கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வீடு

Page 1
3C5 GRT GIFÒGDj
சல்லத்துரையின்
 

லைக்காட்சி நாடகமும் னொலி நாடகங்களும்

Page 2

தெ க்காட்சி நாடகமு வானொலி நாடகங்களும்
எழுதியவர்: அருணா செல்லத்துரை
இளவழகன் பதிப்பகம்
4, இரண்டாவது தெரு, ஆண்டவர் நகர்,
கோடம்பாக்கம், சென்னை - 600 024,

Page 3
(. . . . ), nfrGUTTsò நாடகங்கள்)
1993 - Vl in M1 با ارا، ۱۱, ، | { |
婚
கு அருணா செல்லர்துரை
பதிப்பாசிரியர் : வே. கருணாநிதி
இலங்கையில் வெளியீடும் விற்பனை உரிமையும்:
குறிஞ்சி வெளியீடு 12925, ஜெம்பட்டா வீதி,
கொட்டாஞ்சேனை, கொழும்பு -13
அச்சு அமைப்பு : எல். கே. எம். கம்ப்யூட்டர் பிரின்ட்ஸ்,
26, ரங்கநாதன் தெரு, தி. நகர், சென்னை - 17
 
 

(BIBLIOGRAPHICAL DATA
S. SS ......................ސ/
Title of the book :VEEDU
Language : Tamil
Written by : Aruna Sellathurai
Copyright of : Author
Published by : Elavazhagan Pathipagam,
Madras -24
First Edition : February 1993
Types used : 10 point
Number of pages : 160
Number of copies : 1000
Printed at : Kannappa Art Printers, Madras - 5.
Wrapper designed by : Ayoma Jayasingh
Subject : Drama
Price y : Rs. 30.00 (India)

Page 4
உடம்பினுள் உதிரமாய் உள்ளத்துள் உரமாய் உள்நின்று ஊக்குவிக்கும் என்தந்தை கதிரவேலு அருணாசலத்திற்கும் என் அன்பு அன்னை அன்னம்மாவிற்கும் பத்தாம்பளையான வற்றாப்பளை உறையும் பெத்தாச்சி கண்ணகை அம்மனுக்கும் காணிக்கையாகும் என் முதல் பொங்கல்.
அன்புடன்
அருணா செல்லத்துரை

முன்னுரை
தொலைக்காட்சியென்ற தொடர்புச் சாதனத்துறையில் புதிதாகப் பிரவேசிப்பவர்களுக்கான நூல்கள் மிகவும் அரிதானவை. திரு. அருணா செல்லத்துரை அவர்களால் அந்தக் குறையை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. 1970ம் ஆண்டில் வானொலி மூலமாக தொடர்புச் சாதனத்துறையில் பிரவேசித்த அருணா ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டபோது தொலைக்காட்சித் தொடர்புச் சாதனத்துறையோடு இணைந்து கொண்ட முன்னோடிகளில் ஒருவராவர். ஜெர்மனி, மலேசியா போன்ற நாடுகளில் பயிற்சியும், ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்துப் பெற்றுள்ள அனுபவமும் அவருக்கு இத்தகைய கலைப்பணியை மேற்கொள்வதற்குத் தேவையான சகல தகைமைகளையும் வழங்கியுள்ளன.
தொலைக்காட்சித் துறையில் புதிதாக பிரவேசிப்பவர் களுக்கு அந்தச் சாதனம் தொடர்பாகக் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய பிரதித்தயாரிப்பு, தயாரிப்பு நுட்பங்கள் போன்றவைபற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்புச் சாதனத்துறையில் ஈடுபட்டுத் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலம் ஒரு சில விடயங்களை விளக்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி புதியவர்களுக்குப் பயனளிப்பதாகும். நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள வானொலி நாடகங்கள் ரசனைக்கும் அறிவு விருத்திக்கும் உதவுவனவாகும்.
திரு. அருணா செல்லத்துரையின் இந்த முயற்சி சகல வழிகளிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
பியதாஸ் ரத்னசிங்க பிரதிப் பணிப்பாளர் நாயகம் (பொது நிகழ்ச்சிகள்) இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம்.

Page 5
வெளியீட்டுரை
எழுத்துத் திறமையும், ஒலிபரப்புக் கலையறிவும் கொண்ட ஊக்கம் மிக்க படைப்பாளர் திரு. அருணா செல்லத்துரை அவர்கள். வானொலி, தொலைக்காட்சித் துறையிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். இவருடைய இந்த நாடக நூல் புதிதாக இத்துறையில் பிரவேசிப்பவர்களுக்கு இச்சாதனங்களின் நுட்பங்களையும் பிரதி எழுதும் அறிவையும் பெற்றுக் கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.
இத்தொகுப்பில், தமது பார்வையில் கண்ட நிகழ்ச்சிகளையும் வாழ்விலே தாம் கண்டு வருகிற சொந்த அனுபவங்களையும் ஒன்று சேர்த்து தொலைக்காட்சி, வானொலி நாடகங்களாகப் படைத்திருக்கிறார்.
ஒலிபரப்பும் பணியோடு எழுத்துப் பணியையும் இணைத்து இவர் தொண்டாற்றுவது பாராட்டுக் குரியது. புதியபுதிய கலைக்கற்பனைகள் மிளிரும் இவருடைய நாடகங்கள் வளரும் தமிழுக்கு வளம் சேர்ப்பன. இந்நாடக நூலை குறிஞ்சி வெளியீடாக வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம்.
குறுகிய காலத்தில் சிறப்பாகப் பதிப்பித்து உதவிய தம்பி வே. கருணாநிதி அவர்களுக்கும் வெளியிட அனுமதியளித்த நண்பர் திரு. அருணா செல்லத்துரை அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக. நூல் உங்கள் கையில். படித்துப் பயன் பெற வேண்டும் என்று வேண்டுகிறோம்.
129|25 ஜெம்பட்டா வீதி மாத்தளை-கார்த்திகேசு கொழும்பு - 13 குறிஞ்சி வெளியீடு.

பதிப்புரை
இலங்கையில் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் திரு. அருணா செல்லத்துரை. வானொலி, தொலைகாட்சி இரண்டிலும் பணியாற்றியதன் மூலம் தான் பெற்ற நாடக அனுபவங்களையும், தான் எழுதி ஒளி, ஒலி பரப்பிய நாடகங்களையும் உங்கள் முன் நூல் வடிவில் தருகிறார். இது இவருடைய முதல் முயற்சி. இதன் மூலம் ஒரு நூலின் ஆசிரியராகவும் அவர் உங்கள் முன் அறிமுகமாகிறார்.
இந்நூலை வெளியிட அனுமதியளித்த திரு. அருணா செல்லத்துரை அவர்களுக்கும் வெளியீட்டில் உதவியும் ஒத்தாசையும் நல்கிய கொழும்பு குறிஞ்சி வெளியீட்டின் உரிமையாளர் திரு. மாத்தளை கார்த்திகேசு அவர்கட்கும் மற்றும் எமக்கு ஆதரவளித்து வரும் தமிழக-இலங்கை வாசகர்களுக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம்.
இந்நூல் பதிப்பில் உதவிய எல்.கே.எம். கம்ப்யூட்டர் பிரிண்ட்ஸ் உரிமையாளர் கார்த்திகேயன் அவர்களுக்கும் தம்பி சிற்றரசு மற்றும் என். மகேந்திரன், கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ஆகியோருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடன்
வே. கருணாநிதி இளவழகன் பதிப்பகம் சென்னை - 24.

Page 6
பொருளடக்கம்
w
தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பு- கட்டுரை
. வீடு - நாடகக் கதை
விடு - தொலைக்காட்சி நாடகம்
சுடலை ஞானம் - வானொலி நாடகம்
s புண்ணிய பூமி - வானொலி நாடகம்
. இவர்களும் மனிதர்கள் - வானொலி நாடகம்
முடிவுகள் மாற்றப்படலாம் - வானொலி நாடகம்
. மானத்திற்காக ஏங்கும் கவரி மான்கள்
- வானொலி/மேடை நாடகம்
14
23
32
60
72
94
13
139

ஒரு கண்ணோட்டம்
வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் பல வழிகளிலும் முக்கியத்துவம் பெற்று வரும் காலம் இது. வானொலி, தொலைக்காட்சி எதுவானாலும், இன்று அவை புதிய பரிமாணத்தைப் பெற்று வருகின்றன. பெரும்பாலும் பொழுதுபோக்குச் சாதனங்களாக விளங்கிவந்த காலம் போய், அன்றாடம் உணவு உண்பது போல், மக்கள் வானொலியைக் கேட்கிறார்கள். தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். எவர் வாழ்விலும் இவ்விரு சாதனங்களும் உயிர்வாழும் அந்தஸ்தினைப் பெற்றுவிட்டன. தேசிய உடைமையாக இருந்துவந்த இவ்விரு சாதனங்கள் தனியார் வசமும்போய்ச் சேர்ந்துள்ளன. இந்த நிலையில் மக்கள் எதிர்பார்ப்புக்களை செவ்வனே நிறைவேற்றுவதென்றால், கற்றுக்குட்டிக் கலப்புத் தன்மையின்றி ஆழ்ந்த அனுபவத்தின் அறுவடையாக அவற்றைக் கையாள வேண்டிய ஒரு தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இந்த வகையில்தான் அருணா'வின் இக்கன்னி முயற்சி காத்திரம் பெறுகிறது.
நான் அறிந்த வரையில் தமிழ் வானொலி நாடகங்களை அப்படியே நூலுருவில் வெளியிட்டிருக்கிறார்கள். வானொலி நுட்பங்களை விவரிக்கும் நூல்கள் ஒன்றோ, இரண்டோ தமிழில் வெளிவந்துள்ளன. 65 ஆண்டுப் பெருமை கொண்ட வானொலியின் நிலையே இவ்வாறெனில், பத்தாண்டுகாலப் பருவ தொலைக்காட்சி பற்றி பேசலாமா?
வானொலியிலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி மக்கள் நாடகங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். அவற்றைச் சரிவர ஒலி-ஒளிபரப்பாவிட்டால், மக்களை ஏமாற்றுவதாகவே அமையும்; மக்கள் ரசனையைக் குறைத்து மதிப்பிடுவதாகவே எண்ண இடமுண்டு. "எல்லோரும் எல்லாம் செய்யலாம்" என்ற ஒரு மாயையில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வகையில், 25 ஆண்டு கால அனுபவத்தினை மூலதனமாகக் கொண்டு, தான் எழுதிய நாடகங்களை நூலுருவில் கொண்டு வந்திருக்கிறார் 'அருணா'. கட்புலன், செவிப்புலன் இரண்டினையும் நன்குணர்ந்து

Page 7
10 0 அருணா செல்லத்துரை
உருவாக்கப்பட்டுள்ள இந்த நூலில் தொலைக்காட்சி நாடகப் பிரதிகளை எவ்வாறு எழுதலாம் என்பதையும் கூறி, தாம் வானொலியில் முன்னர் பணியாற்றியதனால் ஏற்பட்ட அனுபவ முத்திரைகளாக அவரே கூறுவது போல், வானொலியில் "ஒலிபரப்பப்பட்ட', 'ஒலிபரப்பாமல் தடை செய்யப்பட்ட' நாடகங்களையும் சேர்த்து அத்துடன் மேடை நாடகப் பிரதியையும் உள்ளடக்கி ஒரே நூலாக வெளியிட்டிருப்பது, நாடகக்கலையில் அவர் முழுமையாக, எவ்வளவு ஆழமாக ஈடுபடத் தொடங்கியுள்ளார் என்பதை எடுத்துக்காட்டுவதோடு, இம்மூன்று துறைகளையும் வேறுபடுத்திப் பார்க்கவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நாடகக்கலை வளர வேண்டுமென்றால், கருப்பொருளில் மட்டுமல்ல, அதை எடுத்துச் சொல்லும் விதத்திலும் கரிசனை காட்ட வேண்டும் என்பதனை உணர்ந்ததனால் போலும் அருணா நாடகப் பிரதியாக்க முறையில் தன் கவனத்தைச் செலுத்தியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடக எழுத்தாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உறுதுணை செய்யும் தரவுகளை எடுத்துச் சொல்லும் நுணுக்கமான சில சங்கதிகளையும் இந்நூலில் காணலாம். முற்றுமுழுதாகக் கவனிக்குமிடத்து, இன்றைய நிலையில் 'அருணா'வின் ஆக்கம் முதன்மையானது; முக்கியத்துவம் வாய்ந்தது; ஏன் ஓர் அவசரத் தேவையுங்கூட. விடாமுயற்சியை மூலதனமாகக் கொண்டு, வானொலியில் தொலைக்காட்சியில், மேடையில் அரங்கேற விரும்புபவர்கள் "அருணா'வின் ஆக்கத்தை வாசித்துப் பயன் பெறலாம். ஏனெனில் 'அருணா'வின் "வீடு உறுதியான அத்திவாரங் கொண்டது. அதுமட்டுமல்ல, ஒலிபரப்பு, ஒளிபரப்புத்துறை சம்பந்தமாக எதிர்காலத்தில் ஆய்வு நடத்துவோர் நுனிப்புல் மேயும், சில்லறை வெளியீடுகள் கொடுக்கும் விபரங்களைக் கோவை செய்வதனால், ஏற்படும் குழப்பங்களைத் தடுத்து, சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த நூல் நிச்சயம் உதவும்.
"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் அவர்தம் கருமமே கட்டளைக்கல்."
ஒலிஅரசு வீ.ஏ.திருஞானசுந்தரம்.
பணிப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனம்

ஆசிரியரின் அடிமனத்திலிருந்து.
தொலைக்காட்சி இலங்கையில் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. ஒவ்வொரு கிழமையும் தொலைக்காட்சி நாடகத்திற்கென நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்படியானால் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட அரைமணிநேர நாடகங்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தனை நாடகங்கள் தயாரிக்கப் பட்டிருக்கின்றனவா? இது கேள்விக்குறியே. ஏன் நாடகங்கள் தயாரிக்கப் படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறுவார்கள். தொலைக்காட்சியில் கடமையாற்றுபவர்களைக் கேட்டால் திறமையான தொலைக்காட்சி நடிகர்கள் இல்லை, அல்லது நல்ல தரமான பிரதிகள் இல்லை எனக் கூறிவிட்டு இருந்து விடுவார்கள். அப்படி எல்லோருமே கூறிவிட்டு இருந்து விட்டால் இந்த ஊடகத்தில் நல்ல தரமான நாடகங்களை தயாரிக்கவே முடியாதா?
நல்ல நாடகங்கள் தயாரிக்க முடியும் என்று சொல்வதற்கு முன்னால் நாடக உலகில் உள்ள எமது குறைபாடுகளை அடிதொட்டு தெரிந்து கொள்வது நல்லதில்லையா.
இந்தியாவின் திரைப்படத்துறையோடு, அதன் வளர்ச்சியோடு எம்மால் போட்டிபோட்டு நிற்க முடியவில்லைத்தான். ஆனால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிங்கள மொழித் திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளன என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சிங்கள மொழித் திரைப்படத்துறையின் வளர்ச்சி சிங்கள மொழி தொலைக்காட்சி நாடகங்களின் வெற்றிக்கு ஒரு ஊன்றுகோலாக இருந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதையே ஏதுவாக எடுத்துக் கொண்டால் இலங்கையில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் தொகைமிகக் குறைவே.

Page 8
12 0 அருணா செல்லத்துரை
அதனால் தமிழ் திரைப்படத்துறையும் தமிழ் தொலைக் காட்சி நாடகங்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இருக்க முடியவில்லை என்பது தெளிபு.
இவற்றையெல்லாம் நாம் கூறிக் கொண்டு இருந்தால் இந்த ஊடகத்தில் வெற்றிகரமான நாடகங்களை தயாரிக்கவே முடியாதா? என்ற கேள்வி எம் மனதில் எழுகிறது. இதே கேள்வி பலநாட்கள் என் மனதில் எழுந்ததின் விளைவே இந்த முயற்சி.
தொலைக்காட்சி நாடகங்கள் மேலைத்தேய நாடுகளில் பிரம்மாண்டமான முறைகளில் தயாரிக்கப்பட்டன, தயாரிக்கப் படுகின்றன, என்பது போன்ற விளக்கங்களைத் தந்து உங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இலங்கை தொலைக்காட்சி ஊடகத்தை பயன்படுத்தி எப்படி தொகையான நாடகங்களை தயாரிக்க முடியும் என்பதை அடைவதே எனது குறிக்கோள். நான் இந்த முடிவுக்கு வந்ததிற்கு பல காரணங்கள் உள்ளன.
'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது பழமொழி.
நாடகங்களை தயாரிக்காமல் இருந்துவிட்டு, வெற்றிகரமான நாடகங்களை தயாரிக்கும் திறமை எம்மிடம் உண்டு ான்று நாம் வீணே தம்பட்டம் அடிப்பதில் பிரயோசனமில்லை. வானொலி நாடகக்கலை வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு வாரம் ஒரு நாடகத்தை தயாரித்து வந்தமையே காரணமாகும். வாரம் ஒரு நாடகத்தை வானொலியில் கேட்கக் கூடியதாய் இருப்பதற்கு காரணம், அந்தளவு பிரதிகள் எழுதப்படுவதே காரணமாகும். அதேபோல தொலைக்காட்சியில் வாரம் ஒரு நாடகத்தை தயாரிப்பது தனிப்பட்ட ஒருவரால் செய்யக் கூடிய காரியமல்ல.
எந்தக் கலையாக இருந்தாலும் பிரதியாக்கம் என்பது வீட்டிற்கு அத்திவாரம் கட்டுவது போன்றதாகும். இலத்திரனியல் ஊடகமான தொலைக்காட்சிக்கு பிரதி எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இந்த ஊடகத்தில் நாம் தொகையான நாடகங்களை தயாரித்த பின்னர் இதுவொரு டி சுலபமான காரியமாகிவிடும். அதன்பின்னர் நல்ல பல நாடகங்களை தயாரித்து

6G 0 13
நாமும் சர்வ தேச பரிசில்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.
அதனால் எனது இருபத்திரண்டு வருட வானொலி, தொலைக்காட்சி அனுபவத்தைக் கொண்டு, தொலைக்காட்சிக்கு எப்படி நாடகப்பிரதிகளை எழுதலாம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்த முயற்சியாகும். இராமாயணத்தில் அணைகட்டுவதற்கு வானரச் சேனைகள் உதவி செய்த போது ஒரு சிறு அணிலும் தன்னாலியன்ற அளவு ஒரு சிறு கல்லைத் தூக்கிப்போட்டு உதவி செய்ததாம். அதே போல பரந்து விரிந்த இந்த ஊடகத்தின் தமிழ் நாடகக்கலைக்கு என்னாலியன்ற அளவு ஒரு சிறு துளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அத்தோடு என்னால் எழுதப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்ட, ஒலிபரப்பாமல் தடை செய்யப்பட்ட, நாடகங்களையும், மேடை நாடகப் பிரதியையும் சேர்த்துள்ளேன். ஏற்றுக் கொள்வீர்கள் என எதிர்பார்த்து விடைபெறுமுன்,
நாடகங்களை ஒளி - ஒலிபரப்பிய இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திற்கும், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும், நாடகங்களை விமர்சித்த அன்பு உள்ளங்களுக்கும், ஆசியுரை வழங்கிய பெரியோர்கட்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்த அன்பு மனையாள் சிவசோதிக்கும் மகள் ஜானகி, மகன் சுஜேனுக்கும், பதிப்பித்து வெளியிட்ட சென்னை - இளவழகன் பதிப்பகம் மற்றும் கொழும்பு - குறிஞ்சி வெளியீடு ஆகியவற்றின் உரிமையாளர் களுக்கும், அட்டைப்படம் வரைந்த அயோமா ஜயசிங்காவிற்கும், மற்றும் உங்களுக்கும் என் அன்பு நன்றிகள்.
அன்புடன்
அருணா செல்லத்துரை.

Page 9
தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பு (TELEVISION DRAMA PRODUCTION)
தொலைக்காட்சிக்கு எனத் தயாரிக்கப்படும் நாடகங்கள் இரண்டு விதமாக தயாரிக்கப்படுகின்றன.
1. கலையக நாடகத் தயாரிப்பு
(STUDIO DRAMA PRODUCTION)
2. வெளிப்புற நாடகத் தயாரிப்பு.
(OUTDOOR DRAMA PRODUCTION)
கலையக நாடகத் தயாரிப்பு (STUDIO DRAMA PRODUCTION)
நாடகத்திற்குத் தேவையான களங்களைக் கலையகத்தில் அரங்கமைத்து நாடகங்களைத் தயாரித்தல் கலையக நாடகத் தயாரிப்பென அழைக்கப்படும். இதற்கு கலையகத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதைப் பிரதி எழுதுபவர்கள் ஒரளவுக்குத் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். எமது கூட்டுத்தாபனத்தில் இருக்கும் கலையகங்களில் முதலாம் கலையகத்தில் மூன்று கமராக்களும் மூன்றாம் கலையகத்தில் நான்கு கமராக்களும் பொருத்தக்கூடிய வசதிகள் அமைந்துள்ளன. முதலாம் கலையகத்தின் நிலப்பரப்பளவு 2,400 சதுர அடிகளாகும். ரூபவாஹினியில் உள்ள மிகப்பெரிய கலையகமான மூன்றாம் கலையகம் 4,800 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டது. தொழில்நுட்பத் தேவைகளுக்காவும் மற்றும் நாடகக் களத்தெரிவை பிரதி எழுதுபவரே தேர்ந்தெடுப்பதால் இவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகின்றது. எப்படியான அரங்கத்தை நீங்கள் எழுதப்போகும் நாடகத்திற்கு அமைக்க வேண்டும் என்பதை உங்களுடைய கற்பனையில் அமைத்துக் கொள்ள வேண்டியது பிரதி எழுதுபவரின் கடமையாகும். நெறியாளரும் தயாரிப்பாளரும் உங்கள் கற்பனையில் உருவாக்கப்பட்ட அரங்கங்களை தொழில்நுட்பத் தேவைகளுக்காக பின்னர்

SG) ♦ 15
மாற்றியமைக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம். ஆனால், பிரதி எழுதுபவரே இதற்கான முதலுருவத்தை அமைக்கின்றார்.
மேலும் கூடிய விளக்கத்திற்காக "வீடு" நாடகத்திற்காக நாம் போட்ட அரங்கமைப்பை படங்களோடு தந்துள்ளேன். மூன்று கமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் காட்சிக்குரிய வசனங்களையும் அதற்குரிய நடிப்புக்களையும் நாம் பிரதியில் எழுதவேண்டியது அவசியம். தொலைக்காட்சியில் நடிகர்கள் நேரே தோன்றி நடிப்பதால் மேடை, வானொலி போன்று வசனங்கள் மூலம் எமது உணர்ச்சிகளைக் காட்டத் தேவையில்லை. ஒவ்வொரு அங்க அவயத்தின் அசைவுகளைக் கொண்டே இந்த உணர்ச்சிகளை நடிகர்கள் வெளிக்கொணர முடியும். இதனால் பிரதி எழுதுபவர்கள் வசனங்களைக் குறைத்து நடிப்புக்கே முக்கிய இடத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல் காட்சி மாற்றங்களுக்காக பலவிதமான அரங்கங்களை கலையகத்தில் அமைக்க முடியாததனால் கூடியளவு வெளிப்புறக் கர்ட்சிகளைத் தவிர்த்து அமைக்கப்பட்டிருக்கும் அரங்கத்தினுள்ளேயே சுவைபட அம்சங்களைச் சேர்த்துக் கொண்டால் நாடகம் சிறப்பாக அமையும்.
வெளிப்புற நாடகத் தயாரிப்பு (OUTDOOR DRAMA PRODUCTION)
நாடகத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட கதை இடம்பெறும் களத்தைத் தெரிவு செய்து அது போன்ற இடத்தில் நாடகத் தயாரிப்பை நடத்துதல் வெளிப்புற நாடகத் தயாரிப்பு என அழைக்கப்படும். வெளிப்புற நாடகத் தயாரிப்பின் போது அநேகமாக நடக்கும் சம்பவங்களை அப்படியே படம்பிடித்துக் கொள்ளலாம். அதனால் பிரதி எழுதுபவர்கள் தங்களுடைய நாடகக் கருவுக்கு வலுவூட்டக்கூடிய விதத்தில் எப்படியான காட்சிகளாக இருந்தாலும் தங்களுடைய பிரதிகளில் சேர்த்துக் கொண்டால் அவற்றை நாடகத் தயாரிப்பின்போது சேர்த்துக் கொள்ளலாம்.
பிரம்மாண்டமான தொலைக்காட்சி நாடகத் தயாரிப்புக்களின்போது வெளிப்புறக் களங்களில் இரண்டு மூன்று கமராக்களை உபயோகித்தும் பெரிய அரங்கங்களை அமைத்தும்

Page 10
16 0 அருணா செல்லத்துரை
நாடகக் காட்சிகள் படமாக்கப்படுவதுண்டு. ஆனால், இலங்கையில் தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரிக்கும்போது ஓரளவு செலவைக் குறைத்துத் தயாரித்தால்தான் நாம் தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் விளம்பரதாரர்களை பெற்றுக் கொள்ள முடியும். பிரதி எழுதுபவர்கள் இவற்றை மனதில் வைத்துக் கொண்டால்தான் கதையின் சம்பவங்களைப் படமாக்குவதில் ஏற்படும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சி நாடகப் பிரதி (TELEVISION DRAMA SCRIPT)
தொலைக்காட்சி நாடகங்களை எழுதுபவர்கள் முதலில் நல்ல கதைக் கருவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நாடகத்திற்குரிய கதையை அநேகமானோர் எடுத்த எடுப்பிலேயே நாடக வடிவம் கொடுத்து வசனங்களை அமைக்கத் தொடங்கி விடுவார்கள். அது ஒரு பிழையான முறையாகும்.
திரைப்படத்துறை வளர்ந்த இடங்களில் உதாரணமாக இந்தியாவில் திரைப்படத்திற்காக “கதைசொல்பவர்கள்' இருக்கின்றார்கள். அவர்களுடைய தொழில் திரைப்படத்திற்காக கதையை கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு தயாரிப்பாளரிடமோ அல்லது நெறியாளரிடமோ சொல்வதேயாகும். அவர்கள் அந்தக் கதைக் கருவை விரும்பினால் அதை கதை வடிவத்தில் எழுதி வாங்கிக் கொள்வார்கள். இதுபோன்ற முறையே தொலைக்காட்சி நாடகத்திற்கும் பொருத்தமானதாகும். முதலில் நாம் நாடகத்தை கதை வடிவமாக எழுதிக் கொள்ள வேண்டும்.
முடியுமானால் நாடகத் தயாரிப்பாளருடனோ அல்லது நெறியாளருடனோ நாடகக் கதையின் தன்மைகளை கதாபாத்திரங்களின் உணர்வுகளை கலந்துரையாடி திருத்தங்களைச் செய்த பின்னரே நாடகத்திற்குரிய வசனங்களை எழுதத் தொடங்க வேண்டும். நெறியாளரை நேரடியாகச் சந்திக்க முடியாதவர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சேர்ந்து நாடகக் கதையின் நெளிவு - சுழிவுகளை விமர்சித்து விவாதித்த பின்னரே திருத்தங்களுடன் நாடகத்திற்கான வசனங்களை எழுதத் தொடங்க வேண்டும். தொலைக்காட்சி நாடகத் துறையில் சிறந்த நெறியாளர்கள்

G 0 17
தாங்கள் தெரிவு செய்யும் கதையை அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்த பின்னரே நாடகப் பிரதியை எழுத அனுமதிப்பார்கள். நாடகப் பிரதி எழுதப் பட்ட பின்னரும் பிரதி, விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட பின்னரே பிழை திருத்தத்துடன் முழுமையான தொலைக்காட்சி நாடகப் பிரதி தயாரிக்கப்படுகின்றது.
நாடகத்திற்கான கதையை விமர்சனத்திற்கு விடமுன்னர் காட்சிகளாகப் பிரித்து, பின்னர் அங்கங்களாகப் பிரித்த பின்னரே நெறியாளருடன் அல்லது கதை விமர்சனக் குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டும். தொலைக்காட்சி நாடகங்கள் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து தயாரிக்கப்படுவதால் நாடகத்தைத் தயாரிப்பதற்கு முன்னரே, விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்த்து அதன் குறைபாடுகளைத் தெரிந்து கொள்வதால் ஏற்படப்போகும் பெரும் செலவுகளையும் எழுதுவதற்கு ஏற்படும் நேர விரயத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சி நாடகப் பிரதியை எழுதும்போது சில எழுத்தாளர்கள் கமரா எந்தக் கோணத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும், கமரா எந்தளவுக்குப் படத்தைப் பிடிக்க வேண்டும் என்பதையும் மட்டுமே தங்களுடைய பிரதிகளில் எழுதியுள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது ஒரு நெறியாளர் செய்ய வேண்டிய கடமையாகும். நாடகப் பிரதி எழுதுபவர் கதையின்படி கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளையுமே எழுதவேண்டும். ஒட்டுமொத்தமாக கதாசிரியர்களின் கற்பனையில் கதாபாத்திரங்கள் எப்படி நடமாடுகின்றன என்பதை எழுதிக் கொடுத்தால் அது நாடகம் வெற்றியாக அமைவதற்கு ஊன்றுகோலாக இருக்கும். அந்தப் பிரதியை அடிப்படையாக வைத்து நெறியாளர் பட்ப்பிடிப்புக் கோணங்களையும் படம்பிடிக்க வேண்டிய அளவுகளையும் தீர்மானித்து, அதற்கான பிரதியை தயாரித்துக் கொள்வார். தொலைக்காட்சி நாடகம் ஒரு தனிப்பட்ட மனிதனின் வெற்றியல்ல. ஒரு குழுவின் வெற்றியாகும்.
தொலைக்காட்சி நாடகப் பிரதி எழுதும்போது பிரதியின் அரைவாசி இடது பக்கத்தில் கதாபாத்திரங்களின் நடவடிக்கை களையும், நடிப்புக்குரிய் விளக்கங்களையும், பிரதியின் மறுபகுதியில்

Page 11
18 0 அருணா செல்லத்துரை
கதாபாத்திரங்கள் பேசவேண்டிய வசனங்களையும் எழுத வேண்டும். நடிகர்களுக்கு கூடியளவு நடிப்பதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். நடிகர்கள் நாடகத்தில் நடிப்பதற்கு வசதியாக வசனங்கள் குறைக்கப்பட வேண்டும். நாடகத்தின் முழுக் கதையையும் பாத்திரங்கள் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தாமல் அதற்குரிய சம்பவங்கள் மூலமும் காட்சி அமைப்பு மூலமும் வெளிப்படுத்துவதற்கு மூலகாரணமாக இருப்பது கதாசிரியரின் கற்பனையாகும். இதற்கு நாம் முன்னர் கூறியதுபோன்று கதை, காட்சிகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்ட பின்னர் அதை வைத்துக் கொண்டு நாடக வசனங்களை எழுதினால் நல்ல பல நாடகங்களை உருவாக்க முடியும். நல்ல தொலைக்காட்சி நாடகப் பிரிதிகளை பலரும் எழுத முன்வந்தால்தான் கிழமைக்கொரு தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரிப்பது இலகுவாகும். வெளிக்களத் தயாரிப்பாக இல்லாமல் கலையகத்திலாவது பரீட்சார்த்த தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
மேற்கூறிய முறைகளை வைத்தே “திருப்பங்கள்" நாடகம் தயாரிக்கப்பட்டது. இதுவொரு வெளிப்புறத் தயாரிப்பாகும். அடுத்த நாடகமான "வீடு" மூன்று அங்கங்களைக் கொண்டதாகும். எமது கலையகத்தில் இருக்கும் வசதிகளைக் கொண்டு மூன்று நாட்களுக்குள் இரண்டு விதமான அரங்குகளை அமைத்து ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடகமாகும். இந்த மூன்று அங்கங்களையும் படத்தொகுப்புச் செய்ததற்கு எடுத்த நேரம் எட்டு மணித்தியாலங்களாகும். நடிகர்களுக்குள் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் முதல்முறையாக தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தவர்களாவர்.
தொலைக்காட்சி நாடக நடிப்பு (TELEVISION DRAMAACTING)
சிங்களத் தொலைக்காட்சி நாடகங்களைப்போல் ஏன் உங்களால் தமிழ் நாடகங்களைத் தயாரிக்க முடியவில்லை என்று பலரும் கேட்பதை நான் கேட்டிருக்கிறேன். எமது நாடக வடிவங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. அது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகும். தெருக்கூத்து, அண்ணாவிமரபு நாடகம், நாட்டுக்கூத்து, ராசா-ராணி நாடகங்கள், யதார்த்தமற்ற வசனங்கள்

ofG (1) 19
நிறைந்த மேடை நாடகங்கள், தற்போதையது போன்று யதார்த்தமான வானொலி, மேடை நாடகங்கள் என எமது நாடகங்களை நாம் குறிப்பிட்டுக் கூறலாம். இந்தப் படிமுறைகளிலேயே எமது நடிகர்கள் நடிப்புப் பாணியைப் பின்பற்றி வந்துள்ளார்கள். அதனால் இந்த நடிப்புப் பாணி இவற்றுள் ஒன்றைச் சார்ந்ததாகவே அமைந்திருக்கின்றது.
அநேகமான நடிகர்கள் வானொலி, மேடை நடிகர்களாக இருந்து வந்ததினால் வசனங்களுக்கு இடையே இடைவெளியே யில்லாமல் வசனங்கள் எழுதப்பட்டிருந்தால் அவற்றை மனனம் செய்துவிட்டு அப்படியே ஒப்பிக்கும் நடிகர்களாக இருக்கின்றார்கள் என்பதை இதுவரை வெளிவந்த தொலைக்காட்சி நாடகங்களில் கவனிக்கக்கூடியதாக இருக்கின்றது. வசனமேயில்லாமல் முகபாவத்தை மட்டும் கொண்ட கதாபாத்திரங்கள் இதுவரை தமிழ் தொலைக்காட்சி நாடகங்களில் வந்ததே கிடையாது. ஒரு பாத்திரம் வசனம் பேசி முடித்ததும் அதற்குப் பதில்கூறும் அடுத்த கதாபாத்திரம் அந்தப் பதிலை எந்தவித முகபாவமும் இன்றி, பாடமாக்கிய வசனத்தை ஒப்பித்தால் அதுவொரு வானொலி நாடக நடிப்பேயொழிய தொலைக்காட்சி நாடக நடிப்பு எனக் கூறிவிட முடியாது. தொலைக்காட்சி நாடக நடிப்புக்காக கடினப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நடிகர்கள் அனைவரும் மேடை, வானொலி நாடக நடிப்புப் பாணியைப் பின்பற்றாமல் யதார்த்தமாக நடிக்கப்பழக வேண்டும். இதற்கு தொகையான தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்பட வேண்டும். வெளிக்கள நாடகங்களாக இருக்காமல் கலையகத்திலே பரீட்சார்த்த தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்பட்டு நடிகர்கள்
முகபாவத்தின் மூலம் நடிப்பதற்கு ஏற்ற வசதிகள் செய்து
கொடுக்கப்பட வேண்டும்.
கலையகத் தயாரிப்புக்காக என்னால் எழுதப்பட்ட வீடு நாடகப் பிரதியை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். இது எனது முதல் முயற்சி. சமுதாயப் பிரச்சினையை வேறுபட்ட கோணத்தில் புதிய களத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட தொலைக்காட்சி நாடகம். எனது அனுபவத்தின் மூலம் வெளிவந்த ஒரு நாடகப் பிரதிதான் இது. இந்தப் பிரதி உங்களைத் தொலைகாட்சி நாடகம் எழுதத்தூண்டினால் அதுவே எனது அனுபவத்தின் வெற்றியாகும்.
அருணா செல்லத்துரை
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

Page 12
I TITVAA
NVTd HOOTH OICITÀ. ILS
 

御圈舞蹟翻)
【归 q|-.* -ououis) hIrán院 : "ho成的 原역Q "이 经T susigi ĝis são o
·|×
·|(109riqÌrog)ßrto GjeogoomU109o 1
størsão o "Too"TÍ 1109 gặso- இs g已画 susunɔ sustemulus?yumeko oo@h |(91091;om -■ ■—~^\/\/\/\/^~--~ hogẫooŲ9190) •* 19æoloe)
1109lgặgặụ9& 09ği 1995)
hņā) usoe) : quo? (opșæðko) ĝQn ņhņuotos@ ! :დ9ტმ-ტე)ყ9

Page 13
P归 Q*如以
susunɔ shumeros ș suorgiosio sƆ
Gjoomootoo?\@rı
யன்னல்
\
கிய9ரg mர்டி torņilob gossoD 용%니19道그us니(J(3
IOEOae ZO ! 令愈* QQ グ、「、 Q_Door»6)Turiņus 运9409颁90QIO ditoriqịroportsgosong, mựitoì阁 കയ9ത !്* []ș19toursulo
|postoso
torņiloše) gesko CJ CJisoseșųorso v
!上*=-9 贮、心こda_rくく、 |(1090$$ụ9& cogi 1ņ951
くくくくくー』 ー „e”
长9690
ரழபnரரியா : ரய99
 
 
 

65G)
நாடகக் கதை
அங்கம் 1
காட்சி : 1
கனகசபையும் செல்லம்மாவும் கொழும்பில் இருக்கும் சிறிய குடும்பம். கனகசபை குறைந்த சம்பளம் பெறும் ஒரு அரசாங்க ஊழியர். அவர்களுக்கு சசி, ராதா என இரண்டு பிள்ளைகள். யாழ்ப்பாணத்தில் சொந்தமாக பெரிய வீடு இருந்தாலும், அவர்களுக்கு கொழும்பில் சொந்தமாக வீடில்லை. அதனால் தங்கள் வருமானத்திற்கு ஏற்ற வகையில் பெரிய வீட்டின் ஒருபகுதியை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார்கள். இதுவரை வீட்டுப் பிரச்சனைகள் காரணமாக பல இடங்களுக்கு வீடு மாறியுள்ளார்கள். இப்போதும் புதிய விடொன்றின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து சாமான்களை ஏற்றி வருகின்றார்கள். பெரிய வீட்டின் ஒருபகுதி, சின்ன அனெக்ஸ். வீட்டுத்தலைவி செல்லம்மா மாவிலைகளை வாசலில் கட்டிக் கொண்டிருக்கிறார். பிள்ளைகள் இருவரும் வெளியேயிருந்து மேசை கதிரைகள், பெட்டிகள் போன்றவற்றை ஒவ்வொன்றாக உள்ளே கொண்டு வந்து அவற்றை எங்கே வைப்பது என கேட்டு பொருட்களை வைக்கிறார்கள். இதன் மூலம் புது விட்டிற்கு குடிபுகுந்துள்ளார்கள் என்பது வெளிக்காட்டப்பட வேண்டும்.
வீட்டுச் சொந்தக்காரி பரிமளம் புதிதாக குடிவந்தவர்களைப் பார்க்க வருகிறார். சேம நலங்களை விசாரித்த

Page 14
24 0 அருணா செல்லத்துரை
பின்னர் சுவரில் ஆணி அடிக்க வேண்டாம் என்பதை மறைமுகமாக கூறுகிறார். இதனால் ஆணி அடிக்கச் சென்ற கனகசபை ஆணி அடிப்பதை நிறுத்தி விட்டு வந்து உட்காருகிறார். பரிமளம் வீட்டில் இருப்பதற்குரிய நிபந்தனைகளை கூறுகின்றார்.
தனது பிள்ளைகள் படிப்பதற்கு, கனகசபையின் மகன் சசி குழப்பாமல் பார்க்க வேண்டுமெனவும், நீர் பாவனை, மின்சாரம் போன்றவற்றின் பாவனைக் கட்டணத்தில் அரைப்பங்கை செலுத்த வேண்டும் எனவும் கூறுகின்றார். புதிதாகப் போடப்பட்ட நிபந்தனைகளைக் கேட்ட செல்லம்மாவும் கனகசபையும், ஒருவரையொருவர் பார்த்து திகைத்து நிற்க பரிமளம் புறப்பட்டுச் செல்கிறார். அத்தோடு காட்சி ஒளி மங்கி குறைகிறது.
பாத்திரங்கள் :
1. தாய் செல்லம்மா 2. தகப்பன் 856858-6.U 3. மகள் ராதா 4. மகன் : சசி.
5. வீட்டுச் சொந்தக்காரி : பரிமளம்.
காட்சி : 2
இரவு நேரம், பிள்ளைகள் இருவரும் மேசையில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இடம் போதவில்லை. இருவருக்குள்ளும் இடம் போதாமையினால் பிரச்சனை ஏற்படுகிறது. தாயிடம் முறையிடப் போவதாக இருவரும் கூறுகிறார்கள்.
இதேவேளை குசினிக்குள் செல்லம்மா பாணை (Bread) வெட்டிக் கொண்டிருக்க கனகசபை யாழ்ப்பாண வீட்டை விற்பதற்கு ஆலோசனை கேட்கிறார். அதற்கு விரும்பாத செல்லம்மா கண்கலங்கிய வண்ணம் கொழும்பில் பிரச்சனை என்றால் பிறகு யாழ்ப்பாணம் போய் எங்கே இருப்பது எனக் கேட்டு தனது விருப்பமின்மையை தெரிவிக்கிறாள். இறுதியில் கனகசபை வீட்டை விற்பதற்கு நிர்ப்பந்திக்கிறான். கனகசபையின் யோசனையை

6f6) ♦ 25
முழுதாக நிராகரிக்க, தனது தகப்பன் தனக்கு சீதனமாக தந்த வீட்டை விற்க விரும்பவில்லையென செல்லம்மா திடமாக கூற ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கனகசபை தண்ணிரைக் குடித்து விட்டுப் போகிறார்.
பாத்திரங்கள் :
1. கணவன் 565-6
2. மனைவி செல்லம்மா
3. மகள் ராதா 4. மகன் : சசி.
காட்சி : 3
ராதாவும் சசியும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வருகிறார்கள். செல்லம்மா வீட்டு வாசலில் நின்று வரவேற்று உள்ளே கூட்டிச் செல்கிறாள். உடுப்பை மாற்றிவிட்டு முகம் கழுவி சாப்பிட வரச் சொல்கிறாள் செல்லம்மா. மகள் ராதா தாய் சொன்னபடி உடுப்பை மாற்ற உள்ளே செல்கிறாள். சசி உடுப்பை மாற்றாமல் கதிரையில் இருந்தபடி பாடசாலையில் நடந்த சம்பவத்தை விபரிக்கிறான். தன்னுடன் படிக்கும் சக மாணவனின் பிறந்த தின வைபவத்திற்கு தனக்கு படிப்பிக்கும் ரீச்சர் போகப்போவதாக கூறுகிறான். ஆனால் தன்னுடைய வசதியீனம் காரணமாக ரீச்சரை தன்னுடைய வீட்டிற்கு அழைக்க முடியவில்லை என மனமுடைந்து சொல்கிறான். தனது மகனின் கவலையைப் போக்க நினைத்த செல்லம்மா தங்களுக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தமாக பெரியவீடு இருப்பதாக கூறி பெருமைப்படுகிறாள்.
இதேவேளை வீட்டுக்காரி பரிமளம் வீட்டுக்குள் வருகிறாள். தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதத்தைப்பற்றி விசாரிக்கிறாள். அத்தோடு அடுத்தமாத வாடகையை முற்பணமாகத் தரும்படியும், அவர்கள் வீட்டிற்கு வந்து இரண்டு வருடம் முடிவதாகவும் கூறுகிறாள். w

Page 15
26 0 அருணா செல்லத்துரை
அதனால், அடுத்த மாதத்திற்கான வாடகைப் பணத்தை 250 ரூபா கூடுதலாகத் தரும்படியும் கூறுகிறாள். இதைக் கேட்ட செல்லம்மா திடுக்கிடுகிறாள். வீட்டுக்காரி பரிமளம், சசியின் குழப்படியை அடக்கி வைக்கும்படியும் சொல்லி புறப்படத் தயாராகிறாள்.
இதனால் கோபமடைந்த செல்லம்மா மகன் சசியை அறைக்குள் இழுத்துச் சென்று அடிக்கிறாள்.
வீட்டுக்காரி பரிமளம் வீட்டு வாசலில் நின்று. பார்த்து, சிரித்து விட்டுச் செல்ல சசியின் அழுகையொலியோடு ஒளியும் குறைய காட்சி முடிவடைகிறது.
பாத்திரங்கள் :
1. தாய் : Gafeo6 obLDIT 2. மகன் : சசி 3. மகள் ராதா
4. வீட்டுக்காரி : பரிமளம்
முதலாம் அங்கம் முடிவு
அங்கம் - 2
காட்சி : 1
10 வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. மகள் ராதா வளர்ந்துவிட்டாள். வீட்டின் காட்சிகள் மாறியுள்ளன. யாழ்ப்பாணத்தில் கனகசபையின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆனந்தன் - விமலா தம்பதியினர் கொழும்புக்கு வந்திருக்கிறார்கள்.
w கனகசபையின் வீட்டிற்கு வருகைதந்த அவர்களுக்கு மகள் ராதா தேநீர் கொண்டுவந்து கொடுக்கிறாள். விமலா ராதாவின் வளர்ச்சியைக் கண்டு பிரமித்துப் பார்க்கிறாள். ஆனந்தன் - விமலா இருவரும் தங்களுடைய பிள்ளைகளின் விபரங்களைக் கூறி உறவைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

oßG (* 27
இதே வேளை தேநீரைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்ற ராதா வீட்டின் பின்பக்கம் உள்ள குளியலறைக்குப் போகும்போது வீட்டுக்காரி பரிமளத்தின் மகன் நிர்மல் வழிமறிக்கிறான். நிர்மல் தான் ராதாவை விரும்புவதாகவும், தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்கிறான். ஆனால் ராதா, பரிமளம் அன்ரி நிர்மலுக்கு கொழும்பில் சொந்த வீட்டோடு பெண் பார்ப்பதாகக் கூறி தனது வறுமை நிலையை எடுத்துக் கூறுகிறாள். இதே நேரம் தாய் பரிமளம் கூப்பிட்டது கேட்டு நிர்மல் பயத்தோடு ஒடுகிறான். அவனின் பயத்தைக் கண்ட ராதா தனக்குள் சிரிக்கிறாள்.
ஹோலுக்குள் (Hall) விமலா செல்லம்மாவிடம் யாழ்ப்பாணத்து வீட்டை விற்கும் நோக்கம் இருக்கிறதா எனக் கேட்கிறாள். செல்லம்மா வீட்டை விற்க விருப்பமில்லையெனக் கூறுகிறாள். கந்தோர் முடிந்து வீட்டுக்கு வந்த கனகசபையிடமும் விமலா - ஆனந்தன் தம்பதியினர் வீட்டைப் பற்றி விசாரிக்கின்றனர். ஒய்வு பெற்றதும் தாங்கள் யாழ்ப்பாணம் வந்து இருக்கப்போவதாக கனகசபை கூறுகிறார்.
யாழ்ப்பாண வீட்டை வாங்கும் நோக்கத்துடன் வந்த ஆனந்தன் - விமலா தம்பதியினர் அந்த நோக்கம் நிறைவேறாமல் போகவே, புறப்பட ஆயத்தமாகிறார்கள்.
அவர்கள் போகப்போவதைக் கூறுவதற்காகச் செல்லம்மா ராதாவை வெளியே கூப்பிடுகிறாள். வெளியே வந்த ராதாவை விமலா அண்மையில் சென்று முத்தம் கொடுத்துவிட்டுச் செல்கிறாள். அந்தக் காட்சியோடு ஒளி குறைந்து காட்சி முடிகிறது.
பாத்திரங்கள் :
1. தாய் செல்லம்மா 2. மகள் ராதா 3. தகப்பன் 8560T859-6s 4. உறவினர்கள் ஆனந்தன், விமலா 5. வீட்டுக்காரியின் மகன் நிர்மல்
காட்சி : 2
பரிமளத்தின் மகன் நிர்மல் ராதாவைத் தேடி அவர்கள் இருக்கும் அனெக்ஸ்"க்கு வருகிறான். அவனை வரவேற்ற

Page 16
28 9 அருணா செல்லத்துரை
செல்லம்மா கதிரையில் உட்காரும்படி கூறிவிட்டு ராதாவைக் கூப்பிடுகிறாள். ராதா வெளியே வந்ததும் இருவரையும் பேச விட்டுவிட்டு குடிப்பதற்கு தேநீர் கொண்டு வருவதாகக் கூறிச் செல்லம்மா உள்ளே போகிறாள். ராதா ஹோலுக்குள் வந்து கதிரையில் உட்காருகிறாள். நிர்மல் தனது காதலை மீண்டும் ராதாவிடம் கூறுகிறான். ராதா பரிமளம் அன்ரி வீடு சீதனமாக வாங்குவதிலேயே கண்ணாகவிருப்பதால் தன்னால் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மீண்டும் தெரிவிக்கிறாள். இதனால் மனமுடைந்த நிர்மல் செல்லம்மாவிடம் சொல்லமலேயே போய்விடுகிறான். தேநீருடன் வெளியே வந்த செல்லம்மா நிர்மல் எங்கே எனக் கேட்கிறார்.
நிர்மல் போய்விட்டதாகக் கூறும் ராதா குற்ற உணர்வினால் மன்னிப்புக் கேட்பதற்காக தாயின் காலில் விழுந்து வணங்குகிறாள். அவளைப் பிடித்து எழுப்பிய செல்லம்மா அவர்களின் பேச்சை தான் கேட்டுக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.
ராதாவின் முடிவே சரியெனக் கூறிய செல்லம்மா தாங்கள் பிறந்த மண்ணில் என்றாலும் போய் நிம்மதியாய் வசதியாய் இருப்பதற்கு முயற்சி செய்வோம் என்று கூறி ராதாவை அணைத்துக்கொள்ள காட்சி ஒளி குன்றி முடிவடைகிறது.
பாத்திரங்கள் :
1. தாய் செல்லம்மா 2. மகள் ராதா 3. வீட்டுக்காரியின் மகன் நிர்மல்
(அங்கம் - 2 முடிவடைந்தது)
அங்கம் - 3
காட்சி : 1
யாழ்ப்பாணத்து வீடு. கனகசபையும் ஒய்வு பெற்று யாழ்ப்பாணம் வந்துவிட்டார். கனகசபை சாய்மனைக் கட்டிலில் படுத்திருக்க காட்சி ஆரம்பமாகிறது. செல்லம்மா வீட்டைக் கூட்டித்

ofG (1) 29
துப்பரவு செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறாள். இருவரும் கொழும்பில் பிள்ளைகளை விட்டு வந்ததைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் ராதாவுக்குக் கல்யாணம் பேசும் புரோக்கர் தர்மு, ஆனந்தனுடன் வீட்டிற்கு வருகிறார்.
கலியாணப் பேச்சு ஆரம்பமாகிறது. புரோக்கர் தர்மு, ஆனந்தன் குடும்பத்தினர் மாற்றுச் சம்பந்தம் செய்வதற்கு விரும்பியுள்ளதைக் கூறுகிறார். செல்லம்மா அதற்குரிய நிபந்தனைகளைக் கூறுகிறாள். தாங்கள் ராதாவுக்கு வீடு ஒன்றைச் சீதனமாகக் கொடுப்பது போல், தங்களுடைய மகன் சசிக்கும் வீடு ஒன்றைச் சீதனமாகக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறாள். புரோக்கர் எவ்வளவோ கூறியும் செல்லம்மா விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் ஆனந்தன் தங்களுக்கென யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரே வீட்டை கொழும்பில் வேலைபார்க்கும் செல்லம்மாவின் மகன் சசிக்குக் கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். காட்சி ஒளி குன்றி முடிகிறது.
பாத்திரங்கள்
1. தகப்பன் 565-6 2. தாய் : GF66) bLost
3. புரோக்கர் : தர்மு 4. சம்பந்தி ஆனந்தன்
காட்சி : 2
கலியாணப் பேச்சு முடிந்ததும், பிள்ளைகள் இருவருக்கும் கடிதம் போட்டு யாழ்ப்பாணம் வரும்படி அழைக்கப்பட்டுள்ளார்கள். முதலில் மகன் சசி வருகிறான். பின்னர் மகள் ராதா வருவதாக சசி தெரிவிக்கிறான். இந்தக் காட்சி எதுவித வசனமும் எழுதாமல் சேர்த்துக் கொள்ளப் பட்டதாகும். இந்தக் காட்சியில் நடித்தவர்கள் அனைவரும் தங்கள் சொந்த வசனத்தையே பேசினார்கள். இது ஒரு பரீட்சார்த்தமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட காட்சியாகும்.

Page 17
30 0 அருணா செல்லத்துரை
கலியாண இசையொன்றைப் போட்டு காட்சி மாற்றத்தைக் காட்ட வேண்டும். கலியாணக் காட்சி இரண்டு சோடிக் கிளிகளைக் காட்டி முடிகிறது.
பாத்திரங்கள் :
1. தகப்பன் 56T58-6 2. தாய் : GeF66)ibLDIT 3. மகன் : சசி
காட்சி : 3
கலியான வீடு முடிந்தவுடன் இரண்டு தம்பதியினரும் கொழும்புக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிறார்கள். வழியனுப்பு வதற்காக எல்லோரும் வந்து ஹோலில் இருக்கிறார்கள். தேநீர் பரிமாறப்படுகிறது.
சசியும், மனைவி மீனாவும் அறைக்குள், புறப்படுவதற்கு ஆயத்தமாகும் வேளையில் வாக்குவாதப் படுகிறார்கள். கொழும்பில் இருப்பதற்கு இடமில்லாமல் ஒரு அறைக்குள் தான் வந்து குடும்பம் நடத்த விரும்பவில்லையென மீனா கூறுகிறாள். இதனால், பிரச்சினை தொடங்குகிறது.
இதே வேளை மற்ற அறைக்குள் இருந்து வெளியே வந்த ராதாவும் கணவனும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுப் புறப்பட ஆயத்தமாகிறார்கள். அவர்களை ஆனந்தனும் விமலாவும் கூட்டிச் செல்கிறார்கள்.
அறைக்குள்ளே சசியும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இறுதியாக மீனா தன்னைக் கலியாணம் பேசும்போது சசியின் தாயார் யாழ்ப்பாணத்தில் வீடு கட்டாயம் சீதனமாகக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டதையும், அதனால் தங்களுக்கு இருக்கும் ஒரே வீட்டையே சீதனமாகத் தந்ததாகவும் அதனால் அந்த வீட்டிலேயே தான் வாழ்க்கை நடத்த விரும்புவதாகவும் தெரிவிக்கிறாள். இதனால் மனமாற்றம் அடைந்த சசி மீனாவை அழைத்துக்கொண்டு ஹோலுக்கு வருகிறான்.

ofG (1) 31
புதுமணத் தம்பதியினர் பெட்டிகளைவிட்டு வெளியே வருவதைக் கண்ட செல்லம்மா பெட்டிகளைத் தான் போய் எடுத்து வருவதாகக் கூறுகிறாள். தாங்கள் கொழும்பில் இருப்பதற்கு சரியான ஒரு இடமில்லாமல் கொழும்புக்குப் போக விரும்பவில்லை எனவும் யாழ்ப்பாணத்திலேயே இருக்கப் போவதாகவும் சசி உறுதியாகக் கூறுகிறான். உத்தியோகத்தை விட்டு விட்டு என்ன செய்யப்போகிறாய் எனச் செல்லம்மா கொதிக்கிறாள். தனியாகப் போய் கொழும்பில் இருந்து உத்தியோகத்தைப் பார்க்கும்படி ஆலோசனை சொல்கிறார் கனகசபை, உத்தியோகத்தைச் சாட்டாக வைத்து தான் கொழும்புக்குப் போய் வாழ விரும்பவில்லை எனவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக வாழ்க்கை நடத்தி பேருக்குக் குடும்பம் நடத்த விரும்பவில்லை எனவும் சசி கூறுகிறான். உத்தியோகமே கண்ணாய் பெற்றோர் அலைந்து திரிய, அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் பெற்றோர்களின் அரவணைப்பு இன்றி, குடும்பப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று எதுவுமே இல்லாமல் பணமே கண்ணாக அலைந்து திரிவதை உதாரணமாக சசி கூறுகிறான்.
அதனால், தன்னுடைய தகப்பன் கொழும்பில் ஒரு சின்ன வீட்டிற்குள் குடும்பம் நடத்தியது போல தானும் வாழ விரும்பவில்லை எனக் கூறி மீனாவையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் போகிறான். அவர்களைப் பார்த்த வண்ணம் கனகசபையும் செல்லம்மாவும் நிற்க ஒளி குறைந்து காட்சி முடிவடைகிறது.
பாத்திரங்கள் :
1. 866OT855-60)
. QF66 oblost
சசி
ராதா ஆனந்தன் விமலா . மீனா (மருமகள்) . மருமகன்
முற்றும்

Page 18
வீடு
(தொலைக்காட்சி நாடகம்)
அங்கம் - 1
கணவன் - 56858-6.U மனைவி - செல்லம்மா வீட்டுக்காரி - பரிமளம் பிள்ளைகள் - சசி, ராதா. காட்சி - 1
சின்ன அனெக்ஸ், வீட்டுச்சாமான்கள்
ஒவ்வொன்றாக வீட்டுக்குள் கொண்டு வரல். மனைவி முன் அறைக்குள் சாமான்களை அடுக்கிக் கொண்டிருத்தல் பாரமில்லாத மேசையை மகனும், மகளும் கொண்டுவரல், அந்த வீட்டிற்கு குடி வருதல் என்பது காட்சியின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். தாய் சாமி படத்தைக் கொழுவிக் கொண்டு நிற்க படத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
ராதா : அம்மா இதை எங்கை வைக்கிறது?
செல் : நீங்கள் உதிலை வையுங்கோ. நானும் அப்பாவும் எடுத்து வைக்கிறம். அப்பா என்ன செய்யிறார்?
சசி : அப்பா வானுக்குக் (Van) காசு குடுத்துக்
கொண்டிருக்கிறார்.
செல் : நீங்களும் போய் உங்களாலை ஏலக்கூடிய சாமான்களைத் தூக்கிக் கொண்டு வாங்கோ.

AG (1) 33
பிள்ளைகள் போய் மற்றக் கதிரைகளைக் கொண்டு 心 வரல். கணவனும் குசினி மேசையுடன் உள்ளே வரல். கணவன் மனைவி பேசிக் கொண்டிருக்கும் போது பிள்ளைகள் மற்றச் சாமான்களைக் கொண்டு வரும்போது தகப்பன் அவற்றை வாங்கி உள்ளே வைத்தல்.
செல் : எவ்வளவு வானுக்கு?
கனக 850/-
செல் : ஒரு இரண்டு மைல் தூரம்தானே வரும்.
கனக ஆயிரம் தரச்சொல்லி நிண்டவன். நான்தான்
சொல்லி ஒரு மாதிரி குறைப்பிச்சனான்.
செல் : ஒவ்வொரு முறையும் வீடு மாறேக்கை குடுத்த காசிலை ஒரு வானே விலைக்கு வாங்கிப் போடலாம் (சிரித்தல்)
சிறிது நேரம் போன பின்னர் பிரதான வீட்டிலிருந்து வீட்டுச் சொந்தக்காரி அனெக்சுக்குள் வரல். வந்தவள் வாசலில் நின்ற வண்ணம்,
வீட்டு : (சிரித்து) சாமான்கள் அடுக்கிறியள் போலை,
நானும் ஏதாவது உதவி செய்யலாமோ.
செல் : வாங்கோ . உள்ளே நாங்கள் இன்னும் கதிரையள் ஒண்டும் சரியாய் அடுக்கேல்லை. இதிலை இருங்கோ.
ஒரு கதிரையை எடுத்துப்போடுகிறாள். கணவன் திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறார். மனைவி அடிக்காமல் வைத்த ஆணியை எடுத்துச் சுவரில் அடிக்கப் போகிறார்.
வீட்டு : முந்தி இங்கை இருந்தவையும் சுவரெல்லாம்
ஆணி அடிச்சுப் பழுதாக்கிப் போட்டினம்.

Page 19
34 0 அருணா செல்லத்துரை
மனைவி கணவனைத் திரும்பிப் பார்க்க ஆணி அடிக்காமல் திரும்பி வந்து கதிரையில் உட்காருகிறார். கணவன் உட்கார மனைவி எழுந்து .
செல் : இருங்கோ அன்ரி பால் கொண்டு வாறன்.
கனக : எங்கை மிஸ்டர் பொன்னம்பலத்தார்
ஒப்பீஸ"க்குப் போயிட்டாரே. வீட்டு : ஒம் அவர் ஒப்பீஸாக்குத்தான் போயிட்டார். அவர்தான் சொல்லிப் போட்டுப் போனவர் இதுகளை ஒருக்கா பார்க்கச் சொல்லி. அது சரி நீங்கள் யாழ்ப்பாணம் எவடம்? கனக : . நான் நல்லூரடி. இவ கச்சேரியடி, வீட்டு : உங்களுக்கு யாழ்ப்பானத்திலை வீடிருக்கா.
மனைவி பாலுடன் உள்ளே வரல்,
செல் : எனக்குச் சீதனமாய் தந்த வீடு கச்சேரியடியிலை இருக்கு. அந்த வீட்டிலை இப்ப ஒருதருமில்லை. அம்மா அப்பா தனிய இருக்கினம்.
வீட்டுக்காரியிடம் பாலைக் கொடுத்தல், வீட்டுக்காரி பாலைக் குடித்த அரைவாசியில்
வீட்டு : சின்னவர் கொஞ்சம் குழப்படிபோலை.
செல் கொஞ்சம் குழப்படிதான்.
கணவன், மனைவியையும் பார்த்து பிள்ளை களையும் பார்த்தல்
வீட்டு : என்ரை மூத்த மகள் ஏ.எல். படிக்கிறாள்.
s மகன் ஜிசீ.ஈ. படிக்கிறார். அதுதான்
கொஞ்சம் குழப்பாமல் பாக்க வேணும்.

GQ 0 , 35
மனைவி கணவனைப் பார்த்தல் பிள்ளைகள் இருவரும் முகம் களித்த வண்ணம் உள்ளே
போகுதல்.
ፈ%6õifፊ፵፩ ;
வீட்டு :
செல் :
செல் :
வீட்டு :
உங்கடை சொந்த எடம் எவடம் எண்டு சொல்லேல்லை.
நாங்கள் பருத்தித்துறை. எங்களுக்கும் அங்கை வீடிருந்தது. அதை வித்துப் போட்டுத்தான் இதை வாங்கினனாங்கள். இந்த வீட்டை வாங்கி எல்லாம் திருத்தினனாங்கள். அப்ப நீங்கள் கொழும்பு வந்து கன காலமோ.
முப்பது வருஷமாச்சு. முந்தி இருந்த வீட்டை ஏன் விட்டனீங்கள்? அது இடம் காணாது பாருங்கோ. பிள்ளையஞம் வளர்ந்திட்டினம் தானே. அப்பிடித்தான் அவரும் சொன்னவர். நீங்கள் குறை நினைக்கப்படாது. என்ன செய்தாலும் எலெக்றிசிற்றி வாட்டர் பில் இரண்டிலையும் அரைவாசி தந்திடவேணும் ஏனென்டால் இப்ப எல்லாம் விலையேறிப் போச்சு. அப்ப நான் வரட்டே. உங்களுக்கும் வேலையிருக்கும்.
வீட்டுக்காரி எழும்பிப் போதல்.
வீட்டுக்காரி போக,
கணவனும் மனைவியும்
ஆளையாள் பார்த்துவிட்டு ஆணிகளையும், சுட்டியலையும் உள்ளே எடுத்துப் போக, கணவன் பெருமூச்சுடன் சாமான்களை அடுக்குகிறார். காட்சி
ஒளி குறைகிறது.
(காட்சி முடிவு.

Page 20
36 0 அருணா செல்லத்துரை
காட்சி - 2
பிள்ளையன் இருவரும் படித்துக் கொண்டிருக் கிறார்கள். சின்னமேசை, இடம் போதவில்லை.
சசி : அக்கா கொஞ்சம் தள்ளியிரன். ராதா : ஏன் உமக்கு இவ்வளவு இடமும் போதாதே. சசி : உம்முடைய கால் ஏன் என்ரை காலிலை
முட்டுது. ராதா சரி நான் முட்டேல்லை. நீர் பேசாமல் இருந்து படியும் இல்லாட்டி அம்மாவைக் கூப்பிடுவன்.
செல்லம்மா குசினியில் பாண் வெட்டுகிறாள். கணவன் மனைவியைப் பார்த்தவண்ணம் இருக்கிறார்.
கனக : இஞ்சேரும் கச்சேரியடிவீட்டை வித்துப்
போட்டு இஞ்சை ஒரு வீடு வாங்குவமே
மனைவி திரும்பிப் பார்த்துவிட்டு பாணை இறுக்கி வெட்டுகிறாள்.
கனக என்னப்பா நான் சொல்லுறன் பேசாமல்
நிக்கிறீர். செல் : எனிப்ப திடீரென்று. கனக இல்லை பிள்ளையள் வளருங் காலத்திலை இருக்க ஒரு நல்ல இடம் வேண்டாமே. அங்கை, இருந்து படிக்க இடம் காணாமல் சண்டை பிடிக்கிதுகள். செல் : அதுக்காக கனக அங்கை வீடு இருந்து என்ன பிரயோசனம். செல் : ஏன் மறந்து போனீங்களே! என்னைக் கலியாணம் பேசேக்கை, மாமா வீடு வேனும்

ബ് ( 37
ó56öTó 。
மகன் ஓடிவந்து
சசி :
மகன் போகிறான்.
எண்டு கட்டாயப்படுத்தினதை நான் மறக்கவில்லை.
அது அப்பா செல்லம்மா இப்ப தேவை எண்டு வரேக்கை விக்கத்தானே.
அம்மா அக்காவைப் பாருங்கோ என்னைத் தள்ளி தள்ளி விடுறா.
கணவன் மனைவியைப்
பார்க்கிறான். மனைவி சமாளித்து
செல் :
öö6õ፤ፊዟ፩ :
மனைவி கண்கலங்கி
செல் :
óቻ56ÖIfö፭ :
செல் :
ராதா தம்பியை இருந்து படிக்க விடு. அது சரி இப்ப யாழ்ப்பான வீட்டை வித்துப் போட்டு, பிறகு கொழும்பிலை இருக்கேலாமல் போனால் யாழ்ப்பாணம் போய் எங்கையிருப்பியள். நல்லாய் இருந்து அனுபவிக்க வேண்டிய காலத்திலை, மூலைக்குள்ளையும் முடுக்குக்குள்ளையும் இருந்திட்டு பிறகு வயது போனப் பிறகு அங்கை போயிருந்து என்ன செய்கிறது?
நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனால் அப்பா எனக்கு தந்த சீதன வீடு. அதோடை அவையள் இப்ப உயிரோடை இருக்கினம். அதுக்குள்ளை நாங்கள் போய் வீட்டை விக்கப்போறம் எண்டால் என்ன யோசிப்பினம். கடைசியாய் நீர் என்ன சொல்லுறீர்.
கோவிக்காதேங்கோ எனக்கெண்டா வீட்டை விக்க விருப்பமில்லை.

Page 21
38 9 அருணா செல்லத்துரை
கனகசபை பெருமூச்சுவிட்டு தண்ணிர் எடுத்து குடித்துவிட்டுப் போகிறார்.
(காட்சி மாற்றம்)
காட்சி - 3
நாட்கள் பல போய்விட்டன. பிள்ளைகள் இருவரும் பாடசாலை விட்டு வருகிறார்கள். தாய் கதவைத் திறந்துவிட்டு பிள்ளைகளின் பின்னால் வந்து அவர்களோடு உட்காருகிறாள். மகள் சப்பாத்தைக்களட்டி சொக்ஸ்சை களட்டுகிறாள். மகன் ஒன்றையும் களட்டாமல் இருக்க
செல் : தம்பி சப்பாத்தைக் களட்டன்.
மகன் பார்த்துவிட்டுப் பேசாமல் இருக்கிறான்.
செல் தம்பி சுறுக்கா சப்பாத்தைக்
போட்டு முகத்தைக் கழுவிப்
சாப்பிட வாரும்.
செல்லம்மா அவனுடைய ஸ்கூல் பாக்கை (Bag) கொண்டுபோய் மேசையில் வைக்கிறாள்.
சசி : அம்மா இண்டைக்கு நகுலன்ரை பேர்த்டே.
செல் : அதுக்கென்ன
சசி ; எங்களுக்கு படிப்பிக்கிற ரீச்சர் நகுலன்
வீட்டை போகப்போறா.
செல் : போனால் போகட்டுமன். நீ போய் உடுப்பை
மாத்து.
சசி அவவிட்டை நான் கேட்டன்.
பேர்த்டேக்கு (Birthday) எங்கடை வீட்டையும்
வரச் சொல்லி.

GQ () 39
செல் :
சசி :
செல் :
சசி :
செல் :
சசி :
செல் :
சசி :
செல் :
சசி :
என்ன வாறெனெண்டு சொன்னவவே. ஒம் எண்டு சொன்னவ. இஞ்சை எப்பிடி கொண்டு வந்து அவவுக்கு சாப்பாடு குடுக்கிறது. (சிரித்து) நீ வரச்சொல்லன் நான் சாப்பாடு குடுக்கிறன். அவவுக்கு சாப்பாடு குடுக்கிறதுக்கு சாப்பாட்டு மேசையில்லை. அது பரவாயில்லை, இந்தச் சின்ன மேசையிருக்குத்தானே. W ஐயோ அம்மா, அவ சிரிப்பா எல்லே. அப்பிடியெண்டா நாங்கள் யாழ்ப்பாணம் போணப்பிறகு வரச்சொல்லு. அங்கை பெரிய வீடிருக்கே அம்மா. அங்கை பெரிய வீடு, குசினி, எல்லாம் கொழும்பு பாசனிலை (Fashion) கட்டியிருக்கு. அங்கை வரச்சொல்லன். அவ எங்கை யாழ்ப்பாணம் வரப்போறா. அதோடை நாங்கள் எப்ப போய் யாழ்ப்பாணத்திலை இருக்கப்போறம்.
விட்டுக்காரி உள்ளே வரல்
வீட்டு :
செல் :
Lurf) :
செல் :
Lurf? :
என்ன தாயும் மகனும் ஒரே கதையாய் இருக்கு.
இருங்கோ பரிமளான்ரி. என்ன சின்னவர் இன்னும் உடுப்பு மாத்தேயில்லை. அதையேன் கேக்கிறியள் அன்ரி, வந்த நேரத்திலையிருந்து என்னோட ஒரே சண்டை.
என்னவாம்

Page 22
40 0 அருணா செல்லத்துரை
செல் :
Լյrh :
செல் :
u_urf :
தன்ரை ரீச்சரை, ஒரு நாளைக்கு கூட்டி வந்து, சாப்பாடு போடவேணுமாம்.
அதுக்கு இது வீடு சரியில்லையாம், சாப்பாட்டு மேசையில்லையாம். ஆளுக்கும் கொஞ்சம் உலகம் பிடிபடுது போலை. சரி சரி அம்மாவோடை சண்டை பிடிச்சது போதும் போய் உடுப்பை மாத்தும்.
சசி எழும்பிப் பார்த்துவிட்டு உள்ளே போகிறான்.
செல் :
ւյrh :
செல் :
: hחנL
செல் :
Lurfi :
செல் :
Lirfi :
என்னன்ரி விசேசம். ஒண்டுமில்லைப்பிள்ளை. சசியின்ரை சத்தம் கேட்டுத்தான் நித்திரையாலை எழும்பின 60TTsit. இவன் உங்கடை நித்திரையை குழப்பிப் போட்டான் போலை.
என்ரை நித்திரை குழம்பினால் பரவாயில்லை. தம்பியும் தங்கச்சியும் படிக்கேக்கை சத்தம் போடுறதைத்தான் குறைக்க வேணும். நானும் ஏலுமான அளவு சொல்லி குறைக்கிறன் அன்ரி. ஆளைக் கொஞ்சம் அடக்கி வைக்க வேணும். தகப்பனுக்கு பயமில்லைப் போலை. தகப்பனோடை ஒரே செல்லம். நான் தான் அடிபோட்டு அடக்க வேணும். ஆளைக் கொஞ்சம் அடக்கி வையுங்கோ அதோடை செல்லம்மா அவரிட்டைச் சொல்லும் இந்த மாத வாடகையை அட்வான்சாய் தரட்டாம் எண்டு. ஏனெண்டா எனக்கு கொஞ்சம் காசு அவசரமாய் தேவையாயிருக்கு.

வீடு 0 41
செல் : சரியன்ரி நான் அவர் வரவிட்டுச் சொல்றன். பரி : இன்னும் ஒண்டு சொல்ல வேணும்.
நீங்களும் இப்ப வந்து 2 வருஷமாச்சு. செல் : நாள் போனதே தெரியேல்லையன்ரி
பரி : உங்கடை அட்வான்சிலையும் இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. வாற மாதத்திலையிருந்து 250/- கூட்டித் தரச்சொல்லுங்கோ. செல் : ம். சரியன்ரி.
பரி சரி நான் வாறன். சின்னவரைத்தான்
கொஞ்சம் அடக்கி வையுங்கோ.
பரிமளம் வெளியே போனதும் செல்லம்மா தனது மகனுக்கு போட்டு அடிக்கிறாள். அழும் சத்தமும் அடிக்கும் சத்தமும் கேட்கிறது. பரிமளம் வெளியே வந்து நின்று கேட்டுவிட்டு, சிரித்து விட்டுப் போகிறாள்.
(காட்சி முடிவு)
அங்கம் - 2
1. கனகசபை 4. 6 Loeast 2. Gaféo6 oblost 5. ராதா 3. ஆனந்தன் 6. நிர்மல்
வீட்டில் காட்சிகள் மாறியுள்ளன. சாமான்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 10 வருடம் போய்விட்டது. மகள் வளர்ந்து விட்டாள். வீட்டிற்கு இரண்டு விருந்தாளிகள் வந்திருக்கின்றனர். தாய் முன் ஹோலில் இருந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். மகள் தேனீர் கொண்டு வந்து கொடுக்கிறாள். மகள் வெளியே வருவதில் இருந்து காட்சி ஆரம்பமாகிறது.

Page 23
42 0 அருணா செல்லத்துரை
செல் :
மகள் நின்று பார்த்து
போகிறாள்.
விம :
ஆனந் :
செல் :
ஆனந் :
செல் :
விம :
செல் :
பாத்ரூம் போகும்
இவதான் மூத்தவ ஏ.எல். செய்திட்டு வீட்டிலை இருக்கிறா.
சிரித்து விட்டு உள்ளே
உம்மடை மகள் ராதா நல்லாய் வளர்ந்திட்டாள். நாங்கள் போனமுறை வந்திட்டுப் போகேக்கை சின்னப்பிள்ளை. நாங்கள் 10 வருஷம் முந்திப் பார்த்ததேல்லே. அப்ப என்ன ராதாவுக்கு 12 வயதுதானே. மகன் என்ன செய்கிறார். ஏ.எல். பாஸ் பண்ணிட்டு இப்பதான் வேலை கிடைச்சிருக்கு. அப்ப நீங்கள் இனி யாழ்ப்பாணம் வாற யோசினையில்லைப் போலை. இனி என்ன இவரும் ரிற்றயர் (Retire) பண்ணப் போறார். நாங்கள் அங்கைதான் வந்திருக்கப் போறம்.
அப்ப பிள்ளையள். அவையள் இரண்டு பேருக்கும் இங்கை வேலை கிடைச்சிருக்கு. அம்மாவும் அப்பாவும் தவறின பிறகு வீட்டைக் கவனிக்கவும் ஒருதருமில்லை.
வழியில் ராதா நின்று
வீட்டுக்காரியின் மகனுடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சி ராதா வரும் போது நிர்மல் கையை நீட்டி
AA
மறிக்க அவள் "அன்ரி" என்று கூப்பிடுவது போல் சைகை செய்ய அவன் கையை எடுத்துவிட ராதா
சிரிக்கிறாள்.
ராதா :
இவ்வளவு பயம் எண்டால், ஏன் சேட்டை விடுவான்.

ofG 0 43
நிர்ம :
ராதா :
நிர்ம :
ராதா :
நிர்ம :
ராதா :
நிர்ம :
ராதா :
நிர்ம :
ராதா :
நான் அம்மாட்டை சொல்லிச் சம்மதிக்கச்
ராதா : நிர்ம :
: rחפgחתו
நீர் அம்மாவைக் கூப்பிடப்போனிர், அதுதான் கையை எடுத்தனான். என்ன விஷயம் சொல்லும். உங்கடை அப்பா றிற்றயர் பண்ணிட்டு யாழ்ப்பாணம் போகப்போறாராம். ஓம் இனியெண்டாலும் போய் பெரிய வீட்டிலை சந்தோஷமாய் இருக்கட்டுமன். அப்ப நீர் நிர்மல் நான் போகமாட்டேன். நான் வேலை செய்யிறன். அதாலை கொழும்பிலையே இருக்கப் போறன். ராதா, நான் கேட்டதுக்கு நீர் ஒண்டும் சொல்லேல்லை. நான் முதலிலை சொன்னதைத்தான் சொல்லுறன் நிர்மல். உங்கடை அம்மா கொழும்பிலை வீட்டோடை தான் உங்களுக்கு பொம்பிளை பார்க்கிறா. அதுக்காக என்னட்டைக் கொழும்பிலை வீடில்லை.
செய்வன். எனக்கு அதிலை நம்பிக்கையில்லை. ஏன் நம்பிக்கையில்லாமப் பேசுறீர். அன்ரியை எனக்கு 15 வருஷமாய் தெரியும். நாங்கள் இந்த அனெக்ஸ்"க்கு வந்ததிலை இருந்து அன்ரி வீடு வீடெண்டு எங்களைக் கஷ்டப்படுத்தினதை நான் மறக்கேல்லை.
தாய் நிர்மலைக் கூப்பிடுகிறாள்.
தாய் :
நிர்மல்.

Page 24
44 0 அருணா செல்லத்துரை
நிர்ம :
இங்கையிருக்கிறன். வாறன் அம்மா.
நிர்மல் ஒடுகிறான். ராதா பார்த்துச் சிரிக்கிறாள்.
விம :
செல் :
ஆனந் : செல் :
ஆனந் :
செல் :
செல்லம்மா பேசேல்லையே.
மகளுக்கு ஒரு இடமும்
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறம். ஏன் ஒண்டும் சரி வரல்லையே.
கொழும்பிலை பேசினால் வீடு தரச்
சொல்லிக் கேக்கினம்.
யாழ்ப்பாணத்து வீட்டை வித்துப்போட்டு கொழும்பிலை வீடு ஒண்டை வாங்கிக் குடுத்து கலியாணத்தை செய்ய வேண்டியது தானே. கடவுளே. அந்த வீட்டை விக்கவோ அது எங்கடை அப்பு ஆச்சியவை சீதனமாய் தந்தது. அப்பிடி விக்கிற யோசினை இருந்தால் சொல்லுங்கோ நாங்கள் இன்னும் ஒரு வீடு வாங்க யோசிக்கிறம்.
கனகசபை ஒப்பீஸ் பேக்குடன் (Bag) உள்ளே வரல். கதிரையில் இருந்த வண்ணம் வயது போனதாகக் காட்ட ஒப்பனை செய்திருக்க வேண்டும்.
565
ஆனந் :
56
விமலா :
ஆ. ஆனந்தன் எப்ப வந்தனிங்கள். யாழ்ப்பாணத்தாலை. முந்தா நாள் வந்திட்டம்.
எப்பிடி ostosum பிள்ளையரும் வந்தவையோ.
இல்லையண்ணை அவயைள் மூண்டு பேரும் வேலை செய்யினம். இரண்டு பேருக்கு ரீச்சர் வேலை கிடைச்சிருக்கு.

65G 0 45
óቻ56õ፲ፌ፵5 :
ஆனந் :
செல் :
விமல :
ó5göTó 。
ஆனந் :
òአ6õIፊ፵5 ;
ஓராள் முல்லைத்தீவிலை ரீச் பண்ணிறா. மகன் கச்சேரியிலை வேலை செய்யிறார்.
எப்பிடிப் போறவ பஸ்சிலையே. கிழமைக்கொரு தரம் போய் வாறவை ராதா. பிள்ளை அப்பாவுக்கு ரீ (Tea) கொண்டு வாவன். அண்ணையும் வந்திட்டியள் விஷயத்தை ஒண்டாய்க் கேட்டிட்டுப் போகலாம். என்ன விஷயம். யாழ்ப்பாண வீட்டை விக்கிற யோசினை இருந்தால் சொல்லுங்கோ. இனி எங்கை பிள்ளை விக்கிறது. நாங்கள் அங்கை வந்து இருக்கப்போறம்.
ராதா f கொண்டு வந்து கொடுக்கிறாள்.
ராதாவுக்குக் கலியாணம் பேசினா அது தான் சீதனம் போலை.
நாங்கள் எங்கையன்ரி வரப்போறம். எனக்கு
கொழும்பிலைதானே வேலை கிடைச் சிருக்கு.
எண்டாலும் இருக்க ஒரு இடம் வேனும் தானே.
ராதா நின்று நிமிர்ந்து பார்த்து விட்டு உள்ளே போகிறாள்.
ஆனந் :
ፊኟ6፲፻፲fö፭ ;
எந்தளவிலை யாழ்ப்பாணம் வாறதா யோசினை.
றிற்றயமெண்ட் பேப்பரேல்லாம் குடுத்திட்டன். இன்னும் ஒரு இரண்டு

Page 25
46 0 அருணா செல்லத்துரை
மாதத்திலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்திடுவம்,
செல்லம்மா குனிந்த வண்ணம் இருக்கிறாள். fயை குடித்துவிட்டு.
ஆனந் சரியண்ணை நாங்கள் போயிட்டு வாறம். விமல : ஒமண்ணை நாங்கள் வேறையும் இரண்டு
வீட்டுக்குப் போகவேணும். வாறமண்ணை.
செல் : ராதா, அன்ரியவை போகப் போகினமாம்.
ராதா வெளியே வருகிறாள். விமலா வந்து ராதாவைக் கொஞ்சிவிட்டுப் போகிறாள்.
விமல : போயிட்டு வாறம் பிள்ளை.
(காட்சி முடிவு)
காட்சி - 2
செல்லம்மா ஹோலுக்குள் இருக்க நிர்மல் வருகிறான்.
நிர்ம : அன்ரி. ராதா நிக்கிறாவே.
செல் : நிக்கிறா . வாரும் தம்பி இந்தக் கதிரையில
இரும்.
நிர்ம : தாங்ஸ் அன்ரி.
செல் : ராதா . நிர்மல் வந்திருக்கு
ராதா வெளியே வர தாய் இருவரையும் பார்த்துவிட்டு.
செல் : தம்பி இருந்து கதையும் குடிக்க ஏதாவது
கொண்டு வாறன்.

GQ () 47
நிர்ம :
செல் :
வேண்டாம் அன்ரி இப்ப தான் குடிச்சிட்டு வந்தனான். அதுக்கென்ன பரவாயில்லை இன்னும் ஒண்டு குடியுமன்.
நின்று மறுமொழி சொல்லிவிட்டு உள்ளே போகிறாள். தாய் உள்ளே போனதும் ராதா நிர்மலைப் பார்க்கிறாள். நிர்மல் ஒன்றும் பேசாமல்
இருக்கிறான்.
ராதா :
என்னைத் தேடி வீட்டுக்கு வந்திட்டுப் பேசாமல் இருந்தால் எப்பிடி. சொல்லுங்கோ வந்த விஷயத்தை.
நிர்மல் ராதாவை நிமிர்ந்து பார்க்கிறான்.
நிர்ம :
grg/T :
நிர்ம :
ராதா :
நிர்ம :
ராதா. நான் கேட்டதுக்கு நீரொண்டும் சரியான மறுமொழி சொல்லேல்லை. நிர்மல். எங்களுக்கு வயது வந்திட்டுது விரும்பமில்லாத ஒண்டைச் செய்துபோட்டு காலமெல்லாம் கஷ்டப்படுறதைவிட செய்யாமலே இருக்கலாம். என்னிலை உமக்கு விருப்பமில்லையே.
அப்பிடி நான் சொல்லேல்லை. உம்மையும் அம்மாவையும் எனக்கு இஞ்சை வந்த நாளிலை இருந்தே தெரியும். எனக்கு உம்மிலை விருப்பம் இல்லாமல் இல்லை ஆனால் அது கலியாணம் வரைக்கும் போய் வாழ்க்கை முழுக்க பிரச்சினையாய் போய்விடக் கூடாது. அதுக்காகத்தான் சொல்லுறன். என்னுடைய நிலைமையிலை நான் என்ன செய்ய வேணும் எண்டு எதிர்பார்க்கிறீர்.

Page 26
48 9 அருணா செல்லத்துரை
ராதா :
நிர்ம :
ராதா :
நிர்ம :
ராதா :
ராதா :
நிர்ம :
இடைமறித்து,
prints.T :
நிர்மல் நாங்கள் என்ன பெரிசாக் காதலிச்சுப் போட்டமே. இல்லைத்தானே. நாங்கள் உங்கடை வீட்டிலை வாடகைக்கு வந்ததாலை ஏற்பட்ட பழக்கம். பேசினம், பழகினம் அவ்வளவுதான்.
நீர் அந்த மட்டோடை நிண்டிட்டீர். நான் அதுக்கு மேலையும் உம்மை விரும்பிட்டன்.
நிர்மல், ஒரு பக்க காதலை விட்டிடலாம். ஆனால் அதை விட வாழ்க்கை முக்கியம். ராதா.
நிர்மல் உங்கடை அம்மா என்னட்டை
திரும்பத் திரும்ப வீட்டைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறா.
அது அம்மா. அவவின்ரை ஆசை பிழையாய் இருக்கலாம். ஆனால் ஒரு தாய் மனம் நோக நாங்கள் கலியாணம் செய்து நல்லாய், சந்தோஷமாய் இருக்கேலாது.
ராதா முடிவாய்.
நிர்மல் நான் என்ரை முடிவை எப்பவோ சொல்லிட்டன். கொழும்பிலை எங்களாலை வீடு தர ஏலாது. அதாலை நான் எங்கை வீடிருக்கோ அங்கை எனக்குப் பொருத்த மான ஒரு மாப்பிள்ளையை பார்த்துக் கொள்ளுறன்.
நிர்மல் நிமிர்ந்து பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டு விட்டு எழும்பிப் போகிறான். ராதா பார்த்துக்
கொண்டிருக்கிறாள்.

ofG � 49
செல்லம்மா தேனிருடன் வருகிறாள். வந்து நிர்மல் போனதைக் கண்டு ராதாவை நிர்மல் எங்கே என்ற தோரணையில் பார்க்கிறாள்.
ராதா நிர்மல் போயிட்டாரம்மா.
செல் : தேத்தண்ணி. ராதா வேண்டாம் எண்டிட்டுப் போயிட்டார்.
தேனீரைக் கொண்டு வந்து மேசையில் வைக்கிறாள். மகளை நிமிர்ந்து பார்க்கிறாள். மகள் எழும்பி வந்து தாயின் காலில் விழுகிறாள். அவளைத் தூக்கி அணைத்த தாய் அவளின் தலையை தடவிவிடுகிறாள்.
ராதா : அம்மா.
செல் : நான் எல்லாம் கேட்டுக்கொண்டுதான்
இருந்தனான்.
ராதா : அம்மா. நீ.
செல் : பிள்ளை. நாங்கள் பிறந்த மண்ணிலை போயெண்டாலும் நிம்மதியாய் வசதியாய் இருக்க முயற்சி செய்வம். ராதா : அம்மா.
தாயை அணைத்துக் கொள்ளக் காட்சி முடிவடைகிறது.
அங்கம் - 3
1. கனகசபை 6. சசி 2. GafsoeoubLDIT 7. ராதா 3. ஆனந்தன் 8. f$6OTIT 4. விமலா 9. மருமகன்
5. புறோக்கர்

Page 27
50 0 அருணா செல்லத்துரை
யாழ்ப்பாணத்துவிடு.
கனகசபை சாய்மனைக்
கட்டிலில் படுத்திருக்கிறார். செல்லம்மா வீட்டைக் கூட்டிக்கொண்டு வெளியே வருகிறாள். கூட்ட
முடியாமல் களைத்து,
விடுகிறாள்.
956T :
செல் :
956 :
செல் :
«56ծT :
செல் :
ტჩ6ზT :
செல் :
56
செல் :
567 :
கதிரையில் உட்கார்ந்து
என்ன செல்லம்மா களைச்சுப் போனியோ.
ஒமப்பா. இப்ப என்னாலை வேலை செய்யேலாமல் கிடக்குது. ஏணிப்ப இந்த நேரத்தில கூட்டுறாய். இதிலை என்ன தூசி படிஞ்சிருக்கே. ஒவ்வொருநாளும் கூட்டித் துப்பரவாய் வடிவாய் வைச்சிருக்க வேணும் எண்டு ஆசையாய் இருக்கு. பிள்ளையஞமில்லை. அதுகள், கொழும் பிலை முந்தி நாங்கள் இருந்ததுபோலை சின்ன அறைக்குள்ளை அடைஞ்சு போய்க்கிடக்கிதுகள். எப்பவோ அவையள் இஞ்சை வந்து இருக்கத்தானே போகுதுகள்.
(சிரிக்கிறார்)
ஏன் சிரிக்கிறியள். இல்லை உனக்கும் எங்கடை வீட்டை வடிவாய் வைச்சிருக்க வேணுமெண்டு எவ்வளவு ஆசை. ஆசைப்பட்ட நாளிலை எல்லாம் கொழும்பிலை சின்ன அறைக்குள்ளேயே சீவியம் நடத்தினம். அதுக்காக உத்தியோகத்தை விட்டிட்டு வர ஏலுமே. வாழவேண்டிய நேரத்திலை வீடில்லாமல் அலைஞ்சு திரிஞ்சம். இப்ப சாகவேண்டிய நேரத்திலை வீடு கூட்ட ஏலாமல் இருக்கிறம்.

GQ () 51
செல் :
ტ56სif :
செல் :
öö6õ፫ ̇ :
அது சரி மகளின்ரை விசயத்தை புறோக்கரிட்டை சொன்னிங்களே. எத்தினை மணிக்கு வாறமெண்டவை. இண்டைக்கு ஆனந்தத்தோடை வாறன் எண்டு சொன்னவர். அதுதான் பார்த்துக் கொண்டு நிக்கிறன். அவையள் வாறதுக்கிடையிலை கூட்டிட்டால் éFf). அவையள் வாறநேரம் தும்புத்தடியோடை நிக்கமால் கூட்டிப்போட்டுக் கொண்டு போய் உள்ள வையும்.
செல்லம்மா, களைச்சு களைச்சு கூட்டி துப்பரவு செய்துவிட்டு உள்ளே போகிறாள். வெளியே இருந்து தர்மு புரோக்கரும் பெண்ணின் தகப்பனாரும் வாறதைக் கண்டதும் கனகசபை எழும்ப முயற்சி செய்கிறார்.
ஆனந் :
புரோ :
ტ86ბIf *
ஆனந் :
புரோ :
கனகசபை கொஞ்ச
பரவாயில்லை நீங்கள் அதிலையே இருங்கோ. நாங்கள் பக்கத்திலை கதிரையைப் போட்டுக் கொண்டு கதைக்கிறம். புரோக்கர் முதலிலை, சொல்லேக்கை கொஞ்சம் யோசினைதான். எண்டாலும் ஒருக்கா கதைச்சாத்தானை எல்லாம் சரியாய் வரும். கொழும்பாலை வந்த நாளிலை இருந்து விமலா ஒரே ராதாவின்ரை கதை தான். அதுதானண்ணை மாத்துச் சம்பந்தமாய் செய்வம் எண்டு யோசிக்கிறம்.
நேரம் யோசித்துவிட்டுத்
திரும்பிப் பார்க்க செல்லம்மா ரியுடன் வருகிறாள்.

Page 28
52 0 அருணா செல்லத்துரை
செல் :
fயை எடுத்த பின்னர்
ፊm56ጀክ :
செல் :
புரோ :
956ST :
செல் :
எடுங்கோ அண்ணை ரீ.
செல்லம்மா மாத்துச்சம்பந்தமாய் என்னை கேட்கினம். கேட்டுக்கொண்டுதான் இருந்தனான். மகளின்ரை சாதகம் 90 வீதம் பொருத்தம். இனி மகனின்ரை சாதகம்தான் பொருத்தம் பார்க்க வேணும். என்ன செல்லம்மா யோசிக்கிறாய். ம். தம்பி ஆனந்தம் இருங்கோ வாறன். இஞ்சை ஒருக்கா வாருங்கோ.
கனகசபையும் செல்லம்மாவும் எழும்பி உள்ளே போகின்றனர். புரோக்கரும் ஆனந்தமும் ஆளை யாள் பார்க்கின்றனர். அறையின் உள் மூலையில் நின்றவண்ணம் பேசுகின்றனர்.
ፊ፵፩68፲ :
செல் :
ó6öT 。
செல் :
6 :
என்னப்பா, புரோக்கர் இப்பிடி ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். சரி வந்தால் செய்வம்.
எப்பிடி நாங்கள் பிள்ளைக்கு வீடு குடுக்கிறது போலை அவையஞம் வீடு குடுப்பினம் எண்டால் செய்வம். அப்ப புரோக்கரை ஒருக்கா கூப்பிட்டு நீ சொல்லு. நான் முன்னுக்குப் போய் ஆனந்தத்தோடை பேசிப் பார்க்கிறன்.
கனகசபை வெளியே வந்து
அறை வாசலில் நின்று

G 0 53
@5cmör 。
தர்மு செல்லம்மா உன்னோடை ஏதோ கதைக்கப் போறாவாம். போய் ஒருக்கா என்னெண்டு கேள்.
தர்மு எழும்பி உள்ளே போக கனகசபை உட்காருகிறார். தர்மு உள்ளே வந்து செல்லம்மாவைப் பார்த்துச் சிரித்து
புரோ :
செல் :
புரோ :
செல் :
என்னக்கா சொல்லுறியள் உங்களுக்கும் நல்லாய் தெரிஞ்ச இடம். சொந்தக்காரரும் கூட. பிறகென்ன யோசிக்கிறியள்.
தர்மு, எங்களிட்டை இருக்கிறது ஒரு வீடு, அதை மகளுக்குத்தான் குடுக்கப் போறம். அதைப்போலை மகனுக்கும் அவையள் ஒரு வீடு குடுப்பினம் எண்டால் நாளைக்கே பொருத்தம் பாப்பம். அக்கா அவையஞக்கு இன்னும் ஒரு மகள் இருக்கு. அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றாய். என்ரை பிள்ளைக்கும் இருக்க ஒரு இடம் வேணுமெல்லே.
முன் ஹோலில் கனகசபை ஆனந்தத்துடன்
பேசுகிறார்.
ஆனந் :
956
(யோசித்து)
எங்களுக்கு இன்னும் ஒருமகள் இருக்கிறா. அதுதான் யோசிக்கிறன். ஆனந்தம் உங்களின்ரை மற்ற மகளின்ரை வாழ்வுக்காக நான் என்ரை மகனுக்கு இருக்க இடமில்லாமல் செய்ய ஏலாது தானே.

Page 29
- அருணா செல்லத்துரை
ஆனந் :
நான் வீட்டை போய் கதைச்சுப் பாத்திட்டு சொல்றன்.
தர்முவும் செல்லம்மாவும் வெளியே வருகின்றனர். வந்து கதிரையில் உட்காருகின்றனர்.
தர்மு :
ஆனந் :
செல் :
956 :
செல் :
956 :
தர்மு :
ஆனந் :
இருவரும் எழும்ப
காட்சி - 2
அப்ப என்ன அண்ணை மகளின்ரை சாதகத்தை தாருங்கோ. ஓம். சாகதத்தை தாங்கோ சாதகம் பொருத்தமெண்டா எல்லாத்தையும் யோசிச்சுச் செய்வம். எங்களுக்குள்ளை ஒளிப்பு மறைப்பொண்டும் இருக்கப்படாது. தம்பி, நான் என்ரை புள்ளைக்கு என்ன செய்யலாம். இவ்வளவு நாளும் கொழும்பிலை வேலை செய்து ஒண்டும் மிஞ்சேல்லை. பிள்ளையளை படிப்பிச்சு விட்டிருக்கிறம். நாங்கள் இப்ப அதுகளுக்கு செய்யக்கூடிய ஒரே உதவி, இருக்கிறதுக்கு ஒரு இல்லிடம் தேடிவிடவேணும் அவ்வளவுதான். என்ன ஆனந்தம் யோசிக்கிறியள். உங்கடை பிள்ளைக்குத்தானே குடுக்கப் போறியள். ஒம் தர்மு. அக்கா நீங்கள் பிள்ளையஞக்கு கடிதம் போட்டு வரச்சொல்லுங்கோ.
(காட்சி முடிவு)
கல்யாண இசை போட்டு காட்சியை மாற்ற வேண்டும். வீட்டுக் காட்சியில் ஆனந்தம், விமலா,

6G 0 55
கனகசபை ஆகியோர் இருக்க செல்லம்மா தேநீர் கொண்டு வந்து கொடுக்கிறாள்.
56 :
ஆனந் :
விம :
செல் :
கார் இரண்டுதானே வந்து நிக்குது. ஒம். தம்பியும் ராதாவும் காரிலை முன்னுக்கு எங்கடை வீட்டைப் போயிட்டு பஸ் ஸ்ராண்டுக்குப் போகட்டும். மருமகனும் மீனாவும் மற்றக் காரிலை வரலாம்தானே. ஓ அப்ப எல்லாரும் பஸ் ஸ்ராண்டுக்குப் போகலாம்.
விட்டின் உள் அறையில் சசியும்
மீனாவும் பேசும் காட்சி
சசி :
மீனா :
சசி :
மீனா :
சசி :
மீனா :
சசி :
மீனா :
கடைசியாய் நீர் என்ன சொல்லுறீர் மீனா. நீங்கள் இன்னும் விடும் பாக்கேல்லை. என்னையும் வரச் சொல்லியிருக்கிறியள். கொஞ்ச நாளைக்குள்ளே வீடு பாத்திடலாம். இஞ்சை நாலு அறையோடை வீட்டை வைச்சுக் கொண்டு அங்கை போய் ஒரு அறைக்குள்ளே கிடக்கிறதே. என்ரை சம்பளத்துக்குள்ளை என்னாலை பெரிய வீடு எடுக்கேலாது. கொழும்பிலை இப்ப ஒரு அறை எடுக்கவே 1500/- வேணும். உங்கடை அப்பா, அதுக்காகத்தானே வீடு சீதனமாய் வேணும் எண்டு கேட்டு வாங்கினவர்.
அதுக்காக
நான் சொல்றதை நல்லாய் யோசிச்சுப் பாருங்கோ. இப்ப நாங்கள் வாழவேண்டிய வயதிலை கொழும்பிலை போய் ஒரு அறைக்குள்ளே சீவியம் நடத்திப்போட்டு

Page 30
56 9 அருணா செல்லத்துரை
பிறது வயதுபோன காலத்திலையே இங்கை வந்து இருக்கிறது.
சசி மீனாவைப் பார்க்கிறான். மீனா அழுகிறாள். ஹோலுக்குள் ராதாவும், மாப்பிள்ளையும் மற்ற அறையில் இருந்து வெளியே வருகிறார்கள். வந்தவர்கள் முதலில் கனகசபை செல்லம்மா
கியோரின் காலில் விழுந்து வணங்குகிறார்கள். ஆனந்தன் - விமலாவின் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.
கன : அப்ப நீங்கள் இவை இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு பஸ் ஸ்ராண்டுக்குப் போங்கோ.
செல் : நாங்கள் சசியையும் மீனாவையும் கூட்டிக் கொண்டு மற்றக் காரிலை வாறம்.
செல்லம்மா ராதாவை கட்டிப் பிடித்து அழுகிறாள். விமலா மருமகளைக் கொஞ்சி விடுகிறாள்.
ஆனந் சரி எல்லாம் நல்லாத்தான் முடிஞ்சிது.
பிறகென்ன அழுகை தம்பி நடவுங்கோ.
பெட்டியைத் தூக்கிக் கொண்டு போக கண்கலங்கியவாறு செல்லம்மாவும் கனகசபையும் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். காட்சி அறைக்குள் வருகிறது.
சசி : மீனா அப்பாவிட்டையும்
அம்மாவிட்டையும் சொல்லிட்டு வருவம். மீனா : என்ன சொல்லப் போறியள்.
சசி : நீர் வாருமன்.

G 0 57
கையைப் பிடித்து அழைத்து வருகிறான். வெளியே வந்ததைக் கண்ட செல்லம்மா
செல் :
சசி வந்து கொண்டே
சசி :
செல் :
óቻ56õ፲‛ :
இருவரும் வந்து
தம்பி பெட்டியையும் கொண்டு வந்திருக்கலாம். சரி. சரி இனி வெளிக்கிட்ட பயணம் திரும்பவேண்டாம். நான் போய் எடுத்துக் கொண்டு வாறன்.
வேண்டாம் அம்மா பாக் (Bag) இங்கையே இருக்கட்டும்.
ஏன் தம்பி
என்ன நடந்தது பிள்ளை
காலில் விழுகிறார்கள்.
செல்லம்மாவும் கனகசபையும் ஆசிர்வதித்துவிட்டு அவர்களை தூக்கி எழுப்புகிறார்கள்.
செல்
αθόρδ και
சசி :
செல் :
சசி :
956 :
சசி :
செல் :
என்ன தம்பி இது, ஏன் நீங்கள் போகயில்லையே. இல்லையப்பா.
என்னது ஓமம்மா இருக்க ஒரு இடமில்லாமல் கொழும்பிலை போய் மூலைக்குள்ளேயும்
முடுக்குக்குள்ளேயும் இருந்து, நான் வாழ விரும்பேல்லை. அப்ப நீ தனியப் போய் உத்தியோகத்தைப் UTITST. அப்பா உத்தியோகத்தை சாட்டாய் வைச்சு நாங்கள் வாழவேண்டிய வயசிலை அஞ்ஞாதவாசமாய் வாழவிரும்பேல்லை. அப்ப என்ன தம்பி செய்யப்போறாய்.

Page 31
58 9 அருணா செல்லத்துரை
சசி :
ტჩ6ზT :
சசி :
அம்மா அங்கையொண்டும் இங்கை யொண்டுமாய் இருந்து சும்மா பேருக்கு பிள்ளைப் பெத்துக் குடும்பம் நடத்த நான் விரும்பேல்லை. அதுதானே தம்பி இப்ப நடக்குது. அதுதான் அப்பா எங்கடை பிள்ளையன் குடும்பப் பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று,
எதுவிதப்பற்றும் இல்லாமல் பணமே
செல் :
seo LO6 f :
கணணாய அலையுதுகள. பிள்ளை நீயெண்டாலும் அவனுக்குச் சொல்லன். மாமி எங்களையெண்டாலும் வாழ வேண்டிய வயதிலை வாழ விடுங்கோவன்.
竺炸
செல்லம்மா, கனகசபையைப் பாக்கிறாள். சசியும் மீனாவும் கையைப்பிடித்த வண்ணம் உள்ளே
போகிறார்கள்.
நடிகர்கள் :
எஸ். எஸ் கணேசபிள்ளை கலாலசுஷ்மி தேவராஜ்
தேவி சிறிபத்மநாதன்
பிராங் புஷ்பநாயகம்
சிவரஞ்சனி விக்னேஸ்வரன் பிரதீக்கா ஜெயரட்ணம்
கமலினி செல்வராஜன் எஸ். ஜெயராஜ் கே. ரவிச்சந்திரன்
எஸ். சுரேஸ்ராஜ் உதயகுமார் கார்த்திகா சிறீதரா
மாஸ்டர். சுஜேன் அருணா செல்லத்துரை.

GQ () 59
இசை :
படப்பிடிப்பு :
ஒலிப்பதிவு :
காட்சித்தொகுப்பு : ஒளியமைப்பு : கலையக உதவியாளர் : அரங்க அமைப்பு : அரங்க உதவி :
அரங்க அலங்காரம் : ஒப்பனை : ஒளித்தொகுப்பு :
கணனி எழுத்துக்கள் : தயாரிப்பு உதவி : கதை, வசனம்,
யாரிப்பு, ! நெறியாள்கை
எம். எஸ். செல்வராஜா, மித்திரப்பிரியன், பிரசாந்தன் நிசித வர்ணதுரிய, இ.டி.கே. பெர்னாண்டோ, யு.எஸ். ரத்னசிறி, காமினி சரச்சந்திர பாத்தியா டி. சில்வா, அஜந்தா விஜயக்கோன் பேர்சி கிளமன்ற் பியானந்த ராஜபக்ஸ என். பி. வீரசேன லயனல் சப்ரமாது ரஞ்சித் வசந்த, ரி. டபிள்யு. ஹரிச்சந்திர, சுமுது லியனகே. எஸ். கதிர்காமத்தம்பி நிமால் ராஜபக்ஸ சே. பரதன், எஸ். ஏ. சுமித் சி. தித்தகல்ல
சே. பரதன்.
ஆர் ரவீந்திரன்.
அருணா செல்லத்துரை.
ஒளிபரப்பு : 01-04-1991, 19.00-19.30 (அங்கம் - ) 08-04-1991, 19.00-19.30 (அங்கம் - 2) 15-04-1991, 1900-19.30 (அங்கம் - 3)

Page 32
கடலைஞானம் பற்றி .
வானொலி நாடக உலகில் பல சாதனைகள் புரிந்தவர் 'சானா' என அழைக்கப்பட்ட சண்முகநாதன் அவர்கள். நான் வானொலியில் சேர்ந்த இரண்டு வருடங்களின் பின்னர் சானா அவர்களிடம் 1972ம் ஆண்டு சுடலைஞானம் எனும் இந்த வானொலி நாடகப் பிரதியை எழுதிக் கொடுத்தேன். வானொலியில் ஒலிப்பதிவு உதவியாளனாக கடமையாற்றியதால் நாடகத்தில் வரும் ஆறு கதாபாத்திரங்களின் வயதுக்கேற்ப அவர்களின் குரலமைப்பு எந்த விதத்தில் அமைந்திருக்க வேண்டுமென்ற தயாரிப்பு ஆலோசனைகளுடன் இந்தப் பிரதியை ஒப்படைத்திருந்தேன். நாடகப் பிரதியை வாசித்த சானா அவர்கள் வானொலி நாடகத்தில் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்களின் வயதையும், அவர்களின் குரல் எப்படி இந்த ஊடகத்தின் மூலம் வெளிவர வேண்டும் என்பதையும் கற்பனையில் கண்டு எழுதியவர்கள் மிகக்குறைவு. நீர் இந்த ஊடகத்தில் கடமையாற்றுவதால் இதை எழுதக்கூடியதாக இருந்தது. அத்தோடு சாதாரண வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் கல்யாணப் புறோக்கரையும் ஒரு மனித இதயம் படைத்தவராக பார்த்திருக்கிறீர்கள். நல்ல முயற்சி. உமது வெற்றிக்கு எனது பாராட்டுக்கள் எனக் கூறினார்.
நாடகப் பிரதி அவருடைய தயாரிப்பு முறைக்கு ஏற்றபடி ஒவ்வொரு வசனத்திற்கும் இலக்கமிடப்பட்டு பிரதிகள் பொறிக்கப்பட்டன. நடிக்க வேண்டிய கலைஞர்களும் தெரிவு செய்யப் பட்டார்கள். ஒத்திகைக்கென 30/10/1972, 31/10/1972 இரண்டு தினங்கள் குறிக்கப்பட்டன. 31/10/1972 பிற்பகல் 6 மணியிலிருந்து ஒலிப்பதிவு 22/11/1972ல் நாடகம் ஒலிபரப்பாகும் என சானா அவர்கள் கூறியதும் எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இலங்கை அரசின் ஆளும் கட்சியில் மாற்றம் கண்டபடியால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளை தரம் கண்டு ஒலிபரப்புவதற்கு

G 0 61
ஆலோசனைச் சபையொன்று நியமிக்கப்பட்டது. ஒலிப்பதிவிற்கு தயாராக இருந்த நிகழ்ச்சிகளின் பிரதிகளை ஆலோசனைச் சபையிடம் வழங்கும்படி உடனடி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதனால் எனது பிரதியும் 29/1072ல் ஆலோசனைச் சபைக்கு சமர்பிக்கப்பட்டது. இந்த நாடகப் பிரதியை மதிப்பீடு செய்த ஆலோசனைச் சபை அங்கத்தவர் பின்வரும் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
TOO PEDESTRIAN, INSIPID, AMORPHOUS
NOT FIT FOR BROADCAST
ஆலோசனைச் சபையின் கட்டளையை மீற முடியாத அனுபவம் வாய்ந்த நாடகத் தயாரிப்பாளர் நாடக ஒத்திகை ஒலிப்பதிவு பட்டார். இதைக் கேள்வியுற்ற நான் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் சானா அவர்களை சந்தித்தபோது அவர் கூறியவை என் மனதில் இன்றும் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.
'எந்த ஊடகமாக இருந்தாலும் அந்த ஊடகத்தின் கலைப் பரிமாணங்களை புரிந்தவர்களால்தான் அளவீடு செய்ய முடியும். வானொலி ஊடகத்தோடு சம்பந்தமில்லாத ஒருவரை வானொலி நாடகப் பிரதியை மதிப்பீடு செய்ய விட்டால் இதுதான் நடக்கும். இது நமது தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி' எனக் கூறினார். அந்த நாடகட் பிரதியையும் உங்கள் முன் பிரதி உருவத்தில் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இனி நாடகத்தை வாசியுங்கள் .
TOO PEDESTRIAN, INSIPID, AMORPHOUS NOT FIT FOR BROADCAST

Page 33
கடலைஞானம் ஒத்திகை 30.10.72 பிற்பகல் 400 - 7.00 31.10.72 பிற்பகல் 4.00 - 6.00 ஒலிப்பதிவு , 31.10.72 பிற்பகல் 6.00 - 8.00
ஒலிபரப்பு 22.11.72 இரவு
நாடக பாத்திரங்கள்
1. சின்னயா 2. முருகுப்பிள்ளை 3. கந்தையா
4. கனகசபை 5. நாகம்மா 6. இராசம்மா
(இசை)
அறிவிப்பு : "சுடலை ஞானம்" . நாடகம் எழுதியவர்
அருணா செல்வா.
S SS SS SS SSSS SS (இசை) (மக்களின் பேச்சொலியும், ஒப்பாரி வைக்கும் ஒலியும்) 1) 1. சின்னை : முருகுப்பிள்ளையண்ணை. நெருப்புப்
பெட்டியைத் தாருங்கோ. இந்த சுருட்டை ஒரு தரம் பத்த வைப்பம்.
2. முருகு : இந்தா. பத்தவைச்சுக் கொண்டு தா! குச்சுகள் இருக்குதோ வெண்டு பார். சின்னையா எப்ப எடுக்கப் போகினமாம்.
3. சின்னை : நான் நினைக்கயில்லை இப்ப எடுப்பினம் எண்டு. 4. முருகு ; ஏன் தம்பி சின்னையா . இப்ப எடுக்க மாட்டினம். 5. சின்னை : மூத்தமகன் இன்னும் வந்து சேர இல்லை. தந்தியடிச்சவையாக்கும். கிடைக்கேல்லையோ, ஆருக்குத் தெரியும். 6. முருகு : கனகசபைக்கு மூத்தமகனும் இருக்கிறானே?
7. சின்னை : ஒமண்ணை அது. முந்தினதாரத்தான். முதல் தாரத்திற்கு ஒரு பொடியன்தான். அவன் படிச்சு

8.
9.
2) 1.
6G 0 63
CupCD565 :
சின்னை :
(ԼՔG5(5 :
சின்னை :
முருகு :
சின்னை :
(pCD5(35 :
சின்னை:
கந்தை :
கொழும்பிலை உத்தியோகம் பார்க்கிறான். முறைக்கு அவன்தானை கொள்ளி வைக்கவேணும்.
அப்ப. நான் அவனை ஒரு நாளும் இங்க வாறதாகக் காணயில்லை. அவன் தகப்பனைப் பாக்க வாறத்தில்லையே.
முந்திக் கிரமமாக வாறவன் இப்ப ஒரு ஏழெட்டு வருஷமாய்த் துப்பரவாய் வாறதில்லை.
ஏன் சின்னையா அப்பிடி.
கனகசபை அதாவது தகப்பன் இரண்டாவது சம்சாரம் எடுத்தது அவனுக்குப் பிடிக்கயில்லை.
ஏன் அவள் நல்ல பெட்டை தானே.
நல்ல பெட்டை தான். ஆனால். அவன் இளம் பெடியன் கண்டியோ அதோடை பேப்பர்களுக்கும் கதைகள் எழுதி சீர்திருத்தம் பேசிறவனாம். அவனுக்கு தன்னுடைய நாற்பத்தைஞ்சு வயசிலை. தகப்பன் . ஒரு இளம் பெட்டையை கலியாணம் கட்டினது.
பிடிக்கேல்லைப் போல இருக்குது. நல்லது மகன் சொன்னது நியாயந்தானே. ஏனெண்டால். இப்ப கனகசபையுடைய வாழ்க்கை முடிஞ்சுது. வாழவேண்டிய வயசிலை அவள் இனி என்ன செய்ய முடியும்.
நீங்கள் இப்ப சொல்லுறது நியாயமாய்த்தான் எனக்கும் படுகுது. ஆனால் கனகசபை கலியாணம் கட்ட முதல். ஒரு நாள்.
(காலமாற்ற இசை) (வண்டில் போகும் சத்தம்)
ஏன் முதல் தாரம் செத்தால். இரண்டாம் தாரமாகக் கல்யாணம் முடிக்கக் கூடாதா சின்னையா.

Page 34
64 0 அருணா செல்லத்துரை
8.
9.
0.
12.
3.
14.
1S.
16.
3) 1.
சின்னை :
கந்தை :
சின்னை :
கந்தை :
சின்னை :
கந்தை :
சின்னை :
கந்தை :
சின்னை :
சின்னை :
கல்யாணம் முடிக்கலாம் தான் கந்தையாண்ணை. ஆனால் கனகசபைக்கும் வயது ஏறிப்போச்சுது நல்லாய். அதோடை. இருபது வயசிலை ஒரு மகன் பொடியனும் இருக்கிறான்.
பொடியன் இருந்தால் என்னப்பா. கனகசபைக்கு சம்மதம் எண்டால். சரிதானே.
கனகசபையுடைய சம்மதத்தைக் கொண்டு போய்
3 (U பக்கத்திலை வை. பெட்டை இராசம்மாவுடைய சம்மதம் கேட்கத் தேவையில்லையா?
சின்னையா. அதை நான் பொன்னரம்மானிட்டை கேட்டனான். இராசம்மாவுக்கு ஐஞ்சாறு கலியாணம் பேசிவந்தவையாம். எல்லாம் சீதனத்திலை குழம்பிப் போச்சுதாம். அதிலை. அவள் கலியாணம் வேண்டாம் எண்டு நிக்கிறாளாம். அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது. அப்ப . அவள் சம்மதிப்பாள் எண்டு எண்ணம் உனக்கு இருக்குதா. நல்ல காசு. காணி பூமி. அதோடை வீடு. இதெல்லாத்தையும் சொன்னால் மாட்டன் எண்டே சொல்லப்போறாள் கல்யாணத்துக்கு.
அந்த வேப்பமரத்தடியிலை வண்டிலை நிப்பாட்டு கந்தையா அண்ணை.
ஒ. ஒ. ம்பா. ம்பா .
கந்தையா அண்ணை . மாடுகளை அவிட்டுக்கட்டு, கனகசபை வீட்டிலை நாய்கள் நிற்குதோ இல்லையோ தெரியாது. கட்டிப்போட்டுவா.
(நாய் குலைக்கும் சத்தம்) கனகசபையண்ணை நாயைப் பிடியுங்கோ. ஐயோ. நாயைப் பிடியுங்கோ.

of G 0 65
3.
10.
1.
12.
«եջGծf:55 :
கந்தை :
565 :
கந்தை :
ტ56ზჭfტმა ჯ
கந்தை :
cዳ፩6ü፲ሪm5 :
. சின்னை :
5675 :
கந்தை :
ፊሟ5õõ፲`ò5 ?
அது கடிக்காது. பயப்பிடாமல் வாருங்கோ. அதாரது மற்றாள். ஒ. கந்தையாவே? ஒமண்ணை நான் தான். ஏன் இன்னும் விட்டுக்கு விளக்குக் கொழுத்தயில்லையே இருட்டாய் இருக்குது. நெருப்புப் பெட்டியைக் காணயில்லைக் கந்தையா. நெருப்புப் பெட்டி இருக்குதே மடிக்குள்ளே. இதுக்குத்தான் சொல்லுறது வீட்டிலை விளக்கேத் துறதுக்கு ஒராள் வேணுமெண்டு. இந்தாருங்கோ நெருப்புப் பெட்டி,
இஞ்சை கொண்டு வா.
(நெருப்புப் பெட்டி தட்டும் சத்தம்)
இருங்கோ திண்ணையிலை. தேத்தண்ணி வைக்கட்டோ.
வேண்டாமண்ணை. இப்பதான் முச்சந்திக் கடையிலை குடிச்சிட்டு வந்தனாங்கள். அதிருக்கட்டும் மகனுக்கு ஒரு இடமும் பேச்சு நடக்க இல்லையா. இன்னும் இல்லைக் கந்தையா. அவன் தனக்கிப்ப கலியாணம் வேண்டாமெண்டு நிக்கிறான். ஓ. இப்ப அவனுக்கென்ன கன வயசே. காலம் இருக்குது தானே. ஆறுதலாய் முடிக்கட்டன. ஆனால். இப்ப உங்களுக்கு இதுகளெல்லாத் தையும் பாக்கிறதுக்கெண்டாலும். ஒராள் வேணும் தானே கனகசபை அண்ணை.
(மெளனம்)
என்ன கனகசபை . பேசாமல் இருக்கிறாய்.
கந்தையா. நானும் இதைப்பற்றித்தான் கொஞ்சநாள் யோசிச்சுக்கொண்டிருக்கிறன்.

Page 35
66 0 அருணா செல்லத்துரை
13. சின்னை :
14. கந்தை :
S. ‹ቻ56ÑÑò5 :
4) 1. சின்னை :
ஆனால் ஒண்டுமாய் ஒரு முடிவுக்கும் வரமுடியஇல்லை. இதிலை என்னண்ணை யோசிக்கிறதுக்கு இருக்குது. பொன்னரம்மானுடைய மகள்க்காறி அவள் இராசம்மாவும் கல்யாணம் கட்டிறத்தில்லை யெண்டு. தீர்மானம் பண்ணி இருக்கிறாளாம். கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம் தான் பொன்னரம்மான் குடும்பம், நீங்கள் பாத்து உதவி செய்தீங்களெண்டால் உங்களுக்கு ஒரு புண்ணியம் தானை. இராசம்மா நல்ல கவனமான பிள்ளை. ஓம். உண்மையாக.
சமைச்சுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கப் போறாய். ஆயிரந்தானெண்டாலும். வீட்டிலை ஒரு பெம்பிளை இருக்கிறது போலை வருமே.
எண்டாலும் கந்தையா. என்னுடைய மகனையும் ஒரு சொல்லுக்கேட்டால் நல்லது தானே. ஊர் முறை யொண்டு இருக்குது தானே.
மகனை என்னண்ணை கேக்கிறது. அவனுக்கு விஷயத்தை விளங்கப்படுத்திச் சொன்னால் மாட்டனெண்டே சொல்லப்போறான். இந்தக் காலத்திலை. இதெல்லாம் சகசம் தானே. கனகசபை அண்ணை. உங்களுக்குக்கிருக்கிற இந்தக் காணி பூமி, வீடு (போய்கொண்டு) வாசல எல்லாத்தையும் பாக்கிறதுக்கொண்டாலும் ஒரு பெம்பிளை இல்லாமல்.
(காலமாற்ற இசை, மக்கள் பேச்சொலி)
2. முருகு :
3. சின்னை :
சின்னையா. அப்ப நீதான் ஆள். இதெல்லாத்தையும் செய்து வைச்சு முற்றாக்கி முடிச்சிருக்கிறாய். ஓம் முருகுப்பிள்ளை அண்ணை ஆருக்கோ தெரிஞ்சதே இப்படி கனகசபையண்ணை திடீரெண்டு கண்ணை மூடுவார் எண்டு.

ofG (1) 67
10.
1.
12.
13.
14.
முருகு :
. சின்னை :
முருகு :
சின்னை :
(மக்கள்
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
இஞ்சேர் un 6ofeso வாழ்க்கையெண்டால் இப்பிடித்தான். கொஞ்சம் யோசிச்சு நடக்க வேணும். அதுசரி. எத்தினை பிள்ளைகள் கனகசபைக்கு.
இரண்டு பெம்பிளைப்புள்ளைகளும், ஒரு பொடியனு மாக்கும். என்ன செய்யப்போறாளே இராசம்மா.
இங்கை கதையிலை இருந்ததிலை நேரம் போனதே தெரியஇல்லை. வா சின்னையா போய்க்கேட்பம் என்ன எடுக்கிறதோ இல்லையோ எண்டு. அண்ணை . இனிமேல் . நான் இப்பிடி படுமரத்திலை பச்சிளம் கொடிகளை படரவிடுற வேலைக்கு (போய்க்கொண்டு) மட்டும் போகமாட்டன். இது எனக்கு நல்லொருபாடம் முருகுப்பிள்ளை அண்ணை.
ஒலியுடன் பெண் ஒருத்தியின் விம்மல் ஒலி)
(இசை) (காட்சி மாற்றம்)
(வந்து கொண்டு) இந்தாருங்கோ, இந்தாருங்கோ. என்ன செய்யிறீங்கள்.
ம்ம். ம். ஒ நாகம்மா . என்ன கேட்டணி.
என்ன செய்யிறீங்கள்.
யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.
என்ன யோசிக்கிறீங்கள்.
இல்லை. அவள் இராசம்மா இரண்டு பெம்பிள்ளப் பிள்ளைகளையும், பொடியனையும் எல்லாம்
குஞ்சுகள். என்ன செய்யப் போறாளோ தெரியவில்லை.
அது சரி. கனகசபையுடைய மூத்த பொடியன் கொள்ளி வைக்க வரயில்லையே. ; காத்துக் கொண்டிருந்தினம் வருவான் வருவான்எண்டு.

Page 36
68 9 அருணா செல்லத்துரை
3.
8.
10.
\\
. சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
. சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
தந்தியடிச்சவையாக்கும். ஆனால் அவன் வரயில்லை.
அப்ப கொள்ளி வைச்சது.
அது கனகசபையுடைய இரண்டாம் தாரத்து சின்னப் பொடியன். அப்ப மூத்தமகன் வராவிட்டால் எல்லாச் சொத்தும் இராசம்மாவுக்குத்தானே பிறகென்ன குறைச்சல். நாகம்மா . அவளுடைய வயசுக்கு அவளிப்ப பூவில்லாமல் பெட்டில்லாமல் இருக்கிற வயசே.
ஒ. அது சரி. சின்ன வயசுதான். ஆனால் என்ன செய்யிறது எல்லாம் விதி.
விதி இல்லை நாகம்மா. நான் இந்தச் சின்னையன் செய்த பிழை. அந்த நேரம் நான் இராசம்மாவை. கனகசபைக்கு முடிச்சு வைக்காமல் இருந்தால் இப்ப இப்பிடி வந்து முடிஞ்சிருக்காது. எல்லாம் என்னுடைய பிழை. எனக்கு இனிமேல் இந்தக் கல்யாணத் தரகர் வேலை வேண்டாம்.
நீங்கள் என்ன கதைக்கிறீங்களெண்டு எனக்கு விளங்கயில்லை. சாப்பிட வாருங்கோ.
தண்ணிச் செம்பைக் கொண்டு வா.
இந்தாருங்கோ, சுறுக்காய் கழுவிப் போட்டு
வாருங்கோ. நேரம் போச்சுது பிள்ளைகள் வரப்போகுதுகள் பள்ளிக் கூடத்தாலை.
என்ன கறி.
சந்தைக்குள்ளை ஒரு மீனும் இல்லை. இறால் தான் வாங்கி வந்து காய்ச்சினனான்.
போடு . ம். ம்.

6G 0 69
6.
17.
18.
19.
20
6) 1.
நாகம் :
சின்னை :
நாகம் :
. சின்னை :
நாகம் :
சின்னை :
இராச :
சின்ன :
இராச :
சின்னை :
கொஞ்சம் குழம்பு விடட்டே.
விடு. . அ. கொஞ்சமாய் விடு. சரி. சரி. நாகம்மா கனகசபைக்கு எத்தனை ஏக்கர் வயல் இருக்கிதாம்.
பத்து ஏக்கர் வயலும் ஆறேக்கர் தோட்டக்காணியும் எண்டு நினைக்கிறன். இவ்வளவு காணி பூமிகளையும் என்னெண்டு அவள் இராசம்மா தனியப் பாக்கப்போறாளோ எனக்குத் தெரியாது.
நானும் வந்த நேரந்தொடக்கம் பாக்கறன். நீங்களும் ஒரே இராசம்மாவுடைய பெயர்ப் படலமாய்த்தான் இருக்குது. உனக்குத் தெரியாது நாகம்மா. நான் இல்லாவிட்டால்.
(காலமாற்ற இசை) நான் மாட்டன். நான் மாட்டன். எனக்கிந்தக் கலியாணம் வேண்டாம்.
இல்லை இராசம்மா. அந்தாள் கனகசபை கலியாணம் முடிச்சால் உன்னைத்தான் முடிப்பன் எண்டு சொல்லி ஒற்றைக் காலிலை நிக்குது. ஒ. ஒ. இப்பிடித்தான் சொல்லுவினம். பிறகு. சீதனம். காசு, காணி, பூமி, எண்டு நிற்பினம். கடைசியிலை. கலியாணம் குளம்பிப் போகும். அவ்வளவு தான் சொல்லிப்போட்டன்.
ஒ. அதே விஷயம் இராசம்மா அதெல்லாம் நான் பாக்கிறன். முருகரம்மான் இங்கை வாருங்கோ.
இரகசியம் பேசுவதற்கான ஓசையுடன்)
சின்னை :
(காலமற்ற இசை) நடந்திருக்காது அந்தக் கலியாணம். இராசம்மாவுக்கு மாப்பிள்ளை ஆரெண்டே தெரியாது. மணப்பந்தலிலை கொண்டுவந்து

Page 37
70 0 அருணா செல்லத்துரை
10,
1.
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
நாகம் :
சின்னை :
இருத்தினதுக்குப் பிறகுதான் தெரியும். மாப்பிளை ஆரெண்டு.
அப்ப அவள் உங்களைப் பேசல்லையே.
தாலி கட்டிற பொழுது பாத்தன் இராசம்மாவுடைய கண்ணாலை கண்ணிர் பொல பொலெண்டு. என்னாலை பாக்க முடியயில்லை. பிறகு ஒரு பிள்ளைப் பெத்த பிறகுதான் கோயிலிலை வைச்சுக் கண்டன்.
நீங்கள் அவளோட பேச இல்லையே.
எப்பிடிச் சுகம் எண்டு கேட்டன். மெல்லிய சிரிப்போடை சுகத்துக்கென்ன குறைச்சல் எண்டு சொல்லிப்போட்டுப் போட்டாள்.
நீங்கள் செய்யிறது தரகர் வேலையெண்டால் எல்லாப் பழி பாவமும் உங்களுடைய தலையிலையே விழவேணும். எல்லாம் அவரவர் தலை விதிப்படிதான் நடக்கும். கடவுளுக்குத் தெரியாதே. கடவுள் தான் எல்லாத்துக்கும். பொறுப்பு. நான் என்ன செய்யிறது. (பெருமூச்சு விடுகிறார்).
என்ன யோசிக்கிறீங்கள் சாப்பிடுங்கோ கொஞ்சம் சொதி விடட்டுமா.
ம். ஒண்டுமில்லை. கொஞ்சம் சொதி விடு. அது
சரி சந்தியில் கணபதிப் பிள்ளைக்கு எத்தினை பிள்ளைகள்.
ஒரு ஆம்பிள்ளைப்பிள்ளையும் ஒரு பெம்பிளைப் பிள்ளையும், பெண்சாதி செத்து இரண்டு வருஷமாய்க் கலியாணம் முடிக்காமல் இருக்குது. அந்தாளும் பாவம் இரண்டும் சின்னக் குஞ்சுகள். இம். ம். இராசம்மாவும் மூண்டு குஞ்சுகளை வைச்சுக் கொண்டு ஒரு ஆம்பிளைத்துணை இல்லாமல் கஷ்டப்படுகிறாள்.

வீடு 6 71
12. நாகம் :
13. சின்னை :
14. நாகம் :
15. சின்னை :
16. நாகம் :
17. சின்னை :
18 நாகம் :
19. சின்னை :
அறிவிப்பு :
பங்குபற்றியவர்கள்
•mæ கே. மார்க்கண்டன்
- பி. என். ஆர். அமிர்தவாசகம்
ஆர். எஸ். சோதிநாதன்
என். பி. தர்மலிங்கம்
விசாலாட்சி குகதாசன்
asam சுமதி சண்முகநாதன்
சின்னையா முருகுப்பிள்ளை கந்தையா
56858-6.U நாகம்மா gyms-budir
நீங்கள் சொல்லுற தொண்டும் விளங்கயில்லை.
நாகம்மா உனக்கு விளங்காது, நீ சும்மாயிரு.
ஏன் எழும்பி விட்டீங்கள்.
தண்ணிச் செம்பைத் தா.
இந்தாருங்கோ.
என்னுடைய சால்வையை எடுத்துக் கொண்டுவா.
எங்கேயோ போகப் போறிங்களா.
ஓம். கணபதிப்பிள்ளை வீட்டை போய் (போய்க்
கொண்டு) கணபதிப்பிள்ளையை என்னென்டு கேட்டுக் கொண்டு வாறன்.
நேயர்கள் கேட்டது "சுடலை ஞானம்" . நாடகம் . எழுதியவர் - அருணா செல்வா.
தயாரித்தவர் - 'சானா' (இசை)

Page 38
புண்ணிய பூமி
எழுதியவர் - அருணா செல்லத்துரை
ஒத்திகை ஒலிப்பதிவு ஒலிபரப்பு
m 27.03.88 - 08.30 - 10.30
27.03.88 - 10.30 - 12.30
m 02.04.88 - 09.30 - 10.00
நாடக பாத்திரங்கள்
1. தத்தை 4. பரதன்
தத்தை :
sibl.-
தத்தை :
* سارق
2. நடராஜா 3. சுரேஷ் 5. இலக்குமணன் 6. இராமச்சந்திரன்
தத்தை ஓடி வருகிறாள் . களையுடன் .)
அப்பா. அப்பா. அப்பா. என்னம்மா. ஏன் இப்படி களைக்க களைக்க ஓடி வாறாய்.
அப்பா. கடற்கரையிலை ஒரு சின்ன வள்ளத்திலை ஒராள் வந்து ஒதுங்கியிருக்கப்பா. அண்ணா பரதன் எங்கையப்பா. அவருக்கு ஆராவது உதவி செய்ய வேணும். பாவம். மயங்கிப் போயிருக்கிறார்.
கட்டாயம் செய்ய வேணும். யாரோ. யார் பெத்த பிள்ளையோ தெரியவில்லை. தம்பி பரதன்.

வீடு 0 73
பரதன் :
5
: זg56bתונL
தத்தை :
சுரேஸ் :
حساb
தத்தை :
பரதன் :
சுரேஸ் :
5 – :
பரதன் :
தத்தை :
5
என்னப்பா ஏன் கூப்பிட்டனிங்கள்.
தம்பி கடற்கரையிலை யாரோ ஒருவர் வள்ளத்தோடை மயங்கிப் போயிருக்கிறாராம். ஒடிப்போய் அவரைத் தூக்கி வாருங்கோ. பக்கத்து வீட்டிலை இருக்கிற ராமச்சந்திரன் இலக்குமணன் கண்ணன் எல்லாரையும் கூட்டிக்கொண்டு போப்பா.
சரியப்பா. தத்தை. ஒடிவா. வந்து எனக்கு இடத்தைக் காட்டு.
சரியண்ணா . ஒடிவாங்கோ.
இசை.) (சுரேஸ் மயக்கத்திலிருந்து முனங்குகிறான்)
அப்பா. அம்மா. ம். ம்மா. நானேங்கையிருக்கிறேன்.
தம்பி. தம்பி. ஒண்டுக்கும் பயப்பிடவேண்டாம். உமக்கு ஒண்டும் நடக்கேல்லை. இந்தக் கஞ்சியைக் குடியும் எல்லாம் சரியாய் வரும்.
அப்பா. அவருக்கு மயக்கம் தெளிஞ்சிட்டுதப்பா.
இப்பிடித்தாருங்கோ அந்தக் கஞ்சியை நான் பருக்கிறன்.
நானெங்கையிருக்கிறன்.
தம்பி நீர். 'புண்ணிய பூமியிலே' இருக்கிறாய்.
அப்பா. கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கிறாரப்பா.
இனி அவருக்கு நல்ல சுகம் வந்திடும். நான் ஒடிப்போய் கடவுளை கும்பிட்டுட்டு வாறனப்பா.
திரு விளக்கையும் ஏற்றிவிடம்மா. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேணும்.

Page 39
74 0 அருணா செல்லத்துரை
தத்தை :
5 -
பரதன் :
சுரேஸ்
Lugg,637 :
5 -
சுரேஸ் :
சுரேஸ் :
பரதன் :
தத்தை :
பரதன் :
அப்பா. போயிற்றுவாறன்.
சரியம்மா. தம்பி பரதன் மிச்சக் கஞ்சியையும் குடிக்கக்குடு.
இதையும் ஒரு மாதிரி குடிச்சிட்டாரெண்டால் சரி. என்ன அங்கையிங்கையும் பாக்கிறியள்.
இல்லை ஒருத்தரையும் தெரியேல்லை. என்னோடை வந்தவைக்கு என்ன நடந்ததெண்டு தெரியேல்லை.
என்னுடைய பெயர். பரதன். இவர் என்ரை அப்பா. பெயர் நடராஜர். நீங்கள் கண் முழிச்சுப் பார்க்கேக்கை நிண்டிட்டு ஓடிப்போனாளே அவள். தத்தை.
என்னுடைய தங்கச்சி.
அது சரி தம்பி. உம்முடைய பெயரென்ன.
ம். என்னுடைய பெயர். சுரேஷ்.
உங்களுக்கு என்ன நடந்தது? . நீர் கடற்கரையில் சின்ன வள்ளத்திலை மயங்கிப்போய் ஒதுங்கியிருந்தீர். தத்தை பார்த்திட்டு ஓடி வந்து சொல்லிச்சுது. நாங்கள் தான் தூக்கி வந்து ஒத்தடம் பிடிச்சு கஞ்சியும் தந்தனாங்கள்.
பெரியவர். நீங்கள் செய்த உதவிக்கு நன்றி.
நீங்கள் என்னெண்டு கடலுக்கு வந்தனிங்கள்.
நானும் வந்திட்டனண்ணா கொஞ்சம் பொறுங்கோ.
சுரேஷ் கொஞ்சம் பொறுங்கோ. இவள்தான் என்னுடைய தங்கச்சி . உங்களுக்கு சுகம் வந்ததுக்காக ஓடிப்போய் கோவிலிலை திருவிளக்கு ஏற்றி நன்றி சொல்லிவிட்டு வாறாள். ஆ. இப்பிடி இதிலை இரு தத்தை. இப்ப சொல்லுங்கோ. நீங்கள் எப்பிடிக் கடலுக்கு வந்தனிங்கள்.

6G 0 75
சுரேஸ் :
தத்தை :
பரதன் :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
நடரா :
: ז256b שנ_ן
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
நாங்கள் வியாபாரம் செய்து பணம் சேர்ப்பதற்காக எங்கடை நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு பெரிய பாய்மரக்கப்பலிலை வந்தனாங்கள். கப்பல் நடுக்கடலிலை வந்ததும் பெரிய சூறாவளிக்காற்று அடிச்சு எங்கடை கப்பலைப் புரட்டிப்போட்டுது.
கடவுளே.
பிறகு என்ன நடந்தது.
நான் ஒரு சின்ன வள்ளத்தை எடுத்து அதிலை உயிர் தப்ப நினைச்சன். பெரிய அலை வந்து அடித்து என்னையும் வள்ளத்தையும் பிரட்டிவிட்டது.
கடவுளே. பிறகு.
வள்ளத்திலை குப்புறப்படுத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டன். பெரிய அலை வந்து அங்கையும் இங்கையும் இழுத்துக்கொண்டு போனதுதான் ஞாபகத்திலை இருக்கு.
தம்பி. நல்ல காலம் வள்ளத்தை பிடிச்சபடியே மயங்கினபடியால் உம்மாலை கரை சேர முடிஞ்சுது. எல்லாம் கடவுளின் செயல்.
மற்றவையஞக்கு என்ன நடந்தது.
மற்ற நண்பர்களுக்கு என்ன நடந்தது எண்டு பார்க்கிற நிலையிலை நான் இருக்கேல்லை. மற்றவையஞம் என்னைப் பற்றிக் கவலைப்பட்டதாய் தெரியேல்லை. ஒவ்வொருத்தரும் தான் தப்பிக் கொள்ள வழி பார்த்தினம்.
அவையள் உங்கடை சொந்தக்காரரே.
சொந்தக்காரரும் இருந்தவை. நண்பர்களும் இருந்தவை.

Page 40
76 9 அருணா செல்லத்துரை
பரதன் :
சுரேஸ் :
Ո5ւ- :
பரதன் :
(சுரேஸாம்
சுரேஸ் :
தத்தை :
சுரேஷ் :
தத்தை :
சுரேஷ் :
நண்பர்களெண்டால்.
வியாபாரத்துக்காக கூட்டுச் சேர்ந்த நண்பர்கள். என்னைப்பற்றி எல்லாம் கேட்கிறியள் உங்களைப் பற்றி ஒண்டும் சொல்லேல்லை.
தம்பி. நாங்களிருக்கிற இந்தத் தீவின்ரை பெயர் புண்ணியபூமி. நாலு பக்கமும் கடலாலை சூழப்பட்டது இந்தத் தீவு. இந்தத் தீவுக்கு வந்த விருந்தாளி நீர், நல்லாய் களைச்சுப் போயிருக்கிறீர். இப்ப படுத்து ஒய்வெடுத்துக் கொள்ளும். நாளைக்குக் காலையிலை இந்தத் தீவை சுற்றிப் பார்க்கலாம்.
ஆறுதலாப் படுங்கோ சுரேஸ் . காலையிலை வந்து பாக்கிறம்.
இசை.)
தத்தையும் தீவைச் சுற்றிப் பார்க்கிறார்கள் கடல் ஒசை.
குருவி கத்தும் ஒசை. காற்றின் ஒலி.)
நல்ல இயற்கையழகுள்ள இடம். பொருத்தமாய்த்தான் புண்ணியபூமி எண்டு பெயர் வெச்சிருக்கினம். அது சரி இந்தக்காணியள் ஒண்டுக்கும் வேலியடைக்கிற தில்லையா.
இல்லையே. நாங்கள் இஞ்சை எந்தக்காணியும் பிரிச்சு வேலியடைக்கிறதில்லை.
ஏன்.
எல்லாக் காணிகளும் எல்லாருக்கும் சொந்தம். அதாலை இது எனக்கு அது உனக்கு எண்டு பிரிச்சுப் பார்க்கிற பழக்கம் இல்லை.
ஒரு பக்கம் தென்னந்தோட்டம். ஒரு பக்கம் வயல். வாழைத் தோட்டம் எவ்வளவு இனிமையான சூழ்நிலை இதைப்பார்த்துத்தான் "காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம். வேண்டும். அந்தக் காணி

ofG 0 77
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும். எண்டு பாடியிருப்பார் போலை.
ஆர் அப்பிடி பாடியிருக்கிறது.?
சுப்பிரமணியபாரதியார். அவரின்ரை கவிதைகள்
படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை.
உங்கடை சுப்பிரமணிய பாரதியார். காணியளைப் பிரித்து வேலையடைக்க வேணுமெண்டும் பாடியிருக்கிறாரோ.? (சிரிக்கிறாள்)
இல்லை. அப்படியில்லை. தத்தை இந்தக் கொய்யாப்பழம் நல்ல ருசியாய் இருக்கும் போலை. இந்தப் பழம் பிடுங்கிச் சாப்பிடலாமா?.
ஓம். நல்லாப்பிடுங்கிச் சாப்பிடலாம்.
ஒருவரும். கேட்கமாட்டினமோ.
அதுதான் சொன்னனே, இங்கை எல்லாம் எல்லாருக்கும் சொந்தமெண்டு.
ஒண்டு பிடுங்கீட்டன், உமக்கும் ஒண்டு தரட்டே.
ஒம். ஒண்டு தாங்கோ.
நல்ல ருசியாயிருக்கு இன்னும் இரண்டு மூண்டு பிடுங்கி வீட்டை கொண்டுபோய் வைச்சால், நாளைக்கும் சாப்பிடலாம்.
இல்லை உங்களுக்கு தேவையான அளவு பிடுங்கிச் சாப்பிடலாம் ஆனால் பிடுங்கி சேர்த்து. வைக்க வேண்டிய அவசியமில்லை. நாளைக்கும் இங்கை வந்து பிடுங்கிச் சாப்பிடலாம்.
நாளைக்கு பழம் இங்கையிருக்கும் எண்டு எப்பிடி நாங்கள் எதிர்பார்க்கலாம்.

Page 41
78 0 அருணா செல்லத்துரை
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
இலக்கு :
UtftLo :
இலக்கு :
சுரேஸ் :
தத்தை :
நாளைக்கு நீங்கள் எப்படி உயிரோடு இருக்கப் போகிறீர்கள் எண்டு உங்களுக்கு நம்பிக்கையிருக்கோ. அதைப் போலை இந்தப்பழங்களும் இங்கையிருக்கும் எண்ட நம்பிக்கை எனக்கு இருக்கு. (சிரிக்கிறாள்)
அதிலை ஆரோ கூட்டமாய் நிக்கினம் போய் அங்கை என்ன நடக்குது எண்டு பார்க்கலாமோ. (போய்கொண்டு)
ஒம் தாராளமாய் போய்ப்பார்க்கலாம்.
நீங்கள் வயலை உழுதபோது இந்தப் புதையலை எடுத்த படியால் நீங்கள் தான் அதைப் பிரிச்சுக் குடுக்க வேணும்.
இல்லை இலக்குமணா. வயல் உங்களுடைய வீட்டுப்
பக்கத்தில் இருந்த படியால் நீங்கள் தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ராமச்சந்திரன் நீங்கள் சொல்லுவது உண்மைதான். யாராவது இதை முன்னின்று பிரித்துக் கொடுத்தால் சரிதானே. நாளைக்கு வழக்கம் போலை கோயில் பூசை முடிந்ததும் எல்லார்க்கும் பிரிச்சுக் கொடுத்துவிடுவம்.
கிடைச்ச புதையலைப் பிரிச்சுக்கொடுக்கவோ இவ்வளவு பிரச்சினைப் படுகினம்.
புதையலை ஆர் எடுத்தினமோ அது அவருக்குத்தானே சொந்தம் அதை ஏன் பிரிச்சுக் குடுப்பான்?.
இங்கை ஆரும் ஒண்டுக்கும் சொந்தம் கொண்டாடுறதில்லை. எதை ஆர் கண்டெடுத்தாலும் கோவிலிலை வைச்சு எல்லாருக்கும் பிரிச்சுக் குடுத்துவிடுவினம். ஆர் அதைக் கொண்டுபோய் கோயிலிலை பிரிச்சுக் கொடுக்கிறது எண்டதைத்தான் அவையள் பேசி தீர்த்துக் கொண்டினம்.

6G 0 79
சுரேஸ் ;
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
அது சரி தத்தை நானும் இந்த ஊருக்கு வந்திருக்கிறன். எனக்கும் அதிலை பங்கு கிடைக்குமோ.
கட்டாயம் உங்களுக்கும் பங்கு கிடைக்கும். (சிரிக்கிறாள்)
ஏன் சிரிக்கிறாய். தத்தை?
இல்லை. நீங்கள் பங்கு கேட்கிறீர்கள். அதைக் கேட்க என்னை அறியாமல் சிரிப்பு வந்திட்டுது. இந்த புண்ணிய பூமியில் யாரும் பங்கு கேட்பதில்லை. ஏனென்றால் பங்கு கேட்கிறதுக்கு அவசியமே இல்லை.
அது சரி. தத்தை அவர்கள் இருவரும் என்ன சாதி.
சாதியெண்டால்..?
ஆ. என்ன தொழில் செய்கிறார்கள்.
வயலை உழுதாரே இலக்குமணன். அவர் வயல் செய்யிறவர். மற்றவர் ராமச்சந்திரன் உடுப்புகளைக் கழுவிக் கொடுக்கிறவர்.
நீங்கள் சாதி வித்தியாசம் பார்க்கிறதில்லையா.
அதை எப்படிப் பார்ப்பது.
நாங்கள் பிரிச்சு வைச்சிருக்கிறம். வேளாண்மை செய்யிறவை உயர்ந்த சாதி மற்றவர்கள் தாழ்ந்த சாதி எண்டு.
அப்பிடியெண்டால் வேளாண்மை செய்யிறது தொழில் இல்லையே. சுரேஸ் நாங்கள் எல்லாரையும் ஒரே சாதியாய் தான் மதிக்கிறம் இஞ்சை ஆராவது பொய்பேசி சூதுவாது செய்தால் அவையள்தான் மற்றவர்களை நேருக்கு நேர் பாக்க வெக்கப்படுவினம். அதாலை ஒருதரும் பொய் பேசிறநில்லை.

Page 42
80 0 அருணா செல்லத்துரை
சுரேஸ் :
தத்தை :
fist-print :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
நடரா :
சுரேஸ் :
பரதன் :
சுரேஸ் :
நேரம் போகுது. வீட்டை போவமே. மிச்ச இடத்தை நாளைக்கு வந்து பாப்பம். (போய்க்கொண்டு)
சரி சுரேஸ்.
ളിഞ്ഞ്.)
தம்பி சுரேஸ். நீரும் வந்து இரண்டு மாதமாகுது. எப்படி இருக்குது எங்கடை ஊர்.
இங்கை பிரச்சினைகள் இல்லை. அதனாலை நீங்கள் நிம்மதியாய் இருக்கிறியள்.
நீங்களும் நிம்மதியாய் இங்கையே இருங்கோவன்.
நானும் அதைத்தான் விரும்புறன். ஆனால் நீங்கள் என்னை இங்கையிருக்க அனுமதிக்க வேணுமே..?
தம்பி இங்கை இருக்கிறதுக்கு யாரும் எதிர்ப் தெரிவிக்க மாட்டினம். வழக்கமாய் ஆரும் இப்பிர வந்து சேர்ந்தால் வள்ளம் ஒண்டை குடுத்து கடலிலை கொண்டுபோய் விட்டுவிடுவம். ஆனால் எங்கடை முறைப்படி நீரும் வாழ்க்கை நடத்த சம்மதமெண்டால் நாங்கள் உம்மை ஏற்றுக் கொள்ளத்தயார்.
கரும்பு தின்னக் கூலி வேணுமே நடராஜர் ஐயா.
சுரேஸ் நீங்கள் ஏன் உங்கடை நாட்டுக்குத் திரும்பில் போக விரும்பேல்லை.
இது உண்மையிலேயே ஒரு புண்ணியபூமிதான் ஒவ்வொருத்தரும் தன்பாட்டையே பார்த்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் கடவுளே முக்கிய மாணவர் என ஒத்துக் கொள்கிறீர்கள். உண்மையே பேசிறியள், நீங்கள் சூது வாது அறியாதவர்கள் அதனாலை உங்களைப் பார்க்க எனக்கு ஒரு பக்கம் பெருமையாகவும் ஒரு பக்கம் பொறாமையாகவும்
இருக்கிறது.

ofG 0 81
பரதன் :
சுரேஸ் :
தத்தை :
நடரா :
தத்தை :
சுரேஸ் :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
நான் கேட்டதுக்கு நீங்கள் மறுமொழி சொல்லேல்லையே சுரேஸ்.
இந்த புண்ணிய பூமியிலை நடக்கிறதுக்கு எல்லாம் எதிர் மாறாகத்தான் அங்கை நடக்கும் அதனாலைதான் நான் திரும்பிப் போக விரும்பேல்லை.
அப்பா நான் கோவிலுக்குப் போய் வாறன்.
திரு விளக்கையும் ஏற்றிவிட்டு வாம்மா. சுரேஸ"ம் எங்களோடை இருக்கப்போறாராம் அதனாலை கடவுளுக்கு நன்றி சொல்ல வேணும்.
(போய்க் கொண்டு) சரியப்பா.
(ஒடி வந்து) தத்தை. தத்தை. கொஞ்சம் நில்லும். நானும வாறன.
ஏன் களைக்க களைக்க ஓடி வாறியள்.
உம்மோடை வாறதுக்குத்தான்.
அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் என்ன சொல்லிப்போட்டு வந்தனிங்கள்.
காலாற கொஞ்சம் நேரம் நடந்துபோட்டு வாறன் எண்டு
சொல்லிப்போட்டு வந்தனான். '
அப்ப 6T sóT (G36OTT SOM வாறியள். நான் கோயிலுக்கெல்லோ போறன் .
அதுதான் ஏன் எண்டு கேக்கிறன்.
நல்ல காரியங்கள் ஏதாவது நடந்தால் கடவுளுக்கு நன்றி சொல்ல வேணும். அதுக்கு நாங்கள் கோயிலுக்கு போய் திருவிளக்கேற்றி கும்பிடுவம். இது எங்கடை வழக்கம்.

Page 43
82 0 அருணா செல்லத்துரை
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை
சுரேஸ் :
தத்தை :
இண்டைக்கு என்ன நல்ல காரியத்துக்காக கடவுளுக்கு நன்றி சொல்லப் போறியள்.
ஆ. அது. வந்து. நீங்கள். ஆ. அப்பா சொன்னாரே நீங்களும் எங்களோடு இருக்கப் போறதாய், அதுக்காக திருவிளக்கேற்றப்போறன்.
அப்பா சொன்னதுக்காகத்தான் போறிரோ.?
ஓம் அப்பா சொன்னதுக்காகத்தான்.
அப்பிடியெண்டால் நான் இங்கை இருக்க வேணுமெண்டு விருப்பம் உமக்கு இல்லையோ?
சுரேஸ் . நான் வந்து. எனக்கும் விருப்பம் தான்.
தத்தை . உண்மையைச் சொல்லும் நான் இங்கை இருக்கிறதிலை உமக்கு அவ்வளவு நல்ல விருப்பமில்லையே.
ஏன் சந்தேகமாக இருக்குதோ.
நான் இங்கையிருக்கிறதுக்கு விருப்பம் தெரிவிச்ச துக்கு இன்னும் ஒரு காரணம் இருக்கு.
அது . என்ன.
நீர்தான்.
நான்தானெண்டால்.
தத்தை நான் நேரடியாயே விசயத்தைச் சொல்லுறன். எனக்கு உம்மிலை விருப்பம். உமக்கு என்னைக் கலியாணம் செய்து கொள்ள விருப்பமோ எண்டுதான் கேட்கிறன்.
ú.

ofG (1) 83
சுரேஸ் :
தத்தை :
தத்தை :
நடரா :
தத்தை :
நடரா :
சுரேஸ் :
நடரா :
சுரேஸ் :
BL-print :
. என்ன தத்தை நான் சொல்லிக் கொண்டே போறன். நீர் மறுமொழி சொல்லாமல். ம். எண்டு சொல்லிக் கொண்டு போறிர்.
நான் என்னத்தை சொல்ல சுரேஸ். வாங்கோ இரண்டு பேருமே. கோயிலுக்கு போய் திருவிளக்கை ஏற்றி வைப்பம்.
இசை.)
(கல்யாண இசை/காட்சி மாற்றம்)
அப்பா. நாங்கள் இரண்டுபேரும் தனிய போய் வாழ விரும்புறம்.
ஏனம்மா. கலியாணம் முடிஞ்சு மூண்டு மாதம்தானை ஆகுது. உனக்கு இங்கை இருக்கப் பிடிக்கேல்லையே.
அவருக்கு எல்லாரும் ஒண்டாய் இருக்கிறது விருப்பமில்லை. தனியப்போய் இருக்க வேணும் எண்டு சொல்றாரப்பா.
சரி சுரேசுக்கு எங்கையிருக்க விருப்பமோ அங்கை ஒரு வீட்டை கட்டிக்கொண்டு இருக்கலாம். நீ எங்கையிருந்தாலும் நிம்மதியாய் இருக்க வேணும் அவ்வளவுதான்.
(வந்துகொண்டு) தத்தை நிம்மதியாய் இருக்க வேணும் எண்டால் மாமா அவவுக்கு குடுக்க வேண்டிய பங்கை நீங்கள் குடுக்க வேணும் மாமா.
தம்பி . பங்கு பிரிச்சுக் கொடுக்கிறதோ. தம்பி அப்பிடி ஒரு வழக்கம் எங்களிட்டையில்லையே.
ஏன் மாமா இவ்வளவு நாளும் சேர்த்து வைச்சதெல்லாம் எங்கை.
இஞ்சை எனக்கு உனக்கு எண்டு ஒண்டும் சேத்து வைக்கிறதில்லை. எல்லாம் எல்லார்க்கும் சொந்தம்.

Page 44
84 9 அருணா செல்லத்துரை
சுரேஸ் :
рђL-grm :
தத்தை :
சுரேஸ் :
தததை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
நடரா :
சுரேஸ் :
நடரா :
சுரேஸ் :
தத்தை :
இப்பிடிச் சொல்லி சொல்லியே என்னை நீங்கள் ஏமாத்தப் பாக்கிறியள்.
(கொஞ்சம் உறுக்கி) . தம்பி .
இஞ்சேருங்கோ.
நீ. பேசாமல் இரு தத்தை. எனக்கெல்லாம் தெரியும். எனக்கு என்ரை பங்கை அதாவது தத்தையின்ரை பங்கை பிரித்து தரவேணும் இல்லையெண்டால் நான் இந்த வீட்டைவிட்டுப்போறன்.
சுரேஸ் நாங்கள் இரண்டு பேருமே போவம். ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு நிம்மதியாய் இருப்பம்.
எப்பிடித் தத்தை நிம்மதியாய் இருக்கிறது. ஒண்டுமில்லாமல் .
இவ்வளவு நாளும் எப்பிடி இருந்தமோ அப்பிடி இருப்பம்.
உங்களைப்போலை ஒட்டாண்டியாய் இருக்க நான் விரும்பேல்லை.
நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்படத் தேவையில்லை தம்பி. இங்கையிருக்கிற எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்.
அப்பிடிச் சொல்லிக் கொண்டு இருக்க நான் கையாலாகாதவனில்லை.
இந்த உலகத்திலை ஒருதரும் கையாலாகதவரில்லை. நீங்கள் என்ன நினைக்கிறியளோ அதன்படி செய்யுங்கோ.
தத்தை இந்த நிமிசமே இந்த வீட்டை விட்டு வெளிக்கிடவேண்டும்.
அப்பா. என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கோ. அப்பா.

சுரேஸ் :
தத்தை :
நடரா :
தத்தை :
[15 TT :
TrrLo :
இலக்கு :
pl Trt :
பரதன் :
p5-grit :
இராம :
இலக்கு
நடரா :
sđ0) 0 85
இவர்ரை ஆசீர்வாதத்தை நாங்கள் என்ன செய்யிறது. நீ வெளிக்கிடு தத்தை.
நான் போட்டு வாறனப்பா.
எழுந்திரம்மா. ராமன் இருக்கிற இடந்தான் சீதைக்கு அயோத்தி. போய் வாம்மா.
(அழுது கொண்டு) போயிட்டு வாறனப்பா.
இசை.)
வாங்கோ இராமச்சந்திரன். இலக்குமணனும் வாறிங்களே வாருங்கோ. இப்பிடி இருங்கோ.
நடராஜர் அண்ணையைப்பாத்து கணக்க விசயம்
கதைக்க வேணும். எண்டு நினைச்சம். நேரம் கிடைக்கேல்லை.
இண்டைக்கு ஒரு மாதிரி நேரம் கிடைச்சுது. அதுதான் வந்தனாங்கள்.
குடிக்க ஏதாவது கொண்டுவா. பரதன். இராமச்சந்திரன் அண்ணாவும் இலக்குமணன் அண்ணாவும் வந்திருக்கினம்.
தூர இருந்து) சரியப்பா.
எனக்கு அவ்வளவாய் நேரம் கிடைக்கேல்லை. அதனாலே உங்களை வந்து பாக்கமுடியேல்லை.
உங்களுடைய மருமகன் புதுவிடு ஒன்று கட்டினார். அதுக்கு நாங்களும் போய் உதவி செய்தம்.
நல்ல வடிவாய் கட்டிக்கொடுத்திருக்கிறம்.
உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றது எண்டே தெரியேல்லை.

Page 45
86 0 அருணா செல்லத்துரை
பரதன் :
இலக்கு :
நடரா :
TrtLo :
இலக்கு :
பரதன் :
TrTLo :
இலக் :
Luugait :
நடரா :
இந்தாங்கோ மோர் கொண்டு வந்திருக்கிறன் குடிக்க. எடுங்கோ.
நன்றி தம்பி. ஏதோ சொல்ல வேணுமெண்டு சொன்னியள்.
அதை எப்படி சொல்றதெண்டு தெரியேல்லை.
அதை நான் சொல்லுறன் அண்ணை. சுரேஸ் தம்பியின்ரை வீட்டைக் கட்டிறதுக்கு நான் இராமச்சந்திரன் அண்ணை மற்ற எல்லாரும் போய் நிண்டு உதவி செய்தனாங்கள். வீடு கட்டும் வரைக்கும் நாங்கள் உள்ளைபோய் வந்தனாங்கள் கட்டிமுடிய என்னை மட்டும் உள்ளுக்கை வரட்டாம், மற்றவையளை உள்ளை வரவேண்டாம் எண்டு சொல்லிப்போட்டார்.
ஏனப்பிடி சொன்னவர் . எனக்கு விளங்கேல்லை.
அவையின்ரை நாட்டிலை செய்யிற தொழிலைப் பொறுத்து ஆட்களைப் பிரிச்சு வைச்சிருக்கினமாம். அதிலை வேளாண்மையைத் தவிர மற்றத் தொழில் எல்லாம் குறைஞ்ச தொழிலாம். அதாலை என்னை உள்ளுக்கை விடேல்லை. நான் அதை அவ்வளவு பெரிசாய் எடுக்கேல்லை.
இவர் பெரிசாய் எடுக்காட்டிலும் அண்ணை எனக்கு மனத்துக்கு சங்கடமாய் போய்ச்சு நான் உடனேயே மற்றவயளையும் கூட்டிக் கொண்டு வந்திட்டன். நடராஜர் அண்ணை எங்களிலை ஆராவது அப்பிடி உயர்வு தாழ்வு பார்க்கிறனாங்களே?
அப்பிடி அவர் செய்திருந்தால் அது அவர்ரை பிழை. நீங்கள் ஏதாவது செய்ய வேணும் அப்பா.
ம். அதுக்கு நாங்கள் என்ன செய்யலாம் தம்பி. அவர் தன்ரை வழக்கப்படி செய்றார் போலை.

ofG 0 87
: 68TלgתונL
இலக்கு
ртптцо :
நடரா :
JITLD :
plurr :
இலக்கு :
Umruo :
நடரா :
அப்பிடிச் சொல்லக்கூடாது அப்பா. இது இப்ப புண்ணிய பூமியின்ரை பிரச்சினை. A.
தம்பி பரதன் சொல்றது சரியண்ணை. ஏனெண்டால். இப்பிடி ஒருத்தரும் இங்கை நடந்து கொண்டதில்லை. இதை இப்பிடியே வளரவிட்டால் இது இன்னும் பல பிரச்சினைகளை கொண்டு வரும்.
நடராஜர் அண்ணை தத்தை உங்கடை மகள். அவவின்ரை வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுற மாதிரி ஒண்டும் செய்து போடாதேங்கோ.
தம்பி. இது ஒரு பொதுப்பிரச்சினை. இதிலை நான் தனிப்பட்ட ஆளாய் நிண்டு முடிவு எடுக்க விரும்பேல்லை. தத்தையோடை பேசித்தான் என்னவும் செய்ய வேணும்.
எதுக்கும் நல்லாய் யோசிச்சு முடிவெடுங்கோ அண்ணை. நாங்கள் வரப்போறம்.
தம்பி ராமச்சந்திரன். சுரேசின்ரை சார்பிலை நான் உங்களிட்டை மன்னிப்புக் கேட்கிறன். -
அண்ணை நீங்கள் வயதிலை பெரியவர். மன்னிப்பெல்லாம் கேட்டு எங்கடை மனதைக் கஷ்டப்படுத்தாதேங்கோ.
அண்ணை நாங்கள் இதை ஒரு குறையாக உங்களுக்குச் சொல்லேல்லை. உங்கடை மனம் நொந்திருந்தால் நாங்கள்தான் மன்னிப்பு கேட்க வேணும். எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அண்ணை. நாங்கள் வாறம்.
சரி தம்பியவை போய் வாங்கோ. நாளைக்கு கோயிலிலை சந்திப்பம்.
൫ിങ്ങ്.)

Page 46
88 9 அருணா செல்லத்துரை
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
என்ன தத்தை, கோயிலிலை திருவிளக்கு ஏற்றின பிறகு என்னோடை கதைக்காமலே வாறாய். என்ன விசயம்.
சுரேஸ் என்ரை மனச்சாட்சி என்னை உறுத்திக் கொண்டே இருக்குது.
என்னத்துக்கு.
ஒண்டு நீங்கள் அண்டைக்கு ராமச்சந்திரன் அண்ணையை வீட்டுக்கு உள்ளை வர வேண்டாம் எண்டு சொன்னது. அடுத்தது எங்கடை வீட்டை பிரிச்சு வேலி அடைக்கப் போறன் எண்டு சொல்லுறது.
அதிலை என்ன பிழை. தத்தை. காலம் வெகு வேகமாய் போகுது. அதுக்கிடையிலை நாங்கள்
சேர்க்கக் கூடியதை சேர்த்துக் கொள்ள வேணும்.
காலம் வேகமாய் போகுதெண்டும் சொல்றியள். பிறகு பொருள் சேர்க்க வேணும் எண்டும் சொல்லுறியள்.
தத்தை உதேல்லாம் விதண்டாவாதம். எனக்கு பொருள் பண்டம் இருக்க வேணும். எனக்கெண்டு வீடு இருக்க வேணும். காணியிருக்க வேணும். நான் இந்த புண்ணிய பூமிக்கே ஒரு முன்மாதிரியாய் இருக்க
வேணும்.
அப்பிடியெண்டால் உங்களை எல்லாரும் பின்பற்றவேணும் எண்டும் விரும்புநியளோ.
என்னைப் பின்பற்றுவது மட்டுமில்லை நானே இந்தப் புண்ணிய பூமியை வழி நடத்தியும் போகப்போறன்.
சுரேஸ். இங்கை நீ பெரிசு நான் பெரிசு எண்டு ஒருதரும் சொல்றதில்லை.
தத்தை அறிவுள்ளவன் பெரியவன். என்னட்டை
அறிவிருக்கு.

தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
psLTIT :
சுரேஸ் :
பரதன் :
தத்தை :
நடரா
சுரேஸ் :
நடரா :
(உரத்து) அறிவு மட்டும் போதாது சுரேஸ். (கோபத்தை சுதாகரித்துக்கொண்டு) . அப்பா தம்பி பரதன் இரண்டு பேரும் வீட்டு வாசலிலை நிக்கினம்.
அவையஞக்கு இஞ்ச என்ன வேலை.
அவையள் ஏதாவது அலுவலாய்த்தான் வந்திருப்பினம். கொஞ்சம் பொறுங்கோ என்னென்டு கேப்பம்.
அவையள் என்ன அலுவலாய் வந்தாலும் சரி. என்ரை வீட்டுக்குள்ளை வாறதுக்கு என்ன உரிமை இருக்கு.
என்ரை வீடு. உன்ரை காணி எண்டு பிரிச்சு பேசுறதுக்கு நாங்கள் இங்கை காணியளை பிரிச்சு வைக்கிறதில்லை.
நீங்கள் பிரிச்சு வைக்கேல்லை. ஆனால் நான் காணியைப் பிரிச்சு வேலிக்கு அடையாளம் போட்டு தடியளும் நட்டு வைச்சிருக்கிறன் தேரியேல்லையே.
என்னக்கா. நீ பாத்து கொண்டு இருக்கிறாய் எங்கடை பழக்க வழக்கமே இதாலை மாறப்போகுது நீங்களே இப்பிடி காணியை பிரிச்சு அடைச்சு வைச்சால் மற்றவையஞக்கு நாங்கள் என்ன மறுமொழி சொல்றது.
நான் இயலக்கூடிய அளவு சொல்லிப்போட்டன் தம்பி.
தம்பி. நீர் காணியை பிரிச்சு அடைச்சால் எல்லாரும் பிரிச்சு அடைக்கத் தொடங்குவினம். பிறகு ஒருதரிலை ஒருதருக்கு நம்பிக்கையில்லாமல் போயிடும் அதனாலைதான் சொல்றம். கொஞ்சம் யோசிச்சுப் பாரும்.
நீங்கள் சொல்றதைக் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. நான் இப்பவே வேலியடைக்கப் போறன்.
தம்பி உம்மடை காலிலை விழுறன். புண்ணிய பூமியின்ரை நிம்மதியை கெடுத்து போடாதையும்.

Page 47
90 0 அருணா செல்லத்துரை
தத்தை :
நடரா :
தத்தை :
பரதன் :
தத்தை :
நடரா :
தத்தை :
பரதன் :
நடரா :
தத்தை :
நடரா
அப்பா. (உரத்து) அப்பா நீங்கள் போய் அவர்ரை காலிலை விழ வேண்டாம்.
நான் எனக்காக விழ இல்லையம்மா. இந்த புண்ணிய பூமியின்ரை பெருமை, நிம்மதி, என்ரை குடும்பத்தாலை கெடக்கூடாது எண்டதுக்காத்தான் விழுறன்.
அதுக்காக நீங்கள் ஏன் காலிலை விழவேணும். பிழை விட்டது நான்.
அக்கா. நீங்கள் என்ன சொல்லுறியள்.
ஓம் தம்பி நான்தான் பிழை விட்டிட்டன். (அழுறாள்)
தத்தை நீ அழக்கூடாது. இங்கை ஒருதருமே அழுதது கிடையாது.
நான்தான் இந்த புண்ணிய பூமியில் அழுத முதலும் கடைசியாளாயும் இருக்க வேணும் அதுக்காகத்தான்
அழுறன் அப்பா.
அக்கா. உன்ரை நிலைமை எங்களுக்குப் புரியுது. நாங்களொரு பக்கம் எங்கடை பூமியைப் பாதுகாக்க நிக்கிறம். சுரேஸ் மற்றப்பக்கம் நிண்டுகொண்டு இந்தப் புண்ணிய பூமியின்ரை போக்கையே மாற்ற நினைக்கிறார். நீ என்ன செய்வாய்.
தத்தை . அழாதை அம்மா.
நான் இதை அவரை கலியாணம் செய்ய முன்னர் யோசிச்சிருக்க வேணும். வந்த முதல் நாளே கோயிலிலை புதையலைப் பிரிக்கப் போகினம் எண்டதும் தனக்கும் பங்கு கேட்ட உடனேயே நான் அவரை விளங்கிக் கொண்டிருக்க வேணும். ஆனால் என்ரை பெண்மனம். போதலிச்சுப் போச்சு.
நீ தேடிக்கொண்ட வாழ்க்கைதாணையம்மா.

6f6 ♦ 91
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
நடரா :
நான்தான் தேடிக்கொண்டது. ஆகவே நான்தான் அதுக்கு முடிவு கட்டவேணும். அப்பா இந்த மண்ணுக்காக நான் எதையும் இழக்கத் தயாராகிவிட்டேன். அப்பா அவரை வழமை போலை வள்ளத்திலை கொண்டு போய் நடுக்கடலிலை விட்டிட்டு வரச்சொல்லுங்கோ.
தத்தை. நான் உன்ர புருஷன். நான் உன்னை முறைப்படி கலியாணம் கட்டியிருக்கிறன்.
நீங்கள் முறைப்படி என்னைக் கலியாணம் கட்டியிருந்தாலும் நான் தான் அதைப்பற்றி முடிவெடுக்க வேணும். நான் இந்த பூமிக்காக விதவையாய் இருக்கத் தயாராகிட்டன்.
தத்தை உன்னைச் சட்டம் கம்மாய் விடாது.
உங்கடை மண்ணிலைதான் மணிசர் சட்டத்திற்கு பயப்பிடுவினம். ஏனெண்டால் அங்கை மனச்சாட்சியில்லை. இங்கை எங்களுக்கெல்லாம் மனச்சாட்சிதான் சட்டம்.
தத்தை, என்ரை பிள்ளை உன்ரை வயித்திலை வளருது எண்டதை ஞாபகத்திலை வைச்சுக்கொள்.
அந்தப் பிள்ளையின்ரை மனத்திலை இப்படியொரு சுயநல எண்ணம் வளரக்கூடாது. சுயநலம் எண்டால் என்ன எண்டு தெரியாமல் இந்தப் புண்ணிய பூமியிலை உள்ள மற்றவையளைப் போல அவனும் வளரப் போறான். அதுக்காகத்தான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறன்.
தத்தை உனக்கு இந்த வயதிலை இப்படியான ஒரு நிலைமை வரக்கூடாதம்மா. வேணுமெண்டா சுரேஸ"க்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் குடுத்துப் பாரம்மா.

Page 48
92 0 அருணா செல்லத்துரை
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
நடரா :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
சுரேஸ் :
தத்தை :
நடரா :
இல்லையப்பா. நானும் அப்படித்தான் எதிர்ப்பார்த்தன் ஆனால் அவரின்ரை சுயநலப்போக்கை மாத்த எங்களாலை ஏலாதப்பா. அதனாலை அவரிட்டை இதுக்கு மேலை ஒண்டையும் எதிர்பார்க்க முடியாது.
(மெதுவாக) தத்தை . நல்லாய் யோசித்துப்பார். நான் என்ரை நன்மைக்காக ஒண்டும் செய்யேல்லை. எங்களுக்குப் பிறக்கப் போற பிள்ளைக்காகத்தான் செய்தனான்.
நீங்கள் மனச்சாட்சியை கொலை செய்து நடந்து போட்டு அதுக்கு ஏன் பிள்ளை மேலை பழியைப்
போடுறியள். அது ஒரு பாவமும் அறியாதது.
கடைசியாய் நீ என்ன சொல்லுறாய்.
அப்பா. நான் எடுத்த முடிவிலை எந்த வித மாற்றமுமில்லை அவரைக் கொண்டு போய் நடுக்கடலிலை விட்டுடுங்கோ. அவர் தன்ரை நாட்டுக்கு போகட்டும்.
தத்தை நீ கஷ்டப்படப் போறாய்.
சுரேஷ் . நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் இந்தப் புண்ணியபூமியில் உள்ளவை என்னொருத்தி யாலை பாதை மாறிப் போகக்கூடாது. இந்தப் பூமி கடைசி வரை புண்ணிய பூமியாகவே இருக்க வேணும். அப்பா. அந்த ராமச்சந்திரன் அண்ணா, இலக்குமணன் அண்ணா எல்லாரும் வருகினம். அவயளிட்டையும் சொல்லுங்கோ என்ரை முடிவை நான் வாறன்.
தத்தை எங்கை போறாய்.
சுரேஸ் . நீங்கள் அவையளோடை போங்கோ. நான் கோயிலுக்குப் போறன்.
இந்த நேரத்திலையோ.

ofG (1) 93
தத்தை : ஒமப்பா. சுயநலம் எண்ட கொடுமையை, இந்த புண்ணிய பூமியிலை இருந்து அகற்ற எனக்கு மனத் துணிவைத் தந்த அந்தக் கடவுளுக்கு நான். தனிய. தனிய. (அழுகிறாள்) நிண்டு திருவிளக்கேற்றி நன்றி செலுத்தப் போறன். நான் வாறன் அப்பா.
இசை . கடல் அலை .) முற்றும்
"புண்ணிய பூமி" என்ற நாடகம் கேட்டிர்கள் எழுதியவர் - அருணா செல்லத்துரை.
பங்கு பற்றியோர்
தத்தை - கணிஸ்ரா திருச்செல்வம் நடராஜர் அருணா செல்லத்துரை சுரேஸ் - கே.எஸ். பாலச்சந்திரன் பரதன் mummw கே. ராமச்சந்திரன் இலக்குமணன் - வீ. ஜெகதீசன் இராமச்சந்திரன் - ஆர் பகவான்
தயாரிப்பு - ஜோர்ஜ் சந்திரசேகரன்

Page 49
இவர்களும் மனிதர்கள் (வானொலி நாடகம் 30 நிமிடம்)
எழுதியவர் : அருணா செல்லத்துரை
ஒத்திகை : 17.01.1988 - 8.30-10.30 ஒலிப்பதிவு : 17.01.1988 - 10.30-12.30 ஒலிபரப்பு : 23.01.1988
நாடகப் பாத்திரங்கள்
1. வசந்தி 2. gy (T60)LDLLJIT 3. மஞ்சுளா
4. சுப்பிரமணியம் 5. ராஜன்
(காலை நேரத்து ஒலி, கதவு தட்டப்படும் அல்லது அழைப்பு மணி ஒலி) வசந் : (கதவைத் திறந்து) யாரைப் பார்க்க வந்திருக்கிறியள் ராமை : வீட்டிலை ஐயா இருக்கிறாங்களா?
வசந் : இருக்கிறார், நீங்கள் ஆர்?
ராமை : நான் இந்த வீட்டிலை வேலைக்கு நிற்கிற ராஜூவோடை அப்பா, அவனைப் பார்த்திட்டு போகலாம்னு வந்திருக்கிறேன், கொஞ்சம் சொல்லி விடுறீங்களா.
வசந் : (போய் கொண்டு) மாமா உங்களை ராஜூவோடை
அப்பா தேடி வந்திருக்கிறார்.

of G 0 95
és Lig :
UTTGðDD :
சுப்ர :
DTIT66)LD :
சுப்ர :
pyrral O :
சுப்ர :
pTIT60)Lo :
: זקוórL
சரி பிள்ளை நான் பார்க்கிறன்? நீ பள்ளிக்கூடம் வெளிக்கிட இல்லையே? நேரம் போச்சு, ராஜாவின்ரை தகப்பனோ.
நான் தான் ராஜூவோடை அப்பன் ராமையா. அவனைப் பார்த்து கூட்டிட்டு போகலாம்னு கொழும்புக்கு வந்தேங்க. உங்க விலாசம் தெரியாததாலை ராஜூவைக் கூட்டிட்டு வந்தாங்களே கந்தசாமி துரையைப் பார்த்து உங்க விலாசத்தைக் கேட்டு தெரிஞ்சுட்டு இங்கை வந்தேனுங்க .
. சரி . சரி . ராமையா உள்ளுக்கை வா . இதிலை இப்பிடி கதிரைக்கு பக்கத்திலை இரு.
சரிங்க . எம்மவன் எப்பிடிங்க சுகமாய் இருக்கிறானா?
அவனுக்கென்ன நல்லாதான் இருக்கிறான். முந்தியிருந்த மாதிரியில்லை ஆள் இப்ப நல்ல நிறம் நல்ல சாப்பாடு நேரத்துக்கு குளிப்பு முழுக்கு பிறகென்ன வேணும்.
அதுக்கில்லிங்க. அவங்க அம்மா கனவு கண்டாளாம். அவன் ம்ெலிஞ்சு சுகமில்லாம இருக்கிறதாயும், கஷ்டப்படுறதாயும், அதனாலை தாங்க போய் பார்த்திட்டு வரச்சொல்லி அழுது சொல்லிச்சுதுங்க .
அது பகல் கனவாயிருக்கும். அவன் பாண் வாங்கப் போயிருக்கிறான். இப்ப வந்திடுவான். நீ பார்ப்பாய்தானே. அப்ப தெரியும்.
அங்க அவனோடை அம்மா இரண்டு மூன்று நாளாய் சாப்பிடாம அழுதுகிட்டு, இருங்குங்க இவனைக் கூட்டிட்டுப் போய் ஒரு கிழமை வைச்சிருந்திட்டு அனுப்பிடறோமுங்க .
ம் . நீ என்னப்பா இப்பிடி திடுதிடுப்பெண்டு வந்து அவனைக் கூட்டிட்டு போகப் போறனெண்டால் எப்பிடி.

Page 50
96 9 அருணா செல்லத்துரை
D støOLD :
: זקוL 97.
pyrra)LO :
சுப்ர :
aft D :
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
இல்லீங்க அவங்க கந்தசாமித் துரையவங்க கூட்டிட்டு வரப்பவே சொல்லிவிட்டேங்க, ஒரு வருஷம் கழிச்சு வந்து ஒருக்கா கூட்டிட்டு போவேன்னு அந்தத் துரை சொல்லலியா?
அவன் சொன்னவன்தான் ஆனால் அதுக்கு இந்த நேரம் பார்த்தே வாறது.
கோவிக்காதீங்க அவனோடை அம்மாதான் அவனை பார்க்க ஆசைப்படுதுங்க. அதோடை அவன் அக்காமார் நாலுபேரும் அவனைப் பார்க்க துடியாய் துடிக்குதுங்க.
உதுக்கு நான் என்னத்தை சொல்லுறது . எதுக்கும் அம்மாவிட்டை சொல்லிப் பார்க்கிறன் வீட்டால் கூட்டிக்கொண்டு போ . இல்லாட்டில் பார்த்திட்டு போ. (போய்க்கொண்டு)
(360&)
மஞ்சுளா . மஞ்சுளா . எங்கை நிற்கிறீர் .
இஞ்சை பின்னுக்கு பூக்கண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறன். (வந்து கொண்டு) இஞ்சாரும் அப்பா, இவன் ராஜன்ரை
தகப்பன் வந்திருக்கிறான் ராஜனை ஒரு கிழமைக்கு கூட்டிக்கொண்டு போகப் போறானாம்.
இப்ப கூட்டிக்கொண்டு போகப் போறானாமோ? நீங்கள் என்ன சொன்னிங்கள்.
நான் என்னத்தை சொல்லுறது, அம்மா என்ன சொல்றாவோ தெரியாது, உன்னட்டை கேட்டு வந்து சொல்றன் எண்டு சொல்லிப் போட்டு வந்தனான்.
இப்ப ஏனாம் அவசரப்படுறான். அவன் இப்பதான் கொஞ்சம் வேலை பழகிக் கொண்டுவாறான்.

ofG 0 97
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
அதுக்கில்லையப்பா, அவன்ரை தாய் கனவு கண்டிட்டு இரண்டு மூன்று நாளாய் அழுது கொண்டிருக்கிறாளாம்.
என்னை உதை நம்பச் சொல்லுறியள்? அவன் இப்ப சாடையாய் வேலை பழகிட்டான். இடியப்பம் புளிய, தேங்காய் திருவ, சட்டிபானை கழுவ, வீடு கூட்ட எல்லாம் பழகிட்டான். இப்ப அவனை விட்டம் எண்டால் கஷ்டம்.
இப்ப அவனுக்கு என்ன சொல்லப்போறாய்.
பிள்ளைக்கு சோதனையும் நடக்குது. அதோடை அனாதைப்பிள்ளையஞக்கு சாப்பாடு குடுக்க மாதர் சங்கத்தாலை ஒழுங்கு செய்து போட்டம் இப்பவிட ஏலாது எண்டு சொல்லுங்கோ.
சரி உன்ரை இஷ்டம்
கஷ்டப்பட்டதுகள் காசுக்காக என்னவும் சொல்லுங்கள். எதுவும் செய்யுங்கள். இப்ப அதுகளுக்கு காசு தேவைப்பட்டிருக்கும், அதுக்காகத்தான் இப்ப உந்தக் கனவுக்கதையும், பாசமும் அழுகையும்.
நான் ராமையாவிடம் சொல்லிப்பாத்தன் அவன் கேட்கிற மாதிரித் தெரியவில்லை.
இப்ப அந்தாளுக்கு கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி விடுங்கோ பிறகு வரச் சொல்லுங்கோ.
எவ்வளவு காசு கொடுப்பம் .
ஒரு ஐம்பது ரூபாய்க்காசு கொடுத்து விடுங்கோ, சுறுக்காப் போங்கோ, அவன் பொடியன் வாறதுக்கிடையிலை சொல்லி அனுப்பி விடுங்கோ, பிறகு அவன் வந்தான் எண்டால் தகப்பனோடை போகப்போறன் எண்டு சொன்னாலும் சொல்லுவான். உங்கடை மருமகள் வசந்தியும் அவனுக்கு நல்லாய் இடம் கொடுத்திட்டாள்.

Page 51
98 9 அருணா செல்லத்துரை
சுப்ர :
மஞ்சு :
சுப்ர :
சுப்ர :
Drs føOLD :
சுப்ர :
மஞ்சு :
printao)LD :
உதென்ன புதுக் கதையொண்டு
அதைப்பிறகு ஆறுதலாய் சொல்லுறன் நீங்கள் இப் போங்கோ, நீங்கள் வீட்டிலை இருந்தாலெல்லோ உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு உங்கடை கந்தோரும் வேலையும் எல்லோ பெரிசு.
சரி . சரி . நான் போய் அவனை அனுப்பிப் போட்டு வாறன் பிறகு தொடங்கன் உன்ரை புராணத்தை. (போகிறார்)
(இசை)
(வந்து கொண்டு) இஞ்சே ராமையா நீ அவனைக் கூட்டிக் கொண்டு போய் பழுதாக்கப் போறாய். நீ அவனை இப்ப இஞ்சை விட்டிட்டுப்போ,
பிள்ளையளின்ரை சோதனை முடிய நாங்கள்
ஊர்ப்பக்கம் வருவம். அப்ப அவனை கூட்டிக்கொண்டு வாறம்.
இல்லை ஐயா நீங்கள் அப்பிடிச் சொல்லக்கூடாது. உங்களுக்கும் பிள்ளையள் இரண்டு இருக்குது. உங்களுக்கு பிள்ளைப்பாசம்ன்னா என்னன்னு தெரியும்தானை துரை.
இஞ்சை பார் ராமையா, இப்ப பிள்ளைகளுக்கு சோதனை தொடங்கீட்டுது. அதோடை அம்மாவுக்கும் நிறைய வேலையிருக்கு.
(வந்து கொண்டு) ஒம் ராமையா, நானும் அதைத்தான் சொல்லுறன் உன்ரை பிள்ளையின்ரை பேரிலை மாதா மாதம் 15 ரூபாக் காசு போஸ்ட் ஒபிசிலை சேமிப்பிலை போடுறம். அதோடை உனக்கும் மாதா மாதம் 50 ரூபாக் காசு அனுப்புறம். இதையெல்லாத்தையும் நீ இப்ப பழுதாக்கப் போறாய்?
இல்ல அம்மா . நான் அப்பிடி ஒன்னும் பண்ணிக்க மாட்டேன் அதோட நான் புள்ளை குட்டிக்காரன் . நாலு

G 0 99
மஞ்சு :
UIT60)LO :
சுப்ர :
வசந் :
ófüU :
வசந் :
சுப்ர
மஞ்சு :
TIT60)LO :
குமர் வேறை வரிசையிலை கலியாணத்துக்கு காத்துக்கிட்டிருக்குதுக .
அப்பிடியெண்டால் நான் இப்ப சொல்லுறதைக்கேள் . இஞ்சாருங்கோ ராமையாவுக்கு 50 ரூபா காசு கொடுத்து விடுங்கோ . வாங்கிக் கொண்டு போ JT60) LOLLIT ...
அம்மா நீங்க சொல்லுறதும் சரிதான் ஆனால் வீட்டிலை மணிசிதான் ஒரேயடியாய் அவனைப் பார்க்கனுமின்னு அழுதிட்டிருக்கா.
சரி . சரி . 100 ரூபா காசு தாரன், மனிசிக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு போய்க்கொடு.
மாமா . (வந்து கொண்டு) ராஜன் வந்தால் இதைக் குடுங்கோ.
என்ன இது .
மத்தியானம் சாப்பாடு கொண்டு வரேக்கை பஸ்சில் வரச்சொல்லுங்கோ, பாவம் ராஜன், அந்த வெயிலுக்கை நடந்து சாப்பாடு கொண்டு வர எனக்கு சாப்பிடவே மனமில்லை (போய்க்கொண்டு) நான் வாறன் .
சரி . சரி . நியோ .
பாத்தியே ராமையா நாங்கள் உன்ரை பிள்ளையை
அவ்வளவு கஷ்டப்படுத்திறத்தில்லை, எல்லாருக்கும் அவனிலை நல்ல விருப்பம்.
இந்தா இந்தக்காச்ை கொண்டு, உன்ரை மணிசி பிள்ளையஞக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு போய்க்கொடு.
(ராஜன் வருகிறான்)
அந்தா நம்ம புள்ளையே வர்ரானுங்க. அவனோடை கொஞ்சம் பேசீட்டு போயிடுறேனுங்க .

Page 52
100 0 அருணா செல்லத்துரை
மஞ்சு :
ITIT68) D :
ராஜா :
Tf T68) D :
ராஜா :
சுப்ர :
மஞ்சு :
ᎠᎢf ᎱᎧᏡ)t Ꮭ :
வசந் :
ராஜன் .
வசந் :
ராஜன்
இரகசியமாக) அவன் என்னத்தைப் பேசப்போறானோ தெரியவில்லை, நீங்கள் ஒருக்கா பக்கத்திலை நிண்டு கொள்ளுங்கோ .
ராஜன் எப்பிடி சுகமாயிருக்கிறியா .
ஆமாப்பா .
அம்மாதான் உன்னை பார்த்திட்டு வரச்சொல்லி அனுப்பிச்சு அக்காமார் எல்லாம் உன்னைப் பார்க்க ஆசையாயிருக்குன்னு சொன்னாங்க .
எனக்கும் ஆசையாயிருக்கப்பா .
அதுதான் சொன்னனே ராமையா . நாங்கள் ஊருக்கு வரேக்கை கூட்டி வாறமென்டு.
ராமையா பிள்ளையஞக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு போய்க்கொடு. நேரம் போச்சில்லே. பஸ்சிலை போறதெண்டால் நேரத்தோடை போ.
சரிம்மா . நான் வாறன் . ராஜன் வாறேம்பா .
(36.06)
ராஜன் . ராஜன் . என்ன மூலைக்குள்ள நிக்கிறாய். இருட்டல்லே .
ஒண்டுமில்லை ரீச்சர் .
இஞ்சாலை வெளிச்சத்துக்கு வா .. நான் உன்னையல்லே சொன்னனான் என்னை ரீச்சர் எண்டு சொல்லக்கூடாது, அக்கா எண்டு சொல்ல வேணுமெண்டு .
ஆமா ரீச்சர் . ஆனா மஞ்சுளா அம்மா, நான் இனிமேல் உங்களை அக்கா எண்டு கூப்பிடக் கூடாதின்னு சொல்லிட்டாங்க.

ബ 0 101
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
ராஜன் :
வசந் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
பின்னை எப்பிடிக் கூப்பிட வேணுமாம்.
ரீச்சர் அம்மான்னு கூப்பிடவேணுமாம் .
அவ அப்பிடித்தான் சொல்லுவா . நீ அப்பிடியெண்டால் ஒண்டு செய் .
என்ன செய்ய வேணும் ரீச்சர்.
மஞ்சுளா அம்மா இல்லாத நேரம் என்னை அக்கா எண்டு கூப்பிடு, அவ இருக்கிற நேரம் என்னை ரீச்சர் எண்டு கூப்பிடு .
का िgिा
சரி இப்ப மஞ்சுளா அம்மாவும் பிள்ளையரும் எங்கை.
கோயிலுக்கு போயிட்டாங்க ரீச்சர் .
அப்ப ஏன் என்னை ரீச்சர் எண்டு கூப்பிடுகிறாய். அக்கா எண்டு கூப்பிடன்.
சரி ரிச்சர் .
ஆ . ம் . அக்காவெண்டு சொல்லு
.... قة ... إلى
அ . க் - கா .
- விம்மி அழுகிறாள்)
ஏனக்கா அழுகிறீங்க
இவ்வளவு நாளும் எனக்கு ஒருதரும் இல்லையெண்டு நினைச்சிருந்தன்.
ஏனக்கா உங்களுக்கு அப்பா அம்மாவேயில்லையா .

Page 53
102 0 அருணா செல்லத்துரை 1
வசந் :
: ז996bחש
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ஏனில்லை . இருந்தவங்கள் இப்ப இல்லை . பிறந்த வீட்டிலையே அம்மா செத்துப்போயிட்டா . அப்பா இன்னுமொரு கலியாணம் கட்டிக்கொண்டு வெளிநாடு போயிட்டார். ஆனா மாதா மாதம் காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவர் அனுப்புற காசிலை மாமா என்னைப் படிப்பிச்சு, ரீச்சர் வேலையும் எடுத்து தந்தார். Lotuot sabsusuri.
ஏனக்கா மஞ்சுளா அம்மாவும் நல்லவங்கதானை .
ஓம் ஓம் நல்லவங்கதான் (கதையை மாற்றும் தோரணையில்) அது சரி. உன்ரை அப்பா வந்து நிண்டார், போயிட்டாரே.
ஒமக்கா. அவர் உடனேயே போயிட்டார்.
அப்ப உன்னை வரச்சொல்லி கேட்கயில்லையே .
வரச்சொன்னாரு ஆனா . மஞ்சுளா அம்மாதான், அப்புறமா அவுங்க போறப்போ கூட்டிட்டு போய் விடுறதா சொல்லிட்டாங்க .
அப்ப அப்பா ஒண்னுமே சொல்லயில்லையா .
இல்லீங்க 100 ரூபா கொடுத்தாங்க, வாங்கிட்டு பிறகு வாரேன்னு சொல்லிட்டு போயிடிச்சு.
அதுதான் அழுதுகொண்டு நிண்டனியே . உனக்கு அம்மாவைப் பார்க்க ஆசையா ..?
பார்க்கணும்னு ரொம்ப ஆசையிங்க .
மஞ்சுளா அன்ரி தன்னுடைய பிள்ளையெண்டா இப்பிடிச் செய்வாவா .
நீங்கள் என்னக்கா சொல்றிங்க .
(சுதாகரித்துக் கொண்டு) அது ஒண்டுமில்லை உனக்கு அம்மா இருந்தும் பார்க்க முடியவில்லை அதுதான்

G 0 - 103
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
: זg68חש
வசந்
ராஜன் :
வசந் :
ராஜன் :
மஞ்சு :
சொன்னன். அது சரி அண்டைக்கு கோபியின்ரை ரூமிலையிருந்து இங்கிலிஸ் புத்தகம் கொண்டு வந்து இங்கிலிஸ் படிக்க ஆசையெண்டு சொன்னாய் பிறகேன் புத்தகத்தை கொண்டு வரேல்லை .
மஞ்சுளா அம்மா புத்தகத்தைக் கொண்டு போயி கோபித் தம்பியின்ரை அறைக்குள்ளை வைக்கச் சொல்லிச்சு, அதனாலை பயத்திலை கொண்டு போய் வைச்சிட்டேங்க .
சரி . நான் உனக்கு புதுப்புத்தகம் வாங்கி வந்து பாடம் சொல்லித் தருவன், நீ ஊரிலை படிக்கயில்லையே . ஊருப் பள்ளிக்கூடத்திலை ஒண்ணாங் கிளாஸ் வரைக்கும் படிச்சேங்க . அதுக்குப் பிறகு படிப்பை நிப்பாட்டிட்டு இங்கை பிடிச்சு அனுப்பிச்சிட்டாங்க .
கோபித் தம்பி போலையும் ராஜித் தங்கச்சி போலையும் படிக்க உனக்கு ஆசையில்லையா?
ஆசைதான் ரீச்சர் . அக்கா .
அப்பிடி படிச்சால், என்னத்துக்கு படிக்க ஆசை?
எனக்கு டாக்டருக்கு படிக்கத்தான் ஆசை
நாளையிலையிருந்து என்ரை அறைக்கு நீ படிக்க வரவேணும் . சரியோ.
மஞ்சுளா அம்மா ஏசமாட்டாங்களா அக்கா .
அவவுக்கு நான் சொல்லுறன். நீ வேலையெல்லாம் முடிஞ்சவுடனை என்னட்டை வரவேணும் சரியோ .
சரியக்கா .
(இசை)
ராஜன் . ராஜன் . இவன் எங்கை போயிட்டான் .

Page 54
104 0 அருணா செல்லத்துரை
ராஜன்
மஞ்சு :
ராஜன் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
இந்தா வந்திட்டேங்க .
உன்னையெல்லோ சொன்னனான் சமைச்ச பாத்திரங்களை யெல்லாம் கழுவச் சொல்லி எங்கை போயி நிண்டனி .
அக்காவின்ரை ரூமிலை . இல்லீங்க . ரீச்சரின்ரை ரூமிலை.
அங்கையெல்லை உன்னை போக வேண்டாம் எண்டு சொன்னனான்.
(வந்து கொண்டு) நான்தான் அன்ரி அவனை வரச்சொல்லி கூப்பிட்டனான்.
நீ வர வர அவனுக்கு கூட இடம் கொடுக்கிறாய்
நான் அப்பிடி ஒண்டும் கூட இடம் கொடுக்கயில்லை. அவனையும் ஒரு மனிசனா நினைக்கிறன் அவ்வளவுதான்.
உதைப்பற்றி கொஞ்சம் கதைக்க வேணும் எண்டுதான் நினைச்சனான். கொஞ்சம் பொறு . (உரத்து) டேய் . நீ என்ன வாய் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
உள்ளுக்கை போய் பாத்திரங்களைக் கழுவிப்போட்டு மேலைபோய் கோபித் தம்பியின்ரை ரூமையும் ராஜித் தங்கச்சின்ரை ரூமையும் துப்புரவாய் கூட்டி விடு . போ . போ .
(கொஞ்சம் பொறுத்து) எனக்கு ஏதோ சொல்ல வேணும்
எண்டு சொன்னியள் . பிறகு ஒண்டும் சொல்லாமல் செருப்பையேன் மேசையில தூக்கி வைச்சுப்போட்டு அதையே பார்த்துக் கொண்டிருக்கிறியள் .
காலிலை போடுற செருப்பை கையிலை போட்டாலென்ன

6G 0 105
வசந் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
: rפו36L
வசந் :
áljD :
வசந் :
சுப்ர :
அன்ரி நீங்கள் என்ன சொல்ல வாறியள் எண்டது எனக்கு விளங்குது . விபரமாய்ச் சொல்லுங்கோ .
வசந்தி காலிலை போடுற செருப்பை ஏன் கையிலை போடக்கூடாதோ அதைப்போல வேலைக்கு வந்த பொடியனை வேலைக்குத்தான் வைச்சிருக்க வேணும் . வீட்டுப் பிள்ளை போல வைச்சிருக்க கூடாது.
அதுதான் அவனைக் கொண்டு வேலையெல்லாம் செய்விக்கிறியள் . பிறகென்ன .
அது சரி . நீ என்ன செய்யிறாய் . அவனை உன்ரை ரூமுக்குள்ளை கதிரையிலை இருக்க விடுறாய் கட்டிலிலை படுக்க விடுறாய் .
அதுக்கென்ன அன்ரி கோபிக்கும் அவனுக்கும் ஒரே வயது . சின்னப்பிள்ளை . என்ரை கட்டிலிலை படுத்தாலென்ன?
கோபி என்ரை பிள்ளை, அவன் வேலைக்காரன், அதுதான் வித்தியாசம் .
(வந்து கொண்டு) என்ன ராஜன்ரை பேர் கோபியின்ரை பேர் எல்லாம் அடிபடுது . ஆ . வசந்தி இங்கையே நிற்கிறாய் . உன்னோடை சில விசயங்கள் கதைக்க வேணும்.
சொல்லுங்கோ மாமா . நேற்றைக்கு உன்ரை பிறின்சிபலைக் கண்டனான். அவரிட்டை நீ போய் கேட்டியாம் பள்ளிக்கூடம் வந்து படிக்காமல் ராஜன் சோதினை எடுக்க முடியுமோவெண்டு .
அவனுக்கு படிக்க நல்ல ஆசை மாமா .
அதுக்காக மற்ற ரீச்சஸ்சுக்கு முன்னாலை சாப்பாடும் தீத்திக் காட்ட வேணுமே .

Page 55
106 9 அருணா செல்லத்துரை
வசந் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
சுப்ர :
அவன் சாப்பிடாமை எனக்கு சாப்பாடு கொண்டு வந்திருந்தான், அதாலை எனக்குக் கொண்டு வந்த சாப்பாட்டிலை அவனுக்கு கொஞ்சம் குடுத்தன் .
நீ உப்பிடி இடம் குடுத்துத்தான் அவனைப் பழுதாக்கிப் போட்டாய் அவன் இப்ப சொல் வழியே கேட்கிறதில்லை.
அவனும் ஒரு தாய் பெத்த பிள்ளைதானே, நாங்கள் கொஞ்சம் மனுசத்தன்மையாய் நடக்க வேணும்.
நாங்களொண்டும் சாப்பாடு சம்பளம் உடுப்பு குடுக்காமல் வைச்சிருக்கேல்லை .
ஆ . உது மட்டும் காணாது .
வேறை என்னத்தை குடுக்கச் சொல்லுறாய் . இதுக்குமேலை குடுத்தால் தலையிலை ஏறிக் குந்திடுங்கள் அதை அதை அந்தந்த இடத்திலை வைக்க வேணும் .
வசந்தி நீ உள்ளுக்கை போ . பிறகு உதைப்பற்றிக்
கதைப்பம் (கொஞ்சம் பொறுத்து) . நீ இப்ப இதைப்பற்றி அவளோடை ஏன் பேசிக் கொண்டிருக்கிறாய் .
நீங்கள் எப்பவும் அவளின்ரை பக்கந்தானை கதைப்பியள்
இல்லையப்பா. அதுகள் இளம்பிள்ளைகள் புதுசாய் புதுமையாய் யோசிச்சு அதை செய்யத்தான் யோசிப்பினம் கொஞ்சம் காலம் போக எல்லாம் சரியாய் போயிடும்.
அதுக்காக அவள் நினைச்சபடியெல்லாம் செய்ய விடுறதே .
அப்பிடியெண்டு நான் சொல்லேல்லை இஞ்சை பார் . நாங்கள் படிக்கிற காலத்திலை சாதி இரண்டொழிய

வீடு 0 107
மஞ்சு :
சுப்ர :
மஞ்சு :
சுப்ர :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
வேறில்லை எண்டு படிச்சனாங்கள் ஆனால் இப்ப அதன்படியே நடக்கிறம்? அதெல்லாம் படிக்கிறதுக்குச் சரி, வாழ்க்கையிலை சரிப்பட்டு வருமே . அப்படியெண்டால் நாங்கள் எல்லோரையும் தலையிலையெல்லாம் தூக்கி வைச்சுக்கொண்டு ஆடவேணும். மஞ்சுளா, நானும் உதைத்தான் சொல்லுறன் அவள் ஏதாவது சொல்லிப் போட்டாள் எண்டு துள்ளி சன்னதம் ஆடதை, காலம் போய் பொறுப்புகள் வர எல்லாம் சரியாய் விடும் . நீங்கள் உப்பிடியே சொல்லிக் கொண்டிருங்கோ, தலைக்கு மேலை வெள்ளம் போனப்பிறகுதான் யோசிப்பியள் .
எவ்வளவுதான் காலம் போனாலும் தலைக்கு மேலை வெள்ளம் போகாதப்பா .
(இசை) ஏ .பி . பி. எல் . இ . அப்பிள்
அ . ப்பிள்
ஏ போர் (For) அப்பிள்
ஏ போர் அப்பிள் பி . போர் . பிஸ்கட் . (Biscut)
பி . போர் . பிஸ்கட்
சி . போர் . கற் . (Cat) சி . போர் . கற் ነ
. Gurî ... LTış (Daddy)
?yا

Page 56
108 9 அருணா செல்லத்துரை
ராஜன் :
வசந் :
ராஜன்
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
வசந் :
ராஜன் :
ouéfpö
ராஜன் :
வசந் :
மஞ்சு :
ராஜன் :
வசந் :
ராஜன் :
மஞ்சு :
டி . போர் . டாடி
டாடி எண்டால் என்னெண்டு தெரியுமே? தெரியாதக்கா .
டாடி எண்டால் அப்பா . இப்ப சொல்லு பாப்பம் டி . போர் .
அப்பா .
(சிரித்து) டி . போர் . டாடி . டாடி எண்டால் அப்பா. அப்ப அம்மாவுக்கு என்னெண்டு சொல்லுறதக்கா . மம்மி . மம்மி . எண்டால் அம்மா .
எனக்கு அம்மாவிலையும் அப்பாவிலையும் விருப்பம் இதை எப்பிடி சொல்லுறதக்கா?
ஏன் ராஜன் உனக்கு அம்மாவிலையும் அப்பாவிலையும் அவ்வளவு விருப்பமா?
ரொம்ப ஆசையக்கா .
(கலங்கி) உனக்கு அப்பா அம்மா இருந்து பார்க்க
முடியேல்லை . ஆனா எனக்கு இரண்டு பேருமே இல்லை .
தூர இருந்து) ராஜன் . ராஜன் . அக்கா மஞ்சுளா அம்மா கூப்பிடுறாங்க .
அவ இங்கை வரட்டும். வேலையெல்லாம் முடிஞ்சுதுதானே, நீ பேசாமல் இருந்து படி .
அக்கா எனக்கு பயமாயிருக்கு .
ராஜன் நீ இஞ்சை என்ன செய்றாய் .

of G 0 109
ராஜன் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
வசந் :
மஞ்சு :
வசந் :
அம்மா நான் . வந்து .
ஆ . க் . கட்டிலிலை இருந்து படிக்கிறீரோ இறங்கடா கட்டிலாலை .
அது என்ரை கட்டில் அன்ரி, நான்தான் இருக்கச் சொன்னனான் .
கட்டில் உன்ரை எண்டாலும் வீடு என்ரை, வேலைக்காரனும் என்ரை .
அவன் வேலைக்காரன் இல்லை அன்ரி அவனும் ஒரு பிள்ளை .
இஞ்சை பெரியவிளக்கம் வைக்காதை . அவனை இஞ்சை கொண்டு வைச்சிருக்கிறது வேலைக்கு, படிக்கிறதிற்கில்லை.
படிக்கிறது அவன்ரை விருப்பம், அதை நீங்கள் தடுக்கக் கூடாது . தடுக்கவும் முடியாது .
(அதட்டி) அவன் படிக்க வேணுமெண்டால் அவன்ரை தாய் தகப்பன் வைச்சிருந்து படிப்பிக்க வேணும். நாங்கள் சம்பளம் குடுத்து வேலைக்கு வைச்சிருக்கிறம்.
காசில்லாமல் கஷ்டப்பட்டு போச்சுதுகள் எண்டதுக்காக நாங்கள் போட்டு மிதிக்கக் கூடாது . அதுகளுக்கும் எங்களாலை இயண்டதைச் செய்ய வேணும்.
அப்பிடி நாங்கள் எல்லோருக்கும் செய்து கொண்டு போனால் நாங்கள் தெருவிலை நிக்க வேண்டியதுதான்.
இப்பிடி ஒரு நிலமை உங்கடை பிள்ளை கோபிக்கு
வந்திருந்தால் என்ன செய்வியள் . அவனைப் பக்கத்திலை தனிய கடைக்குக்கூட அனுப்பப் பயப்படுறியள். ஆனால் அதே வயதுள்ள இந்தச் சின்னப்பாலனை 2 மைல் தொலைவிலுள்ள சந்தைக்கு மரக்கறி வாங்கி வர, தனிய கடைக்கு துரத்திறியள் .

Page 57
10 0 அருணா செல்லத்துரை
மஞ்சு :
சுப்ர :
வசந் :
சுப்ர :
வசந் :
வசந் :
சுப்ர :
வசந் :
கோபி சின்னப்பிள்ளை . அவனை நான் ஏன் கடைக்கு அனுப்ப வேணும் . இப்பிடி கனக்கக் கதைக்கிறனி ராஜனைக் கொண்டு போய் வைச்சி படிப்பியன்
Tfl).
(வந்து கொண்டு) வசந்தி நீ பேசினதெல்லாம் கேட்டுக் கொண்டு தான் நிண்டனான் . நீ சொல்லுறபடி வேலைக்குக் கொண்டுவாற பெடியளை எல்லாம் படிப்பிச்சு எங்களுக்கு சமமாய் வைச்சிருக்க வேணும் எண்டு சொல்லுறது நடைமுறைக்கு ஒத்துவராது.
ஏன் மாமா ஒத்துவராது.
உப்பிடி இளம் வயதிலை எத்தினையோ பேர் இப்பிடியான சிந்தனைகளை வைச்சுக்கொண்டு சமுதாயத்தை மாற்ற வேணுமெண்டு நினைச்சவை . எழுதினவை ஆனால் நடைமுறையிலை அதை செய்து காட்டினவை இல்லையெண்டே சொல்லலாம் .
நான் இதைக் கதையாகவோ கட்டுரையாகவோ எழுதப்போறதில்லை மாமா . நடைமுறைப்படுத்திக் காட்டப் போறன் .
நீ இப்ப என்ன செய்யப்போறாய் .
நான் ராஜனைக் கூட்டிக்கொண்டு போய் படிப்பிச்சு அவன் விரும்புற மாதிரி டொக்டராக்கிக் காட்டப்போறன் .
பிள்ளை . நீ இப்பிடி இவனை கொண்டுபோய் டொக்டராக்கினால் இனிமேல் இந்தப் பிரச்சினையே இல்லாமல் முடியப்போறதில்லை .
இல்லை மாமா . இவ்வளவு நாளும் எழுதிச்சினம் பேசிச்சினம் . நடைமுறைப்படுத்தேல்ல . எண்டு சொன்னியள் அதை ஆராவது ஆரம்பிக்க வேணும் அது ஏன் நானாயிருக்கக் கூடாது .

வீடு O 111
சுப்ர :
வசந் :
சுப்ர :
வசந் :
சுப்ர :
வசந் :
மஞ்சு :
வசந் :
: זg68חש
மஞ்சு :
பிள்ளை . உனக்கெண்டு ஒரு வாழ்வு இருக்குது . நீ இப்பவே இந்தச் சுமைகளை ஏற்றிக் கொண்டு வாழ்க்கையை நாசமாக்கப்போறாய் .
வாழ்க்கை எண்டால் என்ன மாமா . கல்யாணம் முடிக்கிறது பிள்ளையளைப் பெறுறது, பிள்ளையள் வளர்ந்து கலியாணம் கட்டிறது, அதுகள் பிள்ளைகளைப் பெறுறது . மாமா இதையேன் எல்லோரும் செய்ய வேணும் . நான் கொஞ்சம் வித்தியாசமாய் செய்து காட்டுறன் .
பிள்ளை உன்ரை அப்பாவுக்கு நான் என்ன மறுமொழி சொல்றது .
பெற்றோர் செய்யத் தவறிய ஒண்டை மகள் செய்றாள் எண்டு எழுதி விடுங்கோ மாமா
வசந்தி அப்பிடியெண்டால் அவன் உனக்கு காசே அனுப்பாமல் விட்டிடுவான்.
எனக்கு காசு அனுப்பாமல் விட்டால் நான் தெருவிலை நிக்கப்போறதில்லை எனக்கெண்டு ஒரு தொழில் இருக்கு நான் நினைச்சதை செய்து முடிக்கத்தான் போறன் . (உரத்து) வாடா ராஜன் .
நில்லடி . பெரிசா பிரசங்கம் செய்து போட்டு போறன் எண்ட நினைப்பே, அதுக்கு எங்கடை வீட்டு வேலைக்காரப் பொடியன் தான் கிடைச்சானோ அவனை நாங்கள்தான் வேலைக்குக் கொண்டு வந்தது. ராஜன் நீ . போடா உள்ளை .
ராஜன் நீ இஞ்சை வாடா வெளியிலை நான் உன்ரை அக்கா சொல்லுறன் வா என்னோடை .
அக்கா .
ராஜன் நான் சொன்னது உனக்கு கேட்கயில்லையே . போ உள்ளே .

Page 58
112 0 அருணா செல்லததுரை
ராஜன் :
மஞ்சு :
வசந் :
ராஜன் :
மஞ்சு :
சுப்ர :
(சிணுங்கி) நான் அக்காவோடை தான் போகப்போறன்
வசந்தி . அவன்ரை தாய் தகப்பன் வந்து எங்களைத்தான் கேட்பினம் .
இப்பிடி பிள்ளையளைப் பெத்து வேலைக்காரனாய் அனுப்புற பெற்றாருக்கும் இது ஒரு பாடமாய் இருக்கட்டும் . அவையள் கிடக்கட்டும் . வாடா என்னோடை .
நான் உங்களோடை வாறேன் அக்கா
நில்லுடா .
(அதட்டி) . மஞ்சுளா அவங்களைப் போகவிடு
இசை)
"இவர்களும் மனிதர்கள்” என்ற நாடகம் கேட்டிர்கள் எழுதியவர் - அருணா செல்லத்துரை
பங்கு பற்றியோர்
வசந்தி - வனஜா சீனிவாசன் JT68)LDu Fr - கே. சந்திரசேகரன் மஞ்சுளா - ஏ.எம்.சி. ஜெயசோதி சுப்ரமணியம் - அருணா செல்லத்துரை ராஜன் "
தயாரிப்பு - ஜோர்ஜ் சந்திரசேகரன்

முடிவுகள் மாற்றப்படலாம்
கனகம்மா தன்னுடைய மகன் ரவிக்கு அதிகம் சீதனம் வாங்கி திருமணம் செய்ய வேண்டும் என்று மிகவும் கண்டிப்பாக இருக்கிறாள்.
வசதி குறைந்த கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சியாமளாவை தன் மகன் ரவி திருமணம் செய்வதற்கு விரும்பியதை அறிந்த கனகம்மா, புறோக்கர் மூலம் வேறு இடங்களில் திருமணம் பேசுகிறாள்.
இதனை அறிந்த ரவி, சியாமளாவை பதிவுத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். கனகம்மா கொதித்து எழுகிறாள். வீட்டில் மாமிக்கும் மருமகளுக்கும் ஒத்துப் போகவில்லை. மனக் கசப்புகள் வளர்கின்றன. ரவியும் சியாமளாவும் பிரிந்திருக்க தீர்மானிக்கிறார்கள். கனகம்மாவும் தங்கை வத்சலாவும் இந்த முடிவை வரவேற்கிறார்கள்.
வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்திற்கு போகுமுன்னர் மாமியுடன் தனிய பேச விரும்புவதாக சியாமளா கூறுகிறாள். : - . .
அறையினுள் பேசுவதற்காக வந்த சியாமளா, கனகம்மாவின் மகன் ரவி ஒர் ஆண்பிள்ளையாக இருக்கத் தகுதியில்லாதவன் எனக் கூறியதும் கனகம்மா கோபப்படுகிறாள்.

Page 59
14 0 அருணா செல்லத்துரை
10.
எந்த ஆண்பிள்ளையானாலும் ஒரு தாயின் மகன்தான் அதனால் அந்தத்தாய் தன்மகன் சீதனம் வாங்கக்கூடாது என்று சொன்னால் என்ன நடக்கும் அதனால் தான் வீட்டை விட்டுப்போய் விவாக ரத்துச் செய்த பின்னர் தன் வயிற்றில் வளரும் பிள்ளையை ஆண் பிள்ளையாக இருந்தால் சீதனம் வாங்காதே எனக் கூறி வளர்க்கப் போவதாக கூறுகிறாள்.
ஒரு ஆண் சீதனம் வாங்க வேண்டுமென பின்னின்று தள்ளும் ஓர் உந்துசக்தி பெண்தான் என கூறுகிறாள். ஆண்களை வீணே குறைகூறுவதில் பிரயோசனமில்லை எல்லாத்தாய்மாரும் ஒன்று சேர்ந்து தன்பிள்ளை சீதனம், வாங்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தால், தன் உதிரத்தில் பிறந்த ஆண் இனத்தை குறை சொல்வது நின்றுவிடும். ஆண்களை குறை கூறுவது தன் உதிரத்தை பழிப்பதற்கு ஒப்பானதாகும் எனக் கூறுகிறாள்.
கனகம்மாவின் மனம் மாறுகிறது. சியாமளா தனது வீட்டைவிட்டுப் போகக்கூடாது எனக் கெஞ்சுகிறாள். தனது மகன் சீதனம் வாங்காமல் கலியாணம் செய்தது போல தனது பேரனும் சீதனம் வாங்காமல் கலியாணம் செய்யும் காட்சியை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் தருமாறு கேட்கிறாள். சியாமளாவும் தனது முடிவை மாற்றிக் கொள்கிறாள்.

முடிவுகள் மாற்றப்படலாம் எழுதியவர் - அருணா செல்லத்துரை
நாடகப் பாத்திரங்கள்
1. கதிர்காமர்
4. ரவி
ஒத்திகை -
2. கனகம்மா 3. சியாமளா 5. புரோக்கர் 6. வத்சலா
28.02.88 - 08.30 - 10.30
ஒலிப்பதிவு - 28.02.88 - 10.30 - 12.30
ஒலிபரப்பு -
10.00 ہے ۔ 09.30 -۔ 05.03.88
(கதிர்காமரும், கனகம்மாவும், புரோக்கர் சிதம்பரம் பிள்ளையும்
ó5Göró 。
ò56õ፲fፊ፵5 :
பேசிக் கொண்டிருக்கிறார்கள்)
சிதம்பரம்பிள்ளையண்ணை தம்பி ரவி ஐ.சி.எம்.ஏ. பைனல் பாஸ் பண்ணிட்டான். அவனுக்கு நீங்கள் பொம்பிளை பாக்கிறதெண்டால் நல்ல சீதனத்தோடு தான் பார்க்க வேணும்.
தங்கச்சி கொழும்பிலை ஒரு விடுவளவு தேவையான நகை, கார், மூன்று லட்சம் ரூபா காசு, இதைவிட வேறு என்ன எதிர்பார்க்கிறியள்.
உது இந்தக் காலத்தில ஒரு எக்கவுண்டனுக்கு குடுக்கிற சீதனமே, சிதம்பரப்பிள்ளை உது காணாது .
நாங்கள் எங்கட இரண்டு பெட்டையஞக்கு சாதாரண உத்தியோகம் பாக்கிற மாப்பிள்ளையளைத்தான் எடுத்தானங்கள். ஒவ்வொரு விடும் மூன்று லட்சம் ரூபா

Page 60
116 0 அருணா செல்லத்துரை
S3
56.95 :
95695 :
காசும் குடுத்தானங்கள் சீதனமாய். எங்கட தம்பி ரவி ஒரு எக்கவுண்டன். ஒரு பத்து லட்சமாவது வாங்கிச் செய்ய வேண்டாமே .
: நான் பேசுற பகுதியிட்டை நல்ல காசு இருக்குத்தான்
ஆனால் அவையஞக்கு இன்னுமொரு பெட்டையும் இருக்கு அதுதான் யோசிக்கினம் .
அதை விட்டிட்டு வேறையொரு இடம் பாருங்கோவன் அண்ணை .
தங்கச்சி அவையஞக்கு இந்த சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அது தான் ஒருக்கா கதைச்சுப் பாக்கச் சொன்னவை.
இதில கதைக்கிறதுக்கு என்ன இருக்கு அண்ணை. அந்த நேரம் எனக்கு கலியாணம் பேசேக்கை இவர் ஒரு சி.சி. மட்டும்தான். அப்பிடியிருந்தும் 75 ஆயிரம் காசாய் குடுத்தவர் எங்கடை அப்பா. அதில அரைவாசிக்குத் தான் வீடு வாங்கினவர் மிச்சத்தை பாங்கில போட்டு இந்தப்பிள்ளையளையும் ஒரு மாதிரி படிப்பிச்சு இந்த நிலைக்கு வந்தனாங்கள் . நாங்கள் தம்பிக்கு கொஞ்சம் கூட எதிர்பார்க்கிறதிலை பிழையில்லைத் தானையண்ணை.
சிதம்பரம், அவையள் வேறை யாருக்கோவே சீதனம் குடுக்கினம் . தங்கட பிள்ளைக்குத்தானை குடுக்கினம். நான் என்ர இரண்டாவது மகளுக்கு கலியாணம் பேசேக்கை கையிலை காசிருக்கேல்லை. பாங்கிலை கடனெடுத்துத்தான் குடுத்தனான்.
அந்தக் கடனும் நாங்கள் கொஞ்சம் குடுக்க வேணும் . அதனாலை ஆகக் குறைஞ்சது ஒரு 8 லட்சமாவது தரச் சொல்லுங்கோ .
அவையள் ஆகக்கூட ஒரு 5 தான் தரலாம் எண்டு சொன்னவை. எதுக்கும் ஒருக்கால் போய்ப் பேசிப்
பார்க்கிறேன்.

GQ � 11.
ó66õ!‛dቿ :
: חנu(98
ரவி :
ரவி :
Gruunt :
அப்பிடி அது சரிவராவிட்டால் வேறை இடமெண்டாலும்
பார்த்து வந்து சொல்லுங்கோ .
அவையஞக்கு வெளியிலையும் ஒரு பெடியன் இருக்கிறான். அவனுக்கும் ፴፰ (ሠ5 கடிதம் போட்டிருக்கினம். அவன்ரை மறுமொழி வந்த உடனை நான் வந்து சொல்றேன். அப்ப நான் வரட்டே .
சுறுக்கா வந்து முடிவைச் சொல்லுங்கோ.
(இசை) (அலுவலக நேரம் ரவியும் சியாமளாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்) அம்மாவுக்கு நீங்கள் என்ன மறுமொழி சொல்லப் போறிங்கள் ரவி .
என்ன சொல்ல வேணும் எண்டு நீரே சொல்லுமன் .
நான் என்னத்தை சொல்லுறது ரவி. உங்கடை அம்மா எதிர்பார்க்கிற அளவு சீதனம் குடுக்க எங்களிட்டை காசு வசதியில்லை. கொழும்பிலை நாங்கள் இருக்கிறதே வாடகை வீடு. பிறகெப்படி கொழும்பிலை வீடு, காசு பத்துலட்சம், கார் எங்களாலை நினைச்சுப் பார்க்கவே முடியாது.
சியாமளா நீர் இந்த செக்சனுக்கு மாறி வந்த உடனேயே எனக்கு உம்மிலை என்னையறியாமலேயே ஒரு விருப்பம் வந்திட்டுது. அது காலப்போக்கில காதலாயும் மாறிட்டிது. உம்மிலை நான் விரும்றது இரண்டு விசயம் ஒண்டு உம்மடை இயற்கையான அழகு, அடுத்தது ஏழ்மை.
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது ரவி. நான் அண்டைக்கு உங்கடை பேர்த் டே பாட்டிக்கு வந்திருந்த போது உங்கடை வீட்டையும் வசதியையும் பாத்து பிரமிச்சுப் போனன்.

Page 61
118 0 அருணா செல்லத்துரை
ரவி :
: ח98u
дrєї) :
சியா :
ரவி :
Sunt :
ரவி :
Fu unir :
ரவி :
என்னட்டை வீடிருக்கு உம்மட்டை நல்ல மனமிருக்கு.
ஆனா என்னட்டை பணம் இல்லை ரவி .
பணந்தான் வாழ்க்கைக்கு முக்கியம் எண்டு நினைக்கேல்லை நான், சியாமளா .
ஆனால் உங்கட அம்மா பணம்தான் முக்கியம் எண்டு நினைக்கிறவ .
அம்மாவே கலியாணம் முடிக்கப்போறா . நானெல்லோ கலியாணம் முடிக்கப் போறது. நீர் உங்கடை வீட்டிலை எங்கடை காதல் விசயத்தைச் சொல்லிப் போட்டிரோ இல்லையோ .
நான் இன்னும் சொல்லேல்லை. எனக்கு பயமாயிருக்கு
ரவி. அப்பா பென்சனில போனதிலிருந்து மனம் நொந்து போயிருக்கிறார். அதோடையும் இதையும் போய்ச்சொல்லி அவரைக் கவலைப்படுத்த நான் விரும்பேல்லை.
சியாமளா வீட்டையும் சொல்லாமல் வெளியிலயும் தெரியாமல் என்ன மறக்கிறதுதான் உம்முடைய விருப்பமா?
இல்லை ரவி. எனக்கு மனத்துணிவு இல்லாமல் இருக்கு. எழுத்திலையும் பேச்சிலையும் சீதனத்தாலை வாற கொடுமைகளைப் பற்றி தெரிஞ்சிருக்கிறேன். ஆனால் நேரிலையே சந்திக்க வேண்டி வந்ததும் வாழ்க்கையை நினைக்க ஒரு பயமாயிருக்கு .
வழமையான குற்றச்சாட்டுத்தானே. ஆண் இனமே மனச்சாட்சி அற்றவர்கள். சீதனப்பேய்கள். (சிரித்து) இவர்களால் இந்தச் சமுதாயமே அழிந்துவிட்டது. பெண்கள் அனைவரும் இவர்களுக்கெதிராக போர்க்கொடியெழுப்ப வேண்டும்.

G 0 119
ரவி :
: חu(88
ரவி :
gunt :
ரவி :
சியா :
ரவி :
&Fuunr :
ரவி :
ரவி நான் அப்பிடி சொல்ல மாட்டன். ஏனெண்டால் நீங்கள் நல்லவர். உங்களுக்கு என்னை ஏமாத்த வேணும் எண்ட எண்ணமேயில்லை, எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் சமுதாய அமைப்பு எங்களைப் போன்றவர்களை வாழவிடாமல் செய்யுறதுக்கெண்டே இந்த சீதனக் கொடுமையை ஆரம்பித்து வைத்திருக்கு.
சியாமளா அப்பிடி நாங்கள் சமுதாயத்திலையோ அல்லது, தனிய ஆம்பிளையளிலையோ நெடுகப் பழியைப் போட்டுக் கொண்டிருக்க முடியாது. பிரச்சினை என்று ஒண்டு வந்தால் அதனின்ர ஆரம்பத்தைக் கண்டு பிடிச்சு அதுக்கு பரிகாரம் செய்ய் வேணும்.
ரவி சமுதாயத்திலை புரையோடிப்போன பிரச்சினைக்கு பரிகாரம் தேடுற அளவுக்கு நானில்லை. ஆனால் இப்ப இது எனக்கு வாழ்க்கைப் பிரச்சினை.
வாழ்க்கைப் பிரச்சினையெண்டால் அதுக்கு ஒரு முடிவு எடுக்க வேணும்.
இப்பிடியான நேரத்திலை, பொம்பிளை அதுவும் ஏழை என்ன முடிவை எடுக்க முடியும் ரவி .
எது சரி எது பிழை என்பதை ஆராய்ஞ்சு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியது உம்முடைய கடமை .
(மெளனம்)
வழமையாய் எல்லாப் பெண்களும் எடுக்கிற முடிவை நீர் எடுக்கிறதெண்டாலும் சரி, ஆனால் நான் ஒண்டை உமக்கு இந்த நேரத்திலை சொல்ல விரும்புறன் .
இடைமறித்து) நான் பொம்பிளை நீங்கள் தான் .
இது வாழ்க்கைப் பிரச்சினை நான் உம்முடைய
பெலவீனத்திலை வாழ்க்கை நடத்த விரும்பேல்லை சியாமளா .

Page 62
120 0 அருணா செல்லத்துரை
Gruunt :
ரவி :
: ח68u
ரவி :
5565
S6s
ò፩6õ፫ፈm5 :
கதிர் :
ரவி நீங்கள் என்ன சொல்லுறியள் .
இப்படியான ஒரு சந்தர்ப்பத்திலை ஒரு ஆம்பிளை என்ன செய்ய வேணும் எண்டு ஒரு பெண் எதிர்பார்ப்பாளோ அதை நான் செய்து முடிப்பன்.
۔۔۔ IJ61
சியாமளா நல்லாய் யோசித்து முடிவை வந்து சொல்லும். நான் வாறன் .
இசை)
தங்கச்சி, தம்பி, கதிர்காமு நான் அவையளோடை கதைச்சனான், வெளியிலை இருக்கிற பெடியனும் கொஞ்ச காசு அனுப்புறானாம். ஏழுலட்சம் தாறதுக்கு சம்மதிக்கினம் நீங்கள் என்ன சொல்லுறியள் .
சிதம்பரம்பிள்ளையண்ணை நாங்கள் கொஞ்சமும் குறைக்கிறதிலையெண்டுதான் யோசித்துக் கொண்டிருந்தனாங்கள். ஆனால் உங்களுக்காக நாங்களும் கொஞ்சம் இறங்கி வரத்தான் வேண்டிக் கிடக்கு .
இஞ்சேர் கனகம்மா நீ காலையிலை சொன்னாய் காசு கொஞ்சமும் குறைக்கிறதில்லையெண்டு எதுக்கும் அவனையும் ஒரு வார்த்தை கேட்டுப்போட்டு செய்றது நல்லது எண்டு நினைக்கிறன்.
நீங்கள் இங்காலை ஒருக்கா வாருங்கோ உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும். சிதம்பரப்பிள்ளை யண்ணை நீங்கள் கொஞ்சம் இருங்கோ.
(சிறிது மெளனத்தின் பின் இரகசியமாக .)
இஞ்சாருங்கோ நீங்கள் விசயம் தெரியாமல் புறோக்கரோடை கதையாதையுங்கோ .
என்னப்பா விசயம் சொல்லன் .

fG 0 121
ò56üfሩm5 :
56.95
கதிர் :
இண்டைக்கு நான் கோயிலுக்குப் போன இடத்திலை ஒரு கதை கேள்விப்பட்டன். இவன் ரவி அவன்ரை கந்தோரிலை வேலை செய்யிற பெட்டை ஒண்டோடை ஏதோ சின்ன தொடர்பு இருக்கெண்டு கதைக்கினமாம்.
உனக்கு ஆர் சொன்னது .
சொன்ன ஆளை ஏன் உங்களுக்கு, நானும் பிறகு விசாரிச்சுப்பார்த்தன் விசயம் ஓரளவு உண்மைதான் . அது, விசயம் முற்றி வாறதுக்கிடையிலை இந்தக் கலியாணத்தை செய்து முடிச்சுப்போடுவம் எண்டு யோசிக்கிறன் .
ஏதோ உன்ரை இஷ்டம் போலை செய் .
(சிறிது இடைவேளையின் பின் .. வந்துகொண்டு)
3569
9565 :
öö6õክሾሪm5 ;
சிதம்பரம் பிள்ளையண்ணை நீங்கள் அவயளோடை போய் கதைச்சு எங்கடை முடிவை சொல்லுங்கோ . நாங்களும் ஒரு நல்ல நாள் பாத்து அவையின்ரை வீட்டுக்கு வாறமெண்டு சொல்லுங்கோ
(இசை) இஞ்சரப்பா . அண்டை அயல் சனமெல்லாம் எட்டிப் பாக்குது . நீ சத்தம் போடாமல் இரு . நீங்கள் சொல்லுங்கோ என்ரை வாசல் படி மிதிக்க வேண்டாம் எண்டு
இந்த நேரத்தில சத்தம் போட்டு ஒண்டும் செய்ய ஏலாது கனகம்மா நீ உள்ளுக்கை போ நான் பாத்துக் கொள்ளுறன் .
சரி . நீங்களும் அவனும் என்னெண்டாலும் செய்து கொள்ளுங்கோ .

Page 63
122 0 அருணா செல்லத்துரை
ரவி :
gunt :
ரவி :
ó56öTó5 。
965 :
சியாமளா . (இரகசியமாக) அம்மா கோவிச்சுக் கொண்டு உள்ளை போறா நீர் உள்ளை போனஉடனை அப்பாவின்ரை காலிலை விழவேனும் சரியோ .
எனக்கு பயமாய் கிடக்கு ரவி .
ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம் . என்ன நடக்கிது எண்டு பாப்பம் .
(சிறிது நேர இடைவெளியின் பின் .)
சரி . சரி . எழும்புங்கோ பிள்ளையள் அங்காலை ஆக்கள் நிண்டு புதினம் பாக்கினம் . உள்ளுக்கை போங்கோ .
(இசை)
நீங்கள் குடுத்த இடம்தான் இவன் கலியாணமும் செய்து, அவளையும் துணிவாய் இஞ்சை கூட்டிக்கொண்டு வந்து குடும்பம் நடத்திறது .
இனி அதுக்கு என்ன செய்றது கனகம்மா .
இனி என்ன செய்யிறதோ .? நான் அவளோடை கதைக்கவும் மாட்டன் இதே வீட்டிலை ஒண்டாய் சமைக்கவும் மாட்டன்.
இஞ்சேர் கணகம்மா, நீ ஒண்டாய் சேர்ந்து சமைக்க விருப்பமில்லாவிட்டால் புறம்பாய் சமை . அதுக்கு சன்னதம் ஆடாதை . எங்கடை பல்லைக்குத்தி மற்றவைக்கு பல்லிளிவு காட்டக்கூடாது கண்டியோ .
அவள் அவனை நல்லாய் மயக்கி வைச்சிருக்கிறாள்ப்பா சரியான கஷ்டப்பட்டதுகள் ஐஞ்சு சதம் காசுக்கு
வழியில்லை. இவளே எனக்கு மருமகள் . நான் எப்பிடி
வெளியிலை முழிக்கப்போறனோ தெரியேல்லை.
இப்ப இரண்டு மாதம் போட்டுது தானை. அதைப் போலை ஒரு மாதிரி சமாளியன் பாப்பம் .

GQ (1) 123
65
ረቛ56õ፻፹óቻ5 :
5655
வத்ச :
é万6öTó 。
வத்ச :
ó፩6õ፻ò፭ :
வத்ச :
என்னத்தை சமாளிக்கிறது. அவளைப் பாக்கிற நேரமெல்லாம் என்ரை வயித்தைப் பத்தி எரியுது. அண்டைக்கு புறோக்கர் சிதம்பரம்பிள்ளையர் வந்து தன்ரை முகத்திலை கரியைப் பூசிப்போட்டமெண்டு சொல்லிப் போட்டுப் போறார்.
அதுக்கு நாங்கள் என்னப்பா செய்யிறது. கலியாணம் எண்டது நாங்கள் தீர்மானிக்கிறதில்லை அது ஆண்டவனால் தீர்மானிக்கப்படுறது எண்டு சொல்லிப் போட்டு பேசாமல் இரு .
அந்தா அவள் தேத்தண்ணி கொண்டு வாறாள் நீங்கள் தான் வாங்கிக் குடியுங்கோ நான் வாறன் .
(இசை) வத்சலா பாத்தியேடி உன்ர கொண்ணன் செய்த வேலையை . இவளை எங்கே பிடிச்சானோ.
ஒண்டுக்கும் வழியில்லை தரித்திரம் பிடிச்சதுகள் .
ஏனம்மா இந்த விசயம் உங்களுக்கு முன்னமே தெரியாதே .
தெரிஞ்சிருந்தால், நான் வந்து உன்னட்டை சொல்லியிருப்பேனே . கடைசி நேரம் தான் தெரிஞ்சது. உன்னட்டை வந்து சொல்ல முடியேல்லை . ஆனால் இரண்டு கடிதம் போட்டனான் நீ ஏன் மறுமொழி போடேல்லை .
கடிதம் வந்ததம்மா. நான் அண்ணை இப்பிடி செய்வாரேண்டு எதிர் பார்க்கேல்லை. அண்ணை படிச்சவர் தானே . பிறகேன் இப்படிப்பட்ட வேலை செய்தவரோ தெரியேல்லை .
எல்லாம் அவள் என்ரை பிள்ளையை மயக்கினதுதான்.
முதலிலை பேசி வந்த கலியாணத்தை செய்திருந்தா லாவது, நாலு லட்சம் காசும், வீடு வளவும்,

Page 64
124 0 அருணா செல்லத்துரை
565
வத்ச :
56.95
வத்ச :
கனக :
வத்ச :
ò56õ፲ፈ85 :
கிடைச்சிருக்கும். ஆகக் கார்தானை இல்லையெண்டு சொன்னவை .
நீ இதைச்சொல்லுறாய். பிள்ளை. கடைசியாய் புறோக்கர் சிதம்பரம் பிள்ளை கொண்டு வந்த கலியாணம் நல்ல கொழுத்த சீதனம். கொழும்பிலை வீடு வளவு, கார், காசும் ஏழு லட்சம் தாறதுக்கு சம்மதிச்சிட்டினம் . நாள் பார்க்க முடிவெடுத்திட்டம். அதுக்கிடையிலை இந்த அறுவாள் என்ன மந்திரம் போட்டாளோ தெரியேல்லை திடுதிடுப்பெண்டு கலியாணம் முடிச்சுக்கொண்டு வந்து நிக்கிறான் . எண்டால் பாரன் .
ஏனம்மா சீதனமாய் ஒண்டும் குடுக்கேல்லையே .?
குடுக்கிறதுக்கு என்ன இருக்கு அதுகளிட்டை. தகப்பன் பென்சன் எடுத்துப் போட்டு வீட்டிலை இருக்கிறார். அதைவிட வேறை இரண்டு பெட்டையள் கலியாணம் முடிக்காமல் குமராய் இருக்குதுகளாம்.
அதுகளுக்கும் அண்ணைதான் சீதனம் குடுத்து கரை சேர்க்க வேண்டிவரும் போலை கிடக்கு . அம்மா எதுக்கும் நீ கொஞ்சம் கவனமாய் இருக்க வேணும் .
இஞ்சையிருந்து ஒரு சதமும் கொண்டு போக விடமாட்டன். ஆகக்கூட போனானெண்டால் இருக்கிற
மிச்சத்தை உங்கடை பேருக்கு எழுதி வைச்சிடுவன் .
அம்மா நான் நெடுகக் கேக்கவேணுமெண்டு நினைச்சனான் . (ஆறுதலாய்) இந்த வீட்டை என்ரை இரண்டாவது மகள் ராதாவின்ரை பேரிலை எழுதிவிடச்சொல்லி என்ரை அவருக்கும் அதுதான்
விருப்பம் .
இப்ப ஏன் பிள்ளை அவசரப்படுறியள் அதெல்லாம் அந்த நேரம் வர நான் சரிவரச் செய்வன்.

ofG (1) 125
வத்ச :
óቻ56Ö፱dm5 ;
வத்ச :
Gruunt :
ரவி :
சியா :
ரவி :
சியா :
ரவி :
ஏனம்மா அவளை இங்கை இருக்க விட்டனிங்கள். எங்கையாவது போய்த் தனிய இருந்து கஷ்டப்படச் சொல்லி அனுப்பி விட வேண்டியதுதானை . அப்பதான் அண்ணைக்கும் புத்தி வரும். அதுக்குப் பிறகு பணத்தின்ரை அருமை அவருக்குத் தெரியவரும்.
அதுதான் கடைசிலை நடக்கப் போகுது .
நான் சொன்னனெண்டு அப்பாவிட்டை சொல்லிப் போடாதேங்கோ. பிறகு என்னிலைதான் பாய்வார் . எதுக்கும் வாற கிழமை அவரையும் பிள்ளையள் இரண்டையும் கூட்டிக்கொண்டு வாறன்.
இசை .)
ரவி . நான் இப்ப இங்க வந்து மூண்டு மாசமாச்சு. உங்கடை அம்மா என்னோடை முகம் குடுத்து பேசுறா இல்லை . எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியயில்லை .
சியாமளா இதுக்கெல்லாம் பயப்பிடக்கூடாது. அதுகள் பழைய காலத்திய ஆக்கள் . கொஞ்சகாலத்துக்கு முகத்தை நீட்டிவினம். பிறகு சரியாய்ப் போடும் .
உங்களுக்கென்ன நீங்கள் சொல்லிப்போட்டு கந்தோருக்குப் போடுவியள் . நானெல்லோ வீட்டிலை யிருந்து கஷ்டப்படுறது .
அதுக்கு என்ன செய்யிறது சியாமளா . கொஞ்ச நாளைக்குப் பொறுத்துப்பாரும் .
பொறுமைக்கு ஒரு அளவிருக்கு ரவி .
சியாமளா. ஒரு பொம்பிளையை இன்னுமொரு பொம்பிளை சமாளிக்க முடியாமல் இருக்கு . இந்த லட்சணத்திலை ஆம்பிளையள் தான் கெட்டவர்கள், அவங்கள்தான் சீதனப்பேய்கள் எண்டெல்லாம் பேச மட்டும் இந்தப் பொம்பிளைகளுக்குத் தெரியும் .

Page 65
126 0 அருணா செல்லத்துரை
: חhu&
ரவி :
ரவி :
9Պայrր :
ரவி :
சியா :
ரவி :
ரவி சமுதாயம் என்ன சொல்லுது எண்டதைப்பற்றி சொல்ல வரேல்லை . நான் சீதனம் இல்லாமல் வந்த பொம்பிளை . எனக்கு உங்களோடை போட்டி போட ஏலாது .
சியாமளா நான் உம்மை என்னோடை போட்டி போடச் சொல்லேல்லை. நீர் சீதனம் இல்லாமல் வந்திட்டிர் எண்டு சொல்லி நாம் உம்மைக் கஷ்டப்படுத்தவு மில்லை. இதுதான் இண்டைக்கு பெண்ணினத்தின்ரை பிரச்சினை எண்டு சொன்னன் .
சமுதாயத்தின்ரை பிரச்சினை வேறை . என்ரை தற்போதைய பிரச்சினை வேறை ரவி . ஒவ்வொருத்தரின்ரை தனிப்பட்ட பல பிரச்சினைகள் சேர்ந்துதான் சியாமளா 3 (5 சமுதாய்ப் பிரச்சினையாகிறது .
சமுதாயப்பிரச்சினையோ அல்லது இது தனிப்பட்ட
பிரச்சினையோ எண்டதெல்லாம் எனக்குத் தேவையில்லை . எனக்குத் தேவை நிம்மதியான வாழ்க்கை .
ஒவ்வொரு பெண்ணுக்கும் நிம்மதியான வாழ்க்கை தான் தேவை. ஆனால் அதுக்காக பழியை ஆம்பிளையளிலை போட்டிட்டு தாங்கள் தப்பிக் கொள்ளக்கூடாது .
என்னை என்ன செய்யச் சொல்லுறியள் ரவி .?
சியாமளா, மற்றப் பொம்பிளையள் சொல்லுறது செய்யிறது போலை உம்மை நான் செய்யச் சொல்ல மாட்டன் . இந்த சீதனக்கொடுமை எங்கையிருந்து ஆரம்பிக்குது எண்டதுக்கு சரியான முடிவைத் தேட வேண்டிய ஒரு லட்சியப்பெண்ணாய்த்தான் இருக்க வேணும். அதைத்தான் நானும் விரும்புறன் .

ofG (1) 127
: חu(68
9565 :
வத்ச
ó፵S6õ፫ó፭ :
வத்ச :
●5@Tó :
வத்ச :
நான் நீங்கள் நினைக்கிற லட்சியப்பெண்ணில்லை. நான் ஒரு சாதாரண பொம்புளை ரவி .
அதினாலைதான் உம்மட்டை சொல்றன் சியாமளா, நாங்கள் ஆம்பிளையள் நாங்கள் எதைச்சொன்னாலும் நாங்கள் தப்பிக்கொள்றதுக்காகத்தான் இதைச் சொல்றம் எண்டு சொல்லுவியள். நீரும் ஒரு பெண். அம்மாவும் ஒரு பெண். இடையிலுள்ள பிரச்சினை சீதனம். பிரச்சினைக்கு எந்த விதமான முடிவை நீர் எடுத்தாலும், என்னுடைய கெளரவத்துக்கு பங்கம் வராமல் இருக்கிற எந்த முடிவானாலும் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயார் .
இசை .)
வா . வத்சலா நீ பிள்ளையளையும் கூட்டி வாறன் எண்டு சொன்னாய் . இப்ப திடுதிடுப்பென்று தனிய வந்து நிக்கிறாய் .
வரவேணும் போலை இருந்தது வந்தனான். அது சரி தங்கச்சி மல்லிகா இங்க வாறன் எண்டு சொன்னவள் வந்தவளா .?
ஓம் பிள்ளை வந்தவள். உங்கை பின்னறைக்குள்ளை ஏதோ எடுத்துக் கொண்டு போனாள் .
என்ன சாமான்கள் .?
தனக்கு ஏதோ வீட்டுச்சாமான் வேணுமெண்டாள் . அதுகள் அந்த அறைக்குள்ளை கிடக்கு போய் எடன் எண்டு சொன்னன். அதுதான் எடுத்துக்கொண்டு போனவள் .
அம்மா நீங்கள் எப்பவும் சின்னமகளுக்குத்தான் சார்பாய்ச் செய்வியள் . அவள் எப்படி தனக்குத் தேவையான சாமான்களை இந்த வீட்டிலையிருந்து எடுத்துக்கொண்டு போறது. நானும் உங்கடை பிள்ளைதானை எனக்கும் சரிசமன் பங்கிருக்கு .

Page 66
128 9 அருணா செல்லத்துரை
ó5@Tó5 :
வத்ச :
56595 :
வத்ச :
ö5@Tó5 :
வத்ச :
556.95
வத்ச :
695
எல்லாம் உங்களுக்குத்தான் பிள்ளையள். பிறகேன் என்னோடை சண்டை பிடிக்கிறாய் . நான் இதுகளெல்லாம் அவனுக்குத்தான் குடுக்கிறது எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தனான். ஆனால் அந்த தரித்திரம் பிடிச்சவள் வந்தபிறகு ஒண்டும் அவனுக்கு குடுக்க மனமில்லை .
அது சரியம்மா . இந்த வீட்டை என்ரை சின்னவள் ராதாவின்ரை பெயரிலை எழுதிறதைப்பற்றி உங்களுக்கு ஞாபகப்படுத்தச் சொன்னவர் . அது பற்றி முடிவு எடுத்த பிறகுதான் இங்கை பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு வருவாராம் .
அதுதானை நான் சொன்னன் பிள்ளை, அவரோடையும் கதைச்சுப் பாக்கவேணும் . மனிசன் என்ன நினைச்சு வைச்சிருக்கோ தெரியாது .
அவர் என்னத்தை நினைச்சாலும் நாங்கள் இனி இந்த வீட்டை ஒரு புறத்தியாருக்கு எழுதிக் கொடுக்க விடமாட்டாம் .
உங்கள் ஒவ்வொருத்தருக்கும் தரவேண்டியதை தந்துதான் கலியாணம் செய்து வைச்சனாங்கள். பிறகேன் வந்து ஆக்கிணைப்படுத்திறியள் . அம்மா . நீங்கள் தேடி வைச்ச சொத்தை இன்னொருவர் அனுபவிக்க விட்டிட்டு எங்களைப் பாத்துக்கொண்டு நிக்கச் சொல்றியளோ .
அதுசரி மல்லிகாவிட்டை நீயே போய்ச் சொன்னனி தேவையான சாமான்களை போய் எடுக்கச் சொல்லி.
ஓம் நான்தான் போய்ச் சொல்லி விட்டனான் .
அந்தா . அவள் வாறாள். நான் உள்ளுக்கை போகப்போறன் .

G 0 129
வத்ச :
ó○öTó 。
வத்ச :
ሓቻ56õIፊ%5 ;
வத்ச :
ரவி :
வத்ச :
ரவி :
956.95 :
உங்களுக்கு அவளின் ரை முகத்தைப் பார்க்க விருப்பமில்லையெண்டால் அவளை வீட்டைவிட்டுப் போகச் சொல்லுங்கோ .
அந்தளவு ரோசமிருந்தால் இப்பிடிச் செய்யுங்களே. வழியில்லை யெண்டால் தங்கடை அளவுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேடிப்பிடிக்க வேணும்.
விரலுக்கு ஏத்த வீக்கம் வேணும். ஒண்டுக்கும் வழியில்லாதவளுக்கு எப்பிடி ரோசம் மானம் வரப்போகுது .
பெத்தவளுக்கல்லோ தெரியும். தன்ரை பிள்ளை எப்பவும் நல்லாய் இருக்கிறதைப் பாக்கத்தான் எந்தத்தாயும் விரும்புவாள் .
இப்பிடி அன்றாடம் காய்ச்சியளைப் பாத்துக் கட்டினால்
எப்பிடி நல்லாய் இருக்கிறது . இது அண்ணைக்கு விளங்கேல்லை அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது.
(வந்துகொண்டு) என்ன வத்சலா ... என்ரை பேரெல்லாம் அடிபடுது.
ஒண்டுமில்லை அண்ணை நீ இப்பிடி ஒரு காரியம் செய்வாயெண்டு நாங்கள்-எதிர்பார்க்கவில்லை .
ஒவ்வொருதரும் தன்ரை விருப்பத்துக்குத்தான் கலியாணம் முடிக்கிறது வத்சலா . ஆ . சியாமளா
நீர் என்ன செய்யிறீர் . ஏன் இப்ப அழுறிர் .
ரவி . (பலத்து அழுதல்)
சியாமளா நெடுக நான் உமக்கு சொல்லி வந்திருக்கிறன் . இதைப்போலை விசயங்கu **து அழக்கூடாது .
உதெல்லாம் நல்ல மாய்மாலக் கண்ணிர் .

Page 67
130 9 அருணா செல்லத்துரை
வத்ச :
ரவி :
: ח88u
ரவி :
ரவி :
சியா :
S6d :
வத்ச :
ரவி :
ò፩6õ፲fö5 ?
அண்ணை இஞ்சையிருக்க விருப்பமில்லையெண்டால் அவ நினைச்ச இடத்துக்கு கூட்டிக் கொண்டுபோய் வைச்சிருக்க வேண்டியதுதானே . அதுக்குப் பெரிசாய் அழுதும் காட்ட வேணுமே .
வத்சலா . அதைப்பற்றி முடிவு எடுக்க வேண்டியது நான் . நீ சொல்லத் தேவையில்லை .
எனக்கு இங்கையிருக்கேலாது . இவையளின்ரை கதையெல்லாம் மனிசத்தன்மை இல்லாதது .
அதுக்கென்ன செய்யப்போறிர் .?
என்னைக் கொண்டு போய் அப்பாவிட்டிலை
விடுங்கோ.
சியாமளா உம்மைக் கொண்டுபோய் உம்மடை அப்பா வீட்டிலை விட்டுட்டு என்னை என்ன செய்யச் சொல்றாய் .
நீங்களும் எங்கடை வீட்டில வந்திருங்கோ - எங்கடை அப்பா கஷ்டப்பட்டவர் . அவருக்கு நல்ல மனமிருக்கு, ஒண்டும் சொல்லமாட்டார் .
நீ வேணுமெண்டால் உங்கடை வீட்டை போயிரு . அவனை பிறகேன் இழுக்கிறாய் .
அண்ணை உந்த தரித்திரங்களை கொண்டுபோய் அதுகள் விரும்புற வீட்டிலை விட்டுட்டு, நீ பேசாமல் வீட்டிலை வந்து நிம்மதியாய் இரு.
வத்சலா . இது என்ரை குடும்ப விசயம் . நீ இதிலை தலையிட வேண்டாம். i
ரவி . ஒண்டை மட்டும் ஞாபகத்திலை வைச்சுக்கொள் எத்தினை பெஞ்சாதி மாரையெண்டாலும் கலியாண்ம் கட்டலாம். ஆனால் இனி ஒரு தாயோ சகோதரமோ பிmங்க வாப்போாதில்லை.

сA6) Ф 131
ரவி :
ó56öTó 。
ரவி :
வத்ச :
ரவி :
6Fu unr :
ரவி :
கோள்ளும். இப்பவும் விளக்கமாய் சொல்லுறன் நான்
இப்படிப்பட்ட சகோதரங்கள் இருந்தென்ன இல்லாமல் போயென்ன . அதுகளுக்குப் பணம்தான் பெரிசு .
ரவி பணத்தின்ரை அருமை நீ கஷ்டப்படேக்கைதான் தெரியும் . நாங்கள் உன்னைக் கெட்டுப் போறதுக்கே வழி சொல்றம் . உன்ரை நன்மைக்குத் தான் சொல்றம்.
அம்மா எதை நல்லது எண்டு நினைக்கிறதிலைதான் எல்லாரும் பிழைவிடுறது . நீங்கள் எதைச் செய்யச் சொல்றியள் எண்டதும் எனக்கு விளங்குது .
அண்ணை நான் சொல்லுறன் எண்டு கோவிக்காதேங்கோ . எங்கடை குடும்ப நிலைக்குப் பொருத்த மில்லாதவளைத்தான் இந்த வீட்டுக்கு மருமகளாய்க் கொண்டு வந்திருக்கிறயள். அதைத்தான் நானும் அம்மாவும் சொல்லுறம் .
நான் முன்னமே சொல்லிப்போட்டன். இது என்ர குடும்ப விசயம் உன்னை பேசாமல் இருக்கச் சொல்லி சியாமளா நீர் என்னசெய்யப் போறிர் .
ரவி . நான் சொன்னபடி நாங்கள் எங்கடை வீட்டை போயிருப்பம். அப்படி உங்களுக்கு அங்கை வந்து இருக்க விருப்ப மில்லாவிட்டால் நாங்கள் எங்கையாவது தனிக்குடித்தனம் போயிருப்பம் .
சியாமளா . உனக்கு இங்கையிருக்க விருப்பமில்லை யெண்டால் நீர்போய் உம்மடை அப்பா வீட்டிலை நிம்மதியாய் இருக்கலாம் . ஆனால் நான் இந்த வீட்டை விட்டு வரப் போறதில்லை .
ஏன் ரவி .
சியாமளா ஒண்டை மட்டும் ஞாபகத்திலை வைத்துக்
உம்மை இந்த வீட்டை விட்டுப் போகச் சொல்லேல்லை. ஆனால் உமக்கு அங்கை போயிருந்தால்தான் நிம்மதி

Page 68
132 0 அருணா செல்லத்துரை
சியா :
சியா :
ரவி :
ரவி :
Stunt :
ò56õዘfö፩ ;
வத்ச :
எண்டு நினைச்சுக்கொண்டு அங்கை போறிர். ஆனால் அங்கையும் என்னென்ன பிரச்சினை வருமோ ஆருக்குத் தெரியும்.
அங்கை ஒரு பிரச்சினையும் வராமல் நானெல்லோ பாத்துக்கொள்றது .
பிரச்சினையில்லாத இடமே இல்லை சியாமளா.
நிலவுக்கு ஒளிச்சு பரதேசம் போகமுடியுமே ..?
(உரத்து சற்று கோபத்துடன்) கடைசியாய் நீங்கள் என்ன சொல்றியள் ரவி.
நான்தான் முதல்லே சொல்லிப்போட்டன் என்னுடைய கெளரவத்தைப் பாதிக்காதவகையிலை எந்த முடிவை எடுத்தாலும் நான் அதுக்கு ஒத்து வருவன். ஆனால் இந்த வீட்டை விட்டு போறதுக்கு மட்டும் நான் ஒத்து 6 JJ LOTILL6GT ...
அப்பிடியெண்டால் நான் நினைச்சதை செய்ய வேண்டியதுதான் .
என்ன செய்யப்போறிர் .
ரவி . நான் இந்த வீட்டை விட்டு இந்த நிமிஷமே போறதாய் தீர்மானிச்சிட்டன் . ஆனால் போறதுக்கு முந்தி, என்ரை மாமியோடை கொஞ்சம் தனிய பேசிட்டுப் போகப்போறன் .
என்னோடை என்ன பேச்சுக்கிடக்கு . அதுதான் உன்ரை புருஷன் சொல்லிப் போட்டானே. பேந்தென்ன?
இரகசியமாய்) அம்மா . வெண்ணெய் திரண்டு வாற நேரத்திலை தாளியை உடைச்சுப்போடாதேயுங்கோ . என்னதான் சொல்லப் போறாளெண்டு கேட்டுப்போட்டு அவளைத் துரத்தி விடுங்கோ ..?

fG 0 133
sets :
GRuurt :
56.95 :
ó56õክኾò5 :
சியா :
ò፭6õ7ፈ8፭ :
சியா :
956.95 :
சியா :
ó6öTó 。
சியா :
கனக :
ஒமடி நீ சொன்னதுதான் சரி . ஒருக்கா உவளுக்கு நாலு முறையாய் குடுத்திட்டு, துரத்தி விடுறன் பாரன், எங்கை வைச்சு இப்ப கதைக்கப் போறாய் .
அந்த அறைக்கு போவம் மாமி .
சரி . வா . வா . என்ன சொல்லப் போறாய் எண்டு பார்ப்பம் . (கதவைப் பூட்டும் ஒலி . சற்றுப் பொறுத்து.)
என்ன என்னவோ பேசப்போறன் எண்டாய், பிறகு கதவைப்பூட்டிப் போட்டு என்ரை முகத்தைப் பார்த்துக்கொண்டு நிக்கிறாய். சொல்லன் சுறுக்கா சொல்லப்போறதை .
இல்லை மாமி . நீங்களும் ஒரு பொம்பிளைதானே .
ஏன் அதிலையும் உனக்குச் சந்தேகமே .
அப்பிடி நீங்களும் ஒரு பொம்பிளையாயிருந்தால் ஏன் உங்கடை மகன் சீதனம் வாங்காமல் கலியாணம் கட்டிட்டார் எண்டு பெருமைப்படுறியள் இல்லை.
இதிலை என்ன பெருமைப்படுறதுக்கு இருக்கு அவன் என்ன பெரிய வீரச் செயலே செய்து போட்டான். நீ அவனை மயக்கி கலியாணம் கட்டிட்டு அதுக்காக என்னை பெருமைப்படச் சொல்லுறியே?
அப்பிடியெண்டா நீங்கள் ஒரு ஆம்பிளைப் பிள்ளையைப் பெறேல்லை மாமி .
அவன் ஆம்பிளைதான் .
அவர் ஆம்பிளையெண்டால் ஒரு பொம்பிளையைக் கலியாணம் முடிச்சு குடும்பம் நடத்தக்கூடிய கெட்டித்தனம் இருக்க வேணும் .
அந்தக் கெட்டித்தனம் எல்லாம் அவனிட்டை இருக்குது.

Page 69
134 9 அருணா செல்லத்துரை
gaunt :
956s
9Պաn :
65
சியா :
ó፭6∂፫ò፩ ;
சியா :
அப்பிடி நீங்கள் உங்கடை மகன்ரை கெட்டித்தனத் திலை நம்பிக்கை வைச்சிருந்தால், அவரை ஒரு ஆம்பிளையெண்டு ஏற்றுக் கொண்டால் அவர் செய்ததும் ஒரு வீரச்செயல் எண்டதை நீங்கள்
ஒப்புக்கொள்ள வேணும் .
அவனை ஒரு சீதனமும் வாங்காமல் கலியாணம் முடிச்சுப்போட்டு அதுக்கு வீரம் எண்டு பட்டம் வேறை சூட்டிறியோ? உதை அவனிட்டை போய்ச் சொல்லு .
இதை நான் அவரிட்டை சொல்லத் தேவையில்லை மாமி ஏனெண்டால் அவருக்கு அந்தத் தைரியம் இருந்தபடியாலதான் என்னைக் கலியாணம் செய்து இஞ்சை கூட்டி வந்தவர். இன்றைய காலத்திலை எத்தினை தாய்மார் தன் மகன் சீதனம் வாங்காமல் கலியாணம் கட்டிட்டான் எண்டு பெருமைப்படுகினம் . ஒருதருமில்லை.
உனக்கு அதுகும் உனக்குத் தெரியுதே . எனக்கு என்ரை பிள்ளை நல்லாயிருக்க வேணும் அவ்வளவுதான் .
மாமி ஒவ்வொரு தாயும் தன்ரை பிள்ளை நல்லாயிருக்க வேணும் எண்டுதான் விரும்புறாள். ஆனால் தானும் ஒரு பெண், தன்னுடைய பெண்ணினம் இந்த சீதனம் எண்ட கொடுமையாலை அழியுது எண்டதை நினைச்சுப் பார்க்கிறதில்லை .
இஞ்சை நீ பிழை விட்டிட்டு பெண்ணினத்துக்காக வாதாடுறது மாதிரி கதைக்காதை .
மாமி, ஒவ்வொரு மாமியும் ஒவ்வொரு தாய்தான். ஒவ்வொரு தாயும் மாமியாய் மாறுறதுதான், மாமியாய் பிறக்கிறதில்லை . ஆனால் ஒவ்வொரு தாயும் தன்ரை பிள்ளை சீதனம் வாங்காமல் கலியாணம் கட்ட வேணும் எண்டு நினைச்சால் இந்த சீதனப்பிரச்சினையே இல்லாமல் போயிடும் .

G 0 135
ፊቻS6õIò :
சியா :
ሩ356õIፈm፩ :
சியா :
ë56õFፈ85 :
6Fu unr :
ò56∂Ió፩ :
9Պայm :
இஞ்சேர் உந்தக் கதையள் எல்லாத்தையும் விட்டுட்டு என்ன சொல்லப் போறாய் எண்டு சொல்லு .
உங்கடை மகன் ஒரு ஆம்பிளையில்லையெண்டு சொல்லிப் போட்டுப் போறதுக்குத்தான் உங்களை இஞ்சை வரச் சொன்னலான் .
என்ரை Os 6) ஆம்பிளையில்லையெண்டு சொல்லுறதுக்கு நீ ஆரடி .?
உங்கடை மருமகள் .
நீ போய் . அவனை ஆம்பிளையில்லையெண்டு சொன்னால் உன்ரை வாயழுகிப்போகும். எங்கையோ கிடந்த உன்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்து விட்டதே அவன்தான், அதை ஞாபகத்திலை வைச்சுக்கொள் .
அதாலைதான் அவரைப் பெத்த உங்களிட்டை சொல்லிப்போட்டுப் போறன் .
உன்னை . என்ன செய்வன் தெரியுமே .
என்ன மாமி செய்யப் போறியள் . இன்னு மொண்டையும் சொல்லிப்போட்டுப் போறன். என்ரை வயித்திலை வளர்ற இந்தக் கரு ஒரு ஆம்பிளைப் பிள்ளையாய்ப் பிறந்தால் கட்டாயம் அந்தப் பிள்ளைக்கு என்ரை பாலை ஊட்டுறபோதெல்லாம் நீ சீதனம்
வாங்காமல்தான் கலியாணம் செய்ய வேணும் எண்டு
சொல்லித்தான் பாலுட்டப் போறன் . என்ரை உதிரத்தைப் பாலாய் குடிச்சு வளர்ற அந்தப் பிள்ளையை ஒருதரும் ஆம்பிளையில்லையெண்டு சொல்றதை நான்
விரும்பேல்லை. அந்தப் பிள்ளையை எந்தப்
பெண் மும் பாவி எண்டு சொல்ல விடவும் மாட்டன்.
மாமி . எல்லாப் பொம்பிளையஞம் சொல்ற மாதிரி
நானும் ஆம்பிளையள்தான் இந்த சீதனக்

Page 70
136 0 அருணா செல்லத்துரை
956.95 :
கொடுமைக்கு காரணம் எண்டு சொல்ல மாட்டன் . அதுக்கு எங்கடை பெண்ணினமும் பொறுப்புத்தான் மாமி. எல்லாத் தாய்மாரும் தன்ரை பின்ளை சீதனம் வாங்கக்கூடாது எண்டதிலை கண்ணும் கருத்துமாய் இருந்தால் இந்தப் பிரச்சினை எப்பவோ இல்லாமற்போயிருக்கும். அதுக்கு முன்னோடியாய் என்ரை பிள்ளையை வளர்க்கப் போறன். அவனும் தன்ரை தகப்பனைப் போல கட்டாயம் சீதனம் வாங்காமல்தான் கலியாணம் கட்டுவான் . நான் வாறன் மாமி.
நில்லு பிள்ளை . சியாமளா (உரத்து)
(கதவுக்கு வெளியே .)
என்ன ரவி கதவையே வைச்ச கண் வாங்காமல் பாத்துக் கொண்டிருக்கிறாய் வத்சலாவும் நிக்கிறியே . என்னெண்டு சொல்லுங்கோவன் .
(பதற்றத்துடன்) அப்பா, அம்மாவும் சியாமளாவும் ஏதோ கதைக்க எண்டு உள்ளுக்கை போனவை அழுது சத்தம் கேட்குது .
அப்ப கதவைத்திறந்துகொண்டு உள்ளுக்குப் போறதுதானே .
கதவை பூட்டிப்போட்டாள் சியாமளா .
அம்மா அழுதும் சத்தம் கேட்குது . வேறை வழியொண்டுமில்லை கதவை உடைக்க வேண்டியதுதான் .
(எல்லோரும் சேர்ந்து கதவைத் தட்டுதல் ஒவ்வொருவரும் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்கள். ரவி சியாமளா ဓါးနှီး...
கதிர்காமர் கணகம்மா என்றும்
வத்சலா அம்மா என்றும் கூப்பிட வேண்டும். சற்றுச்
ரவி :
சென்றபின்னரும் கதவு திறக்கப்படவில்லை}
அப்பா என்ரை அறைக்குள்ளை போய் நடுக்கதவைத் திறந்து பார்ப்போம்.

fG 0 137
ரவி :
567
ரவி :
ö፩6õዘ'öö ;
ரவி :
ò§6õሆö5 :
சியா :
சியா :
ரவி :
96
ஓம் தம்பி நடவும். தம்பி அந்த குறுக்குத்தடியை எடுத்துப்போட்டு கதவைத்திற .
நல்லகாலம் திறப்பும் கதவிலையே கிடக்கு .
(கதவு திறக்கப்படும் ஒலி (சியாமளாவின் கையைப் பிடித்த வண்ணம் அழுது கொண்டிருக்கிறாள்) பிள்ளை நீ இந்த வீட்டைவிட்டுப் போகக்கூடாது. நீ போகமாட்டன் எண்டு சொல்லுமட்டும் நான் உன்னை விடமாட்டன் .
(அவசரப்பட்டு) என்ன பிள்ளை நடந்தது. கனகம்மா.
சியாமளா என்ன நடந்தது . சொல்லுங்கோவன் .
முதல்லை சியாமளாவிட்டை சொல்லுடா . தயவு செய்து இந்த வீட்டை விட்டு போக வேண்டாமெண்டு.
சியாமளா சொல்லுமன். என்ன இது. என்ன நடந்தது.
சியாமளா சொல்லன் பிள்ளை. நீ சொல்லும் வரைக்கும் நான் உன்னை விடமாட்டன் .
(பெருமூச்சு விட்டு) சரி மாமி நான் போகேல்லை என்னை விடுங்கோ .
பிள்ளை சியாமளா என்ன நடந்தது சொல்லன் .
அதை மாமியிட்டையே கேளுங்கோ மாமா .
என்ன நடந்தது எண்டு நீங்களெண்டாலும் சொல்லுங்கோவன் அம்மா .
அதை என்ரை மருமேள் சியாமளாவிட்டை கேள் .
- முற்றும் -

Page 71
138 0 அருணா செல்லத்துரை
'முடிவுகள் மாற்றப்படலாம்" என்ற நாடகம் கேட்டிர்கள் எழுதுயவர் - அருணா செல்லத்துரை
பங்கு பற்றியோர்
கதிர்காமர் ஏ. செல்லத்துரை கனகம்மா - ஏ.எம்.சி. ஜெயஜோதி durderst கமலினி செல்வராஜன் ரவி m கே. எஸ். பாலச்சந்திரன் புரோக்கர் ஆர். பகவான்
வத்சலா ஏ.எம்.சி. ஜெயஜோதி
இரு குரலில் நடித்தார்)
தயாரிப்பு ஜோர்ஜ் சந்திரசேகரன்

மானத்திற்காக ஏங்கும் கவரி மான்கள்.
தமிழ் நாடகங்களுக்கு சில வரையறைகள் இருக்கின்றன. இந்த சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் வரை காதல், குடும்பப் பிரச்சனை போன்றவற்றை மையமாகக் கொண்ட நாடகங்களைத் தவிர வேறு எந்தக் கதைக் கருக்களையும் நாடகமாக்க முடியாது என்பதற்கு இந்த நாடகம் ஓர் எடுத்துக்காட்டு. w
நாட்டுப் பிரச்சனையை மையமாகக் கொண்டு மனித உள்ளங்களின் மத்தியிலே ஏற்படும் உணர்வுப் பிரச்சனைகளை வெளிக் கொணர முனைந்துள்ளேன். இந்த நாடகத்தை ஒலிபரப்ப முடியாமல் வானொலியின் சட்ட திட்டங்கள் தடைபோட்டு விட்டன.
அதனால் இந்த நாடகத்தை பிரதியுருவில் கொண்டு வர முனைந்தேன். ஒலி, மேடை வடிவங்களுக்கு தடை ஏற்பட்டாலும் பிரதி வடிவத்தில் உங்கள் கைகளில் மானத்திற்காக ஏங்கும் கவரிமான்கள் அகப்பட்டுள்ளன.
வாசியுங்கள்.

Page 72
மானத்திற்காக ஏங்கும் கவரிமான்கள்
(வானொலி/மேடை நாடகம்)
பாத்திரங்கள்
1. தமிழரசி 6. லட்சுமி 2. தமிழரசன் 7. நிர்மல் 3. தேன்மொழி 8. கப்ரன் 4. சாந்தி ' 9. குரல் 1,2,3. 5. மணியம்
எழுதியவர்
அருணா செல்லத்துரை
துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள தொடர்ச்சியாக கேட்டவண்ணமிருக்கிறது. மணியத்தாரின் கடைசி மகள் தேன்மொழி ஓடிவந்த களைப்புடன்.)
தேன்மொழி : (ஓடிவந்து) அக்கா. அக்கா. அக்கா.
தமிழரசியக்கா
தமிழரசி : ஏன் தேன்மொழி அவசரமாய் ஓடி வாறாய்.
தேன்மொழி : அவங்கள் வந்திட்டாங்கள்.
தமிழரசி அவங்கள் எண்டால் ஆர் பிள்ளை. ஏன் பிள்ளை
உன்ரை சதிரமெல்லாம் நடுங்குது.
தேன்மொழி : ஆமி. ஊரைச்சுத்தி வளைச்சிட்டுது
தமிழரசியக்கா.

AG � 141
தமிழரசி :
தேன்மொழி :
தமிழரசி :
தேன்மொழி :
தமிழரசி
தேன்மொழி :
தமிழரசி :
தேன்மொழி :
தமிழரசி :
தேன்மொழி :
தமிழரசி :
சரியாய்ச் சொல்லம்மா. எங்கை கண்டனி.
நானும் முன்வீட்டு ராஜியும் விளையாடிக் கொண்டிருந்தம். அப்ப ஒழுங்கை முகப்பிலை ஜிப் ஒண்டு வந்து நிண்டுது. அதைத் தொடர்ந்து பத்து ஜிப் வரையிருக்கும் வரிசையிலை வந்து நிண்டுது. எல்லாரும் கடகட வெண்டு இறங்கினாங்கள். எல்லாரும் தெருவோடை இருந்த கானுக்குள்ளை படுத்திட்டாங்களக்கா. (சிணுங்குகிறாள்)
அழாதை பிள்ளை. நடந்ததைச் சொல்லு.
ஒரு பத்துப்பேர் இருக்கும் தமிழரசியக்கா நடந்து வந்தாங்கள்.
பிறகு.
சந்தி வீட்டு சின்னத்துரையர் வீட்டுக்குள்ளை போனாங்கள் எல்லாரும் ஹான்ட்ஸ் அப் (HANDS
UP) என்டு சொன்னாங்கள். வெளியிலை வா எண்டாங்கள். நானும் ராஜியும் ஓடி வந்திட்டம்.
இப்ப ராஜி எங்கை பிள்ளை
நாங்கள் ஓடி வரேக்கை வெடிச்சத்தம் கேட்டுது. சின்னத்துரை. மாமாவின்ரை மாமி ஐயோ என்ரை மகனே எண்டு கத்திக் கேட்டுது. ராஜி சுடுறாங்கள் போலை கிடக்கு எண்டு போட்டு தங்கடை வீட்டுக்குள்ளை ஒடிட்டாள்.
கடவுளே, அப்ப. இவன் தம்பி தமிழரசனைக் கண்டனியே பிள்ளை.
ஒமக்கா. அவர் மாமி வீட்டை போனதைக் கண்டனான்.
இவனுக்கு ஒருநாளைக் கெண்டாலும் அவள் சாந்தியைப் பார்க்காமல் இருக்கேலாது. நீ. ஒடிப்போய் கூட்டி வாறியே.

Page 73
142 0 அருணா செல்லத்துரை
தேன்மொழி : ஒமக்கா. நான் ஒடிப்போய் கூட்டிவாறன்.
தமிழரசி : வேண்டாம் தேன்மொழியம்மா. நீ. சின்னப்பிள்ளை. நீ. உள்ளுக்கை போ. நான் போய்க் கூட்டிவாறன். தேன்மொழி : இல்லையக்கா. நான் சின்னப்பிள்ளை. என்னைத்தான் ஒண்டும் செய்ய மாட்டாங்கள். நான் போய்க் கூட்டிக் கொண்டு வாறன். தமிழரசி ; உன்னை விட்டிட்டு என்னாலை பொறுத்துக்
கொண்டு இருக்கேலாதம்மா. தாய் லட்சுமி வந்து கொண்டே.) லட்சுமி : என்ன பிள்ளை. கேற்றுக்கை என்ன செய்து
கொண்டிருக்கிறியள். '/ தேன்மொழி : அம்மா. அவங்கள் . வந்திட்டாங்கள்.
லட்சுமி : ஆர் பிள்ளை. தேன்மொழி : அவங்கள் தான் . இந்தி.
(வாயைப் பொத்துகிறாள் . தமிழரசி) தமிழரசி அதம்மா. ஒண்டுமில்லை. நேற்றைக்கு நிலக்கண்ணியொண்டு வெடித்ததேல்லே. அதுதான் உங்கை செக் பண்ணுறாங்களாம். லட்சுமி : கடவுளே பிறகும் வந்திட்டாங்களே. இவங்களேன்
போய் வெடி வைக்கிறாங்களோ தெரியேல்லை. தமிழரசி : அம்மா அதைப்பற்றி ஒண்டும் இதிலை நிண்டு கதைக்கேலாது. (வெடிச்சத்தம் கேட்கிறது) நீங்கள் உள்ளுக்கை போங்கோ. லட்சுமி : தமிழரசி . தம்பி தமிழரசன் எங்கை.

GQ (1) 143
தமிழரசி :
லட்சுமி :
தேன்மொழி :
தமிழரசன் :
லட்சுமி :
தமிழரசி :
லட்சுமி :
தமிழரசி :
தேன்மொழி :
லட்சுமி :
அவன் சாந்தி மச்சாள் வீட்டை போயிட்டானாம். அதுதான் நான்போய் கூட்டிவருவம் எண்டு வெளிக்கிட்டனான்.
தமிழரசி நீ முந்தி அவனை வெளியிலை எடுக்கப் போய் பட்டபாடு, படுகிறபாடு எனக்குத் தெரியும். நீ போகத் தேவையில்லை. நான் போய்க் கூட்டி வாறன்.
வாருங்கோ அம்மா. நானும் வாறன்.
தமிழரசன் ஓடி வருகிறான்.)
அக்கா. தமிழரசியக்கா. அம்மா. இதிலை நிண்டு
என்ன செய்யிறியள். உள்ளுக்கை போங்கோ.
வெடிச்சத்தம் எல்லே கேட்குது.
அது சரி நீ. எங்கடா போனணி. உன்னாலை நாங்கள் பட்ட பாடு போதும். நீ முதலிலை உள்ளுக்கை போ.
அம்மா. நீங்கள் அவனைப் பேசாதையுங்கோ. தம்பி நீ போ.
உந்த வயதுப் பொடியளைத்தான் அவங்களுக்குக் கண்ணிலை காட்டேலாது. ஏன் முந்திப்பட்டது காணாதே.
(நடந்து கொண்டே) அம்மா கொஞ்சம் கம்மாயிருக்கிறியளே.
அண்ணை. நீ.எங்கடை அறைக்குள்ளை வா.
(கையைப் பிடித்து இழுக்கிறாள்)
உவன்ரை காலை அடிச்சு முறிச்சுப்போட்டு கட்டிலிலை போட்டால்தான் சரி.

Page 74
144 0 அருணா செல்லத்துரை
தமிழரசி :
லட்சுமி :
அம்மா. பெலத்துப் பேசாதேங்கோ. வெடிச்சத்தம் கிட்டியிலை கேட்டுது. நீங்களும் உள்ளுக்கை போங்கோ. அப்பா எல்லே தனிய இருக்கிறார். அவர் கட்டிலாலை இறங்கப் போறார். கண்னும் மங்கல், உங்களையெல்லே பக்கத்திலை நிக்கச் சொன்னனான்.
நான் அங்கைபோறன். நீ உவனை வெளியிலை விடாதை. உவனைப் போய் தான் நினைச்சபடி வெளியிலை விட்டதாலை தான் இவ்வளவு கரைச்சலும்.
(கதவு பூட்டப்படுகிறது. லட்சுமி வெளிக்கதவை பூட்டிவிட்டு நின்று பார்த்து ப்ெருமுச்சு விட்டுவிட்டுப் போகிறாள்)
மணியம் :
லட்சுமி :
மணியம் :
லட்சுமி :
மணியம் :
லட்சுமி :
லட்சுமி. என்ன பேசிக்கொண்டு வாறாய்.
ஒண்டுமில்லை.
என்ன லட்சுமி. எனக்கு கண் மங்கலாய் போயிட்டுது எண்ட உடனை எல்லாத்தையும் மறைக்கப் பாக்கிறியள்.
(கலங்கி) அப்பிடியில்லையப்பா. அவங்கள் இந்தப் பக்கத்தை சுத்தி வளைச்சுப் போட்டாங்களாம்.
கடவுளே. இவன் தமிழரசன் வந்திட்டானே. தமிழரசி எங்கை. தமிழரசி, தேன் மொழி.
அதுகள் தங்கடை ரூமுக்குள்ளை பூட்டிப்போட்டு நிக்குதுகள். கொஞ்சம் பொறுங்கோ. வெடிச்சத்தம் வரவரக் கூடக் கேட்குது.
(மெல்லிய இசை, வெடிச்சத்தம் கூடுதலாக
தமிழரசன் :
கேட்க வேண்டும்)
என்னக்கா. பூட்டின கதவிலை சாஞ்சுகொண்டு.
நெஞ்சிலை கையை வைச்சுக்கொண்டு. அப்பிடியே
சிலைபோல நிக்கிறாய்.

G 0 145
தமிழரசி :
தேன்மொழி :
தமிழரசி :
தமிழரசன் :
தேன்மொழி :
தமிழரசி :
தேன்மொழி :
தமிழரசன் :
தமிழரசி :
முருகன் :
தமிழரசி :
முருகன் :
தமிழரசன் :
முருகன் :
(பெருமூச்சுடன்). கடவுளே.
தமிழரசியக்கா. பின்பக்கத்தாலை ஜன்னலைத் திறந்து. வேலிக்குள்ளாலை பக்கத்துவீட்டு மாமியைக் கூப்பிட்டுப் பாக்கட்டே.
தேன்மொழி . நீ பேசாமல் இருக்க மாட்டியே.
அக்கா. கூப்பிட்டு என்ன நடக்குதெண்டு கேப்பமே.
ஒமக்கா. கேட்டுப் பாப்பம்.
தம்பி தமிழரசன் நீ இங்காலை வா. நான் கூப்பிட்டுக் கேக்கிறன்.
அவதான் எல்லாம் செய்ய வேணும்.
தேன் மொழி. கொஞ்சம் விடம்மா.
(மெதுவாக குரலையடக்கி) வள்ளி மாமி. வள்ளி மாமி. முருகன் மாமா. முருகன் மாமா.
(குரல் மட்டும்) என்ன பிள்ளை தமிழரசி.
எங்கை மாமா இருக்கிறியள்.
அடுப்படிக்குள்ளை. அடுப்பு மேடைக்குக் கீழை இருக்கிறம்.
மாமா அவங்கள் உங்கை வந்தவங்களே. கிட்டடியிலை வெடி கேட்குது.
இல்லைத்தம்பி. தமிழரசன். அவங்கள் வேலிக் கங்காலை ஒழுங்கைக்கை நிக்கிறாங்கள் போலை கிடக்குது. முதல் நாய் குலைச்ச சத்தம் கேட்டுது. அதோடை இரண்டு வெடிச்சத்தமும் கேட்டுது.

Page 75
146 0 அருணா செல்லத்துரை
தமிழரசி :
முருகன் :
தேன்மொழி :
முருகன் :
தமிழரசி :
முருகன் :
தேன்மொழி :
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
(கலக்கத்துடன்) அப்ப போட்டாங்களோ மாமா.
ஆரையேன் சுட்டுட்
ஆக்களைச் சுட்டதுபோலை தெரியேல்லை. நாயைத்தான் சுட்டிருக்க வேணும் போலை. நாய் அணுங்கின சத்தமும் கேட்டுது.
மாமா நீங்கள் எங்கையாவது ஓடப்போறியளே.
இல்லைப்பிள்ளை. கொஞ்ச நேரம் இருந்து பாப்பம். இந்தமுறை விடமாட்டாங்கள் போலை. நிலக்கண்ணி வெடியிலை 15 பேர் வரையிலை செத்துப்போனாங்களாம். பழிக்குப்பழி வாங்குறம் எண்டு நிக்கிறாங்களாம்.
Tf வீட்டை விட்டு , א போறதெண்டால் சொல்லுங்கோ.
எங்கையாவது
ஓம் பிள்ளை. யன்னலைச் சாத்துங்கோ.
(யன்னல் சாத்தப்படுகிறது)
தமிழரசியக்கா. உங்களுக்குத் தெரிஞ்ச தமிழ்க்கப்ரன் வந்தால் சொல்லித்தப்பலாம் என்னக்கா.
தேன்மொழி. (கோபத்துடன்) பேசாமல் இருக்கமாட்டியே. நீ இனிமேல் அதைப்பற்றி
ஒண்டுமே கதைக்கப்படாது.
தமிழரசன் . நீ ஏன் அவள் மேலை கோவிக்கிறாய்.
அக்கா அந்தக் கேவலத்தை நான் திருப்பிக் கதைக்க விரும்பேல்லை.
எந்தக் கேவலம்.
என்னை ஆமி பிடிச்சுக்கொண்டு போக நீ வந்து அவனோடை பேசினதும் பிறகு அவன் உன்னைப்

GQ () 147
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி :
லட்சுமி :
மணியம் :
லட்சுமி :
மணியம் :
லட்சுமி :
பாக்க வந்ததும், ஊர்ச்சனம் கதைச்ச கதையும் பெரிய கேவலம்தானை.
(பெருமூச்சுடன்) கேவலம்தான் தம்பி. நீ இப்ப உயிரோடை நிக்கிறதும், என்னைக் கேள்வி கேட்கிறதும் எல்லாமே கேவலம் தான்.
அக்கா. நீங்கள் எனக்கு உயிர்பிச்சை கேட்கிறதுக்காக.
தம்பி உனக்கு உண்மையாய் என்ன நடந்தது என்டது தெரியாது. ஆனால் அதை நான் இந்த நேரத்திலையும் சொல்லாமல் விடுறதும் பிழை.
(மெல்லிய இசை காட்சி மாறுகிறது)
ஐயோ. எனக்கு இரண்டு ஆம்பிளைக்குஞ்சுகள். ஒண்டு ஏற்கனவே போய்ச் சேந்திட்டான். எங்கை யெண்டே தெரியாது. கடவுளே இவன் சின்னவனையும் கொண்டு போட்டாங்கள். நான் இனி என்ன செய்வன். கடவுளே. கடவுளே. (தலையில் அடித்து அழுகிறாள்)
இஞ்சை லட்சுமி. உதுக்குத் தலையிலை அடிச்சு என்ன பிரயோசனம். நடக்க வேண்டியதைக் கவனிப்பம்.
என்ன செய்யப் போறியள். என்னத்தை யெண்டாலும் செய்து என்ரை சின்னவனைக் காப்பாற்றுங்கோ.
லட்சுமி என்ரை நசனலைக் கொண்டுவா. நான் உவங்கடை காம்புக்கு போய் விசாரிச்சுக் கூட்டிக் கொண்டு வாறன்.
g(G LLUIT என்ரை சின்னவனை என்ன செய்யிறாங்களோ தெரியேல்லை. உடனை போங்கோ. (உள்ளே போகத் திரும்புகிறாள்)

Page 76
148 0 அருணா செல்லத்துரை
தமிழரசி :
மணியம்
தமிழரசி :
லட்சுமி
தமிழரசி :
லட்சுமி
தமிழரசி :
லட்சுமி :
தமிழரசி :
மணியம் :
தமிழரசி :
லட்சுமி :
w தமிழரசி :
(வெளியே வந்து) அப்பா கொஞ்சம் பொறுங்கோ.
: ஏன் பிள்ளை.
அப்பா நீங்கள் போக வேண்டாம் காம்புக்கு.
அப்ப ஆர் போறது காம்புக்கு.
. நான் போயிட்டு வாறன்.
: என்ன நீ போகப் போறியோ.
ஓமம்மா.
தமிழரசி நீ என்னடி சொல்லுறாய்.
கெளரவமாய் இருந்து ஒருதருக்கும் தலைசாய்க் காமல் இருந்தவர் அப்பா. அவர் அந்த சுயகெளரவத்தோடையே இருக்க வேணும். அதை நான் பாத்து பெருமைப்படவேணும். அவர் போய் எங்கிருந்தோ வந்தவங்களுக்கு முன்னாலை போய் கைகட்டி வாய் பொத்தி பிச்சை கேட்கிறதை நான் விரும்பேல்லை.
உதையெல்லாம் பாத்தால் என்ரை பிள்ளையைக் காப்பாத்த ஏலாது. நான் அவங்கடை காலிலை விழுந்தாவது அவனை உயிரோடை கூட்டி வாறன்.
அப்பா. நீங்கள் போய் அவங்கடை காலிலை விழத் தேவையில்லை. நான் போய் அவங்களோடை கதைச்சு தம்பியைக் கூட்டி வாறன்.
தமிழரசி. நீ. குமர்ப்பிள்ளை.
ஓமம்மா. இந்த நாட்டிலை இருக்கிற எத்தினையோ குமர்ப்பிள்ளையளிலை நானும் ஒரு குமர்ப்பிள்ளை. ஆனால் பிரச்சினை இளம் சமுதாயத்தினுடையது. நீங்கள் வாழ்க்கையின்ரை கடைசிக்காலத்திலை

 ീ 149
மணியம் :
தமிழரசி :
லட்சுமி :
தமிழரசி :
லட்சுமி :
மணியம் :
தமிழரசி :
மணியம் :
லட்சுமி
மணியம் :
காலை வைச்சிருக்கிறியள். உங்களுக்கேன் இந்த தேவையில்லாத பிரச்சினை.
இது எங்கடை பிரச்சினை இல்லைப்பிள்ளை. எங்கடை பிள்ளையின்ரை பிரச்சினை.
அதுதானப்பா. நானும் சொல்லுறன். பிள்ளை யளின்ரை பிரச்சினை அதை எங்களோடையே விட்டிடுங்கோ.
தமிழரசி . உனக்கு வேண்டாம் பிள்ளை. உந்த வேலை.
அம்மா . அப்பாவைப்பற்றி கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. அவருக்கு இப்ப கண்பார்வையும் கொஞ்சம் குறைஞ்சுபோச்சு. ஆளும். மூத்தண்ணை போனப்பிறகு மனமுடைஞ்சு பலவீனமாயிருக்கிறார். அங்கை போய் ஏதாவது இடக்கு முடக்காய் நடந்திட்டால்.
தமிழரசி. பிள்ளை. (அழுகிறாள்)
தமிழரசி . நீ இப்ப கடைசியாய் என்ன சொல்றாய். என்னத்தை செய்யப்போறாய்.
அப்பா நீங்கள் ஒண்டுக்கும் கவலைப் படாதேங்கோ. நானும் படிச்சிருக்கிறன்.
தமிழரசி நானும் இருபது வருஷம் விதானையாராய்
இருந்து பென்சன் எடுத்தனான். எனக்கு விசயம் தெரியும்.
: நீங்கள் உவன் மூத்தவனை போக விட்டிட்டு
உப்பிடித்தானை பேசிக் கொண்டிருந்தனிங்கள்.
லட்சுமி எனக்கு நாலே நாலு பிள்ளையள். நாலையும் கண்ணைப்போல வளர்த்தன். அதுகள் சமுதாயத்திலை என்ரை பெருமையை உயர்த்த வேணும் எண்டும் ஆசைப்பட்டன்.

Page 77
150 0 அருணா செல்லத்துரை
லட்சுமி :
மணியம் :
லட்சுமி :
மணியம் :
லட்சுமி :
மணியம் :
தமிழரசி :
மணியம் :
அவன் மூத்தவனை அப்பவே எல்லாரும் ஜேர்மனிக்குப் போகேக்கை அனுப்புங்கோ எண்டு சொன்னன் கேட்டியளே.
படிக்காமல் உந்த நாடுகளில் போய் பிச்சை எடுக்கிறதுக்காட்டி இந்த மண்ணிலை உயிரை விடுறதை பெருமையாய் நினைக்கிறன் நான்.
உப்பிடியே சொல்லிக் கொண்டிருந்தால் கடைசியிலை ஒண்டும் மிஞ்சாது.
ஒண்டு மிஞ்சும் லட்சுமி. அது உனக்கு என்னெண்டு விளங்காது. அதை சரித்திரம்தான் சொல்ல வேணும்.
இப்ப அவளுக்கு என்ன சொல்லப் போறியள். அவள் குமர்ப்பிள்ளை ஊருக்குள்ளை சனம் பலதையும் பத்தையும் சொல்லும்.
சொல்லுறவை ஆயிரத்தை சொல்லுவினம். அவையஞக்கு என்ன தெரியப் போகுது.
அப்பா நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கத் தேவையில்லை. நான் போய்க் கதைச்சுக் கூட்டிக் கொண்டு வாறன்.
கவனம் பிள்ளை.
(மெல்லிய இசை. காட்சி மாறுகிறது. இராணுவ முகாம் காட்டப்படுகிறது. ಇ
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
கடவுளே, அப்பாவிட்டையும் அம்மாவிட்டையும் சொல்லிப்போட்டு ஒரு மாதிரி வந்திட்டன். கடவுளே எவ்வளவு வாகனங்கள்.
யேஸ். கம். இன்.
நான் இந்த ஊர் விதானையார்ரை மகள். என்ரை பெயர் தமிழரசி,

ofG 0 151
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
பியூட்டிபுல் நேம். சிற் டவுன். வட் டு யு வோன்ற்.
ம். ம். மன்னிக்க வேணும். என்ரை தம்பியை பிடிச்சுக் கொண்டு வந்திட்டினம்.
வட் இஸ் கிஸ் நேம்.
தமிழரசன்.
பியூட்டிபுல் நேம். எங்கடை அப்பா நிறைய தமிழ் பற்றுள்ளவர். அதாலைதான் இந்தப் பெயர்களை தெரிஞ்சு எடுத்து வைச்சவர். நல்லாத்தான் வைச்சிருக்கிறாங்க.
நீங்கள் தமிழே?. ஆமா. நான் தமிழன்தான். (எழும்பி நிற்கிறான்).
அப்பிடியெண்டா. நீங்கள் கட்டாயம் உதவி செய்யத்தான் வேணும்.
தமிழரசி கதிரையை விட்டிட்டு எழும்புகிறாள்.)
கப்ரன் : ஏன் செயாரை விட்டுட்டு எழும்பிட்டீங்க.
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன் :
இல்லை. நிங்கள் நிக்கிறியள்.
அந்த பண்பாடு கூட இருக்கா உங்கிட்ட.
அந்த பண்பாடெல்லாம் எங்களிட்டையும் நிறைய இருக்கு. தயவு செய்து இந்த உதவியை நீங்கள் செய்தால் நான் உயிருள்ள வரையும் மறக்கமாட்டன்.
(ஆளை மேலும் கீழும் பார்த்துவிட்டு) . ம். உங்களுக்காக நான் கட்டாயம் செய்வேங்க. என்ன பெயர் சொன்னிங்க.

Page 78
152 0 அருணா செல்லத்துரை
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன்
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசன். தமிழரசன்.
கொஞ்சம் பொறுங்கோ.
(உள்ளே போகிறான்.)
கடவுளே நீதான் என்ரை தம்பியைக் காப்பாற்ற வேணும்.
(வெளியே தமிழரசனுடன் வந்து.)
; மிஸ். தமிழரசி. இவர்தானை உங்கடை தம்பி.
தம்பி.
அக்கா.
ஓம் பாருங்கோ. இவர்தான் என்ரை தம்பி. நான் இப்பவே இவரைக் கூட்டிக் கொண்டு போறன். உங்களுக்கு கோடி புண்ணியம் சேரும். அக்கா. அத்தான் நிர்மலையும் பிடிச்சு வைச்சிருக்கினம்.
என்ன. அத்தானையுமா.
ஒமக்கா. அவர் உன்னட்டை தன்னை பிடிச்சு வைச்சிருக்கிறதாய் சொல்லச் சொன்னவர். என்ன தமிழரசி. யாரது. அத்தான்.
நான் செய்ய
அவரைத்தான் திருமணம்
இருக்கிறன்.
அவர்ரை பெயரென்ன.
. அவர்ரை பெயர். நிர்மல்.
யாரப்பா அங்கை. அந்த நிர்மலையும் கூட்டிட்டு
T.

G 0 153
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
நான் உங்களை என்ரை வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டன் சேர்.
தமிழரசி. நான் உங்கடை தம்பியை மட்டும் பொறுப்பெடுத்து விடுவிக்கலாம். ஆனால் உன்னுடைய அத்தானை என்னாலை விடுவிக்க ஏலாது.
சேர். என்ரை வாழ்க்கை.
நிர்மல் மேடைக்கு அழைத்து வரப்படுகிறான்)
நிர்மல் :
தமிழரசி :
நிர்மல் :
கப்ரன் :
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
தமிழரசி.
அத்தான்.
என்னையும் விடுவிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது.
தமிழரசி. நல்லாய் யோசித்து சொல்லு.
என்னத்தை சொல்லச் சொல்லுறியள்.
இந்த இரண்டு பேரிலை யாராவது ஒராளை மட்டும் விடுதலை செய்யலாம். அது யாராய் இருக்க வேனும் அது உன்ாை தம்பியா அல்லது அத்தானா. நல்லாய் யோசித்து சொல்லு.
சேர். என்னை என்ன செய்யச் சொல்லுறியள். கூடப் பிறந்த சகோதரனா. அல்லது காதலனா. கடவுளே ஏன் இந்தச் சோதனை.
இருவரும் தங்களையே கூட்டிச் செல்லும்படி சைகை காட்டுகிறார்கள் சிறிதுநேர இடைவெளிக்குப் பின்னர் தனது தம்பியையே கூட்டிச்செல்வதாக காட்டுகிறாள். கப்ரன் நிர்மலை உள்ளே அழைத்துச் செல்லும்படி காட்ட தமிழரசியைப் பார்த்த வண்ணம் அவன் செல்கிறான். தமிழரசி அழுகிறாள்.)
தமிழரசி :
சேர் நான் தம்பியைத்தான் கூட்டிக்கொண்டு போறன் சேர். நான் இப்பவே அவனைக் கூட்டிக் கொண்டு போறன் சேர். (அழுகிறாள்).

Page 79
154 0 அருணா செல்லத்துரை
கப்ரன்
தமிழரசி :
கப்ரன் :
தமிழரசி :
தமிழரசன் :
இல்லை தமிழரசி. நாங்க இவரை கொஞ்சம்
விசாரணை செய்ய வேணும். அதன்பிறகு நானே இவரை உங்கவீட்டுக்குக் கூட்டி வந்து விடுறன்.
நான் உங்களைத் தெய்வமாய் நம்பறன். அப்பாவும் அம்மாவும் வயது போனவர்கள். அப்பாவுக்கு அவ்வளவாக கண் தெரியாது. அவர் இந்த ஊர் விதானையாராக இருபது வருஷம் இருந்தவர். எங்களுக்கு இப்ப இருக்கிற ஒரே ஆண் துணை இவன்தான். (அழுகிறாள்)
மிஸ் தமிழரசி அதுதான் நான் பொறுப் பெடுத்திட்டேனே. நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வேணாம். எனக்கும் சகோதரங்கள் இருக்காங்க. நீங்க நம்பிப் போகலாம்.
தம்பி. தமிழரசன். நீ ஒண்டுக்கும் யோசியாதை. (அழுகிறாள்) . உனக்கு ஒண்டும் நடவாது.
அக்கா. அக்கா. தமிழரசியக்கா.
(காட்சி மாற்ற மெல்லிய இசை. அத்தோடு வெடிச்சத்தம். கேட்கிறது. முதல் வீட்டுக்காட்சி அமைக்கப்படவேண்டும்.)
தமிழரசன் :
தமிழரசி :
அக்கா. நீ. இப்ப என்னத்தை சொன்னாலும் என்ரை மனம் ஒப்புக்கொள்ளுதில்லை. நீ. அவன் என்னை வீட்டை கூட்டி வந்தபோது அவனை ஒடி ஒடி உபசரிச்சிருக்கப்படாது.
எனக்காக. என்ரை தம்பியை உயிரோடை விட்ட அவருக்கு நான் செய்த நன்றிக்கடன் அது. உனக்குத் தெரியுந்தானை. உன்னோடை பிடிச்ச எத்தினை பேர் உயிரோடை திரும்பி வந்தவையெண்டு. ஏன் உன்னோடை பிடிச்ச ராஜனுக்கு என்ன நடந்தது. ரவிக்கு என்ன நடந்தது. மாமாவின்ரை மகன். (அழுகிறாள்) நான் அல்லும் பகலும் நம்பியிருந்த அத்தான். அவரைத் தன்னிலும் உயிரோடை பாக்க முடிஞ்சுதே. நான்

ofG � 155
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
உன்ரை உயிர் பெரிசு எண்டு நம்பித்தான் உன்னை விடச்சொல்லிக்கேட்டனான். இல்லையெண்டால் என்ரை அத்தானை விடச்சொல்லி என்ரை வாழ்க்கையை நான் பாத்திருக்கலாம்.
அதக்கா. அவன் திரும்பத் திரும்ப வர வர நீ அவனோடை சிரிச்சு சிரிச்சு பேசியிருக்கப்படாது.
அவர் நடக்கிற நடையும். அவன்ரை பார்வையும் எனக்கு எங்கடை மூத்த அண்ணையை ஞாபகப் படுத்திச்சுது. அதாலைதான். நான் அவரோடை அப்பிடிப் பழகினனான். அது மற்றவையின்ரை கண்ணுக்கு பிழையாய் தெரிஞ்சிருக்குது. அதுக்கு நான் என்ன செய்ய.
அக்கா. அப்பிடி ஒரு எண்ணம் இருந்தால் தயவு செய்து அதை விட்டிடக்கா.
தம்பி. உண்மையைச் சொல்லுறன். அவர் என்ரை தம்பியை உயிரோடை விட்டவர் என்ற நன்றியுணர்வைத் தவிர வேறையொண்டுமில்லை.
அப்பிடியெண்டால் சாந்தி சொன்னது.
சாந்தி என்ன சொன்னவ.
நீ அவனைத்தான் கல்யாணம் கட்டப் போறாய் எண்டு சொன்னா.
(சிரிக்கிறாள்). தம்பி. அவர்தான் என்னை கல்யாணம் கட்ட விருப்பம் எண்டு சொன்னவரே ஒழிய நான் அவரை கல்யாணம் கட்டப்போறன் எண்டு சொல்லேல்லை. தம்பி நானும் இந்த மண்ணிலைதான் பிறந்தவள். எனக்கும் உன்னிலை ஒடுற அதே இரத்தம் தான் ஓடுது. என்னை முழுதாய் நீ நம்பலாம்.
இப்பதான் நீ என்ரை அக்கா.

Page 80
156 0 அருணா செல்லத்துரை
தட.
தேன்மொழி :
தமிழரசி :
தேன்மொழி :
தமிழரசி
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி :
தமிழரசன் :
தமிழரசி
தட. தடவென கதவில் தட்டப்படும் ஒலி.)
இருந்த இடத்தை விட்டு எழும்பி) கதவிலை ஆரோ பிலத்துத் தட்டுகினம். அக்கா. அக்கா. அவங்கள்தான் வந்திட்டாங்களே.
தேன்மொழி . நீ போய்க் கட்டிலுக்குக் கீழே ஒளி. நான் கூப்பிடும் வரைக்கும் நீ வெளியிலை வரப்படாது. சரியோ.
அக்கா. நானும்.
பொத்தடி வாய். கட்டிலுக்கு கீழை போடி.
நானும் வாறன் உன்னோடை.
தம்பி நான் ஏன் உன்னை உயிரோடை வெளியிலை கூட்டி வந்தனான் எண்டால் நீ இந்த மண்ணுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு. நீ ஒரு தனிமனிதனாய் சாகிறதிலும் பார்க்க இந்த மண்ணுக்கு செய்ய வேண்டியதைச் செய்ததின் பிறகு செத்தாலும் பறவாயில்லை. அதுக்காக நீ இப்ப அறைக்குள்ளை நிக்க வேணும். நான் அறைக்கதவை பூட்டிப் போட்டுத்தான் வெளியிலை போவன். நான் கூப்பிடும் வரைக்கும் நீ வெளியிலை வரப்படாது. அம்மா மேலை ஆணையாய் சத்தியம் செய்ய வேணும்.
தமிழரசியக்கா.
கையிலை அடிச்சு சத்திய பண்ண வேணும். ம். (கையை நீட்டுகிறாள்) தமிழரசன் உன்ரை காலிலை
விழுந்து கேட்கிறன். (காலில் விழுகிறாள்).
அக்கா. என்ன வேலையக்கா. செய்தனி. எழும்பக்கா.
! நீ சத்தியம் பண்ணுவியா.

ofG � 157
தமிழரசன் :
தமிழரசி :
சரியக்கா. நீ கூப்பிடும்வரை நான் வெளியிலை வரேல்லை. இது அம்மா மேலை சத்தியம்.
நீ இப்பதான் என்ரை தம்பி.
(அறைக்கதவை பூட்டிவிட்டு வெளி ತಿಳ್ದ." ನಿಘಿ: முன்
uD 8](መ5
கதவு தட்டப்படும் ஓசை கேட்டவண்ண க்
சாந்தி :
தமிழரசி :
சாந்தி :
தமிழரசி :
தமிழரசி :
சாந்தி :
தமிழரசி
சாந்தி :
தமிழரசி :
றது.)
(ply வந்த களைப்புடன்) மச்சாள்.
சாந்தி. என்ன இது. இந்த நேரத்திலை. அப்பா. அம்மாவையெல்லாம் எங்கை.
மச்சாள் . அப்பா அம்மா எல்லாரையும் பிடிச்சுக் கொண்டு போயிட்டாங்கள். (அழுகிறாள்).
சரி . சரி. உள்ளுக்கை வாங்கோ.
(கதவைப் பூட்டுகிறாள்)
சாந்தி. என்ன நடந்தது. பதகளிப்படாமல் சொல்லு. என்ன நடந்தது.
அம்மா என்னை அறைக்குள்ளை நிக்கச் சொல்லிப் போட்டு ஹோலுக்குள்ளை தம்பியோடையும் அப்பாவோடையும் நிண்டவ. கதவை அடிச்சு திறந்து கொண்டு உள்ளுக்கை வந்தாங்கள். ஹான்ட்ஸ் அப் எண்டாங்கள் எல்லாரையும் துவக்கு முனையிலை கூட்டிப்போறாங்கள். அவங்கள் நிக்கிற நிலையைப் பாக்க எனக்குப் பயமாய் இருக்கு மச்சாள்.
எல்லாரையும் பிடிக்கிறாங்களே. அப்ப நீ என்னெண்டு ஓடி வந்தனிர். பின்பக்கத்து வேலியாலை பாய்ஞ்சு பதுங்கிப் பதுங்கி ஓடி வந்தனான் அத்தானிட்டை சொல்லுவம் எண்டு. எங்கை அத்தான்.
அங்கை அந்த அறைக்குள்ளை தேன்மொழியையும் தமிழரசனையும் போட்டு பூட்டி வைச்சிருக்கிறன்.

Page 81
158 0 அருணா செல்லத்துரை
தமிழரசி :
தமிழரசன் :
சாந்தி :
தமிழரசன் :
சாந்தி :
லட்சுமி :
சாந்தி :
மணியம் :
தமிழரசி :
சாந்தி :
தேன்மொழி
தமிழரசன் :
(நடந்து சென்று கதவைத் திறந்து விடுகிறாள்).
(வெளியே வந்து) ஆர் வந்தது. சாந்தியே.
அத்தான். அம்மா அப்பா எல்லாரையும் பிடிச்சுக் கொண்டு போட்டாங்கள். (அழுகிறாள்).
கன நேரமோ பிடிச்சுக் கொண்டுபோய்.
இப்பதான் பிடிச்சுக் கொண்டு போறாங்கள். அதோடை வெடிச்சத்தமும் கேட்குது. ஆக்களும் அழுது கேட்குது.
(வெளியே வந்து) ஆர் பிள்ளை வந்தது. அட சாந்தியே. எங்கை பிள்ளை கொம்மா கொப்பரவையெல்லாம்.
மாமி அவையெல்லாரையும் ஆமி பிடிச்சுக் கொண்டு போட்டுது.
நீங்கள் எல்லாரும் என்ன செய்யிறியள் . (வெளியே வருகிறார்) அங்கை வெடிச்சத்தம் வரவர கூடக் கேட்குது.
அப்பா நீங்கள் ஏன் எழும்பி வந்தனிங்கள்.
மச்சாள் உங்களுக்குத் தெரிஞ்ச அந்தக் கப்ரன்தான் வந்திருக்கிறார். அவர்தான் எல்லா ஒடரும் கொடுக்கிறார்.
: அக்கா. அப்ப நாங்கள் பயப்படத் தேவையில்லை.
அக்கா சொன்னால் அவர் கேட்பார்.
தேன்மொழி. பொத்துவாய். ஒருதரும் அவனோடை கதைக்கிறதில்லை. சொல்லிப் போட்டன். ஆர் இங்கை கதைச்சாலும் அவங்கள் சுட்டுக் கொல்லுறதுக்கு முந்தியே இங்கை கொலை விழும். -

ofG � 159
தமிழரசி :
தம்பி. நீ. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரி. நான் இந்தமுறை ஒருதரோடையும் பேசமாட்டன்.
வெடிச்சத்தத்துடன் கதவு. தட்டப்படும் ஒலி.
மணியம் :
தமிழரசன் :
லட்சுமி :
தமிழரசி :
சாந்தி :
தமிழரசி :
தேன்மொழி :
தமிழரசி
தமிழரசன் :
ஒருவரையொருவர் பார்த்தபடி
கூடுதலாக கேட்கிறது)
லட்சுமி . கதவை உடைக்கப் போறாங்கள். திறந்து விடுங்கோ.
அப்பா நீங்கள் பேசாமல் இருங்கோ. அவங்களுக்கு கதவை உடைச்சு வந்துதானை பழக்கம். உடைச்சுக் கொண்டே வரட்டும்.
பிள்ளை. கதவைத் திறந்து விடுவமே.
(வேதனையுடன்) எத்தினை கதவுகளை உடைச்சுப் போட்டாங்கள். இதுவும் அதிலை ஒரு கதவாயிருக்கட்டும் பேசாமல் இருங்கோ.
தமிழரசி மச்சாள். தேன்மொழி கதவுக்கு கிட்ட ஒடுறாள்.
தேன்மொழி. (பெலத்துக் கூப்பிடுகிறாள்).
(கதவு துவாரத்தினுள் பார்த்து). தமிழரசியக்கா.
இங்கை. வடிவாய்த் தெரியுது. ஓடிவந்து பாருங்கோ. அக்கா. அவர்தான் நிக்கிறார்.
: அவன் நிக்கட்டும். நீ இங்காலை வா பிள்ளை.
தேன்மொழி. நீ. இங்காலை வந்து அம்மாவோடை நில்.
ற்க கதவைத்தட்டும் ஒலி
(தேன்மொழி வந்து தாயோடு స్టే ஒவ்வொருவரும்
குரல் :
கூடுதலாக கேட்கிறது)
கதவை உடைக்கப் போகிறோம் திறவுங்கள்.

Page 82
160 0 அருணா செல்லத்துரை
குரல் : கதவைத் திறக்காவிட்டால் எல்லோரையும்
சுட்டுவிடுவோம்.
குரல் : கதவைத் திறக்கப்போகிறீர்களா இல்லையா.
தமிழரசி : (தமிழரசனைப் பார்த்து) தமிழரசன் . தம்பி. இப்ப
உனக்கு. திருப்திதானே.
தமிழரசன் : (தலையை ஆட்டி) . இப்பதான் என்ரை அக்கா.
நீதான் உண்மையான தமிழரசி.
(கதவு உடைத்து திறக்கப்படுகிறது. ஹோலுக்குள்ளே எல்லோரும் நின்றவண்ணம் நிற்கிறார்கள்).
கப்ரன் : ஹான்ட்ஸ் அப்.
(எல்லோரும் கையைத் தூக்குகிறார்கள். வெடிச் சத்தம் கேட்டு மெதுவாக மறைகிறது. ஒளி மங்குகிறது. திரை விழுகிறது). முற்றும்
எழுதியவர் : அருணா செல்லத்துரை


Page 83
உரைச்சித்திரங்கள், விளம்பர நிக தயாரித்துமுள்ளார். கடந்த 22 . நடிகனாகவும், பகுதிநேர அறிவிப்ட
1974ல் இலங்கை கலைக்கழக முல்லைத்தீவுப் பிரதேச மரபுவழி தயாரித்து மேடையேற்றி முதல்பரி 1981ல் தொலைக்காட்சிப் பயிற் பயிற்சி பெற்றவர். பின்னர் 198 நாடுகளில் தொலைக்காட்சி செய்தி தொலைக்காட்சியில் "ஆயகலை பல நுண்கலைகளை தொலைக்கா "ஒளித்தென்றல்" என்ற நிகழ்ச் கலைஞர்களின் திறமைகளை கொணர்ந்தவர். அத்துடன் தெ மெல்லிசைக் கலைஞர் அறிமுக நீர்
சிறுகதைகள் மற்றும் வானொலி பல மெல்லிசைப் பாடல்களும் எழு தொலைக்காட்சி நாடகத்தை த வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்ப
"வீடு" என்ற மூன்று அங்கங்கள் கலையகத்தில் தயாரித்து நெ தொலைக்காட்சி ஆரம்பித்த கா நிகழ்ச்சித் தயாரிப்பாளராக கடயை
蔷 تتعلقة -
 

முள்ளியவளை சைவப்பாடசாலை, ற்றாப்பனை ரோமன் கத்தோலிக்க ாடசாலை, வித்தியானந்தாக்கல்லூரி கியவற்றில் கல்வி சுற்றவர். 1960க்குப் ன்னர் முள்ளியவளை இயல்இசை ாடகக் கலாமன்றம், பாரதி இளைஞர் லக்கிய மன்றம் போன்றவற்றில் பாறுப்பான பதவிகள்ை வகித்து, பல மடை நாடகங்களை எழுதியும், பாரித்தும், நடித்தும் இயக்கியும் னுபவம் பெற்றவர்.
1970ல் இலங்கை ஒலிபரப்புக் ட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சி உதவித் பாரிப்பாளராகச் சேர்ந்து நிகழ்ச்சித் பாரிப்பாளராக பதவி உயர்வு பற்றவர். வானொலியில் நாடகங்கள், ழ்ச்சிகள் போன்றவற்றை எழுதியும் பருடங்களுக்கு மேலாக வானொலி பாளராகவும் இருக்கிறார். ம் நடத்திய நாடகப் போட்டியில் நாடகமான "கோவலன் கூத்தை" சைப் பெற்றவர்.
சிக்காக மேற்கு ஜெர்மனி சென்று ல் மலேசியா, சிங்கப்பூர் போன்ற தித் தயாரிப்பில் பயிற்சி பெற்றவர். பகள்" என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து ட்சி நிகழ்ச்சியாக தயாரித்தவர். சியை தொடங்கி பல மெல்லிசைக் தொலைக்காட்சியில் வெளிக் ாலைக்காட்சியில் "உதய கீதம்" கழ்ச்சியை தொகுத்தளிப்பவர்.
தொலைக்காட்சி போன்றவற்றிற்கு தியுள்ள இவர், "திருப்பங்கள்" என்ற பாரித்து தொலைக்காட்சி நாடக டுத்தியவர். ள் கொண்ட நாடகத்தினை எழுதி, 1றிப்படுத்தியவர். இலங்கையில் லத்தில் இருந்து நிரந்தர செய்தி, 2யாற்றி வருபவர்.
- மாத்தளை கார்த்திகேசு