கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாவித்திரி சபதம்

Page 1

酮

Page 2

.ெ சிவமயம்
சாவித்திரி சரிதம்
(பாட்டும் உரையும் )
நூலாசிரியர் : வே. கனகசபாபதி
1ாழ், இலக்கிய வட்டி வெளியீடு
۔ـــــــد نیم
Mשונ% ל"" ; נוק, : .צ 34:"... , ...", עז: "", ז

Page 3
பாழ். இலக்கிய வட்ட வெளியீடு : 38 நூல் : சாவித்கிரி சரிதம்
பண்டிதர். செ. சிவப்பிரகாசம் மாசி |
க்கியோனுக்கு அச்சுப் பதிவு: ஆனந்தா அச்சகம், யாழ்ப்பாணம்,
LLE .
5{}/- (சிறப்புப் பதிப்பு)
ாடர்புகள் : க. கமலநாதன்,
"ஞானகிரி", சண்டிலிப்பாய்.
பூரீ லங்கா
இந்நூலின் முதற் பதிப்புப் பிரதிகள் விற் பனே பால் கிடைக்கும் ஆதாயம் சண்டிவிப் பாய், சீரணி நாகம்மாள் கோவில் திருப்
:
SqSSLSLSSLSLSSLSL SLL LSSLS S S SMSSSSLLLL LSST L LSLS LLL LLLL S S S S S S STS SLLL LS LL LSLS LSLSLS LLLLSLLLSLLSLLS
பணிக்குச் செலவிடப்படும்.
)
 
 

பீ.
பதிப்புரை
இலங்கையின் வடபகுதியில் ஏற்றமுடன் இயங்கி வரும் இனே யற்ற எழுத்தாளர் சங்கம் யாழ் இலக்கிய வட்டம் என்பதன எல் லோரும் நன்கு அறிவர். 1986-ம் ஆண்டில் இரசிகமணி கனக செக்கி நாதன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பெற்ற இச் சங்கம் கமி ழையும் தமிழர்களேயும் உளமாரக் காதல் செய்து, பழந்தமிழர் பன் பாட்டை எடுத்து விளக்கவும் உயர் தனிச் செந்தமிழின் ஒப்பற்ற தனித்துவத்தை நிலைநாட்டவும் வாழும் சமு காயத்திற் குழு மாறு தல்களுட் சுத்தமானவற்றை முத்தமிடவும் பக்கரின் சிந்தண்+ளேயும் செயற்பாடுகளேயும் எதிர்பார்ப்புகக்ாயும் ப்ெபமிடவும் சமுதாய மறு மலர்ச்சி, முன்னேற்றம் என்பவற்றுக்கு வழி சமைக்கவும் எழுத்திை யும் மேடையையும் புத்தி பூர்வமாகப் பயன் படுத்திக் கடந்த பதி ஒன்கு வருடங்களாகச் சமகால இலக்கியத்தை வளர்த்து வதி துள்ளது.
யாழ் இலக்கிய வட்டம் இதுரை இருபத்தேழு நூல்களே வெளி யிட்டுள்ளது. இதன் அடுத்த வெளியீடாகச் சாவித்திரி சரிதம்" என்னும் இக் காவியத்தை தமிழன்பர்களுக்கு வழங்குவதிற் பெரு மகிழ்ச்சி அடைகின்றுேம்.
வியாச பாரதத்தில் வன பர்வத்தில் ஓர் உப ரீதை "கிக் கூறு
பட்டுள்ள சாவித்திரி கதையை விரிவாக்கிக் காவியமாக்கியுள் r பு வர் வே. கனகசபாபதி அவர்கள். ஒன்பது சருக்கங்கஃக கொள்' விளங் கும் இக் காவியம் எழுநூற்ருெரு விருத்தப் பாக்காாள் ஆனது. நால்வகைப் பொருள்க% யும் பல்வகை நபங்களும் பெவியக் கூ செல்லும் இக் காவியம் தமிழ்கூறும் காவியங்களுடன்  ை.ெ நீ து போற்றத்தகு பெருமை வாய்த்தது. மேலும், கற்பிற் சிறந்த சாவிதி திரியின் கதை தமிழுலகிற் கதையாகவும் நாடகமாகவும் நெடுங்கால மாக உலவி வந்த பொழுதிலும் காவியமாக மலரவில்லே. இக் குறையை நிவிர்த்தி செய்கின்றது இக் காவியம்.
இத்தகு பெருமை மிக்க காவியத்தைச் செய்த புலவர் வே காங் சபாபதி அவர்கள் திருநெல்வேலியைச் சார்ந்தவர் யாழ் இலக்கிய வட்டத்து உறுப்பினர். இவரது "கனவும் கவிதைபும்" என்று துலே முன்பு யாழ் இலக்கி விட்டம் வெளியிட்டுள்ளது வ ர து பிற ப்புசகளு ட் காபா ே ராக  ைf போற்றிப்பதது, நீலாயதாடரிப்

Page 4
W
போய்றிப் பத்து, வயிரவ சுவாமி பிரார்த்தினேப் பத்து, வ யி ர வ சுவாமி திருவூஞ்சல், தோத்திரப் பாமாலை என்பன அச்சேறியுள்ளன. தமிழிலே நிரம்பிய தேர்ச்சியும் தமிழர் நிலத்தினுல் அரும்பிய ஆர்வமு முள்ள புலவர் அவர்கள் உள்ளத்தால் உயர்ந்தவர் ஒழுக்கத்தாற் சிறந்தவர்.
சாவித்திரி என்ருல் "சோதியின் புதல்வி' என்று பொருள். சோதியைப் போன்று எங்கும் பிரகாசிக்கும் நலம் வாய்ந்த இக் காவியத்தைத் தமிழன்&னக்கு அணியாகும் வகையில் மதிப்புடன் வெளி
யிடுகின்ருேம்.
இதனே அழகுற அக்சிட்டுத் தந்த யாழ்ப்பாணம், ஆனந்தா அச் சகத்தார்க்கும் எமது நன்றியைத் தெரிவிக்கின்றுேம்.
வன்க்கம்
குரும்பசிட்டி, வி. கந்தவனம். தெல்விப்பழை. யாழ். இலக்கிய வட்ட
--7 9 வெளியீட்டுக்குழுத் திலேவர்
 

顯
நூலாசிரியர் :
புலவர் வே. கனகசபாபதி அவர்கள்

Page 5

(a
சிவமயம்
முன்னுரை
சாவித்திரி சரிதம் மிகவும் புராதனமான கதைகளுள் ஒன்று. சாவித்திரியின் கற்பின் மகிமையைப் பேசுங் கதை. வ ட மொழியில் வியாசபாரதத்தில் வனபர்வத்தில், இது ஒரு உபகதையாகக் கூறப்படு கிறது. பஞ்சபாண்டவர் வனவாசஞ் செய்தபொழுது யுதிஷ்டிரன் தங் கள் நிலைமையைக் குறித்துக் கவலையுடன் இருந்தர்ன். அப்பொழுது மார்க்கண்டேய முனிவர் அவனுக்கு எப்படிச் சாவித்திரி தன் கற்பின் மகிமையால் சத்தியவானின் உயிரை மீளப் பெற்ருளோ அப்படியே திரெளபதியும் தனது கற்பின் மகிமையால் பாண்டவரின் துய்ரமெல் லாவற்றையும் நீக்கிச் சுக வாழ்வை உண்டாக்குவாளென்று ஆறுதல் கூறினர். இக்கதையின் சுருக்கம் XViம் பக்கத்தில் தரப்பட்டிருக்கிறது.
இக்கதை நாடகரூபமாகவும் சிறு கதைய்ாகவும் தமிழ்கூறும் நல் லுலகில் வழங்கி வருகின்றது. ஆணுல் இதைத் தமிழில் ஒரு காவிய மாக எவரும் எழுதி வெளியிடவில்லை.
எனது மதிப்பிற்கும் பேரன்பிற்கமுரிய காலஞ்சென்ற பண்டிதமணி சோ. இளமுருகனுர் அவர்கள் "நீங்கள் தனிப்பாடல்களாக எழுதுகி நீர்கள். சாவித்திரி சரிதத்தைக் காவியமாகப் பாடுங்கள் அது ஒரு சிறந்த கதை. இதுவரை அது கவிதை ரூபமாக வெளிவரவில்லை. பயனுள்ள முயற்சி" என்று எனக்குப் பணித்தார்கள். அ ற் ப அறி வுடையவஞகிய நான் ஒரு காவியத்தைப் பாடுவதாவது என்று நான் மனந்தளர, அவர்கள் "உங்களுக்கு நன்ருகக் கவிதை எழுத வருகி றது. உங்களால் இதை எழுதி முடிக்க இயலும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எழுதத் தொடங்குங்கள்' என்று சொன்னர்கள்.
யானும் மனந்தேறி இந்நூலை எழுதத் தொடங்கினேன். வியாச பாரதத்தில் மிகவும் சுருக்கமாகக் கூறப்பட்ட கதையை விரிவாக்கி வேண்டற்பாலனவாகிய உறுப்புக்களைச் சேர்த்து எழுதினேன். சில சருக்கங்களை அவர்கள் பார்வையிட்டுத் திருத்தியடைந்து என்னைச் சீக்கிரம் இதனை எழுதி முடிக்கும்படி அடிக்கடி கடிதம் எழுதி ஊக் கப்படுத்தினர்கள். தான் சீவிய வந்தராக இருக்கும் பொழுதே இந் நூல் அச்சாகி வெளிவந்து விடவேண்டுமென்று பெரிதும் விரும் பிஞர்கள். எமது துர்ப்பாக்கியம், இது நிறைவேறுமுன் அவர் க ள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

Page 6
á
V
இந்நூல் முழுவதையும் எனது உழுவலன்பர் செந்தமிழ்ச் சிரோ upah luas igg 635yait6r 5, 6). El-TTarsir B. O. L. Cip-in Ed. அவர்கள் பrவையிட்டு சிற்சில இடங்களில் வேண்டிய மாற்றங்களை யும் சுட்டிக்காட்டி உதவிஞர்கள் அத்துடன் சிறந்த ஒரு சிறப்புப் பாயிரத்தையும் தந்து உதவினுர்கள்.
பின்பு, எமது அன்பு கெழுமிய நண்பன் பண்டிதர் செ, சிவப் பிரகாசம் அவர்கள் நூலையும் நான் எழுதிய சுருக்கமான உரையை யும் பார்வையிட்டு, இதை எல்லோரும் படித்து விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற அவாவினுல் தானே மனமுவந்து ஒரு விரிவான உரையை எழுதி உதவிஞர்கள். அத்துடன் ஒரு அணிந்துரையையும் வழங்கிஞர்கள்.
இவர்களுக்கு எனது மனமார்ந்த தன்றியைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன்.
இந்நூலுக்கு மனமுவந்து அணிந்துரைகள் வழங்கிய இ லக் கி ய கலாநிதி, பண்டிதமணி. உயர்திரு சி. கணபதிப்பிள்ளை அவர்களுக் கும், யாழ் ப் பா ன ப் பல் கலை க் கழக இந்து நாகரிகத் துறைத் தலைவர், பேராசிரியர் கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள் M. A., Ph.D. அவர்களுக்கும், பண்டிதர் சி. வேலுப்பிள்ளை அவர்க ளுக்கும் எனது உளங்கனிந்த நன்றி உரித்தாகுக.
இந்நூலின் மூலப் பிரதியையும் அச்சுப் பிரதியையும் ஒத் துப் பார்ப்பதில் எனக்கு உறுதுணையாயிருந்த எனது இனிய நண்பர்-பண் டிதர் சி வேலுப்பிள்ளையவர்களுக்கும், ஒய்வுபெற்ற தலைமை ஆசிரி யர் பொ. சிவகுரு அவர்களுக்கும் செல்வன் க. கமலநாதனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்,
இந்நூலை வெளியிட முன்வந்த யாழ் இலக்கிய வட்டத்தாருக்கும், குறிப்பாக வெளியீட்டுக் குழுத் தலைவர் கவிஞர் வி. கந்தவனம் அவர்கட்கும் எனது நன்றி உரியதாகுக.
"ஞானகிரி' வே. கனகசபாபதி சண்டிலிப்பாய்.
9-2-2982.

(i. சிவமயம்
அணிந்துரை
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி உயர்திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
வழங்கியது
தற்காத்த லோடு தற்கொண்டாற் பேணித்
தகைமை சான்ற சொற்காத்து நின்று சொததாகியதன் கணவனுயிர்
காத்த தையல் மற்ருே ரெ வருஞ் செயற்கருஞ் செய்கை
செய்துநின்றே மனசால் நாமும் மற்றேரும் பேணச் சாவித்திரி யானவள்
வாழ்ந்து வந்தாள்.
அவ்வாழ் விலட்சியம் அறிந்தோரும் போற்ற
அவனி யிலே இவ்வாழ்வு பெற்ற எவரும் அறிந்திட
w இனிய பாவால் எவ்வெவர் தாமும் போற்றிடும் புலவன்
கனக சபா பதிதான் செவ்விதே செய்து ஒன்டான் சருக்கத்தால்
உணர்த்தி ஞனே.
கலாசாலை வீதி, சி. கணபதிப்பிள்ளை
திருநெல்வேலி. .%ዳ ← ነ ጳ~§፲ ,

Page 7
سخهٔ
சிவமயம் செந்தமிழ்ச் சிரோமணி பண்டித வித்துவான் திரு க. கி. நடராஜன் B.O.L., Dip.in.Ed, அவர்களின்
சிறப்புப் பாயிரம்
மாத்திர தேசந் தன்னில் மாநிலம் புரந்து வாழ்ந்த மாத்திறல் மன்னன் அஸ்வ பதிக்கும்மா ளவிதே விக்கும் நாத்திறல் கொண்டு 36 வயம் நாளுமே போற்றுங் கற்புப் பூத்திடும் வல்லி யன்ன புனிதசா வித்ரி தேவி.
2 சரிதையைக் காவி யத்தின் சகலநன் னயமும் வாய்ப்ப விரிதரு விருத்தப் பாவால் மிகவுநூண் சுவைபொ ருந்த அரிதினிற் பாயி ரத்தோ டுற்பத்திச் சருக்கம் ஆதித் திருமலி சுயம்வ ரம்பின் திருக்கலி யாணம் இன்னும்,
3 மனையறச் சருக்கத் தோடு மறலிசார் சருக்கம் பின்னர் நினைவரும் மீட்சி நேரில் நின்மலத் துறவு நன்னர்ப் புனைமுடி சருக்கம ஆகப் போற்றுமொன் பான்ச ருக்கம் எனைவரும் மகிழ்வி ருத்தப் பாவினில் எழுநூற் ருென்று.
4. யாத்தளித் துதவி ஞனல் யாவரும் போற்றுஞ் சீலன் பாத்தருந் திறத்தி லிந்தப் பார்புகழ் புலமை மிக்கோன் ஏத்தருஞ் சிறப்பு வாய்ப்ப இன்பமார் அணிகள் கோத்துத் தாய்த்திரு மொழிக்கு நல்ல தகவுடன் சமர்ப்பித் தானல்.
5 சைவநற் கலைக ளாய்ந்தோன் தண்ணளி மிகவும்
(வாய்ந்தோன் மெய்வரும் பத்தி மிக்கோன் மேம்படும் உத்யோ கத்தன் ஐவரிற் றருமன் பேர்ல்வான் அறிவினிற் சேட ஞெப்பான் துப்பேரு நெறியில் நிற்போன் உயர்பல நூல்கள் தந்தோன்,

iX
6 மனநிறை யன்பி ரக்கம் மாண்புகள் பொருந்துஞ் சீலன் கனகநற் சபாய திப்பேர்க் கவிமணி குணத்தால் மேரு; எனதுளங் கவர்ந்த தூய இன்பமார் நண்பன், ஊர்க்குக் கனடணி யுஞற்றுஞ் சீரோன் காசினி மதிக்க வாழ்வோன்
7 முப்பொருள் இயல்பி னேடு முந்திடும் தேவி பத்தி ஒப்பிலாச் சமய பத்தி உலகதில் இயற்கை மாண்பு செப்பிடு பிள்ளைப் பாடல் திருமணக் கிரியை யோடு மைப்படு கண்ணி யார்தம் மனையற மாண்பும் அன்னர்
8 கைப்படும் ஆடல் ஊஞ்சல் கந்துகப் பாட லோடு ஒப்பனை செய்தல் ஆதி உயர்விளை யாடல் மற்றும் செப்பருந் திறத்தில் நங்கை எமனெடு செய்யும் வாது வைப்பினில் அழகு சேர வகுத்தனன் செய்யு ளாலே
9 ஆண்களுக் கறிவு சொல்லும் அரிவையர்க் கறிவு சொல்லும் காண்வரு மிளைஞ ருக்கும் கனமுதி யோர்க ளுக்கும் பேணுநல் லB வு சொல்லும் பின்னைநல் லொழுக்கஞ்
(சொல்லும் மாண்வரும் அரச நீதி மறைநெறி சொல்லும் இந்நூல்
O சாவித்ரி சரிதம் வாழ்க தாய்மைபோற் கற்பும் வாழ்க மேவிடும் பண்பு வாழ்க விரியுநற் புகழும் வாழ்க ஆவியின் இனிய எங்கள் அருந்தமிழ் வாழ்க வையம் பாவியல் சிறந்து வாழ்க பாரினிற் புலவோர் வாழ்க.
"யோக பவனம்" க. கி. நடராஜன் 10, பொன்னப்பா வீதி,
வண்ணை நகர்.
z 6-3-79:

Page 8
சிவமயம்
தாவடி பண்டிதர் செ. சிலப்பிரகாசம் அவர்கள் வழங்கிய
அணிந்துரை
LHHLHSSLLSzLCLCCLSMrMLSHCLELMLMLLLLSSSLLLSLLLLLLSLLCLLSSSSLLLLLLS
ஆசிரிய விருத்தம்
உலசோர் போற்றும் உத்தம நாடாம் பாரதத்தின்
ஒளிசேர் தெய்வப் பெருமைக ளெல்லா முயர்ந்துற்றே பலபேர் புகழப் பாருல கெங்கும் பரந்தோங்கும்
பகர ந் நாட்டில் பலகற் புடையார் வாழ்ந்துள்ளார் நலமார் கற்பிற் பஞ்சகன் னியர்க ளாயுற்றே
நல்லார் சீதை அகலிகை தாரை துரோபதையும் அலதாம் மண்டோ தரியெனு நாமந் தாமுடையோர்
அவ்வக் காலத் தவதரித் துள்ளார் அவர்போல.
2
பாரத நாட்டின் மாத் திர கேயந் தனையாண்ட
பார்த்திட னய அசுவ பதிக்கும் அவன்மனையாள்
சீரது மிக்க மாளவி தேவி என்பவட்கும்
சேர்பெருந் தவத்தாற் சிறப்லினின் மிக்க திருமகளாய்ப்
பேரது சாவித் திரியென எவரும் பிரியமுடன்
பேசியே புகழப் பெண் மக வாகப் புவிவந்தாள்
சாரவள் வாழ்ந்து தகுமண மதனுல் தக்கோளும்
சத்திய வனைத் தானே தேடி மணமுடித்தாள்.
S
சத்திய வான்தான் தியுமற் சேனன் முதலாய
தந்தை தாயர் பணிபல புரியு' பண்பாளன்
மெத்த உள் மகிழ்ந்து கானக வாழ்கில வாழ்போது மேலவ விை கலனே பீவர லந்துற்முன்

xi
அத்தகு காலத் தவனுடன் நின்ற அவன்மனையாம்
அற்புத தெய்வச் சத்திகொள் சாவித் திரியென்பாள் உத்தம தெய்வச் சத்தியினுலே உயர்கணவன்
உயிரொடு வாழ உயர்பல வரமும் பெற்றுவந்தாள்.
4.
பூவிற் கீதோர் டொற்கதை யாகப் புகழ்ந்தோங்கப்
புவியோர் யாருஞ் சத்திய வாழ்வில் தலைநின்ருர்
பாவி அரசன் துன்மதி தா:ம் மடிவுற்றன்
பலரும போற்றச் சாலுவ தேயந் தனையென்றும்
மேவித் தம்மைத் தியுமற் சேன னரசாட்சி
மேவற் காய மெய்ப்பணி யாவும் மேற்கொண்டார்
சாவித் திரியின் கற்பினை எண்ணி உலகோர்கள்
சத்திய வானுஞ் சாவித் திரியும் போலானர்.
5
இத்தகை மேன்மை எய்திய சரிதம் இதுதன்னை
இனிக்குந் தமிழாற் கவிபல பாடி இனிதாக்கிச்
சித்தந் தோறுந் தித்தத் தமுதந் தேக்கிடவே
சீர்மும் மூன்று சருக்கம தின்கண் ணினிதிட்டு
எத்தன் மையரும் இனிதே ஒத இன்னுரையும் இனிதே எழுதிச் சா வித்த ரியின் சரிதமிதை
அத்தன் அருளா லவனி த00ழக்க ஈந்திட டான்
அவன்யா ரென்னின் அன்பும் அறிவும் மிகுபுலவோன்.
6
திருவா ரீழச் சீர் நா டதனின் வடபாலில்
திகழ்நல் திருநெல் வேலி தன்னில் வந்துதித்தோன்
பெருகார் வத்தில் தமிழ்நூல் பலவுந் தேர்ந்துள்ளோன் பிறைசேர் சென் னிப் பெருமான் பாதம் பேணுறுவோன்
உருகார் வத்தில் பற்பல நூல்கள் உருவாக்கும்
உயர்நற் பணியன் கனக சபாபதி எனுங் கவிஞன்
மருவார் புலமை மன்னிய நூல்கள் பலகற்ருேர்
மகிழ்நனி துள்ளப் பாவகை பாடும் பருணிதனுர்,

Page 9
xiii
GagosTLIsr
7 சத்தியவான் சாவித் திரிதேவி தம்சரிதம்
இத்தரணி தன்னி லினிதோங்கி-நித்தியமுஞ் சத்தியமுங் கற்புந் தகுபொறையு மன்புமெலாம் எத்தினமும் நல்கும் இனிது.
"திருவருள்கம்”* செ. சிவப்பிரகாசம்
தாவடி, கொக்குவில்.
- 1078.
(குறிப்பு : திரு. செ. சிவப்பிரகாசம் அவர்கள்,
கோயில்அல்லது சிதம்பரத்தின் சிறப்பு, தில்லையந் தாதி, பூஜீ விநாயகர் வெண்பா அந்தாதி, பராசத்தி மாலை, இன்னும் பல திருநெறி தழுவிய நூல்களின்
ஆசிரியராவர்.)

G. பேராசிரியர் கலாநிதி கா, கைலாசநாதக் குருக்கள், M. A , Ph. D யாழ்ப்பாண்ப் பல்கலைக்கழகம், பூஜீ லங்கா, இந்து நாகரிகத்துறைத் தலைவர் அவர்கள் வழங்கிய
அணிந்துரை
திலே சிறந்த இதிகர்சமாகத் திகழும் மகா பாரதத்தில் மணி மணியான உபாக்கியானங்கள் உண்டு. ராமோ பாக்யானம், நளோ பாக்யானம் முதலிய உபாக்கியானங்களுள் சாவித்திரி உபாக்கியானமும் ஒன்று. இது கற்புக் கணிகலமான சாவித்திரியின் வரலாறு கூறுவது,
பாரத நாட்டிலும், அதன் பண்பாடு விளங்கு மிடங்களிலும், சாவித்திரி கதை பிரசித்தி பெற்றது. இக் கதையைப் பொருளாகக் கொண்டு சாவித்திரி சரிதம் என்னும் இக் காவியம் உருவாகியுள்ளது: இதுவே சாவித்திரி சரிதம் முதன் முதலாகக் காவிய வடிவந்தாங்கி வெளிவரும் நூல் வட மொழியிலும் சாவித்திரி சரிதம் கூறும் காவிய மெதுவும் இதுவரை வெளிவந்ததில்லை. இக் காவியத்தை யாத்தவர் கவிஞர் கனகசபாபதி அவர்கள். அரசாங்கத்திற் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இயல்பாகவே கவிதை பாடும் கலை கைவந்தவர். சிறு பிராயத்திலிருந்தே இக் கலை கவிஞருடன் வளர்ந்து வரலாயிற்று. உத் தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும் கலை வளர்ச்சி இவர் கவனம் முழுவதையும் ஈர்த்ததல்ை இக் காவியத்தை நலன்கள் கொழிக்கும் வண்ணம் உருவாக்கும் குழ்நிலை பிறந்தது.
அணி நூல்கள் கூறும் காவியப் பண்புகள் சிறப்புற விளங்கும் வண்ணம் கவிஞர் சாவித்திரி சரிதத்தை யாத்துள்ளார். காவிய் மர பைத் தழுவிக் காவியம் கடவுள் வணக்கத்துடன் தொடங்குகின்றது? மிகவும் விரியாத அமைப்பினவாகிய சருக்கங்களால் காவியம் அமை தல் வேண்டும் என்ற முறைக்கேற்ப, உற்பத்திச் சருக்கம், திருக்கலி யாணச் சருக்கம், மனையறச் சருக்கம், மறலிவரு சருக்கம், மீட்சி ச் சருக்கம், துறவுச் சருக்கம், முடி சூட்டுச் சருக்கமென பல சருக்கங்க ளைக் காவியம் கொண்டு விளங்குகின்றது. இக் காவியம் அணிகள் விரவப் பெற்றது: இரச பாவங்கள் மலிந்தது; காதுக்கினிய பல் வேறு விருத்தப் பாக்களாலானது; வேறுபடும் வரலாறுகளைச் சுவை படக் கூறுவது; உலக ரஞ்சகமாகத் திகழ்வது, இவ்வகைப் பண்புகள் ஒருங்கு கைவரப்பெற்ற காவியம் ஊழிக் காலம்வரை நிலவும் எனக் காவியப் பண்புகள் சுறும் அலங்கார சாத்திரங்கள் கூறுகின்றன. காவி

Page 10
xiv
யம் கொண்டு விளங்கும் கதைப் புணர்ப்பு, இதிகாசங்களை யடிப்ப டையாகக் கொள்ளுதல் சாலச் சிறந்ததென அணி நூலாசிரியர் கூறு வர். இக் காவியம் மகா பாரதத்தில் கூறபடும் சம்பவத்தை அடிப் படையாகக் கொண்டு காவியப் பண்பை வெளிப்படுத்துவது குறிப் பாக நோக்கற்பாலது.
காவி: மரபைத் தழுவி சமஸ்கிருதத்தில் பல காவியங்கள் உருவாகி யுள்ளன தீந்தமிழிலும் இதுவரை உருவாகிய காவியங்கள் பலப்பல. இவற்றுள் தலை சிறந்து விளங்குவது கம்பராமாயணம், ஆதி காவிய மெனப்படும் வால்மீகி ராமாயணத்தையே கம்பாாபாயண்ம் விஞ்சி விளங்குவதென்பது மிகையாகாது. சாவித்திரி சரிதம் பாடிய கவிஞ ரும் கம்பர் வழி நின்று காவியம் இயற்றிய சிறப்பின ஆங்காங்கு காண நேரிடுகின்றது இக் காவியம் தமிழ் கூறும் நல்லுலகில் உரு வாவது; தமிழ் மக்கள் சுவைத்தின்புறுவதற்குரி து இந்நிலையில், தமிழ்ப் பண்டாடும், பீடும், பெருமையும் காவியத்தில் சுவறினுல் மட் டுமே இது தமிழ் நாட்டிற்குரிய காவிய மாகச் சிறந்து விளங்கும் என்று சம்பர் நினைத்ததைக் கருத்திற் கொண்டு அவ்வழி நின்று எம் கவிஞரும் முதனூலாகிய சாவித்திரி உபாக்கி பானத்தையே முற் றும் பின்பற்ா?து, எம் நாட்டுத் தேவைகட் கேற்ப ஆங்காங்கு உரிய வேறுபாடுகளைப் புகுத்தி தமிழ் மக்கள் சுவைக்கக் கூடிய காவியமாக ஆக்கியுள்ளார். கதையதன் பொருளைப் பெருமளவிற் பேணிக்காத் துள்ளார். காவிய மரபைப் போற்றி வளர்த்துள்ளார்,
கதை மூலம் கருத்துக்களை வழங்கும் மரபு பாரதத்துக்கே உரித்தா னது. கசப்பானவையாகவோ, கிாகித்தற்கரியனவாகவோ இருக்கும் கருத்துக்களைக் கதைகளுட் பொதிந்து வழங்கிற்ை சிரு நம் மற்?ரும் கதையைச் சுவைப்பதோடமையாது கதைகளுட் புகுத்தப்பட்ட கருத் துக்களையும் தெரிந்து கொள்ளுவர். இவ் வுத்தி பி%னக் கையாண்ட கவி ஞருt , சமயம், தத்துவம் கல்வி அறிவுாை அாசியல் மு த லா ன பல்வேறு பொருள்களைச் சிறுவர்க்கும், பெரியோர்க்கும் ஏற்றவாறு தனித்தனியே பாடல்கள் கூறும் பொருளாக அமைத்திருப்பது டெரி து பாராட்டுக்குரியது, இக் ககத் துக்கள் வாழ்க்கையைப் பயனுறச் செய்ய இன்றியமையாதவை. அறம், பொரு ) . இன்பம் வீடு ஆகிய தான்கையும் பயக்க வல்லவை. காவியம் இந்நால்வகைப் பயனுடை யதாய் அமைதல் வேண்டும் என்ற காவியப் பண்பை காவியத்தில் கவிஞர் மிளிரச் செய்யும் அழகே தனியழகு.
கவிஞர் கனகசபாபதி அவர்களின் கவிதைத் திறமை மேன்மே லும் ஓங்கி வளர்வதாக, சாவி திரி சரிதம் 7 என்னும் காவியமும் தமிழ் கூறும் நல்லுலகில் என்றும் விளங்குவதாக,
30 - 10-79 கா. கைலாசநா தக்குருக்கள்

Q
பண்டிதர் சி வேலுப்பிள்ளே அவர்கள் அளித்த அணிந்துரை
SLLSSSS SrTSAAYLLLLSAAALLSLLLLSLLLS qTqALSL ALALAeAALEESYLASAS
வெள்ளைக் கவிகள் விரைந்து துள்ளிப்பாயும் இந்நாளில் யாப்பு மரபு வழுவாது யாத்த சாவித்திரி சரிதம் என்னும் நூல் தமிழ் கூறு நல்லுலகிற்கு ஒரு வரப்பிரசாதமாகும் காலன் கைப்பட்ட காதலன் சத்தியவானின் உயிரை மீட்ட கற்பின் செல்வி சாவித்திரியின் சரிதை கவிதை வடிவில் இல்லையே என்ற குறை:ை நிறைவாக்கிவிட்டார் கவிஞர் கனகச:ா: ; ஐாகஸ் . இந்நூலைக் கற்போர் யாவரும் கவி ஞரின் நுண்மாண் நுழைபுலங்கண்டு வியப்புறுவர் என்பது உண்மை . வெறும் புகழ்ச்சியில்லை.
விநாயகர் முதலாகக் கொண்ட கடவுளர் வணக்கத்துடன் கவிதை ஆரம்பிக்கிறது. செந்தமிழ் கற்பித்த அசான் மாவை வெண்ணெய்க் கண்ணன் பாரதியாருக்கும் வணக்கம் செலுத்துகின்றர். என்னே இவரது குருபக்தி. பாடல்கள் எளிமையும் இனிமையும், பொருளா ழமும், கற்பனைவளமும், சந்த அமைவும் அமைந்திருப்பது பாராட் டுதற்குரியது. உவமை, உருவகம், சிலேடை சொற்பின் வருநிலை, பொருட்பின் வருநிலை, உய்ர்வு நவிற்சி முதலிய அணிகள் நூலுக்கு அலங்காரஞ் செய்கின்றன. பதி, பசு, பாச இலக்கணம் பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவங்கள் முத்தி நெறி முதலாய சித்தாந்தக் கருத்துக்கள் சிந்திக்க வைக்கக் கூடியனவாய் அமைந்துள் ளன. விளையாட்டயர்தல் என்னும் பகுதியில் பெண்பாற் பிள்ளைத் தமி ழில் பொதிந்துள்ள பருவங்கள் கண்முன் தோன்றுபவை போலக் காட்சி யளிக்கின்றன. சுயம்வரப் பகுதியைச் சுவைக்குத் தோறும் நளவெண் பாவின் சுயம்வர காண்டம் நம் நினைவுக்கு வருகிறது. சாவித்திரி சத்தியவான் மேறகொண்ட தெய்வீகக் காதலு: , பிரிவால் ஏற்பட்விரகதாடமும் படிப்போர் பணத்தைப் பரவசப்படுத்தும் பாங்குடை யன. சத்தியவான் வனத்தின் வனப்பை யெல்லாம் சாவித்திரிக்குக் கவினுறக் காட்டும் காட்சி வெள்ளித் திரையில் கானும் காட்சியாக எம் மனத்திரையில் தவழ்ந்து செல்கிறது.
துறவுச் சருக்கத்தில் இளமை, யாக்கை, செல்வம் நிலையாமை குறித்துப் பாடிய பாடல்கள் இருக்குறள், நாலடி பார் முதலிய நீதி நூல்களின் உண்மைப் பொருள்கள் உள்ளிடாக அமைந்துள்ளன நார தர் அரியாசனமமர்ந்த சத்திவானுக்குக் கூறும் அரசியல் அறிவுரை

Page 11
Χγi
கள் சாணக்கியர் அரசியல் தத்துவங்களே அடிப்படையாகக் கொண் டுள்ளன. சத்தியவான் உலாப் போனபோது எழுவகைப் பருவமாதர் அவன்மேற்கொண்ட காதலும், மகளிர் சாவித்திரியை நலம் பாராட் டியதும் உலாப் பிரபந்தத்தின் உள்ளீடுகளைக் கொண்டுள்ளன. சத்திய வான் மணிமுடி சூடி மாநிலத்தைச் செங்கோலோச்சினன் என மங் கீல நிறைவோடு நூல் முற்றுப் பெறுவது, இன்னல் பல உற்ருலும் நல்லோர்கள் இறுதியில் இன்பமடைவர் என்னும் உண்மையை உல சிற் கெடுத்தோதுகிறது. கவிஞர் கனகசபாபதி அவர்களின் புகழ் உல குள்ளளவும் நின்று நிலவுவதாக,
"நந்தா விளக்கு" சி. வேலுப்பிள்ளே
தேவாலய வீதி, சங்கானை,
1-7-1979.

. சிவமயம்
கதைச் சுருக்கம்
பரத கண்டத்திலே மாத்திர தேசமென்றுெரு நாடிருந்தது. அது நீர்வள நிலவளங்களாற் சிறப்புற்று குறிஞ்சி, முல்லை, மருதமென் னும் நிலப் பாகுபாடுகளைக் கொண்டு திகழ்ந்தது,
அதனை அசுவபதியென்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் கல்வி கேள்விகளிற் சிறந்தவனுகவும் ஒழுக்கமுடையவனுகவும் தன்னு யிர்போல் மன்னுயிர்களையும் போற்றுபவனுகவும் விளங்கினன். அவன் நீதி வழுவாது செங்கோலோச்சிக் குடிகளைப் பாதுகாத்து வந்தான். அவனுட்சியில் மாதம் மும்மாரி பெய்தது. பூமியும் வளங் குன்றது பயன் தந்தது, மக்கள் அற நெறி நின்று இன்பமாய் வாழ்ந்தார்கள்.
அசுவபதிக்கு மாளவிதேவியென்பாள் மனைவியாவாள். அவள் கற்பு நெறி தவருதவள். கணவனைத் தெய்வமெனப் போற்றுபவள் எல் லோரிடமும் அன்பும் பரிவுமுடையவள். எல்லாச் செல்வங்களும் இருந் தும் இவர்களுக்கு மக்கட் செல்வம் இல்லாக் குறை மனத்தை வருத் தியது. தான தருமங்கள் பல செய்தார்கள். அப்போதும் புத்திரப் பேறு கிடைக்கவில்லை.
அரசன் மெய்யறிவு பெற்ற முனிவர்களை அண்டித் தனக்குப் புத்திரப்பேறு கிடைக்கும் மார்க்கம் யாதென்று உசாவினன். அவர் கள் 'அரசே, நீர் சாவித்திரி தேவியை வேண்டித் தவஞ் செய்தால் உமது விருப்பம் நிறைவேறும்' என்று சொல்லி அதற்குரிய விரத முறையையும் மந்திரங்களையும் உபதேசித்தார்கள். அவ்வுபதேசப்படியே புலன்களை யடக்கிப் பதினெட்டு ஆட்டைக் காலம் மன்னன் கடுந் தவஞ் செய்தான். அவன் நோன்பிற் கிரங்கிச் சாவித்திரி தேவி, பிரசன்னமானுள். "பத்தனே, உன் தவத்தினல் மனம் மகிழ்ந் தோம். நீ வேண்டும் வரம் யாது?" என்று வினவினள். "தாயே எனக் குப் புத்திரப்பேறு தந்தருளுக' என்று அவன் வேண்டிஞன். 'அன்' பனே!. இப்போது உனக்கு ஆண் மகவு கிடைக்காது. எங்கள் பரம பதியின் அருளால் உனக்கு முதலில் ஒரு சிறந்த குண்முள்ள பெண் மிகவு கிடைக்கும். அக் குழந்தையால் நீ மேன்மை படைவாய்" என்று சொல்லித் தேவி மறைந்தாள்.

Page 12
xviii
அசுவபதியும் மனைவியும் மகிழ்ச்சியுடன் இன்புற்றிருந்த நாளில் மாளவிதேவி திருவயிறு வாய்த்து ஒர் அழகிய பெண் மகவை ஈன் ருள். அக் குழந்தைக்குச் சாவித்திரியென்று திருநாமமிட்டார்கள்: குழந்தை நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வந்தது. ஐந்தாட்டைப் பருவமெய்தியதும் மன்னன் பூரண முனிவ ரிடத்தில் சாவித்திரியை ஒப்படைத்து அவளுக்குக் கல்வி பயிற் று வித்தான்.
சர்வித்திரி அறிவிலும் நல்லொழுக்கத்திலும் அழகிலும் சிறந்து விளங்கினுள். அவள் மங்கைப் பருவமடைந்ததைக் கண்டு பெற்றேர் பூரிப்பெய்தினர். செந்தாமரைபோல் முகமும் குவளை நிறக் கண்க ளும் வஞ்சிக்கொடிபோல் இடையுங்கொண்டு தங்க விக்கிரகம்போற் காட்சியளித்தாள். அவளின் தெய்வீக அழகையும் முகக் காந்தியை யுங் கண்டவர்கள், இவள் வணக்கத்திற்குரிய ஒரு தெய்வப் பெண். இலக்குமியின் அவதாரம் என்றெண்ணினர்கள் இதனல் ஓர் அரச குமாரனும் அவளை மணக்க முன்வரவில்லை. சாவித்திரியும் தன்னைப் போல் கல்வியறிவும் நல்லொழுக்கமுமுடைய ஓர் ஆடவனயே மணஞ் செய்ய விரும்பினுள் :
மகளுக்குத் தகுந்த வரன் கிடைக்கவில்லைய்ென்று பெற்ருே ர் கவன்றர்கள். ஒரு பூரணைத் தினத்தன்று சாவித்திரி பூசையை முடித்து விட்டு விபூதி புட்பம் முதலிய பிரசாதங்களை யெடுத்துக்கொண்டு சென்று தாய் தந்தையரை வணங்கினள். அவர்கள் அவளை ஆசீர்வதித்தபின், தந்தை சாவித்திரியை நோக்கி "மகளே! நீ பருவ மடைந்த பெண்ணுகியும், உன்னைத் திருமணஞ் செய்ய ஏற்ற ஓர் ஆடவனும் முன்வரவில்லை. தனது மகளுக்குத் திருமணஞ் செய்து வைக்காத தந்தை இகழப்படுவான். ஆதலால் நீயே உனக்கு ஏற்ற மண வாளனைத் தெரிவு செய். உன் விருப்பப்படி திருமணஞ் செய்து வைக் கிறேன்" என்று சொல்லி. அவளைப் பொற்றேரில் ஏற்றி, மந்திரி, காவலர், தோழியராகிய பரிவாரங்களுடன் அனுப்பினன்.
சர்வித்திரி தேச சஞ்சாரஞ் செய்துகொண்டு சென்று, கடைசியில் முனிவர்கள் தவஞ் செய்யும் வனத்துட் சென்ருள். அங்கோரிடத்தில் சில இருடி கும்ாரர்கள் சென்ருர்கள். அவர்களுள் சிறந்த அழகும் வசீகரத் தோற்றமுமுடைய ஒர் இளைஞனைக் கண்டு, அவன்பால் மனதைப் பறிகொடுத்தாள். பின் தன் குருவாகிய பூரண முனிவ ரிடஞ் சென்று வணங்கி, அவரிடம் அந்த வாலிபனைப் பற்றிய விப ரங்களை யறிந்தாள். 'மகளே! அவ்விளைஞன் பெயர் சத்தியவான். அவன் தந்தை தியூமற் சேனர், சாலுவ நாட்டை ஆண்டு வந்தார். அவர் வயது முதிர்ந்து கண்பார்வையிழந்து இருந்த காலை, அண்டை

xix
நாட்டு வேந்தன் துன்மதியென்பவன், சாலுவ நாட்டைக் கைப்பற்றி ஞன். தியூமற்சேனரும், மனைவியும் , தமது மகன் சத்தியவானுடன் காட்டிற்கு வந்து துறவு வாழ்வை மேற்கொண்டிருக்கிருர்கள். சத்திய வான் சிறந்த பராக்கிரமசாலி; சத்திய வந்தன்; கல்வியிற் கடல்: ஒழுக்கத்திற் சிறந்தவன்,' என்று முனிவர் சொன்னர். −
அவள் அரண்மனைக்குத் திரும்பி வந்த பொழுது அங்கு அசுவ பதியும், நாரதமுனிவரும் இருகேக் கண்டு இருவரையும் வணங்கி எழுந்தாள். நாரத முனிவர், “மன்னவா! சாவித்திரி எங்கு சென்று வருகிருள்? அவளுக்கு வயசாகி ட்டதே. ஏன் இன்னும் திருமணஞ் செய்து வைக்காமலிருக்கிருய்?’ என்று கேட்டார். “முனியுங்கவ! அதற்காகவே அவள் சென்று வந்திருக்கிருள். அவள் விருப்பத்தைக் கேட்டறிவோம்" என்று மன்னன் மகளை நோக்கினன்,
சாவித்திரி, தான் வனத்தில் சத்தியவானைக் கண்டதும், அவனே தனக்கேற்ற வரனெனத் தான் தெரிந்ததும், அவனைப் பற்றிய வர லாற்றினையும் விபரமாகச் சொன்னுள்.
அது கேட்ட நாரதர் துணுக்குற்று ‘குழந்தாய், பெரிய த வறு செய்து விட்டாய். சத்தியவான் சிறந்த குணங்களுள்ளவன். சத்தியந் தவருதவன். அவன் பெற்றேரும் அப்படியே சத்தியவந்தர்கள். அவன் அழகிற் சூரியன், ஆண்மையில் இந்திரன், பொறுமையிற் பூமாதேவி அறிவில் குருபகவான், அரச குமாரன். ஆனல், அவனுடைய ஆயுள் இன்னும் ஒருவருடமேயுள்ளது அதன்பின் இறந்து விடுவான். அதனை யெண்ணியே துயரப்படுகிறேன்" என்ருர்.
இவ்வாறு சொல்லக் கேட்ட ம ன் ன ன், அதிர்ச்சியடைந்து, "மகளே சத்தியவானுக்கு எல்லாச் சிறப்புமிருந்தும், அற்ப ஆயுளு டையவனுயிருக்கின்றன். ஆகையால் அவனை மறந்து வேருெரு வர னைத் தேடு" என்ருன். 'எந்தையே, மரணம் ஒரு முறைதான் வரும். ஒரு கன்னியை ஒரு முறைதான் கன்னிகா தானஞ் செய்யலாம். வரமும் ஒரு முறை கொடுத் த து கொடுத்ததுதான். நல்ல வனே கெட்டவனே, நான் அவரைக் கணவனுக மனத்தில் வரித்து விட்டேன். கற்புள்ள பெண்கள் வேருெருவரையும் நினைப்பார்களோ? நான் மணந்தால் சத்தியவானையே மணப்பேன். இன்றேல் துறவு பூண்டு கன்னியாகவே காலங் கழிப்பேன்" என்று சா வித் தி ரி சொன்னள்.
அவளின் மன உறுதியையும், கற்பின் திண்மையையுங் கண்டு மெச்சிய நாரதர், "குழந்தாய், நீ நீடூழி வாழி. எல்லாம் நீ நினேத்த

Page 13
XX
படி இனிது நிறைவேறும்" என்று வாழ்த்திவிட்டு அரசனைப் பார்த்து, 'விதியின் படியே எல்லாம் நடக்கும். நம்மால் மீற முடியுமோ? சாவித்திரி சத்தியவானேயே மணக்கட்டும். சாவித்திரி தேவியிடத்தில் சரணடைந்து பத்தியோடு நோற்ருல் அன்னையின் அருளால் எல்லாம் நன்மையாக முடியும்" என்று சொல்லிப் போஞர்.
அசுவபதி தன் பரிவாரங்களுடன் சாவித்திரியைக் கூட்டிக்கொண்டு தியூமற்சேனன் தங்கியிருக்கும் வனத்திற்குச் சென்ருன். தியூமற்சேன னல் உபசரிக்கப்பெற்றபின், தன் மகளைச் சத்தியவானுக்கு மணஞ் செய்து வைக்கும்படி வேண்டினன். தியூமற் சேனன், “நான் நாடும் அரசுமிழந்து காட்டில் வசிக்கிறேன். உமது அரசிளங்குமாரி எப்படி இந்த எளிய வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்?" என்று கூற, அசுவபதி, "பெரியோய், நானும் எனது மகளும் இன்ப துன்பங்க ளைப் பற்றியறிவோம். எங்களுக்கு நிலையற்ற செல்வமும் போக வாழ் வும் பெரிதல்ல. தங்கள் மகன் சத்தியவானுக்கு என் மகளைக் கொடுப் பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவளை மருமகளாக ஏற்றருள்க" என்று வேண்டினன். தியூமற்சேனனும் உடன்படவே திரு மணிம்ே இனிது நிறைவேறியது. சாவித்திரி அரச மகளிர்க்குரிய ஆடை ஆப் ரணங்களைக் களைந்து, ஆச்சிரமத்துக்குரிய எளிய உடைகளை அணிந்து, கணவனுடன் இணைபிரியாது வாழ்ந்து வந்தாள். கணவனே தெய்வமெ னப் போற்றி அவன் மனங் க்ோணுமல், அவன் ஆணையைக் கடவாமல், அவனுக்குத் தொண்டு செய்து வந்தாள். மாமன் மாமிக்கு எல்லாப் பணிவிடைகளுஞ் செய்து அவர்களின் அன்புக்குப் பாத்திரமானுள்:
இன்பமாக மாதங்கள் கழிந்தன. நாரதர் கூறியபடி சத்திய்வா னின் ஆயுள் முடிவடைய இன்னும் நான்கு நாள்கள் இருந்தன் சாவித்திரி திரிராத்திரி விரதம் அனுட்டித்துத் தேவியைப் பூசித்தாள் நான்காம் நாட் காலை சத்தியவான் காட்டிற்கு வழக்கம் போல் விறகு வெட்டப் புறப்பட, சாவித்திரி தானும் கணவனுடன் அன்று செல்ல விரும்புவதாகச் சொன்னுள். "நீ விரத்மிருந்து இளைத்திருச்சிழுய் காட்டில் நடத்தல்வருத்தத்தைத் தரும்’ என்று அவன் தடுத்தும், அவள் அவனைப் பிரிந்திருத்தலே பெரிய துன்பமென்று சொல்லி, மாமன் மாமியரின் அனுமதி பெற்று, அவனுடன் சென்ருள். சத்திய வான், வனத்தின் வனப்புக்களையெல்லாங் காட்ட, அவளும்:கண்டு களித்தாலும், மனத்துள் அன்று அவன் உயிருக்கு என்ன நேருமோ வென்று பயந்தவளாய்ச் சென்ருள் w
காட்டில் பழங்சளும் பூக்களும் பறித்தபின், சத்தியவர்ன் விறகு லேட்ட ஒரு மரத்திலேற அடிசறுக்கிக் கீழே விழுந்து சேர்ந்தான்.

ΧΧΙ
அவனைத் தன் மடி மீது சாவித்திரி வைத்து. நாரத முனிவர் சொன்” னபடி இன்று இவன் ஆயுள் முடியுமோ என்று அஞ்சி இறைவனை வேண்டிக் கொண்டாள்.
மாலைப் பொழுதாகிச் சூரியனும் அத்தமிக்க இருள் சூழ்ந்தது. சாவித்திரி தனியே கணவனைப் பார்த்துப் புலம்பிக்கொண்டிருக்க, அவள் முன் உலகம் நடுங்கும்படியாக மலைபோன்ற நீல நிறமுடைய ஒர் உருவம் தோன்றிற்று. ஒரு கையிற் சூலமும் மறு கையிற் பாசக் கயி றுங் கொண்டு எருமை மீதேறி வருவது காலனென அறிந்தாள்.
உடனே கணவனை நிலத்திற் கிடத்திவிட்டு எழுந்து காலனடிக ளில் வீழ்ந்து வணங்கி, " தருமதேவனே! நீ நீதி தவழுதவன். என் கணவன் சத்தியவந்தன். தீய நெறியிற் செல்லாதவன். அவனுயிரைக் கொள்ளுதல் முறையோ?" எனக் கேட்டாள்.
காலன், 'மண்ணிற் பிறந்தவரெல்லோரும் இறப்பார்கள், அவ. ரவர் காலமறிந்து எனது தூதர் சென்று உயிரைக் கொள்வர். டன் கணவன் நற்குணங்களுள்ளவனதலால் நானே இட்டுச் செல்ல வந் தேன்" என்றன்.
சாவித்திரி, 'ஐயனே கற்புடைய மங்கையர் கணவன் இறந்த பின் உயிர் தரியார். ஆதலால் என்னுயிரையுங் கூட எடுத்துக் செல், லுக" என்ருள்.
அதற்குக் கார்லன், "அது என்னுல் முடியாதம்மா. உனக்கு வாழ் நாள் இன்னும் இருக்கிறது. உன் பதி பத்தியை மெச்சினேன். சத்திய வான் உயிரைத் தவிர, வேறு ஒரு வரங்கேள். தருகிறேன்?? என்ருன்;
சாவித்திரி, "தரும பூபதி என் மாமனர் தாம் இழந்த கண், பார்வையைப் பெற்றுத் தமது நாட்டை மீண்டும் ஆளவேண்டும்? வி என்று கேட்க, 'அப்படியே தந்தேன். நீ இக்கொடிய காட்  ைட விட்டுச் செல்' என்று காலன் சொன்னன்.
சாவித்திரி, "தேவரீர் முன்நிற்க எனக்கு எத்துயரும் இல்ஜ என் கணவனை விட்டு யான் எங்கே செல்லுவேன்? அவர் போகும் இடமே நானும் போவேன்" என்ருள்.
காலன், ‘கற்பிற் சிறந்தவளே! நீ சென்று உன் கணவனுக்குச். செய்ய வேண்டிய தீக்கடன் நீர்க்கடன்களைச் செய். அவனுயிரையல் லால் வேறு ஒரு வரங்கேள். தருகிறேன்" என்ருன்
சாவித்திரி, "எனது தந்தை ஆண் மகவின்றிக் கவலையுற்றிருக் திருர், அவருக்கு நூறு புத்திரர்களை அருளுக" என்று வேண்டினள்:

Page 14
xxii
காலன், "அப்படியேயாகட்டும். நீ இந்த இருளில் நெடுந் தொலைவு வந்து நொந்தனை. திரும்பிச் செல்" என்ருன்.
சாவித்திரி, 'என் கணவர் எங்கிருக்கின்ருரோ. அங்கேயிருப்பது தான் என் கடமை. தரும ராசணுகிய உம்முன் நிற்க எனக்கு எவ் விதத் துன்பமும் வராது' என்ருள்.
இயமன், “பெண்ணே! நீ பேசும் வார்த்தைகள் செவிக்கின்ப மூட்டுகின்றன. உன் கற்பின் மாண்பு வெல்க சத்தியவானின் உயி ாைத் தவிர்ந்து வேறு ஒரு வரங்கேள். தருகிறேன்" என்ருன்.
சாவித்திரி, ‘அருட்பெருங் கடலே! நீரே படைப்பவர். நீரே காப்பவர், நீரே அழிப்பவர். எனக்கும் என் கணவனுக்கும் பண்புள்ள பல மைந்தர் உண்டாக வரந்தருக" என்ருள், காலனும், 'அவ் வரந்தந்தேன். இனி நீ செல்லலாம்" என்று சொல்லி அப்பால் ஏக, சாவித்திரி பின்னும் தொடர்ந்தாள். 'மங்காய்! மீண்டும் ஏன் என் னைத் தொடர்கிருய்?" என்று காலன் கேட்க,
*"எந்தையே! என் கணவன் இன்றி எப்படி எனக்கு மைந்தர் கிடைப்பார்? தேவர்கள் தந்த வாக்குப் பொய்க்காது. எனவே, எனக்கு மாங்கலியப் பிச்சை தந்தருள்க. நான் உம் அடைக்கலம்" என்று அவள் இரந்தாள். காலனும், கொடுத்த வரத்தை மறுக் க முடியாது. இவளோ கற்பிற் சிறந்தவள். அம்பிகையின் அருளை ப் பெற்றவள். இன்று என்னை வென்று விட்டாள். வேதன் விதித் த தெப்படியோ . இவரிருவரும் இன்னுஞ் சிலகால மிருப்பதுதான் நியதி போலும் என்று எண்ணி, "கற்பிற் சிறந்தவளே! நீ நோற்ற விர தத்தால் சத்தி மகிழ்ந்து கிருபை செய்திருக்கிருள். நீயும் இவனும் பல்லாண்டு காலம் நல்லற மாற்றிப் பாலரையும் பெற்றுப் பின் பரம பதமடைவீர்கள்" என்று சொல்லி வாழ்த்திவிட்டுச் சென்றன்.
அப்பொழுது சத்தியவான் கண்களைத் திறந்து சாவித்திரியைப் பார்த்துத் தான் ஒரு கனவு கண்டதாகவும், தன்னைப் பெரிய உரு வுடைய ஒருவன் பிடித்துத் தேவருலகுக்குக் கொண்டு சென்றதாகவும், அங்கு ஒரு பெண் வந்து தன்னை மீட்டு, மண்ணுலகிற்குக் கொண்டு வந்ததாகவும் சொன்னன். அதுகேட்ட சாவித்திரி, நடந்த தெல்லா வற்றையும் விபரித்தாள். சத்தியவான் அவளை அனைத்து, "எங்குலம் தழைக்க வந்த கற்புடைய மாதே! உன்னை மனைவியாகப் பெற்ற எனக்கு என்ன குறை?" என்று புகழ்ந்தான்.
பொழுது புலர்ந்ததும், இருவரும் நீராடிக் காலைக் கடன்களே முடித்துத், தாய் தந்தையர் வைகும் ஆச்சிரமத்திற்குப் போஞர்கள்.

xiii
அங்கே தியூமற்சேனர் தன் கண்பார்வையைப் பெற்று இருந்தார்: மகனையும் மருமகளையும் வரவேற்றுக் காட்டில் நிகழ்ந்தவற்றையெல் லாங் கேட்டறிந்தார்"
இப்படிச் சில நாள் இருக்க, சாலுவ தேசத்தைச் சூழ்ச்சியால் அபகரித்த துன்மதி மன்னன், அவன் மந்திரி ஒருவனுலேயே கொலை செய்யப்பட்டான். நாட்டு மக்கள் தியூமற்சேனனே மீண்டும் நாட்டை யாள வேண்டு மென்று விரும்பினர். பழைய அமைச்சர் காட்டிற்கு வந்து தியூமற் சேனனையழைத்துச் செல்ல எல்லோரும் அவரை அரச ஞக்கினர்கள். தியூமற் சேனன் நாட்டை இனிது ஆட்சிசெய்து சில காலஞ் செல்ல, யாக்கை நிலையாமை, செ ல் வம் நிலையாமையை நினைத்துத் தவ ஞ் செய்ய எண்ணி, சத்தியவானுக்குப் பட்டஞ் சூட்டித் துறவை மேற்கொண்டான், அசுவபதி நுாறு புதல்வர்கசைப் பெற்று மகிழ்ந்திருந்தான்.
சத்தியவான் சாலுவ நர்ட்டை நெடுங்காலம் சிறப்புடன் ஆட்சி செய்தான். பல புத்திரர்களைப் பெற்றுச் சாவித்திரியுடன் மகிழ்ந் திருந்தான். அந்நாட்டு ஆடவர் சத்தியவானைப் டோல் சத்தியந் தவ ருதவர்களாகவும், மகளிர் சாவித்திரியைப்போல் கற்புடையவர்களாக வும் திகழ்ந்தனர். எல்லோரும் இன்புற்றிருந்தார்கள்

Page 15
ଜୋ! J ாருளடக்கம்
பக்கம் செய்யுள்
பதிப்புரை - iii vigi*
முன்னுரை ܡܚ V áxWow» சிறப்புப் பாயிரம் - vii ~ அணிந்துரை Angs χνι Vex சாவித்திரி சரிதம் கதைச் சுருக்கம் .س XVii பொருளடக்கம் Shima XXίν xwesed
பொருளகராதி esse XXV an பிழை திருத்தம் xxvii -
1. பாயிரச் சருக்கம் w-ww.u. w 14. உற்பத்திச் சருக்கம் ^ess 8 183 ميسيسبي.
(i) ஆற்றுச் சிறப்பு (ii) நாட்டுச் சிறப்பு (iii) நகரச் சிறப்பு (iv) அரசியற் சிறப்பு (w) சாவித்திரி பிறத்தல் (wi) விளையாட்டயர்தல் (wi) கல்வி பயிறல்
சுய்ம்வரச் சருக்கம் 93 127 திருக்கலியாணச் சருக்கம் s 57 80 மனையறச் சருக்கம் 20 سے awan 37 மறலிவரு சருக்கிம் ow a 221 faalia 76 ; மீட்சிச் சருக்கம் awqa-. 260 40 துறவுச் சருக்கம் 影榜领 283 43 முடிசூட்டுச் சருக்கம் apons 306 Sissim» 10
ஆகச் செய்யுள் 70

பொருளகராதி
YzSLkLSSSBLzYSTAeLeMLALALLS LLLLLLLrLkSEkMLSSzYJLSJYSLLLLSLLSLLLLEEEEG LuTeLTLSHLHLSEES
பாட்டு எண்
அரசியற் சிறப்பு 3 || || سی 98 " لم يص. அரசியல் அறிவுரை XNRWA 623 647 سے ஆற்றுச் சிறப்பு 3:sek t5-28س இளமை நிலையாமை - 561-563 இயமன் சாவித்திரி சம்வாதம் sex. : 453-434 S26)ff" く «se 300 -307; 354-357; 220-22; 503-504: 535-549; 65-659
ஊஞ்சல் - H54392 156سے ஒப்ப்ண் செய்தல் -- 297 299-س: 353 س-349
கல்வி சிருருக்கு இது 161-195 கடவுளுண்மை - 164- 173 கலவி Máis 371-383 60sligar 672حے 660 , ۔۔۔ காம வருத்தம், பிரிவு angs 270-279
* 。、リ。 36-324 குறிஞ்சி, முல்லை, மருதம் வருணனை Máis 30-74; } • 244-247-; 430 - 436 சந்திரோத்யம் -- 313315 م 314 ه சமயங்கள் 180 183-سس۔ சத்தியவான் சிறப்பு XV 25267--9ژ; 286-289
சத்தியவான் அழகு ~ 352 -353g 608-610; 662, 665, 671
சாவித்திரியின் அழகு
225--س-222 சிவன் தோத்திரம் சிறுபிள்ளைப் பருவம் செல்வம் நிலைதுாமை
252
212 حس-1 20 قة ؟ سف 349-351: 611-62; 673-680 一 **684一693
Kyussex 41-50
assee 567-S72
3:40.سس-38

Page 16
xxvi
சூரியோதயம்
சூரிய அத்தமனம் தேவி தோத்திரம்
நகரை அலங்கரித்தல் நகரச் சிறப்பு நலமுரைத்தல் நாட்டுச் சிறப்பு நீராடல் பலநாட்டு மன்னரைப்பற்றி பந்தாடல் பெண்களுக்கறிவுரை மகளிர் விளையாட்டு மலர் கொய்தல் மனையறம் மக்கள் களியாட்டு
முப்பொருள் விளக்கம் (பசு, பதி, பாசம்)
சிறுவருக்கு பெரியோருக்கு ஊழ்
யாக்கை நிலையாமை
விவாகக் கிரியை
ജ:'ജം:ജi
325, 345, 50 سے 499
450 :309 ,308 سس--
குரண்
123-128; {42 -س-418
603-605 ' ',
72-97.
385-386
, 7 مسس سے 29 399 م-395 ـ 66 226-242
5 : 52 187-195 )51-55 389-391 405-44
47-48; 606-607
79 1-ܡ̣ܚ174 594 سح574 : 533 سن-5309
566-سسس-564
369-س358

பக்கம்
4
I6
45
69
8O
83
90
99 08
08
夏5星
84
H 93
2O3
27
224
23
297
254
259
262
፵77
29
293
32
23
岛名罗
32
39
30
3
32
27
22
3
33
16
23
33
ዷ7
23
7
18
4.
7
பிழை திருத்தம்
பிழை
குங்குமப் பூவம்
LG)660 Stilfrao நில வருண்ணை நிறைந்த ஈற்றிசை ஈற்றிசை go smrti
ல்ல 4ல்வார்த்தை
oOTGvinTuh சமுத்திரம்தில் மொய்த்பொடு ஈற்றிசை கேர்பம்
令
தள
T68) if
gy 6nrif குழலை
EST G00_- வேதங்களையு
Gatail
ଜtଉଁr if ஆ யில்
ாரும் நீராஞ்ச ம் போரருள் அணவமே குகந்க செங்கே ல்
ழ்ந்திடும்
திருத்தம்
குங்குமப் பூவும் பல வகை Life நில வருணனை நிரைந்த ஈற்றசை ஈற்றசை
FinTSIT
நல்ல நல்வார்த்தை 6T60Tajirth சமுத்திரத்தில் மொய்ம்பொடு ஈற்றசை கோபம்
தன் பாவைய்ர் அவர் குழலைக் துாறிடை வேதங்களையும் ளென்னப்
GrGör(?tit ஆழியில் வீரரும் நீராஞ்சனம் பேரருள் ஆணவமே குகந்த செங்கோல்
வீழ்ந்திடும்

Page 17
tli&sh
ö罗4
326
8ዷ6
3罗6
327
328
32.8
334
337
岛40
34
34
岛42
344
544
344
352
356
6) If
19 29
3
24
27
3
26
13
4
28
25
9
塞区yi
பிழை
நல் ர்லட்சி கே றமென் பெரு கலும் ஒம்பலும்
કઢી) அழகி
Ա60) ତtଦର୍ଦt if கொ டிலே tortif65) Lis
Cupdiscip
ரு யென் பாமோர்
றுவர்
எழுவாய (o) fu நடன தை ை த்தாள்
i
திருத்தம்
நல்லாட்சி கேற்றமென் பெருக்கலும் ஓம்பலும் ஆசில் அழகிய
பூசை என்ருர் கொண்டிலே
Origs
முகமும் இரு யென்போமோ
கூறுவர் எழுவாய் பெரிய நடனத்தை வைத்தாள்

டெ சிவமயம்
சா வித் தி ரி சரிதம் பாயிரச் சருக்கம்
காப்பு
விநாயகர் வணக்கம்
திருச்சிற்றம்பலம்
கங்கைநதி பாயுங் கவினுறுநன் னுட்டில் மங்கையர்கள் திலக மணியெனவே போற்றும் சங்கைமிகு சாவித் திரிசரிதம் பாடக் கங்கைபெறு பாலன் கணபதிதாள் காப்பாம்.
(இதன் பொருள்:) கங்கை நதி பாயுங் கவினுறு நல்நாட்டில்கங்காநதி பாய்ந்து அழகுபெற்று விளங்கும் மாத்திரமென்னும் நல்ல நாட்டிலே; மங்கையர்கள் திலகமணி எனவே போற்றும் - மங்கை யர்க்குள் மேன்மையான மணி போன்றவள் என்று போற்றப்படும்; சங்கைமிகு சாவித்திரி ச ரி த ம் பாட - மிகுந்த கீர்த்தியையுடைய சாவித்திரியின் சரிதத்தை நான் பாட கங்கைபெறு பாலன் கண்பதி தாள் காப்பாம் - கங்கை பெற்ருேனன கணபதியின் திருத்தாள்கள் காப்பாகும். (என்றவாறு)
(விளக்கம்:) "கங்கை பெற்ருேன்' என்பது விநாயகன் திருநாமங் களுள் ஒன்று. நிகண்டிற் காண்க.

Page 18
சிவ வணக்கம்
2 மஞ்சுதவழ் கைலை மாமலையில் மன்னிப்
பிஞ்சுமதி கொன்றை பேணிமுடி சூடும் நஞ்சணிந்த கண்டன் நம்பனருள் பாடிச் செஞ்சொல்புனை காதை செய்யவடி சேர்ப்பாம்.
(இ- ள்) ம ஞ் சு த வ ழ் மா கைலைமலையில் மன்னி - மேகங்கள் தவழ்கின்ற பெரிய கைலைமலையிலே தங்கி; பிஞ்சுமதி கொன்றை பேணி முடிசூடும் - இளம் பிறையையும் கொன்றை மாலையையும் விருப்புடன் முடியில் தரிக்கும்; நஞ்சு அணிந்த கண்டன் - கண்டத்திலே நஞ்சினை ஆபரணமாக அணிந்தவனன; நம்பன் அருள்பாடி - சிவபெருமானு டைய திருவருளைப் பாடி, செஞ்சொல்புனை காதை -செஞ்சொற்களால் புனையப்பட்ட இந்தச் சாவித்திரி சரிதம் என்னும் நூலை; செய்ய அடி சேர்ப்பாம் - அவருடைய செவ்விய திருவடிகளிற் சேர் ப் போ ம்: (எ-று) 2 செஞ்சொல்புனை - ஒற்றுநீக்கிக் கூவிளங்காயாகக் கொள்க.
சாவித்திரிதேவி வணக்கம் 3. கந்தமலர்ப் போது கைத்தலத்தி லேந்திச்
சந்ததமுஞ் சாவித் திரிபாதம் போற்றிப் பந்தமொடு பிணிக்கும் பாசமெலாம் போக்கி அந்தகன ரெம்மை யடையாமற் காப்பாம்.
(இ - ள்) கந்தமலர்ப்போது - வாசனை பொரு ந் தி ய தாமரை மலரை: கைத்தலத்திலேந்தி - கைகளில் ஏந்தி; சந்ததமும்-எப்பொழு தும்; சாவித்திரி பாதம் போற்றி - சாவித்திரி தேவியினுடைய திருவடி களை வணங்கித்துதித்து; பந்தமொடு பிணிக்கும் பாசமெலாம் போக்கி - மலபந்தங்களால் கட்டுண்டிருக்கும் எமது பாசங்களைப் போக்கி; அந்தகனர் எம்மை அடையாமல் காப்பாம் - இயமன் எம்மை அடை யாதவாறு காப்போமாக. (எ-று) 3
முருகன் வணக்கம் 4. அதிரவரு காலன் அணுகியெனை வாட்டிப்
பிதிரிலென தாவி பிரித்திடுமஷ் வேளை மதுரமொழி வள்ளி மகிழ்ந்தணையும் மார்பன் கதிரமலைக் கந்தன் கடுகியெனக் காக்க,

s
(இ- ள்) அதிரவரு காலன்-பிறர்கண்டு நடுங்கும்படியாக வரும் இயமன் எனை அணுகி வாட்டி-என்னை அணுகித் துன்புறுவித்து; பிதிரி லென தாவி - நொடியில் எனது ஆவியை; பிரித்திடும் அவ்வேளை - கவர்ந்து செல்லும் அந்நேரத்தில்; மதுரமொழி வள்ளி - மதுரமான மொழிகளைப் பேசும் வள்ளிநாயகி; மகிழ்ந்து அணையும் மார்பன்-மகிழ்ச் சியுடன் சேர்கின்ற திருமார்பினை உடையவனகிய; கதிரமலைக் கந்தன்: கடுகியெனக் காக்க-விரைந்து வந்து என்னைக் காப்பாராக. (எ-று) 4
நாமகள் வணக்கம்
S வேதனது நாவில் வீற்றிருக்குந் தாயே
பாதமலர்ப் போது பணிந்திடுவன் கற்பில் ஏதமிலாள் காதை யின்றமிழாற் பாட நீதுணையென் வாக்கில் நின்றருள வேண்டும்.
(இ-ள்) வேதனது நாவில் வீற்றிருக்கும் தாய்ே - பிரமாவினது நாக்கில் வீற்றிருக்கின்ற எம்தாயே; பாதமலர்ப்போது பணிந்திடுவன் - நர்ன் உனது இருபாத கமலங்களையும் பணிந்திடுவேன்; கற்பில் ஏதமி லாள் காதை-கற்பில் குற்றமில்லாதவளாகிய சாவித்திரியின் கதையை இன்தமிழால் பாட - இனிய தமிழ்ப்பாக்களால் பாட நீதுணை என் வாக்கில் நின்றருள வேண்டும்-தாயே! நீ எனது வாக்கிற்குத் துணையாக நின்று அருளுதல் வேண்டும். (எ-று) 5
எமதருமன் வணக்கம்
S மன்பதைகள் வாணுள் மதித்தவற்றை முடிக்குந் தென்புலத்திற் கிறைவா தேவர்தமக் கேறே உன்பதங்கள் பணிவே னுயிர்பிரியும் வேளை துன்பநிலை யின்றித் துறக்கவருள் வாயே.
(இ-ள்) மன்பதைகள் வாழ்நாள் மதித்து-உயிர்களின் வாழ்நாளைக் கணித்து; அவற்றை முடிக்கும் - அவர்களின் க்ால எல்லையாகிய சீவிய காலத்தை முடிக்கும்; தென்புலத்திற்கு இறைவா - இயமலோகத்திற்கு அரசனுன எமதர்மராசனே தேவர்தமக்கு ஏறே-தேவர்க்ளுக்குச் சிங்க ஏறு போன்றவனே; உன்பதங்கள் பணிவேன்-உன்திருவடிகளைப் பணிந்து வணங்குவேன்; உயிர்பிரியும் வேளை - எனது உயிர் பிரியும் வேளையில்; துன்பநிலையின்றித் துறக்க அருள்வாயே-வருந்துதலாகிய நிலைமை இல் லாமல் இம்மாயா உடலை நான் நீக்க அருள்புரிவீராக. (எ-று) 6

Page 19
r. குரு வணக்கம் 7 ஆரமுத மென்னும் அருந்தமிழை யூட்டி
நாரமுடன் செய்யுள் நயமெல்லாங் காட்டி வாரமுட னெம்மை வளர்த்தவெண்ணெய்க் கண்ணன் பாரதியின் பாத பங்கயங்கள் பணிவாம்.
(இ - ள்) ஆர் அமுதம் என்னும் அரும்தமிழை ஊட்டி - அருமை யான அமுதமென்னும் அரிய இனிய தமிழை எனக்கு ஊட்டி நார முடன் செய்யுள் நயமெல்லாங் காட்டி - அன்புடன் எனக்குச் செய்யுள் நயங்களைக் காட்டி வாரமுடன் என்னை வளர்த்த - அன்புடன் என்னை வளர்த்த; வெண்ணெய்க் கண்ணன் பாரதியின்-வெண்ணெய்க்கண்ணன் என்னும் நவநீதகிருஷ்ண் பாரதியாரின் பாதபங்கயங்கள் பணிவாம் - திருவடித் தாமரைகளை வணங்குவோமாக. (எ-று) 7
குறிப்பு - வெண்ண்ெய்க்கண்ணன் - நவநீதகிருஷ்ண பாரதியார் என்
னும் பெரும் புலவர்.
நூல் நுதலிய பொருள் வேறு
8 மாத்திர நாட்டினை யாண்ட மன்னவன்
பூத்தசா வித்திரி பொருவில் கற்பினல் மாத்திகழ் சத்திய வான்ற னருயிர் காத்தவக் காதையைக் கழறு வாமரோ.
(இ- ள்) மாத்திர நாட்டினை யாண்ட மன்னவன்-மாத்திரம் என் னும் நாட்டை அரசாட்சி செய்த அசுவபதி என்னும் மன்னன் பூத்த சாவித்திரி-பெற்றெடுத்த சாவித்திரியானவள்; பொருவில் கற்பினுல்ஒப்பில்லாத தனது கற்பின் வலிமையால்; மாத்திகழ் சத்தியவான்றன் ஆருயிர் - பெருமை திகழும் சத்தியவானுடைய அரிய உயிரை காத்த அக்காதையைக் கழறு வாமரோ - காத்த அந்தத் திவ்விய சரித்திரத் தைச் சொல்லுவாம், அரோ-ஈற்றசை (எ-று) 8
நூல் வந்த வழி 9 பாண்டுவின் புத்திரன் தருமன் பன்னிரண் டாண்டுகள் வனத்திடை யலக்க ணுற்றுபூழி மாண்டவ மாமுனி மார்க்கண் டேயனும் நீண்டவிக் கதையைமுன் நிகழ்த்த லாயினன்.

5
(இ-ள்) பாண்டுவின் புத்திரன் தருமன் - பாண்டு மன்னனின் மூத்த மகளுன தருமன் என்பவன்; பன்னிரன்டு ஆண்டுகள் - பன்னி ரண்டு வருடங்கள், வனத்திடை அலக்கண் உற்றுழி-காட்டிலே வசித்து துன்பமுற்றபோது; மாண்தவமாமுனி மார்க்கண்டேயனும் - சிறந்த தவத்தினையுடைய முனிவரான மார்க்கண்டேயமுனிவர்; நீண்ட இக் காதையை முன் நிகழ்த்தலாயினன் - நீண்ட இச்சரிதையை முன்னர் தருமனுக்குச் சொல்லலாயினர். (எ-று) 9
(வி-ம்) வியா ச மகா பாரதத்தில், வனபர்வத்தில், தருமராசனுக்கு மார்க்கண்டேய முனிவர் ‘சாவித்திரி உபாக்கியானம்’ என்னும் சாவித்திரி சரித்திரத்தைச் சொன்னர் என வருதல் அறிக.
நூல் செய்த காரணம்
10 ஆரிய மொழியினி லமைந்த காதையைச்
சீரிய செந்தமிழ்ச் செய்யு ளாக்கென வாரித கவிஇள முருக ெைரனுஞ் சீரியன் வேண்டிடச் செப்ப லுற்றனன்.
(இ-ள்) ஆரிய மொழியினிலமைந்த காதையை - வடமொழியில் அமைந்த வியாசபாரதம் எ ன் னு ம் நூலில் வரும் (சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்றது) இந்தச் சாவித்திரி சரித்திரத்தை சீரிய செந்தமிழ்ச் செய்யுள் ஆக்கென - சிறப்புவாய்ந்த அழகியதாகிய செந்தமிழ்ச் செய் யுள்களில் பாடுவீரென வாரிதகவி இள முருக ஞ ர் எனும் சீரியன் வேண்டிட - கவிமேகமாகிய இளமுருகனுர் என்னும் புலவன் என்னை வேண்டிட: செப்பலுற்றனன் - நானும் அவ்வண்ணமே இச்சாவித்திரி கதையைத் தமிழ்ப் பாக்களாற் பாடினேன். (எ -று) 0. (வி-ம்) புலவர்மணி சோ. இளமுருக ளு ர்ே (பாலசுப்பிரமனியம்) ஈழத்து நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவரின் மகனுவார். இவர் ஈழத் துச் சிதம்பரபுராணம் முதலிய பல நூல்களை யாத்துத் தமிழன்னை!ை அலங்கரித்தவர்.
சாவித்திரி சரிதம் தமிழில் காவியரூபமாக வெளிவரல் வேண்டு
மென்று பெரிதும் விரும்பியவர்.
11 முதல்வரு நூலினை முற்றும் பின்செலா
திதிற்சில மாற்றமும் ஏற்பச் செய்தனன்
கதையதன் கருப்பொருள் காத்துக் காப்பியப்
பொதுவியல் தழுவிடல் புலவர்க் கேற்றதால்,

Page 20
6
(இ.ஸ்) முதல்வரு நூலினே முற்றும் பின்செலாது - முதல் நூலா கிய வியாச பாரதத்தை முழுமையாகப் பின்பற்ருது; இதிற் சிலமாற்ற மும் ஏற்பச் செய்தனன் - இந்தச் சாவித்திரிசரிதம் என்னும் நூலில் சிற்சில மாற்றங்களை ஏற்புடையவிடத்துச் செய்தேன்; கதையதன் கருப்பொருள் காத்து, காவியப் பொதுவியல் தழுவிடல் புலவர்க்கு ஏற்றது - கதையினுடைய கருப்பொருளையுங் காத்து காவியத்தினு டைய பொது இயல்புகளையும் தழுவி நூல்செய்தல் புலவர்களுக்கு ஏற் புடையதேயாகும். ஆல் - ஈற்றசை (எ-று) 11
நூல் செய்யத்துணை 12 முன்னியிந் நூலினை முயன்ற காலைநான்
பன்னிய பாக்களைப் பரிவொ டாய்ந்துமே நன்னிரைப் படுத்தினன் நடரா சன்னெனும் மன்னிய புகழுடை மாசில் பண்டிதன்.
(இ - ள்) நான் முன்னி இந்நூலினை முயன்ற காலை - நான் முற் பட்டு இந்த நூலினைப் பாட முயன்ற காலத்தில்; நான் பன்னிய பாக் களை - நான் பாடிய பாடல் களை; பரி வொ டு ஆய்ந்து நன்னி ரைப் படுத்தினன்-அனுதாபத்தோடு ஆராய்ந்து ஒழுங்குபடுத்தினன்; நடராசன் எனும் - க, கி. நடராசன் என்கின்ற; மன்னிய புகழுடை மாசில் பண்டிதன் - நிலைபெற்ற புகழினையுடைய குற் ற மில் லா த பேரறிஞன். (எ-று) 2 (வி-ம்) செந்தமிழ்ச் சிரோமணி பண்டித வித்துவான் க. கி. நடரர்சன் B. O. L. Dip -in-Ed. அவர்கள் ஈழத்துச் சிவயோக சுவாமி களின் பரமபத்தன். சுவாமி புகழ், சுவாமி பிள்ளைத்தமிழ், சிவ யோகசுவாமிகள் திருச்சரிதம் முதலிய நூல்களை ஆக்கியவர், சிவதொண்டன் பத்திரிகை ஆசிரியருமாவார்.
நடராசன்னெனும் - சீர்நோக்கி 'ன்' மிகுந்தது.
அவையடக்கம்
18 அற்பமா மறிவுளேன் அறைந்த காதையிற்
சொற்பிழை யாதியாஞ் சோர்வு சேரினுங்
கற்பினிற் பிறங்கிய காசில் காரிகை
அற்புதச் சரிதமால் அறிஞர் கொள்வரே.
(இ- ள்) அற்பமா மறிவுளேன் - அற்ப அறிவு படைத்தவனகிய
யான்; அறைந்த காதையில் - சொன்ன இந்தச் சாவித்திரி சரித்திரத் தில்; சொற்பிழை ஆதியாம் சோர்வு சேரினும் - சொற்பிழை முதலா

கிய சோர்வுகள் சேர்ந்திருந்தாலும்; கற்பினிற் பிறங்கிய காசில் காரிகை அற்புதச் சரிதமால் - கற்பினிற் சிறந்து விளங்கிய குற்றமற்ற தெய்வப் பெண் எனத்தக்க சாவித்திரியின் அற்புதமான சரிதமாகையால்; அறி ஞர் கொள்வரே - கற்றறிந்தோர் குற்றங்களைப் பாராட்டாது. இந் நூலின் குணங்களை ஏற்றுக்கொள்வார்களாக. ஏ. ஈற்றசை (எ-று)
நூற் பயன்
14 திண்ணிய கற்புடைத் தெய்வ மானவள்
புண்ணிய மாக்கதை போற்றிக் கேட்பவர் மண்ணினிற் புகழ்பொருள் மற்றுஞ் சீர்களும் எண்ணிய எண்ணியாங் கெய்தி வாழ்வரே.
(இ-ள்) தி ன் னி ய கற்புடைத் தெய்வ மானவள் - உறுதி யான கற்பினையுடைய தெய்வ ப் பெண்ணுன சாவித்திரியின்; புண் ணிய மாக்கதை-புண்ணியமாகிய இந்தச் சுபசரித்திரத்தை போற்றிக் கேட்பவர் - வணங்கி இருந்து கேட்பவர்கள்; ம ண் ணி னிற் புகழ் பொருள் மற்றுஞ் சீர்களும் - பூமியின் கண் னே புகழும் பொருளும் நீண்ட ஆயுள் முதலாகிய மற்றுஞ் சிறப்புகளும்; எண் ணி ய எண்ணி யாங்கு எய்தி வாழ்வர்-விரும்பிய விரும்பியபடி பெற்று வாழ்வார்கள். ஏ - ஈற்றசை (எ-று) 4
பாயிரச் சருக்கம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்

Page 21
இரண்டாவது உ ற் பத் தி ச் ச ருக் கம்
திருச்சிற்றம்பலம் (i) ஆற்றுச்சிறப்பு
வேறு
15 ஆர்கலி குழுல கத்தினுக் கானனம்
பார்புக ழப்பெறு பாரத நாடதன்
சீர்தில கம்மெனச் செப்புவர் மாத்திரம்
ஆர்புன லாங்குநல் காற்றணி சாற்றுவாம்.
(இ-ள்) ஆர்கலி சூழ் உலகத்தினுக்கு ஆனனம் - சப்திக்கின்ற கட
லால் குழப்பட்ட உலகத்தினுக்கு முகம் போன்று இருப்பது; பார்புகழப் பெறு பாரத நாடு - உலகத்தோரால் புகழப்பெறும் பாரதநாடு; அதன் சீர் திலகம் எனச் செப்புவர் - அந்தப் பாரத நாட்டின் சிறப்பான அழ கான பொட்டு எனப் பாரோர் சொல்லுவர்; மாத்திரம் - மாத்திரம் என்னும் தேசத்தை; ஆர் புனல் ஆங்கு நல்கு ஆற்றணி சாற்றுவாம் - நிறைந்த புனலை அந்தத் தேசத்திற்குக் கொடுக்கும் ஆற்றின் அழகைச்
சொல்லுவாம். (எ-று) (வி-ம்) பூமிக்கு முகம் பாரதநாடு; அதன் திலகமாக விளங்குவது மாத்
திர தேசம்
திலகம்மென என்பதில் 'ம்' சீர்நோக்கி மிகுந்தது.
18 பார்மகள் தான் பெறு பல்லுயிர்க் கூட்டத்தன்
மார்பக மாம்இம யப்பொருப் புச்சியில் நீர்சுரந் தாளது நீண்டுயர் கங்கையாய் ஏர்கெழு மாத்திரம் ஏர்கொளப் பாய்ந்ததே.
(இ- ள்) பார்மகள் பூமாதேவியானவள், தான்பெறு பல்உயிர்க்கு ஊட்ட - தான்பெற்ற பல்லுயிர்களாகிய பிள்ளைகளுக்கு அரு த் தும் பொருட்டு; தன் மார்பகமாம் இமயப் பொருப்பு உச்சியில் - த னது மார்பகமென்று சொல்லத்தக்க இமய மலையின் உச்சியில் நின்று; நீர் சுரந்தாள் நீரைச் சுரந்தாள்; அது நீண்டு உயர் கங்கையாய் அதுவே நீண்டு மேன்மையான கங்காநதியாய்; ஏர்கெழு மாத்திரம் - கலப்பை யுடன் நட்புக்கொண்டு உழுதொழிலை மிகுதியாகச் செய்யும் மாத்திர தேசம், ஏர் கொளப் பாய்ந்ததே - அழகு கொள்ளும்படி பாய் ந் து ஓடியது. (எ-று) 2

9
(வி ம்) பூமி ஒரு பெண்ணுகவும், இமயமலை அவள் மார்பகமாகவும், ஊறும் புனல் சுரந்த பாலாகவும் பல் உயிர்களும் பூமாதேவி யின் பிள்ளைகளாகவும் உருவகம் செய்யப்பட்டன,
17 மாங்கனி பாளிதம் மான்மதம் வாழையின்
தீங்கனி குங்குமம் தேன்தரு தேறலும் துரங்கிள நீருடன் தோடைப லாக்கனி ஓங்கிய கன்னலு மொன்றிணைந் தோடலால்.
(இதுவும் அடுத்த பாட்டும் குளகம்)
(இ - ள்) மாங்கனி, பாளிதம், மான்மதம் - அந்த நீரிலே மாங்க னியும் பச்சைக்கருப்பூரமும், கத்தூரியும்; வாழையின் தீங்கனி - வாழை யினது இனிய பழமும்; குங்குமம் - குங்குமப்பூவம், தேன்தருதேறலும் -வண்டுகள் தரும் தேனும்; தூங்கு இளநீருடன்,தோடை, பலாக்கனிதென்னைகளில் தூங்குகின்ற இளநீருடன் தோடம்பழம் பலாப்பழம் என் பனவும்; ஒங்கிய கன்னலும் - செழித்து வளர்ந்த கரும்பும்; ஒன்றி ணேந்து ஒடலால் - ஒன்று சேர்ந்து அக்கங்காநீரின்கண் ஒடுதலாலே " (எ ~று) 3
18 அண்டர்தம் நாதனை அம்பிகை மஞ்சனம்
பண்டையி னுட்டிடப் பாய்ந்தவத் தீர்த்தமே கொண்டுவந் திட்டதிக் கோதறும் ஆறென உண்டநன் மக்களும் உள்ளுவ ராயினர்.
(இ-ள்) அண்டர்தம் நாதனே - தேவர்களுக்குத் தலைவனுகிய திருக்கைலாயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அம்பிகை மஞ்சனம் பண்டையின் ஆட்டிட-உமாதேவியார் முன்னர் திருமஞ்சன மாட்டிட பாய்ந்த அத்தீர்த்தமே - பாய்ந்த அந்த திருமஞ்சனத்தீர்த் தத்தையே; இக்கோது அறுஆறு கொண்டுவந்திட்டது என - இந்தக் குற்றமற்ற புனிதமான ஆறு கொண்டு வந்திட்டது என; உண்டநன் மக் களும் உள்ளுவராயினர்- அந்நீரை உண்ட மக்களும் எண்ணலாயினர். (எ-று) 4
19 மால்வரைச் சாரலில் மண்டுசந் தாரகில்
வால்மிள கேலமின் வாசனைப் பண்டமுங் கால்பொர வீழ்ந்துமக் கங்கையிற் சேர்தலாற் கோல்படு மீனினங் கொண்டில புன்மணம்,

Page 22
10
(இ- ள்) மால்வரைச் சாரலில் மண்டும் - பெரிய மலைச்சாரலில் நெருங்கி வளரும்; சந்து, ஆர் அகில் - சந்தனம், அருமையான அகில்; வால்மிளகு, ஏலம் இன் வாசனைப்பண்டமும்-வால்மிளகு, ஏலம் முதலிய இனிய வாசனைப் பொருள்களும்; கால்பொர வீழ்ந்து - காற்ருல் அடி பட்டு வீழ்ந்து; அக்கங்கையிற் சேர்தலால் - அந்தக் கங்காநீரிற்கலத்த லாலே ( அந்த நீர் வாசனையுடைத்தாயிற்று. அதனல்); கோல் படு மீனினம் கொண்டில புன்மண்ம் - அந்த நீரில்வாழும் மீனினங்கள் தூண்டிலில் அகப்பட்ட பொழுது புலால் மண்ம்மாறி வாசனையுடை யனவாக இருந்தன. (எ-று)
20 வாரணத் தந்தமும் வால்வளை முத்தமும்
பாரகத் துட்பெறு பல்வகைப் பொன்களுஞ் சாரலிற் கொள்மணி சந்தனம் ஏந்தியத் தாரணி மன்னற்குத் தந்தது கையுறை. (இ- ள்) வாரணத் தந்தமும் - யானைத் தந்தமும், வால் வளை முத்தமும்-வெண்சங்கு முத்தும்; பாரகத்துள்பெறு பல்வகைப் பொன் களும் - பூமிக்குள்ளிருந்து பெறப்படும் செம்பொன், க ரு ம் பொ ன், வெண்பொன் முதலிய பலவகையான பொன்களும்; சாரலிற்கொள் மணி, சந்தனம்-மலைச்சாரலிற் கொள்ளப்படும் மணிகளும், சந்தனமும்; ஏந்தி அத்தாரணி மன்னற்கு - அந்த ஆறு ஏந்திக் கொண்டு வந்து அந்த மாத்திர நாட்டு அரசனுக்கு: கையுறை தந்தது - காணிக்கை யாகக் கொடுத்தது. (எ-று) 6 வேறு 21 ஆறது செல்வழி யடைத்து நின்றிடும் வேறுள தடைகளை வெல்கு வேனெணு நூறுதல் செய்வது நோக்கில் மன்னவன் மாறுகொள் வோர்தமை மடித்தல் போலுமே.
(இ-ள்) ஆறது செல்வழி - ஆருனது செ ல் லும் வழி  ைய:
அட்ைத்து நின்றிடும் வேறுள தடைகளை - அடைத்து நிற்கும் பலவை கயான தடைகளை; வெல்குவேனென - நான் வெல்லுவேன் என்று; நூறுதல் செய்வது - அழித்துச்சிதைப்பதை; நோக்கில் - ஆராய்ந்து பார்க்கில்;மன்னவன் - மாத்திரதேச அரசனனவன்; மாறுகொள்வோர் தமை - தன்னேடு பகைமை கொள்ளுவேர்ர்களை மடித்தல் பேர்லும் ட அழித்தல் போலும். (எ-று) 22 தாழ்வுறு நிலத்தினிற் தண்ணீர் தங்கிப்பைங்
கூழ்வள ரச்செயுங் கொள்கை கூர்ந்திடில்
தாள்பணிந் திட்டவர் தங்கட் கேற்புறு
வாழ்வழித் திடுமிறை வண்மை மானுமே,

இ-ள்) தாழ்வுறு நிலத்தினில் - பள்ளமான நிலத்தினில்: தண்ணீர் தங்கி பைங்கூழ் வளரச் செய்யுங் கொள்கை-பயிரை வளரச் செய்யும் கொள்கையை, கூர்ந்திடில் - ஆராய்ந்து பார்க்கின்; தாள் பணிந்தி ட்டவர் தங்கட்கு - தனது பாதங்களைப் பணிந்தவர்களுக்கு; ஏற்புறு வாழ்வளித்திடும் இறைவண்மை மானும் ஏற்ற நல்வாழ்வை அளிக்கும் மாத்திர மன்னனின் ஈகைக் குணத்தை ஒக்கும். (எ று) &
23 உருவம் நீண்டதால் ஊர்ந்து சேறலால்
அரவஞ் செய்வதால் ஆலம் பாய்வதால் அரத னங்களை ஆகம் வைத்தலால் சிரமொ ராயிரச் சேட னெக்குமே.
(இ ள்) உருவம் நீண்டதால்-உருவத்தால் நீண்டதர்க இருப்ப தாலும்; ஊர்ந்து சேறலால் - ஊர்ந்து செல்வதாலும்; அரவஞ் செய் வதால் - இரைந்து ஒலி செய்வதாலும்; ஆலம் பர்ய்வதால்-நீர் ஓடு தலாலும், அரதனங்களை ஆகம் வைத்தலால்-இரத்தினக் கற்களை தன் உடலில் வைத்திருத்தலாலும்; சிரம் ஒரு ஆயிரச் சேடன் ஒக்கும் - ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேடனை அந்த ஆறு ஒக்கும். (எ- று) 9. இப்பாடல் ஆற்றுக்கும் ஆதிசேடனுக்குஞ்சிலேடை.
(வி ம்) ஆதிசேடன் - உருவத்தால் நீண்டது; ஊர்ந்து செல்வது; இரைந்து ஒலி செய்வது; விடத்தைக் கக்குவது; நர்கரத்தினத்தைத் தலையில் வைத்திருப்பது; ஆயிரம் தலைகளையுடையது. (ஆறும் பல கழி முகங்களையுடையது.) ஆதலால் ஆறு ஆதி சேடனை ஒக்கும்:
24 முடித்தலை மலரிடை மூச வண்டினம்
கொடித்துணைக் கங்கைமட் குன் றென் கொங்கைமேற் செடிக்கரை நுண் அலைச் சேலை போர்த்தியிப் படித்தலை நடந்தது பாவை யென்னவே
(இ - ள்) முடித்தலை மலரிடை - முடியின் கண்ணுள்ள மலரில்; வண்டினம் மூச - வண்டினம் மொய்க்க; கொடித்துணைக் கங்கை - கொடிபோன்ற கங்கையர்னது; மட்குன்றென் கொங்கை மேல் - மண் குன்றுகளாகிய கொங்கையின்மேல்; செடிக்கரை நுண் அலைச் சேலை போர்த்தி - செடிகளைக் கரையாகக் கொண்டு நுண் அலையினலாகிய சேலையைப் போர்த்து; இப்படித்தலை பாவை யென்ன நடந்தது - இந்த நிலத்தினில் ஒரு பெண்போல் நடந்தது. (எ-று) உவமையணி 19

Page 23
2
(வி- ம்) கொடி போன்ற கங்கை - கொடி போன்ற பெண் ; ஆற்றில்
மண்குன்றம் - பெண்ணின் கொங்கை; அதை மறைக்கும் அலை மெல்
லிய சேலை; கரையில் செடிகள். சேலையின் செடிக்கரை ஆற்றில் மிதக் கும் மலர் - பெண்ணின் தலையில் மலர்; வண்டினம் இரு இடத்தும் மொய்க்கும்.
25 புல்லறி வாளர்தம் புலம்பல் போனதி
கல்லினி லாழமில் கலக லத்திடும் நல்லறி வாளர்தம் நாவ டக்கம்போல் மெல்லெனத் தரைமிசை மேவு மாழமாய்.
(இ- ள்) புல்லறிவாளர்தம் புலம்பல் போல் - அற்ப அறிவுள்ள வர் பெரிது ஆரவாரமாக, ஆனல் ஆழ்ந்த கருத்தில்லாமல், பேசு தல் போல்; நதி-நதியானது; கல்லினில் ஆழமில் கலகலத்திடும்கல்நிலத்தில் ஆழமில்லாமல் கலகலவென்ற ஒசையுடன் ஒடும், நல் லறிவாளர்தம் நாவடக்கம் பேர்ல்-ஆழ்ந்த அறிவுடையோர் அடக்க மாக இருப்பது போல்; மெல்லெனத்தரைமிசை மேவும் ஆழமாய்மென்மையர்ன நிலத்தில் ஆழமாகவும் ஓசை இல்லாமலும் செல் லும். (எ-று) Η Ι
26 வரைவில பொருள்தரு வள்ளல் மன்னனின்
குரைகழல் பணிந்திடுங் குடிகள் செய்கைபோல் கரைகெழு தருக்கடங் கரங்கள் நீட்டியத் திரையெறி வருபுனல் தீண்ட முந்துமே,
(இ- ள்) வரைவில பொருள் தரு வள்ளல் மன்னனின் - வரை வில்லாது பொருளைக் கொடுக்கும் வள்ளண்மை வாய்ந்த மர்த்திர தேச மன்னனின் குரைகழல் பணிந்திடுங் குடிகள் செய்கைபோல்சப்திக்கும் கழல்களையணிந்த பாதங்களைப் பணியும் குடிமக்களின் செய்கைபேர்ல்; கரைகெழு தருக்கள் தம் கரங்கள் நீட்டி - ஆற்றின் கரைகளிற் கெழுமியிருக்கும் மரங்கள் தம் கரங்களை நீட்டி; அத்திரை பெறி வருபுனல் தீண்ட முந்துமே - அந்தத் திரையெறிந்து வரும் ஆற்றுநீரைத் தீண்ட முந்தும், ஏ-அசை. (எ-று) 12
27 அந்தணர் தங்களை யடைந்த புல்லியர்
சிந்தைகள் தெளிவுறீஇச் சில மெய்தல்போல்
இந்தநன் னிரினி லிழிந்து மூழ்கினேர் தந்தம்புன் னேய்மலந் தவிர்வ ராயினர்,

13.
(இ-ள்) அந்தணர் தங்களை அடைந்த புல்லியர் - அறவோரர்ன மேலானவர்களை அடைந்த இழிகுணத்தோர்; சிந்தைகள் தெளிவுறீஇ . - தங்கள் மனம் தெளிவுபட்டு; சீலமெய்தல் பேர்ல் - நற்குணமடை தல் போல் இந்த நன்னீரினில் இழிந்து மூழ்கினுேர்-இந்த நல்ல நீரினில் இறங்கி மூழ்கினேர்; தம்தம் புன்நோய் மலம் தவிர்வராயினர் -தங்கள் தங்கள் இழிந்த நோய்களும் அழுக்கும் பாவமும் நீங்கப் பெற்றவராயி னர். (எ-று)
28 பிரளய மெனவரு பெரிய நீத்தமும்
கரைகளில் வெட்டிய காலிற் பாய்ந்திட முரணிழந் தடங்கியம் மூதூர் சேர்ந்ததே உரமுளர் பிரிந்திடின் உறுவர் நொய்மையால்.
(இ-ள்) பிரளய மெனவரு பெரிய நீத்தமும் - பிரளயம் போல் வரும் பெரிய ஆற்று வெள்ளமும்; கரைகளில் வெட்டிய கர்லிற் பாய்ந்திட-ஆற்றங்கரைகளில் நீர்பர்சனத்திற்காக வெட்டிய வாய்க் கால்களிற் பாய்ந்திட முரணிழந்து அடங்கி அம்மூதூர் சேர்ந்ததுவலியிழந்து அடங்கி அந்த மாத்திரதேசத்தைச் சேர்ந்தது; உரமுளர் பிரிந்திடின் உறுவர் நொய்மையால் - வலியுள்ளேர்ர் பிரிந்திடில் தளர் வடைவாரர்கலால். (எ-று) 4
(i) நாட்டுச்சிறப்பு 29 ஆத்திக ரந்தண ரறங்க ளோம்புநர் சாத்திரம் வல்லுநர் சால்பு மிக்கவர் பூத்திகழ் கற்பினர் பொலியும் பொன்கொழி மாத்திர நாடதன் மகிமை பேசுவாம்.
(இ - ள்) ஆத்திகர் - கடவுளை நம்புவோரும்; அந்தணர் - அந்த ணர்களும்;அறங்கள் ஒம்புநர் -தருமங்களைப் பேணுபவரும்; சாத்திரம் வல்லுநர் - சாத்திரங்களில் வல்லவர்களும்; சால்புமிக்கவர் - அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மை முதலிய குணம் மிக்கவரும்; பூத் தி க ழ் கற்பினர் - பூவுலகில் விளங் கும் கற்பையுடையவரும்: பொ லி யும் - பொலிந்து விளங்கும்; பொன்கொழி - பொன்ஃகாக் கொழிக்கும் வளம் நிறைந்த, மாத்திர நாடதன் மகிமை பேசுவாம் - மாத்திர நாட்டின் மகிமையைச் சொல்லுவாம் (எ-று) 5

Page 24
14
குறிஞ்சி நிலவருணனை 30 தொடர்மலை முடி மிசை துஞ்சும் மஞ்சினந்
தடவரை முழைவயின் தங்கும் வல்லியங் கடகரி திரிவன காம்புக் காட்டிடை படவர வுயிர்ப்பன பாழிப் பாங்கரில்,
(இ - ள்) தொடர்மலை முடிமிசை மஞ்சினம் துஞ்சும் - தொடர்ச்சி யான மலைச் சிகரங்களின் மீது மேகக் கூட்டங்கள் படியும்; தட வரை முழைவயின் வல்லியம் தங்கும்-அகன்ற மலைக் குகைகளிலே வேங்கைகள் தங்கும்; காம்புக் காட்டிடை கடகரிதிரிவன-மதமுள்ள யானைகள் மூங்கிற் காட்டிடை திரியும்; படஅரவு பாழிப்பாங்கரில் உயிர்ப்பன - படத்தையுடைய பாம்புகள் கு  ைக ப் பக்கங்களில் இரைந்து மூச்சு விட்டுக் கொண்டு திரியும் (எ-று) 6
31 ஐவனம் மூங்கிலின் அரிசி ஏனலும்
கொய்தெடு குரக்கனுங் கொம்புத் தேனெடு பெய்வளை மங்கையர் பெயர்த்த மூலமும் மைவரைக் குறிஞ்சியில் மலிந்து தோன்றுமால்.
(இ-ள்) ஐவனம் - மலை நெல்லும்; மூங்கிலின் அரிசியும் - மூங் கிலின்கண் வரும் அரிசியும்; ஏனல். செந்தினையும்; கொய்தெடு குரக்கனும் -கொய்து எடுக்கப்படும் குரக்கனும் கொம்புத் தேணுேடு- கொம்புத் தேனும்; பெய்வளை மங்கையர் பெயர்த்த மூலமும்-வளையலனிந்த பெண்கள் பெயர்த்தெடுத்த கிழங்கும்; மைவரைக் குறிஞ்சியில் மலிந்து தோன்றும் - கரிய மேகங்கள் படிந்த மலைகளையுடைய குறுஞ்சி நிலத் தில் நிறைந்து தோன்றும். (எ-று) 7
32 சந்தனங் குங்குமஞ் சாதிக் காயகில்
சிந்துரம் பாளிதஞ் சிறுதக் கோலமுங் சந்தமென் மான்மதங் கராம்பு கோட்டமும் அந்தநன் னிலந்தரு மளப்பில் செல்வமாம். (இ- ள்) சந்தனம் குங்குமம் சாதிக்காய் அகில் - சந்தனமும் குங்குமப்பூவும், சாதிக்காயும், அகிலும்; சிந்துரம் பாளிதம் சிறுதக் கோலமும் - வெட்சிப் பூவும், கருப்பூரமும் தக்கோலமும்; கந்தமென் யான்மதம் கராம்பு கோட்டமும் வாசனையுடைய கத்தூரியும் கராம் 11ம் சோட்டமும்; அந்த நல்நிலம் தரும் அளப்பில் செல்வமாம்- அந்தக் குறிஞ்சி நிலம் தருகின்ற அளவில்லாத செல்வங்களாம். (எ-று) 18

15
33 வெங்கரி முத்தமும் வேரல் முத்தமும்
தங்கமும் மணிகளுந் தயங்கு வைரமும் பொங்கரின் புறமெலாம் பொழியு மொண்கதிர் கங்குலைப் பகலெனக் காட்டு மாமரோ.
(இ- ள்) வெங்கரி முத்தமும் - கோபத்தையுடைய யானையின் மருப்பிலிருந்து வரும் முத்தும்; வேரல் முத்தமும்-மூங்கிலின் முத்தும்; தங்கமும் மணிகளும்-தங்கமும் இரத்தினங்களும்; தயங்கு வைரமும் . ஒளிசெய்யும் வைரமும்; பொங்கரின் புறம்எலாம் பொழியும் ஒண் கதிர் - மலைப்புறத்திலெல்லாம் கிடந்து பொழிகின்ற ஒளி பொருந் திய கிரணங்கள்; கங்குலைப் பகலெனக் காட்டும் - இரவைப் பகலெ னக் காட்டும் ஆம், அரோ- அசைகள். (எ-று) 19 வேறு 34 ஏனத் தூணை எரியில் வாட்டித்
தேனிற் ருேய்த்துத் தின்பா ரோர்சார் ஏனற் சோறும் இலை காய் கனியுங் கானற் கிழங்குங் களிப்பா ரோர்சார். (இ - ள்) ஏனத்து ஊனை-பன்றியின் தசையை; எரியில் வாட்டி- நெருப்பில் வாட்டிப் பதப்படுத்தி, தேனில் தோய்த்துத் தின்பார் ஒர்சார்-தேனேடு சேர்த்துத் தின்பார்கள் ஒருசாரார்; ஏனற் சோறும் - தினச்சோறும்; இலை, காய் கனியும் - இலைகளும் காய்களும் பழங் களும்; கானற் கிழங்கும் - மலை சார்ந்த சோலைகளில் கிடைக்கும் கிழங்கும்; களிப்பார் ஓர்சார் - உண்டு இன்புறுவோர் ஒருசாரார். (ஆக இங்ங்னம் மக்கள் மகிழ்வர்) (எ-று) 20
35 குரவை யாடுங் குறத்தி யோர்சார்
அரவை யாட்டி யயர்வா ரோர் சார் வரையின் சாரல் வளர்மான் பன்றி வரிவில் கொண்டு வதைப்பா ரோர்சார்.
(இ ள்) குரவை ஆடுங் குறத்தி ஓர்சார் - குரவைக்கூத்து ஆடும் குறத்தியர்கள் அம்மலையின் ஒரு பக்கத்தில் காணப்பட்டனர்; அரவை ஆட்டி அயர்வார் ஓர்சார் - பாம்பை ஆட்டித் தளர்வார் இன்னுெரு பக்கத்தில் காணப்பட்டனர். வரையின் சாரல் மலையின் பக்கத்தில்; வளர்மான் பன்றி - வளருகின்ற மான் பன்றி ஆகிய விலங்குகளே; வரிவில் கொண்டு வதைப்பார் ஓர்சார் - வரிந்த வில்லேக் கொண்டு கொலை செய்பவர்கள் இன்னுெரு பக்கத்தில் காணப்பட்டனர். குறத்தி - குறத்தியர் என்பதில் கடை தொக்கு நின்றது. (31-று) 2.

Page 25
வேறு நீல வானிடை நிரைந்த தாரகை போல மால்வரை பொலிந்த பொன்மணி கீல வெண்மதி கிளர்ந்த போலுமே நாலும் வாய்மத நாகக் கோடுகள்.
3
6
(இ-ள்) நீலவானிடை தாரகை நிறைந்த போல-கரிய வானத் தில் நட்சத்திரங்கள் நிரையாக விளங்கியது போல; மால்வரை பொன் மணி பொலிந்த - கரிய மலேயில் பொன்னும் மணியும் விளங்கின; கீல வெண்மதி கிளர்ந்த போலுமே-அவ்வானத்தில் பிறைச் சந்திரன் விளங்கியது போல்; நாலும் வாய்மத நாகக் கோடுகள் - மலையிலே தொங்கும் வாயையுடைய மதங்கொண்ட யானையின் கொம்புகள் விளங்கின. (எ-று) 22
37 வேங்கை நறுமலர் விரித்த பர்யலில் ஓங்கல் பிடியுட னுறவு கொண்டிடக் கோங்கின் கொம்பரிற் குரங்கு மந்தியை நீங்கா வேட்கையில் நெருங்கிப் புல்லுமே. (இ - ள்) வேங்கை நறுமலர் விரித்த பாயலில் - வேங்கை மரத் தின் வாசனை பொருந்திய பூக்கள் சொரிந்து பரந்து கிடந்த மலர்ப் படுக்கையில்; ஒங்கல் பிடியுடன் உறவு கொண்டிட - ஆண்யானே பெண்யானையுடன் உறவு கொள்ள, (அதைக்கண்ட) கோங்கின் கொம் டரிற் குரங்கு - கோங்க மரத்தின் கொப்பிலிருக்கும் குரங்கு; மந் தியை - பெண்குரங்கை; நீங்கா வேட்கையில் நெருங்கிப் புல்லும்தணியாத காமவிருப்பத்தால் நெருங்கித் தழுவும். (எ-று) 23 38 கல்லால் விழுதினிற் கலாப மங்கையர் உல்லா சத்துட னுாஞ்ச லா டிட வில்லாய் வளைதரு வேரற் காம்பினிற் பொல்லா மந்தியும் பொலிய ஆடுமே.
(இ~ள்; கல்லால் விழுதினில் கல்லால மரத்தின் விழுதினில் (தொங்கும் இரு விழுதுகளை முடிந்து ஊஞ்சலாக்கி): கலாப மங்க்ை யர் - கலாபம் என்னும் 16 மணிக்கோவையை அணிந்த பெண்கள்; உல்லா சத்துடன் ஊஞ்சலாடிட - மனஉல்லாசமாக ஊஞ்சலாடி விளையாட' (அதைக் கண்ட) பொல்லா மந்தியும் - பொல்லாத பெண்குரங்கும்; வில்லாய் வளைதரு வேரற் காம்பினில் - வில்லைப் போல் வளைந்து வரும் மூங்கிற் காம்பினில்; பொலிய ஆடுமே -பொலிவாக இருந்து தானும் ஊஞ்சலாடி விளையாடும். (எ-று) 24

17
39 ஆலும் மஞ்ஞைக ளகவு மோசையுஞ்
சேலொண் கண்ணியர் செய்மொய் பைங்கிளி ஆலோ லம்மென அகற்று மோசையும் மாலு மென்பரே மலையின் சாரலில், (இ - ள்) ஆலும் மைஞ்ஞைகள் அகவும் ஓசையும் - ஆடும் மயில் கள் அகவுகின்ற ஒசையும்; சேல்ஒண் கண்ணியர் - கயல்மீனைப் போன்று புரளுகின்ற ஒளிபொருந்திய கண்களையுடைய பெண்கள்; செய்மொய் பைங்கிளி- தினைவயலில் மொய்க்கின்ற பசுங்கிளிகளை; ஆலோலம் என அகற்றும் ஒசையும் - ஆலோலம் என்று அகற்றுகின்ற ஒசையும்; மலை யின் சாரலில் மாலும் எ ன் பர் - மலைப்பக்கத்தில் மயங்கும் என்பார். (அவ்வோசைகளைக் கேட்டவர்கள்) (எ- று) 25
40 குன்றக் குறத்தியர் குரவை யோசையும்
வென்றி வேலவன் விழவி னேசையும் மன்றில் மாதர்கை யாழி னேசையுந் துன்றி மலையிடந் துறக்க மொக்குமே. (இ-ள்) குன்றக் குறத்தியர் குரவை ஒசையும் - மலைப்பிரதேசத் தில் வாழும் குறப்பெண்கள் குரவைக் கூத்தாடும் ஒசையும்; வென்றி வேலவன் விழவின் ஒசையும் - வெற்றியையுடைய முருகனுக்கு மக்கள் எடுக்கும் திருவிழாவின் ஒசையும்; மன்றில் மாதர்கை யாழின் ஒசையும் - வாய்தல் முன்றிலில் பெண்களின் கையில் விளங்கும் யாழின் ஒசை யும்; துன்றி - நெருங்கிக் கலந்து; (எங்கும் இன்பத்தை உண்டாக்குவ தால்) மலையிடம் - மலைப்பகுதி; துறக்கம் ஒக்கும் - தேவலோகத்தை ஒக்கும். ஏ - அசை (எ-று) 26
41 வண்ணப் புலியடி வரையிற் றுாங்குதல்
கண்க ளாயிரக் கடவுள் கெளதமன் பெண்கல் லாகிடப் பேதை யாடனை யெண்ணி யவ்விடை யிருத்த லொக்குமே. ( இ - ள்) வண்ணப்புலி - (கரும்புள்ளிகளை உடம் பெங்கும் கொண்ட) அழகான புலி, அடிவரையில் தூங்குதல்-மலையடிவாரத் தில் தூங்குவது கண்கள் ஆயிரக் கடவுள்-ஆயிரம் கண்களை உடைய இந்திரன்; கெளதமன் பெண் கல்லாகிட - கெளதமருடைய மனைவி யாகிய அகலிகை தன் கணவனிட்ட சாபத்தால் கல்லாகிவிட பேதை யாள் தனை எண்ணி - அந்தப் பெண்ணை எண்ணிக்கொண்டு; அவ் விடை இருத்தல் ஒக்கும் - அந்தக்கல்லின்மேல் இருத்தலை ஒக்கும் (67-0) 27
FtTa

Page 26
で
18
42 நீலக் குறிஞ்சிதான் நெடிய கண்களாய்க்
கோல மாமணி குலவும் பூணதாய் ஆல மேகமே அழக பாரமாய்ப் பீலி யென்னுமப் பெண்நிற் பாளரோ.
( இ-ஸ்) நீலக்குறிஞ்சிதான் நெடிய கண்களாய் - நீல நிறமு டைய குறிஞ்சிப்பூ நீண்ட கண்களாகவும்; கோலமாமணி குலவும் பூண்தாய்-அழகு பொருந்திய மாணிக்கங்கள் பிரகாசிக்கும் ஆபர ணங்களாகவும்; ஆல மேகமே அழக பாரமாய்-கரியமேகம் கூந்தலா கவும்; பீலி என்னும் அப்பெண் நிற்பாள்-மலே என்னும் அந்தப் பெண் நிற்பாள், அரோ-அசை (எ-று) 28
வேறு 43 கரிமாவும் வயமாவுங் கடைகாத்து நிற்பப்
பரிமாவும் பல்லுகமும் பணிந்தேவல் செய்ய நரியாரும் மதிகூர்ந்த நல்லமைச்ச னக அரிமாதன் அணையேறி அரசோச்சுங் கானம்.
(இ-ள்) கரிமாவும் - யானையும்; வயமாவும் - புலியும்; கடை காத்துநிற்ப - வாயிலைக்காத்து நிற்க; பரிமாவும் - குதிரையும், பல் லுகமும் - கரடியும்; பணிந்து ஏவல் செய்ய - பணிவுடன் ஏவல்களைச் செய்ய; நரியாரும் மதிகூர்ந்த நல்லமைச்சனக - நரியானது புத்தி கூர்மையுள்ள நல்லமந்திரியாக; அரிமா - சிங்க இராசா தன் அணை ஏறி - தன் அரியாசனத்திலமர்ந்து: அரசோச்சும் கானம் - அரசாட்சி செய்யும் காடு கண்டு இன்புறத்தக்கது. (எ-று) 29
முல்லை நில வருணனை 44 கன்னெஞ்சர் மனம்போலக் கார் சூழ்ந்த காட்டில்
மின்வண்டு விளக்கேற்றி யிருளோட்டும் நேரம் தென்னென்றின் னிசைபாடத் தேன் வண்டு பச்சை வன்னங்கொள் மயிலாட மான்கன்று நோக்கும்.
(இ-ள்) கல்நெஞ்சர் மனம்போல - கல்போன்ற வலிய நெஞ்சை யுடையவரது மனம் இருண்டு இருத்தல் போல; கார்சூழ்ந்த காட்டில் - இருள் சூழ்ந்தகாட்டிலே; மின்வண்டு விளக்கேற்றி இருள் ஒட்டும் நேரம் - மின்மினிப் பூச்சியானது தனது ஒளியாகிய விளக்கை ஏற்றி இருளை ஓட்டச் செய்யும் நேரத்தில், தேன்வண்டு தென்என்று இன் னிசை பாட - தேன்வண்டானது தென் என்னும் ஒலியுடன் இனிய

i9
இசையைப் பாட பச்சை வன்னங்கொள் மயில் ஆட- பச்சை நிறத்தை கொண்ட மயில் ஆட, மான்கன்று நோக்கும் - மான்கன்று அவ்ஆடலை நோக்கி மகிழும் (எ-று) 3)
(வி-ம்) அரங்கம் - காடு; விளக்குகள்- மின்மினி பாணிசைப்பவர் - தேன்வண்டு; ஆடு பவ ர் - மயில்கள்; பார்ப்போர் - மான் கன்றுகள்.
45 கருங்காலி மரக்காட்டிற் கருநாக மூர்ந்து
வருங்கானப் புள்தம்மை வகையாக வெளவச் சிருங்காரச் சிகிப்போத்துச் சென்றதனைக் கொல்லப் பெருங்காகம் வல்லூறு பேருண்டி கொள்ளும்.
(இ-ள்) கருங்காலிமரக் காட்டில் கருநாகம் ஊர்ந்து-கருங்காலி மரங்கள் நெருங்கிய காட்டிலே கரிய நாகபாம்பு சென்று; வருங்கா னப் புள்தம்மை வகையாக வெளவ - அக்காட்டில் வருவனவாகிய காட்டுப்பறவைகளை வகையாகப் பிடிக்க; சிருங்காரச் சிகிப்போத்துஅலங்கர்ரமான ஆண்மயில், சென்று அதனைக் கொல்ல - சென்று அந்த நாகத்தைக் கொல்ல; பெருங்காகம், வ ல் லூ று. பேருண்டி கொள்ளும்-இறந்தநாகத்தை, பெரியகாகமும் வல்லூறும் பேருண்டி யாகக் கொள்ளும், (எ-று) 3.
48 கழைக்காம்பின் துளையூடு கால்செல்ல ஒசை
எழக்கண்டு களகண்டம் எதிராகக் கூவும் புழைக்கைம்மா செவியசைக்கப் பொலிசூட்டுச் சேவல் அழைப்பென்று பெடைக்கோழி அணிவந்து சேரும்.
(இ- ள்) கழைக்காம்பின் துளையூடு கால்செல்ல-மூங்கிற்கோலின், துளையின் ஊடாகக் காற்றுச்செல்லலும்; ஒசை எழக்கண்டு - இனிய ஓசை எழுதலைக்கண்டு; களகண்டம் எதிராகக் கூவும் - குயில் அவ் வோசைக்கு எதிராக மாறுபட்டுக் கூவும்; புழைக்கைம்மா செ வி ய சைக்க - உள்ளே துளையுள்ள கையினையுடைய யானை தனது செ வி களையசைக்க, பொலிசூட்டுச் சேவல் அழைப்பென்று-செவியசைத்த லால் எழுந்த ஒசையை, பொலிந்த உச்சிக் கொண்டையையு ைட ய சேவற்கோழி சிறகையடித்துத் தன்னை அழைக்கின்றதென்று எண்ணி; பெடைக்கோழி-பேட்டுக்கோழி; அணிவந்து சேரும்-சமீபமாக வந்து. Gob (ar-p) ö多

Page 27
20
47 கொல்லேற்றின் கொடுங்கோட்டைக் கோவிந்தர் பற்றி மல்லாடி மறங்காட்ட மால்கொண்டு மங்கை நல்லார்வந் தெதிர்கொண்டு நறுமாலை சூட்டிப் புல்லாநின்றவர்நோவைப் பூண்முலையாற் றீர்ப்பார்.
(இ - ள்) கொல்லேற்றின் கொடுங்கோட்டை-கொலைத்தொழிலைச் செய்யும் ஆண் எருதின் வளைந்த கொடியகொம்பை, கோவிந்தர் பற்றி -இடையர்குலக்காளைகள் பற்றி; மல்லாடி மறங்காட்ட - போராடித் தங்கள் வீரத்தைக் காட்ட, மங்கை நல்லார் மால்கொண்டு - இடைப் பெண்கள் அவ்வீர இடையரின்பால் மயக்கம் கொண்டு; வந்து எதிர் கொண்டு நறுமாலை சூட்டி - அவ்விளைஞர் முன்வந்து எதிர்கொண்டு வாசனை பொருந்திய மாலைகளை அவர்களுக்குச் சூட்டி புல்லா நின்று அவர் நோவைப் பூண்முலையால் தீர்ப்பார் - அவர்களைத் தழுவி அவர் மல்லர்டினமையால் உற்றநோவைத் தமது ஆபரணங்கள் அணிந்த முலைகளினுல் ஒத்தணம் கொடுத்துத் தீர்ப்பார் (எ-று) 3.
48 சேலாடு விழிமங்கை செங்காந்தட் கையாற்
பாலாடை பந்தாக்கிப் பலமாக வீசக் காலோடு பொருதோடிக் கைப்பற்றி யுண்டு வேலாடு மிளமைந்தர் விளையாட்ட யர்வார்.
(கி - ள்) சேலாடு விழிமங்கை - சேல்மீனைப்போலும் புரளும் கண்களையுடைய பெண்ணுனவள், செங்காந்தள் கையால் - த ன து செங்காந்தட் பூப்போன்ற கைகளினல்; பாலாடை பந்தாக்கிப் பல மாக வீச - பாலேட்டை பந்துபோல் திரட்டிப் பலமாக வீசி எறிய; காலோடு பொருதோடி - காற்றேடு போட்டியிட்டுப் போர் செய்து அதனினும் வேகமாக ஓடி கைப்பற்றி உண்டு - அந்தப்பாலேட்டு உண்டைகளைக் கைப்பற்றி உண்டு; வேலாடும் இளமைந்தர்-வேலைக் கையில் எடுத்துப் போராடும் இளமைந்தர்; (மிகமகிழ்வுட்னே) விளை யாட்டு அயர்வார் - (ஓடி, பற்றி, உண்டு) விளையாடல் செய்வார்கள். (எ கூறு) 34
49 காராதங் கன்றுன்னிக் கனைப்பச்சோர் பாலும்
ஊரார்தம் மில்தோறு முருக்கச்சோர் நெய்யும் வாராதோ விருந்தென்று வைத்தூற்றும் மோரும் ஆராத வமுதஞ்சே ராருகப் பாயும்.
(இ- ள்) காராதம் கன்று உன்னி கனைப்பச் சோர்பாலும் - எரு மைப்பசுக்கள் தங்கள் கன்றுகளை எண்ணிக் கனைக் க, தானே

2.
சொரிந்தபாலும்; ஊரார்தம் இல்தோறும் உருக்கச் சோர் நெய்யும் -ஊரவர் தங்கள் வீடுகள் தோறும் நெய்யை உருக்க வீழ்ந்த நெய் யும்; விருந்து வாராதோ என்று வைத்தூற்றும் மோரும் - விரு ந் தி னர் வாராரோ என்று வைத்திருந்து ஊற்றிய மோரும்; ஆராத அமு தஞ்சேர் ஆருகப் பாயும் -தெவிட்டாத அமுதங் கலந்த ஆரு கப் பாய்ந்து ஓடும். (எ-று) 35
மருதநில வருணனை வேறு
50 மடைதிறந் திழியும் நன்னீர்
மருதநீள் வயல்க டோறும் இடையரு தெங்கும் பாய
இணைவல பகடு பூட்டிப் படைதொடுத் துழுது மள்ளர்
பரம்படித் துரமுஞ் சிந்தக் கடைசியர் தெய்வ மேத்திக்
கழனியில் நடுவார் நாறு. (இ - ள்) மடைதிறந்து இழியும் நல்நீர் -நீரணையைத் திறந்துவிட வெளிப்பட்டு ஒடும் நல்ல தண்ணீர்; மருதநீள் வயல்கள் தோறும் இடையருது எங்கும்பாய-மருதநிலத்து நீண்ட வயல்கள் தோறும் இடையில்லாது எங்கணும் பாய்ந்து ஒட இணேவல பகடு பூட்டிசோடியாகிய வலுவுள்ள எருமைகளைப் பூட்டி, ப  ைட தொடுத் து உழுது மள்ளர் - உழவர் கலப்பையைச் செலுத்தி உழுது: பரம்படித்து உரமுஞ் சிந்த-நிலத்தைச் சமன்படுத்தி உரமுஞ் சிந்திவிட க  ைட சியர் - மருதநிலப்பெண்கள்; தெய்வம் ஏத்தி-தெய்வத்தை வணங்கி; கழனியில் நடுவார் நாறு-சேருன வயல்களில் முளைப் ப யி  ைர நடு வார்கள். (எ-று) 36
S. சேற்றினை யுழக்க மேதி
செம்புகர்த் தேரை பாய்ந்து
நாற்றினை நாட்டும் மாதர்
- நயனமீ தளறு சேர்க்கும்
ஆற்றலே மம்ம வென்ன
அலமருங் கவ்வை கேட்டுக்
கோற்கைகொண் டுழவர் கூடக்
குருகின மிரியல் செய்யும்.

Page 28
22
(இ - ள்) மேதி சேற்றினை உழக்க - எருமைகள் சேற்றினை உழக்கு தலால்; செம்புகர்த் தேரை பாய்ந்து - செம்புள்ளிகளையுடைய தேரைகள் சேற்றினின்றும் பாய்ந்து; நாற்றினை நாட்டும் மாதர் நயனம்மீது அளறு சேர்க்கும் - நாற்றுகளை நடும் கடைசியர்களின் கண்கள்மீது சேற்றைச் சேர்க்கும்; அம்ம ஆற்றலேம் என்ன அலமருங் கவ்வை கேட்டு - அம் மம்ம நாம் ஆற்றமாட்டோம் என்று சொல்லி அப்பெண்கள் துன்புறும் ஒலியைக் கேட்டு; கோல்கை கொண்டு உழவர் கூட - (அ ப் பெண் களுக்கு உதவவேண்டி) உழவர் கையிலே கோலை ஏந்திக்கொண்டு கூடுத லும்; குருகினம் இரியல் செய்யும் - அங்கு தங்கியிருந்த நீர்ப்பறவைகள் பயத்தினல் பறந்து போகும். (எ-று) 37
52 கயல்பிறழ் கழனி மண்டுங்
களைகருங் குவளை யாம்பல் கயல்விழி மாதர் நீக்கக்
களமரச் சும்மை கொண்டு வயலய லுய்ப்பார் மேதி
வயாவற வுண்டு துஞ்சும் வயலெலி தவளை பற்ற
வளையுநீர்க் கோத்தைப் பாம்பு. (இ ள்) கயல் பிறழ் களனி மண்டும் களை - கயல் மீன்கள் புடை பெயருகின்ற கழனியில் மிகுதியாகக் காணப்படும் களைகளான கருங் குவளை ஆம்பல்-கருங்குவளையையும் ஆம்பலையும்;கயல்விழி மாதர் நீக்க - கயல்மீனைப்போன்ற கண்களையுடைய பெண்கள் களைந்து அப்புறப் படுத்த, களமர் - உழுநர்; அச்சும்மை கொண்டு வயலயல் உய்ப்பார்அந்தக் களைச்சுமைகளைக் கொண்டு போய் வயற்புறத்தில் சேர்ப்பார் கள்; மேதிவயா அற உண்டு துஞ்சும் - எருமைகள் ஆசைதீர அக்களை களை உண்டு உறங்கும்; நீர்க்கோத்தைப் பாம்பு, வயல்எலி தவளைபற்ற வளையும் - வயலெலியையும், தவளையையும் பிடிக்க வளைந்து திரியும். (எ-று) 38 S3 செழிப்புற வளர்ந்து யர்ந்த
செந்நெலின் பசிய தாள்கள் வளிக்கலைப் புண்டு தம்முள்
வளைந்துமெய் தழுவல் ப்ச்சை நெளித்தசை நீர் வாழ் பாம்பு
நிமிர்ந்துநின் ருென்றை யொன்று களிப்பொடு காதல் செய்து
கலந்துற வாடல் போலும்,

23
(இ-ள்) செழிப்புற வளர்ந்து உயர்ந்த செந்நெலின் பசிய தாள் கள் - செழிப்பாக வளர்ந்து உயர் ந் த செந்நெல்லின் பசுமையான தண்டுகள்; வளிக்கு அலைப்புண்டு - காற்றுக்கு அலைப்புண்டு; வளைந்து தம்முள் மெய்தழுவல் - வளைந்து தம்முள் ஒன்றின் உடம்பை மற்றது தழுவுதல்; நெளிந்து அசை நீர்வாழ் பச்சைப்பாம்பு - நெளிந்து அசை கின்ற நீரில் வாழும் பச்சைநிறப்பாம்பு; நிமிர்ந்து நின்று ஒன்றை ஒன்று - வால் நிலத்தில் இருக்க தலையும் முன்பகுதியும் உயர நிமிர்ந்து நின்று ஒன்றினையொன்று; களிப்பொடு கா த ல் செய்து கலந்துறவாடல் போலும் - மகிழ்ச்சியுடன் காதல் புரிந்து கலந்து உறவாடல் போன்று இருக்கும். (எ-று) 39 54 கரும்பென வளர்ந்த செந்நெல்
கடகரி மறைக்க வல்ல; தருங்கதிர் தலைகள் சாய்த்துத் தமனிய மாலை போல்வ; விரும்பியம் மணிகள் கொள்ளும்
விதவிதப் பட்சி சாலம்; மருங்குறக் கவண்கொண் டோச்சும்
மழலைமென் மொழியார் மாதர்.
(இ-ள்) கரும்பென வளர்ந்த செந்நெல் -கரும்பு என்னும்படி செழித்து வளர்ந்த செந்நெல்லானவை; கடகரி மறைக்க வ ல் லமதம்பொருந்திய யானையைத் தம்முள்மறைக்கவல்லன; தருங் க தி ர் தலைகள் சாய்த்துத் தமனிய மாலை போல்வ - அந்நெற்பயிர் த ரும் நெற்கதிர்கள் பழுத்துத் தலைகளைச் சாய்த்துத் தொங்குதல், பொன் மாலைகளைப் போலத் தோன்றும்; விரும்பி அம்மணிகள் கொள் ஞ ம் வித வித பட்சி சாலம் - விரும்பி அந்த நென்மணிகளைக் கொள் ளும் விதம் விதமான பட்சிக் கூட்டங்கள்; மருங்குறக் கவண் கொண்டு ஒச்சும் மழலைமென் மொழியார் மாதர்-மணிகளைக் கொள்ளவரும் அப்பட்சிகளைக் கவண்கொண்டு ஒட்டுவார் மென்மையா ன ம ழ ஃல மொழி பேசும் பாதர். (எ-று) 40
55 முற்றிய கதிர்கள் தம்மை
முறையினிற் றெய்வம் போற்றிக் காற்றவன் கோன்மை வாழ்த்திக்
குலமகள் கற்பைப் பாடி எற்றுவர் கடைச்சி மாதர்
எஃகயிற் கூன்வாள் கொண்டு கற்றைகள் சுமந்து மள்ளர்
களத்தினிற் போர்கள் செய்வார்,

Page 29
24
(இ. ஸ்) கடைச்சிமாதர் - மருதநிலத்துப் பெண்கள்; முறையி னில் தெய்வம் போற்றி - முறையாகத் தெய்வத் தை வ ண ங் கித் துதித்து; கொற்றவன் கோன்மை வாழ்த்தி அரசனுகிய அசுவ பதி யின் இராசநீதி தவழுத ஆளுகையை வாழ்த்தி; குலமகள் கற் பைப் பாடி - குலமகளாகிய சாவித்திரியின் கற்பைப் பாடி எ ஃ கு அ யில் கூன்வாள் கொண் டு - உருக்கினலாய கூரிய வளைந்த அரிவாளைக் கொண்டு; முற்றிய கதிர்கள் தம்மை - முற்றிய நெற்கதிர்களை எற்று வர்-வெட்டுவர் மள்ளர் கற்றைகள் சுமந்து-உழவர் நெற்கற்றை களைச் சுமந்துகொண்டு சென்று; களத்தினிற் போர்கள் செய்வார்களமேட்டில் நெற்போர்கள் செய்வார்கள் (எ. நு) Ꮞ1
56 காற்றுள் பொழுது சூட்டைக்
களத்தினிற் பரப்பி மள்ளர் ஏற்றினை வளைப்பார்; கூட்டி
யெடுத்தபொங் கழியைக் காற்றில் தூற்றுவர் பதடி போக்கித்
துகளறு துப்பாம் நெல்லைப் போற்றிடுங் களத்துப் பிச்சை
போட்டபின் பொதிகள் செய்வார்.
(இ - ள்) காற்றுள பொழுது - காற்று வீசும்பொழுது; சூட்டைக் களத்தினிற் பரப்பி - நெற்குட்டைக் களமேட்டிலே பரப்பி; மள்ளர் ஏற்றினை வளைப்பர்-உழவர் எருதுகளை அச்சூட்டின்மேல் வளைப்பார் கள்; கூட்டி எடுத்த பொங்கழியைக் காற்றினில் தூற்றுவர்-கூட்டி அள்ளிய தூற்ருத நெல்லைக் காற்றினில் தூற்றுவார்கள்; பத gபோக்கி - பதரை அகற்றி; துகளறு துப்பாம் நெல்லை - தூசி நீக்கிய உண்வாகும் நெல்லை; போற்றிடும் களத்துப் பிச்சை போட்டபின் - மேலோரால் கடைப்பிடிக்கப்படும் களத்துப்பிச்சை போட்ட பின் பொதிகள் செய்வார் - பொதிகளாகக் கட்டுவார்கள். (எ-று) 4罗
57 நிரைநிரை செல்லும் வண்டி
நிறைவன நெல்லும் வையும்
குரவையுங் குழலும் பாட்டுங்
குணில்கிணை கொட்டு மார்ப்பும்
பரவையி னேதை யென்னப்
பரந்திடும் பாங்க ரெல்லாம்
வரையெனக் குவிப்பர் செந்நெல்
வளவர்தம் மில்லந் தோறும்,

25
(இ-ஸ்) நிரை நிரை செல்லும் வண்டி நிறைவன - நிரைநிரை யாகச் செல்லும் வண்டிகளில் நிறைந்து கிடப்பன: நெல்லும் வையும் -நெல்லும் வைக்கோலும்; குரவையும், குழலும், பாட்டும். குணில் கிணைகொட்டும் ஆர்ப்பும்-குரவைஒலியும், குழல் ஊ தும் ஒலி யும் பாட்டின் ஒலியும் குணிற்பறை, கிணைப்பறை கொட்டு பேரொலி யும்; பரவையின் ஒதையென்ன - கடலின் பேரொலி என்னும்படி, பாங்க ரெல்லாம் பரந்திடும் - வயற்பக்கங்களில் எங்கும் பரந்து கேட்கும்; வளவர்தம் இல்லந்தோறும் - வேளாளர் தங்கள் இல்லங்கள் தோறும்; செந்நெல் வரையெனக் குவிப்பர் - செந்நெல்லை மலைபோலக் குவிப் பார்கள். (எ-று) 4品
(வி-ம் ) குணில் - ஒருவகைப்பறை கிணை - மருதநிலப்பறை,
58 சிறுபெயற் போகந் தன்னிற்
செய்பயிர் எள்ளு முந்து
நறியநற் பயறு சோளம்
நல்லவேர்க் கடலை யாதி
முறைமுறை வித்திக் காத்து
முற்றிய பயிர்க டம்மை
அறுவடை செய்து தத்தம்
அகந்தொறுஞ் சேர்ப்பார் மள்ளர்
(இ-ள்) சிறுபெயல் போகந் தன்னில்-சிறுமழை பெய்யும் சிறு போகத்தில் செய்பயிர்-செய்யப்படும் பயிர்களாகிய, எள்ளு, உழுந்து நறியநற்பயறு, சோளம், நல்லவேர்க்கடலை; ஆதி - முதலான தானி யங்களை; முறை முறை வித்தி, காத்து - முறைப்படி வி ைத த் து. காத்து; முற்றிய பயிர்கள் தம்மை அறுவடை செய்து - முற் றிய மேற்காட்டிய பயிர்களை அவற்றுக்குரிய காலத்தில் அறுவடை செய்து; மள்ளர் தத்தம் அகந்தொறும் சேர்ப்பார் - மள்ளர்கள் தங்கள் தங் கள் வீடுகள் தோறும் சேர்ப்பார்கள். (எ-று) 44
SS இறைவரி யிறுத்துத் தெய்வந்
தென்புலத் தவர்கட் போற்றி மறையவர் துறந்தார் துவ்வார்
மனைவரு விருந்து பேணிக்

Page 30
26
குறைவறக் கிளைஞர்த் தாங்கிக்
கொள்கையுங் குணமு மோங்க நிறைவுடன் வாழ்வா ரந்த
நிறைவள நாட்டு மக்கள்.
(இ-ள்) அந்த நிறைவள நாட்டுமக்கள்-அந்த நிறைந்த வளங் களைக் கொண்ட மாத்திரநாட்டு மக்கள்; இறைவரி இறுத்து - அர சனுக்குக் கொடுக்கவேண்டிய வரிகளைச் செலுத்தி; தெய்வம் தென் புலத்தவர்கள் போற்றி-கடவுளுக்கும் பிதிர்களுக்கும் செய்யும் கடன் களைச் செய்து வணங்கி; மறையவர், துறந்தார், துவ்வார், மனை வரு விருந்து பேணி-அந்தண்ர், நீத்தோர், தரித்திரர், வீ டு தே டி வரும் விருந்தினர் ஆகியோரைப் பாதுகாத்து; குறைவறக்கிளைஞர்த் தாங்கி-குறைவின்றி உறவோரை ஆதரித்து; கொள்கையும் குணமும் ஓங்க - வேளாளருக்குரிய கொள்கைகளும் குணப்பண்பும் மேலோங்க; நிறைவுடன் வாழ்வார் - மனநிறைவாக வாழ்வார்கள். (எ-று) 45
60 ஓங்குசெங் கரும்பை மெல்லு
மொருத்தல்வா யொழுகுஞ் சாறும்
மாங்கனி கோதுங் கிள்ளை
மழலைவா யிழிந்த சாறுந்
துரங்குமுள் வருக்கை காகந்
துளைக்கவீழ் சுளையின் சாறுந்
தேங்கனி வாழைச் சாறுந்
தெருவெலா மளக்க ராக்கும்.
(இ-ன்) ஓங்கு செங்கரும்பை மெல்லும் ஒருத்தல் வாய் ஒழு கும் சாறும் - உயர்ந்து பருத்து வளர்ந்த செங்கரும்பைக் கறிக்கும் யானையின் வாயினின்று ஒழுகுகின்ற சாறும்; மாங்கனி கோ தும் கிள்ளை மழலைவாய் இழிந்த சாறும் - மாங்கனிகளைக் கோது கின்ற கிளியினுடைய மழலைப்பேச்சைப் பேசும் வாயினின்றும் இறங்கிய சாறும்; தூங்குமுள் வருக்க்ை காகம் துளைக்க வீழ் சுளையின் சாறும் -தூங்குகின்ற முட்களையுடைய பலாப்பழத்தைக் காகம் துளை க் க அதனின்றும் வீழும் சுளையின் சாறும்; தேங்கனி வாழைச் சாறும்தேன்போன்ற வாழைக்கனியின் சாறும்; தெருவெலாம் அளக்கராக் கும் -ஒன்றகச் சேர்ந்து தெருக்களையெல்லாம் சேருக்கும். (எ லு) 46

27
6 கரும்பினின் சாற்றைக் காய்ச்சிக்
கண்டுசர்க் கரையுஞ் செய்வர்ர்
பரும்பனைப் பதநீர் காய்ச்சிப்
பனங்கட்டி பாகஞ் செய்வார்
விரும்பிடுங் கித்திற் கள்ளில்
விளைவுறு வெல்லஞ் செய்வார்
குரும்பைசேர் தெங்கின் தேனிற்
குளமெனுங் கட்டி செய்வார்.
(இ- ள்) கரும்பின் இன் சாற்றைக் காய்ச்சிக் கண்டு சர்க்கரை 4ம் செய்வார்-(அந்நாட்டு மருதநில ஊரிலுள்ள மக்கள்) கரும்பின் இனிய சாற்றைக் காய்ச்சிக் கற்கண்டும் சர்க்கரையும் செய்வார்கள் பரும்பனைப் பதநீர் காய்ச்சிப் பனங்கட்டி பாகஞ் செய் வார்பருத்த பனையின் பதநீரைக் காய்ச்சிப் பனங்கட்டியைப் பதமாகச் செய் வார்கள்; விரும்பிடுங் கித்திற் கள்ளில் விழைவுறு வெல்லம் செய்வார் -விரும்புகின்ற கூந்தற்பனையின் கள்ளில் (மக்கள்) ஆசையுறும் வெல் லம் (க்ருப்பட்டி) செய்வார்கள்; குரும்பைசேர் தெங்கின் தே னில் குளம் எனுங் கட்டி செய்வார் - குரும்பைகளையுடைய தெ ங் கி ன் தேனில் குளம் என்று சொல்லப்படும் கட்டி செய்வார்கள். (எ-று) (வி - ம்) தெங்கின்தேன் - தென்னங்கள்ளிற்கு சுண்ணும்பு பேரிட்டு கருப்பநீராக்கி அதைக் காய்ச்ச வரும் இனிய பாணி, குளம் - வெல் லம். (எ-று) 鲨7
62 எள்ளினை விளக்கி யாட்டி
எண்ணெய்பிண் ணுக்குக் கொள்வார்
வெள்ளிய தயிர்க டைந்து
வெண்ணெயும் மோருங் கொள்வார்
கள்ளுமிழ் பாளைத் தெங்கின்
காய்தரு மின்நெய் கொள்வார்
அள்ளிலை வேம்பின் வித்தை
ஆட்டிநெய் மருந்தாக் கொள்வார்.
(இ - ள்) எள்ளினை விளக்கி ஆட்டி எண்ணெய் பிண் ணு க்கு கொள்வார்; வெள்ளியதயிர் கடைந்து - வெண்மையான தயி ைர க் கடைந்து; வெண்ணெயும் மோருங் கொள்வார்; கள்ளுமிழ் பாளைத் தெங்கின் காய்தரும் இன்நெய் கொள்வார் - கள்ளை உமிழ்கின்ற பாளை களையுடைய தென்னையின் காய்கள் தரும் இனிய நெய்யைக் கொள்

Page 31
28.
வார்கள்; அள்ளிலை வேம்பின் வித்தை ஆட்டி நெய்மருந்தாக் கெர்ள் வார்-நெருக்கமான இலைகளையுடைய வேம்பின் விதையை செக்கில் இட்டு ஆட்டிப் பெறும் நெய்யை (வேப்பம் நெய்யை) மருந் தாக க் கொள்வர்ர்கள் (எ -று) \, A 8
63 ஆலய மணியி னேசை
அணிமுழ வதிரு மார்ப்பு
ஆலைபா யமலை யெண்ணெய்
ஆட்டுவார் செக்கி னேதை
காலையிற் கழனி தன்னிற்
களமரே றுரப்பு பூசல்
மாலைவாய் முரசின் விம்மல்
மயங்குமே மாறி நின்று.
(இ-ள்) ஆலயமணியின் ஒசை - ஆலயங்களில் அடிக்கும் மணி கிளின் ஓசையும்; அணிமுழவு அதிரும் ஆர்ப்பு - வரிசைய்ாக வைக் கப்பட்ட அழகிய முழவு ஒலிக்கும் பேரெர்லியும்; ஆலைபாய் அமல் -கரும்பாலையில் கருப்பஞ்சாறு பாய்கின்ற ஒலியும்; எண்ண்ெய் ஆட் டுவார் செக்கின் ஒதை-எண்ணெய் ஆட்டுபவர்களின் செக்கின் கண் இருந்துவரும் ஒலியும்; காலையிற் கழனிதன்னிற் களமர் ஏறு உரப்பு பூசல்-காலைப்பொழுதில் கழனிகளிலே உழுநர் எருத்தை உரப்புகின்ற பேரொலியும்; மாலைவாய் முரசின் விம்மல்-அரசன் மனையில் அடிக் கப்படும் முரசின் ஒலியும்; மாறிநின்று மயங்கும் - ஒன்ருேடொன்று மாறிநின்று கலந்தொலிக்கும். (எ-று) 49
64 கனங்குழை மாதர் காந்தட்
கையினுற் கருந்தோல் நீக்கிப் பனம்பழக் களிபி சைந்து
பாயினிற் பணுட்டு நீவ நனந்தலை சுலாவிக் காக்கை
நறுங்களி கவர நல்லார் சினந்தெறி களியிற் ருேய்ந்து
செம்புகப் புள்ளை யொக்கும்.
(இ- ள்) கணங்குழை மாதர் - கனவிய குழையை அணிந்த மா தர்; காந்தள் கையினல் - காந்தட் பூப்போன்ற கையினுல்; கருந் தோல் நீக்கி - பனம் பழத்தின் கரிய தோலை நீக்கி, பனம் பழக் களி பிசைந்து - பனங்களியுைப் பிசைந்து எடுத்து; பாயினிற் பணுட்டு

2势
நீவ - பா யி னில் பனட்டாகப் பரவிப் பூச; காக்கை நனந்தலை சுலாவி - காகம் அகன்ற இடத்தைச் சுற்றி வந்து நறுங்களி கவர - நறிய பனங்களியைக் கவர்ந்து செல்ல; நல்லார் சி னந்து எ றி களியில் தோய்ந்து - அப்பெண்கள் கோபித்து எறியும் பனங்களியில் தோய்ந்து; செம்புகப் புள்ளை ஒக்கும் - சிவந்த நிறத்தைப் பெற்று செம்போத்துப் பறவையை ஒத்து இருக்கும் (எ-று) 50
CS பூகமென் பாளை வீழ்ந்து
பொலிவன பவளம் ஓங்கு சேகரங் காற்றுக் காடிச்
சிந்துவ மரக தங்கள் நாகிளங் குலிகம் பூத்து
நகுவன நளிர்வெண் முத்தம் காக மின் புற்றுண் நாவற்
கனிகள மணிக ளொக்கும்.
(இ ள்) பூகமென் பாளை வீழ்ந்து பொலிவன பவளம் ஒக்கும் - கமுகினுடைய மென்மையான பாளையினின்று வீழ்ந்து பொலிவனவா கிய சிவந்த பழப் பாக்குகள் பவளத்தை ஒக்கும்; ஒங் கு சேகரம் காற்றுக்கு ஆடி சிந்துவ மரகதங்கள் ஒக்கும் - ஓங்கி வளர்ந்த மாம ரங்கள் காற்றுக்கு ஆடிச் சிந்துவனவாகிய மாங்காய்கள் பசிய நிறமுள்ள மரகதங்களை ஒக்கும்; நாகிளம் குலிகம் பூத்து நகுவன நளிர் வெண் ۔۔۔۔۔ முத்தம் ஒக்கும் - இளமரமாகிய இருப்பை பூத்து மலர்ந்து சிரிப்பன் குளிர்ந்த வெண்நிறமான முத்துக்களை ஒக்கும். (வெள்ளை நிற்ப் பூ) : காகம் இன்புற்றுண் நாவற்கனி களமணிகள் ஒக்கும் - காகங்கள் இன் புற்று உண்ணும் நாவற்கனிகள் கருநீல மணிகளை ஒக்கும். (எ-று) 51
66 கள்ளிமிழ் காவி யாம்பல்
கமலமென் போது நாறுந்
தெள்ளிய கயத்து நீரிற்
தெரிவையர் நீந்தி யாட
ஒள்ளிழைக் கலாபஞ் சிந்தும்
ஒளிர்மணிக் குப்பை யெல்லாம்
வெள்ளிகள் நீல வானில்
விளங்குவ போலு மன்றே.

Page 32
36
(இ- ள்) கள் இமிழ் - தேனைக் கொப்பளிக்கும்; காவி - கருங் குவளையும்; ஆம்பல் - ஆம்பல் மலரும்; மென் கமலப் போதும்-மென் மையான தாமரைப் போதும்; நாறும்-வாசனை கமழும்; தெள்ளிய கயத்து நீரில்- தெளிந்த குளத்து நீரில்; தெரிவையர் நீந்தி ஆட- பெண் கள் நீந்தி விளையாட ஒள் இழை கலாபம் சிந்தும் - ஒளி பொருந்திய மணிகள் பதிக்கப்பட்ட சரமணிக் கோவையினின்றும் சிந்துகின்ற; ஒளிர் மணிக் குப்பை எல்லாம் . பிரகாசமுடைய மணிகளின் கூட்டமெல்லாம்; நீலவானில் வெள்ளிகள் விளங்குவ போலும் - நீலவானத்தில் நட்சத் திரங்கள் விளங்குதல் போலும். அன்றும் ஏயும்-அசை. (எ-று) 52
67 கெண்டைகள் பிறழ்ந்து பாய்ந்து
கெம்பளித் தாடல் செய்யத்
தண்புனற் றடாகந் துன்றுந்
தாமரை யிலைகள் மீது
தெண்டிரள் தெறித்த நன்னீர்
திகழ்வது மரக தஞ்செய்
மண்டலத் தட்டிற் பெய்த
மணிகிளர் வயிர மொக்கும்.
(இ - ள்) கெண்டைகள் பிறழ்ந்து பாய்ந்து கெம்பளித்து ஆடல் செய்ய - கயல் மீன்கள் திரும்பித் துள்ளி, பாய்ந்து, களித்து விளையா டல் செய்ய, தண்புனல் தடாகம் துன்றும் தாமரை இலைகள் மீதுகுளிர்ந்த நீரையுடைய தடாகத்தில் நெருங்கி விளங்கும் தாமரை இலை களின் மேல்; தெறித்த நன்னீர் தெண்திரள் திகழ்வது-தெறித்ததாகிய தெளிந்த நல்ல நீர்த் திரள்கள் பிரகாசிப்பது; மரகதஞ் செய் மண்டலத் தட்டில் பெய்த மணிகிளர் வயிரம் ஒக்கும் - மரகதத்தினற் செய்யப் பட்ட வட்டமான தட்டினிலே பெய்யப்பட்ட ஒளி மிக்க வயிர இரத் தினங்களை ஒக்கும்; (6T-1) 53
68 பாசடை கலந்த பொய்கைப்
பங்கய மலர்க ளெல்லாந்
தேசுடைத் தீப மொக்குந்
தெளிந்தநற் றேனை யுண்டு
மூசுவண் டினம்மேற் செல்லல்
மொய்த்தெழு புகையை யொக்கும்
பூசனை செய்வா ரொக்கும்
போதிடைப் பொலியு மன்னம்.

31
(இ- ள்) பாசடை கலந்த பொய்கை-பசிய இலைகள் அடர்ந்த பொய்கையிலே விளங்கும்; பங்கய மலர்களெல்லாம்-தாமரைப் பூக்க ளெல்லாம்; தேசஉடைத் தீபம் ஒக்கும் - ஒளிக்கர்ங்கையையுடைய தீபத்தை ஒக்கும்; தெளிந்த நல் தேனை உண்டு - அம்மலர்களிலேயுள்ள தெளிந்த நல்ல தேனை உண்டு; மூசு வண்டினம் மேற்செல்லல்-மொய்க் கும் வண்டினங்கள் மேலே எழுந்து செல்லுதல்; மொய்த்துஎழு புகையை ஒக்கும்-அத் தீபத்தில்நின்று சூழ்ந்து நெருங்கி எழுகின்ற புகையை ஒக்கும்; போது இடைப் பொலியும் அன்னம் - அந்த மலர்களிடையே பொலியும் அன்னப் பறவைகள் பூசனை செய்வார் ஒக்கும் - தீபங்காட்டி ஆராதனை செய்வாரை ஒக்கும். (arー』l) 54
69 மாதவர் வேள்வி செய்யும்
மணங்கமழ் தூமம் ஓங்கி மாதிர மெங்கும் மேவ
மஞ்ஞைகள் காரென் றெண்ணித் தாதவிழ் பூக்கள் மல்குந்
தண்டலை நாப்பண் நின்றே ஏதமார் தோகை காட்டி
யெதிரெழில் நடன மாடும்.
(இ- ள்) மாதவர் வேள்வி செய்யும் மணங்கமழ் தூமம் ஓங்கி-முனி வர்கள் வேள்வி செய்யும்போது எழுகின்ற மணம் பரப்பும் புகையானது உயர்ந்து; மாதிரம் எங்கும் மேவ - ஆகாயத்தில் எங்கும் பொருந்த: மஞ்ஞைகள் காரென்றெண்ணி - மயில்கள் அதை நீர்மேகம் என்று எண்ணி; தாது.அவிழ் பூக்கள் மல்கும் தண்டலை நாப்பண் நின்று - பூந்தாது கட்டவிழும் பூக்கள் நிறைந்திருக்கும் சோலையின் நடு வில் நின்று; ஏதமார் தோகை காட்டி-பலவர்ணம் நிறைந்த தோ  ைக யைக் காட்டி எதிர் எழில் நடனம் ஆடும்-எதிர் எதிராக நின்று அழகிய நடனமாடும். (எ று) 55
70 ஊர்தொறும் அன்னசாலை
உண்பவர்க் கமுத மூட்டும்
நீரொடு சர்றும் மோரும்
நிழல்தரு பந்தர் நீட்டும்
சூர்தரு பிணிகள் போக்கிச்
சுகந்தரும் மருந்துச் சாலை
பேரருள் கூட்டி வைக்கும்
பெட்புறு மடால யங்கள்.

Page 33
32.
(இ - ள்) ஊர்தொறும் அன்னசாலை உண்பவர்க்கு அமுதம் ஊட்டும் - ஊர்கள்தோறுமுள்ள அன்னசத்திரங்கள் அங்கு சென்று உணவு உண்பவர்களுக்கு அமுதுபோன்ற உணவை ஊட்டும்; நீரொடு சாறும் மோரும் நிழல்தரு பந்தர் நீட்டும் - நீரும், பழரசமும், ம்ோரும் நிழலைத்தருகின்ற பந்தர்கள் (தண்ணீர்ப்பந்தர்கள்) ஈயும்; மருந்துச்சாலை சூர்தரு பிணிகள் போக்கிச் சுகந்தரும் -மருந்துச்சாலை கள் துன்பத்தைத் தருகின்ற பிணிகளைப் போக்கிச் சுகத்தைத் தரும்; பெட்புறு மடாலயங்கள் பேரருள் கூட்டி வைக்கும் - பெருமையுறும் மடாலயங்கள் பெரிய திருவருளைக் கூட்டி வைக்கும் (எ . று) 56
ஊர்தொறும் என்று ஒவ்வொரு அடிக்கும் கூட்டிக் கொள்க,
7 கோல்நெறி கோடி டாத
கொற்றவ னட்சி யாலும் நூல்நெறி வழுவா மக்கள்
நுண்ணறி வுண்மை யாலும் மால்நெறி மனத்துங் கொள்ளா
மங்கையர் மாண்பி ஞலுங் கால்நெறி கடந்த மேலாங்
கற்பக நாட்டை விஞ்சும்.
(இ-ள்) கோல்நெறி கேர்டிடாத கொற்றவன் ஆட்சியாலும்செங்கோல்நெறி தப்பாத அசுவபதி மன்னனின் அரசாட்சியாலும்; நூல்நெறி வழுவா மக்கள் நுண்ணறிவு உண்மையாலும் - அறநூல் வழி வழுவாத மக்களிடம் நுண்ணறிவுள்ளதாலும்; மால்நெறி மனத் துங் கொள்ளா மங்கையர் மாண்பினலும் - மயக்கத்தால் ஏற்படும் கூடாஒழுக்கத்தை மனத்திலும் கொள்ளாத மங்கையரின் கற்பெர்ழுக்க மாண்பினலும் கால்நெறி கடந்த மேலாம் கற்பக நாட்டை விஞ்சும் - அந்த மாத்திரநாடு, காற்று மண்டலத்திற்கப்பாற் பட்ட மேலாகிய வானுலகத்தைவிட மேலானதாகும். (எ-று) 57

(i) நகரச் சிறப்பு
வேறு.
72 அந்தநன் னுட்டினுக் காவி யன்னது
சுந்தர புரியதன் சொக்கஞ் சொல்லொணு திந்திர புரியது மிணைய லாதெனின் அந்தநன் னகரணி அறைதற் பாலதோ.
(இ- ள்) அந்த நன்ஞட்டினுக்கு ஆவி அன்னது சுந்தரபுரி அந்த நல்ல மாத்திர நாட்டினுக்கு உயிர்போன்றது சுந்தரபுரி என்னும் நகரம்; அதன் சொக்கம் சொல்லொணுது-அதன் அழகும் சிறப்பும் சொல்ல இயலாது; இந்திர புரியதும் இணை அலாது எனின்-இந்திரபுரியும் அந்த நகரத்திற்கு இணையாகாதெனின் அந்த நன்னகரணி அறைதற்பாலதோ -அந்த நல்ல நகரத்தின் அழகும் பெருமையும் சொல்ல முடியுமோ? (6t-g) 58
78 நல்வள நாடதன் நாப்பண் உள்ளது
செல்வமுஞ் சீர்களுஞ் சிறப்பும் மிக்கது கல்வியுங் கேள்வியுங் கலையுங் கொண்டது அல்லவ ரஞ்சுறும் அரணஞ் சான்றது. (இ- ள்) நல்வள நாடதன் நாப்பண் உள்ளது-அந்தச் சுந்தரபுரி, நல்ல வளமுள்ள மாத்திர நாட்டின் நடுவே உள்ளது. செல்வமும் சீர்க ளும் சிறப்பும் மிக்கது; கல்வியும், கேள்வியும், கலை யும் கொண்டது; கல்வி கேள்வி கலை ஞானங்களை உடையது; அல்லவர் அஞ்சுறும் அரணம் சான்றது - அந்நாட்டவரல்லாத பிறர் அச்சப்படும் படியான அரண் அமைந்தது. (எ-று) 59
(விணம்) அல்லவர்-நட்பில்லாதவர் எனினும் ஆம். அரணம்
காவல், கோட்டை, மதில், அரண்.
மதில் 74 நகரினை யரண்செயும் நாஞ்சில் நீண்மதில்
சிகரியின் தொடரெனச் செறிந்து சூழ்ந்திடும் முகடுறு பலபொறி முடுக்கின் மேவலர்
பகடொடு பரிபடை பாறச் செய்வன. Frt

Page 34
34
(இ - ள்) நகரினை அரண்செயும் நாஞ்சில் நீண்மதில் - இரர்ச மாநகரத்தைக் காவல் செய்யும் நாஞ்சிலைக்கொண்ட நீண்ட மதில்; சிகரியின் தொடரெனச் செறிந்து சூழ்ந்திடும் - மலைத் தொடரெனும்படி செறிந்து நெருங்கிச் சூழ்ந்திருக்கும்; முகடுறு பலபொறி - மதில் உச்சியில் உள்ள பலவகையான இயந்திரங்கள்; முடுக்கின் - முடுக்கிவிட்டால்; மேவலர்- பகைவரின் பகடொடு பரி படை பாறச் செய்வன -யானை, குதிரை, தானை ஆகியவற்றை அழியச் செய்வனவாகும். (எ-று) 60
75 எழுகணை எறிசிரல் எஃகம் வேல்எறுழ்
கொழுகுணில் கோல்வளை குந்தம் வாள்கதை கழுகவண் தாமணி கணையம் கப்பணம் மழுஎனப் பலபடை மதின்மேல் விஞ்சுவ,
(இ- ள்) எழு-வளைதடி (மதிற் படை), கணை - பாண்ம் எறி சிரல்-மதிற்படை எஃகம்-ஈட்டி, சூலம்; வேல்; எறுழ் - தண்டு; கொழு - மதிற்படை குணில் - கவண், குறுந்தடி கோல் வளை குந்தம் - க்ைவேல்; வாள்; கதை; கழு-சூலம்: கவண் - கயிற்றினல் கல்வீசும் கருவி; தாமணி-வடம்; கணையம் -தண்டாயுதம், கப்பணம்இருப்பு நெருஞ்சி முள்; மழு-கோடரி எனப் பலபடை மதில்மேல் விஞ் சுவ - என பலவகையான படைக்கலங்கள் மதில் மேலே மிகுதியாகப்
பொருந்தி இருந்தன: (எ-று) 61
76 விதியினிற் குயிற்றிய விண் சேர் மூவெயில்
அதிவிசை கொல்படை அகத்துட் கொண்டவால் மதிலவை மீச்செலல் மாளா தென்றுமக் கதிரவன் பரிமிசை கடந்து செல்வனே.
(இ- ள்) விதியினிற் குயிற்றிய விண்சேர் மூவெயில் - விதிப்படி அழகுறச் செய்த ஆகாயத்தை அளாவும் புறமதில், இடைமதில், உள் மதில் ஆகிய மூன்று மதில்களும்; அதிவிசை கொல்படை அகத்துள் கொண்டவால் - அதிவிரைவாகக் கொல்லக்கூடிய படைகளை தம் அகத்துட் கொண்டனவாகலால்; மதிலவை மீச்செலல் மாளாதென்று -அந்த மதில்களின் மேற்போதல் இயலாது என்று; அக்கதிரவன் பரிமிசை கடந்து செல்வனே - அந்தக்கதிரவன் குதி ரை யி ன் மீது அமர்ந்து கடந்து செல்வான். ஆல்-அசை; ஏ-ஈற்றசை (எ-று) 62

35
மதிலைக் காவல் செய்தல்
77 எரிதவழ் சுடர்விடும் எண்ணெய்ப் பந்தமும்
வரிசிலை கல்கவண் வாட்கை யேந்திய கரிநிகர் வயவர்கள் கங்குற் போதெலாம் புரிசையைக் கண்ணெனப் போற்றிக் காப்பரால்.
(இ- ள்) எரிதவழ் சுடர்விடும் எண்ணெய்ப் பந்தமும் - தீயைப் பரப்பி ஒளிச்சுடரைக்காலும் எண்ணெய்ப்பந்தங்களையும்; வரிசிலை, கல், கவண், வாள் கைஏந்திய கரிநிகர் வயவர்கள் - வரிந்து கட்டப் பட்ட வில்லையும் கல் கவண் வாள் ஆகியவற்றையும் கையில் ஏந்திய யானையை ஒத்த வலிய பெரிய கரிய உருவமுடைய ப  ைட வீரர்; கங்குற் போது எலாம் --இரவுநேரமெல்லாம்; புரிசையை - மதில்களை கண்எனப் போற்றிக்காப்பர்-கண்ணை இமை காப்பது போல ப்
பாதுகாத்துக் காவல் செய்வார்கள். ஆல் - ஈற்றசை (எ-று) 63
அகழி
78 புறமதில் சூழ்ந்திடும் புணரி யென்னலாம்
நிறைபுன லகழியில் நிறைந்து காண்பன பொறிகளுந் தூண்டிலும் போழ்ந்த வாயுடைப் பிறையெயிற் றிடங்கரும் பெரிய பாம்புமே.
(இ- ள்) புறமதில் சூழ்ந்திடும் புணரி என்னலாம் நிறைபுனல் அகழியில் - புறமதிலைச் சூழ்ந்து இருக்கும் கடலென்று சொல்லத்தக்க நீர்நிறைந்த அகழியில்; நிறைந்து காண்பன - நிறைவாகக் காணப் படுவன பொறிகளும்-இயந்திரப்பொறிகளும்; தூண்டிலும் -தூ ண் டில்களும்; போழ்ந்த வாயுடைப் பிறை எயிற்று இடங்கரும் - பிளந்த வாயையும் பிறைபோன்று வளைந்து கூரான பற் களை யும் உடைய முதலைகளும்; பெரிய பாம்புமே- பெரிய பாம்புகளுமேயாம், (67-pi) 64
தொங்குபாலம்
79 தோரண வாய்தலிற் ருெங்கு பாலத்தைக்
கூரயி லேந்துசெங் குந்தர் காத்திட நேரினிற் ருழ்த்தவும் நெடிது தூக்கவும் பாரிய சுழல்பொறி பாங்க ருள்ளதாம்.

Page 35
36
(இ - ள்) தோரண வாய்தலில் - சித்திர கேர்புர வாயிலில் இருக் கும்; தொங்கு பாலத்தை - தொங்குகின்ற பாலத்தை; கூர் அயில் ஏந்து செங்குந்தர் காத்திட - கூர்மையான கைவேலை ஏந்திய செங் குந்தர் காத்து நிற்ப; நேரினில் தாழ்த்தவும் நெடிது தூக்கவும்” அப் பாலத்தை நேராகத் தாழ்த்திவிடவும், நெடிது தூக்கிவிடவும்; பாரிய சுழல்பொறி-பருத்த சுழலும் இயந்திரம்; பாங்கர் உள்ளது - அ ப் பாலத்தின் பக்கத்தில் உள்ளது. (எ-று) ஆம் - அசை 65
(வி- ம்) செங்குந்தர் - கையில் வேலையுடையவர்; கைக்கோளர்.
கோபுரம்
80 கண்ணினைக் கவர்கவின் காட்சித் தாகியும்
விண்ணினை யணவியும் விளங்கு கோபுரத் தெண்ணில நிலைகளு மெழிலார் சிற்பமும் பண்ணவர் நாடுசெல் படிகள் போல்வன.
(இ- ள்) கண்ணினைக் கவர் கவின் காட்சித்து ஆகியும் - கண் களைக் கவரும் அழகிய காட்சியை உடையதாகியும்; விண்ணினை அண வியும் -ஆகாயத்தைக் கிட்டியும்; விளங்கு கோபுரத்து- விளங்குகின்ற கோபுரத்தின், எண்ணில நிலைகளும்-எண்ணமுடியாத அநேக நிலைக ளும்; எழில் ஆர் சிற்பமும் - அழகு நிறைந்த சிற்பங்களும்; பண்ண வர் நாடுசெல் படிகள் போல்வன. வானவர் நாட்டிற்குச் செல்லும் படிகளை நிகர்த்து அழகு செய்வனவாகும் (எ-று) 66 விே-ம்) அணவுதல் - கிட்டல், அணுகுதல்; பண்ணவர்-தேவர்.
81 செம்பொனிற் செதுக்கிய சிகரச் குடிகை
கும்பமொக் கும்மதன் குடுமி மாமணி எம்பரும் எழிலொளி எல்லில் வீசுதல் உம்பர்தம் நாட்டினுக் குய்க்கும் தீபம்போன்ம். (இ-ள்) செம்பொனில் செதுக்கிய சிகரச் சூடிகை -செம்பொன் னிற் செதுக்கப்பட்ட சிகரத்திலமைந்த முடியானது; கும்பம் ஒக்கும் - கும்பத்தை ஒக்கும்; அதன் குடுமிமாமணி - அதன் குடுமியிலுள்ள பெரிய மாணிக்கமணி, எம்பரும்-எவ்விடத்தும்; எழில் ஒளிஎல்லில் வீசுதல்-அழகிய ஒளியை இராப்பொழுதில் வீசுதல்; உம்ப்ர்தம் நாட்டினுக்கு - தேவலோகத்திற்கு உய்க்கும் தீபம் போன்ம்-கொண்டு போகும் வழியைக் காட்டும் கலங்கரை விளக்கம் போல்வது. (எ-று) 67 (வி-ம்) ஒக்கும் மதன் - என்பதில் சீர்நோக்கி 'ம்' மிகுந்தது
எல் - இரவு -

37
நான்கு திக்கிலுங் காவற் தெய்வங்கள்
82 திக்கு நான்குள தேவ கோயிலில்
முக்கண் ஈசனும் மூத்த பிள்ளையும் அக்கம் மூன்றுடை யம்மை சூலியுங் குக்கல் ஊர்தியுங் கோயில் கொள்வரே.
(இகள்) திக்கு நான்குள தேவ கோயிலில் - நான்கு திக்குகளிலு முள்ள கோயில்களில்; முக்கண் ஈசனும் - சோம, சூரிய, அக் கி னி ஆகிய மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமானும், மூத்த பிள்ளை யும்-விநாயகரும்; அக்கம் மூன்றுடை அம்மை சூலியும்-மூன்று திருக் கண்களையுடைய காளியம்மையும்; குக்கல் ஊர்தியும்-வேதமாகிய நாயை ஊர்தியாகவுடைய வயிரவரும்; கோயில் கொள் வர் - கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பார். ஏ. ஈற்றிசை (எ-று) 68
பூசை நியமம்
83 அத்திருக் கோயிலில் ஆக மப்படி
நித்திய பூசைகள் நியம மாகவே பத்தியொ டாற்றிடப் பலவாம் மானியம் மத்திர நாடுடை மன்னன் தந்தனன்.
(இ- ள்) அத்திருக்கோயிலில் அந்தத் திருக்கோயில்களில்; ஆகமப் படி நித்திய பூசைகள், நியமமாகவே - ஒழுங்காகவே பத்தியொடு ஆற்றிட-பத்தியொடு செய்ய; பலவாம் மானியம் -பலவாகிய மானிய நியமங்களை; மத்திர நாடுடை மன்னன் தந்தனன் - மாத்திர நாட் டின் அரசாட்சியையுடைய அசுவபதி மன்னன் நியமித்தனன். (எ-று) 69
84 இஞ்சி சூழ்வதி ராச மாநகர்
மஞ்சு சூழ்வது மாட மாளிகை பஞ்சு சூழ்வது பாவை மாரடி நஞ்சு சூழ்வது நங்கை மார்விழி.
(இ- ள்) இராசமாநகர் இஞ்சி சூழ்வது - இராசமா நகரத்தை மதில்கள் சூழ்ந்திருக்கும்; மாடமாளிகை மஞ்சு சூழ்வது மாடமாளிகை களைச் சூழ்வன மேகங்கள்; பாவை மாரடி பஞ்சு சூழ்வது- பெண்களின் அடிகளைச் சூழ்வது - செம்பஞ்சுக்குழம்பு, நங்கைமார்விழி சூழ்வது - பெண்களின் கண்களில் சூழ் வ து; நஞ்சு - நஞ்சுபோன்று கொல்லுந் தன்மையையுடைய பார்வை (எ-று) 70

Page 36
38
வேறு
அரச மாளிகை 85
மாடி மீது மாடி வைத்த மன்னன் வைகும் மாளிகை கோடி செம்பொன் ஒடு கொண்டு கூரை முற்றும் வேய்ந்தது மோடு மின்னும் மாணிக் கஞ்செய் முண்ட கம்போற் கூர்முடி பாடு பாற்ப விங்குக் கற்கள் பத்தி வைத்த பித்திகை.
(இ-ள்) மாடிமீது மாடிவைத்த மன்னன் வைகும் மாளிகை - ஒன்றின்மேல் ஒன்ருகப் பல மாடிகள் வைக்கப்பட்ட அரசன் வாழும் மாளிகை, கோடி செம்பொன் ஒடுகொண்டு கூரை முற்றும் வேய்ந்தது - ஒரு கோடி செம்பொன்னுற் செய்யப்பட்ட ஒடுகளைக் கொண்டு அதன் கூரை முற்றும் வேயப்பட்டது; மோடு - அதன் முகட்டில்; மாணிக்கஞ் செய் முண்டகம் போற் கூர்முடி மின்னும் - மாணிக்கத்தால் செய்யப் பட்ட தாமரை மொட்டுப் போன்ற கூர்மையுள்ள முடியானது மின்ன நிற்கும்; பித்திகை பாடு-அதன் சுவர்களின் பக்கங்கள்; பால் பளிங்குக் கற்கள் பத்தி வைத்த - பால்போன்ற வெள்ளைப் பளிங் குக் கற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளனவாகும். (எ-று) 71
86
பத்து நூறு தூண்கள் ஆரம் பத்தி யாக நட்டவை வைத்த உச்சிப் போதி கைகள் வச்சி ரத்தா லானவை உத்தி ரங்கள் ஊசிக் காலு லோகம் வெள்ளி செய்தவை கைத்த லங்கள் காரி ரும்பு காணம் பூசப் பட்டவே,
(இ- ள்) பத்து நூறு தூண்கள் - ஆயிரம் தூண்கள் ஆரம் பத்தி யாக நட்டவை - சந்தன மரங்களைச் செதுக்கி வரிசையாக நடப்பட்ட வையாகும்; வைத்த உச்சிப் போதிகைகள் - அத்தூண்களின் மே ல் வைக்கப்பட்ட சுமையடைக்கட்டைகள்; வச்சிரத்தால் ஆனவை-வயி ரத்தால் ஆனவையாகும்; உத்திரங்கள், ஊசிக்கால் - விட்டங்களும் , ஊசிக்கால்களும், வெள்ளி உலோகம் செய்தவை - வெள்ளி உலோகத் தாற் செய்யப்பட்டவையாகும்; கைத்தலங்கள்-கைமரங்கள்; கார் இரும்பு காணம் பூசப்பட்டவே - கரிய இரும்பினுல் செய்யப்பட்டு பொன்முலாம் பூசப்பட்டவையாகும். (எ-று) 72
87 நீல மான மேல்வி தானம் நித்தி லம்ப தித்தது
கோலமாக மேத கங்கள் கொள்ளை வீசும் வெண்ணிலா பாலி னடை போலுஞ் சேலை சாள ரக்கண் நாலுவ காலி லாடி நாலுங் காசு கலக லென்ருெ லிப்பன.

39
(இ- ள்) நீலமான மேல்விதானம் -நீலநிறமான மேல் விதானம்; நித்திலம் பதித்தது - முத்து க் கள் பதிக்கப்பட்டது; மேதகங்கள் கோலமாக வெண்ணிலா கொள்ளை வீசும்-கோமேதகங்கள் அழகாக கொள்ளையான நிலாவை வீசும்: பாலினடை போலும் சேலை - பாலாடைபோல் மெல்லிய திரைச்சீலைகள்; சாளரக்கண் நாலுவ - பலகணிகளின் நின்றும் தொங்குவ; நாலுங் காசு காலில் ஆடி-அச் சீலைக் கரைகளிலும், மற்றும் இடங்களிலும், தொங்கவிடப்பட்ட மணிகள் காற்றில் ஆடி, கலகல என்று ஒலிப்பன- கலகல என்று ஒலிக்கா நிற்கும். (எ-று) 73
(வி-ம்) நீலவானத்தில் நட்சத்திரங்கள் விளங்குதல் போல் நீல விதா னத்தில் முத்துக்கள் மிளிர்ந்தன, கோமேதகங்கள், சந்திரனைப் போல் நிலாவை வீ சின. திரைச்சீலைகள் பாலாடை போல் மெல்லியதாகத் தொங்கின. அச்சீலைக்கரைகளில் அழகுக்காக மணிகள் கோக்கப்பட்டிருந்தன. அம்மணிகள் காற்றுக்கு ஆடி கலகலவென்று சத்தித்தன.
88
நாக முந்து கோபு ரத்தில் நாட்டு சூலக் கத்திகை
வேக மாக வீச வீச விண்ப டர்ந்து லாவுவெண் மேகம் நின்று மெய்கு ஸ்ரிர்ந்து மீட்டு யாழின் தந்திபோல் சீக ரங்கள் சிந்த வான வில்லு மங்கெ முந்திடும்.
(இ-ள்) நாகம் உந்து கோபுரத்தில் - ஆகாயத்தைப் பொருந்து கின்ற உயர்ந்த கோபுரங்களில்; நாட்டு குல கத்திகை - நாட்டப் பட்ட சூலங்களில் தொங்கும் துகிற்கொடிகள்; வேகமாக வீச வீசகாற்றில் வேகமாக வீசுதலும்; விண்படர்ந்து உலாவு வெண்மேகம் -அதனல் ി; ജി.) படர்ந்து உலாவும் வெண்மையான முகில்கள்; நின்று மெய் குளிர்ந்து - நின்று அதன் மெய் குளிர்ந்து; மீட் ெ யாழின் தந்திபோல் - மீட்டப்படும் யாழின் தந்திக் கம்பிபோல்; சீக ரங்கள் சிந்த -மழைத்துளிகளைச் சிந்த, வானவில்லும் அங்கு எழுந்தி டும் - அப்பொழுது வானவில்லும் விண்ணில் எழுந்திடும். (எ - று) 7 �

Page 37
40
மற்றும் மாளிகைகள் 89.
மாசி லாத செம்பொன் வேய்ந்த மாளி கைபல் லாயிரம் தேசு லாவு வெள்ளி பூசு தெற்றி யும்பல் லாயிரம் வீசு தென்றல் வெம்மை போக்கும் வேனில் மாட மாயிரம் கூசு வைரம் கொள்ளை வைத்த கோபு ரங்க ளாயிரம்.
(இ - ள்) மாசிலாத -குற்றமில்லாத செம்பொன் வேய்ந்த-செம் பொன்னல் வேயப்பட்ட மாளிகைபல்லாயிரம் - மாளிகைகள் பல ஆயிரக்கணக்கிலுள்ளன; தேசு உலாவு - ஒளி வீசுகின்ற; வெள்ளி பூசு -வெள்ளியாற் பூசப்பட்ட, தெற்றியும் பல்லாயிரம்-சித்திரகூடங்கள் பல ஆயிரக்கணக்காக உள்ளன; வீசுதென்றல் வெம்மை போக்கும்வீசுகின்றதென்றல் வெப்பத்தைப்போக்கும் இடமாகிய;வேனில் மாடம் ஆயிரம் - வேனிற்காலத்துத்தங்கும் வேயா மாடங்கள் ஆயிரக்கணக் கிலுள்ளன; கூசுவைரம் - கூசுகின்ற ஒளியையுடைய  ைவ ரங்க ள்; கொள்ளை வைத்த - கொள்ளையாகப் பதிக்கப்பட்ட கோபுரங்க ள் ஆயிரம் - கோபுரங்கள் ஆயிரக் கணக்காக உள்ளன (எ-று) 75
93 மஞ்சு யர்ந்த இஞ்சி துஞ்சு மாடி வீடு மாயிரம்
மஞ்சம் நின்று கொஞ்சல் பேசு மாத ரார்பல் லாயிரம் தஞ்ச மென்று குஞ்சி தாழ்த்திக் கெஞ்சு மாண்க ளாயிரம் அஞ்ச லஞ்ச லஞ்ச லென்ச லங்கை மாத ராயிரம்
(இ- ள்) உயர்ந்த இஞ்சி மஞ்சு துஞ்சும் மாடி வீடும் ஆயிரம் - உயர்ந்தமதில் மேல் முகில்கள் படிகின்ற மாடி வீடுகள் ஆயிரம்; மஞ்சம் நின்றுகொஞ்சல் பே சும் மாதரார் பல்லாயிரம் - அங்கு, மஞ்சத்தில் இருந்து கொஞ்சு மொழிகள் பேசும் மாதர்கள் பல்லாயிரவர் தஞ்சம் என்று, குஞ்சி தாழ்த்தி, கெஞ்சும் ஆண்கள் ஆயிரம் - அப்பெண்களைத் தஞ்சம் என்று தங்கள் குடுமியைத் தாழ்த் தி ( தலையைத் தாழ்த்தி ) கெஞ்சுகின்ற ஆண்கள் ஆயிரவர்; அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என் சலங்கை மாதர் ஆயிரம் - அப்படிக் கெஞ் சு ம் ஆண்களே, அஞ்சாதீர், அஞ் சாதீர், அஞ்சாதீர் என்று கூறுவது போன்று ஒலிகளைச் சத்திக்கின்ற சலங்கைகளை அணிந்த மாதர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். (எ-று) 76
91 மந்தி ரத்த வர்கள் வைகும் மாளிகைக ளோர்புறம்
அந்த ரங்கக் காவல் வீரர் அல்கும் மாட மோர்புறம் கந்த மிக்க கார கில் சூழ் கன்னி மாட மோர்புறம் சிந்து ரந்து ரங்க சேனை சேரும் பந்தி யோர்புறம்,

4.
(இ-ள்) மந்திரத்தவர்கள் வைகும் மாளிகைகள் ஒர்புறம் -மந் திரிகள் வசிக்கும் மாளிகைகள் ஓர் புறம்; அந்தரங்கக் காவல் வீரர் அல் கும் மாடம் ஓர் புறம்-அந்தரங்கக் காவற்படை தங்கும் மாடம் ஓர் புறம்; கந்தம் மிக்க கார் அகில் சூழ் கன்னிமாடம் ஒர் புறம் -வாசனை மிகுந்த கரிய அகிற் புகை சூழ்ந்த கன்னிமாடங்கள் ஒர் புறம்; சிந்துரம், துரங்க சேனை சேரும் பந்தி ஓர் புறம் - யானைப் படை குதிரைப் படை சேரும் பந்திகள் ஓர் புறம் உள்ளன, (எ-று) 77
பொது மன்றங்களுஞ் சாலைகளும்
92 ஆடல் வல்ல ஆரணங்கா ராட ரங்கு பற்பல நாட கர்கள் நாட கங்கள் நல்க ரங்கு பற்பல பாடல் வல்லார் பாணி சைத்துப் பாட ரங்கு பற்பல கூடி மேள வாத்தி யங்கள் கொட்ட ரங்கு பற்பல. (இ- ள்) ஆடல்வல்ல ஆர்அண்ங்கார் ஆடு அரங்கு பலபல -ஆடல் வல்ல அழகிய பெண்கள் நடனமாடும் அரங்குகள் பற்பல உள்ளன நாடகர்கள் நாடகங்கள் நல்கு அரங்கு பல பல-நடிகர்கள் நாடகங்கள் நல்கும் அரங்குகள் பற்பல உள்ளன; பாடல் வல்லார் பாண் இசைத் துப் பாடு அரங்கு பலபல-இசைவல்லார், இசைப்பாட்டுக்களை இசைத் துப் பாடும் அரங்குகள் பற்பல உள்ளன; கூடிமேள் வாத்தியங்கள் கொட்டு அரங்கு பலபல-ஒன்று சேர்ந்து மேளவாத்தியங்கள் கொட்டும் அரங்குகள் பற்பல உள்ளன, அரங்கு-பொது இடம், மன்றம் (எ-று) 78
98 சித்திரங்கள் சிற்ப வேலை சேர்த்து வைத்த சாலையும்
புத்த கங்கள் பத்தி ரங்கள் போற்றி வைத்த சாலையும் வித்த கப்பொருள்கள் வேறு வேறு வைத்த சாலையும் யுத்த வீரர் பற்று மாயு தங்கள் வைத்த சாலையும்.
(இதுவும் அடுத்த பாடலும் குளகம்} (இ - ள்) சித்திரங்கள் சிற்பவேலை சேர்த்து வைத்த சாலையும் - சித்திரங்களைச் சேர்த்துவைத்த சித்திர கூடங்களும், சிற்ப வேலைகள மைந்த சிலைகளைச் சேர்த்து வைத்த சிற்ப கூடங்களும்; புத்தகங்கள் பத் திரங்கள் போற்றிவைத்த சாலையும்-புத்தகங்கள் (அருஞ்சுவடிகள்) பத் திரங்கள் முதலியவற்றைப் பாதுகாத்து வைக்கப்பட்ட சாலையும்; வித் தகப் பொருள்கள் வேறு வேறு வைத்த சாலையும்-நூதன, அதிசயப் பொருள்கள் வெவ்வேருக வைக்கப்பட்ட நூதன சாலையும்; யுத்த வீரர் பற்றும் ஆயுதங்கள் வைத்த சாலையும் - யுத்த வீரர்கள் கையில் பற்றும் ஆயுதங்களை வைத்திருக்கு ஆயுத சாலையும். { at - pl) 79 (வி-ம்) பத்திரம் -உறுதிப் பத்திரம், திருமுகம், புத்தகத்தினேரேடு,
வித்தகம் - அதிசயம். நூதனம்,

Page 38
42
94.
வேதி யர்கள் வேத மோதி வேட்கும் யாக சாலையும் ஆது லர்கட் கங்க வீனர்க் கன்ன மூட்டுஞ் சாலையும் ஓதி நூல்க ளுற்று ணர்ந்தோ ருண்மை நாட்டு வோமென வாது செய்யுஞ் சாலை யும்மம் மாண கர்க்க ஒனுள்ளவாம்.
(இ-ள்) வேதியர்கள் வேதம் ஓதி வேட்கும் யாகசாலையும்-அந் தணர்கள் வேதங்களை முறைப்படி ஓதி வேள்வி செய்யும் யாகசாலை யும்; ஆதுலர்கட்கு அங்கவீனர்க்கு அன்னமூட்டுஞ் சாலையும்-தரித்தி ரர்களுக்கும், ஏழைகளுக்கும் அங்கவீனர்க்கும் சோறு, உணவு ஊட்டு கின்ற அன்னசாலைகளும்; ஒதி நூல்கள் உற்று உணர்ந்தோர் -ஞான நூல்களைப் படித்து ஆராய்ந்து உண்ர்ந்த அறிஞர்கள்; உ ண்  ைம நாட்டுவோமென - தங்கள் தங்கள் கொள்கைகளை நிலைநாட்டுவோ மென்று; வாது செய்யும் சாலையும் - வாதங்கள் செய்கின்ற பட் டி. மண்டபங்களும்; அம்மாண் நகர்க்கண் உள்ளவாம் - அந்த மாட்சி மைப்பட்ட நகரின் கண்ணே உள்ளனவாம், (எ-று) 80
சாலையும்மம்- ம் சீர்நோக்கி மிகுந்தது.
95 மாலை வந்து சோலை நின்று மார னெய்த வாளியால் வேலை வென்ற சேலின் கண்கள் வேய மைந்த தோளினர் மேலெ முந்த வேட்கை விஞ்ச மேலெ லாம்ப சந்திடப் பாலை சென்று மீண்டி லாத பாங்க ரெண்ணி மாழ்குவார்
(இ-ள்) மாலை வந்து சோலை நின்று-மாலைக்காலம் வந்த தும் சோலைக்கண் வந்துநின்று; மாரன் எய்த வாளியால் - மன்மதன் எய்த அம்பினுலே; வேலை வென்ற சேலின் கண்கள் - வே ற் ப ைட  ைய வென்றதும், கயலை ஒத்ததுமான கண்களையும்; வேயமைந்த தோளி ஞர்-மூங்கிலை ஒத்த தோளையுமுடைய மகளிர்; மேலெழுந்த வேட்கை விஞ்ச - மேம்பட்டு எழுந்த காமவேட்கை அதிகப்பட மேலெலாம் பசந்திட - மேனி பசலையடைய; பாலை சென்று மீண்டிலாத பாங்க ரெண்ணி மாழ்குவார் - பொருள் வயிற் பிரிந்த தங்கணவர் வரவு கூறிச் சென்ற கால எல்லே வராமை கண்டு அவரை எண்ணி மயங் குவார். (எ-று) 81 S6
மாத ரார்தம் ஆவி கொள்ளும் மார ஞர் செய் வாதையால் திTத ருத சோலை மேவித் தாவு கின்ற வண்டுகாள் *"த லார்தம் மாடு நண்ணிக் கால எல்லை காட்டியே
தூது சென்று சேதி சொல்லி வாரு மென்று வேண்டுவார்.

43
(இ-ள்) மாதரார் தம் ஆவி கொள்ளும் மாரனர் செய்வாதை யால் - பெண்கள், த ங் கள் உயிரைக் குடிக்கும் மாரன் செய்யும் வேதனையால்; தாது அழுத சோலை மேவி தாவுகின்ற வண்டுகாள்தாது நீங்காத சோலையில் தாவித் திரிகின்ற வண்டுகாள்; காதலார் தம்மாடு நண்ணி தூது சென்று - எமது காதலரின் பக்கலிலே தூது சென்று; கால எல்லை காட்டி - அவர் வரவு கூறிச் சென்ற கால எல்லையைக் காட்டி சேதி சொல்லி - எமது உயிர் பிரியா திருக்க க் கூடிய கால எல்லைய்ையுஞ் சொல்லி, வாரும் என்று வேண்டுவார் - வாருங்கள் என்று இரந்து வேண்டிக் கொள்வார்கள். (எ-று) 82
வி-ம்) காலனல்லை காட்டி - காதலர் வரவு கூறிச்சென்ற க ர் ல எல்லை. தங்கள் உயிர் பிரியாதிருக்கக்கூடிய காலஎல்லை என விரிக்க, 97
நாடு விட்டு நாடு சென்று நாடி யீட்டு பொன்னெலாம் வீடு கொண்டு தேடி வந்த வீர மிக்க பாங்கரை ஊடி நின்று பாத மன்னர் உச்சி மீது வைத்தபின் கூடி யின்ப மெய்து வாரக் கோல்வ ளைக்கை மாதரே.
(இ- ள்) நாடு விட்டு நாடு சென்று - தன் நாட்டை விட்டுப் பிற நாடு சென்று; நாடி ஈட்டு பொன்னெலாம் - விரும்பிச் சம்பாதித்த பொன்னெல்லாவற்றையும்; வீடு தேடிக் கொண்டு வந்த வீர மி க்க பாங்கரை - வீடுதேடிக் கொணர்ந்து குவித்த 'ரமிக்க காதலரை: ஊடிநின்று - ஊடல் செய்து; பாதம் அன்னர் உச்சிமீது  ைவ த் த பின்-தம் பாதத்தை அக்காதலரின் உச்சிமீது வைத்த பின்பு: அக் கோல்வளைக்கை மாதர் - அந்த அழகிய வளையலை அணிந்த கையினை யுடைய மாதர்; கூடி இன்பம் எய்துவர். (எ-று) 83
கோல்வளைக்கை மாதர் பாங்கரைக் கூடி இன்பம் எய்துவர்.
iv அரசியற் சிறப்பு
வேறு 98 சொன்ன சீருடைச் சுந்தர புரியினில்
மன்னு நல்வள மாத்திர நாட்டினை அன்னை காத்தென ஆட்சி புரிந்தனன் மன்னர் மன்னவன் அசுவ பதியரோ,

Page 39
44
(இ-ள்) சொன்ன சீருடைச் சுந் த ர புரியினில் - இதுகாறும் சொல்லப்பட்ட சிறப்புக்களையுடைய சுந்தரபுரி என்னும் தலைநகரியில் இருந்து; மன்னு நல்வள மாத்திர நாட்டினை-நிலைபெற்ற நல்வளங்கள் நிறைந்த மாத்திரம் என்னும் நாட்டினை; அன்னை காத்தது என ஆட்சி புரிந்தனன் - தாய் மகவைக் காத்திடல்போல அரசாட்சி செய்தனன் மன்னர் மன்னவன் அசுவபதி-மன்னர் மன்னவனுகிய அசுவபதி என்ப வன். அரோ-அசை, (எ- று) 84
S9 தன்னுயி ரென்னவே தாரணி தங்கிய
மன்னுயிர் தம்மையும் மாண்பொடு போற்றியே இன்னலு மின்மையு மில்லையென் றின்புறப் பன்னிய நூனெறிப் பாரினை யாண்டனன்.
(இ- ள்) தன்னுயிர் என்னவே தாரணி தங்கிய மன்னுயிர் தம்மை யும்-தன்னுயிரைப் போலவே பூமியிற் தங்கிய நிலைபெற்ற எல்லா உயிர் களையும்; மாண்பொடு போற்றி-அரச மாட்சிமையோடு பாதுகாத்து; இன்னலும், இன்மையும் இல்லை என்று இன்புற-துன்பமும், வறுமை யும் இந்நாட்டில் இல்லையென்று மக்கள் இன்பமுற; பன்னிய நூல் நெறி - ஆராய்ந்து சொல்லப்பட்ட நீதி நூல் முறைப்படி பாரினமாத்திர நாட்டினை அசுவபதி ஆண்டனன். (at-g) 85 100 கண்ணை யிமையிணை காத்திடல் போலவே
அண்ண லோம்பின னங்குள மக்களை எண்ணி லேரிக ளேற்ப வெடுத்தனன் பண்ணுங் கைத்தொழில் பற்பல ஊக்கினன். (இ-ள்) கண்ணை இமை இணை காத்திடல் போலவே-கண்களை இமைகள் இரண்டும் பாதுகாத்தல் போல; அண்ணல் அங்குள மக்களை ஒம்பினன்-பெருமையிற் சிறந்த அசுவபதி தன் நாட்டில் வாழ்கின்ற மக்கள் எல்லோரையும் பாதுகாத்தனன்; எண்ணில் ஏரிகள் ஏற்ப எடுத் தனன்-எண்ணற்ற குளங்களைத் தக்கபடி உண்டாக்கினன்; பண்ணுங் கைத்தொழில் பற்பல ஊக்கினன்-அந்நாட்டில் செய்யப்படும் கைத்
தொழில் பலவற்றையும் ஊக்குவித்தான். (at-gs) 86 10 கல்வி பல்கலை யின்கரை கண்டவன்
நல்ல வர்சொலை நாடி மதிப்பவன் அல்ல வர்பகை யடக்கி யொறுப்பவன் எல்ல வர்களு மேத்து மியல்பினன்.

45
(இ-ள்) கல்வி பல்கலையின் கரைகண்டவன்-அவன் கல்வியினதும் பல கலைகளினதும் கரைகண்டவன் (மிகத் தேர்ந்தவன்); நல்லவர் சொலை நாடி மதிப்பவன்-நல்லவர்களின் சொல்லை விரும்பிக் கேட்டு மதிப்பவன்; அல்லவர் பகை அடக்கி ஒறுப்பவன் - நல்லவரல்லாதவர் பகைவர் ஆகியோரை அடக்கித் தண்டிப்பவன்; எல்லவர்களும் ஏத்தும் இயல்பினன்-யாவரும் துதிக்கும் தகுதியுடையவன்; (GT-1) 87
02 ஆழி நேர்நெறி யாணை செலுத்துவன்
பாழித் தோளினன் பற்றலர் கூற்றுவன் மேழிச் செல்வமும் மேவலர் செல்வமும் ஏழைக் கிரவலர்க் கீதலிற் கொண்டலே.
(இ-ள்) ஆழி நேர்நெறி ஆணை செலுத்துவன்-ஆஞ்ஞாசக்கர நேர்வழி நின்று அரசியல் ஆணையைச் செலுத்துபவன்; பாழித் தோளி னன் - அகன்ற வலிமையுடைய தோளை யு  ைட ய வ ன், பற்றலர் கூற்றுவன் - பகைவருக்கு இயமன ஒப்பவன்; மேழிச் செல்வமும் -உழுதலினல் எய்தும் செல்வத்தையும்; மேவலர் செல்வமும்-பகை வரை வென்று அவரிடமிருந்து கொண்டுவந்த செ ல் வத்  ைத யும்; ஏழைக்கு, இரவலருக்கு - ஏழைகட்கும் இரவலர்கட்கும்; ஈ த லி ற் கொண்டல்-நல்கலில் மேகம் போன்றவன். ஏ -ஈற்றிசை (எ-று) 88
வேறு 103 எரிதவழ் வேலினன் எல்லா மக்கட்குஞ்
சரிநிலைத் துலா வெனச் சார்பில் நீதியைப் புரிவதிற் றருமனம் புவனந் தாங்கலில் அரியிவ ஞமென அவனி போற்றுமே.
(இ-ள்) எரிதவழ் வேலினன்- தீ பரவும் வேலையுடையவன கி ய அசு வ பதி ; எல்லா மக்கட்கும்; சரிநிலை துலா என - சமநிலையில் நிற்கும் துலாக்கோல் போன்று; சார்பில் நீதியைப் புரிவதில் தரும ஞம்-ஒருபக்கம் சாராது நீதி வழங்குவதில் தருமராசனை ஒப்பான்; புவனம் தாங்கலில் அரியிவணுமென அவனி போற்றும் - பூமியைக் காத்தலில் இவன் திருமாலைப் போல்வான் என்று உலகம் துதிக்கும்; ஏ-ஈற்றசை (எ-று) 89
04 ஐம்புல னடக்கமும் அறிவும் ஆண்மையுஞ்
செம்பொரு ணுட்டமுஞ் சீருங் கொண்டவன் உம்பருக் காகுதி உஞற்று முத்தமன் அம்பிகை திருவடிக் கயர்வில் அன்பினன்.

Page 40
46
(இ-ள்) ஐம்புலன் அடக்கமும், அறிவும், ஆண்மையும் - ஆண்ட கைமையும்; செம்பொருள் நாட்டமும் - கடவுளின்பால் நாட்டமும்; சீரும் கொண்டவன் - சிறப்பும், புகழும் கொண்டவன்; உம்பருக்கு ஆகுதி உஞற்றும் உத்தமன் - தேவர்களுக்கு ஆகுதி செய்யும் உத்த ம குணத்தையுடையவன்; அம்பிகை திருவடிக்கு அயர் வில் அன்பினன்சாவித்திரிதேவியின் திருவடிக்கு மறவாத அன் பினை உ  ைட ய வ ன் (எ-று) 90
அசுவபதியின் ஆட்சியில் மக்கள் இன்பமாய் வாழுதல்,
05 மறைநெறி யொழுகுமம் மன்ன ஞட்சியிற்
குறைவற மும்மழை குளிர்ந்து பெய்தது நிறைவளஞ் சுரந்தது நெடிய பூமியும் இறைவழி நின்றனர் இன்ப மக்களே.
(இ-ள்) மறை நெறி ஒழுகும் அம் மன்னன் ஆட்சியில் - வேத நெறிப்படி ஒழுகுகின்ற அந்த அசுவபதி மன்னனின் அரசாட்சியில்: குறைவுஅற மும்மழை குளிர்ந்து பெய்தது - குறைவின்றி மாதம் மும் மாரி குளிரப்பெய்தது; நெடிய பூமியும் நிறைவளஞ் சுரந்தது - நெடிய பூமியும் நிறைய வளங்களைச் சுரந்தது; இன்பமக்கள் இறைவழி நின்ற னர் - இவற்ருல் இன்பமடைந்த மக்கள் இறைவன் வழியில் ஒழுகுவா ராயினர். (எ-று) ஏ- ஈற்றசை, 9.
மக்களின் ஒழுக்கம், நேர்மை
06 மன்னனுக் கிறைவரி மகிழ்ந்து தந்தனர்
முன்னவன் பூசைகள் முட்டா தாற்றினர் தென்புலத் தவர்கடன் தேவர்க் காங்கடன் அன்பொடு செய்தனர் அந்த நாட்டவர்.
(இ- ள்) அந்த நாட்டவர் - அந்த மாத்திர நாட்டின் கண்ணே வாழ்ந்தவர்கள்; மன்னனுக்கு இறைவரி மகிழ்ந்து தந்தனர்-அரசனுக் குரிய ஆறில் ஒரு கடமை மகிழ்வுடன் கொடுத்தனர்; முன்னவன் பூசை கள் முட்டாது ஆற்றினர்-சிவபெருமானுக்குரிய நித்திய நைமித்திய பூசைகளைக் குறைவறச் செய்தனர்; தென்புலத்தவர்கடன்-பிதிர்களுக் குச் செய்யவேண்டிய நீர்க்கடன் முதலியனவற்றையும்; தேவர்க்கு ஆம் கடன் - தேவர்கட்குச் செய்யவேண்டிய யாகம் முதலிய கடன்களையும் அன்பொடு செய்தனர்- பேரன்புடன் செய்துவந்தனர். (எ-று) 92

47
07 கல்வியிற் கேள்வியிற் கலையிற் றேர்ந்தவர்
பல்வகைக் கைத்தொழிற் பயிற்சி பெற்றவர் வெல்லரும் பகையையும் வீழ்த்தும் வீரர்கள் நல்லன செய்வதில் நாட்டங் கொண்டனர்.
(இ- ள்) கல்வியில் கேள்வியில் கலையில் தேர்ந்தவர்-கல்வியிலும் கேள் வியிலும் கலைகளிலும் தேர்ச்சியடைந்தவர்கள்; பல்வகைக் கைத்தொ ழிற் பயிற்சி பெற்றவர்-பலவகையான கைத்தொழில்களிற் பயிற்சி பெற்றவர்கள்; வெல்லரும் பகையையும் வீழ்த்தும் வீரர்கள் - வெல்லு கற்கு அருமையான பகைவரையும் வென்று வீழ்த்தும் வீரர்கள்; நல்லன செய்வதில் நாட்டம் கொண்டனர்-நல்லவற்றைச் செய்வதிலேயே தம்
கவனத்தைச் செலுத்தினர். (எ-று) 93
வேறு 108 மன்றினி லோரஞ் சொல்லும்
மாசுடை மாக்க ளில்லை ஒன்றினை யிலஞ்ச மாக்கொண்
டொருவழிச் சார்வா ரில்லை நன்றறி மனுநூல் வல்லார்
நடுவராய் நீதி வேண்டிச் சென்றவர் குறையா ராய்ந்து
செப்பமாய்த் தீர்வு காண்பார்.
(இ-ள்) மன்றினில் ஒரம் சொல்லும் மாசுஉடை மாக்கள்இல்லை -நீதிமன்றங்களில் ஒரு பக்கம் சார்பாகப் பேசும் குற்றமுள்ள மாக் கள் இல்லை; ஒன்றினை இலஞ்சமாக் கொண்டு ஒரு வழிச் சார்வார் இல்லை -ஒரு பொருளை இலஞ்சமாகப் பெற்று ப் பட்ச பாதகமாக நடப்பாரில்லை; மனுநூல் நன்றறி வல்லார்- மனுநூலை நன்கு அறிந்த நீதி வல்லவர்கள்; நடுவராய்-நீதிபதிகளாய் இருந்து; நீதி வேண்டிச் சென்றவர் குறை ஆராய்ந்து- தம்முன் நீதி வேண்டிச் சென்றவர்களு டைய குறைகளைக் கேட்டு ஆராய்ந்து; செப்பமாய்த் தீர்வு காண் பார் - நேர்மையாகவும் செவ்வையாகவும் மு டி வு காண் பார்கள். (6T-DJ) 94
09 அறநிலை யத்தின் சொத்தை யபகரிப் பாரு மில்லை இறைவரி கொடாதே மாற்றும்
எத்தர்க ளெவரு மில்லை

Page 41
48
நிறையினைக் குறைத்து விற்கும்
நேர்மையில் வணிக ரில்லை
பிறபொருள் கலந்து விற்கும்
பேதக ரந்நாட் டில்லை.
(இ- ள்) அறநிலையத்தின் சொத்தை அபகரிப்பாரும் இ ல் லை - அறநிலையங்களின் பொருளை அபகரிப்பவர் எவரும் ஆங்கில்லை; இறை வரி கொடாது ஏமாற்றும் எத்தர்கள் எவரும் இல்லை-அரசவரியைக் கொடாது ஏமாற்றுகின்ற எத்தர்கள் எவரும் ஆங்கில்லை; நிறையி னைக் குறைத்து விற்கும் நேர்மையில் வணிகர் இல்லை - பொருள்க ளின் நிறைகளைக் குறைத்து நிறுத்து விற்கும் நேர்மையில்லாத வணி கர் ஆங்கில்லை; பிறபொருள் கலந்து விற்கும் பே த கர் அந்நாட்டு இல்லை-ஒரு பொருளில் வேற்றுப் பொருளைக் கலந்து விற்கும் தப்பித காரர் அந்நாட்டில் இல்லை. (எ-று) 95
10 காதலர் கண்ண தன்றிக்
களவெணு மொழுக்க மில்லைக் காதலர் கண்ண தன்றிக்
களிப்புறு பழக்க மில்லைக் காதலர் கண்ண தன்றிக்
கால்பிடித் திரத்த லில்லைக் காதலர் கண்ண தன்றிக்
கழறிய பிழைத்த லில்லை.
(இ- ள்) காதலர் கண்ண்து அன்றிக் களவு எனும் ஒழுக்கம் இல்லை - காதலரிடம் களவொழுக்கம் உண்டு. மற்றவர்களிடம் திருட்டுத் தொழில் இல்லை; காதலர் கண்ணதன்றிக் களிப்புறு பழக்கம் இல்லை - காதலர்களிடம், மயங்குதலும் மகிழ்வுறுதலும் உண்டு; மற்றவர்க விடம் மது வெறியுறும் பழக்கமில்லை; காதலர் கண்ணதன்றிக் கால் பிடித்து இரத்தல் இல்லை-காதலர்களிடம், ஊடல் நீக்கத் தலைவன் தலைவியின் காலைப் பிடித்தல் உண்டு, மற்றவர்களிடம் தோல்வியுற் றுச் சரணடையும் வழக்கமில்லை; காதலர் கண்ணது அன்றிக் கழறிய பிழைத்தல் இல்லை - காதலரிடம், தலைவன் உறுதிச்சொல் காவாமை யுண்டு. மற்றவர்களிடம் சொற்காவாமை, பொய்யுரைத்தல் என் னும் குற்றங்களில்லை. (எ-று) 96

முதுநகர் மக்கள் தங்கள்
முன்றிலில் விற்கும் பண்டம்
அதன்விலை குறித்து வைப்பார்
ஆங்கொரு காவ லில்லை
எதையெவர் வேண்டி னலும்
ஏற்புறுங் காசை வைத்தே
யதையவர் எடுத்துச் செல்வர்
அந்நகர் நேர்மை யிஃதாம்.
(இ - ள்) முதுநகர் மக்கள்-பழைய நகரமாகிய சுந்தரபுரியின் மக்கள் தங்கள் முன்றிலில் விற்கும் பண்டம் அதன்விலை குறித் து வைப்பார்-தங்கள் வீட்டின் முன்னிடத்தில் தாங்கள் விற்க விரும் பும் பண்டங்களை அவற்றின் விலையைக் குறித்து வைப்பார்கள்; ஆங்கு ஒரு காவல் இல்லை-அங்கே அவற்றுக்கு ஒரு காவலும் இல்லை; எதை எவர் வேண்டினலும் - எப்பொருளை எவர் வேண்டி எடுத்தாலும்; ஏற்புறும் காசை வைத்தே - அதற்குரிய பணத்தை வைத்தே அதை அவர் எடுத்துச் செல்வர் - அப்பொருளை அவர் எடுத்துச் செல்வார் கள்; அந்நகர் நேர்மை இஃதாம் - அந்தச் சுந்தரபுரியில் வாழ்வோ ரின் நேர்மையான நடை இப்படிப்பட்டதாகும். (எ-று) 97
12 வாதமும் வழக்குந் தீர்ப்பும்
வளர்வன பட்டி மன்றில்
மோதலுங் குத்தும் வெட்டும்
முயல்வன பயில ரங்கில்
காதகம் நிகழ்வ வெல்லாங்
கயல்விழி யார்கண் வீச்சில்
வாதனை தருவ மாதர்
வாரிற வளர்ந்த கொங்கை.
(இ-ள்) வாதமும் வழக்கும் தீர்ப்பும் பட்டிமன்றில் வளர்வன -தருக்கம் செய்தலும் நியாயம் பேசுதலும் நடுவர் தீர்ப்புச் சொல் லுதலும் பட்டிமன்றங்களில் வளர்ந்து நிகழ்வன (பொருள் காரண மான வியாச்சியம் பேசி நீதிமன்றம் செல்வோர் குறைவு); ப யில் அரங்கில் மோதலும் குத்தும் வெட்டும் முயல்வன-யுத்தம் பயிலும் அரங்கத்தில் வீரர் முயல்வன, மோதல், குத் த ல், வெட்டல் என் பனவாம் (பிற இடங்களில் மக்கள் இவற்றைச் செய்வதில்லை. ஏனெ னில் மக்கள் சமாதானமாக வாழ்ந்தார்கள். பகைவரும் இல்லை);
Fir-4

Page 42
50
கயல்விழியார் கண்வீச்சில் காதகம் நிகழ்வது எ ல் லாம் - கயல் போன்ற விழிகளையுடைய பெண்களின் கண்வெட்டிற்ருன் கொலைகள் நிகழும் ( பிற இடங்களில் சண்டையோ கொலையோ இல்லை ); வாதனை
தருவமாதர் வாரிற வளர்ந்த கொங்கை - ஆண்களுக்கு வருத்தத்தைத்
தருவது மாதரின் கச்சு அறும்படி வளர்ந்த கொங்கைகள் (வேறு வருத்தம் இல்லை). (எ-று) 98
13 தேனமர் தெரிய லானின்
திருவளர் ஆட்சி தன்னில்
மாநில மக்க ளெல்லாம்
மனக்குறை யின்றி வாழ்ந்தார்
வானவர் தாமு மங்கு
வாழ்ந்திட விழைவ ரென்றற்
கோனவன் கொற்ற மாண்பைக்
கறுத லொல்லு மோதான்.
(இ- ள்) தேனமர் தெரியலானின் திருவளர் ஆட்சி தன்னில் . தேன் பொருந்திய மாலையை அணிந்த அசுவபதியின் செல்வமும் சிறப்பும் வளரும் ஆட்சியில்; மாநில மக்கள் எல்லாம் மனக்குறைவு இன்றி வாழ்ந்தார் - பெருமைமிக்க அவன் நிலத்தில் வாழ்ந்தோ ரெல்லோரும் மனதில் குறைபாடு இன்றி வாழ்ந்தனர்; வானவர் தாமும் அங்கு வாழ்ந்திட விழைவர் என்ருல் - தேவர்கள் தாமும் அங்கு வந்து வாழ விரும்புவார்கள் என்ருல் கோன் அவன் கொற்ற மாண்பை - அரசனகிய அசுவபதியின் அரசியல் மாண்பை கூறுதல் ஒல்லுமோ - கூறுதல் இயலுமோ? இயலாது. (எ-று) 99 தான்-அசை,
அசுவயதியின் மனைவி
114 மன்னவன் மனைவி யாவாள்
மாளவி தேவி யென்பாள்
தன்குலப் பெருமை பேணித்
தான்புகு நாட்டின் வேந்தன்
முன்குலப் புகழுங் காக்கும்
மொய்குழற் செய்ய பாவை
நன்னலம் யாவும் மிக்காள்
நளினமேற் றிருவை யொப்பாள்,

51
(இ- ள்) மன்னவன் மனைவியாவாள் மாளவி தேவி யென்பாள்அசுவபதியின் மனைவி மாளவிதேவி என்பவள் தன்குலப் பெருமை பேணி-தனது குலத்தின் பெருமையையும் பாதுகாத்து; தா ன் புகு நாட்டின் வேந்தன் முன்குலப் புகழும் காக்கும் -தான் புகுந்த நாட் டின் அரசனது முன்குலப் புகழையுங் காக்கின்ற; மொய்குழற் செய்ய பாவை - வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய சிறந்த அழகி ய பாவை போன்றவள் நன்னலம் யாவும் மிக்கவள் நளினமேல் திருவை ஒப்பாள்-தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் இ லக் கு மி தேவியை ஒப்பாவள். (எ-று) 90
115 கற்பினிற் சிறந்த மாது
கணவனே தெய்வ மென்று பொற்புடன் போற்றுஞ் சீராள்
பொறுமையிற் பூமி யன்னஸ் உற்றவர்க் குறுகண் ணுளர்க்
குதவலில் உலக மாதா கொற்றவர்க் கறிவு கூறுங்
கூர்மதி யமைச்சு மாவாள்
(இ- ள்) கற்பினிற் சிறந்த மாது- கற்பினிலே சிறந்து விளங்கும் பெண்ணுனவள்; கணவனே தெய்வமென்று பொற்புடன் போற்றும் சீர்ாள்-கணவனே கண்கண்ட தெய்வமென்று அழகாகப் போற்றுகின்ற சிறப்பினை உடையவள் பொறுமையிற் பூமி அன்னுள் - பெர்றுமை யினலே பூமாதேவியை ஒத்தவள்; உற்றவர்க்கு உறுகணளர்க்கு உத வலில் உலக மாதா - உற்றவருக்கும், தரித்திரர்களுக்கும் உதவுதலில் உலகமாதா போன்றவள்; கொற்றவர்க்கு அறிவு கூறும்கூர்மதி அமைச் சும் ஆவாள் - அரசனுக்கு நல்லறிவு கூறும் கூர்ந்த மதியுடைய அமைச் சனும் ஆவாள். (எ-று) 0.
மன்னவன் மனைவியோடு இனிது வாழ்தல்
6 மலருடன் மணமும் போலும்
மணியுடன் ஒளியும் போலும் அலர்பொலி மாலை மார்பன்
அணங்குடன் இனிது வாழ்ந்தான் நிலவினிற் கறையே போல
நிருபனின் நிறைந்த வாழ்வில் லணிவன் மக்கட் பேறென்
றியம்பிடுங் குறையொன் றுண்டாம்,

Page 43
s:
(இ - ன்) மலருடன் மனமும் போலும் - மலரோடு மனம் கலந் திருத்தல் போலவும்: மணியுடன் ஒளியும் போலும்--மணியோடு ஒளி சேர்ந்து இ ருத் த ல் போலவும் அலர்பொலி மாலே மார்பன் அணங்குடன் இனிது வாழ்ந்தான். மலர்ந்த பூப்பொலியும் மா8லயை பணிந்த மார்பையுடைய அசுவபதி அழகிய தெய்வப் பெண் என் னும்படியான மாளவிதேவியோடு இனிது வாழ்ந்தான்; நிலவினிற் கறையேபோல - சந்திரனில் கரிய கறையிருப்பது போல நிருபனின் நிறைந்த வாழ்வில் அசுவபதி இராசாவினுடைய நிறைவான வாழ்வில் இவன் மக்கட்பேறு இவன் என்று இயம்பிடும் குறை ஒன்று உண்டாம் - இவனுக்குப் புத்திரப்பேறு இல்லேயேயென்று பிறர் சொல்வத்தக்க குறை ஒன்றுண்டு. (எ-று) 3.
கவிக்கூற்று 7 ஒருதனிக் குடையின் நீழல்
உலகினை யாள்வா ரேனும் இருநிதி யங்கள் பெற்றே
இசைபெற வாழ்வா ரேனும் இருமையு மின்பம் நல்கி
இல்லறஞ் சிறக்க வைக்கும் அருமகப் பேறில் லாதார்க்
ககத்தினில் மகிழ்வு முண்டோ.
(இ-ன்) ஒரு தனிக்குடையின் நீழல் உலகினே ஆள்வாரேனும்ஒப்பற்ற வெண்கொற்றக் குடை நிழலிலிருந்து உலகம் முழுவதை யும் ஆட்சி செய்கின்ற ஏக சக்கிராதிபதியானுலும் இரு நிதியங்கள் பெற்றே இசை பெற வாழ்வாரேனும்-சங்கநிதி பதுமநிதி என்னும் நிதிகளைப் பெற்றுப் புகழுடன் வாழ்வாராணுலும் இருமையும் இன் பம் நல்கி - இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தந்து: இல்லுறம் சிறக்க வைக்கும் - இல்லற வாழ்வுப்பயனேச் சிறப்பாக வைக்கின்ற அருமகப்பேறு இல்லாதார்க்கு அகத்தினில் மகிழ்வும் உண்டோ?-பெறு தற்கரியபுத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு மனத்தின் கண்ணே சந் தோஷமானது உண்டோ? (உண்டாகாது) (ஏ-று 3.
W சாவித்திரி பிறத்தல் மன்னன் மக்களின்றி வருந்துதல் R குலத்தினை விளக்க நல்ல
கொழுந்தெனும் மைந்தரின்றிக் கலக்கமுற் றிருந்தான் மன்னன்
"காதலியோடு தங்கள்
t
 

நிலத்துள கோவிற் கெல்லாம்
நேர்கடன் செய்து நூலிற்
சொலப்படுத் தருமந் தானஞ்
சோர்விலா தியற்ற லானன்.
(இ-ள்) குலத்தினே விளக்க நல்ல கொழுந்தெனும் மைந்தரின்றிதனது குலத்தை விளக்கவல்ல நல்ல குலக் கொழுந்தென்னும் படியான மக்களின்றி மன்னன் கலக்கமுற்றிருந்தான் - அசுவபதி மனக் கலக்க முற்று இருந்தான் காதலியோடு-தன் மனேவியோடு; தங்கள் நிலத் துள கோவிற்கு எல்லாம் நேர்கடன் செய்து-மாத்திர நாட்டில் உள்ள கோவில்களில் வாழும் தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன்கள் செய்து நூலிற் சொலப்படும் தருமம் தானம் சோர்விலாது இயற்றலானுன் - அறநூல்களிற் சொல்லப்பட்ட தான தருமங்கஃனப் புத் தி ர ப் பேறு வேண்டி அய்ர்வில்லாது செய்யலாஞன். (எ-று) IŲ
19 மனக்குறை நீங்கா னுக
மற்றெது செய்வோ மென்று சினக்களி பாஃன மன்னன்
சிந்தையில் நாடித் துன்று வனத்தினிற் றவஞ்செய் மேலாம் மாமுனி வரரை பண்டித் தனக்குள குறையைப் போக்கத்
தக்கதோர் மார்க்கங் கேட்டான். (இ-ள்) சினக்களி யானே மன்னன்-கோபத்தையும் மதக்களிப் பையும் கொண்ட யானேயையுடைய அசுவபதி மனக்குறை நீங்காணுகதனது மனக்குறை நீங்கப்பெருனுகா மற்று எது செய்வோம் என்று சிந்தையில் நாடி-இனி வேறெது செயல்களேச் செய்வோமென்று தமது மனதில் ஆராய்ந்து எண்ணி; துன்று வனத்தினில் தவம் செய் மேலாம் மாமுனிவரரை அண்டி-நெருங்கிய காட்டில் தவம் செய்கின்ற மேலான மாமுனிவரரை நெருங்கி தனக்குள குறையைப் போக்கத் தக்கதோர் மார்க்கம் கேட்டான்-தனக்குள்ள புத்திரப் பேறில்லாத தன்மையை
நீக்குவதற்கு ஏற்ற வழிகளேக் கேட்டான் (sT- TI) " முனிவர் கூறியது 12 புவனியைப் புரக்கும் வேந்தே
புதல்வரும் ஏஃனப் பேறும் அவரவர் செய்த வத்தால்
அமைவன ஆத லால் நீ

Page 44
54
சிவன்இடப் பாகச் சாவித்
திரியினைச் சரண டைந்து
தவம்முறை முயலு வாயேற்
முயவள் கிருபை செய்வாள்.
( இ- ள்) புவனியைப் புரக்கும் வேந்தே - பூமியைக் கா க்கும் அரசனே புதல்வரும் ஏனைப்பேறும்; அவரவர் செய்தவத்தால் அமை வன: ஆதலால் நீ - ஆகையால் நீ; சிவன் இடப்பாகச் சாவித்திரியி னைச் சரண் அடைந்து - சிவபெருமானின் இடப்பாகத்தில் விளங்கு கின்ற சாவித்திரிதேவியைச் சரண்ம் அடைந்து; தவம் முறை முயலு வாயேல்-தவத்தை முறையாகச் செய்து புத்திரப்பேற்றிற்கு முயலு வாயானல்; தாயவள் கிருபை செய்வாள் -எமது தாயாகிய சாவித் திரிதேவி அருள் செய்வாள் (புத்திரப்பேறு கிட்டும் (எ-று) 06
12 ஐம்பெரும் பாத கங்கள்
அவாஅழுக் காறு நீக்கி
ஐம்புலன் களைய டக்கி
அகத்தினிற் றுாய்மை யாகி
அம்பிகை நாமந் தன்னை
அன்புடன் செபித்து நோற்றல்
நம்பிநின் குறைகள் தீர்ப்பாள்
நம்பெரு மாட்டி யென்முர்.
(இ- ள்) ஐம்பெரும் பாதகங்கள் அவr அழுக்காறு நீக்கி ஸ்-பஞ் சமா பாதகங்களான பொய், கொலை, களவு, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவற்றையும், அவா, பொறுமை என்பவற்றையும் நீக்கி: ஐம்புலன்களை அடக்கி-சுவை, ஒளி, உாறு, ஓசை, நாற்றம் என்ப வற்றையடக்கி; அகத்தினில் தூய்மையாகி; அம்பிகை நாமந் தன்னை அன்புடன் செபித்து; நோற்றல்-தவஞ்செய்தால்; நம்பி-புருடரிற். சிறந்தவனே நம்பெருமாட்டி நின் குறைகள் தீர்ப்பாள் என்ருர்எம்பெருமாட்டியாகிய அம்பிகை உம்முடைய புத்திர ரி ல் லா த குறையை நீக்குவாளென்று கூறினர். (எ று) 07
122 மன்னனுந் தேறி னணுய்
மனத்தினில் மாசு நீக்கிச் சொன்னசீர் நெறியில் நின்று
சுகங்களைத் துறந்து நோன்பைப்

55
பன்னிரண் டோடர் ருண்டு
பத்தியோ டியற்ற லானுன்
அன்னையை நோக்கிச் செய்தான் அக்கினி கோத்திரங்கள்.
(இ- ள்) மன்னனும் தேறினணுய் - அசுவபதியும் அது கேட்டு மனம் தேறியவனகி; மனத்தினில் மாசு நீக்கி; சொன்னசீர் நெறியில் நின்று முனிவர்கள் சொல்லிய ஒழுக்க நெறியில் நின்று; சுகங்களைத் துறந்துஇன்பசுகங்களை விட்டு நீங்கி; நோன்பை பன்னிரண்டோடு ஆருண்டு - தவத்தைப் பதினெட்டு வருடங்கள்; பத்தியோடு இயற்றலாஞன் - பத்திபூர்வமாகச் செய்து வந்தான்; அன்னையை நோக்கி அக்கினி கோத்திரங்கள் செய்தான் - சாவித்திரி தேவியை நோக்கி அக்கினி வளர்த்து செய்யப்படும் யாகங்களையும் செய்தான். (எ-று) 0 8
அசுவபதி சாவித்திரி தேவியைத் தோத்தரித்தல் வேறு 123 ஒம் சத்தி சிவசத்தி சிவையே போற்றி
உருத்திரன ரொரு பாகமானுய் போற்றி
ஒம்இச்சா சத்திவடி வானேய் போற்றி
உல்லாச மோகினியே 1ரையே போற்றி
ஒம் கிரியா சத்திவடி வானேய் போற்றி
உலகமெலா மீன்றபரா சத்தி போற்றி
ஒம் ஞான சத்திவடி வானேய் போற்றி
உமாதேவி யுன்பாதம் போற்றி போற்றி.
(இ- ள்) ஒம்சத்தி பிரணவரூபியே! வல்லமையுள்ளவளே! ; சிவ சத்தி! - சிவசத்தியே சிவையே சிவபெருமானின் தேவியே; போற்றி -வணக்கம்; உருத்திரளுர் ஒருபாகம் ஆய்ை போற்றி -- சிவபெருமா னின் இடப்பாகமானவளே வணக்கம்; ஓம் இச்சா சத்தி வடிவானுேப் போற்றி - ஒம் இச்சாசத்தி வடிவமானவளே வணக்கம், 49 ல்லாச மோகினியே - உல்லாசமாக எவராலும் விரும்பப்படுபவளே பரையே - பரனின் தேவியே; போற்றி - வணக்கம்; ஒம் கிரியா சத்தி வடி வானேய் போற்றி - ஒம் கிரியா சத்திவடிவானவளே வணக்கம்; உல கமெலாம் ஈன்ற பராசத்தி போற்றி- உலகங்கள் எல்லாவற்றையும் பெற்றெடுத்த பராசத்தியே வணக்கம்; ஓம் ஞானசத்தி வடிவானேய் போற்றி-ஓம் ஞான சத்தி வடிவானவளே வணக்கம் உமாதேவி உமாதேவியே; உன் பாதம் போற்றி போற்றி உனது திருவடிகளுக்கு வணக்கம்! வணக்கம்! (எ று) 09

Page 45
56
12年 அந்தரியே பாதிபரா சத்தி போற்றி
அகிலமெலா மளிக்குமருட் டாயே போற்றி சுந்தரியே சுகவாரி சோதி போற்றி
சூலினியே சாவித்திரி தேவி போற்றி மந்திரமும் மருந்துமெமக் கானுய் போற்றி
மலமூன்றும் போக்கியருள் மணியே போற்றி அந்தரரு மறிவரிய அன்னய் போற்றி
அருமறையும் அளந்தறியா அணங்கே போற்றி
(இ ள்) அந்தரியே - அகத்தினுள்ளே உள்ளவளே, துர்க்கையே!; ஆதிபராசத்தி - ஆதியாகிய பராசத்தியே; போற்றி-வணக்கம்; அகில மெலாம் அளிக்கும் அருள் தாயே போற்றி - எல்லா உலகங்களையும் காக்கின்ற திருவருள் நிறைந்த தாய் போன்றவளே வணக்கம்; சுந் தரியே-அழகு நிறைந்தவளே; சுகவாரி-சுகவாரியே; சோதி-சோதி உருவமானவளே போற்றி-வண்க்கம்; சூலினியே-சூலத்தை ஏந்திய வளே; சாவித்திரி தேவி போற்றி - சாவித்திரி தேவியே வணக்கம்; எமக்கு மந்திரமும் மருந்தும் ஆணுய் போற்றி-எங்களுக்கு மந்திரமும் மருந்துமாகி உள்ளவளே வணக்கம்; மலமூன்றும் போக்கி அருள் மணியே போற்றி-ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை யும் போக்கி எமக்கு அருள் செய்கின்ற மணியே வணக்கம்; அந்தர ரும் அறிவரிய அன்னய் போற்றி-தேவர்களும் இப்படிப்பட்டவள் என்று அறிதற்கு அரிய தாயே வண்க்கம்; அருமறையும் அளந்த றியா அணங்கே போற்றி - அரிய் வேதங்களும் இன்னமும் அனந்த றிய மாட்டாத தேவியே வணக்கம். (எ-று) 10
மணி - ஒளி, மருந்துக்கல், விஷநீக்கும் கல்
125 வேதங்க ளம்மாவென் முேல மிட்டுன்
விரையார்ந்த மலர்ப்பாதந் தேடி நிற்கும் மாதங்கி மனேன்மணியே மரக தப்பைம்
மடமயிலே மலையரசன் மதலாய் போற்றி பூதங்க ளைந்தாயும் பொலிந்தாய் போற்றி பூரணியே புந்திதனில் நிறைந்த பேறே ாேதங்க ளறுத்தெய்மை யாள்வாய் போ ற்றி
எழுபிறப்பு மெனையடிமை கொண்டாய் போற்றி.
(இ-ள்) வேதங்கள் அம்மா என்று ஒலம் இட்டு - வேதங்களா னவை தாயே என்று ஒலமிட்டுக்கொண்டு; உன் விரை ஆர்ந்த மலர்ப்

57
பாதம் தேடி நிற்கும்-உம்முடைய வாசனை பொருந்திய செந்தாமரை யனைய திருவடிகளைத் தேடி நிற்கும்; மாதங்கி - பார்ப்பதியே; மனேன் மணியே-உமையே; மரகதப் பைம் மட மயிலே - மரகதமணியைப் போன்ற பசுமையான அழகிய மயிலை ஒத்த சாயலையுடையவளே மலை யரசன் மதலாய் போற்றி - இமயமலை அரசனுடைய மகளே வணக்கம் பூதங்கள் ஐந்தாயும் பொலிந்தாய் போற்றி-பிருதிவி, அப்பு, தேயு வாயு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களாயும் விளங்குபவளே வணக்கம்: பூரணியே-எங்கும் நிறைந்தவளே; புந்திதனில் நிறைந்தபேறே-எனது சித்தத்தில் நிறைந்து நிற்கும் செல்வமே; ஏதங்கள் அறுத்து எம்மை ஆள்வாய் போற்றி-எமது குற்றங்களை நீக்கி எம்மை ஆண்டருள்வாய் வண்க்கம்; எழுபிறப்பும் எனை அடிமை கொண்டாய் போற்றி-எழு பிறப்பின் கண்ணேயும் என்னை உமக்கு அடிமையாகக் கொண்டவளே! வண்க்கம். (GT-I)
126 புத்தென்னும் நரகத்துட் புகுதா வண்ணம்
பூவுலகிற் பிறப்பெடுக்கும் மாந்தர் தம்மைப் புத்திரரே காப்பாரென் முன்ருேர் சொல்வர் புரமூன்றும் புன்னகையா லெரித்த ஈசன் பத்தினியே பராபரையே பாவி யேற்குப்
பாலகரைத் தந்தருள வேண்டு மென்பின் இத்தரையை யினிதாட்சி செய்ய மைந்தன்
இலனென்னுங் குறைதீர்த்து வைப்பாய் போற்றி.
(இ- ள்) பூவுலகில் பிறப்பு எடுக்கும் மாந்தர் தம்மை புத் என்னும் நரகத்துள் புகுதா வண்ணம்-இப் பூவுலகின் கண்ணே பிறவி எடுக்கின்ற மக்களை புத்தென்று சொல்லப்படும் நரகத்துட் செல்லா வண்ணம்; புத் திரரே காப்பார் என்று ஆன்ருேர் சொல்வர்-புத்திரர்களே காப்பாற்று வார்கள் என்று பெரியோர் சொல்வர்; புர மூன்றும் புன்னகையால் எரித்த ஈசன் பத்தினியே - முப்புரங்களையும் தனது புன்னகையிஞல் எரித்த பரமசிவனின் தேவியே; பராபரையே -பராபரனின் தேவியே: பாவியேற்குப் பாலகரை தந்தருள வேண்டும். பாவியாகிய எனக்குப் புத்திரரைத் தந்தருளுதல் வேண்டும்; என்பின் இத்தரையை இனிது ஆட்சி செய்ய - எனக்குப்பின் இப் பூமியை இனிது அரசாட்சி செய்ய: மைந்தன் இலன் என்னும் குறை தீர்த்து வைப்பாய் போற்றி-புத்திரன் ( என்னும் குறையைத் தீர்த்து வைப்பீராக, வணக்கம் (ፍፐ-ወሠ)l18

Page 46
58
27 மன்னுயிர்க ணன்னுதரத் துதித்த மக்கள்
மாதாநின் மடிவைத்து மகிழ்வை யன்றே
அன்னவகை யடியோமு மரவ னைக்க
அருமதலைப் புதல்வர்களை வேண்டி நின்ருேம்
மின்னலிடை மெல்லியலே யன்ன நாணும்
மென்னடையாய் மீனட்சி யெம்முன் வந்து
முன்னுவரந் தந்தருள்வாய் முருக வேளை
முத்தமிடக் கைத்தலத்தி லேந்துந் தாயே.
(இ- ள்) மன்னுயிர்கள் நின் உதரத்து உதித்த மக்கள் - நிலை பெற்ற சீவராசிகள் எல்லாம் உன் வயிற்றில் பிறந்த குழந்தைகள்; மாதா நின் மடி வைத்து மகிழ்வை அன்றே - மாதாவாகிய நீ அவர் களை உன் மடியில் வைத்து மகிழ்வாய் அல்லவா?: அன்னவகைஅத்தன்மையாக; அடியோமும் அரவணைக்க அருமதலைப் புதல்வர்களை வேண்டி நின்ருேம்-நானும் எனது மனைவியும் ஆகிய நாங்கள் தழு விக் கொள்ள அருமையான மழலை மொழி பேசுகின்ற புதல்வர்களை வேண்டி நின்ருேம்; மின்னல் இடை மெல்லியலே-மின்னற் கொடி போலும் இடையையுடைய மென்மையான இயல்பையுடையபெண்ணே அன்னம் நாணும் மெல் நடையாய் - அன்னமும் உன் ந  ைட  ைய ப் பார்த்து நாணமுறும் மென்மையான நடையையுடையவளே; மீனட்சி - அங்கயற்கண்ணியே; முருகவேளை முத்தமிடக் கைத்தலத்தில் ஏந் தும் தாயே-முருகப்பெருமான முத்தமிடுதற்காக உமது திருக்கரங் களில் ஏந்தி வைத்திருக்கின்ற தாயே! எம்முன் வந்து - எ ம க் கு முன்னே காட்சி தந்தருளி; முன்னு வரம் தந்து அருள்வாய்- யாம் கருதும் வரத்தைத் தந்தருள்வாயாக. (எ-று) 3
28 நஞ்சமணி கண்டருடன் நாளும் நின்று - நட்டமிடு நாயகியே நளின நங்காய்
கஞ்சமல ரடியினைகள் தஞ்ச மென்று
கனலின்மேல் மெழுகாக உருகி நிற்கும் நெஞ்சினனெல் குறைதீர்க்க நீயு முள்ளம்
நெகிழாத தென்னதவக் குறையோ அம்மா அஞ்சுகமே கிஞ்சுகவாய் அமுத வாக்கொன்
றருளுதிநீ ஆரணங்கே அலந்தேன் போற்றி.
(இ-ள்) நஞ்சமணி கண் ட ரு ட ன் நாளும் நின்று நட்டமிடு நாயகியே-நஞ்சைத் தமது கண்டத்தில் அணிந்திருக்கும் சிவபெருமா

59
னுடன் எந்நாளும் நின்று நடனஞ் செய்யும் தலைவியே, நளின நங்காய்மகாலட்சுமியே கஞ்சமலரடியிணேகள் தஞ்சமென்று -தாமரை மலர் போன்ற உனது இரு பாதங்களைத் தஞ்சம் என்று கனலின் மேல் மெழு காக உருகி நிற்கும் அக்கினியின் மேல் அகப்பட்ட மெழுகுபோல உருகி நிற்கும்; நெஞ்சினனென் குறைதீர்க்க-நெஞ்சினையுடையவனுகிய எனது குறையை நீக்க, நீயும் உளம் நெகிழாதது-தேவியே நீயும் மனம் நெகி ழாதது; என்ன தவக்குறையோ அம்மா- என்ன த வ க் குறைபாடோ தா யே அஞ்சுகமே - கிளிபோன்றவளே; நீ கிஞ்சுகவாய் அமுத வாக்கொன்று அருளுதி-நீ முண்முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயால் அமுத வாக்கொன்று அருளுதிராக, ஆரணங்கே - தேவமாதாவே; அலந் தேன்-துன்பமுற்றேன்; போற்றி-வணக்கம். (aTーgy) 4.
(வி-ம்) சிவகாமசுந்தரிக்கு மகாலட்சுமி யென்றும் ஒரு திருநாமம் உண்டு கமஹாலகஷ்மியை நம: .
சாவித்திரி தோன்றுதல்
வேறு
12) அங்கிக் குண்டத் தாகுதி மன்னன் அளிக்கும்போ தங்கோர் கோடி ஆதவர் தேசும் அழகுங்கொண் டங்கை தன்னில் அங்குச பாச மவையேந்தி அங்கிக் குண்ணின் றம்பிகை சாவித்திரி வந்தாள்.
(இ- ள்) அங்கிக் குண்டத்து ஆகுதி மன்னன் அளிக்கும்போதுயாகாக்கினிக் குண்டத்தில் அசுவபதி மன்னன் ஆகுதி கொடுக்கும் போது அங்கு ஓர் கோடி ஆதவர் தேசும் அழகுங் கொண்டுஅங்கே ஒருகோடி சூரியப்பிரகாசமும் அழகும் கொண்டு; அம்கை தன்னில் அங்குசபாசம் அவையேந்தி அழகிய கைகளிலே அங்குசம் பாசம் என்பவைகளை ஏந்தி; அங்கிக்குள் நின்று அம்பிகை சாவித்திரி வந்தாள்-அந்த யாகாக்கினிக்குள் நின்று அம்பிகையாகிய சாவித்திரி வந்தாள். (எ- று) 15
130 மன்னன் செய்யும் மாதவங் கண்டு மகிழ்வுற்ற
கன்னல் வில்லைக் கையினி லேந்துங் கமழ்தாராள் பொன்னின் நல்லாள் புன்னகை பூத்துப் புவிவேந்தை என்னிந் நோன்பையேற்றனை மைந்த வெனக்கேட்டாள்
(இ-ள்) கன்னல் வில்லை கையினில் ஏந்தும் கமழ்தாராள் - கருப்பம் வில்லைக் கையினில் ஏந்தும், வாசனை கமழ்கின்ற மாலையை

Page 47
60
ய்ணிந்த சாவித்திரிதேவி; பொன்னின் நல்லாள் - பொன்போலும் அழகுடையவள்; புன்னகை பூத்து. புன்சிரிப்புச் சிரித்து; புவி வேந்தை என்னிந் நோன்பை ஏற்றனை மைந்த எனக் கேட்டாள்- புவிவேந்தன கிய அசுவபதியைப் பார்த்து "மைந்தனே! எதற்காக இந்த நோன்பை ஏற்றனே?’ எனக்கேட்டாள். (எ- று) 16
13
கன்னேர் நெஞ்சக் கள்வனென் கண்கள் களிகூர முன்னே தோன்றி முன்வினை யெல்லாம் முடித்தாளே பொன்னே யெற்குப் புத்திரர் வேண்டித் தவஞ்செய்தேன் அன்னே யென்னை யாதரித் துன்றன் அருள்தாராய்.
(இ-ள்) கல்நேர் நெஞ்சக் கள்வன் என் கண்கள் களிகூர-கல்லை ஒத்த நெஞ்சு படைத்த கள்வனகிய எனது கண்கள் களிப்பெய்தும் படி; முன்னே தோன்றி முன்வினை எல்லாம் முடித்தாளே - என் முன்னே வந்து தோன்றி அதன் பயஞக எனது பழைய வினைகள் எல் லாவற்றையும் அழித்தவளே பொன்னே-பொன் போன்று அழகிய வளே எற் குப் புத்திரர் வேண்டித் தவஞ்செய்தேன் - எனக்குப் புத்திரப்பேறு விரும்பி யான் தவஞ்செய்தேன்; அன்னே-தாயே; என்னை ஆதரித்து உன்தன் அருள் தாராய் - என்னை ஆதரித்து உமது திரு வருளைத் தருவீராக. (எ-று) 7
182
மன்ன நிற்கு மைந்தரிப் போது மலரார்காண் தன்னே ரின்றித் தாவறு கற்பிற் றணிநிற்கும் பொன்னே போலும் புத்திரி தன்னைப் புவிபோற்ற இந்நா வீவான் ஈச்சுர னின்புற் றிருவென்ருள்.
(இ- ள்) மன்னு நிற்கு மைந்தர் இப்போது மலரார்காண்ல மின் னவனே உனக்கு ஆண்பிள்ளைகள் இப்போது தோன்றர்கள்; தன் நேர் இன்றித் தாவறு கற்பில் தனிநிற்கும்-தனக்குச் சமானமின்றிக் குற்றமற்ற கற்பினில் முதன்மையுடன் நிற்கும்; டொன்னே போலும் புத்திரி தன்னை- இலக்குமியைப் போலும் ஒரு பெண்பிள்ளையை; புவி போற்ற-உலகோர் போற்றும் வண்ணம்; இந்நாள் ஈச்சுரன் ஈவான் -இப்பொழுது சிவபிரான் கொடுத்தருள்வான்; இன்புற்றிரு என்ருள் -இன்பமெய்தி இருப்பாயாக என்று தேவி சொன்னள். (எ-று) 118

6.
133 தாயும் நீயே தந்தையும் நீயே தமியேற்குச்
சேயும் ஆதல் செவ்விதுன் வண்மை செயிர்நாகம் பாயுங் கங்கை பான்மதி சூடும் பவன்நாளுந் தோயும் இன்பத் தோயதி யேயென் துயர்தீர்த்தாய்.
(இ-கள்) தாயும் நீயே - எனக்குத் தாயும் நீயே தந்தையும் நீயே -எனக்குத் தந்தையும் நீயே, தமியேற்குச் சேயும் ஆதல் செவ்விது உன் வண்மை-எனக்கு குழந்தையும் நீ ஆகுதல் செவ்விதாகிய உனது வள்ளற்றன்மையாகும். அது நன்று; செயிர் நாகம்-கோபங் கொண்ட நாகபாம்பையும்: பாயுங்கங்கை பாய்கின்ற-கங்கை நதியையும்; பான் மதி-பால் போன்ற சந்திரனையும்; சூடும்பவன் - சூடுகின்ற சிவன்; நாளுந் தோயும் இன்பத் தோயதியே - தினமும் முழுகும் (சேரும்) இன்ப சாகரமே; என்துயர் தீர்த்தாய் - நீர் இன்று எனது துய ரத்தை தீர்த்தருளினீர். (எ-று) 9
மாளவிதேவி கருவுறல்
184 செய்யார் தங்குஞ் செம்புன லெல்லாஞ் செறிதேறல்
மொய்யார்ந் துண்டு மூசுநன் னுடன் முதற்பன்னி மையா ருண்கண் மாளவிதேவி மணிமோட்டிற் பொய்யா வண்ணம் பூத்தது தெய்வக் கருவொன்று.
(இ-ள்) செய்ஆர் தங்கும்- வயலில் நிறைந்து தங்கும்; செம்புனல் எல்லாம்-புதுவெள்ளம் அடங்கலும் செறிதேறல்-செறிந்த தேன; மொய் ஆர்ந்து உண்டு- வண்டுகள் அனுபவித்து உண்டு, மூகநல் நாடன் - மொய்க்கின்ற நல்ல நாட்டினையுடைய அசுவபதியின் முதற்பன்னி - முதல் மனைவியாகிய, மைஆர் உண்கண்-மைநிறையப் பூசப்பட்ட கண் களையுடைய மாளவிதேவி - மாளவிதேவியுடைய மணிமோட்டில்மணிவயிற்றிலே, பொய்யாவண்ணம் - தேவியின் வாக்குப் பொய்யாத வாறு; தெய்வக்கருவொன்று பூத்தது - தெய்வக் குழந்தையொன்று உண்டாகது. (எ-று) 20
மாளவிதேவியின் வயாவருத்தம்
135 வாளுண் கண்ணி வாயுமிழ் வூற வயாவுற்ருள்
நாளுஞ் செல்ல நங்கைதன் கொங்கை நனிபொங்க காழொண் வண்டின் கண்முலைக் காம்பு கறுப்பாக கோள்வெண் டிங்கட் கோலமுங் கொண்டு குலாவுற்ருள்

Page 48
62
(இ- ள்) வாள் உண்கண்ணி - ஒளி பொருந்திய மை பூசப்பட்ட கண்களையுடைய மாளவிதேவி; வாய் உமிழ்வு ஊற - வாயில் உமிழ் நீர் ஊற வயாவுற்ருள் - மசக்கையுற்ருள்; நாளுஞ் செல்ல -நாள் கள் செல்ல; நங்கைதன் கொங்கை நனிபொங்க - மாளவிதேவி தனது கொங்கைகள் மிகவும் பருத்துப் பொலிந்துவளர, காழ் ஒண் வண்டின் - கருமை நிறமான அழகுடைய வண்டினைப்போல்; கண் முலைக்காம்பு கறுப்பாக்-துவாரத்தினையுடைய முலைக்காம்புகள் கறுப் படைய; கோள் வெண்திங்கட் கோலமும் கொண்டு - கிரகமாகிய வெண்சந்திரனின் நிறமும் கொண்டு ( வெளிறிய நிறமுங் கொண்டு); குலாவுற்ருள்-சஞ்சரித்தாள். (எ-று) 丑2球
மாளவிதேவி கருவுயிர்த்தல்
136 திங்கள் பத்துச் சென்றிடத் தேவி திருவன்ன
பங்கம் இல்லாப் பாலகி தன்னைப் பயந்திட்டாள் பொங்கும் இன்பப் புணரியி லாழ்ந்த புவிமன்னன் மங்குல் என்ன மாநிதி தந்து மகிழ்ந்தானே.
(இ-ள்) திங்கள் பத்துச் சென்றிட - பத்து மாதஞ் செல்ல; தேவி-மாளவிதேவி, திருவன்ன-இலக்குமி போன்ற பங்கம் இல்லா - குற்றம், ஈனம், விகாரம் ஆகியன இல்லாத பாலகி தன் னை பயந்திட்டாள் - ஒரு பெண்குழந்தையைப் பெற்ருள்; பொங்கும் இன் பப் புணரியில் ஆழ்ந்த புவி மன்னன். பொங்கி வருகின்ற இன்பமா கிய கட ல் ஆழ்ந்த அசுவபதிமன்னன்; மங்குல் என்ன-கார்மேகம் என்னுட டி மாநிதி தந்து மகிழ்ந்தான் - பெருஞ் செல்வங்களை மக்
களுக்குச் கொடுத்து மகிழ்ந்தான். (எ-று) 122 ஏ-அசை
(வி-ம்) பயந்திட்டாள் - இரட்டித்து இறந்த காலம் காட் டிற்று.
அப்பொழுது நிகழ்ந்தவை 13
பூவிற் றங்கும் பொன்னினைப் பெற்ற புவிமன்னன் காவற் சாலைக் கைதிக டம்மை விடுமின்கள் தேவர்க் கெல்லாந் தேர்பலி யிட்டுத் தொழுமின்கள் கோவிற் கென்று கொள்திறை யாண்டேழ் விடுமென்ருன்,
(இ- ள்) பூவில் தங்கும் பொன்னினை பெற்ற புவி மன்னன்-தாம ரைப் பூவில் வசிக்கும் இலக்குமி போன்ற மகளைப் பெற்ற அசுவபதி

63
மன்னன்; காவற் சாலைக் கைதிகள் தம்மை விடுமின்கள். சிறைச்சாலை யில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யுங்கள்; தேவர்க்கு எல்லாம்தேவர்களுக் கெல்லாம்; தேர் பலியிட்டு-ஆராய்ந்து தேர்ந்த பலிகளைச் செலுத்தி; தொழுமின்கள்-வண்ங்குங்கள்; கோவிற் கென்று-அரசனுக் கென்று கொள்திறை - கொள்ளும் திறையை, ஆணடு ஏழ் விடுமென் ருன்-ஏழு வருடத்திற்குப் பெருது விடுங்கள் என்று ஆணையிட்டான்,
(GI --gi) 3.
138 ஆர்த்தன சங்கம் ஆர்த்தன வண்டும் அலர்மீது
ஆர்த்தனர் மக்கள் ஆர்த்தனர் அந்தண் மறையோரும் ஆர்த்தனர் மேலாம் ஆரணி யஞ்சேர் அறவோர்கள் ஆர்த்தனர் வானுேர் அந்தரத் தேநின் றலர்தூவி.
(இ-ள்) ஆர்த்தன சங்கம்-சங்குகள் முழங்கின; வண்டும் அலர் மீது ஆர்த்தன - மலரின் மீது வண்டுகள் ரீங்காரஞ் செய்து ஒலித்தன; மக்கள் ஆர்த்தனர் - மக்கள் ஆரவாரஞ் செய்தனர்; அந்தண் மறை யோரும் ஆர்த்தனர்-அழகிய தண்ணளியையுடைய அந்தணரும் ஆர வாரஞ் செய்தனர்; மேலாம் ஆரணியஞ் சேர் அறவோர்கள் ஆாத்த னர்-காட்டின்கண் பொருந்திய மேலாகிய முனிவரும் துறவோரும் ஆர வாரஞ் செய்தனர்; வானேர் அந்தரத்தே நின்று அலர் தூவி ஆர்த்த னர்-தேவர் ஆகாயத்தில் நின்று பூக்களைத் தூவி ஆரவாரஞ் செய் தனர். று) 星岑4
குழந்தைக்குப் பெயர் சூட்டல்
189 விண்ணிற் றேவர் விஞ்சையர் மேலாம் விரதர்தம் எண்ணுக் கெட்டா எம்பெரு மாட்டி எளிவந்து மண்ணிற் போந்து மாத்திர மன்னன் மகளான பெண்ணுக் குச்சா வித்திரி யென்றே பெயரிட்டார்,
(இ-ள்) விண்ணில் தேவர் - விண்ணகத் தேவர்களதும்; விஞ் சையர் - வித்தியர்தரரதும் மேலாம் விரதர்தம் மேலாகிய தவத்தோ ரதும்; எண்ணுக்கு எட்டா எம்பெருமாட்டி - மனத்திற்கும் அறிவுக் கும் எட்டாத சாவித்திரிதேவி; எளி வந்து - எளிதாக வந்து மண் ணிற் போந்து மாத்திர மன்னன் மகளான பெண்ணிற்கு - மண்ணுல கத்தில் பிறந்து மாத்திரமன்னனுடைய மகளான அப்பெண்ணுக்கு சாவித்திரி யென்றே பெயரிட்டார். தேவியின் நாமமாகிய 'சா வித்திரி' என்றே நாமகரணஞ் செய்தார்கள். (எ~று) 25

Page 49
64
குழந்தை வளர்தல் 140 கஞ்சம் நாணுங் காமரு தோற்றக் கவின்பாவை
அஞ்சொற் கொஞ்சும் ஆம்பலின் வாயில் அமுதூற மஞ்சம் மீதும் மங்கையர் தங்கள் மடிமீதும் உஞ்சல் மீதும் உம்பரின் காப்பில் வளர்கின்ருள். (இ. ஸ்) கஞ்சம் நாணும்-தாமரை நாணும்படியான காம ரு தோற்ற - அழகிய தோற்றத்தையுடைய; க்வின் பாவை - எழிலு டைய பாவை போன்ற சாவித்திரி அம்சொல் கொஞ்சும்-அழகிய மழலைச் சொற்களைப் பேசும்; ஆம்பலின் வாயில் - செ வ் வாம் பல் போன்ற வாயில்; அமுதுஊற; ம ஞ் சம் மீதும்-மஞ்சத்தின் மேலும்; மங்கையர் தங்கள் மடிமீதும்; உஞ்சல் மீதும்; உம்பரின் காப்பில் வளர்கின்ருள்-தேவர்களின் காவலில் வளர்கின்ருள். (எ-று) 126
உஞ்சல் - ஊஞ்சல்
wர் விளையாட்டியர்தல் வேறு
4. மான்கொண்ட விழியும் மயில்கொண்ட எழிலுந்
தேன்கொண்ட மொழியுந் தான்கொண்ட பாவை வான்கொண்ட மதிபோல் வளர்கின்ரு ளதனை நான்கண்ட வாபோல் நவில்கின்றேன் கேண்மின்.
(இ ஸ்) மான் கொண்ட விழியும் -மான் கொண்டுள்ள மருண்ட விழி போன்ற கண்களையும்; மயில் கொண்ட எழிலும்-மயில் கொண் டது போன்ற அழகையும்; தேன் கொண்ட மொழியும் - தேன் கொண்ட இனிமை போன்ற இனிய மொழியையும்; தான் கொண்ட பாவை தான் பெற்ற சாவித்திரியானவள்; வான் கொண்ட மதி போல் வளர்கின்றள் - ஆகாயம் கொண்டுள்ள சந்திரனைப்போல் வளர் கின்ருள்; அதனை நான் கண்டவாபோல் நவில்கின்றேன் கேண்மின்அதனை நான் கண்டவாறு போலச் சொல்லுகிறேன் கேளுங்க ள். (6T-g!) 27
செங்கீரையாடல் 142 பங்கேரு கம்போற் பால்வடியும் முகத்தை அங்காந்து தூக்கி அம்காலை மடக்கிச் சிங்காரப் பாவை சிறுகைக ரூன்றிச் செங்கீரை யாடுஞ் செவ்விதனைக் காணிர்.

65.
(இ- ள்) பங்கேருகம் போல் பால்வடியும் முகத்தை - தாமரை போலும் செவ்விதாகிய பால்வடியும் அழகிய முகத்தை; அங்காந்து தூக்கி-அண்ணுந்து தூக்கி; அம்காலை மடக்கி-அழகிய காலை மடக்கி; சிறுகைகள் ஊன்றி-சிறிய கைகளை நிலத்தில் ஊன்றி; சிங்காரப் பாவை - அலங்காரமான சாவித்திரி; செங்கீரையாடும் செவ்விதனைக் காணிர்-செங்கீரை ஆடுகின்ற அழகினைக் காண்பீராக. (எ-று) 128
தாலாட்டுதல்
143 மாலோனும் அந்த மலரோனும் மற்றும்
மேலோரும் வந்து மெய்காத்து நிற்பச் சேலாடுங் கண்ணுர் செந்திருவைத் தவிசிற் முலேலோ வென்று தாலாட்டல் கேளீர்.
(இ-ள்) மாலோனும்-திருமாலும்; அந்த மலரோனும் - அந்தப் பிரமாவும்; மற்றும் மேலோரும்- மற்றுந் தேவர்களும் ; வந்து மெய் காத்து நிற்ப-வந்து அந்தக் குழந்தைக்கு மெய்காப்பாளராக நிற்க; சேலாடுங் கண்ணுர்- கயல்மீன் போல் புரளுகின்ற கண்களையுடைய மாதர்கள்; செந்திருவை - இலக்குமி போன்ற குழந்தையை தவிசில் தாலேலோ என்று - தொட் டி லில் இட்டுத் தாலேலோ" என்று; தாலாட்டல் கேளிர்-தாலாட்டுதலைக் கேளுங்கள். (எ-று) 9
144 ஒப்பாரு மில்லா ஒருமுதலைச் சாரா
திப்பாரில் வைகு மிழிசனரைப் பார்த்துச் செப்பாரும் முலையீர் செங்காந்தட் கையாற் சப்பாணி சாவித் திரிகொட்டல் காணிர்.
(இ- ள்) ஒப்பர்ரும் இல்லா ஒருமுதலைச் சாராது - தனக்கு ஒப் பானவர் யாரும் இல்லாத ஒரு தனி முதற்பொருளாகிய பரம்பொ ருளைச் சார்வடையாமல்; இப்பாரில் வைகும் இழிசனரைப் பார்த்து -இப்பூமியில் தங்கியிருக்கும் அறிவீனரைப் பார்த்து; செங்காந்தட் கையால் - செங்காந்தட் பூப்போன்ற இரண்டு கைகளினுலும்; சாவித் திரி சப்பாணி கொட்டல்; செப்பாரும் முலையீர் காணிர் - சிமிழை ஒக்கும் முலைகளையுடைய பெண்களே! காணுங்கள்: (எ-று) 1369
(வி-ம்) குழந்தை சப்பாணி கொட்டுதல், பரம் பொருளை மறந்து வாழும் அறிவினரைப் பார்த்து எள்ளிக் கைகொட்டல் எனக் கற்பிப்பது தற்குறிப்பேற்றவணி.
Öቸff-5

Page 50
66
முத்தாடுதல்
45 கருக்கொண்ட மேகக் கார்குழலார் கையிற்
திருக்கொண்ட சாவித் திரிதன்னை யேந்தி மருக்கொண்ட மணிவாய் மகிழ்முத்தங் கேட்ப முருக்கம்பூ விதழால் முத்தாடல் காணிர். (இ- ள்) கருக்கொண்ட மேகக் கார்குழலார் - கருவுற்ற மேகம் போல் கரிய குழலையுடைய பெண்கள், கையில் திரு கொண்ட சாவித் திரிதன்னை ஏந்தி-தங்கள் கைகளிலே அழகுமிக்க சாவித்திரியை ஏந்தி; மருக்கொண்ட மணிவாய் மகிழ்முத்தங் கேட்ப வாசனை பொருந்திய அழகிய வாயால் முத்தமிடும்படி கேட்க முருக்கம்பூ இதழால் முத் தாடல் காணிர் - முருக்கம் பூப்போன்ற சிவந்த அதரத்தால் முத்தமி டுதலைக் காணுங்கள். (எ-று) 13.
அம்புலியை அழைத்தல்
46 கொம்பனையார் மடிமேற் குழவிதனை வைத்தே
உம்பருலாப் போகும் உவாமதியைக் காட்டக்
கிம்புரிகை வளையல் கிளர்ந்தொலிகள் செய்ய அம்புலியை வாவென் றழைக்கின்ருள் காண்மின். (இ- ள்) கொம்பனையார் - பூங்கொம்பு போன்ற மகளிர் மடி மேல் குழவிதனை வைத்து- தங்கள் மடியிலே சாவித்திரியை வைத்தி ருந்து; உம்பர் உலாப் போகும் ஆகாயத்தில் உலாவுகின்ற; உவாமதி யைக் காட்ட - பூரணைச் சந்திரனைக் காட்ட கிம்புரி - தோளணியும்; கைவளையல் - கைவளையலும்; கிளர்ந்து - மிகுந்து; ஒலிகள் செய்ய; அம் புலியை வா என்று அழைக்கின்ருள் காண்மின் - சந்திரனை இங்கே என் னிடம் வா என்று சாவித்திரி அழைப்பதைக் காணுங்கள். (எ-று) 132
அம்மானை ஆடில் 47 பெம்மானை யேத்திப் பெருந்தவத்தாற் பெற்ற அம்மானை மென்ருேள் ஆரணங்கார் அணைந்து தம்மானைப் பாடத் தானுமவர் தம்மோ டம்மானை பாடி ஆடுகின்ருள் காண்மின். (இ- ள்) பெம்மானை ஏத்தி - எமது தலைவராகிய கடவுளை த் துதித்து பெருந்தவத்தாற் பெற்ற அம்மானை-பெருந்தவஞ் செய்து
பெறப்பட்டவளாகிய அந்த அழகிய மான்போலும் சாவித்திரியை, மென்தோள் ஆர்அணங்கார் அணைந்து-மென்மையான தோள்களை

67
யுடைய அழகிய பெண்கள் அணைந்து; தம்மானைப்பாட - தமது முதல் வனை (கடவுளை) ப்பாட தா னும் அவர்தம்மோடு - சாவித்திரியும் அவர்களுடன் கூடி அம்மானை பாடி ஆடுகின்ருள் காண்மின் - அம் மானைப் பாடல்கள் பாடி ஆடுகின்ருள் காண்மின்கள். (எ-று) 133
சிற்றில் இழைத்தல் வேறு
148 மாணிக்கக் கல்லடுக்கி மதுகரத்தின் மெழுகப்பி ஏணிற்குஞ் சுவரெழுப்பி எறிவைர விளக்கேற்றி
ஆணிப்பொன் இதழ்வேய்ந்தங் கழகான சிற்றில்கள் நாணிற்கும் நறுநுதலாள் நயப்புடனே இழைக்கின்ருள்
(இ-ள்) மாணிக்கக்கல் அடுக்கி - மாணிக்கக்கற்களை அடுக் கி; மதுகரத்தின் மெழுகு அப்பி - வண்டுகள் சேர்த்த தேன் மெழுகாற் சந்து பூசி; ஏண் நிற்கும் சுவர் எழுப்பி-வலிமை அமைந்த சுவர்கள் எழுப்பி-எறிவைர விளக்கேற்றி-ஒளிவீசும் வைரக் கற்க ளா கி ய விளக்கை ஏற்றி ஆணிப்பொன் இதழ் வேய்ந்து - உயர்ந்த பொன் னினுல் இலைவடிவாகச் செய்த தகடுக்ளினுல் கூரை வேய்ந்து; அங்கு அழகான சிற்றில்கள்; நாண் நிற்கும் நறுநுதலாள் - நாணந் தங்கிய நறுமணங் கமழும் நெற்றியையுடைய சாவித்திரி; ந யப் புட னே இழைக்கின்ருள்-ஆசையுடன் அமைக்கின்ருள். (எ நூறு) 34
வள்ள பாடி நெற்குத்தல் 149 அம்பொன்செய் யுரல்நிறுத்தி யரதனத்தை யதில்நிரப்பி உம்பல்வெண் கூர்ங்கோடே யுலக்கையாக் கைப்பற்றி
வம்பமலர் வண்டிரிய வள்ளைப்பாட் டுப்பாடி அம்புவியை யாள்மன்னன் அருமதலை அவைக்கின்ருள்.
(இ-ள்) அம்பொன்செய் உரல் நிறுத்தி - அழகிய பொன்னல் செய்யப்பட்ட உரலை நிறுத்தி; அரதனத்தை அதில் நிரப்பி-இரத்தி னத்தை அவ்வுரலில் நிரப்பி, உம்பல் வெண் கூர்ங்கோடே - யானை யின் வெண்மையான கூரிய தந்தத்தையே உலக்கையாக் கைப்பற்றி -உலக்கையாகக் கையிற் பிடித்து வம்பமலர் வண்டிரிய - தலையிற் சூடிய புதிய மலரினின்றும் வண்டுகள் ஒட வள்ளைப்பாட்டுப் பாடி - வள்ளைப் பாடல்களைப் பாடி அம்புவியை ஆள் மன்னன் அரும தலை - அழகிய பூமியை ஆளும் அசுவபதி மன்னனின் அரிய மக்ளா கிய சாவித்திரி; அவைக்கின்ருள்-குற்றுகின்ருள். (எ-று) 35

Page 51
68
சிறு சோறு சமைத்தல் 50 பணிலத்தை யடுப்பாக்கிப் பாலாமை யோடேற்றி அணிமுத்தை யதிற்பெய்தே ஆரக்கோல் தீமூட்டி மணிச்சோறு சமைத்தாய மங்கையரை மனையிருத்தி மணித்தட்டிற் படைத்தூட்டி மகிழ்கின்ருள் மாதரசி.
(இ- ள்) பணிலத்தை அடுப்பாக்கி - சங்குகளை அ டு ப் பர் க வைத்து; பாலாமை ஒடு ஏற்றி-பாலாமையின் ஒட்டைக் கலமாக அதன்மேல் ஏற்றி, அணிமுத்தை அதிற் பெய்து - அழகிய முத்துக் களை அக்கலத்தில் அரிசியாக இட்டு; ஆரக்கோல் தீமூட்டி - சந்த னக் கோல்களை விறகாக வைத்து நெருப்பாக மூட்டி மணிச்சோறு சமைத்து-மணிகள் போலும் சோற்றைச் சமைத்து; ஆயமங்கையரை மணையிருத்தி-தோழிப் பெண்களை பீடப்பலகையில் இருத்தி; மணித் தட்டில்-அழகிய தட்டுக்களில் படைத்து ஊட்டி - அச்சோற்றைப் படைத்து உண்பித்து; மா த ர சி மகிழ்கின்ருள் - அப்பெண்களுக்கு அரசிபோன்ற சாவித்திரி மகிழ்வடைகின்ருள். (எ-று) 196
பந்தாடுதல் வேறு
5. பந்து பயிலு மரங்கத்திற்
பாவை நல்லார் தம்மோடு கந்து கத்தைக் கைக்கொண்டு
கலாப மஞ்ஞை போல்மடவாள் வந்து துள்ளி விளையாட
வார்மென் கொங்கை வடமறவே நொந்து மருங்குல் ஆற்ருது
நுடங்கி நுடங்கி நொசிந்ததுவே.
(இ- ள்) பந்து பயிலும் அரங்கத்தில் - பந்தடித்துப் பழ கும் விளையாட்டு இடத்தில்; பாவைநல்லார் தம்மோடு - பாவைபோன்ற பெண்கள் பலரோடு; கந்துகத்தை கைகொண்டு - பந் ைத க் கையில் ஏந்திக்கொண்டு; கலாப மஞ்ஞை போல் மடவாள்-தோகையையுடைய மயில்போன்ற சாவித்திரி; வந்து துள்ளி விளையாட-அப்பெண்களுடன் வந்து பந்தடித்துத் துள்ளி விளையாட வார்மென்கொங்கை வடம்

69
அறவே- முலைக்கச்சணிந்த மென்மையான கொங்கை மீதிருந்த மணி வடங்கள் அறுந்துபோக; மருங்குல் நொந்து ஆற்ருது-இடையானது நொந்து ஆற்ருது; நுடங்கி நுடங்கி - துவண்டுதுவண்டு; நொசிந்தது - வருந்தியது. ஏய ஈற்றிசை (எ. நு) 37
152 மையா ருண்கண் மடவார்கள்
மாறி மாறிக் கந்துகத்தைக்
கையா லடிக்க அடங்காது
ககனத் தெழுந்து சென்றிடலும்
பையா ரல் குற் பாவை"யரும்
பாய்ந்து பாய்ந்து பற்றிடுவர்
பொய்யா மின்பம் புசித்தற்குப்
போகும் புலனை யடக்கல்போல்.
(இ-ள்) மைஆர் உண்கண் மடவார்கள் - மை நிறைய எழுதிய கண்களையுடைய பெண்கள்; மாறி மாறி கந்துகத்தை கையால் அடிக்கமாறி மாறிப் பந்தைக் கையால் அடிக்க; அடங்காது ககனத்து எழுந்து சென்றிடலும் - அப்பந்து அடங்காது ஆகாயத்தில் எழுந்து சென்றிடு தலும்; பைஆர் அல்குல் பாவையரும் - பாம்பின் படம்போன்ற நிதம் பத்தையுடைய பெண்களும்; பாய்ந்து பாய்ந்து பற்றிடுவர் - பாய்ந்து பாய்ந்து அப்பந்தைப் பற்றிக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவர்; (அச் செயல் எதுபோலவெனில்) பொய்யாம் இன்பம் புசித்தற்குப் போகும் புலனை அடக்கல் போல் - அடங்காது நிலையற்ற பொய்யாகிய இன்ப விடயங்களை அநுபவிக்கச் செல்லும் புலன்களை அறிவுள்ளோர் அடக்கு தலைப்போலும். (எ-று) 38
பாவை விளையாடல்
153 கொங்கு தங்குங் குழன்மடவார்
குரவின் மலரைக் குழவியெனத்
தங்கள் தங்கள் கரத்தெடுத்துத்
தழுவி முத்தம் பலதந்து
1ெ 1ங்கு கின்ற புணர்முலைகள்
புகட்டி யின்பங் காண்டாரால்
சங்கு விம்முங் கடலுலகிற்
சாற்றுந் தரமோ தாயன்பு.

Page 52
70
(இ-ள்) கொங்கு தங்கும் குழல் மடவார் - வாசனை கமழ்ந்து தங்குகின்ற கூந்தலையுடைய பெண்கள்; குரவின் மலரைக் குழவியென - குராமரத்தின் பூ க் களை க் குழந்தையென்று; தங்கள் தங்கள் கரத்து எடுத்து - தங்கள் தங்களுடைய கைகளில் எடுத்து வந்து; தழுவி பல முத்தம் தந்து; பொங்குகின்ற புணர்முலைகள்- அன்பால் பொங்குகின்ற இரண்டு முலைகளையும்; புகட்டி இன்பங்காண்பாரால் - ஊட்டி இன்பங் காண்டார்கள்; சங்கு விம்முங் கடலுலகில் - சங்குகள் ஒலிக்கும் கடல் சூழ்ந்த பூமியில்; தாயன்பு சாற்றுந்தரமோ-தாயன்பு சொல்லுந்தரத் ததோ? (எ-று) 39 (வி-ம்) பெண்கள் சிறு பராயத்தில் பார்வைப்பிள்ளைகளை வைத் துப் பாலூட்டிச் சீராட்டி விளையாடுவர். இது அவர்கட்கு இயல் பாக உள்ள தாய்மையன் பின் வெளிப்பாடாம். குராமரத்தின் மலர் குழவிபோல் இருக்கும். அதைக் குழவியெனப் பெண்கள் எடுத்து விளையாடுவர்.
96m86)f 16)
வேறு
154 காராரும் பொழின்மேவு கற்பகத்தின் நீழல்
தாராருந் தேன்வண்டு தாம்பூசல் செய்ய வாராரும் முலையாள்பல் வண்ணங்கள் பாடி ஏராரும் பொன்னுரச லிருந்தாடு கின்ருள்.
(இ - ள்) காராரும் பொழின் மேவு - மேகங்கள் தங்கும் சோலை களின்கண் பொருந்தும்; கற்பகத்தின் நீழல் - கற்பக மரத்தின் நிழ லிலே; தாராரும் தேன்வண்டு தாம்பூசல் செய்ய - பூமாலையிற்றங் கும் தேன்வண்டுகள் கூடிப் பேரொலி செய்; வார் ஆரும் முலை யாள்-கச்சுப் பொருந்திய முலைகளையுடைய சாவித்திரி; பல் வண்ண்ங் கள்பாடி-பல இராகங்களைப்பாடி, ஏராரும் பொன்னுரசல் அழகு பொருந்திய பொன் ஊசலில், இருந்து ஆடுகின்ருள் - இருந்து விளை யாடுகின்ருள். (எ-று) 40
155 தாதாரும் பூங்கோதை தாழ்குழலி லாடக்
காதாருங் குண்டலமுங் க்னங்குழையு மாடப் போதாரும் பூண்முலைமேற் பொன் வடமு மா. மாதாரும் மணியூசல் மயிலாடு கின்ற ஸ்.

71
(இ-ள்) தாதாரும் பூங்கோதை-பூந்தாது நிறைந்த பூமாலை; தாழ்குழலில் ஆட - தாழ்ந்த கூந்தலில் ஆட காது ஆரும் குண்டல மும்-காதிற் பொருந்திய குண்டலமும்; கணங்குழையும் ஆட-கன விய குழையும் ஆட போது ஆரும் பூண்முலைமேல் - தாமரை யரும்பு போலும் ஆபரணம் அணிந்த முலைகளின் மேல்; பொன் வடமும் ஆட பொன் வடங்களும் ஆட, ம்ாது ஆரும் மணி ஊசல் -அழகு பொருந் திய மணி ஊசலில்; மயில் ஆடுகின்ருள் - மயில் போலும் சாயலையு டைய சாவித்திரி ஆடுகின்ருள். (எ.ாறு) 4.
158 கொந்தாருங் கொம்பரிலே குயிலிருந்து பாட மந்தாரம் மலர்பெய்து மங்கைதன வாழ்த்த வந்தாரும் போவாரும் வடந்தொட்டே யாட்ட பந்தாரும் பணைமுலையாள் படிந்தாடு கின்ருள். (இ-ள்) கொந்து ஆரும் கொம்பரிலே - பூங்கொத்துக்கள் நிறைந்த பூங் கொம்புகளிலே; குயிலிருந்து பாட-குயில்கள் இருந்து கூவ; மந்தாரம் மலர்பெய்து மங்கைதனை வாழ்த்த-மந்தார மரங் கள் பூக்கள் சொரிந்து சாவித்திரியை வாழ்த்த; வந்தாரும் போவா ரும் வடந்தொட்டே ஆட்ட- வந்தவர்களும் போபவர்களும் கயிற் றிலே பிடித்து ஆட்ட பந்தாரும் பணை முலையாள்-பந்தை ஒத்த பருத்த முலைகளையுடைய சாவித்திரி; படிந்தாடுகின்ருள்-ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகின்ருள். (GT-gi) 42
(wi) கல்வி பயிறல் வேறு
57 ஆங்கவ விங்ங்ண மயர்ந்த காலையிற்
பூங்கொடிக் குக்கலை புகட்ட வெண்ணிய தேங்கமழ் தெரியலான் தேர்ந்த நூல்களை ஊங்கறி வார்களை உள்ளத் தாய்ந்தபின்,
(இதுவும் அடுத்த பாட்டும் குளகம்) (@)- Gir) ஆங்கு அவள் இங்ஙனம் அயர்ந்த காலையில் - ஆங்கே சாவித்திரி இங்ங்ணம் பல விளையாடல்களை விரும்பிச் செய்த காலத் தில்; பூங்கொடிக்கு கலை புகட்ட எண்ணிய - பூங்கொடி போன்ற சாவித்திரிக்குப் பல கலைகளையும் கற்பிக்க நினைந்த; தேம்கமழ் தெரி யலான் - வாசனை கமழ்கின்ற மாலையையணிந்த அசுவபதி; தேர்ந்த நூல்க%ா - ஆராய்ந்த நூல்களை ஊங்கறிவார்களை - மிகு தி யாக அறிந்தவர்களை உளத்து ஆயந்தபின் - மனதில் ஆராய்ந்தறிந்த பின்பு (எ-று) 43

Page 53
72
58 ஆரண மாகம மாழ்ந்து கற்றநற்
பூரண முனிவரைப் போற்றிப் புங்கவ ஏரண மாதியா மேற்ற நூல்களை யாரணங் கிவட்குவந் தருள்க வென்றனன்.
(இ ~ள்) ஆரணம், ஆகமம் ஆழ்ந்து கற்ற - வேதங்கள் ஆகமங் களை ஆழ்ந்து கற்றவரான நற்பூரண முனிவரைப் போற்றி - நல்ல வரான பூரண முனிவரை அழைத்து வணங்கி; புங்கவ-முனிசிரேஷ் டரே; ஏரணம் ஆதியாம் ஏற்ற நூல்களை- நியாயநூல், இலக்கணம் முதலிய தகுதியான நூல்களை ஆரணங்கு இவட்கு உவந்து அருள்க என்றனன் - தேவப்பெண்ணை ஒத்த எமது மகள் சாவித்திரிக்கு விருப் புடன் கற்பிப்பீராக என்று வேண்டிக்கொண்டான். (எ-று) 144
1.59 நற்றவத் தாற்பெறு நங்கை யாதலிற் கற்றிட வேண்டிய கலையெ லாமிவள் பெற்றிடு வாளெனப் பெரிது வந்துமே
முற்றறி முனிவனும் முயறு மென்றனன்.
(இ-ள்) நல்தவத்தால் பெறும் நங்கை ஆதலால்-நல்ல தவஞ் செய்து பெற்ற பெண் ஆகையால்; கற்றிட வேண்டிய கலைஎல்லாம் -ஒரு அரசகுமாரி கற்கவேண்டிய கலைகளையெல்லாம்; இவள் பெற் றிடுவாள் என - சாவித்திரி கற்றுக் கொள்வாள் என; பெரிது உவந் துமே-மிகவும் விரும்பி; முற்றறி முனிவனும் முயல்தும் என்றனன் - முற்றும் அறிந்த பூரண முனிவனும் கலைகளைக் கற்பிக்க முயலுவோம் என்றனன். (எ-று) J45
60 அந்தநல் லுத்தர மரசன் கேட்டலும்
புந்தியில் மகிழ்வுரீஇப் புனிதன் பொன்னடி முந்துற வணங்கினன் முருந்து மூரல்வாய்ச் சுந்தரி யும்மடி தொழுது போற்றினள்.
(இ - ள்) அந்தநல் உத்தரம் அரசன் கேட்டலும் - அந்த மறு மொழியை அசுவபதி கேட்டு; புந்தியில் மகிழ்வு உரீஇ - மனத்தில் மகிழ்ச்சியடைந்து; புனிதன் பொன்னடி முந்துற வணங்கினன் - புனி தன் ஆன முனிவனின் பொன் அடிகளை முற்பட்டு வ ண ங் கி ன ன்; முருந்து மூரல் வாய்ச் சுந்தரியும் - இறகின் அடிக்குருத்துப் போன்ற பற்கள் பொருந்திய வாயையுடைய சாவித்திரியும்; அடி தொழு து போற்றினள் - பூரண முனிவரின் பாதங்களை வணங்கித் துதித்தாள். (எ-று) 146.

முனிவர் உபதேசம் வேறு. அல்னேயும் பிதாவும்
6. மன்னவன் மதலாய் கேளிம்
மாயிரு ஞாலந் தன்னிற் றன்னலந் துறந்தா ராகித்
தளர்விலா அன்பு காட்டி யுன்னல மொன்றே யெண்ணி
யுனக்குடை யுண்டி நல்கும் அன்னையு மத்த லுந்தான்
அறிமுதற் றெய்வ மாவார்.
(இ-ள்) மன்னவன் மதலர்ய் கேள்-அசுவபதியின் குழந்தையே கேட்பாயாக, இம்மா இரு ஞாலம் தன்னில்-இந்தப் பெரிய பூமியின் கண்ணே, தன்னலந் துறந்தாராகி தம்முடைய நன்மையை நீத்தா ராகி; தளர்விலா அன்பு காட்டி; உன் நலம் ஒன்றே எண்ணி; உனக்கு உடை உண்டி நல்கும்-உனக்கு உடையும் உணவுந் தரும்; அன்னையும் அத்தனும்தான்-தாயும் தகப்பனுந்தான்; அறிமுதற் றெய்வ மாவார்
நீ அறியும் படியான முதற் கடவுளராவார். (6 т—др/) 147
குரு 62 செகத்தினி லெமக்கு வாழுஞ்
செந்நெறி யதனைக் காட்டி அகத்தினி விருளைப் போக்கி
அறிவொளி பரப்பி யெம்மைப் பகத்தினை யடையச் செய்யும்
பண்புடைக் குருவு மெங்கட் கிகத்தினிற் றெய்வ மாவர்
னிவன்மொழி யிகத்த லா சா
(இ - ள்) செகத்தினில்-இந்த உலகினில்; எமக்கு வாழும் செம் நெறி அதனைக் காட்டி - எமக்கு நாம் வாழ வேண்டிய நல்ல வழியைக் காட்டி ; அகத்தினில் இருளைப்போக்கி எங்கள் மனத்தில் இருக்கும் அஞ்ஞானயாகிய இருளை (அறியாமையை) நீக்கி; அறிவு ஒளி பரப்பி. எங்கள் அறிவு பிரகாசிக்கும்படி செய்து; எம்மை பகத்தினை அடையச் செய்யும் - எங்களை ஈசுரத்தன்மையை (ஞானத்தை) அடையச் செழ்

Page 54
74
கின்ற;பண்பு உடை குருவும் - பண்புள்ள குருவும்; எங்கட்கு இகத்தினில் தெய்வ மாவான் - எங்களுக்கு இம்மையில் தெய்வத்துக்குச் சமமா வான் இவன் மொழிஇகத்தல் ஆகா . இவனுடைய உபதேசங்களையும்
கட்டளைகளையும் கடத்தல் ஆகாது. (ar-pi) 148
கணவன் 6. விற்புரு வத்து வாட்கண்
விளங்கிழை யார்க டம்மை அற்புடன் உண்டி யாடை
அணிபொருள் அளித்துக் காக்கும் நற்புகழ் நாதன் மாட்டு
நன்றியு மன்புங் கூர்வர்; கற்புடை மங்கை யர்க்கோ
கணவனே காணுந் தெய்வம்.
(இ- ள்) விற்புருவத்து வாள்கண் விளங்கு இழையார்கள்-வில் போன்று வளைந்த புருவமும்; ஒளி பொருந்திய கண்களையும்; விளங்கிய ஆபரணங்களையும் அணிந்த மாதர்கள்; தம்மை அற்பு உடன் உண்டி, ஆடை அணி, பொருள் அளித்துக் காக்கும்-தம்மை அன்புடன் ஆத ரித்து உணவு உடை, அணிகலன். பொருள் முதலியன தந்து காப்பாற் றும்; நல்புகழ் நாதன் மாட்டு-நல்ல புகழையுடைய கணவனிடத்தில்: நன்றியும் அன்பும் கூர்வர்; கற்பு உடை மங்கையர்க்கோ; கண்வனே கானுந் தெய்வம்-கணவனே கண்கண்ட தெய்வமாவான். (எ-று) 149
கடிவுள் உண்மை
164: காற்றினி லெறிந்த பண்டங்
கடுகியே தரையில் வீழும்
மாற்றமில் நியதி யிஃது
மண்ணின் மீ தெப்பொ ருட்கும்
ஏற்றமா முருண்ட பூமி
எறிகடல் குழு மென்றல்
நீர்த்தரங் கம்வீ ழாமல்
நிற்பதென் விந்தை யம்மா.
(இ ன்) காற்றினில் எறிந்த பண்டம் கடுகியே தரையில் வீழும்
-ஆகாயத்தை நோக்கிக் காற்றில் எறிந்த பொருள் விரைவாகத் தரையில் விழும்; மண்ணின் மீது எப்பொருட்கும் நியதி இஃது

75
மாற்றமில்லை-பூமியின்மேல் எந்தப் பொருள்களுக்கும் இந்த நியதி மாறுவதில்லை; ஏற்றமா முருண்டபூமி எறி கடல் சூழுமென்ருல்மேன்மையான இந்த உருண்ட பூமியை அலையெறியும் கடல் சூழ்ந் திருக்குமென்ருல்; நீர்த்தரங்கம் வீழாமல் நிற்பதென் விந் தை அம்மா. கடல்நீர் வழிந்தோடாமல் நிற்பது என்ன ஆச்சரியம் அம்மா. (எ-று) 50 (வி- ம்) பூமியோ உருண்டை வடிவம். அதைச் சுற்றிக் கடல் இருக் கிறது. எமக்கு எதிர்ப்புறத்தில் பூமிக்கடிப்புறத்திலும் நீர் இருக்கிறது. அந்நீர் கொட்டுண்ணுவதில்லையே. இல் து பெரிய ஆச்சரியமல்லவா?
65 அந்தரந் தன்னில் வீழா
தளப்பில காலம் நிற்கும் பந்தெனத் திரண்ட பூமி
பம்பர மென்னச் சுற்றும் சுந்தரப் பரிதி தன்னைச்
சுற்றிடும் வட்ட மாக எந்திர நியமம் வைத்தா
ரெவரென வறிய லாமோ.
(இ- ள்) பந்து எனத் திரண்ட பூமி அந்தரந் தன்னில் வீழாது அளப்பில காலம் நிற்கும் - பந்துபோல உருண்டு திரண்ட பூமி கீழே விழாமல் அந்தரத்தில் அளவில்லாத காலம் நிற்கிறது; பம்பரம் என்னச் சுற்றும்-அது பம்பரம்போல் தன்னைத் தானே (60 நாழிகைக் கொரு முறை) சுற்றும்; சுந்தரப் பரிதி தன்னைச் சுற்றிடும் வட்டமாக அழகிய சூரியனை யும் வட்ட மாக ச் (365 நாளுக் கொருமுறை) சுற்றும்; எந்திர நியமம் வைத்தார் எவரென அறியலாமோ- இப்படி எந்திர போல் ஒழுங்கு தவழுது செயற்பட வைத்தவர் யார் என அறியலாமோ? (arー』lル 166 இந்த நம் பூமி தன்னை
இருபதி னேழு நாளிற் சந்திரன் சுற்றி நிற்கும்
சார்உப கிரக மாகும் கந்துக மன்ன திங்கள்
கதிதவ ருது சுற்றும் வந்தது புவியைக் கிட்டா
தெட்டவு மாட்டா தென்னே

Page 55
76
(இ-கள்) சந்திரன் இந்த நம் பூமி தன்னை இருபதினேழு நாளிற்
சுற்றி நிற்கும் சார் உப கிரகமாகும் -சந்திரனனது இந்த நாம் வாழும் பூமியை 27 நாள்களில் சுற்றி வந்து நிற்கும் உபக் கிரகமாகும்; கந்துகம் அன்ன திங்கள்-பந்து போன்று உருள் சந்திரன்; கதிதவருது சுற்றும் - கிரக நடை தவருது சுற்றிவரும்; அது வந்து புவியைக் கிட்டாது, எட் டவும் மாட்டாது-அச் சந்திரன் வந்து பூமியைக் கிட்டவும் மாட்டாது; எட்டிப் போகவும் மாட்டாது; என்னே!-இஃது என்ன ஆச்சரியம், (srー』)
67 இப்படி யாகக் கோள்கள்
இருப்பவை யொன்ப தாகும்
வெப்புடைச் செவ்வாய் தன்னை வேறிரு மதிகள் சாரும்
செப்பிய வியாழன் தன்னைச்
சேர்மதி பன்னி ரண்டாம்
தப்புத லில்லாக் காரி
தான்கொளும் மதிமும் மூன்ரும்.
15
(இ-ள்) இப்படியாகக் கோள்கள் இருப்பவை ஒன்பதாகும் - இந்த வண்ணமான நியதியில் இருக்கும் கிரகங்கள் ஒன்பதுண்டு, வெப்புடைச் செவ்வாய் தன்னை வேறிரு மதிகள் சாரும் - வெப்பத்தையுடை செவ் வாய்க் கிரகத்தை வேறு இரண்டு சந்திரன்கள் சேர்ந்திருக்கும்; செப்பிய வியாழன் தன்னைச் சேர்மதி பன்னிரண்டாம்-சொல்லிய வியாழனைச் சேர்ந்த சந்திரன் பன்னிரண்டாகும்; தப்புதல் இல்லாக் காரி-பிழைத்த வில்லாத சனி தான் கொளும் மதிமும் மூன்ரும் -தான் கொள்ளும் சந்திரன்கள் ஒன்பதாம். (எ-று) 53
(வி-ம்) சனி தன் தசா பலனைத் தருவதில் பிழைக்காது. மக்களும் அதன் பார்வைக்குத் தப்ப இயலாது.
168 கதிரவன் கதிக்குட் பட்டுக்
காணுமிக் கோள்க ளெல்லாம் அதிதொலை வுற்றிட் டாலும்
அவன்ஒளி சத்தி பெற்று விதியினில் வலமாய் வந்து
விண்ணினில் வீழா நிற்கும் மதியுடை மங்காய் எல்லாம்
மதிக்கிலோர் அண்டந் தானே.

לל
(இ-ள்) கதிரவன் கதிக்குட்பட்டுக் காணுமிக் கோள்களெல்லாம் --சூரியனின் சத்திக்கு உட்பட்டு அமைகின்ற இந்தக் கிரகங்களெல் லாம்; அதிதொலைவு உற்றிட்டாலும்-அதி தொலைவில் இருந்தாலும்; அவன் ஒளி சத்தி பெற்று - சூரியனின் ஒளியையும், வெப்பம் முதலிய சத்திகளையும் பெற்று; விதியினில் வலமாய் வந்து - ஒரு நியதிப்படி அச்சூரியனை வலம் வந்து; விண்ணினில் வீழாநிற்கும் -அண்டவெளி யினில் வீழாமல் நிற்கும்; மதியுடை மங்காய் - புத்தியுடைய மங் கையே! எல்லாம் மதிக்கில் ஒர் அண்டந்தானே-சூரியனும் அதைச் சுற்றி வரும் கிரகங்களும், அக்கிரகங்களைச் சுற்றி வரும் உபக்கிரகங்களும் ஆகிய எல்லாம் சேர்ந்து ஒர் அண்டமாகும். (எ-று) 154
69 அண்டங்க ளிதனைப் போல
ஐந்துநூ றிலக்கங் கோடி உண்டென அறிஞர் சொல்வர்
உலகமும் பதின லென்பர் இண்டைசேர் குழலாய் தேரின்
இவற்றினை இயக்கு மாற்றல் கொண்டதோர் மூல சத்தி
உண்டென உணர லாமே. '
(இ- ள்) அண்டங்கள் இதனைப்போல ஐந்து நூறு இ லக் க ங் கோடி உண்டு என அறிஞர் சொல்வர்-எமது இந்த அண்டத்தைப் போல 500 இலக்கங் கோடி அண்ட்ங்கள் உண்டென அறிஞர் சொல் வர்; உலகமும் பதினலு என்பர் - உலகங்களும் பதினன்கு உண் டென்பர்; இண்டைசேர் குழலாய் - முல்லை மாலையை யணிந்த கூந் தலையுடையவளே! தேரின் - ஆராயின்; இவற்றினை இயக்கும் ஆற் றல் கொண்டதோர் மூலசத்தி-இவற்றையெல்லாம் இயக்கும் ஆற் றல் கொண்ட ஒரு மூல சத்தி; உண்டென உணரலாம்-உண்டென்று உணரலாம். (எ-று) ஏ-ஈற்றசை 155 ۔
170 உலகினிற் ருேற்றம் நாலாம்
உறுபிறப் பேழாம்; யோனி
இலகுதல் ஆயி ரங்கள்
எண்பத்து நான்கு நூரும்
நிலவுமிழ் பைம்பூண் பாவாய்
நீணலத் திவற்றை யெல்லாம்
நலமுறப் படைத்துக் காக்கும்
நாயகன் ஒருவன் உண்டே.

Page 56
78
(இ- ள்) உலகினில் தோற்றம் நாலாம் - உலகினில் பிறப்பன கருப்பை, முட்டை, வியர்வை, உற்பிச்சம் என நாலுவகைப்படும்; உறுபிறப்பு ஏழாம் - உயிர்கள் அடையும் பிறப்பு தேவர், மக்கள், விலங்கு பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என ஏழாகும்; யோனி இலகுதல் ஆயிரங்கள் எண்பத்து நான்கு நூரும் - யோனி கள் விளங்குதல் எண்பத்து நான்கு நூருயிரம் ஆகும் ; 8400000); நிலவுமிழ் பைம்பூண் பாவாய் - ஒளிகாலும் பொன்னபரணங்களை அணித்த பெண்ணே நீள்நிலத்து இவற்றையெல்லாம்-நீண்ட இப் பூமியில் இவைகளை எல்லாம்; நலமுறப் படைத்துக் காக்கும் நாய கன் ஒருவன் உண்டு - ஆன்மாக்களின் நன்மையின் பொருட் டு ப் படைத்துக் காத்து வருகின்ற தலைவன் ஒருவன் உண்டு (எ-று) 156 ஏ-ஈற்றசை
71 வித்தினை நிலத்தில் வித்த
விளைந்திடும் பயிர்என் விந்தை எத்தனை யுயிர்கள் நாளும்
எடுத்திடும் பிறவி யிங்கே அத்தனைக் கும்மெய் வாயென்
றவயவம் அமைய வைத்தான் துத்திட உணவும் நீரும்
தூயநற் கற்றும் வைத்தான். w (இ-ள்) வித்தினை நிலத்தில் வித்த ஒருவிதையை நாம் நிலத்தில் விதைக்க: பயிர் விளைந்திடும் - அதனின்றும் பயிர் விளைந்திடும்; என் விந்தை-இது என்ன ஆச்சரியம்: இங்கே எத்தனை உயிர்கள் நாளும் எடுத்திடும் பிறவி - இங்கே எத்தனை உயிர்கள் ஒவ்வொரு நாளும் பிறவி எடுக்கும்? அத்தனைக்கும் -அத்தனை பிறவிகளுக்கும்; மெய், வாய் என்று அவய்வம் அமைய வைத்தான் - மெய் வாய், கண், மூக்கு, செவி முதலிய அவயவங்களை அமைவுற வைத்தான்; துத்திட~உண்ண உண வும் நீரும்; தூயநல் காற்றும் வைத்தான். (எ-று) 157
72 நீரொடு காற்றுந் தீயும்
நிலத்தொடு வெளியும் வைத்துப் பாரினி லுயிர்கள் வாழப்
பக்குவஞ் செய்தான் இன்றேல் ஒருயிர் தானும் வாழா
துலகெலாம் பாழே யாகும்; யாரிது செய்ய வல்லார்;
அவன்பரி சுரைப்பன் கேட்டி,

7g
(இ- ள்) நீரொடு காற்றும் தீயும் நிலத்தொடு வெளியும் வைத்துநீர், காற்று, நெருப்பு, நிலம், ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களையும் உண்டாக்கி வைத்து; பாரினில் உயிர்கள் வாழப் பக்குவம் செய்தான். பூமியில் சீவகோடிகள் வாழத்தக்க பக்குவத்தினையும் செய்தான்; இன் றேல்-அங்ங்ணம் செய்யாவிடின்; ஓர் உயிர்தானும் வாழாது-இப் பூமி யில் ஓர் உயிர்தானும் உடம்புடன் வாழாது உலகெலாம் பாழே ஆகும் -உலகங்கள் எல்லாம் சீவராசிகளற்ற பாழ் இடமே ஆகும்; இது செய்ய வல்லார் யார்?-இதனைச் செய்ய வல்லவன் யாவன்? அவன் பரிசு உரைப் பன் கேட்டி - அவனுடைய பண்பை உரைப்பேன் கேட்பாயாக, (எ-று)
ஒருவனே பரமன்
73. பலவுல கங்கட் கெல்லாம்
பரமனு மொருவன் ருனே அலகிலா ஆடல் செய்வான்
அடியருக் கருள வேண்டிப் பலபல வடிவங் கொள்வான்
படியுளோர் வேறு வேருய்ப் பலபல நாமஞ் சொல்லிப்
பரவுவர் அவனைத் தானே. (இ-ள்) பல உலகங்கட்கு எல்லாம் பரமனம் ஒருவன்தானே-பல உலகங்களுக்கும் கடவுளாகிய பரமசிவன் ஒருவனே அலகிலா ஆடல் செய்வான்-எண்ணிலாத திருவிளே யாடல்களேச் செய்வான்; அடியருக் கருளவேண்டி-அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டி பல பல வடி வங் கொள்வான்-அவ்வக் காலங்களுக்கேற்றபடி பல பல வடிவங்களைக் கொள்ளுவான்; படியுளோர் வேறு வேரு ய் பல பல நாமம் சொல்லி அவனைத் தானே பரவுவர்- பூமியிலுள்ளோர் வேறு வேரு ய் பல பல
பெயர்கள் சொல்லி அப்பரமபதியையே வணங்குவர். (எ . மறு) 59 பதியின் இலக்கணம் 174: முன்னவன் முதல்வன் மூவான்
முழுவதும் முடிய நிற்கும் பின்னவன் பிறவான் சாகாப்
பெற்றியன் பாச மில்லான் நின்மல னெல்லாம் வல்லான்
நீக்கமற் றெங்கு முள்ளான் தன்வய னின்ப வாரி
நானறி வானே யெல்லாம்.

Page 57
8
(இ-ள்) முன்னவன்- எல்லாவற்றிற்கும் முன்னனவன்; முதல் வன் - எல்லாப்பொருள்களுக்குங் காரணனன கடவுள்; மூவான்முதுமையுருதவன், (கேடுருதவன்); முழுவதும் முடிய நிற்கும் பின் னவன்-ஊழிக்காலத்து எல்லாம் அழியக்கடைசியிற் றணியாய் நிற்ப வன்; பிறவான். பிறப்பில்லாதவன்; சகாப் பெற்றியன் - இறப்பில் லாத் தன்மையன்; பாசமில்லான் - இயல்பாகவே பாசங்களினிங்கிய் வன்; நின்மலன் - மலமில்லாதவன், (தூய்வன்); எல்லாம் வல்லான் -முடிவிலாற்றலுள்ளவன்; நீக்கமற்று எங்குமுள்ளான்-நீக்கமற எங் கும் நிறைந்து நிற்பவன்; தன்வயன் -- சுவதந்திரமுடையவன்; இன்ப வாரி - வரம்பிலின்பமுடையவன்; எல்லாந் தானறிவான் - முற்றுமு ணர்ந்தவன் (எ-று) 60 (வி-ம்) கடவுள் பிறப்பு, மூப்பு, இறப்பு இல்லாதவன். கடவுளினு டைய குச்னங்கள்:- தன்வயத்தணுதல்-தன்வயன், சுவதந்தி ரன். தூயஉடம்பினணுதல் - நின்மலன், தூயவன். முற்றுமு ணர்தல் - எல்லாமறிபவன். இயல்பாகவே பாசங்களினிங்கு தல் அனுதிமலமுத்தன், பாசமில்லான். முடிவிலாற்றலுடைமை - எல்லாம்வல்லவன். வரம்பிலின்பமுடைமை - இன்பவாரி, நித்தியானந்தன். எங்கும் நிறைதல்-சர்வவிய்ாபகன், பேரரு ளுடைமை - (இது அடுத்த பாட்டிற் கூறப்படும்)
75 பேரரு ஞடையா னிசன்
பெருகிய கருணை யாலே ஆருயிர் தம்மைப் பற்றி
யலைக்குமா வைத்தை நீக்கச் சாருமிப் புவன போகந்
தனுவொடு கரண மாக்கி நேரினிற் காத்துப் பின்னர்
நின்றவை யழிப்பான் ருனே. (இ - ள்) ஈசன் பேர் அருள் உடையான் - யாவருக்கும் முதல்வ ஞகிய இறைவன் பெருங்கருணைய்ை உடைய்வன்; பெருகிய கருணை பாலே - அளவற்ற கருணையினுலே; ஆர் உயிர் தம்மைப்பற்றி அலேக் கும் ஆணவத்தை நீக்க - அரிய உயிர்களைப் பற்றி அலைக்கும் ஆணவ மலத்தை நீக்க; சாரும் இப்புவனம் - நாம் சாரும் இவ் உலகம்; போகம் - அனுபவப்பொருள்; தனு உடம்பு கரணம் - மனம் முத லிய கருவிகள்; ஆக்கி - ஆகிவற்றைத் தோற்றுவித்து; நேரி னில் காத்து-முன்னின்று காத்து; பின்னர் நின்றவை தானே அழிப்பீான் -பின்பு நின்று அவற்றைத் தானே சங்கரிப்பான் (ஒடுக்குவான்) (67-gi) 161

8
(வி-ம்) தனுசு உடம்பு, கரணம்-மனம் முதலிய கருவி, புவனம்உலகம் போகம் - அனுபவப்பொருள், ஆக்கல் - தோற்று வித்தல், காத்தல் மன நிறுத்துதல், அழித்தல் - முதற்கரணத்தில் ஒடுக்கல், படைத்தல், காத்தல், அழித்தல் கூறப்பட்டது: மறைத்தல், அருளல் அடுத்த பாட்டிற் கூறப்படும்; 181
76 இருவினைப் பயன்க ளாய
இன்பதுன் பத்தி லெம்மைத்
திருவருள் மறைத்து வைக்கும்
தெளிந்துநல் வினைகள் செய்ய
இருவினை யொப்புங் கிட்ட
இறைவனெங் குருவாய் வந்து
பெருமலப் பிணிப்பை நீக்கிப்
பேரருள் நல்கு வானே.
(இ- ள்) இருவினைப் பயன்கள் ஆய இன்பதுன்பத்தில் - நல்வினை தீவினைகளின் பயருகிய இன்பதுன்பங்களில் எம்மைத் தி ரு வருள் மறைத்து வைக்கும்; தெளிந்து நல்வினைகள் செய்ய - வினைப்பய்ன் களை ஆராய்ந்து தெளிந்து நல்வினைகளைச் செய்ய இருவினை ஒப்புங் கிட்ட - (மலபரிபாகமும்) இருவினையொப்பும் வந்துசேர இறைவன் எம்குருவாய் வந்து - இறையருளே எமது குருவாகி வந்து பெருமலப் பிணிப்பை நீக்கி - (எம்மைப் பந்தித்துள்ள) பெரிய மலக்கட்டை அறுத்து பேரருள் நல்குவான் - பெரிய வீட்டின்பத்தைக் கொடுப் பான். (எ-று) 162
சத்தி
177 சிவத்தினின் றுதிக்குஞ் சத்தி
சிவனது வல்ல மையாம்; சிவத்தினில் வேற தன்று
செந்தழல் சூடு போலச் சிவத்துடன் சத்தி சேர்ந்து
செய்விளை யாடல் தாமே சிவத்துட னெம்மைக் கூட்டச்
செகத்தினைப் படைத்த லாதி.
gyfrif - 6

Page 58
82
(இ-ள்) சிவத்தில் நின்று உதிக்கும் சத்தி - சிவத்தினின்று தோன்றுவது சத்தி; சிவனது வல்லமையாம் - அது சிவனின் வல்ல மையாம்; சிவத்தினில் வேறது அன்று- அது சிவத்தின் வேருனதன்று: செந்தழல் சூடுபோல-அக்கினியும் சூடும் போல, சிவத்தோடு பிரி வின்றி உள்ளது. சிவத்தொடு சத்தி சேர்ந்து- சிவனுடன் சத்தி கூடி: செய்விளையாடல் தாமே - செய்கின்ற திருவிளையாடலே; சிவத்துடன் எம்மைக் கூட்ட-சிவத்துடன் எம்மைக் கூட்டுவதற்காக, செகத்தினைப் படைத்தல் ஆதி லா தனு கரண புவன போகங்களைப் படைத்தல் முத லிய செயல்கள். (எ-று) s 63
178 ஆணவ மறைப்புப் பெற்ற
அனந்தமாம் பசுக்கள் யாங்கள்; காணுமிவ் வுலகி லின்பம்
கணக்கிலாத் துன்பம் யாவும் வேணவாக் கொண்டு யாஞ்செய் வினைகளின் பயணு லான; ஆணவ வலிமை நீங்கின்
அடைகுவம் பேரா னந்தம், (இ-ள்) ஆணவ மறைப்பு பெற்ற அனந்தம் ஆம் பசுக்கள் யாங்கள்- ஆணவத்தால் மறைக்கப்பட்ட அளவற்றவாகிய ஆன்மாக் கள் நாங்கள்; காணும் இவ் உலகில் இன்பம் கணக்கிலாத் துன்பம் யாவும்-நாம் வசித்திருந்து காணுகின்ற இவ்வுலகில் அடையும் இன்ப துன்பங்கள் எல்லாம்; வேண் அவாக் கொண்டு யாம் செய்வினைகளின் பயனல் ஆன-மிகுந்த ஆசைப் பெருக்கங் கொண்டு நாம் செய்கின்ற வினைகளின் பயனுல் ஆனவை; ஆணவ வலிமை நீங்கின் அடைகுவம் பேர் ஆனந்தம் - ஆணவம் வலிமை குன்ற, (அதனுல் ஆசை நீங்க, அதனுல் வினைகள் குறைந்து இருவினையொப்பு ஏற்பட, மலபரிபாகம் , ஏற்பட) நாம் பேரானந்தத்தை அடைவோம். (எ-று) 64
79 அம்மலம் நீங்க வேண்டில்
அரனைநாஞ் சரண டைந்து செம்மையாம் நெறியில் நின்று
செய்வன நல்ல செய்தே இம்மியும் பயனைக் கோரா
திறைபணி யென்றி பற்றின் நம்மையப் பயன்கள் பற்ரு
நமக்கவன் பதமுங் கிட்டும்,

83
(இ- ள்) அம்மலம் நீங்க வேண்டில் - அந்த ஆணவமலம் நீங்க வேண்டுமேல்; அரனை நாஞ்சரண் அடைந்து - சிவபெருமானை நாம் சரணடைந்து; செம்மையாம் நெறி யி ல் நின்று; செய்வன நல்ல செய்தே-அறநெறியில் நின்று செய்யவேண்டிய சற்கருமங்களைச் செய்து; இம்மியும் பயனைக்கோராது அற்பமும் அவ்வினைகளின் பயனை வேண் டாது; இறைபணி என்று இயற்றின் - ஈசுவர அர்ப்பணமாக இறை வன் பணி என்று அவற்றைச் செய்யில்; நம்மை அப்பயன்கள் பற்ரு - எம்மை அவ்வினைகளின் பயன்கள் பற்றமாட்டா; அப்படி நிஷ்கா மிய கருமம் செய்யின் நமக்கு அ வ ன் பதமுங் கிட்டும் - எமக்கு
இறைவனின் திருவடியும் கிட்டும். (எ-று) 165
знцошѣањ6іт
180 முன்னறி சமய மெல்லாம்
முதல்வன்மாட் டிட்டுச் செல்லும் நன்னெறி யாத லாலே
நாமவை போற்ற வேண்டும் சொன்னெறி யெம்ம தத்துஞ்
சுகத்தினைத் தருவ வன்ருே எந்நிறப் பசுவென் ருலென்
ஈவதின் வெண்பா லானுல்.
(இ- ள்) முன்அறி சமயம் எல்லாம்-நாம் முன்பு அறிந்த சம யங்கள் எல்லாம்; முதல்வன் மாட்டு இட்டுச் செல்லும் நல்நெறி ஆதலாலே-முதல்வனகிய கடவுளிடத்து எம்மை இட்டுச் செல்லுகின்ற ல்ல வழிகள் ஆதலாலே; நாம் அவை போற்ற வேண்டும் - நாம் அவற்றைப் போற்றுதல் வேண்டும்; எம் ம த த் தும் செர்ல்நெறி கத்தினை தருவவன்றே - எம்மதத்திலும் சொல்லப்படும் வழிகள் சுகத்தினைத் தருவன அன்றே? எந் நிற ப் பசு என்ருல்என் ஈவது இன் வெண்பாலானல்-எந்த நிறப் பசுவானுல் என்ன, அது தரு வது இனிய வெண்மையான பாலானல்? (எ-று) (166)
பாவ புண்ணியங்கள்
8 பொய்கொலை களவு காமம்
புன்மது அருந்தல் சூது
கைதவந் தவிர்க வென்றே
கழறும்மெய்ச் சமய மெல்லாம்

Page 59
84
மெய்பொறை கருணை யன்பு
மேவுதல் பசிநோய் தீர்த்தல்
ஐவகைப் புலன டக்கல்
அறநெறி யென்று ரைக்கும்.
(இ- ள்) மெய்ச்சமயமெல்லாம் ம மெய்மையான சமயங்களெல் லாம்; பொய் கொலை களவு காம ம் புன்மது அருந்தல் - பொய் பேசுதல், கொல்லுதல் களவாடல் காமமுடைமை புன்  ைம ய ர் ன மதுவை அருந்துதல்; சூதாடல்; கைதவம்- வஞ்சனை ஆகியவற்றை தவிர்க என்றே கழறும் - தவிருங்கள் என்றே கூறும்; மெய், பொறை, கருணை, அன்புமேவுதல் - உ ண்  ைம பேசுதல், பொறையுடைமை, கருணையுடைமை, அன்புடைமை; பசி நோய் தீர்த்தல் - பசியையும் நோயையும் தீர்த்தல்; ஐவகைப் புலன் அடக்கல் - சுவை. ஒளி, ஊறு. ஒசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களையும் அடக்குதல் ஆகியவை: அறநெறி என்று உரைக்கும் - அறநெறி என்று உரைக்கும். (எ-று) 67
182 மன்னுயி ரெல்லா மீசன்
மலர்பெருங் கருணைக் காளாம்
தன்னுயிர் போல வற்றைத்
தாம்மதித் திடுதct) வேண்டும்
அன்னவைக் கன்பு கூர்தல்
அவைக்குறு கண்செய் யாமை
நன்னெறி யென்று சொல்லும்
நாமறி சமய மெல்லாம்.
(இ- ள்) மன்னுயிரெல்லாம் ஈசன் மலர்பெருங் கருணைக்காளாம். சீவராசிகள் எல்லாம் இறைவனுடைய மலர்ந்த பெருங்கருணைக்கு ஆளா கும்; தன்னுயிர் போல் அவற்றைத் தாம் மதித்திடுதல் வேண்டும்-தன் உயிரைமதித்தல் போல பிறஉயிர்களையும் தாம் மதித்திடுதல் வேண்டும்; அன்னவைக்கு அன்புகூர்தல் - அத்தன்மையான சீவன்களுக்கு அன்பு கூர்தல்; அவைக்கு உறுகண் செய்யாமை - அவைகளுக்குத் துன்பம் செய்யாமை; நன்னெறியென்று நாம் அறிசமயம் எல்லாம் சொல்லும் . நாமறிந்த சமயங்கள் எல்லாம் நல்ல நெறிகள் என்று கூறும். (எ-று) 168

85
183 எவ்வுயிர் தானும் வேண்டல்
இன்டமே துன்ப மன்றிங்
கவ்வுயிர்க் கிடுக்கண் செய்தல்
அவனரு ளடைக்குந் தாழாம்
கொவ்வையங் கனிவாய் மாதே
கொடுந்தொழில் புரிவோர் தம்மை
ஒவ்வுற ஒறுத்தல் மன்னர்க்
குரியதாங் குற்ற மன்று.
(இ-ள்) எவ்வுயிர்தானும் வேண்டல் இன்பமே; துன்பம் அன்று; இங்கு அவ்வுயிர்க்கு இடுக்கண் செய்தல் - இவ்வுலகில் அவ்வுயிருக்குத் துன்பம் செய்தல்; அவனருள் அடைக்கும் தாழாம் - இறைவனுடைய அருள் எம்மை அடையாவண்ணம் அடைக்கும் தாழா கும்; அம் கொவ்வை கனிவாய்மாதே - அழகிய கொவ்வைக் கனிபோன்ற சிவந்த வாயையுடைய பெண்ணே; கொடுந்தொழில் புரிவோர் தம்மை . கொடுமையான கருமங்களைச் செய்பவர்களை ஒவ்வுற ஒறுத் த ல் , பொருத்தமுறத் தண்டித்தல்; மன்னர்க்கு உரியதாம் - அரசனுக்குரிய நீதியாகும்; குற்றமன்று - அது குற்றமன்று. (எ-று) 1 69
84 நெல்லினை விதைத்த மக்கள்
நெல்லினை யறுத்தல் போல
நல்வினை செய்த மக்கள்
நன்மையே யடைவர்; மாருய்
அல்லன செய்த மக்கள்
அடைவது துன்பே திண்ணம்;
ஒல்வகை யெல்லாம் நன்றே
உஞற்றிட வேண்டுங் கண்டாய்.
il( நெல்லினை விதைத்த மக்கள் நெல்லினை அறுத்தல் போலه ---(B)) - நெல்ல விதைத்த வேளாண் மக்கள் நெல்லை அறுவடை செய்தல் போல நல்வினை செய்த மக்கள் - நல்லவினையைச் செய்த மக்கள்: நன் மையே அ டை வர் - நன்மையையே அடைவார்கள்: ம 1 அகற்கு மாருக; அல்லன-நல்வினை அல்லாதன (தீவி மக்கள் அடைவது -செய்த மக்கள் பெறுவது; துன்பே 1 \; /* , ; , ; திண்ணம் - இது சத்தியம்; ஒல்வகை யெல்லாம் - இசையும் வன்க எல்லாம்; நன்றே உஞற்றிட வேண்டும் கண்டாய் நல்வினையே செப் திடவேண்டும் என்பதை அறிவாயாக, (எ-று) 7 ().

Page 60
86
185 பிறரறி யாமற் செய்யும்
பிழைகளுக் கரச தண்டம் பெறுதலிற் றப்ப லாகும்
பிரிவிலா தெங்கும் நிற்கும் இறைவனுக் கொளிக்க லாமோ
இம்மையி லொறுப்பான் அன்றேல் மறுமையு மொறுப்பான் என்னே
மறத்தினை மாக்கள் செய்தல், (இ=ள்) பிறர் அறியாமற் செய்யும் பிழைகளுக்கு - நாம் பிற ரொருவர் அறியாத வண்ணம் செய்கின்ற பிழைகளுக்கு அரச தண் டம் பெறுதலிற்றப்பலாகும் - கண்டு பிடிக்கப்படாமையாலோ அன் றிச் சாட்சிக்ள் இன்மையாலோ, அரச தண்டனையைப் பெறுதலில்தப்ப லாகும் பிரிவிலாது எங்கும் நிற்கும் இறைவனுக்கு ஒளிக்க லாமோநீக்கமற எங்கும் நிறைந்து நிற்கும் இை றவனுக்கு எமது செயலே ஒளிக்க முடியுமோ (முடியாது); இம்மையில் ஒறுப்பான் - இறைவன் இப் பிறவியிலேயே அவர்கள்ேத் தண்டிப்பான் அன்றேல்-இல்லாவிடின் மறுமையும் ஒறுப்பான்-மறுபிறப்பிலும் தண்டிப்பான்; மறத்தினே மாக்கள் செய்தல் என்னுே-ஆதலினுல் மறச்செயல்களே அறிவில்லாத மக்கள் செய்தல் என்ன காரணமோ? (எ-று) I 71 186 இறையுணர் வின்றி வாழ்தல்
இருளினிற் றிரித லொக்கும் குறியிலா தியங்கும் மக்கள்
கொள்கையில் மாக்க ளொப்பர் பெறலரி தாகு மிந்தப்
பெட்புறு மனித யாக்கை இறுதியை யெய்த முன்னர்
இறைகழல் நோக்கல் வேண்டும். (இ-ள்) இறை உணர்வு இன்றி வாழ்தல் இருளினில் திரிதல் ஒக் கும்-பதிஞானம் இல்லாமல் வாழ்வது இருளினில் திரிவதை ஒக்கும்; குறியிலாது இயங்கும் மக்கள் கொள்கை இல் மாக்கள் ஒப்பர்-ஒரு குறிக்கோளும் இல்லாமல் இயங்கும் மக்கள் த மக் கென்று ஒரு கொள்கை இல்லாத விலங்குகளே ஒப்பர் பெறலரிதாகும் இந்த பெட்பு உறு மனிதயாக்கை - இந்த விரும்பத்தகும் பெருமை மிக்க மானிட சரீரம் பெறுவதற்கரியதாகும்; இறுதியை எய்து முன்னர் இறை கழல் நோக்கல் வேண்டும்-ஆதலால் நாம் மரணத்தை எ ப்த முன்னர், இறைவனுடைய திருவடிகளே நோக்குதல் வேண்டும். (எ-று) (173)
 

87
பெண்களுக் குற்றசிலம்
187 மாதருக் கணியாம் நாணம்
மடம்பயிர்ப் பச்சம் பேணல் காதலன் குறிப்ப றிந்து
கடமைகள் செய்தல் வீணே வாதுசெய் யாதி ருத்தல்
வருவிருந் தோம்பல் கற்பிற் கோதில ளாதல் கோதாய் குலமகட் குற்ற சீலம், (இ-ள்) கோதாய் - பெண்ணே நாணம், மடம், பயிர்ப்பு. அச்சம் பேணல் மாதருக்குஅணியாம் - நாணம், மடம், பயிர்ப்பு அச்சம்ஆகிய குணங்களைப் பேணுதல் மாதருக்கு அணிகலனுகும். காத லன் குறிப்பறிந்து கடமைகள் செய்தல்- கணவனது குறிப்பை அறிந்து அவனுக்குரிய கடமைகளே உரிய காலத்தில் செய்தல் வீணே வாது செய்யாதிருத்தல் - கணவனுடனும் மற்றையோருடனும் வீணு கத்திருக் கம் செய்யாதிருத்தல் வருவிருந்து ஓம்பல் - இல்லில் வரும் விருந்தின ரைப் பாதுகாத்தல்; கற்பில் கோது இவள் ஆதல் - கற்பிலே குற்றமில் லாதவளாக இருத்தல்; குலமகட்கு உற்ற சீலம் ஆகும். குலப் பெண்ணுக் குரிய ஒழுக்கங்களாகும். (எ-று (173)
t
தலைவன் தலைவி இணைந்து வாழ வேண்டும்.
88 பதியொடு சத்தி நின்று
பரித்திடும் பான்மை போலப் பதியொடு சதியுஞ் சேர்ந்து
பாரினில் இல்ல றத்தை விதியினில் நடத்தி வந்தால்
விண்ணுல கின்பங் காண்டர் மதிமுக நங்காய் மாறில்
மாநர கிங்கே காண்டார். (இ- ள்) பதியோடு சத்தி நின்று பரித்திடும் பான்மைபோல - சிவனுடன் சத்தி நின்று காத்திடும் தன்மையைப் போல பதியோடு சதியும் சேர்ந்து - கொழுநனுடன் கற்புடைய மனேவியும் சேர்ந்து பாரினில் இல்லறத்தை விதியினில் நடத்தி வந்தால் - இப்பூமிலே இல்லற தருமத்தை விதிப்படி நடத்தி வந் தால் விண் ணு லகு இன்பங் காண்டர்-சுவர்க்க இன்பத்தை இங்கேயே FITiiiiiiT LI IT raw isir

Page 61
88
மதிமுக நங்காய் - திங்கள் போன்ற முகத்தையுடைய பெண்களுக் குட் சிறந்தவளே; மாறில்-அவ்வண்ணமின்றி மாறுபட்டு நடந்தால்: மாநரகு இங்கே காண்பார்-பெரிய நரகத்தைத்தான் இங்கே கர்ண் பார்கள். (எ-று) 74
கற்பு ஆண் பெண் இருபாலார்க்கும் வேண்டும்
189 ஒருவனுக் கொருத்தி யென்னும்
உறவுமே லான கற்பாம்
இருவரு மிதனைப் போற்றின் இல்லற மின்ப் மாகும்
ஒருவர்சற் றேறு மாருய்
ஒழுகினிற் றுன்ப முண்டாம்
ஒருவர்ம்ே லொருவர் ஐயம்
உறுவதும் அனர்த்த மாகும்.
(இ-ள்) ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உறவு மேலான கற்பாம் -ஒருவனுக்கு ஒரேயொரு காதலி ஒருத்திக்கு ஒரேயொரு காதலன் -என்னும் உறவு மேலான கற்பாம்; இருவரும் -ஆணும் பெண்ணும் (கணவனும் -மனைவியும்); இதனைப்போற்றின்-இதனைப் பாதுகாத்து ஒழுகிவரின்: இல்லறம் இன்பம் ஆகும்; ஒருவர் சற்று ஏறுமாருய் ஒழுகினில் - தலைவன் அல்லது தலைவி சற்று ஏறுமாறிக ஒழுகினல்* துன்பம் உண்டாம் ஒருவர் மேல் ஒருவர்-கணவின்மேல் மனைவி அல் லது மனைவிமேல் கணவன் ஐயம் உறுவதும் -காரணமின்றிச் சர்த்ே கப் படுவதும் அனர்த்தம்,ஆகும் -வீணுன தீமையாகும். (எ-று) 175
கூற்றுக்குச் சமம் 190 கணவனைத் தூற்று வ்ாளும்
கற்பினிற் பிறழு வாளும் தணிவறு காமத் தாளுந்
தலைவனை யெதிர்த்துப் பேசும்
," பணிவிலா தாளும் பாவம்
பழியினுக் கஞ்சாதோளு குணமிலார் நட்பி ஞளுங்
is
கூற்றமாங் கொண்க ஜக்கே.

89
(இ-ள்) கணவனைத் தூற்றுவாளும்; கற்பினில் பிறழுவாளும்-கற்பினில் முறைகெடுவாளும்; தணிவறு காமத்தாளும்-குறையாத காமத்தை உடையவளும்; தலைவனை எதிர்த்துப் பேசும் பணிவிலாதாளும் -தனது கணவனை எதிர்த்துப்பேசுகின்ற அடக்கமில்லாதவளும்; பாவம் பழி யினுக்கு அஞ்சாதாளும்; குணமிலார் நட்பினுளும் -ஒழுக்கமற்றவர்க ளுடன் நட்புக் கொண்டிருப்பவளும்; கொண்கனுக்கு -கணவனுக்கு கூற்றமாகும்-இயமனுவாள். (எ-று) 76
91 ஈட்டிடும் பொருளுக் கேற்ப
இல்லவள் செலவு செய்தல்
தேட்டமுஞ் சிறிது வைத்தல்
தெரிந்துநல் லறங்க ளோம்பல்
மேட்டிமைச் செலவொ றுத்தல்
மெய்வருத் தம்பா ராமல்
வீட்டினிற் பணிகள் செய்தல்
விழுப்பமு மின்பும் நல்கும்.
(இ- ள்) இல்லவள்-தலைவி, ஈட்டிடும் பொருளுக்கேற்ப-தலைவன் சம் பாதிக்கும் பொருளுக்குத் தக்கவாறு; செலவு செய்தல்-செலவழித்தல்: சிறிது தேட்டமும் வைத்தல்-சிறிது பகுதியைச் ச்ேகரித்து வைத்தில்; தெரிந்து-ஆராய்ந்து; நல்லறங்க்ள் ஒம்பல்- நல்ல தரும் ங் களைப் போற்றுதல்; மேட்டிமைச் செலவு ஒறுத்தல்-அகந்தைய்ாகப் பிறர் மெச்ச வேண்டும் என்று செய்யும் இடாம்பீகச் செலவை : றுத்தில் மெய்வருத்தம் பாராமல் வீட்டினிற் பணிகள் செய்தல்; it. - சிறப்பும்; இன்பும் நல்கும்-இன்பமும் கொடுக்கும். (எ-று) 177
92 விடியுமுன் எழுந்து வீட்டை
விளக்குதல் மெழுகல் நீரிற்
படிதல்வெண் ணீறு சாத்தல்
பரமனைப் பதியைப் போற்றல்
கடிதினில் அட்டில் புக்குக்
கணவனுக் குண்டியமட்டல்
துடியிடிை மாதே நாளுந்
துணேவிசெய் கடன்க ளாகம்.
இன்) விடியுமுன், !ன்முந்து. விடிவதற்கு ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுந்து; வீட்டை விளக்குதல் - வீட்டைப் tெருக்குதல்; மெழுகல்; நீரிற்படித்ல் - நீராடல்; வெண்ணிறு சாத் gáis, titie0éary (t. 1699 tír '''{{{31 ாற்றில் க்ட்ரீமேசுவரனையும் கணவனையும்

Page 62
90
துதித்தல்; கடிதினில் அட்டில் புக்கு - விரைவினில் சமையலறை புகுந்து: கணவனுக்கு உண்டி அட்டல் - கணவனுக்கு வேண்டிய உணவைச் சமைத்தல்; துடியிடை மாதே-உடுக்கையை ஒத்த மெலிந்த இடை யையுடைய பெண்ணே நாளும் துணைவி செய் கடன்களாகும்- இவை கள் ஒவ்வொரு நாளும் மனைவி செய்கின்ற கடமைகளாகும். ("ಬ್ಜ 193 சேடிய ரிருந்தா லென்ன
செவிலிய ரிருந்தா லென்ன மாடிமேல் வைகும் மன்னன்
மகளவ ளான லென்ன நாடிய கணவ னுக்கு
நல்லுண வூட்ட லாதி தேடியே செய்த லென்றுந்
தேவியின் கடமை யாகும்.
(இகள்) சேடியர்-ஏவல் செய்பவர்; இருந்தர்ல் என்ன-இருந்தா லுமென்ன; செவிலியர்கவளர்ப்புத்தாய்மார்; இருந்தால் என்ன-இருந் தாலுமென்ன; மாடிமேல் வைகும் மன்னன் மகளவள் ஆனல் என்ன -மாடி வீட்டில் வசிக்கும் மன்னனுடைய மகளாக இருந்தால் என்ன; நாடிய கணவனுக்கு-தன்னை விரும்பி வரும் கணவனுக்கு நல் உணவு ஊட்டல் ஆதி- நல்லுண்வை ஆக்கி ஊட்டுதல் முதலான (கடமை களை) தேடியே செய்தல் என்றும் தேவியின் கடமையாகும்-என்றும் தேடிச் செய்தல் மனைவியின் தலையாய கடமையாகும். (எ-று) 179
94 இல்லினிற் கிசைய வாழ்தல்
இனியநல் வார்த்தை பேசல்
நல்லவர் கேண்மை நாடல்
நலமுடைக் கற்பி னளென்
சொல்லினைக் காத்தல் நாதன்
சொற்கட வாதி ருத்தல்
அல்லிமென் முல்லை மூரல்
அரிவையர்க் காகும் பண்பாம்.
(இ-ள்) இல்லினிற் கிசைய வாழ்தல்-தான் புகுந்த வீட்டிற்கு அவ்வீட்டில் உள்ள மாமன் மாமியருக்கும்) அமைய் வாழ்தல்; இனிய ஏல்வார்த்தை பேசல் - எவருடனும் இனிய நல்ல சொற்களைச் சொல் லுதல்; நல்லவர் கேண்மை நாடல்-நல்லவர்களுடைய சிநேகத்தை விரும்புதல்; நலமுடைக் கற்பினள் என் சொல்லினைக் காத்தல்-நல்ல

91
கற்பினை உடையவள் என்ற சொல்லைப் பாதுகாத்து நடத்தல்; நாதன் சொற்கடவாது இருத்தல்-கணவனின் சொல்லை மீருதிருத்தல்; அல்லி மென்முல்லை மூரல் அரிவையர்க்கு-பூந்தாதையுடைய மென்மையான முல்லை மொக்கைப் போலும் பற்களையுடைய பெண்களுக்கு; பண்பு ஆகும்-பண்பான குணங்களாகும். (எ-று) 180
95 நல்லவை யெண்ணல் வேண்டும்
நல்லவை பார்த்தல் வேண்டும்
நல்லவை கேட்டல் வேண்டும்
நல்லவை படித்தல் வேண்டும்
நல்லவர் சங்கம் வேண்டும்
நல்லன வறிதல் வேண்டும்
நல்லவை செய்தல் வேண்டும்
நல்லவே நம்மைச் சாரும்.
(இ- ள்) நல்லவை எண்ணல் வேண்டும்-நல்ல எண்ணங்களையே எண்ணுதல் வேண்டும்; நல்லவை பார்த்தல் வேண்டும்-நல்ல காட் சிகளையே காணவேண்டும்; நல்லவை கேட்டல் வேண்டும்-நல்ல கேள் விகளையே கேட்டல் வேண்டும்; நல்லவை படித்தல் வேண்டும்-நல்ல அறிவுதரும் நூல்களைப் படித்தல் வேண்டும்; நல்லவர் சங்கம் வேண் டும் -நல்லவர்களுடைய் கூட்டம் வேண்டும்; நல்லன அறிதல் வேண் டும் - நல்லனவற்றை அறிதல் வேணடும்; நல்லன செய்தல் வேண் டும்- நல்லவற்றையே செய்தல் வேண்டும்; (அப்படி நடந்தால்) நல் லவே நம்மைச் சாரும் -நன்மைகளே நம்மை அடையும் (எ-று) 181
196 பண்ணிசை மிழற்றும் பாவாய்
பகர்ந்தநன் னெறிக டம்மை
எண்ணி நீ கடைப்பி டித்தால்
என்றுமுன் புகழ்நின் ருேங்கும்
விண்ணினிற் றேவர் நிற்கு
வேண்டிய வரங்க ளிவார்
மண்ணினிற் றெய்வ மென்று
மதிப்பரா முன்னை யென்ருர்
(இ-ஸ்) பண்ணிசை மிழற்றும் பாவாய்-வீணையினின்று எழும்
இசை போல இனிய மென் சொல்லைப் பேசும் பாவை போன்ற சாவித் திரியே: டகர்ந்த நல்நெறிகள் தம்மை-நான் கூறிய நல்ல நெறிகளை

Page 63
92
எண்ணி நீ கடைப்பிடித்தால்-மனத்திற் கொண்டு மதித்து நீ அவற் றைக் கடைப்பிடிப்பாயேயானல்; என்றும் உன்புகழ் நின்று ஓங்கும் -எப்பொழுதும் உனது புகளானது இவ்வுலகில் நின்று வளரும்; விண் ணினில் தேவர் நிற்கு வேண்டிய வரங்கள் ஈவார்-தேவர்கள் உனக்கு வேண்டிய் வரங்களைக் கொடுப்பார்கள்; உன்னை மண்ணினில் தெய் வம் என்று மதிப்பராம் என்ருர்-(உலகோர்) உன்னை இப்பூமியில் ஒரு தெய்வமென்று மதிப்பார்கள் என்று பூரணமுனிவர் உபதேசித் தார். (எ-ாறு) 82
97 முற்றறி முனிவர் தன்பால்
முழுமதி முகத்தாள் கேட்டுக்
கற்பவை கற்ற பின்னர்
கடவுளே துணையா யென்றும்
நிற்பவ ரென்று ணர்ந்து
நீங்கிலா அன்பு பூண்டு
கற்பினில் வழுவா ளாகிக்
காசினி போற்ற வாழ்ந்தாள்.
(இகள்) முற்றறி முனிவர் தன்பால்-பேரறிவுடைய பூரண முனிவரி டிம்; முழுமதி முகத்தாள் - பூரண சந்திரன் போன்ற முகத்தினையு டிைறு சாவித்திரி; கேட்டு கற்பவை கற்றபின்னர் - உபதேசங்களைக் கேட்டு கற்கவேண்டிய கல்விகளைக் கற்ற பின்பு: கடவுளே துணையாய் என்றும் நிற்பவர் என்று உணர்ந்து நீங்கிலா அன்பு பூண்டு-கடவு ளிடத்தில் நீங்காத அன்பு பூண்டு; கற்பினில் வழுவாளாகி - கற்பு நெறியில் தவருதவளாகி: காசினி போற்ற வாழ்ந்தாள் -பூமியிலுள் ளோர் துதிக்கும்படி வாழ்ந்து வந்தாள். (எ-று) 83
உற்பத்திச் சருக்கம் முற்றிற்று. திருச்சிற்றம்பலம்,

மூன்றவது சுயம்வரச் சருக்கம்
* திருச்சிற்றம்பலம்
198 வளர்மதி போல மங்கை
வளர்வது கண்டு பெற்றேர் உளமதி லுவகை புற்ருர்
உலகினை யாளும் வேந்தர் களரியிற் பயிலும் வித்தை
கவின்கலை மனுநூ லாதி இளவர சற்குப் போல
இவட்குங்கற் பித்தான் மன்னன். (இ- ள்) வளர்மதி போல மங்கை வளர்வது கண்டு-வளர்பிறைச் சந்திரன் போலச் சாவித்திரியானவள் நாளொரு வண்ணமாக வளர்வ தைக் கண்டு;பெற்றேர் உளமதில் உவகையுற்ருர்-அசுவபதியும் மாளவி தேவியும் உள்ளத்தில் உவகையடைந்தனர்; உலகினை ஆளும் வேந்தர்உலகத்தையாளும் அரசர் களரியில் பயிலும் வித்தை - அரங்கத்தில் பயில்வனவர்கிய வாள்வித்தை, வில்வித்தை முதலியனவும்; கவின்கலைஅழகுக் கலை மனு நூல்-நீதி நூல்; ஆதி - முதலானவற்றை இளவர சற்குப்போல -இளவரசனுக்குக் கற்பிப்பது போல; மன்னன் இவட்குங் கற்பித்தான். (a T-1)
தனக்கு ஆண்மக்வின்மையால், த ன க் கு ப் பின் அரசாட்சியைச் சாவித்திரியே ஏற்கவேண்டுமாகலின் அவளுக்குப் போர்க் கலைகளையுங் கற்பித்தான் என்க. (l)
99 அருமறை நூல்கள் கற்றும்
அரியநுண் கலைகள் தேர்ந்தும்
இருநிலம் புரப்போர்க் கேற்ற
இயல்புக ளெல்லாங் கொண்டும்
அரசிளங் குமரி கற்பில்
அருந்ததிக் கொப்பா ளாகித்
திருமக ளென்னப் பொற்பில்
திகழ்ந்தனள் திசையோர் போற்ற.

Page 64
94
(இ-ள்) அருமறை நூல்கள் கற்றும்-அரிய வேதாகம நூல்களைக் கற்றும்; அரிய நுண் கலைகள் தேர்ந்தும்-அரியதாகிய நுண்கலைகளைக் கற்றுத் தெரிந்தும்; இருநிலம் புரப்போர்க்கு ஏற்ற - பூமியைப் பாது ' காக்கும் அரசர்க்கேற்ற இயல்புகள் எல்லாங் கொண்டும்-இய்ல்புகள் எல்லாவற்றையுங் கொண்டும்; அரசிளங் குமரி-சாவித்திரியானவள்; கற்பில் அருந்ததிக் கொப்பாளாகி; திருமகள் என்னப் பொற்பில் திசை யோர் போற்ற திகழ்ந்தனள்-நாற்றிசையிலுமுள்ளோர் போற்றும்படி அழகில் இலக்குமியென்று சொல்லும்படியாகத் திகழ்ந்தனள். (எ று) 2
200 சொன்னலங் கடந்த மேலாஞ் சுந்தர வடிவந் தாங்கிப் பன்னலங் கொண்ட பாவை
பாரினுக் கணியாய் நின்ருள் அன்னவள் அழகுஞ் சீரும்
அறைவதெற் கொல்லா வேனும் முன்னையோர் சொன்ன வாபோல்
மொழிகுவன் இயன்ற வாறு. (இ-ள்) சொல் நலங் கடந்த - சொற்களால் சொல்லப்படும் அழ குகளுக்கு அப்பாற்பட்ட (வருணிக்க முடியாத); மேலர்ஞ் சுந்தர வடி வம் தாங்கி-மேன்மையான அழகிய வடிவத்தை உடையவளாய்; பல் நலம் கொண்ட பாவை - பல நலங்களையும் கொண்ட சாவித்திரி; பாரினுக்கு அணியாய் நின்ருள் - பூமிக்கு ஒரு அணிகலனுக விளங்கினுள் அன்னவள்-அத்தன்மையானவளின்; அழகும் சீரும்-அழகையும் சிறப் பையும்; அறைவதெற்கு ஒல்லாவேனும்-சொல்லுதற்கு என்னுல் இயலா தெனினும்; முன்னையோர் சொன்னவாபோல்-முன்னேர்கள் சொன்ன வாறுபோல; இயன்றவாறு மொழிகுவன்-என்னுல் இயன்றவாறுசொல் லுவேன். (எ-று) 3
சாவித்திரியின் தோற்றம் - வருணனை பாதம் 20 கொம்பனை யாளின் பாதம்
கூறிடிற் கோதி லாத அம்பொனை யுருக்கி வார்த்தே அதனடிப் பாகந் தன்னிற் செம்பவ ளம்ப தித்துச்
செய்தவை மென்மை காண வம்பலர் கஞ்சம் பஞ்சு
வயின்வயின் இழைத்த போல்வ.

95
(இ - ள்) கொம்பு அனையாளின் பாதம் - பூங்கொம்பு போன்ற சாவித்திரியின் பாதங்கள் கூறிடில் - எப்படிப்பட்ட அழகினையுடை ய்ன என்று சொல்லப்போனல்; கோதிலாத-குற்றமற்ற, அம்பொனை உருக்கி வார்த்து-அழகிய பொன்னை உருக்கி வார்த்து; அதன் அடிப் பாகந் தன்னில் - அதன் அடியிலே; செம்பவளம் பதித்துச் செய்துசிவந்த பவளத்தைப் பதித்து வைத்து; அவை மென்மை காண்அப்பாதங்கள் மென்மைய்ாகும் படியாக, வம்பு அலர் க ஞ் சம்வாசனை கமழ்கின்ற புதிதாக மலர்ந்த தாமரையும்; பஞ்சு-பஞ்சும்; வயின் வயின் - பக்கம் பக்கந் தோறும்; இழைத்த போல்வ-வைத்து இழைத்துச் செய்யப்பட்டன போல்வன. (எ-று) 4
தொடிை, இsை
292 அன்னமென் னடையி னுளின்
அணிபெறு குறங்கு பேசில்
கன்னல்சேர் கதலித் தண்டும்
கயத்தினீள் கரமு மொக்கும்
கன்னியின் நுண்ம ருங்குல்
காண்பதற் கரிதாய் விண்செல்
மின்னலின் கொடியைப் போன்று
மேலெழுந் தொசியு மன்றே.
(இ-ள்) அன்னமென் நடையிஞளின்-அன்னத்தின் நடையைப் போன்று மென்மையான நடையையுடைய சாவித்திரியின் அணிபெறு குறங்கு பேசில்- அழகான தொடையின் அழகைச் சொன்னல்: கன் னல் சேர் கதலித்தண்டும் - கரும்புபோல் இனிக்கும் வாழையின் தண்டும் (தேன் கதலி என்னும் வழக்கம் போல கன்னற் கதலி என்க); கயத்திணிள் கரமுமொக்கும் - யானையின் நீண்ட தும்பிக்கையையும் ஒக்கும்; கன்னியின் நுண் மருங்குல்-அவளின் நுண்ணிய இடை காண் பதற்கு அரிதாய் - கண்ணுக்குப் புலப்படற் கரிதாக:விண்செல் மின்ன லின் கொடியைப் போன்று - ஆகாயத்திற் செல்லும் மின்னற்கொடி போன்று; மேலெழுந் தொசியும்- மேல் நோக்கித் துவஞம். (எ-று) அன்று; ஏ-அசைகள். 5 கொங்கை 208 மருங்குலை வருத்தி மார்பில்
மதர்த்தடி பரந்து ருண்டு திருந்துபொன் திதலை பூத்துத்
திரல்ே டெழு கொங்கை தெங்கின்

Page 65
குரும்பையைக் குலிகச் செப்பைக்
கோங்கினைக் குன்றை மானும் விரும்பிளம் பருவந் தந்த
வியத்தகு கனியு மொக்கும்.
(இ- ள்) மருங்குலை வருத்தி இடையைத் தனது பாரத்தால் வருத்தமுறச் செய்து; மார்பில் மதர்த்து-மார்பிலே கொழுத்து; அடி பரந்து உருண்டு-அடிப்பாகம் பரந்து உருண்டு; திருந்து பொன் திதலை பூத்து - திருந்திய பொன்நிறமான தேமல் பூத் து; திர ண் டு எழு கொங்கை - திரண்டு எழுந்து நிற்கும் தனங்கள்; தெங்கின் குரும் பையை - தென்னங் குரும்பையையும்; குலிகச் செப்பை-சாதிலிங்கச் செப்பையும்; கோங்கினை-கோங்கம் பூவையும்; குன்றை சிறு மலையை யும்; மானும்-ஒக்கும்; விரும்பிளம்பருவம் தந்த டிவிரும்பப்படும் இளம்: பருவமானது தந்த வியத்தகு கனியு மொக்கும் - அதிசயப் படத்தக்க கனியையும் ஒக்கும். (எ-று) 6
தோள், கை,
204 பொங்கிள முலையாள் தோள்கள்
பொன் அவிர் வேயை யேய்த்து வங்கிகிம் புரிகள் தாங்கி
வனப்பொடு திகழ்வ; முன்கை கங்கணங் கடக மேந்திக்
காந்தளைக் கமலப் போதைக் குங்கும வண்ண மாவின்
குளிரிளந் தளிரை யொக்கும்.
(இ-ள்) பொங்கு இளமுலைய்ாள் தோள்கள்-பருத்துப் பொலிந்த இளங் கொங்கையையுடையவளாகிய சாவித்திரியின் தோள்கள்; பெர்ன் அவிர்வேயை ஏய்த்து- பொன்னிறமாகப் பிரகாசிக்கும் மூங்கிலை ஒத்து; வங்கி, கிம் புரிகள் தாங்கி-வங்கி, கிம்புரி என்னும் தோளணிகளைத் தாங்கி, வனப்பொடு திகழ்வ- அழகுடன் விளங்குவ; முன்கை கங்கணம் கடகம் ஏந்தி முன்னங்கைகள் கங்கணம், கடகம் என்னும் கைய்ணிகளை ஏந்தி; காந்தளை-காந்தட் பூவையும்; கமலப்போதை-செந்தாமரைப் பூவையும்; குங்குமவண்ணமாவின் குளிரிளந் தளிரை ஒக்கும்-குங்கும நிறம் வாய்ந்த மாவின் குளிர்ச்சி பொருந்திய இளந் தளிரையும் ஒக்கும். (எ-று) 7

97
கழுத்து, முகம், கூந்தல், நுதல்.
205 சங்கவெண் கழுத்தின் தோற்றம்
சாற்றிடிற் பசுமென் பூகம் திங்களைப் பழிக்குந் தெய்வத்
திருமுகம் தேய்த லின்ரும் அங்கதைத் தழுவுங் கூந்தல்
அஞ்சன வண்ண மஞ்சாம் மங்கையொண் ணுதலுக் கொப்பு மழலையம் புலியென் பாரால்.
(இ-ள்) சங்கவெண் கழுத்தின் தோற்றம் சாற்றிடில் - சங்கு போன்ற வெண்ணிறக் கழுத்தின் தோற்றத்தைச் சொல்லில்; பசு மென் பூகம்-பசிய மென்மையான வழுவழுப்பான கமுகென்று சொல் லலாம். (கமுகு பச்சை நிறம் ஆதலால் சங்கவெண் கழுத்தென்று நிறங் கூறப்பட்டது). தெய்வத் திருமுகம் திங்களைப் பழிக்கும், தேய் தல் இன்ரும் - அவளுடைய தெய்வக்காந்தி வீசும் திருமுகம் திங்க ளைப் பழிக்கும், ஏனெனில் அது சந்திரனைப் போல் தேய்வதில்லை; அங் கதைத் தழுவுங் கூந்தல் - அந்த முகத்தைத் தழுவுகின்ற கூந்தல் : அஞ்சன வண்ண மஞ்சாம்-மை நிறமுடைய முகிலாம்; மங்கை ஒள் நுதலுக்கு ஒப்பு-சாவித்திரியினுடைய ஒளி பொருந்திய நெற்றிக்கு ஒப்பு: மழலை அம்புலி யென்பாரால்- இளம்பிறை என்பார், அழகு களை அறிந்தோர். (எ-று) 8
கண்கள்
206 செவ்வரி பரந்து நீண்டு
சேலெனப் பிறழுங் கண்கள்
நவ்வியின் மருண்ட நோக்கும்
நல்லவர்க் கருளைச் செய்யும்
செவ்வியுஞ் செம்மை யில்லாச் சிந்தனைப் புல்லர் தம்மைத்
கெவ்வரை யுட்கச் செய்து
தெருட்டுமோர் நோக்குங் கொண்ட,
(இ-ள்) சென்வரி பரந்து-சிவந்த இரேகைகள் பரந்து; நீண்டு
நீட்சியுடையனவாய்; (சலெனப் பிறழுங் கண்கள் - கயல் மீனெனப்
(# fT-7

Page 66
98
புடைபெயருங் கண்கள்; நவ்வியின் மருண்ட நோக்கும்-மான்குட்டி யின் மருண்ட பார்வையும்; நல்லவர்க் கருளைச் செய்யும் செவ்வியும் - நல்லோர்களுக்குக் கிருபை செய்யும் அழகும்; செம்மையில்லாச் சிந்தனைப் புல்லர் தம்மை - செம்மையில்லாத எண்ணத்தைக் கொண்ட கீழ் மக்களாகிய அறிவீனரை (துர் எண்ணங் கொண்ட காமுகர்களை) தெவ்வரை - பகைவரை உட்கச் செய்து-பயப்படச் செய்துதெருட் டும் ஒர் நோக்குங் கொண்ட - அறிவுறுத்தும் ஒப்பற்ற நல்ல பார் வைய்ையும் கொண்டன. (எ-று) 9
207 நானமார் கூந்த லாளின்
நயனமோ நீல வண்டும்
பானலு மொக்கும் பண்டு
பாற்கட லெழுந்த நஞ்சு
தானவை யெனினுஞ் சாலும்
தருணரை மாய்த்த லாலே
வேண்கு வாட்கண் ணுக்கு
வேறெதை யுவமை சொல்வேன்.
(இ- ள்) நானம் ஆர்கூந்தலாளின் - வாசனை நிறைந்த கூந்தலை யுடையவளது; நயனமோ-கண்களோ; நீல வண்டும் - நீலநிறமான வண்டுகளையும்; பாணலும்-கருங்குவளை மலர்களையும்; ஒக்கும்-நிகர்க் கும்; பண்டு-முற்காலத்தில்; பாற்கடல் எழுந்த நஞ்சுதான் அவை எனினும் சாலும்-திருப்பாற்கடலில் எழுந்த நஞ்சுதான் அவை எனி னும் பொருந்தும்; (ஏனெனில்) தருணரை மாய்த்தலாலே - காளைப் பருவத்தோரை (வாலிபரை) அவை மாயச் செய்வதாலே; வேல் நகு வாள் கண்ணுக்கு-வேலைப் பழித்தது போன்ற உருவத்தையுடைய ஒளி பொருந்திய கண்களுக்கு; வேறு எதை உவமை சொல்வேன்-வேறு எப்பொருளை உவமானமாகச் சொல்வேன். (எ-று)
(வி-ம்) அவள் கண்களின் வீச்சைத் தாங்கமாட்டாமல் வாலி பர் வருந்தி மடிவர். 10
காது, மூக்கு
208 கள்ளிமிழ் கோதை நல்லாள்
கனங்குழைக் காது நோக்கில் வள்ளையும் சங்குப் பூவும்
வளர்பனை முகிழும் போலும்

99
கொள்ளையொண் கதிர்கள் வீசும்
கொளுவிய மின்னி நாசிக்
கெள்ளுசம் பகப்பூ ஓந்தி
என்பவை யொருவா ருெக்கும் ,
மாலையையணிந்த சாவித்திரியின்; கனம் குழைக் காது நோக்கில் - கனவிய குழையை யணிந்த காதை நோக்கினல் வள்ளையும் - வள் ளைக் கொடியின் இலையும்; சங்குப்பூவும் - சங்கபுட்பமும்; வளர்பனை முகிழும்-வளர்ந்த பனை நுங்கின் முகிழும்; போலும் - ஒக் கும்; கொள்ளை ஒண் கதிர்கள் வீசும்-மிகுதியான ஒளி பொருந்திய கதிர் களை வீசும்; மின்னி - மூக்கில் அணியும் ஆபரண்ம்; கொளுவிய மாட் டிய நாசிக்கு-மூக்கிற்கு எள்ளு, சம்பகப்பூ, ஓந்தி, என்பவை; ஒரு
(இ-ன்) கள் இமிழ் கோதை நல்லாள் -தேனேக் கொப்பளிக்கும்
வாறு ஒக்கும்-ஒருவாறு சமானமாகும். (எ ~று)
வாய், பல்.
209 மைப்புறு மழையொண் கண்ணி
மதுவளர் மழலைச் செவ்வாய் துப்புறழ் இதழ்கள் சொல்லில்
தொண்டையங் கனியை மானும் செப்புறு முத்தம் முல்லை
சேயிழை முருந்து மூரற் கொப்புறு மெனலா மென்ருல் ஒண்ணில வுமிழா வன்ருே.
(இ- ள்) மைப்புறு - மைபொருந்திய மழை ஒண் கண்ணி- குளிர்ச்சி பொருந்திய ஒளியையுடைய, கண்கள் பெற்ற சாவித்திரியின்; மதுவளர் --தேன் ஊறும் (இதழ் அமுதம் ஊறும்); மழலைச்செவ்வாய்-மழலைச் சொற்களைப் பேசும் சிவந்த வாய்; துப்பு உறழ் இதழ்கள் சொல்லில் -பவளத்தை ஒத்த இதழ்களுக்கு உவமானம் சொல்லப் போனல்: தொண்டையங் கனியை மானும் - அழகிய கொவ்வைக் கனியை யொக்கும்; சேயிழை - ஆபரணங்களனிந்த சாவித்திரியின் முருந்து மூரற்கு-இறகின் அடியை ஒத்த வெண்மையான பற்களுக்கு செப்பு உறு முத்தம் - செப்பிலே நிரையாக வைத்த முத்துக்கள் வாய் செப்பு; பல்-முத்து) முல்லை-முல்லை மொட்டு; ஒப்புறும் எனலாம் என்ருல் டி சமானமாகும் என்று சொல்லப்போல்ை; (அதுவும் முடி

Page 67
100
யாது. ஏனெனில், முத்தும் முல்லையும், அவள் பற்களைப்போல்) ஒண்ணி
லவு உமிழா அன்ருே-ஒளி பொருந்திய நிலவை வெளிப்படுத்த மாட்டா
அன்றே. (எ-று) 2 சொல், சாயல், நடிை
210 கண்டினு மினிய சொல்லாள்
கனிமொழி குழலும் யாழும் கொண்டெழு மின்ப நாதம்
குழைத்த மென் குதலை யொக்கும் கொண்டல்கண் டாலும் மஞ்ஞை
கோதையின் சாயல் மானும் ஒண்டொடி நடையைக் கண்ட
ஒதிமந் தானும் நானும்,
(இ- ள்) கண்டினும் இனிய் செர்ல்லாள் கனிமெர்ழி-கற்கண்டி லும் இனிமைய்ான சொல்லையுடையவளது கனிபோன்ற மொழி; குழ லும் யாழும் கொண்டு எழும் இன்ப நாதம் குழைத்த மென்குதலை ஒக்கும்-குழலும், யாழும் எழுப்புகின்ற இன்ப நாதத்தைக் குழைத்த மென்மையான மழலைச் சொல்லை ஒக்கும்; கொண்டல் கண்டு ஆலும் மஞ்ஞை - மேகத்தைக் கண்டு ஆடும் மயில்; கோதையின் சா ய ல் மானும் -பூமாலையை அணிந்த சாவித்திரியின் சாயலை ஒக்கும்; ஒண் தொடி நடையைக் கண்ட ஓதிமம் தானும் நாணும்-ஒளி பொருந் திய வளையல்களை அணிந்த அவளின் நடையைக் கண்டு, நல்ல நடை யையுடைய அன்னந் தன்னுடைய நடை அதற்கொப்பு இல்லையே என்று வெட்கமடையும். (எ-று) 13
211 திங்கள் வெண் முகத்தில் வீசும்
திவ்விய மான தேசும் செங்கயல் பழித்து நீண்டு
செவ்வரி படர்ந்த கண்ணிற் றங்கிய கருணை நோக்கும்
தாவறு கற்பின் காப்பும் மங்கைபால் மக்க ளுக்கோர்
மதிப்பினே டச்ச மூட்டும்.
(இ-ள்) திங்கள் வெண் முகத்தில் வீசும் திவ்வியமான தேசும் -
ந்திரனைப் போன்று வெண்மையான அவள் முகத்தில் வீசுகின்ற தெய்வீகமான ஒளிக்காங்கையும் செங்கயல் பழித்து நீண்டு - செங்

101
கயல் மீனைப் பழித்து நீண்டு; செவ்வரி படர்ந்த கண்ணில்- சிவந்த இரேகைகள் படர்ந்த கண்களில்; தங்கிய கருணை நோக்கும் - தங்கிய கருணை செய்யும் பார்வையும்; தாவு அறு கற்பின் காப்பும் - குற்ற மற்ற கற்பின் காவலும்; மங்கைபால் மக்களுக்கோர் மதிப்பினேடு அச்சம் ஊட்டும்-சாவித்திரியின்பால் மக்களுக்கு ஒருவகை மதிப் போடு அச்சத்தையும் உண்டாக்கும். (எ நு) 14
22 செங்கம லத்தில் வைகும்
செந்திரு மகளோ அன்றிப் பொங்கழ லுருவ முக்கட்
பூரணன் பாகத் துற்ற அங்கயற் கண்ணி தானே
அறிகிலோம் அழகிற் கற்பில் இங்கிவட் கொப்பா ரில்லை
இவளொரு தெய்வ மென்ருர்.
(இ- ள்) செங்கமலத்தில் வைகும் செந்திரு மகளோ - சிவந்த தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியோ அன்றி -அல்லது; பொங்கு அழல் உருவ முக்கண் பூரணன் பாகத்து உற்ற அம்கயல் கண்ணிதாளுேபொங்கும் நெருப்பு வடிவினனும்; மூன்று கண்களை யுடையவனுமாகிய பராபரனின் இடப் பாகத்தில் பொருந்திய அழகிய கயல் போன்ற கண் களையுடைய உமாதேவியார்தானே? அறிகிலோம்; அழகில், கற்பில்,- அழகிலும், கற்பிலும்; இங்கு இவட்கு ஒப்பாரில்லை--இப் பூவுலகில் இவ ளுக்குச் சமானமானவரில்லை; இவள் ஒரு தெய்வமென்றர்-இவள் ஒரு தெய்வமென்று மக்கள் சொன்னுர்கள். (6r-t))) 15
3 அன்னவள் மேன்மை யெண்ணி
அவள்கரம் பற்ற எந்த
மன்னனும் வாரா னக
மாத்திர தேய மன்னன்
தன்னுளங் கவன்று தையல்
தானுெரு வரனைத் தேர
முன்னுதல் முறையென் றெண்ணி
முற்றிழை வருக வென்றன்.
(இ. ள்) அன்னவள் மேன்மை எண்ணி-அத்தன்மையான சாவித் திரியின் சிறப்பையும் (மகத்துவத்தையும்) மனதில் எண்ணி; அவள் கரம்

Page 68
02
பற்ற-அவளைத் திருமணஞ் செய்ய; எந்த மன்னனும் வாரானக-எந்த ஒரு அரசனும் முன்வராஞக; மாத்திரதேய மன்னன் தன் உளங்கவன்று -மாத்திரதேச அரசஞகிய அசுவபதி தன் உள்ளம் வருந்தி; தையல்தான் ஒருவரனைத் தேர முன்னுதல்- சாவித்திரி தானே தனக்கொரு கணவனைக் கொள்ளத் தீர்மானிக்க முற்படுதல்; முறையென்று எண்ணி-முறை மையானது என்று எண்ணி; முற்றிழை வருக என்ருன்-பலவித ஆபர ணங்களை அணிந்த மகளே வருக என்று அழைத்தான். (எ-று) 6
அன்னவள் வன அத்தன்மையானவள் மேன்மை - சிறப்பு, மகத்துவம் முன்னுதல் - முற்படுதல், படர்ந்து செல்லுதல் தேரல் - தீர்மானித்தல் - ஆராய்தல்.
24 அன்னையைப் பூசித் துப்பின்
அருட்பிர சாதங் கொண்டு மன்னனை வணங்கி மங்கை
மதிமுகந் தாழ்த்தி நிற்ப கன்ன வில் தோளி னனுங்
தாதலால் உச்சி மோந்து தன்னிக ரில்லாத் தையல்
தனக்கிவை பகர்த லுற்ருன். (இ - ள்) மங்கை - சாவித்திரி; அன்னையைப் பூசித்து பின்-பர சத்தியைப் பூசித்த பின்னர்; அருட்பிரசாதங் கொண்டு-திருவருட்பிர சாதமாகிய விபூதி, மலர் முதலியவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, பன்னனை வணங்கி - தந்தையாகிய அசுவபதி மன்னனை வணங்கி; மதி முகம் தாழ்த்தி நிற்ப-சந்திரனைஒத்த தனது முகத்தைத்தாழ்த்தி வணங்கி நிற்கவும்; கல் நவில் தோளினனும்-கல்லைப் போலத் திண்ணியதென்று சொல்லத்தக்க தோள்களையுடைய அசுவபதியும்; கா த லால் உச்சி மோந்து அன்பு மிகுதியால் அவளுடைய உச்சியை மோந்து; தன்நிகர் இல்லாத்தையல் தனக்கு-தனக்கு வேறெவரும் நிகரில்லாதவளாகிய அச் சாவித்திரிக்கு; இவை பகர்தலுற்றன்-மேல்வரும் இவ் வார்த்தை களைச் சொல்லலானன். (6T-g) 17
2 5 அருந்தவஞ் செய்து பெற்ற
ஆரணங் கனையா யுன்பாற்
பொருந்திய எழிலுஞ் சீரும்
புரையறு கற்புங் கண்டு

விரும்பியுன் றனைம ணக்க
விழைபவ னிலனுல் யானும் பெருந்துய ரடைந்து நைந்தேன்
பெற்றவர்க் கிழுக்கா மன்ருே. (இ- ள்) அருந்தவம் செய்து பெற்ற ஆரணங்கு அணையாய்-யாம் அரிய தவத்தைச் செய்து பெற்றெடுத்த தெய்வப் பெண்போன்றவளே; உன்பால் பொருந்திய எழிலும் சீரும் - உன்னிடத்தில் பொருந்தியுள்ள அழகையும் சிறப்பையும்; புரையறு கற்புங் கண்டு-குற்றமற்ற கற்பை யுங் கண்டு; விரும்பி உன்தனை மணக்க விழைபவன் இலனல்-விரும்பி உன்னை மணஞ்செய்ய ஆசைப்படுபவனில்லானுக; யானும் பெருந் துயர் அடைந்து நைந்தேன் - யானும் பெருந்துயரமடைந்து மனம் மெலிந் தேன்; பெற்றவர்க்கு இழுக்காமன்ருே-பருவமடைந்த தமது பெண்ணுக்கு விவாகஞ்செய்து வைக்காவிட்டால் அது அவளைப் பெற்றவர்க்கு நிந்தை யாகுமல்லவா? (GT-argi) 18 216 பருவம தடைந்த பெண்ணைப்
பண்புளா னுெருவ னுக்குத் திருமணஞ் செய்யாத் தந்தை
தேவியின் குறிப்ப நிந்து மருவிடா மகிழ்நன், தாதை
மறைந்தபின் பயந்தாள் தன்னைப் பெருமையொ டோம்பா மைந்தன்,
பெரும்பழி யடைவா ரன்ருே. (இ-ள்) பருவம் அது அடைந்த பெண்ணை - மணப்பருவமடைந்த பெண்ணை; பண்புளான் ஒருவனுக்கு-பண்புள்ள ஒரு கணவனுக்கு; திருமணஞ் செய்யாத் தந்தை-திருமணஞ் செய்து வைக்காத தந்தை தேவியின் குறிப்பறிந்து மருவிடா மகிழ்நன்.தனது மனைவியின் மனக் குறிப்பை யறிந்து அவளைத் தழுவிடாத கணவன்; தாதை மறைந்த பின் - தனது தகப்பன் இறந்தபின் பயந்தாள் தன்னை - தன்னைப் பெற்ற தாயை பெருமையோடு ஒம்பா மைந்தன் - பெருமையுடன் காப்பாற்ருத புத்திரன் ஆகியோர்; பெரும்பழி அடைவார் அன்ருே -பெரும் பழியை யடைவார்களல்லவா? (எ-று) 9
7 ஆதலி ஞலே நீயும்
அணிமணித் தேர் மீ தேறி
மாதர்கள் மறையோர் சூதர்
*
மந்திரச் சுற்றஞ் சூழப்

Page 69
பூதலம் வலமாய்ப் போந்து
பூவையுன் மனத்துக் கேற்ற
காதலன் றன்னைத் தேர்ந்து
கடிதிவண் மீள்வா யென்ருன்.
(இ-ள்) ஆதலிஞலே நீயும் அணிமணித் தேர்மீது ஏறி-ஆகை யால் நீயும் அழகிய மணிகளினல் அலங்காரஞ் செய்யப்பட்ட தேர் மீதேறி; மாதர்கள் - பாங்கிப் பெண்களும்; மறையோர்-வேதியர்க ளும்; சூதர்-பாணர்களும்; மந்திரச் சுற்றஞ் சூழ- அமைச்சர் குழா மும் சூழ்ந்து வர, பூதலம் வலமாய்ப் போந்து-பூமிய்ை வலம் வந்து பூவை உன் மனத்துக்கு ஏற்ற காதலன் தன்னைத் தேர்ந்து-பெண்ணே! உன் மனத்துக்கு விருப்பமான காதலன் ஒருவனேத் தேர்ந்து எடுத்துக் கொண்டு; கடிது இவண் மீள்வாய் என்ருன் - விரைவாக இங்கு மீண்டு வருவாயாக என்ருன். (எ-று) 20
28 குலத்தினிற், குணத்திற், கோன்மை
கோடிடா நடுவு நிற்கும் நலத்தினிற் சிறந்தோன், யார்க்கும்
நல்லவை செய்து மக்கட் பலத்தினைப் பெற்றேன், நான்கு
படையொடு பொருளும் பல்க நிலத்திரைக் குரிமை பூண்டோன்
நினக்குயர் வரணு மென்ருன்.
(இ- ள்) குலத்தினில் - குலத்தினலும்; குணத்தினில்-குணத்தி ஞலும்; கோன்மை கோடிடா நடுவுநிற்கும் நலத்தினில் - செங்கோன்மை கோடாது நடுவு நிலைமையில் நிற்கும் இராசநீதி தவருத நலத்தினலும்; யார்க்கும் நல்லவை செய்து மக்கள் பலத்தினைப் பெற்ருே?ன் - யாவர்க் கும் நல்லவையையே செய்து அதனல் மக்களின் ஆதரவையும் பலத்தினை யும் பெற்றேனும்; நான்கு படையொடு பொருளும் பல்க-சதுரங்க சேனை சளும் பொருளும் பெருக, நிலத்தினுக்கு உரிமை பூண்டோன்-அT சாட்சிக்கு உரிமை கொண்டவனுமாகியவன்; நினக்கு உயர்வரனும் என் குன்-உனக்கு உயர்வாகிய கணவனுவான் என்று அசுவபதி சொன்னன்' (6T-pi) (வி ம்) நிலத்தினுக்குரிமை பூண்டோன் - நிலத்தினை வஞ்சகமா கப் பெற்றவன் உரிமையற்றவன். நேர்மையாகப் பெற்றவன் உரிமை யுடையவன். தற்போது ஆளும் அரசனுக்கு நேரான வாரிசாக உள்ள வன்பின்பு ஆளும் உரிமையுடையவன். 2.

105
219 கொங்கவிழ் கோதை நாணிக்
கொற்றவ னடிய னிந்து
இங்கும தெண்ண மிஃதேல்
இறைவியின் அருளுங் கூட்ட
கங்கைபாய் மாத்தி ரத்தைக்
கடந்தயல் நாடு சென்றே
எங்குளன் யானு வக்கும்
ஏந்தலென் றறிது மென்ருள்.
(இ-ள்) கொங்கு அவிழ் கோதை - தேன் கட்டவிழும் பூமாலையை அணிந்த பெண்ணுகிய சாவித்திரி; நாணம் உற்று; கொற்றவன் அடி பணிந்து-அகவபதியின் பாதங்களை வணங்கி; இங்கு உமது எண்ணம் இஃதேல்; இறைவியின் அருளுங் கூட்ட -பராசத்தியின் அருளுங் கை கூட்ட கங்கைபாய் மாத்திரத்தைக் கடந்து-கங்கை ந தி பாய் ந் து வளஞ்செய்யும் ம்ாத்திர நாட்டைக் கடந்து; அயல் நாடு சென்று-அயல் நாடுகளுக்குச் சென்று; யானுவக்கும் ஏந்தல்-யான் விரும்பும் பெருமை யிற் சிறந்த அரசன்; எங்குளன் என்று அறிதும் என்ருள்- எங்கே இருக் கின்ருன் என்று அறிவேன் என்ருள்: (எ- று) 22
220 பஞ்சின் மெல் லடியாள் தேரிற்
பல்லியம் முழங்கி யார்ப்ப கஞ்சமென் முகத்து மாதர்
காவலர் அமைச்சர் சூழ வெஞ்சமர் விளைக்கக் காமன் விரும்பிடு மழகு தாங்கி இஞ்சிசூழ் நகரம் நீங்கி
இருநிலம் சாரி போனுள். (இ-ள்) பஞ்சு இன் மெல்லடியாள்-பஞ்சினும் மென்மையான அடிகளையுடைய சாவித்திரி; தேரில்-தேரில் ஏறி; பல் இயம் முழங்கி யார்ப்ப்-பலவகை வாத்தியங்கள் முழங்கி ஆரவாரிக்க; கஞ்சமென் முகத்து மாதர் காவலர் அமைச்சர் சூழ-தாமரை போன்ற மென்மை யான முகத்தினையுடைய தோழியரும், காவலரும், அமைச்சரும், சூழ்ந்து வர, வெஞ்சமர் விளைக்க-காதற் போராகிய் கொடிய் போரைச் செய்ய, காமன் விரும்பிடும் அழகு தாங்கி- மன்மதன் விரும்பக் கூடிய அழகைக் கொண்டு; இஞ்சி சூழ் நகரம் நீங்கி -மதில்கள் சூழ்ந்த சுந்தர புரியை நீங்கி; இருநிலம் சாரி போனள் - பெரிய பூமிமேல் (வாகனமேறி) உலாப்போனுள். (எ-று) 23

Page 70
106
22 விதிக டோறும் மக்கள்
விதானமும் வளைவுங் கட்டித் தாதவிழ் மலர்கள் தூவித்
தண்பனி நீர்தெ விரித்துச் சோதியுங் குடமும் வைத்துச்
சுற்றின ரால நன்னீர் மாதிவள் மாண்புக் கேற்ற
மணமகற் பெறுக வென்றர்.
(இ-ள்) (அவள் பவனி சென்ற) வீதிகள் தோறும், மக்கள் - தெருக்களில் ஜி.ஸ்ள மக்கள்; விதானமும் - மேற்கட்டிகளும்; வளைவு ங் கட்டி-அலங்கார வளைவுகளும் கட்டி, தாதவிழ் மலர்கள் தூவி - பூந் தாது அவிழும் மலர்களைத் தூவி, தண்பனி நீர் தெளித்து - குளிர்ந்த பனி நீரைத் தெளித்து; சோதியுங் குடமும் வைத்து-விளக்குகளும் பூரண கும்பங்களும் நிரைத்து வைத்து; ஆல நன்னீர் சுற்றினர்-மங்கல மான ஆலாத்தி சுற்றினர்கள்; மாது இவள் மாண்புக்கு ஏற்ற - இந்த மங்கையின் பெருமைக்கேற்ற, மணமகனை பெறுக வென்ருர் - மணமக னைப் பெறுவாளாக என்று வாழ்த்தினர். (at-g) 24
ஆலம் - மஞ்சளும் சுண்ணும்பும் கலந்த நீர்.
222 சுணங்கிழை சுமந்த கொங்கைச்
சுந்தர வல்லி தன்னை
யணங்கினை யமுத மூறும்
அரத்தமென் அதரத் தாளை
மணஞ்செயும் பேறு வாய்க்கும்
மன்னனெங் குளனே வென்று
பணந்தனைப் பழிக்கு மல்குற்
பஈ வையர் மயங்கி நின்ருர்,
(இ- ள்) சுணங்கு இழை சுமந்த கொங்கை - தேமல் படர்ந்து ஆபரணங்களைச் சுமந்த தனங்களையுடையவளும்; சுந்தரவல்லிதன்னைஅழகிய பூங்கொடிபோன்றவளும் ஆகிய; அணங்கினை-தெய்வப்பெண்ணை; அமுதம் ஊறும் அரத்தமென் அதரத்தாளை - அமுதமூறுகின்ற, செவ்வ ரத்தம் பூப்போன்று சிவந்த உதடுகtேucடையவளுமாகிய சாவித்திரி தேவியை மணஞ்செய்யும் பேறு வாய்க்கும்; மன்னன் எங்கு உளனே

107
என்று; பண்ந்தனைப் பழிக்கும் அல்குல் பாவையர்-பாம்பின் படத்தை
யும் அழகாற் பழிக்கும் நிதம்பத்தையுடைய பாவை போன்ற பெண்கள்:
மயங்கி நின்ருர் - கலங்கி நின்ருர்கள். (ar一gl) 25
(இதுவும் அடுத்த பாட்டும் ஒரு தொடர்)
223 முருந்துறழ் முல்லை மூரல்
முழுமதி முகத்தி ஞளுக் கிரும்புவி மன்னர் யாரும்
ஏற்றவ ரிலரால் ஈசன் பெருங்கரு ணேயினுற் றந்த
பெண்ணிவட் கியைந்த கேள்வன் கரும்புவில் மார னேயோ
கடம்பனுே அறியோ மென்ருர்,
(இ-ள்) முருந்துறழ்-இறகினடியிற் குருத்தை யொத்தும்; முல்லை மூரல்-முல்லை மொட்டுப் போன்றும் தோன்றும் பற்களையும்; முழுமதி முகத்தினுளுக்கு-பூரண சந்திரனை ஒத்த முகத்தையும் உடைய் சாவித் திரிக்கு; இரும்புவி மன்னர் யாரும் ஏற்றவரிலரால்-பூமியிலுள்ள மன் னர் யாரும் ஏற்றவரில்லாராகையால்; ஈசன் பெருங் கருணையினுற் றந்த -பரமேஸ்வரன் தமது பெருங் கருணையினல் தந்த பெண்ணிவட்கு இயைந்த கேள்வன்-பெண்ணுகிய இவளுக்கு இயைந்த கணவன் கரும் புவில் மாரனேயோ-கருப்பம் வில்லை ஏந்திய காமனுே; கடம்பனுே - கடம்ப மாலையையணிந்த முருகனே; அறியோ மென்ருர். (எ-று) 26
224 சிந்துரப் பவளச் செவ்வாய்ச்
சிலைநுதற் சிறும ருங்குற்
கந்தவார் குழலி ஞளின்
கருந்தடங் கண்ணி லேதோ
மந்திரம் உளது போலும்
மக்களைத் தம்பா லீர்த்து
வந்தடி பணியச் செய்யும்
வலிமையொன் றுண்டா மென்ருர்,
(இ- ள்) சிந்துரப் பவளச் செவ்வர்ய்-சிவந்த பவளம் போன்ற செவ்வாயையும், சிலைநுதல் - விற்போன்ற நெற்றியையும்; சிறு மருங் குல்-சிறிய இடையையும் உடைய கந்தவார் குழலினளின் - வாசனை பொருந்திய நீண்ட கூந்தலையுடைய சாவித்திரியின் கருந்தடங் கண்

Page 71
08
னில் - கருமை பொருந்திய விசாலமான கண்களில்; ஏதோ மந்திர முளது போலும்-ஏதோ மந்திரசக்தி உள்ளது போலும்;. (ஏனெனில், அவைக்கு) மக்களைத் தம்பால் ஈர்த்து வந்து அடிபணியச் செய்யும் வலிமையொன்று உண்டாம் என்ருர்-மனிதரைத் தம்மிடம் இழுத்து வந்து அடிபணியச் செய்கின்ற வலிமை ஒன்று உண்டு என்று கூறி ஞர்கள். (எ-று) 27
225 காவியந் தடங்க ணுளின்
கருத்தினை யறிய வேண்டி
ஆவியந் தூச னிந்த
அருந்துணைப் பாங்கி மன்னர்
ஒவியம் பலவுங் காட்டி
ஒளிர்மணித் தவிசி ருந்து
பூவினைப் புரக்கும் வேந்தர்
புகழெலா மியம்ப லுற்ருள்.
(இ-ள்) (காவி அம் தடம் கண்ணுளின்-கருங்குவளையையொத்த அழகிய விசாலமான கண்களையுடைய சாவித்திரியின்; கருத்தினை யறியவேண்டி -மனக்கருத்தையறியவேண்டி ஆவி அம் தூசணிந்த - பால் ஆவி போல் மெல்லிய அழகிய சீலேயை யணிந்த, அருந்துணைப்பாங்கிஅரிய துணைவியாகிய தோழி; மன்னர் ஒவியம் பலவும் காட்டி-மன் னவர் பலருடைய ஓவியங்கள் பலவற்றை அவளுக்குக் காட்டி ஒளிர் மணித் தவிசு இருந்து - பிரகாசிக்கும் மணிகள் பதிக்கப்பட்ட சிங் காசனத்திலிருந்து; பூவினைப் புரக்கும் வேந்தர் - பூமியைக் காக்கும் அரசரின் புகழ் எலாம் இயம்பல் உற்ருள். புகழ்களெல்லாவற்றை யும் கிரமமாகக் கூறிஞள். (எ-று) 28
வேறு இலங்கை மன்னன்
226 இந்து சாகரத் திலங்கைத் தீவினை
முந்தி யிராவணன் மொய்ம்பொ டாண்டனன்
செந்த மிழ்வளர் செல்வ நாடதற்
கிந்த நாகனின் றிறைமை பூண்டவன்.
(இ-ள்) இந்து சாகரத்து இலங்கைத் தீவினை-இந்து சமுத்திரம்
தில் விளங்கும் இலங்கையென்னும் தீவினை; முந்தி இராவணன் மொய்த் பொடு ஆண்டனன்-முற்காலத்தில் இராவணன் என்னும் அரசன் வலி

09
மையோடு ஆண்டான்; செந்தமிழ் வளர் செல்வ நாடு அதற்கு-செந் தமிழ் வளர்கின்ற செல்வம் மிக்க அந்த நாட்டிற்கு; இந்த நாகன் இன்று இறைமை பூண்டவன்-இங்கே ஒவியத்தில் காணப்படும் இந்த நாகன் என்னும் பட்டத்தையுடையவன் இப்பொழுது தலைமை பூண்டுள்ளான்.
(எ-று)
(வி-ம்) நாகர் இலங்கையின் பூர்வீக மக்கள். அவர்கள் தமிழர்கள். அந்த நாட்டு அரசர்கள் நாகன் என்னும் பட்டத்தை யுடையவர்கள் இலங்கையில் செந்தமிழ் வளர்ந்தது. இயற்கை வளம் நிறைந்த செல்வங் கொழிக்கும் நாடு அவ் இலங்கை.
சிங்கபுரம், அங்க நாட்டு அரசர்கள்
227 சிங்க புரமெனுஞ் செல்வ நாட்டினைத்
தங்கு புகழுடன் தாங்கும் வேளிவன் அங்க நாட்டினை அரசு செய்பவன் இங்கு காணுமிவ் இலங்கு பூணினன்.
(இ-ள்) சிங்க புரமெனும் செல்வ நாட்டினை -சிங்கபுரம் என்னும் செல்வம் மிக்க நாட்டின; தங்கு புகழுடன் - நிலைபெற்ற புகழுடன்; தாங்கும் வேள் இவன்-காக்கும் மன்மதன ஒத்த குமரன் இவன்; இங்கு காணும் இவ் இலங்கு பூணினன்-இங்கு நீ காணும் இந்தப்பிரகாசிக்கும் ஆபரணங்களை யணிந்தவன்; அங்க நாட்டிஃன அரசு, செய்பவன்-அங்க நாட்டை அரசாள்பவன். (எ-று)
(வி-ம்) சிங்க புரம் - மலாய்க் குடாநாடு. செ ல் வச் செழிப் புள்ள நாடு. 30
சாவக நாட்டு வேந்தன்
228 காவியத் தில்வரு கதைகள் கண் கவர்
ஒவியத் தில்வரைந் துயர்வு பெற்ற நற் சாவகத் தீவெனுஞ் சுவர்ண பூமியின் காவலன் கடாமுகக் களிற்று வேந்தனே.
(இ- ள்) காவியத்தில் வரு கதைகள் - இராமாயணம் முதலிய காவியங்களில் வரும் கதைகளை; கண்கவர் ஒவியத்தில் வரைந்து-கண் ணைக் கவரும் ஒவியங்களில் எழுதி; உயர்வு பெற்ற-உயர்ச்சியடைந்த நற் சாவகத்தீவெனும் சுவர்ண பூமியின்-நல்ல சாவகத்தீவென்று சொல்

Page 72
t
லப்படும் சுவர்ண பூமியின் காவலன்-அரசன், கடாமுகக் களிற்று வேந்தன்- மதம் பொருந்திய முகத்தினையுடைய யானைகளையுடைய இவ் வேந்தணுவான். ஏ - ஈற்றசை. (arー0り
(வி-ம்) சாவகத்தின் தமிழ்ப் பெயர்-சுவர்ண பூமி; அர்ச்சுனன் நாகர் குலக் கொடிய்ை மணந்தான் என்று யாவகர் கூறுவர். நாகபுரத் தில் பூரீ மாரன், பூமிச் சந்திரன், புண்ணிய ராசன் முதலிய அரசர்கள் ஆண்டனர். 3
காம்போச மன்னன்
229 மின்னெறி தவிசினில் மேவும் மன்னவன்
செந்நெறி யாகிய சைவம் பேணியே கன்னல்செந் நெல்மலி காம்போ சத்தினை ஒன்னல ரடிதொழ ஒம்பும் வர்மனே.
(இ-ன்) மின் எறி தவிசினில் - ஒளியை வீசும் ஆசனத்தில்: மேவும் மன்னவன் - பொருந்தியிருக்கும் இவ் அரசன், செம்நெறியா கிய சைவம் பேணியே - செம்மை வாய்ந்த நெறியாகிய சைவ சம யத்தைப் பாதுகாத்து; கன்னல் செந்நெல் மலி - கரும்பும், செந் நெல்லும் அதிகமாக உள்ள; காம்போசத்தினை-காம்போசம் என்னும் நாட்டை ஒன்னலர் அடிதொழ - தனது பகைவர் வந்து தனதடி யைத் தொழ; ஒம்பும்-பாதுகாக்கும்; வர்மன்-வர்மனென்னும் பட் டத்தையுடைய அரசனுவான்; ஏ-ஈற்றிசை (எ-று)
(வி-ம்) சாம்போசம் - கம்போடியாவின் தமிழ்ப் பெயர். வர்மன் என்னும் பட்டத்தையுடைய அரசர்கள் ஆண்டனர்- (உ- ம்) ஜயவர்
மன், யசோவர்மன், இந்திரவர்மன். 32
கடாரவேந்தன்
230 மின்ஒளிர் வைரமும் மிளகு மேலமும்
செந்நெலுந் தேக்கினிற் செய்த தூண்களும்
பன்னக ரங்களிற் பண்டம் மாறியே
பொன்பொலி கடாரத்தைப் புரக்கும் ஏந்தலே.
(இ- ள்) மின் ஒளிர் வைரமும் - மின்னலைப்போல் ஒளிவிட்டுப்
பிரகாசிக்கும் வைரஇரத்தினங்களும்; மிளகும்; ஏலமும்; செந்நெலும் தேக்கினிற் செய்த தூண்களும்-தேக்கம் மரத்திலே செய்த தூண்களும்:

பல் நகரங்களிற் பண்டம் மாறி-பல பிறநகரங்களில் பண்டமாற்றுச் செய்து; பொன்பொலி கடாரத்தை - அதனல் செல்வம் நிறைந்த கடாரம் என்னும் தேசத்தை; புரக்கும் ஏந்தல் - காக்கும் அரசன் இவ ணுவான், ஏ-ஈற்றிசை (எ-று}
(விளம்) கடாரம்-பர்மாவின் தமிழ்ப்பெயர். 33
பாண்டிய மன்னன்
23 அங்கயற் கண்ணிமுன் ஆண்ட ஆலவாய்
அங்கரன் திருவிளை யாடல் செய்தது சங்கமி ருந்துசெந் தமிழ்வ ளர்த்தது மங்கல நிறைதரு மதுரை மாநகர்,
(இ-ள்) அங்கயற்கண்ணி - மீனட்சியம்மையார்; முன் ஆண்ட ஆலவாய்-முற்காலத்தில் ஆட்சி செய்த திருஆலவாய் என்னும் நக ரம்; அங்கு அரன் திருவிளையாடல் செய்தது - அங்கே சிவபிரான் திருவிளையாடல்களைச் செய்தது; சங்கம் இருந்து செந்தமிழ் வளர்த் தது-தமிழ்ச்சங்கம் இருந்து செந்தமிழை வளர்த்தது; மங்கல நிறை தரு மதுரை மாநகர்-மங்கலம் நிறைந்த மதுரை யென்று சொல்லும் பெரிய நகரம் ஒன்று உண்டு. (எ மறு) 34
இதுவும் அடுத்த கவியும் ஒரு தொடர்.
232 அங்கதை மனு முறை ஆட்சி செய்பவன்
திங்களின் மரபினன் திகழும் மேருவை அங்கையிற் செண்டினுல் அடித்த மேன்மையன் இங்குபொற் றவிசினில் இலங்கு பாண்டியன்.
(இ-ள்) அங்கு அதை-அங்கு அந்த மதுரை நகரத்தை (டாண் டிய நாட்டினை); ஆட்சி செய்பவன் - அரசாட்சி செய்பவன்; திங்க ளின் மரபினன் - சந்திரகுலத்துதித்தவன்; திகழும் மேருவை - பிரகா சம் பொருந்திய மேருமலையை; அங்கையில் செண்டினல் - அழகி ய கையில் வைத்திருக்கும் செண்டாயுதத்தால், அடித்த மேன்மையன்அடித்து அதன் வலிமையை அடக்கிய மேன்மையை உடையவன்; இங்கு பொற்றவிசினில் - இங்கேயுள்ள பொன் ஆசனத்தில், இலங்கு பாண்டியன்-பிரகாசஞ் செய்து இருக்கின்ற பாண்டிய மன்னனுவான். (at-g)) 35

Page 73
12
சேர மன்னன்
233 வடவரை முடிமிசை வரிவில் தீட்டிய
கடகரி பரிஅரி கடலென் தானையான் கடலலை நித்திலம் கரைகொண் டுய்த்திடும் குடகினை யரசுசெய் கோஇச் சேரனே.
(இ-ள்) வடவரை முடிமிசை - வடபால் உள்ள இமய்மலையின் உச்சியிலே; வரிவில் தீட்டிய -தனது இலச்சினைய்ாகிய வரிந்த வில்லைப் பொறித்த கடகரி-மதம் பொருந்திய யானை; பரி-குதிரை அரிதேர்; கடல் என் தானையான்-கடல் என்று சொல்லும் படியான அதிக படையை யுடையவன்; கடல் அலே - கடலின் அலைகள்; நித்திலம் கரை கொண்டு உய்த்திடும்-முத்துக்களை கரையிற் கொண்டுபோய்ச் சேர்த் திடும்; குடகினை-சேரநாட்டினை; அரசு செய்கோ - அரசாட்சி செய்யும் அரசன், இச் சேரன் -இந்தச் சேர மன்னனே, ஏ-பிரிநிலை (எ-று) 36
சோழ மன்னன்
234 ஆதவன் மரபினில் அவத ரித்தவர்
நீதியிற் கோடிடா நேர்மை யானவர் தாதவிழ் ஆத்தியின் தாரைக் கொண்டவர் பூதலத் தெவ்வரும் புகழுஞ் சோழரே.
(இ-ள்) ஆதவன் மரபினில் - சூரிய குலத்தில்; அவதரித்தவர்; நீதியிற் கோடிடா-நீதியிலே நெறிதப்பாத (வளையாத); நேர்மையான வர் - செங்கோன்மையை உடையவர்; தாதவிழ் ஆத்தியின் தாரைக் கொண்டவர் - பூவிதழ் கட்டவிழும் ஆத் தி மாலையையுடையவர்; பூதலத்து எவ்வரும்-பூமியிலுள்ள எல்லாரும்; புகழும் - புகழ்ந்து பேசும்: சோழர்-சோழ அரசர், ஏ-பிரிநிலை. (எ ~று) 37
235 அன்ருெரு புருவுனக் கடைக்க லம்எனத்
தன்றசை பரிந்துமே தந்து காத்தவன் கன்றினை மாய்த்ததன் காதன் மைந்தனைக் கொன்றவன் சோழர்தங் குலத்து மன்னரே. (இ - ள்) அன்று ஒரு புரு உனக்கு அடைக்கலம் என-முன்னெரு
காலத்து ஒரு புரு உனக்கு அடைக்கலம் என்று வேண்ட தன் தசை பரிந்து தந்து காத்தவன் (அப் புருவைக் காப்பாற்றத் தன் தசையை

13
அரிந்து வேடனுக்குக் கொடுத்து அப்புருவின் உயிரைக் காப்பாற்றிய வன்; (சிபிச்சக்கரவர்த்தி), கன்றினை மாய்த்த தன் காதல் மைந்தனை கொன்றவன் - பசுக்கன்ருெ?ன்றைத் தேர்ச்சில்லினுல் தற்செயலாகக் கொன்ற தனது அன்புக்குரிய ஒரேயொரு மகனையும் அக்குற்றத்திற் காகத் தேர்ச்சில்லிகுல் உரு ட் டி க் கொன்றவன் ( ம னு நீ தி ச் சோழன்); சோழர்தம் குலத்து மன்னரே-ஆகிய இவர்கள் சோழர் குலத்து மன்னரேயாவார். ஏ-தேற்றம். (எ-று) 38
236 கன்னலின் மொழியினய் கழனி யெங்கணும்
பொன்னியின் புதுப்புனல் புகுந்து நிற்றலாற் செந்நெலுங் கதலியுஞ் செழிப்புற் ருேங்கிடும். நன்னலம் மிக்கசோ னட்டின் கோஇவன். (இ-ள்) கன்னல்இன் மொழியினுய் - கரும்புபோலும் தித்திக் கின்ற இனிய மொழியினைப் பேசும் சாவித்திரியே; கழனி யெங்கணும் --மருத நிலமெங்கணும்; பொன்னியின் புதுப்புனல்-பொன்னியாற் றின் புதியநீர் புகுந்து நிற்றலால் - பாய்ந்து ஒடுதலால்; செந்நெ லும், கதலியும் செழிப்புற்று ஓங்கிடும்; நல்நலம்மிக்க - நற்சிறப்பும் அழகும் மிக்க, சோழநாட்டின் கோ இவன்-சோழநாட்டின் அரசன் இவன். சோழ + நாடு-சோணுடு. (எ-று) 39
பல்லவ மன்னன்
237 கல்லினிற் சிற்பங்கள் கவினச் செய்பவர்
நல்லபல் கலைகளில் நாட்டங் கொண்டவர் மல்லலந் தோளினர் மலிந்த பல்வளப் பல்லவ நாட்டினைப் பரிக்கும் வேந்தனே. (இகள்) கல்லினிற் சிற்பங்கள் கவினச் செய்பவர் - கல்லினிலே சிற் பங்களை அழகாயிருக்கச் செய்பவரும்; நல்ல பல் கலைகளில் நாட்டம் கொண்டவர்- நல்ல பல் கலைகளில் விருப்பம் கொண்டவரும்; மல்லல் அம் தோளினர் வலிமையுள்ள அழகிய தோள்களையுடையவரும்; மலிந்த பல்வள - அதிகமாகிய பலவகையான வளங்களுமுடைய; பல்லவ நாட்டினை- பல்லவ தேயத்தை; பரிக்கும்-காக்கும்; வேந்தன் - அர சன் இவனுவான். ஏ பிரிநிலை (எ-று) 40 233 இன்னன ஒவியம் இவட்குக் காட்டியும்
பொன்னனை யாளவள் புந்தி கொண்டிலள் அன்னமென் னடையினள் அயல வாகிய நன்னக ரங்களை நாடிச் சென்றனள், y T - 8

Page 74
114
(இ - ள்) இன்னன ஒவியம் - இப்படியான ஒவியங்களை; இவட் குக் காட்டியும் - சாவித்திரிக்குப் பாங்கி காட்டியும் பொன் அனை யாள் அவள் புந்தி கொண்டிலள் - பொன்னையொத்த அழகுடைய சாவித்திரி தன் மனத்தில் ஏற்றுக்கொண்டாளல்லள்; அன்னமென்ன டையினுள் அன்னத்தின் நடைபோன்ற மென்மையான நடையையு டைய சாவித்திரி; அயலவாகிய நல் நகரங்களை - அயலிலுள்ளனவா கிய நல்ல நகரங்களை, நாடிச் சென்றனள் - (தனது கணவனுவான் இருப்பான் என்று) நினைத்துச் சென்ருள். (எ-று) 41
வேறு
குரு நாட்டு வேந்தன் 239
மின்னேரிடை மிகநொந்திட மேலும்வளர் முலையாய் பொன்னேவிளை புலமெங்கணும் புவிசாய்கதிர் மணியைக் கன்னேர்புயக் களமர்கொடு களமேட்டினிற் குவைசெய் தன்னேரில தாகுங்குரு தனையாள்பவ னிவனே.
(இ-ள்) மின்நேர்இடை மிகநொந்திட மேலும் வளர் முலையாய்மின்னற்கொடியை ஒத்த இடையானது மிகவும் வருந்திட மேலும் மேலும்வளர்கின்ற முலைகளையுடையவளே!; பொன்னே விளை புலம் எங்கணும். பொன்விளைகின்ற வயல்கள் எங்கும்(நல்ல விளைவுள்ள வயல் கள், அதனுல் பொன் விளையும் வயல் என்று கூறப்பட்டது); புவி சாய் கதிர் மணியை-நிலத்திற் பாரத்தினுல் சாய்ந்து கிடக்கும் நெற் கதிர்மணிகளை; கல் நேர்புய களமர்கொடு-கல்லையொத்த திண்ணிய தோள்களையுடைய மருதநில மக்கள் கொண்டுபோய்; களமேட்டினிற் குவை செய்-களத்து மேட்டினிலே குவித்து வைக்கும், த ன் நேர் இலது ஆகுங் குருதனை - தனக்குச் செல்வத்தால் ஒப்பில்லாததாகிய குருநாட்டினை ஆள்பவன் இவனே-ஆள்பவன் இவனே எனப் பாங்கி
சொன்னுள், ஏ-பிரிநிலை (எ-று) 42
விதர்ப்ப நாட்டிரசன்
240
இதங்கொண்டெழு யாழின்னிசை யிணையாம்மொழி
L15ffeun uit மதங்கொண்டெழு மால்யானையின் மருமந்தனி லயில்வேல் விதங்கொண்டெறி விறலோர்நிறை விதர்ப்பம்இத னரசன் கதங்கொண்டெழின் கடற்முனைமுன் காலாந்தகன்
நிகர்வான்.

5
(இ- ள்) இதங்கொண்டெழு யாழின் இசை -இனிமையோடு எழு கின்ற யாழின் இனிய இசையை; இணை:ாம் மொழி பகர்வாய்-ஒத்த தாகிய வார்த்தைகளைப் பேசுகின்ற சாவித்திரியே; மதம் கொண்டு எழு மால் யானையின் மதங்கொண்டு போர்க்கு எழுகின்ற மயக்கங்கொண்ட யானையின்; மருமந்தனில் உயிர் நிலையாகிய மார்பில்; அயில்வேல் - கூர்மையான வேலாயுதத்தை; விதங்கொண்டு எறி - எறிய வேண்டிய விதத்தில் எறியும்; விறலோர் நிறை விதர்ப்பம் -வீரர்கள் நிறைந்த விதர்ப்பநாடு; இதன் அரசன், கதங்கொண்டு எழின் - கோ பங் கொண்டு போர்க்கு எழுந்தால்; கடல் தானை முன் - கடல்போன்ற பெரிய பகைவர் படையின் முன்னே; கால அந்தகன் நிகர்வான் - கால க்ால மூர்த்தியாகிய உருத்திர மூர்த்திய்ை ஒப்பாவான். (எ-று)
43, கலிங்க நாட்டரசன்
21 முழுவாண்மதி யெனவேயொளிர் முகத்தாய்மருள் விழியாய் உழுசால்களி லெழுமாமணி உழுவார்நிதம் நனிகொள் கழுநீர்ச்சுனை கயல்மீன்பிறழ் கலிங்கந்தனை யிதுநாள் வழுவாநெறி யரசாள்பவன் வயமாமிசை வருவோன்.
(இ-ள்) முழுவாண்மதி யெனவே யொளிர் முகத்தாய் - ஒளி பொருந்திய பூரணச் சந்திரன் போல் பிரகாசிக்கும் முகத்தையுடைய வளே!, மருள் விழியாய்-மருண்ட பார்வையை யுடையவளே! உழு சால்களில் நிலத்தை உழுகின்ற உழவுசால்களில்; எழுமாமணி -- தாமாகவே கிளம்புகின்ற மணிகளை; உழுவார் நிதம் நனிகொள் - உழுபவர்கள் நாளும் நிறையக் கொள்ளுகின்றதும்; கழுநீர்ச்சுனை கய்ல் மீன் பிறழ்-கழுநீர் மலர்கின்ற குளங்களில் கயல் மீன்கள் புடை பெயர்கின்றதுமான சிறப்பையுடைய, கலிங்கந்தனை - கலிங்சி நாட்டின; இதுநாள் இப்பொழுது; வழுவாநெறி அரசு ஆள்பவன்மனுநீதி நெறி வழுவாது அரசு செய்பவன்; வயமா மிசை வருவோன்வெற்றிமிக்க யானைமீது பவனிவரும் இவ் அரசன். (எ-று) y 44
சாலுவ நட்டரசன் 242 ஆளும்உரி மைக்கோவினை யடவிக்குற வாக்கி வாழுங்குடி மக்கள்துயர் வளர்சாலுவ நாட்டை வாளின் வலி கொண் டாள்பவன் வருதுன்மதி யென்பான் ஊழின்வலி யிதுவாமென உணர்வாய்திரு அன்னய்,

Page 75
116
(இ- ள்) ஆளும் உரிமைக் கோவினை - ஆட்சி செய்யும் உரிமை யையுடைய தியூமற்சேன இராசாவை; அடவிக்கு உறவாக்கி - காட் டிற்கு உறவாக்கி (வனவாசம் செய்யப்பண்ணி); வாழுங்குடி மக்கள் துயர் - வாழும் குடி மக்களின் துயரம், வளர் சாலுவ நாட்டை - வளர்ந்துகொண்டிருக்கும் சாலுவ தேயத்தை, வாளின்வலி கொண்டு ஆள்பவன் - வாளின் வலிமையைக் கொண்டு அரசாள்பவன்; வருதுன் மதியென்பான் - இங்கு வரும் துன்மதி என்பவன்; ஊழின்வலி இது வாமென-ஊழினது வலிமை இப்படியானதென்று; திரு அன்னய் உணர்வாய் -இலக்குமி போன்றவளே உணர்வாயாக. (எ-று) 45
பலநகரங்களையும் அடைந்து பின் வனம் புகுதல்
243
பலநாளவர் பதிகள்பல படர்ந்தார்பயன் காணுர் இலனேஇவட் கொருநாயகன் இரும்பூதலத் தென்ருர் வலனயொரு மறிமான்வர வழியாயதைத் தொடர்ந்தே புலனுயவைந் தடக்கித்தவம் புரிவார்வனம் புகுந்தார்.
(இ- ள்) பல நாளவர் பதிகள் பல படர்ந்தார் - பல நாட்களாக அவர்கள் பல நகரங்களிலும் கணவனைத்தேடித் திரிந்தார்கள்; பயன் காணுர்-விரும்பும் நாயகனைக் காணுதவரானர்கள்; இவட்கு ஒரு நாயகன் இரும்பூதலத்து இலனே என்ருர்-இவளுக்கு ஒரு நாயகன் இந்தப்பெரிய பூதலத்தில் இல்லானே என்றர்கள்; வலனய் ஒரு மறிமான்வர-வலப்பக்கமாக ஒரு பெண் மான் வர, வழியாய் அதைத் தொடர்ந்து- (அதை ஒரு நல்லசகுனமாக) அது செல்லும் வழியாக அதைத் தொடர்வாராக புலனய ஐந்து அடக்கித் தவம் புரிவார் வனம் புகுந்தார்-ஐம்புலன்களையும் அடக்கித் தவஞ்செய்யும் முனிவர் தங்கும் வனத்துட் புகுந்தார். (எ-று) 46
வனத்தில் அவர்கள் கண்டி காட்சி
244 மனிதன்செயல் நகரங்களில் வளங்காட்டுதல் கண்டே தனதென்ருெரு நினைவும்மணச் சலனங்களுங் கூட்டும் தனிநின்றவொர் தலைவன்செயல் தனை நாமிவண் கண்டோம் எனதென்பவை யெவையும்இலை என்ருர்வனஞ் சென்ருர்,
(இ- ள்) மனிதன் செயல் நகரங்களில் வளங்காட்டுதல் கண்டுநகரங்களில் மனிதன் தனது முயற்சியினல் பலவற்றைச்செய்து அதனல்

117
அந்த நகரங்கள் வளங்காட்டுதலைக் கண்டு; தனது என்று ஒரு நினை வும்-தன்னுடைய வல்லமையினல் அவையெல்லாம் ஏற்பட்டதென்ற ஒரு நினைவும்; மனச் சலன ங் களும் கூட்டும் - நான் எனது என்னும் மனச் சலனங்களையும் கூட்டும்; தனிநின்ற ஓர் தல்ை வன் செயல் தனை-கடந்துநின்ற தலைவனுண இறைவன் தனியாக நின்று செய்ததிறனை, நாம் இவண் கண்டோம் - நாங்கள் இங்கே கண்டோம்; எனது என்பவை எவையும் இலை-எனதென்று சொல்லக் கூடியதெவையும் இங்கு இல்லை; என்ருர் வனஞ் சென்ருர் - என்று வனஞ் சென்றவர்கள் சொன்ஞர்கள். (எ-று) 47
245 தண்ணென்புனல் தவழ்கால்அனல் தங்கும்வெளி தந்தே மண்ணின்மிசை மன்னும்உயிர் வாழும்வகை செய்தான் பண்ணும்பர தமும்போலவே பெண் ஆணினப் படைத்தே எண்ணில்பல ஆன்மாக்களை இன்பம்நுகர் வித்தான்.
(இ-ள்) தண்என் புனல்-தண்ணென்று குளிர்ந்த நீர்; தவழ் கால்-தவழ்ந்து செல்லும் காற்று; அனல் - நெருப்பு; தங்கும் வெளிமேலே தங்கும் ஆகாயம்; தந்தே--ஆகியவற்றைத் தந்து மண்ணின் மிசை-மண்மேலே: மன்னும் உயிர்-நிலைபெற்றுப் பொருந்திய உயிர் கள்; வாழும்வகை செய்தான்; பண்ணும் பரதமும் போலவே-பண்ணும் பரதநாட்டியமும் இசைவதுபோல; பெண் ஆணினப் படைத்தே; எண்ணில்-எண்ணில் அடங்காத, ஆன்மாக்களை (இறைவன்) இன்பம் நுகர்வித்தான்-இன்பம் அனுபவிக்கச் செய்தான். (எ - று) 48
246 நெடிதாய்வளர் தருவின்அடி நிழலின்உழை துயிலும் பிடிநாணிட மதமாகரி பிறகாயதைத் தழுவும் கடிநாண்மலர் கமழ்தேன்துளி கருவண்டினி துவக்கும் கொடியூசலிற் குரங்காடிடக் குயில்கொம்பிருந் திசைக்கும்.
(இ- ள்) நெடிதாய் வளர்தருவின் அடி நிழலின் நெடிதாயுயர்ந்து வளர்ந்த மர அடியின் நீழலில்; உழை துயிலும் - மான் உறங்கும்; பிடி நாணிட - பெண் யானை நாணமுற; மதமாகரி - மதங்கொண்ட பெரிய ஆண் யானையானது; பிறகாய் அதைத் தழுவும் - பெண்யானை யின் பிற்புறமாகச்சென்று அதைக்கட்டித்தழுவும்; கடிநாண் மலர் கமழ் தேன்துளி-வாசனை கமழும் அன்றலர்ந்த மலரில் உள்ளதேன் துளிக்ளை; கருவண்டு இனிது உவக்கும்-கரியவண்டுகள் இனிது உவந்து உண் ணும்; கொடியூசலிற் காட்டுக் கொடியினுலாய ஊசலிலே, குரங்கு

Page 76
118
ஆடிட குயில் கொம்பிருந்து இசைக்கும் - அதனைக்கண்ட குயில்கள் மரக்கொமபிலிருந்து இசைபாடும். (எ-று
(வி-ம்) குறிஞ்சியும் முல்லேயும் மயங்கிய இடம்) 49
247 ': புரிநூலணி முனிபுங்கவர் புலித்தோன்மிசை யிருந்தே எரிதீயினி லிடுவார்.அவி யிசைப்பார்அரு மறைகள் அரியின்குலம் கிளையின்மிசை யமர்ந்தேயவை பயிலும், திரிகின்றனர் தருணர்பலர் தேன்காய்கனி தேடி.
(இ- ள்) புரிநூல் அணி முனியுங்கவர்-முப்புரிநூலணிந்த முனி சிரேட்டர்கள் புலித்தோன்மிசை இருந்து; எரிதீயினில் அவி இடு வார்-எரிகின்ற வேள்வித்தீயில் தேவர்க்கான அவிகளை இடுவார்கள்: அரு மறைகள் இசைப்பார்- அரிய வேதங்களை ஒதுவார்கள்; அரியின் குலம்-கிளியின் கூட்டம்; கிளையின் மிசையிருந்தே - மரக்கிளைகளில் இருந்து; அவைபயிலும்-அந்த மறைகளைத் தாமும் சொல்லும்; தரு ணர்பலர் தேன் காய் கனி தேடி திரிகின்றனர் - இளைஞர்பலர் தேன், காய், கணிகளைத் தேடித் திரிகின்றனர். (எ-று)
அரி - ஈண்டுக்கிளி
248 அவர்தம்மிடை யரியேறென வமைந்தானெரு குமரன் சிவவேடமும் சிறுகுஞ்சியும் செம்பாற்கரன் ஒளியும் புவனந்தனை யரசாள்பவர் பொலிவுந்திகழ் வடிவாய்த் தவமேபலித் ததுவாமெனத் தையல்எதிர் வந்தான்.
(இ- ள்) அவர்தம்இடை-அந்த வாலிபர் மத்தியில்; அரியேறு என-ஆண் சிங்கமென்னும் படியாக; ஒரு குமரன் அமைந்தான்; சிவ வேடமும், சிறுகுஞ்சியும், செம்பாற்கரன் ஒளியும் - அவன் சிவ வேடமும், சிறிய குடுமியும், சிவந்த சூரியனின் ஒளியும்; புவனந் தனை அரசு ஆள்பவர் பொலிவுந் திகழ்வடிவாய் - அரசர்க்குரிய பொலிவும் திகழும் வடிவுமுடையவனுய்; தவமே பலித்ததுவாம் என-சாவித்திரியின் தவம் பலித்தது என்று கூறும்படி தையல் எதிர் வந்தான்- சாவித்திரியின் எதிரே வந்தான். (எ-று) 51
50
சாவித்திரி அவ்விளைஞன்பாற் காதல் கொள்ளல் 249 வண்டார்குழல் வனிதாமணி வருகாளையின் வடிவும் திண்டோள்களும் திரிநூலணி திருத்தங்கிய மார்பும் கண்டாளவள் கண்ணும் அவன் கண்ணுங்கலந் திடவே பண்டேயொரு பிறவித்தொடர் புண்டோஎமக் கென்ருள்"

19
(இ-ள்) வண்டார் குழல் வனிதாமணி-வண்டுகள் நிறைவா கத் தங்கும் கூந்தலையுடைய சாவித்திரியானவள்; வருகாளையின் வடி வும்- வருபவனகிய காளையின் தோற்றமும் திண்தோள்களும் திண் ணிய தோள்களும்; திரிநூலணி-முப்புரி நூலணிந்த, திருத்தங்கிய மார்பும்-வீர இலக்குமி தங்கிய மார்பு t; (அழகுதங்கிய மார்பு எனி னும் ஆம்) கண்டாள்; அவள் கண்ணும், அவன் கண்ணும் கலந் திடவே, பண்டே ஒரு பிறவித் தொடர்பு-முன்பே பழமையான ஒரு பிறவித் தொடர்பு எமக்கு உண்டோ என்ருள்-எமக்கு (எனக் கும் இவனுக்கும்) உண்டோ என்று எண்ணினுள். (எ-று) 52'
250 அப்போதினில் அநங்கன்மல ரம்பொன்றினை அணங்கின் செப்பார்முலைத் தடத்தின்மிசை செலுத்தக்கயல் விழியும் அப்பார்த்தியற் காளாகினள் அவன்பால்மயல் கொண்டாள் இப்பாரினில் இவனேயெனக் கிணையானவன் என்ருள்.
(இ-ஸ்) அப்போதினில் - அப்பொழுது; அநங்கன்-மன்மதனன வன்; மலரம்பு ஒன்றினை- ஒரு மலர்வாளியை; அணங்கின் செப்பார் முலைத் தடத்தின் மிசை செலுத்த-சாவித்திரியின் செப்பையொத்த முலைத்தடத்தின் மீது செலுத்த, கயல்விழியும் - கயல்போன்ற விழிக ளையுடைய சாவித்திரியும்; அப்பார்த்திபற்கு ஆளாகினள் -அந்த அர சகுமாரனுக்கு ஆளாகினுள்; அவன் பால் மயல் கொண்டாள்-அவ னிடத்தே காதல் மயக்கம் கொண்டாள்; இப்பர்ரினில்-இப் பூமியின் கண்ண்ே; இவனே எனக்கு இணையானவன் என்ருள். இவனே எனக்கு ஏற்ற இசைவாகிய கணவனுவான் என்று எண்ணினுள் (எ-று) 53 இணை-இசைவு சோடு, ஒப்பு.
வேறு
இளைஞன் சாவித்திரியைக் கண்டு காதல் கொள்ளுதல் 25 குங்குமக் குவவுத் திண்டோட்
குமரனு மாங்கு நின்ற மங்கையின் வேற்கண் பட்டும்
மதர்த்தெழு கொங்கை கண்டும் ஐங்கணைக் கிழவ னெய்த
அம்பினுற் ருக்கப் பெற்றுங் கொங்கவிழ் கோதை யாள்மேற்
கொண்டனன் குன்ருக் காதல்.

Page 77
120
(இ- ள்) குங்கும குவவு திண் தோள்குமரனும்-குங்குமநிறம் பொருந்திய பருத்த வலிய தோள்களையுடைய அக் குமரனும்; ஆங்கு நின்ற மங்கையின் வேல்கண் பட்டும்-அங்கே நின்ற சாவித் திரியின் வேல்போன்ற கண்கள் தன்மேல் தைக்கப்பட்டும்; மதர்த்து எழு கொங்கை கண்டும்-செழித்துக் கொழுத்து எழுந்த முலைக ளைக் கண்டும்; ஐங்கணைக் கிழவன் எய்த அம்பினுல் தாக்கப் பெற் றும்- மன்மதன் எய்த வாளியினல் தாக்கப் பெற்றும் - கொங்கு அவிழ் கோதையாள் மேல் - தேன்கட்டவிழும் மாலையை யணிந்த சாவித்திரியின்மேல்; குன்ருக் காதல் கொண்டனன் - குறையாத காத லைக் கொண்டான். (எ.நூ)
(வி-ம்) மன்மதன் ஐங்கணைகளாவன - தாமரைப்பூ, மாம்பூ, அசோகம்பூ, முல்லைப்பூ, நீலோற்பலப்பூ. 54
252 சுந்தர வடிவந் தாங்குஞ்
சுரிகுழற் செய்ய பாவை செந்திரு மகளோ அன்றிச்
செகத்தினை மயக்கும் பெண்ணுே முந்தியம் மாயோன் கொண்ட
மோகினி யுருவந் தானே இந்திர லோக மாதோ ,
இரதியோ அறியேன் என்ருன். (இ- ள்) சுந்தர வடிவந் தாங்கும் சுரிகுழற் செய்ய பாவைஅழகிய உருவைத் தாங்கி நிற்கின்ற முறுக்கேறிய கூந்தலையுடைய சிவந்த பாவைபோன்ற இவள், செந்திரு மகளோ-இலக்குமியோ; அன்றி - அல்லது; செகத்தினை மயக்கும் பெண்ணுே - உலகத்தை மயக்கும் பெண்ணுே. முந்திஅம் மாயோன் கொண்ட மோகினி யுருவந்தானுே - மு ன் னெ ரு கால் அந்தத் திருமால் எடுத் துக் கொண்ட மோகினி யுருவமோ, இந்திரலோக மாதேர்-இந் திர லோகத்துப் பெண்ணுே (அரம்பை, ஊர்வசி என்று சொல் லப்படுபவர்களில் ஒரு பெண்ணுே); இரதியோ-மன்மதன் மனைவி யாகிய இரதியோ அறியேன் என்ருன். (எ-று) (55)
தோழி அவர்களின் காதலே அறிந்து கொள்ளல் 253 இருவரின் நிலையும் நோக்கி
இளநகை புரிந்தாள் தோழி இருநிதி கொண்ட பேரை
ஏந்திழை யேற்ற வில்லை

2.
மருவியில் வனத்தில் வைகும்
மாணியைத் தேர்ந்தா ளொன்னில் முருகவிழ் தாரான் செய்த
முன்வினைப் பயனே யென்ருள்.
(இ- ள்) இருவரின் நிலையும் நோக்கி - அவ்விருவரும் காதல் வயப்பட்டு நின்ற நிலையைப் பார்த்து; தோழி இளநகை புரிந்தாள் ; இருநிதிகொண்ட பேரை-சங்கநிதி பதுமநிதி என்று சொல்லத்தக்க பெரும் செல்வத்திற்கு அதிபதியான அரசகுமாரர்களை ஏந்திழை ஏற்ருளில்லை-ஏந்திய ஆபரணங்களையணிந்த சாவித்திரி ஏற்ருளில்லை; இவ் வனத்தில் மருவி வைகும் மாணியைத் தேர்ந்தாளென்னில்இக் கானகத்தில் பொருந்தி வாழும் இந்தப் பிரமச்சாரியைத் தேர்ந் தெடுத்தாளென்ருல்; முருகு அவிழ் தாரான்-தே ன் கட்ட விழும் மாலையையணிந்த இந்த இளைஞன்; செய்த முன்வினைப் பயனேயென் ருள்-செய்த பழைய நல்வினையின் பயனே என்று கூறினுள். (எ-று)
(வி-ம்) சாவித்திரி அவனை விரும்புவதால் அவனுக்கு அரச குமாரியை மணஞ்செய்யுt பேறும் அதனுல் அரியணையேறும் பர்க்கிய மும் கிட்டும் இவற்றையடைதல் இவன் முன் செய்த நல்வினையின் பயனகும். 56,
மந்திரிமாரின் யோசனை
254 குவளையொண் கண்ணி யுள்ளக்
குறிப்பினை யமைச்சர் கண்டே
அவனியை யாளு மாற்றல்
அமையுமோ இவனுக் கென்றர்;
இவர்நிலை யிவ்வா ருக
இரதமு மப்பாற் செல்லத்
தவமுனி குமாரர் தாமுந்
தம்வழி யேக லானர்.
'இ--ள்) குவளை ஒண் கண்ணி உள்ளக் குறிப்பினை - குவளை மலர்போலும் ஒளிபொருந்திய கண்களையுடைய சாவித்திரியின் உள்ள க் குறிப்பினை; அமைச்சர் கண்டே-உடன் போந்த அமைச்சர் கண்டு; இவனுக்கு அவனியை ஆளும் ஆற்றல் அமையுமோ என்ருர் - (இவ் வனவாசியாகிய) இவனுக்குப் பூமியை ஆளும் ஆற்றல் அமையுமோ என்ருர் இவர் நிலை யிவ்வாருக-க இவர்களின் நிலை இவ்வாழுக, இர

Page 78
22.
தமும் அப்பாற் செல்ல - சாவித்திரியின் தேர் அப்பாற்செல்லவும்:
தவமுனி குமாரர் தாமும் தம்வழி ஏகலானர்-முனிகுமாரரும் தாம் செல்ல வேண்டிய வழியிற் செல்லலாஞர். (எ-று) 57
255 பந்தணை விரலி யுள்ளம்
பார்த்திபன் பால தாக
இந்தநல் வரனை யெந்தை
ஏற்பனே அன்ருே என்று
சிந்தனை செய்த வாறு
செறியிருட் கான கத்துட்
பந்தனை யறுத்தார் வாழும்
பள்ளிக டோறுஞ் சென்ருள்.
(இ -ள்) பந்துஅணை விரலி உள்ளம்-பந்து வந்தணையும் விர லினையுடைய சாவித்திரியின் உள்ளம்; பார்த்திபன் பாலதாக-அந்த (அரசகுமாரனைப் போன்ற) இளைஞனின் பாலதாக இந்த நல் வரனை-இந்த நல்ல மணமகனை எந்தை ஏற்பனே அன்ருே என்றுஎனது தந்தை ஏற்பானே, ஏற்க மாட்டானே என்று சிந்தனை செய்தவாறு; செறியிருள் கானகத்துள்-செறிந்த இருளையுடைய வனத் துள். பந்தனை யறுத்தார் வாழும்-பந்தங்களை அறுத்தவராகிய முனி வர் வாசஞ் செய்யும்; பள்ளிகள் தோறும் சென்ருள். (எ-று)
(வி-ம்) பார்த்திபன்-அந்த இளைஞன் அரசகளை யுடையவனுகக் காணப்பட்டமையாலும் பின்னல் அவன் அரசகுமாரனே என அறி யப்படுவானகையாலும் பார்த்திபன் எனக் குறிக்கப்பட்டான்.
பள்ளி - முனிவர்வாசம். 58
256 நங்கைதன் பாங்கி யோடு
நற்றவச் சாலை நண்ணி அங்குள அறவோர் தம்மை
அடியுற வணங்கி யேத்தி மங்குலின் மணிபொன் ஈந்து
மாதவ ராசி பெற்றுப் புங்கவ ஞன சீர்த்திப்
பூரண முனிவர்ச் சார்ந்தாள்.
(இ-ள்) நங்கைதன் பாங்கியோடு - சாவித்திரி தனது தோழி யோடு; நல்தவச் சாலை நண்ணி; அங்குள அறவோர் தம்மை அடியுற

23
வணங்கி ஏத்தி-அங்கே தங்குகின்ற முனிவர்களை அவர்கள் பாதத் திற் பொருந்தும்படி விழுந்து வணங்கித் துதித்து; மங்குலின் மணி பொன் ஈந்து-மேகம்போல் மணியும்பொன்னும் கொடுத்து: மாத வர் ஆசி பெற்று-அந்த முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்று: புங்கவன் ஆன சீர்த்திப் பூரண முனிவர்ச் சார்ந்தாள் - புகழினை யுடைய குருவான பூரண முனிவரை அடைந்தாள். (எ-று) 59
257 முற்றிழை தன்னைக் கண்ட
முனிவரும் முகம லர்ந்தே
இற்றை நீ வருத லாலே
ஈறிலா இன்பங் கொண்டேன்
கொற்றவன் குழந்தா யுன்றன்
குளிர்முகம் வாட லேனே
தெற்றென வுரைத்தி யென்னத்
தேமொழி விளம்ப லுற்ருள்.
(இ- ள்) முற்றிழை தன்னைக்கண்ட முனிவரும் முகமலர்ந்து - சாவித்திரியைக் கண்ட பூரண முனிவரும் முகம் மலர்ந்து; இற்றை நீ வருதலாலே ஈறிலா இன்பங் கொண்டேன்-இன்று நீ இங்கு வரு தலாலே நான் எல்லையற்ற இன்பங் கொண்டேன்; கொற்றவன் குழந் தாய்-அரசன் மகளே உன்தன் குளிர்முகம் வாடல் ஏனே? உன்னு டைய குளிர்மையான முகம் வாடியிருத்தல் ஏன்? தெற் றென வுரைத்தி என்ன-தெளிவாக உரைப்பாயாக என்று கூற, தேமொழி விளம்பலுற்ருள்-தேன்போன்ற இனிய மொழியைப் பேசும் சாவித் திரி பின்வருமாறு சொல்லலானள். (எ-று) 60
258 மன்னவ னென்னை யிந்த
மாநிலம் பவனி போந்தே யென்மனம் விரும்பி யேற்கும்
இளைஞனைத் தெரியச் சொன்னன் பன்னக ரங்கள் சென்று
பரந்தவிக் கானுள் வந்தேன் கன்னவில் தோளி ஞனேர்
காளையை யிங்குக் கண்டேன்.
(இ - ள்) மன்னவன் -என் தந்தையாகிய அசுவபதி அரசன்; என்னை இந்த மாநிலம் பவனி போந்து-என்னை இந்தப் பூமிமேல் பவனி போய்; என்மனம் விரும்பி ஏற்கும் இளைஞனைத் தெரிய ச்

Page 79
24
சொன்னன்- எனது மனம் விரும்பி ஏற்கின்ற ஒரு காளையைத் தெரி யும்படி கூறினன்; பல் நகரங்கள் சென்று-பல நகரங்களுக்கும் சென்று (பின்); பரந்த இக் கானுள் வந்தேன்; கல் நவில் தோ ளின ன்(வந்தவிடத்து) கல் என்று சொல்லத்தக்க திண்ணிய புயங்களையுடை யவனகிய; ஒர் காளையை இங்குக் கண்டேன்-ஒரு ஆண் மகனை இங்கே கண்டேன். (எ-று) 61
59 முனிவரின் குமாரன் தானுே
முடியுடை மன்னன் சேயோ
குனிசிலை மாரன் தானே
குறமகள் கேள்வ னேயோ
நனிநறை பில் குத் தாரான்
நங்கை யென் உள்ளங் கொண்ட
இனியனின் குலமுஞ் சீரும்
இயம்பிட வேண்டு மென்ருள்.
(இ~ள்) முனிவரின் குமாரன் தானே - அவ்விளைஞன் ஒரு முனி வரின் குமாரனே; முடியுடை மன்னன் சேயோ-அல்லது) முடியை யுடைய ஒரு மன்னனின் மகனுே; குனிசிலை மாரன் தானே-வளைந்த வில்லையுடைய காமனே; குறமகள் கேள்வனேயோ-(அன்றி) குறமகளா கிய வள்ளியின் கணவனுகிய முருகனே, நனி நறை பில்குந் தாரான் - மிகவும் தேனைக் கொப்பளிக்கும் மாலையை யணிந்தவன்; நங்கை யென் உள்ளங்கொண்ட - பெண்ணுகிய என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்த இனியனின் குலமும் சீரும் - இனிமையானவனின் குலமும் சிறப்பும்; இயம்பிட வேண்டும் என்ருள்- சொல்லுதல் வேண்டும் என் ழுள். (எாறு) 62
260 முனிவனும் முறுவல் செய்து
மொய்குழற் கிவைகள் சொல்வான்
கனிமொழி கண்ட காமர்க்
காளைசத் தியவா னென்பான்
மனிதருட் டெய்வ மென்று
மாநிலம் போற்றுஞ் சீரான்
இனியவே சொல்வான் செய்வான்
எண்ணமும் இனிய வாகும்.
(இ- ள்) முனிவனும் முறுவல் செய்து-பூரண முனிவரும் புன் னகை செய்து மொய்குழற்கு இவைகள் சொல்வான்-செறிந்த குழலை

125
யுடைய சாவித்திரிக்கு இவைகளைச் சொல்வாரானர்; கனிமொழி கண்ட காமர்க்காளை-இனிய மொழிகளைப் பேசும் சாவித்திரி கண்ட அழகிய இளைஞன்; சத்தியவான் என்பான்; மனிதருள் தெய்வம் என்று மாநிலம் போற்றும் சீரான்-மனிதருக்குள் இவன் ஒரு தெய்வ மென்று மாநிலத்தோர் போற்றும் பெருமையையுடையவன்; இனியவே சொல்வான், செய்வான், எண்ணமும் இனிய வாகும்-அவன் இனிய வற்றையே சொல்லுவான், இனியவற்றையே செய்வான், அவனின் எண்ணமும் இனியவையேயாகும். (எ- று) 63
261 சத்தியந் தவருச் சீலன்
சாந்தமும் பொறையுங் கொண்டோன்
மெத்தவுந் தந்தை தாயர்
மேலவர் குருவி டத்துப்
பத்தியும் பணிவுங் கொண்டோ ன்
பரனடிக் கன்பு பூண்டோன்
இத்தலத் தெல்லோர் மாட்டும்
இரக்கமு மன்புங் கொண்டோன்.
(இ- ள்) சத்தியந் தவருச் சீலன் - சத்தியம் தவருத நற்குணி சாலி: சாந்தமும் பொறையும் கொண்டோன்; தந்தை தாயர் மேல சிர் குரு விடத்துப் பத்தியும் பணிவும் மெத்தக் கொண்டோன்; பரன் அடிக்கு அன்பு பூண்டோன்-க்டவுளின் திருவடிக்கு அன்பு பூண்டவன்; இத் தலத்து எல்லோர் மாட்டும்-இந்த உலகத்தில் உள்ள எல்லோ ரிடத்தும்; இரக்கமும் அன்பும் கொண்டோன். (எ-று) 64
262 பிறன்மனை விழையாத் தீரன்
பெண்களின் கற்பைக் காப்போன்
பிறர்பொருட் கிச்சை கொள்ளான்
பெறுபொரு வீயும் வள்ளல்
குறளை பொய் பயனில் வார்த்தை
கூறிடான் குணத்தின் குன்ரும்
அறநெறி வழுவா ஏந்தல்
ஆண்மையில் அமரர் கோமான்.
(இ-ள்) பிறன்மனை விழையாத் தீரன் - பிறர் தாரத்திற்கு ஆசைப்படாத திண்ணியன்; பெண்களின் கற்பைக் காப்போன்; பிறர் பொருட்கு இச்சை கொள்ளான் . மற்றவருடைய பொரு ளுக்கு

Page 80
  

Page 81
128
(இ - ள்) விரிசெறி குழலியான வேந்தனின் காதல் பன்னி - விரிந்து செறிந்த கூந்தலினை யுடையவளான மன்னனின் அன்பு மிக்க மனைவி; பிரிவினையாற்ருளாகி-கணவனைப் பிரிந்திருக்கச் சகிக்க முடி யாதவளாகி; பெற்ற தன் மைந்தனுேடும்-பெற்றெடுத்த தனது மகன் சத்தியவானேடும்; கரிய இக்காட்டில் தங்கி - இருண்ட இந்தக்காட்டி னில் தங்கி; காவலற்கு ஏவல் செய்வாள்-மன்னணுகிய தியூமற் சேன னுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வாள்; அரியதன் போதகம் போல் - சிங்கத்தின் குட்டி போல்; அம்மகன் வளருகின் முன்-அந்தச் சத்தியவான் வளருகின்ருன். (எ-று) 6.9
267 காட்டினில் வாழ்வா னேனுங்
கல்லுறழ் திண்டோட் காளை நாட்டினை யாள்வோர்க் கேற்ற
நல்லியல் பெல்லாம் பெற்றேன் மேட்டிமை யாண்மை வீரம்
மெய்யறி வுண்மை நேர்மை கேட்டிலுந் தளரா வுள்ளங்
கெழுமிய ஏந்த லென்ருன். d (இ-ள்) காட்டினில் வாழ்வர்னேனும் - (அந்தச் சத்தியவான்) *"ட்டினிலே வாழ்பவனுயினும் கல்லுறழ் திண்தோள் காளை - கல் இக்கொப்பான திண்ணிய தோளையுடைய காளையான சத்தியவான்; நாட்டினை ஆள்வோர்க்கு ஏற்ற நல் இயல்பு எல்லாம் பெற்றேன்நாட்டினை ஆளும் அரசர்க்குரிய நல்லியல்புகள் எல்லாம் பெற்றேன்; மேட்டிமை-மேன்மை: ஆண்மை, வீரம்; மெய்யறிவு - பேரறிவு: உண்மை; நேர்மை; கேட்டிலும் தளரா உள்ளம்-கேடுவந்தவிடத்தும் தளர்வடையாத மனம்; கெழுமிய - பொருந்திய ஏந்தல்-பெருமை யிற் சிறந்தோன்; என்ருன் - என்று பூரண முனிவர் சொன்னர். (எ-று
பூரணமுனிவர் 63 ம் பாட்டில் சொல்லத் தொடங்கியது 70 ம் பாட்டில் முடிகிறது. 7 O
268 அவன்பரி சுரைக்கக் கேட்ட
அரிவையும் புளக மெய்தி
இவனெனக் கிணையாங் கேள்வன்
எந்தையு மேற்பா னென்ருள்
சிவனனுக் கிரகம் வேண்டிச்
சேவடி சிந்தை வைத்துத்
தவமுனி வரைவ ணங்கித்
தன்னகர்க் கேக லானள்,

129
(இ- ள்) அவன் பரிசு உரைக்கக்கேட்ட அரிவையும் - சத்தியவர் னுடைய பண்புகளை பூரண முனிவர் சொல்லக் கேட்ட சாவித்திரி யும்; புளகமெய்தி - மகிழ்ச்சியால் மெய் மயிர்க் கூச்செறிந்து; இவன் எனக்கு இணையாம் கேள்வன் -இவன் எனக்கு இணையர்ன கணவன வான்; எந்தையும் ஏற்பான் என்ருள்-என் தந்தையும் இந்த வரணை ஏற்பான் என்ருள்; சிவன் அணுக்கிரகம் வேண்டி - தன் விருப்பம் நிறைவேற சிவபெருமானுடைய அணுக்கிரகத்தை வேண்டி, சேவடி சிந்தை வைத்து - அப்பெருமானுடைய சிவந்த பாதங்களைச் சிந்தை யில் இருத்தி, தவமுனிவரை வணங்கி-தவத்தில் மேம்பட்ட பூரண முனிவரை வணங்கி; தன் நகர்க்கு ஏகல் ஆனஸ்-தன்னுடையசுந்தரபுரி என்னும் நகரத்திற்குச் செல்லலானள். (எ-று) 71
269 வண்டமர் கோதை செல்லும்
வழியெலா மின்பக் காட்சி கண்டனள் களிப்பி லாழ்ந்தாள்
காமனுங் கணைக ளெய்தான் கண்டகத் துலவுங் கைம்மா
காதலன் நினைவை யூட்ட இண்டைசேர் குழலி னளும்
இரங்கிநின் றினைய கூறும். (இ- ள்) வண்டு அமர் கோதை-வண்டுகள் அமர்கின்ற மாலையை யணிந்த சாவித்திரி; செல்லும் வழியெலாம் இன்பக் காட்சி கண்ட னள்-தான் செல்லும் வழிகளிலெல்லாம் இன்பமான பல காட்சிக ளைக் கண்டாள்; களிப்பில் ஆழ்ந்தாள்-மகிழ்ச்சியில் முழுகினுள்.காம னும் கணைகள் எய்தான் - மன்மதனும் பூங்கணைகளை அவள் மீது ஏவி னன் கண்டகத்து உலவும் கைம்மா - காட்டினுள்ளே உலவாநின்ற யானை, காதலன் நினைவை யூட்ட-தான்கண்ட காதலனின் நினைவை உண்டாக்க: இண்டைசேர் குழலினுளும் - முல்லை மாலையை அணிந்த கூந்தலையுடைய சாவித்திரியும்; இரங்கிநின்று இனைய கூறும்-மனம் இரங்கி நின்று இத்தன்மையான மொழி களைக் கூறுவாளர்யினள்: (எ-று) 72 வேறு 270 மலைபோல் வருவாய் மதமா கரியே
தொலைவே யெனதா ருயிர்போ யினணுல் உலேமேல் மெழுகா யுருகா வுலைவேன் நிலையே பகர்வாய் நீகா னு தியேல்.
است. آtiی

Page 82
30
(இ- ள்) மதமா கரியே - மதங்கொண்ட பெரிய யானையே; மலை போல் வருவாய்-மலைபோலும் பெரிய தோற்றத்துடன் வருவாய்; எனது ஆர்உயிர் தொலைவே போயினனல் - எனது ஆருயிர் போன்ற காதலன் தூரத்தே போய் விட்டான். அதனுல்; உலைமேல் மெழுகா உருகா உலைவேன்-உலையின்மேல் வைத்த மெழுகுபோல் உருகி மனம் அலைந்து வருந்துவேன்; நீ காணுதியேல்-நீ அவனைக் கண்டயானல், நிலையே பகர்வாய்-என்னுடைய மன நிலையை அவ னுக்குக் கூறுவாயாக. (எ-று) 73
274 மறியோ டுறவாய் மகிழும் மானே
அறிவா யலையோ அளியேன் துயரம் நெறியே வழுவா நிருபற் கு ரையாய் கிறியே புரிதல் கிளையார் செயலோ.
(இ-ள்) மறியோடுறவாய் மகிழும் மானே - பெண்மானுடன் உறவாக மகிழ்கின்ற ஆண் மானே, அளியேன் துயரம் அறிவா யலையோ. அருளத்தக்கவளாகிய எனது துயரத்தை நீ அறிவாய் அல் லையோ, கிறியே புரிதல் கிளையார் செயலோ-வஞ்சகம் செய்தல் உற வினர் செயலோ என்று; நெறியே வழுவா நிருபற் குரையாய்-நல்ல நெறியினின்று வழுவாத இயல்பையுடைய அரசகுமாரனுக்கு உரைப் Lurruunt 5 , (67- p)
(வி-ம்) சத்தியவர்ன் அரசகுமாரனுகையால் நிருபன் எனப் பட்டான். 74
272 இன்பாய்ப் பெடையோ டிணையுங் கிளியே
என்பா லீரம் இல்லா ரிடம்போய்த் தன்பால் யான்கொள் தணியாக் காதல் அன்பா யுரைத்தே யவரைக் கொணராய்
(இ-ள்) இன்பாய் பெடையோடு இணையும் கிளியே-இன்பமா கப் பெண் கிளியோடு சேரும் ஆண் கிளியே; என்பால் ஈரம் இல் லாரிடம் போய்-என்னிடம் கிருபை இல்லாத என் காதலரிடம் போய்; தன்பால் யான் கொள் தணியாக்காதல் - அவர்பால் நான்கொண் டுள்ள குறைவுபடாத காதலை; அன்பாய் உரைத்து - அன்பாக உரைத்து; அவரைக் கொணராய் - அவரை என்னிடம் கொண்டு வருவாயாக. (எ-று) 75

13
273 கள்ளார் கமலங் கமழுங் கயத்துள்
வெள்ளோ திமமே விளையாட் டயர்வாய் உள்ளே யெனதா ருயிருள் ளனரோ விள்ளா யெனையே விடுத்துப் பிரிந்தார்
(இ-ள்) கள் ஆர் கமலம் கமழும் க்யத்துள்-தேன் நிறைந்த தாமரைப் பூக்கள் மணக்கும் குளத்துள்; வெள் ஓதிமமே-வாழுகின்ற வெண் ணிற மு  ைடய அன்னமே விளையாட்டு அயர்வாய் - விளையாட்டை விரும்பிச் செய்வாய்; உள்ளே எனது ஆருயிர் உள்ளனரோ-உந்தக் குளத்துள் எனது ஆருயிர் போன்ற அன்பர் தங்கியிருக்கின்ருரோ? விள்ளாய்-சொல்லாய்; எனயே விடுத்துப் பிரிந்தார் - என்னை அவர் விட்டுப் பிரிந்து சென்று விட்டார். (எ-று) 76
274 கார்கண் டாலுங் களிசேர் மயிலே
வார்மென் குழலென் மனசைக் கவர்ந்து சூர்தந் தகன்ருன் சுடர்கொள் திகிரிப் பார்மன் னவர்தம் பண்போ பகர்வாய்
(இ-ள்) கார்கண்டு ஆலும் களிசேர் மயிலே - மேகத்தைக் கண்டு ஆடும் மகிழ்ச்சி பொருந்திய மயிலே; வார்மென் குழல் என் மனசைக் கவர்ந்து -எனது காதலன் நீண்ட மென்மையான கூந்தலை யுடையவளாகிய எனது மனசைக் கவர்ந்து; குர்தந்து அகன்ருன் - பின் எனக்குத் துன்பத்தைத் தந்து பிரிந்தான், சுடர்கொள் திகிரிப் பார் மன்னவர்தம் பண்போ-இது ஒளி பொருந்திய சக்கரத்தை உடைய பூமியை அரசாளும் அரசர்களுடைய இயல்பான குணமோ பகர்வாய்-சொல்லுவாய். (எ .நூ) 77
275 புனல் மீ தணைவாய் பொழில்வா யலைவாய்
கனல்வி சுவதேன் களிமா ருதமே சினமே துகொலோ சிறியேன் விதியோ மனநோய் தவிரா தெனைவாட் டுதியே (இ-ள்) புனல்மீது அணைவாய்-நீரின்மீது அணைவாய்; பொழில் வாய் அலைவாய்-சோலை இடத்து அலைவாய்; களி மாருதமே - சீதமான காற்றே; கனல் வீசுவதேன்-இருந்தும் நீ (இப்போது என் மேல்) உட்டணத்தை வீசுவதேன்?; சினமேது கொலோ - உனக்கு என்மீது கோபம் எதற்கு சிறியேன் விதியோ-அது கிறியேகுகிய

Page 83
13
எனது விதியோ; மனநோய் தவிராது-நீ எனது மனநோயை நீக் காது; என வாட்டுதியே - என்னை வாட்டுகின்றயே. (எ-று) 78
276 பணந்தா ழிடையீர் பணை மென் முலையீர்
மணந்தா ரெனவே மனத்துள் ளுறைவார் கணந்தா னெனினுங் கருதா தெனையே தணந்தார்க் குரையீர் தமியேன் துயரே.
(இ-ள்) பணம் தாழ் இடையீர்-பாம்பின் படமும் வணங்கு கின்ற அல்குலை உடையீர்; பண மென் முலையீர்-பருத்த மென்மை யான முலைகளை யுடையீர்; மணந்தார் எனவே மனத்துள் உறைவார்என்னை மணந்தவரைப்போல் என் மனத்துள் உறைகின்ருர் (என் காதலர்); கணந்தா னெனினும் கருதாது எனயே தணந்தார்க்குஒரு கண மாயினும் என்னை நினையாது பிரிந்தவருக்கு, த மியே ன் துயர் உரையீர்-தமியேனுடைய துயரத்தை உரையீர். (எ-று)
ஏ - ஈற்றசை
(வி- ம்) இடை - அல்குல். பை ஏர் இடை மடவாள் என்ருர் தேவாரத்தும், 79
277 குழையா மனசைக் குழைவித் தெனதுள்
விளையா விரகம் விளைவித் தெனை நீ அழையா திருந்தால் ஆண்மைக் கழகோ வளையாச் செங்கோல் வயவா வருவாய்.
(இ-ள்) குழையா மனசை குழைவித்து - நெகிழாத எனது மனசை நெகிழ்வித்து; எனதுள் விளையா விரகம் விளைவித்து - என துள்ளத்துள்ளே விளையாத விரகத்தை விளைவித்து; என நீ அழையா திருந்தால்-பின் என்னை நீ அழையாமல் இருந்தால்: ஆண்மைக்கு அழகோ. அது உன் ஆண்டகைமைக்கு அழகாகுமேர் வளையர்ச் செங்கேர்ல் வயவா வருவாய் - கோடாத செங்கோலை உடைய் தலைவனே வருவாயாக! (எ-று) - 80
278 மைசேர் விழிகள் மழையே பெர்ழியக்
கைசேர் வளைகள் கழலும் படியே மெய்சோர் வடைவேன் மெலியா வணமே நெய்சேர் அயில்வேல் நிருபா வருவாய்
(இ-ள்) மைசேர் விழிகள் மழையே பொழிய - மை சேர்ந்த கண்கள் கண்ணீரர்கிய மழையையே இடைவிட்ாது பொழியவும்:

33
கைசேர் வளைகள் கழலும் படியே-கையிற் பொருந்திய வளையல்கள் கழலும் படியாகவும்; மெய்சோர்வு அடைவேன்-நான் மெய்சோர்வு அடைகின்றேன்; மெலியா வணமே - நான் அங்ங்னம் மெலியா வண் ணமாக; நெய்சேர் அயில்வேல் நிருபா வருவாய் - நெய் பொருந்திய கூர்மையான வேலையுடைய அரசனே வருவாயாக, (எ-று) 8
279 என்னப் பலவும் இழைசேர் முலையாள்
சொன்னுள் உடலஞ் சோர்ந்தாள் தேர்மேல் பொன்னர் மணித்தேர் புலரிப் பொழுதில் கொன்னர் நகரைக் குறுகிற் றன்றே.
(இ-ள்) இழைசேர் முலையாள் என்னப் பலவும் சொன்னுள்ஆபரணங்கள் பொருந்திய முலைகளையுடைய சாவித்திரி இவ்வண்ணம் விரக வேதனையால் பலபலவாகிய வார்த்தைகளைச் சொன்னுள்; தேர்மேல் உடலஞ் சோர்ந்தாள்-தேரின் மீது இருந்து உடல் சோர்ந் தாள் (அப்படியிருக்க) பொன் ஆர் மணித்தேர்-அழகு மிகுந்த மணி க்ள் கட்டப்பட்ட தேரானது; புலரிப்பொழுதில்-விடியற்காலத்தில்; கொன் ஆர் நகரை - பெருமைமிகுந்த சுந்தரபுரி நகரத்தை; குறு
கிற்று-அடைந்தது. அன்று, ஏ-அசைகள். (எ-று) 82
வேறு 280 தேரினின் றிழிந்து நங்கை
தேவியை மனத்துட் போற்றி நேரிலந் தப்பு ரத்தை
நெருங்கினள் தாயுஞ் சென்று வாரமொ டுச்சி மோந்து
வார்முடி நீவிக் கண்ண்ே பாரில் நீ பார்த்த வெல்லாம்
பகருதி யென்று கேட்டாள்.
(இ-ள்) நங்கை தேரின் நின்று இழிந்து - சாவித்திரி தேரி னின்று இறங்கி; தேவியை மனத்துட் போற்றி - தனது குலதெய்வ மாகிய சாவித்திரி தேவியை மனத்துட் போற்றியவளாய்; நேரில் அந்திப்புரத்தை நெருங்கினள் - நேராகத் தனது அந்தப்புர மாளி கையை நெருங்கினள்; தாயும் சென்று வாரமொடு உச்சி மோந்து - தஈயாகிய மாளவிதேவியும் எதிர் சென்று அன்போடு மகளின் உச் சியை மோந்து; வார்முடி நீவி-அவளின் நீண்ட கூந்தலைத் த.வி :

Page 84
34
கண்ணே! பாரில்நீ பார்த்த எல்லாம் பகருதி என்று கேட்டாள் - கண்போன்று எமக்கு மிகவும் அருமையாகக் கிடைத்த மகளே! பூமியை வலம் வரும்போது நீ கண்டன எல்லாவற்றையும் கூறுவா யாக என்று கேட்டாள். (எ-று) 83
281 கோதைதான் கண்ட வெல்லாங்
கூறிப்பின் கான கத்தில்
ஆதவன் என்ன வந்த
ஆண்டகை பற்றிச் சொன்னுள்
மாதவள் குறிப் பறிந்து
மன்னனுக் குணர்த்த வேண்டித்
தாதையைக் காணு மென்று
தையலை யிட்டுச் சென்ருள்.
(இ-ள்) கோதை தான் கண்ட எல்லாம் கூறி-சாவித்திரி தான் பல நாடு நக்ரங்களிற் கண்டனவற்றை எல்லாம் எடுத்துச் சொல்லி பின் கானகத்தில் ஆதவன் என்ன வந்த ஆண்டகை பற்றிச் சொன் ஞள்-பின்னர் காட்டிலே சூரியனைப்போல் வந்த சிறந்தோணுன சத் தியவானைப்பற்றிச் சொன்னுள்; மாது அவள் குறிப்பறிந்து-மாளவி தேவி சாவித்திரியின் குறிப்பையுணர்ந்து; மன்னனுக்கு உணர்த்த வேண்டி-அந்தச் செய்தியை அசுவபதி மன்னனுக்கு உண்ர்த்துவாள் வேண்டி தாதையைக் காணும் என்று-தந்தையாரைக் காண்போம் என்று: தையலை இட்டுச் சென்ருள்-சாவித்திரியைக் கூட்டிக்கொண்டு சென்ருள் (எ-று). 84
282 நற்றவ ஞானி யான
நாரத முனிவ ரோடும்
மற்றுமைங் குழுவி னேடும்
மன்னவ னிருக்கக் கண்ட
முற்றிழை வணங்கி நிற்க
முனிவரு மாசி கூறிக்
கொற்றவ யாங்குச் சென்று
கோதையிங் குற்ரு ளென்ருர்.
(இ- ள்) நல்தவ ஞானியான நாரத முனிவரோடும் -நல்ல தவத் தையுடைய ஞானியான நாரத முனிவரோடும்; மற்றும் ஐங் குழுவி னேடும்-சாரணர், சேனபதியர், தூதர், புரோகிதர், மந்திரியர் ஆகி

135
யோரோடும்; மன்னவன் இருக்கக் கண்ட முற்றிழை-அசுவபதி மன் னன் இருக்கக் கண்ட சாவித்திரி; வணங்கி நிற்க - தந்தையையும் நாரத முனிவரையும் வணங்கி நிற்க; முனிவரும் ஆசி கூறி-நாரத முனிவரும் ஆசீர்வாத வார்த்தைகளைக் கூறி, கொற்றவ-அரசனே! கோதையாங்குச் சென்று இங்குற்ருள் என்ருர் - சாவித்திரி எங்கே சென்று இங்கே வந்து சேர்ந்தாள் என்று வினுவினர். (எ-று) 85
283 மணவினைப் பருவ மெய்தி
மங்கையும் நிற்கின் ருளால் மணிவரை யனைய மார்பா
மங்கையைத் தக்கோ னுக்கு மணமிது காறுஞ் செய்து
வைத்திலை யேனே வென்ன மணமகற் றேடித் தானே
மங்கையுஞ் சென்று வந்தாள். (இ-ள்) மணவினைப் பருவம் எய்தி மங்கையும் நிற்கின்ருள் ஆல் -சாவித்திரி மணப்பருவத்தை யடைந்து நிற்கின்ருளாகையால்; மணி வரை அனைய மார்பா-மாணிக்க மலை போலும் அழகிய அகன்ற மார்பையுடைய அரசனே; மங்கையைத் தக்கோனுக்கு மண்ம் இது காறும் செய்து வைத்திலை ஏனே - சாவித்திரியைத் தகுந்த ஒருவர னுக்கு இவ்வளவு நாளும் ஏன் மணம் முடித்து வைக்காமல் விட் டு விட்டர்ய்; என்ன-என்று நாரதர் கேட்க, மணமகனைத் தே டி த் தானே மங்கையும் சென்று வந்தாள்-(அதற்கு மன்னவன்) நாரத முனி வரைப்பார்த்து முணிபுங்கவ! மணமகனைத் தேடித்தான் மங்கையுஞ் சென்று திரும்பி வந்திருக்கின்ருள் (என்ருன்). இதுவும் அடுத்த பாட் டும் ஒரு தொடர் (எ-று) 86
284 நங்கைதான் தேர்ந்து கொண்ட
நாயகன் யாவ னென்றே இங்கெமக் கியம்பக் கேட்போ
மென்றுமன் னவனுஞ் சொல்லச் செங்கயல் பழித்து நீண்ட
செவ்வரிக் கண்ணுள் செப்பும் எங்குல குருவே யெந்தா
யென்னுள முரைப்பன் கேண்மோ. (இ~ள்) நங்கைதான் தேர்ந்து கொண்ட நாயகன் யா வ ன் என்றே - சாவித்திரி தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட நாயகன்

Page 85
136
யாவன் என்று; இங்கு எமக்கு இயம்பக் கேட்போம்-அவள் இங்கு எமக்குச் சொல்லக் கேட்போம்; என்று மன்னவனுஞ் சொல்ல - என்று அசுவபதி கூற செங்கயல் பழித்து நீண்ட செவ்வரிக் கண்ணுள் செப் பும்-சிவந்த கயல்மீனைப் பழித்து நீண்ட, செவ்வரி படர்ந்த கண் களையுடைய சாவித்திரி பின்வருமாறு சொல்லுவாள்; எங்குல குருவே!; சிந்தாய்! என் உளம் உரைப்பன் கேண்மோ - என்னுடைய உள்ளக் கருத்தை உரைப்பேன் கேளுங்கள். (எ-று) 87
285 புகழொடு சால்வ நாட்டைப்
புரந்தனன் தியூமற் சேனன் அகவையில் முதிர்ந்து கண்கள்
அவை தொழில் புரியர் நாளிற் பகைவனுந் தருண மென்று
பற்றின னந்த நாட்டை மிகவுளம் வருந்திச் சேனன்
மேவினன் கான கத்தை . (இ- ள்) தியூமற்சேனன் சால்வ நாட்டைப் புகழொடு புரந்த ணன்-தியூமற் சேனன், சால்வ நாட்டைப் புகழொடு காத்தான்; அகவையில் முதிர்ந்து-வய்து சென்று; கண்கள் அவை தொழில் Hரியா நாளில்-அவனுடைய கண்கள் பார்வையிழந்து இருந்த நாளில்; பகைவனும் தருணமென்று-அவனுக்குப் பகைவனகிய துன்மதியென் பான் இதுதான் தக்க தருணமென்று எண்ணி; அந்த நாட்டை பற் றினன்-சால்வ நாட்டைக் கைப்பற்றினன்; சேனன் மிகவுளம் வருந்தி மேவினன் கானகத்தை-தியூமற் சேனன் மிகவும் உள்ளம் வருந்திக் காட்டை அடைந்தான். (எ-று} 88
286 கோலுந்தன் கொடியும் நாடுங்
கொற்றமு மிழந்து கானில்
நூலுங்கண் டிகையு மேற்று
நோன்பினை மேற்கொண் டுள்ளான்
சாலுவற் கொருவன் மைந்தன்
சத்திய வானென் பேரோன்
சீலமும் விறலும் மிக்கான்
சேந்தனை வேளை யொப்புான்.
(இ-ள்) கோலும் -செங்க்ோலும்; தன்கொடியும், நாடும்,கொற்ற மும் இழந்து தன்து இராச சின்னம்ான் கொடியையும், நாட்டையும்

37
i' is
வலியையும் இழந்து; கானில் - காட்டினிலே; நூலும் கண்டிகையும் ஏற்று - பூணுாலும், உருத்திராக்கமும்தாங்கி; நோன்பினை ே மற் கொண்டுள்ளான்-தவ ஒழுக்கத்தைமேற்கொண்டுள்ளான்; சாலுவற்கு ஒருவன் மைந்தன்-சாலுவ மன்னனுக்கு ஒரு மகன்; சத்தியவான் என்பேரோன்; சீலமும் விறலும் மிக்கான்-ஒழுக்கமும் வீரமும் மிக்க வன்; சேந்தன, வேளை ஒப்பான் - (அழகால்) முருகனையும், மாரனையும் ஒப்பவன். (எ-று) 89
287 தந்தையைத் தாயைப் பேணத்
தங்கினன் கான கத்தில் தந்திரு நாட்டை மீட்கத்
தக்கதோர் சமயங் கிட்டும் அந்தநற் குமரன் சீர்க
ளறைந்தவர் பூரணர்தாம் எந்தையே யிவனை யானு
மேற்றனன் கணவ ஞக.
(இ- ள்) தந்தையைத் தாயைப் பேணத் தங்கினன் கானகத்தில் - தனதுதாய் தந்தையரைப் பேணும் பொருட்டு அவன் காட்டில் தங்கி யிருக்கின்றன்; தம் திருநாட்டை மீட்கத் தக்க ஒர் சமயம் கிட்டும் - தனது இந்த அழகிய சாலுவ நாட்டைப் பகைவனிடமிருந்து மீட்கத் தக்கதோர் சமயம் வரும்; அந்த நல் குமரன் சீர்கள்-அந்த நல்ல இராச குமாரனுடைய பெருமை சிறப்பு முதலியனவற்றை அறைந் தவர் பூரணர்தாம்-எனக்குச் சொன்னவர் பூரண முனிவராவர்; எந் தையே இவனையானும் கணவனுக ஏற்றனன் - என் தந்தையே இந் தச் சத்தியவானை நானும் எனது கணவனக ஏற்றேன். (எ-று) 90
88 நங்கையில் வாறு ரைக்க V நாரத முனிவ னம்ம
இங்கொரு குறைதா னுண்டா
மிவனே நீ தவிர்த்தல் நன்றம் சங்கையில் மிக்கோ னந்தச்
சத்திய் வானஃ துண்மை சிங்கவே றனைய் வீரன்
(இ- ள்) நீங்கை இவ்வாறு உரைக்க - சாவித்திரி இவ்வாறு சொல்ல; நாரதமுனிவன் - அதனைக்கேட்ட நாரதமுனிவர்; அம்ம -

Page 86
138
பெண்ணே! இங்கு ஒரு குறைதானுண்டாம்; இவனை நீ தவிர்த்தல் நன் ரும் -இங்கு ஒரு குறை மாத்திரம் உண்டு. இவனை நீ தவிர்த்தல் நன்ரும்-இவனை நீ விலக்கல் நல்லது; அந்தச் சத்திய்வான் சங்கை யில் மிக்கோன்-அந்தச் சத்தியவான் கீர்த்திமிக்கவன்; அஃது உண்மை; சிங்க ஏறு அனைய வீரன்-ஆண் சிங்கத்தைப்போன்று வீரமுள்ளவன்; சித்தசன் நாணுங்காளை - மன்மதனும் நாணும் படியான அழகிய காளையாவான். (எ-று) 91
289 உண்மையே பேசும் நேர்மை
யுற்றவர்க் குதவும் வண்மை
பெண்மையை மதிக்கும் பண்பு
பேரறி வெல்லாங் கொண்ட
அண்ணலே யெனினு மாயு
ளவனுக்கோ ராண்டே யுண்டென்
றெண்ணியே கவலு கின்றே
னிதனை நீ யோர்தி யென்றன்.
(இ- ள்) உண்மையே பேசும் நேர்மை - உண்மையைய்ே எப் பொழுதும் பேசும் நேர்மையும்; உற்றவர்க்கு உதவும் வண்மை-தன் னைச் சேர்ந்தவருக்கு உதவி செய்யும் ஈகைக் குணமும்; பெண்மையை மதிக்கும் பண்பு- பெண்டன்மையையும் கற்பையும் மதிக்கும் பண்பும்; பேரறிவு எல்லாம் கொண்ட அண்ணலே எனினும்-ஞானம், பகுத்த றிவு எல்லாம் கொண்ட பெருமையிற் சிறந்தோனே என்ருலும்; அவனுக்கு ஆயுள் ஒராண்டே உண்டென்று எண்ணியே கவலுகின்றேன்அந்தச் சத்திய்வானுக்கு ஆயுள் இன்னும் ஓர் ஆண்டே இருக்கின்றது என்று எண்ணிய்ே நான் கவலைப்படுகின்றேன்; இதனை நீ ஒர்தி என் முன்-இதனை நீ ஆராய்ந்து அறிந்து தெளிவாயாக என்று நாரத முனிவர் சொன்னர். (எ - று) 92
290 அம்மொழி கேட்ட மன்னன்
அயர்ந்துமெய் சோர்ந்து கண்ணே
இம்மகற் காயு ளின்னு
மிருப்பதோ ராண்டே யாயின்
கைம்மைநீ யெய்தித் துன்பக்
கடலினில் வீழ்வா யன்றே
கொம்மைசேர் கொடியே வேறு
கொழுநனைத் தேர்தி யென்முன்,

39
(இ - ள்) அம்மொழி கேட்ட மன்னன்-நாரதர் சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்ட அசுவபதி மன்னன்; அயர்ந்து மெய்சோர்ந்துவருந்தி உடல் சோர்ந்து; கண்ணே-எம் கண் போன்றவளே; இம் மகற்கு-இந்தச் சத்தியவானுக்கு; ஆயுள் இன்னும் இருப்பது ஓராண்டே ஆயின் ல இன்னும் உள்ள ஆயுள் ஒராண்டே என்ருல்; நீ கைம்மை எய்தி-நீ விதவையாகி; துன்பக்கடலினில் வீழ்வாயன்றே; (ஆதலி ஞல்) கொம்மைசேர் கொடியே - அழகும் இளமையும் பொருந்திய கொடிபோன்ற மகளே; வேறு கொழுநனைத் தேர்தி என்ருன் - வேருெரு கணவனை நீ தேர்வாயாக என்று அசுவபதி மன்னன் கூறினன். (எ-று) 98
291 அருமறை யுணர்ந்த மேலோய்
அறத்தினைப் பேணு மெந்தாய் ஒருமுறை கொடுத்த வஈக்கை
உத்தமர் மீறு வாரோ ஒருமுறை யொருவன் றன்னை
உளத்தினி லேற்றுப் பின்வே ருெருவனை மணத்தல் கற்போ
உயர்குலப் பெண்கட் காமோ.
(இ - ள்) அருமறை உணர்ந்த மேலோய் - அரிய வேதாகமங்களை உணர்ந்த மேலான முனிவரே; அறத்தினைப் பேணும் எந்தாய்-தருமத் தைப் போற்றிப் பாதுகாக்கும் எனது தந்தையே; உத்தமர் ஒருமுறை கொடுத்த வாக்கை மீறுவாரோ - உத்தமர்கள் ஒருமுறை கொடுத்த வாக்கைக் கடப்பார்களோ, ஒரு முறை ஒருவன்றன்னை உளத்தினில் ஏற்று - ஒருமுறை ஒருவனை மனத்தினில் கணவனக ஏற்று; பின் வேருெருவனை மணத்தல் கற்போ?-வேருெருவனைப் பின் விவாக ம் செய்தல் கற்பாகுமோ? - உயர் குலப் பெண்கட்கு ஆமோ? - இது உயர்குலப் பெண்களுக்கு ஏற்ற செயலாகுமோ? (எ -று) 94
292 ஒருமுறை தானே சாதல்
உறுவதா முயிர்கட் கெல்லாம் ஒருமுறை தானே யொன்றை
யொருவனுக் கீதல் கூடும் ஒருமுறை தானே கன்னி
யொருத்தியைத் தானஞ் செய்தல் ஒருமுறை தானே மங்கை
யொருவனை வரித்தல் கூடும்,

Page 87
40
(இ-ள்) உயிர்கட்கு எல்லாம் ஒருமுறைதானே சாதல் உறுவ தாம்-எல்லா உயிர்கட்கும் ஒருமுறை தானே சாதல் சம்பவிக்கும்; ஒன்றை ஒருவனுக்கு ஒருமுறைதானே ஈதல் கூடும் - ஒரு பொருளை ஒருவனுக்கு ஒருமுறைதானே தானஞ் செய்யமுடியும்; கன்னி ஒருத் தியை ஒருமுறைதானே தானஞ் செய்தல்-ஒரு கன்னியை அவள் பெற்றேர் ஒருமுறைதானே கன்னிகாதானஞ் செய்யலாம்; மங்கை ஒருமுறைதானே ஒருவன வரித்தல் கூடும் -ஒரு மங்கை ஒரு முறை தானே ஒருவனைக் கணவனுக நியமித்தல் கூடும். (எ-று)
(வி.ம்) இவைய்ெல்லாம் ஒருமுறைதான் செய்யக்கூடும். மர்ற்ற முடியாது. இரண்டுதரம் செய்யமுடியாது. என்மனத்தை ஒருவனுக்குக் கொடுத்து விட்டேன். அதைத் திரும்பப் பெறமுடியாது. வேருெருவ னுக்குக் கொடுக்கவும் என்னிடம் வேறுமனம் இல்லை. 95
293 ஒருறை தன்னுள் வைக்க
ஒல்லுமோ இரண்டு வாளை
ஒருளந் தன்னுள் வைக்க
ஒல்லுமோ இருபத் தாவைப்
பாரினி லவனே யென்றன்
பதியென வரித்துக் கொண்டேன்
நீரிதை மறுத்தால் யானும்
நினைப்பது துறவே யென்ருள்,
(இ-ள்) ஒருறை தன்னுள் இரண்டு வாளை வைக்க ஒல்லுமோ -ஒருறைக்குள் இரண்டு வாளை வைக்க இயலுமோ? ஒருளந் தன் னுள் இருபத்தாவை வைக்க ஒல்லுமோ - ஒருள்ளத்தினுள் இரண்டு கணவரை வைக்க இயலுமோ? பாரினில் அவனே என்றன் பதியென வரித்துக் கொண்டேன்-இந்தப் பூமியிலே சத்தியவானே எனது தலை வன் என நான் நியமித்துக் கொண்டேன்; நீரிதை மறுத் தால் யானும் நினைப்பது துறவே என்ருள்-நீவிர் இதை மறுத்தால், நான் நினைப்பது இல்லறம் நீங்கி நிற்கும் துறவற வாழ் வே எ ன் ரு ள். (எ- று) 96
294 நங்கையி னுறுதி கண்டு
நாரத முனியும் மெச்சி இங்கிவட் கிணையார் கற்பில்
இவளொரு தெய்வப் பெண்ணே

141
அங்கயன் விதித்த வாறே
யமைவது வாழ்வென் றெண்ணி
மங்கைநீ நினைத்த வாறே
மணத்தினை முடித்தி யென்ருர்.
(இ- ள்) நங்கையின் உறுதி கண்டு-சாவித்திரியின் மனவுறுதிய்ைக் கண்டு; நாரத முனியும் மெச்சி-நாரத முனிவரும் அவளைப் புகழ்ந்து: இங்கு இவட்கு கற்பில் இணையார் - இங்கு இவளுக்குக் கற்பில் சமான மாவார் யர்ர்? இவள் ஒரு தெய்வப் பெண்ணே-இவள் ஒரு தெய்வப் பெண்ணேயாவாள்; அங்கு அயன் விதிக்த வாறே அ  ைம வது வாழ்வு என்று எண்ணி-அங்கு பிரமா விதித்தபடியே வாழ்வு அமை வது என்று எண்ணி; மங்கை நீ நினைத்தவாறே மணத்தினை முடித்தி என்ருர்-சாவித்திரியே! நீ நினைத்தபடியே மணத்தினை முடிப்பாயாக என்று கூறினர். (எ-று) 97
295 மன்னவ கவல வேண்டா
மறையவ னெழுத்தை யாரே
வென்றவர் தேவர் தாமும்
வென்றில ராத லாலே
சென்று நீ மணமி வட்குச்
செய்துவை திரிரா நோன்பை
ஒன்றிய மனத்தால் நோற்கின்
ஒழியுமெத் துயரு மென்ருர்,
(இ-ஸ்) மன்னவ கவல வேண்டா - அரசனே நீ கவலைப்பட வேண்டாம்; மறையவன் எழுத்தை வென்றவர் யாரே - பிரமாவின் எழுத்தை வென்றவர் யார்? தேவர் தாமும் வென்றிலர்- தேவர்க ளும் விதியை வெல்லவில்லை; ஆதலாலே நீ சென்று இவட்கு மணம் செய்துவை-ஆதலால், நீ வனத்திற்குச் சென்று இவளுக்கு இவள் எண்ண்ப்படி மணஞ் செய்துவைப்பாயாக திரிரா நோன்பை ஒன்றிய மனத்தால் நோற்கின்-திரிராத்திரி விரதத்தை ஒருமைப்பட்ட மனத் தால் நோற்ருல்; எத் துயரும் ஒழியும் என்ருர்- எந்தத் துன்பமும் நீங்கும் என்ருர். (எ-று)
திரி ராத்திரி நோன்பு - மூன்று பகலும் இரவும் உப (قدس الأه) வாசமிருந்து ஒரே நிலையாக நின்று தியானஞ் செய்து அனுட்டிக்கும் விரதம், 98

Page 88
142
26 மன்னனுந் தேறி னணுய்
மாமுனி தனைவ ணங்கி
என்னரு மகளோ டின்றே
யேகுவன் கானம் நோக்கி
யென்றனன் முரச மார்த்த:
ஏந்திழை தன்னை வாழ்த்திச்
சென்றனர் முனிவர்; கோலஞ்
செய்தனர் செய்யா டன்னை.
(இ-ள்) மன்னனும் தேறிஞனய்-அரசனும் துன் பந் தீர்ந்து தெளிந்தவனப்; மாமுனிதனை வணங்கி-பெருமைமிக்க நாரத முனி வரை வணங்கி; என் அரு மகளோடு இன்றே கானம் நோக்கி ஏகுவன் என்றனன்-எனது அரிய மகளோடு இன்றே காடுநோக்கிச் செல்லு வேன் என்றனன் முரசம் ஆர்த்த-அப்பொழுது முரசங்கள் ஒலித் தன; முனிவர் ஏந்திழை தன்னை வாழ்த்திச் சென்றனர்-நாரத முனி வர், சாவித்திரியை வாழ்த்திவிட்டுச் சென்ருர்; செய்யாள் தன்னைக் கோலஞ் செய்தனர்-இலக்குமி போன்ற சாவித்திரியைப் பிரயாணஞ் செய்வதற்காக வண்ண மகளிர் அலங்காரஞ் செய்தார்கள். (எ-று) 99 297 நங்கையை நன்னி ராட்டி
நறும்புகை கூந்தற் கூட்டித் துங்கமென் தூசு டுத்தித்
தூமலர் மாலை சூட்டிக் கொங்கையிற் ருெய்யில் தீட்டிக்
குலமணிக் கச்சு வீக்கி அங்கையிற் பாதந் தம்மில்
அரத்தமும் பூசி னர்கள்.
(இ- ள்) நங்கையை நல்நீர் ஆட்டி-சாவித்திரியை நல்ல பரிமள நீரில் முழுக்காட்டி, நறும்புகை கூந்தற்கு ஊட்டி-வாசனைப் புகை யைக் கூந்தலுக்கு ஊட்டி, துங்கமென் தூசு உடுத்தி-பரிசுத்தமான மெல்லிய புடைவையை உடுத்தி; தூமலர் மாலை சூட்டி-தூய மலர் மாலையை அணிந்து; கொங்கையில் தொய்யில் தீட்டி - தனங்களில் சாந்தினல் கோலம் எழுதி; குலமணிக் கச்சு வீக்கி-சாதி இரத்தினங் களால் அணிபெறச் செய்யப்பட்ட முலைக்கச்சை முலைகளுக்குக் கட்டி அங்கையில் பாதம் தம்மில்-அழகிய உள்ளங்கையிலும் பாதங்களி லும்; அரத்தமும் பூசிஞர்கள் -செம்பஞ்சுக் குழம்பும் பூசினர்கள். (எ-று) 100

143
298 நெற்றியிற் றிலக மிட்டு
நீள்விழி மையாற் றீட்டிக் கற்றைவார் குழலில் நாகங்
காதினிற் குழைதான் பூட்டிப் பொற்ருெடி கடகங் கையிற்
பொன்மணி மாலை மார்பிற் சிற்றிடை தன்னிற் காஞ்சி
சிலம்புகள் காலிற் சேர்த்தார்.
(இ-ள்) நெற்றியில் திலகம் இட்டு-சாவித்திரியின் நெற்றியில் பொட்டு இட்டு; நீள்விழி மையால் தீட்டி-நீண்ட கண்களை அஞ் சன மையினல் எழுதி, கற்றைவார் குழலில் நாகம்-தொகுதியான நீண்ட கூந்தலில் சடைநாகமென்னும் அணியையும்; காதினிற் குழை தான் பூட்டி-காதினில் குழையென்னும் காதணியையும் அணிந்து, பொற்ருெடி கடகம் கையில் சேர்த்தார் - பொன்வளையும் கங்கண மும் கைகளிற்சேர்த்தார்கள். மார்பில் பொன்மணி மாலை சேர்த் தார் - மார்பினில் பொன்னலும் ம ணி க ளின லும் செய்த மாலைகளை அணிந்தார்கள்; சிறு இடை தன்னில் காஞ்சி சேர்த்தார்சிறிய இடையில் எட்டுக் கோவை மணி வடங்கொண்ட காஞ்சியை அணிந்தார்கள்; காலில் சிலம்புகள் சேர்த்தார்-கால்களில் சிலம்புகளை அணிந்தார்கள். (எ-று)
கையில், மார்பில், சிற்றிடை தன்னில், காலில் என்பவற்றிற்குப் பின் சேர்த்தார் என்று கூட்டுக, 10.
299 வண்ணமா தர்கள் தங்கை
வண்ணபெல் லாமி வட்குப்
பண்ணின ரழகுக் கின்னும்
பண்ணுவ தெவனே கோலம்
நுண்ணிடை நொசிதல் நோக்கார்
நூக்களை மேலுஞ் சேர்த்தார்
கண்ணின லுற்ற தீங்கு
கழித்தனர் காப்புஞ் செய்தார்.
(இ-ள்) வண்ண மாதர்கள் - கோலஞ் செய்யும் மகளிர், தம்கை வண்ணம் எல்லாம் இவட்குப் பண்ணினர்-தங்கள் கை வண்ண மெல்லாம் (அழகுகள் எல்லாம்) இவளுக்குச் செய்தனர்; அழகுக்கு

Page 89
14
இன்னும் கோலம் பண்ணுவது எவனே-அழகேயுருவர்கியிருக்கும் இவ ளுக்கு மேலும் அலங்காரஞ் செய்தல் என்னையோ:நுண் இடை நொசி தல் நோக்கார்- அவளுடைய நுண்மையான இடை துவ ண் டு வருந்துதலை நோக்காராய்; நூக்களை மேலும் சேர்த்தார்-ஆபரண்ங் களை மேலுஞ் சேர்த்தார்கள்; கண்ணினல் உற்ற தீங்கு கழித்தனர்கண்ணுரறு கழித்தனர்; காப்புஞ் செய்தார்-திருநீறு பூசுதல், காப்பு நாண் கட்டல் முதலிய காப்புஞ் செய்தார்கள் (எ-று) 102
300 மன்னனும் மங்கை யோடும்
மாளவி தேவி யோடும்
தன்பரி வாரத் தோடும்
தானதேர் புரவி யானை
என்னுநாற் படையி னுேடும்
எண்ணில்சீர் வரிசை கொண்டு
பொன்னக ரதனை நீங்கிப்
போயினன் மக்கள் வாழ்த்த
(இகள்) மன்னனும் மங்கையோடும் - அசுவபதி மன்னனும் சாவித்திரியோடும்; மாளவி தேவியோடும் -தன்னரசியாகிய மாளவி தேவியோடும்; தன் பரிவாரத்தோடும்; தானை தேர் புரவி யானை என்னும் நாற் படையினுேடும்-காலாள் தேர் குதிரை யானை என் னும் நான்குவகைப் படைகளோடும்; எண் இல் சீர் வரிசை கொண்டு - எண்ண முடியாத சீதனப் பொருட்களைக் கொண்டு; பொன் நகர் அதனை நீங்கி-அழகிய சுந்தர புரியை நீங்கி; மக்கள் வாழ்த்த போயினன் - அந்த நகர மா ந் த ர் வாழ்த்துக்கூறப் புறப்பட்டுப் போயிஞன். (στ - g))) 103
அப்பொழுது எழுந்த ஒலிகள்
30 முழவொடு தமுக்குப் பம்பை
முரசு தூ ரியங்க ளார்ப்பக் குழலொடு சங்கம் வீணை
கொம்புகின் னரங்க ளார்ப்ப மழைமதர்க் கண்ணி னர்கள் மங்கலம் பாடி வாழ்த்த இழைவளர் முலையி னுளும்
இறைவனு மேகி ஞர்கள்

145
(இ- ள்) முழவு ஒடு தமுக்கு பம்பை முரசு தூரியங்கள் ஆர்ப்ப; -முழவும், தமுக்கும், பம்பையும், முரசும், தூாரியங்களும் ஒலி செய்ய குழலொடு சங்கம் வீணை கொம்பு கின்னரங்கள் ஆர்ப்ப - குழலும், சங்கும், வீணையும், கொம்பும், கின்னரங்களும் ஒலி செய்ய ம  ைழ மதர்க் கண்ணினர்கள்-குளிர்ச்சி பெர்ருந்திய களிப்புள்ள கண்களை புடைய பெண்கள்; மங்கலம் பாடி வாழ்த்த இழைவளர் முலையின ளும்-ஆபரணங்கள் தங்கும் வளர்ந்த முலைகளையுடைய சாவித்திரி யும்; இறைவனும் . அரசனும் (மாளவிதேவியும்) சென் ரு ர் க ள். (ar一gy) 104
மக்கள் விதியை யலங்கரித்தல்
302 தேரணை வீதி யெல்லாந்
தேமலர் மாலை துரிக்கித் தோரணம் பூகம் வாழை
துகிற்கொடி கட்டி ஞர்கள் பூரண கும்பம் வைத்துப்
புதுமணற் பரப்பி ஞர்கள் ஆரணங் கனையார் கூடி
ஆடினர் பாடி ஞர்கள். (இ- ள்) தேர் அணை வீதி எல்லாம் - தேர்கள் அ டை கி ன் ற தெருக்களிலெல்லாம்; தேமலர் மாலை தூக்கி- தேன் பொருந் தி ய வாசனையையுடைய மலர் மாலைகளைத் தூக்கி; தோரணம் பூகம் வாழை துகிற்கொடி கட்டினர்கள்-தோரணங்களையும் கமுகு, வாழை, துகிற்கொடி ஆகியவற்றையும் கட்டினர்கள்; புதுமணல் பரப்பினர் கள்-புதுமணலைப் பரப்பினர்கள்; பூரண கும்பம் வைத்தார்கள்பூரண கும்பங்களை நிரையாக வைத்தார்கள்; ஆரணங்கு அனையார் கூடி, பாடினர்கள் ஆடினர்கள். தேவப் பெண்களை நிகர்த்தோர் ஒன்று கூடி, பாடினர்கள்; அப்பாடல்களுக்கு இசைய (சில பெண்கள்) நடனமாடினர்கள். (எ-று) 05
மக்கள் மகிழ்ந்து வழியனுப்புதல் 303 நறுமலர் துரவு வாரும்
நரம்பிசை மீட்டு வாரும் நறுமண மூட்டு வாரும்
நறியநிர் சிவிறு வாரும்
Frt - 10

Page 90
அறுகினுே டரிசி தூவி
யணங்கினை வாழ்த்து வரும்
மறுகெலாம் மகிழ்வு காட்ட
மன்னனுஞ் சென்ரு னன்றே.
(இ-ள்) மறுகு எலாம்-தெருவெல்லாம்; நறுமலர் தூவுவாரும் --வாசனையுள்ள மலர்களைத் தூவுபவர்களும்; நரம்பு இசை மீட்டு வாரும்-வீணை முதலிய நரம்பு வாத்தியங்களை மீட்டு, இசை வாசிப் பவர்களும், நறுமணம் ஊட்டுவாரும் - வாசனைத் திரவியங்களால நறுமணத்தை யூட்டுவார்களும்; நறிய நீர் சிவிறுவாரும் - பன்னீர் முதலிய வாசனை நீரைத் தெளிப்பாரும்; அறுகினேடு அரிசி தூவி; அணங்கினை வாழ்த்து வாரும் - சாவித்தியை வாழ்த்துபவர்களும்; மகிழ்வு காட்ட-தங்கள் மனமகிழ்ச்சிய்ை முற்போந்த செயல்களால் காட்ட மன்னனுஞ் சென்ருன்-அசுவடதியும் செ ல் ல ல | யி னு ன். (எ-று) அன்று, ஏ-அசைகள். 06
பரிவாரங்களின் நெருக்கம்
304 வானுயர் தேரின் கூட்டம்
வளருளைப் பரியி னிட்டந்
தானமார் கயத்தின் சங்கந்
தறுகண் தந் திரத்தின் கோட்டி
வேண்கு வாட்கண் மாதர்
விறலியர் வினைஞர் கூட்டம்
காண்கஞ் செல்லு மாற்றைக்
கதிர்புகா தடைத்த வன்றே.
(இ-ள்) வான் உயர் தேரின் கூட்டம் - ஆகாயத்தைத் தொடும் படியாக உயர்ந்த தேர்களின் கூட்டமும்; வளர் உளைப் பரியினிட்டம் -வளர்ந்த பிடர் மயிரையுடைய குதிரைகளின் கூட்டமும்; தானம் ஆர் கயத்தின் சங்கம்-மதம் நிறைந்த யானைகளின் கூட்டமும்; தறு கண் தந்திரத்தின் கோட்டி-அஞ்சாமையுடைய பதாதிகளின் கூட்ட மும்; வேல்நகு வாள்கண் மாதர்-வேலைப் பழிக்கும் ஒளி பொருந்திய கண்களையுடைய மாதரின் கூட்டமும்; விறலியர் - பாடுவிச்சிகளின் கூட்டமும்; வினைஞர் கூட்டம்-தொழில் செய்வோர் கூத்தர் முதலி யோரின் கூட்டமும்; கானகஞ் செல்லும் ஆற்றை-காட்டிற்குச் செல் லும்வழியை கதிர்புகாது அடைத்த - ஒளிபுகா வண்ணம் அடைத் தன; அன்று, ஏ-அசைகள் (எ-று) 07

147 அங்கு எழுந்த பலவகை ஒசை
305 சிந்துரம் பிளிறு மோசை
சேனையி ஞர வாரம்
கந்துகங் கனைக்கு மோதை
காளையர் களிப்பின் பூசல்
எந்திர முருளு மோசை
இயம்பல கிளப்பும் நாதம்
அந்தரத் தெழுந்து சென்றே
யமருல குழம்பல் செய்த
(இ- ள்) சிந்துரம் பிளிறும் ஓசை - யானைகள் பிளிறும் ஒசை யும்; சேனையின் ஆரவாரம்- சேனையின் ஆரவாரமும்; கந்துகம் கனைக் கும் ஒதை- குதிரைகளின் கனைப்பொலியும்; காளையர் களிப்பின் பூசல் --காளையர்களின் மகிழ்வொலியும்; எந்திரம் உருளும் ஒசை - தேர் கள் உருளும் ஒசையும் இயம்பல கிளப்பும் நாதம்-பலவகை வாத் தியங்களும் இசைந்து உண்டாக்கும் ஓசையும்; அந்தரத்து எழுந்து சென்றுமஆகாயத்தில் எழுந்து சென்று அமர் உலகு உழம்பல் செய்த -விண்ணுலகில் கலந்து ஒலித்தன. (எ-று)
(வி - ம்) உழம்பல் - பல ஒசை கலந்தொலித்தல் ஒசை, ஆரவா ரம், ஒதை, நாதம் ஒருபொருட் சொற்கள். பூசல்-பேரொலி. 108
306 கோதறு மணிய மைத்துக்
குயிற்றிய மகுட மெல்லாம்
ஆதவர் நூறு கோடி
அசைவது போலுந் தண்ணுெண்
மாதரின் முகங்க ளெல்லாம்
மதியெனத் திகழ்ந்த கண்டோர்
ஏதொரு பொழுதிற் றிங்கள்
இரவியோ டிலங்க லென்ருர்,
(இ- ள்) கோது அறு மணி அமைத்து-குற்றமற்ற மணி கள் அமைத்து; குயிற்றிய மகுடம் எல்லாம்-செய்யப்பட்ட முடிகள் எல்லாம்; ஆதவர்-சூரியர் நூறு கோடி அசைவது போலும்-நூறு கோடியாகச் சேர்ந்து அசைதலை ஒக்கும்; தண் ஒண் மாதரின் முகங்கள் எல்லாம்-- குளிர்ச்சியும் ஒளியும் பொருந்திய பெண்களின் முகங்கள் எல்லாம்; மதி எனத் திகழ்ந்த- சந்திரன்கள் என விளங்கின; கண்டோர்-அவற்

Page 91
148
றைக் கண்டவர்கள் ஏது ஒரு பொழுதில் திங்கள் இரவியோடு இலங் கல் என்ருர்- இது ஏது ஒரே பொழுதில் சந்திரனும் சூரிய னே டு கலந்து ஒருங்குசேர விளங்குதல் என்ருர்கள். (எ- று) 1 09
307 நீல்வணக் கயத்தின் கூட்டம்
நீல்வணக் கயத்தை யொக்கும்
கால்வல பக்கு டைகள்
கஞ்சமெல் லிலேக ளொக்கும்
வேல்முனை விளங்க லெங்கும்
வெண்மலர் மொக்கு ளொக்கும்
கால்படக் கொடிக ளாடல்
களிவரு மன்ன மொக்கும்.
(இ- ள்) நீல்வணக் கயத்தின் கூட்டம் - கறுப்பு நிறத்தையுடைய யானைகளின் கூட்டம்; நீல்வணக் கயத்தை ஒக்கும்-கறுப்பு நிறத்தை யுடைய குளத்தை யொக்கும்; கால் வலயக் குடைகள்-கைப்பிடியை யுடைய (வட்டமான) குடைகள், கஞ்சமெல் இலைகள் ஒக் கும் - தாமரை இலைகளை யொக்கும்; எங்கும் வேல்முனை விளங்கல் - எங் கும் வேலின் முனைகள் விளங்குதல்; வெண்மலர் மொக்குள் ஒக்கும்வெண்டாமரை மொட்டுக்களை நிகர்க்கும்; கால்பட கொடிகள் ஆடல் - காற்றுப்பட கொடிச்சேலைகள் ஆடுதல்; களிவரும் அன்னம் ஒக்கும் --களிப்புடன் வருகின்ற அன்னங்களை நிகர்க்கும். (எ-று II 0
சூரியன் அத்தமித்தல்
308 அரசனும் பரிவா ரத்தோ
டரணியத் தெல்லை சார்ந்தான்
இரவியு மிளைத்தான் போல
இரும்புன லமளி சேர்ந்தான்
இரவெனும் மாது தன்கை
யிருளினல் வையந் தன்னை
அரவணைத் தமைதி தந்தாள்
அடங்கின துழனி யெங்கும்.
(இ- ள்) அரசனும் பரிவாரத்தோடு அரணியத்து எல்லை சார்ந் தான்-அசுவபதி மன்னனும் தனது பாரிவாரங்களுடன் காட்டின் எல்லையை அடைந்தான் இரவியும் இளைத்தான் போல - சூரியனும் இளைப்படைந்தவன் போல; இரும்புனல் அமளி சேர்ந்தான் - பெரிய கட லாகிய நீர்ப்படுக்கையைச் சேர்ந்தான்; இரவு எனும் மாது தன்

149
கை இருளினல் - இரவென்கின்ற பெண்ணுனவள் தனது னிகயாகிய இருளினல், வையந்தன்னை-பூமியை, அரவணைத்து அமைதி தந்தாள்
- கட்டியணைத்து அமைதியைத் தந்தாள், துழனி எங்கும் அடங்கின -எல்லாவிடங்களிலும் பலவித ஒலிகளும் அடங்கின. (எ-று) 111
இருள் சூழ்தல் 309 மெய்ம்மையாம் ஞான பானு
மேதினித் துறந்து செல்ல பொய்ம்மையாம் அஞ்ஞா னப்பேர்ப புல்லிருள் சூழ்ந்த போலும் தெய்வமாஞ் சோதி நீங்கத்
திண்ணிருள் ஞால மெங்கும் டையவே சூழ்ந்த தந்தப்
பழுவமு மடங்கிற் றன்றே.
(இ - ள் மெய்ம்மையாம் ஞானபானு - மெய்ஞானமென்னும் சூரியன்; மேதினித் துறந்து செல்ல - பூமியை நீங்கிச் செ ல் ல; பொய்ம்மையாம் அஞ்ஞான பேர்ப்புல் இருள்-பொய்ம்மையான அஞ் ஞானமென்னும் இழிவான இருள்; சூழ்ந்த போலும் - சூழ் ந் து கொண்டது போலும்; தெய்வமாம் சோதி நீங்க - தெய்வத்தன்மை யுடைய ஒளிரூபராகிய சூரியபகவான் நீங்க; நாலம் எங்கும் - பூமி யெங்கும்; திண் இருள் பையவே சூழ்ந்தது - நெருக்கமான இ ரு ள் மெல்ல மெல்லச் சூழ்ந்து கொண்டது; அந்தப் பழுவமும் அடங்கிற்று அன்றே -அந்தக் காடும் ஆரவாரமின்றி அடங்கியது; அன்று, ஏஅசைகள் (எ-று) 2
வீரர் கூடாரங்கள் சமைத்தல்
30. விரைவினிற் கூடா ரங்கள்
6:ரர்கள் சமைத்தார் வண்ணத்
திரைகள்மேல் விதானங் கட்டித் தீபமு மேற்றி ஞர்கள்
தரையினிற் கம்ப ளங்கள்
தவிசுகள் விரித்தார் பூவும்
விரைசெறி பொடியுந் தூவி
வெறிகமழ் தூப மிட்டார்.

Page 92
150
(இ-ஸ்) விரைவினில் கூடாரங்கள் வீரர்கள் சமைத்தார்.சீக் கிரமாகக் கூடர்ரங்களை வீரர்கள் அமைத்தார்கள்; வண்ண்த் திரை கள்-அழகிய திரைச்சீலைகளையும்; மேல்விதானம் கட்டி-மேற்கட்டிகளை யும் கட்டி தீபமும் ஏற்றினர்கள்-விளக்குகளையும் ஏற்றினர்கள் : தரையினில்-அடித்தளத்தில்; கம்பளங்கள், தவிசுகள் விரித்தார்கம்பளங்களையும் மெத்தைகளையும் விரித்தார்கள்; பூவும், விரைசெறி பொடியும் தூவி-பூக்களையும், வாசனை மிகுந்த கந்தப் பொடிகளை யும் தூவி; வெறிகமழ் தூபம் இட்டார்- வாசனை க ம ழு கின்ற தூபத்தை இட்டார்கள். (எ-று) 113
எல்லோரும் மாடங்களில் சென்று தங்குதல்
3 அந்தளி ரலங்கன் மாலை
யரசனு மணங்க ஞளும்
அந்துகில் மாடஞ் சேர்ந்தார்
அணுக்கர்மெய்க் காவல் செய்தார்
மந்திரர் மறையோர் பாணர்
மங்கையர் மறவ ரானேர்
வந்தவ ரவர்கட் கான
வடிவமை மாடஞ் சேர்ந்தார்.
(இ-ள்) அந்தளி ரலங்கன் மாலை யரசனும் -அழகிய தளிர்கள் இடையிடையே தொடுக்கப்பட்ட அசைகின்ற மாலையினை அணிந்த அசுவபதி மன்னனும்; அணங்கு அனுளும் - தெய்வப் பெண் போன்ற சாவித்திரியும்; அம்துகில் மாடஞ் சேர்ந்தார்-அழகிய படமாடஞ் சேர்ந்தார்கள்; அணுக்கர் மெய்க்காவல் செய்தார்-அந்தரங்கமான காவல் வீரர்கள் மெய்க்காவல் புரிந்தனர் - (மெய்காத்து நின்றனர்): மந்திரர், மறையோா-அமைச்சர், வேதியர்; பாணர், மங்கையர், 10வரானுேர்-பாணர், பெண்கள்,படைவீரர் முதலியோர்;வந்து அவர விர்கட்கு ஆன; வடிவு அமை மாடஞ் சேர்ந்தார்-வடிவாக அமைக் கப்பட்ட மாடங்களைச் சேர்ந்தார்கள். (எ-று) l 4
அவர்கள் ஆடலும் பாடலும் மகிழ்தல்
312 ஒடரி பரந்த கண்ணுர்
உளமகிழ்ந் தினிய பண்கள் 11ாடினர்; குழலும் யாழும்
பாணர்நின் றிசைத்தார்; மாதர்

15t
ஆடினர் பரதம் வட்ட
அரங்கினில், மருங்கு ஞே)வக்
கூடியே யடித்தார் கும்மி
குவட்டிள முலையி னர்கள்.
(இ- ள்) ஒடு அரி பரந்த கண்ணுர் - ஒடுகின்ற செவ் வ ரி பரந்த கண்களையுடைய மாதர்; உளமகிழ்ந்து இனிய பண்கள் பாடி ஞர்-மனமகிழ்ந்து செவிக்கு இனியனவாகிய இசைகளை இசைத்தா/* கள் குழலும் யாழும் பாணர் நின்று இசைத்தார்; வட்ட அரங்கி னில் மாதர் பரதம் ஆடினர்- வட்டமான மேடையிலே பெண்கள் நடனம் ஆடிஞர்கள்; குவட்டு இள முலையினர்கள் - திரட்சி பொருந் திய இளம் முலைகளையுடைய பெண்கள் மருங்கு நோவ-இடை வரு ந்த கூடியே கும்மி அடித்தார். கூடி நின்று கும்மி அடித்தார்கள். (a T-Ol) 115
சந்திரோதயம்
வேறு
313 அந்த காரமா மளக்கர்நின் றவனியை மீட்க
இந்து சாகரத் தெல்லையி லெழுந்தன னிந்து கந்து கம்மெனக் கடன்மிசை களிநடம் புரிய இந்த மானிலக் கின்னுயிர் 11ாவுமின் புற்ற,
(இ -ஸ்) அந்த காரமாம் அளக்கர் நின்று அவனியை மீட்க - அந்த காரமென்னும் கடலில் நின்று பூமியை மீட்பதற்காக; இந்து சகரத்து எல்லேயில் இந்து எழுந்தனன்-இந்து சமுத்திரத்தின் கிழக் குக் கோடியில் சந்திரன் எழுந்தான்; கந்துகம் எனக் கடல் மிசை களிநடம் புரிய-அவன் பந்து போலக் கடல்மீது களிநடம் புரிய; இந்த மாநிலத்து இன்னுயிர் யாவும் இன்புற்ற-இப்பரந்த பெரிய பூமியிலுள்ள இனிய உயிர்க் கூட்டங்கள் எல்லாம் இ ன் புற்ற ன" (எ-று) 6
314 திங்கள் நாயகன் திருமுகங் கண்டுள மகிழ்ந்தே
யெங்கும் முல்லைதம் இதழ்விரித் திளநகை புரிந்த கொங்குண் அல்லியுங் குமுதமுங் குளிர்முக மலர்ந்த பொங்கி ஆர்கலி பொலிந்தது தன்னலங் கனிந்தே,

Page 93
152
(இ-ள்) திங்கள் நாயகன் திருமுகம் கண்டு உளம் மகிழ்ந்தே - சந்திரனுகிய தமது கணவனின் திருமுகத்தைக் கண்டு உளமகிழ்ந்து எங்கும் முல்லை தம் (தழ் விரித்து இளநகை புரிந்த - எங்க ணு ம் முல்லை மலர்கள் தங்கள் இதழ்களை விரித்துக் குறுஞ் சிரிப்புச் செய் தன; கொங்குண் அல்லியும் குமுதமும் குளிர்முகம் மலர்ந்த -(அவ் வாறே தமது நாயகனுகிய சந்திரனின் முகத்தைக் கண்டு) வாசனை பொருந்திய அல்லி மலரும் குமுத மலரும் தங்கள் குளிர்ந்த முகங் களை மலர்த்தின; ஆர்கலி பொங்கி பொலிந்தது தன்னலங் கனிந்து(அவ்வாறே) கடலும் நீர்ப்பெருக்கெடுத்துப் பொங்கித் தன்னலங் கனிந்து பொலிந்தது. ஏ அசை (எ மறு) 1 7
315 சந்தி ரன்கதிர் சாளரத் துரடுசென் றுறங்கா
இந்து வாண்முகத் திளமுலை மாதினைத் தழுவ மந்த மாருதம் மதுமலர் மணங்கொடு வீசச் சிந்தை வந்தனன் செம்பொனிற் செதுக்கிய தோளான்
(இ-ள்) சந்திரன் கதிர் சாளரத் தூடு சென்று கசந்திரனுடைய கிரணம் சன்னலினூடாகச் சென்று; உறங்கா-உறங்காது இருந்த இந்து வாண் முகத்து இளமுலை மாதினைத் தழுவ-சந்திரன்போலும் ஒளி பொருந்திய முகத்தினையும் இளமை பொருந்திய முலைகளையு முடைய சாவித்திரியைத் தழுவ; மந்தமாருதம் மதுமலர் மணங் கொடு வீச-இளந்தென்றற் காற்ருனது தேன்பொருந்திய மலரின் வாசனை யைத் தன்னுடன் கலந்து கொண்டு அவள் மீது வீச; செம்பொனிற் செதுக்கிய தோளான் சிந்தை வந்தனன்-செம்பொன்னிற் செதுக்கி யவை போன்ற தோள்களையுடைய சத்தியவான் அவளின் சிந்தையில் வந்து உதித்தான். (எ-று) 8
316 மஞ்சு சூழ்வரை மார்பனும் மனத்தினிற் ருேன்றப் பஞ்ச பாணனும் பல்சணை பாவைமேற் ருெடுத்தான் கஞ்ச மென்முகக் காரிகை காதலன் வசமாய் நெஞ்சு நெக்கிட நெட்டுயிர்த் தினையவை கூறும்.
(இ- ள்) மஞ்சு சூழ்வரை மார்பனும் - மேகம் சூழ்ந்த மலை போலும் அகன்ற மார்பினையுடைய சத்தியவான்; மனத்தினில் தோன்ற - சாவித்திரியின் மனத்தினிற்றேன்ற; பஞ்சபாணனும் - ஐந்து மலரம்புகளையுடைய மன்மதனும்; பல்கணை பாவைமேல் தொடுத் தான்-பல மலரம்புகளைச் சாவித்திரியின் மேல் ஏவினுன், கஞ்ச மென்முகக் காரிகை காதலன் வசமாய் -தாமரை போலும் மென்மை

15
யர்ன முகத்தை புடைய சாவித்திரி, சத்தியவான் வசத்த ளாகி; நெஞ்சு நெக்கிட-நெஞ்சு உருகிட, நெட்டு பிர்த்து-பெருமூச்சு விட்டு; இன யவை கூறும் .இத்தன்மையான மொழிகளைக் கூறுவாள். (எ -று)
I 9
317 ஆதி நாயகன் அவிர்சடை மீதன மதியே
நீதி யாவர்க்கும் நிகழ்த்துதல் தேவர்தங் கடனும் சீத ளம்மிகு செழுங் கதிர் செகத்தினுக் களித்துக் காத லர்ப்பிரி கன்னியைக் கனற்றிட லெவனே .
(இ - ள்) ஆதி நாயகன் அவிர்சடை மீது அணை மதியே - சிவ பிரானுடைய ஒளிபொருந்திய விரிந்த சடையின் மீது அணைந்திருக் கின்ற சந்திரனே; யாவர்க்கும் நீதி நிகழ்த்துதல் - எல்லோருக்கும் (சார்பின்றி) நீதியைச் செய்தல்; தேவர்தம் கடனும் - தேவர்களது கடமையாகும்; (அவ்வாறிருக்க) சீதளம் மிகு - குளிர்ச்சிமிக்க செழும் கதிர் -செழுமையான நிலவின; செகத்தினுக்கு அளித்து-உலகத்திற் குக் கொடுத்து; காதலர்ப்பிரி கன்னியை காதலரைப் பிரிந்த கன்னி யாகிய என்னை, கனற்றிடல் எ வனே - வெதுப் பி டல் என்ன காரணமோ. (எ-று) 12 O
38
கடலிற் ருேன்றினை கா சினி தண்மதி யெனுமே உடலைத் தீயென உலர்த்துவை யாதுகொல் அறியேன் வடவைத் தீயுடன் வளர்ந்தனை யாதலி னதுபோற் சுடவைத் தாயெனச் சொல்லுத லல்லது பிறிதென்?
(இ-ஸ்) (சந்திரனே நீ) கடலில் தோன்றினை-கடலிலே பிறந் தாய்; (அதனுல் குளிர்ச்சியுடையவனணுய்), காசினிதண்மதி எனுமே - உலகம் உன்னைக் குளிர்ந்த மதி என்று போற்றும்; (அப்படியிருந்தும்) உடலை - எனது உடம்பை; தீ என உலர்த்துவை யாது கொல் அறியேன் -தீப்போன்று உலர்த்தாநின்ரு ய், யாது காரணம் பற்றி என நான் அறியேன்; வடவைத் தீயுடன் வளர்ந்தனை ஆதலின் வடவாமுகாக் கினியுடன் வளர்ந்தாய் ஆதலினுல்; அதுபோல் - அத் தீயைப்போல்; சுடவைத்தாய்-நீயும் என்னைச் சுடவைத்தாய், எனச் சொல்லுதல் அல்லது பிறிதென்-என்று சொல்லுவதல்லாமல் வேறு என்ன கார ண்த்தைச் சொல்லுவேன்? (எ று) 12

Page 94
5A
39 படஞ்சேர் பாம்புனைப் பற்றியு மிழ்ந்ததன் றதனல் விடஞ்சேர் மெய்யினை வெங்கதிர் வீசுவை; விதியோ தடஞ்சேர் தண்பணைச் சாலுவக் கோமகன் பிரிவால் வடஞ்சேர் மென்முலை வாடிடு மென்றனை வதைப்பாய்.
(இ-ள்) படஞ்சேர் பாம்பு உனை அன்று பற்றி உமிழ்ந்தது - படம் பொருந்திய கேது என்னும் பாம்பு உன்னை அன்று கெளவிப் பின் உமிழ்ந்தது. அதனுல் விடஞ்சேர் மெய்யினை - அதனுலே நீ விடம் சேர்ந்த உடம்பை உடையவனுஞய்; வெம்கதிர் வீசுவை - ஆனமையாற்ருன் வெப்பமாகிய கிரண்த்தை வீசுகின்ருய்; விதியோஇது எனது விதியோ? தடம்சேர் தண்பணை சாலுவ கோமகன் பிரி வால்-குளங்களோடு கூடிய குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடைய சாலுவ நாட்டின் அரச குமாரனுடைய பிரிவினுல்; வடம் சேர் மென்முலை-மணிவடம் பொருந்திய மென்மையான முலைகள்; வாடி டும் என்தனை-மெலிகின்ற என்ன வதைப்பாய் - வதைக்கின்முய் (GT --ዐሃ) 置22
320 திங்கள் வெண்குடைத் திருமகண் மைந்தனென் பகையாய் ஐங்க ணைதமை அரிவையென் மீதினில் விடுத்தான் அங்க மற்றவன் ஆதலின் நீயவன் துணையோ திங்க ளேயென்ன தீங்குகள் செய்தன னுனக்கே.
(இ- ள்) திங்கள் வெண்குடைத் திருமகண் மைந்தன்-திங்கள் வெண்குடையோணுகிய, இலக்குமிக்கு மகன் (காமன்); என்பகை யாய்-எனது பகையாய்; ஐங்கணை தமை-தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோற்பலமாகிய ஐந்து வகைக் க ஃண களை அ ரி ைவ என்மீதினில் விடுத்தான்- பெண்ணுகிய என்மீது ஏவிஞன்; அங்க மற்றவன் ஆதலின்-அந்தக் காமன் அநங்கனதலின்; நீ அவ ன் துணையோ-நீயவனுக்குத் துணையாக வந்திருக்கிருயோ; திங்களே! உனக்கு என்ன தீங்குகள் செய்தனன்-சந்திரனே நான் உனக்கு என்ன தீங்குகள் செய்தேன்? (எ-று) 123
32 மந்த மாருதம் மலையினிற் பிறந்தனை மழைசேர் சந்த ணப்புற வத்திடைச் சஞ்சரித் தனையே இந்த நாளெனை யெரித்திடுங் காமமாம் நெருப்பை வந்து வீசிநீ வளருறச் செய்வதென் தகைத்தோ?

155
(இ-ள், மந்த மாருதம் -தென்றற்காற்றே; மலையினிற் பிறந் தன-நீ மலையின்மீது பிறந்தாய்; மழைசேர் குளிர்ச்சிபொருந்திய, சந்தனப் புறவத்து இடை-சந்தனக் காட்டினுாடே சஞ்சரித்தனையே - நடமாடினையே; (அதனல் குளிர்ச்சி யுடையை). இந்த நாள் என எரித்திடும் காமமாம் நெருப்பை-இந்த நாளிலே என்னை எரிக்கின்ற காமமாகிய நெருப்பை; நீ வந்து வீசி வளருறச் செய்வது-நீ வந்து வீசிக் கொண்டு வளரச்செய்வது; என் த ைகத்தோ?-என்ன தகைமை யுடையதோ; (எ=று) 及24
322 காம நோய்ப்படு கன்னியில் வாறிரங் குதலும்
வாம மேகலை வஞ்சியர் வனிதையை வளர்த்திச் சாம ரங்கொடு வீசினர் சந்தனம் பூசிக் கோம கட்கவை குண்டமேற் பெய்த நெய் யான.
(இ-ள்) காமநோய்படு கன்னி - காமநோயின் வாய்ப்பட்ட சாவித்திரி; இவ்வாறு இரங்குதலும் - இவ்வாறு துன்பப் படுதலும்; வாம மேகலை வஞ்சியர்-அழகிய மேகலையை அணிந்த வஞ்சிக்கொடி போன்ற தோழிப் பெண்கள், வனிதைய்ை வளர்த்தி-சாவித்திரியைப் படுக்க வைத்து; சந்தனம் பூசி - குளிர்ச்சியடையும்படி ச ந் த ன க் குழம்பை உடம்பெங்கும் பூசி: சாமரங்கொடு வீசினர்-சாமரைகளைக் கொண்டுவந்து வீசினர்கள்; கோமகட்கு-அரசகுமாரியாகிய சாவித் திரிக்கு; அவை -அச்செயல்கள்; குண்டமேல் பெய்த நெய் ஆனஓம குண்டத்தின் மேல் சொரிந்த நெப்போல காமாக்கினியை மேன் மேலும் வளர்த்தன. (எ கறு) 25
373 காந்தக் கல்லுமக் கதிர்பட உருகிடு மென்ருற்
காந்தட் கையினர் கலைமதி யவன்முனர் என்னும் சாந்தைப் பூசிலென் சாமரம் வீசிலென் சற்றுஞ் சாந்தத் தைத்தரு மோவெனச் சகிகளைக் கேட்டாள்.
(இ- ள்) காந்தக் கல்லும் -சந்திரகாந்தக் கல்லும்; அக் கதிர் பட-அந்தச் சந்திர கிரணம்பட உருகிவிடும் என்ருல்-உருகிவிடும் என் முல். காந்தள் கையினர்-காந்தள் போன்ற கையையுடைய பெண்கள் கலைமதியவன் முனர் என்னும்?-பூரண கலைச்சந்திரன் முன்னர் (அவர் கள் உருகாமல்) என்னுவார்கள்? சாந்தைப் பூசில் என்-சந்தனத்தை பூசினலுமென்ன? சாமரம் வீசில் என்-சாமரத்தால் வீசினலென்ன? சற்றுஞ் சாந்தத்தைத் தருமோ என-சிறிதும் அமைதியைத் தருமோ என்று; சகிகளைக் கேட்டாள்- தோழிமாரைக் கேட்டாள் சாவித்திரி. 26

Page 95
56
324 ஒவி லந்தணர் ஒமஞ்செய் மந்திரம் பயின்ற
பூவை கொம்பரிற் புரிதவர் மொழிகளைப் புகன்ற தாவில் சத்தியன் தன்மொழி யுஞ்சொலக் கேட்டு காவி நீள்விழிக் கன்னியுங் கண்ணயர் வுற்ருள்.
(இ-ள்) ஒவுஇல்-ஒழிவில்லாது; அந்தணர் ஒமஞ் செய் மந்தி ரம் பயின்ற பூவை-முனிவர்கள் யாகஞ் செய்யும்போது கூறும் மந் திரங்களைத் தாமும் சொல்லிப் பழகிய நாகணவாய் (கிளி, எனி னுமாம்); கொம்பரில்-மரக்கொம்புகளிலிருந்து; புரிதவர் மொழிகளைப் புகன்ற - தவம் புரிகின்ற முனிவரின் மொழிகளைச் சொன்னன; தாவில் சத்திய்ன் தன்மொழியுஞ் சொலக் கேட்டு-குற்றமற்ற சத்தியவான் சொல்லும் மொழிகளையும் பூவைகள் சொல்லக் கேட்டு; காவி நீள் விழிக் கன்னியும்-கருங்குவளை போன்ற, நீண்ட விழிகளையுடைய சர்வித்திரியும்; கண் அயர்வுற்ருள்-(அதனுல் இன்பமடைந்து) தூங் கினுள். (எ-று)
(வி-ம்) யாகசாலையில் முனிவர் வேதங்களை ஒதுவார்கள். பிர மச்சாரியாகிய சத்தியவானும், தந்தை செய்யும் யாகங்களில் வேதங்க ளையும், கீதங்களையும் மொழிவான். ஆதலால் பூவை அவன் மொழி களையும் சொல்லும், அவன் மொழிகளைக் கேட்ட மாத்திரத்தில் சாவித்திரி துன்பம் நீங்கி இன்பமுற்றுத் துயின்ருள்.
இரவில் பூவை பேசுமோ என்பார்க்கு - சாவித்திரி இரவு வெகு நேரம் நித்திரை வராமல் வருந்தினுள். பின்இரவு வைகறைப் பொழு தைக் கிட்டும் நேரம். பூவை பேசியது. அப்பொழுதுதான் தூங்கினுள் என்க, 127
சுயம்வரச் சருக்கம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்

நான்காவது திருக்கலியாணச் சருக்கம்
திருச்சிற்றம்பலம்
கதிரவன் உதயம்
வேறு
325 நீள்விழி நின்னுளம் நீங்கா நின்றவக்
கேள்வனைக் காட்டுதும் கேதம் நீங்கென ஆழ்கடற் பள்ளிவிட் டளப்பில் தேசுடன் ஏழ்பரித் தேர்மிசை யிரவி தோன்றினன்.
(இ-ள்) நீள்விழி!-நீண்ட கண்களையுடைய சாவித்திரி நின்னு ளம் நீங்கா நின்ற-உன்னுடைய உள்ளத்தில் நீங்காமல் நின்றவணு கிய; அ கேள்வனை-அந்தத் தலைவனை காட்டுதும்-காண்பிப்பேன்: கேதம் நீங்கு என-துன்பம் நீங்குவாயாக என்று ஆழ்கடல் பள்ளி விட்டு-ஆழ்ந்த கடலாகிய படுக்கையை விட்டு; அளப்பில்-அளவிட முடியாத தேசு உடன்-ஒளியுடன் ஏழ்பரித் தேர்மிசை-ஏழு கிர ணங்களாகிய குதிரைகள் பூட்டிய தேரின் மீது; இரவி தோன்றினன் --சூரியன் உதயமானன். (எ-று)
எல்லோரும் துயிலெழுதல்.
326 மங்கல யாழினை மாதர் மீட்டிட
மங்கைதன் மலர்விழி மலர்ந்தெ ழுந்தனள் அங்குள பேர்களு மமளி நீங்கினர் கங்கையி லாடியே கடன்க ளாற்றினர்.
(இ - ள்) மங்கல யாழினை-மங்கல வாத்தியமான யாழை; மாதர் மீட்டிட-இசை செய்கின்ற பெண்கள் மீட்டு வாசிக்க; ம ங்  ைக -- சாவித்திரி; தன் மலர்விழி - தன் குவளை மலரை ஒத்த கண்களை மலர்ந்து எழுந்தனள்-விழித்து துயில் எழுந்தாள்; அங்கு உளபேர் களும்-அங்குள்ள மற்றையோர்களும்; அமளி நீங்கினர்-படுக்கையை விட்டு எழுந்தார்கள்; கங்கையில் ஆடியே-கங்கா நதியில் நீராடி: கடன்கள் ஆற்றினர் - காலைக் கடன்களைச் செய்து மு டி த் த னர். (67- -gy) 2

Page 96
தியுமற்சேனன் இருக்குமிடம் செல்லல்
327 அரசனு மமைச்சரும் அணங்குஞ் சாலுவ நரர்பதி யுறைவிடம் நடந்து சென்றனர் அரனடிக் கன்புசெய் யண்ணல் சார்லநீள் தருநிழற் றருப்பைமேற் றங்கக் கண்டனர்.
(இ- ள்) அரசனும் - அசுவபதி மன்னனும்; அமைச்சரும்-மந்திரி மார்களும்;அணங்கும்-தெய்வப் பெண் போன்ற சாவித்திரியும்; சாலுவ நரர்பதி-தியுமற்சேனனுணவன்; உறைவிடம்-தங்கியிருந்த தவப்பள் ளிக்கு நடந்து-வாகனங்களை விடுத்து நடந்து; சென்றனர் - சென் முர்கள்; அரன் அடிக்கு அன்பு செய் அண்ணல் சிவபெருமானுடைய திருவடியிலே அன்பு கொண்டு தவநெறியை மேற்கொண்ட தியூமற் சேனன்; நீள்சால தரு நிழல்-உயர்ந்த சாலமரத்தின் நிழலில்; தருப் பைமேல்-தருப்பாசனத்தின் மேல்; தங்கக் கண்டனர்-இருக்கக் கண் டார்கள். (எ-று) 3
(வி - ம்) சாலமரம் -ஆச்சாமரம்.
அசுவபதி தன்னை அறிமுகப்படுத்தல்
328 மாத்திர மன்னன்யான் மகள்சா வித்திரி
பூத்திகழ் கற்பினுள் பொற்பிற் பொன்னியாம் நீத்தநும் பெருமையை நேரிற் கண்டனம் தோத்திரஞ் செய்தனம் தோன்ற லென்றனன்.
(இ- ள்/ \தோன்றல் - பெருமை மிக்க தியூமற் சேனரே! யான் மாத்திர மன்னன்-நான் மாத்திர தேசத்து அரசன் மகள் சாவித் திரி - (அயலில் நிற்கும் இவள்) என்மகள் சாவித்திரியாவாள்; பூ திகழ் கற்பினுள்-இப்பூமியில் சிறப்புமிக்க கற்பையுடையவள்; பொற் பில் பொன்னியாம் - அழகில் இலக்குமியாவாள்; நீத்த - துறந்த நூம்-உமது; பெருமையை நேரிற் கண்டனம் - பெருமையை நேரிற் கண்டறிந்தோம்; தோத்திரம் செய்தனம்-துதி செய்தோம்; என்ற னன்- என்று அசுவபதி கூறினன். (எ-று)
(வி-ம்) தியூமற்சேனன் பார்வையிழந்திருந்ததனல் - மகளின் அழகைப் பற்றியுஞ் சொன்ஞன். 4

159 தியூமற்சேனன் அசுவுபதியை வரவேற்றல்
329 வரவுநல் வரவென வணங்கிச் சேனனும்
புரவல அமர்கெனப் புற்பா யிட்டனன் மரவையிற் பாலுடன் மதுரத் தேன் கனி அரசனுக் கேனையோர்க் களித்தா னன்புடன்.
(இ=ள்) சேனனும் வரவு நல்வரவு என வணங்கி-தியூமற் சேனனும் உங்கள் வரவு நல்வரவாகுக என்று சொல்லி வணங்கி; புரவல-அர சனே! அமர்க என-இருக்கக் கடவீர்கள், என்று; புல்பாய் இட்ட னன்-தருப்பைப் புற்பாயை விரித்தனன்; மரவையில்-மரத்தாற் செய் யப்பட்ட பாத்திரத்தில்; பாலுடன் மதுரதேன், கணி- பாலோடு இனி மையான தேனையும், கனிவகைகளையும்; அன்புடன் அரசனுக்கு ஏனை யோர்க்கு அளித்தான் - அன்புடன் அரசனுக்கும் ஏனையோருக்கும் விருந்தாகக் கொடுத்தான். (எ-று)
(வி-ம்) காட்டில் தவம் செய்பவனுகையால், தருப்பைப் புல்லாற் செய்த பாயையிட்டனன். சருக்கரை அங்கு கிடைப்பதரிதாகையால் பாலுடன் தேனைக் கொடுத்தான் என்க. துறவியிடம் வெள்ளிப் பாத் திரமோ, உலோகத்தாலான பாத்திரமோ கிடையாது. ஆகையால் மரப்பாத்திரத்தில் பால் கொடுத்தான் என்பதே பொருந்தும். 5
330 தவம்பயில் தமியனைத் தாங்கள் நாடிய
தெவனென அறியுமா றியம்பு வீரெனச் சிவநெறி தழுவிய செல்வ நின்தவம் அவனியில் யார்க்குமே யாற்ற வல்லதோ.
(இ- ள்) தவம் பயில் தமியனை-தவத்தைச் செய்யும் வறியவ ஞகிய என்னை; தாங்கள் நாடியது ~ அரசனுக இருக்கும் தாங்கள் தேடி வந்தது; எவன் என-என்னகாரிய நிமித்தமாக என்று; அறி மாறு-அதனை நான் அறியும்படி; இயம்புவீரென - சொல்லுவீர்களாக என்று தியூமற் சேனன் கேட்க, சிவநெறி தழுவிய் செல்வ-சிவநெறி யாகிய தவத்தை மேற்கொண்ட செல்வரே நின்தவம்-உம்முடைய தவம்; அவனியில்-உலகத்தில்; யார்க்குமே ஆற்றவல்லதோ-யார்க் கும் செய்யத் தகுந்ததோ?- என்று உபசாரம் கூறி அதன் பின்பு அசுவ பதி பின் வருமாறு சொல்வானுயினன் (எ-று)
(அடுத்த பாட்டிற் ருெடரும்)

Page 97
160
(வி-ம்) தியூமற் சேனன் தன்னை வறியவனகச் சொன்னணுகை யால், அசுவபதி தவத்தாற் சிவப்பேறுபெற்ற செல்வ என்ருன். "செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே' என்னும் திருவாக்கை நோக்குக. 6
331 அருந்தவஞ் செய்தவ ரடைவர் விண்ணுல
கிரும்புக ழெய்துவ ரிம்மை வாழ்வினிற் பொருந்திநீர் செய்தவம் புந்தி கொண்டியாம் விரும்பிநும் உறவினை வேண்டி வந்தனம்.
(இ- ள்) அரும்தவம் செய்தவர் விண்ணுலகு அடைவர்-செய் தற்கு அரிய தவத்தைச் செய்தவர்கள் சுவர்க்க உலகை அடைவார் கள்; இரும்புகழ்-பெரிய புகழை, எய்துவர்- அடைவார்கள்; இம்மை வாழ்வினில் இந்தப் பிறப்பில், இவ்வுலக வாழ்வினில்; நீர் பொருந்தி செய்தவம் யாம் புந்தி கொண்டு-நீர் மனம்பொருந்திச் செய்யும் தவத்தை நாம் மனத்திற் கொண்டு. நும் உறவினை விரும்பி - உம் முடன் உறவு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு; வேண்டி வந்தனம்அச்சம்பந்தத்தை வேண்டி (இரந்து) வந்தோம். (எ-று)
(வி- ம்) நீர் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருப்பதை அறிந்தும் உம்முடைய உறவை விரும்பி வந்தேன். திருமணம் பேச வந்தவனுகை யால், உம் உறவை விரும்பி வந்தேன் என்றும். அவர் துறவியாக வறியவனுக இருப்பதையறிந்தும் அதைப் பொருட்படுத்தாது அரச குமாரியைக் கொடுக்கும் சம்பந்தத்தை வேண்டி வந்தேன் என்பதை யும் பின் சொல்லப் போவதற்குத் தோற்றுவாயாகச் சொன்னன். என்க. 7
( வேறு )
332 புத்திர ரின்றி யானும்
புரிந்தனன் தவங்கள் முன்னுட்
சத்தியின் வரத்தி னலிச்
சற்குண வதியைப் பெற்றேன்
இத்திரு மகளுக் கேற்ற
இளைஞனைத் தேடுங் காலை
சத்திய வானை நங்கை
சாருமிவ் வனத்திற் கண்டர்ள்.

16
(இ- ள்) புத்திரர் இன்றி யானும் முன்நாள் தவங்கள் புரிந்தனன்எமக்குப் புத்திரப் பேறில்லாமையால் முற் காலத்தில் அதற்கேற்ற தவங் களைச் செய்தேன் சத்தியின் வரத்தினுல் - சாவித்திரி தேவியின் வரத் தினல் இச் சற்குணவதியைப் பெற்றேன் - இந்த நற்குணமுள்ள சாவித்திரியென்னும் பெண்ணை மகளாகப் பெற்றேன்; இத் திரு மக ளுக்கு ஏற்ற இளைஞனைத் தேடுங்காலை - இந்த இலக் குமியை ஒத்த மகளுக்குத் தகுந்த ஒரு கணவனைத் தேடுங்காலை; சத்தியவான-உமது மகளுகிய சத்தியவான நங்கை (நமது மகளாகிய) சாவித்திரி; சாரும் இவ் வனத்திற் கண்டாள்-நாம் வந்து சேர்ந்த இந்தக் காட்டிலே கண்ணுற்ருள். (எ-று) 8
333 கண்டவ ளவனைத் தானே
கணவனுய் வரித்துக் கொண்டாள்
இண்டைசேர் குழலி ஞளை
இங்குநா னிட்டு வந்தேன்
வண்டிமிர் தாரா னுக்கிவ்
வனிதையை வதுவை செய்தால்
பண்டைநம் நட்பு மேலும்
பலமுறும் வாய்ப்பு முண்டாம்.
(இ -ள்) கண்டவள்-கண்டவளாகிய இச் சாவித்திரி; அவனை. அச் சத்தியவானை; தானே கணவனுய் வரித்துக் கொண்டாள் - தனது கணவனுகத் தானே தேர்ந்து கொண் Iாள்; இண்டைசேர் குழலினுளைமுல்லைமாலையையணிந்த கூந்தலினையுடையவளாகிய சாவித்திரியை: இங்கு நான் இட்டு வந்தேன் - இங்கு நான் கட்டிக்கொண்டு வந் தேன்; வண்டுஇமிர்தாரானுக்கு - வண்டுகள் மொய்க்கும் மாலையை யணிந்த சத்தியவானுக்கு; இவ் வனிதையை-இச் சாவித்திரியை: வதுவை செய்தால் திருமணம் செய்துவைத்தால்; நம் பண்டை நட்பு -எமது பழைமையான நட்பு; மேலும் பலமுறும் வாய்ப்புமுண்டாம் - மேலும் பலப்படுவதற்குரிய வாய்ப்புமுண்டாம எ-று) 9
334 காதலாற் பெற்ற கன்னி
கற்பினுற் கருத்து மாருள்
ஆதலால் ஐய அந்த
அண்ணலு மிசைவா னுகில்
FIT

Page 98
162
தீதிலா முகூர்த்தந் தன்னில்
திருமணம் முடிப்பீ ரென்று மாதுலாம் மருதஞ் சூழும்
மாத்திர மன்னன் சொற்ருன். (இ-ள்) காதலால் பெற்ற கன்னி - நான் அன்பினல் பெற்றெ டுத்த கன்னிப்பெண்ணுகிய இவள்; கற்பினல் கருத்து மாருள் -தான் கடைப்பிடிக்கும் கற்பின் மேம்பாட்டில்ை, தனது கணவனுகச் சத்திய வானை ஏற்றுக்கொண்ட கருத்தை மாற்றமாட்டாள்; ஆதலால் ஐய! -ஆனதன்மையால் தியுமற்சேனரே! அந்த அண்ணலும் - அந்தப் பெருமையிற் சிறந்த சத்தியவானும்; இசைவானகில்-அவளை மணக்க மனம் இசைவானனல், தீது இலா முகூர்த்தந் தன்னில் - குற்றமில் லாத சுப முகூர்த்தத்தில் திருமணம் முடிப்பீர் என்று - திருமண விஜனயை முடித்து வைப்பீராக என்று மாது உலாம் மருதம் சூழும் மாத்திர மன்னன் சொற்ருன் - அழகு தவழும் மருதநிலம் சூழ்ந்த மாத்திர நாட்டு அரசனகிய அசுவபதி சொன்னன். (எ-று) 1 O
தியுமற்சேனன் பதில்
335 நாட்டினை யிழந்தோஞ் செல்வ
நகரினை யிழந்தோம் பொன் செய்
வீட்டினை யிழந்தோம் மிக்க
வியன்பொரு விரிழந்தோம் மண்செய்
ஒட்டினைக் கையி லேந்தி
உணவினை யேற்றே யுண்டு
காட்டினில் வாழு மெம்மைக்
கணித்திட லெதுவோ மன்ன.
(இ- ள்) மன்ன -அசுவபதியாகிய அரசனே! நாட்டினை இழந் தோம்-நாம் சாலுவ நாட்டினை இழந்தோம்; செல்வ நகரினை இழந் தோம்--செல்வம் மிக்க தலைநகாையும் இழந்தோம்; பொன்செய் வீட் டினை இழந்தோம் - டொன்தகட்டினல் வேயப்பட்டதும், பொன்மு லாம் பூசப்பெற்றதுமான அரண்மனையை இழந்தோம்; மிக்க வியன் பொருள் இழந்தோம் -மிகவும் அதிகமான பொருள்களை இழந்தோம்; மண்செய் ஒட்டினைக் கையில் ஏந்தி - மண்ணினுற் செய்யப்பட்ட பாத்திரமாகிய ஒட்டைக் கையில் ஏந்தி; உணவினை ஏற்றே உண்டு -உணவினை யாசித்து அருந்தி; க்ாட்டினில் வாழும் எம்மை-காட்டி னில் வாழுகின்ற எம்மை; கணித்திடல் எதுவோ-ஒரு பொருட்டா கக் கரிைத்து எம்மிடம் வந்தது எதுவோ? (எ-று) ፲ 1

63
336 நும்புகழ் யாவுங் கேட்டோம்
நும்மகள் பொற்புங் கேட்டோம்
நம்மிக ணுக்கு வாய்த்த
நன்மனை ஐய மில்லை
எம்மரு மகளாய்க் கொள்ள
எமக்கதி விருப்பே யேனும்
நும்மக ளிந்தக் கானில்
நோதலை யடைவா ளன்றே.
(இ- ள்) நும்புகழ் யாவுங் கேட்டேர்ம் - அசுவபதி மன்னனே! உமது புகழ் எல்லாவற்றையும் கேட்டறிந்தோம்; நும்மகள் பொற் புங் கேட்டோம்-உமது மகளின் அழகைப்பற்றியும் கேட்டறிந்தோம்: நம்மகனுக்கு வாய்த்த நன்மன ஐயமில்லை -எமது மகனுக்கு அவள் வாய்த்த நல்ல மனைவியாவாள், அதில் சந்தேகமில்லை; எம்மருமக ளாய்க் கொள்ள, எமக்கு அதிவிருப்பே யேனும்-அவளை எமது மரு மகளாகக் கொள்ள எமக்கு அதிகம் விருப்பமே என்ருலும் நும்மகள் இந்தக்கானில் நோதலை அடைவாள் அன்றே -உமது அரசகுமாரியா கிய சாவித்திரி எம்முடன் இக்காட்டில் வசிக்கும்போது துன்பத்தை அடைவாளல்லவா? (எ-று) 2
337 அரண்மனைப் போகந் தன்னை
யநுபவித் திருந்த நங்கை
அரணியத் தெளிய வாழ்வி
லமைவதை யாற்ரு ளைய
அரசுட னிருந்தா னகில்
அண்ணலிவ் வணங்கின் செய்ய
கரங்களைப் பற்ற நாமுங்
களிப்புட னேற்போ மென்ருன்.
(இ-ள்) அரண்மனைப் போகந்தன்னை - அரண்மனையில் உள்ள பேர்கங்களை அநுபவித்து இருந்த நங்கை - அநுபவித்துக் கொண் டிருந்த சாவித்திரி; அரணியத்து எளிய வாழ்வில் அமைவதை - காட்டின் கண்ணே வறுமையான வாழ்வில் பொருந்துவதை ஆற் ருள் ஐய-பொறுக்கமாட்டாள் அரசனே; அரசுடன் இருந்தாணுகில்சத்தியவான் அரசாட்சியுடன் இருந்தானகில்; அண்ணல் இவ் அணங் கின் செய்ய கரங்களைப் பற்ற-பெருமைமிக்க அவன் இச் சாவித்திரி யின் அழகிய கைகளைப் பற்றிக் கொள்ள நாமும் களிப்புடன் ஏற்

Page 99
6.
போம் என்ருன்-நர்மும் மகிழ்ச்சியுடன் ஏற்போம் என்று தியூமற்சே னன் கூறினன். (எ-று) 13
அசுவபதி கூறல்
338 இன்பமுந் துன்பந் தானும்
என்றுமே நிலைப்ப தில்லை
அன்னமும் யானு மிந்த
அரசபோ கங்க ளெல்லாம்
மின்னலின் மாயு மென்ற
மெய்யினை யுணர்வோம் நன்றே
பொன்னியோ ரிடத்திற் றங்காள்
போதலும் வரலுங் கண்டோம்.
(இ- ள்) இன்பமும் துன்பந்தானும்; என்றுமே நிலைப்பதில்லைஒருவரிடத்தில் என்றும் நிலைத்து நிற்பதில்லை (மாறி மாறி வரும்); அன் னமும்-அன்னம் போன்ற நடையையுடைய சாவித்திரியும்; யானும்நானும்; இந்த அரச போகங்கள் எல்லாம் -அனுபவிக்கும் இந்தச் செல் வங்கள் எல்லாம்; மின்னலின் மாயும் என்ற மெய்யினை - மின்னலைப் போல் நிலையில்லாமல் அழிந்துவிடும் என்ற உண்மையை, நன்றே உணர்வோம் - நன்ருக உணர்வோம்; பொன்னி - இலக்குமி, ஓரிடத் தில் தங்காள்- எப்போதும் ஒரே இடத்தில் தங்கியிருக்க மாட்டாள் போதலும் வரலும் கண்டோம்-சிலகாலம் நீங்குதலும் சிலகாலம் வந்து இருத்தலும் ஆகிய செயல்களை நாம் கண்டோம் (எ-று) 14
339 கொற்றவெண் குடையின் நீழற்
கொலுவிருந் தாண்ட மன்னன்
மற்ருெரு நாளில் நாட்டை
மாற்றலன் பற்றிக் கொள்ள
உற்றவ ருறவோ ரின்றி
ஊரதி னெல்லை நீங்கிக்
கற்றரை துயின்று காலங்
கழிப்பதும் நாங்கள் கண்டோம்.
'இ-ஸ்) கொற்றவெண் குடையின் நீழல் - வெற்றி மிகுந்த வெண்கொற்றக் குடையின் நீழலிலே கொலு இருந்து ஆண்ட மன் னன்; மற்று ஒரு நாளில்: நாட்டை, மாற்றலன் பற்றிக்கொள்ள -

165
தனது நாட்டைப் பகைவன் கைப்பற்றிக்கொள்ள, உற்றவர் உற வோர் இன்றி-உற்ற துணைவரும் சுற்றத்தவரும் இன்றி, ஊ ர தின் எல்லை நீங்கி-தனது நாட்டின் எல்லையைவிட்டு நீங்கி; வேற்று நாட் டில்) கல்தரை -கல்லுத்தரையிலே துயின்று காலங்கழிப்பதும் நாங் கள் கண்டோம்-நித்திரை செய்து தனது காலத்தைக் கழிப்பதையும் நாங்கள் கண்டோம். (எ-று) 15
30 பெருநிதி படைத்த பேரும்
பெற்றதில் நிறைவு காணுர்
அரும்பொருள் அளவாய்ப் பெற்றேர்
அடைந்ததி லின்பங் காண்பார்
இருநிலத் தின்புந் துன்பும்
எம்மனம் அளவு கோலாய்
வருவதை வகுத்துக் காட்டும்
வழக்கமொன் றன்றி யுண்டோ.
(இ- ள்) பெருநிதி படைத்த பேரும் - மிகவும் பெரிய செல்வத் தைப் பெற்றவர்களும்; பெற்றதில் நிறைவு காணுர்-தாம் பெற்ற செல்வம் போதும் என்று மன நிறைவு காணுர்கள்; அரும்பொருள்பெறுதற்கரிய பொருள்ை; அளவாய்ப் பெற்ருேர் - வரையறையாகப் பெற்றவர்கள்; அடைந்ததில்-தாம்பெற்ற பொருளில்; இன்பம் காண் பார்-திருத்திப்பட்டு இன்பம் காண்பார்கள்; இருநிலத்து இ ன் பும் துன்பும் - மிகப்பெரிய இப் பூமியில் இன்பமும் துன்பமும்; எம்மனம் அளவு கோலாய்-எம்முடைய மனமே அளக்கும் அளவு கோலாக: வருவதை-எமக்கு வருபவைகளை வகுத்துக்காட்டும் - இது இன்பம் இது துன்பம், இது போதும், இது போதாது என்று வகுத்துக்காட்டு கின்ற; வழக்கமொன்று அன்றி உண்டோ-வழக்கமொன்று அன்றி Gap o6ì7G3 T? (6-p)
(வி-ம்) நிரம்பப் பொருளையுடையவர்களும், அது போதாது, இன்னும் வேண்டுமென்று வருந்துவார்கள். மிகக் குறைந்த பொருளே யுடைய வேறு சிலர் அந்தப் பொருளே போதும் என்று இன்பமா யிருப்பார்கள். எனவே செல்வத்தின் பரிமாணமல்ல இன்பதுன்பத்தைத் தருவது. செல்வத்தை மதிப்பீடு செய்யும் மனந்தான் இன்பதுன்பத் தற்குக் காரணம். மனமே அளவு கோல், "தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க’’ என்ற வாக் கையும் நோக்குக. 6

Page 100
166
3411 ஆதலா லைய விந்த
அன்னமு மழுங்கு மென்று
வேதனை கொள்ள வேண்டா
வேல்விழி நங்கை வேண்டல்
கோதிலாக் குணக்குன் முன குமரனை யன்றி யிந்தப்
பூதலத் தரச வாழ்வும்
போகமு மல்ல வென்றன்.
(இ-ள்) ஆதலால் ஐய-ஆகைய்ால் ஐயனே; இந்த அன்னமும் அழுங்கும் என்று-இந்த அன்னத்தை யொத்த நடைய்ையுடைய சாவித்திரியும் துன்பப்படுவாள் என்று: வேதனை கொள்ள வேண்டாம் - நீர் மன வேதனை யடைய வேண்டாம்; வேல்விழி நங்கை வேண்டல் - வேல்போன்ற கண்களையுடைய சாவித்திரி வேண்டுவது; கோது இலார் குணக்குன்ருன-குற்றமில்லாத குணமலை போன்றவனன; கு மர னை அன்றி-குமாரப் பருவமுடைய சத்தியவானையன்றி; இந்தப் பூதலத்து அரச வாழ்வும்-இந்தப் பூமியில் வாழ்கின்ற அரச வாழ்வும்; போக மும் அல்ல - போக போக்கியங்களுமல்ல; என்ருன்-என்று அசுவபதி சொன்னன். (எ-று) 17
சத்தியவானின் நிலை
342 அந்தவோ ரமயந் தன்னி
லண்ணலங் குழைய ஞகித்
தந்தையை மற்றை யோரைத்
தாழ்த்திமெய் வணங்கிப் பாங்கர்
முந்தியக் கானிற் கண்ட
முழுமதி நிற்பக் கண்டு
சிந்தையில் மகிழ்வு கொண்டு
செய்வதொன் றறியா நின்முன்.
(இ - ள்) அந்த ஒர் அமயந் தன்னில் ~ அந்தச் சமயத்தில்; அண் ணல் அங்கு உழையன் ஆகி சத்தி பவான் அங்கு அண்மையில் வந்து நின்று; தந்தையை மற்றையோரைத் தாழ்த்தி மெய்வணங்கி - தகப்ப னையும் ஏனையோரையும் உடம்பைத் தாழ்த்தி நன்கு வணங்கி; பாங் கர்-அவர்களின் பக்கத்தில்; முந்தி அக்கானில் கண்ட- தான் முந்தி ஒரு தினம் அந்தக் காட்டிற் கண்ட முழுமதி நிற்பக் கண்டு - பூரண சந்திரன் போன்ற அழகிய முகத்தினையுடைய சாவித்திரி நிற்பதைக்

167
கண்டு; சிந்தையில் மகிழ்வு கொண்டு. தனதுமனத்தில் 1:கிழ்ச்சிய டைந்து: செய்வதொன்று அறியா நின்றன் - வியப்பால் என்ன செய் வதென்று அறியாதவனுக நின்றன். (எ . று) 8
343 தன்னுளங் கொள்ளை கொண்டு
தவிப்பினி லாழ்த்திச் சென்ற
கன்னியைக் களிப்பி னேடு
காளையும் பலகால் நோக்கும்
தன்னிக ரில்லாள் தாலி
தரித்தில வின்னு மென்னும்
மின்னிவள் மெலிந்தா ளென்னும்
மெல்லிடை தாங்கா தென்னும்,
(இ-ள்) தன்னுளம் கொள்ளை கொண்டு-தன்னுடைய உள்ளத் தைக் கவர்ந்து கொள்ளை கொண்டுபோய்; (தன்னை) தவிப்பினில் ஆழ்த்திச் சென்ற-தன்னை மனவருத்தத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றவ ளாகிய, கன்னியை - சாவித்திரியை, களிப்பினேடு-மனமகிழ்ச்சியோடு: காளையும்-சத்தியவானும்; பலகால் நோக்கும்; தன் நிகர் இல்லாள்-- வேறு ஒருவரும் தனக்கு நிகரில்லாதவளாகிய சாவித்திரி; இன்னும் தாலி தரித்திலள் என்னும் -இன்னும் திருமாங்கலியம் தரித்திலள் (ஆத லால் அவளுக்கு திருமணமாகவில்லை) என்னும்; மின் இவள் மெலிந்தாள் என்னும்-மின்னற்கொடி போன்ற இவள் மெலிந்தாள் என்னும்; மெல் விடை தாங்கா தென்னும்-மெல்லிய இடையானது தனபாரத்தைத் தாங்காது என்னும். (எ-று) 9
என்னும் ~ என்று சொல்வான், என்று எண்ணுவான்.
344 என்றவப் பயனே யிற்றை
யிஷளையான் கண்டே னென்னும்
பன்னவன் மகளு மென்னை -
மறந்திலள் போலு மென்னும்
பொன்னியைத் தருவா னேவிப்
புரவலன் விரும்பி யென்னும்
கன்னியின் கையைப் பற்றுங்
காலமும் வருமோ வென்னும்,
(இ-ள்) இற்றை இவளை யான் கண்டேன் என்தவப்பயனே என்னும்-இன்று இவளை யான் கண்டனன். இது யான் செய்தி தவப்
Φι ぐ2 Q> ○ d محماسی، ث பயனே என்று எண்ணுவான்; மன்னவன் மகளும் என்ன் மறித்தில்வி

Page 101
168
போலும் என்னும் - அசுவபதியின் மகளும் என்னை இன்னும் மறக்க வில்லைப் போலும் என்று எண்ணுவான்; பொன்னிய்ை -இலக்குமி போன்ற சாவித்திரியை, இப்புரவலன் விரும்பி தருவானே என்னும்இந்த அசுவபதி மன்னன் விருப்பத்துடன் எனக்கு தருவானே என்று எண்ணுவான்; கன்னியின் கையைப் பற்றும்-சாவித்திரியின் கையைப் பற்றித் திருமணஞ் செய்கின்ற; காலமும் வருமோ என்னும் - ஒரு காலமும் வந்து வாய்க்கப் பெறுமோ என்று எண்ணுவர்ன் (எ-று) 20
சாவித்திரியின் நிலை
345 வைவடி வேலொண் கண்ணி வள்ளலின் வரவு கண்டு கைவளை திருத்து வாள்போ ற்
கடைக் னி னவனை நோக்கும் ஐயனும் நோக்க நாணி
யவள்விழி நிலத்தை நோக்கும் தையல்மெய் துகிலால் மூடித்
தரையினை விரலாற் கீறும்.
(இ ள்) வைவடிவேல் ஒண்கண்ணி-கூர்மையாக வடிக்கப்பெற்ற வேலையொத்த ஒளி பொருந்திய கண்களையுடைய சாவித்திரி; வள்ள லின் வரவு கண்டு -சத்தியவானின் வரவினைக் கண்டு; கைவளை திருத்து வாள்போல்- தனது கைவளைகளைத் திருத்துபவளைப் போல; கடைக் கணின் அவனை நோக்கும்-தனது கடைக்கண்ணுலே சத்தியவானைப் பார்ப்பாள்; ஐயனும் நோக்க-சத்தியவானும் அவளை அச்சமயத்தில் பார்க்க; அவள் நாணி-அவள் நாணமடைந்து நிற்க விழி நிலத்தை நோக்கும்-அவளது கண்கள் பூமியைப் பார்க்கும்; தையல் - பெண்க ளுட் சிறந்த சாவித்திரி; மெய் துகிலால் மூடி - தனது உடம்பைச் சேலைத்தலைப்பால் மூடிக்கொண்டு; தரையினை விரலாற் கீறும்-தரை யினைக் காற் பெருவிரலாற் கீறுவாள். (எ-று)
(வி - ம்) அவனை நேராகப் பார்க்க வெட்கப்பட்டு, தனது கை வ3ளகளைச் சரிசெய்வதுபோற் பாசாங்கு செய்து, கடைக்கண்ணுற் பார்த்தாள்; அதே நேரம் அவனும் பார்க்க, நாணமடைந்து நிலத்தை நோக்கினள்; தன்னை ஒரு ஆடவன் பார்க்கிருன் என்ருல், முன்முனை பால் மார்பகத்தை மூடிக்கொள்ளு நல் இயல்பாக நடைபெறுவது. நிலத்தைக் கால்விரலாற் கீறுவது மீறிப்பாயும் உள்ளத்தைத் தடுத்து ஒருமுகப் படுத்த முயல்வதாகும். 2.

169
348 கானகத் திந்தக் காளை
கார்முக விராமன் போலும்
நானவன் றனக்கு வாய்த்த
நல்லவோர் சீதை போலும்
ஊனமுற் றிருக்குஞ் சேனற்
குறுபணி விடைகள் செய்வேன்
மானகு விழியாள் மாமி
மறுப்பளோ வென்னை யென்னும்.
(இ- ள்) கானகத்து - காட்டின் கண்ணே வசிக்கின்ற; இந் தக் காளை - இந்த அழகிய குமரனுகிய சத்தியவான்; கார் முக இராமன் போலும் வில்லையேந்திய இராமனை ஒப்பான் போலும்; நான் அவன் தனக்கு வாய்த்த-நான் அக்காளைக்குக் கிடைத்த நல்ல ஓர் சீதை போலும்; ஊனம் உற்று இருக்கும் சேனற்கு-கண் ஊன முற்று பார்வைகுன்றி இருக்கும் தியூமற் சேனருக்கு உறுபணிவிடை கள் செய்வேன் - பொருந்திய மிக்க பணிவிடைகளை நான் செய்வேன்ச் மான் நகு விழியாள்-மானைப் பழிக்கும் விழிகளையுடையவளாகிய; மாமி-சத்தியவானின் அன்னை; என்னை மறுப்பளோ என்னும் -என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுப்பாளோ என்று எண்ணுவாள்' (எ-று) 22
347 அங்கவர் நிலையை நோக்கி
யவருள மறிந்தார் பெற்றேர்
இங்கிவர் வதுவை செய்ய
இனியெமக் குடன்பா டென்ருர்;
மங்கல நாணைப் பூட்ட
மறையவர் கணித்தார் நேரம்
தங்கள்கூ டாரத் திற்குத்
தையலை யழைத்துச் சென்ருர்,
(இ- ள்) பெற்றேர்-பெற்றேர்கள்; அங்கு அவர் நிலையை நோக்கி - அங்கு சத்தியவானும் சாவித்திரியும் நின்ற காதல் நிலைமையைக் குறிப்பால் பார்த்து; அவர் உளம் அறிந்தார்-அவ்விருவரின் உள்ளக் கருத்தையும் அறிந்து கொண்டனர்; இங்கு இவர் வதுவை செய்யஇங்கு இவ்விருவரும் திருமணஞ் செய்ய; இனி எமக்கு உடன்பாடு என்ருர்-இனி எமக்குச் சம்மதமே என்ருர்கள்; மங்கல நாணேப் பூட்ட-மங்கல சூத்திரந் தரித்துக்கொள்ள மறையவர் நேரம் கணித்

Page 102
17ህ
தார்-அந்தணர்கள் சுபமுகூர்த்தத்தைக் கணித்துக் கூறினர்கள்; தங் கள் கூடாரத்திற்கு தையலை அழைத்துச் சென்ருர்-அசுவபதியும் கூட வந்த அமைச்சரும் தாங்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குச் சாவித் திரியை அழைத்துக்கொண்டு சென்ழுர்கள். (எ-று)
(வி-ம்) தியூமற்சேனனுக்குக் கண்பார்வை குறைவு. அவன் மனைவி யுங் கூட இருந்தாள். அவள் அவனுக்கு அந்தக் காதலர்களின் நிலையைக் கூறினுள். பெற்ருேர் எனக் கூறியது அசுவபதியையும், தியூமற் சேன னேயும், அவன் மனேவியையும் குறிக்கும். 33
மறுநாட் சூரியோதயம் 諡48 பனைமுலைப் பாவை யாட்கும் பார்த்திய லுக்கு மின்று மணவினை நிகழு மென்று
மதுகர மிசைத்த கானம் துணரிதழ் விரித்த புள்ளின்
தொழுதியார்ப் பரவஞ் செய்த; குணதிசை யெழுந்தான் பானு
கோமகள் வதுவை காண்டான்.
(இகள்) பணைமுலை பாவையாட்கும் - பருத்த முலைகளையுடைய பாவைபோன்ற மங்கையாகிய சாவித்திரிக்கும்; பார்த்திபனுக்கும் - அரசகுமாரனுன சத்தியவானுக்கும்; இன்று மணவினை நிகழுமென்று --திருமணம் நிகழும் என்று; மதுகரம் - வண்டுகள்; கானம் இசைத்தமகிழ்ந்து ரீங்காரஞ் செய்தன; துணர்-பூக்கள்; இதழ் விரித்த-இதழ் களை விரித்தன; புள்ளின் தொகுதி பறவைகளின் கூட்டம்; ஆர்ப் பரவஞ்செய்த-ஆரவாரஞ்செய்தன; குணதிசை-கிழக்குத் திசையில் கோமகள் வதுவை காண்பான். சாவித்திரியின் திருமணத்தைக் காணும் பொருட்டு பானு எழுந்தான் --சூரியன் உதயமானன். (எ- று) 24
சாவித்திரியைத் திருமுழுக்காட்டில் 349 காலையிற் கன்னி தன்னைக்
கவின்மணித் தவிசி ருத்திப் பாலுட னறுகு வைத்துப்
பனிமல ரிட்ட நீராற் சேலுறழ் கண்ணி னல்லார்
திருமுழுக் காட்டி ஞர்கள் ஏலவார் குழலு லர்த்தி
யின்புகை யூட்டி ஞர்கள்.

17
(இ- ள்) காலையில் - சூரியன் உதித்த அந்நேரத்தில்; கன்னிதன்னை -கன்னியாகிய சாவித்திரியை, கவின்மணி தவிசு இருத்தி - அழகிய மணிகள் பதித்த இருக்கையில் இருத்தி, பாலுடன் அறுகு வைத்துபசும்பாலும் அறுகும் சேர்த்து வைத்து; பனிமலர் இட்ட நீரால் - குளிர்ந்த வாசனையுள்ள மலர்கள் இட்ட நீரிஞல்; சேல் உறழ் கண் ணின் நல்லார் -சேல் மீனை ஒத்த கண்களையுடைய பெண்கள்; திரு முழுக்காட்டினர்கள் - நீராட்டினர்கள்; ஏலவார்குழல் உலர்த்தி - வாசனை கமழுகின்ற நீண்ட கூந்தலை நீரில்லாது துவட்டி இன்புகை -- இனிய நறுமணம் கமழும் அகில் முதலியவற்றின் புகையை ஊட்டி ஞர்கள்-அவளின் கூந்தலுக்கு ஊட்டினர்கள். (எ-று) 芝5
சாவித்திரியைக் கோலஞ் செய்தல்
350 பொன்னிழை தூசு டுத்திப்
புணர்முலைக் கச்சு வீக்கி
மின்னிடைக் காஞ்சி சேர்த்தி மெய்யினிற் சாந்து பூசி
நன்னுதற் றிலக மிட்டு
நறுமலர் மாலை சூட்டிப்
பொன்னணி கலன்கள் பூட்டிப்
பூவையைக் கோலஞ் செய்தார்.
'இ-ள்) பொன் இழை தூசு - பொன் (சருகை) இழைக்கப் பட்ட சேலையை உடுத்தி-கட்டி; புணர்முலைக் கச்சு வீக்கி -இணை முலைகளில் கச்சுக்கட்டி; மின் இடை காஞ்சி சேர்த்தி - மின்ன ந் கொடிபோலும் இடையில் எட்டுக் கோவை மலரியாகிய காஞ்சியைக் கட்டி; மெய்யினில் சாந்து பூசி-உடம்பினிலே சந்தனம் பூசி, நல்நுதல் திலகம் இட்டு -நல்ல அழகிய நெற்றியில் பொட்டு இட்டு; நறுமலர் மாலை சூட்டி-வாசனை பொருந்திய மலர்களாற் ருெடுக்கப்பட்ட மாலை யைச் சூட்டி; பொன் அணிகலன்கள் பூட்டி-பொன்னலான ஆபர ணங்களைப் பூட்டி பூவையை-நாகணவாய்ப்புட்போன்ற பேச்சினை யுடைய சாவித்திரியை கோலம் செய்தார் - அலங்காரஞ் செய்தார் கள். (எ-று) 26
35 அஞ்சனங் கண்ணுக் கிட்டார்
ஆலநீர் சுற்றி ஞர்கள் வஞ்சியர் மலர்கள் தூவி
வாழ்கென வாழ்த்தி னர்கள்

Page 103
172
பஞ்சின் மெல் லடியாள் மன்னன் பரிசன ருறவோர் சூழக்
கஞ்சிகை மீதி வர்ந்து
கடிமனைக் கேக லானுள்.
(இ- ள்) கண்ணுக்கு அஞ்சனம் இட்டார்-கண்ணுக்கு மை எழு தினர்கள்; ஆலநீர் சுற்றினர்கள் - சுண்ணும்பும் மஞ்சளும் கலந்த நீரால் ஆலத்தி சுற்றிஞர்கள்; வஞ்சியர் - வஞ்சிக்கொடிபோன்ற இடையையுடைய் பெண்கள்; மலர்கள் தூவி- பூக்களைத் தூவி வாழ்க என வாழ்த்திஞர்கள்-நன்கு வாழ்க என்று வாழ்த்தினர்கள்; பஞ் சின் மெல் அடியாள்-பஞ்சுபோன்ற மென்மையான பாதங்களையுடைய சாவித்திரி; மன்னன்-அசுவபதியும்; பரிசனர்-ஏவல் செய்வோரும் உறவோர்-உறவோரும்; சூழ-சூழ்ந்துவர கஞ்சிகை மீது இவர்ந்துஇரத்தினச் சிவிகை மீதேறி, கடிமனைக்கு ஏகலானுள்-கலியாண வீட் டின் கண்ணுள்ள மணவறைக்குச் செல்லலானள். (எ-று) 27
சத்தியவானத் திருமுழுக்காட்டில் 352 சத்திய வானை யங்குச்
சார்தவ மேலோர் கூடிச் சித்திர மணையி ருத்திச்
சிரசினி லறுகும் பாலும் வைத்தனர் கங்கை நீரால்
வள்ளலை யாட்டிப் பின்னர் மத்திர மன்னன் தந்த
மணியணி பூட்டி ஞர்கள். (இ-ள்) சத்தியவானை - அத்தருணம், மணமகனுகிய சத்திய வானை அங்கு சார்தவ மேலோர் கூடி-அவ் வனத்திற் சார்ந்திருந்த தவ ஒழுக்கமுடைய மேலோர்கள் கூடி சித்திரமணை இருத்தி - அழ கிய இருக்கையில் இருத்தி; சிரசினில் பாலும் அறுகும் வைத்தனர் - தலைமீது, பாலும் அறுகும் வைத்தார்கள்; கங்கை நீரால் கங்கா நீரி ஞலே; வள்ளலை - சத்தியவான ஆட்டி-திருமுழுக்காட்டி பின்னர்; மத்திரமன்னன்-மத்திரநாட்டு மன்னணுகிய அசுவபதி தந்த - அன்பு, டன் கொடுத்த மணி அணி-அழகிய அணிகலன்களை பூட்டினர்கள்தரித்தார்கள். (எ-று)
(வி-ம்) காட்டில் தவஞ் செய்வோருக்கு அணிகலன்கள் கிடை யாது; மத்திர மன்னன் அன்புடன் உபகரித்த அணிகலன்களைப் பூட் டிஞர்கள் என்க. 28

173
353 மென்றுகி லரையிற் கட்டி
மெய்யினிற் சால்வை போர்த்திச்
சென்னியிற் றலைப்பா வைத்துச்
செவிகளிற் கடுக்கன் பூட்டிப்
பொன்னணி யாரம் மார்பிற்
பொலிவுற நீறணிந்து
கன்னவில் தோளான் வந்து
கடிமனை சேர்ந்தா னன்றே.
(இ-ள்) மென் துகில் அரையில் கட்டி - மென்  ைம யான ஆடையை அரையில் தரித்து; மெய்யினில் -உடம்பை மூடி, சால்வை -- உத்தரீயம்; போர்த்தி; சென்னியில் - தலையில்; தலைப்பா - தலைப்பா கையை வைத்து-குட்டி; செவிகளிற் கடுக்கன் பூட்டி; பொன் அணிபொன்னலான அணிகலன்கள்; ஆரம்-மாலை; மார்பிற் பொலிவுற - ஆகியன மார்பிலே பொலிய; நீறணிந்து திருநீற்றையும் அணிந்து; கல்நவில் தோளான்-கல்லென்று சொல்லும்படியான திண்மையான தோள்களையுடைய சத்தியவான்; கடிமனை - மணவறையை வந்து சேர்ந்தான்-வந்து அடைந்தான். அன்று, ஏ-அசைகள். (எ-று) 29
சாவித்திரியின் வருகை
354 மணியொளிர் சிவிகை மீது
மங்கைவிற் றிருந்த போது
அணிநிரை யுடுக்கள் நாப்பண்
அமைந்தவெண் மதிய மொத்தாள்;
துணி திரை யசைதல் விண்ணிற்
றுயல்வரு மெழிலி யொக்கும்
குணில்முர சறையு மார்ப்புக்
கொண்டலி னுருமை யொக்கும்.
(இ -ஸ்) மணி ஒளிர் சிவிகை மீது - இரத்தினக் கற்கள் பிரகா சிக்கும் சிவிகை மேலே: மங்கை வீற்றிருந்தபோது-சாவித்திரி வீற்றி ருந்த பொழுது அணி நிரை உடுக்கள் நாப்பண் - அணியாக நிரைந்த தாரகைகளின் நடுவே; அமைந்த வெண்மதியம் ஒத்தாள்; அமைந் துள்ள வெண்மையான பூரண சந்திரனை ஒத்து விளங்கிள்ை. துணிை திரை அசைதல் - சீலையினுலான திரை அசைதல்; விண்ணில் துயல் வரும் எழிலி ஒக்கும் - ஆகாயத்தில் அசையும் மேகத்தை ஒக்கும்;

Page 104
74
குணில் முரசு அறையும் ஆர்ப்பு - குலவில் என்னும் பறையும், முரசும் அடித்தலால் உண்டான பேரொலி கொண்டலின் உருமை ஒக்கும்மேகத்தின் இடியோசையை நிகர்க்கும். (எ-று) 30
355 மழைமதர்க் கண்ணி னட்கு
மானினங் கவரி வீசும்
துளையுடைக் கைம்மா தன்கை
தூக்கியே வணங்கி நிற்கும்
கிளையமர் பட்சி சாலம்
கிளர்ந்துநல் வரவு கூறும்
ைைழநறு மலர்கள் தூவி
வனிதையை வாழ்த்தும் மாதோ,
(இ- ள்) மழைமதர் கண்ணினுட்கு - குளிர் ச் சி பொருந்திய மதர்த்த கண்களையுடைய சாவித்திரிக்கு; மானினம் கவரி வீசும் - மானின் இனமாகிய கவரிமான்கள் சாமரம் இரட்டும்; துளை உடை கைமா - துவாரம் பொருந்திய கையையுடைய யானை; தன்கை தூக் கியே வணங்கி நிற்கும்-தன்னுடைய கையைத் தூக்கி அவளை வண்ங்கி நிற்கும்; கிளே அமர் பட்சி சாலம் --மரக் கிளைகளில் அமர்ந்திருக்கும் பட்சிகளின் கூட்டம்; கிளர்ந்து நல் வரவு கூறும் - குதூகலித்து அவ ளுக்கு நல்வரவு கூறுவது போலப் பல ஒலிகள் செய்யும் வழை~ சுர புன்னை; நறுமலர்கள் தூவி-நல்ல வாசனையுள்ள மலர்களைச் சொரிந்து வனிதையை வாழ்த்தும் - சா வித் தி ரி தேவியை வாழ்த்தும். மாது ஒ-அசைகள். (எ-று) 3
356 மங்கையின் சாயல் கண்டு
மஞ்ஞைகள் நாணி நிற்கும்
அங்கவள் பார்வை கண்டே
அரினமா வெட்சி நிற்கும்
திங்கள்வெண் வதனங் கண்டு
தெண்கயத் தல்லி விள்ளும்
கொங்கவிழ் கோதை யாளின்
குதலையைக் கிள்ளை கற்கும்.
(இ -ள்) மங்கையின் - சாவித்திரியின் சாயல் கண்டு - மாமை யைக் கண்டு; மஞ்ஞைகள் - மயில்கள், நாணி நிற்கும் - வெட்கி ஒதுங்கி நிற்கும்; அங்கு அவள் பார்வுை கண்டு - அங்குள்ள அவளது

75
கண்களைக்கண்டு; அரிணமா - மான்கள்; வெட்கி நிற்கும்; திங்கள் வெண் வதனம் கண்டு - சந்திரனைப்போன்ற வெண்மையான அவள் முகத்தைக் கண்டு; தெண் கயத்து அல்லி விள்ளும் - தெளிந்த நீரை யுடைய குளத்தில் அல்லி மலர்கள் மலரும்; கொங்கு அவிழ் கோதை யாளின்-தேன்கட்டவிழும் பூ மாலையையுடைய சாவித்திரியின் குத லையை-இனிய மழலைமொழியை; கிள்ளை-கிளிகள்; கற்கும்-கற்றுக் கொள்ளும் (எ-று) 32
சாவித்திரி மணமண்டபத்தையடைதல்
வேறு
357 சங்கமொடு துந்துமியுஞ் சச்சரியும் விம்ம
நங்கையர்தம் வாழ்த்தொலிகள் நாற்றிசையு மார்ப்பக் கொங்குமலர் மாரியெனக் கோதையர்கள் பெய்ய மங்கைமட மஞ்ஞையென மண்டபம டைந்தாள்.
(இ-ள்) சங்கமொடு துந்துமியும் சச்சரியும் விம்ம - சங்கும், துந் துமியென்னும் பேரிகையும் சச்சரி யென்னும் வாத்தியமும் ஒலிக்க; நங்கையர்தம் வாழ்த்தொலிகள்-சூழவரும் பெண்களின் வாழ்த்தோ சைகள்; நாற்றிசையும் ஆர்ப்ப-நான்கு திசைகளிலும் பே ரொ லி செய்ய; கொங்கு மலர்-வாசனை பொருந்திய மலரை மாரியென - மாரி மழை பெய்கிறது என்னும்படி கோதையர்கள் - பெண்கள்; பெய்ய-சொரிய; மங்கை-சாவித்திரி; மடமஞ்ஞையென - அழகுள்ள மயிலென; மண்டப மடைந்தாள்-கலியான மண்டபத்தை அடைந் தாள். (எ=று)
(வி-ம்) துந்துமி-பேரிகை (கழகத்தமிழ் அகராதி, தமிழ்ப் பேர கராதி காண்க). 33
விவாகக் கிரியை நடித்தல்
358 வேதநெறி வேதியர்கள் வேதிகைய மைத்தார்
ஆதிசிவ னம்பிகைக்கு மர்க்கியங்கள் செய்தார் தீத கல ஒன்பதுகோள் தேமலர் கெர்ண் டேத்தி
வேதியினில் நெய்சொரிந்து வேள்விமுறை செய்தார்.
(இ- ள் வேதியர்கள்-அந்தணர்; வேதநெறி-வேதத்திற் சொல் லப்பட்ட விதிப்படி; வேதிகை-மணமேடையை அமைத்தார் - செய் தார்கள்; ஆதி சிவன் அம்பிகைக்கும்-ஆதி கர்த்தராகிய சிவனுக்கும்

Page 105
76
பார்வதிக்கும்; அாக்கியங்கள் செய்தார் - பூசைகள் செய்தார்; தீது அகல-தீமைகள் நீங்க; ஒன்பது கோள் - நவக்கிரகங்களை தேமலர் கொண்டேத்தி-தேனும் வாசனையும் பொருந்திய மலர்கொண்டு தூவி வணங்கி; வேதியினில் நெய் சொரித்து - ஒம குண்டத்தில் நெய்யைச் சொரிந்து; வேள்வி முறை செய்தார் - ஆகம விதிப்படி யாகத்தைச் செய்தார். (எ-று)
(வி-ம்) சிவன் பார்வதி பூசை, நவக்கிரக பூசை, அக்கினி காரி யம் நடந்ததெனக் கூறப்பட்டது. இதற்கு முன் செய்யற்பாலனவாகிய புண்ணியாவனம், சந்திரபூசை முதலியனவும் செய்தார் கள் எனக் கொள்க. 34
மாப்பிள்ளை பாதபூசை, சம்பந்தி உபசாரம்
339 மாத்திரதே சத்தரசன் மாப்பிள்ளையின் பாதம் ஏத்தியபின் சாலுவனுக் குபசரணை செய்ய மாத்திரற்குச் சாலுவனு மவ்விதமே செய்தான் கோத்திரம்பேர் சபையறியக் குருக்களுமே சொன்னர்
(இ- ள்) மாத்திர தேசத்தரசன் - மாத்திர தேசத்து அரசனுகிய அசுவபதி; மாப்பிள்ளையின் பாதம் ஏத்தியபின்-சத்தியவானுக்குப் பாத பூசை செய்து முடித்த பின்பு: சாலுவனுக்கு உபசரணை செய்ய - சம் பந்தியாகிய தியூமற் சேனனுக்கு உபசாரங்களைச் செய்ய; மாத்திரற்குஅசுவபதிக்கு; சாலுவனும்-தியூமற் சேனனும்; அவ்விதமே செய்தான் -அந்த விதமாகவே உபசாரங்களைச் செய்தான்; குருக்களும் கோத் திரம்பேர் சபையறியச் சொன்னர் - அதன் பின்னர் குருக்கள், மண மகன், மணமகளின் கோத்திரங்களையும், அவர்களின் பாட்டன் பெயர், தந்தை பெயர், அவர்கள் பெயர் ஆகியவற்றையும் சபையோர் அறி பும்படி சொன்னர், (எ - நூறு; ፵ 5
கன்னிகாதானம்
360 அங்கிகுரு அந்தணர்கள் அச்சபையோர் சான்ருய்
மங்கலப்பொன் மஞ்சளுடன் மாத்திரத்து மன்னன் நங்கைதனை நீர்சொரிந்து நம்பியவற் கீயப் புங்கவனுந் தன்மனையாய்ப் பொற்கொடியை யேற்ருன்
(இ) - ள்) அங்கில அக்கினி, குரு - ஆசாரியர்; அந்தணர்கள்; அச் சபையோர்-அங்கு அந்தச் சபையில் இருந்தோர்; சான்ரு ய் -சாட்சி

177
யாக, மங்கலப்பொன் மஞ்சளுடன் - மங்கலமான பொன்னுடனும், மஞ்சளுடனும்; மாத்திரத்து மன்னன் - மாத்திரதேய அரசனன அசுவ பதி; நங்கைதனை - சாவித்திரியை, நீர் சொரிந்து நம்பியவற்கு ஈயநீர் வார்த்துத் தத்தம் பண்ணிச் சத்தியவானுக்குக் கன்னிகாதானத் தைச் செய்து கொடுக்க, புங்கவனும் சிறந்தோனகிய சத்தியவானும்: தன் மனையாய் - தன்னுடைய மனைவியாக, பொற்கொடியை - பொற் கொடி போன்றவளாகிய சாவித்திரிய்ை; ஏற்ருன் - தனது மனையா ளாக ஏற்றுக்கொண்டான். (எ-று)
(வி - ம்) மங்கலப்பொன், மஞ்சளுடன், பழம் பாக்கு வெற்றிலை தேங்காய் நெல் ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தான் எனக் கொள்க. 36
கூறை கொடுத்தல்
361 குங்குமநி றத்ததொரு கூறையினைக் காளை
நங்கையிடந் தந்திடவும் நாணமுட னேற்றே அங்கிருந்து சென்ருெருசார் ஆடைதனை மாற்றிச் செங்கையினில் மாலைகொடு சேயிழையும் வந்தாள்.
(இ - ள்) குங்கும நிறத்தது ஒரு கூறையினை - செங் குங்குமநிறத் தினையுடைய ஒரு கூறைச் சேலையை, காளை-சத்தியவான்; நங்கையி டந் தந்திடவும் - சாவித்திரியிடம் கொடுக்கவும்; நாணமுடன் ஏற்றுஅவள் அதை நாண்த்துடன் ஏற்று; அங்கிருந்து சென்று ஒரு சார் ஆடைதனை மாற்றி - அங்கிருந்து ஒரு பக்கமாகச் சென்று (மறை விடத்தில்) உடுத்த சேலையைக் களைந்து கூறைச் சேலையை உடுத் துக்கொண்டு; செங்கையினில் மாலை கொடு - சிவந்த கையினிலே ஒரு பூ மாலையை ஏந்திக் கொண்டு; சேயிழையும் வந்தாள் - செவ்விதாகிய ஆபரணங்களை அணிந்தவளாகிய சாவித்திரியும் வந்தாள். (எ-று) 37
மாலை மாற்றல், மங்கல நானேற்றல்
362 மங்கைமண மாலையினை மாப்பிள்ளைக்குச் சூட்ட
அங்கவன்றன் மாலேயினை யவ்வணிதைக் கிட்டான்
மங்கலநல் லோரைதனில் மாங்கலியங் கட்ட
அங்கெழுந்த வாழ்த்தொலிபோய் அண்டமுக டுற்ற.
(இ- ள்) மங்கை-சாவித்திரி, மணமாலையினை-பண மாலையை: மாப்பிள்ளைக்குச் சூட்ட-மணமகனுக்குச் சூட்ட அங்கு - அப்போது:
- சா - 12

Page 106
178
அவன்- சத்தியவான்; தன் மாலையினை-தன் கழுத்திலணந்திருந்த பூ மாலையை; அவ் வனிதைக்கு இட்டான்-சாவித்திரிக்குச் குட்டினுன் மங்கல நல் ஒரைதனில்-மங்கலமான நல்ல முகூர்த்தத்தில்; மாங்க லியங்கட்ட-திரு மாங்கலியத்தைச் சாவித்திரிக்குக் கட்ட அங்கெ முந்த வர்ழ்த்தொலிபோய்-அம் மண்டபத்திலிருந்து எழுந்த வாழ்த் தோசையர்னது சென்று; அண்டமுகடுற்ற - அண்டத்தின் உச்சியை அடைந்தது. (எ-று) 38
மணமகனும் மணமகளும் வீற்றிருந்த பொலிவு
383 கன்னவில்தோட் காளையுடன் கஞ்சமுக வஞ்சி
மின்னுமணிப் பீடமிசை வீற்றிருந்த போது, தென்மதுரை மீனுட்சி தேவியிட மாகத் V− தன்னிகரில் சுந்தரனுர் தாமிருந்த தொத்தார்.
(இ. ஸ்) கல்நவில் தோள் காளையுடன்-மலையென்று சொல்லும் படியான அழகும் வலிமையும் உள்ள தோள்களையுடைய சத்திய்வானு டன் கஞ்சமுக வஞ்சி-தாமரைபோலும் முகத்தையுடைய வ ஞ் சிக் கொடிபோன்ற சாவித்திரி; மின்னும் மணிப்பீடமிசை-பிரகாசிக்கும் மணிகள் அமைத்த அழகிய பீடத்தின்மேல்; வீற்று இருந்தபோது: தென்மதுரை மீனுட்சி தேவி; இடமாக--இடப் பக்கமாக தன் நிக ரில்-தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாதவராகிய; சுந்தரனுர்-சோம சுந்தரக் கடவுள் தாமிருந்தது ஒத்தார். (எ-று) 39
பால் பழம் புசித்தல், பாணிக்கிரகணம்,
அரசாணி வலம் வருதல்
364 அன்னமுட னையன் நறும் பால்பழம்பு சித்து
முன்னர்பசுக் கன்றுவர முழித்துமகிழ் வுற்ருர் கன்னியவள் மென்விரலைக் காளேகரம் பற்றி வன்னியர சாணிவலம் மூன்றுமுறை வந்தான்.
(இ-ள்) அன்னமுடன் ஐயன் - சாவித்திரியுடன் சத்தியவான்; பால் பழம் புசித்து; முன்னர் பசுக்கன்று வர-தம்முன்னே பசுக்கன் முனது வர முழித்து - அதில் முழித்து; மகிழ்வுற்ருர் கன்னி யவள் மென் விரலை - கன்னிகையாகிய சர்வித்திரியின் மென்மை யான கை விரலை; காளை - சத்தியவான்; கரம் பற்றி - பாணிக் கிரக ணஞ் செய்து; வன்னி-ஓமத் தீயையும்; அரசர்ணி-அரசாணியையும்

79
மூன்று முறை வலம் வந்தான். (அரசாணி வலம் வந்தபொழுது அம்மி மிதித்தலும் நடைபெற்றது எனக் கொள்க.) (எ~று) 4份
சத்தியவான் கையைப்பற்றிய போது சாவித்திரியின் மெய்ப்பாடு
365 காந்தளங்கை தன்னையவன் கைப்பிடித்த போது
காந்தமின்னல் பட்டதெனக் கன்னியதிர் வுற்ருள் மாந்தளிர்மெய் வேர்வைகொள்ள மயிர்குத்தி நிற்ப ஏந்திழைதன் வசமிழந்தவ் வேந்தலின்பின் சென்ருள்.
(இ- ள்) காந்தள் அம் கை தன்னை-காந்தட்பூப்போலும் அழகிய கையை அவன் கைப்பிடித்த போது-சத்தியவான் கையினற் பற்றிய போது; காந்த மின்னல் பட்டதென-பிரகாசமான மின்னல் (மின் சாரம்) பட்டதென; கன்னி அதிர்வுற்ருள் - சாவித்திரி ந டு க் கம் (அதிர்ச்சி) அடைந்தாள், மாம் தளிர் மெய் வேர்வை கொள்ள - மாந்தளிர் போன்ற மேனி வேர்வை கொள்ள மயிர்குத்தி நிற்ப - மயிர்க்கூச்செறிய ஏந்திழை - சாவித்திரி; தன்வசமிழந்து; அவ் ஏந்த லின் பின் சென்ருள் -அந்தப் பெருமையிற் சிறந்தோணுகிய சத்திய வானின் பின் அரசாணியை வலமாகச் சென்ருள். (எ~று)
(வி-ம்) இதற்கு முன் அவளின் கரத்தைப் பிற ஆடவன் தீண் டியதில்லை. முதல் முதலாக அவன் கை பட்டதும், அதிர்ச்சியடைந் தாள். மெய் வேர்த்தது. மயிர் கூச்செறிந்தது. 4墨
ஆசீர்வாதம், அறுகரிசி பேடல், ஆலாத்தி சுற்றுதல்
366 அந்தணர்க ளாசிசொலி யட்சதைகொ டுத்தார்
தந்தையரு முற்றவருந் தாய்செவிலி யானேர் வந்தறுகி னேடரிசி வாழ்கவெனப் பெய்தார் சுந்தரிகள் மங்கலமாய்ச் சுற்றினரா லாத்தி
(இ-ள்) அந்தணர்கள் ஆசி சொல்லி அட்சதை கொடுத்தார் - வேதியர்கள் ஆசீர்வாதம் செய்து மங்கலவரிசி கொடுத்தார்கள்; தந் தையரும், உற்றவரும், தாய் செவிலி யானேர்; வந்து அறுகிைேடு அரிசி வாழ்கவெனப் பெய்தார்-வந்து, அறுகரிசிபோட்டு வாழ்கவென வாழ்த்தினர்கள்; சுந்தரிகள்-அழகிய வாழ்வுள்ள பெண்கள்; ஆலாத்தி மங்கலமாய்ச் சுற்றினர்-ஆலாத்தியை மங்கல முண்டாகும்படி வல் மாகச் சுற்றி ஆலாத்தியெடுத்தார்கள். (எ-று) 4器

Page 107
180
367 கார்முயங்கு சாலுவத்தின் காவலனுய் வாழி! ஒர் முயங்கு மாத்திரத்தின் செல்வமகள் வாழி! தார்முயங்கு மார்பழக தையலுடன் வாழி! வார்முயங்கு வன்னமுலை வஞ்சியுடன் வாழி!.
(இ-ள்) கார்முயங்கு-மேகம் தழுவும் (மழைவளமுள்ள); சாலு வத்தின்-சாலுவநாட்டின்;க்ாவலனுய்-அரசனகவாழி-வாழ்வாயாக; ர்ே முயங்கு-செல்வமும் சிறப்பும் பொருந்திய மாத்திரத்தின்-மாத் திர தேசத்தின்; செல்வ மகள் வாழி-செல்வ மகளே வாழ்வாயாக தார் முயங்கு - பூமாலை தழுவும்; மார்பழக-அழகிய மார்பையுடைய சுந்தரனே, தையலுடன் வாழி-மணமகளுடன் இனிது வாழ்க; வார் முயங்கு - கச்சுப்பொருந்திய, வன்னமுலை-தொய்யில் எழுதப்பட்ட முலையையுடைய வஞ்சியுடன் வாழி-வஞ்சிக்கொடி போன்ற சாவித் திரியுடன் வாழ்வாயாக. (எ-று)
(வி-ம்) காவலய்ை வாழி- என்றது வருங்காலத்தில் சாலுவ நாட்டின் அரசனகி வாழி என்று வாழ்த்தியது. 43
368 பூவினெடு சேர்ந்தமணம் போலநிதம் வாழி
பூவிலுறை மாதுமரி போலவுமே வாழி பூவைநலந் துய்த்தினிய புத்திரரைப் பெற்றே பூவுலகோ ரும்மடியைப் போற்றநிதம் வாழி (இ-ள்) பூவினெடு சேர்ந்த மணம்போல - பூவும் மணமும்பேர்ல; நிதம் வாழி-நித்தியம் வாழ்வீர்களாக! பூவிலுறை மாதும்-தாமரை யில் வீற்றிருக்கும் இலக்குமியும்; அரி-விட்டுணுவும்; போலவுமே வாழி -போல நீவிர் என்றும் இனிது வாழ்வீர்களாக, பூவை நலம் துய்த்து - சாவித்திரியின் நலத்தை அனுபவித்து; இனிய புத்திரரைப் பெற்றேட
நல்ல மக்கட்பேற்றைப் பெற்று; பூவுலகோர் உம் ம டி யை ப் போற்ற நிதம் வாழி-பூமியிலுள்ளோர் உமது பாதங்களைப் போற்ற என்றும் வாழ்வீர்களாக. (எ-று) 44
குருவுக்குத் தட்சணை கொடுத்தல், உறவோர் விடை பெறுதல், மணமக்கள் பள்ளியறை சேர்தல், 369 அந்தணருக் கானபொரு ளன்புடன வித்தார்
வந்ததமர் தம்பதியை வாழ்த்திவிடை பெற்ருர் சுந்தரனுஞ் சுந்தரியுஞ் சொன்னசுப வேளை அந்தரங்கப் பள்ளியறை யார்வமுடன் சேர்ந்தார்.

181
(இ-ள்) அந்தணருக்கு-திருமண வினைபுரிந்த குருக்கள் மற்றும் வேதியர்களுக்கு; ஆனபொருள்-தட்சணை ஆடை முதலியவற்றை; அன்புடன் அளித்தார்; வந்த தமர்-திருமணங்காண வந்திருந்த உற வோர்; தம்பதியை வாழ்த்தி விடை பெற்ருர், சுந்தரனும் சுந்தரி யும்-அழகிற் சிறந்த சத்தியவானும் சாவித்திரியும் சொன்ன சுப வேளை-சேர்திட கணிதர் சொன்ன நல்ல சுபமுகூர்த்தத்தில், அந்த ரங்கப் பள்ளி அறை-அந்தரங்கமர்ண படுக்கையறையை, ஆர்வமு டன் சேர்ந்தார்-மிகுந்த பிரியமுடன் போய்ச் சேர்ந்தார்கள். (எ-று) 45
வேறு
பள்ளியறையின் அலங்காரம்
370 தாழையி னேலை வேய்ந்து
தண்ணென க் குளிர்ந்து வாயில்
வாழையுங் கமுகும் நாட்டி
வளரிளங் குரும்பை தூக்கி
மாழையி னிலைக ளாலும்
மதுமலர் மாலை யாலும்
வீழ்வுற அலங்க ரித்து
விளங்கிய தந்தப் பள்ளி.
(இ-ள்) தாழையின் ஒலை வேய்ந்து -தாழையின் ஓ லை யி ன ல் வேயப்பட்டு; தண்ணெனக் குளிர்ந்து; வாயில்-வாசலில்; வாழையும் கமுகும் நாட்டி; வளர் இளங் குரும்பை தூக்கி-அழகுவளரும் இள நீப் க்குரும்பைகளை அழகுறத் தூக்கி; மாழையின் இலைகளாலும் - மாவிலைகளாலும்; மதுமலர் மாலையாலும்-தேன் பிலிற்றும் மலர் மாலை களாலும்; வீழ்வுற - கண்டோர் ஆசைப்படும்படி அலங்கரித்து; அந் தப் பள்ளி விளங்கிய்து - அந்தப் படுக்கையறை அழகுடன் விளங் கியது. (எ-று) 46
மாதர் நறும்பொருட்களைப் பள்ளியறையிற் சேர்த்தல்
37 வாரணி முலையி னர்கள்
வாசனைப் பொடிகள் தூவிக் காரகிற் புகையை யூட்டிக்
கந்தநன் னிர்தெ எரித்தார்

Page 108
182,
ஏருடை யெழினி தூக்கி
யெறிசுடர் விளக்கு மேற்றிப்
பூரிகம் பழமும் பாலும்
புதுநறுந் தேனும் வைத்தார்.
(இ-ள்) வாரணி முலையிஞர்கள்- கச்சையணிந்த முலைகளையுடைய மாதர்கள்; வாசனைப் பொடிகள் தூவி, கார் அகில் புகையை ஊட்டி -கருமையான அகிற்றுாபமிட்டு; கந்த நல்நீர் தெளித்து - வாசனை கமழுகின்ற நல்ல பணி நீரைத் தெளித்து; ஏருடை யெழினி தூக்கி -அழகுடைய திரைச்சீலைகளைத் தூக்கி; எறிசுடர் விளக்கும் ஏற்றிபிரகாசித்துச் சுடர் வீசுகின்ற விளக்குகளையும் ஏற்றி, பூரிகம்-அப்ப வருக்கமும்; பழமும் பாலும் - பழவகைகளும் பசும்பாலும்; புதுநறுந் தேனும் வைத்தார்-புதிய நறிய தேனையும் வைத்தார்கள். (எ-று) 47
72 முழுமதி முகத்தி லண்ணல்
முத்தமொன் றிந்து மெய்யைத்
தழுவியே யமளி சேர்த்தான்
தையல்தன் கற்பின் கோட்டை
பழுதடைந் ததிந்நா ளென்று
பயிர்ப்பினற் கிளர்ந்தெ ழுந்தாள்
அழுதன ளப்பால் நின்றே
அங்கையால் முகத்தை மூடி.
(இ-ள்) முழுமதி முகத்தில்- பூரண சந்திரன் போன்ற சர்வித் திரியின் முகத்தில்: அண்ணல் முத்தமொன்று ஈந்து - பெருமையிற் சிறந்த சத்தியவான் ஒரு முத்தம் கொடுத்து; மெய்யைத் தழுவியே அமளி சேர்த்தான்-அவளின் உடம்பைக் கட்டியணைத்து அவளை ப் படுக்கையிற் சேர்த்தான்; தையல்-சாவித்திரி; தன் கற்பின் கோட்டை -தன்னுடைய கற்பினலான காவற்கோட்டை; இந்நாள் பழுதடைந் தது என்று-இன்று தகர்க்கப்பட்டதே என்று; பயிர்ப்பினல்-பெண் களுக்கு இயல்பாக உள்ள பயிர்ப்பென்னும் குணத்தினுல்; கிளர்ந்து எழுந்தாள்-உள்ளக்கிளர்ச்சி கொண்டு சினந்து எழுந்தாள்; அப்பால் நின்றே-சற்று விலகி அப்பால் எழுந்து நின்று; அங்கையால் முகத்தை மூடி-அழகிய கரத்தால் முகத்தை மூடிக்கொண்டு; அழுதனள்-(ஆற் முது) அழுதாள். (எ-று)
(வி-ம்) குல மகளிர் தம் கற்பை உயிரினும் மேலாக மதித்து ஓம்புவர், அதற்குப் பங்கமேற்பட்டால் புலி போலச் சீறி யெழுவர்,

183
பயிர்ப்பு-பிற ஆடவர் தன் உடலைத் தீண்டுதலை அருவருத்தல்; அற்ப மான நினைவை, செயலை அருவருத்தல் ஆகியன. பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னுங் குணங்கள் இயற்கையாக அமைந்த தற்காப்புப் படைகள் என்ப. மதிப்பிடமுடியாத தன் பெண்மை பறி போகிறதே என்ற ஆற்ருமையர்ல் அழுதாள் என்க, 48
8፳8 ஐயனுந் துணுக்குற் றஞய்
ஆயிழை யுள்ள மேதோ
நைதலை யடைந்த தம்மா
நானுகந் தவனல் லேனே
மைவிழி சோர்வ தென்னை
மனக்குறை யறிது மென்னுப்
பெய்சிலம் படிகள் பற்றிப்
பிழையெது செய்தே னென்ருன்.
(இ-ள்) ஜய்னும் - சத்தியவர்னும், துணுக்குற்றணுய் - திடுக் கிட்டு அச்சப்பட்டவணுய்; ஆய் இழை உள்ளம் - ஆராய்ந்தணிந்த ஆபரணங்களையுடைய சாவித்திரியின் உள்ளம்; ஏதோ நை த லை யடைந்தது அம்மா - ஏதோ துன்பத்தை யடைந்த தம்மர், நான் உகந்தவன் அல்லேனுே-நான் இவளுக்குக் தகுதியானவனல்லேனே? (அதனல் துன்புறுகிருளோ); மைவிழி சோர்வது என்னை-மை எழு தப்பட்ட அவளின் கண்கள் கண்ணிரைச் சொரிவது என்ன கார ணமேர்; மனக்குறை அறிதும் என்னு ~அவள் மனக்குறை யாதென அறி வேன் என்று: பெய் சிலம்படிகள் பற்றி-சப்திக்கும் சிலம்பை யணித்த அவள் பர்தங்களைப் பிடித்துக்கொண்டு; பிழையெது செய்தேன் என் முன் - நான் என்ன பிழை செய்தேன் என்று கேட்டான். (எ-று) 49
374 அன்னமும் முறுவ லித்தே
யவன்கரம் விலக்கி விட்டுத்
தன்னிக ரில்லோ யென்தாள்
தைவரல் தகுமோ வென்முள்
பின்னவ னனிைத்துச் செல்லப்
பெயர்த்துமே யப்பாற் சென்ருள்
கன்னவில் தோளி ஞனுங்
கருத்தழிந் திருந்தா ஞங்கே.
(இ-ள்) அன்னமும் முறுவலித்தே ~அன்னம் போன்ற சாவித் திரியும் புன்முறுவல் செய்து; அவன் கரம் விலக்கி விட்டு - சத்தியவா

Page 109
8.
னின் கைகளை நீக்கிவிட்டு; தன் நிகர் இல்லோய்-உனக்கு வேருெ ருவரும் நிகரில்லாதவனே; என்தாள் தைவரல் தகுமோ? என்றுள் - என்னுடைய பாதங்களை நீர் தடவுதல் தகுமோ என்றுள்; பின்னவன் அணித்துச் செல்ல -பின்னர், அவன் அவளைச் சமீபித்துச் செ ல் ல; பெயர்த்துமே அப்பாற் சென்ருள் -மறுபடியும் அவள் அப்பாற் சென் ருள்; கல்நவில் தோளினனும் - கல்லென்று சொல்லத்தக்க வலி ய தோள்களையுடைய சத்தியவானும்; கருத்தழிந்து - தன் எண்ணங் கெட்டு ஆங்கே இருந்தான் -அவ்விடத்தில் இருந்தான். (எ-று) 50
375 அந்நிலை பொறுக்கா ளாகி
யவன்புயங் கடைக்கண் ணுேக்கி என்னிவ ஞண்மை யென்னை
யெடுத்தணைக் கின்ரு னில்லை யென்றெணிச் சாள ரத்தை
இறுகவே பூட்டி விட்டாள் கன்னிய ருள்ளந் தன்னைக்
கண்டவ ரெ வரோ வம்மா. (இ-ள்) அந்நிலை பொறுக்காளாகி-சத்தியவானின் செயலிழந்த நிலையைக்கண்டு பொறுக்காதவளாகி; அவன் புயம் கடைக்கண்நோக்கி -அவனின் திரண்ட புயங்களைக் கடைக்கண்ணுற் பார்த்து; இவன் ஆண்மை என்?-இவனின் ஆண்மை எத்தன்மையது? என்னை எடுத் தணைக்கின்றனரில்லை என்னை ஆர்வமுடன் எடுத்து அணைக்கின்ரு னில் லையே; என்று எண்ணி- என்று நினத்து; சாளரத்தை-பலகணியை: இறுகவே பூட்டி விட்டாள் -இறுக்கிப் பூட்டினுள்; கன்னியர் உள்ளந் தன்னைக் கண்டவர் எவரோ அம்மா-கன்னிப் பெண்களின் உண்மை யான மன நிலையைக் கண்டவர் யாவர்? அம்மா - வியப்பிசைச் சொல். (οι - είμ)
(வி-ம்) சாளரத்தைப் பூட்டியதால் தள் உள்ளக் குறிப்பை
வெளிப்படுத்தினுள். 5
376 மாரனம் மங்கை தன்னை
மலரணை மீதி ருத்தி ஆரணங் கனையா யுன் றன்
அணிமுகம் அழுங்கல் தாளேன் பாரினிற் செய்த வத்தின்
பயனையா னின்று பெற்றேன் ஈரெழு பிறப்பு முன்னை
இணைபிரி யேன்நா னென்றன்.

185
(இ - ள்) மாரன் - மன்மதன் போன்ற சத்தியவான்; அம் மங்கை தன்னை தன்-மனைவியாகிய சாவித்திரியை, மலர் அணை மீது இருத்தி “பூஞ் சயனத்தின் மேலே இருத்தி, ஆரணங்கு அனையாய் - அரிய் தெய்வப்பெண் போன்றவளே! ; உன்தன் அணிமுகம் அழு ங் கல் தாளேன்-உன்னுடைய அழகிய முகம் வருந்தி ஒளி மழுங்கு த லை நான் பொறுக்கமாட்டேன்; பாரினில் செய்தவத்தின் பயனை யான் இன்று பெற்றேன்-பூமியில் செய்த தவத்தின் பயனை நான் இன்று பெற்றேன்; ஈர்எழு-பதினன்கு; பிறப்பும் -பிறப்புக்கும்; நான் உன்னை இணைபிரியேன் என்ருன்-நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்ருன். (எ-று) 52
377 அன்னமு மனம கிழ்ந்தே
யார்வமோ டவனை நோக்கி
என்னருந் தெய்வம் நீரே
இனியும தடிமை யென்ருள்
தன்வச மிழந்து தையல்
தார்வரை யகன்ற மார்பிற்
றன்முகம் புதைத்த ழுந்தத்
தலைவனைத் தழுவி ஞளே.
(இ-ள்) அன்னமும் மனம் மகிழ்ந்தே - சாவித் திரியும் மனம் மகிழ்ந்து ஆர்வமோடு அவனை நோக்கி - விருப்பினெடும் அவனை ப் பார்த்து; என் அரும் தெய்வம் நீரே-என்னுடைய அரிய தெய்வமும் நீரேயாவீர்; இனி உமது அடிமை என்ருள்-இனி நான் உமது அடிமை என்ருள் தன்வசம் இழந்து, தையல்-சாவித்திரியானவள் தார்வரை அகன்ற ம்ார்பில் - பூமாலை யணிந்த மலைபோலும் அகன்ற சத் தி ய வானின் மார்பிலே; தன்முகம் புதைத்து - தன்னுடைய முகத்தைப் Hதைத்து அழுந்த தலைவனை தழுவினுள்-இறுகத் தனது தனங்கள் அவனின் மார்பிற் பதிய, சத்தியவானத் தழுவினுள், ஏ-அசை, (67-gpi)
முத்தாடல்
378 காவியந் தடங்கண் ணுளைக்
கவான்மிசை யிருத்தி யண்ணல் பூவியல் வதனந் தன்னிற்
பூமணம் முகர்வார் போல.

Page 110
186
ஒவலில் முத்த மிட்டான்
ஒண்டொடி தானு மன்போ
டாவலற் கனந்த மீந்தாள்
அளவினை யறிந்தார் யாரே.
(இ-ள்) கர்வியந் தடங்கண்ணுளை - கருங்குவளைபோலும் அழ கிய விசாலமான கண்களையுடையவளாகிய சாவித்திரியை, அண்ணல் கவான்மிசை இருத்தி-சத்தியவான் தனது தொடையின் மீதிருத்தி; பூ இயல் வதனந்தன்னில் - பூவின் தன்மை பொருந்திய அவளது முகத் தில்; பூ மணம் முகர்வர்ர்போல-பூவினது மணத்தை முகர்கின்றவர் போல: ஒவல் இல் முத்தம் இட்டான் - ஒழிவில்லாமல் முத்தமிட் டான், ஒண்தொடி தானும் அன்போடு-சாவித்திரியும் அன்போடு; ஆவலற்கு-கணவனுக்கு அனந்தம் ஈந்தாள்-அனந்தம் முத்தங்களை இட்டாள்; அளவினை அறிந்தார் யார் - அவற்றின் எண்ணளவை யறிந் தார் யார்? (எவருமில்லை) (எ-று) ஏ-அசை 54
கலவி
379 குங்குமக் குவவுத் திண்டோட்
குமரனு மார்வ மோடு
பங்கய வாண்மு கத்துப்
பவளவா யமுதம் மாந்தித்
தெங்கிளங் குரும்பை யென்னத்
திரண்டுருண் டெழுந்து விம்முங்
கொங்கையைக் குழைய மோந்து
கூடலை மேவி னுனே.
(இ-ள்) குங்குமக் குவவுத் திண் தோள் - குங்குமம் போலும் சிவந்த நிறத்தையுடைய திரண்ட திண்ணிய தோள்களையுடையவன கிய குமரனும் - சத்தியவானும்; ஆர்வமோடு - மிகுந்த விருப்பத்து டனே பங்கய் வாண்முகத்து பவளவாய் அமுதம் மாந்தி-தாமரை போலும் ஒளி பொருந்திய முகத்திலமைந்த பவளம் போலும் வாயில் ஊறும் அமுதத்தைக் குடித்து; தெங்கு இளங் குரும்பை என்ன - தெங் கின் இளங் குரும்பையை ஒத்த திரண்டு, உருண்டு; எழுந்து விம்மும் கொங்கையைக் குழைய மோந்து - திரண்டும் உருண்டும் பருத்தும் விம்முகின்ற தனங்களை அவை குழையும்படி மோந்து; கூடலை மேவி ஞன்-புணர்தலைப் பொருந்தினுன் (எ.கறு) ஏ-அசை 55

187
380 பஞ்சின் மெல் லடிச்சி லம்பு
பாடகம் புலம்பல் செய்யக் கஞ்சமென் முகத்தின் வேர்வை கண்ணிடு மைய பூழிப்ப வஞ்சிநுண் ணிடைநு டங்க
வளர்முலை ஞெமுங்கப் புல்லி வெஞ்சமர் விளைத்தா னையன்
மதன நூல் விதித்த வாறே.
(இ- ள்) பஞ்சு இன் மெல்லடி சிலம்பு-பஞ்சைப்போலும் மென் மையான பாதத்திலனிந்த சிலம்பும்; பாடகம்-பாடகமும்; புலம்பல் செய்ய-ஒலி செய்ய; கஞ்சமென் முகத்தின் வேர்வை - தா ம  ைர போலும் மென்மையான முகத்தில் வெளிப்படும் வேர்வை; கண் இடுமை அழிப்ப-கண்ணுக்கு இடப்பட்ட மையை அழிக்க; வஞ்சி நுண் இடை நுடங்க - வஞ்சிக்கொடிபோலும் நுண்ணிய இடை துவள வளர்முலை-வளர்ந்தனவாகிய முலைகளை, ஞெமுங்கப் புல்லிஅழுந்தத் தழுவி; ஐயன்-சத்தியவான்; மதனநூல் விதித்தவாறேகாம நூலில் விதித்தபடியே; வெஞ்சமர் விளைத்தான்-காமப் போரைச் செய்தான். (எ-று) 56
38 குனிசிலை மார னன்னன்
கோதையை யாரப் புல்லிப்
பனிமதி முகத்தி லங்கு
பவளவா யதரம் மென்றுங்
கனிநிகர் கதுப்பிற் ருேளிற்
களிகொள முத்த மிட்டு
மினியநன் மொழிகள் பேசி யிளநலம் பருகி ஞனே.
(இ- ள்) குனிசிலை மாரன் அன்னன் - வளைந்த வில்லையுடைய மன்மதனைப் போன்ற சத்தியவான்; கோதையை - சாவித்திரியை: ஆரப்புல்லி-ஆரத்தழுவி, பனிமதி முகத்து இலங்கு - குளிர்ந்த பூர ணச் சந்திரனை யொத்த முகத்தில் விளங்கும்; பவளவாய் அதரம் மென்றும்-பவளம் போன்ற வாயின் கீழ் உதட்டைக் கடித்தும்; கணி நிகர் கதுப்பில் -கனியை யொத்த கன்னத்திலும்; தோளில்-மார்பி லும்; களிகொள-அவள் களிப்படைய்; முத்தமிட்டு-முத்தம் கொடுத் தும்; இனிய நன்மொழிகள் பேசி-இனிமையான நல்ல காதல் வார்த்

Page 111
188
தைகளைப் பேசி: இளநலம் பருகி ன னே - அவளது இளமையின் நிலத்தை அனுபவித்தான். (எ-று) 57
382 தொண்டைவா யிதழ்து டிப்பத்
தொய்யில்சேர் கொங்கை விம்ம
வண்டிமிர் கோதை தாழ
வரிவளை யார்ப்ப ரிப்ப
மண்டல மணிப்பூண் ஏங்க
மாரனுே டாடல் செய்து
கண்டினு மினிய சொல்லாள்
காமமாங் கடலி லாழ்ந்தாள்.
(இ- ள்) கண்டினும் இனிய சொல்லாள்-கற்கண்டிலும் இனிய சொற்களைச் சொல்லும் சாவித்திரி; தொண்டை வாய் இதழ் துடிப்பகொவ்வைக் கனிபோன்ற வாயிதழ் துடிக்கவும்; தொய் யி ல் சேர் கோங்கை விம்ம -தொய்யில் பொருந்திய (எழுதிய) கொங்கைகள் பருக்கவும்: வண்டு இமிர் கோதை தாழ - வண்டுகள் மொய்க்கும் பூமாலை கீழே விழவும் வரிவளை ஆர்ப்பரிப்ப-கோடுகளையுடைய வளை யல்கள் ஆர்ப்பரிக்கவும், மண்டலமணி பூண் ஏங்க--கூட்டமான மணி யணிகலன்கள் ஒலிக்கவும்; மாரனேடு ஆடல் செய்து - மன்மதன் ஒத்த சத்தியவானேடு பல லீலைகள் செய்து; காமமாங்கடலில் ஆழ்ந் தாள்-காமமாகிய கடலிலே மூழ்கினுள். (எ- று) 58
383 முத்துறழ் மூரற் செவ்வாய்
முழுமதி முறுவல் பூத்தே எய்த்துமெய் வேர்த்த யர்ந்தாள்
ஏந்தலும் பரிவி னுேடு நித்திலத் துளிது டைத்து
நிகரிலான் பால்ப ருக்கி கத்திகைக் குழல்கை செய்து
கைவளை திருத்தி ஞனே.
(இ-ள்) முத்து உறழ் மூரற் செவ்வாய் முழுமதி-முத்தை ஒத்த பற்களைக் கொண்ட சிவந்த வாயையுடைய பூரண சந்திரன் போலும் முகத்தவளாகிய சாவித்திரி; முறுவல் பூத்து - புன்முறுவல் செய்து எய்த்து -இளைத்து; மெய்வேர்த்து - உடம்பு வியர்த்து; அயர்ந்தாள் --சோர்ந்தாள் ஏந்தலும் - சத்தியவானும் பரிவினேடு-மிக அன்பு டன் நித்தில துளி துடைத்து - அவளின் உடலில் வரும் முத்து ப்

189
போன்ற வேர்வைத்துளிகளைத் துடைத்து; நிகர் இல் ஆன்பால் பருக்கி - நிகரில்லாத பசுவின் பாலைப் பருக்கி; கத்திகை குழல் கைசெய்து - பூமாலையணிந்த கூந்தலை (கலவியின்போது கலைந்திருந்த குழலை) அலங்கரித்து; கைவளை திருத்தினன் - அவளது கைவளையல்களையும் திருத்தியமைத்தான். (எ-று) 59
பொழுது புலர, அவர்கள் மலர்வனமடைதல்
384 கலவியுந் துயிலு மாகக்
கழிந்தது கங்குற் போது
முலகின ருயிர்ப்ப டைவா
னுதித்தனன் குணக்கிற் பானு
அலர்பொலி மாலை மார்ப
னணங்கினே டணித்தா யுள்ள
மலர்வன மொன்றை நாடி
மகிழ்வுடன் சென்ற டைந்தான்.
(இ-ள்) க்லவியும் துயிலும் ஆக-கலவி செய்வதிலும் துயில் செய் வதிலும்; கங்குற் போதும் கழிந்தது-இராப்பொழுதும் கழிந்தது; உல கினர் உயிர்ப்படைவான்-உலகத்தோர் சோர்வு நீங்கிப் புதுப்பலமடை யும் பொருட்டு; குணக்கிற் பானு உதித்தனன் - கிழக்கு த்திசையில் ஞாயிறு உதித்தனன்; அலர்பொலி மாலை மார்பன் -மலர்பொலியும் மாலையையணிந்த மார்பனன சத்தியவான்; அணங்கினேடு - சாவித் திரியோடு; அணித்தாயுள்ள - தமதுறைவிடத்திற்குச் சமீபமாயுள்ள மலர்வனம் ஒன்றை நாடி மகிழ்வுடன் சென்று அடைந்தான்-பூஞ் சோலை ஒன்றினை அடைய விரும்பிச் சந்தோஷத்துடன் சென்று சேர்ந் தான் (எ-று) 6 O
நலமு ைரத்தல் 385 கஞ்சு மென் மலர்கள் காணுய்
கன்னியுன் வதன மொக்கும் கிஞ்சுகப் பூக்கள் காணுய்
கிள்ளையுன் அதரம் மானும் வஞ்சியுன் மருங்கைப் போலும்
வளரிளங் கொடிகள் பாராய் அஞ்சம் உன் னடிக்குத் தோற்ற
அனிச்சமென் மலர்கள் பாராய்,

Page 112
190
(இ - ள்) கன்னியுன் வதனம் ஒக்கும் மென் கஞ்ச மலர்கள் காணுய் - கன்னிகையே; உன் முகத்தை ஒக் கும் மென்  ைம யான தாமரை மலர்களைப் பார்ப்பாயாக; கிள்ளை உன் அதரம் மானும் கிஞ்சுக பூக்கள் காணுய்-கிளியே உன் வாயிதழ்களை ஒக் கும் முருக்கம் பூக்களைக் காண்பாயாக; வஞ்சி உன் மருங்  ைக + போலும் வளரிளங் கொடிகள் பாராய் - வஞ்சிக்கொடி போன்றவளே உன்னுடைய இடையைப் போலும் மெலிந்து வளர்ந்த இளமையான கொடிகளைப் பார்ப்பாயாக; அஞ்சம் உன் அடிக்குத் தோற்ற அனிச் சமென் மலர்கள் பாராய்-அன்னமே! உனது அடிக்கு மென்மையில் தோற்றுப்போன மென்மையான அனிச்ச மலர்களைப் பார்ப்பாயாக. (6 т—др) 61
386 குமுகமுன் இதழுக் கொவ்வா
குவளேயுன் விழிகட் கொவ்வா
சிமிழ்கல சங்கோங் கென்ப
சேரிள முலைக்கொப் பாமோ
அமிழ்தினு மினிய செர்ல்லுக்
கமையுமோ குழலும் யாழும்
தமிழ்தருஞ் சுவையே யுன்னைத்
தமியனும் விளம்பப் போமோ.
(இ-ள்) குமுதம் உன் இதழுக்கு ஒவ்வா-செவ்வர்ம்பல் மலர் கள் உனது இதழ்களுக்கு ஒப்பாகமாட்டா குவளையுன் விழிகட்கு ஒவ்வா-கருங்குவளை மலர்கள் உன் கண்களுக்கு ஒப்பாக மாட்டா: சிமிழ் - செப்பு: கலசம்-குடம்; கோங்கு-கோங்கம்பூ என்ப - என் பன; சேர் இள முலைக்கு ஒப்பாமோ - உனது சோடான சேர்ந்த இள முலைகளுக்கு ஒப்பாமோ (ஆகா); அமிழ்தினும் இனிய சொல்லுக்கு குழலும் யாழும் அமையுமோ-அமிழ்தினும் இனிய உனது சொற்க ளுக்கு குழலும் யாழும் இனிமையில் அமையுமோ (அமையா); தமிழ் தரும் சுவையே! உன்னைத் தமியனும் விளம்பப் போமோ? தமிழ் தருகின்ற சுவையை ஒத் தவ ளே ! உன்னை நானும் விதந்து கூறல்
ஆகுமோ? (ஆகாதே), (எ -று) 62
87 இன்னவை யவனுஞ் சொல்ல
இறைவியும் புளக மெய்திக் கன்னவில் தோளி னயுன்
கைத்தலம் பற்ற யானும்

19
என்னபுண் ணியங்கள் செய்தேன்
எனக்கினி யெல்லாம் நீயே என்றவன் தாம மார்பில்
ஏந்திழை முகம்பு தைத்தாள்.
(இ- ள்) இன்னவை அவனுஞ் சொல்ல .இப்படியான வார்த்தை களைச் சத்தியவானும் சொல்ல; இறைவியும்-தலைவியாகிய சாவித் தி ரியும்; புளகம் எய்தி-புளகாங்கித மடைந்து; கல் நவில் தோளினய் -திண்மையால் கல்லென்று சொல்லும் படியான தோள்களையுடை யவனே! உன் கைத்தலம் பற்ற யானும் என்ன புண்ணியங்கள் செய் தேன்-உனது கைகளைப் பற்றித் தி ரு மண் ம் செய்ய நானும் என்ன புண்ணியங்களைச் செய்தேனுே; எனக்கு இனி எல்லாம் நீயே - எனக்கு இனி, கணவனும் தெய்வமும் மற்றும் எ ல் லா ம் நீயே யாவாய்; என்று-என்றுசொல்லி; அவன் தாம மார்பில் - அவனு டைய மாலையணிந்த மார்பில்; ஏந்திழை முகம் புதைத்தாள்- ஏந்திய ஆபரணங்களையணிந்த சாவித்திரி தனது முகத்தைப் புதைத்தாள். (எ-று) 63
388 நறுமலர் வாசம் பூசி
நல்லிளந் தென்றல் வீசப்
பிறைநுதற் பேதை நல்லாள்
பெருகிய வேட்கை யாலே
இறுகவே யவனைப் புல்லி
யிமைகளை மூடிக் கொண்டாள்
அறைகழ லநங்க னன்போ
டணைத்துமெய் சிலிர்த்து நின்றன்.
(இ - ள்) நறுமலர் வாசம் பூசி - வாசனையுள்ள மலரின் மணத் தைப் பூசிக்கொண்டு; நல் இளம் தென்றல் வீச - நல்ல இளந் தென் றற் காற்று வீச, பிறைநுதற் பேதை நல்லாள் - பிறைபோலும் நெற் றியினையுடைய அழகு நிறைந்த சாவித்திரி; பெருகிய வேட்கையாலே -பெருகிவந்த காமநோய் வயப்பட்ட விருப்பத்தாலே அவனே இறு கவே புல்லி-சத்தியவான இறுகத் தழுவி; இமைகளை மூடிக்கொண் டாள்-தன் கண்ணிமைகளை மூடிக்கொண்டாள்; அறைகழல் அநங் கன்-ஒலிக்கின்ற கழல்களையணிந்த மன்மதன் போலும் சத்தியவான்; அன்போடு அணைத்து-சாவித்திரியை அன்போடு அணை த் து; மெய் சிலிர்த்து நின்றன்-மகிழ்வு மிகுதியால் உடம்பு புள காங் கி த மி கொண்டு நின்றன். (எ-று) 64

Page 113
192
மலர் கொய்தல்
389 ஏந்தலவ் வனத்திற் றேன்பெய்
தினியநல் வாசம் வீசும்
பூந்துணர் கொய்து வந்து
பூவையின் குழலிற் சூட்டக்
காந்தளங் கையி னளுங்
கடிமலர் மாலை கட்டிச்
சாந்தணி யன்பன் மார்பிற்
சாத்திமென் முறுவல் பூத்தாள்.
(இ-ள்) ஏந்தல் - பெருமையிற் சிறந்தவனுகிய சத்தியவான்; அவ்வனத்தில்-அக்காட்டின்கண்ணுள்ள, தேன்பெய்து இனியநல் வாசம் வீசும்-தேனினைச் சொரிந்து இனிய்தாகிய நல்ல வாசனை கமழுகின்ற : பூந்துணர் கொய்து வந்து-பூங்கொத்துக்களைக் கொய்து கொண்டு வந்து; பூவையின்-சாவித்திரியின்; குழலிற் சூட்ட-கூந்தலிலே சூட்ட: காந்தள் அம் கையிளுைம்-காந்தட் பூப்போலும் அழகிய கையினை யுடையவளாகிய சாவித்திரியும்; கடிமலர் மாலை கட்டி - வாசனை பொருந்திய மலர்மாலையொன்றைக் கட்டி சாந்தணி அன்பன் மார் விற் சாத்தி-கலவைச் சாந்தையணிந்த தனது அன்பிற்குரிய சத்திய வானுடைய மார்பிற் சாத்தி; மென்முறுவல் பூத்தாள் - இளநகை செய்தாள். (எ-று) 65
380 முல்லையங் கோதை மீது
முரலும்வண் டினங்கள் மொய்ப்பக்
கல்லியல் தோளி னனுங்
கண்டவை கையா லோச்சி
வல்லியின் நுண்ம ருங்குல்
வருந்துதல் காரீைர் போலும்
ஒல்லைநீர் போமி னென்ற
னெருவரின் துன்பந் தாளான்.
(இ-ள்) அம் முல்லை கோதை மீது - சாவித்திரியின் அழகிய முல்லை மாலை மீது; முரலும் வண்டினங்கள் மொய்ப்ப - ரீங்காரஞ் செய்கின்ற வண்டுக் கூட்டங்கள் வந்து மொய்க்க; கல்லியல் தோளி ஞனும்-கல்லையொத்த தோள்களையுடைய சத்தியவானும்: கண்டு - அதனைக்கண்டு; அவை கையால்; ஒச்சி-அவ் வண்டுகளைக் கையினல்

193
ஒட்டி வல்லியின் நுண் மருங்குல்-கொடிபோலும் நுண்ணிய இடை வருந்துதல் காணிர் போலும்-உங்கள் பாரம் தாங்கமாட்டாமல் வருந்துதலை நீ விர் காணவில்லைப்போலும்; ஒல்லை - சீக்கிரம்; நீர் போமின் என்ருன்-நீங்கள் அகலுங்கள் என்று வண்டுகளை ஒச்சினன்; ஒருவரின் துன்பந்தாளான்-ஒருவர் படுந் துன்பத்தைக் கண்டு தன் மனம் பொறுக்கமாட்டாதவனகிய சத்தியவான். (எ-று) 66
39 அந்தளி ரசோக மேந்து
மழகிய செய்ய பூக்கள்
செந்தழல் பரந்த போலுஞ்
செவ்வியைக் காட்டல் காணுய்
இந்துளச் சினைகள் தாங்கு
மின்மதுப் பிலிற்றும் பூக்கள்
பந்தெனத் திரண்ட காணுய் பாவைய ராடற் காகும்.
(இ-ள்) அம்தளிர் அசோகம் ஏந்தும் -அழகிய தளிர்களையுடைய அசோக மரங்கள் ஏந்தி நிற்கும்; அழகிய செய்ய பூக்கள் - அழகிய சிவந்த பூக்கள்; செந்தழல் பரந்த போலும் -சிவந்த அக்கினி பரவி யிருத்தல் போன்ற, செவ்வியைக் காட்டல் காணுய்-அழகைக் கர்ட்டு தலை நீ காண்பாயாக, இந்துளச் சினைகள் தாங்கும்-கடப்ப மரத்தின் கொம்புகள் தாங்கி நிற்கும்; இன்மது பிலிற்றும் பூக்கள் - இ னி ய தேனைக் கொப்பளிக்கும் பூக்கள்; பந்துஎனத் திரண்ட காணுய்-பந்து போல உருண்டு திரண்டு இருப்பதைக் காண்பாயாக; பாவையs ஆடற்காகும் - அவை பெண்கள் விளையாடற்குப் பயன்படும். (எ-று) 67
ஊஞ்சலர்டல்
392 மாங்கிளை யொன்றிற் ருெங்கும்
மலர்க்கொடி தம்மைப் பற்றி ஆங்கொரு நல்ல ஊஞ்ச
லமைத்ததன் மீதி ருந்து தேங்கமழ் தெரிய லானுந் தேவியு மாட லானர் பூங்குயில் கொம்பி ருந்து
பொழிந்தன இனிய கானம்,
y g|T-13

Page 114
194
(இ- ள்) மர்ங்கிளை ஒன்றில் தொங்கும்; மலர்க்கொடி தம்மைப் பற்றி-பூங்கொடிகளைச் சேர்த்துப் பிடித்து; ஆங்கு ஒரு நல்ல ஊஞ் சல் அமைத்து-அங்கே ஒரு நல்ல ஊஞ்சலை உண்டாக்கி; அதன் மீது இருந்து: தேம்கமழ் தெரியலானும் - வாசனை கமழும் மாலையினை யுடைய சத்தியவானும்; தேவியும்-சாவித்திரியும்; ஆட லா னு ர் - ஊஞ்சலாடினர்கள்; பூங்குயில்-நீல நிறமுடைய குயில்கள்; கொம்பி ருந்து பொழிந்தன இனிய கானம்-மரக் கெர்ம்பிலிருந்து இவர்களைப் பார்த்து இனிய கானத்தைப் பொழிந்தன. (எ-று) 68
393 கடிமலர்ப் பூந்தா தாடிக்
களித்திடுங் கிள்ளை யொன்றைச்
செடிமறை விருந்த பூசை
செகுத்திட முயறல் கண்டு
துடித்துமே பாய்ந்து சென்று
துரத்தினள் பூஞை தன்னைப்
படிமிசை நமன வென்று
பதியினைக் காக்கும் பாவை,
(இ-ள்) கடிமலர் பூ தாது ஆடி-வர்சனையுள்ள பூக்களின் மக ரந்தத்தில் ஆடி களித்திடும் கிள்ளையொன்றை-மனம் மகிழ்ந்திருக் கும் கிளி ஒன்றை; செடி மறை விருந்த பூசை - பற்றை மறைவிலே யிருந்த ஒரு பூனை, செகுத்திட முயறல் கண்டு - பிடித்துக் கொன்று உண்ண முயலுதலைக் கண்டு; துடித்துமே பாய்ந்து சென்று; பூஞைதன்னை துரத்தினள்-அப் பூனையைத் துரத்தினுள்; (யாரெனில்) படிமிசை - பூமியிலே; நமனை வென்று-காலனை வென்று; பதியினைக் காக்கும் பாவை-தனது கணவனைக் காக்கும் கற்பு வல்லமை மிக்கவளாகிய சாவித்திரி, (எ-று) 69
39 மண்டல மணிப்பூண் பாவை
மாரனே டயலில் நின்ற
விண்டுயில் தருவின் நீழல்
வீற்றிருந் தயர்வு நீக்க
வண்டுக ளினிது பாட
வசந்தமென் காற்று வீசப்
பிண்டிதேன் மாரி பெய்யப்
பிணிமுகம் நடன மாடும்,

195
(இ-ள்) மண்டல மணிப்பூண் பாவை-கூட்டமாக அழகிய மணி களமைத்துச் செய்த ஆபரணங்களை யணிந்த சாவித்திரி; மாரனேடுசத்தியவானேடு; அயலில் நின்ற; விண்துயில் - முகில்கள் படிகின்ற; தருவின் நீழல்-ஒரு மரத்தின் நிழலிலே; வீற்று இருந்து அயர்வு நீக்க -உல்லாசமாக இருந்து தனது சோர்வை நீக்க வண்டுகள் இனிது
பாட வசந்த மென் காற்று வீச; பிண்டி-அசோகமரம், தேன்மாரி
பெய்ய, பிணிமுகம் --மயில்கள்; நடனமாடும்-நடனங்களை ஆடி மகிழ்
விக்கும். (எ-று) 70
நீராடில்
395 போதுலா மலங்க லானும்
பூங்கொடி தானு மந்தத் தாதுலாஞ் சோலை நீங்கித்
தண்புனல் நிறைந்து நீண்ட சீதுலாங் குவளை யாம்பல்
செங்கம லங்கள் பூத்த மாதுலாம் பொய்கை யொன்றை
மருவிநீ ராட லானர்.
(இ- ள்) போது உலாம் அலங்க லானும் - பூக்கள் பொருந்திய மாலையை அணிந்த சத்தியவானும்; பூங்கொடி தானும் - பூங்கொடி போன்ற சாவித்திரியும்; அந்தத் தாது உலாம் சோலை நீங்கி-அந்தத் தாது நிறைந்த சோலையை நீங்கி; தண்புனல் நிறைந்து - குளிர்ச்சி பொருந்திய நீர் நிறைந்து; நீண்ட-நீண்டுள்ள சீது உலாம்-தேன் பெருகுகின்ற; குவளை, ஆம்பல், செங்கமலங்கள் பூத்த மாது உலாம்அழகு பொருந்திய; பொய்கை ஒன்றை-குளம் ஒன்றினை மருவி. பொருந்தி, நீர் ஆடலானர். (எ-று) 7
396 குங்குமக் குவவுத் தோளான்
குமரியின் மீது நீரை
அங்கையா லெற்றி யாட
அவள்துகில் நனைத லாலே
கொங்கைகள் விளங்கத் தோன்றக்
கோதையும் நாண முற்றுப்
பங்கயத் திலைகள் கொய்து
பாவைதன் மார்பை மூடும்,

Page 115
196
(இ-ள்) குங்கும குவவுத் தோளான்-குங்கும நிறம் பொருந் திய திரண்ட தோள்களையுடைய சத்தியவான்; குமரியின் மீது-சாவித் திரியின் மீது; நீரை அம் கையால் எற்றி ஆட-நீரைத் தனது அழ கிய கையால் எற்றி விளையாட அவள் துகில் நனைதலாலே; கொங் கைகள் விளங்கத் தோன்ற-அவளுடைய கொங்கைகள் விளங்கும்படி தோன்ற கோதையும் நாணமுற்று - சாவித்திரியும் நாணமடைந்து: பங்கயத்து இலைகள் கொய்து -தாமரை இலைகளைக் கெர்ய்து; பாவை தன் மார்பை மூடும் - பதுமை போலுஞ் சாவித்திரி தன் மார்பை மூடுவாள். (எ-று) 72
397 பங்கய முகத்து மங்கை
பாய்ந்துநீ ராடல் செய்யப் பங்கய மென்று வண்டு
படிந்திட முயன்று தோற்கும் அங்கயல் விழிகள் கண்ட
அஞ்சிறை யன்னப் பேடு அங்கய லென்றே யெண்ணி
யடைந்துபின் நாண மெய்தும். (இ - ள்) பங்கய முகத்து மங்கை-செந்தாமரை மலர் போலும் முகத்தையுடைய சாவித்திரி; பாய்ந்து நீராடல் செய்ய; பங்கயம் என்று வண்டு-அவள் முகத்தைத் தாமரைப் பூவென்று எண் ணிய வண்டு; படிந்திட முய்ன்று கோற்கும்-அதன் மேற் படிந்திட முயன்று தோல்வியடையும்; அம் கயல் விழிகள் கண்ட - அழகிய கயல் போலும் அவளுடைய கண்களைக் கண்ட அம் சிறை அன்னப்பேடு - அழகிய சிறகுகளையுடைய பெண் அன்னம்; அம் கயல் என்றே யெண்ணி - அவற்றை அழகிய கயல் மீன் என்றே எண்ணி; அடைந்து பின் நாண மெய்தும்-பிடிக்கச் சென்று ஏமாற்ற ம  ைடந்து வெட்கமடையும். (எ-று) 73
398 ஐயனந் நீரில் மூழ்கி
யவளிரு பதங்கள் பற்ற
'ஐயகோ முதலை வாயி
லகப்பட்டே' னென்ருள் கன்னி
கையின லவள்வாய் பொத்திக்
'காத்தனன் திருமா’’ லென்றேர்
கையின லபயங் காட்டக்
காரிகை நாணி நின்முள்,

197
(இ-ள்) ஐயன்-சத்தியவான்; அந்நீரில் மூழ்கி; அவள் இரு பதங் கள் பற்ற-அவளுடைய இரு பா தங்களை யும் பற்றிக்கொள்ள ‘ஐயகோ முதலைவாயில் அகப்பட்டேன்" என்ருள் கன்னி; கையில்ை அவள் வாய் பொத்தி-சத்தியவான் தன்கையினல் அவள் வாயைப் பொத்தி; திருமால் காத்தனன் என்று-திருமாலாகிய நான் உன்னை முதலைவாயில் இருந்து காத்தேன் என்று சொல்லி, ஒர்கையினல் - மற்றக் கையினல்; அபயங்காட்ட-அஞ்சாதே அடைக்கலம் தந்தேன் என்று காட்ட காரிகை-சாவித்திரி; நாணி நின்ருள் - வெட்கி நின் ருள். (எ-று)
(வி-ம்) முன்பு கஜேந்திரன் என்னும் யானை நீரிற் குளிக்க, ஒரு முதலை அதன் காலைப் பற்றிக் கொண்டது. யானை ஆதிமூலமே என்று ஒலமிடத் திருமால் அந்த யானையைக் காப்பாற்றினர். அதுபோலத் தான் இவளைக் காப்பாற்றியதாகக் கூறினன். 74
399 கந்தெறி களிறன் னனுங்
களிமடப் பிடியன் ஞளுந்
தந்தம்மெய் திமிர்த்த மேலாந்
தண்ணறுங் களபச் சேறுஞ்
சந்தனம் புழுகு மந்தச்
சலத்தினிற் படித லாலே
அந்த நீர் வாழும் மீன்கள்
அடைந்தன நறிய வாசம்.
(இ-ள்) கந்து எறி களிறு அன்னனும் - கட்டுத்தறியை முறிக் கின்ற யானையைப் போன்ற சத்தியவானும்; களிமட பிடி அன்ன ளும் - களிப்பையுடைய பெண்யானை போன்ற சாவித்திரியும்; தம் தம்மெய் திமிர்த்த-தமது தமது உடம்பிற் றடவிய; மேலாம் தண் நறும் களபச் சேறும் -மேலான குளிர்ந்த வாசனை பொருந்திய கல வைச் சாந்தாகிய சேறும்; சந்தனம்-சந்தனமும்; புழுகும்-புனுகும்; அந்தச் சலத்தினிற் படிதலாலே; அந்த நீர் வாழும் மீன்கள் நறிய வாசம் அடைந்தன -அந்த நீரில் வாழுகின்ற மீன்கள் கமழுகின்ற வாசனையை அடைந்தன. (எ-று) - 75
400 பங்கயப் பொய்கை நீரிற்
பார்த்திபன் படுத்து நீந்த லங்குபாற் கடலில் மாயோ
னறிதுயில் கொள்ள லொக்கும்

Page 116
பங்கய மலர்கள் நாப்பண்
பைங்கொடி நின்ற கோலஞ்
செங்கம லத்தின் மீது
செய்யவள் நிற்ற லொக்கும்.
(இ- ள்) பங்கயப் பொய்கை நீரில் -தாமரைக் குளத்து நீரிலே; பார்த்திபன் படுத்து நீந்தல் - அரச குமாரனன சத்தியவான் படுத்து நீந்துதல்; எவ்வண்ணமிருக்குமென்றல்; அங்கு பாற்கடலில் மாயோன் அறிதுயில் கொள்ளல் ஒக்கும் - அங்குள்ள திருப்பாற்கடலில் திருமால் அறிதுயில் கொள்ளுவதை ஒக்கும்; பங்கய மலர்கள் நாப்பண் -தாமரை மலர்களின் நடுவே: பைங்கொடி நின்ற கோலம் - பசுங்கொடி போன்ற சாவித்திரி நின்ற காட்சியானது; செங்கமலத்தின்மீது-செந்தாமரை மலரின் மேலே செய்யவள் நிற்ற லொக்கும் - இலக்குமி தேவி நிற் றலை ஒக்கும். (எ-று)
(வி-ம்) சத்தியவான் அரச குமாரனனபடியால் பர் ர் த் தி ப ன் எனப்பட்டான். படுத்து நீந்தல் - நீரில் படுத்ததுபோல் நீந்துதல், (நிற்பது போற் காலால் நீந்துதல், தவளைபோல் பாய்ந்து நீந்துதல் முதலிய வெவ்வேறு நிலை களும் உண்டு) 76
40 அங்கயற் கண்ணி நீரி
லமிழ்ந்தெழுந் தாடல் செய்யக்
கொங்கைகள் புடைத்துப் பக்கம்
பொலிவுறத் தோன்றுங் காட்சி
தெங்கதி னிரண்டு காயைத்
தெப்பமாய்ப் பிணைத்துப் பாலர்
அங்கதை யணைத்து நீரி
லாடல்கள் பயிலல் மானும்.
(இ- ள்) அம்கயல்கண்ணி - அழகிய கயல்மீன் போலும் புரளு கின்ற கண்களையுடைய சாவித்திரி; நீரில் அமிழ்ந்து எழுந்து; ஆடல் செய்ய நீராடி விளையாட கொங்கைகள் புடைத்து - கொங்கைகள் வீங்கி; பக்கம் பொலிவுறத் தோன்றும் காட்சி; தெங்கு அதின் இரண்டு காயைப் பிணைத்து தெப்பமாய் - இரண்டு தேங்காய்களைப் பிணைத்து அதை மிதவையாக்கி; பாலர்-சிருர்; அங்கதை அணைத்து -அந்த மிதவையை அனைத்துக்கொண்டு; நீரில் ஆடல்கள் பயிலல் மானும் - நீரில் நீந்தப் பழகுதலை ஒக்கும். (எ-று) 77

காதலர் மனையையடைதல்
402 இரும்புன லாடல் செய்தே
யிளைத்தவர் பொய்கை நீங்கிப்
பொருந்திய துகிலு டுத்துப்
புனிதவெண் ணிறு சாத்தி
விரும்பிடுஞ் சாந்து பூசி
விரைமலர் மாலே சூடி
அரும்பணி யமையப் பூட்டி
யவர்மனே யடைந்தா ரன்றே.
(இ- ள்) இரும்புனல் ஆடல் செய்தே -மிகுந்த நீரிலே நீரர்டல் செய்து; இளைத்தவர் பொய்கை நீங்கி - இளைப்படைந்த இருவரும் குளத்தை விட்டு நீங்கி; பொருந்திய துகில் உடுத்து - பொருத்த மர்ண ஆ ைட  ைய அணிந்து; புனித வெண் நீறு சாத் தி - புனிதத் தன்மைமிக்க வெண்ணிற விபூதியை அணிந்து; விரும்பிடும் சாந்து பூசி-விரும்பப்படும் சந்தனச் சாந்தைப் பூசி, விரை மலர் மாலை சூடி-வாசனை பொருந்திய மலர் மாலையை அணிந்து அரும் பணி அமையப் பூட்டி-அரிய ஆபரணங்களை அவ்வவ்விடங்களுக்கு அமைவாகப் பூட்டி அவர்மன யடைந்தார்-அவர்களுடைய மனயை அடைந்தார்கள்; (எ -று) அன்று, ஏ - அசைகள் Ꭶ 8
அசுவபதி தன்னுடைய நாட்டிற்குத் திரும்புதல்
403 கலவியி லின்பங் கண்டு
காதல ரிருந்த காலை சிலைவல அசுவ மன்னன்
சேயிழைக் கநங்க ணுக்குப் பலபொருள் பரிசு நல்கிப்
பாரினிற் புகழி னேடு நிலவுக வென்று வாழ்த்தி
நிருபனின் நாடு சென்றன். (இ - ள்) கலவியில் இன்பம் கண்டு காதலர் இருந்த காலை - திருமணத்தின் பின் சேருகின்ற சேர்க்கைகளில் அக் காதலர் இருவ ரும் இன்பம் அநுபவித்துக் கொண்டு இருந்த காலத்தே; சிலை வல அசுவ மன்னன் - விற்போரில் வல்லவனுகிய அசுவபதி மன்னன்; சேயி ழைக்கு-செவ்விய ஆபரணங்களை பணிந்த சாவித்திரிக்கும்; அ ந ங் க

Page 117
awV
னுக்கும்- மன்மதன்போன்ற சத்தியவானுக்கும்; பலபொருள் பரிசு நல்கி- பலபொருள்களைப் பரிசாகக் கொடுத்து; பாரினில் புகழினேடு நிலவுக என்று வாழ்த்தி-பூமியில் புகழோடு வாழ் வீராக என்று வாழ்த்தி; நிருபனின் நாடு சென்ரு ன் - மாத்திர நாட்டிற்குச் சென் ரு ன். (எ- று) 79
நிருபன் - அரசன். ஈண்டு அசுவபதியைக் குறிக்கும்:
404 கோதைதான் மனத்தில் வேட்ட
கொழுநன யடைய வென்ன
மாதவஞ் செய்தே னென்று
மகிழ்வெனுங் கடலி லாழ்ந்தாள்
தாதவிழ் தாரான் தானுந் - தன்மனங் கொள்ளை கொண்ட
மாதினைப் பெற்றே மென்று
மங்கையோ டினிது வாழ்ந்தான்.
(இ- ள்) கோதை -சாவித்திரி; தான் மனத்தில் வேட்ட-தான் மனத்தில் விரும்பிய கொழுநன-கணவனை; அடைய 'என்ன மாத வம் செய்தேன்' என்று -அடைவதற்கு என்ன பெரிய தவத்தைச் செய்தேன் என்று; மகிழ்வெனும் கடலில் ஆழ்ந்தாள்-மகிழ்ச்சி என் னும் கடலில் மூழ்கினள் தாதவிழ் தாரான் தானும் -பூந்தாது கட்ட விழும் மாலையை அணிந்த சத்தியவானும்; தன்மனம் கொள்ளை கொண்ட மாதினைப் பெற்ருேமென்று-தனது மனத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணைப் பெற்ருேமென்று; மங்கையோடு இனிது வாழ்ந் தான்-சாவித்திரியோடு மிக இனிதே வாழ்ந்தான். (எ-று) 80
திருக்கலியாணச் சருக்கம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்

ஐந்தாவது மனையறச் சருக்கம்
405 மட்டவிழ் தாராள் மாமன்
மாமியை வணங்கிப் பின்னர் விட்டுவிட் டொளிரும் பைம்பூண்
விளங்குபொன் காஞ்சி நீக்கிப் பட்டுடை களைந்து கான்வாழ்
பார்ப்பனப் பெண்கள் போலக் கட்டினள் காவிக் கூறை
கண்டிகை கழுத்தி லேற்ருள். (இ- ள்) மட்டு அவிழ் தாராள்-தேன் கட்டவிழும் மாலையை யணிந்த சாவித்திரி; மாமன் மாமியை வணங்கி-தியுமற்சேனனையும் அவன் மனைவியையும் வணங்கி; பின்னர்-அதன் பின்பு: விட்டு விட்டு ஒளிரும் பைம் பூண் - விட்டு விட்டு ஒளி செய்யும் பொன் ஆபரண ங்களையும்; விளங்குபொன் காஞ்சி - விளங்கா நின்ற பொன்னலாகிய கர்ஞ்சி என்னும் எட்டுக்கோவை மணியையும், நீக்கி-விலக்கி; பட் டுடை களைந்து-பட்டுடைகளைக் கழற்றி:கான்வாழ் பார்ப்பனப் பெண் கள்போல-காட்டில் தவவாழ்வை மேற்கொண்டு வாழும் பார்ப்ப னப் பெண்களைப் போல; காவிக் கூறை கட்டினள் - காவிநிறப் புடை வையைக் கட்டினுள்; கண்டிகை கழுத்திலேற்ருள் - உருத்திராக்க மாலையைக் கழுத்தில் தாங்கினுள். (எ-று) l
406 கணவனே தெய்வ மென்று
கருதிடுங் கற்பின் மிக்காள் கணவனைத் தொழுதெ ழுந்து
காலைதன் கடன்மு டிப்பாள் கணவனின் கருத்த நிந்து
கடமைகள் செய்யும் நீராள் கணவனை யன்றி வேழுேர்
காளையை நினைத்தும் பாராள், (இ-ள்) கணவனே தெய்வமென்று கருதிடும் கற்பின் மிக்காள்தனது கணவனே தனக்குத் தெய்வமென்று எண்ணும் கற்பிற் சிறந் கவள்; கணவனைத் தொழுது எழுந்து காலை தன் கடன் முடிப்பாள்நித்தியை விட்டெழும்பொழுது கணவனைத் தொழுது எழுவாள், அதன் பின் கான் செய்ய வேண்டிய காலைக்கடன்களைச் செய்து முடிப்பாள்; கணவனின் கருத்து அறிந்து கடமைகள் செய்யும் நீராள்-கணவனின்

Page 118
2UZ,
க்ருத்தையறிந்து அதன்படி கடமைகளைச் செய்யும் குணத்தை யுடைய வள்; கணவனை அன்றி வேறு ஒர் காளையை நினைத்தும் பாராள் - தனது கணவனையன்றிப் பிற ஆடவரை நினைத்தும் பார்க்கமாட் டாள். (எ-று) 2
407 புலர்வதன் முன்னெ முந்து
பூவைதன் இல்லம் முற்றம்
அலகிடல் மெழுகல் செய்வாள்
அலைபுன லாடித் தேன்பெய்
மலர்தழை கொய்து வந்து
மகேசனைப் பூசித் துப்பின்
பலவகை யுண்டி யட்டிப்
பதியினுக் கூட்டு வாளே.
(இ~ள்) பூவை - சாவித்திரி; புலர்வதன் முன் எழுந்து - விடியு முன் நித்திரை விட்டெழுந்து; தன் இல்லம் முற்றம் அலகிடல், மெழு கல் செய்வாள் - தனது வீட்டையும், முற்றத்தையும் அலகிடல், மெழு கல் முதலியவற்றைச் செய்வாள்; அலைபுனல் ஆடி - (அதன் பின்பு) நீராடி, தேன் பெய் மலர், தழை கொய்துவந்து - தேன் பிலிற்றும் மலர்களையும் பத்திரங்களையும் கொய்து கொண்டுவந்து; மகேசனைப் பூசித்து-இறைவனுக்குச் சாத்தி வழிபட்டு; பின் பலவகை உண்டி அட்டி-பின்னர்-பல வகையான தீன்பண்டங்களைச் சமைத்து பதி யினுக்கு ஊட்டுவாள் -தன் நாயகனுக்கு ஊட்டுவாள். (எ -று) 3
403 தன்பதிப் பெற்றேர் தம்மைத்
தனது பெற் ருே ரென் றெண்ணி
அன்பொடு சேவை செய்வா
ளவர்சொலைத் தட்டா ளாகி
முன்பவர்க் குணவ ருத்தி
மொய்குழல் பின்ன ருண்பாள்
நன்மகட் பெற்ருே மென்று
நயந்தனர் முதியோர் தாமும்,
(இ-ள்) தன் பதிப் பெற்றேர் தம்மை-தனது கணவனைப் பெற் றவராகிய மாமன் மாமியை, தனது பெற்றேர் என்று எண்ணி -- தன்னைப் பெற்ற தகப்பன் தாய்போல எண்ணி; அன்பொடு சேவை செய்வாள்-அன்போடு அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வாள்;

2O3
அவாசொலைத் தட்டாளர்கி; முன்பு அவர்க்கு உணவு அருத்தி - முன்னர் அவர்களுக்கு உணவூட்டி மொய்குழல் -வண்டுமொய்க்கும் கூந்தலையுடைய சாவித்திரி; பின்னர் உண்பர்ள்; நன்மகட் பெற்ருேம் என்று-நல்ல மருமகளை நாம் பெற்ருேமென்று; முதியோர் தாமும் நய்ந்தனர் - அந்த முதியவர்களும் அவளிடத்தில் விருப்பும் அன்பும் கொண்ட்ார்கள், (எ-று} 4
409 மருமகள் வந்த பின்னர்
மாமனும் மாமி யுந்தாம்
அருமையாய் வளர்த்த தங்கள்
அருமக னையும்ம றந்தார்
திருமகள் தானே தம்மைத்
தேடிவந் தடைந்தா ளென்று
பெருமையோ ட வளைக் கண்போற் பேணின ரன்பு செய்தார்.
(இ-ள்) மருமகள் வந்த பின்பு - மருமகளாகிய சாவித்திரி வந்த பின்பு: மாமனும் மாமியும்-தியுமற்சேனனும் மனைவியும்; தாம் அரு மையாய் வளர்த்த - தாங்கள் அருமையாகப் பெற்று வளர்த்த; தங் கள் அரு மகனையும் மறந்தார் -தங்களது அருமை மகனையும் மறந் தார்கள்; திருமகள்தானே -இலக்குமிதானே; தம்மைத் தேடி வந்து அடைந்தாள் என்று - தம்மைத்தேடி தம்மிடம் வந் தா ள் என்று; பெருமையோடு-பெருமையுடையவர்க்ளாய்; அவளை-சர்வித்திரியை கண்போற் பேணினர்-கண்களைப் பேணுவதுபோலப் பேணிக்காத்த னர்; அன்பு செய்தார் - அவளின்மேல் உள்ளன்புடையவர்களானுர் கள். (எ-று) 5
40 சினக்களி யானை மன்னன்
செல்விதா னெனத்த ருக்காள் வனத்தினிற் பெற்ற வாழ்வு
வறியதென் றெள்ளல் செய்யாள் மனக்குறை யெதுவு மின்றி
மகிழ்வுடன் நிறைவு மெய்திக் கனக்குழை கணவ னேடு
கருத்தொரு மித்து வாழ்ந்தாள். (இ- ள்) சின களி யானை மன்னன் - கோபத்தையுடைய மதம் பொருந்திய யானைப்படையையுடைய அசுவபதி ம ன் ன லு  ைடய

Page 119
204
செ ல் விதா னெ ன த் தருக்காள் - மகள் தான் என்று எ ன் ணிச் சாவித்திரி ஆணவங் கொள்ளாள்; வனத்தினிற் பெற்ற வாழ்வு-தான் காட்டினிலே பெற்ற வாழ்வு; வறியது என்று எள்ளல் செய்யாள் - தரித்திரமானது என்று இகழமாட்டாள்; மனக்குறை எதுவுமின்றி-மனத்தில் குறைபாடு ஒன்றுமின்றி; மகிழ்வுடன் நிறைவு மெய்தி-மனமகிழ்வும் மன நிறைவும் எய்தி, கனக்குழை கணவனேடு கருத்து ஒருமித்து வாழ்ந்தாள்-கணத்த குழையையணிந்த சாவித்திரி கணவனுேடு மனமொருமித்து நன்கு வாழ்ந்தாள். (எ-று)
(வி-ம்) கணங்குழை என்பது எதுகை நோக்கி கனக்குழை என்று வலித்தது. 6
笠11 சத்திய வானு மென்றுஞ்
சத்தியந் தவற மாட்டான்
நித்திய பூசை வேள்வி
நியமமாய்ச் செய்து வந்தான்
புத்திரன் பெற்ற வர்க்குப்
புரிகட னெல்லாஞ் செய்தான்
பத்தினி தன்னை யன்றிப்
பரன்மனை மனத்துங் கொள்ளான்.
(இ-ள்) சத்தியவானும் என்றும் சத்தியந் தவறமாட்டான்,நித் திய பூசை, வேள்வி; நியமமாய்-முறைமைப்படி செய்து வந்தான்; புத்திரன்-மகன்; பெற்றவர்க்குப் புரிகடன் எல்லாம் செய்தான் - பெற்றேருக்குச் செய்ய வேண்டிய கடன்களை எல்லாம் செய்தான்; பத்தினி தன்னையன்றி - சாவித்திரியையன்றி, பரன்மனை-பிறன் மனை விய்ை; மனத்துங் கொள்ளான்-மனத்தாலும் நினைக்க மாட்டான். (ஏகபத்தினி விரதணுக இருந்தான்) (எ-று) 7
任沮2 கற்பெனு மொழுக்கம் பேணல்
காரிகை யர்க்கே யாகும்
மற்பகர் மார்ப ரான
மைந்தருக் கல்ல வென்னு
மற்பர்கள் போல வன்றி
யத்திரு மகனே ஆணுங்
கற்பினில் வழுவா நிற்றல்
கடமையென் றெண்ணுஞ் சீரோன்,

205
(இ-ள்) கற்பெனும் ஒழுக்கம் பேணல்-கற்பு என்னும் ஒழுக் கத்தைப் பேணி நடத்தல்; காரிகையர்க்கே ஆகும் - பெண்களுக்கே பொருந்தும்; மல்பகர் மார்பர் ஆன மைந்தருக்கு அல்ல என்னும் - மற்ருெழிலைக் கூறும் (வெளிப்படுத்தும்) மார்பினையுடைய ஆண்மக்க ளுக்கல்ல என்று சொல்லும்; அற்பர்கள் போல அன்றி-அற்ப புத் தியையுடையவர் போலவன்றி; அத் திருமகனே - அந்த மேன்மையான சத்தியவானே: ஆணும் - ஆண்களும், கற்பினில் வழுவா நிற்றல்கற்பினிலே வழுவாது நிற்றல்; கடமை என்று எண்ணும் - கடமை என்று எண்ணுகின்ற; சீரோன்-சிறப்பான இயல்பை உடையவன். (எ-று) 8
43 அருந்ததி வசிட்டன் போலும்
அலரொடு மணமும் போலுந் திருந்திய தமிழில் வேதந்
தெரித்தவள் ளுவனுந் திண்மை பொருந்திய கற்பின் மிக்க
பூவைவா சுகியும் போலும் இரும்புவி தனில வர்கள்
இணைபிரி யாது வாழ்ந்தார். (இ- ள்) அருந்ததி வசிட்டன் பேர்லும்-அருந்ததியும் வசிட்ட னும் போலவும்; அலரொடு மணமும் போ லும் - பூவும் மணமும் போலவும்; திருந்திய தமிழில் -செம்மையாகிய தமிழில்; வேத ம் தெரித்த-தமிழ்மறையாகிய திருக்குறளைச் சொன்ன, வள்ளுவனும்திருவள்ளுவனும்: திண்மை பொருந்திய கற்பின்மிக்க பூவை - மனத் திட்பம் உள்ள கற்பிலே மிகுந்த பெண்ணுகிய, வாசுகியும் போலும்வாசுகியைப் போலவும்; இரும்புவிதனில் - இந்தப் பெரிய பூமியில்! அவர்கள்-சத்தியவானும் சாவித்திரியும்; இணைபிரியாது வாழ்ந்தார் -வாழ்விற் பிரிதலில்லாமல் ஒன்றித்து வாழ்ந்தனர். (எ-று) 9
44 காதல ரின்ப வாழ்வைக்
கண்டவர் மெச்சி ஞர்கள்
பூத லத் திவர்கள் மாலும்
பொன்னியும் போல்வ ரென்பார்
ஆதியு மம்மை யும்போ
லமைந்தன ரரிதே யென்பார்
காதலன் கருப்பு வில்லி
கன்னியோ இரதி யென்பார்,

Page 120
206
(இ -ன்) காதலர் இன்ப வாழ்வைக் கண்டவர் மெச்சினுர்கள்சத்தியளானும் சாவித்திரியும் ஆகிய இரண்டு காதலர்களும் இன்ப மாக வாழ்ந்தார்கள் அsதைக் கண்டவர்கள் மெச்சினுர்கள் பூதலத்து இவர்கள் மாலும் பொன்னியும் போல் வர் என்பார் - பூமியில் இவர்கள் திருமாலும் இலக்குமியும் போல்வர் என்பார் ஆதி யும் அம்மையும் போல் அமைந்தனர் அரிதே என்பார் - சிவபெருமானும் உமாதேவிபு போல் அமைந்தனர். இஃது கிடைத்தற்கரிய நல் வாழ்வே ஆகையால் இப்படி வாழுதல் அரிதே என்பார்கள்; காதலன் கருப்பு வில்லி - சந்தியவான் மன்மதன், கன்னியோ இரதி என்பார்-சாவித்
திரியோ இரதிதேவி போன்றவள் என்பார்கள். (எ-று)
፵ 15 இங்கன மின்ப மாக
இருவரும் வாழு நாளில் திங்கள்பன் னிரண்டு சென்ற
தேன்பொழி நார தப்பேர்ப் புங்கவன் சொன்ன தெல்லாம் புந்தியிலெண்ணி நாதன் இங்கினும் நான்கு நாளே
யிருப்பனென் றுள்ளம் நைந்தாள்.
(இ-ன்) இங்ங்ணம் இன்பமாக இருவரும் வாழும் நாளில் பன்னிரண்டு திங்கள் சென்ற - பன்னிரண்டு மாசங்கள் சென்ற ன; தேன் பொழி-தேனேப் போலும் இனிய கானத்தைப் பொழிபவரும்; நாரதப் பேர்ப் புங்கவன்-நாரதர் என்னும் பெயரையுடையவருமான சிறந்த மகா முனிவர் சொன்னதெல்லாம் - முன்பு சொன்னதெல் லாம் புந்தியில் எண்ணி-மனத்தில் எண்ணி; நாதன் இங்கு இனும் நான்கு நாளே இருப்பன் என்று-சத்தியவான் இங்கு இன்னும் நான்கு நாள்களே வாழ்ந்து இருப்பன் என்று உள்ளம் நைத்தாள் - மனம் வருந்தினுள். (எ-று)
G பதியினே யிழந்த பின்னர்ப்
பாவையென் வாழ்வு பாழாம்
மதியினே யிழந்த வானம்
மையிருள் மயமா மன்றே
விதியினை வென்மு னன்றே
வியன் புகழ் மார்க்கண் டேயன்
பதியவன் ருளேப் பற்றின்
பாறுமே கூற்றத் தானும்,

207
'இ-ன்) பதியினே இழந்த பின்னர்-கணவனே இழந்த பின்பு பாவை என் வாழ்வு பாழாம்-பாவையாகிய என்னுடைய வாழ்வு பாழாகும் மதியினே இழந்த வானம் - சந்திரனில்லாத ஆகாயம்" மை இருள் மயமாம் அன்ருே - மை போலும் இருள் மயமாகும் அல் லவா வியன்புகழ் மார்க்கண்டேயன் விதியினே வென்மு ன் அன்ஜேமிகுந்த புகழையுடைய மார்க்கண்டேயன் முன்னர் விதியை வென்று னல்லவோ பதியவன் தாளேப் பற்றின்-எப்பொருட்கும் இறைவணு கிய சிவபெருமாவின் தாள்கஃனப் பற்றினுல் கூற்றந் தானும் பாறுமே-நமனும் நிலைகளங்கி நீங்குவானே. (எ-று)
47 என்றவள் தேறி ஞளா
யேற்றனள் திரிரா நோன்பை
ஒன்றிய மனத்த ளாகி
யொருதனி முதல்வன் றன்ஃன
என்றுமே பிரிவில் லாத
இறைவியை யேத்த லானுள்
சென்றன மூன்று நாள்கள்
செய்தவம் பலிக்கு மன்றே.
(இ-ன்) என்று அவள் தேறினுளாப் -என்று எண்ணிய் சாவித் திரி மனத் தேறியவளாப் திரிரா தோன்பை ஏற்றனன் - திரிரா நோன்பைக் கைக்கொண்டொழுகிஒன்: ஒன்றிய மனந்தளாகி - ஒரு நிலேப்படுத்திய மனத்தை உடையவளாகி ஒரு தனி முதல்வன் தன்தீனஒப்பற்ற ஈஸ்வரனுகிய சிவபெருமாஃண் என்றுமே பிரிவில்லாத இறை வினய-என்றும் பிரிவில்லாதவளாகிய சாவித்திரி தேவியை ஏத்த லானுள்-துதித்துக் கொண்டிருந்தான் மூன்று நாள்கள் சென்றன - அப்படி மூன்று நாள்கள் கழித்தன செய்தவர் பவிக்கும் அன்றுே - அவள் செய்த தவம் பவிக்கும் அல்லவர்? ஆம் பலிக்குமே) (எ-று) 13
சாவித்திரி தேவியைத் தோத்தரித்தல்
வேறு
48 ஒங்காரி சிவசத்தி, புமையே! போற்றி!
உருத்ராணி யுன்பாதம் போற்றி! போற்றி!! பாங்காகப் பல்லுலகும் படைத்தாப் போற்றி!
படைத்தவைகள் பரித்தருளும் பரையே போற்றி!

Page 121
208
நீங்காம லென்னுள்ளம் நிற்பாய் போற், !
நின்மலமாம் அருட்சோதி நீலி! போற்றி! தீங்கான வவையெம்மைத் தீண்டா வண்ணந்
திருவருள்செய் சாவித்ரி தேவி போற்றி!
(இ- ள்) ஓங்காரி- சத்தியே சிவசத்தி - சிவசத் தியே; உமையேஉமாதேவியாரே போற்றி-வணக்கம்; உருத்திராணி-பரமேஸ்வரியே! உன்பாதம் போற்றி போற்றி-உமது திருவடிகளுக்கு வணக் கம், வணக்கம்; பாங்காக - மிகுந்த அழகாக; பல் உலகும் - பல உலகங் களையும்; படைத்தாய் போற்றி-தோன்றச் செய்தவளே வணக்கம்: படைத்தவைகள்- தோற்றங்களாகிய அவற்றை; பரித்தருளும்-காத் தருளும்; பரையே போற்றி -பரையென்பவளே வணக்கம் என்னுள் ளம் நீங்காமல் நிற்பாய் போற்றி-எனது மனத்தை விட்டு நீங்கா மல் நிற்பவளே வணக்கம்; நின்மலமாம் - மலமற்ற அருட்சோதி - அருள்சோதியே; நீலி-நீல நிறத்தையுடையவளே, பேர்ற்றி - வணக் கம்; தீங்கான அவை எம்மைத் தீண்டா வண்ணம்-எவ்வகைப்பட்ட தீமைகளும் எமைவந்து பற்றவண்ணம்; திருவருள் செய் சாவித்திரி தேவி போற்றி - திருவருள் செய்தருளுகின்ற உமாதேவியே வணக்கம். (எ-று) 14
419 மரகதமா மணிவண்ண மாதே! போற்றி!
மகாதேவர் மகிழ்ந்தணையும் மானே! போற்றி!
மருவணையும் மலர்க்குழலாய்! மந்த காச
மதிமுகத்தாய்! மாதங்கி மாலின் தங்காய்!
திரிவிழியர்ய்! திரிசூலி! திகழுஞ் செய்ய
திருக்கரத்தி லங்குசபா சங்க ளேந்துந்
திரிபுவன சுந்தரியே! தேவர் போற்றுந்
திகம்பரியே! சாவித்ரி தேவி! போற்றி!
(இ-ள்) மரகதமா மணிவண்ண மாதே போற்றி-பச்சை மணி நிறமுள்ள தேவியே வணக்கம்; மகாதேவர் மகிழ்ந்து அணையும் மர்னே போற்றி-சிவன் அணைந்து மகிழ்கின்ற மான்போன்றவளே வண்க்கம்; மரு அணையும் - வாசனை பொருந்திய, மலர்க் குழலாய்-மலரை அணிந்த கூந்தலை உடையவளே; மந்தகாச-புன்னகை தவழும்; மதி முகத்தாய்சந்திரன் போலும் முகத்தை உடையவளே; மாதங்கி - ப ா ர் வதி தேவியே; மாலின் தங்காய் -விஷ்ணுவின் தங்கையே; திரி விழியாய்மூன்று கண்களையுடையவளே; திரிசூலி-முத்தலைச் சூலத்தை யுடைய

209
வளே; திகழும் செய்ய திருக்கரத்தில் -விளங்காநின்ற சிவந்த திருக் கரங்களிலே, அங்குச பாசங்கள் ஏந்தும் - அங்குசத்தையும் பாசத்தை யும் ஏந்துகின்ற; திரிபுவன சுந்தரியே-மூவுலக அழகி யே; தே வர் போற்றும் திகம்பரியே -தேவர்கள் துதிக்கின்ற பார்வதி தேவியே; சாவித்திரி தேவி-உமாதேவியே; போற்றி-வணக்கம். (எ-று) 15
420 இந்திரனு மிமையவரு மிரந்து வேண்ட
விடர் செய்த மகிடனைமுன் னிறுத்த தாயே!
நந்தியிடஞ் சரணடைய மார்க்கண் டேயன்
நம்பரனும் நமனுயிரை நலிந்தா ரன்றே
சந்த தமு முன்புகழே சாற்றும் நாதன்
சத்தியவான் தன்னுயிரைக் கவர வெண்ணி
அந்தகன ரடைந்தவனை யழிக்கா வண்ணம்
அருளுவைநீ! யாரணங்கே! யலந்தேன் போற்றி!
(இ- ள்) இந்திரனும்; இமையவரும் - தேவர்களும்; இர ந் து வேண்ட-மகிடாசுரனின் கொடுமைகளினின்றும் தம்மைக் காப்பாற் றும்படி இரந்து வேண்டிக்கொள்ள இடர் செய்த மகிடனை-அவர்க ளுக்கு இடுக்கண் செய்த மகிடாசுரனை; முன்-முன்பு: இறுத்த -சங் கரித்த; தாயே -தாயானவளே; மார்க்கண்டேயன் நந்தியிடம் சரண டைய-மார்க்கண்டேயன் சிவபெருமானிடம் சரணமடைய; நம் பர னும் -எங்கள் சிவபிரானும்; நமன் உயிரை -இயமனுடைய உயிரை நலிந்தார் அன்றே -அழித்தாரல்லவா : சந்ததமும் - எப்பொழுதும் உன்புகழே சாற்றும் நாதன்-உனது புகழையே சொல்லும் என் தலை வணுகிய; சத்தியவான் தன் உயிரைக் கவர எண்ணி - சத்தியவானின் உயிரைக் கவரும்படி எண்ணி; அந்தகனுர் அடைந்து அவனை அழிக்கா வண்ணம்-இயமன் அவனை அடைந்து அவனது உ யி  ைர க் கவரா வண்ணம்; ஆரணங்கே-அரிய தேவியே; நீ அருளுவை-நீ அருள் செய்வாயாக; அலந்தேன்-நான் துன்பப் பட்டேன்; போற்றி -- வணக்கம். (எ-று) 16
421 வேதமுதல் விண்ணுேரு மறிய வொண்ணு
வித்தகியே விசாலாட்சி போற்றி போற்றி காதலுட னுன்பதமே களைக ணென்று
கருதியுனை யடைந்தேற்குன் கடைக்கண் நல்காய்
9T· 14

Page 122
2 O
நாதனுயிர் போனபின்பு நாரி யர்க்கு
நானிலத்தில் நல்வாழ்வு முண்டோ தாயே
ஆதலின லவனுயிரைக் காப்பா யம்மா;
அம்பிகையே அருட்டாயே! போற்றி! போற்றி!!
(இ-ள்) வேதம் முதல்-வேதம் முதலாக; விண்ணேரும்-தேவர் களும்; அறிய ஒண்ணு-அறிய முடியாத வித்தகியே-ஞான சாதுரி யத்தை உடையவளே விசாலாட்சி - விசாலமான கண்களையுடைய வளே; போற்றி போற்றி-வணக்கம் வணக்கம்; காதலுடன்-அன்பு டன்; உன்பதமே-உன் பாதங்களையே; களைகண் என்று - பற்றுக் கோடு என்று; கருதி உனை அடைந்த எற்கு-எண்ணி உன்னை வந்து அடைந்த அடியவளாகிய எனக்கு உன் கடைக்கண் நல்காய்-உனது கடாட்சத்தை ஈவாயாக; நாதன் உயிர் பேர்ன பின்பு மதமது கண வனின் உயிர் போன பின்பு; நர்ரியர்க்கு-பெண்களுக்கு நானிலத் தில் -இந்தப் பூமியில்; தாயே நல்வாழ்வும் உண்டோ-தாயே! இன் பமான நல்வாழ்வுமுண்டாகுமோ? ஆதலினுல் அவன் உயிரைக் காப் பாய் அம்மா-ஆகையினல் எனது கண்வனின் உயிரைக் காப்பாற்று வாய் தாயே; அம்பிகையே - மகேஸ்வரியே; அருள் தாயே - அருளுக் குத் தாயாய் அமைந்தவளே! போற்றி போற்றி - வணக்கம், வணக் கம். (எ- று) 7
சாவித்திரி சத்தியவானுடன் காட்டிற்குச் செல்லத் துணிதல்
வேறு
422 நன்றவள் முடித்தாள் நோன்பை
ஞாயிறு முதித்தான் காலை
இன்றிவ ஞயு ளெல்லை
யிறுதியை யெய்து மென்று
நன்றறி முனிவர் சொன்னர் நாணிவ னுடனே கானம்
இன்று சென் றிடுதல் வேண்டு
மென்றவள் துணிய லானள்.
(இ- ள்) அவள் நோன்பை நன்று முடித்தாள் - சாவித்திரி திரிரா நோன்புை நன்கு நோற்று நிறைவு செய்தாள்; காலை ஞாயி

2.
றும் உதித்தான்-காலையில் சூரியனும் உதித்தான், இன்று இவன் ஆயுள் எல்லை இறுதியை எய்தும் என்று-இன்றைக்கு இவனது வாழ் வின் அளவு முடிவை அடையும் என்று; நன்று அறி முனிவர் சொன் னர்-திரிகால உணர்ச்சி மிக்க நாரத முனிவர் முன்னே கூறினூர்; நான் இன்று இவனுடனே கானம் சென்றிடுதல் வேண்டும் . ஆத லால் நானும் இன்று இவனுடன் காட்டிற்குச் செல்லுதல் வேண்டும்; என்று அவள் துணியலர்ணுள் - என்று சாவித்திரி மனத் துணிவு கொண்டாள். (எ-று) 8
மாமி சாவித்திரியை உணவருந்தும்படி வேண்டல்
423 கண்மணி மூன்று நாளாய்க்
கடுந்தவஞ் செய்து நொந்தாய்
எண்ணிய படியே யெல்லா
மெம்பெரு மாட்டி யீவாள்
பண்ணியஞ் செய்து வைத்தேன்
பால்பழந் தேனு முண்டாம்
உண்ணுதி யென்று மாமி
யுருக்கமாய் வேண்டி ஞளே.
(இ-ள்) கண்மணி-எம் கண்ணின் மணி போன்றவளே; மூன்று நாளாய்க் கடுந்தவம் செய்து நொந்தாய்-நீ மூன்று நாள்களாகத் திரிரா நோன்பு நோற்று வருத்தமுற்ருய்; எண்ணிய படியே எல்லாம் எம்பெருமாட்டி ஈவாள்- நீ விரும்பியபடியே எல்லா வரங்களையும் சாவித்திரி தேவி ஈவாள்; பண்ணியம்-பணியாரம் செய்து வைத் தேன்-ஆக்கி வைத்திருக்கின்றேன்; பால் பழம் தேனும் உண்டாம்பால், பழம், தேன் ஆனவும் உண்டு; உண்ணுதி - உண்பாயாக, என்று மாமி உருக்கமாய் வேண்டினுள்- என்று தியுமற் சேனன் மனைவி மன அன்போடு வேண்டினுள். (எ - று) ᎶᎢ -- Ꮈj6Ꮡ)éᎦ . 19
424 அம்மநா னந்தி வேளே
யருந்துவேன் வருந்த வேண்டாம்
அம்மையின் நோன்பை நோற்ரு
ரடைவரோ மெய்வ ருத்தம்
நம்மையும் கூற்றம் வந்து
நலியுமோ வில்லை யில்லை
இம்மையி லின்ப வாழ்வு
மேற்றமுந் தருவா ளன்னை!

Page 123
21.
(இ -ள) அம்ம!-தர்பை ஒத்த எனது மாமியே; நான் அந்தி வேளை அருந்துவேன்-நான் சாயங்காலம் உண்ணுவேன்; வருந்த வேண்டாம்-இப்போது உண்ணவில்லை என்று வருந்த வேண்டாம்; அம்மையின்-பார்வதியின்; நோன்பை நோற்ருர் வருத்தம் அடை வரோ-திரிரா நோன்பை நோற்றவர்களும் உடல் வருத்தம் அடை வார்களோ, இல்லையே; நம்மையும் கூற்றம் வந்து நலியுமேர் - எம் மையும் இயமன் வந்து வருத்துவானே; இல்லை இல்லை-வருத்தமாட் டான், வருத்தமாட்டான்; இம்மையில்- இப்பிறப்பில்; இன்ப வாழ் வும் -இன்பமான வாழ்வும்; ஏற்றமும்- உயர்ச்சியையும்; அன்னை தருவாள்-உமாதேவியார் தந்தருளுவார். (எ-று) 20
425 கோடரி கூடை கையிற்
கொண்டுசத் தியவான் செல்ல
ஒடரிக் கண்ணி னளு
மும்முடன் நானும் வந்து
காடுறை விலங்கு புட்கள்
கனிதரு மரங்கள் வண்டு
பாடுபூஞ் சோலை யெல்லாம்
பார்த்திட விழைந்தே னென்ருள்.
(இ- ள்) சத்தியவான் கோடரி கூடை கையிற் கெர்ண்டு-சத்தி யவான் கோடரியும் கூடையும் கையிலே கொண்டு; செல்ல-காட்டிற் குப்போக ஒடு அரி கண்ணினளும்-ஒடுகின்ற செவ்வரிபடர்ந்த கண் களையுடைய சாவித்திரியும்; உம்முடன் நானும் வந்து - உம்முடனே நானும் கூடிவந்து; காடு உறை-காட்டில் வாழும்; விலங்கு- மிருகங் கள்; புட்கள்- பறவைகள்; கனிதரு மரங்கள் - பழங்களைத் தருகின்ற பழ மரங்கள்; வண்டு பாடு பூஞ்சோலை-வண்டு ரீங்கர்ரம் செய்கின்ற பூஞ்சோலைகள்; எல்லாம்-எல்லாவற்றையும்; பார்த்திட விழைந்தேன் -பார்த்திட விரும்பினேன்; என்ருள்- என்று சாவித்திரி கூறினள். (எ-று) 21 426 உன் விருப் பதுவா னலென்
னுடன்வரற் கட்டி யில்லை யன்னமா கார மின்றி
யரியநோன் பாற்றி னையா லுன்னுடல் தளர்ந்தாய் கானி லுலா வரல் வருத்த மாகும் அன்னமுன் துன்பங் காண
ஆற்றுமோ என்ற னுள்ளம்.

23
(இ-ள்) உன் விருப்பு அது ஆனல்- காட்டிற்கு வருவது உன் விருப்பமானல்; என் உடன் வரற்கு அட்டியில்லை-நீ என்னுடன் வரு வதற்குத் தடையில்லை; அன்னம் ஆகாரம் இன்றி--சோறு முதலிய உணவின்றி; அரிய நோன்பு ஆற்றினையால்-அரியதொரு நோன்பைச் செய்தாயாதலால்; உன் உடல் தளர்ந்தாய் - உனது உடல் தளரப் பெற்ருய் கானில் உலா வரல் வருத்தமாகும்-ஆனமையால் நீ காட் டிலே உலாவி வருவது துன்பத்தைத்தரும்; அன்னம்-அன்னமே; உன் துன்பம்காண -நீ படும் வேதனையைக்கான என் உள்ளம் ஆற்றுமோ -எனது மனம் பொறுக்குமோ பொருது. (எ-று) 2
427 ஐயநும் மோடு செல்ல
லளவிலா வின்பம் நல்கும்
நையுமென் உள்ள மும்மை
நான்பிரிந் திருக்கும் வேளை
தெய்வம்நந் துணையாய் நிற்குந் தேவரீர் கவல வேண்டாம்
மெய்யினில் வருத்த மில்லேன்
மேவுவோங் காட்டை யென்ருள்.
(இ- ள்) ஐய-என் தலைவனே நும்மோடு செல்லல்-உம்மோடு நான் காட்டிலே செல்லுதல்; அளவு இலா இன்பம் நல்கும்-எனக்கு அளவிலாத இன்பத்தைத் தரும். உம்மை நான் பிரிந்திருக்கும் வேளை என் உள்ளம் நையும்-உம்மை நான் பிரிந்திருக்கும் சமையத்தில் என் மனம் வருந்தும்; ஆதலால் நானும் கூட வருகிறேன். தெய்வம் நம் துணையாய் நிற்கும்-தெய்வம் நமக்குத் துணேயாய் நின்றருளும்; தேவ ரீர் கவலவேண்டாம் - தெய்வாம்சமுடையவரே தாங்கள் கவலைப்பட வேண்டாம். மெய்யினில் வருத்தமில்லேன் - உடம் பில் எதுவித துன் பமும் இல்லாமல் இருக்கின்றேன்; காட்டை மேவுவோம் என்ருள் - ஆதலால் நாம் காட்டை அடைவோம் என்று சாவித்திரி கூறினுள்.
(or-g) 23
428 பெற்றவர்க் குண்டி யாய
பேணியே தந்த பின்னர்
நற்றவ மாமன் மா
நல்விடை பெற்று மேலே
கொற்றவ னேடுங் கோதை
குளிர்முகங் காட்டிச் சென்ரு?ள்
இற்றையென் நிகழு மோ வென்
நிருதயந் துடித்தல் காட்டாள்.

Page 124
24
(இ - ள்) பெற்றவர்க்கு உண்டி ஆய-தனது கணவனைப் பெற் றவர்களாய மாமன் மாமிக்கு உண்டி முதலானவற்றை: பேணியே தந்த பின்னர்-விருப்பமாக ஆக்கிக் கொடுத்த பின்பு: நல்தவ மாமன் மாமி நல்விடை பெற்று-நல்ல தவத்தையுடைய மாமன் மாமியரின் நல்ல உத்தரவைப் பெற்று; மேலே-பின், கொற்றவனேடும் - (அரச குமாரனன) சத்தியவானேடும்; கோதை - சாவித்திரி; குளிர் முகம் காட்டிச் சென்ருள்-குளிர்ந்த தன் முகபாவத்தைக் காட்டிச் சென் ருள். இற்றை-இன்று; என்- என்ன நிகழுமோ என்று இருதயந் துடித்தல் காட்டாள் -நிகழப்போகிறதோ என்று தனது இருதயம் படபடத்தலைக் காட்டாதவளானள். (எ-று) 24
423 வல்லியோ டக லாலே
வள்ளலினுள்ளந் துள்ளும் மெல்லிசை கிளர்ந்து பாடி
மிகுவன வனப்புக் கூற அல்லிமென் கோதை யாளும் அகமகிழ் வுற்ரு ளேனும் அல்லலுற் றள கத்தில்
ஐயனுக் கென்ன மென்று. (இ- ள்) வல்லியோடேகலாலே - கொடி போன்ற சாவித்திரியு டன் சத்தியவான் செல்லுதலாலே; வள்ளலின் உள்ளம் துள்ளும்-சத் தியவானின் உள்ளம், மகிழ்ச்சியால் துள்ளும்; மெல்இசை கிளர்ந்து பாடி -மென்மையான இசைகளே மன எழுச்சியுடன் பாடி மிகுவன வனப்புக் கூற- மிகுந்த காட்டின் அழகினை எடுத்துக் கூற, அல்லி மென்கோதை யாளும் - அல்லியினுற் ருெடுக்கப்பட்ட மென்மையான மாலையையணிந்த சாவித்திரியும்; அகமகிழ்வுநருளேனும் - மனமகிழ்வு அடைந்தாளேனும்: ஐயனுக்கு என்ன ஆம் என்று அகத்தில் அல்லல் உற்ருள்-சத்தியவா னுக்கு இன்று என்ன ஆகுமோ என்று உள்ளத்தில் துன்பம் அடைந் தாள். (எ- று) 25
430 பச்சைமா மலையைப் பாராய்
பார்வதி நினைவை யூட்டும்
உச்சியில் மஞ்சு துஞ்ச
லுமையவ ளளகங் காட்டும்
வச்சிர மாலே போலும்
வார்புன லருவி பாய்தல்
வச்சகம் மலர்ந்து தோன்றல்
வண்ணமே லாடை யொக்கும்.

215
(இ-ள்) பச்சைமாமலையைப் பாராய்-பச்சை நிறம் பொருந்திய பெரிய மலையினைப் பார்ப்பாயாக; பார்வதி நினைவை யூட்டும்-அது பார்வதி தேவியின் நினைவைத்தரும்; உச்சியில் மஞ்சு துஞ்சல்-அதன் உச்சியில் கருமேகம் வந்து தங்குதல்; உமையவள் அளகம் காட்டும்உமையவளின் கரிய கூந்தலைக் காட்டும்; வார்புனல் அருவி பாய் தல்-நீர் ஒழுகுகின்ற மலையின் வீழ் ஆறு பாய்ந்தோடுதல்; வச்சிர மாலை போலும் -உமையவளின் மார்பில் மின்னும் வயிரமணி மாலையை ஒக்கும்; வச்சகம்-மலை மல்லிகை, மலர்ந்து தோன்றல்; வண்ண மேல் ஆடை ஒக்கும் - அழகிய மேலாடையை நிகர்க்கும்; (எ-று) 26
争3】 அரியின மினிது பாட
லந்தரர் கான மொக்கும்
அரிபயில் மழலை மாத
ரருமறை யோத லொக்கும்
அரிதம தார்ப்பி னேசை
யங்குசங் கூத லொக்கும்
அரிகளங் கூர்ந்து செல்ல
லன்னையி னுர மொக்கும்.
(இ- ள்) அரியினம் இனிது பாடல்-வண்டின் கூட்டம் இனிதா கப் பாடுதல்; அந்தரர் கானம் ஒக்கும் . தேவர்கள் எம் பிராட்டிக் குச் சாமவேத கானம் பாடுதலை ஒக்கும் - அரிபயில் மழலை-கிளிகள் சொல்லும் மழலை; மாதர் அருமறை ஒதல் ஒக்கும்-பெண்கள் அரிய வேதங்களை ஒதுதலை ஒக்கும்; அரிதம தார்ப்பின் ஒசை - தவளைகளின் பேரொலி ஓசை; அங்கு சங்கு ஊதல் ஒக்கும் - அங்கே சங்குகூதுதலை ஒக்கும் அரிகள் - பாம்புகள்; அங்கு ஊர்ந்து செல்லல்; அன்னையின் ஆரம் ஒக்கும்-எம் அன்னையாகிய பார்வதிதேவியின் மார்பில் புரளும் பொன் ஆரத்தை ஒக்கும். (எ-று) 27
அரி என்னும் பலபொருள் ஒருசொல்-வண்டு, கிளி, தவளை,
பாம்பு என்பவற்றை உணர்த்தியது
4.32 பொன்மலர் சொரிவ வேங்கை
பொழிவன நறவங் கோங்கு
புன்னைகள் பூப்ப வெள்ளி
புது மணந் தருவ சாந்தம்
நன்மணி யசோகஞ் சிந்தும்
நகுவன நாக லிங்கம்
புன்னகை புரிவ முல்லை
பூந்துகள் துருக்கந் தூவும்.

Page 125
26
(இ-ஸ்) வேங்கை பொன்மலர் சொரிவ-வேங்கை ம ரங் க ள் பொன்னிற மலர்களைச் சொரிகின்றன; (அவை பொன்னைச் சொரி வது போலும்); கோங்கு நறவம் பொழிவன. கோங்கு மர ங் க ள் தேனைப் பொழிவனவாயின; புன்னைகள் வெள்ளி பூப்ப-புன்னை மரங் கள் வெள்ளை நிற மலர்களைப் பூப்ப; (அவை வெள்ளியைப் பூத்த போலும்); சாந்தம் புதுமணம் தருவ-சந்தனம் புதுமணத்தைத் தருவ வாயின; அசோகம் நன் மணி சிந்தும் - அசோக மரங்கள் ந ல் ல மாணிக்கம் போலும் சிவந்த நிற மலர்களைச் சிந்தும்; (அவை மாணிக் கங்களைச் சிந்துதல் போலும்); நாகலிங்கம் நகுவன-நாகலிங்க மரங் கள் புட்பித்து நகுதல் செய்யும்; முல்லை புன்னகை புரிவ-முல்லைகள் பூத்துப் புன்னகை செய்வனவாயின; துருக்கம் பூந்துகள் தூவும் - குங்கும மரங்கள் பூந்தாதுகளைத் துரவும். (எ-று) 28
433 பஞ்சினும் வெளிய வாலாற் படருநற் கவரி மான்கள் அஞ்சிறைத் தும்பி யோட்டு
மழகினை யங்குக் காணுய் குஞ்சரக் கன்று சந்தின்
கொம்பரைக் கையி லேந்தித் துஞ்சிடும் வல்லி யத்தைத்
துயிலெழுப் புதலுங் காணுய். (இ- ள்) படரும் நற் கவரி மான்கள்-படர்ந்து திரியும் நல்ல கவரிமான்கள், பஞ்சினும் வெளிய வாலால்-பஞ்சிலும் வெண்மை யான தனது வாலினலே; அம்சிறைத் தும்பி ஒட்டும் - அழகிய இறகு களையுடைய தும்பிகளை ஒட்டும்; அழகினை அங்குக் காணுய்-அழகினை நீ அங்கே காண்பாயாக, குஞ்சரக்கன்று சந்தின் கொம்பரைக் கையி லேந்தி - யானைக் கன்று சந்தன மரத்தின் கொம்பரைத் துதிக்கையில் ஏந்திக்கொண்டு; துஞ்சிடும் வல்லியத்தை - துயில் செய்யும் புலியை துயிலெழுப்புதலும் - நித்திரையிலிருந்து எழுப்புதலையும்; காணுய் - &hofT6öt Lurru urral5. (6T-p) 29
431 கரிநிறக் குன்று போலுங்
களிறுகள் திரிவ காணுய்
பெரியவப் பாறை மீது
பேழ்எனத் திறந்த வாயோ
டரிநிகர் எயிறுங் கொண்ட
அழல்விழிச் சீறும் பாந்தள்
திரிதரும் வேழக் கன்றைத்
தன்றிட முயலல் காணுய்.

2 i7
(இ-ள்) கரிநிறக் குன்று போலும்-கருமை பொருந்திய குன் றுகள் போலும்; களிறுகள் - யானேகள்: திரிவ காணுப் பெரிய அப் பாறை மீது; பேழ் என - குகை என்று சொல்லத்தக்க திறந்த வாயோடு; அரிநிகர்-ஈர்வாளை ஒத்த; எயிறுங்கொண்ட - பல்லையும் கொண்ட அழல்விழி - நெருப்பைக் கக்குகின்ற விழியையுடைய சீறும் பாந்தள்-சீறுகின்ற மலைப்பாம்பு; திரிதரும் வேழக் கன்றை-திரிகின்ற யானைக் கன்றை; தின்றிட முயலல் காணுய் - தின்பதற்கு முயல்வ தைக் காண்பாயாக. (எ-று) 30
435 சிங்கங்கர்ச் சிக்கு மோசை
செயிர்த்தெழுங் கரடி யோசை
வெங்கரி யொன்றே டொன்று
வேறுபட் டிகலு மோசை
பொங்கரா சீறு மோசை
புலிகளி னுறும லோசை
மங்குலை நூறு செய்ய
மழைத்துளி வீழ்தல் பாராய்.
(இ- ள்) சிங்கம் கர்ச்சிக்கும் ஒசையும்; செயிர்த்து எழும் கரடி ஒசை-சினந்து எழுகின்ற கரடியின் ஒசையும்; வெம்கரி - கோபம் பொருந்திய யானைகள் ஒன்ருேடு ஒன்று வேறுபட்டு; இகலும் ஒசைபொருதல் செய்யும் ஒசையும்; பொங்குஅரா சீறும் ஒசை - கோபங் கொண்ட பாம்புகள் சீறுகின்ற ஓசையும்; புலிகளின் உறுமல் ஒசை - புலிகளின் உறுமலோசையும்; ஒன்று சேர்ந்து சென்று; மங்குலை - மேகத்தை; நூறு செய்ய-சிதைக்க; (அதனல்) மழைத்துளி வீழ்தல் பாராய் -மழைத்துளிகள் விழுவதைக் காண்பாயாக. (எ-று) 3 7
436 சுந்தலுன் குழலைக் காட்டுங்
கொவ்வையுன் கனிவாய் காட்டும் மாந்தளிர் மேனி காட்டும்
மெளவலுன் மூரல் காட்டும் காந்தளுன் கைகள் காட்டுங்
கருவிளை கண்கள் காட்டும் பாந்தளுன் அல்குல் காட்டும்
பணைமுலை கோங்கு காட்டும்.
(இ- ள்) கூந்தல்-பாளை விரிந்த கூந்தற் பனைகள்; உன் குழலை காட்டும்-உனது கூந்தலைக் காட்டும்; கொவ்வை - கொவ்வைக்கனி

Page 126
Zito
கள்; உன் கனிவாய் காட்டும்-உன்னுடைய கணிகின்ற வாயைக் காட்டும்; மாந்தளிர் மேனி காட்டும். மாமரத்தின் சிவந்த தளிர்கள் உன் உடம்பின் நிறத்தைக் காட்டும்; மெளவல் - முல்லை மலர்கள்; உன் மூரல் காட்டும் - உனது பற்களைக் காட்டும்; காந்தள்-செங்காந் தட் பூக்கள்; உன் கைகள் காட்டு - உனது கைகளைக் காட்டும் கரு விளை கண்கள் காட்டும்-கருவிளம் பூக்கள் உனது கண்களைக் காட் டும், பாந்தள்-பாம்புகள் (பாம்பின் படங்கள்) உன் அல்குல் காட் டும்-உனது நிதம்பத்தைக் காட்டும்; கோங்கு பணமுலை காட்டும் - கேர்ங்கு மலர்கள் உனது பருமையான முலையைக் காட்டும். (எ-று) 32
437 நந்தர்கள் விளவிற் றுரங்கும்
நறியநற் கணிப றித்துப்
பொந்துறு தேனிற் ருேய்த்துப் புசிப்பதை யிங்குக் காணுய்
சிந்துரச் சினைக டோறுஞ்
செறிபுளி யங்காய் தம்மை
மந்திக ளார வுண்டு
மகிழ்வதை யங்குக் காணுய்.
(இ -ள்) நந்தர்கள் - இடையர்கள்; விளவில் தூங்கும் - 6)øm fr மரத்தில் தூங்குகின்ற; நறிய நல்கனி பறித்து-வாசனை பொருந்திய நல்ல கனிகளைப் பறித்து; பொந்து உறு தேனில் தோய்த்து- மரப் பொந்திற் பொருத்திய தேனில் தோய்த்து; புசிப்பதை இங்கு காணுய் . உண்ணுவதை இங்கே காண் பாயாக; சிந்துர சினைகள் தோறும் " புளியமரத்தின் கொம்புகள் தோறும்; செறி புளியங்காய் தம்மை - நெருங்கிக் காணப்படும் புளியங்காய்களை; மந்திகள் ஆர உண்டு ” குரங்குகள் பிடுங்கி மிகவும் உண்டு; மகிழ்வதை அங்கு காணுய்” களிப்பதை அங்கு காண்பாயாக, (எ-று) 33
438 பாலையின் பழங்க டம்மைப்
பட்சிசா லங்க ளுண்ணும்
மாலுகக் கணியைக் காகம்
மகிழ்வுடன் கூடி யுண்ணும்
மாலையிற் ருெங்குங் கொன்றை
மலர்களில் வண்டு மொய்த்துச்
சாலவே தேனை யுண்டு
சரமெனத் தூங்கும் மாதோ.

29
(இ-ஸ்) பாலையின் பழங்கள் தம்மை - பாலை மரத்தின் பழங் களே, பட்சி சாலங்கள் உண்ணும்-பறவைக் கூட்டம் உ ன் னு ம்; மாலுகக் கனியை- வேம்பின் கனியை காகம் மகிழ்வுடன் கூடி உண் ணும்; மாலையில் தொங்கும் கொன்றை மலர்களில் - மாலை போலத் தொங்குகின்ற சரக்கொன்றை மலர்களில்; வண்டு மொய்த்து; சாலவே தேனை உண்டு-மிகுதியாகத் தேனை உண்டு, சரமென - மணிவடம் போல; துரங்கும்-துரங்குவதைக் காண்பாயாக. (எ-று) 34
மாது, ஓ - அசைகள.
439 பாசிலை படர்ந்த நீரிற்
பாம்புதன் தலையை நீட்ட ஊசியின் கூர்வாய் நாரை
யுற்றதோர் மீனென் றெண்ணி ஆசையோ டதனைக் கொத்த
வதனையப் பாம்பு பற்ற வாசமாய்ப் பேடை நாரை
வந்ததன் துணையை மீட்கும்.
(இ-ள்) பாசிலை படர்ந்த நீரிற் -பச்சிலை படர்ந்த நீரில்; பாம்பு தன் தலையை நீட்ட-ஒரு நீர்ப்பாம்பு தன் தலையை நீரின் மேல் நீட்ட ஊசியின் கூர் வாய் நாரை-ஊசி போலும் கூரிய வாயை யுடைய நாரையானது; உற்றதோர் மீன் என்று எண்ணி - வந்தது ஒர் மீன் என்று எண்ணி; ஆசையோடு அதனைக் கொத்த-உண்ணும் ஆசையுடன் அப்பாம்பைக் கெளவ, அதனை-அந்த நாரையை அப் பாம்பு பற்ற-அந்த நீர்ப்பாம்பு பற்ற; வாசமாய் -வேகமாக: பேடை நாரை-பெண் நாரை; வந்து அதன் துணையை மீட்கும்-வந்து தன் சோடியை மீட்டுக்கொள்ளும் பேடை நாரை பாம்பைக் கொத்தின தால் அது ஆண் நாரையை விட்டது,) (எ-று) 35
440 தண்முகங் கயத்துள் விள்ளுந்
தாமரை மலர்க ளாக
கண்களக் குளத்திற் றேன்றுங்
கருமணிக் குவளை யாக
மண்மகள் பசும்புல் லென்னும்
மரகதச் சேலை போர்த்து
வண்ண மென் மலர்கள் சூடி
வடிவுடன் விளங்கல் காணுய்.

Page 127
220
(இ-ள்) தண்முகம் கயத்துள் விள்ளும் தாமரை மலர்கள் ஆக - குளத்துள் மலரும் தாமரை மலர்கள் குளிர்ந்த முகங்களாக: கண் களக் குளத்தில் தோன்றும் கருமணிக் குவளை ஆக-அந்தக் குளத்திற் ருேன்றும் அழகிய கருநிறக் குவளை மலர்கள் கண்களாக மண்மகள் - நிலமகள்; பசு ம் புல் லெ ன் னு ம் மரகதச் சேலை போர்த்து - பசும்புல்லென்னும் பச்சைச் சேலையைப் போ ர் த் து; வண்ண மென் மலர்கள் சூடி-அழகிய நிறங்களேக் கொண்ட மென்மையான மலர்களைச் சூடி வடிவுடன் விளங்கல் காணுய்-அழகுடன் விளங்குவ தைக் காண்பாய்ாக . . (எ-று) 36
44 என்றவன் பலவுங் காட்ட
வேந்திழை தானுங் கண்டு
சென்றனள்; காதம் நான்கு
சென்றபின் தருக்கள் மிக்குத்
துன்றிய வனம டைந்தார்
தோகையோ விதியை யெண்ணிக்
கன்றிய மனத்தி னேடு :
கணவனைக் காத்து நின்ருள்.
(இ -ள்) என்று அவன் பலவும் காட்ட- என்று சொல்லி சத் தியவான் பலவீற்றையுங் காட்டிக்கொண்டு செல்ல; ஏந்திழை-சாவித் திரி; தானும் கண்டு சென்றனள் - தானும அவற்றைக் கண்டு களித்துக் கொண்டு சென்ருள்; நான்கு காதம் சென்றபின்-நான்கு காத தூரம் சென்றதன் பின், தருக்கள் மிக்குத் துன்றிய - மரங்கள் மிகவும் நெருங்கிய; வனமடைந்தார் - காட்டினுட் சென்ருர்கள்; தோகையோ -சாவித்திரியோ (அக் காட்சிகளில் மனத்தை அதிகம் செலுத்தா மல்); விதியை எண்ணி-சத்தியவானின் விதியை நினைத்து; கன்றிய மனத்தினேடு-வருந்திய மனத்தினேடு; கணவனைக் காத்து நின்ருள்சத்தியவானைக் காத்துக்கொண்டு நின்ருள். (எ-று) 37
மனையறச் சருக்கம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்.

ஆறவது மறலிவரு சருக்கம்
திருச்சிற்றம்பலம்
வேறு
442 தேன் கமழும் பூங்கொடிகள் தென்றலிடை யாடும்
தேன்பருகித் தும்பியினந் தென்னெனவே பாடும் வான்மருவு பல்தருக்கள் வார்கிளைக்கை காட்டி வான்கணிகள் நாந்தருவோம் வந்துகொளு மென்னும்,
(இ- ள்) தேன்கமழும் - வாசனை கமழும் பூங்கொடிகள்; தென்ற விடை-தென்றற் காற்றினிடையே; ஆடும் - அசைந்தாடும்; தேன் பருகி-பூவிலுள்ள மதுவைப் பருகி; தும்பியினம் - வண்டுக் கூட்டங் கள்; தென்னெனவே பாடும்-இனிய இசையுடனே பாடு ம்; வான் மருவு-ஆகாயத்தைக் கிட்டும்; பல் தருக்கள்-பல மரங்கள் வார் கிளைகை காட்டி - நீண்ட கிளைகளாகிய கைகளைக் காட்டி; வான் கனி கள் - சிறந்த அமுதம் போன்ற கணிகளை; நாம் தருவோம்; வந்து கொள்ளும் என்னும் - வந்து பெற்றுக்கொள்ளுங்கள் (என்று கூறுவது போல இருக்கும்) (எ-று)
443 அன்னமுட னண்ணலுஞ்சென் றவ்விடத்தை நண்ணி
பொன்னனையாள் கார்குழலிற் பூமகிழச்சூட்டி இன்னமுதே யான்பறிப்ப னிக்கனிகள் கூடை தன்னிலவை யேந்திடுவாய் தட்சணமே யென்ருன்.
(இ-ள்) அன்னமுடன் - அன்ன நடையையுடைய சாவித்திரியு டன்; அண்ணலும்-சத்தியவானும்; சென்று அவ்விடத்தை நண்ணிபோய் அவ்விடத்தையடைந்து; பொன்னனையாள் - பொன் போன்ற சாவித்திரியின் கார்குழலில் - கரிய கூந்தலில் பூ மகிழச் சூட்டி Aவை மகிழும்படி சூட்டி இன்னமுதே-இனிய அமுதம் போன்ற ேெள; இக் கனிகள் யான் பறிப்பன் - இப்பழங்களை யான் பிடுங் கிப் போடுவேன்; அவை கூடைதன்னில் தட்சணமே ஏந்திடுவாய் என்ருன் - அவற்றை, இக் கூடையின் கண்ணே உடனே ஏந்திக் கொள்வாயாக என்றன். (எ-று)

Page 128
சத்தியவான் கனி பறித்தல்
444 மாங்கனியுங் கூவிளமும் மாதுளையும் பாலைத்
தீங்கனியும் முந்திரிகைத் தேம்பழமு மாய்ந்து பாங்குடனே சத்தியவான் பாவையிடம் நீட்ட வாங்கியவள் கூடையினில் வைத்துமகிழ் வுற்ருள்.
(இ- ள்) மாங்கனியும்-மாம்பழமும்; கூவிளமும் -வில் வம்பழமும் மாதுளையும்-மாதுளம் பழமும்; பாலைத் தீங்கனியும்-இனிய பாலைப்பழ மும்; தேம் முந்திரிகைப் பழமும் - தித்திக்கும் முந்திரிகைப் பழமும்; ஆய்ந்து-ஆராய்ந்து பிடுங்கி; பாங்குடனே சத்தியவான் பாவையிடம் நீட்ட- பக்குவமாகவே சத்தியவான் சாவித்திரியிடம் நீட்டிப் போட அவள் வாங்கிக் கூடையினில் வைத்து மகிழ்வுற்ருள்-சாவித்திரி அவற்றைவாங்கிக் கூடையிலே வைத்து மகிழ்ந்தாள். (எ-று) 3
சத்தியவான் விறகு வெட்ட மரத்திலேறுதல்
445
கத்தியொடு சத்தியவான் கட்டைசில வெட்ட மெத்தவளர் அத்திமர மீதுவிரைந் தேற வைத்தவடி பொய்த்திடலும் வல்வினையுங் கூட பொத்தெனவே வீழ்ந்துபுவி பொன்னுடலஞ் சோர்ந்தான்.
(இ-ள்) கத்தியொடு சத்தியவான்-கத்தியோடு சென்ற சத்திய வான், சில கட்டை வெட்ட சில மரக் கட்டைகளை வெட் டு ம் பொருட்டு; மெத்தவளர் அத்திமரம் மீது விரைந்து ஏற - மிகவும் உயர்ந்து வளர்ந்த அத்திமரம் ஒன்றி ல் வி ைர வாக ஏற; வைத்த அடி பொய்த்திடலும்- வைத்தகால் அடி சறுக்கித் தவறிட லும்; வல்வினையும் கூட-வலியதாகிய ஊழுங்கூட, பெர்த்தெனவே.- பொத்தென்று; புவி வீழ்ந்து-பூமியிலே வீழ்ந்து பொ ன் உடலஞ் சோர்ந்தான் -அழகிய உடல் சோர்ந்தான். (எ -று) 4
446 பத்தினியைப் பக்கல்வரப் பார்வையினுற் கூவி உத்தமியே யென்றலையி லூசிபல கொண்டு குத்திடுதல் போன்றதொரு குற்றமுள தாலே நித்திரைசற் றேயுரிவன் நின்மடியி லென்றன்.

223
(இ- ள்) பத்தினியை-சாவித்திரியை, பக்கல்வர - பக்கத்திலே வரும்படி, பார்வையினுல் கூவி - தன் பார்வையினலே அழைத்து; உத்தமிய்ே-உத்தம நாயகியே; என் தலையில் ஊசி பல கொண்டு குத்திடுதல் போன்றதொரு குற்றமுளதால் - எ ன் னு  ைடய தலை யிலே ஊசிகள் பல கொண்டு குத்திடுவது போன்ற ஒரு துன்பமுண்டு அதனுலே; நின்மடியில் நித்திரை சற்றே புரிவன் என்ருன் - உன்னு
டைய மடியில் சற்று நேரம் நித்திரை செய்வேன் என்ரு ன். (எ-று)
சாவித்திரி வருந்துதல்
447 ஆங்கதனைக் கேட்டவுட னன்ன மிக வஞ்சி
ஏங்கியுளங் கன்றியினி யேதுசெய லென்னத் தாங்கரிய துன்பமுடன் தன் கணவன் யாக்கை
வாங்கிமடி மீதிருத்தி வஞ்சியிவை சொன்னுள்.
(இ- ள்) ஆங்கு அதனைக் கேட்டவுடன்-அவ்விடத்தே சத்திய வான் கூறிய அவ்வுரையைக் கேட்டவுடனேயே; அன்னம் - அன்னம் ப்ோன்ற நடையையுடைய சாவித்திரி; மிக அஞ்சி-மிகவும் பயந்து; ஏங்கி-ஏக்கம் அடைந்து; உளங்கன்றி - மனம் வருந்தி உருகி, இனி ஏது செயல் என்னு-இணிச் செய்வது எது என்று; தாங்கரிய துன்ப முடன்-தாங்குதற்கரிய துன்பத்துடனே தன் கணவன் யாக்கை - தனது கணவனுடைய உடலை; வாங்கி படிமீது இருத்தி - தூக்கி எடுத்து மடியின் மேலே வைத்து; வஞ்சி; இவை சொன்னுள்-வஞ்சிக் கொடி போலும் சாவித்திரி இவ் வார்த்தைகளைச் சொல்லலானள், (at-g) 6
448 இற்றையிவ ஞயுண்முடி வெய்துமென முன்னுள்
முற்றுமுணர் நாரதன் மொழிந்தபடி யாமோ கற்றைமுடிக் கண்ணுதலே காந்தனிவ னல்லால் உற்றதுனே வேறுளதோ உன்னருளு மீதோ.
(இ- ள்) இற்றை-இன்றைக்கு இவன் ஆயுள் முடிவெய்துமெ6 - இவனுடைய வயசு முற்றுப்பெறுமென்று; முன்னுள்; முற்றுமுணர் நார தன்-முற்றும் உணர்ந்தவராகிய நாரத முனிவர்; 1ெ) T பூழி ந் த ட டி. ஆமோ - சொன்னதுபோல நடக்குமோ, கற்றை முடி கண்ணுதலே --கற்றைச் சடையையுடையவரும் நெற்றிக் கண்ணே யுடைபவருமான சிவபெருமானே; காந்தன் இவனல்லால் - கணவனுகிய இவனல்லாமல்; உற்றதுனே வேறுளதோ - எனக்கு உற்றதுணை வேறும் உண்டோ:

Page 129
224
உன் அருளும் ஈதோ?-உன்னுடைய திருவருளும் இம் முடிவுக்குரி யதோ? (எ-கறு) 7
449 எந்தனுயிர்க் காதரவே என்முகத்தைப் பாராய்
நொந்துமிக வேதனையால் நொவ்வுறுதல் தேராய் தந்தையுடன் தாயுமங்கு தாந்தனிய ரோராய் சுந்தரனே யென்றுனேயே சோர் வொழிந்து வாராய்.
(இ- ள்) எந்தன் உயிருக்கு ஆதரவே-எனது உயிருக்கு ஆதார மானவனே என் முகத்தைப் பாராய் -என்னுடைய முக த்  ைத ப் பார்ப்பாயாக; நொந்து-நான் மனம் வருந்தி நொந்து; மிக வேத னேயால்-மிக்க துன்பத்தால் நொவ்வுறுதல்- வருந்துதல்; தேராய் - அறிவாயாக, தந்தையுடன் தாயும் அங்கு தாம் தனியர்-உனது தந் தையும் தாயும் அங்கே தனியராய் இருக்கின்றனர்; ஒராய்-இதனை நினையாய்; சுந்தரனே! என் துணையே சோர்வொழிந்து வாராய் - அழகனே! எனக்குத் துணேயானவனே உமது மயக்கம் நீங்கி எழுந்து Gni (IHGTTG5! (Gr - g) }
450 என்றுபல சொல்லியவ ளேங்கியழும் வேளை
சென்றுபகல் மேல்கடலிற் செக்கரிடை வீழ்ந்தான் துன்றியிருள் சூழ்ந்திடவே துட்டமிரு கங்காள் கொன்றுபசி தீருமெனக் கோதைதனி நின்ருள்.
(இ-ள்) என்று பல சொல்லி அவள் ஏங்கி அழும் வேளை - என்று இவ்வாருகிய பல இரங்கல் வார்த்தைகளைச் சொல்லி அவள் ஏங்கி அழுகின்ற நேரத்தில், பகல் சென்று -சூரியன் சென்று: மேல் கடலில்-மேற்குக் கடலில்; செக்கரிடை - செவ்வானத்திடை வீழ்ந் தான். அத்தமித்தான்; துன்றி இருள் சூழ்ந்திடவே - நெருங்கி இருள் சூழ்ந்திடுதலும்; துட்ட மிருகங்காள்; - கொ டிய விலங்குகளே; கொன்று பசிதீரும் - எ ன் னை க் கொ ன்று உமது பசியைத் தீருங்கள்; என - என்று சொல்லி, கோதை தனி நின்ருள் - சாவித்திரி தனியளாய் நின்ருள். (எ று) 9
காட்டிலுண்டான சகுனங்கள்
451 அட்டகுல மாமலைக ளாடிமுடி தாழ்ந்த
பட்டதெனப் பல்தருக்கள் பாறியடி வீழ்ந்த வட்டவய மாமடங்கல் வாரணமி ரிந்த துட்டநரி குக்கலுடன் தூாட்டைக ரந்த

225
(இ.ஸ்) அட்டமா குல ம%லகள்-எட்டு என்று சொல்லப்படும் பெரிய குல மலேகள்; ஆடி முடிதாழ்ந்த - ஆடி முடிசைத்தாழ்த்தின; பட்ட தென-பட்டுப்போய் விட்டதென. பல் தருக்கள் -1.1ல மரங்கள்; பாறி அடி வீழ்ந்த - பாறி அடியுடன் வீழ்ந்தன; வட்ட வயமா-வரியுள்ள புவி; மடங்கல்-சிங்கம்; வாரணம் - யானை; இரிந்த-அஞ்சி ஒடின; துட்ட நரி, குக்கலுடன் -நாயுடன்; தூறிடை - பற்றையினிடையே ; கரந்த ஒளித்தன. (எ-று)
(வி-ம்) தூறிடைக் கரந்த என்பதில் "க்" மறைந்தது செய்யுள் விகாரம், 0
காலன் வருகை
452 நீலநிற நீள்வரை நிகர்த்தவடி வாக
ஞாலநடுக் குற்றிடவே நாற்றிசையொ டுங்க சூலமொ டு பாசமவை சுற்றியுயிர் பற்றக் காலனெரு மேதிமிசை காரிகைமுன் வந்தான்.
(இ-ள்) நீல நிற நீள்வரை நிகர்த்த வடிவாக - நீல நிறம் பொருந்திய பெரிய மலை போலும் தோற்றத்துடன்; ஞாலம் நடுக் குற்றிடவே - நிலம் நடுக்கமடையும் டடியாக; நாற்றிசை ஒடுங்க - நான்கு திக்கும் ஒடுங்கும் படியாக சூலமொடு பாசம் அவை சுற்றி - குலத்தையும் பாசத்தையும் சுற்றி; உயிர்பற்ற - உயிரைக் கவர: காலன் - இயமன் ஒரு மேதி மிசை - ஒரு எருமைக்கடாவின் மேல் ஏறி, காரிகை முன் வந்தான்- சாவித்திரியின் முன்வந்தான். (எ-று)11
சாவித்திரி கால?ன வணங்கல்
453 பொய்யுடைய மானிடரின் புன்கணுக்குத் தோற்ருத்
தெய்வவுருத் தோற்றிடவே தேவிபடி வீழ்ந்து
செய்யவடி 1.1ற்றியவள் சென்னிமிசை சேர்த்துப்
gil 5 م) س.
பொய்யில்மறை யந்தணனைப் போற்றியிவை சொல்வாள். (இ.ஸ்) பொய்யுடைய மானிடரின் -பொய்ம்மைய்ையுடைய மாணி 1. ரிங் புன்கணுக்குத் தோற்ரு -புன்மையான கண்களுக்குத் தோற்றப்
டா, தெய்வ உரு கால் தேவனது தெய்வீக 18ான உருவம்; தோற்
frt - is

Page 130
AAS
றிடவே-சாவித்திரிக்குத் தெரிதலும்; தேவி-சாவித்திரி; படி வீழ்ந்து -பூமியில் விழுந்து; செய்யவடி பற்றி-அவனுடைய சிவந்த அழகிய் பாதங்களைக் கையால் பற்றிக்கொண்டு; அவள் சென்னிமிசை சேர்த்து -அவளுடைய தலைமீது வைத்து; பொய் இல் மறை அ ந் த ண னை போற்றி-பொய்ம்மையில்லாத அந்தணனகிய காலதேவனை வணங்கித் துதித்து; இவை சொல்வாள்-இவ்வார்த்தைகளைச் சொல்லுவாளாயி (e)sir, sor-gi) 夏罗
வேறு
சாவித்திரி காலனை வேண்டுதல்
484 மன்னவரென் ருலும் மற்றையரென் முலும்
பொன்னுளரென் ருலும் பொருளிலரென் முலும் கன்னியரென் ருலுங் காளையரென் முலும் உன்னுடைய நீதி ஒருவுதலில் ஐய.
(இ--ஸ்ர் மன்னவர் என்ருலும் --இராசாக்கள் என்ருலும்; மற்றை யவர் என்ருலும் - அவரினின்றும் வேறுபட்ட பிறிது யாரென்ருலும்; பொன்னுளர் என்ருலும் -செல்வரென்ருலும்; பொருள் இலர் என்ரு லும் . பொருளில்லாதவர்களென்ருலும்; கன்னியர் என்ருலும்; காளை யர் என்ருலும்; (அவர்களுடைய மேம்பாடோ, இழிவோ கருதாது) உன்னுடைய நீதி-உரிய்காலத்தில் அவரவர் ஆவி கொள்ளும் நீதி; ஐய - ஐயனே ஒருவுதல் இல் - தப்புதலில்லை (பிழையாவதில்லை) (எ - று) 3.
455 திண்ணியர்க ளேனுந் திடமிலர்க ளேனும்
புண்ணியர்க ளேனும் புன்மையர்க ளேனும் தண்ணவர்க ளேனுந் தயவிலர்க ளேனும் எண்ணியவை பாரா தெடுத்திடுவா யவரை.
(இ- ள்) திண்ணியர்களேனும் - வலியுடையோராயினும்; திடமி லர்களேனும். வலியற்றவர்களாயினும்; புண்ணியர்களேனும் - தரும வான்களேஆயினும்; புன்மையர்களேனும்-ஈனர்களே ஆயினும்: தண் ணவர்களேனும் - தண்ணளி பொருந்தியவர்களே ஆயினும்; (அன்பும் இரக்கமும் உள்ளவர் என்க); தயவிலர்களேனும்-இரக்கமில்லாதவர் களே ஆயினும்; எண்ணியவை பாராது ~அவர்களது குணுகுணங்களைப் பாராது; அவரை எடுத்திடுவாய்- அவர்களின் உயிரைக் க வர் ந் து கொள்ளுவீர், (எ-று) i4

22፲
456 நன்றுகிழ மாகி நாடிநிலை யின்றி
இன்றுவரு வான்கொல் நாளை வரு வான்கொல் என்றுவருங் காலன் எமது துயர் நீங்கும் என்றுகவல் வோரை ஏறெடுத்தும் பாராய்.
(இ-ள்) நன்று கிழமாகி -முதிர்ந்த கிழமைப் பருவ மெய்தி: நாடி நிலையின்றி-நாடிகள் ஒருநிலையின்றி, (ஒழுங்கான ஓட்டமின்றி): இன்று வருவான் கொல் -இயமன் இன்றைக்கு வருவானுே; நாளைவரு வான் கொல் -நாளைக்கு வருவானுே; என்று வருங்காலன் -என்று இய மன் வருவான்; எமது துயர் நீங்கும் - காலன் வந்து உயிரைக் கொண் டால் எமக்குள்ள துயரம் நீங்கும்; என்று கவல்வோரை - எ ன் று வருத்தப்படுவோரை; ஆயுள் முடியாவிடின்; ஏறெடுத்தும் பாராய் - நீ நிமிர்ந்தும் பார்க்கமாட்டாய். (எ-று)
(ଚନ୍ମ th) ஆயுள் முடியாமல் வருத்த த்தினுலும் துன்ப்த்தினுலும் மரணம் வந்தால் வருத்தம் தீரும் என்று மரணத்தை வரவேற்போரை நீ ஏறெடுத்துப் பார்ப்பதில்லை என்றபடி, 5
467 அருந்தவங்க ளியற்றி யறம்பலவுஞ் செய்தே
அருமையுடன் பெற்ற அழகியபா லரையும் விரும்பியுயிர் கொள்வாய் வெய்துயிர்க்க அன்னை இருளனையை யென்ரு லிருதயமு மிருளோ,
(இ - ன்) அருந்தவங்களியற்றி - அரிய தவங்களை இயற்றி, அறம் ப. ஞ் செய்தே-அறங்கள் பலவற்றையும் செய்து: அருமையுடன் பெற்ற; அழகிய பாலரையும்; விரும்பி உயிர் கொள்வாய்-நீ விரும்பி அவர் உயிரைக் கொள்வாய்: வெய்துயிர்க்க அன்னை- அவர் அன்னை நெட்டுயிர்க்க; இருளனையை என்ருல்-நீ இருள் வடிவானவனென்ருல், இருதயமும் இருளோ?-உன் இருதயமும் இருளோ? (எ-று)
(வி - ம்) உனது தோற்றந்தான் இருள்வடிவென்ருல், உன் உள் ளமும் இருட்டாக இருக்கின்றதோ என்றபடி, 16
458 படுகொலையும் பஞ்ச பாதகமுஞ் செய்யுங்
கொடு வினையர் தம்மைக் குறிக்கொள்வா யில்லை நடுவுநிலை நிற்கும் நன்னெறிய னிவனைக் கடுகெனவே வந்து கவர்ந்திடுதல் நன்றே.

Page 131
228
(இ.ஸ்) படுகொலையும்-கொடுங்கொலையும்; பஞ்சபாதகமும்பஞ்ச மா பாதகங்களையும்; செய்யும்-செய்கின்ற கொடுவினையர் தம்மை கொடிய வினைகளையுடையவர்களை; குறிக்கொள்வாயில்லைகுறிப்பாயில்?ல நடுவுநிலை நிற்கும்; நல் நெறியன்- நல்ல தரும நெறி பில் நிற்பவகிைய; இவனை- சத்தியவான கடுகெனவே வந்து-விரை வாகவே வந்து; கவர்ந்திடுதல் நன்ருே-உயிரைக் கவர்ந்து செல்லு தல் அழகோ. எ-று) 17
459 தருமனென வுன்னைத் தரணியெலாம் போற்றும்
பெருமையுடைத் தேவா பேணியறஞ் செய்யுந் திருவுடையன் தீய செயலறியான் துரயன் உருமெனவே வந்தா ருயிர்வெளவல் முறையோ.
(இ-ள்) தரணி எலாம் தருமன் என உன்னைப் போற்றும் பெருமையுடைத் தேவா - பூமியிலுள்ளோரெல்லாரும் உன்னைத் தருமன் என்று போற்றும் பெருமையினையுடைய தேவனே, அறம் பேணி செய்யும் திருவுடையன் - அறத்தை விரும்பிச் செய்யும் தெய்வத் தன் மையுடையவன்; தீய செயல் அறியான்-தீய செயல் செய்ய அறி யாதவன்; தூயன் தூயவன்; (ஆதலால்) உருமெனவே வந்து-இடி என வந்து; ஆருயிர் வெளவல் முறையோ - (அவன்) ஆருயிரைக் கவர்ந்து செல்லுதல் முறையோ? (எ-று) 18
காலன் உத்தரம்
வேறு
460 1ண்ணிசை மிழற்றும் பாவாய் பகருமிம் மாற்றங் கேட்டி விண்ணினிற் றேவர்க் கல்லால்
விளங்கிடா தென்றன் கோலம் மண்ணினிற் பிறந்து மாயும்
மானுடர் காண மாட்டார் புண்ணியஞ் செய்த வாற்றற்
புலப்படும் பேறு பெற்ருய்.
(இ-ஸ்) பண்ணிசை மிழற்றும் பாவாய் - நிறை நரம்புள்ள வீனே யில் எழு b இசை போன்று இனிய மழலைச் சொற்களைப் பேசு ம் !ாவையை ஒத்த சாவித்திரியே; பகரும் இம் மாற்றம் கேட்டி -

223
நர்ன் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக; விண்ணினில் தேவர்க்கு அல்லால் -வானுலகிற் றேவர்கட்கேயன்றி; என்தன் கோலம் விளங்கிடாது - மற்றவர்களுக்கு என்னுடைய வடிவம் தோன்றது; மண்ணினிற் பிறந்து மாயும் மானுடர் காணமாட்டார் - பூமியில் பிறந்து இறக்கின்ற மனிதர்கள் என்னைக் காணமாட்டார்கள்; புண் வியஞ் செய்தவாற்ருல்-நீ புண்ணியஞ் செய்த தன்மையால்; புலப் படும் பேறு பெற்ருய் - என்வடிவம் உன் கண்களுக்குப் புலப்படும் பேற்றைப் பெற்ருய். (எ ~று)
(வி-ம்) கோலம் விளங்கிடாது
கோலம் காணமாட்டார் கோலம் புலப்படும் பேறுபெற்ருய் என இசைக்க, 19
461 மண்ணினிற் பிறந்தோ ரெல்லாம்
மடிவது நியதி காண் நீ விண்ணினிற் றேவர் தாமும்
விதித்தவன் விதித்த வாறே கண்ணுத லொருவன் ருனே கடந்தவன் கால எல்லை பண்ணிய வினையின் பேறே
பாரினிற் பிறப்பி றப்பு.
(இ-ள்) மண்ணினிற் பிறந்தோர் எல்லாம்-பூமியின் மீது பிறப் பெடுத்தவர் எல்லோரும்; மடிவது நியதி - இறப்பது முறைமை நீ காண்-நீ இதனை உணர்வாயாக விண்ணினில் தேவர் தாமும்-விண் ணில் வசிக்கும் தேவர்களும்; விதித்தவன் விதித்தவாறே - பிரமன் விதித்தபடியே (முடிவுக்குட்படுவர்); கண்ணுதல் ஒருவன் தானே - நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் ஒருவனே கால எல்லை கடந்த வன்-கால எல்லைகளைக் கடந்தவன் ஆவான்; பாரினிற் பிறப்பிறப்புமண்ணினில் பிறப்பதுவும் இறப்பதுவும்; பண்ணிய வினேயின் பேறே -அவரவர் செய்த வினைகளின் பெறுபேரு லாவனவே. (எ- று) 20
46 எவ்வெவ ரெனினு மன்ன
ரெத்துணை நல்ல ரேனும் அவ்வவர் கால வெல்லை
யறிந்தவ ராவி கொள்ளுஞ் செவ்விதென் பணியே யாகுஞ்
செகத்தவர் நிந்தித் தாலும் அவ்விதி பிறழ மாட்டே
குயிழை யறிந்து கொள்நீ.

Page 132
(இ- ள்) எவ்வெவர் எ னினும் - எப்.டிப்பட்டவரென்ருலும்: அன்னர் எத்துணை தில்லர் ஏனும் அவர் எவ்வளவு நல்லவர்களான லும்; அவ்அவர் கால எல்லே அறிந்து- அவரவர் ஆயுட் கால எல் லையை அறிந்து: அவர் ஆவி கொள்ளும் அவர்களின் உயிரைக் கவ ரும்; செவ்விது என்பணியே யாகும் - செம்மையானது (நேரானது) என் தொழிலேயாகும்; செகத்தவர் நிந்தித்தாலும்-பூமியிலுள்ளோர் என்னேக் கொடியவன் என்று நிந்தித்தாலும்; அவ் விதி - அந்த விதி யினின்றும்; பிறழ மாட் டே ன் - மாறுபட மாட்டேன்; ஆயிழை அறிந்து கொள் நீ - தெரிந்தெடுத்த அணிகளையுடைய சாவித்திரியே இதனே நீ அறிந்து கொள்வாயாக. (எ - று) 3.
邻8器 அறம்புரி யந்த ஞள
ராருயிர் யானே கொள்வன்
மறம்புரி மாக்க ளாவி
மற்றுமென் துரதர் கொள்வர்
சிறந்தநற் குணத்தின் மிக்கான்
சீரிய அறநூல் நீதி
திறம்பிடா இவனை யிட்டுச்
சென்றிட வந்தே னம்மா.
(இ- ள்) அம்புரி அந்தணுளர்- அறத்தைச் செய்யும் அந்தணு ளருடைய, ஆருயிர் யானே கொள்வன்-அரிய உயிரை யானே கவர்ந்து செல்வேன்; மறம்புரி மாக்கள் ஆவி- மறத்தைச் செய்யும் ஐயறிவு மக் களின் ஆவியை (விலங்குகளின் ஆவியையும்; மற்றும் என் தூ த ர் கொள்வர்- மற்றைய எனது தூதுவர்கள் கவருவர்; சிறந்த நற் குணத் தின் மிக்கான் -சிறந்த நற்குணத்தின் மிக்கவனும்; சீரிய அற நூ ன் நீதி திறம்பிடா இவனை - சிறந்த அறநூல் நீதி நெறியில் மாறுபடாத வனுமாகிய இவனே; இட்டுச் சென்றிட ய்ானே கவர்ந்து செ ல் ல; வந்தேன் அம்மா. (எ-று) 22
சர்வித்திரியின் பதில்
வேறு
,臀6筠 கணவனுயிர் நீப்பின் கற்புடைய மாதர்
கணமுமுயிர் தரியார் காதலர்தம் முடனே
தனலமளி சேர்ந்து தம்முயிரை மாய்ப்பர் பிணமனை {1 ரன்ருே பின்னுமுயிர் வாழ்வோர்.

2.3
(இ- ள்) கணவன் 2 யிா நீப்பின் கணவன் தன்னுயிரைப் பிரிந் தால்; கற்புடைய மாதர்; கணமும் உயிர் தரியார் - ஒரு கணப் பொழுதும் உயிர்தங்கி இருக்கார்; காதலர் தம்முடனே-அன்புடைய கணவனுடனே தணலமளி சேர்ந்து த மூட்டி அப் படுக்கையில் ஏறி: தம்முயிரை மாய்ப்பர்-தமது உயிரை நீக்குவர்; பின் னு ம் உயிர் வாழ்வோர் - கணவன் இறந்த பின்னும் உயிர் வாழும் பெண்கள்: பிண மனையர் அ ன் ருே - பிணத்திற்குச் சமானமாவார்களல்லவா. (எ-று) 23
465 ஆதலின லைய அடியவளு மென்றன்
நாதனுடன் செல்லும் நலமருள வேண்டும் மர்தவனே முற்றும் மறையுணர்ந்த பெரியோய் பாதமல ரல்லாற் பற்று பெனக் குளதோ.
(இ- ள்) ஆதலினல் ஐய-ஆகையால் காலதேவனே! அடியவளும் என்தன் நாதனுடன் - அடியாளாகிய நானும் என் கணவனுடன் செல்லும் நலம் அருள வேண்டும்--செல்லுகின்ற நல்ல வ ரத்  ைத எனக்குத் தருதல் வேண்டும்; மாதவனே - பெரிய தவத்தையுடைய வனே; முற்றும் மறை உணர்ந்த பெரியோய் - முழு வேதங்களையும் அறிந்த பெரியவரே; பாத1லரல்லால் - உன்னுடைய பாத கமலங்க ளல்லாமல்; பற்றும் எனக்கு உளதோ-வேறு பற்றுக் கோடும் எனக் குண்டோ? (எ-று) 24
வேறு
466 அன்னவை சொல்லக் கேட்ட
அந்தகன் அணங்கின் நல்லாய் முன்னவன் விதித்த வந்நாள்
முடிப்பதென் கரும மன்றி உன்னது விருப்பிற் கொவ்வேன் உத்தம னுயிரை யன்றி இன்னுெரு வரங்கே ளிவன்
இசைந்தென வியம்ப லுற்ருன்.
(இ-ள்) அன்னவை சொல்லக் கேட்ட அந்தகன்-அவ்வாருன வார்த்தைகளைச் சாவித்திரி சொல்லக் கேட்ட காலன்; அணங்கின் நல்லாய்-அழகிற் சிறந்த பெண்ணே; முன்னவன் - சிவன்; விதித்த அந்நாள்-விதித்த அன்று; முடிப்பது - ஒருவருடைய ஆயுளை முடிப் பது: என் கருமம் அன்றி~ எனது தொழில் அன்றி: ".ண்னது விருப்

Page 133
232
பிற் கொவ்வேன் - உன்னுடைய விருப்பிற்கு (கணவனுடன் நீ யும் இறக்க வேண்டுமென்று விரும்புவதற்கு) இசையேன்; உத்தமனுயிரை
யன்றி - சத்தியவானின் உயிரைத் தவிர இன்னெரு வரங்கேள்; ஈவன்
இசைந்து - இசைந்து தருவேன்; என இயம்பலுற்ருன்- என்று கூறி ஞன். (எ-று) 25
4.67 தையலு முவகை கொண்டு
தருமபூ பதியே யென்றன்
ஐயனி னத்த னிந்நா
ளந்தக னணு னன்னுேன்
பையவே பார்வை பெற்றுப்
Ljrriflådr Lf6öst(G) LD1r 6n
மெய்யனே யருள வேண்டும்
மேதியூர் மேலோ யென்ருள்.
(இ-ள்) தையலும் உவகை கொண்டு-சர்வித்திரியும் பெருமகிழ் வடைந்து; தரும பூபதியே -தரும ராசனே! என்தன் ஐயனின் அத் தன்-எனது தலைவனகிய சத்தியவானின் தந்தை; இந்நாள் - இப் பொழுது; அந்தகனுனன் -குருடனுனன்; அன்னேன் பையவே பார்வை பெற்று-அவன் மெல்ல மெல்லக் கண்பார்வையைப் பெற்று; பாரினை மீண்டுமாள-பூமியை (சாலுவநாட்டை) மீண்டும் அரசாட்சி செய்ய; மெய்யனே-மெய்ம்மையானவனே; அருளவேண்டும்-அருளுதல் வேண் டும்; மேதியூர் மேலோய் - எருமை வாகனத்தில் ஊரும் மேலோனே; என்ருள். (எ-று) 26
46器 விரும்பிய வரங்கள் தந்தேன்
வெய்யவிக் கானம் விட்டுத்
திரும்பிநீ செல்க வென்னத் தேவரீர் திருமுன் நிற்க
வருந்துய ரெனக்கு முண்டோ
வாழ்விலென் ஞெளியாய் வந்த
அருந்துணை யிவனை விட்டே
யகல்வது மெவண்நா னென்ருள்.
( இ-ஸ்) விரும்பிய வரங்கள் தந்தேன்-சாவித்திரியே நீ விரும் பிய வரங்களை எல்லாம் தந்தேன்; வெய்ய இக் கானைவிட்டு -கொடிய இக் காட்டை விட்டு; திரும்பி நீ செல்க என்ன -திரும்பிச் செல்வா யாக என்று காலன் கூற தேவரீர் திருமுன் நிற்க - தேவரீருடைய

233
திரு முன்னிலையில் நிற்க வருந்துயர் எனக்கும் உண்டோ-வருந் துய ரமும் எனக்கு உண்டோ? வாழ்விலென் ஒளியாய் வந்த அருந்துணை இவனை விட்டே - எனது வாழ்வில் ஒளியாக வந்த அரிய துணையான கணவனை விட்டு; நான் அகல்வதும் எவண் என்றுள் - நான் அகல் வது எவ்விடம் என்ருள் சாவித்திரி. (எ-று) 27
469 காலனல் வுரையைக் கேட்டுக்
கற்பினிற் சிறந்தோய் கொன்னே
காலமுங் கழிந்த துன்றன்
கணவனுக் காங்க டன்கள்
சாலவே சென்று செய்தி
சத்திய வானை யல்லால்
மேலுமோர் வரங்கே ளிவன்
மெல்லிய லென்று சொற்ருன்.
(இ-ஸ்) காலன் அவ்வுரைய்ைக் கேட்டு - இயமன் அவளின் வார்த்தைகளைக் கேட்டு; கற்பினிற் சிறந்தோய்-கற்பினில் மேம் பட் டவளே கொன்னே-பயனில்லாமல்; காலமும் கழிந்தது - கா ல ஞ் சென்று விட்டது; உன்தன் கணவனுக்கு ஆங்கடன்கள்-உனது கண வனுக்குச் செய்ய வேண்டிய தீக்கடன் நீர் க் கடன் ஆகியவற்றை சென்று சாலவே செய்தி-போய் மிகவும் செய்வாய்ாக; சத்தியவானை அல்லால்-சத்தியவானின் உயிரை அல்லாமல்; மேலும் ஓர் வரம் கேள்-இன்னும் ஒரு வரம் கேள்; ஈவன்-தருவேன்; மெல்லியல் - மென்மையான இயல்புடைய பெண்ணே என்று சொற்ருன்-என்று நமன் சொன்னன். (எ-று) 28
470 அந்தக னினைய கூற
அருந்ததி யனையா ளென்றன் தந்தையோர் தனயன் வேண்டித்
தவம்பல நோற்க லானுர் எந்தையின் குலம்வி ளங்க
ஏற்புடை நலங்கள் மிக்க மைந்தர்நாற் றுவரை யெந்தைக்
கருளுக ஐயா வென்றள்.
(இ-ள்) அந்தகன் இனைய கூற-காலன் இப்படிய்ான வார்த்தை களைச் சொல்ல; அருந்ததி யனையாள் - கற்பில் அருந்ததி போலும் சாவித்திரி; என்தன் தந்தை-எனது தகப்பனராகிய அசுவபதி ஓர்

Page 134
234
தனயன் வேண்டி-ஒர் ஆண் மகவைப்பெற வேண்டி தவம்பல நோற்க லானுர்-தவங்கள் பலவற்றைச் செய்தார் எந்தையின்-என் தகப்ப னின் குலம் விளங்க-குலமானது விளங்கும்படி ஏற்புடை நலங்கள் மிக்க - தகுதியான நல்ல குணங்கள் மிக்க; மைந்தர் நூற்றுவரை -- புத்திரர் நூறுபேரை, எந்தைக்கு அருளுக ஐயா என்ருள் - எனது தந்தையாருக்கு அருள் செய்க ஐயனே! என்ருள். (எ-று) 29
47 உந்தையின் குலம்வி ளங்க
உத்தம ரான நூறு மைந்தரைப் பெறுவான் நீயும்
மனநிறை வுடனே மீள்க இந்தவெங் கான கத்தில்
இருள்வழி வந்த தாலே நொந்தனை நங்கா யென்று
நுவன்றனன் மேதி யூர்தி (@一á) உந்தையின்-உன் தந்தையின்; குலம் விளங்க-குலமா னது விளங்கும்படி உத்தமரான நூறு மைந்தரைப் பெறுவான்-உத் தம குணங்களுள்ள நூறு புத்திரரை அவன் பெறுவான், நீயும் மன நிறைவுடனே மீள்க-நீயும் மன நிறைவோடு திரும்புவாயாக, இந்த வெங் கானகத்தில்-இந்தக் கொடிய காட்டிலே; இருள் வழி வந்த தாலே-இருண்டவழியே வந்த காரணத்தாலே; நங்காய் நொந்தனை -நங்கையே வருத்தமடைந்தாய்; என்று நுவன்றனன்-என்று சொன் ஞன். மேதி யூர்தி~ எருமையை வாகனமாக உடையவனகிய காலன். (எ-று) 30
472 எவ்விட மென்றன் நாதன்
இருந்துள னெனினும் நீங்கா தவ்விட மிருப்ப தன்ருே
அரிவையெற் குரிய தாகுஞ் செவ்விதில் நீதி செய்யுஞ்
சீருடைத் தேவே யுன்முன் எவ்விதத் துன்பும் வாரா
தெனக்கென வியம்பி நின்ருள்.
(இ- ள்) என்தன் நாதன் எவ்விடம் இருந்துளன் எனினும்
என் கணவன் எங்கு இருந்தாலும்; நீங்காது அவ்விடமிருப்பதன்ருேஅவனை விட்டு நீங்காமல் அவ்விடத்திலேயே இருப்பதல்லவேர்,அரிவை

23s
யெற்குரியதாகும் - பெண்ணுகிய எனக்கு உரிய கடமையாகும்; செவ் விதில் நீதி செய்யும் சீருடைத் தேவே-நேராக நீதியைச் செய்யும் சிறப்பினையுடைய கால தேவனே, உன்முன்-உன் முன் நிற்க எவ் விதத் துன்பும் எனக்கு வாராது என இயம்பி நின்ருள் - எவ்விதத் துன்பமும் எனக்கு வரமாட்டாது என்று கூறி நின்ருள். (எ-று 31
473 செல்வி நீ செப்பும் வார்த்தை
செவிகளுக் கின்ப மூட்டுங்
கல்வியிற் சிறந்தோர் தாமுங்
கருத்தினிற் கொள்ளற் பாற்று
நல்வினை யுடையோர்க் கன்ருே
ஞானமுங் கற்புங் கூடும்
வெல்கநின் கற்பின் மாண்பு
வேறுமோர் வரங்கே ளென்முன்.
(இடன்) செல்வி நீ செப்பும் வார்த்தை-கற்பின் செல்வியே நீ கூறும் சொற்கள்; செவிகளுக்கு இன்பம் ஊட்டும்-எனது செவிகளுக்கு இன்பத்தை யூட்டுகின்றன; கல்வியிற் சிறந்தோர் தாமும் கருத்தினில் கொள்ளற் பாற்று--கல்வியில் மேம்பட்டவர்களும் தம் க ருத்தி ற் கொள்ளத்தக்கன; நல்வினையுடையோர்க்கு அன்ருே ஞானமும் கற்பும் கூடும்-நல்வினையுடையவர்களுக்கல்லவோ ஞானமும் கற்பும் கை கூடும்; நின் கற்பின் மாண்பு வெல்க. உனது கற்பின் பெருமை வெல்லுக; வேறுமோர் வரங்கேள் என்ருன்-வேறுமோர் வரங் கேட்பாயாக என்ருன். (எ-று) 32
474 அங்கவை யணங்கு கேளா
அருட்பெருங் கடலே யந்தப்
பங்கயத் தயனும் நீயே
பாற்கடல் மாலும் நீயே
சங்கரிப் பவனும் நீயே
சத்திய மூர்த்தி யன்ருே
பங்கமில் பண்பின் மைந்தர்ப்
பரிந்தெமக் கருள்க வென்ருள்.
(இ. cir) அங்கு அவை அணங்கு கேளா-அங்கு அவ் வார்த்தை கக்ா சாவித்திரி கேட்டு; அருள் பெரும் கடலே-கிருபா சமுத்திரமே! அந்த பங்கயத்து அயனும் நீயே -தாமரையில் வீற்றிருக்கும் அந்தப் பிரமனும் நீயே; பாற்கடல் மாலும் நீயே. திருப்பாற்கடலிற் பள்ளி

Page 135
26
கொள்ளும் திருமாலு: நீயே சங்கரிப் பவனும் நீயே-சங்கர்ர மூர்த் தியும் நீயே சத்திய மூர்த்தியன்றே - நீ தருமக்கடவுள் அல்லவா பங்கமில் பண்பின் மைந்தர்ப் பரிந்து எமக்கு அருள்க என்'ஸ் - ஈனமில்லாத பண்பின்புடைய அமைந்தரை யாம் பெறுவதற்கு எமக்கு அருள் புரிக என்ருள் (எ-று)
(வி-ம்) தருமனே முய் மூர்த்திகளும் நீயே, அறக் கடவுளும் நீயே என்று துதித்தான். பங்கமில்லாத மைந்தர் என்றது-ஆங்கிவீன மில்லாத மைந்தர் என்பதை, எமக்கருள்க என்பதால், சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் பெறும் மைந்தர் என்றுகும். எனவே சத்தியவான் உயிர்த்தெழல் வேண்டும். முதல் நூலில் சாவித்திரி 100 மைந்தரைத் தரும்படி கேட்டதாகவும் காலன் அங்ஙனம் வரங் கொடுத்ததாகவும் இருக்கின்றது. ஒரு பெண் 100 மைந்தரைப் பெறுவது சாலுமோ ான்பதால், "மைத்திரை' என்று இங்கு கூறப்பட்டது.
75 புந்தியில் மகிழ்ந்தா னேயன்
பூவையில் வாறு போற்ற நிந்தனே செய்வா ரன்றி
நீணில மாந்த ரென்னே வந்தனே செய்வா ரில்லே
வாட்டடங் கண்ணுய் வாழி தந்தெனவ் வரமு மென்று
தருமனுஞ் சாற்றி நின்றன்.
(இ-ள்) பூவை இவ்வாறு போற்ற - சாவித்திரி இவ்வாறு துதிக்க ஐயன் புந்தியில் மகிழ்ந்தான் - தருமதேவன் அக மகிழ்ந் தான் நீணிலமாந்தர் - நெடிய உலகின் கண்ணுள்ள மக்கள்; என்னே நிந்தனே செய்வாரன்றி-என்னேக் கொடியவன் என்று நிந்திப் பாரன்றி வந்தனே செய்வாரில்லே - புகழுவாரில்ல்ே வாள் தடம் கண் ணுய் வாழி - ஒளி பொருந்திய விசாலமான கண்களேயுடையவளே! நீ வாழ்வாயாக தந்தென் அவ்வரமும் - நீ கேட்ட அந்த வரமும் தந்தேன் என்று தருமனும் சாற்றி நின்ருன்-என்று காலனும் வரங் கொடுத்து நின்ருன் (எ-று)
ፋWሽ6 மங்கல வரத்தைப் பெற்ற
மங்கைபே ருவகை கொண்டு செங்கதிர் மைந்தா போற்றி
சீரிய செல்வா போற்றி

37
இங்கெனே வாழ வைத்த
இறைவனே போற்றி யென்னுத்
துங்கவன் பாதம் பற்றித்
தோத்திரித் திறைஞ்சி ஐளே.
(இ-ள்) மங்கல வரத்தைப் பெற்ற மங்கை-மங்கலமான வரத் தைப் பெற்ற சாவித்திரி பேருவகை கொண்டு-பெருமகிழ்வடைந்து செங்கதிர் மைந்தா போற்றி சூரியன் மைந்தனே வணக்கம்; சீரிய செல்வா போற்றி-சிறப்பான செல்வனே வணக்கம்; இங்கு என வாழவைத்த இறைவனே போற்றி--இவ்வுலகில் என்னே வாழும்படி வைத்த இறைவனே வணக்கம்; என்னு-என்று சொல்லி துங்கவன் பாதம் பற்றி-மேன்மையுடைய தருமனுடைய பாதங்களைப் பிடித் துக்கொண்டு; தோத்திரித்து இறைஞ்சினுள்-துதிசெய்து வணங்கினுள். (எ-று)
(வி-ம் "இங்கெஃன வாழவைத்த" என்றது - புத்திரரைப் பெறும் வரத்தைத் தந்ததால், சத்தியவான் உயிர் பெற்ருகல் வேண் டும். ஆதலால் சாவித்திரி உடன்கட்டை ஏறத் தேவையில்லே. வாழ்வு கிடைத்தது என்பதாம். செங்கதிர் மைந்தன் என்பது சூரியன் மைத் தன். யமன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவன். ፵ I;
477 மண்ணினிற் கிடந்த மாலே
மார்பனை மகிழ்ந்து புல்லி
அண்ணலே மைந்த ருன்பா
லடியளும் பெறுவே னென்னுக்
கண்ணினின் றருவி சோர்ந்தாள்
கருப்பமொன் றுற்ரு ளென்ன ப்
பண்மொழி கொங்கை பொங்கிப் பாற்றுளி சுரத்த தம்பா,
(இ-ள் ) மண்ணினிற் கிடந்த மாப்ே பார்பனே - மண்ணினே கிடந்த மாலேயணிந்த மார்பினனுன சத்தியவானே மகிழ்ந்து புல்வி -களிப்புடன் கட்டித்தழுவி அண்ணலே பெருமையிற் சிறந்தவனே, உன்பால் அடியளும் மைந்தர் பெறுவேள் என்னு - உன்மூலம் அடிய வளும் மைந்தரைப் பெறுவேன் என்று: கண்ணின் நின்று அரு வி சோர்ந்தாள்-கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள் கருப் பம் ஒன்று உற்ருள் என்ன-கருப்பம் ஒன்று தரித்தவள் என்று சொல் லும்படி பன்மொழி-இனியவார்த்தைகளைப் பேசுகின்ற சாவித்திரி

Page 136
2器、
யினது; கொங்கை பொங்கி-முஃகள் பூரித்து; பாற்றுவி சுரந்ததம்மா -முலைப்பால் துளிகள் சுரந்தது. இஃது என்ன அதிசயம். (எ-று) 36
478 ஆங்கவட் காசி கூறி
ஐயனு மப்பா லேகப் பூங்கொடி பவளும் பின்னுற்
போயினள் பொன்னி னல் :ாய் ஈங்கெனத் தொடர் த லேனே
என்னலும் எந்தாய் எங்ங்ண் பாங்கனை யின்றி மைந்தர்
பலரையான் பெறுவே னென்ருள்.
(இ - ள்) ஆங்கு அவட்கு ஆசி கூறி ஐயனும் அப்பால் ஏக - நமன் அவ்விடத்தில் சாவித்திரிக்கு ஆசிகள் கூறி அப்பாற் செல்ல; பூங்கொடியவளும் பின்னுற் போயினள்-பூங்கொடி போன்ற சாவித் திரியும் யமன் பின்னே போனுள் பொன்னின் நல்லாய் - இலக்குமி யைப் போலும் அழகுடைய பெண்ணேஈங்கெனைத் தொடர்தல் ஏனே? என்னலும்- இங்கே என்னை மேலும் பின்தொடர்தல் எதற்காக என்று கேட்க: எந்தாய்! பாங்கனையின்றி எங்ங்ண் மைந்தர் பலரை யான் பெறு வேன் என்ருள்-எந்தையே கணவனையின்றிப் பல மைந்தரை எப் படி யான் பெறுவேன் என்று சாவித்திரி கேட்டாள். (எ-று) 37
479 புண்ணிய முதலே போற்றி
பூரணு புனிதா போற்றி
டண்ணி வர் தந்த வாக்குப்
பலிப்பது சரத மன்ருே?
எண்ணிய வரங்கள் தந்தோய்
எனக்குமங் கலியப் பிச்சை
அண்ணலே யருளு வாயுன்
னடை க்கல மையா வென் ருள்.
(இ - ள்) புண்ணிய முதலே போற்றி - புண்ணியத்துக்கு முதல் வனே வணக்கம்; பூரணு -பூரணனே: புனிதா - பரிசுத்தமானவனே; போற்றி வணக்கம்; பண்ணவர்-கடவுளர்; தந்த வாக்குப் பலி ப் பது சரதமன்றே -தந்த வரங்கள் பலிப்பது உண்மையல்லவா எண் ணிய வரங்கள் தந்தோய்-யான் நினைத்த வரங்களைத் தந்தவனே; அண்ணலே - பெரியோனே; எனக்கு மாங்கலியப் பிச்சை அருளுவாய்

239.
எனக்குத் தாலிப்பிச்சை அருளுவீர்; ஐயா உன் அடைக்கலம் என் ருள்-ஐயா உமது அடைக்கலம் யான் என்று கூறினள். (எ-று) 38
邻80 நன்றுநன் றென்று நக்கு
நமனுமக் காலை யெண்ணுங்
கொன்றுயிர் கொள்வ தல்லாற்
கொடுத்திலே னென்பா ரென்னை
இன்றிவட் களித்த வாக்கை
யினிமறுப் பதற்கு மில்லை
வென்றன விவளே வேதன்
விதித்தவா றறிவார் யாரே.
(இ-ள்) நமனும்-தருமனும்; நன்று நன்று என்று - நல்லது நல்லது என்று; நக்கு-சிரித்து: அக்காலை எண்ணும் - அப்பொழுது எண்ணுவான்; கொன்று உயிர் கொள்வது அல்லால் - உயிர்களைக் கொன்று கவருவதல்லாமல்; என்னை கொடுத்திலேன் என்பார் - என்னை உயிரைக் கொடுத்திலேன் என்பார்கள்; இன்று இவட்கு அளித்த வாக்கை -இன்று இவளுக்குக் கொடுத்த வாக்கை; இனி மறுப்பதற்கும் இல்லை-இனி மறுக்கவும் முடியாது; இவளே வென்றனள் - இவளே என்னை வென்றுவிட்டாள்; வேதன் - பிரமதேவன்; விதித்தவாறு அறி வார் யாரே-சத்தியவானின் ஆயுளை விதித்த தன்மையை யாரே அறிவர்ர் என்ரு ன். (எ-று)
(வி-ம்) கொடுத்த வாக்கை இனி நான் மறு க்க முடியாது. இவளே தன் சாதுரியத்தால் என்னை வென்றுவிட்டாள், சத்தியவான் இன்னும் உயிரோடு இருக்க வேண்டுமென்றுதான் பிரமன் விதித் தானே? அதனுற்ருன் இப்படி யாயிற்ருே?? யார் அறிவார் எ ன் ரு னென்க
48】 அரனடிக் கன்பு பூண்ட
அந்தணன் மார்க்கண் டேயன்
மரணம் வந் தடுத்த காலே
மதிச்சடை யெம்பி, ரானைச்
சரணமென் றடைந்து போற்றச் சங்கர னபயந் தந்தான்
நானவ னுயிரை வெளவ
நாதனும் முனிந்தா னன்றே.

Page 137
(இ- ள்) அரன் அடிக்கு அன்பு பூண்ட-சிவபிரானுடைய திரு வடிகளுக்கு அன்பு பூண்டு; பூசை செய்த; அந்தணன் மார்க்கிண்டே யன்- அந்தண ைகிய மார்க்கணடேயன் மரணம் வந்தடுத்த காலை - மரணம் வந்து சேர்ந்த பதினறு வயதில்; மதிச்சடை எம்பிரான - சந்திரனைத் திருச்சடையில் தாங்கிய எம் தலைவனகிய சிவபிரான் சரணம் என்று அடைந்து போற்ற அடைக்கலம் என்று சென்று பூசித்து வணங்க, சங்கரன் அபயம் தந்தான் - சிவபிரான் அடைக்க லம் கொடுத்தான்; நரன் அவன் உயிரை வெளவ-நான் ந ர ன கி ய மார்க்கண்டேயனின் உயிரைக் கவர; நாதனும் முனிந்தான் அன்ருேசிவபெருமானும் என்னைக் கோபித்தாரல்லவா? (எ-று)
(வி-ம்) மார்க்கண்டேயனுக்கு ஆயுள் பதினறு என்று இருந்தது: அவன் சிவபிரானையடைந்து சரண் புகுந்தான். அவரும் அவனுக்கு அபயங் கொடுத்தார். நானே குறித்த தினத்தில் அம் மார்க்கண்டே யனின் உயிரைக் கவரச் சென்றேன். அதனல் சிவன் எ ன் னை க் கோபித்தார். அவ்வாருன ஒரு சூழ்நிலை இன்றும் ஏற்பட்டிருக்கிறது என்று காலன் எண்ணினன். 40
482 அம்பிகை யருளைப் பெற்ற
அணங்கிவள் கற்பின் மிக்காள் அம்பரத் தருக்கன் றன்னை
யானையில் நிறுத்த வல்லாள் நம்பியைப் பிரிந்து வாழாள்
நம்மையு மின்று வென்முள் இம்பரி லிவனுஞ் சின்னு
விருப்பகே நியதி போலும்.
(இ. ஸ்) அம்பிகை யருளைப் பெற்ற அணங்கு இவள்-இவள் சாவித் திரி தேவியின் அருளைப்பெற்ற தெய்வத்தன்மை பொருந்திய பெண் ஆவாள்; கற்பின் மிக்காள்-கற்பிற் சிறந்தவள்; அம்பரத் தருக்கன் தன்னை ஆணையில் நிறுத்த வல்லாள்-ஆகாயத்தில் திரியும் சூரியனைத் தன் ஆணையினுல் செல்லாது நிறுத்தவல்லவள்; நம்பியைப் பிரிந்து வாழாள்-சத்தியவானைப் பிரிந்து வாழமாட்டாள்; நம்மையும் இன்று வென்ருள்-என்னையும் இன்று வென்றுவிட்டாள்; இம்பரில் - இவ்வுல கில்: இவனும்-சத்தியவானும்; சின்னுள் -இன்னுஞ்சில காலத்திற்கு; இருப்பதே நியதி போலும் - உயிரோடு இருப்பதே விதி போலும், (6Tー』sル

墅叠助
(வி - ம்) முன்னுெருகால்; கற்பிற் சிறந்தவளான நளாயினி தன் ஆணையினல் சூரியனை உதிக்காமற் செய்தாள். இவளும் தனது கற் பினல் அப்படிச் செய்ய வல்லவள். அம்பிகையின் அருளயும் பெற்றி ருக்கிருள். என்னையும் இன்று வென்றுவிட்டாள். யோசிக்கின் சத்திய வான் இன்னும் சிலகாலம் உயிரோடு இருக்க வேண்டும் என்று நியதி உண்டுபோலும் என்று காலன் எண்ணினுன் ، 4 1
483 காலனு மிவ்வா றெண்ணிக் கற்பினிற் சிறந்த மாதே சாலநி விரதம் நோற்ருய்
சத்தியுங் கிருபை கூர்ந்தாள் ஞாலமீ திவனும் நீயும்
நல்லறம் பல்லாண் டாற்றிப் பாலரும் பெற்றுப் பின்னட்
பரனடி சேர்வீ ரென்முன்.
இ-ள்) காலனும் இவ்வாறு எண்ணி - இயமதேவனும் இவ் வண்ணம் நினைந்து; கற்பினில் சிறந்தமாதே - கற்பினில் மேம்பட்ட சாவித்திரியே; நீ விரதம் சால நோற்றுய் -நீ திரிராத்திரி விரதத்தை மிகவும் முறைப்படி அனுட்டித்தாய்; சத்தியும் கிருபை கூர்ந்தாள்சாவித்திரி தேவியும் அதனைக்கண்டு மகிழ்ந்து உன்மீது கிருபை கூர்ந் தாள், ஞாலமீது - இப்பூமியின் கண்ணே. இவனும் நீயும் - சத்திய வானும் நீயும்; நல்லறம் பல்லாண்டு ஆற்றி - இல்லறமாகிய நல்ல றத்தைப் பல ஆண்டுகள் நடத்தி: பாலரும் பெற்று - மைந்தரை யும் பெற்று; பின்னுள்-பின்னெருநாள்; பரனடி சேர்வீர் என்ருன்இறைவனடியைச் சேர்வீர் என்று அருள் கூர்ந்தான். (எ-று) 4蜀
१ 警$4 அந்தநல் வார்த்தை கேட்ட அரிவை யு முளம கிழ்ந்து கொந்தலர் தாராய் செங்கோல் கோடுத லில்லாய் போற்றி எந்தமை யுய்ய வைத்த
எம்பிரான் போற்றி யென்ன அந்தக னவளே வாழ்த்தி
யவ்விடம் விட்ட கன்முன்.
*T - ከየ

Page 138
2ቶ፭
(函一à川 அந்த நல்வார்த்தை கேட்ட அரிவையும்-இயமதேவன் கூறிய அந்த நல்ல வார்த்தைகளைக் கேட்ட சாவித்திரியும் உளம் மகிழ்ந்து-மனம் மகிழ்ந்து கொந்து அலர் தாராய் கொத்துக் கொத்தாக மலர்ந்துள்ள பூக்களம் கட்டப்பட்ட மாலையை பணிந் தவனே, செங்கோல் கோடுதல் இல்லாய் -செங்க்ோல் தவறுதலில்லா தவனே போற்றி - வணக்கம்; எந்தமை உய்ய வைத்த எம்பிரான் போற்றி-எங்களே உய்யும்படி வைத்த எம் இறைவனே வணக்கம்! என்ன-என்று கூற அந்தகன் அவளே வாழ்த்தி அவ்விடம் விட்டு அகன்ருன்-இயமதேவன் அவளை வாழ்த்திவிட்டு அவ்விடம் விட்டு அகன்ருன். (எ-று) 蛙品
485 இந்திர னிமையோர் வாழ்த்த
இருடிபுங் கவர்கள் வாழ்த்த அந்தண ரறவோர் வாழ்த்த
அருந்ததி முதலோர் வாழ்த்தச் சந்திரன் பானு வாழ்த்தச்
சத்திய வானும் மெல்லச்
சுந்தர விழிம வர்த்திச்
சுரிகுழ லாளைப் பார்த்தான்.
(லுடன்) இந்திரன் இமையோர் வாழ்த்த–இந்திரனும் அவனேச் சூழ்ந்த தேவர்களும் வாழ்த்தொலி செய்ய இருடி புங்க வ வாழ்த்த - முனியுங்கவர்கள் வாழ் த்தொலி செய்ய அந்தனர் அற வ்ோர் வாழ்த்த-அந்தணரும் திரும் சீலர்களும் வாழ்த்தொலி செப்ப அருந்ததி முதலோர் வாழ்த்த-அருந்ததி முதலாகிய கற்புடைய பெண் கள் வாழ்த்தொலி செய்ய: சந்திரன் பானு வாழ்த்த-சந்திரனும், சூரியனும் வாழ்த்தொலி செய்ய; சத் தியவானும் மெல்ல சுந்தர விழி மலர்த்தி - அவ் வாழ்த்தொலிகளைக் கேட்டவனுகிய சத்தியவான் மெல்லவாகத் தனது அழகிய கண்களே விழித்து சுரிகுழலாளேப் பார்த்தான்-சுருண்டு அழகிய கூந்தலையுடைய சாவித்திரியைப் பார்த் தான். (எ-று
வி-ம்) சந்திரனுடைய ஒளியும் தாரகைகளினுடைய ஒளியும் இருந்ததால் சத்தியவான் சாவித்திரியைப் பார்க்சுக் கூடியதாக
இருந்தது.

ጛ፥፱
அப்பொ ழுது நிகழ்ந்தவை
வேறு
488 நந்தன வண்டினம் நாற்றிசை யார்த்தன | || || LINN
சுந்தரப் புள்ளினஞ் சோஃபி லார்த்தன அந்தர துந்துபி ஆசினி பார்த்தன கந்தரு வர்களுங் காணமொ டார்த்தனர்.
(இ- ள்) நந்தன வண்டினம் நாற்றிசை ஆர்த்தன - பூந்தோட் டத்தில் வாழும் வண்டினங்கள் நான்கு திசையும் ஆரவாரித்தன; சுந்தரப் புள்ளினம் சோலேயில் ஆர்த்தன-அழகிய பறவையினங்கள் சோஃபின் கண்ணே ஆரவாரித்தன; அந்தர துந்துபி ஆசினி ஆர்க் தன-தேவர்களது அந்தர துந்துபிகள் ஆகாயத்ரில் ஒலித்தன சக்தி ருவர்களும் காணமொடு ஆர்த்தனர். கந்தருவர்களும் தத்தமக்கியன்ற கான இசைகளேப் பாடி ஆரவாசித்தர்ர்கள். (எ-று)
487 விண்ணுற ஓங்கிய வேரலொ வித்தன
தண்ணுறு வாவிதேன் தங்கியொ வித்தன ஒண்ணுறு சங்கினம் ஒமென்ருெ லித்தன ( நண்ணுறு மாக்குலம் ஞாங்கரொ லித்தன "
(இ- ள்) விண்ணுற ஓங்கிய வேரல் ஒலித்தன -ஆகாயத்தைப் பொருந்தும்படி ஓங்கிவளர்ந்த மூங்கில்கள் ஒலித்தன; தண்ணுறு வாவி-குளிர்ச்சி பொருந்திய குளங்களில்: தேன் தங்கி ஒலித்தளபெண் வண்டுகள் தங்கி ஒளித்தன; ஒண்ணுறு சங்கு இனம் - ஒளி பொருந்திய சங்கின் கூட்டம் ஒம் என்று ஒலித்தன - ஒம் என்ற சத்தத்துடன் ஒலித்தன; நண்ணுறு மாக்குலம்-நெருங்கிவரும் விலங்
குகள் ஞாங்கர் ஒலித்தன-பக்கங்களில் ஒளித்தன. (எ-று) 墨闻
॥ 488 விண்மதி பொன்னுெளி வீசியி லங்கினன்
எண்ணில தாரகை யெங்குமி லங்கின தண்கயத் தல்லிசே தாம்பல லர்ந்தன சண்பகம் மல்லிகை சாதிய லர்ந்தன.
(இ-ஸ்) விண்மதி-ஆகாயத்திற் சந்திரன் பொன் ஒளி வீசி இலங்கினன்-பொன்போன்ற நில வொனியை வீசி விளங்கினுன் எண் ஸ்ரிஸ் தாரகை-அநேக நட்சத்திரங்கிள் எங்கும் இலங்கின-எல்லா இடங்களிலும் ஒளிவிட்டு விளங்கின; தண் கயத்து-குளிர்ச்சி பொருந்

Page 139
244
திய குளங்களில்; அல்லி, சேதாம்பல் அலர்ந்தன. அல்லி மலர்களும், ஒவந்த ஆம்பல் மலர்களும் அலர்ந்தன; சண்பகம், மல்லிகை, சாதி அலர்ந்தன-சண்பகம், மல்லிகை, சிறுசண்பகம் முதலிய மலர்களும் மலர்ந்தன. (எ-று) 47
சத்தியவான் தன் கணுத்திறமுரைத்தல்
வேறு
489 கற்பினிற் சிறந்த மாதே
கனவிது கண்டேன் கேளாய்
வெற்பெனத் திரண்ட தோளான்
விளங்குநூல் மணிபூண் மார்பன்
சுற்றிவந் தென்னைப் பற்றிச்
சுரருல கிட்டுச் சென்ருன்
பொற்புவித் தேவ ரென்னைப்
புல்லிநீ வருக வென்றர்.
(இ-ள்) கற்பினிற் சிறந்த மாதே-கற்பிற் சிறந்த எனது மனைவி யாகிய சாவித்திரியே! கனவிது கண்டேன் கேளாய்-நான் இப்போது கனவொன்று கண்டேன் கேட்பாயாக, வெற்பு என திரண்ட தோளான் -மலைபோலுந் திரண்ட தோள்களையுடையவனும்; விளங்கு நூல் மணி பூண் மார்பன்-பூணுரலும், உருத்திராக்கமும், அணிகலன்க ளும் விளங்குகின்ற மார்பினனுமான ஒருவன்; சுற்றிவந்து என்னைப் பற்றி-பாசக் கயிற்றைச் சுற்றி வந்து என்னைக் கவர்ந்து சென்று: சுரருலகு இட்டுச் சென்ருன்-தேவருலகிற்கு அழைத்துச் சென்ருன்; பொன் புவி தேவர்-பொன்னுலகிலுள்ள தேவர்கள்; என்னைப் புல்லி நீ வருக என்ருர் - என்னைக் கண்டதும் கட்டித் தழுவி நீ வருவர்யாக என்று வரவேற்ருர்கள். (எ-று) 4&
490 கற்பகத் தருவின் நீழல்
கவின்மணித் தவிசி ருத்தி அற்புத மணிபொன் னடை
அணிகலன் தந்து பின்னர்ப் பொற்கலத் திணிய பாலும்
புதுமலர் நறிய தேனும் நற்கணி பலவும் பாகும்
நாவுறப் புசிக்கத் தந்தார்,

多锡
(இ- ள்) கற்பகத் தருவின் நீழல்-கற்பகதருவின் நிழலிலே;"கவின் மணித் தவிசு இருத்தி - அழகிய மணிகள் பதிக்கப்பட்ட இருக்கை யில் என்னை இருத்தி; அற்புதமணி பொன் ஆடை - அற்புதமான அழகிய பொன்னுடையும்; அணிகலன் - ஆபரணங்களும்; தந்து “ எனக்கு அணியத்தந்து; பின்னர்-அதன்பின்பு: பொற்கலத்து பொற் கிண்ணத்தில்: இனிய பாலும்; புதுமலர் நறிய தேனும்-புதுமலர்* ளிலிருந்து எடுக்கப்பட்ட வாசனையுள்ள தேனும்; நல்கனி பலவும்" நல்ல பழங்கள் பலவும்; பாகும்-வெல்லப்பாகும்; நாவுறப் புசிக்கத் தந்தார்-நாவுக்கு இனிமையுற உண்ணத் தந்தார்கள். (எ-று) 49
邻9瑚 அரம்பையர் நடன மாட
அரமகள் கீதம் பாடச்
சுரர்பதி யாங்கு வந்து
சுந்தர மகிழ்ந்தோம் வாழி
நரர்முறை யறங்கள் செய்யின்
நம்பதி வருவார் நிற்கு
வரமெவை வேண்டுங் கேட்டி
வழங்குவா மின்னே யென்ருர்,
(இ-ள்) அரம்பையர் - தெய்வப் பெண்கள் நடனமா-”நடனங்களை ஆடவும்; அரமகள் கீதம்பாட-அரம்பதாஸ்திரீகள் இசைப் பாடல்களைப் பாடவும்; சுரர்பதி. இந்திரன், ஆங்கு வந்து - அங்கே வந்து (என்னைக் கண்டு); சுந்தர-அழகுள்ளவனே! மகிழ்ந்தோம்உன்வரவால் தேவர்களாகிய நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்; வாழிநீ நன்கு வாழ்வாயாக; நரர். மனிதர்; முறை - முறையாக அறங் கள் செய்யில் - தருமங்களைச் செய்தால்; நம்பதி வருவார் - நமது தேவலோகத்திற்கு வருவார்கள்; நிற்கு-உனக்கு; வரமெவை வேண் டும் கேட்டி-வரங்கள் எவை எவை வேண்டும் கேட்பாயாக இன்னே வழங்குவோம் என்ருர்-இப்பொழுதே தருவோம் என்று கூறினர். (T-py) 5.
492 பலமுறை வணங்கி யானும்
பாகசா தனனை நோக்கி நலமுடை யில்லா ளோடு
நல்லற மியற்றி யின்னு முலகிடைச் சின்னுள் வைகி
யும்பதி யடைவே னென்னை நிலமிசை மீண்டுஞ் செல்ல
நீரருள் புரி ? ரென்றேன்

Page 140
246
(இ - ள்) யானும் பல முறை வணங்கி பாக சாதனனை நோக்கி -நானும் இந்திரனைப் பல முறை வணங்கி அவனைப் பார்த்து: நல முடை இல்லாளோடு நல்ல கற்புடைய எனது மனைவியோடு; நல்லற மியற்றி-நல்லறமாகிய இல்லறத்தை நடத்தி, இன்னும் உலகிடைச் கில்நாள் வைகி-இன்னும் பூமியிலே சில காலம் வாழ்ந்து; உம் பதி அடைவேன்-உமது தேவலோகத்தை அடைவேன்; என்னை நிலமிசை மீண்டும் செல்ல -என்னைப் பூவுலகத்திற்குத் திரும்பவும் செல்ல; நீர் அருள் புரிவீர் என்றேன்-நீர் அருள் புரிவீராக என்று கூறினேன். (6T-I) 51 493 அந்தவோர் வேளை யாங்கே
யணிமயி லுன்னை யொக்குஞ் சுந்தரி யொருத்தி மிக்க
சோர்வுட னுழைய ளாகி யந்தகன் றன்னை வேண்டி யமருல கிருந்து மீட்டு வந்தெனை யிக்கா னுய்த்தாள்
வரும்பய னேது ரைத்தி. (இ-ள்) அந்த வோர் வேளை -அந்த ஒப்பற்ற நல்ல சமயத்தில் ஆங்கே அவ்விடத்தே; அணி மயில் உன்னை ஒக்கும் சுந்தரி ஒருத்திஅழகிய மயில் போலும் உன்னை ஒத்த அழகிய பெண் ஒருத்தி: மிக்க சோர்வுடன்-மிகுந்த இ%ளப்புடன், உழையளாகி - பக்கத்தில் வந்து: அந்தகன் தன்னை வேண்டி - இபமனை வேண்டி அமருலகு இருந்து மீட்டு வந்து -தேவலோகத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து என்ன இக்கான் உய்த்தாள் - என்னை இந்தக் காட்டிற் சேர்த்தாள் வரும் பயன் ஏது உரைத்தி - வரும்பயன் ஏது என்று சொல்வாய்ாக. (என் முன் சத்தியவான்) (எ-று) 52
சாவித்திரி நிகழ்ந்தவை கூறல் 494 அனப்பெடை முறுவல் செய்தே
ஐயநீர் கண்ட தெல்லாம் முனர்நிகழ்ந் தவையே யென்றும் மொய்குழ லவனை யன்று வனத்தினிற் கண்ட வாறும்
வள்ளலின் வசமே யாகி மனத்தினில் வரித்த வாறும்
மாமுனி சொன்ன வாறும்,

247
(இதுமுதல் மூன்று பாட்டுக்குளகம்)
(இ-ள்) அனப்பெடை முறுவல் செய்தே - அன்னப் பேடுபோலும் நடையினையுடைய சாவித்திரி புன்னகை பூத்து: "ஐய! நீர் கண்டது எல்லாம் முனர் நிகழ்ந்தவையே’’ என்றும்-தலைவனே நீர் கண்டவை களெல்லாம் முன்னே நிகழ்ந்தவையே என்றும்; மொய் குழல் அவனை அன்று-சாவித்திரி, சத்தியவானை அன்று வனத்தினில் கண்டவாறும் - காட்டிலே கண்ட வண்ணமும் வள்ளலின் வசமே யாகி - சத்திய வானின் வசத்தளாகி; மனத்தினில் வரித்தவாறும் அவனைத் தன் கணவனுக மனத்தினில் வரித்த தன்மையும்; மாமுனி சொன்னவாறும் - நாரதமுனிவர் அவன் ஆயுளைப் பற்றிச் சொன்னவாறும். (எ-று) 53
495 மாறிலா மனத்த ளாகி
மகிபனே மணந்த வாறுந்
தேறியே சத்தி நோன்பு
திரியிரா நோற்ற வாறுங்
கூறிய படியே யன்று
கூற்றுயிர் கொண்ட வாறும்
ஏறிவர் நமனை வேண்டி
யிரந்துயிர் மீட்ட வாறும்.
(ஜ்-ன்) மாறுஇலா மனத்தளாகி - நாரதர் சத்தியவானுக்கு அற்ப ஆயுள் என்று தடுத்தும் மனம் மாறுபடாதவளாகி; மகிபனசத்தியவான மணந்தவாறும் - தான் மணஞ் செய்த தன்மையும்: தேறியே சத்தி நோன்பு திரி இரா நோற்றவாறும் திரி யி ராத், திரி நோன்பை நோற்ருல் மாங்கலிய் பலம் கிடைக்குமென்று தெளிந்து; அத்திரியிரா நோன்பை நோ ற் ற வாறு ம்; கூறிய படியே - நாரதர் கூறியபடியே; அன்று கூற்று உயிர் கொண்ட வாறும்-அன்று இயமன் உயிரைக் கவர்ந்த விதமும்; ஏறு இவர் நமனே இரந்து வேண்டி-எருமைக் கடாவில் செல்லுகின்ற இயமன இரந்து வேண்டி உயிர் மீட்டவாறும் - சத்தியவானின் உயிரை மீட்ட வரலாறும். (எ-று) 54
496 காமுறு குதலை மைந்தர்
காதலன் பெறுவா னென்றும் மாமனுர் தன்கட் பார்வை
மறித்துமே பெறுவர் ரென்றுந்

Page 141
2臀、
தாமுன ரிழந்த நாடுந்
தந்திடப் பெறுவா ரென்று ந்
தேமலர்க் கோதை யெல்லாந்
தெரிதர விளம்ப லுற்ருள்
(இ- ள்) காமுறு குதலை மைந்தர்-விரும்புகின்ற மழலைச் சொற் களைப் பேசும் புதல்வர்களை; காதலன் - சத்தியவான்; பெறுவானென் றும்அைடைவான் என்றும்; மாமனுர் - தியுமற்சேனர்; தன் கண் பார்வை-தன்னுடைய கண்ணின் பார்வையை; மறித்துமே பெறுவி" ரென்றும்-திரும்பவும் பெற்றுக்கொள்வாரென்றும்; தாம் முனர் இழந்த நாடும்-அவர் முன்னர் இழந்த சாலுவநாட்டையும்; தந்தி டப் பெறுவார் என்றும் -திருப்பித்தரப் பெறுவாரென்றும்; தேமலர்க் கோதை-தேன் பொதிந்த மலர் மாலையை யணிந்த சாவித்திரி; எல் லாம் தெரிதர விளம்பலுற்ருள் - எல்லாம் இனிது அறியத் தான் பெற்ற வரங்களின் விபரங்களைச் சத்தியவானுக்குக் கூறி ன ள்55 (رgplسسه 6T)
சத்தியவான் மகிழ்தல்
497 நங்கையில் வாறு ரைக்க
நம்பியும் மனம கிழ்ந்து,
பொங்கிய காத லோடு '
பொற்கொடி தன்னைப் புல்லி
யெங்குலந் தழைக்க வந்த
எழிலுடை யணங்கே வாழி
யிங்குனத் துணையாப் பெற்ற
எனக்கெது குறையுண் டென்றன்.
(இ-ள்) நங்கை- பெண்களிற் சிறந்த கற்பினையுடையவளாகிய சாவித்திரி; இவ்வாறு உரைக்க-இவ் விவரங்களைக் கூற; நம்பியும்சத்தியவானும்; மனம் மகிழ்ந்து-மனச் சந்தோஷமடைந்து பெர்ங் கிய காதலோடு - மிகுந்த அன்போடு; பொற்கொடி தன்னைப் புல்லி -பொற்கொடிபோலும் சாவித்திரியைக் கட்டி அணைத்து: எம் குலம் தழைக்க வந்த - எமது குலம் முழுவதும் தழைக்கும்படி வந்தவளா கிய; எழிலுடை அணங்கே-அழகுடைய தெய்வத்தன்மை பொருந்திய பெண்ணே வாழி-நீ நன்கு வாழ்வாயாக இங்கு உனைத் துணையர்ப் பெற்ற எனக்கு எது குறை உண்டு என்ருன் - இவ்வுலகில் உன்னை மனைவியாகப் பெற்ற எனக்கு எக் குறையுமுண்டோ (இல்லையே) భా 6హిger) {GT-g) • 56

2扮·
பொழுது புலர்தல்
t98 கோதையுங் குமர னேடு
குலாவியங் கிருந்த காலை சீதளத் தென்றல் வீசச்
சிலம்பின சேவற் கூட்டம் பூதல மாது கங்குற்
போர்வையை நீக்கி நோக்க ஆதவ ஞழி மேலே
யருண்முகங் காட்ட லானன்.
(இ-ள்) கோதையும்-சாவித்திரியும்; குமரனுேடு - சத்தியவா னேடு; குலாவி அங்கு இருந்த காலை - அளவளாவிக்கொண்டு அங்கி ருந்த சமயத்தில்; சீதளத் தென்றல் வீச-குளிர்ச்சி பொருந்திய தென்றற் காற்று வீச சேவற் கூட்டம் சிலம்பின - சேவற் கூட்டங் கள் ஒலித்தன (கூவின); பூதல மாது-பூமாதேவி, கங்குற் போர் வையை நீக்கி நோக்க-இருளென்னும் போர்வையை நீக்கிப் பார்க்க; ஆதவன்-சூரியன்; ஆழிமேலே-கீழ்த்திசைக் கடலின் மேலே: அருள் முகம் காட்டலானன்- அருள் முகத்தைக் காட்டினன். (எ-று 57
சூரியோதயம்
வேறு
49. மரகத மயின்மிசை வருதிரு முருகென
அரவணை துயில்கொளு மரிவிடு படையென. அரதன மணியென அலைகட லமுதென இரவியிந் திரன்திசை யிலங்கின னெழிலாய்.
(இ- ள்) மரகத மயின்மிசை - பச்சை மயில் மேலே; வருதிரு முருகுஎன- வரும் திரு முருகனெனவும்; அரவு அணை துயில்கொளும்சர்ப்பாசயனத்தின் மேற் பள்ளி கொள்ளும்; அரிவிடு படை என-மகா விட்டுணு விடும் சக்கரப் படையென்னும் வண்ணமும்; அரதன மணி என-இரத்தினக்கல் என்னும்படியும்; அலைகடல் அமுது என - அலை வீசுகின்ற திருப்பாற்கடலின் நின்று மெழுந்த அமுது என்னும் வண் ணமும்; இரவி- சூரியன்; இந்திரன்திசை-கிழக்குத் திசையில்; எழிலாய் இலங்கினன்-அழகாக விளங்கினன். (எ-று) &

Page 142
250
500 மின்னெளித் திரளென மிதந்திடுந் தினகரன்
பொன்னெளி பரப்பியப் புணரியை விளக்கினன் மன்னுயிர் துயிலெழ மகிதல முயிர்த்திட இன்னிசைப் பலவிய மியம்பில் தொழுதி.
(இ- ள்) மின் ஒளித்திரள் என-மின்னலின் ஒளித்திரள் போலும்; மிதந்திடும் தினகரன் - கடலின் மீது மிதந்திடும் சூரியன்; பொ ன் ஒளி பரப்பி-பொன் நிறமான கிரணங்களைப் பரப்பி, அப் புணரியை விளக்கினன் - அந்தக் கடலை விளக்கினன்; மன்னுயிர் துயில் எழ - நிலைபெற்ற சீவராசிகள் நித்திரைவிட்டெழ; மகிதலம் உயிர்த்திடபூமி உயிர்ப்புக் கொள்ள இன் இசைப் பலஇயம்-இன்னிசையாகிய பல ஒலிகளை தொழுதி இயம்பின-பறவைக் கூட்டங்கள் ஒலித்தன. set - d.) 每莎
501 ஆதவன் வருகையை யகமகிழ்ந் தெதிர்கொளப்
போதம ரணியனம் பொலிவுடன் நிரைந்தன தாதவிழ் கமலக்கண் தடங்களும் மலர்த்தின ஊதின மதுகர முயர்ந்தநீர்க் கொடியே.
(இ- ள்) ஆதவன் வருகையை-சூரியனுடைய வருகையை அக மகிழ்ந்து எதிர்கொள- மன மகிழ்வு கொண்டு எதிர்கொள்ள போது அமர் அணி அன்னம்-தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அழகிய அன் னங்கள் பொலிவுடன் நிரைந்தன. அழகுடன் வரிசையாக நின்றன: தடங்களும் தாது அவிழ் கமலக்கண் மலர்த்தின - தடாகங்களும் மகரந்தத்தாது கட்டவிழ்ந்த தாமரைகளாகிய கண்களை விரித்தன; மதுகரம் ஊதின- வண்டுகள் ரீங்காரஞ் செய்தன; நீர் க் கொடி உயர்ந்த-நீர்க்கொடிகள் (ஆம்பல் முதலிய நீரிலுள்ள கொடிகள்) உயர்ந்தன. ஏ. அசை (எ- று)
(வி-ம்) ஆதவனகிய தலைவன் வர, அன்னங்கள் (படைகளைப் போல்) அணிவகுத்து நின்று வரவேற்றன. தடாகங்கள் (பெண்களைப் போல்) தாமரைக் கண்களை விரித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றன. மதுகரம் (வாச்சியங்களை ஊதுவதுபோல்) ஊ தின. நீர்க்கெர்டிகள் (விருதுக் கொடிகள் போல்) உயர்ந்தன. 60

25
சாவித்திரியுஞ் சத்தியவானும் திரும்பச் செல்லுதல்
வேறு
502 ஆயவக் காலை யந்த
அன்னமு மலங்க லானுந்
தூயநீர்த் தடத்தி லாடித்
துயரெலாம் நீங்கப் பெற்றே
ஆய்மல ரங்கை யேந்தி
யமலனைத் தொழுது பின்னர்த்
தாயொடு தந்தை வைகுந்
தவவனம் நோக்கிச் சென்ருர்:
(இ-ள்) ஆய அக்காலை-அவ்வாருகிய அச் சமயத்தில்; அந்த அன்னமும் -அந்த அன்ன நடையையுடைய் சாவித்திரியும்; அலங்க லானும்- மலர் மாலைகளையணிந்த சத்தியவானும்; தூய நீர்த் தடத் தில் ஆடி-பரிசுத்தமான நீர் நிறைந்த குளத்திலே நீரா டி துய் ரெலாம் நீங்கப் பெற்றே-துன்பங்களெல்லாம் நீங்கப்பெற்று; ஆய் மலர் அங்கை ஏந்தி-ஆராய்ந்தறிந்து கொய்த பூக்களை அழகிய கை களில் ஏந்தி; அமலன-சிவபெருமானை; தொழுது பின்னர்-மலரிட்டு வணங்கி, அதன் பின்பு; தாயொடு தந்தை வைகும்-தாயும் தந்தை யும் வசிக்கும்; தவவனம் நோக்கி சென்ருர்-தவவனத்தை நோக்கிச் சென்ருர்கள், (எ.கா. நூறு) 6.
அவர்கட்கு வரவேற்பு
503 விதியினைக் கடந்த வேளும்
விளங்கிழை யிரதி தானும் புதியதோர் வாழ்வு பெற்றுப்
பொலிவுடன் போந்தா ரென்றே எதிர்நிரை அசோகு வேங்கை யெடுத்தன நீழற் பந்தர் உதிர்த்தன மலர்கள் பாத
முறுத்திடும் பரல்க ளென்றே.
(இ.ஸ்) விதியினைக் கடந்த வேளும் விளங்கு இழை இரதி தானும்-கூற்றத்தை வென்ற மன்மதன் போன்ற சத்தியவானும் . விளங்குகின்ற அணிகலன்களை யணிந்த சாவித்திரியும்; புதியது ஓர்

Page 143
252
வாழ்வு பெற்று-புதிதாகிய ஒப்பற்ற நல்வாழ்வைப் பெற்றவரர்ய் பொலிவுடன் போந்தார் என்று -அழகுடன் வந்தார்கள் என்றெண்ணி; எதிர் நிரை -எதிரே நிரையாக நின்ற; அசோகு வேங்கை -அசேர்க மரமும் -வேங்கை மரமும்; நீழற் பந்தர் எடுத்தன - நிழற் பந்தர்க ளைத் தாங்கின; பாதம் பரல்கள் உறுத்திடும் என்றே-பாதங்களை பரல்கள் (கற்கள்) நெருடும் என்று; உதிர்த்தன மலர்கள்-வரும்வழி யெல்லாம் பூக்களை உதிர்த்தன. ( 6Ꭲ -- Ᏸ01)
(வி-ம்) இழை என்றது-உருத்திராக்கமாலை, சங்குமாலை, வளை, ஆற்றில் பெறப்படும் பல நிறக்கற்களினலாய் மாலை முதலியனவற்றை என்க. 62
504 மதலைதோ ரணங்கள் தூக்க
மானினங் கவரி வீசக் கதலிகள் பதாகை தாங்கக்
கம்புள்கட் டியங்கள் கூற மதுகரங் கீதம் பாட
மஞ்ஞைகள் நடன மாடச் சதமணி கங்கை நீட்டச்
சாலுவத் தோன்றல் சென்றன்.
(இ. ள்) மதலை தோரணங்கள் தூக்க- சரக்கொன்றை மரங்கள் மலரினுற் தோரணங்கள் தூக்க; மானினம் கவரிவீச - கவரிமான் கூட் டங்கள் தமது வாலினுற் சாமரைவீச, கதலிகள் பதாகை தாங்கவாழைகள் இலைகளினல் விருதுக் கொடிகள் தாங்க; கம்புள் கட்டியம் கூற-வானம்பாடிப் பறவைகள் கட்டியங்கள் கூற; மதுகரம் கீதம்பர்ட -வண்டுகள் இசை பாட மஞ்ஞைகள் நடனமாட - மயில்கள் நட னமாட சதமணி கங்கை நீட்ட கன தொகையான மணிவகைகளைக் கங்கை காணிக்கையாக நீட்ட சாலுவத் தோன்றல் சென்றன் - சாலுவநாட்டின் இளவரசனுன சத்தியவான் வழிச் சென்ருன் (எ-று) 63 மாலையாகியும் மக்கள் வராமை கண்டு தவ வனத்தில் தாய்தந்தையர் துயரமடைதல்
505 திருநிறை தியுமற் சேனர்
தேவியோ டந்தி வேளை மருமகள் மகனைக் காணுர்
மனமிக நொந்து மாழ்கி

யிருகனின் மணியே போல்வா
ரெங்குளா 7ெ மக்கு ஞநீர் தருபவ ரிலரே யென்று
தவித்தனர் துணைவே றில்லார்.
(இ-ள்) திருநிறை -தெய்வத் தன்மை நிறைந்த தியுமற்சேனர் --தியுமற்சேன அரசர்; தேவியோடு-தன் மனைவியோடு; அந்திவேளை - அன்றைய மாலைப்பொழுதில்; மருமகள் மகனைக் காணுர்-காட்டிற் குச் சென்ற மருமகளையும் மகனையும் திரும்பிவரக் காணுராக; மன மிக நொந்து மாழ்கி-மனம் மிகவும் நொந்து மயங்கி; இருகணின் மணியே போல்வார்-தமது இரண்டு கண்களினது கண்மணிகளை யொத்தவர்கள்; எங்குளார் எங்கு சென்றுள்ளார்கள்; எமக்கு-எங் களுக்கு உணு - உணவும்; நீர்-நீரும்; தருபவர் இலரே என்று தவித் தனர்-தருபவர்கள் இல்லையே என்று தவித்தனர்; துணை வேறு இல் லார்-வேருெரு துணையும் இல்லாதவரான அவர்கள். (எ-று) (64)
506 பையரா தீண்டிற் றேயோ
பாய்புலி படுத்த கெர்ல்லோ மைந்நிற மதங்கொள் வேழம்
மடித்ததோ மாறு கொண்டு கைதவக் கான வேடர்
கடந்தன ரோகொல் லென்ன
நைவுறு மனத்த ராகி
நயனநீர் சொரிய லுற்ருர்
(இ- ள்) பை அரா தீண்டிற்று ஏ ஒ படத்தையுடைய அரவம் தீண்டியதோ, ஏ. இஃது என்னேயோ? பாய் புலி படுத்த கொல்லோ - பாய்ந்து கொல்லும் புலியானது கொலை செய்ததோ? மை நிற - கறுப்பு நிறமுள்ள மதம் கொள் வேழம்-மதம் பொருந்திய யானை, மடித் ததோ-மடியச் செய்ததோ? மாறு கொண்டு - விரோதங் கொண்டு; கைதவ கான வேடர் - வஞ்சனையை மிகவுமுடைய காட்டு வேடர்கள்; கடந்தனரோ கொல் என்னு-அழித்தனரோ என்று ஐயுற்று; நைவுறு மனத்தர் ஆகி-வருந்துகின்ற மனத்தை யுடையவராகி; நயன நீர் சொரியல் உற்ருர்-கண்ணிர் சொரிந்து இருந்தார்கள். (எ-று) (85} ஏ. கொல் அசைகள்

Page 144
ሂfi4
507 மெத்தவும் விசாரப் பட்டு
மேலெது செய்வோ மென்னுப்
புத்திர சோகம் விஞ்சப்
புலம்பினர் புறத்தே சென்று
ஆத்தவ வனத்துள் வைகு
மந்தனர் தம்மைக் சுட்டிச்
சத்திய வானேச் சாவித்
திரியைநீர் தேடு மென்றர்.
(இ-ன் மெத்தவும் விசாரப்பட்டு-மிகவும் கவலேப்பட்டு; மேல் எது செய்வோம் என்னு - இனிமேல் என்ன செய்வோம் என்று புத் திர சோகம் விஞ்ச- புத்திரத் துன்பம் மிக; புலம்பினா வாய் விட்டு அழுதனர் புறத்தே சென்று - வெளியே போய்; அத்தவ வனத்துள் வைகும் அந்த தவ வனத்தில் வசிக்கின்ற; அந்தண்ர் தம்மைக் கூட்டி - அந்தணர்களைக் கூட்டிவந்து; சத்தியவானே, சாவித்திரியை நீர் தேடும் என்ருர்-சத்தியவானோ ம் சாவித்திரியையும் நீங்கள் தேடி வாருங்கள் என்றர்கள். (எ-று) [ኛ፭
58 முற்றுணர் முனிவர் சேனன்
மொழிந்தவை கேட்டு மன்னு
சற்றும்நீர் கவறல் வேண்டா
சத்தியன் சீலம் மிக்கான்
குற்றமொன் றில்லாள் கோதை
குறைவறத் திரிரா நோற்ருள்
அற்றமொன் றிலரா பிங்கே
பவர் வால் திண்ண மென்றர்.
(இ-ன்) முற்று உணர் முனிவர்-எல்லாம் அறிய வல்லவராகிய முனிவர்கள் சேனன் மொழிந்தவை கேட்டு - தியுமற்சேனன் கூறிய வற்றைக் கேட்டு; மன்னு! சற்றும் நீர் சுவல்தல் வேண்டா அரசனே நீர் சிறிதும் கவலே கொள்ள வேண்டாம்; சத்தியன் சீலம் மிக்கான் -சத்தியவான் நல்லொழுக்கம் மிகுந்தவன்; கோதை குற்றமொன்று இல்லாள்-சாவித்திரி குற்றமொன்று மில்லாதவள் குறைவு அறத் திரிரா நோற்ருள்-குறைவில்லாது திரிரா விரதம நுட்டித்தவள் அற் றம் ஒன்று இலராப்-கேடு ஒன்றும் இல்லாதவராய்; இங்கே அவர் வரல் திண்ணம் என் ர் - இங்கே அவர்கள் வருவது சத்தியம் என் மூர்கள். (எ- று) 酚?

265
தியுமற்சேனன் கனவு காண்டிலும்
கண்பார்வையைப் பெறுதலும்
E9 நடுநிசி தன்னில் மன்னன்
நற்கன வொன்று கண்டு
திTமென விழித்துப் பார்க்சுத்
தெரிந்தன விண்ணில் மீன்கள்
கடுகென மனயைக் கூவி
காணிய விருதி யென்ன
உடுவினை யவளுங் கண்டா
ளுவகைதா னுரைக்கற் பாற்றுே.
(இ- ள்) நடுநிசி தன்னில்-நள்ளிரவில், மன்னன்-தியுமற்சே னன். தற்கனவு ஒன்று கண்டு-நல்ல கனவொன்றைக் கண்டு; திடுமென விழித்துப் பார்க்க-திடுமென பார்க்க முடியாத கண்களே விழித்துப் பார்க்க: விண்ணில் மீன்கள் தெரிந்தன. ஆகாயத்தில் நட்சத்திரங்கள் புலப்பட்டன; கடுகென-விரைவாக மண்  ையக் கூவி-மனேவியை அழைத்து காணிய வருதி என்ன- (எனக்குக் கண் தெரிகிறது. நட் சத்திரங்களேக் காண்கிறேன்) நீயும் வந்து பார்ப்பாயாக" என்று கூற உடுவினே-அவளும் கண்டாள்; நட்சத்திரங்களே அவளும் பார்த்தாள்; உவகை தான் உரைக்கற் பாற்றே-அவர்களடைந்த மகிழ்ச்சியை
உரைக்க முடியுமோ? (எ-டறு) it (FGF)
اما 510 பங்கயத் திருவன் ணுளேப்
பார்த்தவன் புளக மெய்தி நங்கைான் வதனங் கான
நான்நவஞ் செய்தே னின்று தங்கியில் வனத்தில் நீயுத்
தளர்வினை யடைந்தா பன்ருே இங்கொரு கனவு கண்டே
ரிையம்புவ னதனே பென்ருன்,
(இ-ன்) பங்கயத் திரு அன்னுளே-செந்தாமரையில் விற்றிருக் கின்ற இலக்குமி போலும் மனேவியை அவன் பார்த்து தியுமற்சேனன் பார்த்து புளகமெய்தி-மகிழ்ச்சி மிகுதியால் புளகாங்கித மடைந்து நங்கை டன்வ தன. இன்று கான நான் தவஞ்செய்தேன்-பெண்னே! உன்முகத்தை இன்று காண நான் தவஞ் செய்தேன்; இவ்வனத்தில்,

Page 145
* EESUO
தங்கி நீயும் தளர் வினையடைந்தாய் அன்ருே -இந்தக் காட்டில் நீயும் தங்கி இருந்து மெலிவினை யடைந்தாய் அல்லவா இங்கொரு கனவு கண்டேன்-இங்கே ஒரு கனவைக் கண்டேன்; அதனை இயம்புவன் என்ருன் - அதனைச் சொல்லுவேன் என்று கூறினுள், (எ.று) ((69)
Sl சத்திய னடர்ந்த காட்டைச்
சார்ந்தொரு மரத்தி லேறப்
பொய்த்தடி வீழ்ந்து சோர்ந்தான்
புகர்நிற மேதி யூர்தி
அத்தரு ணத்திற் ருேன்றி
யவனுயிர் கொள்ள மேலாம்
பத்தினி யவனை வேண்டிப்
பதியுயிர் தன்னை மீட்டாள்,
(இ-ள்) சத்தியன்-சத்தியவான்; அடர்ந்த காட்டைச் சார்ந்து -நெருங்கிய காட்டினுள்ளே போய்; ஒரு மரத்தில் ஏற-ஒரு மரத் தின் மேலேறலும்; அடி பொய்த்து வீழ்ந்து சோர்ந்தான்-அடி தவறி கீழே விழுந்து சோர்ந்தான்; புகர்நிற மேதி ஊர்தி - கபிலநிற எரு மையின் மேற் செல்லும் நமன்; அத்தருணத்தில் தோன்றி - அப் போது முன்னே தோன்றி; அவனுயிர் கொள்ள -சத்தியவானுடைய உயிரைக் கவர மேலாம் பத்தினி-மேலாகிய சாவித்திரி அவனை வேண்டி-அக்காலனை வேண்டி பதியுயிர் தன்னை மீட்டாள்-கணவ னின் உயிரினை மீட்டு வந்தாள். (6T - p) (70)
52 அங்கவள் பெறுவ ரத்தா
லவர்கள்பல் லாண்டு வாழ்ந்து
மங்கல மான மக்கள்
மகிழ்வுறப் பெறுவார் மேலுங்
கங்கைபாய் மாத்தி ரத்துக்
காவலன் குலம்வி ளங்கச்
சிங்க ஏ றனைய நூறு
செல்வரைப் பெற்று வாழ்வான்.
(இ- ள்) அங்கு அவள் பெறுவரத்தால் அங்கு சாவித்திரி கால னிடம் பெற்ற வரத்தால்; அவர்கள்-சாவித்திரியும் சத்தியவானும் பல்லாண்டு வாழ்ந்து; மங்கலமான மக்கள் மகிழ்வுறப் பெறுவார் .

மங்கலமான மக்களே மகிழ்வுடன் பெறுவார்கள். மேலும்; கங்கை பாய் மாத்திரத்துக் காவலன்-கங்கை நதி பாயும் மாத்திர தேசத் தின் அரசன் அசுவபதி; (தன்) குலம் விளங்க - தனது கோத்திரமா" னது விளங்க; சிங்க ஏறு அனைய நூறு செல்வரை-ஆண் சிங்கங்கள் போன்ற நூறு புதல்வரை பெற்று வாழ்வான்-பெற்று நன்கு வாழ் வான். (எ-று g: கண்ணினல் லொளியான் பெற்றேன்
காரிகை பெறுவ ரத்தால் மண்ணினைப் பெறுவோ மந்த மறலியி னருளி ஞலே அண்ணலு மவளு மாங்கே
யடவியி லவல மெய்தார் பெண்ணினைப் பெற்றே மல்லேம்
பேணிடுந் தெய்வ மென்றன்.
(இ-ள்) கண்ணின் நல் ஒளி யான் பெற்றேன் -கண்ணின் நல் லொளியை நான் பெற்றேன்; (கண் தெரியப் பெற்றேன்); காரிகை *சாவித்திரி; பெறு வரத்தால்-பெற்ற வரத்தினலே மண்ணினேப் பெறுவோம் அந்த மறலியின் அருளிேைல - நாங்கள் இழந்த நாட் டையும் பெறுவோம் அந்த இயமனின் அருளினலே; அண்ணலும் - சத்தியவானும் அவளும்-சாவித்திரியும்; ஆங்கே-அங்குள்ள அடவி யில் அவல மெய்தார்-காட்டில் கேடடைய மாட்டார்கள்; பெண் ணினைப் பெற்ருேமல்லேம் பேணிடும் தெய்வமென்ருன் - நாங்கள் பெற்றது பெண்ணையல்ல, போற்றுதற்குரிய தெய்வத்தைப் பெற் ருேம் என்ருன். (எ-று) ፖ ፵
614 நாளையோர் பொழுதி லிங்கு நம்பியு நங்கை தானும் வாழிய வருவா ரென்றே
வருத்தமற் றிருந்து காலை வர்ழையுங் கமுகும் நாட்டி மதுமலர் மாலை தூக்கி மீளியை வென்ற மக்கள்
மீளுதல் நோக்கி நின்றர். (இ-ஸ்) நாளை ஒர் பொழுதில் . நாளைய ஒரு சமயத்தில்: இங்கு -இங்கே: நம்பியும் நங்கை தானும் -சத்தியவானும் சாவித்திரியும்:
FIT - 17

Page 146
258
வாழிய வருவார் என்றே வாழ் 3 வாடு வருவார்களென்று: வருத்தமற்று இருந்து துன்பமின்றி இருந்து காலே சா? பில் வான்றாம்ாழுது நாட்பு-வாழைா பும் கழகு காேயும் மங் ஆதாகக் கட்டி பதுமலர் மாவே தாக்கி-தேன் பொதிந்த மலர் ਦੋ: ।।।। தாக்கி: மிரியை வென்ற 品リエー நம&ன் வென்றவராகிய ரங்கள் மக்கள் மீளுரல் திரும ப வருகையை நோக்கி தின் ஓர்-எதிர்பார்த்து நொண்டு நின்ருர்கள். (எ-து) 73
நியூமற்சேனனும் மனேவியும் மக்களே வரவேற்றல்
ாலுறம் கன்னி குறளும்
காாபம் வருதல் கண்டு புயலெனக் கடிது போந்து
புல்லிமெய்ப் புளக மெய்தி பவற மாறி மாறி
மக்கரே மகிழ்ந்து பார்த்துச் செயலருங் கருமஞ் செய்தி
செல்வங்கள் வம்மி னென்டூர் -
இ-ன்) கயல் உறழ் கண்ணிளுைம்- நய8 பொத்த கண்களே புண்ட சாவித்திரியும் ாளயும்-சத்தியவானு: வருதல் கண்டு - வருவதை இருவருங் கண்டு புயல் எனக் 'து போந்து புயற் காற் றுப் போல் வி ைவா ஒடிப்போப் புல்லிமெய்ப் புளக மெய்தி - அவர்களேக் கட்டி ஆகிாந்து மெய் சிவிர்க் மி' மயக்கந்திர (உயிர் மீளப்பெற்று வந்து நமது மக்கள் நாறே என்ற மயக்கம்) மாறி triarxı") மக்கள மகிழ்ந்து பார்த்து செயலருங் கருமஞ் செய்த உமானிடர் செய்யமுடியாத செயல்பிளேச் செய்தி செல்வங்கான் செல் வங்களே எம்மின்-வாருங்கள் என்ருர் - என்று வரவேற்ருர்கள். (GT-J) "
மக்கள் வணங்குதல்
516 கன்னியுங் காளே தானுங்
காதலோ டனேந்து தங்கள் முன்னறி தெய்வ பான
, ਨਾ । f
।
என் பின் கொடுத்தநல் வரங்கள் சொன்னர்,

259
(இ- ள்) கன்னியும் நா?ாராளும் ராவிந்திரியும் ரத்தியவா னும்; காதலோடு அனேந்து-அன்போடு சென்றடைந்து தங்கள் முன் அறி தெய்வமான தாங்கள் முன்னராக அறிந்த தெய்வங்க ளான, முது குரவரை பெற்ஜேரை வணங்கி-முறைப்பா தாழ்ந்து வானங்கி துன் இருபானகத்தில்-நெருங்கிய இருண்ட காட்டில்: துரந்து உயிர் கொள்ள வந்த தள்ளித் தொடர்ந்து சி.யினரர் கரை வந்த கொன் உரு கூற்றுவன்-அச்சத்தைத் த ரு ம் உருவத்தைக் கொண்ட இயமன் பின் கொடுந்த நல்வரங்கள் சொன்னர்-பின் கொடுத்த நல்ல வரங்களெல்லாவற்றஞ் சொன்ஞர்கள். 「T-“g庫」
முனிவர் ஆசி கூறல்
57 தாழிருஞ் சடைகள் தாங்கித்
தவம்பயில் முனிவ ரீண்டி
ஊழினை உப்பக் கங்கா
ணுயர்குலக் கொடியைக் கண்டு
வாழிநீ வையத் தன்னில்
வனிதைநின் கற்பின் மாட்சி
ஆழியிற் பெரிதே பாமென்
முர்த்தன ராசி சொன்னூர்.
(இ-ன்) தாழ் இருஞ் சடைகள் தாங்கி-துரங்குகின்ற பெரிய சடைகன்த் தாங்சி: தவம் பயில் முனிவர் ஈண்டி - தவஞ் செய்கின்ற முரிவர்கள் நெருங்கி ஜாழினே உப்பக்கங் காண்- ஊழின் முதுகுப் பக்கத்தைக் கண்ட விதியைப் புற முதுகு காட்டி ஒடச் செய்தவெற்றி கொண்ட) உயர் குலக் கொடியைக் கண்டு உயர்வுள்ள குலக் கொடியாகிய சாவித்திரியைக் கண் டு; வையந் தன்னில் நீ வாழிபூமியில் நீ நீடூழி காலம் வாழ்வாயாக வனிதை நின் கற் பின் மாட்சி பெண்ணே உனது கற்பின் மகத்துவம்; ஆரி யி ல் பெரிதே பாம்-கடலினும் பெரிதே பாம் என்று - என்று கூறி ஆர்த்தனர் "ஆ" வாரித்தனர்; ஆசி சொன்னுர்-அவர்கள் மேல் நல்ல ஆசிர் வா த வார்த்தைகள் சொன்னர்கள். (எ-று)
மறலிவரு சருக்கம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்,

Page 147
ஏழாவது மீட்சிச் சருக்கம்
திருச்சிற்றம்பலம்
சாலுவ நாட்டின் நிலை
வேறு
518 ஆட்சியைச் சூழ்ச்சியா லடைந்த துன்மதி
மாட்சிமை யற்றவன் மரண முற்றதும் மாட்சிமை தங்கிய மகிபன் சேனன்தன் ஆட்சியைப் புெற்றதும் அறைதல் செய்குவாம்
(இ-ள்) ஆட்சியைச் சூழ்ச்சியால் அடைந்த துன்மதி-சாலுவ நாட்டின் அரசாட்சியைச் சூழ்ச்சியினல் அடைந்த துன்மதியென்னும் அரசன் மாட்சிமை அற்றவன்-மகிமையில்லாதவன்; மரணம் உற்ற தும்-மரணமடைந்ததும்; மாட்சிமை தங்கிய மகிபன் சேனன் . மகிமையுடைய அரசஞன தியுமற் சேனன்; தன் ஆட்சியைப் பெற் றதும்-தனது சாலுவ நாட்டின் அரசாட்சியைப் பெற்றதும்; அறை தல் செய்குவாம்-இனிமேற் சொல்லுவாம். (எ-று)
மன்னன் கடும் வரிகள் விதித்தல்
519 துறைவரி தலைவரி தொழிலுக் கும்வரி நிறைவரி நிலவரி நீருக் கும்வரி நறைவரி யின்னன நாட்டு மக்களுக் கிறைவரி விதித்தன னியல்பை மிஞ்சவே.
(இ.ஸ்) துறைவரி-துறைமுகத்தில் நாவாய்களுக்கு வரி (சுங்க வரி); தலைவரி-ஆள்வரி; தொழிலுக்கும் வரி - தொழில் செய்வதற். கும் வரி, நிறைவரி நிறையளவுகளைச் சரிப்பார்த்து அச்சுக் குத்து வதற்கும் வரி; நில வரி- நிலத் தீர்வை; நீருக்கும்வரி-குளம் மடு முதலிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர்ப் பாசனஞ் செய்வதற்கு அற விடும் வரி; நறைவரி - மதுவரி (கலால் வரி: இன்னன வரி-இப்படி யான வரிகளை; நாட்டு மக்களுக்கு இயல்பை மிஞ்சவே-அவர்களின் இயல்பிற்கு அதிகழாக; இறை-அரசன் விதித்தனன் விதித்தான்.
(可一@)

26
நாட்டிற் குற்றச் செயல்கள்
520 கள்வருங் கயவருங் காடு நாடெலாங்
கொள்ளையுங் கொலைகளுங் கொடிய செய்கையும் உள்ளமும் வெள்கிட உஞற்ற மக்களும் அள்ளலில் வீழ்ந்தென அவதி யுற்றனர்.
(இ-கள்) கள்வரும் கயவரும் காடு நாடெலாம் - கள்வர்களும் கீழ் மக்களும் காடு நாடாகிய இடங்களிலெல்லாம்; கொள்ளை யும் கொலைகளும் கொடிய செய்கையும் - கொள்ளை, கொலை, தீயசெயல் கள் ஆகியவற்றை உள்ளமும் வெள்கிட உஞற்ற-மனமும் அச்சப்ப டும்படி தினமும் செய்ய மக்களும் அள்ளலில் வீழ்ந்தென - அந்நாட்டு மக்களும் நரகத்தில் வீழ்ந்தது போல; அவதி யுற்றனர்-துன்பநிலை யுற்று அவதிப்பட்டார்கள். (எ-று) 3
வேறு
52 காவலன் மாதரின் காதலில் மூழ்கினன்
ஒவலில் கள்ளினை யுண்டுமால் கொண்டனன் ஏவலர் தாமுவந் திட்டது சட்டமாப் பாவமே செய்தனர் பாருளா ரேங்கினர்.
(இ- ள்) காவலன் மாதரின் காதலில் மூழ்கினன்-அரசன் பெண் களுடன் கூடி அநுபவிக்கும் சிற்றின்பத்தில் மூழ்கினன்; ஒவலில் கள் ளினை உண்டு மால் கொண்டனன்-ஒழிவில்லாமல் மதுவை அருந்தி மயக்கமடைந்தான்; ஏவலர் - பணிவிடை செய்வோர் (அரசபளியாட் கள்); தாம் உவந்து இட்டது சட்டமாய்ப் பாவம்ே செய்தனர்-தாம் விரும்பி இட்டதே சட்டமென அக்கிரமங்களையே செய்தார்கள்; பாரு ளார் ஏங்கினர். தேசத்திலுள்ளோர் யாவரும் ஏங்கினர்கள். (எாறு) 4
522 சத்தியம் பொய்த்தது சாலுவ நாட்டினிற்
பொய்த்தது வானமும் பூமி விளைச்சலும் நித்திய பூசைகள் நின்றன கோயிலில் எத்திசை மாந்தரு மின்மையின் வாடினர்.
(இ-ஸ்) சாலுவநாட்டினில் - சாலுவதேயத்தின் கண்ணே சத் தியம் பொய்த்தது சத்தியம் தவறியது; வானமும் பூமிவிளைச்சலும் பொய்த்தது- வானம் பொய்த்து மழை தவறியது; பூமியில் நெல் முத லிய பயிர்களின் விளைச்சலும் பொய்த்தது; நித்திய பூசைகள் G57.

Page 148
262
வில் நின்றன-நித்தியமும் நடைபெறும் பூசைகள் கோயில்களில் தவ றின எத்திசை மாந்தரும் இன்மையின் வாடினர்-எல்லா இடத்து மனிதரும் வறுமையால் வாடினுர்கள். (ar-il))
523 பஞ்சமும் நோய்களும் பாரினே வாட்டிட
அஞ்சிய மக்களும் அண்ணலே பண்மியே தஞ்சமெ மக்களி யென்றடி தாழ்ந்திட நெஞ்சகங் கொண்டிலன் நீதியை யோர்கிலான்.
L
(இ-ன் பஞ்சமும் நோய்களும் பாரினே வாட்டிட-பஞ்சமும் பல வித வருத்தங்களும் பூமியிலுள்ளோரைத் துன்புறுத்த அஞ்சிய மக் களும்-அதனுள் அச்சமடைந்த மக்கள் அண்ணிலே அண்மியே - அர ச3:ன அடைந்து எமக்குத் தஞ்சம் அணி என்று அடி ققTفينسك بالتعقي எமக்குத் தஞ்சம் தீரல் வேண்டும் என்று பாதங்களில் தாழ்ந்து வரங்கிட நீதியை ஓர் கிலான் நெஞ்சகங் கொண்டிலன் - நீதியை ஆராய்ந்தறியாதவனுகிய துன்பதி, ஆக்குடி மக்களின் வேண்டுதல் ஆ3ள மனத்திற் கொண்டாவில்ஃப். (எ-று) ዘï
மன்னன் மடிதல்
54 மக்கள் கிளர்ந்தெழ மன்னன் மருண்டனன் தக்க படைகளுத் தாங்குறு சூழ்நரும் ஒக்க லமைச்சரும் ஓடி ஒளித்தனர் துக்க மிகைபடத் தூங்கிய வேளையில்.
(இதுவும் அடுத்த பாட்டும் குளகம்}
(இ-ன்) மக்கள் கிளர்ந்து எழ - குடிமக்கள் கலவாஞ் செய்து எழ மன்னன் மருண்டனன்-நூன்மதி அஞ்சின்ன் தக்க படைகளும் -தகுதி வாய்ந்த தான் ரருட0; தாங்குறு சூழ்நரும் - அரசனோத் தாங்கிச் சூழ்ந்து நிற்போரும்: ஒக்கல் அமைச்சரும் - சுற்றமும் மந் திரி மாதும்; ஒடி ஒழித்தனர் ஆகிய எல்லோரும் ஓடி மறைந்திருந்த னர்: தும் மி) படத் தூங்கிய வேளேயில்-துக்க மிகுதியாசு அரசன் தூங்கிய சமயத்தில். (எ-து:
துரங்கிங் வேளோபில் - ப்த்துக் :ெங் சங் சீரடுக் ப"
1, 3 Հուդ"|ւն,

26:
525 கோனெறி கோடிய கொற்றவன் நாட்டனுக் சுனமென் றெண்ணியொர் உள்வினே மந்திரி ஈனரைக் கொன்றிட விழுக்கில தாமென
மானமில் மன்னனே மTப்த்தனன் வாளி அல்.
(இ-ள்) கோல் நெறி கோடிய கொற்றவன்-செங்கோல் நெறி தப்பிய (வளைந்த மன்னன் நாட்டினுக்கு ஆவணம் என்று எண்ணிநாட்டினுக்குக் கேடு என்று எண்ணி ஓர் உள்வினே மத்திரி-ஒர் உட் பகையுள்ள மந்திரி ஈனரைக் கொன்றிட இழுக்கி Tம் என் இழித்தோரைக் கொல்லுதல் தவறு இவ்வோம் என மானமில் மன் னனே - பெருமையில்லாத துன்மதியை வாளினுல் மாய்த்தனன் - வாளினுல் வெட்டிக் கொலே செய்தான். (எ- று)
மந்திரி முதலானுேர் தியுமற்சேனனத் தேடிச் செல்லுதல்
526 மன்னவன் மாழலும் மந்திரி மேலவர்
அந்நெடு நாட்டினே பாண்டிட வல்லவன் தன்னிக சில்லவன் தண்ணளிச் சேனனென் றுன்னியல் வுத்தம லுறைவன மேகினர்.
(இ - ள் மன்னவன் மாபூலும்-துன்தி கொபுேண்டு இறந்: லும், மந்திரி மேஸ்வர் பந்திரிமாரும் அந் நாட்டுப் பெரிபே 'த' 'தி நெடு நாட்டினே ஆண்டிட வல்லவன் அந்தப் பெரிய சான் ந | ஃ HTCC TTTT TT T TT TS TTu TT T T O GCT TT STTTT GtC TTTS AA L A S L T L உன்னி-தனக்கு நிகரில்லாதவனும் தண்மை புன்னுெட புற் சேனனே என்று எண்ணி; அவ் டத் தமன் டாரா னொ அந்த உத்தம அரச இலட்சங்க்ஃபுல்டர் | iii பெரும் காட் டிற்குச் சென்று கள். ( - யூ :
தியுமற் சேனனே ம ந்திரி காணுதல்
527 சிங்கா சனத்திற் சீருடனே
செம்பத் திருந்த தம்மன்னன் அங்கோர் புலியின் அருள் மீதே
ਗੇ।

Page 149
செங்கோ லேந்துஞ் செங்கையிற்
செபமார் கண்டி மாலையுடன்
மங்கை பாகன் மலரடியை
மனத்துள் நிறுத்தல் தாங்கண்டார்.
(இ- ள்) சிங்காசனத்திற் சீருடனே-அரியணையின் மேலே மிகுந்த சிறப்புடனே செம்மாந்து இருந்த தம் மன்னன்-களிப்புடனும் இறு மாப்புடனும் இருந்த தமதரசனகிய தியுமற் சேன மன்னன்; அங்கு துர் புலியின் அதள் மீதே-அங்கு ஒரு புலித்தோல் ஆசனத்தின் மீது; அமர்ந்து, இன்னருளின் திருவுருவாய்-வீற்றிருந்து இனிய அருளுரு வத்துடன் செங்கோல் ஏந்தும் செம்கையிற் - செங்கோலைப் பற்றும் சிவந்த கையில்; செபம் ஆர் கண்டி மாலையுடன் - செபஞ் செய்யும் அரிய உருத்திராக்க மாலையுடன்; மங்கை பாகன் மலரடியை-உமா தேவியாரைப் பாகத்தே வைத்த பரம சிவனின் செந்தாமரை மல ரனைய திருவடியை மனத்துள் நிறுத்தல் தாங்கண்ட ார்-மனத்துள்ளே தாங்கியிருப்பதை அவர்கள் கண்டார்கள். (arー』) 0
சேனனை யரசாட்சியை யேற்கச் சொல்லி அவர்கள் வேண்டுதல்
528 கொந்தார் மாலை மணிமார்பா
கொடுங்கோன் மன்னன் இறந்தொழிந்தான் நந்தாச் செல்வ வளநாட்டில்
நான்கு வருடம் மழையின்றி நொந்தார் ஏழைக் குடிமக்கள்
நோயும் பசியும் நுகர்வுற்றர் சிந்தா குலந்தீர்த் தெமையாளச்
சித்தங் கூரும் எனச்சொன்னர்.
(இ- ள்) கொந்தார் மாலை மணிமார்பா-பூங்கொத்து நிறைந்த மாலையை அணிந்த அழகிய மார்பினையுடையவனே; கொடுங்கோன் மன்னன் இறந்தொழிந்தான்-கொடுங்கோலாட்சி செய்த மன்னணு கிய துன்மதி இறந்து பட்டான்: நந்தாச் செல்வ வளநாட்டில் - குறையாத செல்வமுள்ள வளப்பம் பொருந்திய சாலுவ நாட்டில்; நான்கு வருடம் மழையின்றி-நான்கு வருடங்கள் மழை பெய்யாது; ஏழைக் குடிமக்கள் நொந்தார் - ஏழை க் குடிமக்கள் வருந்தினர்; Gր,ո Այմ) பசியும் நுகர்வுற்முர்-நோயையும் பசியையும் அனுபவித்தார்

2é5,
கள்; சிந்தை ஆகுலம் தீர்த்து எமை ஆள-(எமது) மனக் கவலையைத் தீர்த்து, எம்மை அரசாட்சி செய்ய; சித்தங் கூரும் எனச் சொன் ஞா-மனம் கருணை கூர்ந்து வருதல் வேண்டும் என்று கூறினர்கள். (ar-g)
529 எங்கள் நாட்டு மக்களெலாம்
எழிலி காணுப் பயிர்போலத்
தங்கள் வருகைக் கேங்குகின்ருர்
தாயிற் சிறந்த தயாவுடையீர்
செங்கோ லேந்தி யெமைக்காப்பீர்
செம்பொற் றேருஞ் சீருடையும்
இங்கும் பணிக்குப் பரிசனரும்
இட்டு வந்தோ மெனப் பணிந்தார்.
(இ-ள்) எங்கள் நாட்டு மக்களெலாம்- எங்கள் சாலுவ நாட் டின் மனிதரெல்லாம்; எழிலி காணுப் பயிர்போல-மேகத்தை (மழை யை)க் காணுத பயிர்களைப்போல; தங்கள் வருகைக்கு ஏங்குகின்ருர்தாங்கள் வருதலை வேண்டி ஏங்கித் தவிக்கின்றர்கள்; தாயிற் சிறந்த தயாவுடையீர்-தாயிலும் சிறந்த தயையையுடையவரே செங்கோல் ஏந்தி எமைக் காப்பீர்-அரசாட்சிக் குரிய செங்கோலை ஏந்தி எம் மைக் காப்பீராக; செம்பொன் தேரும்-செம் பொன்னுற் செய்யப் பட்ட தேரும்; சீருடையும்-அரசர் அணிவதற்குரிய சிறப்பான உடை களும்; இங்கு உம் பணிக்குப் பரிசனரும் - இங்கு உமது பணிகளைச் செய்ய ஏவல் செய்வோரும்; இட்டு வந்தோம் எனப் பணிந்தார்கொண்டு வந்துள்ளோம் என்று வணங்கிக் கூறினர்கள். (எ-று) 12
தியுமற் சேனன் கூறல்
530 நன்றுந் தீதும் பிறர்தாரார்
நாஞ்செய் வினையின் பயனேயாம் நன்றே செய்யின் நலமுண்டாம்
நாடி யதுவே செயத்தகுமாம் அன்றி வினைகள் தீதானுல்
அல்லல் வாழ்வே யெமக்காகும் துன்றும் பவத்தின் வினைதம்மிற்
றுய்யா தனவுந் தொடர்ந்திடுமே.

Page 150
266
(இ-ள்) நன்றுந் தீதும் பிறர் தாரார் - நன்மையும் தீமையும் பிறர் தருவனவல்ல; நாஞ் செய்வினயின் பயனேயாம்- அவை நாம் செய்த நல்வினை தீவினைகளின் பயனேயாகும்; நன்றே செய்யின் நல முண்டாம் -நன்மையைச் செய்யின் தன்மையே உண்டாகும்; நாடி அதுவே செயத்தகுமாம்-அதுவே விரும்பிச் செயத் தகுந்தது ஆகும்; அன்றி வினைகள் தீதானுல் . அதுவன்றி நாம் செய்யும் வினைகள் தீய வையானல்; அல்லல் வாழ்வே எமக்கு ஆகும் - துன்பமான வாழ்க்கையே எமக்குக் கிடைக்கும்; துன்றும் பவத்தின் வினை தம்மில் - நெருங்கும் பிறப்பின் வினைகளுள்ளே துய்யாதனவும் தொடர்ந்திடுமே - அனுப விக்கப்படாதவை அடுத்த பிறவிக்குத் தொடர்ந்து வருமே. (எ-று) 2
S3球 பலனைக் கருதி வினைசெய்யின்
பயனைத் துய்த்தல் மாருது
நலமுந் தீதுந் துய்த்திடவே
நானு பிறவி யெடுப்போங்காண்
பலனிற் பற்று வைக்காது
பரமன் சேவை யெனச்செய்யில்
இலவா மின்ப துன்பமெமக்
கிலையே பிறவிப் பெருந்துயரம் ,
(இ-கள்) பலனைக் கருதி வினை செய்யின் - நாம் ஒரு செயலைச் செய்யும்போது அதனல் வரும் பலனை மனத்திற் கொண்டு அவ் வினை
பேருன பயன்களை அனுபவித்தல் தப்பாது; நலமும் தீதும் துய்த்தி டவே-நன்மையால் இன்பமும், தீமையால் துன்பமும் அனுபவிக் கவே; நாணு பிறவி எடுப்போம் காண் - நாம் பலவகைப் பிறவிகளை எடுப்போம்; பலனில் பற்று வைக்காது - பலன் எது வரினும் அதிற் பற்று வைக்காது; பரமன் சேவை எனச் செய்யில்-ஈஸ்வரார்ப்பண மாகக் கருமங்களை நாம் செய்யின்: இன்பதுன்பம் எமக்கு இலவாம் -இன்பமும் துன்பமும் எமக்கு இல்லையாகும்; இலையே பிற வி ப் பெரும் துயரம்- மாறி மாறிப் பிறக்கின்ற பிறவி என்னும் பெரிய துன்பமும் எமக்கு இல்லையாகும். (எ.ாறு) 14
532 பிரபஞ் சத்தைப் படைத்தளித்துப்
பின்ன ரதனைத் துடைத்தருளும் அரணி னுடல் யாரறிவார்
ஆட்டி வைக்குங் கேனவனே

267
அரசை யாள வைத்தவனும்
அதுவிட் டென்னை யாரணியத்
திரந்துண் ணென்று விட்டவனு
மெல்லா மவனென் றறிந்தேனே,
(இ-ள்) பிரபஞ்சத்தைப் படைத்து அளித்து - உலகத்தைப் படைத்துக் காத்து பின்னர் அதனைத் துடைத்து அருளும் - பின்னர் அதனை அழித்து, ஆன்மாக்களுக்கு அருளைச் செய்யும்; அரணின் ஆடல் யாரறிவார்-சிவபெருமானின் திருவிளையாடலை யார் அறிவார்கள்? ஆட்டி வைக்கும் கோன் அவனே-எல்லாவற்றையும் ஆட்டி வைக் கின்ற இறைவன் அவனேயாவன்; அரசை ஆள வைத்தவனும் - என்னை அரசாட்சி செய்ய வைத்தவனும்; அதுவிட்டு என்னை ஆரணி யத்து இரந்துண் என்று விட்டவனும் அதைவிட்டு என்னை க் காட் டில் வந்து தங்கித் தவஞ் செய்து இரத்து உண் என்று விட்டவனும்: எல்லாம் அவன் என்று அறிந்தேனே. (எ-று 5
莎33 பின்னும் போகத் தழுத்தியெனப்
பிடமிட் டெடுக்கத் திருவுள்ளம்
பொன்னர் கொன்றைப் பெருமானர்
புரிந்தார் போலும் புல்லறிவன்
என்னு லாவ தொன்றில்லை
யெனினு மவணு னைவழியே
இந்நா டதனைச் சிலகாலம்
இனிது புரப்பே னெனவிசைந்தான்.
(இ - ள்) பின்னும்-திரும்பவும்; போகத்து அழுத்தி-அரசபோ கத்தில் அழுத்தி எனப் பிடமிட்டு எடுக்க் - என்னைப் புடமிட்டுச் சுசுதிசெய்ய; பொன் ஆர் கொன்றைப் பெருமானுர்-பொன்போன்ற கொன்றை மலர்மாலையை யணந்த பரமசிவனுர்; திருவுள்ளம் புரிந் தார் போலும்-திருவுள்ளஞ் செய்தார் போலும்; புல்லறிவன் என்ன லாவதொன்றுமில்லை-அறிவீனணுகிய் என்னுல் ஆவது ஒன்றுமில்லை; எனினும் அவன் ஆணை வழியே-என்ரு லும் அவ்விறைவனின் கட்டளை வழியே; இந்நா.தனைச் சிலகாலம்-இச்சாலுவ நாட்டைச் சில காலத் துக்கு இனது புரப்பேன் என இசைந்தான்-நன்கு அரசாட்சி செய்து காப்பேன் சனச் சம்மதித்தான். (எ-று)
வி ம்) பிடம்- புடம் (மதுரைத் தமிழ்ப் பேரகராதி) , IŠ

Page 151
268
மந்திரிகள் வேண்டல்
534 மைதீர் காட்சி மன்னனுரை
மதிமந் திரிகள் உளங்கொண்டு மெய்யாம் பொருளை யுணர்ந்தோம்யாம்
மேலாம் நெறியி லெமைச்செலுத்திச் செய்யார் தடஞ்சூழ் வளநாட்டைச் செங்கோ லேந்திப் புரந்திடவே ஐயா இன்றே எழுகவென
அரசை வேண்டி யடிதொழுதார். (இ-ள்) மைதீர் காட்சி மன்னன் உரை - குற்றமற்ற அறிவை யுடைய தியுமற்சேன மன்னனுடைய உரையை மதிமந்திரிகள் உளங் கொண்டு-அறிவுள்ள அம் மந்திரிகள் மனத்திற்கொண்டு; யாம் மெய் யாம் பொருளை உணர்ந்தோம்-யாம் உண்மைப் பொருளை உணர்த் தோம்; மேலாம் நெறியில் எமைச் செலுத்தி - மேலான வழியில் எம்மை வழிநடத்தி; செய் ஆர் தடஞ்சூழ் வள நாட்டை - வயல் கள் நிறைந்ததும் குளங்களினற் சூழப்பட்டதுமான விசாலமும் வளப் பமும் பொருந்திய சாலுவ நாட்டை செங்கோல் ஏந்திப் புரந்திடவே - செங்கோல் ஏந்திக் காத்திடுவதற்காக; ஐயா இன்றே எழுக என. அரசனே இன்றே வருவீராக என்று: அரசை வேண்டி அடிதொழு தார்-தியுமற்சேனனைத் தாழ்ந்து வேண்டி அவனின் பாதங் களை நமஸ்கரித்தார்கள். (எ ~று) 17
தியுமற் சேனன் சாலுவநாட்டிற் கேகுதல்
535 மன்னன் இசைந்து மனைவியுடன்
மறைதேர் முனிவர் விடைபெற்றுச்
சென்னி வைத்த சிகைநீக்கிச்
செம்பொன் மணிப்பூ ஆணுடைதரித்துக்
கொன்வே லொன்று கைப்பற்றிக்
கொடிஞ்சித் திண்டேர் மீதிவர்ந்து
கன்னற் கழனி சூழ் நாட்டைக்
காவல் செய்யப் புறப்பட்டான்.
(இ- ள்) மன்னன் இசைந்து மனைவியுடன் - தி யு மற் சேனன் இசைந்து தன் மனைவியுடன்; மறைதேர் முனிவர் விடைபெற்று.

263
வேதங்களை ஆராய்ந்து தெளிந்த முனிவரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்னிவைத்த சிகை நீக்கி - சிரசிலே வளர்த்து வைத்திருந்த குடு மியை நீக்கி; செம்பொன் மணிப்பூண் உடைதரித்து-செம்பொன்ன லும் மணிகளினலுமான ஆபரணங்களையும், அரசர்க்குரிய உடைகளை யும் தரித்து கொன்வேலொன்று கைப்பற்றி - அச்சத்தைத் தரும் வேலொன்றைக் கையிலே கொண்டு; கொடிஞ்சித்திண் தேர் மீது இவர்ந்து-தாளம் பூவின் உருவமுள்ள கொடிஞ்சியென்னும் முன் வைக் கப்பட்ட உறுப்பையுடைய திண்ணிய தேரின் மீது ஏறி: கன் ன ல் கழனி சூழ் நாட்டை-கரும்பு வளரும் வயல்கள் சூழ்ந்த சா லு வ நாட்டை காவல் செய்யப் புறப்பட்டான் - அரசாள்வதற்காகச் சென்ருன். (எ-று)
(வி-ம்) கொடிஞ்சி-தேர்மொட்டு சிகை நீக்கியமை -தவ ஒழுக்கத்தை மேற்கொண்டு இருந்தபடியால் சடைவளர்த்து வந்தான். இப்பொழுது சடையை நீக்கிச் சவரஞ் செய் தான் என்க. 8
சாவித்திரியுஞ் சத்தியவானுந் தொடர்ந்து செல்லுதல் 536 காவித் தடங்கட் கரியகுழற்
கன்னற் றீஞ்சொற் கலாபமயிற் சாவித் திரியுஞ் சத்தியனுஞ்
சால்வ:நாட்டு மந்திரரும் வாவிப் பாய்மாத் தேரேறி
மன்னன் பின்னே போதரலும் ஆவி பிரிந்த ஆக்கையென
அந்த அடவி வெறித்ததுவே.
(இ- ள்) காவி தடம்கண் - கருங் கு வளை போலும் விசால மான கண்களையும்; கரிய குழல் - கருமையான கூந் த லை யும்; கன்னல் தீம் சொல் - கற்கண்டு போலும் இனிய மொழியையும். உடைய கலாப மயில் சாவித்திரியும்-கலாப மயில்போலும் சாவித் திரியும்; சத்தியனும் - சத்தியவானும்; சால்வநாட்டு மந்திரரும் - சாலுவ தேயத்து மந்திரிகளும், வாவிப்பாய் மாத்தேர் ஏறி- தாவிப் பாய்கின்ற குதிரைகள் பூட்டப்பெற்ற தேர்களின் மீது ஏறி; மன்னன் பின்னே போதரலும் -தியுமற்சேன மன்னனுக்குப் பின்ற்ை செல்ல லும்; ஆவி பிரிந்த ஆக்கையென - உயிர் நீங்கிய உடலைப்போல; அந்த அடவி - அந்தக் காடு; வெறித்தது - வெறி தாய்ப் போ ன து.
୩୬ - ୭ ଜ୩ଣF, (67. p.)

Page 152
27)
(வி-ம் கலாபம் - தோகை சாவித்திரியும் சத்தியவானும் நீங்கிய அடவி உயிர் பிரிந்த உடல் போலாயது, 9. அரச குடும்பத்தினர் பிரிவால் வனத்திலுள்ளோர்
துயரப்படுதல்
537 கொற்றக் குடையோன் ம்ை ங்கிக்
கோதை யோடுஞ் சென்றிடவே
பற்றைத் துறந்த முனிவர்களும் பாச மேலிட் டயர்ந்தனரே
கற்றைக் குழற்சா வித்திரியைக்
காணுப் பசிய கிள்ளையினம்
பற்றுக்கோடே திணியென்று
பாலும் பழமும் வெறுத்தனவே.
(இ-ள்) கொற்ற குடையோன்-வெற்றிக்குடையையுடைய திய மற்சேனன்; வனம் நீங்கி-காட்டைவிட்டு நீங்கி கோதையோடும்தன் ம&னவியோடும்; சென்றிடவே - சென்றிடுதலும் பற்றை தீ துறந்த முனிவர்களும்-எப்பற்றையும் துறந்த முனிவர்கூட பரிச மேலிட்டயர்ந்தனரே-பாசம் (அன்பு மேவிட்டுச் சோர்ந்தார்கள்; கற்றைக் குழற் சாவித்திரியைக் காணு-தொகுதியான கூந்தல்யு டைய சாவித்திரியைக் காணப்பெருத: பசிய கிள்ளேயினம்-பசுங்கிளி கள் இனி பற்றுக்கோடு ஏது என்று-தமக்கு இனிமேற் பற்றுக்கோடு ஏது என்று; பாலும் பழமும் வெறுத்தனவே - தமதுணவாகிய பால் பழங்களேக்கூட உண்ணுது வெறுத்தன (எ ற)
வி-ம்) சாவித்திரி கிளிக்கு பாலும் பழமும் ஊட்டி வளர் தீ தாள். அங்ஙனம் ஊட்டிவந்த அவள் பிரிவால் கிளிகள் உண  ைவ வெறுத்தன. 20
5出8 தழையுங் குழையுத் தளிர்க்கரத்தாற்
றடவித் தருவா ளிலேயென்றே
உழையுங் கன்று முண்ணுமல்
உறங்கிக் கிடந்த முன்றிலிலே
கழையும் புல்லுங் கறிக்காது
காஃளக் கன்று கதறியதால்
மழையைக் கண்டும் மகிழாமே
மயில்கள் வாளா இருந்தனவால்,
"

(இ-ள்) தழையும், இயுேம் குழையும் தளிரும் sh தால் - தளிர் போன்ற தனது விக்களால் gLe Carl GM யென்றே தடவித் தடவித் தருபவளாகிய சாவிந்திரி இ ெேய என்று; உழையும் மானும்; கன்றும்-மான் கன்றும் உண்றைமல் உறங் இக் கிடந்த ஒன்றும் உண்ணுமல் உறங்கிக் கிடந்தன முன்றிலிலேமுற்றத்திலே கழையும்-கரும்பும் புல்லும் - புல் முதலியனவும் சுறி காது-கடித்துத் தின்ஒமல்; காஃளக்கன்று கதறியது - காளேக்கன்று கதறி அழுதது; மழையைக் கண்டும் மகிழாமே L rigal isir TIT ATTIT இருந்தன - இன்பமாக மழையைக் கண்டு மகிழ்கின்ற பயில்கள் கூட மழையைக் கண்டு மகிழாது சும்மா இருந்தன. ஆல் - அசை (எ- று)
(வி-ம்) பிரிவின் துயரத்தால், மானும் கன்றும் உண்ணுமல் உறங் கின; கா8ளக்கன்று உண்ணுமற் கதறியது. மயில்கள் ஆடாமல் இருந்
தன.
மன்னன் வருகையை யறிந்து சாலுவ நாட்டு மக்களின் மகிழ்ச்சி
வேறு
539 அருளுடைத் தியூமற் சேனன்
அந்நக ரனேந்த போது பெருநகர் மாக்க ளிண்டிப்
பேரிகை முரசங் கொட்டி: இருநிதி யிழந்த மாந்தர்
இடும்பையுற் றுழன்ற காலே பெருநிதி பெற்ரு ரென்னப்
பெருமகிழ் வெய்தி பார்த்தார்.
(இ-ள்) அருளுடைத் தியுமற்சேனன் கருனேயுடைய தியூமற் சேன மன்னன்; அந்நகர் அண்ணந்த போது-அந்த நகரத்தை அடைந்த போது; பெருநகர் மாக்கள் ஈண்டி-பெரிய நகரத்து மக்கள் ஒன்று கூடி நெருங்கி பேரிகை, முரசங் கொட்டி - பேரிகை முரசு முத விய வாத்தியங்களே முழக்கி; இரு நிதி இழந்த மாந்தர் சங்கநிதி பதுமநிதியென்னும் பெரிய நிதியை இழந்த மக்கள் இடும்பையுற்று " தரித்திரமடைந்து உழன்றகாலே-உலேந்து திரிந்த காலத்து பெரு நிதி பெற்ருர் என்ன-பெரிய செல்வத்தைப் பெற்றுற்போல பெரு மகிழ்வெய்தி - பெரிய மகிழ்ச்சி கொண்டு ஆர்த்தார்" ஆரவாரித் தார். (TーJI」 88

Page 153
272
மக்கள் நகரை அலங்கரித்தல்
540 கோமறு கெங்கும் வண்ணக்
கோலங்கள் தீட்டி மாந்தர்
தேமலர் மாலை தூக்கித்
தெளித்தனர் மஞ்சள் நன்னீர்
பூமலர் அரம்பை தாழை
பூகமொ டிக்கு நாட்டித்
தூமணி முத்தின் ஆரம்
தூக்கினர் பந்தர் தோறும்.
(இ- ள்) மாந்தர்-சாலுவநாட்டு மக்கள்; கோ மறுகு எங்கும்அரச வீதி எங்கணும்; வண்ண கோலங்கள் தீட்டி - அழகிய பல கோலங்கள் எழுதி; தேமலர் மாலை தூக்கி - வாசனையுடைய மலர் மாலைகளைத் தூக்கி; மஞ்சள் நல் நீர் தெளித்தனர்-மஞ்சள் கலந்த பரிசுத்தமான நீரைத் தெளித்தார்கள்; பூ மலர்-அழகிய மலர்மாலை களையும்; அரம்பை - வாழைகளையும்; தாழை- தாழைகளையும் பூகம் - கமுகுகளையும்; இக்கு-கரும்புகளையும்; நாட்டி-கட்டி தூமணி முத் தின் ஆரம்-தூய மணியாலும் முத்தாலும் செய்யப்பட்ட மாலை களை பந்தர் தோறும் தூக்கினர் - பந்தர் எங்கணும் தூக்கினர்கள். (6T-gi) 23
மக்கள் மன்னனை எதிர்கொள்ளல்
S4 அந்நக ரெல்லை தன்னில்
அரசனை யெதிர்கொண் டேற்கத் துன்னிய மணித்தேர் வேழம்
துரகநற் பதாதி யாய மன்னிய மறைநூல் வல்லோர்
மந்திர ஞ் சொல்லி வாழ்த்த மின்னிடை மடவார் கீதம்
மிழற்றிட மக்கள் சூழ்ந்தார்.
(இ-ள்) அந்நகர் எல்லை தன்னில் - அந்த நகர எல்லையில்; அர சனை எதிர்கொண்டு ஏற்க - அரசனை எதிர்கொண்டு அழைத்துச்செல்ல; மணித்தேர், வேழம், துரகம், நற்பதாதி ஆய துன்னிய - இரத கஜ துரக பதாதியாய நாற்படைகளும் நெருங்கின: மன்னிய மறைநூல்

273
வல்லோர் - நிலைபெற்ற மறைநூல்களில் வல்லவர்கள்; மந்திரஞ் சொல்லி வாழ்த்த - மந்திரங்களைச் சொல்லி வாழ்த்தொலி செய்ய: மின் இடைமடவார். மின்னற் கொடிபோலும் துவஞகின்ற இடையை யுடைய பெண்கள்; கீதம் மிழற்றிட-இன்னிசைப் பர்டல்களை இசைக்க; மக்கள் சூழ்ந்தார் - எல்லா மக்களும் வந்து குழுமினர். (எ-று)
(வி-ம் மிழற்றல்-மழலைச் சொல்போல் மெல்லப் படித்தல்: 4
மன்னன் வரிவு
542 குன்றன குவவுத் திண்டோட்
கொற்றவ ஞங்கு வந்து
துன்றிய தானை மக்கள்
துறவிய ரறிஞர் தம்மை
ஒன்றிய பரிவின் நோக்கி
உளநெகிழ்ந் துருகி யீன்ற
கன்றினைக் கண்ட காராம்
பசுவினை யொத்தா னன்றே.
(இ-ள்) குன்று அன-குன்றையொத்த; குவவுத்திண்டோள் - திரண்ட திண்ணிய தோள்களையுடைய; கொற்றவன் --அரசன் ஆங்கு வந்து; துன்றிய-நெருங்கிய; தான-சேன்ைகள்: மக்கள்; துறவியர்; அறிஞர் தம்மை-அறிஞர் ஆகியோரை ஒன்றிய பரிவின் நோக்கிபொருந்திய மிக்க அன்புடன் நோக்கி; உளம் நெகிழ்ந்து உருகி - மனம் நெக்குருகி; ஈன்ற கன்றினைக் கண்ட காராம் பசுவின ஒத்தான் அன்றே -தான் ஈன்ற கன்றைக் கண்ட காராம் பசுவை ஒத்தான்.
அன்று, ஏ - அசைகள் (எ-று) 25
மன்னனும் பரிவாரமும் நகரடைதல்
வேறு
5恪3 காவி யாம்பல் தாமரை
கண்ம லர்ந்து கவினுறும் வாவி மல்கு சாலுவ
வண்மை மிக்க நாட்டினுள்
Frr - 18

Page 154
மாவி ளங்கு மற்புய
மன்னன் தானே சூழ்வரத் தூவி யன்ன மென்னடைத் וו עד לרו.
துணைவி யோடு மேகிஞன்.
(இ-ள்) காவி ஆம்பல் தாமரை-கருங் குவனே மலரும் ஆம் பலும் தாமரை மலரும்; கண்மலர்ந்து சுவினுறும் - கண்விழித்து மலர்ந்து அழகுற்று விளங்கும்: வாவி மல்கு - குளங்கள் நிறைந்து: வண்மை மிக்க-வளப்பம் மிகுந்த சாலுவ நாட்டினுள் மா விளங்கு -வலிமையும் அழகும் விளங்குகின்ற மல்புய மன்னன் - மற்போர் செய்யும் வலிமை பொருந்திய புயங்க3ளயுடைய தியுமற்சேனன் தாஜன சூழ்வர-தன்னேத் தனது சேஜன சூழ்ந்துவர தூவி அன்ன மென்னடை - இறகுகள் பொருந்திய அன்னத்தின் மென்மைய்ான் நடையைப் போலும் நடையை யுடைய: துஜனவியோடும் ஏகினுன் - மண்வியோடும் சென்ருன். (எ-று {
நாற்படைத் தொகுதி
544 நூறு பத்து வாரணம்
நொடியில் யோச னேசெலும்
நூறு நூறு வ்ாம்பரி
நோக்கொ னுது சேணுயர் ஆறு நூறு சுவிரம்
அணிக மாயி ரம்பல ஆறு பாயு மகலிடம்
அனைத்து மடைத்துச் சென்றவே.
(இ-ள்) நூறு பத்து வாரணம்-ஆயிரம் யானேகளும்; நொடி யில் யோசனை செலும் ஒரு நொடிப் பொழுதில் யோசஃன துர ரம் செல்வனவாகிய; நூறு நூறு வாம்பரி - பதினுயிரம் தாவும் குதிரைக ளும்; நோக்கொணுது சேணுயர் - பார்க்கமுடியாத அளவு ஆகாயத்தை நோக்கி உயர்ந்த ஆறுநூறு கூவிரம் அறுநூறு தேர்களும்; அனிகம் ஆயிரம் பல-பல்லாயிரம் படைகளும்; ஆறு பாயும் அகலிடம் அஃனத் தும்-ஆறு பரந்து பாய்கின்ற அகன்ற இடம&னத்தையும் அடைத் துச் சென்ற-மூடிப்பரந்து சென்றன. (எ-று) gTーリl点F
(வி- ம்) வாமான் - குதிரை
வாம் ரி - வாவும் குதிரை ■ *

55 சாரி சாரி யாகவே
தானே போன ஆறெலாம்
வாரி வீக பூழியும்
வான ளாய மாடமேல்
ஆர ணங்க ஞர்குழல்
அலர்த்து பூழில் ஆவியும்
காரி ருட்கொண் மூவெனக்
கவிந்த வான மெங்குமே.
(இ-ள்) சாரி சாரி யாகவே - கூட்டங் கூட்டமாக (பக்கம் பக்கமாக எனினுமாம்) தானேபோன ஆறெலாம்-சேஃன சென்ற வழி களெல்லாம்; வாரி வீசு பூழியும்-அவற்றின்செலவால் வாரி வீசுகின்ற புழுதியும் வான் அளாய் மாட்மேல் - வானத்தைத் தீண்டுகின்ற உயர்ந்த மாடங்கிளின் மேல்; ஆரணங்கு அஞர் - அரிய தெய்வப் பெண் போன்ற மாதர்கள் குழல் அலர்த்து தமது கூந்தலே அலர்த் தும் பூழில் ஆவியும்-அகிற் புகையும்; கார் இருள் கொண்மூவெனகரிய இருண்ட முகில் என்று கூறும்படி வானமெங்கும் கவிந்தஆகாயமெங்கும் நெருங்கி மூடின. (எ-று ஒர-அசை
(விகம்) அலர்த்தல்-விரித்தல், மலரச் செய்தல், உலரச் செய் தல். ஈரத்தினுல் கற்றையாக இருக்கும் குழலே அகிற்புகையில் காய்ச்சி விரித்தல், ஐதாக்கல், உலர்த்துதல் வழக்கு. ፵ 8
546 தூசி வீரர் வேவிலும்
துலங்கு மெஃக வாளிலும்
தூசி லங்கு மேகலைத்
தோகை மார்கண் வீச்சிலும்
வீசு செம்பொற் றேரினில்
வீக்கு மணியின் குவையிலும்
வீசு கதிரின் கற்றைகள்
விண்ணில் மின்னே பொத்தவே.
இ-ன்) தூசி வீரம் வேவிலும் - குதிரைப்படை வீரர் கையிற் " பற்றிய வேவிலும்; துலங்கும் எஃக வாளிலும்-பிரகாசிக்கும் உருக் விஞற் செய்த வாளிலும் தூசு இலங்கு மேகலேத் தோகைமார் கண் வீச்சிலும் - சீலேயின் மேல் விளங்கும் மேகலயை யணிந்த மயில் போன்ற சாயலேயுடைய பெண்களின் கண் வீச்சிலும்; வீசு செம் பொன் தேரினில்-ஒளிவீசும் செம் பொன்னுற் செய்யப்பட்ட துேரி

Page 155
2ገ6
னில்; வீக்கு கட்டப்பட்ட மணியின் குவையிலும்-நவரத்தின மண்ணி களின் தொகுதியிலும்; வீசு கதிரின் கற்றைகள்-வீசா நின்ற கதிர்த் தொகுதிகள்; விண்ணில் மின்னை ஒத்த -ஆகாயத்தில் மின்னலை ஒத் தன. (எ-று} ஏ -அசை 29
547 கோட்டு நாகம் பிளிற்ருெலி
கொய்யு ஃளக னைப்பொலி
பூட்டு வாரின் முரசொலி
புரிவ லம்பு லம்பொலி
சூட்டு நெற்றி மாதரார்
சுற்றி யாடுஞ் சிலம்பொலி
மோட்டு வானி லுருமென
முழங்கி யெங்கும் பரந்தவே.
(இ-ள்) கோட்டு நாகம் பிளிற்ருெ லி-தந்தங்களையுடைய யானை களின் பிளிறும் ஒலியும்; கொய்யுளை கனைப்பொலி - குதிரைகளின் கனைப்பொலியும், பூட்டுவாரின் முரசு ஒலி-வாரினற் பூட்டப்பட்ட முரசங்களின் ஒலியும்; புரிவலம் புலம்பொலி-வலம்புரிச் சங்கு புலம் பும் ஒலியும்; சூட்டு நெற்றி மாதரார்-சூட்டென்னும் நுதலணியை அணிந்த நெற்றியையுடைய மாதர் சுற்றியாடும் சிலம்பொலி - அரங் கில் வட்டமாக ஆட, எழும் சிலம்பின் ஒலியும்; மோட்டு வானில்உச்சி வானில்; உருமென முழங்கி-இடிபோல முழங்கி; எங்கு ம் பரந்த-எவ்விடமும் பரந்தன. (எ-று) ஏ. அசை
(வி- ம்) பூட்டு வாரின் முரசு - வாரினல் வரிந்து பூட்டப்பட்ட முரசு, புரிவலம்-வலம்புரியென மாற்றுக. வலம்புரிச் சங்கை வீரர் கள் எடுத்து ஊதுதலினல் எழுந்த ஒலி, ፵0
58 மூரி யானை மும்மதம்
மொய்ம்பு வீரர் வள்ளவாய் வாரி வார்த்த மாரியும்
வாசி வாய்நின் றிழிநுரை சேரி தே?றுந் தையலார்
சிவிறு பன்னீர்த் துளிகளும் மாரி பெய்த தாமென
மண்ணி டைச்செ றிந்தவே. (இ- ள்) மூரி யானை மும்மதம்-வலிமை கொண்ட யானைகளின் மும்மதமும்; மொய்ம்பு வீரர் வலிமையுடைய வீரர் வுள்ளவாய்

277
உண் கலத்தில்: வாரி வார்த்த மாரியும் - வாரி வார்த்த கள்ளும்; வாசிவாய் நின்றிழி நுரை-குதிரையின் வாயில் நின்று வடியும் நுரை யும்; சேரி தோறும்-வீதிகடோறும்; தையலார் - பெண்கள்; சிவிறு பன்னீர்த்துளிகளும் - விசிறும் பன்னீர்த்துளிகளும்; மாரிபெய்ததாம் என; மண்ணிடைச் செறிந்த - மண்ணினில் மிகுந்து கலந்தன. (எ-று) ஏ-அசை
V )س-7لمه th( யானையின் மும்மதம் - க ன் ன மத ம், கைம் மதம் கோசமதம். 3.
அரசன் அரண்மனையை அடைதல்
549 ஆட கஞ்செய் யரண்மனை
அரச ணைந்த போதினிற் காட கஞ்சேர் துறவொரீஇக்
காவ லன் மீண் டானெனப் பாட கஞ்சேர் மெல்லடிப்
பாவை யார்பண் பாவிசைத் தேட கஞ்சொ ரிந்தவற்
கெடுத்த னர்நீ ராஞ்ச ம். (இ- ள்) ஆடகம்செய் அரண்மனை - பொன்னல் வேயப்பட்ட, பொன்முலாம் பூசிய தூண் முதலிய உள்ள, அரண்மனையை; அரசு அணைந்த போதினில் - தியுமற்சேனன் சென்று சேர்ந்த சமயத்தில்; காடு அகம் சேர் துறவு ஒரீஇ-காட்டினுள்ளே போய்ச் செய்யும் துறவை விடுத்து; காவலன்-தியுமற்சேனன்; மீண்டான் என -திரும்பி வந்தான் என்று பாடகம் சேர் மெல் அடி பாவையார் பாடகம் என் ஆறும் காலணியணிந்த மென்மையான பாதங்களையுடைய பெண்கள்; பண்பா இசைத்து-பண்ணுேடு கூடிய டாக்களைப் பாடி ஏ ட க ம் சொரிந்து-பூ இதழ்களைச் சொரிந்து அவற்கு நீராஞ்சனம் எடுத் த0ர்- அவனுக்கு ஆலத்தி எடுத்தார்கள். (எ று)
(வி-ம்) ஒரீஇ-ஒருவி என்பதன் மரூஉ. 38
அரசன அலங்கரித்தல் வேறு 56) நல்லதோர் முழுத்தந் தன் னில் நம்பியை நன் னி ராட்டித் துல்லிய கலிங்கம் போர்த்தித்
துTநறுஞ் சாநதஞ தே:'.

Page 156
பல்வகை மணிபொன் பூண்கள்
பாசிழை யாரஞ் சேர்த்தி
வில்லுமிழ் வயிர வாளும்
விக்இன ரிடையில் மின்ன.
(இ.ஸ்) நல்லது ஓர் முழுத்தம் தன்னில்-நல்லதொரு முகூர்த் தத்தில்; நம்பியை நல்நீர் ஆட்டி-தியுமற் சேனனை நல்ல (வாசம் பொருந்திய) தூய நீரால் ஆட்டி, துல்லிய கலிங்கம் போர்த்தி-சுத்த மான சேலையை போர்வையைப்) போர்த்தி; தூநறும் சாந்தம் சாத்தி --சுத்தமான வாசம் பொருந்திய சந்தனத்தைப் பூசி, பல்வகைமணி பொன் பூண்கள் பல வகையான மணியாலும் பொன்ஞலும் செய் யப்பட்ட ஆபரணங்களேயும்: பாசிழை - பசுமையான அணிகலன்களை யும்; ஆரம் - முத்து மாலையையும்; சேர்த்தி - அணிந்து வில் all flyb வயிரவாளும்- ஒளியைவிசும் வயிரவாளையும்; இடையில் மின்ன வீக் கினர்-இடையில் மின்னும்படி கட்டினர்கள். (எணறு)
தியுமற்சேனன் முடிசூடில்
55. இந்திரன் இமையோர் வாழ்த்த
இருநிலத்தி றைவன் றன்னை அந்தணர் ஆசி கூறி
அரிமணித் தவிசி ருத்த மந்திரர் முதலி மன்னன்
மனுநெறி வாழ்க வென்று சுந்தர மெளலி தன்னைச்
சுபமெனச் சூட்டி ஞனே.
(இ- ள்) இந்திரன் இமையோர் வாழ்த்த-இந்திரனும் தேவர் களும் வாழ்த்த இரு நிலத்து இறைவன்தன்னை-பூமிக்கு அரசரூன தியுமற்சேனனை; அந்தணர் ஆசி கூறி-அந்தணர்கள் ஆசி வார்த்தை கள் சொல்லி; அரிமணித் தவிசு இருத்த - அழகிய சிங்காசனத்தில் இருத்த மந்திரர் முதலி - முதலமைச்சன் மன்னன் மனு நெறி வாழ்கவென்று- மன்னன் மனு நெறி நின்று வாழ்க (அரசுசெய்க) என்று; சுந்தர மெளலிதன்னை-அழகிய முடியை சுபமெணச் சூட்டி ணுனே-மங்களமெனச் சொல்லிச் சூட்டினன். (எ-று)
(வி. ம்) சுபம் - மங்களம்
அரி+ மணி+தவிசு-அழகிய சிங்காசனம்,

279
தியுமற்சேனன் பொலிவு
552 மங்கல முழக்கம் பொங்க
மகிதலம் மகிழ்வு பொங்கச் சங்கரி வளையோர் பாங்கர் சாமரை யிரட்டி நிற்ப அங்கையிற் செங்கோ லேந்தி
அரியணை மீத மர்ந்து திங்கள்வெண் குடையின் நீழற்
றிகழ்ந்தனன் தியுமற் சேனன்.
(இ-ஸ்) மங்கல முழக்கம் பொங்க - மங்கல வாத்தியங்களின் முழக்கம் மிகுந்தொலிக்க; மகிதலம் மகிழ்வு பொங்க-பூதலத்தோர் மிகுந்த மகிழ்ச்சியடைய; சங்கு அரிவளையோர் - சங்கை அரிந்து செய் யப்பட்ட வளையலை அணிந்த மாதர்கள்; பாங்கர்-பக்கத்தில் சாமரை இரட்டி நிற்ப - சாமரைகளை வீசி நிற்ப; அம் கையில் செங்கோல் ஏந்தி-அழகிய கையில் செங்கோலைப் பற்றி; அரிஅணை மீது அமர்ந்து -சிங்காசனத்தின் மீதிருந்து; திங்கள் வெண் குடையின் நீழல் - சந் திரவட்டக் குடையின் கீழே; தியுமற்சேனன் திகழ்ந்தனன்-தியுமற் சேனன் விளங்கினன். (எ-று) s;5
S53 மன்னவன் மங்கு லென்ன
மாநிதி வழங்கி நிற்பக்
கன்னலங் கலாப மஞ்ஞைக் கன்னியர் நடன மா.
இன்னிசை பாணர் மீட்ட
இரும்புகழ் புலவர் பாடப்
பொன்னகர் வேந்த னேபோற்
பொலிந்தன ன் சால்வர் கோமான்.
(இ- ள்) மன்னவன் மங்குல் என்ன மாநிதி வழங்கி நிற்ப -- தியுமற் சேனன் மேகம் போலப் பெரிய செல்வங்களை யாவருக்கும் வழங்கி நிற்க கன்னல் அம் கலாப மஞ்ஞைக் கன்னியர் நட னம் ஆட-கரும்பு போன்ற இனிய மொழியையும், அழகிய தோகையைக் கொண்ட மயிலைப் போன்ற சாயலையும் உடைய கன்னியர் நடனம் ஆட பாணர் இன்னிசை மீட்ட- பாணர்கள் இனிய இசையை மீட் டுப்பாட புலவர் இரும்புகழ் பாட-புலவர்கள் அரசனின் பெ ரும்

Page 157
2盛棋
புகழைப் பாட பொன் நகர் வேந்தனே போல்-சுவர்க்கலோக அதி பதியாகிய இந்திரனேபோல: சால்வர் கோமான் பொலிந்தனன் ை சாலுவநாட்டு அரசனுகிய தியுமற்சேனன் பொலிந்து விளங்கிஞன். (எ- று) 36
554 திறைகொணர் மன்னர் தங்கள்
திறமுணர்ந் தவர வர்க்கு
முறைமுறை பரிசு நல்கி
முட்டுறு மக்கட் கெல்லாம்
நிறைபொனு மணியு மீந்து
நிலவரி யாண்டோர் நீக்கிச்
சிறையுறு மாக்க டம்மைச்
செல்கென விடுத்தா னன்றே.
(இ- ள்) திறைகொணர் மன்னர் தங்கள் திறம் உண்ர்ந்து - திறைகொண்டு வந்து கொடுக்கும் குறுநில மன்னரின் வகையறிந்து: அவரவர்க்கு முறைமுறை பரிசு நல்கி அவரவர் தகுதிக் கேற்ப முறை முறையாகப் பரிசுகள் கொடுத்து; முட்டுறு மக்கட்கு எல்லாம் - வறு மையுற்ற மக்கள் யாவர்க்கும்; நிறை பொனும் மணியும் ஈந்து-நிறை யப் பொன்னும் மணியும் கொடுத்து; நிலவரி ஒர் ஆண்டு நீக்கி - நிலவரியை ஓராண்டு காலத்திற்கு அறவிடாமல் விட்டு சிறையுறு மாக்கள் தம்மை-சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளை செல்க என விடுத்தான் - செல்வீர்களாக என்று சிறை விடுத்தான். (எ-று)
அன்று, ஏ-அசைகள்.
(வி-ம்) ஆண்டோர். ஓர் ஆண்டு என மாற்றுக. 37
அசுவபதி வருகை
555 மத்திர தேய மன்னன்
மாளவி தேவி யோடும் அத்திரு நகர டைந்தே
அரசனே டளவ ளாவிச் சத்திய வானைச் சாவித்
திரியையா சீர்வ தித்து நித்திய மங்க லத்தோ
டிலங்குக வெனமொ ழிந்தான்.

28
(இ.ண்) மத்திர தேய மன்னன் -மாத்திர தேயத்து அரசனை அசுவபதி மாளவி தேவியோடு- தனது மனைவியாகிய மாளவி தேவி யோடும்; அத்திரு நகர் அடைந்தே -அந்த அழகிய சாலுவ நாட்டின் நகரத்தை அடைந்து; அரசனேடு அளவளாவி - தியுமற்சேன மன்னணு டன் அன்புடன் கலந்து பேசி: சத்தியவானை சாவித்திரியை ஆசீர் வதித்து-சத்தியவானையும் சாவித்திரியையும் ஆசீர்வாதம் செய்து: நித்திய மங்கலத்தோடு இலங்குக என மொழிந்தான் -எப்பொழுதும் மங்கலங்கள் பொலிய விளங்கி வாழ்வீர்களாக எனக் கூறினன் (எ-று) 38
தியுமற்சேனன் ஆட்சியில் சாலுவநாடு செழிப்புறுதல்
556 கோதறு தியுமற் சேனன்
கோன்முறைக் கொற்றந் தன்னில்
மாதமும் மாரி பெய்ய
மலிந்தநீர் பழனந் தோறும்
பூதல மாது பச்சை
போர்த்துப்பல் வளஞ்சு ரக்க
வீதலு மிரவு மின்றி
விளங்கிய தந்த நாடு.
(இ- ள்) கோதுஅறுகுைற்றமற்ற; தியுமற்சேனன்-தியுமற் சேன னுடைய கோன்முறை கொற்றந் தன்னில்-செங்கோன் முறையான அரசாட்சியில்; மாதம் மும்மாரி பெய்ய - மாதம் மும்மழைபெய்ய்; பழனம் தோறும் மலிந்த நீர்-பொய்கைகளிலெல்லாம் நீர் மலிந்தது; பூதலமாது பச்சை போர்த்து-பூமாதேவி பச்சை நிறம் போர்த்து; பல்வளஞ் சுரக்க-பல வளங்களையும் கொடுக்க வீதலும் - வறுமை யெய்துதலும்; இரவும்-இரத்தலும்; இன்றி-இல்லாமல்; அந்த நாடு விளங்கியது-அந்தச் சாலுவ நாடு விளங்கியது. (எ-று) 39
567 கோன்முறை கோட லின்றிக்
கொற்றவ ஞட்சி செய்ய ஆன்பயிர் செழித்த மக்கள்
ஆறிலோர் கடமை நல்கி

Page 158
282
நூன்முறை யறங்க ளோம்பி
நுகர்ந்தன ரிம்மை யின்பம்
வான்வதி தேவர்க் கெல்லாம்
வழுவறப் பூசை செய்தார்.
(இ-ள்) கோன்முறை கோடல் இன்றி-செங்கோன்முறை நெறி தப்பாமல்; கொற்றவன் ஆட்சி செய்ய-தியுமற்சேனன் அரசாட்சியை நடாத்த ஆன்-பசுக்களும் பயிர்-பயிர்களும் செழித்த - செழித் தன; மக்கள் ஆறில் ஒர் கடமை நல்கி - மக்கள் அரசனுக்கு ஆறி லோர் கடமை கொடுத்து; நூன் முறை அறங்கள் ஓம்பி - அறநூல் களிற் சொல்லப்பட்ட முறையில் நல்லறங்களைப்போற்றி இம்  ைம இன்பம் நுகர்ந்தனர்- இம்மை இன்பங்களை அனுபவித்தனர்; வான் வதி கேவர்க்கெல்லாம்-விண்ணுலகத்தில் வசிக்கும் தேவர்களுக்கெல் லாம்; வழுவற-தவறின்றி, பூசை செய்தார்-பூசைகள் செய்தார்கள். (எ-று) 40
மிட்சிச் சருக்கம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்

எட்டாவது துறவுச் சருக்கம்
திருச்சிற்றம்பலம்.
தியுமற்சேனன் பற்று நீங்கித் துறக்க எண்ணுதல் வேறு
558
பொன்னணி மார்பன் பூமியை யிங் வன் புரக்குங்கால் தன்னுடை யாக்கை தன்னிலை கெட்டுத் தளர்வெய்த இந்நில வாழ்வு மிங்குள போக மிவையாவும் மின்னலின் மாயு மியல்பின வென்ப தவனேர்ந்தான்.
(இ-ள்) பொன் அணி மார்பன்- பொன் ஆபரணங்களை அணிந்த மார்பினையுடையவளுன தியுமற்சேனன்; பூமியை இங்ங்ண் புரக்குங் கால்-பூமியை இப்படி அரசாட்சி செய்து காத்துவரும் பொழுது: தன்னுடையாக்கை-தன்னுடைய உடம்பு; தன்நிலை கெட்டு-தன்னு டைய நல்ல நிலை அழிந்து; தளர்வெய்த-தளர்வடைய; இந்நில வாழ்வும் -இப் பூவுலக வாழ்வும்; இங்கு உள போகம் இவையாவும்-இப் பூமியின் கண்ணேயுள்ள போகங்கள் எல்லாம்; மின்னலின் மாயும் இயல்பின என்பது-மின்னல்போல் மறையும் இயல்புடையன என்பதனை; அவன் றர்ந்தான்-அவன் தன் அனுபவத்தின் மூலம் ஆராய்ந்து அறிந்தான். (or-0)
به و மந்திரச் சுற்றம் மண்டல மன்னர் த்மைக்கூட்டி எந்திரு நாட்டை யினியர சோச்சும் பொறுப்பெல்லாம் நந்திரு மைந்தன் சத்திய வானுக் களித்திட்டே செந்திரு வோடுஞ் செல்குவ னென்றன் தவஞ்செய்ய.
(இ-ன்) மந்திரச் சுற்றம் - தன்ன்ைச் சூழ உள்ள அமைச்சர் மண்டல மன்னர்-பிரதேச மன்னர்கள்; தமைக்கூட்டி-ஆகியோரை ஒருங்கு சேர்த்து எம் திருநாட்டை-எமது அழகிய சாலுவ நாட்டை இனி அரசு ஒச்சும் பெர்றுப்பு எல்லாம்--இனிமேல் அரசாட்சி செய் யும் பொறுப்பெல்லாவற்றையும்; நம் திருமைந்தன் - நமது திரு மக" ஞகிய; சத்தியவானுக்கு அளித்திட்டு-சத்தியவானிடம் ஒப்படைத்து விட்டு: செந்திருவோடும்-இலக்குமிபோன்ற எனது மனைவியுடன்;

Page 159
284
தவஞ் செய்ய்ச் செல்குவன் என்றன் - தவம் செய்வதற்குச் செல் வேன் என்று அவர்களுக்குக் கூறினன். (எ-று) 2
மந்திரி முதலியோர் வேண்டுதல்
560 முந்தையர் சொன்ன முறையினை யுன்னி முயல்கின்றீர் எந்துயர் போக்கி யெங்களைக் காத்தீ ரிதுகாறும் நுந்தமை நீங்கி நோதலை யெய்த யாமாற்ருேம் சிந்தனை யீது செய்குவி ரைய வெனச் சொற்ருர்,
(இ.ஸ்) முந்தையர் சொன்ன முறையினை உன்னி முயல்கின்றீர் -எம் முன்னேர் இல்லறத்தின்பின் வானப் பிரஸ்த்தம் செய்ய வேண் டும் என்று சொன்ன முறையினை எண்ணி நீரும் தவஞ் செய்ய முயல் கின்றீர்; இதுகாறும் எம் துயர் போக்கி எங்களைக் காத்தீர்-இற்றை நாள்வரைக்கும் எமது துன்பம் துடைத்து எம்மை அரசாட்சிசெய்து காப்பாற்றினீர்; நுந்தமை நீங்கி -உம்மை விட்டு நீங்கி; நோதலே எய்த யாம் ஆற்றேம்-துன்பத்தைய்டைய நாம் சகிக்க மாட்டோம்; ஐய! -ஆனமையால் ஐயனே; சிந்தனை ஈது செய்குவீர்- இதை இன் னும் சிந்தனை செய்குவீர் எனச் சொற்ருர்-என்று மந்திரி முதலா னேர் சொன்னர்கள். (எ-று) 3
மன்னன் நிலையாமையை அறிவுறுத்தல்
இளமை நிலையாமை
56
வரைகெழு தோளும் வச்சிர மெய்யும் வரப்பெற்றே திரைகடல் மானும் தெவ்வரை யட்ட திறலோரும் நரை திரை வந்து நலிவுறல் கண்டும் நமதாக்கை விரைபுனை செய்து வீணினுக் கோம்பி வளர்த்திட்டோம்.
(இ- ள்) வரைகெழுதோளும்- மலைபோலும் பருத்த தோளும்; வச்சிரமெய்யும் - வயிரமான உறுதியான தேகமும்; வரப்பெற்று: திரைகடல் மானும்-திரைகடலை ஒத்திருக்கும் பெரிய தெவ்வரை - பகைவரை அட்ட - கொன்ற; திறலோரும் - வல்லமையுள்ள திண் ணியோரும்; நரைதிரை வந்து - நரையும் தோல் திரைதலும் அடைந்து நலிவு உறல் கண்டும் - மெலிவுறல் கண்டும்; நமது ஆக்கை-எமது உடம்பை விரைபுனசெய்து-வாசனைத் 5 gaišā

235
ளைப் பூசி வீணினுக்கு ஒம்பி வளர்த்திட்டோம் . வீனினுக்குப் பேணி வளர்த்தோம். (6T-0) ஏ -அசை 4
582 மும்மத வேழம் முன்னுற வந்து முரண்செய்ய
அம்மத மஃக அதன்மருப் பொசித்த அடலேறும் கொம்மையி ழந்து கூன்முது காஞன் கோலூன்றி இம்மையில் வாழ்வு மிப்பரி சாமென் றிரங்கிட்டோம். {இ- ள்) மும்மத வேழம் -மும் மதங்களைப் பொழியும் யானை முன்னுறவந்து -தன் முன்னே வந்து; முரண்செய்1-மாறுபட அம் மதம் அஃக-அந்த யானையின் மதம் குறைய; அதன் மருப்பு ஒசித்த -அதன் கொம்பை ஒடித்த, அடல் ஏறும் - வலிமை பொருந்திய ஆண்சிங்கம் போன்றவனும்; கொம்மை இழந்து-இளமையும் வலிமை யும் இழந்து; கோல் ஊன்றி கூன் முதுகானன் -தண்டூன்றிக் கூனிய முதுகினயுடையவனுனன் இம்மையில் வாழ்வும்-இவ்வுலகத்தில் வாழு கின்ற வாழ்க்கையும்; இப்பரிசுஆம் என்று இரங்கிட்டோம்-இத் தன் மையதாகுமென்று இரங்கினுேம். (எ-று) 5 563 முருந்துறழ் மூரல் முழுமதி நாணும் முகங்காட் வருந்திட மருங்கு வாரிற வளர்ந்த முலையேந்தி விருந்தென மாரன் விழைவுற இந்நாள் வருநங்கை பெரும்பிணி கொண்டு பேயெனத் திரிவாள் பிறிதோர் நாள். (இ ~ள்) முருந்து உறழ் மூரல் - இறகின் அடிக்குருத்தை ஒத்த வெண்மையான அழகிய பற்களையும்; முழுமதி நானும் முகங்காட்டி - பூரணச் சந்திரன் நாணும்படியான அழகிய முகத்தையும் காட்டி; மருங்கு வருத்திட-இடைவருத்த முற வாரிற வளர்ந்த-கச்சு அறும் படி பருத்து வளர்ந்த முலை ஏந்தி-முலைகளை ஏந்தி; விருந்து என மாரன் விழைவு உற-இவள் தனக்கு நல்ல விருந்து என்று மன்ம தன் ஆசைப்பட இந்நாள் வருநங்கை - இப்பொழுது வ ரு கி ன் ற பெண்குணனவள்; பிறிது ஓர் நாள்-பின் வே(ெ?ரு நாளில்; பெரும் பிணி கொண்டு - பெரும் பிணியைக்கொண்டு; பேய் எனத் திரிவாள் -பேயென்று சொல்லும்படி அவலட்சணமாகத் திரிவாள். (எ -று) 6
யாக்கை நிலையாமை 584 பால்பழந் தேனும் பல்வகை பூணும் பசிக்குண்டு
நூல்முறை க.ய கற்பமுஞ் செய்து நுகர்ந்தோரும் சூல்கொடு கலன் சுற்றியே பாசச் சுருக்கிட்டால் மால்படு மானின் மடிகுவ ரல்லால் மற்றுண்டோ,

Page 160
286
SS S L S LSLS SS SS LSLS
(இ-ன்) பால் பழம் தேனும் -பால், பழம், தேன் முதலிய நல்லு சத்துள்ள ஆகாரத்தையும்; பல்வகை ஊணும் - பலவகைப்பட்ட உணவு வகைகளேயும் பசிக்கு உண்டு-தமது பசிக்கு அருந்தி நூல் முறை-வைத்திய நூலிற் கூறிய முறைப்படி காய கற்பமும் செய்து -காயகற்ப மருந்தைச் செய்து நுகர்ந்தோரும் - புசித்தோரும்; (அப் படி உண்டு திடதேகியாக இருந்தோரும்) குல்கொடு - சூலத்தைக் கையிற்கொண்டு; காலன் - இயமதருமன்; பாசம் சுற்றியே சுருக் கிட்டால் - பாசக்கயிற்றைச் சுற்றி அவர்களேச் சுருக்கிட்டு இழுத் தால் மால் படு மானின்-வலேபிற்பட்ட மானேப்போல மடிகுவர்இறப்பர் அல்லால் மற்றுண்டோ-அங்ஙனம் சாகாமல் தப்புபவர்க ஞம் இப்பூவுலகில் உளரோ? (எ-று} 7
585 காக்கையுங் கழுகுங் கழிந்திட ஆவி களித்துண்ணும் ஆக்கையிஃ தென்ப தறிகுவி ரதுதான் அழியும்முன் நோக்கின ரான்ற நூல்வழி நின்று நோற்றிட்டே போக்கினர் பிறவிப் பெருந்துயர்பெற்ருர் பேரின்பம்.
(இ-ஸ்) ஆவி கழிந்திட-எமது ஆவிபோய்விட காக்கையும் கழு கும்-காகங்களும் கழுகுகளும் சுளித்து உண்ணும் ஆக்கை இஃதுகளிப்போடு தாம் உண்ணும் உடம்பு இது என்பது அறிகுவிர்-என் பதை அறியுங்கள் அதுதான் அழியும் முன் - அத்தன்மையான ஆக்கை அழியுமுன் நோக்கினர்-அதன் நிலையாமையை நோக்கி அறிந் தவர் ஆன்ற நூல்வழி நின்று-மாட்சிமைப்பட்ட நூல்வழி ஒழுகி " தோற்றிட்டு - தவஞ்செய்து பிறவிப் பெருந்துயர் போக்கினர் - பிற வியாகிய பெரிய துன்பத்தைப் போக்கினர்கள் பேரின்பம் பெற்ருர் -பேரின்பத்தை அடைந்தார். (எ +று) &
566 நென்னலெம் அவையில் நேர்பட வந்து நெடுந்தேரும் பன்மணிப் பரிசும் பெற்றவன் பரிதி படுமுன்னே தன்மனே சேரான் தவிர்ந்தன னுவி தலேசாய இன்னது வாகும் இப்புவி வாழ்க்கை யெனக்கண்டோம்.
(இ-ன்) நென்னல் நேற்று எம் அவையில் நேர்பட வந்து - எமது அரச சபையில் நேராக வந்து சந்தித்து நெடுந்தேரும் -நெடிய தேரையும்; பன்மணிப் பரிசும் பெற்றவன்-பல நவமணிப் பரிசுகளே யும் பெற்ற ஒருவன் பரிதி படு முன்னே--சூரியன் அத்தமிக்க முன் னதாகவே தன்மனே சேரான் தனது வீட்டிற்குப் போய்ச் சேராத வஞய்; தலைசாய தவிர்ந்தனன் ஆவி-தலேயானது சாய தனது ஆவியை,

287
விட்டுவிட்டான் இன்னதுவாகும் இப்புவி வாழ்க் கை ரான கண் டோம்-இத் தன்மையுடையது இந்தப் பூமியில் வாழும் வாழ்க்கை என நேரிற் கண்டோம். (எ-று)
செல்வம் நிலையாமை
567
அலைகடல் மேலே ஆயிரம் நாவாய் அணிபோக்கி விலைபெறு பண்டம் விற்பனை செய்து பொருளிட்டி மலையென மணிபொன் மாளிகை தோறும் மிகவைத்தோர் இலையென ஒருநாள் இரந்தனர் ஐயம் எனக்கண் டோம்.
(இ-ள்) அலேகடல் மேலே -அலை பொருந்திய கடலின் மேலே: ஆயிரம் நாவாய்-ஆயிரக்கணக்கான கப்பல்களே அனிபோக்கி-கூட் டமாக அனுப்பி விலேபெறு பண்டம் விற்பனை செய்து -விலேயுள்ள பொருட்களே வியாபாரஞ்செய்து; பொருளிட்டி - பொருளே + ட் டி: மலேயென - மலைபோல மணி பொன்-மணியையும் பொன்னேயும்; மாளிகைதோறும் மிக வைத்தோர்-மாளிகைகள் தோறும் மிகுதியாக வைத்திருந்த பெரும் செல்வர்களும்; இலே என ஒருநாள் ஐயம் இரந் தனர்-பொருள் இல்லையென்று ஒருநாள் பிச்சை வேண்டினர் எனக் கண்டோம். (எ-று) I
568 பொன்னிழை கலிங்கம் போர்த்திட அங்கம் பொறுக்காது நன்னறுஞ் சாந்தும் நாவியின் புழுகும் நனிபூசி மென்மல ரமளி மேவிய கஞ்ச மலர்போல்வாள் வென்குமிழ் தோன்ற வெறுந்தரை துயில்வா ள் வறியாளாய்.
(இ-ன்) பொன்னிழை கலிங்கம்-பொன் இழைகள் இழைக்கப் பட்ட பட்டுப்போர்வை (சருகைப்பட்டு) போர்த்திட அங்கம் பொறுக் காது-தன்மேல் போர்த்திட, அது மென்மையாகவில்லே யென்று அங் கம் பொறுக்காதவளாய் தன்னறுஞ் சாந்தும்-நல்ல வாசனை பொருந் திய சந்தனத்தையும் நாவியின் புழுகும்-நாவியினின்று பெறும் புனூ கும் நனி பூசி மிகுதியாகப் பூசி மென்மலர் அமளி மேவிய மென் மையான மலர்ப் படுக்கையில் மேவிய கஞ்ச மலர் போல்வாள்தாமரை மலர்போலும் பெண் வென் குமிழ் தோன்ற -தன் முதுகில் கொப்புளம் தோன்ற வெறுத்தரை - வெறுந்தரையின்மேல் வறியா ளாய்த் துயில்வாள்- வறியவளாய் நித்திரை கொள்ளுவாள். (எ-று)

Page 161
288
569
காமரு கழனி கவின்பெறு மிந்நா டெமதென்றே ஏமுற அரணும் எழில்பெறு மனையும் எடுத்திட்டோம் பூமலி சோலை புதுப்புன ற் றேக்கம் புனைவித்தோம் தோமறு கலையுந் தொழில்நிலை பலவுந் தொடக்கிட்டோம் ,
(இள்ை) காமரு கழனி கவின்பெறும் இந்நாடு எமது என்றே - அழகுள்ள கழனிக%ளப் பெற்று எழில்பெறும் இந்த நாடு எம்முடை யது என்றே எண்ணி; ஏமுற இறுமாப்புற அரணும் - கோட்டை யும்; எழில்பெறு மனையும் -அழகு பொருந்திய அரண்மனையும்; எடுத் திட்டோம் -கட்டுவித்தோம்; பூமலி சோலை-பூக்கள் நிறைந்த பூஞ் சோலைகளும்; புது புனல் தேக்கம்-புது நீர் நிறையும் ஏரிகளும், நீர ணைகளும்; புனேவித்தோம்-கட்டுவித்தோம்; தோம் அறு கலேயும் - குற்றமில்லாத கலைகளையும்; தொழில் நிலை பலவும்-தொழில்நிலையங் கள் பலவற்றையும்; தொடக்கிட்டேர்ம் -நாட்டில் தொடக்கி வைத் தோம். (எ-று)
(விமம்) எடுத்திடு+ஒம்-எடுத்திட்டோம்
தொடக்கிடு+ஒம் - தொடக்கிட்டோம்
இரட்டித்து இறந்த காலம் காட்டிற்று. ,双&
570
எல்லைகள் வகுத்தே ஏற்புடைப் படைகள் இருத்திட்டோம் ஒல்லுந ரோம்பி ஒன்னல ரொடுக்கி உள்நாட்டில் அல்லன செய்வோர் ஆறலை கள்வர் அடக்கிட்டோம் நல்லன செய்து நாட்டினை நன்றே நாங்காத்தோம்.
(இ-ள்) எல்லைகள் வகுத்து - நாட்டின் எல்லைகளை வகுத்து: ஏற்புடைப் படைகள் இருத்திட்டோம்--காவலுக்குத் தக்க படைகளை இருத்திவைத்தோம்; ஒல்லுநர் ஒம்பி-மேவினரை ஓம்பி ஒன்னலர் ஒடுக்கி -பக்ைவரை ஒடுக்கி; உள்நாட்டில் - உள்நாட்டின் கண்ணே; அல்லன செய்வோர்-தீயன செய்வோர் ஆறலை கள்வர்- வழிப்பறி செய்யும் கள்வர்; அடக்கிட்டோம் - ஆகியோரை அடக்கி வைத்தோம்; நல்லன செய்து நாட்டினை நன்றே நாங்காத்தோம் - நல்லவற்றைச் செய்து நாட்டினை நன்கு காப்பாற்றினுேம். (எ-று)
(வி - ம்) இருந்திடு + ஓம்
அடக்கிடு + ஓம் இரட்டித்து இறந்த காலம் காட்டிற்று. 3

289
57
நண்ணல னிந்த நாட்டினைப் பற்ற நசைகொண்டே பண்ணிய சூழ்ச்சி பாதக மெல்லாம் பார்த்திட்டும் மண்ணிவ ளவனை மறுத்தில ளேற்று மகிழ்வித்தாள் எண்ணிடி லிவளின் இயல்பிது வாமென் றிரங்கிட்டோம்.
(இ ள்) நண்ணலன்-எனது பகைவன்; இந்த நாட்டினைப்பற்ற: நசைகொண்டு-ஆசை கொண்டு; பண்ணிய சூழ்ச்சி, பா த கம் எல் லாம் பார்த்திட்டும் .அவன் செய்த சூழ்ச்சி பாதகம் எல்லாவற்றை யும் பார்த்தும், மண்ணிவள்-இந்த மண்ணுன பெண்; அவனை மறுத் திலள்-அப் பகைவனை மறுத்தாளில்லை; ஏற்று மகிழ்வித்தாள் - தனது தலைவனுக ஏற்று மகிழ்வித்தாள்; எண்ணிடில்- ஆலோசித்தால்; இவ ளின் இயல்பு இதுவாம் என்று இரங்கிட்டோம் - இவளின் இயல்பு இதுவாகும் என்று இரங்கினுேம். (எ-று)
(வி-ம்) மண் ஒருவரிடமே நிலைத்து நிற்பதில்லை
கைமாறிப்போகும் தன்மையக. 4
572 t GLD g5 து
செல்வருக் காளாய்ச் சேர்ந்திடும் வரைவின் மகள்போல வல்லவற் காளாய் வைகிடு மிப்பூ தலமாது மல்லலத் தோளிர் மதித்தி வை பொருளாப் மயங்கன் மின் சொல்லிய அறங்கள் சோர்வறச் செய்மின் சுகமுறுவீர்.
(இ-ள் செல்வருக்கு ஆளாய்ச் சேர்ந்திடும் வரைவின் ம க ள் போல-செல்வருக்கு அடிமையாகி அவரைச் சேர்ந்திடுகின்ற விலை மக ளைப் போல; வல்லவற்கு ஆளாய் - வல்லவர்களுக்கு அடிமையாக; இப் பூதல மாது வைகிடும் இந்தப் பூமியாகிய பெண் இருப்பாள்; மல்லல் அம் தோளீர் -வலிமை பொருந்திய அழகிய தோள்களையு டையவரே; இவை பொருளாய் மதி க்து மயங்கன் மின் -இவைகளைப் பொருளாக மதித்து மயங்காதீர்கள்; சொல்லிய அறங்கள்- அறநூல் களிற் சொல்லப்பட்ட அறங்களை, சோர்வறச் செய்மின்-சோர்வின்
றிச் செய்யுங்கள்; சுகமுறுவீர் - அதனுல் இன்பமடைவீர்கள் (எ-று) − I5
மன்னனை மந்திரிமார் விணுவுதல் 573 இருப்பது சிலநாள் இங்குள பொருளும் நிலநில்லா மிருத்தியு வலையில் மீன் படு மாபே ல் வீ.பும்மு ன் விருப்.ொடு பெற்ற வியன்பொருள் துய்த்து மகிழாமல் வருத்தியில் வுடலை வாட்டுத லெவனுே எனக்கேட்டார்,
frr - 19

Page 162
29)
(இ- ள்) இருப்பது சில நாள்-நர்ம் உயிரோடு இருப்பது சில நாளாகும்; இங்குள பொருளும் நிலை நில்லா - இங்குள்ள பொருள்க ளும் நிலை நில்லாதன (ஆதலால்) மிருத்தியு வலையில்-இயமனுடைய வலையில்; மீன் படுமாபோல்-வலையில் மீன் பட்டு இறப்பதுபோல்: வீயும் முன்- நாமும் பட்டு இறக்கும் முன்; விருப்பொடு-விருப்பத் தோடு; பெற்ற வியன் பொருள்-நாம் பெற்ற அதிக பொருளை: துய்த்து மகிழாமல் - அனுபவித்து மகிழாமல்; இவ்வுடலை வருத்திஇவ்வுடலை வருத்தித் தவஞ்செய்து; வாட்டுதல் எவனுே -வாட்டுதல் ஏன்; எனக் கேட்டார்-என மந்திரிகள் கேட்டார்கள். (எ-று) 16
மன்னன் மெய்ப்பொருள் விளக்கல்
வேறு 574 பொருளல்லாப் பொருடம்மைப் பொருளென்று
(பொருட்படுத்தும் மருள்கொண்ட மானுடர்கள் மண்மீது பிறந்துழல்வர் தெருளுடைய மேலோர்கள் தெளிந்தபொருள் கேட்பீரேல் அருளுடையான் பதியொருவன் அனந்தம்பசு பாசமென்பர்
(இ ள்) பொருள் அல்லா பொருள் தம்மை - உண்மையில்லாத பொருள்க%ள பொருள் என்று பொருட்படுத்தும் -உண்மையானவை என்று மதிக்கும்; மருள் கொண்ட மானுடர்கள் -மயக்கத்தையுடைய மானுடர்கள்: மண்மீது பிறந்துழல்வர் இப் பூமியில் பிறந்து இறந்து உழல்வார்கள் தெருளுடைய மேலோர்கள் - தெளிந்த அறிவையுடைய மேலோர்கள்; தெளிந்த பொருள் கேட்பீரேல் - ஆராய்ந்து கண்ட மெய்ப் பொருள் எவை என்று கேட்பீரானல்; அருளுடையான் பதி யொருவன்-பெருங்கருணையையுடைய பதி (எப்பொருட்கும் இறை வன்) ஒருவன் அனந்தம் பசு-அளவில்லாதன பசுக்கள் (ஆன்மாக் கள்); பாசம் என்பர்- என்று கூறுவார்கள். (எ-று)
A
(வி-ம்) பதி, பசு, பாசம் - முப்பொருள் 7
பதியின் இலக்கணம் 575 பதியென்று முளன் தூயன் பாசமிலா னனந்தன் அதிபனெலாம் வல்லவன்பே ரருளுடைய னெலாமறிவான் திதிசிருட்டி சங்கா ரம் திரோதமருள் செய்தெமக்குக் கதிநல்குந் தடங்கருணைக் கடலெங்குங் கலந்திருப்பான்.

29
(இகள்) பதி என்றும் உளன் -பதி என்றும் உள்ளவன் துரயன் - பரிசுத்தன்; பாசமிலான்-பாசமில்லாதவன்; ஆனந்தன் - ஆனந்த முள்ளவன்; அதிபன்-தலைவன் எலாம் வல்லவன் எலாம் செய்ய வல் லவன்; பேரருள் உடையான்-பெரிய அருளையுடையவன்; எலா மறி வான்-எல்லாம் அறிபவன்; சிருட்டி, திதி சங்காரம் தி ரோ தம், அருள் செய்து-படைத்து காத்து, அழித்து, மறைத்து, அரு ளைச் செய்து; எமக்கு கதி நல்கும் தடங்கருணைக் கடல் - எமக்கு முத்திக் கதியைத் தருகின்ற பெரிய கருணு சமுத்திரம்; எங்கும் கலந்திருப் பான் -எல்லா இடங்களிலும், எப் பொருளிலும் கலந்திருப்பான், (GIT -- gpl.)
அதிபன் - எப்பொருட்குமிறைவன் கதி - மோட்சம், வீடு
என்றுமுளன் - நித்தியன் தூயன் - தூய உடம்பினன் பாசமிலான் - அநாதி மல முத்தன் ஆனந்தன் - நித்தியானந்தன் எலாம் வல்லவன்-அநந்த சத்தியுடையவன் . போருளுடையான்-அலுப்த சத்தியுடையவன்
எல்லாமறிபவன் . சருவஞ்ஞன் எங்கும் கலந்திருப்பான் - சருவ வியாபகன்
s
சிருட்டி - படைத்தல் திதி - காத்தல் சங்காரம் - அழித்தல் திரோதம் - மறைத்தல் அருளல் - பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்கல்.
(Tang)
(வி-ம்) ஐந்தொழில்களையும் ஆன்மாக்களின் நன்மைக்காகச் செய்து வீடு பேற்றையருளும் பெருங்கருணைக் கடல் என்றவாறு 18
576 தமக்கொன்றும் வேண்டாதான் தன்வயத்தன்
(தண்ணளியான் எமக்கென்றும் இனியானப் எம்மலங்கள் போக்கிடுவான் சமைத்தனனித் த ைகரண புவனமொடு போகங்கள் அ00 மத்தவற்றி லழுத்தியெமக் கருள்புரியும்
(அந்தணன்காண்,

Page 163
29,
(இ) -ன்) தமக்கொன்றும் வேண்டாதான் - விருப்பு வெறுப்பில் லாதவன் பஞ்ச கிருத்தியங்களே ஆன்மாக்கள் பொருட்டுச் செய்ய .. ခန္r; தன்வயத்தன் சுவதந்திரன் தண்ணளியான் - கிருபையுடைய வன்; எமக்கென்றும் இணியானுய்-எமக்கு என்றும் இனியவனுகி எம் `#ႀiè#၏ir போக்கிடுவான் - எம்முடைய பலங்களேப் போக்கியருள்வான் இத் தனு கரன புவனமொடு போகங்கள் சமைத்தனன்.தணு (உடம் "பையும்) கரணம் (மன முதலிய கருவிகளேயும்) புவனம் உடம்புக்கு ஆதாரமாகிய உலகத்தையும்) போகங்கள் (அநுபவிக்கப்படும் பொருள் களையும்) உண்டாக்கினன் அமைத்தவற்றில் அழுத்தி எமக்கருள் புரியும் அந்தணன் அமைத்த தனுசுரண் புவன போகங்களில் ஆன் மாக்களே அழுந்தச் செய்து பின்பு எமக்கு (ஆன்மாக்களுககு அருள் புரியும் பரிசுத்தனுன சிவன் காண்-காண்பீராக. (எ-று) 9
577 படைப்பதுவுங் காப்பதுவும் படைத்தவற்றி லழுத்தியெமை இடையிடையே இளைப்பாற்றி இருவினைகள் நுகர்வித்துத் துடைப்பதுவும் பசுவகையின் துரிசெல்லாம் போக்குதற்கே அடைந்தவனுக் காட்பட்டால் அருளுவன்பே ரானந்தம்.
(இ ள்) படைப்பதுவும்-தனுகரண புவன போகங்களே முதற் காரணத்தினின்றுந் தோற்றுவித்தலும் காப்பதுவும்-அவற்றை நிலே நிறுத்துதலும் பட்ைத் தவற்றி ல் எமை அழுத்தி - அப்படிப் படைத்தவற்றில் எம்மை அழுத் தி இடையிடையே இளேப் பாற்றி - இடையிடையே இ&ளப்பாறச் செய்து இருவி னேகள் நுகர்வித்து நல்வினே தீவினே யாகியவற்றின் பயன்கரே அனுபவிப் பித்து துடைப்பதுவும் தனுகரண புவன போகங்களே முதற் காரணத் தில் ஒடுக் தலும், பசு வகையின், துரிசு எல்லாம் போக்குதற்கே - பசுக்களின் (ஆன்மாக்களின்) குற்றங்களேப் போக்குவதற்காகவேயாம்: அடைந்து அவனுக்கு ஆட்பட்டால் நாம் சிவபெருமானின் திருவடி க8ளச் சரணடைந்து அவனுக்கு அடிமைப்பட்டால்; பேர் ஆனந்தம் அருளுவன்-அவள் பேரானந்தத்தைத் தந்தருளுவான். (எ-று)
(வி- ம்) பசுவகை - விஞ்ஞானகலர்
- ஆணவ மல மாத்திரமுடையவர்
பிரஜாபாகலர்
- ஆணவம் கன்மம் என்னும் இருமவ
pā37 LEI fall ff.
சலேர்
- ஆணவம், கன்மம், n"யை என்னும் மும்மலமுடையவர். ፵ []

293
பசு விலக்கணம்
578 பசுவெல்லாம் பதிக்கடிமை பாசவலைப் பட்டுழலும் விசும்புறையுந் தேவர்களாய் விலங்குகளாய் மானுடராய்ப் பசுமரமாய் ஊர்வனவாய்ப் பறவைகளாய் 'னரினமாய்ப் பசுதாஞ்செய் வினைக்கேற்பப் பலபிறவி யெடுத்துழலும்,
(இ-ன்) பசு எல்லாம் பதிக்கு அடிமை-ஆன்மாக்கள் எல்லாம் பதிக்கு அடிமைகள்; பாசவலேப் பட்டுழலும் - அவை பாசவலையில் விழுந்து உழலும்; விசும்புறையுந் தேவர்களாய் - தேவலோகத் தில் வசிக்கும் தேவர்களாய் விலங்குகளாய் -மிருகங்களாய் மானுட ராய் மனிதராய் பசுமரமாய் -பசிய தாவரங்களாய் ஊர்வனவாய் பறவைகளாய்-பட்சிகளாய்; மீனினமாய் - நீர்வாழ்வனவாய் பசு தாஞ்செய் வினேக்கேற்ப-பசுக்கள் தாம் செய்யும் விண்களுக்கு ஏற்பு; பலபிறவி எடுத்து உழலும்-மேலே கூறிய பலபல் பிறவிகளை எடுத்து உழலும். (எ-று
(வி-ம்) எழுவகைப் பிறப்பு ; தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன I
279 தானுக உணராது தனக்குனர்த்தத் தானுணரும் தான்சார்ந்த பொருள்வண்ணம் தானிற்குந் தன்மையது தான்யாரென் றறியாது தஃளப்பட்டுத்தான்மயங்கும் தான்யாரென்றறிந்தக்கால் த லேப்படுமே தலைவன்ருள்.
(இ-ஸ்) தானுக உணராது - ஆன்மா தானுகவே ஒன்றை யும் உ ன் ர மாட் டா து; தனக்கு உணர்த்தத் தான் உண கும் - தனக்கு இறை வன் உணர்த்த தான் அறியும் தான்சார்ந்த பொருள் வண்ணம் தான் நிற்கும் தன்மையதுதான் எப்பொருளச் சார் கிற தோ, அப்பொருள் வண்ணமா கத் தன் நிற்கின்ற தன்மையுடையது; தான் யாரென்றறியாது - தான் யாரென்று அறியமாட்டாது தஃளப்பட்டு-பாசத்தாற் கட்டுப் பட்டு; தான் மயங்கும்-தான் மயங்கி நிற்கும்; தான் யாரென்று அறிந்தக் கால்-தான் யாரென்று அறிந்த விடத்து நல்வன் தாள் தலைப்படுமே-இறைவனுடைய தாள்களே மேற்கொள்ளும் (சென்ற டையும்). (எ-று' "

Page 164
2.94.
580
ஒருமலத்தார் ஆண்வஞ்சேர் விஞ்ஞான கலராவர் இருமலத்தார் கன்மமுஞ்சேர் பிரளயா கலரென்ப திரிமலத்தா ரிரண்டோடும் மாயையுஞ்சேர் சகலர்காண் ஒருமலமு மிலாவான்மா ஒருவனுடன் ஒன்றிடுமே.
(இ- ள்) ஆணவஞ்சேர் விஞ்ஞான கலர் ஒருமலத்தாராவர்-விஞ் ஞான கலர் ஆணவ மலமுடைய ஒரு மலத்தாராவர்; கன்மமுஞ்சேர் இருமலத்தார் பிரளயாகலர் என்ப -ஆணவமும், கன்மமும் உடைய இருமலத்தார் பிரளயாகலர் எனப்படுவர்; திரிமலத்தார் இரண்டோ டும் மாயையும் சேர் சகலர்காண்-ஆணவம், கன்மம், மாயை என் னும் மூன்று மலமுமுடையவர் சகலர் எனப்படுவர் ஒருமலமும் இலா ஆன்மா ஒருவனுடன் ஒன்றிடும்-மும்மலமும் நீங்கப்பெற்ற ஆன்மா முழுமுதலாகிய இறைவனுடன் ஒன்றிச் சாயுச்சிய நிலையை அடை պւծ. (67 - 0)
*" திரிமலத்தா ரொன்றதனிற் சென்ருர்க ளன்றி
ஒருமலத்தா ராயு முளர்" - திருவருட்பயன்: 23
58 ஒரறிவு முதலாக ஓராறும் பெறும்பசுக்கள்
பாரதனிற் பிறப்பவற்றுள் பகுத்தறிவாம் மேலறிவு சீருடைய மானுடர்க்கே சிறப்பாகச் சேர்வதென்பர் கூரறிவால் மெய்யுணர்ந்து கூடிடுவீர் பரம்பொருளை,
(இ-ள்) பசுக்கள் ஓரறிவு முதலாக ஓராறும் பெறும்-ஆன்மாக் கள் ஒரறிவு பெறுபவையும் ஈரறிவு பெறுபவையும், மூவறிவு பெறு பவையும், நாலறிவு பெறுபவையும், ஐந்தறிவு பெறுபவையும், ஆற றிவு பெறுபவையும் ஆக உள்ளன; பாரதனிற் பிறப்பவற்றுள்-பூமி யில் பிறக்கும் ஆன்மாக்களுள் பகுத்தறிவாம் மேலறிவு - பகுத்தறிவு என்னும் மேலான அறிவு; சீருடைய மானுடர்க்கே-சிறப்புடைய மணி தருக்கே சிறப்பாகச் சேர்வதென்பர் சிறப்பாகப் பொருந்துவதென் பர்; கூரறிவால் மெய்யுணர்ந்து - கூர்மையான அறிவால் மெய் ப் பொருளையுணர்ந்து பரம்பொருளை கூடிடுவீர். பரம்பொருளைக் கூடுவி ராக. (எ-று)
(வி-ம்) ஆறறிவு -மெய்யால் உணர்தல், கேட்டல், காண்டல் முகர்தல், சுவைத்தல், பகுத்துணர்தல்.
"மானிடப்பிறவிதானும் வகுத்தது மனம்வாக்காதி ஆனிடத்தைந்துமாடு மரன்பணிக் காகவன்றே."
- சிவஞானசித்திப்ார்: 罗4

296 :
மானுடப் பிறவியின் அருமை
582 ஆழ்கடலிற் போட்டமணி அரித்தெடுத்த லரி தாம்போல் ஏழ்வகைத்தாம் பிறப்பவற்றுள் எடுப்பதுமா னுடப்பிறவி ஊழ்வினையின் நற்பயணுல் உற்றதெமக் கிவ்யாக்கை பாழ்நெறியிற் செல்லாமற் பரமுத்தி குறிக்கொண்மின்,
(இ - ள்) ஆழ்கடலில் போட்டமணி - ஆழமான சமுத்திரத்தில் போடப்பட்ட ஒரு இரத்தினக்கல்; அரித்து எடுத்தல் அரிதாம்போல் -அரித்துத் திரும்ப எடுத்தல் அரிதாவதுபோல; ஏழ் வகைத்து ஆம் பிறப்பு அவற்றுள் - எழுவகைப் பிறப்புக்களுள்; மா னு டப் பிறவி எடுப்பது-மானுடப் பிறவி எடுப்பது மிக அரிதாகும்; ஊழ்வினேயின் நல் பயனல்-நாம் செய்த ஊழ்வினையின் நல்ல பயனல்; எமக்கு இவ் யாக்கை உற்றது - எமக்கு இந்த மானுட யாக்கை கிடைக்க நேரிட் டது (இந்த மானுடப்பிறவி கிடைத்தது); பாழ் தெறியில் செல்லா மல்-வீணுன அழிவான நெறியிற் செல்லாமல்; பரமுத்தி குறிக்கொண் மின்-மேலான வீடு பேற்றைக் குறிக்கொள்ளுங்கள். (எ-று)
(வி-ம்) எழுவகைப் பிறப்புள் மானுடப் பிறவியே சிறந்தது. அரி யதாகும், ஆகையால் இப் பிறவியிலேயே தவஞ்செய்து வீடு பேற்றை யடைய வேண்டு : 25
583 மானுடராய்ப் பிறந்தாலும் மனத்தெளிவுங் கூன் குருடென் றுானமிலா உடற்பேறும் உறுவதரி தரிதாகும் கானகத்துங் கடுநிலத்துங் கழிநிலத்தும் பணிநிலத்தும் ஆானுகர்ந்திங் குழல்வார்கள் உறுதிதரும் பொருளுணரார்.
(இ. ஸ்) மானுடராய் பிறந்தாலும் - மானிடராகப் பிறந்தா லும்; மனத் தெளிவும்-மனம் தெளிவடைவதும்; கூன் குருடு என்று மளனம் இலா உடல் பேறும் - கூன், குருடு (செவிடு ஊமை அங்க வீனம்) என்று உடலுறுப்புக் குறைவில்லாத ந ல் ல உடற்பேறு ம; மறுவது அரிது அரிதாகும் -பொருந்துதல் அரி தி னு ம் அரிதாகும்; கனகத்தும் காட்டிலும்; கடுநிலத்தும் - பாலை நிலத்தும்; கழிநிலத் தும் த ப்பங்கழி நிலத்தும் (நெய்தல் நிலத்தும்); பனி நிலத்தும் . பனி படர்ந்த பிரதேசத்தும் பிறந்து); ஊன் நுகர்ந்து இங்கு உழல் வார்கள் புலால் இறைச்சி உண்டு இங்கு உழன்று திரிவார்கள்:

Page 165
296
உறுதி தரும் பொருள் உணரார்-ஆன்மலாபத்தைத் தரும் கடவுளை உணரார்கள். (எ று)
(வி.ம்) காட்டில் வாழ்பவர் வேட்டையாடியும், கழி நிலத்தே வாழ்பவர் மீன்பிடித்தும். கடுநிலம், பனி நிலத்தில் வாழ்பவர் பிற உயிர்களைக் கொன்றும் ஊனையுண்டு வாழ்பவர்கள், அருளில்லாதவர் கள், மாக்கள் போல் வாழ்பவர். ஆதலால் இறையுணர்வும் ஆன்ம் விசாரமும் இல்லாதவர்கள். 26
மானுடப்பிறவியெடுத்த பயனையடையாதார் மடமை
584 ஒன்னலர்மேற் படை நடத்தி யொறுத்திடுவான் செல்வீரன் பொன் கணங்கு பூத்த இளம் பொம்மல்முலை யாளொருத்தி தன்னலத்தைக் காமுற்றுத் தன்வினையை மறந்தாற்போல் முன்னவனை மனத்திருத்தி முத்திபெற முயலாமை.
(இ-ள்) ஒன்னலர்மேற் படை நடத்தி -பகைவரின் மேற் படை யெடுத்துச் சென்று ஒறுத்திடுவான் செல் வீரன் அவரை ஒடுச் குமாறு செல்லும் ஒரு போர் வீரன்; பொன் சுணங்கு பூத்த இளம் பொடி மல் முலையாள் ஒருத்தி தன்னலத்தைக் காமுற்று - பொன் தேமல் படர்ந்த இளமையும் பொலிவுங்கொண்ட முலையினே யுடைய ஓர் அழ கிய பெண்ணன் நலத்தை விரும்பி; தன்வி%னயை மறந்தாற்போல் - (அதனுல் அவளைப் பின்பற்றிச் சென்று) தான் மேற்கொண்ட பகை வரை ஒடுக்கும் செயலே மறந்த rற் போலும்; முன்னவனை மனத் திருத்தி-சிவபெருமான மனத்தில் இருத்தி: முத்திபெற முயலாமை -வீடுபேற்றையடைய முயலாமையாகும். (எ- று)
(வி-ம்) நாம் இந்த மானுடப்பிறவியை எடுத்தது இறைவனை வணங்கி வீடுபேறெப்த. நா அந்தக் குறிக்கோளைவிட்டு, இந்திரிய வயப்பட்டு, உலகானுபோகங்களில் மூழ்கினுல் வழிதவறியவர்களா வேrம். 27
அறிவுடையோர் செயல்
885 வேதனவன் படைப்பவற்றுள் மானுடமே மிகமேலாம்
ஆதலின லிவ்வாக்கை யழியுமுன் னறிவுடையோர் ஏதமல மறுத்தின்ப மெய்துதலைக் குறிக்கொண்டு நாத னடி பற்றிநின்று நற்றவங்கள் செய்திடுவார்.

297
(இ- ள்) வேதனவன் படைப்பவற்றுள் பிரமதேவனின் படைப் புக்களுள் மாலுடமே மிக மேலாம் - மானுடப்பிறவியே மிக மேலான பிறவியாகும்; ஆதலினுல் இவ் ஆக்கை அழியும் முன் - ஆதலால் இம் மானுடப் பிறவி அழியும் முன்னே; அறிவுடையோர் - அறிவினை யுடைய மக்கள்; ஏத மலம் அறுத்து-குற்றமாகிய மலத்தை அறுத்து: இன்பம் எய்துதலைக் குறிக்கொண்டு - பேரின்பம் அடைதலையே குறிக் கோளாகக் கொண்டு; நாதனடி பற்றி நின்று இறைவனுடைய திரு வடிகளைப் பற்றி நின்று; நல் தவங்கள் செய்திடுவர் - நல்ல தவங்க ளைச் செய்வார்கள். (எ .நு. 28
பாசவிலக்கணம்
586 பாசம்மூ வகைத்தாகிப் பசுதம்மைப் பந்திக்கும் பாசமது மலங்கட்டுப் பந்தமெனப் பலபெயர்த்தாம் தேசுடைய பரம்பொருளைத் தெரியவொட்டா
[ தான்மாவைப் பாசந்தான் மறைத்துநிற்கும் பவத்திற்கு வித்தாகும்.
(இ~ள்) பாசம் மூவகைத்தாகி - பாசம், ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று வகையாகி; பசுதம்மைப் பந்திக்கும் - ஆன் மாக்களைப் பற்றி நிற்கும்; பாசமது மலம், கட்டு, பந்தம் எனப்பல பெயர்த்தாம்-அப்பாசமானது. மலம், கட்டு பந்தம் என ப் பல பெயர்களையுடையது; தேசு உடைய பரம்பொருளை-ஒளிமயமான சிவ பரம்பொருளை தெரிய ஒட்டாது - அறியவிடாது. ஆன்மாவைப் பாசர் தான் மறைத்து நிற்கும்-ஆன்மாவை அப் பாசங்கள் மறைத்து நிற் கும் பவத்திற்கு வித்தாகும் - பிறவிக்கு வித்தாக அவை அமையும். (GT-g) 29
ஆணவம்
587
மும்மலத்து ளாண வந்தான் மூலமல மான்மாவைச் செம்பிலுறு களிம்பைப்போற் சேர்ந்ததுகா ணநாதியே எம்மறிவை மறைத்துநிற்கு மெப்பொருளுங் காட்டாது கும்பிருளாய்க் குரோதாதி குணமெட்டுங் கொண்டதுவாம்.
(இ-ள்) மும்மலத்துள்-ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களுள் ஆணவந்தான் மூலமலம் - ஆணவமானதுதான்

Page 166
298
மூலமலமாகும்; ஆன்மாவை செம்பில் உறு களிம்பைப்போல் அந்ா தியே சேர்ந்தது காண்-செம்பிலுள்ள களிம்பைப்போல அநாதியா கவே ஆன்மாவை ஆணவமலம் பந்தித்து நின்றதென்பதை அறிவீ ராக எம் அறிவை மறைத்து நிற்கும் - எமது அறிவை மறைத்து நிற்கும்; எப்பொருளும் காட்டாது - இறைவனையோ, தன்னையோ பிறபொருள்களையோ காட்டமாட்டாது; கும்பிருளாய் - கு விந்த திரண்ட இருளாய்; குரோதாதி குண்ம் எட்டும் கொண்டதுவாம் - குரோதம். விகற்பம். கற்பம், மோகம், கொலை, அஞர், மதம், நகை ஆகிய எட்டுக் குணங்களும் பொருந்தியதாகும். (எ-று)
(வி-ம்) எப்பொருளுங் காட்டாது என்பதல்ை, தன்னையுங் காட் டாது, பிறபொருளையுங் காட்டாது என்பது பெறப்படும்.
‘ஒருபொருளுங் காட்டா திருள் உருவங் காட்டும்
இருபொருளுங் காட்டா திது" - திருவருட்பயன் 30
588 ஆணவமே ஆன்மாவுக் காசைகளை யுண்டாக்கும்
ஆணவமே மோகமு த லேழுவகைக் காரியங்கள் நீணிலமேற் செய்விக்கும் நிமித்த கா ரணமாகும் ஆணவமே கன்மவித்தாம் அது நீங்கு மவனருளால்.
(இ -ன்) ஆணவமே ஆன்மாவுக்கு ஆசைகளை உண்டாக்கும் - ஆணவமே ஆன்மாக்களுக்குப் பற்றுக்களை உண்டாக்கும்; ஆணவமே மோகமுதல் ஏழுவகைக் காரியங்கள்-ஆணவமே மோகம், மதம், இராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் என்னும் ஏழுவகைக் காரியங்களை; நீள் நில மேல் செய்விக்கும் நிமித்த காரணமாகும்பெரிய பூமியின் கண்ணே செய்வித்தற்குரிய நிமித்த காரணமாகும்; ஆணவமே கன்ம வித்தாம் - ஆணவமே கன்மத்துக்கு வித்தாகும்; அது அவன் அருளால் நீங்கும் - அது இறைவனது திருவருளால் நீங்கும். (6T-gy) 3
கன்மம்
589 இச்சைகளின் காரணமா யிருவினையும் நாஞ்செய்வோம் அச்செயலின் விளைவாக அடைந்திடுவோம் பலபிற வி நற்செயலால் நற்பிறப்பாம் நவைச்செயலா லிழிபிறப்பாம் எச்செயலு மிலதாயி னெமக்கேது பிறப்பிறப்பு.
(இ- ள்) இச்சைகளின் காரணமாய்-பற்றுக்களின் காரணமாக; இரு வினையும் நாம் செய்வோம்--நல்வினை, தீவினை ஆகிய இரண்டு

299
வினைகளையும் நாம் செய்வோம்; அச் செயலின் விளைவாக பல பிறவி அடைந்திடுவோம்-அச் செயல்களின் பயணுகப் பல பிறவிகளை படை வோம்; நற்செயலால் நற்பிறப்பாம்- நல்ல வினையினலே நல்ல பிறப் புண்டாகும், நவைச் செயலால் இழி பிறப்பாம் இழிவான (குற்ற முள்ள) செயலால் இழி பிறப்புண்டாகும்; எச் செயலும் இலதாயின் -எந்தச் செயலும் செய்யாது ஒழியின் 'சும்மா இருக்கும் நிலையேற் பட்டால்); எமக்கு பிறப்பு இறப்பு ஏது- எமக்குப் பிறப்பும் இறப் பும் எப்படி உண்டாகும் (உண்டாகாது) (எ-று) 32
590
கன்மங்கள் மனம்வாக்குக் காயத்தாற் செயப்படுவ நன்மைகளுந் தீமைகளும் நாமடைவோ மதன்விளைவால் நன்மரத்தை நாட்டினபேர் நற்கணிக ஞண்பார்கள் புன்முட்டி புதைத்தவர்கள் புசிப்பதுகாஞ் சிரையன்றே,
(இ-ள்) கன்மங்கள் மனம், வாக்கு, காயத்தாற் செயப்படுவட கன்மங்கள் மனம் வாக்கு, உடல் ஆகியவற்ருற் செய்யப்படுபவை யாகும்; அதன் விளைவால் - அப்படிச் செய்தலின் பயனல்; நன்மைக ளும் தீமைகளும் நாம் அடைவோம் -நாம் நன்மைகளையும் தீமைக ளையும் அடைவோம்; நன் மரத்தை நாட்டினபேர்-நல்ல பயனுள்ள கனிமரத்தை நாட்டினவர்கள், நல் கனிகள் உண்பார்கள்-நல்ல பழங் களை உண்பார்கள்; புன்முட்டி புதைத்தவர்கள்-புல்லிய காஞ்சி ரையை நட்டவர்கள் புசிப்பது காஞ்சிரையன்ருே-துய்ப்பது காஞ்சி ரங்காயல்லவா, எ-று) 33
59
பற்றேடு வினையாற்றிற் பயனும்வந் தெமைச்சாரும் பற்றின்றிச் செய்திடிலோ பயனெம்மைப் பற்ருதாம் முற்றுமவன் செயலென்று முனைப்பின்றிப் பணிசெய்ய முற்றும்மிப் பிறப்பென்னும் முடிவில்லாப் பெருந்துயரம்.
(இ- ள்) பற்றேடு வினையாற்றில்-பயனில் பற்றுவைத்து வினை செய்தால் பயனும் வந்து எமைச்சாரும் - அதனுல் வரும் பயனும் வந்து எமை அடையும்; பற்றின்றிச் செய்திடிலோ-விருப்பு வெறுப் பின்றிச் செய்யின்; பயன் எம்மைப் பற்றதாம் - பயன் எம்மைத் தாக்க தாம்; முற்றும் அவன் செயலென்று-எல்லாம் சிவன் செயல் என்று எண்ணி: முனைப்பு இன்றி பணிசெய்ய-நான் என்னும் முனைப் பின்றி, நான் இறைவன் வகுத்தபடி அவன் பணியைச் செய்கிறேன் என்று பணி செய்ய; இப் பிறப்பென்னும் முடிவில்லாப் பெருந் துய

Page 167
300
ரம் முற்றும் -இந்தப் பிறவியெடுத்தலாகிய முடிவில்லாத பெருந்துய ரம் முற்றுப்பெறும். (எ-று)
(வி-ம்) தான் செய்ய வேண்டிய கடமையை அறநூல்வழி நின்று இறைபணி எனச் செய்தல் வேண்டும். செய்யப் பிறவியறும். 34
D6 L 592 மாயை சுத் தம்மசுத்தம் பிரகிருதி யென மூன்ரும் மாயையிலே தோன்றியன தத்துவம் முப் பத்தாறும் மாயையின் காரியங்கள் தனுகரண புவனதி மாயைதரும் மயக்கத்தை மகேசனுக்கோர் சத்தியுமாம்,
(இ - ள்) மாயை சுத்தம், அசுத்தம், பிரகிருதி என மூன்ரும்மாயை, சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என மூன் ருகும்; தத்துவம் முப்பத்தாறும் மாயையிலே தோன்றியன - தத்து வங்கள் முப்பத்தாறும் மாயையிலே தோன்றியனவாகும்; மாயையின் காரியங்கள் தனு கரண புவணுதி -மாயையின் காரியங்கள், தனு, கரணம் புவனம் போகம் ஆகியவை: மாயை மயக்கத்தைத் தரும் -மாயை மயக்கத்தைத் கொடுக்கும்; மகேசனுக்கோர் சத்தியுமாம்மாயை இறைவனுக்கு ஒரு சத்தியுமாகும். (எ-று)
(வி-ம்) தத்துவங்கள் முப்பத்தாறு: சுத்த மாயையில் - 5 சிவதத்துவம்
- நாதம், விந்து சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை அசுத்த மாயையில் - 7 வித்தியாதத்துவம்
- காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை. பிரகிருதி மாயையில் - 24 ஆன்மதத்துவம்
பூதம் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் புலன் - சப்த, ஸ்பரிச, ரூப, ரச. கந்த பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி கன்மேந்திரியம் - வாக்கு, பாதம். பாணி, பாயுரு, உபத்தம் அகக்கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் மாயை விமலனுக்கோர் சத்தி என்பதை சிவஞான சித்தியாரிலும் காணலாம்:
"நித்தமாய். விமலனுக்கேர்ர் சத்தியாய், .
வைத்ததோர் மலமாய், மாயை மயக்கமுஞ் செய்யுமன்றே '
- சிவஞானசித்தியார், சுபக்கம் (53) 35

593 ஆன்மாவின் மலந்தன்னை யகற்றிடவே யருள்வள்ளல் நான்காகுந் தனுவாதி நல்கினன்காண் மாயையினல் ஆன்மாவை யவைதம்மில் அழுத்தியெல்லா மலம் நீக்கி வான்நாடர் காணுத வார்கழல்கள் சூட்டிடுவான்.
(இ-ஸ்) ஆன்மாவின் மலந்தன்னை அகற்றிடவே ஆன்மாக்க ளைப் பந்தித்து நிற்கும் மலத்தை அகற்றவே; அருள் வள்ளல் - அருள் வள்ளலாகிய சிவபிரான்; தனுவாதி நல்கினன் காண் -தனு, கரண, புவன, போகங்களை ஆக்கித்தந்தான் என்பதை அறிவீராக; மாயை யினல் ஆன்மாவை அவைதம்மில் அழுத்தி - மயையினல் ஆன்மாக் களை அவைகளுள் ஆழ்த்தி; எல்லாமலம் நீக்கி - பின்பு எல்லா மலங் களையும் போக்கி; வான் நாடர் காணுத -தேவர்களும் கண்டறியாத வார்கழல்கள் சூட்டிடுவான் - பெரிய திருவடிகளைச் சூட்டிடுவான் (எ-று) 36 594
தற்பரனின் ருளடையத் தடங்கருணைக் கடலவனும் சற்குருவாய் வந்தெமக்குச் சன்மார்க்கம் போதித்துப் பொற்பாதந் த%லவைத்துப் புன் மலத்தைப் போக்கிடு வான் நற்கதியும் நல்கிடுவான் நாமவற்கே சர லவோம்.
(இ - ள்) தற்பரனின் தான் அ  ைடய - தற்பரவஸ்துவாகிய பரம்பொருளின் திருவடிகளையடைய, தடங் கருணைக் கடலவனும் - பெருங் கருணைக் கடலான அவ் இறைவனும்; சற்குருவாய் வந்து - உண்மையையுணர்த்தும் குருவாக வந்து; எ ம க்கு சன்மார்க்கம் போதித்து கொண்மார்க்கத்தை அறிவித்து; பொற்பாதம் தலைவைத்து -பொன்போன்ற திருவடியை எமது தலைமேற் சூட்டி புன் மலத் தைப் போக்கிடுவான்-புன்மையான மலங்களை ஒழித்திடுவான்; நற் கதியும்- வீடுபேற்றையும், நல்கிடுவான் - கொடுத்தருளுவான்; நாம் அவற்கே சரணுவோம்-நாம் அப்படிப்பட்ட இறைவனது பாதார விந்
தங்களையே சாளுக அடைவோமாக. (எ -ாறு: 37 மந்திரத்தோர் சத்தியவானுக்கு முடி சூட்டச் சம்மதித்தல்
வேறு 895 மெய்யினை யுணர்ந்த மேலோய்
மேதினி வாழ்வு நில்லா ஆய்வழி தவமே யென்ப
தோர்ந்தனம்; உறுதி பஃதேல்

Page 168
SU
நெய்வழி வைவேன் மைந்தன்
நீள் புவி யரசை யேற்கச்
செய்வதே கரும மென்று
செப்பினுர் மந்தி ரத்தோர்.
(இ-ன்) மெய்யின் உணர்ந்த மேலே ப் - மெய்ப்பொருளே உணர்ந்த பெரியோய் மேதினி வாழ்வு நில்லாது -இவ்வுலக வாழ்வு நிலேயில்லாதது; உய்வழி தவமே யென்பது ஒர்ந்தனம் - நாம் ஈடே றும் வழி தவஞ் செய்தலே யென்பதை இப்போது ஆராய்ந்து அறிந்து கொண்டோம் உறுதி அஃதேல்-தவத்தை மேற்கொள்வதே உமது உறுதியான முடிவென்ருல் நெய்வழி வை வேல் மைந்தன்-நெய் வழி கின்ற கூர்மையான வேலேயுடைய மைத்தனுகிய சத்தியவானே நீள் புவி அரசை ஏற்கச் செய்வதே கருமம்- நீண்ட இந்தப் பூமியின் அரசை ஏற்கச் செய்வதே இனிச் செய்ய வேண்டிய கருமம் என்று மந்திரத்தோர் செப்பினர் - என்று மந்திரிமார்கள் சொன்னுர்கள்.
சத்தியவான் தானும் தந்தையோடு செல்வேனெனல்
596 சத்திய வானு மந்தச்
சபையினி லெழுந்து தந்தாய்
புத்திரன் கடமை தன்னைப்
பெற்றவர்ப் பேண லன்ருே
நத்திநீர் தவமேற் கொள்ள
நானர சாள்வ தென்ரு
வித்தரை நகைத்தி டாதோ
ஏகுவ னும்மோ டென்ருன்,
(இ-ள்) சத்தியவானும் அந்தச் சபையினில் எழுந்து - சத்தியவா னும் அந்தச் சபைபிலே எழுந்து நின்று தந்தாய் புத்திரன் கடமை -தந்தையே, புத்திரனுடைய கடமை, தன்னேப் பெற்றவர்ப் பேன லன்ருே-தன்னேப் பெற்றவரைப் பேணுதல் அல்லவா நத்தி நீர் தவ மேற்கொள்ள-விரும்பி நீர் தவத்தை மேற்கொள்ள நான் அரசாள் வது என்ருல் -நான் அரசாட்சி செய்வதென் ஸ்; இத் தரை நகைத் திடாதோ இந்த நாட்டிலுள்ளவர் என்னே இகழ் வாக எண்ணி நகைத்திடாரோ உம்மோடு ஏகுவன் என்று ன் - நானும் உம்மோடு சீாட்டிற்கு வருவேன் என்றன். (எ -Ir) 9

303
மன்னன் புத்திமதி கூறல்
597 மைந்த நீ இளேயை யுன்ஃன
மனந்தவள் மன்னன் மங்கை முந்திநாங் கானம் வைக
முற்றுறப் பணிகள் செய்தாய் செந்திரு வனேயா ளோடுஞ்
செவ்விதின் அரசு செய்தே அந்திநா ளடையு முன்னர்
ஆற்றுதி தவங்க ளென்ருன்,
(இ-ள்) மைந்த நீ இளேயை-மகனே நீ இளமைப் பருவத் திண் உடையவன் உன்னே மணந்தவள் மன்னன் மங்கை - உன் &ன மனந்த சாவித்திரி மன்னனுடைய மகள் (ஆதலால் அரச போகத்தை அனுபவிக்க வேணடியவள்). நாம் முந்தி கானம் வைக - நாங்கள் முன்பு காட்டில் இருக்க பணிகள் முற்றுற செய்தாய் நீ செய்ய வேண்டிய பணிகஃயெல்லாம் முற்றுறச் செய்தாய்; செந்திரு அ&ன பாளோடும் இலக்குமிபோன்ற சாவித்திரியோடும்; செவ்விதின் அரசு செய்து-செவ்வையாக அரசாட்சி செய்து; அந்தி நாள் அடையும் முன்னர்-இறுதிக் காலத்தை அடையும் முன்னர் தவங்கள் ஆற்றுதி என்ஜின்-தவங்களேச் செய்வாயாக என்ருன், எ-று)
598 ஐம்புல னடக்க மின்றி
யருந்தவ மாற்ற ஒல்லா
தைம்புல னடக்கல் வேண்டின்
அனுபவ மறிவு மாய்வும்
செம்பொருட் டுணிவும் வேண்டும் சீரிய தவம்பின் செய்து
வெம்பவப் பிணியை நீக்கி
வீடுபே றடைதி மைந்த.
(இ- ள்) ஐம்புலனடக்கம் இன்றி - ஐந்து புலன்களேயும் அடக் காது: அருந்தவம் ஆற்ற ஒல்லாது - அரிய தவத்தைச் செய்தல் இய வாது ஐம்புலன் அடக்கல் வேண்டின்-ஐம்புலன்களையும் அடக்குதல் வேண்டி3ல் அனுபவம் அறிவும், ஆய்வும், செம்பொருட்டுணிவும் வேண்டும்-அனுபவமும், அறிவும். ஆராய்வும். கடவுளைப் பற்றிய தெளிவும் வேண்டும்; சீரிய தவம் பின் செய்து சிறப்பான தவத்தைப்

Page 169
304
பின்னர் செய்து; வெம்பவ பிணியை நீக்கி-கொடிய பிறவிப் பிணியை நீக்கி; மைந்த வீடுபேறு அடைதி மகனே வீடுபேற்றை யடைவா uur. (6- )
(வி-ம்) அனுபவம் - இன்பதுன்பங்களை நுகர்ந்து அனுபவத் தால் ஆசாபாசங்கள் நீங்கும்.
அறிவு - அனுபவத்தாலும், நூல்களாலும், பெரியோர் வாயிலா கவும் பெறப்படும்.
ஆய்வு - அனுபவத்தாலும், கண்டும், கே ட் டு ம், படித்தும் , ஆராய்ந்து மெய்யை உணர்வது.
செம்பொருள் துணிவு - இவற்றுல் கடவு ள் உண்டென்றும் ” அவனே எமக்குப் பற்றுக்கோடென்றும் , அவனே மெய்ப்பொருள் என் றும் தெளிவடைவது. 4 I
5.99 மன்னனிவ் வாறு சொல்ல
மைந்தனும் மனமி சைந்தF ன் பொன்னவிர் த விசு நீங்கிப்
பொன் முடி புறத்தே வைத்துக் கன்ன வில் தோளான் மேலே
காசினிக் கிறைவ ணுமென் றிந்நகர் மாந்தர்க் கெல்லாம்
இயம்புமி னென்று சொற்றன்.
(இ-ள்) மன்னன் இவ்வாறு சொல்ல - தியுமற் சேனன் இவ் வாறு கூற மைந்தனும் மனம் இசைந்தான் - சந்தியவானும், முடி சூட மனம் ஒருப்பட்டான்; பொன் அ பிர் த விசு நீங்கி - தி யு மற் சேனன் பொன் ஒளிரும் சிங்காசனத்தை விட்டு நீங்கி; பொன் முடி புறத்தே வைத்து-பொற் கிரீடத்தைப் புறத்தே வைத் து: கல்நவில் தோளான்-கல்லென்று சொல்லும்படியான தோள்களையுடைய சத்தி யவான்; மேலே-வருங்காலத்தில், (இனிமேல்); காசினிக்கு இறைவ னம் என்று-பூமிக்கு இந்நாட்டிற்கு) அரசனவான் என்று; இந் நகர் மாந்தர்க்கு எல்லாம்-இந்த நகரத்து நாட்டு) மக்களுக்கெல்லாம்; இயம்புமின்-சொல்லுங்கள் (முரசறையுங்கள்) என்று சொற்ருன் - என்று கட்டளை இட்டான். (எ-று) 42
600 அலங்கலம் மாலை மார்பன்
அருமணி வயிரம் முத்து விலங்கிவில் உமிழும் பைம்பூண்
வீரகங் கணம்கேயூரம்

35
பொலங்கலம் யாவும் போக்கிப்
பூதியும் மணியும் நூலும்
உலங்கெழு தோளி லேற்ருள்
உளத்தினி லுவகை பொங்க.
(இ- ள்) அலங்கல் அம் மாலை மார்பன் - அசைகின்ற அழகிய மாலையையணிந்த மார்பினையுடைய தியுமற்சேனன்; அருமணி வயிரம் முத்து-அருமையான மாணிக்கத்தையும், வயிரத்தையும் முத்தையும் பதித்துச் செய்தனவாகிய; விலங்கிவில் உமிழும் பைம்பூண் -விட்டு விட்டு ஒளி செய்யும் பொன் ஆபரணங்களையும்; வீரகங்கணம்-வீரக் காப்பையும்; கேயூரம் - கவசத்தையும்; பொலன்கலம் - பிற பொன் ஆபரணங்களையும்; யாவும் போக் கி; எல்லாவற்றையும் நீக்கி; உளத்தினில் உவகை பொங்க-உளத்தினில் மகிழ்ச்சி பொங்க; பூதியும்" -விபூதியும்; மணியும் - உருத்திராக்கமும்; நூலும்-பூணுாலும்; உலங் கெழு-கல்லையொத்த; தோளில் ஏற்ருன் - தோள் மீது அணிந்து கொண்டான். (எ-று)
(வி-ம்) பைம்பூண் என்று முன் சொல்லப்பட்டவை-மணிகள் பதிக்கப்பட்டு விட்டு விட்டு ஒளி செய்பவை; பொலங்கலம் என்று. பின் சொல்லப்பட்டவை பொன்னி ல் செய்யப்பட்ட பிற ஆபரணங் கள், பூதியும் மணியும் நாலும் தே7ளில் ஏற்ரூன் என்றது பூணுாலும், உருத்திராக்கமும், விபூதியும் -புயத்திலும் மார்பிலும் ஏற்ருன் என்க: உளத்தினில் உவகை பொங்க என்றதனுல் பொன் ஆபரணங்கனை நீக்குவதால் மனவருத்தமின்மையும்; பூதியும் மணியும் அணிவதில் பெருமகிழ்ச்சியடைந்த மனப்பக்குவத்தையும் காட்டிற்று. 43
துறவுச் சருக்கம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்

Page 170
ஒன்பதாவது முடிசூட்டுச் சருக்கம்
திருச்சிற்றம்பலம்.
முரசறைதல்
வேறு
60 இன்னுமேழ் வைகலி லிளைய வேந்தலும் பொன்னவிர் மணிமுடி புனைவ ஞமென மன்னவ ஞணையை மகிழ்ந்து வள்ளுவன் அந்நகர் மாந்தருக் கறியச் சாற்றினன். (இ-ள்) இன்னும் ஏழ் வைகலில் - இன்னும் ஏழு நாட்களில்; இளைய ஏந்தலும்-இளவரசனகிய சத்தியவான்; பொன் அவிர் மணி முடி-பொன் ஒளிரும் மணி முடியை புனைவனும் என தரிப்பணு மென்று- மன்னவன் ஆணையை வள்ளுவன் மகிழ்ந்து; அந்நகர் மாந் திருக்கு அறியச் சாற்றினன்-அந்நகர மக்களுக்கு அவர் அறியும்படி முரசறைந்து சாற்றினன். (எ-று)
மக்களின் மகிழ்ச்சி 602 ஆண்களும் பெண்களும் அவர்தம் மைந்தனே பூண்பது முடியெனப் பூரிப் பெய்தினர் மாண்பெறு சத்திய வானின் மன்புகழ்ப் பாண்டல பாடினர் பரத மாடினர். (இ-ள்) ஆண்களும் பெண்களும்- அந்நகர ஆண்களும் பெண் களும்; அவர்தம் மைந்தனே முடி பூண்பது என - தங்கள் தங்கள் மைந்தனே முடி தரிப்பது என்று; பூரிப்பு எய்தினர்-களிப்படைந்த னர் ஐாண்பெறு சத்தியவானின் -மாட்சிமையுடைய சத்தியவானின்: மன் புகழ்-நிலைபெற்ற புகழ் அமைந்த பல பாண் - பல இசைப் பாட்டுகளே; பாடினர்-பாடினர்கள்; பரத மாடினர்-பரத நர்ட்டியங் களாடிஞர்கள். (எ-று) 2
நகரை யலங்கரித்தல் 693 வெண்மணல் பரப்பினர் வீதி வாயெலாம்
தண் ணிழல் விரித்தனர் தங்கு வைப்பெலாம் வெண்டுகில் விதானமும் விளங்க வீக்கினர் வண்ணநீர் தெளித்தனர் வாயி லெங்கணும்,

307
(இ.ஸ்) வீதி வாயெலாம் வெண்மணல் பரப்பினர்- - வீதியின் கண் எல்லாம் வெண் மணலேப் பரப்பினர் தங்கு வைப்பு எலாம் --மக்கள் தங்கும் இடமெலாம் தண்ணிழல் விரித் கனர் - குளிர்ந்த நிழலை ஆக்கினர், வெண்டுகில் விதானமும் -வெள்ளைச் சீலை மேற் கட்டிகளும்; விளங்க விக்கினர் - விளங்கக் கட்டினர்; வாயில் எங் கணும்-வாயில் இடமெல்லாம்; வண்ண நீர் தெளித்தனர்-வாசஃன நீர் தெளித்தனர். (எ-று) 3.
604 வாழையும் பூகமும் வருக்கை வேரலும்
தாழையுங் கன்னலுந் தருவும் நாட்டினர் மாழையி னிலைகளும் மணியும் மாலையும் பாளையுங் குருத்தொடு பந்தர்த் தூக்கினர்.
(இ-ள்) வாழையும் - வாழைகளையும்; பூகமும் - கமுகுகளையும்: வருக்கை-பலாக்களையும்; வேரலும் மூங்கில்களையும்; தாழையும் - தாழைகளையும்; கன்னலும் கரும்புகளையு h; தருவும் தேவதாருவை யும்; நாட்டினர்-நாட்டினூர்கள்; மாழையின் இலைகளும் - மாவிலைகளை யும்; மணியும் --மணிகளையும், மாலையும் பூமாலைகளையும்; பாளையும் - தென்னம் பாளைகளையும்; குருத்தொடு-தென்னங்கு ருத்தொடு. (வெண் னிறமான இளம் தென்னம்பா%ளயும், தென்னங் குருத்து ஓலையி குற்ை செய்த தோரணமும்) பந்தர்த் தூக்கினர் பந்தரில் தூக்கினர் கிள் (எகூறு: 4
0ே6 தோரணந் தூக்கினர் தொய் பில் தீட்டிய
வாரணி முலையினர் வாயின் முன்தொறும் பூரண கும்பமும் பொன்செய் பாலி கை நேரணி வைத்தனர் நிரைந்த கத்திகை.
(இ உள்) தோரணத் தூக்கினர் - அலங்காரத் தொங்கல்களைத் தூக்கிறர்கள் தொய்யில் தீட்டிய -தொய்யில் எழுதிப; வார் அணி முஃலயினl-கச்ச8ரிந்த முலயினையுடைய பெண்கள்; முன் வா யில் கொறும்-முன் வாயில் தோறும்; பூரண கும் பமும் பூரண கும்பங்க ளும்; பொன் செய் பாலிகை-பொன்னுற் செய்யப்பட்ட முளைப் பாலி கையு ; டுேனரி வைத்தனர் நோr ,வும் வரிசை பாகவும் வைத்தார் கள்; கத்திகை நிரைந்த துகிற் கொடிகள் கட்டப்பட்டு) திரையாக
நின்றன. (Tーgy) 5

Page 171
32
மக்களின் களியாட்டு
606 பாடக மெல்லடிப் பாவை மார்மகிழ்ந்
தாடலும் பாடலும் அரங்கி லார்ந்தனர் ஆடவர் வாரணம் அடக்கி யூர்தலும் பாடல மேறலும் பலவு மேவினர்.
(இ-ள்) பாடக மெல் அடிப் பாவைமார் - பாடகமென்னும் பாத அணியை அணிந்த மென்மையர்ன பாதங்களையுடைய பெண் கள் மகிழ்ந்து- அகமகிழ்ந்து; ஆடலும், பாடலும்-ஆடுதலையும் பாடு தலையும்; அரங்கில்-நாடகசாலையில்; ஆர்ந்தனர்- செய்து மகிழ்ந்த ர்ை ஆடவர். ஆண்கள் வாரணம்-யானையை அடக்கி ஊர்தலும் -அடங்கச் செய்து அதன் மீது செல்லுதலும் பாடலம் ஏறலும் - குதிரைமீது ஏறிச் சவாரி செய்தலும் பலவும் - வேறுபல பொழுது போக்கு விளையாட்டுக்களையும்; மேவினர்- பொருந்தினர். (எ-று) 6
?ே வில்லமர் போட்டியும் வீங்கு தோளினர் மல்லமர் போட்டியும் மடங்க லேற்றினை வெல்லமர் போட்டியும் விளங்கு நூல்வலர் சொல்லமர் போட்டியும் சோரா தாற்றினர்.
(இ-ள்) வில்லமர் போட்டியும் -விற்போரிற் போட்டியும்; வீங்கு தோளினர் மல்லமர் போட்டியும்-பருத்த தோளையுடைய ஆண்கள் மற்போர் செய்யும் போட்டியும்; மடங்கல் ஏற்றினை வெல் அமர் போட்டியும்-ஆண் சிங்கத்தை அடக்கி வெல் லும் போட்டியும்: விளங்கு நூல் வலர் -கற்றறிந்தோர்; சொல் அமர் போட்டியும் - தருக்கப் போட்டியும் (கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டியுமாம்); சோராது ஆற்றினர். சோர்வில்லாது செய்தனர். (எ-று)
சத்தியவான யலங்கரித்தல் வேறு
608 மங்கல மான வோரை
மன்னவன் குமரன் றன்னைக் கங்கைநன் னிரி லாட்டிக்
காசறு விரைகள் சாத்தித்

09.
துங்கவெண் பட்டு டுத்தித் தூநறு மாலை சூட்டிக்
கங்கணங் கவசம் வீரக்
கழல்களுங் கட்டி னர்கள்.
(இ-ள்) மங்கலமான ஒரை-சுபமான முகூர்த்த நேரத்தில்; மன் னவன் குமரன் தன்னை-தியுமற்சேனனின் குமாரனகிய சத்தியவான: நல் கங்கை நீரில் ஆட்டி - பரிசுத்தமான கங்கையின் நீரினல் நீராட்டி காசு அறு விரைகள் சாத்தி - குற்றமற்ற வாசனைத் திரவியங்களைச்' சாத்தி; துங்கவெண் பட்டு உடுத் தி - பரிசுத்தமான வெண் பட்டு ஆடையை உடுத்தி; தூ நறு மாலை சூட்டி-தூய வாசனை பொருந்திய பூ மாலைகளைச் சூட்டி, கங்கணம் வீர கங்கணங்களும்; கவசம் -கவச மும் அணிந்து வீரக் கழல்களும் கட்டினர்கள் . வீரக் கழல்களும் காலிற் கட்டினர்கள். (எ-று) 8
609 குண்டலங் காதில் மின்னக்
குஞ்சியில் மணியி லங்கக்
கண்டநாண் கழுத்தி லாரங் கண்டிகை யோடி லங்க
மண்டல மணிபொன் பைம்பூண் மார்பினிற் றிருவில் வீச
விண்டலத் திரவி போல
விளங்கின னிளைய வேந்தன்.
(இ-ள்) கர்தில் குண்டலம் மின்ன - காதில் குண்டலங்கள் ஒளி வீச; குஞ்சியில் மணி இலங்க-முடியிற் சூளாமணி விளங்க கண்ட நாண், ஆரம் கண்டிகையோடு கழுத்தில் இலங்க-கண்ட நானும், ஆரமும், கண்டிகையும் கழுத்தில் விளங்க; மண்டல மணி பொன் பைம் பூண் கூட்டமான, மணிகளாலும் பொன்னலும் செய்யப்பட்ட பசிய ஆபரணங்கள்; மார்பினில் திருவில் வீச-மார்பினிலே அழகிய ஒளியை வீச வின தலத்து இரவி போல -ஆகாயத்திற் சூரியன் விளங்கியது போல: இளைய வேந்தன் விளங்கினன் -இளவரசனுகி ப சத்தியவான் விளங்கிஞன். (எறுை)
(வி-ம்) கண்ட நாண் - கழுத்தணி, கண்டிகை உருத்திராக்க மாலை மணி  ைசூாாமரிை; ஆரம் - மாலை மண்டலம் - கூட்டம், &ll-lb.

Page 172
310
60 அரதன மணையி ருத்தி
ஆரகிற் றுாபங் காட்டிச் சிரசிலட் சதைதெ வித்துச்
சிந்துரப் பொட்டு மிட்டு நரபதி நீடு மன்னி
நானிலங் காக்க வென்று சுரிகுழற் குட்டு மாதர்
சுற்றின ரால நன்னீர்.
(இ-ள்) அரதன மணே இருத்தி - நவம ணிகள் பதிக்கப்பட்ட இருக்கையில் இருத்தி: ஆர் அகில் தூபங்காட்டி --வாசனை நிறைந்த அகிற்புகை காட்டி; சிரசில் அட்சதை தெளித்து: சிந்துரப் பொட்டும் இட்டு-செந்திலகமிட்டு; நரபதி - அரசன். நீடு மன்னி நெடுங்காலம் நிலைபெற்று (வாழ்ந்து); நானிலங் காக்க என்று - பூமியைக் காக்கக் கடவான் என்று சொல்லி சுரி குழல் சூட்டு மாதர் -சுரிந்த குழலை யுடைய, சூட்டை யணிந்த மாதர்; ஆல நன்னீர் சுற்றினர் - மங்கல மான ஆலத்தி சுற்றினுர்கள். (எ-று)
(வி-ம்) அட்சதை-மங்கலவரிசி: சிந்துரம்-சிவந்த; சுரிகுழல் - முறுக்குள்ள குழல்; சூட்டு - நுதலணி, ஆலம் - சுண்ணும்பும் மஞ்ச ளுங் கலந்த நீர். 0
வித்திரியை யலங்கரித்தல்
6 மழைமதர்க் கண்ணி னுளை
மஞ்சன பாட்டிப் பொன்னூல் இழைது லுடுத்தி யுக்கத்
திலங்குடேரி கலையும் வீக்கிக் குழைகடிப் பிணை பொற் சுட்டி
குறங்கணி தண்டை பூட்டிக் கழைபொரு தோளில் வங்கி
கவினுறக் கட்டி ஞர்கள். (இ-ள்) மழை மதர்க் சண்ணினளை - குளிர்ச்சி பொருந்திய செழிப்புள்ள 8 6.ண்களையுடை ய "வித்ரிேயை மஞ்சனம் ஆட்டி-மங் கல நீராட்டி : பொன் நூல் இ6ழ துகில் டடுத்தி-சருகை இழைத்த பட்டுச் சேலையைக் கட்டி, உக்கத்து இலங் மேகலையும் வீக்கி - இடை புல் விளங்குகிம0:ற மேகலையையும் கட்டி குழை கடிப்பிணை, பொற்

311
சுட்டி, குறங்கணி, தண்டை, பூட்டி கழை பொரு தோளில் - மூங் கிலையொத்த தோளில்; வங்கி கவினுறக் கட்டினர்கள் - வங்கியை அழ குறக் கட்டினுர்கள். (எ- று)
(வி-ம்) குழை-காதணி; கடிப்பிணை-காதணி; பொற் சுட்டிதுதலணி; குறங்கணி-தொடையணி; தண்டை - காலணி; வங்கிதோளணி.
62 வண்டிமிர் கூந்தன் மீது
வாசனைத் தைலந் தேய்த்தே இண்டையு மிணருஞ் சேர்த்தார்
இருகணு மையாற் றீட்டி முண்டகத் திலக மிட்டு
முகத்தினிற் சாந்தும் பூசி விண்டலேய் தோளில் மார்பில்
விழைவுற வரைந்தார் தொய்யில்
(இ-ள்) வண்டு இமிர் கூந்தன் மீது - வண்டுகள் மொய்க்கும் (ஒலிக்கும் எனினுமாம்) கூந்தலின் மீது; வாசனைத் தைலம் தேய்த்தே -வாசம் பொருந்திய தைலத்தைத் தேய்த்து; இண்டையும்-இண்டை மாலையையும் இணரும்-பூங்கொத்தும்; சேர்த்தார் - சூட்டினர்கள்: இரு கண்ணும்மையாற் றீட்டி-இரு கண்களுக்கும் அநசனம் தீட்டி முண்டகத் திலகமிட்டு-நெற்றியில் பொட்டு இட்டு; முகத்தினில் சார்: தும் பூசி-முகத்தினிலே வாசனைப் பொடியும் பூசி, வின்ா ட ல் ஏப் தோளில் - மூங்கிலை ஒத்த தோள்களிலும்; மார்பில் - மார்பிலும் விழைவுற-பார்ப்பவர் ஆசைப்படும்படியாக தொய்யில் வரைந்தார். தெய்யிற் கொடிகளை எழுதினர்கள். (எ-று) 2
அரசவைக்குச் செல்லல்
63 நங்கையர் நடன மாட
நரம்பிசை பாணர் மீட்டச்
சங்குதுந் துபிமு ழங்கச்
சச்சரி முரச மார்ப்பக்
கொங்கவிழ் மாலை மார்பன்
கோமள வல்லி யோடும்
அங்கையி லயில்வே லேந்தி
அரசவை யடைந்தா னன்றே.

Page 173
32
(இ- ள்) நங்கையர் நடனம் ஆட - நடனமாதர் நடனமாட பாணர் நரம்பிசை மீட்ட- பாணர் யாழினை மீட்ட சங்கு துந்துபி முழங்க - சங்கும் துந்துபியும் பேரொலி செய்ய; சச்சரி. முரசம் ஆர்ப்ப-சச்சரியும். முரசமும் ஒலிக்க; கொங்கு அவிழ் மாலை மார்பன் --தேன் கட்டவிழும் மாலேயை யணிந்த மார்பனுன சத்தியவான்; கோமள வல்லியோடும்-இளமையும் அழகும் பொருந்திய பூங்கொடி போன்ற சாவித்திரியுடன்; அங்கையில் அயில்வேல் ஏந்தி - அழகிய கையில் கூர்மையான வேலை ஏந்தி; அரசஅவை அடைந்தான்-அரச சபையை வந்து அடைந்தான். (எ-று) 3
அன்று, ஏ - அசைகள்.
சத்தியவான் அரியணையில் அமர்தல்
614 தோரண வாய்தல் வந்து
துவன்றின ரவையோ ரான்ருேர்
பூரண கும்பம் வைத்துப்
பொன்மலர் தூவி வாழ்த்த
ஆாணங் கனையார் தீபம்
அயினிநீர் சுற்றிப் பாட
வாரணி முரச மார்ப்ப
வந்தரி யணைய மர்ந்தான்.
(இ-ள்) தோரண வாய்தல் வந்து சித்திர கோபுர வாயிலில் வந்து; அவையோர் ஆன்ருேர் துவன்றினர்- அவையோரும் பெரியோ ரும் நெருங்கினர்; பூரண தம்பம் வைத்து - நிறைகுடம் வைத்து பொன் மலர் தாவி வாழ்த்த-அவர்கள் பொன்னுற் செய்த மலர்க ளைத் தூவி வாழ்த்தொலி செய்ய (பொன்னும், மலரும் எனினும், அழகிய மலர் எனினுமாய்); ஆரணங்கனையார் - அழகிய தெய்வப் பெண் போன்ற பெண்கள்; தீபம் -தீபமும்; அயினிநீர் சோறு கலந்த ஆலத்தி நீரும்; சுற்றிப்பாட வார் அணி முரசம் ஆர்ப்ப வார் பூட் டப் பட்ட முரசு ஒலிக்க வந்து அரி அனே அமர்ந்தான் - சத்திய வான் வந்து சிங்காசனத்தில் இருந்தான். (எ-று) a
சாவித்திரி சத்தியவான் தோற்றம்
65 கோமகன் ருனு மந்த்க்
கோதையு மமர்ந்த போது காமனு மிரதி போலுங்
கந்தரு வர்கள் போலுஞ்

33
சோமனுஞ் சதியும் போலுஞ் சுரர்பதி சசியும் போலும்
பூமகள் மாலும் போலும்
பொற்புடன் பொலிந்தா ரன்றே
(இன ஸ்) கோமகன்தானும் - அரசகுமாரனன சத்தியவானும்; அந்தக் கோதையும்-அந்தச் சாவித்திரியும்; அமர்ந்தபோது - சிங்கா சனத்தில் அமர்ந்த காலத்தில்; காமனும் இரதிபோலும்-மன்மதனை யும் இரதியையும் போலவும்; கந்தருவர்கள் போலும்.கந்தருவர்களைப் போலவும்; சோமனும் சதியும் போலும்-சந்திரனையும் உரோகிணி யையும் போலவும்; சுரர்பதி சசியும் போலும் - இந்திரனையும் இந்தி ராணியையும் போலவும்; பூமகள் மாலும் போலும் - இலக்குமியை யும் திருமாலையும் போலவும்; பொற்புடன் பொலிந்தார்-அழகுடன்
பொலிந்தார்கள். (எ-று) அன்று, ஏ-அசைகள். 15
முடி சூட்டில்
66 பாரகம் புளகங் கொள்ளப்
பத்தினிப் பெண்டி ரார்ப்ப ஆரண முதல்வ னம்மை
அம்பரத் தாசி நல்கத் தாரணி தியுமற் சேனன்
தந்திடத் தவத்தின் மிக்க நாரத முனிவன் மெளலி
நலமெனச் சூட்டி ஞனே,
(இ-ஸ்) பாரகம் டாளகம் கொள்ள-பூமியிலுள்ளோர் மகிழ்ச்சி மிகுதியால் புளகாங்கிதங்கொள்ள பத்திணிப் பெண்டிர் ஆர்ப்ப - கற்புடைய மகளிர் மகிழ்ச்சியுடன் பேரொலி செய்ய: ஆரண முதல் வன்-வேத முதல்வராகிய சிவபெருமானும்; அம்மை-உமாதேவியா ரும்; அம்பாத்து ஆசி நல்க -ஆகாயத்தில் நின்று ஆசி செய்ய; தார் அணி தியுமற்சேனன்-பூமாலையை யணிந்த தியுமற்சேன மன்னன்: தந்திட-முடியைக் கொடுக்க தவத்தின் மிக்க நாரத முனிவன் - தவவலிமை மிகுந்த நாாத மகா முனிவன், மெளலி நலமெனச் சூட்டி ஞன்-முடியை "நலம்" எனக் கூறிச் சூட்டினன். (எ-று)
ர  ைஅசை
(வி-ம்) நலம் - நன்மை, இன்பம், புகழ், அழகு. is .

Page 174
34
வாழ்த்தொலி
67 அந்தரத் தமரர் வாழ்த்தும்
அருந்தவ முனிவர் வாழ்த்தும் மந்திரத் தவர்கள் வாழ்த்தும்
மணிமுடி மன்னர் வாழ்த்தும் சிந்துரப் பவளச் செவ்வாய்ச்
சேயிழை யார்கள் வாழ்த்தும் எந்திறத் தவர்க்கு நாவால்
எடுத்தியம் பிடுதற் பாற்ருே.
(இ- ள்) அந்தரத்து அமரர் வாழ்த்தும்-ஆகாய வாசிகளாகிய தேவர்களின் வாழ்த்தும்; அரும்தவ முனிவர் வாழ்த்தும்-அரிய தவத் தைச் செய்யும் முனிவரின் வாழ்த்தும்; மந்திரத்தவர்கள் வாழ்த்தும் -மந்திரிகளின் வாழ்த்தும்; மணி முடி மன்னர் வாழ்த்தும் மணி முடிகளையணிந்த அரசர்களது வாழ்த்தும்; சிந்துர பவளச் செவ்வாய் சேயிழையார்கள் வாழ்த்தும்--சிவந்த பவளம் போன்ற வாயினே யுடைய பெண்களின் வாழ்த்தும்; எந்திறத்வர்க்கு-எம்போன்றவர்க்கு; நாவால் எடுத்தியம்பிடுதற் பாற்றே -நாவால் எடுத்துச் சொல்லற் பாலதோ? (எ-று)
மேற்கூறிய வாழ்த்தொலிகளின் ஒசையின்பம் எம்போன்றேரால் எடுத்து இயம்ப முடியாதது என்பதாம். 17
மன்னன் இருந்த பொலிவு
68 பல்லியம் பொங்கி யார்ப்பப்
பண்ணிசை பாணர் பாட
மல்லியல் மறவர் மன்னன்
மலரடி இறைஞ்சி நிற்ப
வில்லியல் வேந்தர் வந்து
வியன்முடி தாழ்த்திப் போற்றக்
கல்லியற் ருேளி னண்ணல்
கவின்மணித் தவிசி ருந்தான்.
(இ-ள்) பல்லியம் பொங்கி ஆர்ப்ப-பலவகையான வாத்தியங்
கள் ஒசை மிக்கு ஒலிசெய்ய; பண்ணிசை பாணர் பாட~பண்ணிசை களைப் பாணர் பாட மல் இயல் மறவர்-மற்போர் செய்யும் இயல்

315
பினையுடைய மறம் பொருந்திய வீரர்; மன்னன் மலரடி இறைஞ்சி நிற்ப அரசனது பூப் போன்ற பாதங்களை வணங்கி நிற்க: வில் இயல் வேந்தர்-விற்போர் செய்யும் இயல்பினையுடைய (வில் பொருந்திய எனினுமாம்) அரசர்கள்; வந்து வியன்முடி தாழ்த்திப்போற்ற-வந்து தமது பெருமையான முடிகளைத் தாழ்த்தி வணங்க, கல் இ யல் தோளின் அண்ணல்-கல்லையொத்த தோள்களையுடைய சத்தியவான்; கவின் மணித் தவிசு இருந்தான்ம அழகிய நவமணிகள் பதித்த ஆச னத்தில் இருந்தான். (எ- று) 18
சத்தியவான் பெரியோரை வணங்குதல்
619 தவமுணி வரனை யேத்தித்
தந்தைதா யரைவ ணங்கி
நவையறு காட்சி மிக்க
நற்றவத் தோரைப் போற்றி
அவையினி லமர்ந்த மன்னர்
அமைச்சருக் கினிய சொல்லிக்
குவைபொனு மணியுந் தூசும்
கொண்டலின் வழங்கி ஞனே.
(இ-ள்) தவமுனிவரனை ஏத்தி-தவத்தால் மிக்க நாரத முனி வரை வணங்கி; தந்தை தாயரை வணங்கி-தந்தையையும் தாயையும் ணைங்கி நவை அறு காட்சி மிக்க நல் தவத்தோரைப் போற்றி - குற்றமற்ற காட்சியையுடைய நற்றவத்தோரைப் போற்றி அவையி னில் அமர்ந்த மன்னர், அமைச்சருக்கு இனிய சொல்லி-சபையினில் விற்றிருந்த குறுநில மன்னர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு இனிய வார்த்தைகள் செர்ல்லி, குவைபொனும் மணியும் தூசும்- தொகுதி யான பொன்னையும், நவமணிகளையும் பட்டாடைகளையும்; கொண்ட வின் வழங்கினன்-மேகம்போல வரையாது எல்லாருக்கும் கொடுத் தான். (எ-று) ஏ"-அசை 9
பெற்றேர் ஆசி கூறல்
820 தாதையுந் தாயுந் தங்கள்
தனபஃரத் தழுவி வாழ்த்தி ஏதமில் செங்கோ லோச்சி
இரும்புக் ழடைதி யென்

Page 175
3.
மாதருக் கணியாங் கற்பின்
மருமக டன்னை வாழ்த்திப்
பூதலம் புகழும் நல்ல
புதல்வரைப் பெறுதி யென்றர்.
(இ ல ள்) தாதையும் - தந்தையும்; தாயும்-தாயும்; தங்கள் தன யனைத் தழுவி வாழ்த்தி-தங்கள் மகளுகிய சத்தியவானைக் கட்டி த் தழுவி, வாழ்த்தி; ஏதம் இல்-குற்றமில்லாத, செங்கோல் ஒ ச் சி . செங்கோல் செய்து அரசாண்டு; இரும்புகழ் அடைதி என்னு - பெரும் புகழை யடைவாயாக என்று சொல்லி, மாதருக்கு அணியாம் கற் பின் மருமகள் தன்னை வாழ்த்தி-பெண்களுக்கு அணியாக விளங்கும் கற்பிற் சிறந்த மருமகளை வாழ்த்தி, பூதலம் புகழும் நல்ல புதல்வ ரைப் பெறுதி என்ருர்- பூவுலகிலுள்ளோர் புகழும்படியான பல சற் புத்திரர்களைப் பெறுவாயாக என்ருர்கள். (எ- று) 20
பெரியோர் ஆசி கூறல்
62 அந்தண ரறவோ ரான்றேர்
அறுகுட னரிசி தூவிச்
சுந்தர வல்லி யோடுஞ்
சுகமுற நீடு வாழ்ந்து
மைந்தருஞ் சீரும் பெற்று
மனுநெறி பிறழா வண்ணம்
எந்திரு நாட்டை மேலே
இனிதர சாள்க வென்ருர்,
(இ-ள்) அந்தணர்-அந்தணர்களும் அறவோர். அறவோரும்; ஆன்ருேர்-பெரியோரும்: அறுகுடன் அசிசி தூவி - அறுகரிசி தூவி, சுந்தரவல்லியோடும்-அழகு நிறைந்த வல்லிக் கொடி போன்ற சாவித் திரியோடும் சுகமுற நீடுவாழ்ந்து-சுகமுடனே அநேககாலம் வாழ்ந்து: மைந்தரும் சீரும் பெற்று-மக்களையும் செல்வங்களையும் சிறப்பையும் அடைந்து; மனுநெறி பிறழாவண்ணம்- மனுநீதி நெறிக்கு மாறுபடா வண்ணம்; எந்திருநாட்டை-எமது செல்வமும் சிறப்பும் பொருந்திய சாலுவ நாட்டை மேலே இனிது அரசாள்க என்றர்-வருங்காலத்தில் (இனிமேல்) இனிது அரசாள்க என்று ஆசி கூறிஞர்கள். (எ-று) 24

37
சத்தியவான் அவரவர் தகுதிக்கேற்பப்
பரிசு வழங்குதல்
622 குறுநில மன்னர்க் கெல்லாம்
குஞ்சரம் பாய்மாத் திண்டேர்
உறுபொனும் பொருளு மீந்தான்
உத்தம ரறவோர் தங்கட்
கறுவையும் ஆனுங் கன்றும்
அக்கர மணியுந் தந்தான்
வறுமையுற் றுழலு வோர்க்கு
வரையில பொருள்க ளிந்தான்.
(இ-ள்) குறுநில மன்னர்க்கு எல்லாம்-சிற்றரசர்க்கு எல்லா? , குஞ்சரம் பாய்மா திண்டேர் - யானேயும், குதிரையும், திண்ணிய தேரும்; உறுபொனும் பொருளும் ஈந்தான் - மிக்க பொன்னும் பொரு ளும் கொடுத்தான்; உத்தமர், அறவோர் தங்கட்கு-மேலோருக்கும், முனிவருக்கும்; அறுவையும் - உடையும் (சீலையும்); ஆனும் பசுவும்: கன்றும் அக்கரமணியும் -உருத்திராக்கமும்; தந்தான் வறுமையுற்று உழலுவோர்க்கு வரையில பொருள்கள் ஈ ந் தா ன் - வரைவின்றிப் பொருள்களைக் கொடுத்தான் (எ-று) 22
523. அரசிறை யாண்டேழ் நீக்கி
அருஞ்சிறை யிருந்தார் விட்டான்
அரனடி யார்க்கு மன்றம்
ஆதுலர் தமக்குச் சாலை
அரணியத் தண்ணல் வைகி
அருந்தவ மாற்றப் பள்ளி
வீரசினி லமைப்பீ ரென்று
விதித்தனன் வினவ லார்க்கு,
(இ-ள்) அரசிறை ஏழ் ஆண்டு நீக்கி-அரசனுக்குக் கொடுக்க வேண்டிய இறைவரியை ஏழாண்டுகட்கு நிறுத்தி வைத்து; அருஞ் சிறை இருந்தார் விட்டான்.அரிய சிறையிலிருந்த கைதிகளை விடு த?ல செய்தான்; அரனடியார்க்கு மன்றம் --சிவனடியார்களுக்குத் தங் நம் ம.மும்; ஆதுலர் தமக்குச் சாலை-இல்லாதவர் (தரித்திரர்) தங் குவதற்கு ஆதுலர்சாலையும்; அரணியத்து அண்ணல் வைகி அருந்தவம் ஆற்றப் பள்ளி ~காட்டில் தியுமற்சேனர் இருந்து அரிய தவத்தைச்

Page 176
38
செய்யத் தவப் பள்ளியும்; விரசினில்-விரைவினில்; அமைப்பீர் என்று விண் வலார்க்கு, விதித்தனன் - அமைப்பீர்களாக என்று அவ் அவ் வினைகளில் வல்லவர்களுக்குக் கட்டளையிட்டான் (எ-று)
(வி-ம்) ஆண்டேழ்க ஏழ் ஆண்டு என மாற்றுக! a 3
சபையில் ஆடில் பாடல் நிகழ்ல்
624 மெல்லியல் மடவார் யாழில்
மீட்டின ரினிய கானம்
சொல்லினி லமுதந் தோய்த்துச் சோபனம் மாதர் பா.
வல்லியின் நுண்ம ருங்கு
வனிதையர் நடன மாடக்
கல்லியற் றிண்டோண் மன்னன் களிப்புட னிருந்தா னுங்கே.
(இ- ள்) மெல் இயல் மடவார் - மெல்லிய இயல்பை யுடைய பெண்கள்; இனிய கானம்- இனிய இசைப் பாடல்களை; யாழில் மீட் டினர்- யாழில் வாசித்தார்கள்; சொல்லினி லமுதந் தோய்த்துச் சோப னம் மாதர் பாட - சொல்லினில் அமுதத்தைத் தோய்த்ததுபோல் இனிய மொழியில் மாதர் மங்களப்பாட்டுப் பாட வல்லியின் நுண் மருங்கு வணிதையர்-வல்லிக் கொடிபோலும் நுண்ணிய இடையை யுடை ய் டெண்கள்; நடனமாட கல் இயல் திண் தோள் மன்னன்கல்லையொத்த திண்ணிய தோள்க?ளயுடைய சத்தியவான் ஆங்கே களிப்புடனிருந்தான் - அங்கே மகிழ்ச்சியுடன் இருந்தான். ó一塑
நாரதர் சத்தியவானுக்குச் செவியறிவுறுத்தல்
வேறு
825 இங்ங்ண மன்னவ னிருந்த காலையிற்
பொங்கலை பொருவுளைப் புரவித் தானையோய் இங்குனக் குறுதியா னியம்பு வேனெனப் புங்கவ னுரதன் புகறல் மேயினன்.
(இ - ள்) இங்ங்ணம் மன்னவன் இருந்த காலையில்-இவ்வண்ணம் சத்தியவான் இருந்த சமயத்தில்; பொங்கு அலை பொருவு உளைப்

39
புரவித் தானையோய்-பொங்குகின்ற கடல் அலையையொத்த பிடர் மயிரையுடைய குதிரைப் படையையுடைய அாசனே: இங்கு உனக்கு உறுதியான் இயம்புவேன் என -இங்கு உனக்குப் பயன் தருபவ வையும், செய்யத்தக்கவையுமான சில உபதேசங்களை யான் சொல்லு வேன் என்று; புங்கவன் நாரதன்-முணிபுங்கவனை நாரதன்; புகல் தல் மேயினன்.சொல்லத் தொடங்கினன். (எ-று) 25
காவலன் காத்தற் கடவுளாகிய அரியை ஒப்பான்
628 ஆழி சூழ்புவி யாளு மன்னவர்
ஆழி நேர்நெறி யாணை செய்வதால் ஆழி யேந்தியே அகிலங் காக்குமவ் ஆழி மீதணை அரியை யொப்பரால்
(இ-ள்) ஆழி சூழ்புவி ஆளும் மன்னவர்-கடல் சூழ்ந்த உல கத்தை ஆளும் மன்னவர்; ஆழி நேர் நெறி - ஆஞ்ஞாசக்கர நெறி நின்று ஆணை செய்வதால்-ஆட்சி செய்வதால் ஆழி ஏந்தியே. சக் கரத்தைக் கையில் ஏந்தி; அகிலங் காக்கும் - உலகத்தைக் காக்கும்; அவ்-அந்த; ஆழி மீதணை-திருப்பாற்கடல் மீது அணைகின்ற; அரியை ஒப்பரால்-மகாவிஷ்ணுவை ஒப்பாராவர். (எ-று) 26
காவலன் கடமை
827 நல்ல வர்தமை நாடிக் காத்தலும்
அல்ல வர்தமை ஆய்ந்தொ றுத்தலும் எல்ல வர்களு மின் புற் றுய்ந்திட வல்ல செய்வது மன்னன் பாலதாம்
(இ- ள்) நல்லவர்தமை - நல்லோர்களை; நாடிக் காத்தலும் - தெரிந்து விரும்பிக் காத்தலும்; அல்லவர்தமை ~நல்லவரல்லாதவரை (தீயவரை}; ஆய்ந்து ஒறுத்தலும்-ஆராய்ந்து தண்டித்தலும்; எல்ல வர்களும்-எல்லோரும், இன்புற்று உய்ந்திட-இன்பமடைந்து உய்யும் வண்ணம்; வல்ல செய்வது-வல்லவற்றைச் செய்வது; மன்னன் பால தாம் - அரசனின் சுடமையாகும். (எ.ணு) 27
மக்கள் இன்புற வேண்டுவன 628 உயிர்க ளுய்ந்திட வுலகிற் பல்வளம்
பயிர்க ளோங்கிடப் பண்ணல் கோன்கடன் அயில வூண்வகை யறுவை யில்லிடம் இயலப் பெற்றிடி லின்பங் கூடுமே.
ಭಿ}{

Page 177
320
(இ--ஸ்) உயிர்கள் உய்ந்திட - உயிர்கள் வாழ; உலகில் பல்வளம் பயிர்கள் ஓங்கிடப் பண்ணல் உலகில் பல வளங்களும். பயிர்களும் அதிகப்படப் பண்ணுதல்; கோன் கடன் - அரசனின் கடனுகும்; அயில ஊண்வகை - உண்ண உணவு வகைகளும்; அறுவை -உடையும்; இல் லிடம் வீடும்; இயலப் பெற்றிடின்-மக்களுக்குப் பொருந்தப் பெற்றி டின்; இன்பம் கூடுமே. (எ-று) 28
உணவைப் பெருக்கல்
629 நீடு வயலெலாம் நெல்லுங் கூலமுங்
காடு மேடெலாங் கம்பு கான்பயிர் நாடிப் பயிரிடல் நல்ல வான்பயிர் நாடு செழிப்புற தாட்டல் நன்மையாம்.
(இ) --ஸ்) நீடு வயலெலாம். நெடிய வயல்களிலெல்லாம்; நெல் லும்; கூலமும் உழுந்து கடலை முதலிய தானியங்களும்; காடு மேடு எலாம்-காடுகளிலும் (காட்டு மரங்களை வெ . டி வெளியாக்கின நிலம்) மேட்டு நிலத்திலும்; கம்பு-கம்பு எனும் தானிய மும்; கான் பயிர் கானகத்தில் உண்டாக்கக் கூடிய பயிர்வகையும், நாடிப் பயி ரிடல் -ஆராய்ந்து தெரிந்து பயிரிடுதல்; நல்ல வான் பயிர் - நல்ல பயன்தரும் தென்னை, கமுகு, வாழை, கரும்பு முதலிய பயிர்களையும்: நாடு செழிப்புற நாட்டல் நன்மையாம்-நாடு செழிக்கும்படி நாட் டுதல் நல்லதாகும். (எ-து) 29
நீர்வள முண்டாக்கல்
630 ஆறு வெட்டலும் அணைகள் கட்டலும் ஊறு நீர்நிலை புண் தி பண்ணலுந் தூறு மழையினைத் தொகுத்து வைத்தலும் நாறு தாரினய் நாடிச் செய்குவை,
(இ-ள்) ஆறு வெட்டலும் -பேராற்றிலிருந்து சிற்றறு வெட்ட லும்; அணைகள் கட்டலும் -நீரைத் தேக்குவதற்கு அணைகள் கட்ட லும்; ஊறு நீர் நிலை உண்டு பண்ணலும் -நீர் ஊற்று உள்ள இடங் களில் கிணறு, கேணி தோண்டுதலும்; தூறு மழைபினத் தொகுத்து வைத்தலும் - பொழிகின்ற மழை நீரை வீணே கடலுக்குப் போகா மல் தேக்கிவைத்தலும்; நாறு தாரினுப்-வாசம் பொருந்திய மாலையை
யுடையவனே நாடிச் செய்குவை-விரும்பிச் செய்வாயாக. எ 一%

32
தொழிலைப் பெருக்கல்
681 தொழில்பல தொடக்கலுந் தொடர்ந்து ஞற்றலும்
வழிவழி வருகலை வளர வூக்கலுங் களிதரு கருப்பநீர் காய்ச்சு மாலையும் எழில்நெச வாலையு மெடுத்தல் நன்றரோ.
(இ-ள்) தொழி : பல தொடக்கலும் - புதிதாகப் பல தொழில், களைத் தொடக்கலும்; தொடர்ந்து உ +ற்றலும் . ஏற்கனவே இருக் கும் தொழில்சளைத் தொடர்ந்து செய்தலும்; வழி வழி வருகலை - பரம்பரையாக வந்த கலைகளை; வளர ஊக்கலும் வளரும்படி ஊக்கு தலும்: களிதரு கருப்பரீர் களிப்பைத்தரும் கருப்பரீரை: காய்ச்சு மாலையும்-காய்ச்சி சருக்கரை, கற்கண்டு. செய்யும் ஆலைகளையும்; எழில் நெசவாலையும்- அழகிய துணிகளே நெசவுசெய்யும் நெசவாலை களையும்; எடுத்தல் நன்று கட்டுதல், தொடக்குதல் நல்லது. (எ-று
அரோ - அசை 3.
3ே2 உழுபட்ை கம்மியர்க் குகந்த வாயுதம்
முழுமழுத் தோமரம் முசுண்டி யதியாம் எழுபடை யேந்திடற் கேற்ற பல்ப.ை வழுவல வடித்திடல் வாகை வேலினய்.
(இ - ள்) உழுபடை-கலப்பை கம்மியர்க்குகந்த வாயுதம்-கம் மாளருக்கு உகந்த ஆயுதங்கள்; முழு - கணிச்சி, மழு - கோடரி: தோமரம் -ஈட்டி முசுண்டி -சிறுவாள்; ஆதியாம்; எழுபடை ஏந்தி டற்கேற்ற பல்படை கிளர்ந்தெழுகின்ற தானே ஏந்திடற் கேற்ற பல வகைப்படைக்கலங்கள் ஆகியவற்றை வடித்திடல் வழுவல - செய்தமைத்தல் தவறல்ல; வாகை வேலினய் வெற்றி பொருந்திய வேலேயுடைய மன்னனே. (எ-று) 32
வாணிகஞ் செய்தல்
639 நிலங்கெரன் கணிப்பொருள் நீரிற் கொள்பொருள் விலங்கலிற் காட்டினில் விளைவிற் கொள்பொருள் கலங்கொடு போக்கியே க திபொன் னீட்டுதல் அலங்கலத் தோளினய் ஆக்கஞ் சேர்க்குமாஸ்,

Page 178
322
இ- ள்) அலங்கலந் தோளிய்ை-பூமாலையை யணிந்த அழகிய தோளை யுடையவனே; நிலங்கொள் கணிப்பொருள் - நிலத்திலிருந்து பெறப்படும் கணிப்பொருள் (பொன் இரும்பு முதலாயன); நீரிற் கொள்பொருள் - நீரிலிருந்து பெறப்படும் பொருள் (மீன், சங்கு முத்து, பவளம் முதலாயன); விலங்கலிற் கொள்பொருள் - மலை யினிற் பெறுபொருள் (மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் முதலாயன); காட்டினிற் கொள் பொருள்-காட்டிலிருந்து பெறு பொருள் (அரக்கு, தேன், நாவி, மயிற்பீலி, சந்தனம் முதி லர்யன); விளைவிற் கொள்பொருள் - வயலிற் பெறு பொருள் (நெல் உழுந்து, பயறு முதலாயன); கலங்கொடு போக்கியே - கப்பல்களில் பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று; கதிபொன் ஈட்டுதல் - மிகுதி யான பொன்னைச் சம்பாதித்தல்; ஆக்கம் சேர்க்குமாம் - செல்வத் தைச் சேர்க்கும். (எ-று) 3岛
பொருளை ஈட்டுதலும் வகுத்தலும்
634 காட்டிய நெறியினிற் கருதி டும்பொருள் ஈட்டலுங் காத்தலு மிசைய ஈதலும் நாட்டினை யாள்பவர் நன்கு செய்வரேல் வாட்டிடும் பசிபிணி வருத்த லில்லையே.
(இ-ள்) காட்டிய நெறியினில் கருதிடும்பொருள் - மேலே கூறப் பட்ட வழியில் விரும்பிடும் பொருளை ஈட்டலும் - சம்பாதித்தலும் காத்தலும் - பாதுகாத்தலும்; இசைய ஈ த லும் - அவரவர்க்குப் பொருந்த நல்கலும்; நாட்டினை ஆள்பவர் நன்கு செய்வரேல் - ஒரு நாட்டினையாள்பவர் நன்கு செய்வார்களானல்; வாட்டிடும் பசி பிணி வருத்தலில்லையே மக்களை வாட்டுகின்ற பசியும் பிணியும் அவர்களை வருத்துதலில்லையாகும். sar-pi) 34
அரசன் சாயாது நீதி வழங்கல் வேண்டும்
635 அரியணை யரசன மர்ந்த போதினில்
அரியிருந் தானென வறைவ ராதலாற் சரிநிலை துலாவெனச் சார்பில் கோன்முறை புரிவதுன் கடனெனப் புந்தி கொள்ளுவாய்.
(@一命) அரியணை- சிங்காசனத்தில்; அரசன் அமர்ந்த போதினில் -அரசன் வீற்றிருந்த போதில்; அரி இருந்தானென-மகா விஷ்ணுவே இருந்தான் என்று அறைவராதலால் - மக்கள் சொல்லுவார்கள்

323
ஆதலால்; சரிநிலை து லா வெ ன - சமன் நிலையில் நிற்கும் துலாக் கோல் போன்று; சார்பில் . எப் பக்கமும் சார்பில்லாது; கோன் முறை புரிவது- செங்கோல்முறை செய்வது; உன் கடனெனப் புந்தி கொள்
ளுவாய்-உனது கடமையென்று புத்தியிற் கொள்ளுவாயாக. (எ-று) 改5
636 முறைசெயு மன்னனை முந்நீர் சூழ் புவி
இறையெனப் போற்றிடும் இயற்கை தன்வளங் குறைவறத் தந்திடக் குடிக ளின்புறும் அறைகழல் வேந்தனுக் கமரார் யாவரே.
(இ- ள்) முறை செயு மன்னனை - நீதி முறைப்படி அரசு செய் யும் அரசனை: முந்நீர் சூழ்புவி - கடலாற் சூழப்பட்ட இப் பூமியி லுள்ள மக்கள்; இறையெனப் போற்றிடும்-கடவுள் எனப் போற்றி டுவர்; இயற்கை தன்வளம் குறைவறத் தந்திட - இயற்கை தன்வ ளத்தைக் குறைவில்லாது தர குடிகள் இன்புறும் - குடி மக்கள் இன் புறுவர்; அறைகழல் வேந்தனுக்கு- அப்படி நீதி பரிபாலனம் செய்யும்" சத்திக்கும் வீரக் கழல்களை யணிந்த வேந்தனுக்கு அமரார் யாவரேபகைவர் யாவருளர்? (பகைவர் யாருமில்லை என்றபடி) (எ-று) 36
செங்கோல் வளைந்தால் அரசு அழியும்
637 கோன்முறை கோடிடிற் குடிகள் குன்றிடும்
வான்மழை பொய்த்திடும் வறுமை வாட்டிடும் ஆன் பயிர் அஃகிடும் அரசு வீழ்ந்திடும் தேன்பொழி தெரியலாய் தெவ்வும் வேண்டுமோ.
(இ-ள்) கோன்முறை கோடிடின்-செங்கோல் முறை நெறி தப் பினுல் குடிகள் குன்றிடும் - குடி மக்கள் மெலிவர்; வான் மழை பொய்த்திடும்- வானம் மழை பெய்யாது பொய்க்கும்; வறுமை வாட் டிடும்-வறுமைப்பிணி வாட்டும்; ஆன் பயிர் அஃகிடும் . பசுக்களும், பயிர் வகையும் சுருங்கும் குறையும்); அரசு வீழ்ந்திடும் - அதனல் அரசு வீழ்ந்திடும்; தேன்பொழி தெரியலாய் - தேனைப் பொழிகின்ற மாலையை யணிந்த மன்னனே! தெவ்வும் வேண்டுமோ - அவ்வரசு வீழ் வதற்கு வேறு புறப் புகையும் வேண்டுமோ? (வேண்டாம் என்றபடி) (T-A) - '' «

Page 179
324
நல்ாலட்சிக்குத் துணை 638 ஆன்ற நீதிநூ லறித லஃதறிந்
தான்ற வர்தமை யமைச்ச ராக்கிடல் நோன்ற தவத்தவர் நுவல்வ கேட்டிடல் தோன்று புகழ்தரத் துணையென் ருேருதி.
(இ- ள்) ஆன்ற நீதிநூல் அறிதல் -மாட்சிமைப்பட்ட நீதி நூல் களைப் படித்து அறிதல்; அஃது அறிந்து ஆன்றவர் தமை - அப்படி யான நீதி நூல்களைக் கற்றறிந்த அறிவுடையோரை அமைச்சராக்கி டல்; நோன் ற தவத்தவர்-தவஞ் செய்த தவசிரேஷ்டர் நுவல் வ கேட்டிடல் சொல்லுவனவற்றைக் கேட்டிடல்; தோன்று புகழ்தர - விளங்கும் புகழைத்தர, துணை என்று ஒருதி-துணையாகுமென்று அறி வாயாக. (எ-று) 38
9ே அறிவு மாற்றலும் ஆய்ந்த சூழ்ச்சியும்
இறுதி நேரினும் இடித்து ரைத்திடும் உறுதி யுந்நிறை யுண்மை யெண்ணரைப் பெறுதல் மன்னரைப் பிறங்க வைக்குமே. (இ-ள் அறிவும் - நல்லறிவும்; ஆற்றலும் நல்லாற்றலும்; ஆய்ந்த சூழ்ச்சியும்-ஆராய்ந்து ஆலோசனைகளையும உபாயங்களையும் சொல்லும் திறமையும்; இறுதி நேரினும் இடித்து உரைத்திடும் உறு தியும் -தனக்கு அரசனுல் மரண தண்டனே கிடைக்க நேரினும் அவ னுக்குச் சொல்ல வேண்டிய புத்திமதிகளை இடித்து உரைத்திடும் மன உறுதியும்; நிறை நிறையப் பெற்ற உண்மை எண்ணரை பெறுதல்ை உண்மையான, விசுவாசமுள்ள மந்திரிகளைப் பெறுதல்; மன்னரைப் பிறங்கவைக்குமே மன்னரைப் பிரகாசிக்க வைக்கும். (எ-று)
۴۰ (N60نی -ست."Jی (வி-ம்) உறுதியுந்நிறை-"ந்" ஒசை நோக்கி மிகுந்தது. 36
அரசனுக்கும் ஆட்சிக்கும் கேடுவிளைவிப்பவர்
640 நற்குண மற்றவர் நாட்டிற் பற்றிலர் உற்றுN நீங்கிடு முறவில் குழுநர் பற்றலர் புகழினைப் பரவும் பான்மையர் மற்றிவர் கேண்மையை மதித்தல் செய்கிலாய் (இ- ள்) நற்குண மற்றவர்-நற்குண்ங்களற்றவர்கள்; நாட்டில் பற்றிலர்-நாட்டுப் பற்றில்லாதவர்கள்; உற்றுமி நீங்கிடும் -துன்புறுங்

326
காலத்தில் நீங்குகின்ற உறவில்-மெய் உறவில்லாத; சூழுநர்-சுற்றத் தவர்; பற்றலர்-பகைவரின் புகழினைப் பரவும் பான்மையர் - புக ழைப் பரப்பும் (சொல்லும்) குணமுடையவர்; மற்றிவர் கேண்மையை - மற்றும் இவர் போன்றவர் நட்பை; மதித்தல் செய்கிலாய் - மதிக் காதிருப்பாயாக. (எ-று) 40
64. இச்சகம் பேசுநர் இலஞ்சம் வாங்குநர் நச்சக நகைமுக நயமில் வஞ்சகர் அச்சமில் காதகர் அயல வன்பொருள் நச்சிடுந் தீயவர் நஞ்சென் றெண்ணுதி.
(இ ள்) இச்சகம் பேசுநர்- முகமன் பேசுகிறவர்கள்; இலஞ்சம் வாங்குநர்-கைக்கூலி வாங்குபவர்கள்; நச்சக நகைமுக நயமில் வஞ்: சகர்- நெஞ்சில் நஞ்சும், முகத்தில் சிரிப்பும் கொண்ட நயமில்லாத வஞ்சகர்; அச்சமில் காதகர்- சிறிதும் பயமில்லாத கொலையாளிகள அயலவன் பொருள் நச்சிடும் தீயவர்-அயலவன் பொருளை விரும்பும் தீயவர்: (ஆகியோர் நஞ்சென்று எண்ணுதி-நஞ்சு போன்றவர் என்று எண்ணுவாயாக. (எ-று) 4
642 பிறனில் விழைபவர் பெருங்கா மத்தினர்
அறனில் வழுவிடு மற்ப மங்கையர் நறவைச் சூதினை நயக்கும் நாணிலர் உறவை யொருவுதி ஒண்மை வேண்டுமேல்,
(இ- ள்) பிறனில் விழைபவர் - பிறன் ம%னவியை விரும்புபவர்; பெருங்காமத்தினர் - தணியாத பெரிய காமத்தையுடையவர்; அற னில் வழுவிடும் அற்ப மங்கையர்-கற்பு நெறியாகிய தருமத்தில் வழு விடும் அற்பகுணமுள்ள மங்கையர்; நறவை-கள்ளை; சூதினை- சூதாட் டத்தை நயக்கும் நாணிலர் - விரும்பும் நாணமில்லாதவர்; (ஆகி யோரின்) உறவை ஒண்மை வேண்டுமேல் ஒரு வு தி - ஆகியோரின் உறவை, உனக்கு நன்மை வேண்டுமானுல் விலக்குவாயாக. (எ-று) 4名
காத்தல்
648 வருபகை யெறிதலும் வளரு முட்பகை
கருவினி லழித்தலுங் கடலிற் காட்டினில் அருநிலத் திற்பொருள் அலைக்குங் கள் வரைக் குருதிவை வேலினய் கோறல் கொள்கையே.

Page 180
326
(இ-ள்) வருபகை எறிதலும்-தன்மேற் படையெடுத்து வரும் பகைவரை மோதி வெல்லுதலும்; வளரும் உட்பகை கருவினில் அழித் தலும் - வளர்ந்துவரும் உட் பகையை தொடக்கத்திலேயே அழித்த லும்; கடலில் கடலிலும்; காட்டினில் - காட்டிலும்; அரு நிலத்தில் - பாஜல நிலத்திலும்; பொருள் அலைக்குங் கள்வரை-பொருளை வழிப் பறி செய்யும் கள்வரை குருதிவை வேலினய் - இரத்தம் தோய்ந்த கூர்மையான வேலையுடைய மன்னனே! கோ ற ல் கொள்கையே - கொல்லுதல் அரசருக்குரிய கொள்கையேயாகும். (எ-று)
(வி-ம்) ஆறலைத்தல் வழிப்பறித்தல், இங்கே அலைக்கும் என் றது பறிக்கும் என்னும பொருளைத் தரும். 玺°
644 காற்படை கரிப்படை கலின மாப்படை
தேர்ப்படை யாயவை தேர்ந்து காத்தலும் வேற்படை விற்படை விளங்கு வாட்படை போர்ப்படைக் கலங்களைப் புதிய வாக்கலும்,
( இதுவும் அடுத்த பாட்டும்குளகம் )
645 நாற்கடல் மீதுசெல் நாவாய் கூட்டலும்
வேற்றுவர் நாட்டினில் வேவு பார்த்தலும் போற்றுநர் ஒம்பலும் புவியை யாள்பவர்க் கேற்றமென் றுணருதி இலங்கு பூணினய்.
(இ-ள்) இலங்கு பூணினய் - விளங் கும் பூண்களையணிந்த வேந்தே காற்படை-காலாட்படை கரிப்படை-யானைப்படை கலி னமாப்படை கடிவாளம் பூட்டப்பட்ட குதிரைப்படை தேர்ப்படை ஆயவை தேர்ந்து காத்தலும்; வேற்படை, விற்படை, விளங்கும் வாட்படை போர்ப்படைக் கலங்களே முதலாய போர்ப்படைக் கலங் களையெல்லாம்; புதியவாச்கலும் - ஆயுகஞ் செய்யும் கம்மாளரிடங் கொடுத்துச் சாணை பிடித்தும் கூர்மையாக்கியும், புதுப்பித்தலும். (அடுத்த பாட்டில் முடியும்) (எ-று) 44
நாற்கடல் மீதுசெல் நாவாய் கூட்டலும்-நாற்கடலில் செல்லும் கப்பற் ருெகையைப் பெருக்கலும்; வேற்றுவர் நாட்டினில் வேவு பார்ததலும்- பிறருடைய நாட்டில் ஒற்றுப் பார்த்தலும் போற்று முனர் ஒம்பலும் - சுற்றத்தாரையும் உறவினரையும் பாதுகாத்தலும்; புவியை ஆள்பவர்க்கு - பூமியை அரசாளும் அரசர்களுக்கு ஏற்ற மென்று உணருதி - மேன்மையைத்தரும் என்று உணர்வாயாக, (6T - p! 45

3
2
அரண்
648 அரணெனப் படுபவை அசில் ஆட்சியும் புரையில போர்வல பொங்கு தானையும் தரைவெளி யரணியம் தரங்கம் திண்மதில் வரையெனப் புகலுவர் வாகை வேலினுய்.
(இ-ள்) அரண் எனப்படுபவை - அரண்களென்று சொல்லப் பெறுபவை; ஆசு இல் ஆட்சியும் - குற்றமில்லாத அரசாட்சியும்; புரை இல-குற்றமில்லாத போர்வல - போர்த்தொழிலில் வல்லமையுள்ள பொங்கு தானையும் - போரென்றவுடன் கிளர்ந்தெழும் படையும்; தரைவெளி-(வெளித்தரை என மாற்றுக) வெளி நிலமும்; அரணி யம்-காடும்; தரங்கம் - கடலும், திண்மதில் -திண்ணிய மதிலும்; வரை -மலையும்; எனப் புகலுவர்- எனச் சொல்லுவர்; வாகை வேலினய் - வெற்றியையுடைய வேலை ஏந்திய மன்னனே. 、er一aル
(வி-ம்) தரை வெளி என்பதை வெளித்தரை என மாற்றுக. தரங்கம் - கடல்; நீரிடை அகழியையும் சேர்க்க. 46
வாழ்த்து 4ே7 மன்னுக மனுநெறி மறையுஞ் சைவமும்,
மன்னுக மன்னவன் மாசில் கோன்முறை மன்னுக மண்ணினில் மாரி நல்வளம் மன்னுக மன்னுயிர் மன்ன நின்புகழ், (இள்ை) மனுநெறி மன்னுக-மனுநெறி நிலைபெறுக: மறையுஞ் சைவமும் மன்னுக-வேதமும், சைவமும் நிலைபெறுக; ம ன் ன வ ன் மாசில் கோன்முறை மன்னுக - அரசனின் குற்றமற்ற செங்கோன் முறை நிலைபெறுக, மண்ணில் மாரி, நல்வளம் மன்னுக - பூமியில் மாரியும், நல்வளமும் நிலைபெறுக; மன்னுயிர் மன்னுக -மன்னுயிர்கள் நிலைபெறுக. மன்ன நின்புகழ் மன்னுக-மன்னனே நின் புகழ் நிலை பெறுக, (எ-று) 47
சத்தியவான் கூறியது
648 இன்னவை நாரத னியம்ப மன்னனும்
பொன்அவிர் மணிமுடி புவியிற் ருழ்த்திநீர் சொன்னவை கொண்டனம் சுருதி வாக்கென
என்னவை செய்தவம் என்ணுே வென்றனன்.

Page 181
328.
(இ- ள்) இன்னவை -இத் தன்மையர்னவைகளை நாரத ன் இயம்ப - நாரத மூனிவர் எடுத்துச் சொல்ல; மன்னனும்- சத்தியவா னும், பொன் அவிர் மணிமுடி புவியில் தாழ்த்தி - பொன் ஒளி வீசும் மணிமுடியை பூமியிற் படும்படி தாழ்த்தி; நீர் சொன்னவைநீர் சொன்னவற்றையெல்லாம்; சுருதி வாக்கெனக் கொண்டனம்வேத வாக்கென மனத்திற் கொண்டனம்; என் அவை செய்தவம் என்னே-என்னுடைய அரசவை செய்ததவம் என்னே? என்றனன். (ጫrማ=ül)
(வி-ம்) எனது அவைக்கு நீர் வந்து இந்த அரிய புத்திமதி களைச் சொன்னீர். இவற்றைக் கேட்க யானும் எனது அவையும் என்ன தவத்தைச் செய்தோமோ" என்ருன் என்றபடி, 43
மன்னன் உலாப் போதல்
வேறு
649 மந்திரி யெழுந்து மன்ன
மாநகர் மக்க ளெல்லாம்
உந்திருக் கோலங் காண
உலாவர வேண்டு கின்றர்
சந்திர மெளலி கோவில்
சார்ந்தவன் பூசை கண்டு
வந்தனை செய்து மீளும்
வழக்குமொன் றுண்டா மென்முன்.
(இ-ள்) மந்திரி எழுந்து-முதன் மந்திரி எழுந்து; மன்னு-அர சனே மாநகர் மக்கள் எலலாம்-பெருமை மிக்கி இந்த நகரத்து மனித ரெல்லோரும்; உம் திருக்கோலம் காண உமது அழகி அரச கோலத் தைக் காண, உலாவர நீர் அரச உாவில் வர வேண்டுகின்ருர்விரும்புகின்ருர் சந்திா மெளலி கோவில் சார்ந்து. சந்திர மெளலீசு ரன் கோவிலை யடைந்து அவன் பூ ைகண்டு அப் பெருமானின் பூசையைக் கண்டு வந்தனை செய்து-ம்பிட்டு வழிபாடு செய்து மீளும் வழக்கும் ஒன்று உண்டாம் என்றன் - மீண்டுவரும் பரம் பரையான வழ4 சமும் ஒனது உண் 1 m ப0 எ ன் று பணிவாகக் கூறினன். í67-g', ᏎᏭ

323°
650 அரசனு மிசைந்தா னகி
அனைவரு மெழுக வென்முன்
நரலையி ஞேதை யென்ன
நாற்றிசை துழனி பொங்க
முரசொடு பேரி யார்த்த
முழங்கின சங்கு காளம்
அரசுவா தன்னைப் பாகர்
அழகுறக் கோலஞ் செய்தார்.
(இ-ள்) அரசனும் இசைந்தா கிை சத்தியவானும் அதற்கு உடன்பட்டு; அனைவரும் எழுக என்ருன்-எல்லோரும் புறப்படுங்கள் என்ருன், நரலையின் ஒதை என்ன-கடலின் பேரொலி என்னும்படி: நால் திசை துழனி பொங்க நாலு திசையும் ஒலி பொங்க முர சொடு பேரி ஆர்த்த - முரசுடன் பேரிகையும் ஒலித்தது; சங்கு காளம் முழங்கின. சங்கும் காளமும் பேரொலி செய்தன; அரசு உவா தன்னை - பட்டத்து யானையை; பாகர் அழகுறக் கோலஞ் செய்தார் - யானைப் பாகர்கள் அழகாக ஒப்பனை செய்தார்கள். (எ ~று) 50
யானையை அலங்கரித்தல்
65 கத்தெறி கடாக்க ளிற்றைக்
கங்கைநன் னீரி லாட்டிச் சிந்துரக் குழம்பால் மெய்யிற்
சித்திரக் கோலந் தீட்டிச் சுந்தரக் கலிங்கம் போர்த்துச்
சுடர்மணி யோடை சேர்த்தி இந்துவின் கீறேய் கோட்டில்
இலங்கு கிம்புரி யணிந்தார்.
(இ-ள்) கந்து எறி-கட்டுத்தறியை முறிக்கும்; கடாக்களிற்றை -மதம் பொருந்திய ஆண் யானையை, கங்கை நல் நீரில் ஆட்டி - கங்கையின் நல்ல நீரிற் குளிப்பாட்டி; சிந்துரக் குழம்பால்-சிவந்த குங்குமக் குழம்பால்; மெய்யில் - அதன் உடம்பில்; சித்திரக் கோலம் தீட்டி-அழகிய கோலங்களை எமுதி; சுந்தரக் கலிங்கம் போர்த்துஅழகிய போர்வையைப் போர்த்து; சுடர்மணி ஒடை சேர்த்தி ஒளி ரும் மணிகள் பதித்த நெற்றிப் பட்டத்தை இணைத்து; இந்துவின்கீறுஏய் கோட்டில்-பிறைச் சந்திரனை யொத்த கொம்பில் (தந்தத்

Page 182
3ä0
தில்); இலங்கு கிம்புரி அணிந்தார்-விளங்குகின்ற கிம்புரியை அணிந் தார்கள் (எ-று)
(வி-ம்) கிம்புரி - யானைக்கொம்பிலனியும் பூண். யானை யி ன் "மெய்" என்று சொல்லலாமா என்பார்க்கு - கம்ப இராமாயணம் சித்திரகூடப் படலத்தில் "மெய்கள் நோகின்ற பிடிகள்' என வரு தல் காண்க. 5麗
652 கொங்கவிழ் கதம்ப மாலை
கொழுங்கதிர் ஆரம் தூக்கிப்
பொங்கொலி மணிகள் வீழ்த்திப்
பொலன் தவி சபரத் தேற்றி
அங்கதக் கவளந் தீற்றி
அங்குச மேந்து பாகர்
வெங்கண்மால் வேழந் தன்னை
விடுத்தனர் கோயில் முன்னே.
(இ-ள்) கொங்கு அவிழ் - வாசனையும் கள்ளும் கட்டவிழும்; கதம்ப மாலை - பல பூக்களாலான மாலையும்: கொழுங்கதிர் ஆரம்குளிர்ச்சிபொருந்தி ஒளி வீசும் ஆரமும்; தூக்கி; பொங்கு ஒலி மணி கள் வீழ்த்தி - மிகுதியாக ஒலி செய்யும் மணிகளைத் தூங்கவிட்டு: பொலன் தவிசு அபரத்து ஏற்றி-பொன்னுலான ஆசனத்தை முது கில் ஏற்றி அங்கதக் கவளம் தீற்றி - யானை உணவு உருண்டையை ஊட்டி, அங்குசம் ஏந்து பாகர், வெங்கண்மால் வேழந் தன்னை - வெவ்விய கண்ணையுடைய, மயக்கங்கொண்ட யானைய்ை; கோயில் முன்னே விடுத்தனர் - அரண்மனையின் முன்னே கொண்டு வந்து விட்டார்கன். (எ-று)
(வி-ம்) அங்கதம்-யானை உணவு. கவளம்-வாயளவு கொண்ட உருண்டை. மணிகள் வீழ்த்துதல்-மணிகளைக் கயிற்றிற் கட்டி இரு பக்கமும் தூங்கவிடல். 52
மன்னனும் பரிவாரமும் புறப்படல்
653 அன்னமு மலங்க லானும் அரசுவா மீத மர்ந்து முன்னணி பாய்மாத் தான
முடியுடை மன்னர் செல்லக்

கன்னியர் கவரி வீசக்
கட்டியங் கணத்தார் கூறப்
பொன்னவிர் கோயில் நீங்கிப்
புறநக ருலாவிற் போந்தார்.
(இ-ள்) அன்னமும்-அன்னத்தின் நடையை ஒத்த நடையை யுடைய சாவித்திரியும்; அலங்கலானும் - அசைகின்ற மாலையை யணிந்த சத்தியவானும்; அரசு உவா மீது அமர்ந்து - - பட் 1 -த்து யானையின் மீது ஏறி அமர்ந்து; முன்னணி -- முன்னுக்கு அணியாக; பாய்ம 7 -குதிரை தா ன -படை முடியுடை மன்னர்முடியையுடைய குறுநில மன்னர் செல்ல; கன்னிபர் கவரி வீச-கன் னிப் பெண்கள் சாமரை இரட்ட கணத்தார் - ஊர்த் தலைவர் கட் டியங்கூற: போன் அவிர் கோயில் நீங்கி - பொன் ஒளிரும் அரண் மனையை நீங்கி; புறநகர் உலாவிற் போந்தார்-புறநகர் உலாச் சென் ருர்கள். (எ-று) 53
உலாப் போன காட்சி
வேறு
854 பரியொடு கறையடி பாந்தன கடலென
அரியுயர் கொடியுடன் அசைவன புணையென கரிபுடை பெயர்வன கருமலை நிகர்வன பரியுளை துயல்வரல் படரலை புரையுமால்.
(இ- ள்) பரியொடு-குதிரையோடு; கறையடி-யானைகள்; கடல் என பரந்தன; அரி-தேர்; உயர் கொடியுடன் - உயர்ந்த கொடியு டன்; அசைவன-அசைந்து செல்வன, புணை என - மரக்கலம் என் னும்படி இருக்கும்; கரி-யானை, புடைபெயர்வன - வெளியேறுவன: கருமலை நிகர்வன-கரிய மலைகளை நிகர்வனவாகும்; பரி உளை - குதி ரையின் பிடர் மயிர் துயல் வரல் -அசைதல்; படர் அலை - படர் கின்ற அலையை புரையும்-ஒக்கும். (எ-று) ஆல் - அசை.
(வி- ம்) குதிரைகளும் யானைகளும் பரந்து செல்லுதல் பரந்த கடலைப் போல். கொடியையுடைய தேர்கள் செல்லுவது - அக் கட லில் செல்லும் மரக்கலங்கள் போல்; யானைக :-கடல் நடுவே கரிய குன்றுகள் போல் காட்சியளித்தன; குதிரையின் பிடர் மயிர் அசை தல்-கடல் அலைபோல் தோன்றின, 54

Page 183
332
855 வெண்ணிறக் கதலிகை விரிகுடை யசைவன
வெண்ணிறக் குருகினம் விரிந்தணி வகுத்தபோல் கண் வலை விரித்திடுங் கயல்விழி வனிதையர் கண்வலை விரித்துமீன் கவர்பவர் நிகர்வரால்.
(இ-ஸ்) வெண் நிறக் கதலிகை - வெண்ணிறக் கொடிகளும்; விரிகுடை-வெண்ணிறமான விரித்த குடைகளும்; அசைவன: வெண் நிறக் குருகினம் - வெண்ணிறக் கொக்குகள் (நீர்ப் பறவைகளும்): விரிந்து அணிவகுத்தபோல்-கடல்மேல் விரிந்து அணிவகுத்துச் செல் வதுபோல் கர்ணப்படும்; கண்வலை விரித்திடும் கயல்விழி வனிதையர்கண்ணுகிய வலையைவிரித்து காளையரைக்கவரும் கயல்போன்ற விழி களையுடைய மாதர்; கண்வலை விரித்து. கண்களுள்ள வலையை விரித்து: மீன்கவர்பவர். மீன்களைக் கவர்பவரை; நிகர்வர் - ஒப்பர். (எாறு
ஆல் - அசை. 莎高
656 திரைசெறி கடன் மிசைத் தினகர னெழுந்தென
அரசனுங் கரிமிசை அணிபெற வலம்வர முரசொடு துடிதவில் முழவினம் முழங்கின பரசினர் குடிசனம் பணிந்தனர் பகைவரே.
(இ~ள்) திரை செறி கடன்மிசை-அலைகள் நெருங்கிய கடலின் மேலே தினகரன் எழுந்தது என-சூரியன் எழுந்ததுபோல்; அரச னு: கரிமிசை - அரசனும் யானை மீது: அணிபெற வலம்வர - அழகு பெற வலம்வர முரசொடு, துடி தவில், முழவினம் முழங்கின - ஒலித்தன; குடிசனம் பரசினர்-குடி மக்கள் துதித்தனர்; பகைவர் பணிந்தனர்-பகைவர்கள் பணிந்தார்கள். {ள ~று) ஏ-அசை 56
857 மலர்மழை பெய்தனர் மடமயில் மங்கையர் அலர்முடி சூட்டினர் அரிநெடுங் கண்ணியர் சிலர்பணி நீரினைச் சிவிறினர் சென்னியிற் பலர்புகழ் பாடினர் பரவினர் போற்றினர்.
(இ-ள்) மடமயில் மங்கையர்-மடமயில் போலும் பெண்கள்; மலர்மழை பெய்தனர் - மலர் மாரி பொழிந்தனர்; அரிநெடுங் கண் ணியர்-செவ்வரி படர்ந்த நெடிய கண்களையுடைய பெண்கள்; அலர் முடி சூட்டினர் - மாலைகளை அரசனின் முடியிற் சூட்டினர்; சிலர் பணி நீரை. சிலர் குளிர்ந்த பன்னீரை; சென்னியில் சிவிறினர் - அரசனு டைய தலைமேல் விசிறினர்; பலர் புகழ்பாடினர்-பலர் அரசனுடைய புகழைப் பாடினர்கள்; பரவினர் போற்றினர்-அரசனை வண்ங்கினர்,
துதித்தனர். (எ-று) 57

333
658 பூரண பொற்குடம் பொன்மலர்க் கோடிகம்
கார்கில் சந்தனம் கற்புரை பாளிதம் வாரணி வெம்முலை வஞ்சிய ரேந்தியே நேரணி சென்றனர் நீரர மாதர்போல்.
(இ-ள்) பொன் பூரண குடம்-பொன்னலான பூரண கும்பம் : பொன்மலர்க் கோடிகம் - பொன்னுற் செய்த பூந்தட்டு; காரகில்-கரிய அகில்; சந்தனம்; கற்புரை-சாம்பிராணி, பாளிதம் - கருப்பூரம்: வாரணி- கச்சையணிந்த வெம்முலை - விருப்பத்தையுண்டுபண்ணும் முலையையுடைய; வஞ்சியர் ஏந்தியே - வஞ்சிக்கொடி போன்ற பெண் கள் ஏந்தியபடி; நீரர மாதர் போல் - நீரில் வாழ் தெய்வப் பெண் களைப்போல்; நேரணி - நோாகவும் வரிசையாகவும் சென்றனர். Greg) 53
859 அலைகடல் மீமிசை அரவணைச் செல்வனும் அலைமக ஞம்மிருந் தருளிய போலுமே சிலைநிகர் திண்புயச் சினக்களிற் றண்ணலுஞ் சிலைநுதற் செல்வியுஞ் சிவணிவி ளங்கினர்.
(இ-ள்) அலைகடல் மீமிசை-பாற்கடலின்மீது; அரவணைச் செல் வனும் பாம்பிற் பள்ளிகொள்ளும் விஷ்ணுவும்; அலைமகளும் இலக் குமியும்; இருந்தருளிய போலுமே - இருந்து அருளியது போலவே சிலைநிகர்-கல்லை மலையை) ஒத்த: திண்புய - திண்ணிய புயத்தையு டைய சினக்களிற் று - கோபங்கொண்ட யானையையுடைய; அண்ண லும்-சத்தியவானும், சிலைநுதற் செல்வியும் வில்லையொத்த புரு வத்தையுடைய சாவித்திரியும்; சிவணி-சேர்ந்து விளங்கினர்-விளங் சிஞர்கள். (எ-று) 59
சத்தியலா?னக் கண்டி மாதரின் நிலை
வேறு
660 ஆம்பலின் மீத மர்ந்தவ்
வநங்கனு மணங்குஞ் செல்லக் காம்புறழ் கன்னி நல்லார்
காணிய ஈண்டி நின்றர்

Page 184
334
தேம்பிழி தெரியல் மார்பன்
- திருவுரு உள்ளங் கொண்டே
ஏம்பலித் திளைத்தா ரின்ப
மெய்துத லென் ருே வென்ருர்,
(இ-ள்) ஆம்பலின் மீதமர்ந்து -ய்ானையின் மீதமர்ந்து; அவ் அநங்கனும் அணங்கும் செல்ல - அந்த மாரனையொத்த சத்தியவா ஜம், தெய்வப் பெண்ணபொத்த சாவித்திரியும் செல்ல; காம்பு உறழ் கன்னி நல்லார்-மலர்க்கொம்பையொத்த பெண்கள்; காணிய ஈண்டி நின்ருர்- அவர்களைக் காணும்பொருட்டு நெருங்கி நின்ருர்கள்; தேம்பிழி தெரியல் மார்பன் - தேனப் பிழிகின்ற மாலையையணிந்த மார்பினையுடைய சத்தியவானின்; திரு உரு உள்ளங் கொண்டே அழ கிய உருவத்தை மனத்திற் கொண்டு; ஏம்பலித்து இளைத்தார்-மயங்கி இளைப் டைந்தார்கள் இன்பம் எய்துதல் என்ருே என் , ர் - அவனைக் கூடி இன்ப மெய்துதல் என்றைக்கோ என்றர்கள். (எ-று) ᏮᎾ
66 ஏழ்டரித் தேரி னேறி
எரிகதிர் இரு நீர் ஞாலஞ்
சூழ்வருந் திசையே நோக்குஞ் சூரிய காந்தி போலத்
தோள்வரை புரையு மன்னன் தும்பிமீ தூர்ந்து செல்ல
யாழ்மொழி மடவார் கண்கள்
யாவுமத் திகையே நோக்கும்.
(இ - ள்) ஏழ்பரித் தேரின் ஏறி -ஏழு குதிரைகள் பூட்டிய தேரி லேறி, எரிகதிர்-கதிரவன்; இருநீர் ஞாலம் - கடல் சூழ்ந்த உல கத்தை; சூழ் வரும் திசையே நோக்கும் -சுற்றிவர, அத்திசையையே நோக்கும்; சூரிய காந்தி போல --குரியகாந்தி மலரைப்போல; வரை புரையும் தோள் மன்னன் -மலை போன்ற தோள்களையுடைய சத்திய வான்; தும்பிமீது ஊர்ந்து செல்ல -யானைமீது ஊர்ந்து செல்ல : யாழ்மொழி மடவார் கண்கள் யாவும் - யாழின் இசை போன்ற மொழியைப் பேசும் பெண்களின் கண்களெல்லாம்; அத்திகையே நோக்கும் -அந்தத் திக்கையே நோக்கி நிற்பவையாயின. (எ-று) 6 ! 662 கருப்புவில் மலரம் பேந்துங்
காமனே கிரவுஞ் சப்பேர்ப் பொருப்பினைப் பொடி செய் வேற்கைப்
புராந்தகன் குமாரன் ருனே

335
இருப்பினைக் காந்தக் கட்டி
யிழுத்திடு மாறு போலெம்
விருப்பினைத் தூண்டி யீர்த்து
வெதுப்புமிக் காளை யென்ருர்,
(இ-ள்) இருப்பினை - இரும்பை; காந்தக்கட்டி இழுத்திடுமாறு போல--காந்தக்கட்டி தன்பால் இழுத்திடும் தன்மைபோல; எம் விருப் பினத் தூண்டி - எமது ஆசையைத் துண்டி; ஈர்த்து - தன்பால் இழுத்து வெதுப்பும்-எம்மை மெலிவிக்கும்; இக் காளை-இந்தக் கட் டிளமையோன் கருப்பு வில் மலரம்பு ஏந்தும் - கருப்பம் வில்லையும் மலரம்பையும் ஏந்துகின்ற; காமனே-மன் மதனே? கிரவுஞ்சப் பேர்ப் பொருப்பினைப் பொடிசெய் வேற்கை-கிரவுஞ்சமென்னும் பெரிய மலை யைப் பொடிசெய்த வேலைக் கையிற் றங்கியவனும்; புராந்தகன் குமா ரன் தானே-திரிபுரங்க%ளயெரித்த சிவபெருமானுடைய குமாரனுமா கிய முருகக் கடவுளோ? என்ருர்-என்று பெண்கள் சொன்னர்கள், (எ-று) 62
663 கன்னலின் மொழியா ரிந்தக்
காமனுக் கேவல் செய்யும் நன்னலந் தானு மில்லேம்
நம்முளங் கொள்ளை கொண்ட மன்னவன் மருங்கி ருந்து
மான்மயிர்க் கவரி வீசும் மின்னிடை மட வார் நோற்ற
மிகுதவ மெதுவோ வென்றார்.
(இ- ள்) கன்னலின் மொழியார் - கரும்பையொத்த இனி ய மொழியைப் பேசும் மாதர்; இந்தக் காமனுக்கு-இந்தக் காம சொரூ பணுக்கு; ஏவல் செய்யும் - ஏவல் செய்கின்ற; நன்னலந்தானும் இல் லேம்-சிறந்த நலந்தானும் இல்லேம்; நம்முளங் கொள்ளை கொண்ட -எம் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட மன்னவன் மருங்கிருந்து - மன்னனின் பக்கத்தில் இருந்து; மான்மயிர்க் கவரி வீசும் - சாமரை வீசுகின்ற; மின்னிடை மடவார் -மின்னற்கொடிபோன்ற இடையை யுடைய பெண்கள்; நோற்ற மிகு தவம் எதுவோ என்ருர் - செய்த மிகுந்ததவம் எதுவோ என்று கூறினுர்கள். (எ-று) 63
664 சங்குலாம் பழனஞ் சூழும்
சாலுவ நாட்டு வேந்தன் மங்குலா மென்ன வாரி
வழங்கிடும் வள்ள லென்பு

Page 185
கங்குலாங் காந்த ளங்கைக்
கன்னியர்க் கருளா ஞகிற்
கொங்குலாம் மாலை மார்பன்
கொடைவண மென்னே யென் முர்.
(இ-ள்) சங்கு உலாம்-சங்குகள் உலாவும்; பழனஞ் சூழும்வயல்கள் குழுகின்ற; சாலுவநாட்டு வேந்தன்; மங்குலா மென்னமேகம் என்று சொல்லும்படி வாரி வழங்கிடும் வள்ளல் என்ப வாரி வாரிக்கொடுக்கின்ற கொடையாளி என்டர்; சங்கு உலாம் - கைவளை ய்சைகின்ற; காந்தள் அம்கை-காந்தட்பூப் போலும் அழகிய கைகளை யுடைய, கன்னியர்க்கருளாலகில்-கன்னியருக்கு அருள் செய்யானுகில்: கொங்குலாம் மாலை மார்பன் - வாசனை தவழும் மாலையையணிந்த ரிார்பினையுடைய சத்தியவானின்; கொடைவண மென்னே யென்ருர் - வள்ளற்றன்மை என்னே! என்ருர்கள். (எ ~று) ,64
சத்தியவானைக்கண்ட ஒவ்வொருத்தி பட்டநிலை
665 வில் உமிழ் வைரப் பைம்பூண்
விரைமலர் மாலை நாலுங்
கல்உறழ் தோளி ஞனின்
கவினெலாங் காண வ்ேண்டிக்
கொல் அயில் கோட்டு நால்வாய்க் குஞ்சரந் தன்னை நோக்கி
மெல்ல நீ செல்க வென்று
மெல்லிய லொருத்தி சொற்ருள்.
(இ- ள்) வில் உமிழ் - ஒளியைக் கக்குகின்ற வைரப் பைம்பூண் - வைரம் பதித்த பொன்னுபரணமும்; விரை மலர் மாலை - வாசம் பொருந்திய மலர் மாலையும்; நாலும் - தொங்கும்; கல் உறழ் தோளினு னின்-கல்லை ஒத்த தோள்களையுடைய சத்தியவானின் கவினெலாம் காணவேண்டி-எழில் எல்லாவற்றையும் காண விரும் பி: கொல் அயில் கோட்டு நால்வாய்க் குஞ்சரம் தன்னை நோக்கி - கொல்லுத் தொழிலையுடைய கூர்மையான கொம்புகளையும் தூங்கும் வாயையு முடைய யானையை நோக்கி; நீ மெல்ல செல்க என்று-நீ ஆறுதலாகச் செல்வாயாக என்று; மெல்லியல் ஒருத்தி சொற் ரு ஸ் - மெல்லிய இயல்பையுடைய பெண்ணெருத்தி சொன்னுள். (எ-று) 65

837
666 முத்துறழ் மூரற் செவ்வாய்
முழுமதி முகத்தொ ருத்தி தைத்தவேள் அம்பி ஞலே
தன்னிறை யழிந்தா ளம்மா வைத்தகண் வாங்கா ளாகி
வள்ளலைத் தனதுள் ளத்திற் சித்திர மெழுதி நீங்காச்
சிறையினி லடைத்துக் காத்தாள்.
{இ-ள்) முத்து உறழ் - முத்தையொத்த; மூரல் - பல்லும்: செவ்வாய்-சிவந்த வாயும்; முழுமதி முகத்தொருத்தி பூரண சத்தி ரன் போலும் முகத்தையுமுடைய ஒரு பெண்; தைத்தவேள் அம்பி ஞலே-தைத்த மன்மதனுடைய அம்பினலே; தன் நிறை அழிந்தாள் அம்மா" தன்னுடைய கற்பு அழிந்தவளாணுள்; வைத்த கண் வாங்கா ளாகி-சத்தியவானின் மேல் வைத்தகண் வாங்காதவளாய் வள்ள லேத் தனது உள்ளத்தில் -சத்தியவானத் தனது மனத்திரையில்; சித் திரம் எழுதி - சித்திரமாக எழுதி நீங்காச் சிறையினில் அடைத்துக் காத்தாள் அவரை நீங்கிப் போகமுடியாதபடி தன் மனச் சிறையில் 'அடைத்துக் காத்து வைத்தாள். (எ-று) 66
687 சீதவார் சேற்கண் சேப்பச்
செய்யவாய் வெளுப்ப மிக்க காதலா ற் கனிந்தொ ருத்தி காவலன் வசத்த ளாகி மாதரார்க் கமிர்த மன்னன் , மலையெனப் பரந்த மார்பிற் கோதையாய்க் குலாவும் பேறுங்
கொகர் டிலே னெனக்க லுழிந்தாள்.
(இ-ள்) சீதவார் சேல்கண் சேப்ப - குளிர்ச்சி பொருந்திய, நீண்ட கயல்போலுங் கண்கள் சிவக்க, செட்யவாய் வெளுப்ப --சிவந்த வாய் வெளுப்படைய; மிக்க காதலால் கனிந்து மிகுந்த காதலால் கனிவுடையவளாய்; ஒருத்தி-ஒருபெண்; காவலன் வசத்தளாகி-சத்தி யவானின் ஆசை வசத்தளாகி; மாதரார்க்கு அமிர்தம் அன்ஞன்பெண்களுக்கு அமிர்தம் போல்வானின்; மலேயெனப் பரந்த மார்பில்மலைபோலப் பரந்த மார்பிலே; கோதையாய்க் குலாவும் பேறும் -

Page 186
33
மர்லேயாக நட்பாடும் பெறு பேறும்; கொண்டிலேன் என-கொண் டேனில்லையென்று கலும்ந்தாள் - கண்ணிர்விட்டு மனம் உருகிளுள் (6t-g)
(வி-ம்) குலாவுதல் - நட்பாடுதல், அளவளர்வுதல், சஞ்சரித் தில் கலும்தல் - உருகுதல் கலங்குதல், அழுதல் 67
66 விலங்கிவில் உமிழும் பைம்பூண்
வெம்முலை மா தொ ருத்தி அலங்கலம் மாலை வேந்தன்
அகலமும் அயில்வேல் தாங்கும் உலங்கெழு தோளுங் காணுரஉ
உற்றதோர் விரகந் தன்னுற் கலங்கிநீள் கம்ப மொன்றைக்
களிப்புறத் தழுவி யார்ந்தாள். (இ-கள்) விலங்கிவில் உமிழும் பைம்பூண் - விட்டுவிட்டு ஒளிகா லும் பொன் ஆபரணங்களையணிந்த, வெம்முலை மாது ஒருத்தி - காமத்தால் வெப்பமெய்திய முலைகளையுடைய பெண்ணுெருத்தி; அலங் கல் அம்மால் வேந்தன்-அசைகின்ற அழகிய மாலையணிந்த வேந்த னுடைய; அகலமும்-மார்பும் அயில்வேல் தாங்கும் - கூர்மையான வேலைத்தாங்கும்; உலம் கெழு தோளுங்காணுஉ -கருங்கல்லையொத்த தோள்களையும் கண்டு; உற்றதோர் விரகந் தன்ஞல்-அடைந்த காம நோயிஞல்; கலங்கி-மதி மயங்கி. (மணங்குழம்பி); நீள் கம்பமொன்றை -நீண்ட தூண் ஒன்றை களிப்புறத் தழுவி-மகிழ்வடையக் கட்டித் தழுவி ஆர்த்தாள்-மகிழ்ந்தாள். (எ-று) 68
669 வைவடி வேலொண் கண்ணி
வல்லவோர் சிற்பி தன்னுற் கைவரக் கடைந்தெ டுத்த
கவின்பெறு பாவை யன்னுள் மைவரை பழித்த தோளான் மார்பக மாலை மீது தைவரு தென்ற லென்மெய்
தடவலால் உய்ந்தே னென்ருள். (இ-ள்) வைவடி வேல் ஒண் கண்ணி - கூர்மையாக வடிக்கிப் பெற்ற வேல் யொத்த ஒளி பொருந்திய கண்களையுடையவள்; வல்ல ஓர் சிற்பி தன் ஒல் -சிற்பத்தொழிலில் வல்லமையுடைய சிற்பி ধ্রুগু

ぞ
339
வணுல்; கைவரக் கடைந்து எடுத்த - அழகுறக் கடைந்து எடுக்கப் பட்ட கவின்பெறு பர்வையன்னுள் -அழகுடைய பாவை போன்றவள்: மைவரை பழித்த தோளான்-கருநிறமுள்ள மலையைப் பNத்த தோள் களையுடைய சத்தியவானின் மார்பக மாலை மீது - மார்பில் தொங் கும் மாலையின் மீது; தைவரு தென்றல் - தடவி வருப தென்றற் காற்று என்மெய் தடவலால்-எனது உடலைத் தடவிச் செல்வதால்; உய்ந்தேன் என்ருள்-நான் காமவேதனை நீங்கி உயிர் வாழ்ந்தேன் என்ருள். (எ-று) 69
670 ஐயனை ஆர்ந்து நோக்கி
ஆரணங் கொருத்தி சோர்ந்தாள்
மெய்யினிற் பசலை யூர
மேகலை யிற்று வீழ்ந்த
தொய்யிலேர் கொங்கை விம்மத் தொகைமணி வார்க ளிற்ற
செய்வதொன் றறியரச் சேடி
சேர்த்தனள் அமளி மீது
(இன ஸ்) ஐயனை ஆர்ந்து நோக்கி - சத்தியவான மகிழ்வுடன் பார்த்து ஆரணங்கு ஒருத்தி சோர்ந்தாள் -ஆாணங்கு போல்வாள் ஒருத்தி சோர்வடைந்தாள்; மெய்யினில் பசலை ஊர-அவளின் உடம் பில் காமத்தால் பசலை என்னும் தேமல் படர மேகலை இ ற் று வீழ்ந்த-மேகலை அறுந்து வீழ்ந்தது. தொய்யில் ஏர் கொங்கை விம்ம -தொய்யில் எழுதப்பட்ட பொலிவான கொங்கை பருத்து விம்ம: (அதனல்) தொகைமணி வார்களிற்ற -கூட்டமாகிய மணிகள் இழைக் கப்பட்ட கச்சுகள் அறுந்தன. செய்வது ஒன்று அறியாச் சேடி-அத னைக் கண்டு செய்வது இன்னதென்று அறியாத தோழி, அமளி மீது சேர்த்தனள்-அவளைப் படுக்கை மீது சேர்த்தாள். (எ-று)
(வி - ம்) காமத்தால்-பசலை யூர்ந்தது. இடை பருத்து அதஞல் மேகலை அறுந்தது. கொங்கை விம்ம அதனுல் கச்சு அறுந்தது. சோர் வடைந்தாள். ஆகவே தோழி அவளைப் படுக்கையிற் கிடத்தினுள் 70
67 பங்கய வாண்மு கத்துப்
டனித்திடும் மையுண் கண்ணுள் அங்கையில் அயில்வே லேந்தி
அரியெனப் பொலியும் மன்னன்

Page 187
器邻9
மங்கையர் நலங்க ணிந்து
மால்கொள மலர்ந்த மார்பைக்
கொங்கைகள் தழுவும் நாளுங்
கூடுமோ வெணவ யர்ந்தாள்.
(இ-ள்) பங்கய வாண்முசத்து-தாமரைபோலும் ஒளி பொருந் திய முகத்தினையும்: பனித்திடு மை உண் கண்ணுள் - துன்பத்தால் துளிக்கும் மையுண்ட கண்களையுமுடைய ஒரு பெண்; அம் கையில் அயில் வேல் ஏந்தி-அழகிய கையில் கூர்மையான வேலை ஏ ந் தி க் கோண்டு; அரி எனப் பொலியும் மன்னன் - சிங்க ஏறுபேர்லப் பொலி வுடின் விளங்குகின்ற சத்தியவாணின் மங்கையர் நலங் கனிந்து ைமங் கையர் தங்கள் நலங்கனியவும்; மால்கொள - மயக்கங்கொள்ளவும்: மலர்ந்த மார்பை-விரிந்து விளங்கிய மார்பினை கொங்கைகள் தழு வும் நாளும்-தனது கொங்கைகள் தழுவப்பெறும் நாளும் கூடுமோகிடைக்குமோ எண் அயர்ந்தாள் என உணர்வழிந்தாள். (எ-று)
7
கவிக்கூற்று
672 மைவரைக் களிற்றின் மேவும்
மடங்கலே றனைய மன்னன்
மைவரை பழித்த தோளும்
மன்மலர்ந் தகன்ற மார்பும்
வ்ைவடி வேற்கை வீரர்
வழிபடுந் தகைய வென்ருல்
வைவடி வேற்கண் மாதர்
வசமழி யாரோ வம்மா.
(இ-ள்) மைவரைக் களிற்றின் மேவும் - கரிய மலைபோலும் யானையின்மேற் பொருந்திய மடங்கல் ஏறு அனைய மன்னன்-ஆண் சிங்கம் போன்ற மன்னன்; மைவரை பழித்த தோளும் - கரிய மலே GotuÚ ப்மித்த தோள்களும் மன் மலர்ந்து அகன்ற மார்பும்-மல்யுத் தகு செய்தலால் விரிந்து அகன்ற மார்பும்; வைவடி வேற்கை வீரர் .கர்மையாய் வடிக்கப்பெற்ற வேலைக் கையிற் கொண்ட வீரர்கள்: வழிபடும் தகையவென்ருல்-வழிபடத்தக்கனவென்ருல்; வைவடி வேல் கண் மாதர் கூர்மையாக வடிக்கப்பெற்ற வேலை ஒத்த கண்களையு டைய பெண்கள் வசமழியாரோ அம்மா தம்வச மழியாரோ? அம்மா (தம் வசமழிவரென்பது ஆச்சரியமல்லவே.) (எ-று) 73

34站
சாவித்திரியைக் காணுதல்
673 பைந்துணர்ப் படலை மார்பன்
பார்த்திபன் மருங்கி ருந்த
இந்துவின் முகமும் நீல
இணைவிழி மலருந் தேன் பெய்
செந்துவர் வாயுங் காமர்
செப்பிள முலையுங் கொண்ட
சிந்துரப் பாவை தன்னைச்
சேல்விழி மாதர் கண்டார்டு
(இ-ள்) பைந்துணர் படலை மார்பன் - அழகிய பூக்களாலான மாலையையணிந்த மார்பனன; பார்த்திபன் - அரசனின் (சத்தியவா னின்); மருங்கிருந்த -பக்கத்தில் இருந்த இந்துவின் முகமும் - பூரண சந்திரன் போன்ற முகமும்; நீல இணைவிழி மலரும் - நீல நிற ம் பொருந்திய விரு விழியாகிய மலரும்: தேன்பெய்-தேனைப்பொழியும்; செம்துவர் வாயும் சிவந்த பவளம் போன்ற வாயும்; காமர் செப்பு இள முலையும் கொண்ட- அழகிய செபபுப்போன்ற இளம். முலைகளை யும், கொண்ட சிந்துரப்பாவை தன்னை-சிவந்த பாவை போன்ற சாவித்திரியை சேல்விழி மாதர்-கயல்போன்ற விழிகளையுடைய பெண் கள் கண்டார்-கண்டார்கள். (எ-று) 73
7ே4 வானக மதியே யென்கோ
வனசமென் மலரே யென்கோ
கானகப் பிடியே யென்கோ
கனகமின் கொடியே யென்கோ
தேனகு மடமிழ்தே யென்கோ
தீந்தமிழ்ச் சுவையே யென்கோ
வேண்கு விழியி னுளை
விளம்புத லெவனே வென்பார்.
(இ -ள்) வானக மதியே என்கோ - ஆகாயத்திலிருக்கும் சந்தி ரனே என்று சொல்லுவோமோ, வனசமென் மலரே என்கோ-மென் மையான தாமரை மலரே எ ன் போ மே 1ா கான கப் பிடியே என்கோ-காட்டில் வாழும் பெண்யானையே என்போமோ கனக மின் கொடியே என்கோ-பொன் மயமான மின்னற் கொடியே என் போமோ; தேன் நகும் அமிழ்தே என்கோ-தேனப் பழிக்கும் அமிழ்

Page 188
342
தமே என்போமோ: தீந்தமிழ்ச் சுவையே என்கோ-இனிய தமிழின் சுவையே யென் பாமோ வேல்நகு விழியினளை - வேலைப் பழிக்கும் விழிகளையுடைய சாவித்திரியை விளம்புதல் எவனே வென்பார் - சொல்லுதல் எப்படியோ என்று அங்கலாய்புடையவராயினர். (எ-று)
(வி-ம்) எழுவாய் - சேல்விழி மாதர். 73-ம் பாட்டு. 夕垒
675 பாற்கடற் பிறந்த தீஞ்சொற்
பவளவாய்ப் பணில மூரற்
சேற்கணின் செய்ய மாது
செங்கம லத்தை நீத்து
வேற்கைகொள் வேந்தன் செய்த
விழுதவப் பயனுற் போலும்
நாற்கடல் குழு மிந்த
நானிலம் போந்தா ளென்பார்.
(இ- ள்) பாற்கடற் பிறந்த-திருப்பாற்கடலிற் பிறந்த தீம் சொல் இனிமையான மொழியைப் பேசும், பவளவாய் - ப வளம் போன்ற வாயையும்; பணிலமூரல்-முத்துப் போலும் பல்லையும்; சேல் கணின் செய்யமாது கயல் போன்ற விழிகளையுமுடைய இனிய சிவந்த நிறமுடைய இலக்குமி, செங்கமலத்தை நீத்து -செந்தாமரை மலரை நீங்கி; வேற்கைகொள் வேந்தன் செய்த வேலைக் கையிற் கொண்ட சத்தியவான் செய்த; விழுதவப் பயனுற்போலும் சிறந்த தவத்தின் பயனற்போலும்; நாற்கடல் சூழும்-நான்கு திக்கும் கடலாற் சூழப் பட்ட இந்த நானிலம் போந்தாள்- இந்தப் பூமிக்கு வந்தாள், என் பார் - என்று கூறுவாராயினர். (எ ~று)
(வி-ம்) எழுவாய்-சேல்விழிமாதர் - 73-ம் பாட்டு 7.
676 செங்கயல் பழித்து நீண்டு
செவ்வரி படர்ந்த கண்ணி
பங்கயத் திருவே யன்னுள்
படரொளிப் பாவை யாளின்
வெங்கய மருப்பை வென்று
விரிந்தெழுந் துருண்டு விம்முங்
கொங்கையைத் தழுவ இந்தக்
குமரனென் னேற்ற னென்றர்.

(இ-ள்) செங்கப்ல் பழித்து நீண்டு-செங்கயல் மீனைப் பழித்து, நீண்டு; செவ் அரி படர்ந்த கண்ணி - செவ்வரி படர்ந்த கண்களை யுடையவளும்; பங்கயத் திருவே அன்னுள் - தாமரையில் வீற்றிருக் கும் இலக்குமியே போன்றவளும்; பட ரொளிப் பாவையாளின் -க படர்ந்து ஒளி செய்யும் பாவை போன்றவளுமான சாவித்திரியின் வெங்கய மருப்பைவென்று--கோபம் பொருந்திய யானையின் கொம்பு களை வென்று; விரிந்து எழுந்து உருண்டு விம்மும் -பரந்து திரண் டெழுந்து உருண்டு பருத்து விம்மும்; கொங்கையை - தனங்களே: தழுவ-தழுவுதற்கு இந்தக் குமரன்; என்நோற்ருன்-என்ன தவஞ் செய்தான்; என்ருர். (எ-று)
(வி-ம்) எழுவாய் - சேல்விழிமாதர். 73-ம் பர்ட்டு 76
677 கற்பகப் பூங்கொம் பன்னுள்
காமனுங் காதல் கொள்ளும்
அற்புதக் காம வல்லி
அருகிருத் தலினற் கொல்லோ
மற்பகர் அகலத் தண்ணல்
மதித்திலா னெம்மை யென்று
விற்புரு வத்து வாட்கண்
விளங்கிழை மாதர் சொன்னர்.
(இ-ள்) கற்பகப் பூங்கொம்பு அன்ஞள் - கற்பகப் பூங்கொம் பைப் போன்றவளும்; காமனும் காதல் கொள்ளும் - மன்மத னும் விரும்பும் அற்புதக் காமவல்லி-அற்புதமான கற்பகத்திற் பட ருங் கொடிபோல்பவளுமாகிய இவள்; அருகிருத்தலினுற் கொல்லோ -அருகில் இருப்பதனுற் போலும்; மல்பகர் -மற்றெழி%ல வெளிப்ப டுத்தும்; அகலத்து அண்ணல் - மார்பையுடைய அரசன் எம்மை மதித்திலான் என்று - எம்மை மதிக்கவில்லை என்று: விற்புருவத்துவில்போன்ற புருவத்தையும்; வாள்கண் ஒளி பொருந்திய கண்ணே யும் உடைய விளங்கிழை - விளங்குகின்ற ஆபரணங்களை யணிந்த மாதர் சொன்னர்-பெண்கள் சொன்னர்கள். (எ-று) 77
678 கூற்றுவ னுெருவ னென்று
கூறுவ ருண்மை தேரார் மாற்றல ருயிரை யுண்ணும்
மன்னவன் கைவே லொன்றுங்

Page 189
344...
காற்றினிற் கடிய வாகிக்
காளைய ராவி கொள்ளுங்
கோற்ருெடி கூர்வேற் கண்ணுங்
குறித்திலர் போலு மென்பார்.
(இ-ள்) கூற்றுவன் ஒருவன் என்று கூறுவர் உண்மை தேரார் - காலன் ஒருவன்தான் என்று கூறுவர் உண்மையை அறியாதார் மாற்றலர் உயிரை உண்ணும்-பகைவரின் உயிரை உண்ணும்; மன் னவன் கைவேலொன்றும் சத்தியவானின் கையிலுள்ள வேலொன் றையும்; காற்றினிற் கடியவாகி - காற்றிலும் விரைவானவையாகி காளையர் ஆவி கொள்ளும் . இக்ாஞரின் உயிரை உண்ணும்; கோல் தொடி அழகிய வளையலையணிந்த சாவத்திரியின்; கூர்வேல் கண்ணும் -கூரிய வேல்போன்ற கண்களையும்; குறித்திலர் போலும் என்பார்குறித்தாரில்லைப்போலும். என்பார். (எ-று)
(வி-ம்) இவற்றைக் குறித்திருந்தால் இயமன் பலர் என அறிவர் என்றபடி, எழுவாய - மாதர், 77ம் பாட்டு. 78
679 காலனை வாதில் வென்று
காதல னுயிரை மீட்ட வேலமை கண்ணி னுளின்
விழுமிய கற்பை நோக்கின் ஞாலமுஞ் சிறிதே யம்மா
நாரியர்க் கழகு கற்பே கோலமும் அணியும் வேறும்
கொடியிவட் கெதற்கா மென்பார்.
(இ-ள்) காலனை வாதில் வென்று - இ யமனை வாதத்தில் வென்று; காதலன் உயிரை மீட்ட-கண்வனது உயிரை மீட்ட வேல் அமை கண்லtஞ்றளின்-வேலைபொத்த கண்ணின யுடைய சாவித்திரி யின்; விழுமிய-மேன்மையான, கறபை நோக்கின்-கற்பின் சிறப்பை ஆராயின் ஞாலமுஞ் சிறிதே அம்மா-இந்தப் பெரிய பூ மியும் சிறிதே அம்மா நாரியர்கரு அழகு கற்பே-பெண்களுக்கு அழக கற் புத்தானேயாம்; கோலமும் - ஒபபனையும்; அணியும்-ஆபரணங்களும் வேறும்-பிற அலங்காரங்களும்; கொடியிவட்கு எதற்காம் என்பார்கொடிபோன்ற இவளுக்கு எதற்காம் என்று கூறுவாராயினர். (தேவையில்லை என்றபடி) (எ-று)
வி-ம்) எழுவாய் - மாதர். 77-ம் பாட்டு: 7Ꭿ

345:
கவிக்கூற்று
880 திங்கரும் பனைய தீஞ்சொற்
திருந்திழை திதலை பூத்த கோங்கிவர் குவிமென் கொங்கை
கொண்டெழு கொம்ப னளுக் கீங்கிணை யெவரு மில்லை
இந்திர லோக மாதர் தாங்களு மொவ்வார் தையல்
தனக்கிணை தானே யானள்,
(இ- ள்) தீங்கரும் பனைய தீஞ்சொற் -இனிய கரும்பையொத்த இனிமையான சொல்லையுடையவளும்; திருந்து இழை - திருந்திய ஆபரணங்களை யணிந்தவளுர்; திதலை பூத்த-தேமல் பரந்த கோங்கு இவர்-கோங்கம் பூவை யொத்த; குவிமென் கொங்கை - குவிந்த மென்மையான கொங்கைகளை கொண்டு எழு கொம்பு அன்ளுைக்கு - கொண்டு எழும் பூங்கொம்பு போன்ருளுமான சாவித்திரிக்கு ஈங்கு இணை எவரும் இல்லை இங்கு இணையாக உள்ளவர் எவருமில்லை; இந்திரலோக மாதர் தாங்களும்-தேவலோகப் பெண்கள் தாமும்; ஒவ்வார்-ஒப்பாகார்; தையல் தனக்கிணை தானேயானுள் - சாவித் திரி தனக்குச் சமானம் தானே பானுள். (எ-று) 80
மன்னன் திருக்கோயிலை யடைதல்
68L கண்டவ ரிவ்வR முகக்
காவலன் றுணைவி யோடும்
வண்டிமிர் சோலை சூழும்
வளர்மதிற் கோவில் நண்ணி
விண்டுயில் கோபு ரத்தை
விழுந்துமெய் யுறவ ணங்கித்
தொண்டரைத் தொழுது பின்னர்த்
தோரண வாய்தல் புக்கான்.
(இ-ஸ்) கண்டவர் இவ்வாரு கட்-கண்ட பெண்களின் நிலையில் வாருக; காவலன்-சத்தியவான்; துணைவியோடும். சாவித்திரியோடும்; வண்டு இமிர் சோலை சூழும்-வண்டுகள் ஒலி செய்கின்ற சோலைகள் குழம்; வளர்மதிற் கோவில் நண்ணி - உயர்ந்த மதில்களையுடையூ

Page 190
346
கோவிலை அடைந்து விண்துயில்-மேகங்கள் தங்கித் துயில் செய் கின்ற; கோபுரத்தை விழுந்து மெய்யுற வணங்கி-விழுந்து நிலத்தில் உடம்பு பொருந்தும்படி வணங்கி; தொண்டரைத் தொழுது-அங்கு நின்ற சிவனடியாரை வணங்கி; பின்னர்-அதன் பின்பு: தோரண வாய் தல் புக்கான் -சித்திர கோபுர வாயிலுட் புகுந்தான். (ஏ -று) 81
இறைவன் திருக்கோலங் காணல்
682 பொன்ஒளிர் அவையின் நாப்பண்
பொலன்மணித் தவிசின் மீது
மின்னவிர் சடையிற் றிங்கள்
மிலைச்சிமெய் நீறு பூசி
மன்னுயிர்க் கபய மோர்கை மற்றது வரதங் காட்ட
இன்னருள் பாலித் தையன்
இருந்தவக் கோலங் கண்டான்.
(இ-ள்) பொன் ஒளிர் அவையின் நாப் பண்-பொன் ஒளிரும் (பிரகாசிக்கும்) சபையின் நடுவிலே; பொலன் மணித் தவிசின் மீதுஅழகிய பொற் பீடத்தின் மீது; மின்னவிர் சடையில்-மின் ஒளிரும் சடையில்; திங்கள் மிலைச்சி-திங்களைச் சூடி; மெய்நீறு பூசி- உடம் பில் திருநீறு சாத்தி; மன்னுயிர்க்கு அபயம் ஒர்  ைக நிலைபெற்ற சீவர்களுக்கு ஒருகை அபயத்தையும்; மற்றது வரதம் காட்ட-மற்றக் கை வாதத்தையுங் காட்ட இன்னருள் பாலித்து -இனிய திருவருளை நல்கி; ஐயன்-எம்பிரான் இருந்த அக் கோலம் கண்டான்-இருந்த அத் திருக்கோலத்தைக் கண்டான். (எ-று)
(வி-ம்) பொன்னுற் செய்யப்பட்ட சபை-பொன் ஒளி வீசியது. அபயம்-அடைக்கலம். வரதம்- ஈதல், கடாட்சம்,
683 அண்ணலா ரிருந்த கோலம்
அரசன்கண் களிப்பக் கண்டு
கண்ணினற் பயனை யின்றே
கண்டனன் என்று நெக்கு
மண்ணின்மேல் விழுந்து ருண்டு மார்புற வணங்கி நின்று
பண்ணினுற் பதிகம் பாடிப்
பரமனைப் பரவ லுற்முன்,

84፻፲ .
(இ- ள்) அண்ணலார் இருந்த கோலம் - எர்பெருமான் இருந்த திருக் கோலத்தை அரசன் கண்களிப்பக் கண்டு-சத்தியவான் தனது கண்கள் களிக்கும்படி கண்டு; கண்ணிற்ை பயனை இன்றே கண்டனன் என்று நெக்கு-கண்களைப் பெற்றதலைாய பயனை இன்று அறிந் தேன் என்று மனங் கசிந்துருகி, மண்ணின்மேல் விழுந்து உருண்டுபூமியில் விழுந்து உருண்டு; மார்புற வணங்கி - மார்பு நிலத் தி ற் பொருந்த வணங்கி நின்று-எழுந்நு நின்று; பண்ணினற் பதிகம் பாடி-இசை கலந்த பதிகத்தைப் பாடி பரமனைப் பரவலுற்ருன் -
ஈஸ்வரனை வழிபடலாயினன் (எ-று) 83 சத்தியவான் சந்திரமௌலீசுவரரைத் துதித்தல்
வேறு w
68 மாலயன் காணு மலரிணை யடிகள்
மாணியைக் காத்திட மண்மேற் சேலயல் புரளச் செழுங்கதிர் விளையுந்
திருக்கட வூரெனும் பதியிற் காலனை யன்று கடிந்தமை கண்டுன் கழலிணை துணையென வந்தேன் ஆலம ரெந்தாய் அமரர்தங் கோவே அளியனை யாதரித் தருளே.
(இ-ஸ்) மால் - திருமாலும்; அயன் - பிரமாவும்; காணு . காணுத மலர் இணையடிகள் மலரை ஒத்த இரண்டு திரு அடிகள்: மாணியை- பிரமசாரியாகிய மார்க்கண்டேயன; காத்திட காக்கும் பொருட்டு; மண்மேல்-இப் பூமியின் மேல், சேல் அயல் புரள-கயல் மீன் அயலிற் புரள செழுங் கதிர் விளையும் - செழுமையாகிய நெற் கதிர்கள் விளையும்; திருக்கடவூர் எனும் பதியில் - திருக்கடவூர் என் னும் தலத்தின் கண்ணே, காலனை அன்று-இயமனை அன்ருெருநாள்: கடிந்தமை கண்டு தடிந்தமை கண்டு; உன் கழலிணை-உனது இரண்டு திருவடிகளையும்; துணை என வந்தேன் - துணை என்று எண்ணி வத் தேன் ஆல் அமர் எந்தாய்-கல்லால மரத்தின் கீழ் வீற்றிருக்கும் எந் தையே அமரர்தம் கோவே - தேவர்களுக்கு அரசனே அளியன - அளிக்கப்படத்தக்க எளியவனகிய என்னை ஆதரித்து அருள்-ஆதரித் துத் திருவருள் செய்வீராக (எ-று) ஏ-அசை 8 6S அந்தரத் தவரும் அவுணருங் கூடி அமுதினை யருந்திட விழைந்து மந்தரம் மத்தாய் வாசுகி நானய் மறிதிரைப் பாற்கடல் கடைய

Page 191
348
வந்தணை நஞ்சை வானவர் வெருவ வாங்கியே யுண்டவுன் னருளைச் சிந்தனை செய்துன் சீரடி யடைந்தேன்
சிறியனை யாதரித் தருளே
(இ-ள்) அந்தரத்தருெம்-சுவர்க்க லோகத்துத் தேவரும்; அவு னரும்-அசுரரும்; கூடி - முன்னுெருகால் சேர்ந்து; அமுதினை அருந் திட-அமுதை உண்ண விழைந்து-விரும்பி; மந்தரம் மத்தாய்-மதி தர மலை மத்தாகவும்: வாசுகி நாளுய் - வாசுகியென்னும் பாம்பு நாணுகவும்; மறிதிரைப் பாற்கடல் கீழ் மேலாகத்துள்ளும் திரையை யுடைய திருப்பாற்கடலை; கடைய - கடைந்தபோது வந்து அணை நஞ்சை-வந்து சேர்ந்த நஞ்சினை; வானவர் வெருவ-தேவர்கள் கண்டு அஞ்ச; வாங்கியே உண்ட உன் அருளை நஞ்சைக் கொடுத்தபோது அதனை) வாங்கி உண்டு அருளிய உமது திருக்கருணையை சிந்தனை செய்து உன் சீரடி அடைந்தேன்-நினைந்து நானும் உமது சிறப்பான திருவடிகளே சரணம் என்று வந்தடைந்தேன்; சிறியனை ஆதரித்து அருளே-சிறியவனுகிய என்னை நன்கு ஆதரித்துத் திருவருள் செய் வீராக. (எ-று) ஏ - அசை 85
686 எழுநிலை மாடம் எல்லினைத் தடுக்கும்
எழில்பெறு மதுரையம் பதியில்
வழுதியின் ஆணை வைகையை யடைக்க
வகையறி யாதவள் வந்தி
தொழுதுனை வேண்டத் துணையவட் காகித்
தூமுடி மீதுமண் சுமந்த
முழுமுதற் பொருளே முடிவிலா இன்பே
மூர்க்கனை யாதரித் தருளே.
(இ-ள்) எழுநிலை மாடம் - ஆங்குள்ள ஏழடுக்கு மாளிகைகள் எல்லினைத் தடுக்கும்-சூரியனின் செலவைத் தடுக்கும்; எழில்பெறு மதுரையம் பதியில்-அழகுபெற்றுள்ள மதுரை என்னும் அழகிய பட் டினத்தில்; வழுதியின் ஆணை - பாண்டிய மன்னனின், ஆணைப்படி வைகையை அடைக்க - வைகை நதியின் கரையை அடைக்க வகை அறியாதவள் வந்தி - வகை அறியாத வளாகிய வந்தி என்னும் மூதாட்டி; தொழுது உனை வேண் ட - வணங்கி உம்மை வேண்டிக்கொள்ள, துணை அவட்கு ஆகி- அவளுக் குக் கூலியாளாகிய துணையாகி; துர முடி மீது - தூய்மையான திரு Փւգ மீது மண் சுமந்த-வைகைக் கரையின் மண்ணினைச் சுமந்த

49
முழுமுதற் பொருளே-முழுமுதற் பொருளர்யுள்ளவரே முடிவு இலா இன்பே-அழிவற்ற இன்பமே! மூர்க்கனை - மூடனகிய என்ன ஆத ரித்து அருள்-ஆதரித்து அருள் செய்வீராக. (எ-று) ஏ-அசை 86
687 தம்பலந் தேராத் தாருக வனத்துத்
தவத்தவர் தருக்குடன் விடுத்த
உம்பலின் உரியும் உழுவையின் அதஞம்
உவந்தணிந் துடுக்கைகை யேந்தி
அம்பலத் தாடும் அற்புதக் கூத்தா
அண்டரும் அறியொன வரனே
ஐம்புல னடக்கி யகத்துனை யிருத்தா
அசடனை யாதரித் தருளே.
(இ-கள்) தம்பலம் தேரா - தம்முடைய பலத்தை அறியாத தாருக வனத்துத் தவத்தவர்-தாருகாவனத்து முனிவர்கள் தருக்கு டன் விடுத்த- அகங்காரத்துடன் ஏவிவிட்ட உம்பலின் உரியும்யானையின் தோலேயும்; உழுவையின் அதஞம் = புலியின் தோலையும்: உவத்து அணிந்து - உவப்புடன் தரித்து: உடுக்கை கை ஏந்தி. உடுக் கையைக் கையிலேந்தி, அம்பலத்து ஆடும் அற்புதக்கூத்தா - திரு அம் பலத்தின் கண்ணே நின்று திரு நடனஞ் செய்த நஞகின்ற அற்புதக் கூத்தனே! அண்டரும்-வானேரும்; அறியொன அரனே- அறிய முடி யாத சிவபெருமானே ஐம்புலன் அடக்கி-பஞ்ச புலன்களையும் அடக்கி அகத்து உன இருத்தா - மனத்துள்ளே உன்னை இருத்தாத அச டன-பேதையாகிய என்னை; ஆதரித்து அருள் - ஆதரித்து அருள் செய்வீராக (6T-D) ஏ - அசை. 87
688 குன்றவில் லேந்திக் கூடலர் புரந்தீக்
கொளுவிய குரைகழல் வீரா
பன்றியின் குருளை பசித்தழ அன்பாற் பால்நினைந் துரட்டிய பரனே
நன்றறி தவத்தோர் நமோநம வென்றுன்
நாமமே செபித்துயர் வுற்றர்
ஒன்றிய உளத்தால் உன்பதம் பணியா
உலுத்தனை யாதரித் தருளே,
(இ-ன்) குன்றவில் ஏந்தி-மேருமலையை வில்லாக ஏந்தி; கூட லர் புரம் -பகைவரின் முப்புரங்களையும்; தீக்கொளுவிய - கீ மூட்டிய குரைகழல் வீரா-சத்திக்கும் வீரக்கழல்களை யணிந்த வீரனே பன்றி

Page 192
ኃ፥50
யின் குரு?ள -பன்றியின் குட்டிகள்; பசித்து அழ-பசியினலழ; அன் பால் அவற்றின் மேற் கருணை கொண்டு; பால் நினைந்து ஊட்டிய பரனே - பாலை நினைந்து ஊட்டிய பரம்பொருளே நன்று அறி தவத் தோர் நன்கு கற்றுணர்ந்த தவத்தோர்; நமோ நம என்று உன் நாமமே செபித்து உயர்வுற்ருர் - நமோ நம என்று உன்னுடைய நாமத்தைச் செபித்து உயர்வடைந்தார்கள்; ஒன்றிய உளத்தால் - ஒருமைப்பாடுள்ள மனத்தால்; உன்பதம் பணியா-உன் திருப்பாதங் களைப் பணியாத உலுத்தனை - பேராசைக்காரனை ஆதரித்து அருள் -ஆதரித்து அருள் செய்வீராக. (எ-று) ஏ-அசை.
(வி-ம்) பசித்தழ-அழுகைப் பொருளை யுணர்த்தியது இலக்கண
வழக்கு. உலுத்தன்-பேராசைக்காரன்-தகுதியற்றவனுக இருந்தும், சிவகிருபைக்கு ஆசைப்பட்டவன். 8ለ፩
689 மத்தமும் மதியும் மெளலியிற் சூடி
மழவிடை யேறருள் மன்ன
நித்தமு மன்பர் நெஞ்சிடங் கொண்ட நிருத்தனே நின்மலா நித்தா
அத்தமும் பொருளும் ஆக்கமென் றெண்ணி
அலைவுறு மனத்தின னுகிச்
சித்தமுன் பாலே சேர்த்திட மாட்டாச்
சிதடனை யாதரித் தருளே.
(இ- ள்) மத்தமும் - ஊமத்தம் பூவையும்; மதியும் - திங்களை யும் மெளலியிற் சூடி - திருமுடியிற் சூடி, மழவிடை ஏறு அரு ஸ் மன்னு இளமையான விடையின் மேல் ஏறும் அருளுடைய மன்னனே! நித்தமும் அன்பர் நெஞ்சிடங்கொண்ட எப்போதும் அன்பர் உள் ளத்தே கோயில் கொண்டருளிய, நிருத்தனே - கூத்தயர்பவனே; நின் மலா-மலரகிதனே; நித்தா நித்தியமானவனே; அத்தமும் பொரு ளும் பொன்னையும் பொருளையும்; ஆக்கம் என்று எண்ணி-நிலைான செல்வமென்றெண்ணி; அலைவுறு மனத்தினனுகி - அலைகின்ற மனத் தினையுடையணுகி, சித்தமுன்பாலே சேர்த்திட மாட்டா - மனத்தை உமது திருவடியின் மேலே செலுத்தமாட்டாத சிதடனை அறிவிலி யாகிய என்ன ஆதரித்து அருள் - ஆதரித்து அருள் செய்வீராக saT-up) ஏ - அசை.
(வி-ம் மெளலி-முடி, சடை, தலை, 89

35
69G மழுமறி யேந்தி மங்கையொர் பாகா
மனை தொறும் பலிபெறும் பரனே அழுதுனக் காளாய் அஞ்செழுத் தோதி
அரகர சிவசிவ வென்று தொழுமடி யார்கள் தொல்வினை நீக்கித் துரிசெலா மறுத்தநற் துணைவர் முழுமுதற் பொருளே முக்கணெம் மானே
முசுடனை யாதரித் தருளே.
(இ-ள்) மழு மறி ஏந்தி - மழுவையும் மானையும் ஏந்தியவனே;
மங்கையொர் பாகா-உமாதேவியாரை வாம பாகத்தில் உடையவனே மனை தொறும் பலி பெறும் பரனே- பிச்சாடன மூர்த்தியாக மன தொறும் பலிபெறும் பரட பொருளே; அழுது உனக்கு ஆளாய் மனம் கசிந்துருகி உனக்கு ஆளாய்; அஞ்செழுத்து ஓதி - திருவைந்தெழுத் தைச் செபித்து; அர கர சிவ சிவ என்று-அர. அர. சிவ. சிவ என்று: தொழும் அடியார்கள்-வணங்குகின்ற சிவனடியார்கள் தொல்வினை நீக்கி-பழ வினைகளை நீக்கி; துரிசு எலாம் அறுத்த -குற்றம் துன்பம்
ஆகிய எல்லாவற்றையும் அறுத்த நல் துணைவா - நல்ல துணைவனே: முழுமுதற் பொருளே- முழுமுதற் கடவுளே முக்கண் எம்மானேமூன்று கண்களையுடைய எமது தலைவனே முசுடனை - கீழ்மகனுகி என்னை ஆதரித்து அருள்-ஆதரித்து அருள் செய்வீராக. (எ-று 99
ஏ - அசை.
691 சுந்தரன் முடிமேற் றிருவடி சூட்டிச்
சொன்மலர் மாலைகொள் சுகிர்தா
பந்தனை விரலி பாகமாய்ப் புணர்ந்த
பரமநின் பாதமே யல்லால்
இந்திரன் முதலாம் இமையவர் பதங்கள்
இசையினு மீண்டவை வேண்டேன்
சந்திரமெளலி சங்கரா இந்தச்
சளுக்கனை யாதரித் தருளே.
(இ-ள்) சுந்தரன் முடிமேல்- சுந்தர மூர்த்தியின் முடி யின் மேல்; திருவடி சூட்டி -திரு நல்லூரிலே திருவடிகள் சூட்டி சொன் மலர் மாலை கொள்-பாமாலைகளை அவர் பாட ஏற்றுக்கொள்ளும்; சுகிர்தா-நண்பனே! ( சுந்தரர் தோழனே ); பந்தணை விரலி-பந்து அணையும் விரல்களையுடைய உமாதேவியார்; பாகமாய்ப் புணர்ந்தாகமாகப் பொருந்திய; பரழு-புரம்பொருளே நின்பாதமே அல்லால்

Page 193
32
-தேவரீரின் திருவடிகளே யல்லாமல்; இந்திரன் முதலாம் இமைய வர் பதங்கள் இந்திரன் முதலாகிய வானேர் பதவிகள் இசையி ஒனும்-பொருந்தினும் ஈண்டு அவை வேண்டேன் இவ்விடத் து அவற்றை விரும்பேன்; சந்திர மெளலி-சந்திரனைத் தரித்த திருமுடியை யுடையவனே! சங்கரா-ஆன்மாக்களுக்குச் சுகத்தைச் செய்பவனே! இந்த சஞக்கனை-இந்த வீணனை ஆதரித்து அருள்-ஆதரித்து அருள்
செய்வீராக. (எ-று) ஏண-அசை,
(விணம்) சளுக்கன்-வீணன்; அகந்தைக்காரன். 9
692 தணிவருங் காதல் தலையெடுத் தோங்கத்
தலைவநின் தாளிணை யடைந்தேன் மணிமிடற் றேறே மலைமகள் கேள்வா
மதித்திலேன் மற்ருெ?ரு வாழ்வை அணிதிகழ் தில்லை யாடாங் காக
ஐந்தொழில் நடமடிரி அரசே பணிமதி குடும் பரம்பரம் பொருளே
பதிதனை யாதரித் தருளே.
(இ-ள்) தணிவரும் காதல் - தணியாத அன்பு தலையெடுத்து ஓங்க-அதிகப்பட்டு வளர தலைவ -தலைவனே! நின் தாளினே அடைந் தேன்-உமது திருவடிகளை அடைந்தேன் மணி மிடற்று ஏறே - கரு நிறமடைந்த கண்டத்தையுடைய ஆண் சிங்கம் போன்றவரே மலை மகள் கேள்வா-பார்வதியின் தலைவனே! மற்ருெரு வாழ்வை மதித் திலேன் - வேருெருவாழ்வை மதித்தேணில்லை; அணிதிகழ்-அழகு பிர காசித்தொளிரும்; தில்லை ஆடரங்காக - தில்லையிலுள்ள திருப்பொற் சபையே நடனமாடும் அரங்காக; ஐந்தொழில் நடம்புரி அரசே-பஞ்ச கிருத்திய நடனக் தைச் செய்கின்ற அரசனே (தலைவனே); பணி - பாம்பையும்; மதி திங்களையும்; குடும் பரம் பரம் பொருளே -அணிந் துள்ள மேலான பரம்பொருளே! பதிதனை ~கசடணுகிய என்னை ஆத ரித்து அருள் ஆதரித்து அருள் செய்வீராக (எ-று) ஏ அசை.
(வி-ம்) தலையெடுத்தல் - அதிகப்படல்; தக்க பருவமெய்தி ஒரு துறையில் நிலையுறுகை. கேள்வன்-தலைவன்,கணவன், மலைமகள் - பருவதராஜன் புத்திரி.

333
693 கார்முகில் காணுக் கான்பயிர் போலக்
கருகிய உளத்தின ஞகி நீர்விழி சோர நெஞ்சுநெக் குருக
நின்னருள் வேண்டிநின் றேற்கு வார்துணை முலையாள் வருடிய பாதா
வள்ளல்நீ யருளிலை யானுல் ஊர்சிரிக் காதோ உனதருள் பொய்யோ உவந்தெனை யாதரித் தருளே.
(இ- ள்) கார்முகில் காணு-கரிய் மேகத்தைக் காணுத கான் பயிர் போல-காட்டுப் பயிர் போல; கரு கி ய உளத்தினன் ஆகி - வாடிக்கருகிய உளத்தினை உடையவனுகி; நீர் விழி சேர்ர கண்ணிர் கண்களிலிருந்து வடிய; நெஞ்சு நெக்குருக - மனம் நெக்குநீெக்குருக; நின் அருள் வேண்டி நின்ற எற்கு -நினதுதிருவருளை வேண்டி நின்றவஞ) கிய எனக்கு வார்துணை முலையாள் -வார் கட்டப்பட்ட சோடான முலைகளையுடைய உமாதேவியார் வருடிய பாதா - வருடுகின்ற திரு வடிகளை உடையவனே வள்ளல் நீ அருளிலையானல் அருள் வள்ள லாகிய நீயே அருள் செய்யாது ஒழியின்: ஊர் சிரிக்காதோஊரார் உன்னைப் பார்த்துச் சிரிக்கார்களோ! உனது அருள் பொய்யோ - உனது திருவருள் பொய்க்குமோ உவந்து என ஆதரித்து அருள்உவப்புடன் என்ன ஆதரித்து அருள் செய்வீராக. (எ-று)
ஏ - அசை,
(விகம்) கர்ட்டுப் பயிருக்கு மேகத்தில் இருந்துதான் நீர் கிடைக் கும். மழை பெய்யும் மேகம் கருமையாக இருக்கும் கருமேகமில்லா விடில், மழையில்லை. வெண் முகில் என்ருல் வெய்யில் எறித்து வெப்ப மாயிருக்கும். பயிர் கருகும். · ·
ஊர் கிரிக்காதோ-நீ பெருவள்ளல் என்று ஊரறியும். அப்படி யிருக்க உன்னருள் வேண்டி நிற்கும் எனக் கு நீ அருணாயாயின், உன் வள்ளன்மையைப் பார்த்து ஊர் சிரிக்காதோ? உனது அருளும் பொய்யோ? என்றபடி. 93 வேறு 694 எம்பெரு மானை யிவ்வா
றிருந்தமிழ்ப் பதிகம் பாடிக் கம்பிதங் கொண்டு மன்னன்
கசிந்துள முருகிப் போற்றி ቶff – 8ቖ ---

Page 194
அம்பிகை தன்னை யேத்தி
அப்புறம் வலமாய்ப் போந்து
தும்பியைக் குமரன் றன்னைத்
தொழுதனன் றுணவி யோடு.
(இ-ள்) எம்பெருமானை இவ்வாறு - சந்திர மெளலீஸ்வரன இங்ஙனமாக இருந்தமிழ்ப் பதிகம் பாடி - பெருமையுடன் கூடிய சிறந்த தமிழ்ப்பதிகம் பாடி கம்பிதங்கொண்டு - அன்பு மேலீட் டால் நடுக்கங் கொண்டு; மன்னன் - சத்தியவான்; கசிந்து உளம் உருகி--மணங் கசிந்து உளம் உருகி; போற்றி - வணங்கி அம்பிகை தன்னை ஏத்தி - உமாதேவியாரையும். வணங்கி; அப்புறம் வலமாய் போந்து- அப்பால் வலமாக வந்து; தும்பியை - கணபதியை குமரன் தன்னை-முருகனை துணைவியோடு தொழுதனன் - சாவித்திரியோடு வணங்கிஞன். (எ-று) 94
அரண்மனைக்கு மீளுதல்
695 அந்தண ரளித்த நீற்றை
அணிந்தவ ராசி பெற்று
வந்தவர்க் கெல்லாந் தானம்
வகைவகை யாக வீந்து
மந்திரி முதலோர் சூழ
மன்னனுந் தேவி யோடு
தந்தியின் மீதி வர்ந்து
தனதரண் மனைக்கு மீண்டான்.
(இ-ள்) அந்தணர் - கோவிற் பூசகராகிய வேதியர்; அளித்த நீற்றை அணிந்து-கொடுத்த விபூதிப் பிரசாதத்தையணிந்து; அவர் ஆசி பெற்று - அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று; வந்தவர்க்கெல் லாம் தானம் வகை வகையாக ஈந்து-வந்தவர்களுக்கு அவரவர்க்கேற்ற வகைவகையான தானம் கொடுத்து மந்திரி முதலோர் சூழ-மந்திரி முதலானேர் சூழ மன்னனும் தேவியோடு சத்தியவானும் சாவித்திரி யுடன்; தந்தியின் மீது இவர்ந்து-யானையின்மேல் ஏறி தனது அரண் மனைக்கு மீண்டான் -தனதரண்மனைக்குத் திரும் பிச் சென்ருன் (எ-று) 95

சத்தியவானின் ஆட்சிச் சிறப்பு
898 - இத்தல வேந்தர்க் கெல்லாம்
இலட்சிய மன்ன னகச்
சத்திய வானுந் தெய்வச்
சாலுவ நாட்டைப் பன்னுள்
எத்திசை யோரும் போற்ற இனிதர சாட்சி செய்து
புத்திரர் பலரைப் பெற்றுப்
பூவையோ டினிது வாழ்ந்தான்.
(இ-ள்) இத்தல வேந்தர்க்கு எல்லாம்-இந்தப் பூவுலகத்து அர சருக்கெல்லாம்: இலட்சிய மன்னனுக -ஒரு இலட்சிய மன்னகை; சத் தியவானும் - சத்தியவானென்பான்; தெய்வச் சாலுவநாட்டை - சாலுவ தேயத்தை பல் நாள் - பலகாலம்; எத்திசையோரும் போற்ற - எத்திக்கிலும் உள்ளவர்கள் வணங்க இனிது அரசா.சி செய்துஇனிதாகச் செங்கோல் செலுத்தி; புத்திரர் பலரைப் பெற்று - சற் புத்திரர் பலரைப் பெற்று; பூவையோடு-சாவித்திரியோடும்; இனிது வாழ்ந்தான் இனிதாக வாழ்வானுயினன். (எ-று) м 96
(வி-ம்) தெய்வச் சாலுவநாடு என்றது-தெய்வத்தன்மை பொருந்திய சத்தியவானும் சாவித்திரியும் இருந்து அரசாட்சி செய் யப்பெற்ற நாடாகையால் என்க. 96
697 அத்திரு நாட்டி லுள்ள
ஆடவ ரரச னைப்போற்
சத்தியந் தவரு ராகிச்
சால்புடன் வைகி னர்கள்
தத்தையின் மொழியின் மாதர் தாவில கற்பின் மிக்க
உத்தமி போல வாழ்ந்தார்
உலகிறை வழித்தா மன்றே.
(இ-ள்) அத்திரு நாட்டிலுள்ள ஆடவர் அந்தச் சாலுவத் திரு
நாட்டிலுள்ள ஆண்கள்; அரசனைப்போல் - சத்தியவா%னப்போல, சத்தி
யந்தவருராகி; சால்புடன் வைகினர்கள்-சான்ருண்மையுடன் வாழ்ந்
தார்கள்; தத்தையின் மொழியின் மாதர் - கிளியை ஒத்த மொழி
A

Page 195
356
யையுடைய பெண்கள் தாவில கற்பின் மிக்க - குற்றமில்லாத கற் பில் மிக்கவளாகிய உத்தமி போல - - உத்தம லட்சணங்களுள்ள சாவித்திரி போல; வாழ்ந்த ர்; உலகு இறை வழித்தாம் அன்றே. உலகோர் அரசன் வழியிலே நடப்பார்கள் அல்லவா? (எ-று)
(வி-ம்) சத்தியவானேயும் சாவித்திரியையும் ஒத்துச் சாலுவ நாட்டினர் வாழ்ந்தனர் என்றபடி, 97
கற்புடையோர் பெருமை
698 கற்பின லொருத்தி முன் னுட்
கதிரினை நிறுத்தி வைத்தாள்
கற்பினுல் மதுரை தன்னைக்
கண்ணகி யெரிய வைத்தாள்
கற்பின லிவளு மீண்டு
கணவனி னுயிரை மீட்டாள்
கற்பினர் பெருமை பேசக்
கவிஞர்க்கு மாற்ரு தம்மா
(இ-ள்) கற்பினல் ஒருத்தி - கற்பு மேம்பாட்டினல் ஒருபெண் (நளாயினி); முன்னுள் முற்காலத்தில்; கதிரினை - சூரியனை; நிறுத்தி வைத்தாள் - உதய மாகாமல் நிறுத்தி வைத்தாள் கற்பிஞல் மதுரை தன்னை கண்ணகி எரிய  ை\த்தாள் கற்பு மேம்பாட்டாற் கண்ணகி, மதுரைமா நகரை எரியவைத்தாள்; கற்பினுல் இவளும் ஈண்டு கணவ னின் உயிரை மீட்டாள் - கற்பு மேம்பாட்டால் இச் சாவித்திரியும் இவ் வுலகில் தனது நாயகனுகிய சத்தியவானின் உயிரை மீண்டும் பெற்ருள்; அம்மா. அ. மம்மா, கற்பிஞர் பெருமைபேசக் கவிஞர்க்கும் ஆற்ருது-கற்பினையுடையவர்களது பெருமையைச் சொல்லல் புலவர்க ளுக்கும் இயலாததாகும். (எ +று)
கற்பின் பெருமை, சொல்ல முடியாத ம க த் துவ மு ைடயது என்றபடி,
(வி- ம்) கதிரினை நிறுத்தல் *நளாயினி பொழுது விடிய மாங் கலியம் இழக்கக் கடவாள்' என்று மாண்டவ்ய மகரிஷி சாபமிட் டார். நளாயினியோ, பொழுது விடியாமல் இருக்கச் சாபமிட்டாள். இதஞல் பொழுது விடியாமல் இருந்தது. பின் தேவர்களின் விருப் பப்படி இருவர் சாபமும் நீக்கப்பட்டது. ”

357
மதுரையை எரித்தல்:- கண்ணகியின் கணவனுகிய கோவலண் பாண்டிய மன்னன் சள்வனென்று குற்றஞ் சுமத்தி மரண தகண்டஃகாக் குள்ளாக்கினன். கணைகி, தன்கணவன் கள்வனல்லனென்று நில நாட்டி, கடுஞ் சினத்தால், மதுரை நகரைத் தீக்கிரையாக்கிளுள். 99
நூற்பயன் 699 சத்தியி னருளி ஞலே
சமனுடன் வாது செய்து சத்திய லுயிரை மீட்ட
சற்குண வதியின் காதை பத்தியோ டோது வோர்கள்
படித்ததைச் சொல்வோர் கேட்போர் சத்திய முவகை யன்பு
சார்ந்துரீ டூழி வாழ்வார். (இ-ள்) சத்தியின் அருளினலே-சாவித்திரி தேவியின் அருளி ஞலே; சமனுடன் வாது செய்து யமனுடன் வாதாடி; சத்தியன் உயிரை மீட்ட-சத்தியவானுடைய உயிரைத் திரும்பப் பெற்ற சற் குணவதியின் காதை - நற்குணமுள்ள சர்வித்திரியின் சரிதத்தை; பத்தி யோடு ஒதுவோர்கள்-அன்போடு கற்பவர்களும் அதைப் படித்துச் சொல்வோர்-அதனை இசையுடன் பாடி அதன் பொருளை விரித்து எல் லோருக்கும் விளங்கும்படி பயன் சொல்பவர்களும்; கேட்போர் அங் வனம் சொல்லும்போது மெய்யன்போடு கேட்பவர்களும் (ஆகிய எல் லோரும்); சத்தியம் - உண்மை நெறியும; உவகை (தாம் தாம் விரும் Hம் பயன்களைப் பெறுதலால் ஏற்படும்) பெரு மகிழ்வும்; அன்பு(இல்லறத்தோர்க்கும் துறவறத்தோர்க்கும் இயல்பாகவே அ  ைம ய வேண்டிய எல்லோரிடத்து முண்டாகும் உள நெகிழ்ச்சியாகிய) அன் பும்; சார்ந்து -(மற்றைய சான்றேர்க்குரிய நற்குணங்கள் எல்லாவற் றையும் குறைவறப்) பெற்று (மகிழ்ந்து); நீடூழி வாழ்வார் - (இப் பூவுலகத்தின் கண்ணே எக் குறைகளுமில்லாமல்) நீடூழி காலம் இனி
தாக வாழ்வார்கள், (எ-று) 99
வாழ்த்து
700 வானம்மும் மாரி பெய்க
வையகம் வளஞ் சிறக்க ஆனின முயிர்கள் வாழ்க
அரிவையர் ஆண்கள் கற்பும்

Page 196
358
ஞானமும் பேணி வாழ்க
நல்லர சாட்சி யோங்க கானகத் தெமனை வென்ற
காரிகை காதை வாழ்க.
(இ-ள்) வானம் மும் மாரி பெய்க-வானம் மாதம் மூன்று முறை மழை பெய்வதாக வையகம் வளம் சிறக்க-பூமியில் பல் வளங்களும் மிகுதியாவதாக; ஆன் இனம் உயிர்கள் வாழ்க-பசுக்களும்? உயிர்களும் வாழ்க அரிவையர் ஆண்கள் - பெண்களும் ஆண்களும்; கற்பும் கற்பையும்; ஞானமும் - ஞானத்தையும்; பேணி வாழ்க - பாதுகாத்து வாழ்வாராக நல் அரசாட்சி ஓங்க - நல்ல செங்கோ லாட்சி ஓங்குவதாக; கானகத்து எமனை வென்ற-காட்டினிடத்தே இய மனை (வாதில்) வென்ற காரிகை காதை-சாவித்திரி சரிதம் என் னும் இந்நூல்; வாழ்க-இனிது என்றென்றும் வாழ்க. (எ-று)
(வி- ம்) கற்பும் ஞான மும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேண்டுமென்பது வலியுறுத்தப் பட்டது. " . . . 60
மங்கல வாழ்த்து
70 கோன்முறை யரசன் வாழ்க!
குவலய மினிது வாழ்க!
தேன் பொதி கஞ்சன் வாழ்க! திகழற மினிது வாழ்க! "
நூன்முறை சான்றேர் வாழ்க!
நுவலுமைந் தெழுத்தும் வாழ்க!
மான்சிவ னடிகள் வாழ்க!
மலரருட் சத்தி வாழ்க!
(இ-ள்) கோன்முறை அரசன் வாழ்க -செங்கோல் முறைப்படி அரசு செய்யும் அரசன் வாழ்வானக குவலயம் இனிது வாழ்க". செங்கோலாட்சி நடைபெறுவதால், பூமியும் பூமியிலுள்ளவர்களும் இனிதே வாழ்க: தேன்பொதி கஞ்சன் வாழ்க - தேன் பொதிந்து நிறைந்துள்ள தாமரை ஆசனணுகிய பிரமதேவன் இனிது வாழ்வா ஞக திகழ் அறம் இனிது வாழ்க- அவனுல் இனிது விளங்கும் அற மாகிய படைத்தற் ருெழில் இனிதே வாழுக நூன்முறை சான்ருேர் வாழ்க-நூன்முறைகளை இனிதே உணர்ந்த கல்வி கேள்விகளால் நிறைந்த மேலோர்கள் இனிது வாழுக; நுவலும் ஐந்தெழுத்தும்

வாழ்க - எல்லா மந்திரங்களிலும் சிறந்ததாகச் சொல்லப்படும் g ஞ் சர்க்கரமும், திரு நீறும் உருத்திாாக்கமும், இனிதே வாழக் கடவன : மான் சிவன் அடிகள் வாழ்க - மகத்துவம் மிகுந்த சிவபெருமாறு டைய திருவடிகள் வாழ்க, (பெரியோ கிைய சிவபெருமான் கணிறு மாம்); அருள் மலர் சத்தி வாழ்க திருவருளை மலர்த்துகின்ற திரு வருட் சத்தியானவள் (சாவித்திரி தேவி) வாழ்வானாக. (எகர-று)
(வி-ம்) மான்மைகத்துவம், பெரியோன், மகான், 0.
diluth.
முடிசூட்டுச் சருக்கம் முற்றிற்று
சாவித்திரி சரிதம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்.

Page 197
"ஈழத்திலே பூத் கம் மாவைக் கவுணி னனுர் வரையும் பன் ருந் தோன்றிப் பல்ே கிய நூல்களேச் செய் படுத்தி வந்திருக்கிரு ஆ டி ச் சு வட் டி விே பாழை பொழிந்து வேலுப்பிள்ளே கனச வர். இவர் எழுதிய , தியுங் கவர்ந்தன. கவி பிறழாமல் அப்பாட8 றன. ....... LUFT - i 5Gi: சொற்களால் அமைத்
தைக் கவரும் பொ
கவிமணியினுடைய சின்னத்தம்பிப் புலவ.
" சுந்தரப் புலவர் :
பாடல்களைப் போன்று கொள்ளும் இயல்புடை
- புலவர்மனி (இந்த கவிதை தொகு
துடி?
}

தன் தேவனுர் தொடக் பன் வெண்ணெய்க் கண் வேறு புலவரும் கவிஞ வேறு வகைப்பட்ட இலக் 翌 தமிழ்த்தாயை வளம் " . . ஈர்கள் . . அவர்கள் இந்நாளிற் ருேன்றிப் வருகின்றவர் கவிமணி கசபாபதி அவர் க ளா பாடல்கள் என்ன மிகு பி மரபுந் தமிழ் மரபும் ல்கள் அமைந்திருக்கின் இனிய அழகிய செஞ் திருக்கின்றன. க ரு த் ருவி வளமுடையன் .
பாடல்கள், நல்லுTர்ச் ர், நவாலியூர்ச் சோம முதலிய புலவர்களின் று மனதைக் கொள்ளை -L at . . . . . . . " '
சோ. இளமுருகனுர்,
all gift fair "" கனவும் :
தரம்" என்ற கவினுதத் 蓝
திக்கு வழங்கிய
ਜੈ
ம், யாழ்ப்பாணம்.