கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாதுகை

Page 1
I = kl: "I'll jät Cumiercial PriIting & Publishing House, Malras-1.
 
 
 
 

resses
டொமினிக் ஜூவா

Page 2

பாது  ைக
டொமினிக் ஜீவா
புத்தகால்யம்
தமிழ்ப்புத்தகாலயம்
3ട3. ഓക്കpr:് ൬ (rജ്-8,

Page 3
முதற் பதிப்பு: ஆகஸ்ட், 1962 உரிமை பதிவு
(C) Tamil Puthakalayam, 898, Pycrofts Road, Madras 14
விலை ரூ. 2 - 00
TAMIL PUTHAKALAYAM
898, PYCROFTS ROAD, MADRAS-4
மங்கை அச்சகம் இராயப்பேட்டை, சென்னை-14

சமர்ப் பணம்
ஈழத்துத் தொழிலாளி வர்க்கக் குரலான தேசாபிமானி
பத்திரிகையின் முந்நாள் ஆசிரியரும், இலங்கை -
தொழிற்சங்க ஸ்தாபகர்களில் ஒருவரும், இன்றைய
தமிழ்நாட்டுத் தொழிலாளி வர்க்கக் குரலாக ஒலித்துக்
கொண்டிருக்கும் "ஜனசக்தி'யின் ஆசிரியர் குழாத்தைச்
சேர்ந்தவரும், எனது மதிப்புக்கும் தோழமைக்கும் உரியவருமான
தோழர் கே. ராமநாதன் அவர்களுக்கு

Page 4
பொருளடக்கம்
முன்னுரை
ஆசிரியர் முன்னுரை
L U IT ġbj6oods நகரத்தின் நிழல் தாளக் காவடி பாபச் சலுகை மனத் தத்துவம் மிருகத்தனம் குறளி வித்தை
கைவணடி
சவாரி
வாய்க்கரிசி
காகிதக் காடு
13
26
33
40
48
64
73
82
93
103
116

முன்னுரை
போதுகை”யின் கதாநாயகன் முத்து முகம்மது நான்தான். யார் இந்த முத்து முகம்மது என்று விழிக்கிறீர்களா? செருப்புத் தைக்கும் ஒரு சாதாரணத் தொழிலாளி திரு. டொமினிக் ஜீவாவின் நீண்டநாளைய நண்பன். இருவரும் ஒரே தெருவில் தொழில் செய்பவர்கள். இதனுல் அடிக்கடி சந்திக்கவும் அவ ரது கதைகளைப் படித்து இரசிக்கவும் ஏற்பட்ட வாய்ப்பு, காலக் கிரமத்தில் இருவரையும் நண்பர்களாக்கி விட்டது. இந்த நட்பு என்னை ஒரு கதாநாயகன் ஆக்கிவிடும் என்பதைக் கனவில் கூட நான் கண்டதில்லே. பாதுகை என்ற அவரது கதையில் வரும் சாக்ஷாத் முத்து முகம்மது நானேதான். அது ஒரு கற்பனை உருவமல்ல. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி, 23-ம் இலக்கச் செருப்புக் கடையில் எந்த நேரமும் நேரிலேயே காணக்கூடிய உண்மை உருவம். என்ன, ஆச்சரியம் மேலிடு கிறதா? கதையில் பாத்திரமாக்கி வாசகர்கள் மத்தியில் நட மாட விட்டதும் போதாமல் தன் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதுமாறும் அன்புக் கட்டளையிட்டுள்ளார், இச் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர். அவரது ஆணையை மீறுவ தென்பது முடியாத காரியந்தான். ஆனல் புடிக் கருவியும், குறடும், மற்றும் செருப்புத் தைக்க உதவும் ஏனைய ஆயுதங் களைத் தாங்கும் இந்தச் சாதாரணக் கைகள் சிறுகதைத் தொகுதி ஒன்றிற்கு முன்னுரை எழுதத் தகுதி படைத்தனவா என்ற தயக்கம் என் மனதில் இடம் பெருமலில்லை. இருப்பினும் முயன்றல் முடியாதது எது?
நண்பர் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் இருக்கின் றனவே, அவற்றைக் கையெழுத்துப் பிரதியில் முதன்முதலில் படிக்கும் இரசிகன் நானேயாகும். என்னதான் வேலை நெருக் கடியும் களைப்பும் இருந்தாலும், **முத்து கதையொன்று

Page 5
6
உருவாயிருக்கிறது; படிக்கட்டுமா? என்று கடை தேடி வரும் அந்தக் கதாசிரியக் குரல் எனக்குப் புதுத் தெம்பை ஊட்டி விடுவதுண்டு. அவர் நிதானமாகப் படித்துக்கொண்டேயிருப் பார். நானும் அக்கறையோடு கேட்டு இரசிப்பேன். கதை முடிந்ததும் அபிப்பிராயப் பரிமாறல்கள் ஆரம்பமாகும். எனது பட்டவர்த்தனமான அபிப்பிராயங்களில் சில, சில சமயங் களில் அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு. எங்கள் கருத்துப் பரிமாறல்களின் வேகம் காதலர்களின் ஊடல் நிலையை ஏற்படுத்திச் சில நாட்களில் மறைந்துவிடும். கதா சிரிய - இரசிக நட்பு இப்படியே காலத்தோடு சேர்ந்து வளர்ந் தது. கடந்த ஆண்டு பூரீ லங்கா சாகித்திய மண்டலத்தின் சிருஷ்டி இலக்கியப் பரிசை அவர் முதன்முதலாகப் பெற்றுக் கொண்டார் என்ற செய்தியைத் தினசரிப் பத்திரிகைகள் மூலம் அறிந்ததும் நானே அப் பரிசு பெற்றுவிட்டது போன்ற பெருமிதத்துடன் உணர்ச்சி வசப்பட்டேன். இப்போது அவருடைய “தண்ணிரும் கண்ணிரும்? என்ற தொகுதியி லிருந்து முன்று கதைகள் ஜெக் மொழியில் மொழிபெயர்க்கப் பெற்றிருப்பதைக் கேள்விப்பட்டதும் என் மகிழ்ச்சி கட்டுக் கடங்கவில்லை. இத்தகைய பெருமைக்கெல்லாம் என்ருவது ஒருநாள் எனது நண்பர் இலக்காகவேண்டும் என்று நான் விரும்பியது வீண் போகவில்லை. பரிசிலேப் பெற்றுக்கொண்டு கண்டியிலிருந்து திரும்பிய நண்பரை முதல் வேலையாகச் சந் தித்து வழக்கமான பிளேன் டீ பரிமாறலுடன் ஆசிகளைத் தெரிவித்துக்கொண்ட நிகழ்ச்சி, பசுமை மிக்க ஒன்ருக என் மனதில் பதிந்துவிட்டது.
நான் முன் சொன்னதுபோல எக்கதையையும் கையெழுத் துப் பிரதியிலேயே படித்துக்காட்டும் ஜீவா, பாதுகையை மட்டும் அதற்கு விதிவிலக்காக எனக்குக் காட்டாமல் அனுப்பி விட்டார். இதனையறிந்ததும் ஆச்சரியம் மேலிட்டது. இதில் ஏதோ புதிர் பொதிந்திருக்கிறது என்ற எண்ணம் எனக்கு அப்போதே உதயமானது. கதை வெளியாகட்டும் எனக் காத் திருந்தேன்.

7
ஞாயிறு தினகரன்? இதழ் ஒன்றில் பாதுகை வெளியாகி யிருந்தது. அதைப் படித்தபோது புதிர் விடுபட்டது மட்டு மல்ல, என்னை அக் கதை தூக்கிவாரிப் போட்டும் விட்டது. *இந்தச் சாதாரணத் தொழிலாளி முத்து முகம்மதுவா இக் கதையில் கதாநாயகனுக வருகிறன்!” என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். பூலோக பிரமாக்களின் சிருஷ்டித் தொழிலே ஒருகணம் மனக்கண்ணுல் பார்த்து வியந்தேன். மலேப்பும் மகிழ்ச்சியும் சுபாவமான பெருமிதமும் என்னுள் மாறி மாறி ஏற்பட்டன.
அடிக்கடி என் கடைக்கு வந்து தொழில்-நுணுக்கங்களைப் பற்றியும் நடப்பு முறைகள் குறித்தும் அவர் குடைந்து ("டைந்து கேட்டது இதற்குத்தானு? 'ஏன், உங்கள் தொழி 'பக் கைவிட்டுவிட்டு என் தொழிலில் இறங்கப்போவதாக உத்தேசமா? என்று கேட்டபோதெல்லாம், சிரித்து மழுப்பி விட்டுச் செல்வாரே, அந்த சாகசமெல்லாம் என்னைச் சந்தியில் நிறுத்துவதற்குப் போட்ட அத்திவாரம்தான் என்பதை அவர் வெளிக்காட்டாமல் சாதித்துவிட்டாரே!
கதையைப் படித்து முடித்துவிட்டு, உள்ளுர மகிழ்ச்சிப் பெருக்குடன் எண்ண அலையில் மிதந்துகொண்டிருந்த என்னை *முத்து’’ என்ற நட்புறவு அழைப்பு திரும்பிப் பார்க்கச் செய் தது. வழக்கமான புன்னகையையும் பீடிகையையும் கண்டு எனது போலிக் கோபம் மறைந்துவிட்டது. மன உளைச்சல் களும் ஓடி ஒழிந்தன. பாதுகையில் ஆரம்பித்த பேச்சு எங் கெங்கெல்லாமோ திசைதிரும்பிச் சென்றது.
பாத்திரம் எழுதுகின்றது என்று படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன். இப் புத்தகத்தில் வரும் ஒவ்வொரு கதைகளையும் வரிக்கு வரி படித்தவன் நான், இதில் என்னைப் போன்றே பல பாத்திரங்கள் நடமாடுகின்றன. அவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள் அந்த வகையில் எனது கருத்தைக் கூறவேண்டியது அவசியமே யாகும். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பாட்டாளி - உழைப்

Page 6
பாளிப் பாத்திரங்களைத் தத்ரூபமாகப் படைத்துத் தனது தனி முத்திரையைக் குத்திக் காட்டுவதில் கைதேர்ந்தவர் டொமி னிக் ஜீவா என்பது என் அபிப்பிராயம்.
அநேகமாக எல்லாக் கதைகளிலும் இத் தனி முத்திரையே மிளிர்கின்றது. அதைத்தான் நானும் அவரிடம் எதிர்பார்க்கி றேன். இச் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதுவதற்கு என்னைவிட எத்தனையோ இலக்கிய நண்பர்கள் அவருக்குஇப் புத்தகத்தின் ஆசிரியருக்கு உண்டு என்று எனக்குத் தெரியும். ஆனல் வற்புறுத்தி அவர் என்னை எழுதும்படி நச்சரித்தார். அடிக்கடி கேட்டுக்கொண்டேயிருந்தார்.
இதோ எழுதிவிட்டேன்.
நீங்களே சொல்லுங்கள்; நான் முன்னுரை எழுதுவதற்குத் தகுதி உள்ளவன்தானு?
23, கஸ்தூரியார் வீதி, 幽
யாழ்ப்பாணம். முதது முகமமது

ஆசிரியர் முன்னுரை
மாதுளம் பழம் போன்றது ஒருவகைச் சிறுகதை இன் ணுெரு வகைச் சிறுகதை மாம்பழத்தைப் போன்றது. மாம்பழத் தைக் கடித்ததும் கொட்டை பெரிதாக இருப்பதைப் போல சொற்கள் அதிகமாகவும் கருத்து சொற்பமாகவுமுள்ள சிறு கதைகள் காலத்தின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க இயலா தவை. மாதுளம்பழத்தைப் போலத் தோண்டத் தோண்டக் கருத்து முத்துக்கள் வெளிவருவதைப் போன்ற சிறுகதைகளே காலத்தின் ஏலத்தால் மடியாத சிருஷ்டி இலக்கியங்களாக இலங்க முடியும்.
வெறும் அலங்கார எழுத்துக் கட்டடங்கள் உயர்ந்த சிறு கதைகளல்ல. சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதுப் புதுப் பிறவி.
சிறுகதையைப் பற்றிய எனது கண்ணுேட்டம் இதுதான் -இலக்கியத்தைப் பற்றி - சிறுகதைத் துறையைப்பற்றித் திட்ட வட்டமான சில கருத்துக்கள் எனக்கு உண்டு.
கலையில் எளிமை வேண்டும்; அது மக்களுக்குப் புரிய வேண்டும்; பயன்பட வேண்டும். அதிலும் இலக்கியக் கலையில் இவை மிக மிக முக்கியம். சொற்சிலம்பமாடும் சில கிளித் தட்டு இலக்கிய கர்த்தாக்கள் மக்களை மறந்துவிட்டு - மக்களி னது பிரச்சினைகளைப் பார்த்தும் பார்க்காததுபோல இருந்து கொண்டு - தங்களது கால்களற்ற கனவு இலக்கியப் படைப்பை வைத்துத் தம்மைத் தாமே முதுகில் தட்டிப் பாராட்டிக் கொள்ளுகின்றனர்.
சிலர் தாம்தான் உண்மையான முற்போக்கு எழுத்தாளர் என்று பெருமைப்பட்டும் கொள்ளுகின்றனர்; சாட்சியம் தேடு கின்றனர். m
இவர்கள் மக்களை மறந்தது போலவே, புதிய புதிய அநுபவங்களாலும் புத்தம் புதுப் போதங்களாலும் படிப்பினே பெற்று முன்னேறி வரும் மக்களும், இவர்களை-இவர்களது சாய்வு நாற்காலி இலக்கியங்களை நிச்சயம் மறந்து விடுவார்கள்.

Page 7
1 O
-இது மட்டும் உறுதி! இதுதான் இலக்கியத்தைப் பற்றிய என்னுடைய கருத் தோட்டம்.
நெருப்பைப்போலவே கருத்துக்கும் போஷணையோடு பாதுகாப்பும் தேவை.
தினசரி வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்கள், தங்கள் நெஞ்சகத்தே ஆயிரமாயிரம் ஆசைகளையும் விருப்பங்களையும் உணர்வுகளேயும் புதைத்து வைத்த வண்ணம் நடமாடித் திரி கின்றனர். அவர்களது மனிதத் தன்மை, உணர்ச்சி, பெரு மூச்சு, அபிலாஷை ஆகியவற்றில் ஓர் அடிப்படை ஒருமைப் பாடு காண உழைப்பதே என் விருப்பம். அதற்காகவே எனது பாத்திரங்கள் படைக்கப்படுகின்றனர்; இச் சிறுகதைத் தொகுதியில் நடமாடித் திரிகின்றனர்.
என்னுடைய வழி நேரான வழி என்னுடைய பாதை வளரும் பாதை! என்னுடைய இலக்கு புதிய சமுதாய அமைப்பு அழகாகப் பேசத் தெரியாத - எழுதத் தெரியாத - கோடானுகோடி பாமர மக்களின் வாழ்வில் மனதைத் தொட் டுக் கவரக்கூடிய சம்பவங்களும் அற்புதமான தத்துவங்களும் பொதிந்துபோய்க் கிடக்கின்றன என்பதை நான் வாழ்க்கை யைப் படித்ததால் தெரிந்துகொண்டேன்.
இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகின்றவன், நான். ஓரளவிற்கு, என்னுல் இயன்றளவிற்கு அவர்களது அனுபவங் களுக்கு, அவர்களது வாழ்வில் இழையோடிப்போயிருக்கும் சம்பவங்களுக்குக் கலை உருக் கொடுக்க முயற்சித்துள்ளேன்.
இதில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளேன் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்கள். / மனிதர்களினுடைய சகல உணர்வுகளுக்கும் இடம் கொடாமல் சில நுண்ணிய, துல்லிய, வர்க்க, சாதி உணர்வு களுக்கே நான் முதலிடம் கொடுக்கின்றேன் என என்மீது சிலர் குறை கண்டுபிடிப்பது ஏற்கனவே எனக்குத் தெரியும்
நான் வாழ்க்கையில் ராமர்களைப் பார்த்தது கிடையாது ஆஞல், ராமர்களாக வாழவேண்டுமென்று விழைபவர்களையும்,

11
வாழ்க்கையுடன் போராடுபவர்களையும், வாழ்வை நேசிப்பவர் களையும் கண்டிருக்கின்றேன். அந்த எழுச்சிக்கு ஒரனஷ் காத்திர உருவம் கொடுக்க முயற்சித்துள்ளேன் என்று சொல் வதில் பிசகில்&ல.
-இதைச் சொல்வதில் அப்படியொன்றும் கோழையு மல்ல, நான்!
இப் பாத்திரங்கள் நானல்ல. நானென்று நம்புகின்றவர் களும் என்னை முற்ருகத் தெரிந்தவர்களுமல்ல. இப் பாத்திரங் கள் வாழ்க்கைப் பாதையில் நான் நடந்து சென்றுகொண் டிருந்தபோது சந்தித்திருந்தவர்களாக இருக்கலாம். அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் கண்டு, பார்த்துப் பழகியவர்களாக வும் இருக்கலாம்.
கொக்குவிலில் இருந்து யாழ்ப்பாணத்தின் இதய நாடியை நோக்கி இருளில் நடந்து வருகின்றது ஓர் உருவம்; யாழ்ப் பாணம் ரெயில்வே நிலையத்திலிருந்து தாரிட்ட சாலையில் ஒடிக் கொண்டிருக்கின்றது இன்னுேர் உருவம்; கஸ்தூரியார் வீதி யிலே கடையொன்றில் இருந்துகொண்டு, செருப்புத் தைத்து, வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கின்றது ஒரு பாத் திரம்; விக்டோரியா வீதி வழியாகக் கைவண்டியைத் தள்ளிக் கொண்டே மனிதச் சிக்கலைத் தீர்க்க வழி சொல்லிக் கொடுக் கின்றது இன்னேர் பாத்திரம் பிண ஊர்வலத்தின் பின்னே தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றது பிறிதோர் பாத்திரம்.
..இன்னும் சில பல பாத்திரங்கள். குறை சொல்பவர்களின் சில குற்றச்சாட்டில் நியாயம் ஏதாவது இருந்தால் நிச்சயம் நான் திருந்த முயற்சிப்பேன். ஓரளவு நியாயமான குற்றச்சாட்டுகளை ஏற்று இச் சிறுகதைத் தொகுதியில் என்னை நானே திருத்திக்கொண்டுள்ளேன் என் பதை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
உங்களுக்கும் புத்தகத்திற்கும் இடையே நிற்கும் தரக னல்ல, நான். பாத்திரங்களுக்கும் வாசகனுக்கும் மத்தியில் நின்றுகொண்டு, தரகு வேலை செய்பவனுமல்ல, எழுத்தாளன். இதை முற்று முழுதாக ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் எனது

Page 8
12
வளர்ச்சிக்கேற்ப அக் குறைபாடுகளையும் நீக்க முயற்சித்திருக் கின்றேன்.
முடிவாகச் சொல்லப்போனல், சுரண்டும் இரக்கமற்ற கூட்டத்தைத் தகர்க்க இன்று தயாராகிக்கொண்டிருக்கும் மகத்தான மானிட சக்தி, பிறருக்காக வாழ்கின்ற வாழ்க்கை யைத் தூண்டும் இலக்கியப் படைப்பாக எதிர்காலத்தில் இச் சிறு காணிக்கையை ஒப்புக்கொள்ளுமாகில், அதுவே எனக் குப் போதிய பரிசாகும்.
இங்குப் பிரசுரமாகும் கதைகள் - ஒன்றைத் தவிர - ஏற் கனவே பத்திரிகைகளில் பிரசுரமானவை. அவை அதே உரு வத்தில் இப் புத்தகத்தில் பிரசுரமாகவில்லை என்பது மட்டும் உண்மை.
பாதுகை, சவாரி, மனத் தத்துவம், வாய்க்கரிசி, குறளி வித்தை ஆகிய கதைகள் தினகரன் ஞாயிறு இதழிலும், நகரத் தின் நிழல் கருஉருவில் சுதந்திரனிலும், மிருகத்தனம் சரஸ் வதியிலும், பாபச் சலுகை சிறுபான்மைத் தமிழர் மகா சபை மலரிலும், தாளக் காவடி கலைச் செல்வி பாரதி இதழிலும், கைவண்டி தாமரை பொங்கல் மலரிலும் வெளிவந்தவை. தலைப்புப் பெயர் சிலவற்றிற்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த அந்த ஆசிரியர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. காகிதக் காடு புத்தகத்திற்காக எழுதிச் சேர்க்கப்பட்ட கதை.
எனது கையெழுத்துப் பிரதியைத் தட்டச்சுப்பொறியில் பிரதி எடுத்துத் தந்துதவிய நண்பர் திரு. வே. தனபால சிங்கம் அவர்களுக்கு எனது நன்றி உரியது. இந் நூலுக்கு முன்னுரை எழுத முதலில் மறுத்தாலும் பின்னர் துணிந்து முன்னுரை நல்கிய தோழமை மிக்க நண்பர் முத்து முகம்மது அவர்களுக்கு என் இதயங் கனிந்த நன்றி. இப் புத்தகத்தை அழகாக அச்சிட்டு வெளியிட்ட தமிழ்ப் புத்தகாலய அதிபர் திரு. கண. முத்தையா அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி உரியது.
60, கஸ்தூரியார் வீதி, NIÐ OG e
யாழ்ப்பாணம். -Guఏరాగి తan

محمد
நீ லங்கா சாகித்திய மண்டலம் 135, தர்மபால மாவத்தை
கொழும்பு 7
ரெலிபோன் : 6 3 56
1961. 9. 6.
டொமினிக் ஜீவா அவர்கள், 60, கஸ்தூரியார் ரோடு, யாழ்ப்பாமீை.
8ህ ሻ »
ஒவ்வொரு ஆண்டிலும் வெளிவநீத சிறந்த புத்தகங்களுக்கு ரீ லங்கா சாகித்திய மண்டலத்தால் வழங்கப்படும் பரிசு திட்டத்தின் கீழ் "கற்ப 2ணக் கதைகள்" பகுதியில் இலங்கையரால் 196 Οιό ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களில் உங்கள் "தன்விரும் கண்விருமீ" என்ற நூல் பரிசு பெறுவதற்கு ஏற்றது என்று தேர்நீதெடுக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இப்பரிசின் பெறுமதி ரூ. 1000.00
1961ம் ஆண்டு செப்டெமீபர் மாதமீ 9மீ திகதி பி. ப. 3 மணிக்கு பேராத 2ன பல்கலைக்கழக கலைப் பகுதி அரங்கத்தில் நடைபெறும் இலக்கிய தின கொண்டாட்டத்தில் இப்பரிசு தங்களுக்கு வழங்கப்படுமீ. அத்தருணம் தாங்கள் அவ்விடத்திற்கு விஜயம் செய்து தங்கள் பரிசை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்
':ജ്ജ பொதுச் செயலாளர், ரீ லங்கா சாகித்திய மண்டலமீ.

Page 9

பாதுகை
உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்தபோது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடதுகால் பாதத்தைத் தூக்கித் திருக்கூத்தாடிய பாவத் துடன் துள்ளிக் குதித்தான், முத்து முகம்மது.
வைரித்த கெட்டியான உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்பு வாதை கொண்ட நோயாளி யைப் போல, அவனைச் சுட்டிக்காட்டின.
-ேசே! காலிலே ஒரு செருப்புக் கிடந்தால்? திரும்பித் தார் ரோட்டைப் பார்த்தான். புகைத்த பின்பு குறையாக வீதியில் வீசி எறியப்பட் டிருந்த சிகரட் துண்ட்ொன்று தரையோடு தரையாக நசுங்கிக் கிடந்தது. அவன் திரும்பிப் பார்க்கும்பொழுது நிலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் குறள் சிகரெட், தனது கடைசிப் புகையைக் கக்கிக்கொண்டிருந்தது.
உள்ளங்காலைப் பதம்பார்த்துச் சுட்ட உஷ்ணத் தகிப்பு இன்னும் முற்றக நீங்காத நிலை.மனம் எரிந்தது.
ஒருகாலத்தில் செம்மா தெரு ஒழுங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டு இன்று மாநகர சபையாரின் ஜனநாயகக் கண்களுக்குத் தவருகத் தெரிந்த சாதிப்பெயர் அகற்றப்பட்டு, அந்த ஒழுங்கையின் மடக்கு முனையில் பெரிய பள்ளிவாசலின் பெயரைத் தாங்கி, அறிவிப்புப் பலகையுடன் பிரபலப்படுத்தப்

Page 10
14 பாதுகை
பட்டுக்கொண்டிருக்கும் ஜும்ஆ மொஸ்க் லேன் வழியாக நடந்து, கஸ்தூரியார் வீதியின் முகப்பிற்கு வந்து, திரும்பிக் கொண்டிருந்த சமயம்தான் முத்து முகம்மது இப்படி நடனம் ஆடிக் காலேத் தூக்கி நிற்கும் சம்பவம் நிகழ்ந்தது.
வடிகாலோரம் துணையாக நின்ற டெலிபோன் கம்பத் தைப் பற்றிப் பிடித்த வண்ணம் வலது காலைச் சிக்காராக ஊன்றி, இடதுகாலே மடக்கி, மடித்து, தலைகுனிந்து, பாதத்தை உற்றுப் பார்த்தான்.
சாம்பல், ஒரு சத நாணய அளவிற்குப் படிந்து, அப்பி யிருந்தது.
வாயில் ஊறிய உமிழ்நீரைத் தொட்டு, வழித்து, இரண்டு மூன்று தடவை பூசிப் பார்த்தான்.
முதற் சிகிச்சை வெற்றியளிக்கவில்லை. உள்ளங்கால் எரிந்தது. பக்கத்து வடிகாலிலிருந்து வயிற்றைக் குமட்டி வாந்தி வரு வதுபோன்ற துர்நாற்றம் வீசியது.
இடது பாதத்தைத் தரையில் நன்றக ஊன்றி, மண்ணும் எச்சிலும் ஒன்று கலக்க உள்ளங்காலே நிலத்தில் அழுத்தி அழுத்தி வைத்துப் பார்த்தான். சுடுபட்ட எரிவு ஓரளவு குறைந்து சுகம் கண்டது போன்ற பிரமை. "
நண்பகல் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குப் போய்த் தொழுதுவிட்டு வந்துகொண்டிருந்தான் முத்து முகம்மது. மனச்சஞ்சலம் jógp6ಖTIq-ಲ್ಯ!! அவன் நெஞ்சில் நாளை வரப்போகும் பெருநாள் ஈதுல் அழ்கா? விஸ்வரூபம் எடுத்து, மனதைப் போட்டு உளைய வைத்தது. தொப்பி தரித்திருக்கவேண்டிய தலையில் கைக்குட்டையை இரண்டாக மடித்துக் கட்டி இருந் தான். அக் கைக்குட்டையைக்கூட இன்னமும் அவிழ்க்க வில்லை. கைக்குட்டையின் கூர்மூலை இரண்டும் காற்றில் இலே சாகப் படபடத்தன.
நினைவுக் குமிழில் சிறு வெடிப்பு. ‘இன்று வெள்ளிக் கிழமை. விடிஞ்சால் ஹஜ்ஜுப் பெருநாள்?
சூடுபட்ட உணர்விலிருந்து முற்ருக விடுபட்டு, நாளை வரப் போகும் புதுத் திருநாளேப்பற்றிய மன அவசத்தைச் சற்றே

பாதுகை 15
மறந்து, நினைவைத் திசை திருப்பிய பார்வையை அர்த்த மற்றுத் திருப்பினன். வீதியைக் கடக்கலாம் என்று எண்ணி எத்தனித்தான்.
8-ஏதாவது கார்கீர் குறுக்கே மறுக்கே வந்திட்டால்? புத்தம் புதிய நீலநிறக் கார் ஒன்று காலோரம் ஊர்ந்து போய், ஒழுங்கை முகப்பைத் தாண்டி, சற்று அப்பால் தள்ளி நின்றது. இரண்டு நாகரிக நவயுக நாரிமணிகள் காரிலிருந்து *பொத், பொத்?தென்று, தார் ரோட்டின் முதுகு நெளியும் படியாகக் குதித்தனர். பராக்குப் பார்த்தவாறே, சிரிப்புச் சித றிய வாயைத் திறந்து தமக்குள் தாமே குசுகுசுத்தனர்.
உதட்டுச் சாயப் பகைப்புலத்தில் பற்கள் பொய்ப் பற் களைப்போல மின்னின. ஒருத்தி பக்கத்திலுள்ள ஷே" பால ஸி??ற்குள் பரபரவென்று நுழைந்தாள். மற்ருெருத்தி சாவகாச மாக ஆடி அசைந்து நடந்து, அக்கடையின் முதற் படிக் கட்டில் ஏறினுள். ஏறி இரண்டாம் படிக்கட்டில் கால் வைக்கும் போது ஷோகே?ஸில் இருந்த நவீன காலணி ஒன்று அவ ளது கண்களையும் கருத்தையும் தன்பால் கவர்ந்து இழுத்துக் கொண்டது. ஆவல் ததும்பும் கண்கள் ஷோகே’ஸின் கண் ணுடிச் சட்டத்திற்குள் புதைந்து, அமிழ்ந்துகொண்டன.
மேற் படிக்கட்டில் ஒருகாலும் கீழே மறுகாலுமாக நின்ற வாறே தேகாப்பியாசம் செய்யும் பாணியில் தவளை நடை பயின்ருள் அந்த யுவதி. கண்களுக்கு விருந்தளிக்கும் உடை நாகரீகத்திலிருந்து, முடிமயிர்க் கொண்டை மோஸ்தர் வரைக் கும் உற்றுப் பார்த்துக் கடைச்சரக்கின் மகிமையை ரசித்து வியந்து பார்த்துக்கொண்டே நின்ற முத்து முகம்மதுவின் பார்வை, கீழிறங்கி 88 கியூடெக்ஸ்? பூசி அலங்கரிக்கப்பட் டிருந்த அவளது மென் பாதங்களில் போய்த் தைத்தது. அப் பூம்பாதங்களில் கண்கள் நிலைகுத்தி நின்றன. அவள் காலில் அணிந்திருந்த புத்தம் புதுக் காலணியில் அவனுடைய எண்ணங்கள் எல்லாம் ஒருமுகப்பட்டுக் குவிந் தன. 、暴
மனம் விழித்துக்கொண்டது.

Page 11
Η 6 பாதுகை
இதைப்போலத்தானே அதுவும்?. அந்த லேடிஸ் ஷ"ஸ"ம்? மண வண்டு, திரும்பத் திரும்ப அவளுடைய காலடி யையே மொய்க்கின்றது.
கனவு காண்பவனைப் போன்று, ஒரு கணம் கண்கண்மூடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த முத்து முகம்மது, வீதியின் ஒருவழிப் பாதையால் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்த இ. போ. ச. பஸ்ஸின் கடகடத்த இரைச்சல் சப்தத்தைக் கேட்டு, சுயப் பிரக்ஞை பெற்று, வீதி ஓரத்துக்கு ஒதுங்கிக்கொண்டான்.
அந்த ஆரவாரத்தில் - அந்தப் பட்டணத்துப் பரபரப்பில், அனைத்துமே அதிதுரித வேகமாக இயங்கும் மும்முரத்தில் - முக்கி மூழ்கி இருந்தது, நகரத்தின் இதய இரத்தக் குழாயான கஸ்தூரியார் வீதி.
தெரு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. காலணியின் நினைவு பார்வையைத் திருப்பியது. முத்து முகம்மது மனதை மீண்டும் அலைய விட்டான்.
செருப்புக்கடையின் ஷோகேஸில் பறிகொடுத்து நின் றவள், பாதத்தை இடம் மாற்றிவைத்து மேலேறி, நடந்து விட்டாள்.
.பார்க்கப்போனுல் காலில் அணியும் செருப்பு இதைப்போன்ற லேடி பலரினு ஷூஸினுல் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகக் காலையிலிருந்து அவன் பட்டு வரும் நெஞ்சத் தவிப்பு இருக்கின்றதே, அது அவன் வாழ்க்கையில் என்றுமே அனுபவிக்காதது; என்றுமே அறிந்திராதது.
நெஞ்சுக் கவலையை மேலுக்கிழுத்து நெடுமூச்சாக்கி, *ஹ"ம்!” என்று பெருமூச்சு விடுவதின்மூலம் போக்கடித்து விட லாம் என்ற தோரணையில் பெருமூச்சொன்று அவனிடமிருந்து விடைபெறுகின்றது.
-ஆணுல், நெஞ்சுப் பாரம் இன்னமும் குறையவில்லையே! முத்து முகம்மது, தான் தொழில் பார்க்கும் கடையை நோக்கித் திரும்பினுன். . . . . . .יי *
நெஞ்சை அழுத்தும் நினைவின் சுமை.

Lunt g6005 Z
எட்டி முப்பது கவடு தெற்குப் பக்கமாக வைத்து நடந் தால் அவன் தொழில் பார்க்கும் கடையை அடைந்துவிட லாம். அதைக் கடையென்று பென்ஞம்பெரிய பெயரில் அழைப்பதைவிட, புருக்கூடு என்றே சுருக்கமாகச் சொல்லி வைக்கலாம். வளர்ந்துவரும் காலமாற்றத்துடன் குச்சுக் கடைகளெல்லாம் கோபுர மாடங்களாக மாறி, நவயுக நாக ரிகத்தை விற்பனைப் பண்டமாக வியாபாரம் செய்யும் அந்த வீதியில், இன்னமும் தனது பத்தாம் பசலி நிலையுடன் காட்சி யளிக்கிறது, அந்தப் பழைய சப்பாத்துக் கடை. கிழிந்து, அறுந்து, துவைந்துபோன செருப்புச் சப்பாத்துகளுக்குப் புனர் வாழ்வளித்து, தெருக்களில் உலாவரக் காரணமாக விளங்கும் தொழிற்சாலை அது. இத்தனைக்கும் வாடகை முப்பது ரூபாய். அதன் ஏகபோக உரிமையாளன் சாகூடிாத் முத்துமுகம்மதுவே அவன் திறமையான தொழிலாளி. பெரியகடை வட்டாரத்தில் அவனுக்கு மவுஸ் அதிகம். இளம் வயதானவனக இருந்தா லும் தொழில் நுணுக்கங்கள் அத்தனையும் கைவரப்பெற்றவன். கை உதவிக்குச் சிறுவன் ஒருவன்.
போதும்.
காலை எட்டு மணிக்கு வந்து பட்டறையில் குந்தினுல் மத்தியானம் ஒருதடவை எழும்புவான், சாப்பிட, தொழுகைக் குப் போகவென்று. மற்றப்படி இருந்தது இருந்ததுதான். கடையின் முன்பக்கத்துப் பட்டறையில் இருந்த வண்ணம், சுவ ருக்கு முதுகை முட்டுக் கொடுத்தவாறு போவோர் வருவோரி னது முகங்களையும் பாதங்களையும் பார்த்துப் பார்த்துச் சலிப் பதுதான் அவனுடைய தினசரி வேலை.
இப்படித் தினமும் புதுப்புது முகங்களைப் பார்த்துப் பார்த்து, தொழில் நிமித்தம் பொழுதைப் போக்கிக்கொண் டிருந்தபோதுதான் அந்த மலாயாப் பென்சன்காரர் வாடிக்கை யாளராக வந்து சேர்ந்தார். V
*சிங்கப்பூரிலை நான் இருக்கேக்கை? என்று அவர் தனது பிரதாபத்தை முதன்முதலில் தானே ஆரம்பித்தபோதே, அவர் ஒரு மலாயாப் பென்சன்காரர் என்று அனுமானித்துக்கொண் டான், முத்து முகம்மது.

Page 12
18 பாதுகை
பதினைந்து நாட்களுக்கு முன்ஒரு மாட்டுக் கடதாசியில் ஒரு சோடி இங்கிலீஸ் பலரினு லேடி ஷ9 ஸ்களைப் பத்திரமாக மடித்து மடித்துச் சுற்றிவைத் திருந்தவர், வெகு கவனமாகவும் சாவதானமாகவும் கடதாசி யைப் பிரித்து அந்த லேடி ஷூஸ்களைப் பட்டறைப் பலகை மீது வைத்தார்.
**இது சிங்கப்பூரிலே எடுத்தது, மோனை.இதைப் பார். இதுகின்ரை வார் ஒண்டு விட்டுப்போச்சு. மற்றதுக்கு ரெண்டு ஆணி வைச்சுத் தரவேணும். அவ்வளவுதான். என்ன, முடிச் சுத் தாஹியா??
அவற்றைத் திருப்பியும், புரட்டியும், வார்ப்பட்டைகளை இழுத்தும், அசைத்தும் பரிசோதனைகள் நடைபெற்றன.
*ஓம், இருங்களேன். முடிச்சுத் தந்திடுறன். ஒண்டுக்குத் தோல் கொஞ்சம் வைச்சுத் தைக்கவேணும். மற்றதின் ரைக்கு குறிக்கு ஆணி அடிச்சு இறுக்கவேணும். இந்தா செஞ்சி தந் திடுவன். ரூபா ஒண்ணு குடுத்திடுங்கோ.?
*ஏதோ நீதியாக் கேள். எழுவத்தைஞ்சு சதம் தந்திடு றன். ஆணு, வேலை திறமாய் இருக்கட்டும். என்ன, விளங் குதோ?
பேரம் முடிவடைகின்றது. *சரி, இப்படிக் குந்துங்களேன். ஒரு நிமிட்டிலை தந்திடு றேன், ஒரு நிமிட்டிலை!??
“எனக்கு இருக்க நேரமெங்கே கிடக்கு? உதாலை சுத்திக் கொண்டு வாறன், கெதியாய்ப் பாத்து முடிச்சுவையன்.?
*சரி; ஜல்தியா சட்டென்று வந்திடுங்க, முடிச்சு வைக் dSpair.’
போனவர் வரவில்லை. அன்று திரும்பவில்லை. அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. அதற்கு அடுத்த நாள் விட்டு அடுத்தநாள் கூட.
ஊஹஜூம்! திரும்பவேயில்லை! பெருநாள் நெருங்கிக்கொண்டிருந்தது. மனதில் ஒரு நப்பா சை.

பாதுகை 19
‘இனி அந்த அரும் புடிச்ச மனுசன் வரமாட்டான்போலே இருக்கு. அது கிடந்து இனி ஆருக்கு என்ன லாபம்? என்று நெஞ்சில் நினைவு அலைகள் சுழியிட்டன. இரண்டு நாட்களுக்கு முன்னர். அவன் துணிந்து விட்டான். நாளை ஒருநாள் போனுல் ஹஜ் பெருநாள். அப்புறம் நாட்கள் கடந்துபோனல் அவனிடம் வக்கென்ன இருக்கிறது?
* அதைப் புதிசாக்கி ரகீலாவுக்கே பெருநாள் பரிசாகக் குடுத்துவிட்டால்..?
ரகீலாவின் பெயரை வாய் உச்சரிக்கும்பொழுதே, நெஞ் சம் இனித்தது!
கடந்த மெளலத் மாதமே அவர்கள் இருவருக்கும் நிக் காஹ் நடந்தேறியது.எண்ணி ஒரு வருடம்கூட ஆகவில்லை. அதற்குள் ஹஜ் பெருநாள். எதைக் குடுப்போம்?-என்னத் தைப் பரிசாக அளிப்போம்? என்று மனம் துடிதுடித்த வேளை யில்தான் பென்சன்காரரின் நினைவு அவன் மனதில் குதிர் விட்டது. அவர் தந்துவிட்டு எடுக்காமல் இருக்கும் பலரினு லேடி ஷூஸ் ஞாபகத்தில் தட்டுப்பட்டது.
ரகீலா அப்படியொன்றும் அவாக் கொண்ட பெண் அல் லத்தான்.
-*ஆன, ஒழுங்கையிலே என்ட மதிப்பு? நாளைக்கி நம்ப பீபியை இந்த ஒழுங்கைப் பெண்டுகள் மதிக்காட்டிபோனு, அவ என்னை மதிப்பாளா?
ஹஜ் பெருநாளன்று அந்த வட்டத்துப் பெண்களெல்லாம் தொழுகைக்குப் போவார்கள். ஒழுங்கைத் திருப்பத்திலுள்ள பெரிய வீடுதான் பெண்கள் தொழுகை இடம். ஒழுங்கை பூராவிலுமுள்ள அத்தனை முஸ்லிம் பெண்களும் அங்கு ஒன்று கூடுவார்கள்.
*அந்த இடத்திலை, அவுங்களுக்கு மத்தியிலே நம்ம பீபி மதிப்பாய் இல்லையெண்டால், நாளேக்கு நம்மளே இவங்கள் மதிப்பாகளா, என்ன?
நப்பாசை செயலாகப் பரிணமிக்கின்றது. இரவோடு இர வாய்க் கண்விழித்து, அந்தப் பலரினு லேடி ஷ9ஸ்களை நகாசு

Page 13
20 Lu Tg7 6d45
பண்ணித் தனது கைவண்ணத்தைக் காட்டிப் புதிதுபோலச் சிருஷ்டித்து விட்டான்.
-அடேயப்பா இப்போது அதன் மவுசுதான் என்ன! தனது பீபிக்கு அன்புப் பரிசாக பலரின லேடி ஷஜூஸ் களைப் பெருநாளன்று கொடுத்துவிட்ட மனப் பூரிப்பில் அவன் திளைத்துக் களித்தது நேற்று.
அந்த நினைவில்தான் எத்துணை இனிமை அவனுடைய அகத்தில் குழுமிய பெருமத அலைகள் மூகத் தில் இழைந்தன. இடையிடையே பைத்தியம் போன்று சிரித் துக்கொண்டான். நெஞ்சில் கவிந்திருந்த ரகீலாவின் சிரித்த முகம் அவனைப் பூரிப்பில் ஆழ்த்தியது. உலகத்து இன்பங்கள் எல்லாமே தன் காலடியில் என்று இறுமாந்து நேற்று நடை பயின்று உலாத்தி வந்ததும் இதே வீதியில்தான்.
-ஆஞல், இன்று? இன்று காலையில் சொல்லி வைத்ததுபோல, கடையைத் தேடி வந்துவிட்டார் அந்தப் பென்சன்காரர்.
*என்ன, நான் தந்திட்டுப் போன செருப்புத் தைச் 学fr学g T??”
கடைப் பையன்தான் கடையில் இருந்தான். அப்பொழுது முத்து முகம்மது பட்டறையில் இல்லை. முன் ணுல் உள்ள தேனீர்க் கடையில் தேனீர் குடிக்கச் சென்றவன் தேனீர் அருந்திவிட்டு, பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு, கடையின் கதவுடன் சாய்ந்துகொண்டே, புகையை ஊதி ஊதி வாயாலும் மூக்காலும் வழியவிட்டுக் கொண்டிருந்தான்.
அவருடைய தலைக் கறுப்பைத் தனது கடைக்கு முன்னுல் கண்டதும், தேநீர்க் கடையின் பின்வாசல் வழியாகப் பாய்ந்து சென்று மறைந்து, தப்பித்துக்கொண்டான் முத்து முகம்மது.
-அதற்காக முழுநாளுமே கடைக்கு வராமல் இருந்துவிட dՔւգ պտո?
அதுவும் நாளைக்கு ஹஜ் பெருநாள். வேலையோ மலைபோல் இருக்கு. நாலு காசு உழைச்சால்தானே நாளைக்குப் பெருநாள் கொண்டாட்டம்-?

LJITgy 60ás 21
கடையை நோக்கி நடந்துகொண்டிருந்தவன் மனத்தில் இப்படியான பிரச்சினைக்குரிய சர்ச்சைகள் நடந்துகொண். டிருந்தன.
*ைஅந்தச் சவத்தை வாங்கி, அந்த மனுசன்ரை முகத் திலே வீசி எறிஞ்சிட்டால்?
நிக்காஹ் செய்து முதல்லை குடுத்த பரிசு. அதிலேயும் தாளைக்குப் பெருநாள் நாத்து அதைக் காலிலே போட்டுக் கொண்டு தொழுவப்போகும் வீட்டுக்குப் போகாட்டி, நம்ம ளுக்குத்தான் நல்லா இருக்குமா?.
.*இண்டைக்குப் போகட்டும். நாளைக்குப் பெருநாள். கடை பூட்டிடுவம். நாளைக்கு மக்க நாள் திருப்பிக் குடுத்திடு
• • • * uthمه
மனத்துடன் தர்க்கவாதம் புரிந்து பார்த்தான். சஞ்சல உணர்ச்சி செத்து மடிந்தது. தான் கட்டிய வலைக்குள் தானே விழுந்து தவிக்கும் சிலந்திப்பூச்சியைப்போல, தனது சிந்தனை வலைக்குள் சிக்குப்பட்டுத் தவிதவித்த தன்னையே தேற்றிக் கொண்டான்.
கடைப் படியில் ஏறிப் பட்டறையில் அமர்ந்ததே நினை வில் இல்லை.
பையன் ஒரு சோடிச் சப்பாத்துக்களையும் இரண்டு சிறுவர் களின் செருப்பையும் முன்னுல் வைத்தான்.
**இதுகளை ஒரு கால்சட்டைக்காரத் துரை தந்திட்டுப் போனுர், செய்து வைக்கட்டாம். சப்பாத்து ரெண்டுக்கும் நல்லாக் குதி அடிச்சு வைக்கட்டாம். இப்ப வருவாராம்.?
*சரி சரி; நீஊட்டுக்குப் போய் சோறு தின்னுட்டு வா..?? மனதின் குரங்காட்டத்தை அடக்க, இதயத்தின் எழுச் சியை இறக்க, தொழிலில் மனத்தை இலயிக்க விட்டான். கை பரபரவென்று பழக்கப்பட்ட வேலையை இயந்திர கதியில் செய் கின்றது. மனம் காட்டில் மேயும் மான்குட்டியைப்போல, அலைந்து திரிகின்றது. அது சுற்றிச் சுற்றி.
ஒரு பூட்சிற்குக் கீல் அடித்தாயிற்று. அடுத்ததை எடுத் துக் குறட்டினல் ஆணிகளைக் கழற்றினுன். படக்கென்று குறடு விடுபட்டு, முழங்கை சுவரில் மோதியது, இலேசான

Page 14
22 பாதுகை
வலி. முகத்தில் வேர்வைச் சரம் கோத்து நிற்க, தலைமயிர் ஒழுங்குகெட்டு, முன்னுல் கவிந்து கண்களை மறைக்க-பூட்சை வைத்துவிட்டு, நெற்றியில் விழுந்த மயிர்க் கற்றைகளேக் கையால் கோதி மேலேற்றித் தலையில் படிய அழுத்தி விட்டுக் கொண்டே, உடுத்தியிருந்த சாரத்தின் கீழ்த் தலைப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
தொடர்ந்து வேலை நடக்கிறது. பூட்ஸ் இரண்டிற்கும் பாலீஸ் பண்ணி, வேலையைத் துப்புர வாக முடித்தாகிவிட்டது. அடுத்தது குழந்தைகளின் செருப்பு கள்.
**இந்தாப்பா! உன்னட்டை எத்தனை தடவை அலையி றது?
பழக்கப்பட்ட குரல். நிமிர்ந்து பார்த்தான். -°சே! இந்த நசராணி புடிச்ச மனுஷன் இவ்வளவு நாளும் ஊட்டிலே சும்மா குந்தி இருந்திட்டு, இப்ப வந்து துலேக்கிருனே?
அந்த மலாயாப் பென்சன்காரர் ஒவ்வொரு படியாக மேலேறுகின்ருர், உருவம் உயர்ந்துகொண்டே வருகின்றது.
வெந்துகொண்டிருக்கும் சுடுமணலில் கால் வைத்தவனைப் போல், ஒரு கணம் திணறுகின்றன், முத்து முகம்மது.
மனம் மருளுகின்றது. சற்று மெளனம். 68இந்தாப்பா.தலையை நிமிர்த்திப் பார் ?? நிமிர்ந்து தலையைத் திருப்புகின்றன். நெஞ்சம் ஆட்டுக் குட்டியின் வாலைப்போலப் பதறுகின்றது.
*அண்டைக்குத் தந்த அந்தச் செருப்புச் சோடியை எடு!99
கடையைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ளாமல் இடம் தவறி வந்துவிட்டவரைப் பார்ப்பதுபோல, அலட்சிய மாகப் பார்த்த வண்ணம் நடித்து, ‘எதைக் கேட்கிறீங்க? எந்தச் செருப்பு? என்ருன்.

un ghi 60Ds 23
அதுதானப்பா.அண்டைக்குத் தந்தேனே, அந்தச் செருப்புகளைத்தான்.?
‘எப்ப உங்களுக்குத் தாற தவணை? **அண்டைக்கு வாறனெண்டன். வரமுடியாமல் போச்சு. அதுதான் இண்டைக்கு வந்திருக்கிறேன். ம். எடு.?- சொல்லிக்கொண்டே மடியைப் பிரித்து மணிபர்ஸை எடுத்து, விரித்துத் துழாவி ஒரு ஐம்பது சத நாணயத்தையும இருபத் கதைந்து சத நாணயம ஒன்றையும் எடுத்தார்.
*தவணை தப்பிப் போச்சானுல் செருப்பு இங்கே இருக் காது. வெளியிலை குப்பை கூடைக்கை எறிஞ்சிருப்பம்?-- வார்த்தைகளை அளந்து அவருடைய முகத்தை ஊடுருவிப் பார்த்தவண்ணம் கூறினன், முத்து முகம்மது.
குரலில் கூச்சம்; சற்று அச்சமும் நிழலாடியது. அவர் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. வெள்ளைக்கார சூறன வெள்ளைக்காரனுக்கே கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய என்னை இந்தப் பொடிப்பயல் ஏமாத்தவா1? என்ற எண்ணம் பென்சன்காரருடைய மனதில் இழையோடினுலும், ஆத்தி ரத்தை வெளிக்குத் தெரியாமல் மறைத்தவாறு, ‘என்னப்பா, விளேயாடுருய்? புத்தப் புதிசு. குப்பேக்கை எறிஞ்சு போட்டன் என்கிறயே? பதினெட்டு ரூபாயல்லவா? என்றர்.
*சும்மா சத்தம் வேண்டாம். குப்பைக்கை எறிஞ்சு போட் டன் எண்டால் எறிஞ்சு போட்டன். ஆமா, இப்ப என்ன செய் யச் சொல்றீங்க??-இந்தத் தடவை அவனுடைய பேச்சில் ஓர் அசாதாரணமான போலிக் கோபத் தொனி ஒலித்தது.
ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள அவர் சற்றுச் சிரமப் பட்டாலும் முடிவில் நெஞ்சுக் கொதிப்பை அடக்கிக்கொண்டு, **என்னப்பா இப்படிப் படுபொய் சொல்லுறியே! சத்தியம் பண்ணிச் சொல்லுவியா? என்று கேட்டார். தொடர்ந்து, *உன் பெத்த தாயைக் கொண்டு சத்தியம் பண்ணு எறிஞ்சு போட்டனென்டு உன் தாயைக் கொண்டு சத்தியம் பண்ணு வியா? என்ருர்,
*உம்மா மேலாணையா எறிஞ்சு போட்டன்!??

Page 15
24 பாதுகை
*உன்ரை அப்பனைக் கொண்டு சத்தியம் பண்ணு, பார்க்க 6)Tth?””
*வாப்பா மேலாணையா குப்பேக்கை எறிஞ்சிட்டன்!? **ஆ?-வாயைப் பிளந்தார். சிந்திப்பதற்கும் அப்பாற் பட்ட நிலை. ஒரு வெறி. ‘ஏமாற்றுகிருனே? என்ற நினைப்பில் ஏற்பட்ட ஒருவித ஆக்ரோஷம். உலேப்பட்டறை போன்று நெருப்பை உமிழும் அளவிற்கு உணர்ச்சி கொதிக்கின்றது. *உன்ரை கடவுளைக்கொண்டு சத்தியம் பண்ணு ஹ"ம். பண்ணு, கடவுளைக்கொண்டு சத்தியம்? என்று ஆத்திரமாகக் கத்தினர். கூச்சலிட்டார் என்றே சொல்லலாம். சொல்லிக் கொண்டே படியேறித் தாவி மேலேறி, கதவின் கீழ்நிலைப் படி யுடன் பொருத்தப்பட்டிருந்த ஒரு சாண் அகலமுள்ளதும் பட் டறைப் பலகையுடன் இணைக்கப்பட்டிருந்ததுமான நிலைத் தளத்தில் நின்றுகொண்டார்.
**ஆண்டவன் ஆணேயாக எறிஞ்சுபோட்டன்!?? -*அட படுபாவி கடைசிலை கடவுளைக்கொண்டு கூடச் சத்தியம் பண்ணிப்போட்டானே?
ஆயுதமற்று, யுத்தகளத்தில் நிற்கும் போர்வீரனின் மன நிலை. உலகமே தன்னைத் தன்னந்தனியாகக் கைவிட்டு விட் டதோ என்ற தவிப்பு, பென்சன்காரரின் நெஞ்சில், நீதியை நிலைநிறுத்தி, கடவுளைக் காப்பாற்றி விடுவதைவிட, தன் னுடைய சுய கெளரவத்தை எப்படியாவது நிலேநிறுத்தியாக வேண்டுமென்ற அசட்டுப் பிடிவாதத்துடன் சுற்றுமுற்றும் பார்க்கின்றர்.
ஒன்றுமே சட்டென்று மனதில் பிடிபடவில்லை. நினைவுக் கோணத்தில் மின்னல் பளிச்சிட்டது. தனது காலில் அணிந்திருந்த செருப்புகளைக் காலைவிட்டு நகர்த்திக் கழற்றினர்.
-°ப்பூ! இனி என்னத்தைத்தான் செஞ்சு கிழிச்சிடப் போருர், பார்ப்போமே?
இப்படி நினைத்திருந்த முத்து முகம்மதுவின் காதுகளில் பென்சன்காரர் உச்சரித்த வார்த்தைகள் தெளிவாக விழுந் 岛6T。

LJ IT ĝ5j60) é5 25
**இதுதான் கடைசித் தடவை ஓமோம், கடைசிமுறை. ாங்ககை, இதை தொட்டுச் சத்தியம் பண்ணு, பார்ப்பம்! உனக் குச் சோறு போடுற இந்தச் செருப்பைத் தொட்டுச் சத்தியம் பண்ணு, உண்மையாய் எறிஞ்சு போட்டாயென்டு!?-கண் கள் தரையில் தாழ்ந்து, பதிந்து, தரையோடு உறவாடிக்கொண் டிருந்த, கீழே அனதையாக விடப்பட்டிருந்த, அந்தச் செருப்பு கள் இரண்டையும் அர்த்தத்தோடு வெறித்துப் பார்த்தன. அவனுடைய விழிகளில் சலனம். மனச்சாட்சியின் மருண்ட பார்வை அவனுள்.
-இதைத் தொட்டா நான் சத்தியம் பண்ணுறது? எனக்குத் திங்கச் சோறு தாற இதைக் கொண்டா நான் பொய் பேசுறது?
மெளனம்.
அந்த மெளனம், பென்சன்காரரின் ஆவேசம் அலைக் கழிக்கும் நெஞ்சில் வெற்றிப் பெருமித அலைகளைப் பாய்ச்சு கின்றது.
*என்ன, பேசாமல் சும்மா இருக்கிருய்? ஹ"ம் சத்தியம் பண்ணன்.?
*முடியாது? என்பதற்கு அடையாளமாக அவன் தலை அங்குமிங்கும் ஆடி, அசைந்து, மறுப்புத் தெரிவித்தது. *ஏலாது! இதைக்கொண்டு நான் சத்தியம் பண்ண மாட் டேன்!” என்றன், முத்து முகம்மது.
- i. 96

Page 16
நகரத்தின் நிழல்
இப்பொழுதெல்லாம், யாழ்ப்பான ரெயில்வே ஸ்டேச னில் திருவிழாக் கூட்டந்தான்.
--திேனசரி இவ்வளவு சனக்கூட்டம் எங்கே போகின் றதோ? எங்கிருந்து வருகின்றதோ?
அந்த நெருக்குவாரக் கூட்டத்துடன் அள்ளுண்டு, எற் றுண்டு, வெளியேறியபொழுதுதான் சாவகாசமாக மூச்சுவிட முடிகின்றது.
தென்குேலைகளினுல் அடைக்கப்பட்ட வேலிகளேக் கொண்ட யாழ்ப்பாண மாநகரம் அமைதியை இழந்து, இயந் திர வேகத்திற்குத் தன்னை ஈடுகொடுக்கும் கோலத்தை இங்கு தான் பார்க்கலாம்.
எத்தனை எத்தனே விதமான டாக்ஸிக்காரர்கள்! அவற்றில் கூட முண்டியடித்துக்கொண்டு ஏறுவதிலேதான் எவ்வளவு வேகம்? பேரமாவது, மண்ணுவது சிறு சக்கரப் பற்களின் சுழற்சியில் காசு காட்டும் அந்தச் சின்னஞ் சிறு வலதுகை இரும்புப்பெட்டியில் உள்ள நம்பிக்கைதான் என்ன?
முன்னரெல்லாம் ரிக்ஷாக்களும், குதிரை வண்டிகளும் தான் பிரயாணிகளுக்கு ஒரேயொரு கதி. குதிரை வண்டி களும் அந்தஸ்து வெளிச்சம் போடுபவர்களுக்குத்தான் மற்றும்படி என்னைப் போன்ற பிரயாணிகளுக்கு ரிக்ஷாவை விட்டால், நடராஜா சர்வீஸ்தான்.
என்ன இருந்தாலும் இந்த ரிக்ஷாக்காரர்களுடன் பேரம் பேசுவதில் இருக்கின்ற குவழி ஒன்று இருக்கின்றதே-அடாடா, அதை அனுபவித்துப் பார்த்தால்தான் அதன் ரஸனை விளங் கும்.
ெேரண்டு ரூவா தா, தம்பி!?
எேன்ன உதிலை கிடக்கிற நல்லூருக்கே?

நகரத்தின் நிழல் 27
' என்ன ராசா, நீ இப்பிடிச் சொல்லுருய்? ஒருநாளும் ரிக்சோவிலே போகல்லேயே...?? உதுதான் கூலி? *ஏறு துரை ஒண்டரை ரூவா தாம்.ஏறு.?
ஒரு ரூவா தான் தருவன்.? *அதுக்கு வேறை ஆளைப் பார்.”* இப்படியான பேரப் பேச்சுக்கள் இப்பொழுது கிடையாது. பீம் பீம்? பூம் பூம்? என்ற கார்களின் ஹார்ன் இரைச்சல் தான். மனிதக் குரல்களுக்குப் பதிலாக இயந்திரங்களின் உறுமல்.
டாக்ஸிகளேத் தாண்டியதும் ஒதுக்குப்புறமாக இரண்டு ரிக்ஷா வண்டிகள். நான் அங்கு நடையைக் காட்டுகின்றேன். என்னைக் கண்டதும் சின்னட்டி, °தம்பியே! போன கிழமை யும் வந்தியளே! இங்கை ஆருக்காகிலும் சுகமில்லைக் கிகமில் இலயே? என்று வாய்நிறையச் சிரித்து வரவேற்று, வாடிக் கைக்காரர் குந்தியிருக்கிற தும்பு மெத்தையைக் கையால் தட் டிச் சுத்தம் செய்கிறன். 86ம்.சரி; ஏறுங்கோவன், தம்பி.??
நான் ரிக்ஷாவில் ஏறிக் குந்துகிறேன். 'இல்லைச் சின் னட்டி, இங்கை ஒரு காணியிலே கரைச்சல். அதுதான் அடிக் கடி கொழும்பிலை இருந்து வரவேண்டி இருக்கு? என்று அக் கறையுடன் சொல்லுகிறேன்.
சற்றுத் தூரத்தில் புத்தம் புது மோரீஸ் மைனர் வாகனத் தின் கதவுகளைத் திறந்துகொண்டு ஏறுகிருர், அமிர்தலிங்கம் அவரொரு பிரபலஸ்தர். என்னைத் தெரிந்திருந்தாலும் தெரியா தவரைப்போலக் காட்டிக்கொள்ளும் முகத் திருப்பம். ஏனென் ரூல் இந்த யந்திர யுகத்தில், மனிதனை மனிதன் இழுக்கும் ரிக்ஷாவில் நான் பிரயாணம் செய்வதைப் பார்த்து மனதிற் குள் என்னை வெறுத்து ஒதுக்கிக்கொண்டாரோ, என்னமோ! ஒருவேளை, காட்டுமிராண்டி என்று என்னை எண்ணிக்கொண் டிருக்கலாம்.
அமிர்தலிங்கம் காருக்குள் ஏறி அமர்வதற்கு முன்னரே, சின்னட்டி, ஏர்க்காலைத் தாக்கி தூக்கிரிக்ஷா வண்டியைச் சம நிலையில் நிமிர்த்திப் பிடித்து, இழுக்க ஆரம்பித்தான்.

Page 17
28 பாதுகை
கார்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடி, சின்னட்டியின் பொறுமையைச் சோதித்தன. கிடைத்த இடைவெளியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவன், வண்டிச் சில்லை வெட்டித் திருப்பி, தார் ரோட்டில் ரிக்ஷாவை ஏற்ற முயற்சித் தான்.
*டேய், மடையா! கார் வாறது பின்னுலை; தெரிய 8%pu ሀff ም” ”
சாரதி ஆசனத்தில் வீற்றிருந்த அமிர்தலிங்கம் ஐயா அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. அதனுல்தான் சின் னட்டியின்மீது சீறி விழுகிறர்.
ரிக்ஷாவை ஒரு ஓரமாக ஒதுக்கிய சின்னட்டி, ப்ேபூ! இந்தக் கார்க்காறன்களுக்குப் புதுசாக் கொம்பு முளைச்சுக் கிடக்காக்கும்!” என்று வாய்க்குள் மூணுமுணுத்தபடியே வண்டியை வேகமாக இழுக்கிறன்.
நடந்து செல்லும் பிரயாணிகளைத் தாண்டிக்கொண்டு ரிக்ஷா வேகமாக முன்னேறுகிறது.
முன்னர் நிலையத்துக்கு முன்பக்கம் வரிசையாக இருந்த கடைகளெல்லாம் புகையிரத நிலைய விஸ்தரிப்புத் திட்டத்தி குல் தரைமட்டமாகக் காட்சியளிக்கின்றன.
அன்றுஇந்த இடத்திலேதான் இருந்தது எவரெஸ்ட் ஹோட்டல். ரெயில் வருகிற, போகிற நேரங்களில் நடக்கும் வியாபாரத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். எதிரே மலையாளத்தான் கடைச் சுவ ரிலேதான் ரீகல் தியேட்டருக்கு வரவிருந்த பயங்கர இங்கிலீஸ் சீரியல் சண்டைப் படத்திற்கு விளம்பரம் ஒட்டியிருந்தது. அதைப் பார்த்ததும் எவரெஸ்ட் கடையில் ஒரு சினிமாப் பத் திரிகை வாங்கலாம் என்ற எண்ணம் என் மனதில் நிழலாடி யது. அதை வாங்கிக்கொண்டு, வீதியில் எறியப்பட்ட வாழைப்பழத்தோலே உண்ண விரைந்த தெருப் பொறுக்கி மாடொன்றுடன் மோதித் திரும்பக் கைப்பெட்டியை இடது கைக்கு மாற்றியபொழுது.
66தம்பி.?? என்ற குரல் பின்னலிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.

நகரத்தின் நிழல் 29
ஒரு கையால் ரிக்ஷாவின் ஏர்க்காலைத் தாங்கியவண்ணம், மறு கையால் தன் முகத்தில் ஒட்டியிருக்கும் அழுக்கைப் பார்க்கிலும் அழுக்கு மிகுந்த சீலைத் துண்டினுல், பசிக் களை இழையோடியிருக்கும் முகத்தில் சற்றே வேர் விடும் வியர்வைத் துளிகளை உரசித் துடைத்தவாறு, பிரிக்சோவிலை ஏறுமன் தம்பி, நான் கொண்டுபோறன்? என்று கேட்டான், சின்னட்டி.
நடுவயதைத் தாண்டி குடும்ப பாரத்தால் நசியுண்டு, பசியினுல் உடல் உலர்த்தப்பட்டு, ரிக்ஷா இழுப்புத் தொழி லால் கூனிய முதுகுடன் அவன் காட்சி தந்தான்.
ேேவண்டாம்; நான் நடந்து போயிடுவன்.? *அதுக்கில்லே ராசா. எனக்கொண்டும் புழைப்பில்லே. விடியக்காத்தாலே ஏதோ குடுக்கிறதைக் குடுங்க...ஏறுங்க தம்பி? என்று கொஞ்சுதலுடன் கெஞ்சினன்.
நான் அப்பொழுது இளமைத் துடிப்பின் இலட்சியவாதி. மனிதன் மனிதனுக வாழவேண்டும். ஒரு மனிதன் ஏறிக் குந்தி யிருக்க, இன்னெரு மனிதன் மாட்டைப்போல இழுப்பது அநாகரிகமானது. இழுப்பது மனிதப் பண்பையே வேரறுக்கும் தொழில். சமதர்மக் கொள்கையில் ஒன்று ரிக்ஷாவில் ஏரும லிருப்பதும் என்ற நியதியைக் கெட்டியாக நம்பியிருந்தேன். அந்த மனிதாபிமான ஜீவகாருண்யப் பிரச்சினையை எத்தனை வார்த்தைகளினலும் எந்தவிதமான தன்மைகளில் சொன்கு லும் அவன் விளங்கிக்கொள்ள மாட்டான் என்றே பட்டது. நிலைமை சங்கடமானதுதான். பதிலொன்றும் சொல்லாமல், நான் சிங்கள பேக்கரியையும் தாண்டி, நடந்துகொண்டிருந் தேன்.
ஒட்டமான, விரைவைப் பெருத வேகமான நடையில் சின்னட்டி பின்னல் தொடர்ந்து வந்தான்.
தேம்பி, இஞ்சை பாரும் ரெண்டுமூண்டு நாளாய்க் காய்ச்சலாலை நான் ரிக்சோவைக் கையால் தொடக்கூட இல்லை. இண்டைக்குத் தான் வந்தனன். துலே தூரத்துக்கு ஒட ஏலாது. இப்பிடிக் கிட்டடி இடத்துக்கெண்டாலும் போனுத்தான் வீட்டிலை சோத்துலே வைக்கலாம். உங்கட
2

Page 18
3U UTg160)45
உழைப்பிலே இது பெரிய காசே? நானெண்டும் பேசல்லை. கொண்டுபோய் விடுறன். ஏதோ பாத்துக் குடுக்கிறதை மனசு போலக் குடுத்தாச் சரி?? என்று சொல்லி, ரோட்டில் சாக்கடை யோரமாக ரிக்ஷாவை நம்பிக்கையுடன் நிறுத்தினுன்.
இரக்கத்தை யாசிக்கும் விழிகள்! பரிதாப உணர்வு நெஞ் சில் குடைந்தது. இரக்கம் என்பது கண்ணிர். ஒரு கணத் தின் வெடிப்பில் தோன்றி உலர்ந்துவிடுகின்றது. இரக்கத்திற் குப் பதிலாக வர்க்க ரீதியான இரத்த தான யாகம்தான் தொழிலாளிகளின் முழு வாழ்க்கையையுமே மாற்றி யமைக் கும்” என்று நான் நம்பும் தத்துவ விளக்கத்தில் நம்பிக்கை இழக்கவில்லை.
கைப்பெட்டியைத் தெருவில் வைத்துவிட்டு, பைக்குள் கைவிட்டுத் துளாவினேன். நான் இன்னமும் யோசிப்ப தாகவே அவன் நினைத்திருக்க வேண்டும். என் கருமித் தனம் தான் எனது தயக்கத்திற்குக் காரணமாக இருந்திருக்கலா மென்று அவன் கற்பித்திருக்கவும் கூடும்.
தேம்பி, உங்களிட்ட நான் கூட எடுக்கல்லை. ஐம்பே சேத்துக் காசுக்கு யோசிக்கிறியளே?-தன் மன வெதும்ப லின் உஷ்ணத்தை மூச்சாக விட்டான்.
*உண்மையைச் சொன்னல் என்ன? உன்ரை ரிக்ஷா விலை ஏறி உன்னிலை நான் சவாரி செய்ய விரும்பவில்லை. நீயும் மனுசன் நானும் மனுசன். அதுதான்.உனக்குச் சொன்னு லும் புரியாதுபோலே’ என்று சொல்லி, அவன் கையில் ஐம்பது சதக் குத்திக் காசொன்றை எடுத்து வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
என் சமதர்மக் கோட்பாட்டினைக் கெட்டியாகக் காப் பாற்றிவிட்ட வெற்றி முறுவல்
சற்றுத் தூரம், வீதிக்குக் குடைபிடித்து நிழல் பரப்பும் வாகை மரத்தையும் தாண்டி, பிள்ளையார் கோவில் ஒழுங்கை யையும் கடந்து நடந்திருப்பேன்.
ரிக்ஷா வேகமாக என்னைத் தாண்டி நின்றது. வெறு வயிற்றில் இழுத்த களைப்பு. மேலும்கீழும் வெட்டிக் கிளர்ந் தெழும் மூச்சினை விட்டுச் சின்னட்டி நின்றன்.

நகரத்தின் நிழல் 31
இதென்னடா, காலங்காத்தாலே வம்பை விலைக்கு வாங்கி யிருக்கிறேன்! இதுகளுக்கு எப்பிடிக் குடுத்தாலும் அண்டாது? என்று என் பரம்பரையான மத்தியதர வர்க்க உணர்வு ஒரு கணம் தலைநீட்டி எட்டிப் பார்த்தது.
ஒரு இமைப்பொழுது நேரத்தில் கல்லாகிய மனதுடன், 'என்ன சும்மா போகவிட மாட்டியே??? என்றேன்.
சின்னட்டியின் கண்கள் கலங்கின. பசி வேக்காட்டில் உலர்ந்திருந்த உதடுகளை நாக்கால் நக்கிக்கொண்டான்.
தெம்பி குறை நினைக்காதையும். நான் ரிக்சோக்காரன்; உழைச்சுப் பிழைக்கிறவன்; பிச்சைக்காரனில்லை? என்று சொல்லி, நான் கொடுத்த நாணயத்தைத் திருப்பித் தந்து விட்டு ரிக்ஷா வை நிமிர்த்தினுன்.
ஒரே ஒரு கணம்.
- அவன் மனிதன்!”
*மனிதன், உழைக்கும் சக்தியையே நம்பி வாழுபவன்.?
**இந்தா...??
66என்ன, தம்பி???
66ரிக்ஷாவைக் கொண்டா..?
நான் ரிக்ஷாவில் ஏறினேன்.
இந்தச் சம்பவங்களில் நீந்திய நான், அதற்குப் பின்னர்
சின்னட்டியின் நிரந்தர வாடிக்கைக்காரர்களில் ஒருவணுகி விட்டேன்! ஏறும்பொழுதெல்லாம் அவனும் நானும் கலகலப் பாகப் பேசிக்கொள்வோம்.
இன்று வழக்கத்திற்கு விரோதமான மெளனம்.
ரிக்ஷா ஸ்டேசன் சந்தியால் திரும்பி, ஆஸ்பத்திரி வீதி யில் ஓடிக்கொண்டிருக்கிறது.
68 என்ன தம்பி, பேச்சுமூச்சைக் கானேன்? காணியிலே வழக்குச் சித்தாயங்களோ?
*இல்லை சின்னட்டி அவ்வளவு கரைச்சலில்லை. இண் டைக்கு எப்பிடியும் முடிந்திடும். அதுசரி. உன்ரை பாடு எப்பிடி??? y

Page 19
32 Lurg Gödés
*தெரிஞ்சதுதானே தம்பியைப்போலை ரெண்டொருத்தர் வந்தா உண்டு; இல்லாட்டிப்போன, வெறும் ரிச்சோவை இழுத்துக்கொண்டு வீட்டைப் போகவேண்டியதுதான்.?
*அப்ப, வீட்டுப்பாடுகளை ஆர் கவனிக்கிறது?
*ஏன் தம்பி, பொய் சொல்லவேனும்? என்ரை மூத்தவன் இப்ப ராக்சியிலே வேலை செய்யுருன். சோத்துக்குப் புழை யில்லை. பாடுபட்ட உடம்பு வீட்டிலை சும்மா குந்தி இருக்க முடியாதே? நான் இதை இழுக்கிறதும், என்ரை மேனுக்கும் புடிக்கிதில்லை. என்னையும் கார் ஒட்டப் பழக்கிவிடுருணும். பேய்ப் பொடியன்! இந்த வயசுக்குப் புறகு எப்பிடிக் காரோட்டு றது எண்ட விசயம் எனக்கொன்னவோ விளங்கல்லை.??
பழக்கப்பட்ட கால்களும், அந்தக் கால்களின் உதை சக்தியால் ரிக்ஷாவும் அடைக்கல மாதாகோவிலைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றன.
- 1954

தாளக் காவடி
நானெரு பஸ் கண்டக்டர்.
என் பெயரைச் சொல்லத்தான் வேண்டுமா?-
*ஊரைச் சொன்னுலும் பேரைச் சொல்லாதே’ என்பது பழமொழி. பேர் வேண்டாம்; ஊர்ப் பெயரை மாத்திரம் சொல்லுகின்றேனே -பருத்தித்துறை. இவ்வேலையில் ஐந்து வருஷம் சேர்விஸ்.
’ எனக்கும் வயிறு இருக்கின்றது. அதைத் தினமும் நிரப்
பித்தான் உயிர் வாழவேண்டும். அதனுலேதான் நான் பஸ் கண்டக்டர் வேலையில் சேர்ந்தேன். இதற்குப் பதிலாக வேறு எந்த வேலை கிடைத்திருந்தாலும் நான் ஏற்றிருப்பேன். ஆனல், இன்று இந்த வேலையே போதுமென்று படுகின்றது. இதில்தான் என்ன குறை இருக்கின்றது? கோழி மேய்க்கும் வேலையென்றலும் கோர்னமேந்து வேலை? என்று யாழ்ப் பாணத்து மனப்பான்மையையும் திருப்தி செய்யும் வகையில் இப்பொழுது நான் ஓர் அரசாங்க ஊழியன்தான். வேலை, ஊதியம் என்பவற்றை விடுத்து, இதில் வேருெரு சுவையும் இருக்கத்தான் இருக்கின்றது.
நான் கண்டக்டராக வேலை பார்க்கும் இலங்கைப் போக்கு வரத்துச் சபையைச் சேர்ந்த இந்தப் பஸ் தினமும் நான்கு தட வைக்கு மேலாக, கீரிமலைக்குச் சென்று திரும்புகின்றது. நான் மூன்று தடவை இதில் பஸ் கண்டக்டராகப் பணியாற்றுவேன். இதற்கிடையிலேதான் பஸ்ஸில் நின்றவாக்கிலேயே, எத்தனை எத்தனை விஷயங்களை அறிந்துகொள்ளுகின்றேன் நான் இந் தப் பஸ் வண்டி பூரணமான சின்னஞ் சிறு உலகம். பேசப் படாத விஷயங்களில்லே. அரசியல் சிக்கல்கள், கோர்ட்டு விவகாரங்கள், காய்கறி விலை நிலவரங்கள், தேர்தல் சூழ்நிலை கள், இலக்கியப் பிரச்சினைகள்.இன்னும் என்னென்னவெல் 6) iro5unit. . .

Page 20
34 பாதுகை
-பின்னர், எதுதான் மிச்சம்?
இதோ, பஸ் கீரிமலையிலிருந்து புறப்படுகின்றது.
பஸ்ஸின் பின்புறம் இருக்கும் மூன்று நடுத்தர வயதைத் தாண்டிக் கிழங்களாகிவிடாத மூவரில் ஒருவர், தரகர். இன்று சுன்னுகம் சந்தை நாள். அவரிடம் மாட்டு விலை, புகையிலை விலை நிலவரம் முதலியவற்றைக் கேட்கலாம். மரக்கறித் தரகு அவருக்கு வாலாயமாக அமைந்துவிட்ட ஒரு விசேடத் துறை. *கொழும்பாளவை வந்ததும் வந்தினம், காய் பிஞ்சு விலை எப் படி எக்கச்சக்கமாக ஏறிக் கிடக்குது? என்று அங்கலாய்க் கிருர், அவருக்குப் பக்கத்தில் விபூதிப் பட்டை தீட்டிக் குண் டஞ்சிச் சால்வையால் முதுகு மறையப் போர்த்தபடி வீற்றிருப் பவருக்குக் கோர்ட்டடியில் தூங்குவது தொழில். புரக்கராசி மார்களுக்கு வழக்குகள் பிடித்துக் கொடுப்பதுடன், கலி யானத் தரகும் இடைக்கிடை உண்டு. மல்லாகம் கற்பழிப்பு வழக்கிலே ‘ஏழு வருஷம் மறியல் தீர்ந்துபோன விவகாரத் தைப் புதினப் பத்திரிகைகள் ஏழு கலங் கட்டிச் செய்தியாக வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே சொல்லி விட்ட நிபுணன். அந்தக் கொல்லங்கலட்டிச் சோமன் ஒரு பொடிச்சியைக் கூட்டிக்கொண்டு ரா வோடு ராவாய் மட்டக் கிளப்புக்கு ஒடின? செய்தி, போலீஸில் புகார் செய்யப்படு வதற்கு முன்னுடியே பஸ்ஸில் அவரால் அறிவிக்கப்பட்டு விட்ட் ஆறிப்போன பழங்கஞ்சி விஷயம். மற்றவர் தாளக் காவடி வைத்தி, பெரிய அண்ணுவியார். யார் யார் நடிக்கிற படம், எந்த எந்தத் தியேட்டருக்கு வருகிறது, எத்தனே பாடல் கள் இன்ன இன்ன படங்களில் இருக்கின்றன, இன்ன இன் ஞர் இன்ன பாட்டுக்களைப் பாடியிருக்கின்றனர் என்ற இன்னுே ரன்ன விஷயங்களில் கைவல்யமாகத் திகழ்பவர். பஸ்ஸின் நிரந்தரப் பிரயாணிகளுள் ஒருத்தியான முத்தாச்சிக் கிழவி மாத்திரம் இலேசுப்பட்டவளா, என்ன? அவளுடைய நரைமயி ரிலும் பார்க்க முதியது அவள் வயது. கடந்த எண்பது வருடங் களின் சரித்திரச் சுவடி அவள். சின்னப் பிள்ளை கங்காணியை ஒரு கிழமையாகக் காணவில்லை. ஆஸ்பத்திரிச் சாப்பாட்டில் அவள் தேகம் பனங்குத்திபோலப் பெருத்திருந்தாலும், வரு

தாளக் காவடி 35
ஷக் கொத்தியாகச் சந்ததி பெருக்குவதில் என்னமோ குறைச் சல் இல்லை. தெல்லிப்பளை சந்தியில் பஸ்ஸை மறித்து ஏறும் செந்தி மாஸ்டரைத் தெரியாதவர்கள் யார்? எந்தப் புத்தகம் எத்தனையாம் ஆண்டு யாரால் எழுதி வெளியிடப்பட்டது? அதன் இத்தனையாவது பக்கத்திலே இன்ன இன்ன எழுதி இருக்கின்றது என்ற செய்திகளெல்லாம், தண்ணிர் பட்டபாடு. எழுத்தாளர் சங்கக் கூட்டங்கள், இலக்கிய விழாக்கள், புத் தகக் கடைகள் என்றல் மனுசனுக்கு உயிர். சோறு தண்ணிர் கூட அப்புறந்தான். நடமாடும் நூல்நிலையம் என்று, இலக்கிய வட்டாரத்தில் ஒரு பெயர் கூட அடிபடுவதுண்டு. தமிழ் இன, மொழிப் பற்றில் எவரெஸ்ட் என்று தன்னைத் தானே கற்பித் துக்கொள்ளும் இணுவில் தளையசிங்கம் சிங் களபூரீ அழிப்பு வழக் கில் சிறை சென்ற செம்மல். பஸ்ஸென்றல் என்ன, ஏறி இறங்குவதற்குள் ஒலிபெருக்கியும் சோடாப் போத்தலும் இல்லாமலேயே ஒரு மேடைப்பிரசங்கம் செய்து முடிக்கக் கூடிய கர்மவீரன். மல்லாகத்தில் ஏறும் மணியம் ஒரு செயல் வீரன், துணிச்சல் கட்டை. ஆணுல் ஒன்று: மணியத்தின் காதில் விழக் கம்யூனிஸ்ட் கட்சியைப்பற்றி யாராவது இசக்குப் பிசக்காகப் பேசிவிட்டால், வந்தது வினே. இருந்தும் பொறுமை சாலி. காங்கேசந்துறைச் சீமேந்து பாக்டரியில் வேலே செய் யும் காங்கேசுவுக்குக் கருங்காலி உடம்புதான். ஆனல் மெழுகு உள்ளம். யூனியன் நோட்டீசுகளைப் பஸ்ஸிற்குள் விநியோகிப் பதிலும் ஒரு திருப்தி. பெண் புரசுகள் வந்துவிட்டால் முத லில் எழும்பி இடம் கொடுக்கக்கூடிய ஒரேயொரு ஆண்பிள்ளை இவரே தான். புள்ளைத்தாச்சியாக வயிறு வீங்கிக் காணப் படும் மாட்டுத்தாள் பெரிய தபால் உறையைக் கக்கத்தில் இடுக்கிப் பிடித்த வண்ணம், சந்தனப் பொட்டுச் சகிதம், பழைய ஈழகேசரிக் கந்தோரிலிருந்து அடிக்கடி ஏறிக்கொள் பவர் தான் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கே நன்கு அறிமுக மான நிருபர் நித்தியலிங்கம் அவர்கள். யாழ்ப்பாணக் கச்சே ரிக்கு முன்னுல் நடந்த தமிழ்மொழிப் பாதுகாப்புச் சத்தியாக் கிரக இயக்கத்தை இந்த மன்னன்தான் நடாத்தி வெற்றிகர மாக முடித்ததாக வடமாகாணமெங்கும் வதந்தி உலாவியது

Page 21
36 Liga as
என்னமோ உண்மை, அவர் ஊமையல்ல. ஆனலும் கட்ச்
செவி. *ரேப்ரொக்கோட்” பதிவு. பஸ்ஸில் காற்றுவாக்கில் பேசப்படும் எந்த விஷயம் அச்சரக்கனின் அந்த வாரத்திய உணவாகும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலாது. ஐந்து முச்சந்தி காதர் காக்கா, தினமும் பத்து நிமிடப் பிர யாணந்தான். நாச்சிமார் கோயில் வருவதற்கிடையில் தனது தனித்துவத்தைக் காட்டத் தவறுவதுமில்லை. இப்பொழுதும் பஸ் ஸின் பக்கத்துப் பெண்கள் ஸிட்டில் இருந்துவரும் இரண்டு பெண்களும் கல்யாணமாகாதவர்கள். வெங்காயச் சருகுச் சேலைகளும் ஹாலிவுட் மாக்ஸ்பெக்டர் அழகு சாதனங்களும் இன்னமும் இவர்களிடம் விளம்பரம் பெற்றுக் கலையாகவில்லை. தபால் கந்தோரில் வேலை பார்க்கும் பெண்களாக இருக்கலாம். மற்றப்படி முகங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளாத பிரயாணிகள். முன் ஆசனத்தில் உட்கார்ந்து இருக்கும் இரு வர் கறுவாக் காட்டுத் தமிழ் பேசுகின்றர்கள். இவர்கள் கப்ப லோட்டிய தமிழன் பரம்பரை பேசி, வகுப்புக் கலவரத்தில் கொழும்பில் இருந்து கப்பலில் ஓடிவந்தவர்களாக இருக்க வேண்டுமென்று ஊகிக்கிறேன். தமிழ் “டமிலாக இருந்தா லும், பேச்சு சுவாரஸ்யமாக இருக்கின்றது.
மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலைப் பஸ் தாண்டுவதற்கும் தாளக் காவடி வைத்தி, தலையில் குட்டிக்கொள்வதற்கும் சரி யாக இருக்கும். வைத்தி தன் தலையில் குட்டிக்கொள்கின்ருர். என் கண்கள் அவருடைய சம்பாவனை அபிநயத்தில் மேய, டேமி?லர்களின் உச்சஸ்தாயிப் பேச்சு, காது களை மொய்க்கின் றது. “ஐ ஸே இந்தப் பாஷைப் புரொப்ளத்தை யூ. என். ஒ. ஒண்டுதான் சோல்வ் பண்ணும். இங்க பார்லிமெண்டாலே ஒண்டும் முடியாது” என்கிறர் ஒருவர். மற்றவரும் அரசியல் விவகாரங்களில் தான் அப்படி ஒன்றும் பால் குடியல்ல என் பதை நிரூபிக்கப் பிரயத்தனப்படுகின்றர். ‘ஐக்கிய நாடுகள் சபை இந்தக் கொங்கோப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் ததிகிணதோம் போடுது. இற் இஸ் நோ யூஸ், நாங்கள் ஒரு கையெழுத்து கம்பேயின் துவக்கி, எங்கட கையெழுத்துக்களை எல்லாம் குயீன் எலிஜபெத்துக்கு அனுப்பி வைக்கவேனும்.

தாளக் காவடி 7
பீடமிலர் யுன்ைட்டாக இப்படிச் செய்தால்தான் நியாயம் கிடைக்கும். என்ன நான் சொல்றது, சரிதானே? என்று தனது கோட்பாட்டினை அவிழ்த்துவிட்டு, மாட்சிமை தங்கிய மகாராணியின் சாம்ராச்சியத்தின்மேல் தனக்குள்ள நன்றி விசுவாசத்தை அறிமுகப்படுத்துகின்றர். இந்த ரீதியில் வாதப் பிரதிவாதங்கள் நடக்க, பஸ் நிற்கின்றது.
பஸ்ஸிற்குள் ஏறுகின்றவர் பழையகால மணியகாரர், ஐயக்கோன்தான். இவருக்கு அந்தக்காலத்தில் - பஸ் கம்பனி யாக நடந்த காலத்தில் - பஸ்ஸில் டிக்கட் எழுதப்பட்டதில்லை. இப்பொழுது டிக்கட் ஒன்றை எழுதிக் கிழித்துக் கொடுக்கின் றேன். பெற்றுக்கொண்டு, கடைசி வரிசையில் காலியாகக் கிடந்த இடத்தை அடைத்துக்கொள்ளுகின்றர். *காசு!?-- நான் ஞாபகப்படுத்துகின்றேன். இவர்களுக்குத் திடீரென்று ஞாபகமறதி அதிகமாம்! “என்னப்பா, அவதிப்படுத்துகிருய்? உன் ரை காசைக் குடுக்காமல் ஒடியா போய்விடுவேன்? என்று கேட்கும் தொனியில், கால மாற்றத்தின் முன்னேற்றத் தில் மனம் வெதும்பும் ஆதுங்கம் கிளைவிட்டுத் தொனிக் கின்றது.
மல்லாகம் சந்தையில் நார் மட்டைக் கட்டுடன் ஒருவன் ஏறுகின்றன். அவன் அஞ்சனந்தாழ்வுத் தம்பன். முன்னர் பவர்ஹவுஸுக்குப் பின்னலிருந்த வெட்டைவெளி வளவில் கள்ளுக் கொட்டில் நடத்தியபோது பழக்கம். பாளைத் தூசுகள் தேகமெங்கும் ஒட்டிக் கிடக்க, வேர்வை வெள்ளம் உடலெங் கும் வழியக் காட்சி தருகிருன். மூவர் இருக்கும் இடத்தைத் தான் லாங்வேஜ் புரொப்ளக்காரர் இருவரும் அடைத்திருந் தனர். தமிழரின் ஒற்றுமை பற்றிப் பேசிய வாய்கள் இன்னமும் ஒயவில்லை. அவனுடைய உடல் வேர்வை தங்கள் மீது படிந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் திருட்டுப் பார்வையை என்மீது வீசி, கால்களை அகட்டி விரித்து, தாராளமாக இருந்து கொள்ளுகின்றர்கள். நல்லகாலம்! இந்தப் பஞ்சைகள் பஸ் தொட்டிக்குள் கூனிக் குறுகிக் குந்தி இருந்து பிரயாணம் செய்த காலத்தில் நான் பஸ் கண்டக்டராக இருந்ததில்லை. தம்பனுக்கு நான் இடம் கண்டுபிடிக்கப் பிரயத்தனப்படுவதற்

Page 22
38 . 8ʼ JJAPğipsubd8 iy”.
கிடையில் பஸ் நிற்கின்றது. மூவர் ஏறுகின்றனர். அம்மூவரும் சர்வகலாசால் மாணவர்களாக இருக்கவேண்டும். இல்லா விட்டால், இந்த அலங்கோல உடையில் அம்பலத்திற்கு வந் திருக்க மாட்டாச்கள். இந்த மோஸ்தர் உடைகள் எல்லாம், வாளிட்டிப் பக்கம்தான் ஆனந்தத் தாண்டவம் ஆடுவது வழக்கம். மூவரில் இருவர் பாஷைப் புரொப்க்ளக்காரர்கன் நெருக்கி, இடத்தைப் பிதுக்கி எடுத்துவிடுகின்றர்கள். ஒருவன் *மவுத் ஓர்கனை எடுத்து வாயில் வைத்து ரொக் அன் ரோல் மாடல் சங்கீதம் பிழிகின்றன். மற்றவன் பைலா? மெட்டில் கையால் தாளம் போடுகின்றன். இடம் பிடிக்கத் தவறியவன், பஸ்ஸின் நடுவில் கூடாரத்திற்கு முட்டுக் கொடுத்துள்ள இரும் புக் கம்பியைத் தொட்டும், விட்டும், தாளத்திற்கு ஏற்றவாறு பிடித்தும் சுற்றிச் சுழன்று நடனமாடத் தொடங்குகின்றன்.
-ஒரே ரகளை! அங்கீகரிக்காத முகபாவத்தில் பிரயாணிகளின் பார்வை கள் அவர்கள் மீது நிலைக்கின்றன. அவர்களுடைய விழிகளைத் தங்கள் பக்கம் திருப்பிவிட்டோம் என்ற கர்வத்தில், சூடேறிய கட்டம். தன்னை மறந்து ஆட்டத்தில் ஈடுபட்டவனின் நிலை, பஸ் ஒரு முடக்கில் வெட்டித் திரும்பிய வேகத்தில் தடுமாறு கின்றது. அவன் அந்தத் தபால் கந்தோரில் வேலை பார்க்கும் உத்தியோகக்காரப் பெண்களின் மீது மோதுகின்றன்.
*என்னப்பா கொண்டக்டர், இது பஸ்ஸா? கூத்து மேடையா? என்று பெண்களுக்காக இரக்கப்பட்ட யாரோ பஸ் பிரயாணி கனல் கக்குகின்றர்.
நாகரிகக் குஞ்சுகளின் கலையார்வத்தில் வேகம் அதிகரிக் கின்றது. புதிய டெம்போ இரட்டை விரலை வாய்க்குள் கொடுத்து, சீழ்க்கையடிக்கப்படுகின்றது
*தம்பிமாரே! தப்பித் தவறி பிரேக் டவுன் இல்லாமல் ஓடும் பஸ் இதுதான். பெண் புரசுகளும் இதிலே இருக்கினம். உந்த ஆட்டத்தையும் பாட்டத்தையும் கொஞ்சம் நிறுத் துங்கோ? என்று விநயமாகக் கேட்டுவைக்கின்றேன்.
நீே சிங்களவனர பந்தமா? இங்கை, எங்கட பஸ்ஸிலே, ஆடவும் பாடவும் எங்களுக்குச் சுதந்திரமில்லையோ? அது

தாளக் காவடி 39
தானே தமிழன் ஒற்றுமை கெட்டுப்போய்க் கிடக்கிருன்? என்று அடிப்பதைப் போல ஒருவன் கேட்கின்றன். உட்கார்ந் திருந்த இருவரும் இன்னுமொரு பிசாசு நடனத்திற்குத் தயா ராகிவிட்டவர்களைப் போல, எழுந்து முன்னுக்கு வருகின் றர்கள்
-ஆட்டம் மும்முரம் கொண்டு தொடங்கிக் களை கட்டு கின்றது.
பிரயாணிகள் என்னைப் பார்க்கிருர்கள் நான் டிரைவ ரைப் பார்க்கிறேன்.
பஸ் சுன்னுகம் போலீஸ் நிலையத்திற்கு முன்னுல் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்படுகின்றது.
*தம்பிமாரே! இறங்குங்கோ! உங்களுக்கு இந்த நாட் டிலே என்ன சுதந்திரம் இருக்கிறது அல்லது இல்லை என்கிற தைப் போலீசுக்காரரிட்டைக் கேளுங்க.ம்.?-டிரைவர் உறுமுகின்ருர்,
சுடுகாட்டுப் பேரமைதி. பல்கலைக் கழக நாகரிகங்கள் மூன்றும் ‘எங்களை விட்டால் போதும்” என்று வாலைச் சுருட்டிக் கொண்டு இறங்குதுகள்.
பஸ் மீண்டும் பிரயாணத்தைத் தொடங்குகின்றது. தம்பன் டமிலர்? மத்தியில் இருக்கத் தனக்குச் சுதந்திரம் இருக்கின்றது என்பதை உணர்ந்தோ என்னமோ, அங்கு இட்ம் பிடித்து அமர்ந்துகொண்டிருக்கின்றன்.
சற்று முன்னர்தான் பஸ்ஸிற்குள் ஏறிய நித்தியலிங்கம் நிருபர், செய்தி வேட்டைக் கண்ணுேட்டத்தில் கம்பியைப் பிடித்தபடி தவம் செய்தவாறு, நிலையாய் நிற்கின்றர்.
பின்ஸ்ரீட்டில் குந்தியிருக்கும் மூவரும், இந்தக் காலத்துப் பொடியன்களின் குதியங்குத்தியைப் பற்றிப் பேசுகின்றனர். பஸ் என்ற சின்னஞ் சிறு உலகம் ஓடிக்கொண்டிருக் கிறது. !
...நான்தான் இந்தச் சின்னஞ் சிறு அதிசய உலகத்தின் கண்டக்டர்
- 1959

Page 23
பாபச் சலுகை
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி.
*சில்ரன் வார்ட்.?
நடுப்பகல்.
நோயாளரின் உற்றர் உறவினர் வந்து பார்க்கும் இடை நேரம். வெல்லக்கட்டியைத் திடீரென்று மொய்க்கும் எறும்புக் கூட்டம்போல், முட்டி மோதிக்கொண்டு, உறவுமுறைகளை யும் நட்புரிமைகளையும் நிலைநிறுத்தும் நோக்கத்துடனும் வேகத்துடனும் வருவோர், போவோர். - அமைதி கலைந்து, இரைச்சலும் பரபரப்பும்.
திருச்செல்வம் மருமகன் படுத்திருந்த கோலத்தை உற்றுப் பார்த்தான்.
*பாவம் இப்பப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்குது. வீட்டிலை காலைச் சும்மா வைச்சுக்கொண்டு இருந்தால்தானே? வேலியிலை ஏறுறதும் இறங்கிறதும்.கொய்யாமரத்து உச்சி யிலை இருந்து விழுகிறதெண்டால்...? நல்லவேளைத் தலைக்கு வந்தது முழங்கையோடை போச்சுது. அக்கா, பாவம் ஒண்டு மாறி ஒண்டு, இரண்டு மாசத்துக்கு முன்னந்தான் இவனுக்கு அடுத்த பொடுச்சியை நெருப்புக் காய்ச்சலிலே கொண்டுவந்து இங்கை போட்டுவிட்டு, சரியா ஒரு மாசம் ராவாப் பகலா முழிச் சிருந்தாள். இப்ப இவன்.?
கட்டிலைச் சுற்றி வந்தான், திருச்செல்வம். மேசை அல மாரியைத் திறந்து, சற்று முன்னர் தான் கொண்டு வந்து அக்காவிடம் கையளித்த திராட்சைப் பார்சலை மேசை மீதிருந்து எடுத்து உள்ளே வைத்துவிட்டுக் கதவைச் சாத்திக் கொக்கியால் பூட்டினுன்.
ராஜேஸ்வரன் நிம்மதியாக உறங்குகின்றன்.
திருச்செல்வத்தின் கண்கள் ஆஸ்பத்திரிச் சூழலைத் துழாவுகின்றன.

பாபுச் சலுகை 4.
அந்தண்டன் கிழவி தங்கம்மா வெற்றில்யைக் குதப்பிய படி இரண்டு எச்சிற் போச்சிகளை எடுத்துச் செல்லுகின்ருள்.
புது லாடம் பூட்டிய வெருளிக் குதிரைகளாட்டம், ஆஸ் பத்திரி சீமேந்துத் தரையைச் சீய்த்து நடக்கும் நர்ஸுகள்.
வெள்ளைக்கார மதர், ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக் கொண்டு நிறைவின் பூரணத்துடன் வந்துகொண்டிருக்கிருள். படுக்கை ஒவ்வொன்றிலும் குனிந்து குனிந்து மிக மெல்லிய குரலில் ஏதேதோ சொல்லிக்கொண்டே வருகிருள், மதர். ? உதட்டில் அமரிக்கையான புன்முறுவல்.
மிேஸ்டர், இந்தப் புல்லையின்ரே அம்மா எங்கே?? திருச் செல்வம் நிமிர்ந்து, அன்பு ததும்பும் அந்தக் கருநீல விழிகளைப் பார்க்கிருன்.
ஒருகணம். *அக்கா சாப்பிடப் போயிட்டாங்க, மதர். இப்ப வந் திடுவா.?
*மிஸ்டர், பயப்பட ஒன்னுமில்லே.ஒன்னுமில்லே. எக்ஸ்ரே பார்த்தம். கொஞ்சம் கொஞ்சம் சிம்பிள் பிராக்சர்? என்று ஆறுதல் சொல்லி, தூங்கும் பையனின் முகவாய்க் கட்டையை வருடிக்கொடுத்துவிட்டு அடுத்த படுக்கைக்கு நகருகின்றள்.
-*அருமையான மதர்” ெேகாஞ்சம் உங்கள் கரண்டியைத் தாரீங்களா? சிந்தனை இழை அறுகின்றது. திரும்பிப் பார்க்கின்றன், திருச்செல்வம். ேேதாடம்பழத் தண்ணி கரைப்பதற்குக் கரண்டி இல்லை. என்னுடைய மிஸிஸ்”ம் சாப்பிடப் போயிட்டா. அதுதான் அந்தக் கரண்டியைக் கொஞ்சம் தந்தால்.”
பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த பெண்குழந்தைக்குப் பாதுகாவலாக நின்ற அந்த மனிதனை அப்பொழுதுதான் நன் ருகக் கவனிக்க முடிந்தது. கறுப்புப் பிளானல் லோங்ஸ் வெள்ளை ஷேர்ட் கண்ணுக்குக் கண்ணுடி அழகு நடு உச்சி பிரித்து ந்ன்முக அழுத்தி வாரிவிடப்பட்ட தலை சட்டைப் பையில் தங்க மூடியிட்ட பார்க்கர் பேணு இடதுகையில்

Page 24
42 பாதுகை
பொன்சங்கிலி பூட்டிய கைக்கடிகாரம் பார்ப்பதற்கு அழகு. வயது முப்பதுக்கும் முப்பத்தைந்துக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். ...
-அந்தபி புள்ளையின்ரை தகப்பணுக இருக்குமோ? அல்லது.”
திறக்கப்படுகின்றது அலமாரி. கரண்டி கை மாறுகின்றது. தொங்ஸ்!?? சிறிது நேர வேலைக்குப் பின்னர் சிறுமிக்குப் பழத்தண்ணி ரைக் குடிக்கக் கொடுத்துவிட்டுத் தொடர்பற்றுப்போன பேச் சைத் தொடர்ந்தான், அந்த வாலிபன். “என் பேர் நடேச லிங்கம். சங்கானையில் இருக்கிருேம். கொழும்பில் வேல். இவ என்னுடைய ஒரேயொரு மகள்-வாசந்தி.??
எதைப்பற்றியுமே கேட்க முனையாமல் இருக்கும்பொழுது, இப்படி அறிமுகப்படலம் நடத்தி முடித்த நடேசலிங்கம் என்ற அந்த விசித்திரப் பிரகிருதியை ஆச்சரியத்துடன் பார்க்கின் ருன், திருச்செல்வம்.
நினைவுப் பூண்டு மனப் புழுதியில் முளை விடுகின்றது. 'அக்கா எங்க இன்னும் காணன்? சகோதரி சென்று மறைந்த திக்கைப் பார்க்கின்ருன். சே! ஏன் இவ்வளவு நேரம்? சம்பாஷணையில் நாட்டமில்லை. நீேங்கள் எங்கை இருக்கின்றது? என்று கேட்கின்ருன், நடேசலிங்கம். அறிமுகத்தை விரிவாக்கும் கேள்வி.
இப்படியான விசாரிப்புகளைக் கட்டோடு வெறுப்பவன் திருச்செல்வம். எனவே, முகத்தைச் சுளித்தான்.
நம்மிடம் மிகக் கேவலயான ஒரு அநாகரிகப் பழக்கம் இருக்கின்றது-பஸ்ஸில், ரெயிலில், ஏன் சாவீட்டில்கூட, ஊர் உத்தியோகம், குலம், கோத்திரம், கலியாணம் செய்தது, செய்யாதது, ஆகிய அத்தனையையும் வாய்விட்டே கேட்டு விசாரிப்பது. அது எண்டைக்கு எங்களை விட்டுத் துலையப் போகிறதோ? என்று மனங் குமுறிப் பலரிடம் வாதிட்ட திருச் செல்வம், இப்பொழுது வாய் செத்து நிற்கின்றன்.

Lur Laik. «Age Gods 43.
கேள்வி தொடர்கின்றது. . . . . . . . சொல்ல மனமில்லாமல் இருந்தபோதிலும் சும்மா ஒப்புக் காக, *ஆனக்கோட்டை” என்று சொல்லி வைக்கின்றன்.
66என்ன உத்தியோகம் பார்க்கிறீங்க? கேட்டுவிட்டுத் தொடர்ந்து பதிலையும் அவனே ஊகித்துச் சொல்கின்றன். “கொழும்பிலே கிளறிக்கல் சேவண்டாக்கும் .என்ன, சரிதானே??-தனது கண்டுபிடிப்பைத் தானே மெச்சிக்கொள்ளும் குழந்தைமனப்பான்மை கொண்டவனைப் போல, திருச்செல்வத்தைப் பார்த்து ஒரு வெற்றிச் சிரிப்புச் சிரித்துவைக்கின்றன், நடேசலிங்கம்.
இேல்லை; ஊரில் படிப்பிக்கிறேன்.? மகிழ்ச்சியுடன் ஊதிப் பெரிதாக்கிய பலூன், வெடித்துச் சிதறியதைக் கண்ணுல் காணும் குழந்தையின் மனத் தவிப்பு *ஓ.மாஸ்டரா??-நடேசலிங்கத்தின் முகத்தில் அலட்சிய மனுேபாவ ரேகை மின்னி மறைவதைத் திருச்செல்வம் அவ தானிக்கத் தவறவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ளாத முறையில் தன்னுடைய முகமாற்றத்தைக் கைதேர்ந்த சினிமா நடிகனைப் போலச் சட்டென்று மாற்றிக்கொண்ட நடேச லிங்கம், 'நான் முதலிலே அப்பிடித்தான் நினைச்சன். ஆமாம், நான் அப்பிடித்தான் முதலிலே எண்ணினேன்? என் கின்றன்.
அறிவு வளராத சிறுவனப் போன்ற நிலையிலுள்ள அந்த நாகரிக வாலிபன் தான் தவருகக் கற்பித்துக்கொண்டு சொன் னதைச் சரி செய்வதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியை யும், அதை உண்மையாக்க-நம்ப வைக்கப் பட்டபாட்டினை யும் நினைத்தபொழுது திருச்செல்வத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
-அதற்காக வாய்விட்டுச் சிரித்துவிட முடியுமா? மனதிற்குள் சிரித்துக்கொள்ளுகின்றன். மோஸ்டர் நீங்கள் மாஸ்டராக இருக்கிறதால், ஒண்டு ஞாபகத்திலை வருகிது. இந்தப் பள்ளிக்கூட விவகாரம்.? பேசிக்கொண்டு வந்ததை முடிக்காமல் இடையிலேயே விட்டு விட்டு, திருச்செல்வத்தின் கண்கண் வேடிக்கையாகக் கூர்ந்து

Page 25
4. Lutgabas
பார்க்கின்றன், நடேசலிங்கம். வகிப்புத் தோல்வியாக முடிந்துவிடக் கூடாதே என்ற ஆவல் மனதில் நிறைந்திருக்க, *என்ன மாஸ்டர், சொல்லுறீங்க? என்கின்றன்.
6ேஎதைச் சொல்றீங்க? *அதுதான், இந்தப் பள்ளிக்கூடங்கள் எல்லாத்திலேயும் எல்லாச் சாதியளும் ஒண்டாப் படிக்கிறதைப் பற்றித்தான். நீங்க என்ன நினைக்கிறீங்க??? − V வேடிக்கையான இந்த விவாதத்தில் வென்றுவிடவேண் டும் என்கின்ற நினைப்பில், சாய்வுநாற்காலிக் கனவுவாதிகளைப் போல, இப் பிரச்சினைக்கு உடன் தீர்வு கண்டுவிடும் நோக்கத் துடன், பரபரப்புடனும் ஒருவித ஆவேசத்துடனும் திருச்செல் வத்தைப் பார்த்துத் தொடர்ந்து கேட்கின்றன், நடேசலிங்கம்:
இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
*உங்க அபிப்பிராயத்தை முதலில் சொல்லுங்க பிறகு நான் சொல்லுறன்.?-தட்டிக்கழிக்கும் பாவனையில் சொல்லு கின்றன், திருச்செல்வம்.
*நான் கொழும்பிலை வீடெடுத்து இருந்தனுன். அங்கை தான் வாசந்தி படிச்சவள். இந்தச் சிங்களச் சண்டைக்குப் பிறகு, ஊரோடை வந்திட்டன். இப்ப சங்கானைப் பள்ளிக் கூடத்திலைதான் இவள் படிக்கிருள்.?
இப்படியான சம்பாஷணைகளில் இடையிட்டுப் பேசினல் உணர்ச்சி தோன்றி, ஆக்ரோஷம் பிறக்கும் என்பதை அனுபவ உண்மையாக உணர்ந்த திருச்செல்வம், வார்த்தைகளால் உணர்ச்சியைத் தூண்ட நினைத்தான். *இப்ப உங்களுக்கு ஒரு கரைச்சலும் இல்லைத்தானே? ஊரோடை வீடு ஊரோடை வேலை. இனித்தான் ஒரு கரைச்சலும் இல்லையே...???
*கரைச்சல் இல்லையா?. அதையேன் கேக்கிறீங்க சிங் களவனிட்ட அடிவாங்கி ஓடிவந்ததுகூட எங்களுக்குப் பெரி சில்லே எங்கட ஊரிலே - நாங்க பிறந்து, வளர்ந்து, படிச்சுப் பெரியவங்களாகின எங்கட ஊரிலே-எங்களே நாலுசனம் மதிக்க வில்லையெண்டால்.கொழும்பிலே இருந்து கப்பலேறி ஓடி வந்தது மாதிரி, இஞ்சையிருந்து நாங்க எங்கை ஓடுகிறது..?

பாபச் சலுகை 45
*ஆத்திரப்படாமல் விஷயத்தைச் சொல்லுங்க.என்ன ஊரிலே நடந்தது?
*ஆத்திரப்படாமல் இந்த அநியாயத்தை எப்படி வாய் திறந்து சொல்லுறது?..சொல்லுங்க பாப்பம். வாசந்தி படிக் கிறதுக்குப் பள்ளியில்லை, ஊரிலை.?
66661 p. *ஏகும், ஏன்?-வார்த்தைகள், வெறுப்பைக் கக்கின. படுத்திருந்த மகளின் தலையணையைச் சரிசெய்து நேராகப் படுக்கவைத்துவிட்டுத் தொடர்ந்து சொல்லுகின்றன், நடேச லிங்கம்:
*ஏஞ, எங்கட பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப எங்க ளுக்கு விருப்பமில்லை. கண்ட சாதியளும் நிண்ட சாதியளும் கலந்து படிக்கிறதாம்.அதுகளுடன் எங்கட பிள்ளைகள் ஒண் டாப் படிக்கிறதுக்கு எங்களுக்கு இஷ்டமில்லை.??
சற்றுநேர மெளனம். மறுபடியும் நடேசலிங்கம்தான் பேசுகின்றன்: ‘'என்ன இருந்தாலும் மாஸ்டர், இதை நீங்க ஒத்துக்கொள்ளத்தான் வேணும். இந்த எழிய சாதிகளிடம் நல்ல ஒழுக்கமோ குணமோ மருந்துக்கும் இல்லை. இதைப்பற்றி என்ன சொல்லு நீங்க???
கோழிச் சண்டையில் வெற்றிபெற்ற சேவல், இறக்கையை அடித்துக் கொக்கரக்கோ’ என்று கூவிவிட்டு, அலட்சிய மாக அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நிற்குமே, அதைப் போன்ற அநாயாச வெற்றிப் பெருமிதப் பார்வையுடன் நடேச லிங்கம் திருச்செல்வத்தைப் பார்க்கின்றன்.
வெகுளித்தனம் பெண்களுக்குக் கவர்ச்சி தரும் ஆபரணம் தான். ஆளுல் அதே ஆபரணம் ஆண்களை அழகுபடுத்த முனையும்பொழுது.
-நடேசலிங்கம் ஆபரணம் தரித்த பெண்ணேதானே? குதர்க்கம் பேசும் சோம்பேறி மகுேபாவம் நிறைந்த இந்த வாலிபனின் குழந்தைத்தனமான வாதத்தைக் கேட்டபொழுது திருச்செல்வத்திற்கு வியப்பு. நாகரிகமாக உடுத்தி, படித்த
8

Page 26
46 பாதுகை
கனவானப்போலக் காட்சியளிக்கும் இந்த வாலிபனின் வார்த்தைகள் அவனைத் திகைக்க வைக்கின்றன.
-‘குழந்தைகளுக்குத்தான் பெயரே உச்சரிக்க முடியாத சில நோய்கள் வரும். அதைப்போல, புரிந்துகொள்ளவே முடியாத சமூக நோய்தானு இதுவும்?
66என்ன மாஸ்டர், பேசாமல் நிக்கிறீங்க? 49ஒ எனக்கொன்று ஞாபகம் வருகிது. கிளியைக் கன காலமாகக் கூட்டிலை அடைச்சு வைச்சிட்டு, ஒருநாள் துறந்து விட்டா, கிளி, வானத்திலே பறக்காது. அது கூட்டைச் சுத்திச் சுத்தித்தான் வரும். எங்கட பழக்கதோஷங்கள் என்னமோ கூட்டில் அடைபட்ட கிளிதான்.?
'அப்படியெண்டால்.” 68ளழிய சாதியான் எண்டு காறித் துப்பப்படுகிற மணிசர் கள் உண்மையான உழைப்பாளிகள். ஏன் மொத்தமாச் சொல்லுறேனே! இப்ப உங்களைப் போன்றவங்க தப்பித் தவ றிப் பேசுகிற தாய்ப்பாஷையைச் சாகாமல் கட்டிக் காத்த வங்க, நீங்க சொல்லுற இந்த எழிய சாதியள்தான். இதுக்குப் பதிலாக நீங்க என்ன செய்தீங்க? குளிக்கக் கிணறில்லை; தவறித் தண்ணி அள்ளினு, கொலை படிக்கப் பள்ளியில்லை; சேர்ந்து படிச்சா சாதி ஒட்டிக்கொள்ளுமாம்! இவங்களுக்கு ஒரேயொரு உரிமைதானம் இந்த மண்ணில் இருக்கிறது: ச்ாகிறதுக்குத்தானும் அந்த உரிமை..?
ஏதோ ஆவேசத்துடன் திருச்செல்வம் பேசிக்கொண்டே போகின்றன்.
அேதுசரி; உங்களுக்கேன் இவ்வளவு கோபம் வருகிது? 'நீர் சொல்லுற அந்த எழிய சாதியான்தான் நானும்? நடேசலிங்கத்துக்குத் தூக்கிவாரிப்போடுகின்றது. வெறும் புற்று என்ற நினைப்பில் விளையாடப் போக, நாகம் துரத்திய மன அவஸ்தை
எேன்ன இருந்தாலும் கண்டசாதியளும் ஒண்டாய்ச் சேர்ந்து படிக்கிற இடத்துக்கு என் பிள்ளையை அனுப்ப மாட்டன்.?

பாபச் சலுகை 47
**அதுசரி கண்டசாதியளும் இருக்கிற, படுக்கிற ஆஸ் பத்திரியிலே மாத்திரம் உங்கட பிள்ளையளைக் கொண்டந்து போடுங்க..??
வீரிட்டு, பயங்கரக் கனவிலிருந்து எழுந்தவள் போல அலறுகின்ருள், வாசந்தி.
வெள்ளைக்கார மதர் ஓடிவருகின்ருள். பிள்ளையைத் தாய்மைப் பரிவுடன் அணைக்கின்ருள். அந்த வெள்ளைத் தோலின் அணைப்பில் வாசந்தியின் கறுப்புத் தோல், தாய்மைச் சுகம் கண்டு, அழுகை தணிக்கின்றது.
மீண்டும் தூங்குகின்ருள். நகர்ந்து வந்த மதர், திருச்செல்வத்தின் மருமகனின் படுக்கையில் குனிந்து நின்று போர்வையைச் சரிசெய்து கொண்டே, குழந்தையின் சொக்கையை லேசாக வருடி விடுகின்ருள்.
.தூக்கத்திலும் ராஜேஸ்வரனின் உதடுகளில் புன்முறு வல் மலருகின்றது.
- 859

Page 27
மனத தததுவம
தேவி ராணி கல்லூரி,
யாழ்ப்பாணம். -
ஒய், உலகத்துக்குப் புத்தி சொல்லும் எழுத்தாளர் குஞ்சே நடனசபை அவர்களே.சே, என்ன பைத்தியக்காரத்தனம் எல்லாரும் உங்களைக் கேலி செய்து, கிண்டல் பண்ணுகிறர்கள் என்ருல், நான்கூடவா உங்களைக் கிண்டல் பண்ணவேண்டும்? தவறு, விட்டுவிடுகிறேன்.
யாரோ ஒரு விஞ்ஞானி - ஈன்ஸ்டீன் என நினைக்கிறேன் - அவருக்கு, உலகப் பெரும் விஞ்ஞானச் சிக்கலுக்கு எல்லாம். சுலபமாக விடைவருமாம்; ஞாபகத்தில் இருக்குமாம். ஆளுல் தனது வீட்டு இலக்கம் தெரியாதாம் ஞாபகத்தில் இருப்ப, தில்லையாம்!
விஞ்ஞானிகளுக்குத்தான் பல ஜோலி. நீங்களோ எழுத் தாளர். மக்களின் மனதை, தனிமனிதர்களின் எண்ணப் போக்கை நன்றக அறிந்தவர் தெரிந்தவர். இப்படியான உங்களுக்கு இந்தச் சிறுபெண், ஐந்தடி ஓரங்குல உயரமும், இரட்டைப் பின்னலும், இரத்தச் சிவப்பு பினொவ்"சும், நவீன மணிப்புரி சாரியும் கட்டி, மேக்கப் என்கிற அலங்காரச் சொல் லால் அலங்கோலத்தை அழகுச் சுடராக எண்ண வைத்து, குதி உயர்ந்த சப்பாத்துடன் நடமாடித் திரியும் நவீன அகல் யாவை, அவளுடைய உண்மையான அகம்பாவம் பிடித்த மனதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே!
-அதற்காக அநுதாபப்படுகிறேன். நீங்களென்ன, எழுத்தாளர். எழுத்தாளர் இருக்கட்டும்; உம்மால் ஆண்வர்க்கத்துக்கே - தன்மானமுள்ள வாலிபர் வர்க்கத்துக்கே - அவமானம் ஒருமுறையென்ன, மூன்றுமுறை சொல்லுகிே றன்? அவமானம் அவமானம் அவமானம்!

மனத் தத்துவம் 49
பெண்ணுய்ப் பிறந்த எனக்கே இந்த அகம்பாவம் பிடித்த கர்வியான அகல்யாவின் செயல் பிடிக்கவில்லை என்ருல், நீங் கள் சும்மா இருக்கலாமா? அதிலும் உங்களை ஒரு திறமையான எழுத்தாளன் என்று என்னிடம் புளுகி, உங்கள்மீது ஒர் அபி மானத்தை, உங்கள் எழுத்தின்மீது ஒரு பிரீதியை, ஆவலைத் தூண்டிவிட்ட அகல்யாதான் இன்று உங்களைக் கேலி செய் கிருள் கெக்கலி கொட்டிச் சிரிப்பாய்ச் சிரிக்கிருள்.
-காரணம் கேட்கிறீர்களா?
நீங்கள் எனது கல்லூரிச் சிநேகிதி அகல்யாவை - என் னுடைய சக ஆசிரியை அகல்யாவை - காதலிக்கிறீர்களாம்; கருத்தைப் பறிகொடுத்துவிட்டீர்களாம்; உயிரையே கொடுத் தாலும் கொடுத்துவிடுவீர்களாம்!
சிரிக்கிருள் அவள் கல்லூரியின் பல ஆசிரியைகள் மத்தி யில் என்னையும் தன் சிரிப்பில் பங்குகொள்ள அழைக்கிருள். என் உயிருக்குபிரான சிநேகிதிதான் அகல்யா. இதில் சந்தே கம் இல்லை. ஆளுல் இந்த விஷயத்தில் நான் அவள் தோழி யல்ல; அவள் சிநேகிதமும் எனக்கு வேண்டாம்.
என் சிநேகிதி அசாத்திய கர்வி. அதே நேரத்தில் எழுத் தாளனின் பேணு வலிமையை உணரமுடியாத சின்னஞ் சிறு பெண். கதைகளைக் கற்பனை என்ற ஆடிக்குறிப்பில் எழுதி, அவளின் மானத்தை, அத்துடன் என்னுடைய மானத்தையும் வாங்கிவிடாதீர்கள். தவறை மன்னித்துவிடுங்கள். ஏதோ, என் மனசு இளகிய மனசு, சிநேகிதியானுலும் சொல்லிவைக் கிறேன். போலிகளைக் கண்டு ஏமாருதீர்கள்-எச்சரிக்கை
இங்ங்னம்: உங்கள் நன்மையை நாடும், மங்களா.
பின்குறிப்பு: உங்கள் முகவரியை அகல்யாவின் அழகுப் பைக்குள் இருந்துதான் அவளையறியாமல் தெரிந்து கொண்டேன். இந்தச் சங்கதி அவள் காதிற்கு எட்டக் கூடாது.-ம.?

Page 28
50 பாதுகை
வெள்ளுவர் இல்லம்,? வண்ணுர் பண்ணை. ஆசிரியை மங்களா தேவி அவர்களுக்கு,
உங்கள் புத்திமதிகளுக்கு நன்றி ரொம்ப ரொம்ப நன்றி. முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்: நான் ஒருகாலத் தில் பள்ளிக்கூட மாணவனுக இருந்தது என்னவோ உண்மை தான். ஆனல், இன்று மாணவனல்ல; சிந்திக்கத் தெரிந்த வாலிபன். அத்துடன் சிந்திக்க வைக்கும் எழுத்தாளனும்கூட. என்னை யாருமே இலேசில் ஏமாற்றிவிட முடியாது.
-நீங்களும் கூடத்தான்! உங்கள் கற்பனை அபாரம் அற்புதம்! அதற்கும் மேலே. மேலே...சொல்லத் தெரியவில்லை. இந்த நாட்டில் பெண் எழுத்தாளர்கள் குறைவு; ஏன், அபூர்வம் என்றே சொல்லி விடலாம். இந்தக் கற்பனையையும் எழுத்துத் திறமையையும் நீங்கள் இலக்கியத் துறைக்குப் பயன்படுத்தினுல் சுலபமாகப் பிரபலமடைந்து விடலாம். இதை மறந்துவிடாதீர்கள்.
சினிமாக்களிலும் நாடகங்களிலும் மட்டும் காதலர்களுக்கு வில்லன்கள் தோன்றுவதில்லை. நிச வாழ்க்கையிலும் காதலர் களின் தெய்வீகக் காதலை மாசுபடுத்தவென்று எங்கிருந்தோ வில்லன்கள் தோன்றிவிடுவது உண்மைதான். துரதிர்ஷ்டம். எங்கள் தெய்வீக இலக்கியக் காதலில் - அதுதான், அகல்யா வும் நானும் எழுத்தும் இலக்கியமும் ஆகிவிட்ட காதலில் - *நாவூறு ஏற்படக்கூடாதென்று இயற்கை உங்கள் ரூபத்தில் ஒரு வில்லியையுமா படைத்துவிட்டது?
-அட ஆண்டவனே
இங்ங்ணம், நடனசபை. பின்குறிப்பு: உண்மை எப்பொழுதும் கசப்பாக இருக்கு மாம். என் பாட்டி சொல்லுவாள்: உண்மையைச் சொன்னுல் உடம்பேன் எரியுது? என்பாள். அதற்காக உங்கள் உடம்பு எரியவேண்டாம்.-ந.”

மனத் தத்துவம் 5 it
மிஸ்டர் நடனசபை அவர்களே!
நீங்கள் ஏதாவது சினிமாப் படம் அல்லது நாடகமாவது தயாரிக்க ஏற்பாடு செய்கிறீர்களா? அதில் நான் வில்லியாக நடிக்க இப்போதே ஒப்புக்கொள்ளுகிறேன்.
-ஆளைப் பார், ஆளை! எனக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். சும்மா இருக்க இயலாமல் அகல்யா உங்களைப்பற்றிக் கல்லூரி முழுவதும் கட்டிவிடும் கதைகளை எழுதினேனே-எனக்கா உங்கள் உண்மைக் காதலின் வில்லி என்று பட்டம் சூட்டு கிறீர்கள்?
-நல்லது நல்லது. எழுத்தில் இருக்கும் புதுமை, கற்பனை, ஏன் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்படவில்லை? கலைஞர்களில் சிலர் எப்பொழு தும் பைத்தியக்காரர்களாகக் காட்சியளிப்பார்களாம்.
--நீங்கள் கூட அப்படித்தாகு, என்ன? ஜே. எஸ். ஸி. படித்து முடிப்பதற்கு முன்னரே நீட்டுக் காற்சட்டையும், அரும்புமீசையும், மைனர் பார்வையும், வெள்ளைச் சுருட்டுடன் 'தாஸ் பூஸ்? இங்கிலீசுடன் காட்சி தரும் ரோட்டோர ரோமியோக்கள் வாழ்ந்து வரும் வாலிபர் குழாத்தில், அடக்கமாக, அமைதியாக, மெளனமாக, நிறை குடமாக, குடத்துள் விளக்காக இருந்து, பெயர்கூட வெளியே தெரியாமல் புனைபெயரில் மறைந்துகொண்டு அருமையான சிறுகதைகளைப் புனைந்து எழுதி வரும் உங்களின் பெருமை, புகழ், மகத்துவம் எல்லாமே இதுதாஞ?
உண்மை கசப்பானது என்று குறிப்பிட்டீர்கள். ஆமாம், யாருக்குக் கசப்பு? அந்தக் கசப்பான சில உண்மைகளை நான் குறிப்பிடட்டுமா? படித்துப் பாருங்கள்.
உங்களைப்பற்றி ஏதேதோ சொல்லுகிருள் அகல்யா. உங்கள் பார்வை கோணங்கிப் பார்வையாம்; உங்கள் சிரிப்பு
அசட்டுச் சிரிப்பாம் உங்கள் நடையோ கோணல் நடையாம் ;

Page 29
S 2 பாதுகை
உங்கள் பேச்சோ கோமாளிப் பேச்சாம். இது கற்பனையல்ல; உண்மை. நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.
இந்தப் பொன்மொழிகள் சாகூடிாத் உங்கள் காதல் தெய் வத்தின் வாய் வார்த்தைகள்தான்.
உண்மை கசப்பாக இருக்கிறதா? நன்ருகக் கசக்கட்டும்; எட்டிக்காயைப்போலக் கைக்கட்டும்.
உண்மை இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் வெளிவந்தே தீரும். அப்பொழுது இந்த மங்களாவைப்பற்றிய உண்மையை அறிவீர்கள்.
இங்ங்ணம்: Di 3b6art.
பின்குறிப்பு: ம்..ம்.ஒரு மண்ணுங்கட்டியுமில்லை.--மே.?
செல்வி மங்களா அவர்களுக்கு,
நீங்கள் கடுங்கோபத்துடன் இருப்பீர்கள் போலத் தோன்றுகிறது. மகா கோபக்காரி போல என் மனதுக்குப் படுகிறது. கோபமுள்ள இடத்தில்தான் குணம் இருக்குமாம். நீங்கள் கோபப்படுவதில் ஏதாவது அர்த்தம் இல்லாமல் இல்லை.
நான் உங்கள் இளகிய இதயத்தைப் புண்படுத்தி இருந் தால் தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்; மறந்துவிடுங்கள்.
என் நன்மையை உத்தேசித்து நீங்கள் உங்கள் பிரான சிநேகிதியின் நட்பை இழந்துவிடலாமா? நீண்டநாளையத் தொடர்பைத் துண்டித்துக்கொள்ளலாமா? இதையும் மீறி, என் தன்மைக்காக நீங்கள் கடிதம் எழுதுவதைப் பார்த்தால்
உண்மையை உணராமல் தத்தளிக்கிறேன். நான் யாரோ, நீங்கள் யாரோ? ஆஞல் நீங்களும் அகல்யாவும் உயிர்ச் சிநேகிதிகள், வெண்கலக் கடைக்குள்

மனத் தத்துவம் 53
யானை புகுந்ததுபோல, நான் உங்கள் நட்புத் தொடர்பில் *எக்கச்சக்கமாகப் புகுந்துவிட்டேகுே என்று பயப்படுகிறேன். உண்மைக்கும், உண்மையல்லாததற்கும் இடையிலே எவ் வளவு நுண்ணிய வேறுபாடு நேற்றுக்கூட அகல்யா புடவைக் கடைக்கு வந்தாள். இடையில் என்னைச் சந்தித்தாள். அப்பா அவள் பெண்ணு? தெய்வீக மலர்! வான லோகத்து ரோஜா என் இலக்கிய சாம்ராஜ்யத்தின் கதாநாயகி
இந்தப் பக்கம் மங்கனா-அதாவது நீங்கள்; அந்தப் பக்கம் அவள்-அதாவது அகல்யா.
-எதை நம்புவது? எதை விடுவது? இதைச் சிக்கெடுப்பதைவிட ஒரு துப்பறியும் நவீனமே எழுதிவிடலாம்போலத் தோன்றுகிறது.
-இறைவா! என்னையேன் படைத்தாய்?
பைத்தியக்கார ஆஸ்பத்திரி நினைவில் திரியும்,
5-60T.J. 60) is
மிஸ்டர் நடனசபை அவர்களே!
*அகல்யா கடைத்தெருவுக்கு வந்தாள். அவளைச் சந்தித் தேன். அவள் இளித்தாள்; நான் சிரித்தேன்.?-இந்த அகல்யா புராணம் ஒருபக்கம் இருக்கட்டும்.
அவள்தான் உங்கள் பெயரைச் சிரிப்பாய்ச் சிரிக்க வைக் கிருளே! அதைக் கடைத்தெருவுக்கு வந்தா காண்பிக்க வேண் டும், மிஸ்டர்? கற்பனை, கதைக்குத்தான் உதவும்; வாழ்க்கை யில் செல்லாக் காசு, அது. கற்பனையைப் போன்றதுதான் பெண்களின் பசப்புச் சிரிப்பும், வரட்டு நடிப்பும்.
அகல்யா பசப்புகிருள். உங்கள் முன்னுல் நடிக்கிருள்" நீங்கள் கடைத்தெருவில் அவளைச் சந்தித்ததுபற்றி அவளிடம் பேச்சோடு பேச்சாகக் கேட்டுவைத்தேன்.

Page 30
54 பாதுகை
அவள் சிரித்தாள் வாய்விட்டுச் சிரித்தாள் வயிறு புண் ணுகும்படி சிரித்தாள்; சிரித்துவிட்டு அவள் சொன்னுள்: அந்த அழுமூஞ்சி அசடைப்பற்றிச் சொல்லுகிருயா? அது வெறும் கருவேப்பிலை. உனக்குத் தெரியும்தானே, கறிக்கு வாசத்துக்கும் குணத்துக்குமாக கருவேப்பிலையை உபயோகிப் பார்கள். சாப்பிடும்போது முதலில் அந்த இலைகளை எடுத்து எட்டப் போட்டுவிடுவார்கள். அதைப்போலத்தான் அந்தப் பைத்தியத்தையும் சில சுயகாரியங்களுக்காக, சுயநலத்துக் காக உபயோகிக்கிறேன். வரப்போகும் கல்லூரி வருஷ மலரில் என் பெயரில் ஒரு அருமையான சிறுகதையே வரப்போகிறது. இருந்து பாரேன்” என்ருளே அந்தப் பாதகி.
இதைச் சொல்லிவிட்டுச் சினிமாக்காரியைப் போல, அர்த்தமற்றுச் சிரித்தான், அகல்யா. அத்துடன், தனது சிரிப் பில் கலந்துகொள்ளச் சொன்னுள். நான் சிரிக்கவில்லை. அதற்காக வேறு கோபிக்கிருள் என்றல் பார்த்துக்கொள்ளுங் களேன்.
எனக்குச் சிரிப்பா வரும்? பற்றிக்கொண்டு வந்தது. அவள் சிநேகிதி; ஆருயிர்ச் சிநேகிதி. என்ன செய்வது? பொறுமையாக இருந்தேன். கோபத்தை அடக்கிக்கொண் டேன். அல்லாதுபோளுல். அல்லாதுபோகுல்.எனக்கே சொல்லத் தெரியவில்லை.
*கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்பார் ‘கள். நீங்கள் கழுதையல்ல; கற்பூரந்தான். அதற்காக என்
சிநேகிதி கழுதையுமல்ல.
இங்ங்ணம்: ஆண்மையை விரும்பும்,
மங்களா.
மங்களா ஆசிரியை சமூகத்திற்கு,
எனக்கு ரோசம் வந்துவிட்டது. ஆண்மை கொழுந்து விட்டு எரிகிறது மானம் கொதிப்பாய்க் கொதிக்கிறது

மனத் தத்துவம் SS
ஆ! அப்படியா சொன்னுள், அகல்யா? எடு பேணுவை எழுது ஒரு கதையை ஆசிரியை அகல்யாவின் மண்டைக் கனம் பொடிப் பொடியாகப் போகட்டும் திமிர் எண்ணம் மண் னைக் கவ்வும்படியாக இதோ ஒரு அகல்யா சம்ஹாரம்” என்ற அருமையான இலக்கியப் படைப்பு என ஆவேசம் கொள்ளு வேன், ஆத்திரப்படுவேன், என நீங்கள் எண்ணினுல் தப்புக் கணக்குப் போட்டவர் நீங்கள்தான்.
ஏன் இதில் ஆத்திரப்படவேண்டும்? நீங்களே சொல்லி யிருக்கிறீர்கள் அகல்யா சிறுபெண்; விண்யாட்டுப் பிள்ளை மனுேபாவம் என்று. அவள் இப்படிக் கூறியிருந்தால் நான் ஏன் அவளது குழந்தைத்தனம் இது என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது?
மேலும் ஒன்று சொல்லுகிறேன், கேளுங்கள்.
நீங்கள் நினைப்பதுபோல நான் அவ்வளவு நல்லவனல்லத் அகல்யா போன்ற பெண்களால் விரும்பக்கூடியவனல்ல. நீங்கள் இரக்கம் காட்டத் தகுந்தவனல்ல. ஆனல் ஒன்று: எந்த ஒரு ஆணும், குறிப்பாக எவ் வாலிபனும் நான் நல்லவ னல்ல என்று ஒரு பெண்ணிடம் ஒப்புக்கொள்ளமாட்டான். நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.அதுவும் உங்களிடம்.
என்னைப்பற்றி நீங்கள் எதுவேண்டுமானுலும் எண்ணிக் கொள்ளுங்கள், நான் கோபிக்கவில்லை.
-பொறுத்திருப்போம் காலம் மாறும்.
இங்ங்னம்: பொறுமையின் பூஷணம்,
Gt øor SFEOL
நடனசபையே! - மொட்டையாக எழுத விரும்பவில்லை. நானென்ன அகல்யாவா? என்ன?
திரு. நடனசபை அவர்களுக்கு,

Page 31
56 பாதுகை
மாறும் மாறும். நீங்கள் நினைப்பதுபோலக் கையைக் கட்டிக்கொண்டு இருந்து, காலம் மாறுமென்ருல் மாறவே மாறது. காலம் மாறுவதைவிட, காலத்தை நாம் மாற்ற வேண்டும். இதில்தான் வெற்றியும் இருக்கிறது. பெரிய எழுத்தாளராம், எழுத்தாளர்! உங்களுக்குக்கூட இது தெரிய வில்லையே?
-சே வெட்கக்கேடு!
நீங்கள் நினைப்பதுபோலக் காலம் மாறினுலும்கூட, அகல் யாவின் மனம் என்னவோ மாருது; மாறவே மாறது. அவள் இதயம் கற்பாறை. வெட்டவே முடியாத வைரச் சுரங்கம், அந்தச் சிறுபெண்ணின் நெஞ்சம்.
இத்தனைக்கும் அவள் அடிக்கிற கொட்டமும் கூத்தும். அப்பப்பா! அவள் அழகிதான். நான் மறுக்கவில்லை. நான் அவளைவிட எந்த வகையிலும் குறைந்தவளல்ல. அழகில் இரட்டையர்கள் என்றும் சொல்லலாம். எனக்கு அவளுக் கிருக்கிற இந்தக் கர்வம், தலைக்கணம் ஒன்றுமில்லையே?
உயர்திரு எழுத்தாளர் அவர்களே! பெண்ணுகப் பிறந்த எனக்கே இந்த அகம்பாவம் பிடிக்கவில்லை. ஆமாம், கொஞ் சங்கூட நன்றக இல்லை.
மனந்திறந்து ஒன்று சொல்லுகிறேன்:
நான் பல சிறுகதைகள் படித்திருக்கிறேன்; நாவல்களும் வாசித்திருக்கிறேன். பல சிநேகிதிகளின் அனுபவத்தை நிறைய நிறையக் கேட்டிருக்கிறேன். அனுபவத்தைக் கொண்டே அனுபவம் பெற்றிருக்கிறேன்.
நீங்கள் சொல்வதுபோல ஒரு ஆண்மகன், அதிலும் வாலி பன் மனந்திறந்து ஒரு பெண்ணிடம், அதிலும் என்னைப் போன்ற கல்யாண மாகாத யுவதியிடம், நான் நல்லவனல்ல? என்று சொல்லுகிருனே, இது அதிசயங்களில் எல்லாம் அதி சயம் அற்புதங்களில் எல்லாம் பெரிய அற்புதம்!
-இது உலகப் பெரும் அதிசயங்களில் ஒன்று

மனத் தத்துவம் 57
நான் இந்திரன் சந்திரன் என்று உங்களைப் புகழாமல் நோன் நல்லவனல்ல? என்று உங்களை நீங்களே சொல்லிக் கொள்வதிலேயே நீங்கள் எவ்வளவு நல்லவர் என்று தெரி சிறதே! எவ்வளவு பண்பட்ட மனம் வேண்டும், இதை வாய் விட்டுச் சொல்ல? இந்த உண்மை ஒன்றே உங்களின் பெருந் தன்மை மிக்க இதயத்தைப் படம்பிடித்துக் காட்டப் போது மென்று நினைக்கிறேன்.
முற்றத்து முல்லைக்கு மணம் இல்லை என்பரர்கள். உங்களைப் பொறுத்தவரை அகல்யாவுக்கு நீங்கள் முற்றத்து முல்லை யல்ல; செம்பரத்தம் பூ-ஆமாம்; செம்பரத்தம் பூ!
நானுக இருந்தால் - நான் அகல்யாவாக இருந்தால் - ஹ9ம்.ஐயோ! வார்த்தைகள் என்னையறியாமல் வெளிவரு கின்றனவே.
மங்களா.
முக்கிய குறிப்பு: வார்த்தைகள் என்னையறியாமல் எழுதப் பட்டிருக்கலாம். அதற்காக என்னைப்பற்றித் தப்பர்த்தம் பண்ணிவிடவேண்டாம். கற்பனைப் பொருளர்க என்னை ஆக்கிவிடவேண்டாம்-மே..?
மிஸ் மங்களாவுக்கு கடிதம் கிடைத்தது. நல்ல உபமானம் ஒன்று கையாண்டிருக்கிறீர்கள்-முற்றத்து முல்லையென்று. அதற்காக என் நன்றி. நீங்கள் இதைவிட எவ்வளவோ சொல்லியிருக்கிறீர்கள்; அகல்யா உட்பட. அதற்காகவும் என் நன்றி.
-இருந்தும் என்னுல் அகல்யாவை ஒரு கணம்கூட மறக்க முடியவில்லையே!
வருகிற சனிக்கிழமை உங்கள் கல்லூரியில் விேற்பனவுச் சந்தை” நடைபெறுகிறதாம். அகல்யா அழைப்பு அனுப்பி

Page 32
58 LTg5/60) 5
யிருந்தாள். கேட்டாயம் - கண்டிப்பாக இதற்கு வரவேண்டும்?
என்று தன் கைப்படக் கடிதமே எழுதி இருந்தாள்.
-நீங்களே சொல்லுங்கள்: அந்த அன்பு நெஞ்சத்தை,
எந்த இரும்பு நெஞ்சத்தவனலும் மறக்க முடியுமா?
5-6oTF6oo Lu.
குறிப்பு: அன்றைக்கே இரண்டிலொன்று தெரிந்துவிடும்.
ஸ்-பீநடன்?.
செல்வி மங்களாவே
உங்கள் கல்லூரி ஆசிரியைகள் கோஷாப் பெண்களா, என்ன? அதிலும் குறிப்பாக உங்களைப் போன்ற பெண்கள் ஆடவர்களின் முகத்திலேயே விழிக்கமாட்டீர்களா? எங்கே உங்களைக் கண்ணிலே காணவில்லையே? தேடினேன்; தேடி னேன்; பார்வையில் அகப்படவேயில்லை. காரணம் என்ன? ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டீர்களா? அல்லது உடம்பு சுகவீனம் காரணமா?
தேவை - பதில் உடன் தேவ்ை - பதில்; சீக்கிரம் தேவை - அதுதான். -பதில்
மனநிம்மதியற்ற சபைநடனம் - சே சே!
நடனசபை.
எழுத்தாளர் சார் அவர்கள்ே
இந்த டூப்பு? எங்கே விடப் பழகினிர்கள்? விற்பனவுக் காட்சிக்கு வந்த நீங்கள் ஏன் மிரள மிரள விழித்தீர்கள்? யுத்த காலத்தில் எதிரி விமானங்களைக் கண்டுபிடிக்கப் பாவிக்கப் படும் சேர்ச்? லைட்டுகளைப்போல, ஏன் உங்கள் கண்கள் அங்குமிங்கும் சுழன்றபடி வட்டமிட்டன? அழகி, அதிருப

மனத் தத்துவம் 59
சுந்தரவதி, காதல் தெய்வம், கற்பனைக்கும் எட்டாத அன்பு நெஞ்சத்தாள் அகல்யா, பக்கத்து “ஸ்டாலில்’ நின்றிருந் தாளே, கவனிக்கவில்லையா, சுவாமி?
யாரைப் பார்க்க விரும்பினிர்கள்? யாரைத் தேடி உங்கள் கண்கள் அலைந்தன? யாரைச் சந்திக்க ஆவல்கொண்டு நின் றிர்கள்?-இதைச் சொன்னுல் போதும்.
இங்ங்ணம்:
மங்களா.
குறும்புக் குறிப்பு: உங்களின் ஒவ்வொரு அசைவையும், ஏக்கப் பார்வையையும், உடல் பதற்றத்தையும், கல் லூரி மேல்மாடியில் நின்று கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். ஐயோ, பாவம்!-ம.?
மங்களா! நீங்கள்-நீ இவ்வளவு அரக்க மனம் படைத் தவள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. உண்மையைச் சொல்லுகிறேன்: நான் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நிமிஷ மும் எதிர்பார்த்தது உன்னத்தான்; உன்னைத்தான்; உன்னைத் தான்!
மனச்சாட்சி என்னை உறுத்தியது. உண்மையை உன் னிடம் - வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிக்கொண்டிருக் கும் குழந்தைச் சுபாவம் படைத்த உன்னிடம் - நேரே சொல்லி விடவேண்டும் என்று தவியாய்த் தவித்தேன்.
என் எண்ணம் தோற்றுவிட்டது; என் ஆசை நிராசை யாகிவிட்டது.
-இதை யாரிடம் போய்ச் சொல்லி அழ?
இங்ங்ணம்:
As L60TáF6of f.

Page 33
60 பாதுகை
நடன் அவர்களுக்கு,
நியாயமான காரணம் சொன்னுல் கேட்கத் தயாராக இருக்கிறேன். காரணம் நியாயமானது மட்டுமல்ல, கண்ணிய மாகவும் இருக்கவேண்டும்.-ம.”
மங்-களா, அவர்களே! காரணத்தை ஒரே மூச்சில் சொல்லிவிடுகிறேன். அல் லாது போனுல்தான் அந்தப் பொல்லாத கோபம் உனக்கு வந்துவிடுமே? யுவதிகளுக்குப் பயப்படுவதைவிட, அவர்க ளுடைய கண்ணிருக்கும் கோபதாபத்துக்கும்தான் வாலிபர்கள் அதிகமாகப் பயப்படுகிறர்கள்.
இது ஏதோ ஒரு நாட்டின் மஞேதத்துவப் புள்ளி விவரம், ஆ.என்ன? காரணம்-ஒருவரைப்பற்றிக் கேலியாகவும் கிண்டலாகவும் அடிக்கடி பேசிப் பேசி, ஒருவர், ஒரு இளம் பெண்ணின் நெஞ்சில் அன்பு சுரக்கச் செய்யலாம். பெண் களின் இதயம் மிகவும் இளகியது; மிகவும் மென்மையானது. பரிதாபமாகத் தாக்கப்படும் எந்த ஜீவன்களின் மீதும் அவர் களுக்குத் திடீரெனப் பச்சாத்தாபம் ஏற்படும். பின்பு அடுத் தடுத்து ஒரே பெயர் அவர்கள் காதில் அடிபட்டால் நிச்சய மாக அந்த அனுதாபம், அரவணைக்கும் அன்பாக மாறும். வயதுப் பொருத்தமுள்ளவர்களானுல் அந்த அன்பே காதலாக வும் மாறும்.
-இது ஒரு மனத்தத்துவ ஆராய்ச்சி. கொடுங் குற்றம் செய்து பத்திரிகைகளினுல் பிரபலப்படுத் தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, மேல்நாட்டில், சிகாகோ சிறைச்சாலையில் உள்ள பயங்கரக் குற்றவாளிகளுக்குப் பல பெண்கள் அன்பு சொட்டும் கடிதங்கள் எழுதினுர்களாம்.
-படித்திருக்கிறேன். இதை ஆதாரமாக - அடித்தளமாக - வைத்து ஒரு கதை புனைய எண்ணினேன்.

மனத் தத்துவம் 61
அகல்யா சிரித்தாள்; வரட்டுக் கற்பனை என்ருள் நடை முறைக்கு ஒவ்வாத இலக்கிய சிருஷ்டி என்ருள் நையாண்டி பண்ணிஞள்.
நான் அதை மறுத்தேன். மனத் தத்துவ ரீதியாக நடை முறை உண்மை என்று வாதாடினேன். சவால் விட்டாள். சவாலே ஏற்றுக்கொண்டேன்.
அப்பொழுது உன் பெயர் அடிபட்டது. “உங்களுக்குத் துணிச்சலும் திறமையும் இருந்தால் உங்கள் மனதையும் தத்து வத்தையும் எங்கள் மங்களாவின்மேல் பிரயோகித்து வெற்றி பெறுங்கள் பார்க்கலாம்? என்ருள்.
அதன் முடிவுதான் இந்த நாடகம்-அவளை நான் காத லித்ததுபோல நடித்ததும், அவள் என்ன வெறுத்து ஒதுக்கு வதுபோலக் கயிறு திரித்ததும். அகல்யா என் தூரத்து உறவுப் பெண். சிறுவயதுத் தோழர்கள் நாங்கள். சில மாதங்களில் கொழும்பில் உத்தியோகம் பார்க்கும் என்னுடைய நண்ப னுக்கு வாழ்க்கைப்படப் போகிறவள் அகல்யா. அவர்கள் இருவரும் முன்னமேயே காதலர்கள்.
*நான் வென்றுவிட்டேன்!” என்று அகல்யாவுக்கு அறி விக்கலாமா? எனது மனத்தத்துவம் பூரண வெற்றிபெற்றுவிட் டது என்று வெற்றி முழக்கம் செய்யலாமல்லவா?
-போதுமா? வேறு ஏதாவது சந்தேகங்கள் தெளிய வேண்டுமா? பதில் உடனே,
இங்ங்ணம்:
நடன்.ன.சபை.
மனத்தத்துவ, ஆராய்ச்சி பூஷண, கற்பனவாதி நடன சபை எழுத்தாளர் அறிவதற்கு,
-பூ இதென்ன பிரமாதம்! w நான் சொல்வதைக் கேட்டு மயக்கம்போட்டு விழுந்து விடாதீர்கள். பக்கத்தில் தண்ணிர்ப் பாத்திரம் ஏதாவது இருக்
4.

Page 34
62 LJITg5/60.45
கிறதா? பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். மயக்கம் போட்டு விழுந்துவிட்டால் முகத்தில் தண்ணிர் தெளிக்க உதவுமல்லவா? பெண்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் எப்படி நினைத்தால் நமக்கென்ன? பெண்கள் புத்திசாலிகள், மகாமகா புத்திசாலிகள். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
நீங்கள் நடித்த நாடகத்தைச் சொல்லி என்னைத் திகைக்க வைக்கப் பார்த்தீர்கள். நீங்கள் அதில்தான் தவறு செய்கிறீர் கள். ஆதியோடந்தமாக எல்லா விஷயமும் எனக்குத் தெரி யும். அகல்யா எல்லாவற்றையும் என்னிடம் சொன்னுள். நானும் உங்களுடைய அசட்டுக் கடிதங்களை அவளிடம் படித் துக் காட்டினேன்.
உங்களுக்குக் கடிதம் எழுத ஐடியா? போட்டுத் தந்த வளே அவள்தான். நான் எழுதிய கடிதத்தை முதல்முதலில் படித்துப் பார்ப்பவளும் அவள்தான்.
நீங்கள் உங்கள் ஆராய்ச்சியையும் மனத்தத்துவத்தையும் கூட்டிச் சென்று கீரிமலைக் கேணியில் ஒருதடவை முழுகிவிட்டு வாருங்கள். நீங்களும், உங்கள் மனமும் தத்துவமும்.நினைக் கவே சிரிப்புச் சிரிப்பாக வருகிறது!
-பக்கத்தில் அகல்யாவும் சிரிக்கிருள். என்ன யோசிக்கிறீர்கள்? ஆண்களைப் போன்று சந்தர்ப்ப வாத அன்பு பேசுபவர்கள் அல்ல பெண்கள்.
முகத்தில் அசடு வழிகிறதா? வழியட்டும் நன்றக வழி பட்டும்!
இங்ங்னம்: பாரதி கண்ட புதும்ைப் பெண்,
மங்களா.
மங்.மங்.களா.களா!.மங்கீ என் அன்பே இவ்வளவும் தெரிந்த பின்புமா நீ என்னைப் பேயணுக்கி ஞய்? அகல்யாவுடன் சேர்ந்துகொண்டு பித்தனுக்கினுய்?

மனத் தத்துவம் 63
மனத்தத்துவத்தைக் கைகழுவி விட்டுவிட்டேன்! உண்மையைச் சொல்லு, மங்கா ஏதோ ஒருவகைப் பாசம், அன்புத் தொடர்பு, இதய இணக்கம்தானே எனக்குக் கடிதம் கடிதமாக எழுதத் தூண்டியது? வெட்கப்படாதே, சொல்லு. உன் அன்பு, பாசம், இரக்கம் எல்லாம் எனக்காகச் சிறிது பரிவுகாட்டுமா? கற்பனை பண்ணிப் பண்ணி இருண்டு போய்க் கிடக்கும் என் வாழ்க்கைக்கு ஒளி ஊட்டுமா?
இதயம் துடிக்கிறது; நெஞ்சம் பதறுகிறது; மனம், உனது மனதையறிய ஆலாய்ப் பறக்கிறது.
இங்ங்னம்: ஆடிக் காற்று இலையான,
நடனசபை.
. அவர்களுக்கு, பெயரை எழுதக் கை கூசுகிறது. எல்லாப் பெண்களுமே உணர்ச்சிவசப்பட்டவர்களல்ல. வாழ்க்கை சிறுகதையல்லகற்பனை பண்ணி எழுதுவதற்கு ஆற அமரச் சிந்தித்து முடி வுக்கு வந்திருக்கிறேன். நேரே சொல்ல வெட்கமாக இருக் கிறது. சூசகமாகத் தெரிவிப்பதில்தான் இன்பம் இருக்கிறது மகிழ்ச்சி இருக்கிறது. இந்தக் காதல் விவகாரம் இருக்கிறதே இது படித்த பெண்களைக்கூட வாயடைக்கச் செய்துவிடுகிறது?
அம்மா என்னை மங்களம் என்றே கூப்பிடுவாள். இந்தச் சிக்கலை விடுவிக்கும் என எண்ணுகிறேன். கைஎழுத் தைப் பாருங்கள். அதைப் போடும் இடத்தையும் கவனித்துப் புரிந்துகொள்ளுங்கள். புத்திசாலிகளுக்கு அதுதான் அழகு!
அகல்யா பக்கத்தில் இல்லை. மனந்திறந்து எழுத இது ஒரு வாய்ப்பு நல்லவள் அவள். குறும்புக்காரி. அவளே மன்னித்துவிடுங்கள். அவள்தான் எங்களை.
இங்ங்னம்: மங் களம்.
18958 -ܝ

Page 35
மிருகத்தனம்
வெளியே நாய் ஊளையிட்டது. தாய் குழந்தையை அடித்துவிட்டால் அது கேவிக் கேவி அழுமே-அத்தகைய துயரம் தோய்ந்த தொனியில் துடித் தலறியது, நாய்.
விட்டு விட்டு ஊளையிட்டுக்கொண்டேயிருந்த அந்த நாயின் தலைஅசைவிலே அதைப் பிணைத்திருந்த சங்கிலி குலுங்கி எழுப்பிய ஓசை, ஊளையின் இடைவெளியை நிரப்பியது.
வினகித் தம்பிக்குத் தூக்கம் வரவில்லை. எல்லே காண முடியாத -ஆழம் கொண்ட ஏதோ பிரச்சினைக்குள் தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்டு, சாய்வுநாற்காலியில் முடங்கிக் கிடந்தான்.
குளத்து விரால் மீன்களேப் போன்று, எண்ணங்கள் முடி வற்றுப் பரிவட்டமிட்டன. அவற்றின் பிரதிபலிப்புப்போல இடையிடையே பெருமூச்சுக்கள்.
நாயின் ஊளைச் சத்தம் இன்னும் அடங்கவில்லை. இடைக் கிடை துயரம் கலந்த அந்த வேதனை ஒலி காற்றில் இழைந்து, கலந்து, கேட்டுக்கொண்டேயிருக்கிறது. 热
இரவு, பொல்லாதது. அத்துடன் தனிமையும், அமைதி யும், மனப்பாரமும் சேர்ந்துகொண்டால். சிந்தனையென்ற முரட்டுக் குதிரை, கடிவாளத்தைக் குதறி எறிந்துவிட்டுத் துரிதவேகத்தில் நாலுகாற் பாய்ச்சலில் பாய்கின்றது.
மனம் உள் முறிகின்றது. அங்கே-வெளியே ஊளையிடும் அந்த நாயின் சத்தம், அவனுக்குத் தம்பியை நினைவூட்டுகிறது.
-தம்பி!? கண்களில் நீர் தேங்கிக் குளம் கட்டுகிறது. நீர்த்திரை படர்ந்த பார்வை.

மிருகத்தனம் 65
சுண்டுவிரலால் கடைக்கண் விழிம்பிலே துளிர்த்திருந்த நீர்த்திவலையைத் துடைத்துக்கொண்டான். ஆணுல், மனதில் கவிந்த, நெஞ்சத்தைச் சுண்டி இழுக்கும் அந்தக் கசப்பான நினைவு இருக்கின்றதே.
அடைபட்டுக் கிடந்த மனச் சிட்டு இறக்கை விரிக் கின்றது.
சில கசப்பான சம்பவங்களை - நினைத்தால் பொங்கிவரும் வேதனையை - மறந்துவிடவேண்டுமென்று எல்லா மனிதர் களுந்தான் விரும்புகிறர்கள். ஆணுல் அந்த நினைவு என்ற நச்சரவம் நினைக்காமலிருக்கும்போதே ஊர்ந்து ஊர்ந்து முன் வந்துவிடுகின்றதே-அதைப்போலத்தான் வினசித் தம்பிக் கும் அவனல் மறக்க முடியாத அந்த வேதனை நினைவு, நகு லேஸ்வரனை அவன் முன்னுல் கொண்டுவந்து நிறுத்தியது.
-*நகுலேஸ்வரா? துன்பமயமான, எண்ணிப் பார்ப்பதற்கே வேதனையை உற்பத்தி செய்யும் அந்தச் செய்தி-வினுசித் தம்பியினுடைய துக்கத்தைப் பலபட விரியச் செய்யும், திணறவைக்கும் அந்த நிகழ்ச்சி?
*தம்பி, என்னைத் தனியா விட்டிட்டு எப்படியடா நீ மாத் திரம் போய்ச் சேர்ந்தாய்?
நெஞ்சில் முட்டும் வேதனை அலைகள் கரைகடந்துவிடுகின் றன. பைத்தியக்காரனுக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடை யாத மனநிலை.
அன்பு முகம் களங்கமும் கல்மிஷமும் இல்லாத உள்ளத் தின் சாளரங்களான கண்கள்; பட்டுப் போன்ற மெத்தென்ற உதடுகள் வாளிப்பான மேனிப் பொலிவு; சுநாத ஒலி கிளம்பச் சிரிக்கும் சிரிப்பொலி; ஆகக்கூடி பத்தோ, பதினென்றே வயது. இவையனைத்தும் கொண்ட அந்த அழகுப் பிம்பம், நகுலேஸ்வரன், அன்புத் தம்பி இன்று..?
காலனின் படுபயங்கரமான கயிற்றில் சிக்கிச் சென்று மறைந்துவிட்ட, அந்தத் துடிப்பும் உறுதியும் பூண்ட அந்தச் சின்னஞ்சிறு உருவம் *.ஆர்.ஐயோ..?

Page 36
66 LJ Tg/60.45
சிறு குழந்தைக்கும் வினசித் தம்பிக்கும் பேதமில்லை. அவன், அதோ தேம்பித் தேம்பி அழுகின்றன். உள்ளங் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுகின்ற அவனைத் தடை செய்துவிட முடியாத, தனிமையும் அமைதியும் ஒன்று கூடிக் குலவும் இரவு; நடுநிசி.
வினடிகள் நிமிடங்களாக உருவெடுத்து, மணித்தியாலங் கனாகப் பரிணமிக்கின்றன.
விடிவிளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. வெண்மேகத் திரையில் மறையுண்ட நிலவு போன்ற சன்ன ஒளி, அந்த அறையில். (
அறையைக் கண்ணுேட்டம் விட்டான். மேற்குப் பக் கத்து ஜன்னல் பூட்டப்படவில்லை. அங்கிருந்து, வெளியே வீசும் பனிக்காற்று அறையெங்கும் சுழன்று வந்தது. போர் வைக்குள் புதையுண்ட கீதா, நித்திரையில் வாய்புலம்பும் ஓசை.
அமைதியான அச் சூழ்நிலையில் சிறு வெடிப்பு. நினைவு தொடர முடியாத துண்டிப்பு. கீதாவின் உழறலுக்குக் காது கொடுத்தான்.
சிேன் இணயா! சின்னையா!...??
அந்தப் புலம்பல், கிறிஸ்தவர்களின் ஜெபம்போல மெது வாக ஒலிக்கின்றது. ஆணுல் அந்த ஜெபத்தின் மூலமந்திரம்:
f66t&OTIT.’
-8என் தம்பி!?
நகுலேஸ்வரா! உன்னை என் மகள் கீதா கூப்பிடுகிறு GrLir
நெஞ்சமே பாகாய் உருகி.உருகி.
fகுழந்தைகள் தெய்வங்களாம். ஒருவேளை நகுலேஸ் வரன் கீதாவுடன் கனவில் ஏதாவது கதைக்க வந்திருக் கிருனே?
கரைதுறை தெரியாத கடலில் அலையும் கலம்போல, வினு சித் தம்பியின் நினைவுகளும் அலேக்கழிய, அதற்கமையச் சூழ் நிலே எழுப்பும் சம்பவங்களும் அமைகின்றன.

மிருகத்தனம் 67
கீதா படுக்கையில் புரண்டு படுத்தாள். உதட்டில் அன் றலர்ந்த ரோஜாவின் ஒளி சிந்தும் எழிற் புன்னகை மெய்ம் மறந்த தூக்கம்.
பக்கத்தில் அவன் மனைவி புவனேஸ்வரி, கைக்குழந் தையை மார்புடன் அனைத்தவண்ணம் உறங்குகிருள். எந்த விதமான சலனங்களும் நெருங்க முடியாத தூக்கம், அவளுக்கு. மனைவியின் தூக்கத்தைப் பார்க்கப் பார்க்கப் பொருமை யாகக்கூட இருந்தது, வினுசித் தம்பிக்கு.
அவளைப்போன்ற நித்திரை, நிம்மதியான உறக்கம்தான் இப்போது அவனுக்குத் தேவைப்பட்டது. கட்டிலில் படுத் தான். உடலின் அயர்வைத்தான் துரத்தியடிக்க முடிந்தது.
ஆனல், தூக்கம்? எழுந்தான். திறந்து கிடந்த ஜன்னல் ஊடே கட்புலன் சென்றது. தேய் நிலவின் அற்ப ஒளிகூடப் பரவ முடியாதபடி மேகங்கள் இருண்டு, கறுத்து, வானையும் வையத்தையும் இறுக அணைத்துக்கொண்டிருக்கின்றன.
அவனுடைய நெஞ்சத்துச் சோக இருளைப்போல, உலக மும் மழைஇருளில் மூழ்கிப்போய்க் கிடக்கின்றது.
அந்த மழைமுகில் போன்ற ஒன்றுதானே அவனை முற்ருக ஆக்கிரமித்து, அவனை அவனுக இருக்கவிடாமல் செய் கின்றது?
கீதா முனகவில்லை; புலம்பவில்லை. அவளது கனவுலகத்தி லிருந்து சின்னையா விடைபெற்றுக்கொண்டுவிட்டானே என் னமோ, விஞசித் தம்பியை மட்டும் அவன் நினைவு இன்னமும் இறுகப் பிணைத்தவண்ணமே இருக்கின்றது.
ஆழ்ந்த பெருமூச்சுவெளியே நாயின் ஊளைச் சத்தம்! *அந்த நாய்க்கும் நகுலேஸ்வரனுக்கும் உள்ளங்களிலே மிகவும் நெருக்கமான பிணைப்பு, பந்தம், பாசம் எப்படி ஏற்பட் டது?-எதனுல் ஏற்பட்டது? அதுவும் அவனை நினைத்துத்தான் இரவிரவாக ஊளையிட்டு அழைக்கின்றதா? அல்லது.”
தன் தவறை மறந்த கற்பனை இது. நாய

Page 37
68 பாதுகை
நினைவினிலே நெருக்கமான நகுலேஸ்வரனுக்கும் இந்த நாய்க்கும் ஆத்மார்த்தமான தொந்தம் எப்படியோ இருக்கத் தான் வேண்டும். அப்படியில்லையென்ருல் இப்படி ஒருநாளும் ஊளையிட்டது கிடையாதே?
அன்றுவருடம் ஒன்றிற்கு முற்பட்ட நாள். சொறியும், குட்டையும் ஆக்கிரமித்த, வெறுத்தொதுக்க வேண்டிய கோலத்துடன் காட்சி தந்த நாய்க்குட்டியொன்றை நகுலேஸ்வரன் இரண்டு கைகளினலும் தூக்கிச் சுமந்த வண் ணம், பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தான்.
கண்களைப் பரிதாப உணர்வு மொய்க்க, ஒரு கையால் குட்டி நாயின் முதுகை வருடிக்கொண்டே வந்தான், நகுலேஸ்வரன்.
வினுசித் தம்பி பார்த்துவிட்டான். "சீ ஏண்டா இதைப் புடிச்சுக்கொண்டு வந்தனி? என்று சீறிஞன்.
*இல்லையண்ணு தாயில்லாக் குட்டி. ரோட்டில் நிண்டு வாள்வாளெண்டு கத்திச்சுது. பாவம்”.சொறியை மாத்தீட்ட மெண்டா, நல்ல குட்டியாய் வளருமண்ணு.?
'தூ! சனியன்! தூரக் கொண்டுபோய் ரோட்டிலே எறி யடா அதை?
*நான் மாட்டேன்; மாட்டேன் அண்ணு!?? *என்னடா, நான் சொல்லுறன். சவத்தைக் கொண் டேய் முதலில் எங்காவது துலேச்சுப் போட்டு வாடா!?
*ஊங்.ஊங்..?? அடத்துடன் ஒன்றுகலந்த அழுகையை அஸ்திரமாகப் பாவித்தான், நகுலேஸ்வரன். வினுசித் தம்பிக்குக் கோபம் மூக்கு முட்ட ஏறிக்கொண்டாலும் தம்பியைக் கைநீட்டி அடிக்க மனம் வரவில்லை. மடப்பயல் என்னத்தையாவது செய்து துலேக்கட்டும்!” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே வெளியே போய்விட்டான். வெளியே அலுவல் அவனுக்குத் தலக்குமேல் காத்திருந்தது.
ஒரு வருடத்திற்குள் அந்த நாய்க்குட்டியின் வாளிப்பான வளர்ச்சி, அதன் புத்திக்கூர்மை, அது குடும்பத்தவருடன் இப்

மிருகத்தனம் 69
பொழுது பழகும் தன்மை, சுறுசுறுப்பாக வீட்டைக் காவல் காக்கும் சுபாவம்-அனைத்தும் விஞசித் தம்பிக்குப் பிடித்துப் போய்விட்டன.
6666uot! 69 unit!”” நகுலேஸ்வரின் அந்த அன்பு அழைப்பிற்கு அத்தகைய ஒரு சக்தியா? வீமன் வாலே ஆட்டிக்கொண்டு அவன் பின்னுல் ஓடுகிறது. அதன் பின்னல் துள்ளிக் குதித்து ஓடுகிருள், கீதா.
*அந்த இரண்டு குழந்தைகளின் மாசில்லாத மனஉணர்வு அந்த வீமனுக்கும் இருக்குமோ?
அடிக்கடி இந்த நினைவு மனக்குகையில் எதிரொலிக்கும். *சே! அப்பிடி விட்டுவைச்சது எவ்வளவு தவறு? அந்த வீமனைக் காப்பாற்ற நகுலேஸ்வரன் போகாமலிருந்திருந்தால் இன்று அவன்.என் தம்பி.”
விஞசித் தம்பி வீட்டிலில்&ல. கந்தோரில் வேலையாக இருந்தான். அப்பொழுது பக்கத்து வீட்டு முருகரம்மான் கீழ் மூச்சு மேல்மூச்சு வாங்கக் கந்தோருக்கு ஒடோடி வந்தார்.
°தம்பி உன்ரை தம்பி நகுலேசுவுக்கெல்லோ...?? *என்னம்மான்? என்ன அவனுக்கு? *கோழியைத் துரத்திக்கொண்டுபோன உங்கடை வீட்டு நாய் கிணத்துக்குள்ளை தவறி விழுந்திட்டுதாம்.அதை உன்ரை மனுசியும் தம்பிப்பொடியனும் வெளியிலே எடுத்தினம் ..இருந்தாலும் தம்பி.”
மனப் பதைபதைப்பில் வினசித் தம்பி கத்தியேவிட்டான். **இருந்தாலும்.அம்மான், கதையை விழுங்காமல் சொல் லுங்கோ?
*கிணத்துக் கட்டில் சாஞ்சிருந்த கல்லு உடைந்துபோய் உன்ரை தம்பியும் கிணத்துக்கை.?
எப்படி வீடுவந்து சேர்ந்தானே அது அவனுக்கே தெரி யாது. வீட்டிற்குச் சென்று அவசர அவசரமாக ஆஸ்பத் திரிக்கு அழைத்துச் சென்ற தம்பியின் கதி?--
மூன்று நாள் பிரக்ஞையற்றுக் கட்டிலில் கிடந்து, அமரத் துவம் அடைந்து, வாழ்க்கையின் சூன்ய முடிச்சுக்களை அவிழ்க்

Page 38
70 urg,5/60).45
கும் அவஸ்தைக்குள் வினசித் தம்பியை உட்படுத்தி.உட் படுத்திச் சென்று மறைந்துவிட்டான்.
"அந்த அவன் வீட்டைவிட்டு மறைந்து மாதம் ஒன்றுகூட ஆகவில்லை.
நாய் ஊளையிட்டுக்கொண்டேயிருந்தது.
சனியன்! நகுலேஸ்வரனின் உயிரை வாங்கிவிட்டு, இன் னும் ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது. நாய் நன்றியுள்ள பிராணியாம். அவன் செத்து ஒரு மாதமாகவில்லை. தரித்திர நாய்க்கு வரவர எவ்வளவு திருட்டுப் புத்தி? சுகமில்லாத குழந் தைக்குக் கொண்டுவரும் பாணைக் கூடவல்லவா திருடித் தின்ன ஆரம்பித்துவிட்டது? இதுக்கென்ன ஜீவகாருண்யம்? அருமைக் கருமையான தம்பியை விழுங்கின சனியன், ஊளை யிட்டு ஊளையிட்டு இன்னும் ஆரைக் கொல்லப்போகிறதோ?. வீடுவாசலுக்கே இது உதவாது..?
கையால் அணைத்திருந்த குழந்தை சிணுங்கி அழத் தொடங்கியது.
புவனேஸ்வரி விழித்துக்கொண்டாள். அவளது நித்திரைச் சோம்பல் நிரம்பிய கண்களில் விஞசித் தம்பி ஜன்னலோரம் விழித்துக்கொண்டு நிற்பது நிழலாடுகின்றது.
*இஞ்சேருங்கோ. நீங்களின்னும் நித்திரை கொள்ளேல் &a)(gu」???
நாயின் ஊளைச் சத்தம் வெளியே. *ஏன் நாய் ஊளையிடுகிறது?-புவனேஸ்வரி கேட் டாள்.
*அதை நாளைக்கு முனிஸியல் நாய் புடிக்காரனிட்டைப் பிடிச்சுக் குடுக்கப்போறன். அதுக்குத்தான் சங்கிலியிலே கட்டிப்போட்டிருக்கிறன்.”*
*ஏன்? அதுக்கு என்ன இழவு வந்தது? *ஏன? உனக்குத் தெரியாதே? பாணிலை ருசி கண்டிட் டுது. இனிமேல் இந்த வீட்டிலே ஒரு சாமானையும் விட்டு
வைக்காது.?

மிருகத்தனம் 7t.
*என்னெண்டாலும் பார்த்துச் செய்யுங்க. பாவம்! இப்ப அதை அவிட்டுவிடுங்க.??
மறுநாள். மேசைமீது பாண் பார்சலைப் போட்டுவிட்டு, மறைந் திருந்து கவனிக்கிருன், வினசித் தம்பி.
பாணைக் கவ்விய வீமன் அதனைத் தின்னவில்லை. வாயால் கெளவிக்கொண்டே வெளியே ஒட்டமெடுக்கின்றது.
-8வெளியே பானுடன் எங்கை ஒடுது? நெஞ்சை விஞக்குடையத் தொடர்ந்து செல்கிறன், விஞசித் தம்பி.
வினகித் தம்பி பின்தொடர்வதைக் கவனிக்காத அந்த நாய், ஏதோ ஒர் இலட்சிய நோக்கோடு, உலகத்தைப்பற்றிச் சட்டை செய்யாது செயல்படும் மனிதனைப்போல ஒடிச் செல் கின்றது.
வீதியின் அந்தம். கால எல்லையை மென்று விழுங்கிக் கிலமாகிவிட்ட பழைய வீடு. உருப்படியாக இருந்த காலத்தில் அந்த வீட்டைத் தாங்கிநின்ற நாலு சுவர்கள் மட்டுமே மொட்டையாகக் காட்சி அளிக்கின்றன.
வீமன் உள்ளே சென்று சுவர்ப் பக்கம் மறைகின்றது. الرسم --எேங்கே நாய்? கண்களிலே தவிப்பு, மெய்யில் பதட்டம் உள்ளே செல் லப் பயம்! இருந்தும், வந்த காரியத்தை ஆராயவேண்டு மென்ற ஆர்வம் மட்டும் குன்றிவிடவில்லே.
சுவரில் சாய்ந்து மறைந்துகொண்டு உள்ளே பார்க்கிருன். *ஏனிந்தத் தனிமையான இடத்துக்கு வந்தது? தின்னு வதற்கு வசதியான நல்ல இடந்தான். மனிசனேவிட இந்த நாய் நல்ல புத்திசாலி நாய்தான்.?
நினைவுபோல எதுவும் புலப்படவில்லை. அந்த இடத்தின் கீழ்ப்புறம். இருளின் நிழல் கவியும் அந்த வேளையில், அசைவுகளை உற்றுப் பார்த்தால் மாத்திரம் தெரியக்கூடிய இடத்தில்

Page 39
72 பாதுகை
காரிலோ, வேறு விபத்திலோ மோதப்பட்டு இடுப்பெலும்பு முறிந்து, நடக்கத் திராணியற்ற நிலையில் கிடக்கும் இன்னுெரு நாய். அதன் மீது சிறு குட்டிகள் ஏறி விளையாடுகின்றன.
வீமன் கொண்டு சென்ற அந்தப் பாண்? முடநாய், அவுக்! அவுக்!” என்ற ஒலியுடன் அதனைச் சுவைத்துத் தின்ன, வீமன் முன்னங்கால்களே நீட்டிப் படுத்த வாறு, தலையைச் சாய்த்து, அந்த நாய் தின்னுவதைக் கவனிக் கின்றது.
வார்த்தைகளே அடுக்கி, அதற்குள் ஒடுக்கிவிட முடியாத பாசத்தின் சங்கமம் ஒன்றிப்பு.
தேகம் புல்லரிக்கின்றது, விஞசித் தம்பிக்கு. *தம்பி.நகுலேஸ்வரா! நீ-நீ சாகவில்லையடா?
189589 س

குறளி வித்தை
வழியில் அம்மன் கோயில் குறுக்கிட்டது. அவநம்பிக்கைகளும், உளைச்சல்களும் குதியாட்டமிடும் மனம்; அதில் மின்னல் கீற்றெனத் துளிர்க்கும் நம்பிக்கை. தோளிற் கிடந்த சால்வையைக் கீழிறக்கி, முழங்கைவரை தளர்த்தி, சிரத்தைச் சற்றே குனிந்து தாழ்த்தி, உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கும்பிட்டான் தம்பிப் பிள்ளை. *அம்மாளே! நீதான் துணை!.ஒரு விக்னமும் நடந்துவிடக் கூடாது.” என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டான். இருட்டில் இருட்டாய் நீண்டு கிடந்த தாரிட்ட சாலையில் கால் கள் நடக்கத் தொடங்கின.
கிணற்றிற்குள் அமிழ்ந்துபோக இருப்பவன், ஒரு சிறு தடி கிடைத்தாலும் அதன் துணையுடன் தன் உயிரைக் காப் பாற்றிவிடலாம் என்று நினேப்பாகும். அப்படித்தான் தம்பிப் பிள்ளையும் கோட்டை முனியப்பர், நல்லூர்க் கந்தசாமியார், செல்லச் சந்நிதியான், முறிகண்டியான் ஆகிய தெய்வங்கள் எல்லோரையும் மாறி மாறி நினைத்து, மனதிற்குள் வேண்டுதல் செய்துகொண்டான். இப்பொழுது நாச்சிமார் கோயில் அம்ம னும் துணைக்குச் சேர்ந்துகொண்டாள்.
நெடுந்து ரப் பிரயாணத்தில் ஈடுபட்டிருப்பதாக ஒரு மன மயக்கம். பெரிய கடை நாலெட்டிற்குள் என்று நினைப்பவன். ஆனல், இன்று மட்டும் வழி நீண்டு நீண்டு.
இன்று பொழுது விடிந்ததற்குப் பின்னர்தான் எத்தனை சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன!
காலேயில் எழுந்து, வழக்கம்போலக் கோப்பி வைத்துத் தந்துவிட்டு, பிட்டுக்கு உலை வைத்தாள், பூமணி. வைத்தவள், வீட்டு விருந்தைக்கு ஓடோடி வந்து வயிற்றை இரு கைகளா லும் இறுகப் பிடித்துக்கொண்டு அழத் தொடங்கிவிட்டாள். தம்பிப் பிள்ளைக்கு, முன்னர்-பின்னர் அநுபவமில்லை. துடித்துப்

Page 40
74 ; UT g/60)45
பதைத்து அழும் பூமணியைக் கண்டு, அவன் மனதும் துடித் ததேயொழிய என்ன செய்யவேண்டுமென்பது மட்டும் புலப் படவில்லை.
தாய் தூங்கிக்கொண்டிருந்தாள். மருமகள் வீட்டிற்கு வந்த பிற்பாடு, இளைப்பாறுதல் பெற்றுவிட்டதாகத்தான் அவள் நினைப்பு. அதுவும் மாசி மாதம் என்றல் கேட்கவேண் டியதில்லை. 'இந்தப் பனிக்கூதலுக்கை வெள்ளென எழும்ப என்னுலே முடியுறதில்லை? என்று சொல்லிக்கொண்டு, வெயில் நன்ருக முதுகில் சுளிரென்று குட்டுமட்டும் படுத்துக் கிடப் பாள்.
*எணேய், ஆச்சி! எணேய், ஆச்சி!?? என்று பல தடவை கள் தம்பிப்பிள்ளை குரல் கொடுத்த பின்னர்தான் நாகம்மா விழித்துக்கொண்டாள். எேன்னடா?...காலங்காத்தாலை ஏன் கத்துருய்? என்று அலுத்துக்கொண்டாள்.
“பூமணிக்கு என்னமோ வயித்துக்குள்ளே செய்யுதா மென? என்று குரல் கொடுத்தான். இதைக் கேட்டதும் திடுக் கிட்டுப் பதைத்து, வாரிச் சுருட்டிக்கொண்டு விருந்தைக்கு வந் தாள், நாகம்மா.
பூமணியின் நிலை அவளுக்கு விளங்கிவிட்டது. *குறுக்காலே போறவனுக்குச் சொன்னுல் கேட்டால் தானே? டேய், கன்னிப் புள்ளைத்தாச்சியடா! எப்ப எண்டு சொல்ல முடியாது. புள்ளை பெறச் சாமான் எல்லாம் வேண்டி வைக்கச் சொன்னன்-கேட்டாத்தானே? இப்பப் பாரடா? என்று இரைந்தாள். நாகம்மாவின் குணமே அப்படித்தான். எந்த ஒரு சிறிய விடயமானுலும் பந்தல் பிரித்துத்தான் பேசு வாள்.
புேள்ளே! இப்ப எப்பிடி இருக்கடி?.குத்துதே? என்று கேட்டுக்கொண்டே, உப்பிப் பருத்திருந்த வயிற்றினே வரிந்து கட்டினுற்போல இருந்த சேலையை, இடுப்பை விட்டுச் சற்று அவிழ்த்து நெகிழவிட்டாள்.
*ஆச்சி, இப்ப என்னணை செய்யிறது? என்று ஒன்றும் புரியாமல் கேட்டான், தம்பிப்பிள்ளை. '

குறளி வித்தை 75
உதில்தான் நிண்டுகொண்டு நிக்கிறியே? காலங் கிடக் கிற கிடையிலை, என்னலே முடியாது. பேந்து, உந்த மருத்து விச்சிகளைக் கொண்டந்து தன்ரை மேளைச் சாக்காட்டிப் போட்டதெண்டு அளவெட்டியாள் ஏறக்கம் பாய்வாள். உதிலே பரமன்ரை கார் நிக்கும் கூட்டியா. கையோடை ஆசுபத் திரிக்குக் கொண்டுபோவம்” என்ருள் நாகம்மா.
தாயின் திட்டப்படி உடனே பூமணி யாழ்ப்பாணம் ஆஸ் பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
தம்பிப்பிள்ளையும் தாயும், விடாப்பிடியாகக் கட்டிலைச் சுற்றிக்கொண்டு நின்றனர். அங்கு வந்த நர்ஸ், நீேங்க புள்ளைப்பேறு பார்க்கிறதெண்டால், வீட்டில்ை வைச்சுப் பார்த் திருக்கலாமே! ஏன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்தனிங்க? நாங்க எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுவம். இஞ்சை கூட் டம் கூடாமல், வீட்டை போங்க? என்று விரட்டினுள்.
*கன்னிப் புள்ளைத்தாச்சி! பாவம்! அதுதான்...?? என்று நாகம்மா பதைபதைத்தாள்.
*என உனக்குக்கூடச் சொல்ல வேணுமா? இப்பதான் நோக்காடு எழும்பி இருக்கு. ராவைக்கோ, நாளைக்கோ தெரி யாது. ஒண்டுக்கும் பயமில்லை. நாங்க என்ன புள்ளையைப் பீச்சாங்குழல் வைச்சா எடுக்கிறது? கரைச்சல் குடுக்காமல் போங்க? என்று இரைந்தாள்.
நர்ஸின் குரலில் ஏறிக்கொண்டிருந்த குட்டினைக் கண்டு, தம்பிப்பிள்ளையும் தாயும் பின்வாங்கிவிட்டார்கள். நோயாளர் களைப் பார்வையிட அநுமதிக்கப்படும் நேரம் பூராவும் நின்று, அவளுக்குத் தேவையான சாமான்கள் யாவும் வாங்கி வைத்து விட்டுத்தான் திரும்பினர்கள்.
கொக்குவிலுக்கு வந்துசேர நேரம் பிற்பகல் இரண்டுமணி யாகிவிட்டது. வந்திறங்கியும்கூட, தம்பிப்பிள்ளையைச் சும்மா விடவில்லை தாய்.
அேந்த அளவெட்டியாள் துள்ளுவாள். ஏன் வீண் பொல் லாப்பை? எதுக்கும் தாய் பாக்கிறதுபோலை வருமே? அடுத்த பசுவிலேயே, ஒருக்கா அளவெட்டிக்குப் போய், உன்ரை மாமி

Page 41
76 பாதுகை
யிட்டை காதிலே போட்டு வைச்சிட்டு வா. பேந்து கரைச்சல் வேண்டாம்? என்ருள்.
கொழுத்தும் வெயிலில், ரோட்டோரத்தில் பஸ்ஸுக்காகத் தவம் கிடந்தான். *தாலியறுத்த பஸ் ஒரு மணி நேரம் கழிச் சுத்தான் வந்து சேர்ந்தது. அதிலே அளவெட்டிக்குப் போய், மாமியின் அப்புக்காத்துக் குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி, அவளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற் குள் போதும் போதுமென்ருகிவிட்டது. ‘என்ரை புள்ளையை ஆருமற்ற அணுதையெண்டு நினைச்சே, தர்மாஸ்பத்திரியிலே இழுத்துப் போட்டுட்டு வந்திருக்கிறியள்? ஏன் இணுவில் ஆசுப்பத்திரி கிட்டத்தானே கிடக்கு-அங்கை கொண்டு போயிருக்கலாமே? என்று கேட்டுச் சன்னதமாடத் தொடங்கி யவளைச் சமாதானப்படுத்தி அனுப்புவதென்றல் அது சமான்ய 66ນ(ບມn?
காலையிலும் சாப்பாடில்லே. ஆஸ்பத்திரிக்கு முன்னுலிருக் கும் லெட்சுமி கபேயில் இரண்டு வடை வாங்கிக் கடிச்சு, *கோப்பித் தண்ணி”யை நாலு மிடறு உள்ளே தள்ளியதுதான் மதியச் சாப்பாடு.
ஆறுமணி வாக்கில், மாமியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு, கொக்குவிலுக்கு வந்து சேர, உடலும் உள்ளமும் வெகு வாகச் சோர்ந்துவிட்டன.
* ஒருக்காப் போய்ப் பூமணியைப் பார்த்தாலென்ன? என்று மனதில் அரும்பிய ஆசையை அமுக்கிவிட்டான்.
அந்தச் சனியன் பிடிச்ச நேர்சுகள் கத்துங்கள். ஆசுப் பத்திரிக்கை விடவும் மாட்டுதுகள். மேலும் நல்லா உளையிது. காலமெ போய்ப் பாப்பம்’ என்று மனதைச் சமாதானப்படுத் திக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.
வீட்டில் ஒரு கைவிளக்குத்தான் எரிந்தது. என்ன இருந் தாலும் வீட்டு லெட்சுமி இருப்பதுபோல வராது. ஒரே இருள் மயம்; வீட்டில் மட்டுமல்ல, மனதிலும் மண்டிக் கிடந்தது. அலுத்துப் போய்ச் சாய்வு நாற்காலியில் படுத்துக் கால்களை நீட்டிக்கொண்டான், தம்பிப்பிள்ளை.

குறளி வித்தை 77
அப்புறம் சமையல் முடிந்த பின்னர், தாய் சாப்பிடக் கூப்பிட்டாள். தம்பிப்பிள்ளையின் முகச் சோர்வைப் பார்த்த நாகம்மாவிற்குப் பகீரென்றது. ‘என்னடா, புது நாணய மாய்க் கவலைப்படுருய்? அவளுக்கு ஒண்டும் வராது. நாங்கள் ஆற்றை சோத்தைத் தட்டிப் பறிச்சுத் திண்டம்? ஒண்டும் பயப்பிடாதை. சாப்பிட வா!?? என்று சமாதானம் சொல்லிக் கொண்டே சாப்பாட்டைப் பரிமாறிஞள்.
தாய், தம்பிப்பிள்ளை சாப்பிட்டுக்கொண் டிருக்கும் பொழுதே, அளவெட்டியாள்? கேட்ட கேள்விகளையெல்லாம் குடைந்தெடுத்து, அதற்குத் தன்னுடைய விமர்சனங்களையும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அன்று முழுவதும் அலைந்த அலைச்சலும், உண்ட களைப் பும் சேர்ந்துகொள்ளவே தூக்க மயக்கம் கண்களைச் சுழற்றி, தம்பிப்பிள்ளையை ஆட்கொண்டது.
பாயை எடுத்து உதறிப் போட்டான்.
மேற்கு மூல இறப்பிலிருந்து பல்லியொன்று சொல்லிற்று.
பல்லிச் சாத்திரத்தில் தம்பிப்பிள்ளைக்கு வெகு நம்பிக்கை; ஆனல், அதற்கு என்ன பலன் என்று வியாக்கியானம் சொல் லத் தெரியாது.
மனம் தவித்தது.
சம்பவங்களை அசைபோட்ட மனதுடன் வந்தவன், இந்துக் கல்லூரிச் சந்திக்கு வந்துவிட்டான். கூட்டம் கூட்ட மாக, அவனை விலக்கிக்கொண்டு மக்கள் சென்றர்கள். *முதலாம் ஷோ முடிஞ்சிருக்காக்கும்” என்று நினைத்தான்.
நாலந்து இளைஞர்கள், வேட்டியை ஏற மடித்துச் சண்டிக் கட்டாகக் கட்டிக்கொண்டு, தூஷணை வார்த்தைகளைச் சொல்லி அட்டகாசமாகச் சிரித்து ரஸித்துக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவன், தன் கழுதைக் குரலில், *போனுல் போகட்டும் போடா? என்ற இந்தக் காலத்துச் சினிமாப் பாட்டொன்றை ராகமிழுத்துப் பாட்டாகப் பாடு கிருன்.
5

Page 42
78 tură coés
ேேச என்ன துர்ச்சகுனம்? போனல் போகட்டுமாம்! எது? உயிரா? என்று மனம் அவஸ்தைப்பட்டது. பல்லி சொன்னது .இந்தப் பாட்டு. தந்தி வந்தது.
சந்திக்கு வந்தபொழுது, அதன் மையத்தில் தொங்கிக் கொண்டிருந்த நீலரஸ், வெளிச்சம் பட்டென்று அணைந்தது. அவன் மனதிலும், ஊசலாடிக்கொண்டிருந்த நம்பிக்கை உணர்வுகள் செத்துவிட்டதைப் போன்ற ஒரு வெறுமை.
நெஞ்சில் சோர்வு அதிகரித்தது. ஆணுல், கால்கள் பூமணிக்கு என்ன ஆயிடுமோ? என்ற ஆவலில் வேகம் கொள்ளத் தொடங்கின. ་་་་་་་
சினிமா ரஸிகர்கள் வெகுதூரம் சென்றுவிட்டனர். திரும் பிப் பார்த்தான். சந்தியில் மீண்டும் வெளிச்சம் வந்துவிட்டது. சந்திகளில் போடப்பட்டிருக்கும் மேர்குரி? வெளிச்சம் இப்படித் தான் அடிக்கடி அவிந்து அவிந்து எரியும் என்பது தம்பிப் பிள்ளைக்குத் தெரியாது.
உளைச்சலெடுக்கும் மனம் அந்த நாற்சந்தியிலேயே சுற் றிச் சுழன்றது.
பல்லி சொல்வியதைக் கேட்டு விறைத்து நின்றபொழுது, வாசலில் சைக்கிள் மணி ஓசை கேட்டது.
*ஆர் இந்த நேரம் சைக்கிள் மணி அடிக்கிறது? என்று யோசிப்பதற்கிடையில், படலையடியிலிருந்து குரல் வந்தது.
செவி விழித்துக்கொள்ளுகின்றது. தேம்பிப்பிள்ளை, உனக்குத் தந்தி ஒண்டு வந்திருக்கு? என்ற குரல் நாகம்மாவிற்கும் கேட்டுவிட்டது. சிம்னி லாம்பை எடுத்துக்கொண்டு அவளும் வந்தாள். தம்பிப்பிள்ளை தந்தியை வாங்கிஞன்.
*ஆரடா மோன இந்த நேரம் தந்தியடிச்சிருக்கினம்? தந்தியில் என்ன சொல்லியிருக்கு? என்று பரபரப்புடன் கேட்டாள், தாய். தந்தி இங்கிலீஷில் இருந்ததால், தனக்கு வாசிக்கத் தெரியாது என்று அப்பொழுதுதான் பட்டது, தம்பிப் பிள்ளைக்கு. நல்லகாலம் தந்திச் சேவகன் போய்விடவில்லை; சைக்கிளைத் திருப்பிக்கொண்டிருந்தான். 'தம்பி இதை

குறளி வித்தை 79
ஒருக்கா வாசிச்சுக் காட்டுமன்? என்று கேட்டுவிட்டுத் தந்தி யைக் கொடுத்தான், தம்பிப்பிள்ளை.
ஒருதடவை மனதிற்குள் படித்துப் பார்த்த அவன், இங்கி லீஷ் வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்திச் சொன்ஞன்: “பெண் சாதிக்குக் கடுமை. உடனே வரட்டாம்!”
எலும்புக் குருத்துக்களை நடுங்க வைக்கும் உள்நடுக்கம். “எங்கை இருந்து வந்திருக்கு? **ஆஸ்பத்திரியிலே இருந்து.” தம்பிப்பிள்ளையின் முகம் வெளுத்தது. தேகமெல்லாம் புல் லரிக்க, கையிலுள்ள தந்தியையே வெறித்தபடி பார்த்தான்.
அவ்வளவுதான்; நாகம்மா நிலத்தில் குந்தியிருந்து கொண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள். பிலாக்கண ராகம் இருளைக் கிழித்து, அக்கம்பக்கத்து வீட்டாரையும் சொல்லாமலே அழைத்துவிட்டது.
தாயைத் தடுத்து, வேண்டிய சமாதானம் சொல்லி சாந் தப்படுத்தவே தம்பிப்பிள்ளை திணறிப்போய்விட்டான்.
-என்ன நடந்திருக்கும்? *கன்னிப் புள்ளை.முதல் புள்ளைப் பேறு..ஏதாவது எக்கச் சக்கமாக..? என்ற சந்தேக நினைவுகள் நின்று நிதானிக்கச் செய்யாமல் அவனை விரட்டின.
சந்தியா காலத்தில் வானில் தோன்றும் உருவங்களைப் போல, நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்து கலந்து, தெளிவற்ற உருவங்களை அவனது மனத்திரையில் விரித்துக் கொண்டிருந்தன.
மனம் ஏக்கம் என்ற நூலில் பட்டமாகப் பறக்க, அதை நம்பிக்கை என்ற நப்பாசையுடன் வலித்து, நிலத்தில் இறக்கும் முயற்சி.
கொட்டடிச் சந்தி. சத்திரத்துத் திருப்பத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தான், தம்பிப்பிள்ளை. இன்னும் எட்டி நாலு ‘கவடுதான். புதுபஸ் நிலையத்தைத் தாண்டிவிட்டால், ஆஸ்பத்திரி.
மன உளைச்சலினுலும், பூமணியின் நிலை என்ன? என்ற கவலையினுலும் உந்தப்பட்டு நடந்துவந்த தம்பிப்பிள்ளை,

Page 43
80 LJA 36045
ஆஸ்பத்திரிக் கேட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டதை உணர்ந் தான்.
முன்னரெல்லாம், வாசலில் ஒரு பெரிய மதுரமரம் நிழல் பரப்பிக்கொண்டிருக்கும். வீதியை விசாலித்து, கொழும்பு நாகரிகத்தின் வேகத்தைப் புகுத்த முனைந்த நினைவிற்கு அந்த மதுரமரம் பலியாகியிருக்க வேண்டும்.
வெளிக்கதவு சாத்தப்பட்டிருந்தது. முன்னுலுள்ள லெட்சுமி கபேயில் சுருட்டுப் பற்றவைக்கப் போயிருந்த கேட் காவற்காரன் திரும்பிவந்தான். தந்தியைக் காட்டிவிட்டு உள்நுழைவது சாத்தியமாக இருந்தது. பிரசவ வார்ட் பக்கமாகத் தம்பிப்பிள்ளை விரைந்து சென்றன்.
வார்டின் விருந்தையில் ஆள் அரவமேயில்லை. மனத் தவிப்புடன் தம்பிப்பிள்ளை அங்குமிங்கும் சிறிது நேரம் உலாவினன். கால்கள் கடுத்தன.
வெள்ளைக் கலையுடுத்த நர்ஸ் ஒருத்தி வெகுவேகமாக வந்துகொண்டிருந்தாள். அவளை வழிமறித்து நிறுத்திய அவன், ஏதோ சொல்ல வாயெடுத்தான்.
* சீரியஸ் கேஸ்! டக்கெண்டு வந்துடறன். இருங்க, இந்த வாங்கிலை? என்று சொல்லிக்கொண்டே, சக்கரத்தில், உருளும் நாற்காலியைத் தள்ளிக்கொண்டு, சத்திர சிகிச்சை ரூமிற்குள் மறைந்துவிட்டாள், நர்ஸ்.
இந்த நேர்சுகளுக்கு நல்லாக் கொழுப்புப் புடிச்சிப் போயிருக்கு’ என்று மனத்திற்குள் கறுவினன், தம்பிப்பிள்ளை. ஆப்பரேஷன் அறையிலிருந்து ‘ஓ’வென்ற அலறல். மனம் திேக்’கென்றது. ஒருவேளை, பூமணியோ? நேரம் ஊர்ந்துகொண்டிருந்தது.
இவன் கங்காணி ஆசீர்வாதம் இருந்தாலாவது விசாரிக்க லாம். அவன் நல்ல பொடியன்’ என்று ஆசீர்வாதத்தைப் பற்றி ஒருகணம் சிந்தித்தான். “அவன் இங்கை இருக்கிருனே? அல்லது வீட்டை போயிருப்பானே? என்று தன் நினைப்பிற் குத் தானே சமாதானம் தேடிக்கொண்டான்.
நீண்ட-வெகுநீண்ட நேரத்திற்குப் பின் அதே நர்ஸ் வந்தாள்.

குறளி வித்தை 8 it
தம்பிப்பிள்ளை தந்தியை விரித்துக் காட்டிஞன். “பூமணி விஷயமே? சரி, அறைக்கு வாருங்க? என்று அழைத்துச் சென்ருள், நர்ஸ். .
எதையோ எல்லாம் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அவள்; “உங்கடை பெயர் என்ன?99 என்று கேட்டாள்.
ʻʻ5tíb9’yu9?6irèr-~ 9 9 *தம்பிப்பிள்ளையோ?--கணவதிப் பிள்ஜளயோ?? என்று ஆச்சரியப் பார்வை முகத்தில் படிய மறுபடியும் கேட்டாள்.
*தம்பிப்பிள்ளை199 66? *கொக்குவில்,29 *அளவெட்டி மனுஷி ஒன்றின்ரை மேள்தானே? ஒெமோம்!99 “ஒ’-நாக்கைச் சப்புக்கொட்டினுள் தர்ஸ், தந்தி விலாசம் தவறி வந்துவிட்டது. உங்கடை மனுஷி நோமல் கேஸ். ஆம்புளைப் பிள்ளை; தாயும் குழந்தையும் நல்வி சுகம்? என்று தொடர்ந்து சொன்னுள், அவள்.
இத்தனை மன உளைச்சல்களுக்குப்பின்னரும், கற்கண்டும், கப்பல் வாழைப்பழக் குஆலயும் வாங்கும் நிறைவு மனதை மொய்க்க, மனைவியும் குழந்தையும் சேமமாக இருக்கின்றர்கள் என்று சொல்லப்பட்ட வார்டை நோக்கி நர்ஸ்-டன் நடத் தான், தம்பிப்பிள்ளை,
ー 1956

Page 44
கைவண்டி
தள்ளிக்கொண்டு வந்த கைவண்டியை ஒரு பக்கம் சட்? டென்று வெட்டித் திருப்பி, ஒதுக்கி நிறுத்தி, கைப்பிடியைச் சற்றுத் தளர்த்திய வண்ணம் ஆஸ்பத்திரியின் பின்பக்க மதில் சுவர் ஒரமாகக் கிளைத்துச் சடைத்து வளர்ந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான விருகூடித்தின் இலையடர்ந்த கிளையை ஒரு முறை அண்ணுந்து பார்த்தான், செபமாலை.
இடதுகையைச் சிரசின்மேலேற்றி, தலையைத் தேய்த்துத் தடவிப் பார்த்ததோடு அதனை மூக்கில் வைத்து முகர்ந்து கொண்டான். முகம் அருவெருப்பில் சுளித்துக்கொள்ளு கின்றது.
*சீ சனியன் புடிச்ச காக்கை?-அந்தப் பசுமை கொழிக் கும் இலக்கூடாரத்தின் அடியில் நின்று, தலையை அசைத்து, யாருடனே சண்டை போடுபவனைப்போல முகத்தை வைத்துக் கொண்டு, வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித் தீர்த்தான், செபமாலை. அப்பொழுதும் அவன் மனதில் கப்பி இருந்த ஆத்திரம் அடங்கவில்லே.
சற்றுக் குனிந்து உடுத்திருந்த சாரத்தின் அடித் தலைப்பை இழுத்துப் பிடித்து, காகம் எச்சமிட்ட இடத்தை - கையால் தொட்டுத் தடவிப் புரிந்துகொண்ட தலைப் பகுதியை - நன்ருக உரசித் துடைத்துச் சுத்தப்படுத்தினன்.
-*காலங் காத்தாலே நாசமாய்ப்போன காகம் தலையிலே இப்பிடிப் பீச்சித் துலைச்சுப் போட்டுதோ?
நினைவு என்னும் அரவம் திரும்பத் திரும்ப அந்தச் சம்பவப் புற்றையே சுற்றிச் சுழன்று ஊர்ந்துகொண்டிருந்தது.
நிறுத்திய வண்டியின் மேற்பக்க மூடியைத் திறந்தான், செபமாலை. உள்ளே வரிசைக்கு மூன்ருக இரண்டு வரிசை களில் ஆறு வாளிகள் நெருக்கியடித்தவாறு கொலுவீற் திருந்தன.

கைவண்டி - 95.
அவற்றில் மூடப்பட்டிருந்த கடைசி வாளியைத் தூக்கிக் கையில் எடுத்தவாறு வண்டியின் மூடியைத் திரும்பவும் மூடிஞன். -
இண்டைக்கு ஏன் இவ்வளவு பொழுது போச்சு?-நினை வுக் குமிழ் மண்டைக்குள் வெடிக்க, கடமையைச் செய்யும் அவசர நோக்குடன் தன் தினசரித் தொழிலைச் செய்வதற்குத் தயார்நிலைப்படுத்திக்கொண்டான்.
உறங்கிக் கிடந்து விழித்துக்கொண்டதுபோல, இருக்கை யில் இருந்து புறப்பட்டு வீதிகளை அமர்க்களப்படுத்தும் வாக னங்களின் இராட்சத ஒலி. யாழ்ப்பாணப் பட்டணத்துக்கு உயிர்த்துவம் கொடுக்கத் தொடங்கிய காஜலவேளை. நேரம் எட்டோ, எட்டரையோ, புத்தகமும் கையுமாகச் சிறுவர் சிறுமி யர் வீதிகளில் காணப்படுகின்றனர். அந்த நெருக்கடிக்கூடே நிதானமாக நடைபோட்டு நடந்து வந்துகொண்டிருந்தனர் இரண்டு இளம் ஆசிரியைகள். அவனையும், அவனுடைய கைவண்டியையும் தூரத்தே கண்டவுடன், முகத்தைச் சுளித்து, உதட்டைப் பிதுக்கி, இடையில் நாகரிக அழகிற் காகச் சொருகப்பட்டிருந்த கைக்குட்டையை ஒருவிதப் பரபரப் புடன் எடுத்து நாசியைப் பொத்திக்கொண்டு, சாட்டி நடை போடுகின்றனர். அவர்களது முகத்தில் தங்களது பரிசுத்தம் குலேந்துவிட்டது போன்ற அருவெருப்புக் குமைகின்றது. வண்டியைக் கடந்து சென்ற அவர்கள், வீதியில் வில்லைப் போன்று வளைந்து எதிர் சாரிக்குச் சென்று நிலம் நோகாமல் நடந்து சென்றனர்.
செபமாலைக்கு இது புதிய அனுபவமல்ல. பார்த்துப் பார்த் துப் பழக்கப்பட்ட காட்சி. இப்படிப்பட்ட பல பிரகிருதிகளே இந்தப் பத்து வருடத் தொழில் வாழ்க்கையில் பார்த்துப் பார்த் துத்தான் அவன் பழகி இருக்கிருனே!
இருந்தாலும் குறும்பு மனம் கோமாளித்தனமாகச் சிந்தித் தது: *அம்மணிமார்கள் இந்த வண்டியைப் பார்த்தவுடனேயே மூக்கைப் புடிக்கினம். ஆன, மூக்கைப் புடிக்கிறதாலே மாத் திரம் எல்லா மணமும் மறைஞ்சுபோயிடுமா, என்ன?

Page 45
8. urgos
தன் கற்பனையில் மூழ்கி, அது காட்டும் இன்பத்தில் தானே சொக்கிச் சுகம் பெற்றன் ஒருகணம்.
வேம்படிப் பெண்கள் கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றிக் கொண்டு வரும் காரொன்று வீதிப் பள்ளத்தில் விழுந்து எழுந்த சத்தம், அவன் காதை வந்து தாக்கிற்று. கிழக்கே கிளர்ந்து வரும் வெயில் சுள்ளென்று முதுகில் சுட்டு அவனது கடமையை ஞாபகமூட்டியது.
*நாய் கடிக்கும்; கவனம்? என்ற அறிவிப்புப் பலகை யைத் தங்களது படலையில் தொங்க்விட்டுத் தங்கள் பங்களா வின் பெருமையை இன்னும் ஒருபடி உயர்த்திக்கொண்டிருந்த அந்த எதிர்வீட்டு இரும்புக் கேட்டின் கொக்கியைக் கழற்றி, படலையைத் திறந்துகொண்டே தலையை வளைத்து வீதியில் சுழலவிட்டு எட்ட நடந்துகொண்டிருக்கும் அந்த யுவதிகள் இருவரையும் ஒரு கண்ணுேட்டம் விட்டான், செபமாலை.
மூக்கை விட்டு லேஞ்சி”யை அவர்கள் இன்னும் எடுக் கவே இல்லே!
இரும்புச் சங்கிலியால் இணைத்துக் கட்டப்பட்டிருந்த உயர் சாதி நாயொன்று வேள்” வேள்ளென்று குரைத்து, அவனது வரவை வீட்டாருக்கு அறிமுகப்படுத்தியது.
*அம்மா.அம்மா.கக்கூஸ்காரன் வந்திட்டானம்மா கக்கூஸ்காரன் வந்திட்டான்!??
குரல் கொடுத்துக்கொண்டே குதித்தோடிக்கொண்டிருந் தாள் அந்த வீட்டு அம்மாளின் சின்னஞ் சிறு பெண்குழந்தை, பவானி. பின்னுல், “கத்துக்காரன் வந்துட்டானம்மா.கத்துக் காரன் வந்துட்டானம்மா..?? என்று அக்காளின் குரலை மழலை ஒலி மூலம் எதிரொலி செய்த வண்ணம் கையைத் தட்டித் தட்டிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான், அந்த வீட்டின் கடைசிக் கொழுந்து, ராதாரமணன்.
*ஏய், பவாணி வாயை மூடடி மூடு வாயை? என்று கடுமையான தொனியில் உத்தரவு போட்டுக்கொண்டே முன் விருந்தைக்கு விரைந்து வந்தாள், புவனேஸ்வரி. அவள் அத்த வீட்டம்மாளின் மூத்த பெண். நான் எத்தனை நாள் உனக்

கைவண்டி 65
குச் சொல்லுறேன், செபமாலை எண்டு சொல்லச் சொல்லி? என்று கோபத்துடன் அதட்டல் போட்டாள் அவள்.
*சும்மா விடு, புள்ளை பாவம் பச்சை மண்ணுகள். அது களுக்கு என்ன தெரியும்? என்று குழந்தைகளின் அறி யாமைக்காகப் பரிந்து பேசினன், செபமாலை.
உள்வீட்டுக் கதவைக் கடந்து வீட்டுக்கார அம்மாவே விருந்தைக்கு வந்தாள். அதாரு?.சேமாஃலயே?-ராசம்மா ளின் முகம் இப்பொழுது தெளிவாகத் தெரிகின்றது: “என்ன சேமாஃல ரெண்டு மூண்டு நாளாய் இந்தப் பக்கமே உன்ரை தலைக் கறுப்பைக் காணன்?
இந்த விசாரணைகள் செபமாலையைப் பொறுத்தவரை அதிசயமானவையல்ல. பட்டினத்தின் பதினுலாம் வட்டாரப் பகுதியில் அறுபது வீடுகளின் அன்றன்ருடச் சுகாதாரமும், ஒவ்வொரு வீட்டுக் கக்கூஸ்களின் சுத்திகரிப்பும் அவன் கைவசம் ஒப்படைத்திருந்தது, யாழ்ப்பாணம் மாநகரசபை நகரசுத்தித் தொழிலாளி என்ற பெயரில் இயங்கிவரும் அவ னது தினசரி வேலை. காலை பத்து மணிக்குள் முடிவடைந்து விடும். ஆகக் கடைசிக் கக்கூசுகளும் இந்த விக்டோரியா வீதியிலுள்ள ஏழெட்டு வீட்டுக்குரியவைதான். தொழில் முடிந்த பின்னர் சற்றுச் சும்மா ஊரளப்பு. மூடித்தால் சில தொட்டாட்டு வேலைகள் செய்து கொடுப்பதில் எடுபிடி. இத சூறல் விக்டோரியா ரோட்டிலுள்ள நாலைந்து வீடுகளுக்குச் செபமாலை செல்லப்பிள்ளை; சம்பளமில்லாத வேலைக்காரன்.
கடைக்குப் போய் ஏதாவது சாமான் வாங்கவேண்டுமா? - *இந்தா, சேமாலை!” - மாடு அவிழ்த்துக் கட்டவேண்டுமா?- *இந்தா, சேமாஃல!” - மாட்டுக்கு வைக்கோல் போடவேண் டுமா? - இந்தா, சேமாஃல!? - மரத்தில் மாங்காய், தேங்காய் பறிக்கவேண்டுமா? - இந்தா, சேமாஃல!
இப்படியான மன உறவில் பழக்கப்பட்டிருந்த செபமாலை யைப்பற்றி ராசம்மாவே சில சமயங்களில் மனம் விட்டுப் பேசு வாள். ஏன், அந்தத் தெருவிலுள்ள நாலந்து வீடுகளிலும் இதே குரல்கள்தான் ஒலிக்கும்.

Page 46
86 unganas
இந்தா சேமாஃல; இந்தா சேமாக்ல; இந்தா சேம்ால்* என்ற இந்த இடைவிடாத அழைப்புகள் கட்டளைகள் - வேருெருவருக்கு அலுப்பை உண்டாக்கி மன எரிச்சலை ஏற் வடுத்தத்தான் செய்யும்.
ஆணுல் செபமாலையைப் பொறுத்தவரையில். இந்த ஏவல்களில் ஏதோ ஒர் உறவைக் கண்டான். அவர் கள் பணிக்கும் அலுவல்களைச் செய்து கொடுப்பதில் ஒருவித ஆத்ம திருப்தி கொண்டான். w . **இந்த வீட்டில் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க சேமாஃலயைத் தவிர ஆர் இருக்கினம்? அவன் ஒருத்தன்தான் இருக்கிருன்!?
-அவன்மீது அபார விசுவாசம் வைத்திருக்கும் அந்த வீட்டுக்கார அம்மா அடிக்கடி சொல்லும் வாசகம்தான் இது அதையொட்டிப் பார்க்கும்பொழுது இப்படியான விசாரிப்புகள் அவனைப் பொறுத்த வரைக்கும் அதியற்புதமான சங்கதியல்ல
rör
*லிவெழுதிப் போட்டனுனம்மா, வந்திது. நிண்டிட்டன். எனக்காக வேண்டித்தான் வேருள் வேலை செய்தானே?
*ஒமோம்; அவனை இங்கை ஆருக்குத் தெரியும்? வந்தா குக்கும்; நான் காணல்லை. அதுசரி எதுக்காக நீ வராமல் 669°.ll6of?ʼʼ
“என்ரை தங்கச்சியின்ரை மகளிட கலியாணமம்மா, நடத் தினன். அதாலேதான் வரல்லை.?
“என்னடாப்பா, இது? தங்கச்சியும் நீயும் ஒண்டு சேர்த் திட்டியளே? உன்னையும் உன்ரை மணிசியையும் ராவோடு ராவா வீட்டைவிட்டுத் துரத்தின அந்தச் சூர்ப்பனகியோடை அப்ப நீ ஒத்துப்போயிட்டாய்?
ஒருகண மெளனம். மனத்தைப் பின்னிப் பின்னிழுக்கும் நினைவுப் போக்கு. தனது சென்றகாலக் கசப்பான அநுபவங்களைப்பற்றிச் சிந்திப் பதுபோல, செபமாலை, சிறிதுநேரம் கண்களை அகல விரித்துப் பின்பு தலையை ஆட்டினன்.

கைவண்டி 8ፇላ
*நீரடிச்சு நீர் விலகுமாம்மா? என்ன இருந்தாலும் ஒரே குட லுக்குள்ளை கிடந்த சகோதரம். புருஷனும் இல்லை. கண்ணிலே தண்ணி வழிய வந்திது; ‘உன்ரை மருமோள்பாடு, உன்பாடு? ண்ைடுது; எல்லாக் காரியங்களையும் நீதான் முன்னிண்டு பாத்து, ஒருவழியா ஒப்பேத்தி வைக்கவேண்டும் எண்டு கேட்குது.பழைய கோவத்தைப் பாக்கலாமாம்மா? சரிதான், போடி தங்கச்சி எண்டு சொல்லிப்போட்டு, சால்வையை எடுத் துத் தலைப்பாவைக் கட்டினன்.ஒருவழியா, நல்ல சோக்கான கல்யாணத்தைச் செய்து முடிச்சுப் போட்டனம்மா?
அந்த விவாகம் நடந்ததில் மணமக்களைவிட அவனுக்குத் தான் அதிக அக்கரை போலும்!
ஆேரு மாப்பிளே? *எங்க சொந்த அண்ணன்ரை கூடப்பிறந்த அண்ண னின்ரை மகன்தான் மாப்பிள்ளை. பொடியன் படிச்சிருக்கான். கொழும்பிலை ஏதோ ஒரு கொம்பனியிலை வேலை.?
சொல்லும்போதே மனப் பூரிப்பில் மகிழ்ச்சி ரேகைகள் முகத்தில் இழை விடுகின்றன.
தடுக்க முடியாத ஆழ்ந்த பெருமூச்சு ராசம்மாளின் இதயத் தைப் பிச்சுப் பிடுங்கிக்கொண்டு வெளியேறுகின்றது.
*சேமாஃல; நீ குடுத்து வச்சனியப்பா!?? செபமாலை நிமிர்ந்து ராசம்மாளின் முகத்தை ஊடுருவிப் பார்த்தான்: “ஏனம்மா இப்படிச் சொல்லுறீங்க??
*உனக்கு ஒண்டுமே தெரியாதா? ரெண்டுநாளா எங்கட அண்ணர் முத்துத்தம்பியர் படுத்த படுக்கையாம் மூச்சுப் பேச்சே இல்லையாம்! படுக்கையிலை கரிக்கரியாய் வயித்தாலே போகிறதாம்.?
-அதைச் சொல்லும்போதே அவள் முகத்தில் சோகம் தாறுமாருகக் கோடி ழுத்துக்கொள்ளுகின்றது. உள்ளத்தில் பிரவகித்த வேதனை முட்டி மோதி வந்து, கடைவிழியில் முத்துச் சரமாகக் கோர்வை கட்டுகின்றது. ஆழ்ந்த சோகத் தினல் வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவரச் சிரமப்பட ராசம்மா பரிதாபமாகக் காட்சி தந்தாள்.

Page 47
8. a 17560d
இதய நெகிழ்ச்சியை அடக்கமாட்டாமல் செபமாலையைம் பார்க்கக்கூடாது என்ற நினைப்பில் திரும்பி நின்று சேலைத் தலைப்பினுல் கண்களை ஒற்றிய வண்ணம் தன்னைச் சுதாரித் துக்கொள்ளுகின்ருள் அவள்.
அதே வீதியில் மூன்று வீடுகளைத் தள்ளி இருக்கும் பென் ஞரம் பெரிய வீடுதான் ஒவசியர் முத்துத்தம்பியின் வீடு. முத்துத் தம்பியர் ராசம்மாவினுடைய உடன்பிறப்பு; அண்ணன். இரண்டு வீட்டுக்காரர்களின் கதைகளுமே - அவர்களது குடும்ப விருத்தாந்தங்கள் அத்தனையுமே - செபமாலைக்குத் தண்ணிர் பட்ட பாடம். அவர்களது பிறந்த ஊரில் - புன்கு லைக் கட்டுவனில் - சகோதரனுக்கும் சகோதரிக்கும் காணி எல்லைத் தகராறு. ஒரேயொரு பூவரச மரம் காணி எல்லைக்கு இப்பால் வந்துவிட்டதாகவும், வேலி அடைக்கும்போது கிடுகு எல்லையை மீறிக்கொண்டு நிற்பதாகவும் பரஸ்பரம் குற்றச் சாட்டு. கோட்டு வரைக்கும் போய் வழக்காடிப் பார்த்தாகி விட்டது. வழக்கு இன்னமும் முடிந்தபாடில்லை. அப்பீலுக்கு மேல் அப்பீலாகப் பணம் இரண்டு பக்கமும் செலவழிந்தது தான் கைகண்ட பலன். அதையொட்டி, இரண்டு வீட்டா ருமே சில ஆண்டுகளாக ஜென்மப் பகைவர்களாகக் காட்சி தந்தனர். அந்த வைராக்கியம் இன்று சகோதரப் பாசத்தை யும் கொன்று புதைத்துவிடக்கூடிய சூழ்நிலையில்தான் ராசம்மா கண்கலங்கி நிற்கின்ருள்.
ஒவசியர் முத்துத்தம்பி மரணப்படுக்கையிலாம்! *அம்மா, நான் சொல்லுறேனெண்டு குறையாய் நினைக்காதிருந்தா ஒண்டு சொல்லுறன்: நீங்க ஒண்டுக்குள்ளை ஒண்டு. மீன் கரஞ்சாலும் ஆணத்துக்கை தானேயம்மா? இது வெறும் கதியால் எல்லைச் சண்டை. இதை மனசிலே வைச்சு எத்தனை நாளைக்குச் சாதிக்கலாம்? இந்தா உங்கடை புள்னை இருக்கு வயசு வந்த புள்ளை. உங்கட அண்ணனுர்ரை மக னும் இருக்குது. நாளைக்கு வாழப்போறதுகள் அதுகள். இந்த எல்லைச் சண்டையாலை நாளைக்கு அதுகள் ரெண்டினுடைய வாழ்க்கையையும் நாசமாக்கப் போநீங்களம்மா? வெறும் கோவத்தை விடுங்க. நல்லா யோசிச்சுப் பாருங்க. ரெண்டு

கைவண்டி 99
பக்கத்தின்ரை நன்மைக்காக வேண்டியாவது இந்த நேரத்தில் போய்ப் பாருங்க..??
*நான் அதுக்குச் சொல்லல்ல சேமாஃல. புவனமும் மாமாக்கு இப்படியெண்டு கேட்டதில் இருந்து பள்ளிக்குப் போகமாட்டுதாம். ரெண்டுநாளா போய்ப் பாக்க அவளும் துடிக்கிறது எனக்குத் தெரியும். ஆளு, அங்கை இருக்கிருளே ஒரு மூளி அலங்காரி.??
மூளி அலங்காரி என்று வர்ணிக்கப்பட்ட தனபாக்கி யத்தை ஒரளவு புரிந்து வைத்திருக்கிருன் செபமாலை. பாவம் அந்தம்மா, ரொம்பச் சாது.
*சேமாஃல!, கடவுளாணை நம்பு கூடப்பிறந்த சகோதரங் களைப் பிரிச்சது நான்தான் எண்டு இந்த உலகம் நினைக்கிது. ஆணு, நீ நல்லா நம்பு; நானே இவரிட்டை நேரே எத்தனையோ நாள் சொல்லீட்டன். ஒரே தெருவில் இருந்துகொண்டு அது களின்ரை நன்மை தின்மைகளுக்கு நாமளும், எங்கடை நன்மை தின்மைகளுக்கு அதுகளும் வராட்டி நல்லா இருக் குமா? எண்டு நான் அவரோடை சண்டை புடிச்சிருக்கிறன். இது இந்த உலகத்துக்குத் தெரியுமா? நீயே சொல்லு சேமாஃல: அவரின் ரை புடிவாதத்திற்கு முன்னுல் ஒரு பொம்பிளை என்ன 6F6Frei?’
போனவாரம் ஏதோ பேச்சிலே இப்படிச் சொல்லி அழு தவள்தான் தனபாக்கியம். அந்தச் சாது தனபாக்கியம் இப் பொழுது இந்த ராசம்மாவிற்கு மூளி அலங்காரியாகக் காட்சி யளிக்கிருள்.
உலகத்தை, அதன் வக்கிரபோக்கின் விசித்திரத்தைத் தனக்குள்தானே எண்ணிப் பார்த்துக்கொண்டான்; சிரிப்பு வந்தது.
-அங்கை என்னடா என்ருல் அப்படி! இங்கை என்னட என்றல் இப்படி!
*என்ன சேமாஃல, நான் சொல்லுறன், பேசாமல் ஊமை யாட்டம் நிக்கிருய்?
*நான் என்னத்தையம்மா புதுசாய்ச் சொல்லுறது? வடி வாய் யோசிச்சுப் பாத்தால் எல்லாம் விளங்கும். உங்க அண்

Page 48
90 LJ Tgy604s
ணன்றை மகனுக்கும் இந்த வீட்டிலை ஒரு கண்ணும். அந்தத் தம்பியின்ரை முகத்தையும் ஒருதடவை நினைச்சுப் LITOU5 i åsஎல்லாம் சரியாய் போயிடும். என்ன இருந்தாலும் சகோதர 46ህዐ6ib6ቧbir?””
*சகோதரமெண்டா சொன்குய்? கோட்டில் வைச்சு நாலு சனங்களுக்கு மத்தியிலே அப்புக்காத்தைக் கொண்டு கிழியக் கிழியக் கேள்வி கேக்க வைச்சவனை ஒரு சகோதர மெண்டா நீயும் சொல்லுருய்?? ܗܝ
செபமாலைக்கு இந்த விவகாரம் தெரியாததல்ல. கோடென்று ஏறிவிட்டால் அவனவன் தன்தன் கட்சியைப் பார்ப்பானே தவிர-நியாயமாவது மண்ணுங்கட்டியாவது!
இந்த அனுபவ ஞானம் அவனது மனதில் நன்ருக வேரூன்றி இருந்தாலும், சகோதரங்கள் இப்படியான கவைக் குதவாத எல்லைச் சண்டையில் பிரிந்திருப்பதை அவனுல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவஜனப் பொறுத்தவரை அவ னது சகோதர உறவில் ஏற்பட்டிருந்த மாபெரும் உடைப்பு, பிளவு மேவிச் சமமாக எவ்வளவு காலம் காத்திருக்கச் செய்து விட்டது? W
சொந்த வாழ்க்கையில் படித்த படிப்பினைக்கு மீண்டும் வார்த்தை உருக் கொடுத்தான் செபமாகல. எநடந்து முடிஞ்சு போன கதையைக் கிண்டிக் கிளருதையுங்கோ. அவர் உங்கட அண்ணன். தானடாவிட்டாலும் தன் சதையாடும் எண்டு சும்மாவா சொல்லுகினம்?
“ஊஹ"ம் ஆடும், ஆடும்! அண்டைக்குக் கோட்டில் அண்ணன்ரை சதையாடவில்லையே? என்ரை சதையா ஆடும்? சரி, காலங்காத்தாலை தொழில் செய்ய வந்த உன்னை நிப்பாட்டி வைச்சுக் கதை சொல்லிக்கொண்டு நிக்கிறன். .போ போய், வேலயைப் பார்.?
*அப்ப நான் போயிட்டு வாறனம்மா,99
இடையிலுள்ள இரண்டு வீட்டுக் கக்கூஸ்க%ளயும் சுத்தம் செய்துவிட்டு வாளியைத் தூக்கிக்கொண்டு மூத்துத்தம்பியரி

கைவண்டி 9t
னுடைய வீட்டை நோக்கி நடந்தான் செபமால். வீட்டில் ஆள் அரவமே இல்லை. முத்துத்தம்பியரின் மகன் குமார லிங்கன் விருந்தையிலுள்ள கதிரையுடன் கதிரையாய்ச் சாய்ந்து கிடந்தான்.
கக்கூஸைச் சுத்தம் செய்துவிட்டு வந்துகொண்டிருந்த செபமாலையைக் குசினிப்பக்கமுள்ள சன்னலினூடாகக் கண்டு விட்டாள், தனபாக்கியம்.
அவனுலும் வீட்டு எசமானின் நிலையை நின்று விசாரிக்கா மல் போக முடியவில்லை. கையிலுள்ள பாரத்தை நிலத்தில் இறக்கி வைத்துவிட்டு, *ஐயாவுக்கு எப்படியம்மா இருக் குது? என்ருன்.
அேதையேன் கேட்கிருய் சேமாலை ஒரே ஓங்காளம் சத்தி அதோடை பிசத்தலே. ராசம்மா.ராசம்மா..? எண்ட குரல்தான். தங்கச்சியின்ரை ஞாபகம்தான். எனக்கென் னமோ ஒரே பயமாக இருக்கு”
*நீங்க ஒண்டு செய்யுங்கோவனம்மா. உங்க மச்சாள் தானே அவ? நீங்க அண்ணன் பெண்சாதி. இதிலே என்ன வெக்கம்? போய்க் கூட்டிக்கொண்டு வாருங்கோவன். ஒரு வேளை அவவைப் பார்த்தா சுகம் வரும்.என்ன யோசிக் கிறீங்க???
ேேயாசிக்க ஒண்டுமில்லை. இருந்தாலும் அந்தாளின்ரை உத்தரவில்லாமல் நாணிதைச் செய்ய மாட்டன் என்ரை மன சும் இதுக்கு ஒப்புக்கொள்ளாது-அதுதான் யோசிக்கிறன். . அந்தா கேள், அவரின்ரை குரலை?
*ரா சம்மா.ரா சம்மா 1.* என்ற ரனஸ்வரத்தில் ஒலிக்கும் குரல், விட்டு விட்டுக் கேட்கிறது.
663gor&oloo ெேனன்னம்மா? இேதுக்கு நான் என்ன செய்ய? விேத்தியாசமா நீங்க நினைக்காமல் இருந்தா, நானெண்டு சொல்லுறன்.செய்வீங்களா?

Page 49
S2 Ll'Arg/60)85
மரணப் படுக்கையில் உள்ள தனது கணவனின் இறுதி அபிலாஷை ஈடேறவேண்டுமே என்ற மனத் தவிப்புடன், செபமாலே என்னத்தைச் சொல்லப்போகிறனே என்ற நெஞ் சப் பதைபதைப்புடன் தனபாக்கியம் அவனை ஆவல் ததும்பும் விழிகளால் பார்த்தாள்.
*ஒருத்தருக்கும் இதாலே கரைச்சல் இல்லே. உங்களுக்கும் கஸ்டம் வராது. உங்கட மகனை அனுப்பி மாமியைக் கூட்டிக் கொண்டு வரச்சொல்லுங்களே?
இந்த அற்புதமான யோசனை இதுவரைக்கும் தன் மூன் யில் தட்டுப்படவில்லையே என்ற எண்ணத்துடன், குமார லிங்கம்! தம்பி, குமாரலிங்கம்..!!?? என்று குரல் கொடுத்துக் கொண்டு மறைந்துவிட்டாள் தனபாக்கியம். உள்ளே தாய்க் கும் மகனுக்கும் நடந்த சம்பாஷணையின் குரல் கேட்கிறது. இன்னும் இரண்டே இரண்டு வீடுகள்தான் பாக்கி. இரண்டு வீட்டுக் கக்கூஸ்களையும் சுத்தம் செய்து முடித்துவிட்டு, வாளியைக் கையில் ஏந்தி வந்த செபமாலை, வண்டிக்குள் வாளிகளைச் சரியாக அடுக்கி, மூடியைச் சிக்கா ராக மூடிவிட்டு இடதுகாலத் தரையில் ஊன்றி வலதுகாலுக்கு வலுவை ஏற்றி, ஒரு உந்து உந்தி, வண்டிச் சில்லே வெட்டித் திரும்புவதற்காகக் கழுத்தைச் சற்றுத் திருப்பினன்.
குமாரலிங்கன் முன்னுல் வர, ராசம்மா சேலைத் தலைப்பை எடுத்து முதுகைப் போர்த்தபடி எட்டி நடைபோட, புவனேஸ் வரி அம்மாவின் அடியையே பின்பற்றி மெதுவாக நடந்து வந்து முத்துத்தம்பியரின் வீட்டுப் படகிலக்குள்ளே நுழை வதைக் கண்டான்.
வெட்டித் திரும்பிய வண்டிச் சில்லு, தார் ரோட்டில் கட கடவென்ற சத்தத்துடன் உருண்டோடுகிறது.
அவனது மனதில் ஒருவித அமைதி.சாவுடன் போராடிக் கொண்டிருந்த முத்துத்தம்பியர், சகோதரி ராசம்மாவோடு மனம் திறந்து உரையாடுவது மனக்கண்ணில் தெளிவாகத் தெரிகிறது.
1932 -ܚ

சவாரி
விடிந்தால் துடக்குக் கழிவு
வீட்டில் ஐந்தாங்கால் பெண்குழந்தை பிறந்து முப்பது நாட்களாகி விட்டன. பிள்ளை பிறந்த துடக்கைக் கழுவி, மேழுகிப் போக்கும் முப்பத்தோராம் நாள், நாளைக்கு விடி கிறது.
குந்தினுேரம், அடுத்த நாள் தேவைக்காக எடுத்து வைக் கப்பட்ட சாணத்தின் நெடி, சரவண முத்தரின் மூக்கைத் துளைத்தது. ஒட்டுத்திண்ணைக் குந்தில் சாய்ந்து படுத்தவண் ணம், மன உளைச்சலினுல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார் அவர். இமைகள் ஒன்றுடன் ஒன்று உறவாட மறுத்தன. துரக்கம் வரவில்ல; மாருகக் கண்கள் எரிந்தன. மனப் பாரம் நெஞ்சைப் பிதுக்க, பெருமூச்செறிந்தார். மனப்போராட்டத் தின் உள்ளக் குமைச்சல், புழுக்கத்தில் திக்குமுக்காடும் அவஸ்தை. தென்னுேலைக் கீற்றுகளை ஆட்டிப் பிளந்து கொண்டு வரும் தென்றல் வீசும் முற்றத்திற்கு வந்தார், சரவணமுத்தர்.
வண்டிச் சில்லைப் போன்று வாழ்க்கைப் பாதையின் மேடு பள்ளங்களில் விழுந்தெழும்பி, இந்த நடைமுறை உலகத்தின் ஏற்ற இறக்கங்களை வெகுவாகப் புரிந்துகொண்டவர் அவர். எந்தப் பக்கமும் பாரத்தால் சரிந்து விழும் நோஞ்சான் மனம் படைத்தவரல்ல.
-ஏன் இப்படி இருக்கு?
அவர் நினைவு ஒரே சம்பவத்தைச் சுற்றிச் சுழன்றது. அதனை வேறு திசையில் திருப்ப அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் பயனற்றவையாயின. சுவர் இடுக்கின் இரண்டு பகுதிகளையும் இணைத்துக் கூடுகட்ட முனைந்து, நூல் தள்ளிக் குதிக்கும் சிலந்தியின் முயற்சியுடன், இறந்தகாலம், வருங்காலம் ஆகியவற்றிற்கிடையில், விடிவதற்குள்ளே தீர்வு கட்டிவிடும் பிரயத்தனமா?
6

Page 50
94. பாதுகை
சேணியன் புடிச்ச பெட்டை மூதேவியாட்டம் எனக் கெண்டு புறந்திருக்கு அதனின்ரை சாதகப் பலன் இப்பிடியா குறுக்கால தெறிச்சுக் கிடக்கவேனும்?.ஒருவேளை.என்ன ஒருவேளை? சாத்திரியார் சும்மா ஆளே? சொன்னது நடக்கும். பொடியங்கள் நாலுக்கும் சாதகம் குறிச்சுத் தந்தது, ஒண் டெண்டாலும் பிசகியிருக்கே?. அப்பிடியெண்டால் இது?. .பேசாமல் ஏதாகிலும் சாட்டுக்கீட்டுச் சொல்லிப்போட்டு, சவாரிக்குப் போகாமல் இருப்பமே?.சே! அப்பிடியெண்டால் ஊரிலே நாலு பேர் என்னையும் ஒரு மனிசனெண்டு மதிப் பினமே? சவாரிச் சரவணை எண்ட மதிப்புக் காற்றிலேயல்லே பறக்கும்? சுருளிச் சுந்தரத்தான் நாளைக்குத் தலையை உசத்திக் கொண்டு ரோட்டிலே நடக்க..??
சிந்தனை மந்தித்த நிலையில் செவ்விளநீர்த் தென்னைமரத் தடியில் குந்தினர்.
அச்சுவேலிச் சந்தையில் சுருளி சுந்தரத்தைத் திடுகூருகத் தான் சந்தித்தார், சரவணை. பேச்சு வெகு சாதாரணமாகச் சவாரி மாடுகளைப் பற்றிப் பலதும் பத்துமாகத் தொடங்கி, பாஞ் சான் செல்லையனின் குறுக்கீட்டால் திசைமாறித் திரும்பியது. பேச்சும் சூடு கண்டது. ‘வாற மாசம் நீர் வேலி உப்புத்தரவை மைதானத்தில் நடக்கப்போற வண்டிச் சவாரியிலை என்னை வெண்டிடுவியோ?? என்று சுருளி ஆக்ரோஷமாகக் கேட் டான். مي
சரவண முத்தருக்கு மூக்கு நுனிமேல் கோபம் வந்தது. *ஏண்டா சுருளி, விசர்ப் பேச்சு? நீர்வேலிச் சவாரியிலே நான் வெண்டிட்டால் உன்ரை மாடுகளே எனக்குத் தந்திடு; நீ வெண்டால் என்ரை சந்தனக் கழுகன் சோடியை உனக்குத் தந்திடுறன். என்ன-பந்தயம் சரிதானே??? என்று சவால் விட்டுக் கத்திகுர்.
பந்தயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பந்தயத்திற்குப் பாஞ் சான் செல்லேயனும், அடிசக்கைச் சிவகுருவும் சாட்சிகளாக அமர்த்தப்பட்டனர்.
சரவண முத்தர் சமான்யமானவரல்ல. சவாரித் தம்பருக்கு, அடுத்தபடியாக யாழ்ப்பாணக் குடா நாடெங்கும் சவாரிச்

F6 it if 95
சரவனே என்று பட்டப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தவர். *நேற்றுப் பிறந்த குழந்தைக்குக் கூட சவாரிச் சரவணையின்ரை பேர் தெரியுமாக்கும்? என்று கூறிப் பெருமைப்பட்டுக்கொள் ளும் அச்சுவேலிக் கிராமத்தில், அவரைச் சவாரி விஷயத்தில் தட்டிக் கேட்க, நேற்றுத்தான் வண்டி ஆசனத் தட்டில் ஏறிக் குந்திய இந்தச் சுருளிக்கு எத்தனை முழ நெஞ்சு?
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், வீடு திரும்பும்பொழுது, அவருடைய மனைவிக்கு நோக்காடு கண்டுவிட்டது. ஆச்சிக் கிழவி மருத்துவச்சியுடன் சேர்ந்து, வீட்டைப் புரட்டியடித்துக் கொண்டிருந்தாள். *சரவணை! இதுகும் ஆம்புளைப் புள்ளை யாகத்தான் இருக்கும். எதுக்கும், கூரை தட்ட உலக்கை யோடை தயாரா நில்? என்று சொன்னுள், ஆச்சிக் கிழவி. அவர் உலக்கையுடன் காத்துக்கொண்டு நின்றர். சற்றுநேரத் தில் °குவாக்.குவாக்..” என்று குரல் ஒலித்தது. உலக் கைக்கு வேலையில்லாமல் போய்விட்டது. ஆசை அருமைக் காகவாகிலும் ஒரு பொம்புளைப்பிள்ளை வேணும்? என்று அவர் நேராத கோயிலெல்லாம் நேர்ந்து வைத்த நேர்த்திக் கடன் வீண் போகவில்லை. ஐஞ்சாங்கால் பெண்பிள்ளே கெஞ்சி ஞலும் கிடையாது” என்று சொல்லுவார்கள். அவள் அவருக்கு ஐந்தாங்கால் பெண்ணுகப் பிறந்தாள். சரவண முத்தருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லே! சுருளியை வென்று அன் றைக்கே ஜெயபேரிகை கொட்டிவிட்டதாக எக்களித்தார்.
ஆணுல் அதற்கிடையில் ஏன் அவர் மனம் குன்றிப்போக வேண்டும்? அவருடைய மன உளைச்சல்களுக்கெல்லாம் காரண மென்ன?
-*சாத்திரியார் சொன்ன அந்தக் கண்டம்? சாத்திரியார் சித்திவிநாயகரைத் தன் மனக்கண் முன்னுல் கொண்டு வந்தார், சரவணை. முதல் நான்கு பையன்களுக்கும் பிறந்த நாள், மணி, நிமிஷம் ஒன்றும் விடாமல் குறித்து . வைத்து, சாத்திரியார் சித்திவிநாயகரிடமே சாதகக் குறிப்புக் களும் எழுதி வைத்திருந்தார். சித்திவிநாயகர் சாதாரண சாத்திரியாரல்ல; யாழ்ப்பாணக் குடா நாடெங்குமே அவ ருடைய சாத்திரத்திற்கு வெகுவெகு மதிப்பு. கடந்தகால

Page 51
96 tugT g5 689)a5
மாஜித் தமிழ்மந்திரிகளில் சிலர், அவரிடம் கைகாட்டி, சாத் திரம் கேட்க, கைகட்டிக் காத்து நின்றர்கள் என்ற சங்கதி மட்டுமே சித்திவிநாயகருடைய பெருமையைப் பறைசாற்றப் போதாதா? அவருடைய பரம்பரைக்கே அநுமார் வாலயம் என்று கேள்வி. இதுவரை காலமும் சாத்திரியாருடைய எந்த வாக்கும் ஒரு அட்சரம்கூடப் பிசகாமல் பலித்திருக்கிறது என் பது சரவண முத்தரின் அநுபவம்.
அவரிடம் மகளுடைய பிறந்தவேளையைக் கொடுத்து, காது குளிரும் சங்கதிகள் கேட்கத்தான் சரவணை விரைந்தார். கொடுக்கப்பட்ட நாள், மணி, நிமிஷ விபரங்களை உற்றுக் கவனித்த பின்னர், சாத்திரியார், விரல்களை மடக்கி, ஏதோ கணக்குப் பார்த்தார். ஒரு பென்சிலால் வெள்ளைக் கடதாசி யில் கோடுகள் போட்டுக் குறிப்புக்கள் எழுதினர். தான் போட்ட கோடுகளையும், குறிகளையும் சற்றுநேரம் இமைகொட் டாது பார்த்தவர், உதடுகளைப் பிதுக்கினுர். கண்ணுடியைக் கண்களை விட்டு உயர்த்தி, நெற்றி வரம்பில் தங்கிநிற்க விட்டு விட்டுச் சட்டென்று திரும்பிச் சரவண முத்தரை உற்றுப் பார்த்தார். அவருடைய உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. சரவன சிலையாக அமர்ந்து, சாத்திரியாரையே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தார். சற்று நேரத்திற்குப் பின் சித்திவிநாயகம் தொண்டையைச் செருமிக் கனைத்த வண் ணம், “சரவணமுத்து!?? என்ருர். பிரத்தியட்சமாகத் தோன் றிய தெய்வத்தின் முன்னிலையில் நிற்கும் பக்தனப்போல, சரவண முத்தர், வாய் செத்தவராகத் தோன்றினுர்.
*நான் சொல்லவந்ததைச் சொல்லுறன். பேந்து எதுக் கும் ஒளிப்பு மறைப்பாகச் சொல்லிப்போட்டன் என்ற குறை வரக்கூடாது பார்..? என்ருர், சொல்லிவிட்டுத் தான் சொன்ன வார்த்தைகள் சரவணையின் முகத்தில் எந்தவித மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் கவனித்தும் கவனிக்காதது போலப் பாவனை பண்ணிக்கொண்டு, கடதாசியையே திரும்பத் திரும்ப அக்கரையுடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
*எதெண்டாலும் மனந் திறந்து சொல்லுங்க, சாத்திரி யார். இதென்ன, நீங்களா எடுத்துவைச்சுச் சொல்லப் போறி

97
யள்? பொடிச்சியின்ரை சாதகமெல்லோ பேசுது?? என்று சரவணமுத்தர் முடுக்கிவிட்டார். சாத்திரியாரின் படிமானப் பேச்சு ஒருவகைப் பீதியை மனதில் ஏற்படுத்த, அதன் உந்துத லில் அதை உடனடியாக அறிந்துவிடவேண்டுமென்ற மனத் துடிப்பில், எதையும் தாங்கும் வல்லவகுன ஒரு போலித் தைரி யத்துடன் தன் மனத்தைத் தயார்ப்படுத்திஞர்.
66. என்னத்தைச் சொல்ல? பொடிச்சிக்கு முப்பத் தோராம் நாள் மட்டுக்கும் குறிப்பெழுத முடியாது.பெரிய கண்டம்?-எவ்வித உணர்ச்சிபாவத்தையுமே முகத்தில் காட் டாமல் ஞானியைப்போல, சர்வ சாதாரணமாகச் சொன்னர் சாத்திரியார்.
மண்டை பிளந்து.மனம் கலங்கி...நிலை தடுமாறி. சாத்திரியார் தொடர்ந்தார்: **இல்லாட்டி.இந்தக் கண் டம் தப்பினுல்.”
*இல்லாட்டி?...இந்தக் கண்டம் தப்பினுல் என்ன நடக் கும் சாத்திரியார்?-பதட்டமும் பரபரப்பும் மண்டிய குரலில் கேள்வி பிறந்தது.
மெளனம். *.என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, சொல் லுங்கோ..?
*சின்னச் சீவன் தப்பினுல் தகப்பனுக்குக் கூடாது. கண் டம் தகப்பனுக்குத்தான் பேசும்’ என்று நிதானமாகவும் ஆறுதலாகவும் பேசிஞர்.
விடிஞ்சால் முப்பத்தொண்டு; துடக்குக் கழிவு. சின்ன னுக்குக் கண்டம் தப்பினல் என்மேலை கண்டம் படியும். . அந்தக் கண்டத்துக்குத்தான் கோதாரிலே போன சவாரி காத்துக் கிடக்கே?
சவாரி விபத்துகள் அவரது மனக்கண் முன்னுல் நர்த்தன a rig-60T.
கோட்டை முனியப்பர் பார்த்திருக்க, சவாரி ஓட்டத்தில் தவறி விழுந்து, வண்டில் சில்லுக்குள் அகப்பட்டு நெரிஞ்சு செத்த சண்டியன் சங்கரப் பிள்ளையின் உருவமும், போன வரு ஷம் அளவெட்டியில் வண்டியிலிருந்து தூக்கியெறியப்பட்டு

Page 52
98 பாதுகை
விலா எலும்பு முறிஞ்சு ஆஸ்பத்திரியில் ஒரு கிழமையாகக் கிடந்து செத்த சித்தங்கேணிச் சிதம்பரியின் உருவமும், நாளைக்கு நீயா சரவணை எங்களோடை சேரப்போருய்? என்று கேட்பதான மனப் பிராந்தி.
சவாரிக்குப் போகாட்டால் என்ன? சந்தனக் கழுகன் சோடியைச் சுருளிக்குக் குடுக்கவேணும்.அதைக் குடுத்திட லாம்.மானம்...? சவாரிச் சரவணை வண்டிச் சவாரிக்கு வந்து தலையைக் காட்டாமலே தோத்துப்போயிட்டாணும் எண்ட அவமானத்தை எந்தக் குளத்திலைக் கொண்டுபோய் எறியிறது?
சிந்தனையில் கிளைத்த இன்னுமொரு சிந்தனை. *எல்லாம் இந்தச் சனியனுலைதானே வந்தது? இது புறந் துது; எல்லாம் போச்சுது! அப்பனைப் புரட்டவா இது இன்ன மும் உயிரோடை கிடக்கிது? என்ற சுயநலத்தில் வேரூன்றிய நினைவு.
குந்தியிருந்த அடிமரத்திலிருந்து எழுந்து, சார்ப்புக் கொட்டிலுக்குப் போனர். அதன் ஒ&லப் படலை இலேசாகத் திறந்து கிடந்தது. விடிவிளக்கின் சுடர், ஆடாமல் அசையா மல் நேராக எரிந்துகொண்டிருந்தது. அதன் ஒளியில் குழந்தை - அந்தப் பச்சை மண் - தூங்கிக்கொண்டிருந்தது. அதை அணைத்தும் அணைக்காமலும் அழகுப் பெண்ணைப் பெற் றெடுத்த - பூரிப்புக் கலந்த - மனநிறைவுடன் அன்னப்பிள்ளை உறங்கிக் கிடக்கிருள். ஆச்சிக் கிழவியும் மூலையில் சுருண்டு கண்ணயர்ந்துவிட்டாள். மண் சுங்கான் தலைமாட்டில் ஓய்வு பெற்றுக் கிடந்தது.
அறைக்குள் நுழைந்தார். *இந்தச் சனியன்ரை கழுத்தைப் புடிச்சு நெரிச்சு இதைச் சாக்காட்டிப் போட்டால்?..?
அவருடைய எண்ணத்தில் குறுக்கிடும் சிதர்களே ஞானத் தில் அறிந்ததுபோலக் குழந்தை வீரிட்டு அலறியது.
கோழித்தூக்கத்தில் சுகம் அனுபவித்த அன்னப்பிள்ளே விழித்துக்கொண்டாள். குழந்தையை அணைத்துக்கொண்டே, கேள்விக் கணை தொடுக்க அவரைப் பார்த்தாள்.

சவாரி 99
*என்ன மாடு மாதிரி நித்திரை கொள்ளிருய்? கள்ளப் பொட்டை அயலை எழுப்பினுள்..ம்! எழும்பிப் பாலேக் குடுத் துட்டுப் படன்.?
**இப்பவே மகளிலை உருக்கந்தான். ஐஞ்சாங்கால் பொடிச்சியெண்டால் அப்பனுக்குத்தானே கரிசினை??
உளைச்சலெடுத்த மனதில் அவரையறியாமலே ஒரு
பூரிப்பு
விடிந்தால் துடக்குக் கழிவு; பின்னேரம் சவாரி.
நீர் வேலி உப்புத்தரவை மைதானம். சுற்றிலும் மனிதத் தலைக்காடு. அந்தச் சென்னிகளில் ஆவல் பிதுங்கும் விழிகள்.
மைதானத்தில் சவாரிப் புலிகள் கூடிவிட்டனர். வாட்டசாட்டமான உருவம்; நெஞ்சிலிருந்து துருத்தியாட் டம் வீங்கிக் கிடக்கும் தொப்பை அடர்த்தியான ஆட்டுக் கடாக் கொம்பு மீசை நெற்றிமேட்டில் இலேசான வழுக்கை யடித்து, கீழே போர்ட்டிக்கோ? பாணியில் பாகவதர் கிராப் கேசம் சுற்றிக் கட்டிய ஜப்பான் பீஸ் புருமார்க் வேட்டியை இடுப்பில் சற்று சுருட்டிச் சொருகி, அதனை மறைக்கும் வாக் கிலே சால்வை சுற்றப்பட்டிருக்கின்றது. தானே தன் கையால் தாவடிப் புகையிலையிலிருந்து சுருட்டியெடுத்த *சுத்தைப் பற்ற வைத்துக்கொண்டு, இடது கக்கத்திற்குள் துவரங் கம் பொன்றை இடுக்கிப் பிடித்த வண்ணம் கம்பீரமாக ராஜநடை போட்டு வருகின்ருர் ஒருவர். அவர்தான் சவாரித் தம்பர். பல சவாரிகளேப் பார்த்துத் தெளிந்த அநுபவ முதிர்ச்சி அவரது பார்வையிலே மிளிர்கின்றது. வண்டிச் சவாரி உலகின் தார் மீகத் தலைவராக வரிக்கப்பட்டு, தமிழ்மக்களின் நெஞ்சங்களில் இடம் பெற்றுப் பலகாலம்.
*என்ன தம்பண்ணை, வெள்ளணத்தோடை வந்திட் டியள்? என்ற குரல் அவருக்குப் பின்னல் கேட்டது. தம்பர் திரும்பிப் பார்த்தார். சுருட்டி மடக்கி, வாழைநாரினல் வரிந்து கட்டப்பட்டிருந்த குடையைக் கக்கத்திற்குள் வைத் துக்கொண்டு, நெட்டை ஒல்லி உடம்பை உரித்துக் காட்டும்

Page 53
OO Lur oxigenés
வகையில், முழங்கால்களுக்குமேல் வேட்டியைச் சேண்டியன்” கட்டாக மடித்துக் கட்டி, திவ்யமாகக் காட்சிதந்தார், சின்னக்குட்டி, குடையைத் தொடையுடன் சார்த்தி வைத்து விட்டு, ஒரு புளியம்பழப் பரிமாணத்தில் உள்ள உச்சிக்குடுமி யைத் தட்டி முடிந்துகொண்டு, ஒரு சிட்டிகை மூக்குப்பொடி போட்டு, மூக்கை இழுத்துச் சரி செய்துகொண்டவராக, சேவாரியைத் துவங்கப் போகினம்போலை? என்ருர்.
'ஒமோம், கானும். அளவெட்டிச் செங்காரி, சுதுமல் மாவெள்ளையன், கட்டப்பிராய் சுவலையன் சோடி, கைதடிச் சுட்டியன்கள், உணுவில் கொடிச்சிவாலன், ஊரெழுக் கிடாய்க் கொம்பன், சரவணையின்ரை சந்தனக்கழுகன்கள், சுருளியின்ரை கடல் அலைச் சோடியன் எல்லாமே வந்திட்டுது கள்? என்று சவாரித் தம்பர் சவாரி மாடுகளின் பட்டியல் அடுக்கினர்.
அப்பொழுதுதான் அடிசக்கைச் சிவகுரு, மைகுச் செல்லையா, குழறி ஆறுமுகம், புளுகன் சின்னத்தம்பி சகிதமாக அவ்விடம் வந்து சேர்ந்தான்.
66அடிசக்கை தம்பரண்ணை, சின்னக்குட்டியையும் கூட்டிக்கொண்டு வந்து சேந்திட்டியள். அங்கை பாஞ்சான் செல்லயனும் காத்துக்கொண்டிருக்கிருன். இண்டைக்கு ஆர் வெல்லப்போகினமோ? வலுவான போட்டிதான். அடிசக்கை .சுருளி விடமாட்டான்போலை கிடக்கு” என்று அடிசக்கைச் சிவகுரு அழைக்க, தம்பரும் சின்னக்குட்டியும் மாடுகள் வரிசையாக நின்ற பக்கம் எட்டி நடைபோட்டனர்.
சரவணமுத்தர் நாணயக் கயிற்றைச் சுண்டிப் பிடித்த வண்ணம் வண்டியின் ஆசனத் தட்டில் உறுதியுடன் உட் கார்ந்திருந்தார். ‘என்ரை ஐஞ்சாங்கால் பொடிச்சிக்கு, அப்பன் சவாரிக் களத்திலே வீர மரணம் அடைஞ்சான்? என்ற பெயரையாவது சம்பாதித்துக் கொடுக்கவேண்டுமென்ற உத் வேகம் அவரது முகத்தில் சுடர் விட்டது. பின்னல் ஒருவன் அவருடைய இடுப்பைப் பிடித்தவண்ணம் இருந்தான். குத்துக் கட்டை கழற்றப்பட்டு வண்டிக்குள் போடப்பட்டது. கையில் இரண்டு நீண்ட துவரங் கம்புகள் சகிதமாக.

சவாரி 101
சுருளி பக்கம் வெகு தடயுடல். அவன் வளர்ந்துவரும் புள்ளி. இளவட்டங்கள் கூட்டத்திற்குக் குறைச்சலில் லை வெற்றியின் தன்னம்பிக்கை முகமெல்லாம் வியாபித்திருந்தது. அடிக்கொரு தடவை சரவணையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக்கொண்டான்.
மற்றைய வண்டிகளும் மாடுகளும் சவாரிக்கு ஆயத்தமாக நிற்கின்றன.
மாடுகளையும் சாரதிகளையும் பார்த்த தம்பர், பிளேன்ன சரவணையின்ரை முகம் இருண்டுபோய்க் கிடக்கு? சுருளி யின்ரை மாடுகள் துள்ளிக்கொண்டு நிக்குது? என்று சின்னக் குட்டியின் காதிற்குள், தான் அநுமானிக்கும் வெற்றியைச் குசகமாகச் சொல்லி வைத்தார்.
பந்தயத்தைக் கண்காணிப்பவரான சவாரித் தம்பர், இடுப் புச் சால்வையை அவிழ்த்தார். முன்பின்னுக எல்லா வண்டி களையும் பார்த்துவிட்டு, சால்வையைக் கையிலெடுத்து, சட் டென்று உயர்த்தி வீசிக் காட்டினுர்.
மாடுகள் ஓடத் தொடங்கின. துவரங் கம்புகள் காற்றில் நாதம் பேசின. பேட்.பட்.சட்.சர்.க்சு.த்சு.ஹொய். ஹோய்.” என்ற ஒலிகளை விழுங்கியது, ரளிக மகா ஜனங் களின் ஓங்கார ஆரவாரம்.
மாடுகள் எல்லாம் வேறு?கத் தொடங்கிவிட்டன. எந்த வண்டி முன்னுல் போகிறது, எந்த மாடுகள் முன் ஞல் ஓடுகின்றன என்பதை நிதானிக்க இயலாது புழுதி மண் டலம் எழும்பி விட்டது.
புழுதியடங்கி, மாடுகள் சவாரியை முடித்தன. *என்ன இருந்தாலும் சவாரிச் சரவணமுத்தனெல்லோ இந்த வாட்டியும் வெண்டிட்டான்? என்ற வார்த்தைகளே எல்லோர் உதடுகளிலும் புரண்டன.
பாஞ்சான் செல்லயனும் அடிசக்கைச் சிவகுருவும் சாட்சி களாக நிற்க, சுருளி சுந்தரத்தினுடைய கடல்அலை சோடியை அவிழ்த்து சவாரியில் வெற்றியீட்டிய சரவணமுத்தரின் கைகளில் ஒப்புவித்தார், சவாரித் தம்பர்.

Page 54
102 பாதுகை
அந்தக் கணம் சுருளியின் முகம் வேருேர், திசையில் திரும்பியது. −
அங்கே சாத்திரியார் சித்திவிநாயகம் கண்ணுடி, சந் தனப் பொட்டு சகிதம்நின்றவர், முகத்தைத் திருப்பிக்கொண் டார். . . "
சோத்திரியார், உம்மை நம்பித்தானே இருந்தன்? நீரும் கைவிட்டிட்டீரே.” என்று சுருளி குமுறுவதை, சரவணமுத்தர், கவனிக்கவில்லை. . ܗܝ
துடக்குக் கழிவன்றே ஐந்தாங்கால் பெண் தனக்கு அதிஷ்டத்தையே கொண்டுவந்த பெருமிதத்தில் சூழலையே? ஒருகணம் மறந்திருந்தார், சரவணமுத்தர்.
- 1959

வாய்க்கரிசி
**ஆம்பிளேயள் சுடஆலயிலே வாய்க்கரிசி போடலாம். இப்ப நடக்க வேண்டியதைப் பாப்பம்? என்று சொல்லிக்கொண்டே, தலைப்பாகையைக் கழற்றி, தோளிற் சால்வையாக அதைப் போட்டுக்கொண்டு, மூடியை எடுத்துச் சவப்பெட்டியை மூட முனைகிருர், சவத்தின் தம்பி. М
சுற்றி நின்ற சிலர் கைகொடுத்து உதவ முன்வருகிறர்கள்.
பிலாக்கணத் தொனி காதைத் தொளைக்கின்றது.
பெட்டி, பாடைகட்டிப் பெரியதம்பியின் கைவண்ணம் முழுவதையும் உறுஞ்சித் திகழ்ந்த தண்டிகைப் பாடைக்குள் ஏற்றப்படுகின்றது.
நெருங்கிய உரிமைக்காரர் நால்வர் பாடையின் நாலு கொம்புகளுக்கும் தோள் கொடுக்கிறர்கள்.
ஒப்பாரி வைக்கும் பெண்களின் கூப்பாட்டில் சுருதி மிகுந்த கட்டம்.
*சாத்தாப் பெருங்கதவை - நீர் சாத்திவிட்டுப் போனிரோ.ஒ.ஒ. பூட்டாப் பெருங்கதவை - நீர் பூட்டிவைத்துப் போனிரோ.ஒ.ஓ..! வீடும் வெளியாச்சே - எங்கட வீட்டு முற்றம் பாழாச்சே.ஓ.ஓ..!"
என்று பலகாலம் மனைவியாக வாழ்ந்தவளான மங்கையர்க் கரசி ஊர் மெச்ச, உலகம் மெச்ச, ஒப்பு வைத்து மாரடிக்கிருள்; கண்ணிர் உகுக்கிருள். அதனை ஒதுக்கித் தள்ளிக்கொண்டு கீச்சிடுகிறது, மருமகளின் பிலாக்கணம்.
கடுகு பயிரா ச்சே என்ரை அம்மான் செல்லரணை - நான் காத்திருந்தேன் வீணுச்சே.ஏ.ஏ.!

Page 55
104 W LJTg.60)45
மிளகு பயிராச்சே என்ரை அம்மான் செல்லரணை - நானுமக்கு முழிப்பிருந்தேன் வீணுச்சே.ஏ.ஏ.!?
பறை, வீதியில் இறங்கிவிட்டது. கிடுகு வேலியை வெட்டிப் பிரித்திருந்த இறுதி வழியி னுாடே, தண்டிகைப் பாடை வீதியில் இறங்குகின்றது.
அதற்குமுன் மூத்த மகன் - தில்லைநாதன் - கிருத்தியக் கோலத்துடன், பூனூல் மார்பில் துலங்க, இடுப்பில் புதுத் துண்டு புனைந்து, கொள்ளிக் குடத்தைத் தோளில் சுமக்கிருன். இளையவன் அவனுக்குப் பின்னுல்.
வீட்டையடுத்துள்ள நாற்சந்தி. சுடலையில் வாங்கப்போகும் பணத்திற்குத் திருப்தியாக வேலே செய்யும் நோக்க வேகத்தில் முழக்கப்படும் பறையொலி. கடதாசிக் குழாய்க்குள் அடங்கிக் கிடக்கும் மருந்தும் பெரு மூச்சை இடைவெளி வயிறு பிளந்ததால் வெடியாக ஒலி கிளப் பும் பட்டாசு வெடிகள்.
நெல்லுப் பொரியும் சில்லரை நாணயங்களும் கலந்த கலவையை நாவிதன் பிடிபிடியாக அள்ளியள்ளிப் பாடைமீது எறிகிறன். பறையடிப்போருடன் சேர்ந்து வந்த வெற்றில் சுருட்டுச் சுமக்கும் பொடியன், கண்ணில் படும் காசுகளைக் குனிந்து குனிந்து பொறுக்கிச் சேர்க்கிறன்.
*தந்தையார், தாயார், உடன்பிறந்தார், சுற்றத்தார்.” --தேவாரம் தொடருகிறது. அது வாழ்க்கைச் சிக்கலின் முடிச்சுக்களை அவிழ்த்து, வாழ்க்கையின் அநித்தியத் தன்மையை அக்குவேறு ஆணி வேருகப் பெயர்த்தெடுத்துக் காட்டுகிறது.
பிரேத மார்வலம் ஆஸ்பத்திரிச் சந்தியில் திரும்புகிறது. பேரமைதி. இனி, பஸ் நிலையத்தைத் தாண்டினுல்தான் பறையடிக்கவோ, பட்டாசு சுடவோ, தேவாரம் பாடவோ முடியும்.
சிலர் தலையைக் கவிழ்த்து, சுடலைஞான மெய்ஞான சம் வாதத்தில் ஈடுபட்டிருக்கிறர்கள். குடையை ஊன்றிய வண்

வாய்க்கரிசி 105
ணம் வெற்றிலேத் துப்பலை நடுரோட்டில் பீச்சியடித்துக் கொண்டு வந்த கிழங்களில் சில, குசுகுசு என்று தங்களுக்குள் தாங்களே ஏதேதோ பேசிக்கொள்ளுகிறர்கள். செத்த வீட்டில் நடந்த ஆடம்பரச் செலவையும், பிள்ளைகள் தகப்பனுக்குச் செய்யும் சிறப்பான சாச் சடங்குகள் பற்றியும் சிலாகித்துப் பேசப்படுகின்றன.
அந்தப் பேச்சு தேவதாஸ்னின் காதில் விழுகின்றது. அவன் அந்தப் பிரேத ஊர்வலத்தை ஒட்டியும், ஒட்டாம லும் வெதும்பும் உள்ளத்துடன் நடந்து செல்லுகின்றன்.
ஆஸ்பத்திரி வளவிற்குள் வேர்விட்டு வளர்ந்து, இல் நிறைந்த கிளைகளை மதில் எல்லையை மீறிப் பரப்பி, செழித்து வளர்ந்திருக்கும் கிழட்டு மதுரமரம். திட்டுத் திட்டாக அதன் நிழல்கள் வாசலோரமெங்கும் படர்ந்து வியாபித்திருக்கின்றது. மதுரங் கிளையில் ஜனித்தவையாகத் தென்றல் மெல்லன வீசு கிறது.
இப் பூந்தென்றல் ஏன் வீசுகிறது? செத்த இப் பிணத்தின் நெஞ்சைக் குளிர்விக்கவா?-மகிழ்விக்கவா?
தேவதாஸன் நெஞ்சு பொருமுகிறது. மனத் தரையில் நினைவுப் பம்பரச் சுழற்சி. அந்த ஆஸ்பத்திரி வார்டிலேதான், இன்று இறுதி யாத் திரையை மேற்கொண்டிருக்கும் பிணம், நேற்று வீரகத்தி அம்மானக இறுதி மூச்சைச் சுவாசித்துக்கொண்டிருந்தது.
மதியம், கேட்” அகலத் திறந்திருக்கிறது. காவற்கார&னக் காணவில்லை. அவனுடைய காக்கி நிற மேலங்கி, காவற் கூட்டிற்குள் ஆணியில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
மதுரமர நிழலில், அசைபோடும் மனதுடன் அவதிப்படும் தேவதாஸன் அரளிச் செடிகளின் இலைகள் சமைத்த சந்து இடைவெளியினூடே அக்ஸிடெண்ட்” வார்டைப் பார்க் கிறன்.
அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களின் உற்ருர் சுற்றத் தினர் நிறைந்து வழிகின்றனர்.
-*அம்மானுக்கு எப்படி இருக்கும்?

Page 56
106 பாதுகை
மனம் ஆதங்கத்தில் குதியாட்டமிடுகிறது. -பிேள்ளைகளுடன் மனம்விட்டுப் பேசும் இந்த நேரத்தில் நானேன் நடுவில் குறுக்க நிப்பான்? .
-இருப்பினும் பாசம் சுரக்கும் நெஞ்சம் இதைக் கேட் கிறதா?
தில்லைநாதன் தனது குஞ்சியப்புவினுடனும் இன்குெருவ ருடனும் இறங்கி வருகிறன். அவன் தேவதாஸைத் தாண்டும் பொழுது, அறிவு தன்ஃனயும் மீறி, *தில்லே கொப்புவுக்கு இப்ப எப்பிடி இருக்கு? என்று கேட்க வைக்கிறது.
தில்லைநாதன் உதட்டை வெறுப்புடன் பிதுக்கிக்கொண்டு, * இனி என்ன இருக்கிறது? நாளேச் செலவுகளை யோசிக்க வேணும்! டாக்குத்தர், இன்னும் அரைமணி நேரந்தான் பாக்க லாம் எண்டிட்டார்.’-தன் தகப்பனின் இறுதி மூச்சு அவஸ் தையை மிக மிகச் சாதாரணமாகச் சொல்லிக்கொண்டே, நின்று பேசப் பிரியப்படாதவனுக விடுக்” என்று சென்று மறைகிறன்.
-6அம்மான்!.என்னுலா அம்மான் உனக்கிந்த முடிவு.? -மனம் பிதுங்கிப் பிழிகிறது.
வீரகத்தி அம்மானின் சடலம் சுடுகாடு நோக்கிச் செல் கிறது.
அவருடைய வாழ்க்கைச் சுவட்டில் மேய்கிறது, தேவதாஸ் னின் மனம்.
வீரகத்தி அம்மான் விந்தை மனிதர். அன்பிற்காகத் தனது இறுதிக் காலத்தில் ஏங்கி அலேந்து நொந்துபோன உருவம். பாசத்தில் உருகும் மெழுகு இதயம், மானத்தில் பாறையாகிவிடும். உழைப்பு-தியாகம்-பண்பு இவையெல்லாம் அவருக்கு அந்நியமான பண்புகளல்ல. அப்படிப்பட்ட அம்மா னின் கடைசிக் காலம்.
மனைவி மலைபோல இருந்தாள். பிள்ளைகள் செழிப்பும் சிறப்புமாக வளர்ந்து, சீரான உத்தியோகத்தில் அமர்ந்து, நிறைய ஊதியம் பெற்று, மனங் கோணு இல்வாழ்வில் ஈடு பட்டு, புத்திரபாக்கியங்களுடன் வாழ்ந்து வந்தார்கள். அப்படி

வாய்க்கரிசி 1 O7
யிருந்தும் ஏன் அவர் அமைதி தேடிக் கடைசியில் கிளிநொச் சிக் காட்டில் வாழவேண்டும்?
காதலோ கத்தரிக்காயோ கிடையவே கிடையாது. அந் தக் காலத்து மனிதரவர். பெற்றர், உற்றர் ஆசிகளுடன், பெரியோர்கள் தாமாகவே, நிச்சயித்த, சுபயோக சுபமுகூர்த் தத்தில், சமய ஆசாரங்கள் வழுவாது அவரை நாயகனுக ஏற்று, அவள் என்ற தனித்துவம் மறைந்து, அவரேயாகி, அவருடைய சிறந்த அம்சமாக மாறி வாழவேண்டிய அந்த அவள்-ஹோமம் வளர்த்துத் திருமாங்கல்யம் பூட்டி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தார்மீக ரீதியாக ஏற்பட்டுவிட்ட பந்தப் பிணைப்பின் ஓர் அங்கமாகிவிட்ட அவள்-ஏன் அவர் நெஞ்சத்தை அணுஅனுவாகச் சாகடிக்க வேண்டும்?
-பிள்ளைகள்? Syed JQ56Ivo-Lu பிள்ளைகள்தானே? அவருடைய-அவ ளுடைய இணைப்புப் பிணைப்பின் அறுவடைகள்தானே? தோள் மீதும் மார்பு மேலும் தூக்கிச் சுமந்து, சீராட்டித் தாலாட்டி வளர்த்த இந்த அப்பனின் மக்கள்தானே? அந்தப் பிள்ளைகள் கூட அம்மானைப் பொறுத்த வரைக்கும் சாத்தானின் குஞ்சுக ளாகவா மாறவேண்டும்? அம்மாவின் செல்லப் பிள்ளைகளாகிய அவர்களைத் தன் பாசத்திற்கும் உரியவர்களாக்கும் வீண் பிரயத்தனத்தில் வாழ்க்கையே அர்த்தமற்றதாக மாறி, சூனி யத்தில் நீளிருள் படர்ந்து.
தொட்டுத் தாலி கட்டிய மனைவி, மக்கள் முன்னிலையில் உதாசீனத்துடன் மிரட்ட, இச்செயல்களுக்குப் பக்கபலமாகப் பெற்ற பிள்ளைகளே நேருக்கு நேராக இவரை மடக்க, குடும்பம் என்ற இரும்புச் சக்கரத்தின் பயங்கரப் பற்களுக்குள் நசி யுண்டு சாம்பினுர். ஊராரின் வாய்க்குக் குடும்ப கெளரவத்தை அவலாக்க விரும்பாத அவர் தனது தனித்துன்பத்தைத் தனக் குள்ளேயே சவ அடக்கம் செய்யப்பட்டுத் திரிந்த பாடு.தன் தலையைத் தானே உயர்த்தி வானைப் பார்த்துத் துப்பினுல், அது தன் முகத்திலேயே சிதறும் என்ற உண்மையை அனுபவ வாயிலாகவே உணர்ந்திருந்த அவர்.பனிக் கட்டியை உடைத்து நொருக்கிகுலோ அல்லது உஷ்ண அவஸ்தை

Page 57
IOS Utrg GDS
கொடுத்து உருக்கினுலோ கிடைப்பதென்னமோ தண்ணிர் தான். உடைந்து, நொறுங்கி, வெறுப்பின் வேக்காட்டில் இரத்தம் அவரது நயன ஊற்றுக்களினுல் கண்ணிராகக் கசிந்த இரவுகள்தான் எத்தனை எத்தனை?
கிளிநொச்சியில் அவர் தங்கிய காலத்தில், தேவதாஸ் னிடம் சொல்லி ஆறிய சம்பவங்கள்தான் எவ்வளவு?-
ஒருநாள்*இஞ்சேரணை, கேக்குதே? இவன் எங்கட மூத்தவன்; கண்டபடி திரியிருணும். இந்த வயதிலே, பெரிய குடிகாரனைப் போலக் கண்ட கண்ட கள்ளுக் கொட்டிலுகளிலையெல்லாம்.? -அவர் வாக்கியத்தை முடிக்கவில்லை. அதற்கிடையில் மங்கை யர்க்கரசி தர வேட்கை கொண்ட இரத்தக்காளியாக மாறி, *உனக்கென்ன அறளை பேந்து போச்சோ? அப்பிடியெண் டால் போய் ஒரு மூலையிலே விடவன். அவன்ரை சோத்தை நல்லாக் கொழுக்கத் திண்டு போட்டு, போயும் போயும் அவனையல்லோ கரிச்சுக் கொட்டுருய்? என்றன்.
அன்று மனைவியும் மக்களும் ஒன்ருகச் சேர்ந்துகொண்டு, அம்மான் உள்ளத்தில் சுருக்கென்று தைக்கும்படி கொட்டித் தீர்த்த வார்த்தைச் சரங்கள். முள் தைத்தால், தைத்த இடம் வலிக்கும்; ஆளுல், அலட்சியத்தில் கொப்பளித்துத் தெறித்த அந்த வார்த்தை அம்புகள் அவருடைய சர்வாங்கத்தை யுமே.
கிழட்டுச் சனியன்.அறளை பேந்த கொத்திப் பிசாசு. மூலையிலே முடங்கிக் கிடக்காமல் வீட்டிலே கொள்ளி வைச்சுத் திரியுது.இந்த வீட்டுக்கு இதுதான் சத்துராதி!” என்ற ஏச்சுக்களால் நொந்துபோன உள்ளத்துடன், 'தம்பி இந்த ஆம்பிளைப் புள்ளைகள் ரெண்டும் தாயின்ரை சொல்லக் கேட் டிட்டு என்னேடை சண்டைக்கு வருகுதுகள். எனக்கு மட்டும் ஒரு பொடிச்சி மேளாப் புறந்திருந்தா.ஏன் தம்பி! அவள் என்ரை பக்கம்தானே ஞாயம் பேசுவாள்? என்று நம்பிக்கை யுடன் கேட்பார்.
தேவதாஸனுக்கு நெஞ்சு வெடித்துவிடும்போலிருக்கும். னுேம் அம்மான், பொடிச்சியெண்டால் கட்டாயம் உன்ரை

6hin this fg 109
பக்கம்தான் நிப்பாள்!” என்று மனேதர்ம ரீதியான நியாயங் களையும் எடுத்துச் சொல்லி விளங்க வைப்பான்.
-*நிப்பாளோ என்னமோ?.நிண்டாலும் நிப்பாள்.? ஊர்வலம் மணிக்கூட்டு வீதியைக் கடக்கிறது. தேவதாஸ்னின் கண்களில் நீர் வழிகிறது. *வீரகத்தி அம்மான் அன்பிற்கு ஏங்கி, பாசத்தை நாடி விட்ட கண்ணிர் ஒரு குளத்தையே நிரப்பப் போதுமே?.
வீதியை இரு கூருக்கி, நட்டநடுவில், வரிசையாக நிற்கும் மகோகினி மரங்கள் கோடைவெயிலேத் தாமே தாங்கி, நிழலை வழிப்போக்கர்களுக்கு அளிக்கின்றன. அவற்றின் அடிமரத் தைப் போன்று வைரித்த சம்பவங்கள்தான் அவரது வாழ்க்கை அம்சங்கள். அதன் ஒவ்வொரு பட்டையும் கொடுமையின் சின்னம் அலட்சியத்தின் தழும்பு.
*மூத்தவன் இப்படி மூர்க்கன். அவனுக்கு வாய்த்த பத் தினியுமா, மாமியாரின் அச்சுப் பிசகாத பிரதியாக இருக்க வேணும்?
இன்னுெரு நாள்.
தில்லையின் மூத்த மகன், தன் தந்தையின் அசல் வார்ப்பு. தன்னுடன் விளையாடிக்கொண்டிருந்த அடுத்த வீட்டுப் பையனே, வேண்டுமென்றே அலக்கமலக்கத் தள்ளிவிட்டான். முகங் குப்புற வீழ்ந்த பையனின் மூக்கிலிருந்து இரத்தம் வடிந் தது. பேரனின் இந்த அக்கிரமச் செயலை நேரில் தற்செய லாகப் பார்த்த வீரகத்தி அம்மானுக்கு வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது. 'அழிவானே! உனக்கு ஏன்ரா இந்தக் குரங்குச் சேட்டை? என்று உணர்ச்சி வேகத்தில் இரண்டு திட்டுத் திட்டி, ஓர் அடியும் முதுகில் கையால் அடித்து விட்டார்.
மனதில் அப்படியொன்றும் கல்மிஷம் இல்லை.
மருமகளின் பத்திரகாளி வேஷம். சோகப்போற நேரத் திலே, ஏனிந்தக் கிழடன் பொடியனைத் தீண்டு கைகழுவுது? கோட்டஞட்டம் குந்தியிருந்து பாத்துக்கொண்டு.” என்று, சொல்லத் தகாத வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே
7

Page 58
110 பாதுகை
போனுள், மனேன்மணி. மாமன் என்றும் பாராமல் வாய்க்கு வந்தபடி ஒரே பேச்சு மாமிக்கும் மருமகளுக்கும் ஒத்து வராது என்று ஊர் முழுதும் கதைக்கிருர்களே இந்த விஷயத்தில் இருவ ரும் பரிபூரண ஒற்றுமை. அவருடைய மனைவி மங்கையர்க் கரசி அவருக்காகப் பரிந்து பேசக்கூடாதா? அவள் பேரன இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, 'நீ சுடலையிலை போன அண்டைக்குத்தான் இந்த வீடு உருப்படும்? என்று மருமக ளின் வலுச்சண்டையை வலிந்து தனதுடமையாக்கிக் கொண் டாள். அள்ளியள்ளிக் கொடுத்தாள், சாபம்.
இதோ, அம்மான் சுடலைக்குப் போருர்; இனித்தான் அந்த வீடு உருப்படும்?
ஆமை தன் ஒட்டிற்குள் தன்னைத்தானே மறைத்துக் கொள்வதைப் போல, வீரகத்தி அம்மானும் தன்னில் தானே ஒடுங்கிக்கொள்கிறர்.
இந்த நாட்களில் ஏதோவொரு நாளில்தொடர்ந்து இருக்கும் இராக் காய்ச்சல், அன்பில்லாத நிலையில் அதை அமுக்கி வைத்திருக்கும் பாரம், சோர்வும் அலுப்பும், மழைக் கூதலில் போர்வைச் சுகத்தில் சுருண்ட நிலை, தன்னைத்தானே மறந்துவிட்ட கனவுத் துயில் ஆகிய கூட்டுக் கலவைச் சூழ்நிலையில், படுக்கை சிறுநீரினுல் நனைக் கப்பட்டு, அசுத்தப்படுத்தப்படுகிறது. விடியற்காலையில், நடந்துவிட்ட சங்கதி தெரிந்தவுடன் வெளியே சொல்ல முடி யாத மனப் பதைபதைப்பு. ஏதோ செய்யக்கூடாத தவறினைச் செய்துவிட்ட வெட்கத்தில் உடல் கூனிக் குறுகுகிறது. நாணம் அவர் உள்ளத்தை மண் புழுவாகக் குடைகிறது.
விஷயத்தைப் புரிந்துகொண்ட மருமகள் சம்பவத்தைச் சுமந்து சென்று கணவனிடம் குசுகுசுக்கிருள். மாமிக்கும் சாடைமாடையாகச் சொல்லி ரஸிக்கிருள்.
*அப்படிச் சொல்லடியாம் சின்னுச்சி! குழந்தை இல்லாத வீட்டிலை கிழவன் துள்ளி விளையாடினணும்.?-மங்கையர்க் கரசியின் இகழ்ச்சி கலந்த வார்த்தைப் பிரயோகங்கள் அவ ரைத் தன்னைத்தானே வெறுக்கும்படி செய்துவிட்டது.

வாய்க்கரிசி 1 11
வீடு நெருஞ்சிக் காடாகியது.
இளையவனிடம் தஞ்சம் தேடிப் போனுர். வயதில்தான் தங்கத்துரை, தில்லேயிலும் இளையவன். அவ்வளவுதான்; ஆணுல். ஆணுல். மனைவியின் தலையணை மந்திரத்தால் வீட்டு நிழல் மறுக்கப்படுகிறது.
*நான் உயிரோடை இருக்கிறதாலைதானே இந்தப் பொல் லாங்கு? துலைஞ்சுப் போறன்? நான் பிரண்டுபோனுல்தான், எல்லோருக்கும் இந்த வீட்டிலே சந்தோஷம்? என்று விரக்தி யடைந்திருந்த அம்மானுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
சவ ஊர்வலம் பஸ் நிலையத்தைத் தாண்டுகிறது. பறை யொலியும், பட்டாஸ் வெடியும் மறுபடியும் அமர்க்களப்ப கின்றன.
தேவதாஸன் அவருடைய ஒன்றுவிட்ட தங்கச்சியின் மகன். கையில் எல்லா விரல்களும் ஒன்றைப்போல ஒன்று இருக்கிறதா? அவள், கையில் உள்ள விரல்களில் ஏதோ ஒன்று. விடிவு தேடி, கிறிஸ்தவன் ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டாள். அதிலிருந்து இனசனங்கள் எல்லாரும் அவர் களை வேதக்காரப் பகுதி என்று ஒதுக்கிவிட்டனர். நன்ருகப் படித்த அவன்மீது அம்மானுக்கு எப்பொழுதுமே ஒரு பரிவு. அவர் காலத்திற்கு முன்னர், இந்தப் பாகுபாடுகளைத் தாண்டி யவர். தேவதாஸன் நன்றகப் படித்துத்தான் எஸ். எஸ். ஸி. சித்தியடைந்தவன். அதற்குமேல் தாய் படிப்பிக்க முடியா மலே கண்ணை மூடிவிட்டாள். வேலை தேடி ஆலாய்ப் பறந் தவன், தன் சகோதரிகள் இருவருடனும் கிளிநொச்சியில் பத்தாம் வாக்கால் பகுதியில் கிடைத்த காணியில் கமக்கார ஞகக் குடியேறினன். வீட்டுக்கு உதவியாக, சொந்தக்காரக் கிழவியைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்றுதான் யாழ்ப் பாணம் வந்திருந்தான். கிழவிக்கு நல்ல இடத்துப் பாது காப்புக் கிடைத்ததினுல், தன் பேத்தியின் பிள்ளைப்பேறு என்று தட்டிக் கழித்துவிட்டாள். கிளிநொச்சிக்கு அவசர மாகத் திரும்பும் எண்ணத்துடன், பஸ்ஸில் ஏற நினைத்த பொழுது

Page 59
12 LJT9/60)46
தேம்பி!..? என்று அம்மான்தான் அவனைக் கூப்பிடு கிறர். ஒருகணம் அம்மானை அடையாளம்கூடத் தெரியவில்லை.
பஸ் நிலையத்து வாகைமரத்தின் கீழே, தேவதாஸ்னைச் சுமைதாங்கியாக்கி, தன் மனப்பாரத்தை வார்த்தைகளாக இறக்கி முடித்தார், அம்மான் வீரகத்தியர். அவருடைய கண் களில் நீர் துளிர்த்துத் துலங்கிற்று. தன் விழிகளில் துளிர்த்து நின்ற கண்ணிரைத் துடைக்கிருன், தேவதாஸன்.
-தங்கமான மனிசன்!?
*அம்மான் கோவிச்சுக்கொள்ளக் கூடாது. வந்து, கொஞ்சகாலத்துக்கு எங்களோடை இருங்கோவன்.?
அன்று கிளிநொச்சிக்கு அவனுடன் சென்றவர், உயிர் நீங்கத்தான் யாழ்ப்பாணம் திரும்பினுர்,
ஆலம் விழுதுகள் பூமியைத் தொட்டு நாளாவட்டத்தில் வைரித்து, ஆலமரமாக மாறிவிடுவதைப்போல, அவர் கிளி நொச்சியில் வாழும் சின்னஞ்சிறு குடும்பத்தில் ஓர் அங்கத் தவராக ஆகிவிட்டார். ی
வீரகத்தி அம்மான் திடீரென்று வீட்டைவிட்டுக் காணுமற் போனதினுல், யாழ்ப்பாணத்தில் அப்படியொன்றும் பரபரப் பேற்பட்டுவிடவில்லை. சனியன்ரை நச்சரிப்பு ஒருமாதிரியாய் ஒழிஞ்சுபோச்சு? என்ற மனுேபாவம்தான்.
ஆணுல், தேவதாஸன் குடும்பத்துத் தேரில் அம்மான் உப யோகமான அச்சாணி.
எப்போதோ ஒருநாள், மத்தியானம்*தம்பி மூத்த பெட்டைக்கு எங்கேயாச்சும் பார்த்துக் கீத்து வைச்சிருக்கிறியே? என்று திடீரென்று கேட்டார், அம்மான். குரலில் எவ்வளவு அக்கறை எவ்வளவு கரிசனை!
தேவதாஸனுக்குப் பதில் சொல்ல நாக்கு எழவில்லை. அவ னுக்கு அது கடமை. ஆனல், பெரியவர் ஒருவர் முன்னின்று நடத்தவேண்டிய பெரும் பொறுப்பல்லவா, இது? யோசித்தான்: 88ஏனம்மான் கேக்கிறியள்?? *சும்மாத்தான். குறை விளங்கிக்கொள்ளாதை. பொடிச் சிக்கு அவன் சேவியரிலை கொஞ்சம் மனம்போலை கிடக்கு.

வாய்க்கரிசி 113
தாய் தோப்பனைத் தின்னிப் புள்ளை. நாளைக்குக் கண்கலங்கக் கூடாது? என்று இழுத்தார்.
தேவதாஸனின் சிந்தனையில் ஞானம் திடீரென்று சுடர் விட, ‘நீங்கதானே அம்மான், பெத்த தேப்பனுக்குத் தேப்ப குய் இருக்கிறியள்! பாத்து முடிச்சு வையுங்கோ? என்று பொறுப்பை அவர்மீது விட்டுவிடுகிறன்.
*அம்மான் கைராசிக்காரர். அவளின்ரை வயித்திலும் பூச்சி புடிச்சிருக்கு. அவள் குடும்பத்துக்கும் ஒரு குறை
எவ்வளவு நேரமாக இந்தச் சவ ஊர்வலம், தன்னுடைய ஆடம்பரங்களைப் பறைசாற்றிக்கொண்டு நகருகிறது! அந்த ஊர்வலத்துடன் ஊர்ந்து செல்லும் தேவதாஸனுடைய நெஞ் சைப் பழைய சம்பவங்களின் தினவுகள் மசித்தெடுக்கின்றன. குழந்தையாக விசும்புகிருன். வேறு யாரும் தன்னைக் கவ னித்துவிடக்கூடாது என்று வேலிப்பக்கம் பார்வையைத் துளைக்கிறன். தூங்கிவழியும் ஒரு தேநீர்க் கடை. அந்தத் தேநீர்க் கடையில், சில சீப்புகள் மட்டும் பழுத்த வாழைக்குலே தொங்கிக்கொண்டிருக்கிறது.
*அம்மான் கைராசிக்காரர்தான். ஆணுலும் தான் வளர்த் ததைத் தானே அனுபவிக்கக் குடுத்துவைக்காதவர்.”
ஒருநாள் காலையில் எழுந்து, பல் விளக்கிக்கொண்டிருந்த பொழுது.
*ஏன் தம்பி! இந்தக் கிணத்தடிக் காணி சும்மா கிடப் பான்? ஒரு ஐஞ்சு, பத்து வாழைக் கண்டுகளை நட்டு வைச் சால் என்ன?? என்று கேட்டார்.
*ஏனம்மான் இந்தக் கரைச்சலெல்லாம் உங்களுக்கு? உள்ள அல்லைதொல்லைகளோடை உதையும் தூக்கித் தலையிலை போடப்போறியளே?
*நீ சும்மா கிட தம்பி; கொஞ்சநாள் கழிச்சுப் பாரன்.? அவர் சொன்ன கொஞ்ச நாட்கள், அவருடைய உழைப்பையும் நீரையும் உண்டு கொழுத்தன.
காய்த்து முற்றிவிட்ட வாழைக் குலைகளைச் சென்ற வாரம் அவர் காட்டியபொழுதுதான் தேவதாஸன் மரத்தை அண்

Page 60
14 Luitgil 6045
ஞணந்து பார்த்தான். கப்பல் வாழைக் குலேயில் இடைப் பழம் பழுத்திருந்தது. அதைப் பார்த்ததும் புத்தம் புது உடை தரித்த சிறுமியைப் போல, அவர் காட்டிய உற்சாகம்.
*பழம் பழுத்தது. அதைப் பாத்து மரத்தை வளத்த அம் மான், பூரிச்சுப் போனர். ஆனல், இப்போது அவரே பழுத் திட்டார். பழுத்து, சுடுகாட்டுக்கு.? இரண்டு நாட்களுக்கு முன்னர். முன்னிருட்டு நேரம். மத்தியானம் சமைத்த கறியைக் கொஞ்சம் குடு காட்ட, தேவதாஸனின் சின்னத் தங்கச்சி பரணிலிருந்து விறகை எடுத் தாள். அதற்குள் தூங்கிக் கிடந்த தேள் அவளைக் கொட்டி விட்டது. வலியால் சுருண்டு தவித்தாள். வேதனையைத் தாங்கமாட்டாமல் அவள் பட்ட அவஸ்தை.
அம்மானுக்குக் கண்ணிரே வந்துவிட்டது! அவர் சிமினி லாம்பைக் கையில் எடுத்துக்கொண்டு, விஷக்கடி வைத்தியரைத் தேடிக் கிளிநொச்சிக் கடைத்தெரு வுக்குச் சென்றர்.
விஷக்கடி வைத்தியரும் வரவில்லை; போன அம்மானும் திரும்பவில்லை. இரவில் நன்றகக் கண் தெரியாத அம்மான், குறுக்கே வந்த காருடன் மோதிவிட்டார். பாரிய வெளிக் காயம் இல்லை; ஆனல்.
பாம்பு தவளையை விழுங்குவதுபோல, காலம் வாழ்க்கை யைக் கொஞ்சம் கொஞ்சமாக.
-*அம்மான்? *அம்மான்! உங்களிடம் நான் பட்ட கடனை எப்படி அடைப்பேன்?
வில்லூண்டிச் சுடலை,
நன்ருக அடுக்கி வைக்கப்பட்ட சிதை.
அதன்மேல், தண்டி கைப் பாடையில் பயணம் செய்த சவப் பெட்டி வைக்கப்படுகிறது.
மூடி திறக்கப்படுகிறது.
வாய்க்கரிசி போடும் சம்பிரதாயம்.

வாய்க்கரிசி 115
வீரகத்தி அம்மானின் தம்பி, தோளிற் கிடந்த சால்வை யைத் தலைப்பாகையாகச் சுற்றிக்கொண்டு, ஒவ்வொருவரை யும் உரிமையுடன் அழைக்கிருர்,
உரிமைக்காரர், சம்பிரதாயத்தின் இயந்திரச் சூட்சுமத் தில் இயங்கி, வாய்க்கரிசி போட்டு.
ஒதுங்கி நின்ற தேவதாஸனையும் வாய்க்கரிசி போடுவதை நடத்துபவர் பார்க்கிறர்.
**இந்தாம்பி, வாவன் வந்து போடன்!? என்று அழைப்பு விடுக்கிருர்,
கொள்ளிக் குடம் கைமாறுகிறது. மின்வேகத்தில் தில்லை நாதன் சவத்தின் தலைமாட்டிற்கு வருகிறன். தேவதாஸனை அழைப்பவரை விழிகளில் பொறி தெறிக்கப் பார்த்து, “ஏன் குஞ்சியப்பு உங்களுக்குப் புத்தி கித்தி இருக்கா? என்ரை அப்புவுக்கு வாய்க்கரிசி போட இவனுர்? இவன் ஒரு வேதக் காரன்!” என்று இரைகிருன்.
-*அம்மான்!.என்னை வேதக்காரனெண்டு உங்களுக்கு நல்லாத் தெரியுந்தானே..?
- T 960

Page 61
காகிதக் காடு
பறந்து வந்த காகம், நியூ புக் ஹவுஸ்" என்ற அந்த விளம்பரப் பலகையின்மேல் விழிம்பில் சட்டென்று இருக் கின்றது.
மேல்தட்டினரின் இலக்கிய தாபத்தையும் பொழுது போக்கு என்ற இதய அரிப்பையும் சாந்தி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நவீன புத்தகக் கடைதான் அது. ஷேக்ஸ்பியரையும் மில்டனையும், கம்பணுகவும் காளிதாஸஞக வும் கருதுவோருக்காக, ஏராளமான மூலதனமிட்டு பிரமாண்ட மாக அமைக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பென்னும் பெரிய ஸ்தாபனம். சிகரெட்டிற்கான சுவரொட்டி விளம்பரங்களில் கூட, சாய உதட்டுடன், கோணல் பார்வை சகிதம் பெண் களின் படங்களை விளம்பரம் செய்யும் இந்த விளம்பர யுகத்தில், பீமிஸ், வேல்பில்லே’ என்று ஸ்தாபனத்தாரினுல் அழைக்கப் படும் செல்வி. மாலினி வேலுப் பிள்ளையை நியூ புக் ஹவுஸ்” விற்பனை அதிகாரியாக நியமித்ததில் அப்படியொன்றும் அதி சயமில்லைத்தான்.
தனக்குப் பக்கத்தில் வெளியுலகைக் காட்டும் ஜன்னலி னுாடே மாலினி பார்வையைச் செலுத்தி நோட்டமிடுகின்ருள். *கேட்” வாயை அகலத் திறந்திருக்கின்றது. வழியை அடுத்து சிறு தோட்டம், மப்பும் மந்தாரமும் கவிந்து முகில்கள் கூரை யிட்டிருக்கின்றன. மூட்டம் போட்டுள்ள வானில், கருத்தை யும் கண்ணையும் கவர்வதற்கு என்ன இருக்கின்றது? பார்வை ஒரு மனித உயரத்திற்கு இறங்கி, சடைத்திருந்த மாமரத்தில் விழுகின்றது. மாலே வெயிலின் நிற ஜாலத்தை இரவல் வாங்கித் தளுக்குக் காட்டிய மாம்பூக்கள் இப்பொழுது கிடையாது. இரவு மழையில் நனைந்து, இன்னும் அதிகம் பசுமையே தருவ தான மயக்கத்தைத் தரும் இலைகளின் மறைவில் ‘கண்ணுரே கடையாரே? விளையாடும் மாங்காய்கள் பருவம் தப்பிப் பிடித் திருக்கும் வம்புப் பிஞ்சுகள்! அதிலிருந்து பார்வையை விலக்கி,

காகிதக் காடு 117
இமைகளைப் பாதிதூரம் தாழ்த்தி, நிலத்தின் மீது புலனை மேய விடுகின்ருள், மாலினி. வாழையின் வாமனுவதாரங்களான மணி வாழைகள் புஷ்பவதிகளாகிப் புதுப் பொலிவு காட்டு கின்றன. கொத்துக் கொத்தான மலர்கள் - சிவப்பு, மஞ்சள், சிவப்பும் மஞ்சளும், மஞ்சளும் சிவப்பும் கலந்தவை அவை - வரிசை கட்டி நிற்கின்றன. இரவு பெய்த மழையின் துளிகள், சில மலர்களை ஸ்பரிசிக்கின்றன. அதைப் பார்த்து, தன் கன் னத்தில் குன்றுமணிப் பருமன் கூட இல்லாமல் குமிழ் விட்டு அழகுகாட்டும் முகப் பருவில் விரல்களை அலைபுரள விட்டுவிடு கின்ருள். கடையின் ஓரங்களில், யாரோ ஒரு கட்டடச் சிற்பி யின் கைவண்ணத்தின் சான்றகச் சித்திர வேலைப்பாடுகளைப் பறைசாற்றி நிற்கும் பூச்சாடிகளில், உரமிட்டுச் செழிப்பாக வளர்க்கப்பட்ட பாம்ஸ்? கமுகுக்கும் வேருெரு வகைச் செடிக் கும் கலப்புமணம் செய்வித்துப் பிறந்த திருமகளாகக் காட்சி தரும் பாம்ஸ் மரங்களின் இலைகளில், தங்களது வண்ண நிறங் களையும் எழில் அமைப்புகளையும் பீச்சிவிட வேண்டுமெனப் பிரயத்தனப்படும் குரோட்டன்ஸ்” செடிகள்.
அநாதையாகப் பரிதவித்துக் கத்தும் காகத்தின் கரைவு, அவளுடைய மேயும் பார்வையை உலக உணர்வு விட்டத்திற் குள் இழுத்து வருகின்றது.
அந்தக் காகம் ஒருகால் எச்சமிட்டுப் பெயர்ப்பலகையின் அழகிற்குக் களங்கம் ஏற்படுத்திவிடுமே என்ற நினைவே இல் லாமல், நிர்க்கள நினைவுகள் என்ற மேகங்களில் மனதைக் கெந்தியடிக்க விட்டுவிடுகின்ருள், மாலினி.
மேசையின் ஒரு பக்க மூலையில் தென்றலை உற்பத்தி செய்ய வல்லதான மின்சார விசிறி, நான்கு இறகுகளைக் கொண்டு, கெட்டியான கம்பிகளாலான கூட்டில் சிறைப்பட் டிருக்கின்றது. கோடைகாலத்தில் மின்சார சக்தியைக் குடித் துக் குடித்து அது ஒய்வொழிச்சலின்றி இயங்கிக்கொண்டே யிருக்கும். ஆனல் இன்று அதற்கு ஓய்வுநாள். உறக்கத்தி லிருக்கும் குழந்தையின் கூந்தலைத் தடவி விடும் தாயின் பரிவு பாவத்துடன், அந்த இறக்கைகளில் அவளுடைய மென் விரல்கள் கீச்சு மூச்சம்? காட்டுகின்றன.

Page 62
118 பாதுகை
சில்லென்று வீசும் குளிர்காற்று சருமத்தைச் சிலிர்க்க வைக்கின்றது.
விசிறியின் சிறகுகள் வேகமாகச் சுழல்கின்றன. பின்பு வேகம் குறைகிறது; நிற்கும் நிலை.
மீண்டும் மீண்டும் இதே வேடிக்கை. *இலேசாகச் சுழலும் விசிறியின் இயக்கத்திற்கு - மின் சார சக்தியை உண்டு சுழலும் இறக்கைகளுக்கு - ஏன் மனித சக்தியைப் பாய்ச்ச இயலாது? என்று சிந்தனை ஒருகணம்ஏன், அத்துடன் அவள் பெருமூச்சு மோத வேண்டும்?
நடுத்தர உயரம். உயரத்திற்கேற்ற உடற்கட்டு. செம் பாட்டு மண்ணில் காய்த்து, மரத்திலேயே பழுத்துப்போன கப்பல் வாழைப்பழத்தைப் போன்ற சதைப் பிடிப்பான மேனிப் பொலிவு; காந்தி. பெண்மையின் அம்சங்களைச் சற்று அதிக மாகவே பெற்றிருந்ததால், பெண்களுக்கு எங்கெங்கெல்லாம் கவர்ச்சி பொருந்தியிருக்க வேண்டுமோ அங்கங்கெல்லாம் அழகின் வனப்பு மிகுந்திருந்தது. கடைச்சரக்கின் ஆதரவும், ஒப்பனைக் கோலத்தின் உதவியுமின்றியே அற்புதமான கவர்ச்சியழகைப் பிறவிப்பயணுகப் பெற்றிருந்தாள், செல்வி மாலினி வேலுப்பிள்ளை.
சுருண்டும் சுருளாமலுமிருக்கும் கேசத்தினை அழகாக வாரி, கொழும்புக் குறுக்கு ரோட்டைப் போன்று கோணல் வகிடெடுத்து, செவிகளின் அமைப்பிற்கு மதிக் களங்கம் ஏற் படுத்தி, தற்காலப் பேஷனில் அலங்காரக் கொண்டை போட் டிருக்கிருள். ஆனல் தூக்களுங் குருவிக் கூட்டின் அமைப் பில், வெகுவெகு சிறிதாகக் கலைந்தும் கலையாமலும், மூச்சிற்கே அலேபாயும் முன்னுேச்சி மயிரிழைகள் பூரணமாகப் படியாதது குறையாகவே படவில்லை; மாறக, அழகை அதிகப்படுத்தியே காட்டுகின்றது. காதுகளில் நவீன வேலைப்பாடமைந்த சங்குத் தோடுகள்.
எந்த அலங்காரமாகத்தான் இருக்கட்டுமே!-அது அது அந்த அந்தத் தன்மை மிகுந்தவர்களிடம்தான் தனிக் கவர்ச்சி யும் புதுப் பெருமையும் பெறுகின்றன. w
-அப்படியானவள்தான் மாலினியும்.

காகிதக் காடு 119
அவளுடைய சுட்டுவிரலின் சக்தியால் சுழலும் மின்விசிறி, வேகம் தணிந்து, இயக்கமிழந்து. ஆளரவம் கேட்கின்றது. பார்வையை வெட்டி மடக்கி, உட்செலுத்தி வந்தவரை உற்றுப் பார்க்கின்றள், மாலினி.
பட்டம் பெறும் முயற்சியில் தன் முகப்பொலிவை ஈடு வைத்த முகக்களையும், மெலிந்த மென்மையான உடலமைப் பும், பெரிதான அகன்ற நெற்றியும், சாந்தம் ததும்ப அறிவுக் களே சொட்டும் விழிகளையுமுடைய ஒருவர் மேசைக்கு முன்னுல் நிற்கின்றர்.
எப்போதோ ஒருநாள், ஏதோ ஒரு புத்தகம் வாங்க வந்தவர் அவர் என்ற ஞாபகம் மாரிக்கால முகிலில் பளிச் சிட்டு மறையும் மின்னலாக அவள் மனதில் தோன்றி மறை கின்றது.
ஏதோ சொல்ல நினைக்கிறர். வார்த்தைகள் வாய்க்குள் ளேயே "ஸ்.புஸ். என்று ஒலி செய்கின்றன.
*உங்களிடம் டாக்டர் ராதாகிருஷ்ணனுடைய புதிய புத்தகங்கள் ஏதாவது வந்திருக்கின்றதா??-தன் தத்துவப் பித்தைப் பறைசாற்றி, கல்வி கமழும் பண்பை இழையோட விட்டுக் கேட்கின்றர்.
அவரது நிதானத்தையும் பண்பார்ந்த அமைதியையும் முக மலர்ச்சியையும் கண்ட மாலினி, 'அவருடைய சமீப காலப் புத்தகம் அடுத்த கிழமை வருகிறது.புதிய புத்தகங்கள் வந்திருக்கின்றன? என்ருள்.
*பரவாயில்லை; அடுத்த கிழமை வருகிறேன்.? வந்தவர் படியிறங்கி நத்தையைப் பழிக்கும் வேகத்தில் நடைபோட்டு மறைகின்றர்.
வந்தவருடைய அமைதியில் ஒருகணம் லயித்த மாலினி யின் மனதில் நேற்றுச் சாயங்காலம் நடந்த சம்பவம் குமிழ் விடுகின்றது.
வெள்ளை நாஷனலும் வேட்டியும் தரித்து, நெஞ்சுப் பாக் கெட்டில் பார்க்கர் பேணு செருகிக்கொண்டு ஒரு எழுத்தாளர் வந்தார். அவரை அவளுக்கு முன்பின் தெரியாது. அவருக்கு

Page 63
120 பாதுகை
அவருடைய பணத்திலேயே பிளேன் டி? குடித்து மகிழும் சிநேகிதக் கட்டியக்காரன் வேறு.
இருவரும், அந்தக்காலத்தில், வள்ளி நாடகத்தில் வேல ஞக நடித்த பிரபல நடிகரின் ராஜபார்ட் நடையைப் பிரதி பண்ணி ஏறுநடை போட்டு நடந்து வந்தனர்.
எழுத்தாளப் பெருமகனுர், அலட்சியமான தோரணையில், கேள்விஞானத்தில் எழுத்தாளராக அறிந்து, தனது உதட்டிற் குள் சிக்குப்பட்ட அத்தனை பேர்களின் பெயர்களையும் நமச்சி வாயப் பாராயண தொனியில் உச்சரித்துத் தள்ளி, அவர்கள் அத்தனை பேர்களும் ஒன்ருக எழுதிய சிறுகதைகள் கொண்ட, ஒரேயொரு தொகுதி இருக்கின்றதா?-என்ற கேள்விக் குறி யைக் கடைசியில் தொங்கவிட்டுவிட்டுத் தனது பிரதாப அளப்பை நிறுத்திக்கொண்டார்.
இவர்தான் ஓ’ஹென்றிக்குச் சிறுகதை எழுதக் கற்றுக் கொடுத்தவர், மாப்பஸாஃன எழுதுவதற்கே ஊக்குவித்தவர், புதுமைப் பித்தனுக்கு எழுதும் உற்சாகத்தையே அருளியவர் என்ற முறையில், பிளேன் டீ? உசாரில், கட்டியம் கூறி வந்த அவரின் நண்பர் ஒரு சுயவிளம்பர புராணத்தையே அரங் கேற்றி முடித்தார்.
மாலினி உதட்டை மடித்தாள். அவள் உதட்டை மடித்துக்கொண்டாலே அந்தச் சம் பாஷணையை அவள் விரும்பவில்லை என்பது அர்த்தம்.
இந்தச் சுயவிளம்பர மாமேதைகளினது அட்டகாசங்கள் அவளுக்குக் கட்டோடு வெறுப்பையே தந்தது. ஒரு மெளன மான அலட்சியத்துடன்தான் அவள் அவர்களை நோக்கினுள். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு நகைமுகம் காட்டி அவர் களை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்துவதற்கே அவளுக் குப் போதும் போதுமென்றகி விட்டது!
டெலிபோன் மணி ஊரை அழைக்கின்றது. மன உணர்வுகளில் இருந்து விடுபட்ட மாலினி, கதி ரையை விட்டுச் சட்டென்று எழுந்து ரிளிசீவரை எடுத்துக் காதில் பொருத்திக்கொள்ளுகின்ருள்.
6 ap(36) it...’

காகிதக் காடு 121
மேலிடத்திலிருந்து செய்தி வந்திருக்கின்றது. ஏதோ பரஸ்பரப் பேச்சு. பேச்சுத் தொடர்ந்து நடக்கின் றது. பேச்சும் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.
விரல்கள் டெலிபோன் வயரை, வீணையின் தந்திகளென நினைத்து மீட்டுகின்றன. அந்தத் தொங்கலில் பேசுவோ ருக்கு விரல்கள் கூடச் செய்தி அனுப்புமா, என்ன! வயரில் வீணை மீட்டி விளையாடிய விரல்கள், உரித்துப் போட்ட வாழைப்பழத் தோலின் உருவத்தில் மடித்த அந்தக் கைக் குட்டையை ஏன் தாளத்துடன் மேசைமேல் போட்டுப் போட்டு விளையாட வேண்டும்?
கர்ப்பமுற்ற மேகங்களைக் கொண்ட வானம் வெளியே கண்ணிர் சிந்துகின்றது. மயிர் நனையாத் துந்துமி, நீர்ச் சிதறல்.
தொலைபேசி இருப்பிடத்தில் வைக்கப்படுகின்றது. கடைக்கண் ஒளியில் வெள்ளை நிறம் நிழலாடுகின்றது. கண்களைச் சாளரத்தினூடே செலுத்தி வெளியே பார்க்கின் ருள், மாலினி. மழைத் தூறலுக்குப் பாதுகாப்பாக, சிலேட்டுப் புத்தகத்தைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிருள், ஒரு சிறுமி. எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். பதுங்கிப் பதுங்கிப் பூனைபோல நடந்து வந்த அப் பாலிகை உள்ளே வர அஞ்சி, வாசல்படிகளிலேயே நின்று கொண்டிருக்கிருள்.
மிருதுவான இதழ்களேயுடைய அவளது வதனத்தில் ஒரு விதக் களை ஒளிர்கின்றது. m
நேற்று இதே நேரமும் இப்படித்தான். அதற்கு முதல் நாளும், முதல்நாளும் வாசல்படி வரைக்கும் வருவதும், வந்து, குடுகுடுவென்று ஒரே ஓட்டமாக ஓடியே போய்விடுவதுமாக விளையாட்டுக் காட்டினுள், இந்தத் துடுக்குக்காரச் சிறுமி.
அவளைப் பார்க்காதது போன்ற நடிப்பு, மாலினியின் முக அபிநயத்தில். விரல்கள் ஜன்னல் விளிம்பில் ஆர்மோனியம் வாசிக்கின்றன.
மற்றைய நாட்களைப்போலல்லாது, சுற்றுமுற்றும் பார்த்த வண்ணம் சின்னஞ் சிறு கண்களை அகல விரித்தவாறு நடந்து,

Page 64
122 பாதுகை
முன்னேறி, மேசையின் விளிம்புவரை வந்து முட்டிக்கொண்டு நிற்கின்ருள், சிறுமி.
இயற்கையிலேயே குறும்புத்தனம் குதிரும் உள்ளம் கொண்ட மாலினி, தன்னை ஒரு குறும்புக்காரச் சிறுவனுகப் பாவித்துக்கொண்டு, ஒரு புருவத்தைத் தாழ்த்தி, இன் னென்றை உயர்த்தியவாறு, முஷ்டியை மடித்து, விஞக் கொக்கியின் தலையைப்போல, அதைச் சரித்துக்கொண்டு, என்ன? என்ற கேள்வியைச் சைகை மூலம் எழுப்புகின்ருள். இந்தத் தமாஷ், உள்ளத்தைக் கிளுகிளுக்கச் செய்கிறது. சிறுமி பேசாமல், பார்ப்பதும் விரல் நகங்களைப் பல்லால் கடிப்பதுமாக நிற்கின்ருள். -
மூக்கு விரிந்து, சுருங்கி, அஷ்ட கோணத்தில் வளைந்து, ஒரு கணப்பொழுது அவஸ்தையில் ‘அச்.சூ” என்ற ஒலி பிரசவமாகின்றது. சளி பிடித்துச் சற்று வீங்கிப்போயிருந்த மூக்கினை, தெளிவான, சிவந்த சதைப்பிடிப்பான சருமப் பகுதி தெரியும் இடுப்புப் பிரதேசத்தில் செருகி இருந்த கைக்குட் டையை எடுத்துத் துடைத்துக்கொள்ளுகின்ருள், மாலினி.
சே காலையிலே நனஞ்சு கோயிலுக்குப் போனதால் தடும னல்லவா பிடித்துவிட்டது?-நினைவு தும்மலுக்குக் காரணம் கற்பிக்கின்றது.
சிறுமி அவஸ்தை நிறைந்த முகத்தை உயர்த்தி மருட்சி நிரம்பிய விழிகளால் மாலினியையே பார்த்துக்கொண்டு நிற் கின்ருள்.
மீண்டும் சைகை பாஷை விஞ எழுப்புகின்றது. சிறுமி நெருங்கி மேசையின் ஒரத்தில் விரல்களைப் பதித்த படி நிற்கின்ருள். தோள்களுக்கிடையே புதைந்திருந்த மிருது வான சின்னத் தலை மேசைக்கு மேலே தெரிய, தாமரை மொக் கைப் போன்ற முகம் தெளிவாகத் தெரிகின்றது.
மாலினியும் ஒரு சிறுமியாகி விடுகின்றள். 68உங்க பெயர் என்னங்கோ? சிறுமி தன்னைச் சுதாரித்து-சமாளித்துக்கொண்டு, பயந்து பயந்து பதிலளிக்கின்றள், பீபத்திமா..?? என்று. சொல்லிவிட்டு நின்ற பத்திமா, வேறு ஏதோ எண்ணத்தால்

காகிதக் காடு 123
உந்தப்பட்டு, ‘என்ரை பேர் பத்திமாதான்? என்று சொல்லி, தான் தவறுதலாகச் சொல்லிவிட்டதாக அபிநயித்துக்கொண்டு *ஊஹ"ம்! அதுதான் என்ரை பள்ளிக்கூடப் பேர்.அம்மா கூப்பிடுற பேர் பத்தி.எங்க அண்ணு இருக்கிருர் பாருங்கோஅவர்தான் தாடி வைச்ச பெரியண்ணு, அவர் என்னைப் பபா வெண்டு கூப்பிடுவார்.ஆன எங்கட முன்வீட்டிலை இருக்கிருன் பாருங்கோ குருவித்தலை-அவன்தான் நரேந்திரன்-அவன் என்னை ஊர்மிளகாய் எண்டுதான் கூப்பிடுவான். அது.அது .என்ரை பட்டப்பெயராம்.?
குழந்தைத்தனமான இந்த வெகுளிப் பேச்சு, இதயத் தைத் தொட்டு, மனதைக் கிளுகிளுக்கச் செய்கின்றது.
66எங்கே படிக்கிறீங்க? ெேகான்வெண்டிலே.?? 86என்னத்துக்கு வந்தனிங்க? நிேறைய நிறையப் படம் போட்ட புத்தகம் இருக்குப் பாருங்கோ, அந்தப் புத்தகம் எனக்கு வேணும்.சும்மா வேண் டாம்; காசு தாறன்.”
ஒரு சத நாணயங்கள் சிலவற்றைச் சட்டைப் பையி லிருந்து கலகலவென்று ஒலிக்க எடுத்து, அவதானத்துடன் மேசையின்மேல் வைக்கின்றள், பத்திமா.
துடுக்கு நிறைந்த குறும்புக்காரியான மாலினியின் உதடு களில் புன்முறுவல் அழகுகாட்டுகின்றது. எண்ணிப் பார்க் கிருள், காசை: பத்தே பத்துச் சதங்கள்!
-நிறையப் படம் போட்ட புத்தகமாமே! எதுவாக இருக் கும்?-மனதிற்குள் குழந்தைப் புத்தகங்களின் பெயரைச் சொல்லிப் பார்க்கின்ருள். திடீரென்று ஒரு பெயர் தட்டுப் படுகின்றது.
66அம்புலிமாமாவா??? பத்திமாவின் வதனத்தில் மகிழ்ச்சி ரேகைகள் மின்னு கின்றன. *ஓமோம்! அதுதான்.அந்தப் புத்தகம்தான்!? என்கின்ருள்.
**இப்ப அந்தப் புத்தகம் எல்லாமே முடிஞ்சு போச்சு. பின்னேரம் பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வாருங்கோ,

Page 65
124 பாதுகை
அப்ப புதுப் புத்தகம் வந்திடும் தாறேன். என்ன, வாறிங்
6TIT?’ W
பிேன்னேரம் டீச்சர் சொல்லித்தாற டான்ஸ் இருக்கு. அது முடிஞ்சதும் ஒரே ஓட்டமா வாறன்.நீங்க இருப்பீங் 56TT?""
، « p!99 மேசையின் மேல் போட்ட காசுகளைப் பொறுக்கி எடுத் துச் சின்னஞ் சிறு பிஞ்சு விரல்களின் கையில் வைக்கின்ருள், மாலினி. இளம் ஆட்டுக்குட்டியைப் போன்று துள்ளல் நடை போட்டு பத்திமா ஓட்டமெடுக்கின்ருள்.
அந்தச் சிறுமியைத் தட்டி விழுத்திவிடுவதைப் போன்ற ஓசையுடன் போர்ட்டிக்கோ’வில் ஒரு சைக்கிள் நிறுத்தப் படுகின்றது.
மாலினியின் காது கூர்மையடைகின்றது. சைக்கிள் சத்தத்தைக்கொண்டே, வருவது யாரென்று ஓரளவு ஊகிக் கின்ருள். அவளது ஊகம் பொய்த்துப்போய் விடவில்லை.
கறுப்புக் கபடின் லோங்ஸ் அணிந்து, அதற்கேற்ற டாம் கோட் புஷ்சேட் போட்டு, அனயாசமான புன்முறுவல் முகத் தில் ஒளி வீச வந்துகொண்டிருக்கிருன், அந்த ரோமியோ. தஐலயை மிகச் சிரத்தையுடன் வாரி, அதே மயிரைக் கர்ம சிரத்தையுடன் முன்பக்கம் அலங்கோலமாகக் குழப்பி விட் டிருக்கின்றன். இந்தப் பட்டணத்தில் தான்தான் ஒரேயொரு மன்மதன் என்கின்ற மன மமதையுடன், ஒருவிதப் புதுநடை நடந்து வந்து, மேசைக்கு முன்னல் நிற்கின்றன். சிகரெட் வாயிலிருந்து கைக்கு மாறுகின்றது. பருந்துக் கண்களும், மெல்லிய நாசியுமுடைய அவன் கரிய சிறிய அரும்பு மீசை யுடன் காட்சியளிக்கின்றன்.
உங்களிடம் ஷேக்ஸ்பியருடைய புத்தகங்கள் இருக் ???LDITوچ
வட்ட வட்டப் புகை சுழன்று சுழன்று மறைகின்றது.
அடிக்கடி வந்து வந்து போகின்ற உங்களுக்குத் திடீ ரென்று அப்படியென்ன சந்தேகம் வந்தது? என்று கேட்கத் தோன்றுகின்றது. கடமை உணர்வு வாய்க்குப் பூட்டிடுகின்

காகிதக் காடு 25
றது. **இருக்கிறது. ஷேக்ஸ்பியருடைய எந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவை?? - மூக்குக்கண்ணுடியைக் கழற்றி அதை ஒரு கையால் சுழற்றிய வண்ணம் கேட்கின்ருள்.
*ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகம்தான்!? குறும்புச் சிரிப்பு இதழோரம் தலைநீட்ட, உதட்டைக் கடித்து மடக்கி, அச் சிரிப்பைக் கொன்றுகொண்டே, *ஷேக்ஸ்பியருடைய புத்தகமென்றல் பல புத்தகங்கள் இருக் கின்றன. நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தின் பெய ரைச் சொன்னுல் தரலாம்?? என்கின்ருள் மாலினி.
எதையோ, எந்தப் பெயரையோ ஆழ்ந்து சிந்திப்பவ னைப் போல ஒருகணம் அந்த ரோமியோ காட்சியளிக்கின்றன்.
“gl’ ஞாபகத்திற்கு வந்துவிட்டது போலும் *ஷேக்ஸ்பியர் எழுதின மாடம் பவாரி.? ஒகோ? என்று வாய்விட்டுச் சிரித்துக் கொட்ட வேண் டும் என்று மணம் விரும்பினுலும் உணர்வு மனதிற்குக் கடிவாள மிடுகின்றது.
*ஒ! மேடம் பவாரியா?-ஷேக்ஸ்பியருடையதா? அது gai)&lo.’
*வேறு ஏதாவது ஸெக்ஸ் புத்தகங்கள்?-ஸ்ெக்ஸோ லோஜி மகஸின், புதிசு??
இெல்ஜல!?? குதிக்கால் சப்பாத்து டக் டக் என்று ஓசை எழுப்ப, உள் நுழைகின்ருள், ஒரு நாகரிக யுவதி. அவளுக்குத் தன்னிடம் ஏதோ வேலே இருக்கின்றது என்பதை, பார்த்த உடனேயே மாலினி புரிந்துகொள்ளுகின்றள்.
*ஹலோ!?? - கை குலுக்குவதற்காக வலது கையை முன்னே நீட்டுகின்ருள்.
மாலினியும் தெரிந்தவளைப் போல நடிக்கவேண்டி இருந் தது. கதிரையை விட்டு எழுந்துகொண்டே நடித்த வண்ணம் நகைமுகம் காட்டி வரவேற்றுக் கையைப் பற்றிக் குலுக் கினுள்.
8

Page 66
26 பாதுகை
உள்ஆடை தெரியும்படியான ஆடை அணி அலங்காரம் மார்புக் குவட்டை நிமிர்த்திக் கட்டிய குத்து மார்புகள் சாயம் பூசப்பட்ட உதடுகள் சாணகலம் வயிற்றின் மினுமினுப்புச் சதையைக் காட்டிக்கொண்டிருக்கும் இறக்கமான கழுத்து ஜாக்கெட் சிரிக்கும்போது பொய்ப்பற்களோ எனச் சந்தேகிக் கும்படியான போலித் தன்மையைப் பிரதிபலிக்கும் உண்மைப் பற்கள்; இளமைக் கவர்ச்சி; அயலார் கண்களைப் பறிக்க வேண்டுமென்பதற்காகச் சிரமப்பட்டுச் சிங்காரித்த அலங்கார பூஜிதையாகக் காட்சி தந்தாள், வந்தவள்.
வந்த அவளைப் பார்த்து நின்ற ரோமியோ குழைந்தான். அவளுடைய தேகம் பூராவுமே - கண்கள், கன்னம், புருவம், கழுத்து, இடை எல்லாமே - ஒரு கோணல் கோணி நிமிர் கின்றது.
68மை நேம் இஸ் மிஸ். இன்பராணி சூசை பில்லே. நான் தமில் கல்ச்சர் மன்றத்திலே செக்ரட்ரி. நாங்க எங்க மன்றத் தின் சார்பிலே ஒரு நாடகம் போடுருேம்.டென் ருப்பிஸ் டிக்கட் ஒண்ணு.பிளிஸ்.?-அறிமுகம் முடிந்து, வந்த காரியத்தையும் நேரடியாகவே சொல்லிவிடுகின்ருள், அந்த யுவதி.
ரோமியோ மெதுவாக நழுவிவிடுகின்றன். டிக்கட்டும் பணமும் கைமாறின. ேேச! பத்து ரூபா தண்டம் பரவாயில்லை; தமிழ் என்று சொன்னதற்காகக் கொடுத்ததாக நினைப்போம்.?
இன்னமும் பிசுபிசுவென்று வெளியே மழை தூறிக் கொண்டே இருக்கின்றது.
“ “ሠዐ6ogfፃu Juh!””
தட்டச்சு இயந்திரத்தின் சத்தம் சட்டென்று தடைப்படு கின்றது.
66என்னம்மா?-உதவியாளனுன மணியம் எழுந்து வந்து கேட்கின்றன்.
*சாப்பிட்டுவிட்டு வா. நேரம் ஒரு மணியாகிறது.?
ெேநீங்கள்.-?*

காகிதக் காடு 127
“எனக்கு இப்ப பசிக்கல்லே பிறகு சாப்பிடுகிறேன். முத லில் நீ போ..??
‘‘‘F fu utblomt...?? **இந்தா சாப்பிட்டுவிட்டு வரும்போது பூவிலிங்கம் புத்தக சாலைக்குப் போய், புது அம்புலிமாமா புத்தகமொன்று வாங்கி வா.என்ன?--காசு ஐம்பது சதத்தை எடுத்துக் கொடுக்கின் ருள், மாலினி.
மேசையை ஒழுங்குபடுத்தி, சில எழுத்து வேலைகளைச் செய்ய முற்படுகின்ருள்.
நேரம் ஊர்ந்து ஊர்ந்து கரைகின்றது. மணியம் திரும்புகின்றன். பசிக் களை மாறிவிட்ட முகத் தோற்றம். கையில் அம்புலிமாமா புத்தகம் ஒன்று.
நேரம் சாப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. சாப்பிட்டுத் தொலைக்கவேண்டுமே என்ற மனச் சலிப்புடன், சும்மா சாப் பிட்டதாகப் பேர் பண்ணுவோம் என்று நினைத்து இருக் கையை விட்டு எழுகின்றள், மாலினி. -
வெள்ளைக் காற்சட்டையும் கறுப்புக் கோட்டும் போட்ட ஒருவர் அப்பொழுதுதான் சாவதானமாக உள் நுழைகின்றர்.
நின்று நிதானித்துப் பார்க்கின்ருள், அவள். அவர் பெயர் இலங்கைநாயகம் என்று மணியத்தின் மூலம் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தாள். இவர் ஒருவகைப் பிரகிருதி. யாருடனும் எதுவுமே பேசமாட்டார்; எதுவும் வாய் திறந்து கேட்கவும் மாட்டார். வருவார்; வந்து, மேசைக்குச் சமீபமாகவுள்ள - வலதுகைப் பக்கமாகவுள்ள - மிகச் சமீப காலத்துப் பிரசுரங்களைக் கண்களில் பட்டென்று படும்படி பார் வைக்கு வைத்திருக்கும் ஷோகேஸிற்கு மிக அண்மையில் போய் நிற்பார் நீண்ட நெடுநேரமாக அந்தப் புதுப் புத்தக அலமாரியையே கூர்ந்து பார்த்த வண்ணம் வேரூன்றி விடு வார்.
ஆரம்ப நாட்களில் இந்த அதிசயத்தைப் பார்த்துப் பார்த்து மனதிற்குள் வியந்து ஆச்சரியப்பட்டவள்தான் மாலினி,
ஒருநாள்.

Page 67
8 L11 g/60) 45
புதிரின் முடிச்சு அவிழ்ந்தது. அன்று அவர் வந்து சென்ற நேரத்தின் பின், அவசரத் தேவையின் உந்துதலால் கட்டடத்தின் உட்புறம் போக வேண்டி நேர்ந்தது.
மாலினி அப்படிப் போகும்போது அவளது இருப்பிடத்தில் மணியம் அமருவது வழக்கம்.
திரும்பினுள்; மாலினி. விம்மிய ஸ்தன பாகத்திலிருந்து ஒதுங்கிய, அந்த அழகு நீல ஜோர்ஜெட்’ சேலையின் தாவணி நழுவியது. அது சரிந்து விழாதவாறு மோவாயால் அழுத்திப் பிடித்த வண்ணம் சரி செய்வதற்காக ஷோகேஸின் ஒரமாக நின்ருள். அப்பொழுது தற்செயலாக ஷோகேஸில் படிந்த அவளது பார்வையே, அவள் மூளையில் இதுவரை கிரகிக்கப் படாதிருந்த அந்தப் பெரும் புதிரை அவிழ்த்துவிடுகின்றது.
மேசையில் இருந்து வேலை செய்துகொண்டிருந்த மணியத் தின் ஒவ்வொரு அங்க அசைவுகளும் ஷோகேஸில் பதிக்கப் பட்டிருந்த கண்ணுடியில், நிலைக்கண்ணுடியில் தெரிவதைப் போல மிகத் தெளிவாகத் தெரிந்தன. ஒரு ரஸிக்கக்கூடிய கோணத்தில் தனது பிரதிபிம்பமும் இப்படித்தான் ரஸ்னைக் காட்சியாக விளங்கியிருக்குமோ என்ற வெட்க உணர்வு நெஞ் சத்தில் நிழலாடியது.
இந்த ரஸனைப் பைத்தியத்தின் விறகுத் தலை மூளைக்குள் இப்படியான கோனல்களைப்பற்றிய கோணங்கி விவகாரங்கள் எப்படி உதித்திருக்க முடியுமென்று ஒருகணம் நினைவு கேள் விக் குறியிடுகின்றது. wʼ முகம் சிவக்க, இதயம் கனக்க. ரஸிகர் இலங்கைநாயகம் ஷோகேஸை நெருங்க, அவ ளும் கோணல்களினதும், பிரதிபிம்பங்களினதும் உண்மையை அறிந்தவளாக உள்ளே செல்கின்ருள்.
-சீ, என்ன உலகம்! பெண்ணென்ருல் இந்தப் பைத் தியங்களுக்கு மியூஸியப் பொருளென்ற நினைப்பா?
மணி நாலையும் தாண்டி, நிமிஷங்கள் பெருக்கல் கணக்குப் போடுன்றன.

காகிதக் காடு 129 உத்தியோக பூர்வமான சில கடிதங்கள் எழுதி முடிக்க வேண்டி இருக்கின்றது. அவசர அவசரமாக அந்தக் கடமை யைச் செய்து முடிப்பதில் முனைகின்ருள், மிஸ். வேலுப்பிள்ளை. வழமையான வியாபாரம் கூட அன்று இல்லை. மழை காரணமாக இருக்கலாம். நியூ புக் ஹவுஸ் துங்கி வழிந்து கொண்டிருக்கின்றது.
சிலர் வருகின்றர்கள் போகின்றர்கள். அவ்வளவேதான்! நிமிர்ந்து பார்க்கின்ருள், மாலினி. சுவர்க் கடிகாரம் நாலு முப்பத்தைந்தைக் காட்டுகின்றது. கைக்கடிகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுகின்றள்.
'ஓ வேலை முடிய இன்னும் இருபத்தைந்து நிமிஷம் இருக்கு.?-வாய் அசையவில்லை; நெஞ்சம் நினைக்கின்றது.
ஒரு வின என்னும் கொக்கு, உள்ளத்தில் தவம் கிடக் கின்றது.
-பேத்திமா ஏன் இன்னமும் வரவில்லை? ஜன்னலால் வெளியே பார்க்கின்ருள். தலைக்குச் சுழ கைப் பிடித்துக்கொண்டு, இந்தத் துமியலில் கூட நான் பள்ளிக்கூடத் தாழ்வாரத்தில் ஒதுங்கப் போவது கிடையாது என்று விஷமம் பிடிக்கும் பாவத்துடன் ஒரு சிறுவன் நடந்து செல்லுகின்றன். அவனைத் தவிர வீதி குனியம்.
மேசையில் கிடந்த பென்சிலை எடுத்து, கை போன போக் கிற்கு ஏற்ப கோணல்மாணலாக ஒரு படம் வரைகின்ருள். பின்னல் அப் படத்தைக் கையால் கசக்கி, பக்கத்தே உள்ள குப்பைக் கூடைக்குள் வீசி எறிகின்ருள்.
-ஏன் இன்னமும் பத்திமாவைக் காணல்லை? மனம் அசை போடுகின்றது. கண்கள் அங்குமிங்கும் சுழன்று நோக்குகின்றன. வாசற்படிகளை யடுத்த கதவுப் பக்கத்தில் வெள்ளைத் துணி அசைந்தாடுவதைப் போல.
பேத்திமா??

Page 68
I 30 பாதுகை
கங்காருவின் வயிற்றுப் பைக்குள் இருந்துகொண்டு எட்டிப் பார்க்கும் குட்டியைப் போல, கதவு மறைவுக்குள் இருந்து தலையை நீட்டிப் பார்க்கின்ருள், பத்திமா.
*ஏன் வெக்கப்படுகிருய், பத்தி? இங்கே வாங்கோ? நாணம் கன்றிய முகத்துடன், உடலைச் சற்று நெளித்துப் பிகு பண்ணும் பாவத்துடன் பத்திமா நெருங்குகின்ருள். விநய மாக நடந்துகொள்ள விரும்பிய அவள், இலேசாகப் பெருமூச்சு விட்டுக்கொண்டே பத்துச் சத ஒற்றை நாணயங்களே மேசைக்கு மேலால் எட்டி நீட்டுகின்றள்.
எழுந்து, மேசையின்மேல் பாரத்தை அழுத்திச் சாய்ந்து கொண்டே, அம்புலிமாமா புத்தகத்தை அவளிடம் கொடுக் கின்ருள், மாலினி.
*காசு வேண்டாம் பத்தி. காசை நீங்களே வைச்சிருங்க. இன்னும் நிறையப் புத்தகம் வேணுமெண்டால் இங்கை இனி மேல் வாருங்கோ..??
சிறுமி யோசித்துக்கொண்டே நிற்கின்ருள். நீங்க. நீங்க..?? என்று இழுத்து, தன் மூன்றம் வகுப்பு நவமணி வாசகத்தின் எந்த வார்த்தைகளால் என்ற குழப்பத்தில் திக்கு முக்காடுகின்ருள்.
*பத்தி என்னை அக்கா வெண்டு கூப்பிடுங்கோ.? *ஏகும்?..?? *இந்த அக்காவுக்கு நீங்க தங்கச்சியாம்; இந்தப் பத்தித் தங்கச்சிக்கு நான் அக்காவாம்!.எங்கை.அக்காவெண்டு கூப்பிடுங்க, பாப்பம்?..”*
அரிவரி வகுப்பில் எழுத்துக் கூட்டி உச்சரிக்கப் பாடம் படிப்பிக்கும் வாத்தியாரம்மாவாக மாறி, பாடம் நடத்திப் பார்க் கின்றள், மாலினி.
சிறுமியிடம் மிரளும் பார்வை; வெருளும் தன்மை குருகில் சாம்பும் உருவமற்ற ஒருவகை உணர்ச்சி.
குழந்தையை மிரட்டிவிட்டோமோ? என்ற சந்தேகம் மாலினியின் நெஞ்சத்தில் தளிர்க்கின்றது.

காகிதக் காடு 131
*சரி சரி; போயிட்டு வாங்க பத்தி.போங்க...?-அன்பு கலந்த ஆதரவுடன் பரிவு காட்டி, புன்முறுவலுடன் விடை கொடுத்து அனுப்புகின்ருள், மாலினி.
பத்திமா சிலேட்டுப் புத்தகத்துடன் புதுப் புத்தகத்தையும் சேர்த்தனைத்தவாறு திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் போகின்ருள்.
மனதில் ஒரு திருப்தி; நிறைவு. வெளியே காரின் ஹார்ன் சத்தம். வேனிற்றி பாக்கையும் லேடீஸ் குடையையும் கையில் எடுத்துக்கொண்டு மாலினி வெளியேறுகின்ருள்.
காரியாலயக் கதவுகள் பின்னே பூட்டப்படும் ஓசை, வீதி ஓரத்திற்கு வருகின்ருள். வந்து, வாடிக்கையாகத் தினசரி வீட்டிற்குக் கொண்டுபோய் விடும் காரின் பின்பக்கக் கதவின் இணைப்பை அழுத்துகின்றள். காரின் கதவு திறந்து கொள்ளுகின்றது.
6 அக்கா...?? மாலினி குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்க்கின்றள்: -*பத்திமா? மதிலோரம் ஒதுங்கி நின்றுகொண்டிருக்கின்ருள், பத்திமா. உள்ளக் குழைவு கண்களில் கணிகின்றது.
மீண்டும், ** அக்கா1? என்கின்ருள், பத்திமா. குரலில் நட்பின் நெருக்கம்.
பத்திமா என் பத்தி.நீதானம்மா இந்த உலகத்தில் என்னைப் புரிஞ்சுக்கொண்ட ஒரேயொருத்தி!”
ஜென்மச் சாபல்யம் நிறைவேறிவிட்ட மனத் திருப்தி நெஞ்சில் நிறைய, பத்திமாவை நோக்கி அடியெடுத்து வைக் கின்ருள், மிஸ். வேலுப்பிள்ளை என்று அழைக்கப்படும் செல்வி மாலினி.
1962 -ܝ

Page 69
இந்நூலாசிரியரின் தண்ணீரும் கண்ணிரும்
-----
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் தமிழ்ச் சிறுகதை களேப் புதுமையும் அருமையும் பொருந்திய முறையில் எழுதும் எழுத்தாளர்கள் தோன்றியிருப்பது மகிழ்ச்சிக் குரியது. அத்தகைய ஒருவர் டொமினிக் ஜீவா. இவருடைய
பதினுேரு சிறுகதைகள் அடங்கிய தொகுதி இது.
- ༨.་:་ -மஞ்சரி
கதைகள் சமுதாய சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு எழுதப்பெற்றிருந்தாலும், ஆசிரியரின் தமிழ்கடை மிகவும் சக்தி வாய்ந்தது; கதைகள் இயற்கையாகவே கலை யம்சம் நிறைந்துள்னன. யாழ்ப்பாணத் தமிழரின் பேணுவி லிருந்து வரும் வழக்குச் சொற்கள் கதைக்கு மெருகு ஊட்டு
கிறது. ` * ?* `.ჭკა,
-ஹிந்து
இலங்கை சாகித்திய மண்டலத்தாரின்
பரிசு பெற்ற நூல் விலை ரூ. 2.00
தமிழ்ப் புத்த கால யம் 393, பைகிராப்ட்ஸ் ரோடு, சென்னை-14