமனிதனின் நாட்குறிப்பிலிருந்து
கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சம்மதித்து, விசாரணை ஒன்று செய்துவிட்டு பரதனை உடனே விட்டுவிடுவோம் என்று கூறினார் களாம். இந்த வாக்குறுதியின் அடிப்படையில் பரதன் மனைவியுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டான். எங்கள் ஒருவருடனும் இது பற்றிக் கலந்து ஆலோசிக்கவோ எங்கள் கருத்துக்களை கேட்டறிய வேண்டியோ அவனுக்கு அவசியம் இருக்கவில்லை போலும். பரதன் போய்விட்டான்.
பரதன் இவ்வாறு நடந்துகொண்டது எமக்குத் துக்கத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு என்ன நிகழுமோ என்று பயம் ஏற்பட்டது. கடிதங்களைத் தந்துவிட்டு சின்னவர் சென்றார். கடிதங்களை வாசித்தோம். என் மனைவி, மணியின் மனைவி மற்றும் எங்கள் இனிய நண்பர்களில் ஒருவரான மாதுவின்கடிதமும் வந்திருந்தன. என் மனைவி எழுதியிருந்தாள்.
நீங்கள் உயிருடன் இருக்கும் வரையிலும் நானும் உயிருடன் இருக்கும் வரையிலும் அவர்களுடைய கையில் சிக்குவதை வெறுக்கிறேன்.
ஒரு அனாதையாய் ஒரு அடிமைப்பிணமாய் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை வெறுக்கிறேன்.
என் மனைவியின் கடிதம் எனக்கு சற்று உற்சாகத்தை தந்தது. உறுதியோடு அவள் இருக்கிறாள் என்பதைக்கடிதம் எனக்குக்கூறியது.
மணியின் மனைவி தனது கடிதத்தில். வீட்டுத் திறப்பு கிடைத்தது. நான் மூன்று நாட்களாக உங்கள் கடிதத்தை எதிர் பார்த்து. வை தேடி அலையாத அலைச்சல் இல்லை. கடிதம் கண்டபின்தான்நிம்மதி. அன்று என்னை சிலர் பின்தொடர்ந்து வந்தனர். அத்தோடு எமது வீட்டுப் பாதை முழுவதும் எம்மை கண்காணிக்கவும், அவதானிக்கவும்கிறுவர்களைக்கூட வேவு பார்ப் பதற்கு விட்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் ஒரு சிறுவனை எமது வீட்டு சொந்தக்காரர் பிடித்து வெருட்ட அவன் தான் வேவு பார்க்கத்

Page 57
செழியன் 106
திரிவதாய் உண்மையைக்கூறிவிட்டான். இரண்டு நாட்களாய் 6Tarig, antiisai. 67tpg. 69 lig.6 g)c5ig Hot plate, Cooler, Hair dryer, மேசையில் இருந்த எல்லாப் புத்தகங்கள், குறிப்புகள் எல்லாவற்றை யும் 'அவர்கள்’ எடுத்துக் கொண்டு போய் விட்டனர். என்று குறிப்பிட்டிருந்தார்.
மதியம் மனைவியின்கடிதத்திற்கு பதில் எழுதிவிட்டுகட்டுரை ஒன்றுக்கான குறிப்பைத்தயார்செய்தேன். மதியமும் பெரியவர் எக்ஸ் வரவில்லை.
மாலை அறைக்கதவு தட்டப்பட்டது. தேனீர்க் கோப்பைகள் வந்தன. ஆவலோடு வாங்கினோம். 'குடிநீர் உடம்புக்கு மிகநல்லது. நீங்களும் குடிக்க வேண்டும்’ என்று கூறிச் சென்றார் அங்கு பணி புரியும் பெண்மணி. எனது ஆவலெல்லாம் பறந்து விட்டது. குடி நீராம். மனிதன் குடிக்க முடியுமா? ஒரே கசப்பு இரண்டு வாய் குடித்துவிட்டு வைத்துவிட்டேன்.
இருள்சூழ்ந்து கொண்டு வந்தது. பெரியவர்இனிவரமாட்டார் என்று நாம் முடிவு செய்து அதிக நேரமாகவில்லை. திடீரென பெரியவர் வந்தார். அவரோடு நமது நண்பர் கவிஞர் சேரன் வந்திருந் தார். பெரியவரோடு பேசி முக்கியமான சில முடிவுகளுக்கு வரத் தயாரானோம்.
எங்களுடைய தலைமறைவு வாழ்க்கை ஆரம்பித்து 15 நாட் களுக்கு மேலாகிவிட்டது. பெரியவர் எக்ஸ் சில முக்கிய காரணங் களுக்காக தான் போகவேண்டிய பயணத்தை எமக்காகத் தள்ளி வைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் எமது அடுத்த கட்டம் பற்றியமுக்கியமானமுடிவை பெரியவரோடு சேர்ந்து தீர்மானித்தாக வேண்டியது எமக்கு மிக்க அவசியமாயும் அவசரமாயும் இருந்தது.
நானும் சூரியனும் மணியும் ஒரு தடவைக்கு பல தடவைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். யாழ்ப்பாணத்தை விட்டு , கடல் வழியாக தப்பிச் செல்ல முடியாது என்பதால் ஏதாவது ஒரு வகையில் முதலில் குடாநாட்டை விட்டு கிளிநொச்சிக்குச் செல்வது பின் அங்கிருந்து கொழும்பிற்குச் செல்வது என்றும் கொழும்பில்

O7 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
இருந்து இரண்டுவார காலத்திற்குள் வெளிநாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்வது என்றுமாக எமது திட்டம் இருந்தது. இந்த திட்டத்தில் இரண்டு ஆபத்துகள் எமக்கு இருந்தன. குடாநாட்டை விட்டு அவர்களின் கண்ணில் படாமல் எப்படி வெளியேறுவது? கொழும் பில் வைத்தோ, கொழும்பு செல்கின்ற வழியிலோ, அல்லது கொழும்பு விமான நிலையத்தில் வைத்தோ இராணுவத்தினராலோ பொலிசாரினாலோ நாம் கைது செய்யப்படுகின்ற அபயாத்தில் இருந்து எங்ங்னம் தப்புவது?
ஏற்கனவே இராணுவத்தினர் எனது வீட்டை முற்றுகையிட்ட போது அதிஸ்டவசமாக தப்பியிருந்தேன். இராணுவத்தினர் எனது அடையாளஅட்டை புகைப்படங்கள் சில கட்டுரைகள் என்பவற்றை கைப்பற்றிச் சென்றிருந்தனர். சூரியனோ ஒருமுறை இராணுவத்தின ரால் கைது செய்யப்பட்டு ஏதோ அதிஸ்ட வசமாக ஒருவருடகாலத் தின் பின் தற்செயலாக விடுதலை செய்யப்பட்டிருந்தான். எனவே எனக்கும் சூரியனுகும் இலங்கை ஆயுதப்படையினராலோ இரகசிய பொலிசாரினாலோ ஆபத்து எந்த நேரமும் காத்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் எப்படி கொழும்பு செல்வது? எவ்வாறு விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறுவது?
இந்த கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில் எம்மிடம் இருக்கவில்லை. ஆனால் எமக்கு வேறுவழி தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இன்னும் அதிக நாட்கள் தங்க முடியாது. இப் படியே நாட்கள் போய்கொண்டிருந்தால் ஒருநாள் அவர்களிடம் நாம் சிக்கிக் கொள்ள நேரிடலாம். ஏன் பரதனுக்கு கூட எமது நகர்வுகள் தெரியும். அவர்கள் பரதனைப்பிடித்து சித்திரவதை செய்தால் எமது இருப்பிடத்தை கண்டறிய ஒரு நாளே போதும். இந்நிலையில்தப்பிப் போக இருப்பது ஒரு வழிபாதை. அவ்வழியால் செல்வதை தவிர வேறுவழி இல்லை. தப்பிச் சென்று விடலாம். கவனமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டால் தப்பிச் சென்று விடலாம் என நம்பினோம்.
சூரியனும் முதலில் கொழும்பு செல்வதற்கு சற்று தயக்கம் காட்டினான். நான் அவனது தயக்கத்தை நீக்கினேன். எல்லா

Page 58
செழியன் 108
இரானுவமுகாம் வாசல்களிலும் எமது படங்களுடனும் பெயர் பட்டியலுடனும் இராணுவத்தினர் காத்திருப்பதில்லை. அத்தோடு இலங்கை அரசை பொறுத்தவரை வலை வீசி தேடப்பட்டுக் கொண்டிருக்கின்ற நபர்களும் நாம் இல்லை. எனவே கவனமாக முன்னேறினால் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையை ஊட்டினேன். இந்த நம்பிக்கை எனக்கு ஏற்படுவதற்கு எனது மாமியார் தான் காரணமாக இருந்தார். (மனைவியின் தாயார்) எனக்கு திருமணமான தில் இருந்தே குடாநாட்டுக்கு வெளியில் இருக்கும் தனது வீட்டுக்கு என்னையும் எனது மனைவியையும் அழைத்துச் செல்ல வேண்டும் எனப் பிடிவாதமாய் இருந்தார். இராணுவம் தேடிக்கொண்டிருக்கை யில், இராணுவ முகாமைக் கடந்து எனது மாமியார் வீட்டுக்குப் போவதா? இப்படி ஒரு ஆசையே எனக்கு ஏற்படவில்லை. ஆனால் மாமியாரோ எனக்கு வேறு பெயரில் அடையாள அட்டையும் எடுத்து தந்தார். இராணுவ முகாம் வாசலில் இந்த அடையாள அட்டையை சும்மா வாங்கி பார்த்துவிட்டு திருப்பித் தந்துவிடுவார்கள் ஒரு பிரச்சனையும் வராது என ஒவ்வொருமாதமும் எனது மாமியார் வரும்போதும் போகும் போதும் நச்சரித்துக்கொண்டிருந்தார். எனது மனைவிக்கு எனது ஆபத்தான நிலைமை விளங்கினாலும் கணவ னோடு தனது வீட்டுக்கும் கிராமத்துக்கும் போய்வரவேண்டும் என்ற ஆசை உள்ளுர இருந்து கொண்டு தான் இருந்தது. இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் குடா நாட்டைவிட்டு வெளியே எனது மாமியார் வீட்டுக்கு பஸ்சில் புறப்பட்டேன். கையில் மாமியார் தந்த அடையாள அட்டையையும் மறக்காமல் எடுத்துக்
கொண்டேன்.
சங்குபிட்டிப் பாலத்தருகில் என்னையும் மனைவியையும் எதிர்பார்த்து மாமிகாத்திருந்தார். படகில் ஏறி அனைவரும் மறுகரைக் குச்சென்றோம். ஒரு குட்டி மினிவான்பயணிகளுக்காக காத்திருந்தது அதுதான்கடைசிமினிவான். இதற்குப்பிறகு இனிமினிவான் சேவை இல்லை என்று அறிந்தேன். நெருப்புப் பெட்டிக்குள் குச்சிகளை அடுக்குவது போல் எல்லோரையும் வானுக்குள் அடுக்கினார்கள், நான், மனவிை, மாமி அனைவரும் வானின் பின்புற இருக்கையில் இருத்தப்பட்டோம். சற்றைக்கெல்லாம் புறப்பட்டு விரைந்து

109 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
சென்றது நமது வான். ஆறு மணிக்கு முன்பூனகரி வாடியடி முகாமைக் கடந்து சென்று விட வேண்டும் அதற்குப்பின் எந்த வாகணங்களும் வாடியடி முகாமைக் கடந்து செல்ல முடியாது. வாகனங்கள் மட்டு மல்ல, மனிதர்களும் கூடச்செல்ல முடியாத, பூனகரி வாடியடிமுகாமி லிருந்து பிறப்பிக்கப்பட்ட ஒரு சட்டமே இது.
இராணுவ முகாமை நெருங்கியதும் சில இராணுவத்தினர் வானை நிறுத்தினர். மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது அருகாமையில் இராணுவத்தினரைப் பார்க்கின்ற சந்தர்ப்பம். உள்ளூர அச்சமாக இருந்தது. முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தேன். இராணுவத்தினர் என்னிடம் கேட்டால் சொல்வதற்கு அடையாள அட்டையில் இருந்த பேர்விலாசத்தை ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டேன். ஆனால் வெகுநேராமாகியும் இராணுவத்தினர் எமது வானை நெருங்கவோ என்னை இறங்கி வரும்படி அழைக்கவோ இல்லை. சற்று நேரத்தில் தூரமாக இராணுவத்தினர் ஒருவர் பின் ஒருவராக முகாமுக்குள் செல்கின்ற காட்சியைக் கண்டோம். இந்த இராணுவத்தினர் அருகில் இருந்த குளத்தில் குளித்து விட்டு வருகிறார்கள் என்றும் இவர்கள் இராணுவ முகாமுக்குள் செல்வதற்காகத்தான் வாகனங்களைப் போக விடாமல் நிறுத்தியுள்ளனர் என்றும் வான் ட்ரைவர்கூறினார்.
அவர் கூறியபடியே நடந்தது. குளித்து விட்டு வந்த இராணுவ வீரர்கள் முகாமுக்குள் சென்றதும், எமது வாகனத்தைப் போகும்படி இராணுவ வீரர்கள் சைகை செய்தனர். அவ்வளவு தான், எந்த சோதனைகளும் இல்லாமல் நாம் இராணுவ முகாமை கடந்து சென்றோம். நாம் மறுபடியும் யாழ்பாணம் வருகின்றபோதும் பூனகரி வாடியடி முகாமை கடக்கின்றபோத ஒருவித சோதனைகளும் இருக்க வில்லை. எல்லாநாட்களும் இப்படித்தான் இருக்கும் என்று இல்லை. ஆனால் பொதுவாக அமைதியான நாட்களும் இப்படித்தான் இருக் கும் என்று இல்லை. ஆனால் பொதுவான அமைதியான நாட்களில் கெடுபிடிகள் இருப்பதில்லையாம். இந்த அனுபவம் எனக்கு இப்போ நம்பிக்கையை அளித்தது. அந்த நம்பிக்கையில் நான் சூரியனுக்கு நம்பிக்கையூட்டினேன்.

Page 59
செழியன் 110
பெரியவர் எக்ஸிடமும், கவிஞரிடமும் எமது முடிவை நாம் கூறினோம். எனக்கு அடையாள அட்டை இருக்கிறது. சூரியனுக்கு அடையாள அட்டை இல்லை. எனவே சூரியனுக்கு ஒரு அடையாள அட்டை எடுக்க வேண்டும். அடையாள அட்டை எடுக்ககாலதாமதம் ஆகும் என்றால் ஒரு போலி அடையாள அட்டை அவனுக்குத் தயாரிக்க வேண்டும். அதன் பின்னர் என்னையும் சூரியையும் யாழ் குடாநாட்டை விட்டு சங்குப்பிட்டி வழியாக கிளிநொச்சி வரை செல்வதற்குரிய ஒழங்கை பெரியவர்தான் செய்ய வேண்டும். அதன் பின்னர் கிளிநொச்சியிலிருந்து எங்களை மாமி பொறுப்பெடுத்து கொழும்புக்குக் கூட்டிச் செல்வார். கொழும்புக்கு நாம் போகும் முன்பே எமக்கு பாஸ்போட் எடுக்கும் ஒழுங்கை வேறுவழியில் செய்து முடிப்போம். மணிக்கு அடையாள அட்டையும் பாஸ்போட் டும் ஏற்கனவே இருக்கிறது. ஆனால் தனது இறுதியாண்டுப் பரீட்சையை எப்படியும் எழுதி முடித்து விட வேண்டும் என அவன் விரும்புகிறான். எனவே தன்னை பரீட்சை எழுதவாவது அவர்கள்’ அனுமதிப்பார்களா? யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தனக்கு என்ன பதிலைச்சொல்லப் போகிறது? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் உடனேயே மணி புறப்படத் தயாராகவில்லை. எனவே அவனது பயணம் தற்சமயத்துக்கு இல்லை. இவ்வாறு நாம் கூறி முடித்தோம்.
சிறிது நேரம் பெரியவர் யோசித்தார். பின் கொழும்பில் உங்களுக்கு பிரச்சனையும் வராதா? கிளிநொச்சியில் உங்களைக் கொண்டு வந்து நான் விட்டால் அதன் பின்னர் நிச்சயமாக பாதுகாப் பாக இருக்குமா? என்றெல்லாம் கேட்டார். அவரது சந்தேகங்களை நீக்கினோம். கடைசியாகப் பெரியவர்கூறினார். "நீங்கள் சொல்கின்ற மாதிரி போகிறதற்கு முடியுமா? நிலைமைகள் எவ்வாறு உள்ளன? என்றெல்லாம் இன்னும் சில பேருடன் கலந்தாலோசித்து மறுபடி வரும் போது சொல்கிறேன்’ என்று கூறினார். அதே நேரம் சூரியனுக்குஅடையாள அட்டை எடுக்கின்ற ஒழுங்கைதான் கவனிப் பதாகக் கவிஞர் எம்மிடம் கூறினார். எமக்குரிய பாஸ்போட்டை எடுக்கின்ற ஒழுங்குகளையும் தாமதிக்காமல் எம்மைக்கவனிக்கும்படி கவிஞரும் பெரியவரும் கூறினார்கள். எமது பயணஒழுங்குகள் பற்றி பேசி முடித்த பின்னர் வேறு சில முக்கிய விடயங்களை பற்றி எமக்கு பெரியவரும் கவிஞரும் கூறினர்.

111 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
சூரியன் தலைமறைவாகு முன்னர் கடைசி நிமிடத்தில் தன்னிடம் இருந்த கட்டுரைகள், சில புத்தகங்கள் மற்றும் முக்கியமாக ஒரு துப்பாக்கி என்பவற்றை சூட்கேசில் போட்டு தனது உறவினர் ஒருவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு வந்திருந்தான். அந்த சூட்கேசை அவர்கள் கைப்பற்றி விட்டனர் என்று தனக்குச் செய்தி வந்ததாக பெரியவர் கூறினார். அச்செய்தியைக் கேட்டதும் சூரியன் பெரிதும் அதிர்ச்சி அடைந்தான்.
சில தினங்களுக்கு முன்னர் அவர்ககள் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியதாகவும் அதில் உரையாடப்பட்ட சில விடயங்களையும் கவிஞர் எமக்குக் குறிப்பிட்டார்.
தாம் அண்மையில் தடை செய்த இயக்கத்தினரிடம் 63 ஆயுதங்கள் இருந்தன, அதில் 56 ஆயுதங்களை நாம் கைப்பற்றி விட்டோம் என அவர்கள் பெருமையாக அறிவித்தனராம். சாவகச் சேரியில் நடைப்பெற்ற தாக்குதலில் கபூர் இறந்திருக்க வேண்டும். நிச்சயமாக கபூர் உயிருடன்தப்பவில்லை. அவரது உடலைத்தூக்கிக் கொண்டு அவரது நண்பர்கள் சென்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனராம். ஒரு நிருபர் கேள்வி ஒன்றை எழுப்பினாராம். பல்கலைக்கழக மாணவர் விஜிதரனைதாம் கடத்தவில்லை, தம்மால் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் தான் கடத்தியது என அவர்கள் அண்மைக்காலமாக சொல்லித்திரிந்தனர். இதை மையமாக வைத்தே அந்த நிருபர் கேள்வியை எழுப்பியுள்ளார். 'குறிப்பிட்ட இயக்கத்தை நீங்கள் தடை செய்து விட்டீர்கள்தானே, ஆனால் விஜிதரனைத்தான் இன்னமும் காணவில்லை, விஜிதரன் எங்கே?' என்று நிருபர்கேட்க, "விஜிதரன் விடயத்திற்குப் பொறுப்பாக இருந்த சேகர் இன்னமும் எம்மிடம் பிடிபடவில்லை. பிடிபட்டதும் தெரியவரும்’ என்று அர்களிடம் இருந்து பதில் வந்ததாம்.
மணியின் விடயம் தொடர்பாகக் கவிஞர் கூறுகையில் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மணி தொடர்பாக எந்த உறுதியும் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் ஜனவரியில் மறுபடியும் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும் வரை மணியைப் பொறுத்திருக்கும் படியும் யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புக் குழு ஊாடக மணியின் விடயத்தை அனுகுவோம் என்றும் கூறினார்.

Page 60
செழியன் 12
சிறிது நேரத்தில் பெரியவரும் கவிஞரும் சென்றனர். இவர்கள் சென்றதன் பின்னர் 'மனிதர் எம்மிடம் வந்தார். எங்களுடைய விடயம் தொடர்பாக என்ன முடிவு செய்தீர்கள் என கேட்டார். நாங்கள் பெரியவரிடம் கூறியதை சுருக்கமாகக் கூறினோம். பொருமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மனிதர் எம்மிடம் "பெரியவர் பாவம் அங்கும் இங்கும் என்று அலைந்து கொண்டிருக் கிறார். எனது இந்த இடத்தில் நீங்கள் இன்னமும் இரண்டு நாட்கள் மட்டும்தான்தங்கலாம். பெரியவர்இதை உங்களுக்குக்கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். இப்படியே போனால் என்ன செய்வது? இதற்கு ஒரு முடிவு வேண்டும் தானே. நான் தகப்பனை போல உங்களுக்கு நல்ல யோசனைச் சொல்கிறேன். நீங்கள் அவர்களிடம்" சென்று சரணடைந்தால் என்ன ?’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். நாம் மூவரும் திடுக்கிட்டுப்போய் நின்றோம்.

30 மார்கழி 1986
காலை விடிந்தது. இரவு முழுவதும் நித்திரை வராமல் புரண்டு கொண்டிருந்தேன் 'நீங்கள் சரணடைந்தால் என்ன? என்று 'மனிதர் கேட்டகேள்வி சுற்றிச்சுற்றிவந்து மண்டையைக் குடைந்துக் கொண்டிருந்தது. எவ்வளவு சுலபமாக அவர் கேட்டுவிட்டார். நாங்களோ சரணடைவதைப்பற்றி பரிசீலனை செய்யவே தயாராக இல்லை. நாங்கள் இதை திட்டவட்டமாகவே ‘மனிதரிடம்" கூறினோம். ஆனால் 'மனிதரோ" விடவில்லை "நான் பெரியவர் இருவருமே அவர்களோடு பேசி எங்கள் முன்னிலையில் உங்களை 'அவர்களிடம் ஒப்படைக்கிறோம். அவர்கள் இரண்டு மூன்று தினங்கள் உங்களை விசாரித்து விட்டு விட்டுவிடுவார்கள். எனவே நீங்கள் வேறு ஒன்றையும் யோசித்து பயப்படத் தேவையில்லை.” என்று கூறினார். எங்களுடைய நிலைமை 'மனிதருக்குப் புரிய வில்லை அது மட்டுடமல்ல அவர்களைப் பற்றியும் 'மனிதருக்கு" தெரியவில்லை. ஏசுநாதரே வந்து பொறுப்புக்கு நின்று ஒப்படைத் தாலும் கொல்ல வேண்டியவன் எனத் தாங்கள் தீர்மானித்தவனைக் கொன்று தீர்ப்பதுதான் அவர்களின் வழிமுறை. இதைத் தெரியாமல் 'மனிதர் மட்டுமல்ல இன்னும் லட்சக்கணக்கானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். புலிகளிடம் சென்று புள்ளி மான்களை சரணடையச்சொல்லும் இவர்களை நினைத்து எப்படி நோவது?

Page 61
செழியன் 114
நாம் திட்டவட்டமாக சரணடையத் தயாராக இல்லை என்பதை விளங்கிக் கொண்ட பின் 'சரி இனி உங்கள் விருப்பம் நீங்கள் விரும்பியபடி செய்யுங்கள்.’’ என்று கூறி 'மனிதர் சென்று விட்டார். இத்தனையும் நடந்ததற்குப் பின்னால் எப்படி நித்திரை வரும?
வரவே இல்லை. செங்கை ஆழியானின் "கிடுகுவேலி நாவலை எடுத்து வாசித்தேன். அதையும் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.
காலையில் மனம் ஓரளவு அமைதிக்குத் திரும்பியது. நாவலை வாசித்து முடித்தேன். யாழ்ப்பாணத்து இளைஞர்கள் வெளிநாடு களுக்கு வேலைவாய்ப்புகளைத் தேடி அலை அலையாக புறப்பட்டுச் செல்கின்றனர். அன்னிய நாட்டுப் பணம் யாழ்ப்பாணத்தில் வந்து ரூபாய்களாக குவிகின்றது. இந்நிகழ்ச்சி யாழ் சமூக அமைப்பில் மனித உறவுகளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையே "கிடுகு வேலியில் செங்கை ஆழியான் கூறுகிறார். மண்ணோடு ஒட்டிகதை பண்ணும் ஆற்றலில் செங்கை ஆழியான் ஒரு முன்னணிக் கதையாசிரியர்.
சீதனம், டொனேசன் இரண்டும் வாங்கி திருமணம் செய்த சண்முகம் திருமணமாகி மூன்று மாதத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகப் புறப்படுகிறான். இளம் மனைவியின் கண்ணிரைக் கடந்து அவன் புறப்படுவது தன் தங்கைமாரின் வாழ்வுக்காக, ஐந்து வருடங்கள் கழித்து அவன்திரும்பியபோது.
அவன் மனைவி நிர்மலா விமான நிலையத்திற்கு வந்திருப் பாள் என்ற அவனது எதிர்பார்ப்புகளை கனவுகளை 'ஐந்தாண்டுகள் பிரிந்திருந்திட்டன் இன்னும் இரண்டு நாள் பிரிந்திருப்பதால் ஒன்றும் வந்திடாது. இங்கே வந்ததும் பார்க்கிறேன் என்றா’ சண்முகத்தின் தம்பி கூறியது நொறுக்குகிறது. வெளிநாட்டிலிருந்து நேரே தாய் வீட்டுக்குப் போய் இறங்கி நிற்க்கும் சண்முகத்தைத் தேடி வரும் அவன் மனைவி நிர்மலா, அடங்கா சினத்துடனும், கண்கள் ஆத்திரத் தால் நீரைச் சொரிய 'இனியாவது என் புருசனை என்னுடன் வாழ விடுறியளா’ என்ற வார்த்தைகள். இது ஐந்து வருடமாய் தன்

15 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
கணவன் தன்னுடன் வாழாததை (வெளிநாட்டில் தங்கை மாருக்காக உழைத்துக் கொண்டிருந்ததை) தாங்க முடியாமல், வெளிவந்த வேதனை வார்த்தைகள். தன் மனைவியை பிரிந்து வெளிநாட்டில் இயந்திரமாய் இயங்கி பணத்தைசண்முகம் வீட்டுக்கு அனுப்பினான். தன்தங்கைகளுக்காக வீடு திரும்பிய அவன்தாயிடம் கேட்கிறான்.
'அம்மா . தங்கச்சிக்கு கல்யாணம் பேசவேண்டும் கெதியாய் முடிச்சுட்டால் நிம்மதி இப்ப எவ்வளவு பேங்கில் இருக்குது?'ஒரு முப்பதாயிரம். 'அம்மா கூறிகிறாள்.
'என்ன விசர்க்கதை பேசுறியள் அம்மா... அவ்வளவு தானா? சண்முகம் திகைப்புடன் கேட்டான். அம்மாவோ அவனை வியப்புடன் பார்த்தாள். 'ஏன் தம்பி? . வீடு கட்டியதில் நாலு லட்சம் போச்சுது, . கடன் இருந்தது. ஈடு மீட்டம் இருபதா யிரம். கிளிக்கு ஒரு சங்கிலியும் மூன்று சோடிகாப்பும் செய்தம். அவ்வளவு தான்’ சண்முகம் நிலை குலைந்து விட்டான். அவன் அனுப்பிய பணத்தில் . தங்கைமாரின் சீதனத்துக்கு என்று அவன் அனுப்பியப் பணம் செலவழிக்கப்பட்டு விட்டது. முப்பதாயிரத்தில் என்ன செய்ய முடியும் "இப்ப வீட்டுத் தேவக்ைகு எவ்வளவு தேவை சொல்லு பார்ப்போம் மூவாயிரம் இருந்தாலும் காணாது தம்பி’ அம்மா தொடர்ந்து கூறுகிறாள். ஐயாவின் இருநூறு ரூபாயுடன் சீவியம் நடத்திய அம்மாவாஇப்படிக்கூறுகிறாள்?
இது சண்முகம் வீட்டில் மட்டுமா? எத்தனை எத்தனையோ வீடுகளில்ெலாம் இதே கதைதான். மிஞ்சியிருப்பது பெருத்தகல் வீடு, சுற்றிவரை இருக்கும் மதில், கிணற்றடியைச் சுற்றிப் போட்ட கொங் கிரிட் மேடை, மோட்டார், லைட், சீலிங்பேன், தொலைக்காட்சிப் பெட்டி, கதிரை என்று இவை மட்டும் தான்.
சொந்த மண்ணில் உழைக்காத எல்லா சமூகமும் சீரழிந்து போவது தவிர்க்க முடியாத இயல்பு போலும்?
பத்திரிக்கைகள் வந்தன. தமிழ்நாடு சூளைமேடு சம்பவம் தொடர்பாக சென்னை நீதிமன்றம் ஒன்றினால் ஒருவர் மட்டுமே பினையில் விடப்பட்டுள்ளார் என்றும் டக்ளஸ் தேவானந்தா உட்பட ஏனைய போராளிகள் பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்து

Page 62
செழியன் 116
விடுதலையாகமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் செய்தி வந்திருந்தது.
அவர்களுடைய யாழ் மாவட்டதளபதியின் பிறந்த தினமான ஜனவரி 2 ஆம் தேதி பரித்தித்துறையில் பிரார்த்தனை, ஆராதனை, நிவாரண உதவிகள், விசேட பூசைகள் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன என இன்னோர் செய்தி கூறியது. எங்களைச் சந்திக்க மறுபடியும் சின்னவர் இன்று வந்தார். முக்கிய விடயம் ஒன்றுமில்லை. ஒரு பாடசாலை மாணவர்களின் கட்டுரை களைத் திருத்தி புள்ளிகள் போட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டார். அந்த வேலை நடைப் பெற்றது. பிற்பகல் மூன்றரை மணியிலிருந்து தேனீர் எப்போ வருமென ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந் தோம். தேனீர், சாப்பாடு, எல்லாமே குறிப்பிட்ட நேரங்களுக்கு வந்து கொண்டிருந்ததால் அது பழக்கப்பட்டு அந்த நேரம் வந்ததும் எதிர் பார்க்கும் நிலை உருவாகி இருந்தது. தேனீர் வரும் வருமென இறுதியில் ஆறரை மணிக்கே வந்து சேர்ந்தது.
தன்கடிதத்தில் மாது எழுதியவை நினைவுக்கு வந்தன. மறுபடி படிக்க வேண்டும்போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. கடித்தை தேடி எடுத்துப் படித்தேன்நீங்களும் படிக்க வேண்டிய கடிதம் தான் இது.
அன்பு நண்பர்களுக்கு
a 8 a 8 o X w. இயக்கத்தின்மீது ஒரு தாக்குதல் நடைபெற்றதற்கான
அடையாளமோ அது பற்றிய உணர்வோஇல்லாமல் சனங்கள் வாழத் தொடங்கி விட்டார்கள்.
சூரியன் உதிக்கிறான், பஸ் ஓடுகிறது, சினிமாப் பாட்டுப் பாடியபடியே தேனீர் கடைகள் திறந்திருக்கின்றன. தெருவெல்லாம் சனங்கள் எதையோ எடுத்து வருவதற்காக ஒடுவது போல் ஒடுகிறார் கள். நத்தார் வெடிகள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. பத்திரிக்கைகள் வருகின்றன இராணுவம் இடைக்கிடை எட்டிப் பார்த்துவிட்டு திரும்புகிறது. எங்காவது ஒரு மூலையில் எப்போதாவது நம்பிக்கை யின் ஒளிக்கீற்றுக்களாக ஒரு சில புகை மூட்டங்கள் தென்படுவதைத் தவிர எல்லாம் 'வழமைப்படி உங்களுக்கும் பெருமையாக இல்லையா? இடி விழுந்தால் கூட அசைந்து கொடுக்காத எமது

117 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பூமியும் எமது மக்களும், எதிரியின் கத்தி தமது குரல்வளையை வெட்டும் வரை மெளனமாக உறங்கிக் கொண்டிருக்கும் எமது தேசத் தின் பண்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. எமது தேசத்தில் ஒரு விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை இனிமேல் யாருக்காவது சொல்லித்தான் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் போலும்.
தமிழ் அதிகார முதலாளித்துவ சக்திகளின் ஏவல் நாயாக அவர்கள் மாறியுள்ளனர். பாசிச கொடுங்கோன்மை மூலம் தமது அதிகாரத்தை நிறுவுவதில் ஆளும் வர்க்கங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அண்மையில்பளையில். இனரால் குடியேற்றப்பட்ட கூலி விவசாயிகள் இப்போசாதி மான்களால் விரட்டப்பட்டுள்ளனர். "உங்கட இயக்கம் சரி. இனி எங்கட இயக்கம்தான்’ என்று சொல்லி விரட்டியுள்ளனர். எல்லா விடயங்களிலும் எல்லா மட்டங்களிலும் மீளவும் தமது சொந்த அதிகாரத்தையும் அடக்குமுறையையும் தொடர வாய்பான சூழலை ஆளும் வர்க்கங்களும் அடிவருடிகளும் பெற்றுக் கொண்டுள்ளனர். புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் தங்கள் பலத்தை இழந்து நிற்கின்றன.
நெருக்கடியும், உயிர் ஆபத்தும் நிறைந்த நிலை இது. ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. பாசிசத்தின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. எவ்வகையான விமர்சனத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்ட சக்தியாகத்தன்னை காட்டியுள்ளது. பாசிசம் 1951, 1982 ஏன் 1983, 1984 ல் கூட மக்கள் இத்தகைய நெருக்கடியை அனுபவித்ததில்லை. ஜனநாயக சூழலுக்கு சிறிதளவும் வாய்ப்பில்லாத பாசிசம் மேலோங்கி நிற்கிறது.
மாது இவ்வாறு குறிப்பிட்டு எழுதியிருந்தார். தலைமறைவாய் இருக்கின்ற போதும் ஒரு கணநேரம் வீதியில் நடந்து சென்று நாட்டில் நிகழ்வதை பார்த்து வந்ததை போல் ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தி யிருந்தார். மாது போன்றவர்களுக்கும் ஆபத்து நெருங்கி வந்து கொண்டுதான் இருக்கும் இன்றைக்கோ? நாளைக்கோ? அதுவரைக் கும் எமது தெருக்களில் நடந்து திரியலாம். சைக்களில் ஏறி நண்பர்கள் வீட்டுக்கு செல்லலாம். சுதந்திரமாக காற்றை இழுத்துவிட்டுக் கொள்ளலாம். எல்லாமே இன்னமும் கொஞ்சநாட்களுக்குத்தான்.

Page 63
31 மார்கழி 1986
காலை விடிந்து எழுகின்ற போதே நாம் இன்று மட்டும் தான் బ్లి இருக்க முடியும் என்பதும் நினைவிற்கு வந்து தொலைத்தது. பெரியவர் ஏதாவது ஒழுங்கு செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது.
சிறது நேரத்தில் சின்னவர் வந்தார். நாம் திருத்தி, புள்ளிகள் போட்டு வைத்திருந்த கட்டுரைகளைப் பெற்றுக் கொண்டு சென்றார். சின்னவர்சென்ற சில நிமிட நேரங்களில் பெரியவர் திடீரென வந்தார். எமக்கு நண்பர்கள் அனுப்பிய கடிதங்களைத் தந்தார். இன்று நாம் இடம் மாறுகிறோம் என்று கூறிய பெரியவர், மணி ஒரு இடத்திற்கும் சூரியனும் நானும் ஒரு இடத்திற்குமாய் செல்வதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாய்க் கூறினார். எம்மைத் தயாராகும் படியும் மறுபடியும் வருவதாகவும் கூறிவிட்டுச் சென்றார். மணி தங்குவதற் கான ஒழுங்கு நண்பர் மாது மூலமாக ஒரு கிராமத்தில் செய்யப் பட்டிருந்தது.
கடிதங்களை வாசித்தோம். யாழ்ப்பாணத்துப் போக்குவரத்து ஒழுங்கு அவர்களின் ஊடாக 1987முதல் அமுலுக்கு வரும். ஏனைய நிர்வாக வேலைகள் யாவும் கூட அவர்களின் பொறுப்பிலேயே நடாத்தப்படவுள்ளது. என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

19 ஒருமனிதனின் நாட்குறிப்பிலிருந்து
அத்தோடு கிராமங்களில் மக்கள் தாங்களாக ஏற்படுத்திக் கொண்ட விழிப்பு மன்றங்களை அவர்கள் சந்தித்து விழிப்பு மன்றங்களிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் தங்களி டம் ஒப்படைக்கும்படி கூறிவிட்டனர் என்றும் தகவல் இருந்தது. இலங்கை அரசும் அவர்களும் இந்திய எதிர்ப்புச் செயல்பாட்டில் இணைந்து வருவதற்காக ஒரு உடன்பாட்டுக்கு வரத் தயாராய் உள்ளனர் என்றும் அறியமுடிகிறது என்ற தகவலும் கடிதத்தில் இருந்தது.
அன்றைய பத்திரிகைகளிலும் இலங்கை அரசினரும் அவர்களினதும் பேச்சுவார்த்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக இரண்டு அம்சநல்லெண்ணத்திட்டம் ஒன்றை அரசாங்கம் மிகத்தீவிர மாக ஆராய்ந்து வருவதாகவும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் மீது வழக்குத் தொடரசாட்சியங்கள் போதாது என்று சட்டமா அதிபர் கருதுபவர்களை விடுதலை செய்வது, வடபகுதியில் தொண்டமானாறு, நாவற்குழி, ஆயுதப்படை முகாம்களை அகற்றிவிட்டு அந்த இடங்களில் பொலிஸ் நிலையங் களை நிறுவிதமிழ் பொலிசாரை பணியாற்ற வைப்பது என்பன இந்த இரண்டு அம்ச நல்லெண்ணத் திட்டத்தில் அடங்கியுள்ளதாக தெரி கிறது. கடந்த திங்கள் நடந்த தேசிய பாதுகாப்புகவுன்சில் கூட்டத்தில் இவ்விடயங்கள் நீண்ட நேரமாக ஆராயப்பட்டன என்று தெரிய வருகிறது என பத்திரிகைச் செய்தி கூறியது. மற்றோர் பத்திரிகை பேச்சுக்களின் விரவங்களைப் பற்றிய அறிக்கைகளைத் தனது சொந்த வழிகள் மூலம் இந்திய அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரபல அரசியல் விமர்சகர் ஜி. கே. ரெட்டி இந்நாளிதழில் எழுதியுள்ளார் எனகுறிப்பிடப்பட்டிருந்தது.
பத்திரிக்கைகளை வாசித்து முடிந்ததும் எமது பயண ஒழுங்குகள் தொடர்பாக சில அலுவல்களை செய்யுமாறு சூரியனின் மனைவிக்கும் எனது மனைவிக்கும் கடிதங்கள் எழுதினோம். எமக்கு பாஸ்போட் எடுக்கும் ஒழுங்கை முக்கியமாக கவனிக்கும் படி குறிப்பாக எழுதினோம் யாழ்ப்பாணம் கச்சேரியிலேயே பாஸ் போட்டை ஒரு மாதத்திற்குள் பெறலாம் என்று நாம் அறிந்திருந்

Page 64
செழியன் 120
தோம். எமக்கு வேண்டிய நண்பர் ஒருவர் கச்சேரியில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரை தொடர்புகொண்டு விரைவாக பாஸ்போட் எடுக்கின்ற ஏற்பாட்டை செய்யும்படி வலியுறுத்தினோம்.
மதிய உணவுக்குப் பின்னர் நாம் கண்ணயர்ந்தோம் மாலை நான்கு மணிக்கு எமது அறைக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தோம். சற்றைக்கெல்லாம் பெரியவர் வந்து விடுவார் மணியை புப்பட்டுத்தயாராக இருக்கும்படி மனிதர் செய்தி கூறினார்.
நாம் ஒவ்வொருவராக பிரிந்து கொண்டிருந்தோம். இப்போ மணியையும் பிரியப்போகிறோம். பிரிகின்ற நண்பர்களை மறுபடி சந்திப்போம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இருக்கவில்லை. மணியைப் பிரிகின்றதுயர் மனதை அழுத்தியது. எதையும் பேசவும் முடியவில்லை. பலத்த மெளனம் நிலவியது 'மனிதர் தானே எமக்கு தேனீர் கொண்டுவந்து தந்தார். நாம் போகப்போகிறோம் என்று ஒரு உணர்வு அவருள் செயற்பட்டதைப் போல் தெரிந்தது. தேனீரைத்தந்து விட்டு அமைதியாகச்சென்று விட்டார்.
சற்று நேரத்தில் பெரியவர் வந்தார். தான்மணியை அழைத்துச் சென்று மாதுவிடம் ஒப்படைப்பதாயும் மாது மணியை கிராமம் ஒன்றுக்கு அழைத்தச்செல்வார்என்றும் சூரியனுக்கும் எனக்கும் வேறு ஒரு இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இருட்டியபின் ஒருவர் வந்து எங்கள் இருவரையும் அழைத்துச் செல்வார் என்றும் பெரியவர்கூறினார்.
மறுபடியும் மறுநாள் வந்து எங்களை சந்திப்பதாக பெரியவர் கூறிவிட்டு மணியுடன் புறப்பட்டார். மணிக்கு நானும் சூரியனும் விடை கொடுத்து அனுப்பினோம். மணி சென்ற பின் வெறுமை சூழ்ந்து கொண்டது. மெல்ல மெல்லமாக நாமும் புறப்படுவதற்க்கு தயாராயினோம். எமது பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொண்டோம். மனிதர் எமக்குப்பாவிப்பதற்காகதந்த பொருட்களை ஒரு இடத்தில் வைத்தோம். நான் ஒரு முறை குளித்து விடுவதென முடிவு செய்தேன்.
இரவு ஆறு மணியைக் கடந்தபோது எம்மை அழைத்துப் போக ஒருவர் வந்திருப்பதாக மனிதரோடு பணியாற்றும் பெண்மனி

121 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
எம்மிடம் வந்து கூறினார். நாம் புறப்பட்டோம். கடைசி நேரத்தில் அந்த பெண்மணி எங்கள் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டார். 'பிள்ளையஸ் நான் மறுபடியும் வாழ்க்கையில் உங்களைச் சந்திப் பேன். நீங்கள் சந்தோசமாய் இருப்பதைக் காண்பேன்’ ஒரு தாயின் பரிவோடு வார்த்தைகளைக் கூறி விடைதந்தார். அத்தாயிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
முற்றத்தில் இருட்டில் சைக்கிளோடு ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். எம்மை விட வயது குறைவான ஒரு இளைஞர். நாம் இளைஞரைப் நெருங்கியபோது 'பெரியவர் உங்களை கூட்டிப் போகச் சொன்னார்’ என்று மெல்ல எம்மிடம் கூறினார் நாம் 'ஓம்’ என்று கூறி தலையாட்டினோம் இளைஞர் சைக்கிளை உருட்டியபடி முன்னே செல்ல நாம் பின் தொடர்ந்தோம். "கொஞ்சத் தூரம்தான் நடந்து போய்விடலாம்' என்று இளைஞரே கூறினார். ஒழுங்கையில் மின்வெளிச்சம் எதுவுமில்லை. சனநடமாட்டமும் இல்லை நடந்தே சென்று அந்த இளைஞர் காட்டிய குறிப்பிட்ட இடத்தை அடைந் தோம். அது ஒரு இரட்டை மாடிக் கட்டடம். மாடிக்கு எம்மை அழைத்துச்சென்றார்.
மாடியில் தங்குவதற்குரிய வசதிகள் இருந்தன. கீழே ஏதோ ஒரு நிறுவனம் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நிறுவனத்திற்கும் இந்த இளைஞருக்கும் சம்பந்தம் இல்லை. இந்த இளைஞர் வெளி மாவட்டத்தைச் சோர்ந்தவர். யாழ் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அறிந்து கொண்டேன்.
மாடியில் இருந்த ஒரு நீளமான அறையில் நான்கு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. இரண்டு கட்டில்களைக் காட்டிய இளைஞர் அவற்றை நாம் பாவிக்கலாம் என கூறினார். "இரவு சாப்பிட்டு விட்டீர்களா’’ எனக் கேட்டார் "எமக்கு பசிக்கவில்லை’ என்று கூறினோம் தேனீர்கொண்டு வருகிறேன் எனக் கூறிச்சென்றார். அந்த இளைஞர் சென்றதும் சூரியன் எனக்கு இந்த இளைஞரைத் தெரியும் . இளைஞருக்கும் என்னைத் தெரியும் . நீண்ட நாட்களின் பின் மறுபடியும் சந்திக்கிறோம் இப்போ என்னை மறந்துவிட்டார் போல எனக் கூறினான். தெரிந்த ஆள் என்றால் செளகரியமாய் அல்லவா போய்விவட்டது இளைஞரோடு பேசிப் பார்க்கும் படி கூறினேன்.

Page 65
செழியன் 122
தேனிரோடு இளைஞர் திரும்பி வந்தார். தேனிரைக் குடித்துக் கொண்டிருக்கையில் 'நீர் ராஜா தானே. என்னை ஞாபகம் இல்லையா?’ என்று சூரியன் கேட்டான். 'ஓ தெரியுமே. நீங்கள் சூரியன் அண்ணன் தானே' என்று சிரித்தப்படி அந்த இளைஞர் கூறினார். எமக்குச்சற்று ஆச்சரியம். சூரியன் நேரடியாகக் கேட்டான் "தெரியும் என்றால் இதுவரையும் ஏன் தெரியாத மாதிரி இருந்தனிர்?’ சூரியின் கேள்விக்கு இளைஞர் பதில் கூறினார். 'பெரியவர் உங்களுடைய நிலைமைகளைப் பற்றி கூறினார். இப்படியான சூழ்நிலையில் நீங்கள் யார் என்பதை வெளிக்காட்ட விரும்பாமலும் இருக்கலாம்தானே. எனவே தான் எனக்கு தெரிந்த மாதிரிகாட்டிக் கொள்ளவில்லை". எனக்கு உள்ளுர மிகத் திருப்த்தியாய் இருந்தது. இந்த இளைஞர் சூரியனுக்கு ஏற்கனவே தெரிந்தவர் வேண்டப் பட்டவர் என்பதால் எமது பாதுகாப்பு உட்பட பல விடயங்களுக்கு இது உறுதுணையாக இருக்கும் என நினைத்தேன்.
புதிய இடம், புதிய சூழ்நிலை, பற்பல சிந்தனைகள் நித்திரை வெகு நேரமாய் வரவில்லை. இரவு பனிரெண்டு மணியாகத்தான் இருக்கும். நாலா திசைகளிலும் இருந்து வெடிச்சத்தங்கள் ஆரவாரங் கள் கேட்டன. ஆகா. புத்தாண்டு அல்லவா பிறக்கிறது. மற்றும் ஒரு புதிய ஆண்டில் நாம் அடையெடுத்து வைக்கிறோம். நல்லது இந்த ஆண்டாவது நமது மக்களுக்கும் நமக்கும் நல்லதொர்ஆண்டாக அமையட்டும் என நான் நினைத்துக்கொண்டேன் "புத்தாண்டு வாழ்த் துக்கள்’ இளைஞரின் குரல் கேட்டது. 'புத்தாண்டு வாழ்த்துக்கள்" "புத்தாண்டு வாழ்த்துக்கள்’ பரஸ்பரம் வாழ்த்துக்கள் கூறினோம். வெகு நேரத்தின் பின் மெல்ல உறங்கிப் போனேன்.

1தை 1987
புத்தாடைகள்அணிந்திருந்த மனிதர்களின் நடமாட்டங்களை மாடியிலிருந்து ஜன்னல் வழியாக அவதானிக்க முடிந்தது. மக்கள் குதூகலமாகப் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரிந்தது. இந்த குதூகலங்கலுக்குப் புறம்பாக இந்த மண்ணில் எம்மைப் போன்ற பலர் உயிரைக்காத்துக்கொள்வதற்காக நடத்திக்கொண்டிருக்கிற போராட்டம் ஒருபுறம் சந்தடி இன்றி நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் இதை புரிந்து கொள்ளவில்லை. மக்களு க்கு புரியவைக்க வேண்டும் என்று யாரும் கவலைப்படவும் இல்லை.
யாழ் நகரத்தின் பிரதான தெருக்களின் சந்திகளில் சீருடை அணிந்த பொலீசார் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்ற தகவலை இளைஞர் எமக்குக்கூறினார். இந்த பொலிசார் இலங்கை அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் அல்லர். "அவர்களுடைய இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட புதிய பிரி வாகும். இன்று பெரியவர் வருவதாக கூறியிருந்தார் அல்லவா 1 அவருடையவருகையை ஆவலாக எதரிபார்த்துக்கொண்டிருந்தோம். எமது பயண ஒழுங்குகள் தொடர்பான ஏற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டும் என்று நானும் சூரியனும் தீவிரமாய் இருந்தோம்.

Page 66
செழியன் 124
பெரியவர் பகல் முழுவதும் வரவில்லை. இரவு வருவார் என நம்பினோம். இந்த புதிய இடத்திலும் நாம் சாப்பாட்டிற்காக நேரத்திற்கு நேரம் சாப்பாட்டு அறைக்குச் செல்ல வேண்டும் மேசை, கதிரைகள் சகிதம் பலவகையான கறிகளோடு சாப்பாடு பரிமாறப் பட்டது. சாப்பாடு தயாரிக்கவென்றே அங்கு ஒருவர் பணிபுரிந்தார். சாப்பாட்டுக்குப் பின்னார் கண்டிப்பாகப் பழம் சாப்பிட வேண்டும் என்று இளைஞர் வற்புறுத்திக்கூறுவார்.
இரவு ஒன்பது மணிவரை பெரியவர் வருவார் என்று நம்பிக் காக்திருதோம். ஆனால் பெரியவர் வரவில்லை. அதன்பின்னர் அவர் வருவார் என்ற நம்பிக்கை அற்றுப் போனது. நித்திரைக்காக படுக்கைக்கு சென்றோம்.
2 தை 1987
காலையிலும் பெரியவர் வரவில்லை. பத்திரிக்கைகள் வந்தன. பெரியவர் வரவில்லை என்பதால் எமது பயண ஒழுங்குகள் தொடர்பாக கேள்விகள் எழுந்தன. ஒரு முடிவுக்கும் வர முடிய வில்லை. இன்று ஜெகனுக்கு ஒரு கடிதம் எழுதினோம். ஜெகனின் குழந்தைகள் பற்றியநினைவுகள் எழுந்தன. சிறு குழந்தைகளோடும் கணவனைப் பிரிந்து கணவனைப் பற்றிய நம்பிக்கையான செய்திகள் எதுவுமே இன்றியும் ஜெகனின் துணைவியார் என்ன துயர் அடைகிறாரோ என்று நினைத்தேன்.
இரவு வானொலிச் செய்தியில் யாழ்ப்பாணத்துக்கான பெற்ரோல் மற்றும் எரிபொருட்கள் அனைத்தினதும் விநியோகத்தை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்றும் போக்குவரத்து தொடர் பான வரி விதிப்புகளை அவர்கள் அமுல்ப்படுத்துவதாக அறிவித்

125 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
ததை தொடர்ந்தே அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஒலிப்பரப்பட்டது.
சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர்கள் செல்வம், பொபி ஆகியோர் மத்திய அமைச்சர் சிதம்பரத் தின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர் என்றும் செய்தியில் அறிவிக்கப்பட்டது. அரசு விதித்த எரிப் பொருள் தடை காரணமாக பல அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் மேலும் மேலும் துயர்களுக்கு ஆளாகப் போகின்றனர் என்று யூகிக்க முடிந்தது. இரவு இளைஞர் கிட்டார்இசையுடன் பாடல்களைப் பாடினார். துயரமான நேரம் இந்த இசைமனதுக்கு இதமாக இருந்தது.
3 தை 1987
காலையில் எழுந்து காலைக் கடன் முடித்து உணவை உண்டபின் மறுபடியும் படுக்கையில் சரிந்தேன். பயணம் தொடர் பான திட்டமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய நேரத்தில் எந்தவிதமான தகவல்களும் ஏற்பாடுகளும் இல்லாமல் வெறுமை மட்டுமே எஞ்சி இருந்தது. மனமோ அமைதி இன்றி தவித்தது. நித்திரை கொண்டால் யோசிக்க வேண்டியதில்லை அல்லவா.
மூன்று தினங்களாக நாம் எதிர் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் இன்று மாலை வந்தார். ஆனால் பயண ஒழுங்குகள் தொடர்பாக ஒருவித முன்னேற்றமும் இல்லை. சரியாக குறிப்பிடுவ தாயின் எமது பயணஏற்பாடு அங்குலம் கூட முன்னேறவில்லை. சில கடிதங்களையும் பொருட்களையும் எம்மிடம் பெரியவர் தந்தார். நாளை மறுதினம் மறுபடியும் வருவதாக பெரியவர்கூறிச்சென்றார்.

Page 67
செழியன் 126
எமது பயண ஒழுங்குகள் தொடர்பாக வேறு வழிகளில் ஒழுங்குகள் செய்ய முடியுமா என்பதைப் பற்றி நானும் சூரியனும் ஆலோசனைசெய்தோம். இது தொடர்பாகசூரியனின் மனைவியுடன் நேரில் பேசினால் ஏதாவது முடிவுக்கு வரலாம் என்று தோன்றியது. இரவு இளைஞரோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சூரியனின் மனைவியை இந்த இடத்திற்கு அழைத்து எமது பயணம் தொடர்பாக பேசலாமா என்று கேட்டோம். "தாராளமாக அழைக்கலாம்’ என்று இளைஞர் கூறினார். சூரியனின் மனைவி யிடம் இந்தச் செய்தியையும் எவ்வாறு இங்கு வருவது என்ற தகவலையும் தெரிவிப்பதற்கும் இளைஞரேஉதவவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். "நிச்சயமாக உதவி செய்கிறேன்" என எதுவித மறுப்புமின்றி இளைஞர்முன்வந்தார்.
4தை 1987
காலையில் இளைஞரிடம் சூரியனின் மனைவிக்கு செய்தி கொடுத்து அனுப்பினோம் உரிய இடத்தில் செய்தியை ஒப்படைத்து வந்ததாக இளைஞர் திரும்பி வந்து கூறினார். மாலை சூரியனின் மனைவி எமது இருப்பிடத்துக்கு வந்தார் வரும் போது தன்னை எவரும் பின் தொடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வந்ததாக முதலிலேயே அவர் எம்மிடம் கூறினார்.
சூரியனின் மனைவியிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக எமது பயணம் தொடர்பாக பேசினோம் . குடா நாட்டு வெளியால் கிளிநொச்சிக்கு நாம்வந்து சேர்ந்தல் போதும், அதன்பின் தானே பொறுப்பெடுத்து கொழும்புக்கு கூட்டிப் போவதாக எனது மாமியார்உறுதியாகக்கூறியுள்ளார் எனசூரியனின் மனைவி கூறினார்.

127 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
அது மட்டுமின்றி நாம் கொழும்பில் தங்கவும் உறவினர் ஒருவர் வீட்டில் ஏற்பாடு செய்துள்ளதாக மாமி கூறியுள்ளதாக தெரிவித்தார்.
யாழ் கச்சேரியில் வேலை செய்யும் எனது நண்பர் குகேந்திரனைச் சந்தித்ததாகவும், குகேந்திரன் கூறியபடி யாழ் கச்சேரியில் வேலைகள் மந்தமாக நிகழ்கிறது. அத்தோடு தபால் சேவையும் சீர் குலைந்து விட்டது. அதனால் கொழும்பிலே தான் விரைவாக பாஸ்போட் எடுக்கமுடியும் என்றும் கூறினார்.
கொழும்பில் பாஸ்போட் எடுக்க ஒரு பாஸ்போட் ஏஜென் சியில் வேலை செய்பவரை அணுகியதாகவும் அவர் இரண்டு வாரத் துக்குள் பாஸ்போட் எடுத்துத் தரலாம் என்று கூறியுள்ளார் என்றும் சூரியனின் மனவிை கூறினார். தன் கையோடு கொண்டு வந்த விண்ணப்பதாளில் எமது கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டார். எமது பயணத்துக்கு வேண்டிய செலவுக்காணபணத்தை சில இடங்களில் கேட்டுப் பெற முயற்சிக்கும் படி கூறி அந்த விவரங் களைகூறினோம்.
கடைசியாக யாழ் குடாநாட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? என்று நாம் கேட்டோம். அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று திட்டவட்டமாக சூரியனின் மனைவி கூறினார். பெரியவர் ஏதாவது ஒழுங்கு செய்தால் அன்றி வேறு வழியில்தப்பிச்செல்ல முடியாது என்று கூறினார். குடாநாட்டுக்குள் இருந்து செல்கிற தனியார் வாகனங்கள் பஸ் என்று அனைத்துமே இன்றும் சோதனை செய்யப்படுகின்றன என்றும் கடலில் கூட மீன் பிடி படகுகள் உட்பட யாவும் கடலில் வைத்தே சோதனை செய்யப்படுவதாகவும் சூரியனின் மனைவி கூறினார். எனவே குடாநாட்டை விட்டு வெளியேற பெரியவர் செய்கின்ற ஏற்பாட்டை நம்பி இருப்பதை விட வேறு வழியில்லை என்று சூரியனின் மனைவி திட்டவட்டமாக கூறினார்.
சூரியனின் மனவிையை சந்தித்தபின் சற்று மனத்தெம்பு
ஏற்பட்டது. பயணம் தொடர்பாக சில ஏற்பாடுகளாவது நடைபெறு கின்றது என்பது மகிழ்ச்சியான விடயம்தானே.

Page 68
5 தை 1987
காலை விடிந்தது. இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மறுபடியும் ஆரம்பிக்கிறது. இளைஞர் எம்மிடம் விடைபெற்று பல்கலைக் கழகம் சென்றார். அவரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். மணிதொடர்பாக மாணவர்அவை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்பினோம்.
மதியம் இளைஞர் திரும்பி வந்தார். யாழ்பல்கலைக் கழக மாணவர், விஜிதரன் தொடர்பாக தொடர்ந்து போராடுவது, பல்கலைக்கழகமாணவர்அமைப்புதலைவன்மணி, அமைப்புக்குழு உறுப்பினர் விமலேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்தும் பல்கலைக் கழகத்தில் கல்விகற்பதற்குதடை எதுவும் இல்லாமல் பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் அவர்களுடனும் பேசி முடிவுக்கு வருதல், அதுவரை இந்த இருவர்களதும் வகுப்பு மாணவர்கள் விரிவுரை களைப் பகிஷ்கரிப்பது, இன்று அடையாள பகிஷ்கரிப்பு நடத்துவது, நாளை மறுபடியும் கூடி இறுதி நேர முடிவுக்கு வருதல் என்று மாணவர்களால் முடிவு செய்யப்பட்டதாக இளைஞர் கூறினார். ஒரே ஒரு மாணவி எழுந்து “போராட்டம் அனாவசியமானது' என குறிப்

129 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
பிட்டு பேசினார் என்றும் கூறினார். யாழ் பல்கலைக் கழக மாணவர் கள் நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறு முடிவு எடுபப்பார்கள் என நினைக்கவில்லை. முடிவுகளை அறிந்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் இனி அவர்கள் பல மாணவர்களை மிரட்டுவார் கள் என எதிர்பார்த்தேன்.
"பத்திரிகையில் யாழ்ப்பாண மக்கள் கஷ்டப்படுகிறார்கள் எரிப்பொருட் தடையை தவிர்க்கவும்' என்று இந்திய தூதுவர் இலங்கை அரசிடம் கோரியுள்ளார் என்ற செய்தி இருந்தது. மாலை இருள் சூழும் நேரம் பெரியவர் வந்தார் மிக எதிர்பார்போடு அவர் சொல்வதை கேட்க தயாராகிறோம். மிக ஏமாற்றமே மிஞ்சியது ஒழுங்குகள் ஒன்றும் சரிவரவில்லை என்று கூறினார். என்ன செய்வது என்று எமக்குப் புரியவில்லை.
6 தை 1987
இன்று கத்தோலிக்க குருவானவர் பஸ்தியனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். இவர் இலங்கை ராணுவத்தினரால் மன்னார் வங்காலையில் கொடூரமாகக் கொல்லப்பட்டவர். இறுதிவரை இவரது உடல் கிடைக்கவில்லை. அன்று வங்காலையில் சாட்சிகளின் கூற்றிலிருந்து 5.1.86 பி.ப 6 மணி ஊரடங்கு. அருள்திரு. மேரி பஸ்தியன் அவர்களும் அனாதைச் சிறுவன் அழகரெட்டினமும் மற்றொரு உதவியாளன்நாதன் குரூஸ் என்ற இளைஞனும் வங்காலை கோவில் குருமனையில் இருந்தனர். நள்ளிரவுக்கு மேல் வங்காலை கிராமத்தை நோக்கி வாகனங்கள் வந்து கோவில் முன் வாயில் தரித்தன. ஆயுதப் படையினர் கால்நடையாக கோவில் வளவிற்குள் பிரவேசித்தனர். துப்பாக்கி வேட்டுக்கள் தீர்த்து கோவில் வளவை

Page 69
செழியன் 130
சுற்றிக்கொண்டனர். ஆயுத படையினர் வளவின் பின் வாசல் வழியாக வந்து குருமனையின் பின் விறாந்தையை அடைந்தனர். ஆயுதப் படையினர் கதவைத் தட்டி அருள்திரு பஸ்ரியன் அவர்களைக் கூப்பிட்டனர். அருள்திரு பஸ்ரியன் குருவுக்குரிய வெள்ளாடையில் திருச்செபமாலையைக் கையில் ஏந்திக்கொண்டு அழகரெட்டினம், நாதன் குரூஸ் உடன் வர படுக்கை அறையயில் இருந்து அலுவலக அறைக்குள் வந்தனர்.
பின் விறாந்தையில் இருந்து ஜன்னல் ஊடாக ஆயுத படையின ரால் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அருள்திரு பஸ்ரியான் "பிளிஸ் பிளிஸ்" என்றார். அருள்திருபஸ்ரியனுக்கும் அழகரெட்டினத்திற்கும் சூடு விழுந்தது. அம்மா எனச் சத்தமிட்டு குருவானவர் விழுந்தார். படையினர் அலுவலக அறையின் பின் விறாந்தைக் கதவை உடைத்து உட்புகுந்து அருள்திரு பஸ்ரியான் அவர்களை சுட்டுக் கொன்றனர். அத்துடன் அழகரெட்டினமும் நாதனும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கோவில் வளவைச் சுற்றி வந்து வேட்டுக்கள் தீர்த்தனர். 72 வயது மூதாட்டியும் கொல்லப்பட்டார். அதிகாலை 4 மணியளவில் அருள் திருபஸ்ரியான்அவர்களுடைய உடல் பின்வாசல் வழியாக இழுத்துக் கொண்டு கன்னியர் மடத்தின் அருகில் உள்ள பெண்கள் பாடசாலைப் பழைய கட்டிடப்படிகளில் போடப்பட்டது. அழகரெட்டினம் நாதன் குரூஸ் இவர்களுடைய உடல்களும் குருமனையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டன. காலை 5 மணியளவில் அருள்திருபஸ்ரியான் அவர்களது உடலை சீருடை அணிந்த மூவர் தூக்கிப்போய் வான் ஒன்றில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
மண்ணெண்ணை தகரங்கள் நான்கில் ஒன்றில் இருந்து மண்ணெண்ணை, குருமனைக்குள்ளிருந்த இரத்தக் கறைகளில் ஊற்றப்பட்ட பின்தகரம் பின் விறாந்தையில் கிடக்கக் காணப்பட்டது. அருட் சகோதரிகளும் மடத்தில் வாழும் பெண் பிள்ளைகளும் ஆயுத படையினரால் மண்டப வாயில் ஊடாக கோவிலுக்குள் அனுப்பப் பட்டனர். மகளிர் பழைய பாடசலை கட்டிடத்தில் இரவு தங்கியிருந்த கிராமவாசிகள் சிலரும் கோவிலுக்குள் அனுப்பட்டனர் அவர்கள் பாடசாலை கட்டிட படிகளில் இரத்தக் கறைகளை அவதானித் துள்ளனர். ஆயுத படையினர்கன்னியர் மடத்தினுள் பிரவேசித்து முழு

13 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
இடமும் தட்டிக் கொட்டி ஆராய்ந்தனர். கைக்கடிகாரங்கள், பணம் வேறு பொருட்களை எடுத்துச் சென்றதுடன் மடத்துச் சிற்றாலயத்துள் சென்று நற்கருணைப் பேழையைத் திறந்து திருப் பாத்திரத்தையும் தீண்டியுள்ளனர். ராணுவ வாகனங்கள் கோவில் வளவிற்குள் பின் பக்கம் வரை சென்றன. காலை 7 மணியளவில் வாகனங்கள் வெளி யேறின. முற்பகல் 11மணியளவில் 9 சடலங்கள் மன்னார் வைத்திய சாலை பிரேதக் காப்பிடத்தில் ஒப்படைக்கப்பட்டன. அருள்திரு பஸ்ரியான்அவர்களுடைய உடல் கொடுக்கப்படவில்லை. அருள்திரு பஸ்ரியானை கொன்றது தனது ராணுவம் தான் என்பதை இலங்கை அரசு ஒப்புக்கொள்ளவும் இல்லை.
பல்கலைக்கழகம் சென்ற இளைஞர்பிற்பகல் திரும்பிவந்தார். பல்கலைக்கழக மாணவர் அமைப்புக் கூட்டம் கூட்டப்படவில்லை என்று கூறினார். அமைப்புக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் "அவர்களால் மிரட்டப்பட்டதனாலேயே கூட்டம் கூட்டப் படவில்லை. பல்கலைக்கழகம் வழமைபோல் இயங்க ஆரம்பித்தது. எமது மற்றொரு நண்பன்ராகுலனை சந்தித்தால் என்ன? என்று நானும் சூரியனும் முடிவு செய்தோம். கடலோடிகள் பலரை அவனுக்குத் தெரியும். கடல் வழியாக நாம் தப்பிச் செல்லவும் ஒழுங்குகள் செய்து தரக்கூடிய வல்லமை அவனுக்கு இருந்தது. இளைஞரை அணுகி அவரூடாக ராகுலனுக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினோம். அன்று இரவு எம்மைச்சந்திக்க வருவதாக ராகுல் கூறினார் என்று அந்த இளைஞன் எம்மிடம் கூறினார்.
இரவு ராகுல் வந்தான். எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வெகுநேரம் எம்மோடு இருந்து உரையாடினான். ராகுலனையும் "அவர்கள்" தேடி வந்து விசாரணை செய்துவிட்டுச் சென்றனர் என்பதையும் கூறினான்.
கைது செய்யப்பட்ட பல நண்பர்களின் பெயர்களையும் கூறினான். கடல் வழியாக தப்பிச் செல்ல ஏதாவது ஒழுங்கு செய்ய முடியுமா என ராகுலனிடம் கேட்டோம். தன்னால் செய்ய முடியும் என்று கூறிய ராகுலன் மறுநாள் இதுபற்றிய உறுதியான பதிலுடன் எம்மை வந்து சந்திப்பதாக கூறி விடை பெற்றான்.

Page 70
7 தை 1987
யாழ்ப்பாணத்திற்கு எரிபொருள் தடை விதித்திருப்பதை இந்திய அமைச்சரவை கண்டித்திருப்பதாக இந்திய வானொலி அறிவித்தது. மாலை யாழ்நகரத்தில் இரண்டு விமானங்கள் ஓர் ஹெலிகொப்டர் என்பன இரைந்தபடி தாழப் பறந்தன. ஏதோ நிகழப் போகிறது என்று ஊகிக்க முடிந்தது. திடீரென விமானத்தில் இருந்து நகரத்தினுள்குண்டுகள் வீசப்பட்டன. மாடியில் இருந்து இதை நானும் சூரியனும் பார்த்துக் கொண்டிருந்தோம். நெருப்பும் புகையும் எழுந்தன. வீடுகள்கடைகள் எரிந்தன. பலர் காயம் அடைந்தனர்4பேர் கொல்லப்பட்டனர். ராணுவம் கோட்டை முகாமில் இருந்து துரையப்பா ஸ்டேடியம் வரை வந்து சென்றதாக அறிந்தோம்.
இரவு ராகுலன் வந்தான். எமக்கு உதவக்கூடிய பல கடலோடிகளை சந்தித்ததாயும் கடல் வழியாக தப்பிச் செல்ல முடியாது என்ற அபிப்பிராயத்தையே அனைவரும் கூறுகின்றனர் எனக் கூறினான். தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் இரு உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்து வரும் போது கடலில் அவர்களால் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார் இதன் பின் மேலும் கடல் வலையம் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது

133 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
என்றான். மறுபடியும் மறுநாள் வருவதாக கூறிச் சென்றான். நாம் தப்பித்துச் செல்வது எப்படி? எமக்கு என்ன நேரப் போகிறது? ஒன்றையும் தீர்மானிக்க முடியவில்லை. சோர்வும் துயரமும் நெஞ்சில் நிறைந்தது. அவர்களிடம் அகப்பட்டு கொல்லப்படுவதுதான் எமக்கு நேரப் போகும் முடிவா?
8தை 1987
இன்றோடு எமது தலைமறைவு வாழ்க்கை ஆரம்பித்து 27 நாட்கள் ஆகிவிட்டன. மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. நாம் தற்போது தங்கியிருக்கம் இடத்திலும் அதிக நாட்கள் இருக்க முடியாது. கீழே ஒரு நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. பலரும் வந்து போய்க்கொண்டிருக்கிற இடம். பெரியவரும் வெகு விரைவில் யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட வேண்டிய நிலைமையில் இருந்தார். எமக்காக பல தடவைகள் பயணத்தை ஒத்திப் போட்டு அதனால் மேலிடத்தின் கண்டிப்புக்கு ஆளாகியிருந்தார். இன்னும் சில தினங்களுக்குள் நாம் தப்பிச் செல்வதற்குரிய ஒழுங்குகள் கிடைக்க வில்லை என்றால் பெரியவர் எம்மை விட்டு விட்டு தமது பயணத்தை மேற்கொள்ளுதல் தவிர்க்க முடியாததாகிவிடும். அதன் பின் நமது நிலைமை என்ன?
காலை 11 மணிபோல் ராகுலன் வந்தான். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக எம்மோடு இருந்தான். கடல் வழியா தப்பிச் செல்வது சாத்தியமே இல்லை என்று ராகுலன் எம்மிடம் விவரித்தான். மாலை நான்கு மணிக்கு சூரியன் மனைவி எம்மைச்சந்திக்க வந்தார்.

Page 71
செழியன் S 134
நான் கூறிய அலுவல்களை எல்லாம். முடித்து விட்டதாயும், எமது பயணத்திற்கு தேவையான பணம் நாம் கூறிய இடங்களில் இருந்து பெற்றுக்கொண்டு விட்டதாயும் இன்னும் கொஞ்சம் பணம் கொழும்பில் சென்று எனது உறவினர் ஒருவரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சூரியின் மனைவி கூறினார். எப்போ புறப் படுவது என்ற செய்திக்காகவே காத்திருப்பதாகவும் கூறினார். அத் தோடு எனது பள்ளித் தோழனும் இனிய நண்பனுமான சுகு கொழும்பில் நீண்ட கால சிறைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்ததாயும் கூறினார்.
சுகு விடுதலை செய்யப்பட்டு விட்டான் என்ற செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிக்க நல்ல நண்பன். இக்கட்டான நிலைமைகளில் எல்லாம் ஒரு நல் மந்திரியைப்போல் ஆலோசனைகளையும், தவறுகள் விடும் பொழுது தந்தையைப் போல் கண்டிப்பையும் மேற்கொள்வான். இலங்கை ராணுவத்தினரால் கைது செய்ப்பட்டு பலாலி, குருநகர், ஆனையிறவு ராணுவ முகாம்களில் வைத்து சித்திர வதை செய்யப்பட்டு இறுதியாக கொழும்பு சிறைச் சாலை ஒன்றுல் தேச விரோத குற்றம் சுமத்தப்பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தான். எப்போ விடுதலை செய்யப்படுவான் என்று அவன் விடுதலையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கின்ற போது அவன் விடுதலையான செய்தி வந்திருக்கின்றது. ஆனாலும் மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இரவு 10 மணியைக் கடந்து விட்டது. நித்திரை கொள்வதற்கு நாம் தயாராகிறோம். படுக்கை விரிப்பை உதறிதலையணையை சரி செய்து இனிபடுக்கையில் சரியலாம் என்ற போது வாசலில் மணியை யாரோ அழுத்திச்சத்தம் கேட்டது.இந்த நேரத்தில் யாராக இருக்கும்? இளைஞர் சென்று கதவைத் திறந்தார். பெரியவர் தான் வந்திருந்தார். என்ன திடீரென்று இந்த நேரத்தில் வந்திருக்கிறார் என்று எனக்கு சற்று ஆச்சரியமாயும் இருந்தது. பெரியவர் சுருக்கமாக விடயத்தை கூறினார். 11ம் திததி நாம் யாழ்ப்பாணத்தை விட்டு வவுனியாவிற்கு போகிறோம். வவுனியாவரையும் பெரியவர் வருவார். வவுனியாவில் என்னையும் சூரியனையும் விட்டு விட்டு பெரியவர் திரும்பி

135 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
விடுவார். அதன்பின் எனது மாமியார் பொறுப்பெடுத்து கொழும்புக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு திடீர் திடீர் என அவர்கள்" வந்து சோதனை செய்கின்றனர் என்று ஏற்கனவே அறிந்திருந்தோம். அதனால் எனது மனைவியும் மாமியும் சூரியனின் தாயார் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து புறப்படுவார்கள். இவர்கள் புறப்படும் போதே எனக்கும் சூரியனுக்கும் மற்றும் பெரியவருக்கான 3 மேலதிக பஸ் டிக்கெட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் நால்வரும் காரில் கோப்பாய் கைதடி பாலத்தை கடந்து சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிற்போம். அந்த இடத்தில் பஸ்சைநிறுத்தி எம்மை ஏற்றிக் கொள்ள வேண்டியது பஸ்ஸில் வருபவர்களின் பொறுப்பு. இவ்வாறு எமது பயணத்திற்கான திட்டத்தை பெரியவர் தயாரித்திருந்தார். பொதுவாக எமது பயணத்தில் பல ஆபத்துக்கள் இருந்தன. ஆனால் இதைவிட இனி வேறு வழி இல்லை. பெரியவரின் திட்டப்படி செய்ய வேண்டிய ஒழுங்குகளை நாம் செய்வதாகக் கூறினோம். சூரியனுக்கு இன்னமும் அடையாள அட்டை கிடைக்க வில்லை. அதற்கு என்ன ஒழுங்கு என்று கேட்டோம். அடையாள அட்டை இல்லாதவர்கள் உதவி அரசாங்க அதிபரின் கையெழுத்திட்ட புகைப்படம் ஒட்டிய கடித்துடன் பயணம் செய்யலாம் எனதிட்ட வட்டமாக தெரியவந்துள்ளதாயும் இத்தகைய ஒரு கடிதத்தை மறுநாள் கவிஞர் கொண்டுவந்து சூரியனிடம்தருவார் என பெரியவர் கூறினார்.
அன்று சரியாக நித்திரை கொள்ளவே முடியவில்லை. வெகுநேரம் வரை பயணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந் தேன். நடுஇரவில் திடீர்திடீர் என கனவுகள் வேறு வந்து முளைத்தன.

Page 72
9 ഞ8, 1987
காலை விடிந்ததும் இளைஞரிடம் கூறி சூரியனின் மனைவியை உடன் வரும்படி செய்தி அனுப்பினோம். செய்தி கிடைத்த ஒரு சில மணிநேரத்தில் எம்மை சந்திக்க வந்தார். நாம் எமது பயணம் பற்றிய ஒழுங்குகளைக் கூறினோம். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்கின்ற பஸ்சில் ஏறி வர வேண்டியவர்களை சரியாக ஏறி வரும்படி அறிவுறுத்தினோம். எல்லா ஒழுங்குகளையும் சரியாக கவனிப்பதாய் சூரியனின் மனைவி கூறினார்.
இன்று எரிபொருள் இல்லாத காரணத்தால் உள்ளூர் பஸ் போக்குவரத்து சேவை முற்றாக நிறுத்தப்பட்டது. இலங்கை போக்கு வரத்துச் சபை வெளி மாவட்டத்திற்கான பஸ் சேவைகளை மட்டும் நடத்துவதாக தெரிவித்தது. யாழ் நகரில் உள்ள அரசாங்க கூட்டுத் தாபன ஊழியர்கள் அரசின் எரிபொருள் தடையைக் கண்டித்து வெளிநடப்புப் போராட்டத்தினை நடாத்தினார்கள்.

1O 65 1987
காலை பெரியவர் வந்து எம்மை சந்தித்தார். நாம் செய்ய வேண்டிய ஒழுங்குகளை செய்துள்ளோமா? நாளைக்கு திட்டமிட்ட படி பயணத்தை ஆரம்பிக்லாமா? எனக் கேட்டார். நாம் செய்ய வேண்டிய ஒழுங்குகளை செய்துள்ளோம். திட்டமிட்டபடி எமது பயணத்தை ஆரம்பிப்போம் எனக் கூறினோம். உதவி அரசாங்க அதிபரின் கடிதம் மட்டும் எமக்கு வரவில்லை என்று தெரிவித்தோம். கவிஞர் அன்று அக்கடிதத்துடன் கட்டாயம் வருவார் என்று பெரியவர் கூறினார். நாளை அதிகாலை எம்மை பயணத்திற்காகப் புறப்பட்டு இன்னோர் இடத்திற்கு வரும்படியும் அங்கு தான் காரோடு காத்திருப் பதாயும் கூறினார்.
பத்திரிகைகளை வாசித்தேன். எரிபொருள் தடை காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையின் அம்புலன்ஸ் சேவை முற்றாக பாதிக் கப்பட்டு விட்டது. சத்திர சிகிச்சைக்கு ஒட்சிசனுக்குப்பதிலாக மயக்க மருந்து பாவிக்கப்படுகிறது. மிக அவசரமான நோயாளிகளுக்கு மாத்திரம் ஒட்சிசன் பாவித்து சத்திர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் சொற்பமான ஒட்சிசன் சிலிண்டர்களே கைவசம் உள்ளது. இதே நேரம் கோட்டை முகாமில் இருந்து சிறிது சிறிதாக

Page 73
Colusir 138
முன்னேறிய ராணுவம் பண்ணைத் தொலைத்தொடர்பு அலுவலகம், மார்பு நோய் சிகிச்சை நிலையம், ரூபவாகினி ஒளிபரப்புக் கட்டிடம் ஆகியவற்றுக்குள் நிலைகொண்டுள்ளதாயும் செய்திகள் இருந்தன.
கடிகங்களை எழுதினோம். எழுதிய குறிப்புக்களை கடிதங் களுக்குள் வைத்து ஒட்டினேன். இளைஞர் எமக்குத் தேவையான சப்பாத்துக்களை வாங்கி வந்து தந்தார். உடுப்புக்கள் ஏற்கனவே சூரியன் மனைவி மூலம் எனக்கு வந்திருந்தது. முகச்சவரம் செய்து உடுப்புக்களை தயார்படுத்தி மறுநாளைய எமது பயணத்திற்காக தயாராகினோம். ஆனால் உதவி அரசாங்க அதிபரின் கடிதம் எமது கைக்கு வரவில்ல்ை அதைக் கொண்டு வருவதாகக் கூறிய கவிஞரும் வரவில்லை. கவிஞரை நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று ஏற்கனவே அவர்கள்’ உத்தரவு பிறப்பித்திருந்தனர். அவர்கள் விதித்த காலக்கெடு ஏற்கனவே முடிந்து போய் விட்டது. எனவே அவர்களால் தான் கவிஞருக்கு எதாவது ஆபத்து நேரிட்டதோ என அஞ்ச வேண்டி இருந்தது. எமக்கு ஒரு செய்தியும் வரவில்லை. அன்றையநாளும் மெல்ல முடிந்தது. இரவு நித்திரைக்கு சென்றோம். காலை விடிந்ததும் எமது பயணம் ஆரம்பமாகிறது.
அதிகாலை 4 மணிக்கெல்லாம் நானும் சூரியனும் கண் விழித்தோம். எங்களோடு சேர்ந்து இளைஞரும் எழுந்து விட்டார். வேகமாக காலைக்கடன்களை முடித்துக் கொண்டு எமது பயணத்திற் கான ஒழுங்குகளைச் செய்து உடைகளை அணிந்து புறப்பட்டோம். எனது மனம் பரபரப்பாக இருந்தது. இதயம் வேகமாகத் துடித்தது. என்ன நடக்குமோ? என்ற சிந்தனை தறிகெட்டு அலைபாய்ந்தது. ஆபத்துக்கள் நிறையக் காத்திருக்கின்றன. துணிவோடு இவற்றைக் கடந்து சென்றால்தான் இனி உயிர்வாழ முடியும் என்பது எமக்கு எழுதப்பட்ட தீர்ப்பாகி விட்டது. ஒன்றுமே செய்ய இயலாது. உயிர் ஆபத்து நிறைந்த பயணத்தை இறுதிவரை தொடர்ந்தே ஆக வேண்டும்.
5 மணி இருள் இன்னும் பிரியாத அதிகாலைப் பொழுது. பெரியவர் ஏற்கனவே கூறியிருந்தபடி அவர் குறிப்பிட்ட இடத்தை நோக்கி நானும் சூரியனும் இளைஞரின் வழி தொடர்ந்தோம்.

139 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
இளைஞர்தனது சைக்கிளின் மீது இரண்டு சூட்கேசுகளையும் வைத்து சைக்கிளை உருட்டியபடி வந்தார். மனித நடமாட்டம் இல்லை. ஒரே ஒரு சைக்கிள் மட்டும் எம்மைக் கடந்து சென்றது. நடந்து சென்று கொண்டிருக்கும் போதே எமது நன்றிகளை இளைஞருக்கும் அத் தோடு நாம் கவிஞர், மாது, ராகுலன் ஆகியோருக்கு எழுதிய கடிதங் களை ராகுலனிடம் ஒப்படைக்கும் படி அவரிடம் கேட்டுக் கொண் டோம். சிறிது நேரத்தில் நாம் பெரியவர் குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டோம். முன் ஹோலில் ஒருவர் இருந்தார். ஏற்கனவே இளைஞருக்கு அவரைத் தெரியும். பெரியவரை நாம் சந்திக்க வந்துள் ளோம் என்று இளைஞர் கூறினார். பெரியவர் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் வந்து விடுவார் என்று பதில் கிடைத்தது. கதிரை களில் அமர்ந்தோம்.
சில நிமிடங்களில் எல்லாம் பெரியவர் வந்து விட்டார். வரும் போதே "நான் ரெடி நீங்கள் எல்லாம் ரெடிதானே?"நாம் தயார் என்று அவரிடம் கூறிவிட்டு கவிஞர் கொண்டுவந்து தருவார் என்று கூறிய உதவி அரசாங்க அதிபரின் கடிதம் எம்மிடம் வந்து சேரவில்லை என்ற விடயத்தை பெரியவரிடம் கூறினோம். 'கிடைக்கவில்லையா? அப்படியானால் நாம் பயணம் போக முடியாதே’ என்று பெரியவர் கூறப் போகிறார் என்ற பிரம்மை எனக்குள் எழுந்தது. ஆனால் அந்தக் கடிதம் என்னிடம் தான் இருக்கிறது. கவிஞர் வரமுடியாத நிலைமையில் இருந்ததால் எனது கைக்குக் கிடைக்க கூடியவாறு ஒருவரிடம் கொடுத்தனுப்பியிருந்தார் எனப் பெரியவர் கூறினார். பெரிய ஆறுதலாய் இருந்தது.
சூரியனின் முகத்தில் பெரிய நிம்மதி தவழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் பெரியவரின் காரில் ஏறினோம். இளைஞரிடம் கையசைத்து விடைபெற்றோம். காரை பெரியவரே ஒட்டினார். "எமது பயணத்தில் சின்ன மாற்றம்" என்று பெரியவர் ஆரம்பித்தார். “என்ன?’ என சூரியன் கேட்டான். எங்களோடு . என்ற பெண்மணியும் வருகிறார் எமது பயணத்தில் பிரச்சனைகள் வராமலிருக்க பெண்களும் கலந்து பயணம் செய்வது நல்லது என தோன்றியது' என்று பெரியவர்கூறினார். எனக்கும் சூரியனுக்கும் அது

Page 74
செழியன் 140
மகிழ்ச்சியாய் இருந்தது. ஏற்கனவே எமக்கு அந்தப் பெண்மணியைத் தெரியும். சமயோசி தமும், துணிவும், கருணையும் நிறைந்த தாயுள்ளம் அது. இவரை சகோதரி என இனி நான் குறிப்பிடுகிறேன். அத்தோடு கொழும்பு வரை எங்களோடு தாங்கள் வருவதாயும் பெரியவர் கூறினார் அது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.
நகரத்தில் ஒரு வீட்டின் வளவிற்குள் எமது கார் புகுந்தது. தயாராய் இருந்த சகோதரியும் காரினுள் ஏறிக் கொண்டார். கார் பயணம் தொடர்ந்தது. பெரியவரும் சகோதரியும் கலகலப்பாக எம்மோடு பேச முற்பட்டனர். எனக்கோகொலைக்களத்திற்கு போய்க் கொண்டிருப்தைப் போல் இருப்புக் கொள்ளாமல் மனம் தவித்தது. கோப்பாய் சந்தியை கார் நெருங்க நெருங்க எனக்கு அச்சம் அதிகரித்துக் கொண்டே வந்தது. கோப்பாய் சந்தியில் 'அவர்கள்? சென்றியில் நின்று கைதடிப் பாலம் வழியாக செல்லுகின்ற வாகனங் களை சோதனை செய்யக்கூடும் என்று உள்மனது உறுத்திக் கொண்டே இருந்தது. மனது தாங்காமல் பெரியவர்களிடமும் அதைக் குறிப்பிட்டேன். 'இருக்கட்டுமே நான் இருக்கின்றேன் ஒன்றுக்கும் யோசிக்காமல் வாருங்கள்’ என்று பெரியவர் கூறிவிட்டார். அவர் கூறியது போல் யோசிக்காமல் வர முடியுமா? என்னைத் தெரிந்த யாராவது சென்றியில் நின்றால் அப்படியே கோழிக்குஞ்சை அமுக்குவது போல் அல்லவா அமுக்கிவிடுவார்கள். எனக்கு அச்சமாக இருந்தது.
கார் கோப்பாய் சந்தியை நெருங்கியது. நாலாபுறமும் என் கண்கள் சுழுன்று வந்தன. கார் மெல்ல சந்தியைக் கடந்தது. ஒருவரும் இல்லை. அப்பாடா” என்று பெரிய நிம்மதி ஏற்பட்டது. ஆனால் "பாலத்தடியில் அவர்கள் நின்றாலும் நிற்கலாம் என்ற எண்ணம் வந்தது. பயம் சூழ்ந்து கொண்டது காரில் இருந்து பார்த்த போது இருளுக்குள் மங்கலாக பாலம் தெரிந்தது. ஆனால் எவரும் நிற்பதாகத் தெரியவில்லை. மறுபடியும் மனம் சமாதானம் அடைந்தது. கோப்பாய் கைதடி பாலத்தை கடந்து சென்றோம். இன்னும் சிறிது தூரம் சென்றதும் கார் ஒரு வளவினுள் புகுந்தது. இங்கிருந்து நாம் பஸ்சில் ஏறப் போகிறோம். இந்த இடத்தைப் பற்றி அடையாளம்

141 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
எல்லாம் நரேசிடம்(எனது மனைவியின் தம்பி) கூறியிருக்கிறேன். இவர்கள் வரும் பஸ் இந்த இடத்தில் வந்து நிற்கும் என்று பெரியவர் கூறினார்.
நாம் வளவிற்குள் சென்றதும் வீட்டிற்குள் இருந்து ஒருவர் வெளியே வந்து எம்மை வரவேற்றுக் கதைத்தார். எமது காரை வீட்டிற்கு பின்புறமாக விடுமாறு பெரியவரிடம் கூறினார். காரை கொண்டுபோய் நிறுத்தினோம். இன்னும் அரை மணி நேரத்தில் பஸ் வந்துவிடும். எனவே ரோட்டில் சென்று என்னையும் சூரியனையும் பார்த்துக் கொண்டிருக்கும் படி பெரியவர் கூறினார். பஸ் வந்ததும் நாம் பெரியவரையும் சகோதரியையும் கூப்பிட வேண்டும்.
ரோட்டில் நிற்பதற்கு பயமாகத்தான் இருந்தது. எங்களைத் தெரிந்த 'அவர்களில் எவனாவது கண்டுவிட்டால் தொலைந் தோமல்லவா? ஆனால் என்ன செய்வது. பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் தானே. எப்போ இந்த பஸ் வரும்? என அங்கலாய்த்துக் கொண்டே காத்திருந்தோம். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நேரம் ஆறு மணி ஆறரையாகி. ஏழாகி ஏழரையாகி. பின்னர் எட்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. வவுனியா கிளிநொச்சி என்று சில பஸ்கள் எம்மைக் கடந்து போயின. ஆனால் எனது மனைவி மாமி நரேன் சூரியனின் அம்மா ஆகியோர் வருவதாக கூறிய பஸ் வரவே யில்லை. என்ன நடந்தது? புரியவில்லை. ரோட்டில் சைக்கிள்களிலும் காரிலும் நடந்தும் மனிதர்கள் நடமாடத் தொடங்கி விட்டனர். இன்னும் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? காத்திருந்தாலும் பஸ் வருமா? வராதா? பெரியவரும் என்ன செய்வது என்று குழம்பினார்
பஸ்சில் வர வேண்டியவர்கள் ஏன் வரவில்லை? பஸ்சில் ஏறமுடியாமல் போய்விட்டதா? அல்லது இவர்களுக்குத்தான் ஏதும் நிகழ்ந்து விட்டதா? யோசிக்கும் போது எனக்குத் தலையே வெடித்து விடும் போல் இருந்தது. என்ன முடிவு எடுப்பது என்று எல்லோரும் குழம்பிப் போய் இருந்த சமயம் திடீரென கேட் வாசலில் நரேன் வந்து நின்றான். எப்படி திடீரென்ற பஸ் வரவில்லை? நரேன் மட்டும் நிற்கிறானே? ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் அவனைக் கண்டதும் சற்று புத்துணர்வு ஏற்பட்டது.

Page 75
செழியன் 142
நரேனும் மற்றவர்களும் வந்த பஸ் எமது இடத்தில் இருந்து IOO யார் தொலைவில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்ற விட்டது. அதனால் தான் தங்களால் வர முடியவில்லை என்றும் இன்னம் அரை மணி நேரத்தில் பஸ் புறப்பட்டு விடும் என்றும் பஸ் டிரைவர் கூறிய தாய் நரேன் கூறினான். பெரியவர் ஏற்கனவே கூறிய அடையாளங் களின் படி நாம் நின்று கொண்டிருந்த வீட்டிற்கு அருகிலேயே பஸ் நிற்கிறது என்ற செய்தியை தெரிவித்துவிட்டுப் போகவே நரேன் வந்திருந்தான். பஸ் அருகில் தான் நிற்கிறது இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும் என்று அறிந்த போது மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது.
சில நிமிட யோசனையில் ஆழ்ந்த பெரியவர் 'இந்த பஸ் எத்தனை மணிக்கு வருமோ தெரியாது. நாங்கள் அடுத்தாய் எந்த பஸ் வந்தாலும் அதில் ஏறி வவுனியா போகிறோம். வவுனியாவில் . என்ற இடத்தில் நீங்கள் எங்களை வந்து சந்தியுங்கள்’ என்று நரேனிடம் கூறினார். நரேனும் வவுனியாவில் எந்த இடத்தில் சந்திப்பது என்பதை விபரமாய் கேட்டுக் கொண்டான்.
பெரியவரின் யோசனை நல்லது போல் பட்டது. இந்த இடத்தில் தொடர்ந்து நிற்பது எனக்கு சரியாகப் படவில்லை. அத்தோடு பழுதாகிப்போன பஸ் மறுபடியும் புறப்பட இன்னும் பல மணி நேரமும் சென்றுவிடலாம் ஆகவே பெரியவர் கூறியபடி நாம் இனி வரப் போகும் பஸ் ஒன்றில் ஏறி வவுனியா செல்வது நல்லது. நாம் அடுத்து வரப்போகும் பஸ்சில் ஏறத் தயாராகிறோம். எங்களை ஏற்றிவிட்டு செல்வதாக நரேன் எம்மோடு நின்று கொண்டான்.
காலை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் 'அவர்களுடைய' நடமாட்டம் ஏதும் இருந்தனவா? என்று நரேனிடம் கேட்டேன். அதிகாலை நாம் ஏறிய பஸ் புறப்பட சற்று முன்னதாக திடீரென துப்பாக்கிகளோடு அவர்கள் பஸ்சினுள் ஏறினார்கள் என்றும் பஸ்சில் அமர்ந்தவர்களை ஒவ்வொருவராக கூர்ந்து நோக்கியபடி சென்றவர்கள் சந்தேகப்படும் படி ஒருவரும் இல்லை என்று திருப்திப் பட்டுக் கொண்டதால் பஸ்சை பயணம் செய்ய அனுமதித்தனர் என்றும் நரேன் கூறினான். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து

43 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
நீங்கள் பஸ் ஏறியிருந்தால் 'அவர்களிடம் பிடிபட்டு இருப்பீர்கள் என்று நரேன் குறிப்பிட்டான். உண்மை தான் ஏதோ கொஞ்சம் முன் யோசனையுடன் நடந்து கொண்டதால் தப்பித்தோம். ஆனால் நாம் இன்னும் ஆபத்தைக் கடந்து விடவில்லை. இயக்கச்சியில் அந்த ஆபத்து எமக்காகக் காத்திருக்கிறது. இங்கு தான் 'அவர்களுடைய' கடைசித் தடை முகாம் அமைந்திருக்கிறது. யழ்ப்பாணத்தை விட்டு செல்கிற சகல வாகனங்களும் இங்கு நிறுத்தப்பட்டு அவர்களுடைய' சோதனைக்குப் பின்னரே போக அனுமதிக்கப்படும். இத்தடை முகாமில் சில முகமூடி மனிதர்களையும் வைத்திருக்கின்றனர் என்று ஏற்கனவே செய்திகள் அடிபட்டன. அண்மைக்காலமாக இந்த முகமூடி மனிதர்கள் இத்தடை முகாமில் காணவில்லை என்றே பெரியவர் எமக்கு உறுதி கூறியிருந்தார். ஆனால் யார் கண்டது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? எப்படி இருந்த போதும் இயக்கச்சியில் எமக்கு ஒரு பெரிய கண்டம் காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் ஒன்று விரைந்து வந்தது. கையை நீட்டி மறித்தோம். பஸ் நிறைய ஒரேஜனத்திரள் நிற்க முடியாமலும் வாசலில் தொங்கிக் கொண்டு பிரயாணிகள் பயணம் செய்தனர். எங்களை ஏற்ற இடம் இல்லை என்பதால் பஸ் நிற்காமலே சென்றுவிட்டது. அதற்கு முன்போன பல பஸ்களில் பல இருக்கைகள் வெறுமையாக இருந்ததை கண்டிருந்தோம். இனி வரப்போகும் பஸ் எல்லாம் இப்படி சனத்திரளாய் வரலாம் என்று எனக்குத் தோன்றியது. என்ன கஸ்ட காலம் எமக்கு. பட்ட காலில் தான் படும் என்பார்கள். எம்மைப் பொறுத்த வரையில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்த ஒரு பஸ் விரைவாக வந்தது. மறுடியும் கையசைத்து மறித்தோம். என்ன பஸ் நிற்குமா? நிற்காதா? சனமா? சனமில்லையா?. பஸ்சில் அவ்வளவாக சனமில்லைத்தான். பஸ்சின் வேகம் மெல்லக் குறைந்தது. எமக்கு முன்பாக வந்து நின்றது. பஸ்சினுள் பாய்ந்து ஏறினோம். 'வவுனியா நாலு டிக்கெட்' பெரியவர்டிக்கெட்டும் எடுத்து விட்டார். அப்பாடா என்று இருந்தது. நடுவில் இடம் இருக்கிறது என்று பெரியவர் கூற முன்னேறினோம். சூரியனும் சகோதரியும் ஓர் இருக்கையிலும் பெரியவர் மற்றொரு

Page 76
செழியன் 144
இருக்கையிலும் பெரியவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் எனக்கும் அமர இடங்கள் கிடைத்தன. பஸ் தரிப்புகளில் நிற்பதும் ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதுமாய் சென்று கொண்டிருந்தது. சாவகச்சேரியை கடந்து கொடிகாமம் பளையையும் கடந்து பஸ் சென்றது. பஸ்சினுள் நான் தனியாக அமைதியாக வந்து கொண்டிருந் தேன். பெரியவர் சகோதரியுடன் ஏதோ சம்பாஷித்துக் கொண்டிருந் தார். இடையிடையே சூரியனும் அதில் கலந்து கொண்டான். இவர்கள் மூவரும் ஒரே நேர்கோட்டில் அமர்ந்து கொண்டிருந்தனர்.
'அவர்களின் தடை முகாம் சரியாக எங்கிருக்கிறதென்று எனக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் அதை அண்மித்துக் கொண்டிருக் கிறோம் என்று எனக்குப் புரிந்தது. உள்ளூர எனக்குப் பயமாக இருந்தது. இதயம் வேகமாகத் துடித்ததை என்னால் உணர முடிந்தது. இந்தத் தடை முகாமை மட்டும் கடந்து விட்டால் எழுபத்தைந்து சதவீதம் நாம் தப்பிவிட்டோம் என்பது உறுதியாகிவிடும்.
தடை முகாமில் அவர்கள் என்ன செய்வார்கள்? எல்லாப் பயணிகளையும் இறக்கி விசாரிப்பார்களா? அல்லது முகமூடிகளின் முன்பாக எம்மை ஒவ்வொருவராக நடந்து செல்லும் படி சொல்லு வார்களா? என்ன நடக்குமோ என்று மனம் கிலி கொண்டு தவித்தது. அவ்வாறு நான் தவித்துக் கொண்டு இருக்கையில் திடீரென பஸ் நின்றது. பஸ் நின்றதுமே பெரியவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். எனக்குப் புரிந்து விட்டது. இது அவர்களின் தடை முகாம். எனக்கு உடம்பு சற்று நடுங்கியது. பதட்டம் அதிகமாகியது. ஆனால் எனது பயமோ பதட்டமோ வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஏதோ சாதாரணமாக இருப்பதைப்போல் காட்டிக் கொள்ள முயற்சித் தேன். எனது நிலைமை பெரியவருக்கு புரிந்திருக்க வேண்டும். தனது கையிலிருந்த அன்றைய தினசரியை என்னிடம் நீட்டினார் இந்தப் பேப்பரை படிப்பது போல் நடி என்று அவர் சொல்லாமல் கூறினார்.
பெரியவரிடமிருந்து பேப்பரை வாங்கினேன். பேப்பரை விரித்து படிப்பது போல் பாசாங்கு செய்தேன். காதை மட்டும் கூர்மையாக்கி என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தேன். சிறிது ரேத்திற்கெல்லாம் பஸ்சின் முன்வாசல் வழியாகவும் பின்

145 : ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
வாசல் வழியாகவும் சிலர் ஏறுவதை என்னால் உணர முடிந்தது. ஏறியவர்களை கவனிக்காமல் தொடர்ந்து பேப்பர் படித்தால் அது வேறு அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திவிடும் என்று நினைத் தேன். எனவே சாதாரணமாக பார்ப்பதைப் போல் ஒரு முறை முன் வாசல் வழியாக ஏறியவர்களைப் பார்தது விட்டு பேப்பரில் கண் களைப் படர விட்டேன். "ஐயோ’ அது அவர்கள் தான். என்ன நடக்கப் போகிறது. என்னையும் சூரியனையும் பிடித்துவிடுவர்களா? எப்போதும் இல்லாதவாறு மனம் பயத்தினால் விறைத்துப் போனது போல் ஒரு உணர்வு எனக்குப் ஏற்பட்டது.
எமது பஸ்சினுள் ஏறிய அவர்கள், நின்ற இடத்திலிருந்தே பஸ்சினுள் இருந்தவர்களை நோட்டம் விட்டனர். பத்திரிகை மீதும் அவர்கள் மேலும் மாறி மாறி எனது கண் பார்வையை படரவிட்டுக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து அவர்களது பார்வை சென்றது. மறுபடி அவர்களது பார்வை திரும்பி வந்தது. என்னருகில் வந்ததும் ஒரு கணம் நிலைத்து நின்று விலகியது. எனது உடம்பு முழுவதும் இரத்தம் 'குபீர்' 'குபீர்” என்று பாய்வதைப் போல் இருந்தது. நானே என்னைக் காட்டிக் கொடுத்து விடுவேனா? என்ற பயமும் கூட எனக்கு எழுந்தது. பத்திரிக்கைச் செய்தி ஒன்றை வாசிக்க முயன்றேன். எழுத்துக்கள் மட்டும் படித்தேன். என்ன எழுதியுள்ளார்கள்? அது என்ன செய்தி? என்றெல்லாம் மூளையில் ஒன்றும் பதிவு செய்யப்பட வில்லை. சில நிமிடங்கள் கழிந்திருக்கும் ஒரு யுகமாய் எனக்கிருந்தன.
தங்களால் தேடப்படுபவர்கள் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் பஸ்சினுள் இல்லை என்று 'அவர்கள் முடிவு செய்திருக்க வேண்டும். பஸ்சை விட்டு அவர்கள் இறங்கினார்கள். ஆபத்து என்னை விட்டு நீங்கிவிட்டது என்று நான் கருதவில்லை. எங்களைப் பிடிக்க இன்னும் பலரைக் கூட்டிக் கொண்டு வரலாம் தானே? என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஆனால் பஸ்சை வழிமறித்துக் கொண்டு பாதையின் குறுக்காக் கிடந்த தடை மேலே எழுந்து இனி போகலாம் என்பது போல் பஸ் செல்வதற்கு வழி விட்டது. பஸ்சும் மெல்ல மெல்லமாக முன்னேறியது. நாம் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவிட்டோம். ஆம் தப்பியே விட்டோம். உள்ளம்துள்ளிக் குதித்தது. பெரியவர் என்னைத்திரும்பிப்

Page 77
செழியன் 146
பார்த்து கண்சிமிட்டினார். ஒரு அசட்டுச் சிரிப்பு உதிர்த்தேன். நினைக்கும் போது நம்பமுடியாமல்தான் இருந்தது. ஆனால் நிஜமாக அவர்களின் கொலைக்கரங்களின் பிடியில் இருந்து நாம் தப்பித்து விட்டோம். திரும்பி யோசிக்கும்போது ஆச்சரியமாய் இருந்தது. கடைசியில் நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் உரிய பலன் கிடைத்துவிட்டது. அவர்களின் பிடியிலிருந்து தப்பிவந்து விட்டோம்.
ஆனால் எமது பயணம் இன்னும் முடியவில்லை. எம்மை எதிர்நோக்கியிருக்கின்ற ஆபத்து முழுமையாக விட்டுவிலகிவிட வில்லை. அடுத்து ஆனையிறவு முகாமில் இலங்கை இராணுவ வீரர்களின் கரங்களில் இருந்தும் கழுகுப் பார்வையிலிருந்தும் நாம் தப்ப வேண்டும். ஆனையிறவு முகாம் நினைவுக்கு வந்ததுமே மறுபடியும் அச்சம் மெல்ல ஆரம்பித்தது. இதுவரைக்கும் 'அவர்க ளினால் எமக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தலும் உயிராபத்தான நெருக்கடிச் சூழ்நிலையும் முதன்மையான பிரச்சனையாய் இருந்தது. ஆனால் அந்த ஆபத்து விலகிய பின்னர்தான் எம்மை எதிர்நோக்கிக் கொண்டிருந்த அடுத்த ஆபத்தினைப்பற்றி மெல்லமாக உறைக்க ஆரம்பித்தது. இருப்பினும் எப்படியும் ஆனையிறவு முகாமை நாம் கடந்து சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையை நான் சுமந்து கொண்டிருந்தேன்.
ஆனையிறவு முகாமை நாம் நெருங்கிய பொழுது சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந் ததைக் கண்டோம். அந்த வரிசையில் எமது பஸ்ஸும் நின்று கொண்டிருந்தது. ஒரு அரை மணிநேரத்தில் இராணுவ வீரர்களின் சோதனையை முடித்துக் கொண்டு முகாமைக் கடந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நேரம் ஓடிக்கொண்டிருந்தது. வாகனங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. பஸ்சிலிருந்த பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கினர். சிலர் முன்னேறி வரிசையின் ஆரம்பத்தில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் வரை சென்றனர். என்ன நடக்கிறதென்று எமக்குப் புரியவில்லை. தான் சென்று அறிந்து வருவதாக பெரியவர் பஸ்ஸை விட்டு இறங்கிச் சென்றார். ஆனையிறவு முகாமில் பணியிலிருந்த இராணுவ வீரர்

147 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
களைத் தாக்குவதற்காக அவர்கள் இராணுவ முகாமிற்கு அருகில் நின்றுகொண்டிருக்கின்றனர் என்றும் அதனால்தான் எந்த ஒரு வாகனத்தையும் இராணுவத்தினர் முன்னேற அனுமதிக்கவில்லை என்று பெரியவர் வந்து எம்மிடம் கூறினார்.
எமது வாகனங்கள் நின்றுகொண்டிருந்த பகுதிகளில் பற்றைகளின் மறைவில் துப்பாக்கிகளோடு பதுங்கியிருந்த அவர்களையும் எமக்குக் காட்டினார். அவர்கள் பதுங்கியிருந்த தோடு மட்டுமின்றி சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கியோடு வாகனங் களின் ஆரம்ப இடம்வரை நடந்தும் சென்று வந்தனர். இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரர்களுக்கு 'அவர்களின் நடமாட் டத்தைக் காணக்கூடியதாக இருக்கும். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. பஸ்ஸிலிருந்து பெரும்பாலும் எல்லோரும் கீழே இறங்கி விட்டனர். நானும் கீழே இறங்கி நின்றுகொண்டிருந்தேன்.
இன்று ஒரு வாகனமும் போவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஒரு கதையும் வதந்தியாய் வந்தது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் பஸ் திரும்பி யாழ்ப்பாணம்தான் செல்லும். அத்தோடு சேர்ந்து நாமும் திரும்ப வேண்டியிருக்கும். அதை நினைத்தால் எனக்குப் பயமாய் கிடந்தது. பொறுத்திருந்து பார்ப்போம் என்று பெரியவர் ஆறுதல் கூறினார். எமது வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டு ஆடிக்கொண்டிருப்பதைப் போல் இருந்தது.
பிற்பகல் நேரம் ஒரு வானத்தை செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்தனர். அதைக் கண்டதும் சற்று நம்பிக்கை துளிர்த்தது. அதற்குப்பிறகு அடுத்த வாகனத்தை இராணுவத்தினர் செல்ல அனுமதிக்க அரைமணிநேரம் ஆனது. மெதுவாக வாகனங்கள் செல்ல இராணுவத்தினர் அனுமதித்தனர். அன்றிரவு இராணுவத்தினர் தம் மோடு தமிழ்ப்பயணிகளையும் தங்கவைத்துக் கொள்வார்கள் என்றும் இவ்வாறு மக்களைப் பணயமாகப் பிடித்தால் அவர்கள் தாக்க மாட்டார்கள் என்று இராணுவம் நினைக்கிறதென்று ஒருகதை உலாவியது. இவங்களிண்ட கொழுப்புக்கு ‘எப்படியும் இரண்டு பேரையாவது நாம் சரிக்காம விடமாட்டோம்' என்று துப்பாக்

Page 78
செழியன் 148
கியோடு வந்த அவர்களில் ஒரு இளைஞன் கூறியதாக இன்னோர்கதை பரவியது.
இன்று யுத்தம் நடந்தால் இராணுவத்தினரின் கையாலோ அல்லது வாகனம் செல்ல அனுமதிக்கப்படாவிட்டால் திரும்பி யாழ்ப்பாணம் சென்று அவர்கள் கையால சாவதே எம் விதி என நான் உணர்ந்தேன்.
வானங்கள் ஒவ்வொன்றும் இராணுவ முகாமைக் கடந்து செல்ல அதிக நேரம் எடுத்தன. தற்போது எமது பஸ்ஸிற்கு முன்பாக நான்கு வாகனங்கள் மட்டும் நின்று கொண்டிருந்தன. இந்த நான்கு வாகனங்களும் இராணுவ முகாமைக் கடந்துசெல்ல முக்கால் மணிநேரமாவது செல்லும். அதற்கிடையில் தாக்குதல் ஏதும் நடை பெறாமல் இருக்க வேண்டும். அத்தோடு இராணுவத்தரப்பிலும் மாற்றம் ஏதும் நிகழாமல் இருக்க வேண்டும். நான் எமது பஸ்ஸினுள் ஏறி அமர்ந்திருந்தேன்.
இன்று முகாமை கடந்துபோய்விட வேண்டு மென்று மனம் வேண்டிக்கொண்டேயிருந்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருந்தன. காலையில் இருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. மனதுக்கும் நிம்மதி இல்லை. அங்கும் இங்கும் என தாறுமாறாக யோசித்து மூளையும் களைத்துப் போய்விட்டது. நித்திரையாவது
கொள்வோம் என்று கண்ணை மூடினால் நித்திரை வரமறுத்தது.
சுற்றிலும் அபாயம் சூழ்ந்து கிடக்கையில் நித்திரைக்கான ஆணையை மூளை பிறப்பதேயில்லை. பஸ்ஸினுள் இருந்தபடியே மனதுக்குள் நான் போராடிக்கொண்டிருந்தேன்.
பெரியவர் என்னிடம் வந்தார். எனது மனைவி, மாமி, ஆகியோர் வந்த பஸ் எமது வண்டிக்கு ஐந்தாறு வாகனங்கள் தள்ளி நின்று கொண்டிருப்பதாகக்கூறிய பெரியவர் விரும்பினால் போய்ப் பார்த்துவிட்டு வருமாறு கூறினார். எனது மனைவியைப் பார்க்க வேண்டும் போல் ஆவல் எழுந்தது. எத்தனை நாட்களாகிவிட்டன. என் மனைவியைவிட்டு நான் பிரிந்து? பெரியவரிடம் கூறிவிட்டு பஸ்ஸை விட்டு இறங்கினேன். ஐந்தாறு வாகனங்கள் கடந்தபின் ஒரு பஸ் வவுனியா என்ற பெயர்ப்பலகையுடன் நின்று கொண்டிருந்தது.

49 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
இந்த பஸ்சாகத்தான் இருக்கும் என நினைத்து அதில் ஏறினேன். பின்வரிசை ஆசனம் ஒன்றில் ஜன்னலோரமாக சோர்ந்துபோய் என் மனைவி அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அருகில் சென்ற பின்னர் தான் என்னை அவள் கண்டாள். அந்தநேரத்தில் என்னை எதிர்பார்த் திருக்காததனால் அவள் விழிகள்ஆச்சரியத்தினால் உயர்ந்தன. "பிறகு சந்திப்போம்” என்று கூறிவிட்டு நான் பஸ்ஸின் பின்பக்க கதவால் இறங்கிவிட்டேன்.
போனதும் வந்ததுமாய் வந்த என்னிடம் 'என்ன உனது மனைவியைப் பார்க்கவில்லையா?’ என்று பெரியவர் கேட்டார். 'பார்த்தேன். உடன் வந்துவிட்டேன்' என்று பெரியவரிடம் கூறினேன். 'நீர் விரும்பினால் அந்த பஸ்சிலேயே உமது மனைவியுடன் சேர்ந்து வவுனியாக்கு வரலாம்’ என்று பெரியவர் கூறினார். "நான் இந்த பஸ்சிலேயே வருகிறேன்’ என்று பெரியவர் கூறினார். 'நான் இந்த பஸ்ஸிலேயே வருகிறேன்’ என பதில் கூறினேன். 'இன்னம் நேரம் இருக்கிறதுதானே யோசியும்’ பெரியவர் கூறினார்.
எனக்கு ஒரே மனப் போராட்டமாக இருந்தது. மனைவி வந்த பஸ்ஸிலும் எமக்காய் எடுத்த நாலு டிக்கெட்டுகள் இருந்தன. எனவே எந்த நேரமும் அதில் ஏறிக் கொள்ளலாம். நான் முடிவு செய்ய முடியாமல் தடுமாறினேன். இவ்வளவு தூரமும் பெரியவரோடும் சூரியனுடனும் வந்தபடியால் திடீரென இவர்களை விட்டுப் பிரிய விரும்பவில்லை. எனவே இந்த பஸ்சிலேயே போவோம் எனத் தீர்மானித்தேன்.
நேரம் ஒடிக்கொண்டிருந்தது. இப்போ எமக்கு முன்னால் நின்ற வாகன்ங்கள் எல்லாம் போய் ஒரே ஒரு வாகனம் மட்டும் நின்றது. அடுத்தது நாம்தான். எமது பஸ் புறப்படத் தயாராகியது. பயணிகள் பஸ்சிலேறி அமரத் தொடங்கினர். "நாங்களும் பஸ்சினுள் ஏறுவோம்’ எனப் பெரியவர் கூறினார். இன்னும் பதினைந்து இருபது நிமிடங்களில் எமது பஸ் இராணுவ முகாமைக் கடந்து சென்றுவிடும். ஆனால் எனது மனைவி இருந்த பஸ்சிற்கு சந்தர்ப்பங்கிடைக்க இன்னும் ஒரு மணிநேரமாவது செல்லும், அதற்கிடையில் யுத்தம்

Page 79
செழியன் 150
தொடங்கி அந்த பஸ்சிற்கு ஏதும் நிகழ்ந்துவிட்டால்? என்று ஒரு யோசனை எனக்குள் உதித்தது. இக்கட்டான சூழ்நிலையில் மனைவியைவிட்டு முந்திக் கொண்டு தப்பிப்போவது தவறு என்று பொறிதட்டியது. "நான் அந்த பஸ்சில் வருகிறேன்' திடீரென்று நான் கூறினேன். பெரியவர் சிரித்துவிட்டு சரி என்று கூறி வவுனியாவில் எங்கு சந்திப்பது என்று கூறினார். சில நிமிடங்களிலெல்லாம் நான் வந்த பஸ் புறப்பட்டுச் சென்றது.
நான் பின்னால் வந்த பஸ்சிலேறின்ேன் நான் இந்த பஸ்சில் தான் வவுனியாவுக்கு வரப்போகிறேன் என்று மாமிக்கும் மனவிைக்கும் கூறினேன். சன நெருக்கடி நிறைந்த பஸ்சில் அதிக மாகப் பேசிக்கொள்ளவில்லை. எமக்கு முன்னால் நின்ற வாகனங்கள் ஒவ்வொன்றாகச் சென்றுகொண்டிருந்தன. அடுத்தது நாம்தான். பயணிகள் உஷாராயினர். கீழே நின்றுகொண்டிருந்த பயணிகள் பஸ்சினுள் ஏறினர்.
பஸ் மெல்ல புறப்பட்டு ஊர்ந்து ஊர்ந்து சென்றது. சிறிது தூரம் சென்றதும் பஸ் நின்றது. சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்த சில இராணுவ வீரர்கள் பஸ்சை நிறுத்தும்படிக் கூறியதால்தான் பஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளை இறங்கிவரும்படி இராணுவத்தினர் சத்தமிட்டுக் கூறினர். அதை பஸ் டிரைவர் எம்மிடம் கூறினார். அத்தோடு எமது பெட்டிகள் சூட்கேஸ்களையும் கையோடு கொண்டுசெல்லுமாறு டிரைவர் கூறினார். பயணிகள் பஸ்சைவிட்டு ஒவ்வொருவராக இறங்கினர். நான் எனது சூட்கேசை ஒருகையிலும் மனைவியின் சூட்கேசை ஒருகையிலும் எடுத்துக் கொண்டு இறங்கி னேன்.
எனக்குப் பின்னால் மனைவி வந்து கொண்டிருந்தாள். சிறிது தூரம் நடந்ததும் இராணுவத்தினர் சிலர் நின்று கொண்டிருந்த முதலாவது தடை அரண் வந்தது. அதில் நின்றுகொண்டிருந்த இராணு வத்தினர் பயணிகளை பத்துப் பேராக முன்னேறிச் செல்ல அனுமதித் தனர். இந்த இடத்தில் இராணுவத்தினரின் எந்த சோதனையும் இருக்க வில்லை. பத்துப்பத்துப்பேராகச் செல்பவர்களை இரண்டாம் தடை அரணில் இருந்த இராணுவத்தினர் சோதனையிடுவது தெரிந்தது.

51 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
இப்போ நாம் முதலாவது தடை அரன் அருகில் நின்று கொண்டிருந்தோம். எமக்கு முன்பாக பத்துப் பேர் சென்று கொண்டிருந்தனர். சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்று சரியாக அவதானிக்க முடியவில்லை. இடையிடையே மண் மூட்டைகள், இராணுவ வண்டிகள் என்பன மறைத்துக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் என்னையும், மனைவியையும் சேர்ந்த அடுத்த பத்துப்பேர் கொண்ட குழுவை முன்னேற இராணுவத்தினர்அனுமதித்தனர். அந்த வரிசையில் எமக்கு முன்பாக சிலர் சென்றுகொண்டிருந்தனர்.
நூறுயார் தூரம் நடந்து சென்ற எம்மை இரண்டு இராணுவத்தினர் நிறுத்தினர். ஒவ்வொருத்தராக வா என்று சற்றுத் தள்ளி நின்ற ஒரு இராணுவ அதிகாரி கூறினான். ஒவ்வொருவரையும் அவன் விசாரிக்க அருகில் நின்ற இராணுவத்தினர் சூட்கேஸ்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அடுத்தது எனது முறை. என்ன நிகழுமோ? என்ற அச்சத்தை உள்ளூரத் தாங்கிக்கொண்டு நின்றேன். “ஏ போ' இராணுவ வீரன் ஒருவன் கத்தினான். எனது சூட்கேசை மட்டும் தூக்கிக் கொண்டு அடுத்து நின்ற இராணுவ அதிகாரி முன்பாகச் சென்றேன். 'அடையாள அட்டை எங்கே??? என்று சிங்களத்தில் கேட்டபடி கையை நீட்டினான். தயாராக வைத்திருந்த அந்தப் போலி அடையாள அட்டையை அந்த அதிகாரியின் கையில் பவித்தரமாகக் கொடுத்து விட்டு அச்சத்துடன் அவன் முன் நின்றுகொண்டிருந்தேன்.
இராணுவ அதிகாரி ஒரு முரடனைப்போல இருந்தான். அவனது முகத்தில் இரக்கம் என்பதையே எதிர்பார்க்க முடியாது. விகாரமான ஒரு முகம். அவனுக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கிற ஒவ்வொரு கண நேரமும் என்ன நிகழப்போகிறதோ? என்ற இதயத் துடிப்போடு நின்றேன். எனக்குள் விசுவரூபமாய் வியாபித்து நின்ற அச்சத்தை உள்ளூர அடக்கி வைத்துக் கொண்டு அந்த இராணுவ அதிகாரியை நிமிர்ந்து நோக்கினேன்.
நான் கொடுத்த அடையாள அட்டையைத் திருப்பித் திருப்பி வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னை உற்று நோக்கிவிட்டு மறுபடி அடையாள அட்டையில் முகம் பதித்தான்.

Page 80
செழியன் 152
நான் சலனமில்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனதிற்குள் ஒரு எரிமலையே குமுறிக்கொண்டிருக்க எனது முகத்தில் மட்டும் அமைதி. அமைதி. அமைதி சிறிது நேரம் சென்றிருக்கும் ஒரு கையில் அடையாள அட்டையைப் பிடித்துக் கொண்டு என் தலையை இருந்து கால் வரைக்கும் நோட்டம் விட்டான். அந்த இராணுவத்தான். ஒரு தீவிரவாதி அல்லது போராளி அவனது பாசையில் கூறுவதாயின் ஒரு பயங்கரவாதி எப்படி இருப்பான் என்கிற படம் அவனுக்குள் இருக்க வேண்டும். அதற்குள் நான் அடங்குவேனா என்று பார்க்கிறான் போலும்? சிறிது நேரம் பார்வையால் படம் பிடித்தவன் 'தம் சகே நம மொகத்த? " (உன்னுடைய பெயர் என்ன?) என்ற கேள்வியைத் தொடுத்தான்.
• a v ’ என்னுடைய பெயரைக் கூறினேன். அதாவது அடையாள அட்டையில் இருந்த பெயரைச் சரியாகக் கூறினேன். பெயரைக் கூறிவிட்டு அடுத்த கேள்விக்கான பதிலையும் தயார் பண்ணினேன். விலாசம் தானே கேட்கப் போகிறான் அந்த வீட்டு நம்பர் தான் சற்று இழுத்துக் கொண்டிருந்தது.ம் அறுபத்திநாலு . நினைவுக்கு வந்துவிட்டது. அவனது அடுத்த கேள்விக்கு பதில் சொல்லத் தயாரானேன். ஆனால் இராணுவத்தானோ திடீரென "யண்ட' (போ) என்று கூறிவிட்டு அடையாள அட்டையையும் என்னிடம் நீட்டினான்.
ஆஹா. மறுபடியும் தப்பிவிட்டேன். உள்ளம் துள்ளிக் குதித்தது. உள்ளூர இருந்த பதட்டம், பரபரப்பு எல்லாம் பரந்தோடிவிட்டது. வெகு நிதானமாக எனது அடையாள அட்டையை அவனிடம் இருந்து வாங்கி எனது கால் சட்டைப்பையினுள் திணித்துக்கொண்டு, சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தேன். அடுத்து நின்றுகொண்டிருந்த இராணுவச் சிப்பாய்களும் எனது சூட்கேஸைத் திறந்து காட்டும்படிக் கூறினார்கள். மெதுவாக சூட்கேசைத் திறந்து காட்டிவிட்டு மறுபடியும் பூட்டினேன். அச்சமயம் எனது மனைவியும் சூட்கேசைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு அந்த இடத்திற்கு வந்துசேர்ந்தாள். எனது மனைவியின் சூட்கேசையும் நானே திறந்து அந்த இராணுவ வீரர்களிடம் காண்பித்துவிட்டு அழுத்தி மூடினேன்.

153 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
எனது இரு கையிலும் இரண்டு சூட்கேஸ்களையும் தூக்கிக் கொண்டு மனைவி பின் தொடர முன்னேறி நடந்தேன். எனக்கு முன்பாக எமது பஸ்சில் வந்த சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களை நாமும் தொடர்ந்தோம். வழியில் ஐம்பதுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் டிரக்குகளிலும், ஆமட் கார்களிலும் இருந்து அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை எல்லாம் கடந்து பயணிகள் குழுமி நின்ற இடத்தை அடைந் தோம். இராணுவத்தினரின் பரிசோதனை முடிந்து ஒவ்வொரு பயணிகளாக வந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் எமது பஸ்சும் இராணுவச் சோதனை முடித்துவர அதில் நாமெல்லாம் ஏறிக்கொண்டோம். வெற்றிகரமான ஆனையிறவு தடைமுகாமையும் கடந்த நாங்கள் எமது பயணத்தைத் தொடர்ந்தோம்.
வவுனியா செல்லும் வழியில் மாங்குளம் மற்றும் சில தடை முகாம்களை நாம் கடக்க வேண்டியிருந்தது. முன்னரைப் போல எந்த அச்சமும் எனக்கு இருக்கவில்லை. சம்பிரதாயத்துக்கு பஸ்சை விட்டு இறங்கி இராணுவத்திற்கு சூட்கேசைத் திறந்து காட்டிவிட்டு மறு படியும் பஸ்சில் ஏறி. இப்படித்தான் நடந்தது. இரவு ஏழு மணி யிருக்கும். வவுனியா நகருக்குள் பிரவேசித்தோம். நகருக்குள் பிரவேசிக்கு முன்னர் இராணுவத்தினர் பெட்டிகளையும், சூட்கேஸையும் சற்று நுணுக்கமாகப் பரிசோதித்தனர். வெடிகுண்டு கள் ஏதும் கொண்டு செல்கிறோமா? என்பதை அறியவே இராணுவத்தி னர் இவ்வாறு அங்குலம் அங்குலமாகக் குடைந்தனர். பஸ்சைவிட்டு இறங்கியதும் நகரத்தினுள் இருந்த ஒரு வீட்டிற்கு எங்களை எனது மாமி அழைத்துச் சென்றார். 'கொழும்பு செல்ல இருக்கிறோம், நாளை வரைக்கும் நாம் தங்க வேண்டும்.'
என்று அந்த வீட்டுக்காரர்களுக்கு மாமி கூறினார். அந்த வீட்டுக்காரர்கள் மாமிக்கு தூரத்து உறவு என்று தெரிந்தது. வவுனி யாவில் இராணுவத்தினர் இரவுகளில் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்துவார்கள் என்றும் யாரும் புதியவர்கள் வீடுகளில் இருந்தால் கைது செய்து கொண்டு சென்று விடுவார்கள் என்றும் அந்த வீட்டுக் காரர்கள் கூறினார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்கும் படி அந்த வீட்டுக்காரர்கள் எம்மிடம் கேட்டுக்கொண்டனர். சற்று நேரம் இருந்து

Page 81
செழியன் 154
விட்டு பெரியவரையும், சூரியனையும் சந்திப்பதற்காக நானும் மாமியும் புறப்பட்டோம்.
எமக்கு வழிகாட்ட அந்த வீட்டு இளைஞர் ஒருவர் கூடவே வந்தார். எங்களைக் கண்டதுமே பெரியவர், சூரியன், சகோதரி ஆகியோர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். பயணம் எப்படி இருந்தது? பிரச்சனை ஒன்றும் இல்லை? என்று கேள்விகளை அடுக்கினார். எமது பயண அநுபவங்களை பகிர்ந்து கொண்டோம். சூரியனுக்கும் ஒரு பிரச்சனையும் வரவில்லை. பெரியவரும், சகோதரியும் இராணுவ த்தினருடன் சிங்களத்திலேயே சகஜமாக உரையாடி மெல்ல சூரியனைக் கடந்தி வந்து விட்டனர்.
மறுநாள் பிற்பகல் மூன்றுமணி போல் புறப்படும் புகையிரதத்தில் கொழும்பு செல்வோம் எனத் தீர்மானித்தோம். பெரியவரும், சகோதரியும் தாம் யாழ்ப்பாணம் செல்வதாயும் எனவே இனி என்னையும், சூரியனையும் மாமியே பொறுப்பாக கொழும்புக் குக் கூட்டிச் சென்று விமானத்தில் ஏற்றி அனுப்பி விடவேண்டும் என்று பெரியவர் கேட்டுக் கொண்டார். அத்தோடு இன்று இரவு தாங்குவதற்கு இடம் இருக்கிறதா? அதில் ஏதும் பிரச்சனைகள் உண்டா? எனவும் பெரியவர் கேட்டார். 'இராணுவத்தினர் திடீர் என சோதனையிட வரலாம். எனவே நமது வீட்டில் இவர்தங்குவதை விட இங்கு தங்குவது நல்லது' என்று எம்முடன் வந்த இளைஞர் கூறினான். 'அப்படியே செய்வோம்’ என்று கூறிய பெரியவர் என்னையும் தன்னோடு தங்கவைத்துக் கொண்டார். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று இரவு மிக நின்மதியாக நித்திரை கொண்டேன்.
அதிகாலையில் காகம் ஒன்று 'கா' 'கா' என்று கரைந்தது. அதனைத் தொடர்ந்து இன்னும் சில காகங்கள் குரலெடுத்துக் கரைந்த படி பறந்தன. நாம் கண் விழித்தோம். வவுனியாவில். புதிய ஓர் இடத்தில் இருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. எமக்கு முன்பாக பெரியவரும், சகோதரியும் எழுந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பிச் செல்வதற்காக ஆயத்தமாகினர். பிற்பகல் என்னையும் சூரியனையும் வவுனியா புகையிரத நிலையத்திற்கு

55 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
அழைத்துச் செல்லும்படி அங்கிருந்த ஒரு நண்பரிடம் ஒழுங்கு செய்திருந்தார் பெரியவர். எம்மிடமிருந்து விடைபெற்று பெரிய வரும், சகோதரியும் சென்றபின்னர் மனதில் வெறுமை குடி கொண்டது.
பெரியவர், சகோதரி, சின்னவர், மனிதர், கவிஞர் சேரன் இவர்களெல்லாம் எமது உயிரை காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை நான் எண்ணிப் பார்த்தேன் . தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு உதவியிருக்கிறார்கள். பெரியவர் எடுத்துக் கொண்ட முயற்சியை அளவிடவே முடியாது. தனது சக்திக்கும் மேலாகவே எமக்காக அவர் உதவி செய்துவிட்டார். இந்த உதவிகளுக்கு எவ்வாறு நாம் நன்றி செலுத்தப் போகிறோம்?
நேரம் மிக மெதுவாக நகர்ந்தது. காலை உணவுக்காக ள்ம்மை அழைத்தார் பெரியவர் அறிமுகப்படுத்திய நண்பர். உணவுக்கு பின் நாம் சற்று நேரம் ஒரு மரநிழலில் அமர்ந்திருந்தோம். எம்மைத் தேடிக் கொண்டு இளைஞர் ஒருவர் வந்தார். கொழும்பு செல்கின்ற புகையிரதம் பிற்பகல் மூன்று மணிக்கு புறப்படுகிறது. எனவே என்னையும் சூரியனையும் இரண்டு மணிக்கெல்லாம் புகையிரத நிலையத்திற்கு வந்துவிடும்படி மாமி செய்தி அனுப்பி இருந்தார். 'குறித்த நேரத்தில் அங்கு நிற்போம்" என்று இளைஞரிடம் கூறி அனுப்பினோம்.
கடிகாரத்திற்கு இன்று என்ன நேர்ந்தது. மெல்ல மெல்ல மாகவே ஊர்ந்து கொண்டிருந்தது. எப்போதுமே இப்படித்தான் நேரம் போகக்கூடாது என்று நினைக்கும் போது கடிகாரம் வேகமாக ஒடித் தொலைத்து விடும். நேரம் போக வேண்டும் என்று வேண்டும் போது மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்.
மதிய உணவுவையும் முடித்துக் கொண்டு புறப்படுவதற்கான நேரம் எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருந்தோம். "அப்பாடா” ஒருவாறு நேரம் ஒரு மணியாகியது. குளித்து, உடைகள் அணிந்து, சப்பாத்துக்களை மாட்டிக்கொண்டு நாம் தாயராகினோம். ஒரு மணி நாற்பத்தைந்து நிமிடமாகியது 'போவோமா?’ என்று பெரியவர் அறிமுகப்படுத்திய நண்பர் எம்மிடம் வந்து கேட்டார். புறப்பட்

Page 82
  

Page 83
செழியன் 158
அவர்களைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. 'மணிஎங்கு இருக்கிறான் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் கட்டாயம் அவனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்." மணியின் அண்ணர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபோதும் கிராமத்து மக்களோ மணியை ஒப்படைக்கத் தயாராக இல்லை. "மணி எங்கே என்று தெரியாது. ' என ஒரேயடியாக கூறிவிட்டனர். இதன் பின்னர் மணியின் அண்ணர்திரும்பிச் சென்று விட்டார்.
எனது மனைவி இச்சம்பவத்தைக் கூறியபோது எனக்கு வேதனையாக இருந்தது. மனிதத்தை பற்றியும், மனித உரிமைகள் பற்றியும், எமது தேசத்தின் விடுதலையைப் பற்றியும், எமது நாட்டின் மீது குறிவைக்கும் அந்நியசக்திகள்பற்றியும் உரத்தக் குரலில் கூக்குரல் இட்ட இந்த மண்ணின் மைந்தர்களையெல்லாம் போராட்டத்துக்கு எதிரானவர்கள், துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்று தீர்க்கும் அவர்களை நமது மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இனி எப்போதுதான் புரிந்து கொள்ளப்போகிறார்கள்?
நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்த போது எமது புகையிரதம் கொழும்பு கோட்டையில் சென்று பெரியதோர் பெருமூச்சு விட்டு நின்றது.

13 தை 1987
கொழும்பு, இரட்டை மாடி வீடு, மாடியில் ஒரு சிறு அறை. இதுதான் எமது புதிய குடியிருப்பு நேற்று இரவு கொழும்பு கோட்டையில் இறங்கியதும்ே இங்கு வந்து சேர்ந்து விட்டோம். ஜெயம் என்ற இந்த வீட்டுக்காரர் நீண்ட காலமாக கொழும்பில் தொழில் செய்து கொண்டிருக்கிறார். அந்தப் பகுதி பொலிஸ் நிலையம் தொடங்கி உள்ளுர் பிரமுகர் மத்தியில் மதிப்பும், செல்வாக்கும் மிக்கவர். அரசியலுக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. நட்புக்காக இப்போஎமக்குஅடைக்கலம் கொடுத்துள்ளார். அடைக்கலம் மட்டுமல்ல எப்படியும் கொழும்பிலிருந்து எம்மை விமானத்தில் ஏற்றிவிடுவேன் என்று உறுதியும் கூறினார்.
கொழும்பில் எமது பயண ஒழுங்குகள் தொடர்பாக செல்ல வேண்டிய இடங்களுக்குத் தனது தம்பி சுந்தர் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். சுந்தரும் அதே வீட்டில்தான் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் நாம் இருக்கின்ற போதே எமக்குரிய பாஸ்போட் எடுப்பதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். சூரியன் மனைவி இந்த ஏற்பாட்டைச்செய்திருந் தார். அத்தோடு கொழும்பு சென்றதும் 'சண்முகாடிராவல் ஏஜென்ஸி"

Page 84
செழியன் 160
( பெயர் ஆசிரியரால் இடப்பட்டது)யுடன் தொடர்பு கொள்ளும்படி விலாசமும் எம்மிடம் தரப்பட்டிருந்தது. மத்தியான சாப்பாட்டுக்குப் பின்னர் அங்கு போய் எமது பாஸ்போட்டுகளை பெற்று வருவோம் என நாம் தீர்மானித்தோம். சுந்தரும் அந்த இடத்துக்கு எம்மை அழைத்துச் செல்வதாகக் கூறினார்.
பிற்பகல் இரண்டு மணிக்கு 'சண்முகாடிராவல் ஏஜென்ஸியை" சென்றடைந்தோம். எம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நாம் "யாழ்ப்பாணத்தில் பரமதேவன் என்பவருடன் செய்து கொண்ட ஏற்பாட்டின் படி வந்துள்ளோம். எங்களுடைய பாஸ்போட்டுகளை பெற்றுக் கொள்ளலாமா?" என்று வினயமாக வேண்டிக் கொண்டோம். பரமதேவன் அந்த ஏஜென்ஸியின் உரிமையாளர் அல்லது உரிமையாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும்.
'பரமதேவனா? அவன் யாழ்ப்பாணம் போய் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் திரும்ப வரவில்லையே! என்று முகாமையாளார் பதில் கூறினார். எங்களுக்கு ஒரே திடுக்காட்டமாய் இருந்தது. ஆனாலும் நம்பிக்கை தளர்ந்து போகவில்லை. மிக மிக நம்பிக்கையான இடம் என்று சூரியன் மனைவி கூறியிருந்தாள். எம்முடைய பாஸ்போட் அலுவல்களில் காலதாமதமோ, மோசடிகளோ, இழுவல்களோ இருக்காது என்ற நம்பிக்கை இருந்தது. 'பரமதேவன் கொழும்பு வரவில்லையா? அவர் வராவிட்டாலும் கூட எமது விண்ணப்பப் படிவங்கள், படங்கள், பிறப்பு சான்றிதழ்கள் என்பனவற்றை முன்னதாக அனுப்பி இருப்பார் என்று நினைக் கிறோம்' என்று மாமி கூறினார். 'ஓம் ஓம். சிலருடைய ஆவணங்களை அனுப்பியிருந்தவர்தான். . உங்களுடைய பெயர்களைச் சொல்லுங்கள் தேடிப் பார்க்கிறேன்" என்று முகாமையாளர் கூறினார். நாம் பெயர்களைக் கூறினோம். அவர் ஒருதடவைக்கு இரண்டு தடவை தேடி பார்த்துவிட்டு 'உங்களுடைய ஆவணங்கள் ஒன்றும் வரவில்லை" என்று கூறினார்.
எமக்கு நாடி ஒட்டமே தளர்ந்து விட்டது'பாவி ஒரு வாரத்தில் பாஸ்போட் தயாராகிவிடும் என்று கூறிக் காசையும் வாங்கி ஏமாற்றி விட்டான்?" மனதுக்குள் திட்டினேன். கோபம் கோபமாய் வந்தது.

161 ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
காசும் வேண்டாம் ஒன்றும்வேண்டாம் எங்களுடைய பிறப்புச் சான்றிதழ் வேண்டும். அது இல்லாமல் பாஸ்போட் எடுக்க இயலாதே எங்களுக்கு ஏற்பட்ட திகைப்பு, கோபம் இவற்றைக் கண்ட முகாமையாளருக்கு தங்கள் பக்கம் ஏதோ பிழை நடந்து விட்டது என்று புரிந்தது. /
"எங்களுக்குப் பாஸ்போட் அவசரம் தேவை. ஒரு வாரத்தில் எடுத்துத் தருவேன் என பரமதேவன் கூறியதால்தான் அவரிடம் கொடுத்தோம். இப்போ ஒரு மாதம் ஆகப்போகிறது. இப்படி இவர் செய்வார் என்று தெரிந்திருந்தால் கொடுத்திருக்க மாட்டோம்’ என்று முகத்தில் அடித்தாற்போல நான் கத்தினேன். 'நீங்கள் இரண்டு நாளைக்குப்பின் வாருங்கள். நான் யாழ்ப்பாணத்திற்கு டெலிபோன் போட்டு கதைத்துவிட்டு உங்களுக்குப் பதில் கூறுகிறேன். பரமதேவ னும் இன்றைக்கோ நாளைக்கோ வந்துவிடுவார்’ முகாமையாளர் கூறினார். எமக்கு வேறுவழியில்லை. கோபம், ஏமாற்றம், ஆத்திரம் எல்லாவற்றையுமே சுமந்துகொண்டு திரும்பினோம்.
'அக்கா நீங்கள் இவற்றையெல்லாம் கையோடு கொண்டு வந்திருந்தால் மூன்று நாளில் பாஸ்போட் எடுத்துத் தந்திருப்பேன். உங்களுக்குத் தெரியும்தானே என்னைப்பற்றி. பிறகு ஏன் யாரிட்டையோ கொடுத்துவிட்டு வந்து நிற்கிறியள்?' நாம் தங்கியிருந்த வீட்டக்காரர் ஜெயம் சற்று கோபமாகவே எனது மாமியிடம் கூறினார். பாஸ்போட் எடுப்பதற்குரிய ஆவணங்கள் கைதவறிப் போனது எல்லோருக்குமே பெரிய சிக்கலைக் கொடுத்தது.

Page 85
1465 1987
இன்று தைப்பொங்கல் தினம். முற்றத்தில் கோலமிட்டு அடுப்பு வைத்து பானை ஏற்றி பொங்குவதுதானே நமது பாரம்பரியமான வழமை. கொழும்பில் இதற்கெல்லாம் எங்கே நேரம்? ஏதோ பொங்கல் தினம் ஞாபகத்திற்கு வருகிறதே அதுவே பெரியவிஷயம். குசினிக்குள்ளே தைப்பொங்கல் பொங்கி எமக்கும் பரிமாறினார்கள். சூரியனின் மனைவிக்குப் பாஸ்போட் விடயத்தில் ஏற்பட்ட குளறுபடி பற்றிக் கடிதம் எழுதினோம்.

15 தை 1987
இன்று மறுபடியும் 'சண்முகாடிராவல் ஏஜென்சி சென்றோம். பரமதேவன் இன்னும் வரவில்லை என்றும் அடுத்த வாரம் தான் வருவாரென்றும் எமக்குக் கூறினார்கள். எமது ஆவணங்களை எம்மிடம் திருப்பித் தருமாறு நாம் திட்டவட்டமாகக் கூறினோம். "சண்முகா ஏஜென்சி மூலமாக எமது பாஸ்போட்டை எடுக்கத் தயாராக இல்லை என்பதையும் நேரடியாகவே கூறிவிட்டோம்.
நாட்கள் உருண்டன. என் பால்ய சினேகிதனும் மதிப்பிற்கும் உரிய சுகுவை (சிறையிலிருந்து அண்மையில்தான் விடுதலையாகி யிருந்தான்.) கொழும்பில் அவனது சித்தப்பா வீட்டில் நானும் சூரியனும் சந்தித்தோம். சுகுவின்பெற்றோர்மறுபடியும் இராணுவம் அவனைக் கைதுசெய்யலாம் என்ற அச்சத்தில் இருந்தனர். நண்பனுடன் விரிவாகப் பேசவில்லை. சந்திப்புசுருக்கமாக முடிந்தது. ஒரு வாரம் ஓடிப்போயிற்று. பரமதேவன் வரவுமில்லை. எமது ஆவணங்களும் வரவில்லை. ஆனால் சூரியனின் மனைவி கொழும்பு வந்தாள். அவரையும் கூட்டிக்கொண்டு மறுபடியும் 'சண்முகா டிராவல் ஏஜென்சி'க்குச் சென்றோம். அங்கு எமது ஆவணங்கள் இருந்தன. பரமதேவா இருக்கவில்லை. எமது ஆவணங்களைத்

Page 86
செழியன் 164
திரும்பப் பெற்றுக்கொண்டோம். எமக்கு உரியபாஸ்போட்டுக்களை இரண்டு வாரத்தில் எடுத்துத் தரலாம் என ஏஜென்சிக்காரர்கள் கூறினார்கள். 'தேவையில்லை’ என்று மட்டும் கூறிவிட்டு வெளியேறி நடந்தோம்.
நாம் நடைபாதையால் சென்று கொண்டிருந்த போது எம்மை நெருங்கி வந்து ஒருவர் புன்னகை செய்தார். "நீங்கள் சிவா தானே? நான் சுரேன்’ என்று தம்மை அவர் அறிமுகம் செய்து கொண்டார். நான்திடுக்கிட்டேன். "சுரேன். அவர்களால் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் உளவுப்பிரிவில் கொழும்பில் வேலை செய்கிற சுரேன் நீர்தானா ஐயா?' என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு திடுக்கிட்டேன். 'அவர்களால் மட்டுமல்ல இந்த உளவுப் பிரிவினாலும் எனக்கும் சூரியனுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் நீண்டகாலமாகவே எனக்கு இருந்தது.
"எப்படி உங்களுக்கு என்னைத் தெரியும்?' சுரேனிடம் கேட்டேன். "நீங்கள் கொழும்பில் நிற்பதாக சுகு கூறினார். 'சண்முகா டிராவல் ஏஜென்சியில் நீங்கள் கதைத்தைப் பார்த்தேன். நீங்களாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ' சுரேன் கூறிக்கொண்டிருந்தார் (அடேயப்பா எமகாதகா. ஒருநாள் &n- சந்தித்ததில்லை கண்டுபிடித்து விட்டாயடாபாவி) 'நீங்கள் சண்முகா ஏஜென்சியில் வேலை செய்கிறீர்களா?' நான் கேட்க ‘ம். இல்லை. ஒரு அலுவலாய் வந்தநான்’ சுரேன் தடுமாறினான். (எனக்குத் தெரியும். அங்குதான்நீர் வேலை செய்கிறீர்) பின் "சுகுவின் பாஸ்போட் விடயமாகவும் நான் தான் அலுவல் பார்க்கிறன். உங்களுடைய பாஸ்போட்டை நான் எடுத்து பாதுகாப்பாய் அனுப்பி வைக்கிறேன்’. சுரேன் தொடர்ந்தார். "எம்முடைய பாஸ்போட்டை எடுக்க வேறு இடத்தில் ஒழுங்கு செய்து விட்டோம். நேரம் போகிறது பிறகு சந்திப்போம்"
அதிக நேரம் அங்கு நிற்கவோ பேசவோ விரும்பாமல் நான் புறப்பட்டேன். ஆனால் சுரேனைச் சந்தித்ததில் இருந்து எனக்கு மற்றுமோர் பயம் பிடித்து ஆட்டியது. இவர்கள் இராணுவத்திடமோ போலீசிடமோ எம்மைப் பிடித்துக்கொடுக்க மாட்டார்கள் என்பது என்னைப் பொறுத்தவரை நிச்சயமான விடயமல்ல.

165 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
கொழும்பில் நாம் தங்கியிருந்த நாட்கள் ஒவ்வொன்றும் அச்சத்துடனேயே கழிந்தன. சுரேனைக் கண்டபின்னர் எமது பாதுகாப்பைப் பற்றிய அச்சம் அதிகரித்தது. ஆனால் நாம் தங்கியிருக் கின்ற விலாசம் எவருக்குமே தெரியாது என்பதால் சற்று ஆறுதலாக இருந்தது. எமக்குப் பாஸ்போட் எடுக்கின்ற வேலை துரிதமாக நடைபெற்றது. நாம் தங்கியிருந்த வீட்டுக்காரர் ஜெயம் இதற்காக ஒரு தரகனை ஏற்பாடு செய்திருந்தார். மூன்று தினங்களில் பாஸ்போட் எடுத்துத் தருவதாகதரகன் உறுதி கூறினான்.
இச்சந்தர்ப்பத்தில் வெள்ளவத்தையில் திடீரென ஒரு குண்டு வெடிப்புச்சம்பவம் நடைபெற்றது. எமது பாதுகாப்புக்கு இது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொழும்பில் தங்கியிருந்த பல நூறு தமிழ் இளைஞர்கள் இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாய்க் கைது செய்யப்பட்டனர். எங்களைத் தேடியும் ஆயுதப் படையினர் வரலாம் என வீட்டக்காரர் சற்றுப் பதட்டமாக இருந்தார். ஆனால் ஏதோ கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள் போலும் அப்படி ஒன்றும் நிகழவில்லை.
சூரியனின் தாயாரும் கொழும்பு வந்து சேர்ந்தார். அவர் தங்குவதற்காக வேறோர் இடம் ஒழுங்கு செய்து கொடுத்திருந்தோம். மூன்று தினங்களின் பின் எமது பாஸ்போட்டுகளுடன்தரகன் வந்தான். இதில் சூரியனுக்கு அடையாள அட்டை இல்லாதபடியால் அவசர கால பாஸ்போட்டே எடுக்க முடிந்தது எனக்கூறினான். இந்தப் பாஸ் போட் சிகப்புநிறம். ஒருமுறை மட்டுமே பயணத்திற்காக பாவிக் கலாம். இந்தப் பாஸ்போட்டில் பயணம் செய்கின்றபோது அனாவசியமாய் அதிகாரிகளின் கவனம் சூரியனின் மீது திரும்பும் என்பதால் எமக்கு அதிருப்தியாய் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. விசா எடுக்கின்ற வேலை, டிக்கெட் எடுப்பதற்குரிய ஒழுங்கு, என்று எமது பயணஒழுங்குகள் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் எனது மனைவி, மனைவியின் தம்பி, ஆகியோருடன் சூரியன், அவன் தாயாரும் பயணம் செய்வதற்காகவே ஒழுங்குகள் செய்யப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்து நாம் விமானம் ஏறுவதற்கான திகதி நிச்சயம் செய்யப்பட்டது. நாம் பயணமாவதற்கு

Page 87
செழியன் 166
சில நாட்கள் இருக்கும்போது எமது பெரியவர் கொழும்புக்கு வந்தார். எங்களையும் சந்தித்தார், அவரிடம் நாம் விடைபெற்றுக் கொண்டோம். எனது மாமியும் எமது பயணத்திற்கு முதல்நாளே எம்மிடம் விடைபெற்று யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்.
296 1987
இன்று எமது பயணநாள். பதட்டமாய் இருந்தது. 'ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். ஒரு பிரச்சனையும் வராது” ஜெயம் அடிக்கடி எம்மை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் என்னதான் தைரியம் கூறினாலும் எமது அடிமனதில் பயம் உறைந்து போயிருந்தது.
மதிய உணவுக்குப்பின் விமான நிலையத்திற்கு எம்மை ஏற்றிப்போக வேன் ஒன்று வந்தது. ஜெயமும் எங்களோடு வந்தார். ஜெயம் குடும்பத்தினரிடம் நாம் விடைபெற்றுக்கொண்டு புறப் பட்டோம். கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தினை நோக்கி எமது வாகனம் விரைந்தது. விமான நிலையப் பகுதிக்குள் எமது வாகனம் செல்வதற்கு முன்பாக இராணுவத் தடை அரண் இருந்தது. தடை அரணில் நிறுத்தி எமது பாஸ்போட், அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டது. எமது சூட்கேஸ்களையும் சோதனை செய்தபின்முன்செல்ல அனுமதி கிடைத்தது.

167 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
விமான நிலையம் சனநடமாட்டம் மிகுந்து காணப்பட்டது. சனமோடு சனமாக இரகசியப் போலீசாரும் இருப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். எனவே எம்மீது சந்தேகப் படக்கூடியதாயோ இரகசியப் போலீசாரின் கழுகுக் கண்கள் எம்மீது திரும்பக் கூடிய தாயோ இருக்காதவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும். நானும், மனைவியும், மனைவியின் தம்பியும் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டோம். சூரியனும் அவனது தாயாரும் இன்னுமோர் இடத்தில் அமர்ந்துகொண்டனர். எமது கவனம் முழுவதும் எமது விமான பயணத்திற்கான கவுண்டரிலேயே பதிந்துகிடந்தது. அது திறக்கப்பட இன்னமும் நேரமிருந்தது. என்மனதில் வழக்கம் போல பல சிந்தனைகளும் வந்து போயிற்று. இவ்வாறு நான் குழம்பித் தவித்துக்கொண்டிருந்தேன். என்னருகில் ஒரு வயோதிபர் இன்னோர் பயணியிடம் ஏதோ கேட்க அந்தப் பயணியோஇல்லை என்பதுபோல் தலையசைத்தவிட்டு நகர்ந்தார். மறுபடியும் இந்த வயோதிபர் இன்னொருவரிடம் சென்று சிறிது நேரம் ஏதோ சொன்னார். இரண்டாமவரும் தன்னிடம் இல்லை என்பது போல் ஏதோகூறினார். வயோதிபரின் முகம் தொங்கிவிட்டது. அவரது முகத்தைப் பார்க்கப் பரிதாமாய் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்த அந்தப் பெரியவர் நான் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தார்.
"சார் . நான் இந்தியா. இப்ப சென்னைக்குப் போரேன் சார். இங்க ஏர்போட்டாக்ஸ் (விமானநிலைய வரி) கட்டணுமாம். இப்ப என்கிட்ட பணம் இல்லை. கொடுத்தீங்கன்னா அப்புறமா எப்படியும் சென்னையில உங்களுக்குத் திருப்பிக் கொடுத்துடறன்". மிகவும் கெஞ்சிக் கேட்டார் அந்தப் பெரியவர். வேட்டி சால்வை அணிந்து கண்ணியமான மனிதரைப்போல்தான் அவர்தென்பட்டார். இக்கட்டான நிலைமையில் இருப்பவருக்கு உதவி செய்யலாம்தான். என் பாக்கெட்டில் இருநூறு ரூபாய் இருந்தது. ஆனாலும் எனக்கு சந்தேகமாய்த்தான் இருந்தது. பொய் சொல்லுகிறாரோ? இருக்கலாம்! விமானநிலையத்திற்கு வரிகட்டவேண்டுமென்று இந்தியாவிலிருந்து வந்தவருக்குத் தெரியாமலா போய்விட்டது?
நான்பதிலேதும் கூறாமல் அவரையேகூர்ந்து பார்த்தேன். நான் நம்பவில்லை என்பது அவருக்கும் தோன்றியிருக்க வேண்டும். 'சார்

Page 88
செழியன் . 168
நம்புங்க. அந்தா பாருங்க என்பொண்ணு நின்னுகிட்டிருக்கா அவளை வேணுமானாலும் கேட்டுப்பாருங்க"சற்றுதள்ளி நின்றிருந்த பெண்ணைக் காட்டினார். மூக்கில் மூக்குத்தி மினுங்க தமிழ் நாட்டிற்கே உரிய இலட்சணங்களோடு சேலையுடுத்திய ஒரு இளம் பெண் சிலையாய் நின்று கொண்டிருந்தாள். அவள்முகத்தில் இப்படி யெல்லாம் அந்நியரிடம் கையேந்தும்படியாயிற்றே என்பதைப்போல் ஒரு பரிதாபமான தோற்றம். 'உங்க மகளா?' சந்தேகத்துடன் கேட்டேன். யாரையோ காட்டி தன்னுடைய மகள் என்கிறாரோ என்றும் எனக்குள் ஒரு சந்தேகம்.
“என்னுடைய மகள்தான் சார்’ என்று கூறியவர் அந்தப் பெண்ணை அழைத்தார். அருகில் வந்த பெண்ணிடம் "நீங்கள் இவருடைய மகளா?' என்று கேட்டேன். ஆம் என்று தலையை மட்டும் அசைத்தாள். நான் யோசித்தேன். இந்தப் பெரியவர் அந்நிய தேசத்துக்காரர் இவர் கூறியது உண்மையாய் இருந்து நான் உதவி செய்யாமல் போனால் அது பெரிய தவறு. எமது நாட்டைப் பற்றியே தவறாக இந்த மனிதர் நினைத்து விடுவார். எனது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து அப்பெரியவரிடம் கொடுத்தேன். “ரொம் நன்றி சார். உங்க விலாசத்தைக் கொடுங்க.." அவர் கேட்க "பரவாயில்லை எப்பவாவது சந்தித்தால் தாங்க' என்று நான் கூறினேன்.
தன் மகளோடு பெரியவர் நகர்ந்து சென்றார். பெரியதொரு கடமையை செய்து விட்டோம் என்பது போன்ற ஒரு உணர்வோடு மறுபடி வந்து அமர்ந்தேன். ஒரு சிரிப்பு சிரித்தாள் என் மனைவி. யாரோ ஏதோ சொல்லி உன்னிடமிருந்த பணத்தைத்தட்டிக்கொண்டு போய்விட்டார்கள் என்பது போலிருந்தது. சரி போகட்டும் பொய்யாயிருந்தால் போகட்டுமே. ஆனால் உண்மையாயிருந்தால்? இப்படியான நிலையில் உதவி செய்யாமல் இருப்பது மனிதத் தன்மையே இல்லையே. என்னை நான் சமாதானப்படுத்திக் கொண்டேன். 'கவுண்டர் திறக்கிறார்கள். வரிசையில் போய் நில்லுங்கள்’ ஜெயம் வந்து எங்களிடம் கூறினார். வரிசையை நோக்கி விரைந்தோம்.
முதலில் பாதுகாப்பு படைப்பிரிவினர் ஒவ்வொருவரையும் மற்றும் சூட்கேசுகளையும் சோதனை செய்து உள்ளே அனுப்பினார்

169 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
கள். முதலில் எனது மைத்துனன், பின்னர் நான், மனவிை உள்ளே செல்ல எமக்குச் சற்றுத் தள்ளி சூரியனுயும், தாயாரும் வந்து கொண்டிருந்தனர். அடுத்தது கஸ்டம்ஸ்.
இதுவும் பிரச்சனை இல்லை. அந்தச் சோதனையையும் முடித்துக் கொண்டு முன்னேறினேன். என்னோடு என் மனைவியும் வந்து கொண்டிருந்தாள். மைத்துனன் எமக்கு முன்பாகவே முடித்துக் கொண்டு அடுத்தகவுண்டரில் நின்றான். அங்கு போடிங் பாஸ் எடுக்க வேண்டும். அக்கவுண்டரை நோக்கி வெற்றிகரமாய் நடந்தான். அவன் முன்னேறிக் கொண்டிருந்தது எனக்கும் உற்சாகமாய் இருந்தது. நானும் எனது மனைவியும் போடிங் பாசை பெற்றுக்கொண்டோம்.
அடுத்து. அடுத்ததில்தான்பிரச்சனை. அங்குதான்bXITவிசா கொடுத்துக் கொண்டிருந்தனர். சற்று நேரம் நின்று பார்த்தேன் ஒரு அதிகாரி தன்னிடம் வருமாறு கைகாட்டினான். நானும் மனைவியும் அவனிடம் சென்று பாஸ்போட்டை கொடுத்தோம். என்ன நிகழப் போகிறதோ என்று அச்சமாய் இருந்தது. எங்களையும் பாஸ் போட்டையும் மாறிமாறி பார்த்தவன் BXIT விசாவைக் குத்தி பாஸ்போட்டை தந்தான். உள்ளூர ஒரே மகிழ்ச்சி கடைசித்தடையும் தாண்டியாயிற்று இனி என்ன முழுமையாகத் தப்பியாகிவிட்டது. உள்ளம் குதிபோடநானும் மனைவியும் விமானநிலையத்தின் அடுத்த பகுதிக்குள் நுளையத் தயாராகினோம். அதற்கு முன் எனது நண்பன் சூரியன் எங்கே என்று திரும்பிப்பார்த்தேன்.
சூரியனை ஒரு அதிகாரி விசாரித்துக் கொண்டிருந்தான். சூரியனுக்கு போவதற்கு விசா தர முடியாது என்று அவன் மறுத்துவிட்டது தெரிந்தது. சூரியனுக்கு பிறகு வந்தவர்களுக்கு விசா குத்தி அனுப்பிய அதே அதிகாரி சூரியன் ஏதோ கேட்க, முடியாது என்று தலையசைத்துக் கொண்டிருந்தான். திரும்பிப் பார்த்தேன். சூட்கேசில் வெடிகுண்டுகள் இருக்கின்றதா என்று பரிசோதித்து உள்ளே அனுமதிக்கிற அதிகாரிகள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன கஸ்டகாலம் எனக்கு? என்ன செய்வ தென்றே தெரியவில்லை.நண்பனை விட்டுப் போகவும் மனமில்லை. அதற்காக அங்கு நின்று நானும் சிக்கலில் மாட்டுப்படுவதா? ஒரே

Page 89
செழியன் 170
குழப்பம். நண்பனை’சிக்கலில் விட்டுப் போவதில்லையென்றே முடிவு செய்தேன். என் மனைவியை நிற்கும் படிகூறிவிட்டு நண்பன் நின்ற கவுண்டரை நோக்கி நடந்தேன்.
ஒரு இக்கட்டான நேரம் அது. ஒருபுறம் எனது நண்பன். மறுபுறம் என்னையே பார்த்துக் கொண்டிருந்த நான்கு அதிகாரிகள். இந்த அதிகாரிகள் EXITவிசா எடுத்துக்கொண்டு வரும் பயணிகளை இறுதியாக சோதனை செய்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர். இவர்களிடம் போக வேண்டிய நான் மறுபடி பின்நோக்கிச் செல்வதைக் கண்டு அந்த அதிகாரிகள் சற்று வினோதமாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் எனது நண்பன் சூரியனையும், அவனது தாயாரையும் நெருங்கினேன்.
"சூரியனின் பாஸ்போட்டை பிரச்சனையாய் பார்க்கிறான். EXIT விசா தர முடியாதாம். சூரியனை விசாரணை செய்ய வேண்டுமாம்' சூரியனின் தாயார் பதட்டமாய் என்னிடம் கூறினார். அந்த அதிகாரியோ எங்களைக் கவனிக்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பயணிகளின் பாஸ்போட்டை வாங்கி சரிபார்த்து விசா குத்திக் கொண்டிருந்தான். "இப்ப என்ன செய்யிறது?’ சூரியன் கேட்டான் "உவனுக்கு காசு ஏதும் கொடுத்தால் ஒரு வேளை, விட்டு விடுவான். காசு இருக்குதோ?’ சூரியன் என்னிடம் கிசுகிசுத்தான். சூரியனிடமும், அவனது தாயாரிடமும் பணம் இல்லை. அது தான் என்னிடம் கேட்கிறான். எனக்கு பலமான ஒரு அதிர்ச்சி. இருந்த பணத்தைத்தானே சற்று முன்பு தாரைவார்த்துக் கொடுத்து விட்டேனே. என்ன பதிலை என் நண்பனுக்குச் சொல்வது எனத் திகைத்தேன்."காசு கொடுத்தால் வாங்குவானா? இல்லாட்டிஅதுவே பெரிய பிரச்சனையாய் போய்விடும். ' சூரியனிடம் ஈனசுரத்தில் கேட்டேன். "அடிக்கடி வியாபார நோக்கமாய் போகின்ற சிலரிடம் உவன்காசு வாங்கினதைக்கண்டனான். காசு கொடுத்தால் சரிவரும்’ சூரியன் சற்று உறுதியாய் கூறினான். 'காசு . காசுக்கு எங்க போறது?’ என் மனைவியிடம் கேட்டுக்கொண்டு வருகிறேன் என்று கூறி மறுபடியும் என் மனைவி நின்றுகொண்டிருந்த இடத்தை அடைந்தேன்.

171 ஒருமனிதனின்நாட்குறிப்பிலிருந்து
ஒரு அதிகாரி மட்டும் இப்போது பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற மூவரும் ஏனைய பயணிகளை சோதனை செய்து கொண்டிருந் தனர். தன்னிடம் பணம் ஏதுமில்லை என்று எனது மனைவியும் கூறிவிட்டாள். எனக்குத்தலை வெடித்துவிடும்போல் இருந்தது. என் மனைவியும் என்மீது பாய்ந்து விழுந்தாள் 'அந்தக் காசை வைத்திருந்தால் இப்ப கொடுத்திருக்கலாம் தானே' கரித்துக் கொட்டினாள். லஞ்சம் கொடுக்க முன்கூட்டியே தயாராய் வந்திருக்க வேண்டும். யோசிக்கவில்லையே இப்போ என்ன செய்வது? என் நண்பனைக்காப்பாற்ற வேண்டுமே?
என்னிடம் என்ன இருக்கிறதென்று யோசித்தேன். கையில் ஒரு பவுன் மோதிரம் இருந்தது. அதைக் கொடுப்போமா? கொடுத்தால் வாங்குவானா? லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பொருட்களை வாங்க விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவொன்றும் புனிதமான கொள்கையில்லை. ஆதராமாகப் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சமே. முயற்சிபண்ணிப்பார்ப்போம். சிந்தனை இவ்வாறு போய்க்கொண்டிருக்கிற போதுமின்னல்போல் திடீரெனஒரு விடயம் நினைவுக்கு வந்தது. ஆ. வேனில் வரும்போது வெளிநாட்டுக்காசு நூறு ரூபாய் ஜெயம் என்னிடம் தந்தார். அங்குபோய் இறங்கியதும் பயன்படும் என்று கூறி அதை அவர் தந்திருந்தார். அதைக் கொடுக் கலாம்தானே? பின்பொக்கெட்டில் இருந்த காசைஎடுத்துக்கொண்டு விரைந்து சென்று சூரியனின் தாயாரிடம் கொடுத்தேன்.
a 8 a நாட்டுக்காசா??? சற்றுத் தயக்கத்தோடுதான் தாயார் வாங்கினார். வெளிநாட்டுக்காசு அனுமதியின்றி நாம் கொண்டுபோக முடியாது. அதைத்தடுக்க வேண்டிய அதிகாரியிடமே அதைக் கொடுக் கலாமா? என்ற தயக்கம் அந்தத் தாயாரிடம் இருந்தது. வாங்குவதே லஞ்சம் அதில் என்ன சட்ட நுணுக்கம் வேண்டிக்கிடக்கும்? என்று நான் நினைத்தேன். சூரியன் பணத்தை அதிகாரியின் மேசையில் வைக்க அதை அதிகாரிதனது புத்தகம் ஒன்றால் இலகுவாக மறைத்துக் கொண்டான். "ம். நாட்டுக்காசு கொண்டுபோகிறாய்?’ என்று சிங்களத்தில் சற்றுக்காரமாகக் கூறியபடி சூரியனின் பாஸ்போட்டில் EXIT விசாவைக்குத்தினான்.

Page 90
செழியன் 172
பிறகென்ன தலைக்கு வந்தது நூறு ரூபாயுடன் போயிற்று. நாங்கள் விரைந்தோம். என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் ஏதும் விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். சாதாரணமாக சோதனை செய்துவிட்டு உள்ளே செல்ல அனுமதித்தனர்.
பயணிகள் தங்கும் அறையில் நாங்கள் காத்திருந்தோம். எமது விமானத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல பஸ் வரவேண்டும். அதுவரை அங்கு காத்திருந்தோம். மனதில் லேசான பயம் இருந்து கொண்டதான் இருந்தது. விமானத்தில் ஏறியபின்னர்கூட எங்களைக் கைது செய்யும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சற்று பயம் இருந்து கொண்டே இருந்தது. இனி எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காது என்ற நம்பிக்கையும் இருந்தது.
விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியது. "இன்று விமானம் ஒரு மணிநேரம் தாமதமாகவே புறப்படும்" என்று ஒரு அறிவிப்பு வந்தது. ஒரு மணிநேரம் அதிகமாகவே நாங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
மனதில் பாலா, மணி, பரதன், ஜெகன் ஆகியோர்உட்பட பலர் வந்து போயினர். நாங்கள் தப்பிவிட்டோம். இவர்கள் உட்பட என் இனிய நண்பர்களுக்கெல்லாம் என்ன நடக்கப்போகிறதோ? பல நண்பர்களின் முகங்களை மனதில் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்தேன்.
மாலை ஆறுமணி. விமானத்திற்கு எங்களை ஏற்றிச் செல்ல பஸ் வந்து நின்றது. விமானப் பணிப்பெண்கள் வந்தனர். ஒவ்வொரு பயணியினதும் 'போடிங் கார்டை வாங்கிக் கொண்டு பஸ்சில் ஏற்றினார்கள். எங்களது 'போடிங் கார்டை வாங்கிக் கொண்டனர். அழைத்துச் சென்று பஸ்சின் இருக்கையில் அமர்த்தினர். எல்லாப் பயணிகளும் ஏறியதும் பஸ் புறப்பட்டு விமானம் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கிச்சென்றது.
விமானத்தை அண்மித்ததும் பஸ்சில் இருந்த நாங்கள்
இறக்கப்பட்டோம். விமானத்தில் ஏறுவதற்கு முன் எமது பொதி களையும், சூட்கேஸ்களையும் அடையாளம் காட்டும்படிக் கேட்கப் பட்டோம். பயணிகள் அனைவரது சூட்கேசுகளும், மற்றும்

173 ஒரு மனிதனின்நாட்குறிப்பிலிருந்து
பொதிகளும் விமான தளத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்தது. எமது சூட் கேசை "இது எங்களுடையது' என்று அடையாளம் காட்டினோம். அதன் பின்னரே எமது சூட்கேசை விமானத்தில் ஏற்றினார்கள். நாங்களும் விமானத்திற்குள் செல்ல அனுமதிக்கப் பட்டோம்.
இவ்வாறு ஒவ்வொருவராக விமானத்திற்குள் ஏறினார்கள். யாராலும் அடையாளம் காட்டாத பொருட்களை விமானத்தில் ஏற்ற மாட்டார்கள். காரணம் வெடிகுண்டு பயம்தான். யாராவது பயணம் செய்வதுபோல் வந்து, பின் தான் வராமல் தனது வெடிகுண்டு சூட்கேசை மட்டும் விமானத்தில் அனுப்பிவிடக்கூடாது என்பதற் காகத்தான் இந்த அடையாள அணிவகுப்பு. விமானத்திற்குள் ஒவ் வொருவராக ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். ஜன்னல் வழியாக என் தேசத்தைப் பார்த்தேன். கடைசி முறையாகப் பார்த்தேன். இருட்டி விட்டது. விமான ஒடு பாதையில் மின்சார வெளிச்சம் மின்னியது. அருகில் அமர்ந்த என் மனைவியைப் பார்த்தேன். கண்களை மூடி சரிந்திருந்தாள். என்னவென்று சொல்ல முடியாத துயரம் வடிந்தது. சோர்ந்து போயிருந்தாள். "
எத்தனை எத்தனை சோகங்களைக் கடந்திருப்போம். என் சொந்த தேசத்தை விட்டுப்பிரிவது சோகங்களிலெல்லாம் துயரமான ஒரு கொடுமை. இந்தத் துயரத்தை நீங்கள் சுமந்தீர்களோ என்னவோ நான் சுமந்தேன். என்ன தவறு செய்தேன்! இந்த தேசத்தின் புதல்வன் நான். என் மண்ணைவிட்டு ஏன் நான்துரத்தியடிக்கப்பட்டேன்?
இராமன்அணைகட்டியபோது அணில் உதவியதாம். சுதந்திரம் வேண்டி என்தேசம் போர்க்கோலம்பூண்டது. நானும் ஒரு அணிலைப் போல மெலிந்து போன என் கரங்களை மக்களோடு மக்களாய் இணைத்துக் கொண்டது தவறா? எந்த ஒரு அந்நிய தேசத்திற்கும் என் தேசம் அடிபணியக் கூடாது என்று கூக்குரலிட்டது தவறா..? மூளையே இல்லாததுப்பாக்கிகள் சொந்த சகோதரர்களையே நோக்கி நீட்டப்பட்டதைக் கண்டித்தது தவறா? தேசத்தின் நலனுக்கு எதிராக ஒரு சிறு கல்லைக் கூட நகர்த்தாத என்னை தேசத்தைவிட்டே ஒடச்சொல்லி துரத்தியடித்தது சரிதானா? என்னை மட்டுமா துரத்தினார்கள்? எத்தனை எத்தனை பேர்?

Page 91
செழியன் /4
விமானம் ஓடுபாதையில் ஒடத் தொடங்கியது. வேகமா gig. . . . . . . get. . . . . . மெல்ல மெல்ல எழுந்து வானவெளியில் மிதந்தது.
மலைகளே!கற்களே! மேகக் கூட்டங்களே மக்களே! என் இனிய தேசமே. சென்று வருகிறேன். கண்ணீர் நிறைந்து வழிந்தது. சென்று வருகிறேன் என் ஜென்ம பூமியே! இங்குதான் பிறந்தேன். இங்குதான் வளர்ந்தேன். இப்போபிரிய நேர்ந்ததே.
வயல்களும், காடுகளும், மலைகள் நிறைந்த என் தேசம். தந்தையர் வாழ்ந்த தாய்த்திருநாடு. தந்தையும் தாயும் கூடிக் குலவி வாழ்ந்த பொன்னாடு.
விமானம் உயர உயரப் பறந்தது. என் தேசத்தில் இருந்து வந்த ஒளிக்கிற்றுக்கள் கண்சிமிட்டி விடை தருவதுபோல இருந்தது.
இனிய தேசமே மறுபடியும் நான் வருவேன். மனிதன் எனும் இனம் எழுந்து வரும் நாளில் மறுபடி நான் வருவேன். ஒருவேளை என் முற்றாத கன்வுகளோடு முதிர்ந்த வயதில் ஏதோ ஒரு நாட்டில் ஒரு அகதியாய் அநாதைப் பிணமாய் பனிக்கட்டிகளுக்கு நடுவிலோ, இயந்திரங்களுக்கு அடியிலோ மரணித்துப் போகலாம். காற்றே, மரம், செடி, கொடிகளே என் தலைமுறை மறுபடி இங்குதான் வேர்விட்டு, இருதளிர்கரம் நீட்டி வளரும். என்புதல்வர்கள், அல்லாது போனால் என் பேரர்களில் ஒருவர் வருவார்கள். இத்தாய்த்திருநாட்டை முத்தமிட வருவார்கள். இனிய தேசமே தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதும் தவறு செய்திருந்தால் தங்கள் கண்ணிரால் என் பாவங்களை இவர்கள் கழுவுவார்கள். தேசமே என்தலைமுறையையாவது இங்கு வாழவிடு. விமானம் மேகக் கூட்டத்தினுள் புகுந்து தொலைந்து போனது.


Page 92