கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காணி உறுதி

Page 1


Page 2

இளையவன்
காணி உறுதி

Page 3
திருமுருகா !
எனது இத் தொகுப்பு உனது கையிலிருந்தால் உன் மனம்-உன் முகம் எப்படிப் பூரித்துப் போயிருக்கும். அதைப் பார்த்தே நான் அகமகிழ்ந்திருப்பேன்.
ஆனால்.
அண்மைய அநியாய அழிப்புகளுக்கு இரையாகி நீ இன்று நினைவாகியுள்ள இவ்வேளையில்,
பிறரது துன்பங்களிலும், இன்பங்களிலும் பங்கெடுத்து அயராது உதவி வந்த உன் இனிய சுபாவம். என் ஒவ்வொரு அசைவுகளிலும் கவனம் கொண்டு ஆக்கபூர்வ ஆலோசனை வழங்கும் தோழனாய், நண்பனாய், உடன் பிறவாச் சகோதரனாய், தோள் கொடுத்து. உன் நினைவுகளுடன்
உன் நினைவாக
இதனை அர்ப்பணிக்கிறேன்.
-இளையவன்

பொன்னி
இளையவன்
காணி உறுதி

Page 4
காணி உறுதி () சிறுகதைகள் () இளையவன் () முதல் பதிப்பு: ஆகஸ்ட் 20, 1989. விலை ரூ. 12.00
வெளியீடு : பொன்னி, 12, முதல் பிரதான சாலை, நேரு நகர், அடையாறு, சென்னை-20.
அச்சு : இராசகிளி பிரிண்டர்ஸ்

தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல்
அன்பான வாசகர்களுக்கு!
எனது எழுதுகோலின் பிரசவங்கள் "காணி உறுதி" என்ற தொகுதியாய் உங்கள் கரங்களில். மகிழ்ச்சியின் பூரிப்பில் என் இதயம். எனது எண்ணங்கள் படைப்பு களின் வாயிலாக உங்களுடன் பகிரப்படுகிறது என்பதுவே அடிப்படை. இந்த வேளையில் யார் இவன்? என்ற வினா உங்களில் பலருக்கு எழக்கூடும். இலக்கியத் துறைக்கு நான் முற்றிலும் புதியவன் என்பதுவும் இதற்கு ஒரு காரணமாகலாம்.
இலங்கைத் தீவிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியிலுள்ள ஊரெழு என் பிறப்பிடம். சாதாரண மத்தியதரக் குடும்பம் எங்களுடையது. என் உடன் பிறப்பினர் அறுவர். ஆசிரியப் பணியாற்றிய என் தந்தை அடிக்கடி பணி மாறுதலுக்கு உள்ளாகும் போதெல்லாம் எங்கள் குடும்பத்தின் இருப்பிடமும் மாறு பட்டது. இதனால் பலதரப்பட்ட மக்களுடனும், பல்வேறு கிராம, நகர மக்களுடனும் பழகும் சந்தர்ப்பம் சிறுவயதிலேயே எனக்கு கிட்டியது.
இலங்கையைக் குலுக்கிய 1971 ஏப்ரல் 5இல் நடை பெற்ற கிளர்ச்சியை அடுத்து எனது குடும்பம் பிறந்த

Page 5
2
புரியாமல், தன் உணர்வுகளால் தவத்தான் ஏதோ சொல்ல முற்படுவதைக் கண்ட சுரேசன் தன் காதுகளை அந்த உரை யாடலுக்கு இரவல் கொடுத்தான்.
"யூ நோ தமிழ் - சிங்கள ப்ராப்ளம் திஸ் லாண்ட்?" இது மட்டும்தான் கேட்டது சுரேசனுக்கு.
திரும்பத் திரும்ப இதையே கூறியபடி என்னென்னவோ சைகைகள் காட்டிக் கொண்டிருந்தான் தவத்தான்.
சுரேசன் தன் இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்து அந்த வெள்ளைக்காரத் தம்பதியரை நோக்கி நடந்தான்.
அந்தக் கிராமம் இயற்கையின் எழிலுக்கும் பெயர் பெற்றது. மூதூர் நகரத்திலிருந்து சுமார் இரண்டரை மைல் கடந்து குறுக்காக வரும் ஆற்றைக் கடந்தால் கட்டை பறிச்சான் என்னும் கிராமத்தை வந்தடையலாம். சுமார் நூறு யார் அகலமிருக்கும் அந்த ஆறு; ஆனால் இரண்டு பாகத்திற்கு மேல் ஆழமான நீரோட்டம் கொண்டது. ஒரு பக்கத்தில் இந்த ஆறு மற்றப் பக்கத்தில் உப்பாறு இரண்டு நீர்ச்சுனைகளாலும் சூழப்பட்ட ஒரு குட்டித்தீவு மாதிரித் தோற்றம் தரும். இந்தக் கட்டைடறிச்சான் கிராமம் இயற்கையின் ஒரு கொடை என்றே சொல்லலாம்.
தென்னை மரச் சோலைகள் ஒரு புறமும், கண்ணாக் காடுகள் மறுபுறமுமாகத் திகழும் இந்தக் கிராமம் பாலு மகேந்திராவின் காமிராக் கண்களுக்குத் தென்பட்டுவிட்டால் போதும் ஒரு பத்துப்படமாவது இந்த "லொகேஷனில் சூட்டிங் நடக்கும். இப்படிப் பலநாட்கள் சுரேசன் எண்ணிய துண்டு.
கட்டைபநிச்சானில் இருந்து பள்ளிக் குடியிருப்புக்குப் போற பாதையில் ஒரு பாலம். சின்னப்பாலம் என்று ஊரார் அழைப்பார்கள். அந்தப் பாலத்தின் நீரோட்டமே தனி. மாலையில் வெள்ளம் ஏறினால் காலை பத்து மணிக்கெல்

3
லாம் வெறும் மணற்பரப்புபோலக் காட்சி தரும். இப்படி வெள்ளம் ஏறுகிற மாலை வேளைகளில் மின்மினிப் பூச்சிகள் மாதிரித் தெரியும் சின்னப் பாலத்தில் நின்று பார்த்தால் தெரியும் - அவ்வளவும் மீனவர் விளக்குகள். கையாலே வலிக் கின்ற சிறிய படகுகளிலிருந்து, இறால் பிடிப்பதற்காக மீனவர் எரிக்கும் விளக்குகள் தான் அவை. மனதுக்கு ரம்மியமான இந்தக் காட்சியை எத்தனையோ இரவுகளில் நேரம் போவதே தெரியHமல் சுரேசன் பார்த்து ரசித்ததுண்டு. கட்டைடறிச்சானை அடுத்து சேனையூர். சேனையூரை ஊடறுத்து கடற்கரைச்சேனை என்னுமிடத்தையடைந்தால் திருகோணமலைக் குடாக்கடலின் சிறப்பை ரசிக்கலாம். எத்தனை வளைவுகள்! இது கிண்ணியாக் குடா, இது சூரைக் குடா, இந்தா இதுக்குள்ளாலை தெரியுதே பொலிஸ் ஸ்ரேசன் துறை. இதிலை அப்ப “ஜெற்றி இருந்தது. இப்படி இராசகிளி சொல்லச் சொல்ல சுரேசன் மனத்திற்குள் வாங்கிக் கொண்டே மணல் விளையாடிக் கொண்டிருப்பான். கடலுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்கென்றே நிமிர்ந்து நிற்பன போல் உயர்ந்து தெரியும் மலைகள். அதோ மூதூர் "லோஞ்ச்" வருகுது. அதுக்கு உட்பக்கம் தான் உட்துறை முகம். அதற்கு இப்பால் கோணேசர் கோயில் மலை தெரியு தெல்லே; அதிலையிருந்து இந்த வெளிச்ச வீடு இருக்கே கெவுளியா இதுவரையும் வெளித்துறைமுகம்; “ஓகோ", இந்தப் பக்கத்தில் ஒரு வெளிச்ச வீடு இருக்கு என்ன! என்று தன் பார்வை மண்டலத்துள் இந்த வெளிச்ச வீடு சிக்க மறுத்துவிட்டதை வெட்கத்துடன் உணருகிறான் சுரேஸ். திருகோணமலைத் துறைமுகம் உலகளாவிய முக்கியத்துவம் பெறுவதற்கு உண்மையிலேயே அர்த்த புஷ்டியான காரணங் கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன என எண்ணித் தன்னுள்ளேயே சுரேசன் வியந்த சந்தர்ப்பங்கள் நிறைய வுண்டு.
சுரேசன் கட்டைபPச்சானுக்கு வந்தபோது, இப்படி யிருக்கும் என எண்ணியதில்லைதான். அவன் அங்கு

Page 6
வந்து சேர்ந்ததே பெரிய கதை. ஆனால் இங்கு வந்தபின் இயற்கையின் எழிலை ரசிக்கக் கற்றுக் கொண்டான்.
ஒவ்வொரு நாளிலும் உச்சிப் பொழுது, சரியத் தொடங்கி யதும் இந்த அனிச்சை மரத்தடிக்கு நண்பர்கள் வந்து சேரத் தொடங்குவார்கள். முன்னுக்கு விபுலானந்தா பள்ளிக்கூடம், எதிர்த்தாற்போல சங்கக்கடை, கொஞ்சம் முன்னுக்குப் போனால் ஒரு அம்மன் கோயில். இவையனைத்திற்கும் நடுவில் நிழல் கொடுக்கும் இந்த அனிச்சை மரம்.
சுமார் இரண்டரை மூன்று மணிக்கு நண்பர்கள் இங்கு கூடத் தொடங்கினால் பலரும் பத்தும் பேசிப் பிரிந்து செல்லும் போது மணி ஏழைத் தாண்டி இருக்கும். இந்த இடைக் காலத்தில் அரசியல் தொடங்கி அடுப்படி வரையில் சுத்திப் பேச்சுக்கள் தொடரும். பேச்சுக்களில் ஒருதடவை அல்லது இரண்டு தடவை பஸ்சின் இரைச்சல் கேட்கும். இந்தத் தார்றோட்டில் ஓடும் பாக்கியம் பெற்ற நவீன வாகனம் அந்த பஸ் மட்டும்தான். பெரியபாலம் என்று சொல்லப்படுவ துண்டு. ஆனால் அது அத்திவாரம் கல்லையும் அதை நாட்டியவரின் பெயரைக் குறிக்கும் கல்லையும் தவிர வேறெந்த வேலையும் நடக்காத காரணத்தால் வாகனப் போக்குவரத்து நடைபெறுவது மிக அபூர்வம். பஸ்கூட அப்படித்தான் மூதூரிலிருந்து புறப்பட்டு பெரிய பாலத்தடி வரை வந்து பின் பயணிகள் அனைவரையும் இறக்கிவிடும். "பாதையிலேற்றப்பட்டு ஆற்றைக் கடந்ததும், தரித்து நிற்கும். ஆற்றைக் கடந்து பயணிகள் வந்து சேர்ந்ததும் அனைவரையும் ஏற்றிக் கொண்டு கட்டைபநிச்சான், சேனையூர், சம்பூர், கூனித்தீவு வரை சென்று திரும்பும். சைக்கிள்களும் மாட்டு வண்டிகளும் தான் அநேகமாகப் போக்குவரத்துச் சாதனமாய் இருக்கும்.
தவம் பட்டிமாடு மேய்த்துப் பராமரிப்பவன். காலையில் பட்டிமாட்டைக் கலைத்துவிட்டால் பொழுது சாயும்போது மீண்டும் பட்டிகளில் அடைத்துவிடுவான். சில காலமாக

5,
அவனது பட்டிமாடுகள் களவாடப்படுவாதகச், சில சமயம் சிங்களவர் பிடித்துக் கட்டி வைத்திருப்பதாக தவத்தான் தன் நண்பர்களிடம் முறையிடுவான். ஆனால் அவர்களாலும் எதுவும் செய்துவிட முடிவதில்லை.
தவத்தானை அதிகமாக எல்லோரும் "கோம்மை" என்று தான் அழைப்பார்கள். இந்தச் சொல்லைக் கேட்டாலே போதும் தவத்தானுக்கு பத்திக் கொண்டு வரும். சுற்றியிருப் பவர்களைத் தாறுமாறாக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவான். மண்ணையள்ளித் திட்டுவான். சிலசமயம் ஓங்கித் தாக்கவும் செய்வான். அப்போது கலைந்து ஓடுவதும், அவனைத் துரத்துவதும் கற்களை விட்டெறிவதும் வாடிக்கையாக நடக்கும். ஒரு வேடிக்கை. தவத்தானுக்கு நல்ல ‘மூட்” இருந்தால் நல்லாக கதைப்பான். அப்படியான நேரங்களில் தான் ஐந்தாம் வகுப்பில் இருக்கும் பொழுது பக்கத்திலிருந்த பெட்டைக்குக் கடிதம் கொடுத்ததில் தொடங்கி தான் கண்ட காதல் தோல்விகளை எல்லாம் விஸ்தாரமாக விவரிப்பான். இப்போதும் தன்னை "லவ்" பண்ணுவோர் என்று ஒரு பட்டியலே சொல்லுவான்.
**எப்படியடா தெரியுமுனக்கு? சுகிர்தா "லவ்” பண்ணு றாளெண்டு”.
"நான் சங்கக்கடைக்குப் போகேக்கை அவளும் பின்னாலை வந்தவள். அப்ப எனக்குத் தெரியும்” என்பான் அசடுவழிய.
நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடியே நண்பர்கள் மேலும்
கிளறினால் "அவள் என்னைப் பார்த்தும் சிரிச்சவள்', 'இவள்
சொக்லட் வர்ங்கித் தந்தவள்’ என்றவறாகக் கதை
சொல்லுவான்.
**எடேய் இவ்வளவு பேரும் உன்னை * லவ்"
பண்ணினா நீ யாரை "லவ்” பண்ணுகிறாய்”,

Page 7
6
**ஆர்? நானோ! ஒரு நாளைக்குஒராளை” என்ப்ான் கபடமில்லாமல்.
* நீ ஏன் பள்ளிக்கூடம் போகாமல் விட்டனி” என்றால் *நான் படிக்கப் போனால் என்ர பட்டியைஆராம் பாக்கிறது?” என்பான் பதிலுக்கு.
**உனக்கு இங்கிலிசு தெரியுமோ? எனக் கேட்டால் போதும் ‘ஏபிசிடி, இடியப்பத்தாடி யூ நோ ஐ நோ.'
*மை கார், மை றோட், மை பெற்றோல்’ என்று ஒரு முறை காரே ஒட்டிக் காட்டுவான்.
இப்படி அதிகமான நாட்களில் கேலிப் பொருளாகி நிற்கும் தவத்தான் இன்று இப்படிச் செய்தது அனைவருக்கும் ஒரு வியப்பைத் தந்தது.
அன்று விசேடமாக எதுவும் நடந்துவிடவில்லை. இந்த ஊரை ஊடறுத்துச் சென்று கெவுளியாக கடற்கரையில் *சன்பாத்’ எடுக்கும் உல்லாசப் பிரயாணிகள் பலர். காடும் காட்டுடன் ஒட்டிய வெள்ளை மணற்கடற்கரையும் சற்றும் பாறைகளிலிருந்தாலும் கரைகளில் ஆழமற்ற இந்தக் கடற் பரப்பு அதில் உயர்ந்து நிற்கும் வெளிச்சவீடு. இதெல்லாம் இந்த ஊர்வாசிகளின் கண்ணுக்கு அப்படி ஒன்றும் அற்புத மாய்த் தெரிவதில்லைதான். ஆனால் இந்த அழகை ரசிக்க வென்றே பல்லாயிரக் கணக்கான மைல்கள் கடந்து வரும் உல்லாசப் பயணிகள் பவுல் பொயின்ற் ஐ (கெவுளியா) வந்து பார்த்துத் தங்கிச் செல்வது வழமையாகி விட்ட தொன்று. அன்றும் இப்படித்தான் ஒரு வெள்ளைக்காரத் தம்பதிகள் மூதூரில் வாடகைக்குப்பற்ற சைக்கிள் வண்டிகளில் கெவுளியாவைப் பார்த்துவரச் சென்று கொண்டிருந்தார்கள்,

f
கட்டைபநிச்சான் விபுலானந்த வித்தியாலத்தடிவரை வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தாங்கள் போய்க் கொண்டிருக்கும் பாதை சரிதானா? என்பதே அந்தச் சந்தேகம்.
கோயிலுக்கு முன்னுக்கு இருக்கும் கொம்பநாச்சியார் வீட்டிலிருந்து வெளிப்பட்டு வந்த தவத்தானைத்தான் அவர்கள் முதலில் கண்டனர். அதனால் அந்த வெள்ளைக் காரன் நிறுத்தி,
"பவுல் பொயின்ற், சால் ஐ கோ பை திஸ் வே பவுல் பொயின்ற்” என்று கேட்டான்.
தவத்தானுக்கு பவுல் பொயின்ற் என்பது கெவுளியாவைத் தான் என்பது தெரியுமாதலால் போகிறபாதைதான் கேட் கிறான் என்பது புரிந்து, சடக்கெனக் கையை நீட்டி 'கோ' என்றான்.
வெள்ளையனுக்கு விளங்கிவிட்டது. சைக்கிளை மிதிக்கத் தொடங்கிவிட்டான். ஒரு ஐம்பது யார் தூரம்தான் சென்றிருப் பான் வெள்ளையன்.
தவத்தானின் சிந்தனையில் மின்னலாய் ஒரு பொறி தட்டியது. இந்த ஊரில் தினசரி அனுபவிக்கும் பிரச்சனையை, பட்டிமாடுகள் மேய்க்கின்ற இடத்தில் சிங்களவர்களால் தான்படும் தொல்லைகளை இவனிடம் எடுத்துச் சொன்னால் உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துவிட முடியாதா என்ன? மிகப் பிரபல்யமான பத்திரிகைகளில் புகழ் பெற்ற ரேடியோ அலைவரிசைகளில் இனப் பிரச்சனை பற்றி எல்லாம் எழுதப்படுவதாக பேசப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அல்லவா? எனவே இவனுக்கு இதை எப்படியும் தெரிவிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட, தவத்தான் இரு கைகளையும் ஓங்கித் தட்டினான். சத்தம் கேட்டு வெள்ளையன் பார்த்ததும் திரும்பி வரும்படி சைகை காட்டினான். வெள்ளையன்

Page 8
8
தன்னை நெருங்கியதும் "யூ நோ தமிழ் - சிங்கள ப்ராப்ளம் திஸ் லாண்ட்? எனறான்.
வெள்ளையன் ஏதோ சொன்னான். தவத்தானுக்கு விளங்கவில்லை. தவத்தான் சொல்லுவது வெள்ள்ையனுக்கு விளங்கியதோ தெரியாது. ஆனால், தவத்தான் தான் தினசரி பட்டிமேய்க்கும் இடத்தில் சந்திக்கும் பிரச்சனை களை உலகுக்கு அறிவிக்க வேண்டுமென்று முயற்சி செய்கி றான் என்பது மட்டும் சுரேசனுக்கு விளங்கிவிட்டது.
30, 06, 1979

Lssëls
"என்ர ராசா; நீ நில்லடா மோனை எனக்கென்டொரு ஆம்பிளைப் பிள்ளையை ஆண்டவன் தரேல்லை. வந்த உன்னைக் காப்பாத்துறது என்ரை பொறுப்பு. அவனை விட்டுட்டு உதுகளையும் தூக்கிக் கொண்டு நீங்கள் ஓடிப் போய்ச் சேருங்கோ. துலைவார் வரப் போறான்கள்” என்ற அந்த அம்மாளின் குரல் தந்த தெம்புடன் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தனர் சோமேசும் அப்பனும்.
அப்பனின் கையில் ஒரே ஒரு எஸ். எம். ஜி. ரகத் துப்பாக்கியும் மூன்று மகசீன் நிரம்பிய தோட்டாக்களும் சில கிரனேட்டுக்களும் மட்டுமே இருந்தது. சோமேசனிடம் சில புத்தகங்களும் சிறிதளவு வெடிப் பொருள்களும் இருந்தன. சாந்தன் இதுவரை தூக்கி வந்த ஒரு உரப் பையையும் மேலதிகமாகச் சுமந்து கொண்டு சோமேசும் அப்பனும் வேகமாய் விரைந்து கொண்டிருந்தனர்.
ஓடி வந்த களைப்பினால் இளைத்தது சாந்தனுக்கு. *பிள்ளை புனிதா, செம்பிலை கொஞ்சம் தண்ணியெடுத்தா, எங்கை இவள் கங்கா" என்று பெரிய குரலில் கூவினாள் அந்த அம்மாள்.
புனிதா தண்ணீர்ச் செம்பைச் சாந்தனின் கையில் கொடுத்துவிட்டு ‘கங்கா, கங்கா’ என்று தன் தங்கையைக் கூவினாள்

Page 9
0
சாந்தன் தண்ணீரைக் குடித்துவிட்டு செம்பை முன்பக்க மாக இருந்த தலைவாசல் திண்ணையில் வைத்துவிட்டுத் திரும்பியதும், ஆட்டிற்கு தவிடு தீத்திக் கொண்டிருந்த அம்மாள் 'தம்பி இஞ்சை வா ?" என்று கூப்பிட்டாள்.
率 së
மாலிச் சந்தியிலிருந்து பருத்தித்துறை போகும் வீதியில் வீதியோரமாக ஒரு பிள்ளையார் கோவில். அந்தக் கோவி லுக்கு முன்பக்கமாக சிறிதும் பெரிதுமாக கிடக்கின்ற பற்றை களை ஊடறுத்துச் செல்லும் மண் பாதை வளைத்து வடலிப் பனைகளையும் தாண்டி ஒரு சிறு குடியிருப்பினுடாகச் சென்று அல்வாய்க்குப் போகும் தார்றோட்டில் சங்கமிக்கும்.
அச் சிறு குடியிருப்பில் அநேகமாக எல்லாமே ஒலைக் குடிசைகள் தான். அதிலொன்றுதான் ஆறுமுகத்தின் வீடு. முன்பக்கத்தில் ஒரு தலைவாசல், நான்கு தூண்களை நிறுத்தி ஒலையால் வேயப்பட்டிருந்த தலைவாசலுக்கு மூன்று பக்க மும் அரைச்சுவர் கட்டப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் இரண்டு திண்ணைகள்; இந்த தலைவாசலுக்குள் ஒரு பாவு கைத்தறி. ஆறுமுகம் ஒரு கைத்தறி நெசவாளன். இத் தலைவாசலுக்கு எதிர்த்தாற்போல ஒரு டெரியவீடு. ஒலை யால் வேயப்பட்டிருந்த அந்த வீடு நான்கு பக்கமும் மண் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஒரு அறையும் முன்னுக்கு சிறி தாக விறாந்தையும் கொண்ட பெரிய வீட்டுக்கு அடுத்தாற் போல சிறியதொரு குசினி, சிறு சுவரெழுப்பி மட்டையால் சுற்றிவர வரியப்பட்டிருந்த சமையலறையை அடுத்து ஆட்டுக் கொட்டில்.
ஆறுமுகம் தம்பதிகளுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் மட்டுமே உள்ளனர். கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் ஆறுமுகத்திற்கு பலவகையிலும் உதவுவாள் அவள் மனைவி. ஆறுமுகம் மனைவி மீது மிகுந்த மரியாதையும் அன்பும் உடையவன். ஆறுமுகத்தின் மனைவி கோழி வளர்ப்பது,

11.
ஆடு வளர்ப்பது போன்ற பலவேலைகளைச் செய்து வருவாயி னைத் தேடினாலும் குடும்ப வருமானம் என்பது தேவைக்குப் போதுமானதாக இல்லைதான்.
§ 来 擎
மாலை சுமார் நான்கு மணியிருக்கும். இன்பருட்டி கடற்கரை வழியாக வந்த இராணுவம் திடுதிடுப்பெனக் குதித்து கிராமத்துள் புகத் தொடங்கியது. துப்பாக்கி களை நீட்டிப்பிடித்தபடி எதிர்ப்படுபவர்களை சுட்டுவிடுகின்ற வெறியுடன் முன்னூற்றுக்கும் அதிகமான இராணுவம் சூழ்ந்து வருகிறது என்ற செய்தியைக் காற்று எல்லாத்திசை களுக்கும் காவிச் சென்றது. சோமேஸ், அப்பன், சாந்தன் ஆகிய மூவரும் இருந்த வீட்டிற்கும் இந்தச் செய்தி வந்து விட்டது. தமது கையிலிருந்த ஒரேயொரு எஸ். எம். ஜி. ரகத் துப்பாக்கியும் மூன்று மகசீன் நிறைந்த தோட்டாக் களும் இன்னும் சில கிரனேட்டுக்களும் மட்டும் இந்த இராணு வத்தை எதிர்க்கப் போதாது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டனர்.
கெரில்லாப் போர் முறையில் எதிரி துரங்கும்போது தாக்குவதும் எதிரி தாக்கும்போது பின்வாங்குவதும் தான் செய்யவேண்டிய வேலை. நேருக்கு நேராக நின்று எதிர்த்து நெஞ்சிலே வேல்பட்டு மடிவதே வீரமரணம் என்கின்ற பண்டைக் காலப் போர் மரபெல்லாம் இன்றில்லை, *சென்றுவா மகனே! வென்றுவா ! என்று வாழ்த்திப் படைக் கருவியைக் கையில் கொடுத்துப் போர்க் களத்திற்கு அனுப்பி வைக்கும் வீரம் கூடத்தான் இன்றில்லையே. எனவே உன் னைப் பாதுகாப்பதும் எதிரியை அழிப்பதும் தான் தியாகம்; நீயே செத்துப் போவதை விரும்புவாயாகில் அது தற் கொலையே. சென்றுவா, ஒளித்து ஒளித்து முன்னேறி எதிரி யைத் தாக்கிவா என்பதையே அரிச்சுவடியாகக் கொண் டிருந்த அவர்கள் மூவரும் இப்போது தாம் பின்வாங்குதலே

Page 10
12
புத்திசாலித்தனம் என்று முடிவு செய்தனர். இது பின்வாங்கு தலே தவிரப் பின்னடைதல் அல்ல எனக் கூறிக் கொண்ட சாந்தன், மண்வெட்டியை எடுத்து ஆழக் கிடங்கொன்றை வெட்டினான். தூக்கிச் செல்ல முடியாதவற்யுைம் அதிகம் முக்கியத்துவமில்லாதவற்றையும் உரப்பைகளில் சோமேசும் அப்பனும் நிரப்பினர். கட்டிமுடித்த உரப்பைகளை வெட்டிய கிடங்கில் போட்டு மண்ணினால் மூடிவிட்டுத் தூக்கிச்செல்லக் கூடியவற்றுடன் அவர்கள் புறப்படத் தொடங்கிய போது வெடிச் சத்தங்கள் மிகச் சமீபமாகக் கேட்டது. வேலிகள்மதில்கள்-கம்பிவேலிகள் எல்லாம் வெகுவேகமாய் லாவகமாய் தாண்டியபடி முன்னேறிய அவர்களைக் கடந்து துப்பாக்கிச் சன்னங்கள் விரைந்து கொண்டிருந்தன.
பனைவடலிப் பற்றைக்குள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்ட அப்பன், வெகுநிதானமாகத் தனது எஸ். எம். ஜி. யை இயக்கினான். மகே அம்மே” என்ற குரலுடன் சிப்பாய் ஒருவன் சரிய அவர்களின் முன்னேற்றம் தடை பட்டது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி அல்வாய் றோட் டைக் கடந்து விட்டாலும் அவர்கள் வருவதனை அனுமானிக்க முடிந்தது.
இந்த நேரத்தில் ஒடிசலான, மெலிந்த தோற்றமும் சுகவீனமான உடலும் கொண்ட சாந்தன் பின் தங்கிக் கொண்டேயிருந்தான்.
"என்னாலை இனி ஒடேலாது. நான் நடந்துவாறன் மச்சான்" என்றான் சாந்தன்.
"எடேய் கொஞ்சத் துரந்தான் வாடா, பருத்தித்துறை றோட்டைக் கடந்து தோட்டங்களுக்குள்ளை போட்டால் பிறகு பரவாயில்லை. பையைத் தா நான் கொண்டாறன்" என்றபடி சோமேஸ் கிட்டப்போய் பையைத் தான் வாங்கிக் கொண்டான்.

13
ஆனால் அப்போது முன்னேறிச் செல்ல சாந்தனால் முடியவில்லை. எதிர்ப்பட்டது ஆறுமுகத்தின் கொட்டில்வீடு. வீட்டுப் படலையடியில் அம்மாள் நின்று கொண்டிருந்தாள்.
"கொஞ்சம் தண்ணி தாங்கோ அம்மா !” என்றான் சோமேஸ் ஓடிச் சென்று. தண்ணிர் எடுத்து வந்தபோது சாந்தன் ‘இனி தன்னால் ஏலாது’ என்பது போல மண்ணில் குந்திவிட்டான். இவர்கள் வந்த வேகத்தையும் தூரத்தில் கேட்ட வெடிச் சத்தங்களையும் கொண்டு எதையோ அனுமானித்துக் கொண்ட அம்மாள் என்ன நினைத் தாளோ,
'இவனைக் காப்பாத்துறது என்ரை பொறுப்பு. நீங்கள் ஒடுங்கோ’ என்றாள் உறுதியான குரலில்.
சோமேசும் அப்பனும் விரைந்து கொண்டிருந்தனர்.
料 事
'தம்பி, அடையாளக் காட் வைச்சிருக்கிறியே?’ என்றாள் ஆட்டுக்குத் தவிடு தீத்திக் கொண்டிருந்த அம்மாள்.
'இல்லை" எனத் தலையசைத்தான் சாந்தன்.
"என்ன பேர்"
"சாந்த குமார்'
*சரி தம்பி. இவருக்குப் பேர்,ஆறுமுகம். எனக்குப் பேர் இரத்தினம்மாள். தண்ணி கொண்டுவந்தாளே, மூத்தவள் அவள்-புனிதா. மற்றவள் படலையடியில் நிற்கிறாளே அவள் கங்கா, இவர் பாவு போடுற வேலை. இப்ப சந்தைக்குப் போட்டார். எல்லாத்தையும் ஞாபகமாய் வைச்சுக்கொள். அவனவை வந்து கேட்டா என்ரை மேன் எண்டு சொல்லிப் போடு. மிச்சத்தை நான் பார்க்கிறன்" எனக் கூறிவிட்டு பிள்ளைகளைக் கூப்பிட்டு "ஆரேனும் கேட்டால் அண்ணன் எண்டு சொல்லுங்கோ, என்ன” எனச் சொல்லி முடிக்கவும்

Page 11
14
படலையடியில் பூட்ஸ் கால்கள் சடசடக்கவும் சரியாக இருந்தது. யாரையும் எதுவும் கேட்காமலே சேட் கொலரில் தூக்கித் துப்பாக்கிப் பிடியாலும் காலாலும் கையாலும் சாந்தனுக்கு விழுந்த அடிகள் பார்ப்பவர் அனைவரையும் கதிகலங்க வைக்கக்கூடியதாக இருந்தது.
"ஐயோ என்ர பிள்ளை அவனை அடியாதையுங்கோ ஐயா" எனக் கதறத் தொடங்கியது அம்மாள் மட்டுமல்ல; புனிதாவும் கங்காவும் கூடத்தான்.
அயல் வீடுகளிலும் இதே மாதிரியான கதறல் ஓசைகள் கேட்டது. இவர்களுக்குத் தெரியவில்லை, கதறலுக்கு மத்தியிலும் ஆறுமுகம் சாந்தகுமார் இவனது பெயர் என்பதில் தொடங்கி, தான் ஏற்கனவே உருப்போட்டிருந்த குடும்ப விபரம் அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண் டிருந்தாள் அம்மாள். குடும்பத்தின் கஷ்ட நிலபரமெல்லாம் எடுத்துச் சொல்லி ‘ஆண்டவன் தந்த ஒரேயொரு ஆம்பிளை பிள்ளை ஐயா ! அவனை ஒண்டும் செய்து போடாதை யுங்கோ’ எனக் கையெடுத்துக் கும்பிட்டாள். படலையடியில் நின்று உத்தரவு போட்டுக் கெர்ண்டிருந்த பெரியவனின் காலில் விழாக் குறையாக அவனுக்குப் புரியக்கூடிய ஏதோ விதத்தில் சகலவற்றையும் சொல்லிப் புலம்பினாள். கூடவே புனிதாவும், கங்காவும் தலையிலடித்துக் குமுறிக் கொண் டிருக்க அந்த இடத்தில் ஒரு மரண ஒலம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் வந்தவர்களுக்கு மனமிரங்கிய பாடக இல்லை.
"உங்களுக்கும் வீட்டிலை வளர்ந்த பிள்ளையஸ் இருக்கும் தானே ஐயா. உங்கடை பிள்ளையைப் போல நினைச்சு அவனை விட்டிடுங்கோ. அவனுக்கு ஒண்டும் தெரியாதய்யா. வீட்டோட இருக்கிற ஆம்பிளைப் பிள்ளை ஐயா அவன்" என்ற அவளது கெஞ்சல் அந்த இராணுவ அதிகாரியின் மனதை இளக வைத்துவிட்டது போலும்.

15
"இந்த வழியிலை யாருங் ஓடிப் போனது?"
"எங்களுக்குத் தெரியாதைய்யா. நாங்கள் காணேல்லை’ என்று அம்மாள் முதலில் கூறியதையே புனிதாவும் கங்காவும் திருப்பிக் கூறினர்.
சுமார் ஒரு மணி நேர கதறல், கெஞ்சல், சித்திரவதை அனைத்துக்கும் பின்னர் இராணுவம் அவ்விடத்தை விட்ட கல்:றது. சாந்தனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல் அடிவாங்கிய வேதனையை விடவும் அந்தக் குடும்பம் பிரதிபலித்த பாச உணர்ச்சியே அவனை அலக்கழித்தது. பொழுது மங்கி இருட்டத் தொடங்கிய வேளையில் சுடுநீர் எடுத்துவந்து ஒத்தடம் பிடித்துக் கொண்டிருந்தாள் அம்மாள்.
அம்மாளின் முகத்தையே உற்றுப் பார்த்த சாந்தன்,
'எனக்காக ஏனம்மா இவ்வளவு கஷ்டப்படுறியள்?” 'ஏதோ தம்பி எங்களால் முடிஞ்சதை எண்டாலும் செய்ய வேண்டாமோ ? ஆர் பெத்த பிள்ளையோ எங்கடை விடிவுக்காகத்தானே கஷ்டப்டடுறியள். வீடு வாசல் எல்லாத் தையும் விட்டிட்டு தினசரி வேதனைப்படுகிற உங்களைப் போல பிள்ளையஸ் எத்தனைபேர் தம்பி. ஏதோ நாங்களும் எங்களாலை ஏலக்கூடியதை எண்டாலும் செய்யத்தானே வேணும். எல்லாத்துக்கும் ஒரு முடிவு வராமலே போயிடும்?”
இப்பொழுது பொழுது நன்றாகவே இருட்டிவிட்டது. இனிப்போனால்தான் தோழர்களைக் கண்டுபிடிக்கலாம் எனக் கூறிப் புறப்பட்டுவிட்ட சாந்தனின் காதுகளில் அந்த அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் ரீங்கரித்துக் கொண்டே யிருக்கிறது. உடல்வலிக்கெல்லாம் அந்த வார்த்தைகளே மருந்தாகிவிட்டது போலும். .
08。01,1985

Page 12
அந்தஸ்து
எங்கே சென்றீர்? வாலிபர்களே; எங்கே சென்றீர்? வயோதிபரை தவிக்கவிட்டே எங்கே சென்றீர்? வாலிபர்களே;
என்றுதான் சுப்பையா வாத்தியாரின் மனம் குறுகுறுத் தது. யாரைக்கேட்பது என்பது புரியாமல் வாய்க்கு வந்த படி திட்டியவாறு வீட்டின் முன் விறாந்தையில் மேலும் கீழும் நடக்கிறார்.
ராஸ்கல்கள்; வரட்டும்; வரட்டும்; நான் இவங் களை ஒருகேள்வி கேட்காமல் விடப்போறதில்லை. அவை களுக்கென்ன? இளம் பொடியள், ஓடிப் போயிடுவினை. இஞ்சை கிடக்கிற கிழடு கட்டைகள்தான் மிச்சம்.
சார்! நான் என்ரை அறுபது வருச காலத்திலை படாத அவமானம் இன்டைக்கு இந்தப் பொடியளாலை, இப்படி அவமானப் படுத்தத்தானோ இவயளுக்கு 'தமிழீழம்”.
கண்டறியாத 'தமிழீழம்”. மனிசனுக்கு மானம் போகுது. இவை ஓடிப்பிடிச்சு விளையாடுகினம், பூனைக்கு விளை யாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகுது.

17.
இப்படி பலவாறாக மனம் போனபடி, வாய்க்கு வந்தபடி வீட்டு முன் விறாந்தையில் மேலும் கீழுமாய் நடந்து திரிகிறார் சுப்பையா வாத்தியார். கண்ணின் பார்வைக்கு எட்டாத. திட்டும் வார்த்தைகள் செவிக்குக்கிட்டாத தூரத்தில் நிற்கும் அந்த இளைஞர்களை நோக்கி அவரது அர்ச்சனைகள்.
யாரிந்த சுப்பையா வாத்தியார்?
அறுபது வயதைத் தாண்டியும் கட்டுறுதி குலையாத உடலும், உழைத்துண்ணச் சோரா உள்ளமும் கொண்ட ஊர்ப் பெரியவர். இந்த ஊரில் நல்ல மனிதர்களில் ஒருவர் எனப் பெயர் எடுத்தவர், கண்ணியமானவர். வேட்டியும் நாஷனல் சேட்டும் அணியும் ஒரு தமிழ் வாத்தியார். அந்தக் காலத்தில் கிழவன் ரை காலத்தில் - அதுதான் தமிழரசுக் காலத்திலை - சட்ட மறுப்பு, சத்தியாக்கிரகங்களில் ஒழுங்காக கலந்து கொண்ட ஒரு தமிழன்பர்.
கறுப்புக் கொடி கட்டுதல், கர்த்தாலில் பங்கு பெறல், ஒழிச்சு ஒழிச்சு சுவரில் தமிழ் வாழ்க என்று எழுதுதல் போன்ற போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்தான்.
ஆனால் பிறகு போராட்டம் தீவிரமடையவில்லை என்ற கோபத்தில் மெல்ல மெல்ல அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கி தற்போது ஓய்வு பெற்று தனித்துப் போயிருக்கும் சராசரி யாழ்ப்பாணத்தவர்தான்.
சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுப் பெற்ற பிள்ளைச் செல்வங்களை வெளி நாடுகளுக்கு அனுப்பிவிட்டு தாய் நாட்டுப் பாசத்தால் இங்கு தங்கிவிட்ட சராசரி தந்தை.
சுப்பையா வாத்தியாரின் ரை இந்த புறுபுறுப்பைக் கேட்டதினால் சற்று தாமதித்த சுப்பையர், ‘என்ன சுப்பையா? என்ன பிரச்சினை?’ என்றார் படலையடியில் நின்றபடி,
கொஞ்சம் பொறு சுப்பையர்.
இ-2

Page 13
18
உந்த அறுவான்கள் உதால இப்பத்தான் போடுங்கள்; அதுதான் பூட்டிப்போட்டன். பொறு திறப்பு எடுத்தாறன் என்றபடி உள்ளே போனார்.
'நீ வர உவங்களை காணவில்லையோ?” என்றார் படலையை திறந்தபடி,
ஆரைக்கேக்கிறாய்?
வேறை ஆர்; ஆமிக்காறனைத்தான்.
அவங்களோ? போட்டாங்கள் என்றவர் சுப்பையாவைப் பார்த்தபடியே 'என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்?’ என்றார்.
இல்லை சுப்பையர் உனக்குத் தெரியும். இதுவரையில் நான் ஒருக்காவது ஏதும் கெடுதல் செய்தனானோ? இல்லாட்டி ஆரிட்டையன் ஒரு அஞ்சு சதத்திற்கும் கெஞ்சி யிருப்பேனா?
ஓ. எனக்கு உம்மைப்பற்றி தெரியாதே?
ஏன். ஏன் என்ன நடந்தது.
இல்லை சுப்பையர் என்ர பிள்ளையளிட்டை கூட ஒரு அஞ்சு சதம் வாங்கி அவையளிப் ர நெளிப்புக்கு ஆளாக்கப் படாது எண்டுதானே நான் இப்பவும் தோட்டம் செய்யிறன்.
அதுக்கென்ன? இப்ப என்ன வந்தது?
இப்படி இவ்வளவு காலமும் ஏதோ நானுண்டு, என் பாடுண்டு எண்டு இருந்த எனக்கு இண்டைக்கு மானம் போயிட்டுது. இனி வாழ்ந்தென்ன? அதுக்கிடையில ஒரு கை பார்க்கோணும் என்றார் உணர்ச்சி வசப்பட்டு,
என்னது என்ன சொல்லுகிறீர்?
அதுதான் இண்டைக்கு தோட்டத்துக்கு தண்ணிகட்டிப் போட்டு மஷினையும் இழத்துக் கொண்டு வந்தனான். நான்

19
ஏன் இவங்கட கேவியூவை மனதில் வைச்சியிருந்தன் ரோட்டிலை வந்தேறி கொஞ்ச தூரம் தான் வந்திருப்பன். நிமிர்ந்து பார்த்தால் வரிசையா வருகுது; இனி என்ன செய் கிறது? என்டிட்டு மஷினையும் இழுத்துக் கொண்டு பேசாமல் வந்தனான். குறுக்கால போவார் மறிச்சுப் போட்டாங்கள்.
பிறகு என்ன நடந்தது.
அதேன் பேசுவான். அவையின்ர ராஜ்யம் தானே. எனக் கென்னடா இடுப்பு வேட்டி உரிஞ்சமாதிரி ஆகிப்போச்சு. இதுவரையிலையும் ஒருத்தரையும் ஐயா எண்டு சொல்லியறி யாத நான் இண்டைக்கு இவங்களைப் போய் 'ஐயா’ **ராசா” சுடாதையுங்கோ என்று கெஞ்ச வைச்சுப் போட்டாங் கள். என்ரை மானம் மரியாதை, அந்தஸ்து எல்லாம் போச்சு.
அட இதுக்குத்தானே துள்ளுறயள்? சுடாமல் விட்டுட் டானே என்று சந்தோஷப்படும். எல்லாம் இந்தப் பொடி யலாலை வந்த வினை என்றார் சுப்பையர். அதுதான் பொடி யனைப் பேசிறள், உவங்களைக் கண்டால் நான் கேக்காமல்
விடுறேல்லை.
என்ன கேக்கப் போறியள்!
இனி ஏதும் செய்யுறதென்றால் எங்களுக்கும் ஒரு சாமான் கொணர்ந்து தந்திட்டுச் செய்யச் சொல்லத்தான்.
தந்தா என்னதான் செய்வியளாம் என்றார் சுப்பையர் 66T600s.
ஒண்டில் நான், அல்லாட்டி அவன் எண்டு ஒரு கை பார்க்கத்தான் என்றார்.
சுப்பையர் ஆவேசமாக உங்களை எங்களைப் போல கிழடு களைப் பொடியள் சேர்க்க மாட்டாங்கள் பாருங்கோ ஏன்

Page 14
20
தெரியுமே? எங்களுக்கு ஆமிக்காரனை கண்ட உடனை அவங் களைப் போல ஒட ஏலாதுதானே என நக்கலாகச் சொன்ன படியே நகர்ந்தார் சுப்பையர்.
வாலிடர்களே!
எங்கே சென்றீர்கள்? என்றே சுப்பையா வாத்தியாரின் மனம் இப்போதும் அரற்றுகிறது.
O
LDrrijd: 1985 "மாற்று'

யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவு அமர்க்களப்படுகிறது. செயற்கைச் சுவாசமளிக்கும் முயற்சி கள் ஒருபுறம், முன்னுக்கு வரைபடம் மாதிரி ஒன்றில் ஏறி இறங்குவதைக் கவனிப்பதும் மீண்டும் ஏதோ ஏதோ செய்வது மாக அவசர சிகிச்சைப் பிரிவு அமர்க்களப்படுகிறது.
இருதய சிகிச்சைப் பிரிவில் பெயர் பெற்ற டாக்டரான நந்தகுமாரனின் தந்தை சிவலிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். டாக்டர் நந்தகுமாரனை மாணவர்களாகவிருந்து நேரடியாக அறிந்தவர்களும் மறை முகமாகக் கேள்விப்பட்டவர்களுமே ஆஸ் பத் தி ரி யில் வைத்தியர்களாகவிருந்தமை திருவாளர் சிவலிங்கத்திற்கு அவர்கள் அளிக்கும் அந்தஸ்தில், மரியாதையில் அவதானிக்க முடிகிறது.
கையைப் பிசைந்தபடி வெளியேறிய டாக்டர் சூரியகுமார், 'வெரி சொறி. யூ ஆர் ரூ லேட்” என்று கூறியபோது கனக ரத்தினம் விடயத்தை முழுமையாகக் கிரகித்துக் கொண்டார்.
‘என்ன டாக்டர், எப்படி ஐயா தப்பி விடுவாரே” என்று பக்கத்து வீட்டு தெய்வேந்திரன் கேட்கவும் 'ஒரு அரைமணித் தியாலத்திற்கு முன்னர் கொண்டு வந்து சேர்த்திருந்தாலும் தப்ப வைத்திருக்கலாம்” என்று கூறியபடி விடுவிடென நடந்து சென்றார் டாக்டர் சூரியகுமார்.
米 米 轮

Page 15
22
தெய்வேந்திரனுக்கு திருவாளர் சிவலிங்கத்தின் மீது ஒரு அபரிமிதமான மதிப்பு. ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியரான சிவலிங்கம் பக்கத்துவீட்டு தெய்வேந்திரனை தனது சொந்தப் பேரனைப் போலவே கருதி வந்தவர். தெய்வேந்திரனும் அவர் வீட்டில் போயிருந்து, கடைக்குப் போய்வரவும், சொன்ன வேலை செய்யவும் ஒராளாய் இருந்ததோடு சுட்டிப் பயலாக அவரிடம் பாடம் கேட்டுப் படிப்பதுடன் பார்வதி மாமிக்கும் சிவலிங்கத்திற்குமிடையில் கோபம் மூண்டு கதைக்காமலிருக் கும் நாட்களில் ஒரு பாலமாகவும் திகழ்வான். இந்த வகையில் சிவலிங்கம்-பார்வதி மாமி தம்பதிகளுக்கு தெய்வேந்திரன்
மிகவும் வேண்டப்பட்டவன்.
சிவலிங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வனான டாக்டர் நந்தகுமாரன் குடும்பத்தினர் அங்கு இருந்தபோது அவர் களது செல்வ மகனான திவாகரனுடன் விளையாட, சேர்ந்து பள்ளிக்கூடம் டோக என்றுதான் தெய்வேந்திரன் சிவலிங்கம் வீட்டுக்கு வந்துபோகத் தொடங்கியவன். தெய்வேந்திர னுக்கு இப்பதான் அவை ஒருதரும் இங்கே இல்லையே!
*
சிவலிங்கம் பார்வதி தம்பதிகள் தங்கள் கடந்த முப்ப தாண்டு தாம்பத்திய வாழ்க்கையில் ஆறுபிள்ளைச் செல்வங் களுக்குப் பெற்றோராகினர். மூத்தவன் நந்தகுமார் டாக் டராகி, பின்னர் அதற்கு மேலும் படிக்கவென்று லண்டனுக் குப் போய், பின்னர் தன் குடும்பத்தையும் அங்கேயே அழைத் துக் கொண்டு குடியேறிவிட்டார். பார்வதி மாமி, அடிக்கடி தன் பக்கத்துவீட்டு சகாக்களுக்கு பெருமையுடன் சொல்லு
66.
'அவன் பெரிய கெட்டிக்காரன். அவனை விடமாட்டம் எண்டு, அங்கேயே சிற்றிசன் சிப்பெல்லாம் குடுத்து இருக்கச் சொல்லுறான்களாம்.”

23
'அவன் என்னவாயிருந்தாலும் வெள்ளைக்காரனெல்லே இந்தச் சிங்களச் சனியன்கள் எண்டால் எங்களை மதிக்க மாட் டான்கள். இங்கை இருந்தால் முன்னேற விடாங்கள். அங்கேயே இருக்கட்டும். அதுதான் நல்லது” புவனத்தின் விமர்சனம் இது.
இரண்டாவது மகள் மஞ்சுளா, ஒரு எக்கவுண்டனைத் திருமணம் செய்துகொண்டு கொழும்பில் இருக்கிறாள். வருடத்தில் ஒரு முறையாவது வந்து தாய் தகப்பனைப் பார்த்துப் போவது வலு அருமை.
* 'இப்ப போக்குவரத்தெல்லாம் பிரச்சினைதானே. றெயிலும் இல்லை. துலைவார் அறுபத்தெட்டு இடத்திலை செக்கிங் எண்டு நிண்டால், என்னென்டு பிள்ளையஸ் வந்து போறது? பாவம் அதுகள். அங்கேயே இருக்கட்டும்.” சிவலிங்கம் ஏதும் சுகமில்லை, ஒருமாதிரியாய் இருக்கு, மஞ்சுளாவைக் கூப்பிடு என்றால், பார்வதி மாமி இப்படிச் சமாதானம் சொல்லி அடக்கிப் போடுவாள்.
மூன்றாவது மகன் விஜயன் படிப்பில் அவ்வளவு கெட்டித் தனம் காட்டவில்லை என்பதால் ஒரு கோபம் சிவலிங்கத் தாருக்கு! இங்கே இருந்தால் அவையிவையோடு சேர்ந்து திரிந்து, ஒருமாதிரியாய் கெட்டுப்போடுவான் ஆனபடியால் விரைவில் எங்காவது அனுப்பிப் போடவேணும் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு க. பொ. தா. (உத) பரீட்சையில் விஜயன் சித்தி பெறாமையும் அந்த நேரம் சரி வந்த ஜேர்மன் ஏஜன்சியும் கைகொடுக்க விஜயன் இப்போது ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரும் அகதியாக இருந்து, சோஷல் காசில் மிச்சம் பிடித்து தங்கைமாரின் குழந்தைகளுக்கு அனுப்பும் பொருட்களை வைத்தே அவன் அங்க பெரிய உத்தியோகம் பார்க்கிறான் என்று கதையளப் பார் சிவலிங்கம்,
நாலாவது மகள் தர்ஷினி கண்டியில் ஒரு தோட்டக் கணக்கரை மணம் முடித்து அங்கேயே வாழ்கிறாள். எப்போ,

Page 16
24
தாவது அவளிடமிருந்து ஒரு கடிதம் வரும். அது வும் அம்பதோ நூறோ அனுப்பும்படி தான் கேட்டிருக்கும். கடைசி பெடியன் வரதன் எ|எல் படித்துக் கொண்டிருந்த போது திடீரெனக் காணாமல் போய்விட்டான். கொழும்பில் நிற்கிறான்; கண்டியில் நிற்கிறான் என்று சொல்லி வந்த சிவலிங்கம் தம்பதிகள் குமுதாவின் திருமணச் சடங்கின்போது தான் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. திருமண வைபவத்தின்போது மாப்பிள்ளைத் தோழனைத் தேடின போதுதான் அவன் ஏதோ இயக்கத்திலை இருக்கிறா னாம் என்பது உறவினர்களுக்கு வெளிப்பட்டது. திருமணச் சடங்கிற்கு இரவலாய் ஒரு மாப்பிள்ளைத் தோழன் கண்டு பிடிக்கப்பட்டது வேறு விடயம்.
米 来源 米
குமுதாவின் கணவரான கனகரத்தின்ம், கொம்யூனிக் கேசன் சென்ரரிலிருந்து லண்டனுக்குக் கதைக்க முயற்சி எடுத்தார். பலத்த முயற்சியின் பின்னர் 'நந்தகுமார் ஹியர்” என்ற குரல் கேட்டு மகிழ்ந்தவராய் சிவலிங்கத்தின் இறப்புச் செய்தியைச் சொல்லி முடித்தார்.
'நீங்கள் வரும்வரைக்கும் வைச்சிருக்க வேணுமெண்டு எம்பாமிங் செய்திருக்கு’ என்றார் கூடவே.
**ஐயோ, அண்ணை நீங்களே யோசிச்சுப் பாருங்கோ, நாங்கள் இங்கேயிருந்து வெளிக்கிடுறது கஷ்டம். சிலவு கனக்க வரும். இனிக் கொழும்புக்கு வந்து சேர்ந்தாலும் வழி எப்படியோ? ஆனபடியால் எங்களைப் பார்க்க வேண்டாம். நீங்கள் எடுங்கோ’ நந்தகுமார் பதில்.
'நீங்கதானே மூத்தபிள்ளை. கொள்ளி வைக்கவேணும்”. கனகரத்தினம் இழுத்தார். ஒரு கணத் தாமதந்தான்.
**ஏன் வரதன் நிக்கிறான்தானே”
**அவனை எங்கையென்டு தேடிப்பிடிக்கறது”.

25
**அதுக்கு நானொன்டும் செய்யேலாது. என்னாலை வரேலாது. அவ்வளவுதான்’.
**அப்ப விஜயனுக்கு அறிவிச்சு அவரையெண்டாலும் வரச் சொன்னால்”
'உங்களுக்குத் தெரியும்தானே. அவனுக்கும் எனக்கும் அவ்வளவு நல்லாயில்லை. நீங்க ள் வேணுமெண்டால் கதைச்சுப் பாருங்கோ?”
போனை வைத்த கனகரத்தினம் பில்லுக்குக் காசு கொடுத்துவிட்டுத் தலையைத் தொங் க ப் போட்டார். **சிவலிங்கம் மாமா! இருந்த காலமெல்லாம் பெருமை யடிச்சியள். என்ரை மோனவையெல்லாம் வெளிநாட்டில நல்லாயிருக்கிறான்களென்டு. ஆனா. உங்கடை செத்த வீட்டுக்கு ஒருத்தரும் இல்லையே. கொள்ளி வைக்கவும் ஆளில்லையே’ மனம் புலம்பியது.
படங்குகள் எடுத்துவந்து பந்தல்போட்டு சாம் பல் மொந்தன் வாழைகள் இரண்டு படலையில் கட்டி, ஒழுங்கை நீட்டுக்கும் தோரணங்கள் தொங்கவிட்டு, இரும்புக் கதிரைகள் எடுத்து வந்து எங்கும் பரவவிட்டு, சுடலையில் விறகும் அடுக்கியாயிற்று. குறுக்கும் நெடுக்குமாக சுறுசுறுப்பாக ஓடி ஒடி வேலைகள் அத்தனையும் கவனித்த இளைஞர்களை யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பக்கத்துவீட்டு தெய்வேந்திரனின் அம்மா சொர்ணம், அவர்கள் அனைவரை யும் அழைத்து தேனீர் கொடுத்துவிட்டு 'நீங்கள் ஆர் மோனை” என்றாள். 'நாங்களோ எப்படிச் சொன்னால் உங்களுக்குத் தெரியும்’ உயரமான கறுவலொன்றின் கேள்வி.
"நாங்கள் - பெடியள்?” ஒரமாய் நின்ற சிவலையின் நளினம்.
**வரதன்ரை பிறென் சோ”

Page 17
26
'ஒமோம்” என்று சொர்ணத்திற்குப் பதிலளித்துவிட்டு தங்களின் வேலைகளைத் தேடி ஓடினர்.
米
அழுகுரல் வான் வரை உயர்ந்து படிப்படியாய் தேய்ந்து மீண்டும் உயர்வதுமாய்.
திசைக்கொன்றும் பிரிக்கப்பட்டு, குடும்ப உறவுகள், இரத்த பாசங்கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுவிட்ட இந்தச் சமூகத்தில் சுயநலமிகளாய். தம் சொந்த மண்ணை மட்டுமன்றி பெற்றவரையும் அனாதையாகத் தவிக்கவிட்டுச் சென்ற அறிவுஜீவிகளைப் பற்றி எண்ணியதால் கோப முச்சுகள் கனன்று கொண்டிருந்தன.
சிவலிங்கத்தின் சடலத்தை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின் போலிப் பெருமைகளையும் கூடவே தூக்கிப் போய்க் கொள்ளி வைக்க, இந்த இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.
O
07. 10, 1985

பிரலாபம்
எனக்கு இந்தக் கதி வருமென்டு நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஆருக்கும் என்ன கெடுதல் செய்தனான். ஏன் இப்ப என்னை ஒருத்தராவது கவனிக்கிறதாய் காண வில்லை. என்ரை நிலையை ஆருக்குத் தா ன் எடுத்துச் சொல்வது. இத்தனைக்கும் நானென்ன இருக்க இடமில் லாமல் போய் இங்கே வந்தவனோ? அல்லது போனால் போக்கிடமில்லாதவனோ? என்ன மாதிரி செல்வம், செல்வாக் கோடு எந்த நேரமும் ஒரே கலகலப்பாய் இருந்த என்னை இப் ப ஆர்தான் கவனிக்கிறார்கள். * வேண்டுவார் வேண்டுவன ஈயும் விநாயகப் பெருமான்' என்று இந்த மண்டப முகப்பில் எழுதிக் கிடப்பதைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்று எனக்கே விளங்கவில்லை. என்னுடைய நிலைமை இப்படியாய் போனதற்கு யார்தான் காரணம் என்பதை யோசிச்சு யோசிச்சே மூளை கலங்கிப் போயிடும் போல இருக்கு.
"சரிதான் இனி என்ன செய்ய; நான் ஆர்? எப்படிச் செல்வாக்காய் இருந்தனான் என்பதை உங்களுக்காவது சொல்லி மனதைத் தேற்றுவம் வேறை என்ன செய்ய'.
கண்டி றோட்டில் கிளிநொச்சிக்கு அப்பால் முறிகண்டி என்ற பெயரில் ஒரு இடம் இருக்கு தெரியும்தானே. கொழும்புக்கோ அல்லது குடா நாட்டை விட்டு வெளியேயோ போகிற போது நீங்களொரு தேத்தண்ணி குடிச்சிட்டுப் போயிருப்பியளே அந்த இடம்தான் முறிகண்டி. அந்த

Page 18
28
தேனீர்க் கடைகளுக்கு அப்பால் ஆலமரங்களுக்கிடையில் ஒரு சிறிய கட்டிடம். அதுதான் எனது குடியிருப்பு. நான் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததே ஒரு பெரிய கதை.
ஐம்பது அறுபது வருஷம் இருக்கும். அப்பதான் முன்னம் யாழ்ப்பாணத்திற்கு ஏபோட்டி சோமசெற் காருகள் வந்த புதிசு. புத்தார் சோமர் என்ற ஒருத்தர் புத்தம் புதிசாய் ஒரு ஏபோட்டியை வாங்கிக்கொண்டு கொழும்பில் இருந்து கொண்டுவந்தார். அந்த நாளையிலை இந்த றோட்டெல் லாம் ஒரே காடு. கிளிநொச்சி, பரந்தன், மாங்குளம் எல்லாம் பெரிய ரவுண் மாதிரிப் போனதெல்லாம் இப்பதானே. இந்தக் கண்டி றோடு கூடப் புதிசுதான். அதுக்கு முன்னர் தரும புரச் சந்தியிலிருந்து வட்டக்கச்சியை ஊடறுத்துக் கொண்டு ஒரு மண்பாதை இருந்ததே-அதுதான் பழைய கண்டிறோட். பழைய நாட்களில் யாழ்ப்பாணத்து முதலிமாரின் வில்லு வண்டிகளும் துரைமாரின் கோச் வண்டிகளும் பவனிவரும் பாட்டை அது. இப்ப என்னைப் போலவே அதுவும் கவனிப்பா ரில்லாமல் புல்லும் புதரும் மண்டிப் போய்க் கிடக்கிறது. கிடக் கட்டும்.
இந்த இடம் இருக்கே முறிகண்டி. இதற்கு இந்தப் பெயர் வரவே ஒரு காரணம் இருக்கிறதெண்டு அப்ப பூசை பண்ணின ஐயர் சொன்னதாய் எனக்கு ஞாபகம். அடர்ந்து போய்க் கிடக்கிற இந்தக் காட்டுக்கை இஞ்சாலையும், அங்காலையுமாய் திரிகிற யானைகள் அதிகமாக இந்த இடத்திலைதான் கடக்குமாம். அப்படி கடந்து போகேக்க மரங்களைக் குழையளை முறிச்சுப் போட்டுப் டோகுமாம். கண்டி றோட்டிலை யானைகள் முறிச்சுப் போடுகிற இடம் என்பதனாலேயே முறிகண்டி எனப் பெயர் வந்ததாக அந்த ஐயர் சொல்லி வைச்சிருக்கிறான்.
இப்படிப்பட்ட இடத்திலை சோமரும் அவற்றை ஆக்களும் காரோடை வரும்போது பொழுது ம ங் கத் தொடங்கி விட்டிருந்தது. நன்கு இருட்டிவிடாத அந்தச் சாயந்தர

29
வேளையில் கலகலப்பாய்ப் பேசிக்கொண்டுவந்த நண்பர்களில் ஒருவர், றைவர் சிற்றுக்கு அடுத்தாற்போல் இடப்பக்கத்தில் இருந்தவர் இருத்தாற்போல "ஐயோ அண்ணை’ எனக்
கூக்குரல் போட்டார். "றைவர்’ சடக்கென பிரேக்கைப் பிடித்துப் போட்டு நிமிர்ந்தா முன்னுக்கொரு யானைக் கூட்டம். ஒருவருக்கும் கையும் ஓடவில்லை. காலும்
ஒடேல்லை. புத்தூர்ச் சோமர் கையை உயர்த்திக் கும்பிட்டபடி பிள்ளையாரப்பா நீதான் காப்பாத்த வேணும் என்றப்டியே தேவாரம் Li TL-5 தொடங்கிவிட்டார். நைவர் ஒரு அரை மயக்கமாகி அப்படியே ஸ்டியரிங்கில் தலை சாய்ந்துவிட்டது தான் தாமதம். கோர்ன் "பாப்' 'பா' என அலறிக் கொண்டது. யானைகள் காட்டை முறித்துக்கொண்டு ஓடின. அன்றைக்குச் சொன்னார் சோமர். இந்த இடத்தில் பிள்ளையாரப்டனுக்கு நானொரு கோயில் கட்டுகிறனோ இல்லையோ என்று இருந்து பாருங்கோ' தான் பாடின 'ஐந்து கரத்தனை" தேவாரமும் கும்பிட்ட கையும்தான் எல்லோரையும் காப்பாற்றி விட்டதாக ஒரு நம்பிக்கை அவருக்கு. பிறகென்ன ஒருசில மாதங்களுக்குள்ளே நான் இங்கு குடியிருப்புக்கு வந்தாச்சு.
கொஞ்சம் கொஞ்சமாய் வாகனப் பாவனை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. போவோர் வருவோர் எல்லாம் எனது இடத்தைக் கடக்கு முன்பு நிறுத்தி கும்பிடு போட்டு மரியாதை செலுத்தலாயினர். அதுவே படிப்படியாக விரிந்து கற்பூரம் கொளுத்துவதாகி பின்னர் தேங்காயும் உடைத்து கற்பூரம் கொளுத்துவதாகி சுமார் அரைமணி நேரமாவது தங்கிச் செல்வது வரையில் விரிவுபட்டுவிட்டது. w
இந்த நேரத்தில் சிறிய அளவில் தேனீர்க்கடை முளை விட்டது. கற்பூரம், தேங்காய் என்பன விற்பதில் ஆரம்பித்து தேனீர்க் கடையாகி பின் சாப்பாட்டுக் கடை என்பது வரை போனபோது பக்கத்தில் ஒன்றாகி இன்னுமொன்றாகி இப்படியே இந்த இடம் கட்டாயம் தரித்துச் செல்வதற்கான ஓரிடமாகியது. ‘கற்பூரம் தேங்காய் அண்ணை கற்பூரம்

Page 19
30
வாங்கேல்லையோ’ ‘அம்மா, தேங்காய்" என்றவாறாக பெரிய அளவில் ஒவ்வொரு அரைமணிக்கொரு முறையேனும் பலமாகக் கேட்கும். ஏதோ ஒரு வாகனம் வந்து நிற்கிறது என்பதை நான் யூகித்துக் கொள்வேன்.
வியாபாரத்தில் போட்டிகள் வலுக்கத் தொடங்கியதும் இந்தச் சத்தங்கள் மெலிய, எப்போதும் காதுக்கினிய சங்கீதம் அல்லது சினிமாப் பாட்டு அல்லது "பொப்' பொணியம் இப்படி ஏதோ ஒன்று கேட்கும். சில சமயம் எல்லாம் சேர்ந்து ஒரு பேரிரைச்சலாகக் கூடக் கேட்கும். இரவு பகல் என்ற பேதம் இங்கில்லை. எந்த நேரமும் வாகனங்கள் வரும் போகும். ஒவ்வொரு வாகனமும் வந்து நின்றதும் குறைந்தது ஒரு தேங்காய் என் முன்னிலையில் சிதறும். கற்பூரச் சட்டியின் சுடர் ஒரு கனம் உயரும். இதிலிருந்து எத்தனை வாகனங்கள் வருகின்றன என்பதைக்கூட சில சமய ம் வேடிக்கையாக நான் எண்ணிப் பார்த்ததுண்டு. கோயிலுக்கு வருபவர்களுக்குக் கால் கழுவ எனத் தண்ணீர் தொட்டிகட்டி அதனருகில் சில மலசல கூடங்கள் கட்டப்பட்டது. அப்போது கூட எனக்குப் புரியவில்லை. பின்னுக்கு இப்படியாகும் என்று.
ஒருநாள் மாலை சுமார் மூன்று மணியிருக்கும். இப்ப ஒரு எட்டு ஒன்பது வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன்.
*"அப்பே ரட்ட”, 'அப்பே ஆண்டுவ” **தெமிளு மினியா’, 'உம்பட்ட கானுவ” என்ற கூக்குரல்கள் கேட்டன. சில விநாடிதான் இருக்கும். கச்சான் பெட்டிகள் தட்டப்பட்டன. கற்பூரம் தேங்காய் தி க்கு க் கொன்றாய் சிதறின, தேனீர் கடைகளின் கண்ணாடிகள் **சிலிங்” என நொறுங்கின. சுமார் இரண்டு அல்லது மூன்று பஸ்களில் வடக்குப் புறமிருந்து வந்த இளைஞர்களும் யுவதி களும் என்னென்னவோ பேசியபடி தாறுமாறாய் ஓடினர். எனக்கொண்டா ஒண்டுமாய் விளங்ககேல்லை. இராப்பூஜைக்கு ஐயர் வருவான் எண்டு பார்த்தா அவனையும் காணேல்லை.

3i
மற்றநாள் காலையில் வேர்த்து விறுவிறுத்து பயத்தை முகத்தில் அப்பியபடி ஐயர் வந்தார். பாலுக்குப் பதிலாக சுடுதண்ணிதான் கிண்ணியில் இருந்தது. ‘என்ன நடந்தது என்ன பிரச்சனை? ஒரு மாதிரியாய் இருக்கின்றீர்? ராத்திரியும் காணேலை; நேற்றுப் பின்னேரமும் இதில் ஒரே அமளியாய் கிடந்தது. என்ன விசேசம்?” இது நான்.
**58ஐப்போல இனக்கலவரம் தொடங்கிவிட்டது. எல்லா இ ட மும் பிரச்சனை. யாழ்ப்பாண கம்பசிலை படிச்ச சிங்களப் பெடி, பெட்டையள்தான் நேற்று இதிலை அட்ட காசம் பண்ணிப்போட்டுத் தங்கடை ஊருக்குப் போகினை. இப்பவும் எல்லா இடமும் ஊரடங்குச் சட்டம் இருக்கு, உனக்காக ஒளிச்சு ஒளிச்சு வந்தனனான். நிக்க நேரமில்லை, பிறகு வாறன் எல்லாத்துக்கும்’ என்றபடி ஐயர் அவசர அவசரமாய் போய்விட்டார்.
சில நாட்களில் தெற்கிலிருந்து வந்தவர்கள் என்னடியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டு உயிரையே காப்பாத்திப் போட்டியே என நன்றி கூறிக் கற்பூரம் கொளுத்தினர். கைகளிலும் கால்களிலும் கட்டுப் போட்டிருந்த போதும் தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்தி அவர்கள் பட்ட திருப்தி எல் நெஞ்சை நெகிழ வைத்தது. ‘பாடுபட்டுத் தேடினதெல்லாம் பறிபேர்சே” எனப் பதறியோர் பலர். 'இனி நான் ஆரை நம்ப உன்னை விட்டால் எனக்கொருத்தரும் இல்லையே” கதறினர் இளம் பெண்கள் பலர்.
எதுவுமே பேசாமல் எங்கோ விறைத்துப் பார்த்தபடி கற்பூரத்தை ஏற்றிவிட்டு சிலைகளாக நின்று ஊமையாய் அழுத கன்னியர் பலர். இவர்கள் சொன்ன-சொல்லாத செய்திகள் யாவும் என் கவலைகளை அதிகரித்தன. ஆனால் இந்த நிலை நீடிக்கவில்லை, மிகக் குறுகிய காலம். மீண்டும் பழையபடி அனைத்தும் கலகலப்பாய், அனைத்தும் சாதாரணமாய். இவை நடந்து நான்கைந்து வருடங்கள் போயிருக்கும். ஆனால் பழைய முரட்டுக் குரல்கள்.

Page 20
82
"அப்பே ரட்ட”, 'அப்பே ஆண்டுவ”
பச்சை நிற உடுப்புக்கள்-பளபளக்கும் நவீன ஆயுதங்கள்பலரக வாகனங்கள். ஆனால் இப்போது தெற்கிலிருந்து வந்தார்கள். கச்சான் கடகங்கள் பறந்தன. தேங்காய்கள் சிதறிக் கிடந்தன. தேனீர்க் கடைகள் நொறுங்கின. சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியான அட்டகாசம். "கண தெய்யோ இழிந்த குரலில் ஒரு நையாண்டி, போய்விட்டார் கள். மறுநாள் ஐயர் சொன்னார். கிளிநொச்சியில் 'ஆமி காம்ப்” போட்டிருக்கு, இரவு ஆறு மணிக்குப் பிறகு ஒரு வாகனமும் முகாமைக் கடக்கக் கூடாது என்ற உத்தரவாம். இரவு நேரக் கலகலப்புக்கள் அடங்கி நிசப்தமாய் கழியும் பொழுதுகள். இந்த நேரத்தில் துணைக்கு ஒராள் இருந்தால் சும்மா பேசிக் கொண்டாவது இருக்கலாம் என்று நினைத் தேன். அதையே பக்கத்துக் கடைக்கார பொன்னம்பலத்திடம் சொன்னேன். இனிமேல் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகள் வந்தாலும் வரும். அதோட இரவு வியாபாரமும் இல்லை. ஏதோ நீதான் காப்பாத்த வேணும் என்று பெரிய பிரார்த் தனையுடன் ஓரிரு மாதத்தில் துணைக்கொரு எழுந்தருளிப் பிள்ளையார் சிலை பஞ்ச உலோகத்தில் வார்க்கப்பட்டது என்ற பெயருடன் வந்து சேர்ந்தது.
"நான்தான் நாட்டுக்குள் போய் கனகாலம். என்ன
புதினம், ஏதேன் சொல்லன்”-எனது கெஞ்சல்.
** என்னத்தைச் சொல்ல; என்னத்தைச் செய்ய” என்று அலுத்துக் கொண்டே ‘நாட்டு நடப்பைத் தவிர வேறு எதையும் இப்ப கதைக்க ஏலாது” என்றான் அறுதியாக,
**சரி அதையாவது சொல்லன்”
‘என்னார பிறப்பே ஒரு அலங்கோலப் பிறப்பு அண்ணை; பிறகு எதைத்தான் சொல்ல”
**சொல்லுகிறதை விளக்கச் சொல்லன்”

33
பஞ்சலோகம் என்றால் செம்பு, தங்கம் எல்லாம் சேர்க்கத் தான் வேணும். "ரயில்வேறக்” பக்கத்தில் போற ரெலி போன் வயரை அறுத்துப் போட்டான்கள். றெயில் வாற யில்லை. பிறகு ஏன் இந்த வயரெல்லாம் இருப்பான் என்று எல்லாத்தையும் அறுத்துப் போட்டாங்கள். அது செப்புக் கம்பி தானே, அதைத்தான் மலிவு விலையில் வாங்கி துண்டு துண்டாய் நறுக்கி உருக்கி 'செம்பு’ என்று போட்டான். ஊலில் கிடந்ததெல்லாம் பெடியள் சேர்த்துக் கொண்டு போட்டான்கள் என்று சொல்லி தங்கத்தைக் கண்ணிலையும் காட்டேல்லை.”
"தங்கத்தைச் சேர்த்துப் பெடியள் என்ன செய்கிறான்கள்'
"அதைக் குடுத்துத்தான் ஆயுதங்கள் வாங்கிறதாம்"
"ஐயோ! இதென்ன கொடுமை தங்கத்தைக் கொடுத்து இரும்பை”.
ஊர் நிலபரங்கள் பற்றி ஒவ்வொன்றாய் அவனிடம் கேட்கக் கேட்க எனக்குப் பத்திக் கொண்டுதான் வந்தது. மேலும் சில வருடங்கள் இப்படியே ஒடிக் கழிந்தது.
来 米 s:
**கொக்காவிலிலும் "காம்ப்" போட்டாச்சு. இனிமேல் ஒரு நேரம்தான் உமக்குப் பூசை” ஐயர் சொன்னான். மத்தியான வேளையில் மட்டும் அவசரவசரமாக வந்து ஒரு குடம் தண்ணியை ஊத்திக் குளிப்பாட்டிப் போட்டு கற்பூரத் தையும் காட்டிப் போட்டு ஐயர் போயிடுவார். கடைகளும் இப்போ குறைந்து ஓரிரண்டாய்ப் போய்விட்டது. காலை பத்து பத்தரைக்குப் பின்னர்தான் வாகனங்கள் வரும். வந்ததும் பயணிகளும் சரி மற்றையோரும் சரி கற்பூரம் தேங்காய் வாங்கிக்கொண்டு என்னண்டை வருவதற்குப் பதில் நேராகத் தண்ணித்தொட்டிப் பக்கம் போய் மலசலகூடத்துள் நுழைவதும் பின் தேனீர்க் கடைக்கு விரைவதும் மீண்டும்
இ-3

Page 21
34
பயணத்தைத் தொடர்வதுமாக அமைந்துவிடும். அப்படித் தப்பித் தவறி யாரும் என்னருகில் வந்து தாமதித்தால் போதும், இதிலை மினக்கெடுகிற நேரத்தை அடுத்த காம்ப்புக்கு முன்னால் போய் நின்றால் அரைமணித்தியால மாவது முந்திப் போயிடலாம் என்ற முணுமுணுப்புக் கேட்கும். இவையும் ஒரு நாலு நாலரை மட்டும்தான். பின்னர் ஒரு மயான அமைதிதான் இப்பகுதியில் நிலவும்.
என்னைவிட பக்கத்தில் இருக்கிற இவளைவிட தண் ணிர்த் தொட்டிக்கும் அந்த ஒரே ஒரு தேனீர்ச் சாலைக்கும் மவுசு ஏறிப் போயிருப்பதை மெளனமாகப் பார்த்துக் கொண் டிருப்பதென்றால் எப்படியிருக்கும்? நீங்களே யோசிச்சுப் பாருங்கோ.
இதுகூடப் பரவாயில்லை. ஒரு நாளைக்கு கொக்காவில் ஆமி சுட்டுப் போட்டான்; ஒரு நாளைக்கு கிளிநொச்சி ஆமி சுடுகிறான் என்று சொல்லி ஒரு வாகனமும் இந்தப் பக்கமும் வராது. சில வேளைகளில் நாட்கணக்கில் கூட ஒரு மனிதரைக் காணக் கிடைக்காமற் போயிடும்.
举 s 率
இப்ப சொல்லுங்கோ நான் என்னதான் செய்ய? என்னைப் பற்றி ஆர்தான் கவலைப்படுகினம். என்னர கவலைகளை யாருக்குச் சொல்லி அழலாம். ஒரு நாளையில் ஒருக்கா என் றாலும் வந்து பார்த்துவிட்டுப் போகிற ஐயரும் நானுமாய் இந்தக் காடு. சில வேளைகளில் நினைக்கவே பயமாய் போகுது. ஐம்பது அறுபது வருசத்திற்கு முந்தி நான் இங்கே வரும்போது இருந்த அதேபோல எல்லாம் காட்சி தருவதாய் உள்மனதில் ஏதோ நிழலாய் ஆடும்.
ロ
30 03, 1986

இன்றைய நாளிலும்
கணேசனுக்கு ஏற்பட்ட கோபத்தால் விரல்கள் துடித்தன. துடித்த விரல்களுக்கிடையில் ஈரம் துடைப்பதற்காக எடுத்த பேப்பர்த் துண்டு சிக்கிப் பவுடராகிக் கொண்டிருந்தது. மெல்லியதான நடைபாதையினூடாக வந்து காசாளர் மேசை யில் ஒரு பத்துரூபாத் தாளும் ஒரு இரண்டு ரூபாக்குற்றியும் இன்னுமொரு ஐம்பது சதக் குற்றியும் எடுத்து அவன் மேசை யில் வைத்த விதம் காசாளரின் முகத்திலறைந்தது போல இருந்தது. அப்படியே வந்து ஒற்றைக் கதவைக் கடந்து மின்சார நிலைய வீதியில் இறங்கிய போதுதான் ஏதோ இருண்ட உலகத்திலிருந்து விடுபட்டுவிட்டது போல ஓர் உணர்வு அவனுக்கு,
திரும்பி ‘சிங்கப்பூரான் கபே என்ற அந்தச் சாப்பாட்டுக் கடையின் பெயர்ப் பலகையைப் பார்த்ததும் காறி உமிழ வேண்டும் போலிருந்தது. ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தவாறு சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான் கணேசன்.
"சீ என்ன மணிசரப்பா” இந்த நாளையில மனிசன் படுகிற பாட்டுக்குள்ள இதுகுமொன்று என்னமாதிரி நாக்கூசாமல் வலுலேசாய் சொல்லிப் போட்டான். இவன் என்னை ஆர் எண்டு நினைச்சுக் கொண்டு இந்தச் சொல்லுச் சொன்னவன்.
இப்படியே எண்ணிக் கொண்டிருந்த கணேசனின் வயிறு பசியால் பொருமியபோதும் அவன் அதனை இலட்சியம் செய்யவில்லை. இப்படியான கடைகளுக்கு இனிமேல் சாப்

Page 22
36
பிடப் போவதில்லை என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டான்.
கணேசன் யாழ் நகரின் பெரிய கடைப் பகுதியிலுள்ள புடவைக் கடையொன்றில் சாதாரண சிப்பந்தி. மெலிந்த தோற்றமும் சாதாரண உடலமைப்பும் கொண்ட அவன் எந்த நேரமும் எதையும் பகிடியாக - கேரியாக எடுத்துக் கொள்ளும் சுபாவம் உடையவன். சில விடயங்களில் அவன் இலகுவாக உணர்ச்சி வசப்பட்டு விடுவான். அவனால் அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாது. தனது செயல் களால் வெளிக்காட்டி விடுவான். இதனால் முன்கோபி என்று கூட இவனுக்கு ஒரு பெயர் உள்ளது.
மரக்கறி உணவு, அதுவும் சுத்தமானது என்று பெயர் பெற்ற உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதில் ரொம்ப பிரியம் அவனுக்கு. இந்தப் புடவைக் கடை வேலைக்கு வந்து விட்ட ஆறுமாத காலப்பகுதியில் மதிய உணவு பெரும்பாலும் இந்த சிங்கப்பூரான் கபேயிலே தான்.
* சிங்கப்பூரான் கபே' க்குச் சொந்தக்காரனான மகாலிங் கத்தின் பாட்டனார் சிங்கப்பூரில் அந்தக் காலத்தில் வேலை பார்த்தவராம். அவர் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதிதான் இந்தக் கபேக்கு முதலீடாக மாறியிருப்பதனாலே தான் இது "சிங்கப்பூரான் கபே என்ற பெயர் பெற்றதாம். இப்படிப் பழைமையினை மறவாத பண்பு கொண்ட இந்தக் கபே சுத்தமான சைவ உணவுக்குப் பெயர் பெற்றது. மின்சார நிலைய வீதியின் தையற் கடைகளுக்கு எதிர்த்தாற் போல இரண்டுமாடிக் கட்டிடத்தில் எழுந்து நிற்கும் இந்தக் கபே சுமார் மூன்று தசாப்தங்களையாவது சந்தித்திருக்கும். தினசரி வந்து விழுகின்ற கோட்டையின் பரிசுகளால் - ஷெல்களால் - யாழ்ப்பாணம் பரிதவிக்கின்றபோது இந்தச் சாப்பாட்டுக் கடையிலும் இரண்டு மூன்று தடவை ஷெல் வந்து விழுந்திருக்கின்றது. ஷெல்களால் சாப்பிடவருபவர்களின் பாது காப்புப் பலவீனப்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக இரும்புக்

37
கேற்றின் பின்பக்கத்திலும் இன்னும் பல இடங்களிலும் மண் மூட்டைகளைப் பக்குவமாக அடுக்கி வைத்திருக்கும் காட்சி போர்க் காலத்தை நினைவுபடுத்தும். ஒற்றைக் கதவுமட்டுமே திறந்திருக்கும். இந்தக் கபேயின் தினசரி வாடிக்கையாளர்கள் என்று பார்த்தால் சுமார் ஆயிரம் பேராவது தேறும். மதிய சாப்பாட்டுக்கு மட்டும் சுமார் ஐநூறு பேர்வரையில் வந்து போவார்கள். சுமார் இரண்டு இரண்டரை வேளைக்கு யாரும் போனால் மதிய போசனப் பகுதியின் கதிரைகள் எல் லாம் மேசைக்குமேல் ஒய்வெடுத்துக் கொலுவிருக்கும், காட்சி யைத் தான் காணமுடியும்.
முன்பக்கத்தில் சிற்றுண்டி பரிமாறும் பகுதியில் மூன்று அல்லது நான்கு நடுத்தர வயதுப் பொடியன்கள்தான் அதிக மாக நிற்பார்கள். பின்னுக்கு மதிய போசனப் பகுதியிலும் குடும்பத்துடன் வருவோர் அமரும் பகுதிக்குமாகச் சேர்த்துப் பரிமாறுபவர்கள் கொஞ்சம் முதியவர்கள். வெள்ளை வேட்டி யும் மடித்துவிட்ட நஷனல் சேட்டும் நெற்றியில் பூசிய விபூதிப் பட்டையும் சந்தனப் பொட்டும் இவர்களது குண விசேடங் களை அளவிடப் போதுமானதல்ல. ஆனால் மிகுந்த அன்பு காட்டி வேண்டியதைக் கேட்டுப் பரிமாறி வாடிக்கையாளர் களைக் கவர்வது கைவந்த கலை அவர்களுக்கு.
கடையில் சனக்கூட்டம் வந்து கொண்டிருந்ததால் மதியச் சாப்பாட்டுக்கு வர கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. காலை உணவும் சரியாக இல்லாததால் பசி எடுக்கத் தொடங்கிவிட் டிருந்தது. கணேசனுடன் பணியாற்றும் மற்றைய சகா தன்னுணவை முடித்துக்கொண்டு திரும்பும்வரை காத்திருந் தான். துணிவகைகளின் விலைகளை அறிவதில் நாட்டம் காட்டும் நாகரிக மணிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கிளறி விட்டு "அது கலர் சரியில்லை", "இது விலை கூடிப் போச்சு’ என்றவாறு ஒதுங்கிச் செல்லும் போது ஏற்படும் எரிச்சலை பொறுமையாக அடக்கிக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந் தான் கணேசன், தன் சகா வந்ததும் 'நான் சாப்பிட்டு விட்டு வாறன்” எனக் கூறி வெளியேறி விட்டான்,

Page 23
38
நேரம் ஒரு மணியைத் தாண்டிவிட்டது. "சிங்கப்பூரான் கபே'யில் மதியச் சாப்பாட்டிற்கான கூட்டம் முட்டி வழிந் தது. எல்லா மேசைகளிலும் தயாராக இருந்த ஆட்களுக்கு முன்னால் வாழையிலை மட்டும் போடப்பட்டிருந்தது. தனக் கான இடத்தைத் தெரிவு செய்து போய் அமரவும் மகேந்திரன் அண்ணை என்னும் முதியவர் வெள்ளைவேட்டியை மடித்துக் கட்டியபடி சோறு பரிமாறவும் சரியாக இருந்தது.
** என்ன அண்ணை நீங்களே இன்டைக்குப் பரிமாற வெளிக்கிட்டியள்?”
**ஆக்கள் ஒருத்தரும் இல்லை. கொழும்புக்கும் போன் பண்ணினம். இப்ப யாழ்ப்பாணம் வாறதுக்கும் எல்லாரும் பயப்படுகினம்”.
"ஏன் அண்ணை?”
**இஞ்சை ஒவ்வொரு நாளும் ஷெல் அடி; அது இது வென்று பிரச்சனைதானே. வாறதெண்டால் ஓராளுக்கு ஐயாயிரம் ரூபா அட்வான்ஸ் கட்டச் சொல்லுறான்கள்”.
**அது சரிதான் அண்ணை. ஏன் இங்கை இந்த வேலை களுக்கும் ஆளில்லையே. இதுக்குக்கூட வெளிநாட்டிலை இருந்துதான் இறக்குமதி செய்யோனுமோ ?”
**எங்கடை பொடியள் இந்தவேலை செய்யமாட்டான்கள். இதெல்லாம் அவங்களுக்குக் கெளரவக் குறைச்சல்” என்ற படி சாம்பாரை ஊற்றினார் மகேந்திரன்.
அட! நாற்பது ஐம்பதாயிரம் செலவழித்து வெளிநாடு போய் அங்கே ஹோட்டல்களில் வேலை செய்யும் தனது நண்பர்களை நினைத்துக் கொண்டான் கணேசன் ஒருகணம்,

39
பிரான்சிலும் சுவிசிலும் இன்னும் பிற நாடுகளிலும் ஹோட்டல் வேலை ஒன்று கிடைக்காதா என்று அலைகின்ற நண்பர்களின் கதைகளைக் கடிதங்கள் மூலம் அறிந்ததை நினைத்துப் பார்த்தபோது மகேந்திரன் அண்ணை சொன்ன கெளரவக் குறைச்சலுக்கு அர்த்தம் என்ன என்று யோசிக்க சிரிப்பு வந்தது கணேசனுக்கு.
**மோர் வேணுமோ?” என்று கேட்டபடி பக்கத்து மேசைக்குப் பரிமாறிக் கொண்டிருந்த மகேந்திரன் கணேச னின் சிரிப்பினால் கவரப்பட்டு "மோர் விடட்டுமா ?” என்று கிட்ட வந்தார்.
**கொஞ்சமாய் விடுங்கோ” என்றவன் தொடர்ந்து,
**ஏனண்ணை எத்தனைபேர் வேலையில்லாமல் திரி கிறார்கள். ஒரு இரண்டு பேரையாவது கொண்டு வந்து போட்டால் உங்களுக்குச் சுகமாயிருக்குமே ?” என்று சிரித் தான்.
* 'இல்லையில்லை. கண்டது கடியதுகளைக் கொண்டு வந்து போட்டால் நல்லவை நறியவை இங்கை சாப்பிட வருவினையோ’ என்று கூறிக் கொண்டே அப்பால் நகந்தார் மகேந்திரன்.
இதன் உள்ளர்த்தம் கணேசனுக்கு உடனடியாக விளங்க வில்லை. சோற்றைப் பிசைந்தவாறே யோசிக்கலானான். **கண்டது கடியது என்றால் இது யாரைக் குறிக்கும்?” என எண்ணியபோது சிந்தனையில் மின்னல் ஒன்று தட்டியது.
அட, மண் மூட்டைக்கு இடையில் சீவிக்கின்ற இந்த நாளிலயுமா இந்த புத்தி-சாதி பாக்கிற எளிய புத்தி என்பது வெளிச்சமாகியபோது அவனால் மேலதிகமாக ஒரு பி டி சோற்றைக்கூட விழுங்க முடியவில்லை,

Page 24
40
அப்படியே தூக்கிக் கொட்டி கை கழுவிவிட்டு ஈரம் துடைப்பதற்காக எடுத்த பேப்பர்த் துண்டு அவனது கைகளுக் கிடையில் சிக்கிப் பவுடராகிக் கொண்டிருந்தது.
இனிமேல் பட்டு இப்படியான இடத்திற்கு சாப்பிட வருவ திலும் பார்க்க சாப்பிடாமல் இருப்பதுவே மேல் என மனசு குறுகுறுக்க.
16.01.1987

இதுவும் ஒரு காதல் கதை
35, கங்கை அம்மன் கோவில் தெரு, கோடம்பாக்கம்,
சென்னை-600 024.
காலை பத்துமணி தொடக்கம் இந்த முகவரியைத் தேடி யலைந்த தங்கராசனும் குட்டியும் வீட்டைத் தேடியடையும் போது நேரம் பதினொன்றரைக்கு மேலாகிவிட்டது. பூட்டிக் கிடந்த முன் கதவை இரண்டு தரம் தட்டி இறுகச் செருமிக் கொள்ளவும், சிலுப்பாத் தலையுடைய இளம் பெண் ஒருத்தி கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.
**செல்லம்மாள் என்று சிலோன்கார யாரும்?” தங்கராசன் மெதுவா மெதுவாக இழுத்தான்.
**ஒமோம் உள்ளை இருக்கிறா. நீங்கள் எங்கை யிருந்து..?” -
**மைக்கல் கடிதம் போட்டவர். அவரைச் சந்திக்கச் சொல்லி”
**சவுதியிலிருந்தோ அவர் அண்ணனின் பிரெண்ட் தானே. நீங்கள் இயக்க."
**ஒமோம். நாங்கள் இயங்குகிறவர்கள். மற்றவை இயங்காதவையள்” தங்கராசன் சிரிக்கவும், கூட வந்த குட்டி கடைக்கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கிக் கொள்ள சிரமப் பட்டான்.

Page 25
42
'நல்லாக் கதைப்பியள்போலை” என்றவள் தொடர்ந்து ** வாங்கோ, இருங்கோ அம்மாவைக் கூப்பிடுறன்” என்றபடி உள்ளே போய்விட்டாள்.
தங்கராசனும் குட்டியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்; யார் முதலில் உள்ளே போவது எனத் தயங்கியபடி.
சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி வந்த செல்லம்மாள், 'தம்பியவை வந்து உள்ளை இருங்கோவன். நான்தான் விஜயரட்ணத்தின் அம்மா. தம்பி உங்களுக்கும் கடிதம் போட்டவனோ?”
**ஒமம்மா, நீங்கள் லொட்ஜ்ஜில் நிற்கும்போதே போய்ச் சந்திச்சு உதவி செய்யச் சொல்லி எழுதியிருந்தவர். கொஞ்சம் வேலையும் கூடிப்போச்சு. கடிதமும் பிந்தித்தான் கிடைச்சது. அதுக்கிடையில் நீங்கள் வீடெடுத்திட்டியள் போல” தங்கராசன் சொன்னான்.
**ஒரேயொரு அறை தான் இருக்கு. இதுக்கு த்ரீகன்றட் ருப்பீஸ் றென்ற்றாம். என்ன செய் ய? அவசரத்திலை எடுத்துப்போட்டம். இதிலும் சீப்பா வேறை வீடு எடுக்க 6ᏍfᎢᏣtᏝ** .
'அட்வான்ஸ் எவ்வளவு குடுத்தனியள்”
'தவுசண்ட் ருப்பீஸ்”.
**இப்போதைக்கு சமாளிக்கலாம்தானே. டொய்லட், பாத்ரூம், தண்ணி வசதி எல்லாம் போதுமோ?”
"ஒ. பின்னுக்கு ஒரு கிணறு இருக்கு. மற்றதுகளும் பரவாயில்லை”.
**அப்படியெண்டா நல்லதம்மா. இந்த வசதியள் மெட்ராசில் கிடைக்கிறது கஸ்ரம்தான். வாடகை கொஞ்சம் கூடித்தான் போச்சு; பரவாயில்லை. கொஞ்ச நாளைக்குத் தானே”. V ra

43
சிலுப்பாத் தலைக்காரி இரண்டு கிளாஸ் நிறையத் தேனீர் கொண்டு வந்தாள்.
**இவதான் என்ரை இரண்டாவது மகள் நளினி. சுமதி எங்கை பிள்ளை?”
** என்னம்மா’ என்றபடி ஜன்னலுக்குள் பளிச்சிட்டது ஒரு முகம்.
“எனக்குப் பெயர் தங்கராசன். இவரைக் குட்டி எண்டு கூப்பிடுறனாங்கள். மற்றதுகள் தெரியுந்தானே” என பலத்துச் சிரித்த தங்கராசன், 'ஏதும் தேவையெண்டா சொல்லுங்கோ’ என்றான்.
**நாங்கள் தம்பியிட்டைப் போகத்தானே வந்தனாங்கள். விசா வர டைம் எடுக்கும் போல இருக்கு. அதுமட்டும் இவைக்கு ஏதும் வேலை கிடைச்சாலும் நல்லது” என்று தயங்கியதைப் புரிந்து கொண்டு அவர்களது கல்வித் தகைமை, வேலை அனுபவம் என்பவற்றைக் கேட்டுத் தெரிந்தனர்.
* “ւ 60) Մ பண்ணிப் பார்க்கிறம். நீங்கள் ட்ரை பண்ணுங்கோ, அதிகமாய் எடுக்கலாம் எண்டுதான் நினைக் கிறன்” எனக் கூறி விட்டுத் திரும்பிய போது குட்டி கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'அம்மா எங்களுக்கு நேரம் போகுது. போட்டுப் பிறகு வந்து சந்திக்கிறம்.”
"'உங்களை எங்கை சந்திக்கலாம். ஏதும் தேவைப் பட்டாலும்.” சிலுப்பாத் தலைக்காரநளினி மெல்லக் கேட்டது தங்கராசனுக்கு விளங்கி விட்டது.
‘எங்களைத் தேடிக் கண்டு பிடிக்கிறது கஷ்டம். தேவைப்பட்டா 223647க்குப் போன் பண்ணுங்கோ.”
223647 சரிதானே.”

Page 26
44
**ஒமோம். சரி அப்ப நாங்கள் போட்டு வாறம்.”
**ஓம் தம்பியவை அடிக்கடி வந்து பார்த்துக் கொள் ளுங்கோ என்று செல்லம்மாள் விடை கொடுத்தாள்.
※ 决赛 案
மவுண்ட் ரோட்டில் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டிய படி நிற்கும் அண்ணா சிலைக்கு அருகாமையில் உள்ள சுரங்கப் பாதை வழியே சட்டசபை உறுப்பினர் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தனர் தங்கராசனும் குட்டியும்.
**எடேய் குட்டி, இந்த அலுவலை முடிச்சுக் கொண்டு ஒருக்காக் கோடம்பாக்கத்திற்கும் போட்டுப் போவம்” என்றான் தங்கராசன்.
**ஏன்ரா, கோடம்பாக்கத்தில் என்ன அலுவல்?” இது குட்டி.
**விஜயரட்ணம் இண்டைக்கு போன் பண்ணுமில்லே. அதுதான் அவை ஏதும் சொல்ல வேணும் எண்டாலும் கேட்டுக் கொண்டருவம்.”
**அவை எண்டால் எவை?”
*அதுதான்ரா நேற்றுப் போன வீட்டுக்காரர்.”
'3. . . . . . என்று இழுத்து நமுட்டுச் சிரிப்புடன்,
*உனக்கேன் அவ்வளவு அக்கறை வருகுது. சிலுப்பாத் தலைக்காரியின்ரை தேத்தண்ணி ருசிக்குது போலை.”
**உனக்கு எப்பவும் பகிடிதான்ரா. போக வேண்டா மென்றால் சொல்லு. அதை விடுவம்.”
*யன்னலுக்குள்ளாலை தெரிஞ்ச முகத்தை வடிவாய்ப் பாக்கேல்லை. ஒருக்காப் போய்ப் பார்க்க வேணும் எண்டு தான் நானும் நினைச்சனான்.”

45
**பாத்தியே பாத்தியே அப்ப நான் வரேல்லை. நீ போய்க் கேட்டுக் கொண்டு வா” என்று கூறிய தங்கராசனின் பார்வையில் குறும்பு நெளிந்தது.
米 掌 米
ட்றிங். . ட்றிங் என்ற ரெலிபோனின் அழைப்பை யேற்று ரிசீவரைத் தூக்கி,
* "ஹலோ. யார் பேசறது” என்றான் தங்கராசன்.
* “ஹலோ. நளினி ஹியர்” என்றதும் முகத்தில் புன்னகை இழையோட,
**சொல்லுங்கோ. என்ன விஷயம்”.
**தங்கராசன் நிற்கிறாரோ”.
**அவர்தான் இப்ப பேசிக் கொண்டிருக்கிறார். குரல்லை தெரியேல்லையே” என்று பலத்துச் சிரித்தான் தங்கராசன்.
'எனக்கு புத்தகக் கடையிலை சேல்ஸ் கேர்ள் வேலை கிடைச்சிருக்கு. இப்ப மூன்று நாளாய் வேலைக்குப் போறன்.”
**நல்லதாய்ப் போச்சு. எப்ப பார்ட்டி.”
**அதெல்லாம் ஒண்டுமில்லை. வேணுமெண்டால் வீட்டை வந்தால் ஒரு கப் ரீ தரலாம். அவ்வளவுதான்.”
** ஒரு கப் ரீ தாறதுக்குத்தான் ரெலிபோனில கூப்பிட்ட னிங்களோ?
'உங்களுக்கு எப்பவும் பகிடிதான்’.
**சரி சரி அப்ப நான் கதைக்கேல்லை”.
**பின்னேரம் வீட்டை வாறியளே”.
**ஏன் ரீ குடிக்கத்தானே. முன்னுக்கு கடையிருக்கு.”

Page 27
46
* 'இல்லை. அம்மா உங்களை வரச் சொல்லிச் சொல்லச் சொன்னவ.”
* சரி. பின்னேரம் தானே பார்ப்பம்”. * "பாப்பம் என்ன பாப்பம், கட்டாயம் வரவேணும்”.
சரி என்றபடி ரிசீவரை வைத்துவிட்டுத் தனது வேலை யில் மூழ்கிப் போனான் தங்கராசன்.
இப்படி அழைப்பு வருவதும் தங்கராசன் போய் வருவதும் இப்போ சாதாரணமாகிவிட்டது. சில சமயம் தங்கராசனே போன் பண்ணிவிட்டுச் சொல்வதுமுண்டு.
家
** டேய்; இவ்வளவு நாளும் நானும் இதைப் பகிடி எண்டு தான் நினைச்சுக் கொண்டிருந்தன். இப்பிடி ரெலிபோன் பண்ணிக் கூப்பிடுறதைப் பார்த்தா ஏதோ விசயம் இருக்கும் போலை தெரியுது. என்னடா செய்வம்.”
**இஞ்சை பார். நாங்கள் நாடு விட்டு வந்து இந்தப் பாடுபடுறது இதுகளுக்கில்லை. இதுகளிலை நாங்கள் இப்போதைக்கு மினக்கெட ன்லாது. அதுவும் அடுத்த கிழமை நீ ஈழத்துக்குப் போகப் போறாய் எண்டதை மறந்து போகாதை”.
*"அப்ப என்னை அங்கை போக வேண்டாமென்று
சொல்லுகிறாய்?
*"அப்படி ஆர் சொன்னது? நாங்கள் தனி மனசரில்லை. நாங்கள் நினைச்சபடி செய்யிறதுக்கு. அமைப்போட வேலை செய்யிறனாங்கள். அதுக்கேற்றபடி நடக்கவேணும். இல்லாவிட்டால் எல்லாருக்கும் தான் அவமானம்.”
'என்னடா.என்ன செய்யச் சொல்லுறாய்? சொல் லுறதை விளங்கச் சொல்லன்” சினந்தான் தங்கராசன்.

47
**நான் சொல்லுறதை சொல்லிப் போட்டன். உனக்குத் தெரிஞ்சபடி செய். நான் பின்னேரம் ஊட்டிக்குப் போறன்.” குட்டி சென்று விட்டான். நடுத்தெருவில் போக்கிடம் தெரி யாமல் தன்னந் தனியனாய் நிற்பது போல உணர்வு தங்கராசனுக்கு.
来源 e 掌
** அம்மா! அடுத்த கிழமை நான் ஈழத்துக்குப் போகப் போறன். உங்களிட்டைச் சொல்லிப்போட்டுப் போகத்தான் வந்தனான்’ தங்கராசன் கூறினான்.
ஒருகணம் திடுக்கிட்டுப் பின் 'இப்ப போவது பிரச்சினை யில்லையே” என்றாள் அம்மா.
**இவையாவது போறதாவது. சும்மா பகிடி விடுகினம்” இது சுமதியின் விமர்சனம்.
* நாங்கள் பகிடிக்காரர்தான். ஆனால் இது பகிடி யில்லை. பிறகு சொல்லாமல் கொள்ளாமல் போட்டாடே என்று கவலைப்படாதையுங்கோ. வேலை நிறைய இருக்கு. போகவேணும் வரட்டோ” என்று எழுந்தவனை வாசற் படியருகில் அசைந்த நிழல்கள் தடுத்தன.
**நளினி! இவர் அடுத்த கிழமை சிலோனுக்குப் போறாராம்” என்றாள் சுமதி.
*ஒரு திருத்தம். ஈழத்துக்கு” என்றான் தங்கராசன்.
நளினி ஒரக்கண்ணால் உற்றுப் பார்த்தவாறு உள்ளே சென்றாள். ஹான்ட் பாக்கை வைத்துவிட்டுக் குசினிக்குள் வரும் போது சுமதி அறைக்குள் எதையோ தேடிக் கொண் டிருப்பது தெரிந்தது. தேனீரைத் தானே தூக்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டு அவள் குசுகுசுத்ததின் அர்த்தம் * காலை 11 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் சந்திக்கவும் எனப் புரிந்து கொண்டான் தங்கராசன்.

Page 28
48
சுமதி அதற்கிடையில் தயாரித்திருந்த ஒரு பார்சலை * தயவு செய்து இதை இந்த விலாசத்தில் குடுத்து விடுங்கோ' என நீட்டினாள்.
அவசரமாகப் புறப்பட்டு விட்டான் தங்கராசன். ஆனால் அவனது மனது மட்டும் அங்கேயே தங்கிவிட்டது. நிமிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகமாகக் கழிகிறது. எதற்காக வரச் சொன்னாள்? ஏன் தனிமையில் சந்திக்கச் சொன்னாள்?
率 来源 米
வள்ளுவர் கோட்டம் மிக அமைதியாக இருந்தது. கந்தேரில் அமைந்திருந்த வள்ளுவன் போதனைகள் கல்மேல் எழுத்துக்களாக மிளிர்ந்து கொண்டிருந்தன. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இங்கும் அங்குமாக புற்றரைகளின் மீது நடந்து கொண்டிருந்த தங்கராசனை *ஹாய்" என்ற குரல் ஈர்த்துவிட்டது.
சில வேளை வரமாட்டீங்களோ எண்டு நினைச்சன்” என்றாள் நளினி.
**ஏனப்படி நினைச்சனிர்”
**சும்மாதான்”
* ஏன் வரச் சொன்னிர்”.
**சும்மாதான்”.
** என்ன எல்லாத்துக்கும் சும்மாதான் பதிலோ”.
** அப்படியில்லை. அதிலை இருந்து கதைப்பமே” என்றபடி படிக்கட்டுகளைச் சுட்டிக் காட்டினாள். இருவரும் நடந்து படிக்கட்டுகளில் வந்து இருந்து கொண்டனர்.
'நான் கணக்க கதைக்க விரும்பேல்லை. நீர் ஈழத்துக்குக் கட்டாயம் போகத்தான் வேணுமே”.
**ஓம். ஏன் உப்பிடிக் கேட்கிறீர்”.

49
a d e
நீண்ட மெளனம். மெளனத்தைக் கலைத்த தங்கராசன் ** என்ன என்றாலும் சொல்லுறதை நேருக்கு நேர சொல்லுங்கோ.”
**நான் உங்களை விரும்புறன்” என்று நிமிர்ந்து அவனை உற்றுப் பார்த்தாள் அவள்.
**நானும் இதே மாதிரி உம்மிடம் சொல்லத்தான் இருந்தனான்.”
**நானும் இதே மாதிரி உம்மிடம் சொல்லத்தான் இருந்தனான். நீர் முந்தியிட்டீர் பரவாயில்லை. ஆனால் நான் ஆர் எண்டு உமக்குச் சரியாகத் தெரியுமெல்லோ? தெரியாமல் தானே இப்படி முடிவு எடுத்தனிர்”
**இல்லை. எனக்கு உங்களைப் பற்றி முழுக்கத் தெரியும்” என்றவள் தொடர்ந்து அவனது சொந்தப் பெயர், ஊர் என்பது முதல் விஞ்ஞானப் பட்டதாரியாகி ஐரோப்பா சென்று ஈழப் போராட்டத்திற்காகத் திரும்பி சென்னை வந்து சேர்ந்தது வரை தனக்குத் தெரிந்த முழுவதையும் கூறி முடித்து விட்டு 'சரி தானே’ என்பது போல் அவனைப் பார்த்தாள். w
‘என்னைப் பற்றி இவ்வளவு அக்கறையாய் நீங்கள் இருப்பீங்களெண்டு நான் எதிர்பார்க்ககேல்லை. நீங்கள் சொன்ன இதே மாதிரி விசயங்களை நானும் உங்களைப் பற்றி அறிந்திருக்கிறன். ஆனால் நான் வாற கிழமை ஈழத்துக்குப் போறன்.”
**கட்டாயம் போகத்தானோ வேணும்?” செல்லச் சிணுங்கல்.
**இது கட்டாயம் மட்டுமல்ல. என்ரை கடமையும்கூட. இதில் நான் தவற முடியாது.”
g-4

Page 29
50
* அப்ப நான்”.
"வீட்டை இதைப்பற்றி தெரியுமோ? * இன்னும் தெரியாது". "அப்பிடி எண்டால் நான் அமைப்புத் தோழர்களோடை
கதைச்சு முடிவு செய்து போட்டு வீட்டை வந்து அம்மாட் டையே நேர விஷயத்தைச் சொல்றேன்”.
*ஐயையோ வேண்டாம். அம் மா வுக் கு நான் சொல்லுறன்’
*"அது உங்கடை பிரச்சனை. நான் அமைப்புத் தோழர் களோடு இதைப் பற்றிப் பேசி அவர்களின் ஆலோசனையோடு சந்திக்கிறன். அநேகமாய் வீட்டை நீங்களே சொல்லுறது நல்லது. அதாலை வீட்டிலை ஏதும் பிரச்சனையெண்டால் முகம் கொடுக்கலாம்தானே. நீங்கள் உழைக்கிறனியள் தானே!”
**நீங்கள் போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டு போனால் என்ன?”
**அது கஸ்ரம். இப்பதான் முதல் முறையா நாங்கள் மனம் விட்டுக் கதைச்சிருக்கிறம். அதுக்கிடையிலை இப்பிடி முடிவெல்லாம் எடுக்க வேண்டாம். அமைப்பு அதை ஏற்காது”.
*சரி. நீங்கள் யோசிச்சிட்டுச் சொல்லுங்கோ’
*பிறகு சந்திப்பம்"
கனத்த யோசனைகளோடு படிக்கட்டுகளில் மெதுவாக இறங்கி நீண்ட புல்தரையைக் கடந்து, மீண்டும் வெளி வாசற்புற படிக்கட்டுகளில் ஏறி இறங்கிப் பிரியும்போது நேரம் மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
率 宋 米

51
இத்தனை நாளும் வந்த கடிதங்களிலிருந்து இது மாறு பட்டதாய். தங்கராசன் இதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை. இரண்டொரு வரிகளில் தனது காதல் முடிவடையும், முற்றுப்பெறும் என்பதை எவரும் எதிர்பார்க்க முடியாது தான். ஆனால் இந்த இரண்டொரு வரிகள் இரண்டு மனங் களின் எண்ண இடைவெளியை அளவிட்டுக் காட்டப்போது மானதாக இல்லை. இதிலிருந்த ஒவ்வொரு சொல்லும் ஆயிரம் மைலுக்கும் மேலான நீளம் கொண்டதாய், இந்துப் பெருங் கடலையும் விட ஆழம் கூடியதாக.
ஒரு வருடத்திற்கும் மேலாகப் பழகிய இனிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். எங்கெங்கோ பிறந்து - எப்படியெப் படியோ திரிந்து, பறந்து வளர்ந்து அன்னிய மண்ணில் முளைத்த எனது காதல் எமது மண்ணில் செழித்து விளையாது போலும் என எண்ணிக் கொண்டான். அவளை நான் கோபிக்கப் போவதில்லை. ஏனெனில் அவளொரு சாதாரண பெண். அதே அடிப்படையில்தான் அவளது சிந்தனை அமைய முடியும். நானும் அப்படியா? என அவனை எழுப் பும் கேள்விக்குரிய டதில் அவனுக்கு மட்டும் சொந்தமான தல்ல. ஆனால் அவளது கடித வரிகள் அவனுக்கே எழுதப் பட்டிருந்தவை.
*"எங்கடை நிலேசன்ஸ் ஒருதரும் இப்ப ஜவ்னாவில் இல்லை. ஆனபடியால் நான் உவ்விடம் வருவது சாத்தியப் படாது. எனவே நீங்கள் இங்கு வந்தால் அண்ணன் டிக்கட் அனுப்பி எங்கள் இரண்டு பேரையும் பரிசுக்கு (பாரீஸ்) கூப்பிடுகிறாராம். ஆதலால் உடன் வரவும்.”
------> ii semre66ir
இப்போது அவர்களைப் பிரித்து வைத்திருப்பது ஆழம் காண முடியாத இந்துப் பெருங்கடல் மட்டும் அல்ல!
ஜனவரி 1987.

Page 30
வாழத்தான் போகிறாள்
*திருமண வீட்டில் ஷெல் விழுந்ததால் மாப்பிள்ளை ஸ்தலத்திலேயே பலி’ என்ற செய்தி காற்றடித்த திசையங்கும் காட்டுத் தீ போல் பரவிவிட்டது.
*"ஐயோ பாவம்” என்ற அனுதாபம் கலந்த பெருமூச்சை எறிந்த படியே தங்கள் அலுவலைக் கவனிக்கும் மாந்தர்கள் ஒருபுறம்.
*"கல்யாணம் கட்டி வீட்டுக்கு வரும்போதே வெள்ளைச் சீலை கட்ட வேண்டியதாய்ப் போச்சு” எனப் பிலாக்கணம் பாடும் சுமாரான பெண்மணிகள்.
**உனக்குத் தெரியுமே சாதகம் பொருத்தமில்லையாமடி,
அவளுக்கு ஏழுச் செவ்வாயாம். அதுதானடி இப்படி நடந்த தாம்” என்றாள் ரியூட்டாரி மாணவி சுகிர்தா.
‘விசர்க்கதை கதையாதை. உனக்கெப்படித் தெரியும்? சுகிர்தாவின் சகா கிறேரின் கேள்வி.
*"இஞ்சை அந்தப் பிள்ளை தீவுப்பக்கம் இருக்கிறதாம். இது காதல் கல்யாணமாம். இரு வீட்டிலையும் பலத்த எதிர்ப்பு இருந்தபடியால் ஆரோ சிநேகிதர் வீட்லைதான் கல்யாணவீடு நடந்ததாம். காலைமை முகூர்த்தத்திற்கு துர்க்கை அம்மன் கோயிலில் தாலிகட்டிவிட்டு வீட்டுக்கு வரும் வழியிலை நாச்சிமார் கோவிலடியில் கும்பிடும் போதுதான் ஷெல் வந்து விழுந்ததாம்”. இது சொர்ணத்தின் விபரணம்.

53
"பாவமடி அவள்! இனி வீட்டையும் போகேலாது. புருஷன் வீட்டை போனாலும் என்ரை பிள்ளையைக் கொண்டு போட்டியேடி என்ற புறுபுறுப்பு. என்னடி செய்யப் போகிறாள் அவள். எப்பிடிச் சீவிக்கப் போறாள்” பவளத்தின் யோசனை.
"அவள் ரவுணிலை இருக்கிற புடைவைக் கடையிலை வேலை செய்கிறவளாம். அங்கை வேலை செய்யேக்கைதான் இந்த லவ் வந்ததாம்” எனப் பவானி சொல்லத் தொடங்கி யதும் கொல்லேன்ற சிரிப்பு அலை ஒன்று எழும்பி ஓய்ந்தது.
*உனக்கு எப்பவும் சிரிப்புத்தான்" சுகிர்தாவின் கோபம்.
*நானே முதல் சிரிச்சனான். பவளம் சிரிச்சதைப் பார்த் துத்தானே நான் சிரித்தனான்" நீ ஏன் என்னோடை கொழுவுப்படுகிறாய். கிறேஸின் விளக்கம்.
**ஏழில் செவ்வாய் இப்படித்தான் செய்யும்” நடந்த சம்பவத்திற்கு சாத்திர விளக்கம் சொல்லும் எட்டு முழ வேட்டிக்காரர்கள்.
* "பெரியாக்களை பெற்றோரை மதிக்கவேணும். இல் லாட்டி உப்பிடித்தான். கலியாணம் எண்டால் சும்மாவே. தாரமும் குருவும் தலையெழுத்தெண்டு என்னத்துக்கு சொல்லி வைச்சிருக்க வேணும். கொஞ்சமும் பொறுப்பில்லாமல் கண்ட தும் காதல் எண்டு அலைஞ்சா உப்பிடித்தான். அனுபவிக்க வேண்டியதுதான். ஆரென்ன செய்ய ஏலும்” தேநீர்கடையில் இருந்த பெரியவர் ஒருவர் தன் நண்பனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த செல்லத்துரை ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள் ஒரு பத்து விதமான விமரி சனங்களை விளக்கங்களை சமாளிப்புகளை அனுதாபப் பெருமூச்சுக்களை எல்லாம் சந்தித்து விட்டான். ஆனால் இதில் என்ன பெரிய பிரச்சனை என்பது அவனுக்கு விளங்க வில்லை. ஷெல் அடிப்பது என்பதுவும் சனக் கூட்டத்தின் மத்தியில் விழுந்து வெடிப்பது என்பதுவும் அதில் சிலர்

Page 31
54
கொல்லப்படுவதும் யாழ்ப்பாண நகருக்கு அப்படியொன்றும் புதினமான விடயமில்லை. அப்படிப் பலர் கொல்லப்பட்ட போது போராட்டத்தில் இழப்புக்கள் நேரும்தானே எனச் சகஜமாகப் பலர் பேசுவதைக்கூடக் கேட்டிருக்கிறான், இன்றும் அப்படித்தான் ஷெல் அடிக்கப்பட்டிருக்கிறது. அது சனக் கூட்டத்தின் மத்தியில் விழுந்து வெடித்திருக்கிறது. ஆனால் இந்த சனக் கூட்டம் ஒரு "திருமண விழா". அதை விட இதிலை வேறை என்ன இருக்கு? ஒ1 செத்தவர் மாப் பிள்ளையாய் இருந்தவர். அதுதான் விசயமா! அதில் விசேட அக்கறை செலுத்த என்ன காரணம் ஏன் இப்படிச் சுத்திச் சுத்தி எல்லாரும் இதைப் பற்றியேக் கதைக்கிறார்கள்?
"ஒரு பொழதேனும் வாழ முடியவில்லையே” என்று பெண்ணின்மீது கொண்ட அனுதாபமா?
வாழவேண்டிய இளம் வயதில் ஒரு இளைஞன் அப்பாவித் தனமாகப் பலியாக நேர்ந்துவிட்டது பற்றிய ஆத்திரமா?
இனிமேல் இவள் எப்படி வாழப் போகிறாள் என்பதை யிட்டுக் கொண்டுள்ள ஆதங்கமா?
சமூகம் அவள் மீது சுமத்தப் போகும் வசைமொழிகள் பற்றிய எண்ண வெளிப்பாடா?
அல்லது போனால்,
விதியின் விபரீத விளையாட்டு என எண்ணிக் கொள்ளும் மனோபாவமா? அல்லது இவை அனைத்தும் கலந்த ஒன்றா? இல்லாவிட்டால் இவற்றைவிட இதையிட்டு அலட்டிக்கொள்ள வேறேதும் காரணம் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண முயன்று கொண்டிருந்தான் செல்லத்துரை. பரமேஸ்வராச் சந்தியில் தேநீர் குடித்துவிட்டு ஒரு சிகரட் பற்ற வைத்தவாறு பஸ்சுக்காகக் காத்திருக்கும் இந்த வேளை இவனுக்கு இந்தக் கேள்விகள்தான் மனத் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

55
பல்கலைக் கழகத்திலிருந்து வந்த மாணவிகள் சிலர் சீரியஸாக இதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதற்குக் காது கொடுத்தான்.
**எடி உனக்கு இப்படி வந்தா என்னடி செவ்வாய்?” சிவப்புச் சட்டைபோட்ட சிலுப்பாத் தலையுடன் நின்றவளின் கேள்வி.
*பிறகென்னடி வாழ்க்கை வேண்டிக்கிடக்கு பச்சைசாறி உடுத்தும் பவ்யமாக நின்ற ஒருத்தி பதிலளிக்கிறாள்.
*அப்ப என்ன நீயும் செத்துப் போவன் எண்டா சொல் லுறாய்?" கறுப்பு அரைப்பாவாடையும் றோஸ் கலரில் மேல் சட்டை போட்ட ஒருத்தியின் கேள்வி.
மெளனத்தையே பதிலாக்குகிறாள் பச்சை சாறி.
**இதுக்கெல்லாம் சாகேலுமே. கவலைதான். இதுக்கு மட்டும்தான் மனித சீவியமோ? கலியானமில்லாவிட்டால் வாழ இயலாதோ?” இரண்டடைப் பின்னலோடு கவுண் போட்டிருந்தவள் சிந்தனை.
இஞ்சை இதெல்லாத்தையும் இதிலை நிண்டே கதைக் கிறது. விடுங்கோடி கதையை. சும்மா வம்பளந்து கொண்டி ருக்கிறியள். அவளின் ரை வேதனை அவளுக்கு. உங்களுக் கென்ன வாயை வைச்சுக் கொண்டிருங்கோவன்” சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த பூப்போட்ட சட்டை இப்படி ஆலோசனை கூறினாள்.
**ஒ, உனக்கென்ன. அவர் வெளிநாடு போட்டாரெல்லே. நீ உப்பிடித்தான் கதைப்பாய்’ என்றாள் சிலுப்பாத் தலைக் காரி. சிரிப்புப் பெரிதாக அலை எழுப்பவும் பஸ் வந்து நிற்க வும் அவ்வளவு பேரும் ஏறிக் கொள்கிறார்கள். - - - - - - செல்லத்துரைக்கு பஸ்சிலை ஏறவும் பிடிக்கவில்லை.
நேராக அந்தச் செத்த வீட்டிற்கு விஜயம் செய்து அந்தப் பிள்ளை என்னதான் யோசிக்கிறாள் என்பதை நாடி பிடித்துப்

Page 32
56
பார்ப்போமா? என்ற சிந்தனை மேலிட தோளில் கிடந்த பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தவாறு நாச்சிமார் கோயிலடியை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டான்.
* 米
குலை தள்ளிய கதலி வாழை மரம் இரண்டு கவனிப் பாரற்று மூலையில் கிடக்கிறது. வாசலில் இரண்டு சாம்பல் மொந்தன் வாழைகள் கட்டப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டுவதற்காய் தென்னைக் குருத்துகள் வெட்டப்பட்டுப் போடப்பட்டிருக்கிறது. அப்பால் இரண்டு கமுகு மரங்களைப் பிளந்து பாடை கட்டும் வேலைகள் நடந்து கொண்டிருக் கிறது. அடுக்கப்பட்டிருந்த இரும்புக் கதிரைகளில் பலர் இருந்தனர். ஆனால் யாரும் எதுவுமே பேசாமல் ஒருவித அமைதி நிலவுகிறது.
இந்த அமைதியை அவ்வப்போது எழும் பெண்களின் ஒப்பாரி ஓசை மட்டுமே குலைக்கிறது. உற்றவர்கள் வரும் போது உச்சஸ்தாயியில் எழும் அழுகுரலோசை சற்று நேரத் தில் மெல்லியதாகி பின்னர் அதுவும் அற்று அமைதியாகி பின்னர் ஏறுவதுமாக இருக்கிறது.
இடையிடையே நிலவும் அமைதி அங்கிருந்த அனைவர் நெஞ்சையும் கசக்கிப் பிழியும் ஒரு நிகழ்வாக.
செல்லத்துரை மெதுவாகக் கதைக்கத் தொடங்கினான். "அன்னை “பொடி வந்திட்டுதோ..? *இல்லைத்தம்பி. கொர்ணர் விசாரணை முடியேல்லை uu JTubʼ.
“எத்தனை மணிக்கு பிரேதம் எடுக்கிறதாம்’ *பொடி வந்த தும் எடுக்க வேண்டியதுதானாம், எம்பாமிங் செய்ய ஏலாது. அதனால் வைச்சிருக்க ஏலாது?’

57
*அப்படியோ! பெண்பிள்ளை எங்கை?"
*அவளும் ஆஸ்பத்திரியிலைதான். கொர்ணர் விசா ரணைக்காக’ என்றவர் மேலும் தொடர்ந்து,
*பெம்பிளை உடுப்புக்கூட யாத்தேல்லை. அப்படியே போயிட்டாள். அங்கைதான் நிற்கிறாள். பாவம் பிள்ளை’.
சற்றுநேரம் தான் போயிருக்கும். குடிகொண்டிருந்ந அமைதியைக் குலைத்தபடி கேர்ஸ் வண்டியொன்று வந்து நின்றது. அதிலிருந்து பிரேதப் பெட்டி இறக்கப்பட்டு தயாராக இருந்த கட்டிலொன்றில் வைக்கப்பட்டு விட்டது.
மூடியைத் திறந்தபோது பெண்களின் கதறல் ஒலி உச்சஸ்தாயியையும் கடந்து கொண்டிருந்தது. கேர்ஸ் வண்டியின் முன்பக்கக் கதவைத்திறந்து கொண்டு இறங்கிய ஒருத்தியின் அரவணைப்பில் பெம்பிளைக் கோலத்தில் அவள். மிரண்ட விழிகள் தெறித்த பார்வையில் ஏதோ ஒரு உறுதி தென்படுவதாக செல்லத்துரை யூகித்துக் கொண்டான்.
அவளை அழைத்துச் சென்றனர் பெண்கள். சற்று நேரத்தில் வெள்ளைச்சீலை உடுத்தியபடி ஒரு மூலையில் அவளிருக்க தாலிக்கொடி மட்டும் பிரேதப்பெட்டியின் மேல் மூலையில் அனாதரவாகக் கிடந்தது.
அவள் என்ன செய்கிறாள்? இன்று எத்தனையோ பேரின் வாயில் கடிபட்ட அந்த அபலைப்பெண் - நேற்றுவரை யாரும் கவலைப்படாத (நாளைக்கும் யாரும் கவலைப்படப் போவதில்லைத்தான்) அந்தப் பெண் என்ன செய்கிறாள் - என்ன செய்யப் போகிறாள் என்பதை ஊகிப்பதே செல்லத் துரையின் கவனமாய் இருந்தது.
பெரிதாகச் சத்தம் போட்டு விழுந்து குழறி அழுது கொண்டிருக்கவில்லை அவள். சோகமயமான அவளது தோற்றத்திலும் ஒரு கம்பீரம் இருந்தது. மிரண்டு வெறித்த அவளது பார்வையில் சமூகத்தைச் சுட்டெரிக்கும் ஒரு

Page 33
58
கோபம் இருந்தது. நேற்றுவரையில் எங்கள் காதலை அங்கீ கரிக்க மறுத்த அவரது பெற்றோர் சகோதர சகோதரிகள் அனைவரையும் கேலி செய்வதுபோல இருந்தது. ஏன் அவளது பெற்றோர் கூடத்தானே சம்மதம் தெரிவிக்கவில்லை. அம்மாதான் எவ்வளவு குழறினாள். அப்பர் சீதனம் தர மாட்டன் எண்டு மிரட்டினாரே, "பாருங்கோ நீங்களெல்லாம் எங்கள் காதல் எப்படி உலகமெல்லாம் அம்பலமாகி நிற் கிறது. இது எனக்குச் சோகமே - துயரமே. இதையும் தாங் கியபடியே நான் வாழ்வேன். சமுதாயக் கட்டுமானங்களால் சீர்குலைக்கப்படும் காதலர்களுக்குச் சாட்சியாக நானும் வாழ்வேன். என் வாழ்வில் குறுக்கிட்ட இயமன்கள் என் நாட்டிலிருந்து துரத்தப்படும் வரை தன்னந்தனி மரம் என்றா லும் நான் வாழ்வேன் என்று அவள் முரசுறைந்து சொல் வது போல இருந்தது செல்லத்துரைக்கு.
*நீ வாழ்வை இழக்கவில்லை. ஏனெனில் நீ அதைப் பெறவேயில்லையே முனகிக் கொண்டிருந்தான் செல்லத் துரை.
O

நவீன சுயம்வரம்
வீடு முழுவதும் ஒரே பரபரப்பு. பார்வதி மாமி வந்து **பிள்ளை பத்திரமாய் போய்ச் சேர்’ என்று தனது வாழ்த் தைத் தெரிவித்துவிட்டுச் செல்கிறாள்.
"இஞ்சை கணக்க பார்சல்களை கட்டாதையும். வழியில் ஒவ்வொரு செக்கிங்கிலையும் உவ்வளவையும் பிரிச்சுப் பிரிச்சுக் கட்டுறதுக்குள்ளை சீவன் போயிடும். ஆனபடியால் சுருக்கமாய் ஒரு இரண்டு சூட்கேசுகளை மட்டும் கொண்டு போறமாதிரி பக் பண்ணும்’ என்று தன் ஆலோசனையைக் கூறிய படியே உடுப்புக்களை மடித்துக் கொண்டிருக்கிறாள் பள்ளிக் காலத் தோழி பவானி.
'பிள்ளை, என்ன இருந்தாலும் கனகாலத்துக்குப் பிறகு ஆசை அருமையா தம்பி சாப்பிடுவான் என்று சொல்லி முட்டைமா செய்திருக்கிறேன். அதை மட்டும் விட்டுட்டுப் போடாதை’ அது மச்சாள் மரகதத்தின் அன்பான
5-606.
*கொடி (அதுதான் தாலிக்கொடி)ப் பெட்டிக்கு உள்ளை வைச்சுக் கொண்டு போனால் கடத்திக்கொண்டு போறது எண்டு பிரச்சினை வரும். ஆனபடியா ஓர்போட்டிலை போகேக்க எடுத்துப் போட்டுக் கொண்டுபோ. என்ன கேட்டுதோ’ இது அப்பாவின் அதிகாரக் குரல்.
*சீச்சீ காலந்தான் என்னமாய் கெட்டுப் போய்க்கிடக்குது. ஒரு பொம்பிளைக்குத் தேப்பன் சொல்லுற கதையே இது.

Page 34
60
பெம்பிள்ளைப்பிள்ளை தானே! தன்ர கழுத்திலை அதுவும் முன்னம் முன்னம் தாலிக்கொடியைப் போடுறதோ அப்பிடிப் போடச் சொல்லி தேப்பன் வேறை சொல்லி அனுப்பு கிறதோ ? இதை நான் இப்ப கேட்கப் போனால் அறளை பேந்துபோய் அலம்புறம்” என்று கனகம்மா மெளனமாகப் புறுபுறுக்கிறாள்.
"கெளரி 1 நாடு பல தேசங்கடந்து புருசனோடை சீவிக்கப் போறனி எதிலும் கவனமாய் இருக்கவேணும். கூப்பிட்ட குரலுக்கு எல்லாம் ஓடி வாறதுக்கு ஆக்கள் இருப்பினை எண்டு நினைக்கப்படாது. நீயும் உன்ரை குடும்பமும் என்றதோடை புருசனோடை சந்தோசமாய் சீவிக்கிறன் என்பதைக் கேள்விப்பட்டால் தான் என்ரமனம் ஆறுதல்படும் தெரியுமோ. உன்னை நல்லாக்குறதுக்கு நாங்கள் என்ன கஷ்டப்பட்டம் உனக்குத் தெரியும்தானே. அந்தப் பொறுப்போடை நடக்கவேணும். இதுக்கு மேலே நான் சொல்லறதுக்கு ஒண்டுமில்லை. கவனம்’ இது அம்மாவின் ஆலோசனை.
இப்படிப் பலபேர் ஆலோசனை கூறிக் கொண்டிருந் தாலும் கெளரி எல்லாவற்றையும் கேட்டபடி தனக்குள்ளேயே யோசிக்கிறாள். அவள் தன் எதிர்கால வாழ்க்கை, கணவன், குடும்பம் பற்றியெல்லாம் கற்பனை பண்ணி மன அரங்கில் எத்தனையோ படங்களைத் தீட்டியிருக்கிறாள். கண் நிறைந்த கணவனோடு மற்றவர்கள் மதிக்கும் வண்ணம் எப்படி வாழலாம் என்று எண்ணியிருக்கிறாள். பெரியதொரு உத்தியோகம் பார்க்கிற, கை நிறைய காசு சம்பாதிக்கிற கணவனுடன் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைப் பற்றி அவள் எண்ணியிருக்கவில்லை. சாதாரணமாக உழைக்கக் கூடிய கண்ணியமான ஒரு ஆண் மகன் பற்றி சிந்தித்திருந் தாலும் நிச்சயமாக தான் கணவனைத் தேடி ஜெர்மனிக்குச் செல்வேன் என்பதை அவள் சத்தியமாக கனவிலும் கூட எண்ணவில்லை,

61
கெளரியின் கல்யாணப் பேச்சு அந்த வீட்டில் சுமார் ஒரு வருடமாக கதைக்கப்பட்டபோதும் அவள் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. சாதகமெல்லாம் பார்த்தாச்சு நல்ல பொருந்தம்” என்று அப்பாவும், அம்மா வும் ஒருநாள் கிசுகிசுத்தபோதும் இனி சீதனப்பேச்சு 1 அதற்குப்பிறகு பொம்பிளை பார்ப்பு!! இப்படி எத்தனையோ சம்பிரதாயங்களைக் கடந்தாக வேண்டுமே என்றுதான் கவலைப்பட்டாள்.
சுமார் ஒரு மாதமிருக்கும். அன்றுதான் அப்பா ஒரு போட்டோவைக் காட்டி உனக்கு இவரைத் தெரியுமோ ? எனக் கேட்டார். அது ஒரு பாஸ்போட் சைஸ் போட்டோ. உடனே கையில் வாங்கி வடிவாக உற்றுப் பார்த்தாள். அவளுக்கு தெரிந்த முகமாயில்லை. அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே இது ஆர் தந்தது? எங்காலை வந்தது ? என்று அப்பாவிடம் கேட்டாள். நேரடி யாக எந்த பதிலையும் அளிக்காமல் அம்மாவைக் கேட்டுப் பார் தெரியுமோ என்று சொல்லி அனுப்பினார். ஏன் நீங்கள் சொல்லக் கூடாதோ என்று சிணுங்கலுடன் கேட்டுவிட்டு அறைக்குள் ஏதோ அலுவலாயிருந்த அம்மாவிடம் இது ஆர் அம்மா எனக் கேட்டாள் கெளரி.
படத்தை ஒருகையில் வாங்கியபடியே அம்மா "இது ஆர் கந்தையர் தந்தபடமோ ?” என்று கேட்டாள் அப்பாவிடம். *ஒமோம்! என்று உரத்த சத்தத்தில் சொன்னவர் கூடவே இது போறதுக்கு முதலே எடுத்த பாஸ்போர்ட் படமாம். அங்கே போனாப் பிறகு எடுத்த படங்களோடை பின்னேரம் மரகதத்தையும் கூட்டிக்கொண்டு வாறன் எண்டு கந்தையர் சொன்னவர் என்று முடித்தார்.
கந்தையர் என்ற பெயரைக் கேட்டவுடனேயே கல்யாணத் தரகர் கந்தையர் பற்றித்தான் கதை போகுதென் பதைக் கெளரி ஊகித்துக் கொண்டாள். அதனால் தனக்குப் பேசப்படும் எதிர்கால கணவனின் படமென உணர்ந்ததால்

Page 35
62
தாயிடம் படத்தை வாங்கி மீண்டுமொரு முறை உற்றுப் பார்த்தாள். யார் இவர் ? எந்த ஊர் ? என்ன தொழில் செய்கிறார் ? எப்படிப்பட்டவர் ? இவரது குடும்பம் எத் தகையது? என்றெல்லாம் அம்மாவிடம் கேட்கவேண்டும் என்று தோன்றினாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். படத்தில் வைத்த கண்ணை மட்டும் எடுக்காமல் எதிர்காலக் கணவரின் குண நலன்கள் ஏதும் இந்த முக விலாசத்தில் புதைந்து கிடக்குமோ ? எனத் தேடிக் கொண்டிருந்தாள். அழகாக வெட்டப் பட்டு ஒழுங்காக வாரியிடப்பட்டிருக்கும் தலை, கறுத்தமீசை. சுமார் இருபத்தைந்து வயதை மதிப் பிட்டுக் காட்டக்கூடியதாயிருந்த முகம். காதுக்குக் கீழ் வரை சைட்போன்ஸ் வைத்து சவரம் செய்திருக்கும் பாவனை அலங் கரிப்பதில் கொஞ்சம் நாட்டம் இருப்பவர் போல காட்டினா லும் ரை, கோட்டு என்பன இல்லாதிருக்கின்றமையால் இரவல் பவிசுதேடக் கூடியவரல்ல என்பதைக் காட்டும் எனக் கொள்ளாலாம். போறதுக்கு முன்னம் எடுத்த படமெண்டால் இவர் இப்ப எங்கையிருக்கிறார் ? சவுதி, துபாய், ஜெர்மனி எந்த நாடாயிருக்கும் ஏன் என்றால் இது பாஸ்போர்ட் போட்டோ. வெளிநாட்டில் இருந்து வந்தவர் எண்டால் எப்படியிருப்பார் ? சாய் என்ன இருந்தாலும் கபடமில்லாத இந்தச் சிரிப்பு நல்லாத்தான் இருக்கு. கண்ணைப்பார் துறுதுறுவென்று எதையோ தேடிக் கொண்டிருக்கு, மூக்கும் கூட அழகாக சிறிதாக என்ன இருந்தாலும் ஒரு அழகான ஆம்பிளைதான். நெத்தியில மெல்லியதாக ஒரு பொட்டு. ஓகோ நல்லா சாமி கும்பிடுவார் போல, இப்படி இன்னும் என்னென்னவோ அந்த ஒரு படத்தை மட்டும் பார்த்து ஆராய்ச்சி பண்ணியபடி கட்டிலில் சாய்ந்திருந்த கெளரியை இந்தாப்பிள்ளை, தேத்தண்ணி என்று அம்மாவின் குரல் இழுத்து வந்தது.
வெட்கம் கன்னங்களில் குமுழியிட படத்தை மறைத்தபடி
தேநீரை வாங்கப் போனாள் கெளரி. **அந்தப்படத்தை தா பிள்ளை ஒருக்காப் பார்ப்பம்.” அம்மாவின் வார்த்தையில்

63
ஒரு கெஞ்சல். இதையே சாதகமாக்கி "இதாற்றை படம்? ஏன் என்னடடைத் தந்தனியள்!” தான் ஆவலையடக்கிய படியே கேள்வியைத் தொடுத்தாள். 'அப்படிக் கேளடி அதுதான் பார்த்தன். என்ர பேத்தி கெட்டிக்காரிதான்” பாட்டியின் புகழ்ச்சி இது.
*சும்மா போனைப்பாட்டி செல்ல சீறலுடன் இதாரனை அம்மா?’ என்றாள் கெளரி.
இது கந்தையர் பேசின கல்யாணம் என்பதில் தொடங்கி இதுவரை நடந்த கல்யாணப் பேச்சுக்கள், மாப்பிள்ளையின் பெயர், ஊர், சொந்த பந்தங்கள், வம்சம், குடும்பப் புகழ் என்பன போன்ற தனக்குத் தெரிந்த விபரமெல்லாவற் றையும் "கூறி நீ சம்மதம் எண்டால் சரி. கல்யாணம் நடக்க வேண்டியதுதான். பெடியனின் தமக்கை மரகதமும் மற்ற வையும் பெண் பார்க்கப் பின்னேரம் வருகினம்’ என்றவரை
ஒரே பேச்சில் அம்மா சொல்லி முடித்து விட்டாள்.
அவரும் பின்னேரம் வருவாரோ ? என்று கேட்க ஆசைப்பட்டாலும் வெட்கம் தடுத்துவிட்டது.
தனியே போய் யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். பின் னேரம் எப்படித் தன்னை அலங்கரிக்க வேண்டுல் என்பதில் ஆரம்பித்த போது தான், அவரது ரசனை எப்படிப்பட்டதா யிருக்கும் ? என்னவிதமான தின்பண்டங்கள் பிடிக்கும் ? முரட ராய் இருப்பாரா? நோஞ்சானாய் அப்பாவியாய் இருப் பரா ? அல்லது அமுசடக்கித்தனமாக சாதுவாய் இருப்பாரா? என்ற கேள்விகளை எழுப்பிப் பார்த்து அந்த ஒரே ஒரு பாஸ் போர்ட் படத்தில் விடை தேடிக் கண்டுபிடிக்க சிரமப்பட்டுக் கொண்டாள்.
பின்னேரம் வந்தபோது எந்தப் பரபரப்பும் இல்லாமல் சில பெண்கள் வீட்டுவாசலில் வந்திறங்கினர். நடந்து வந்த

Page 36
64
மாதிரியைப் பார்த்தால் பஸ்ஸில்தான் வந்திருப்பார்கள் போல இருக்கிறது. சாதுவான களைப்பு. ஏற்கனவே காத் திருந்த கந்தையா அப்பாவுக்கு ஒவ்வொருத்தராய் அறிமுகம் செய்து வைத்தார். 'இவர்தான் பெடியன்ரை அக்கா மரகதம். இவ தமையன் பெண்சாதி கருணா, 'இவதான் தாய் பொன்னம்மாக்கா. எங்கபிள்ளை கொய்யா வர வில்லையோ? "தெரியும்தானே அவருக்கு நல்ல சுகமில்லை. பஸ்சாலை இறங்கி நடந்து வாறார் பின்னாலை” இவ்வளவு கதையும் தான் எனக்குக் கேட்டுது. பிறகு என்னை தேத்தண்ணி கலந்து பலகாரத்தையும் எடுத்துக் கொண்டு போய் எல்லாருக்கும் கொடுக்கும்படி அம்மா சொன்னாள். நான் போய்விட்டேன். தேநீர் கொடுக்கும் போதும் பலகாரம்பரிமாறும் போதும் என்னவரை கண்கள் துளாவின. என் அலங்காரத்தை எண்ணி நானே அவமானப்பட்டுப் போனதோர் உணர்வுடன் எனது அறையில் பேசாமலிருந் தேன்.
அன்றிரவு அம்மா சொன்னார். 'இப்ப பெர்லினில் இருக்கிறாராம். அவரின்ரை அண்ணன் அதுதான் கருணா எண்டு வந்தாலே அவனின் ரை புருசன் காரன் மற்ற மாதம் குடும்பத்தோடை ஜெர்மனி போறாராம். அவையளோடை கெளரியும் போனால் அங்கேயே கல்யாணமாம், தமயன் இப்ப பாஸ்போர்ட் அலுவல்கள் பார்க்கக் கொழும்புக்குப் போயிட்டாராம். கெளரிக்கும் பாஸ்போர்ட் ஒழுங்குகளைப் பார்க்கிறதுக்குத் தேவையானதுகளை இவை வாங்கிக் கொண்டு போனவையாம். பாஸ்போட்டுடன் வந்த உடனை வெளிக்கிட வேணுமெண்டு ஆயத்தமாய் இருக்கச் சொல்லி விட்டு பஸ்நேரத்துக்குப் போறதுக்காக அவசரப்பட்டுப் போகினம். பிறகு வந்து ஆறுதலாய் எல்லாம் கதைப்பம் எண்டு சொன்னவை” என்று அடுக்கிக் கொண்டே போனாள் அம்மா.
இதைக் கெளரி சற்றும் எதிர்பார்க்கவில்லை தான். ஜெர்மனிக்குப் போவேன் என்றோ தனது கல்யாணம்

65
ஜெர்மனியில் நடக்குமென்றோ கனவு கூடக் காணவில்லை. இப்போ தன் கணவனைப் பற்றிய கற்பனைகளை விடவும் புதிய தேசம் புதிய சூழ்நிலை புதிய நபர்கள் பற்றிய கற்பனைதான் அதிகமாய் விட்டது. தான், தனது குடும்பம், தனது எதிர்காலம் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந் தாள். முன்பின் அறிமுகமற்ற நாட்டில் புதிய வாழ்க்கை தொடங்கப் போவது பற்றி ஆனந்தப்பட்டாலும் அவளை அறியாமலேயே ஒரு பயமும் அவளை ஊடுருவத் தவற வில்லை.
ஒரு மாலையில் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டி ருந்த தனது தம்பியிடம் தன் எதிர்காலம், ஜெர்மனி பயணம், திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள் கெளரி. எல்லா வற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் தம்பி நிரஞ்சன். மெளனமாக இடையிடையே சிறு தலை யசைப்பு. ஆ. அடுத்து என்று கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சன் எனது கதையெல்லாம் முடிந்தவுடன் சிறுபெருமூச் சொன்றை இழுத்துவிட்டு ‘நவீன சுயம்வரம்’ ஒன்று நடக்கப் போகுதென்றான்.
நான் புரியாதவளாக என்ன சொல்லுறாய் தம்பி. நான் இலங்கையில் இல்லையென்றாலும் நீ கவனமாய் படிக்க வேணும். பிறகு நல்லா இருக்கும்போது உன்னையும் அங்கை கூப்பிடுவேன் என்ன ? என்றேன்.
அவனோ.
*"அரைப்போட்டோ ஒன்றை மாத்திரம் துணையாய்க் கொண்டு பெர்லின் தெருக்களில் தனது துணையைத் தேடும் ஈழத்தின் தாயை உன்னிடம் காண்கின்றேன்”, என்று ஏதோ சினிமா வசனம் போலச் சொல்லிட்டு எழுந்துபோய் விட்டான்.
*வண்டுகளைத் தேடி மலர்கள் இப்போ தன் மகரந்தங் களைத் தூது அனுப்புகின்றதோ? என்பதை மீண்டும்
இ-5

Page 37
66
மீண்டும் உரத்த குரலில் சொல்லிக் கொண்டு போகிறான் நிரஞ்சன். கெளரிக்கு எதுவும் புரியவில்லை.
பஸ் ஸ்டாண்ட். கொழும்பு பஸ் புறப்படத் தயாராகி விட்டது. அப்பா, அம்மா, தம்பி, நண்பிகள் சொந்தங்கள் கீழே நின்று கையசைக்கிறார்கள், நான் புதிய உறவு களுடன் வாழ்க்கை எப்படி என்று தெரியாமலே பயணிக்க ஆரம்பிக்கிறேன். சுகமான கற்பனைகளோடும் ஏதிர்கால ஏக்கத்தோடும் பஸ் என்னை இழுத்துச் செல்கிறது. டட்டா, கையசைப்பு தொடர்கிறது. விழியில் இருந்து கொட்டிய சிறுசிறு கண்ணிர் கூட சொந்த மண்ணை சென்றடைய வில்லை.
கனகம்மா இது எல்லாத்தையும் பார்த்துக் கண்ணிர் வடிக்கிறாள். பேத்தியைப் பிரிகிற வேதனையில் கண்ணீர் கடலாய்க் கொட்டுது என்று பக்கத்தில் நின்றவர்கள் பேசிக் கொள்வது கூடக் காதில் விழவில்லை. ஆனால் தன் கண் முன்னாலேயே தானும் தன் பரம்பரையும் கட்டிக்காத்த கலாச்சார மரபுகள் பாரம்பரியங்கள் சிதைவது கண்டு அவளது உள்ளம் தாங்கமாட்டாமல் ஊளையிடுகிறது என் பதை யார்தான் புரிந்து கொள்ளக்கூடும்?
O
சஞ்சீவி

தியாகம்
எனக்கு என்ன நடந்தது என்பதே சரியாகத் தெரிய வில்லை. நான் எப்படி இங்கு வந்து சேர்ந்தேன் என்பதுவும் புரியவில்லை. ஏன் நான் இங்கிருக்கிறேன்? கண்ணை விழித்துப் பார்த்தாலும் எதிரில் நிற்பது எதுவும் தெளிவாகத் தெரியாமைக்கு இருள்தான் காரணம். எழும்பி உட்கார முயற்சித்தேன். உடம்பை அசைக்க சிரமாக இருந்தது. சிறிது அசைத்தேன். கண் தூங்காமல் என்னையே உற்றுப் பார்த்தபடி இருந்தது. ரமேஷ் ‘என்ன வலிக்கிறதா’ எனக்
கேட்டான்.
**அப்படி ஒண்டுமில்லை. குடிக்கக் கொஞ்சம் தண்ணி வேணும்” என்றபடி காலை இழுத்து படுக்கையில் நிமிர முற்பட்டபோதுதான் இரண்டு காலும் விறைத்திருக்கிறது என்பது புரிந்தது. இடது காலில் பெரிய கட்டுப் போடப் பட்டிருந்தது. இரத்தம் பொசிந்து உறைந்து போயிருந்தது. உடம்பு முழுவதும் உரசல் காயங்கள். நான் நிலைமைகளை மீட்டிப் பார்த்து நிலைமையைப் புரிந்து கொள்ள முற் பட்டேன். தண்ணிர்க் கோப்பையுடன் வந்த ரமேஷ் அதனை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு நான் நிமிர்ந்து உட்கார உதவி செய்தான்.
படுக்கையில் இருந்தவாறே இன்றைய அடி எப்படி? மற்றத் தோழர்களெல்லாம் எங்கே? எனக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை அடுக்கினேன்.

Page 38
68
தண்ணீர்க் கோப்பையைக் கையிலே தந்த ரமேஷ், **அடி பரவாயில்லை. வந்த டெலிக்கா வானும் ஜீப்பும் தூளாய்ப்போச்சு; எப்பிடியெண்டாலும் ஒரு இருபது பேராவது செத்திருப்பாங்கள்; எனிமேல் இப்படி வரானுகள்” என்றவாறு தொடர்ந்தபோது நான் கோப்பைத் தண்ணீர் முழுவதையும் காலி செய்திருந்தேன்.
தூரத்தில் எரிந்து கொண்டிருந்த விறகுகளைச் சரிசெய்து விட்டு வெறும் கோப்பையை மீண்டும் நிரப்பியபடி வந்தான் ரமேஷ்.
அருகருகாகச் சில தோழர்கள் தூங்கிக் கொண்ருடிந் தனர். காட்டின் நடுவே அமைந்திருந்த முகாமின் காவற் கடமைகளில் ஈடுபட்டுள்ள தோழர்கள் விழி மூடாமல் பயங்கர இருளை வெறித்துப் பார்த்தபடி ஒவ்வொரு அசைவையும் உற்றுப் பார்த்தபடி **கண்ணன், பாபு, மதன், கிருபா எல்லாம் எங்கை, ரீமிலை ஆருக்கும் பாடோ?” என்றேன் நான்.
* 'இல்லையில்லை; உங்களுக்குத்தான் காயம். மற்றப் படி ஒண்டுமில்லை. கொஞ்சம் சாமானும் எடுத்தனாங்கள். எம். 16 ரவுண்ஸ் எல்லாம் கிடைச்சிருக்கு வந்தாக்களோடை ஒரு முகமூடிக்காரனும் செத்துப் போனான் போல. மற்றவை அடுத்த முகாமில் இருக்கினம். விடிஞ்சதும் டொக்டரிட்டைப் போக வேணும். அதுதான் உங்களை இங்கை கொண்டு வந்தனாங்கள்” என்று ஒரே மூச்சில் சொல்லிக் கொண்டிருந் தான.
நான் கண்ணை மூடிக்கொண்டு இன்றைய நாளை அசை போடலானேன். செங்கலடியிலிருந்து பதுளை செல்லும் அந்த நீண்ட தார் வீதியில் ஒரு கண்ணி வெடித் தாக்குதலுக்கு நாம் தயாராக இருந்தோம். ஆயுதப்படையினர் இந்த வீதி வழியாக உட்புகுந்து தான் பல கிராமங்களில் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அநியாயமான முறையில் பல அப்பாவிகள் பலியாவதையும், வீண் சித்திரவதைக்கும்

69
காணாமற்போவதற்கும் இந்தப் பாதையையே இராணுவத் தினர் பயன்படுத்தி வந்தனர். இதனைத் தடுக்கும் பொருட்டு படையினரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என தோழர்களால் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கண்ணிவெடித் தாக்குதலுக்குத் தயாரானோம்.
来源 来源 案
பொதுசன நடமாட்டம் இல்லாத இந்தப் பாதையில் பன்குடா வெளியை நோக்கிறோட்டுப் பிரியும் சந்தியில் ஒரு பெட்டிக்கடை, வடை, தேனீர் தொடக்கம் சில்லறைச் சாமான்கள் வரை விற்பனை செய்யும் இந்தக் கடையில் தேநீருக்குச் சொல்லிவிட்டுக் காத்திருந்தனர் கண்ணனும் ரமேசும். தேநீர் குடித்து முடிந்ததும் சிகரட் ஒன்றை ஆசுவாசமாகப் பிடித்து முடித்தனர்.
பின்னர் எழுந்து வீதி வழியே நடந்து சென்றனர். அவர்கள் எதிர்பார்த்த வாகனம் வருகிறது. மிகத் தொலைவி லேயே, அந்த பச்சை நிறக் கவச வாகனம் ஒன்றைக் கண்டு விட்டதும் பற்றை ஒன்றினுள் புகுந்து தம்மை மறைத்துக் கொண்டனர். வரிசையாக நான்கு வாகனங்கள் ஒடிச் சென்று மறைந்தன. ரமேஷ் மாலை 4.30 என்று நேரத்தைக் குறித்துக்கொண்டான். கண்ணன் ஒவ்வொரு வாகனத்திற்கும் இடையிலான இடைவெளி நூற்றைம்பது முதல் இருநூறு யார் எனக் கூறினான். மீண்டும் மறுநாள் இதேநேரம் கடைப் பக்கமாகப் போய் தேநீர் குடித்து, சிகரட்டையும் பிடித்துவிட்டு வீதிவழியே மெல்ல நடந்து வருகின்றனர்.
"காரொண்டு வருகுது ஒளிப்பமோ” என்றான் ரமேஷ். *உனக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகந்தான். சும்மா காரை எண்டாலும் போகவிடன்’ எனத் துணிவூட்டிய கண்ணன் நடந்து கொண்டிருந்தான்.
அளவான வேகத்துடன் இவர்களைக் கடந்து சுமார்
இருநூறு யார் சென்ற கார் திடீரென நின்றது. தலையைத்

Page 39
70
திருப்பிய ரமேஷ் கண்களில் துப்பாக்கியை உயர்த்தி இவர் களைக் குறிபார்த்தபடி சாதாரண உடையில் ஒரு வ ன், அவ்வளவுதான். ரமேஷ் ஒடத் தொடங்கினான். கண்ணன் பின் தொடர்ந்தான். துப்பாக்கி வேட்டுக்கள் துரத்திக் கொண்டிருந்தன. தறிகெட்டுத் திசைமாறி ஓடி முகாமிற்குத் திரும்பும்போது இரவு ஒன்பதை அண்மித்துக் கொண்டிருந்தது நேரம்.
மீண்டும் மறுநாள், அதே கடையில் தேநீருக்குச் சென்ற போது ஒடிசலான மெலிந்த தேகமும் வெள்ளை வேட்டியுமாக நின்ற அந்த நடுத்தர வயதுக்காரர் மெல்லிய முறுவல் ஒன்றை வீசினார் தேநீர் கோப்பைகளைத் தந்தபடியே.
'தம்பி நீங்கள் ஏதும் இயக்கத்திலை இருக்கிறவையோ" என்றார். கடைக்கொடுப்புக்குள் சிரித்த ரமேஷ்,
"சீச்சீ, அப்படி ஒண்டுமில்லை"
*நேற்றைக்கு அவனுகள் சுட்டதிலை உங்களுக்கு ஒண்டும் காயமில்லையே”
**இவனுக்கு கையிலை பட்டு எலும்பு முறிஞ்சுபோச்சு, எனக்கு காலிலைபட்டு நடக்கேலாமல் போச்சு” என்று ரமேஷ் நக்கலாகச் சொன்னதைக் கேட்டு முதலில் நிரம்ப அனுதாபப் பட்டார். பிறகுதான் தங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர் கண்ணனும் ரமேசும்.
ஆறுதலடைந்த அந்த மனிதர் வ ய லில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடும் தெரு நாய் ஒன்றும் நேற்றைய துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்ததைச் சொன்னார்.
வீதியைத் தவிர்த்து பற்றை மறையுகளுக்குள்ளால் தமது பயணத்தைத் தொடர்ந்து இன்றும் வந்த வாகனங்கள், அவற்றின் இடைவெளிகள், அண்ணளவாக வரும் ஆயுதப் படையினரின் தொகை எல்லாம் கணக்கெடுத்தாகிவிட்டது.

71.
இவ்வாறாகச் சுமார் இரு வாரங்களுக்கு மேலாக இந்தப் பகுதியைச் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததில் இப்போது கடைக்காரர் நட்புடன் பழக ஆரம்பித்துவிட்டார். எம்மைப் பற்றியும் சாடைமாடையாக அவர் தெரிந்து கொண்டார். தேநீர், சிகரெட்டுக்கு பணம் வாங்காதது மட்டு மன்றி தேவைப்படும் உதவிகளையும் அவரே செய்ய முன்வந்துவிட்டார்.
"நாளைக்கு எங்களுக்கு மூன்று அலவாங்களும் இரண்டு மண்வெட்டிகளும், ஒரு கோடாலியும் வேணும் எடுத்து வைக்க முடியுமே?”
"ஒமோம்! ஊருக்கை இருக்கும். அதெல்லாம் நான் எடுத்து வைக்கிறன்"
மறுநாள் பாரம் தூக்கி வந்த களைப்பு ஒருபுறமும் முழுத் தூரத்தையும் நடந்தே கழித்த களைப்புமாக கடைக்கு வந்து சேர்ந்தனர் கண்ணனும் ரமேசும்.
*நேற்றுச் சொன்ன சாமான் எடுத்திட்டியளே!"
"அதைத்தாறன் இருங்கோவன். தேத்தண்ணி குடித் திட்டுப் போகலாம்".
'இல்லை. சாமான்களைத் தாங்கே, ஒரு பதினைஞ்சு ரீ போட்டு வையுங்கோ அரைமணித்தியாலத்திலை வாறம்.
*சரி சரி பின்னுக்கு இருக்கு எடுத்திட்டுப் போங்கோ",
*பிறகு வாறம்" என்று கூறிக்கொண்டு அலவாங்கு, மண் வெட்டி. கோடரியைத் தூக்கிக்கொண்டு மறைவிடம் வந்து சேர்ந்தாயிற்று.
இன்றைக்கு அமாவாசை. இரவில் வடிவாய்த் தெரியாது என்பதால் பொழுது மைம்மலுக்குள்ளேயே எங்கே? எப்படி? என்ன முறையில் புதைக்கவேணும் என்பதைக் குறித்துக் கொண்டாயிற்று.

Page 40
72
கண்ணன் தானே போய் எல்லாருக்கும் ரீயும் பிஸ்கெட் டும் எடுத்து வரும்போது மணி எட்டை நெருங்கிக் கொண்டது.
மறைவிடத்திலிருந்து மெதுவாகப் புறப்பட்டு வேலை களை ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்யும்போது தூரத்தில் எங்கோ சேவல் கூவிக் கொண்டிருந்தது.
வாங்கிய பொருட்களைக் காலையில் கொடுக்கும்போது ரமேஷ் கேட்டான். ‘அண்ணை, இண்டைக்கு நாளைக்கு ஏதும் கல்யாண வீடு இல்லையே'.
"இருக்குமாப் போல இல்லை. ஏன் கேட்கிறீர்"
'இல்லை நீங்கள் கடையைப் பூட்டுவியள் எண்டுதான்' என மெதுவாக இழுத்தான்.
"கர்த்தால் இல்லை, ஊரடங்குதான் போட்டாலும் என்ரை கடை திறந்துதான் இருக்கும். நான் கடை பூட்ட மாட்டன். கோயில் திருவிழா பார்க்கக்கூட கடை பூட்டிப் போட்டுப் போறயில்லை நான். திடீரென இண்டைக்குப் பூட்டினால் ஆரும் சந்தேகப்படமாட்டினையே.
காரணத்தை விளங்கிக்கொண்ட ரமேஷ் மேலதிகமாக ஏதும் பேசவில்லை.
அதிகாலை நேரம். இருள் விலகும் முன்பாகவே எமது மறைவிடம் நோக்கி வந்த கடைக்காரர் கேத்தல் நிறை தேநீரும், பிஸ்கட்டும், சிகரட்டும் தந்துவிட்டுச் சென்று விட்டார். தினசரி எமது முகாமில் நடக்கும் கலந்துரை யாடலில் அந்தக் கடைக்காரரைப் பற்றியும் கதைகளும் வந்து போகும். அவர் எமக்காற்றிய மகத்தான உதவிகள் பற்றியும் அவருடன் நட்பு ஏற்படுத்திய சுவையான தகவல்கள் பரிமாறப்படும். இப்படியான கதைகளால் அந்தக் கடைக் காரரைக் காணாவிட்டாலும் அவருடன் பழகாவிட்டாலும்
அவரைப் பற்றி என் மனதில் ஒரு படமே விழுந்திருந்தது.

78
முகாமில் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது தனது சொந்தப் பொறுப்பில் தொகையான பணம் திரட்டித் தந்த போது அவரைப் பற்றிய மதிப்பு என்னுள் உயர்ந்து நின்றது. இப்போது நேரம் நெருங்க நெருங்க துப்பாக்கி விசையில் பதித்த கையுடன் இன்றைய தாக்குதலுக்குத் தயாராக நாம் ஒவ்வொருவரும்.
来源
米
நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொலைதூரத் தில் ஒரு டெலிக்கா வான். அதன் பின்னாக ஒரு ஜீப். இன்னும் ஒரு கவசவாகனம். அனைத்தும் மிக மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து வருகிறது என அரை மைலுக்கப்பால் இருக்கும் முதல் சென்றி தகவல் தருகிறான்.
இடையிடையே சிலர் இறங்கிப் பற்றை மறைவுகளைத் தேடிவிட்டுப் பின்னர் வாகனங்களில் மெதுவாக வருகின்றனர். டெலிக்கா நிறுத்தப்பட்டு விட்டது. கடையில் நிற்பவர்களுடன் ஏதோ கதைக்கின்றனர். வேட்டியும், மெலிந்த உருவமும் கொண்ட ஒருவர் அதிரடியின் வானில் ஏறுகிறார். வான் சிறிது வேகமாக முன்னேறுகிறது. தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் அதே வேகத்தில், இரண்டாவது சென்றியும் தனது வேலையை முடித்துவிட்டு தொடர்பு சாதனத்தை மூடி விட்டான்.
எம்மை நெருங்கிவிட்டது. எமது வேலை கணப்பொழுது தான். பேரிடியொன்று கேட்டது. தொடர்ந்து பல வெடிகள் துப்பாக்கிகள் சடசடத்தன. கூக்குரல்கள் எழுந்து ஓய்ந்தன. வேட்டுக்களைத் தீர்த்தபடி கண்ணிவெடிக்குத் தப்பிய ஒருவன் பின்வாங்கி ஓடுகிறான். நாங்கள் ஒவ்வொருவரும் வேகமாகச் செயற்படலானோம். ஆயுதங்களைச் சேகரிப்பதும், சிக்கிய வாகனங்களைச் சல்லடை போட்டுத் தேடுவதுமாக. திடீர் என்று இரண்டு வேட்டுக்கள் என் காலைத் துளைத்தன. தூக்கி வீசப்பட்ட அதிரடி ஒருவன் அரைகுறை உயிரில்

Page 41
74.
தீர்த்த வேட்டு அது. அவனை அதே இடத்தில் சுட்டுத் தீர்த்துவிட்டு அவனது ஆயுதத்தையும் பாபு எடுத்துக் கொண் டான். இதன் பின்னர் நான் இந்த முகாமில்தான் கண் விழிக்கிறேன். நினைவை மீட்டிப் பார்க்கிறேன்.
事 米
டாக்டரை அழைத்து வர ரமேஷ் சென்றுவிட்டான். காலை எட்டு எட்டரை மணியிருக்கும். எனது வலி வேதனை யெல்லாம் என்னை உலுப்பிக் கொண்டிருந்தது. முனங்கிக் கொண்டு கிடந்தேன். இந்த நேரம்தான் இரண்டாம் சென்றி யிலிருந்த மாயவனும் மட்டையும் கண்ணனும் வந்து சேர்ந் தார்கள். கண்ணனின் முகம் அழுது வீங்கியிருந்தது. சோர்வாகக் காணப்பட்டான்.
ஒருவாறு சுதாரித்துக் கொண்டு எழுந்து,
** என்ன கண்ணன்? ஏன் அழுகிறாய்?”
* கடைக்காரர் செத்துப் போனார்" என்றவன் தேம்பத் தொடங்கி விட்டான். அவனால் பேச முடியவில்லை.
ஆமிக்காரர் திரும்ப வந்து அழிவு செய்திருக்கிறான்கள் போல, என நினைத்துக் கொண்ட எனது முகம் தரையை நோக்கியது.
"என்ன இருந்தாலும் இப்பிடியொரு தியாகத்தை எங்க ளால செய்யேலாது" என்றான் மாயவன்.
"என்ன சொல்லுறாய்?" என்றேன் நான்.
நேற்று வரும்போதே அவங்களுக்குக் கண்ணி வெடி இருக்கு எண்டது தெரியுமாம். மெதுமெதுவாய் ஊர்ந்து வந்து கடையடியிலை நிற்பாட்டிப் போட்டு அதிலை நிண்டாக் களிட்டைக் கேட்டிருக்கிறான்கள். நிண்டவர் ஓராள் இந்த இடத்திலை தான் தாட்டிருக்க வேணும் என்று குறிப்புச் சொல்லப் பார்த்திருக்கிறார். உடனே அந்த ஆள் வாருங்கோ

75
எனக்குத் தெரியும். நான் சொல்லுற இடத்திலை நிற்பாட்டி னால் சரி என்று சொல்லிப்போட்டு வானிலை ஏறியிட்டுதாம்.
அதிலை நிண்ட ஆக்களிடம் 'நான் திரும்பிவரமாட்டன்" உங்களைப் போலை காட்டிக் குடுக்கிறவையோடை சீவிக்கிற திலும் பார்க்க சாகிறது மேல்” என்று பேசிப் போட்டுத்தான் வானில் ஏறிப் போனதாம். கண்ணியிலை ஆப்பிட்டுத்தான் ஆள் செத்திருக்கு என விம்மி விம்மி கூறி முடித்தபோது அனைவரது கண்களும் கலங்கிப் போயிருந்தது.
ரமேஷ் திரும்பி வரும்போது அனைவரது கண்களும் கலங்கிப் போயிருப்பதைப் பார்த்துத் திடுக்குற்றுவிட்டான்.
"என்ன ஒருமாதிரி இருக்கிறியள்" * கடைக்காரர் எங்களை விட்டுப் போட்டார்’
சாதாரண மனிதராய், அப்பாவி போல எம்மத்தியில் வாழ்ந்த கடைக்காரரின் அசாதாரணமான துணிகரமான
முடிவைப் பாராட்டினாலும், இழப்பின் வேதனை நெஞ்சைக் குடைய கண்ணிராய் சொரிந்து கொண்டிருக்கிறது.
டாக்டர் காயங்களுக்கு மருந்து கட்டத் தயாராகி விட்டார்.
03.04.1985

Page 42
சிவப்புக் கோடு
இண்டைக்கு எப்படியெண்டாலும் நேரத்தோடையே வேலைக்குப் போயிடவேணும். சைக்கிளில் ஓடிக் கொண்டி ருந்த கைலாசனின் சிந்தனை அவனைவிட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
போன வாரமும் இப்படித்தான் முழு நாளும் சிவப்புக் கோட்டுக்குக் கீழேதான் கையெழுத்துப் போட்டது. முதலாளிக்கு வேண்டியவனாய் இருக்கும் அந்த மனேச்சர் சுந்தரம்பிள்ளை சரியாய் 7.30க்குச் சிவப்புக் கோட்டைக் கீறிப்போடும். ஒரு நிமிசமும் பிந்தவிடான். கறுத்த தடியனான் சுந்தரம்பிள்ளைக்குக் கருணை எண்டது கொஞ்ச மும் கிடையாது. கொழும்பில் நிற்கிற முதலாளி வந்தே பார்க்கிறார், ஒருமாதிரிப் பார்த்து ஐந்து பத்து நிமிடமாவது பிந்திச் சிவப்புக் கோட்டைக் கீறினால் என்ன வந்திடப் போகுது.
நேரத்தோடு போவம் எண்டு பார்த்தா இந்த சைக்கிள் தான் என்ன பாடு படுத்துது. சாய்; பெடல்கட்டைகூட சுத்தமாட்டன் எண்டு அடம் பிடிக்குது. சீ! என்ன சைக்கிள் இது. இந்த மாதம் சம்பளம் எடுத்தவுடனை இதை நல்லாத் திருத்தவேணும். பெடல்கட்டை இரண்டையும் மாத்தி பின் ரயரை முன்னுக்குப் போட்டுப் பின்னுக்குப் புது ரயரும் ரியூப்பும் வாங்கிப்போட்டு முழுசாய் கழுவிப் பூட்டித் திருத்த வேணும். இதுக்கே இப்ப 200 ரூபாய் வேணும். பார்ப்பம் எப்படியென்றாலும் இதைத் திருத்தாட்டி நேரத்தோடை வேலைக்குப் போகேலாது.

ጝrr
சும்மாவே ஒவ்வொரு நாளும் 20 மைலுக்குக் குறையாமல் ஓடுது. உரும்பிராய் எங்கை, மாவிட்டபுரம் எங்கை. இவ்வளவு தூரத்தையும் இதில்தானே ஒடித்தள்ள வேணும்; பஸ்ஸிலை போகலாம் என்றால் வீட்டிலேயிருந்து பலாலி றோட்டு வரைக்கும் (எப்படியும் அரை மைலிருக்கும்) நடந்து வந்து பிறகு யாழ்ப்பாணம் போய் பிறகு அடுத்த பஸ்ஸிலை மாவிட்டபுரம் வாறதெண்டால் பஸ்சுக்கு மட்டும் மாதம் 400 ரூபாய் வேணும். அதுக்கு இதைத் திருத்திப் போட்டால் எல்லாத்துக்கும் சுகமாய் போயிடும்.
எப்படியும் இண்டைக்கு நேரத்தோடை போய் 7.30க்கு முன்னுக்கு கையெழுத்துப் போட்டிடவேணும்.
இப்படி கைலாசன் எண்ணிக் கொண்டிருக்கும் போது பலாலி வீதியில் புன்னாலைக்கட்டுவன் சந்தியை அண்மித்துக் கொண்டிருக்கிறான். சந்தியிலை இருக்கிற லட்சுமி விலாசில் இருந்து ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்புக்கு முன்னான கரகர சத்தம் கேட்டது. சரி இப்ப 6.30 மணி தானே. எப்பிடியும் 7.30க்கு முன் போய்ச் சேர்ந்திடலாம் என்ற நம்பிக்கையில் சைக்கிளைத் தன்னாலான வேகத்தில் மிதித்துக் கொண்டிருக்கிறான். அதுவும் தனக்கேற்ற விதத் தில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. புன்னாலைக் கட்டுவன் தெற்குச் சந்தியைக் கடந்து சுன்னாகம் நோக்கிப் போகும்போது வைரவர் கோயிலைத் தாண்டி ஒரு நூறுயார் தூரம் போனதுதான் தாமதம் *படீர்' என்று ஒரு சத்தம், கைலாசனின் சிந்தனை முழுவதும் அறுந்து போய்விட்டது.
米 掌 率
கைலாசன் அலுமீனியத் தொழிற்சாலை ஒன்றின் சாதாரண ஊழியன். மெலிய நெடிய தோற்றம் கொண்ட கைலாசன் இரு குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும்பம் ஒன்றின் தலைவன் - ஒரு காலத்தில் நாட்டுக்குத் தலைவ னாக வேண்டும் என்ற ஆசை இல்லாத போதும் நல்ல

Page 43
8
தொண்டனாக இருக்க வேண்டும் என எண்ணி களுபண்டா வுடன் கந்தையாவும் கைகோர்த்துக் கலகம் ஒன்றை விளைவித்து சோசலிச அரசொன்றைத் தோற்றுவிக்கக் கனவு கண்டவன்தான். ஆர்விட்ட தவறோ அவனது கனவுகள் பொடிப்பொடியாக சிதைந்து சின்னாபின்னமாகிப் போன போது கைலாசனின் தனிப்பட்ட எதிர்காலமும் பெரிய கேள்விக்குறியாகிப் போனது. தேச பக்தியினால் வாலிப சம்மேளனத்தின் உறுப்புரிமை பெற்ற கைலாசன் தன் வாலிப வாழ்வு அர்த்தமற்றதாகி விடக்கூடாதே என்ற ஒருவித அவசரத்தில் திருமண வாழ்வை ஆரம்பித்து அரசியல் வாழ்வைக் கொஞ்சம் அப்புறப்படுத்தி வைத்தான்.
உடலுழைப்பில் நம்பிக்கையும் திடகாத்திரமான தேகா ரோக்கியமும் கொண்ட கைலாசன் தன் குடும்ப வாழ்வை யோட்ட இந்த அலுமீனியத் தொழிற்சாலைக்கு வருமுன்பே பல இடங்களில் வேலை பார்த்தவன்தான். ஆனால் வேலை செய்த ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை களால் ஒரு இடத்திலும் ஒரு வருசம் அல்லது ஆறு மாசத்திற்கு மேல் நீடிக்க முடியவில்லை. சொந்த பிரயாசையாலும் மாமன் மைத்துனரின் அனுசரணையாலும் இந்த அலுமீனியத் தொழிற்சாலை வேலை கிடைத்தபோதுகூட "இங்கையாவது நிரந்தரமாய் வேலை செய்யவேணும் நீங்கள்” என்று மனைவி கெளரி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். மாமனாரோ தம்பி, உமக்கு மற்றவையின்ரை பிரச்சனை தேவை இல்லை. அவை ஒருதரும் உமக்கு சோறு போடப்போறதில்லை. உம்மடை குடும்பத்துக்கு நீர்தான் உழைக்க வேணும்' என ஆலோசனை வழங்கினார். இதற்கு முதல் வேலை செய்த இலக்ரிக்கல் இண்டஸ்றிரில் எல்லா ஊழியர்களுக்கும் ஈ.பி.எவ். (ஊழியர் சேமலாபநிதி) கட்டவேணும் என்று இவன் தூண்டிவிடப் போய் கடைசியில் இவனது வேலை பறிபோன கதையை இப்படி ஞாபகப்படுத்தியது கைலாசனுக்குச் சுள்ளென்றது. சி.ரி.பி.யிலை கொண்டக்டராக இருக்கிற மைத்துனனோ "அத்தான் என்னை நம்பித்தான் சுந்தரம்பிள்ளை வேலைக்கு

79.
எடுத்தவர்; என்ரை மானத்தைக் காப்பாற்றிப் போடுங்கோ' என விடுத்தார் அன்புக் கட்டளை. இலக்றிக்கல் இண்டஸ்ரீ ஸில் சேர முன்பு வேலை செய்த சோப் தொழிற்சாலையில் மேற்பார்வையாளர் சக ஊழியன் ஒருவனைத் தாறுமாறாகப் பேசித் தாக்கியபோது பொறுக்க முடியாத கைலாசன் சீறிப் போய் மேற்பார்வையாளர் பொன்னம்பலத்தைத் தாக்க அவரது உதட்டிலிருந்து இரத்தம் கசிய இவன் வேலையிழந்து வீடு சேர்ந்த சரித்திரத்தை மெல்லக் கிளறிச் சென்றது மைத்துனனின் அன்புக் கட்டளை.
இப்படிப் பல இடங்களில் பல பிரச்சனைகளின் பின்னால் அமைதியாக இருந்து வாழ்க்கையை ஓட்ட வேணும் என்ற ஆசையுடன்தான் கடந்த இரண்டு மாதங்களாக அலுமீனியத் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான். எனினும் இங்கு வந்த பின்பு வீட்டுக்கும் வேலைத் தலத்திற்குமிடையில் தூரம் அதிகம். அதனாலோ என்னவோ பெரும்பாலும் வேலைக்குப் போய்ச்சேர கடைசி ஒரு ஐந்து நிமிடமாவது பிந்திவிடுகிறது.
率 米
இந்தக் கிழமையிலிருந்து எப்படியும் நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டுமென்று முயற்சி எடுத்த முதல் நாளில் தான் சைக்கிள் ரியூப் வெடித்துக் காற்றுப்போய் அரைமணி நேரம் பிந்திப் போனான்.
கையெழுத்துப் போட்டுவிட்டு நிமிர சுந்தரம்பிள்ளையின் பார்வை கைலாசனைத் துளைத்தது. பார்வையைச் சகிக்க முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டான். 'இனிமே லாவது சிவப்புக் கோட்டுக்கு மேலை கையெழுத்துப் போடுகிற வழியைப் பாரும்”. ‘இல்லை ஐயா! சைக்கிள் ரயர், ரியூப் வெடிச்சு காத்துப்போய். கைலாசன் இழுத்தான். "அது தான் சொல்லிப் போட்டன். இனிமேல் பிந்தப்படாது. தெரியுதோ' மீண்டும் சுந்தரம்பிள்ளை.

Page 44
80
*ஒமோம்" என்றவன் தன் அன்றைய தொழிலை ஆரம் பித்துவிட்டான். 'எங்கையப்பா சைக்கிளைக் காணேல்லை. நடந்து வாறியள்" முழகியிருந்ததால் தலைமயிரை விரித்த படியே ஒரு வயது நிரம்பாத இளைய மகன் மிதிலனுடன் விளையாடிக் கொண்டிருந்த கெளரி கேட்டாள்.
*போகேக்கை ரயர் ரியூப் வெடிச்சுப் போச்சு" என்றவன் திண்ணைக்குந்தில் சாய்ந்து கொண்டான். தேநீர்க் கோப்பையை அவனிடம் நீட்டிய கெளரி ** என்ன ஒரு மாதிரி யாய் இருக்கிறியள், ஏதும் பிரச்சனையே?”
**இல்லையப்பா; ஒவ்வொரு நாளும் ஏதோ விதமாய்ப் பிந்திப் போடுது. நாளைக்காவது நேரத்துக்குப் போக வேணும்”
**நாளைக்குத்தானே. எப்படியும் போகலாம். இப்ப எழும்பி உடுப்பை மாத்திப் போட்டு முகத்தைக் கழுவுங்கோ’ என்று மாற்றுடையை நீட்டினாள்.
அதிகாலையில் குளித்துவிட்டு அவசரமாக வெளிக்கிட்டுக் கொண்டிருந்த கைலாசனின் மனம் 5.30க்கு என்றாலும் வெளிக்கிட்டால்தான் நடந்து பலாலி றோட்டுக்குப் போக ஆறுமணியாகும். அதிலையிருந்து யாழ்ப்பாணம் பஸ் எடுத்து ஆறரைக்கிடையில் போட்டால் எப்படியும் ஏழரைக் கிடையில் மாவிட்டபுரம் போயிடலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. இதுக்காகவே கெளரியும் விடியவே எழும்பி என்னவோ செய்து "இந்தாங்கோ இது காலைச் சாப்பாடு. இது மத்தியானத்துக்கு கொண்டு இரண்டு பார்சல்களை ஒரு சொப்பிங் பாக்கிலை போட்டுக் கொடுத்துவிட்டாள். கணவன் வேலைக்குப் போகிற அவசரத்தைப் புரிந்து கொண்டு தன் கருமங்களை ஆற்றிவிட்ட திருப்தியோடு வாசல்வரை வந்து வழியனுப்ப படலைத் திறப்பையும் எடுத்தபடி முன்னுக்கு, நடந்தாள்.
மூன்று வீடு தள்ளியிருக்கும் பாமா ரீச்சர் வீடு. அவ ஏதோ அலுவலாய் கொழும்புக்குப் போகவேணும் எண்டு

8.
கையிலை இரண்டு சூட்கேசுகளையும் காவிக் கொண்டு பஸ்சுக் குப் போறதுக்காக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
படலையைத் திறந்த கெளரியும் ரீச்சரைக் கண்டதும் மெல்லியதாக புன்னகையை வரவழைத்தபடியே "நான்தான் முழுவியளமாக்கும்" என்றாள்.
"ஓ! இப்ப அதுக்கென்ன குறை. நான் கொழும்புக்குப் போகவேணும் பஸ்ஸைப் பிடிக்கவேணும். இப்ப நிக்க நேர மில்லை" எனக் கூறிக்கொண்டே நடந்தாள்.
*இவரும் வேலைக்குப் போகத்தான் வெளிக்கிடுகிறார். சைக்கிள் பழுதாப் போச்சு. பஸ்சுக்குத்தான் வாறார்" என்றாள் எழுந்தமானமாக.
* அப்பிடியோ’ என்ற ரீச்சர் "துணைக்கு ஒருத்தரும் இல்லை என்று யோசிச்சன் நல்லதாய்ப் போச்சு பாத்தியே’ என்றபடி நிற்க, கைலாசனும் வந்து சேரச் சரியாக இருந்தது.
"ஐயோ நான் நேரத்துக்குப் போகவேணும். மினைக் கெட ஏலாது" என்று சொல்லியபடியே கைலாசன் நடையில் வேகத்தைக் கூட்டினான்.
எரிபொருள் பற்றாக்குறையினால் வாகனம் போக்கு வரத்துகள் குறைந்து வருகின்ற ஒன்றிரண்டு மினி பஸ்சும் நெரிசலாய்.
ஒருவாறாக ஒற்றைக் காலை மிதித்து தொற்றிக்கொண்டு வந்து சேர்ந்து விட்டான். ஆனால்.
வழமையைப் போலவே அன்றும் சிவப்புக் கோட்டுக்குக் கீழேதான் கையெழுத்து. கைலாசன் 7.40 என்று கிறுக்கி விட்டு உள்ளே போய்விட்டான். நல்லவேளை சுந்தரம் பிள்ளையர் ஏதோ அலுவலாய் வெளியிலை போட்டார். பரவாயில்லை என்றபடி வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டான்.
s 奉 率
இ-6

Page 45
82
கெளரி ஒருவாறாக இருந்த காசெல்லாம் சேர்த்து ரயர், ரியூப் வாங்கித் தனது கடைசித் தம்பி மகிந்தனைக் கொண்டு சைக்கிளைத் திருத்தி வைத்துவிட்டாள். இன்னும் கைலாசன் வேலையால் வரவில்லை. வந்து பார்த்ததும் மிகுந்த சந்தோசப்படுவான் என தனக்குள் எண்ணிப் பரபரத்துக் கொண்டிருந்தாள். இருந்த காசெல்லாம் இதிலை செலவழிச் சாச்சு. அவரின்ரை பொக்கட்டில கொஞ்சமெண்டாலும் இருக்கும்தானே. கடைசி நாளைக்கு பஸ்சுக்கு வச்சிருக்கிற காசையாவது எடுக்கலாம்தானே என கணக்குப் போட் டிருந்தாள்.
சைக்கிள் திருத்தி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் கைலாசன் உண்மையிலேயே மகிழ்ந்துவிட்டான். நாளைக்கு பஸ்சுக்குக் காசில்லை என்ற யோசனையில் வந்தவனுக்குப் பெரிய பூரிப்பு.
*எப்படி என்றாலும் நாளைக்கு நேரத்தோடை வேலைக் குப் போயிடலாம்". இதையே மனைவியிடம் சொல்லி வைத்தான்.
அதிகாலையில் எழுந்ததும் கெளரி தேநீர்க் கோப்பையை நீட்டியபடியே 'இண்டைக்கு ஒண் டு ம் செய்யேல்லை; காசில்லை என்ன செய்யிறது?"
"என்னத்தையாலும் செய்யும். எனக்கு நேரம் போட்டுது. நான் போட்டுவாறன்’ என்றபடியே சைக்கிளை வேகமாய் மிதிக்கத் தொடங்கி விட்டான்.
இன்று வேலைக்கு நேரம் போகப் போகின்றதே என் பதைவிடவும் சின்னக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாள் செலவுக்கு என்ற கவலையே கைலாசனை அலைக்கழித்தது.
இந்த நிலையில்தான் முன்னால், தோழன் சிவன் எதிர்ப் பட்டான்.

83
"மச்சான் எங்கத்தயாலை வாறாய்?’ கைலாசன்.
"சந்தைக்குப் போட்டுவாறன் வாழைக்குலை குடுத் திட்டு சிவம்.
மின்னல் பொறி ஒன்று தட்டியது கைலாசனுக்கு கேட்டு விட்டான்.
"மச்சான், அம்பது ரூபாய் கிடந்தால் தாடா பிறகு தாறன்’
*அதுக்கென்ன. என்ன அவசரம்?"
"ஒண்டுமில்லை, வீட்டுச் செலவுக்குத்தான். சம்பளம் எடுத்தவுடனை தாறன்’. சிவத்தான் கொடுத்த ஐம்பது ரூபாயை வாங்கியதும் தான் பாதி தூரத்திற்கு மேல் வந்து விட்டதையும் மறந்து வீடு நோக்கி திரும்பி விட்டான். கைலாசன் கெளரியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் சைக்கிளில் கம்பனிக்கு வந்து சேர்ந்த போது மணி ஏழே முக்காலை எட்டிக்கொண்டிருந்தது.
冰 率 来源
**நானும் எத்தனையோ தரம் சொல்லிப்போட்டன். நீரும் கவனிக்கிறதாய் இல்லை. இப்படியே போனால் என்ன கணக்கு. நீரே யோசிச்சுப் பாரும். அரைமணித்தியாலம் பிந்தி வேலையை விடச் சொன்னா ஓவர்டைம் கேட்கிறியள் ஆனா நேரத்துக்கு வரமாட்டியள்’ சுந்தரம்பிள்ளை பொரு முகிறார்.
கைலாசனுக்குத் தாங்க முடியவில்லை.
**நான் என்ன பிந்திவரவேண்டுமென்றே நினைக்கிறன். ஒவ்வொரு நாளும் வெள்ளென நாலுநாலரைக்கெழும்பி வெளிக்கிட்டு நேரத்துக்கு வர வேண்டுமென்றுதான் கஷ்டப் படுறன். ஆனா முடியேல்லை. இது என்ரை பிரச்சனை

Page 46
84
இல்லை. ஒரு வர்க்கத்தின்ரை பிரச்சனை. உமக்கென்ன கார் இருக்கு வீட்டில; எடுபிடி ஆட்கள் இருக்கு நேரத்துக்கு வந்து குந்தியிருப்பியள். எங்களுக்கு அப்படியே. அதுதான் எனக்கும் உமக்குமுள்ள வித்தியாசம். ஆனபடியால் பிழை யில்லை. நான் நேரத்துக்கு வரத்தான் தெண்டிக்கிறன். என்ன செய்ய? ஒவ்வொரு நாளும் ஏதோவொரு பிரச்சனை. இண்டைக்கும் அப்படித்தான். வேலைக்கு வர வெளிக்கிட்டா சமைக்க காசில்லை எண்ணுது. நான் கூட ஒரு சாப்பாடும் கட்டியரேல்லை. காலமையும் சாப்பிடேல்லை. இதோடு நின்று வேலை செய்யத்தானே வந்தனான், இது எனக்கு மட்டுமுள்ள பிரச்சனை இல்லை. இதை நீங்கள் விளங்கிக் கொள்ளவேணும்” என்று இன்னும் எவ்வளவோவெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் சுந்தரம்பிள்ளையை எதிரில் காண முடியவில்லை. கைலாசன் எப்படியென்றாலும் ஒரு நாளைக்காவது சிவப்புக் கோட்டுக்கு மேல் முன்னேறி விட முயற்சித்துக் கொணடேயிருக்கிறான்.
O
13. 0, 1987 "வீரகேசரி’ வார இதழ்

காணி உறுதி
சோளக் காற்று பலமாய் வீசும் ஆனி மாதத்து இரவு. கடல் அலைகள் பொங்கி எழுந்து கரையைக் கடக்க ஆவேசம் கொள்ளும் இந்தப் பொழுது, உழைப்பைத் தேடியும் மீன் பிடிக்கவும் மட்டுமே இதுவரை பயன்பட்ட அந்த ரோலர் படகுகள் மனிதக் கூட்டத்தைச் சுமக்கத் தயாராக ஜெற்றிலில் நங்கூரமிட்டபடி. கோட்டை இராணுவ முகாமிலும் மண்டைத் தீவு இராணுவ முகாமிலும் பாரிய வெளிச்சங்களை உமிழும் மின் விளக்குகள்; பண்ணைப் பாலத்தில் அடிக்கடி உறுமும் இராணுவ வாகனங்கள். இருந்தாற் போல் கேட்கின்ற பாரிய வெடிச் சத்தங்களால் ஈரல் குலை நடுங்கிய படி மனிதர்கள்.
நடுநிசியைத் தொட்டுக் கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் 'போட் ரெடி” காசு குடுத்தவை கெதியாய் வாங்கோ என்ற கிசு கிசு பரவிய போது கால்களுக்கு வேகம் தானாகவே பிறந்தது. வயோதிபர்களும், பெண்டு பிள்ளை களுமாக வெளிச்சத்திற்கு மறைந்து இருளைக் கிழிக்கும் விழி களால் உற்றுப் பார்த்து ஜெற்றியின் வழியே நடந்து போகும் காட்சி கண்களில் ரத்தச் சிவப்பை ஏற்றும். யாழ்ப்பாண நகரை அண்டிய குருநகர் ஜெற்றி ஒரு போக்கு வரத்துத் துறை முகம் அல்லவே. மீன் பிடித் தொழிலாளரின் வசதிக் காக அமைந்த இத் துறைமுகம் இப்போது மனிதன் கூட் டத்தை வெளித் தள்ளும் வடிகாலாய் மாறியது எப்படி?
事 物 事

Page 47
86
ஆளடையாளம் தெரியாத கும்மிருட்டில், மெளனத்தைப் போர்த்திக் கொண்டிருந்த மனிதர்களிடையில், குடும்ப உற வினர்களைப் பிரிந்து விடாமலிருக்க ஒருவரை ஒருவர் நெருங்கிய படி தான் ஜெற்றியில் நடந்து கொண்டிருந்தனர். படகின் ஓரத்தின் நின்று கொண்டிருந்த வாட்ட சாட்டமான ஒருவன் தலைகளை எண்ணி, தனக்கு வர வேண்டிய பணத் தைப் பற்றிக் கொண்டிருந்தான். குடும்பத்துடன் வந்த கந்தப்பு வாத்தியார் ஒவ்வொருவராக ஏற்றி விட்டுத்திரும்பிப் பார்த்தால் கடைக்குட்டி கண்ணனை காணவில்லை. மையிருட்டில் பதினைந்து வயதான கண்ணனைத் தேடுவதற் காக கந்தப்பு ரோலரை விட்டு இறங்க எடுத்த முயற்சி தடுக்கப்பட்டு விட்டது.
எங்களுக்கு நேரம் போகுது, நீர் இறங்கித் தேடுறதென் றால் உங்கடை ஆக்கள் எல்லாரும் இறங்குங்கோ, டேய்! செல்வம் மற்ற ஆக்களை வரச் சொல்லு. ஏற்றிக்கொண்டு போவம் என்று அவன் உச்ச ஸ்தாயியில் வைத்த சத்தம் கந்தப்பு மனைவியும் அவனிட்டை காசு கிடக்கு அடுத்த போட்டிலை வரட்டுக்கும் என்ற கிசு கிசுப்பு, எங்கேயோ தூரத்தில் கேட்ட செல்லடிச் சத்தம் அனைத்தும் கந்தப்பின் முயற்சியை கைவிடச் செய்துவிட்டது. கந்தப்பர்தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸ் பெட்டியைத் தூக்கி பத்திரமானஓரிடத்தில் வைத்து கொண்டார்.
ரோலர் எஞ்சின் இரைச்சலையும் மீறி பெண்களின் பேச்சுக் குரல் கேட்கத் தொடங்கிவிட்டது. பெடியன், தனிய வரக்கூடிய ஆளோ, மின்னிலிட்ட கேள்வியின் பயனாய் கந்தப்புவின் மனைவியிடம் 'தம்பிக்கு எத்தனை வயது' என்று கேட்க வைத்தது பக்கத்தில் இருந்தவருக்கு. முகத்தை ஒரு மாதிரியாகப் பிடித்தபடி **பதினைந்து வயதாகும்” என்றாள் கந்தப்புவின் மனைவி.
ஊராக்கள் வேற ஆரும் கரையிலை நிக்கினையோ?
‘ஓமோம் அவற்றை தம்பியாரும் வந்து நின்டவர்”

87
அப்ப அவரோடை பெடியன் வருவான்தானே என்னொரு ஆறுதல் மொழி.
இல்லை, இல்லை அவர் வரேல்லைதான். செத்தாலும் இஞ்சை நிண்டுதான் சாவுறது எண்டு தான் நிக்கிறார். நான் தான் இனியும் இஞ்சை இருக்கேலாது எண்டு இவரை யும் கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டேன்!
ஓம் பாருங்கோ! இனியும் என்னண்டு சீவிக்கிறது. செல்லடி ஒரு பக்கத்தாலை. பொம்பர் ஒரு பக்கம். இதுக் குள்ளை துவக்குச் சூடு. அதுவும் எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலை பெடியனோட இருக்கு. ந |ா ங் க ஞ ம் இடைக்கிடை சாப்பாடேலாம் குடுக்கிற நாங்கள். இனி ஆமிக்காரன் வந்தா எங்களை இருக்க விடுவானோ? சீச்சீ! பெடியள் நிண்டு அடிபடுகிறாங்கள்தான், ஆனால் அவங் களாலைதான் என்ன செய்ய ஏலும். எத்தனை நாளைக்குத் தான் அடிபட ஏலும். வடமராட்சியை ஆமி பிடிச்சுப்போட் டானாம். இனி யாழ்ப்பாணந்தான் அடுத்ததாம். அதுதான் நாங்களும் வெளிக்கிட்டம்!
முன் அணியத்தில் இருந்து வழி காட்டிக் கொண்டிருந்த அன்ரன் திடீரென்று அணியத்துக்கு விலங்குப் பக்கத்தைப் பாரடா; மோகன் என்றான். உரத்த குரலில், ரோலரின் மேற்தளத்தில் நெருக்கமாக குந்தி இருந்த அனைவரும் கரிய இருளில் தத்தமக்குத் தோன்றிய திசைகளில் கண்களை வெறிக்க விட்டனர்.
சாரத்தை மடித்துக் கட்டியபடி கடலிலுள் எந்த நேரமும் பாய்ந்து விடத் தயாரான நிலையிலிருந்த இளைஞன் ஒருவன், அன்ரனை நெருங்கி என்ன அண்ணை என்றான் மெல்லிய குரலில் ஒரு திசையை சுட்டிக்காட்டிய அன்ரன் “ஸ்பீட் போட் ஒண்டு வருகுது என்று கிசுகிசுத்தான்.
கடலின் வெகு தொலைவில் வெள்ளை நுரைகள் மட்டும்
தெரிந்து கொண்டிருந்தது. அது "நேவிபோட்’ ஆக இருக்

Page 48
88
குமோ என்ற சந்தேகம் ரோலிரில் இருந்த அனைவர் முகங் களிலும் பயத்தை அப்பியது.
'பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே" என்று ஒருகுரல் மெதுவாகக் கேட்டது. ‘அர்ச்சியேட்ட மரியாயே வாழ்க’ என்று செபமாலை உருட்டவும் சிலர் தொடங்கி விட்டனர். ‘பால் நினைந்துட்டும் தாயினும் சாலப் பரிந்து நீர் பாவியேனுடைய ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே. சிவபெருமானே’ என்று நடுநடுங்கி யது கந்தப்பரின் குரல்.
கடல் அலைகளால் சூட்கேசில் ஈரம் பட்டு விடாமலிருக் கட்டும் என்று எடுத்து தன் பக்கத்தில் வைத்துக் கொண்டார். கடலினுள் கிளம்பிய வெள்ளை நுரைகள் பலரது கண் களுக்கும் தெரியாவிட்டாலும் கூட அந்த ஆபத்துப் பற்றிய பயப்பிராந்தியும் பதட்டமும் தணியவில்லை. சுக்கானைப் பிடித்தபடி இருந்த மோகன் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத் தான். *ஐயய்யோ சிகரெட் நெருப்பு தூரத்துக்குத் தெரி யுமோ” எனச் சிலர் ஆதங்கப்பட்டனர்.
கோபம் கொப்புளிக்க நாங்க நெடுகத்தான் போய் வாறவனுகள் தெரியுமே. உங்களுக்குப் பயமாய் இருந்தா இஞ்சைவா; சுக்கானைப்பிடி என்று உறுமினான் மோகன். வெள்ளை நுரைகளின் தொடர்ச்சி அணியத்துக்கு நேரே முன்னுக்கு 'அம்மா தாயே, காப்பாற்று!’ என்பது கூக்குர லாகி ரோலர் அல்லோலகல்லோலப்பட்டது. ஆனால் சுமார் ஆயிரம் யார் இடைவெளியளவில் அந்த ஸ்பீட்போட் இந்த ரோலரின் அணியத்தின் விலங்குப் பக்கமாக விலகிச்சென்ற போது அது "பெடியளின்ர போட்' என்றான் அன்ரன். அதன் பின்புதான் பலருக்கும் போன உயிர் திரும்பிய மாதிரி. "மாதா எங்களைக் கைவிடமாட்டாள்" என்றொரு முணு முணுப்பு. நான் பாடிய தேவாரம்தான் எங்களைக் காப்பாற்றி யது. இன்னொரு பெருமிதம்.

89
"இந்தியாவிலை இருந்து பெடியள் சாமானுகளோட போறாங்கள் பாருங்கோ. இன்னும் இரண்டு நாளிலை ஆமிக்காரர் ஓடோட வாங்கிக் கட்டப்போகினம்! இன்னொரு வீராப்பு.
"பேய்க்கதை கதையாதையும். அவையும் அவையின்ர வீரமும் எங்களுக்குத் தெரியாதே. எங்களை முந்திக்கொண்டு எல்லாரும் ஓடுதுங்கள் இந்தியாவுக்கு. சும்மா இருக்கே லாமல் நொட்டிப்போட்டு இப்ப ஓடுகினம்" இன்னொரு கிண்டல்,
"இதிலை கதைக்கிற மாதிரி வெளியிலை நிண்டு கதைச் சிருந்தால் நடக்கிறது வேறை" என்று ஒரு கரகரத்த குரல் கேட்டதுதான் தாமதம் நிசப்தம் நிலவியது.
'தம்பி இன்னும் எவ்வளவு நேரத்திலை இந்தியக் கரை தெரியும்?
'கச்சத்தீவை இன்னும் கடக்கவில்லை. அதுக்குள்ள இந்தியக்கரை பார்க்க ஆசைப்படுகிறீரே" என்றான் நையாண்டித்தனமாக.
"இப்ப எவ்விடத்திலை தம்பி நிக்கிறம்".
"கடலுக்குள்ளை' என்று நெளித்ததும் கந்தப்பருக்கு மேலும், எதுவும் கேட்கத்தோன்றவில்லை. ஆதலால்;
'அம்மையே அப்பா ஒப்பிலாமணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கி பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவது இனியே’

Page 49
90
என்று முணுமுணுத்ததைக் கேட்ட அவனுக்குச் சிரிப்பு பொறுக்க முடியவில்லை.
"அப்ப இனி இங்கு எழுந்தருளுவது இல்லைப்போலும் எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டது கந்தப்பரின் காதில் விழவும் "டொக் டொக்" என்ற சத்தத்துடன் ரோல ரின் என்ஜின் நிற்கவும் சரியாக இருந்தது.
"என்ன தம்பி என்ன நடந்தது! எங்கும் ஒரே பரபரப்பு. கடல் அலைகளில் ரோலர் அசைந்து ஆடிக்கொண்டிருந்தது. வானத்தை அண்ணாந்து பார்த்து ‘விடிவெள்ளி தெரியுது இன்னும் கரையைக் காணவில்லை" என்றார் ஒரு கிழவர். *டேய் அன்ரன், இஞ்சை வாடா என்று மோகனை அழைத்த குரலில் கடூரம் தெரிந்தது. அன்ரன் எழுந்து போகவும், என்ஜின் அறைக்குள் இருந்த இராசன் வெளியே வந்து, *சாப்ற் உடைந்து போச்சு' என்றான்.
"அப்ப ஒண்டும் செய்ய ஏலா. நங்கூரத்தைப் பாய்ச்சு" ரோலரில் இருந்த அனைவர் மனங்களும் தத்தளித்தது. மோகன் என்ஜின் அறைக்குள் இறங்கி என்னென்னவோ செய்யத் தொடங்கினான். ஒவ்வொருவரும் தத்தமது எண்ணத்தை சொல்லில் வடித்துக் கொண்டனர். ரோலர் இரணைதீவுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. பாயை யும் இழுத்துப்போட்டு என்ஜினையும் இலேசாய் ஓடவிட்டால் வலைப் பாட்டுக்கரைக்கு விடியப்புறம் போயிரலாம். பிறகு அங்காலை யோசிப்பம் என்று எடுத்த முடிவின்படி ஒட்டிகள் பம்பரமாய்ச் செயலாற்றினர்.
நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என்றோ, எப்போது சேரப் போகிறோம் என்றோ எதுவுமறியா நிலையில் நாட்டி னுள் நமக்கிருந்த பேராபத்திலிருந்து விடுபட்டு விட்டது போன்ற மாயை நிலையில் ஒவ்வொருவரும் தமக்குள் ஏதோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டனர்.
料 料 。料

9.
சூரியக்கதிர்கள் பரவத் தொடங்கிய வேளையில் கண் ணுக்குத் தென்பட்டது கரை. இது இராமேஸ்வரம் கரையா ? வேதாரணியமா? கோடிக்கரையா ? தூத்துக்குடியா ? என்று ஒவ்வொருவரும் தத்தமக்குள் எண்ணமிட்டு கரையில் காணப் போகும் கற்பனைக் காட்சிகளுக்காக தமது கண்களை அகலத் திறந்திருந்தனர். மெல்லமெல்ல நகர்ந்த ரோலரை வேக மாகத் தள்ளிக் கொண்டிருந்தது அவர்களது மனம்,
வலைப்பாட்டுக்கரையிலிருக்கும் ஒற்றைத் தேநீர்க் கடையிலிருந்து இலங்கை வானொலி அலறிக்கொண்டிருந் தது எப்போதும் இல்லாதது போல ரோலரிலிருந்து இறங்கி வருவோரைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று எண்ண இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதக்கூட்டம் இறங்கி வருவதனை வலைப்பாட்டுக்கரை கண்டிருக்கவில்லை.
குடா மாதிரி அமிழ்ந்திருக்கும் வலைப்பாட்டுக்கரையில் மரங்கள், தடிகள், கம்புகள், ஏற்றிச் செல்லவரும் படகுகளும், தொழிலுக்குப் போய்வரும் படகுகளும் எங்கேயோ இருந்து கடலில் பழுதுபட்டு பின்னர் திருத்த வேலைகளுக்காக கொண்டு வந்து சேர்த்திருக்கும் சில படகுகளுமாகத்தான் காட்சியளிக்கும். திடீரென ஒரு ஐம்பது பேரளவில் வந்து இறங்கியதும் அங்கு யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஆனால் வந்து இறங்கிய பலருக்கும் அது எந்த இடம் என்பது தெரிந்திருக்கவில்லை. பெட்டிகள் மற்றும் சாமான் களோடு போய் இறங்கிய அனைவரையும் முன்னாலுள்ள மண்டபத்தில் சேரும்படி கட்டளையிட்டான் மோகன். கந்தப்பர் தான் கொண்டு வந்திருந்த சூட்கேசுப் பெட்டியை பொலித்தீனால் மூடாமல் விட்டதனால் அது நனைந்து போனமைக்காக கவலைப்பட்டுக் கொண்டார். மோகன் உரத்தகுரல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
நாங்கள் வந்த ரோலர் பழுதாய்ப் போச்சு அதாலைதான் நாங்கள் இஞ்சை நிக்கிறம். இது வலைப்பாட்டுக்கரை. எல்லாரும் குளிச்சி, சமைச்சி சாப்பிடுங்கோ. நான் யாழ்ப்

Page 50
92
பாணத்துக்கு பஸ்லை போய் எஞ்சினை சரி பண்ணிக் கொண்டு வந்திட்டு இரவைக்கு வெளிக்கடுவம். நாளைக்குக் காலமை நான் உங்களை இராமேஸ்வரத்தில் இறக்கி விடுறம்.
இப்போது பலரது முணுமுணுப்புக்கள். ஏமாற்றங்கள் வெளிப்பட்டன. தமது ஏமாற்றத்தை கோபமாக வெளிக் காட்டவும் சிலர் முயன்றனர். அவன்தான் என்னசெய்யும். போட் பழுதாயிப்போச்சு. கடலுக்குள்ள நிக்கவைக்காம கரையில் உயிரோடை சேர்த்ததுக்கு கடவுளுக்கு நன்றி. சொல்லவேணும். இப்படிப்பலரும் பலவாறாய் பேசிக் கொண்டனர். மோகன் அங்கிருக்கவில்லை இவற்றைக் கேட்பதற்கு.
மோகன் வரட்டுக்கும் என்ற ஆறுதல் மொழியினால் திருப்தியுற்றுவிட்டனர். ஏறத்தாழ அனைவருமே காலைக் கடன்களை தீர்க்கவேண்டிய அவசரம், அவசியம் அவர்களை உந்தித் தள்ளியது. முன் அனுபவமில்லாத கடற்பயணத்தின் களைப்புவேறு. எதுவும் புரிந்தும், புரியாமலும் இருக்கின்ற பாலகர் வயதினர் புதிய இடத்தைச் சுற்றிப்பார்க்கும் ஆவ லில் எங்கும் ஏற்றுண்டனர். வலைப்பாட்டுக்கரையில் இருக்கும் மண்டபத்தில் சாமான்கள் தத்தம் பெட்டிகளை ஒரமாக வைத்துக்கொண்டவர்கள் தேநீர் மற்றும் சாப்பாட்டு ஏற்பாட்டிற்குமாக இங்கும் அங்கும் அலைந்து கொண் டிருந்தனர்.
கந்தப்பு வாத்தியாரின் மனைவியும், மூத்த மகளும் எங்கோ போய் திரும்பி வந்தனர். தாங்கள் குளிக்கவேண்ட மென்று அதற்காக ஆயத்தம் பண்ணத்தொடங்கினர். கந்தப்பு சூட்கேஸ் நனைந்து போயிற்று. அதனால்தான் திறந்து உடுப்புகள் எடுத்துத்தரவேணும் என்று சொன்னார். கந்தப்புவின் மனைவியும், மகளும் கடையில் தேநீர் குடித்து விட்டு விறுவிறுவென தின்கீழ் கட்டில் அமர்ந்திருந்தனர். கந்தப்பு வாத்தியார் தேநீரைக் குடித்துவிட்டு விறுவிறுவென

93
நடந்து மண்டபத்தையடைந்தார். காவலுக்கு விட்டிருந்த இரண்டு மகன்களிடத்திலும் காசை கொடுத்துத் தேநீர் குடிக்க அனுப்பிவிட்டு பெட்டியைத் திறந்தார். அனைத்தும் நன்றாகவே நனைந்து விட்டிருந்தது. ஒவ்வொரு உடுப்பாக, மற்றும் பொருட்களாக எடுத்துப் பத்திரமாக அடுக்கிக் கொண்டு மேலும் மேலும் பெட்டியிலிருப்பவற்றை வெளியே எடுத்தார். பொறுமையிழக்கும் எல்லைக்கு வந்துகொண் டிருந்த கந்தப்பரின் மனைவி 'என்னத்தைத் தேடுறியள்" எனக் குரல் கொடுத்தாள். 'போச்சு போச்சு எல்லாம் போச்சு" என்றபடி அவர் கையில் எடுத்த பார்சலில் இருந்து கடல்நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
எத்தனை வருடங்கள் எங்கள் பரம்பரைகள் எல்லாம் உழைத்துச் சேர்த்த சொத்தின் அடையாளமாக விளங்கும் காணி உறுதி இப்படி தொப்பலாக நனைந்து கிடக்கிறது. காணியின் எல்லைகளை நிலைநாட்டுவதற்காக அயலவர் களுடன் பட்ட வாக்குவாதங்கள் சகோதரச் சண்டைகள் எல்லாம் அவரது மனக்கண்ணில் நிறைய அவரது கண்ணி லிருந்தும் நீர் வடிந்தது.
வலைப்பாட்டுக்கரையிலிருக்கும் மாதா சுரூபத்தின் கீழ்க் கட்டில் காணி உறுதிகளைக் காய வைத்து மேற்பாரத்துக்கு வைக்கப் பொருத்தமான கற்களைத் தேடிக் கொண்டிருக் கிறார், கந்தப்பு வாத்தியார். கரையில் தவறிவிட்ட கடைக்குட்டி கண்ணனை அவர்கள் இப்போது மறந்து விட்டனர்.
O
30.06. 1987 முரசொலி வார இதழ்

Page 51

பொன்னியின் புதிய நூல்கள்
கானல் வரி சேரன் கவிதைகள் விலை : ரூ. 6-00
O
நவீன ஓவியக்கலை ஓர் அறிமுகம் கி. ஆ. சச்சிதானந்தம் விலை: ரூ. 6-00
O
*曲
சிறுகதைகள் பூமணி விலை : ரூ. 13-00

Page 52


Page 53