கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிலவும் நினைவும்

Page 1
卓
--------------------------**** ************
ஆசிரியரைப்பற்றி.
கலேச்செல்வி " யின் கெள வ ஆசிரிய | IT sist af J. af fi) a (சி. சரவணபவன்) ஒரு
யாழ். திருநெல்வேலி செங்குந்த இந் து க் கல்லூரியில் ஆசிரிய ராகப் LLT ற் கின்ருர் .
28-2-1983ல் பிறந்த இ வ ர் , மானவராக
இரு க் கும் போதே இலக்கியத் துறையில்
இற ங்கி விட்டார்: ரென்ாே கிறிஸ்தவக் கல்லூரிச் ଶ u। ໃນ 星占 击 மன்றத்தார் வெளியிட்ட "இளந்தமிழன்' இதழின் ஆசிரியராகவும் கடமை புரிந்தார். திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச் சங்கத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ருர், இலங்கையில் " உதயம்' பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு ஈட்டினுர், *அகில இனத் தன் ஆதர்ச எழுத்தாளராக மதிக்கும் இவர், தமக்கே உரித்தான ஒரு தனிப்பானரியில் சிறுகதைகளேச் சிருட்டித்துக் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுவதில் வல்லவர் சிறு கதைகளில் இவர் கையாளுவது கணிரென்ற கம்பீரமான தடை அதில் குத்தல் இருக்காது; குழைவும் தெளிவும் நெளியும். 'டுரைகளில் ஆணித்தரமான கருத் து களே ப் புகுத்தி ஆவேசமாக எழுதுவார்.
புதிய எழுத்தாளர்களேச் சிருட் டிப்பதிலும் இவர் முகாந்துள்ளார். 'கலேச் செல்வி' மூலம் வடக்கி தள்ள பல கல்லூரிகளில், மாணவர்கள் தம்மை எழுத்துவ தில் வளர்த்துவிடும் "அண்று இாத இவரை மதிக்கிமுர்கள். -சுதந்திரன் ---------------------- ********
acti Printed at Flag for E. Preis, Ffidiri i 7
轟
 

-
貂
3. 3.
3.
3. 3.

Page 2

நிலவும் நினைவும்
ஆசிரியர் : ઈ fi) કી
s
விற்பஜன உரிமை : பாரி நிலையம்
59, பிராட்வே, சென்ஜின. 1.

Page 3
முதற் பதிப்பு: மே, 1964.
வெளியீடு :
திரு. கோ. சுந்தரமூர்த்தி, 50, வடக்குத் தேர் வீதி, சிதம்பரம்.
விலை ரூ. 2-00
ராஜன் எலக்டிரிக் பிரஸ், 7, சுங்குராம செட்டித் தெரு, சென்னை-1.

உள்ளே.
சிந்தனையும் செய்ந்நன்றியும் திரு. அகிலன் - கருத்துரை பிறந்தமண் கோவில் பூனை நிலவும் நினைவும் திருட்டுப் பணம் நீலப்பட்டு வெறி முறிந்தது காதல் பலி
உயிரோவியம்
நிறைவு
Luds i
104 120

Page 4
பக்கம் பாரா வரி
18
42
48 90
g g
91.
\\
s
105 127
fBread
படிக்கு முன்.
3
16
6
2 5 4
12 2
8
பிழை திருத்தம்
சிறுது சிறிது இப்பாது இப்போது பானும் பாணும்t தெரியாது தெரியும் அவள் அவன் திருணமாக திரணமாக
மார்ஷல் விசுவமான விசாலமான
காண வந்தவர்க்ளை மாணவர்களே

சிந்தனையும் செய்ந்நன்றியும்
என்னுடைய முதலாவது சிறுகதைத்தொகுதி * நிலவும் நினைவும்.?
இன்றைய வாசகர்கள், சிறுகதைகளையே பெரும்பாலும் விரும்பிப்படிக்கின்ருர்கள். பெருங் காவியங்களையும் நீண்ட நாவல்களையும் கடினமான கட்டுரைகளையும் படிப்பதற்கு, இந்த அவசர யுகத்தில், போதிய ஒய்வு கிடைப்பதில்லை. வாசகர்களின் தேவையை உணர்ந்த மாத, வார இதழ்கள், சிறு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தன் கருத்தையும், கொள்கையையும் அதிகப்படியான வாச கர்கள் அறியவேண்டும் அவற்றைப் பற்றி அவர்கள் சிந் தித்துப் பார்க்கவேண்டும்; என விரும்பும் எழுந்தாளன், சிறுகதையின் துணையையே நாடுகின்றன். எழுத்தாளர் களுட் பலர், சிறுகதையாசிரியர்களாக இருப்பதன் காரணம் இதுதான். கதையை வெறும் பிரசாரக் கருவியாக்காது, கலையம்சம் நிறைந்த இலக்கியப் படைப்பாக ஆக்குபவர் கள், வாசகர்களின் நெஞ்சில் நீடித்து வாழ்கின்றர்கள்.
சிறுகதை அனுபவத்தை ஒரு சத்திர சிகிச்சையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிகிச்சை நடைபெறும்போது, மனிதன் மயக்கத்தில் இருக்கின்றன். அவனுக்குப் புற உலக நினைவு இருப்பதில்லை. சிகிச்சை முடிந்ததும், சிறிது சிறிதாக மயக்கம் நீங்கி, உணர்ச்சி ஏற்படுகின்றது; கொதி வலி உண்டாகின்றது. அந்த வலியினுல் மனிதன் அவஸ் தைப்படுகின்றன்; இந்த அவஸ்தையின் பின் நோய் மாறு கின்றது.
ஒரு சிறுகதைக்கென எடுத்துக்கொண்ட சம்பவக் கோவையால், அதைச் சொல்லும் முறையினுல், இனிய

Page 5
ii
நடையினல், வாசகஇன முதலில் மயக்கவேண்டும். படித் துக்கொண்டிருக்கும்போது, "இப்படி நடக்குமா? இது உண் மையா? என்பன போன்ற சந்தேகங்கள், வாசகனின் உள்ளத்தில் எழாதவாறு, கலை மெருகுடன் திறமையான முறையிற் கதை சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாசகன், ஒரு சிறந்த சிறுகதையைப் படித்துமுடிக்கும்வரை, அந்தக் கதையை எழுதிய எழுத்தாளனின் கைப்பொம்மை யாகவே இருக்கின்றன். படித்து முடிந்தபின், மயக்கம் நீங்கி வாசகன் வருகின்றன் இவ்வுலகிற்கு. இப்போதுதான் அவனுடைய சிந்தனை வேலை செய்கின்றது; மனதிலே போராட்டம் ஏற்படுகின்றது. நோயாளி அவஸ்தைப்படும் கட்டம் இது. சிகிச்சை சரியானதாக அமைந்தால் நோயாளியின் நோய் மாறுகின்றதல்லவா? அதைப்போல், சிறுகதை சிறந்ததாக இருந்தால் வாசகனிடம் தன்மாற்றங் கள் ஏற்படும்.
சிறுகதைகளைப் படிக்கும் பழக்கும் அல்லது பைத்தியம் எனக்குச் சிறுவயதிலேயே ஏற்பட்டுவிட்டது. “கலைமகள்? இதழில் வெளியாகும் கதைகள் அனைத்தையும் ஒன்று விடாமற் படிப்பேன். இலக்கியத்தைப் பற்றியோ, எழுத் தாளர்களைப்பற்றியோ எதுவித அக்கறையும் எடுக்காது, கையிற் கிடைக்கும் கதைகளைப் படிப்பேன். சில கதைகள் என்ஆன மயக்கி, வேறேர் உலகிற்கு இழுத்துச் சென்றுவிடும். நானும் என்னை மறந்து, அந்த உலகத்திலேயே சஞ்சரிப் பேன். இதே காலத்திற்தான் *அகிலன்" கலைமகளில் எழுதத் தொடங்கினர். அவருடைய பரிசு நாவலான *பெண், பின் எழுதிய "அவளுக்கு", "வழி பிறந்தது? என்ற சிறுகதைகள், புத்தக உருவில் வெளியான *சிநே. கிதி, முதலியவை என்னை ஆட்கொண்டுவிட்டன என்றே சொல்லலாம். அன்பும் பண்பும் தியாகமும் நிறைந்த இன்ப மயமான ஓர் இலட்சிய உலகை அவர் தன் கதையில் உரு வாக்கினூர்.

iii
இந்த அம்சங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவ ருடைய அன்புப் பிரச்சாரம் என் உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. இத்தகைய கதைகளை எழுதவேண்டும் என்ற ஆசை என் நெஞ்சிற் துளிர்விட்டது. இந்த ஆசையின் உந்தலால், நான் எழுதிய கதைகளுள் இதுவரை 32 சிறு கதைகள் அச்சில் வந்துவிட்டன. அவற்றுள் ஒன்பது கதைகள் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன.
கோவில் பூனை, பிறந்த மண், திருட்டுப் பணம், நிலவும் கினைவும், வெறி முறிந்தது ஆகியவை “சுதந்திரன்" வார இதழிலும், கீலப்பட்டு என்ற கதை மத்திய தீபம் என்ற மாணவர் சஞ்சிகையிலும், நிறைவு என்பது தினகரன் ஞாயிறு இதழிலும், காதல்பலி என்ற கதை கல்கி வார இதழி லும், உயிரோவியம் என்பது வீரகேசரி வாரப் பதிப்பிலும் வெளிவந்தன. என் கதைகளைத் தம் பத்திரிகைகளில் வெளியிட்டு என்னை ஊக்குவித்தமைக்காகவும், இப்போது தொகுதியிற் சேர்ப்பதற்கு அனுமதியளித்தமைக்காகவும் இப்பத்திரிகை ஆசியர்கட்கு என் நன்றியைத் தெரிவிக்கின் றேன். -
ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் நான் மாணவளுக இருந்தபோது எனக்குத் தமிழார்வத்தை ஊட்டியவர் வித்துவான் சி. ஆறுமுகம் அவர்கள். என்னுள்ளே ஓர் எழுத் தாள&னத் தோற்றுவித்தவர் அகிலன் அவர்கள். என் கதைகளை அடிக்கடி பிரசுரித்து என்னை எழுத்தாளனுக அறி முகஞ் செய்தவர் முன்னே நாள் "சுதந்திரன்99 ஆசிரியரும் இப்போதைய "வீரகேசரி ஆசிரியருமான எஸ். டி. சிவ தாயகம் அவர்கள். என் ஆரம்ப காலக் கதைகளுள் ஒன் றன "மறுமணம்? என்ற கதைக்கு முதற்பரிசு அளித்துக் கெளரவித்தவர், 'உதயம்99 பத்திரிகையை நடாத்திய இணுவை மூர்த்தி அவர்கள். 'என் கதைகளைப்பற்றி நேரி லும் கடித மூலமும் கூறி என்னை ஊக்கிவருபவர்கள் என் இனிய நண்பர்களான உதயணன், தமிழ்ச்செல்வன் ஆசி

Page 6
iv
யோர், இவர்கள் அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி யுடன் நினைவு கூருகின்றேன்.
இத் தொகுதி உருவாவதற்குப் பலர் பெருந்துணை புரிந்துள்ளார்கள். இலங்கைப் பல்கலைக் கழக விரிவுரை யாளரும் சிறுகதை எழுத்தாளருமான திரு. பானுஸிம்ஹன், சென்னை ஒய். எம். சி. ஏ. பட்டி மன்ற அமைச்சரான திரு. அன்புப் பழம் நீ ஆகியோரைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இவர்கட்கும், முன்பு நான் தொகுத்த ‘ஈழத்துச் சிறுகதை கள்??-முதலாவது தொகுதியை வெளியிட்டு ஆக்கம் அளித்த அன்பருக்கும் என் அன்புகனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். இன்னும், இந்நூலின் அச்சு வேலையைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துதவிய தமிழ் எழுத்தாளர் சங்கத் துணை அமைச்சர் திரு. கே. பக்தவத்சலம் அவர் களுக்கும், நண்பர் திரு. சோ. பரமசாமி (நம்பி) அவர் களுக்கும் என் உள்ளங்கலந்த நன்றி உரியதாகுக. பின்னும், இதனை அழகுற அச்சிட்ட இராஜன் எலக்டிரிக் அச்சகத்தார்க்கும் என தன்பான பாராட்டு என்று முண்டு.
ஓயாது எழுத்துப்பணி புரிபவர் திரு. அகிலன் அவர் கள். என் கதைகளை அனுப்பியதும், தன் மற்றய வேலைகளை ஒதுக்கி விட்டு, அவற்றைப் படித்துத் தன் கருத்துக்களைச் சிறப்பான முறையில் எழுதியுள்ளார். அவருக்கு என் நெஞ்சு நிறைந்த நன்றி உரியது
என் கதைகள், ஒரு சிறு அசைவையாவது, படிப் போரின் உள்ளத்தில் ஏற்படுத்தினுல், என் உள்ளம் திருப்தி யடையும். இக்கதைகளைப் படித்து, அவை பற்றிய தமது கருத்தைத் தெரிவிக்கும் வாசகர்கட்கும் முன் கூட்டியே என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
தமிழ்த்தாயின் திருவடிகளிற் சூட்டும் இக் கதாமாலை யைக் காலமும் வாசகர்களும் கவனித்துக் கொள்ளட்டும். 6 * 58buodjo Góyf6b6@ ** -சிற்பி.
Gyrosol-, :: (இலங்கை) 28-2-"64

நூற்றுக்கணக்கான சிறு கதைகளுக்கு ஆசிரியரும், பல நாவல்களே எழுதி
வாசகர்கள் மத்தியில் உலவ விடுபவருமான
திரு. அகிலன் அவர்களின் கருத்துரை
சிறு கதைகளின் இலட்சியம் இலக்கணம் இவைபற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி விரிவுரை கூறுகிறவர் கள் இருக்கிறர்கள். ஆணுல் கதை எழுதத் தொடங்கும் பலர், இவற்றைக் கற்றுக்கொண்டு எழுதத் தொடங்குவ தில்லை. கற்பனை உள்ளத்தின் உந்துதலால் தங்கள் எண் ணத்துக்கு எழுத்துருவம் கொடுக்கிறர்கள். அவர்களு டைய கற்பனைக்கும் திறமைக்கும் தக்கவாறு, உருவம் தானே அமைந்து விடுகிறது.
அளவில் சிறியதாகவும், கதை அம்சம் உள்ளதாகவும் இருந்து விட்டால் போதும். அதுவே சிறு கதை. ‘கதை அம்சம் என்ருல் என்ன?99 என்று கேள்வி பிறக்கலாம். படிப்பவர்களுக்குச் சுவை தரக் கூடிய ஒரு மையக் கருத் துள்ள வாழ்க்கைத் துணுக்கு ; கற்பனைக் கலவையுள்ள வாழ்க்கைச் சித்திரம்.
ஆசிரியர் வெளியிட விரும்பித் தமது கதைக்குள் மூடி மறைத்து வைக்கும் ஒரு அடித் தளக் கருத்தே கதைக் கருத்தாகும். அதை ஒரு சில கதாபாத்திரங்களே, ஒரு சில நிகழ்ச்சிகளின் மூலம் மோதவிட்டு அவர் சொல்லாமல் சொல்லுவார். அன்றியும் ஒரு தனிப்பட்ட குணசித்திரத் தைச் சுட்டிக் காட்டுவதற்குக் கூட ஒரு கதையை எழுது வார். படிப்பவர்களின் சுவையிலும் பலவகை உண்டு ; சிறுகதைகளிலும் பலவகை உண்டு.
*நிலவும் நினைவும்” என்ற இந்தத் தொகுப்பில், ஒன்பது சிறு கதைகள் இருக்கின்றன. பிறந்த மண்ணிடம் உள்ள காதலுக்கும் பிணைந்த உள்ளத்திடம் கொண்ட காதலுக் கும் இடையில் கிடந்து போராடும் சிவலிங்கம், மாலதியின் காதலப் புரிந்து கொள்ளாமல், பிறகு ‘நிலவும் நிஜனவுமாக அவளுக்காக ஏங்கும் சங்கரன், ‘காதல்பலிக்காக ஞானு னந்தரான மாதவன் முதலியவர்களுடைய கதைகள், காதல் கதைகள்.
*உள்ளத்தால் கள்ளமில்லாதவன் உதைத் தொடுக்கப் படுவதையும், உருத்திராட்சப் பூனே யொன்று உல்லாச

Page 7
νi
பவனி வருவதையும்? சித்திரிக்கும் கோவில் பூனை? நம் நாட்டின் சாபக்கேடான சாதிக்கொடுமையின் படப்பிடிப் பாகும். வயிற்றுக் கொடுமையால் பணப்பைத் திருடனுக மாறிய வேலு, பிறகு அதே தொழிலில் கைதேர்ந்தவணுகி விடுகிறன். தன்னுடைய மனைவியின் உயிரையே காப்பாற்றி யிருக்கக்கூடிய ஐம்பது ரூபாயைத் திருடியபோதுதான், அவனுக்கு அந்தத் தொழிலின் தீமை தெரிகிறது-இதுவே *திருட்டுப் பணம்?.
இன்னும், தன் தந்தையின் குடிவெறியை மறக்கச் செய்த சிறுவன் பாலுவை வெறி முறிந்தது? என்ற கதை யிலும், காதலின் தோல்வியை உயிரோவியமாகசச் செய்து தன் உயிர்க்காதலியை விட ஓவியக் காதலியையே நேசிக் கும் கலைஞன் மனுேகர&னயும், தம்முடைய எளிய கல்விப் பணிக்குரிய பரிசாக மாணவர்களுடைய பாசத்தை மட்டும் பெற்று மன நிறைவு பெறும் குணச்சித்திரப் படைப்பான கைலாச நாதரை நாம் நிறைவு? என்ற கதையிலும் கண்டு உறவாடி மகிழ்கிருேம்.
ஆசிரியர் சிற்பி அவர்களுடைய முதல் சிறு கதைத் தொகுப்பு இது என்று தெரிகிறது. ஐந்து ஆறு ஆண்டுக ளாக எழுதிய கதைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. கதைகளினூடே ஈழ நாட்டில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சிகள் சிலவற்றையும் ஆங்காங்கே தொட்டுக் கொண்டு செல்வதால் அவற்றையும் நாம் நினைவில் வைத் துக்கொள்ள முடிகிறது. ஈழ நாட்டுப் பெருவெள்ளம், இரண்டாம் உலகப் போர்க்காலம், வகுப்புக் கலவரம் இவை இடையிடையே தென்படுகின்றன.
இனிய எளிய நடையில் கதை சொல்லும் கைவண் ணம் இவரிடம் இருக்கிறது. கற்பனை மனத்தையும் பாத் திர உருவகத்தையும் நிகழ்ச்சிக் கோவையையும் இவர் கதைகளிற் சுவைத்து சுவைத்து இன்புற முடிகிறது. ஆசி ரியர் சிற்பி ஆர்வமுள்ள இளைஞர். வாசகர்களின் ஆதர வால் மேலும் ஊக்கமும் உற்சாகமும் பெற்று, திரு. சிற்பி அவர்கள் திறனும் பயனும் பெருகி வாழ என் வாழ்த்துக்கள்.
சென்னை-14, அன்பன், 12--5--64 அகிலன்.

பிறந்த மண்
*உங்களைப் போன்ற பைத்தியக்காரரை நான் இதுவரை கண்டதில்லை.??
6* அடி பைத்தியமே நானும் அப்படித்தான். பைத்தியக்காரிகளையே நான் பார்க்கவில்லேஉன்னைத் தவிர.?
66 சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ஜளயுடன் வி8ளயாட எனக்கு நேரமில்லை. . . .? பொய்க் கோபத்துடன் அவ்விடத்தை விட்டுச் செல்ல முயன்ருள் சோமாவதி. தாவி நீட்டிய சிவலிங்கத் தின் கரங்களுள் சோமாவின் பின்னல் இரண்டும் சிக்கின. மெல்லிய பூங்கொடியைப் பற்றுவதைப் போன்று, அவளின் பின்னல்களைத் தன் கைவிரல் களிற்கிடையில் சுற்றிக் கொண்டு, இந்த முழுப் பைத்தியத்தைக் காதலிக்கின்றயே, இதை விடப் பைத்தியக்காரச் செயல் ஏதாவது உண்டா?* என்று அழகு காட்டினன். அவனுடைய ஒரு கை அவளுடைய மதி முகத்தை வருடியது.

Page 8
2
சிவலிங்கத்தின் கர ஸ்பரிசம் அவ8ள ஊமை யாக்கியது. பேச்சற்று மூச்சற்றுப் பொற்சிலையாய் நின்ருள். இரண்டு சோடிக் கண்கள் ஒன்றை யொன்று கெளவின; கலந்தன; கதைகள் பல பேசின மெளன பாஷையில் !
யாரோ வரும் அரவம் கேட்டது. சிஜல உயிர் பெற்றது.
*உங்கள் தொழுகையை முடித்து விட்டு வாருங்கள். சாப்பிடுவதற்கு நேரமாகி விட்டது,” என்று சொல்லி சிட்டாய்ப் பறந்தாள் சோமா.
சிந்தைக் கினியவள் சிந்திய வார்த்தைகள் சிவலிங்கத்திற்குப் புதிய வேகத்தைக் கொடுத்தன. இன்ப உணர்ச்சிகளுடன் அடுத்த அறைக்குச் சென்ருன், அன்றைய பிரார்த்தனையை முடிப் பதற்காக,
来源 米 米
இந்த மண்ணில் பிறந்த பெருமை சிவலிங்கத் திற்கு மட்டும் உண்டு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த சிசு முதன் முதலாக மண்ணைத்தான் முத்தமிட்டது. பிரசவ வேதனையுடன் கிடந்து தவித்த அவனுடைய தாய்க்கு, பஞ்சணை மெத்தை, ஏன், கிழிந்த பாய் கூடக் கிடைக்கவில்லை!
தந்தையை அவனுக்குத் தெரியாது. குழந் தையை எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்ற ஆவலுடனிருந்த கந்தப்பன் அந்த ஆவல் நிறை வேருமலே இறந்து விட்டான், இரண்டு மாதங் களுக்கு முன்பு. சிவலிங்கம் பிறந்து ஓராண்டு

3
முடிவதற்குள் பெற்ற தாயைப் பூமித்தாய் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொண்டாள். V,
அணுதை ஆச்சிரமத்தில் வளர்ந்தான் அவன். பதினெட்டு ஆண்டுகள் அங்கேயே கழிந்தன. எஸ். எஸ். சி. சித்தியடைந்தவுடன் ஆச்சிரமத்தி லிருந்து வெளியேறி வேலை தேடும் படலத்தில் இறங்கினுன், அரசாங்கம் அவனை அன்புடன் வரவேற்றுப் பொலநறுவைக்கு அனுப்பியது, குமாஸ்தாவாக.
பொலநறுவையில் அவனுக்குத் தெரிந்தவர்கள் எவருமேயில்லை. சென்ற புதிதில், அலுவல கத்தில் வேலை செய்த ஒருவரின் வீட்டில் தங்கியிருந் தான். ஆணுல் அவருடைய தயவில் நீண்ட நாட் கள் இருப்பதற்குப் பிடிக்கவில்லை. 'ஊர் பிடிபட்ட பின்° தனியாக எங்காவது அறை கிடைக்குமா என்று விசாரிக்கத் தொடங்கினுன். அப்போது எதிர்ப்பட்டவள்தான் சோமாவதி.
கல்லூரி மாணவி அவள். கிழத் தந்தையும் அவளுமே யடங்கிய அந்தச் சிறு குடும்பம் ஒரு பெரிய பங்களாவில் வசித்து வந்தது. அறை விசாரிப்பதற்காகச் சென்ற சிவலிங்கத்தைக் கிழவனும் மகளும் அன்புடன் வரவேற்றனர்.
பங்களா முழுவதையும், சுற்றிப் பார்த்தான் சிவலிங்கம். நல்ல காற்றேட்டமுள்ள அறைகள். எல்லாப் பகுதிகளும் கூட்டிச் சுத்தமாக வைக்கப் பட்டிருந்தன. பங்களாவைச் சுற்றிலும் ஒரு

Page 9
4 ,
தோட்டம், தோட்டத்தின் மத்தியில் ஒரு கிணறு. அவன் மனதைக் கவர்ந்துவிட்டது, அந்த இடம்.
6 பெரியவரே வாடகை எவ்வளவானலும் பரவாயில்லை. எனக்கு இந்த இடம் பிடித்து விட்டது." என்ருன் கிழவனிடம். சிவலிங்கத்தின் தோற்றமும், அவன் பேசிய தோரணையும் கிழவரை மயக்கி விட்டன.
தம்பி! எனக்கு வாடகை பெரிதல்ல. உங் கஜளப் போன்ற கண்ணியமானவர்களென்றல் இந்தப் பங்களா முழுவதையுமே கொடுத்து விடு வோம். உங்கள் சொந்த வீடாகவே இதைக் கருதிக் கொள்ளலாம் * அரைகுறை ஆங்கிலத்தில் அடிக்கடி நிறுத்தி நிறுத்திப் பேசினுன் கிழவன். கிழவன் வார்த்தைகளுக்காகத் தவித்த போது, அவன் பேசியதைப் புரிய முடியாமல் சிவலிங்கம் தவித்த போது, வலிய வந்து தெளிய வைத்தது அந்த வண்ணக்கிளி. ஆச்சரியம் அவனை ஊமை யாக்க அவளையே பார்த்தபடி நின்றன் சிவலிங்கம். செந்தமிழில் தேனேக் கலந்து இனிமை சொட்டப் பேச அந்தச் சிங்களப் பெண்ணுல் எப்படி முடிந்தது?
விழுங்கி விடும் பார்வையுடன் நின்ற சிவலிங் கத்தைக் கண்டு, கால் விரல்களால் நிலத்தைச் சுரண்டியபடி தலையைக் குனிந்து கொண்டாள் சோமாவதி.
"நாங்கள் எப்போதுமே தமிழர்களுக்குத்தான் அறைகளை வாடகைக்குக் கொடுப்பது வழக்கம்.

5
அவர்கள்தான் எதுவித தகராறுமில்லாமல் வாடகைப் பணத்தை ஒழுங்காகக் கொடுப்பவர்கள். அவர்களுடன் பழகி, சோமா தமிழை நன்ருகப் பேசப் பழகி இருக்கிருள் ?? - சிவலிங்கத்தின் திகைப்பைக் கண்ட கிழவன் கூறிய விளக்கம், அவனுக்குத் தேனுகத் தித்தித்தது.
அன்று பின்னேரமே சிவலிங்கம் அங்கு குடி போய் விட்டான். அருகேயிருந்த ஒரு மலையாளம் கடையில் உணவு ஏற்பாடுகளைச் செய்தான். அலு வலகத்திற்குச் செல்லாத வேளைகளில், பங்களாவை யடுத்த தோட்டத்தில்தான் அவனைக் காணலாம்.
அவன் ஒரு கவிதைப் பித்து. தமிழில் வெளி யான கவிதைத் தொகுதிகள் அனைத்தும் அவனிடம் இருந்தன. அவன் எழுதிய ஓரிரு கவிதை களும் பத்திரிகையில் வெளி வந்துள்ளன. தோட் டத்திலுள்ள செடி கொடிகளின் பசுந் தோற்றமும், அங்கே வீசும் இளந் தென்றலும் அவனுடைய கவிதை உள்ளத்திற்குச் சிறந்த விருந்தாயமையும் புதிய கவிதைகளை அவன் உருவாக்கிக் கொண்டே இருந்தான்.
கவிதைகளை இயற்ற முடிந்ததே தவிர, அவற்றை இசையுடன் பாட அவனுல் முடியவில்லை. சாரீர வசதி போதாது. தோட்டத்திற்குச் சென்ருல் மட்டும் வாய்விட்டுப் படுவான். தனிமையான அந்த இடத்தில் காதுகளைப் பொத்திக் கொள் வதற்கு யாரிருக்கின்றர்கள் ?
§ + §

Page 10
6.
அன்று சிவலிங்கத்திற்கு ஒரே மகிழ்ச்சி. வெண்பாப் போட்டி ஒன்றில் பங்கு பற்றும்படி பத்திரிகை ஆசிரியர் ஒருவர் எழுதியிருந்தார். வெண்பாவின் கடைசி அடி கொடுக்கப் பட்டிருந் தது. அதற்கேற்றற்போல், முதல் மூன்று அடி களையும் எழுதவேண்டும். நீண்ட நேரம் சிந்தித்து, வெண்பாவில் இடம் பெற வேண்டிய கருத்துக்களை ஒழுங்கு செய்து விட்டான். இனி, அவற்றிற்குக் கவிதை உருவம் கொடுக்கவேண்டும். அலுவலகத் திலிருந்தபோது பல தடவை எழுதி, எழுதிக் கிழித்து விட்டான். ஒன்றுமே அவனுக்குப் பிடிக்க வில்லை. பிரசவத்தை எதிர் நோக்கும் தாய்மார் களுக்கு ஏற்படும் இன்ப வேதனையுடன் வீட் டிற்கு வந்து, உடைகளை மாற்றிய பின் தோட்டத் திற்குச் சென்றன்.
வழக்கமாக உட்காரும் செவ்வந்திச் செடிக் கருகே துண்டை விரித்துப் படுத்தான். அவன் உடம்பு மாத்திரம் அங்கே கிடந்தது. எண்ணம் எங்கெல்லாமோ பறந்து திரிந்து விளையாடியது. நேரம் ஏறிக் கொண்டே போனது. வட்ட நிலா வான முகட்டை நோக்கி ஏறத் தொடங்கியது. பால் நிலவில் வெள்ளித் துண்டுகளைப் போலிருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணம் அவனுக்குப் போதை யூட்டியது. செவ்வந்திகள் பொன்னுெளி யில் மின்னின. இரவரசி? மலர்களும் மொட்டுக் களுமாகக் குலுங்கினுள். இவைகளை ஆட்டி அசைத்து மெல்லென வருடிக் கொண்டு இன் னிசை எழுப்பியது தென்றல். அந்த இசையைத்

7
தொடர்ந்து அவனுடைய மனம் செல்ல, அவன் வாய்விட்டுப் பாடினுன். கவிதை பிறந்துவிட்டது
துள்ளியெழுந்தான் அவன், இரண்டு மூன்று தடவை அந்தப் பாடலைப் பாடிப் பார்த்தான். அத் தகைய சிறந்த கவிதையை அவன் இதுவரை இயற்றவில்லை. கிணற்றில் கைகால்களைக் கழுவி விட்டு அறைக்குள் சென்று மீண்டும் பாடினுன். அவனுடைய ஒட்டைக் குரலைத் தொடர்ந்து தேன ருவியாய்ப் பாய்ந்தது ஓர் இனிய கீதம். கன்னித் தமிழ்க்கவிதையினைக் கற்கண்டுக்குரலில் பாடினுள் பெண்ணுெருத்தி.
தேவர்க்கரசு நில்
வேண்டியதில்லை-அவர் தின்னும் சுவை யமுது
வேண்டியதில்லை. சாவிற் தமிழ் படித்துச்
சாக வேண்டும்-என்றன் சாம்பல் தமிழ் மணத்து வேக வேண்டும்.9
சிவலிங்கத்திற்கு மிகவும் பிடித்தமான அந்தப் பாட்டை ஈழ நாட்டுக் கவிஞரொருவர் இயற்றி யிருந்தார்! அவனைப் பித்தணுக்கியது அந்தக் கவிதைதான். தமிழுணர்ச்சி ததும்பும் அந்தப் பாட்டைத் தமிழ் மணமேயில்லாத இந்த இடத்தில் யார் பாடுவார்கள்? ஆவலால் உந்தப்பட்டு, குரல் வந்த திசையில் கண்ணுேட்டம் விட்டான். கனவா அது? அந்தப் பாடலை, அடுத்த அறையி லிருந்து பாடியவள் சோமாவதி

Page 11
திடுமென அங்கே சென்ருன் சிவலிங்கம். பாட்டு டேப்' பென்று நின்றது. அவள் எழுந்தாள்.
* மன்னித்துவிடு சோமா உத்தரவின்றி உள்ளே நுழைந்ததற்காக" என்ருன் அவன்" அவனுடைய வெப்ப மூச்சு அவள் பட்டுக் கன்னங் களிற் பட்டு அவற்றைச் சிகப்பாக்கியது.உணர்ச்சிப் பிழம்பாக நின்ற சிவலிங்கத்தைக் கண்ட அவள் சற்றே பின் நகர்ந்தாள். தன்னை ஒருவித மாகச் சமாளித்துக் கொண்டு, “ வேறு ஏதாவது தமிழ்ப் பாடல்கள் தெரியுமா?’ என்றன்.
அவள் பதில் சொல்லவில்லை; பாடினுள் பாரதி யாரின் ‘கண்ணம்மா?, சோமசுந்தரனுரின் ‘கத்தரி வெருளி?, எல்லாவற்றையும் அழகாகப் பாடினுள். அவனுடைய இதய வீணை அவள் பாடலுக்குச் சுருதி சேர்த்தது.
*இவைகளை எங்கே கற்றுக் கொண்டாய் 3FT DIT?» »
*உங்களிட.மிருந்துதான்.? சோமாவதியின் குரல் கரகரத்தது.
*என்னிடமிருந்தா?? சிவலிங்கத்தின் கேள்வி யில் பேரன்பும் பெருமிதமும் பொங்கி யெழுந்தன.
*நீங்கள் தோட்டத்தில் பாடிக் கொண்டிருக் கும்போது நான் அவற்றை நன்கு கவனித்து மனப் பாடஞ் செய்தேன். தமிழ் மொழியில் நல்ல கவிதைகள் இருக்கின்றன என்பதை உங்களிட மிருந்துதான் தெரிந்து கொண்டேன்.*

9
அவர்கள் இப்பொழுது இவ்வுலக மனிதர்களா கவே தோன்றவில்லை. கவிதா தேவியின் சன்னி தானத்திலே ஒன்ருகப் பிணைந்திருக்கும் ரசிக சிகா மணிகளாக இருந்தார்கள். அவள் பாட அவன் கேட்க, அவள் கேட்க, அவன் பாட. கவிதை வானில் தமிழிசை முழங்கியது. மறுபடியும் அவர் கள் இந்த உலகத்திற்கு வந்தபோது. . . . . .வெட் கத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிணைந்திருந்த கைகள் பிரிந்தன!
s: 永 宋 அவள் கல்லூரிப் படிப்பு முடிந்து விட்டது. இருவர்க்கிடையே பழக்கமும் அதிகரித்தது. சோமா வதியின் வீட்டிலேயே சாப்பிடவும் தொடங்கினுன் சிவலிங்கம். அவன் மனதறிந்து, ருசியறிந்து சமைத்துப் போட்டாள் அவள். எவ்வளவுதான் அன்பில் மிதந்தாலும் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள், என்ற நம்பிக்கையினுல், கிழவனும் அவர்கள் தொடர்பில் குறுக்கிடவில்லை.
ஒரு நாள். சமையல் வேலை முடிந்தபின் சிவ லிங்கத்தின் அறையைச் சுத்தம் செய்வதற்காகச் சென்றள் சோமாவதி. புத்தகங்களைக் கண்ட கண்டபடி வாரியிறைத்து அறையை ஒரே குப்பை யாக்கி விட்டிருந்தான் சிவலிங்கம். அவற்றை ஒழுங்காக எடுத்து வைத்துக் கொண்டிருந்த பொழுது ஓர் அபூர்வ வஸ்து அவள் கண்களில் பட்டது. ஒரு சிறிய பட்டுப்பை நிறைய கொஞ்ச மண் மிக மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட் டிருந்தது. அதை எடுத்தெறிய நினைத்தவள் சிவ லிங்கத்தின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

Page 12
10
*மண் கிடைக்காதென்று இவ்வளவு கட்டுக் காவலுடன் வைத்திருக்கின்றீர்களே, பைத்தியக் காரரைப்போல்’ என்ருள் அவள்.
*அது மண்ணல்ல, சோமா! நான் வணங்கும் தெய்வம்?.
*கலீ*ரென்று நகைத்தாள் அவள், 'கல்லேயும் மண்ணையும் வணங்குபவர்கள்தானே நீங்கள்?
“அந்தக் காரணத்திற்காக நான் இதை வணங்கவில்லை. எனக்கு உயிரூட்டி, உணர் வூட்டி, உரமூட்டியது இந்த மண். இதைப் பார்க்கும்போது என் பெற்ற தாயை நினைத்துக் கொள்வேன். உயிரைக் கொடுத்தாவது நான் பிறந்த நாட்டின் உரிமையைக் காப்பாற்ற வேண் டும் என்ற உறுதியை எனக்கு ஊட்டுவது இந்தத் தமிழ் மண்தான் சோமா, இதே தமிழ் மண்தான்", *அதையறியாமல் நான் கேலி செய்துவிட் டேன், அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் சிவா!....? அவனையே பார்த்தபடி நின்ருள் அவள்.
மெளனம் பல நிமிடங்களை விழுங்கியது.
நீங்கள் தமிழர். நான் சிங்களப் பெண்.* சோமாவதியின் ஏக்கக் குரல் அந்த மெளனத்தைக் கலைத்தது.
*அதற்காகக் கவலைப்படாதே சோமா வீரத் தைப் போற்றுவதைப்போல் காதலையும் போற்றுப வர்கள் தமிழர்கள். நீ சிங்களப் பெண் என்பதற்

l
காக உன்னை எவருமே வெறுத் தொதுக்கமாட்டார் கள். என்னை நம்பு சோமா." அவளுடைய கைகளை அழுத்தியபடியே மேலும் சொன்னுன், 'ஆட்சி யில் ஒரு மாற்றத்தை நாம் விரும்புகின்ருேமே தவிர, அன்பிலே மாற்றம் ஏற்படுவதை விரும்ப வில்லை. எத்தனையோ துறைகளில் இந்த இரண்டு இனமும் பிரிந்திருந்தாலும், அன்பு என்ற சக்தி எல்லோரையும் ஒன்ருக்கும். என் நாட்டில் உனக்கு அளிக்கப்படும் வரவேற்பைக் கண்டு நீ பிரமித்து விடுவாய்?
சோமாவதியின் சந்தேகம் தீர்ந்துவிட்டது” ஆணுல் ஓய்வான வேளைகளில் அவனுடைய வாயைக் கிண்டிவிடும் வழக்கம் மட்டும் மாற வில்லை. அந்தப் பைத்தியக்காரப் பேச்சைத் தொடங்கினுல் அவனுடைய உணர்வின் உள்ளத் திலிருந்து உதிக்கும் உறுதி மொழிகளைக் காதாரக் கேட்டு நெஞ்சார மகிழலாமல்லவா?
2
சோமாவதி அன்புடன் பரிமாறிய உணவை, நாக்கில் நீர் சொட்டச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தின் காதுகளில் கிழவர் கூறிய செய்தி நாராசமாகப் பாய்ந்தது.
*வவனியாவை நோக்கிக் குண்டர் படை செல் கிறதாம். இன்னும் சில மணி நேரத்தில் பொல நறுவையிலும் கலகம் ஏற்பட்டு விடுமாம்..??
கையை உதறி விட்டு வெளியே எழுந்து சென்ருன் சிவலிங்கம்.

Page 13
12
இலங்கைச் சரித்திரத்தின் இரத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது. நாடெங்கிலும் வகுப்புக் கலவரம். எங்கு பார்த்தாலும் இன வெறியின் எதிரொலி. கூச்சல், குமுறல், மரணத்தின் பிடியில் அகப்பட்டவர்களின் பரிதாப ஒலங்கள். மரண தேவனின் மறு உருவில் வந்தவர்களின் எக்காளம் நேற்றுவரை ஒரு தாயின் பிள்ளைகளென வாழ்ந்த வர்களிடையே இன்று போர் 1
போர்க்களத்தில் திரியும் முரட்டு யானையைப் போல் வீதியில் குதித்தான் சிவலிங்கம். எப்படி யாவது வவனியாவிற்குச் சென்று, ஆருயிரைக் கொடுத்தாவது அந்த அன்னை பூமியைக் காக்க வேண்டும் !
பாய்ந்தோடி வந்தாள் சோமா. 'மூலை முடுக்குகளிலெல்லாம் முரடர்கள் நிற்கின்றர்கள். வெளியே செல்வது ஆபத்து. வீட்டிற்குள்ளேயே இருந்தால் எப்படியாவது தப்பி விடலாம்” என்ருள்,
“எனக்கு என்னுயிர் பெரிதல்ல. நான் போகத் தான் வேண்டும்?.
*அப்படியானுல் நானும் வருகின்றேன்? அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அவள் கெஞ்சினுள், அழுதாள்.
*வேண்டாம் சோமா! நீ இங்கேயே இரு. வெற்றி வீரனுக வந்து உன்னைச் சந்திக்கின்றேன்.”* சோமாவின் கைகளை விடுவித்துக்கொண்டு, முன் னிலும் வேகமாகச் சென்ருன்.

13
பற்றிய மரம் பறிக்கப் பட்டதால் படாரென்று விழுந்தது அந்தப் பூங்கொடி. உணர்ச்சி வெறியர் களின் உடும்புப் பிடியாக உயிருக்குயிரானவன் சிக்கப் போகின்றனே என்பதை எண்ணி அவள் விம்மினுள், புலம்பினுள்.
திடீரென்று ஒரு யோசனை பளிச்சிட்டது! நிமிர்ந்து பார்த்தாள். சிவாவின் உருவம் இன்னும் மறையவில்லை. “விடுவிடென்?று அறைக்குள் சென்று மண் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.
68இதோ உங்கள் தெய்வம்! நீங்கள் மறந்து விட்டீர்களே, சிவா. சிவா..!!?? தன் பலமெல் லாவற்றையும் சேர்ந்து உச்சக் குரலில் கதறினுள்
மந்திரத்தில் கட்டுண்டவனைப் போலத் திரும் பினுன் அவன். வந்து கொண்டிருப்பவனை வர வேற்க அவளும் முன்னேறினுள். காந்தம் போல் ஒருவரை ஒருவர் இழுத்தனர். கைகளை நீட்டி, அந்தப் பொட்டலத்தைப் பெறப்போகும் சமயம். ஐயோ, எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்து விட்டது எங்கிருந்தோ வந்து இடையில் புகுந்த முரடணுெருவன் தன் கத்தியைச் சிவலிங்கத்தின் நெஞ்சில் பாய்ச்சிவிட்டு ஓடினுன். ኀ
சோமாவின் கையிலிருந்த மண் முடிச்சு நிலத். தில் விழுந்தது. நெஞ்சைக் கையால் அழுத்திய படி சுருண்டு சுருண்டு கீழே விழவிருந்த சிவா வைத் தாங்கினுள் அவள். நடுங்கும் தொடைகளின்

Page 14
14
மேல் தன் அன்புக் காதலனேக் கிடத்தினுள். அவளுடைய கண்ணிர் அவனைக் குளிப்பாட்டியது.
துயர வெள்ளத்தில் இருவரும் மிதந்தார்கள். சிவாவின் தொண்டையிலிருந்து வந்த பரிதாப ஒலி சோமாவின் இதயத்தை அறுத்துக் கொண்டிருந் @gj。 6 சோமா.சோ.மா. எங்கே. என்ன ??? சிவாவினுல் எதையுமே தெளிவாகப் பேச முடிய வில்லே,
கண்களில் நீர் மல்க அந்தக் கடைசி நாட கத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்தாள் சோமா. அவளுக்குப் பேச்சு எழவில்லை.
குறிப்பறிந்த கிழவன் அருகேயிருந்த பட்டுப் பையை எடுத்துக்கொண்டு வந்தான். மிகவும் பய பக்தியுடன் அதைத் தன் இரண்டு கைகளாலும் பெற்றுக் கொள்வதற்காக எழுந்த சிவலிங்கம், மறு படியும் தடா?லென்று விழுந்தான். கிழவனின் கைகளிலிருந்து விழுந்த பையிலிருந்து மண் எங்கும் சிதறியது. அந்த மண்ணின் மீதே கிடந்து உயிரை விட்ட பெருமை சிவலிங்கத்தின் முகத்தில் காணப்பட்டது
米 米 se
கண்களில் துளித்த நீரைத் துடைத்து விட்டு தன் காதலனின் நினைவுச் சின்னமான அந்த மண்ணைப் பார்த்தாள். அங்கங்கே தெறித்திருந்த இரத்தத் துளிகள் அழகான வார்த்தைகளாக அவளுக்குத் தோற்றமளித்தன. அந்த வண்ணத் தமிழ் வாசகத்தைப் 16l)(p60p படித்தாள் சோமாவதி. 'நான் பிரிந்தாலும் உன் தூய அன்பை மறக்க மாட்டேன்; நாடு பிரிந்தாலும் நல்ல அன்புணர்ச்சி எல்லோரையும் பிணைக்கும்”.
-1959.

கோவில் ഗ്ലീങ്ങ
சித்திரை மாதத்துச் சூரியன் கொளுத்து கொளுத்தென்று கொளுத்தினுன். கண்களைத் திறக்கவே முடியாதபடி அவ்வளவு வெப்பம் அனல் காற்று வீசியது. வீதியிலுள்ள தார் வெப்பத்தைக் கண்டு குமுறுவதைப்போல் உருகிப் பொங்கியது.
இந்தப் பதைபதைக்கும் வெய்யிஆலயும் பொருட் படுத்தாது அந்த இரண்டு உருவங் களும் அங்கே நின்று மோனத் தவம் செய்தன. முதலாவதாக அந்த இடத்தை வந்து சேர்ந்தவன் மயிலன். உடம்பெல்லாம் திருநீற்றுக் குறிகள்; நெற்றியிலிட்ட சந்தனப் பொட்டிற்குள் பளிச்? சென்று மின்னிக் கொண்டிருந்தது குங்குமம். இரண்டு காதுகளிலும் செவ்வரத்தைப் பூக்கள். கையிலே ஒரு சிறு சாக்குப் பை, அதற்குள்ளே வைக்கப்பட்ட போத்தலில் நிறையத் தண்ணிர் இருந்தது. ஏற்படக்கூடிய கஷ்டங்கள் எல்லா

Page 15
16
வற்றையும் எதிர்பார்த்தே தன் ஆயத்தங்களைச் செய்திருந்தான். அந்த அகோர வெய்யிலிலும் அவன் தோற்றம் குளிர்மையை வருவித்தது.
சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார் வைத்திலிங்கம் பிள்ளை. சரிந்த தொந்தியிலிருந்து சரிகை வேட்டி வழுவாமலிருக்க அவரது அரை ஞாண் பயன்பட்டது. தலையைச் சூரியன் தாக்க, கால்களைத் தார் வீதி கவ்விப் பிடிக்கத் தள்ளாடிய படியே வந்த அவர் பேஸ்" நிறுத்துமிடத்திற்கு வந்ததும் நீண்டதொரு பெருமூச்சு விட்டார். அவ் வளவு களைப்பு அவருக்கு காரிலேயே பிரயாணம் செய்து பழக்கப்பட்ட அவருக்கு, சூரிய வெப்பம் எவ்வளவு கொடூரமானது என்பது அப்போது தான் தெரிந்தது. ஒரு கணம், ஒரேயொரு கணம் வெய்யிலையும் மழையையும் பாராது, குளிரென்றும் கூதலென்றும் பாராது, அவர் போன்ற ஒரு சிலரின் சொகுசான வாழ்க்கைக்காகத் தமது உயிரையே பணயம் வைத்து, இயற்கைச் சக்தி களுடன் இணைந்தும், எதிர்த்தும் ஒருவித சூதாட் டம் ஆடுகின்ற ஏழைப் பாட்டாளி மக்களின் சகிப்புத் தன்மையை நினைத்து அவர் உள்ளம் குளிர்ந்தது!
* அப்பப்பா ! என்ன வெய்யில் இன்றைக் கென்று தான் இப்படி எறிக்க வேண்டுமா?* என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்.
இவரைக் கண்டதும் மயிலன் சிறிது விலகி நின்றன். அவனைக் கண்ட பிள்ளையவர்கள் தன்

17
முகத்தில் புன்னகையை வருவித்துக் கொண்டார். அவனை அவருக்குத் தெரியும் !
மயிலனுக்கும் அவரை முன்பு எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. எங்கே என்றுதான் உடனே நினைவிற்கு வரவில்லை. மூளையைக் குடைந்தான். கடைசியில் நினைவு வந்ததும் முகத்தில் அரு வருப்பு ரேகைகள் படர்ந்தன. ஆணுல் மரியாதைக் காகப் பதில் புன்முறுவல் பூத்தான்.
இருவர் கண்களும் பஸ் வரும் திசையிலேயே பதிந்திருந்தன. ஏதாவதொரு சிறிய சத்தம் கேட் டாலும் இருவரும் சுறுசுறுப்படைவர். அங்கிருந்து எட்டு மைல் தொலைவிலுள்ள முருகன் ஆலயத் தில் அன்று தேர்த் திருவிழா. அங்கு போகத்தான் இருவரும் பஸ்ஸை எதிர்பார்த்து நின்றர்கள். அதிகப்படியான பஸ்கள் விடப்படுமென்று விளம் பரஞ் செய்யப் பட்டிருந்தும் சென்ற இரண்டு மணித்தியாலங்களாக அந்தப் பாதையால் ஒரு பஸ்ஸலம் செல்லவில்லை.
பிள்ளை போனுற்தான் தேர் இருப்பிடத்தி லிருந்து இழுக்கப்படும். அவர்தான் கோவில் முதலாளி. அவர் துடியாய்த் துடித்தார். வெய்யில் ஒரு பக்கம் வாட்டியது. நேர காலத்திற்கு, கோவி லுக்குச் சென்றுவிட வேண்டுமே என்ற கவலை. நிற்க முடியாமல் நின்றர். உடல் இங்கே ; உள்ளம்
அங்கே.
米 朱 朱
2

Page 16
18
அன்று காலையில் கோவிலுக்குச் சென்றிருந் தார் பிள்ளை. அன்றைய பொறுப்புகளை அவரவர் களிடம் ஒப்படைத்து விட்டுச் சிறுது கண்ணயர லாமெனச் சென்ருர். அவள்? நினைவு வந்தது. ஓடோடியும் வந்தார் தன் காரில், அவளைப் பார்த்து விட்டுப் போக. அவரை ஏற்றிக்கொண்டு வந்த கார் திரும்பிச் செல்ல மறுத்து விட்டது. அதன் பலன்தான் அவர் வெய்யிலிலே வெந்தது !
நா வரண்டது. சுற்று முற்றும் பார்த்தார்! கிட்டிய தூரத்தில் வீடுகள் ஒன்றும் இல்லை. கடை களும் இல்லை. அந்த வெய்யிலில் அவரையும் மயிலனையும் தவிர வேறெவரும் அங்கே இல்லை. அவளுடைய வீட்டிற்குச் சென்று திரும்புவதற் கிடையில் பஸ் வந்து விட்டால்.
மயிலனுடைய பையினுள் இருந்த தண்ணிர்ப் போத்தல் அவர் கண்ணில் பட்டது. வாய் விட்டுக் கேட்டும் விட்டார்.
மயிலன் தயங்கினுன். தான் உண்மையில் யாரென்பதைச் சொல்ல விரும்பினுன். ஆணுல் அவருடைய நடத்தையைப் பற்றிய நினைவு வந்து அது தேவையில்லை என்பதை உணர்த்தியது.
முதன் முதலாக அவளுடன் சேர்த்துத்தான் அவரை அவன் கண்டான். அவள் வேறு யாரு மல்ல. இந்த உலகத்திலே ‘வாழத்தெரிந்த ஒரு சில பெண்களில் அவளும் ஒருத்தி. பெயர் லீலாமணி. பார்ப்பதற்கு நல்ல அழகாயிருப்பாள். பால்ய விதவை என்ருல் ஒருவரும் நம்பவே

19
மாட்டார்கள். வீதியிலே அவளைக் காண்பதரிது. வீட்டிலேயே வியாபாரம் நன்ருக நடக்கும்போது, வெளியில் சென்று ஏன் உடம்பை வருத்த வேண்டும்? பிள்ளையைப் போன்ற பல பிள்ளை களுக்கும், துரைகளுக்கும் அவள் வீடு ஒரு புண்ணிய ஸ்தலம்; அந்த அம்மாளைத் தரிசிக்க அவர்கள் தவறுவதேயில்லை. இதில் வேடிக்கை என்ன வென்றல், அவள் தனக்குத்தான் சொந்த மானவள் என்று ஒவ்வொருவருமே நினைத்த தாகும்!
இவ்வளவு உத்தமோத்தமரான பிள்ளையவர் களுக்குத் தான் தண்ணீர் கொடுப்பதால் அவருடைய "தூய்மை கெட்டுவிடுமா ?
மயிலன் கொடுத்த தண்ணிரைப் பிள்ளை *மட மட வென்று குடித்து முடித்தார்.
கடைசியில் வந்தது பஸ். அதிலே இருக்க இடமில்லை; நிற்க இடமில்லை; தொங்கிக் கொண்டு செல்லவும் இடமில்லை; அந்த இருவரையும் அங்கேயே விட்டுவிட்டுப் போவதற்குச் சாரதிக்கு மனமும் இல்லை. அப்படியான நாட்களில் தங்கள் மடியையும் நிரப்பாவிட்டால், பஸ்ஸில் வேலை செய்துதான் என்ன பலன் !
பஸ் நின்றது. இருவரும் உள்ளே தள்ளப் பட்டனர்.
அரசாங்கம் மறந்துவிட்ட விஷயங்களுள்
அந்த நெடுந்தெருவும் ஒன்றகும். அது ஒரு பிரதான வீதி என்பதும், தினமும் ஆயிரக் கணக்

Page 17
20
கானுேர் அதை உபயோகிக்கின்றனர் என்பதும் அரசாங்கத்திற்கு மறந்து விட்டது. பழமையை விரும்பியோ என்னவோ, முன்னுெரு காலத்தில் இருந்த நிலையிலேயே இருக்கும்படி அந்த வீதியை விட்டு வைத்தது அரசாங்கம். வறுமை அரக்கனின் முரட்டுப் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழையின் உடல் போன்று ஒரே கோரமாகக் காட்சியளித்தது அவ்வீதி.
இன்னுெரு விசேஷம், அந்த வீதியால் ஓடிய பஸ்கள் இலங்கையில் முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்ட பஸ்கள் இன்னமும் அந்த வீதியிலே தான் ஓடிக் கொண்டிருந்தன!
சரித்திரப் பிரசித்தி பெற்ற இப்படியான பஸ் ஒன்றுதான் பிள்ளையவர்களுக்கும் மயிலனுக்கும் தஞ்சமளித்தது. மூச்சுவிடவே முடியாதபடி அவ் வளவு சன நெருக்கம். பிள்ளை அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அன்றைக்கென்று புதிதாக எடுத்து உடுத்த சரிகை வேட்டி கசங்குகின்றதே ! அவர் கவலையெல்லாம் இதைப் பற்றித்தான் !
அவர் அணிந்திருந்த மஸ்லின் சட்டை வியர்வையில் தோய்ந்து உடம்புடன் ஒட்டிக் கொண்டது. மற்றவர்களெல்லோரும் வெற்றுடம் புடன்தான் இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து நிற்க என்னவோ போலிருந்தது பிள்ளையவர் களுக்கு வெளியே எரிந்த வெய்யிலும், பஸ் கொடுத்த குலுக்கம், ஆட்டம் ஆகியவையும் ஒவ் வொருவர் மேனியிலிருந்தும் வியர்வையை ஆருகப் பெருகச் செய்தது. வெளவாலைப் போல் தொங்கிக்

21
கொண்டு நின்ற மயிலனின் கையில் உற்பத்தி யான வியர்வையூற்று சிறிது குள்ளமான பிள்ளை யவர்களின் தோள்களில் விழுந்து பக்கத்தில் நின்ற வேருெருவரின் வண்டியில் வழிந்து மற்றுமொரு வரின் கால் வழியாக வடிந்து கொண்டிருந்தது! இந்த வியர்வை நாற்றத்தைப் பிள்ளையவர் களால் சகிக்க முடியவில்லை. இப்படிச் சங்கடமான வேளைகளில் அவருக்குதவி புரியும் புகையிலைத் துண்டுகள் அன்று அவரிடம் இல்லை. வெறும் புகையிலையை வாய்க்குள் போட்டுச் சப்புவதில் அவருக்கொரு தனி இன்பம்! 96) (560) -u கஷ்டங்களைப் போக்கும் சக்தி அதற்கிருந்தது. அது வாய்க்குள் சென்றவுடனே அவர் கற்பனை சிறகு கட்டிப் பறந்து விடும். பின்பு அவருக்கு இந்த உலக நினேவேது !
அவசரத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டபடி யால் புகையிலையை எடுத்து வர மறந்து விட்டார். பக்கத்தில் நின்ற ஓரிருவரின் காதுகளில் வாயை வைத்துத் தன் விருப்பத்தை வெளியிட்டார். அவர்கள் கையை விரித்து விட்டனர்.
கடைசியில் மயிலனைக் கேட்டார். அவனிடம் இருக்காது என்பது அவர் எண்ணம். ஆணுல் அவன் புகையிலை வைத்திருந்தான். மறுக்க மன மின்றி அதைப் பிள்ளையவர்களுக்கும் கொடுத்தான். இனிமேல் அவருக்குக் கவலையில்லை. பஸ் ஓடிக்கொண்டிருந்த வேகத்தில் கோவிலை அடை யுமா என்பது சந்தேகந்தான், என்ருலும் முருகன் அவரைக் கைவிடுவானு?

Page 18
22
திடீரென்று பிரேக்கை அழுத்தினுன் சாரதி ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். மயிலனுக்கு மேல் அவர்; அவருக்கு மேல் வேருெருவர்; வியர் வையும் அதுவுமாக மிகவும் கஷ்டப் பட்டனர்.
மயிலனுல் அதைப் பொறுக்கவே முடிய வில்லை. அவருடைய வாய் பரப்பிய மணம் அவனுக்கு வேதனையைக் கொடுக்கவில்லை. ஆணுல் அவர் அணிந்திருந்த ‘சென்ட்"தான் அவன் மூக்கைப் பிடுங்கியது. இந்தப் புனித நாளிலும் அந்தத் துர்நாற்றத்தை’ அனுபவிக்க வேண்டுமா?
அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட பிரயாணிகள் வெளியே தலையை நீட்டிப் பார்த்தனர். அவர்க ளெல்லோருக்கும் ஒரே பயம், ஏதும் சிவப்புக் கட்டடம் தெரிகின்றதாவென்று ! ஏனெனில் பெற் ருேல் குதங்களைக் கண்டால் குறுக்கே இழுக்கும் குணம் அந்த பஸ்ஸுடன் கூடப் பிறந்தது! அவர் களில் ஒருவர் கண்களிலாவது அந்த நிலையம் தென் படவில்லை. அத்தனைக்கும் ஆறுதல்தான்!
சாரதி இறங்கினுன். ஒரு சிறு குடிசையை நோக்கிப் போனுன். அனைவரும் தலைகளை உள் ளுக்கு இழுத்துக் கொண்டனர். பஸ்ஸிற்கு பெற் ருேல் தேவைப்படவில்லை. சாரதிக்குத்தான் தேவைப்பட்டது! அப்போதுதான் அனைவர் நெஞ்சிலும் தண்ணிர் வந்தது. இனிமேல் பஸ் விரைவில் சென்று விடும் என்பதில் அனைவருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது
பிள்ளையவர்களுக்கு வாயூறியது. சாரதிக்குப் பக்கத்தில் இருந்திருந்தால் இத்தனை நேரம் அவர்

23
*விடாயும்? தீர்ந்திருக்கும் ஆணுல் இப்போதோ அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்ருலும் ஆசை அவ்வளவு இலகுவில் தீர்ந்து விடுமா? நாவைக் கட்டுப் படுத்த முடியாது தவித்தார். வெளியே வர முயன்றர். வருவதற்குள் பஸ் மறுபடியும் புறப்பட்டு விட்டது.
எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே மிக விரைவாகச் சென்றது பஸ்.
கோவிலை அடைந்தபோது தேரில் சுவாமியை ஏற்றி விட்டார்கள். சனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடி மனைகள் அதிகம் இல்லாத அந்தக் காட்டுப் பிரதேசத்திலும் திருவிழாக் காலங்களில் கூட்டம் சொல்ல முடியாது.
அரோகரா’ என்ற ஒலியுடன் பஸ்ஸிலிருந்து இறங்கினர் அனைவரும். சட்டை கழற்றிய பாம்பைப் போன்று நகர்ந்து கொண்டிருந்தது
u6).
மயிலன் தன்னேயே மறந்தான். விழாக் கோலத்தில் சுவாமியைக் காண உடம்பு சிலிர்த் தது. அருகேயிருந்த கிணற்றுக்குச் சென்று கை, கால், உடம்பு எல்லாவற்றையும் நன்கு கழுவிக் கொண்டான். தொண்டு செய்வதில் பற்றுக் கொண்டிருந்த அன்பரொருவர் அவனுக்கு உதவி செய்தார். அல்லாவிடில் வெகு தூரத்திலிருந்த கடலுக்குச் சென்றுதான் தன் உடம்பைத் தூய்மைப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட் டிருக்கும்.

Page 19
24
பிள்ளையவர்களுக்கு வீட்டிற்குச் செல்லவே நேரம் இல்லை. கோவிலில் இவர் வருகையைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும். தேர் இழுப்பதற்கு முன்னர் பிள்ளையவர்கள் கையால் தேங்காய் உடைக்கப்பட வேண்டும்.
வேலையாள் ஒருவன் மூலம் தனது சட்டை யைக் கொடுத்தனுப்பினுர், வாய்க்குள் போட்டு உமிழ்ந்த புகையிலையைத் துப்ப மனமின்றித் துப்பினுர், மடிப்புக் கலையாத சரிகைச் சால்வையை அரையில் வரிந்து கட்டினுர். நேரே தேரில் ஏறிஞர்
கழுவித் துப்புரவாக வைக்கப்பட்ட தேங்காய் ஒன்று பிள்ளையவர்களிடம் கொடுக்கப்பட்டது. “முருகா? என்று சொல்லிக் கொண்டே தேங்காயை உடைத்தார்.
தேர் வடத்தைப் பிடித்து இழுத்தனர் சிலர். அத்தனை பெரிய சனக் கூட்டத்தினுள் தேரை இழுப்பதற்குத் தயாராயிருந்தவர்கள் ஏதோ இருபது முப்பது பேர்தான். தங்கள் அருமையான பட்டு வேட்டிகளைப் பழுதாக்கிக் கொள்ள விரும்பவில்லை மற்றவர்கள்.
தேர் அசையவில்லை.
*அரோகரா? அப்பனே முருகா? என்று தொண்டர்கள் தொண்டை கிழியக் கத்தியது வானத்தைத் தொட்டது.
ஆணுலும் தேர் அசையவில்லை.
ஆள் சேர்க்கும் வேலை ஆரம்பமானது. எங்கோ எல்லாம் திரிந்து பலரைக் கூட்டி வந்தார்,

25
ஒருவர். எவ்வளவோ மறுத்த மயிலனையும் அவர் விடவில்லை. அவனுடைய தோற்றம் என்ன சந்தேகப்படும்படியாகவா இருந்தது!
மறுபடியும் ’அரோகரா’ என்ற சத்தம். தேர் அசைந்தது. பிள்ளையின் முகத்தில் இப் போதுதான் மகிழ்ச்சியின் சாயல் தோன்றியது.
கீழே பார்த்து அங்கு நின்றவர்கள் மேல் தன் புன்னகையை உதிர்த்தார். வியர்த்து விறுவிறுத் துத் தேர் வடத்தைக் கையில் பிடித்துக் கொண்டு கந்தப் பெருமானுக்குச் சேவை செய்யும் எல்லோர் மேலும் அவர் பார்வை விழுந்தது. அதற்குள் ஒருவன் பிள்ளையவர்களின் காதுகளில் முணு முணுத்தான்.
தேர் வடத்தின் நுனியில் நின்ற ஒருவன்மேல் அவர் கண்கள் குத்திட்டு நின்றன. அவன் யார்? கண்களை அகலத் திறந்தார் பிள்ளை. திருப்புகழ் ஒன்றை வாய்க்குள் முணுமுணுத்தபடி நின்றன் மயிலன்!
அந்தக் காட்சியைக் காணப் பொறுக்க முடிய வில்8ல பிள்ளையவர்களால், அவருடைய கண்கள் சிவந்தன. ‘அவனை யார் தேர்வடத்தைத் தொடச் சொன்னது? அந்தச் சனியனைத் துரத்துங்கள்..?? ஆத்திரத்துடன் உத்தரவிட்டார் ஆண்டவனுக்கு அருகில் நின்ற தருமகர்த்தா.
மறுகணம்.
வெறி கொண்ட மக்கள், அது கோவில் என் பதையும் மறந்து மயிலனை நையப் புடைத்தனர்.

Page 20
26
அவனுடைய அவலக் குரலை, அவனுடைய முதுகு, தோள் முதலியவற்றில் விழுந்த அடி, உதைகளின் சத்தம் அமுக்கியது. அவன் மயங்கி விழும் வரைக்கும் பக்த கோடிகள் தம் கைவரிசையைக் காட்டினர்.
மயிலன் என்ற மயில்வாகனத்திடமிருந்து முருகப் பெருமானின் ரதத்தை இழுத்துச் செல்லும் உரிமையைப் பறித்த உற்சாகத்தில் தன் சரிகைச் சால்வையை ஒருதரம் அவிழ்த்துக் கட்டினர் பிள்ளையவர்கள்.
உள்ளத்தால் கள்ளமில்லாதவன் உதைத் தொதுக்கப்பட்டட்ான்; உருத்திராட்சப் பூனை யொன்று உல்லாச பவனி வந்துகொண்டிருந்தது. 1956.

நிலவும் நினைவும்
அமுதைப் பொழியும் நிலவு அமைதி கொஞ் சும் இரவு அவை இரண்டும் சங்கரனின் மனதில் ஒரேயொரு நினேவைத்தான் எழுப்பின. அந்த நினைவை அவனுல் அழிக்க முடியவில்லை; அதில் திளைக்கவும் முடியவில்லை. மனத்தின் அடித் தளத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது அவனைப் பைத்தியக்காரணுக்கும் நினைவாகவே அது இருந்தது.
வழக்கத்துக்கு மாருக அன்று அவன் காலி முகத்தில் அதிக நேரம் தங்கி விட்டான். களைத்துப் போய்க் காற்று வாங்க வந்தவர்கள் எல்லோரும், காற்று வாங்கிக் களைத்துப்போய் வீடு திரும்பிவிட் டார்கள். காலிமுக மைதானம் இப்பொழுது காலி யாகவே இருந்தது. அசைந்தசைந்து அவனு டைய உடலை வருடிய, காற்று, அவனுடைய இதயத்தை எங்கோ இழுத்துச் சென்று கொண்
டிருந்தது.
米 米

Page 21
28
அப்போது அவன் மாணவன். கொழும்பிலே யுள்ள பல்கலைக் கழக விடுதியில் தங்கியிருந்தான். வாழ்க்கையில் அடிபடாத வயது. வயதிற்குச் சொந்தமான கற்பனைகளை மனதில் நிறைத்து, விரும்பியபடி வாழ்ந்து, மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தான். பாடங்களைப் படிப்பதுகூட ஒருவிதப் பொழுதுபோக்காகத்தான் இருந்தது அவனுக்கு.
சித்திரை விடுமுறையைக் கழிப்பதற்காக ஒரு தடவை மட்டக் களப்பிற்குச் சென்றன். அவனு டைய அக்கா சிவகாமியும் அவள் கணவரும் அங் கிருந்தனர். மட்டக்களப்பிலுள்ள ஓர் அரசாங்க அலுவலகத்தில் சிவகாமியின் கணவர் வேலை பார்த்து வந்தார்.
மட்டக்களப்புத் தமிழகம் மட்டற்ற மகிழ்ச்சி யைச் சங்கரனுக்குக் கொடுத்தது. வந்தோர் அனைவரையும் மன நிறைவுடன் வரவேற்று உப சரிக்கும் மக்கள்; அர்த்தமற்ற கட்டுப்பாடுகளை அறுத்தெறிந்துவிட்டு அனைவரும் ஒன்றென்று ஆடிப்பாடி மகிழும் காட்சி கண்ணுக் கெட்டாத தூரம் வரை பரந்து கிடந்து பார்த்தாலே பசியைத் தீர்க்கும் வயற் பரப்புகள்; அந்த வயல்களிலே வேலை செய்யும் வறிய குடி மக்கள் வாயைத் திறக் கும்போதே வண்டமிழ்க் கவிதைகள் வழிந்தோடும் விந்தை-இவை எல்லாம் அவனிடம் புதிய உணர்ச் சிகளை உண்டாக்கின. அசல் பட்டிக்காடான அவனுடைய சொந்தக் கிராமத்திற்கும் மேலை நாகரிகத்திலே விழுந்து தோய்ந்து மிதந்து

29
கொண்டிருக்கும் கொழும்பிற்கும் இடைப்பட்ட தரத்தில் இருந்தது அந்த நகரம்.
தன் ஆசை தீருமட்டும் ஊரைச் சுற்றிய பின் வீட்டிற்குத் திரும்பினுன் ஒரு நாள். அங்கே ஒருவருமில்லை. அக்காவின் குழந்தைகள் படிக் கும் கல்லூரியில் அன்று பரிசளிப்பு விழா. அங்கு தான் எல்லோரும் சென்றிருந்தனர். நடந்த அலுப் பினுல் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்தான்.
தரையில் பரப்பப்பட்டிருந்த கடற்கரை மணல் அவனுடைய களைப்பை உறிஞ்சியது. வானத்தில் வட்டநிலா தனி ஆட்சி செலுத்தியது. அசைந் தாடிய தென்றல் அவனுடன் இரகசியம் பேசியது. *அப்பா இது வல்லவா சொர்க்கம்?
வீதியிலே யாரோ சிரித்துப் பேசும் சத்தம் கேட்டது. சிவகாமியும் குழந்தைகளும் வருகின் ருர்களோ என நினைத்து எழுந்து பார்த்தான்.
கண்கள் இமைக்க மறுத்துவிட்டன. பால் போன்ற அந்த நிலாவிலே பஞ்சனைய பாதங்களால் பதுமைகள் போன்று நடந்து வந்தார்கள், பாவை கள் சிலர். பரிசளிப்பு விழா முடிந்து வீடு திரும்பு கின்றனர் போலும் மனத்தை மயக்க வைக்கும் அந்த மோகன வேளையிலே பருவ மங்கையர்கள் சிலர் சேர்ந்தால் அங்கே மகிழ்ச்சிக்கு வரம்பிட முடியுமா? அழகு கொழிக்கும் அங்கங்கள் குலுங்க, அவர்கள் சிரித்துப் பேசிச் சிங்காரமாக நடந்து வந்தது சங்கரனின் மனதைக் கிறங்கச் செய்தது.
அவர்கள் எல்லோருந்தான் அழகிகள். அழகு ராணிப் போட்டியில் அவனை நீதிபதியாக நியமித்

Page 22
30
தால், அவன் நிச்சயம் திண்டாடிப் போவான். மின்னலிடை துவள மென்னடை பயின்று கொண் டிருந்தாள் ஒருத்தி. கருநாகம் போன்ற தன் பின் னல்கள் இரண்டால் ஒன்றை மார்பின் மேலும், மற்றதை முதுகுப் புறமும் விட்டுத் தன் அழகை அதிகரிக்கச் செய்திருந்தாள் இன்னுெரு பெண். தங்கக் கரங்களிலிருந்த வளையல்கள் தாளம் போட தன் கொஞ்சும் குரலில் நெஞ்சைக் கவரும் இன் னிசை எழுப்பினுள் வேருெரு பெண்.
இத்தனை அழகிகளுக்கும் மத்தியில் அமை தியே உருவாக வந்த ஒருத்திதான் சங்கரனைக் கவர்ந்தாள். அல்லி மலர்களின் நடுவே, அன்ற லர்ந்த அழகுத் தாமரை அவள். பெற்ற பரிசுப் புத்தகங்களைப் பூரிக்கும் மார் பகங்களுடன் அணைத்தபடி வந்தாள். நிலவையே துகிலாக உடுத்தது போன்று, வெள்ளை வெளேரென்ற பாவாடை. வட்டமதியை ஒத்த அவள் வதனத் தின் அழகை, ஆகாச வர்ணத்தில் அவள் அணிந் திருந்த ரவிக்கை அதிகரிக்கச் செய்தது. பட்டுப் போன்ற அவள் உடலை, மற்றவர்கள் தொட்டுப் பேசிய போதெல்லாம் தன் முத்துப் பற்கள் தெரிய முறுவலித்தாள். அந்த மோகனப் புன்னகையில்
தன் மனதைப் பறி கொடுத்தான் சங்கரன்.
*கலீர் கலீர்? என்ற ஒலியில் மிதந்து வந்த அந்தக் கன்னியர் கூட்டம் சங்கரனைக் கண்டதும் மெளனமாக நடக்கத் தொடங்கியது. தன்னையே பார்த்துக்கொண்டு நின்ற சங்கரனைக் கடைக்

31
கண்ணுல் கவனித்தபடி, பக்கத்து வீட்டில் நுழைந் தது அந்த வட்டமதி’.
水 米 ※
அவள் பெயர் மாலதி, அரசாங்க சேவையி லுள்ள சதானந்தன் என்பவரின் மகள். நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் அவளுடன் கூடப் பிறந்தவர்கள். அவள்தான் குடும்பத்தின் கடைக்குட்டி, குடும்பத்தை நடத்துவதற்கு மாதச் சம்பளம் போதாமல் தவித்தார் சதானந்தன். மாலதிக்கு அழகைக் சொரிந்த பிரமன் அறிவைச் சொரியவும் தவறவில்லை. அருகிலுள்ள கல்லூரி யில் எஸ். எஸ். சி. வகுப்பில் படித்துக் கொண் டிருந்தாள்.
இந்த விபரங்கள் எல்லாவற்றையும் சிவகாமி யிடம் தெரிந்து வைத்திருந்தான் சங்கரன்.
சிவகாமியும் மாலதியும் நெருங்கிய சிநேகிதி ஆள். பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும், இங்கேயே வந்து விடுவாள் மாலதி. சிவகாமியின் (குழந்தைகளுடன் தானும் ஒரு குழந்தையாக மாறி விளையாடுவதில் தனி இன்பம் அவளுக்கு. அந்தப் பதினுறு வயதுக் குழந்தையின் வெகுளித் தனத்தைப் பார்த்து ரசிப்பதற்கே சங்கரனுக்கு
நேரம் சரியாயிருந்தது.
இப்போதெல்லாம் சங்கரன் வெளியே உலாவப் போவதில்&ல. பார்க்க வேண்டிய அழகுக் காட்சி களெல்லாம் ஒன்று திரண்டு ஒப்பற்ற உருவெடுத் துப் பக்கத்து வீட்டில் குடியிருந்து, இந்த வீட்டி

Page 23
32
லும் அரசு செலுத்திய போது வெளியே சென்று பார்க்க என்ன இருக்கின்றது?
சங்கரனுடன் பழகுவதற்கு அவளுக்கு அறி முகம் தேவைப் படவில்லை. 8 மாமா மாமா!” என்று அவனைச் சுற்றி வட்ட மிட்டாள். தேவை யற்ற பல விஷயங்களைப் பற்றிக் கேள்விமேல் கேள்வி போட்டு அவனைத் துளைத் தெடுத்தாள்.
அவைகளுக்குப் பதில் சொல்வதில் சங்கரனுக் குச் சலிப்பே ஏற்படவில்லை. அறிவைப் பெருக்க வேண்டும் என்ற ஆர்வம் அவளிடம் இருந்தது. இதை அவன் பாராட்டிய போதிலும், அளவிற்கு மீறிய பொறுமையைக் கடைப்பிடித்ததற்கு வேருெரு காரணமும் இருந்தது.
இளமையின் முழுமையிலே எழுச்சி பெற்றி ருக்கும் இளஞ் சிங்கம் அவன். பருவத்தின் எல்லைக் கோட்டிலே அடி எடுத்து வைக்கும் பச்சைக் குமரி அவள். அவள் வாயைத் திறந்த போது அங்கிருந்து தேன் ஒழுகியது. கண்களால் ஏறிட்டு அவனை நோக்கிய பொழுது அழகு ஒளி வீசியது. ரோஜாக் கன்னங்கள் குழியிட அவள் சிரித்த சிரிப்பு அவனைச் சொர்க்க லோகத்திற்குச் சுமந்து சென்றது. தன் இதயக் கோவிலில் அந்த அழகுத் தெய்வத்தை ஏற்றி வைத்தான் சங்கரன்.
ஆணுல் மாலதி? அவனுடைய உணர்ச்சிகளை அறிவாளோ என்னவோ கூத்து, கும்மாளம், வேடிக்கை, விளையாட்டு இவைகளில்தான் அவ ளது நாட்டம் சென்றது. வெகுளித்தனம் அவளே விட்டு விலகவேயில்லை.

33
தனிமையான ஓர் இடத்தில் மாலதியைக் கண்டு, நேரடியாகத் தன் விருப்பத்தைத் தெரி வித்து அவளுடைய கருத்தை அறிவதற்குத் துடித் தான் சங்கரன். நல்ல சந்தர்ப்பங்கள், சில அவனுக்குக் கிடைக்கத்தான் செய்தன. ஆணுல் அவற்றை அவன் நழுவ விட்டு விட்டான்.
*களங்கமில்லாமல், கலகலப்புடன் என்னுடன் பழகுகின்ருள். என் மாசு படிந்த மனத்தை அறிந் தால் என்ன நினைப்பாள்? பிறகு என்னிடம் முகம் கொடுத்துப் பேசா விட்டால்..? என்னுல், அதைச் சகிக்க முடியுமா?? இப்படியான சிந்தனைகள் அவனுடைய தைரியத்தைப் பறக் கடித்துவிடும்.
தவிக்கும் நெஞ்சுடன் நாட்களைக் கடத்தினன். விடுமுறை முடிவடைந்தது. இனிக் கொழும்பு செல்ல வேண்டும்.
புகைவண்டி நிலையத்திற்கு எல்லோரும் வந் திருந்தனர். மாலதியும் வந்தாள். இவ்வளவு காலமும் அவனுடன் பேச மறந்து விட்டவளைப் போன்று ஏதோவெல்லாம் பேசிக் கொண்டிருந் தாள் சிவகாமி. ஆளுல் சங்கரனின் கண்ணும் கருத்தும் மாலதியிடமே இருந்தன. அவள் ஒன்றும் பேசாது ஒதுங்கி நின்ருள். புகைவண்டி நகரத் தொடங்கியபோது மாத்திரம் கைகைஆளக் கூப்பி விடை கொடுத்தாள். முகத்தில் புன்சிரிப்பு அரும்பியது. ஆணுல் அதில் உயிர் இல்லை.
3.

Page 24
34
மாலதியின் உள்ளத்தை அவனுல் அறிய முடியவில்லை. அவளுடைய நினைவை அகற்றவும் முடியவில்லை. a メ
ஆண்டு ஒன்று உருண்டோடியது. இறுதித் தேர்வில் வெற்றி பெற்றன். விரைவில் அரசாங் கத்தில் ஓர் உயர் பதவியும் கிடைத்தது. இவை யிரண்டும் கொடுக்காத மகிழ்ச்சியை, அவனு டைய அக்காவிடமிருந்து வந்த கடிதம் கொடுத் தது. அவனுடைய வெற்றிக்காகத் தன் மகிழ்ச் சியைத் தெரிவித்து, ‘மாலதியும் எஸ்.எஸ்.சி. பாஸ் செய்துவிட்டு, வீட்டோடேயே இருக்கின்ருள். உன்ஆனப்பற்றி அடிக்கடி என்னிடம் விசாரிக்கின் ருள். நீதான் இங்கு வந்து அதிக நாட்கள் ஆகி விட்டனவே! ஒரு தடவை இங்கு வந்தாலென்ன? அவரும் குழந்தைகளும் உன்னைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலோடிருக்கின்றர்கள்” என்று எழுதி யிருந்தாள். W
துள்ளிக் குதிக்கும் உள்ளத்துடன் வார முடிவில் மட்டக்களப்பிற்குச் சென்றன். மாலதி யைக் காணலாம்; கருத்தைப் பரிமாறலாம்; இதயத் தோடு இதயம் கலந்து இன்பப் படகில் ஏறலாம் என்றெல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு சென்ருன்.
மாலதியைக் கண்டான். அகலத் திறந்த கண்களை மூடாது அவளையே பார்த்துக் கொண் டிருந்தான். முன்பு வந்தபோது அரும்பு விட்ட அழகு, இப்போது மலர்ந்து மணம் வீசியது.

35
அவள் நடந்து கொண்ட முறையிலும் எவ்வ ளவோ மாறுதல்கள் காணப்பட்டன. அவளிட மிருந்த வெகுளித்தனம், சிரிப்பு எல்லாம் இப்போது இல்லை. சங்கரன் முன்பு தோன்றும் போதெல்லாம்
அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டாள்.
சங்கரனுடன் அவள் அதிகமாகப் பேசவில்லை. அவன் ஏதாவது வந்து கேட்டால், "ஆம்", *இல்லை? அல்லது ஒரு புன் சிரிப்பு-இவைதான் பதிலாக வரும். அவனைப் பற்றி மிக அக்கறை யுடன் விசாரித்த மாலதியா இவள்?
இப்போதுகூட மாலதியின் மனக் கருத்தை அவனுல் அறியமுடியவில்லை. தனியாக ஒரு தடவை அவளைக் கண்டான். நெஞ்சில் தேக்கி வைத்திருந்த ஆசை அனைத்தையும் சேர்த்து, * மாலதி " என்ருன் கனிவுடன்.
அவளுடைய அதரங்களில் ஓர் இளநகை மலர்ந்தது, அவ்வளவுதான். ஒரே ஓட்டமாக ஓடினுள் தன் வீட்டிற்கு அவள் சென்ற திசை டியையே பார்த்து மலைத்து நின்றவனை இந்த உலகத் திற்குக் கொண்டுவரச் சிவகாமி பட்டபாடு!
68உண்மையான அன்பு இருந்தால் என்னிடம் பேசவே பிடிக்காது இப்படி ஓடி மறைவாளா?* இதயத்தின் அடித்தளத்தில் மறைந்திருந்த ஏமாற்ற உணர்ச்சி அவன் உடலெங்கும் பரவியது. நெஞ்சு சோர்ந்தது; கண்கள் சுற்றின. உலகம் சுழன்றது!

Page 25
36
அன்றிரவு கொழும்பிற்குப் புறப்பட்டான். பக்கத்து வீட்டு வாசலில் அவனையே பார்த்தபடி மாலதி நின்றது தெரிந்தது. ஆணுல் அங்கே திரும்பிப் பார்க்கவோ, அவளிடம் விடை பெறவோ அவன் விரும்பவில்லை. இனி மட்டக்களப்பை மறந்துவிட வேண்டியதுதான். மாலதியையும்..! அரசாங்க உத்தியோகம் அவனை இயந்திரமாக்கி யது. ஒய்வு கிடைத்த வேளைகளிலெல்லாம் அவன் மனம் மாலதியைப் பற்றித்தான் வட்டமிடும். அந்த நினைவு கொடுத்த துயரத்திலிருந்து தப்ப முடியாது தவித்தான் அவன்.
米 冰 米 இன்ப நிலாவும் இளந் தென்றலும் எழுப்பிய நிஜனவிலிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொண்டு, தான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பினுன். . . சிவகாமியின் கடிதம் அவனை வரவேற்றது. முக்கியமாக மாலதியைப் பற்றித்தான் அதில் எழுதப் பட்டிருந்தது. “மாலதியை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது. எத்தனையோ இடங் களில் கல்யாணம் பேசிவிட்டார்கள். அவளுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. என் மனதில் ஒன்று தோன்றுகின்றது. ஆணுல் நீ என்ன சொல் வாயோ தெரியாது. எதற்கும் ஒரு தடவை இங்கு வந்தால் நல்லது.??
கடிதத்தை வீசியெறிந்தான். சிவகாமியின் விருப்பம் அவனுக்குப் புரிந்தது. மாலதியின் நிலைக் காக இரங்கி, அவளைத் தனக்கு மணஞ்செய்து

37
வைக்க விரும்புகிருள். அக்கா என்ற முறையில் அவனுக்கு அவள் செய்யும் கடமை. சிநேகிதி என்ற முறையில் மாலதிக்கு அவள் செய்யும்
பேருதவி.
ஆணுல் மாலதி. அவனுக்கு அவள் மீது அன்பு இருந்திருந் தால் அவர்கள் திருமணம் என்றே மிகவும் கோலா கலமாக நடைபெற்றிருக்கும். இன்பபுரியின் உச்சி யில் நின்று எக்காளமிட்டிருப்பான் அவன். ஆணுல் அவன் கொடுத்து வைக்கவில்லை. இதை நினைத்த போது பெருமூச்சொன்று புறப்பட்டது.
இப்போது அவள் சம்மதிப்பாளா? வேறு வழி யில்லை என்பதற்காக ஒரு வேளை சம்மதித்தாலும் சம்மதிப்பாள்..இப்படியான மணத்தினுல் அவ தனுக்கு என்ன இன்பம் கிட்டப் போகின்றது? மனமில்லாத மணத்தினுல் தன் வாழ்வையும் இன்பப்பெண்ணுெருத்தியின் வாழ்வையும் பாழாக்க அவன் தயாராயில்லை. i
சகோதரியைக் காண்பதற்கு அவன் செல்ல வில்லை, வேலை அதிகமானபடியால் 6லிவு’ எடுக்க முடியாதென்று எழுதினுன்.
கடைசியாக ஒருநாள் ஒரு மஞ்சள் கடிதம் அவனத் தேடி வந்தது. மாலதியின் தங்கக் கரங் களேப் பற்றும் பாக்கியசாலியைக் கண்டு பிடித்து விட்டார்கள் !
திருமண அழைப்பைப் படித்தபோது சங்கர கணின் நெஞ்சு வேதனையால் விம்மியது. மாலதியை

Page 26
38
மறந்து விடவேண்டும் என்ற வைராக்கியம் அவனிடம் ஏற்பட்டிருந்தாலும், அவள் வேறெரு வனை மணக்கப் போகின்ருள் என்பதை அறிந்த வுடனே துக்கம் பொத்துக்கொண்டு வந்தது. தன்னைப் பற்றிய தாழ்வுணர்ச்சியும், மாலதியின் அன்பு கிடைக்காததால் ஏற்பட்ட தோல்வி யுணர்ச்சியும் அவனைச் சித்திரவதை செய்தன. ஐந்து வயதுடன் அழுகையை மறந்துபோன அவன் அன்று முழுவதும் அழுது கொண்டே யிருந்தான்.
கல்யாணத்திற்குப் போவதா? வேண்டாமா ? போகாவிட்டால் அக்கா சிவகாமியிடமிருந்து அவன் தப்பமுடியாது. மாலதியை இன்னும் ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவனிடம் இருந்தது.
திருமணத்திற்கு முதல் நாளே அங்கு சென்றன் சங்கரன். மிகவும் அமைதியான முறையில் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் அங்கிருந் தார்கள். மணவீட்டில் காணப்பட வேண்டிய மகிழ்ச்சியோ கலகலப்போ அங்கு இல்லை.
மாலதியைக் காண்பதற்குச் சங்கரனின் உள்ளம் துடித்தது. வீட்டினுள்ளே அவளைக் காண 6ჩმ6iაზსა. யாரையாவது கேட்கலாமென்ருல், அவர்கள் ஏதாவது தவருக நினைத்தால்....?
தவிக்கும் நெஞ்சம் தனிமையை நாடியது. நேரே கிணற்றடிக்குச் சென்றன். சீலை துவைக்கும்

39
கல்லில் உட்கார்ந்திருந்தாள் மாலதி. தன்
உணர்ச்சிகள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
மாலதியின் கண்களிலிருந்து “Lዐ 6UD ዜ፴” பொழிந்தது!
*மாலதி * மிகவும் மெதுவான குரலில் அவன் அவளே அழைத்தான்.
சங்கரனை ஏறிட்டு நோக்கினுள் மாலதி, 6 ஏன் அழுகின்ருய் மாலதி? கல்யாணம் செய்து கொள்வதற்கு உனக்கு விருப்பம் இல்லையா?*
மெளனமாக அவனையே பார்த்துக் கொண் டிருந்த அவள் விழிகளிலிருந்து கோபக் கனல் பறந்தது. கொதிக்கும் நெஞ்சிலிருந்து வார்த்தை களைக் கொட்டினுள்.
** இதயமற்றவரே! வெட்கமில்லை உங்களுக்கு? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்குத்தாணு இன்று ஓடி வந்தீர்கள்?. . . . இப்போது நீங்கள் கேட்ட இதே கேள்வியைச் சில நாட்களுக்கு முன்பே கேட்டிருந்தால் நான் இப்படிக் கலங்கிக் கண்ணிர் விடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா?? சங்கரனுல் தன் காதுகளையே நம்ப முடிய வில்லை. முன்பு மாலதி அவனுடன் நடந்துகொண்ட முறைகளெல்லாம் அவன் முன் தோன்றி ஒரு புது அர்த்தத்தைக் கொடுத்தன.
*நான் பாக்கியசாலி மாலதி.என்னை மன்னித்துவிடு, பெண்மையின் பண்பை அறியாத

Page 27
40
நான், நீயாக ஏதாவது சொல்வாய் என்று எதிர் பார்த்தேன்..இப்போது சொல், இந்த மணத்தை நிறுத்திவிட்டு நானே..?? மகிழ்ச்சி கட்டுக் கடங்காது அவன் குரலைக் குளற வைத்தது.
* வேண்டாம். உங்கள் நிஜனவால் என்னை இதுவரை சித்திரவதை செய்தது போதும். இனி, என் வாழ்விலும் பார்க்க, அப்பாவின் மானம் பெரிது. இப்போது எனக்கு ஒரே ஒரு உதவி செய்ஹிபீர்களா?99
*சொல் மாலதி. சொல். சீக்கிரமே நிறை வேற்றி விடுகின்றேன்.?
“தயவு செய்து இவ்வூரை விட்டு இப்போதே ஓடி விடுங்கள்??
வானமே பெயர்ந்து அவன் தலையில் விழுந்தது. மாலதியைப் பார்த்தான்.
* இன்னும் ஏன் நிற்கின்ருய்??? என்று கேட் பதைப் போலிருந்தது அவளுடைய பார்வை.
இனிமேல் அங்கு நின்றுதான் என்ன பிரயோசனம்? சங்கரன் கண்களில் நீர் துளிர்த்தது. மெளனமாக அவ்விடத்தைவிட்டு நகரத் தொடங் கினுன். கோ? வென்று குளறியழுதாள் மாலதி. சங்கரன் திரும்பிப் பார்க்கவேயில்லை.
நடக்க வேண்டியது நடந்து விட்டது என்று மனத்தை ஓரளவு சமாதானப் படுத்திய பின்பு தன் நெஞ்சத்திரையில் நிஜனவுத் தூரிகை கொண்டு எழுதத் தொடங்கினுன் :

4.
‘மாலதி அமுதைப் பொழியும் அந்த நிலவிலே அவளை முதன் முதலாகப் பார்த்தேன். . இனி என்றுமே அவள் நிலவுதான். நிலவைப் பார்க்க லாம். நிலவின் குளிர்மையை அனுபவிக்கலாம். ஆஞல் அது அருகே வரமாட்டாது. மாலதியை நான் அடைய முடியாது. ஆணுல் என் இனிய மாலதி என்னைஉள்ளன்புடன் காதலித்தாள் என்ற
இனவே போதும், நான் வாழ்ந்து விடுவேன்?
1957.

Page 28
திருட்டுப் பணம்
வேலுவுக்குத் தேவைப்பட்ட தெல்லாம் இரண்டு பிடி சோறு, ஒரு பிடி அவனுக்கு; மற்றது அவனுடைய மனைவி செல்லத்திற்கு அதைப் பிச்சையாகக் கேட்கவில்லை. அதற்குப் போதுமான பணத்தைக் கொடுத்தால் போதும், மாடாக உழைக்கத் தயாராயிருந்தான். அவன் வேலை தேடி நகரை வலம் வந்தான் பலமுறை. ஒரு கடையும் மிச்சமின்றி ஏறி இறங்கினுன், முதலாளிமார்களின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினுன். செல்லத்தின் நிலைமையைச் சொல்லிச் சிறிதளவு இரக்கம் காட்டும்படி கேட்டான். ஒன்றும் பலிக்கவில்லை. சொந்த நெருக்கடி காரணமாகச் சொற்ப சம்பளத் திற்கு வேலை செய்ய முன்வந்த அவனைச் சந்தேகக் கண்களுடன் பார்த்தனர் கடைமுதலாளிகள். எவ்வ ளவோ தடவை அவன் கெஞ்சி மன்றடிய பிறகு “இப்பாது ஆள் தேவையில்லையே! என்ன செய்வது? என்றுதான் திருவாய் மலர்ந்தருளி ஞர்கள். கனத்த இரும்புப் பெட்டியுள் புணத்தைத்

43
திணித்து, அதையும் இறுகப் பூட்டி இறுமாப்புடன் இருக்கும் அவர்களின் இதயத்தை இளகச் செய்ய அந்த ஏழையால் முடியவில்லை.
கடைசியாக வந்து சேர்ந்தான் பஸ்நிலையத் திற்கு. பஸ்கள்ஏற்றி வரும் சாமான் மூடைகளே இறக்கிக் கொடுத்து, ஐந்து, பத்துச் சதமாவது உழைக்கலாம் என்ற நம்பிக்கையும் சிதறடித்தார் கள் அங்கு நின்றவர்கள். எந்த முதலாளிக்கும் கட்டுப்படாத சுதந்திரமான வேலைதான் அது ஆனல் ஏற்கெனவே அந்தத் தொழிலில் ஈடு பட்டிருந்தவர்கள் அவனை விரட்டியடித்துத் தம் உரிமையை நிலை நாட்டினுர்கள்! கீழே விழவிருந்த அவனை ஒரு மரம் தாங்கிக் கொண்டது. நடந்து திரிந்த அலுப்பும், பசிக்களையும், அவன் அணுப விக்கக் din. Lq- ஒரேயொரு இன்பத்தைக் கொடுத்தன. மரத்திலே சாய்ந்தவாறு தன்னை மறந்து தூங்கினுன் வேலு
米 米 米
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்குச் சென்று அரசாங்கம் கொடுத்த நிலத்தில் குடியேறி ஞர்கள் வேலுவும் செல்லமும், ஆரம்பத்தில் சொந்த நிலம் என்ற பெருமையைக் கொடுத்ததே தவிர, வேறென்றையும் கொடுக்க வில்லை அந்த நிலம். காடுமுற்றக அழிக்கப் படவில்லை. மரக் குற்றிகள், முட்பற்றைகள் அங்கங்கே கிடந்தன. அவற்றை அகற்றி, நிலத்தைக் கொத்திப் பண்படுத்தினுற்றன் ஏதாவது பயன் கிடைக்கும்.

Page 29
44
அந்தக் களனியில் குடியேறிய பதினைந்து குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்ந்தன. உழைத் துப் பழகியவர்களாதலால், கஷ்டப்பட்டு உழைத் தார்கள். ஆண்கள், பெண்கள் அனைவரும் வயலில் வேலை செய்தனர்; ஒருவருக்கொருவர் ஒத்தாசை புரிந்தனர். கிணறு தோண்டுவதற்காகவும், காடு வெட்டுவதற்காகவும் அரசாங்கம் கொடுப்பதாகச் சொன்ன பணம் இன்னும் இவர்கள் கைக்கு வந்து சேரவில்லை !
சற்று மேடாக இருந்த இடத்தில் அவர் களுடைய வீடுகள் இருந்தன. அவற்றைச் சுற்றி வாழை, கமுகு, எலுமிச்சை முதலிய மரங்களை நட்டு வைத்தார்கள். தூரத்தேயிருந்த ஒரு குளத்தி லிருந்து தண்ணிர் ஒழுங்காக வந்து கொண்டிருந் தது. நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வயல்கள் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தன.
இனி, வயலில் வேலையில்லே. அறுவடை யாகும் வரை சும்மா இருக்க வேண்டும். சிலர் யாழ்ப்பாணம் திரும்பினுர்கள். வேட்டைப் பிரியர் கள், தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள் ளும்படி மற்றையோர்களிடம் கூறிவிட்டு, துப்பாக்கி களுடன் காடுகளில் அலைந்து திரியச் சென்ருர்கள். ஆண்களில் வேலு மாத்திரம் அங்கிருந்தான்மற்றைய பெண்களுக்குப் பாதுகாப்பாளஞக.
வேலை செய்யாமலிருப்பது வேலுவால் முடி யாத காரியம். ஏதாவது கூலி வேலை செய்யலாம் என்ற நோக்கத்துடன் ஒரு தடவை கிளிநொச்சிப் பட்டணத்திற்குச் சென்றன். அங்குள்ள ஓர் அரிசி

45
மில்லில் வேலை கிடைத்தது. மூடை தூக்குவது, நெல் அவிய வைப்பது, யந்திரத்தில் குற்றி அரிசி யாக்குவது, இவை அவன் செய்யவேண்டிய வேலைகள், காஜல ஏழுமணி முதல் இரவு எட்டுமணி வரைக்கும் வேலை செய்யவேண்டும். வேஜல முடிந்ததும், அலுத்துக் களைத்து, மில்லை அடுத்த கொட்டில்களில் தொழிலாளர்கள் தூங்கிவிடுவர். ஆணுல் வேலு, ஐந்து மைல்களுக்கப்பாலுள்ள
அந்தக் காட்டுப்பாதை வழியாகத் தன்னந்தனியே செல்வான். எந்நேரமானுலும் se6). SO/60DL-L வருகைக்காகக் காத்திருப்பாள் செல்லம். அவளை 6 மாற்றமடையச் செய்ய அவன் ஒரு போதும் விரும்பியதில்லை.
செல்லத்திற்கு இப்போது ஒன்பது மாதம். தாய்மையின் பூரணப் பொலிவுடன் விளங்கினுள். மணமாகி இரண்டாண்டுகளின் பின் இப்போது தான் அவளுக்கு அந்தப் பேறு கிட்டியிருந்தது.
செல்லத்திற்கு வகை வகையான தின்பண்டங் கள் வாங்கிக் கொடுக்கவேண்டும்; பழவகைகள் எல்லாம் கொடுத்து உடம்பைக் காக்க வேண்டும். அப்போதுதான் அவளுக்குச் சுகப் பிரசவம் ஆகும்-இதை எண்ணித்தான் அவன் மில்லில் சேர்ந்து கஷ்டப்பட்டுழைத்தான். s
வெற்றிலையையே தின்று சிவத்துப்போன செல்லத்தின் உதடுகளில் நெளிந்தோடும் புன் னகையை நினைத்தவுடன் காட்டுப் பாதையின் பயங்கரம் மறைந்துவிடும். இன்னும் சில நாட்களில்

Page 30
46
வெளிவர விருந்த செல்லக் குஞ்சைப் பற்றிய பேச்சில் இரவின் பெரும் பகுதி கழிந்துவிடும்.
நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. இவர் களுடைய இன்ப வாழ்க்கையைக் காண்பதற்காகப் போலும் கருமேகங்கள் சில இரகசியமாக ஓரிரவு அங்கே திரண்டு வந்தன. வந்த இடத்தில் அவை களுக்குள் சண்டை" ஏற்பட்டுவிட்டது. ஒன்றை யொன்று பார்த்துக் கோபச் சிரிப்புச் சிரித்தது ! தொடர்ந்து எல்லா மேகங்களும் தமக்குள் முட்டி மோதின வானமும் வழி விட்டது. ஒன்றுடன் ஒன்ருய், ஒன்றன்பின் ஒன்ருய் மின்னல், இடி, மழை எல்லாம் தொடர்ந்தன.
சிற்றறுகள், வாய்க்கால்கள் கரையை மீறிப் பாய்ந்தன. குளங்கள், ஏரிகள் எல்லாம் உடைப் பெடுத்தன. காடு முழுவதும் வெள்ளக் காடாகியது. இடைவிடாது பெய்த மழைக் காற்றல் வீடுகள் எல்லாம் சரிந்து விழுந்தன. கூச்சலிட்டபடி வெளியே வந்தனர் எல்லோரும். கண்ணைப் பறிக் கும் மின்னலொன்று வெள்ளத்தின் வேகத்தை அவர்களுக்கு விளக்கிக் காட்டியது. அதிக நேரம் அங்கு தங்கி நிற்பது ஆபத்து என்பதை அனை வரும் உணர்ந்தனர். வேலுவைத்தான் எல்லோரும் சரணடைந்தார்கள்.
வெள்ள மட்டம் வரவர உயர்ந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு வேலு புறப்பட்டான். இடுப் பளவு தண்ணிரில், அந்த இராட்சத இருளில் ஐந்து மை8லக் கடக்கவேண்டும் மின்னல் இடைக்கிடை வழிகாட்டியது. உயிரைக் கையில் பிடித்துக்

47
கொண்டு நடந்தார்கள். வெள்ளத்தில் மிதந்து வந்த மரக்கட்டைகள் வழித் திருடர்களைப் போல் அடித்துப் பயமுறுத்தின. புறப்படும் அவசரத்தில் கையில் எடுத்துக்கொண்டுவந்த சில பொருட்களே ஒவ்வொன்ருக வழியில் நழுவ விட்டார்கள். இவை போதாவென்று சில மனித உடல்களையும் ருசி பார்த்து விட்டாள் வெள்ளமாதேவி! கட்டுமீறிப் பாய்ந்த அந்த வெள்ளத்துடன் தங்கள் கண்ணிர் வெள்ளத்தையும் கரைத்துக் கொண்டு நட்ந்தார்
6.
பட்டணத்தை அடைந்தபோது பொழுது விடிந்து விட்டது. அங்கேயும் அரைவாசிப் பகுதிக்குமேல் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. வேலு வேலை பார்த்துவந்த மில்லை மேவி வெள்ளம் பாய்ந்தது. வீட்டின் கூரைகளிலும் கற்பாறைகள் மேலும், மரங்களிடையேயும் மக்கள் பயந்து, பதுங்கி, நடுங்கிக் கொண்டிருந்த காட்சி கண்(றவியாக இருந்தது.
வேலுவின் கூட்டத்தினர் ஒரு பெரிய மரத் தடிக்கு வந்து சேர்ந்தார்கள். நான்கு பக்கமும் கவர் விட்டு அழகாக வளர்ந்திருந்தது அந்த மரம். கவர்கட் கிடையில் சிறுசிறு தடிகளைக் கட்டிச் சில படுக்கைகள் தயார் செய்தான் வேலு. நிலத்தோடேயே நீண்ட தூரம் சாய்ந்து, பிறகு படிப்படியாக மேல் நோக்கி வளர்ந்த மரமாதலால், அதில் ஏறி இறங்குவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை.

Page 31
48
உடனேயே யாழ்ப்பாணம் சென்று விட வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றர்கள் பெண் கள். அவர்களிலும் பார்க்க அதிக அவசரப் பட்டவன் வேலுதான். செல்லத்தை எப்படியாவது யாழ்ப்பாணம் கொண்டு சேர்த்தாற்ருன் அவன் மனம் நிம்மதி அடையும் போல் தோன்றியது. ”
வெள்ளம் வீதிகள் எல்லாவற்றையும் அரித்து விட்டது. யாழ்ப்பாணம் முற்ருகத் துண்டிக்கப் பட்டிருந்தது. ரயில், பஸ் போக்குவரத்து ஒன்றுமே கிடையாது. இன்னும் சில நாட்களுக்கு அந்த மரத்தை நம்பித்தான் வாழவேண்டும்.
வயிறு கிள்ளத் தொடங்கியது. வெள்ளத்தைக் கொட்டி வினையை விதைத்த அதே வானத்தைத் தான் அண்ணுந்துபார்த்தனர்அகதிகள். இப்போது இடியும் மழையும் இல்லை. இனிய உணவுகள் கிடைத்தன இந்திய விமானப் படையினர், பானும், பச்சை வெண்ணெயும் போர்ஸல்களில் கட்டி மேலேயிருந்து இந்த அகதிகளுக்கு எறிந் தனர்.
அதிக நாட்கள் இப்படி இருப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. வெள்ளம் சிறிது சிறிதாக வடியத் தொடங்கவே, “செத்தாலும், பிறந்த மண்ணில் செத்து விடுவோம்? என்ற எண்ணத்துடன் யாழ்ப் பாணத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். பள் ளங்களில் விழுந்து, வெள்ளம் , அரித்த வீதிகளில் ஊசிமேல் நீடப்பதைப்போன்று நடந்து, மரப் பாலங்களைக் கடந்து ஒருவழியாக யாழ்ப்பாணத்தை அடைந்தனர். எல்லோரையும் அவரவர்க்கான

49
வீடுகளில் சேர்த்தபின் செல்லத்துடன் அவளுடைய தம்பியின் வீட்டிற்கு வந்தான் வேலு. அப்பாடா! நிம்மதியாக இரண்டு நாட்களை அங்கு கழித்த பிறகுதான் தன்னைப் பற்றி நினைத்தான் வேலு பாடுபட்டுச் சேகரித்த பணம், பானை, சட்டி, பாய், படுக்கை மற்றும் உடைமைகள் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய் விட்டது வெள்ளம். இனி வயிற்றுப் பாட்டிற்கு வழி? செல்லத்திற்கு ஏதாவது ஏற்பட்டால் செலவிற்கு 6T666Or செய்வது? s
கிளிநொச்சி வயலை நம்பிப் பிரயோசனமில்8ல. மில் இருந்த இடமே தெரியவில்லை என்று யாரோ சொன்னுர்கள். ஆகவேதான் யாழ் நகரில் வேலை தேடி அலைந்தான். அவனுக்கு வேலை கொடுக்க ஒருவருமே தயாராயில்லை.
sk 米 R ஏமாற்றத்தைத் தோழனுக்கி, . எரியும் வயிற்றை இறுக்கிப் பிடித்து, இரவென்று நிஜனத்து டுன்ப நித்திரையை அனுபவித்த வேலு திடுக் ட்ெடுக் கண்விழித்தான். யாரோ எறிந்த ஏதோ .Yரு பொருள் அவன் காலடிகளில் கிடந்தது. குனிந்து பார்த்தான். பணப்பை கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. ஒரு கணம் சபலம் தட்டியது. ஆசையை அடக்கிக் கொண்டான். சற்றுத் தூரத்தே நின்ற போலீஸ்காரரிடம் அதை ஒப்படைப்பதற்காகச் சென்றன்.
ஷ.. அண்ணே . இப்பிடிவா. நான் தான் உந்தப் பையை உன்னிடம் எறிஞ்சஞன்."
4

Page 32
50
யாரோ ஒரு தி மனிதன் தோள்களில் கையை
து அவனத் தடுத்து நிறுத்திகுன்
வேலு அவனுடன் சென்ருன். சந்தடியற்ற இடமொன்றை அடைந்தார்கள். பணம் கிடைத்த வரலாற்றை விளக்கினுன் புதியவன். Lu6ჩა6m66iა நுழைவதற்காகப் பலப் பரீட்சை செய்த மக்க ளிடையே புகுந்து களவாடிய பணம் அது
6இதுவும் ஒரு பிழைப்பா தம்பி? எவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமோ? கொண்டு போய்க் கொடுத்து விடு 9 வேலு உபதேசஞ் செய்தான். w
* பிழைக்கத் தெரியாதவனண்ணே நீ! வெள் ளத்தாலே பாதிக்கப்பட்டவங்கட்குக் குடுக்கும்படி கவுண்மேந்து குடுத்த காசைத் தன்ரை பொக் கற்றுக்குள்ளே போட்டுத் தானும் ஒரு பணக்கார ஞக வரவேண்டுமென்று ஆசைப்பட்டுக்கொண் டிருக்கிற ” ஒருத்தனிட்டைத் தட்டிப் பறிச்சது தானண்ணை இது.”
வேலு அப்புதியவனைப் பார்த்தபடியே நின் றன். ❖.ኦ
6 நியாயப்படி ஏழைகளாகிய எங்களுக்குச் சேரவேண்டிய பணந்தான் இது" இந்தா பிடி இதை வைத்துக்கொள்?? என்று சொல்லிச் சில தாள்களை வேலுவிடம் கொடுத்தான் அவன்.
நடுங்கும் கைகளுடன் பணத்தை வாங்கினுன் வேலு. நா8ளக்கும் இப்படித்தான்” என்று டுசல்லிச் சென்ருன் புதியவன்.

51
வேலுவின் மனம் போர்க்களமானது. பணம் கப்படி வந்தது? என்று செல்லம் கேட்டால் என்ன கிலேச் சொல்வது?.யாரிடமாவது கொடுத்து படுவோமா?. அவர்கள் என்னிலை சந்தேகப் பட்டுக் கைது செய்தால்..? செல்லத்தின் கதி.
*செல்லம் உனக்காகத்தான் இதை வாங்கி (Roor6ólo
செல்லத்தின் நினைவு வந்தவுடன் நேரே கடைக்குச் சென்றன். பல மாதிரியான தின்பண் ங்கள், பழ வகைகள் எல்லாம் வாங்கினுன். பணம் வந்த வழி அவனுக்கு மறந்தே போய் விட்டது !
அடுத்த நாள் பஸ் நிலையத்தில் வேலுவைச் சந்தித்தான் அந்தப் புதிய மனிதன். தங்களுடைய பஸ் என்ற உரிமையுணர்ச்சியினுலோ என்னவோ, ஆசை அருமையாய் அங்கு வந்து சேர்ந்த ஒரு பஸ்ளினுள் ஏறுவதற்கு, ஒன்பது பஸ்ஸில் ஏறக் கூடிய சனங்கள் முயன்று கொண்டிருந்தார்கள். உடைகள் கசங்க, வியர்வை வழிய, சப்பாத்துக் கால்கள் வெறுங்கால்களைப் பதம் பார்க்க, மெலிந் தவர்கள் கூச்சலிட வாலிபர்கள் முன்னேற-இப் படியாக நடைபெற்றது அங்கே போராட்டம், வேலுவையும் அந்தக் கூட்டத்தினுள் இழுத்துச் சென்றன் புதியவன். திரும்பி வரும்போது இரு வருடைய கைகளும் நிறைந்திருந்தன. ஒரேயொரு நாளில், அத்தொழிலின் நெளிவு, சுளிவுகளை அறிந்து கொண்டான் வேலு !

Page 33
52
இப்போதெல்லாம் அவன் கைதேர்ந்த தொழி லாளி. தொடக்கத்தில் இருந்த தயக்கம், நடுக்கம் எல்லாம் மறைந்து விட்டன. ஐந்து பத்து என்று ஒவ்வொரு நாளும் கிடைத்தது. பணத்தைப் பறி கொடுத்த சிலர் அவனிடமே வந்து தங்கள் கதை யைச் சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்து வேலுவும் பணத்தைப் பறித்த அந்தப் படுபாவி? யைத் திட்டுவான்! y
கையில் பசை கூடியபடியால் நண்பர்கள் பலர் அவனுடன் ஒட்டிக் கொண்டார்கள். சினிமா பார்ப்பதிலும், சீட்டாடுவதிலும் நேரம் செலவா னது. சில வேளைகளில் வீட்டுக்குக் கூடச் செல் லாமல், இரவிரவாகக் கண்விழித்துச் சீட்டாடு வான் வேலு. ஒவ்வொரு நாளும் அதிகப் பணத் தைக் கொண்டு போனுல், செல்லம் கூடச் சந்தேகப் படுவாளல்லவா?
நாட்கள் பறந்தன. செல்லத்தின் நினைவு திடீரென்று வந்தது அவனுக்கு. தொடர்ந்து மூன்று நான்கு நாட்களாக வீட்டிற்குச் செல்லவில்லை என்ற நினைவு அவனை என்னவோ செய்தது. அன்றைய பிழைப்பை முடித்துக் கொண்டு, மாஆலயில் கட்டாயம் வீட்டுக்குச் செல்லவேண்டு மென்று தீர்மானித்தான்.
அவனுடைய நல்லகாலம். அன்று முழுசாக ஐம்பது ரூபா கிடைத்தது. சீட்டாடுவதில் சிறிது நேரத்தைக் கழித்த பின் வீட்டை நோக்கிச் சென்றன். செல்லத்தை இனி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இது

53
பயன்படும் என்ற எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சி யையும் பெருமையையும் கொடுத்தது.
வீட்டில் ஒரே கூட்டம். அந்தப் பகுதியி லிருந்த ஏழைகள் எல்லோரும் ஒன்று கூடிக் கதறிக் கொண்டிருந்தனர். வேலுவைக் கண்டதும் அழுகை ஒலி அதிகரித்து. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்தது? என்ற கேள்விக்குப் பதிலளிப்பார் ஒருவருமில்லை. செல்லத்தையாவது கேட்கலாம் என்று நினைத்து உள்ளே எட்டிப் பார்த்தான்.
இதயமே நின்று விடும் போலிருந்தது. செல் லத்தின் உடல் மாத்திரம் அங்கே கிடத்தப் பட்டிருந்தது! செல்லம் போய்விட்டாள்.
அவள் உடலின் மேல் விழுந்து கதறிஞன் வேலு. தலையைப் போட்டு அடித்துக் கொண் டான். கொண்டு வந்த பணத்தின் நினைவு வந்தது.
* உனக்காகத்தானடி இந்தப் பணத்தைக் கொண்டு வந்தேன். இந்தா, இதை நீயே வைத்துக் கொள்..?? என்று சொல்லி அந்தப் பணத்தைச் செல்லத்தின் வாயில் திணித்தான் வேலு.
அந்தப் பைத்தியக்காரச் செயலைக் கண்டு சகிக்காமல் அவனை அப்புறப்படுத்தினர் அங்கிருந் தோர்.
* அத்தான்! இந்தப் பணத்தை நீ மத்தி யானமே கொண்டு வந்திருந்தால் அக்கா பிழைத் திருப்பாள். இரண்டுநாட்களாகவே அக்காவிற்குச்

Page 34
54
சுகமில்லை. வெள்ளத்தால் வந்த வினையென்று டாக்குத்தர் சொன்னுர். வயிற்றைக் கீறிப் பிள்ளையை எடுப்பதற்கு ஐம்பது ரூபாயாவது வேண்டுமென்றர். எனக்குத் தெரிந்த ஒருவரிடம் பணம் வாங்கி வரும்படி என்னுடைய சிநேகிதனை அனுப்பினேன். பணம் கிடைத்தது. ஆணுல் பணத்துடன் பஸ்ஸில் ஏறவரும்போது யாரோ ஒரு படுபாவி அதைப் பறித்து விட்டான் அத்தான்.? நடந்து முடிந்த விடயங்களைச் சுருக்கமாகச் சொல்லி அழுதான் செல்லத்தின் தம்பி.
68 ஆ. . . . பஸ்ஸிலா...!” என்று அலறிய படி விழுந்தான் வேலு.
*அத்தான். . . .அத்தான். , ..? என்று குளறி ஞன் செல்லத்தின் தம்பி. vn
வேலு பேசவில்லை. வாய் திறந்தபடியே கிடந்தது. அந்த வாய்க்குள் பணத்தைத் திணிக்க யார் இருக்கின்ருர்கள் ?
1958

நீலப்பட்டு
அலுவலகத்திலிருந்து அலுத்துக் களத்துப் போய் வந்த குமாரசாமியை அணுதை போன்றிருந்த வீடுதான் வரவேற்றது. வெளியில் தொங்கிய பூட்டு அவரை ஏதோவெல்லாம் கேட்டது. கை யுடன் கொண்டு வந்திருந்த சாவியைப் போட்டுப் பூட்டைத் திறந்தார். மனத்திலே இருந்த வெறுமை யுணர்ச்சி வீடு முழுவதும் பரவிவிட்டதைப் போன் றிருந்தது. திக்பிரமை பிடித்தவராய் நாற்காலி ஒன்றினுள் விழுந்துகிடந்தார்.
எங்கிருந்தோ ஒரு மெல்லிய ஒலி கேட்டது. கூர்ந்து கவனித்தார், அவர். தனக்கென ஒதுக்கி வைத்துள்ள சொந்த அறைக்குள்ளிருந்துதான் வருகின்றதா? அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவருடைய மனைவி சுகுணு கூட அந்த அறைக்குள் செல்ல முடியாது. இப்போது அவள் அந்த வீட்டிலேயே இல்லை. காலையில் அலுவலகத் திற்குச் சென்றபோது அறைக் கதவுகள் எல்லா

Page 35
56
வற்றையும் பூட்டி விட்டுச் சாவிக் கொத்தையும் தன்னுடனேயே எடுத்துச் சென்றிருக்கின்ருர், அப்படியானல் அந்த அறைக்குள்ளிருப்பது யாரா யிருக்கக்கூடும்? அவர் நெஞ்சு திக்’ என்றது.
மெதுவாகக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தார் குமாரசாமி. அந்த மாதச் சம்பளத்தின் பெரும் பகுதியைக் கொட்டி ஆசை யோடு அவர் வாங்கிய அழகான சேலையை 巴沙g}点 லாக ருசி பார்த்துக் கொண்டிருந்தது எலியொன்று! திருடர்களோ என்று திகைப்படையச் செய்த ஒலி அந்த இடத்திலிருந்துதான் பிறந்தது! அடக்க முடியாத ஆத்திரத்துடன் அருகிலிருந்த நாற் காலியை விட்டெறிந்தார் எலியின் மீது. இலக்கு தவறி விட்டது. ஒரு கை பார்ப்பது என்ற தீர்மா னத்துடன் மேலும் பல முயற்சிகள் செய்தார். அவருடைய ஆத்திரத்தை உணர முடியாத அந்த "மிருகசாதி அவருடன் ஒளித்து விளையாடத் தொடங்கியது. நாற்காலிகளை முறித்து, கண்ணுடிப் பொருட்களை உடைத்து அறையையே அலங் கோலப் படுத்தியதுதான் மிச்சம். எலி தப்பி ஓடி எங்கோ மறைந்துவிட்டது!
சோர்ந்து போய் ஒரு மூஆலயில் சாய்ந்தார் குமாரசாமி. உடலை அங்கிங்கு அசைக்க (Lolqtu வில்லை. உள்ளம் பழைய நிகழ்ச்சிகள் பலவற்றிற் குப் பறந்து பறந்து சென்றது.
s 米 米
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது அது.
குளித்து விட்டுத் தன் அறைக்குத் திரும்பிக்கொண்

57
டிருந்தார், குமாரசாமி. எதிரே கண்ணுடியின் முன்பு மனைவி சுகுணு நின்ருள். முதனுள் அவர் வாங்கிய ஆகாச வர்ணப்பட்டு அவளுடைய தோளில் கிடந்தது. பொருத்தம் * பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் !
இந்தக் காட்சியைக் கண்டதும் பொங்கி எழுந்த கோபத்தை அவரால் கட்டுப்படுத்த முடிய வில்லை. எட்டி நடந்து சென்று புடவையை இழுத் துப் பறித்தார். அவள் திரும்புவதற்கிடையில் 6 பளார் பளார்? என்று அவள் கன்னங்களில் அறைந்தார்.
* யாரைக் கேட்டடி இந்தப் புடவையை எடுத் தாய்?’ அவரது ஆவேசக் குரல் அவளை அதிர வைத்தது. கைகள் கன்னத்திலிருந்து முதுகிற்குத் தாவின. அடிமாரி பொழிந்தது
அந்த முரட்டுக் கரங்களின் வலிமையைப் பொறுக்க முடியாது சுருண்டு விழுந்தாள் சுகுணு. அவளைத் தவிர அந்த வீட்டில் வேறு பெண் கள் இல்லை. குமாரசாமிக்கும் சகோதரிகளோ, நெருங்கிய உறவில் பெண்களோ கிடையாது. தீபாவளி நெருங்கிய வேளையில் அவ்வளவு அழகான புடவையை அவர் யாருக்காக வாங்கி யிருப்பார்? சுகுணுவிற்காகத்தானே! h
இந்த எண்ணத்தினுற்ருன் சுகுணு அந்தப் பட்டுச் சேலையை எடுத்து அழகு பார்த்தாள். அது தவருக இருந்தாலும் அவ்வளவு முரட்டுத்தனமாக அவர் நடந்திருக்க வேண்டியதில்லையே!

Page 36
58
ஆணுல் பணிந்து போகவே விரும்பியது அந்தப் பெண் உள்ளம். அவரை எதிர்த்துப் பேசிக் காரணத்தை விளக்க விரும்பவில்லை. ஒன்றுமே நடக்காததைப் போன்று எழுந்திருக்க முயன்ருள்.
உடை மாற்றச் சென்ற குமாரசாமி திரும்பி வந்தார். சிறிய முடிச் சொன்றை அவள் கையில் திணித்தார். அவளே ஒன்றுமே பேச விடவில்லை. உடனேயே வண்டியிலேற்றி ஊருக்கனுப்பிய பின் தான் குமாரசாமியின் கோபம் ஓரளவு குறைந்தது.
米 米 米
மறுபடியும் அந்தச் சத்தம் கேட்டது. கண் களை விழித்து மேலே பார்த்தார். அதே எலி எட்டாத இடத்திலிருந்து எட்டியெட்டிப் பார்த்தது. 6 என்னை என்ன செய்து விட்டாய்?" என்று கேட்டதோ !
அவரால் என்னதான் செய்ய முடிந்தது? அந்தப் புடவைத் தொட்டுவிட்ட ஒரே குற்றத்திற் காக, வாழ்வின் இன்ப துன்பங்களில் பங்குகொள்ள வந்தவளை வண்டியிலேற்றி ஊருக்கனுப்பி வாழா வெட்டியாக்க முடிந்தது. புடவையையே கடித்து நாசமாக்கிய எலியை..?
அவள் பெண். அவரையே கண் கண்ட கடவு ளாகக் கருதிக் காலத்தைக் கழிப்பவள்.
எதிர்த்துப் பேச உரிமை இருந்தும், கணவன் என்றபடியால் ஒன்றுமே பேசாது ஊமையாகி விட்டவள். அந்தப் பேதைக்கு அவர் அளித்த தண்டனை சரிதானு?

59
இந்தக் கேள்வி அவர் நெஞ்சை அரிக்கத் தொடங்கியது. w
米 米 米
அவர் மனம் 'விரும்பித்தான் சுகுணுவை மணம் செய்தார். ஒரு பெண்ணில் காதல் கொண்டுவிட்டு, சில காலத்தின் பின் அதே அளவு அன்பை வேருெரு பெண்ணின்மீது சொரிவது சாத்தியமானுல் அவர் செய்து கொண்டது காதல் திருமணம் என்று கூடச் சொல்லலாம் !
அவருடைய மனதறிந்து நடந்து வந்தாள் சுகுஞ்,ை செய்யவேண்டிய பணிவிடைகளைத் தவறது செய்தாள். அவருக்குப் பிடிக்காத விஷ யங்கள் அவளுக்கும் பிடிக்கா.
குமாரசாமியும் தன்னைத் தகுந்த கணவராக ஆக்கிக்கொண்டார். சுகுணுவின் மனம் நோகாத வாறு எல்லாவற்றையும் செய்தார். அவளாக எதையும் கேட்பதற்கு விடவில்லை. சம்பளம் எடுத்தவுடன் அவளுக்குத் தேவையான எல்லா வற்றையும் வாங்கிவிட்டுத்தான் மறு வேலை பார்ப் பார். குடும்பச் செலவிற்கான பணத்தையும் அவளிடம் கொடுத்து விடுவார். பின் அதன் விபரங்களைக் குடைந்து குடைந்து கேட்பதில்லை. முக்கியமான கூட்டங்களுக்கும், நாடகம், சினிமா முதலியவற்றிற்கும் இருவரும் சேர்ந்தே செல்வார் கள்.
இவ்வளவையும் செய்து அவளுடன் நெருங்கி வாழ்ந்த போதிலும் அவரால் தன்னை முழுக்க அவளுடையவராக்க முடியவில்லை. w t

Page 37
60
ஏதோ ஒரு நினைவு அவரை அடிக்கடி வாட்டி யது. சில வேளைகளில் தனியாக ஓரிடத்திற்குச் சென்று அழுது கொண்டேயிருப்பார். அவருடைய மனப்பாரம் ஓரளவு குறையும். ஆணுல் அந்த நினைவை மட்டும் முழுதாக அகற்ற முடியவில்லை.
சுகுணுவின் தூய அன்பை எண்ணும்போது அவர் தன்னையே நொந்து கொள்வார். வாழ் வையே குலைத்து உயிரைக் குடித்துவிடக் கூடிய அந்த நிகழ்ச்சியை அவளிடமே வெளிப்படை யாகச் சொல்வதற்குப் பலதடவை அவர் முயன்ற துண்டு. ஆணுல் அதற்கேற்ற தைரியம் அவரிடம் இல்லை. தன் அந்தரங்க உணர்ச்சிகளை அவள் அறியாதவாறு மறைத்து வந்தார்.
இரண்டு ஆண்டுகள் உருண்டன. இரண்டு தடவை தீபாவளியும் வந்து போய் விட்டது. முதல் தீபாவளியின் போது நடந்தவை இப்போதும் அவர் நெஞ்சில் பசுமையாய் இருந்தன.
米 米 米
தலைத் தீபாவளி’ என்ற நினைவு சுகுணுவைப் பூரிக்கச் செய்தது. மிகவும் சிறப்பாகக் கொண் டாடுவதற்குத் திட்டம் போட்டிருந்தாள் அவள். அவற்றை ஆசையுடன் அவள் வெளியிட்டபோது, அநாவசியச் செலவு’ என்று திட்டமெல்லாவற் றையும் தரைமட்டமாக்கி விட்டார்.
அதைக் கேட்டவுடனே அவளுடைய முகத் தில் ஏற்பட்ட மாறுதல்கள்.

61
ஆணுல் அவர் தனியாக அன்று செய்த வேருெரு செய்கையை அவள் அறிந்திருந்தால், அவள் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் ! *அநாவசியச்செலவு என்று அவளுடைய ஆசைக் கனவுகளைச் சிதறடித்த அவர் அதிக செலவில் அழகான புடவை ஒன்றை ஏற்கெனவே வாங்கித் தான் இருந்தார். நிழலை விட்டு நீங்க விரும்பாத சுகுணுவிற்காக அல்ல; நினைவை விட்டு நீங்க மறுத்த மற்றெருத்திக்காக !
米 米 米
தன் இதய பீடத்திலே மல்லிகா என்ற பெண் ணழகியை ஏற்றி வைத்திருந்தார் குமாரசாமி. உயிரும் உயிரும் கலந்து நெஞ்சும் நெஞ்சும் ஒன் றன அந்த இருவரும் எத்தனையோ இன்பக் கோட் டைகள் கட்டியிருந்தார்கள். இன்ப உலகம் தங்கள் காலடியில் கிடப்பது போன்ற நினைப்பில் நீந்தினுர் கள் அந்த இலட்சியக் காதலர்கள். மல்லிகாவிற்கு நீலநிறச் சேலை மிகவும் எடுப்பாக விருக்கும். தன் அன்புப் பரிசாக ஒரு நீலப் புடவையை அவளுக் குக் கொடுப்பதற்காகத் தீபாவளியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்.
எதிர்பாராத சம்பவங்கள் எல்லாவற்றையுமே சிதறடித்து விட்டன. மல்லிகா வேறு யாருக்கோ கழுத்தை நீட்டும்படி நிர்ப்பந்திக்கப்பட்டாள். குமாரசாமியால் அதைத் தடுத்து நிறுத்த முடிய வில்லை. நினைவில் மட்டுமே அவளைத் தன்னுடைய வளாக்க அவரால் முடிந்தது.
தீபாவளி வந்தது. மல்லிகாவிற்காக அவர் வாங்கிய சேலை மடிப்புக் கலையாமல் கிடந்தது.

Page 38
62
அன்று முழுவதும் தன் அறைக்குள்ளே அடை பட்டுக் கிடந்து அவளை நினைத்து அழுது தீர்த்தார்; மனமொடிந்து போய் ஓராண்டு காலம் நடைப் பிணமாகத் திரிந்தார். பின்புதான் சுகுணு அவர் வாழ்வில் குறுக்கிட்டாள்.
ஆணுலும் என்ன? அவருடைய இதயக் கல்லில் மல்லிகாவின் சிற்பந்தான் செதுக்கப்பட் டிருந்தது. நினைவுத் திரையில் மல்லிகாவைக் கொண்டு வந்து நிறுத்தி, தன் கையாலேயே அலங் கரித்து அழகு பார்ப்பார் 1 மானசீகமாக அவளு டன் உரையாடுவார். அவளுக்கெனப் பரிசுப் பொருட்கள் வாங்கித் தன் அறையையே நிறைத் தார். அவருடைய அன்பின் தீவிரத்தை உணராத வர்கள் இவற்றைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லலாம். ஆணுல் அவருக்கு அதில் ஒருவித திருப்தி ஏற்பட்டது. மல்லிகாவை நினைத்து அழுவதில் மன அமைதி கிட்டியது.
இந்த விசித்திரச் செயல்களைச் சுகுணு கவனித் திருந்தாள். கட்டிய கணவன், வேருெருத்தியைக் கருத்தில் வைத்திருக்கிருனென்பதை அறிந்தால் எந்தப் பெண்தான் பொறுப்பாள் ?
சுகுணு சாமர்த்தியசாலி ; எல்லாவற்றையும் சமாளித்துவந்தாள்.
米 §ද ck
இரண்டாவது தீபாவளியும் எப்படியோ கழிந் தது. குமாரசாமியின் விருப்பத்தை அறிந்து, அதற் கேற்றபடி தன்னை மாற்றிக் கொண்டாள் சுகுணு.

63
முதல் தடவையைப் போன்று மனக்கசப்பு ஏற்பட வில்லை; மாறக மகிழ்ச்சி பொங்கவுமில்ஜல.
ஆணுல் இந்த மூன்ருவது தீபாவளி? மல்லிகா வைத் தவிர வேறு எவருமே ஆகாச வர்ணப் புடவை உடுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என் பது இவர் முடிவு. ஒவ்வொரு தீபாவளியின்போதும் அவளை நினைத்துக் கொண்டு வாங்கிய புடவைகள் அறையுள் மறைவாக வைக்கப்பட்டிருந்தன. வழக்கத்திற்கு மாறக இந்தத் தடவை அப் புதுப் புடவையைச் சுகுணுவின் கண்களில் படும்படி வைத்தது அவர் குற்றந்தானே. இயற்கையாகவே ஓர் இளம் பெண்ணின் இதயத்தில் எழுகின்ற இன்பக் கற்பனைகளையெல்லாம் அவருக்காகத் தியாகம் செய்துவிட்டு அவருடன் வாழ்ந்தாளே அவள் மனதறிந்து தவறிழைப்பாளா?
திரும்பத் திரும்ப யோசித்தபோது சுகுணுமேல் குற்றமில்லை என்ற முடிவிற்குத்தான் அவரால் வர முடிந்தது. களங்கமற்ற அவள் கன்னத்தில் அடித்ததை நினைத்தபோது, அவர் கை வலித்தது; நெஞ்சு கலங்கியது. உணர்ச்சி வெறிக்கு அடிமை யாகி மிருகமாக மாறி அந்தச் செயலைச் செய்து விட்டார்; ஆறுதலாக எண்ணியபோது, பச்சாத் தாபம் தலை தூக்கியது.
தன் கைபட்ட வலி பொறுக்க முடியாது சுருண்டு விழுந்த சுகுணுவின் நிலை அவர் மனக்கண் முன்னே தோன்றியது. வெளியே வந்து விடுமோ என்று பயப்படும்படி குமுறித் தவித்த நெஞ்சை இறுகப் பிடித்துக் கொண்டார். அன்று காலையில்

Page 39
64
தன் சட்டைப் பையினுள் வைத்த கடிதம் ஒன்று அப்போது அவர் கைகளை உறுத்தியது.
அலுவலகத்திலிருந்த போதே அந்தக் கடிதம் வந்து விட்டது. ஆணுல் பிரித்துப் படிக்கும் மணுே நிலை இல்லாதபடியால் அப்படியே வைத்துவிட் டார். மனம் இளகிவிட்ட இப்போது கடிதத்தைப் பிரித்து மள மள என்று வாசித்தார்.
நெஞ்சை உருக்கும் வண்ணம் சுகுணு எழுதி யிருந்தாள் :-
என் தெய்வமே !
தங்கள் பிரிவைப் பொறுக்க முடியாத துயரத்
துடன் இக் கடிதத்தை எழுதுகின்றேன். உங்கள் மஜனவி என்ற உரிமை யுணர்ச்சியினுற்ருன் நான் அன்று அப்படி நடந்துவிட்டேன். ஆணுல் நீங்கள் நடந்து கொண்ட முறை என்னை வாயடைக்கச் செய்துவிட்டது. வாயைத் திறந்து மன்னிப்புக் கேட்க என்னுல் முடியவில்லை. நீங்களும் என்ஜினப் பேசவிடவில்லை. த வறு என்னுடையதுதான். தயவு செய்து மன்னித்து விடுங்கள்.
இன்னுமொரு முக்கிய விஷயத்தை இன்றைக்கு எழுதுகின்றேன். எனக்குத் தெரியாது? என்று தாங்கள் எண்ணிக்கொண்டிருந்த அந்த விஷயம்மல்லிகாவிற்கும் தங்களுக்குமிடையே யிருந்த தொடர்பை நான் நன்கறிவேன்.
அன்பின் சக்தியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண் டிருப்பவள் நான். அன்பினுல் கட்டுண்ட நீங்க ளிருவரும் மணம் செய்திருந்தால் நான் உண்மை யிலேயே மகிழ்ந்திருப்பேன். ஆணுல் 6 விதி

65
உங்களைப் பிரித்து. விட்டது! என் கண்*தான் உங்களில் பட்டு விட்டதோ என்று கூடச் சில சமயம் நான் வேதனைக் கண்ணீர் வடித்திருக் கிறேன். என் நெஞ்சு உங்களையே நினைக்கத் தொடங்கியது. காரணத்தை விளக்க என்னுல் முடியவில்லை. எப்படியாவது மறுபடியும் உங்களைச் சந்தோஷமாக வாழவைக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். தங்களுடைய பழைய வாழ்க் கையை அறிந்து கொண்டே தங்களுக்கு மாலை யிட்டேன், மனம் விரும்பி.
எனக்காக நீங்கள் எவ்வளவோ வசதிகள் செய்து கொடுத்தீர்கள், உரிமைகளைத் தந்தீர்கள் ஆணுல் நான் எதிர்பார்த்தது உங்களுடைய தூய உள்ளக் கலப்பு ஒன்றையே. ஆனல் அது கிட்ட வில்லை. ஒட்டி வாழ மட்டும் உங்களால் (Lpb[q. ULI
உங்கள் அறையினுள் இருந்து தனிமையில் கண்ணிர் வடித்தபோதெல்லாம் ஓடிவந்து ஆறுதல் கூறி அமைதியடையச் செய்ய என் உள்ளம் துடித்திருக்கின்றது. நீங்க ளே என்னிடம் ஒன்றையும், சொல்லாதபோது நானுக வலிய வந்தால் ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம் என்னைத் தடுத்து நிறுத்தும்.
அன்பே !
இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் பங்கு கொள்ளவே நான் விரும்புகின்றேன். நீங்கள் அவளுக்காக வாழுங்கள்; அவளையே நினையுங்கள்;
5

Page 40
66
நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆணுல் நானும் ஒரு பெண் என்பதை, உடல் கனமும் உடைப் பொலிவும் மாத்திரமல்ல, உயிர்த் துடிப்பும் உணர்ச்சிப் பெருக்கமும் உள்ளவள் என்பதை மறக்காதிருந்தால் போதும்.
நான் செய்த பிழையைப் பொறுத்துக்கொண்டு மறுபடியும் எனக்கு வாழ்வளிப்பீர்களா?
உங்கள்,
சுகுணு
கடிதத்தைப் படித்து முடித்தார். கடை விழி களில் துளித்த நீரைத் துடைத்தார். சுகுணுவை நினைத்து ஏங்கியது அவர் உள்ளம்.
உள்ளதைக் கொண்டு ஒழுங்காக வாழ முடி யாதவன், இல்லாதவற்றிற்காக ஏங்கி என்ன பயன்? எவ்வளவோ படித்தும் அவர் உணரத் தவறிய இந்தப் பேருண்மையை அந்தக் கடிதம் நன்கு பதிய வைத்துவிட்டது.
மல்லிகா நல்லவளாக இருக்கலாம். அவளைப் பற்றி நினைப்பதிலே அவர் மகிழ்ச்சி அதிகரிக் கலாம். அதற்காக, தன் அன்பையெல்லாஞ் சொரிந்து, அவரை மகிழ்விக்க வேண்டுமென்ற சீரிய நோக்கத்துடன் அவர் வாழ்விலும் தாழ்விலும் பங்கு கொள்ளத் துடிக்கும் ஒரு பெண்ணை ஏன் அநியாயமாகக் கலக்க வேண்டும்!
*சுகுணு ! உன்னைக் கைவிட மாட்டேன். நீ தான் மல்லிகா.இல்லையில்லை; என் சுகுணுதான்

67
நீ. என் உயிர், என் உடல், என் உலகம் எல்லாமே இனி நீதான்.... குமாரசாமி வாய் விட்டே அலறிஞர்.
ஒரு பாவமுமறியாத சுகுணுவை வாரியணைத்து தேறுதல் கூறத் தவியாகத் தவித்தது அவர் உள்ளம். போட்டது போட்டபடியே கிடக்க வீட் டைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டார். அழகான ஒரு நீலப் புடவையை வழியிலே வாங்கிக் கொண்டார். மூன்ருவது தீபாவளியை முதல் தீபாவளியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விரைந்து
சென்ருர் சுகுணுவிடம் !
1959

Page 41
வெறி முறிந்தது! t LTS? • • • • • • LUTS? • • • • • • UITS? • • • ...»
99 p pop beg Oso oo o O p
*டேய் பாலு, ... எங்கேடா போட்டாய்...." மகனை அழைத்தபடியே உள் அறைக்குச் சென் ருள் செல்லம். பாலு இருந்த நிலை அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. முழங்கால்களில் கைகளை ஊன்றி அவற்றின்மேல் நாடியைச் சாய்த்தபடி எதையோ ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான் UITS? •
6 டேய், எட்டு மணியாச்சு. இன்றைக்கு பள்ளிக்கூடம் போவதில்லையா?* அதட்டினுள் செல்லம்.
6இல்லையம்மா, நான் இனிமேல் பள்ளிக்கூடம் போகப் போவதில்லை?. பாலுவின் குரல் கரகரத்தது. கண்களில் நீர் துளிர்த்தது.
செல்லத்திற்கு ஆத்திரம் பொங்கியது. 6துரை ஏதோ உத்தியோகம் பார்க்கப் போகுதாக்கும். . . .

69
ஐந்தாம் வகுப்புக் கூடப் பாசு பண்ணேல்லை. அதற்கிடையில் உனக்கென்னடா வந்துவிட்டது?”
பாலு ஒன்றும் பேசவில்லை. செல்லம் அவனையே பார்த்தபடி நின்ருள். பாலுவின் கன்னத்தில் வழிந்த கண்ணிர் அப்போது தான் செல்லத்தின் கண்களுக்குத் தெரிந்தது.
பதறிப்போய்க் கேட்டாள், “ஏனடா அழுகிருய் தம்பி? பள்ளிக்கூடத்தில் யாராவது அடித்து விட் டார்களா?. . . . . . . கொப்பர் தான் நினைத்தபடி நடக்கிருர், நீயாவது நல்ல பிள்ளையாயிருப்பா யென்று நம்பினேன். கடைசியில் நீகூட இப்படி மாறி விட்டாயே!99
*அம்மா! வீணுக என்னை ஏனம்மா கோபிக் கிருய்? பள்ளிக்கூடம் போவதானுல் குறைந்தது பத்து ரூபாயாவது கொண்டுபோக வேண்டும். இவ்வளவு நாளாச்சு, ஒரு புத்தகமும் நான் வாங் (ჭტნ6ზზსა. எத்தனை நாட்களுக்கு வாத்தியாரை ஏமாற்றலாம்??
செல்லத்தின் நெஞ்சிலிருந்து ஓர் ஆறுதல் பெருமூச்சு வந்தது. இதற்குத்தான் இவ்வளவு துாரம் யோசித்தாயா? நீ எழுந்து உடைகளை மாற்று. நான் பணத்தை எடுத்து வருகின்றேன்?.
சிறிது நேரத்தில் பணத்துடன் திரும்பி வந்தாள் செல்லம்.
“9th DIT'
466rsir?'

Page 42
70
*நான் எப்போதுமே சிறுவனுக இருக்க முடி, யாதம்மா. இந்த வீட்டில் நடப்பவற்றை இனிமேல் என்னிடம் மறைத்துப் பிரயோசனமில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் இப்படிக் கடன் வாங்கப் போகிருய்?99
அவனை உருட்டி விழித்துப் பார்த்தாள் அன்னை. 'டேய் பாலு, அந்தக் கவலையெல்லாம் உனக்கு வேண்டாம். என்ன வேண்டுமோ கேள். நான் தருகிறேன். . . . . , , , சரி, நேரமாய்ச்சுது, பள்ளிக்கூடத்திற்கு ஒடு. . . . . .*
*காசில்லா விட்டால் கால் துரசென்றும் எங்களை ஒருவரும் மதிக்க மாட்டார்கள். கடன் வாங்கினுல் கடைசியில் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும். ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்....? என்று சொல்லி விட்டுப் பள்ளிக்கூடம் சென்ருன்
IIT gl.
அதுவரை கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த துக்கம் இப்போது கட்டுமீறிப் பாய்ந்தது. தன் குடும்பத்தை நினைந்து நினைந்து, உள்ளம் நைந்து அழுதாள் செல்லம். தன் பரிதாப நிலைக்காகக் கண்ணிர் வடிப்பதிலே பகற்பொழுதில் பெரும் பகுதி கழிந்தது.
。米 米 事
மணி நாலுக்கு மேலாகிவிட்டது. பதற்றத் துடன் எழுந்தாள் அவள். மத்தியானச் சாப்பாட் டிற்கு மகன் அன்று வராதது நினைவிற்கு வந்தது. ஓடோடியும் சென்ருள் வாயிலுக்கு. ஒருவரையுமே

71
காணவில்லை வீதியில். உள்ளம் சோர்ந்தது. பசிக்களே o L-3;u& தள்ளாடச் செய்தது. தூஞெணன்றில் சாய்ந்தாள்.
‘அம்மா!. O . அம்மா. 8) ...’
பாலு வந்து விட்டான். அந்தக் குரல் தேவாமிர்தமாகப் பட்டது, செல்லத்திற்கு.
*உன்னைக் காணுது நான் எவ்வளவு பயந்து விட்டேன் தெரியுமா? இன்று மத்தியானம் ஏன் சாப்பிடுவதற்கு வரவில்லை ???
‘இன்று தொடக்கம் பள்ளிக்கூடத்தில் ஒரு துண்டு ரொட்டியும், ஒரு கிளாஸ் பாலும் கொடுக் கிருர்களம்மா....எனக்காக மத்தியானச் சாப்பாடு தயாரிக்கும் கஷ்டம் உனக்கு இன்றுடன் நீங்கி விடும். ...?
உனக்குப் பாலும் வேண்டாம். பானும் வேண்டாம். கண்டதெல்லாவற்றையும் தின்ருல் உடம்புக்காகாது. நீ ஒழுங்காக வீட்டிற்கு வா. சுடச்சுடச் சோறு சாப்பிடலாம்.??
66ஏனம்மா உனக்கிந்த வீண் பயம் ? பாண் சாப்பிட்டு வருத்தம் வருமென்ருல், அரசாங்கம் (1ழந்தைகளுக்கு ஏன் அதைக் கொடுக்கப் Căt répg?... . நாங்கள் இப்போதிருக்கும் நிலைமை யில் ஒரு நேரச் சாப்பாடு மிஞ்சுவது எவ்வளவு நல்லது தெரியுமா ?*
* அப்படி * மிச்சம் பிடித்துதான் நாங்கள் குபேரர்களாகப் போகின்ருேமாக்கும். சரி, அப்பு

Page 43
72
வரும் நேரமாச்சு. கால் கைகளைக் கழுவி விட்டுப் போய்ப்படி. சமைத்தவுடன் கூப்பிடுகின்றேன்.?
அதற்குமேல் தாயுடன் வாதாட விரும்ப வில்லை, பாலு. அப்பால் சென்று விட்டான்.
கணவனை வரவேற்கத் தயாராணுள் செல்லம். அவனை நினைத்தபோது, நெஞ்சில் அருவருப்புத் தோன்றியது. கணவன் பரமு ஒரு பிறவிக் குடி காரன்.? கள்ளுத் தேவியுடன் கைகோத்துக் கொண்டு, சாராயராணியுடன் சரசமாடுவது தான் அவன் தொழில். கஷ்டப் பட்டு உழைக்கும் பணம் முழுவதும் அப்படித்தான் கரைந்தது. குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள் செல்லம். வீட்டிலிருந்த பரமு, செல்லம், பாலு-என்ற மூன்று உயிர்களையும் தவிர விற்பதற்கு வேறு ஒன்றுமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இருந்தும், தெரிந்த வர்களிடம் கடன் வாங்கி ஒரு மாதிரிச் சமாளித்து வந்தாள் செல்லம்.
இன்றைக்கு என்ன திருக்கூத்தேர்தெரியாது. என்றுதான் இந்தத் தொல்லை நீங்குமோ? என்று பெருமூச்சு விட்டபடி எழுந்தாள் செல்லம்.
*குடியைக் கெடுப்பது குடி. மிடியைக் கொணர்வது குடி, மிடிமைக்கு விடிவு காண வேண்டுமானுல் குடிக்கும் பழக்கத்திற்கு முடிவு தேட வேண்டும்.?-உள் அறையிலிருந்து பாலு படித்தது செல்லத்தின் காதுகளில் புகுந்து அவளே ஒரு கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றது ‘கடவுளே! அருமைக் கணவனுடனும் அன்பு

73
மகனுடனும் ஆனந்தமாக வாழ்வதற்கு என்றுதான் வழி செய்வாயோ?
*டீய். . . . டியேய். . . .செல்லி! படலையைத் திறவடி. , ..??
கணவன் வந்து விட்டான். தன் காதுகளைப் பொத்துவதா அல்லது மூக்கைப் பொத்துவதா என்று தெரியாமல் அவஸ்தைப் பட்டாள் செல்லம். அதிக நேரம் தாமதிப்பது ஆபத்து என்பதை அனுபவத்தில் உணர்ந்த அவள் ஓடிப்போய்ப் படலையைத் திறந்தாள்.
தள்ளாடியபடியே உள்ளே வந்து விழுந்தான் பரமு. பாலுவின் குரல் அப்போதுதான் அவன் கர்துகளில் விழுந்தது.
*யார்ர். . . . ரு அவன்? கள்ளு, கள்ளு என்று கத்திருனே, யாரடி அந்தக் குடிகாரன்?*
* உஷ் சத்தம் போடாதீர்கள். பாலுதான் படித்துக் கொண்டிருக்கிருன்.* செல்லம் அவன் வாயைப் பொத்தினுள்.
* ஆ! பாலுவா...? டேய் பாலு வாடா இங்கே?
பாலு வந்தான். தகப்பனைக் கண்டதும் ஆத்திரம் அவனையறியாமலே அவன் முகத்தில் வந்து அமர்ந்து கொண்டது. நிலைமையைச் சமாளிக்க முயன்ற செல்லம், “பாலு நீ போய்ப்படி, அப்புவுடன் இப்போது நீ பேச வேண்டாம்.” என்று இரகசியமாகச் சொன்னுள்.

Page 44
74
6 என்ரை பொடியனைப் போகச் சொல்வதற்கு நீ யாரடி??? என்று கேட்டுக் கொண்டே செல்லத்தின் தலைமயிரைப் பற்றி யிழுத்தான் பரமு.
பாலுவால் பொறுக்க முடியவில்லை. வார்த்தை கள் வெடித்துப் பறந்தன. 88 நாலுபேரைப் போல் நல்லவராக வாழத் தெரியாத உங்களுக்கு அம்மாவைத் தொடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? குடிகாரன் என்று பெயரெடுக்க வெட்கமில்லை? கள்ளு கண்ட இடமெல்லாம் கை நீட்டி வாங்கிக் குடிப்பது; பிறகு இங்கு வந்து எட்டு வீடு கேட்கக் கத்துவது இது தானே அப்பு உங்கள் தொழில்? உங்களை எதிர் பார்த்துக் கொண்டு ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்தீர்களா? உங்களால் இந்த ஊர் முழுவதுமே எங்களுக்குக் கடன். இனியும் நீங்கள் இப்படி நடப்பதானுல், ஒன்றில் நானும் அம்மாவும் இங்கிருந்து வெளி யேற வேண்டும். அல்லது நீங்கள். . . .?? -
பாலு பேசி முடிக்கவில்லை. செல்லம் சீறினுள்.
6 நிறுத்தடா பாலு. இதுதானு நீ பள்ளிக் கூடத்தில் படிப்பது? பெற்ற தகப்பன் என்ற மரியாதை இல்லாமல் இப்படியா பேசுவது?” என்று சொல்லிக் கொண்டே அவன் முதுகில் அடித்தாள், குத்தினுள், கிள்ளினுள். அப்படி யிருந்தும் அவன் ஆத்திரம் அடங்குவதாயில்லை.
* ஐயோ! அம்மா..இனிமேல் இப்படி நடக்க மாட்டேனம்மா. ஐயோ..? குளறிஞன் பாலு; கூச்சலிட்டான்.

75
"எங்கேயாவது ஓடிப் போ நாயே? என்று: பாலுவைத் தள்ளினுள் செல்லம்.
பத்திர காளியைப்போல் நின்ற செல்லத்தைப் பார்க்கவே பயமாயிருந்தது பரமுவிற்கு. அவன் வெறி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.
*செல்லம்..!?? மெதுவான குரலில் அழைத். தான் பரமு.
செல்லத்தின் குரலிலும் இப்போது கனிவு பிறந்தது.
68 நீங்கள் பேசாமல் படுத்திருங்கள். சமையல் முடிந்தவுடன் கூப்பிடுகின்றேன்? என்று சொல்லி உள்ளே சென்ருள் அவள்.
*செல்லம்! நீ எவ்வளவு நல்லவள்? சுய நிலையை அடைந்த பரமுதன் மனத்திற்குள்ளேயே மனைவியைப் பாராட்டத் தொடங்கினுன்.
பாலுவிட மிருந்து வந்த விக்கல்களும் விம்மல்களும் மாத்திரம் பரமுவின் நெஞ்சத்தில் வேதனையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
米 §ද 米 象
நாட்கள் ஓடின. இப்போதெல்லாம் பரமு கள் குடிப்பதேயில்லை. இதை அறிந்தபோது செல்லம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தாள். கடவுள் கண் திறந்து விட்டார் என்று நினைத்தாள். பரமு உழைக்கும் காசு மாத்திரம் ஒழுங்காக வீட்டிற்கு

Page 45
76
வருவதில்லை. ஆறுதலாக அதைப் பற்றிக் கேட்கலாம் என்றிருந்து விட்டாள் அவள்.
ஒரு தாள் வழக்கத்திலும் பார்க்க, விரைவில் படுக்கையிலிருந்து எழுந்து செல்லத்தை அழைத்தான் பரமு.
குரலிலிருந்த இனிமை செல்லத்தை இன்ப மடையச் செய்தது.
6ஏன், என்ன வேண்டும் ?? செல்லத்தின் குரலிலும் கனிவு இருந்தது.
பரமு பேசாமல், அவளையே பார்த்தபடி நின்றன்.
6என்ன? ஒன்றும் பேசாது நிற்கின்றீர்களே?*
"அன்றைக்குப் பாலு பேசியதின் பிறகுதான் நான் எங்கள் குடும்பத்தைப்பற்றி நினைக்கத் தொடங்கினேன். அன்றிலிருந்து நான் கள்ளைக் கையாலும் தொடுவதில்லை, செல்லம்..?
* இந்தக் கடைசி நேரத்திலாவது கடவுள் கைகொடுத்துதவி விட்டாரே !. இனிமேலாவது நீங்கள் உழைக்கும் பணத்தை என்னிடம் -கொண்டு வந்து கொடுங்கள். கட்டு மட்டாகச் செலவு செய்து விரைவில் கடன் முழுவதையும் அடைத்து விடலாம்?.
**ஆனல் ஒன்று. . . . . . GF6)6th.’
* என்ன? சந்தேகத்துடன் தன் கணவனைப் பார்த்தாள்.

77
‘இன்றைக்கு எனக்கு இருபத்தைந்து ரூபா தேவை. அந்தக் கள்ளுக் கடைக்காரனுக்கு நான் கொடுக்கவேண்டிய பாக்கி. இப்போது நான் அங்கு செல்வதில்லையாதலால், அடிக்கடி அந்தப் பாக்கியை நினைவூட்டி என்னை அவமானப்படுத்து கின்றன். உன்னுடைய தாலிக் கொடியை....??
திடுக்குற்ருள் செல்லம். என் தாலிக் கொடியையா கேட்கின்றீர்கள். . . . . .? உங்கள் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்று இத்தனை நாளும் அதை மறைத்து வைத்திருந்தேனே!
அந்தப் புனிதப் பொருளையா கேட்கின்றீர்கள்?
செல்லத்தின் குரல் அழுதது. >
*வீணுகப் பதற்றப்படாதே செல்லம். நான்’ அதை விற்க விரும்பவில்லை. அடைவு வைக்கத்
தான் கேட்டேன். எண்ணி மூன்று மாதங்களுக்குள் ege60)g5 மீட்டு விடுவேன். என்னை நம்பு செல்லம்.?-பரமு மன்ருடினுன்.
அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது
அவளுக்கு. ‘உங்களுக்கு இருபத்தைந்து ரூபா தானே வேண்டும்? யாரிடமேனும் கெஞ்சியோ
மன்ருடியோ அந்தப் பணத்தை உங்களுக்குத் தரு
கின்றேன். மாலையில் தந்தால் போதுமல்லவா???
6 சரியாக ஐந்து மணிக்கு வருகிறேன்? என்று சொல்லிவிட்டுச் சென்ருன் பரமு.
நேரம் நான்கு மணிக்கு மேலாகி விட்டது.
多
அவசர அவசரமாகச் சமையலை முடித்துக்கொண்டு வெளியே செல்லத் தயாராணுள். இன்னும் சிறிது

Page 46
78
நேரத்திற்குள் இருபத்தைந்து ரூபா கையிலிருக்க
வேண்டுமே!
வீட்டுக் கதவைப் பூட்டச் சென்றவள் திகைத்து நின்ருள். வீட்டுக் கதவு திறந்து கிடந் தது மாத்திரமல்ல, எங்கோ ஒரு மூலையில் அவள் பதுக்கி வைத்திருந்த தாலிக்கொடியும் அங்கில்லை!
அதிர்ச்சி அவளை வாயடைக்கச் செய்து விட்டது.
பட்டப் பகலிலே யாரோ திருடிவிட்டார்களே என் தாலிக்கொடியை அவர் ஆசையுடன் கேட்ட பொழுது, கொடுக்க மறுத்தேனே, பாவிநான். கடைசியில் யாரோ ஒருவன் கொண்டு போய்விட் டான், செல்லத்தின் நெஞ்சு பொருமியது.
பாலுவின் அறையிலிருந்து, ஆள் நடமாடும் அரவம் கேட்டது. பாலு பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கவேண்டும்.
பாலுவைக் கூப்பிட்டுக்கொண்டே சென்ருள் செல்லம். விவரம் முழுவதையும் மகனிடம் கூறி என்ன செய்யவேண்டும் என்பது பற்றி யோசிக்க விரும்பினுள்.
தாயின் திடீர் வருகையால் தடுமாறினுன் பாலு. அவனுடைய நிலை செல்லத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
6என்னடா முழிக்கிருய்? வாடா இங்கே?9 அவனே மிரட்டினுள் அவள்.

79
தயங்கித் தயங்கித் தாயிடம் வந்தான். சட் டைப் பைக்குள் ஏதோ பொம்மிக் கொண்டு கிடந் தது. பொங்கி எழுந்த ஆத்திரத்துடன் அந்தப் பழஞ் சட்டையைப் பிடித்திழுத்தாள். சட்டைப் பையும் அதன் பொருளடக்கமும் கையோடேயே வந்தன.
அவற்றை நன்கு கவனித்தவுடன் துள்ளி யெழும்பினுள் அவள். பையினுள் இருந்தது இருபத்தைந்து ரூபா
*பாலு.* பற்களை நறநறவெனக் கடித்தபடி பேசினுள் செல்லம். *அப்புவிற்குப் பயந்து நான் ஒளித்து வைத்த தாலிக் கொடியை நீ எடுத்து விற்று விட்டாய். நான் சந்தேகப்பட்டது சரி. பாவற் கொட்டை போட்டால் அவரைச் கொடி முஆளக்குமா???
ஏதோ சொல்வதற்கு வாயெடுத்தான் பாலு. விடவில்லை அவள். கண்கள் கனலைக் கக்கின. கைகள் பாலுவின் உடலைக் கசக்கிப் பிழிந்தன. மயிரைப் பிடித்து இழுத்தாள். மண்டையில் இடித் தாள். அந்தப் பத்ரகாளியின் கைகளிலகப்பட்ட பச்சைப் பாலகன் பரிதாபத்துடன் அலறிக் கொண் டிருந்தான்.
*ஐயோ. . . அம்மா. . . . . . நான் திருடவில்ஜல UlbuDT------------
*அப்படியானுல் இந்தப் பணம் உனக்கு எப்படிக் கிடைத்தது???
*அது என்னுடைய பணம் அம்மா???

Page 47
80
அதுதான் எப்படி வந்ததென்று சொல்லு”.
*அது வந்து. . . . . . வந்து. . . . . . 99
பாலுவின் தடுமாற்றம் தாயின் கோபத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்தது. இந்த வயிற்றில் வந்து பிறந்தாயே மூதேவி என்று திட்டிக்கொண்டே தன் கால்களால் உதைத்தாள் ട്രഖങ്ങ്,
6ஏய்! செல்லம்-இந்த இடி முழக்கக் குரலேக் கேட்டுத் திரும்பினுள் செல்லம். எதிரே பரமு நின்றன்.
6ராட்சதப் பிறவி போடி அங்காலே. பொடி யஜன என்ன, சாக்காட்டப் போறியேடி??
செல்லத்தின் ஆத்திரம் இப்போதுகூட அடங்கவில்லை.
'நீங்கள் இதில் தலையிடாதீர்கள். அவனு டைய முதுகுத் தோலை உரித்தாற்றன் உண்மை வெளிவரும். நல்ல பிள்ளை என்று நினைத்திருக்கப் பச்சைக் கள்ளணுக மாறிவிட்டான்?
“இப்ப எதைத்தான் அவன் களவெடுத்து 69 LT6öt?'
* அதெல்லாம் பிறகு சொல்லிறன். இந்த இருபத்தைந்து ரூபாவும் அவனுக்கு எப்படிக் கிடைத்ததென்று கேளுங்கோ?.
அலறித் துடித்துக் கொண்டிருந்த பாலுவைத் தூக்கி நிறுத்தினுன் பரமு. கை, கால்களைத் தடவி

81
விட்டு, ஆறுதல் கூறினுன். அழுகை முடிந்த
பின் கேட்டான்.
6தம்பி! நான் உன்னை அடிக்க மாட்டேன்.
இந்தக் காசு உனக்கு எப்படிக் கிடைத்தது???
விக்கலுடனும் விம்மலுடனும் கூறினுன் பாலு. *அது நான் உழைத்த பணம் அப்பு, நான் உழைத்த U60OTLboo.
*நீ உழைத்த பணமா?? திகைப்புடன் ஏக காலத்தில் கேட்டார்கள் தாயும் தந்தையும்.
*ஓம் அப்பு பள்ளிக்கூடத்தில் என்னைக் கேலி செய்யத் தொடங்கினுர்கள், பையன்கள். தெரு வீதிகளில் தெருக் கூத்தாடும் பரமுவின் புத்திர பாக்கியம் என்று என்னைப் பழித்தார்கள். அங்கு போவதற்கு எனக்கு வெட்கமாகவும், துக்கமாகவு மிருந்தது. வீட்டில் அம்மாவின் நிலைமையையும் பார்த்தேன். எத்தனையோ நாட்கள் ஒன்றுமே சாப்பிடாது, பச்சைத் தண்ணிரை மாத்திரம் குடித்து விட்டுப் பட்டினியாகப் படுத்திருக்கின்ற. என் கையால் உழைத்தாவது அம்மாவை ஒழுங்காகச் சாப்பிடச் செய்யவேண்டுமென்று நினைத்தேன். ஆசிரியர் ஒருவருடைய வீட்டில் வேலைக்காரணு னேன். பள்ளிக்கூடம் முடிந்து அவர் வீட்டிற்கு வந்ததும், என்னுடைய வேலையும் முடிந்துவிடும். மத்தியானம் வீட்டிற்கு வரமுடியாது. பள்ளிக் கூடத்தில் பாலும் பானும் சாப்பிடுவதாகப் பொய் சொன்னேன். இன்றுதான் ஆசிரியர் பதினைந்து ரூபா சம்பளம் கொடுத்தார். அத்துடன் அம்மா
6

Page 48
82
அன்ருெரு நாள் புத்தகம் வாங்குவதற்காகக் கொடுத்த பத்து ரூபாயும் சேர்த்தேன். அம்மா என்னிடம் வரும் போதெல்லாம் ‘புத்தகங்கள் எங்கே??? என்று கேட்டு விடுவாளோ என்று பயந் தேன். பணம் முழுவதையும் அம்மாவிடம் கொடுத்து, விபரத்தையும் கூறுவதற்கு எண்ணி யிருந்தேன். அதற்கிடையில் அம்மா அவசரப் lul (b. . . . . * கண்ணிர் அவன் பேச்சைக் கட்டுப் படுத்தியது. உடல் நோ இப்போது இல்லை; உள்ளம்தான் நொந்து கொண்டிருந்தது.
கண்ணிரை மாலையாக்கி அவனுடைய கழுத்தி லணிந்தாள் செல்லம், தம்பி! என்னை மன்னித்துக் கொள்ளடா. ஆத்திரத்தில் என்னை மறந்து உன்னை அடித்துவிட்டேன்.?
*நீ அடிச்சதை நான் ஒரு குறையாகக் கருத வில்லையம்மா. நான் பொய் சொன்னது குற்றம் தானே!....சரி இந்தப் பணத்தை அப்புவிடமே கொடு. ஐந்து மணிக்குத் தருவதாகக் கூறினு
யல்லவா???
ஞானியைப் போல் நின்ற பாலுவைப் பார்த்துக் கொண்டு, செல்லம் பணத்தை நீட்டினுள் தன் கணவனிடம்.
பரமுவின் உடல் ஒடுங்கியது. குரல் நடுங் கியது. கண்ணிர் பெருகியது. வேண்டாம் செல்லம் வேண்டாம். பணம் எனக்கு வேண் டாம். காணுமற்போன உன் தாலிக்கொடியும் இதோ இருக்கிறது.??

83
*தாலிக்கொடியா? திருடனை நீங்களே பிடித்து விட்டீர்களா?99
*நான் எல்லாவற்றையும் சொல்லுகிறேன். ஆத்திரப்படாமல் கேள். இன்று காலையில் உன்னி டம் கூறியதெல்லாம் பொய் செல்லம், பொய். பணம் இல்லாத படியாற்ருன் நான் இவ்வளவு காலமும் கள் குடிக்கப் போகவில்லை. உன்னுடைய தாலிக்கொடியை விற்ருல் இன்னும் கொஞ்ச நாட் களுக்குக் கவலையில்லாமல் குடிக்கலாம் என்று நினைத்தேன். நீ சமையலறைக்குள்ளிருந்தபோது சந்தடியின்றி வீட்டிற்குள் சென்றேன். தாலிக் கொடியை எடுத்துக்கொண்டு வரும்போது, நீ திடீரென்று வந்துவிட்டாய். நான் மறைந்து நின்றேன். பாலு அடி வாங்கிக் கதறியபோது தான் என் மனச்சாட்சி என்னைக் குத்தத் தொடங் கியது. அவன் என் கண்களைத் திறந்துவிட்ட கடவுள், செல்லம். அவன் மேல் ஆணை, நான் இனிமேல் கள்ளைக் கண்ணுலும் பார்க்கமாட்டேன் ...?? மன்னிப்பைக் கோரி மனைவியின் கால்களைக் கட்டிப் பிடித்தான் பரமு.
*சீ! என்ன இது? யார் யாரை மன்னிப்பது?99 என்று சொல்லியபடி கணவனைத் தூக்கி நிறுத் தினுள் செல்லம். பாலு பார்த்துக்கொண்டு நிற்கின் ருனே என்ற நினைவு அவளை நாணமடையச் செய்தது.
ஆணுல் பாலு எப்போதோ உள்ளே சென்று விட்டான். ஆறுதலாக இருந்தது செல்லத்திற்கு.

Page 49
84 6°கொஞ்சம் பொறுங்கள். பாலுவின் காயங் களுக்கு எண்ணெய் போட்டுவிட்டுச் சாப்பிடச் செல்வோம்.? கணவனிடம் விடை பெற்ருள்
செல்லம்.
6 அப்பு கடைசியாகச் சொன்ன சொற்களே என் நோயை மாற்றிவிட்டன அம்மா.,வாருங்கள் சாப்பிடுவோம்? என்று உள்ளிருந்து பாலுவின் குரல் கேட்டது
1958

காதல் பலி
இரவின் பெரும் பகுதியை நித்திரையின்றிக் கழித்த சோமாவதி எழுந்தாள். சற்றுத் தூரத்தி லுள்ள தாமரைக் குளத்தை நோக்கி ஓடினுள்.
கிழக்கு வெளுத்தது. செக்கச் சிவேலென் றிருந்த கீழ்வானம் மஞ்சளாகி, வெண்மையடையத் தொடங்கியது. காலைச் சூரியனின் வெண் பொற் கிரணங்கள் மாநிலத்தாயின் மடியை வருடின. மணுளஜனக் கண்ட மகிழ்ச்சியில் மெல்ல மெல்ல இதழ் விரிக்கும் தாமரைப் பெண்ணின் எழிலைத் தன் உள்ளம் நிறைய ரசித்தாள் சோமாவதி.
*எப்போது இதழ்விரிக்கும்” என்று காத்திருத் தாற் போல், கன்னங்கரே லென்ற வண்டு ஒன்றும், வெள்ளை வெளேரென்ற வாத்து ஒன்றும் அந்த அழகுத் தாமர்ையைச் சுற்றி வட்டமிட்டன. வாத்து கொத்திவிடுமோ என்ற பயம் வண்டுக்கு, வண்டு கொட்டிவிடுமோ என்ற அச்சம் வாத்துக்கு, இந்தப் பரஸ்பர அச்சத்தினுல் ஒன்றையொன்று

Page 50
86
முறைத்துப் பார்க்க, அவற்றைச் சிறிதும் இலட்சி யம் செய்யாது, தன் ஆசைக் காதலன் அருகே வரமாட்டாணு என்ற ஏக்கத்தில் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாமரைப்பெண்.
குளிப்பதற்காக மார்பளவு நீரில் இறங்கிய சோமாவதியை அந்தக் காட்சி என்னவோ செய் தது. வேண்டைப்போல் ஏதோ முணுமுணுத்தபடி என்னைச் சித்திரவதை செய்கிருன் பியதாஸா, எதுவுமே பேசாது, வாத்தைப்போல் என்னையே பார்த்தபடி நிற்கிறர் ஞானனந்தர்! ஆனல் என் மனமோ எங்கோ இருக்கிற என் இனிய மாதவனுக் காகவல்லவா தவமிருக்கிறது? ஏக்கப் பெருமூச்சு டன் இதழ்களை உதிர்த்து உதிர்த்து இறந்தொழியும் தாமரையைப்போல் நானும் ஏங்கி ஏங்கி இதயம் வெடித்துச் சாகத்தான் வேண்டுமோ 1: சோமாவதி கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணிர் குளத்தில் விழுந்தது.
来 米 ”来
சோமாவதி கருணுரத்ணுவின் அருமைப் புதல்வி. நன்றக இருந்து நலிந்து போன குடும்பம் அவர்களுடையது. கருணுரத்ணுவின் பீட்டன் ஒல்லாந்தர் காலத்தில் துவிபாஷியாக இருந்த வராம். அதன் காரணமாக அந்தக் காலத்திலேயே அவருக்குச் செல்வாக்கு அதிகம். செல்வம் சேர்ந் தது. பெரிய மாளிகை கட்டி அதில் ஆடம்பரமாக வாழ்ந்தார். நல்ல அந்தஸ்தையும் கெளரவத்தை யும் தேடிவைத்தார். ஒல்லாந்தர் போக ஆங்கிலே யச் வந்தார்கள். அப்பொழுதும் அந்தக் குடும்பத்

87
தின் செல்வாக்குக் குறையவில்&ல. கருணுரத்ணு சிறுவனுக இருந்தபோது கூடச் செல்வமும் செல் வாக்குமாகத்தான் அவர் குடும்பம் வாழ்ந்தது. காலச் சுழற்சியில் எல்லாம் மாறிவிட்டன. நாட்கள் ஒட, மக்களின் மனத்தில் சுதந்திர உணர்ச்சி பொங்கி எழ, ஆங்கிலேயர் மீது இந்நாட்டு மக்கள் வைத்திருந்த பற்றும் பாசமும் ஒட, அதனுடன் சேர்ந்து கருணுரத்ணுவின் செல்வமும் ஓடிவிட்டது
ஒரு சிறிய வீடும் அதையடுத்து இரண்டு பரப்பு நிலமுமே மிஞ்சியிருந்தன. நாள் முழுதும் நிலத்தில் பாடுபட்டாலும் அதிலிருந்து வரும் விளைச்சல் ஒருமாதத்துக்கு மேல் குடும்பத்தை நடத்தப் போதாது. வாழ்க்கை வண்டியை ஒட்டு வது கஷ்டமாக இருந்தது. பழைய கெளரவத் தைப் பற்றி இடக்காகப் பேசிக்கொண்டிராது ஏதா வது கூலி வேலை செய்வதற்கும் தயாராகவிருந்தார்" கருணுரத்ணு. ஆணுல் நலிந்து மெலிந்திருந்த உடல் ஒத்துழைக்க மறுத்தது.
நாளுக்கு நாள் மத மத வென்று வளர்ந்து வரும் சோமாவதி அவர் நிம்மதியைக் குலைத்து வந்தாள். கண்ணின் மணிபோன்று வளர்த்த அவளைக் கண்கலங்க விடலாமா? அவர் ஏழை என்பது உண்மைதான். அதற்காக வாழ்வைச் சுவைக்கத் துடிக்கும் அவருடைய செல்வக் குமரி யைத் தடுத்து நிறுத்த அவர் ஒருப்படவில்லை.
தன் மனைவி சீலாவதியுடன் கலந்து யோசித் தார். காணியில் ஒரு பகுதியை விற்றுவிட்டு அந்தப் பணத்தை முதலாக வைத்து ஒரு தேநீர்க்

Page 51
88
கடை ஆரம்பித்தார். வேறு வேலையாட்களை வைக்காது தமது குடும்பத்துடன் பாடுபட்டார் கருணுரத்ணு. பலகாரம் தயாரிப்பதில் தாயும், மகளும் ஈடுபட்டனர். பரிமாறும் வேலையும் பணம் வாங்கும் வேலையும் கருணுரத்ணுவினுடையவை. பலகார வேலை நேரத்துடன் முடிந்துவிட்டால், தகப்பணுருக்குத் துணையாகச் சோமாவதி வெளியில் வந்து வேலை செய்வாள். ஆணுல் வியாபாரம் என்னவோ நடக்கவில்லை; நகரவுமில்லை; விழுந்து படுத்துக் கொண்டது. அநேக நாட்களில் விற்ப தற்காகத் தயாரித்த தின்பண்டங்களைத் தின்பதற் காக மூன்றே மூன்று பேர்கள் தானிருந்தனர். கருணுரத்ணு, சீலாவதி, சோமாவதி !
பூர்வீக சொத்தாகிய நிலத்தை விற்றதை நினைந்து நினைந்து வருந்தினர் கருணுரத்ன. நிலம் கொடுத்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை நிலத்தை விற்ற பணம் கொடுக்கவில்லை. வறுமையை ஒட்ட நினைத்த அவர் ஈயை மட்டும் ஒட்டிக் கொண் டிருந்தார்!
நாட்கள் கரைந்து, நம்பிக்கை கரைந்து, உடல் கரைந்து, உயிரும் கரைய ஆரம்பித்த கடைசி நேரத்திலேதான், அதிருஷ்ட தேவதை அவர் மீது தன் கண்ணுேட்டத்தைச் செலுத்த ஆரம்பித்தாள். இரண்டாம் உலகப்போர் மிக மும்முரமாக நடைபெற்ற வேளை அது. பிரிட்டிஷாரின் யுத்த தளமாக இலங்கையும் உபயோகிக்கப்பட்டு வந்தது. ஜப்பான் போரில் குதித்து, இலங்கை இந்தியா முதலிய நாடுகளைக் கைப்பற்றுவதற்குத்

89
திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆகவே இலங்கையிலுள்ள படை வீரர்களின் தொகையை அதிகரித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்தியாவி லிருந்தும் மற்றைய நாடுகளிலிருந்தும் படை வீரர்கள் பலர் இங்கு கொண்டுவரப்பட்டனர்.
கருணுரத்ணுவின் கடையை யடுத்துள்ள கட்டு நாயக்காவில் இரண்டாயிரம் வீரர்கள் முகாமிட்ட னர். எதிரியை விரட்டும் பணியில் தம் உயிரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராகவிருந்த இந்த வீரர்களுக்காக, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக் கான ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் தம் உயிரைத் தியாகம் செய்தன. இவை போதா வென்று தேநீர் அலவன்ஸ்” என்ற பெயரில் தின மொன்றுக்குப் பத்து ரூபாய் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைச் செலவு செய்யும் நோக்கத்துடன் பலர் கருணுரத்ணுவின் கடைக்கு வந்தனர்.
படுத்த வியாபாரம் எழுந்தது. தாயும் மகளும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டி ருசியான பலகாரங்களைத் தயாரித்தனர். அவர்களின் * கிரிபத்* இராணுவ வீரர்களிடையே மிகுந்த புகழ் பெற்றிருந்தது.
மாலையில் மற்றவர்களுடன் நெருக்கியடித்துக் கொண்டு * கிரிபத்? சாப்பிட விரும்பாத ஒரு சிலர் மற்றவர்களுக்குத் தெரியாதபடி ரகசியமாகப் பகல் வேளைகளில் கடைக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் பறந்து விடுவார்கள்.

Page 52
90
அப்படி ரகசியமாக வந்து போனவர்களில் மாதவனும் ஒருவன். தினமும் பகல் பதினுெரு மணிக்கு அங்கே வருவான்.
அந்தக் கிராமத்திலேயிருந்து அருகேயுள்ள சிறு நகரங்களுக்கும் வெகு தொலைவிலுள்ள கொழும்புக்கும் செல்லும் கந்தோர் உத்தியோகஸ் தர் சிலர் காலை ஏழுமண சுமாருக்கு அங்கே வரு வார்கள். அப்போதைய “சிறு நெருக்கடிக்குப் பிறகு, மாலை நாலரை மணி வரைக்கும் கடையில் ஈ ஒட்டுவதைத் தவிர வேறு வேலை இராது. அந்த வேலையைக் கருணுரத்ணு தம் அருமை மகளிடம் ஒப்படைத்திருந்தார். சீலாவதி வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருப்பாள். கருணுரத்ணுவுக்கு வேறு பல வேலைகளிருக்கும். ஆகவே மாதவன் வரும் வேளை களில் சோமாவதி மட்டுமே கடையிலிருப்பாள்.
* கிரிபத்? என்ற சிங்களச் சொல் மட்டும் அவனுக்குத் தெரியாது மாதவன் வந்தவுடன் * கிரிபத்’ எடுத்து வைப்பாள் அவள். மெளனமாக அதைச் சாப்பிட்டுவிட்டுப் பத்து ரூபாய்த் தாளை எடுத்து நீட்டுவான் அவள். சில சமயம், அவள் சில்லரையை எண்ணிக் கொடுக்கும் வரைக்கும், காத்திருந்து வாங்கிக் கொண்டு போவான். பல தடவைகள் மிகுதிப் பணத்துக்குக் காத்திராமலே பறந்து விடுவான்.
பணத்தினருமையை நினைக்காத அந்த மனித ஜனப் பற்றி நினைக்கத் தொடங்கினுள் சோமாவதி. கடிய சொல்லும் கொடிய செயலும் நிறைந்த இராணுவத்தினரை அவள் கண்டிருக்கிருள். குடி

91
போதையில் வந்து கடையில் நின்று கூச்சலிடும் இராணுவத்தினரைப் பார்த்துப் பயந்திருக்கிருள். மாதவன் அவர்களிலிருந்து, முற்றும் வேறுபட்ட வணுகவிருந்தான். அவனுடைய இரும்புத் தொப்பி, அரும்பு மீசை, சிவந்த மேனி, சிரித்த முகம், காக் கிச் சட்டை, காந்தப்பார்வை-எல்லாம் அவளைக் கவர்ந்திழுத்தன. பதினுெரு மணியானதும் அவன் வரும் வழி மேல் விழி பதிக்கத் தொடங்கிவிடுவாள்.
மாதவனுக்கும் ஏறக்குறைய இதே நிலைதான். கிணற்றடியில் நிற்கும் வாழையைப் போல் வாளிப் பாக வளர்ந்திருந்த அவள் கனவுக் கன்னியாக அவனுக்குத் தோற்றமளித்தாள். சாதாரண மாகவே நல்ல சுவையுடனிருந்த “கிரிபத்? சோமா வதியின் கைபட்டு இன்னும் அதிகமாக இனித்தது.
எங்கோ பார்த்து எதையோ நினைத்து ஏங்கிய படி இருக்கும் சோமாவதியின் எழில் அவனைப் பைத்தியமாக அடிக்கும். தன் ஆசையை யடக்க முடியாமல் தவித்தான் மாதவன். உயிரைத் திருண மாக மதித்து இராணுவத்தில் சேர்ந்த அவனுக்குத் தன் இதயத்தைத் திறந்து காட்டும் தைரியம் இருக்கவில்லை! சோமாவதியின் எண்ணம் வேருக. இருந்து, அவனைப்பற்றித் தாய் தந்தையருக்கு அவள் அறிவித்தால் அவனுடைய முதுகுத் தோல் உரிக்கப்பட்டு விடுமே! இராணுவத் தளபதி அறிந்தாராணுல், அவன் நிலை என்னுவது? “கோர்ட் மார்விலை’ப்பற்றியோ கொலைத் தண்டனைக்காகவோ அவன் அஞ்சவில்லை. அவனுடைய காதல் பகிரங்கப் படுத்தப்பட்டால், அவனுக்கு மட்டு

Page 53
92
மல்ல, அவனுடன் வந்த பாரத நாட்டு வீரர் களுக்கு மல்லவா இழுக்கு ஏற்படும்?
இப்படி ஒருவரையொருவர் அறியாது ஒருவருக் காக ஒருவர் ஏங்கிக் கொண்டிருக்க, நாட்கள் ஒன்றையொன்று விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்தன.
ஒருநாள். உள்ளே ஏதோ வே8லயில் ஈடுபட் டிருந்த சோமாவதி, மணி பதினுென்ருகியதும், பாய்ந்து பறந்து வாசலுக்கு வந்தாள்; அப்போது தான் வாசற்படியில் காலை வைத்த மாதவனுடன் மோதிக் கொண்டாள். விழவிருந்தவளை மாதவன் தாங்கிப் பிடித்தான். ஒரு கணம், இரு சோடிக் கண்கள் ஒன்றையொன்று ஊடுருவிப் பார்த்தன.
பாஷை தெரியாததால் பேசிக் கொள்ளாதிருந் வர்கள், இப்போது பாஷை தேவையில்லாததால் பேசாதிருந்தனர். அன்பு சொட்டும் பார்வையும் ஆசை கொஞ்சும் சிரிப்பும் இதயங்களுக்குப் பாலம் அமைத்தன. V சிறிது நேரத்தில், தன் நிலையை உணர்ந்த சோமாவதி, நாணத்தால் தலையைக் குனிந்து கொண்டாள். மாதவனும் மெல்லத் தன் பிடியி லிருந்து அவளை விடுதலை செய்தான். அதற்குப் பிறகு அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவ னும் குனிந்த தலை நிமிராமல் கிரிபத்? சாப்பிட் டான், சென்றுவிட்டான்.
அடுத்த நாள் சீவி முடித்துச் சிங்காரித்து 96) gol60) - I வருகைக்காகக் காத்திருந்தாள்

93
சோமாவதி. அவன் வந்தவுடன் தான் எப்படி யெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று மனதில் இன்பக் கற்பனை செய்துகொண்டு வாசஆல: எட்டிப் பார்த்தாள்.
மாதவன் வரவில்லை.
‘இன்று தாமதப்படுத்துவதற்காக அவரை கோபித்துக் கொள்ள வேண்டும். அவர் மன்னிக் கும்படி கெஞ்சுவார். உடனே அவரை என் நெஞ்சோடணைப்பேன்’ என்று நினைத்துக்கொண்டு மீண்டும் வாசலைப் பார்த்தாள்.
மாதவன் வரவில்லை.
ஆணுல், இராணுவ லாரிகள் படுவேகமாக எங்கோ ஓடிக்கொண்டிருந்தன. ஆகாயவிமானங். கள் பயங்கர ஒலியுடன் பறந்து திரிந்தன.
8 இன்றைக்கு மட்டும் ஏன் இந்தத் திடீர் மாற்றங்கள்? என்னிடம் சொல்லாமலே, என் மாதவனும் விமானத்தில் சென்று விடுவாரோ??
சூழ்நிலைஅவளுடைய இதயத்தைஉலுக்கியது. ஏமாற்றம் தாளாத அவள் அங்கேயே சுருண்டு விழுந்தாள். N
அவள் கண் விழித்துப் பார்த்தபோது கடையி' லுள்ள பொருட்களோ, கருணுரத்ணுவோ, சீலா வதியோ அவளுடைய கண்களுக்குத் தென்பட வில்லை. அவளுடைய மாமன் தில்கரத்ணுவும் அவருடைய மகன் பியதாசாவும்தான் கலங்கிய கண்களுடன் அங்கே நின்றனர். அவர்களுடைய)

Page 54
94
வீடுதான் அது. அங்குள்ள ஒரு சிறிய அறையில் அவள் கிடந்தாள்.
*நான் எப்படி இங்கே வந்தேன்? அம்மாவும் அப்பாவும் எங்கே? மாமா ஏன் அழுதுகொண்டு நிற்கிருர்??
அவளுடைய திகைப்பைப் போக்கினுர் திலக ரத்ணு. சோமா! நீ'பயப்படாதேயம்மா. மயங்கி விழுந்த உன்னை முதலில் கார் ஒன்றில் இங்கே அனுப்பிவிட்டார்கள். கடையிலுள்ள சாமான்களை ஏற்றிக் கொண்டு உன் அப்பாவும், அம்மாவும் விரைவில் இங்கு வந்து விடுவார்கள். இன்றே நாளையோ,ஜப்பான்காரன் இலங்கையைப் பிடித்து விடுவாணும். கட்டுநாயக்காவிலிருந்து வீரர்க ளெல்லாம் விமானத்தில் புறப்பட்டுக் கொண்டிருக்
கின்றர்கள் . சண்டைக்கும் குண்டுக்கும் பயந்த சனங்கள் கட்டுநாயக்காவைவிட்டு ஓடிக் கொண்டிருக்கின்ருர்கள்."
t §ද * 米
நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் பலமறைந்தன. இலங்கை மக்களைக் கெடிக்கலக்கு கலக்கிய ஜப்பான்காரன் இறுதியில் சரணுகதியடைந்து விட்டான். சண்டை நிறுத்தப்பட்டுச் சமாதானமும் ஏற்பட்டுவிட்டது.
வந்த இடத்திலிருந்தவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பினுர்கள். போர்க்கிலி மறைந்த பிறகு, மக்கள் மனத்தில் மறுபடியும் மகிழ்ச்சியும் கலகலப்பும் ஏற்படத் தொடங்கின.

95
கட்டுநாயக்காவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பிய கருணு ரத்ணுவையும் சீலாவதியையும் தடுத்துநிறுத்திஞர் திலகரத்ஞ. “இந்தக் கிழ வயதில், ஒய்வெடுத்துக்கொண்டு உல்லாசமாக வாழ்வதை விட்டுவிட்டு, ஏன் உடம்பு முறியப் பாடுபடவேண்டும்? புத்ததேவனின் அருளால் என்னிடம் நிறையப் பணம் குவிந்து கிடக்கிறது. என் மகன் பியதாஸாவுக்கும் உங்கள் மகள் சோமா வதியை நன்கு பிடித்து விட்டது. இருவருக்கும் கலியாணத்தைச் செய்து விட்டோமானுல் என் செல்வமும் வெளியே செல்லாது. நமது உறவு முறையும் இறுகிவிடும். நீங்களும் இனி இங்கேயே தங்கிவிடலாம்? என்ருர் திலகரத்ணு.
எல்லாம் நன்மைக்கே? என்ற நம்பிக்கை யுடைய கருணரத்னு மானஸிகமாக ஜப்பான் காரனை வாழ்த்தினுர். அந்தஸ்து வேறுபாடு காரணமாகத் தம்மைத்துனரே தம்மை அவமதித்து விடுவாரோ என்று பயந்திருந்த அவர் காதுகளில் இந்த அமிர்த வார்த்தைகள் விழுவதற்கு ஆதி காரணம் அந்த ஜப்பான்காரன்தானல்லவா?
அவரைப் பொறுத்த வரையில் அவருடைய வாழ்க்கைப் பிரச்சினையும், மகளின் கல்யாணப் பிரச்னையும் சுலபமாகத் தீர்ந்துவிட்டன. ஆணுல் GariT LOT6 g.o.o. ...
பெரியவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை அவளுக்குத் தெரியாது. காணியை விற்றுக் கடை கட்டிய தாய் தந்தையர் அதைக் கவனியாது, ஒண்ட வந்த இடத்தில் ஒரேயடியாக

Page 55
96
உட்கார்ந்திருப்பதின் காரணமும் அவளுக்குத் தெரியாது; பியதாஸா நேரத்துக்கொரு “கைலியும்? நிமிடத்துக்கொரு சிகரெட்டுமாய்ப் புகைத்துத் தள்ளுவது அவளைக் கவர்வதற்காகத்தான் என்பதும் தெரியாது.
போரணியில் நிற்கும் மாதவனின் பொலிந்த உருவம்தான் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவளுடைய கனவிலும் நனவிலும் உடலிலும் உள்ளத்திலும் மாதவன்தான் நிறைந்திருந்தான். அவள் தனியாக இருக்கும்போது அவன் வந்து சரஸ் சல்லாபம் செய்தான். கிரிபத்? சாப்பிடும் பொழுது மாதவன் அதற்குள் கிடந்து இனித்தான். நாட்கள் செல்லச் செல்ல பியதாஸாவையும் தன்னையும் பெற்றேர்கள் இணைத்துக் கதைப்பது சிறிது சிறிதாகத் தெரிய வந்தது. உள்ளத்தில் உள்ளதை உரைக்கும் துணிவு அவளிடமிருக்க வில்லை. வற்புறுத்தித் தன்னைக் கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்களோ என்ற பயம் அவள் மனதை அரித்தது.
தன் உள்ளம் கலந்து உறவாடியவரைத் தன்னுடன் என்றென்றும் இணைத்து வைக்கும்படி போதி முனிவனிடம் மன்ருடினுள். அந்தக் கிராமத் திலுள்ள பெளத்த விஹாரைக்குச் சென்று தினமும் தவம் கிடந்தாள். ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் “சில்? அனுஷ்டித்தாள். காலையில் வீடு தேடிவரும் பெளத்த பிட்சுகளுக்குத் தன் கையா லேயே அன்னமிட்டாள். இந்தப் புண்ணியச் செயல்களெல்லாம் ஒன்று திரண்டு தன் மாதவனை

97
இழுத்துவந்து கண் முன்னே நிறுத்தமாட்டாவா என்ற கவலே அவளுக்கு.
ஆண்டுகள் இரண்டு உருண்டன. பல தடவைகள் பியதாஸா வெளிப்படையாகவே தன் ஆசையை அவளிடம் வெளியிட்டான். தனக்கு இருக்கும் சொத்து முழுவதும் அவளுடைய காலடி யிற் கொட்டிக் குவிக்க அவன் தயாராயிருந்தான். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசி அவனு டைய வெறுப்பையும், மாமனின் பகையையும், தாய் தந்தையரின் அதிருப்தியையும் ஒரே முறை யிலே கொள்முதல் செய்ய விரும்பாத அவள் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லிச் சமாளித்து வந்தாள்.
தாய் தந்தையரின் நச்சரிப்பையும், பியதாஸா வின் கரைச்சலையும் பொறுத்துக்கொண்டு, தன் காதல் மாதவனின் வருகைக்காகப் போதி மாத வனின் புனித அடியார்களுக்குத் தொண்டு செய்து கொண்டு வந்தபோது, அந்த விஹாரைக்குப் புதிதாக வந்து சேர்ந்தார் ஞானுனந்த தேரோ. வந்தது மட்டுமல்ல, சோமாவதியின் வீட்டுக்கே உணவு பெறுவதற்காகக் காலை வேளைகளில் வரவுந் தொடங்கினுர். ۔۔۔۔
அந்தப் பிட்சுவைப் பக்தியும் பணிவும் பரிவும்
நிறைந்த கண்களால் பார்த்தாள் சோமாவதி.
அவரைப் பார்க்கும்போது தன் மாதவனேயே
பார்த்துக்கொள்வது போன்ற திருப்தி ஏற்பட்டது
சோமாவதிக்கு. காலையில் அவர் வருவதற்கு
7

Page 56
98
முன்பாகவே, உணவுடன் அவருக்காகக் காத்தி ருக்கத் தொடங்கினுள்.
ஆணுல், முடிவு விபரீதமாகத் தொடங்கி விட்டது. அவளைப் போலவே அவரும் அவளை வெறித்து நோக்கினுர். \ வீட்டில் வேறு யாரு மில்லை என்பதையறிந்தால் மெல்ல ஒரு மோகனப் புன்னகையை அவள்மீது வீசுவார். அவள் உண வளித்துவிட்டு உள்ளே சென்று மறையும் வரையும் அவளையே பார்த்துப் பெருமூச்சு விட்டபடி திரும்பிச் செல்வார்.
சோமாவதியின் நெஞ்சு நடுங்கியது. புனித மான ஒரு தொண்டிலீடுபட்டிருக்கும் பிட்சுவைப் புன்மைப் படுகுழியில் விழச் செய்தது அவளல் லவா? பாபத்தைச் சம்பாதித்தது மட்டுமல்ல, பிட்சு முறைதவறி நடந்தால்-எங்கோ இருக்கும் அவளுடைய மாதவன் என்ருவது அதையறிந் தால் அவள் கதி? புத்த பிட்சுக்களுக்கு எதிராக எதையும் சொல்லவோ, செய்யவோ கூடாது என்ற நம்பிக்கையில் ஊறிப்போனவள் அவள். இப்பொழுது ஞானுனந்தருக்கெதிராக எதையாவது சொன்னுலும், அவளுடைய தாய், தந்தையர்கூட நம்பப் போவதில்லை. ஒரு பக்கத்தில் பிட்சுவும் மறுபக்கத்தில் பியதாஸாவும் நின்று அவளைச் சித்திரவதை செய்தனர்.
米 米 米
ஆடவர் சிலர் குளத்திலிறங்கினர். நீரில் நின்று நினைவில் குளித்த அவள் வெளியே வந்தாள். யாரோ தூரத்து உறவினர் வீட்டுக்கு அவளது

99
பெற்றேர் சென்று விட்டனர். அன்றைய உணவை அவளே தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னும் சில மணி நேரத்தில் பிட்சுக்கள் வந்து விடுவார் கள். அவசரமாக அவள் உணவைத் தயாரித்து முடிப்பதற்கும் வெளி வாசலில் ஞானுனந்தர் வருவதற்கும் சரியாகவிருந்தது.
ஞானனந்த தேரோ மட்டும் அன்று தனியாக வந்திருந்தார். மிகவும் பயபக்தியுடன் உணவை எடுத்துச் சென்ருள் சோமாவதி. பிட்சு அன்னத்தை வாங்கவில்லை. அவளையே பார்த்தார். புன்முறுவல் பூத்தார்; பயந்து பயந்து மிரண்டு விழித்த சோமாவதியின் கைகளை எட்டிப்பிடித்து, ஒரு கடிதத்தைத் திணித்துவிட்டு ஓடிவிட்டார்.
திக்கித் திணறித் திகைத்துவிட்டாள் சோமா வதி. உடம்பு ஒரேயடியாக வியர்த்துக் கொட்டி யது. சில நிமிட நேரங்கள், ஒன்றுமே செய்வ தறியாது அசைவற்று நின்ருள்.
நேரம் செல்லச் செல்ல அவள் உள்ளம் சூடேறிக் கொதித்தது; பிட்சுவின் இந்த நடத்தைக்கு முடிவு காணத் துடித்தது.
பியதாஸாவைத் தவிர வேறெவரும் அவள் சொல்லை நம்பமாட்டார்கள். வாழ்க்கையில் முதன் முதலாகப் பியதாஸாவின் வருகைக்காகக் காத் திருந்தாள் சோமாவதி. கடிதத்தைப் படிக்காமலே மடியுள் வைத்து மறைத்துக்கொண்டு அவனுக் காகக் காத்திருந்தாள்.

Page 57
100
பியதாஸா வந்தான். காற்றில் ஏறி யவ்விண்ணே
யும் சாடத் தயாராயிருந்த அவன் சோமாவதியின் சொல்லைக் கேட்டவுடன் பறந்தான் பெளத்த விஹாரையை நோக்கி.
அவன் சென்றபின், சற்று நிம்மதியடைந்த (3d TLDT6) is, கடிதத்தைப் பிரித்தாள். அதைக் கிழித்து எறிவதற்கு முன், என்ன எழுதியிருக்கிற தென்பதை அறியும் ஆவல் அவளுக்கு பிட்சு எழுதியிருந்தார்:
அன்புள்ள சோமாவதி,
பெளத்த *விநாயாவுக்கு மாறக நான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்காகப் பகவான் புத்தர் என்னை மன்னித்தருள்வாராக.
சில ஆண்டுகளுக்கு முன், கட்டுநாயக் காவில் உன் தந்தை தேநீர்க் கடை வைத்திருந்த போது கிரிபத்” சாப்பிடுவதற்குத் தனியர்க வரும் மாதவன் என்ற இராணுவ 3jಶಿರfé மறந்திருக்க மாட்டாய். உன் அழகிலும் குணத்திலும் தன் மனதைப் பறிகொடுத்த அவன் உனக்காக, தன் இராணுவ உத்தியோகத்தையும் உதறித் தள்ளத் தயாராயிருந்தான். தற்செயலாக நடந்த ஒரு சம்ப வத்தினுல் உன்னுடைய மனநிஜலயையும் நன்கு தெரிந்து கொண்ட அவன், தன் முடிவை இராணுவ அதிகாரிக்குத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தான். ஆனல் அவனுடை' துரதிருஷ் L-th, ஜப்பான்காரனின் படையெடுப்பு பற்றிய செய்தி கிட்டி உடனேயே போருக்குப் புறப்பட தாயிற்று.இந்தியாவுக்கும், பர்மாவுக்கும்

101
சிங்கப்பூருக்குமாக அவன் மாறி மாறிப் பறந்து திரிந்தான். ஒரு வழியாகப் போர் முடிந்து சமாதான மேற்பட்ட பிறகு மறுபடியும் உன்னைத் தேடி கட்டு நாயக்காவுக்கு வந்தான். உன்னைக் காணவில்லை. கடையை அடுத்து வாழ்ந்த மக்களிடம் உன்னைப் பற்றி விசாரித்தான். சரியான தகவல் அவனுக்குக் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்திலுள்ள கிராமங் களில் தேடினுன். பலன் கிடைக்க வில்லை. என் ருலும் என்ருவது ஒரு நாள் உன்னைச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை அவனிடமிருக்கத்தான் செய்தது. அப்படி உன்னைச் சந்திக்கும் சந்தர்ப்பத் தில், உள்ளம் திறந்து உன்னுடன் உரையாடி ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் உனக்கு ஊட்டவேண்டும் என்பதற்காக உன் மொழியைக் கற்கத் தொடங்கினுன். மிகுந்த அவாவுடன் உன் சிங்கள மொழியைக் கற்ற போது, அந்த மொழியில் எழுதப்பட்டுள்ள ஏராளமான பெளத்த நூல்களை யும் படித்தான். அன்பு மதமாகிய பெளத்தத்தைப் பற்றி நன்கறியும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. உன்னைக் காணுத ஏக்கத்தில் உள்ளம் சோர்ந்திருந்த அவ னுக்கு, பெளத்தம் புதியதோர் உலகைக் காட்டி யது. அணுகுண்டினுல் உலகினையடக்கி ஆள முயலும் ஆங்கிலேயரின் கீழிருந்து, அனுதினமும் ஆடு, கோழிகளைத் தின்று வயிறு வளர்க்கும் தன் அவல வாழ்வையும், அன்பினுல் உலகையாண்ட ஆசியஜோதியின் அறவாழ்வையும் எண்ணிப் பார்த்தான். சமரின் முடிவில் சாம்ராட் அசோக னுக்குக் கிடைத்த சன்மார்க்க ஒளி உன் மாதவ னுக்கும் கிடைத்தது. தன்னை மறந்து, உலக

Page 58
102
மக்களின் ஈடேற்றத்துக்காகத் தன்னை அர்ப்பணித் தான்; பெளத்தத் துறவியானுன்; மாதவன் என்ற பெயரை விட்டெறிந்தான். ஞானுனந்த தேரோ என்ற பெயர் அவனுடன் ஒட்டிக் கொண்டது. seb(6O6b • • • • • • ''
அம்மே” என்று பயங்கர ஒலமிட்டாள் சோமாவதி. கடிதத்தை அதற்குமேல் படிக்க முடியவில்லை அவளால் தினமும் அவள் வீட்டுக்கு வந்து அவள் கையால் உணவு வாங்கும் பிட்சுவா அவளின் ஆசைக் காதலன் மாதவன்? அவரைக் கண்டித்து விடும்படியாகவா பியதாஸாவிடம் அவள் சொல்லியனுப்பினுள்? ஆச்சரியப்படுவதா, ஆனந்தப்படுவதா, ஆத்திரப்படுவதா என்று புரியாமல் தவித்தாள் அவள்.
தன் மேலுள்ள ஆசையினுல் பியதாஸா' விபரீதமாக ஏதாவது செய்துவிடுவானுே என்ற பயம் இப்பொழுதுதான் அவளுக் கேற்பட்டது. உடனடியாகச் சென்று அவனேத் தடுத்துவிடத் துடித்தாள் அவள். படபடத்ததுஅவள் உள்ளம்.
போட்டது போட்டபடியே கிடக்க ஓடினுள் பெளத்த விஹாரையை நோக்கி. இடைவழியில்வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்த ஞானுனந்த தேரோ உயிருக்கு மன்ருடிக் கொண்டிருந்தார். அருகில் வேறு எவருமில்லை.
உடல் நடுங்க, உயிர் கலங்கக் கோ’ வென்று
கதறிய சோமாவதி அந்தப் புனிதரைத் தூக்கித், தன் மடியில் கிடத்தினுள்.

103
இதயம் கரைந்து கண்ணிராக ஓடியது. சோமாவதி வந்து விட்டாயா ? கடைசி நேரத்திலாவது உன்னைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. மஞ்சள் உடைக்குள் இருந்து கொண்டு மங்கை ஒருத்தியிடம் மனதைச் செலுத்திய நான் மகாபாபிதான். அதற்காக உரிய தண்டனையை நான் பெற்று விட்டேன். சோமாவதி உன் தூய அன்பை என்னுல் மறக்க முடியவில்லை. உன்னை ஏமாற்றிவிட்டேனே யென்ற நினைவைப் பொறுக் கவே முடியவில்லை" என்று முக்கி முனகிப்பேசினுர் ஞானுனந்தர்.
உணர்ச்சிக் கொந்தளிப்பினுல் எதையுமே பேச முடியாதிருந்த சோமாவதியின் கண்களி லிருந்து கண்ணிர் அருவியாய், ஆருய்க், கடலாய்ப் பெருகியது. துடிக்கும் நெஞ்சுடன் அவரைத் தூக்கி யஃணத்து, தன் துன்ப வாழ்வை நினைத்துக் கண்ணிர் பெருக்கினுள்.
தற்செயலாக வருபவனைப் போல் வந்த பியதாஸாவுக்கு ஞானுனந்தரின் செந்நீருடன் அவர்மீது தன்னை ஏவிவிட்ட சோமாவதியின் கண்ணிர் கலந்த காரணம் என்ன என்பது தெரிய வில்லை! 1961

Page 59
உயிரோவியம்
* அரோகரா! அப்பனே முருகா!” என்ற ஓசைகள் ஓய்ந்து விட்டன. மலையின் உச்சிக்கு ஏறிய முருக பக்தர்கள் அனைவரும் அடிவாரத்திற்கு இறங்கிச்சென்றுவிட்டார்கள். இரண்டே இரண்டு ஜீவன்கள் மட்டும் உலகை மறந்து, உச்சி வெயிலை மறந்து, உணர்ச்சிச் சுழியில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருந்தன.
உருக்கை உருக்கி வார்த்ததைப் போன்றிருந் தான் அவன்-மனுேகரன். அவனுடைய உறுதி வாய்ந்த கரங்களினுல் சுற்றி வளைக்கப்பட்டு அவனுடைய தோளிலே சாய்ந்து கிடந்தது ஒரு தங்கச் சிலை-ஜானகி
மனுேகரன் எங்கிருந்தோ வந்தான். ஜானகி வேறெங்கோ இருந்து வந்தாள். மலையில் ஏறும் போதும் ஒன்ருக ஏறவில்லை. இறங்கும்போது இருவரும் அருகருகே வந்தபோதும், ஒருவரை யொருவர் அடையாளம் காணவில்லை. ஓரிடத்தில்

105
அவளுடைய கால் வழுக்கியது. விழவிருந்தவளை எட்டிப் பிடித்துக் காப்பாற்றினுன் அவன். அப் போதுதான் அடையாளம் கண்டுகொண்டனர்; அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
அவர்களைத் தாண்டி எத்தனையோ பேர் சென்று விட்டனர். ஆணுல் அந்த இருவரும் மட்டும் அங் கிங்கு அசையவில்லை. காலவெள்ளத்தைக் கடந்து ஏதோ ஒரு கனவுலகிலே மிதந்து கொண்டிருந்தனர்.
*மனுேகர் ? - நெஞ்சு முழுவதும் நிறைந் திருந்த ஆசை அனைத்தையும் அற்புதமான ஒலி யாக்கி, அன்பு சொட்ட அவள் அழைத்தாள்.
*ஜானகி ?? - அவனுடைய குரலிலே ஒருவித ஏக்கம்; தணியாத தாபம்.
அதற்குமேல் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. குரல் நடுங்கியதைப் போல் இரு வருடைய உடல்களும் நடுங்கின. பின்னிப் பிணைந் திருந்த கைகள் தாளம் போடக் கால்கள் தந்தி யடித்தன.
விரிந்து கிடந்த அவனுடைய விழிகளுக் குள்ளே விசுவமான மார்பகங்களிலே, வெளிறிப் போன கன்னங்களிலே அவள் எதையெதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
அவனுடைய நெஞ்சப் பறவையோதன் நீண்ட சிறகுகளை அடித்துக்கொண்டு, மலையையும், காட் டையும், மாதங்களையும் வருடங்களையும் கடந்து, அவசர அவசரமாகக் கற்பனைக்கெட்டாத கடு வேகத்துடன், கண்ணிற்கெட்டாத நெடுந்துTரத்

Page 60
106
திற்குச் சென்றது. யாருமே தேடாது அமைதியாகக் கிடந்த ஒரு குளத்தின் படிக்கட்டில் இருந்த அந்தப் பறவையின் நுண்ணிய செவிகளில், அன் பும் ஆசையும் ஒழுக, இன்பமும் இனிமையும் இழையோட இரண்டு குரல்கள், ஒன்றன்பின் ஒன்ருய், ஒன்றுடன் ஒன்ருய், இணைந்தும் பிணைந் தும், பிரிந்தும் பொருந்தியும், வெகு தொலைவில் இசைக்கப்படும் வீணையும் வேய்ங்குழலும் காற்றில் மிதந்து வந்து காதில் நுழைவதைப் போல், இலே சாக, மிக மெல்லியதாகக் கேட்டன. குரலுக்குரிய குமரனையும் குமரியையும் அதன் கண்கள் வட்ட மிட்டன.
米 米 米 *யார் என்ன சொன்னுலும் என்ஆனக் கைவிட மாட்டீர்களே மனுேகர் ???
** யார் என்ன, ஆண்டவனே வந்து ஜான கியை மறந்துவிடு? என்று ஆணையிட்டாலும் கூட உன்னை மறக்கப் போவதில்லை; உன்னை மறந்து வேருெருத்தியை மணக்கப் போவதுமில்லை."
* பணத்தில் மிதந்து, படிப்பில் சிறந்து, பதவி யில் உயர்ந்து விளங்குபவர் நீங்கள். நான் எந்த விதத்திலும் தங்களுக்குத் தகுதியில்லாத ஏழை. அன்பு என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவுமே என் னிடம் இல்லை. இந்த நிலையில், உங்கள் உற்ருரும் உறவினரும், பெற்றேரும் மற்ருேரும் உங்களுக்கு, உடந்தையாக இருப்பார்களென நம்புகின்றீர்
56TT p

107
68 அவர்களைப் பற்றி நான் கவலைப்படப் போவ : தில்லை ஜானகி, என் இதயத்திற்கு இதமளிக்கும், இந்த ஒவியக் கலைக்காக என் பட்டத்தையும் பதவியையும் விட்டுத் தொலைத்ததுபோல், என் உள்ளத்துடன் கலந்து ஊக்கமும் உயர்ச்சியும், அளிக்கும் உனக்காக, எதையும் அர்ப்பணிக்க நான் தயார் ஜானகி..??
* அப்படியாளுல். ஏனத்தான் என்னுருவை ஒவியத்தில் வரைய மறுக்கின்றீர்கள்? ஆசையோடு கேட்டேனே, ஆயிரந் தடவை யாராவது பார்த் தால் ஏதாவது நினைத்து விடுவார்கள் என்று பயப் படுகின்றீர்களா ???
* பயமா ? எ ன க் கா ? அப்படியொன்று மில்லை ஜானகி, ஆணுல்.....”
* சொல்லுங்களத்தான் ??
* உன்னையே உரித்து வைத்தாற்போன்ற ஓர் ஒவியத்தை வரைய, நான் ஒரு தடவையல்ல. ஓராயிரந்தடவை முயன்றதுண்டு. ஆணுல் என்னுல்" முடியவில்லை. என் முன்னுல் நீ இருக்கும் வரை உன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, வேறெதுவும் என்னுல் செய்ய முடிவதில்லை . *
6 அத்தான் 199
**ஆமாம் ஜானகி என் உள்ளத்து உணர்ச் சிகளை அடக்கி, உன் உருவத்தை மட்டும் மனக் கண்ணில் நிறுத்தி, என் துாரிகையை எடுப்பேன். ஆணுல் அந்த வேளையிலும் என் தூரிகையின் நுனி யிலே நீ தோன்றி உன் துடியிடை நடுங்க நர்த்தன"

Page 61
108
மிடுவாய். உன் அழகு நடனத்தால் என்னை மயக்கி, என் நெஞ்சையும் நினைவையும் கொய்தெடுத்து, கற்பனைக் கெட்டாத ஓரிடத்திலே, ஆகாச ஊஞ்ச லிலே வைத்து என்னைத் தாலாட்டுவாய். நான் என்னை மறந்து அந்த மானசீக உலகிலே மயங்கிக் கிடப்பேன். 9
* அத்தான் ? *மயக்கம் நீங்கி, உன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் உன் ஒவியத்தை வரைய ஆரம்பித்தேனுணுல், பூர்த்தியாக்கப்படாத உன் அங்கங்கள்-தங்கத்துண்டுகள்-அங்கங்கே கிடந்து அலறித் துடித்து, “சித்திரவதையா செய் கின்ருய்?" என்று கேட்டு என்னைச் சித்திரவதை செய்யும். ஒவியத்தைப் பூரணமாக்க முடியாத ஆற்றமையால் நான் அழ, என் கண்ணிரால் வண்ண மை கரைய, அந்த வெள்ளத்தில் நான் மூழ்கி மூச்சுவிட முடியாமல் தவிப்பேன்.”
ஜானகி இன்னும் சற்று நெருங்கி வந்தாள். தன் மெல்லிய சேலைத் தலைப்பால், அவனுடைய கண் மடல்களை ஒற்றினுள். அந்த ஸ்பரிசத்தை அவனுல் தாங்க முடியவில்லை. அப்படியே அவளைப் பிடித்து, கட்டிய&ணத்து, அவளுடைய பட்டுக் கன்னத்தில் தன் முத்திரையை ஒட்டப் பதித்து . . ஆசை நினைவுகளுடன் தன் அகன்ற கரங்களுக்குள் அவளை அடிமையாக்குவதற்கிடையில் . அவள் பாய்ந் தோடி விட்டாள்.
*ஜானகி . ஜானி . ஜானி. . *
米 ck 米

109
*ஜானகி 1. ஜானி . ஜானி . * இந்த ஜானகி திடுக்குற்ருள். * திடீரென்று ஏன் இந்தக் கூச்சல்??
மனுேகரனின் இரும்பு உடலைப் பிடித்து அவள் குலுக்கினுள். அவனுடைய மயக்கம் நீங்கியது. * ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலக் கத்தி னிர்களே! நான் பயந்து விட்டேன்??-இது ஜானகி. * பேயல்ல . பேயைப்போல் வந்த . வேண்டாம். நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். அவ்வளவுதான்!”-விருப்பு வெறுப்பற்ற குரலில் பதிலளித்த அவன், இப்போது அவளிடமிருந்து விலகிச் சற்று அப்பால் நின்றன்.
சூழ்நிலை மாறிவிட்டது. மனமொத்த நண்பர் களாய், அந்த மோனப் பெருவெளியிலே அவர் களால் நிற்பதற்கு முடியவில்லை.
உச்சி வெயில் இப்போதுதான் சுட்டது. தனிமை இப்போதுதான் பயங்கரத்தை ஊட்டியது
இருவரும் இறங்கத் தொடங்கினுர்கள். பழைய நினைவுகள், பாச அலைகள், பாரமாக அழுத்தத் தொடங்கின. தள்ளாடித் தள்ளாடியபடியே இறங் கிணுர்கள். அவனும் பேசவில்லை; அவளும் பேச வில்லை.
மலையடிவாரத்தில் மூன்று வயதுக் குழந்தை ஒருத்தி, ஜானகியுடன் சேர்ந்து கொண்டாள்.
** இவள்தான் என் மகள், அன்பரசி’- புதி தாக வந்தவளை அறிமுகப் படுத்தினுள் ஜானகி

Page 62
10
குழந்தையை வாரித் தூக்கினுன் அவன். அவனுடைய முகத்தின் பயங்கர மாற்றத்தைக் கண்ட குழந்தை அழுதது. சமாதானப் படுத்தினுள் தாய,
*நான் இதுவரை எந்தக் குழந்தையையும் என் கைகளாற் தொட்டதில்லை. இன்றைய முதல் முயற்சியே முழுத் தோல்வியடைந்துவிட்டது’- விரக்தியுடன் சிரித்தான் மனுேகரன்.
மெளனக் கண்ணிர் சிந்தியபடி inds25T அனைத்துக் கொண்டாள் ஜானகி.
கோவில் சமீபித்துவிட்டது. ஆண்களும் பெண்களும், கிழவர்களும் குழந்தைகளுமாக ஆயிர மாயிரம் பக்தர்கள் அங்கே குழுமியிருந்தனர். அத்தனை பேரின் மத்தியிலும் மனுேகரனும் ஜானகி யும் தனித்து நின்றனர்.
* இந்தச் சன சமுத்திரத்திற்குள், உன் குழந் தையுடன் என்ன செய்யப் போகின்ருய்? ”- அவன் கேட்டான்.
“இப்படி நெருக்கடியான சூழ்நிலையில்வாழ்ந்து நான் பழகிவிட்டேன்.என் கணவர் காலமானதின் பிறகு, கோவிலும் குளமும்தான் என்னைக் காத்து வருகின்றன.”
மனுேகரன் அவளைப் பார்த்த பார்வை, ஆயிரம் கேள்விகளை அள்ளி வீசியது.
அவளுக்கு என்ன தோன்றியதோ, ஒரே மூச்சில் எல்லாவற்றையும் சொல்லியழுதாள்.
米

111
*கடும் நோயினுல் நான் கஷ்டப்பட்டுக் கதறிய நேரத்தில் கைகொடுத்துதவினுர் உங்கள் அன்னை. பணத்தை மருந்தாக்கி, பாசத்தைப் பத்தியமாக்கிப் பக்குவமாகப் பராமரித்தார் அவர். அந்த இலட்சியப் பெண்ணின் பின்னுல் உங்க ளுடைய எழில் உருவத்தைக் கண்டேன். உடல் நோயினுல் வாட, உள்ளம் உங்களின் நினைவால் துள்ளிக் குதித்தது. வாடியிழந்த மேனியுடன், உருமாறிய உடம்புடன், உங்கள் முன் தோன்றக் கூடாது என்பதற்காக, சில காலம் என் ஆசையை அடக்கி அமைதியாக இருந்தேன்.
என் நோய் மாறியது. உங்கள் தாய் பேயாக மாறினுர். உங்களை மறந்துவிடும்படி பணிவுடன் வேண்டினர்; அன்புடன் கேட்டார்; ஆத்திரத் துடன் அதிகாரமிட்டார்.
அதிர்ச்சியினுல் என் வாயடைத்து விட்டது.
உங்கள் அன்னை உங்களின் விருப்பத்தின்படி, உங்களின் வேண்டுகோளின்படிதான் எனக்குப் பணிவிடை செய்தார் என்று நான் நினைத்தது தவறு என்பது, அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது.
உங்களுக்குச் செய்தியனுப்ப நினைத்தேன். ஓவியக் கலைக்குள்ளே உங்கள் உயிரைக் கலந்து வாழ்ந்தீர்கள். உங்களை இந்த உலகிற்குக் கொண்டுவர வேண்டுமானுல், நானே நேரில் வந்தாற்ருன் முடியும் ஆணுல் அங்கிங்கு அசை வதற்குக் கூட உங்கள் அன்னை என்னை அனுமதிக்கவில்லை.

Page 63
112
எனக்கு உயிர் கொடுத்தவர் அவர் பணத் தைப் பணமென்று பாராமல் செலவு செய்து பணிவிடை செய்தவர் அவர். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைப் பெற்று இப் பூவுலகிற்களித்த புண்ணியம் செய்தவர் அவர். sy6).JO)6O) lull அன்பிற்கும் ஆத்திரத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிபணிய வேண்டியவள்தானே நான் !
உங்களை மறக்க நினைத்தேன்; முடியவில்லை. மனத்தை மரமாக்கி, இதயத்தை இரும்பாக்கி, என் சொந்த மச்சானுக்கு மாலையிட்டேன்.
உங்களை மறக்க முடியவில்லை. என் மகளுக்குத் தந்தையான மறுமாதமே, மரணத்தின் பிடியிற் சிக்கினுர் என் கணவர். என் வாழ்வு போய்விட்டது.
உங்களை மறக்க முடியவில்லை. இத்தனை நாட்களுக்குப் பிறகு, இன்றுதான் உங்களின் தரிசனம் கிடைத்தது. *
米 米 米 ஜானகியின் பேச்சு முடிந்தது. பேச முடியாத பெருந் துயரத்துடன் பெரு மூச்சுவிட்டான் மனுேகரன். அவளுடைய சோகக் கதைக்காக அவன் அனுதாபம் தெரிவிக்கவு மில்லை; ஆறுதல் கூறவுமில்லை. சிறிது நேரம் எதையோ நினைத்தபடி எங்கோ பார்த்துக்கொண் டிருந்தான்.
சன சமுத்திரத்தின் அலே, இருவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. பக்தி வெறியில்

13
பரபரப்புடன் ஒடியாடித் திரிந்த சிலர், அவர்களை இடித்து நெருக்கினர்கள்; முட்டித் தள்ளினர்கள். குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு அவள் கஷ்டப்படுவதை அவனுல் சகிக்க முடிய
** இங்கே நின்று கஷ்டப்பட உன்னுல் முடியாது. என் வீட்டிற்கு வா. க ஆறுதலாகப் பேசிக் கொள்ளலாம்.? அவனுடைய அழைப்பில் தனிப்பட்ட அன்போ, பரிவோ காணப்படவில்லை.
* உங்கள் வீடா ? இங்கேயா??, சந்தேகத் துடனும் கலவரத்துடனும் அவள் கேட்டாள். திருவிழாக் காலம் தவிர்ந்த மற்றைய நாட்களில் ஈ, காக்கை கூடப் பறக்காத அந்தக் காட்டுப் பிரதேசத்தில், அவன் வீடுகட்டி வாழ்கின்ருன் என்பதை அவளால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
பதில் கூருது அவன் நடந்தான்; பதிலே எதிர்பார்க்காது அவள் தொடர்ந்தாள்.
米 ඡීද 米
ஜனசந்தடியற்ற, ஒதுக்குப்புறமான ஓரிடம். பர்ணசாலையைப் போன்று சின்னஞ்சிறு வீடு அங்கே. அவனுடைய வீடு அதுதான். அவளே உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தான்.
* பயங்கரமான இந்த இடத்தில், நீங்கள்
தனியாகவா வாழ்கின்றீர்கள் ?” அவளுடைய கேள்வியின் ஒவ்வொரு அட்சரத்திலும் அனுதாபம் துளிர்த்தது.
8

Page 64
114
பதில் சொல்ல வாயைத் திறந்தான் மனுேகரன். ஆணுல் வார்த்தைகள் வெளிவரவில்லை. பதிலாக, கண்களை உருட்டி விழித்து அவளை உக்கிரமாகப் பார்த்தான்.
பார்வையின் வேகத்தைத் தாங்க முடியாது பயந்து நடுங்கினுள் அவள்.
நிமிடங்கள் நீண்டன.
நெஞ்சை உலுக்கும் இந்தப் பயங்கர நிகழ்ச்சி, அந்தப் பச்சைக் குழந்தையைப் பயமுறுத்தியது. குழந்தை அலறியது.
மனுேகரன் மீண்டும் மனிதனுணுன்.
* இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து விட்டது ஜானகி, தனிமைதான் என் போக்கிற்கு ஏற்றது’-முன்போல் அன்பாக, அமைதியாக, அடக்கமாகப் பேசினுன்.
அவளுக்கு இப்போது , சற்றுத் தெம்பு வந்தது.
6 வெறிகொண்ட வேங்கையைப் போல், விழியினுல் மிரட்டியதைக் கண்டு, நானே வெல வெலத்துவிட்டேன்,”-குறைகாணும் குரல் அவ னுடைய உள்ளத்தைக் குடைந்தெடுத்தது.
6 எனக்கு வெறிதான் வந்துவிட்டது; ஜானகி ! இன்றல்ல, என்றுமே ஒருவித வெறியுணர்ச்சியுடன் பித்த மயக்கத்துடன்தான் நான் வாழ்கிறேன். வெறியனுக நான் வாழும்போது இந்த உலகத்தின் மேடு பள்ளங்களை நான் மதிப்பதில்லை; உயர்வு

115
தாழ்வுகளை உணர்வதில்லை; நயவஞ்சகத்தையும் நம்பிக்கைத் துரோகத்தையும் நினைப்பதில்லை. இவைகள் இல்லாத ஓர் உன்னத உலகத்தில் என்னுல் வாழமுடிகின்றது.”
இதைச் சொல்லி முடித்தவுடன், விறுக்” கென்று எழுந்து சமையலறைக்குச் சென்றன். * பத்து நிமிடத்தில் உணவு பரிமாறுவேன்” என்ற அவனுடைய குரல், உள்ளிருந்து கேட்டது.
உட்கார்ந்திருந்தபடியே அறை முழுவதையும் சுற்றிக் கண்ணுேட்டம் விட்டாள் ஜானகி. வெறும் அறையாக அது காட்சியளிக்க வில்லை. பார்ப் போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் கலைக்கூடமாக அது திகழ்ந்தது. வாழ்க்கையையே வண்ண ஒவியமாக வரைந்திருந்தான் மனுேகரன். பாச மயக்கத்தால் ஜானகியின் கண்கள் கசிந்தன. பசி மயக்கத்தால் குழந்தை அழுதது. அங்கிருந்த ஓவியங்களைக் காட்டிக் குழந்தையைச் சமாதானப்படுத்த முயன்ருள் ஜானகி.
பக்கத்திலே ஓர் அறை திறந்தும் திறவாமலும் இருந்தது. அங்கே சென்றல், மேலும் சில நல்ல ஒவியங்களைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு.
உள்ளே சென்ருள். எங்குமில்லாத புனித மான அமைதி அங்கே ஆட்சி புரிந்தது. அவள் என்றும் கண்டிராத கலை, அங்கே கொலு வீற்றிருந்தது. அழகு ஒளிவிடும் ஓவியங்களைப் பார்த்தபடி, இன்னும் சற்று உள்ளே சென்ருள்.

Page 65
116
யாருமே இல்லை என்ற நினைவுடன், அங்கே சென்ற அவளை, அன்புடன் வரவேற்கும் பார்வை யுடன், புன்னகை பூத்துப் புதுமலராக நின் ருள் ஒரு பெண் !
தன்னுடைய மறுபதிப்பைப் போன்றிருந்த அவளைக் கண்டு அசந்துவிட்டாள் ஜானகி. மங்கி மறைந்துபோன அந்த இளமைக் காலத்தில் அவளிடம் குடிகொண்டிருந்த அங்க அழகை, ஆசை சொட்ட மனுேகரன் வர்ணித்தது, அவளுடைய நினைவிற்கு வந்தது. அந் த. வர்ணனையில் அணுவளவும் தவருது, அச்சிட்டது போல், அப்படியே இருந்தாள் அந்தப் பெண் !
ஜானகி எதையோ நினைத்துக் கொண்டாள். குழந்தையைத் தொப்'பென்று கீழே போட்டாள்.
** அக்கா! நீங்கள் பாக்கியசாலி. இவரைக்
கணவராக அடைந்த நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரிதான்!” என்று கூறிக்கொண்டே அந்தப் பெண்ணின் கால்களில் விழுந்து, அவற்றைத் தன் கண்ணிரால் கழுவினுள்.
அந்தக் கால்கள் கரைந்தன. சிவந்த பாதங் களிலிருந்து செந்நீர் பாய்ந்தது!
அப்பொழுதுதான் அவளுக்கு உண்மை புலப்பட்டது. அங்கே நின்றவள் வேறு யாருமல்ல; அவளேதான் !
ஆசையும் அன்பும் துளிர்க்க ஆயிரம் தடவைக்கு மேல் அவள் கெஞ்சிக் கேட்ட

117
போதெல்லாம் மனுேகரனுல் வரைய முடியாதிருந்த இவளின் ஓவியத்தை இப்போது அவன் வரைந்து தான் விட்டான் ! தன் உயிரைக் கொய்தெடுத்து உதிரத்துடன் கலந்து வரைந்த அந்த அற்புத ஒவியத்தில் உயிர்க்களை சொட்டியது; கலை ஒளி சுடர்விட்டது; அழகு ஒழுகியது.
தன்மீது அவன் கொண்டிருந்த அன்பின் தீவிரத்தை அவள் உணர்ந்து கொண்ட போது, அவள் வாய்விட்டு அலறிஞள்.
சமையல் அறையினுள்ளிருந்து அவஸ்தைப் பட்ட மனுேகரனை அவளுடைய அலறல் வர வழைத்தது.
ஜானகியின் செயலைக் கண்ட அவன், தன்னை மறந்தான்; மீண்டும் வெறியனுணுன்.
*ஜானகி....?--கோபத்தினுல் அவனுடைய குரல் கேரியது.
பரிதாபமாக அவனைப் பார்த்தாள் அவள்.
* என் மனைவியின் மாளிகைக்குள் உன்னை துழையச் சொன்னது யார்? அந்த அழகுத் தெய்வத்தின் முன், அழுது அழுது, அசுத்தப் படுத்தச் சொன்னது யார்? மாசு படிந்த உன் தோற்றத்தினுல் என் மாணிக்கத்தின் ஒளியை ஏன் மங்கச் செய்தாய்?
சொல்லுக்குச் சொல், வார்த்தைக்கு வார்த்தை மனுேகரனின் வேகம் அதிக்ரித்தது.

Page 66
118
* அவளுக்கு முன்னுல் நிற்பதற்கு நீ தகுதி வற்றவள் ” என்று சொல்லி ஜானகியின் தலை மயிரைப் பற்றி வெளியே இழுத்து வந்தான் aGgOa5g 6ót.
* அத்தான் !”-கண்களில் நீர் மல்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.
* அத்தான் என்று என்னை அழைக்கும் உரிமை, அந்த அறைக்குள்ளிருக்கும் ஒரே ஒருத்திக்குத்தான் உண்டு.” (്ഥ3ണ്ഡ Gug, முடியாதபடி துக்கம் அவனுடைய தொண்டையை அடைத்தது.
என்ருலும் விக்கி விக்கிப் பேசினன். ‘ஐந்து வருடங்களுக்கு முன் என் காதலியாக இருந்த ஜானகியை, எளிமையும் அழகும் ஒளிவிடும் அந்த மாசற்ற ஜோதியை நான் பிரதிட்டை செய்திருக் கின்றேன். முன்பு சொரிந்த அதேயளவு அன்பை இன்றும் அவள் சொரிகிருள். அன்பு மொழிகளை உதிர்த்து என் இதயத்துடன் உறவாடுகிருள். ஜானகி! நீ வேறு, அவள் வேறு. அவளுக்கு, முன்னுல் நீ நிற்பதற்கு அருகதையற்றவள். நீயும் அவளும் சேர்ந்து ஓரிடத்தில் வாழ முடியாது. தயவு செய்து இங்கிருந்து போய்விடு!”
கனவு வெறி, கலை வெறி, காதல் வெறி ஆகிய வற்றின் கூட்டுத் தொகையாக நின்ற மனுேகர னின் கண்களிலிருந்து கண்ணிர் சொட்டியது.
பரிதாபத்துடன் அவனைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்ருள் ஜானகி, பிறகு, அவனுடைய

119
பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு வெளியே "வந்தாள்.
தோளில் கிடந்த குழந்தை துடித்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. கோவிலைச் சுற்றிச் சூழ்ந்து நிற்கும் மனிதக் கும்பலுக்குள் மறைவதற்காக அவள் நடந்துகொண்டிருந்தாள்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு, மனுேகரனுக்கு இவ்வுலக நினைவு மீண்டது. கண்களைத் துடைத்து விட்டு, வெளியே பார்வையைச் செலுத்தினுன்.
வெகு தொலைவிலே, ஜானகி தள்ளாடித் தள்ளாடியபடி நடந்து செல்வது தெரிந்தது.
பொறுக்க முடியாத துக்கத்துடன், உள்ளே சென்று, அவளுக்கு முன்-ஒவியத்திலிருக்கும் அவனுடைய ஜானகிக்கு முன் விழுந்தான்.
*அன்பே என்னை உன்னிடமிருந்து பிரித்து விடாதே. நீ, நான் வரைந்த உன்னத உயிரோவியம் மட்டுமல்ல; நீ கைப்படாத முல்லைப் பூ என் காதலி; என் மனைவி!’ 96.

Page 67
நிறைவு
கைலாசநாதரின் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தது. அருகிலுள்ளோர் அதைக் கவனிப் பதற்கு முன் அதைத் துடைப்பதற்கு விரும்பிச் சட்டைப் பைக்குள் கையை விட்டார், கைகுட் டையை எடுப்பதற்காக. பை இருந்தாலல்லவா, அதற்குள் கைக்குட்டையும் இருக்கும்? தன் சட்டை முழுவதையும் ஒரு தடவை பார்த்துக் கொண்டார். அந்தச் சனக் கூட்டத்தினுள் இடிபட்ட படி யினுல், இனிக் கிழிந்து போவதற்கு இடமின்றிக் கந்தலாகக் காட்சியளித்தது அது. கல்லூரியி லிருந்துஅவசர அவசரமாகப் புறப்பட்டு வந்ததால், சால்வையைக் கூட அவர் எடுத்து வரவில்லை. கூட்டத்திலிருந்து பிரிந்து ஏதாவதொரு தனி இடத்திற்குச் செல்ல முயன்ருர். சற்றுமுன் அவரைத் திட்டிய பொலீஸ்காரன் இன்னமும் அங்கேதான் நின்று கொண்டிருந்தான், சனக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக. அவனைக் கண்டதும் தன் முயற்சியையும் கைவிட்டார் கைலாசம்.

121
நாட்டுப் புறத்திலிருந்த கல்லூரி ஒன்றில் கைலாசநாதர் ஆசிரியராக இருந்தார். வயது முப்பதுக்கு மேலிராது. ஆணுல் பார்ப்பவர்கள், ஐம்பதுடன் ஐந்தையோ, பத்தையோ கூட்டித் தான் மதிப்பிடுவார்கள். தோஜல உள்ளே தள்ளி, நரம்புகளை வெளியே இழுத்து வேடிக்கை காட்டு வதைப் போலிருந்தது அவருடைய உடம்பின் தோற்றம்.
米 米 水
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளி யேறிய அவர் வேலைக்காக அலைந்தார். பலன் கிட்ட வில்லை. அவர் சென்று விசாரித்த பாடசாலை களிலெல்லாம் கட்டட நிதி* என்ற ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். அதற்கு உதவும் நிலையில் அவர் இருக்கவில்லை! கடைசியில் யாரோ ஒருவர் கூறிய இலவச ஆலோசனையின் பேரில் மேற் கொண்டு படித்தார். எத்தனையோ இடையூறுகளுக் கிடையில் “இண்டரில்" தேறினர். இரண்டு வருடங்களின் முன் அவரை வெறுத்தொதுக்கிய உலகம் இப்போது விரும்பி வரவேற்றது. பல இடங்களிலிருந்து வேலைக்காக அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன. அரசாங்க வேலையில் சேர்ந்தால் அதி விரைவில் முன்னேறி விடலாம் என்றனர் சிலர். அந்தஸ்தும் உயரும். இரண்டுமாதச் சம்பளத்தை மிச்சம் பிடித்தாலே போதும், இதுவரை பட்ட கடன்களையெல்லாம் அடைத்து விடலாம்!
கைலாசநாதரால் இவர்கள் கூறியதை ஏற்க முடியவில்லை. 4۔

Page 68
122
உலகத்தில் வாழ்வதற்குப் பன்னம்தானு முக் கியம்? ஆசிரிய வாழ்வு அமர வாழ்வாகத் தோன்றி யது அவருக்கு எதிர் கால உலகத்தை உருவாக்கு பவர்கள் ஆசிரியர்கள். ஆயிரம் ஆயிரம் இளம் உள்ளங்களின் களங்க மற்ற அன்பைப் பெறலாம். உயர்ந்த கருத்துக்கள் பலவற்றை உள்ளன்புடன் மாணவர்களுக்கு ஊட்டலாம்.
இப்படி ஓடிய சிந்தனை அவரைக் கல்லூரி ஆசிரியராக்கிவிட்டது.
முதல் மாதச் சம்பளத்தை எடுத்த உடனேயே அவரை முற்றுகையிடத் தொடங்கினர்பலர்.இருபதி ஞயிரத்திலிருந்து ஏறிக் கொண்டு போனது அவர்கள் கொடுக்கத் தயாராயிருந்த சீதனத் தொகை. இப்போது கூட அவர் பணத்தின் அவ சியத்தை உணர வில்லை. வந்த பெண்களெல்லோ ரையும் வேண்டாமென்று ஒதுக்கி விட்டுச் சிறு வயதில் தன்னுடன் கல்வி கற்ற ஓர் ' ஏழைப் பெண்ணை மணந்து கொண்டார். குழந்தைச் செல்வம் குறைவின்றிக் கிடைத்தது. ஆணும் பெண் ணுமாக ஆறுபேர் கிடந்தும், தவழ்ந்தும், ஒடியும் அந்தக் குடிசையை நிறைத்தனர்.
கல்லூரி, பலவிதப்பட்ட அனுபவங்களே அவருக்குக் கொடுத்தது. உணர்ச்சிக் குமிழிகளை உள்ளிருந்து வெளியே தள்ளும் உருக்குக் குடம் போன்றது கல்லூரி. அங்கே அன்பு உண்டு; விருப்பு, வெறுப்பு, காழ்ப்பு எல்லாம் உண்டு. பொருமை, எரிச்சல் கூட அங்கே பொங்கி வழிவ துண்டு. ஆசிரியர்களுக் கிடையில் ஒற்றுமை

123
கிடையாது. ஒருவரை ஒருவர் தூற்றுவதும் மேலதிகாரிகளுக்குக் கோள் சொல்லுவதுமே தங்கள் தொழில் என்ற நினைப்பில் வே8ல பார்க்கும் பலர் இருந்தார்கள். காரணம் எதுவுமின்றிக் கைலாச நாதர்மீது வெறுப்பைக் காட்டினுர் தலைமை ஆசிரியர். மாணவர்கள் காட்டிய மாசற்ற அன்பு ஒன்றுதான் அவருக்கு மன நிம்மதியைக் கொடுத்தது. மாணவர்களின் அன்பு வெள்ளத்தில் அவர் மிதந்தார். மற்றையோர் காட்டிய கோபம்,  ெவறு ப் பு எல்லாவற்றையும் அந்த அன்பு வெள்ளத்தில் கரையவிட்டார்.
se), 6) (b50) Ltd வீட்டில் அவருக்கெனத் தனியாக ஒரு நூல் நிலையம் உண்டு. வெவ்வேறு துறைகளில் வல்லுநரான அறிஞர்களின் கருத்துப் பொக்கிஷங்கள் பல அங்கே இருந்தன. இரவுவேளை களில் அந்த நூல்களுக்குள்ளேயே புதைந்து கிடப்பார் அவர். படுக்கைக்குப் போகுமுன் நூறு பக்கங்களாவது படித்து முடிக்கா விட்டால் அவருக்குத் தூக்கம் வராது. விடியற்புறம் நான்கு மணிக்கு அவருடைய சிந்தனை மறுபடியும் வேலை செய்யத் தொடங்கிவிடும். முதனுளிரவு படித்துத் தேக்கியவற்றை அலசி அலசிப் பார்ப்பார். புதுப் புதுக் கருத்துக்கள் தோன்றி அவர் உள்ளத்தை நிறைக்கும். அதற்குப் பிறகு அவருக்கு வேலையே ஓடாது. அவற்றை வெளியே சொல்லும் வரைக்கும் அவருக்கு ஏறக்குறைய பிரசவ வேதனை" தான். மாணவர்களின் மனத்தில் புதிய கருத்துக் களைப் பதியவைக்கும் போது, அவர்கள் முகத்தில்

Page 69
124
அரும்புகின்ற மலர்ச்சியைக் காணும் போது, அவர் அடையும் இன்பம் இருக்கின்றதே அதை எழுத்தில் வடித்துவிட முடியாது; ஒரு சிலர்தான் உணர்ந்து கொள்ள முடியும். அந்த இன்பம் ஆசிரியர்களின் அரும் பெரும் சொத்து; மற்றவர் களால் அடைய முடியாத மாபெரும் பாக்கியம்.
நாட்கள் செல்லச் செல்லத்தான் பணத்தின் அருமையை அவரால் உணர முடிந்தது. வீட்டில் மனைவி பாடும் இல்லைப்பாட்டும் அதுவாங்கித்தா, இது வாங்கித் தா’ என்ற செல்வக் குழந்தைகளின் சிணுங்கல்களும் அவருடைய பணமுடையைக் குத்திக் காட்டுவன போன்றிருக்கும். எல்லாவற்றை யும் சமாளிக்க வருவாய் போதாது தவித்தார். வேறு ஏதாவது வேலை பார்த்தால் அதிகப்படியான சம்பளம் பெறலாமே என்று அவ்வப்போது ஏங்கு வார். இலட்சியத்தைப் பெரிதாக எண்ணி இந்த ஆசிரியத் தொழிலை ஏற்றுக் கொண்டேன். வயிற்றுப் பாட்டிற்குக் கூட இப்போது கஷ்டமாக இருக் கின்றதே! நான் இப்படிச் செய்தது உண்மையில் தவறுதானுே !? அவருடைய எண்ண அலைகள் சில சமயம் இந்த ரீதியில் ஒடும். ஆணுல் பள்ளிக் கூடம் போனதும் இவைகளெல்லாம் அவருக்கு மறந்து விடும். காலையில் சரியாக எட்டு மணிக்குக் கல்லூரி வாசற்படியில் கால் வைத்து, மறுபடியும். மாலை ஐந்து மணிக்கு அங்கிருந்து புறப்படும் வரைக்கும் அவருக்குப் புறவுலக நினைவே இருப்ப தில்லை. ஒவ்வொரு வேளைகளில், சற்றுக் குறை வான மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லிக்

125
கொடுப்பார். மாணவர்களுடன் கலந்துரையாடு வதில், மாணவர்களோடு மாணவராய் ஒன்றியிருப் பதில் அவருக்குத் தனி இன்பம் ஏற்படும்.
米 ek
வழக்கம் போல அன்றும் கல்லூரிக்குச் சென் ருர், மேல் வகுப்பொன்றில் இலக்கியப் பாடம் முத லாவதாக இருந்தது. கம்பனுடன் மேல் நாட்டுக் கவிஞர்கள் பலரை ஒப்பிட்டுக் காட்டினுர், கம்ப" னின் கவிதா சன்னிதானத்திலே மில்டன், தாந்தே போன்ற மேனுட்டுக் கவிஞர்கள் முடி சாய்த்து அடிபணிய வேண்டும் என்பதைத் தகுந்த மேற் கோள்களுடன் அழகாக விளக்கிக் கொண்டிருந் தார். தன்னையே மறந்து நின்ற அந்த வேளை யிலேதான் தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது, உடனே வந்து பார்க்கும்படி, செய்தி கொண்டுவந்தவனையும் சேர்த்துச் சபித்துக் கொண்டு அங்கே சென்ருர்,
கடுகடுத்த முகத்துடன் தன் அறையில் உட்கார்ந்திருந்தார் தலைமை ஆசிரியர். வந்தவரை உட்காரக்கூடச் சொல்லாமல், 'உங்களைப் பற்றி இப்போது அடிக்கடி புகார்கள் வருகின்றன” என்ருர்,
*என்ஜனப் பற்றியா சார்?” ஆச்சரியத்துடன் கேட்டார் கைலாசம்.
68உங்களைப் பற்றியேதான். பாடத்தில் கவனம், செலுத்தாது, தேவையற்ற விஷயங்களை மாண"
வர்கள்மீது திணிக்கின்றீர்களாம்.

Page 70
126
கைலாசம் அலட்சியமாகக் கேட்டார், இதற் காகவா கூப்பிட்டீர்கள்?”
* பாடப் புத்தகங்களிலுள்ளவற்றை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதானுல் அதற்கு ஆசிரியர் என்று ஒருவர் தேவையில்லை; அரிச்சுவடி தெரிந்த ஒருவரே போதும். அவர் களின் அறிவு பரந்து, விரிந்து வளரவேண்டு மானுல், வேறு நூல்களிலுள்ளவற்றையும் சந்தர்ப் பத்திற் கேற்றவாறு சொல்லிக் கொடுக்கத்தான் வேண்டும். இதை யறியாது யாராவது புகார் செய் தால் அதைப் பெரிது படுத்தித் தன்னையும் கூப் பிட்டுவிட்டாரே தலைமை ஆசிரியர்’-இவ்வாறு எண்ணிக் கொண்டார் கைலாசம்.
68 நீர் ஏதோ விளையாட்டாக நினைத்து விட்டீர். இன்ஸ்பெக்டர் கூட அதைக் கவனித்து விட்டா ராம். இதோ இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்?’ என்று கேட்டுக்கொண்டே கடித மொன்றை அவரிடம் நீட்டினுர் தலைமை ஆசிரியர்.
கடிதத்தைப் படித்த கைலாசத்தின் நெஞ்சு குமுறியது. வேலை திருப்திகரமாக இல்லாததால் அவ்வாண்டில் அவருக்குச் சம்பள உயர்வு கிடையாதென்பதை அறிவித்திருந்தார் இன்ஸ் பெக்டர்.
*இது அநியாயம் சார். நீங்கள் கட்டாயம் இதில் தலையிட வேண்டும். தலைமையாசிரியர் என்ற முறையிலே நீங்கள் இன்ஸ்பெக்டருக்கு எழுதுவதற்கு உரிமை யுண்டு,” என்ருர் கைலாசம்.

127
*மன்னிக்க வேண்டும் மிஸ்டர் கைலாசம். என் ணுல் ஒன்றுமே செய்ய முடியாது. இன்ஸ்பெக்டர் வந்த அன்றே, அவர் என்னிடம் கூறியவற்றை நான் உமக்குச் சொல்லவில்லையா??
கைலாசத்தின் கெஞ்சுதல்களும் வேண்டு கோள்களும் பலிக்கவில்லை. மனமுடைந்து போய்த் தன் வகுப்பிற்குத் திரும்பினுர், மற்றைய ஆசிரியர்கள் அவரைப் பற்றித் தமக்குள் பரிகாச மாகப் பேசிக் கொண்டிருந்தனர். கைலாசத்தின் சிந்தனை பின்னுேக்கி ஓடியது.
本 米
இரண்டு வாரங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் அக் கல்லூரிக்கு வந்திருக்கிருர், மற்றைய ஆசிரியர்கள் தனித்தனியாகவும் ஒன்று சேர்ந்தும் சென்று இன்ஸ்பெக்டருக்குத் தங்கள் வணக்கத்தை தெரிவித்து அவருடன் உரையாடிவிட்டு வந்தனர். அதே வகுப்பிற்கு அன்றும் இலக்கியபாடம் ந ட த் தி க் கொண்டிருந்தபடியால், கைலாசம் இன்ஸ்பெக்டரை காண்பதற்குச் செல்லவில்லை.
இதைக் கவனித்த இன்ஸ்பெக்டர் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு அவருடைய வகுப்பறைக்குள் நுழைந்தார். கைலாசநாதர் கம்பீரத்துடன் எழுந்து அவரை வரவேற்றர். குழைந்து குழைந்து பேசி மன்னிப்புக் கேட்பார் என்று எதிர்பார்த்த இன்ஸ்பெக்டருக்கு ஏமாற்ற மாகப் போய்விட்டது. கேள்விமேல் கேள்வி போட்டு காணவந்தவர்களைத் திணறவைக்க விரும்பினுர் அவர். ஆணுல் கேள்விகளை முடிக்கு

Page 71
28
முன்பேயே மாணவர்கள் பட்டென்று பதிலைச் சொல்லிவிடுவார்கள். ஆத்திரமடைந்த இன்ஸ் பெக்டர் தன் திறமையெல்லாவற்றையும் சேர்த்து: ஒரு கேள்வியாக மாணவர்களைக் கேட்டார். மாணவர்கள் ஒன்றும் புரியாது விழித்தனர். வெற்றிப் பெருமிதத்துடன் கைலாசத்தைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். அப்பொழுது படு சுட்டியான ஒருவன் எழுந்து அதே கேள்வியை இன்ஸ்பெக்டரிடமே கேட்டான். அவருக்குக் கேள்வி தெரிந்திருந்ததே தவிரப் பதில் தெரிய வில்லை. சமாளிக்க முயன்ருர். அதைக் கண்டு கொண்ட மாணவர்கள் ‘கொல்லென்று சிரித்தனர்.
அவமானத்துடன் புறப்பட்டார் இன்ஸ்பெக்டர். அன்று மாலை, நடந்தவற்றையெல்லாம் தலைமை யாசிரியருக்குச் சொன்னுர் கைலாசம்.
அவரின் விளக்கங்களை ஏற்றுக் கொள்ள வில்லே, தலைமையாசிரியர். * நானுந்தான் கவனித்து வருகின்றேன். உமது மாணவர்கள் அதிகப் பிரசங்கிகளாக மாறுகின்றர்கள்*’ என்ருர். *உமது’ என்பதில் வைத்த அசாதாரண அழுத்தம் கைலாசத்திற்குப் புரிந்தது! தன்னிலும் பார்க்க ஓர் உதவி ஆசிரியருக்கு மாணவர்களிடம் செல்வாக்கு இருப்பதை எந்தத் தலைமை ஆசிரியரால்தான் பொறுக்க முடியும்?
அந்தச் சம்பவத்தை அன்றே மறந்துவிட்டார் கைலாசம். ஆணுல் அதை மறக்காது அவர் மீது வஞ்சம் தீர்த்துவிட்டார்களே தலைமை ஆசிரியரும் இன்ஸ்பெக்டரும்
米 来源 米

129
கைலாசநாதரால் தொடர்ந்து பாடத்தை நடத்த முடியவில்லை. "சீ என்ன பிழைப்பு இது என் உடலைக் கெடுத்து, உயிரைக்கொடுத்து உழைத்தேனே இவர்களுக்காக! கடைசியில் உதறித் தள்ளி விட்டார்களே!”
இந்த ஆண்டுச் சம்பள உயர்வை நம்பி எத்தனையோ திட்டங்கள் இட்டிருந்தார் கைலாசம். கடன்காரருக்குச் சாட்டுச் சொல்வதற்கு, மனைவிக்குப் புதுப் புடவை வாங்குவதற்கு, குழந்தைகளுக்கு விஜளயாட்டுச் JFTLOIT6ö at 6ir வாங்குவதற்கு-இன்னும் பலவற்றிற்கெல்லாம் அந்தச் சம்பள உயர்வு? உதவியது. அது இப்போது வராது என்ருல் அவருடைய நிலை.!
மாணவர்கள்மீது அநாவசியமாக எரிந்து விழுந்தார். அடிப்பதை வெறுப்பவர் அன்று இரண்டு மாணவர்களின் முதுகுத் தோஜல உரித் தெறிந்து விட்டார். மாணவர்களுக்கு அது புது அனுபவமாக இருந்தது.
அன்று மாலையில் அவர் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை. எங்காவது சுற்றித் திரிந்தால் அமைதி ஏற்படுமென்று நம்பிப்பட்டினம் செல்லும் பஸ்ஸில் ஏறினுர். புதிதாகப் பதவி ஏற்கவரும் 60 அதிகாரியை வரவேற்பதற்காகப் பட்டினம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கண் ணுக்கு முன்னே தோன்றிய காட்சிகளை இரசித்துத் தன் கவலைகளை மறந்து திரிந்தபோதுதான் பொலீஸ் காரன் ஒருவன் அவரை அவமானப் படுத்தி அழ
9

Page 72
130 வைத்து விட்டான். வீதி ஒழுங்கை மீறிவிட்டார் என்பதற்காக அவருடைய கையிலிருந்த பையைப் பறித் தெறிந்து விட்டு, கிழடு கட்டைகளுக்கு இங்கென்ன வேலை??’ என்று கேட்டுவிட்டான்!
米 米 米
சுவாரஸ்யமற்றுத் திரிந்த சனக் கூட்டம் இப்போது சுறுசுறுப்படைந்தது. மேள வாத்தியம், நாதஸ்வரம் ஆகியவை முழங்கின. வாண வேடிக்கைகள் வானத்தை நிறைத்தன. அழகிய புத்தம் புதுக் கார்கள் அடுக்கடுக்காக வந்தன. அவற்றைத் தொடர்ந்து கடைசியில் வந்தது நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு கார். நகரத்துப் பிரமுகர்கள் பலர் அதைச் சுற்றி நடந்து வந்தார்கள். அந்தக் காரினுள்தான் மாகாண அதிகாரி வரு கின்ருர் போலும் முக்கியமான சந்திகளிலும் பிரபல வணிகநிலையங்களின் முன்பும் கார் நிறுத்தப்பட்டு மாகாண அதிகாரிக்கு மலர் மாலைகள் அணிவிக்கப் பட்டன. ܖ
கார் கைலாசநாதரைச் சமீபித்தது. வைத்த கண்வாங்காது அந்தப் புதிய அதிகாரியைப் பார்த் தார். கனவிலேயே நடக்க முடியாத ஒரு நிகழ்ச்சி கண் முன்னுலே நடப்பதைப் போன்ற பிரமை ! மாகாண அதிகாரியாக வந்தவர் அவருடைய பள்ளி நண்பன் கந்தமூர்த்தி. கந்தா’ என்று உரிமை யுடன் அழைப்பதற்கு வாயெடுத்தார். பக்கத்தில் நின்ற பொலீஸ்காரனின் பார்வையினுல் அது தொண்டைக்குள்ளேயே சிக்கி விட்டது!
சனக்கூட்டம் இடிபட்டுக் கொண்டு முன் னேறியது. கைலாசம் சிலையாக நின்றர்.

131
கந்தமூர்த்தி அவருடன் கூடப் படித்தவன். பணக்காரப் பெற்றேர்களின் கடைக்குட்டி. அத ணுற்ருணுே என்னவோ ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி இடத்தைக் கவனமாகப் பாதுகாத்து வந் தான். பரீட்சை வேளைகளில், பார்த்தெழுதிக் கேட் டெழுதி பாஸ்” பண்ணி விடுவான். கைலாசநாதர் இல்லாதிருந்தால் அவனுல் இதைக் கூடச் சாதித் திருத்க முடியாது. இப்படியான உதவிகளைச் செய்வ தற்கு அவர் என்றுமே விரும்பவில்லை. ஆணுல் தந்திர சாலியான கந்தமூர்த்தி அவருடைய அனுமதி இல்லாமலே அவருடைய உதவியைப் பெற்றுப் பயனடைந்தான்! நாளடைவில் அவர் உண்மையை உணர்ந்தபோது, 'உதவாக்கரை, எப்படியாவது போகட்டும்” என்று இருந்து விட்டார்.
அதே கந்தமூர்த்தி இன்று மாகாண அதிகாரி அவனை வரவேற்கத்தான் இத்தனை தடபுடல்கள் ! ஆணுல் ஏணி போன்றிருந்து அவனை அவ்வளவு தூரம் உயர்த்தியவருக்கு அதே கூட்டத்திலேயே அவமானம் !
கந்தமூர்த்தியை நினைத்தபோது அவருக்கு ஆத்திரமோ, அருவருப்போ, பொருமையோ ஏற் படவில்லை. அவன் அதிர்ஷ்டசாலி. அதிர்ஷ்டசாலி யாகவே பிறந்த அவன்மீது எப்போதும் அதிர்ஷ் டம் திணிக்கப் பட்டிருக்கின்றது." என்று வியந்து கொண்டார்.
தன்னுடைய சொந்த நிலையை நினைத்தபோது ஒரே எரிச்சலாக வந்தது.அவருக்கு. இலட்சியத்திற்

Page 73
132
காக வாழ்ந்து இதுவரை அவர் கண்ட பலன்? சக ஆசிரியர்களின் புகைச்சல், வீட்டிலே மனைவி மக்களின் ‘இல்லை யென்ற ஒலம், ஊரிலே ஏராள மான கடன், நெஞ்சிலே வெறுமை, சூனியம்இவ்வளவுதான்.
தன் நிஜனவற்றவராகவே பஸ்ஸில் ஏறி ஊர் வந்துசேர்ந்தார்.பஸ் நிலையத்திலிருந்து அரை மைல் நடந்து கல்லூரியைக் கடந்துதான் வீடு செல்ல வேண்டும். கல்லூரியை நினைத்தபோது, காலையில் நடைபெற்ற அந்தக் கசப்பான சம்பவம் கண் முன்னே வந்தது. கந்த மூர்த்திக்கு நடந்த வரவேற் பும், காலை நிகழ்ச்சியும் அவர் மனத்தினுள் கிடந்து உருண்டு புரண்டன. சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தையைக் குழப்பியபடி நடந்தார். கலங்கி யிருந்த சிந்தனை வெள்ளம் தெளிந்து ஓடி அவரை ஒரு முடிவிற்கு வரச் செய்தது.
இன்றுடன் கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியிட வேண்டும். கந்தமூர்த்தியிடம் ஒரு சொல் சொன்னுல் போதும். நல்ல உத்தியோகம் கிடைக்கும். கை நிறையச் சம்பளம், வேலை முடிந்த பின் நிம்மதியாக வீடு வந்து சேரலாம். சம்பளத்திலும் பார்க்க வேலைக்குக் கிடைக்கும் மதிப்பு, கெளரவம். . . . . .
அவர் மேலும் நடந்தார். கல்லூரி சமீபித்தது. சற்று முன்பு அவர் செய்த தீர்மானம் சுக்கு நூருகி விட்டது. விடுதலையுணர்ச்சி இப்போது அவரிட மிருந்து விடுதலை பெற்றுவிட்டது

133
இந்தக் கல்லூரியையா நான் விட்டு விலக வேண்டும்? கலைத்தேவி கொலுவிருக்கும் இக்கலைக் கூடத்தினுள் நான் காலடி எடுத்து வைக்க முடியாதா?’ அவருடைய நெஞ்சு ஏங்கத் தொடங் கியது. துக்கம் மனத்தை அழுத்த, நடக்க முடியாது தள்ளாடித் தள்ளாடி நடந்தார். கல்லூரி விடுதிச் சாலையிலிருந்து குரல்கள் பல கேட்டன. தன் பெயரும் இடைக்கிடை அடிபட்டதால் அப்படியே நின்று விட்டார் அவர்.
*அந்தக் கிழவனுக்குப் பயந்தா நீங்கள் பட்டி னம் போகவில்லை ? மற்றைய மாணவர்கள் எல் லோரும் போய் விட்டார்களே!99-இது விடுதிக்குப் பொறுப்பாக இருந்த ஆசிரியரின் கேள்வி. அவர் கிழவன் என்று குறிப்பிட்டது கைலாசத்தைத்தான்
* அவரிடம் எங்களுக்குப் பயம் இல்லை. பற்று உண்டு; பாசம் உண்டு” என்று அமைதியாகப் பதி லளித்தான் ஒரு மாணவன்.
எஅந்தக் கிழவனிடமா?-விடுதி ஆசிரியரின் கேள்வி.குரோதமும் வியப்பும் குரலில் தொனித்தன.
*சார், நீங்களும் ஆசிரிய ரா க இருந்து கொண்டே இப்படி மரியாதைக் குறைவாகப் பேசு கின்றீர்களே! உங்களுக்குள்ளே வேண்டுமானுல் அவரைக் கிழவன்’ என்று பேசிக் கொள்ளுங்கள். எங்களுக்கு முன்னுலே பேச வேண்டாம். இனி மேல் பேசி ஞ ல்...” ஆவேசத்துடன் இப்படிக் கூறிய ஒருவனைத் தடுத்து விட்டு வேறு ஒருவன் சொன்னுன்: 66மாகாண அதிகாரி இனி

Page 74
134
மேல் இங்கேதானே இருப்பார். இன்னுமொரு நாளில் அவரைப் பார்த்தால் போதும்.”
‘இன்றைக்கு ஆசிரியரின் மனம் புண்பட்டு விட்டது. நாம்தான் ஏதோ தவறு செய்துவிட்டோம். நாளைக்கு இலக்கியப் பரீட்சையில் நன்ருக எழுதி அவருடைய மனத்தைக் குளிரப் பண்ண வேண்டும்” ኵ..
*அவர் எங்களுடைய ஆசிரியராக வந்தது எங்களின் பாக்கியம்’- ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு மாணவர்கள் உணர்ச்சியுடன் கூறினர்.
கைலாசத்தின் கண்கள் கலங்கின. காற்றிலே கலந்து வந்த அந்த அன்புக் குரல்கள் அவரையும் காற்றில் மிதக்கச் செய்தன. அவருடைய உள்ளச் சோர்வு, உடல்வலி எல்லாம் எங்கோ ஒடி ஒழிந்து கொண்டன. பத்துவயது பள்ளிச் சிறுவனைப் போல் துள்ளித் துள்ளி ஓடினுர் வீட்டிற்கு.
மனைவியும் மக்களும் நித்திரையி லாழ்ந்திருந் தார்கள். சமையலறைக்குள் சென்றர். அன்று சமையல் செய்த அடையாளமே இல்லை. பசிக்களை யினுற்றன் படுத்துறங்கிவிட்டார்களோ வேண்டிய மட்டும் பச்சைத் தண்ணிரைப் பருகினுர்,
எேனக்குப் பட்டம் வேண்டாம். பதவி வேண் டாம். பணம் வேண்டாம். நாள் தவருது இந்தக் கலைக் கோயிலுக்குச் சென்று, கல்வித் தெய்வத் தின் முன்னிலையில், களங்கமற்ற சிறர்களுக்குக்

135
கல்வியூட்டி அவர்களுடன் கலந்து பழகும் வாய்ப் புக் கிடைத்தாற் போதும். என் சேவையை மற்றைய ஆசிரியர்கள் மதிக்காது போனுல் போகட்டும். என் இதயத்தை உணரக் கூடிய இளம் உள்ளங்கள் ஏராளமாக இருக்கின்றனவே!?
வறுமையை வணங்கி வரவேற்ற அவர் படுக்கையில் சாய்ந்தார். பச்சைத் தண்ணிர் அவர் வயிறை நிறைத்தது. பள்ளிப் பையன்களின் பாசம்
அவர் நெஞ்சை நிறைத்தது
1959

Page 75
ஆசிரியரின் பிற நூல்கள் ஈழத்துச் சிறுகதைகள் (தொகுப்பு)
(முதற்பாகம்)
சிறுகதைத் துறையில் முன்னுேடிகளாய் விளங் கிய ஈழத்து எழுத்தாளர் சிலரது படைப்புக்கள் இந் நூலில் அடங்கியுள்ளன. முன்னரே பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பல்வேறு ஆசிரியர் களது எழுத்தோவியங்களைப் புத்தக வடிவில் ஒன் ருகக் காணும் போது, அவற்றை எழுதிய ஆசிரி யர்களுக்கும் வாசகர்களுக்கும் மீண்டும் உறவு ஏற் பட இத்தகைய தொகுப்பு நூல் பெரிதும் பயனளிக் கின்றது. ஈழத்தில் முதன் முதல் வெளியான சிறு கதைத் தொகுப்பு இது வென்றே சொல்லலாம்.
தொகுப்பாசிரியர் : சிற்பி
肇 肇 肇
உனக்காக, கண்ணே. (நாவல்)
ஈழத்து இலக்கியத் திங்கள் ஏடான * கலைச் செல்வியிற் தொடர்ந்து வெளிவந்த சிற்பி அவர் களின் * உனக்காக, கண்ணே? என்னும் இந் நாவல், எண்ணற்ற வாசகர்களுடைய பாராட்டு தலைப் பெற்றுள்ளது. பல வாசக அன்பர்களுடைய விருப்பத்திற்கிணங்க இது நூலாக விரைவில் வெளிவர இருக்கின்றது.
o 羲