கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிருஸ்ணன் தூது

Page 1
கிருதிறை
 
 


Page 2

கிருஷ்ணன் தரது
சாந்தன்

Page 3
Krishnan Thoudhu short stories in tamil
by
Santhan (Srilanka } (c) author
published by ilakkia the dal, 9, railway station road palayamkottai 627 002. printed at uma press, tirunelveli town, jacket design by sp. lakshman, first edition july 1982. price rupees six.

*அநாயாசமாகப் பொருளை உணர்த்தும் கலைத் திறன் சாந்தனிடத்து அபரிமிதமாய்க் காணப்படுகிறது."
‘சுயபிரகடனஞ் செய்யாத-ஆணுல் கனதியானசமூகப்பார்வை ஆசிரியருக்கு இருப்பதனுலேயே இத் தகைய கதைகளே அவரால் எழுத முடிகிறது என்று எண்ணுகிறேன்."
‘இன்று தமிழில் விதந்து குறிப்பிடத்தக்க சிறுகதை களை எழுதுவோரில் சாந்தனும் ஒருவர் என்பதை வாதிட்டு நிறுவ வேண்டிய தேவையில்லை".
- பேராசிரியர் க. கைலாசபதி ("முளைகள் முன்னுரையில்)
*இந்தச் சிறுகதைகளை ஒரு விஞ்ஞானியின் கலைப் பார்வை என் ருே, ஒரு கலைஞனின் விஞ்ஞானப் பார்வை என்றே கூடச் சொல்லலாம்."
*. இத் தொகுதியைப் போன்ற ஒரு சில கலை முயற்சிகளினுல்தான் ஒரு மொழி பிற மொழியினத்தவரி டம் தலை நிமிர்ந்து நிற்க முடியும்."
- நீல. பத்மநாபன் (கணையாழியில் "ஒரே ஒரு ஊரிலே - விமர்சனம்)

Page 4
விண்டு ரைக்க அறிய அரியதாய்
விரிந்தவான வெளியென - நின்றன,
அண்ட கோடிகள் வானில் அமைத்தன;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை :
மண்ட லத்தை அணுவணு வாக்கினுல்,
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே! நினைக் காளியென் றேத்துவேன்.
- பாரதியார்

இந்தக் கதைகளை விடத் தனியாக வேறு
எதுவும் சொல்ல எனக்கில்லை.
‘இலக்கியத்தேடல்’ நண்பர்களுக்கு மன
மார்ந்த நன்றி.
-ஐ. சாந்தன்
அண்ணுமலை வீதி, சுதுமலை, மானிப்பாய், இலங்கை,

Page 5
23
27
30
37
42
46
50
53
55
y
நீக்கல்கள்
மனிதர்கள் மனங்கள் மானங்கள்
புரிதல்
கவலை
தமிழன்
இழப்பு
76ல் ஒரு விடுமுறை நாளில்
இன்னும் உள்ள வண்ணங்கள்
ஸ்பீ - அனிமோன்
969 (U/167 lb
கிருஷ்ணன் தூது

நீக்கல்கள்
கணையாழி 74

Page 6
அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லே. அது சமயத்தைப் பொறுத் தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோ டேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளேப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளேக்ளில்-அப்படித்தான் அதிகம் நேர்கிறது. - பஸ்ஸைக் கண்ணுற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வே3ளகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல.மூன்று மணித் தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக் கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனல் அதுவுங்கூட அரும்பொட்டு நேரம்.
வீட்டிலிருந்தே ஸ்பெஸிம?ன எடுத்துக் கொண்டு போக முடி யாது. கொஞ்சம் முந்திப் பிந்தினுல், இவ்வளவு பாடும் வீணுகிவிடும். ‘எப்படியும், எடுத்து நாற்பத்தைஞ்சு நிமி ஷத்துக்குள்ளே குடுத்திட வேணும் . . இல்லாட்டி, நிச் சயமா ஒன்றும் சொல்ல ஏலாது " என்று-விஜயன் நேற் றைக்கே சொல்லியிருந்தான். விஜயன் }வனுடைய வலு நெருங்கின கூட்டாளி. டொக்டர். பெரிய ஆஸ்பத்திரியில்பட்டணத்தில்-தான் இப்போது வேலை. அவனுடைய உத வியாலும், அட்வைஸா’லும்தான் இந்த விஷயம் சுலபமாக நடக்கப் போகிறது-வீண்மி?னக்கேடு, பரபரப்பு, ஆட்டபாட்ட மில்லாமல்,
சைக்கிளிற் தான் போவது என்று தீர்மானிப்பதைத் தவிர வேறு வழியிருக்க முடியாது. ஸ்பெஸிம*?னயும் அங்கு போய்த்தான் எடுத்தாக வேண்டிருக்கிறது.
* ஸிப் வைத்த காற்சட்டையையும், புஷ்-ஷேர்ட்"டையும் முன்னேற்பாடாக-வசதி கருதிப்-போட்டுக் கொண்டான். விஜயன் தந்த ஆஸ்பத்திரிச் சிட்டையை ஞாபகமாக எடுத் துக்கொண்டாயிற்று. சைக்கிளேத் தள்ளிக்கொண்டு புறப்பட் டபோது, அவனுக்குள்ளே சாதுவான கூச்சமாய்த்தானிருந் தது. சும்மா, விஜய8னப் போய்ப் பார்த்துவிட்டு, அப்படியே பட்டணத்திற்குப் போய்விட்டு வருவதாகவே, மனேவியிடம்
2 / நீக்கல்கள் O

சொல்லியிருந்தான். அவளுக்கு இப்போது விபரஞ் சொல்லத் தேவையில்லே; இந்த "டெஸ்டின் முடிவைப் பார்த்துத் தேவையானதைப் பேசிக்கொள்ளலாம்.
அவளுக்கும் இவனுக்கும் கல்யாணமாகி, வருகிற சித்திரை இரண்டு வருடம், காதல் கல்யாணம்தான். அந்தக் காதல் காலத்திலேயே, இவன் கனக்கக் கற்பனைகள் பண்ணிக் கொண்டிருந்தான். நீண்ட காலத்திட்டங்கள், அழகிய ஓவி யங்களாக நெஞ்சிற் பதிந்து உறைந்துபோன. அவள் நிறமும் விழிகளும், தன் தோற்றமும் முடியுமாக, இவனது விந்து இதுவரையில் முளேத்துத் தளிர்த்திருக்க வேண்டுமே-அது நடக்கவில்லே என்பதை அவனுற் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
திருப்பித் திருப்பிப் பரீட்சை எழுதிக் குண்டடிக்கிற மான வன் மாதிரி, மாதா மாதம் ‘ரிசல்ட்"க்காகக் காத்திருந்து; ஆசை அவதியாய், ஏமாற்றத்தில் அடுத்தடுத்து முடிகிற போது - “எங்கே வழுக்குகிறது” என்று புரியவில்லை. தானறிந்த மட் டில், தங்களிருவரிலும் எந்தக்கோளாறும் வெளிப்படையா யில்லை என்பது தெரிந்தது. சராசரிக்குக் கொஞ்சம் மேலா, யிருந்த உடற்கூற்று அறிவு, விஜயனிடம் போகத் தூண் டவே, போனுன். ‘அதுதான் சரி; இப்பவே ஏதாவது செய் யிறது தான் புத்தி. வயது போனல், பிறகு என்ன செய் தும் அவ்வளவு பலனிராது”. என்று, விஜயன் உற்சாகப் படுத்தினுன், வழிமுறைகளும் அவ்வளவு சிக்கலாயில்லே.
*முதலில, உன்னே ‘டெஸ்ட்” பண்ணுவம் அதிலே ஒரு கோளாறுமில்லையெண்டா. பிறகு, அவவை ஒரு லேடி டொக் டரிட்டைக் கூட்டிக் கொண்டு போ...”*
தன்னே எப்படிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்று அவன் அறிந்தபோது வலு சுகமான டெஸ்ட்” -என்று தெரிய வந்தது. எப்படி “ஸ்பெஸிமன்” எடுக்கிறது என்பது புரிய வில்லே, கேட்டான். அதற்கும் ஏதாவது முறை அல்லது கருவிகள் இருக்கக் கூடும் .
O சாந்தன் / 3

Page 7
"நீதான் எடுத்துக் குடுக்கவேணும். டெஸ்ட் ரியூப்" தருவி ம்ை " விஜயன் பயலின் முகத்தில், குறும்போ, சிரிப்போ மருந்துக்குக் கூட இல்லை! "கவுண்டரின் வெளியே நின்று மெல்லத் தட்டினன். யாரோ ஒருவர் - ஆய்வுக்கூட உதவியாளராய்த்தானிருக்கும்-வந்தார்" விஜயன் தந்த சிட்டையை நீட்டினுன். பெயர், வயது, கான்ன பரிசோதனை-எல்லா விபரமும், அந்தத் துண்டில் விஜ யன் தானே குறித்துக் கொடுத்திருந்தான். *டெஸ்ட் ரியூப்" இல்லே-கிட்டத்தட்ட அதே அளவில், சுத்தமாகக் கழுவி பிளாஸ்டிக் மூடிபோட்ட, சிறிய போத் தல் ஒன்று கிடைத்தது. ஏதோ ஒரு வார்ட்"டிலிருந்த விஜயனைத் தேடிப் போஞன். ‘எங்கேயிருந்து எடுக்கப் போகிருய்?. குவார்டஸிலை, என் அறைக்குப் போனு, வசதியாயிருக்கும்.’ *அது சரியில்லை; நீயில்லாத நேரத்திலை, நான் அங்க தனி யாய்ப் போறது அவ்வளவு நல்லாயிராது."
*அப்ப, வேற என்ன செய்யிறது? இங்க உள்ள ஆஸ்பத் திரி உலவெட்டிரியளே நம்பி உள்ளுக்குப் போகேலாது.”* கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு**. இங்க வா" என்று சொல்லிக் கூட்டிப் போனுன். ஓரிடத்தில் வரிசையாக நாலைந்து சின்னச்சின்ன அறைகளி ருந்தன. தொங்கலிலிருந்த அறைக்கதவை விஜயன் மெல் லத் தள்ளினுன். அது கக்கூஸ் அல்ல. ஆஸ்பத்திரி வேலை யாட்கள் தட்டுமுட்டுக்களைப் போட்டு வைக்கிற அறை. இந்த வரிசை அறைகள் எல்லாமே அப்படித்தான் போலி ருக்கிறது. விஜயன் அறைக்கதவைத் தள்ளுகிறபோதே, ஒரு வேலை யாள் பார்த்து விட்டான். அவசரமாக ஓடி வந்தான் - உடம்பை வளைத்துக் கொண்டு; நின்ற இடத்திலேயே காற் செருப்பைக் கழற்றி விட்டு விட்டு.
4 / நீக்கல்கள் O

*ஐயா .. ??- கேள்வியே வணங்கியது. இவனுக்கு அந்த ஆள் மேல் கோபமாக வந்தது; பரிதாபமாயுமிருந்தது.
விஜயன் கேட்டான்.
**இந்த ஐயா, லாப்"பில குடுக்கிறதுக்கு ஏதோ ஸ்பெஸி மன்’ எடுக்க வேணுமாம் இதுக்குள்ளே துப்புரவாய் இருக் குதுதானே?. *
**ஆமாங்க, ஆமாங்க. வடிவாப் போலாமுங்க”
**சரி; நீ போய் அந்தரப்படாம ஆறுதலா எடு. எடுத்து *லாப்பிலை குடுத்திட்டு வா- நான் “வார்ட்"டிலே தானிருப் பன்.*-விஜயன் இவனைப் பார்த்துச் சொல்லிவிட்டுத் திரும் பினன்.
'ஐயா பயப்படாமப் போலாமுங்க. உள்ள, நல்ல "கிளி"ணு இருக்கு. ” அந்த ஆளும் போய் விட்டான்.
கதவைத் தள்ளி உள்ளே போனன், இவன். மிகவுந் துப்பு ரவாய்த்தானிருந்தது. சிறிய அறை. ஐந்தடி அகலங்கூட இராது. அதில் அரைவாசி இடத்தை, சுவரிலேயே கட்டப் பட்டிருந்த 'ருக்கைகள்” பிடித்துக் கொண்டிருந்தன. ஒரு மூலையில் தண்ணிர்க் குழாய் இருந்தது. ‘நல்ல இடந்தான்” என்று எண்ணிக் கொண்டே கதவை சாத்தினுன். பூட்ட முடியாது போலிருந்தது. பூட்டுவதற்காகப் போடப்பட்டிருந்த கட்டை இறுகிக் கிடந்தது. நிலையில் கட்டியிருந்த கயிற்றுத் துண்டை இழுத்து, கதவில் அடித்திருந்த ஆணியில் இறு கச் சுற்றினுன். “வெளியிலிருந்து தள்ளிலுைம் திறவாது என்கிற நிச்சயம் வந்தபின்தான் உள்ளே வந்தான். காற்சட் டைப் பையிலிருந்த போத்தலை எடுத்துத் தட்டின் மேல் வைத்தபோது தான், ஜன்னல் கண்ணில் பட்டது. ஜன்னற் கதவின் மேல் பாதி, கண்ணுடி!
அருகே போய் நின்று பார்த்தான். தன்னுடைய தலை எப்படியாவது வெளியே தெரியும் போலத்தானிருந்தது. பரவ்ாயில்லை. தலை மட்டும்தானே" என்கிற ஒரு நிம்மதி,
ロ சாந்தன் / 5

Page 8
ஜன்னலுக்கூடாய்ப் பார்த்தால், ஆஸ்ப்பத்திரியின் மற்றக் கட்டிடங்கள் உயர உயரமாய் நின்றன. எதிர்த்த கட்டிடத் தின் மேல் மாடியில், வரிசையாக ஜன்னல்கள். நல்ல காலமாக அங்கு ஒருவரையுங் காணவில்லை. அந்தக் கூட் டத்திற்கும் இந்த அறைக்கும் நடுவிலிருந்த முற்றத்தில் யாரோ போனுர்கள். இந்தப் பக்கம் பார்க்கிறவராக எவரு 1ჩ6ზზu.
இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாகக் கை விட் டிருந்த பழக்கத்தில் இப்போது கை வைப்பது ஒரு மாதிரி யாய்த்தான் இருந்தது. வளம் வராதது போல, சீனி போட்டுக் கோப்பி குடித்துப் பழகியவனுக்குக் கருப்பட்டி யைக் கடித்துக்கொண்டு குடிக்கச் சொல்லிக் கொடுத்தாற் போலவும் இருந்தது. எப்படிச் சரிவரும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்றுந் தெரியவில்லை.
கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்தேகால். முடிந்து பின் எவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும் என நிஜனத்துக்கொண்டான்.
மனம், எங்கெங்கோ ஒடிக் கொண்டிருந்தது. பதட்டம் வேறு. இத்தப் பதட்டத்துடன் மனதை ஒரு முகப்படுத்த முடியாமல், ஒன்றுஞ் செய்ய முடியாது என்பது அவனுக்குத் தெரியும். மனதை நிலைப்படுத்த முயன்றன். திருவிழா நாட் களில் கோவிலுக்குப் போய், சாமியைக் கும்பிட முயல்வது போல இருந்தது இந்த முயற்சி. தான் இப்போது செய்து கொண்டிருக்கிற வேலை, மனைவிக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வாள் என்ற நினைப்பு வந்தது.
பழைய "ரெக்னிக்'குகள் ஒன்றுஞ் சரிவரவில்லை. சீனியுங் கருப்பட்டியுந்தான். முதற்கட்டமே இன்னம் முடியவில்லை. . வெளியே, யாரோ ஆர்ப்பாட்டமாகப் பேசிக் கொண்டு டோனர்கள். இந்த அறையைத் தான் திறக்க வருகிறர் களோ என்று, ஒரு நிமிடம் பேசாமல் நின்றன். அந்தப் பரபரப்பில், இவ்வளவு நேரம் பட்ட பாடும் வீணுய்ப்
6 / நீக்கல்கள் O

போயிற்று. அவர்கள் இங்கு வரவில்லை. குரல்கள் தாண்டிப் போய், நடைபாதையில் மங்கி மறைந்து போயின. மீண்டும் முயன்று ஒரு நிலைக்கு வந்த பின் நேரத்தைப் பார்த்தபோது, இப்போதே பத்துநிமிடமாகி விட்டுருந்தது; *கெதியாகச் செய்து முடிக்க வேணும்" என்கிற உறுதி மனதை நிலை நிறுத்த உதவியாயிருந்தது. படிக்கிற காலத்தில், ஒத்த தோழர்களுக்குள் புழங்கிய தன்கையே தனக்குதவி வெள்ளையனே வெளியேறு' - என் கிற வசனங்களெல்லாம் அப்போதைய ‘ரீன்ஏஜ்" அர்த்தங் களுடன் இப்போது நினைவில் வந்தன. இந்தப் பரபரப்பிலும் சிரிப்பு வந்தது. *ஐயா. உள்ளேதான் இருக்கிறீங்களா?.” என்கிற கேள்வி, இவனைத் திடுக்கிடச் செய்வது போல, இருந்தாற் போல் வெளியிலிருந்து வந்தது. அந்த ஆளாய்த்தானிருக் கும். சட்டென்று பாய்ந்து, கதவை அழுத்திப் பிடித்தபடி *:ஒமோம் இன்னம் முடியேல்லை.” என்றன், குரல் அடைக்க.
**சரிங்க, சரிங்க . ஐயா வெளியே (8штиalt" to ti. களோன்னு பாத்தேன். நீங்க இருங்க . "- குரல் நகர்ந் ,அவன் மேல் அசாத்தியக் கோபம் வந்தது سملاقاتي இவனுக்கு. கதவடியிலிருந்து திரும்பி, மீண்டும் தன் இடத்திற்கு- ஜன் னலடிக்கு வந்ந போது, எதிர்த்த மாடி ஜன்னல்களில் ஆள் நடமாட்டந் தெரிந்ததை அவதானித்தான். ஒரே ஆத்திர மாய் வந்தது. யாரோ இரண்டு மூன்று பேர், அங்கே நின்று ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பக்கத் திரும்பவில்லைதான்; ஆணுல் தற்செயலாகத் திரும்பினுல், இவன் கட்டாயம் கண்ணிற்படுவான். சுவர்த் தட்டின் ஒரு மூலையில் மடங்கிப் போய்க்கிடந்த கடதாசி மட்டை கண்ணிற் பட்டது. எடுத்துத் தூசு தட்டி, விரித்துப் பார்த்த போது, ஜன்னலில் இவன் தலையை மறைக்கிற அளவுக்குச் சரிவரும் போலிருந்தது.
O சாந்தன் / 7

Page 9
வலு பாடுபட்டு, ஜன்னல் இடுக்குகளில் அதைச் சொருகி மறைக்கப் பார்த்தான். இதை விட்டு, போத்தஐலயும் வீசி எறிந்து விட்டுப் போய்விட வேண்டுமென்கிற அவதி எழுந்தது. அடக்கிக் கொண்டான்.
கனவுகளின் தோல்வியை இனியும் பொறுக்க முடியாது. இல்லாவிட்டாலும், காரணமாவது தெரிந்தாக வேண்டும். ஒருபடியாக, மட்டையை ஜன்னலிற் பொருத்திய போது, அது அந்நேரத்தில் நிற்குமாப் போல நின்றது. ஒரு மூலை யில் மட்டும் நீக்கல். பரவாயில்லை. வெளியில் இருந்து பார்ப் பவர்களுக்கு, நிச்சயமாக இவனைத் தெரியாது; ஆணுல், இவனுக்கு வெளியே எல்லாந் தெரியும். நீக்கல் வழியே பார்த்தான்; அந்த மாடி ஜன்னல்களருகில் அப்போது நின்றவர்கள் இல்லை. இரண்டு ‘நேர்ஸ்மார் , அவசரமாக நடந்து வருவது தெரிந்தது. ஒருத்தி, ஜன்னலே நெருங்கி வந்தாள். கையிலிருந்த எதோ காகிதங்களை விரித்து வெளிச்சப் படுகிற மாதிரிப் பிடித்து, அந்த இடத்திலேயே நின்று படிக்கலானுள். இவன் நேரத்தைப் பார்த்தான். இரு பது நிமிடமாகிக் கொண்டிருந்தது. வெளியே இருந்தவன், மீண்டுங் குரல் கொடுக்கலாம். விஜ யன் கூட தேடி வந்தாலும் வரலாம். - *டக்கென்று முடித்துவிடவேண்டும்" - என்று திரும்பவும் நிஜனத்துக் கொண்ட போதிலேயே, அதைச் சுலபமாக முடித்துக் கொள்வதற்கான வழியும் அவன் மனதிற் பளிச் சிட்டது.
கடதாசி மட்டை நீக்கலூடாகப் பார்த்தான். அந்த நேர்ஸ் இன்னமும் அங்கேதான் நின்று கொண்டிருந்தாள். “அழகு" என்ற சொல் கிட்டவும் வராது. “சாதாரணம்’ என்று வேண்டுமானுல்- அதுவும் யோசித்து - சொல்லலாம். கறுப்பு இளவயதுதான். உடற்கட்டை நிர்ணயிக்க முடியாதபடி? "யூனிஃபோர்ம்' நின்றது. பாதகமில்லை.
அவள், தானறியாமலே இவனுக்கு உதவலானுள்.
8 / நீக்கல்கள்

இவன் வலு சுகமாக அவளுடைய 'யூனிஃபோர்ம்", தொப்பி, எல்லாவற்றையும் தன் மனதாலேயே கழற்றிவிட்டான். கற்பனைகள் கற்பிதங்கள் எல்லாம், அவள் நேருக்கு நேரேயே நின்றதால், நிதர்சனம் போலவே இவனை எழுப்பி, ஊக்கப் படுத்தின.
உச்சத்தை நோக்கி விரைந்த கணங்கள். எல்லாம் முடிந்தபோது, அப்பாடா” என்றிருந்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, அந்த நேர்ஸ்மீது பச்சாத்தாபமும் தன்னில் ஆத்திரமும் கொண்டான்.
&rsair /9

Page 10
மனிதர்கள் மனங்கள் மானங்கள்
(síf 63ðf&scó *74

1.
இன்னமும் முக்கால் மணி நேரமிருந்தது. பரீட்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபமும் அதன் சூழலும் நகரின் சந்தடிகளிலிருந்து ஒதுங்கி மிக மனுேகரமாக இருக் கவே, "அரை மணி நேரமாவது மெல்ல உலவி வரலாம்" என்கிற எண்ணம் மனதினே இழுக்க அவன் வெளியே நடந்தான்.
ஒன்பதுக்குத் தொடங்குகிற பரீட்சை முடியப் பன்னிரண்டு மணியாகும். ஒரு மணிக்குள் லலனியின் வீட்டுக்குப் போய் விட முடியுமா?" என்கிற குழப்பமும், பஸ் நேரத்திற்குக் கிடைத்தால் உடனேயே போய் விடலாம் . என்கிற ஒரு சமாதானமும்.
காற்சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட போது, அவளுக்குப் பரிசளிப்பதற்காக வாங்கிய அந்த அழ கிய வெல்வெட் கொட்டைப்பெட்டி, கையை ஸ்பரிசித்தது, மெதுவாக வெளியே எடுத்துப் பார்த்தான். இரண்டு பட்டாகச் சுற்றிய கடதாசியும், மேலுரையான ப்ரெளன் பேப்பரும் அவிழாமல் சரை கெட்டியாக இருக்கவே, வியர்வையில் ஊறி நசியாது’ என்ற நம்பிக்கை பிறந்தது. அதற்குள்ளே இரண்டு அழகிய பிளாஸ்ரிக் தோடுகளையும் வைத்திருந் தான.
பரீட்சார்த்திகள் வந்துகொண்டிருந்தார்கள். படிக்கிற நாட் களில் அவன் எழுதிய பரீட்சைகளுக்கும் இதற்கும் வித்தி யாசங்களிருந்தன. இளந்துள்ளலும் துடிப்புமாய் -கீரடிநாரடி யாய். அமளிபடுகிற பரீட்சை மண்டபங்கள், ஒத்த வயதுள்ள இளம் மாணவர்கள் இருந்தெழுதிய பரீட்சைகள் அவை. ஐம்பது வயதும் இருபது வயதும் அருகருகே இருந் தெழுதுவதும்; ஹிப்பித்தலையும் வழுக்கை மண்டையும், நஷனல் வேட்டியும் ஹாஃப்ஸ்கேட்டும் முன் பின்னுக இருந்து மண்டையை சொறிவதும் இங்கே நடக்கிறது.
O சாந்தன் / 11

Page 11
வரக்கூடிய கேள்விகளென்று ஒரு மாதமாகவே அலுவலகங் களிலெல்லாம் பேசப்பட்டுப் பழகிப்போன தலைப்புகள் *அந்த மாஸ்ரர் சொன்னுர்’, இந்த மாஸ்ரர் சொன்னுர்", *கனகாலமாய் வராத கேள்வி: கரண்ட் ரொப்பிக்ஸ்’- என்று எத்தனையோ ஆதாரங்களிலே விளைந்த தலைப்புகள். அவனுக்கு என்னவோ, நவ கார்யால வெலாவ'- புதிய வேலை நேரம்'- தான் வருமென்ற நம்பிக்கை. பொது ஊழியரை நேரடியாகப் பாதிக்கிற விஷயங்களை - மாற்றங்களே. வியாசங் களாகக் கொடுப்பது வழமை என்கிற எண்ணம் உறுதியா யிருந்ததாலும், இந்த விஷயம் குறிப்பிடக்கூடிய மாற்ற மென்பதாலும் அவன் நம்பியிருந்தான். * சிங்களம் படிப்பதா, இல்லேயா' என்ற யோசனைக் கெல்லாம் போகாமல்- அல்லது, அதை தாண்டி- அவன் இந்த சோதனை எடுக்க வந்திருந்தான். அந்த மொழியைத் தனக்குள் சுவறச் செய்ய இயல்பாக முடிந்து விட்டது. அந்த மொழி யில் ஒரு பிரேமை -அவனுல் பிரேமிக்கப் படுபவளின் தாய்மொழி என்று லலனியின் மொழியைப் பயில்வதில் ஓர் ஆர்வம். அது அரசகரும மொழியோ, என்னவோ. அதனுல்- அந்தப் பிரேமை பிரசவித்த ஆர்வத்தால்ம் விளம்பரப் பலகைகளையும்; போஸ்ரர்களையும் எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்து, இன்று பத்திரிகைகள் படிக்கிற அளவில் வந்து நிற்கிறது. "இதுக்காக ரியூஷன் எடுக்க எனக்கு நேரமில்லை’ என்று தான் ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். பிறகு, எப்படியோ ஒரு ரியூஷன் வைத்துக் கொள்ள நேர்ந் தது. மிஸ். பெரேரா கொழும்பில் அவ்வளவு பெயரெடுத்த ஆசிரியை அல்லள். அவளது ஃபீஸஸும் மிக அதிகம். தவிர தமிழ் ‘ரிக்க ரிக்க”த்தான் தெரியுமென்பதால், ஆங்கில மூலமே சொல்லிக் கொடுப்பாள். இதனுலெல்லாம் அவளிடம் அதிகம்பேர் படிக்கபோவதில்லை. இவனது தோழிகளிலே ஒருத்திக்குத் தோழியாக இருந்த மிஸ் பெரேராவை அந்தப் பெண் அறிமுகப்படுத்திய போதுதான் அவள் ரியூஷன்
12 / மனிதர்கள் மனங்கள் மானங்கள் O

கொடுப்பது தெரிய வந்தது. மிஸ். பெரேராவுக்கு வயது இருபத்தைந்திற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட எதுவுமாக இருக்கலாம். நடந்த வண்ணமே, நவ கார்யால வெலாவ பற்றி மிஸ். பெரேரா தந்த குறிப்புகளைப் பிரித்து ஒரு மேலோட்டப் பார்வை. “எக்ஸ்கியூஸ் மி , * -குரல் அவனே நிறுத்திய போதுதான். தான் நடந்தபடி தெருமு?னக்கே வந்திருப்பது தெரிந்தது. திரும்பியபோது, அந்த மனிதர் - அவனே அழைத்தவர்ஆங்கிலத்தில் கேட்டார்; “இங்கே எங்கு பரீட்சை நடக்கிறது?’ அவன் சுட்டிக் காட்டினுன். ஒரு நிமிட இடைவெளிக்குள் ‘நீங்களும் அந்தப் பரீட்சை எடுக்கிறீர்களா?’ என்ற இரண்டாவது கேள்வி ஒரு தோழ மைப் பாங்கில் வந்தது.
“ஆம்’ *நானுந்தான் எழுதப் போகிறேன் . பாருங்கள் என்ஜன ** அவன், அப்போதுதான் அவரை சிரத்தையிற் கொண்டான். ஐம்பது வயதிருக்கலாம். அதற்காகத்தான் சொல்லியிருக்க வேண்டும். தமிழ் முகவாகு இல்லை. *நீங்கள் முஸ்லிமா?? -தமிழிற் கேட்டான். கேட்ட பிறகுதான், தான் அப்படிக் கேட்டிருக்கக் கூடா தென்று தோன்றியது. *இல்லே, நான் ஒரு BURGHER .* -அவர் முறுவலுடன் ஆங்கிலத்தில் சொன்னுர், *. ஐ ஆம் ஜோன்ஸ் - வில்லியம் ஜோன்ஸ்” அவர் நீட்டிய வலக்கரத்தைப் பற்றிக் குலுக்கினுன். **ஐ ஆம் தேவன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி .”* கல்லூரியை நாடி இருவரும் மெல்ல நடந்தார்கள்.
O சாந்தன் / 13

Page 12
*உமக்கு எவ்வளவு கால “ஸேவிஸ்" ஆகியிருக்கிறது?" என் றர், ஜோன்ஸ்.
*மூன்று வருஷம்”*
*தம்பி, எனக்கு முப்பது வருஷம் ..”* ‘ஓ! நான் அப்போதே கேட்க நினைத்தேன்; எங்களுக்குபுதியவர்களுக்குத்தான், வேலே நிரந்தரமாக்கப்பட வேண்டு மென் ருல் சிங்களம் தேவை. நீங்கள் ஏன் இந்தப் பரீட்சை எடுக்க வேண்டும்? பழைய ஊழியராயிற்றே!?? அவர் ஒரு நலிந்த சிரிப்புடன் சென்னுர்: **இனி எக்ஸ்ரென்ஷன்” கேட்கப் போவதணுல் நானும் பாஸ் பண்ணியாக வேண்டுமாம்”* எட பாவமே என்றிருந்தது. ‘என்னைப் பார், நான் பிள்ளைகுட்டிக்காரன். இந்த வயதில் என்னைப் படிக்கச் சொன்னுல் என்ன செய்வேன்? - அந்த மனிதரின் முகத்தில் கோடிட்டிருந்தது கவலையா வெறுப்பா என்பதை இனங்கண்டு கொள்ள அவனுல் முடியவில்லை.
2
சரசரவென்று கேட்ட ஒலிகள் - நடையொலிகள், பேச்சொலி கள், பேப்பர் ஒலிகள் - எல்லாம் அடங்கி நிசப்தம் நிலவியது. மணி ஒன்பது.
பரீட்சை தொடங்கியாயிற்று. தனித்தனி வகுப்பறைகள். ஒவ்வொன்றிலும் பதினேந்து 5 குறு பரீட்சார்த்திகள். அவன் வினுத்தாளைப் பார்த்தான். வியாசம் எழுதத் தெரிவு செய்யப்பட வேண்டிய தலைப்புகளில் ‘நவ கார்யாலவெலா வவும் வந்திருந்தது. அவனுள் ஊற்றெடுத்த ஒரு உசார். இது என்ன பரீட்சை? சமாளித்து விடலாம்!” என்கிற துணிவு. இந்தச் சோதனைக்கா இப்படிப் பயந்து சாகிருன் கள்?
14/ மனிதர்கள் மனங்கள் மானங்கள் O

ஏற்கனவே படித்து, நினேவில் மதர்த்து நின்ற குறிப்புகளை "கடகட வென்று அதே ஒழுங்கில் ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்ட பின்தான் முட்டு நீங்கியது. ஒரு விஷய மும் மறக்கவில்லே வசனங்கள் கூட அதே ஒழுங்கில் பீறிட முயன்றன. அவன் எழுத்தில் ஒன்றிப்போனன்.
3
"நவகார்யால வெலாவ"வை முடித்துவிட்டு நிமிர்ந்த போது மணி பத்து. மிஸ். பெரேராவுக்கு மனதுக்குள்ளேயே ஒரு தாங்ஸ்! இரண்டு நிமிஷம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. சோம்பல் முறித்து நெட்டி நெருடியபடி சுற்று முற்றும் பார்த்தான். சின்ன அறை. நீளப்பாட்டில் நாலு வரிசை மேசைகள், அகலப்பாட்டில் நாலு வரிசை. அவனிருந்த வரிசையில் முத லிடம் காலியாக இருந்தது. யாரோ வரவில்லை. மேற்பார்வை யாளரின் இடம் கரும்பலகைக்குக் கீழே. அந்த ஆள், கை களை மார்பிற் கட்டியபடி குறுக்கும் நெடுக்கும் உலவிக்கொண் டிருந்தது. முப்பத்தைந்து வயதிருக்கலாம். முகத்தில் ஒரு வரட்டு ஆணவப் பார்வை. "கவனித்தே தீருவேன்" என் பது போல விழிகள் கடகடவென்று ஒவ்வொரு பரீட்சார்த்தி மேலும் மாறிமாறி மேய்ந்தபடி இருந்தன. இந்தச் செயலைப் பார்த்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. அடுத்த கேள்வி. தரப்பட்டுள்ள பத்தியை வாசித்து அதன் கீழ் கேட்கப்பட்டுள்ள வினக்களுக்கு விடை எழுதுதல்.
*அது வலு ஸிம்பிள் ."
4.
பத்தரைக்கு இரண்டாவது கேள்வி முழுவதும் முடித்தா யிற்று. தான் அதற்கு விடையளிக்கச் சற்று அதிக நேரம் எடுத்து விட்டதாகவே படுகிறது; இனிக் கடகடவென்று எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
O சாந்தன் / 15

Page 13
இன்னும் மூன்று கேள்விகள். அடுத்தது, மொழி பெயர்ப்பு அல்லது சுருக்கம். கடைசி இரண்டும் இலக்கணம்.
சுருக்கம் எழுதுவது சுலபம்’ என்று தோன்றுகிறது. அதற் கான விசேட விடைத்தாள் தேவை.
மேசையில் பேணுவால் டொக் டொக்கென்று மெதுவாகத் தட்டினுன்.
**9fsmo) (3 LJř - **
பேப்பரைக் கொடுத்து விட்டு இடுப்பிற் கையை வைத்த படி அந்த ஆள் அவன் எழுதியவற்றை வாசிக்க முனைந் தது. நிமிர்ந்து பார்த்தான். அதன் முகத்தில் ஒரு கேலி முறுவல். ஆத்திரமாக வந்தது. * எதுக்கு இளிக்கிருன்? - வினுத்தாளே எடுத்து, சட்டென்று எழுதிய தாளின் மேல் வைத்தான் - முகத்திலறைந்தது போல, அது அப்பால் நகர்ந்தது.
சுருக்கி எழுதலுக்கு ஆயத்தஞ்செய்யும் போது, ஒரு சொல் நினைவில் நெருடியது . சத்தெக்கு ? (ஒர் பிராணி) * , சத் தெக்கு. சுரத்தல் சத்தெக்கு -அவன் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. முன்பொரு எக்ஸாமில் சுரத்தல் சத்தெக்கு (ஒர் செல்லப் பிராணி) பற்றி எழுதச் சொன்ன வினவுக்கு, *சுரத்தலி' (காதலி) பற்றி விளாசி விட்டு வந்த மாதவனின் நினைவு!. பாவிப்பயல் -*சுரத்தல் சத்தெக்குவும். சுரத்தலி" யும் ஒன்றென நினைத்ததால் வந்த வினை அந்த விடைத் தா?ளத் திருத்தியவன் எப்படிச் சிரித்திருப்பான் -கொடுத்து வைத்தவன். AP
*சுரத்தலி -அவனுக்கு லலனி’யின் ஞாபகம் வந்தது. மணி யைப் பார்த்தான், பத்து முப்பத்தைத்து, ‘ஒரு மணிக்கு அவள் பார்த்துக் கொண்டிருப்பாளே என்கிற எண்ணம் நெஞ்சில் உறைத்தது.
முடிந்தால் பதினுென்றரைக்கே கொடுத்து விட்டுப் போய்
16 / மனிதர்கள் மனங்கள் மானங்கள் O

விட வேண்டும் என்று நி?னத்துக் கொண்டான். முந்த நாளே அவள் கேட்டாள்:
'உங்களுக்கு எக்ஸாம் பன்னிரண்டு மணிக்குத்தான் (nடியுமென்றல், சாப்பாட்டை இரண்டு மணிக்கு வைத்துக் கொள்ளலாமே?’ அவளின் பெற்றேரும் ஆமோதித்தார்கள். *ஒவ் புத்தா -எங்களுக்கென்ன அவசரம்? நீ ஆறுதலாக வரலாம்*
அவன் தான் விடாப்பிடியாக மறுத்து விட்டான்.
"சே எதுக்கு அப்பிடி? அங்கிருந்து இங்கு வர ஒரு மணித் தியாலம் போதாதா? நான் பன்னிரண்டே முக்காலுக்கே இங்கே நிற்பேன்!”* 'நீ பிந்தி விடாதே . பிறகு என் சாப்பாடும் போச்சு!?? - நிஹால் தோளில் தட்டிச் சிரித்தான். "என்னுல் அவர்கள் மி?னக்கெடக் கூடாது - அதுவும் அவளின் பிறந்த நாளில்' -மனதை ஒருமுகப்படுத்தி எழுத முயன்றன்.
சிந்தனையும் அதன் பயணுகிய எழுத்தும். அதிலேயே ஒன் றிப் போனுன்,
5
எழுதியதைத் திரும்பச் சரிபார்த்துக் கொண்டிருந்த போது, நிமிர்த்தான். மணி, பதினுென்று. விடைத்தாள்களைச் சேர்த்துக் கட்டுகிற நூல் துண்டை ஒருவன் கொடுத்துக் கொண்டு போனன். கைகளில் இரண்டு விடைத்தாள்களே வைத்து வாசித்தபடி மேற்பார்வையாள் வெளிப்படையாகவே சிரித்துக் கொண்டிருந்தது. யாரோ வேளைக்கே கொடுத்து விட்டுப் போயிருக்க வேண்டும்.
"இதில் சிரிக்க என்ன இருக்கிறது? - அவனுக்கு அருவருப் பாக இருந்தது.
口 சாந்தன் / 17

Page 14
.*அவர்களின் விடையை இவன் எப்படி வாசிக்க முடியும்? சரி, வாசித்தாலும் என்ன இளிப்பு? பிழை விட்டால்தான் என்ன? இது அவர்களின் தாய்மொழியா - கூலிக்கு மாரடித் துப் படித்தது; இவ்வளவு எழுதியது கூடப் போதாதோ?” கடைசிக் கேள்வியில் புலனைச் செலுத்த முயன்றபோது சிரம மாயிருந்தது. என்ன மனிதர்கள்! லலனியின் குடும்பத்திற் கும் இதுகளுக்கும் துருவ வேற்றுமை! இந்தக் கும்பலின் மற்றப் பிரகிருதிகள். அவன் மேலதிகாரி பெர்ணுண்டோ ஏன், மிஸ், பெரேரா
6
அவன் மேல் அவள் இன்ட்ரெஸ்டட்'டாயிருந்தாள் என் பதை அவளே ஒப்புக்கொண்டது உண்மைதான். அவ னுக்கு உயிரான ஒரு பெண் இருக்கிருளென்பதை அவன் மிஸ். பெரேராவிடம் அந்தச் சமயம் சொன்னதைக் கூட, அவள் பெரிதாக மதிக்கவில்லை. அவனுக்கும் பயமாயிருந் தது. லலனியைப் பற்றி - அவள் அண்ணன் நிஹாலுடன் படித்து சிநேகமானதன் மூலம், லலனியின் காதலும் அவர் களது பெற்றேர்களின் அன்பும் காலப்போக்கில் சித்தித்த கதையைப் பற்றி - அவன் கூறியதே கூட, மிஸ். பெரே ராவைப் பற்றிய பயத்தால்தான் என்று நினைக்கிருன். அவளைப் பார்க்கும் போதெல்லாம், மோகினி" என்ற பெயர் நினைவு வரும். அவளது பெயர் சுமஞவோ, சோமாவோ ஏதோ.ஆனுலும், நெருக்கமான பரிச்சயங்களின் பிறகுங் கூட, "மிஸ். பெரேரா’ என்று அழைத்துக் கொண்டும், *மோகினி" என்று நினைத்துக் கொண்டும் தானிருந்தானே யொழிய அவளது பெயரே நினைவுக்கு வந்ததில்லை.
மாலையிலெல்லாம் ரியூஷன் ஐந்து மணியிலிருந்து ஏழரை மட்டுமாவது நீளும். ‘வாரத்தில் மூன்று நாட்கள். ஒரு மணி நேரம் பாடம்’ என்பது பேச்சு. ஆறு மணிக்குப் பாடம் முடிந்தால் கதை எங்கெல்லாமோ போகும் - அரசியலிலிருந்து
18 / மனிதர்கள் மனங்கள் மானங்கள்

ஆயுள் வேதம் வரை.
மிஸ்.பெரேராவுக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும், பேசினுல் புரியும். அவள் அபிப்பிராயத்தில் தமிழிலும் பார்க்கச் சிங்களம் உயர்ந்தது என்கிற ஒரு எண்ணமும், அதை இடைக்கிடை சொல்லித் திருப்தி கொள்கிற ஒரு முனைப்பும் இருந்தன என்பதை அவன் போகப் போகப் புரிந்து கொள்ள நேர்ந்தது.
ஒருநாள், ‘அடி" சந்தித்தது. பிடித்துக் கொண்டாள். வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.
**சரி, இலங்கையிலிருக்கிற நாங்கள் தான் உங்களிடமிருந்து எடுத்துக் கொண்டோம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் இந்த நாட்டுத் தமிழர்களுக்கெல்லாங்கூட நீங்கள்தான் அந்தச் சொல்லைக் கொடுத்தீர்களா?”
அவள் பேசவில்லை.
அவளுடைய இன்னுெரு ஆசை சம்ஸ்கிருதம் சம்பந்தப்பட்ட தாய்- அதாவது, ‘சம்ஸ்கிருதத்திருந்து தான் தமிழ் தோன்றியது" என்பதையும் எப்படியாயும் நிறுவிவிட வேண்டுமென்பதாய்- இருந்தது. ‘இயந்திரம்’ என்ற சொல்லை இன்னுெருநாள் இழுத்துக் கொண்டு வந்தாள்.
'பார்த்தீர்களா, மிஸ்டர்? யந்த்ர, என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து தான் உங்கள் தமிழில் யந்திரம் என்று வந்திருக்கிறது! தமிழ் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தது என்ப
و و زf
தற்கு இது ஓர் ஆதாரமல்லவோ? **யந்திரம் என்று தமிழில்லே!” - அவன் டக்கென்று சொன் ஞ்றன்.
*என்ன? தமிழில்?லயா? உங்களுக்கு உங்கள் பாஷையே சரியாகத் தெரியாது போலிருக்கிறது . " -அவள் சிரித்தாள்.
*இல்லை, தமிழில்லே, நீ சொல்வது போல அது சம்ஸ்கிருதந் தான்- எங்களிடம் வேறு நல்ல சொல்லிருக்கிறது!’
O சாந்தன் / 19

Page 15
'என்ன அது?" - அப்படியொன்று இருக்கவே முடியாது என் கிற தொனி. ‘பொறி!” - அவன் அழுத்தந் திருத்தமாய்ச் சொன்னுன், ‘. தமிழைப் படியாத நீ, அதை விமர்சிப் பதை அநுமதிக்க முடியாது! நான் சொல்லலாமே - இதே மாதிரி - சம்ஸ்கிருதமே தமிழிலிருந்து வந்ததென்று?" - அவன் சிரித்துவிட்டு எழுந்து வந்தான்.
7
யாழ்ப்பாணத்தில், நண்பன் விஜயரத்தினத்திற்குக் கல்யா 5ணம். அலுவலக முகவரிக்கு அழைப்பு அனுப்பியிருந்தான். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது பெர்ணுண்டோ அந்தப் பக்கம் வந்தார். *ஒகோ! உனக்கு எப்போதென்று யோசிக்கிருயோ? யாரு டையது அது?’ என்று சிரித்தார்.
அவனும் சிரித்தவாறே அழைப்பிதழை நீட்டினுன். வாங்கி வாசித்தவர், "விஜயரத்னம்’ என்று முணுமுணுத்தபடி திருப் பிக் கொடுத்தார்.
*யூ ஸி . இந்த விஜயரத்னம் என்பது, விஜயரத்ன" என்ற சிங்களப் பெயரிலிருந்து வந்திருக்க வேண்டும், இல்லையா?* 'இல்லை, மிஸ்டர் பெர்ணுண்டோ - அது தமிழுமில்லை, சிங் களமுமில்லை; சம்ஸ்கிருத ஒரிஜின்." - இப்படிச் சொன்ன போது, தமிழ்ப் பெயர்களின் பின்னுலுள்ள இம்மன்னு", * இன்னன்னு’க்களே வெட்டிவிட்டு சிங்களப் பெயராக்குகிருர் கள்’ என்று தமிழர்கள் சொல்வது நினைவு வந்தது.
பிறகு கேட்டான்:
*அழகிய வண்ண, தென்னக்கோன் - என்றெல்லாம் பச்சைத் தமிழ்ப் பெயர்களிருக்கிறதே, உங்களிடம்!”
*உனக்கென்ன, பைத்தியமா." - மிஸ்டர். பெர்ணுண்டோ முறைத்தார்.
20 / மனிதர்கள் மனங்கள் மானங்கள் 口

11.கந்தையா, நடராசன் டோன்ற பெயர்கள் தான் உங்கள் ஒரிஜினல் பெயர்கள். அழகிய வண்ண, தென்னக்கோன் எல்லாம் சிங்களந்தான்!' - அவர் சற்று ஸ்ரிேயஸ்ஸாகப் பேச முற்படுவது தெரிந்தது. மிஸ், பெரேராவுக்குச் சொன்னது போல, வெளிநாட்டுத் தமிழர்களேத் துணைக்கிழுத்ததும் பெர்ணுண்டோ நிறுத்திக் கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தப் பரீட்சைக்கான அது மதிப் பத்திரத்தில் சான்று ஒப்பத்திற்காக பெர்ணுண்டோ விடம் போனுன், பார்த்துவிட்டு, ‘ஓ! நீகூட எடுக்கிருயா?* என்றர். அப்போதுதான் இந்தப் பரீட்சை எழுத முடிவு கட்டியதற்காக வருத்தம் அவனுக்கு முதன் முறையாகத் தலைகாட்டியது.
8 முழுவதும் எழுதி முடிந்தபோது பதினென்று நாற்பது. அதே கமாக எல்லோருமே எழுதி முடிந்தாயிற்று. முன்வரிசையில் ஒரு பெண்ணும் வலது மூலையிலிருந்த இன்னுெருவரும்தான் இன்னமும் எழுதிக் கொண்டிருந்தார்கள். விடைத்தாள்களே ஒழுங்காக அடுக்கிக் கட்டி மேசையில் வைத்தபோது, அந்த ஆள் அருகில் வந்தது. அவன் சும்மா இருந்தான். **இவறத?* புரியாதவன் போலக் கேட்டான் : ‘'என்ன?” *முடிந்ததா? - மெல்லிய வெருட்டுத் தொனிக்க ஆங்கிலத் தில் கேள்வி வந்தது. *6 ஏன்?* **தந்திட்டுப் போகலாம்’ *இன்னும் பதினஞ்சு நிமிஷமிருக்கு. நான் திருப்பிப் பார்க்க வேணும்" - நீ எப்படிக் கேட்க முடியும்? என்கின்ற தைரியம். அது தன்பாட்டில் ஏதோ முணுமுணுத்தபடி நகர்ந்தது.
சாந்தன் / 21

Page 16
81 முதியவற்றைத் திரும்பி வாசிக்கக்கூட மனம் வரவில்லை. அவனுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. இந்தப் பரீட்சை எடுத்ததே மகா தவறு" என்று பட்டது. ஒரு கூச் சம். இதைப் பாஸ் பண்ணுமல் விட்டாலே நல்லதாகிவிடும் என்ற ஒரு தவிப்பு. அது சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தது. அவனைத் தாண்டும்போது உற்றுப் பார்த்தது. பிறகு நின்று, ஓரளவு உரத்த குரலில் வேறெதையோ குறிப்பதான பாவனையில் நூல்காரனுக்குச் சொல்லிற்று :
o rC3rgir!" * பாரேன் இந்தப் பரிதாபங்களே!” - என்று அது தொனித்தது. அவன் சடாரென்று நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்தான். தான் சொன்னது அவனுக்குப் புரியாது என்று அது நினைத் ததோ - இல்லை, புரிய வேண்டுமென்றுதான் அப்படிச் சொல் லிற்றே - எழுந்த வேகத்தைக் கண்டு திடுக்கிட்டது. அவன் எழுந்து விடைத்தாளே எடுத்து நின்றநிலையில் நீட்டினன். அருகில் வந்தவுடன்,
‘ஒரு நிமிஷம் , * -அதன் முன்னல், தன் மேசையில் விடைத்தாள்களே வைத்துவிட்டுப் பே?னயைத் திறந்தான். கடதாசியின் குறுக்கே கரியகோடு நீண்டு விழுந்தது. அதன் திகைப்பு மீள முன்பே, மூன்றுதாள்களிலும் - ஆறு பக்கங்கள் - கோடு விழுந்து விட்டது! வெட்டப்பட்டு வெறுங்காகிதமாகிவிட்ட தாள்களை அதனி டம் நீட்டினுன்.
“ஏன் . " அதற்குப் புரியவில்லை. அதன் கைகளில் விடைத்தாள்களே வலிந்து திணித்தபடி, காதருகில் சாய்ந்து கூறினுன் ‘வைத்திரு!" -அந்தக் குரலில் ஒலித்த கடூரம் அதை உறுத்தமுன்பே அவன் வெளியேறினுன்.
லலனி பார்த்திருப்பாள்.
22 / மனிதர்கள் மனங்கள் மானங்கள் O

புரிதல்
Uírsvö '77

Page 17
1
கல்லூரி அலுவலகத்திற்கு வெளியில் நான் காத்துக்கொண் டிருந்தபோது, "டக், டக்கென்று சப்பாத்து சத்தத்துடன் கைலைநாதன் அங்கு வந்தான். * டேய்! என்ன மச்சான். இஞ்ச நிக்கிருய்?’ என்று கத்தி ன்ை. எனக்கும் அவனைக் கண்டதும் சந்தோஷமாய்த்தானி ருந்தது. நாலு வருஷம் என்னேடு இங்கு படித்தவன் . *ஃபைனல் எக்ஸாம் முடிந்து இரண்டு வருஷத்துக்குப் பிறகு, இப்போதுதான் சந்திக்க முடிந்திருக்கிறது. **இந்த "டிப்பொஸிற்’ திருப்பி எடுக்க வந்த நான், மச்சான் .." என்று சொல்லி விட்டு, **. நீ எங்கே இந்தப் பக்கம்?" என்று கேட்டேன். *ஒரு ரெஸ்ரிமோனியல் ஒண்டு எடுக்க வேண்டியிருக்கு.” **இப்ப, எங்கை?..”* *பி. டபிள்யூ. டீ. தான். கொழும்பிலை. நீ?" "இன்னும் ஒண்டுஞ் சரிவரேல்லை.” பழைய நினைவுகளே மீட்டுக்கொண்டு, கன்ரீனுக்குப் போ னுேம், கன்ரீன் மிகவும் மாறியிருந்தது. இப்ப இஞ்ச எல் லாம் நல்ல முன்னேற்றம்.’’ என்ருன், கைலி, **ஒமடாப் பா. புதுசா இரண்டு ப்ளொக்ஸ் கூடக் கட்டியிருக்கிருன் கள் .”*
*அது மாத்திரமில்லை; பெடியளுந்தான் . முந்தி நாங்கள் படிக்கிற காலத்திலே எல்லாரும் ஸ்லிப்பரோட தானே திரியற நாங்கள். இப்ப என்னடா எண்டா - பார் - ஒருத்தணுவது ஷ oஸ் போடாமலில்லை." - கைலி, ஏதோ நினைவு வந்தவனுக என் கால்களைப் பார்த் தான். நான் ஸ்லிப்பர் போட்டுக் கொண்டு நின்றேன். **இண்டைக்கு ஒரு சாடை யான மழைக்குணமிருக்கு - ” என்றன் கைலி, பிறகு,
24 / புரிதல் O

2
சந்திரன் அந்த கேற்றைத் தாண்டிப்போக நேரிட்டது தெரு வின் இடது பக்கத்தில் ஒரு தென்னே 10ரத்தை யொட்டி அது இருந்தது. இரட்டை கேற். ஐந்தடி ஐந்தடியாகப் பத்தடி இருக்கும். கேற்றின் குறுக்குச் சட்டத்தில் ஏறி நின்று அதன்மேல் வயிற்றை வைத்து, வெளிப்பக்கம் குனிந்து, ஒரு குழந்தை விளேயாடிக் கொண்டிருந்தது. அவன் திடுக்கிட்டான். கேற்றின் மேற்பக்கம் முழுவதும் ஆறங்குலத்திற்கு ஒன்ருக - கூர்கூரான கம்பிகள் நீட்டிக் கொண்டிருந்தன. குறுக்குக் கம்பியில் ஊன்றிக் கொண்டி ருந்த குழந்தையின் கால் தற்செயலாகக் கொஞ்சம் வழுக்கி (லுைம் - வழுக்கும் போலத்தானிருந்தது - போதும் . அவன் நி3னத்துப் பார்க்கக் கஷ்டப்பட்டான். குழந்தைக்கு மூன்று வயதிருக்கலாம். தலேமயிர் சுருள் சுரு ளாக, நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. நடைவேகத்தைக் குறைத்து, கேற்றின் உள்ளே பார்த்தான். பழைய வீடு; முற்றம். ஒருவரையுங் காணவில்லே. மதிற் சுவரில், ஆர். ரி. அருமைநாயகம்" என்று பெயர்ப்பலகை பொருத்தியிருந்தது. அவனுக்கு, அந்த வீட்டு ஆட்கள் மீது சரியான ஆத்திரம் வந்தது. தெருவிலும் ஆள் நடமாட்ட மில்லை; மத்தியான நேரம். அப்படியே விட்டு விட்டுப் போக அவனுல் முடியாதிருத் தது. திரும்ப கேற்றடிக்குப் போனுன். குழந்தை அவனேக் கவனித்ததாகத் தெரியவில்லே, சந்திரன் கவனமாகக் கூப் பிட்டான்.
It
குழந்தை திடுக்கிட்டு நிமிர்ந்து, பரபரத்து இறங்கியது. அவ னுக்குப் பயமாயிருந்தது. இந்த அவதியில் வழுக்கி விடு மோ..?
சாந்தன் / 25

Page 18
அனுல், குழந்தை கெட்டித்தனமாக இறங்கிக் கொண்டது. 66தாத்தா”. என்று கத்திக்கொண்டு உள்ளே ஓடியது. கோடுபோட்ட சாரங்கட்டி, வெள்ளே பெனியனும் கண்ணுடி யும் போட்ட, நரைத்த தலைக் கிழவர் ஒருவர் வந்தார். அவர் கேற்றருகே வருமட்டுங் காத்திருந்து, சந்திரன் விஷ யத்தைச் சொன்னுன்.
அவன் சொல்லி முடித்ததும், கிழவர் அவனை ஒரு மாதிரி யாகப் பார்த்து விட்டு, **தாங்ஸ்." என்ருர்,
26 / புரிதல் CI

கவலே
மல்விகை 81

Page 19
மகாதேவன் விஷயத்தைச் சொல்லியே நாலு நாளாகிவிட்டது: போன புதன்கிழமையிலிருந்து செல்லத்துரையர் ஆஸ்பத் திரியிலாம்!
புதைேடு புதன், இன்று எட்டு நாள் - இன்னும் போய்ப் பார்க்க முடியவில்லே! என்ன மாதிரி மனுசன், எத்தஐ உதவிகள் செய்தவர், உடனேயே போய்ப் பார்த்திருக்க வேணும். கமலம் அவனிடம் காலேயிலும் சொன்னுள்; “இண்டைக்கா வது அவரை ஒருக்காப் போய்ப் பாத்திட்டு வாங்கோ.”* அவள் சொல்லாமலே கூட அவன் போகக் கூடியவன் தான்; போக வேண்டியவன்தான். பஸ் காலை வாரி விடா மலிருந்திருந்தால் முந்தநாளே கூட போய்ப் பார்த்திருக்க லாம். நேற்றெல்லாம் தலை தூக்க முடியாவில் வேலை, விஷ யத்தைச் சொன்ன மகாதேவன் இரண்டுநாள் முத்திச் சொல் லியிருக்கக் கூடாதா என்றிருந்தது.
இன்றைக்கும் மினக்கெட்டுவிட்டு வீணுகத் திரும்பத்தான் வேணுமோ என்று சிவநாதன் யோசிக்கிறபோதே, தூரத் தில் பஸ் உறுமிக் கேட்டது.
பஸ் ஸ்ராண்டில் இறங்கி, கால் கிலோ முந்திரிகைப் பழமும் நல்லதாக ஒரு பிஸ்கோத்துப் பெட்டியும் வாங்கினுன். அவர் கட்டாயம் ஏசுவார்: “இதல்லாம் ஏன் வாங்கிக் கொண்டு வந்த நீ?" என்று. இருந்தாலும் வெறுங்கையோடு வருத்தம் பார்க்கப் போகக் கூடாது - அதுவும் அவரை. சொல்லி வைத்தாற்போல நேரம் சரியாக வந்திருக்கிறது. ஆஸ்பத்திரியடிக்கு வந்தபோது, திறந்த கேற்றின் வழியாக ஆட்கள் நெருக்கியடித்து நுழையத் தொடங்கியிருந்தார்கள். கொஞ்சம் ஒதுங்கிநின்று, நெரிசல் குறைய உள்ளே போ ஞன். விபரமெல்லாம் அன்றைக்கே மகாதேவனிடம் வடிவாகக் கேட்டு அறிந்து வைத்திருந்தான்: பதினெட்டாம் வாட், பதினுலாம் கட்டில். தன்ஜனக் கண்டவுடன் செல்லத்துரையர் என்ன கேட்பார் என்று நினைத்துப் பார்த்தான். 'ஆர் சொன்னது உனக்கு?”*
28/ 63 O

அல்லது, “ஏன் அவசரப்பட்டு ஓடி வந்தநீ? -எப்படி யிருந்தாலும் தன் அன்பையும் நன்றியையும் இது காட்டும். படியேறி மேலே போனுன்.
மூக்கைப் பொத்திக் கொண்டு அந்த நீண்ட நடை வழியைக் கடக்க நேர்ந்தது. அவரவர் அநுபவிக்கிற வியாதிக்காக மட்டுமல்லாமல் இந்த நாற்றத்தைச் சகித்துக் கொள்வதற் காகவும் சேர்த்து அந்த நோயாளிகளில் அநுதாபம் மிகுந் தது. பதினெட்டாம் வாட்டில் நுழைந்தான். பதினுலாம் கட்டிலுக்கு நேரே போனுன். ஆணுல், அதிற் படுத்திருந்த வர் செல்லத்துரையரல்லர். மகாதேவன் நம்பரை மறந்து போய் மாறிச் சொல்லியிருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டி லாகப் பார்த்துக் கொண்டே நீள நடந்து திரும்பினன். அவரைக் காணவில்லே. "பதினெட்டாம் வாட்டில் ஏ, பி, எண்டு இரண்டிருக்கு. இது, பி. ஏயைப் போய்ப் பாருங்கோ. ”” என்று யாரோ சொன்னுர்கள். அதுதானே! -மகாதேவன் ஏ என்று சொல்ல மறந்து விட்டான்.
சிவநாதன் பி யை விட்டு வைளியேறி, ஏ க்குள் போனன். நாலு - ஏழு- எட்டு - பத்து - பதினுலு படுத்திருந்தவர் போர்த்துக்கொண்டு மறுபுறம் திரும்பிக் கிடந்தார். தன் ஆன விட வேறுயாரும் பார்க்க வரவில்லையா? இப்ப பன்னிரண்டு மணிதானே, கொஞ்சம் பிந்தித்தான் வருவார்கள். அருகே போஞன். பார்த்ததும் அவனுக்கு மகாதேவன் மேல் ஆத்திரமாக வந் தது - அவரும் செல்லத்துரையரில்லை. திரும்பினுன், பதினேந் தாம் கட்டிலில் எழும்பிச் சாய்ந்திருந்தவர், ‘ஆரைத் தேடு கிருய், தம்பி?” என்று கேட்டார்.
சொன்னுன்.
'எடட, அவரோ? உந்தக் கட்டிலிலே தான் இருந்தவர். இப்ப நல்ல சுகம். நேற்று துண்டு வெட்டிக்கொண்டு வீட்டை போயிட்டார்."
*சுகமோ? வீட்டை போய்ட்டாரோ?. அட, சே!” என்ருன், சிவநாதன்.
O சாந்தன் / 29

Page 20
தமிழன்
மல்லிகை '79

குமாரசாமிக்கு நல்ல பசி. மத்தியானம், சாப்பாட்டு நேரத்தில் கோட்டைக்கு ஒரு அலுவலாகப் போனவர், மினேக்கெட்டுப் போஞர். நேரே கந் தோருக்கு வந்ததும் இரண்டரை மணியாகி விட்டது. இனி, வழக்கம் போல கணேஷ் கஃபேக்கு-அங்கேதான் அவருக்கு அக்கெளன்ட்-போய்ச் சாப்பிட்டு விட்டு வருவது முடியாத காரியம். இந்த நேரத்திலும் இங்கே கன்ரீனில் சோறு கிடைக்குந் தான். ஆணுல் குமாரசாமி சைவம். கண்ணுடி அலுமாரிக்குள் பார்த்தார், வடை இல்லை. எள் ரூத் *தலகுளி' யையுங் காணவில்லை. மற்றதெல்லாம் நம்ப முடியாது; மச்சமாயிருக்கும். 'தம்பி, மரக்கறியா ஒண்டுமில்லையா? கன்ரீன் பெடியன் கட்லட் தட்டைத் தூக்கி நிறுத்தினுன்.
இது மரக்கறிதான் மாத்தயா"
குமாரசாமி தயங்கினுர், "பயப்பட வேணும், இது சைவம்." என்ருன், அரை குறைத் தமிழில். தேத்தண்ணிக் கிளாஸை இடதுகைக்கு மாற்றிக்கொண்டு, ஒரு கட்லட்டை எடுத்தார். நல்லாயிருந்தால் இன்னுென்று எடுக்கலாம் என்ற எண்ணம், திரும்பியபோது வந்தது.
ஹலோ கும்.இங்கே வாருமேன்." ஹலோ..? - சில்வா இருந்த மேசையடிக்குப் போய், காலால் கதிரையை மெல்ல அரக்கிக்கொண்டு உட்கார்ந் தார்.
இந்தக் கன்ரீன் வர வர மோசம்’ சில்வா சொன்னுர்.
4. இங்க பாரும், ரீ எண்டு சொல்லித் தந்தான். சீனி இல்லை,
O சாந்தன் / 31

Page 21
ஒரே சாயம், படு கைச்சல்”
உறிஞ்சிய தேநீரை மிடறு விழுங்கியபடியே, குமாரசாமி ம்ம் .’ என்ருர், த&லயை மேலும் கீழுமாட்டிப் புன்ன கைத்தார். அந்தத் தர்மசங்கடப் புன்னகையை மாறவிடாமலே, கட் லட்டை வாயருகில் கொண்டு போய், முறுகி மொறு மொறுத்த அதன் தோலே எச்சரிக்கையாய் நுனிப் பற் களாற் கடித்துப் பிய்த்தார். ஜன்னல் பக்கத்து மேசையில் என்னவோ, ஒரே ஆரவாரம். டனிபாஸ் கத்திக் கொண்டிருந்தான்.
"அங்கே பாரும் என்ருர் சில்வா:
6 . . . பைப்பிலே தண்ணி இல்லேயாம். சாப்பிட்டவன்கள் கைகழுவத் தண்ணியில்லையெண்டால் சத்தம் போடுவான் கள் தானே?
குமாரசாமி திரும்பிப் பார்த்தார். டனிபாஸ் மாத்திரமில்லே, அந்த மேசையிலிருந்த மற்றவர்களும் சேர்ந்து இரைந்து கொண்டிருந்தார்கள். இலேயான்கள் மாதிரி, இந்தச் சத்தமும் அரியண்டமாயிருந்தது.
கட்லட்டில் முழு தாய் ஒரு கடி கடிக்கப்போன போதுதான் அது மனத்தது. வெடுக்கு, சரியான் மீன் வெடில், குமார சாமி துள்ளியெழுத்து வாசலடிக்கு ஒடிஞர். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. துப்பினுர். கையிற் கிடந்ததை எறியப்போனவர், எறியவில்லை.
கைலேஞ்சியால் வாயை அழுத்தித் துடைத்த போதே, வந்த ஆத்திரத்தையும் துடைத்துக் கொண்டார். திரும்பிக் கணக்கு மேசையடிக்குப் போனபோது,
*என்ன, என்ன, கும்? . என்று சில்வா கேட்டது அவர் காதில் விழவில்லே. இந்த அமளிகள் ஜன்னலடி மேசை யைச் சுற்றியிருந்தவர்களே இங்கே திரும்பச் செய்ததையும் அவர் கவனிக்கவில்லை.
32 / தமிழன் O

இநீதா பார், தம்பி. -பொடியனிடம் கடித்த கட்லட்டை நீட்டிறர். அமைதியாகக் கேட்டார்:
nரக்கறியெண்டு சொன்னுய், இல்லையா?”
மரக்கறிதான் மாத்தயா" அவன் அதை வாங்காமலே பிடிவாதமாகச் சொன்னுன். இதற்குள் சில்வா எழுந்து வந்து விட்டார்.
சான்ன பிரச்சிஜன, கும்?
இது என்ன பாரும்? வாங்கி முகர்ந்து விட்டு, வலு சாதாரணமாக, “மாலு’ என் (yf óflsö6)Ir,
'. ஏன், என்ன அதில்?’ சில்வாவுக்கு உடனே நி3ணவு வந்தது. "ஓ! கும் நீர் ஒரு வெஜிற்றேரியன் - நான் அதை மறந்தே (it (sor 6ir
இது மீன்தான் பெடியா. மீன் ’ என்று சில்வா சொன்ன பிறகுதான் கன்ரீன் பெடியன் கையை நீட்டி அதைக் கும்மிடமிருந்து வாங்கினன். விரல்களால் அழுத்திப் பிரித் தான். அதைப் பார்க்கவே அருவருத்தது குமாரசாமிக்கு.
s
என்றபோது அவன் பதில் சொல்லாமல் தான். வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொள்ள
போர்த்தியா?
முணுமுணுத் வேண்டியிருந்தது.
கணக்கு எழுதியாச்சா?" குமாரசாமி கேட்டார். அவன் தலை பாட்டினுன்.
"ஐம்பது சதம் வீண்காசு . அந்தக் கணக்கை வெட்டி விடேன்’
"ஒமோம், மாத்தயாவில் பிழை இல்லே, வெட்டிவிடு . ." என்ருர், சில்வாவும்.
O சாந்தன் / 33

Page 22
கேத்தண்ணியோட சமாளிக்க வேண்டியதுதான் என்று நினேத்தபடி, இன்னுெருதரம் சொண்டெல்லாவற்றையும் இறுக்கித் துடைத்தார், குமாரசாமி. “பாருங்க மாத்தயா, வெட்டிறன்” - பெடியன் பே?னயைத் திறந்தபோது, பின்னலிருந்து டனிபாஸின் குரல் பலத்துக் கேட்டது.
வேண்டாம், வெட்ட வேண்டாம்" இவர்கள் திரும்பிப் பார்த்தபோது அவன் சொன்னுன் ‘வெட் டத் தேவையில்லை’ இவனுக்கென்ன வந்தது இதில்? பைத்தியமா? *ஏன்? - குமாரசாமிக்கு போன கோபமெல்லாம் ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பி வந்த மாதிரி. அவன் எச்சிற் கையை வெறும் வட்டிலிற் தட்டிவிட்டு எழும்பி வந்தான். கும்மின் கேள்வியைக் கவனியாமலே பெடியனுக்குச் சொன்
இறன் : “அது இந்த ஆளுடைய பிழை. வாங்கின போதே பார்த்து வாங்கியிருக்க வேணும்"
இந்த பாஸ் பயல் நல்லாய்க் குடித்து விட்டுச் சாப்பிட வந்திருக்க வேண்டும் என்று குமாரசாமிக்குப் பட்டது. *நீ உன்னுடைய வேலையைப் பார். உனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லே "
என்ன ஒய் சொல்லுறீர்? யாழ்ப்பாணத்திலிருந்து வந்து, இங்க சண்டித்தனமா விடுகிறிங்கள்? கும் மின் இடது கன்னத்தில், அவனது எச்சிற்கை அடை
யாளம் பதித்தது.
காலையில் வந்தவுடன் இந்தக் கதையைக் கேள்விப்பட்டதும் ரபினன் திடுக்கிட்டான். இது தேற்று நடந்திருக்கிறது. நேற்று அவன் லீவு.
34 / தமிழன்

இவ்வளவும் மட்டுந்தானு நடந்தது? இன்னும் என்ன நடக்க வேணும்?
இவ்வளவு மட்டுந்தானெண்டா, அவனுக்கேன் அவ்வளவு (Riri?”
"கொஞ்ச நாளேக்கு முந்தி அவன் பத்துருபா கடன் கேட்க இவர் இல்ஜலடெண்டு சொல்லி இருக்கிருர்’
இதைப்பற்றி ஒருத்தருக்கும் றிப்போட் பண்ணேல்லையா?
*ம் ஹ"ம்.”
ரமணனுக்கு ஆத்திரமாக வந்தது. நேரே குமாரசாமியிடம் போஞன்.
"ஏன் அண்ணை, ஏன் றிப்போர்ட் பண்ணுமல் விட்டீங்கள்?
குமாரசாமி ஒரு நிமிஷம் பேசாமலிருந்து விட்டுப் பிறகு அவனேயே திருப்பிக் கேட்டார்:
"அது வீண் பிரச்சினைய3ளக் கொண்டுவராதா?
என்ன பிரச்சினையள்?
*றிப்போர்ட் பண்ணுறதாலே இந்த விஷயம் ஒரு இனவாத விவகாரமாகத் திரும்பிக் கொண்டால் என்ன செய்யிறது. ஆனபடியாலே இவ்வ்ளவோட விடுகிறது புத்திசாலித்தனம் காண்டு சொல்லுருங்கள்."
'gif?'
‘எங்கட ஸெக்ஷன் ஆக்கள்தான். *
மறைமுகமான மிரட்டல்”, கூடவே வந்து நின்ற சந்திரன் கசந்து சிரித்தான்.
* . இதிலே இனித் திரும்பிற்துக்கு என்ன இருக்கு?
ரமணன் ஒரு பெருமூச்சுக்குப் பிறகு சொன்னன். ஏன் எல் லாத்தையும் இந்த இனக் கண்ணுேட்டத்திலேதான் பார்க் கிருங்கள்? எங்கட ஸெக்ஷ?னச் சேர்ந்த ஒருத்தனுக்கு -
O சாந்தன் / 35

Page 23
எங்கட தொழிலைச் செய்யிற ஒருத்தனுக்கு - ஒரு பிறத்தி யான் அநியாயமாகக் கை நீட்டி விட்டானே எண்டு ஏன் பார்க்க முடியுதில்லே?. . அண்ணே இது எப்படித் திருப்பி ஞலும் திரும்பட்டும். அதுக்குப் பயந்து இதெல்லாத்தையும் பொறுத்துக் கொண்டிருக்க வேணுமா? அதுதானே? என்ருன், சந்திரனும், பென்சிலே உருட்டியபடியே பேசாமலிருந்தார், குமாரசாமி, யோசிக்கிருர் போலும். ரமணன் தனது இடத்திற்குத் திரும்பிய கொஞ்ச நேரத்தில் அவர் அவனிடம் வந்தார். "நீ சொன்னது சரிதான், தம்பி. ஒரு பெருமூச்சுக்குப் பிறகு ஆறுதலாகச் சொன்னுர்: * . ஆணு, எனக்கும் இப்ப காலம் சரியில்லே. இந்தக் கிரக மாற்றம் என்ர சாதகபலனின் படிக்கு தேவையில்லாத கோ ளாறுகளேத் தரக்கூடிய காலமெண்டு சொல்லியிருக்கிருன் கள் - வீண்சண்டை, வம்பு, வழக்கு, கோடு, கச்சேரி எண்டு அலேய இடமிருக்காம் . ஏன் វិទ្យា (pr៦៦ងជំរ*→
எழுந்து தானும் ஒரு அடி போடலாமா என்றிருந்தது, ரமணனுக்கு.
36 / தமிழன்

இழப்பு
மல்விகை 78

Page 24
இப்போதும் நன்றக ஞாபகமிருக்கிறது - இது ஒரு நல்ல புதிராக இருந்தது, அப்போது. வழுக்கி வழுக்கி மூளேயை வலிக்கப் பண்ணிய புதிர். என்ருலும் எப்போதுமே இந்தப் புதிர்கள் இன்பமானவை. அவற்றை அவிழ்த்து ஒன்றைப் படைக்க முடிகிறதும், அப்படி முடிகிறதில் கிடைக்கிற நிறை வும் நிச்சயமென்பது தெரிகிறதால். இதில் இன்னுெரு விசேஷமுமிருந்தது - மூன்று நீலப் பிரதிகளையும், அளவு - செலவு மதிப்பீட்டை யுங் கொடுத்து விட்டு, உத்தேச மதிப்பில் ஒரு வீதம் கூலி என்று வாங்குகிற காரியமில்லை. நட்புக்கும் பரஸ்பர அன்புக் கும் ஒரு நினைவாய் நிலைத்து விடப்போகிற சின்னம், எத் தஜனயோ தரம் என் காலால் மிதிபடப் போகிற வாசற்படியும் இருந்து கதைக்கிற நேரமெல்லாம் அந்த உரிமையை நிஜன வூட்டப்போகிற விருந்தையும் - என்ற நினைவு, வழமை யிலும் பார்க்க அதிகரித்த ஈடுபாட்டையும் உசாரையுங் கொடுத்திருந்தது.
இந்தப் புதிருக்கான விதிகள் வலு இறுக்கமாயிருந்தன. நாற் பத்தைந்தடிக்கு நாற்பத்தெட்டடி காணியில் நண்பன் கேட் டிருந்தவை, ஒரு சராசரி 'வீட்டின் எதிர்பார்ப்புக்கள். மூன்று அறை, முன்னுல் விருந்தை. மால், குசினி.
இடம், மாநகரசபை எல்லைக்குள்ளிருந்தது. சுகாதார விதி கள் மறக்கப்பட முடியாதவை. ஒரு பக்கம் தெரு, அது வடக்கு. ஒரு பக்கம் ஒழுங்கை - கிழக்கு, மேற்கிலுந் தெற் கிலும் மற்ற காணித்துண்டுகள். இவற்றில் கட்டிடங்கள் எழும்பும்போது, வெளிச்சமுங் காற்றேட்டமும் இங்கு பாதிக் கப்படக் கூடாது. அந்தரங்கம் இழக்கப்படக் கூடாது. காணிக்குள் கிணறு வரவேண்டும். அதோடு கக்கூசும். குழி தான். அதற்கும் கிணற்றுக்குமிடையில் ஆகக் குறைந்தது ஐம்பதடியாவது இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. கொஞ்சம் மணற்பாங்கான இடம். இன்னும் கூடுத லாக விட்டாலும் நல்லது.
38 / இழப்பு O

மொத்தச் செலவு முப்பதினுயிரத்துக்கு மேற்பட வேண்டாம் கேர்று நண்பன் சொல்லியிருந்தான். எவ்வளவு குறையுமோ அாவளவு நல்லதாம், கிணறுங் கக்கூசும் இதில் சேர்மதி
வழமையான, எட்டடிக்கு ஒரு இஞ்சி என்ற ஸ்கேல். பழைய "ப்ளுப்ரிண்ட்’ ஒன்றின் பின்புறத்தில் பின்னல் வலை களாய் விழுந்த கோடுகள். சதுரங்கக் கட்டங்களான வடி வங்கள். கோடுகளே அரக்கினுன் - முன்னும் பின்னும்; பக்க வாட்டில். ஒன்ருய்த் தொடரும் பிரச்சிஜனகள். அல்லது ஒன்று சரிவந்தபோது இன்னுென்று தடுக்கியது - இங்கே தான் அது திராகியது. கீறுதலும் அழித்தலும் யக்ஞமாய்த் தொடர்ந்தன. மேசையைத் தாண்டிப் போகிற- அல்லது எதற்காகவோ or (gth 9 அவனருகில் வருகிற சகாக்களின் மூளைகளும் அதில் தடங்கள் பதித்தன. அதுதான் ஒரு நயம், கந்தோரில். தப் பித்தவறி விடுகிற பிழைகூட எவனுே ஒருவனின் கண்களிற் பட்டு விடும். நழுவி வழுகி ஓடுகிற ஒருவழி, ஏதுவோ ஒரு மூளையில் அகப்படும். ஆணுலும் அதில் அபாயம் உண்டு. ஒவ்வொரு ஆலோசனையும் ஒப்புக்கொள்ளப் படுகிற பட்சத் தில், சுவரே இல்லாத வீடும் ஆகலாம்; அல்லது வாசலே வராத அறையும் ஆகலாம். யோசனைகள் வரவேற்கப்படும். ஆணுலுங் கடைசி முடிவு, அவனவன் பொறுப்பு. அப்படித் தான் இதுவுமிருந்தது. முடிக்க- முழுதாகப் புதிரை அவிழ்க்க- ஒரு கிழமை பிடித் தது. கந்தோர் வேலைகளுக்கிடையில் மிஞ்சுகிற செம்பாதி நேரங்களின் கணக்கில், ஆறு கதவுகள், எட்டு ஜன்னல்கள் இவற்றுடன் தொளாயிரத்தறுபது சதுர அடி தளப்பரப்பு முப்பது ரூபாப்படி பார்த்தாலும் இருபத்தொட்டாயிரத்துச். சொச்சம்.
கிடைப்படவேலை முடிந்ததும், முன் தோற்றம், வெட்டுமுகம், கட்டுமானவிபரம் பக்கத் தோற்றம், அத்திவாரம், காணிப்
சாந்தன் / 39

Page 25
படம்- எல்லாம் அளவுக்கு அமைவாக, அழகு பார்த்து, * ட்றேஸ்” பண்ணி, "ப்ரின்ட்" எடுத்து, அளவு. செலவு கணக்குப் போட்டு.
முதலில் காணியை அளக்கப் போன போது நண்பன் அதி ருஷ்டசாலி என்று பட்டது. தெரு பெருந்தெரு, கரையெல் யெல்லாம் சடைவிரித்துச் சரிந்து, பட்டை வெடித்த பூவரசு வரிசைகள். பின்னுல் காற்கடைக்கு அப்பால் கடல் தெரிந்தது.
போன பயணம் ஊரில் நிற்கையில், தற்செயலாய் அந்தப் பாதையால் போக நேரிட்டது. அளந்த காணி ஞாபகமாகப் பார்த்தவன் வியப்படைந்தான். அந்தப் பென்சில் கோடுக ளெல்லாம், சீமேந்துச் சுவர்களாயும் சிவப்பு ஒடுகளாயும் எழும்பி நின்றன. முடிகிற கட்டம். சுவர் பூசிக்கொண்டிருந் தார்கள். சட்டென்று சைக்கிளே நிறுத்திப் பூட்டிவிட்டு உள்ளே போனன். மேசனுக்கு என்ன சொன்னதென்று ஞாபகம் இல்லை. அவனும் கேட்டதாய் நினைவில்லை. சுற்றிப் பார்த்தான். குசினிக்குத் தளம் போடவில்லை. பூச்சு வேலை யும் மிச்சம். மற்றும்படி நினைத்ததிலும் வடிவாயிருந்தது. மனதில் நிறைவு வந்தது. வெளியே வந்து சைக்கிளே எடுத்தபோதுதான், இவ்வளவு வேலை முடிந்ததைப் பற்றி நண்பன் சொல்லக் கூட இல்லை யே என்று பட்டது. நாலைந்து மாதங்களுக்கொரு முறை சந்திக்க நேர்கிற அந்தக் குறுகிய இடைவெளிகளில், சேர்த்து வைத்திருக்கிற கதைகளின் கனத்தில், இதைச் சொல்ல மறந்திருக்கும் என்று நிஜனத்தான்.
ஆணுல், இப்போது புரிகிறது - அப்போதே ஒரு விரிசலின் கோடு இந்த உறவில் விழுந்திருக்க வேண்டும்.
குடிபுகுதல் முடிந்திருக்குமோ தெரியவில்லை. முதல் அழைப்பு தனக்கென்றிருந்த கொண்டாட்டம்.
இன்று, இந்த லாச்சியில் சேர்ந்து கிடக்கிற படச் சுருள் கள் எல்லாவற்தையும் விரித்து அடுக்கிக் கொண்டிருக்கிற
40 / இழப்பு O

வேஜயில் - சிக்கிய அந்த வீட்டுப்படப் பிரதி ஒன்று விரிக்க விரிக்க கையில் சுருளுகிற இந்த நேரத்தில் - இழப் பை அடையாளங்காண முடிகிறது. தன்னிலும் பிழைகளிருந்திருக்கலாம். ஆணுல் நிச்சயமாக, அந்த ஆரம்பமும் பொறுப்பும் இல்லை என்று - தள்ளி நின்று பார்த்தும்-திருப்திப்பட்டுக் கொள்ள முடிகிறது, இன்றைக் கும்.
இதையும் விரித்து, பத்தோடு பதினுென்ருக வைத்தான்*
érrög sör / 41

Page 26
76ல், ஒரு விடுமுறை நாளில் -
臀97窑

கொப்பி குடித்து விட்டு வெளியே வந்து காசு கொடுத்துக் இகாண்டிருக்கும் போது, யோகன் சொன்னுன்: 'பார்த்தீரா, இதுதான் நான் சொன்னது ”
த ைமுகப்பிலிருந்து ஸ்பீக்கர், பிரபலமான ஒரு சிங்கள பொப் பாடலேக் காதடைக்கப் பாடிக்கொண்டிருந்தது. கஷி பரின் மேசையருகில் சுழன்று கொண்டிருந்த ரேப்.
ந்த பயணம் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, சசி கூட இதை அவதானித்திருந்தான். ளிேப் ரிக்கற் வான்களும் விளம்பரச் சேவை ஒலி பெருக்கி புமாய், கடைக்குக் கடை அலறுகிற பாட்டுக்களோடு சேர்ந்து, தெருவில் கார் பஸ் அடிக்கிற ஹோண் சப்தங் பிளேக் கூடக் காதில் விழாமற் பண்ணிக் கொண்டிருக்கிற அதே பட்டணந்தான். ஆணுல்
". இப்ப, அநேகமான கடைகளிலை இப்பிடித்தான்." மன்றன் யோகன், மீண்டும். "ஒரு ஃபஷன் போலே?" -சசி சிரித்தபடி மூன்று பீடா NJAT Fá6696ör.
சைக்கிள்களை எடுத்து உருட்டிக் கொண்டு, தெருவைக் al-fig55lth,
'ஏன், அதிலே என்ன பிழை?? என்று கேட்டான் ருநிவா Voör.
"வெறுமனே ஒரு பாட்டைப் போட்டு ரசிக்கிற சங்கதி மட்டு மில்லை. இது, றுநீதி . வேற சில விஷயங்களையும் யோசிக்க வேண்டியிருக்கு”
'நீங்கள் மாத்திரம் வெள்ளவத்தையிலே எல்லாம் செய்ய aorth, 6r6ör6oT?” ரீநியின் இந்தக் கேள்வியும் அதன் வேகமும் சசிக்குச் சிரிப்பை மூட்டின. 'இந்த வெங்காயக் கேள்வியை நீரும் கேளாதேயும்!.
O சாந்தன் / 43

Page 27
அதையும் இதையும் ஒப்பிடவும் ஏலாது. ! சும்மா கொச் சைத்தனமா எல்லாத்துக்கும் வெள்ளவத்தையை உதாரணத் துக்கு இழுக்காதையுங்கோ. 29 ‘இதெல்லாம் எங்களுடைய தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிற விஷயங்களாயிருக்கலாம் ."! ‘ஒரு நல்லுறவை - உண்டாக்கக் கூடிய விஷயம் உங் களுக்குப் பிடிக்கேல்லை...!"> **அப்படியில்லே, பூநீநி. நீர் சொல்லுற நல்லுறவுக்கும் ஒற்று மைக்கும் நாங்கள் எதிரில்லை. ஆணு, அந்த நல்லுறவு எண்ட
தும் ஒருவழிப்பாதை இல்லே. இண்டைய நிலையிலே எங் கட பரந்த மனப்பான்மை, விட்டுக் கொடுக்கிற போக்கு, நல்லுறவைக் காட்ட நாங்கள் எடுக்கிற முயற்சி - இதுக
ளெல்லாம் எங்கட பலவீனமெண்டுதான் எடுத்துக் கொள்ளப் படுகுது. ஆனபடியா, இப்படிச் சின்ன விஷயங்களிலே கூட - அது தற்செயலோ, என்னவோ - இனி நாங்கள் கொஞ்சம் கவனமா நடக்கிறதுதான் நல்லது போலயிருக்கு
s
8 0
நீநிவாசன் பதில் சொல்லவில்லை. பேசாமல் நடந்தார்கள். “திஸ்ஸ பேக்கரியைத் தாண்டும் போது அந்தப் பாட்டுக் காதில் விழுந்தது. பேக்கரி - ஷோ கேஸின் மேலிருந்த ரேடியோவிலிருந்து வந்த பாட்டு.
*டிக்கிரி மெனிக்கே அம்புல கெனல்லா கொவிரால கொடட்ட அவில்லா.”* கேட்டு எத்தனை நாட்கள்! சசி அப்படியே ஒருகணம் நின்றன். இந்தப் பாட்டு இப்படித்தான் - அடிக்கடி கேட்க முடிகிற தில்லை. எப்போதாவது இருந்துவிட்டு காதில் விழுகிறது. அப்படி விழுவதுதான் நல்லதென்றும் தோன்றுகிறது - அலுத் துப் போகாமல், இதைக் கேட்கிற போதெல்லாம் அவனுக்குப் பச்சைப்புல் வாசஆன நினைவுக்கு வருகிறது. எட்டு வருஷங்களுக்கு
44/76 ல் ஒரு விடுமுறை நாளில்

முன்னுல், ஒரு மாணவனுக இருந்த போது, முதற் த வை பாக இந்தப் பாட்டை அவன் கேட்டான். அப்போதிருந்தே இதைக் கேட்க நேரிடுகிற அந்த எதிர் பாராத சந்தர்ப்பங்கள் ால்லாம் மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கின்றன.
பச்சைப்புல் வாசனை மட்டுமல்லாமல், கட்டு பெத்தையின் கபூக்தரை, காட்டுச் சூரியகாந்திச் செடிகள், மெஷறிங் ரேப், தீயோடலேற், தசநாயக்கவின் வெள்ளேத் தொப்பி- எல்லாங் கூட ஞாபகத்திற்கு வருகின்றன. இன்னும் அந்த டிக்கிரி மெனிக்கா, கமக்காரர்கள் எல்லாம் எப்படி இருப்பார்களென்ற
បំLê T.
* - டிக்கிரி மெனிக்கே அம்புல கெனல்லா.”
எவ்வித துள்ளாட்டமுமின்றி, மொஹிதீன் பேக்கின் குரலில், அமைதியாக கம்பீரமாக அந்தப் பாடல் வருகிறது- மனதை வருடிக் கொடுப்பது போல, மென்காற்றில் அலைதவழும் நெற்கதிர்களின் அமைதி: இளந்துாற்றல் வெறும் மேலில் தழுவுகிற பரவசம்.
இந்த மூன்று நிமிஷத்தை அவன் இழக்கக் கூடாது.
மச்சான், இதிலே கொஞ்சம் நிண்டிட்டுப் போவம்.” என்ருன், சசி.
சாந்தன் / 45

Page 28
இன்னும் உள்ள வண்ணங்கள்
மல்லிகை 282

இந்த இயந்திரத்தின் முதுகில் குந்துகிற போதுகளில் தெரு வையே தியானிக்க வேண்டும் என்கிற பாடம் கூட இன்று மறந்து போயிற்று. மறந்தல்ல; நினைக்கக்கூட மனதில் இட மில்லாமல் வேதனையும் ஏமாற்றமும் ரோஷமுமாய்ப் பிரவகித் நன. பட்டணத்தில் ஏறிய ஞாபகமே கூட இல்லாமல், வீடு வந்தது கூட எப்படி என்று தெரியாமல் - தாவடிச் சந்தியில் எதிரே வந்த பசாசு ஒன்றினுேடு சருவாமல் திரும் பியதுகூட அரும்பொட்டுத்தான்.
படலையைத் தாண்டி உள்ளே திரும்பியபோது, ‘இன்றைய மாலையை இந்த வேதனையால் இழந்தாயிற்று" என்ற எண் ணம் வேறு இன்னும் ஆத்திரத்தை அதிகரித்தது. பிற்பகல் சம்பவத்தை நினைத்தால், இலக்கியக் காரன் என்று எண்ணிக் கொள்வதில், அப்படிச் சொல்பவர்களோடு உறவு சம்பவிப் பதில் எல்லாங்கூட ஒரு அருவருப்பு உண்டாயிற்று. மனி தத்தனம் இல்லாதவர்களெல்லாம் எப்படி இலக்கியக்காரராக முடியும் என்று பட்டது- எட்டாம் வகுப்பே பாஸ்பண்ணுத வன், எஸ். எஸ். ஸிக்குப் போவது போல . இந்த எக்ஸ் இந்த வேலையைச் செய்யக் கூடும் என்று எண்ணிப் பார்க் கக்கூட இதற்கு முன் முடிந்திருக்குமா?
உடுப்பு மாற்றிவிட்டு வந்தான். குளிக்கப் பஞ்சியாய் இருந் தது. பசிக்கவுமில்லை.
சாப்பிட வாறிங்களா? ." என்று கூப்பிட்ட மனைவிக்குப் பதில் சொல்ல முடியாமல் எரிச்சலாயிருந்தது. வேணி முறைத்துக் கொண்டு போனுள். மனமெல்லாம் அதே உளைச் சல். இந்த எக்ஸ், இப்படி - . .
ரேடியோ ஒரு விளம்பரத்தை முடித்துவிட்டு, பாரதிநூற்ருண் டைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.
உமக்குக் காலை வாரிவிட அப்போது யாரெல்லாம் இருந் தார்களோ?
தங்கை வந்து நின்றள்: ‘அண்ணை."
O சாந்தன் / 47

Page 29
என்ன?
கையிலிருந்த எலாம் மணிக்கூட்டைக் காட்டினுள். அது பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது.
ஒருக்கால் பார்." என்ன, மணிக்கூட்டுக்கடையா? என்று சினந்தான். அவள் சிரித்துவிட்டுக் கெஞ்சினுள்: “நாளைக்கு விடிய எழும்ப வேணும் எக்ஸ்ாம் வருகுது. படிக்க வேணும்.’
- மணிக்கூட்டோடு அவனது சின்ன ற்குல் பொக்ஸையும் மெல்ல மேசையில் வைத்தாள்.
நினைத்ததுதான் நடந்திருந்தது. ஹெயர் ஸ்பிறிங் இழுவுண்டு கிடக்க, பலன்ஸ் வீல் வழுவிக்கிடந்தது. சரிப்படுத்தி வைத் தான். ஊசி நுனியால், எண்ணெயைத் தொட்டு விட்டுக் கொண்டே, கீழே போட்டியா” என்று கேட்டான். பயந்து கொண்டே தலையாட்டினுள். வெளி ஃபிரேமின் நாலாவது ஸ்க்றுாவையும் இறுக்கிவிட்டு மேசையில் வைத்ததும், அதன் டிக்டிக் துல்லியமான ஒரு சுநாதமாய் ஒலித்தது.
இலக்கியத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டால்தான் இவர்களோ டெல்லாம் தொடர்பு நேர்ந்ததேயொழிய, இவர்களோடு தொ டர்பு வந்ததால் இலக்கியத்தைத் தழுவியவ்னல்லன் நான் - என்கிற உணர்வு மனதிற்கிதமாய் இருந்தது.
வேணி திரும்பவும் வந்தாள். இருட்டப் போகுது எழும் பேல்லேயா?."
*ம்ம் . என்றன்.
*. நாய்க்குட்டியைப் பாத்தீங்களா?
*ஆ! எப்படி இருக்கு? என்று நிமிர்ந்தான். இவ்வளவு நேரமும் எப்படி மறந்து போய் இருந்திருக்கிறன்! அவள் சிரித்தாள்.
*வந்து பாருங்கோ."
48 / இன்னும் உள்ள வண்ணங்கள்

பின் முற்றத்தில் அந்த உயிருள்ள பஞ்சுசுருண்டை மீண்டும் துள்ளிக் கொண்டிருந்தது. கிட்டப் போய்க் குந்தி, ச்ச், ச்ச். ? என்றன். கையில் இன்னமும் மணிக்கூட்டையே வைத்திருந்த தங்கை, "இரண்டு நாளாய்க் கிடந்த நாய்க் குட்டி, காலமை நீ குடுத்த அஞ்சு லட்சத்தோடை எழும்பி யிருக்கு. வேலையை விட்டிட்டு, நாய் வைத்தியம் செய்ய லாம்." என்று சிரித்தாள்.
அந்தப் பூக்குட்டியைக் கையிரண்டிலும் ஏந்தி எடுத்தான். முகத்தை மோந்து வாலை ஆட்டியது. தங்கை கையிலிருந்த மணிக்கூடு டிக்டிக் கென்று கொண்டி ருந்தது. நாய்க்குட்டி செல்லமாக அனுங்கியது,
அதை மெள்ள இறக்கிவிட்டபடி, "குளிச்சிட்டு வாறன், சாப்பிட. என்றன்.
எக்ஸ் சமன் ஸ்பீரோ,
assisir M 49

Page 30
எரீ - அனிமோன்
கல்விகை 778

மீன் காட்சி சாஜல கனவுலகமாயிருந்தது. மங்கிய வெளிச் ம்ே - மிக மங்கிய வெளிச்சம் - கசிந்தபடி, மூச்சு விட்டுக் கொண்டு கடலினடியில் நடக்க முடிந்தது போல உணர்ந் நான். குளிரூட்டியிருந்தார்கள். ஆளுயரத்திற்குப் பென்னம் பெரிய கண்ணுடித் தொட்டிகள். கற்பனை பண்ணிக்கூடப் பார்த்திருக்க முடியாத அழகுகளும் விசித்திரங்களும் விடா மல், சங்கிலித் தொடராய்க் குமிழுதும் ஏரேட்டர்கள்.
வளைந்த பாதைகளில் நடந்து போக, ஒரு தொங்கலில் மற்ற நீர்வாழ் ஜந்துக்களும் இருந்தன. சிங்க இருல், நீர்ப் பாம்பு, நட்சத்திர மீன், அதன் உறவினர்கள். .
எ-ேஅனிமோனும் இருந்தது. ஆதிப் படைப்பு. ஆயிரங் கரங்களாற் சூழப்பட்ட ஒரே வாயில் உள்ள உடம்பு. அசைய முடியாது. சதைத்துண்டாய் - சதை என்று அதன் முழு அர்த்தத்தில் சொல்ல முடியாவிட்டாலும் - ஒரே இடத்தில் ஒட்டிக் கொள்கிற உடம்பு.
இங்கே, தொட்டிக்குள், ஒரு கல்லில் ஒட்டிக்கொண்டு, தன் கரங்களை அசைத்துக் கொண்டிருந்தது. முன்னுலுங் கற்கள்.
இதுகள் செத்த பிறகு, இப்பிடித்தான் கல்லாகி விடும். ' என்ருன் நண்பன்.
*இல்லை; கோறல்ஸ்தான் கல்லை உண்டாக்குகிறது இதுகள் கல் ஆகிறதில்லை.!” என்றன், இவன்.
இல்லை, நடா . ஸி - அனிமோனும் கல்லாகும் . *
"எவ்வளவு பந்தயம்? கல்லாகாது!...”
கூட வந்த புதிய நண்பர் இருவரையும் பார்த்தார்.
வெளியே வந்து, கடற்சிங்கத்தைப் பார்க்கப் போன போது, இந்த விஷயத்தில் நண்பனுக்குச் சவால் விட்டிருக்கலாமா என்று பட்டது. தான், புகுமுக வகுப்பில் பண்ணிய நட்டா முட்டித் தனங்களால் வழியை மாற்றிக் கொண்டவன்.
O சாந்தன் / 51

Page 31
அவன் பல்கலைக் கழகத்தில் கொஞ்சமாவது அதிகம் பிராணி யியல் படித்திருப்பான். என்றலும், கல்லூரி ஆய்வு கூடத் திலிருந்த-போத்தலில் அல்கஹோல் வற்றியதால் சுருங்கி மறைந்த - ஸ்பெஸிமன், நினைவில் கல்லாக நின்றது. இப்போது நினைக்கிறபோது, என்னதானிருந்தாலும், தான் அவ்வளவு மூர்த்தண்யமாக மறுத்திருக்கக் கூடாது என்றும், தங்களிடையே ஏற்பட்ட பிரிவு அங்கே முளைவிட்டிருக்கக் கூடும் என்றும் படுகிறது, நடாவுக்கு.

அடையாளம்
மல்லிகை 282

Page 32
சைலன்ஸரைக் கழற்றிக் கழுவக் கொடுத்து விட்டு, கார்ட ரேட்டரைக் கவனிக்க வந்தான் அந்த இளைஞன். எண்ணே படிந்த உடைகள். காலில் வழுக்க வழுக்க ரப்பர் செருப்பு. சுறுசுறுப்பாயிருந்தான். மோட்டார் சைக்கிள்கள் இடைக் கிடை உறுமின, குரைத்தன, கர்ஜித்தன.
பெட்ரோல் குழாய்கள்ைக் கழற்றினன். பிறகு தன் கை உத விப் பையனிடம் சொன்னுன் :
*அந்தப் பெட்டிக்குள்ளே, குழந்தைப்பிள்ளை போல ஒரு ஸ்க்றுாட்றைவர் இருக்கு. அதை எடு.”*
நான் வியந்து போய் அவனைப் பார்த்தேன். பெடியனுக்கும் விளங்கவில்லை.
‘.அதுதான், அந்த மஞ்சள்பிடி போட்ட கட்டை ஸ்க் றுட்றைவர்”
பெடியன் எடுத்து வந்ததை ஆவலுடன் பார்த்தேன். கார்ப ரேட்டருக்கான திருப்புளி அது. உலோகப் பகுதி நீளமில் லாமல் ஒன்றிரண்டு இஞ்சிதான். அடியில் தடிப்பான மொத்தப்பிடி, குழந்தைப் பிள்ளை போலத்தானிருந்தது.
நண்பன் சத்திய?ன நான் முதலிற் சந்தித்தது இப்படித்தான்.
54/ அடையாளம்

கிருஷ்ணன் தூது
‘’ '81

Page 33
1
காலையில் வந்து கையெழுத்து வைக்கிறதற்கு அடுத்த வேலே துடைக்கிறதுதான். லாச்சியைத் திறந்து டஸ்ரரை எடுத்து, வரைபலகையையும் ட்ராஃப்ரிங் மெஷி”னையும் அழுத்தித் துடைக்க வேண்டியிருக்கும். பியோன்மார் சாட் டுக்குக் கொடுத்து விட்டுப் போயிருக்கக் கூடிய இரண்டு தட்டுதல் போதாது. ஒரு சொட்டு ஊத்தை போதும் -படத் தைப் பாழாக்க.
வெள்ளிக்கிழமை உந்த வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான், சேணுதி கூப்பிட்டான். துடைத்து முடித்து *வாஷ்பேஸினில் கையையுங் கழுவிவிட்டு சேணுதியடிக்குப் போனபோது, அவன் அதைக் காட்டினுன். ‘என்ன, உது?”
ஒரு அச்சு புறுாஃப், சின்னத்துண்டு. "நலன் செய் சங்கம்” என்று போட்டு, எதிரே கந்தோரின் பெயர் இருந்தது. பிறகு விலாசம், தொலைபேசி எண். கீழே, தலைவர், செயலாளர், பொருளாளர், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உப, உப, உப. சேஞ்றதியின் பெயர், உப - செயலாளர் என்பதற்கு எதிரி லிருந்தது. எல்லாம் இரண்டு மொழிகளில் - தமிழில்லை.
சினமாய் வந்தது.
*லெற்றர் ஹெட்தானே?" சேணுதி தலையாட்டினுன்.
*இங்லீஷிலை போட்டிருக்கிறதைத் தமிழிலை போட்டால் 6. f6569 p.
“என்னவோ, அவங்கட வேலை. "
**ஆர் அடிப்பிக்கிறது?’
*காரியதரிசி - லயனல்."
56 / கிருஷ்ணன் தூது O

'கேட்கவா?.”*
கூப்பிட்டதும் லயனல் எழும்பி வந்தான்.
*விவே, இதுதான் எங்கட லெற்றர் ஹெட். எப்படி யிருக்கு?*
*எந்தப் பிரஸ், மச்சான்.?? - விவே கேட்டான்.
லயனல் சொன்ன அச்சுக் கூடம், அதிகமாகத் தமிழ் வேலை செய்கிற இடம்.
'லயனல், இதிலே தமிழையும் நீங்கள் போட்டிருக்கலாமே?,
இடந்தானே மச்சான், பிரச்சிஜனயாயிருக்கு ?? - லயனல் ஒரு நிமிடந் தயங்கிவிட்டுப் பிறகு சொன்னுன்: .ேஇப்பவே பார், பேப்பரிலே கால்வாசி போச்சு!’
அப்ப அந்த ஆறு பேருடைய பெயரையும் எடுத்திடலா On?' '
"அது அவசியம்.’
*சின்ன எழுத்தாகப் போடுறது? . .*
கொஞ்சம் பளிச்சென்று இருக்க வேண்டாமா?* ஒரு கூட்டம் கூடியிருந்தது. இன்னும், காமினி, கண்டொஸ், ரஞ்ஜித், சச்சி. சேணுதியிடமிருந்து கண்டொஸ் அந்த புறு ஃபை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சேரி, இங்லிஷை எடுத்திட்டுப் போடுங்களேன்?
**இங்லீஷா ? எத்தினை கொம்பனிகளோட தொடர்பு கொள்ள வேண்டி வரும்? அதை எடுத்திட்டு?..”*
எந்தக் கொம்பனியெண்டாலும், பருத்தித் துறைக்கும் டொன்ட்ராவுக்கும் இடையிலே உள்ளதுதானே?.",
'எண்டாலும்."
இங்லிஷ், இங்கே எத்தினை பேருடைய பாஷை? அதை
சாந்தன் / 57

Page 34
எடுத்திட்டு, அங்கத்தவர்களிலே நாற்பது வீதம் பேருடைய பாஷையைப் போட்டா, என்ன?? சச்சி கேட்டான்.
**விவே, இதுக்கு முதல் லெற்றர் ஹெட் இல்லே றபர் ஸ்ராம்ப் தானே பாவிச்சது? .’’ என்ருன் ரஞ்சித்.
* * سس. 2 جوي " 6
**அது தனிச் சிங்களத்தில் தானே இருந்தது? அதுக்கெல் லாம் ஒண்டும் பேசாமல் இருந்தீங்களே, இதற்கு மாத்திரம் ஏன்?.”
இந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது. ஒரு பிடி கிடைத்த மா திரியும் இருந்தது, விவேகானந்தனுக்கு.
** அந்த ஸ்ராம்பிலை தமிழையும் போடு” எண்டு நாங்கள் கேட்டிருந்தா, அது நடை முறை சாத்தியமில்லை. இந்த அளவு ‘* -இடது உள்ளங் கையில் வலது சுட்டு விர லால் ஒரு சின்ன வட்டம் போட்டுக் காட்டினுன்.
" . இந்த அளவு வட்டத்துக்குள்ளே இரண்டுபாஷை போடு, மூண்டு பாஷைபோடு- எண்டு நாங்கள் கேட்டிருந்தா, அது முட்டாள் தனம்." **இது அப்படியில்லை, வடிவாப் போடலாந்தானே?.” கன் டொஸ் கேட்டான்.
**இப்ப என்ன செய்யிறது மச்சான், அடிச்சாச்சே?.”* **இல்லை, இது புறுாஃப்தான், இப்பவும் வடிவாச் சேர்க்க 6) Th
பிறகு விவே சொன்னுன்: *மச்சான் இதெல்லாம் நாங்கள் கேட்டு நீங்கள் போடுகிற விஷயமில்லை. நீங்களாகவே உணர்ந்து போடுகிறதுதான் அழகு. இது அரசியலில்லை; குடும்பம் மாதிரி. நல்லுறவுக்கும் சிநேகிதத்துக்கும் ஒரு பரஸ்பர மதிப்பு தேவையில்லையா?. இப்பிடி சின்ன சின்ன விஷயங்களில் கூட."
-முடிக்க முதல் மிஸ்டர். பெர்ணுண்டோ வந்து விட்டார்.
58 / கிருஷ்ணன் தூது O

ஐஸே, இப்ப எத்தினே மணி? என்ன செய்யிறீங்கள் எல் லாரும் இங்கை??
2
அரசமரம் சலசலத்தது. பென்னும் பெரிய மரம். கந்தோரின் இந்தளவு பெரிய முற்றத்தில் ஒரு பொட்டு வெய்யில் பட விடாது. காற்றடிக்கிற நேரங்களில் பாடும். இப்போது வை சாகம் முடிந்த கையோடு, புதுப்பச்சை இலைகளும் வெள்ளைக் க்டதாசிச் சோடனைகளுமாய்ப் பொலிந்து நிற்கிறது. 'எண்டாலும், நீர் அப்பிடி அவனுேட பேசியிருக்கக் கூடாது .” என்ருன், சேணுதிராசா.
“6 ta' Fuq?””
அவ்வளவு கடுமையா. சண்டை பிடிக்கிற மாதிரி." **கடுமையா? சண்டையா?’ - விவே திகைத்துப் போனுன். * அதை அவன் ஒரு சவாலாக நினைக்கலாம் - "இப்படிக் கேட்டு போடவோ’ எண்டு .. ?? *கேளாமலே போட்டிருந்தால் வடிவுதான்.” *சச்சி, நீர் கொஞ்சம் பேசாம இரும்." - சேனுதிக்குக் கோபம் வரப்பார்த்தது.
'நான் அவனை ஏச இல்லை. சிநேகிதன் எண்ட முறையிலை அதைக் கூடச் சொல்லக் கூடாதா? s 'இல்லை அண்ணே, நீங்கள் பேசினதிலை ஒரு பிழையுமில்லை . இனி என்ன, கெஞ்சிறதா?’ ~ விவேயைப் பார்த்து, திரும்பவும் சச்சி சொன்னுன், "எண்டாலும் ." - மெல்ல, ஆறுதலாகத் தொடங்கினுன், சித்திரவேல். சேணுதிக்குப் பக்கத்து மேசை. எல்லாம் வடி வாகக் கேட்டுக் கொண்டிருந்தவன். *. தெரியாதே - இப்ப உள்ள நிலைமைகளிலை நாங்கள் கொஞ்சம் பணிஞ்சுதான் நடக்க வேண்டியிருக்கு."
சாந்தன் / 59

Page 35
3
வெள்ளைச் சல்லி பெருத விஷயம் இப்படியாகி விட்டது. வேலையில் மனம் ஏவமாட்டேன் என்கிறது. அதுவும் முழுக்க கல்குலேஷன்கள்.
விசிறி சுழற்றிய காற்றின் வீச்சில், வரைபலகையுடன் பொ ருத்தியிருந்த “கிளிப்பை மீற முடியாமல் படத்து முலை பட படத்தது. இந்தக் காற்றுப் பொல்லாதது - என்னதான் இறுக்கிப் பொருத்தியிருந்தாலும் படத்தாளே அசைத்து விடும். இம்மிஅசைந்தாலும் நுணுக்கம் போச்சு . என்ன செய்வது? புழுக்கந் தாள முடியாது. விசிறிக்கு றெகுலேற்றரும் இல்லை “ட்ராஃப்ரிங் மெஷினை அரக்கி, தாள் கிளம்பாமல் வைத் தான். ‘என்னில் தான் பிழையா? - இரண்டு நாளாக இதே யோ g?,0Tஆணுல். யோசிக்க யோசிக்க, அப்படியில்லை என்று படுகி றது, நேற்றும் அப்படித்தான் பட்டது. சொல்லி முடித்த அடுத்த கணங் கூட, ஒரு திருப்திதான் தெரிந்தது, சேன தியும் சித்திரவேலும் தான் குழப்பிவிட்டார்கள். பென் சிலை உருட்டிக் கொண்டிருந்தபோது, சித்திர வேலுவே வந்தான். *எப்பிடி விவே?." அவன் நேரே விஷயத்தில் இறங் கினுன். "...நான், பிறகு,- நேற்றும் முந்தநாளும்- இந்த விஷயத்தை நல்லா யோசிச்சுப் பாத்தன். நீர் சொன்னதிலே ஒரு பிழை யுமில்லை எண்டுதான் படுகுது - சச்சி சொன்னது போல. இது கெஞ்சுகிற விசயமில்லேத்தான்."
பெருத்த ஆறுதலாயிருந்தது.
சித்திரவேலு, சொல்லி விட்டுக் கொஞ்ச நேரம் மெளனமாயி குந்தான்.
60 / கிருஷ்ணன் தூது O

"அப்ப இனி என்ன செய்யலாமெண்டு நினைக்கிறீர்?? -விவே கேட்டான்.
"இனியோ?. இத்தறுதிக்கு அடிச்சி முடிச்சிருப்பாங்களே?
**இல்லை அச்சுக் கூடத்திலையிருந்து வாற வெள்ளிக் கிழமை தான் எடுக்கலாம் . இண்டைக்குத் திங்கள் தானே.”
"அப்ப நாங்கள் செயற்குழுவுக்கு ஒரு விண்ணப்பம் எழுது வம் - அண்டைக்கு சும்மா வாய்ப் பேச்சிலை கதைத்ததை விட, வேற ஒண்டுமில்லைத்தானே?- 'நீங்கள் எப்ப கேட்டநீங்கள்? எண்டு பிறகு கேக்க இடம் வைக்கக் கூடாது **
"அது நல்ல யோசனைதான்.”
*எழுதி, எல்லா அங்கத்தவர்களும் கையெழுத்து வைச்சுக் கொடுக்கலாம்.”
4.
"அய்யா நீங்கள் என்ன வேலை செய்திருக்கிறீங்கள்?
-மூர்த்தி கேட்ட விதத்தில் சிவஜோதி கொஞ்சம் பயந்து போய் விட்டார்.
"ஏன் என்ன? என்ன செய்தநான்? "பின்ஜன என்ன? அந்த லெற்றர் ஹெட் "திருப்தி எண்டு கையெழுத்துப் போட்டுக் குடுத்திருக்கிறீங்களே. அதிலே ஒரு வரி தமிழிலையும் போட்டால் குறைஞ்சா போகும்?” சிவஜோதி திடுக்கிடத்தான் செய்தார்.
என்ன தம்பி, என்னதம்பி, அதை ஆர் யோசிச்சது?. அவன் உங்கட லயனல்தான் - கொண்டு வந்து, சரியா
எண்டு கேட்டான். அந்த லே-அவுட்"அதுகளைப் பற்றிக் கேட்கிறனுக்கம் எண்டு நான் நினைச்சேன். எடடே.”
சாந்தன் / 61

Page 36
"உங்கட கொமிற்றியிலே இதுகளேப் பற்றி ஒண்டுந் தீர் மானிக்க இல்லையா?.”
*ஒரு ஐந்நூறு "லெற்றர் ஹெட் அடிக்கிறது எண்டுதான் முடிவெடுத்ததொழிய, விபரம் ஒண்டும் தீர்மானிக்க இல்லே - தீர்மானிக்குறதெண்டா, நாங்களும் மூண்டு பேர் இருக்கிற மெல்லே - நான், சேணுதி, 'மணியத்தார் . . * 5
* மணியத்தார் வாருர் .” என்ருன், கன்டொஸ், சுருட்டுப்புகை முன்னுல் வந்தது. *தம்பியவை, இப்படி நீங்கள் மாத்திரம் தனித்தனிக் கூட்டமா நிண்டு கதையாதையுங்கோடா. மற்றவங்களுக்கு, பார்க்க ஒருமாதிரியாயிருக்கும்."
*அதுக்கு என்னய்யா செய்யிறது?’ என்ருன், சச்சி,
* இனிமேல் ஒரு பிரச்சிஜனயுமிராது. அடுத்த முறையிலே யிருந்து, தனிய இங்லிஷிலைதான் அடிக்கிறது எண்டு நாங்கள் தீர்மானிக்கப் போகிறம் ." -சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் சொன்னுரி. விவேக்குக்குப் பற்றிக்கொண்டு வந்தது. 'அய்யா, அவங்களிலே சிலபேர் நி?னக்கிற மாதிரித்தான் நீங்களும் நினைக்கிறீங்கள் - சிங்களத்தில் போட்டது எங்க ளுக்குப் பிடிக்கேல்லை எண்டு பிரச்சி?ன அதில்லே! தமிழிலே போடாமல் விட்டதுதான் எங்கட பிரச்சினே! நீங்கள் தனிய இங்லிஷிலே அடிக்க வெளிக்கிட்டா, அதை எதிர்க்கிற முதல் ஆளாக நானிருப்பன். இப்ப பாதிப் பேருக்கு உள்ள நட் டத்தை நீங்கள் முழுப்பேருக்கும் கொண்டு வாறன் எண்டு நிக்கிறியள்.’
6
ருெபட்டைப் பற்றி விவேக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததுபியோன் வேலைக்கு வந்து சேர்ந்தாலும், படித்தவன், அறி
52 / கிருஷ்ணன் தூது o

வானவன் என்று. அவனுடைய தொழிற்சங்கத்தில் தமிழர் களும் கன பேர் அங்கத்தவர்களாயிருக்கிருர்களாம். அவனுேடு ஒரு தரம் தனியாகக் கதைத்துப் பார்க்க வேண்டுமென்றி ருந்தது. ருெபட், நலன் செய் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினன். சாப்பிட வெளிக்கிட்டுப் போனபோது, ருெபட் யாருடனுே பேசிக்கொண்டு நின்றன். அவ்வளவு எரிேயஸான பேச்சாகத் தெரியவில்லை. கிட்டப் போனதும், *ருெபட், வேலையா?.” என்று மெல்லக் கேட்டான்.
'இல்லை, ஏன்? 9 y “ஒரு சின்னக் கதை .”
தள்ளிப் போனர்கள்
‘இந்த விஷயம் என்ன, குழப்பமாகிப் போச்சு. ருெபட் என்ன நினைக்கிறீர்?"
அவன் கொஞ்சம் அசட்டுத்தனம் தெரியச் சிரித்தான். பிறகு சொன்னுன் : ‘இடந்தான் பிரச்சிஜனயாம். மூண்டு பாஷையிலும் போட, அரைவாசி இடம் போயிடுமே ’ **ஏன் மூண்டு?. இங்லிஷை விடலாமே?.” “அதெப்படி? கொம்பனிகளுக்கு .’
மத்தியானம் பஸ்சுக்கு நின்றபோதுதான் திடீரென்று அந்த யோசனை வந்தது, விவேகானந்தனுக்கு - வேண்டு கோள்
கடிதத்தில், தனிய நாங்கள் மட்டுங் கையெழுத்து வைக்கக் கூடாது.”
கந்தோருக்கு வந்ததும், முதல் வேலையாக கனகசுந்தரத்தின் ஸெக்ஷனுக்குப் போனுன்.
ロ சாந்தன் / 63

Page 37
"அது நல்ல யோசனைதான் - இன அடிப்படையிலை இரண்டு பிரிவாகப் பிரிஞ்சு நடக்கிறதைத் தவிர்க்கத்தான் வே gosh. --
- கனக்ஸ் சொன்னுர். “அதுதான், பாருங்கோ - இதிலை இரண்டு விஷயம்: ஒண்டு, அப்படியான் பிரிவைத் தவிர்க்க வேணும். மற்றது பிரிவைத் தவிர்க்க வேணும் எண்டதுக்காக மலிஞ்சு போகக் கூடாது .’ *ஏன் நிக்கிறீர்? அவசரமே? இரும், இரும். இருந்து கதைப் பம் -’ கனக்ஸ், மேசையில் கிடந்த ஃபைல்களை ஒதுக்கி வைத்தார். விவே இருந்ததும் அவர் கேட்டார்: **நீர் சொல்லுறது சரி;. ஆணு, கையெழுத்து வைக்கக் கூடிய ஆக்கள் இருக்னமே? ஆரைக் கேக்கிறது?" *அதுக்கு ஒரு வழி இருக்கு .”
6T6T6Or?' எங்கட, மிஸ்டர், பெர்ணுண்டோ இருக்கிருரெல்லோ?.? *உங்கட பொஸ்?” **அந்தாள் நல்ல மனுஷன். இப்படியான வேற்றுமைகள் பார்க்கிறதில்லை இடது சாரி எண்டு சொல்லுறவங்கள்.” "அவர் மாத்திரம் வைச்சாப் போதுமே?” “அந்தாள் வைச்சா, அதைப் பாத்திட்டு அதுக்காக வைக் கக் கூடிய ஏழெட்டுப் பேர் எங்கட ஸெக்ஷனிலே இருக் கினம் . *
8
*வணக்கம், எல்லாள மகாராஜா " மூர்த்தி, ஆள் பகிடிக்காரன் தான் என்ருலும் இந்தப் பகிடி அவ்வளவு உவப்பாகத் தெரியவில்லை
அலம்பாதையடா-1’ என்றன். விவே கேபமாக,
64 / கிருஷ்ணன் தூது ロ

“நான் என்ன செய்ய? உன்னே அப்பிடித்தான் நி3ணக்கிருங் கள் போலிருக்கு. ” *அப்பிடி நிஜனச்சாலும் ஆச்சரியமில்லை. அதுதான் வழக்கம் அப்படிப் பழக்கியிருக்கு.’ என்ருன் கன்டொஸ்
முந்தி சின்னப் பெடியளாயிருந்த காலத்தில் எம் ஜி ஆரும் வீரப்பாவும் வாள்ச் சண்டை போடுறதென்று சொல்லி நாங் கள் பூவரசந்தடி சுழட்டுற மாதிரி.’ விவே சிரித்தான்.
**உங்களுக்காவது இந்தியா இருக்கு. நாங்கள் எங்க போ றது? . எண்டு மிஸ் அத்தபத்து கேட்டா.” - கன் டொஸ் சிரிப்பை அடக்கிச் சொன்னுன். "ஆண்டவா!” -இந்த குழப்பத்திலும், மன உளேச்சலிலும் கூட நல்ல பகிடிகள் சந்திக்கின்றன! சிரித்து முடித்தபின் அழுதிருக்க வேண்டுமோ என்று பட் டது விவேக்கு. *எப்ப கதைச்சநீ? என்னெண்டு இந்தக் கதை வந்தது? . * *மத்தியானம் சாப்பிட்ட பிறகு கதைச்சுக் கொண்டிருக் கேக்கை.”* *எழுபத்தேழாம் ஆண்டுக் கலவரத்துக்குள்ளே கூட நாங்கள் உங்களை ஒண்டுச் செய்யலே நீங்கள் ஏன் இப்படி நடக்கிறீங் கள்? -எண்டுங் கேட்டுதுகள்.’ *எல்லாம், அறியாதத்தன்மை; அதால் வந்த பயம். நாங் கள் விளங்கப் படுத்த வேணும்.’’ என்ருன் தொண்டர். *எவ்வளவு காலத்துக்கு என்னத்தையெண்டு விளங்கப் படுத்தப் போறிங்கள்? அதுக்கிடையிலே எங்கடபாடு முடிஞ் சிடும்.” சச்சி சொன்னுன் கோபமும் சிரிப்புமாய். **இங்லீஷ் போடுற இடத்திலே தமிழைப் போடுறதாலே பாத கமில்லை என்பதை விளங்கப் படுத்த வேண்டியிருக்கு."
*சரி, நாளே - செவ்வாய்க் கிழமைக் கிடையிலே எங்கட
O சாந்தன் / 65

Page 38
கடிதத்தைக் குடுத்திட வேணும். இப்ப எத்தினை பேர் கை யெழுத்து வைச்சிருக்கு?”
'இருபத்தொரு பேர். இன்னும் எட்டுப் பேர் வைக்க இருக்கு
*கந்தையர்?
*வைச்சிட்டார். ஆணு, சரியா யோசிக்கிருர். இப்பவே பெர் ஞண்டோவுக்குக் குடுக்கிற மரியாதையிலை பாதியாவது அவங்கள் தனக்குத் தாறகில்லேயாம் . . இதிலே கையெ ழுத்தும் வைச்சா இன்னும் நல்லாத்தானிருக்கும் எண்டார்; எப்படியோ வைச்சுத் தந்திட்டார் ’ ‘அந்தாள். பாவம் - அவங்களுக்கும் பயப்பிடுகுது, எங்களுக் கும் பயப்பிடுகுது.” என்றன் மூர்த்தி.
*சேணுதி?
*பின்னேரம் சொல்லுறன் எண்டார். ஆணு, தான் கொமிற்றிக் கூட்டத்திலே இதைப் பற்றிக் கதைப்பாரம் ’ ‘கதைச்சுத்தான் என்ன நடக்கப் போகுது? கொமிற்றியிலை யுள்ள பதினுேருபேரிலே இவையள் மூண்டுபேர். தலையளை எண்ணிப் பாக்கிறபோது என்ன செய்யேலும்?.’
*.சேணுதி, ஏன் இப்பிடிப் பின்னடிக்குது?-**
*அந்தாளுக்குப்பயம் -புறுாஃட ஏன் மற்ற ஆட்களுக்குக் காட்டினநி? எண்டு தன்னைக் கேட்பாங்களோ எண்டு.”*
9
கந்தோரால் வந்து கணவன் தேத்தண்ணி குடித்துக் கொண் டிருக்கும் போது, கமலா கேட்டாள் : “இன்னும் உங்கட அந்த இது அடிச்சு முடியேல்லையே?’ “எது?”
“அந்த லெற்றர் ஹெட்?”
66 / கிருஷ்ணன் தூது O

*நீரும் ஒரு பக்கம், இதுக்குள்ளே.” -சேணுதி சீறிறன்: * அதிஜல இப்ப காயிதம் எழுதப் போறிரே?
கமலாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.
“எனக்கென்னத்துக்கப்பா, அதை? . ஏதோ உங்கட பேரும் போட்டு அச்சடிக்கினம் எண்டு சொன்னிங்கள், அதைப் பார்க்கலாமெண்டுதான். * அவள், பலகைத்
தடுப்பைத்தாண்டி அடுப்படிக்குப் போனுள்.
10
**மிஸ்டர் பெர்ணுண்டோ, இதை ஒருக்காப் பார்க்கிறீங் களா? ...”*
சுங்கான் புகை மணத்தை ரசித்தவாறு, மரியாதையாகக் கேட்டான் கன்டொஸ்,
**என்ன, அது?.’ நிமிர்ந்து, சுங்கா?ன மேசையில் வைத்த படி அதை வாங்கினுர், பெர்ணுண்டோ.
நீள நீளமாகச் சுருட்டப்பட்ட பெரிய படங்கள் மேசையின் ஒருபக்கம் முழுவதையும் பிடித் திருந்தன. தடித்த கண்ணு டிக்கடியில் கிடந்த வண்ண வண்ணமான வெளிநாட்டு தபால் முத் திரைகளைப் பார்த்துக் கொண்டு நின்றன் 9 கன்டோஸ்.
பெர்ணுண்டோ படித்தார் :
எங்கள் நலன் புரிச்சங்கத்தின் செயற்குழு, சங்கத்திற் காகக் கடிதத் தலைப்பு அச்சிடுவதென்று தீர்மானித்து அதற்கான வேலை தொடங்கியிருப்பதாய் அறிகிருேம். குறிப்பிட்ட கடிதத் தலைப்பில், தமிழ் ; இடம்பெறவில்ஜல என்பது எங்களை மிகவும் வருந்தச் செய்கிறது.
*உறுப்பினர்களுக்கிடையில் நல்லுறவையும், ஒத்துழைப்பை யும் வளர்ப்பதற்கும், சங்கத்தின் சுமுகமான செயற்பாட்டிற் கும் இம்மாதிரியான விஷயங்களில் தமிழுக்கும் உரிய
O சாந்தன் / 67

Page 39
இடங்கொடுப்பது அவசியமென்பதை ஒத்துக்கொள்வீர்கள். 'இது விஷயமாக ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிருேம்.
நன்றி.” . எழுதத்தான் வேனும் واژینا06أ56] سمه ** பெர்ணுண்டோ வாசித்து முடித்ததும்.
s
என்ருர்,
பிறகு பழையபடி சாய்ந்து கொண்டு, கண்ணுடியை நெற்றி யில் உயர்த்தி விட்டார். *இது கொஞ்சம் நுணுக்கமான விஷயம். உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட சங்கதி.’ “ஒமோம் . ’ என்ருன், கன்டொஸ். *. ஆணு உங்கட வேண்டுகோளே வடிவா எழுதியிருக் கிறீங்கள் - நல்லமாதிரி’ கன்டோசுக்கு சந்தோஷமாயிருந்தது. “அப்ப இதிலை நீங்களும் கையெழுத்து வைக்கலாந் தானே?’ என்ருன். “நானு? நான் எதுக்கு." - அந்தாள் இதை எதிர் பார்க்க
"நாங்கள் மட்டுந்தான் இதிலே கையெழுத்து வைக்கவேணு மெண்டில்லையே. இந்தக் கடிதத்திலே உள்ள நியாயத்தை ஒப்புக்கொள்கிற எவரும் வைக்கலாந்தானே.?? *அதுசரி, அதுசரி.’ - பெர்ணுண்டோ சமாளித்துக் கொண்டு சுங்கானேக் கையில் எடுத்தார். * . அப்பிடியெண்டா, மிஸ்டர். கந்தசாமி இதிலே இன்னுங் கொஞ்சம் மாத்தி, - இன்னும் வடிவா எழுதி - எல்லோரும் கையெழுத்து வைப்பம் . இப்ப கொஞ்சம் வேலேயிருக்கு. பிறகு ஆறுதலாகச் செய்வமா. ?” கன்டொஸ் சிரித்துக்கொண்டு திரும்பி வந்தான்.
68 / கிருஷ்ணன் தூது C

11
கன்ரீன் வழமைபோல் இருண்டு கிடந்தது. பிசுபிசுக்கிற மேசைகள். சிகரட் புகை, கிளாஸ்கள் அடிபடுகிற ஓசை, இலையான்கள்.
“நீ, இந்தளவுக்கு மாறிப் போவாய் எண்டு நான் நிஜனச்சி ருக்கேல்லை." காமினி சொன்னுன். அந்தக் குரல் எவ்வளவு அந்நியப்பட்டு ஒலிக்கிறது? விவேகானந்தனுக்கு வேதனையாயிருந்தது. ஒரு சின்னச் சிரிப்பும் வந்தது. தேத் தண்ணி கிளாலை வைத்துவிட்டுக் கேட்டான். *ஏன் அப்படிச் சொல்லுருய், காமினி?. ’
* பின்னே என்ன, இண்டைக்கு இவ்வளவு கோளாறு வந்தி ருக்கே. நீ தான் அவ்வளவுக்கும் காரணம்.”
பயங்கரமாய்த் தானிருந்தது. பிறகும் நானு? *நானு?"
**நீ தான்.
காமினி சிகரட்டை உறிஞ்சினுன்.
*நீ தான். போன வெள்ளிக் கிழமை பகல், லயனல் புறுஃ பைக் கொண்டு போய்க் காட்டின போது சரியெண்டு சொன்ன சிவசோதி, சுப்பிரமணியம் எல்லாருங்கூட, இண் டைக்கு உங்கடை வேண்டு கோளிலே கையெழுத்து வைச்சி ருக்கினம் , **
*நான் போய், மேசை மேசையா கன்வஸ் பண்ணினேன் எண்டு நிஜனக்கிறியா?* *அதைப் பிழையெண்டு பேச நீ முதலிலை புறப்பட்ட பிறகு தான் இவ்வளவும் நடக்குது. இதெல்லாம் என்ன தாக்கத் தை ஏற்படுத்தும் எண்டு நினேச்சுப் பார்த்தீங்களா?.’ ‘எங்களுக்கு எண்டும் ஒரு அடையாளம் இருக்கெண்டதைக் காட்டினதும், ஏன் இப்படிக் குழம்புநீங்கள், மச்சான்?”*
O சாந்தன் / 69

Page 40
“நாங்கள் குழம்பேல்லை. நீ தான் குழப்புருய், பார், இண் டைக்கு செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிடையிலே, பிரஸ்ஸிலே யிருந்து அதுகளை எடுக்க வ்ேனும், அதுக்கிடையிலை இது ஒரு குழப்பம்."
விவே சிரித்தான்.
12
கதவருகில் நின்று மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தார்கள், கல்தேராவும் ரஞ்ஜித்தும். பெர்ணுண்டோ தனது இடத்தில் இல்லை. எங்கோ வெளியில் போயிருக்க வேண்டும். ஹோலின் மற்றத் தொங்கலில் கந்தையர் இருந்தார். போனேக் காதில் வைத்தபடி. “லெப்ஃற், றைற். லெப்ஃற், றைற் ." -ஆளுக்கொரு நீண்ட படச்சுருளைத் தோளில் துவக்காகச் சார்த்தி, நெஞ்சை நிமிர்த் திக் கொண்டு இரண்டு பேரும் “டக்டக்" கென்று உள்ளே வந்தார்கள். மேசைகளில் படிந்திருந்த பார்வைகளெல்லாம் நிமிர்ந்து அவர்கள் மேல் பதிந்தன. “லெஃப்ற், றைற் - லெப்ற்,றைற் ’ -அணி நடை நீளப் போனது. **வம், தக் . வம், தக்.’ காமினியின் மேசையருகில் போய் காலை உதைத்து, அற் றென்ஷனில் நின்றர்கள். முறுவலித்த படி, வரைப் பலகையின் மேலிருந்த படத்தில் மீண்டும் புல8னச் செலுத்தியபோது. சச்சி சொன்னுன்: “பாருங்கோ, அண்ணை, . என்ன மாதிரி, குழந்தைப் பிள்ளை யள் போல் விளையாடி முசுப்பாத்தி பண்ணுருங்கள். ஆணு இந்த விஷயம் எண்டு வந்தவுடன் எவ்வளவு பிடிவாதமும் முரட்டுத்தனமும்" தான் நிஜனத்ததையே சச்சி கேட்டுவிட்டதை விவே உணர்ந் தான்.
“ஒவ்வொருத்தன்ர இயல்பு என்ன மாதிரித் தானிருந்தாலும்,
70 / கிருஷ்ணன் தூது O

இந்த உணர்ச்சி இப்ப அநேகமாக கால்லாரிலும் ஊறிப் போயிட்டுது. ’’ “இதுக்கு அந்த அரசியல்விாதிகள் தான் காரணம் எண்டு எனக்குப் படுகுது. முந்தி சுகமா அதிகாரத்தைப் பிடிக்கிறதுக் காக சனங்களுக்கு வகுப்பு வாதத்தை ஏத்திச்சினம். அது இப்ப நல்லாச் சுவறி, விட்டுது - சொல்லிக் குடுத்தவையே வந்து, 'வகுப்புவாதம்கூடாது’ எண்டு சொன்னுலும் அவை யளையே சனம் தூக்கி எறியிற அளவுக்கு1.*
13
*இந்த பஸ் பெரிய தலையிடி.** என்ருன் சச்சி *அஞ்சரை மட்டும் இதிலை நிண்டு காயாமல் ஜங்ஷனுக்கு எல்லாம் முசுப்பாத்தியா நடந்து போயிடலாம்.” நடக்கத் தொடங்கிய போது, பின்னுல் யாரோ கூப்பிட்டார் கள் - கனக்ஸ்.
*நானும் வாறன் . " **இந்தாளோட நடந்தா ஜங்ஷனிலை முதல் பஸ் எடுக்க லாம். விடிய ’ என்ருன் மூர்த்தி, மரமுகடுகளே, வாகையின் மஞ்சளும், காட்டுத்தீ மரத்தின் சிவப்பும் மூடியிருந்தன. அந்தக் கூடலுக்குள் போய்விட் டால் இந்தப்பாட்டு வெய்யில் முகத்தைச் சுடாது. நடந் தார்கள். ‘எப்படி, இண்டைக்கு அந்த லெற்றர் குடுத்திட்டீங் களா?.’ என்றர் கனக்ஸ். “ஒ. மத்தியானம் குடுத்தாச்சு.’ “மற்ற எல்லோரும் கையெழுத்து வைச்சிட்டினமே?” *இருபத்தெட்டுப் பேர்; - இ. இ. சிங்க ராயரைவிட, அவர் 6668) '
O சாந்தன் / 71

Page 41
“என்ன நடக்குதெண்டு பாப்பம்."
*சீ! என்ன நிம்மதியில்லாத சீவியம். கொஞ்சநாளா கந் தோர் கூட நெருடலும், அந்தரமுமான இடமா ஆயிட் டுது . போதாக்குறைக்கு இப்ப இதுவும் ஒரு பிரச்சனை.”
**இதுகள் விளங்காம உபதேசம் பண்ணுகிற எங்கடை ஆக்கள் இன்னும் ஊர்வழிய இருக்கினம் - இந்தச் சூடு குளி ரிலே ஒரு எப்பனும் அறியாமல் - வெறும் தியறி - உப தேசம் .”*
“ஆணு, அவங்கள் புத்திக்காரங்கள் எங்களைப் போலே இந்த இரண்டுங்கெட்டான் அவலச் சீவியம் இல்லை - எப்ப
என்ன வருமோ எண்டு. வடிவா, கதைச்சுக் கொண்டிருக் கலாந்தானே.”
14
தபாற்கந்தோர் எக்கச்சக்கமாக மினக் கெடுத்து விட்டது. சாப்பிட்டுவிட்டு, அப்படியே வீட்டுக்கு ஒரு மணி ஒடர் தபாலையும் ரெஜிஸ்ரர் பண்ணிவிட்டு வர, இவ்வளவு நேர் மாயிருக்கிறது! இரண்டரைமணி. அவதி ஒருபக்கம், வெய்யில் ஒருபக்கமாக வியர்த்து வடிந் தது. விசிறியைத் தட்டிவிட்டுப் போய் மேசையில் குந்திய போது, சச்சி சொன்னுன் : *அட! இரண்டு வடையை மிஸ் பண்ணிட்டீங்கள், அண்ணே ’
** 6 JóOdlu it? *கந்தையர் கொண்டந்தது! .’ என்றன் கன்டோஸ். பின் ஞலிருந்து, *கந்தயரா? ஏன்?’ - விவே, திரும்பிப் பார்த்துக் கேட்டன்"
இதற்கு மறு மொழி சொல்லாமல் கன்டோஸ் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
72/ கிருஷ்ணன் தூது O

9 g
“எல்லோருக்கும் குடுத்தவரா?
29
*ஓ! ஸெக்ஷன் முழுக்க . “ஏன்? என்ன விசேஷம்?” திரும்பவும் கேட்டான். *சும்மாதானும் . வீட்டிலே செய்தது எண்டு சொன்னவர் . ஆணு, உண்மையிலே அண்டைக்கு அந்த கடிதத்திலே கை யெழுத்து வைச்சதுக்குப் பிராயச்சித்தம் ." இப்போது சச்சியும் சேர்ந்து சிரித்தான்.
15
*உங்கள் கடிதம் செயற்குழுவின் ஆலோசஆனக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட கடிதத் தலைப்புகள் இப் போது அச்சிடப்பட்டு விட்டதால், அது பற்றி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அச்சிடப்பட்டவை முழுவதும் முடிவடைந்ததும், உங்கள் வேண்டுகோளேப் பரி சீலனைக்கு எடுத்துக் கொள்வது என்று செயற்குழு முடி வெடுத்துள்ளது’ - இந்தக் கடிதம், புதுக்கடிதத் தலைப்பில் ஆங்கிலத்தில் ரைப் செய்யப்பட்டிருந்தது. கீழே செயற் குழுவுக்காக” என்று லயனலின் கையெழுத்து.
பதில் வரப் பிந்தியதால், ஒரளவு எதிர்பார்த்திருந்தது தான்: பிறகு சேணுதி ஆட்கள் மூன்று பேரும் வந்து சொன்ன சேதி தான் என்ருலும், எழுத்தில், அந்த அச்சிட்ட ஒற்றை யில், பார்க்கப் பார்க்க கவலையும் கோபமும் சேர்ந்து படரு கின்றன. *முடிந்ததன் பிறகு, சேர்ந்து அடிக்கிருேம் எண்டாலும் பர வாயில்லை . முடியுமட்டும் . எவ்வளவு நாளானுலும் - டொ றுக்க நாங்கள் தயார். ஆணுல் முடிந்ததன் பிறகு யோ சிக்கப் போகினமாம்! "
இ. இ. சிங்கராயர் அதைப் படித்து முடித்ததும் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தார். பிறகு சொன்னுர்:
சாந்தன் / 73

Page 42
*றிசைன் பண்ணுறது வலு சுகமான வேலை. இப்ப நாங்கள் அதைச் செய்யிறதா?ல பிரச்சிஜன தீர்ந்திடாது. எங்கட வேண்டுகோளும் நிறைவேறது."
**?xt"Luی ء ء
** இன்னுெரு சந்தர்ப்பம் குடுத்துப் பார்ப்பம். சில சமயம் உண்மையிலேயே எங்கட வேண்டுகோள் பிந்தியிருக்க 6) Th...'
‘இன்னுெரு சந்தர்ப்பமோ? - - விவேயும் கனக்சும் இதை எதிர்பார்க்கவில்லை.
ராஜினுமாக் கடிதத்தில் சிங்கராயரின் கையெழுத்தை வாங்க வராமல் விட்டிருக்கலாம் என்று கனகசுந்தரம் நினைத்தார்.
உந்த லெற்றரை, இப்ப குடுக்காமல், அதுக்கு முதல் இன் னுேரு வேண்டுகோள் விட்டுப் பார்ப்பம் .”*
“6T 'il 7 iq?” ”
*திருப்பி அடிக்கச் சொல்லி ." “உது சரிவராது, சேர்." - விவே சிரித்தான். " . காசில்லை எண்டு மறுமொழி சொல்லலாம் - சுகமா?? *அதுக்குத்தான் ஒரு வழி இருக்கு...”*
66 69r.
*செலவழிச்ச காசை நாங்கள் தாறம் எண்டு சொல்லி ."
இருவரும் குறுக்கிட்டார்கள், விவே சொன்னுன்:
*வெட்கங் கெட்டவேலை. ! உதிலும் பார்க்க, தமிழைப் போ டச் சொல்லிக் கேளாமல் இருக்கலாம்."
சிங்கராயர் நிதானமிழக்கவில்லே.
“பொறும் தம்பி, றிசைன் பண்ணுறதாலே எங்கட வேண்டு கோள் நிறைவேறி விடுமோ? - சொல்லும்."
“நிறைவேறது . ஆணு, வேறவழி இல்லை."
74 / கிருஷ்ணன் தூது

*கந்தோர் கன் ரீனே நடத்துறது ஆர்? இந்தச் சங்கந் தானே? ’
இவர்களிரண்டு பேரும் தலையாட்டினுர்கள்.
*சங்கத்தாலே றிசைன் பண்ணிப் போட்டு, கன்ரினிலே ஒரு தேத் தண்ணி கூடக் குடிக்க முடியாது.”
*தேத் தண்ணி பெரிசில் ஜல, சேர்." -விவேயால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை
** அதுதான். 1“என் ருர் கனக்சும் “அதை நான் பெரிசு எண்டு சொல்லேல் ஆல. ஆன. அதைத் தானும் ஏன் இழக்க வேணும்?. இந்த வேண்டுகோளுக்கு, எந்த ஒரு மறுமொழியும் சொல்ல முடியாது-திருப்பிஅடிக்கிற தை விட. ஆனபடியால் தான் இவ்வளவு சொல்லுறன் . இதுக்கும் "மாட்டோம்” என்று சொன்ன்ல், றெஸிக்னேஷன் கடிதத்திலை முதல் கையெழுத்து வைக்கிற ஆளாக நானிருக்கிறன்."
16
‘எங்கள் வேண்டுகோளே, செயற்குழு ஆராய்ந்து முடிவை அறிவித்தமைக்கு நன்றி பாராட்டுகிருேம். 61ரிைனும், பரஸ்பர நல்லெண்ணத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் மதிப்புக் கொடுக் கும் விதமாக கடிதத் தலைப்பில் தமிழும் சேர்க்கப்பட வேண் டும் என்பதில் இன்னமும் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிருேம்.
*இதன் சீழ்க் கையொப்பம் இட்டிருக்கும் உறுப்பினர்களாகிய நாம், ஏற்கனவே அச்சிடப்பட்ட கடிதத்தலைப்பிற்கான செல வைச் சங்கத்திற்குத் தந்து அத்தலைப்புகளைப் பெற்றுக் கொள்ளச் சித்தமாய் உள்ளோம். ஆகவே தமிழையும் சேர்த்து, புதுக் கடிதத் தலைப்புகளை அச்சிடுமாறு செயற் குழுவை மீண்டும் தயவாகக் கேட்டுக் கொள்கிருேம்.
O சாந்தன் / 75

Page 43
17
*உங்கள் வேண்டுகோள், செயற்குழுவின் பரிசீல?னக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனைக்கு நன்றி தெரிவிக்கிற அதே நேரத்தில்; தன் முன்னிலையில் அநேக பொறுப்புகள் இருப்பதால், கடிதத்தலைப்பு விஷயத்தில் இன் னும் சில நாட்களைச் செலவிட முடியாத நிலையிலிருப்பதஜன செயற்குழு வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறது. *முன்னர் அறிவித்தது போல, கைவசமுள்ள கடிதத்தலைப் புகள் முடிவடைந்ததும், தமிழையும் சேர்ப்பது பற்றிய உங் கள் வேண்டுகோள் பரிசீல3னக்கெடுத்துக் கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேம்.
18
* தங்கள் பதில், நிரம்பிய துயரத்தையும், திருப்தியீனத்தை யும் எமக்குத் தந்தது. செயற்குழுவின் இத் தீர்மானத்தால் நலன்செய் சங்கத்திலிருந்து விலகுவதைவிட வேறெந்த முடிவுக்கும் வர எம்மால் இயலவில்லை. எமது ராஜினுமாக்களே ஏற்றுக் கொள்ளும் படி வேண்டுகிருேம்”*
-இந்தக் கடிதத்தின் கீழ், இருபத்தொன்பது கையொப்பங் களும் இருந்தன.
76/ கிருஷ்ணன் தூது

சாந்தனுடைய இந்தப் பதிவினரு கதைகள்
சிங்களத் தீவினிக்கோர் பாலமமைக்கப் பாடிய பாரதியின் நூற்ருண்டு சந்திக்குச் சந்தி அல்லோகோலப் பட்டுக்கொண் டிருக்கிற இந்த நேரத்தில், ரொம்ப சாதுவாய் இலக்கியத் தேடல்", ராமனின் அணிலாய், பாலத்துக்கு மண் சுமந்தி ருப்பது ரொம்பப் பெருமையான விஷயம். அதிலும், ஈழத்து இளந்தலைமுறையின் முதிர்ந்த எழுத்தாளரான சாந்தனின் எழுத்துக்கள் இலக்கியத்தேடல் மூலம் தமிழ் வாசகர்களுக்கு, குறிப்பாய்த் தமிழ்நாட்டு வாசகர்களுக்குக் கிடைத்திருப்பது இன்னும் விசேஷம்.
ஏழு வருஷங்களுக்கு முன் கனோபாழியில் யாரோ ஒty சாந்தன் எழுதி வெளியான நீக்கல்கள்" வாரிக்கக் கிடைத்த
போது, யார் இந்த சாந்தன் 6ான்று புருவங்களே தெரிக்க வைத்தது சாந்தனின் எழுத்து. ஐந்து வருவங்கழித்து அதே 8á56ö66ir Illustrated Weekly of India sofli 9), sblá)Gu;h தில் பிரசுரமானபோது - அந்த இடைக்காலத்தில் சாந்தன் என்னுடைய அபிமான எழுத்தாளராகவும், உயர்ந்த நண்ப ராகவும் ஆகிவிட்டிருந்தார்.
சாந்தனுடைய இந்தப் பதினுேரு கதைகளில் பெரும்பகுதி நான் முன்பே வாசித்திருந்த போதிலும், திரும்ப இப்போது வாசிக்கிறபோது, அதுவும் இத்தனை கதைகளையும் ஒரு சேர, நான் நேசிக்கிற யாழ்ப்பாணத்தமிழில் வாசிக்கிறபோது புதி தாய் ஒரு சந்தோஷம் - ஒடைத்தண்ணிரில் முங்கு நீச்சல் போட்டவன் தாமிரபரணிப் பிரவாகத்தில் களியாட்டம் போடுகிற மாதிரி,
இந்தத் தொகுதியிலிருக்கிற பதினுேரு கதைகளைப் பொது வாய் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் - தனிமனிதப் பிரச் சனேகள், அனுபவங்கள் பற்றிய கதைகள் என்றும் இலங் கையின் இன்றைய த8லயாய பிரச்சனையான தமிழ், சிங்கள இனமக்களிடையே நிலவுகிற இறுக்கத்தை உள்ளிடாகக் கொண்ட கதைகள் என்றும்,

Page 44
நீக்கல்கள், புரிதல், கவலே, இழப்பு, இன்னும் உள்ள வண் ணங்கள், அடையாளம் ஆகிய கதைகள் முதல் பிரிவிலும், மனிதர்கள் மனங்கள் மானங்கள், தமிழன், 76ல் ஒரு விடு முறை நாளில், கிருஷ்ணன் தூது ஆகிய கதைகள் இரண்டா வது பிரிவிலும் அடங்குகின்றன. நீக்கல்களே சாந்தன் எழுதியிருக்கிருர் என்று சொல்வதை விட, ஒரு வரைவல்லுனரின் லாவகத்தோடு வரைந்திருக்கி றர் என்று சொல்வதுதான் பொருத்தம். போர்டில் பதித்த தாள் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் அலுங்கிவிட்டாலும் படம் பிசகிவிடும்; காற்றுக்குப் கப்பம் கட்ட வேண்டும்; ஒரு சொட்டு ஊத்தை யிருந்தாலும் போதும், படமெல்லாம் பாழ், பட்ட பாடெல்லாம் வீண். நீக்கல்களும் கிட்டத்தட்ட இதே சங்கதி தான். வார்த்தைகளைக் கொஞ்சம் அஜாக்கிர தையாக விட்டு விட்டால் ரொம்ப சுலபமாய்ப் புஷ்பா தங்க துரை வகையரு சமாச்சாரமாகி விடக் கூடும். இம்மி பிசகி லுைம் அசிங்கப்பட்டுப் போகக் கூடிய ஒரு விஷயத்தை சாந்த&ன மாதிரி இவ்வளவு நேர்த்தியாய் ஒரு கலேப் படைப் பாய்ப் படைக்க எத்தனை பேருக்குக் கை விளங்கும் என் பது ஒரு கேள்வி. இந்தக் கதையை, மூலத்தின் மெருகு (g, &uu i TLD6t) Illustrated weekely ufolo 9/p5 Till GLOTf பெயர்த்திருந்த CDR. A. V. பரத் அவர்களின் பெயரை இங்கே அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும். நோய் வாய்ப்பட்டு ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்கிற ஒரு பெரிய மனிதரை, ரொம்பப் பாடுபட்டு வேலை மெனக்கெட்டு *வருத்தம் பார்க்க”ப் போகிற ஒருத்தன், பார்க்கப் போனவர் டிஸ்ச்சார்ஜ் ஆகிப் போய் விட்டார் என்று தெரிகிற போது கொள்கிற அலுப்பு எவ்வளவு நிஜமானது "கவலை யென் கிற கதையில் Human Psychology யை எவ்வித பம்மாத்து வேலைகளும் இல்லாமல் அப்பட்டமாய்ச் சொல்லியிருக்கிருர் சாந்தன். பொதுவாய் சாந்தனின் கதைகள் உரிச்ச வாழைப்பழ வகை யைச் சேர்ந்தவையல்ல. புரிதல், இழப்பு, இன்னும் உள்ள வண்ணங்கள், ஸி அணி மோன், அடையாளம் ஆகிய கதைகள், ஊட்டிவிட்டுச்

சோறு தின் கிறவர்களேயும், நுனிப்புல் மேய்ச்சல் காரர்களையும் ரெம்பவும் சங்கடப்படுத்தும், "கடுகு" (குறுங்கதைத் தொகுதி யின் முன்னுரையில் சாந்தன் சொல்லுவது இந்தக்கதைக ளுக்கும் பொருந்தும்:
* இந்தக் கதைகளில் சாந்தன் என்ன சொல்லு கிருன்? கதைகள் என்ன முடிவைச் சொல்லு கின்றன? - என்று நேரடிச் சேதிகளே கதையில் தேடப்போகிற உரிச்ச வா8ளப்பளம் தின்னி களான டியூப்லேற் தலை நண்பர்கள், கதைகளை வாசிப்பதைத் தவிர்த்து, கட்டுரைகளேப் படிப் பது சேமம்."
புரிதல் 1 இல் அந்த சிநேகிதனின் தர்மசங்கடத் தப்பித் தல், (இண்டைக்கு ஒரு சாடையான மழைக் குணமிரு க்கு ) புரிதல் 2 இல் சந்திரன் மேல் அந்த முதியவரின் வக்கிரத் தாக்குதல், ஸி. அனிமோன், இழப்பு - இவற்றில் கதாநாயகர்களின் சிநேகித சோகம், இன்னும் உள்ள வண் ணங்களில் எக்ஸைப் பூஜியமாக்கிப் புறந்தள்ளும் பக்குவம், அடையாளத்தில் அந்த மெக்காணிக்கை ‘இவன் நம்ம ஜாதி” என்று நண்பனுய் அடையாளங் கண்டு கொள்ளும் நேர்த்தி ட இவையெல்லாம் எழுத்தாளனின் Wave length திலேயே வாசகனும் ஒன்றி அனுபவிக்க வேண்டிய உன்னதமான விஷயங்கள்.
**இதையும் விரித்து, பத்தோடு பதினுென்ருக வைத்தான்” என்கிற ஒரு வரியில் (இழப்பு), எவ்வளவு பெரிய கனத்தை வாசகனின் நெஞ்சில் தூக்கி வைத்து விடுகிறர் சாந்தன்! அடையாளத்தைப்பற்றியும் விசேஷமாய்க் குறிப்பிட வேண் டும். இந்தத் தொகுதியிலேயே மிகச்சிறிய கதை இது. குறுங்
கதையென்றும் சொல்லலாம்.
'நண்பன் சத்தியனை நான் முதலிற் சந்தித்தது இப்படித் தான்" என்ற அந்த உன்னதமான கடைசி வரி சுதாரிப் பில்லாமல் இருக்கும் நேரத்தில் முகத்தில் பன்னிர் தெளித் துச் சிலிர்க்கச் செய்தது மாதிரி அந்த ஒரு வரியிலே ய

Page 45
இந்தக் குறுங்கதைக்கு இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுத் தருகிற தேர்ச்சி சாந்தனுக்கு அமைந்திருக்கிறது.
சாந்தன் சொல்லுவது போல சில டியூப் லேற் தலே நண்பர் களிடம் சாந்தனின் இந்தக் கதைகள் எந்தவிதத் தாக்கத் தையுமே ; ஏற்படுத்தாமற் போகலாம். அந்த ரக வாசகர் களுக்குச் சொல்ல நான் ஒரு யோசனை வைத்திருக்கிறேன்: உங்களுக்கு சாந்தனின் வாசமே ஆகாது; ஓடி ஒளிந்து தப் பித்துக் கொள்ளுங்கள்.
இந்தத் தொகுதியில் நிறைய பக்கங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற கதைகள், சிங்கள, தமிழ் இனங்களிடை யே உறவுகளே, உரசல்களே, விரிசல்களேச் சொல்லுபவை. இந்த எல்லாக் கதைகளிலுமே சாந்தன் தன்னுடைய இலக் கிய நேர்மையை வெளிப்படுத்தியிருக்கிறர். சிங்களப் பரீட் சையெடுக்க வந்திருக்கும் தமிழர்களே ஒரு சிங்கள மேற்பார் வையாளன் இளக்காரமாய்ப் பரிகசிப்பதை ஒப்புக்கொள்ள முடியாதவன், அவனுடைய, அல்லது அதனுடைய மூஞ்சி யிலறைந்தாற் போல, இத்தனை பாடுபட்டு எழுதின பரீட் சைத்தாள்களைக் குறுக்குக்கோடுகள் கிழித்துச் செல்லாத தாக்கிப் போட்டுவிட்டு வெளியேறுகிற அளவுக்குத் தமிழ்த் திமிருடையவன், ஒரு சிங்களப் பெண்ணின் சிநேகத்தை ஆராதிக்கவும் அவளுடைய குடும்பத்தாரின் நட்பை கண் னிையப்படுத்தவும் தெரிந்தவனுயிருக்கிருன். (மனிதர்கள் மனங்கள் மானங்கள்). மிஸ், பெரேரா, மிஸ்டர் ஃபெர்ணுண் டோ போன்ருேர் வலிந்து தமிழை மட்டந்தட்டுகிறபோது வலிமையான வாதங்களால் அவர்களே மட்டத்தட்டி உட்கார வைக்கிற இவன், அவர்களுடைய அறியாமையின் மேல் தான் சினங்கொள்கிறனேயொழிய அந்த இனத்தின் மேல் சினமில்ஜல, மாருக சிநேகமே மிகுந்து நிற்கிறது. இந்த பண்பு சாந்தனின் எல்லா நாயகர்களிடமுமே காணக் கிடக் கிறது. இந்த சிநேகம் ஒருவழிப்பாதையாய்ப் போய்விடக் கூடாது என்ற சாந்தனின் ஆதங்கம் அவருடைய கதை களில் வெளிப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் ஒரு ஃபாஷன் போல, ஸ்ட்டீரியோவில்

கடைக்குக் க ை.ொட்டி (புழங்குகிற சிங்காப் பொப் பாடல் களின் பேரிரைச்சலால் வருத்தம் கொள்கிற சாந்தணின் நாய கன் (76ல் ஒரு விடு புறை நாளில்), தன்னுடைய அபிமா னப் பாடலான "டிக்கி மெனிக்கே'யை நின்று கேட்டு அணு பவித்துப் போகிற அளவுக்கு வேஷங்களற்றவணுயிருக் கிருன். *யாழ்ப்பாணத்திலையிருந்து வந்து இங்க சண்டித்தனமா விடு நீங்கள்’ என்று காரணமில்லாமல் தமிழனேக் குற்றஞ்சாட்டி விரோதம் விதைக்கிற சிங்கள மனப்பான்மையைப் பார்த்து சாந்தனுக்கு வேதனைதான் ஏற்படுகிறதேயொழிய வேறு வித மான விபரீத உணர்ச்சிகள் இல்லே.
*ஏன் எல்லாத்தையும் இந்த இனக்கண்ணுேட் திலேதான் பாக்கிருங்கள்? எங்கட ஸெக்ஷ ஜனச் சேர்ந்த ஒருத்தனுக்கு- எங்கட தொழி லைச் செய்யிற ஒருத்தனுக்கு- ஒரு பிறத்தி யான் அநியாயமாகக் கை நீட்டி விட்டானே எண்டு ஏன் பார்க்க முடியுதில்லே?" என்று ரமணன் (தமிழன்) வருத்தப்படுவது, இலங்கையிலி ருக்கிற ஒவ்வொரு நல்ல தமிழனின் கவலையுமல்லவா!
சிங்கள, தமிழ் இனத்தவர் அறுபதுக்கு நாற்பது என்கிற விகி தத்தில் வேலை செய்கிற கொழும்பில், கந்தோரின் நலன் செய் சங்கத்தின் லெட்டர் ஹெட் அடிக்கிற ஒரு சாதாரண விஷயத் தில்கூட தமிழரின் உரிமை எப்படி மறுக்கப்படுகிறது என்ப தைத் த&லப்புச் சிறுகதையான கிருஷ்ணன்தூதில் சொல் கிருர் சாந்தன். மற்ற எல்லா விஷயங்களிலும் தமிழரோடு சிநேகம் பாராட்டுகிற சிங்கள சகாக்கள், மொழிப் பிரச்சனை யென்று வருகிற போது, தங்கள் ஆதிக்கத்தை ஸ்திரப் படுத்திக் கொள்ளவே முனைகிருர்கள். இந்த ஆதிக்கத்துக்கு ஆட்படாமல் தங்கள் உரிமையை நிலைநாட்டவும், அதே சம யம் சிங்கள சகோதரர்களுக்குப் பாதகமில்லாமலும் பிரச்ச?ன யை சுமுகமாய்த் தீர்த்து வைக்கிற வகையில் எவ்வளவு அறிவு பூர்வமாகத் தமிழ் நண்பர்கள் செயல்படுகிருர்கள், கடைசில் தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டே விடும்

Page 46
பட்சத்தில் எவ்வளவு கண்ணியமாய்த் "தங்கள் கெளரவத்தை நிலைநிறுத்திக் கொள்கிறர்கள் என்கிற விஷயங்களை ரொம்ப யதார்த்தமாய் இலக்கியப் படுத்தியிருக்கிருர் சாந்தன்.
சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமிருக்கிற லெட்டர் ஹெட், சிக்கலைக் கிளப்பி விட்டதால் அதைத் தனி ஆங்கிலத்தில் அடித்துப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் என்ற பேச் சுக்கு விவே சொல்கிற பதில் மகத்துவமானது.
"நீங்கள் தனிய இங்லீஷிலே அடிக்க வெளிக் கிட்டா அதை எதிர்க்கிற முதல் ஆளாக நாணி ருப்பன். இப்ப பாதிப் பேருக்கு உள்ள நட் டத்தை நீங்க முழுப் பேருக்கும் கொண்டு வாறன் எண்டு நிக்கிறியள்’
என்று விவே சொல்வது எவ்வளவு பொறுப்பு மிக்க, அறிவு பூர்வமான வார்த்தைகள்! விவேக்கு இருக்கிற விவேகம் இலங்கையிருக்கிற இரண்டு இன மக்களில் சிலருக்காவது இருந்தால் எவ்வளவு நன்றயிருக்குமென்கிற ஏக்கம் தலே தூக்குகிறது. இந்தத் தொகுப்பிலிருக்கிற இரண்டாம் பிரிவுக் கதைகளில் தமிழர் சிங்களவர் விவகாரங்கள் உள்ளிடாக வருகிறபோது சாந்தன் தமிழர் தரப்பு நியாயத்தையே சிலாகிப்பதாக சில சமயம் தோன்றுவது ஒரு தோற்றமே. சாந்தன் என்ற இலக் கிய வாதியின் பாரபட்சமற்ற பார்வையைப் புரிந்து கொள்ள, அவருடைய "கடுகு" குறுங் கதைத் தொகுதியிலிருக்கிற *முழம்" என்கிற குறுங்கதையைக் கவனிக்கலாம்:
பேப்பர் படித்துக் கொண்டிருந்த பொன்னையா திடுக்கிட்டாற் போலத் திரும்பி பக்கத்திலி ருந்த நடராசாவைப் பார்த்துச் சொன்னுர்: "பஸ்ஸோட பஸ் மோதி பதினெட்டுப்பேருக்கு மரண காயமாம். நாலுபேர் உடனேயே செத்துப் போஞங்களாம். பேரெல்லாம் பேப்பரிலே போட்டிருக்கு.”

நடராசா நிமிர்ந்து பார்த்துக்கேட்டார்: “அதிலே தமிழர் எத்தனை பேர்? சிங்களவர் எத்தனை Gu Jዙ?””
பிடறியில் தட்டுகிற மாதிரி இந்தக் குறுங்கதை ஒரு தமிழ்ப் பெரியவரின் பிற்போக்குப் புத்தியைப் படம் பிடிக்கிறது. மனிதர்களின் வக்கிரங்களே தைரியமாய் வெளிச்சப் படுத்து
கிறபோது சாந்தரைக்கு இன, வர்க்கப் பாகுபாடுகள் இல்லை. கல்லின் மேல் வைக்கிற கண்ணுடிப்பாத்திரம் போல மிக
நுணுக்கமாகப் கையாளப்பட வேண்டிய இந்த இனப் பிரச் ச?ன குறித்த சாந்தனின் பார்வை ரொம்ப ஆரோக்யமானது.
“இங்கே துப்பாதே’ என்ற அறிவிப்பில் கூட தமிழ் இருட்
டடிப்புச் செய்யப் படுவதைக் கண்டு பொருமுகிற சாந்தன்
தான், ஒரு சிங்கள யுவதிக்கும் தமிழ் இளைஞனுக்குமிடை
யில் மலர்ந்து, இனத்துவேஷத்தின் அரக்கக் கால்களின்
கீழ் அரைப்பட்டுப் போகிற காதலை ஒட்டு மா’ என்ற
நாவலில் சித்தரித்து, “இலங்கையின் இரு இனங்களும் ஒட் டுமா?” என்று ஏக்கக் கேள்வி எழுப்புபவர். இந்தத் தொகுதி யில் இடம் பெற்றிருக்கிற 'மனிதர்கள் மனங்கள் மானங்
களில் சித்தரிக்கப் பட்டிருக்கிற சிங்களத் தமிழ்க் காதலும் ஒரு அற்புதமான விஷயமே.
கிருஷ்ணன் தூது தொகுதியிலிருக்கிற இந்தக் கதைகளில் சாந்தன் ஒரு நல்ல மனிதராக வெளிப்படுகிற அதே நேரத் தில், இதிலிருக்கிற இனப் பிரச்சனை கதைகளில் சாந்தன் ஒரு நல்ல தமிழனுகவும் வெளிப்படுகிறர். மொத்தத்தில் இந்தப் பதினுெரு கதைகளுமே சாந்தனை ஒரு நல்ல இலக் கியக்காரராக அடையாளம் காட்டுகின்றன. எழுதுகிறவன், நல்ல இலக்கியவாதியாக வெளிப்படுவதற்கு அவன் நல்ல மனிதனுக இருப்பதுவே அஸ்திவாரமில்லையா!
சாந்தனின் படைப்புகளிலிருக்கிற ஒரு விசேஷம், அவருடைய ஒவ்வொரு நாயகனுகவும் அவரே வாழ்ந்திருப்பது. அதனு லேயே சாந்தனின் எழுத்துக்கள் நிஜமானவையாய் நிமிர்ந்து நிற்கின்றன. மேலெல்லாம் சாயம்பூசி வேஷங்கட்டிக் கொள் ளாமலும், அநாவசிய ஜிகினு வேலைப்பாடுகள் இல்லாமலும்,

Page 47
நிஜத்தையே தளமாய்க் கொண்டு இலக்கியம் J63) til 5, சாந்தனின் கலை.
*உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந் தால், கை பிறகு தானுகவே நேரான எழுத்து ள்முதும்" என்று பாரதி சொல்லுவான். சாந்தனின் எழுத்து நேரான தாயிருக்கிறதென்றல் - அது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்ட விஷயம்.
16- 6 - 1982 - ஏ. ஏ. ஹெச். கே. கோரி திருநெல்வேலி
ΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟΟ Ο
பக்கம் 13
BURGHER : ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட
சிங்கள - டச்சுக் கலப்பினம்.
பக்கம் 64
எல்லாளன் : அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டி (ருந்து இலங்கையை நீண்டகாலம் சிறப்புற ஆட்சி செய்த ஒரு தமிழரசன். வயோதிப காலத்தில் துட்ட கைமுனு என்ற சிங்கள வீரனுல் போரில் கொல்லப்பட்டவன். தமி ழர்களின் மேலாதிக்கத்துக்கு எல்லாளன் ஒரு குறியீடாகவும், அதைத் தோற்கடித்த சிங்கள இன எழுச்சிக்கு துட்டகைமுனு ஒரு குறியீடாகவும் கொள்ளப்படும் போக்கு பரவலாக உள்ளது.


Page 48
H. 1947ல் பிறந்த ஐயாத்துரை சாந்தன் 1965லிருந்து எழு தத் தொடங்கினூர். இதுவரை நான்கு கீதைத் தொகுதிகளும் (பார்வை, கடுகு, ஒரே ஒரு ஊரிலே, முளேகள்) ஒரு நாவலும் (ஒட்டுமா) வெளி யாகியுள்ளன. 1975 - Gy இலங்கை சாகித்ய மண்டலப் பரிசு பெற்றர் வரை வல்லுரு ராக (Draபghts man) பணிபுரி கிருர்: சிங்களம், ஆங்கிலம், ஓரளவுக்கு ருஷ்யன்-மொழி களிற் பரிச்சயமுண்டு,
 
 
 
 

* என் சொந்த அநுபவங் கtளாக ஸ்பித்தவை, அல்லது நான் முன் சாட்சியாக நிற்க நேர்ந்தவை - இவை பற்றி மீட்டுத்தான் இதுவரை என் குனூல் எழுத முடிந்திருக்கிறது.
" வாழ்க்கைதான் எனக்கு
முதலாவது, இலக்கியம் இரண் டாம் பட்சமே, வாழ்க்கை என் கிற Proces8ல், இலக்கியம் எப் FUTgjia By - product pyetj, தான் சாத்தியம். அதை Main product ஆகச் செய்வது முடி யாது என நம்புகிறேன்.