கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பரியாரி பரமர்

Page 1
SWS P4, L'"AR PARAMA IR
அரசு வெளியீடுகள்
1. தோணி
=hi/ / : இராசரத்தி 2. வாழையடி வாழை
-க செபரெத்தினம் 3. பகவத்கீதை வெண்பா
-புலவர்மனி 4. இளமைப் பருவத்திலே!
-எம். ஏ. ரஹ்மான் 5. LDT니
-எம். ஏ. ரஹ்மான் 8. ஈழத்து இலக்கிய வளர்ச்சி -இரசிகமணி 7. அண்ணல் கவிதைகள் -அண்னல் 8. பரிபாரி பரமர்
-சாணு
Printed at the Rainbow Printers, Colombo 13
 

III" வெளியீடு "ל איי
சானு வின்
பரியாரி பரமர்

Page 2

பேணுச் சித்திரங்கள் பரியாரி பரமர்
சாணு
அ ர சு வெளி யீ டு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13. (இலங்கை )

Page 3
அரசு வெளியீடு 8.
முதற் பதிப்பு: நவம்பர், 1964.
G92u el : 1-90
Pariyari Paramar
( A Collection of Pen Sketches, )
Author: SANA
Illustrator: SANA
Publisher: ARASU PUBLICATIONS,
23.l., Wolfendhal Street,
Colombo - 13, (Ceylon).
First Edition: 14th November 1964.
Price: Rs. 1.90
ரெயின்போ பிரிண்டர்ஸ் , கொழும்பு-13.

சமர்ப்பணம்
சைத்திரிகஞன என்னை ஓர் எழுத்தாள
னுமாக்கிய என் நண்பன் “சோசி"க்கு
கான் கன்றி செலுத்து முகமாக இந்த நூலை அவருக்குச் சமர்ப்
பிக்கின்றேன்.
- Frg)

Page 4

பதிப்புரை
இங்கந் தொட்டுச் சீரிளமை குன்றக் குமரியாக வாழ்வும் வளமும் பெற்றுப் பயின்று வருந் தமிழ்மொழி, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு வல கால வகையினனே" என்பதற்கேற்ப, நவீன இலக்கிய உருவங்களையும் ஏற்றுள் ளது. சிறுகதை-நாவல் ஆகிய உரை கடைச் சித் திரிப்பு உபாய முறை யி ல் அமைந்த இலக்கியங்கள் தமிழுக்குப் புதியவை. அவை தமிழின் வனப்பிற்கு எழிலூட்டியுள்ளன என்பதும் உண்மை. சிறுகதைத் தொகுதிகளும், நாவல் களும் ஆயிரக்கணக்கில் தமிழில் வெளி வந்துவிட்டன.
கவிதைத் துறையிலே , மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பித்து வைத்தார் புதுமைக்கவி பாரதியார். அவ்வாறே உரைநடை இலக்கியத்தில் மறுமலர்ச் சியை உண்டாக்கிய பெருமை வ. ரா.

Page 5
6
அவர்களைச் சாரும் . வட்டார நலன் பேணுதல் என்னும் நோய் தென்ன கத்திலும் பரவியுள்ளதினுற் போலும், அன்னரைப் பற்றிய சரியான மதிப்பீடு இன்னமும் வாசகர் முன் வைக்கப்பட வில்லை. தமிழில் எழுந்த பேணுச் சித்திர இலக்கிய உருவத்தின் பிதாமகர் அவ ரெனப் பொதுவாகக் கொள்ளப்படுகின் ரு ர். பேணுச் சித்திரங்கள், ஒரு கோணத் திலிருந்து பார்க்கும் பொழுது சிறுகதை அம்சங்களைக் கொண்டவையாகத் தோற் றலாம். ஆனல், சிறு கதையின் பிர தான அம்சமான கதா சம்பவ இசைப்பு பேனச் சித்திரங்களில் இடம்பெறு வதில்லை. எனவே, சிறுகதை வேறு; பேணுச் சித்திரம் வேறு. இன்னெரு கோணத்திலிருந்து பார்க்கும் பொழுது பேணுச் சித்திரங்கள் கட்டுரையின் சாயலைப் பெற்றவையாகத் தோற்ற லாம் . ஆனல், ஆழ்ந்து நோக்கும் பொழுது, கட்டுரைக்கு அந்நியமான கவிதா நயம் மிக்கச் செழிப்பான வண் ணச் சேர்க்கையைப் பேணுச் சித்திரங் களிலே காணலாம். எனவே, பேணுச் சித்திரங்கள் தனித்த இலக்கிய உருவம்

7
என்பதும் பெறப்படும். ஒர் எழுத்தாளன் வண்ணக் கலவைகளினதும் தூரிகையின தும் துணையின்றி, சொற்களின் துணை கொண்டு ஒரு உருவச் சித்திரத்தை (Portrait) நம்மு ன் நிறுத்தலாம். அல்லா விடின், சமுதாயத்திலே புரையோடிக் கிடக்கும் பலவீனங்களை நையாண்டிப் பார்வையுடன் சித்திரிக்கலாம். இவ்வா ரு ன முயற்சிகளிலே பேணுச் சித்தி ரங்கள் தோன்றுகின்றன. s
இந்நூலிலே, சாஞ எழுதியுள்ள பன்னிரண்டு பேணுச்சித்திரங்கள் இடம் பெறுகின்றன. சானவை ஈழம் நன் கறியும். அவரை ஒரு நல்ல ஒவியராகவும் நாடக நடிகராவும் அறியாதவர்கள் இலர். ஆனல், இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்னர், பேணுச் சித்திரங்கள் எழுதும் முறையை ஈழத்து இலக்கிய உலகிற்கு வெற்றியுடன் அறிமுகப் படுத்திய சானவை அறியாதோர் பலர். அவருடைய பேணுச்சித்திரங்கள் ஈழகே சரிப் பழங் கட்டுகளிலே தூங்கிக்கொண் டிருந்தன. அவற்றைப் புதிய கோலத் தில்- புதிய நூலாக நின்று லவும் வகையில் தாம் மகிழ்ச்சியுடன் வெளியிடுகின்

Page 6
8
ருேம். "யாழ்ப்பாண மண்வாசனை வீச. சானுவின் மனதில் மிதந்து வந்த சம்ப வங்களினதும் மனிதர்களினதும் தொகுப் பாக விளங்கும் பரியாரிபரமரில் யாழ்ப் பாணத்து வழங்கு தமிழ்ச் சொற்கள் இடம் பெறுதல் இயல்பானது. எனினும், இச்சொற்கள் பிற பிராந்திய வாசகருக்கு அதிகஞ் சிரமந் தர மாட்டாதென்றே நாம் கருதுகின்ருேம்.
兴
அரசு வெளியீட்டின் தமிழிலக்கியத் தொண்டை இரை மீட்டிப் பார்க்கும் பொழுது திருப்தியாக இருக்கின்றது. புனைகதைத் துறையில் பூரீலங்கா சாகித் திய மண்டலப் பரிசில் பெற்ற "தேரணி" என்னும் முதலாவது வெளியீடுடன் தொடங்கி *அண்ணல் கவிதைகள்' வரை நமது வெளியீடுகள் வாசகரின் பேராதரவைப் பெற்றுள்ளன. இவற்றுட் சில நூல்களின் இரண்டாம் பதிப்பு களைச் சீக்கிரம் வெளியிடவேண்டிய நிலையிலிருக்கின்ருேம். இவ்வாண்டில் புதிய இலக்கியத் துறைகளில் புத்தகங் கள் வெளியிட வேண்டுமென்று தீர்மா

9
னித்தோம். இதன் பயணுக, ஈழத்தின் முதலாவது உருவகக்கதைத் தொகுதி யாக "மரபு வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, ஈழத்தின் தற்கால இலக்கிய வரலாற்றைக் கூறும் முதனுாலாக இரசிக மணி கனக. செந்திநாதன் அவர்களின் "ஈழத்து இலக்கிய வளர்ச்சி” வெளியா யிற்று. இப்பொழுது ஈழத்தின் முதலா வது பேணுச் சித்திரத் தொகுதியை வாசகருக்கு அளிக்கின்ருேம்.
தரமான நூல்களை, எளிமை தழு விய அழகிய அமைப்புடன் வெளியிட வேண்டுமென்பது நமது இலட்சிய மாகும். இந்நூலுக்கு அழகூட்ட, ஒவ் வொரு பேணுச் சித்திரத்திற்கும் படங் கள் சேர்த்துப் பொலிவூட்டியுள்ளோம். இந்நூலைத் தமிழ் இலக்கிய உலகம் உவ கையுடன் வரவேற்குமென்பது நமது நம்பிக்கையாகும்.
வணக்கம்.
எம் ஏ, ரஹ்மான்
அரசு வெளியீடு.
J.2

Page 7
அணிந்துரை
நண்பர் சான அவர்கள் பள்ளிப் பிள்ளையாக இருக்குங் காலந் தொடக் கமாக அவரை நான் நன்கறிவேன். படிக்குங் காலத்திலேயே நாடக மேடை யில் நகைச்சுவை நடிகராகப் புகழ் ஈட் டிக்கொண்டார். சிறந்த சைத்திரிகராக வும் மலரத் தொடங்கினர். ஈழநாட் டிலே ஈழகேசரி என்ற வாரப் பத்திரிகை உதயமாயிற்று. அதன் அதிபர், புரவலர் திரு நா. பொன்னையா அவர்களுடைய இடையரு முயற்சியின் பயனுக, ஈழ கேசரி, தாய்நாட்டிலும் சேய் நாட்டிலும் தமிழறிஞர்களின் நன்மதிப்பைப் பெற் றது. ஈழகேசரியில் இளம் எழுத்தா ளர்களை எழுதுமாறும், இளம் சைத்திரி கரை சித்திரம் தீட்டுமாறும், கவிஞர் களைச் செஞ்சொற்கவி இயற்று மாறும் தெரிந்தெடுத்து ஊ க் க ம ஸ்ரி ப் ப தி ல் கைதேர்ந்தவர் ஈழகேசரி பொன்னையா

அவர்கள். தமது பத்திரிகைக்கு ஆசிரி யராக திரு. சோ. சிவபாதசுந்தரம் அவர்களையும், சைத் திரிகராகச் “சானு' அவர்களையும் தெரிந்தெடுத்து நியமித் தார்கள். “சோசி’யும் "சானு ஷம் ஈழகே சரியின் இரு கண்களாகத் திகழ்ந்தனர். இவ்விரு வரும் கடமை புரிந்த காலந் தான் ஈழகேசரியின் பொற்காலம் என லாம். ஆனந்த விகடன் ஆசிரியராக கல்கியும், சித்திரக்காரராக ‘மாலி'யும் எவ்வாறு இணைபிரியா நண்பர்களாக இருந்தார்களோ, அவ்வாறே ஈழகேசரி யில் 'சோசி’யும் 'சான வும் விளங்கி ஞர்கள். ஈழகேசரி ஆண்டு மலர்களில் அநேக வர்ணச் சித்திரங்களைச் 'சான' தீட்டியுள்ளார், அட்டைப் படங்களும் இவருடைய கைச்சரக்காக விருந்தன.
நண்பர் "சான நையாண்டியுடன் தீட்டும் கேலிச் சித்திரங்களைக் கண்ணுற்று வயிறு குலுங்கச் சிரிப்பது வழக்கம். ஆணுல், திடீரெனச் சைத்திரிகன் "சான' தூரிகையை வைத்துவிட்டுப் பேணுவை எடுத்துச் சொல்லோவியங்களை யாழ்ப்பா ணத் தமிழிலே தீட்டத் தொடங்கினர்.

Page 8
42
அவை வட இலங்கை வாழ் மக்களின் பண் பாட்டினையும் நம்பிக்கைகளையும் பின்ன ணியாக வைத்து, நகைச்சுவை ததும்பச் சித்திரித்தன. அவற்றிற்கு வாசகரிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இன்று சான இலங்கை வானெலி யில் தமிழ் நாடகத்துறைத் தலைவராகக் கடமையாற்றுகிரு?ர். "லண்டன் கந்தை யா'வை அறியாத வானெலி நேயர்கள் இருக்கமாட்டார்கள். இன்று நடிகருக்குப் பயிற்சியளித்தும், வானெலி நாடகங்கள் தயாரித்தும் நாடகக் கலைக்குத் தொண் டாற்றுவதிலே தமது நேரத்தின் பெரும் பகுதியைச்செலவிடும் 'சாணு 'வின் பேணு வன்மைக்கு இந்நூலே தக்க சான்று பகரும். தமிழன்பர்கள் இந்நூலைப் பெரிதுவந்து வரவேற்பார்களாக!
குல. சபாநாதன்.
'முருகன் அருள் 2. இராமகிருஷ்ண ரெரேஸ் வெள்ளவத்தை.

என்னுரை
இன்று, இலங்கை வானுெலியில் நான் தயாரிக்கும் நாடகங்களைக் கேட்டு மகி ழும் பல இரசிகர்களுக்கு இந்த சானவை நன்கு தெரியாது. என்னை ஒரு நகைச் சுவை நடிகனக மட்டுமே தரிசிக்கும் பல அன்பர்களையும் நானறிவேன். இதன் காரணமாகத் தான் நான் என்னைப் பற் றிச் சிறிது விருத்தாந்தமாக எழுதலா மென்று நினைக்கின்றேன். எழுத்தாள ருக்கு இயல்பாகவுள்ள "தலைக்கணத்தி ஞற் சுய புராணம் பாடுகின்றேன் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.
யாழ்ப்பாணம் - பரமேஸ்வராக் கல் லூரியில் படிக்கும் காலத்தில், தமிழ் வகுப்பைக் "கட்" பண்ணி 'ஆட்கிளாஸி லிருந்து சித்திரம் வரைந்து கொண்டிருப் பேன். சித்திரத்தில் எனக்கு ஒரு வகைப் ‘பைத்தியம்". இதன் காரணமாக, சென்னை அரசாங்கச் சித்திரக் கல்லூரி

Page 9
4
யில் ஐந்து வருடம் பயிற்சி பெற்று, பின் னர்'இலங்கை " டெக்னிக்கல் கல்லூரியிற் பயிற்சி பெற்றேன். 1937 ஆம் ஆண்டில், ஈழகேசரியில் சைத்திரிகனுகச் சேர்ந்தேன். அப்பொழுது சோ. சிவபாதசுந்தரம் என்ப வர் ஈழகேசரியின் ஆசிரியராகக் கடமை பார்த்தார்.
*பத்திரிகைக்கு ஏதாவது எழுதுங் காணும்; எழுதுங்காணும்' என்று என்னே இவர் நெடுக நெருக்கிக் கொண்டிருப் பார். நான் தமிழைத் தமிழாகப் படிக் காததால் 'தமிழை எழுதப் பயமாக இருந்தது. ஆனல்,ஆசிரியரோ விடாக்கண் டர். என்னைச் சும்மா விடவில்லை. சும்மா பயப்படாமல் எழுதும்' என்று வற்பு றுத்தி வரலாணு ர், ஆய்க் கினை” தாங்க முடியாது "மரியாதை எதற்கு?’ என்னும் மகுடத்தில் ஏதோ ஒன்று எழுதினேன். அது ஈழகேசரி ஆண்டு மலரொன்றில் வெளியாயிற்று. வாசகர்கள் அதை வர வேற்ருர்கள், எனக்கும் மனே திடம் பிறந் தது. அதன் பின்னர், 'சோசி" என்றன் பாக அழைக்கப்படும் சிவபாதசுந்தரத்தி டம் தமிழை முறையாகப் பயின்றேன்.

5
சைத்திரிகனன என் சிந்தனையில் எழுந்த வற்றை வைத்து, தூரிகைக்குப் பதிலாகப் பேஞ வைப் பிடித்து வரைந்தேன். இவை அனைத்தும் ஈழகேசரியில் வெளியாயின. அவற்றுட் சிலவே பரியாரி பாமர் என் னும் இத் தொகுப்பில் இடம் பெறுகின் றன. இதன் கண் இடம்பெறுஞ் சித்திரங் கள் அனைத்தும் 1939ஆம் ஆண்டிற்கும், 1945 ஆம் ஆண்டிற்குமிடையில் எழுதப் பட்டவை என்பதை வாசகர் மனத்தில் வைத்திருத்தல் நன்று.
குரும்பசிட்டி சன்மார்க்க சபை நூல் நிலையத்திலிருந்து இவற்றைச் சேகரித்து, பிரதிசெய்து எனக்கு அனுப்பி வைத்த என் நண்பன் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களுக்கும். இவ்வாரு ன ஒரு புத்த கத்தை வெளிக்கொணர்தல் வேண்டும் என்று என்னைச் சதா “தொந்தரவு செய்த அரிய நண்பர் இரசிகமணி கனக - செந்தி காதன் அவர்களுக்கும் என் நன்றிகள். இக் கட்டுரைகள் ஈழகேசரியில் வெளிவந்த காலங்களிற் படித்து, இரசித்துத் தன் அபிப் பிராயங்களைச் சொல்லிவந்த என் நண்பர் குல - சபாநாதன் அவர்கள் அணிந் துரை தந்துள்ளார்கள். தமிழ் இலக்கிய

Page 10
1邑
ஆக்சிப் பண்ணியையே மூச்சாகக் கொண் டுழைத்து வரும் ஈழத்தின் பிரபல எழுத் தாளர் எஸ். பொன்னுத்துரை அவர்கள் இத் தொகுதியின் அமைப்பிலே பல ஆக்க பூர் மொன ஆலோசண்களேத் தந்தார்கள். இவ்விரு வருக்கும் நான் மனம் நிறைந்த நன்றிகள் செலுத்தக் கடப்பாடுடை யேன்.
ஈழத்துத் தமிழ்ப் புத்தக வெளியீட் டுத் துறையில், ஆதாயத்தை முன் வைக் காது, தரமான நூல்களே அழகிய முறை யிலே வெளியிட்டுத் தமிழ் இலக்கிய உலகை வளப்படுத்தி வருதலேயே இலட் சியமாகக் கொண்டுழைத்து பெரும் அரசு வெளியீட்டினரின் நூலாகப் பரியாரி பர மர் வெளிவருவதில் பேருவகை அடை கின்றேன். இதனே மிக அழகாக வெளி யிட்டுள்ளமைக்கு அரசு வெளியீட்டின் அதிபர் ஜனுப் எம். ஏ. ரஹ்மான் அவர் சுருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
- சாளு, இலங்கை வ ாணுேவி, கொழும்பு=

உள்ளே
பரியார் பரமர்
நத்தை
ஆறுமுகச் சட்டம்பியார்
மரியான த எதற்கு
点 ܠܐ ܨ11 ↓ܩܢ البا للا TITL| ܬܪE படு மான்
மேல் ஸ்தாயி
அம் பட்ட அம்பலவின்
if I R C Li
山岳岛f .חחו וףן חת „If If s, arr[], [r i :
i
முணுமுணுப் T
சானுவைப் பற்றி
3:11 山、
吕墨
I Us

Page 11

பரியாரி பரமர்
Uரியாரி பரமர் என்ருல் பாம்பு படுத் துறங்கும்; விஷம் விட்டிறங்கும். எங்க ளூரில் இவரைத் தெரியாதவர்கள் இல்லை. சிறு வியாதி சிரங்கு முதல், கடும் வியாதி காய்ச்சல் வரை தோன்றியதற்கும். மறைந்ததற்கும் இவர்தான் காரண கர்த்தர். பேதிக்குக் கொடுப்பதில் பெரும் பெயர் வாய்ந்தவர் கைபிடியில் கைதேர்ந்தவர்; கண் வைத்தியத்தில் கடும் பண்டிதர்; மாட்டு வைத்தியத்தில் மகா நிபுணர்.
தமிழறிவுள்ளவர். பரம பக்தர். புரா னத்திற்குப் பயன் சொல்வதில் புகழ் பெற்றவர். ஆன்மாக்கள் நல்வினை தீவி னைக்கு ஈடாகப் பிறந்து, இறந்து, உழலு வது என்பர் சித்தாந்த சாத்திரிகள். ஆனல், எங்களூரில் பரியாரி பரமரை அறி யாமல் ஒருவர் சுகமாகப் பிறந்ததுமில்லை; J-3

Page 12
8 Lurfuumfo LuTuo
சுகமாக இறந்ததுமில்லை. நன்மையா கவோ தீமையாகவோ, எதுதான் நடந்த போதிலும் பங்கு பற்றுவார் பரமர். மானிப்பாய், இணுவில் போன்ற பெரும் ஆஸ்பத்திரிகளில் சந்தேகப்பட்டவர்கள் இவரிடம் வருவார்கள், இவரும் சந்தே கப்பட்டால், மறு உலகம் செல்வார்கள். இவர் செய்த பாவம் யாதோ அறியோம். இவர் மனைவி நாற்பத்திரண்டாவது வய தில் உயிர் துறக்க, தனது மூத்த மகனைச் சிங்கப்பூருக்கு அனுப்பிவிட்டு, இளையவ னைத் தன்னுடனேயே வைத்துக்கொண் டார். பிற்காலத்தில் ஒருவன் இல்லா விட்டால், பரம்பரைக் குணம் பாழாய்ப் போய்விடு மல்லவா ?
சிங்கப்பூரிலிருந்து கிரமமாகப் பணம் வந்துகொண்டிருந்தது. அதைக் கொண்டு துத்தம், துருசு, பெருங்காயம் முதலிய மருந்துச் சரக்குகளை வாங்கி, தனது தொழிலைச் சீராக நடத்தி வந்தார். கலி யான வீடு, சாவீடுகளில் தனது மகன் அனுப்பிய பச்சைக் கம்பளிப் போர்வை யுடன் பிரசன்னமாவார். வெள்ளிப் பூண் போட்ட பிரம்பு கையில்; ஒரு சோடி செருப்பு கால்களில்; நாலுமுள வேட்டி

LuffuuTf LuTuor 9
அரையில் மருந்துச் செப்பு மடியில் . இவைகளெல்லாம் ஒருங்கு திரண்ட வடி வமெடுத்த வர்தான் பரியாரி பரம ர். மழை காலம் பனி காலங்களில் மகன் அனுப்பிய 'காக்கிச் சட்டையை முதுகுப் பக்கத்தில் பூட்டத்தக்கதாக அணிந்து திரிவார். இப்படியணிந்தால் நெஞ்சில் குளிர் பிடியாது என்பது இவர் கொள்கை. இக்காலங்களில் இவருக்குத் தொய்வு தோன்றும். தனது வைத்தியத்தில் அதி கம் நம்பிக்கை யில்லாதபடியால் பள் " வல்லியைக் கொண்டே வைத்தியம் செய் விப்பார், வல்லி இவரது கையாள்,
தேவையான சகல மூலிகைகளையும், வேர் விராய்களையும் பரம ருக்கு உதவி வந் தவர் வேலர். மருந்தரைத்தல், குளிகை உருட்டல் முதலிய பெருந் தொண்டுகளை யும் வேலர் ஆற்றிவந்தார். பரமர் நினைத் தால் போதும் வேலர் செய்து முடிப்பார். பரமர் இல்லாவிட்டால் வேலர் இல்லை : வேலர் இல்லாவிட்டால் பரமர் இல்லை! அவ்வளவாக ஒரு வரை ஒருவர் அறிந்து அதற்கேற்றவாறு நடந்து வந்தார்கள். சினிமா மடுவங்களிலும், நாடகக் கொட் டகைகளிலும் இருப்பதுபோல பரமர்

Page 13
20 பரியாரி பரமர்
வீட்டிலும் மூன்றுவித ஆசனங்கள் உண்டு . இல்லை, மூன்றே ஆசனங்கள்தான். சாய்வு நாற்காலி பரம ருக்கு; பதிந்த
வாங்கு வேலருக்கு தரை வல்லிக்கு.
நெஞ்சடைப்பு, வயிற்றுக் கோளாறு கள் போன்ற கழுத்துக்குக் கீழேயும் அடி வயிற்றுக்கு மேலேயும் உள்ள "சேஷ்டை" கள் எல்லாவற்றிற்கும் பெருங்காயக் குளிகை, சருமத்தில் உண்டாகும் புண், சொறி சிரங்கு, குட்டை, வேர்க்குரு, கரப்பன் முதலிய நோய்களுக்கு துத் தம் துருசு வெளிப் பூச்சு.
துத்தமும் துருசு மாருப்
புண்ணுடன் சுவாச காசம் பத்திரமான கண்ணிற்
படலமே காசம் போக்கும் உத்தம மான வேல
முறு வாந்தி விக்கல் வெப்பு மெத்திய சுரமே யீழை
வீட்டுமென் றுரைப்பர் சித்தர்', என்று சில நேரங்களில் வாகடம் பாடு வார் பரமர். துத் தம் துருசு சேர்ந்த ஒளவு தங்களை மூன்று பெரும் போத்தல் களில் அடைத்து வைத்திருப்பார். ஒன்று

பரியாரி பரமர் 2.
.துத் தம் துருசு முக்காற் பங்கு நீர் காற் பங்கு. இரண்டு . துத்தம் துருசும் நீரும் சம பங்கு. மூன்று. துத் தம் துருசு காற் பங்கு, நீர் முக்காற் பங்கு. சிங்கப்பூரிலி ருந்து மூத்தவன் அனுப்பிய கறள் பிடித்த *ரொட்ஜர்ஸ் கத்தி, சாவணம், காம்புச் சத்தகம் முதலிய வெட்டுக் கொத்து ஆயு தங்களும் இவர் வசம் எப்பொழுதும் இருக்கும். வேறு பல மூலிகைகளையும் வேர் குழைகளையும் என்ன செய்வ தென்று அறியாதவராய் முற்றத்தில் பரப்பி வைத்திருப்பார். இவரின் "வைப் புச் செப்பு இவ்வளவுதான். இவற்றைக் கையில் வைத்துக்கொண்டு வேலரின் உதவியால் தீவிர பரிகாரம் செய்து வந் தார் பரம ர்.
புண் வைத்தியமென்ருல் அயலூரி லிருந்தும் அழைப்பார்கள். விதம்விதமான வியாதிகளுக்கு விதம்விதமான வைத்தியம். பிற பொருள் உடம்பில் நுழைந்து கண் ணுக்கெட்டிய தூரத்திலிருந்தால், சாவ ணம் கொண்டு பிடுங்கி, இதரை வாழைப் பொத்திப்பாலை வெளியில் பூசி, அதே பூவில் வறைசெய்து பத்தியமுமென்பார். நாய் கடி, பூனை கடி, எலி கடி முதலிய

Page 14
  

Page 15
24 பரியாரி பரமர்
மான ரோகங்களுக்கும் இவரிடத்தில் கை கண்ட சில சூரணங்கள் உண்டு. உதார ணமாக, வாலிபந் தொட்டே வயிரவிக் குக் குடி கொண்டு வந்த அடிவயிற்றுக் கோளாறு, பதினைந்து நேர வேளை சண்ட மாருதச் சூரணத்தால் வெய்யிலைக் கண்ட பணிபோல் ஆகிவிட்டது.
வெறுந் தமிழைப் பேசியும், தனித் தமிழ் எழுதியும் வருபவர்களும், ஆங்கிலம் படித்த மாயாவாதம் , * கிறீக் படித்த வேதாந்தம், முத்திக்குக் குறுக்கு வழி கண்ட துவைதம் அத்துவைதம் வெறும் சமஸ்கிருதம் இன்னும் இப்படி இப்படிப் புதியதும் பழையதுமான தொல்லைகளில் ஈடுபட்டோ மன நோயைத் தேடியதும ல் லாமல், எண்சாண் உடம்பையும் அதற் குப் பிரதானமான தலையையும் வீணுக நோய்க்குள்ளாக்கிக் கொண்டு வருந்து வோருக்கு கண் கண்ட சிரஞ்சீவிபோல இவர் கையில் ஒரு தைலம். இதன் குணங் கள், தலைக் கொழும்பைக் கரையப் பண் ணும் தலைவீக்கத்தை வற்றப் பண்ணும்: சகலவித வாதங்களையும் போக்கடிக்கும். கைகாற்பிடிப்புப் போன்ற "பிடிச்சுராவி' வியாதிகளை மடியச் செய்யும். நாரிப்

UfuuTf LuTuor 25
பிடிப்பை இரத்துச் செய்யும் . இத் தியாதி!
பரமரின் தொழில்கள் பல. சோதி டம், மாந்திரீகம், காணி வழக்குத் தீர்த் த ல், பேயகற்றல், கணவன் மனைவி சச் சரவு அகற்றல். இவை அவற்றிற் சில . இராம நாடகத்தில் இராமர் வேஷம் போட்டாடினர் என்ரு ல் , சீதா தேவி மாத் திரம் அந்நேரத்தில் உயிருடனிருந்தால் கண்ணிர் விட்டு அழத் தொடங்கிவிடு வாள். வனவாசத்தில் உண்பதற்குச் சரி யான உணவு கிடைக்காது, அகப்பட்ட பழங்களையும் காய்களையும் உண்டு, நூறு இருத்தல் நிறை கொண்ட மரக் கிரீடத்தை தலையில் மாட்டிக்கொண்டு இராமபிரான டுவாராணுல் இவர் உடம்பு துரும்பாக இழைத்துப் போய்விடமாட்டாதா ? அப் படி உடம்புக்கு ஏதாவது நேர்ந்தால் வல்லி இருக்கிருன் என்ற துணிவுதான் போலும் 1 மகாபாரதத்தில் துரியோதன ஞக வேஷந் தரித்து ‘அண்ணன் தம்பி அஞ்சுபேரும் ஆடி ஆடி வாருங்கள் . நான் . ஆடும் இவ்வாட்டத்தைப் பார்த்து ஒட் டம் பண்ணச் செய்கிறேனே ' என்று
4۔ "

Page 16
26 Lifumf Loir
கதறிச் சுழன்று ஆடினரானல், நாட்டுக் கூத்துப் பார்க்க வந்தவர் பலருக்கு வீட் டுக்குப் போக மனம் வரும். சிலருக்கு குடல் கலங்கி வெளியில் வரும். இதற் கும் வைத்தியம் செய்வார் பரமர்.
எங்களூரில் பரமர் பெரும் புகழைப் பெற்றதற்கு மூல காரணம் அம்பாளை அநுதினமும் இடைவிடாமல் உபாசனை செய்ததே. மானிடராய்ப் பிறந்தவர் கள் பிறகு என்ன பிறவிதான் எடுத்த போதிலும், நோயின்றிச் சுகமாக வாழ வேண்டுமென்பதே இவருடைய சீவியத் தில் குறிக்கோளாக இருந்தது. அல்லா விட்டால், விதிவசத்தால் இறந்தவர்களை விட, பரியாரி பரமர் மற்றவர்களுக்கு விதேக முத்தி கொடுத்து வந்தது எப்படி?
பரியாரி பரமர் உரைக்க வேலர் பஸ்பம் செய்கிறர்.
 

நத்தை
fa தினங்களுக்கு முன்னர் என் நண் பர் ஒரு வருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது பல கதைகளும், அக்கதைகளே உண்மையென்று நிரூபிக்கப் பல நியாயங் களும் பிறந்தன. ஒருவித காரணமுமின்றி இருந்தாற்போல் “நீர் நத்தையைப் பற்றி என்ன நினைக்கிறீர்?' என்று ஒரு போடு போட்டார். இக்கேள்வி பள்ளிக்கூட நாட்களில் வெளி வந்திருந்தால் என் பாடு பெருந் திண்டாட்டமாகவே இருந் திருக்கும். ** நத்தை ஒரு ...' என்று என் மூளையைக் கிளறிக் கொண்டிருந் திருப்பேன். ( அதற்குள் ஏதாவது இருந் தால்தானே கிளறப்படுவதற்கு?)நாயென் ரு ல், உடனே " " நாய் ஒரு நாலுகால் மிரு கம்' என்றும், அல்லது கோழி என்ருல் ** கோழி ஒரு இரண்டு கால் பட்சி ‘' என் றும் முன் பின் யோசியாமல் எழுதித் தள்ளிவிடுவேன்.

Page 17
28 Lfurf Luluoff
"நத்தைய்ைப் பற்றி முக்கியமாக என்ன எடுத்துச் சொல்லக் கூடும்?" சரி யாகச் சொன்னீர்கள் . அது நத்தை யைப் போல மிக மெதுவாய் ஊர்ந் தூர்ந்து செல்லும். ஒரு நாள் நான் ஒரு நத்தையைச் சிறிது நேரத்திற்குப் பின் தொடர நேர்ந்தது. எனக்கோ பெருஞ் சினமாகிவிட்டது. அப்படி ஏன் இருந் தது என்று எனக்குத் தெரியாது. (ஆறு வது சினம்.)
நத்தை எங்காவது போக்கு வரத்துச் செய்ய வேண்டுமென்ரு ல், தசை நரம்பு களின் அலை போன்ற சுருக்குகளின் மீது இழுபறிப்பட்டு, சடலத்தின் கீழ்ப் பகுதி யினல் பயணஞ் செய்யும். இவ்வித அனு பவம் உங்களுக்கு எப்பொழுதாவது ஏற் பட்டிருந்தால் அச் சுற்றுப்பிரயாணம் திருப்திகர மா யிருந்திருக்க முடியாது. அத்துடன் முதுகுப் புறத்திலும் உங்கள் வீட்டைச் சுமந்துகொண்டு போக நேரிட் டால், முன்னேற்றத்திற்கேற்ற அறிகுறி கள் இருப்பதாகத் தோற்றவில்லை. இவ் வகையான மனுேபாவம் நத்தைகளுக்கு ஒருக்காலும் ஏற்படாது. (மனத்தை ஒன்றிலேயே நாடவிடும் தன்மை நத்தை களிடம் இல்லை.)

ாகத்தை 29
ஒரு மணி நேரத்திற்குப் பத்தடி அல் லது ஒரு நிமிஷத்திற்கு இரண்டு அங்குலம் அளவிற்ருன் சாதாரண நத்தை சராசரி யாக நகரும். அதுமட்டுமா . இல்லை. சில நிமிஷங்களுக்குள் ஒரு கணமாவது ஒரு முறை இளைப்பாறுவதற்காகத் தங்க வும் வேண்டும். இதே வேகத்தில் அது நூறு யார் ஓட்டத்தை முப்பது மணி நேரங்களில் அனேகமாக முடிக்கக் கூடும். நத்தைகளுக்கு வீரியங் குறைவு. பச்சைக் கீரைச் செடிகளை சும்மா மென்று தின்று திரிந்தால் தைரியம் ஏற்படுமா ? (பெரும் விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சிகளி லிருந்து நத்தைகளுக்கு வாய்ப் பிரதேசங் களில் தான் சுவையுணர்ச்சி அதிகமாகத் தோற்றும் என்று தெரிய வருகிறது.)
சில குறித்த அலுவல்களுக்குப் போவ தற்கு , நத்தை ஒரு பொழுதும் துரிதப்பட மாட்டாது. எப்படி யென்ருலும் குறித்த திகதி, இரண்டொரு நாள் பிந்தித்தான் இருக்க வேண்டுமென்று அதற்கு ஒரு நம் பிக்கை வரும். அதனுல் வரும் பயன் என்ன ? சென்ற வெள்ளிக் கிழமை கோண ற் புளிய மரத்தின் கீழ் கட்டாயம் சந்திக்கிறேனென்று சொன்ன வரை எதிர்

Page 18
30 LuffuuTf LuTuor
பார்த்துக்கொண்டிருக்கும் ஓர் அழகியை, இவர் எப்படியாவது சந்திப்பார், சிறிது நேரத்திற்குப்பின் இருவரும் முட்டைக ளிட்டு ஆடி ஆவணியிற் குஞ்சுகளும் பொரித்து விடுவார்கள். இந்த ஐம்பதுக்  ைகம்பது ஒப்பந்தம் எங்களுக்குப் பார்க் கப் பெரும் பயித்தியக்காரத்தனமாயிருக் கும். (ஆனல் ஒன்று மாத்திரம் நிச்சயம் , நத்தை ஒன்றில் தகப்பன் நத்தையாக விருக்கும்; இல்லையேல் தாய் நத்தையாக விருக்கும், சும்மா விளையாட்டாக இருக்க மாட்டாது.)
பனி நத்தைகள் ஈரமான சுற்றுப் புறங்களில் வசித்தற்கு விருப்புடையன. திடகாத்திர சீவியத்திற்கு அளவுக்கு மிஞ்சிய நனைவு அவசியம். சில நத்தை கள் வழக்கத்தில் பெருஞ் சமுத்திரத்தில் வாழ்ந்து, அதிர்ஷ்ட வசத்தால் கரை யோரமாக அலசி வீசப்பட்டன. தரையும் நீரைப் போல் நனைந்திருக்கு மென்பது அவற்றின் எண்ணம். (அதற்கென்ன. நாங்களும் த ப்பெண்ணங்கள் கொள்வ தில்லையா ?) கவனமாக உலாவாவிட்டால் தாங்கள் காய்ந்து கருவாடாகி விடுவார்க ளென்ற பயமும் ஒரு புறம். ஆனபடி

கத்தை 3
யாற்ருன் , கசிவான இடங்களையும் ஈர மான தட்பவெட்ப நிலைகளையும் இவை தேடித் திரிகின்றன.
இந்தவித ஈர மனப்பான்மையைப் பற்றி முறையிட நாம் எத்தனித்தால், அம் முறைப்பாடுகள் நத்தைகளுக்குத் தான் உத்தமம் என்பதை நாம் மறக்கக் &nt-Tg5!.
குறிப்பு :- தமிழரின் கலை, சமய சம்
பந்த முன்னேற்றத்திற்கு நத்தை கொடுத் துதவியது "வேகம்",
火 6لالالا تقلsol6 |
• °“.-
முற்போக்குக் கொள்கையில்லாக் கட்சியைச் சார்ந்தது.

Page 19
ஆறுமுகச் சட்டம்பியார்
தோய்ந்து காய்ந்த தலைமயிர் காற்றி லசைய, ஒரு பக்கக் கொடுப்புக்குள் அவஸ்தைப்படும் திவ்யமான தாம்பூலம் காரணமாக கீழ் அலகு அசைய, கழுத்தில் தொங்கும் தங்க அட்சரக்கூடு அசைய, நாலடி உயரம், பொதுநிற மேனி, ஸ்தூல சரீரம் , ஐம்பது வயது, உள் வளைந்து, திரு நீற்றுக் குறி சாற்றி, புனிதமான பொட் டிட்டு, முக மலர்ந்து, முழந்தாளிற்கு மேல் வேட்டிக்கட்டு, அட்சரக் கூட்டிற்கு ஆதாரமான சங்கிலியைக் காட்டி மறைக் கும் அங்க வஸ்திரம், இடது கக்கத்தில் குடை, வலது கையில் வெற்றிலைச் சரை, நாசிகா சூரணப்பட்டை, குறிப்புப் புத்த கம் முதலிய தளபாடங்கள் சகிதம் அசைந்து வருகிருரே, அவர்தான் ஆறு முகச் சட்டம்பியார். அவரைப் பார்த்த வுடன் உங்களுக்கு ஒருவேளை சிரிப்பு வரும் . எனக்கும் அப்படித்தான்.

ஆறுமுகச் சட்டம்பியார் 33
பள்ளிக்கூட வாசலில் நடக்கும் கெந் த லடி, கிளிக்கோடு முதலிய விநோத சம் பவங்களிற் கூடாக இவர் வரும்போது ஒர் இருமல், ஒரு செருமல்-அவ்வளவு தான்-காயும் பழமுஞ் சேரும், புறக் கோடுமேறும் . சுருங்கச் சொன்னல் அற் புதங்கள் நடைபெறும், சட்டம் பியார் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்ததும், தமிழ்நாட்டு நாவலாசிரியர்கள் விவரிக் கின்ற மாதிரி **டங், டாங், டங், டாங்’ என்று பெரிய மணி கர்ச்சிக்க, தலைமை உபாத்தியாயர் மேசையிலிருக்கும் கை மணி **டிங் டிங், டிங் டிங்'" என்று முறை கூறும். சிதறு தேங்காய் பொறுக்கக் கூட இவ்வளவு ஆரவார மேற்படாது! கூட்டி லடைபட்டிருந்த காட்டு மிருகங்களை வெளியே விட்டால் என்ன பதற்றமுண் டாகுமோ அதே பதற்றத்துடன் இவர் கள் எல்லோரும் வெளியிலிருந்து பள்ளிக் கூடத்திற்குள் பறந்தோடுவார்கள். இந் தக் காட்சியை, எங்களூர் ஐயர் பள்ளிக் கூடத்தில், நான் அரிவரி படிக்குங் காலத் தில் ஒவ்வொரு நாள் காலையிலும் பார்த் திருக்கிறேன்.
J-5

Page 20
34 Urfa uTifo "Lor
கல்வியின் அத்திவாரம் நன்ருக இருக்கவேண்டும். தகுதியுடையதாக இருக்க வேண்டும். தளராததாக இருக்க வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டுதான் போலும் ஆறுமுகச் சட் டம்பியாரை அரிவரி வகுப்பை மேய்க் கும்படி விட்டிருந்தார் தலைமை உபாத்தி யாயர். இரண்டாவது மணியடித்ததும் , வகுப்பு உபாத்தியாயர்கள் முன் செல்ல, பின்னே கொழுத்தாடு பிடித்துக்கொண்டு நாங்கள் போவோம், அரிவரிப் பிள்ளை களுக்கு ஆராதனைக்குப் போவதென்றல் பரம சந்தோஷம். ஏனெனில், ஆராதனை நடப்பது மேல் வகுப்புக் கட்டிடத்தில். மறு நேரங்களில் அங்கு போனல் மேல் வகுப்பு நாட்டாண்மைக்காரர்கள் எங் களை விரட்டியடிப்பார்கள். இஃது உலகம் முழுவதும் மேல் வகுப்பார் பரம்பரையா கக் கையாண்டுவரும் ஆதிக்கம். அவர்கள் அதையேன் கைவிடவேண்டும்? எமக்குக் கிடைத்த அருந்தருணத்தை நாமுமேன் நழுவவிட வேண்டும்?
இந்த நேரத்திலும் மேல் வகுப்பார் சும் மாவிருக்க மாட்டார்கள். பிறவிக் குணம் பற்றற்றுப் போகாது. கையோங்கி

ஆறுமுகச் சட்டம்பியார் 35
எங்களில் யாருக்காவது ஒரு வருக்கு ஒரு குட்டு விழும். 'உபாத்தியா." என்று கதறுமுன், 'நமப்பார் பதீபதே-அரஹர மஹா தேவா', தேவாரம் , நல்லொழுக் கம், சுகாதாரம் , தே காப்பியாசம், கல்வி என்னும் பொருள்கள் பற்றிப் பிரசங்கம்; திரும்பவும் பட்டியைச் சாய்த்துக் கொண்டு வகுப்பு உபாத்தியாயர்கள் செல்வார்கள். எல்லோரும் வகுப்புகளில் உட்கார்ந்தவுடன் கல கலவென்ற தொனி யுடன் தையலம்மா வழிகாட்ட, சண் டைப்பட்டாளம் அணிவகுத்து தன் வகுப் பில் நுழையும். இந்த நாரீமணிகள் ஏன் கடைசியாக வருகிறர்கள் தெரியுமா? ஆண்களைக் கண்டால் வெட்க மாம் . ** என்ன அரிவரிப் பிள்ளைகளைப் பார்த் தாலுமா? வெட்கம். அரிவரிப் பிள்ளைக ளென்ருல் என்ன வேறு சாதியா?' என்று துடி துடிக்கிருள் இப்பொழுது என் பக் கத்திலிருக்கும் மனைவி, கலிகாலமே!
வகுப்புத் தொடங்கியதும் முன் தினம் வராதவர்களை விசாரித்துப் போதுமான பதில் கிடைக்காவிட்டால், ஆறுமுகச் சட் டம்பியார் ஆக்கினைக்குள்ளாக்குவார். பலவிதமான சாட்டுகள் பிறக்கும். முக்

Page 21
36 பரியாரி பரமர்
கியமாக வயிற்றுவலி, தலையிடி, " அப்பு" என்னுடைய வேஷ்டியைப் போர்த்திக் கொண்டு எங்கோ போய்விட்டார், "ஆச்சி அடுத்த வீட்டு மனுஷியோடு அலட்டிவிட்டு அடுப்புப் பற்ற வைக்க அயர்ந்து போனுள் என்று, திணிசு தினி சாக வரும். அதற்குப்பின் மடி சோதனை. எங்கள் மடிகளுக்குள் இருக்கும் கொய் யாப் பழம், இனிப்பு, நெல்லிக்காய், புளி யம்பழம் , இலந்தைக் காய், பனங் குருத் துப் போன்ற போஜன திரவியங்களை இறக்குமதி செய்து, ஒவ்வொன்றையும் கயிற்றுத் துண்டுகளில் கோத்து, சொந் தக்காரரின் கழுத்தில் மாலையாகப் போடு வார் எங்கள் சட்டம்பியார், ஒன்பது மணிக்குப் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும். ஒரு மணிக்கு விடும். இப்பொழுது பதி னென்று தானே, விடுதலை கிடைக்க இன் னும் இரண்டு மணித்தியாலங்கள் உள. காலச்சக்கரம் மனவேகமாகச் சுழலுகின் றது. பத்தடி நீளம் எட்டடி அகலமுள்ள பெரிய அரிவரிப் படமொன்றை எட்டிச் சுவரில் மாட்டுவாராணுல், ஆறுமுகச் சட் டம்பியார் பிள்ளைகளுடன் போர் தொ
டுத்து விட்டாரென்பதற்கு அறிகுறி. கையில் பிரம்பை எடுத்து 'அ' வைத்

ஆறுமுகச் சட்டம்பியார் 37
தொட்டு "ஆணு" என்று முழங்குவாரா கில், பின் வாங்கிலே நிம்மதியாகத் தூங் கிக்கொண்டிருக்கும் சில பாலர்கள் திடுக் கிட்டெழுந்து குடைகளை எடுத்து விரிப் பார்கள். அவர் "ஆணு" என்றதுதான் தாமதம், நாங்களெல்லோரும் 'ஆன’’ என்று ராகம் பாடுவோம். இதில் சுருதி வித்தியாசம், தாள வித்தியாசம் எல்லாம் கலக்கும். இப்படியாக "அ" தொடக்கம் ஐ' வரை கிரமமான முறையில் நடக் கும். அரைக் கண் பார்வையுடன் சட்டம் பியாரின் கை தளர "கீ’ வரை போகும். அதற்கப்புறம் 'கு'வந்ததும் பிரம்பு எங் கேயோ போய் "லெ'யில் சுட்டிக் காட் டும்; சட்டம்பியார் குறட்டைவிடத் தொடங்கி விடுவார். இதுதான் சமய மென்று கழுத்தில் தொங்கியிருந்த உண வுப் பொருட்களெல்லாம் அவரவர்கள் வாயில் நுழையும் அமைதி எங்கும் நிலவும்.
A
பள்ளிக்கூடம் விட்டதும் யார் யாரு டைய வீட்டு மரத்திலேறுவது, எந்தப் புளியமரத்திற்குக் கல்லெறிவது என்று "புருே கிராம்' போடத் தொடங்கி, குஸ்தி, மல்யுத்தம் முதலிய தேகப்பயிற்சி

Page 22
38 பரியாரி பரமர்
களில் இறங்கினுலும் இறங்கி விடுவோம். சமயம் பார்த்து ஆறுமுகச் சட்டம் பியா ரும் கண்விழித்து, குதித்தெழுந்து, யாரா வது ஒருவனுக்கு முதுகில் இரண்டுவாட்டு வாட்டி விட்டுத் திரும்பவும் "அ" என்று இரை வார். நாங்களும் கரைவோம். இவ் வாருக, புகுவதற்கு இடமில்லாமல் சட் டம்பியாருக்கும் எங்களுக்கு மிடையில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொண்டி ருக்கும் அரிச்சுவடி 'கு' வந்ததும் சட் டம்பியார் பழையபடி ஏட்டைக் கட்டி விடுவார். 'டங்" என்று ஒரு மணி அடிக் கும். "நமஸ்காரம் உபாத்தியாயர்' என்று கூறியதும் கூரு ததுமாக ஒருவர் மேல் ஒருவர் வீழ்ந்த டித்துக்கொண்டு கம்பி நீட்டி விடுவோம்.
ஒரு வருஷ முழுவதும் "கீ'யுடன் பாடம் முடிந்துவிடும். பரீட்சைத் தின மும் நெருங்கிவிடும். ஏன். பரீட்சைத் தினமும் வந்துவிட்டது. கோடி வேஷ்டி, கோடிச் சட்டை, கோடிச் சால்வை அணிந்து, கைகளுக்குக் காப்புப் பூட்டி, நகங்களெல்லாம் வெட்டி, முகம் சுத்தி செய்து, "'பெளடர் "பூசி கறுப்புப் பொட் டிட்டு, எண்ணெய் ஒழுக வைத்துத் தலை

ஆறுமுகச் சட்டம்பியார் 39
வாரி, ஒரு கையில் ஏட்டுக்கட்டு, மறு கை யில் தேங்காயும் கற்பூரமும் கொண்டு, காலை ஆறு மணிக்கே ஆகாரம் முடித்துக் கொண்டு, உல்லாசமாக, இருதயம் பட படக்க, கை கால் நடுநடுங்க, தாய் தந் தையரின் ஆசீர் வாதம் பெற்று வீட்டை விட்டு வெளிக் கிளம்புவோம். முதல் வரு கிற பிள்ளை யார் கோவிலில் கற்பூரம் * கொளுத்தி', 'பிள்ளை யாரே, சோதனை "பாஸ் ' பண்ணச் செய்து போடும்" என்று பிரார்த்தித்துக் கொண்டு தேங்காயையும் உடைத்து பிரசாதமும் உண்டு பள்ளிக் கூடம் சேர்வோம்.
அமர்க்களம், ஆரவாரம். ஆறுமுகச் சட்டம்பியார் காட்சியளிக்கிரு ர். தினசரி அணிந்து வரும் உடைதான். ஆனல் சில மாறுதல்களும் உண்டு. நீட்டுக் கைச் சட்டை-அவர் கையிலும் பார்க்கச் சட் டையின் கை நீளம்: மூக்கில் கண்ணுடிகண்ணுடி விளிம்புக்கு மேலாக ஏறிட்டுப் பார்க்கும் ராச முளி; சட்டைப் பையில் பெளண்டின் பேணு-அதிலிருந்து ஒழு கிய மை மூன்று சதுர அங்குலம் வரை அலங்கரித்திருக்கிறது அவரது சட்டை யை. அவரதைக் கவனிக்கவில்லை. மேற்

Page 23
40. பரியாரி பரமர்
பார்வையுங் கண்ணுமாக விசிக்கி நடக் கிற சட்டம்பியாருக்கு கண் தெரிந்தால் தானே!
தலைப்பாகை, மேற் சட்டை, காற் சட்டை முதலிய பயங்கர உடை அணிந்து பரிசோதகர் வந்தார். எங்கள் வகுப்பில் நுழைந்ததும், நாங்கள் எல்லோரும் எழுந்து கை கூப்பி ‘நமஸ்காரம் ஐயா!' என்று ஒரே காலத்தில் வரவேற்ருேம் , இதைச் சரியாகச் செய்யப் பயில்வதற்கு எங்களில் எத்தனை பேர்களின் முதுகுத் தோல் உரிந்திருக்குமோ, மேலே இருக் கிறவனுக்குத் தான் தெரியும். அவதி அவ தியாக ஆறுமுகச் சட்டம்பியார் மூலையிலி ருந்த வாழைத் தடற் சுருளே அவிழ்த்து, பரிசோதகர் கழுத்தில் சாற்றினர் மல்லி கையும் அலரியும் கலந்த ஒரு பூமாலையை. புன்முறுவல் பூத்த முகத்தினராய் நெடு நாட் பழகிய நண்பர்கள் போல் சேமம், நாட்டு நடப்பு முதலியவைகளைப் பற்றிச் சிறிது நேரம் விழுந்து விழுந்து பேசினர்
கள்.
மேசை மேலிருந்த கம்பொன்றை எடுத்து, பரிசோதகர் 'உ'வைக் காட்டி,

ஆறுமுகச் சட்டம்பியார் 4.
மற்றக்கைச்சுட்டு விரலினுல் நரசிங்க னைக் காட்டினர். நரசிங்கன் "உ" என்று கத்தினன். ஏதோ சட்டம்பியார் கொ டுத்துவைத்த பாக்கியம் இன்னும் பரி சோதகர் "கீ’ வுக்குக் கீழ் இறங்கவில்லை. கம்பு கீழே வந்து எதையோ காட்டிற்று. சுட்டுவிரல் மாணிக்கத்தை நோக்கிற்று; மாணிக்கத்தின் முழி புரளத் தொடங்கி விட்டது. சட்டம்பியார் பரிசோதகருக்குப் பின்னல் நின்று கொண்டு ஏதோவெல்லாம் கையை நெளித்துக் காட்டினர். சட்டம் பியார் பரிசோதகரை நையாண்டி பண் ணுகிருர் என்று மாணிக்கம் நினைத்து, வந்த சிரிப்பைக் கையாலடக்கினன். பொங்கிவிட்டது கோபம் சட்டம்பியா ருக்கு, சந்ந தம் போட்டுக் கொண்டு **சொல்லடா ‘ஞை சொல்லு' என்றர். மாணிக்கம் "ஞை" என்ரு ன்.
இப்படியாகத் தள்ளுப்பட்டு இழு பட்டு அரிவரி வகுப்பில் படித்த அறுபத்து மூவரில் நால்வர்தவிர மற்றைய அனைவ ரையும் அடுத்த வாரமே முதலாம் வகுப் புக்கு வந்திருக்குமாறு தலைமை உபாத்தி யாயர் அழைப்புப் பத்திரம் அனுப்பி J-6

Page 24
42 பரியாரி பரமர்
இருந்தார், அச்சுபதினத்திலன்றே ஆறு முகச் சட்டம்பியாரை நாம் விட்டுப் பிரிந் தோம். இவ்வளவு பிள்ளைகளும் எப்படி "பாஸ்' பண்ணினே மென்று எனக்கு இன் றுந்தான் ஆச்சரியமா யிருக்கின்றது. பூமாலையோ, சட்டம் பியாரின் வசீகர முகமோ அறிகிலேன். பழங் காலத்துப் படிப்பு அப்படியுமிப்படியுந்தான் என்று இக்காலத்து மாணவர்கள் பேசிக்கொள்ளு கிரு ர்கள். பழங் காலத்திலே நால்வரை யாவது நிறுத்திவைத்தார்களே.
குறிப்பு: காலையில் வயிறு நிரம்ப உண் ணும் பழஞ்சா தமும் புளிச்சல் கறியும் தான் ஆறுமுகச் சட்டம்பியாரின் தூக்கத் திற்குக் காரணம் என்று எங்கள் பலரின் பலநாளைய கூட்டபிப்பிராயமாகும்!
ஏறு நடையோடு வரும் ஆறுமுகம் என்றே,
 

மரியாதை எதற்கு?
ஆமாம்! இந்தத் தலையங்கத்தைப் பார்த்தவுடன், தற்கால இளைஞர்களுக் கெல்லாம் மரியாதைப் பழக்கங்கள் கொஞ்சமேனும் இல்லையென்றுதான் கட் டாயம் முறுகுவார்கள்- யார் முறுகுவார் கள்?’ கிழவர்கள்! அஃதேனென்ரு ல்ஒன்று, கிழவர்களைக் கண்டால் நாற்காலி யைவிட்டு எழுந்து மரியாதையாக வாய் பொத்தி, கைகட்டிநிற்கவில்லை. இரண்டு, பெண்கள் வந்தால் எழுந்து நின்று அவர் கள் சொன்ன ஏவல்களைப் புரியாமல் நிற் பது. மூன்று, வாயில் சுருட்டுடன் கதாப் பிரசங்கம் செய்வது. கிழவர்கள் முட் டாள்களிடம் அகப்பட்டு சந்தோஷமாக கஷ்டப்படுவதுபோல, இளைஞர்கள் அகப் படுவதில்லையே. ஏன்? அவர்கள்தாம் சர்வ முட்டாள்களாச்சே!
ஆனல், 'வில்லியம் ஒவ் விக்காம்" என்பவர், "பழக்கங்கள்தான்ஒரு மனிதனை

Page 25
44 பரியாரி பரமர்
ஆக்குகின்றன’’ என்று சொல்லும் பொ ழுது, இதைத் தான் கருதினரோ தெரி யாது. அப்படி இதைக் கருதாவிட்டால், ஒரு கால் அவர் மனதில் வேறு ஏதாவது வைத்திருப்பார்; பரிதாபம், சகோதர அன்பு அல்லது இந்த வகையில் ஏதாவது சரக்குகள் வைத்திருந்திருப்பார். *
வயதிற்குத் தகுந்த மரியாதையா, அறிவிற்கேற்ற மரியாதையா தேவை என்பதுதான் இளைஞர்களின் சந்தே
கம்!
அரசியல் விஷயங்களிலும், கந்தோர் விஷயங்களிலும் ஒரு மாதிரியான மரி யாதை இருக்கத்தான் வேண்டும். ஆனல், எல்லோரும் ஒருவிதமான பிரவேசக் கட் டணங் கொடுத்து, சுயமரியாதையுடன் சினிமாக் கொட்டகையில் படம் பார்க் குஞ் சமயத்தில் - கிழவனுர், பெரிய வர், பெண்மணி, அல்லது வேறு யாராகத்தானிருக்கட்டும் - வந்து விட் டாரென்று எழுந்து உட்கார்ந்திருந்த நாற்காலியை அவருக்குக் கொடுப்பா னேன்? பல ஹினர்களென்ருல் கொடுக்கத் தான் வேண்டும். அப்படிக் கொடுத்தா

மரியாதை எதற்கு? 45
லும் இதற்காக நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்? வயதின் முதிர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று தீர்மானித்து விட்டு 'கம் மென்று சும்மா இருந்துவிடு வார்கள். மடத்தனமாக உளறுவேனே யாகில்-அவர்கள் நிரம்பவும் சரி. ஒரு வரிலும் பார்க்க இன்னெருவர் இருபது வயதாலே கூடியவர் ' என்ற ஒரு சிறு போலி நியாயத்தைக் கொண்டு, அவரு 6) மரியாதைக்கோ, நாற்காலிக் கோ மற்றவர் உரித்தாளியல்லர், மூடத் தனத்திலும் பார்க்க, அறியாமைக்கே வயதும் மரியாதையுங்கூட.
பெண் பிள்ளைகள் மரியாதைக் குரிய வர்கள்தாம். ஏனென்ரு ல் , எங்கள் சாதி யாருடையதாய்கள், பத்து மாதம் நொந்து சுமந்து பெற்றவர்கள்; அவர்களில்லா விடில் நாங்கள் எங்கே? ஆனல், இளைஞர் களின் பழக்க வழக்கங்களைக் குறித்து, கோள் சொல்லும் பெண்களில் எத்தனை பேர்கள் உண்மையில் தாய்மார்கள்? ஒரு பெண், அல்லது எந்தப் பெண்ணுவது வரும் பொழுதெல்லாம், ஒர் இளைஞன் எதற்காக எழுந்திருக்கவேண்டும்?

Page 26
46 urt'urrf uOT LOff
பெண்களோ பகல் முழுவதும் வீட்டி லேயே இருந்து சுகமாகக் காலங் கழித்து விட்டு வெளியே உலாவ வரும் பொழு தெல்லாம்-ஒரு நாளைக் கொன்பது தர மாவது ஒரே பாதையைத் திருப்பித் திருப்பி அளந்து பார்த்துவிட்டு, அல்லது கந்தோரில் தன் கடமை பார்த்துக் கஷ் டப்பட்டு உழைத்து ஆறுதலாய் உட்காரு வோம் என்ற ஆலோசனையுடன் சற்றே இளைப்பாறியிருக்கும் இளைஞன் எழுந்தி, ருக்க முடியுமா? சற்று யோசித்துச் சொல் லுங்கள்.
ஓர் இளைஞன் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளாமல் வாயில் ஒரு சிக ரெட்டுடன் போனுல், சுருட்டுக்கு மேல் சுருட்டடிக்கும் கிழவனருக்கு ஏன்கோபம் வரவேண்டும்? அதுதான் முறை . தம்பி, சரியான முறை! உண்மையில், வேஷ் டியை மடித்துக் கட்டி முழங்கால் தெரிய நடக்கும் பையனைப் பார்த்து, முதுகு தெரிய ரவிக்கை போட்டு மார்பு தெரிய சேலை கட்டிய பெண் அதிசயப்பட்டு, ஏங்கி அறிவு கெட்டு விழுந்தாளாம்!
பெண்களின் மரியாதையைக் காப் பாற்றவாவது ஆண்கள் பொய் பேசாது,

மரியாதை எதற்கு? 47
அழகாக உடுத்தி, நேர்மையாக நடக்க எத்தனிக்கவேண்டும். ஆனல், உண்மை யில் மனதிற்குள் அடங்கியிருக்கும் கொள் கையின் வெளி அம்சங்களைக் காட்டுவதற் காகவா இச் செயல்களை ஆண்கள் செய்ய வேண்டும்? '
நல்ல பழக்கங்களின் ஆதார யாக, மற்றவர்களுக்கு ஒரு யோசனை: பல ஹீனர் ளுக்குஞ் சரி, எளியவர்களுக்குஞ்சரி, வெட் கப்படுகிறவர்களுக்குஞ் சரி-நம்முடைய அடிமைப் புத்தியை இப்படி உரிந்து காட் டுவது சரியல்ல. இதுதான் நாம் முக்கிய மாகக் கவனிக்க வேண்டியதாகும்.
வேட்டியை மடித்துக் கட்டினுல் முட் டுக் கால்கள்தான் தெரியும்; ஆனல் கெட்ட இருதயத்தைக் காட்டிக்கொடுக்க வில்லையே. நேர்மையான குளுதிசயங்க ளுடன், வெளியிடங்களில் மற்றவர்கள் கவனிக்கும்பொழுது பெண்களுடன் மரி யாதையாக நடப்பவன், தன் மனைவி யையும், மகளையும் தனிபிடத்தில் வைத்து திட்டி உதைக்கவில்லையா? எல்லோரை யுங் கனம் பண்ணி, ஒருவர் சொல்லையும் தட்டிப் பேசாமல் தடக்கும் ஒருவன், தன்

Page 27
48 Lurfu umTrf LuTLoñt
வேலையாட்களையும் ஏவலாளர்களையும் துன்பப்படுத்துவதில்லையா?
ஒவ்வொருவரின் தராதரங்களையும் பார்த்து அதற்கேற்ற மரியாதை செய்ய வேண்டுமானுல், அதற்காகப் பிறக்க வேண்டுமென்றே நான் சொல்லுவேன்.
இளைஞர்கள் தங்கள் நினைவுகளை வெளிப்படுத்தக் கொஞ்சம் கடூரமான சொற்களைத்தான் உபயோகிப்பார்கள். பழைய காலங்களில் நடந்த மாதிரி கிரி யைகளுக்கும், உபசாரங்களுக்கும் பயந்து பின் நிற்பவர்கள் அல்லர். ஆகையால் தான் இவர்களை 'வம்பன்கள்" என்றழைப் பார்கள்-யார்? கிழவர்கள்!
ஒரு கிழவன் ஆற்றில் குளிக்கும்பொ ழுது உண்மையில் நீந்தத் தெரியாது, அமிழ்ந்து தத்தளிக்கும் பொழுது, ஒரு இளைஞன் அவரைக் காப்பாற்றத் தெண் டித்தால் சந்தோஷப்படுவார். ஆனல், தர்க்கிக்கும் பொழுது மாத்திரம் எதிர்த்து உண்மை நியாயத்தைப் பேசினல் கிழவன் கோபிப்பார். எதற்காக? இளைஞனுக்கு வயது இருபத்தைந்து, கிழவனுக்கு அறு பத்தைந்து! இதுவும் ஒரு சம்பிரதாயம்.

மரியாதை எதற்கு? 49
வேஷ்டி நிலத்தைக் கூட்ட, சால்வை பறக்க, வாயில் சிகரெட்டுடன், தலை நிமிர்ந்து நடக்கிருன் ஒரு வாலிபன். கிழ வரையும் பெண் சமூகத்தாரையுமே மதிக் கிரு னில்லை. அப்படியிருந்தும் பழக்க வழக்கமில்லாத இந்த "வம்ப"னை அந்தப் பெண் மணக்க ஏன் விரும்புகிருள் என்று எந்தக் கிழவனுக்குத்தான் தெரியும்? மலை யேறினல் என்ன, ஆகாய விமானத்தை ஒட்டினலென்ன , நெற்றி வியர்வை நிலத் தில் விழச் சம்பாதித்தாலென்ன-எல்லாம் செய்வது யார்? துணிவு, தேகக் கட்டு, அழகு, பேச்சு வன்மை எல்லாம் ஒருங்கு சேர்ந்து பொங்கி வழியும் இந்த இளைஞன்
தான்!
ஒருவேளை இவர்களுக்குத் தங்கள் தந் தையர்களிலும் பார்க்க மனத் தைரியம் அதிகமாக இருக்கலாம். தீர்மானிக்கு முன் எல்லாவற்றையும் விளங்கும் ஆற்ற லுடையவர்களா யிருக்கலாம். தற்காலத் திலும், வழங்கினலொழிய ஐதிகம் என் பது அறவே கிடையாது. அதை வேருடன் அழிக்க விருப்பமுடையவர்களாக யிருக் கிருர்கள். ஒரு வன் ஆங்கில பாஷையைப் J-7

Page 28
50 um unir
பிழையாகப் பேசினல், நாங்கள் ஏன் அதைப் பின்பற்றுவான்? கசடறப் பேசக் கற்றுக் கொண்டால் என்ன?
ஆலயங்களுக்குள் இருக்கும்போதெல் லாம் பெண்கள் புண்ணியான்மாக்கள் தாம், ஆனல், வீதியில் வந்தால் மனு ஷத் தன்மையுடையவர்கள்தானே? அதற்கு வேறு அபிநயங்கள் ஏன் வேண்டும்? உண் மையில் ஒரு மாது அடிக்கிணற்றில் தான் அடங்கிக் கிடப்பாள். வயதானவர் கள் அந்தக் கிணற்றைச் சுற்றிவர அழகா கக் கட்டி, பொய் என்னும் புற வெள்ளம் உட்செல்லாமல் வெகு கவனமாகப் பேணி வருவார்கள். ஆனல் இளைஞர்களோ, அவளை வெளியே இழுத்து, என்ன சேலை கட்டியிருக்கிருள், சுத்தப் பட்டோ அல்லது "இமிற்றேஷனுே?" பற்கள் உண்மையோ, பொய்ப் பற்களோ? தலைமயிர் இயற்கையோ பொய் முடியோ? என்று அறிய மிக அவாவுடை யவர்களாயிருப்பார்கள். இளைஞர்களுக்கு மூத்தோர்கள் தங்களிலும் பார்க்க விவேக முடையவர்கள் என்ற நம்பிக்கையே
கிடையாது. உண்மையைக் கூறுமிடத்து

மரியாதை எதற்கு? S
அவர்கள் ஏன் நம்பவேண்டும்? எப்படி நம்ப இயலும்?
பழக்கங்கள்தான் ஒரு மனிதனை ஆக்குகின்றன-வெள்ளை வேஷ்டி, சரி கைச் சால் வை. ஆம் , ஆம். நீங்கள் சொல் வதுதான் சரி. நீங்கள் செய்வதெல்லாம் எப்பொழுதுஞ் சரி ஏனென்றல் என்னி லும் பார்க்க நீங்கள் வயதிற் பெரியவர். இங்கே நான் சுருட்டுப் புகைக்கலாமோ? "அம்மணி இப்படிஉட்காருங்கள் (அந்தப் பெண்மணி ஏன் வாய் திறவாது எங்களை யெல்லாம் இப்படி ஏமாறவிட்டு நிற்கி ருள்?) ஒஹோ வெட்கம். சீ, இல்லை அகங் காரம்! இதற்குப் பெரியோர்கள் கையா ளும் முறையொன்றுண்டு. அஃது என்ன வென்று என்னை நீங்கள் அகங்காரத்து டன் கேட்பீர்கள். நானும் மரியாதை யாக இதோ பதிலுரைக்கிறேன். கபட நிலை, மாய் மாலங்கள், பொய்யாசாரங் கள் முதலிய தெய்வங்களை வணங்குதலே.
இளைஞர்கள் இவ்வகையான தெய்வ வழிபாடுகளை நன்ரு ய் அறியவில்லை. இவ் வகையான குருட்டு நம்பிக்கைகளை உத றித் தள்ளிவிட்டார்கள். இன்னுமென்ன

Page 29
52 Lifu umrf LIJuof
வென்றுதான் அறிய விருப்பமுடையவர் கள். ஆசாரம், வழக்கம் என்னும் வனத் தை வெட்டி, வளர்ச்சி என்னும் பாதை யை உண்ட்ாக்குபவர்கள்,இந்தக் கிரியைஅந்த நியாயக் கருமங்களைச் செய்வதனல் என்ன நன்மை வருமென்று ஆராய்பவர் கள்-எல்லா நேரத்திலும் ஏனென்று கேட் டுக்கொண்டேயிருப்பார்கன்.
பழக்க வழக்கந் தெரியாத 'வம்பன்" அப்படித்தான் இவன் தகப்பனை, அவர் தகப்பனர் சொன்னர்!
ஆண்கொண்டை. பெண்"; , , rாடை மரியானா மாதர்
 

தமிழ் அறியாப் பெருமான்
"யமதர்ம ராசனே! இவன் தயவு தாட்சண்யமில்லாத கொடூர குரூபி. இவன் கன்றுக் குட்டியைப் பாலூட்ட விடாமல், கறந்த பாலைத் தண்ணிருடன் கலந்து, பாலென்று சனத்தை ஏமாற்றி, அதனை விற்ற படுபாவி" என்று கூறினன் யமதூதன்.
* பாதகன். தூதர்காள்! இவனை முள் ளுக் கம்பிகளினுற் சுற்றிக் கட்டிப் பசி யால் வாடி வதங்கியிருக்கும் என் கழுகு களுக்கு இரையாக்குங்கள்' என்று யம தர்மராஜன் கர்ச்சிக்க, மந்திரி இருந்த ஆசனத்தை விட்டெழுந்து, "மஹாராஜ்! எங்களிடமிருந்த முள்ளுக் கம்பிகளெல் லாம் குள்ளரக்கன் வாயினின்றும் எங்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்காக யுத்த சேவையிலீடுபட்டிருக்கின்றன" என்று தெரிவித்தான்.

Page 30
54 பரியாரி பரமர்
'எவ்விதத்திலாவது இவனைக் கட்டியி ழுத்துக் கழுகுகளுக்கு இரையாக்குங்கள்.' மறுபக்கந் திரும்பி, 'யார் இந்த மகான்? இவரை எதற்காக இங்கு கொண்டு வந்தீர்கள்?' என்று வெகு பணிவுடன் யம தர்மராசன் வினவ, ‘சுவாமி! நீங்களும் இந்த வெளி வேஷத்தை மென்று விழுங்கி விட்டீர்களோ என்பதை நினைக்க எனக் குச் சிரிப்பாயிருக்கிறது. ஜீரணமாகாது. கக்கிவிடுங்கள்' என்று சித்திர புத்திரன் சிரித்த வண்ணமே, "இவன் மகான் அல் லன். தமிழ் நாட்டிலே,தமிழ்ப் பெற்ருேர் செய்த தவப் பயனல் பிறந்து, தமிழ் தெரி யாதென்று வீரமுழக்கஞ் செய்த தமி ழன்' என்று கூறினன்.
மகாராசன் உடனே தனது வெண் பற்களை நெருமி "உண்மைதான? ஆஹா ! இவனை என்ன செய்வது என்று தெரிய வில்லையே! தேசத் துரோகி புரியாப் பாஷையில் பேசுகிறவன் எங்களைப் பற்றி என்னென்ன தகவல்கள் எதிரிக்குக் கொ டுப்பானே? இவனை இத்தேசத்தில் நின் றும் துரத்திவிட வேண்டும். எங்கேயனுப் பலாம்? அந்த மா.இல்லை. என்னையும் ஏமாற்றத் துணிந்தவனல்லவா? இவன்

தமிழ் அறியாப் பெருமான் 55
கர்வந்தான் என்னை? இவனை இங்கேயே வைத்துச் சித்திரவதை செய்யவேண்டும். என் கண் முன்னேயே செய்யவேண்டும்" என்று ஆசனத்தை விட்டிறங்கி, தமிழ் தெரியாத் தமிழனை அணுகி, அவன் காதை முறுக்குவதற்காகக் கையை நீட்டினன்.
"சீ இவனைத் தீண்டுவதும் பாவம்' என்று முன் யோசனையுடன் பின்வாங்கி, ‘இவனுக்குப் பிராயச் சித்தம் செய்ய வேண்டும். தண்ணிர்க் குழாயைத் திறந்து அதன் கீழ் இவனை மூன்று கிழமை இரு த் துங்கள். மற்றைய அலுவல்களைப் பின்பு யோசிப்போம்' என்று கதறினன்.
"தமிழனுக்குச் சித்திரவதை', 'தமிழ் தெரியாத் தமிழன்’, ‘சித்திரபுத்திரனர் சிரிப்பு" என்ற தலையங்கங்களுடன் வெளி வந்தன, தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம்! ஒரே கலவரம். பத்திரிகைக் காரர்களுக்குக் குதூகலிப்பு. எந்தத் தமி ழன் கையிலும் ஒரு பத்திரிகை. யமலோ கத்து நடப்புப் பற்றியே தமிழ் நாடெங் கும் பேச்சு. இவ்வுலக சீவியத்தில் தண் டனை கிடைக்காவிட்டாலும், யமலோ கத்திலாவது கிடைத்ததே என்று

Page 31
56 பரியாரி பரமர்
எங்களுக்கோர் ஆறுதல். தமிழ் தெரியா மற்றும் தமிழருக்குத் தமிழ்ப் பத்திரிகை கள் மீது அருவருப்பு. தமிழ்ப் பத்திரிகை கள் வாசிப்போர்மீது ஒரு வெறுப்பு. தமிழ்ப்பத்திரிகைகளுக்கு எழுதுவோரைக் கண்டால் குறுகுறுப்பு, ஒரு மாதமாக இதே முழக்கம். தினசரிகள், வாரப் பதிப் புகள் எல்லாம் இந்தத் தேசத் துரோகி யைப் பற்றியே 'கொலம் கள்! அச்சு எந் திரங்களுக்கு ஓய்வில்லா ஒட்டம். காய்ந்து கிடந்த பத்திரிகைகள் குளிர்ந்தன. குளிர்ந்திருந்த பத்திரிகைகள் மிளிர்ந் தன.
*இதுவும் வேண்டும் இன்னமும் வேண் டும்" என்று தமிழ்ப் பத்திரிகைகளுக்குக் கடிதங்கள் வந்து குவிந்தன. மறுப்புக் கடிதங்கள் (தமிழ்த் தெரியாத் தமிழரால் எழுதப் பெற்றவை) புரியாப் பாஷைப் பத்திரிகைகளில் வெளியாயின. இப் பத் திரிகைகளை ஆதரிப்பவர்களுக்குத் தமிழ் நாட்டு விவகாரங்களில் அவ்வளவு அக் கறையில்லை. அக்கடிதங்கள் சுய சுகத்திற் காகவே பிரசுரமாகின்றன. ஆகையால் யமலோக சேம லாபங்களை அறிய விரும் பிய சில தமிழ் தெரியாத் தமிழன்பர்கள்

தமிழ் அறியாப் பெருமான் 57
இப் பத்திரிகைகளைக் கக்கத்தில் செருகிக் கொண்டு"இதற்கென்ன செய்யவேண்டும்" என்று இரகசியக் கூட்டங்கள் கூடினர். பத்திரிகைகளில் இச் செய்திகள் வெளி வராத வண்ணம், தகுந்த பாதுகாப்பு நட வடிக்கைகளும் கைக் கொள்ளப்பட்டன.
யமலோக அதிபன் விதித்த தண்டனை யைக் கண்டித்துக் கண்டனக் கூட்டங்கள் கூடின. "பெட்டிசங்கள் பறந்தன! வழக்க மான முறையில் பதிலும் கிடைத்தது. தமிழ் தெரியாத் தமிழருக்கு வயிறு பற்றி எரிந்தது. என்ன செய்யலாம்? யாருக்கு முறையிடலாம்? சிறுபான்மைக் கட்சி என்ருலும் புத்தியில் குறைபட்டவர் களா! " மற்றைய தமிழர்கள் தங்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறவர்கள் இல்லை" என்று ஒரு வெறும் புகாரைக் கிளப்பினர். செவிசாய்ப்பார் யாருமில்லை.
தூது கோஷ் டி யொன்றைத் திரட் டிப் பெரியார்களுக்கு "முறை'யிட்டனர். ஒன்றும் பலிக்கவில்லை. சரி, இதைத் தீர்க்க ஒரேயொரு மார்க்கம் உண்டு.
J-8

Page 32
58 Lurfuum f LuTor
*சும்மா விடுவோமா?" என்ற சுலோ கத்தை உச்சரித்துக் கொண்டு புரியாப் பாஷை பேசும் பெரியோரை வேண்டினர். அவர்களும் தக்க சமயமிதுதான் என்று பக்கக் கிட்டியில் எட்டிப் பிடித்தார்கள். மாடுகளும் அவர்கள் பக்கம் இழுத்தன. அவர்கள் காரியமும் பலித்தது. இவர்க்ள் வேகமும் குறைந்தது.
யமலோகப் பிரச்சினையை முற்றும் விபரமாக விசாரித்து உலகிற்கு விரிவாக விளக்க ஒரு விசாரணைச் சபை ஏற்படுத்தி, குற்றவாளியையும் "சாய்த்துக் கொண்டு தமிழ் நாடு வந்து சேர வேண்டுமென்று யமதர்மராஜனுக்குக் கட்டளையனுப்பி னர். கட்டளைகளுக்கு அடங்குபவனு யமன்? விண்ணப்பித்தார்கள். (LfD L.q- tLu வில்லை. கெஞ்சினர்கள். தயவாக வேண் டினர்கள். அப்பொழுதுதான் காரியம் பலித்தது.
தென்புல வேந்தன் தமிழ் நாட்டிற்த விஜயம் செய்கிரு ரென்ருல் சொல்லவும் வேண்டுமா? பெரும் ஆரவாரம். இவர் ஓர் தேநீர் விருந்து". "அவர் ஓர் இராச் சாப்பாடு இப்படியாக ஏக தடல் புடல்

தமிழ் அறியாப் பெருமான் 59
கள் நடந்தன. யமனுக்கோ ஓய்வில்லை; சபைகளும் சங்கங்களும் புதிதாக முளைத் தன. திறப்பு விழாக்கள்! சமயோசிதப் பேச்சுக்கள்!! "பிறப்பும் இறப்பும் பற்றி யொரு விசேட சொற் பொழிவு. "ஆஹா!' " யமதர்ம ராஜனுக்கு ஜே!' போன்ற சத்தங்கள் காதைத் துளைத் தன. புகைப் படங்கள் பத்திரிகைகளைச் சோபி தஞ் செய்தன. சுருக்கிச் சொன்னல், யம தர்மராஜனின் வரவு தமிழ் நாட்டை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.
விசாரணை ஆரம்பமாகு முன்னரே யமதர்ம ராஜன் தனது போக்குவரத்துச் செலவுகளை, விசாரணை முடித்து ஊருக் குத் திரும்புமுன் கொடுக்கு மாறு உறுமி ஞன் முற்பணமாக, மூன்றில் ஒரு பங்கை, விசாரணை ஆரம்பமாகு முன் மேசைமேல் வீசியெறிய வேண்டுமென்று கதறினர். "கடன் சொல்லவேண்டாம் . இந்த நாட்டுக் கணக்குகளைத் தென் புலத் துப் பற்று வரவுடன் சேர்க்கக் கூடாது' என்றும் முன்னறிக்கை செய்தான். இவற் றிற்குத் தகுந்த உத்தரங்கள் கிடைத்த தும் விசாரணைத் திகதி குறிக்கப்பட்டது.

Page 33
60 பரியாரி பரமர்
பலரின் வேண்டுகோளுக் கிணங்கி, விசா ரணை பகிரங்கமாக வைக்கப்படுமென்று பறைசாற்றப்பட்டது.
தமிழ் நாட்டு மைதானம், "எக்கச் சக்கமான கூட்டம். எலும்புருக்கி விருட் சத்தின் கீழ் அமைக்கப் பெற்ற அலங்கார மேடைமீது ஐந்தாறு நாற்காலிகள் 'தூவப்பட்டிருந்தன. பல சாதியினரும், எல்லா மதத்தினரும் பிரசன்னமாயிருந் தனர். படித்துப் பெரிய பதவிகள் வகிக் கும் சிறியவர்கள்; படியாமல் பெரும் பதவிகளைச் சுகிக்கும் பெரியவர்கள்; அப் புக்காத்துமார்; "மிலிற்றேரி வேலைக்கா ரர்கள்; சொந்தப் பாஷையை நேராகப் பேசத் தெரியாதவர்கள்; குடுமியுடைய பெண்கள்; உஷ்ண வாய்வு ஜுரம் நிமித் தம் தலைமயிர் சிதைந்து, பிறகு வளர்ந்த மயிரை மொட்டையடித்துச் சீராக்கிய கட்டழகிகள் - இவர்களைப்போன்ற பல தினுசான மனிதப் பிராணிகள் வந்து குழுமியிருந்தார்கள். விசாரணை சபைத் தலைவர் மேடைமேல் தோற்றினர். கர கோஷம். பரபரப்பு. சேவகர்கள் புடை
சூழ, குற்றவாளி நடராசனுகவே வந்து,

தமிழ் அறியாப் பெருமான் 6
மேடைமேல் அவருக்கென்று பிரத்தியேக மாகக் குறித்திருந்த இடத்தில் அமர்ந் தார். காறியுமிழ்தல். கல்லெறி . எரு மைக் கடாவில் யமதர்மராஜன் வந்தி றங்கி, அந்நியவுடை தரித்திருந்த சேவக னிடம் கடாவைச் சலக் கரைக்குக் கொண் டேகு மாறு கட்டளையிட்டு, ஒரு காலை மேடைமேல் ஊன்றியதும், சபையிலி ருந்து எறிவெடி, பட்டாசு முதலிய உள் நாட்டு வாணங்களின் பேரொலி கிழம்பி யது. உடனே, அவசர கால அடக்கு முறைச் சட்டம் வாசிக்கப்பட்டது. எங் கும் நிசப்தம் நிலவியது.
நாம் கண்டறியாத பக்கவாத்திய சகிதமாக, எங்களுக்குப் புரியாத பாஷை யில் ‘ஒன்று வந்து பாமாலை பாடிற்று. (குறை நினைக்க வேண்டாம். ஆணுே பெண்ணுே என்று மதிப்பிடச் சக் தி யென்னிடமில்லாதபடியால்தான் இவ்வி தம் குறிப்பிட நேர்ந்தது. மன்னிக்கவும்.) அதற்குத் பின் "இரண்டு வந்து யம தர் மனுக்கும் தலைவருக்கும் பூமாலைகள் சூட்டின விசாரணை தமிழில் நடக்கவிருந் தது. குற்றவாளிக்கு இது புரியாத பாஷை

Page 34
62 பரியாரி பரமர்
யாகையால் "தொலுக்கு' க்கும் துவிபாஷ கர் ஒருவரைச் சேகரித்து வைத்திருந் தார்கள். அப்பாடா! விசாரணை ஆரம்ப மாயிற்று. தலைவர் உனக்குத் தமிழ் தெரியாதென் பது உண்மை தானு?
குற்றவாளி: ஆம். சபையோர்: வெட்கம் - வெட்கம்!! தலை: (மேசைமேல் கையால் தட்டி) உனது தாயார் எங்கே? குற்ற: தயார் என்பது யாது? தலை: உன்னைச் சிறுவயதில் பாலூட்டி, தலைக்கெண்ணெய் வைத்து, உன்னை முத்த மிட்டு வளர்த்த மிருகம். குற்ற அது ஒரு சிங்கள ஆயா!' யமன் மெச்சினேன்.
(சபையோர் சிரிப்பார வாரத்துடன் "சீக் காய்" வலிக்கிரு ர்கள்.)
தலை: சரி, உனது தகப்பன்?
குற்: அதன் அர்த்தம்? தலை; உன்னை இந்தச் சீர்கேடான நிலைக்

தமிழ் அறியாப் பெருமான் 63
குக் கொண்டு வந்த அற்ப பிராணி. அதா வது, உனக்கும் உன் தாயார் அவர் களுக்கும் தேவையான சசல பாக்கியங் களையும் குறைவில்லாமல் பாதுகாப் பதற்கு வருந்தி உழைத்த பாவி,
குற்: அது இருந்த தென்று தான் சொல் லிக் கொண்டார்கள். காலையில் விழிக்கு முன்னர், அது வெளிக் கிளம்பி, நான் தூங் கிய பின்னர் வீடு திரும்பிய அதுதானே! அதை எனக்குத் தெரியாது.
தலை: மிகவும் நன்று. சபையோர்களே! நான் பார்க்குமளவில், இவன் மேல் குற்ற மில்லை. பெற்ருே ரை இன்னரென்று அறி யாத இந்த மூடன் மேல், தாய்ப்பாஷை தெரியாதென்ற குற்றத்தைச் சுமத் தினுல், அப்பாவம் எங்களைச் சார்ந்த தாகும். யம தர்மராஜனே! இதற்கேதும் வழிவகைகளுண்டா?
யம: அடிப்படையிலிருக்கும் மூல காரணங் களைக் கிளறப் போனுல் மன ஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். எங்கள் நாட்டிற்கே கெளரவக் குறைவு வேண்டாம். இவனுக் குத் தக்க புத் திமதிகள் கூறி, இன்னும்

Page 35
64 பரியாரி பரமர்
சில காலம் தமிழ் நாட்டிலே விட்டு, நல்ல பழக்க வழக்கங்களையும் பழக்கித் திருத்த வேண்டுமென்பதே எனது அவா.
எல்லோரும் ஏகமனதாய் வாக்குக் கொடுத்ததின் பின் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 火
றிவாப் :ெ :ானுக்கு அருள் புரிந்த பெருமகனுர், .
 

மேல் ஸ்தாயி
லகத்தில் மகத்தான பதவியடைய, அவ்வாறு பிறக்கவேண்டும். இதற்காகச் சோர்வடைய வேண்டாம். ஏதோ இந்த நவநாகரிக காலத்தில் சில தந்திர”ங் களைக் கையாண்டு மகா மேன்மையான பதவியை அடையலாம். இந்தத் தந்தி ரங்கள் இலேசான சில விதிமுறைகளைக் கொண்டவை. செலவுச் சுருக்கமானவை எ ன் பதுடன் உத்தரவாதமானவை. இவை, பட்டணத்துப் பேர்வழிகள் பல ரால் கையாளப்பட்டு, பெரும் பலனளித் தவை. இதோ அவை: முதன் முதலாக நீங்கள் ஒரு பெரிய ஐஸ்வரியவானென்று உலகத்தார் மதிக்கத் தக்கதாக நடந்து கொள்ள வேண்டும். பூநகரியில் பூந் தோட்டம் , தென்னைமரத்தடியில் தென்
J-9

Page 36
66 ufuun fo Luosi
னந் தோட்டம், கள்ள வெட்டியில் காணி பூமி இருப்பதாக உங்களுடைய உற்ற நண்பர்களைக் கொண்டு (யாராவது இருந் தால்) பிரசித்தம் செய்ய வேண்டும். இந்த ஐஸ்வரியம், உங்களுடைய பேச்சு , சிரிப்பு, நடை, உடை, பாவனை முதலிய வற்றில் தளம்ப வேண்டும். வீட்டிற்குள் என்ன தான் அணிந்திருந்தாலும், வெளி யில் உலாவும் போது கட்டுவதற்கு ஒரு பட்டு வேஷ் டியாவது  ைவத் தி ரு க் க வேண்டும். இந்த வேஷ் டியைத் தினசரி படுக்கைக்குப் போகும் போது, பவுத்திர மாக மடித்து தலையணையின் கீழ் வைத்துக் கொண்டு படுத்தால், துணி சுருங்காமல், வண்ணுன் செலவு சுருங்கி வரும், தெண் டித்து வண்ணுனுக்கு வேலை கொடுக்கப் படாது. அப்படியில்லையென்று வேலை கொடுத்தாலும், பணம் கொ டு க் க ப் படாது. புகைப் படங்களுக்கு நிற்பதற் கும், முக்கிய கூட்டங்களுக்குச் செல்வ ற்கும் காற்சட்டை, கோட், முக்கியமாகத் தலைப்பாகை முதலியன தேவை. அவற் றை அடிப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

மேல் ஸ்தாயி 67
இப்படியான இடங்களில் பேசச் சந் தர்ப்பம் கிடைத்துவிட்டால், அதைவிடத் திவ்வியமானது வேறில்லை. உடனே அதைப் பத்திரிகைகளில் போடும்படி செய்யவேண்டும். இது வெகு சுலபம். இந்தக் "கூப்பன் காலங்களில் என்னைப் போல் எத்தனையோ பத்திரிகை நிருபர் கள் பட்டினியாக - சாதமென்று வாய் விட வெட்கப்பட்டவர்களாக-அலைகிருர் கள். அவர்களை அழைத்து ஒரு விருந்து கொடுத்து, " சலாம் போட்டனுப்ப வேண் டும். பார்த்த இடங்களில், ஒரு கோப்பி, ஒரு சுருட்டு, ஒரு "சலாம். பத்திரிகைக்கா ரர்கள் எங்கே யாவது படம் பிடிக்க நேரிட் டால், உடனே தலையை நீட்டவேண்டும். விடிந்ததும் அடுத்த வீட்டு அப்புக் காத்து வீட்டிலோ, பின் வீட்டு பிரக் கிராசி வீட் டிலோ, பத்திரிகையை இரவல் வாங்கி, "ஐயோ பத்திரிகையை நாய் மென்று தின்றுவிட்டதே' என்று புகார் ஒன்றைக் கிளப்பவேண்டும் இரகசியமாக உங்கள் படத்தை வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் படத்தைத் தெரிந்த வர், தெரியாதவர்களுக் கெல்லாம் காட்
டிக்கொண்டு திரியவேண்டும்,

Page 37
68 Luff'uurts' UITLofi
பிள்ளைகளிருந்தால், கடன் பட்டா வது ஒரு 'பொடியனைச் சர்வகலாசாலைக் கணுப்பவேண்டும். பெண்ணை சிதம்பரத் திற்கோ, சென்னைக்கோ அனுப்பிச் சங்கீ தம் படிப்பிக்கவேண்டும். சங்கீதம் பயின்று திரும்பியதும், இரண்டு மூன்று கச்சேரிகள் செய்யவேண்டும். கச்சேரி சோபித்தாலென்ன, விட்டாலென்ன. உபசரிக்கப்பட்ட பத்திரிகை நிருபர்கள் தானே இருக்கிருர்கள்? அவர்கள் பார்த் துக்கொள்வார்கள். ரேடியோவில் பாடு வதற்கும் மனு எழுதிப்போடுங்கள். அந் தப் பாக்கியம் மட்டும் கிடைக்காதென் பது நிச்சயம். இந்தச் சமயத்தில்தான் உங்கள் சாமர்த்தியத்தை காண்பிக்கக் கொடுக்கிழுத்துக் கட்டவேண்டும். உமது சிநேகிதர்கள். ஆலோசனை. கதை கிளப் புதல்.குற்றச்சாட்டு பிரமுகர்கள் பிற் கதவில் சந்தித்தல், இரண்டு மூன்று மனு திரும்பவும் ஆலோசனைச் சபை.இதற் குள் நீங்கள் பிரசித்தியும் கீர்த்தியும் அடைந்து விடுவீர்கள்!

மேல் ஸ்தாயி 69
உங்களைக்கூட சில சமயத்தில் ரேடி யோகாரர்கள் "காற்றில் நிற்கும் படி அழைப்புப் பத்திரங்கள் அனுப்பியபடியே இருப்பார்கள், உங்களுக்கு ஏற்ற விஷய மாக இரண்டொரு பதார்த்தம் தயா ரித்து ஆயத்தமாக வைத்திருக்க வேண் டும். ' சரீரமும் சாரீரமும்', ' கழுதை யும் கானமும்' என்ற விஷயங்கள் பற்றிப் பொழிந்து தள்ள வேண்டும். அப்படி அவர்கள் அழைக்கா விட்டால், ‘என்னை ஏன் கூப்பிடவில்லை? என்னை யாரென்று தெரியாதோ?’ என்று உங்கள் யோக் கியதா பத்திரங்களில் சிலவற்றையும் சேர்த்து ஒரு "வெருட்டு விடவேண்டியது தான்.ரேடியோவில் நிரந்தரமான உத்தி யோகம் கிடைத்தாலும் கிடைத்துவிடும்!
பிற்குறிப்பு: பிற ஊர்களிலிருந்து யாராவது பெரியவர்கள் வந்தால் புகை யிரத நிலையத்திற்குச் சென்று அழைத்து வந்து, விருந்து போடவேண்டும். தேர் தல் விஷயங்களிலும், அரசியல் விவகாரங் களிலும் தலையிடவேண்டும். கல்யாண

Page 38
70 Lurfo LuTf LuTui
விடு சாவீடுகளில் "முள்" நின்று "நடத்த" வேண்டும். இப்படியாக இரண்டு &l Ա5 ஷங்கள் செய்து வாருங்கள். ஆணுல் ஒன்று, இந்த ஆலோசஃனகளால் மேல் ஸ்தாயியை அடைந்துவிட்டேனே யென்று ஏழை 'சாணு ' வைக் கண்டால் எறிந்து
நடக்கவேண்டாம்.
மேல் விநாபி حیختصر
(அபிமாவிகளுக்கு மாந்திரம்) \چ
கீழ் ஸ்தாபி
இரசிகர்களுக்கு மாத்திரம்
 
 
 

அம்பட்ட அம்பலவன்
அம்பலம் வருகிருனென்ரூ ல், வீடு களிலெல்லாம் ஒரே ஆரவாரம் சரியாகச் சோன் ஸ்ட் போஞல் அம்பலம் அரசாங்க ரயில் மாதிரி.சாதாரணமாக இரண்டு நிமி டங்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்கமாட் டான். பெரிய இடங்களில் சிலவேண்களில் பதினேந்து நிமிடங்களும் த ங் குவா ன், அங்கு தனக்கு ஏதாவது ஆதாய வேலே இருந்து விட்டால், மனிக் கணக்காகும் கிரைம்ப .
வாட்டசாட்டமான தேகம் , ரெயின் நிறம். "கிராப்'தலே. நெற்றியில் குறி. முழங்காலுக்கு மேல் வெள்ளே வேட்டி கட்டி, அதைத் தளர விடா வண்னம் ஒரு சால் வைத் துண்டை அதைச் சுற்றி இறுக்கியிருப்பான். இரு கையிலும் மோதி ரங்கள். ஒன்று சங்கு. மற்றது 'சொகு 1ா' இடப் பக்கத்திலிருக்கும் தோற்

Page 39
72 Luf'uum fî uyupi
பையில் இருந்து ஒரு கத்தி, கத்திரி கோல், முறிந்த சீப்பு, பழந்தோல், கல், * கிளிப்பா' முதலியன வெளியே தலை காட்டும்.
அம்பலம் மலாய் நாடு போய் திரும் பியவன். குவா லாக்கன் சுவில் பெரிய சலூனி லே வேலை பார்த்து, பிறகு தன் னுடைய சொந்த வியாபாரத்தைக் கிளாந் தனிலே நடத்தி வந்தவன். தலைமயிர் வெட்டுவதற்கு, குப்பிளான் ஏழா லை முதலிய பிரதேசங்களில் இருந்து தெல் லிப்பழையை நாடுவார்கள்த அம்பலத் தின் தலைமயிர் வெட்டுக்குப் பிறகு, தலை யைத் தடவினல், அதிலேயே ஒரு தனிச் சுகம் இருக்கின்றது.
எங்கும் அம்பலத்தைக் காணலாம்: சிலருக்கு 'ஒரு நாள் ஒரு பொழுதாவது அம்பலத்தைத் தரிசிக்காது விட்டால் "அந்தரமாக'இருக்கும். அநேக மாக ப் பெரிய புளிய டி யில் அம்பலத்தைப் பேட்டி காண்போர் மொய்த்துக் கொண் டிருப்பார்கள். அம்பலம் வரும் வரையும் சிலர் பொழுது போக்காக, "டாக்-டீக்

அம்பட்ட அம்பலவன் 73
டொக்" அல்லது ‘நாயும் புலியும் முத லிய ஆட்டங்கள் விளையாடிக் காலங் கழிப்பார்கள். அம்பலம் தோன்றியதும் அக்கம் பக்கத்து வீடுகளில் த ன் னிர் வாங்கி, முகத்தை நனைத்துக் கொண்டு வரிசையாக நிற்க வேண்டியதுதான் , அம்பலம் சிரை சிரை யென்று, சிரைத் து ஒதுக்கிவிடுவான்! சூடுள்ள தேகக்காரர் இதற் கிடையில் ஒரு தரம் பூசிய தண்ணிர் காய்ந்து போக, மறுதரம் பூசவேண்டியும் வரும் . அ ன் று தா ன் அம்பலத்துக்கு ஆனந்தம் , அலைச்சலில் லே நின்ற நிலை யில் வேலை. p
அம்பலம் கால் மிதியாத இடங்களே கிடையாது. பெரிய இடத்துப் படலை தொடக்கம் , குச்சு வீட்டுத் தட்டி மட்டும் அம்பலத்துக்கு "நடப்பு’. அவனே க் கண் டால் குழந்தைகளுக்கு குடல் நடுக்கம். அம்பலம் என்ரு ல் குழந்தைகள் அழும் , பெயருக்குத் தகுந்த படி அம்பலம் பெரும் சிவபக்தன் மற்றும் கோவில் களைப் பார்க் கிலும் தச் சங்கடவைக் காளிகோவிலுக்குத் தான் பயமதி கம். சைவ முறைகள் த வரு தவன். காளிகோவிலில் வருடா வருடம்
J-10

Page 40
74 பரியாரி பரமர்
நடக்கும் “வேள்வி'யில் கொழுத்த கிடாய் ஒன்று பலி கொடுப்பான். நன் ரு க க் குடித்து, ஆட்டையும் சாப்பிட்டு, மனைவி யுடன் ஐந்தாறு நியாயம் பேசி, தலை நிமிர்த்த முடியாமல், கை கால் ஓய்ந்து ஒரு மூலையில் சாய்ந்து விடுவான். அன்று தான் அம்பலத்துக்கு ஓய்வு நாள். திரு நாள்!
ஆலமரத்தடி வயிரவ கோயிலில் மடை நடக்கிற காலங்களில், அப்பலத் துக்கு “உரு ஏறும். அரசாங்க சபையில் எங்கள் பிரதிநிதிகள் மாதா மாத ம் பெறும் சம்பளத்திற்காக, ஊர்களிற் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி, ஒருவருக்கு ஒருவர் 'குஸ்தி போட்டு, "உரு’க் கொண்டு, சந்நதங் கொண்டு ஆரவாரப் படுவார்களே, அதே மாதிரி அம்பலமும் "உருக் கொண்டு சந்நதங் கொண்டு, ‘கோயிலைச் சுற்றி வர மதில் கட்ட வேண்டும். மாதம் ஒரு முறை எனக்குச் சர்க்கரைப் பொங்கல் பொங்க வேண்டும்' என்பன போன்ற பிரகட னங்களைப் பிரே ரிப்பான். அர சாங்க
சபைப் பிரதிநிதிகளைப் பற்றி எனக்கு

அம்பட்ட அம்பலவன் 75
அனுபவமதிகமில்லை. ஏன், அக்கறையு மில்லைத் தான். ஆணுல், அம்பலத்தின் சொற்கள், உடனே அம்பலத்தில் ஏறும் . பழைய நாட்களிலே கொழும்பு-கறுவாத் தோட்டப் பகுதியிலிருந்து எங்கள் பகுதித் தேர்தலுக்கு வருகிரு ர்களே ஆகையால், அம்பலத்தையும் ஒரு தரம் அனுப்பி வைத்தாலென்ன என்று நாங்கள் எல் லோரும் சிறுவர்களாயிருந்த பொழுது யோசித்ததுண்டு. அனுப் பி யிருந்தால், எவ்வளவு உசிதமாய் இருந்திருக்கும். நினைத்த காரியத்தை அம்பலத்துரை யைப் பிடித்து கையோடை செய்து முடித்திருக்கலாமே.
இப்படியாக அம்பலம் சந்ந தம் ஆடிக் கொண்டிரும் அதே நேரத்தில், பூகாத் தை என் ருெரு பெண்ணுக்கும்*உரு‘ஏறும் , சிறிது சிறிதாகத் தொடங்கி, பூகாத் தையின் பூத உடல் அ ைசந்து ஆடிக் குதித்து ஆவேசங் கொள்ளத்தொடங்கிப் பெரிதாய், பெரிது பெரிதாகி விடும். அச் சமயம் அம்பலத்தைக் கைவிட்டு, பூகாத் தையைப் பார்க்க ஓடி விடுவார்கள் . சின்ன மேளம் என்ருல் நன்ரு ய்த் தான் விட்

Page 41
76 Lifunf urtoir
டார்கள் எங்கள் ஆட்கள். அன்று அம் பலத்தைக் கைவிட்டவர்கள், எல்லோ ரும் அடுத்த நாள் அம்பலத்தின் வரவை ஆத்திரத்துடன் காத்திருந்திருப்பார்கள். அம்பலத்தின் அருமை அப்பொழுதுதான் தெரியும்.
ஒய்வு நேரங்களில் அம்பலத்திடம் அகப்பட்டு விட்டால் ஒரே "புளுகு'தான். தான் சிங்கப்பூரிலே செய்த அற்புதங் கள், அதிசயங்கள், அநியாயங்கள் எல் லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரும். சிங்கப்பூரிலிருந்து வருகிறவர்கள் புளுகர்கள். அதிலும் அம்பலத்தின் சாதியினரென்ரு ல் சொல்லத் தேவை யில்லை. அப்படியானல், சிங்கப்பூரிலிருந்து திரும்பிய அம்பலத்தைப் பற்றிய வியாக்கி யானம் அவசியமில்லை சிங்கப்பூரில் அவ னுக்கு அதிகமாகப் பிடித்தது மூ ன்று சதத்துச் சீனன் கோப்பிதானம் , "அது ஒன்று குடித்தாலே போதும் முழுநாளும் சாப்பாடே தேவையில்லை" என்பான்.
மலாய்க்காரரின் ரொங்கிங்" கூத்
துக்கூட அம்பலத்திற்குத் தெரியும். அம்பலம் "ரொங்கிங்" ஆடி, அப்படிச்

ஆம்பட்ட அம்பலவன் 77
சுழன்று வந்து, ஒரு சிரிப்புப் போட்டா னென்ரு ல், கடைவாய்க்குள் ம  ைற ந் திருந்த சீனன் கட்டிய பொன் பல்லு மின்னி மறையும். மலாய்க்காரர் மாதிரி சாரத்தைச் சுருட்டிக் கட்டியிருப்பான். அதற்குப் பெயர் 'லுங்கி என்பான். சிங் கப்பூரிலிருந்த இன்னுெரு வரைச் சந்தித் தால், அவன் தமிழை மறந்து விடுவான். உடனே மலாய்ப் பஷையில் இருவரும் பேசத் தெடங்கி விடுவார்கள். எங்களுக் குப் பெரும் ஆச்சரியமாய் இருக்கும். "நீங்கள் இனிமேல் நிற்பதில் பிரயோசன மில்லை' என்ற தோரணையில் அம்பலம் பரிதாபமாய்ப் பார்ப்பான். புளுகு கேட் கப் போன எல்லோரும் வீடு திரும் ப வேண்டியது தான்.
கலியாணவீடு, செத்த வீடு முதலிய தினங்களில் அம்பலம் தனது மூ ன்று வயது மொட்டையனுடன் தோன்று வான் , அந் நாட்களில் வண்ணுர வயிர முத்துவுக்கும், அப்பட்ட அம்பலத்திற்கும் யார் சாதியில் குறைந்தவர்கள் என்ற பெரிய விவகாரம் கிளம்பும். அதிலிருந்து சிறு சண்டையும் எழும்பும். ஆன ல்,

Page 42
78 பரியாரி பரமர்
கிரியைகளை நிதானமாகக் கவனித்து வரு வான் அம்பலம். அணுவளவும் பிசக மாட் படான், பெண்ணுக்கோ ஆனு க் கோ *தோய வார்க்கும் நேரங்களில் வாழ்த் துவதற்கு வாயைத் திறந்தால் எண்ணுரறு யாருக்குள் இருக்கிறவர்களுக்கு தூக்கமே கிடையாது ஒரே ஏ க் க ம க த் தா ன் இருக்கும்.
சில நாட்களுக்கு முன் அம்பலத்தைச் சந்திக்க நேர்ந்தது. கூப்பன் கொடூரத் தினுல் , வயிறு ஒட்டிக் கிடந்தது, கையும் காலும் தளர்கிற பருவம் . நான் கடை சியாகச் சந்தித்து, இப்போது பதினெட்டு வருடங்களாகின்றன. அப்பொழுது அம் பலத்திற்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். ' என்ன அம்பலம் எப்படித் தொழில் சுகங்கள்?' என்று கேட்டேன். "என்ன வும் உங்களைப் போலயோ இப்போ தை யப் பிள்ளைகள் சீ! முளைக்க முந்தி "செளரம்" பண்ணத் தொடங்கி விட்டார் கள். அதுவும் ஒவ்வொருத்தரிடமும் ஒவ் வொரு ஆயுதம் வீட்டிலே கிடக்கிறது. அதாலே போட்டுச் சுறண்டு கிருர்கள் . மயிர் வெட்டுகிறதென்ரு ல், பட்டணத்

அம்பட்ட அம்பலவன் 79
துச் சலூனுக்குப் போகினம். என்ன எடுப்பு . ஏன் முந்தி உங்களுக்கெல்லாம் நான் தானே வெட்டுகிறனன் . ஏன் உங்க ளுக்குத் தலையிலே எப்போதாவது பழுது கிழுது வந்ததோ?' என்று வெகு மன்ருட் டமாகச் சொல்லி மேலும் பல குறைகளை இப்போதைய நாகரிக யுவர்கள் மீது சுமத் துவான். அவற்றை நான் சொன்னல் ஒரு வேளை "இவர்கள்" அவனே டு சண்டைக் குப் போகக் கூடும். எங்களூர் பிள்ளைகள் அல்லவா? என்ன நடந்தாலும், "போர்த்து' மறைக்க வேண்டியது எங்கள் கடமை.
"அது இருக்க, உனக்கு ஒரு மொட் டையன் இருந்தானே அவன் எங்கே?' எ ன் றே ன். "அதேன்தம்பி சொல்ல?" கண்களைக் கசக் கத்தொடங்கினன். "இந் தக் கேள்வியை ஏன் கேட்டேன்' என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன். * யப்பான் சிங்கப்பூரைப் பிடிக்க ஒரு வரு டத்துக்கு முன்தான், அவனுடைய மச் சான் காசானிலே இருந்து தந்தி அடித்துக் கூப்பிட்டவன். வோன வன்தான் தம்பி; எட்டுக் கடுதாசி போட்டேன். அதுக்குப் பிறகு யாரோ சொன்னர்கள் சிங்கப்பூரை

Page 43
80 அம்பட்ட அம்பலவன்
யப்பான் பிடித்துவிட்டான் என்று. மெய் தானு தம்பி?’ என்று அழுதவண்ணம் கெஞ்சினன் . 'அதற்கென்ன இப்போ? ஒன்றும் நடந்திருக்கமாட்டாது. அவர்க ளுடன் சீவியம் பண்ணுகிறதென்ருல் பெருங் கஷ்டமாக இருக்கும். பெரும் தொந்தரவுக்காரர். ஏன் உனக்குத் தானே தெரியும் யப்பானைப் பற்றி?' என்றேன். 'ஒமாக்கும் தம்பி; எனக்கும் ஒரு ஐம்பது அறுபது யப்பானைத் தெரியும் . முந்தி என்னுடைய கடைக்குத் தான் செளரம் செய்ய வாறவர்கள். பொல்லாத ருங்கிக் காரர்கள்’’ என்ரு ன். "அப்படியானல் எங்களுடைய ஆட்கள் ?" என்று இழுத் தேன். அழுதுகொண்டிருந்த அம்பலம் கண்ணைத் துடைத்துவிட்டு, ‘ தங்கக் கம்பி கள் . தட்டினுலும் வளையாது. செ ல் ல ப் பிள்ளைகள், காலையிலே உலாத்த ஒரு உடுப்பு; மத்தியானம் சாப்பிட ஒரு உடுப்பு கந்தோருக்கு ஒரு உடுப்பு: பின் னேரம் பந்தடிக்க ஒரு உடுப்பு: இராச் சாப்பாட்டுக்கு ஒரு உடுப்பு. இனி இர விலே "டான் சு" என்ன? சொகுசாய் சீவிக் கிறவர்கள் கறண்டி முள்ளென்ன . பல்லுமினுக்க * பிறவு' என்ன. எவ்வளவு

அம்பட்ட அம்பலவன் 8
துப் பரவு? எவ்வளவு குதூகலம். யப்பா னுேடை இவர்களையும் நேருக்கு வைத்துப் பேசுகிறீரே. படித்தும் புத்தியில்லையாக் கும் தம்பிக்கு!? என்று புத்தி புகட்ட தொடங்கினன்.
அம்பலம் தன் தொழிலையும் குடும் பத்தையும் குறைவில்லாமல் நடத்தி வரு வதாகக் கேள்வி. ஆனல், மகன் யப்பா னிடம் சிக்கிக்கொண்டானே என்ற துக் கம் தலையைக் கொஞ்சம் குழப்பிவிட்டி ருக்கிறது. போஸ்ற் மாஸ்ரருக்குச் செள ரம் செய்யும் போதெல்லாம் தன்னு டைய மகனிடம் இருந்து ஏதாவது தந்தி, தபால், "போஸ்ற் காட்” வந்திருக்
கிறதோ என்று மட்டும் கிரமமாக விசா ரித்து வருகிருஞம்: 六
J-11

Page 44
சாதி பேதம்
வெனுெருவன் தமிழனுகப் பிறக்கின் ருனே, அவனுடன் சாதியும் பிறந்து விடு கின்றது. இதைத் தடுக்க எத்தனையோ மகான்கள் எத்தனித்தும் பயனில்லை. பெரியோர்கள் 'சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால்.’’ என்றே பாடினர்கள் மானிட மர்ம சாஸ்திரிகள், ஆண்களையும் பெண்களையும் பல சாதிக ளாக்கி யிருக்கிருர்கள். மானிடப் பிறவி யெடுத்த இவர்களை மிருகங்களோ டொப் பிட்டு எல்லோரையும் மிருக சாதிகளாக மாற்றியுமிருக்கிருர்கள்.
ஆண் சாதிகளுள் சிலர் நாடக மேடை மீது "பெண் சாதி"யாகி விடுகிரு ர்கள்! பெண் சாதிகளிற் சிலர், தத்தம் வீடுகளில் 'ஆண்சாதி"யாகி ஆதிக்கஞ் செலுத்துகின் ரு ர்கள். ஆண் சாதியும் பெண் சாதியும் சேர்ந்து சில காலங்களில் மிருக சாதியாகி விடுகிருர்கள் . சாதியென்ப தெல்லாம்

சாதி பேதம் 83
பொய்-மாயை! என் முன்பு இவைக ளெல்லாம் ஒரே சாதியாகத் தான் தோற் றுகின்றன.
அங்கபேதங்களின் மூலமாக நாம் ஆண் சாதியோ பெண் சாதியோவென உடனே தெரிந்து விடுகிருேம். அங்க பேதங்களை ஆதாரமாகக் கொண்டு இவ் விரு சாதிகளையும், மானிட மர்ம சாஸ் திரிகள் கூறிய வண்ணம் , இவர்களின் உருவ அளவை நிதானித்து, எந்த மிரு கத்தை ஒத்திருக்கிருர்கள் என்பதையும் அறிந்து விடுகிருேம். S.
ஆணுல், எல்லாவற்றிற்கும் மூல கார ணம் நாதம். நாதத்திலிருந்து தான் இம் மாயா உலகம் உற்பத்தியானது. மெல் லிய காற்றிலும் நாதம்-மலைப் பாறை களிலிருந்து சொட்டும் ஒவ்வொரு நீர்த் துளியிலும் நாதம்-கரை புரண்டோடும் வெள்ளப் பெருக்கிலும் நாதம் - எங்கும் நாதம்-நாத மயம்! ஆகையினல், நாதம் என்னும் ஒரே சாதியை, அவற்றிலிருந்து பிறக்கும் நாதத்தைக் கொண்டு, பல சிறு சாதிகளாகப் பிரிக்க முயல்கின்றேன்.

Page 45
84 fu ufrifo uyor
நாதத்தைக் காரணமாகக் கொண்டு, சாதி வித்தியாசம் பாராட்டும் எனது கட் டுரை, ஆண் சாதிகளுக்கும், பெண் சாதி களுக்குமிடையே பெரும் கலாதியை உண்டுபண்ணக் கூடுமென்று சந்தேகம் எழுப்பும் கேள்வி ஒன்று என் காதுகளிலே விழுகின்றது. ஆராய்ந் துணர்வதற்குத் தகுந்த 'தளவாடங்கள்" எங்களிடத்திலி ருக்கின்றன; மிருகங்களிடத்து மிருக்கின் றன. மிருகங்களை ஒத்திருக்கும் எங்களுக்கு நான் மேற்கூறியபடி கலாதி யுரு வெடுக்கு மென்ற உணர்ச்சிஏற்படுமானல், இதற்கு மேல் இக்கட்டுரையை வாசிக்கவேண் டாம். பயப்படாதோர் தொடர்ந்து வாசிக்கட்டும்.
யாழ்ச்சாதி: தேசம் விட்டுப் பிறதேசம் சென்று, உண்மை ஞானத்தை வெளிக் காட்டி, புகழும் பட்டமும், தனக்கொரு பட்டினமும் பெற்றுத் தனது சாதியின ருக்கும் அப்புகழை ஊட்டி மகிழ்விப்பவர். யாழ்ப்பாணத்தவர்களுள் உ எண் டா ன சாதிகளில் இதுதான் ஆதி. இதைக் குருட் டுச் சாதி என்று நாங்கள் இப்போது சொல்லிக்கொள்கிருேம்.

சாதி பேதம் BS
சங்குச்சாதி வருடத்திற் கொருமுறை , பனிக்காலங்களில் சில நாட்களுக்கு, சூரி யோதயத்திற்கு முன் தோன்றி மறையும் பக்தகோடிகள். இந்நாட்களில் அவர்களு டன் சேர்ந்து நாமும் பாடுவோம்; அவர் கள் தூங்கினல் நாமும் தூங்குவோம். இது பனிக் காலங்களில் உற்பத்தியாகும் ஒரு ‘விசாதி யென்றும் பலர் கருதுவர். தற்போதைய வயித்தியர்கள் இதைக் குளிர் வாய்வு, என்பர்.
சேமக்கலசாதி முன் குறித்தபடி, வருட மொரு முறை கிளம்பிச் சங்குச் சாதியின் அமர்க் களத்தை யடக்கும் எண்ணத்து டன் தொண்டு புரிந்துவரும் ஒருவித குழு வினர். தனியாக இருக்கும் வரை தீங் கற்றவர்கள். இவர்களை யாராகிலும் தட் டிக் கொடுக்கவேண்டும். இவர்களிடம் வரம் வேண்டின், யாரும் அணுகலாம். பெரியார் - சிறியார் - அறிவுடையார் - அறிவிலர் என்ற வித்தியாசம் பாராட்டா உத்தமர்கள்.
வயலின் சாதி: இது அநேகமாகப் பெண்மணிகளுள் தோன்றும் ஒரு பிற சாதி. பெற்றேர்களால் தங்கள் குமாரி

Page 46
86 பரியாரி பரமர்
களின் தோள்களில் சுமத்தப்பட்டது. உலக சீவியத்தில் தத்தளித்துக்கொண்டி ருந்த எத்தனையோ குமர்கள் இதை உதவி யாகக் கொண்டு கரை சேர்ந்திருக்கிருர் கள் . மதனது வில்லு, இவர்கள் கரங் களில் எப்பொழுதும் காட்சியளிக்கும். உற்சாகப்படுத்துவதற்கு குங்கிலியம் அவ சியம். பெற்றேர் தின விழா-பரிசளிப்பு விழா-பிரியா விடை விழா முதலிய உற் சவ காலங்களிலே இவர்களுடைய சேவை தேவையானது. மேலைத் தேசங்களிலும் இச்சாதியினர் சஞ்சரிக்கின்றனர், இஃது ஒரு கலப்புச் சாதி,
ஒத்துது சாதி: கர்நாடக முறைகளின் படி, இவர்கள் உயர்ந்தவர்கள். இவர் களை நிதானித்துத் தான் மற்றவர்கள் நடக்க வேண்டுமென்று தரும நூல்கள் கூறுகின்றன. ஆனல், இம்முறையை வெகு சிலர்தான் பின் பற்று கிருர்கள், இச் சாதியினரது பார்வை அநேகமாகக் கீழ் நோக்கிய வண்ணமாகவே யிருக்கும். சில காலங்களில் விட்டுக் கொடுத்து விடுவார் கள் . சனத் தொகை குறைவான சங்கங் களிற் சல்லாரி சாதியின் பிரதிநிதியாக வும் தோற்றுவர். இவரையடக்குவது,

சாதி பேதம் 87
நாதஸ்வர சாதியினரின் தனியுரிமை. உற் சவ காலங்களிலும், மற்றும் சுப தினங் களிலும் இவர் தவிற்சாதி, நாதஸ்வர சாதி முதலிய சாதிகளுடன் ஒத்துழைப் பர். அவர்களுக்குக் கிடைக்கும் சன்மா னங்களைச் சுமந்து செல்வது இவர் பொ றுப்பு. சன்மானங்களில் இவர் பங்கு சொற்பம். இவ்வுலக வாழ்க்கைக்கு இச் சாதியினர் அத்தியாவசியம். ஆல்ை, நாம் இதற்கிணங்க மாட்டோம். எச்சுப கருமத்திலேனும் இவர்கள் வாய் திறந் தால்தான் மற்றவர்கள் திறப்பார்கள். இவர்களை ஊமைச் சாதியென்றும் அழைப்
T.
நாதஸ்வரசாதி: தூரப் பார்வைக்கு, ஒத்தூது சாதியினரைப் போலிருப்பார் கள். சமீபத்தில் "கண் கூர்ந்து பார்த் தால் அவர்களின் விசேட அம்சங்கள் விளங்கும். இவர்களிற் சிலர் பேசும் போது தொண்டை யடைப்பு, கரகரப்பு முதலிய 'விக்கினங்கள் ஏற்படும். அந் நோய்களைக் கிளறிச் சுத்தம்பண்ண ஏற்ற சூரணங்களைக் கைவசம் வைத்திருப்பார் கள். இவ்வானந்தக் கோட்டைகளுக்குப் பல ஓட்டைகளும் உள.

Page 47
88 பரியாரி பரமர்
சல்லாரிசாதி: உலகத்தில், உண்மை யாகி மெச்சத் தக்க நிலையில் யார் இருக்கி முர்களோ அவர்கள் தான் இச்சாதியைச் சேர்ந்தவர்கள். கணக்கு வழக்குகளைச் சரிவர அமைத்து, அடிக்கு அடி வைத்து, அடி த வருது நடப்பவர்கள். கால வித்தி யாயங்களினல் உண்டாகும் சில சச்சர வான நேரங்களில் இவர்கள் முறை பிசகு வதும் உண்டு. இதைக் காரணமாகக் கொண்டு நாம் இவர்களைத் தள்ளி வைக் கக் கூடாது. காலம் மாற மாற, எப்படி யாவது சமாளிக்க வேண்டுமென்ற உத் தேசத்துடன் தமது பாட்டுக்கு இழுபட்டு விழுவதே இவர்களின் உதார குணத்திற் குச் சான்ற கும். மற்றும் சாதியினருக்கு இயைந்த படி தாளம் போடுவதும் இவர் களினது பிறப்புரிமை. இந்நவீன முறை யைக் கைவிட்டால், இவர்கள் பிழைப்பது கஷ்டம் . பொதுவாகக் கூறின் இவர்கள் ஒரு அமைதியான சாதி.
பியானேசாதி: இவர்கள் மேலைத் தேசத் திலிருந்து வந்த பல சாதிகளுடன், பகி ரங்கமாக வந்து சேர்ந்த பரதேசிகள். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் பலர், எங்கள் தமிழ் மக்களில் இருக்கிரு ர்கள்.

சாதி பேதம் 89
இவர்களில் நூற்றுக்குத் தொண்ணுரற் ருெ ன்பதே முக்காலும் பெண்களே. கலி யாண விடயங்களில் இவர்களுக்கு ஒரு வித "விக்கனமும் இல்லை. இச்சாதியைப் பற்றி எனக்கதிகம் வராது. கொழும்பி லும் யாழ்ப்பாணத்திலும் இச்சாதியார் கள் ஆயிரக்கணக்காக இருக்கிரு ர்கள். *
J-12

Page 48
பத்திரிகாபிமானம்
வளருமா?
ழெக்கமாகக் காலையில் நித்திரை விட் டெழும் போது வலப்பக்கம் புரண்டெ ழும்பும் நான் இருபத்தைந்தாம் திகதி காலை வலப்பக்கம் திரும்பியதும், பக்கத் தில் தேள் இருக்கக் கண்டு, இடப் பக்கம் புரண் டெழுந்தேன். வழக்கமாக இரட் டைத் தும் மலிடும் என் குழந்தை அன்று ஒரு தரம் தும் ம, நான் நூறென்றேன், நூற்ருெ?ன்று சொல்லும் பாக்கியம் எனக் குக் கிடைக்கவில்லை. எனக்கு தினந் தோறும் காலையில், கோப்பி கையிலேந் திச் ‘சகுனம் அளிக்கும் என் மனைவியின் தரிசனம் கூட அன்று கிடைக்கவில்லை. ‘இதென்ன அபசகுனம்' என்று எண்ணிய வாறு, 'கோப்பி' என்றேன். மனைவி மெளனமாக இருந்தாள். "என்ன சீனி யில்லையா? போன மாதந்தானே அரைக்

பத்திரிகாபிமானம் வளருமா? 9
கால் ருத்தல் சீனி வாங்கிக் கொட்டி னேன்' என்று என் அடிக்கிடக்கையை அவிழ்க்க முன், **சீனியெல்லாமிருக் கிறது. கோப்பித்துரள் தானில்லை' என் ருள் என் மனைவி. இந்த விருத்தாந்த மெல்லாம் இருபத்தைந்தாம் நாட்காலை என் வீட்டில் நடந்தவை.
கந்தோர் சேர்ந்ததும், குதூகலமாக இருக்கும் எங்கள் ஆசிரியர் குழுவினர் அன்று ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்தி ருந்தனர். ஆசிரியரைப் பார்த்தேன். தலையைத் தடவிக் கொடுத்துக்கொண்டே மேசையைப் பார்த்துக் கொண்டிருந்தார். மேசையை நோக்கினேன். இருபத் ைதந் தாம் திகதி "சிம்லாவில் மகாநாடு" என்ற தலையங்கத்துடன் ஒரு பத்திரிகையிருந் தது. விளம்பர அதிபர் வித்தியாசமாக இருந்தார். சந்தா அதிபர் சமநிலையை இழந்திருந்தார். உதவியாசிரியர் உற் சாகமின்றி இருந்தார். கந்தோரில் நிசப் தம் உலவிற்று. காரணம்? சிம் லா மகா நாட்டின் மர்மம் வெளியானல்தான் இவர்கள் வாய் திறப்பார்களோ? ஒவ் வொரு தனிமுறையான கொள்கையை

Page 49
92 ufuumff Lytosi
அடிப்படையில் வைத்துக் கொண்டுதான் பத்திரிகை நடத்துவது சகஜம். இன்றைய கொள்கை பேசாமையாக இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் நானும் வாய் திற வாது என் ஆசனத்திலமர்ந்து 'ஆ' வென்று கொண்டிருந்தேன். இந்தியாவின் சுதந்திரத்தில், இவர்களுக்கு என்ன சிரத்தை? சிம்லா மகாநாடு வெற்றிகர மாக முடியவேண்டுமென்று பிரார்த்தனை செய்கிரு ர்களோ? 'இன்றைய மெளனத் திற்குக் காரணம் தேசாபிமானமோ?" என்று வினவினேன், 'இல்லை, இல்லை பத் திரிகாபிமானந்தான் காரணம்,' என்ருர் ஆசிரியர். 'அபிமானத்திற் கென்ன வந்து விட்டது? தமிழ் மக்கள் யாழ்ப்பாணத் தில் உயிரோடிருக்கும் வரை அபிமானம் இருக்கத்தான் செய்யும். அதற்கென்ன கடும் யோசனை?’ என்றேன் நான். அவர் என்னைப் பார்த்து, 'பத்திரிகை-அதற் கொரு அபிமானம்-இதோ, இதை வாசித்துப் பாரும்' என் ருெரு கடிதத்தை நீட்டினர்.
**.வணக்கம் யான் சென்ற இரு மாதகாலமாக இருபத்தினன்கு கட்டுரை களும், பதினெட்டுச் சிறு கதைகளும் பிர

பத்திரிகாபிமானம் வளருமா? 93
சுரத்திற்காக அனுப்பியுள்ளேன். அவற் றைப் பிரசுரியாததின் ஏதுக்கள் யாவை? நான் சந்தாதாரணுகச் சேர்ந்ததன் நன் னுேக்கம் என் எழுத்துக்களை மற்ருே ர்க் கும் புகட்டும் பொருட்டே, உங்கள் பத் திரிகையில் வாராவாரம் வெளியாவதெல் லாம் குப்பை கூளங்களே. ஆகையால், தொடர்ந்தும் நான் சந்தாதாரணுக இருக்க விரும்பவில்லை. அத்துடன், எனது மற்றைய நண்பர்களும் அங்ஙனம் செய் யவே உத்தே சித்துள்ளார்கள். ' என் றும், இன்னும் பல திட்டுக்களும் அக் கடிதத்தில் இடம்பெற்றிருந்தன, “இதன லென்ன இடுக் கண் நேர்ந்து விடப் போகி றது? அவரின் ஒரு கட்டுரையையாவது போட்டுத் தொலைத்துத் திருப்திப்படுத்து வதுதானே?’ என்று சந்தாப் பணம் பெருகவேண்டும் என்ற நல்லெண்ணத் துடன் சந்தா அதிபர் வேண்டினர். 'சும்மா இரும். குப்பை கூளங்களையெல் லாம் போட்டால் பத்திரிகைக்கு மதிப் பெங்கே?" என்று ஆசிரியர் சீறினர். 'பத் திரிகையில் காலியாக இடமிருந்தால் சொல்லுங்கள். யுத்த காலத்தில் மேல திகமான விளம்பரங்கள்தான் வருகின்

Page 50
94 பரியாரி பரமர்
றனவே, ஒன்றைப் போட்டுக் காசாக்கு வது தானே?' என்ருர் விளம்பர அதிபர். இம் முப்பெருந் தலைவரின் முடிவை எதிர் பார்த்த வண்ணமாக உதவி ஆசிரியரும் நானும் அடக்கத்திலிருந்தோம் . " " என்ன சான, ஏதாவது சொல்லித் தொலையும்' என்று என் மீது தாவினர் ஆசிரியர்,
* நெடுநாளாகச் சொல்ல வேண்டு மென்ற பேரவாவுடனிருந்த எனக்கு, இன்று ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு என் வந்தனம், "" (கைகூப்பி, தலை குனிந்து, ஒரு கும் பிடு போட்டு) என்று எனது பிர சங்கத்தைத் தொடங்கினேன். 'இந்தச் சிறு மிரட்டலுக்கு நீங்கள் இவ்வளவு யோசனை செய்தால், உண்மையாகத் தலை போகிற காரிய மென்ருல் த%லயையே இழந்து விடுவீர்களோ? பத்திரிகையை வாங்கக் கூடாது, வாசிக்கக்கூடாது என்று நேர்முகமாகவோ, மறைபொருளாகவோ எவனுெருவன் பிரசாரம் செய்கிருனே அவனொருவனே தான் அப்பத்திரிகையில் உள்ள எல்லாவற்றையும் கட்டாயமாக வாசிப்பவன். ஆதலால், முதலாவதாக நாம் இன்று எடுத்துக் கொண்ட விஷ்

பத்திரிகாபிமானம் வளருமா? 95
யத்தை-அதாவது கடிதத்தை - கைவிட லாம் ** அக்கடிதத்தை கை பறிய விட் டேன். என் கைக்குக் கீழே நேராகவிருந்த குப்பைக் கூடைக்குள் அது விழுந்தது. (கரகோஷம். இந்த ஆரவாரத்தைக் கேட்டு அச்சகத் தொழிலாளரும் - புத்த கம் கட்டுவோரும் - இயந்திரம் இயக்கு வோரும் ஆசிரியர் காரியாலயத்துள் புகுந் தனர்.)
"விமர்சனத்திற்காகத் தமிழ் நாட்டி லிருந்து வரும் புத்தகங்கள், பத்திரிகை கள், ஆண்டு மலர்கள் முதலியவற்றிற்கு உண்மையான அபிப் பிராயம் கூறுவதா, அல்லது எழுத்தாளர்களைச் சாந்தப்படுத் தும் வகையில் விமர்சனம் "பண்ணுவதா' என்பதுதான் என் இரண்டாவது பிரச் சினை. புத்தங்களில் ஏதாவது குற்றங்கள் காணப்பட்டால், புத்தக அட்டையைப் பற்றி ஓர் ஆலாபனம் மாத்திரம் செய் தால் போதுமானதன்று. குற்றங் குறை களைக் கூசாமல் எடுத்துக் காட்டுவதே விமர்சகனுக் கழகு. அப்படிச் செய்வத ஞல் பொது மக்களுக்குப் பெரும் புண்ணி யம் செய்பவனன். அல்லாவிடில், மனித

Page 51
96 பரியாரி பரமர்
வர்க்கத்தையும் - ஏன் எழுத்தாளர் குழாத்தையும்-பிழையான பாதையைப் பின்பற்றும்படி துரண்டுபவனுவான்.
ஆகவே, நண்பர்களே! பத்திரிகா தர்மம் தழைத்தோங்குவது எங்ங்னம்? (.குத்து) விமர்சனம் விமர்சனமாகவே இருக்கட் டும். விண்ணுதி விண்ணன் எழுதினுலும் இம் முறையிலிருந்து விலகோம் .
"அடுத்தபடியாக, சங்கீத விற்பன்ன ரின் சச்சரவுகளை எடுத்துக் கொள்வோம். அவர்கள் பாடுவதெல்லாம் பாட்டு, என்ன பாட்டுக்குத்தான் இராகம் பாடிய போதி லும், விமர்சனம் வெளியாகும்போது உருப்படி உருப்படியாகவே தோன்ற வேணுமென்பது அவர்களின் செருக்கு. சற்று ஏறு மாருக நடப்போமேயாகில் , பக்க வாத்திய சகிதமாகப் பாடுபடும் இப் பாடகர்கள் குடும்ப சகிதமாகப் பந்து மித் திரர் புடைசூழ கந்தோர் வாசலில் வந்தி றங்குகிரு ர்களே! இதற்கென்ன செய்வ தென்று நீங்கள் எப்போதாவது சிந்தித்த துண்டா? இல்லை. இதற்கு ஒரேயொரு வழியுண்டு. அவ்வகையான சங்கீத பூபதி களுக் கென்று ஒரு தனி நிதி திரட்டி , இந்

பத்திரிகாபிமானம் வளருமா? 97
தியாவுக்கனுப்பி மேலும், சங்கீதத்தை யோ அல்லது சங்கீத ஞானத்தையோ விருத்திசெய்ய நாம் உதவ வேண்டும். இந்த நற்செய்கையால் பத்திரிகாபிமா னம் செழிக்கும். (சபையிலிருந்தொரு வர் :- அத்துடன் அவரை ஊரைவிட்டு அகற்றுவதாகவும் முடிகிறதே!)
'இன்னெரு ரகத் தினுசுகள் உளர். அவர்கள் கடித மூலமாகக் கட்டுரைகளை அனுப்பிவிட்டுத் தாமாக நேரில் வந்து, கட்டுரையை எதற்காகப் பிரசுரிக்கவில்லை யென்று அதட்டிக் கேட்கும் அஞ்சா நெஞ் சர்கள். இவர்களுக்கென்ன பதில் கூறு வது? ஏற்ற காலத்தில் அது பிரசுரிக் கப்படும் என்று பதிலளிப்பதா அல்லது கட்டுரை "பச்சைப் படான்' என்று பச் சாத்தாபமின்றிப் பகருவதா? நன்றென்று சொன்னல், நாள்தோறும் ஆசிரியரின் குப்பைக் கூடையைக் காலி செய்யும் நமது கந்தோர் பையனுக்கு வேலைக் கஷ்டமாக இருக்கும். அவன் சம்பள உயர்ச்சியைக் கேட்பான். ஆகையால்,
J-13

Page 52
98 шfштif шJulir
இவ்விஷயத்தை அதிபரோடு கலந்தாலோ சிப்பதுதான் நலம்.
'கடைசியாக, இன்னெரு முக்கிய மான சங்கதி கூற விரும்புகிறேன். சமயக் கொள்கைகளை மாறுபாடாக வைத்திருக் கும் சில பத்திரிகைகள், அவர்களது சம யத்தின் தலையெழுத்துக் கறுப்பை எங்கள் பத்திரிகைகளில் கண்ட மாத்திரத்தே, தங்கள் பத்திரிகைகளில், "இன்ன பத்திரி கையில் இன்ன மாதிரி எழுதியிருக்கிருர் கள்" என்று விளாசிவிடுகிரு ர்கள். இதற்கு நாங்கள் ஏதாவது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏனெனில், இன்னும் ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தினுல் எங் கள் பத்திரிகையை எம்மதத்தாரும் சம்ம தத்தோடு வாசிப்பார்கள். எங்கள் பத் திரிகைக்கு இலவச விளம்பரம். ஆகை யினுல், நாம் பேசாமலிருப்பதே பெருந் தன்மை. வேறு அதிகமாகக் கூறுவதற் கொன்றுமில்லை. விசேஷமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏதாவது வர நேரிட்டால், காலக்கிரமத்தில் ஆராய்ந்

பத்திரிகாபிமானம் வளருமா? 99
துணர்வோம். பிரச்சினையைப் பிரச்சினை யாக வைத்திருப்பவர்கள் முதுகெலும் பு இல்லாதவர்கள். உங்களுக்குத் தெரியும். மனிதருக்கு முதுகெலும்பு உண்டு. பத் திரிகை காரரும் மனிதர்களே! வந்தனம்." (கரகோஷம் வானைப் பிளந்தது. நான் அமர்ந்தேன். இருந்தவர்களை விட, வந் வர்கள் தங்களுடைய அலுவல்களைக் கவனிக்க மீண்டார்கள்.) 火

Page 53
ஈக்கள்
இந்த இரகசியத்தைப் பகிரங்கமாக்க நான் தயங்கவில்லை. ஈக்களைக் கண் டால், உண்மைக்கு உண்மையாக எனக் குப் பிடிக்கிறதில்லை. என்னைக் கண்டால் ஈக்களுக்கும் பிடிக்காமல் இருக்கலாம். இஃது உலகத்தின் இயல்பு. இரு பக்கத் திற்கும் சாயும் தன்மையுடையது.
பெரிய வீடுகளிலுள்ள ஈக்கள் சபைப் பழக்கத்தில் கைதேர்ந்தவையல்ல. அவற் றிலே கணக்கற்ற - பலவிதமான கிருமி கள் தொற்றிக் கொண்டிருக்கின்றன. சாப்பாட்டு மேசைக்கு வந்தால், பாலில் விழுந்து நீச்சலடித்து சாகஸ் மாகத் தப்பி, அரையவியல் உருளைக் கிழங்கை ஊர்வ லம் வந்துதான் போகும். காரசாரமாக ஏதாவது இருந்தால், அவற்றின் உடம் பிற்கு ஒத்துக் கொள்ளமாட்டாது. எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் தவ

ஈக்கள் O
ரு ன அபிநயம் பிடிப்பதில் உண்மையான லக்ஷணம் பொருத்தியவை. இவை, மற்ற வர்களைத் துன்பப்படுத்துவதையே இலட் சியமாகக் கொண்டு வாழ்நாட்களைக் கழிக்கும் வீணர்களாயினும், உலகத்திற்கு ஏதோ பெரும் நன்மை செய்கின்ருே மென்ற எண்ணம் உடையவை. தங்களைத் தாமே ஏமாற்றும் யமகா தகப் பேர்வழி கள். (சில ஈக்களும் எங்களைப்போல சுபா வம் உடையவையெனத் தத்துவ சாத்திரி கள் ஆராய்ந்து சொல்லுகிரு ர்கள், எங் களிடமும் "மொய்த்தற் குணம்” இருப்பது உண்மை. ஆனல், ஈக்களின் "மொய்த்தற் குணம்’ கொஞ்சம் மாறுபட்டிருக்கின்றது என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயமாகும்.)
வீட்டு ஈச்களிற் சில, தமது சாமர்த் தியத்தைப் பறைசாற்ற கூரைகளின் உட் புறத்தில் தலைகீழாக நடந்து திரிவது வழக் கம். இதில் கஷ்டமில்லை. வச்சிர மனப் பான்மையுடையவை. இவற்றின் பாதங் களில் பசைத்தன்மை இருக்கின்றது. (தற் கால விஞ்ஞானிகள் இதை 'உமிதற் குணம்’ என்பார்கள்.) எவ்வளவு முயன்

Page 54
O2 uff*uחrf LחנLםff
ரு லும், தாம் நினைத்தவுடன் கீழே விழ முடியாது. ஆகையால், புளுகுவதற்குரிய விசேட குணங்களென்று இதில் ஒன்று மில்லை. மேலைத் தேசங்களிலிருந்து வரும் இயந்திரங்களைப்போல, ஈக்களும் பார்ப் பதற்குச் சூனியமாகத் தோன்றும்.) ஈக் களுக்கு இரு சிறகுகள் உள. சிற்றுயிரா ராய்ச்சி நிபுணர்களின் கண்களுக்கு மாத் திரம் புலப்படக்கூடிய பிரமாணத்தில், மயிர் போன்ற இரு அதைப்புகள், பின் புறத்தில் சிறகுகள் இருப்பதற்குப் பதி லாக இருக்கின்றன. இவ்விரு அதைப்பு களைத் ‘துரக்குக் குண்டுகளென்றும் அழைப்பார்கள். பறந்து செல்லும்போது, இந்த அதைப்புகளைக் கழற்றிவிட்டால், ஈக்கள் சமநிலையை இழந்துவிட நேரிடும் என்று விலங்கியல் நூலிற் பாண்டித்தியம் பெற்றவர்கள் கூறுகிருர்கள். உடம்பின் வேறு பகுதிகளைத் துண்டித்துவிட்டால் அவிவேகிகளாகிவிடும்.
வீட்டு ஈக்களுக்குக் கடிக்கும் குண மில்லை, வீட்டுக் கொசுக்களுக்கும் அக் குண மில்லை. எங்களிற் சிலருக்கு, ஈக்கும் கொசுவுக்குமுள்ள வேறுபாடுகள் புரி

ஈக்கள் 03
யாது. (ஈக்களுடன் நாம் எப்படிக் கூடிப் பழகவேண்டும் என்பதை அறிவிக்கும் நோக்கத்துடன், ஈ வரும் முன்னர் கொசு வரும் ) உங்களைப் புண்படுத்தக்கூடிய வகையில் கடிப்பது மாட்டு ஈ தான். எந் தச் சாதியாக இருந்தாலும்-ஆஞன லென்ன, பெண்ணுனலென்ன-ஒன்றைப் போலவே மற்றதும் கெட்டது. மாட்டு ஈப் பெண்மணிகள், மாடுகளையும் சில மனிதர்களையும் நெருங்கித் தாக்கும். ஈ ஆண்கள், மரங்களிலூறும் சாற்றை அருந்தி, ஊர் நிலையையும் கால நிலையை யும் அடக்கியாளும்.
தலை விறைத்த ஈக்கள் இலங்கையில் அதிகம். இந்த வர்க்கத்தைச் சேர்ந்த புருடர்களின் சகவாச ஆசாரம் கேவலமா னது. சில ஆண் ஈக்கள் துணைவியைத் தேடியதும் மாண்டு விடுகின்றன. தலைவி களைத் தேடித் தேடி அலைவது வேறு சில வற்றின் தலைவி தியே! ஒன்று மாத்திரம் முக்கியமாகக் கவனிக்கத் தக்கது. ஒரு ஈக்குத் தன் பாட்டனரைத் தெரியாமலி ருக்கக் கூடும் ஆன லும், அதனுடைய குடும்ப கோத்திரங்களை விபரிக்க என்னுல்

Page 55
04 பரியாரி பரமர்
முடியும். இதற்கிடையில், உங்களுள் சில ருக்கேனும், நான் சில மனித ஈக்களைப் பற்றியும் சூசகமாகச் சொல்லுகின்றேன் என்பது விளங்கியிருக்கக் கூடும். அதனுல், பின்பு நான் கவலைப்படக்கூடிய விதத் தில் எதையாவது உளறிவிடக்கூடுமோ என்ற பயத்தினலே தான் நிறுத் தி க் கொள்ளுகின்றேன்.
 

முணுமுணுப்பு மசோதா
யுத்த காலத்தில் என்ன செய்கிருர்கள் என்று பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் சென் றிருந்தேன். அங்கே ஒரே முணுமுணுப்பு நான் ஒரு யாழ்ப்பாணத்தவன். ஒரு யப் பான் காரணுகவோ வெள்ளைக் காரணு கவோ நான் ஜெனிக்காது, இந்தப் புண் ணிய பூமியில் யாழ்ப்பாணத்தவனுகவே பிறந்ததற்காக என் முன்னுேருக்கு-முக் கியமாக என் தாய் தந்தையருக்கு-என் ஸ்துதி. யாழ்ப்பாணத்தில் பிறந்தபடி யால் இவர்களுக்குரிய சகல சம்பத்துக் களிலும் என் பங்கைத் தருமாறு வற் புறுத்து வேணுகில் என்மேல் நீங்கள் துவே ஷம் பாராட்டக்கூடாது. யாழ்ப்பாணத் தில் மிக முக்கியமானதாகவும் பரிசுத்த மானதாகவும் பரிமாறப்பட்டுவரும் முணு முணுப்பை நான் முதுசொமாகப் பெற் றுக்கொண்டதனுல் அளவிலா ஆனந்த
J-14

Page 56
106 பரியாரி பரமர்
மடைகின்றேன் என்பதை நினைத்து நீங் கள் ஒருவரும் கண்ணிர்கொட்டக்கூடாது. முணு முணுப்பு எங்களுடைய பிறப் புரிமை.
நாங்கள்-அதாவது முணுமுணுப்ப வர்கள்-பிறந்திருக்காவிட்டால் இந்த உலகத்தின் முன்னேற்றம் எத்தனையோ முட்டுக்கட்டைகளில் தட்டுப்பட்டிருக் கும். முணுமுணுப்பின் அந்தரங்க இரக சியம் மிகவும் மேன்மையானது. அதை அறிந்துகொள்வதும் கஷ்டமல்ல. ஆகர் ஷண சக்தியைப்போல சுலபமானது. என் ரு லும், பலமுள்ளது. உலகத்தில் நடக் கும் சகல விஷயங்களிலும் எங்களுக்குத் திருப்தியேயில்லை. ஒரே முணுமுணுப்பு. அரசாங்கத்தார் நல்லெண்ணத்துடன் 'அளந்து" தரும் அரிசியைப் பார்த்து முணுமுணுப்பு. பலமளிக்கும் கோதுமை யைக் கண்டால் வயிற்றுவலி. மச் சான் கல்யாணம் செய்தால் பெண் பகுதி சாதி யில் குறைந்தவர்கள். தம்பிக்குப் பேச் சுக்கால் நடந்தால் சீதனம் போதாது. சென்னையில் சங்கீதம் பயின்ற என் மகள் வீட்டிலிருக்க, சும்மா இருந்த இவள் அகில இந்திய ரேடியோவில் கச்சேரி

முணுமுணுப்பு மசோதா O7
செய்கிருளே! எனக்கு அறிவிக்காத தால் நான் பெரியப்பாவின் சாவீட் டுக்குப் போகவில்லை. இப்படி முணு முணுப்பில் பலவகையுண்டு, அதிருப்தி வளர்ந்து முணுமுணுப்பு உண்டாகும். கீழ் நோக்கினுலென்ன, மேல் நோக்கின லென்ன முணுமுணுப்பு அவசியம். முன் னேற்றத்திற்கு இது ஒர் ஏற்றதுணை, சந் தேகமுண்டா? ஏன் முணுமுணுக்கிறீர்கள்?
யுத்த காலத்தில் அரசாங்கத்தாரின் வரும்படி போதாதாம். செலவுகளைக் குறைக்கவும், வரும்படியை அதிகரிக்க வும் அரசாங்க சபையில் உள்ளவர் களெல்லாம் சேர்ந்து மண்டையை வெடிக் கப் பண்ணி, மனத்தைக் கூழாக்கி, வீண் கலவரத்துக்குள்ளாகிருர்கள்.
பொதுஜனங்களே! மகாஜனங்களே! என்னை மாத்திரம் அரசாங்க சபையில் ஒரு நியமன அங்கத்தவராக (இல்லை, இப்பொழுது ஜனங்களுக்கு என்ன அதி காரம் இருக்கின்றது? உங்களை ஏன் நான் கெஞ்ச வேண்டும்? நீங்கள் நாசமாகப் போனலென்ன! பாழ்பட்டுப் போன லென்ன..) அரசாங்கத்தார் ஆக்குவார்

Page 57
08 பரியாரி பரமர்
களேயானல் (தேர்தலிலே சமாளித் துக் கொள்வது கஷ்டம் என்பதினலே தான் நியமன உத்தியோகம் கேட்கின்றேன்) வரும்படியை உயர்த்துவதற்கு ஒரு "சோக்கான மசோதா சமர்ப்பிப்பேன். என் மசோதாவைச் சமர்ப்பித்து இப் படித்தான் பேசுவேன்:-
"இலங்கைத் தீவில் வசித்துவரும் பன் னிரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆளுே பெண்ணுே முணுமுணுப்பு ‘லைசென்சு’ இல்லாமல் முனு முணுத்தல் கூடாது. இந்த உத்தரவுச் சீட்டைப் பெறுவதற்கு அரசாங்கத்தார் கொடுக்கும் பத்திரத் தில் இருபது ரூபாய் பெறுமதியான முத் திரை ஒட்டி, அதன் குறுக்கே தங்கள் கையெழுத்தால் கிறுக்கி, முத்திரையை அலங்கோலப் படுத்திவிட வேண்டும். எழுதத் தெரியாதவர்கள், தங்கள் பெரு விரவிலுள்ள வரைகளில் வர்ணம் தீட்டி அம்முத்திரிரையை அழகு படுத்தலாம். இதற்கு மூவர் சாட்சிக் கையொப்பம் போட வேண்டும். இதனை வருஷா வருஷம் புதுப்பிக்கவேண்டும், அரசாங்க அதிகாரிகள் கேட்டநேரமெல்லாம் இதை நீட்டவேண்டும். ஒருவரின் சீட்டை இன்

முணுமுணுப்பு மசோதா 09
ஞெருவர் உபயோகிக்கக் கூடாது. அப் படி உபயோகித்தால் அபராதம் விதிக் கப்பப்படும்.'
"இலங்கைத் தீவில் வசிக்கும் என் பதை இலங்கைத் தீவில் பிறந்த என்று மாற்ற வேண்டும். அந்நியர்கள் இன் றைக்கிருந்துவிட்டு நாளைக்கு மூட்டை கட்டுகிறவர்கள். வீடு தேடி வந்தவர்களை உபசரித்து அனுப்புவதே பெருந் தன்மை" என்று இன்னெரு அங்கத்தவர் இடைமறித்து முணுமுணுக்கலாம்.
"வீடு தேடி வந்தவர்கள் வந்த காரி யம் முடிந்ததும் வண்டியைத் திருப்பா மல் 'ஒட்டெடா ஒட்டு" என்ற மாதிரி எங்களுடன் ஒட்டிக் கொண்டால் நாங் கள் என்ன செய்வது? அதே சமயம் அந்நியருக்கு ஒரு சலுகை காட்டலாம். இவர்கள் பத்து ரூபாய் முத்திரை ஒட்டி உத்தரவுச் சீட்டுப் பெறவேண்டும். நீங் கள் எல்லோரும் இதை ஏகமனதாக அங்கீகரிப்பீர்களென்று நம்புகின்றேன். வந்தனம்."

Page 58
O Lufulltrf' LITds
"அரசாங்க சபையாம்; அங்கத்தவ ராம் மசோதாவாம்: சானு ஏதோ அலட்டு கிரூர்' என்று நீங்கள் முணுமுணுப் பது என் காதில் விழுகின்றது. யுத்தி கால யாழ்ப்பாணத்தில் என் காதில் விழுந்
தவையெல்லாம் முணுமுணுப்புகளே! இதனுல் என் மேல் வீடு "பிசகிப்" போய் விட்டதாகும். மன்னியுங்கள்.
Taif
till
 

இதுவரையிற் சாளுவின் பதினுேரு பேணுச் சிந்திரங் களே வாசித்து, அவரைப்பற்றிய கற்பனயிலே திளேத்திருக் கும் உங்களே இங்கு நிறுத்தி, நாடகமேடைக்கு வெளியே வாழும் சாருவைப் பற்றிய சில வாழ்க்கைக் குறிப்புக்களேத் தருேேரும். கார்த்திகேசு செல்லத்துரை - சிவகங்கை தம் பதிகளின் மூத்த புதல்வருன சண்முகநாதன் 11-1-1913 இல், வெள்ளவத்தையிற் பிறந்தார். தாய்வழிப் பாட்டரூர் அருளப்பா இவருடைய இளமைப் பருவத்து வாழ்க்கையை அமைந்துக் கொடுத்தார். பரமேஸ்வராக் கல்லூரியிற் பயின்ற இவர் சென்னே அரசினார் வித்திரக் கல்லூரியிலும், கொழும்பு டெக்ளிக்கல் கல்லூரியிலும் பயின்று தேர்ந்த சைத்திரிகராஞர். 1937-10 வரை, ஈழகேசரியிற் சைத்திரி கராகவும், உதவி ஆசிரியராகவும் பவியாற்றிறர். புந்த காலத்தில், அமெரிக்க ஒற்றர் பகுதியிற் பணிபுரிந்து அரையாண்டு காலம் யப்பாவிலும் வாழ்ந்தார். ாேன்ளே பில், ஆருண்டு காலம் சினிமா ஸ்டுடியோக்களிலே பணி யாற்றிய இவர், எட்டு சினிமாப் படங்களுக்கு ஆர்ட் ஈடரக்ட ராகக் கடமையாற்றியுள்ளார். பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராகவிருந்த பொழுது 1981 ஆம் ஆண்டிங் வானுெ வித் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார். எட்டு மாத காாலும் இங்கிலாந்திலே இதற்கான விசேடப் பயிற்சி பெற்ருர், இவரை "சாறு" என்றும் "லண்டன் கந் தையா" என்றும் இலங்கை நேயர்கள் அறிந்த அளவிற்கு, செ. சண்முகநாதன் என்று அறியமாட்டார்கள்.

Page 59
சண்முகநாதனும்
சாளுவும
செல்லத்துரை சண்முகநாதனுக்கு சானவைப் பார்க்க நெடுநாளைய ஆசை. சானவின் அழகைப் பார்ப்பதற்கல்ல. ச ன வைப் பற்றிப் பலபேர் பல மாதி ரிச் சொல்லுகிரு ர்கள். ஆகையினுல் , நேரிற் பார்த்துப் பேசினற்ருன், தன் ஜென்மம் சாபல்யம் அடையுமென்பது சண்முகநாதனின் நம்பிக்கை. 'சான" வைப் பார்ப்பதென்ரு ல் இலேசான காரியமல்ல. ' அவன் ஒரு அங்கிடுதத்தி; பல தொல்லைக்காரன்; அண்டங் காகம் போல் அங்க லாய்த்தலை பவன்' என்று ஊரிலே கதை. இந்த அபிப்பிராயம் காட்டுத் தீ போல பரவி வருகிற காலத் திலே, பத்திரிகைக் காரியாலத்திற்குள் ஒரு நாள் சண்முகநாதன் நுழைந்தார். முன் அறையிலிருந்த பத்திராதிபரைத் தாண்டிக்கொண்டு, அவர் என் மேசையை

சண்முகநாதனும் சாளுவும் 3
அணுகினர். திறந்த வீட்டிற்குள் நாய் நுழைவதுபோல இப்படி யாரும் வருவது வழக்கம். இதைத் தடுக்க நாங்கள் முயன்றபோதிலும், வருபவர்கள் இதில் துளியளவு சிரத்தையும் எடுக்கவில்லை. எனவே தான், சண்முகநாதனுல் உல் லாசமாக உள்ளே வர முடிந்தது. இதில் ஒருவரிலும் பிழையில்லை. நாங்களும் எங் களாலானதைச் செய்து வந்தோம். அவர் களும் தங்களாலானதைச் செய்து வந்தார்கள்.
சண்முகநாதன் உள்ளே வந்ததும் பெரிதாக ஒரு “கும் பிடு போட்டார். *" என்ன காரியம் வந்தது?’ என்று வின வினேன். அதிலிருந்து சம்பாஷணை தொடங்கிற்று. கதை கொடுத்தது என் பிழை. பேச்சின் சாரம் பின்வருமாறு அமைந்தது: சண்: இல்லை. சும்மா ஒரு தரம்பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். நான்: சந்தோஷம். பார்த்து முடிந்தால் போகலாம் தானே?
J-15

Page 60
4 urfurf TLD
சண் ; உன்னேடு சில காரியங்கள் பேச வேண்டுமென்று பல நாட்களாக என் எண்ணம் . அதற்காகவே வந்தேன்.
நான்: என்ன? மரியாதையில் லாமல் நீ நான் என்று பேசத் தொடங்குகிறீர்? மரியாதை யாக உம்மை நான் நடத்தி அனுப்ப வேண்டுமென்ற எண்ணம் உமக்கு இருக்குமானல், எ ன் னே க் கெளரவத்தோடு நடந்தும் , இப்படியான சில பழக்க வழக்கங்கள் உங்களூரில் நடைமுறையில் இல்லாவிட்டால், எங் களூரில் சில காலம் தங்கியிருந்து பழகிப் போவது உமக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும். (இந்தப்பதிலை இவர் என்னிட மிருந்து எதிர்பார்க்கவில்லை. மலைத்துப் போனர். சில மனிதர்களை இவ் வகை யாக, வெருட்டி வைக்காவிட்டால், ஒரு காரியமும் நடக்காது. இதையறிந்து தானே பலர் இந்த ஏமாற்று விளையாட்டுக் களைக் கையாண்டு வருகிறர்கள். இதனல் நன்மை உண்டு.)
சண்: கோபிக்காதீர்கள்; உங்களைக் கோபப் படுத்தவேண்டுமென்ற எண்ணத் துடன் சொல்லவில்லை; மன்னியுங்கள்.

சண்முகநாதனும் சானுவும் 5
நான் வீண் கதை பேச எனக்கு நேரம் இல்லை. விருப்பமும் இல்லை உண்மை யாகவே மன்னிப்புக் கேட்கின்றீரா, அல் லது வந்த காரியம் பலிக்க வேண்டுமே என்ற தின் பொருட்டுச் சாகசம் செய் கிறீரா? அது இருக்க, சுத்தமான செந் தமிழை இலக்கணத்தோடு பேசுகிறீர். பேச்சாளர்களுக்கும், இலக்கியக் கட்டுரை யாளர்களுக்கும் தான் அதில் தனி உரிமை உண்டென்று உமக்குத் தெரி யாதோ? நீர் என்ன சாதி?
சண் வெள்ளாஞ்சாதி. மாப்பாண முதலி வம்சம் என்று மூப்பன் சொல்லக்கேள்வி,
நான்! ஏன், நிற்கிறீர்? அப்படி அந்த நாற்காலியில் உட்காரும் . (வந்த உட னேயே இவரை உட்காரச் சொல்லி யிருந்தால், என்னைப்பற்றி என்ன நினைப் பார்? இப்படித்தானுக்கும் வருகின்ற வர்களுக்கெல்லாம் இவர் மரியாதை செய்கிறவர் போலும் என்று என்னை இழி வாக நினைக்கக் கூடும். ஒருவனை அளந்து அதற்குத் தகுந்த படி அவனே நடத்த வேண்டுமென்று மூத்தோர் சொன் னதை நாம் மறக்கலாமா? உ ல கத்

Page 61
6 . LufuImff trts
தோடும் ஒத்துழைக்க வேண்டும் . இல்லா விடில் எங்களுக்குள் ஒற்றுமை எங்கே?) சண் : இந்த யுத்தத்தைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
நான் : யுத்தம் தொடங்கியது எனக்கு நிரம்பச் சந்தோஷம். ஏன் என்று கேட் கிறீரா? ஒரு தேசம் இன்னுெரு தேசத்தை அடக்கியாள்வதையும், ஆக்கிரமிப்பதை யும் ஒழிப்பதற்காகத் தொடங்கியது மகா யுத்தம். காரணம் நன்மை யாது. ஆனல், இந்த யுத்தம் முடிந்தால்தான் திரும்பவும் சந்தோஷமடைவேன். அதற் கிடையில் நடந்து வருவதைத் தினசரிப் பத்திரிகைகள் மூலம் அறியலாம். (இவர் பத்துச்சதம் செலவிட்டுப் பத்திரிகை பார்த்தாலென்ன? இந்த யுத்த காலத் தில் பணந்தானிருக்கிறதே. பணத்துக் குப் பஞ்சமா? பத்திரிகைக்குத்தான் பஞ்சமென்ற ல், பத்திரிகை நிலையத்தில் போய் வாசிக்கலாம். தினசரிகள் பிர சுரமாவது, உங்களுக்காகவே. தொழில் முறையில் வித்தியாசமோ, பொரு மைமோ பாராட்டாது, தினசரிகளுடன் ஒத்துழைக்கப் பத்திரிகைகள் வாங்குவது

சண்முகாகாதனும் சாளுவும் 7 -ر
எங்கள் கடமை. பத்திரிகை வாசிப்பது உங்கள் கடமை. எவ்வளவு விரிந்த மனப்பான்மை!)
சண்: இந்த யுத்தம் எப்போது முடியு மென்பது உமது எண்ணம்? நான் இதில் எனக்கொரு நிதானமில்லை. அது ஒருவருக்குந் தெரியாத ஒரு பரம இரகசியம். இந்த இரகசியத்தை நீர் அறிந்தும் ஒரு பயனில்லை. அதனல், உமக்கு ஒரு சுகமும் வரப் போவதுமில்லை. சண்: அப்படியானல், யப்பானைப்பற்றி என்ன நினைக்கிறீர்? நான் யப்பான் என்பது பஸிபிக் சமுத் திரத்தில் சிறு தீவுகள் பல சேர்ந்த தீவுக் கூட்டம். ஒரு எரி மலைக்கும், பல பல்லுக் கட்டிகளுக்கும் பெயர் போனது. (இது ஒரு சில்லறைப் பகிடி என்று நீங்கள் நினைக்கக் கூடும். சில்லறைப் பகிடிகளுக்குச் சிரிப்ப வர்களுமுண்டு. எல்லோர்க்கும் திருப்தி அளிப்பதே என் கொள்கை. இவ்வித மான பகிடிகள் சில்லறையுமல்ல, இதற் குச் சிரிப்பவர்கள் சில்லறைகளுமல்ல. உங்களைக் கொண்டு மற்றவர்களை மதிப் பிடாதீர்கள்!)

Page 62
8 - - - பரியாரி பரமர்
சண்: சான! நான் சொல்லுகிறே னென்று கோபிக்கவேண்டாம். நீர் ஒரு பொல்லாத ஆள்.
நான்: என்னை நன்ரு யறிந்தவர்கள் uLuT G3 prnr உமக்கிதைச் சொல்லியிருக் கிரு ர்கள். இல்லாவிடில் உமக்கு எப்படித் தெரியும்? உலகம் முழுவதுமே இதுதான் பேச்சு. (இந்த ஒரு அலுவலிலாவது எவ் வளவு ஒற்றுமை உலகத்தில் நிலவி வரு கிறது பாருங்கள். இதல் லவோ ஒற்று  ைமக்கு அழகு!) சண்: கேலி செய்வதை விட்டு விட்டு இந்த ஐம்பதுக்  ைகம்பதைப் பற்றி உமது உண்மையான அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். நான் ஐம்பதுக் கைம்பதைப் பற்றிச் சொல்ல எனக்கு அதிகம் வராது. அது எனக்குச் சொந்தமானதல்ல. செலவை பொருட் படுத்தாது, அதைத் தயாரித்த வரை ஒரு தரம் கண்டு பேசினுல் , அதன் உண்மைகளை விளக்கிக் காட்டு வார். அவர்தான் அந்தச் சாமர்த்தியம் பொருந்தியவர். (பிறர் சொத்தைப் பங் கிட வேண்டுமென்ற ஆசை எனக்கில்லை. எங்கள் தேசம் சம்பந்தமான பிரச்சினை

சண்முகநாதனும் சானுவும் 9.
களை அலசிப்பார்த்து, நன்மையான வற்றைத் தெரிந் தெடுப்பது எங்கள் ஒவ்வொருவரின் கடமை. ஆடூல்ை,
இதொன்றில் மாத்திரம் என்னை விலக்கி வைக்க வேண்டும். அநாவசியமாக ஒரு வரோடு முட்டிக்கொள்வதில் எனக்கு அதிகம் விருப்பமில்லை, ("சான" பயந்து விட்டானென்று நீங்கள் எண்ணக்கூடும். அப்படியல்ல. சுயநலங்கருதியே!) சண் உமக்குக் கல்யாணம் ஆகி விட் டதா? நான்: பார்த் தீரா? கொஞ்சம் இடம் கொடுத்து விட்டால் குடும்ப விவகாரங் களிலேயே பிரவேசிக்கிறீர். சண் இல்லை. உமது நன்மையைக் கருதியே கேட்டேன். அதில் என்ன குறை இருக்கிறது? நான் அது உம்மால் முடியும் காரியம் என்று நினைக்கிறீரா? அச் சுபகாரியங் களைப் பெரியோர்கள் கூடி நிச்சயப் படுத்தினுல் தான் ஆகும். பார்க்கப் போனுல் முப்பத்திரண்டு வயதுதாணிருக் கும் உமக்கு. அதற்குள் பெரியவராகப் பார்க்கிறீரே? (நான் பார்த்த பெரியவர்

Page 63
20 h− பரியாரி பரமர்
கள் எல்லோரும் உண்மையில் பெரியவர் கள்தான். பெரும் எண்ணம். இதை நிலை நாட்டுவதற்கு இப்பெரியவர்களுக் குப் பின்னும் முன்னுமாக பல தினு சான மனிதர்கள் திரிகிரு ர்கள். இவர்கள்தான் வருங்காலத்துப் பெரியார்கள். முன் னேற்றத்திற்கு எவ்வளவு முன்னேற் பாடு!) சண்: அப்படியாஞ ல் , தமிழருக்காகப் பாடுபடும் பெரியவர்கள் சிலரைக் கூற முடியுமா? நான் நன்ரு க. சட்டென்று சொல்வதா ஞல் நீரும் நானும் . (பார்த் தீர்களா எனது பெரும் எண்ணத்தை? ஒருவனுக் குத் தற் பெருமை அவசியம் இருக்க வேண்டும். மற்றவர்கள்தான் பெரியவர் களைப் பாராட்டாவிட்டாலும், சொந்த வீடுகளி லாவது "நாட்டாண்மை செலுத் த லாமல்லவா? அத்துடன், எனது பரோ பகார சிந்தனையையும் கவனித்தீர்களா? பக்கத்திலிருப்பவரையும் தட்டிக்கொடுத் துவிட்டேன். உலகத்திலே ஒரு மனித னென்ரு ல் 'சானு தான் என்ற எண் ணத்தையும் அவருள் புகுத் திவிட்டேன். மன்னுயிரையும் தன்னுயிர் போல நினை!)

சண்முகநாதனும் சானுவும் 2
சண்: சான! என்னையும் உம்மோடு சேர்க்க வேண்டாம். உண்மையில் நீர் ஒரு பெரும் பிறவிதான். (இதில் என்னை தட்டிக்கொடுப்பதாக அவருக்கு ஒரு வீண் எண்ணம். இப்படியாக நிலை குலைந்து அழிந்து போகிறவர்கள் பலர். ஊழ்வினை என்பது பொய்யாகுமா?) நான் அப்படிச் சொல்லவேண்டாம். நீரே நன்ற க யோசித்துப்பாரும், சண் என்னதான் இருந்தாலும் . இருக் கட்டும் சாஞ, நேரமாகிவிட்டது. உம் முடைய வேலையையும் குழப்புகிறதாக முடியும். ஆறுதலாக இன்னுெரு நாள் வருகிறேன். வணக்கம்.) நான்: அதற்கென்ன? இடையிடையே கட்டாயமாக வரவேண்டும். (அவரை நான் பெரியவர் என்று சொன்னதும் அவரால் பொறுத்திருக்க முடியவில்லை. இதை யாரிடமாவது கட்டாயம் சொல்ல வேண்டுமென்று வெளிக்கிளம்பி விட்
டார்.)
நான் அவரைத் தட்டிக்கொடுத்தது போல், அவரும் இன்னெரு வரைத் தட்

Page 64
22 ufuu Trfo uyor
டிக்கொடுப்பார். இவ்வகையாக இச் சிறு தட்டு யாழ்ப்பாணம் முழுதும் பரவு மானுல். பிற கென்ன? நான் பெரியவன், நீ பெரியவன் என்ற வித்தியாசம் கிடை யாது. சமத்துவம் நிலவும். அதுவே சேமம்.)
இது ஒர் : ச்சி மகாநாஃ. இரகசியம் மிக மிக அவசியம்.