கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனி பெய்யும் இரவுகள்

Page 1
YAKE *
Hillifi リ စူကြီး
äTA
 
 

AYISYEBA||13. |* b)): ||*
栉 KEER MYNYM AAI Ali ಗ
* 粤
s
* o/Sš 爬 אין אוזולאיטליה: VT T |
ܘܲ.
1 ..'ሓዛ ) Hiሆቼዘቖ፡" "[
v?AFA338ğ A=AsegAgFg-Sé--
is

Page 2

பனி பெய்யும் இரவுகள்
(நாவல்)
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
விற்பனை உரிமை பாரி நிலையம் 184, பிராட்வே : : சென்னை-600 108,

Page 3
முதல் பதிப்பு: செப்டம்பர், 1993
விலை: ரூ. 24-00
PAN PEYYUM IRAVUGAL A Tamil Social Novel by RAJESWAR BALASUBRAMANIAM (C)
First Edition SEPTEMBER 1993 Pages 192 Size 18 Ж 12.5 Cm. Types 10 Point Paper ; 11.6 Kg, Creamwove Binding Duplex Board Price Rs... 24-00 Published by KUMARAN PUBLISHERS
27, 2nd Street, Kumaran Colony, Vadapalani, Madras-600 O26. Printed by · ALAGAL ACHAGAM
36, South Sivan Koil Streets Kodambakkam, Madras-600024

அறிமுகம்
தமிழர்கள் கூலிகளாக 19-ஆம் , 20-ஆம் நூற்றாண்டு களில் பல நாடுகளுக்குச் சென்று குடியேறிய கதைகளை வரலாறு கூறும்; பின்னர் கல்வி கற்கவும் பொருள் தேடும் நோக்குடனும் மேல்நாடுகளுக்குச் சென்றனர். அண்மை யில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப் பட்டவர்களும் வாய்ப்பும், வசதியும், வரவேற்பும் தந்த உலக நாடுகளெல்லாம் குடிபுகுந்துள்ளனர். சிறப்பாக இந்தியா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து நாடுகளைக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் குடிபெயர்ந்தவர் அந்நாட்டவருடன் ஒன்றி விடவில்லை. ஒன்றிவிட முடியவுமில்லை. தமது இனம், மொழி, மதம், பண்பாடு, கலை, இலக்கியங்களைப் பேணி வருவதோடு அவற்றை வளர்ப்பதிலும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ் மொழியில் மட்டுமே இவர்கள் தேர்ச்சி பெற்றிருந்ததும் இதற்கு முக்கிய காரணமாகும்.
அண்மைய அச்சுத் தொழில்நுட்ப் வளர்ச்சி சென்ற இடங்களிலெல்லாம் தமிழ் மொழியிலேயே பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்களை எல்லாம் வெளியிடவும் வாய்ப் பளித்துள்ளது. தமிழ்நாடு சார்ந்த தமிழர்களும் கல்வி, பொருள் தேடும் காரணமாக இதே நாடுகளில் குடி பெயர்ந்து வாழ்ந்தபோதும் இலங்கைத் தமிழர்கள் குடி யேறிய பின்னர் ஏற்பட்ட விழிப்புணர்வு முன்னர்

Page 4
6
என்றும் ஏற்பட்டதில்லை என்று கூறும்போது மலேசியா சிங்கப்பூரை விதிவிலக்காகவே கூறவேண்டும்.
குடிபெயர்ந்த நாட்டிலிருந்து கலை, இலக்கியம் படைப்போரும் தமது சுற்றாடலை மறந்துவிட முடியாது. அங்கு வாழும் மக்கள் இடம், பொருள்கள், உணவு, உடை, வசிப்பிடம், பாவனைப் பண்டங்கள், வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களையும் மறந்துவிட முடியாது. அத்தோடு தாம் பிறந்து வளர்ந்த மண்ண்ை யும், மக்களையும்கூட நினைவிலிருந்து எடுத்துவிட முடியாது. மேலும் தமது நாட்டு அரசியல், உலக அரசியல் போராட்டங்கள், பொருளாதார மாற்றங்கள், கல்வி, வேலையில் லாத் திண்டாட்டம் ஆகியவற்றையும் விட்டுவிட முடியாது.
திருமதி. ராஜேஸ்வரியின் இந்நாவலில் இவை: யாவற்றையும் சிறப்புறக் காணலாம். இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியவரின் வாழ்க்கை, இலங்கையின் இனப்பிரச்சனையால் பாதிக்கப் பட்ட மலையகத் தமிழரின் பிரச்சனையும் கதையில் நன்கு பின்னப்பட்டுள்ளது.
வளைகுடா யுத்தத்துடன் இலண்டன் நகரிலேயே கதை ஆரம்பமாகிறது. பின்னோட்டமாக கதை மாந்தர் முன்னர் மலையகத்திலும் கொழும்பிலும் வாழ்ந்த வாழ்க்கை, அங்கு ஏற்பட்ட எதிர்பாராத பிணைப்புகள், முரண்பாடுகள் நாவலில் கூறப்படுகின்றன. இலண்டன் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் நாவலெங்கும் பரவி இருந்த போதும் மன ஓட்டங்களும் உணர்வுகளும் அத்தனை வேகமாக மாறிவிடவில்லை என்பதையும் கதை
காட்டுகிறது.

y
அடிப்படையில் நாவல் காதல் கதையையே கூறுகிறது" விசித்திரமான, வியப்பான காதற் கதை. தீவிர காதலில் காதலர் ஒருவரை ஒருவர் தமக்கே உரிய சொத்தாக எண்ணிக் கொள்வது, அதனால் ஏற்படும் சந்தேகங்கள், பொறாமை உணர்வுகள், காதலரிடை ஏற்படும் பிணக்கு கள் அவற்றால் ஏற்படக் கூடிய மனத்துன்பங்கள் யாவும் நாவலில் வருகின்றன. முன்னேறிய இலண்டன் மாநகரிலுமா இவ்வாறான எண்ணங்கள் என்று எண்ண வும் தோன்றலாம்.
பருவகால அடிப்படையில் தோன்றும் காதல், காதலுக்காக தன்னை அர்ப்பணிப்பது, பரஸ்பரம் உணர்ந்து கொண்டவரின் இன்டெலெக்சுவல் காதல் என மூன்றாகக் காதலைப் பிரித்துப் பார்க்கும் கோட்பாட்டை ஆசிரியர் கதை மாந்தர் மூவரின் தனிப்பட்ட காதலு ணர்வுகள் மூலம் நாவலில் காட்ட முனைந்துள்ளார். குழந்தைக்காக ஏங்கும் கதாநாயகிக்கு “ரெஸ்ட் ரீயூப் பேபி"க்கு வழிகாட்டுகிறார் ஆசிரியர். அதற்காகக் கணவன் கையாளும் முறை வியப்பானது மட்டுமல்ல, அவரின் விரிந்த மனப்பான்மையையும் கூறுகிறது. பெண்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்ற வழக்கமான ஆணாதிக்கக் கருத்திற்கு மாறாக ஆண்களா லும் முற்போக்காக வாழ்ந்து தியாகம் செய்ய முடியும் என ராமநாதன் என்ற பாத்திரம் மூலம் ஆசிரியர் காட்ட முயன்றுள்ளார்.
நாவலாசிரியர் திருமதி ராஜேஸ்வரி பாலசுப்ர மணியம் 1983-இல் ஏற்பட்ட இலங்கை இனக் கலவரத் திற்கு முன்னரே இங்கிலாந்தில் சென்று குடியேறியவர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்திலும் இலண்டனிலும் கல்வி கற்றவர். சினிமாத் துறை யிலும் கற்று

Page 5
8
பட்டம் பெற்றவர். மூன்று பிள்  ைள களுக்கு த் தாயானவர். பெண் விடுதலை இயக்கங்களிலும் மிக்க ஈடுபாடுள்ளவர். இலங்கை, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, கனடா நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகை, பத்திரிகைகளில் நாவல், சிறுகதை, கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். தமிழ் நாட்டிலும் இவரது தேம்ஸ் நதிக் கரையில், உலகமெல்லாம் வியாபாரிகள், தில்லையாற்றங் கரையில் ஒரு கோடை விடுமுறை ஆகிய நாவல்கள் மூலம் நன்கு அறிமுகமானவர்.
பணி பெய்யும் இரவுகள் என்ற இந்நாவல் இவரை மேலும் சிறப்பாக அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேக மில்லை.
செ. கணேசலிங்கன். 5-9-93

பணி பெய்யும் இரவுகள்
1
"சினேகிதர்களுடன் சேர்ந்து காரில் போயிருக் கலாமா"- தியாகராஜன் சூட்கேசைத் தூக்கி இருக்கைக்கு மேல் வைத்தபோது யோசித்தான். அவர்களுடன் பிரயாணம் செய்தால் எடின்பரோவி லிருந்து லண்டன் போய்ச் சேர ஒரு நாளைக்குமேல் எடுக்கலாம்; ரெயிலில் என்றால் இரவு பன்னிரண்டு மணிக்கு முதல் போய்ச் சேர்ந்து விடலாம். அவனுடைய சினேகிதர்கள் எ ப் போ து இந்த ட்ரெயினிங் முடியும் என்று காத்திருந்தவர்கள்போல் மத்தியானம் பயிற்சி முடிந்தவுடனேயே குடித்துக் கும்மாளம் போடத் தொடங்கி விட்டார்கள். தியாகராஜன் பக்குவமாக ஒதுங்கிக் கொண்டான். கடந்த இரண்டு கிழமைகளாகக் காலையில் ஒன்பது மணியிலிருந்து பின்னேரம் நான்கு மணி வரை ஓயாமல் லெக்ஸர் நடந்து கொண்டிருக்கும். அதன் பின்னரும் சினேகிதர்கள் ஒன்று சேர்ந்தால் மத்தியானம் நடந்த கொம்பியூட்டர் லெக்ஸர் பற்றிப் பேசிக் கொண்டிருப் பார்கள்; கொம்பியூட்டர் பற்றிக் கதைக்காத நேரங்களில் காதலிகள் பற்றிக் கதைக்கத் தொடங்கி விடுவார்கள். தியாகராஜனைத் தவிர இந்தியரோ கறுப்பரோ யாரும் அந்தக் குழுவில் இல்லை. ஆங்கிலேய இளைஞர்களுடன்

Page 6
O பணிபெய்யும் இரவுகள்
சேர்ந்து அவர்களைப் போல் அரட்டையடிக்க தியாகுவால் முடியவில்லை. தியாகுவின் சினேகிதன் மால்கம் ஹரிசன் நல்லவன்; தியாகுவின் தர்ம சங்கடங்களைப் புரிந்து கொண்டவன்; இயலுமானவரையில் தியாகுவுடன் திரிவான். தனக்காக மால்க்கம் தன் சந்தோசங்களைத் தவிர்த்துக் கொள்வதை தியாகு விரும்பவில்லை.
மால்க்கம் ஹரிஸனின் கா ரி ல் இவனையும் வரச் சொல்லிக் கேட்டான். தியாகு தான் ரெயினில் லண்ட னுக்குப் போவதாகச் சொல்லி விட்டான்.
மால்கமும் சினேகிதர்களும் மத்தியானமே புறப்பட்டு விட்டார்கள். எடின்பரோவிலிருந்து லண்டனுக்கு நானூறு மைல்களாவது இருக்கலாம். அதை எட்டு அல்லது ஒன்பது மணித்தியாலங்களில் கடந்து விடலாம். ஆனால் அந்தக் கூட்டம் எந்தக் கிளப்பில் அல்லது எந்த போரில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்குமோ என்ற பயத்தில் தியாகு மறுத்து விட்டான். "ஏன் இந்தச் சாட்டெல்லாம், ராதிகாவைப் பார்க் காமல் உன்னால் இருக்க முடியாது என்று சொல்லேன்" -மால்க்கம் நண்பனைச் சீண்டினான். தியாகு மால்க்கத்திற்குப் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டான்.
"ராதிகாவைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியாதா?" தியாகு தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ரெயின் இன்னும் வெளிக்கிடவில்லை. கொம்பனியின் காசில் முதல் வகுப்பில் பிரயாணம் செய்வது சுகம்தான். இவனுக்கு முன்னால் ஒரு மத்தியதர வயதுக்காரப் பிரமுகரைத் தவிர யாரும் இல்லை.

ராஜேஸ்வரி
அந்த மனிதர் இவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கெளரவமான மனிதர் என்று ஒரு நிமிடத்தில் மதிப்பிடக் கூடிய தோற்றம். இன்னும் ஆறு மணித் தியாலங்களுக்கு இருவரும் பிரயாணம் செய்ய வேண்டும்.
இவன் கையிலிருந்த கார்டியன் பேப்பரை விரித்தான். அவர் ஏதோ சொல்லத் தொடங்குவதற்காகத் தொண்டையைக் கனைத்தார்.
தியாகு நிமிர்ந்து பார்த்தான். "என்ன இருக்கும் பேப்பரில், எல்லாம் இந்த யுத்தத்
தைப் பற்றித்தானே இருக்கும்" அவர் அலுப்புடன் சொன்னார் .
தியாகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட எல்லா வெள்ளைக்காரர்களும் இந்த வளைகுடா யுத்தத்தை ஆதரிக்கிறார்கள் என்றுதான் இதுவரைக்கும் நினைத்திருந்தான்.
இவர் வித்தியாசமான மனிதராக இருக்கிறாரே!
இவன் பத்திரிகையை LD וg 69 9ש வைத்தபடி சொன்னான்.
'எதையாவது எழுதி பத்திரிகை விற்பனையானால் சரி என்று இந்தப் பேப்பர்கள் போட்டி போடுகின்றன."
தன் அரசியல் பாகுபாட்டை அவரிடம் சொல்லாமல் அவன் பொதுப்படையாகச் சொன்னான்.
"என்னை அறிமுகம் செய்யாமலே உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே" கிழவர் குரலில் என்னை மன்னித் துக்கொள்ளுங்கள் என்ற பாவம் தொனித்தது 'எனது பெயர் ஜேம்ஸ் மக்பேர்ஸன்." கிழவர் கை குலுக்கினார்.

Page 7
2 பனிபெய்யும் இரவுகள்
"எனது பெயர் ராஜன்" ஆங்கிலேயர்களுக்குத் தன் முழுப் பெயரையும் சொல்லி அவர்களைத் திண்டாட வைத்து அவன் பட்ட பாடு அவனுக்குத்தான் தெரியும். சுருக்கமான பெயராக இல்லாவிட்டால் அவர்களின் வாயில் எங்கள் பெயர்கள் படும்பாடே பெரிய பரிதாபம் தான். "ராஜன்?" கிழவர் சந்தேகத்துடன் இவனைப் பார்த் தார். தியாகராஜன். தியாகுவைக் குறைத்து விட்டு ராஜன் என்று மட்டும் தன்னை அறிமுகம் செய்து கொள்வான்.
கிழவன் இவனை உற்றுப் பார்த்தார். முகத்தில் எத்தனையோ விதமான சிந்தனைகள் தோன்றி மறைந்த தின் எதிரொலிப்பு தெரிந்தது. வெள்ளைக்காரன் தன் நரைத் தலையைத் தடவிக்கொண்டு இவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
இலங்கையனா"
தியாகு ‘யேஸ்" என்றான். "உன்னைச் சந்திப்பதில் சந்தோசமடைகிறேன், நானும் இலங்கையில்தான் பிறந்தேன். சுதந்திரம் கிடைத்தபின் எடின்பரோவுக்கு வந்துவிட்டோம்" கிழவனின் முகத்தில் ஒரு பெரிய மலர்ச்சி. "என்ன ஆச்சரியம். இலங்கையிற் பிறந்த இரு மனிதர் கள்." கிழவர் தலையை ஆட்டிக்கொண்டார். ரெயின் புறப்படத் தொடங்கிவிட்டது. எடின்பரோவின் மலைத் தொடர்கள் நகரத் தொடங் கியது போலிருந்தது. தியாகு ஓடும் ரெயினின் ஜன்னலால் வெளிப்புறம் பார்த்தான்.

ராஜேஸ்வரி 1S
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பெரிய மாமா வீட்டுக் குப் போய்விட்டுப் பதுளையிலிருந்து ட்ரெயின் எடுத்து கொழும்புக்கு வரும் ஞாபகம் வந்தது.
பின்னேரம் நான்கு மணிதான் என்றாலும் வின்ரரின் கொடிய இருளும் குளிரும் ஜன்னலால் தெரியும் காட்சி கிளை மறைத்துக் கொண்டிருந்தது.
“எடின்பரோ பிடித்ததா' கிழவர் தன் ஒவர் கோட்டைக்
கழட்டி விட்டு சேர்ட்டுடன் உட் கார்ந்திருந்தார். இவர் களுக்கு இதெல்லாம் பழக்கம், எத்தனை வயதென்றாலும் குளிரே தெரியாத மாதிரி நடக்கும் கிழவர்களை அவன் கண்டிருக்கிறான்.
அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினான். கடந்த இரண்டு கிழமைகளும் எடின்பரோவில் நின்றிருந் தாலும் பகல் நேரம் முழுக்க ட்ரெயினிங்கில் முடிந்துவிட பின்னேரம் நண்பர்களுடன் சுத்தியடிக்கத்தான் சரியாக இருந்தது. சனிக்கிழமை எடின்பரோ கோட்டைக்குப் போயிருந்தான். அங்கிருந்து எடின்பரோவைப் பார்ப்பது கண்டி அல்லது பதுளை மலைச் சாரல்களிலிருந்து நகரங் களைப் பார்ப்பது போலத்தானிருக்கிறது.
எடின்பரோவைச் சுற்றிக் கடலிருக்கிறது, நுரை பொங்கும் அலைகள் குன்றுகளிலும் பாறைகளிலும் அடித் துத்திரும்பியது. பதுளை மலை முகட்டிலிருந்து பணி மூடிய காலைகளில்- மலையடியின் நகரத்தைப் பார்த் தால் புகார்க்குள்ளால் இந்தியத் தொழிலாளியின் சிறு குடிலின் மெல்லிய விளக்கொலி மின் மினியாய்த் தெரியும். . "உங்களின் அழகிய நகரத்தைப் பற்றி நான் அதிகம் சொல்லுமளவுக்கு என்னிடம் அனுபவமில்லை" மரியாதை :பாகச் ச்ொன்னான்.

Page 8
4 பனிபெய்யும் இரவுகள்
வித்தியாசம்தான், லண்டனுக்கும் எடின்பரோவுக்கும் எத்தனையோ வித்தியாசம், பதுளைக்கும் கொழும்புக்கு முள்ள வித்தியாசம் போல் எத்தனையோ வித்தியாசம் என்பதைச் சொன்னால் அவனுக்கு விளங்கப் போவ: தில்லை.
சுவாத்திய நிலையில், சூழ்நிலையில், மனிதரின் பழக்க வழக்கத்தில் மட்டுமா கொழும்புக்கும் பதுளைக்கும் வித்தி uurt Fo?
அவன் தற்செயலாய் ஏதோ சொல்ல நினைத்ததும் அதே நேரம் அவன் மனத்திரையில் மறந்து விட்டதாக நினைத்த எத்தனையோ சம்பவங்கள் நிழலாடின.
அடிமனத்தில் உறைந்து கிடந்த எத்தனையோ பழைய ஞாபகங்களை இந்த எடின்பரோ ஞாபகப்படுத்தியதை அவன் உணர்ந்தான். அந்த உணர்வின் துயரில் நேரத்தைச் செலவழித்தால் தன் மனநிலையில் என்ன மாற்றம் வரும் என்று அவனுக்குத் தெரியும். எடின்பரோவுக்கு அவன் ட்ரெயினிங் விஷயமாக வந்திருந். தான். வந்த ஒன்றிரண்டு நாட்கள் இந்த நகரின் கம்பீர மான, கலைத்துவமான, மோகனமாக அழகை அவன் ரசிக்கவில்லை. எடின்பரோ வந்து மூன்றாம் நாள் மால்க் கமும் மற்றவர்களும் கிளப்புக்கு குடிக்கப் போனபின் எடின்பரோ ரோட்டையைச் சுற்றியபடி நடந்தான்.
அன்று-அவன் எடின் பரோ கோட்டைக்கு ஏறி எடின் பரோ நகரைப் பார்த்தபோது திடிரென்று அவன் மனத் தில் பெரிய மாமாவும் செந்தாமரையும் சாரதாவும் வந்து நின்றார்கள். அவர்களுடன் சேர்ந்து பதுளையின் உயர்ந்த மலைச்சாரல் தோட்டங்களில் நடந்த ஞாபகம் மனதைக் குடைந்தது. சாரதாவைப்பற்றி அதிகம் நினைக்கக் கூடாது என்று

ராஜேஸ்வரி 1籌
தனக்குத் தானே செய்து கொண்ட முடிவை எடின்பரோ நகரம் சிதைத்து விட்டது. நீண்ட நேரம் கோட்டையின் விளிம்பில் நின்றபடி தூரத்தே கல கலப்பாக இருக்கும் எடின்பரோவை வெறித்துப் பார்த்தான். வெள்ளைக்காரர்கள் செல்லமாக ஆடம்பரமாக வாழ்கிறார்கள்.
பதுளை மலைமுகடும் எடின்பரோ கோட்டையின் விளிம்புக்கும்தான் எத்தனை வித்தியாசம் "என்ன தூங்கப் போகிறீர்களா" ஜேம்ஸ் மக்பேர்ஸன் கேட்டார்.
ரெயில் இருளைப் பிழந்து கொண்டு லண்டன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. "லண்டன் போய்ச் சேர இரவு பதினொரு மணியாகலாம். அதற்கிடையில் நானும் ஒரு குட்டித்தூக்கம் போடத்தான் செய்வேன்"
ஜேம்ஸ் உற்சாகத்துடன் சொன்னார்; தான் எப்போதும் எதையும் திட்டமிட்டுச் செய்வதான பிரகடனம், "எனக்குப் பதினொரு மணிக்குமேல் நித்திரை செய்து பழக்கமில்லை" **நல்ல பழக்கம், உன் வயதுக்கு நல்லது, எனக்கு அறுபது வயது, நீத்திரையே வராது, பிரயாணம் செய்த களைப் பில் நித்திரை வந்தால் அதைக் குழப்பிக் கொள்ள மாட் டேன். எல்லாம் எங்கள் அனுபவத்தையும் முயற்சிகளை யும் பொறுத்தது என்று நினைக்கிறேன் நீ என்ன நினைக் கிறாய்" கிழவர் பேப்பர் எடுத்து விரிக்கத் தொடங்கினார். ஜேம்ஸ் கிழவர் தியாகராஜனுடன் பழகும் ஆங்கிலேயர் போலில்லை. ஸ்கொட்டிஸ் மனிதர்கள் சினேகிதமாகப் பழகக்கூடியவர்கள் என்பதற்கு மால்க்கம் ஒரு உதாரணம்.

Page 9
16 பனிபெய்யும் இரவுகள்
தியாகராஜனின் நண்பன் மால்க்கத்தின் தாய் ஸ்கொட்டிஷ், தகப்பன் ஆங்கிலேயன் மிகவும் அன்னி யோன்னியமாய்ப் பழகிக் கொள்வான். *எனது வயது உங்கள் வயதின் அரைவாசிதானாகிறது. உங்களைப் போல அனுபவங்கள் வரும்போது, எனது முயற்சிகளையும் திட்டமிட்டுக் கொள்கிறேன்."
கிழவர் வாய் விட்டுச் சிரிந்தார். அவனுக்கு அவரைப் பிடித்து விட்டது.
ரெயின் லண்டனுக்கு வந்து சேர்ந்தபோது இரவு பதி னொரு மணிக்கு மேலாகி விட்டது.
ஜேம்ஸ் தனது கொலிஜ் விடயமாக ஒரு கொன்பரன்ஸ் சுக்கு வந்தாராம். லண்டனில் தான் தங்கி நிற்கும் ஹோட் டலின் நம்பரையும் கொடுத்தார்.
அவர் ஒரு பிலோசபி லெக்ஸரர். இந்தியத் தத்துவத்தில் அவருக்கு அபாரமான ஈடுபாடு. அவனுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பினார்.
தியாகராஜாவுக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை. "நான் ஒரு இலங்கையன்தான், இந்து சமயம் என்று சொல்லிக் கொள்பவன்தான் ஆனால் எனக்கு உங்களுடன் சமமாகப் பேசுமளவுக்கு இந்துத் தத்துவத் தைப் பற்றி எனக்குத் தெரியாது" அவன் தாழ்மையுடன் சொன்னான்.
ஜேம்ஸ் கல கலவென்று சிரித்தார். அவர் பற்கள் வெண் மையாக இருந்தன. செயற்கைப்பற்களாக இருக்கலாம். இல்லா விட்டால் ஆங்கிலேயர்களுக்கு அறுபது வயதில் இவ்வளவு அழகான பற்கள் இருக்காது. "வாழ்க்கையே ஒரு தத்துவம்தானே” ஜேம்ஸ் தன் சூட் கேசைத் தூக்குக் கொண்டார்.

ராஜேஸ்வரி 17
'கல்யாணமாகி விட்டதா" அவர் குரலில் கனிவு.
"இல்லை" என்றான் இவன் கல்யாணம் முடிவானதைச் சொல்லலாமா?
'a-6 gaolu வயதில் எனக்கு மூன்று குழந்தைகள்
பிறந்து விட்டார்கள். டோன் வேஸ்ட் யுவர் டைம்" கிழவர் குறும்புடன் அவன் தோள்களைத் தட்டிக் கொடுத் தார்.
"காதலி எப்படி" கிழவர் மிகவும் குறும்புக்காரன்தான். அவன் சங்கோஜத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண் list air.
*உன் அவசரத்தைப் பார்த்தால் அவளில் நீ பைத்தியமாய் இருப்பாய் என்று தெரிகிறது" ஜேம்ஸின் குரலில் இன்னும் குறும்பு. ராதிகாவில் நான் பைத்தியமாக இருக்கிறேனா? தனக்குள் வந்த கேள்வியைத் தானாகத் தடைசெய்து கொண்டான், *"கீப் இன் ரச். ஸ்ரீ யு' கிழவர் லண்டனின் தெருக்கமான சனத்திரளில் ஒருத்தராய் மறைந்து விட்டார். அவர் கொடுத்த டெலிபோன் நம்பரை எடுத்து வைத்துக் கொண்டான்.
நேரம் பன்னிரண்டு மணியாகப் போகிறது. வீட்டுக்குப் போக அண்டர் கிரவுண்ட் ரெயினுக்குப் போய் அவதிப் பட அவன் தயாராக இல்லை.
ஸ்டேசனை விட்டு வெளியே வந்ததும் தைமாதக் குளிர் தோலை ஊடுருவிக் கொண்டு எலும்பைத் துளைப்பது போலிருந்தது.
டாக்ஸியில் ஏறுமட்டும் குளிர் நடுக்கம் தாங்க முடியாம லிருந்தது. நிம்மதியாக கண்ணை மூடியதும் ராதிகாவின் முகம் மனக்கண்ணில் தவழ்ந்தது.

Page 10
18 பனிபெய்யும் இரவுகள
இன்னும் அரைமணித்தியாலத்தில் அவளின் தழுவல் கிடைக்தம் என்ற நினைவே உடம்பில் திடீரென்று: சூட்டை உண்டாக்கியது. எப்படி அவளைப் பிரிந்து இரண்டு கிழமைகள் எடின் பரோவில் சீவித்தேன்; அவனுக்கே விளங்கவில்லை. அவளுக்கும் அவனுக்குமுள்ள நெருக்கம் எப்படிப்பட்டது என்பதை எடின்பரோவில் தங்கியபோதுதான் உணர்ந் தான்.
2
டாக்ஸி போய்க் கொண்டிருந்தது. வீடுவர இன்னும்: ஒன்றிரண்டு நிமிடங்களேயிருந்தன. டாக்ஸிக்காரனுக்குக் கொடுக்க காசை எடுத்தான். அடுத்த கை சூட்கேசைத் தூக்கியது. டாக்ஸிக்காரன் காசைப் பெற்றதும் "குட் நைட் சேர்" என்றான். அவனுடைய வீட்டின் மேல்மாடியில் லைட் எரிந்து கொண்டிருந்தது. வழிமேல் விழிவைத்து அவள் பார்த் திருப்பாள். இன்று வரப்போவதாகச் சொன்னதுமே "உங்களுக்கு, என்ன சமைத்து வைக்கலாம்" என்று கேட்டாள். ராதிகா. அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. ராதிகாவுக்கும் சமையலுக்கும் வெகுதூரம் இருந்தாலும் இவனுக்காக எதையாவது சமைக்க ஆரம்பித்து இவ னிடம் வம்புக்குப் போவாள் அவள்.

ராஜேஸ்வரி 19
வீட்டுக் கதவைத் திறந்ததும் அவள், மேல்மாடியிலிருந்து தட தடவென்று ஓடிவரும் சத்தம் கேட்டது. "ஹலோ ராஜன்' ஓடி வந்தவள் இவனில் கொடியாய்த் துவண்டாள். வெளியே பனி பெய்யத் தொடங்கியிருக்க வேண்டும். சட்டென்று குளிர் கதவிடுக்கால் வரத் தொடங்கியது. "டார்லிங் ஐ மிஸ்ட் யு" அவளின் முணுமுணுப்பு அவன் இதழ்களில் அரை குறையாய்ப் படிந்தன.
அவன் அதிகம் பேசாதவன். அதுவும் இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் என்ன் பேச இருக்கிறது? "எப்படிப் பிரயாணம்" "இதைவிட விரைவாக வரமுடியவில்லை" அவன் அவளின் கன்னத்தைச் சீண்டினான்.
"எப்படி எடின் பரோ" அவள் கேட்ட கேள்விக்கு அவன் சொல்ல மறுமொழி வாயில் வரமுதலே அடங்கி விட்டது. எடின்பரோவின் குளிரும், அமைதியும், மலைமுகடு களும் பதுளையை ஞாபகப் படுத்தியது என்று சொன் னால் ராதிகா எப்படி நடந்து கொள்வாள் என்று தெரி աn gi].
"எப்படி எடின் பரோ என்றால்."
அவன் தோள்களில் தொங்கிய அவள் கரங்களை விலக்கி விட்டு அவள் கண்களை உற்றுப் பார்த்தான். இவள் என்ன இவள் கண்களுக்குள் காந்தத்தையா புகுத்தி
வைத்திருக்கிறாள்? அப்படியே அவனுடையவனாகி விடு கிறாளே!
"பசிக்கவில்லையா" அவள் செல்லமாய்க் கொஞ்சினாள்.
"கடையில் சாப்பாட்டை மைக்ரோ ஆவணில் வைத்திருக் கிறாயா" அவன் கிண்டலாகக் கேட்டான்.

Page 11
20 பனிபெய்யும் இரவுகள்
"ஏதோ சாப்பாடு தயாராக வைத்திருக்கிறேன் என்ற நன்றியில்லாமல்." அவள் செல்லமாய்ச் சிணுங்கினாள்? இவனுக்குக் கடைச் சாப்பாடு பிடிக்காது. ஆனாலும் அவள் என்ன செய்து வைத்திருந்தாலும் அவன் அவளுக் காகச் சாப்பிடத்தயார். ズ
"நீ எப்படி இருக்கிறாய் ராதிகா, படிப்பெல்லாம் எப் படிப் போகிறது" அவன் டையைக் கழட்டிக்கொண்டு கேட்டான்.
'படிப்புக்கென்ன மூட்டை மூட்டையாகப் புத்தகங் களைக் குவித்து வைத்திருக்கிறேன். இந்த வருடம் என் சோதனை முடியும் வரைக்கும் ஒரு இடமும் போவதில்லை என்று முடிவு கட்டியிருக்கிறேன்.
"என்னிடம் கூட வரமாட்டாயா"
“என்னால் அது (Մ)ւգեւյւDm" *வள் பட்டென்று கேட்டாள். அவளுக்கு ஒளித்து பிறைத்து ஒன்றையும் பேசமுடியாது. நேரே ே நரே எதையும் சொல்லி விடுவாள். லண்டனில் பிறந்து வளர்ந்த தன்மை அதுதான். எதையும் சாட்டுக்கும் போக்குக்கும் சொல்ல மாட்டாள். தனக்குப் பிடிக்காதவர்களுடன் பேச்சு வார்த்தை கூட வைத்துக்கொள்ள மாட்டாள்.
அவளுக்குப் பதில் சொல்ல நினைத்தவனுக்கு சட்டென்று ஒலித்த டெலிபோன் தடைபோட்டது. "என்ன இந்த நேரத்தில் யார் போன் பண்ணுகிறார்கள்? அவன் கேள்விக்குறியுடன் முகத்தைச் சுழித்துக் கொண்டான்.
ராதிகாவின் முகத்தில் ஒரு வினாடியில் தோன்றி மறைந்த அதிருப்தியை அவன் கவனிக்கவில்லை.

gтGgovori 2
அவன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு மணிக்கு, ஐந்து நிமிடமிருநதது.
"ஹலோ.”*
"நான்தான் ராமநாதன் பேசுறன்" தியாகராஜன் தன் ஆச்சரியத்தைக் காட்டிக் கொள்ளவில்லை.
"ம்." ராமநாதனின் குரலில் தயக்கம். "என்ன விசயம்." தியாகு பொறுமையாய்க் கேட்டாலும்
அவன் வயிற்றில் ஏதோ பூச்சி ஊர்வது போன்றதொரு உணர்ச்சி.
சாரதாவுக்கு ஒன்றும் நடக்காமலிருக்க வேண்டும். அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
"சாரதா ஹொஸ்பிட்டலிலிருக்கிறாள்"
ராமநாதன் ரேடியோ அறிவிப்பாளர் சொல்வதுபோல். மெளனமாகி விட்டார், இவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் தொண்டைக்குள் ஏதோ கல் அடைத்துக் கொண்டதுபோல் இருந்தது.
* என்ன சுகவீனம்" தியாகுவின் குரல் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. "கொஞ்ச நாளாகச் சுகமில்லை. போன கிழமைதான் ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணினன். வயிற்றில ரியுமர் என்று டொக்டர் சொன்னார். ஒப்பரேஷன் செய்ய வேண்டுமாம்."
ாமநாதனின் தொனி பெலவீனமாக இருந்தது.

Page 12
22 பனிபெய்யும் இரவுகள்
"நான் போன கிழமையிலிருந்து போன் பண்ணினன். நீங்கள் ஸ்கொட்லாந்துக்குப் போய் விட்டதாகவும் இன்று வர இருப்பதாகவும் சொன்னாள்." போன கிழமையிலிருந்து ராமநாதன் போன் பண்ணிக் கொண்டிருக்கிறார்! ராதிகாவுடன் அவன் ஒவ்வொரு இரவும் ஸ்கொட்லாந்தி லிருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவள் சாரதா சுகமில்லாமலிருப்பது பற்றி மூச்சுக் கூட விடவில்லை! தியாகு சாப்பிட்டு மேசையில் மிக ஒழுங்காகக் கோப்பை களையும் கிளாஸ்களையும் வைத்துக் கொண்டிருக்கும் ராதிகாவைப் பார்த்தான். அவள் இவன் தன்னைப் பார்ப்பது தெரிந்தும் தெரியாதது போல் தன் வேலையில் ஈடுபட்டிருந்தாள். சாரதா எந்த ஆஸ்பத்திரியிலிருக்கிறாள் என்ன வார்ட் என்றெல்லாம் கேட்டுவிட்டு போனை வைத்தான் தியாகு. வெளியில் திடீரென்று மழை தொடங்கியிருக்க வேண்டும். பொட்டுப் பொட்டென்று மழைத்துளிகள் ஜன்னலிற் தெறித்தது. சிறிது நேரத்துக்கு முதல் வெளிச்சமும் கலகலப்புமாக இருந்த இதே இடம் இப்போது இருண்டுபோய் சூனிய மாகத் தெரிந்தது.
"சாப்பாடு ஆறப்போகிறது"
ராதிகா இவனுக்காகச் சாப்பாட்டு மேசையிற் காத்திருந் தாள். டெலிபோன் வைத்திருக்கும் மூலையில் நின்றபடி ராதிகாவை ஏறிட்டுப் பார்த்தான் தியாகு,
அவள் உலகத்தில் ஒன்றும் நடக்காத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

ராஜேஸ்வரி 23
சாரதா சுகமில்லாமல் ஒரு கிழமையாக ஆஸ்பத்திரியிலிருப் பதைப் பற்றி ஒரு துளியும் அக்கறைப் படாத ராதிகாவின் அலட்சிபத்தை அவனால் தாங்க முடியாதிருந்தது.
அதே நேரம் சாரதாவின் பேச்செடுத்தால் நடுச் சாமத்தில் ராதிகா ஒரு திருவிழாவே நடத்தி விடுவாள்.
சாதாரண நேரங்களாயிருந்தால் சாரதாவை ராதிகா அலட்சியப்படுத்துவதை அவன் தாங்கிக் கொள்வான் அல்லது தாங்கிக் கொள்வதாக நடித்துக் கொள்வான். ஆனால் சாரதா ஹொஸ்பிட்டலிலிருப்பதை இவனிடம் ஒரு கிழமையாகச் சொல்லாமலிருக்கிறாள் என்பதை அவனால் தாங்க முடியாதிருந்தது.
ராதிகா இவனையுற்றுப் பார்த்தாள். எப்போது இவன் கேள்வி கேட்பான் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவள் தோற்றம்.
என்ன செய்வது?
இவளிடம் சாரதாவைப் பற்றிக் கேட்டு நிம்மதியைக் குலைத்துக் கொள்வதா அல்லது இவள் சாரதா பற்றிய விடயங்களை இப்படித்தான் அலட்சியம் செய்வாள் என்பதை ஒத்துக்கொண்டு ஒன்றும் நடக்காதது போல் நடித்துக் கொள்வதா? இரண்டு கிழமையாக வெளியூரிலிருந்து வந்த களைப்பு ராமநாதனின் டெலிபோனுடன் எங்கேயோ பறந்து விட்டது.
சாரதா போன கிழமை ஹொஸ்பிட்டலுக்கு அட்மிட் பண்ணப் பட்டாளாம். என்ன ஆச்சரியம்! எடின்பரோக் கோட்டையின் சுவர் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்ட அதே நேரம் அவள் இங்கே அட்மிட் பண்ணப்பட்டிருக்கிறாள்.

Page 13
24 பணி பெய்யும் இரவுகள்
வயிற்றில் ஏதோ ரியுமர். அதைப்பற்றி விளக்கமாகக் கேட்க இவன் தயாராக இல்லை.
தன்னைத்தானே சித்திரவதைப் படுத்திக்கொள்ளத் தயாராக இல்லை.
ராமநாதன் சாரதாவின் கணவர், அவரை இவனுக்குப் பிடிக்காது. அந்த விடயம் ராமநாதனுக்கும் தெரியும். இருந்தும் சாரதா சுகமில்லாத விடயத்தை அவரே இவனுக்கு அறிவிப்பதென்றால் அவளின் நிலை கடுமை யாகத்தானிருக்க வேண்டும்.
சாரதாவை உடனே போய்ப் பார்க்க வேண்டும் போலி ருந்தது. இந்த இரவில் வார்ட்டில் நுழைய விடுவார்களோ தெரியாது. இருதயத்தை யாரோ குடைவது போலிருந்தது. *சாப்பாடு காத்திருக்கிறது" ராதிகா குரலையுயர்த்தி னாள். அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
"அப்படி என்ன என்னை எரித்து விடுமாற்போல்ப். பார்க்கிறீர்கள்" என்பதுபோல் அவளும் முறைத்துப் பார்த்தாள். அதுதான் ராதிகாவின் குணம். விட்டுக் கொடுக்க மாட்டாள்.
ராதிகாவின் முகத்தில் அவன் பார்வை பதிந்திருந்தாலும் சிந்தனை சாரதாவை நோக்கியோடியது.
சாரதாவை அவன் கண்டு ஒரு வருடமாகிறது. *"என்னில் உண்மையான அன்பிருந்தால் என்னை இனி வந்து பாராதே" சாரதா இப்படித்தான் போனவருடம் கிறிஸ்மஸ்: பண்டிகைக்கு முதல் சொன்னாள். சொல்லும்போது அவள் குலுங்கிக் குலுங்கியழுதாள். ‘'நீ என்னை வந்து பார்ப்பதால் எனக்குக் கெட்டபேரும் அவமானமும்தான் கிடைக்குமென்றால் அதன் விளைவை

ராஜேஸ்வரி 25
உன்னால் யோசித்துப் பார்க்க முடியாதா ராஜன்?" குரலடைக்க விம்மிய அந்தக் கேள்வி இன்னும் அவன் செவிகளில் ஒலிக்கிறது.
சாரதா இவனை ஒருநாளும் "தியாகராஜன்" என்றோ *தியாகு" என்றோ கூப்பிட்டிருக்க மாட்டாள். இவன் ஐந்து வயதாகவும் அவள் ஏழு வயதாகவும் இருக்கும் போது பணி படிந்த ஒரு காலை நேரம் இந்தச் சிறுபையன் மெல்லிய குளிர் காற்றில் தலைமயிர் பறக்க பூசைக்கு வெண் மல்லிகை பறித்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சாரதா என்ற குறிஞ்சி மலரைக் கண்டான். 'உன் பெயர் ராஜன்தானே அவள் கண்கள் சிரிக்க, முகம் மலர, குரல் கணிரென்று கேட்டாள். இவன் தலையாட்டினான். *அப்பா சொன்னார் நீ நல்லாப் பாடுவியாம், நல்லாக் கணக்குச் செய்வாயாம். நல்ல கெட்டிக்காரனாம்" ஏழு வயதுச் சாரதா இவனைப் பற்றிய மதிப்புடன் சொன்னாள்,
தூரத்தில் மலை முகட்டைப் பணிப்படலம் மறைத்துக் கொண்டிருந்தது மலைச் சாரல்களில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குப் போய்க் கொண்டிருந் தார்கள். இவனும் இவன் தகப்பனும் இரவுதான் வந்திருந் தார்கள். இவர்கள் வரும்போது சாரதா நல்ல நித்திரை. நீண்டநேரம் காத்துக் கொண்டிருந்ததாகத் தியாக ராஜனின் பெரிய மாமா சத்தியமூர்த்தி, சாரதாவின் தகப்பன் சொன்னார்.
தியாகராஜன் பெரிய LDT LD fTØ06 எப்போ தாவது கொழும்பிற் காணுவான். அவருக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறாள் என்பதும் அவளுக்குக் கொழும்பு உறவுகளில் ஒரு தொடர்புமில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடியாத பிஞ்சு வயது அவனுக்கு.
u-2

Page 14
26 பனிபெய்யும் இரவுகள்
"அம்மா பூசை பண்ணப் போறாங்க நீயும் வாறியா " அவளின் மலைநாட்டுத் தமிழ் அவனுக்குப் புதினமாக இருந்தது.
கொழும்பில் அவர்களின் வீட்டில் ஒரு வேலைக்காரி முத்தம்மா இருக்கிறாள். அவள் இப்படித்தான் பேசுவாள். இதெல்லாம் விளங்கிக் கொள்ளத் தெரியாத பிஞ்சு வயது அவனுக்கு இதெல்லாம் ஒரு கால் நூற்றாண்டுக்கு மேல் நடந்த கதைகள்.
இன்று அவள் லண்டனில் ஒரு ஆஸ்பத்திரியில் நோயாளி யாக இருக்கிறாள்.
அவனுக்கு இப்போது பாட வராது. கொம்பியூட்டரிற் புரோக்கிறாம் செய்யத் தெரியும். லண்டனில் ராதிகா மல்லிகை பூ வைத்துப் பூசை பண்ண மாட்டாள். ஐந்து வயதில் அவனுக்கிருந்த உரிமை முப்பது வயதிலில்லை.
அன்று அவன்தாய் அவனருகிலிருந்தால் அவனுக்குச் சாரதாவைப் பார்க்கும் உரிமை கிடைத்திருக்காது. பதுளை யிலுள்ள ஒரு நண்பனின் கல்யாணத்துக்கு வந்திருந்த அவன் தகப்பன் நீண்ட காலமாகத் தங்கள் குடும்பத்துடன் ஒரு உறவும் வைத்துக் கெகள்ளாமல் தனிக் குடித்தனம் நடத்தும் தன் மைத்துனர் சத்தியமூர்த்தியைப் பார்க்க வந்திருந்தார். இந்தச் சிக்கலான விபரங்கள் தெரியாத வயதில் சாரதா வைச் சந்தித்தான். அவனுக்கு அப்போது இரண்டு தங்கச்சி கள் இருந்தார்கள். வீட்டில் அவனே பெரிய பையன். சாரதாவுடன் நின்றிருந்தபோது அவன் சின்னப் பையன். செல்லப் பையன். *ராஜன் அடிக்கடி வந்திட்டுப் போயேன்" இரண்டு நாள் நின்று விட்டு வெளிக்கிட்ட போது மலைச் சாரல் வரைக்கும் ஓடிவந்து சாரதா சொன்னாள்.

*ராஜேஸ்வரி 27
ஏதோ அவன் அடுத்த மலைச் சாரலில் வசிப்பதாக நினைத்துக் கொண்டாளோ என்னவோ.
இவனின் தகப்பன் அருளம்பலம் தன் மைத்துனர் சத்திய மூர்த்தியைப் பார்த்துக் கொண்டார். அப்படிப்பட்டவள்தான் போன வருடம் "தயவு செய்து
இனி என்னை வந்து சந்திக்காதே" என்று கெஞ் சினாள்.
"என்ன, என்னுடன் பேசவே மாட்டியளா" இது ராதிகா வின் கேள்வி.
3
இவளுடன் பேசாமல் அவன் எப்படி இருப்பான்?
"ஏன் சாரதா ஆஸ்பத்திரியிலிருக்கிறாள் என்பதை சொல்லவில்லை" என்ற கேள்வி அவன் நாக்கின் நுனி வரையிலும் வந்து விட்டது. எவ்வளவு நேரம்தான் பொறுத்துப் பார்த்தாலும் அவன் கோபம் ஆறப் போவ தில்லை என்று தெரிந்தது.
ராதிகா தன் பரீட்சைக்கு அவள் படித்துக் கொண்டிருக் கிறாள். அந்தக் காரணத்தால்தான் சாரதா ஹொஸ் பிட்டலில் இருக்கும் விடயத்தைச் சொல்ல மறந்து விட்டாள் என்று தியாகராஜன் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை.
ராதிகா சாரதா விடயத்தில் எப்படி நடந்து கொள்வாள் என்று தெரியும், அத்தோடு தன் அன்பையும் ராதிகா எப்படிச் சோதிப்பாள் என்று அவனுக்குத் தெரியாத தல்ல.

Page 15
28 பணி பெய்யும் இரவுகள்
ராதிகா சாதாரண பெண்ணா? மெடிகல் கல்லூரியின் கடைசி வருட மாணவி. உலகத்து விடயங்களை "இன்டெ. லெக்சுவல்" ரீதியாக விளங்கிக் கொள்ளத் தெரிந்தவள். மனித உறவுகளை வெறும் சதையுணர்வுகளுக்குள்ளும் சம்பிரதாயக் கோட்பாடுகளுக்கும் நிறுத்திக் கொள்ளாமல் ஒரு மனிதன் தன் உறவை மற்ற மனிதர்களிடம் கெளரவ மாசவும் ஒளிவு மறைவின்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவள். அந்தக் சோட்பாட்டை நடை முறையிலும் காட்டிக் கொள்
667.
அவர்களின் உறவு லண்டன் வாழும்பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உறவோ வாழ்க்கை முறையோ போலில்லை. அவர்கள் இனனும் கொஞ்சக் காலத்தில் திருமணம் செய்யப் போகிறவர்கள். ஆனால் அதற்கு முதலே கலியாணம் கட்டிக் கொள்ளாத தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு ராதிகா வார விடுமுறையில் எங்கே போகிறாள் என்று தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடந்து கொள் கிறார்கள் . லண்டனில் மனித உரிமை சட்டம் இந்தத் தாய் தகப்பன் மாரின் கட்டுப்பாடுகளைக் கடக்க ஏதுவாக இருக்கிறது.
கொழும்பில் தான் வளர்ந்ததுபோல் ராதிகாவின் தந்தை சிதம்பரவேலன் லண்டனில் தன் பெண்கள் இருவரையும் வளர்ச்க முடியவில்லை. முதல் மகள் பவானி கிட்டத் தட்டத் தாய் தகட்பன் சொல்லியபடி வாழ்ந்து கணவன் நினைத்தபடி வாழ்கிறாள் என்று அவர்கள் தங்களுக்குள் சமாதானப் படுததிக்கொண்டாலும் பவானி தன் குடும்பத் தில் எவ்வளவு தூரம் சந்தோசமாய் இருக்கிறாள் என்று அவர்களுக்குத் தெரியும்.
ராதிகா பெற்றோர்கள் சொன்னபடி கேட்க மாட்டாள் என்று தெரியும். தனக்சென்று ஒரு வழியைத் தேர்ந்

*ராஜேஸ்வரி 29 برع
'தெடுக்கத் திறமையும் வழி முறைகளும் தெரித்தவள் ‘கெட்டிக்காரி, விட்டுக் கொடுத்தவள், பழைமைகளைக்
கேட்பவள்.
அவளுடன் பேசிக்கொள்ளாமல் தியாகுவால் ஒரு மணித் தியாலம் கூடக் கழிக்க முடியாது.
இப்போதிருக்கும் நிலையில் ஏதும் கதைக்க முயற்சித்தால் அவர்களின் உறவே ஒரேயடியாகச் சிதைந்து போகலாம்.
அவளைப் பற்றி அவனுக்குத் தெரியும்.
சாரதாவை ஒரு வருடம் பார்க்காமல் இருப்பதற்குச் சாரதாவின் உத்தரவுதான் காரணம் என்றால் அந்த உத்தரவே இவளின் கூத்துக்களால்தானே நடந்தது?
எடின்பரோ மலைச் சாரல்கள், பனித்துளிகள் இரவின் அமைதி என்பன இலங்கையின் பதுளை நகரத்தையும் சாரதாவையும் அவளின் பழைய நிகழ்ச்சிகளையும் கிளறி விட்டது என்றால் இப்போது ராமநாதனின் டெலிபோன் கோல் இன்றும் எத்தனையோ வேதனை படர்ந்த சம்பவங் களைக் கிளறி விட்டது.
ராதிகாவுக்கு இவனின் ‘மூட்" தெரிந்திருக்க வேண்டும் , எழும்பிப் போய் டெலிவிஷனைப் போட்டாள். வளை குடா யுத்தம் எந்த நிமிடமும் நடக்கலாம் என்று விவர்ணச் சித்திரம் செய்து கொண்டிருந்தார்கள். நடு நிசியிலும் போர்த்திட்டம், ஏதோ காரணம் கொண்டு எந்தவொரு மூன்றாம் தர நாட்டையும் நாசம் செய்யும் மேற்கத்திய மூர்க்கம், கெளரவமான சொற்களுக்குள்ளால் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த வாழ்க்கையைப் பொறுத்தவரையிலும் ஒரே மாதிரி யான தத்துவம் தானே?
அவனுக்கு ஜேம்ஸ் மக்பேர்ஸ்ன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் ஞாபகம் வந்தன.

Page 16
பனி டெய்யும் இரவுகள்”
வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு திருப்பமும் ஒவ்வொரு மாற்றங்களும் ஏதோ ஒரு தத்துவத் தின் அடிப்படையில்தானா நடந்து கொண்டிருக் இன்றன? ராதிகா இவன் மெளனத்தைக் கலைக்க யோசித்து டெலிவிஷன் போட்டதும் அவன் எழும்பினான். வயிற் றில் ஒரு துளியும் பசியில்லை.
அவன் கோர்ட் ஹாங்கரில் மாட்டியிருந்த கோட்டை எடுத்தான்.
இவன் எங்கே போகிறான் என்று ராதிகாவுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவள் கண்களில் அலை தெறித்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
என்னைவிட எப்போதும் அவள்தானே பெரிது என்று சாரதாவைப் பற்றிக் குரூரமாகச் சொல்ல ராதிகா தயங்கப் போவதில்லை.
வெளியில் நல்ல குளிர். மெல்லிய பணிச் சிதறல்கள் மழைத் துளிகளோடு உதிர்ந்து கொட்டிக் கொண்டி *ருந்தன.
இரவின் அமைதியில் ஹைகேட் தூங்கிக் கொண்டிருந்தது. ரோட்டருகில் பார்க் பண்ணியிருக்கும் காருக்குப் போவ தற்கிடையில் மழையிற் சரியாக நனைந்து விட்டான். ஒன்றிரண்டு கார்களைத் தவிர ரோட்டில் அதிக நடமாட் டம் இல்லை. இரண்டு கிழமையாகப் பாவிககாததால் கார் ஸ்ராட் பண்ணுவது சிரமமாக இருந்தது. இந்தப் பனிக் குளிரில் கார் எஞ்சின் குளிர் பிடித்துப் போய் விட்டதா?
காரை ஸ்ராட் பண்ணி வெளியிற் திருப்பியதும் மெயின்" ரோடு இவனை மெளனமாக வரவேற்பது போலிருந்தது.
 

ராஜேஸ்வரி 31.
பகல் நேரமென்றால் ஹைகேட்டிலிருந்து ஹைபரி வரைக் கும் கார்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டி ருக்கும். இரவு இரண்டு மணியாகப் போகிறது. உலகம் பணி பெய்யும் இரவின் குளிர் தாங்காது தன்னை ஒடுக்கிக் கொண்டது போலிருந்தது.
சாரதாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராதிகா வைப் பற்றி நினைக்காமலிருக்க முடியவில்லை. ராதிகாவை இவனுக்காகச் சிபாரிசு செய்தவளே சாரதா தானே.
ஏழு வருடங்களுக்கு முன் ராதிகாவின் பதினெட்டாவது பிறந்த தினத்திற்குச் சாரதாதானே இவனைப் பிடிவாத மாக இழுத்துக் கொண்டு போனாள்? "லண்டனில் யாரையும் இங்கிலிஸ் பெட்டையைப் பார்த்து பிடிச்சுப் போடாதே - நீ ஒரு அசல்த் தமிழன். உனக்கு உன்னைப் புரிந்து கொள்கிற மாதிரி ஒரு தமிழ்ப் பெட்டை தேவை"
சாரதாவுக்கு உலகம் எவ்வளவு சிக்கலில்லாமல் தெரிகிறது? இப்படித்தான் தியாகு அன்றைக்கு நினைத் தரன். சாதாரண பெண்களைவிடக் கொஞ்சம் உயர்ந்து வளர்ந்து, காந்தம்போல இரண் டு கண்களுடன் ஒரு இளம் பெண் இவனுக்குக் கேக் கொடுத்தாள். *இதுதான் தியாகு, இவள்தான் சொந்தக்காரரின் பெண் ராதிகா." N ராமநாதன்தான் ராதிகாவையும் தியாகுவையும் அறி முகம் செய்தார். அவனுக்கு இருபத்து மூன்று வயது, இவளுக்கு பதினெட்டு வயது. அவன் லண்டனுக்குப் படிக்க வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

Page 17
32 பனி பெய்யும் இரவுகள்
ராதிகாவின் குடும்பம் லண்டனில் கடந்த பதினைந்து வருடங்களாக வாழ்கிறார்கள். கொழும்பிற் பிறந்தாலும் ராதிகா லண்டனில் வளர்ந்தவள். கூச்சமில்லாமல் பழகினாள்.
தான் மெடிக்கல் காலேஜுக்குப் போக இருப்பதாகவும் அதறகுமுன் ஒரு வருட லீவில் ஏதோ ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்றும் சொன்னாள். லண்டனிற் பெரும்பாலான இளம் வயதினர் இப்படிச் செய்வார்கள். யூனிவர் சிட்டிச்குப் போக முதல் ஒரு வருடம் உலகம் சுற்றிப் பார்ப்பார்கள். தானும் தன் சீனேகிதிகள் இருவரும் இந்தியா போக இருப்பதாக ராதிகா சொன்னாள்.
லண்டனில் வளரும் சாதாரண தமிழ்ப் பெண்களைவிட ராதிகா வித்தியாசமாகந் தெரிந்தாள். பதினெட்டு வயதி லேயே தன் தேவைகள் பற்றி யோசிக்கத் தொடங்கி விட்டாள். சாதாரணமான பேர்த்டே பார்ட்டிகளுக்குத்தியாகராஜன் போகமாட்டான். லண்டன் தமிழர்களின் போலி வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் தன்னையுயர்த்திக் காட்ட பார்ட்டிகள் வைப்பது, புதுக்கார் வாங்குவது என்ற "சின்னத் தனமான" ஆடம் பரங்களை அவனாள் சகிக்க முடியாது.
ராமநாதனின் சொந்தக்காரர்கள் என்ற அடிப்படையில் சாரதாவின் நச்சரிப்புக்காக அவன் இந்தப் பார்ட்டிக்கு வந்திருந்தான்.
வழக்கம்போல் அளவுக்கு மீறிய உணவு வகைகள் ஆடம் பரமான உடுப்புக்கள், வாய் மீறிய அலட்டல்கள். இவை தான் லண்டன் தமிழர்கள் சிலரின் வாழ்க்கை முறைகள் . இலங்கையில் தமிழர்கள் கண்ணிரும் கம்பலையுமாக வாழ்கிறார்கள். இங்கேயென்றால் தமிழர் தண்ணீர்

ராஜேஸ்வரி 3.3 ع
போத்தலும் போலிக் கூத்துக்களுடனும் வாழ் கிறார்கள் என்று தனக்குத் தானே சொல்லிந கொண் டான்.
அவன் இலங்கையை விட்டு 1983ஆம் ஆண்டு வெளிக் கிட்டான்.இலங்கையின் பயங்கரக் கலவரத்துக்கு இரண்டு கிழமைகளுக்குமுன் வெளிக் கிட்டான். தமிழருக்கெதி ரான வகுப்புக் கலவரத்தில் அவன் அகப்பட்டுக் கொள்ளா விட்டாலும் அவனுடைய தாய் தகப்பனுக்கு கொழும்பில் என்ன நடந்தது என்று தெரியும். அதைப்பற்றி எல்லாம் அவன் நிறைய அலட்டிக் கொள்வதில்லை. அரசியல் ஒரு அதர்மமான விளையாட்டாகப் போய்விட்டது என்று மட்டும் நினைத்துக் கொள்வான்.
ராதிகாவின் பிறந்த தினப் பார்ட்டிக்கு சாரதா தான் நச்சரித்துக் கொண்டு இழுத்துக் கொண்டு போனாள். “யாரும் அரசியல் என்னுடன் பேசினால் நான் ஓடி விடுவேன்" என்று சொல்லிக் கொண்டு தான் பார்ட்டிக் குப் போனான். ராதிகாவின் தகப்பன் ஒரு டொக்டர். தாய் ஒரு ஆசிரியை. தமக்கைக்கு இப்போதுதான் கல்யாணம் நடந்து முடிந் திருந்தது. ராதிகாவின் தமக்கை பவானி அவனை வரவேற்றாள்; சாரதா வீட்டில் சந்தித்தபடியால் பவானிக்குத் தியாகராஜனைத் தெரியும். அசாரதாவின் கணவர் ராமநாதன் ராதிகாவின் தகப்பனின் உறவினர், அப்படி என்றால் ஏதோ ஒரு வழியில் தாங் களும் தியாகராஜனுக்கு உறவினர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று பவானி சொல்லிச் சிரித்தாள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்னான் தியாகு, பவானிக்கு இவனின் வயதுதான் என்றாலும் கல்யாணம் நடந்த பூரிப்போ ஏதோ நன்றாகக் கொழுத்திருந்தாள்.

Page 18
34 'பணி பெய்யும் இரவுகள்"
"உங்களுக்குப் பகிடி விடத்தெரியாது என்று நினைத். Gsair'-
பவானி வடை ஒன்றைக் கடித்துக் கொண்டே சொன்னாள்.
"எனக்கு என்னென்ன தெரித்திருக்கி வேண்டும் என ஏன் அக்கறைப் படுகிறீர்கள்." பார்ட்டிக்கு வந்து உம்மணா மூஞ்சியாய் இருக்கக்கூடாது என்பதற்காக இப்படிச் சொன்னான்.
ஆனாலும் பவானியை அவனுக்குப் பிடித்துக் கொண்டது.
அவனுடைய சிது வயதிலேயே லண்டனுக்கு வந்தாலும்
தாய் தகப்பன் சொற்படி நடந்து கொண்டவள். அவர்கள்
தெரிந்தெடுத்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டவள். அவள் கணவர் நடராஜன் ஒரு பணப். பித்து என்று கேள்விப் பட்டிருக்கிறாள். நடராஜனைப் பற்றி தியாகுவுக்கு ஒரு அக்கறையுமில்லை.
உலகத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ வித மான பித்துக்களாகத் தானிருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஏன் மனத்தைப் போட்டு உடைக்க வேண்டும்.? ராதிகாவின் பர்த்டே பார்டி அன்று அவன் ராதிகாவுடன் ஒன்றும் அதிகமாகக் கதைத்துக் கொள்ளவில்லை. *ஹப்பி பர்த்டே" என்று எல்லோரையும் போல் சொல்லிக் கொண்டான்.
இவனை அவளுக்குத் தெரியாது. எல்லோருக்கும் சொல் வதுபோல் "தாங் யு" என்றாள். அவள் லண்டனில் வளர்ந்தவள். வெட்கம், நாணம் என்று தமிழ்ப் பெண்கள் அணிந்து கொள்ளும் அல்லது அணியப் பண்ணிக் கொள்ளும் போலிகளுக்கு அப்பாற்பட்டவள். ஆனால் அவளைப் பற்றி ஓயாமல் சாரதா பேசிக் கொண்டே வந்தாள். "பவானி எவ்வளவு நல்ல பிள்ளை.

ாஜேஸ்வரி 35
லண்டனில் வளர்ந்தாலும் தாய் தகப்பன் சொன்னபடி நடந்து கொள்பவள்.ராதிகாவுக்குக் கொஞ்சம் குழந்தைத் தனம் கூடத்தான் இருக்கிறது. அதற்கென்ன. காலமும் நேரமும் வரும்போது ராதிகாவும் தாய் தகப்பன்சொற்படி தானே நடப்பாள்" சாரதா அன்றைக்குக் கண்ட கனவும் இவனை ராதிகா வுடன் சேர்த்து வைக்கப்பட்ட பாடும் இவனுக்குத் தெரி யாததல்ல. 'எனக்கு விருப்பமானால் நான் எனக்குவிருப்ப மானவர்களுடன் பழகுவேனே தவிர மற்றவர்களுக்காக நான் என் விருப்பங்களை மாற்றிக் கொள்ளப் போவ தில்லை."
"நான் யாரோ மற்றவர்களா"
அவன் மறுமொழி சொல்லவில்லை.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் இன்னும் அவன் மனதில் பசுமையாக இருக்கிறது.
இன்று இரவு இரண்டு மணிக்கு அவன் சாரதாவைப் பார்க்க லண்டன் தெருக்களிற் போய்க் கொண்டிருக் கிறான். அவன் இப்படிப் பேய் பிடித்தவன் மாதிரிப் போய்க் கொண்டிருப்பானா? வீட்டில் அவனுக்காக அவன் எதிர்கால மனைவி காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் மனம் எப்படியிருக்கும்? ராதிகாவுக்கு இன்றைக்கு எவ்வளவு கோபம் வரும என்பது அவனுக்குத் தெரியாததல்ல. ஆனால் அவளின் கோபத்தைப் பற்றி அவன் இப்போது யோசித்துக் கொள்ளப் போவதில்லை.
ஆஸ்பத்திரியருகில் காரை நிற்பாட்டிவிட்டு இறங்கினான்.
தேம்ஸ் நதியின் அருகில்- பிரிட்டிஸ் பாராளுமன்றத்திற்கு எதிராக அந்த ஹொஸ்பிட்டல் பிரமாண்டமாகத்

Page 19
36 பனிபெய்யும் இரவுகள்
தெரிந்தது. தேம்ஸ் நதியில் ஒன்றிரண்டு படகுகள் போய்க் கொண்டிருந்தன; அவைகள் இரவு உல்லாசப் படகுகள், அந்தப் படகுகளிலிருந்து ஆடலும் பாடலும் கேட்டு* கொண்டிருந்தன. அவன் தேம்ஸ் நதியை ஒட்டி கடந்துபோய் ஹொல் பிட்டலில் கால் வைத்தான். ரிஸ்ப்சனிஸ்ட், "என்ன வேண்டும்" என்பதுபோல் இவனைப் பார்த்தான். தான் சாரதா ராமநாதன் என்ற நோயாளியைப் பார்க்க வந்ததாகவும், அவள் இருக்கும் வார்ட்டின் பெயரையும் தம்பரையும் சொன்னான். ரிஸ்ப்சனிஸ்ட் இவனை மேலும் கீழும் பார்த்தான். "ஏதும் அபாயமான நிலையிலிருக் கிறாளா, உங்கள் சொந்தக்காரப் பெண்." இவன் என்ன பதில் சொல்வதாம்?
"எனக்குத் தெரியாது, நான் இரண்டு கிழமையாக லண்டனில் இல்லை. இன்றைக்குத்தான் வந்தேன். இப்போதுதான் செய்தி கிடைத்தது. தயவு செய்து ஒரு ஐந்து நிமிடம் நான் போய்ப் பார்க்க முடியுமா?" சேர் நான் ஒன்றும் அதிகாரம் படைத்தவனல்ல. வார்ட் சிஸ்டரைப் போன் பண்ணிக் கேட்கிறேன். அந்த சிஸ்டர் அநுமதித்தால் நான் உங்களை விடுகிறேன்." தியாகு பொறுமையுடன் ஒரு மூலையில் உட்கார நினைத் தான். நீண்ட வழியால் ஒரு டொக்டர் வந்து கொண்டிருந் தார். இந்திய- அல்லது இலங்கை டொக்டராக இருக்க லாம் என்று நினைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தான். கையில் ஏதோ ரிப்போர்ட்டுடன் வந்த டொக்டர் நிமிர்ந்து பார்த்தார். தியாகுவும் உற்றுப் பார்த்தான். இருவர் முகத்திலும் ஒரே நேரத்தில் புன்னகை மலர்ந்தது. 'பாரதி'- தியாகு சந்தேகத்துடன் கேட்டான்.

urm Ggsveuf 37
"என்ன ஆச்சரியம் என்ன ஆச்சரியம்" பாரதியின் கண் களில் திடீரென்று ஒரு மலர்ச்சி.
தியாகுவுக்கு இந்தச் சந்திப்பை எப்படி வர்ணிப்பது என்று பாரதியும் தியாகுவும் கொழும்பில் ஒன்றாய்ப் படித்த வர்கள். தியாகு லண்டனுக்கு வந்த அதே வருடம் பாரதி யும் மெடிகல் கொலிஜ்ஜுக்குப்போயிருந்தான். இருவருக்கு மிடையிலும் ஒரு தொடர்பும் இதுவரையிருந்ததில்லை.
பாரதி உயர்ந்த உருவமும், கல கலக்கும் மனப்பான்மை யும் உள்ளவன், கைகள் எப்போதும் வாய்ப் பேச்சுக்கு ஏற்ப அசைந்து கொண்டேயிருக்கும்.
தியாகுவைப் போல் அளந்து பேசும், அடக்கமான தன்மை பாரதிக்கில்லை.
4
வார்ட் ஸிஸ்டர் அவனை சாரதாவின் கட்டிலருகே காட்டிக் கொண்டு போனாள்.
"இந்த நேரம் விசிட்டிங் செய்வது சரியில்லை, இந்த வார்ட் டொக்டர் சிபாரிசு செய்தபடியால் உங்களை அனுமதிக்கிறேன்" மெல்லிய குரலில் சொன்னாள். ஐரிஸ் நாட்னடச் சேர்ந்தவள் என்பது குரலிற் தெரிந்தது. "தாங்க்யு சிஸ்டர்'
சாரதா நல்ல நித்திரை போலும், அவள் கையில் ஏதோ ஒரு ட்ரிப் ஏற்றப் பட்டிருந்தது. அவள் முகம் இரவின் மங்கிய ஒளியில் மஞ்சளாய்த் தெரிந்தது. கண்கள் தாமரை மொட்டுக்கள் போல் மூடிக் கிடந்தன.

Page 20
38 பணி பெய்யும் இரவுகள்
சாதாரணமானவை அவள் கண்கள். அவை மூடிக் கிடந்தன. அவளை இந்த நிலையில் அவன் ஒரு நாளும் கண்டதில்லை.
*சிலிப்பிங் பியூட்டி" என்று மனம் சொல்லியது. அவள் நிலை ஒன்றும் பியூட்டியாய் இல்லை என்று தெரியும். ஒரு வருடம் அவளை அவன் சந்தித்ததில்லை. ஒன்றிரண்டு முறை டெலிபோனிற் பேசியிருக்கிறான். ஒரு வருடத்தின் பின் இந்த இளம் காலை நேரத்தில் ஒரு நோயாளியாய் அவளைச் சந்திப்பான் என்று கனவும் காணவில்லை.
எந்தக் கலைஞனையும் அல்லது கலையுணர்வு உள்ளவர் களையும் கவருபவை அவளுடைய அழகிய- சிவந்த இதழ்கள். இந்த மங்கிய வெளிச்சத்தில் வெளிறிப் போய்த் தெரிந்தன. மெல்லிய மூச்சு நிதானமாய் வந்து கொண் டிருநதது. நித்திரைக்கு மருந்து கொடுத்திருப்பதாக வார்ட் ஸிஸ்டர் சொல்லி இருந்தாள். அதுதான் இந்த ஆழ்ந்த நித்திரை போலும். அவன் அவள் பக்கத்திலிருந்த கதிரையில் உட்கார்ந்தான்.
ஏதோ கனவோ அல்லது இவன் வந்திருக்கிறான் என்ற உணர்வோ சாரதாவின் வாய் ஏதோ முணுமுணுத்தது. என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை.
ஏதோ சொல்லிப் புலம்புகிறாள்.
என்னைப் பற்றிக் கனவு காண்பாளா? பைத்தியக்காரத் தனமாக நினைத்துக் கொண்டான். அப்படி நினைத்துக் கொண்டதற்காகத் தன்னையே நொந்து கொண்டான்.
இவளின் நோயைப் பற்றி ராமநாதன் இவனுக்கு எதுவும் சொல்லவில்லை. டொக்டர் பாரதியைத் தற்செயலாகக் கண்டது, ஏதோ கடவுளைக் கண்டதுபோல் இருக்கிறது. இல்லை என்றால் அவனுக்குச் சாரதாவின் நிலை பற்றி ஒன்றுமே தெரியாமலிருந்திருக்கலாம்.

ஆராஜேஸ்வரி 39
'நான் சாரதாவின் டொக்டர், அதற்காக அவளின் நோயைப் பற்றியோ உன்னிடம் செல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். அவளுக்குச் சத்திர சிகிச்சை உடனடியாக நடக்க வேண்டும். எவ்வளவு தாமதிக்கிறதோ, அவ்வளவுக்கு அவள் உயிருக்கு ஆபத்து இருக்கலாம்" "சத்திர சிகிச்சை ஏன் செய்ய முடியாது" தியாகு அவசர
மாய்க் கேட்டான்.
"அவள் சம்மதிக்க மாட்டாளாம்" பாரதியின் குரல் தோல்வியைத் தொனித்தது.
"சம்மதிக்க மாட்டாளா?" தியாகு நம்ப முடியாமல் கேட்டான்.
"தியாகு, எனக்கு அவள் மனநிலையைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க இது நேரமில்லை. அவள் கணவன் எவ்வள வோ சொல்லிப் பார்த்து விட்டார்."
"என்னை ஒன்றும் வெட்டிக் கிழிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாளாம்."
பாரதி தன் நேரத்தைப் பார்த்தபடி சொன்னான். "ஏன் சாரதா ஒப்பரேஷன் செய்ய ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறாய்" மெல்லிய குரலில் அவள் காதில் கிசுகிசுத்தான் தியாகு. இவன் குரல் அவள் புலன்களில் ஏறியிருக்குமா? எத்தனை ஆழமான நினைவுகளோடு என்ன கனவு காண்
கிறாளோ? "ஏன்சாரதா ஒப்பரேஷன் செய்யமாட்டேன் என்கிறாய்" அவன் இந்தக் கேள்வியை எத்தனை தரம் கேட்டான் என்று அவனுக்கே தெரியாது. மெல்லிய மூச்சொலிகள் தவிர அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

Page 21
40 பனிபெய்யும் இரவுகள்
"நீ கொஞ்சம் பெரியவனாய் இருந்தால் இவளைக் கவனிக்கச் சொல்லி உன்னிடம் கேட்கலாம். இவளின் தலையெழுத்துத்தான் தம்பி தங்கச்சியில்லாமல் பிறந்து
விட்டாளே”
பெரிய மாமா சத்தியமூர்த்தி இப்படித்தான் ஒருநாள் சொன்னார். அப்போது இவனுக்குப் பதினைந்து வயது அவளுக்குப் பதினேழு வயது. மாமா மரணப் படுக்கையி லிருந்தார். அவர் செந்தாமரையுடன் வாழ்கிறார் என்ற ஆத்திரத்தில் அவரின் குடும்பம் அவரைத் தூரவிலக்கி வைத்திருந்தது. தியாகராஜனும் அவன் தகப்பன் அருளம் பலமும் மட்டும் சத்தியமூர்த்தி மாமாவைத் தூரத்தில் வைக்கவில்லை. அருளம்பலம் சத்தியமூர்த்தியின் தங்கை யான காந்திமதியைக் கலியாணம் செய்ய முதலே இளமை யிலிருந்தே சத்தியமூர்த்தியின் நண்பனாக இருந்தவர். சத்தியமூர்த்தி உத்தியோகம் பார்க்கப் போன இடத்தில் இன்னொரு பெண்ணுடன் (அதுசுான் செந்தாமரை, சாரதாவின் தாய்) உறவு கொண்டதும் அவளுடன் வாழ்க்கை அமைத்துக் கொண்டதும் மத்திய தரவர்க்க மான அவரின் மனைவி குடும்பத்தை அவரிடமிருந்து தூர விலகப் பண்ணி விட்டது.
-இதெல்லாவற்றையும் இப்போது நினைத்து என்ன பயன்? சத்தியமூர்த்தி மாமாவின்- செந்தாமரையின்
காதலின் சின்னம் இன்று உயிருக்குப் போராடிக் கொண் டிருக்கிறது.
தியாகராஜன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் சாயல் அப்படியே சத்திய மாமாவை உரித்த சாயல், மாமா நல்ல நிறமும் சாந்தமான போக்கு முடை யவர். தியாகுவின் தாய் முன்கோபமுடையவள். தமை யனுக்கு எதிர்மாறானவள். தியாகு எப்போதும் அடக்க மாக இருப்பான்.

ராஜேஸ்வரி 4r
"நீயும்தான் உன் மாமா போல் இருக்கிறாய், அவரை மாதிரியே உன்னை நம்பியிருக்கும் மனைவியை விட்டு விட்டு யாரும். ' சத்தியமூர்த்தியின் மனைவி செல்வமலர் கண்களில் நீர் வரும். அவள் ஒன்றும் மாமா சத்தியமூர்த்தியை நம்பியோ அல்லது அன்புடன் எதிர்பார்த்தோ இருந்ததாக தியாகு வின் இளம் மனதில் ஞாபகமில்லை. அவர்களின் சிக்கலான வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முதலே மாமா இறந்துவிட்டார். மாமா இறக்க பல நாட்கள் முன்னரே செந்தாமரை இறந்து விட்டாள். இயற்கை மரணமல்ல. 1977ம் ஆண்டு இலங்கை அரசாங்கம், இலங்கை வாழ் தமிழர்களுக்கெதிராக ஏவிவிடப்பட்ட பயங்கர வகுப்பு வாதத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியத் தமிழரில் செந்தாமரையும் ஒருத்தி.
சிங்கள இனவாதம் சகிக்காமல் தமிழ் ஈழம் கேட்டதன் பலன் 1977ம் ஆண்டின் இனக் கலவரம். அதில் பலியா னோர் பலர் பிரஜாவுரிமையுமில்லாத இந்தியத் தோட்டத் தொழிலாளர். இலங்கைத் தமிழரின் ஈழக் கோரிக்கைக்குத் தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளில் ஒருத்திதான் சாரதாவின் தாய் செந்தாமரை.
அவளின் இழப்பு மாமாவை வாழ்க்கையின் எதிர் காலத்தை இழக்கப் பண்ணிவிட்டது. இளம் பெண் சாரதாவுடன் கொழும்புக்கு வந்து நோயாளியாய் இருதய நோயுடன் போராடி விட்டு மகளை அனாதையாக்கி விட்டு இறந்து விட்டார்.
வாழும் வரை தன்னுடன் அன்பில்லாமல் வாழ்ந்துவிட்டு இறந்த பின் அவருக்கும் வேறு யாரோ ஒருத்திருக்கும் பிறந்த காதற் சின்னமான சாரதாவைத் தனியாக விட்டுப் போன ஆத்திரத்தை செல்வமலர் பதினேழு வயதான
Lu-3

Page 22
42 பனிபெய்யும் இரவுகள்
சாரதாவிற்கு இழைத்த கொடுமையை அருளம் பலத்தாற் தாங்கமுடியவில்லை. சினேகிதனின்- மைத்துனனின் மகள் வேலைக்காரிபோல் நடத்தப்பட்ட கொடுமையைத் தாங்க முடியாமல் அவர் மனைவியிடம் சீறியதை நேரில் கண்டவன் தியாகராஜன்"
"அண்ணா செய்த அநியாயத்துக்குச் செல்வமலர் பழி வாங்காமல் சாரதாவை வீட்டில் வைத்திருப்பதே பெரிய காரியம்" காந்திமதி தமையன் செய்த "குற்றத்தை' வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டாள் போலிருந்தது. செல்வமலர் பழிக்குப் பழிவாங்கத்தான் பதினைந்து வருட வித்தியாசமுள்ள ராமநாதனைச் சாரதாவுக்குச் செய்து வைத்தாளா? * 'இவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த் தாயா. காந்தி மதி லண்டனில் இருக்கிற எங்கள் சொந்தக்காரப் பையன் ஒருத்தன் இவளைக் கலியாணம் செய்யச் சம்மதித்திருக் கிறான்.?
செல்வமலர் குரலில்தான் எத்தனை சந்தோசம் தன் வாழ்க்கையைப் பங்கு போட்டவளின் மகளுக்கு ஒரு நல்ல வாழ்வைச் செய்து வைப்பதுதான் செல்வமலரின் "தூய" நோக்கமாக இருக்கும் என்று தியாகராஜன் நம்பத் தயாராயில்லை, ஆனால் அவளைத் தடுக்க முடிந்ததா? தியாகு பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
*"ஏன் ஒப்பரேஷன் செய்து கொள்ள மாட்டேன் என் கிறாய் சாரதா" இப்படி இன்னொருதரம் வாய்விட்டுக் கேட்ட பின் அவன் அழுதே விட்டான். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து "அவன் அழுதது" என்பது குறைவான காரியம்.
அவன் ஆண் மகன் அழக்கூடாது

ராஜேஸ்வரி 43
அவனுக்குத் தெரியும் அவள் ஏன் ஒப்பரேஷன் செய்து கொள்ள மறுக்கிறாள் என்று.
செல்வமலரின் பிடியிலிருந்து "தப்ப" யாரையாவது கலியாணம் செய்யத் தயாராயிருந்தாள். சொல்லி வைத் தாற்போல் ராமநாதன் அந்த நேரம் பார்த்து பெண் வேட்டையாட கொழும்புக்குப் போயிருந்தார். இருபத் தாறு வயதில் திருமணம் செய்து, கொஞ்ச நாளிலேயே விவாகரத்து செய்து விட்டு இப்போது முப்பத்தைந் தாவது வயதில் ஒரு பெண் தேடி வந்திருந்தார் ராம நாதன்.
தியாகராஜனுக்கு அந்தப் பழைய நினைவுகளை ஞாபகப் படுத்த விருப்பமில்லை.
'ஏதோ வாழ்ந்து விட்டுச் செத்துத் தொலைந்து போகத் தானே." இப்படி அடிக்கடி சொல்வாள் சாரதா.
உள்ளக் குமுறல்களைக் காட்டிக் கொள்ளாமல் 'ஏதோ" வாழ்ந்து கொண்டிருந்தவளா சாரதா?
"என் தலைவிதி எனக்கொரு தம்பியில்லை, தங்கச்சி யில்லை. அள்ளியணைக்க ஒரு குழந்தையுமில்லை. நீயும் என்னைக் கோபித்தால் நான் எப்படித் தாங்குவேன்"
இப்படி ஒருதரம் அழுதவள்தான் போன வருடம் "ராஜன் நீ என்னிடம் உண்மையாக அன்பு வைத்திருப்பதானால் என்னை வந்து பார்க்காதே" என்று கெஞ்சினாள்.
அவளை அப்படிக் கெஞ்சப் பண்ணியது ராதிகாவின்
குரூரமான நடத்தைகள்தான் என்பது அவனுக்குத் தெரி யாததல்ல.
எவள் வந்து தியாகராஜன் வாழ்க்கையில் சந்தோசம்
தருவாள் என்று நினைத்தானோ அந்த ராதிகாவே அவள் வாயில் சாரதாவை எப்படி எல்லாம் பேசிவிட்டாள்?

Page 23
44 பனிபெய்யும் இரவுகள்
உலகத்துக் கொடுமைகளுக்கெல்லாம் உன்னைப் பலி கொடுக்கப் போகிறாயா சாரதா? வயிற்றில் ஒரு குழந்தை தருவதற்குப் பதில் ஒரு கொடிய புற்று நோயைக் கடவுள தநதுவிட்ட வேதனையில் சாகத் துணிந்து விட்டாயா சாரதா"
அவன் மெல்ல முணுமுணுத்தான். அவள் அசைவது போலிருந்தது. அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. கண்கள் மெல்ல விழித்துக் கொண்டன. தான் ஏதோ கனவு காணுகிறேன் என்ற பிரமையோ என்னவோ கண்களை வெட்டி விழித்தாள். மெல்லிய வெளிச்சத்தில் அவள் கண்களில் தொக்கி நின்ற சேள்வியைப் புரிந்து கொண்டான் தியாகு.
'என்னை இப்படி ஏமாற்றலாமா சாரதா" அவன் ஒரு கேள்வியைக் கேட்பான் என்று வாழ்க்கையில் ஒரு நாளும் அவன் நினைத்ததில்லை. போன கிழமை எடின்பரோ மலைச்சாரல் கிழறிவிட்ட எத்தனையோ இளமை நிகழ்ச்சிகளின் நெகிழ்ச்சி, இன்று இந்தக் கொடிய பனி பெய்யும் இருலொன்றில் லண்டன் ஆஸ்பத்திரியில் அனாதையாய் அவளைக் கண்டபோது அவனால் தாங்க முடியவில்லை. "என்னில் உண்மையான அன்பிருந்தால் என்னை விட்டுத் தூரப் போயவிடு என்றாய். அதற்காக நீ என்னிட மிருந்து தொலைந்தே போகலாமா சாரதா' அவனுக்கென்ன பைத்தியமா. இப்படிப் பேசுகிறாளே! அவள் இப்போது நன்றாக விழித்துக் கொண்டாள். "அழாதே ராஜன், நான்." அவள் குரல் அடைத்துக் கொண்டது. "இந்த நேரத்தில் என்ன செய்கிறாய்" அவள் குரல் மிக மிகப் பலவீனமாக இருந்தது.

ராஜேஸ்வரி 45
"நீ ஹொஸ்பிட்டலில் இருப்பதாக கொஞ்ச நேரத்துக்கு முன் தான் தெரியும். அதுதான் ஓடி வந்தேன்." வெளிறிப் போயிருந்த அவள் இதழ்களில் ஒரு புன்சிரிப்பு. இந்தச் சிரிப்பை அவன் கண்டு ஒரு வருடமாகி விட்டது. மின்னலென வந்து மழை பெய்யும் ஒரு மோகனச் சிரிப்பு. இன்னொருதரம் காணமாட்டோமா? என்று தவிக்கும்
அழகிய சிரிப்பு. *நீ என்ன டொக்டரா- உன்னுடைய அவள்தானே டொக்டராகப் போகிறாளே. அவளையும் சேர்த்துக் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே"
சாரதா என்ன கிண்டலா செய்கிறாள். ராதிகாவைப் பற்றி இவளுக்கு என்ன தெரியும்? அல்லது அவளைச் சரியாகப் புரிந்து கொண்டு இப்படிச் சொல்கிறாளா? பக்கத்தில் இருந்த நோயாளி "நேர்ஸ்" என்று கூப்பிட் டாள். நேர்ஸ் வந்தாள். இவன் இன்னும் சாரதாவின் பக்கத்திலிருப்பதைப் பார்த்து விட்டு 'கூடிய விரைவில் நீங்கள் இடத்தைக் காலி செய்தால் நன்றாய் இருக்கும்" என்று அழகிய சிரிப்புடன் சொன்னாள். “என்னடாப்பா, விடியற் காலையில் இப்படிப் பெண்கள் வார்ட்டில் நின்று தொணதொணக்கிறாய்" என்பதன் தமிழாக்கமே அதுவா! எதுவாக இருந்தால் என்ன, அவன் நீண்ட நேரம் அந்த இடத்தில் இருக்க முடியாது. "ஒப்பிரேஷன் செய்யச் சரி என்று சொல்லேன் சாரதா" அவன் அவசரமாகச் சொன்னான். அவள் அவனை வெறித்துப் பார்த்தாள். 'நான் ஒப்பிரேஷன் செய்து கொள்ளாவிட்டால் உனக் கென்ன" என்பது போன்ற பார்வையது. “நாளைக்கு வருகிறேன்"

Page 24
46 பணி பெய்யும் இரவுகள்"
அவன் வார்ட்டை விட்டு வெளியே வந்தபோது மழை இன்னும் சிணுங்கிக் கொண்டிருந்தது. தேம்ஸ் நதியில் உல்லாசப் படகுகளிலிருந்து வந்த ஒசை இன்னும் அடங்க வில்லை.
வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் இன்னும் உல்லா சப்" பிரயாணிகள்- இரவில் லண்டனின் அழகை ரசிக்கும் இளம் டுரிஸ்ட் ஒன்றிரண்டு பேர் நடந்து கொண்டிருந்: தார்கள்.
பாராளுமன்றம் கம்பீரமாகத் தலை தூக்கி நின்றது. "பிக்பென்' மணிக்கூடு மூன்று மணிகளைப் பெரிய சத்தத் துடன் அலறி முடித்தது. ) நேற்றுப் பின்னேரம் எடின்பரோவிலிருந்து வெளிக்கிட்ட தற்கும் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எத்தனை வித்தியாசம். பன்னிரண்டு மணித்தியாலங்களில் எத்தனை மாற்றம், சில வேளைகளில் வாழ்க்கையில் ஒன்றுமே நடக்காதது போல இருக்கும், சில வேளைகளில் ஏன் எல்லாம் ஒரேயடியாக வருகின்றன?
ஒரு நாளில் எத்தனை வித்தியாசமான நிகழ்ச்சிகள்! வீட்டுக்குப் போனதும் என்ன நடக்கும்? ராதிகா என்ன மாதிரி மூட்டில் இருப்பாள்?
5
மார்கட்டுகளுக்குச் சாமான்கள் கொண்டு போகும் லொறிகள் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒடிக் கொண்டிருந்தன. வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது ராதிகா முன் ஹாலில் சோபாவில் சோர்ந்து போய்ப் படுத்திருந்தாள்.

ராஜேஸ்வரி 47
டெலிவிஷன் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. அவளை எழுப்பவோ அல்லது அவளுக்கு ஒரு பிளாங்கெட்டைக் கொண்டு வந்து மூடிவிடவோ அவன் யோசிக்கவில்லை. கதவைப் படாரென்று சாத்தினான். டெலிவிஷனை ஒவ் பண்ணினான். அவள் சட்டென்று கண் விழித்தாள். அவள் மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்துக் கொண்டாள்.
அவன் அவற்றை ஒன்றும் பெரிது படுத்தாமல் விறுவிறு என்று மேலே ஏறினான். உடம்பு சோர்ந்து போய் இருந்தது. இவன் தன்னிடம் ஏதும் பேசுவான் என்று எதிர்பார்த் திருக்க வேண்டும். ராதிகா இவனைப் பின் தொடர்ந்து வருவது கேட்டது. அவன் சட்டையைக் கழட்டி ஹாங்கரில் மாட்டிவிட்டு கட்டிலிற் பொத்தென்று விழுந்தான். கம்பளிக்குள் நுழையும் வரை உடம்பு சில் என்று குளிர்ந்தது. ராதிகா அவன் முன் வந்து நின்றாள். சண்டைக்கு ஆயத்தம்! அவனால் சண்டை பிடிக்க (pg. Cliftgil. அவன் திரும்பிப் படுத்தான். *ராதிகா தயவு செய்து என்னைக் குழப்பாதே. ஐ'ஆம் வெரி ரயேட்."
"ஹொஸ்பிட்டலுக்குப் போக மட்டும் களைப்பில்லை யாக்கும்." "ஹொஸ்பிட்டலில் யாரும் யுத்தப் பிரகடனம் செய்ய வில்லை.”*
"நான் ஒன்றும் சண்டைக்கு வரவில்லை."
*சந்தோசமான விடயம்"

Page 25
48 பனிபெப்யும் இரவுகள்
அவன் மீண்டும் அவள் பக்கம் திரும்பினான்.
அறையின் மங்கிய வெளிச்சத்தில் அவளின் கவர்ச்சி அவனை என்னவோ செய்தது.
சில்க் நைட் கவுணுக்குள்ளால் அவள் அழகிய பருவம் அவனைக் குத்தியது,
இதுக்குத்தானே எடின்பரோ விருந்து ஓடோடி வந்தான். சினேகிதர்கள் காரில் ஏறிக் கும்மாளம் அடித்துக்கொண்டு வரும்போது, எக்ஸ்பிரள் ரெயில் எடுத்து இவளிடம் தானே ஓடி வந்தான்.
ராதிகா அவன் மனநிலையை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டாள். படபடவென்று ஒன்றிரண்டு கம்பளிகளை அலுமாரியிலிருந்து எடுத்தாள். அவனுக்குப் பக்கத்தில் கிடந்த ஒரு தலையணையைத் தூக்கிக் கொண்டாள்.
"தனிக் குடித்தனமா" அவனின் தூக்கக் கலக்கம் பறந்து விட்டது, குரலில் குறும்பு, அவளிலுள்ள கோபமும் குறைந்து கொண்டு வந்து கொண்டிருந்தது.
சாரதா ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருப்பதை இவள் வேண்டுமென்றுதான் சொல்லாமல் விட்டாள். இப்போது அது பற்றித் தர்மம் ஆரம்பித்தால் "நான் வேண்டுமென்றா செய்தேன். ஏதோ மறந்து விட்ட து" என்று சொன்னாலும் சொல்லலாம். அது உண்மையான காரணமாக இருக்காது.
ஏன் அந்தச் சண்டையைத் தொடங்கவேண்டும். அவன் தான் சாரதாவைப் பார்த்துவிட்டு வந்துவிட்டானே. அவள் விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறி னாள்.
என்ன செய்வது. பின்னால் ஓடிப் போவதா?

ராஜேஸ்வரி 49
இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில், அவளைத் தன் பாட்டுக்கு விட்டுவிடுவதுதான் சரியானது. இது வரைக்கும் அவளைப் பொறுத்தவரையில் அவன் பின்னால் ஓடியதாகத் தெரியவில்லை. தனது அடக்க மான குணாதிசயங்களுக்கும் அவனுக்கும் சரிவராது என்று முடிவு கட்டி விட்டுச் சாரதாவுக்கு தன் முடிவைச் சொன் னான், ராதிகாவைச் சந்தித்த காலத்தில். அத்தோடு தனக்கு யாரையோ பிடித்து முடிச்சுபோட்டு வைப்பதைத் தவிர்க்கச் சொல்லி விட்டான். அப்போது அவனது குடும்பம் இலங்கையிலிருந்து கனடா குடிபெயர முடிவு கட்டிக் கொண்டார்கள். லண்டனில் இவன் படிப்பு முடிந்ததும் தங்களுடன் வந்து சேரச் சொல்வி விட்டார்கள். அம்மா தன் பிள்ளைகளைகள் எல்லோரையும் தன் சுண்டு விரல் ஆணைக்குள் கட்டுப்பட வைக்கப் பார்க் கிறாள். உனக்கு லண்டன் பிடித்துக் கொண்டால் அங்கேயே இரு. அத்தோடு உனக்கு விருப்பமான யாரையும் வேண்டு மானாற் கட்டிக் கொள். நான் ஒரு நாளும் பழைமை வாய்ந்த தகப்பனாக இருக்க விரும்பவில்லை. இருக்கப் போவதுமில்லை. இருபத்தியொரு வயதுக்கு மேல் ஒரு மனிதனுக்கு இன்னொருத்தர் வாழ்க்கையை அமைத் துக் கொடுக்கவேண்டும் என்ற பழைய கருத்தை எதிர்ப் பவன் நான்.
ஏன் இதெல்லாம் எழுதுகிறேன் என்றால் உனது தங்கை ராகிணியின் கல்யாணம் எப்படி நடந்தது என்று உனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். அவள் தன்னுடன் படித்த யாரையோ விரும்பினாளாம். உமது அம்மாவும் மாமி செல்வமலரும் சேர்ந்து தாங்கள் தேர்ந் தெடுத்த மாப்பிள்ளையைச் செய்யச் சொல்ல ராகிணி யை

Page 26
50 பணி பெய்யும் இரவுகள்
வற்புறுத்துவதைப் பார்க்கக் கோபம் வருகிறது. அம்மா இலங்கையை விட்டு எங்காவது போய்விடவேண்டும் என்பதற்கு இலங்கையில் எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மட்டும் காரணமல்ல சொற்படி கேட்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக் கிறாள்.
"நீ எப்போதாவது என் ஆலோசனை பற்றி யே ij என்று நினைக்கிறேன். எனக்கு எதையும் زیر{ வைக்கத் தெரியாது. உனது வாழ்க்கையை நீ அத்திவாரம் போடும்போது உனக்கு விருப்பமான ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஒரு கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். மனமும் உடலும் வேறு வேறு விதமான தேவைகளை எதிர்பார்க்கும். ஆத்மா இன் னொரு சாமான். வாழ்க்கையில் இன்னுமெதையோ எதிர் பார்க்கும்.
இருபத்தியொரு வயதுக்குப் பின் ஒரு ஒப்பமில்லாத (மடிவுக்கு வர உன்னால் முடியும் என்று நினைக்கிறேன்." அவனின் அப்பா இப்படித்தான் எழுதினார். அருளம்பலம், மாஸ்டர் எப்படி காந்திமதி என்ற பெண்ணுக்குக் கணவனாக வந்து சேர்ந்தார் என்று அவன் பல தடவை யோசித்திருச்கிறான்.
அவனுடைய தாய் காந்திமதியும் தகப்பன் அருளம்பலமும் படிப்பிலோ பழக்க வழக்கங்களிலோ மிகவும் எதிர்மாறா னவர்கள். அம்மா இந்தியாவில் படித்தவர். அப்போது தான் மாமா சத்தியமூர்த்தியைச் சந்தித்தாராம். இந்தியா" சுதந்திரமடைய ஒரு வருடம் முந்தி இந்தியா போனவர் கள் தமிழ்நாட்டில் அண்ணாதுரையும் கருணாநிதியும் தமிழ் உணர்ச்சியைத் தட்டிக் கொண்டிருந்த நாட்களிற் திரும்பி வந்தார்கள் என்று அப்பா சொல்லியிருக் கிறார்.

ராஜேஸ்வரி 51
தியாகு அவனுடைய இளவயதிலிருந்தே அப்பாவின்" பிள்ளை. அவரோடு நெருக்கமாகப் பழகியவன். அவனுக்குச் அவன் தாயை அணைத்துக் கொஞ்சியது ஞாபகமில்லை. ஆனால் அப்பாவின் தோள்களில் ஏறி கொழும்புக் கடற் கரை மண்ணில் குதித்து விளையாடியது ஞாபகமிருக் கிறது. அப்பா அவனின் சினேகிதன் இப்படி ஒரு மகனுக்கு அப்படி ஒரு தகப்பன் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
லண்டனுக்கு வந்து முதல் ஒன்றிரண்டு வருடங்கள் வீட்டு ஞாபகம் அவனை மிகவும் வாட்டியது. எண்ணெய் ததும்பிய தோற்றமளிக்கும் தேம்ஸ் நதிக் கரையில் நடக் கும் போது அவன் மனம் கொழும்புக் கடற்கரைக்கு ஓடிப் போகும்.
குறும்புத்தனமான குழந்தைபோல் கரையைத் தட்டி ஓடும் கடலலைகளுடன் ஒடிப் பிடித்த ஞாபகம் மனதை வாட்டும்.
வெயில், குளிர் என்று மட்டும்தானா பருவம் மாறும்? துக்கம், சந்தோஷம் என்றும் மாறிக் கொண்டிருந்தது. அவன் லண்டனுக்கு வந்த போது சாரதா வீட்டில் தங்கி நிற்காதது சந்தோசமான விடயமாகத்தான் இப்போது தெரிகிறது. சாரதாவுக்கு நிச்சயம் அவன் மனநிலை தெரிந்திருக்க வேண்டும். அவள் அவனை வற்புறுத்தவில்லை. சொந்தக் காரர்கள் வீடுகளில் பேத்டேயும் கல்யாண வீடுகளும் அடிக்கடி நடக்கும், அவன் போக மாட்டான்.
ஒருதரம் அவனை வற்புறுத்தி இழுத்துக் கொண்டு போனது ராதிகாவின் பேத்டே பார்ட்டிக்குத்தான். அதன் பின் தற்செயலாக ராதிகாவை அவன் நாஷனல் பிலிம் தியேட்டரிற் கண்டான்.

Page 27
52 பனிபெய்யும் இரவுகள்
இவளைக் கண்டதும் அவனுக்கும் ஆச்சரியம் வந்திருக்க வேண்டும். தமிழர்கள் என்றால் பிலிம் தியேட்டர் பக்கம் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்' அவனுக்கு எதையும் மறைத்துக் கதைக்க முடியாது என்பது ஒரு நிமிடத்தில் அவனுக்குப் புரிந்தது.
அவன் அன்று ஒரு லத்தின் அமெரிக்கப் படம் பார்க்க சினேகிதருடன் போயிருந்தான். அந்தச் சினேகிதன் மால்க்கம் ஹரிஸன். அவள் அதேபடத்திற்கு தன் சினேகிதி லிண்டா பிரவுண் என்பவளுடன் வந்திருந்தாள்.
இவனைத் தன் பதினெட்டாவது பிறந்த தினவிழாவிற் கண்டவள் ஒரு வருடம் முடிய நாஷனல் பிலிம் தியேட்டரில் காண்கிறாள்.
அன்று ஒரு அழகான மாலை நேரம், அருமையான வசந்தத்தின் பிரதிபலிப்பு தெரிந்தது. வெயிலைக் கண்டால் மனிதர் முகத்திலும் சந்தோஷம் தெரியும். தேம்ஸ் சூரிய வெளிச்சத்தில் வெள்ளி அலைகளைப் பிரதி பலித்தது. தங்களைக் கண்டதும் "ஹலோ" என்று கூடச் சொல்லாமல் தமிழர்களின் கலையுணர்வை விமர்சனம் செய்வது அவனுக்குச் சிரிப்பாக இருந்தது. **இது என்னுடைய சினேகிதன் மால்க்கம் ஹரிஸன்” தியாகு தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான். "இது என்னுடைய சினேகிதி லிண்டா பிரஷண்" ராதி காவை மால்க்கத்துக்கு உடனே பிடித்து விட்டது. லிண்டாவுக்கு மால்க்கத்தைப் பிடித்தது என்று சொல்லா மலே தெரிந்தது. என்ன ஆச்சரியம், அன்று அந்த வசந்த கால மாலை நேரத்தில் உண்டாகிய உறவு இன்று வரையும் தொடர் கிறது. 'கல்லூரி தொடங்கவில்லையா" அவன் கேட்டான்.

urm Giggsv6Nurf 53
** தொடங்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஸ்கொட் லாந்தில்தான் இடம் கிடைத்தது. அவ்வளவு தூரம் போய்ப் படிக்க அம்மா விடமாட்டாளாம். அத்தோடு இந்த வருடம் நான் ஹொலிடே போகப் போகிறேன். டொக்டராக வந்தால் ஒரு வருடம் லீவு எடுக்க முடியாது." பத்தொன்பது வயதில் இப்படிச் சொல்கிறாளே! "நாங்கள் இருவரும் இந்த வருடக் கடைசியிலிருந்து ஆறு மாதம் இந்தியா போக இருக்கிறோம்." லிண்டாவின் குரல் மிகவும் மெல்லிய குரல், அவளுடைய ஆங்கிலம் லண்டனுக்கு அப்பாற்பட்ட வன் என்பதைக் காட்டியது. மிகவும் சங்கோஜமான பெண் என்று லிண்டாவைப் பற்றி நினைத்தான். ஆனால் அவள் என்னவென்றால் இந்த வாயாடி ராதிகா மாதிரியே பேசுகிறாள்." எனது தகப்பன் டெல்லியில் வேலை செய்கிறார்" லிண்டாவே சொன்னாள். "நாங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுவோம்' ராதிகா சிரித்தாள். வசந்த காலத் தென்றல் அவளின் கூந்தலுடன் விளையாட, மேற்கே செலலும் சூரியன் அவள் கண் களுக்குள் பிரதிபலித்தான். ஒரு வினாடி. ஒரே ஒரு அந்த வினாடி, அவளுடைய அந்தச் சிரிப்பு, தேம்ஸ் நதிக்கரையின் பின்னணியில் அவள் சாய்ந்கிருந்த கோலம் எல்லாம் சேர்ந்தோ என்னவோ அவள் மனத்தில் ஏதோ ஒரு சங்கற்பத்தை யுண்டாக்கி விட்டது.
சுதந்திரமாக வளர்ந்து, சுதந்திரமாகச் சிந்திக்கத் தெரிந்தவள். அழகிய கலைகளையும் அருமையான படங் களையும் ரசிக்கத் தெரிந்தவள். டொக்டராக வந்தாலும் இப்படியே இருப்பாளா அல்லது சிறுமிகளுக்குள்ளும், பிளட் குறுரப்ஸுக்குள்ளும் மனிதர் சளை எடை போடு வTவரா?

Page 28
5- பணி பெய்யும் இரவுகள்
-7 நான் இவளுடையவனாக இருந்தால் எத்தனை அதிர்ஷ்டசாலி" தான் அப்படி நினைத்துக் கொண்டது முட்டாள்தனமான விஷயமோ என்று தெரியாது, அவன் கொழும்பில் மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டவன். அல்லது தான் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டவன் என்றாவது நினைத்துக் கொண்டிருப்பவன் அவனுக்கு அப்போது இருபத்து நாலு வயது. வாழ்க்கையின் வசந்த ன பருவம், இளம் மங்கைகளின் சிரிப்பில் உலகின் ஆக்கத்தையும் அழிவையும் எடைபோடும் வயது. எதையும் செய்ய முடியும் என்று நினைத்துக் கொள்கிற sutilagi. நாஷனல் பிலிம் தியேட்டருக்குக் கொஞ்சத் தூரத்தில் யாரோ ஒரு பாடகன் ஏதோ பாடிக்கொண்டிருந்தான். என்ன பாட்டு, காதற் பாட்டுத்தான்.
இந்தியாவுக்குப் போனால் போஸ்ட் கார்ட் போட மறந்து விடாதீர்கள்' மால்க்கம்தான் சொன்னான்.
நீ என்ன நினைக்கிறாய். இவர்களுக்குப் போஸ்ட் கார்ட் போடலாமா" ராதிகா குறும்புத்தனமாகக் கேட்டாள். அவளின் பார்வை தியாகுவில் நடனமாடிக் கொண்டி ருந்தது. ஒரு இளம் பெண் இப்படி நேரடியாய்ப் பார்த்தது அவனுக்குப் பழக்கமில்லை. அவன் மிகத் தர்ம சங்கடப்பட்டான்.
"இவர்கள் விலாசம் தந்தால் எங்களிடமிருந்து ஒன்றிரண்டு போஸ்ட் கார்ட் கிடைக்கும் அதிர்ஷ்டசாலி களாக இவர்கள் இருக்கலாம் என்பதில் எனக்கு ஆச்சரிய மில்லை" சங்கோஜி என்று நினைக்கப் பண்ணிய லிண்டாவா இப்படிக் கிண்டல் செய்கிறாள். நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.அதன்பின் அந்தப் பெண்கள் இந்தியா போக முன்னர் நால்வரும் சேர்ந்து அடிக்கடி சினிமா நாடகம் எனப் போயிருக் கிறார்கள்.

ராஜேஸ்வரி 55
ஒரு மாலை நேரம் ராதிகா அவன் அறைக்கே வந்தாள். அவன் அப்போது ஒரு இந்திய குஜராத்தி வீட்டுக்காரர் வீட்டில் இருந்தான். அவர்களின் பெண்கள் யாரும் இப்படி ஒரு வாலிபனின் அறைக்குப் போயிருக்க மாட்டார்கள் என்பது அவர்கள் இவனைப் பார்த்த பார்வையிலிருந்து தெரிந்தது.
'உங்கள் சாரதா எங்கள் வீட்டுக்காரர்களைச் சாப் பாட்டுக்குக் கூப்பிட்டிருப்பதாக அக்கா சொன்னாள்.'" அவள் அப்படித் திடீரென்று அங்கு வந்த அதிர்ச்சியே அவனால் தாங்கிக் கொள்ளக் கொஞ்ச நேரம் எடுத்தது. இப்போது உங்கள் சாரதா என்று அவள் சொன்னது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. "ஸி இஸ் வெரி ஃபொண் ஆப் யு" ராதிகா இவனை
உற்றுப் பார்த்தாள்.
"ஆமாம் எனது மைத்துணி என்பது உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்."
"ஸ்ரீ இஸ் வெரி பியூட்டிபுல்" ராதிகா இன்றும் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன் இங்கிலிசில் பேசித் தொலைக்கிறாள். "இருக்கலாம்" அவன் அசட்டையாகச் சொன்னான்.
"இட்ஸ் பிற்றி ஸ்ரீ இஸ்." அவள் என்ன சொல்ல நினைத்தாளோ தெரியாது சொல்ல வந்தவளின் வார்த் தைகள் அப்படியே நிற்க இவன் கண்களுடன் அவள் பார்வை தழுவிக் கொண்டது.
அவன் தர்ம சங்கடத்துடன் தன் பார்வையைத் திருப்பிக் கொள்ளவில்லை. அவளை அப்படியே அள்ளி எடுத்து முத்தமிடவேண்டும் போலிருந்தது.
"யு ஆர் ஸோ பியூட்டிபுல் ரூ" அவன் அப்படிச் சொல் வான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவள் கண்

Page 29
56 பணி பெய்யும் இரவுகள்"
களில் தோன்றி மறைந்த ஒரு சிரிப்பு "உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்' என்று சொல்லியது. அவள் அவன் முன் நின்றால் ஆடிப்போய்விடுவான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
6
அவன் காலையில் எழும்பியபோது இரவில் நடந்த தெல்லாம் கனவு போலிருந்தது. நித்திரை கொள்ள முதல் அவனின் அறையை விட்டு ஓடிய ராதிகாவின் ஞாபகம் வந்தது. அவளை நினைக்கப் பாவமாகவும் இருந்தது. எனக்காக நேற்றெல்லாம் காத்திருந்தவள். இரவில் அவ்வளவு தூரம் கண்டிப்புடன் நடந்திருக்கக்கூடாது. இன்னுமொரு யோசனை வந்து மனம் மாற முதல் தடதட வென்று படியிறங்கிறான். சோபாவில் கம்பளிக் குள்ளாய்ப் படுத்திருந்தாள் ராதிகா. எத்தனை பொல்லாத வாய் இவளுக்கு மோதிரம் போட்டுக் கொண்ட உடனேயே இவ்வளவு ஆட்டிப் படைக்கிறவள் தாலி கட்டிக் கொண்டால் என்ன பாடு படுத்தப் போகிறாள். நீண்ட நேரம் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். எழுப்புவதா? விடுவதா? மனித மனம் ஆசைக்கும் கோபத்துக்கும் இருளில் அடிமையாகக்கூடியது என்பது அவனுக்குத் தெரியும். அவளுடன் சமாதானம் பண்ண அவனின் உள்மனது ஆசைப்பட்டாலும் அவள் நேற்று நடந்து கொண்ட விதத்தினாலுண்டான கோபம் இன்னும் தீரவில்லை.

ராஜேஸ்வரி 57
கம்பளிப் போர்வைக்குள் எவ்வளவு அடக்கமாகத் தூங்கு கிறாள்? இவன் நரம்புகளில் முறுக்கேற்றி, இரத்த நாளங் களில் அக்கினியாய் ஊற்றெடுக்கப் பண்ணுபவள் எவ்வளவு அடக்கமாகத் தூங்குகிறாள். பக்கத்தில் அணைத்திருந்து தாலாட்டவேண்டும் போன்ற குழந்தைத் தனம் அவள் முகத்தில். அவள் குழந்தை தானே! கஷ்டங்கள் தெரியாமல், துன்பங் களை அனுபவியாமல் வளர்ந்தவள். குழந்தை மனம் கொண்டவள். ஏனென்றால் அவளுக்கு இந்தச் சிக்கலான உலகத்தின் கொடுமைகள் தெரியாது. பருவங்கள், படிப்புக்கள், காதல் என்றெல்லாம் திட்ட மிட்டப்படி நடந்துகொண்டு போகின்ற அவள் வளர்ச்சி யில் அவன் படும் துன்பத்தை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறில்லையா? அவன் குனிந்து அவள் முகத்தில் முத்தமிட்டான். பஞ்சுபோல் மென்மையான உடம்பு. அவளுக்கு முகத்தில் பருவக் குறியாக வரும் ஒரு பருக்கள் கூட இல்லை. இருபத்தைந்து வயதாகிவிட்டது. இன்றும் அந்த முகத்தில் எத்தனை தூய்மையான பாவம், குழந்தைத் தனம். அவனால் நீண்டநேரம் தன் உணர்ச்சிகளையடக்க முடிய வில்லை. அவன் பிடியில் அவள் கொடியாய்த் துவண்டாள். வெளியில் இன்னும் மழை பொழிந்து கொண்டி ருந்தது. சனிக்கிழமையின் ஷொப்பிங் ஆரவாரம் இன்னும் வெளியிற் தொடங்கவில்லை. இவர்களுக்கென்று இந்த உலகமே மெளனமாக இருப்பது போலத் தோன்றியது. இவன் படுக்கையறைக்கு அப்பா
L-4

Page 30
58 М பணி பெய்யும் இரவுகள்
லுள்ள செரி மரம இப்போதே துளிர்க்கத் தொடங்கி விட்டது. தை மாதம் துளிர் விடும் ஒன்றிரண்டு மரங்களில் செரிமரமும் ஒன்றாக இருக்க வேண்டும். மாடிக் கூரையின் மூலையில் கூடு கட்டியிருக்கும் வெள்ளைப் புறா இவன் முத்தங்களுக்குத் தாளம் போட்டது.
அவள் அவனின் அன்பில் திளைத்தாள். இரவு நடந்த எதையும் இருவரும் பேசிக் கொள்ளப் போவதில்லை என்பது அந்தச் சங்கமத்தில் உறுதியானது, இந்த ஒரு சில மணி நேரம் ஒரேயடியாக நிலைக்காதா? மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு யாரோ கதவு மணியை அடித்த Glunt g அவர்கள் இருவரும் குளித்துக் கொண்டி ருந்தார்கள். அவளின் மெல்லிய உடலின் மேடு பள்ளங் களுக்குச் சோப்பு போடுவதில் அவனுக்கு அலாதியான விருப்பம். பளிங்குத் தரையில் நீரோடுவது போல் அவள் பொன் உடலில் நீர்த்துளி தெறிப்பது கண் கொள்ளாக் காட்சி.
ஷவருக்கு முன்னால் கண்களை மூடி அவள் கழுத்தை வளைத்து முகத்தை யுயர்த்துவது எந்தப் பரத நாட்டியக் கலையும் காட்டாத பாவம். அவளின் சங்குபோன்ற கழுத்துக்களில் மெல்லிய சங்கிலி நீர்த்துளியில் நனைந் தாட அவள் ஷவருக்கு முன்னால் நின்றிருந்தாள்.
வெளியில் யாரோ கதவு மணியை அடிக்கும் சத்தம் மீண்டும் கேட்டது.
இடையில் ஒரு ட வலைக் கட்டிக் கொண்டு, தலையை ஒரு டவலால் துடைத்துக் கொண்டு அவன் படியிறங்கி வந்தான்.
கதவின் கண்ணாடிக்கு வெளியில் தெரிந்த உருவம் ராம நாதனாக இருக்கலாம் என்பதை அவன் உடனடியாகத் தெரிந்து கொண்டான்.

ராஜேஸ்வரி 59
அவன் வீட்டுக்கு அவர் வந்ததே அருமை. சாரதா இந்த வீட்டு வாசற்படி மிதித்தது கூட இலலை. ஒரு இடமும் அதிகம் போகாதவள் அவள்.
அவளின் தாய் வழியில் உறவினர் என்று இங்கிலாந்தில் சாரதாவுக்கு யாரும் இல்லை. தகப்பன் வழியில் தியாகுவும் இன்னும் எத்தனையோ உறவினர்களும் இருக்கிறார்கள். இருந்தும் அவள் அதிகம் வெளியில் போக மாட்டாள். ராதிகாவின் தமக்கை பவானியை அவளுக்குப் பிடிக்கும். எப்போதாவது இருந்து அங்கே போவாள். சாரதா a
ட்டால் ராமநாதன் வெளியிடங்களுக்குப் போவதும் அருமை.
இன்று இங்கு வந்திருக்கிறார். ராமநாதனை தியாகு வுக்குப் பிடிக்காது. அது அவருக்குத் தெரியும். அவர் அவனைவிடப் பதினைந்து வயது முதியவர். அவனின் மைத்துணியைத் திருமணம் செய்து கொண்டவர்.
சாரதாவை ராமநாதன் திருமணம் செய்து கொண்டது தான் அவனுக்குப் பிடிக்காதது என்று அவருக்குத் தெரியும்
அவனுக்குப் பிடித்தமான விதத்தில் அவர் நடக்க முடியாது, முயலவுமில்லை.
அவன் கதவைத் திறந்தான். வெளியிலுள்ள குளிர் அப்படியே அவன் முகத்திலடித்தது. அவன் உடம்பு குளிருக்குச் சிலிர்த்துக் கொண்டது. "ஐ ஆம் ஸோ சொறி டு டிஸ்ரேப் யூ" அவர் மெல்லிய குரலில் முணுமுணுத்தார். அவர் சுபாவம் அப்படி. தாழ்ந்த குரலிற்தான் பேசுவார். உயர்ந்த உருவமும், பரந்த தோற்றத்தையும் தருபவர்; அவர் எப்போதும் ஸ்மார்ட்டாக உடுப்பவர். ஒரு பெரிய கெமிக்கல் கொம்பனி ஒன்றில் பெரிய வேலையிலிருப்பவர். தலையில் மயிர் உதிரத் தொடங்கியிருந்தது. கன்னப்பக்க மயிர் அப்படியே நரைத்துப் போய்விட்டது.

Page 31
60 பணி பெய்யும் இரவுகள்
கதவைத் திறந்தவனின் பார்வையில் உடனடியாகத் தட்டுப் பட்டது ராமநாதனின் சோகமான கண்களே.
மேல் மாடியிலிருந்து ராதிகா கீழே காட்டிப் பார்த்தாள்.
"ஹலோ ராதிகா' ராமநாதன் ராதிகாவைப் பார்த்துச்
சொன்னது அவளுக்குச் சரியாகக் கேட்காமல் விட்டாலும், "ஹலோ மாமா' என்று சொன்னாள். குரலில் உயிரில்லை.
ஒரு கொஞ்ச நேரம் அந்த வீட்டில் பூரண அமைதி.
ராமநாதன் ஹாலில் போய் உட்கார்ந்திருந்தார். தியாகு மேலே போய் உடுப்பு மாற்றிக் கொண்டிருந்தான்.
ராதிகா கட்டிலின் விளிம்பிலிருந்து முகத்தைத் தொங்கப்
போட்டுக் கொண்டிருநதாள். கீழே போய் ராமநாதனுடன் கதைக்கக் சொல்லலாமs என்று கேட்க நினைத்தான். அவளிருக்கும் கோலத்தைப் பார்த்தால் மெளனம் நல்லது என்று பட்டது.
கீழே பார்த்துக் கொண்டு காற்பெருவிரலால் கார்ப்பெட்
டில் கோலம் போட்டுக் மகாண்டிருந்தாள்.
சில நிமிடங்களுக்கு முன் உயிரும் உணர்வும் உள்ள ஒரு பெண்ணாயிருந்தவள் ராமநாதனைக் கண்டதும் சிலையடித்துப் போயிருக்கிறாள்.
அவன் சேர்ட்டுக்குப் பட்டன் பூட்டினான். அவள்
பார்வை உயர்ந்தது. இருவரும் ஒருத்தரை ஒருத்தர்
கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"சாரதாவுக்கு எப்படியாம்' என்று கேட்க மாட்டாளார்
என்று ஏங்கினான் அவன். அவள் இன்னும் உடுப்பு மாற்றிக் கொள்ளவில்லை.
ராமநாதன் வந்து கதவைத்தட்டிய நேரத்தில் அவசரமாகத் தூக்கிப் போட்டுக் கொண்ட அவளுடைய ரெஸிங்.
கவுனுடன் இன்னும் இருந்தாள்.

ராஜேஸ்வரி 6.
"குளிர் பிடிக்கும். உடுப்பை மாத்தலாமே"
அவன் அவள் அருகிற் சென்று அவளின் ஈரம் படிந்த தலையைத் தடவி விட்டான், "பெரிய அக்கரைதான் உங்களுக்கு" என்பதுபோல் அவள் இன்னொருதரம் பார்த்தாள். இவளின் கண்களிற்தான் எவ்வளவு பாஷைகள் அடங்கிக் கிடக்கின்றன?
அவள் கண்களில் நீர் முட்டியது. நீரில் நனைத்த மல்லிகை இதழ்கள்போல் அவள் விழிகள் படபடத்தன.
கீழே ரேடியோவின் சத்தம் கேட்டது. இந்தப் பொல்லாத மெளனத்தைத் தாங்காமல் ராமநாதன் தானாகவே ரேடியோவைத் திருப்பியிருப்பார். ரேடியோவில் மொஸாட்டின் இசை கேட்டுக் கொண் டிருந்தது. பியானோவில் யாரோ மொஸாட்டைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். M இவன் படுக்கையறை லைட்டை அணைத்துவிட்டு ஜன்னலைத் திறந்து விட்டான். சூரியன் உலகத்தில் எந்த மூலையில் ஒதுங்கி விட்டானோ தெரியவில்லை. மழை விட்டிருந்தாலும் வானம் மப்பும் மந்தாரமுமாய் கரும் முகில்களால் மறைக்கப்பட்டிருந்தது. அவன் கீழே போனபோது ராமநாதன் சோபாவில் கண்களை மூடியபடி இருந்தார். கைவிரல்கள் சோபாவின் விளிம்பில் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.
அவருக்குச் சங்கீதம் பிடிக்கும் என்று தெரியும். சாரதா
வுக்கும் அவருக்குமுள்ள ஒற்றுமைகளில் இதுவும் ஒன்றா? "உனக்கு மொஸாட்டைப் பிடிக்குமா?"
அவன் தலையாட்டிக் கொண்டான். "இளமையில் நல்லாகப் பாடுவாயாமே" அவர் குரலில் ருே சந்தோஷம்.

Page 32
62 பனி பெய்யும் இரவுகள்
அவன் தர்மசங்கடத்துடன் தலையாட்டிக் கொண்டான். 'வீட்டில் டாக்டர் அல்லது எஞ்சினியராக வரவேண்டும். என்று படிப்பித்திருப்பார்கள். சங்கீதம் தன்பாட்டுக்கு; கடற்கரைப் பக்கம் காத்து வாங்கப் போயிருக்கும்" அவர் குரலில் அதிருப்தி.
இவருக்கொரு குழந்தையிருந்தால் சங்கீத வித்துவானாகப் படிப்பிப்பாரா? சாரதாவுக்குத்தான் அந்த அதிர்ஷ்ட மில்லையே.
'சாரதா எப்படி" இவன் நேரடியாகக் கேட்டான். அவர் இவனை நேரே பார்த்தார். சாரதாவுக்கும். இவருக்கும் கல்யாணமாகிப் பத்து வருடங்களாகின்றன. இருவரும் தனிமையில் சந்தித்தது இதுதான் முதற் தடவை.
"ஒப்பரேஷன் செய்ய மாட்டேன் என்கிறாள்"
**தெரியும்- இரவு போயிருந்தேன்" "ஓம் நீ வந்து போனதாக டொக்டர் பாரதியும் சாரதா வும் சொன்னார்கள்'
"ஏன் மாட்டாளாம்"
அவர் எழும்பிப் போய் ஜன்னலால் வெளியிற் பார்த்தார். கேற்றைத் தாண்டி தபாற்காரன் வந்து கொண்டிருந் தான். "நீ அவளுக்குப் புத்தி சொன்னாயா?"
நான் அவளைவிட பெரியவனில்லையே?*
அவர் சிரித்தார். அது ஒரு சோகச் சிரிப்பு.
'நீ வயதில் பெரியவனாக இருந்தால் அவள் இந்த திலையில் இருந்திருக்க மாட்டாளே”

ராஜேஸ்வரி 63
அவர் என்ன காரணத்தை உள்வைத்து இப்படிச் சொல் கிறார் என்று அவனுக்குத் தெரியாது. ஆனாலும் இப்படிசி சொன்னதை அவன் விரும்பவில்லை.
"அவள் எனக்கு ஒரு சகோதரி மாதிரி" அவன் ஏன் இவருக்கு இதெல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக் கிறேன் என்று தனக்குள் எரிச்சல் பட்டுக்கொண்டான். அவர் இன்னொருதரம் இவனை ஏறிட்டுப் பார்த்தார். ஜன்னலருகிலிருந்து வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். ரேடியோவில் பன்னிரண்டரை மணிச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
அமெரிக்கனும் பிரிட்டிஷ்காரனும் சேர்ந்து சதாம் ஹ"சேனை உதைத்துத் தள்ளுவதற்கு எப்படித் திட்டம் போடுகிறார்கள் என்று ரேடியோ அறிவிப்பாளர் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். "பாஸ்ரட்ஸ்" ராமநாதன் குரல் சாடையாக உயர்ந்தது. 'தங்களுக்கு எண்ணெய் கிடைப்பதற்கு எத்தனை உயிர் போனாலும் இவர்களுக்குக் கவலையில்லை" "கோப்பி போடட்டுமா"
தியாகு பேச்சை மாற்றினான். அரசியல் அவனுக்குப் பிடிக்காது.
"குளிருக்கு ஏதும் குடித்தால் நல்லதுதானே" ராமநாதன் தான் வந்த விடயத்தை எப்படி ஆரம்பிப்பது என்பதை யோசிக்கிறாரா? வெளியில் கார்களின் ஓசை காதைப் பிளக்கத் தொடங்கி விட்டது. மலிவாகக் கிடைத்தபடியால் இந்த வீட்டை அவன் வாங்கினான்; ரோட்டோர வீடு. ஒரே சத்தம். வீட்டுக்கு அருகில் பாதாள ரயில் இருக்கிறது. தூரத்தில்

Page 33
64 பனிபெய்யும் இரவுகள்
இரண்டு பெரிய பார்க்குகள் இருக்கின்றன. நேரமிருந்தால் லைப்ரரிக்குப்போய் மணிக்கணக்காக இருந்து புத்தகம் வாசிப்பான்.
என்ன என்று இல்லை, எது நல்ல புத்தகம் கிடைக்கிறதோ அவைகளை எல்லாம் வாசிப்பான். ஒருநாள் ஜானகி ராமன் அடுத்த நாள் வேர்ஜினியா வூல்ஸ் அவன் கைகளிருக்கும். ராதிகாவின் தொடர்பு இறுக்கமடைந்து அவள் கல்யாண ஒப்பந்தம் செய்து மோதிரம் மாற்றிக் கொண்டபின் புத்தகம் வாசிப்பது குறைந்து விட்டது. அவன் கோப்பி போடப் போனான். ராதிகா இன்னும் கீழே வர மாட்டாளாம். "காலையிலிருந்து சாரதாவுக்குச் சரியான வயிற்று வலி" ராமநாதன் குசினிக்குள் வந்தார். - "இந்த ரியுமர் என்ன விதக் கரைச்சல் கொடுக்கிறது. பாவம் அவள். தன் பிடிவாதத்தை விடமாட்டேன் என்கிறாள். சத்திர சிகிச்சைக்குப் பயந்துதான் மாட்டேன் என்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அதைவிட வேறு ஒன்று அவள் மனத்தை வாட்டுகிறது. சாரதா மனம் விட்டுச் சொல்ல முடியாத துக்கம் என்னவென்று நான் எப்படித் தெரிந்து கொள்வது" ராமநாதன் ஏன் இதை எல்லாம் எனக்குச் சொல்கிறார்?
தியாகு நேற்றிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை. கோப்பியின் மணம் பசியையுண்டாக்கியது இரண்டு மூன்று துண்டு ரொட்டியை எடுத்து "கிறிவில் போட்டான். றோஸ்ட் பண்ணும் மணம் இன்னும் பசியைத் தூண்டி விட்டது. "உங்களுக்கும் ஏதாவது சாப்பிடத் தரட்டுமா"
"மத்தியானம் லன்ஞ் எடுக்கிற நேரம், காலைச் &n t'iun Lrt''

ராஜேஸ்வரி 65
ராமநாதனுக்கு தியாகு இரவு பட்ட துயரம் தெரியாது. சாரதாவிைக் கண்ட நேரத்திலிருந்து அவனுக்குப் பசி யில்லை. அவர் தனக்குச் சாப்பாடு ஒன்றும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு கோப்பி குடித்துக் கொண்டிருந்தார். தியாகு கோப்பியையும் வாட்டிய ரொட்டியில் பட்டரும் பூசி எடுத்துக்கொண்டு மேலே போனான். ராதிகா வெளிக் கிளம்பப் போகிறாள் என்பதற்கு அறிகுறி தெரிந்தது. "ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போகலாமே" "சாரதாவுக்கு இந்த உபசாரம் எல்லாம் பிடிக்குமென்று
நினைக்கிறேன்" ‘சாரதா சுகமில்லாமலிருக்கிறாள்" நேற்றிலிருந்து மூடி மறைக்கப்பட்ட பிரச்சினை பூதா காரமாக உருவெடுக் கிறது.
'சிலருக்குச் சுகமில்லாமலிருப்பதில் சந்தோசம்" எவ்வளவு குரூரம் இவள் குரலில். 'சாரதா சிலவேளை இறந்து விடலாம்" "அப்போதாவது உங்களுக்கு அவளிடமிருந்து விடுதலை கிடைக்குமா" ராதிகா அவன் பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறு வென்று கீழே போய்விட்டாள். ,"சீ யு மாமா” ராமநாதனை நேரே பார்க்காமல் அவள் கதவைச் சாத்திக்கொண்டு வெளியேறுகிறாள். அவ னுடைய காரை அவள் ஸ்ரார்ட் பண்ணிக் கொண்டிருந் தாள். சாரதாவை இவன் போய்ப் பார்க்கக் கூடாது என்ப தற்காக இவள் காரை எடுத்துக்கொண்டு போகிறாளா?

Page 34
66 பனி பெய்யும் இரவுகள்
தியாகு கீழே வராமல் படுக்கையறை ஜன்னலால் அவள் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றான். இவனிடம், கேட்க வேண்டிய கேள்விகளை, நடத்தக்கூடிய தர்க்கங் களை, பாவிக்க வேண்டிய ஆயுதங்களை எல்லாம் ஒரு கேள்வியில் கேட்டு விட்டாளே!
சாரதாவை இவ்வளவு தூரம் இவள் வெறுக்கும்படி நான் என்ன செய்து விட்டேன்? இவள் தனக்குத்தானே எதையெல்லாமோ கற்பனை செய்துகொண்டு தன்னையும் வருத்திக்கொண்டு என்னை யும் வருத்துகிறாளா? போன வருடம் இவன் சாரதாவை இனிச் சந்திப்பதில்லை என்று முடிவு கட்டியதற்கு இவளின் சந்தேகங்கள்தானே காரணம்?
தன் குரூரமான வார்த்தைகளால் எவ்வளவு தூரம் ராதிகா சாரதாவை வருத்திவிட்டாள் என்பது ராதிகாவுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடந்து கொள்கிறாளா?
தான் சாரதாவைவிடப் படித்தவள், நாளைக்குத் தியாகு வின் மனைவியாக வரப் போகிறாள் என்பதற்காகச் சாரதாவைப் பற்றி எதையும் சொல்லலாம் என்று நினைப்பது எவ்வளவு அகங்காரம் அவனுக்கு வந்த கோபத்தில் ராதிகா நேரேயிருந்தால் பெரிய பூகம்பமே நடந்திருக்கலாம்.
ராமநாதனுக்கு இந்த நாடகமெல்லாம் விளங்குமா? அவனின் மெளனத்திலிருந்து அவருக்கு ஏதோ விளங்கி யிருக்க வேண்டும். இவன் வெளிக்கிடத் தயாராகும் வரைக்கும் அவர் மெளனமாக இருந்தார்.

ராஜேஸ்வரி 67 −
காரில் போய்க் கொண்டிருந்தபோதும் ராமநாதன் அதிகம்* பேசிக் கொள்ளவில்லை.
"சாரதா இறந்து விட்டால் உங்களுக்கு அவளிடமிருந்து விடுதலை கிடைக்குமில்லையா" ராதிகாவின் கேள்வி அவன் காதில் பயங்கரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. தை மாதக் குளிர் அவன் உடம்பில் படவில்லை. அவன் புலன்களெல்லாம் விறைத்த மாதிரியான உணர்ச்சி.
இந்த அளவு ராதிகா சாரதாவைப்பற்றி நினைக்கு மளவுக்கும் பேசுமளவுக்கும் சாரதா ராதிகாவுக்கு என்ன தான் செய்து விட்டாள்.
மாமா சத்தியமூர்த்தி உயிரோடிருந்தால் இதெல்லாம் நடக்குமா? பெண்கள் தங்கள் உரிமைகளைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உரிமைகளுக்காக வாதாடும் ராதிகா சாரதாவைப் பற்றி இப்படிப் பேசலாமா? பெண்களே பெண்களுக்கு எதிரியா? இவள் இப்படிப் பேசினால் படியாத அப்பாவிகள் என்னவெல்லாம் பேசுவார்கள்?
அவன் மனத்தில் ஆயிரம் கேள்விகள். அந்தக் கேள்விகளுக் கப்பால் சத்தியமூர்த்தி மாமாவின் கருணை ததும்பும் முகம் தெரிந்தது. கடைசி நிமிடம் அவர் இவனைக் கண்டபோது இவனைப் பார்த்துக் கேட்ட கேள்வி நினைவில் வந்தது.
"தியாகு நான் இதெல்லாம் உன்னுடன் கதைக்கக்கூடாது. உனக்கு இந்த உலகத்தை விளங்கிக் கொள்ளும் வயது இன்னும் வரவில்லை. பதினைந்து வயதில் சைக்கிளில் உலகம் சுற்றும் இளம்வயதில் சாரதாவைப் பார்த்துக் கொள்கிறாயா என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது. எனது நண்பன் நல்லநாயகத்தையும், உனது தகப்பனை யும் உணனையும் தவிர என்னால் யாரையும் இந்த உலகத்தில் நம்ப முடியாது."

Page 35
68 பணி பெய்யும் இரவுகள்
சத்தியமூர்த்தி மாமாவுக்கு அப்போது எத்தனை வயதாக இருக்கலாம்? அதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கும் வயதா அவனுக்கு? அவனுக்கு நினைவு தெரிந்த நாள்முதல் அவரைப் பற்றித் தெரிந்ததெல்லாம் அவனுக்கு ஆச்சரியமான விடயங்கள். அவர் வித்தியாசமான மனிதராக வாழ்ந்து மறைந்து விட்டார். வினோதமான சிந்தனைகள் அவரின் வாழ்க்கை யில் எத்தனையோ சோதனைகளை எதிர்நோக்கப் பண்ணி விட்டது. ஆனால் இதுவரையும் அவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு அவன் பெரிய மாமா. நேர்மைக்காக வாழ்ந்து நேர்மையால் அழிந்து முடிந்தவர். அந்தி நினைவு அவனிடமிருந்து பிரியுமா?
7
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்துவிட்டு உள்ள செல்வத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு போனபின் இரு நாடுகளிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் வளர்ந்தவர்கள் அருளம்பலமும் சத்தியமூர்த்தியும்.
இருவரும் இந்தியாவிற் தங்கள் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டவர்கள். இணைபிரியாத சினேகிதர்கள்.
அடையாற்றில் ஒரு வீட்டிலிருந்து ஒன்றாகப் படித்த வர்கள். விடுமுறை நாட்களில் தஞ்சாவூருக்கும் சிவகாசிக் கும் போய் இனிதே பொழுது கழித்தவர்கள். குற்றால நீர்வீழ்ச்சியிற் குளித்து குதூகலம் கண்டவர்கள். இளமை யும் கனவுகளும் வாழ்க்கையின் இன்னும் எதிர்பார்க்கப் போகும் அனுபவங்களை ஆரோக்கியமான, கெளரவமான,

ராஜேஸ்வரி 69
நீதியான கண்களுடன் நோக்க வேண்டும் என்ற உறுதி கொண்டவர்கள்.
எத்தனையோ சாதாரண மனிதர்களில் அவர்கள் அசாதாரண மனிதர்களாகத்தானிருக்க வேண்டும். அருளம்பலம் இலங்கை வந்து சேர்ந்ததும் சத்தியமூர்த்தி யின் வீட்டுக்கு வந்துபோக அந்த உறவு சத்தியமூர்த்தியின் தங்கை காந்திமதியைக் கல்யாணம் செய்யுமளவுக்கு வளர்ந்து விட்டது.
அது ஒன்றும் காதற் கதையல்ல. இரு குடும்பங்களும் பேசி வைத்த கல்யாணம், காந்திமதி எந்தத் தமிழ்ப் பெண் களுக்கும் விதி விலக்கானவளல்ல. அட்டியலுக்கும், கை வளையல்களுக்கும் கனவு காண்பவள்தான். பார்க்கப் பரவாயில்லாத - படித்த தன் தமையனுக்குத் தெரிந்த - அதிக சீதனம் எதிர்பார்க்காத அருளம்பலத்தைக் கட்ட அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவள் சினேகிதிகள் சொல்லிக் கொண்டார்கள்.
அருளம்பலத்துக்குக் கொழும்புலேயே ஒரு தனியார் கொம். னயில் வேலை கிடைத்துவிட்டது. காந்திமதிக்குக் சீதனமாக வெள்ளவத்தையில் ஒரு வீடு; அருளம்பலத்தின் வாழ்க்கை மிக செளகரியமான ரீதியில் ஆரம்பமாயிற்று.
لمحہ
அருளம்பலம் தன் தங்கையைக் கல்யாணம் செய்ய யோசித்தபோது சத்தியமூர்த்தியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அருளம்பலம் கலையை, இயற்கையை ரசிப்பவர். ஆயிரம் புத்தகங்களானாலும் அவற்றை எல்லாம் ஆர்வத்துடன் வாசிப்பவர். காந்திமதி கலைமகளையும் கல்கியையும் மட்டும் வாசிப் பவள். அதிலும் ராஜகோபாலாச்சாரியார் போன்றவரது கட்டுரைகள் தவிர வேறொன்றும் வாசிக்கமாட்டாள்.

Page 36
170 பணி பெய்யும் இரவுகள்
பெரிய கடவுள் பக்தியுள்ளவள் என்றில்லை. ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பின்னேரமும் பம்பலப்பிட்டிக் கோயிலுக்குப் பூசைத்தட்டுடன் போக மறக்காதவள்.
சத்தியமூர்த்தியும், அருளம்பலமும் கொழும்பு காலிமுகத் திடரில் அமர்ந்திருந்து, மாலையிளம் வெயிலில் பச்சைப் புல்தரையில், அலையோடும் கடல் பார்த்திருந்து கலை பற்றி, அரசியல் பற்றி பேசுவதெல்லாம் அருளம்பலம் காந்திமதி கல்யாணத்துடன் குறையத் தொடங்கியது.
சத்தியமூர்த்திக்குப் பதுளை நகரில் ஒரு கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் வேலை கிடைத்தது. அங்கு சென்றதும் அவர் பதுளை நகரின் இயற்கையழகிற் சொக்கி விட்டார்.
வான் தொடும் மலை முகடுகள், அந்த முகடுகளில் முத்த மிடும் நீல வானம், மலையடிவாரத்தில் நடனமிடும் நதிகள், குன்றுகளைத் தடவிப்பாயும் நீர்வீழ்ச்சிகள். மலை நாட்டில் செல்வம் தரும் தேயிலைத் தோட்டங்கள், அந்தத் தோட்டங்களில் தங்கள் உழைப்பை, உடலை, வாழ்க்கை யைத் தானம் பண்ணும் இந்திய வம்சா வழித் தமிழர்கள். அவர் அந்தச் சூழ்நிலையிற் சொக்கிவிட்டார். அதே ஊரில் அப்போது நல்லநாயகம் ஒரு சுகாதார அதிகாரி யாக இருந்தார். இருவரும் ஒரு நாள் எவரோ ஒருவர் வீட்டில் விருந்தில் சந்தித்துக் கொண்டார்கள். சத்தியமூர்த்தி ஒரு வீட்டில் அறை எடுத்துக் கொண்டிருந் தார். வீட்டுக்காரத் தமிழர்.கீழே கடையும் மேல் மாடியில் குடித்தனமும் வைத்திருந்தார். காலையில் எழுந்து பின்னேரமாகும் வரைக்கும் ஒரே சந்தடி. பாடசாலை விட்டு வந்து ஒய்வான நேரத்தில் புத்தகம் வாசிக்க முடியாத சந்தடியான சூழ்நிலை.
~ "ஒரு சின்ன தனி வீடாகப் பார்த்தால் என்ன?"

; ராஜேஸ்வரி 7.
சத்தியமூர்த்தி நல்ல நாயகத்தைக் கேட்டார்.
இருவரும் கல்யாணமாகாதவர்கள். நல்லநாயகம் ஒன்றும் கலை, அரசியல் இசை, இயற்கை என்று புலம்பிக் கொள்ள மாட்டார். ஆனால் சுவாரசியமான மனிதர். -வாழ்க்கையை "அனுபவிக்கத் தெரிந்தவர். இருந்து விட்டுக் குடிப்பார். வேறு ஏதும் வேறு பழக்கங்களும் இருக்கலாம். அது பற்றி சத்தியமூர்த்திக்கு அக்கறை யில்லை. மத்திய தரத்தமிழர்கள் ஏழைச் சிங்களப் பெண் களையும் மலைநாட்டு இளம் தமிழ்ப் பெண்களையும் சந்தர்ப்பம் வந்தால் தடவிப் பார்க்கத் தயங்குவதில்லை என்று சத்தியமூர்த்தி எப்போதோ புரிந்து கொண்டார்.
நாராயணன். என்பவன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஒரு ஏழை. நல்லநாயகத்துக்குத் தெரிந்த ஒரு தமிழ் வர்த்தகர் கடையில் வேலை செய்யும் ஒரு இந்தியத் தொழிலாளி. அவன் நல்லநாயகத்தை நீண்ட நாட் களாகத் தெரிதவன். வாய்க்கு ருசியாகத் தன் தாய் சமைத்துப் போடுவாள் என்று சொன்னான்.
இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகள், ஜி. ஜி. பொன்னம் பலம் போன்றோர். 130 வருடங்களுக்குமேலாக இலங்கைக் காட்டையழித்துத் தேயிலையால் நாட்டுக்குச் செல்வம் தேடிக் கொடுத்த இந்தியத் தமிழ் வம்சாவழித் தொழி லாளர்களை நாடற்றவர்கள் என்று பிரகடனப் படுத்திய பின் இந்தியத் தொழிலாளர்களுக்கு வகுப்புவாதச் சிங்களக்காடையினரால் அவ்வப்போது பிரச்சினை வரும். ஒரு ஏழை இந்தியனைச் சில வகுப்புவாதச் சிங்களவர்கள் ஏதோ சாட்டுச் சொல்லிப் புடைத்தால் ஏனென்று கேட்க நியாயமில்லாத நாட்கள் அவை. ஒன்றிரண்டு வருடங் களுக்கு முன்தான் நாராயணனின் தகப்பன் குடிவெறியில் யாருடனோ வாய்த்தர்க்கப் பட்டு அதனாற்தாக்கப் பட்ட தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சில வாரங்களுக் குப் பின் இறந்துவிட்டான்.

Page 37
72 பனிபெய்யும் இரவுகள்
'ஏழைக் குடும்பம் எங்களுக்குச் சமைத்துப் போட்டால் ஏதோ இருபது, முப்பது ரூபா கொடுத்துவிட்டுப் போகி றோம்." நல்லநாயகம் வாய்க்கு ருசியாகச் சாப்பாடு தேடுபவர், ருசியை மலிவான உழைப்பிற் பெறத்தயங். சாதவர். லட்சுமிக்கு நாற்பது வயதிருக்கலாம். பதின்மூன்றோ பதின்னாலோ வயதில் கல்யாணம் செய்து குடும்ப பாரம் ஏற்ற வடு வயதில் தெரிந்தது. தலை நன்றாக நரைத்து முன் பற்கள் விழுந்து விட்டாலும் அவள் முகத்தில் சீதேவித் தன்மை. சிரிப்பு எப்போதும் தயங்காமல் வந்து போகும். "ஆம்பிளங்கள நம்பி எப்பிடி ஐயா சீவிக்கிறது, பொம்: மனாட்டிங்க எப்படீன்றாலும் பிழைச்சுப் போகணும்" அவள் தன் கணவரைத் தாக்கிப் பேசுகிறாளா அல்லது எடுக்கும் சம்பளத்தின் பாதியைக் குடியிற் செலவழிக்கும் மகன் நாராயணனுக்காகத் தான் இந்த வார்த்தைகளைச் சொல்கிறாளா என்று தெரியாது. அவள் சமையல் ருசியானது, சம்பாஷணை அலாதி யானது.ஒரு கிழமையிலேயே சத்திய மூர்த்திக்கு எப்போது லட்சுமியின் கைபட்ட சாப்பாடு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டு விட்டது. "ஐயா ஒங்களுக்குப் புண்ணியமாகப் போகும் எம் பொண்ணுக்கு இங்கிலிசு சொல்லித் தர்ரீங்களா ஐயா" லட்சுமி ஒருநாள் பின்னேரம் இவரைக் கேட்டாள். மாலை வெயில் மலை முகட்டில் மறைந்து கொண் டிருந்தது.
மலைச்சாரலை நதியணைத்து விளையாடியது.
இளம் தென்றற்காற்றில் கண்ணை மூடிப் படுத்திருந்தவர் லட்சுமியின் குரல் கேட்டுத் திரும்பினார்.

ராஜேஸ்வரி 73
மெல்லிய பச்சையில் சிவப்புக்கரை போட்ட பாவாடை யுடன் ஒரு சிவப்புப் புள்ளிச் சட்டை போட்டு, பச்சைத் தாவணி போட்ட கோயில் விக்கிரகமா லட்சுமி யின் மகள்?
வாசித்துக் கொண்டிருந்த பாவை விளக்கில் மனம் பதித் திருந்த சத்தியமூர்த்தி மாலை வெயில் கண்களிற் பிரதி பலிக்க தனக்கு முன் நாணத்துடன் குனிந்து நிற்கும் அந்த இளம் பெண்ணைப் பார்த்தார். 'எம் பொண்ணு செந்தாமரைங்க" லட்சுமி முந்தானை யால் வியர்வை வழியும் முகத்தைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்.
செந்தாமரை! எத்தனை பொருத்தமான பெயர். "பொண்ணு மாடு மாதிரி வளர்ந்திருந்தாலும் அவளுக்கு இப்போதுதான் பதினைந்து வயதுங்க" இவளைப் பார்த்ததும் குற்றலாத்தில் குளித்த சுகம்,மரீனா பீச்சில் மணல் அணைந்த உணர்வும் மலைச்சாரல் நதி யில் கால் பதிய நடந்த தெளிவும். நிலவில் காணும் அழகும் ஏன்மனதில் வந்தது. இவர் லட்சுமி கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை, "எம் பொண்ணு டீச்சரா வர ஆசைப் படுதுங்க" ஏழை இந்தியத் தொழிலாளியின் அந்தப் புனிதக் கனவு அவள் தொனியில் ஒலித்தது. "ஐயா அவள் சொல்லிக் கொடுத்ததெல்லாம் நல்லாப் படிப்பாள் ஐயா" லட்சுமி குழைந்தாள். **யோசித்துச் சொல்கிறேன் லட்சுமி" அவர் தன்னைத் தானே அடக்கிக் கொண்டார். அதன் பின் ஒரு மாதம்
J-5

Page 38
74 பனிபெய்யும் இரவுகள்
அவர் லட்சுமிக்குப் பதில் சொல்லவில்லை. காலையில் கல்லூரிக்குப் போகும் வழியில் தன்னைச் சில வேளை கடந்து செல்லும் செந்தாமரையை ஒரக் கண்ணாற் L17řůurfiř.
ஒருநாள் நல்ல மழை, பாடசாலையிலிருந்து வந்து கொண்டிருந்தார். செந்தாமரை மழையில் நனைந்து போய்க் கொண்டிருந்தாள்.
"செந்தாமரை"
அவள் திரும்பிப் பார்த்தாள். நீர் நனைந்த மீனாக அவள் கண்கள், அவரை ஊடுரு வியது. அவள் தயங்கினாள்.
இடி இடிக்கத் தொடங்கியது. மழை வானம் பொத்துக் கொண்டு பெய்தது. *' என் குடையில் வரவேண்டாம். நீயே பிடித்துக் கொள்" அவர் குடையை நீட்டினார். தேயிலைச் செடிகளில் நீர்த் துளிகள் படபடவெனக் கொட்டின. அவள் கைகள் நடுங்கின. ஏன் என்று தெரியவில்லை. குளிரிலா? அவருக்குத் தெரியாது. அவள் குடையையும் அவரையும் பார்த்தாள். பின்னர் விடுவிடுவென்று மலையேறிப் போய் விட்டாள். இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தையும் அவள் பேசி இவர் கேட்டதில்லை. அன்றிரவு அவர் தூங்கவில்லை, மழையில் நனைந்த செந்தாமரையின் உருவம் கனவில் வந்தது. அவருக்கு முப்பது வயதாகப் போகிறது. தாய் தகப்பன் எத்தனையோ பெண்களைப் பார்த்து விட்டார்கள். தனக்குப் பிடிக்காத யாரையும் கல்யாணம்

ராஜேஸ்வரி 75
செய்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி விட்டார்.
* சரி உனக்குப் பிடித்த பெண்ணாக யாரையும் பாரேன்" தாய் தகப்பன் நச்சரிக்கத் தொடங்கி யிருந்தார்கள். அடுத்த நாள் தாயின் கடிதம் வந்திருந்தது. வழக்கப்படி எப்போது கல்யாணம் முடிக்கப் போகிறாய் என்ற கேள்வி. w ஒன்றிரண்டு நாட்கள் தனிமையிலிருந்து யோசித்தார். வாழ்க்கை முழுக்கப் பிரம்மச்சாரியாக இருக்கமுடியாது. எப்போதோ இந்த மாதிரிச் செந்தாமரைகள் அவர் சிந்தனையைக் குலைக்கத்தான் போகிறார்கள். பதுளை நகரம் மார் கழி மாதக் குளிரில் தன்னைப் பிணைத்துக் கொண்டது. மலை முகடுகளைப் புகார் கவ்விக் கொண்டது.
மழை சோ வெனக் கொட்டி தேயிலை யிலைகளை வளம் செய்தது.
அவர் தூக்கமில்லாமற் தவித்தார். கடைசியாகத் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். "நீங்கள் பார்க்கும் பெண்ணைச் செய்கிறேன்," அடுத்த மாதம் செல்வ மலரைத் திருமணம் செய்துகொண்டார்.
8
தை பிறந்தது. செல்வமலர் திருமணம் நடந்த கை யோடு யாரோ எல்லாரையும் பிடித்து அவரைக் கொழும் புக்கு மாற்ற ஒடித் திரிந்தாள். அப்போது இலங்கையில் வகுப்பு வாதத்தின் விதை விதைக்கப்பட்டு விருட்சமாகிக்

Page 39
76 பணி பெய்யும் இரவுகள்
கொண்டு வந்தது. பண்டார நாயக்கர் பதவிக்கு வந்து சிங்கள மொழியை உத்தியோக பூர்வமாக்கியதைத் தொடர்ந்துத் தமிழ்த் தலைவர்கள் கோல்பேஸ் திடலில் தமிழுக்குச் சம அந்தஸ்துக்குக் கேட்டுச் சத்தியாக்கிரகம் இருந்தார்கள். சிங்களக் காடையர்களால் தமிழ்த் தலைவர்களுக்கு நல்ல அடி, இந்த ஊரில் "ஏன் இருக்க வேண்டும். நாங்கள் இங்கிலிஸ் படித்தவர்கள் லண்டனுக்குப் போனால் என்ன?'- செல்வமலர் கேட்டாள்.
அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. கல்யாணம் செய்து கொண்டது. சரி; இனி அவரின் வாழ்க்கையைச் செல்வ மலருக்காகத் தியாகம் செய்ய வேண்டுமா?
செல்வமலரின் நிகழ்ச்சி நிரலே வேறு. அவள் தனியார் கொம்பனி ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். வசதியான குடும்பம், அண்ணன்மார் நிறையக் கொடுத்திருந்தார்கள். எக்காரணம் கொண்டும் அவள் பதுளைக்குக் குடி பெயர்ந்து வரத் தயாராயில்லை.
சத்தியமூர்த்தி கல்யாணத்துக்காக எடுத்துக் கொண்ட ஒரு மாத லீவிற்தான் தன் எதிர்காலத்தைப் பற்றி யோசித் தார். செல்வமலர்- அவளின் பெரிய குடும்பம் அவர்கள் அகராதியில் அவரின் எதிர்காலம்! கொழும்பு கோல்டேஸில் சேர்ந்திருந்து அரசியல், கலை இலக்கியம் பேச அருளம்பலம் இப்போது தயாராயில்லை. "என்ன நீங்கள் இளம் பெடியன்களா" செல்வமலர். கேள்வி கேட்டாள்.
சத்தியமூர்த்திக்குக் கர்நாடக சங்கீதத்தில் அதிக ஆர்வம். இந்தியாவில் வாழ்ந்தபோது சேட்டு ரசித்த நீலாம்பரியும்
சல்யாணியும் செல்வமலரின் ஆங்கில றெக்கோர்டரின் சத்தத்தில் ஒலியிழந்து விட்டன. அவரால் எல்விஸ்:

*ராஜேஸ்வரி 77
ஃபிரஸ்லியைச் சகிக்க முடியவில்லை. ரொக் அன்ரோல்ட் மியுசிச்கில் செல்வமலருக்குப் பைத்தியம்.
விடுதலை நேரத்தில் அவருக்குக் கொள்ளுப் பிட்டியில் கடற்கரையில் நடக்க ஆசை. பாறையில் அம்ர்ந்திருந்து புத்தகம் வாசிக்க, ஓடிவரும் அலையில் கால் மிதிக்க ஆசை, அவளுக்கு அதெல்லாம் பிடிக்காது.
பட்டுச்சேலை சரசரக்க, தங்க நகை பளபளக்க அவள் உற்றார் உறவினர் வீடுகளுக்கு ஊர்வலம் போவாள். அவர்கள் பேச்சு லேற்றஸ்ட் சாரி,பிளவுஸ், தங்க மாளிகை நெக்லஸ் பற்றியிருக்கும்.
ஒரு மாதம் முடிய விட்டு பதுளைக்கு வந்து சேர்ந்தார்.
நாராயணன், இப்போது அடிக்கடி குடிக்கத் தொடங்கி விட்டான் லட்சுமி அடிக்கடி இருமலால் கஷ்டப்படுபவன் இப்போது இரத்தமும் துப்பத் தொடங்கி விட்டாள்.
**இந்த வருடம் எஸ். எஸ். சி எடுக்கப் போறாள்
செந்தாமரை, இங்கிலிசு கொஞ்சம் சொல்லிக் குடுங்க
ஐயா." செந்தாமரை தாயின் ஒரு அறை வீட்டின் மூலையில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருத்தாள். அவர்கள் இருப்பது ஒரு பெரிய வீட்டின் மூலையிலுள்ள ஒரு சிறிய அறையில். விறாந்தையில் நாராயணன் படுப்பான். விறாந்தையை ஒட்டியபடி ஒரு அடுப்பு, அதுதான் அவர் களின் சொத்து.
"செந்தாமரை உனக்கு இங்கிலிசு படிக்க ஆசையா?" அவர் செந்தாமரையைப் பார்த்துக் கேட்டார்.
அவள் சரி என்பதுபோற் தலையாட்டினாள்.
*"பின்னேரம் வீட்டே வா"

Page 40
ገ8 பணி பெய்யும் இரவுகள்
அன்று பின்னேரம் அவர்களின் வீட்டு விறாந்தையில் ஒரு மேசையை இழுத்து, இரண்டு கதிரைகளைப் போட்டுக் Go Tom.
நல்லநாயகம் இதெல்லாம் எதற்கு என்பதுபோற் பார்த்தார். தான் செந்தாமரைக்கு ஆங்கிலம் படிப்பிப்ப தாகச் சொன்னார். நல்லநாயகம் இவரை மேலும் கீழும் பார்த்தார். என்ன யோசித்தார் என்பது பற்றி சத்தியமூர்த்திக்கு அக்கறை யில்லை.
அவள்வந்தாள். தயக்கத்துடன் முன்னால் உட்கார்ந்தாள். அவர் அவள் முகத்தைப் பார்க்கவில்லை. முடிந்த மட்டும் புத்தகத்தையும் இல்லாவிட்டால் தூரத்தில் தெரியும் மலை முகட்டைப் பார்த்துக் கொள்வார். அந்த வருடம்தான் அவர் வாழ்க்கையின் வசந்தகாலம் என்பதைப் புரிந்துகொள்ள சத்தியமூர்த்திக்கு அதிக நாள் எடுக்கவில்லை. வார விடுமுறைகளில் கொழும்புக்கு வருவதும் செல்வமலருடன் அவளின் ஆசைக்கு ஏற்றபடி இழுபடுவதும் போதும் போதும் என்றிருந்தது. செந்தாமரைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, அவளுடன் சேர்ந்திருப்பது காலையில் நீலாம்பரி ராகம் கேட்பதுபோலவும் மலை முகட்டில் கண்மூடி கல்யாணி ராகம் ரசிப்பதுபோலவுமிருக்கும்.
நீண்ட நாளாகச் செய்யாத தன் பழைய வழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார். புல்லாங்குழலை எடுத்து வாசித்துக கொண்டார்.
பனிபடர்ந்த புல்தரையில் மெல்லிய நடையுடன் செந்தாமரை, தாய் லட்சுமி செய்து கொடுத்த சாப்பாட் டைக் கொண்டு வருவாள். லட்சுமிக்கு அடிக்கடி சுகமில்லாதபடியால் செந்தாமரையே பெரும்பாலாக சமையலைக் கவனித்தாள்.

grmrGgavanuif? 79
அந்த வருடம் நன்றாகப் பரீட்சை செய்ததாகச் சொன்னாள் செந் தாமரை.
நாராயணன் ஒரு கல்யாணம் செய்து “கொண்டான். அதன்பின் நாராயணன் செய்து வந்த கொஞ்ச நஞ்ச உதவியும் நின்று விட்டது.
லட்சுமி ஒன்றிரண்டு வீடுகளுக்குப் போய் ஒத்தாசை செய்து கொடுத்தாள்.
"இந்த லட்சணத்தில் அம்மா என்னை ரீச்சராகப் பார்க்க ஆசைப்படுறா" செந்தாமரையின் கண்களில்நீர் மல்கியது. ஏழை இந்தியத் தமிழர் கூலிகளாக மட்டும் வாழவும் நடத்தப்படவும் படைக்கப்பட்டவர்களா? சாப்பாட்டிற்கு முன்னையவிடக் கொஞ்சம்கூடப் பணம் நல்லநாயகமும் சத்தியமூர்த்தியும் கொடுத்தார்கள்.
கொழும்பிலிருந்து வரும்போது செல்வமலர் தனக்குத் தேவையில்லை என்று கழித்து வைத்திருந்த பிளவுஸ் களைக் கொண்டு வந்து கொடுத்தார். செல்வமலருக்கு இவருக்குச் சமையல் செய்து கொடுக்க லட்சுமி என்ற இந்தியப் பெண்ணும் அவள் மகளும் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார். செல்வமலரின் உடுப்பில் செந்தாமரையைப் பார்த்த போது அது அசிங்கமாகப் பட்டது. தூய்மையான ஒரு கோயில் விக்கிரகத்துச்கு ஒரு கந்தையை விரித்து வைத்தது போல் இருந்தது. அன்றொரு நாள் அவர் ஒன்றிரண்டு புதுத்துணிகள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். *“GGAuarunt to guunt”*
செந்தாமரை பழைய உடுப்பைப் போடத் தயார்!

Page 41
80 பணி பெய்யும் இரவுகள்
புதிதாக ஒன்றும் இவரிடமிருந்து வாங்க மாட்டாளாம், அவர் கட்டாயப் படுத்தவில்லை. ஆனால் செல்வமலரின் உடுப்புக்களைக் கொண்டு வருவதை விட்டு விட்டார். தங்கை காந்திமதி ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவார்.
நல்லநாயகம் ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொண்டு நல்ல வீட்டைப் பார்த்துக் கொண்டு போன பின் பொழுது போவது இவருக்குப் பெரிய திண்டாட்ட மாக இருந்தது.
நாராயணன் தன் மனைவியை வீட்டுக்கு வேறு கொண்டு வந்து விட்டான்,
செந்தாமரையும் தாயும் வசதியற்றுக் கஷ்டப் பட்டார்கள்.
*லட்சுமி இந்த வீட்டில் நான் இனி யாரையும் சேர்க்கப் போவதில்லை. உனக்கு விருப்ப மென்றால் குசினிக்குப் பக்கத்தில் இருக்கிற சின்ன அறையில் செந்தாமரையுடன் வந்து இரேன்." லட்சுமி இருமலுடன் இவரை நிமிர்ந்து பார்த்தாள். “வேண்டாம் ஐயா" 'சரி உன் விருப்பம்" அவர் வற்புறுத்தவில்லை. ஆனால் பல பின்னேரங்களில் குளிர் தாங்காமல் லட்சுமி தன் விறாந்தையிற் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்துப் பரிதாபப் படுவார் . ஒரு மாலை நேரம் கொழும்பு போக வெளிக்கிட்டவர் சரியான காய்ச்சல் வந்ததும் பேசாமற் படுத்து விட்டார். தனக்குச் சுகமில்லை என்றும் அடுத்த வாரம் வருவதாகவும் செல்வமலருக்குப் போன் பண்ணிச் சொன்னார்.
மழை சோ எனக் கொட்டத் தொடங்கி விட்டது.

ராஜேஸ்வரி 8
தலையிடி மண்டையைப் பிளந்தது. யாரும் ஏதும் குடிக்கத் தர மாட்டார்களா என்றிருந்தது. பின்னேரம் எத்தனை மணியிருக்கும் என்று தெரியாது. ஏதோ கனவு காணுவது போற் பிரமையாய் இருந்தது. ஆயாசத்துடன் கண் திறந்தவர் முன்னால் அவள் நின்றி ருந்தாள்.
கையில் கோப்பியோ தேநீரோ ஏதோ ஒன்றுடன் அவள் உருவம் மங்கலாகத் தெரிந்தது. "செந்தாமரை" அவர் முனகினார்.
"ஐயா. நல்லநாயகம் ஐயாவுக்குக் சொல்லி ஆனுப்
பட்டா" அவள் மெல்லக் கேட்டாள். மழை விடாமற் பெய்தது. வேண்டாம் என்பதுபோல் தலையாட்டினார். கொஞ்ச நேரத்தில் அவர் தூங்கிப் போய் விட்டார். எழும்பிப் பார்த்தால் நல்லநாயகம் இவர் கையைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டிருந்தார். *உனக்கு நல்ல மலேரியாக் காய்ச்சல்" நல்லநாயகம் ஒரு அப்போதிக்கரி, மருந்தெழுதிக் கொடுத் தார். அடுத்த நாள் விடிந்தால்தான் ஏதும் மருந்து வாங்க லாம்.
நல்லநாயகம் சிறிது நேரம் இருந்து விட்டுப் போய் விட் பார். வெளியில் இடியும் மின்னலும். இவர் காய்ச்சலிற் பிதற்றத் தொடங்கி விட்டார். லட்சுமி சாதாரணமாகவே நோயாளி. கட்டிலின் அடியில் ஒரு மூலையில் குந்தியிருந்தாள். செந்தாமரை இவர் பக்கத்தில் கதிரையில் உட்கார்த்திருத்
5f 67.

Page 42
82 பனி பெய்யும் இரவுகிள்"
நடுச்சாமம் இருக்குமா?
ஏதோ ஒரு பயங்கரக் கனவு. மலை முகட்டிலிருந்து யாரோ இவரை பாதாளத்துக்குத் தள்ளிவிடுவது போல வும், செல்லமலர் தன் சிநேகிதிகளுடன் காரில் ஏறிப் போவதுபோலவும் கனவு. யாரோ உதவிக்கு வருகிறார் கள்.யார் என்று முகம் தெரியவில்லை. இவர் திடுக்கிட்டு விழித்தார். செந்தாமரை பக்கத்தில் இருந்தாள். அவள் கை இவர் நெற்றியில்.
"உங்களுக்குச் சரியான காய்ச்சல் ஐயா, பிதற்றத். தொடங்கி விட்டீர்கள்" அவள் இவர் நெற்றியைத்தடவி விட்டாள். லட்சுமி தன் சேலையால் மூடிக் கொண்டு நல்ல தூக்கம். வானம் இப்போது அமைதியாக இருந்தது. ஆயிரம் நட் சத்திரங்கள் மழை முகில்களை அகற்றிவிட்டு இப்போது, தான் எட்டிப் பார்த்தது. *உனக்கு நித்திரை வரவில்லையா செந்தாமரை" அவள் இல்லை என்பதுபோல் தலையாட்டினாள். *"என்ன நேரம்." அவர் போட்டிருந்த கைக் கடிகாரத்தைப் பார்த்து: “காலை ஐந்து பணி" என்றாள். 'ரேடியோவில் ஏதாவது கேட்கலாமா" அவர் காய்ச்சலில் பிதற்றுகிறாரோ தெரியவில்லை என்பதுபோல் அவள். பார்த்தாள்.
"இன்னும் கொஞ்ச நேரத்தில் விடியப்போகுது ஐயா " அவள் பணிவாகச் சொன்னாள். விடிந்தது. உலக மாதாவை இரவெல்லாம் நீராட்டிய அலுட்பில் வருணபகவான் ஓய்ந்து விட்டான்.

ராஜேஸ்வரி 83
தேயிலைச் செடிகள் குளித்து முழுகிய இளம் பெண்போல்" காற்றிலாடின. பக்கத்து பங்களாக் கோழிகள் கூவின.
இவள் இவருக்குச் சுடக் சுடச் கோப்பி போட்டுத் தந் தாள்.
சுகமில்லாமல் படுக்கையிற் படுத்தது நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுதான் முதற்தரம். அவர் வீட்டில் மூத்த மகன், அதனால் நினைவு தெரிந்த நாளிலிருந்து யாரையாவது பார்க்கும் பொறுப்பு. தப் பி ஒருத்தன் பத்து வயதில் இறந்து போனான். வெறும் காய்ச்சல் என்று படுத்தவன். எழும்பவில்லை. அப்போது அவர்களின் தாய் துடித்து விட்டாள். இறந்து விட்ட தம்பியைத் தூக்கி வைத்துக் கொண்டு புலம்பிய தோற்றம் இவரின் மனத்தை விட்டகலவில்லை.
அன்றுதான் அவருக்கு இன்னொரு உண்மையும் விளங் கியது. அவரின் நினைவிற் படும்படியாக அவரின் தாய் இவரையணைத்ததையோ முத்த மிட்டதையோ இவர் அறியார். தாய்ப்பாசம் என்றால் பாலூட்டுதலும் சோறு போடுவதும், உடுப்புத் தோய்த்துக் கொடுப்பதும் என்று LDGLDIT?
இந்தியாவில் படிக்கும்போது கோயிற் தலங்கலுக்குத் தரிசனம் செய்யப் போகும்போது "என்ன தேவை என்று பிரார்த்திக்கிறாய்" அருளம்பலம் கேட் பார்.
இவர் சங்கோஜத்துடன் சிரிப்பார்.
தேவை என்று கேட்காதே" அருளம்பலம் கேலிசெய்வாள். வாழ்க்கையின் முதற் தடவையாக நினைவு தெரிந்த நாளி லிருந்து அவரையாரோ, இன்றுதான் மனமார்ந்த அன்பு டன் தொடுகிறார்கள். செல்வமலர் அவரைத் தொடுவதற்:

Page 43
84 பணி பெய்யும் இரவுகள்
கும் இவள் தொட்டதற்கும்தான் எத்தனை வித்தியாசம் செல்வமலரில் என்ன குறை? சம்பிரதாயத்தின்படி, சமு தாய எதிர்பார்ப்புகளின்படி அவள் நடந்து கொள் கிறாள்.
இவர், கலைத் தேவியை வணங்குவதை, இயற்கையைப் பணிவதைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும், எல்லா மத்திய தர வர்க்கத் தமிழ்ப் பெண்களும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தட்டைத் தூக்கிக் கொண்டு கடவு ளிடம் பம்பலப்பிட்டிக்குக்செல்லுவதுபோல் அவளும்தான் போகிறாள். செல்வமலரும் இவளும் வாழும் உலகமும் -எதிர்பார்க்கும் அனுபவங்களும் எத்தனை வித்தியாச
DfTayao)6)?
9
சத்தியமூர்த்தி உடம்பு சுகமாகி வீட்டுக்குப் போன போது எவ்வளவோ இளைத்து விட்டார், ஒரு மாதம் மெடிக்கல் லீவு போடச் சொல்லி செல்வமலர் உத்தரவு போட்டு விட்டாள்.
அந்த உத்தரவை ஒரு கிழமை மெடிக்கல் லீவாக்கி விட்டு பதுளை திரும்பும் போது ஒரு புதிய உற்சாகம். புதிய வேகம், புதிய எதிர்பார்ப்பு.
முப்பத்திரண்டு வயதாகிறது, ஆனால் இப்போதுதான் ஏதோ பதினெட்டு வயது வாலிபன் என்ற நினைவு, ஒடும் மேகங்களைப் பார்த்து மனம் குதூகலித்தது. மலைச் சாரல்களில் நதிகள் தன்னைப் பார்த்து நாணிக் கொண்டு வளைந்து செல்வதாகத் தோன்றியது.

ராஜேஸ்வரி 85
தன்னைத் தடவிப் போகும் தென்றல் ஏதோ ரகசியம் சொல்ல வந்ததுபோல் இருந்தது, ஏதோ தன்னைபறியாத எதிர்காலம் அவரை எதிர் கொள்வது போலிருந்தது.
அந்த வாரம் இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பமானது. தமிழர்களுக்கு எதிரான முதற் தமிழ்க்கலவரம் அது. தங்கள் மொழிக்கும் சம அந்தஸ்து கேட்டபடியால் சிங்களப் பேரின வகுப்புவாதம் அவிழ்த்து விட்ட பயங்கர வாதம் அது. ஆயிரக் கணக்கான உடமைகளைத் தமிழர்கள் இழந் தார்கள், நூற்றுக் கணக்கான உயிர்கள் சிங்கள இன வாதத்திற்குப் பலியானது.
லொறி காடையர்களால் தாக்கப்பட்டு அவன் கொல்லப் பட்டான். அந்த நிகழ்ச்சி பதுளையை வந்தடைய எத்த னையோ நாளாகி விட்டன. விஷயம் வந்தவுடன் எப்போது செத்து முடிவேன் என்றிருந்த லட்சுமி படுக்கையில் விழுந்து விட்டாள்.
நாராயணனின் மனைவி வயிற்றில்வளரும் குழந்தையுடன் தாய் தகப்பன் இருக்கும் தோட்டத்துக்குப் போய் விட்டாள்
எப்படியும் கொழும்பு வந்து சேரும்படி செல்வமலர் தந்தியடித்திருந்தாள். எப்படிப்போவதாம்? எத்தனையோ கொடுமைகள் வழியில் பாணந்துறைக் கோயில் ஐயரின் குழந்தைகளை கொலை செய்து மனைவியைப் கற்பழித்து ஐயரைத் தார் உருகும் பீப்பாவில் உயிருடன் போட்டதை யாரோ சொன்னார்கள்.
தமிழர்களின் கடைகள் எரிக்கப் பட்டன.
வீடுகள் தாக்கப் பட்டன. எப்போது என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது.

Page 44
86 பனி பெய்யும் இரவுகள்
லட்சுமி பிதற்றும் நிலையில் இருந்தால், ஆஸ்பத்திரிக்கும் கொண்டு போய்ச் சேர்த்தார் சத்தியமூர்த்தி. ஒன்றிரண்டு நாளில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்த்திருந்த போது நல்லநாயகம் குடும்பத்தினரும் வந்தனர். தாங்கள் கொழும்புக்குப் போவதாகவும் இவரையும் வரச் சொல்லி நல்லநாயகம் சொன்னார். செந்தாமரையையும் லட்சுமியையும் விட்டுதான் வரப் போவதில்லை என்று சத்தியமூர்த்தி சொன்னார். . நல்லநாயகம் இயலுமான புத்திம்திகளைச் சொன் னார். சத்தியமூர்த்தி மசியவில்லை. "உலகம் என்ன சொல்லும்" நல்லநாயகம் கேட்டார். 'உலகம் கேட்கும் கேள்விகளுக்குத் திருப்தியான மறுமொழிகள் கொடுக்க என்றால் முடியாது." நல்லநாயகம் கொழும்புக்குப் போய் என்ன சொன் னாரோ தெரியவில்லை. ஒன்றிரண்டு நாட்களில் செல்வமலரின் தம்பிகள் இருவர் காரில் வந்தனர். லட்சுமி இப்போது கிட்டத்தட்ட பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்தாள். - "இந்த முண்டங்களுக்காகவா பதுளையைச் சுற்றிச் சுற்றி இருக்கிறீர்கள்" செல்வமலரின் குண்டாந்தம்பி கேட்டான். அவன் ஒரு வேலையுமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவன். நாய் எலும்புத் துண்டைப் பார்ப்பதுபோல் செந்தாமரை யைப் பார்த்தான். 'எங்கள் வீட்டுக்கும் வேலைக்காரிகள் தேவை" குண்டாந் தடி கிண்டலாகச் சொன்னான். நேர்மை கெட்டவர்களுடன் அவர் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை.

ஆராஜேஸ்வரி − 87
வந்தவர்கள் வார்த்தைகளை உதிர்ந்து விட்டுப் போய் -விட்டார்கள்.
லட்சுமி இறந்து விட்டாள்.
நாராயணன் மனைவி தன்னுடன் செந்தாமரை இருக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். ஒருவேளைச் சோற் றுக்கு அவளே தன் பெற்றோர்களை எதிர்பார்க்கும் போது இந்த வயதுப் பெண்ணை வைத்து என்ன செய்வ தாம்? * 'எனக்கு ஒரு வேலை என்றாலும் எடுத்துத் தரப்பாருங்க ஐயா" அந்தக் காலத்தில் பெண்கள் கடை கண்ணிகளில் வேலை செய்வதில்லை. அவன் தகப்பன் ஒரு ட்ரைவர், தமையன் ஒரு ட்ரைவர். தேயிலைக் கொழுந்து பறிக்கும் வேலையும் கிடைக்காது செந்தாமரைக்கு.
அவள் ஆசிரியர் கல்லூரிக்கு எடுபடுவதென்றால் எத்த னையோ பிரமுகர்களின் சிபார்சு தேவை.
கொழும்புக்குப் போய் காந்திமதி வீட்டில் விடலாமா?
அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது செல்வமலரின் கடிதம் வந்தது.
அவர் செய்கை குறித்து கண்டபடி எழுதியிருந்தாள். இத்தனை வயதில் ஒரு இளம் பெண்ணை வைப்பாட்டி யாக வைத்திருக்க வெட்கமாயில்லையா என்று கேட்
டெழுதியிருந்தாள். அவளின் தம்பிகள் அப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். நல்லநாயகம் இதே தருணம் பார்த்து ஒரு தமிழ்ப் பகுதிக்கு மாற்றம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்.
செல்வமலரின் கடிதத்தின் பின் காந்திமதி வீட்டில் செந்தா மரையைக் கொண்டு விடுவதும் அவரால் முடியவில்லை.

Page 45
88. பணி பெய்யும் இரவுகள்"
"செந்தாமரை என்னில் நம்பிக்கையிருந்தால் இங்கேயே இருக்கலாம்." அவளுக்கு வேறு வழியில்லை. ஏழ்மை அவளை இப்படி வாழப் பண்ணியது. அப்படி அவள் நினைத்து ஒரு கிழமைக் கிடையில், அக்கம் பக்கத்து வேலைக்காரிகள் இவளைக் கேவலமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள். அருளம்பலம் இந்த நேரம் பார்த்து பதுளை வந்திருந் தார். சத்தியமூர்த்தி அந்த ஏழைப் பெண்ணின் துயரக் கதையைச் சொன்னார். அருளம்பலம் தனக்குத் தெரிந்த ஒரு தமிழ் வீட்டில் அவளை கண்டியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதாகச் சொன்னார். "அவள் படிச்ச பெட்டை, ரீச்சர் ட்ரெயினிங் போகக் காத்துக் கொண்டிருக்கிறாள். வேலைக்காரி மாதிரி நடத்த முயலாதே". சத்தியமூர்த்தி கெஞ்சினார். தனக்குத் தெரிந்த தமிழ் மனிதர் அப்படி ஒன்றும் கெட்ட வரல்ல, நல்ல மாதிரித்தான் நடத்து வார் என்று அருளம் பலம் சொன்னார். ܢ* இப்படிச் சொல்லி அருளம்பலம் தன்னை கொழும்புக்கு. அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறார் என்று தெரி யாத சத்தியமூர்த்தி அவரை நம்பிக் கொழும்புக்கும். போனார். செல்வமலர் முகம் கொடுத்துப் பேசவில்லை. கண்ட பாட்டுக்குத் திட்டித் தீர்த்தாள். அவளுக்கு உரிமை இருக்கிறது. திட்டித்தீர்க்கட்டும் என்று பொறுமையுட னிருந்தார் சத்தியமூர்ததி. ஒரு மாத லீவில் கொழும்பிலிருந்து வந்தபோது செந்தா மரை இவர் வீட்டில் துவண்ட கொடியாய்ச் சோர்ந்து;

ராஜேஸ்வரி - 89
போய் இருந்தாள். பசியில் கண்கள் சுருங்கி, உடம்பு மெலிந்திருந்தாள். செல்வமலர், அருளம்பலம் எல்லாரும் சேர்ந்து ஒரு உதவாப்பயலுக்குக் கல்யாணம் செய்து வைக்கத்தான் இவளைக் கண்டிக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள் என்பதைக் கேட்டபோது அவர் துடித்து விட்டார்.
அருளம்பலமும் சேர்ந்தா இந்தக் கொடுமை? ஒரு காலத்தில் அருளம்பலம் நினைத்து, நடந்து கொண்ட கொள்கைகளுக்கும் இப்போது அவன் நடந்து கொள்ளும் விதத்துக்கும் எத்தனை வித்தியாசம்?
பெண்மையைத் தெய்வமாய், சக்தியாய்த் தாயாய் நினைக்கும் அருளம்பலமும் மற்றவர்களுடன் சேர்ந்து இப்படி நடந்து கொள்ளலாமா? நடந்தார், யோசனையுடன் ஒவ்வொரு பின்னேரமும் பதுளை மலைச் சாரல்களில் நடந்தார். பனி தவழ்ந்த மர நிழல்களில் இரவில் இருந்து சிந்திப்பார்.
அடுத்த அறையில் பதினேழு வயதில் ஒரு இளம் பெண்ணின் விம்மல் அவர் இருதயத்தைப் பிழிந்திருக்கும். ஏழையாய்ப் பிறந்த குற்றத்துக்காகத்தான் எத்தனை தண்டனை? இந்த அழகும் இந்தப் பவ்யமும் ஒரு பணக் காரவிட்டுச்குப் பெண்ணுக்கிருந்தால் இப்போது கோயில் கட்டி வைத்திருப்பார்களே. அவள் விம்மலின் காரணங்களை அவர் கேட்கவில்லை, அவர் கேட்கத் தேவையில்லை. பக்கத்து பங்களாக்காரப் பெண்கள், அவர்களின் வேலைக்காரிகள் என்றும் பல பெண்கள் விர சமாய்ப் பேசியிருக்கலாம்.
அருளம்பலத்தின் கடிதம் வந்தது.
6-سسLu

Page 46
'90, பனி பெய்யும் இரவுகள்
அவர் எதிர்பார்த்தது சரிதான். தனது தங்கையைச் செய்து கொண்ட கடமைக்காக குடும்ப மானம் காக்க செந்தாமரையைச் சத்தியமூர்த்தியிடமிருந்து பிரிக்க அவரும் துணையாய்த்தான் இருந்தார் என எழுதியிருந் தாா. "ஏன் இந்தச் சிறையில் போய் மாட்டியிருக்கிறாய்" அருளம்பலம் கேட்டெழுதியிருந்தார்.
செந்தாமரை அவர் வீட்டு மூலையில் வாழ்வது ஏன் சத்தியமூர்த்திக்குச் சிறையாக இருக்கவேண்டும்? அவ ளல்லோ இந்தச் சமுதாயச் சிறையில் தன் பெண்மையைப் பற்றிக் கொள்ளத் தன்னை இவரிடம் ஒப்படைத்திருக் கிறாள். செல்வமலர் கண்டபாட்டுக்கு எழுதியிருந்ததாள். ஊர் உலகம் என்ன சொல்லும் என்று ஏதோ குழந்தைப் பிள்ளை மாதிரிக் கேட்டெழுதியிருந்தாள். ஊர் உலகமென்றால் யார்? செல்வமலர் உன்னைப்போல் பெண்களும் உன் தம்பியைப் போல இழிமக்களும் சேர்ந்ததுதானே உலகம். **அவளைத் தொட்ட கையால் என்னைத் தொடப் போகிறீர்கள் என்ற கற்பனைகூட உங்களுக்கு இருக்க வேண்டாம்" செல்வமலருக்கும் அவருக்கும் எத்தனை வித்தியாசம் என்று தெரியும். ஆனால் அவரைப் பற்றி அவள் இவ்வளவு மோசமாகவா நடக்க வேண்டும்?
அவர் சாப்பிடவில்லை. இந்தப் பெண்ணைக் காணா விட்டால் இவர் இந்த இக்கட்டான நிலையில் அகப்பட்
டிருக்கத் தேவையில்லையே! *என்னய்யா சாப்பிடாமல் இருக்கீங்க' இரண்டொரு நாள் அவர் சாப்பிடாமல் அலைவதைக் கண்டு அவள் கேட்டாள்.

ராஜேஸ்வரி 9.
-மார்கழி மாதம் நல்ல குளிர், வானம் கருமேகங்களால் மறைக்கப்பட்ட உலகமே ஏதோ சோக கீதம் பாடுவது போல் சோகமாய்த் தெரிந்தது. அவள் அவர் முன்னால் நின்றிருந்தாள். சிவப்புச் சேலையும் ஒரு நீலச் சட்டையும் போட்டிருந்தாள். அவர் வாங்கிக் கொடுத்த உடுப்பு. 'பசிக்கயில்ல செந்தாமரை" அவர் பொய் சொல்கிறார் என்று தெரியும். "ஐயா என்னைப் பத்தித்தானே யோசிக்கிறீங்க"
அவர் மெளனமாய் இருந்தார். 'ஐயா போகச் சொன்னால் போய்விடுவேன்" அவள் அழுதாள். திலம் பார்த்த முகம், நீர் வழியும்
கண்கள்.
'''StikGg, Gunt 6))ftur''
d
8 a so see
*உனக்கு ஆசிரியர் கலாசாலையில் ஒரு இடம் கிடைக்க என்னாற் தெரிந்த ஆட்களை எல்லாம் கேட்டிருக்கிறேன் அது வரைக்கும் எங்கே போவாய்"
8 P A 00 000 H.O. Op Op
*உலகம் பொல்லாதது செந்தாமரை" "தெரியுமய்யா" அவள் விம்மி விம்மி அழுதாள். வெளியில் உலகம் இருளில் சூழ்ந்து கிடந்தது. ‘எங்களைப் பற்றிக் கூடாமல் கதைக்கினம்"
4 y V
I di O 98 e o O N e 8
"நான் உன்னை வைச்சிருப்பதாகச் சொல்லிகினம்"
அவள் இப்போது நிமிர்ந்து பார்த்தாள்.

Page 47
92 பணி பெய்யும் இரவுகள்”
நீராடும் அவள் விழியில் அவர் உருவம் தெளிவாகத் தெரிந்தது.
"நீங்க என்னை வைச்சிருக்கீங்கதானே ஐயா" அவள் விம்மலுக்கிடையில் சொன்னாள் அவள் விளங்கித் தான் சொல்கிறாளா? அல்லது பேதைத்தனமாகப் புலம்பு கிறாளா?
"நீ என்ன சொல்கிறாய் செந்தாமரை" "நான் சாப்பிடற சாப்பாடு, நான் உடுத்துகிற உடுப்பு. படுத்திருச்கிற இடம், நம்பிக் கொள்கிற பாதுகாப்பு எல்லாம் உங்களின் ரைதானே. நீங்க என்னை வைச்சிருக்
கிறீங்க ஐயா"
'அடி பெண்ணே, நீ இளம் பெண். உன் வாழ்க்கையில் ஒரு நல்லவனைச் சந்திப்பாய். நாலு பிள்ளைகளைக் கட்டிப் பாதுகாப்பாய். நான் உன்னை ஒன்றும் வைச் சிருக்க இல்லை. உன்ரை உழைப்பில், பணியில், பாது காப்பில் வாழ்கிறேன்"
இருவருக்கும் விளங்காமல் இருவரும் பேசிக் கொள் கிறார்களா?
'ஐயா உலகம் என்ன சொன்னாலும் என்ன. நான் இஞ்ச பலமில்லாமல் இருக்கேன். நீங்க என்னைப் பாதுகாப்பாக வச்சிருக்கிறீங்ச, .' இன்னும் ஏதோ சொல்ல நினைத்தாள் போலும்.
அவரை மேலும் கீழும் பார்த்தாள்.
"நீங்க விரும்பினா நீங்க அந்த உலகம் நினைக்கிற மாதிரி வைச்சிருக்கலாம் ஐயா"
அவர் திடுக்கிட்டு விட்டார். இந்தப் பெண் பேசுவது என்னவென்று தெரிந்துதான். GL&SLnstit? ས་

ராஜேஸ்வரி 93
'எனக்கு விருப்பமில்லாத யாரோ குடிகாரரைக் கட்டி வைக்கப் பார்த்தாங்க, கல்யாணம் நடந்திருந்தா அடியும் :உதையும் வாங்கிக் கொண்டு அவனோட வாழ்ந்திருக்கத் தானே வேணும். அதைவிட அதைவிட." அவள் அழுது விட்டாள்.
*நீ என்ரை பாதுகாப்பில் இருக்கிறதற்காக நீ என்னிடம் எதையும் தரத் தேவையில்லை செந்தாமரை"
* நான் எப்போதே தந்திட்டேங்க" அவள் நிதானமாகச் சொன்னாள். அவர் கொடுத்த புத்தகங்களை வாசித்த புத்தியா இது?
அவர் அன்றிரவு நீண்ட நேரம் வெளியிலிருந்து யோசித் தார். இவளைத் தொட்ட கையால் என்ன துணிவிருந் தால் என்னைத் தொட நினைப்பீர்கள்' என்று செல்வ பலர் கேட்டு எழுதியிருந்தாள்.
அவருக்குச் சிரிப்பு வந்தது. அழவேண்டியவர் சிரிக்கிறார். அன்றிரவு பனி பெய்து இலையெல்லாம் முத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. ・ }
அடுத்த நாள் சனிக்கிழமை. இப்போதெல்லாம் அவர் கொழும்புக்குப் போவதில்லை. செந்தாமரையின் காலடிகள் விருப்பமான வீணையின் நாதமென அவருக்குக் கேட்கிறது.
ஒன்றிரண்டு கிழமைகளின் பின் பொங்கல் வந்தது.
அவர் அவளுக்குப் புதிய உடுப்பு வாங்கிக் கொடுத்தார்.
அவள் வீடு கழுவி பொங்கல் வைத்து, புத்தாடை கட்டிக்
கொண்டு வந்து அவர் காலைத் தொட்டுக்கும்பிட்டாள். அவள் கண்கள் அவர் கண்களைத் தழுவிக் கொண்டன.
“நான் கல்யாணமானவன்" அவர் குரல் தழதழத்தது.

Page 48
94. பணி பெய்யும் இரவுகள்"
மலை முகட்டின் பின்னணியில் வெள்ளைப் பூவில் கரை சேர்த்துக் கட்டியிருந்த சேலையுடன் அவளைப் பார்க்கும் போது உலகத்து அபூர்வமெல்லாம் பெண்ணுருவில் அவர் முன்னால் நின்றது,
'எனக்கொரு மஞ்சள் கயிறு போதுமய்யா. தங்கத்தாலி Genus, Lntib'
அவளாக அவர் கையைப் பற்றிக் கொண்டாள். அவர் விடுவித்துக் கொள்ளவில்லை. யுகயுகமாய் அந்த அழைப் பிற்குக் காத்திருந்த , பிரமை அவர் மனத்தில் பிரவே சித்தது.
1 O
"என்ன தியாகு பேசாமல் இருக்கிறாய்? ராதிகா தாறுமாறாகத் திட்டினாளா"
ராமநாதன் ஹைபரி கோர்ணரில் காரைத் திருப்பினார். "அப்படி ஒன்றும் இல்லை"
'நெருக்கமான உறவென்றால் இதெல்லாம் சர்வ சாதா ரணம்."
“நெருக்கமில்லாத உறவுடன் எத்தனை தம்பதிகள் இருக் கிறார்கள்" அவன் சிரித்தான்.
ராமநாதன் அவனைத் திரும்பிப் பார்த்தார். என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை.
"தியாகு நீ சில வேளை சாதாரண உலகத்தின் சாதாரண மனிதன் மாதிரித்தான் யோசிக்கிறாயோ என்று எனக்குச் சந்தேகம் வரும்"

ராஜேஸ்வரி 95.
தியாகு மறுமொழி சொல்லவில்லை.
ராமநாதனை அவனுக்குப் பிடிக்காது; தனக்குத் தானே இதுவரையும் சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது அவர் தன்னைப் பற்றிச் சொல்வதை நம்பாமல் தூக்கி எறிந்து விடுவதா? அல்லது உலகத்து அனுவங்கள் நிறைந்த இவரிடமிருந்து அப்படி ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்பதா?
கார் பென்டன்வில் ரோட்டில் திரும்பியது, இஸ்லிங்டனில் இன்று "அன்ரீக்' சாமான்கள் விலைபடும். உலகத்தின் பல பாகங்களிலுமிருந்து இன்று ஆயிரக்கணக்கான பணக் காரர்கள் இஸ்லிங்டனுக்குப் படை எடுப்பார்கள்.
இங்கிலாந்தின் கடந்த காலச் கரித்திரத்தின் சாட்சியாக ஒரு பழைய கதிரையாக, அல்லது டுப்ளிகேட் வைர நெக்லஸ் வடிவத்தில் வாங்கிப் போவார்கள். பழைய வனின் சரித்திரத்தை, அனுபவத்தை, அழிந்துவிட்ட நினைவுகளை இன்னொருத்தன் தன்னுடைய தாக்கிக் கொள்வதில் எவ்வளவு கஷ்டப்படுகிறான், -
"வாழ்ந்து மறைந்து விட்ட உனது மாமாபோல் நீயும் வாழ ஆசைப்படுகிறாயோ என்று எனக்குச் சந்தேகம் வரும்" ராமநாதன் பார்வையில் பாதை; இவனைப் பார்க்கவில்லை.
கார் இப்போது ஒரு ட்ரவிக் லைட்டில் நின்றது. தியாகராஜனின் மனதில் சுளிரென ஒரு சாட்டையடி.
"அழகுகளை ரசித்து, இயற்கையை ரசித்து, தன் மனச்
சாட்சிக்கு அடி பணிந்து, வாழ்ந்த மனிதர் உனது மாமா சத்தியமூர்த்தி என்று நினைக்கிறேன் "
தன் மாமாவைப் பற்றித் தெரிந்தது, உணர்ந்து கொண்டது எல்லாம் இவனைப் பொறுத்த வரையில் அசாதாரணமான நிசழ்ச்சிகள்; அவர் ஒரு அசாதாரண

Page 49
96 பனி பெய்யும் இரவுகள்
மனிதர் செல்வமலர் மாமி திட்டிக் கொள்வதுபோல் அந்த மனிதன் ஒரு பைத்தியக்காரனில்லை, வாழத் தெரி யாதவனில்லை. உலகத்துக்காக நடித்து, உலக நாடகத்தில் பங்கெடுத்து, மற்றவர்களுக்கு முகஸ்துதி பாடி நடிக்காத மனிதர். -
கிங்ஸ் குறோஸ் ஸ்ரேசன் பக்கம் கார் போய்க்கொண் டிருந்தது. ஸ்ரேசனைச் சுற்றி விபச்சாார்கள் நிறைந்திருப் பதாகப் பத்திரிகைகளில் படித்திருக்கிறான். குளிருக்கு எல்லாரும் தலையிலிருந்து கால் வரை மூடிக்கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள் உடம்பைக் காட்டிப் பிழைக்கும் பெண்களை எவ்வாறு அடையாளம் கண்டு பிடிப்பார்கள்?
*என்ன யோசிக்கிறாய்? அழுகலான உலகத்தில் உன் மாமா போன்றவர்கள் அசாதாரண மனிதர்கள், பொய் மைக்குள் தன்னைச் சுருட்டிக் கொள்ளாமல் தன்னுணர். வின் தர்மப் பாதையில் நடப்பவர்கள்" ---
ஏன் இப்படி உயரத்தில் பேசுகிறார் ராமநாதன்? இவர் ஒரு சாதாரண மத்திய தரவர்க்கத் தமிழன். தர்மத் தையும் தெய்வத்தையும் சத்தியசாயிபாபா பூசைக்குள் காண்பவர்கள். ஏழ்மையையும், அதர்மத்தையும் விதி என்றும் கர்மபலன் என்றும் சொல்பவர்கள்.
*"ஏழைப் பெண்களை ருசித்துக் கழித்துவிட்ட தமிழன், பணக்காரன் தமிழ்ப் பரம்பரைக்கு சத்தியமூர்த்தி ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறேன்" அவரின் வார்த்தைகள் அவனைக் கவர்ந்தது.
கார் ஹொஸ்பிட்டல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. தேம்ஸ் நதி அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தது.
பரந்த ஆற்றில் குப்பையும் கூளங்கலும் அடிபட்டு ஓடிக் கொண்டிருந்தன.

ராஜேஸ்வரி 97
“பகல் பன்னிரண்டு மணியிலிருந்து பின்னேரம் எட்டு மணிவரைக்கும் விசிட்டிங்ரைம். நான் கொஞ்ச நேரத்தில் வருவேன். நீ போய்ப் பார்'
அவர் காருக்குள் இருந்தபடி சொன்னார்.
ஏன் நான் தனியாகப் போய்ப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்?
சாரதாவை ஒப்பிரேஷனுக்குச் சம்மதிக்கச் சொல்லித் தானே என்னை அனுப்புகிறார்?
தான் இருந்தால் இவன் அவளுடன் மனம் விட்டுப் பேச முடியாது என்று நினைக்கிறாரா?
அவளின் உயிர் பிழைப்பது இப்போது இவன் கையிலா
இருக்கிறது?
சாரதாவைத் திருமணம் செய்து பத்து வருடங்களில் ஒன்றிரண்டு வார்த்தையைத் தவிர வேறொன்றும் பேசிக் கொள்ளாத இந்த மனிதர் இப்போது அவளின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் பணியை இவனிடம் ஒப்படைப்ப தென்றால் இவனைப்பற்றி அவர் கணித்து வைத்திருக்கும் அபிப்பிராயம் மிகக் கண்ணிய மானது, என்று நினைத்துக் கொள்வதா? அல்லது இவனைத் தன் இக்கட்டான நேரத் தில் பயன்படுத்திக் கொள்கிறார் என்று நினைத்துக் கொள்வதா?
அவனுக்குப் புரியவில்லை. புரியத் தேவையுமில்லை. சாரதா சுகமாய் வீட்டுக்குப் போனால் அதுதான் அவ ணுக்குத் தேவை; சந்தோஷமான நிகழ்ச்சி. மாமா உயிரோடு இருந்தால் தன் மகளை இந்த நிலையிற் கண்டால் துடித்துப் போவார். செல்வமலர் மாமி திட்டிக் கொள்ளலாம். ‘என்னை அழப் பண்ணியவர்கள் சந்தோச மாக இருப்பார்களா' என்று. ஆனால் செல்வமலரைச்

Page 50
98 ப னி டே ட்யுப் இ | வ ஸ்:
சந்தோசப் படுத்த மாமா பொய்யனாக நடந்திருக்க வேண்டுமா?
பதுளையில் ஒரு வேலைக்காரியைத் தன் தேவைக்குப் பாவித்து விட்டு கொழும்பு வந்து சம்பிரதாயக் கோட் பாடுகளுக்காக அவரால் வாழ முடியவில்லையே! அதை ஏன் அவள் உணர்ந்து கொள்ளவில்லை.
"வாழ்க்கையில் தன்னை முன்னேற்றிக் கொள்ளாத முட்
டாள்" செல்வமலர் மாமி இப்படியும் திட்டினாள்.
முன்னேற்றம் என்றால் என்ன? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதா? தேவைகளுக்கு மட்டும் பெண்
களைப் பாவித்து தூக்கி எறிவதா? அப்பா அருளம்பலமும்
மாமி செல்வமலரும் எத்தனையோ தரம் இது பற்றி விவா
தித்துக் கொண்டது இவனுக்கு ஞாபகம் இருக்கிறது.
செல்வமலர் அப்பாவுடன் ஒரு பிரைவேட் கொம்பனியில் வேலை செய்பவள். அந்தச் சினேகிதத்தில்தான் சத்தியமூர்த்தி குடும்பம் அவளை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.
செல்வமலர் மாமி எப்போதும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் பேர்வழி. அளவுக்குச் சற்று மீறித்தடித் திருந்த உடம்பு. முப்பது வயதுவரையும் கல்யாணம் ஆகாமல் இருந்த சோகம். பின்னர் கல்யாணமாகி நான்கு வருடங்களில் வேலைக்காரிக்குத் தன் கணவனை இழந்து விட்ட தோல்வி. எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வெறுப் புள்ள பெண்ணாக்கி விட்டிருந்தது.
அவளைப் பொறுத்த வரையில் உலகம் அவளுக்குக் கொடுமை செய்து விட்டது. தன்னைச் சத்தியமூர்த்திக்குக் கட்டிவைத்த தன் பெற்றோர்களை வைதாள். தன்னைச் சத்தியமூர்த்தி குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்த அருளம்பலத்தைத் திட்டித் தீர்த்தாள்.

pm (igaivojsh 99
"அந்த மனிதன் ஒரு காமப் பிசாசு, கலைகள் கத்திரிக் காய்கள் என்று புலம்புவதெல்லாம் இளம் பெட்டைகளை ரசிப்பதற்குத்தானே அவள் புலம்புவாள்.
சத்தியமூர்த்தி, இசையில் தன்னை மறப்பவன், சித்தி ரத்தில் உயிராயிருப்பவன் என்றெல்லாம் அருளம்பலம் சொல்லியிருந்தார்.
செவ்வாய் தோசமோ என்ன இழவோ என்றிருந்த செல்வ மலருக்குச் சத்தியமூர்த்தி கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம்
என்றுதான் அவளின் பெற்றோர்கள் நினைத்தார்கள். பெண்பார்க்க என்று அவர் வந்தபோது முன்ஹோலில்
மாட்டியிருந்த ரவிவர்மாவையே பார்த்துக் கொண்டிருந்: தாராம்.
"பெண்ணோட ஏதாவது கதையேன்டா" என்று அருளம் பலம் கிசுகிசுத்தபோது "உங்களுக்கு பாலச்சந்தரின் வீணையிசை பிடிக்குமா" என்று சத்தியமூர்த்தி கேட். டாராம்.
செல்வமலர் மருண்டு போனாளாம்.
அருளம்பலம் தன்மகன் தியாகுவிற்குச் சொல்லிச் சிரிப் t_umā.
"செல்வமலருக்கும் அவருக்கும் ஒத்து வராது என்று தெரிந்தும் ஏன் கலியாணம் செய்து கொண்டாராம்." இந்தக் கேள்வி கேட்கும்போது தியாகுவுக்கு இருபது வயது, தகப்பனுக்கு ஐம்பத்தி நான்கு வயது. மகனை ஏற இறங்கப் பார்த்தார் தகப்பன் அருளம்பலம். தகப்பனும் மகனும் சினேகிதர்களாய்ப் பழகத் தொடங் கியது எல்லோருக்கும் ஆச்சரியமே.
தியாகராஜன் நான்கு கருச்சிதைவுகளுக்குப் பின் தாய் காந்திமதியின் வயிற்றில் பிறந்தவன்.

Page 51
100 பணி பெய்யும் இரவுகள்
தாயின் செல்லப் பிள்ளை. தகப்டனின் சிநேகிதன் தான் மற்ற இளைஞர்கள் மாதிரியில்லாமல் தகப்பனுடன் சினேகிதமாக இருப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
அருளம்பலத்தைத் தகப்பனாராகக் கொண்டது தன் அதிர்ஷ்டம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வான் தியாகராஜன் ,
அருளம்பலம் தன்னைக் கூட்டிக்கொண்டு பதுளைக்குப் போனதும் அவன் சாரதாவை முதன் முதல் கண்டதும் இன்னும் கனவுபோல் இருக்கிறது. அதன் நினைவில் உடல் சிலிர்த்தது. "என்ன வெளியில் சரியான குளிரா" சாரதா ஹொஸ் பிட்டல் கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள். இரவு மங்கிய வெளிச்சத்தில் பார்த்ததற்கும் இப்போது பார்ப் பதற்கும் எவ்வளவோ வித்தியாசம். s அவனுக்குப் பரிதாபகரமாக இருந்தது. மிகவும் மெலிந்து, வெளிறிப்போய் இருந்தாள். இவனைக் கண்டதும் முகத்தில் ஒரு மலர்ச்சி பரவியது என்று சொல் லாமலே தெரிந்தது "என்ன சரியாகவே நித்திரையில்லையா' அவள் தன் முன்னங்கைகளை அமர்த்தி இன்னும் கொஞ்சம் வசதி யாக உட்கார முயற்சித்தாள். "நீ எப்படி இருக்கிறாய் என்று நான் கேட்க வேணும். நீ என்னைப் பற்றிக் கேட்கிறாயே" "எனக்கென்ன, டொக்டர்கள் சரியாகப் பார்த்துக் கொள் கிறார்களே”
"டொக்டர்களிடம் மட்டும் எங்கள் உயிரின் நிலை யைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஒப்புக் கொடுப்பது சரியில்லை என்று நினைக்கிறேன்"

ராஜேஸ்வரி 10
"என்ன உபதேசம் பண்ண வந்திருக்கிறாயா"
"கேட்பதற்குத் தயாராய் இருந்தால் முயற்சி செய்யலாம்: என்றுதான் நினைக்கிறேன்."
"செத்துப் போக நினைக்கிறது ஒவ்வொருத்தருடையதும் உரிமை'
சாரதாவா இப்படிப் பேசுகிறாள். அவன் மெளனமாய் இருந்தான். அவள் எவ்வளவு விரக்தியாக இருக்கிறாள் என்பது குரலில் ஒலித்தது.
"இது மிகவும் சுயநலமான முடிவு" "எது" அவள் கண்கள் இவனையூடுருவியது. "உங்களை நேசிப்பவர்களை விட்டு ஓடிப் போக நினைப்பது"
"நான் ஒருத்தி இல்லாவிட்டால் உலகம் என்ன அப்படியே நின்று விடுமா"
"நிற்காதுதான். அதற்காகக் கஷ்டங்களுக்கு முகம் கொடுக் காமல் உயிர் விடத் துணிவது கோழைத்தனம். இப்படி ஒவ்வொருவரும் செத்துத் தொலைத்தால் என்ன. நடக்கும்?" 'ஒன்றும் நடக்காது. ஏனென்றால் எல்லாரும் என்னைப் போல துரதிர்ஷ்டசாலிகள் இல்லை. அவர்களுக்கு வாழவென்று ஏதோ இருக்கிறது" "உனக் கொன்றுமில்லையா? ஏன் முட்டாள் தனமாப் சுேபகிறாய்." "எனக்குத் தாய் தகப்பனில்லை, கட்டிய கணவருக்குச் சந்தோசம் கொடுக்க எனக்குக் குழந்தை பிறக்க வில்லை. இந்த லட்சணத்தில் கான் ஸர் வந்து செத்துத் தொலைந், தால் என்ன நட்டம் வந்து கொட்டப் போகிறதாம்"

Page 52
1102 பணி பெய்யும் இரவுகள்
"இப்படிப் பேசுவது முட்டாள்த்தனம்"
"எப்படிப் பேசுவது. மற்றவர்களின் எதிர் பார்ப்புக் களுக்காக வாழநினைப்பது முட்டாள் தனம் என்கிறேன்” "நூற்றுக்கு நூறு வீதமாக இருக்காது, கொஞ்சம் விட்டுக் கொடுத்து வாழுவோமே தவிர ஒருத்தரைஒருத்தர் அடிமை கொள்ள மாட்டோம்."
அவன் இவளை இன்னொருதாம் உற்றுப் பார்த்தான். இந்த வெளிறிய முகத்திலும் தான் எத்தனை கவர்ச்சி. இவளையிப்படியே பார்த்து ஒரு ஓவியம் வரையலாமே! இந்த முகத்திற் தான் என்ன பவித்திரம்; உண்மைகளுக் காக வாழ்ந்து முடிந்துவிட வேண்டும் என்ற துடிப்பு. "ராஜன்." அவள் பெரிய ஒரு பிரசங்கம் செய்யப் போகிறாள் போல் முக பாவனையிருந்தது. -
"ராஜன்." அவள் தொடர்ந்தாள்.
*உனக்கு என்னை விளங்கப்படுத்திச் சொல்ல வேண்டும் என்று எனக்கு ஒரு அக்கறையுமில்லை. நான் ஒன்றும் தற்கொலை செய்து தப்பித்துக் கொள்ள நினைக்கும் கோளையுமில்லை. என்ன மாதிரி ரியூமர் எனக்குத் தெரியாது. கான்ஸராகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒப்பிரேஷன் செய்யும் உடல்நிலையில் இல்லை. எனக்கு இருக்கும் இரத்த அளவு போதாதாம். அவரின் இரத்தம் எனக்குப் பொருந்தாது. நான் யாரோ ஒரு மனிதரின் இரத்த தானத்தை வாங்கி ஒப்பிரேஷன் செய்து, அதன்பின் எனது ரியூமர் கான்ஸர் வகையைச் சேர்ந்தது என்று சொல்லி எனக்கு ஒன்றோ இரண்டு வருடம்தான் வாழலாம் என்ற நிலையும் ஏற்பட்டால் என்ன செய்வதாம்? கான்ஸர் என்று தெரிந்தபின் அணுவணுவாய்த் துடித்துச் செத்துப் போவதைவிட இப்போது நான் செத்துவிட்டால் கரைச்சல் இல்லையே" அவன் மெளனமாக நின்றான். இவள் எத்தனையோ

ராஜேஸ்வரி 03
விடயங்களைப் பற்றி யோசித்தபின் தான் இதெல்லாம் முடிவு கட்டியிருக்கிறாள்! அவன் என்ன சொல்வதாம்?
'நான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதாகக் கோபிக்காதே, நீ சொல்லும் காரணங்கள் எல்லாம் எனக்கு விளங்குகிறது. ஆனாலும் நீ முட்டாள்த்தனமாக மற்றவர்களின் இரத்தத்தை ஏற்றிக் கொள்ளமாட்டேன் என்று சொல்வதும், அதற்காக ஒப்பிரேசனைத் தட்டிக் கழிப்பதும் ஒரு பிற்போக்கு வாதமான கருத்து என்று தான் நினைக்கிறேன். இப்போது எல்லாம் இருதயத்தை யும் கிட்னியையும் தானம் செய்வது எவ்வளவோ நடை முறை சாத்தியமென்றாகி விட்ட பின் இன்னொகுத்தர் இரத்தத்தைப் பாய்ச்சிக் கொள்வதில் இவ்வளவு பிடிவாத மாக இருக்கிறாயே."
"ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தத்துவங் களும், ஆத்மீக நம்பிக்கைகளுமிருக்குமென்பதை ஏன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறாய்" "சாரதா நீ ஒரு பரந்துபட்ட மனதுடைய பெண் என்று தான் நினைத்தேன்.""
"இப்போது என்ன நினைக்கிறாய்"
'உனக்காக வாழ நினைக்காவிட்டாலும் உன்னில் அன்புள்ளவர்களுக்காக வாழ நினைக்கக் கூடாதா"
அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் கட்டிலுக்கு அருகில் உள்ள ஜன்னலால் பாராளுமன்றம் கம்பீரமாகத் தெரிந்தது. உலகத்தின் பாதியை அடிமை கொண்ட வெள்ளை ஆதிக்கத்தின் சிந்தனைகளின் பிறப்பிடமாய்ப் பாராளுமன்றம் வானத்தைப் பிளந்து கொண்டு நின்றது.
மனித மனங்களை அடக்கி ஆளும் பழம் நம்பிக்கைகளால் இவள் தன்னைத் தானே அடிமைப் படுத்திக் கொள் Gspmarsr?

Page 53
104 பணி பெய்யும் இரவுகள்"
11
"ஏன் நாங்கள் நீண்ட வராந்தாவிலேயே சந்தித்துக் கொள்கிறோம்" பாரதியைக் கேட்டான் தியாகு. பாரதி ஸ்டெதெஸ்கோப்பைச் சுற்றிக் கொண்டு வந்து கொண் டிருந்தான். பாரதி வழக்கம்போல் பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரித்தான். தலையாட்டிக் கைகளை அசைத்து அவன் பேசுவான். யாரோ ஒரு பாகவதருக்குப் பெற்றிருக்க வேண்டும். எல்லாச் சாயல்களும் அப்படியே இருக்கிறது. "எப்படி உன்னுடைய மச்சாள்'"டொக்டர் தன் நோயாளி யைப் பற்றிப் பார்வையாளனிடம் கேட்டான். "பிடிவாதமாக இருக்கிறாள். கான்ஸாராக இருந்தால் ஏன் இந்தச் சத்திர சிகிச்சை எல்லாம் என்று யோசிக் கிறாள் போலும்." *முட்டாள் மனிஷி, கான்ஸாராகத்தான் இருந்தாலும் இந்தக் காலத்திற்தான் எத்தனையோ ட்ரீட்மென்ட்ஸ் இருக்கே எனக்கென்னவோ இப்படிப் பிடிவாதங்களைக் கண்டாற் பிடிக்காது."
ஆஸ்பத்திரியால் வந்ததும் தியாகு வாட்டர்லூ றெயில்வே ஸ்ரேசன் பக்கம் திரும்பினான். "ஏன் காருக்கு என்ன நடந்தது?" "வரும்போது சாரதாவின் கணவருடன் பேசிக் கொண்டு வருவதற்காக அவர் காரிலேயே வந்தேன்." வாயில் வந்த பொய்யைச் சொன்னான். ராதிகா இவன் காரை எடுத்துக் கொண்டு போனதைப் பற்றிச் சொல்ல வில்லை.

ராஜேஸ்வரி 105
"எங்கேயிருப்பதாகச் சொன்னாய்"
"ஹைகேட்டில்" "பரவாயில்லை நான் லிப்ட் தருகிறேன், நான் மாமா ஒருத்தர் வீட்டு பேர்த்டேய்க்குப் பார்னட் போக வேண்டி யிருக்கிறது" இவனுடன் லிப்ட் எடுத்துப் போனால் வீட்டுக்குள் வந்து விட்டுப் போ என்று எப்படிச் சொல்லாமலிருப்பது?
ராதிகா இன்னும் மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று என்ன நிச்சயம்?
ராதிகாவுக்காக நான் ஏன் பயப்படவேண்டும்? "ஒரே ஒரு நிபந்தனை, மெடிக்கல் விடயமாக எதையும் சொல்லிப் போரடிக்காதே, எப்போது ஓய்வு வரும் வீட்டுக்குப் போய் ஒரு நித்திரை போடலாம் என்றிருக் கிறேன், போற வழியெல்லாம் மெடிக்கல் சம்பந்தமான கேள்வி கேட்டால் ஆவென்று அலறுவேன்" *"தியாகுவுக்குச் சிரிப்பு வந்தது. ராதிகாவும் இதைத்தான் சொல்வாள். மெடிக்கல் சம்பந்தமாக எதையும் கேட்கா தீர்கள்."
கார் வெஸ்ட் மினஸ்ட்டர் பாலத்தைக் கடந்து கொண்டி ருந்தது. பின்னேரம் ஐந்து மணிக்கே இருள் பரவி உலகை மறைதது விட்டிருந்தது. கல்யாணம், காதல் ஒன்றுமில்லையா என்று பாரதியைக் கேட்க நினைத்தான். பாரதி பல குழந்தைகள் உள்ள வீட்டில் பிறந்தவன். *உனக்குக் கல்யாணம் இன்னும் ஆகவில்லை என்று நினைக்கிறேன்." பாரதி இவன் மனதில் ஒடிக் கொண்டி
Lu-7

Page 54
106 பணி பெய்யும் இரவுகள்
ருக்கும் சம்பாஷணையைத் தெரிந்துக் கொண்டவன் போற் சொன்னான்.
*காதல் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளேன்."
பாரதி இன்னுமொருதரம் சத்தம் போட்டுச் சிரித்தான்.
என்ன சிரிப்பு" *நீ அதிர்ஷ்டசாலி, காதலிக்கக் கொடுத்து வைத்தவன்" "இதில் என்ன அதிர்ஷ்டம் இருக்கிறது" தியாவுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.
"இல்லாமல்என்ன? என்னைப் போன்ற வர் காதல் செய்வது பற்றிக் கற்பனையும் செய்ய முடியுமா? மூன்றுகல் அடுப்பு மாதிரி மூன்று தங்கச்சிகள். அவர்களுக்குச் சீதனம். அதற்காக நான் உழைக்க வேண்டும். இந்த நிலையில் தனி மனித ஆசைகளுக்கு எங்கே இடமிருக்கிறது? மத்திய தர வர்க்கத் தமிழன் ஒரு மரச் சிலை, உயிரும் உணர்வும் இல்லாமல் திரு விழாவுக்கு எடுபடுகிற சிலை மாதிரி தேலைகளுக்குப் பாவிக்கப்படவும் பாவிக்கப்படத் தெரிந்தும் வாழப் பழகிக் கொண்டவன் ."
பாரதியின் குரலில் விரக்தி, இவனுடைய வயதுதான் அவனுக்கும். "தமிழ்க் குடும்பத்தில் டொக்டராகப் பிறந்தாற்தான் என்ன தொழிலாளியாகப் பிறந்தாற்தான் என்ன? கல்யாண வியாபார ஒழுங்குகளுக்குக் கட்டுப் படாமல் வாழ முடிகிறதா?" கார் "சார்ள்ஸ் டிக்கன் மியுசியம்" இந்த வழியில் என்று காட்டப்பட்டிருக்கும் சந்தியினடியில் உள்ள ட்ரவிக் லைட்டில் நின்றது. "யார் பெட்டை" பாரதி கல்லூரிக் காலத்தில் படித்த தொனியிற் கேட்டான்.

grGgdiva)fl 107
இவனுக்கு அந்தச் சொல்லே பிடிக்கவில்லை. மெளனமாக இருந்தான். "லண்டனில் வளர்ந்த தமிழ்ப் பெட்டைகள் வெள்ளைக் காரர் மாதிரி வாழத் தெரிந்தவர். தமிழ்ப் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றில் அக்கறையில்லாதவர்கள். நாங்கள் கவனமாக இருக்க வேணும்' 'தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன?" இவன் கேள்விக்கு அவன் திரும்பிப் பார்த்தான். றோஸ்பரி அவெனியுவில் பழமையான, அருமையான புத்தகம் விற்கும் வியாபாரி தன் புத்தகப் பெட்டிகளைக் காரில் ஏற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் தியாகு ஒன்றிரண்டு தரம் பழைய புத்தகங்கள் வாங்கியிருக் கிறான்.
இந்தப் புத்தக வியாபாரி ஒரு தடவை இவனுக்குச் சொன்ன கதை ஞாபகம் வருகிறது.
உலகத்தில் பெயர் போன ஒரு சாஸ்திரப் புத்தகம்; அது இப்போது அச்சிலில்லை. அதைத் தேடி ஒரு வெளி நாட்டுப் பிரமுகர் வந்தாராம். அந்தப் புத்தகத்தின் பெயர் சொல்லிக் கேட்டாராம்,
அதற்கு அந்தப் புத்தக வியாபாரி "ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் புஸ்தகத்தைத் தேடுகிறீர்கள். அந்தப் புத்தகம்தான் இப்போது அச்சில் இல்ல, கிடைப்பதும் அருமையான காரியம்" என்று சொன்னாராம்.
அதற்கு அந்த வெளிநாட்டுப் பிரமுகர் சொன்னாராம். "எங்கள் நாட்டு ஜனாதிபதி இங்கு மாணவராய் இருந்த போது யாரோ ஒருவர் அந்தப் புத்தகத்தின் குறிப்பின் படி இவர் ஒருகாலத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதி யாவார் என்றும் எதிரிகளை மிகவும் இலகுவில் அடக்குவார் என்றும் சொன்னாராம், எனவே எங்கள்

Page 55
108 பனி பெய்யும் இரவுகள்
ஜனாதிபதி இந்த சாஸ்திரத்தைத் தன் இளவயதில் நம்பர் விட்டாலும் இப்போது நம்புகிறார்; அவருக்கு இப்போது எழுபத்தைந்து வயது. அவர் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பார், எப்படித் தன் எதிரியை வெல்ல முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறார்" என்றும் சொன்னாராம்.
புத்தக வியாபாரி நீங்கள் எந்த நாடு, உங்கள் ஜனாதிபதி யின் பெயர் என்ன என்று கேட்ட போது வந்த பிரமுகர் தான் இலங்கைக் ஹைக்கமிஷனிலிருந்து வந்திருப்பதா கவும் ஜனாதிபதியின் பெயரையும் சொன்னாராம் அந்தக் காலத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகக் கொடூரமான பயங்கர வாதம் கட்டவிழ்த்து விடப் பட்டிருந்தது. புத்தக வியாபாரி ஒரு இடது சாரி; இலங்கையில் தமிழர்களுக்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும் என்று சொன்னாராம், "என்னிடம் அந்தப் புத்தகமில்லை. இருந்தாலும் உன் போன்ற நாசகாரர்களுக்கு விற்கமாட்டேன். உங்க ஜனாதிபதி விரைவில் செத்துப்போவான்." என்று சொன்னாராம்.
"என்ன ஏதோ கேள்வி கேட்டு விட்டு ஏன் புத்தகக் கடைக் காரனைப் பார்த்துக் கனவு காண்கிறாய்" பாரதி என்ன கேள்வி கேட்கிறான்? தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி இவன் கேள்வி சேட்டதை ஞாபகப் படுத்துகிறானா? y "தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன?" தியாகு இன்னொருதரம் கேட்டான். "பண்பாடு." பாரதியால் அதற்குமேற் தொடர முடிய வில்லைப் போலும். இவனைத் திரும்பிப் பார்த்தான். "ஒரு பியர் எடுப்போமா" பாரதியின் கேள்வியில் தியாகு சிரித்து விட்டான்.

ராஜேஸ்வரி 109
பியர் எடுக்காமல் கலாச்சாரச் சர்ச்சை இவனுக்கு வராதோ? ع . 'வீட்டுக்குப் போகவேனும், நேற்றுத்தான் எடின்பரோ வில் இருந்து வந்தேன், நித்திரை கொள்ள வேணும்"
தியாகுவின் இந்த விளக்கம் பாதியுண்மை, பாதியுண்மை. யில்லை.
ராதிகா காத்திருப்பாள் நான் உடனே அவளிடம் போது
வேண்டும் என்பதுதான் உண்மை,
கார் ஹொல்வேய் ரோட்டால் ஆமை வேகத்தின்தான் போக வேண்டியிருந்தது. இருளும் மழையும் மக்கள் கூட்டமும் ஒரே அமளியாயிருந்தது.
"சரி உன் வீட்டிலாவது ஒரு பியர் கிடைக்குமாபார்ப்பம்" பாரதி சொன்னான்.
பாரதிக்கு பியர் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை என்பது தெளிவாகியது. ராதிகாதான் கதவைத் திறந்தாள்.
ஓகோ ஓகோ என்று சத்தம் போட்டுக் கொண்டு வந்த பாரதியின் வாய் சட்டென்று அடைத்தது தியாகுவுக்குத்
தெரியாது.
அவள் தியாகுவைப் பார்த்தாள். "உங்களுடன் வருபவரை எனக்கு அறிமுகம் கெய்வீர்கள் என்று நினைக் கிறேன்." குத்தலாகச் சொல்கிறாளா? 'ஒ. ஐயாம் சொறி. இது எனது பழைய சினேகிதன் பாரதி” அவள் பாரதிக்குக் "ஹலோ" சொன்னாள்.
'பாரதி இது என் வருங்கால மனைவி, ராதிகா?"

Page 56
110 பனி பெய்யும் இரவுகள்
பாரதி ஹலோ என்று கை குலுக்கப் போனான். ராதிகா கை குலுக்கிக் கொள்ளவில்லை. செளரவமாசக் சிரித்துச் சமாளித்து விட்டாள். "எங்கே சந்தித்தீர்கள் என்று கேட்கவில்லையே" ராதிகா வுடன் பேச வேண்டும் என்ற ஆவல் அவன் குரலில் அப்பட்டமாய்த் தொனித்தது. *சொன்னாற் கேட்டுக் கொள்கிறேன்." அவள் முன்னால் இருந்து கொண்டான். தியாகராஜன் இரண்டு பியர். ரின்னுடன் வந்து சேர்ந்தான். "இவர் மைத்துணியின் டொக்டர் நான். தற்செயலாகத் தான் சந்தித்தோம்."
ராதிகாவின் முகபாவம் மாறுவதைப்பாரதி கவனிக்க வில்லை. பாரதி எதையாவது பேசி ராதிகாவின் கவனத் தைக் கவர முயல்கிறான் என்பது அவன் காலடி எடுத்து வைத்த நிமிடத்திலேயே தெரிந்தது. இவன்தானே சிறிது நேரத்துக்குமுன் தமிழ்க்கலாச் சாரம்" பற்றிக் கதைத்தான்? இப்போது யாரோ ஒருத்த னின் வருங்கால மனைவியை எச்சில் வழியப்பார்க்கிறான்? 'நீங்கள் பியர் எடுக்கவில்லையே" பாரதி ராதிகாவையே கேட்கிறான்? தியாகு ராதிகாவைப் பார்த்தான். சாதாரண நாட்களாக இருந்தால் ஏதாவது குறும்புத்தன மாகக் கூறுவாள். இப்போது இருக்கும் மூட்டில் ஒன்றும். சுடச்சுடச் சொல்லாமல் "எனக்கும் படிப்பு வேலை நிறையக் கிடக்கு" என்றாள். "என்ன படிக்கிறீர்கள்"?
**மெடிஷின் ஃபைனல் இயர்" "அடேயப்பா மெடிஷின் படிக்கிறீர்களா. அதுவும் ஃபைனல் இயர். உங்சளைப் பார்த்தால் அட்படி ஒன்றும் வயதாகத் தெரியவில்லை"

ராஜேஸ்வரி 1 "என்ன வயது தெரியவில்லை? எனக்கு இருபத்தைந்து வயது. இந்த வயதிற்தானே பெரும்பாலானவர் ஃபைனல் எடுப்பார்கள்" அவளும் இப்போது பாரதியுடன் சேர்ந்து அரட்டையடிக்கும் "மூட்டு'க்கு வந்து விட்டாள் என்று அவள் குரலின் தொனி காட்டியது. "உங்களைப்பற்றி இந்த மடையன் ஒன்றுமே சொல்ல வில்லையே"
"அவருக்கு மச்சாளின் வருத்தத்தில் பெரிய சோகம்" அவள் குரலில் அனல். ஆனால் அந்தத் தொணியைப் பாரதி எப்படிக் கண்டு பிடித்தான்? "எனக்கு என் வேலை விடயம் பற்றிக் கதைக்க விருப்ப மில்லை" அதைக் காரில் வரும் போதே சொல்லி விட் டானே, தியாகு மெளனமாய் மற்ற இருவரையும் பார்த்துக் கொண்டான். *பின்னேரச் சாப்பாட்டை எங்களுடன் வைத்துக் கொள்ளலாமே". ராதிகா கடைக்கண்ணால் தியாகராஜ னைப் பார்த்து விட்டுச் சொன்னாள்.
'676,607...... சாப்பாடா. உங்களுக்குச் சிரமம் இல்லை என்றால்." பாரதி தேனாகக் குழைந்தான். *இந்த மடையன் தானே ஒரு பார்ட்டிக்குப் போவதாகச் சொன்னான்?" தியாகராஜனுக்குப் பாரதியின் நடத்தை ஆச்சரியத்தை மூட்டியது. பாரதி கல்லூரியில் படிக்குப்போதே பெண்கள் என்றால் கொஞ்சம் 'இளகிப் போவான். அந்தக் குணம் இத்தனை வருடமாக, இந்த நேர் ஸ்மாரைக் கண்டும் போய்த் தொலைய வில்லையா?
"எங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லை. எதையும் யாரு டனும் பங்கு போட்டுக் கொள்வதென்றால் எங்சளுக்கு

Page 57
12 பனி பெய்யும் இரவுகள்
நல்ல விருப்பம்" தியாகுவுக்கு அவளின் கிண்டல் ஆத்தி ரத்தை யுண்டாக்கியது.
"கரும்பு தின்னக் கூலியா? உங்களுக்கு ஏன் வீண் சிரமம்" இந்தப் பாரதி மெடிக்கல் கொலிஜ்ஜுக்குத் தானே போய்த் தொலைந்தான்? இந்போது பார்த்தால் இப்படி நடிக்கி றானே ஒஸ்கார் கொடுக்கத் தக்கதான நடிப்புத்தான்.
*சரி நான் ஏதும் கெதியாய் சமைக்கப் பார்க்கிறேன்" அவள் எழும்பினாள்.
"நான் ஏதும் உதவி செய்ய வேணுமென்றால் மிகச் சந்தோஷப் படுவேன்"
அவன் பின் தொடர்ந்தான். பாரதியா இப்படிக் குழை கிறான்? பாரதி தானாக இன்னொரு பியரை உடைத்துக் கொண்டான். பிரிஜாசுக்குள் நிறைய பியர் இருக்கிறது. அவன் கூடாரமடித்துக் குடியிருந்து கொண்டு குடித்துத் தொலைக்கப் போகிறானா? இவள் விருந்துக்குக் கூப்பிட் டால் அவன் ஏன் மாட்டேன் என்று சொல்லப் போகி றான்? தியாகுவிற்குக் கோபம் வந்தது.
ஏன் பாரதியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் என்றி ருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது.
டெலிபோன் மணியடித்தது.
நேரத்தைப் பார்த்தான் தியாகு. இரவு பதினொருமனி
நேற்று இந்த நேரம் இவளைக் காண எத்தனை துடிப்
புடன் வந்து சேர்ந்தான்? இருபத்தி நான்கு மணித் தியாலங்களிடையில் வாழ்க்கையில் ஒருநாளும் சந்திக்காத
இந்தப் படுபாவி பாரதிக்கு விருந்து சமைக்கிறாள். இதெல்லாம் எனக்குச் செய்யும் பழி வாங்கலா?
டெலிபோனை எடுத்து ஹலோ என்றான்.

ராஜேஸ்வரி 13
*ராமநாதன் பேசுறன். நேர காலம் போய்ப் போன் பண்ணி எழுப்புறத்துக்கு என்னை மன்னித்துக் கொள் ளுங்கோ" அவர் தாழ்மையுடன் சொன்னார்.
"பரவாயில்லை சொல்லுங்கோ"
SK VE
*சாரதா ஒப்பிரேஷன் செய்யச் சம்மதிச்சு விட்டாள் ராமநாதன் சொன்னவற்றை இன்னொருதரம் அசை போட்டுப் பார்த்தான். நம்ப முடியவில்லை.
'உண்மையாகவா"
'உண்மையாகத்தான்" ராமநாதனின் குரலில் மகிழ்ச்சி. தியாகுவுக்குப் பாரதியின் அலட்டல் மறந்து போய்விட் டது. ராதிகா பாரதியுடன் செல்லம் பண்ணுவதுபோல் நடந்து கொள்வது கண்ணில் படவில்லை. அவன் மனக் கண்ணில் சோர்ந்த, வெளிறிய, நோவுடன் துடிக்கும் சாரதா தோன்றினாள். "வசந்தி போய்ப் பார்த்தாளாம். அவள்தான் தன்
மனத்தை மாற்றினாளாம்"
*** y ffrifir வசந்தி'
"அவள் என் முதல் மனைவி'
12
திங்கட்கிழமை தியாகுவுக்கு ஒரு சோதனையான நாளாகி விடடது. வெள்ளிக் கிழமை பின்னேரம் எடின் பரோவிலிருந்து வந்த நேரத்திலிருந்து நடக்கும் நிகழ்ச் சிகள் இவனின் வாழ்க்கையில் இதுவரை நடந்து கொண் டிருக்கும் அனுபவங்களுக்கு எதிர் மாறாகத்தானிருந்தது.

Page 58
114 பனி பெய்யும் இரவுகள்
மால்க்கம் ஹரிஸன் முகத்தை நீட்டிக் கொண்டிருந்தான்
என்ன நடந்தது" ஒவ்வீசுக்குப் போய்ப் பத்து மணி வரைக்கும் மால்கத்தைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. "நீ இன்னும் மனேஜரைப் பார்க்கப் போகவில்லையா" மால்க்கம் வழக்கம் போல் உற்சாகமின்றிக் கேட்டான்.
தனக்கும் ராதிகாவுக்கும் பிரச்சினை நடப்பதுபோல் அவனுக்கும் லிண்டாவுக்கும் பிரச்சினை வந்திருக்குமா? ஏன் மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்கிறான்.
"பதினொரு மணிக்குத் தன்னை வந்து பார்க்கச் சொல்லி "நோட்" ஒன்று அனுப்பியிருக்கிறார்." "குட் லக்" மால்க்கம் மேலே ஒன்றும் சொல்லாமற்: போய் விட்டான்.
என்ன நடந்து விட்டது இவனுக்கு? கொம்பனியில் ஏதும் பிரச்சினையா? இவர்கள் கொம்பனி "இண்டஸ்ரி மெஷினறி" செய்வதில் பெயர் பெற்றவர்கள்.
தியாகுவும் மால்கமும் கொம்பியூட்டர் செக்ஸனில் வேலை செய்கிறார்கள். சிறிய அளவில் டிசைனிங் செய்கிறார்கள். மேலே உயர இடமுண்டு, ஆனால் இங்கிலாந்தில் உண் டாகியிருக்கும் பொருளாதார தேக்கம் இவர்கள் கொம் பணியையும் தாக்கியிருக்கிறது.
நூற்றுக் கணக்கான சிறிய கொம்பனிகள் வாரந்தோறும் மூடப்பட்டுக் கொண்டு வருகின்றன. இவர்களிடம் ஒடர் கொடுக்கும் கொம்பனிகளிற் பல பொருளாதார பிரச் சினையால் திண்டாடுகிறது. ஆனாலும் கொம்பனியில் ஆள்க் குறைப்பு நடத்துவதற்கான அறிகுறிகள் ஏதும் இப்போது இல்லை.
எப்போது பதினொரு மணியாகும் என்று காத்திருந் தவன் போல் மனேஜர் அறையுள் நுழைந்தான்.

grOgdiweuf 115
ஹலோ, ராஜன், கம் இன், எப்படி எடின்பரோ" மனேஜர் மலர்ச்சியுடன் வரவேற்றார். வெள்ளைக் காரர் சிரித்துக் கொண்டே எந்தவிதமான சீரியஸான விடயத்தையும் சொல்வார்கள் என்பது அவலுக்குத் தெரி யாததல்ல.
அவன் சுருக்கமாக எடின்பரோ ட்ரெயினிங் பற்றிச் சொன்னான். "சந்தோசமாகப் போனதாக எல்லோரும் சொன்னார்கள்" மனேஜர் இன்னும் மலர்ச்சியான முகத்துடனிருந்தார்.
"மற்றப்படி ஒரு பிரச்சினையுமில்லையே' மனேஜர் ஏதோ பிரமாண்டமான விஷயத்தை அவிழ்த்து விடப் போகிறார் என்று மனம் சொல்லியது. ஏதும் பிரச்சினை என்று எதைப்பற்றிக் கேட்கிறார்? சாரதாவுக்குச் சுகமில்லாமலிருப்பது இவன் மனத்தில் உண்டாகியிருக்கும் பெரிய பிரச்சினை. அதைப்பற்றி இந்த மனேஜருக்கு ஏன் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? மனேஜர் இருக்கையை விட்டெழுந்தார். மனேஜர் குட்டி போட்ட பூனை போல் அங்குமிங்கும் நடந்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார். டையைச் சரிசெய்து கொண்டார்.
மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தார். ஐம்பது வயதான மிஸ்டர் கிறீன் தன் வழுக்கை விழும் மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டார். மொட்டைத் தலையுள்ளவர்களுக்கு இருதய வருத்தம் அறிகுறிகள் கூட இருக்குமாம்; தியாகுவுக்கு ஞாபகம் வந்தது.
பின்னர் தன் கைகளைக் கும்பிடுவதுபோல் குவித்துக் கொண்டு மேசையில் தூக்கி வைத்தார்.

Page 59
116 பனி பெய்யும் இரவுகள்
"கொம்பனியில் ஆள்க்குறைப்பு செய்ய வேண்டிய
நிலைமை ஏற்பட்டிருக்கிறது" மால்க்கத்தின் முகத்தில் தெரிந்த எரிச்சலின் காரணம் இப்போது தெரிந்தது.
இவன் பேசாமல் இருந்தான். “லண்டன் கிளையை முற்றாக மூடவேண்டிய நிர்ப்பந்தம். பெரும்பாலானவர்களுக்கு வேலை போகப் போகிறது. ஒரு சிலரை எடின்பரோவுக்கு மாற்ற உத்தேசித்திருக் கிறோம்" メ அவர் இப்போது கைகளை விரித்துக் கொண்டார். விரல் களால் மேசையிற் தட்டிக் கொண்டிருந்தார். ரொம்பவும் நேர்வஸ்ஸாக இருந்தார். அப்பட்டமாகத் தெரிந்தது. என்ன கேட்பது? நான் வேலையிழக்கப் போகிறேனா அல்லது மாற்றப்படப் போகிறேனா என்று கேட்பதா? இவன் மெளனமாக இருந்தான். வெள்ளைக்காரர் தேவை யில்லாமல் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அவன் அவர்களிடம் படித்த நல்ல விடயங்களில் அதுவு மொன்று. 'நீ அதிர்ஷ்டசாலி என்று நம்புகிறேன்" அவர் சிரித்தார். சிகரெட் புகைத்துக் காவியேறிய பற்கள், இவன் பொறுமையாக இருந்தான். இருதயம் நிமிடத்துக்கு நூறு தரம் துடித்தது.
"உன்னை எடின்பரோவுக்கு மாற்றியிருக்கிறார்கள்" அவன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான் என்று நினைத்தவரின் முகம் ஏமாற்றத்தைக் காட்டியது.
சாரதா சாகக் கிடக்கிறாள், உடனடியாக எடின்பரோ அக்குப் போவதா?

pr rrGag6iv smurf? 117
அவர் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். வெள்ளை முதலாளிகள் ஒரு நிமிடத்தையும் விரயம் செய்யா தவர்கள். "உடனே பதில் சொல்ல வேண்டுமா" அவன் குரலில் உயிரில்லை.
"உங்கள் ஃபியான்சே ராதிகாவுடன் கலந்தாலோசிக்கப் போகிறீர்களா" அவர் இன்னொரு தரம் தன் காவி படிந்த பற்களைக் காட்டிக் கொண்டார்.
கொஞ்ச நாளைக்கு முதல் அங்கு நடந்த பார்ட்டிக்கு அவளும் வந்திருந்தாள். அவளையிந்த காவிப் பற்களுக்கு நிறையப் பிடித்துக் கொண்டது. அடுத்த நாள் தன் மொட்டையைத் தடவிக் கொண்டு இவன் ஒரு அதிர்ஷ்ட சாலி என்று பாராட்டினார். அவர் வாழ்க்கையில் பெரிய துரதிர்ஷ்டசாலிதான்! அவர் மனைவி தன்னிடம் படித்த மாணவனுடன் போய் விட்டாள். அதன்பின் இவரின், தலைமயிர் எல்லாம் உதிர்ந்துவிட்டது. பாவம் மனிதர்.
"உங்கள் மறுமொழி எனக்கு வெள்ளிக்கிழமை தேவை" அவர் கையை நீட்டினார். கைகுலுக்கப் போகிறார். இனி வெளியே போகலாம் என்பதை இப்படித்தான் நாகரீக மாகக் காட்டிக் கொள்வார்கள். இவன் எழுந்து கொண்டான். அடுத்த திங்கட்கிழமை வரைக்கும் பொறுக்க முடியுமா என்று கேட்க நினைத் தான். ஏனென்றால் சனி ஞாயிற்றுக்கிழமையில் ராதிகா வருவாள். இது பற்றிக் கலந்து ஆலோசிக்கலாம். ஆனால் அவனுக்கு ஒரு கிழமை தேவையில்ல. இப்போதே என்ன செய்வது என்று முடிவு கட்டிவிட்டான். வெள்ளிக்கிழமை சொல்லிக் கொண்டாற் போகிறது.
சளி யு" சொல்லிவிட்டு ஒவ்வீசை விட்டு வெளியேறி surter,

Page 60
118 பனி பெய்யும் இரவுகள்
கண்டினில் மால்க்கம் காத்திருந்தான்.
"பிளடி ஸிற்’ மால்க்கம் கொம்பனியைத் திட்டிக் கொண்டான். இங்கிலாந்துப் பொருளாதாரத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்த கொன்சர்வேட்டிவ் கட்சியைத் திட்டிக் கொண்டான். மார்க்கிரட் தச்சரையும் திட்டினான். லன்ஞ் ரைம் என்றும் பார்க்காமல் இவனையும் இழுத்துக் கொண்டு "பாரு"க்குப் போனான். விஸ்கியில் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டான். அதன் பின் மார்க்கிரட் தச்சரை இழிந்த பாஷையில் திட்டிக் கொண்டான். அரச குடும்பத்தை ஆபாசமாகப் பேசினான்; அரசியல் ரீதியாய் அவன் ஒரு "அனாக்கிஸ்ட்". எல்லாரையும் திட்டித் தீர்ப்பான். அவன் தாய் பரம்பரையில் ஐரிஸ், தகப்பன் இங்கிலிஸ் குடித்தால் ஐரிஸ்காரன். குடிக்காவிட்டால்தான் ஒரு இங்கிலிஸ் ஜென்ட்டில்மன் என்று தன்னைத்தானே சுய விளம்பரம் செய்து கொள்வான் மால்க்கம்.
சினேகிதனைப் பார்த்துக் கொண்டிருந்தான் தியாகு. எடின்பரோவுக்குப் போகும் உத்தியோகத்தர்களில் அவனும் ஒருத்தன். அவனுக்கு எடின்பரோ நன்றாகப் பிடிக்கும். அதற்குக் காரணம் ஸ்கொட்டிற்தான் விஸ்கி உற்பத்தி செய்கிறார்கள் என்பது மட்டுமல்ல. இவனை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் - லண்டன் சூழ் நிலையில் வைத்துக்கொள்ள நினைப்பவள் அவனின் காதலி லிண்டா.
அவள் பிரபல டிசைனிங் கொம்பனி ஒன்றில் பார்ட்னராக லண்டனில் வேலை செய்கிறாள். தன் வேலை முன்னேற் றத்தில் மிகக் கவனமுள்ளவள். அதே நேரம் மால்க்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லாதவள்.
"குடித்துவிட்டு இந்த மால்க்கம் எனக்குப் பக்கத்தில் படுத்தால் இவன் வாயில் வரும் பெண்கள் பேரை எல்லாம்

ராஜேஸ்வரி 19
குறிப்பில் எழுதினால் ஒரு அகில உலக வைப்பாட்டிகள் சங்கம் இவனுக்கு அமைத்துக் கொடுக்கலாம்" என்று ஒப்பாரி வைப்பாள் லிண்டா. மதுவிலும் மங்கைகளிலும் மால்க்கத்திற்கு ஒரு மயக்கம் பாவம் லிண்டா. "நீ என்ன செய்யப் போகிறாய். ராதிகா உன்னை நம்பலாந்தானே. நீ ராதிகா பூசை செய்யும் பக்தன் இல்லையா"
சாரதாவையும் தன்னையும் சேர்த்து ராதிகா திட்டுவதை இவன் இன்னும் கேட்கவில்லையே. மால்க்கம் தன் நெருப்பு நிறத் தலையைப் பிய்த்துக் கொண்டான்.
எடின்பரோ போகாவிட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும். மால்க்கம் எடின்பரோ போனால் அவன் காதலிக்குப் பைத்தியம் பிடிக்கலாம்.
தியாகு நாளையிலிருந்து இரண்டு நாளைக்கு லீவு கேட்டிருந்தான். பேர்ஸனல் டிப்பார்ட்மென்ட்டுக்குப் போய் அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போய்விட்டான்.
மாலையில் ஹொஸ்பிட்டலுக்குப் போக வேண்டும். நாளைக்கு சாரதாவுக்குச் சத்திர சிகிச்சை நடக்கும். நேற்றுத்தான் அவள் ஒப்பிரேஷன் கொன்சேன்ட் பத்திரத்தில் கையெழுத்திட்டாள். எஸ்கலேட்டரில் ஏறிக் கொண்டிருந்த தியாகுவின் முகத்தில் ஒரு சிறிய புன்சிரிப்புத் தோன்றி மறைந்தது. ஒரு காலத்தில் சத்தியமூர்த்தி மாமாவின் பதுளை நகரில் அமைந்த வீட்டின் விறாந்தையிலிருந்து கொண்டு சாரதா வும் அவனும் நட்சத்திரங்களை எண்ணி விளையாடியது நினைவில் வந்தது.
ஆடி மாதக் கோடைவெயில் காலத்தில் அவனுடைய தகப்பன் அருளம்பலம் தியாகுவுடன் தன் மைத்துனா

Page 61
20 ւյogh பெய்யும் இரவுகள்
சத்தியமூர்த்தியைப் பார்க்கப் டோயிருந்தார். சத்திய மூர்த்தியின் தங்கை காந்திமதி - தியாகுவின் தாய், வேலைக்காரி சாரதாவுடன் குடித்தனம் நடத்தும் தமையன் வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டாள்.
தன் கணவர் அருளம்பலத்துடன் காந்திமதி போட்ட சண்டை எல்லாம் விழலுக்கிறைத்த நீராய்ப் போய் விட்டது.
* உன்னைத் தொட முதல் உன் அண்ணன் தான் எனது மிக நெருங்கிய சினேகிதனாக இருந்தான். சமுதாயத்தின் நிர்ப்பந்தங்களுக்குப் போலியாக வாழ்ந்து தொலைக் காமல் மனித நேயத்துக்கு, உண்மையான காதலுக்கு மதிப்புக் கொடுக்கும் என் சினேகிதனை உனக்காக ஒதுக்கத் தயாராயில்லை"
அருளம்பலம் தன் மகன் தியாகுவையும் இழுத்துக்கொண்டு கொழும்பிலிருந்து பதுளைக்கு ரெயின் எடுத்து விடுவார். தியாகு என்ற பெயரை வைத்தவரே சத்தியமூர்த்திதான்" காந்திமதி தியாகுவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த போது சத்தியமூர்த்தியின் தாய் இறந்து விட்டாள். தன் மகன் ஒரு வேலைக்காரியை மனைவியாக்கிக் கொண்டதில் அவள் இருதயம் புண்பட்டு விட்டது. அந்தக் கிழவியின் தலைமுறையில் சிங்கள ஏழைப் பெண்களும், இந்திய ஏழைப் பெண்களும் வசதிபடைத்த வாலிபர்களால் அனுபவித்துக் கழித்துவிடப் பிறந்தவர்கள். ஒரு இந்தியக் கூலியைக் குடும்பக் காரியாக்கி விட்டானே! மத்தியதரத் தமிழ்த் தாயால் அதைத் தாங்கமுடியவில்லை. எப்போது இறந்து தொலைவேன் என்று சாப்பிடாமல் இருந்து தவம் செய்தாள். சாரதா பிறந்து விட்டாள் என்று கேள்விப்பட்டதும் செல்வமலர் வந்து மாமியார் காலைப்பிடித்துக் கதறினாள் •

ராஜேஸ்வரி 2
பின்னர், தன் மனம் போனபடி சத்தியமூர்த்தியின் குடும்பத்தைத் திட்டித் தீர்த்தாள். கிழவி படுத்த படுக்கையாய் இருந்த போதும் தன் மகன் தன்னைப் பார்க்கக் கூடாது என்று சட்டம் பிறப்பித்து விட்டாள். அவள் இறந்தபோது சாரதா எழும்பி நடக்கத் தொடங்கி யிருந்தாள். குழந்தையையும் தூக்கிக் கொண்டு தாயின் செத்த வீட்டுக்கு வந்திருந்தார் சத்தியமூர்த்தி. சினேகிதன் அருளம்பலம் மனைவியைப் பார்த்தார்; காந்திமதி விறுவிறுவென்று உள்ளே போய்க் கதவைப் பூட்டிக் கொண்டாள். 'அந்தச் சனியன் என் வீட்டில் கால் எடுத்து வைக்க விடமாட்டேன்' பிள்ளை வயிற்றை தாங்கிப் பிடித்துக் கொண்டு அவள் சத்தம் போட்டாள். செத்த வீட்டுக்கு வந்திருந்த நல்லநாயகம் தத்தித் தத்தி நடந்து வந்த சாரதாவைத் தூக்கிக் கொண்டார். சத்திய மூர்த்தி தாயின் கடைசிக் கருமங்களை முடித்துக் கொண்டார். முகத்தில் உள்ள துயரம் தாயைப் பிரிந்த தாலா அல்லது தான் பட்ட அவமானத்தாலா என்று யாருக்குத் தெரியும். அருளம்பலம் சினேகிதனை வழிய’ னுப்ப ஸ்ராண்டுச்கு வந்தார்.
சாரதா அவரைப் பார்த்துச் சிரித்தாள். அருளம்பலம் கண்களில் நீர் பொங்கியது. குழந்தையை வாங்கி ஆசை தீர முத்தம் கொடுத்தார். "இத்தனையழகு உனக்குத் தேவைதானா" குழந்தையிடம் பைத்தியக்காரன் போற்கேட்டார். "உலகத்தையே ஏளனம் செய்து சிரிக்கிறாளே. இந்தச் சிரிப்பிற்தான் எத்தனை அழகு" அருளம்பலம் தேம்பினார். "நீ வித்தியாசமானவன், உன்னைப் பைத்தியகாரன் என்று விட்டில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு
Lu-8

Page 62
122 பணி பெய்யும் இரவுகள்
ஆத்மீக உணர்வுகளில் அசையாத நம்பிக்கையுண்டு. அது தான் செந்தாமரையின் புனித அன்புக்கு உன்னைத் தியாகம் செய்து விட்டாய்"
"பெரிதாகத் தூக்கி வைச்சுப் பேசாதே அருள், எனக்கு மற்றவர்கள் மாதிரி போலியாய் வாழத் தெரியவில்லை. கொழும்பு நகரும் செல்வமலரும் எனக்கு மிக அந்நிய மான விடயங்கள். செந்தாமரை என் உள்ளுணர்வின் ஒரு பங்கு, சாரதா என் எதிர்காலக் கனவுகளின் ஒரு
பிரதிநிதி"
*சாரத. வை எப்படி வளர்க்க எதிர்பார்க்கிறாய்"
சத்திய மூர்த்தி பொக்கை வாய் திறந்து சிரிக்கும் மகளைப் பார்த்தார். பின் நிர்மலமான நீல வானத்தைப் பார்த் தார். 'என் மகள். என் மகள் பதினாறு குழந்தைகளைப் பெற வேண்டும், அவர்கள் உலகத்தில் உள்ள அத்தனை கலைகளையும் படிக்க வேண்டும், என் மகள் கலையில் சரஸ்வதியாய் இருக்க வேண்டும்."
* ஆகா ஆகா என்ன கற்பனை, இப்போதே வீணையைத் தூக்கிக் கொடுத்து விடாதே"
"அவளுக்கு எப்படி வாழ்க்கையமைகிறதோ தெரியாது. எனக்கு ஏதும் நடந்தால் என் குழந்தையைப் பார்த்துக் கொள்வாயா?" "என்ன சத்தியமூர்ந்தி இப்படிக் கேட்கிறாய் உன்னு டைய வயதுதானே எனக்கும், எனக்கு ஏதும் நடக்காது என்று என்ன நிச்சயம். காந்திமதி வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை ஆனால் அவனைக் கேட்போம்" இருவரும் சிரித்துக் கொண்டார்கள். "ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று காந்திமதி சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஒரு நல்ல பெயர் சொல்லேன்' அருளம்பலம் கேட்டார்.

u n Ggsio6uf 23
சத்தியமூர்த்தி சிந்தித்தார். 'தியாகராஜன் என்று பெயர் வையேன்" "இசையிற் பெரிய மேதையாக வருவான் என்று எதிரி Lumft" in ''
"அதுவும் ஒரு காரணம், அடுத்தது என் மகளுக்காக உனது மனைவியின் வரட்டுக் கெளரவங்களை அவன் தியாகம் செய்ய வேண்டுமே" அருளம்பலம் தன் சினேகிதனின் குறும்புப் பேச்சைக் கேட்டுச் சிரித்தார்.
"பயப்படாதே. யார் வெறுத்தாலும் அவன் விரும்பினால் நான் உன் மகளைச் செய்து வைக்கிறேனே."
"என் மகள் உங்கள் குடும்பத்தை விரும்ப வேண்டுமே"
சினேகிதர்கள் இருவரும் பலத்த சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டார்கள். அருளம்பலம் அதன் பின் சத்திய மூர்த்தியைக் கண்டதும் தியாகராஜன் ஐந்து வயதாக இருக்கும் போதுதான். அப்போது சாரதாவுக்கு சரி கம பத நிசா பழக்கிக்கொண் டிருந்தார் சத்தியமூர்த்தி. அவள் காலில் சங்கிலி போட்டுக் கலீர் கலீர் என்று நடப் பதை தன் ஓட்டை விழுந்த பல்லுடன் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தான் தியாகு. இவர்கள் பதுளைக்குப் போனவிடயம் கேள்விப்பட்டு காந்திமதி இன்னொரு தரம் சத்தம் போட்டதுதான் மிச்சம். அருளர் அதன்பின் ஒரு வருடத்துக்கு ஒருதர மாவது பதுளைக்குப் போகாமல் விடயாட்டார். கொழும்பு நகர அவசர வாழ்க்கையும் பதுளை நகரின் இனிய இயற்கை அழகும் நேர் விரோதமானவை. வெள்ள வத்தையில் காலை ஏழரை மணிக்கு வெளிக்கிட்டு ஒன்பது

Page 63
24 பணி,பெய்யும் இரவுகள்
மணிக்குக் கோட்டை ஸ்ரேசனில் பதுளை ரெயின் எடுத்து மலை நாட்டை ஊடறுத்துக் கொண்டு செல்லும் ரெயினிற் செல்வதே ஓர் இனிய அனுபவம்.
இளவயதிற் தகப்பதுடன் போனவன் பன்னிரண்டு லயதானதும் பாடசாலை விடுமுறை விட்டதும் மாமா வீட்டுக்குப் போகலாமா என்று கேட்க ஆரப் பித்து விட்டான்.
மலைநாட்டின் இயற்கையழகு யாரையும் மதி மடங்சச் செய்யும். மலையிடுக்குகளால், மலைவிளிப்புகளில் "உட ரெட்ட மெனிக்கா" என்று பெயர் கொண்ட ரெயின் போய்க் கொண்டிருக்கும். பூமித்தாயின் உயர்ந்த மார்பகங்காளாகத் தெரியும் மலை, முகடுகள், ஒன்றோடு ஒன்றிணைந்து அல்லது பிரிந்து பாயும் சில சிறு நதிகள், உலகத்து ரகசியத்தை எலலாம் அடக்கி வைத்திருக்குமாற் போல அடர்ந்து வளர்ந்த காடுகள். அதற்கப்பால் சாரதா!
தியாகராஜனைத் தம்பி என்று சொல்வாள் சாரதா. செந்தாமரைக்கும் சத்தியமூர்த்திக்கும் சாரதாவுக்குப் பின் வேறொரு குழந்தையும் பிறக்கவில்லை.
'உலகத்து அழகை எல்லாம் தனக்குள் அடக்கிக். கொண்டு என் குழந்தை பிறந்திருக்கிறாளே அதே பெரிய அதிர்ஷ்டம் தானே” பெருமிதத்துடன் சொல்வார்" சத்தியமூர்த்தி. ۔۔۔۔ அவர்கள்-சத்தியமூர்த்தி, செந்தாமரை, சாரதா மூவரும் வாழ்ந்த உலகம் தியாகராஜனால் அனுபவிக்க முடியாத, புதிய உலகம். அந்த உலகம் அவற்றின் வாழ்க்கை. தனித்துவமானது. மலைச் சாரலில் அமைந்திருந்தது அவர்கள் வீடு. மலையடிவாரத்தில் ஏழைத் தொழிலாளி களின் குடிசைகள். சாரதாவும் தியாகுவும் குழந்தை களாக இருக்கும்போது, நீலவானில் மினுங்கும் நட்சத்

ஆராஜேஸ்வரி 125
திரங்களைப் பற்றித் தங்கள் கற்பனையை அவிழ்த்துவிடு Gun7 ff s Gir. 2
"செத்துவிட்ட மனிதர்கள்தான் வானத்தில் நட்சத்திர மாய்த் தெரிவார்களாம்"
"அப்படி என்றால் பூமியில் நட்சத்திரமாய்த் தெரிவது யார்' தியாகு மலையடிவாரத்தில் புகார் நடுவில் மின்னும் ஏழை இந்தியனின் வீட்டு வெளிச்சத்தைப் பற்றிய விளக்கம் தெரியாமல் சாரதாவைக் கேட்டான். அவள் இவனை உற்றுப் பார்த்தாள்.
*"அவங்க தேயிலை பறிக்கிற மனிசங்க," என்றாள். அந்த நினைவு அவன் அடிமனத்தில் பதிந்து விட்டது.
யாழ்ப்பாணத் தமிழனின் அரசியல் தந்திரத்தால் உரிமைகளையிழந்த தமிழ்நாட்டுப் பிரஜைகள் வானத்துத் தாரகைகள்தானே! பிரபஞ்சத்தின் எத்தனையோ இயற்கை நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்தத் தொழிலாளர்களின் இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டிருக்கிறதா? 1977ஆம் ஆண்டு வந்தது. தமிழ் ஈழம் கேட்டுத் தமிழர் பாராளுமன்ற ரீதியாக வாக்களித்து விட்டார்கள். இலங்கை மத்திய தர தமிழ் வர்க்கம் யூனிவர் சிட்டிக்குப் போகமுடியவில்லை. அரசாங்க உத்தியோகங்களைத் தாங்களே பெறவேண்டும், என மனத்தில் வைத்துக் கொண்டு - தமிழர் உரிமை பறி போவதாகக் குரல் எழுப்பி நாட்டைத் துண்டு போட வாக்குப் பெட்டிகளை நாடிவிட்டார்கள். ஆங்கிலேயர்களிடம் ஏன் அவர்கள் ஈழம் கேட்கவில்லை? வட்டுக் கோட்டை மகாநாட்டுக்கு எத்தனையோ மாதங்களுக்கு முன் லண்டனில் பேசி முடிக்கப்பட்ட 'தமிழீழம்" சிங்கள இனவாதிகளின் கொடூர உணர்ச்சியைத் தூண்டியது.

Page 64
26 பணி பெய்யும் இரவுகள்
அந்தத் தமிழீழத் தாகத்துக்குப் பலியானவர்கள் இந்தியத் தொழிலாளிகள். யாழ்ப்பாணத்துத் தமிழன் உயர்த்திய குரலுக்கு இந்தியத் தமிழரின் குரல்வளை நெருக்கப் பட்டது.
77ஆம் ஆண்டுக் கலவரத்தில் தமிழீழத்துக்கு ஒடிப் போ என்ற கூக்குரலுடன் சிங்கள வெறியர்கள் இந்தியத் தொழி லாளர்களைக் கொலை செய்தார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள். லயன்களைத் தீக்கிரையாக்கினார்கள்.
சாரதா அப்போது நல்லநாயகம் தம்பதிகளுடன் கொழும் புக்குப் போய்விட்டாள். மலைநாடு ஆறாய் பெருகியது இரத்தத்தால், தன் உயிரிலும் உயிரான செந்தாமரை. சத்தியமூர்த்தியை ஏன் குற்றுயிரும் குலையுருவுமாய்த் தப்ப விட்டார்கள்?
அவரால் செந்தாமரையின் கதறல்களை மறக்க முடிய வில்லையே! அவள் அந்த மூர்க்கர்களால்.
நல்லநாயகம் சில நல்ல மனிதர்களுடன் சேர்ந்து வவுனியா வில் புனர் வாழ்வுக்கழகம் அமைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.சத்தியமூர்த்தியின் ஆத்மா செந்தாமரை யுடன் பதுளை மலைச்சாரலில் எப்போதோ சங்கமமாகி விட்டது. உடம்பு மட்டும் தன் மகளுக்காக ஊசலாடிக் கொண்டிருந்தது.
"இவர் இறந்துவிட்டால் என் கெதி என்ன' சாரதாவுக் குப் பதினேழு வயது. இந்த வயதிற்தானே இவளின் தாயை இவர் ஏற்றுக் கொண்டார்.
இந்தக் குழந்தையின் கதி என்ன? "நல்லநாயகம் உனக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும். சான் மகளைக் காப்பாத்து" சத்தியமூர்த்தி தேம் பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார்.

ராஜேஸ்வரி 127
"எனக்குச் செய்த பாவத்துக்குக் கடவுள் அவரைத் தண்டிக்கத் தானே வேணும்" செல்வமலர் திட்டிக் கொண் Alst 6it. சத்தியமூர்த்தியும் சாரதாவும் தெகிவளையில் இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டி, ருந்தார்கள்.
தியாகு அடிக்கடி போவான்.
இவனுக்கு அப்போது பதினைந்து வயது, அவன் தாய் காந்திமதி இவனை எவ்வளவோ தடுத்தும் கேட்டாமல் மாமாவைப் பார்க்கப் போவான். தகப்பன் அருளம்பலம் சாரதாவை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வேன் என்று தன் மைத்துனரிடம், அருமைச் சினேகிதரிடம் சொல்ல முடியாத நெருக்கடி. *"அந்த வேலைக்கார நாயின் மகள் இந்த வீட்டிற் காலடி எடுத்து வைத்தால் நான் தற்கொலை செய்து சாவன்' என்றெல்லாம் காந்திமதி திட்டித் தீர்ப்பாள்.
எப்போதோ போக வேண்டிய உயிர் சாரதாவின் பத்தொன்பதாவது வயது வந்த ஒன்றிரண்டு நாட்களிற் போய் விட்டது. அவள் ஏ லெவல் முடித்திருந்தாள், படிக்க வேண்டிய கெட்டிக்காரி. நல்லநாயகம் அப்போது லண்டனுக்கு வர முயற்சி செய்து கொண்டிருந்தார். செல்வமலர் நாகமெனச் சீறினாள். "என்ன கொடுமை; அந்தத் தேவடியாள் மகளை வைத்திருப்பதா'
"பெரியம்மா நான் உங்கடை வேலைக்காரியா இருக் கேனே" சாரதா தானாகப் போனாள். வேறு ஒரு வழியும் இல்லை. செல்வமலர் தனக்கு முன்னால் இருக்கும் தன் கணவரின் மகளை நேரே பார்த்தாள்.

Page 65
128 பணி பெய்யும் இரவுகள்
அடேயப்பா இப்படியும் ஒரு கவர்ச்சியா? இவள் தாயும் இவள் மாதிரியே இருந்தாள் போலும்.
தன் முன்னால் நீலப் பாவாடையும் தாவணியும் போட்டு, சிவப்புச் சட்டையின் விளிப்பில் சங்குபோல ஒரு கழுத் துடன் வந்து நிற்கிறாளே இந்தத் தேவதையை வேலைக் காரி என்று ஏற்பதா?
செல்வமலர் மலடி - கல்யாணமாகி நான்கு வருடமாய் ஒரு "பூ காய் கிடைக்காதவள்; அப்படிக் கிடைத்திருந்தால் ஒரு வேளை சத்தியமூர்த்தி அவளை விட்டு செந்தாமரை காலடியில் சங்கமமாகி விட்டிருக்க மாட்டாரோ?
சாரதாவுடன் தியாக ராஜா, அருளம்பலம்,நல்லநாயகம் தம்பதிகள் வந்திருந்தனர்.
வாய் கூசமாற் தன்னை “பெரியம்மா" என்கிறாளே! இவள் குரலென்ன வீணையின் நாதமா?
மெல்ல அடி எடுத்து வந்தாளே. அந்த நடையென்ன பரத நாட்டிய பாவங்களா?
*பெரியம்மா" என்றாளே, அது என்ன பிரபஞ்சத்தைப் பிளந்து வந்த பாசக் குரலா?
உன்னால் ஆளமுடியாத அன்பின் சின்னம் நான், என்னை ஏற்றுக் கொள் என்கிறாளோ,
தியாகு செல்வமலர் மாமியைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
சத்தியமூர்த்தி இறந்தபின், நல்லநாயகம் லண்டன் போக முதல் சாரதாவை ஒரு பெண்கள் விடுதியிற் சேர்த்து விட்டுப் போக யோசித்தார். அவள் ஒரு தனியார் கொம் பனியில் டைப்பிஸ்ட் ஆகச் சேர்ந்திருந்தாள்.

ராஜேஸ்வரி 129
"மாமா நான் அனாதைதான் ஆனா அதற்குமுன் பெரியம்
விமாவை ஒருக்கால் பார்க்கக் கூட்டிக் கொண்டு போங்கோ' நல்லநாயகம் அருளம்பலத்தின் ஆலோசனையை
நாடினார். அருளம்பலத்தால் மறுப்புச் சொல்ல முடிய
வில்லை.
சாரதாவையும் கூட்டிக் கொண்டு செல்வமலர் வீட்டுக்குப் போனபோது தூரத்தில் கோயில் மணி ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. கொள்ளுப்பிட்டிக் கடற்கரை மாலை நேர ஆரவாரத்தில் மூழ்கிக் கிடந்தது. இவர்களைக் கண்ட ஆச்சரியம் அவளை விட்டுப் போக ஒரு நிமிடம் எடுத்திருக்க வேண்டும் . வந்தவர்களை எப்படி வரவேற்பது? அல்லது ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்டுத் தொலைப்பதா என்றெல்லாம் யோசிக்க முதல் "பெரியம்மா" என்று கூப்பிட்டாளே இவள். குரலிற்தான் என்ன கனிவு. அத்துடன் ஒரு கம்பீரம் வேறு. -
இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.எப்படி எதிர் நோக்குவது இந்தச் சந்தர்ப்பத்தை? சாரதா தாமதிக்கவில்லை. தன்னையும் தன் தாயையும் இந்த மத்திய தர வர்க்கத் தமிழர்கள் எப்படி நடத்துவார் கள் என்று தெரியும்.
"பெரியம்மா உங்களின் வேலைக்காரியா இருக்கிறேன்" என்றாளே!
அன்றிரவு தியாகராஜா நித்திரை கொள்ளவில்லை. நீலப் பாவாடை தாவணியுடன் சாரதா கனவு காட் டினாள்.

Page 66
130 பணி பெய்யும் இரவுகள்
அந்தக் கண்களின் கம்பீரத்தை அவன் முன்னர் ஒரு. தாளும் சந்தித்ததில்லை.
பதினேழு வயதுப் பையன் நீலப் பாவாடை தாவணியைக் கனவு காணலாமா?
உடம்பு வியர்த்தது மட்டுமா கட்டில் தணைந்தது. தியாகு. நீண்ட நாட்களாகச் சாரதாவைப் பார்க்காமல் இருந் தான். அவளை ஏன் பார்க்க வேண்டும்? அவள் தான் ஒவ்வொரு நாளும் அவன் கனவில் வந்து தொலைக் கிறாளே!
அவன் ஐந்து வயதுப் பையனாக இருக்கும்போது பணி படர்ந்த புல்தரையில் இவனோடு சேர்ந்து நடந்தவள் இன்று பத்தொன்பது வயதில் இவன் பருவ மேடையில் நடனமாடுவதை அறிந்து கொள்வாளா?
அம்மாவுக்குப் பயந்தில்லை. ஆனால் இவனாகவே சாரதாவைப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டான்.
செல்வமலரும் சாரதாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளட்டும் என்று தன் மனத்தைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.
செல்வமலர் தன் மைத்துணி காந்திமதியிடம் வரும்போது சாரதாவைப் பற்றிப் பேசும்போது அவள் உண்மைகளை மறக்கப்படும்பாடு இவனுக்குத் தெரியும்,
"ஏன் எனக்குத் தேவையில்லாத வம்பு. யாராவது ஒரு நல்ல இடத்தைப் பாருங்கோ எனக்கு மட்டுமா அவள் பொறுப்பு" செல்வம்லருக்குச் சாரதாவின் அழகின் சொரூபம் பயத்தைக் காட்டியிருக்க வேண்டும்.
சாரதாவுக்கு இருபத்து ஏழு வயதாகி விட்டது. பூமியைப்
பிளந்து நிற்கும் கனவாக ஒளிர்கிறாள். இவளுக்குத் தகுந்தவன் யார்? பாவம் செல்வமலர்.

ராஜேஸ்வரி 31
ராமநாதன் அப்போது இலங்கைக்கு பெண் வேட்டை யாட வந்திருந்தார். கல்யாணம் ஆகி ஆறு மாதத்திலேயே மனைவியைப் பிரிந்து கொண்டாராம். தனக்கு அடங்கி நடக்கத் தக்கதாக யாரையும் பார்க்க வந்திருப்பதாகத் தன் சொந்தக்காரர் செல்வமலருக்குச் சொல்ல வந்தார்.
அவர் வந்த நேரம், அவர் சாரதாவைப் பார்த்த நேரம் ஒன்றும் தெரியாது தியாகுவுக்கு.
'ஏதோ நான்தான் வேணுமென்று செய்து வைத்தது எண்டு நீங்க சொன்னாலும் சொல்லுவியள். இந்தப் பெட்டையை ராமநாதன் கேட்டிருக்கிறார்."
செல்வமலரின் குரல் அவசரப்பட்டது. ஏதோ கேட்பவ னின் தலையில் இந்தச் சனியனைக் கட்டிவிட வேண்டும். அவள் யோசித்திருந்ததாக எந்தச் சாடையும் அவள் குரலிலில்லை.
"எத்தனை வயது வித்தியாசம். அந்த ஆள் முதலில் கல்யாணம் செய்தவரா?" அருளம்பளம் விரிவாகக் கேட்டார்.
"என்ன மண்ணாங்கட்டிக் கேள்விகள். லண்டன் மாப் பிள்ளை கட்டிவைத்தால் என்ன" காந்திமதியின் படபடப் பான குரலுக்கு அப்பால் ஏதோ பயம் இருப்பதைத் தியாகு அறியாமல் இல்லை.
இவன் சாரதாவைச் சந்திக்கப் போனபோது அவள் ராம நாதனுடன் சேலை செலக்ட் பண்ணப் போய் விட்டதாகச் சென்னாள். அன்றிரவு சாரதா கனவில் வரவில்லை; ஏனென்றால் இவன் தூங்காமல் விழிந்திருந்து அழுதான்"

Page 67
32 பனி பெய்யும் இரவுகள்
13
அடுத்த நாள் அவன் லீவு எடுத்திருந்தான். ஹொஸ்பிட் டலுக்குப் போனபோது சாரதாவை அப்போதுதான்
ஒப்பரேசன் முடிந்து அறையிலிருந்து கொண்டு வந்திருந் தாாகள.
இன்னும் உணர்வு வரவில்லை. ராமநாதன் அவள்
பக்கத்தில் இருந்து அவள் கையைத் தடவிக் கொண்டிருந் தாா.
இவன் போனதும் அவர் இருக்கச் சொன்னார். சாரதா
வின் கையில் இரத்தம் பாய்ச்சப்பட்டுக் கொண்டி
ருந்தது. முகத்தில் ஒக்ஸிஸன் மாஸ்க் பொருத்தப்பட்டி
ருந்தது.
"ஒப்பிரேஷன் நல்லபடி நடந்ததாக டொக்டர் சொன் -னார்" ராமநாதன் மெல்லச் சொன்னார். வார்ட் நிறைய
ஒரே சந்தடியாக இருந்தது.
"தாங்ஸ் தியாகு" அவர் இவன் முகத்தில் பார்வையைப் பதித்துக் கொண்டார்.
"சாரதாவை ஒப்பிரேஷன் செய்ய சம்மதித்ததற்கு நன்றி" அவன் அது பற்றிக் கதைக்கத் தயாராயில்லை என்பதை எப்படி அவருக்கு விளங்க வைப்பது?
போன கிழமை வந்துபோன ஞாயிற்றுக் கிழமை இன்னொரு தரம் அவன் வாழ்க்கையில் வரக் கூடாது என்று தான் அவன் யோசிக்கிறான்.

ராஜேஸ்வரி 133
"நான் கொஞ்ச நேரம் வெளியிற் போய்விட்டு வரு கிறேன்" அவர் எழும்பினார். நேற்றிலிருந்து அவர் சரியாகத் தூங்கியிருக்கக் கூட மாட்டார்.
பத்து வருடங்களாகத் தெரிந்து கொள்ளாத மனிதரை கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரேயடியாகத் தெரிந்து கொள்ள அவன் மனம் ஆவல் படுவதை அவர் அறிவாரா?
வசந்தி வந்து போனபின் சாரதா ஒப்பரேஷனுக்குச் சம்மதித்தாள் என்று அவர் சனிக்கிழமை இரவு போன் பண்ணியிருந்தார்.
பாரதி பேர்த்டேய் பார்ட்டிக்குப் போகும் வழியிற் தன் வீட்டில் கூடாரம் போட்டதும் ராதிகாவின் வேண்டு மென்ற நடிப்பும் அவனுக்கு எரிச்சலையுண்டாக்கிக் கொண்டிருந்த போதுதான் அவர் போன் பண்ணினார்.
வசந்தி ஏன் இத்தனை வருடங்களுக்குப் பின் ராமநாதன் வாழ்க்கையிற் தலையிட வேண்டும்? இந்தக் கேள்வி தியாகராஜனின் மனத்தைக் குழப்பியது.
அன்றிரவு-அல்லது அதிகாலை இரண்டு மணி வரை பாரதி யும் ராதிகாவும் அலட்டிக்கொண்டிருந்தார்கள். இருவரும் *மெடிக்கல் விடயம் பற்றிக் கதைக்க விரும்பாதவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள். ஆனால் அவள் ஏதோ தன் படிப்பு விடயமாகக் கேட்ட கேள்வி பாரதியை ஒரு அரைவாசிப் புரபொசர் ஆக்கி விட்டிருந்தது. y அவன் பொறுமையுடன் பாரதியின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தான். தியாகுவும் சேர்ந்து பங்கு பற்றுவதாக அந்தச் சம்பாஷனை இருககவில்லை. அவள் வேண்டுமென்றே இவனை அலட்சியமாக நடத்துகிறாள் எனத் தெரிந்தது. VK.

Page 68
134 பணி பெய்யும் இரவுகள்
அடுத்த நாள் எப்போது விடியும் எப்போது ஆஸ்பத்திரிக்
குப் போய்ச் சேர்வோம் என்றிருந்தது.
இரவு இரண்டு மணிக்கு அவன் மேல் மாடிக்குப் போய் விட்டான். பாரதி வீட்டை விட்டுப் போகும்வரைக்கும் ராதிகா அலட்டிக்கொண்டிருந்தாள். பாரதி போக விட்டு அவள் மேலே வந்த போது அவன் புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தான். இவனுடன் ரெயினில் வந்த புரபெசர் ஜேம்ஸ் “ஞாபகத் துக்கு வந்தார். பாரதியுடன் செலவழித்த இத்தனை நேரமும் அந்த சுவாரசியமான மனிதருடன் பேசிக் கொண் டிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். 'வந்த சினேகிதரைக் கீழே இருக்கவிட்டு மேலே வந்து புத்தகம் புரட்டிக் கொண்டிருக்கிறீர்களே." 'நீ தான் என்டெட்ரெயின் பண்ணிக் கொண்டிருந் தாயே" **பொறாமை பொங்கி வழிகிறது" 'அதுதானே உம்முடைய இலட்சியம்"
"எது" இடுப்பில் கை வைத்துக் கொண்டு ராதிகா கேட்டாள். "நான் பார்தியில் பொறாமைப் பட்டிருக்க வேண்டும் என்பது" அவன் அவளைப் பார்க்காமல் மறு மொழி சொன்னான்.
"நான் உங்களைப் போல இல்லை"அவள் குரலில். "என்ன கருத்தில் சொல்கிறாய் என்று தெரியவில்லை" "உங்களுக்காக நான் வீட்டில் நாயாகக் காத்திருக்கிறேன். நான் "வேறு யாரோவுக்காக ஒடித் திரியவில்லை."
4சாரதா வேறு யாரோ தானே? அவன் வாய் விட்டுக் கேட்கவில்லை. அவன் கண்கள் அவளைக் கேட்டன.

Drt Ogdund 135
"தியாகு" அவள் குரலில் கனிவு, முகத்தில் சோகம், பாதிகா நன்றாக நடிக்கவும் தெரிந்தவளா?
"ஐ லவ் யு தியாகு. நான் அக் காதலை மற்றொருத்தி யுடன் பங்கு போட விரும்பவில்லை."
அவள் அழத் தொடங்கி விட்டாள்.
பாரதியுடன் இத்தனை நேரம் கதைத்துப் பேசிக் கொண்டி ருந்தது நடிப்பா அல்லது இப்போது இவனிடம் கண்ணிர் விடுவது நடிப்பா?
"அவள் இவனைக் காதலிக்கிறாளாம், இவனை யாரு டனும் பங்கு போட மாட்டாளாம்!"
"நான் ஒன்றும் முழுக்க முழுக்கச் சரியான மனிதன் இல்லை. என்னிலும் குறைபாடுகள் இருக்கின்றன. ஆனாலும் நீ சாரதா இவ்வளவு சுகமில்லாமல் இருக்கும் போது இவ்வளவு குரூரமாக நடக்கத் தேவையில்லை." "சாரதா இப்படி ஒரு நிலையில் இருப்பது உங்களுக்குச் சந்தோசமாக இருக்கிறது."
"என்ன முட்டாள்த் தனமாகக் கதைக்கிறாய்" அவளை விளங்கிக் கொள்ளாமற் பார்த்தான் அவன். * பெண்களை ஏதோ ஒருவிதத்தில் அடக்கி ஆளவேண்டும் என்று நினைக்கிற ஆண்களில் நீங்களும் ஒருத்தர்" "நான் ஏன் சாரதாவை அடக்கி ஆளவேண்டும்?" "ஏன் என்று உங்களுக்கே தெரியும்" "எனக்குத் தெரியாது ராதிகா நீயும் உன்னுடைய பிராய்ட் தியரிகளும் எனக்கு வேண்டாம். எனக்கு அவளில் உள்ள ஆசைதான் இப்படி எல்லாம் என்னை நடத்துகிறது என்று விவாதம் பண்ணத் தொடங்கி விடுவாய். உன் விவாதம் பிழையானது என்பதை

Page 69
136 பனி பெய்யும் இரவுகள்
நிரூபிக்கத்தான் ஒரு வருடம் அவளைப் பார்க்காமல் இருந் ’* gGewرق) இதை அவன் சொன்னபோது தன்னைத்தானே வெறுத் தான். ராதிகாவைச் சமாதானப் படுத்துவதற்காகத் தான் இப்படிச் சொல்கிறானே தவிர உண்மையில் என்ன நடந்தது என்று தெரியும். அவளுக்கு முன்னால் உண்மையை ஒப்புக் கொள்ளத் தயங்குபவன் அவன். "எனக்குச் சோதனை நெருங்குகிறது. என்னால் எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுக்க முடியாது."
அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். 'உன் பரீட்சையைக் காட்டி என்னை இமோஷனல்
பிளாக்மெயில் செய்யாதே"
"தியாகு எனக்கு நீங்கள் இல்லாமல் இருக்க முடியாது" அவள் அவனை இறுக்கி முத்தம் கொடுத்தாள்.
அதுதான் இரவு இவ்வளவு நேரமும் பாரதியுடன் அலட் டிறாயா"
'பாவம் பாரதி. கல்யாணம் செய்யாத ஃப்ரஸ்ரேஷன்' அவள் அவனின் சேர்ட் பட்டனைக் கழட்டி விட்டாள். வெளியில் நிசப்தம். மழையில்லாத ஒரு இரவு இவன் பிடியில் அவள் கசங்கினாள். "ஏன் இந்த வேகம்" அவள் குரலில் ஆச்சரியம். "இன்னொரு தரம் பாரதியுடன் அலட்டினால் எனக்கு நிச்சயமாகப் பொறாமை வரும்" அவன் சிரித்தான். நீ என்னுடையவள் மட்டும் என்பதை நிரூபிக்கவா இந்த வேகமும் துடிப்பும்? ராதிகா யோசித்தாள்.

ராஜேஸ்வரி い 137
அடுத்த நாள் மதியம் வரை அவர்கள் தூங்கினார்களா அல்லது காதல் புரிந்தார்களா அல்லது ஊடல் செய்தார் asem f7? என்ன இருந்தாலும் ராதிகா சமாதானமாய் இருந்தால் சரி. அது எத்தனை நாளைக்கு? ஞாயிற்றுக்கிழமை ஆஸ்பத்திரிக்குப் போனதை அவன் இன்னொரு தரம் நினைத்துப் பார்க்கிறான். அன்று அவன் போனபோது யாருமில்லை, சாரதா ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் எத்தனையோ யோசனைகளின் பிரதிபலிப்புக் கண்களில் தெரிந்தது.
வசந்தியைப் பற்றிக் கேட்பதா? இவனைக் கண்டதும் அவள் ஏறிட்டுப் பார்த்தாள். அது ஒரு கண்ணியமான பார்வை.
சாரதா இவன் கண்களுக்குள் எதையோ தேடுகிறாளா?
"ஒப்பிரேஷன் செய்தால் நான் பிழைத்துக் கொள் வேனா?" குரல் தடுமாறச் சாரதா கேட்டாள். 4 லண்டன் டொக்டர்கள் கெட்டிக்காரர்கள் என்று கேள்வி'
எனக்கு இரத்தம் கொடுக்காமல் ஒப்பிரேஷன் செய்ய முடியாதாம். எனக்கு யாரின் இரத்தமும் தேவையில்லை" அவள் சட்டென்று நிறுத்தினாள். "ராஜன் கிட்ட வாயேன்."
அவன் கட்டிலுக்கு அருகில் கதிரையை இழுத்துப்போட்டுக் கொண்டான்.
us-9

Page 70
38 W பணி பெய்யும் இரவுகள்
"வசந்தி வந்திருந்தாள்" சாரதா நறுக்கென்று சொன் னாள். போனில் ராமநாதன், வசந்தி தன் முதல் மனைவி என்றுதான் சொல்லியிருந்தார். மற்றப்படி ஒன்றும் சொல்லவில்லை.
அவன் மெளனமாக இருந்தான். "வசந்தி இவரின் முதல் மனைவி' இவனின் மெளனம் கலையவில்லை. *"நான் ஒரு பாவி" அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
"சாரதா பெலவீனமான நேரத்தில் இப்படி மனத்தை அலட்டிக் கொள்ளலாமா?"
"என்னைப் பத்து வருடமாதக் குழந்தையாகத் தாயாகத் தாரமாக நடத்திய மனிதனை விட்டுச் சாக நினைத் தேனே"
'சுகமில்லாதவர்கள் பெலவீனமான நேரத்தில் பலதையும் பத்தையும் நினைத்துக் கொள்வார்கள்." அவன் பெரிய மனிதன் மாதிரிச் சொல்லிக் கொண்டான். "ராஜன். உனக்கு இவரைப் பிடிக்காது இல்லையா?? அவள் இவனை ஏற இறங்கப் பார்த்தாள். "ஏன் பொய் சொல்ல வேண்டும். பிடிக்காமற்தான் இருந்தது" அவன் மென்று விழுங்கினான். *"என்னை இரண்டாம் தாரமாகச் செய்ததுதானே உனது கோபத்துத்குக் காரணம்?"
அவன் தலையை ஆட் டினான். *ராஜன்." அவள் எழும்பியிருக்க முயன்றாள். "அவர் என்னை ஒன்றும் வற்புறுத்திச் செய்யவில்லை. என்னைப் பெண் பார்க்க வந்தது உண்மை. என்னிடம்

ராஜேஸ்வரி 139
கேட்டார் வயது வித்தியாசம், தனது முதற் கல்யாணம் பற்றி எல்லாம் என்ன நினைக்கிறேன் என்று. அப்போது நான் இருந்த நிலையில் அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. என்ன மாதிரி என்று எனக்குத்தெரியாது. அவரில் ஒன்றும் கவர்ச்சியோ காதலோ இல்லை. ஆனால் ஒரு நம்பிக்கை ஒரு வினாடியில் எனக்கு வந்துவிட்டது. அந்த நம்பிக்கையில்தான் நான் பெரியம்மாவுக்குஇவரைச் செய்வதாகச் சொன்னேன். ஆனால் அவர் அப்படியில்லை. என்னைப் பார்த்த வினாடியிலேயே என்னைப் பிடித்து விட்ட தாகச் சொன்னார்."
"அதெல்லாம் பழைய கதை."
"ராஜன் பழைய நிகழ்ச்சிகளின் படிப்புத்தான் இன்றைய வாழ்க்கையின் பிரதிபலிப்பு."
"அந்த அருமையான மனிதருடன் வாழாமல் 5ான் சாக நினைத்தது எத்தனை தவறு."
இவள் என்ன புலம்புகிறாள்?
"வசந்தி வந்தாள். நான் ஒப்பரேஷனுக்கு மறுத்தேன் என்று கேள்விப்பட்டதாகச் சொன்னாள். அதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். ராமநாதன் போன்ற மனிதர்களை யாரும் உண்மையில்புரிந்துகொள்ள மாட்டார்களா என்று கேட்டாள்.எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. அவர் குடிக்கும் அடிக்கும் பயந்துதான் அவள் ஒடிப் போனதாகக் கேள்விப்பட்டேன் என்று சொன்னேன் "அப்படித்தான் ஊரும் நினைத்தது," என்று சொன்னாள் வசந்தி, தான் விரும்பியவனுடன் கலியாணம் செய்து வாழ முடியாத சோகத்துடன் இவள் ஏனோ தானோ என்று இருந்ததும் அந்த வேதனையில் அவர் குடித்ததும் உண்மை. ஆனால் இவளுக்கு அடிக்கவும் இல்லை. கொடுமை செய்யவும் இல்லை. அப்படி ஊரும் நினைத்தது. கடைசியாக இவளுக்கு டைவோஸ் கொடுத்து விட்டா

Page 71
140 பணி பெய்யும் இரவுகள்"
ராம். அத்துடன் இவளுடன் காதலாயிருந்த மனிதருக்கும் உண்மை சொல்லி இவளுக்கு வாழ்வளித்தாராம். இப்படி எத்தனை தமிழர்கள் செய்வார்கள்.'
"நல்ல கதை" ஏன் சாரதா இன்னும் கேவிக் கேவி அழுகிறாள் என்று தெரியவில்லை. * இப்படியான நல்ல மனிதருக்கு நான் என்ன செய்தேன். என்ன வாழ்க்கையிது. செத்துத் தொலைந்தால் நல்லது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தேன், நான் ஒரு சுயநலவாதி." 'சாரதா வருத்தம் வந்தால் எல்லோரும்தான் எதை எதையோ சொல்லிக் கொள்வார்கள்."
"ராஜன். எனக்கு யாரோ முன்பின் தெரியாத மனிதர் களின் இரத்தம் வேண்டாம்.நீ எனக்கு இரத்தம்தருவாயா? என்னுடைய சொந்தக்காரர் யாரும் இருந்தால் தாங்கள் இரத்தம் எடுத்துச் சோதித்துப் பார்க்கத் தயக்கம் இல்லை. என்று சொன்னார்கள்." சாரதா அவசரப்பட்டாள். ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து முடிக்கும் ஆர்வம் அந்த வெளிறிய முகத்திற். தெரிந்தது. ராமநாதன் வரும் வரையும் அவள் பார்த்திருந்தாள். அவர் வந்ததும் சாரதாவின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியை தியாகுவால் வர்ணிக்க முடியவில்லை.
இவர்களின் உறவும் அன்பும் இவனால் விளங்கிக்கொள்ள முடியாது. பதினெட்டு வயது வரை மட்டும் இலங்கையில் வாழ்ந்து தன்னை - தன் இளமையை இங்கிலாந்தில் வளர்த்துக் கொண்ட - விரித்துக்கொண்ட இந்த மேல் நாட்டு மயமான ராமநாதனுக்கும், மலைநாட்டின் குறிஞ்சிப் பூவாய்ப் பூத்து வளர்ந்த - அன்பாலும் தர்ம. நியாயங்களாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட சாரதாவுக்கும் தான் எத்தனை ஒற்றுமை.

ராஜேஸ்வரி 14
"ாாஜனின் இரத்தம் என்னுடைய இரத்தம் மாதிரி இருக்கு மில்லையா?" சாரதாவின் குரலில் ஒரு குழந்தையின் ஆவல்.
ராமநாதன் தியாகுவையும் சாரதாவையும் மாறி மாறிப் பார்த்தார் வசந்தி வந்தது. சாரதாவின் மனத்தை மாற்றியது.இப்போது சாரதா இரத்தம்பாய்ச்சிக்கொள்ள ஒப்புக் கொள்வது எல்லாம் மிக விரைவாக நடைபெறும் மாற்றங்கள். இவர் வாழ்க்கையில் எப்போதுமே நடக்காத மாற்றங்கள் இறக்க ஒரு சில நாட்களுக்குமுன் நடப்பதில்லையா? பாரதி அன்று டியுட்டியில் இல்லை, வேறொரு டாக்டர் தான் தியாகுவின் இரத்தத்தைப் பரிசோதிப்பதற்கு எடுப்ப தாகச் சொன்னார். *நான் ஒரு கொம்பியூட்டர்காரன்' இவன் தன் - இரத்தம் சம்பந்தமான அறிவுகள் பற்றிய பூர்ஜிதத்தைக் காட்டிக் கொண்டான். ‘ஒரு சில மணிதத்தியாலங்களில் முடிவுதெரியும். உங்க வின் இரத்தம் சரி என்றால் மிஸ்ஸிஸ் ராமநாதனுக்கு நாளைக்கு ஒப்பரேஷன் நடக்கும்" மலர்ந்த முகத்துடன் அந்த டொக்டர் சொன்னபோது தூரத்தில் எங்கோ ஒரு கோயில் மணி அடித்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. லண்டனைச் சுற்றிய ஏதோ ஒரு "சேர்ச்சில்' மணியடிப்பது சர்வ சாதாரணம். அன்று இரவு ஏழு மணிக்கு முடிவு வந்தது. அடுத்த நாள் சாரதாவுக்கு ஒப்பரேஷன் செய்வார்களா? அன்றிரவு தியாகராஜன் இரத்த தானம் செய்து கொடுத்து முடிய இரவு பதினோரு மணியாகி விட்டது. செல்வாய்க்கிழமை ஒப்பரேஷன் பெரும்பாலும் நடக் விலாம் என்று டொக்டர் சொன்னார். ατμ.

Page 72
42 பனி பெய்யும் இரவுகள்
ராமநாதனும் தியாகுவும் ஹொஸ்பிட்டலால் வெளிவந்த போது நடுச் சாமமாவிட்டது. "நீ பெலவீனமாக இருப்பாய். ஏதாவது சாப்பிட வேணும்"
ராமநாதன் பரிவுடன் சொன்னார். வானத்தில் நட்சத்திரங்களேயில்லை; சரியான குளிர். கரு மேகங்கள் வானை மூடியிருந்தன. "பாவம், சாரதா மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாள்" அவர்கள் இருவரும் வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் நடந்து பேசிக் கொண்டிருந்தனர். தேம்ஸ் நதி பாலத்துக்குக் கீழ் அமைதியாக ஓடிக் கொண்" டிருந்தது. "அவள் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாள்" ராம் நாதன் சொன்னார். முதற்தரம் தான் சொன்னதை இவன் தன் காதில் போட்டுக் கொள்ளாமற் போயிருப்பானோ என்ற ஆதங்கத்துடன் சொன்னார். "எல்லாம் விரைவில் நடக்குந்தானே" அவன் பாலத்தில் சாய்ந்து கொண்டான். ராமநாதன் சொன்னது சரி. அவனுக்குப் பெலவீனமாகத்தான் இருக் கிறது.
"வீட்டில் ராதிகா இருப்பாளா" "இல்லை நிறையப் படிக்க இருப்பதாக ஹொஸ்டலுக்கு, ஏழு மணியளவில் போய் வருவதாகச் சொன்னாள்" "அப்போ நாங்கள் உன் வீட்டுக்குப் போகலாமா" "அதற்கென்ன"
"வீட்டில் ஏதும் குடிக்க வைத்திருக்கிறாயா"
அவன் அவரை விளங்காமற் பார்த்தான்.

unQgewast 143
"நான் ஒரு காலத்தில் பெரிய குடிகாரன்" ராமநாதன் வேதனையாகச் சிரித்தார். இருந்த ஒன்றிரண்டு பியரையும் பாரதி குடித்துத் தொலைத்து விட்டான் என்று சொல்ல நினைத்தான். "போகிற வழியில் ஏதும் வாங்கப் பார்ப்பம்"
ஞாயிற்றுக்கிழமையில் எந்த மடையன் இரவில் விஸ்கிக் கடை திறப்பான்? தியாகுவுக்குத் தெரியாது.
இவர்கள் வெஸ்ட் மினிஸ்டரால் திரும்பிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, அப்போதுதான் பூட்டிக் கொண்டிருந்த ஒரு "பார்"இல் அநியாய விலைக்கு ஒரு விஸ்கிப் போத்தலை வாங்கிக் கொண்டார். தியாகுவுக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமற் காரை ஒட்டிக் கொண்டிருந்தான். அவர் கார் பின்னால் வந்து கொண்டிருந்தது. இன்று பின்னேரம் அவரது இரண்டு மனைவியர்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் இவரை நிலைகுலையப் பண்ணி யிருக்குமா?
பொய்மை, வஞ்சகம், சுயநலம் அடுத்துக் கெடுத்தல், அயலானைப் பழித்தல் போன்றவையே தர்மமாகக் கொண்ட "தற்காலத் தமிழ் சமுதாயத்தில் ராமநாதன் போன்ற மனிதர்கள் - அசாதாரணமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. என்ன உலகம்! எத்தனை விசித்திரமானது.
சாரதாவை இந்த மனிதர் செய்து கொண்டபோது னத்தனை ஆத்திரம் வந்தது. அவள் லண்டனுக்கு வந்து எத்தனையோ கடிதம் போட்டுப் பதில் எழுதாமல் இருந்தானே தான் லண்டனுக்கு வந்த பின்னும் அவளைப் பார்க்கப் போக எத்தனை காலம் எடுத்தது. இதெல்லாம் இந்த மனிதரிலுள்ள ஆத்திரத்தாற்தானே வந்தது?

Page 73
44 பனி பெய்யும் இரவுகள்
அவனுக்குத் தன்னிலேயே வெட்கம் வந்தது. ஹொலவேய் ரோட் ஞாயிற்றுக்கிழமை இரவு கொஞ்சம் அமைதியாகத் தெரிந்தது. வீட்டில் காரைப் பார்க் பண்ணிவிட்டு கதவைத்திறந்தான். மேசையில் ஒரு துண்டு. ராதிகாவின் குறிப்புக் காத்துக் கிடந்தது. நான் உன்னைக் காதலிக்கிறேன். பிரிவது வருத்தமே. பாசமும் இனிமையும் இன்பமும் C “டு களித்த நேரத்திற்கு நன்றி கூறுவேன்- ராதிகா. அவன் உதடுகளிற் சிரிப்பு. குறும்புக்காரப் பெண் பள் தானே இவனைச் சந்தோசப்படுத்துகிறாள். இவள் நன்றி சொல்கிறாளே.
ராமநாதன் வந்து சேர்ந்தார்.
ராதிகாவின் நோட்"ஜப் படித்துப் புன்முறுவல் செய்து ரசித்தார்.
"நீ அதிர்ஷ்டக்காரன்" அவர் கிளாஸ் தேடிக் கொண் டிருந்தார்.
"என்ன சொல்கிறீர்கள்" "ராதிகா கிடைத்தது உன் அதிர்ஷ்டம் என்கிறேன்" *ராதிகாவை எனக்கு அறிமுகப்படுத்தியவள் சாரதா தானே? "சாரதா உன்னைப் புரிந்துகொண்ட அளவு நீ அவளைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்" அவர் மடமடவென்று விஸ்கியைக் குடித்து முடித்தார். "உனக்குத் தெரியுமா, வசந்தி போன அன்றிலிருந்து நான் குடியைத் தொட்டதில்லை." **பின் ஏன் இப்போது குடிக்கிறீர்கள்" "சாரதா செத்துப் போய்விடுவாள் என்ற உண்மையை என்னால் தாங்க முடியாது" ராமநாதன் கண்கள்

ராஜேஸ்வரி 145
கலங்கின. தூரத்தில் ஏதோ இர ண்டு கார்கள் மோதிய பெரிய சப்தம்.
"அவள்தான் ஒப்பிரேஷனுக்கு ஒப்புக்கொண்டு விட் и тGBs"
'அதற்கென்ன? அவளுக்கு ஒப்பரேஷன் நடந்து அவளுக்கு கான்ஸர் என்று கண்டுபிடித்தால் என்ன கதி?" 'ஏன் இப்படி மனத்தை அலைய விடுகிறீர்கள். சும்மா ஏமாற்றங்களைப் பற்றி யோசிக்காதீர்கள்" "இவருக்கு எப்போதாவது இருந்து ஏமாற்றங்கள் வரலாம். இவருக்கு வாழ்க்கையே ஏமாற்றந்தானே?" "சாரதா உங்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமா"
அவனுடன் இப்படி மனம் விட்டுப் பேசுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவர் இவனைக் கூர்மையாகப் பார்த்தார். "அவள் என்னைத் திருமணம் செய்தது உனக்குப்
பொறாமையில்லையா" அவர் மூன்றாவது கிளாஸை மடமடவென்று குடித்து முடித்தார்.
"நீ ஏதாவது சாப்பிடு"
அவன் சாப்பாட்டை எடுத்து "மைக்ரோ அவனில்" வைத்தான்.
"நான் இனி குடிக்க மாட்டேன். கொஞ்ச நாளாக இருதயம் மிகவும் வலித்தது. என்னால் அந்த வலியைத் தாங்க முடியவில்லை நாங்கள் சாதாரண மனிதர்கள் அசாதாரணமாக நடக்க வெளிக்கிடக் கூடாது"
அவர் கதிரையில் செளக்கியமாகச் சாய்ந்து உட்கார்த் தார்.

Page 74
46 பணி பெய்யும் இரவுகள்?
அவன் இருவருக்கும் சாப்பாட்டைப் பகிர்ந்து கொடுத் தான்.
“இது ராதிகாவின் சாப்பாடு, உப்புப் புளி இருக்காது” அவன் சிரித்தான். "ராதிகாவின் தமக்கை பவானி நல்லாச் சமைப்பாள்" ராதிகாவின் குடும்பத்தின் தூரத்துச் சொந்தக்காரன் ராமநாதன். "காலமும் நேரமும் வர ராதிகாவும் நன்றாகச் சமைக்கப் பழகலாம்"
"சிலரிடம் சில விஷயங்களை மட்டும்தான் எதிர்பார்க்க லாம். அவள் நாளைக்கு ஒரு பிரபல டொக்டராக வரும்: போது அவள் தன் நேரத்தைச் சமயலறையிற் கழிக்க வேணும் என்று எதிர் பார்க்காதே" "அவள் இப்போதே தான் சொன்னபடி நான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாளே”
"அதுதான் காதல்"
"ஒருவிதத்தில் சுயநலம் என்றுதான் எனக்குப் படுகிறது" அவன் சலித்துக் சொண்டான். "காதலில் மூன்று விதம் என்று தெரியுமா உனக்கு?" அவர் அவன் கொடுத்த சாப்பாட்டை ருசித்தபடி சொன்னார். அவன் மெளனமாய் இருந்தான். "காதலில் ஈறோஸ், அகாபாய், ஃபிலோ என்று மூன்று வகை. ஈறோஸ் என்பது பருவதாகத்தின் அடிப்படையில் வருவது என்று நினைக்கிறேன். மன்மதலீலை என்று வைத்துக் கொள்ளேன். அடுத்தது அகாபாய் அதாவது தன்னையே ஒரு காதலுக்கு அர்ப்பணித்துக் கொள்வது. அதுதான் நீ என்று வைத்துக் கொள்ளேன். சாரதாவில் உள்ள அன்பில் அல்லது காதலில் உன்னையே அழித்துக் கொள்ளக்கூட எண்ணலாம். மூன்றாவது ஃபிலோ

ராஜேஸ்வரி 147
அதாவது இன்டலெக்சுவல், பரஸ்பரம் உணர்ந்த அன்பு. ராதிகா முதலாவது வகை. நீ இரண்டாவது வகை. நான் மூன்றாவது வகை என்று நினைக்கிறேன்"
அவன் அப்படியே உறைந்தபடி உட்கார்ந்தான். அதற்குக் காரணம் வெளியில் அடித்த குளிர் காற்றில்லை. அவர் சொன்ன உண்மைகள் காரணமாக இருக்கலாம்.
"சாரதாவைக் கண்டபோது எனக்கு ஒன்றும் பருவதாகம் பொங்கி வழியவில்லை. எனக்கு ஒரு மனைவி தேவையாக இருந்தது. அவளுக்குத்தான் உன் போன்றவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருந்தது. நான் அதையுணரச் சில காலம் எடுத்தது. இதெல்லாம் தான் "கர்மா". எது எந்த விதத்தில் நடக்குமோ அது அந்த விதத்தில்தான் நடக்கும்"
இவர் என்ன வெறியில் பேசுகிறாரா அல்லது இப்படிப் பேசுவதற்காகத்தான் குடித்தாரா? 'நீ சாரதாவில் வைத்திருப்பது வெறும் அன்பா, வெறும் பாசமா? அதை நீ மறைத்துக் கொள்ளலாம் அல்லது, புரிந்துகொள்ளாமலே வாழ்ந்து முடியலாம். ஆனால் ராதிகாவுக்கு, சாரதாவுக்கு எனக்குப் புரியாது என்று
நினைக்காதே
தியாகுவுக்கு இப்போது கோபம் வந்தது. இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு. 'கோபப்படாதே தியாகு. இதெல்லாம் இயற்கை. ராதிகா என்றால் ஃப்ராயிட்டின் மனோதத்துவ உண்மைகளைச் சொல்லத் தொடங்குவாள். எல்லாரின் பிரச்சினை களுக்கும் மனத்துள் அடக்கி வைத்திருக்கின்ற பாலுணர் வுகள்தான் காரணம் என்று அவள் வாதிக்கலாம். எனக்கு அதுபற்றித் தெரியாது. நான் என் மனைவியை உண்மை யாகக் காதலிக்கத் தெரிந்தவன். அந்த உணர்ச்சி யுண்டாகச் சில அனுபவங்கள் தேவை. என்னை

Page 75
148 பனி பெய்யும் இரவுகள்
விரும்பாத வசந்தியை என் தலையிற் கட்டிவிட்டார்கள் எங்கள் எதிர்காலத் துணையைத் தேர்ந்தெடுக்க எங்களை புரிநதுகொள்ளாத பெற்றோர்களை நம்பியதன் பலன், * கர்மா' என்று வைத்துக் கொள்ளேன். தொட்டுத் தாலி கட்டியவளின் கண்ணிரைத் துடைக்க முடியாமல் தண்ணிக்கு அடிமையானேன். இருவர் வாழ்க்கையையும் பாழாக்கிக் கொள்ளாமல் இருவரும் கல்யாணத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம். நான் குடிகாரன் என்ற படியால் அவள் என்னை விட்டு ஓடிப் போனதாக உலகம் சொல்லியது. ஒருவிதத்தில் நல்லதுதான். அல்லது அவளை வேறுவிதமாகத் திட்டியிருப்பார்கள்! திருமணம் ஒரு புனிதமான சங்கமம். அதைச் சடங்குகளால், சாதிகளால் செல்வத்தால் பிணைத்து விடமுடியாது. இரண்டு மனங்களாற் தான் இணைக்க முடியும்" அவன் மெளனமாக இருந்தான். "இன்று அவனுக்கு இரத்தம் கொடுத்தாய். அவள் ஒப்பரேஷனில் பிழைக்கலாம். அவளுக்குக் கான்ஸர் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதன் பின்னும் அவள் உண்மையான சந்தோசத்துடன் இருப்பாள் என்பது என்ன நிச்சயம்?"
*"ஏன் (урцgштg?”” *"தியாகு அவள் ஏன் செத்துத் தொலைய வேண்டும்
அவளுக்கு ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அவள் வேதனைக்குக் காரணம்." “பிள்ளை வராத-பிள்ளை தரிக்க முடியாத எத்தனையோ தம்பதிகளுக்கு உதவிசெய்ய என்றுதான் எத்தனையோ கிளினிக்குகள் லண்டனில் இருக்கிறதே" “இவ்வளவு காலமும் இதெல்லாவற்றையும் விசாரிக்காமல்
இருக்கிறேன் என்று நினைக்கிறாயா"

ராஜேஸ்வரி 149
"சாரதா தான் ஒரு சோதனைக்கும் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டாள். கடவுள் இருக்கிறார் மன்று பழியைப் போடுகிறாள். நான் என்னை ரெஸ்ட் செய்து பார்த்தேன்."
அவனை நேருக்குநேர் பார்த்தார்.
"எனக்கு ஒரு தகப்பனாகும் பாக்கியம் இல்லை. இப்போதெல்லாம் விஞ்ஞான ரீதியில் பெண்களைத் தாயாக்க மருத்துவ வசதிகள் எத்தனையோ இருக்கின்றன விதி சாரதாவைத்தான் மிக வஞ்சகமாக நடத்தி விட்டது ஒரு தெய்வீகக் கலையைப் பரப்பும் ஒரு கலையரசியாக அவர் தகப்பன் அவளைக் காண நினைத்தார். தன்னைப் போல் ஒரு நல்ல தாயாக அவள் தாய் செந்தாமரை, இவளைக் கற்பனை செய்திருக்கலாம். இவளைப் பார். வெறும் பட்ட மரமாக நிற்கிறாளே’
ராமநாதன் இதுவரை யாருடனும் இப்படி மனம் திறந்பி’ பேசியிருக்க மாட்டார் என்று அவனுக்குத் தெரியும். அவர் குடித்த காரணம் இப்போது விளங்கியது.
**ஆண்களும் ஆண்களால் படைக்கப்பட்ட சமூகக் கட்டுப் பாடுகளும் பெண்களைச் சிறை வைத்திருக்கிறது. ஒரு ஆண் ஒரு மலட்டுப் பெண்ணைச் செய்தால் அவளுக்குக் குழந்தை பிறக்காது என்று தெரிந்ததும் அவனில் பரிதாபம் கொண்டு அவனை இன்னொரு திருமணம் செய்ய அனு மதிக்கிறது. எங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கேட்க இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. அதற்காக நாங்கள் சாரதா போன்ற உத்தமிகளை உதாசீனம் செய்வதா?" அவனால் ஒன்றும் பேச முடியவில்லை. "எப்படி உதவி செய்யப் போகிறீர்கள்"
"என்னால் முடியாது. ஆனால் உன்னால் முடியும்

Page 76
150 பணி பெய்யும் இரவுகள்
ராமநாதன் தெளிவாகப் பேசினார். "என்ன சொல்கிறீர்கள்"
"என் மனைவி சாரதாவுக்கு வாழ்க்கையைக் கொடுப்பாயா
என்று கேட்கிறேன். அவள் கான்ஸ்ரிலிருந்து - ஒப்பரேஷ னிலிருந்து தப்பிப் பிழைத்தால் அவளைத் தாயாக்க உதவி செய்வாயா என்று கேட்கிறேன்"
15
மேற்கூறிய சம்பாஷணை நடந்தபின் திங்கட்கிழமை வந்தது; போனது. இன்று செவ்வாய்க்கிழமை சாரதா வுக்கு ஆபரேஷன் முடிந்தது. அதன் விளக்கத்தைக் கூடிய விரைவில் ராமநாதனுக்குச் சொல்வார்கள். இன்று ராமநாதனும் தியாகராஜனும் சாரதா அருகில் இருக் கிறார்கள். அன்று முழுக்க அவள் சரியாக விழித்துக் கொள்ளவில்லை. நோவுடன் முனகுகிறாள். டொக்டர் வந்து பார்த்தார். நேர் ஸ்மார் ஊசி போட்டார்கள். ராமநாதன் தியாக ராஜனுடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தான் சொன்ன விடயத்தைக் கவனமாக யோசிக்கச் சொன்னார். அவனால் சரியாக நித்திரை கொள்ள முடியவில்லை" சாரதாவுக்கு செயற்கையாகக் கர்ப்பம் தரிக்கப் பண்ணுதல் மூலம் கர்ப்பம் உண்டாக்க யோசிக்கிறார் ராமநாதன். தியாகராஜனை "ஸ்பேர்ம் டொனேற்” பண்ணச் சொன் – 6 тпй !
கதைகளில் எல்லாம் இதெல்லாம் நடக்கலாம். ஒரு தமிழன் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கலாமா?

ராஜேஸ்வரி 5
*ஒவ்வொரு வீடும் ஒரு ரகசிய சுரங்கம், அங்கே என்ன
என்ன இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. சாரதாை உணர்ந்தவர்கள் நாம். அவளுக்கு நாம் உதவி செய்ய விட்டால் யார் செய்வது?" ராமநாதன் தர்க்கம் பேசினார்.
*அவளுக்காக மட்டும் கேட்கவில்லை. உனக்காகவும்தான் கேட்கிறேன். உன் மனத்திலிருந்து அவளுக்கு நீ விடுதலை கொடுக்க முடியாதா? யோசித்துப் பார் சாரதாவின் உடம்பில் உன் இரத்தம் மட்டும் ஓடவில்லை. உன் உயிரும் வளரப் போகிறது என்பது உனக்குத் திருப்தி தரவில்லையா"
இந்த மனிதனுக்குப் பைத்தியமா? அல்லது இந்த மனிதன்
நடமாடும் தெய்வமா?
"சாரதாவுக்குத் தெரிய வந்தால்." அவன் ஒப்பாரி வைக்க த குறையாகக் கேட்டான்.
'எனது டொக்டர் சொல்லப் போவதில்லை. நான் சொல்லப் போவதில்லை. நீ சொல்லித் தொலைப்பாய் என்று நான் நம்பவில்லை"
"இது பாவமில்லையா"
“எது பாவம்? ஒரு உயிர் பிழைக்க இருதய தானம் இரத்த தானம் செய்வதில்லையா? இந்த விடயம் விஞ்ஞான ரீதியில் சரியானது"
"அவளுக்குத் தெரியாமல் இதெல்லாம் செய்வது"
"இதில் ஒரு பாவமும் இல்லை. அவளுக்குக் குழந்தை தேவை. எனக்கு அவள் வாழவேண்டும் என்ற ஆசை நிறைவேற வேணும், உனக்கு ராதிகாவின் உறவு தேவை. நீ சாரதாவுக்காகப் பரிதாபப்பட்டு அலையும் வரை ராதிகாவுக்கும் உனக்கும் ஒருநாளும் சந்தோசம் இருக்கப் போவதில்லை."

Page 77
152 பனி பெய்யும் இரவுகள்"
ராமநாதன் சொல்லும் விடயங்களை அவன் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. சாரதாவில் அவன் வைத்தி ருக்கும் ஆத்மீக அன்புக்கும் அவர் கேட்கும் உதவிக்கும் எவ்வளவு வித்தியாசம்?
ராதிகா சுகமில்லாமல் இருந்தால், அவளுக்கு ஒரு இருதயமோ, கிட்னியோ பழுதடைந்து அவள் இறக்கும் தறுவாயில் இருந்தால் நீ என்ன செய்வாய்?" ராமநாதன் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவ நான முறையாக வாழ்க்கையின் உறவுகளையும் க்கத் தொடங்கி விட்டாரா? "இந்தக் காலத்தில் எத்தனையோ டி.என்.ஏ. ரெஸ்ட் செய்கிறார்களே" பாவம் தியாகு, வாழ்க்கையின் முதற் தடவையாகத் தன் பயத்தைக் காட்டிக் கொண்டான். கற்பனையில் யாரையும் ரசிக்கலாம். பக்கத்தில் வைத்துப் பார்க்கலாம். உண்மையில் தன் கருவைத் தானமாக இன்னொரு ஜீவனுக்குக் கொடுப்பதென்றால்..? அவல் குழம்பிப் போனான். "செயற்கையாகக் குழந்தையுண்டாக்க உலகத்திப் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ரியுப்பில் குழந்தையை உண்டாக்கி விட்டுப் பெண்ணின் கருப் பையுள் வைத்து விடுகிறார்கள். கருப்பைக் குழாய்கள் அடைத்துப் போய் இருக்கும். பெண் குழந்தை பெற ஆசைப்பட்டால் அவள் ஆசையை நிறைவேற்ற இந்த விஞ்ஞான முறை பாவிக்கப்படுகிறது. தாயின், தகப்பனின் கருக்கள் ஒன்று சேர முடியாத எத்தனையோ தடைகள் ஒரு பெண்ணின் உடம்பில் இருக்கலாம். அதற்காக விஞ்ஞான வளர்ச்சியைப் பாவிப்பது பிழையில்லையே' ராமநாதன் விடாப்பிடியாக இவனிடம் கேட்டுக் கொண் டிருந்தார். அவன் திங்கட்கிழமை வேலைக்குப் போனபோது இந்தயோசனை எல்லாம் தலையில் குவிந்து கிடந்தது.

ராஜேஸ்வரி 153
செவ்வாய்க்கிழமை சாரதாவுக்கு ஒப்பரேஷன் நடந்தது. வெள்ளிக்கிழமை இவன் ஆஸ்பத்திரிக்குப் போன போது சாரதா படுக்கையில் உட்கார்ந்து தேனிர் குடித்துக் கொண்டிருந்தாள். "இதோ பார் இந்தக் கோப்பையைத் தாங்கிக் கொள்ளத் தக்க சக்தியை நீதானே என் உடம்புக்குத் தந்தாய், ராஜன் உனக்கு என் ஆசீர் வாதம் ஏழு தலைமுறைகளுக்கு இருக்கும்" அவள் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னாள்! ஒப்பரேஷன் நடந்ததன் விளக்கம் என்ன? ராமநாதன் அன்று பின்னேரம் வந்தார். அவன் இது வரைக்கும் அவனின் ஒவ்வீசில் நடக்கும் மாற்றங்களைச் சொல்லவில்லை.
சாரதாவைப் பார்த்துவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள் 4 எங்கேயாவது போவோமா" ஏதோ முக்கியமான விடயம் சொல்லப் போகிறார் என்று தெரிந்தது. இதுவரை நடந்த விடயங்களை விட வேறென்ன முக்கியமான விடயங்களைச் சொல்லப் Glum 6pT?
அவர் தியாகுவின் காரில் ஏறிக் கொண்டார், இன்று பின்னேரம் ராதிகா வருவாள். தியாகு முடியுமான விரைவில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டான்.
வேலை விடயமாக நடக்கும் மாற்றங்களை இன்னும் அவளுக்குச் சொல்லவில்லை. அவள் என்ன சொல்வாள் என்று தெரியாது. பரீட்சை முடியவிட்டு ஒரு வருடம்
u-10

Page 78
154 பணி பெய்யும் இரவுகள்
அவள் லண்டன் ஹொஸ்பிட்டல் ஏதாவது ஒன்றில் வேலை செய்ய வேண்டும். அவன் எடின்பரோவுக்குப் போவதை விரும்புவாளோ தெரியவில்லை. இருவரும் "பார்' ஒன்றுக்குப் போனார்கள்.
ராமநாதன் பியர் ஒடர் பண்ணிக் கொண்டார். ரேடியோவில் வளைகுடா யுத்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வளைகுடா யுத்தம் தொடங்கி விட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். அமெரிக்கன் உலகத்தில் எந்த மூலைக்குப் போய் என்றாலும் யாரையும் கொலை செய்யலாம். யாரும் கேட்பாரில்லை.
"சாரதாவுக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்து நீங்கி விட்டதாக டொக்டர் சொன்னார். அவளுக்கு இருந்த ரியூமர் கான்ஸராக வளரும் நிலையில் இருந்ததாம்" ராமநாதன் குரலில் ஒரு நிம்மதி.
*நான் சொன்ன விடயத்தைப் பற்றி யோசித்தாயா?"
"சாரதாவின் கர்ப்பக் குழாய்கள் எடுபட்டுவிட்டன. கருப்டை தப்பிவிட்டது." அவன் மெளனம் சாதித்தான்.
*நான் உன்னை வற்புறுத்த முடியாது. ஆனால் உனக்கு இது ஒரு புண்ணியமாக இருக்கும். ரெஸ்ட் ரியுப்பில் கரு வளர்த்து கருப்பையில் வைப்பதைவிட வேறு வழி யில்லை."
"யாருக்கும் தெரிய வந்தால், சாதாரண மனிதர் இதை ஒரு விஞ்ஞான அடிப்படையான நிகழ்ச்சி என்று மட்டுமா சொல்வார்கள்?" "அப்படித் தெரிய வராது. உலகத்தில் ஆயிரக் கணக்கான பெண்கள் இந்த விஞ்ஞான முறையில் தாய்மையடை கிறார்கள்."

ஆராஜேஸ்வரி 155
"சாரதாவுக்கு தெரியாமல் இதெல்லாம் செய்வது பாவ lólába)Gaur?" **இதில் ஒன்றும் பாவமில்லை. விஞ்ஞான வளர்ச்சி, நான் யாரையும் கொலை செய்யவில்லை. அவளை வாழ வைக்க ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். ஒரு வெறுமையான வாழ்க்கையில் ஒரு விருப்பத்தையுண்டாக்க மாட்டாயா? இருண்ட வாழ்க்கையில் விளக்கேற்ற மாட்டாயா"
ராமநாதன் குரல் தழுதழுத்தது. கடந்த சில நாட்களாக இந்த மனிதன் மிகவும் நொந்து தான் போய் விட்டார்.
'நான் என்ன செய்ய வேண்டும்" தயக்கத்துடன் கேட்டாள் தியாகு.
"கிளினிக்குக்கு வந்து ஸ்பேர்ம் டொனேட் பண்ண வேண்டும். அவர்கள் எல்லாச் சோதனையும் செய்வார் கள், எல்லாம் சட்ட ரீதியாகத்தான் நடக்கிறது" "அவர்களுக்குத் தெரியுமா யார் ஸ்பேர்ம் கொடுக் கிறார்கள் என்று" *சாரதாவைப் பொறுத்தவரையில் ஸ்பேர்ம் "பாங்'கின் விடயம் தனக்குத் தெரிய வேண்டாமாம். கிளினிக்கில் அவர்கள் சோதிக்கப் போவது எனது ஸ்பேர்ம் என்று தான் ஒழுங்கு பண்ணப் பட்டிருக்கிறது. உண்ம்ையான விடயம் எனக்கும் வைத்திய நிபுணர் ஒருத்தருக்கும் தான் தெரியும். கிளினிக்கு நீ என் பெயரில் போவாய். ஸ்பெசிமனைக் கொடுப்பாய். அவ்வளவு தான் நீ செய்ய வேண்டியது." "எப்போது இதெல்லாம் செய்ய வேண்டும்."
"நீ எப்போதும் போய் ஸ்பெசிமன் கொடுக்கலாம். எனது பெயரில் எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன்."

Page 79
156 பணி பெய்யும் இரவுகள்
அவன் மெளனமானான். பக்கத்தில் உள்ள பாலம் பிரித்து. கொடுத்து தேம்ஸ் நதியில் போய்க் கொண்டிருக்கும் கப்பலுக்கு இடம் கொடுத்தது.
இதுதான் டவர் பிரிட்ஜ்ஜின் மகிமை. எந்தவிதமான உயர மான கப்பலும் போக இந்தப் பாலம் தன்னை விரித்துக் கொடுக்கும். கல்லாலும் இரும்பாலும் செய்யப்பட்ட இந்தப் பாலம் ஒரு கப்பல் போக இடம் கொடுக்கி" மனித உயிர் வாழ நாங்கள் உதவி செய்ய முடியா
'சரி நான் ஒப்புக் கொள்கிறேன்" அவன் எழுந்தn
என்ன யோசிக்கிறான் என்று அவரால் முடிவு கட்டமுடிய வில்லை; ராமநாதன் ஹொஸ்பிட்டல் அருகில் உள்ள இடத்தில் காரை விட்டிருந்தார்.
அவரை இறக்கிவிட்டுப் போகும்போது புரபெஸர் ஜேப்ஸின் ஞாபகம் வந்தது. ஏன் அந்த ஸ்கொட்டிஸ் கிழவனின் நினைவு அவனுக்கு அப்போது வந்தது என்று தெரியாது. メ சனிக்கிழமை போன் பண்ணுவதாகச் சொன்னவன் புதன் கிழமை போன் பண்ணினான்.அவர் இரண்டு தரம் போன் பண்ணியதாகவும் இவன் வீட்டில் இருந்திருக்கவில்லை. என்றும் சொன்னார்.
இந்தக் கிழமை முழுக்க, தான் ஒரே குழப்பமாக இருக் கிறதே! r
அவர் சொல்லிய ஹோட்டல் ஒன்றும் அதிக தூரத்தில் இல்லை.
அவர் எங்கேயோ போய் விட்டு வந்து அப்போது தான் வந்திருக்க வேண்டும்.
டையைக் கழற்றியபடி அறைக் கதவைத் திறந்தார்.

ஆராஜேஸ்வரி - 157
“எங்கே உன்னை இரண்டாம் தரம் சந்திக்காமலே போய் விடுவேனோ என்று நினைத்தேன்' கிழவர் மலர்ச்சியுடன் அவனை வரவேற்றார். அந்நியர்களிடம் சிலவேளை மனம் விட்டுப் பழக வேண்டும். போல் இருக்கிறது?
சாரதா சுகமில்லாமல் இருக்கும் விடயத்தைச் சொன்னான்.
'நெருக்கமான உறவா." ஜேம்ஸ் கிழவன் ஹோட்டல் சிப்பந்தியைத் தேனீர் கொண்டு வரச் சொல்லி விட்டு இவனுடன் கதைத்தார். சாரதா நெருக்கமான உறவா? இரத்த உறவில் எத்தனையோ நெருக்கத்தான். "ராமநாதன் கேட்பதைக் செய்தால் மிக மிக நெருக்க மானவன் ஆகி விடுவான்!"
*எனது தாயின் அண்ணன் மகள் அவள்”
"மிக நெருக்கம்தான். நீ மிகவும் வாடிப் போய் இருக் கிறாயோ' அவன் மனம் திறந்து தன் வேலைப் பிரச்சிகளைப் பற்றிச்
சொன்னான்.
'எடின்பரோவுக்கு மாற்றமா, நீ இதைச் சந்தோசத் துடன் சொல்வாய் என எதிர்பார்க்கிறேன்" அவர் கேள்விக் குறியுடன் இவளைப் பார்த்தார்.
"சாதாரணமாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தால் மாற்றங்கள் சந்தோசமாக இருக்கும். இப்போது ராதிகா கடைசி வருடப் படிப்பு. அவளை விட்டு விட்டு நான் டிசம்பர் வரைக்கும் அல்லது ஜூலை வரைக்கும் என்றா லும் லண்டன் விட்டுப் போக விரும்பவில்லை." w

Page 80
158 பணி பெய்யும் இரவுகள்
"ஆஹா ஆஹா இதெல்லோ உண்மையான காதல்" கிழவன் சந்தோசத்தில் கூவினார். தான் அடுத்த நாள் எடின்பரோ புறப்படுவதாகவும் இவன் எடின்பரோ வந்ததும் தன்னை வந்து சந்திக்கும்படியும் சொல்லித் தன் முகவரி அட்டையைக் கொடுத்தார் ஜேம்ஸ்.
16
அவன் வீடு போய்ச் சேர இரவு எட்டு மணியாகி விட்டது. இன்று அவளின் முடிவை அவன் தன் மனேஜ சருக்குச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. ராமநாதன் சொல்லிய விடயம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. ராமநாதன் சொல்கிற விடயம் நடப்பதாயிருந்தால் அவன் உடனடியாக எடின்பரோ போக முடியாது! ராதிகா குளித்துக் கொண்டிருந்தாள், இவன் வரும்போது சாப்பாடு வாங்கி வந்திருந்தான். அவளுக்குச் சிக்கன் ரீகாவும் சிக்கன் தண்டோரியும் பிடிக் கும். கொஞ்சம் சலட் செய்தான். மேசையில் சாப்பாடு தயார். W சாப்பாட்டின் மணம் மூக்கிலடித்தது. அவன் ஒரு பியர்க்கானை எடுத்து உடைத்துக் கொண்டு டி. வி. முன்னால் உட்கார்ந்தான். ஏதேதோ நிகழ்ச்சி. மனம் ஒடவில்லை. "ம் என்ன அருமையான சாப்பாடு” அவள் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து அவன் அருகில் உட்கார்த் தாள்.

ராஜேஸ்வரி V 159
சாரதாவுக்கு எப்படி என்று கேட்க மாட்டாளா? "எப்படி வேலை' திடீரென்று கேட்டாள். ராதிகா அவன் டி.வி. பார்ப்பதை விட்டு அவளைப் பார்த்தான், 'நீங்கள்தான் ஏதோ வேறு உலகத்தில் இருக்கிறீர்களே. மால்க்கமும் லிண்டாவும் சொன்னார்கள். லிண்டா மால்க்கத்தை எடின்பரோ போக விடமாட்டாள் என்று மால்க்சம் நினைத்துக் கொண்டிருந்தான்.என்ன மாற்றம். விண்டா மால்க்கம் எடின் பரோ போவதற்குச் சம்மதித்து விட்டாள்" கோழியைக் கடித்துக் கொண்டு சொன்னாள் ராதிகா. இவன் தன் சாப்பாட்டில் கையைத்தான் பதிக்கவில்லை. மனம் எங்கேயோ போய்க் கொண்டிருந்தது.
4 என்ன பேசாமல் இருக்கிறீர்கள்" 56, gp160) - it கோழியை இவன் வாயில் திணித்தாள் ராதிகா. இவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். "நான் எடின்பரோ போகவில்லை." அவளைப் பார்க்காமல் சொன்னான் தியாகு. "என்ன" அவள் குரலில் சந்தேகத் தொணி ஒலித்தது. *நான் இப்போது எடின் பரோ போகத் தயாராயில்லை." "ஏன் போக மாட்டீர்கள்" "ஏன் எடின் பரோவுக்குப் போக வேணும். லண்டனில் ஒரு வேலை பார்த்துக் கொண்டால் போகிறது" *வேலையில்லாத் திண்டாட்டம் இவ்வளவு தூரம் ஊதிப் போயிருக்கிற நேரத்தில் பேசுகிற பேச்சா இது" அவள் அழுது விடுவாள் போல் இருந்தது. "கொஞ்ச நாள் வேலையில்லாமல் இருந்தால் என்ன குடி முழுகியா போகும்."

Page 81
160 பணி பெய்யும் இரவுகள்
வன் சாப்பாட்டுக் கோப்பையை மேசையில் வைத் 9. தான்.
"தியாகு, எங்கள் கல்யாணத்தை என் படிப்பு முடிந்த கையோடு வைப்பதாக வீட்டில் காத்திருக்கிறார்கள். அது தெரியும் தானே உங்களுக்கு" * திட்டம் போட்டபடி உலகம் நடக்கிறதா' அவள் மெளனமாக இருந்தாள்.
"இதெல்லாம் சாரதாவுக்காகச் செய்யும் தியாகமா" அவள் குரலில் கிண்டல்; அவமானம் செய்யும் கிண்டல். “ராதிகா நாங்கள் தேவையில்லாத விடயங்களைப் பற்றியா பேச வேணும். இன்னும் ஆறுமாதத்தில் நான் இன்னொரு வேலை எடுக்க மாட்டேனா? 'நீங்கள் என்னை எப்படி எல்லாம் வேதனைப் படுத்து கிறீர்கள தெரியுமா? சோதனைக்கு இன்னும் ஆறுமாதம் தான் இருக்கிறது. அதற்கு முன் உங்களிடமிருந்து எனக்கு ஆறுதல் கிடைப்பதைவிட இப்படிக் கரைச்சல்தான் கிடைக்குது."
அவள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். "நான் உனக்குச் சரியில்லாதவனாக இருக்கலாம்" தியாகு முணுமுணுத்தான்.
**இந்த ஞானம் இந்த மோதிரத்தை என் விரலில் போட முதல் வந்திருக்க வேணுமே" அவள் எரிச்சலுடன் கத்தினாள். 'இப்போதென்ன குடிமுழுகிப் போய்விட்டதா" அவன் எடுத்தெறிந்து பேசினான். * என்னோடு விளையாட வேணாம் தியாகு, நான் நீங்கள் சுண்டு விரலசைத்தால் சுருண்டு விடுகிற தமிழ்ப் பெண் இல்லை"

ராஜேஸ்வரி く 61
"நான் இப்போது எடின்பரோவுக்குப் போக முடியாது." இதற்கு மேல் என்னுடன் ஒரு பேச்சும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்வதுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவள் ஓடி வந்தாள். அவனை உலுக்கிறாள். தலையைப் பிடித்து உலுக்குகிறாள்." தியாகு உங்கள் எதிர் காலத்தை நாசமாக்க வேண்டாம். பிளிஸ் கிடைக்கிற வேலையை விட வேண்டாம்."
"ராதிகா வீணாக என்னுடன் கோபிக்காதே"
"நீங்கள் ஒரு வடிகட்டிய முட்டாள். வாழத் தெரியாத பேயன்" அவள் திட்டித் தொலைத்தாள்.
அவள் அழுவதற்கு, ஆந்திரப்படுவதற்கெல்லாம் நிறையக்
காரணங்கள் உள்ளன. அவனுக்குக் கோபம்வரவில்லை. அவளை இந்த நிலையிற் பார்க்கப் பரிதாபமாக இருத்தது. ஒன்றிரண்டு வருடங் களாக இவன் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறாள். இப்போது வெண்ணெய் திரண்டு வரும்போது தாளி
புடையலாமா?
அவளுக்குத் துணையாக இருக்க வேண்டியவன் துன்பம் கொடுக்கிறானே!
அவளுக்கு இது கடைசி வருடம் அவள் முழு மூச்சாகப் படிக்க வேண்டும், அவளின் படிப்புக்கு அவன் ஒத்துழைப்புத் தேவை; அவன் என்னடா வென்றால் "உனக்கு நான் சரியில்லை என்று நினைத்தால் விட்டுப் போயேன்" என்கிற மாதிரித்தானே சொல் கிறான். "நீங்கள் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறீர் கள் " அவள் குரலைத் தணித்துச் சொன்னாள். சண்டை அயைக் கூட்டாமல் சமாதானமாக இந்தப் பிரச்சினையைத்

Page 82
162 பனி பெய்யும் இரவுகள்
தீர்த்து விடவேண்டுமென்ற ஆவல் அவள் குரலில் ஒலித்தது. "நீண்ட நேரமாய் யோசித்துத்தான் முடிவு கட்டியிருக். கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் உன் பரீட்சை நெருங்கும்போது நான் உன் அருகில் இருப்ப தையே விரும்புவாய் என்று நினைத்தேன்." "வேலையில்லாத மனிதராய் என்னுடனிருந்து பிரச்சினை யும் மனவேதனையும் தவிர வேலையுள்ள மனிதனாய் தூரத்திலிருப்பது நல்லதில்லையா" 'உறவுகளே உத்தியோகத்தின் அடிப்படையிலா" இந்தக் கேள்வி அவளைக் குத்தியிருக்கவேண்டும். அவனை எரித்து விடுவதுபோற் பார்த்தாள். “எனது ஸ்ரேட்டஸைப் பார்ப்பதானால் நான் பாரதி போன்ற ஒரு டொக்டரைக் கட்டலாமே" அவனுக்கு இப்போது உண்மையாகக் கோபம் வந்தது. இத்தனை நாளும் இவனோடு கலந்தவள் இன்பத்தையே பெரும்பாலும் இதுவரையும் அனுபவித்தவள் இவனுக்குத் துன்பம் வந்தபோது ஸ்ரேட்டஸ் பற்றிப் புலம்புகிறாளே. "பாரதியின் விருப்பமென்றால் தாராளமாய்ப் போய்ப் படுத்துக் கொள்ளலாம்." அவன் தனக்கும் கோபம் வரும் என்று காட்டிக் கொண்” tl-frait.
"இதெல்லாம் அந்தத் தேவடியாள் சாரதாவால் வந்த வினைதானே? அவள் லண்டனில் இருக்கிறாள். அவளைப் 4 9fflu a DTl'. Lee ffes Gawr.”
அவளும் திட்டத் தொடங்கினாள்,
'வாயை அடக்கிப் பேசு ராதிகா, அவள் ஒரு ஏழை. என்பதால் நீ எதையும் பேசலாம் இல்லையா? நீங்கள்

ராஜேஸ்வரி 163
எல்லாம் முற்போக்குப் பெண்களா? படுக்கையைப் பகிர்ந்து கொள்ள மட்டும் முற்போக்கு, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைக் கண்டால் பத்தினி வேஷம், உனக்கும் ஒன்றும் படிக்காத சாதாரண மனிசிக்கும் என்ன வித்தியாசம்?"
"என்ன வித்தியாசமா? நான் மனத்தில் சாரதாவை நினைத்துக் கொண்டு உங்களோடு படுத்தெழும்பவில்லை. உங்களுடைய ரகசிய ஆசைகளை மானசீகக் காதல், ஆத்மீக உறவு மண்ணாங்கட்டி என்று மறைத்து வைத்து விளையாடவில்லை. உறவுகள் நேர்மையின் அடிப்படை யில் அமைய வேணும் நான் ஒன்றும் ஒளித்து மறைத்து பேசுவதில்லை, எது என் மனதில் படுகிறதோ அதையே பேசுவேன்." அவள் படபடவென்று மேலே போனாள். விறுவிறு வென்று உறுப்புக்களை எடுத்து பெட்டியில் போட்டாள்" இவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
உண்மையாகத்தான் என்னைவிட்டுப் GG ilu nr 95 'il போகிறாளா? "ராதிகா பிளிஸ், பொறுமையாக யோசிக்கப் பழகு." "யு ஆர்ஏ பஸ்ராட்" அவள் அழுகையினுடனே கத்தினாள். "நாங்க ள்ல்லோருமே சில வேளைகளில் அப்படி யில்லையா" அவன் தாழ்மையாகச் சொன்னான். கோபம் கிண்டலாக மாறியது.
"போய்ச் சாரதாவுடன் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள். ராமநாதன் மாமா ஒரு பேயன்தானே. அவர் கடவுள் தலையில் போட்டுக் கொண்டு கஷாயம் வாங்கட்டும். நீயும் அவரும் நரகத்திற்குப் போங்கள்." அவள் வெளியேறினாள். அவள் போனது மழையடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது பூகம்பத்திற்குப் பின் ஏற்படும் அமைதி.

Page 83
164 பணி பெய்யும் இரவுகள்,
ராதிகா இவனை உண்மையாகவே விட்டுப் போய் விட்டாளா? பெற்றோர் தீர்மானித்த திருமணத்துக்கு இன்னும் ஆறேழு மாதங்கள் இருக்கின்றன. போன வருடம் கல்யாணம் நிச்சயமாகி மோதிரம் மாத்திக் கொண்டதே பெரிய வைபமாக இருந்தது. இவள் தன் படிப்பு முடியும் வரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டாள். இப்போது எந்த முகத்துடன் தன் பெற்றோரிடம் போய்ச் சொல்லப் போகிறாள்? என்ன சொல் வாள்?
போன வருடம் சொன்னதுபோல் 'இவர் என்னை விடத் தன் மச்சாளிடம்தான் பெரிய அன்பு" என்று விளை யாட்டுத் தனமாகச் சொல்வதுபோலத்தன் பெற்றோர்க ளிடம் சொல்வாளா?
தனிமையில் என்ன சொன்னாள்.
"நீங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது "
துல்லியமான, ஆனால் துணிவான பேச்சு அவளுக்கு. அவள் அருகில் இருந்தால் இந்த வீடே கலகலக்கும். இந்த ஜன்னல் சீலை தென்றலில் ஆடும், நாற்காலிகள் கதை பேசும் மாடிப் படிகள் சுமைதாங்கிச் சிரிக்கும், கொட்டும் ஷலரில் அவள் குழந்தையெனக் குதூகலிப்பாள், இவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆயிரம் கதை சொல்வாள், அவள் இன்று போய்விட்டாள். 3
அவனுக்குத் தெரியாமலே தன்னை இவனுக்கு அர்ப்பணித் தவள். "நான் சுதந்திரமான பெண், என்னை ஒருவரும் ஆட்டிப் படைக்க முடியாது. நான் எனது அக்கா பவானி மாதிரியில்லை. அவள் குக்கருக்கு மாலை போட்டுவிட்டுத் தன் படங்களுக்கு மஞ்சள் பூசி மணவாழ்க்கை நடத்து

ராஜேஸ்வரி 1.65
கிறாள். நான் படிப்பேன். பட்டம் பெறுவேன். எனக்கு. விருப்பமான இடங்களுக்கெல்லாம் போவேன். கல்யாணம் என்று வந்தால் என் இஷ்டப்பட்ட மாதிரியே. செய்வேன்."
ராதிகா தற்கால நவநாகரிகப் பெண்ணாகத் தன்னைப் பிரகடனப் படுத்தியிருந்தாலும் அவள் ஒரு இந்திய கவிதை, வாசிக்க வாசிக்க அலுக்காதவள். ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் ஒவ்வொரு புதிய கவிதை அவள். ராதிகா உண்மையிலேயே என்னிடம் இருந்து ஓடி விட்டாளா?
எனக்குக் கோபம் வருவதற்காகப் பாரதியைப் பற்றிப் பேசினாயா, அல்லது பாரதியில் உனக்கு அன்பு வரத் தொடங்கிவிட்டதா?
அது உன்னால் எப்படி முடியும்? உடம்பாலும் உள்ளத் தாலும் ஒன்றாகியபின் ஒருத்தரை ஒருத்தர் வெறும் வார்த்தைகளாற் பிரித்துக் கொண்டு போய்விட்டாயே? லண்டனில் இளவேனிற் காலத்தில் உன் இனிய சிரிப்பைக் காற்றில் கேட்டு தேம்ஸ் நதி தவழுமே. பார்க்குகளும் புற்தரையும் உன் பாதம் படாமல் பரிதவிக்க விடலாமா! கோபத்தில் என்னையே தூக்கியெறிந்து பேசிவிட்டாய், ஆனால் எப்படி ஒதுங்கிக் கொள்வாய். தியாகராஜன் சிலையாய் உட்கார்ந்திருந்தாலும் அவன் , மனம் சுக்குநூறாக உடைந்து கொண்டிருந்தது. இந்தக் கதவு அவள் கைபட்டு அழகு பெற்றது. இந்த அறை அவள் வரவால் உயிர் பெற்றது அவன் அவள் மூச்சால் உணர்வு தெளிபவன். ராதிகா ஏன் உனக்கு இந்தப் பிடிவாதம்? சாரதாவின் தூய வாழ்க்கை உனக்குப் புரியாதம்மா பெரியம்மா செல்வமலரிடமிருந்து விடுதலை பெற யாரையோ

Page 84
፲66 பணி பெய்யும் இரவுகள்
கல்யாணம் செய்து கொண்டு எங்கேயாவது ஒட இருந்த வளுக்கு இராமநாதன் கிடைத்தது புண்ணியம் என் கிறாள். தன்னை விரும்பி, சீதனம் ஒன்றும் கேட்காமல் செய்த அவர் அவளைப் பொறுத்தவரையில் ஒரு ரட்சகன். அவரைக் கல்யாணம் செய்துதான் என்ன கண்டாள்? எல்லாப் பெண்களும் ஆசைப்படுவதுபோல அவளுக்கு ஒரு குழந்தை கூடக் கிடைக்கவில்லை. அந்த அன்பை அவள் தியாகராஜாவிற் சொரிந்தாள். அந்த அன்பை ராதிகா வாற் பொறுக்க முடியவில்லையே.
'ராதிகா உனக்கு எப்படித் தெரியும் சாரதா ஏன் ஆஸ்பத்திரியிலிருக்கிறாள் என்று; அவளுக்கு இந்த மாதிரி ஒரு நோய் வந்ததே ஒரு அதிர்ச்சியில்தான். அவளைத் தன்னால் கர்ப்பவதியாக்கமுடியாது என்றதும் ராமநாதன் செயற்கைக் கர்ப்ப மூலம் அவளைத் தாய்மை கொள்ள லாமே என்று கேட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சி, அத்தோடு நீ என்னை அவளிடமிருந்து பிரித்துவிட்டாய் என்ற அதிர்ச்சி. எல்லாம் சேர்ந்து அவள் வேதனைதான் அவளின் மானசீக ஆசையாக செத்துத் தொலைந்து விட்டால் பிரச்சினையில்லை என்ற பிடிவாதம் அவள் வயிற்றில் கட்டியாக வளர்ந்திருக்கும் என்பது உனக்கு என்னவென்று புரியும்? ராதிகா நீ நினைத்ததெல்லாம் உனக்குக் கிடைத்தது. அவள் கிடைப்பதைக் கொண்டு சந்தோஷப்படப் பழகி விட்ட வள்! *தாலி கட்டாத தாய்க்குப் பிறந்து, இரண்டாம் மனைவியாக ஒருவரை மணந்து யாரோ முன்பின் தெரியாதவரால் கர்ப்பம் அடைய வேண்டும் என்ற நிலை வந்தால் உனக்கு வாழ்க்கை வெறுக்காதா?” 'ராமநாதன் அன்று குழந்தை மாதிரி விம்மிறாரே, அவள்
இல்லாமற் தன்னால் வாழமுடியாது என்ற அந்த அன்பை நான் ஒருநாளும் அனுபவிக்கவில்லையே. எந்தக்

ராஜேஸ்வரி 167
கணவன் இந்த உலகத்தில் இம்மாதிரித் தூய - தெய்வீக அன்பை வைத்திருப்பான்?"
தியாகராஜன் எழுந்தான். தன் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் முடிந்த உணர்ச்சி மனத்தை அழுத்தியது. அவன் வாழ்க்கையில் மட்டுமல்ல, சாரதாவின் வாழ்க்கையில், ராதிகாவின் வாழ்க்கையிலும்தான் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது!
17
பணிக்காலம் முடிந்து இலையுதிர்காலம் வந்தது. சாரதா எழுந்து நடக்கத் தொடங்கி விட்டாள். பட்ட மரங்களில் இலைகள் துளிர்த்தன. பறவைகள் பறக்கத் தொடங்கின. பூக்கள் பூத்துக் குலுங்கின. செரி புளோசம் பூக்கள் தன் காதலைப் பூமியில் கொட்டியிறைத்தது.
அமெரிக்கரும் பிரித்தானியரும் முஸ்லீம்களைக் கொன்று குவித்துவிட்டார்கள். வளைகுடா யுத்தத்தில் அமெரிக்கன் பாவித்த ஆயுத மகிமைகளைக் குழந்தைகள் டி.வி.யில் கண்டு ரசித்தன.
தியாகராஜன் எதிர்பார்த்தது போல் அவனின் கொம்பனி அவனை வேலையிலிருந்து துரத்திவிடவில்லை. லண்டன் கிளையில் வைத்திருந்த ஒன்றிரண்டு எஞ்சினியர்களில் அவனும் ஒருத்தனாக இருந்தான். ஆனாலும் பெரும் பாலும் இந்தக் கிளை மூடப்படலாம் என்று பேசிக் கொள்ளப்பட்டது.
மால்க்கம் எடின்பரோ போய்விட்டான். அவனுக்குச் சந்தோசம்தான். ஆனால் மால்க்கத்தின் காதலி லிண்டா தான் கொஞ்சம் யோசித்தாள்,

Page 85
168 பணி பெய்யும் இரவுகள்”
“மால்க்கம் எடின்பரோவிலிருந்து என்ன கூத்துக்களை செய்வானோ" என்று அங்கலாய்த்துக் கொண்டாள். லிண்டா கூட ராதிகாவைப் பற்றித் தியாகராஜாவிடம் கதைப்பதை விட்டு விட்டாள். ராதிகா தியாகராஜனுடன் பேசாமல் விட்டு மூன்று மாதங்களாகி விட்டன. சோதனைக்கு விழுந்து விழுந்து படிப்பதாகச் செய்தி கிடைத்தது. பாரதி ஏதோ இன்னுமொரு ஆஸ்பத்திரிக்கு மாற்றலாகிப் போய் விட்டான் என்றும் கேள்வி. தமிழ்ப் பாகவதர்கள் மாதிரித் தலையாட்டிக் கை காட்டிக் கொண்டு ஏதும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டான். சாரதாவின் உடம்பில் இப்போதுதான் கொஞ்சம் தசை பிடிக்கிறது. அவர்கள் வீட்டுக்கு தியாகராசா அடிக்கடி போவது கிடையாது. ராமநாதன் போன் பண்ணுவார். அவனைப் பார்க்க ஒரு தயக்கம். ராதிகா இவனுடன் தகராறு பண்ணிக் கொண்டிருப்பது தெரியும். தான்தான் காரணமாயிருக்கும் என்று அவளுக்குத் தெரியாமல் இல்லை. போன வருடம் சாரதா இவனிடம் வந்து "ராஜன் உனக்கு என்னில் அன்பிருந்தால் தயவுசெய்து என்னைப் பார்க்காதே." என்று கேவிக் கேவியழுததை அவன் மறக்கவில்லை. ராதிகா சாரதாவைக் கண்ட பாட்டுக்குப் பேசிவிட்டாள். அந்தக் குரூரமான குற்றச்சாட்டைச் சாரதாவாற் தாங்க முடியாமலிருந்தது. ராதிகாவை இவனுக்குச் சாரதா தான் சிபாரிசு செய்தாள். தந்திக்கப் பண்ணினாள் என்று தற்செயலாகக் கேள்விப் பட்டபோது ராதிகா புலிபோல் எகிறிக் குதித்தாள்.

ராஜேஸ்வரி 169
*"என்னை என்னவென்று நினைத்தீர்கள். வலைபோட்டுப் பிடிக்கும் மான் என்றா நினைத்தீர்கள்" அவள் ஆவேசத் துடன் கேட்டாள்.
"யார் முயற்சியாய் இருந்தால் என்ன நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறோம். அதுதானே தேவை" அவன் உண்மையுடன் சொன்னான். தன்னில் அன்பிருந்தால் சாரதாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றாள் ராதிகா. தன்னில் அன்பிருந்தால் தன்னை வந்து பார்க்க வேண்டாம் என்று சொன்னாள் சாரதா.
தியாகு தன் மனம் சொன்னபடி நடந்தான். ராதிகாவுக் காகச் சாரதாவைப் பார்ப்பதை விட்டுவிட்டான். ஆனால் அவளில் உள்ள பரிவை - அன்பை, பாசத்தை மறக்க முடியவில்லை.
சாரதா ஆஸ்பத்திரிக்குச் சத்திரசிகிச்சைக்கு அட்மிட் பண்ணப்பட்டதும் அங்கு ராமநாதன் இவனிடம் கேட்ட உதவியும் தியாகுவின் மனத்தில் எத்தனையோ போராட்டங்களைத் தோற்றுவித்து விட்டது.
தான் தன் மனைவியைத் தாயாக்க - விஞ்ஞான உதவியைப் பயன்படுத்த இன்னொருத்தன் உதவியை ராமநாதன் கேட்கிறார். ராமநாதன் போல் எத்தனை மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். அவள் இவரின் இயலாமையை நம்பத் தயாரில்லை. எல்லாம் கடவுள் செயல் என்கிறாள். அப்படி நம்புபவளை இவர் வாழவைக்கத் துடிக்கிறார். ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இவனை கிளினிக்குக் கூட்டிக் கொண்டு போனார் ராமநாதன்.
Lu-l

Page 86
70 பணி பெய்யும் இரவுகள்
செயற்கையாகக் கர்ப்பம் உண்டாக்கச் சாரதா சம்மதித்து விட்டதாகவும் ஆனால் தனக்கு எந்த விளக்கமும் தேவை யில்லை என்றும் சொல்லி விட்டாளாம்.
கிளினிக்கில் இவனை ராமநாதன் என்ற பெயரில் பதிந்து கொண்டார்கள். இவன் பெயர் ராமநாதன், வயது முப்பத்தைந்து என்றெல்லாம் மாற்றி வைத்துக் கொண் டார்கள்.
“எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது. அவளுக்கு உண்மை தெரிய வந்தால்." தியாகராஜன் திணறுவதைப் பார்த்துச் சிரித்தார். "கடந்த ஒன்றிரண்டு வருடமாக நான் டொக்டரிடம் சொல்லி வந்திருக்கிறேன். சாரதா தாயாக வேண்டும் என்று நான் எவ்வளவு தூரம் விரும்புகிறேன் என்று அவளுக்குத் தெரியும். நான் அவளைக் கஷ்டப்படுத்த வில்லை. நான் இறந்து விட்டால்."
ராமநாதன் மறந்துபோய் ஏதோ சொல்ல வந்ததைச் சொல்லி விட்டார் என்ற பாவம் முகத்தில் தெரிந்தது. இவனுக்கு ஏதோ. விளங்கியும் விளங்காத மாதிரித் தோன்றியது. இவர் முன்ஏற்பாடாக ஏதோ செய்கிறார் என்று அவன் மனம் சொல்லியது. w
"தியாகு நான் நாற்பது வயதைத் தாண்டியவன். சாவு எப்போதும் வரலாம். நான் போய்விட்டால் அவள் தனித்துப் போவாளே"
ராமநாதன் குரல் மிக மிகத் தொய்ந்து தொனித்தது.
"அவள் தனித்துப் போவாளே." அவர் மீண்டும் மீண்டும் சொன்னார்.

ராஜேஸ்வரி 171
"நான் இருக்கிறேன்" அவன் முணுமுணுத்தான். அவனை அன்றுதான் முதற்தரம் பார்ப்பதுபோற் பார்த்தார். அவன் வாட்ட சாட்டமான முப்பது வயது-படித்த - கூர்மையான கண்களையுடைய-மிக மிகக் கண்ணிய மான தோற்றத்தையுடையவன். இவனை இன்றுதான் முதற் தரம் பார்ப்பதுபோல் பார்த்தார்.
அவனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. சித்திரை மாதக் காற்று திறந்த கதவால் ஓடிவந்து இவன் முகத்திலடித்தது. "நீ உன் சுய உணர்வுக்கு வா" என்று அந்தக் காற்றுச் சொல்லியது போல். இவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான்.
*"அனாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்று சொன்னேன். அவளுக்கு அது மிகவும் பிடித்த விசயமாக இருக்கவில்லை."
இவருக்கு ஏதும் நடந்தால் அவள் என்ன செய்வாளாம். இவர் பகிடியாய்க் கேட்பதுபோல் கேட்டாராம்.
"லண்டனில் யாரும் தனியாக இல்லையே, அதைவிட ஏன் செத்துப் போகிற கதைகள் சொல்கிறீர்கள்" என்று சாரதா இவரின் வாயை மூடிவிட்டாள். 'மலட்டுத் தன்மை என்பது விஞ்ஞானம் வளர்ச்சியடை யாத காலத்தில் பெரிய பிரச்சினையான விதம் இப்போது மலட்டுத் தன்மையைத் தீர்க்க எத்தனையோ முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், நீ மலடியாயிருந்தால் என் சொந்தக்காரர் என்னை இன்னொரு கல்யாணம் செய்யச் சொல்லி நிர்ப்பந்திக்க மாட்டர்ாகள் என்று என்ன நிச்சயம், நான் மலடாய் இருப்பதனால் நீஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்"
ராமநாதனின் கேள்விகள் அவளுக்கு விளங்காது. அவள்
வாழ்ந்த முறை, நம்பிய கட்டுப்பாடுகள் வித்தியாச LOfT66),

Page 87
172 பணி பெய்யும் இரவுகள்
"சாரதா ஆண்டாண்டு காலமாக ஆண்கள் தங்கள் சந்தோசங்களுக்கு, சமுதாய விருத்திக்கு என்றெல்லாம் தான் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் தங்கள் சுய தேவைகளை, ஆசைகளை, அபிலாசைகளைப் புரிந்து கொள்ள மாட்டார்சுளா" அவர் இப்படி எல்லாம் கேட்டது அவள் மனதைக் குழப்பி விட்டது" கல்யாணம் இரு மனிதர்களின் சங்க 1 ம் என்று நம்பி வாழ்ந்து பழகியவள் அவள். இப்போது இந்தச் சங்கமத்தில் ஒரு கறையா?
அவருக்கும் வசந்திக்கும் உள்ள உறவை, எப்படி விவாகரத்து வந்தது என்றெல்லாம் அவள் கேட்கவில்லை. இந்தக் குடிகாரனுடன் யார் இருப்பது என்று சொல்லி விட்டு வசந்தி போய்விட்டதாகக் கேள்விப்பட்டிருந்தாள். ஆனால் அவர் சாரதாவைத் திருமணம் செய்த நாளி லிருந்து மதுவைத் தொட்டதில்லை. எத்தனை குழப்பங் கள் அவள் மனத்தில். அவளை விஞ்ஞான ரீதியாக யோசினை பண்ண அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்,
ராமநாதன் தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் தியாகராஜனைப் பார்த்தார்" w அவன் மனத்தில் ஒடும் குழப்பங்கள் அவரால் புரியக் கூடியதாக இருந்தது. "உன் மனத்தில் வைத்துப் பூசை வைத்துக் கொண்டிருக்கிற அன்புக்கு மதிப்புக் கொடு தியாகு" இவர் என்ன சொல்கிறார்?
தியாகு பேசாமலிருந்தான். 'நீ என்னை முதன் முதற் கண்டபோது உன் கண்களில் தெரிந்த அனலில் தெரிந்தது உன் மன அறையில் என்ன பூஜை நடக்கிறது என்று. தியாகு உன்னுடைய அன்பை நான் மதிக்கிறேன். அந்த அன்பை நீ சாரதாவுக்கு வெளிப்

ராஜேஸ்வரி 173
படுத்தியிருந்தால் அவள் அந்த நெருப்பில் அழிந்து போயிருப்பாள். உன் அன்பை அந்த விதத்தில் அவள் எற்றுக் கொள்ள முடியாதவாறு உன்னில் ஒரு தாய்மை யுடன் இருக்கிறாள். ராதிகா அன்று போன் பண்ணினாள் என்ன சொன்னாள் தெரியுமா?"
இவன் இன்னும் வாய் திறக்காமலிருந்தான்.
"உனக்கும் சாரதாவுக்கும் உள்ள அன்பைத்தான் விளங்கிக் கொள்வதாகச் சொன்னாள்'
"என்ன' இது ஒரு புதிய விசயம் இவனுக்கு.
‘'என்ன சொன்னாள் ராதிகா" இப்போது தியாகு அவரை
நேரே பார்த்தான்.
"ராதிகா சொன்னாள், பெரும்பாலான மனிதர்கள் சுய நலவாதிகள், சமுதாயம், கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டுக்குள் தங்களைச் சிறை வைத்திருக்கும் கோழைகள், சாரதாவில் அன்பிருந்தால் தியாகு அவளோடு வாழ்ந்திருக்கலாம். அதைவிட்டு விட்டு மானசீக அன்பென்று சொல்லி ஏன் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஃப்ராயிட் சொல்கிற மாதிரி சாரதாவில் தியாகுவுக்கு உள்ள அன்பு ஒரு இடிபஸ் கொம்ளக்ஸ்' அதை தியாகு என்னதான் சொல்லி மறைத்தாலும் தியாகு அந்த உணர்விலிருந்து விடுதலை பெறும் வரை தியாகு ஒரு சுதந்திரமான மனிதனாக வாழப் போவதில்லை."
அவனுக்கு அதைக் கேட்க ஆத்திரமாக இருந்தது. இந்த "இடிபஸ் கொம்ளக்ஸ்" பற்றி அவள் எத்தனையோ தரம் அவனிடம் வாதிட்டுச் சண்டை பிடித்திருக்கிறாள்.
இவன் சாரதாவுக் கென்று நினைத்துக் கொண்டு தன்னை வருத்திக் கொள்வது ஒரு "மஸோசிஸம்" என்று திட்டியி ருக்கிறாள். இதெல்லாம் கோபத்தில் வரும் வெறும் வார்த்
دی

Page 88
174 பணி பெய்யும் இரவுகள்
தைகள் என்றுதான் இதுவரை நம்பியிருந்தான். இப்போது என்னடா என்றால் ராதிகா தன் கண்டு பிடிப்புக்களை மற்றவர்களுக்கும் பரப்பிக் கொண்டிருத்கிறாளா? "தியாகு நீ ஒரு மஸோஸிஸ்ட் என்றோ இடிபஸ் கொம்ளக்ஸில் இருந்து விடுபட முடியாதவனென்றோ உன்னை மதிப்பிட்டுத் தரப்படுத்தப் போவதில்லை. செயற்கைக் கருவுண்டாக ஒரு சுகதேகியாக ஒருத்தரின் ஸ்பேர்ம் தேவை. விஞ்ஞான ரீதியாக டொக்டர்கள் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள டி.என்.ஏ பொருத்தங்கள் பார்த்து இந்த செயற்கையாக கருவுண் டாக்கும் முயற்சியில் இறங்குவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இருதய்ம் பழுதாகிவிட்டால் இன்னொரு இருதயம் வைத்துப் பொருத்துவது மாதிரி. பள்ளன் பறையன், தீண்டாச் சாதி என்றெல்லாம் இரத்ததிலும் இருதயத்திலும் எந்தப் பிரிவுமில்லை. அதே போல ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்க ஆரோக்கி யமான ஒரு ஆணின் கருவும் முட்டையும் தேவை. அந்த ஆரோக்கியமான ஆண் நீயாய் இருந்தால் அந்தக் குழந்தை எங்கள் குழந்தை என்ற பரிபூரண உணர்ச்சி வரும் என்றுதான் யோசித்தேன்." ராமநாதன் கெமிஸ்ட்ரியில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு விஞ்ஞானி. அவருக்கு இந்த சமயம் கோட்பாடுகளுக்காக வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்வது பிடிக்காது. விசயத்தை நேரடியாகச் சொன்னார். *ராதிகா உன்னில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் தெரியுமா"
ராமநாதன் பெரும்பாலும் ராதிகாவின் பேச்சை இவனிடம் எடுப்பது குறைவு. அவள் இவனுடன் கதைக் காமல் விட்டு விட்டாள் என்று கேள்விப்பட்டபோது
ராதிகா சாரதாவைப் பழி சொல்லாமல் இருக்கவேண்டும் என்று துக்கப்பட்டார்.

ராஜேஸ்வரி 175
"ஆனால் அவள் அன்பில் ஒரு துளியை என்றாலும் பாரதிக்குக் கொடுப்பாள். என்று நினைக்கிறாயா?"
பாரதிக்கு ஏன் ராதிகா அன்பைக் கெ ாடுக்கவேண்டும்? இவன் சேள்விக் குறியுடன் அவரைப் பார்த்தான்.
'ஒ நீ கேள்விப்படவில்லையா? பாரதி ராதிகா வைக் கேட்டு அவள் தகப்பனுடன் கதைத்ததாகப் பவானி சென்னாள்"
"என்ன? அவன் குரலில் இடி, மழை, வெள்ளம்.
"ஏன் ஆச்சரியப் படுகிறாய்? அவள் கோபித்துக் கொண்டு போனாலும் ஏன் போய்விட்டாள் என்று ஒரு தரமாவது நீ போன் பண்ணவில்லையாமே, அதையும் பவாணிதான் சொன்னாள்."
அவனுக்கு உலகத்திலேயே கோபம் வந்தது,
பாரதியுடன் ராதிகாவைச் சேர்த்து அவனால் கற்பனை கூடச் செய்ய முடியாமலிருந்தது,
*"மிஸ்டர் ராமநாதன் உங்கள் ஸ்பெசிமன் ரெடியா" என்று ஒருத்தி வந்து புன்னகைத்தாள். ஸ்பேர்ம் எடுத்துத் தரச் சொல்லிக் கொடுத்த சண்ணாடிப் போத்தல் தியாகு வின் கையில் இருந்தது.
அவன் அவள் காட்டிய மறை விடத்துக்குள் போனான். உலகத்தில் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பாரதியின் பாகவதர் தோற்றமும் ராதிகாவின் இனிய சிரிப்பும் தான். என்னவென்று அவன் இவ்வளவு முட்டாளாக நடந்து கொண்டான்? கனவு வாழ்க்கையால் ராதிகாவை இழக்கலாமா?
'தாங்க்யூ மிஸ்டர் ராமநாதன்' அவள், அந்த நேர்ஸ் அவனிடமிருந்து 'ஸ்பெசிமனை வாங்கிக் கொண்டாள்.

Page 89
፲76 பணி பெய்யும் இரவுகள்
18
“உலகத்துப் பிரச்சினைக்கெல்லாம் காரணம் மனிதனின் தேவை. அந்தத் தேவையின் அடிப்படை பசியாக இருக்க லாம். காதலாக இருக்கலாம். இவைகள் கிடைக்கா விட்டால் மனிதன் அந்த விரக்தியில் எதையும் செய்ய முயல்வான். காதலிற் தோல்வியுற்றவன் ஒரு பெரிய போர் வீரனாக மாறுவான். பசியில் வாடியவன், ஒரு காலத்தில் ஒரு கொடைவள்ளலாக, அல்லது கொடி கொள்ளைக்காரனாக வரலாம்" இப்படிச் சொன்ன ராதிகா எப்படி அந்த முட்டாள் பாரதியை முத்தமிட்டுக் கொள்ளலாம்?
அவனுக்கு ராதிகாவையும் பாரதியையும் ஒன்றாய் நினைத்துப் பார்க்கும்போது வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.
தியாகு இப்போது எடின்பரோவில் வாழ்கிறான். ஆனி மாத முற்பகுதியில் அவனுக்கு லண்டனைவிட்டு ஒட வேண்டும்போல் இருந்தது.
கிளினிக்கில் ஸ்பேர்ம் கொடுத்து ஒன்றுரண்டுமாதங்களால் சாரதாவின் பெண் கருவை எடுத்து ரியுப் பில் வைத்து அவர்கள் ஐஸ் பெட்டியில் போட்டுவைத்திருந்த தியாகு வின் ஸ்பேர்முடன் சேர்த்துவைத்தார்கள் டெஸ்ட் ரியூப் பில் கரு உருவாகி விட்டதா என்று தெரியச் சில நாட்கள் எடுக்கும். அப்படித் தெரிந்தபின் அந்த வளர்ச்சியடைந்த கருவை, எம்றியோவை, எடுத்துச் சாரதாவின் கருப்பை யில் வைப்பார்கள் என்றொல்லாம் தியாகு தெரிந்திருந் தான், அந்த ஆராய்ச்சிக் கட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அவன் லண்டனில் இல்லை. அதற்கு இரண்டு

ராஜேஸ்வரி ቤ77
கிழமைகளுக்கு முன் எதிர்பாராத விதமாகச் சாரதா இவன் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் முகம் மிகவும் கலங்கிப் போயிருந்தது. இவனைக் கண்டதும் கண் கலங்கி விட்டது. ராமநாதன் உண்மை -யைச் சொல்லி விட்டாரா? அவன் திறந்துவிட்ட கதவைப்
பிடித்தபடி நின்றிருந்தாள். 'உள்ளே வா என்று சொல்ல மாட்டாயா" இவள் குரலில்தான் என்ன கம்பீரம். 'இரண்டாம் தரம் வந்து என்னை உன்னிடம் கெஞ்சப் பண்ணி விட்டாயே" அவள் அவன் கண்களைப் பார்த்த படி சொன்னாள்.
என்ன கேட்கப் போகிறாள்?
அவனுக்கு இருதயம் படபடவென்று அடித்தது. 'நான் இன்று உன்னிடம் ஒரு சத்தியம் கேட்கப் போகிறேன்" அவன் குடலுக்குள் பாம்புகள் ஊர்வதுபோல் ஒரு பயங்கர உணர்ச்சி.
"இதோடார் எனது பேச்சு, எனதுநடை , எனது நான் என்ற மூச்சே உன் இரத்தத்தால் உயிர் பிழைத்தது தானே"
அவன் பேசாமல் நின்றான். "நீ இரத்தி தானம் தாராமல் இருந்திருந்தால் நான் செத்துத் தொலைத்திருக்கலாம் இப்போ.இப்போ அந்த உயிரை மற்றவர்கள் அவமானத்துக்காகச் சிதைத்துக் Go)35st Gina Taunt Lont.'
அவள் கண்களிலிருந்து நீர் பெருகிக் கொண்டிருந்தது.
ராமநாதன் தன் உயிர் போனாலும் இந்த ரகசியத்தை இவளுக்குத் தெரியப் படுத்த மாட்டேன் என்று சொன்

Page 90
178 பனி பெய்யும் இரவுகள்"
னாரே இப்போது என்ன என்றால் இவள் இப்படி வந்து" நிற்கிறாளே! "சாரதா இப்படியெல்லாம் என்ன பேச்சு?"
'நீ. நீ. என்னில் வைத்திருக்கிற அன்புக்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாக்கலாமா"
露 s
“ராதிகா உன்னைப் பழிவாங்கத் தன்னை அழித்துக் கொள்ளப் போகிறாளா" அவன் இன்னும் மெளனம்.
"உன்னைப் பழிவாங்க யாரையாவது கட்டிக் கொண் டால் போகிறது. அவர்தான் சாரதாவைக் கோயிலாச்கி வைத்திருக்கிறாரே என்று பவானிச்குச் சொன்னா ளாம்"
"ராதிகா அழுதால் நான் அழிந்து போவேன். ராஜன் அவள் உன்னில் உயிரையே வைத்திருக்கிறாள்.
உனக்கு அந்த அன்பைத் தாங்கிக் கொள்ள ஏன் பெல மில்லை? ஏன் உன்னை அழித்துக் கொள்கிறாய்? அந்த அழிவில் ஏன் என் பெயரை இழுபடச் செய்கிறாய். என் கணவர் ஒரு உத்தமர். அவருக்காக நான் வாழவேணும். பிளிஸ் என்னை வாழவிடு" அவன் எதிர்பார்க்க வில்லை.
அவனால் அதிக தூரம் ஓட முடியவில்லை. அடுத்த நாளே மிஸ்டர் கிறினைப் போய்ச் சந்தித்தான். மால்க்கத்தை லண்டனுக்கும் தன்னை எடின் பரோவுக்கும் அனுப்ப முடியுமா எனறு கேட்டான், மிஸ்டர் கிறீன் வழுக்கைத்தலையைத் தடவிக் கொண் Al-Tf.
"உனக்கு எடின் பரோ பிடிக்காதென்றாய்"

ராஜேஸ்வரி 79
“எனக்கு இப்போது லண்டன் பிடிக்காது" மிஸ்டர் கிறீன் முகத்தில் குழப்பம், "இரண்டு மூன்று மாதம் எடுக்கும். அவர் இழுத்தார்.
"இந்த வார முடிவில் நான் லண்டனைவிட்டுப் போக முடியாவிட்டால் இந்தக் கொம்பனியை இன்றோடு விடு கிறேன்."
லண்டனில் எத்தனை லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்? இவன் மடையன் என்ன சொல்கிறான்? "நாளைக்கு வா சொல்கிறேன்" மிஸ்டர் கிறீன் எரிச்சலு டன் முணுமுணுத்தார்.
அவன் அன்றிரவு மால்க்கத்துகுப் போன் பண்ணினான். மால்க்கம் லண்டன் வரவிருப்பமில்லை என்று ஒப்பாரி வைத்தான். லிண்டா ஒரு மாட்டுக் கயிறுபோட்டு அவனை அடக்கி வைப்பாள் என்ற பயம்.
"ஒரு ஆறு மாதம் என்றாலும் வாயேன்" இவன் கெஞ்சி னான். உலகத்தின் மூலைக்கே ஒடிவிட ைேண்டுமென்ற ஆவேசம்.
அடுத்தவாரம் எடின்ட்ரோ போய்ச் சேர்ந்ததும்புரபெசஸர் ஜேம்ஸின் வீட்டைத் தேடிப் பிடித்தான். ரெயிலில் கண்ட பிரயாணம் இப்படித் தொடர்வதில் பெரிய சந்தோசம் அவருக்கு. அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் என்று சொன்னார், எல்லாரும் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் என்று கேள்விப் பட்டான். அவருடைய மனைவி ஒரு பழைய காலத்துக் கொள்கை *ளையுடைய கிறிஸ்தவமாது. முற்போக்குள்ள ஜேம்ஸ்
கிழவரும் இந்த கிறிஸ்தவ சமயத்தை கடுமையாகத் தொழும் @○ பெண்மணியும் எப்படி ஒன்றாக 6uT.

Page 91
180 பனி பெய்யும் இரவுகள்
சிடியும் என்று அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. அவர்களின் வீட்டில் ஒரு நல்ல அறை கிடைத்தது.
*4ன்பரோக் கோட்டை இவனின் ஜன்னலாற் தெரிந்தது. *டுத்த பக்கத்தில் கடலலை மெல்லமாய் வந்து கற்பாறை களில் தட்டும் காட்டு தெரிந்தது.
ஸ்கொட்டிஸ் சீப்பாடுதான். இவனுக்குச் சாப்பாடு ஒரு 27ளும் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அதுவும் ராதிகாவைக் கண்ட நாளிலிருந்து சாப்பாடு ஒரு i litré சினையாகவேயில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிடையிற்தான் வாங்குவான் ராதிகாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டால் கல்யாணம் செய்ய முதலே சன்னியாசம் எடுக்க வேண்டிவரும்.
Hரபெஸர் ஜேம்ஸ் நிறையப் படித்துக்கொண்டே இருப் f frfir. இந்தியத் தத்துவங்களைத் தன்னிடம் கேட்காமல் இருக்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டான். அவர் உபநிடதம், பகவத்கீதை போன்ற வற்றைப் Hடித்திருப்பதாகச் சொன்னார்.
பகவத்கீதையா? பார்த்திபனையும் கண்ண பரமாத்மாவை யும் பற்றி நினைக்கும் நினைவில் அவன் மனம் இல்லை.
இருவருக்கும் மொசாட்டின் இசை பிடிக்கும் என்பது அவனுக்கு மகிழ்ச்சி.
மனைவியார் கிறிஸ்தவ சங்கங்களுக்கு என்று அலையும் போது இவர் நீட்யேசயுைம், சார் த்ரேயையும் பற்றிப் பேசுவார்.
"மார்ஸிஸம் பற்றி அறிவாயா?" வெளியில் நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. அாரத்தில் எடின் பரோ கோட்டையில் ஏதோ விசேடம் போலும். பெரிய ஆர் *வாரம். இவன் "இல்லை" என்றான்.

ராஜேஸ்வரி 8.
இவன் என்னதான் படித்திருப்பான் என்று நினைத்தாரோ தெரியவில்லை.
"நான் எனது யூனிவர்சிட்டிப் படிப்பு முடிய அமெரிக்கா போயிருந்தேன். புதிய இடம். ஆட்கள் பழக்கம் இல்லை. லைப்ரரி தேடிப் போனேன். மார்க்ஸ், மாட்டின் லூதர் போன்றவர்களின் அருமையை ‘அங்கேதான் கண்டேன். சின்ன வயதில் மிகவும் கட்டுப்பாடான கிறிஸ்தவனாக நான் வளர்க்கப்பட்டேன். கார்ல் மார்க்ஸ் என்னை மாற்றிவிட்டார்."
அவர் ஓகோ ஓகோ என்று சிரித்தார்.
அடுத்த நாள் வேலையால் வரும்போது லைப்ரரி தட்டுப் பட்டது. உள்ளே போனதும் ஒரு இந்தியப் பெண்மணி என்ன புத்தகம் தேடுகிறீர்கள் என்று அன்பாகக் கேட்டாள்.
"எடின்பரோ புதிது. நேரம் போகமாட்டேன் என்கி ADS 's- அவளின் சிரிப்பு அலாதியானது. அழகான நடை, பார்த்த
படியே சித்திரம் வரையத் தூண்டும் ஒரு வசீகரம். "இந்தியனா' என்றாள்.
*இலங்கையன்."
இருவரும் தங்கள் பெயர் என்னவென்று சொல்லிக் கொள்ளவில்லை. இவன் பெயரை இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் அவன் லைப்ரரியில் சேர்ந்து கொள்ளப் போகிறான்.
கதைப் புத்தகங்களா? அல்லது கருத்துள்ள புத்தகங்களா எடுப்பது? ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயைத் தூக்கிக் கொண்டான். வெளியில் நல்ல வெயில்,

Page 92
i182 பனி பெய்யும் இரவுகள்
இந்த மாதிரி வேளைகளில் ராதிகாவுடன் கைகோர்த்துக் கொண்டு லண்டனில் திரிவது இனியும் முடியுமா?
அவன் தன் வீட்டை வாடகைக்கு விடச் சொல்லி ராமநாத னிடம் சொல்லியிருந்தான். இவன் அவசரமாக லண்டனை விட்டு ஓடியபோது சாரதாவாலா அல்லது ராதிகா பாரதி யுடன் பழகுகிறாள் என்பதாலா என்று அவருக்குதி தெரியாது. ராமநாதன் இவன் சொல்லாமல் தான் ஒன்றும் கேட்கப் போவதில்லை என்று நினைத்திருக்க வேண்டும். அவருக்கு இவனை நன்றாகத் தெரியும்; இவனது பயங்கள் பதட்டங்கள், போராட்டங்கள் முழுக்க அவருக்குத் தெரியும் என்பது இவனுக்குத் தெரியும். அந்த வசந்த காலம் எப்படிப் போய்த் தொலையப் போகிறது என்று நினைத்தவனுக்கு இரண்டு மாதம் முடிய இந்தக் காலம் எப்படி விரைந்து ஓடிவிட்டது என்று யோசித்தான். இந்தியாவில் வைத்து இந்தியப் பிரதமர் ரஜிவ் காந்தியை கொலை செய்துவிட்டார்கள். இவன் லைப்ரரிக்குப் போனபோது நர்மதா இவனை அந்நியன் போலப் பார்த்தாள். இவனைப் பார்த்த விதத்தில் அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்தது. "ஐ ஆம் சொறி நர்மதா" அவன் இலங்கைத் தமிழர் சார்பில் மன்னிப்பு கேட்க முடியுமா?
லண்டனிலிருந்து ஒரு தகவலும் இல்லை ராதிகா பற்றி. ஊரிலிருந்து அடிக்கடி கடிதம் வந்தது. தன் மகன் ஒரு லேடி டொக்டரைச் செய்யப்போகிறான் என்று பூரித்துப் போயிருந்த காந்திமதி, ராதிகா பாரதி விடயம் கேள்விப் பட்டுத் துடிதுடித்துப் போய் எழுதியிருந்தாள். "உன் வாழ்க்கையில் இப்படி ஒரு ஏமாற்றம் நடக்கக் கடவுள் விடலாமா" பெற்ற மனம் துடித்து அழுதது.

ராஜேஸ்வரி 183
தகப்பன் வழக்கம்போல் வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு அனுபவம் என்று நினைத்துக் கொள் என்று எழுதி யிருந்தார். தனக்கும் தன் காதலிக்குமிடையில் உறவு முறிந்துவிட்டது என்று தெரிந்த நண்பர்களான மால்க்கத்துக்கும் லிண்டா வுக்கும் சொன்னான். லிண்டா ராதிகாவின் சினேகிதி. இவனில் மிகக் கோபமாக இருந்தாள். ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை.
மால்க்கமும் லிண்டாவும் ஒரு கிழமை எடின்பரோவில் தங்கியிருந்தார்கள். "ராதிகர் இல்லாமல் உன்னால் எப்படி வாழமுடியும்" லிண்டா கேட்டாள். ராதிகா தன் சினேகிதியிடம் எல்லா விடயங்களையும் சொல்லுபவள். "இன்னொரு பெண்ணுடன் ராதிகாவுடன் வாழ்ந்தது போல் சந்தோசமாக வாழ்வாயா", லிண்டா நேரடியாகக் கேட்டாள். "ராதிகாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கை வித்தியாச மானது" அவன் தன் வாழ்க்கையை இறந்த காலமாகப் பேசுவதை யிட்டுத் துக்கப்பட்டான்.
'குட் செக்ஸ் அன் கிரேட் ஃபன்" லிண்டா கேலி செய்தாள்; குரலில் ஆத்திரம். 'அதற்கு மட்டும் தானே பெண்களை பாவிக்கிறீர்கள்." ‘'நீ அப்படிப்பட்டவனாக என்னை நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்."
"என்ன சண்டை' மால்க்கத்துக்கு நல்லவெறி. தள்ளாடிக்
கொண்டு வந்தான். 'ளி இஸ் ஸ்டில் இன்லவ் வித் யு" லிண்டா போய் விட்டாள்.

Page 93
84 பணி பெய்யும் இரவுகள்
9
992,
தை மாதம் முடியப் போகிறது. தியாகு கிறிஸ்மஸ் பண்டி கைக்குக் கூட லண்டனுக்குப் போகவில்லை.
இதே மாதம் போன வருடம் எடின்பரோவிலிருந்து லண்ட னுக்கு அவன் ராதிகாவுக்காக விழுந்தடித்துக் கொண்டு ஓடியது ஞாபகம் வந்தது. இப்போது அவள் லேடி டொக்டராக கிறின்விச் ஹொஸ் பிட்டலில் வேலை செய்கிறாளாம். லண்டன் எலிஸபெத் ஹோல் இசைவிழாவில் அவளுடன் பாரதியைக்கண்டதாக ராமநாதன் எழுதியிருந்தார். சாரதா அடுத்த மாதம் தாயாகப் போகிறாள்! என்ன விந்தை? தந்தை யார் அந்தக் குழந்தைகளுக்கு என்று தெரிந்தால் என்ன நடக்கும்? பனி கொட்டிக் கொண்டிருக்கிறது.
இன்று ராமநாதனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது. படிக்க அவனுக்குப் புல்லரித்ததுதான். சாரதாவை மனம் திருத்தி செயற்கைக் கர்ப்பம் செய்யப் பண்ணியதை விஞ்ஞான ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், சமய ரீதி யாகவும், ஒழுக்க ரீதியாகவும் தான் பல தடவை யோசித்த தாக எழுதினார். 'ஆனாலும் ஐ லவ் மை வைப் அவள் சந்தோசமாக வாழவேண்டும்." இந்த இடத்தில் நீர்த்துளி பட்டா எழுத்துக்கள் அழிந்திருக்கும். அவன் மேலே படித்தான். "ஐ நோ யு லவ் மை வைப் ரூ" அவனால் அதற்கு மேல் வாசிக்க முடியவில்லை. இப்படி அவர் நினைக்கக் கூடாது. அவனுக்கு அழுகை வந்தது. ஏன்

ராஜேஸ்வரி 185
அழுகை வந்தது என்று தெரியாது. கடிதத்தை வைத்து விட்டு அழுதான். நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அழுதது குறைவு. அதற்குமேல் அந்தக் கடிதத்தை அவனால் வாசிக்க முடியவில்லை. அடுத்த நாள் வாசிக்க கடிதத்தை எடுத்தபோது டெலிபோன் அடித்தது. 'ராதிகா பேசுறன்" வெளியில் பணி பெய்து கொண்டிருந் தது. அவன் குரல் அடைத்து விட்டது. தொண்டைக்குள் தொலைந்துபோன வார்த்தைகளை எப்படிக் கைவிட்டுத் தேடுவதாம்? அவன் உள்ளம் சிலிர்க்க நின்றான். "ராமநாதன் மாமா செத்துப் போய்விட்டார்."
அவள் அழுதுகொண்டே சொன்னாள். அவனுக்கு அதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது?
வெளியில் நடந்தான். இந்தக் கொட்டும் பணியில் எங்கே போகிறான் என்று புரபெஸர் ஜேம்ஸ்எட்டிப்பார்த்தார். தூரத்தில் தெரியும் எடின்பரோ கோட்டையை நோக்கி நடந்தான். வானம் பிளந்து மாமா ராமநாதனுக்கு பனிமலர் கொட்டு கிறதா? அவன் பணிமலரில் நனைந்து போனான். அப்போது பின் னேரம் ஐந்து மணி. பனிக்காலம், தெருவில் சன நட மாட்டம் இல்லை. இருள் படர்ந்த உலகத்தில் அவன் திசை தெரியாமல் நடந்தான். "நான் செத்துப் போனால் அவள் தவித்துப் போவாளே” ராமநாதன் சொல்லியது. அவன் காதில் கூவியது. அவள் தனித்துப் போகக் கூடாது என்பதற்காகத்தான் என்னைக் கெஞ்சினீர்களா ராமநாதன்? வானத்தைப் பார்த்துக் கேட்டான்.
u-12

Page 94
186 பணி பெய்யும் இரவுகள்
சாரதாவுடன் சேர்ந்து பதுளை மலை முகட்டிலிருந்து வானத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டி இறந்து போன மனிதர்கள்தான் நட்சத்திரமாவார்கள் என்று பேசிக் கொண்டது ஞாபகம் வந்தது.
**ராமநாதன் நீங்கள் புனிதமான மனிதன் பெற்றோருக்" காக சல்யாணம் செய்து கல்யாணம் செய்தவளின் கண்ணிரைத் தாண்ட முடியாத கண்ணியம் உள்ளவர் நீங்கள். உறவுக்குள் ஒளித்து வைத்திருந்த எனது விரச தாபத்தை எனக்கே வெளிப்படுத்தியவர் நீங்கள். உங்கள் மனைவி தனியாக வாழக்கூடாது என்பதற்காக முன் ஏற்பாடாக அவளைத் தாயாக்கிய தியாகி நீங்கள்"
அவன் பைத்தியக்காரன் மாதிரிப் பேசிக் கொண்டான்.
கொலைவெறி பிடித்தலையும் தமிழ் இனத்தில் அவர் ஒரு
புனிதப் பேர்வழி. வாழ்க்கைக்கு, உயிருக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு தூய மனிதன் அவர்.
அவன் மினுக்மினுக் என்று தெரியும் எடின்பரோ நகரத்தைப் பார்த்தான். இது ஏழை இந்தியரின் குடிசைகள் அல்ல என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அவனது பழைய ஞாபகங்களை அவனிடமிருந்து பிரிக்க முடியவில்லை அவரின் கடிதம் அவன் சட்டைப்பையில், கனத்தது. நேரே தெரிந்த "பார்’ ஒன்றுக்குப் போனான். ஒரு பியர் ஒடர் பண்ணிக் கொண்டான். போன வருடம் இதே மாதம் ராமநாதன் விஸ்கி குடித்தது ஞாபகம் வந்தது. பார் லையிட் மங்கலான வெளிச்சம். ஆனாலும் ராமநாதனின் எழுத்துக்களை வாசிப்பது அவ்வளவு கஷ்டம் இல்லை. முத்து முத்தான எழுத்துக்கள்.
"...இந்தக் கடிதத்தை ஆஸ்பத்திரியில் இருந்து எழுது கிறேன். சாரதாவுக்குக் குழந்தை பெறும்வரை இந்த விடயத்தை உனக்குச் சொல்லக் கூடாது என்று இருந் தேன். ஆனால் இப்போது ஆஸ்பத்திரியில் எனது இருதய

ராஜேஸ்வரி 87.
சத்திர சிகிச்சைக்காக வந்திருக்கிறேன். சத்திர சிகிச்சை வெற்றி என்றுதான் டொக்டர்கள் சொல்லப் போகி றார்கள். ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. ஏன் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. இப்படி ஒரு பயம் மனத்தில் இருந்தபடியால் தான் சாரதாவைத் தனியாக விட்டுவிட்டுச் செத்துப் போகக் கூடாது என்று முடிவு கட்டினேன். ஏழெட்டு வருடமாக எனக்குத் தெரியும். இந்த வருத்தம் ஒரு பிரச்சினையைத் தருமென்று. ஆனாலும் எனக்கு என்னவோ ஒப்பரேஷனுக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதோ எப்போதாவது இருந்து நெஞ்சுநோ வரும் என்று சாரதாவுக்குத் தெரியுமே தவிர எவ்வளவு சீரியசானது என்று அவளுக்குக் கனவிலும் தெரியாது. போன வருடம் நீ அவளைப் பார்க்க வரக்கூடாது என்று உனக்குத் தடை யுத்தரவு போட்டபின் மிகவும் ஆடிப் போனாள்ள உலகத்தில் உண்மையான அன்பு செலுத்த உன்னைத் தவிர உறவினர் யாருமில்லையே. நீங்கள் இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன்" என்றழுதாள். அன்றே முடிவு செய்து விட்டேன் இவளைத் தனியாக விட்டுவிட்டு நான் போகப் போவதில்லை என்று. கடவுள், சம்பிரதாயம் என்ற நம்பிக்கைகளுக்குள் தங்களைச் சிறை வைத்திருக்கும் அவள் மன உணர்ச்சிகளை வெல்வது சரியான வழியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அவளுக்குப் புத்தி சொல்லத் தொடங் கினேன். எனக்குள் ஒரு வெறி. என்னை நான் வெல்ல வேண்டும் அல்லது அவளை நான் வெல்ல வேண்டும் என்ற துடிப்பு. அந்தப் போராட்டம்தான் அவளை நோயாளியாக்கியது. தியாகு ஒரு மனிதன் சாக நினைத்தால் வருத்தம் தானாகத் தேடிவரும் என்று தெரியுமா உனக்கு? எட்டு வருடத்திற்கு முன் எனக்குத் தெரிநதது நான் தகப்பனாக முடியாது என்று - அன்றிரவே எனக்கு இருதயம் வலிக்கத் தொடங்கி

Page 95
188 பணி பெய்யும் இரவுகள்"
விட்டது. ஏன் ஒரு மலடனாக வாழவேண்டும் என்ற ஆத்திரத்தில் என்னை அழித்துக்கொள்ளும் வெறிதான் siël •
தியாகு நான் உன் அன்பைப் பாவித்துக் கொள்ளவில்லை. சாரதாவில் நீ வைத்திருக்கும் அன்பு எனக்கு உன்னை முதல் நாள் சந்தித்த அன்றே தெரிந்தது. உனது பார்வை யில் தெரிந்த வெறுப்பு என்னைக் குலுக்கி விட்டது.
நீ சின்னப்பையன் அப்போது. உன் அன்பை ஒரு கவனமான வழிக்குத் திசை திருப்ப முடியாத வயது உனக்கு. ஆனாலும் உன் அன்பை விதவிதமான பெயர்கள். சொல்லி நீ ஏமாற்றிக் கொண்டாலும் உனக்குத் தெரியும், உன் மனம் என்று நினைக்கிறேன். கல்யாணம் ஆன ஆரம்பக் காலத்தில் சாரதா உண்மையாகத் தன் பெரியம்மா செல்வமலரிடமிருந்து தப்பித்துக் கொள்ளத் தான் என்னைச் செய்தாளா அல்லது உன்னிடமிருந்து தப்பத்தான் என்னைச் செய்தாளா என்று நான் யோசித்தது உண்டு. சாரதா ஒரு தெய்வம். உன்னைத் தம்பி என்ற உறவுக்கு அப்பால் பார்க்கத் தெரியாத புண்ணிய ஆத்மா அது. அவளுக்கு நாங்கள் செய்த விடயம் தெரிந்தால் செத்துப் போவாள். நான் குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் உயிரோடு இருப் பேனோ தெரியாது. குழந்தைகள் என்று சொல்கிறேனே ஆமாம் சாரதாவின் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஸ்கானில் கண்டுபிடித்தார்கள். நாளைக்கு எனக்கு சத்திர சிகிச்சை. பிழைப்பேனோ தெரியாது.
இல்லாவிட்டால் சாரதாவை அவள் குழந்தைகள் காப்பாற்றுவார்கள். நீ கட்டாயம் ராதிகாவிடம் போக வேண்டும். பாரதியை அவள் கல்யாணம் செய்ய
மாட்டேன் என்று சொல்லி விட்டாளாம். ஸ்ரீ லவ் யு சோ மச். ஹோ பாக் டு ராதிகா."
தியாகு கடிதத்தைப் படித்து முடித்து விட்டான்.

ராஜேஸ்வரி 89
வீட்டுக்கு வந்தபோது இரவு ஒரு மணியிருக்கும்.
புரபெஸர் ஜேம்ஸ் நீட்சேயுடன் மாரடித்துக் கொண்” டிருக்க வேண்டும். "உனக்கு என்ன பைத்தியமா இந்தப் பணியில் அலை கிறாயே" கிழவர் அன்புடன் கண்டித்துக் கொண்டார்.
அவன் அவரிடம் விடயத்தைக் சொல்லிமுடிய இரவு மூன்று மணியாகி விட்டது. "செத்த வீட்டுக்குப் போக வில்லையா" கிழவர் அன்பாகக் கேட்டார்.
'இல்லை சாரதாவைப் பார்க்க வேறு யாரும் இருப் பார்கள்" அவன் வேதனையுடன் சொன்னான்.
ஆங்கிலேய - ஸ்கொட்டிஸ் மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான விடயங்கள் கல்யாண வீடும் செத்த வீடும்தான். இவன் தன் நெருங்கிய சொந்தக்காரர் ஒருத்தரின் செத்த வீட்டுக்குப் போகாதது புரபெஸர் ஜேம்ஸ்சுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவன் கொஞ்ச நாளாக ஏதோ குழம்பிப்போய் இருக் கிறான் என்று அவருக்குத் தெரியும். ஆனால் ஏன் குழம்பிப் போய் இருக்கிறான் என்று தெரியாது. அவர் அதைப் பற்றிக் கேட்கக் கூடிய மனிதர் இல்லை.
பணி கொட்டி, மலை மறைந்த காலம் போய் இளவேனிற் காலம் பிறக்கப் போகிறது.
ராதிகா இரண்டொருதரம் போன் பண்ணினாள். முதற் தரம் ராமநாதன் இறந்து விட்டார் என்று சொல்லப் போன் பண்ணினாள். செத்த விடயத்தை மட்டும் கேட்டுவிட்டு அவள் எப்படியிருக்கிறாள் என்று கூடக் கேட்கவில்லை.
அடுத்த தடவை சாரதாவுக்குக் குழந்தைகள் பிறந்த விடயம் பற்றிச் சொன்னாள்.

Page 96
190 பணி பெய்யும் இரவுகள்
இவள் எப்படியிருக்கிறாள் என்றோ சாரதா எப்படி இருக்கிறாள் என்றோ இவன் கேட்கவில்லை. இப்படித் தன்னைத்தானே ஒடுக்கிக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது.
இவன் ஏதும் மேலதிகமாகக் கேட்கமாட்டானா என்று அவள் தயங்குவது இவனுக்குப் புரிந்தது. இருவருக்கு மிடையில் நானூறு மைல்களுக்கு மேல் வித்தியாசம் இருக்கலாம். ஆனாலும் அவள் பெருமூச்சு அவனுக்குக் கேட்டது.
உங்களுக்கு என்ன நடந்தது என்று அவள் கேட்கத் துடிப்பது அவனால் உணரமுடிந்தது. சாரதாவை ஏன் நீ பார்த்துக் கொள்கிறாய் என்று இவன் கேட்க மாட்டானா என்று அவள் ஏங்குவதை இவனால் கருத்தில் எடுக்க முடியும். அவனைப் பொறுத்தவரையில் சாரதா ஒரு இறந்த காலம், ஆனால் ராதிகா? ஒரு நாள் லைப்ரரிக்குப் போனபோது நர்மதா இவனை ஏற இறங்கப் பார்த்தாள். “என்ன சுகமில்லையா" அவள் பரிவுடன் கேட்டாள் ம அந்தக் குரலே இவனுக்கு எத்தனையோ ஆறுதலாக இருந்தது. "அப்படி ஒன்றும் இல்லை" பொய் சொல்கிறான் என்று அவளுக்குத் தெரியும். "மிகவும் இளைத்துப் போய் இருக்கிறீர்கள்" தர்மதாவின் இனிய குரல் அவனைச் சுண்டியது. "உனக்கு போய் பிரண்ட் இருக்கிறானா" அவள் கண் களைப் பார்த்துக் கொண்டு இவன் கேட்டான். அவள் இல்லை என்பது போற் தலையாட்டினாள்.

ராஜேஸ்வரி 19
"உங்களுடன் ஒரு படம் பார்க்கவோ அல்லது ஒரு நல்ல இசை விழாவுக்கோ நீங்கள் என்னைக் கூப்பிட்டால்
மறுக்க மாட்டேன்." அவள் குரலில் நிதானம். ராதிகா சாரதா போல் இவள் இல்லை. அவர்களிடம் இல்லாதது இவளிட மிருக்கிறது.
,"ஐ லைக் யு நர்மதா' அவன் விடைபெற்றான். சாரதாவின் குழந்தைகள் சரியாக அவள் தகப்பன் சத்திய மூர்த்தி போல் இருப்பதாக ராதிகா சொன்னாள். இவன் 'உம்' போட்டுக் கொண்டான். "சத்தியன்,நாதன் என்று தன் மகன்களுக்குப் பெயர் வைத் திருக்கிறாள்.' ராதிகாவின் குரலில் பிளிஸ் என்னுடன் கதையுங்கள் என்ற தவிப்பு. சத்தியமூர்த்தி-ராமநாதன் போன்ற மனிதர்களைச் சாரதா வளர்க்கப் போகிறாள். "நல்ல பெயர்கள்’ தியாகு மெதுவாக முணுமுணுத்தான்.
"பையன்கள் நல்ல பையன்கள். சாரதாவுக்குத் துணையாக நான் அவள் வீட்டிலேயே இருக்கிறேன். பாவம், சாரதா. மாமாவின் பிரிவால் மிகவும் வாடி விட்டாள். ' ராதிகா மேலும் சொல்லிக் கொண்டி ருந்தாள். செத்த வீட்டுக்கு கூடப் போகாமல் சாரதாவிடமிருந்து தன்னைத் துண்டித்து விட்டானே! இவன் இருதயம் என்ன இரும்பாலா செய்தது?
"லண்டன் பக்கம் வரமாட்டீர்களா" ராதிகாவின் கெஞ்சல் மனதை என்னவோ செய்தது. * நீதானே எடின் பரோவுக்குப் போகச் சொன்னாய்" அவன் குரல் தழுதழுத்தது. *தியாகு நீங்கள் போட்ட மோதிரத்தை நான் இன்னும் கழட்டவில்லை" அவன் மெளனமாக ரெலிபோனை வைத்தான்.

Page 97
192 பணி பெய்யும் இரவுகள்
அன்றிரவு நர்மதா வீட்டில் சாப்பாடு. நர்மதா அழகாக உடுத்திருந்தாள். மொசாட் றெக்கோட்டை அவள் போட்டதும் இவனுக்குச் சிரிப்பு வந்தது. ராமநாதன் தன் வீட்டுக்கு வந்து தானாக ரேடியோவைத் திருப்பிய போது கேட்டஇசை. அந்த இசை இவனை ராதிகாவுடன் ஷவர் எடுத்த நினைவைக் கிளப்பியது. இவன் முகத்தை மூடிக் கொண்டான். "என்ன ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்" தர்மதா மெது வாகக் கேட்டாள். ராதிகா எனக்கு இந்த வினாடியிற் தேவை என்று சொல்ல முடியுமா? 'வீட்டுக்குப் போகிறேன்" அவளுடன் மேலும் பேசிக் கொண்டிருக்க மனம் இல்லை. வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது "லண்டன் பக்கம் வரமாட்டீர்களா' என்று ராதிகா கேட்ட குரல் துரத்திக் கொண்டு வந்தது. அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை. அறையிலேயே கழித் தான். ஜேம்ஸ் குடும்பம் இரண்டு கிழமைக்கு கிளாஸ்கோ போய்விட்டார்கள். வீடு அமைதியாக இருந்தது. மொசாட் றெக்கோட்ஸ் எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டான். மாலை வந்தது. வெளியில் போகலாமா? யாரோ கதவைத் தட்டினார்கள் அலுப்புடன் கீழே வந்து கதவைத் திறந்தான். ராதிகா ! இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக் கொள்ளவில்லை. "உங்களுக்கு என்னில் விருப்பமில்லை என்றால் நீங்கள் போட்ட மோதிரத்தைத் திருப்பித்தர வந்திருக்கிறேன்; அவள் உதடுகள் துடித்தன. நீர் பொங்கும் விழிகளை அவனால் சகிக்க முடியவில்லை. மடைவெள்ளம் பாய்ந்தது. பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ!


Page 98
இலண்டன் மா வாழ்க்கையை நாவல், புகழ்பெற்றவர் திருமதி நதிக்க ைபயில், தில்லையாற்றங்கை ஆகிய நாவல்கள் எர் கில் பாராட்டுப் பெற் கனடா , பிற ஐரோப் சஞ்சிகைகளிலும் எழு
திருமதி ராஜே மாகாணத்தைப் பிறப் பாணத்தில் கல்வி கற் அங்கும் திரைப்படத்த வர். மூன்று பிள் ஈ எ
பெண் விடுதளை இய
ஓரி ெ
என்ற இந்நாவல் இ6 காரணமாக இங்கில ஏற்படும் உறவுகள், மு கதையின் அடிப்படை அதன் பரிமானங்கள் பாடுகளையும் இந் நா!
 

பணி பெய்யும் இரவுகள்
நகரத்தில் வாழும் தமிழர்களின் சிறுகதை வடிவங்களில் எழுதிப் தி ராஜேஸ்வரி. இவரின் தேம்ஸ் லகமெல்லாம் வியாபாரிகள், ரபரில், ஒரு கோடை விடுமுறை கெனவே வெளிவந்து எழுத்துல றவர். இண்டன், இலங்கை, பிய நாடுகளிலிருந்து வெளிவரும் தி வருபவர். ஸ்வரி இலங்கையின் கிழக்கு பிடமாகக் கொண்டவர். யாழ்ப் று இலண்டன் நகரில் வாழ்பவர், துறையில் கற்றுப் பட்டம் பெற்ற 1 களுக்குத் தாயான ராஜேஸ்வரி க்கங்களில் ஈடுபாடுடையவர்.
பய்யும் இரவுகள்
ங்கைத் தமிழர் இனக்கலவரம் ாந்தில் குடிபெயர்ந்தவர்களிடை ரண்பாடுகளைக் கூறி நிற்கிறது. டயாகக் காதல் இருந்தபோதும் சின் விசித்திரங்களையும் வேறு வலில் கானாம்,