கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரே ஒரு ஊரிலே

Page 1

ஒரே
ஒரு ஊரிலே.
(சிறுகதைகள்)

Page 2
ORE' ORU OORILAE/
(a Collection of Short Stories in Tamil )
By A. SANTHAN
ANNAMALA ROAD SUTHUMALA, MAN I PAY.
Sri Lanka
తొst 2Dublished. October 1975
Cover Design
By THE AUTHOR
& illustrations
Printed at:
SANTHI PRINTERS
14/c, FERNA N'Do AVENU E NEGомво.
PRICE: Rs. 41
Copy Right: A. SANTHAN
Published By:
S. A. YATHURA ANNAMALAF ROAD SUTHU MALA MANIPAY.

* அண்ணுமலைப் பரியாரியா " ரென
அறியப்பட்ட
என் அப்புவின்
நினைவுக்கு
இந்நூல் சமர்ப்பணம்.
SSAS SSASALALASAAALLLAAAAASSAAAS LSLSALALMS SASLSALqS SASALA LSLSALLAAAALSMASAqAASAAAAASAALLLLLAASAAASSSSSASLSAAAqSqSqSLLAASqAAqS SLSLALLSASSMSSAAASLSLLLLLSSSMLASqSASSSLSLSSLSLSSLSqSqSSqSSLASAL AALSLSLSLeSMLALASSMLALSSMSLSALSqSqSqSASSMMeSMALSSSqSAALSLALASS

Page 3

சாந்தனின் கதைகள்.
திசாப்தங்களில் இலக்கியங்களைக் கூறுகட்டி விமர் சனச்சந்தையில் விலை பேசப்பட்டு வருகின்றன. தசாப்த காலக் கூறுகள் சில தேவைகருதி ஏற்பட்டனவேயொழிய, அவை முடிந்த முடிவுகளல்ல; ஆயினும் இதை உணராத விமர்சகர்கள், விரிவுரையாளர்கள் பலருண்டு. காலக் கூறு களுக்கும், இலக்கியத்தரங்களுக்குமிடையில் உள்ள உறவுகள் மிக நுட்பமானவை. ஆனல், இந்த நுட்பத்தை முன் கூறப் பட்டவர்களில் எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றனர்?
"மணிக் கொடி‘ காலத்தில் எழுத ஆரம்பித்த (அல் லது அப்பத்திரிகையில்)-தரத்தில் வேறுபட்ட எல்லா எழுத் தாளர்களையும் ஒரே காலக் கூற்றுக் கயிற்றில் பிணைத்து அவர் களுக்கும், அவர்கள் எழுத்துக்கும் அமரத்துவம் தர முனையாத வர்கள் இன்று எத்தனை பேர்? ஈழத்திலும் இத்தகைய பிரி வுகள் இலக்கிய உலகில் உண்டு. இப்பிரிவுகள் அர்த்தமற்ற வையல்ல; ஆனல் இப்பிரிவுகளைக் கொச்சைப் படுத்தாமல் அணுகிஞல் தகுந்த பலனுண்டு.
1960-ம் ஆண்டில் தமிழ் மூலக்கல்வியினல், உயர் கல்விகற்கப் புகுந்த பல்கலைக்கழக மாணவரிடத்தும், கட்டுப் பெத்தை, போன்ற உயர் கல்விப்பீட மாணவர்களிடத்தும் தேசியம், இனம், மொழி, மாக்ஸியம், இலக்கியம் போன் றன பற்றிய அறிவு உணர்வு பூர்வமாக தொழிற்படலாயின. இவ்வுணர்ச்சிகள் எல்லாவற்ருலுமோ, ஒருசிலவற்ருலோ பாதிக்கப்பட்டவர்களாக இவர்கள் விளங்கினர்.
இவர்களில் சிலர் எழுத்துத் துறையில் ஈடுபடலாயி னர். சுதை, கவிதைத் துறைகளே இவர்க%ளப் பெரிதும் கவர்ந்தன. சிலர் முற்று முழுதாக மார்க்ஸிய கருத்துக்களை யும், சிலர் அறிவு ஜீவிகள் போன்று பல்துறைக் கருத்துக்களை யும், பொருட்களையும் படைப்பின் 'கரு' வாகவும், தொனி யாகவும் கொண்டனர்.

Page 4
அப்போதிருந்த அரசியல் விழிப்புக் காரணமாக மார்க்ஸிய எழுத்துகட்கு நல்லவரவேற்பிருக்கவே, மார்க்ஸிய எழுத்தாளர்கள் வளர்ச்சி பெற்றனர். இவ் எழுத்தாளர் களுக்கு துணையாக- இலக்கிய விமர்சகர்களும் விளங்கினர். இவ் விமர்சகர்கள் பல்கலைக்கழகங்களிலும், சமூக நிலைகளி லும் பெற்றிருந்த உயர்நிலை காரணமாக, இவர்கள் கவனத் தைக் கவர்வதே எம்எமக்கின் பணி என்ற நிலையும் உருவாக லாயிற்று. எனவே, புகிகாக எாழக ஆரம்பித்தோ ரெல்லாம் அளி, இயக்கம் என்று கூறிக்கொண்டு, மார்க்ஸிய விமர்சகர் களின் கவனத்தைப் பல வழிகளினலும் கவரத் தலைப்படலா u63rri.
இதல்ை ஒரு எதிர்வினையும் தோன்றியது.
பெரும்பான்மை மக்களுக்காக படைக்கப்பட்டு வந்த மார்க்ஸிய எழுத்துக்கள், விமர்சகர்சளான ஒரு சிலரின் தேவை, ந்ோக்கம், கருகி எழுதப்படலாயின. இதுவும் ஒரு வகையில் அறிவுஜீவிசளின் பக்கமே இலக்கியம் திசை கிருப் பப்படக்காரணம் எனலாம். எனவே, எழுத்தாளர்கள் ‘வாழ் வின் அனுபவங்கட்கப்பதிலாக தத் துவங்களின் கரிசனங்க ளாக அனுபவங்க%ளக் கானக் தொடங்கினர். ஆகவே அனு பவங்கள், வெளியீடுகள், பொதுமையாயின; வரட்சியாயின. பெரிய பெரிய சமூகவட்டங்களைச் சேரவேண்டிய இலக்கியங் கள் சின்னஞ் சிறு வட்டங்களை சென்றடையலாயின. இவை மட்டுமன்றி, எழுத்தாளர் சளும் - ஏழைகளையும், தொழி லாள வர்க்கங்களையும் நன்கு புரிந்து அவர்களின் அக, புறப் பிரச்சனைகளை எழுதாமல் சில வார்த்தைகள் மூலம் அவ் வர்க்கத்தையும் ஏமாற்ற முற்பட்டனர். (ஆதாரம் (ம. புஷ்பராஜனின் கட்டுரை-மல்லிகை ஆண்டுமலர்-1975)
இவ்வாறு விமர்சகர்களின் பின்னல் சோரம் போகும் வேகம் இந்த 1970-ம் தசாப்தத்தில் அதிகமாகிவிட்டது. குறுகிய வட்டத்தினரான விமர்சகர்களின் முன்னுரையோ, அணிந்துரையோ தம் நூல்களுக்குக் கிடைக்குமாயின் அந் நூல்கள் இலக்கிய உலகில் சிறந்க அந்தஸ்தையும், உயர்ந்த ஈழ இலக்கியப் பரிசில்களையும் ஈட்டி விடலாம் என்ற எண் னம் எழுத்தாளர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இவ் விமர்சகர்களே பரிசில் மண்டபங்களின் தூண்களாக விளங்

குவதால் இந்த நப்பாசை மேலும் அதிகமாகி விட்டது. இதனுல், நூலின் அட்டையிலேயே "இன்னுரின் அணிந்துரை கொண்டது என அச்சிடும் வழக்கமும் ஆரம்பமாகிவிட்டது.
இவ்வளவும் எதற்காக இங்கு கூற வேண்டும்? 1960-ல் எழுத ஆரம்பித்த "சாந்தன்” 1970-ல் "பார்வை' என்ற சிறுகதைத் தொகுதியையும், 1975-ல் ‘கடுகு" என்ற சின்னஞ் சிறு கதைகள் கொண்ட தொகுதியையும் வெளி யிட்ட கையோடு, இந்த சிறுகதைத் தொகுதியையும் வெளி யிடுகின் முர்.
"பார்வை” - தொகுதியில் அகவாழ்வுப் பிரச்சனை களே அதிகம் அலசப்பட்டு இருந்தன. -
"சடுகு தொகுதியில் சமூக, அரசியல், பொருளா தார முரண்பாடுகள் கிண்டல் செய்யப்பட்டிருந்தன. இடை யிடையே மனதின் மெல்லிய உணர்வுகள் ஆத்ம சுத்தி யுடன் இயங்கிக் கொண்டிருந்தன.
"ஒரே ஒரு ஊரிலே . - என்ற இத் தொகுதியில் பல்வகைப்பட்ட துறைகளின் அலை வீச்சுக்களைக் காண (முடியும். பொருளாதாரம், சமூகம், அரசியல், இலக்கியம், பாலுறவு, இனங்கள், தேசிய ஒருமைப்பாடு போன்றன கருப் பொருளாகியுள்ளன. அவை மட்டுமல்ல - தேசிய ஒரு மைப்பாட்டிற்கும் இன உணர்வுகளுக்குமுள்ள வேற்றுமை களும், அவற்றின் தோற்றக் காரணிகளும் காட்டப்படுகின் றன. சிாந்தனின் ஆராய்வுகள் தனித்துவமானவை; போலி களற்றவை; புனிதமானவை.
சாந்தனின் எழுத்துக்களில் தென்படுவதில் முக்கிய அம்சம் அவரின் தனித்துவமே.
தற்போதைய நூல் வெளியீட்டில் - ஒரே ஒரு ஊரிலே. * என்ற தலைப்பு வியாபாரரீதியில் கவர்ச்சி குறைந்தது. ஆனல், இலக்கியரீதியில் அந்தத் தலைப்பின் அர்த்தமும், ஆழமான அகண்டாகாரமான தத்துவ வீச்சும் சாந்தனின் பார்வையின் தனியாற்றலைப் புலப்படுத்தும்
இன்றைய நிலையில் "செம்பியன் செல்வனிடம்" முன் ஒரை வாங்குவதால் அவருக்கு லோகாயத ரீதியில் இலாப மில்லை. மாரு க சில சமயம் இழப்பும் ஏற்படலாம். இதனை

Page 5
அவருக்கு இலக்கிய இலாபம் கண்ட நண்பர்கள் சுட்டிக்காட் டிய பின்பும் அந்த முன்னுரை இடம் பெறுவது அவரது போர்க்கோல நெறியையே காட்டுகிறது. (இவற்றை இலக் கிய விசயம் என்பதால் குறிப்பிட்டேன்.)
யார் இந்தச் சாந்தன் ! எழுத்தாளனுகவே பிறந்து, எழுத்தாளனுகவே வளர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பவன் அல்ல. கருவிலே திருவுடையவ னும் அல்ல. இன்றைய சமூசச் சூழல்கள் அவனை எழுத்தா ளனுக்கி விட்டாலும், அவன் ஒரு சராசரி மனிதன், சராசரி மனிதர்களே சூழ் நிலைகளால் பாதிக்கப்படுவார்கள், வஞ்சிக் கப்படுபவர்கள், இவர்களுக்குத் தான் விசாரமும் விசாரணை யும். இந்த விசாரணைகளினடியாக அவர்கள் பெறும் முடிவு களே அவர்களின் ஆறுதல்கள், ஆனல், இந்த ஆறுதல்கள் பூரணத்துவமுடையவையுமல்ல; என்றும் நீரந்தரமான வையுமல்ல. எனவே, சாாசரியான எண்ணங்களும்; அற்ப எதிர்பார்ப்புகளும், அவாக்களும் அவாவின்மைகளும்: தேவை எது? சார்பு எது? எவற்றில் தவறு - தவறின்மை கள் நிறைந்து கிடக்கின்றன? எனத் தேடுதல் நடாத்தும் யாத்திரிகன்.
அவன் யாத்திரைகள் மனித மரங்களும், எட்டுக்கால் பூச்சி மனங்களும் கொண்ட நாடுகளில் நிகழ்கின்றன. மரங்கள் வழி விடுகின்றன. எட்டுக் காலில் ஏதாவது ஒரு காலால் அறைந்து அவன் பயணத்தைச் சில வழிமறித்து விடுகின்றன. பயணத்தில் மிஞ்சுவது திகைப்பே. திகைப் பின் தெளிவில், சரியென எண்ணி வழி நடந்தவை பிழை யெனவும், பிழையென வழியொதுங்கி வந்தவை சரியென வும் தீர்ப்பாக - தெளிவே திகைப்பாகிறது. தேடுதல் வேட்கை தொடர்கிறது. நேருக்குநேர் -விசாரணை அவன் வாழ்வின் அடித்தளத்தில் நின்றே விசாரணை புரிகிறன். சில தீர்ப்புகள், முடிவுகள் எமக்கு உடன்பாடாகின்றன. சில எதிர்மறையாகின்றன, அவனின் விசாரணை தொடர்கிறது. தவறும் வழிகளும், திரும்பும் திசைகளும் வாழ்வின் நிதர் சனங்களாகின்றன. எம் சிந்தனை கிளை விரிக்கின்றன.
இந்த இளைஞனின் போக்கு ஏன் இப்படி ஆடிக் காற் றின் அகல்திரியென அலைப்புறுகிறதென்று?

மார்க்ஸியம்" - எல்லாரையும் போல் இவரையும் வசீகரிக்கிறது. விஞ்ஞான பூர்வமான சமூக அணுகலே மார்க்ஸியமே அன்றி அது ஒரு கட்சியல்ல என்பதனை உண ருகிருர், மார்க்ஸிய அறிவினைப் பெறப்பெற அதன் பெய ரால் நடைபெறும் சீர்கேடுகளைக் கண்டு மனம் குமுறுகிருர் மார்க்ஸியப் பற்றே அவருக்கு போலிகள் மேல் சீற்றத்தை விளைவிக்கிறது. மாவோ கூறுவது போல் -, "நாம் வெற் றிக் கம்பத்தை நெருங்கும் வேளேயில் எதிரிகள் எம்முடன் சமரசம் பேச வருவார்கள். போலிகளும் எம்மைப் போல் வேஷமிட்டு வருவார்கள். நாம் கவனமாக இருக்க வேண் டும்? - என்று இவர் கூறுகையில் இவர் பிரச்சினையாளரா கிருர், மாக்ஸியம் பேரால் நடைபெறும் ஊழல்களை ஒரு கலைஞன் என்ற ரீதியில் மட்டுமல்ல ஒரு சாதாரண மனிதன் என்ற நிலையிலும் இவரால் சீரணிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் மேலும் விசாரணை நடாத்துகிருர். இது சிலருக் குக் கசப்பாகப் படுகிறது. ஒரு உண்மையான மாக்ஸிய வாதி செய்ய வேண்டியதையே தன் கதைகள் மூலம் செய் &მცუff.
தேசிய ஒருமைப்பாட்டில் இவரது கவனம் ஆழமாகச் சென்றது. பூரீலங்கா என்னும் இந்தச் சின்னஞ்சிறு தீவி னிலே பிரிவினைகள் இருக்கக் கூடாது. அவரவர் தத்தம் இனப் பண்புகளையும், பண்பாடுகளையும் மொழிகளையும் சுதந் திரமாகப் பேணிவளர்க்கும் அதே வேளையில் நாம் ஈழத்த வர் என்று தேசிய உணர்வு மேலோங்க வேண்டுமென்று அவாவுகிருர், அத்துடன் தம் தனித்துவமான இனவுணர்வு கட்கு தடைகள் ஏற்படுவதையும் வெறுக்கிருர். இவர் தேசிய ஒருமைப்பாட்டின் சிறப்பை உணர பல்லாண்டு கால மாக கொழும்பிலே பெரும்பான்மை மக்களின் மத்தியிலே வாழ்வதும் காரணம் எனலாம்.
இவர் பெரும்பான்மை மக்களுடன் நெருங்கிப் பழகு வதுடன், அவர்களிற் பலரை உற்ற நண்பர்களாகவுமாக்கி புள்ளார். எனவே இவர் பெரும்பான்மை மக்களின் மனப் பான்மை, எதிர்பார்ப்புகள், சிறு பான்மையினர் பற்றிய அவர்களின் எண்ணங்களை அனுபவரீதியாக புரிந்துகொண் டுள்ளார். இதற்கு இவரின் சிங்கள, ஆங்கில மொழியறிவும் ‘இவன் தமிழன் என்று மற்றவர்களால் இனம் கண்டுகொள்

Page 6
ளப்படாமல் விடும் தோற்றமும் பெரிதும் உதவுகிறது. எனவே சிங்கள நண்பர்களின், குடும்பங்களின் உறவுகள் இவரின் மனப்பான்மையை - தேசிய ஒருமைப் பாடுபற்றிய பெரிதும் வளர்க்கின்றன. இவரின் தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் போலிகளல்ல. அனுபவ வீச்சுகளின் சிதறல் களே. இதனை அவர் தமது கதைகளிலே அழகாகக்காட் க்கிருர், ‘என் நண்பன் பெயர் நாணயக்கார', 'பிரிப்பு" முதலிய கதைகள் தேசிய ஒருமைப்பாட்டை ஆரவாரமோ, பகட்டோ இன்றி அமைகியாக, இதய சுத்தியாக எடுத்துக் காட்டுகின்றன. இவரின் கதைகளைப் படிக்கையில், மொழி பெயர்ப்பில் படிக்கும் சிங்கள மொழிச் சிறுகதைகளை ஏனே நினைவூட்டுகின்றன சொல்ல வந்த விடயத்தை விரைவில் சொல்லிவிட்டுப்போகும் முறையது. இயற்கை வர்ணனை களோ, சூழல் சித்தரிப்புகளோ, வேண்டாத அலங்காரச் சொற் சேர்க்கைகளோ கிடையாது. விடயம் நேராகப் பேசப்படும். பேசி முடிவும் எடுக்கப்படும். அந் க முடிவு எடுக்கப்படும் துரித கெதியில் முரண்பட்ட கருத்துக் கொண் டோர் கூட அது எடுக்கப்பட்ட விதத்தில் அயர்ந்து போய் விடுவார். இத்தகைய பண்பினை சாந்தனின் கதைகளில் பரக்கக் காணலாம்.
பூரீ லங்கா போன்ற தீவில் தமிழரின் நிலை என்ன என்பது பற்றியும் சித்தரிக்கின்ருர். தமிழினம் தன்னு டைய தனித்துவ்த்தை இழக்கவோ, இழப்பது போன்ற நிலைமையோ விரும்பாமல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் எத்தனை விகிதம் ‘தமிழ்த்தனம்’ நிறைந்திருக்கின்றது, என் பதனை இவர் எடை போடும் போது மெல்லிய நகையே எழு கிறது. அது மட்டுமல்ல; நாட்டில் தேசிய ஒருமைப்பாட் டிற்கு சிறு பான்மையினமே முன்னணியில் போராடுவதும், அதே இனமே முன்னணியில் எதிர்க்கும் முரண்பாடுகள் பற்றியும் சிந்திக்கிருர்,
ஆகவே, அவர் மேற்கொள்ளும் எந்த விசாரணைக ளும் பிரச்சனைகளாகின்றன. அவையும் தத்துவ விசாரணைக ளாகின்றன. நம்நாட்டின் நிகழ்கால அரசியல், சமூகப்பொ ருளாதார நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அவரின் மன தைப் பாதிக்கின்றன.

சாந்தனின் கதைகளைப் படிக்கும் பொழுது, "ஒரு தமிழனின் கொழும்பு அனுபவங்கள்" "விசாரணைகள்கதைகள்' என்ற சொற் சேர்க்கைகள் மனதில் இயல்பாகவே எழுகின் றனவெனினும், அந்தக்கொழும்பு வாழ்வினூடே ஈழத்தின் முழு உணர்வையும் தரிசித்து விட்டநிறைவும் ஏற்பட்டு விடுகிறது.
“ஒரு திங்கட்கிழமை மாலை”, “பெரிய மனிதன்" 'இராக்குருவி”, “வண்டிகளும் மாடுகளும்", - ஆகிய கதை கள் சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அவற்றின் செயல் நிலைக ளையும் எடுத்துக்காட்டுகின்றன. உடலை விற்று வாழ்வது என்பது சுலபமான தொழில் என்பது அறியாமை கொண்ட பலரின் எண்ணம், அகற்கும் எ க்கனை பாதுகாப் புகள் தேவையாயிருக்கின்றன. "இராக்குருவி" நெஞ்சில் கழிவிரக்கத்தை கோற்றுவிக்கிறது. என்னல் அந்தச்சிறு வனை மறக்க முடியவில்லை. அகே போன் mகே “பெரிய மனித" னின் சிறுவனும். சிறுவர்களின் மனவுணர்வுகளையும், இயக் கங்களையும் நன்கு அவதானிக்கிருர்- 'வண்டிகளும் மாடுக ளும்’, ‘ஒரு திங்கட்கிழமை மாலை" போன்றன பணக்கார வர்க்கத்தின், கொடூரத்தையும், திமிரையும் அமைதியாக எடுத்துச் சொல்கின்றன. ஆரவாரத்தை விட, இந்த மெளன அமைதியிலே எங்கள் இரத்தம் சூடு காண்கிறது.
"ஹீரோத்தனம்" "வடிகால்' - ஆகிய கதைகள் பாலு றவினைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் பேசுகின் றன. கொழும்பில் ஹீரோத்தனம் பேசும் இளைஞனைப்பற்றி மட்டுமல்ல, குமரப்பருவத்தின் எல்லையில் - பெண்களை வெறும் போகப் பொருளாகப் பார்க்கும் ஒரு இளைஞன் மனதில் - ஒா குடும்பத்தலைவனின் பரிவு ஏற்படும் மாற்றத் தை நுணுக்கமாகக் காட்டுகிறர். ஜெயகாந்தனின் போர் வை" போல, சாந்தனின் வடிகால் பாலுணர்வு பற்றிய சிறந்த கதையே. இவ்வுனர்வை நுணுக்கமாகவும், விர சம் தட்டாமலும் காட்டிய சாந் கணின் படைப்பாற்றல் இக்க கையில் ஏனையவற்றைவிட மேலோங்கி நிற்பதாக எண்ணு கிறேன்.

Page 7
"ஒரு இருபத்தாரும் தேதி காலை" 'சிறிய பயணங் கள் - மனிதன் மனிதஞக வாழ்வதற்குத் தேவையான மெல்லிய மனவுணர்வுகளின் துடிப்புகளை எடுத்துக்காட்டு கின்றன. இந்தத்துடிப்புகளே நேர்மை, சத்தியம் போன்றவற்றை அவாவி நிற்பவை. இத்தகைய உணர் வுகளைப் புரியவும், கெளரவிக்கவும், தெரிந்த ஒருவன் நல்ல மனிதனகவே வாழ்வான். இவனது சிந்தனைகள் மனித குல மேம்பாட்டை நோக்கியே அமையும். சாந்தனின் இத் தொகுப்பைப் படிப்பவர்களிடையே அவன் படைப்பாற்றல் பற்றி வேறுபாடுகள் தோன்றினலும், அவன் ஒரு நல்ல மனிதன் என்பதில் வேறுபாடு தோன்ரு து. நல்ல மனிதன் எழுத்தாளனகவுமிருப்பது எத்தகைய பாக்கியம் - அதுவும் இன்றைய இலக்கியச் சூழலில். இக்கதைகள் மனேவியலைப் பேசுவதும் சிறப்பே.
சிலருக்கு சாந்தனின் கதைகள் ANT.SHORTSTORIES என்ற மயக்கத்தை அளிக்கின்றன. அவர் ஒரு விடயத்தை, ஒரு மனவுணர்வை-தீர்க்கமான ஒரு முடிவு ணர்ச்சியுடன் முரட்டுத்தனமாக வெளியிடுவது தான் இதற் குக் காரணம் எனலாம். "புதிய முதலைகள்", கதை சொல்ல வில்லை. சத்திய ஆவேசம் வெறுப்பாக ம்ாறும் கிருப்பத் தைக் காட்டுகிறது. அந்தத் திருப்பம் தான் கதை. இவை பலருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் * தொனி”களாகப் படுவதில்லை. ”
இன்று பலர் சிறுகதை என்ற போர்வையில் "கதை களே எழுதுகிருர்கள். சில சம்பவத்தையோ, உணர்ச்சி யையோ காட்ட முற்படுபவர் சள் அச்சூழலுக்கான நிகழ்ச்சி களை ஒன்றன் பின் ஒன்முக அடுக்கி ஒரே கதைக் கோபு ரமாக்கிவிடுகின்றனர். பல கிளைச் சம்பவங்கள் கொண்ட ஒரு சம்பவம், "நதி’ போல - பல-சிறு கிளைகொண்டுபெருகிவிரிகிறது. ஆனல், சிறுகதையின் பண்பினை, அந்தக் கலை வடிவத்தைக் கையாண்டு வருவதால் ஏற்படும் அனுபவ மனமாற்ற வளர்ச்சியினல், தான் கையாளும் கலைவடிவம்

இவ்வாறுதான் அமையவேண்டும் என்ற தீர்மான முடி வினைக்கொண்டே எழுத்தாளனின் தரமும், ஆற்றலும், CRAFTSMANSHIP ம், எடைபோடப்படவேண்டும். அந்த வகையில் சாந்தன் மேம்படுகிருர் என்றே படுகிறது.
ஆமாம்;
பாறைகளைப் பிளக்கும் பெரிய செயல்களே பலருக் கும் கண்ணில் படுகிறது. அணுவைப்பிளக்கும் செயல்கள் படுவதில்லைத்தான்.
சாந்தனின் கதைகள் "அணுக்கதைகளே’
2-C, அத்தியடி புது வீதி செம்பியன் செல்வன். யாழ்ப்பாணம் .

Page 8
10.
11.
12.
3.
14.
ஒரு சின்ன வட்டம்
அது வேறு சங்கதி!
வடிகால்
என் நண்பன் பெயர், நாணயக்கார
சிறிய பயணங்கள்
ஹீரோத்தனம்
ஒரு திங்கள் மாலை
ஒரு இருபத்தாருந்தேதி, காலை
வண்டிகளும் மாடுகளும்
பிரிப்பு
இராக் குருவி
நம்பிக்கைகள் அழியவேண்டியதில்லை
பெரிய மனிதன்
புதிய முதலைகள் مر
1972
1972
1971
1972
1973
1973
1973
1973 1974
1974
1974
974.
1973
1974

உங்களுடன், 8
இத்தொகுதியிலுள்ள கதைகள், 71-74 ஆகிய நாலாண்டுகளில் நான் எழுதிய கதைகளிலிருந்து தெரியப் பட்டவை. என் கதைகளைப் பொறுத்த மட்டில், எனக்கு எப்போதும் ஒரு திருப்தி இருந்து கொண்டு தானிருக்கிறது. எனக்குச் சரியென்று பட்ட வம்றை-நான் விசுவசிக்கிற வற்றை-எவருக்காகவும், எதற்காகவும், எட்போதும் நெகிழ்த்திக் கொள்ளாமல் அவை சொல்லிக் கொண்டிருக்
கின்றன.
இக்கதைகளிற் பெரும்பாலானவை, பஸ்க%ளயும், ரயில்களையும் நி க ழ் க ள ஞ க க் கொண்டு அமை
வதை நீங்கள் அவதானிக்கக் கூடும். வாழ்வுப் பாட்டுக்காக வேறு வழியின்றி நகரங்களிலே மாட்டிக் கொண்டு அழுந்து கிற ஒரு சராசரி மனிதன், தன்னைச் சுற்றியுள்ள இந்த நகர சமூகத்தைச் சந்திப்பதும், தான் அகில் ஒரு அங்கமே என உணர்வதும், இந்த பஸ்களிலும் ரயில்களிலுந் தான். உண் மையில், ஒவ்வொரு பஸ்சும் , ரயில் பெட் டியும், இந்த சமூ கத்தின் ஒரு “மாதிரி"யாக அமைந்து விடுவதை, நான் எப் போதும் அவதானித் திருக்கிறேன். கிராமப் பறங்களைப் போல, பரஸ்பர உறவு, நெருக்கம் புழக்கம் இல்லாமல் கணிமைப் பட்டுக் கிடக்கிற நகரவாசிகளை, இங்கேதான் சரிவரத் தரிசிக்க முடிகிறது.
ன்ேனுடைய இத்தொகுதிக்கு மகிழ்வுடன், தாமத மின்றியும் முன்னுரை தந்த செம்பியன் செல்வன் அவர்க ளுக்கு நான் நன்றியுடையவனுகிறேன். இந்தப் புத் தக வேலையில் எனக்குப் பல வழிகளிலும் உதவி புரிந்த நண்பர் கள் - ஈழவாணன், லெ. முருகபூபதி, சதாசிவம் ஆகியோரு க்கும்; ‘சாந்தி அச்சக நவரத்தினராசா, அச்சகத்தில் பணிபுரியும் நண்பர்கள் ஆகியோருக்கும என் நன்றிகள்.
கொழும்பு. ۔۔۔۔۔۔- .ap . gr, I bg56ئF BO-1 O.75

Page 9

Ο & <سے لے کC
ஒரு சின்ன வட்டம்
கல் ஒரு மணிக்குத் தொடங்கிய தமிழ் விழாக்கருத் தரங்கு முடிவடையும் போது மணி நாலாகிவிட்டது -
வேல் முருகுவும் நானும் பஸ்ஸைப் பிடிக்க வந்தோம். ஞாயிற்றுக்கிழமை என்ற படியால் அவ்வளவு சனமில்லை. என்ருலும், அரை மணித்தியாலத்திற்கு மேலாகியும் பஸ் வரு வதாய்க் காணுேம். இரைந்து விரைந்து மறைகிற வாகனங் கள், மனிதக்கும்பல்கள் - இவையே கண்ணிற் பட்டுக்கொண் டிருந்தன. வேல்முருகு, இன்னமுங் கருத்தரங்கின் கருத்துக் களிலேயே மூழ்கியிருந்தான். விபரிக்க முடியாக சூழநிலை யாயும், உலகம் அப்படியே உறைந்து விட்டதாயும் எனக்கு ஒரு பிரமை, மூன்று மணி நேரம் அசையாதிருந்ததால் ஏற் பட்ட சோர்வு, தூக்கப் போல் அழுத்தியது. பஸ்ஸைக் காண வில்லை.
வேல்முருகு கேட்டான், இருந்தாற்போல: "மச்சான் கருத்தரங்கிலே அந் தாள் சொன்னதைக் கேட்டியா? தமிழன் ஆளப்படும்வரை, அவன் உய்ய முடியாது. "'
நான் தலையாட்டினேன்.

Page 10
அப்போதுதான் அந்தக் கிழவன் வந்தான். குருட்டுப் பிச்சைக்க்ாரன். வர்ணனையே தேவையில்லாதபடி எல்லாப் பிச்சைக்காரர்களையும் போலத் தானிருந்தான். அவனை அநு தாபத்துடன் பார்த்தான் வேல்.முருகு. கையிற் குலுக்கிய தகரக் குவளையின் பின்னணியில்,
**பின்னட்ட மொக்குத் தென்ன.." என்று ஒரு ராகம் போல, கிழவனின் குரல் சிங்களத்தில் ஆரம்பித்தது.
காற்சட்டைப் பைக்குட் கையைவிட்ட வேல் முருகு, வெறுங்கையை வெளியே இழுத்துக் கொண்டான். கிழவன், பிச்சைப்பாடல் தொடர நகர்ந்தான்.
*பஸ் எங்கே தொலைந்தது?" எனக்கு ஒரே அலுப்பு. பின்னுற் ‘படா"ரென்ற ஒரு சத்தம். திரும் பினல், கிழவன் - பாவம் - கீழே விழுந்து கிடந்தான். அவன் கையி லிருந்த வழிகாட்டித்தடிக்கு, கீழே கிடந்த வாழைப்பழத் தோல் தெரிந்திருக்க நியாயமில்லை.
அருவருப்பை விட்டு, கிழவனைப் பிடித்து எழுப்பி, அருகே கிடந்த தடியையும் எடுத்துக் கொடுத்தேன். கிழவன் நன்றி சொல்லி வாழ்த்திஞன். -
கையைத் துடைத்த படி நிற்கும் போது, வேல் முருகு முணுமுணுத்தான்.
'உவங்களுக்கெல்லாம், உதை ஏன் செய்கிருய்?" * பாவமடா: குருட்டுக்கிழவன்* "எண்டாலும், "உவங்க ளுக்கோ?" எனக்கு ஏதோ உறைத்தது. "உவங்க"ளில் ஒரு அழுத்தம்.
**ஏனடா?- எனக்கு, என்ன கேட்பதென்று புரிய வில்லை. அவன், முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
**அவனும் மனிதன்தானே!' - நான் மீண்டுஞ் சொன் னேன்.
** எங்களை 'அமத்துற வன்கள்!'
18 ஒரே ஒரு ஊரிலே

'இந்தக் குருடனு?"
"சும்மா நக்காதை; அவனில்லாட்டிலும் அவன்ர ஆக்கள்தானே. நீ, அவைக்கு உதவு. மானங்கெட்ட
யல்! "
'வேல்முருகு, நான் முதலிலை மனிதன்; பிறகு தமிழன்'
* நான் முதலிலே தமிழன்!' - வேல்முருகு படபடத் தான்.
'டேய், இதென்ன பேய்க்கதை?. அங்கை பார் - ஒரு மாடு நிக்குது. அதுக்குப் பக்கத்திலை நீ நிண்டா, “இது தமிழன் - இது மாடு எண்டா சொல்லுறது? இது மணி தன் - இது மாடு" எண்டெல்லோடா எவனுஞ் சொல்லு வான்!...”*
**கருத்தரங்கிலை அவங்கட பேச்சைக் கேட்கேல்லையே? பிற கும்..??? - வேல்முருகு முறைத்தான். 1.
*அதுதான் அப்பனே! சருத்தரங்கிலே - ஒருத்தர் சொன்னரே - "உலக நாகரீகத்திற்குத் தமிழ் நாகரீகமே வழிகாட்டியது எண்டு - அதைத்தான், நான் இப்ப சொல்றன் . " நாங்கள் மிகவும் பண்பட்ட ஒரு இனத்தில் வந்தவர்கள் என்று சொல்லுறமெண்டால், பிறகு இப்படி யான இடங்களிலை இப்படியான பேதங்கள் பாக்கிறது, எவ் வளவு ஒரு பெரிய அவமானத்தை எங்களினத்துக்குத் தரும்? தமிழினம் அவ்வளவு தாழ்ந்த இனமா?*
'உனக்கு எல்லாங் கிரந்தந்தான்!' - வேல்முருகு பட் டென்று சொன்னன்.
1972 *േrബി
சாந்தன் 9

Page 11
அது வேறு சங்கதி
செ ல்லத்தம்பி அம்மானைக் கண்டதுமே, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பயமல்ல, அம்மான் ஏதாவது ஏறுமாறக உளறிவிடுவாரோ என்று! கிட்டிணன் கிடங்கு கிண்டிக் கொண்டிருந் தான். காய்ந்து இறுகியிருந்த நிலத்தில் அலவாங்கு மோதியபோது, "ணங்ணங் கென்ற ஒலி கிளம்பியது. நான் அவனருகில் நின்று கொண்டிருந்தேன். காலடியில் குவிந்திருந்த செம் மண், கலடும் சேறுமாய்க் கலந்து கிடந்தது. தண்ணிரை ஊற்றித் தோண்டியதால் அப்படி.
அம்மான் - தெருவோரத்தால் போய்க்கொண்டி ருந்தவர் - எங்களருகில் வந்தார். என்னை அங்கு கண்ட வுடன், அவரின் புருவங்கள் சுளித்துக் கொண்டதை நான் கண்டேன்.
> 'டேய் தம்பி, நீ பயணத்தாலை வந்தனி. ஒரு நேரமாகிலும் வீட்டிலை இருக்கவேணும். சும்மா தெருச்சுத் திணு ...? அங்கை அம்மா தேடின. போய்ப்பார்' - தனது
 

மூளைக்கெட்டிய விதத்தில் "நாகுக் காக, "நீ இங்கிருந்து போ' என்பதை வெளிப்படுத்தியபடி, அம்மான் கிட்டே வந்தார். "இப்பதானே அம்மான், வீட்டிலையிருந்து வாறன்." என்று நான் முணுமுணுத்தது அம்மானுக்குக் கேட்டிராது. கிட்டி ணனை நோக்கித் திரும்பினர்.
'அப்ப, கிட்டின! எல்லாம் ஆயித்தமே? நாளைக்கு விடியத் தண்ணி வாக்கத் தொடங்கி விடுவியள்?.
**ஒமோம், எல்லாஞ் சரி. பொழுது படுகிறதுக்குள்ளை, பந்தல் "ரெடி" யாயிடும்' - கிட்டிணன் எழுந்து மண்ணை உதறினன்.
"எண்டாலும் உங்கை இப்ப எவன்கள் தண்ணி குடிக்கிருஜன்கள் பந்தல் வழிய?. நரலெல்லாம் பஸ்ஸிலை யெல்லே அள்ளுப்படுகுது? முந்தின காலத்திலையெண்டால் பந் தல் போடுகிறது தான்; சனமுங் குடிக்கிறது தான். இப்ப.? என்னவோ போடுங்கோ - உங்களுக்கும் ஒரு பிராக்கு..”* அம்மான், திரும்பினவர், என்னைப் பார்த்து;
*".வா, தம்பி’ என் ருர்,
**நான் வாறன். நீங்கள் போங்கோ.”*
கிட்டிணன் காட்டுத்தடியை நாட்டி விட்டு, உரம் போட்டுக்கொண்டிருந்தான். தடி ஆடாமற் பிடித்துக்கொண்
டேன். vn
**நீர் போட்டு வாருமன்.' என்ருன் கிட்டிணன், தலையைத்துக்கி.
**இட்பதானே வந்தனன்! அம்மான்ரை கதையை விட்டிட்டு, நீர் தடியைப் போடும்'
ஏமாற் றத்தின் பிரதிபலிப்பு, புறுபுறுப்பாய்ப் பரிண மித்துக் கேட்க, அம்மான் நழுவினர்.
ாாந் தன் 2

Page 12
"நான் தண்ணீர்ப் பந்தலில் நின்றிருந்தேன்." வாத்தியாரின் பிரலாபம் ஒலிபெருக்கியில் லட்சத்து ஒாாவது தடவையாக ஓங்கிக் கேட்டது. இந்த 'பிஸினஸ் எங்களிற் சிலருக்குப் பிடிக்காமலிருந்தாலுங் கூட, எங்கள் மன்ற அங் கத்தவர்களின் 'மெஜோரிட்டி பலத்தால் "ஒலிபரப்பி பிடிக் கிற தீர்மானம் செயலாகிவிட்டிருந்ததைத் தடை செய்ய முடியவில்லை.
தெருவை மூடி மண்டபமாய் உயர்ந்து கவிந்திருந்த பந்தல். நிலத்தில் பரவியிருந்த மணலின் வெண்மை, கூரையில் கட்டியிருந்த "வெள்ளை யோடு, செத்கையில் சங்க மிக்கிற ரம்மியமான அழகு. பந்தலின் ஒரு மூலையில் இடுப்பள வுக்குக் கட்டியிருந்த தடுப்பின் அப்பால், பெரிய கிடாரங் களில், வார்ப்பதற்குத் தயாராகக் காைத்து வைக்கப்பட்டி ருந்த சர்க்கரைத் தண்ணிர், ஊறுகாய்த் தண்ணீர் வகை
SGT , .
காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பதமான அந்த வேளையில், அவ்வளவு கூட்டமில்லை. அம்மன் கோவில் தேர், பிற்பகலில்தான். அப்போது, சனம்சாயும்.
வெண்மணற் பரப்பில் நண்பர்களுடன் சல்லாபிப்ப தில் ஒரு புது இன்பத்தை - கொழும்பின் “நைலெக்ஸ்’ மலர்களின் கூட்டுறவிற்கு அப்பாலே ஒரு இன்பத்தை - விழைகிற வேட்கையில், முழுக்க முழுக்க வேறு வித மான மகிழ்வாய் ஒன்றைத் தேடி, அது இப்போது இங்கே சம்பவித்த திருப்தியை - நுகர்ந்திருக்கையில்; அம்மான் வந்தார்.
அம்மான், சாதிமான். ஊருக்குப் பெரியவர். அம் மாவின் ஒன்று விட்ட தமையன், மருமகனின் இந்த "நட்டா முட்டித்தனம்" - "அந்தப் பெடிய’ளுடன் சேர்ந்து "பினைபடுவது? அவரது கெளரவத்திற்குச் சவாலாய்த் தெரி கிறது.
22 ஒரே ஒரு ஊரிலே
-ܥܠ

பந்தலருகே வந்ததும், உள்ளே வராமல், எகோ காரி யமாக வெளியே நிற்பவர் போல மாவடியில் நின்று, "இந் தாடா தம்பி, ஒருக்கா...' என்று குரல் கொடுத் 仍广斤。
மண்ணைத் தட்டிவிட்டு எழுந்து போனேன்.
மாவடியில் ஒருவருமில்லை. அங்கே பேசுவதும் யாருக் குங் கேட்காது. அருகே போனதும்,
'தம்பி, உன்னட்டை ஒரு விஷயம் நெடுகச் சொல் றன், நீ கேள்க்கயில்லை." என்று, குற்றஞ் சாட்டுகிற தொனியில் தொடங்கினர்.
"என்ன சங்க கி" என்பது எனக்கந் தெளிவு. என் ா?லும், ஒரு அப்பாவித் தனத்தை முகத்திலும் குரலிலும் எற்றி, -
** என்ன அம்மான்?' என்று, புரியாதவன் போல் கேட்டு வைத்தேன்.
** நீ என்ன், இன்னமுங் குழந்தையே? நீ ஆர்? அவன் கள் ஆர்? இப்பிடி ஒண்டு மண்டடியாப் புழங்கின இனி மேல் மதிப்டான்களே? அந் தந்த மாதிரியெல்லே பழக வேணும். ? - அம்மானுக்கு சற்று சூடு.
''. . . . . . . . . இப்ப, இந்தப் பந்தலிலை நிற்கிருய். அந்தத் தண்ணியிலை - சக்கரைத் தண்ணியோ, ஊறுகாய்த் தண் னியோ - தந்தாக் குடிக்கத்தானே வேணும்? 'உடை யாற்ற மருமேனுங் குடிச்சார் எண்ட பேருக்காக, மருட் டிக் கிருட்டிக் குடிக்கச் சொல்லுவாங்கள்! நீ குடிப் 49) Géu urr?...” *
* எத்தனை தரம் குடித்தேன் என்று அம்மானுக்குச் சொல்ல எண்ணும் போதே, முகத்தருகில் நெருங்கி,
‘அப்பிடிக் குடிச்சா, எங்கட மட்டு மரியாதை என்ன ஆகிறது?’ என்ருர் . , Øም
அவரின் வாயிலிருந்து 'பக் கென்று கள் மனம் வீசி அடித் க த. அம்மான், வந்தாரே - தெருவின் கிழக்குப் பக்கத்திலிருந்து - அங்கேதான், தெருத் திருப்பத்தில், பனைக் கூடலுக்குள், சின்ன வியின் கள்ளுக் கொட்டிலிருந்தது.
1972 காவலன்"
சாந்தன் 23

Page 13
வடிகால்
வன், ஆவலுடன் போனன். நெடுநாள் தனிமைச்
சூட்டில் மதர்த்துத் தினவெடுத்த தன் ஆவல் உந்த
அவன் போஞன். கொழும்பிலிருந்து குருநாகலுக் குப் போன அந்தத் தூரமெல்லாம், அடிக்கு அடி அவன் ஆவல் வளர்ந்தது. ஆளையே செமித்துவிடுகிற பசி.
நீண்டகால மதகடைப்பாற் பெருகித் திமிர்த்த வெள் ளம் அவனுள்ளே பொங்கி ஆர்ப்பரித்தது போன்ற உந்துத லால், அதனை மடை திறக்க அவதியுற்று; அதற்கான இடம் நாடி, இதந்தேடி அவன் போனன், "போயா வை எதிர் பார்த்து, விடிகாலையிலேயே "எலாம் வைத்தெழும்பி, பஸ் களை யெல்லாந் துரத்து துரத்கென்று துரத்திக் கொழும்பி லிருந்து குருநாகலைக்குப் போயும் -
அவள், அங்கில்லை. இவன் செய்த முட்டாள்தனம். ஒரு பி.ஸி" கிறுக்கிவிட்டு வந்திருந்தால்-? தன் மேலேயே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது!

"என்ன செய்வது? நேற்றுவரை இந்தப் பயனந் திட மில்லையே! என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்ட போதிலும், சுருதி மாருத அந்த ஆர்வம் கிளர்ந்து, பொங்கி ஏமாற்றத்தின் தாக்குதலால் அலைமோதிற்று.
அவள்!
அதுவும் ஒரு தொடர்பு நட்பு.
நட்பின் இலக்கணம், அன்பிலே பரஸ்பர உதவியென் பது தானென்ருல், நிச்சயமாக இதுவும் நட்புதான்.
"ஒரு நாளைக்கு மூன்று நாலு தரம் சைவர் கடைக் குப் போகலாமென்ருல், மூன்று நாலு மாதத்திலொரு தரம் இங்கு வருவதிற் பிழையென்ன?’ என்பது அவன் வாதம்.
போக -
ஏமாற்றமும், தீராத தாகமுமாக வெதும்பிச் சாம்பி, அவன் திரும்பினன்.
கும்பலின் பரிணும வடிவு, "கியூ' வா? பேருந்து வராததால் நீண்டு போய் நின்றிருந்த அந்த நரசாரியின் வாலில் அவனும் ஒட்டிக்கொண்டான். காண்பதிலெல்லாம் வெறுப்பும், ஆத்திரமுமாய்.
"இழவு பஸ்" !
ஆங்காங்கே தெரிகிற " வர்ணங் களெல்லாம் "அவளோ?" என்ற முனைப்புடன் அவனைப் பரீர்க்கச் செய் தன. w
*ம்ஹ?ம்!"
அவனுக்குப் பின்னல் சிலர் வந்து நின் ருர்கள்.
இரு இளங் கன்னியர் ஒரு நடுத்தர வயது தம்பதி.
சாந்தன் 25

Page 14
அவனுக்கு அடுத்தாற் போல நின்றவள் மிக அழகாக இருந்தாள். அவளின் நெருக்கம், அவனின் சூட்டைத் தணிக்க எத்தனித்தது.
* வெறும்-!"
அவளையே வெறித்துப் பார்த்தான்.
அங்கம் அங்கமாக, அணு அணுவாக ரசித்தான்; நிதர்சனக் கோலங்களை விட்டுத் தன் மனமேடையில் கற்ப னைக் கோலங்களால் அவளை நிர்வாணமாக்கி, மானசீகமா கவே முயங்க முயன்று; அதில் ஒரு நிஜத்தைக் கண்டு அவன் மயங்கி வெறியுற்றன்.
உலைக்காற்முய்ச் சீறும் பெரு-முச்சு; அவளை த் அகிக்க வல்லது. இருவருக்குமிடையில் இருந்த நீவினை அவன் குறைக்க விழைந்து உடலைச் சாமர்த்தியமாக ஓர் அங்குலம் பின்னல் நகர்த்தி பக்கவாட்டில் சரிந்து நின்று கொண்ட போதில் அவளிலிருந்து பரவிய சுகந்தம் அவனைக் கிறங்க வைத்தது. ‘இதெல்லாம் என்ன? வெறும் மானசீகம்!” - மனது சலித்த த.
*கிடைத்தவரையிற் சந்தோஷம்" என்கிற முடிவால் மனத்தை நிரப்பி, அ கனை நடைமுறைக்குக் கொண்டு வர முயன்ருன் அவன். தன்மேல் அசாதாரணமான நம்பிக்கை அவனுக்கு "நொக் - அவுட் எப்படியாக்கலாம் என்பது கைவந்தகலை.
கழுத்தை வளைத்து, தூரத்தில் எங்கோ பஸ்ஸைப் பார்ப்பவன் போல அவன் திரும்புகையில், அவளின் கண்க ளும் அவனைச் சந்தித் தன. அந்தத் துகள் கனத்தில் கண்க ளுள் மின்வெட்டைத் தேக்க முயன்றவனுக, அவளுக்கு எதையோ உணர்த்தத் தலைப்பட்டான். "ரியாக்ஷன் நல்ல ஆரம்பம் என்றே காட்டிற்று.
* தொடரலாம்."
26 ஒரே ஒரு ஊரிலே

ஸ்ேஸிற்குள் ஒரே நெரிசல். அடுத்த பஸ் வரும் வரை காத்திருக்கப் பொறுமையற்றவனுக அவன் ஏறிக் கொண்டான். இருக்க இடமில்லை. பின்னல், ஒரு மூலையில் கம்பியொன்றைப் பிடித்தபடி அவன் தொங்கிக் கொண்டி ருந்த பொழுது "கியூ"வின் பின்னல் நின்றிருந்த நால்வரும் உள்ளே ஏறினர்கள். இடந்தேடித் தயங்கிக் தவிக் து நின் mளர்களுக்கு யார்யாரோ ஒதுங்கி இரண்டு இடங்களை உண் டாக்கிக் கொடுக்க, இருவர் அந்கரத்தில் குந்தினர்கள். இவன் பின்னல் நின்றவளுக்கும் பெரியவருக்கும் இடமில்லை.
** இஸ்ஸராட்ட யண்ட. ** கூவலுடன், அவர் (மன்னே போக இவள் பின்னல் ஒதுங்கி ஒண்டிக் கொண்ட மூலை, அவனுக்கு அணிக்காயிருந்தது. அவள் சண்களைச் சந்தித்த அந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அவன் புன்னகைத்த போது, அவள் முகமும் அதனை எதிர்ப்பலி தம் செய்ததில் அவன் உற்சாகங் கொண்டான்.
பஸ், நிரம்பி விட்டது. அவளுக்கு முன்னுல் யாரோ ஒரு "தொக்கைக் கிழவி. பாவம், நிற்க முடியாது திண் டாடினள். கும்பலின் நெரிசலில், அந்தப் பெண், கிழவிக் கும் இவனுக்குமிடையில் "சான்ட்விச் மசாலாவானள்.
வண்டி ஒடிக்கொண்டிருந்தது. குலுக்கல்கள், சரிவு
கள் எல்லாவற்றின் போதும், மனிதர்களே மனிதர்களுக்கு "ஷ்ொக் அப்ஸோபர் களாகி.
அவனும், அவளும் இறுகி நின்ருர்கள்.
இதற்கிடையில் அவன் எவ்வளவோ முன்னேறியி ருந்தான். அந்த இதம்; மென்மை; அதன் பயனுகிய இளஞ் சூடு.
எங்கோ வாசித்திருந்த "புடையன், புற்று எல்லாம் நினைவிற்கு வர, அவன் நெட்டுயிர்த்தான்.
சாந்தன் 27

Page 15
குறிப்பிடத்தக்க - இவர்களைக் கவனிக்கும் - பேர் வழிகள் அருகே இல்லாததால், பேருந்து புஷ்பக விமான மாயிற்று. அவள், ஒரு கொடியாகி அவன் மேற் படர்ந் திருந்தாள். உணர்ச்சிகள் வெறியாக, அவன் தவித்தான்.
பொல்காவலையில் நின்றுவிட்டு பஸ் புறப்படும்போது அவர்களிருவரும் கடைசி இருக்கையில் அருகருகே இடம் பிடித்தார்கள். இதங்களை இழக்க இருவருமே விரும்பவில்லை. கிழவி, அவளுக்கு அடுத்த பக்கமும், கிழவிக்கு அடுத்தாற் போல் ஜன்னலுடன் யாரோ ஒரு பெண்ணும் உட்கார்ந் திருந்தார்கள்.
விரல்கள், இன்ப உறிஞ்சிகள்.
இருந்தாற் போல அவள் நெளிந்தாள். அவன் அதை உணர்ந்தான். அவனை அண்ணுந்து அவள் கண்கள் பரிதாப மாகப் பார்த்த வே?ளயில், அவள் கைகள் பாவாடையை வருடின. முகம், வியர்த்திருந்தது. அவன் புரியாமல் விழித்தான்.
அவள், "சடா ரென்று அவனிலிருந்து விலகி, அருகி லிருந்த கிழவியிடம் ஏதோ முணு முணுத்தாள். "தன்னைப் பற்றி ஏதோ சொல் கிருளோ? என்ற எண்ணம் அவனிடம் வரவும், திடுக்குற்றன். உடல் சட்டென்று சோர்ந்தது. அவள் என்ன சொன்னுளோ.
கிழவியும் மற்றப் பெண்ணும் உடனே எழுந்து கொண்டனர். அவள், இருந்த படியே, மூ% க்கு "அரக்கி ஞள். ஜன்னலால் தலையை நீட்டி, 'ஒ'வென அவள் ஒங் களித்துத் துப்பிய போது, அவனுக்குப் பரிதாபமாயிருந் தது. *நீண்ட பிரயாணங்களில், ஏன் பலருக்குத் தலை சுற்றுகிறது? என அவன் எண்ணினன். அவளுடன் கூட வந்தவர்கள் இதைக் கவனிக்க முடியாதபடி, இடையிற் கும்பல் நின்றது. எழுந்த கிழவியும், பெண்ணும் எழுந்த படியே நின்றதை அவன் அவதானித்து, திரும்பி "சீற்றைப் பார்த்தான். கையகலத்திற்குங் கூடிய இடம், ஈரமாயி ருந்தது!
28 ஒரே ஒரு ஜஹரிலே

ஒரு விதமான புரியாத உணர்ச்சியால் ஆளப்பட்டு நிமிருகையில், எ கிரே நின்று விஷமப் புன்னகை புரிந்த ஒரு ஒல்லி ஆளைக் கண்டதும் அவனுக்கு ஆத்திரம் வந்தது. கிழவி, ஒரு படியாகத் தனது இடத்தில் உட்கார்ந்து கொண்டாள். அந்த மற்றப் பெண்ணுக்கு இடமில்லை. அவன் எழுந்து, தன் இடத்தைக் கொடுத்துவிட்டு நின்று கொண்டான்.
இன்னவென்று தெரியாத ஒரு புதுமை உணர்வு, பிரவகித்தது. இதுநாள் வரை காணுததைக் கண்ட மாதிரி. மற்றவர்களுக்குச் சொன்னல், *9ygni),5ub,” “34. urterur o என்று பிரலாபிக்கப்படக் கூடிய துடிப்புகள் அவனை ஆக்கி ரமித்தன. ஈரத்துள் என்ன இருக்கும்?" என அவன் நினைத் தான், ஒரளவு படித்த “பயோலஜி? அறிவு, ப்ளட் ஸெல்" களும், “ரிஸ்யூ"க்களும் இருக்கும்" என்றது. "மெடிக்கோ’ வான நண்பனைக் கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.
"இன்னும் ஈரமாகவேயிருக்குமா?-திரும்பி மீண்டும் * சீற்றைப் பார்க்க நினைத்தும், ஒரு குற்ற உணர்வால் அவன் பார்க்காமலேயிருந்தான். சம்பவம் என்னவோ, நாலைந்து பேரால் தான்-அவர்களும் இப்போ தூங்கி வழிகி ருரர்கள்-கவனிக்கப்பட்டதென்பது அவனுக்குத் தெரிந்தா லும், அவன் பயந்தான். காற்றை மெதுவாக மோப்பம் பிடித்தான்.
வித்தியாசந் தெரியவில்லை!
பயத்தை விட்டு, அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் சோர்ந்து டோய், முன் ஸிட்டில் தலையைக் கவிழ்த் தக் குப்புறச் சரிந்திருந்தாள். அவனுள்ளிருந்த வெறி நீங்கி, ஒரு பாசம் அவள் மேற்பிறந்தது. அவளை ஆதரவாக அணைத்துப் பரிவுடன் தடவிக் கொடுக்க அவன் விரும்பி ஞன். அவன் இளைஞன், மண மாகாதவன். மண வாழ்க் கையில் இத்தனை நுண்ணிய மகிழ்ச்சிகள் நிறைந்திருக்கின்
சாந்தன் 3

Page 16
றன வென்பதை உணர்ந்த போது, ஏதோ ஒரு பொக்கி ஷம் தனக்குக் காத்திருக்கிறது என்பது போல அவன் புள கித்தான். மீண்டும் அந்தப் பரபரப்பு. "அவளை வருடிக் கொடுக்கவேண்டும். ஆதரவாய் அனைத்துக் கொள்ள வேண் டும்" என்பது போல. நிச்சயமாக, இது பழைய-இவ்வ ளவு காலமுமுணர்ந்த - “வெறி யல்ல என்பதை அவன்
உணர்ந்தான். மனத்தில் ஏதோ காட்சி ஜாலங்கள்.
மனக் காட்சி ஜாலங்களால், திடீரென ஒரு மாற் றத்தினை அவன் உணர்ந்தான். மனத்தில் நிகழ்ந்த ஒரு அதீத கற்பனை அவுனுள் அருவருப்பை மூட்டி விட்டது. இருந்தாற் போல ஒரு சூனியம்! எல்லாப் பெண்கள் மீதும் அருவருப்பாய்.தான் மினைக்கெட்டு இந்தப் பிரயா ணம் மேற் கொண்டதே பைத்தியக் காரத்தனமாய்.
4 *இதற்கா - இவ்வளவு?? - என்று தோன்றிற்று.
கவர்ச்சி, ஆசை, வெறி, வேகம், எல்லாம் "படீ" ரென அறுந்து போயின. இதில் ஒன்றுமேயில்லை" என்பது போல அவன் உணர்ந்தான். உணர்ச்சிகள், வடிந்தே விட்டன.
ரெக் காப்பொலையில் தேநீருக்காக பஸ் நின்றது. அவனும் இறங்கினன். இறங்கி, ஜன்னலால் அவளை நோக் கிய போது, அவள் தலையை மெல்லத்தூக்கிப் பார்த்து விட்டு, மீண்டும் பழையபடி கவிழ்த்துக்கொண்டதைக்கண் டான். அவள், மிகவுஞ் சோர்ந்திருந்தாள். "கூட வந்தவர்கள்
எங்கே?' என்று நினைத்த போதே, "பாவம்; தனியே தான்
30. ஒரே ஒரு ஊரிலே

வந்திருப்பாளோ" என்றுந் தோன்றிற்று - ஒரு சகோதரி யைப் பார்ப்பது போல் அவளைப் பார்த்தான். மனத்தில் பச்சாத்தாபம் எழுந்தது. அவளைக்கேட்டு, தேநீரோ, சோடாவோ வாங்கிக் கொடுக்கலாமென அவன் நினைத்
தான். ஆணுல், பயமாகவும் இருந்தது; அவளுந் தலை நிமிர வில்லை.
கடைக்குள், தேநீர் அருந்தும் போது நினைத்தான்: 'பாவம், அவளுக்கு எவ்வளவு வெட்கமாயிருக்கும்? இனி இறங்கிப் போவது கூட..?? - இரக்கம் மிகுந்தது. "அவளை எழுப்பியாவது ஏதேனும் வாங்கிக்கொடுக்க வேண்டும்" என்ற முடிவுடன் வெளியே வந்தபோது, பஸ்ஸின் ஜன் னலூடே, அவளுடன் வந்த பெரியவர் அவளுக்கு சோடா கொடுப்பதைக் கண்டான். ஒரு ஆறுதல் பிறந்தது.
1971-"இளம்பிறை"
சாந்தன்

Page 17
என் நண்பன் பெயர் நாணயக்கார.
ட்டாஞ்சேனையிலிருந்து, நாணயக்காரவும்
lb நானும் கோட்டைக்குவந்தோம். "யாழ்தேவி”
யில் ராஜநாயகம் வருவதாகக் கடிதம்
போட்டிருந்தான். வண்டி வருவதற்கு "இன்னமும் ஒரு மணி நேரத்திற்கு மேலிருந்தது.
"என்னடா செய்யலாம்??? என்ருன் நாணு. எனக் கும் புரியவில்லை. இனி, எங்கள் அறைக்கு- பம்பலப்பிட்டிக் குப் போய் விட்டுத் திரும்பி வருவது முடியாத காரியம்.
*ஸ்ரேஷனடியி%ல பேசிக்கொண்டிருக்கலாம்; வா,
சாப்பிட்டு வரூவோம்" என்றேன்.

சிப்பிட்டுவிட்டுத் திரும்பி "ஸ்ரேஷனின் முன்னுல் ஒல்கொட் சிலையருகில் வந்த போது, நாணு மிக உற்சாக மாயிருந்தான். அவன் ‘எடுத்த’ அந்த "ட்ரும் அதற்குக் கார ணமாய் இருந்திருக்கக்கூடும். அவன் எப்போதுமே இப்படித் தான் அளவுக்கு மேல் போகாது. அந்த ஆறடி உயரமும், அதற்கேற்ற ஆகிருதியுமான உடம்புமுள்ள நாணுவின் கம் பீரத்திற்கு இந்த ‘மப் பின் உசார் மேலும் பொலிவூட் டும். தீர்க்கமான மூக்கும், அதன் கீழ்க் “கருகரு" மீசையு மாய்-ஒரு சாயலில் ராவணனைக் கற்பனை செய்து கொள் ளலாம்.
* எண் டா, ராவணு. என்று செல்லமாக நான் அழைக்கும்போதெல்லாம் "கட கட*வென்று அவன் சிரிக் குந் தொனியில், ‘மாத்தறை-யாழ்ப்பாணமோ, அல்லது “சீன-தா"ைவோ தலைநீட்ட முடியாத அளவுக்கு எமக் கிடையில் இறுகியிருந்த நட்பின் வைரந் தெரியும். கல்லூரி யில் ஒரே வகுப்பு, ஒரே அலுவலகத்தில் ஒரே வேலை. தவிர நாண இப்போது என் "ரூம் மேட்".
'நிப்பமா? உள்ளுக்குப் போவமா?' என்றன்.
**இதிலையே கொஞ்சம் நிப்பம்'
இன்னும் அரைமணி நேரம் இருந்தது.
ஒரே குளிர், பனி மூட்டங்களிடை வாகனங்களின் ஒளிக் கதிர்கள் பீச்சப்படுகையில் முப்பரிமாணமுள்ள குவி யமாகிற பரினமம். உடலைச் சிலிர்க்க வைக்கிற காற்று. அங்கொன்றும் இங்கொன்றுமான யந்திர ஒலிகள் இல்லா விட்டால் இன்னும் நன்ருக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
**இவர்களையெல்லாம் பார்த் தாயா?* என்றன் நாணு, கீழே படுத்துக் கிடந்தவர்களைக் காட்டி.
சாந்தன் 33

Page 18
ஆண்-பெண், குழந்தை-கிழவர் என்று ஒரு "மினி" உலகமே அங்கு-ஒல்கொட்” சிலையடியிலிருந்து "ஸ்ரேஷன்" விருந்தை வரை வியாபித்திருந்தது. நாணு கேட்டதுந் தான் அதைக் கவனித்தேன். இவ்வளவு நாளும் வருகிற போகிற போதெல்லாம் கண்டு கண்டு அது ஒரு சாதா ரண விஷயமாய்ப் போய்விட்ட காரணத்தால், நான் அதைக் கவனிக்கவில்லை.
‘இவர்கள் இந்நாட்டு மக்களில்லையா???--சிகரட்டை ஊதியபடி நாளு சேட்டான்.
நான் பேசவில்லை.
'. டேய், இவங்களுக்கு வேலைவேண்டாம், காகசாப்பாடு கொடுக்க வேண்டாம். ஒரு சத்திரமாவது கட் டிப் போட்டா, இந்தப் பணியிலை இப்படிக் கிடக்கத் தேவையில்லையடா. 3 )
ஆங்காங்கே தூவப்பட்டிருந்த அந்தக் கம்பவிடை, பலர் இன்னமுந் தூங்கவில்லை. நாணுவின் உரத்த பேச் சால் ஈர்க்கப்பட்டு, எங்களை அவதானித்தனர்.
*நீ சொல்றது சரிதான்; கொஞ்சம் மெதுவாகப் பேசு. எல்லாரும் பார்க்கிருர்கள்" என்றேன்.
உண்மையில் நாணுவின் துடிப்பு எனக்குப் புரிந்து தான் இருந்ததென்ருலும், இந்த இரண்டு "மொட்டை யன்"களும் பேசி ஆகிற காரியமா இது?
நாணு பிறகு பேசாமலிருந்தான். இருவருமாக நடந்து போய் ஸ்ரேஷன் விழுந்தையில் நின்ருேம். திரும்பு கையில் நுழை வாசலருகில் நின்றவர்களைக் கண்டதும் எனக்குத் திடுக்கிட்டது.
சிறில்!
34 ஒரே ஒரு ஊரிலே

இலேசான ஒரு குளிர் முள்ளந்தண்டில் ஓடுவது போல-ராஜநாயகத்தைப் பார்த்துக்கொண்டிராமல், பேசா மல் அறைக்குப் போய் விட்டாலென்ன" என்று நினைத் தேன். ‘என்னைக் கண்டால் என்ன செய்வானே" என் கின்ற பயம் மேலோங்கிற்று. திரும்பி நாணுவை மெல்லத் தட்டுவதற்குள்-சிறில் என்னைக் கண்டு கொண்டான் !
அந்தப் பார்வை-அதிற் பின்னியிருந்த கொடூரம். எனக்கு வியர்த்தது. நாணுவின் கரங்களை இறுகப் பற் றிக்கொண்டேன். சிறில், என்ன நினைத்தானுே, ‘விடு விடென்று ஸ் ரே ஷ னு க்கு ஸ் போய்விட்டான். ஆஞல், எனக்கென்னவோ, அவன் சும்மாயிருப்பானென்று தோன்றவில்லை. நடுங்கிய கரங்களை உணர்ந்ததும், நாணு “என்னடா?' என்ருன்.
“சிறில். "-எனக்கு மேலே பேச வரவில்லை.
*எங்கே?' என்றவனின் கண்டத்திலிருந்து ‘கட கட" வென்ற வெண்கலச் சிரிப்பொலி எழுந்தது. அந்தக் கம்பீரத்தில்-அதன் தைரியத்தில்- நான் சமநிலைக்கு வரு கையில், “வீனகப் பயப்படாதே; நானிருக்கிறேன்' என் முன் நாணு.
வெளியே உறைத்த குளிர், இப்போது அதிகரித்தது போலொரு உணர்வு. சிறிலுக்கு நான் பயப்படுகிற கார ணம்-நாணுவும் அறிவான்
ஒர் அபலைப் பெண்ணைப் பழிவாங்க இந்த சிறில் முன்பொருதரம் முயன்றபோது, என் தலையீட்டால் அவன் திட்டங்கள் கவிழ்ந்து
அதன் விளைவாய் இந்த "தெமலப்பய"லுக்கு ஒரு பாடங்கற்பிக்க முனைந்து அலையும் சிறில்.
எங்கள் சொந்தக் ‘கொழுவ’ லுக்கு ஒரு இனவாத முலாம் பூசும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிருன்!
நாணு உலுக்கினன். ** என்னடா, இன்னுமா நடுக்கம்?" நான் தலையாட்டினேன்.
சாந் கன் 35

Page 19
ராஜநாயகம் வந்தாயிற்று. மூவரும் பஸ்தரிப்புக்கு வத்தோம்.
பஸ்ஸைப் பார்த்துக்கொண்டு நின்ற அலுப்பில் நேரம் ஊர்வது போலிருந்தது. பஸ்தரிப்பில் எங்களைவிட வேறெவருமில்லை. இரைந்தபடி குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்த “டாக்ஸி'களும் மறைந்துவிட்டன.
பின் புறத்திலிருந்து ஒரு செருமல் கேட்டது. திரும்பினல்
சிறில்! இன்னும் யாரோ இரண்டுபேருடன் நின்றன்.
"நாணு. *’ என்றேன். இதற்குள் சிறில் மிக அருகில் வந்துவிட்டான் - தமிழர்களைப் படுமோசமாகத் திட்டியபடி, அவனுக்கு நல்ல வெறி. 'இண்டைக்கு நான் உன்னைக் கொன்ருலுஞ் சரி! ஆன நீ என்னைத் தொட் டியோ, 'தமிழன் சிங்களவனை அடித்தானென்று நாளைக்கு கொழும்பே கலங்கும். கவனம்!" என்னைப் பார்த்துக் குழறிஞன்.
நாணயக்கார வாயிலிருந்த சிகரட்டை எறிந்த அடுத்த கணம் சிறிலின் சட்டை அவன் கையிலிருந்தது! “ ‘சி’யைத் "த அடித்தால்தானே, பிழை? டேய் காவாலி "சி" யை “சியே அடிக்கிறேன் . நானும் "சி" நீயும் "சி" இனி எப்படி இனக்கலவரம் வரும்? எளிய ராஸ்கல். உன்ர அக்கிரமத்துக்கு அவன் துணை வரேல்லையெண்டு இந்த வேலையா செய்யிருய்?" - நாணுவின் வாய்ப்பேச்சு இவ்வளவு தான்.
அம்மூவரும் 'நிறைவெறி”யில் நின்றதால் என் நண் பனின் வேலை இலகுவாயிற்று. திகைப்பில் கரைந்த நிமி
- fill GT. . . . . .
‘இனி, இந்த வேலையை நினையாதே!' - விழுந் தவனுக்கு நாணுவின் குரல் அபயமளித்தது.
ராஜநாயகம் 'டாக்ஸி’க்கு கைதட்டினன்.
1972 ‘மல்லிகை"
36 ஒரே ஒரு ஊரிலே

9u Uu ணங்கள்
ழவர், ஒரு சாயலில் பாட்டாவைப் போலவே இருந்
தார். உருவத்தைக் கொண்டு எந்த இனமாயிருக்கும்
என்று தீர்மானிக்க முடியவில்லை. ரயிலின் ஆட்டத் திற்கேற்ப தலை ஆடிக்கொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே வெறித்த பார்வை. பற்களில்லாத பொந்து போன்ற வாய்.
விஜி, உப்புமாவைப் பிடியாகப் பிடித்து நீட்டினுள். கிழவரைப் பார்த்த விழிகளைத் திருப்பி விஜியைப் பார்த் "வன், தலையை ஆட்டினன். பெரிய கூச்சமாக இருந்தது:
*ஏன்?" - காதருகில் சாய்ந்து, விஜி மெல்லக் கேட் டாள். உண்மையைச் சொல்ல முடியவில்லை. சொல்வதற் கேற்ற - சொன்னுலும் மற்றவர்களுக்குத் தன் கனதியை விளக்கக் கூடிய - காரணமாகப் படவில்லை. எனவே, 'எனக்கிப்ப வேண்டாம். நீர் சாப்பிடும்’ என்ருன்.

Page 20
விஜிக்கும், ஒரு சிறு "இதாகப் போய்விட்டிருக்க வேண்டும். "அப்ப, நானும் பிறகு சாப்பிடுறன். 9 g என்று சரையை மூட ஆயத்தமானுள்.
"விஜி, பாவம்" - அவனுக்குப் பாவமாக இருந்தது. ஐந்து நாற்பத்தைந்துக்கு ரயிலைப் பிடிக்கவென்று ஓடிய ஓட்டத்தில், அவள் சாப்பிடக்கூட இல்லை. அந்த நேரத்தில் சாப்பிடவும் முடியாது.
*சரி; தாரும். * சலிப்பைச் சாட்டிட்டுக்
கேட்டான்.
பிடிப்பிடியாக உருட்டிக் கையில் வைத்தபடி விஜி இருந்தாள். மாறி மாறி, ஒரு பிடி அவனுக்கு; ஒரு பிடி தனக்கு. கூச்சந்தான் வியாபித்து நின்றது. அந்தப் பெட்டி யிலேயே இவர்கள்தான் கடைசி. பொல்காவலைக்கும் குரு நாகலைக்கும் இடையிலேயே முக்கால்வாசிப்பேர் முடித்து விட்டார்கள். கிழவர் மட்டும், கோட்டையில் ஏறிய படியே உட்கார்ந்திருந்தார் - ஜன்னல்பக்கந் திரும்பி, வெளியே ஒடவிட்ட பார்வைவுடன்.
மூலையிலிருந்தவர் முதலில் தன் சரையை அவிழ்த் ததும், மற்றவர்களும் தர்ம சங்கடங்களைத் தவிர்ப்பதற் கென்றே தொடங்கியிருக்க வேண்டும். இப்படியான இடங் களில், எல்லோரும் ஒருமித்துத் தொடங்குவது வசதியா
னது; எல்லோரதும் - ஒவ்வொருவரதும் - தர்ம சங் கடங்களைத் தீர்ப்பது, என உணர்ந்திருந்தாலும்; கிழவ ருக்காக அவன் தாமதிக்க எண்ணி, ** கொஞ்சம்
பொறுத்து எடுப்பம்' என்று விஜியிடம் சொல்லியிருந் தான்.
38 ஒரே ஒரு ஊரிலே

மாகோ வரைக்கும் கிழவர் அப்படியேதானிருந்தார்.
தாங்கள் கொண்டுவந்திருந்ததில் சிறிது கொடுத்துப் பார்க்கலாமா? என்கிற எண்ணம் தலை நீட்டிற்று. ஏழை யாகத் தெரிந்தாலும், கிழவரில் தெரிந்த கம்பீரம் அவனைத் தடுத்தது. பிழையாக எண்ணிச் சண்டைக்கு வந்தாலும் பாதகமில்லை. அவர் மனதைக் கூசப்பண்ணி விடக் கூடாதே" என்பதில் அவனுக்கு மிகுந்த அக்கறை. அதினுல் கேட்கவில்லை.
கல் கமுவவை நெருங்குகிற கருணத்தில், விஜி சுருட் டித் தந்த வெறுங்கடதாசியை வெளியே எறிய எழுந்த போது, கிழவர் தன் காக்கிப் பைக்குள் கையைவிட்டு ஒரு சிறிய பொட்டலத்தை எடுப்பதைக் கண்டான்.
இனந் தெரியாத ஒரு திருப்தி முகிழ்த்தது.
நேரே பார்ப்பது அநாகரீகம். பழையபடி தன்னி டத்தில் உட்கார்ந்து, புறப்பார்வைக்குள் கிழவரைக் கொண்டுவந்தான்.
வெற்றிலை போடுவதையே கிழவர் ஒரு கலையாகப் பபின்றிருந்தார் போலும் - விரல் நுனியில் சுண்ணும்பை எடுத்து, காம்பை வார்ந்த வெற்றிலையில் அதைத் தடவி, சுருட்டி, சீவலையும் புகையிலையையும்.
ஏமாற்றமும், இன்னும் "எதுவுமோ கெளவியது.
அநுராதபுரத்தில் இவன் எதிர்பாராத விதமாக கிழவர் இறங்கியபோது நிம்மதியடைந்தான்.
1973 "மல்லிகை"
ராந்தன் 59

Page 21
ஹீரோத்தனம்
ருண்டு திரண்டிருந்த கைகால்களுடன், “மொழு மொழு' வென்று, அந்தக் குழந்தை உண்மையி
லேயே மிகமிக அழகாய்த்தானிருந்தது. அந்த "ஸ்ரான் டீ பஸ்ஸின் எதிர்ப்புற வரிசையிலிருந்த தாயின் மடியிலிருந்து, இவனைப் பார்த்த போதெல்லாம் அது சிரித் தது. அதை வாங்கி அணைத்துக்கொள்ள வேண்டுமென்கிற
ஆசை.
"பாவி, ஷியாமா!' - எங்கோ கிரிபத்கொடையிலி ருக்கிற அவளைத் தேடி, அவள் குரல்வளையைக் கடித்துக் குதறவேண்டுமென்ற தவிப்பு. அவன் பார்த்த சினிமா ஒன் றில், தன் வாழ்வை அலங்கோலமாக்கிய ஒருவனை, கதாநா யகி இப்படித்தான் கடித்துக் கொல்கிருள். பத்திரகாளி போல் அவள் நின்ற கோலம் இவன் முன் விரிகிறது.
 

ஷியாமாவை - ஆயிரந் தடவைகள் அவன் கண்டி ருக்கிருனே, அவள் கட்டிலில் மலர்ந்திருக்கிற கோலம்அப்படியே அந்தத் தோகை மயிர் பரந்து மெத்தையாய்க் கிடக்க, அதன் மேல் வியாமா - (ஷியாமா கூட, இந்தக் குழந்தையின் வாகுதான் - பெரிதாய்) மெல்லிய கவுண் மூடியும் மூடாமலுமிருக்க, இவனை இழுத்துப் பிணைக்கிற பார்வையை வீசிக்கிடக்கிற அந்தக் கோலத்தில் - அவள் மேல் தாவி, அந்தக் குரல்வளையை நறுக்கென்று கடிக்கிற ஆவேசம்.
பஸ் நிற்கிறது - பம்பலப்பிட்டி சந்தி.
அவன் இறங்கி நடந்தான். (“குழந்தை இனி யாரைப் பார்த்து சிரிக்கும்?')
"அந்தக் குழந்தைபோல் எங்களுக்குந்தான் பிறக்கும் -லலிதாவின் நிறமும், என் முகமுமாய். அது, இந்தக் குழந்தைகளையெல்லாந் தூக்கியடித்துவிடாதோ' - என்ருே பிறக்கப் போகிற அந்தப் புது உயிரைக் கொஞ்ச, இப் போதே உணர்வினைச் சேமித்துக்கொள்கிற வழக்கம். மழலையைக் காண்கிற போதெல்லாம், இனிய எதிர்பார்ப் புக்களைப் பழக்கப் படுத்திக் கொள்கிற சுபாவம்.
*எல்லாம் போச்சுதா?’- இழப்பில், இயலாமையில் ஆளைக் கொல்வதாய் எழுந்த கவலை.
அவன் துவண்டான்.
* கவலை வேண்டாம்; அதிற் பயனில்லை. திரும்பிக்
கொள்' - உள்ளுணர்வு.
அவன் முயன்றன்.
சாந்தன் 4

Page 22
"நான் சரியாகிவிடுவேன். எனக்கொன்றுமில்லை. நான் முன்னேறுவேனே!” - ஜபித்துக்கொண்டு நடந்தான்.
*"அதுதானென்று என்ன நிச்சயம்? 'அது'வாகவே
தானிருந்தாலும் என்ன, செத்தா போவேன்?
டொக்டர் வரச் சொன்னது, நாளைக்கு. தீர்ப்புக் காகக் காத்திருக்கும் கைதியின் நிலை. இன்று திங்கள்.
லலிதா பார்த்திருப்பாளே! - சனிக்கிழமையும் போகவில்லை.
* என்ன முகத்துடன் போய்ப் பார்ப்பது? - உன்னை
நான் அணுகவா? உன்னையும் மாசு படுத்தி, நோய்க். ஐயோ, வேண்டாம்!
"ல விதா-என் லலிதா! உலகின் அழகெல்லாம் உரு,
வாகி வந்தவள்.
அவளையும் இழந்த - கிடைத்தும் அணுக முடியாத நிலையென்கிற-தவிப்பு.
ஓ ! அது பயங்கரமானது.
உயிரே போனலும் பாதகமில்லை ?. “இல்லை; நான் சரியாகிவிடுவேன். இது, "சிம்பிள்" எனக்கொன்றுமில்லை."
என்ருலும், லலிதாவிடம் போக முயலவில்லை; முடியாது.
தோசைக் கடைக்கான நேரம்.
அலைந்த கலைப்பு பாதி, கவலைக்களைப்புப் பாதியாக
42 ஒரே ஒரு ஊரிலே

நுழைந்தபோது, கடதாசியில் ஈரக் கையைத் துடைத்த படி, சிவராசா வந்தான்.
"இன்று இவன் என்னிலும் பெரியவன்?
எப்பொழுதும், சிவராசாவை--ஏன், எந்த நண்பனை யுமே-சந்திக்கையில், "ஹீரோ"வாக நெஞ்சை நிமிர்த்திப் பீடு நடைபோடும் உசார்
அந்த ஆளுமை -
இன்று போயிற்று ?
*சிவராசா, நீ பெரியவனகிவிட்டாய்! சொர்க்கத் திற்கு ஏறப்போய்த் தடுக்கிப் பாதாளத்தில் வீழ்ந்ததனுல், எப்போதுமே பூமியில் நிற்கும் உன்னிலும் தாழ்வாகப் போய்விட்டேன்!"
சிவராசா, நல்லவனேதான். வழமைபோல் பேசினன். (அவனுக்கு எப்படித் தெரியும்? எது தெரியும்?-யாருக்குத் தான் தெரியும்?) ஏதேதோ பேசிவிட்டு நடந்தான்.
“என் துணிவு-அந்த ‘ஹீரோத்தனம்’-இதுவேதான் என் எதிரியாயிற்றே? சிவராசா ஆட்களைப்போல் பேசா மல் இருந்திருந்தால் அபாயங்களேயில்லை! "ஹீரோத்தனம்" எப்போதுமே-எதிலுமே-ஆபத்துத்தான்?*
* கோழைப் பயலுகள்!"
முப்பது வயதுக்குக் கிட்டியும், ஒருத்தி கிடைக்காத அந்தரத்தில், மனம் முறுகித் திரிந்து வக்கரித்துப் போன ஒரு "செக்ஸ்’ தன்மை-தனிப்பார்வை!
எட்டி நின்று பார்ப்பதிலும், பார்த்ததை மீண்டும் பேசுவதிலுமே “ஒகஸம்" காண்கிற பரிணுமம்!-தவிப்பு,
சாந்தன் 43

Page 23
ஏக்கம், பெருமூச்சுக்களின் தொகுதிகள்!
பஸ்ஸிலும், ரயிலிலும் (இன்னும் எங்கெங்கோவெல் லாம்) பறக்கிற பட்டுப் பூச்சிகளை இவன் கைப்பற்றுகிற சாகஸம்-அந்தத் தொழில் நுட்பம் -இவர்களுக்குத் தரு கிற பொருமை சொல்லி மாளாது!
(சாப்பிட்டு விட்டுத் திரும்பியாயிற்று.)
கொழும்பிற்கு வந்த புதிதில்- ஆறேழு வருடங் களுக்கு முன்-படித்துக் கொண்டிருந்த காலத்தில்-அவ னும், இதே மாதிரி ‘நல்ல பிள்ளை யாயிருந்தான்.--அப்படி யிருந்தாக வேண்டியிருந்த வயது. இந்த "நொக்-அவுட்” *ரெக்னிக்'குகள் கைவந்திராத பருவம்.
‘எப்படி, எந்தக் கோணத்தில், எந்த மாதிரி, ஒரு "தட்டு’, எதிராளியை விழுத்தும்" என்கிற இப்போதைய அறிவு வந்திராத நேரமது. எந்தப் "பிடிபாடுமே இல்லா மல் இப்போது ராஜநடை போட்டாலும், - அன்ருெருநாள் செய்யாத ஒரு பிழைக்காகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத் தப்பட்டு.
அவன் தண்டிக்கப்படவில்லை தான்.
ஆனல், இழக்கவேண்டி வந்தது?
ஒரு ஞாயிற்றுக்கிழமை.
இவன் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தான். பக்கத்து
‘ஸிற்றில் அவள் -அந்தக் காலத்தில் இவனுல் ‘படு ஸிரி யஸ் ஸாகப் பிரேமிக்கப்பட்டவள்-இவன் வாடகைக்குக்
44 ஒரே ஒரு ஊரிலே

குடியிருந்த அறையின் பக்கத்து வீட்டுக்காரி. அவள் அன்
பிற்காக இவன் தவம் நோற்ற காலம்.அவள் மனதிலும், காதல் மொக்கு விட்டிருக்க வேண்டும் என்பதை, இவன்
உணர ஆரம்பிக்கிற காலங்களில் ஒரு நாள் தான், அது;
அந்த ஞாயிறு.
ஒடும் பஸ்ஸில், தெருக் கரையைப் பார்க்கிற சாட் டில் பார்வைகளை மோதவிடுகிற ஜாலங்கள்.
இருந்தாற் போல ஒருத்தி-இவனிருந்த "ஸீற்றின் முன்னலிருந்தவள் - முப்பது வயதிருக்கலாம் - "அவள் போன்ருேரை ஒதுக்கவேண்டும்" என்று இயல்பாகவே படிந்த சுபாவம் இனங் காட்டும் வகையினள்-சீறி எழுந்தாள். திரும்பி இவனைப் பார்த்து, இவனுக்குப் புரியாத சிங்களத் தில், "காச் சுமூச் சென்று கத்தி ஒய்ந்தாள். பஸ்ஸில் எல் லோர் கண்களும் தன்மேல் மேய்கிற உணர்ச்சியால், எங் காவது ஒளிந்து சுருங்கிக்கொள்ள வேண்டுமென்கிற தவிப்பு. ‘என்ன செய்தோ மென்பதே புரியாத குழப்பம். மற்றவள்-இவன் மானஸிகக் காதலி-இந்தக் கூப்பாட் டைக் கேட்டு, முகங்கறுத்து, உலகின் வெறுப்பையெல்லா ந் திரட்டி இவன் மேல் கக்குவதான ஒரு பார்வையுடன் முகத் தைத் திருப்பியபோது தான், (அவளுக்குச் சிங்களம் புரியும்) “ஏதோ பெரிய பிழை" என்பது புரிந்தது.
பக்கத்திலிருந்தவரை,
'ஏன் இந்த மனுசி கத்துது?'- எனக் குழம்பிய குர லில், ஆங்கிலத்தில் கேட்டபோது;
**நீங்க தன்னுேட முதுகைச் சொரண்டுறதாம்" என்று கொச்சைத் தமிழில் பரிதாபத்துடன் சொன்னர்.
அவன் திகைத்தான்.
சாந்தன் 45

Page 24
"நாணு a...
அந்த மனிதரின் அருகில், - இவனுக்கும் அவருக்கு மிடையில்-நின்று, முன் "ஸிற் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்ற குழந்தை இப்போது அவர் மடிமேல் ஏறி யிருந்தது.
அவ்வளவுதான் !
அவன் மானஸிகக் காதலி (என்ன தான் மான ஸிக மாளுலுைம், எவ்வளவு தீவிரமாய்க் காதலித்தான்!) ஒதுங்கி.
இவனும் சுருண்டு.
அந்த இழப்பில் விளைந்த ஆக்திரத்தில், இந்தப் போலி உலகையே பழிவாங்கவேண்டுமென்ற வக்கிரத் துடன்;
*தட்டுவது எப்படி என்பதையே, ஒரு கலையாகப் பயின்று, (ஏகலைவன், இவன்) பழகி, இன்று "சக்கர வர்த்தி யாகி. ---
(ஓ ! ரீட்டா, கேட்டாளே ஒரு நாள்; "உங்களுக்கு இன்னுெரு பேர் ‘சக்கரவர்த்தி'யாமே?" என்று - பாவி யாரோ அண்டியிருக்கிருன்!-நல்ல காலம், ரீட்டா
என்ன சக்கரவர்த்தி?" என்பதைக் கேட்கவில்லை!)
எல்லாம் அலுத்து (-எல்லாமே, ஒரு ருசிதான்!) *எல்லாமே ஒன்று தான்" என்கிற துறவு நிலை சித்தித்தது. அந்த அஞ்ஞாத வாசத்தில் ஒராண்டும், பிறகு உத்தியோக மான புதிதில் "வாழ்க்கையை அமைதியாக அமைத்தாக வேண்டும்’ என்கிற முடிவில்-லலிதாவைக் கண்டதால் பற் றிய நெருப்பில்-அவன் மாறி, ஒரு அமைதியான-லட்சிய? -வாழ்வை வாழ்ந்த போதுதான்
46 ஒரே ஒரு ஊரிலே

*பாவி, ஷியாமா 1.
சினிமா நடிகையாம்-புதுமுகம்! (உண்மைதான், “பழையமுக மென்ருல், இவ்வளவு புதிதாக இராது) கவர்ச் சியின் இலக்கணம் ! صم -
‘எப்படி, என்னில் விழுந்தாள்? என்கிற வியப்பு
இவனுக்கு மாறுவதற்கு முன்பே, அவள் இவனுக்குப் பழை யவளாகி விட்ட நிகழ்வுகள்!
அதன் விளைவு தான?
முந்த நாள் அறிகுறிகள்...!
"மூதேவி! “என்னை நம்புங்கள்-வண்டுதா மலர் நான்’ என்ருளே!"
படுக்கும்போது, மணி பதினென்று. ‘நாளைக்கு முடிவு என்னுகுமோ?
தூக்கம் வருவதாவது !
‘கடவுளே இந்தமுறை-இந்தமுறை மட்டும்-காப் பாற்றி விடு. இனிமேல் அந்தப் பக்கம் நினைக்கவே மாட் டேன்' -மனதினுள் நேர்ந்து கொண்டான்.
* லலிதா-என் லலிதா. உனக்குத் துரோகம் நினைத்த எனக்கு இது வேண்டும்." -தன்னையே சபிக்கிற கோபம், அவனுல் தாங்க முடியவில்லை.
N
* லலிதா.என் லலிதா..!"
-முனகினன். கண்ணுள் அந்த "லக்டோஜன் குழந்தை யும் லலிதாவும் வலம் வந்தார்கள்.
மனமே நொறுங்குகிறமாதிரி வலி.
சாந்தன்
مضم

Page 25
* விருட்டென்று எழுந்தான். விளக்கைப் போட்டு விட்டு-*தெரிகிறதா?*
இழவு !
தெரிகிறது போலவும், தெரியாதது போலவும். l
நீண்பன், *மெடிக்கோ வானதுதான் எவ்வளவு வசதி? ராஜா, நேரேயே உள்ளே போனன்.
"உட்காருங்கள்" என்ருர் டொக்டர், இவனைப் பார்த்து.
**தாங்க் யூ.??-உட்கார்ந்தான்.
**உங்களுடைய 'றிப்போர்ட் வந்துவிட்டது. உங்க ளுக்கு எதுவுமே இல்லை-வீண் பீதிதான். ** என்ற டொக்டர், ராஜாவைப் பார்த்துச் சொன்னர்
"ராஜா, உங்களுக்கு நான் நேற்றே சொன்னேனில் லையா?-உங்கள் நண்பருடைய திருப்திக்காகத் தான் ஒருக் கால் "டெஸ்ட்” பண்ணச் சொன்னேன்.
ராஜா, சிரித்தான். “ “grfu u nr nr.......?” ”
"தாங்க் யூ, டொக்டர்.தாங்க் யூ வெரிமச்."- உலகத்தில் இவன் தான் இப்போ பெரியவன், ஒரு பொக் ஷத்து அதிபதி, சர்வ வல்லமை மிக்கவன்..!
1973 "பூரணி"
4& ஒரே ஒரு ஊரிலே

ஒரு திங்கட்கிழமை மாலை
6 நுமார் வால்போல - என்று எல்லோருஞ் சொல் வது புளித்துப் போன உதாரணம் என்று நினைத் தான் பரம். "கியூ நீண்டுதா னிருந்தது - வளை ந்து, நெளிந்து, நடை பாதையையும் இரண்டொரு இடங் களில் மறித்துக்கொண்டு. 'தன்பாடு நிச்சயமில்லை" என்று பட்டது.முன்னல் நின்றவர்களே அறுபது எழுபது பேர் களுக்கு மேலிருக்கும்.
நேற்றும் இப்படித்தான். இவனுக்கு முன்னல் நாலு பேர் நிற்கிற போதே பாண் தீர்ந்து விட்டது. ஏமாற்றத் தோடு திரும்பினுன்.
‘இந்தப் பேக்கரிக்காரன் மூண்டே முக்காலுக்கு குடுக் கத் துவங்கின என்ன! மடையன்."

Page 26
மூன்றரைக்குத் தான் வேலை முடியும். அந்தநேரத் துக்குத் தான் இவனும் இங்கே பாண் கொடுக்கத்
தொடங்குவான்.
*.அஞ்சு நிமிஷம் முந்தியாவது வெளிக்கிட, கந்தோ ரிலை விடுருனில்லை. வேலை நேரம் முழுக்க “ஷொப்பிங்" செய்து போட்டு வரலாம்-ஆன மூண்டரைக்கு ஒரு நிமி
ஷம் முந்தி வெளிக்கிட ஏலாது.
இன்றைக்குப் பாண் கிடைக்கா விட்டால், நாளைக் குப் பெரும்பாடாகிவிடும். நாளைக்குச் செவ்வாய்க்கிழமை. * இதைக் கொண்டு போன, இரண்டு நேரஞ் சமாளிக்கலாம். இல்லாட்டி மூண்டு நேரமும் கடைக்காரன்ாை ‘பரிசோத னைப் பண்டங்களை விழுங்க வேண்டி வரும்."
“Sig மெல்ல நக்ர்ந்தது. திரும்பித் தெருவைப் பார்க்க அவன் விரும்பவில்லை. காலி வீதியில் குறுக்கும் நெடுக்கும் மிக வேகமாகப் போகும் வாகனங்கள், கண்ணை மின்னித் தலையைச் சுற்றச் செய்யும் என்ற பயம். எச்சில் தெறிப்பு போல கையில் ஏதோ பட்டது. அடுத்தடுத்து. இரண்டு மூன்று துமிகள். அண்ணுந்து பார்த்தான். மழை
தான.
பலக்கும் போலிருந்தது. வரிசை-வளைந்து நெளிந்து நின்றது - இப்போது அருகிலிருந்த கடைத் தாழ்வாரங் களை ஒட்டி, நீண்டு நேராய் நிற்க முயன்றது. அடுத்தடுத்த கடைவாசல்கள் மறிக்கப்படுவது தவிர்க்க முடியவில்லை. இடைக்கிடை வாசல்களுக்கு இடைவெளி விட்டு எல்லோ ரும் நின்றர்கள். தூவானமும் மோசம், •ሪ
50 ஒரே ஒரு ஊரிலே

“மண்ணுங்கட்டி மழை கொழும்பிலை ஒரு மாதமா கழுத்தறுக்குது-ஒண்டுஞ் செய்ய விடாம.அங்க களத்து வாவ, லபுகம வழிய மழையே இல்லையாம்!"
குளியலறைக் குழாய் வறண்டு கிடக்கிறது-அறைக் குள் கட்டிலடியில் தண்ணிர் ஒழுகுகிறது!
‘ என்ன வாழ்க்கை தண்ணியுமில்லாமல், சாப்பாடு மில்லாமல், "உத்தியோகம்’ எண்ட பேருக்காகக் கிடந்த மாள
வேண்டி கிடக்கு!
-இதைச் சொன்ன போது தான், சோதி கேட்டான்:
‘ஏன்? அப்ப இதை விட்டிட்டு ஊரோடை போய்க் கமஞ் செய்யன்?"
-அது நக்கல். பரத்துக்குத் தெயும்.
*ஊரோட போய் என்னத்திலை கமஞ் செய்யிறது? குடியிருக்கிற அந்த ஒற்றைக் காணியுக்கையோ!"
இந்த விழல் உத்தியோகத்தை விட்டால் வேறு வழி யில்லை-இப்போதைக்கு!
"கியூ" முன்னேறுவது என்பது வலு ஆறுதலானபொறுமையைச் சோதிக்கிற-விஷயம். இப்படியான இடங் களில் சகலதரத்து-சகலமட்ட-மக்களும் பிரதி நிதித்து வப்படுத்தப்படுகிருர்கள். குஞ்சு குருமன்கள். கூட மழைக்கு ஒதுங்கியபடி கையில் கூடைகளோடு நின்றன.
யாரோ பாண் வாங்கிக்கொண்டு போன பெண் னிடம், அதைத் தட்டிப் பறித்துக்கொண்டு போனவ னைப் பற்றி பத்திரிகைச் செய்தியொன்று படித்தது, பரத் துக்கு நினைவு வந்தது- -
சாந்தன்

Page 27
"எங்களைப் போல மாதச் சம்பள- அரசாங்க உத்தியோக காரரே இப்பிடி அவலப்பட்டா, கொஞ்சம் முட்டுப்பட்ட சனம் என்ன செய்யும்?"
பரம், ஆத்திரமும் அரியண்டமுமாக அறைக்குத் திரும்பினன். இன்றைக்கும் தோல்வி
இவனுக்கு முன்னல் பத்துப் பன்னிரண்டு பேர் நிற் கும் போதே பாண் தீர்ந்து விட்டதால், அவ்வளவு
வயிற்றெரிச்சல் இல்லை!
அறை வாசலில், வெள்ளையும் மஞ்சளுமாய் இரண்டு மூன்று சிறு குவியல்கள்
குழைந்து போய், அசிங்கமாய்க் கிடந்தன. * துர்நாற்றம் வேறு இலேசாக வீசியது. அந்தக் குவிய லிருந்து தரையெல்லாம் நீர்படர்ந்து ஊறிக்கிடந்தது.
“இது என்ன கறுமம்-?* அறையைத் திறந்து கொண்டு உள்ளே போனன்.
"இது பெரிய மனிதர்கள் வீடு - தொல்லையில்லாதது“டீஸன்டா"யிருக்கும்" -என்று தான், வாடகை அதிகம் என்ருலும் பரவாயில்லை என்று பரமும் சோதியும் இதை வாடகைக்கு எடுத்திருத்தார்கள். மூன்று நாய்கள் வேறுகுதிரை மாதிரி-வீட்டுக்காரர்கள் வைத்திருப்பதால் அறை யைத் திறந்த படி விட்டுப் போனலும் கள்ளர் பயமில்லை.
சோதியும் வந்து விட்டான். * 'இதென்னடா, வாசலிலை அரியண்டம்?"
9
'எனக்குந் தெரியேல்லை?.
52 ஒரே ஒரு ஊரிலே

அறைக் கதவை யாரோ தட்டும் ஒலி கேட்டது. ஒற்றைச் சப்பாத்து மட்டுங் கழற்றிய படி பரம் எழுந்து போய்க் கதவைத் திறந்தான். வீட்டுச் சொந்தக்காரி.
"ஐ ஆம் ஸொறி. உங்கள் அறைவாசலை இந்த நாய்கள் அலங்கோலம் பண்ணி விட்டன. இப்போதே துப்புரவாக்கச் சொல்கிறேன். και ν
'அதற்கென்ன பரவாயில்லை. துப்புரவாக்கினுல் சரிதானே."
*.இந்த நாய்கள் இவ்வளவு நாளும் பழக்கமில் லாததைச் சாப்பிட்டதால்தான் இப்படிக் கக்கியிருக் கின்றன. சோறு தின்று பழகியவை. -இன்று பாணை வாங்கி, முட்டையுடன் வைத்தேன். ஒத்துவரவில்லை போலிருக்கிறது. 》$
ベ -அந்த மனுஷியின் முகத்தில் பாய்ந்து ஒரு உதை விட வேண்டும் போலிருந்தது பரத்துக்கு.
1973 ag Gag if
சாந்தன் 53

Page 28
52(5 இருபத்தாருந் தேதி, காலை
னதில் ஏதோ சுண்டியிழுத்தது. பச்சாத்தாபம்.
*சே! என்ன நினைத் திருப்பாள்?. *நான் கள்ளி
என்று நினைக்கிருரோ" என்று அந்தப் பிஞ்சுமணம் நொந்திருக்குமோ??-அவனுக்குத் தன்மேல் கோபங் கோட! மாய் வந்தது. ". இந்தத் தொழிலுக்கு வந்ததால் இப் படி அனுபவிக்க வேண்டி-இந்தப் பேச்சுக்களைக் கேட்க வேண்டி வந்ததே! என்று மனங்குமுறியிராதோ?. "
எதிரே கிடந்த "ஃபைல்களைத் தூக்கிப் போட்டு விட்டு, "கன் ரீ*னுக்கு ஒட வேண்டும் போலிருந்தது. போய், "நான் முட்டாள் தனமாகக் கேட்டுவிட்டேன். கவலைப் படாதே" என்று அவளிடம் சொல்ல வேண்டும் என்கிற அவதி.
 

‘போய்ச் சொன்னுல், விஷயத்தைப் பெரிதுபடுத்து கிற மாதிரி. இதுவரையில் அதை "ஸ்பீரியஸ் ஸாக எடுக் காவிட்டாலுங் கூட, இனி எடுத்து விடுவாள்!."
தர்ம சங்கடம்.
8லையில், அலுவலகத்திற்குப் புறப்பட்டபோதே ஏற்பட்ட குழப்பம்-பஸ் கொண்டக்டருடன் போட்ட சண்டை வேறு, ஆளை இன்னும் குழப்பிவிட்டிருந்தது. அலு வலகத்திற்கு வந்து, கையெழுத்துப் போட்ட கையோ டேயே 'கன்ரீனுக்குள் புகுந்தான்.
நேற்று சம்பள நாள்.
இப்போ சாப்பிட்டு முடிந்த போதுதான், ‘நேற்றுப் பணங் கொடுக்கும் போது முதலாளி நின்றன? என்கிற ஐமிச்சம் எழுந்தது. "கன்ரீன் மாதாந்தக் கணக்குகளை சம்பள தினத்தன்று தீர்த்து விடுவது.
கையைக் கழுவிக்கொண்டு, முன் மேசையடிக்கு வந்த போது முதலாளி இல்லை. இவள்தான் வழமைபோல் ‘கவி யர் ஆயிருந்தாள்.
“இப்ப கேட்டாலொழிய, பிறகு மறந்து போய். நேற்று அந்த விசரனும் காசு வாங்கினதை மறந்திருந்தா, இன்னும் முப்பது ரூபாய் அழவேண்டிவரும். கேட்டுவிடு Gaunrub!”
கேட்டான்.
"ஓ! தந்திட்டீங்களே!...”* அவள் சிரித்துக் கொண்டே சொன்னுள்.
சாந்தன் 55

Page 29
“நான் காசு தந்தபோது முதலாளி நிண்டாரோ?*
“ஒ1.*-அவள் கணக்குப் பேரேட்டைப் புரட்டி, இவன் பக்கத்தைக் காட்டினுள். ド
**.இதிலை “சரி” போட்டு கையெழுத்து வைச்சிருக் கிருரே"
அப்பாடி ! சரிதான்.
"எனக்கெப்படி இது மறந்தது?"-நிம்மதியூடே ஒரு திடீர்ப் பொறி:
*நான் இப்படி இவளைக் கேட்டிருக்கலாமோ??
"முதலாளி நிண்டவரோ" என்று தான் கேட்ட போது, அவள் முகங் கன்றியது போல ஒரு ஞாபகம்.
கடதாசியில் கையைத் துடைத்தபடி அலுவலகத்திற் குள் நுழைந்து மேசை முன்னுல் அமருகிற வரையில் இதுவே மனதில் புரண்டது.
"அந்த "ஃபைல்" ஒரு அவசரமான "ஸ்கீம் அதை
இன்றே முடித்துவிடுவாயா?" - மிஸ்டர். பெர்ளுண்டோ அவன் முன் வந்து கேட்டபோது தான் விழித்தான்.
“எனக்கு ஒரு பைத்தியக் காரமனம். இதுக்கெல்லாம் இப்பிடி யோசிக்கலாமோ? அவள் இதைப் பெரிதாய் எடுத் திருப்பாள் என்று என்ன நிச்சயம்?-இந்த எண்ணம் வேரோட முடியவில்லை, முளையிலேயே கருகிவிட்டது.
எப்படி மனம் ஆறும் என்று புரியவில்லை.
‘இந்த முதலாளிப் பயல் கூட, அவள் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுக்கிறனே தெரியாது. (சண்முகமும் அந்த
56 ஒரே ஒரு ஊரிலே

மற்ற வெள்ளைப் பெடியனும், இவன் இரண்டு மூன்று ம்ாத
LDrtill "பேய்க்காட்"டினதாலைதானே விட்டிட்டுப் போனங்கள்).எத்தினை கரைச்சல்களோட இந்த வேலை செய்யுதோ அந்தப் பிள்ளை?--. நான் வேறை-ஒரு 1D60) Lt 16it.....
எப்போதோ சிறு வயதில் இறந்துபோன தன் தங் கையொருத்தியின் சாயல் கூட இலளில் இருப்பதாக அடிக்கடி 'தட்டுப்படுவது" வேறு அவனை வாட்டியது.
எழுந்தான். மணி ஒன்பது கூட ஆகியிருக்கவில்லை சாப்பிட்டபோது ஏழே முக்கால்.
** என்னடா, இண்டைக்கு வேளைக்கு "ரீ க்குப் போழுய்???--சகா கேட்டான்.
ஷிேயரின் மேசைக்கு அருகாக இருந்த ஓரிடத்தில் உட்கார்ந்து, ஒரு தேநீர் கொண்டுவரும்படி பெடியனிடம் சொல்லிவிட்டு, அவளை ப் பார் த் துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
1973 "மல்லிகை"
சாந்தன் 57

Page 30
வண்டிகளும் மாடுகளும்
ராசாமி, அந்தக் கொழுத்த செங்காரி நாம்பனை வண்டியிலிருந்து அவிழ்த்து, தெருக்கரையோர மாக எதிர்வீட்டு வேலியிற் கட்டிவிட்டு வந்தான்"
“உங்ககிட்டே கோடாலி இருக்குங்கிளா?
"ஏன்? நீ கொண்டு வரேல்லையா?*
"நம்முது உடஞ்சி போச்சுங்க.*-மிகவும் அப்பா வித்தனமாகச் சொன்னன். அந்த அப்பாவித்தனமே, அவ னது துரதிருஷ்டத்திற்கும் மேலாக அவன் பால் அநுதா பத்தை ஈர்த்துக் கொடுக்கக் கூடியதாக இருந்தது.
பக்கத்து வீட்டிற் கோ டரி வாங்க, நான் ஆளனுப்பினேன்.
**இந்த மாட்டுக்குக் கொஞ்ச வைக்கல் போட்டுட்டு வர்றேனுங்க.."-என்றவாறு, அவனும் வெளியே போனன்.
 

"இன்றைக்கும் இவன் ஏன் இந்த வண்டியைக் கொண்டு வந்தான்??-என்கிற கேள்வி, இப்போதுதான் எனக்குள் உதித்தது. பிழைப்பு இருக்கிறதோ, இல்லையோ -இந்த வண்டிக்கும் மாட்டுக்கும் நாளொன்றுக்கு வாடகை, ஆறுரூபா. இதை அவன் தான் சொல்லியிருந்தான்.
தெருத்தொங்கல் கடையிலிருந்து வாங்கி வந்த இரண்டு கற்றை வைக்கோலில் ஒன்றைச் சாய்த்து நின்ற வண்டிக்குள் போட்டுவிட்டு, மற்றதைப் புரி அவிழ்த்து, மாட்டுக்கெதிரில் உதறினன். படுத்துக்கிடந்த மாடு, சலங் கைகள் ஒலிக்க சாவதானமாக எழுந்து சாணம் போட்டு விட்டு, வைக்கோலை மோந்தது. "இந்த வைக்கோல் காசும், அந்த ஆறுரூபாயில் அடக்கமா, இல்லை தனியா?"
வீராசாமியைக் கேட்டேன்.
நைந்து போய், வியர்வை மணத்த, பொத்தான் களேயில்லாத-பழைய நைலோன் சட்டையைக் கழற்றி, தலையிலிருந்த மெல்லிய ஓலைத் தொப்பிக்குள் சுருட்டி வைத்தபடியே;
'இது, நம்ம செலவு தானுங்க.அதும் பாவம், வாயில்லாச் சீவனைப் பட்டினி போட்டக் கூடாதில்லீங் களா?...”*-என்று சிரித்தான்.
விறகுக் குவியலில், மொக்குக் கட்டையொன்றைத் தேடி, அகலப்பாட்டில் கிடத்தினன். அசைத்தசைத்துப் பார்த்து, அசையாது என்கிற நிச்சயம் வரும் மட்டும் மண்ணை அணைத்தான். அப்போது தான் ஞாபகம் வந்தி ருக்க வேண்டும் -கோடரியை எடுத்து, விரல் நுனியால் உரசிப் பார்த்தான்.
**ரொம்ப மழுங்கலா இருக்குதுங்க... ?- என்ற வாறே, ஒரு கைப்பிடி மணலை அள்ளிக்கொண்டு போய்,
வாசற்படி விளிம்பில் தூவிப் பரவிவிட்டு, கோடரியைத்
சாந்தன் 5 9

Page 31
தலை கீழாகப் பிடித்து, பிடியை நிலத்தில் தட்டினன். கோடரி மெல்லக் கழன்றது.
அவன் குனிந்து தீட்ட ஆரம்பித்தபோது, மெல்லிய தாக நரை பரவத் தொடங்கி, சீப்புக்கடங்காத தாய் விரித்துக் கொண்டு கிடக்கிற அவன் தலைமுடி, "சிலும், சிலும் என்று ஆடத் தொடங்கிற்று.
கோடரியைத் தீட்டி முடித்துப் பிடியை இறுக்கிய போது, வீராசாமியைக் கேட்டேன்:
* 'இண்டைக்கும் காட்டுக்குப் போறியா?*
'இல்லீங்க...??
*"அப்ப ஏன் வண்டில்? தேவையில்லைத்தானே?. *
"அப்படியில்லீங்க. அது, எடுத்துத்தாங்க ஆவ go)lth......'
** ஏன் P J
'ஒரு நா"க்கூட விட்டே ஏலாதுங்க, நாம விட்டாக்க வேறயாருக்காவது குடுத் துடுவாங்க. பிறகு.கெடைக்காது”
“வேலையில்லாட்டிலுங் கூட, சும்மாவாவது எடுக்க வேணுமா???
**ஆமாங்க..??
‘சரியான அநியாயமாயிருக்கே!.ஆர், வண்டில் முதலாளி???
'நம்மூர் தாங்க. '
‘எத்தினை வண்டில் வைச்சிருக்கிருர்?"
"எல்லாமா, பதினஞ்சு வண்டிங்க...!"
60 ஒரே ஒரு ஊரிலே

“ஒவ்வொண்டுக்கும், ஒரு நாளேக்கு ஆறுரூபா on T O tu i fr ?” ”
*ஒரு மாட்டுக்கும், ஒரு வண்டிக்கும்- ஜோடியா, ஒரு நாளைக்கு ஆறு ரூபாயிங்க. 象 剑
**எல்லா வண்டிலும் போயிடுமா???
*"ஓ! ஒரு நா’க்கூட, ஒரு வண்டி கூட மிஞ்சா துங்க. s
முந்தாநாள் பின்னேரம், விறகு வண்டிலுடன் வீரா சாமி வந்தான். 'சொலை, கொலை' என்று காதிற் படு கிற விதமாக ** கொள்ளி, கொள்ளி..." என்று கூவிக் கொண்டே விறகு விற்கிற இவ்வூர் வண்டிக் காரர்களிடை யில், சத்தமே போடாமல் விறகு வண்டியுடன் போனன், 6FTIT FT LÉ. ܗܝ
*விறகு, விற்கிறதுக்கா?-என்று நான்தான் கேட்க வேண்டியிருந்தது.
விறகு பறித்து முடிந்து, காசைக் கொடுக்கும் போது கேட்டேன்.
"உனக்கு, ஒவ்வொரு நாளும் இப்படிப் பத்து ரூபா வரும்படி இருக்குமா?*
அவன் சிரித்தான்.
** அது, எப்படீங்க?. வண்டிக்கே ஆறு ரூபா போயிடுமே"
**இது, உன் ர சொந்த வண்டில் இல்லையா?*
'இல்லீங்க.வாடகை வண்டி..”*
*உன்னட்டை, சொந்தமாக Gu Gjoi q. Gi) - u rrG இல்லையா???
சாந்த்ன் G 1

Page 32
“இருந்ததுங்கி, முந்தி. இப்ப, இல்லை'
*ஏன்? வித்திட்டியா?...??
“இல்லீங்க. '-கண்கள் கலங்ச, இடையில் நிறுத்தி, மெளனமானுன் வீராசாமி.
''. . . . . . யாரோ, ஒரு நா”, என்னுேட மாட்டைக் களவா வெட்டிப்பிட்டாங்க.அதும்பிறகு, வேறமாடு வாங் குறதுக்கும் காசில்லையா, வண்டியையும் வித்துட்டேன்."
"ஒரு நாளைக் காவது, அவன் அநியாயமாக வண்டி வாடகை கொடுக்காமல், உருப்படியாக சம்பாதிக்கட்
டுமே"-என்ற எண்ணத்துடன்;
“இந்த விறகை, நீயே நாளைக்கு வந்து கொத்தித் தாவன்?" என்றேன்.
** சரிங்க நாளன்னிக்கு, ஞாயித்துக்கிளமை வந்து
கொத்தித் தர்றேனுங்க . * என்ருன்.
அதுதான், வீராசாமி இன்றைக்கு வந்திருந்தான்.
**மெய்யே, வீராசாமி .??
“என்னுங்க?...??
62 ஒரே ஒரு ஊரிலே

*உன்ர அந்த மாட்டை, ஆர் களவாப் பிடிச்சு வெட்டியிருப்பாங்க எண்டு, உனக்குக் கூடத்
தெரியாதா???
*தெரிஞ்சு என்னுங்க செய்யிறது?.அவங்க, ரொம் பப் பெரிய ஆளுங்க..
'ஆரது p 2 }
“என்க்கு இந்த வண்டி-மாடு, வாடகைக்குத் தர்
ருரே, அவரோட ஆளுங்கதான்!"
1974 ‘வீரகேசரி”
சாந்தன் 63

Page 33
பிரிப்பு
s ல்யாண வீட்டிற்குத் தென்னங் குருத்து அலங்காரஞ் செய்யக் கூடாதென்றுதான், பெரியவர்கள் எல்லோ ரும் வாது பண்ணினர்கள். திரு, "அதெல்லாம் முட்டாள் கனம்" என்று சண்டை போட்டு, பச்சை ஓலைத் தோர ணங்கள் கட்ட வழி பார்த்தான். தனது கல்யாணத்திற் கென்றே மினைக்கெட்டு மூன்று நாள் லீவு போட்டுவிட்டுத் தென்னிலங்கையிலிருந்து வந்த தன் கூட்டாளிமாரின் அலங் காரத் திறமையை - யாழ்ப்பாணத்திற்கு அவ்வளவு அறி முகமில்லாத - சிகரம் போன்று வாசலை அணைத்து எழுகிறதென்னுேலைத் தோரண வாயிலை, இந்தச் சந்தர்ப்பத்தைச் சாட்டி, இங்கு காட்டுவது அவன் ஆசையாயிருந்தது.
 

பொன் உருக்குவதிலிருந்து, கோவிலில் தாலிகட்டு முடிந்து, புதுத் தம்பதிகள் வீடு திரும்புவது வரை வித வித மான ஃபோட்டோக்கள். திருதான் அவற்றில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிருன்! முகங்கொள்ளாத மகிழ்ச்சி. பக்கத் தில் அதேபோலக் கமலாவும்.
கொழும்பிலிருந்து வந்த நண்பர்கள் கான் பந்தலையே பார்த்துக் கொண்டார்கள். தோரணம் பின்னுவதிலிருந்து, காகிதப் பூச்சாங் சுட்டுவதுவாை - அவர்கள் கவனித்த எல்லா வேலைகளையும், தம்பி ஒவ்வொன்முகத் தன் 'கமரா " வுக்குள் அடக்கியிருந்தான். அந்தப் படங்களுங்கூட, இந் தப் படத்தொகுப்பில்-அல்ப”த்தில் தான் இருக்கின்றன.
சில்வாவும், அவர் ம%னவியும் ஒரு குழந்தையின் ஆர்வம் முகமெல்லாம் வழிய, ஒவ்வொரு படமாக இரசித் துக்கொண்டிருந்தார்கள். படங்களை விளக்குவதற்கு, ஒரு தமிழ்-இந்துத் திருமணத்தின் சடங்குகள், தாற்பரியங்கள் எல்லாவற்றையும் விளக்க வேண்டியிருந்தது, திருவுக்கு. சில்வா ஏற்கெனவே ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், அவர் மனைவிக்கு இவை யெல்லாம் மிகவும் புதிய விஷயங்கள்.
ஏழெட்டு ஆண்டுக்காலக் கொழும்பு வாழ்வைவிட்டு இந்த இடத்திற்கு மாற்றலாகி, திரு வந்தபோது, புதிய அலுவலகத்தில் சில்வாவைச் சந்தித்தான். தன் நண்பர் களின் ‘உள்ளுடனை' இவரினுள்ளும் அவன் கண்டதானது, இப்புது நட்புக்கு அடிகோலி வேரூன்ற வைத்தது. இன்று) இந்த மத்தியான விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்ட வேளையில், அல்பத்தைக் காட்டுவதும், உபசாரங்களில் ஒன்ரு யமைந்தது.
as r is 56it 65

Page 34
சோடனைகளின் போது மட்டுமல்ல; மாப்பிள்ளை வீட் டின் பலவிதமான சடங்குகளின் போதுங்கூட-இதோ, இந்தத் திருமதி சில்வாவின் ஆர்வத்தையொத்த, அதே துடிப்புட்ன்-எல்லோருக்கும் முன்னுல் துருத்திக்கொண்டு வந்து, மாப்பிள்ளையின் பின்னுல்-தோளுக்கு மேலால் எத் தனை இடங்களில் நிற்கிறர்கள், அவன் நண்பர்கள்.
‘இவர்களெல்லாம் என் சிங்கள நண்பர்கள் இப்படி அந்தப் படங்களைக் காட்டி, சில்வாவுக்குச் சொன்னுல், அவர் வியப்பும், தன்மேல் மதிப்பும், மகிழ்வுங் கொள்ளக் கூடும் என்கிற எண்ணம்-ஆசை-அவனுள் எழுந்தது.
‘நண்பர்கள் என்கின்றபோது, "சிங்கள நண்பர்கள்? என்று சொல்வது எந்தளவு அசட்டுத்தனம் என்கிற உண் மையும் அடுத்த கணத்திற்குள்ளேயே அவனுக்கு உறைத் தது. " .இதில் பெருமைப்படவோ குறிப்பிட்டுச் சொல் லவோ ஒன்றுமிருக்கக் கூடாது. இந்தக் குட்டி நாட்டுக்குள் இருந்து கொண்டு, பரஸ்பரம் இப்படியான உறவுகளில்லா மல் இருப்பதுதான் புதுமையாக இருக்க வேண்டும். இப்படி இருப்பதையும், அப்படிச் சொல்லிக் காட்டப்போய், அதன லேயே அந்தப் பிரிவு அநாவசியமாய் உணர்த்தப் படக் dh. --fligil . . . . . . . . .
தோரணங்களை நண்பர்கள் கட்டுகிற ஒரு படத்தைக் காட்டி; "உங்கள் நண்பர்கள்தான் அலங்காரங்கள் எல் லாம் செய்கிறர்கள் போலிருக்கிறதே?" -என்று சில்வா கேட்டபோது, அவன் மகிழ்ச்சியுடன் புன்முறுவல் செய்த
வாறே, "ஆமாம்" என்று மட்டுந்தான் சொன்னன்.
66 ஒரே ஒரு ஊரிலே

இராக் குருவி
வனுக்கு இது பழகிப் போய்விட்டிருந்தது என்ரு?
லும், இன்றைக்கு என்னவோ அலுப்பு அலுப்பாய்
வந்தது. தலையைக் கனக்கச் செய்கிற நித் திரைப் பாரம். நேற்றையைப் போல், ஒன்பது பத்து மணிக்கா வது படுத்தால் பரவாயில்லை என்று பட்டது. நேற்று மழை, வெளியே புறப்படவில்லை. மாலையிற் பிடித்த மழை, இரவெல்லாம் நசுநசுத்தபடியே இருந்தது. அதற் குப் போட்டியாக, அவன் தாயும் விடாப்பிடியாக மழை யைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள். வயிற்றைக் குடைந்த பசியும், தாயின் அறளையுமாக நேற்றிரவு தூக் கமே பிடிக்காமலிருந்தது.
இன்று என்னடாவென்ருல் வயிறு நிரம்பி ‘பும்" மென்றிருந்தும், தூக்கம் பாட்டம் பாட்டமாக வந்தும்,
துரங்க வழியில்லை!
*
அவனுக்கு அழுகையாக வந்தது.

Page 35
பஸ்தரிப்பில் நின்று, காலே கழன்று விடுகிற மாதிரி வலித்தது.
"அம்மா, போலாமா?." தாயின் முன்முனையை இழுத்தபடியே கேட்டான்.
**சனியன் புடிச்சவனே, பேசாம இரடா...! நாளைக்கு எதை விழுங்கப் போறே?*
அவனுக்கு மேலே பேச முடியவில்லை.
வெகு வேகமாக பஸ் ஒன்று வந்து நிற்கிறது. யாரோ ஒருவன் குதித்தான். அது, வேறு யாரோ.
தாய், பெருமூச்சு விட்டாள்.
பஸ் பெருத்த சத்தத்துடன் போய்விட்டது. குதித் தவன், எதிர்த்திசையில் நடந்தான். அகன்று கிடந்த தெரு, இப்போது “வெறிச்? சென்ருகி விட்டிருந்தது.
தூரத்தூர ஒளிக்கூம்புகள். இவர்களுக்குப் பின்பக் கம் சாத்தியிருந்த கடையினுள்ளே பேச்சுக் குரல் கேட் டபடியிருந்தது. யாரோ கேட்டான்:
** மச்சான், வெலாவ கீயத???
*எக்கொளஹட காலாய்!"
‘ஐயோ! பத்தே முக்காலா"
‘பாவிப்பயல் ஏமாத்திட்டுப் போனைே, கண் ருவி.." தாய் மெல்லத் திட்டுவது தெளிவாகக் கேட்டது. அவள் யாரை எதிர்பார்க்கிருள் என்பது அவனுக்குத் தெரி யும். ‘அந்திக்கு, அந்த மூலைக்கடைக்கு அழைச்சிட்டுப் போய், சாப்பிடப் பண்ணினுனே - அந்தச் சுருளைத் தலை
68 ஒரே ஒரு ஊரிலே

யன் அவனுத்தானிருக்கும். *.பத்து மணிக்கே வாறதாச் சொன்னனே. இனி எங்கே வரப்போழுன்???-அவளின் குரல் சிணுங்கியது.
"அவன் வராட்டா நல்லது. வந்தான்னு, எங்க அலேய ணுமோ...வேளைக்குப் படுத்துத் தூங்கக்கூட முடியாதே." என்ற பயம். "ஆண்டவனே அவன் வரக்கூடாது" என்று எண்ணவைத்தது.
**ஆண்டவனே ... அந்த மனுசன் வராட்டிக்கி நாளைக்கும் பட்டினியாய் போமே .. * தாய் புலம்பினள்.
*அண்ணன் குடுத்து வைச் சவன்.” எங்கு திரிவானேபகலில் ஆளைக் காணவே கிடையாது. இரவில் ஏழெட்டு மணிக்குள் வந்து படுத்து விட்டதாக அடுத்தநாட் காலையில் அவன் சொல்லும்போது, எரிச்சலாய் வரும்.
“அம்மோவ் அண்ணனைக் கூட்டிப்போயேன்...??, அவன் ஒரு நாள் கேட்டான்.
*கேடு கெட்டவனே அவன் தலைக்கு மிஞ்சிய பையன்டா. தொழிலைக் கெடுக்கவா சொல்லுறே.. ???
அவனுக்குப் புரியவில்லை. ‘அண்ணன், பகலில் தொழில்தானே செய்கிறன். 狮 எங்கு போவானே, என்ன செய்வானே தாய்க்கு ஒரு சதம் கொடுப்பதே கிடையாது,
அண்ணனுக்குப் பன்னிரண்டு வயதாம். இவனிலும் நாலு வயது பெரியவன்.
*உனக்கு எட்டு வயதாடா? சின்னப் பையன்போல்
நாலு வயதுக் காரன்போல் இருக்கிற இவனைப் பார்த்தவர்கள் நம்பமாட்டார்கள்.
சாந்தன் 69

Page 36
யாரோ தூரத்தில் வருவது தெரிந்தது. "ஆரோ வாராங்க, அவன்தானு?' தாய் கேட்டாள்.
"ஐயோ! வந்திட்டான?. இன்னைக்குத் தூக்கம் போச்சு. அவனை கண்களை இடுக்கி பார்வையைக் கூர்மை யாக்கி, அந்தச் சந்தினுள்ளே பார்த்தான். மங்கிய தெரு விளக்கின் வெளிச்சத்தில் அடையாளந் தெரியவில்லை.
உருவம் கிட்டே வந்தது.
**அப்பாடி! அவனில்லே . . ஆரோ கிழவன்'
'அந்த ஆளில்லை" - தாய் பதில் பேசாமல் நின்ருள்.
இன்றைக்கு மட்டுந் தப்பினல் போதுமென்றிருந்தது. அப்படியொரு அசதி. கண் ஆஸ்பத்திரியடியிலிருந்து நடந்து வந்த களைப்பு வேறு. அவன் துவண்டான்.
இது ஒன்றும் அவனுக்குப் புது அநுபவமில்லைத்தான். இப்படி நின்றுவிட்டு, பிறகு எங்கோ போனல்-? அவை என்ன வீடுகளா? எங்காவது மூலை முடுக்கு, எலி வளைகள்.
*ராஜா, இப்படிப் படுத்துக்க. தூங்கு. நான் வந்து எழுப்பறேன்" என்று, அவனுக்குத்தெரியாத - ஆனல், அவளுக்குத் தெரிந்த' - எவனுடனே, அவள்; அறைப்புறமோ, வீட்டுப்புறமோ இவனை விட்டு விட்டு அந் தர்த் தியானமாகி விட்டால்; திரும்பவும் இவனை வந்து எழுப் பும்போது, படுத்த இடமும் புரியாமல் தூக்கியதுந் தெரியா மல், தூக்கக் கலக்கத்தோடு இவன் மலங்க மலங்க விழித் துக்கொள்வான். அசதியுங் களைப்புமாக, கொய்கிற இருளில் இருவரும் மறைகிற அந்த வேளையில்தான், அநேகமாக விடி ந் து கொண்டு வரும்.
70 ஒரே ஒரு ஊரிலே

பகலெல்லாம் அவன் உறங்குவான். ஒரே அலுப்பாயி ருக்கும் - காய்ச்சல் மாதிரி- மற்றப்பயலுகள் விளையாடும் போதெல்லாம் இவனுக்கு ஒட்ட மனம் வராது.
முதல் நாள், தாயைக் கேட்டான்:
**ஏம்மா? எங்கே போகணும்?"
அது, முதல் நாள் தான் என்று நினைவு. முதல் நாள் நினைவில்லை என்றும் நினைவு. " என்றே ஒரு நாள்" என்று வைத்துக்கொண்டா லுங் கூட, அவன் கேட்டது உண்மை தான். தாய் சொன்னுள்; 'தெரிஞ்ச ஒருத்தர் வருவார் அவர சந்திக்கனும், வா...”*
அந்க ‘தெரிஞ்ச ஒருத்தர் ஒருத்தாாயில்லை. ‘அம்மாடி! இத்தனை தெரிஞ்சவங்களா!' - என்றிருந்தாலுங் கூட. இப் படி எப்போதுமே அவர் ஈ%ளத் தேடிப்போவது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் ஒாே ‘கவழி யாயிருந்தது. ‘கார் ணிவல் மாதிரி விளக்குகள் ஜொலிக்கிற கொழும்புப் பட்ட ணத்தின் வீதிகளில் நடைபழகுகிற அந்த உல்லாசம். தாயின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு பஸ்ஸாய் ஏறி இறங்குகிற குதியாட்டம்.எல்லாமே அவனுக்குப் பிடித் திருந்தது. w
நாளாக, ஆக, அதிலும் அலுப்பு-"என்னடா தூக்கங் கூட இல்லாம!..."என்று இருக்கும். ஒரு நாள் இப்படித் தான் களைத்துச் சோர்ந்த ஒருநாள் - தாயைக்கேட்டான்:
"ஏம்மா? நானும் வரணுமா? என்னை விட்டுட்டு நீ யாபோ மாட்டியா?"
* 'இல்லே ராஜா. உங்கப்பாவுமில்லாத எனக்கு நீதா னே துணை? நான் தனியாப் போலாமா? டோன இந்தப்
சாந்தன், 7.

Page 37
பொலிசுக்காரங்க பிடிச்சிட மாட்டாங்களா? நீ, கூட வந்தா ஆருங் கேட்க மாட்டாங்கடா. வந்துடு' தாய் கெஞ்சினள்.
அவனுக்குப் பாவமாயிருந்தது. ‘அம்மா, பாவம். இந்த அண்ணன் தடியன் வேறு திட்டித் தொலைக்கிருனே.
அவன் துணைதான்! நிசமாகவே. அன்று வெள்ளவத் தையில் பஸ்சுக்கு நின்ற போது பொலிஸ்காரர் மிரட்டி ஞரே.
‘என்ன செய்யிருய் இந்த நேரத்திலை?" *பஸ் சுக்கு நிக்கிறேன், தொரை-."
“இந்த நேரத்திலை பஸ்ஸா? எனக்கு உங்கட வேலை தெரியாதா?
“இல்லை தொரை, நிசமாத்தான். இதோ பையனேட இங்க உறவுக்காரங்க வூட்டுக்கு வந்தாப்பல நேரமாச்சு" - அவள் பையனைக்காட்டினுள் பொலிஸ்காரர் போய்விட்டார். அவனுக்கு அப்போது தலைகொள்ளாத பெருமை.
இன்றைக்கு அப்படி யாராவது ஒரு பொலிஸ்காரரா துெ வந்து துரத்தினல் பரவாயில்லை என்று பட்டது. சுற்று முற்றும் பார்த்தான். யாரும் வருவதாகத் தெரியவில்லை. எதிரே கட்டிடங்களுக்கு மேலாக மருதானை ரெயில்வே ஸ்ரே ஷ னின் மணிக்கூடு பளிச் சென்று தெரிந்தது.
** எத்தனை மணிம்மா?"
‘எங்கடா இருக்கு, ஒருலோ சு? பேசாம இரு'
** அங்க பார். ** அவன் காட்டினுன்.
**பதினுெண்ணரை'
72 - ஒரே ஒரு ஊரிலே

**போவமா? அந்தாள் வர மாட்டாரா?”*
அவள் பேசவில்லை.
அவன் அந்த ‘ஷெட் டின் கிராதிக் கம்பிகளைப் பிடி த்து, அதன் மேல் தலையைச் சாய்த்துக் கொண்டான். கம்பி *சில் லென்று குளிர்ந்தது. கன்னத்தை அழுந்தப் பிடித்துக் கொண்டான். கண்கள் சொக்கின.
தாய், முதுகில் தட்டினள். "வாடா, இனிப் போ art th''
அவனுக்கு சந்தோஷமாயிருந்தது - "போலாமா??
*"அந்த ஆள் வரல்லையா..?"
'பாவி ஏமாத்திட்டுத் தொலைஞ்சான். நாளை வயித் துலை மண். நீ வா. p p
அவனுக்கு இப்போது தாயைப் பார்க்க ரொம்பப் பாவமாயிருந்தது.
அவன் கையைத் தன் கைக்குள் பொத்தியபடி அவள் முன்னே தடந்தாள். அவன் பின்னல் இழுத்தான்.
'நடந்தா போகணும் கொம்பனி வீதிக்கு?
'வாடா; ஏதாவது டாக்ஸி வரும்'
நடந்தார்கள்.
சார் தன் 73

Page 38
டார்லி ருேட்டில் வந்த போது, அவள் சொன்ன மாதி ரியே டாக்ஸி ஒன்று வந்தது. கையைத் தட்டினுள். டிரைவர் தெரிந்தவன்தான். சிறில் மாமே!
“என்ன? வேளைக்குத் திரும்பியாச்சு??? - சிறில் சிங்க ளத்தில் கேட்டான்.
**கண்ருவி என்னை வீட்டிலை கொண்டு விடு. சல்வி
பிறகு தர்றேன்." - கார்க் கதவைத் திறந்தபடி அவள்
சொன்னள்.
1974 மல்லிகை"
7名 ஒரே ஒரு ஊரிலே

நம்பிக்கைகள்
அழியவேண்டிய தில்லை
றிஸ்மஸ்ஸிலிருந்து, இப்படித்தானிருக்கிறது. இன்
றைக்கு மூன்ருவது ந்ாள். "சில் "லென்று, பகல் முழு
வதுங் கூடக் குளிர். இடை விடாத பன்னீர் தெளிப் புப் போன்ற பூந்துமிகள். வெயிலையே காணவில்லை. காரி யாலயத்திலும் தெருக்களிலுங் கூட, ஒரு அசாதாரணமான -வருட முடிவில் நத்தாரையொட்டிய, வழமையானஒய்ச்சல், எல்லாமே மாறிவிட்டது போன்ற ஒரு புதிய அநு பவம். நேற்று மாலை வரையம், சந்திரனல் இவையெல்லா வற்றையும் அநுபவித்து ரசிக்க முடிந்தது. ஏனென்ருல் இவையெல்லாவற்றையுந் தன்னுள் வாங்கி, செமித்து ரசிக்கக் கூடியதாக மனம் விரிந்து தயாராயிருந்தது.

Page 39
பிறகு இருந்தாற் போல, எல்லாமே - அல்லது எல்லா வற்றிற்குங் காரணமான மனம்-மாறி விட்டது எவ்வளவோ நாட்களாக மனதில் கட்டியெழுப்பி வந்த அந்த ஆதர்சம்அந்த இலட்சிய எதிர்பார்ப்பும், அதன் பயனகிய கற்பனை ( முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம்?) களும் - உடைந்து விட்டது போல உணர்கிருன் .
அகனல் வந்த வெறுமையுஞ் சலிப்பும். உற்சாகத்திற் குக் காலாயிருந்த காலநிலையும் சூழலுங் கூட இன்று வெறுமையையுஞ் சலிப்பையும் பெரிதுபடுத்திக் காட்டுகின்
றன ....
*வேற்றுமையில் ஒற்றுமை", "தேசீயம்" என்கிறவை யெல்லாம், வெறும் அலங்கார - அல்லது ஆடம்பர - சொல் லடுக்குகள்தானே என்ற எண்ணம் மிதந்து நிற்கிறது! ஒற் றுமை. பரஸ்பர நல்லெண்ணம் இவைகளெல்லாம், நிச்சய மாக ஒருவழிப் பாதைகளல்ல! சமீபத்திய கடந்த காலங் களில் இதை வலுப்படுத்தக் கூடிய சிறுசிறு நிகழ்ச்சிகள் மனதில் கருக்கூட்டியதை அவன் அலட்சியப்படுத்தியது எப் படி உண்மையோ, அதேபோல், நேற்றைய சங்கதியுடன் அவையெல்லாம் சேர்ந்தபோது, ஒரேயடியாக வெடித்து, அவனைப் பாதித்ததும் உண்மைதான்.
"வடக்கு, வடக்குத்தான் - தெற்கு தெற்குத்தான்" என்பதைச் சொல்லிக் காட்டுவது போல அவர்களெல்லோ ரும்ே நடந்து கொண்டதை அவனுல் சகிக்க முடியவில்லை. அவர்கள் எல்லோரிலும் எவ்வளவு நம்பிக்கை - புதிய இலங்கையைப் படைக்க முந்துகிற சக முன்னேடிகள் என்று எவ்வளவு நம்பிக்கை - வைத்திருந்தான்?.
எல்லாமே தூர்ந்து போய்விட, இன்று வெறும் வெறுமை, ஏமாற்றம், எஞ்சி நிற்கிறது.
76 ஒரே ஒரு ஊரிலே

ப்போதெல்லாம், பஸ் சுலபமாகக் கிடைத்து விடு கிறது" கொஞ்ச நாட்களுக்குத்தான் இப்படியிருக்கும். புதுவருடம் பிறந்து, காரியாலயங்களும் பள்ளிகளும் கறு சுறுப்புடன் மீண்டும் செயற்பட ஆரம்பிக்கிற போது, காலை வேளைகளிலெல்லாம், பம்பலப்பிட்டி சந்தியில் பஸ்ஸுக்கா கக் காத்து நிற்கிற "கியூ, கொள்ளுப்பிட்டிப் பக்கமாகத் திரும்ப ஆரம்பித்து விடும்.!
சந்திரனுக்கு (மன்னல் "கியூ"வில் நின்ற ஜோடிதான் பஸ்வறிற்குள்ளும் முன் இருக்கைகளில் இருந்தது. இருவரை யும் அடிக்கடி பார்த்திருக்கிா?ன் - இந்த வேளைகளில்தான். சந்திரனின் அலுவலகத்திற்கு அருகில் தான் இருவரும் எங்கோ வேலை பார்க்கிருர்கள் போலிருக்கிறது.
"இனிமேல், பின்னேரங்களில் முன்னையப் போல ஒவ் வொரு நாளும் சந்திக்க முடியாது, நிமால். *" - அந்தப் பெண்தான் சொன்னுள், சிங்களத்தில். அவர்கள் பேச்சைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் எண்ணமே கூட இல்லாமலிருந்த சந்திரனுக்கு, இந்தப் பேச்சு சாதார மாகவே காதில் விழுந்தது.
*" என்ன இருந்தாற் போல???
''. . . . . . ஒன்றுமில்லை, ஜனவரியிலிருந்து எங்கள் ஹிந்தி வகுப்புகள் தொடங்குகின்றன. கிழமைக்கு மூன்று நாட் கள். p
** என்ன வகுப்புகள்??? - அவன் கேளாதவன் போலக் கேட்டான்.
** ஹிந்தி!??
'ஹிந்தியா?. அது எதுக்கு? - அந்த நிமால் "கடகட வென்று சிரித்தான் ,
சாந்தன் 77

Page 40
சந்திரனுக்கு அந்தச் சிரிப்பு மிகவும் பிடித்திருந்தது.
"ஏன்?. சும்மாதான் படிக்கிறேன்! எங்கள் கந் தோரிலுள்ள பெண்கள் பத்துப்பேர் சேர்ந்து படிக்கிருேம். ஒரு "ரீயூஷன்" வகுப்பு நடக்கிறது."
"அதைப் படித்து விட்டு என்ன செய்யப் போகிறீர் ó6治r?""
"ஏன்? எத்தனை படங்கள் வருகின்றன."
அவள் பேசி முடிக்கு முன்பே, நிமால் சிரிக்க ஆரம்பித் தான். முன்னையிலும் பலமான சிரிப்பு!
'ஏன்? ஏன் நிமால்???
'மாலா! உனக்குத் தமிழ் தெரியுமா?" - நிமால் சிரிப்பை நிறுத்திவிட்டுக் கேட்டான்.
**!bויר מו6 ub**
*எழுத? படிக்க? பேச?..”*
“ஒன்றுமே தெரியாது!"
"நீ இருக்கிறது இலங்கை தானே?." - நிமால் கேட்டான்:
''. . . . . . இந்தியாவுக்கு, வட இந்தியாவுக்கு போகிற எண்ணமோ?
*@ ຄໍາທີ່ກ *
**பிறகு என்ன முட்டாள் வேலை பார்க்கிருய்! இத்த இலங்கையில் இருந்து கொண்டு, எங்கள் பக்கத்து மொழி
- சகோதர மொழியான தமிழைப் படிக்காமல், எங்கேயோ இருக்கிற ஹிந்தியைப் படிக்கிறீர்களே!. சிங்களத்தைப்
78 ஒரே ஒரு ஊரிலே

படிக்காமல் ஆங்கிலம் படிக்கிற கறுவாக்காட்டு சிங்களவர் களுக்கும், தமிழைப் படிக்காமல் ஹிந்தியைப் படிக்கிற உங் களுக்கும் என்ன வித்தியாசம்?. இப்படியான வேலைகளே இன்றைக்கு எங்கள் நாடு இருக்கிற நிலைமையில் தேசத் துரோகம் என்று கூடச் சொல்லலாம்!.
மாலா, சிரித்தாள்:
* சிழமையில் மூன்று நாள் என்னைச் சந்திக்காமல்
இருக்க் வேண்டுமே என்கிற கவலையில் இப்படிச் சொல்கிறீர் கள் நிமால்!??
நிமாலுக்கு குரல் தடித்தது. உறுதியாய்ச் சொன் ஞன்.
**இல்லை மாலா! நிச்சயமாக அதற்காக இல்லை!. நீ தமிழ் படிக்க வேண்டுமென்று புறப்பட்டு, ஐந்து நாட்கள் உனக்கு வகுப்புகளிருந்தாலும் நான் அதற்காகக் கவலைப்பட மரட்டேன்!"
ஸ்ஸிலிருந்து இறங்கிய சந்திரனுக்கு, மந்தாரமும், மப்புக் கூட்டித் துமிக்கிற வானமும் மீண்டும் புதிய அதுபவ மாகி மனதை வருட ஆரம்பித்தன.
1974 ° மல்லிகை
சாந்தன் 79

Page 41
பெரிய மனிதன்
ல வேளைகளில், "இவன் தமிழன்" என்று - மற்றவர்
களால் இனங்கண்டு கொள்ளாமல் விடப்படுவது கூட
மிகவும் வசதியாய்ப் போய் விடுகிறது: எனக்கு அடுத் தாற் போல இருந்தவர் கன்னங்கரேலென்று இருந்தார். வெற்றிலைச் சிவப்பேறிய தடித்த உதடுகள், அந்தக் கறுத்தப் பகைப்புலனில் பளிச்சென்று பொருந்தின. ஒட்ட வெட்டப் பட்டிருந்த தலைமயிரும், உதட்டுக்கு மேலிருந்த அகன்ற மீசையும் விறைப்பாக நின்று ‘பிரஷ்" ஷை நினைவுபடுத்தின. கண்களில் நாட்டுப்புறத்து அப்பாவித் தனம். நான்கு முழ வேட்டியும், வெள்ளைச் சட்டையும் துண்டுமாயிருந்தார். மலைநாட்டவர் போலத் தெரிந்தது.
“ஏனப்பா? இந்த பஸ் எங்கே போகுது?" - அவருக்கு அடுத்தாற் போலிருந்த பையன் உரத்த குரலில் கேட்டான்.
 

ஒரு கொழும்பு பஸ்ஸில், கொழும்பு வாசிகள் பேசிக்கொள்கிற தொனிக்கு மிக மேலாகவே அந்த ஸ்தாயி இருந்தது. குரலி லும் அப்பாவுடன் பேசுகிற தன்மை இல்லை. மச்சா னை, "அப்பா” என்று கூப்பிடுவது போன்ற ஒலிப்பு.
இந்த இரண்டு விசேஷங்களாலும், அந்தப் பையனை ஒரு தரம் பார்க்க வேண்டும் போலிருந்தது. மெல்லத்திரும்பி, அவனது அப்பாவின் தோளுக்கு மேலாகப் பார்த்தேன்.
அப்பாவின் சிறிய உருவம். தலையை மட்டும் முன்பக் கத்தில் நாகரீகமாகப் பொம் மவிட முயன்றிருந்தான். பத்து வயதளவிலிருந்தாலும், கன்னங்களும் வாயும் ஒரு பாட் டா போலிருந்தன. கட்டியிருந்த சாரத்தை மடித்தவாறு ஒற்றைக் காலைத் தூக்கி ஸிற்றின் மேல் போட முயன்ருன்.
பஸ் எங்கே போகிறது என்கிற விபரம் அப்பாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. "மாமாவைக் கேளு' என்று பார்வை யைத் திருப்பாமலே பதில் சொன்னர். பாவங்களில்லாத முகம்.
பாரதியார் மீசையும், பட்டணத்துப் பொலிவு தெரி கிற முகமுமாக - சாரங் கட்டிக்கொண்டிருந்த மாமாவைப் பார்த்து,
. xU "எங்கே மாமா இந்த பஸ் போகுது?" என்று பையன் திரும் பவும் கேட்டான்.
** புறக் கோட்டைக்குப் போகுதடா' - மாமா கலகலப் பாகவே பதிலளித்தார். பையனுக்கு இடது பக்கம் அப்பா,
G) / G05/. L. sph, LDfTLDT.
மாமாவின் பதிலால், பையன் வளமாக மாமா புறமே திரும்பிக்கொண்டான் எனக்கு அவன் பிடரிதான் தெரிந்தது.
சாந்தன் 8t

Page 42
ஒன்றையொன்று பார்த்தபடி இரண்டே வரிசைகளில் இருக்கைகள் இருக்கிற பஸ், அது. நான், பையனின் அப்பா, பையன், மாமா, இந்த வரிசை. மற்ற இருக்கைகளெல்லாங் காலியாகவே கிடந்தன. எதிர் வரிசையில் எட்டுப்பத்துப் பேர்கள் இருந்தாலும், இரண்டே இரண்டு தமிழ்ப்பிறவிகள் தான். தூங்கி வழிந்து கொண்டிருந்த ஒரு பொக்கைவாய்க் கிழவியும், அவளருகே ஒரு சிறுமியும். இதனல், இவர்க ளுக்கு-இந்த மாமாவுக்கும் மருமகனுக்கும்-வேண்டியளவு சுதந்திரம் கிட்டியிருந்தது.
-,
"இதெல்லாம் யாருடா வாங்கிக் கொடுத் தாங்க?"
அவன் கையில் கட்டியிருந்த பொம்மை “வாட்ச்", ஒரு சிறிய புல்லாங்குழல் -இவற்றைக்காட்டி, மாமா கேட்டார்.
“அவயள்தான் வாங்கித் தந்தது.?? -பையனின் குர லில் யாழ்ப்பாணத் தமிழ் கமழ்ந்தது.
யாழ்ப்பாணத்தில் எங்கோ ஒருவீட்டில் வேலைக்கு நின்று விட்டு, கொழும்புக்கு வந்து ஊருக்குத் திரும்புகிற ஒரு "எஸ்டேட் பக்கத்துப் பையனுக இருக்க வேண்டும். அப்பாவின் கோலம், பையனை அழைத்துப் போக வந்தவராகவே தெரிகி றது. மாமா தான் பொருத்தியிருக்கிருர்-இப்படி ஊகித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
பையனுக்குப் பை அல்லது பெட்டி? அப்பாவின் கையில், இரண்டு துணிப்பைகள் - பெரிதாக இரு ந்தன. "பாத்தியா? இதெல்லாம் உனக்கு வாங்கித் தந்திருக் காங்க! நீ திரும்பிப் போக மாட்டேங்கிறியே?" “சீ! இதுகளுக்காகப் போறதோ? நான் மாட்டன்" - பையனின் உரத்த குரல், இம்முறை அவன் பக்கம் பலரை ஈர்த்து விட்டது.அதனலெல்லாம் அவன் பாதிக்கப்படவில்லை. ஆசுவாசமாகச் சாய்ந்து, காலுக்கு மேல் காலைப்போட்டபடி மாமாவுடன் தன் சம்பாஷணையை நடத்திக் கொண் டிருந்தான்.
82 ஒரே ஒரு ஊரிலே

** 66öTLm ?’’
*சீ!எனக்கிந்த வேலையே வேண்டாம் .
ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு வேலை செய்யத்தான்
வேணும். ஆனல் எனக்கிந்த மானங்கெட்ட வேலை வேண்
டாம்!' - மிக உறுதியாக, ஒரு பெரிய மனித தோரணையில்
பையன் பேசினன்.
இவனைக் கூறுகுறிப்பா கப்பார்த்து இரகித்தவர்களில், இரண்டுபேர் முக்கியமானவர்கள். 'குறுகுறு வென்ற நாவற் பழ விழிகளுள்ள அந்தச் சிறுமி - கிழவியுடன் இருந்தவள். இவனிலும் சின்னவள். இரட்டைப் பின்னல் போட்டிருந் தாள். மற்றவர், ஒரு ‘நஷனல்" போட்ட சிங்களக்கிழவர். முகத்தில் புன்னகை ததும்பப் பார்த்தபடி இருந்தார்.
**அந்த வீட்டுக்கார ஐயா என்ன செய்கிருர்?" * ஸ்டேஷனிலை வேலை?"
“ “ 67 GörGoT G36n&a?” ”
"ஸ்டேஷன் மாஸ்டர்' * எத்தனை புள்ளைங்க?...இரண்டா?" ** இரண்டும் பெம்பிளைப் பிள்ளையன்' ** மூத்ததுக்கு கல்யாண மாயிருச்சு.என்ன?"
ഉ; *?
**அவரு என்ன வேலை???
**தெரியாது??
** இரண்டாவதுக்கு - ???
"இன்னும் ஆகேல்லை."
**உனக்கு அடிப்பாங்களா?" "நெடுக! அதுதானே அவயளுக்கு வேலே!" "உன்னை யாழ்ப்பாணத்திலேருந்து கூட்டியாந்தது ஆரு?" "அதுதான்.
** எது? இரண்டாவதா???
* obb* * *அவங்க அடிக்கிறதாலேதான் போக மாட்டேங் கிறியா?* "பின்னை? இப்பிடி அடிவாங்கிக்கொண்டு வேலை செய்ய
சாந்தன் 83

Page 43
(1pւգ պւՈrr?**
"சாப்பாடு ஒழுங்காத் தருவாங்களா?” "அது நல்லாக்கிடைக்கும் ஆணு, இப்பிடி அடிச்சா..?" **சரி, இந்த வீடு போகுது! இன்னெரு இடமிருக்கு. p "ஐயோ! எனக்கு வேண்டாம்! இனி வீட்டு வேலைக ளுக்குப்போகமாட்டேன்!?? - பையன் கத்தினுன்.
மாமா, அப்பா பக்கந்திரும்பி,
... ... என்ன? இன்னுேரு இடமிருக்கு. அங்க விடுவ மா? இவனை?" என்ருர்,
**ம்ம்?. "" - அப்பா, அதே கோலம்,
மாமாவுக்கு, ‘மூட்" ஏணுே மாறியிருக் கவேண்டும் - ‘ஏண்டா..??? - பையனை விளித்தார்.
6T66T60?’” "அந்த இரண்டாவது மக, உனக்கு அடிக்குதுங்கிறியே, நீ அதுக்கு அடிக்கலையா?*
*ச்சீயேய்!..?? - பையன் உரத்துக்கூவினன்.
''. . . . . . . . . இங்க பாருங்கப்பா, மாமாவை!..எத்தினே பேர் சுத்த வர இருக்கினம் - இப்படிப் பேசுறிங்களே, மாமா?
b v a ஒ9 − மாமாவிடவில்லை:
"அதுக்குத்தான் கல்யாணமாகலேங்கிறியே, நீயே கட்டீறி ருக்கலாமே?* பையனுக்கு முகஞ் சிவத்து விட்டது.
‘என்ன மாமா, நீங்க? பஸ்ஸிலை இப்படியா பேசுறது? எத் தனை பேர் பாக்கினம்??? ܝ
பையனுடைய விசிறிகள் இருவருக்குமே, இதுகள் ஒன்றும் புரியவில்லை.
1973 கணையாழி
84 ஒரே ஒரு ஊரிலே

புதிய முதலைகள்
ட்டம் தொடங்கி விட்டது. --
அதிசயம் - குறித்த நேரத்திற்கே தொடங்கி விட்
டார்கள்! அழைப்பிதழில் போட்ட நேரம் ஆறு மணி. இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் ஒன்று விடாமல் சமூகமளிக்கிற அநுபவந் தந்த பாடமாக அரைமணி "முந் திப் போவோமென்று ஆறரைமணிக்கே வந்திருந்தான். இலக்கிய நண்பர்களுடன் அரட்டை - அல்லது சல்லாபத் தில்-அரைமணி போகலாம் என்கிற திட்டமும் ஏமாற்றத் தில் முடிந்துபோனது.
மண்டபத்தில் நுழைகிறபோது, தலைமையுரை முடிந்து கொண்டிருந்தது. முதலாவது ஆய்வுரையாளரைத் தலைவர் அழைத்தபோது, இவன் நுழைந்தான். மெல்லி தாகத் தட்டுப்பட்டாலும் மண்டபமே அதிருகிற மாதிரி ஒலி கிளப்புகிற அலுமினிய நாற்காலிகள். மிகுந்த எச்

Page 44
சரிக்கையாக-சிறு ஒலிதானும் கிளப்புவது அநாகரிகம் என்கிற, மனதில் ஊறிய சுபாவம் எச்சரிக்க-பின்புற வரி சைகளில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.
நுழைகிற போதே மேலோட்டமாக வீசிய பார்வை, அவனுக்கு இரண்டாவது ஏமாற்றத்தைத் தரும் போலி ருக்தது. அருகில், ஒரு இலக்கிய மூஞ்சையையும் கான வில்லை. ஆசுவாசமாகச் சாய்ந்து உட்கார்ந்த பின், ஆறு தலாக ஒரு நோட்டம் விட்டான். நேரே முன்னுல். இவ னுக்கு முதுகைக் காட்டியபடி வானவனும், கோபால் ராஜும் உட்கார்ந்திருந்தார்கள். மெல்ல முன்னுல் சாய்ந்து கோபால் ராஜின் முதுகைத் தொட்டான். இருவருமே திரும்பினர்கள்.
பேச்சு, சீராக ஒலிக்கத் தொடங்கியிருந்தது. பேச் சுக்கள் பரவாயில்லாமல் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு.
“இந்தாள், ஒரு "ஆமான விமரிசகர்"-பேசிக்கொண் டிருப்பவரைப் பார்த்தான்.
இது ஒர் நூல் வெளியீட்டு விழா. இந்த நூலைப் பற்றியோ, ஆசிரியரைப் பற்றியோ, எதுவும் இவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. (இவனது அறியாமை யாயுமிருக்கலாம்) நூலின் விலை நாலுரூபாய். அதன் மேடு பள்ளங் க%ள,முடிச்சு களை இந்தப் பேச்சாளர் தொட்டுக் காட்டுகிறபோது, "இன்றிருக்கிற தன் நிதி நிலைமையில் வாங்கக் கூடிய புத்த 'கமா, இல்லையா? என்பது தெரிந்துவிடும்- என்கிற எண்ணத்துடன், மிகுந்த-இயற்கையான-அவதானத்து டன், பேச்சைச் செவிமடுத்தான்.
சிந்தையில் எதுவும் சுவறவில்லை?
“என்ன மச்சான், இந்தாள் இந்தப் புத்தகத்தை வாசித்திருப்பாரென்று நினைக்கிருயா?" - வானவனின் முகம், தோளுக்கு மேலால் திரும்பியது. கோபால் ராஜின்
86 ஒரே ஒரு ஊரிலே

சிரிப்பொலி, பேச்சாளரின் குரலையும், பெண்கள் பக்கத்தி லிருந்த "குசுகுசுக்களையும், நிலை விசிறிகளின் ரீங்காரத்தை தையும் மீறி ஒலித்தது.
அண்மையில் வந்த இவரது இரண்டு மூன்று விமர் சனங்களைப் பார்த்தபோது, "ஆள் உண்மையிலேயே வாசித்து விட்டு விமர்சிக்கிருரா?" என்கிற சந்தேகம் எழுந்ததுண்டு. அது, இப்போதும் மனதில் நெருடியது.
அவர், இப்போது ஒரு பழ மொ ழி யை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார். புத்தகத்தைப் பற்றி ஒரு வார்த்தை?.
இவனுள் ஏதோ குமுறியது! இப்படியான ஏமாற்றுக் களைச் செய்ய அசாதாரண துணிச்சல் வேண்டும் ‘சமு தாய மறுமலர்ச்சிக்கு உழைப்பதில் தன்னை அர்ப்பணித் தவர்" என்று முத்திரை குத்தப்பட்டு; சொல், செயல், எழுத்து, எல்லாமே ஒரு மகத்தான நாளைக்கு - அந்த “நாளை யின் சிருஷ்டிப்புச்கு அத்திவாரமாக இருக்க வேண் டும் என அறைகூவும் இவர். !
"இந்தப் புத் ககத்தில், அது-அந்த அத்திவாரம்இருக்கிறதா என்று உன் கண்ணுேட்டத்தில் பார்க்கத் தானே அழைத் கார்கள்? இருந்தால் சொல்லு.இல்லை கிழி!-அதைவிட்டு?? -
இந்த அசத்தியதரிசனம் சித்திப்பது இன்றுதான் முதல் தடவையல்ல--
இதற்கு முன்பும் ஒரு தரம், ஒரு கலந்துரையாடலில், காரசாரமான நீண்ட விவாதமொன்றில், சத்திய ஆவேசங்
களும், வேஷங்களும் மோதிக்கொண்டிருந்த வேளையில், இவ ரது வெளிப்பாட்டை எல்லோரும் எதிர்பார்த்திருந்தும் -
சாந்தன் 87

Page 45
நியாயமான எதிர்பார்ப்பு - இவர் வாயே திறவாமல் மெள னமாயிருந்ததை இவன் அவதானித்து, "அந்த மெளனமே ஒரு போக்கிரித்தனம்" என்று குமுறிஞன்.
அதே கோபம், அந்த வெறுப்பு, இந்தப்டொய்மை களைப் பொசுக்குகிற கனல், இப்போதும் தன்னுள்ளே பொங் குவதை உணர்ந்தான். அன்றைய அந்தத் தப்பிலித்தனத் திற்கும், இன்றைய இதற்கும் வேற்றுமை இல்லை என்று --- ģi.
கோபால் ராஜ், திரும்பித் தலையை அசைத்தான், ‘போவோமா?" என்பது அர்த்தம்.
இவன், குனிந்து கோபால்ராஜின் காதருகில் சொன்ஞன்:
*மச் சான், போக முதல் இவரிட்ட ஒரு கேள்வி கேட்டு விட்டுப் போகவேணும்-ஒரே கேள்வி: "இந்தப் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தீர்கள?-என்று ஒரே யொரு கேள்வி..??
வானவன் சொன்னன்.
**மடையா; இவன்களை இப்பிடிக் கேட்கிறதாலை திருத்தலாமென்று நினைக்கிறியா? வீணுக உணர்ச்சி வசப் பட்டு ஆகிறது ஒண்டுமில்லை. இது கூட , திட்ட மிட்ட ஒருவித சுரண்டல்தான்! - "சுரண்டப்படுகிறவர்களுக்காகப் பாடு படுகிருேம்" என்கிற பெயரில் தங்கள் பேரையும், வயிற் நையும் வளர்க்கிறது கூட, ஒரு புதிய பயங்கரமான சுரண் டல்தான்! இதுக்கெல்லாம், ஆழமிக்க, பரந்துபட்ட, உரமா ன ஒரு அறிவுப் போராட்டந்தான் அவசியமேயொழிய உன் னைப்போல ஒரு தனி மொட்டையன் கத்தி ஆகிறதில்லை."
கூட்டம் நடந்து கொண்டிருந்தது. வானவன் தன் பேச்சை நிறுத்தி விட்டு:
‘போவோமா?" என்ருன்.
1974 g6T6...f.'
8S ஒரே ஒரு ஊரிலே


Page 46
யாழ்ப்பானத்திரள்ள சுதும்iேயில் ■置凸 ஆண்டு பிறந்த சாந்தள் மானிப்பாய் இந்துக்கள் ஏரி, யாழ்ப்பானம் இந் துக் கல்லூரி கட்டுபெத்
கவ்லூரி - ஆகியவற்றில் * (,197、
திருமணமாகியது. கட்டி டத் IF.J.GANIT -in:րար երրորդ ,
பணி புரிவிருர், 1970 வ்
| வெளிவந்த "பார்வை'
॥ தொகுப்பு 1975 El INCF வந்த "சுடுகு" என்ற ਲ தொகுப்பு वा कई।Isr, இவரின் பிற J)
"ஒரே ஒரு பாரியே. ட என்ற இத்தொகுதியி பர் வகைப்பட்ட துறைகளின் து வீச்சுக்களேக் கான முடி யு. பொருளாதாரம், சமூகம், சியல், இலக்கிய, "r"T"AEA"VIY) kal/ இனங்கள், தேசிய ஒருமைப்பா போன்றன கருப்ெ ாருளா புள்ளன. அவைமட்டுமா துே ஒருமைப்பாட்டிற்கும் இன உணர் விகளுக்குமுள்ள வேறு வர ம களும், அவற்றின் தோற்று காரணிகளும் காட்டப்பாடு றன. சாந்தளின் - Trilla wall. தனித்துவமானவை, களற்றவை புனிதமாக
சாந்தனின் எழுத்துக்கா தென்படுவதில் முக்கிய அம்சம் அவரின் தனித்துவமே. அவரின் தேசிய ஒருமைப்பாட்டு கண்ேகள் போவிகளAவ அது வீச்சுகளின் சிதறல்கள், இதர அவர் தமது கதைகளிலே அற காசுக் காட்டுகிரு.
-செம்பியன் ரெடிங்
SS