கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2014.01-03

Page 1


Page 2
அம்மா
அம்மா, உன் றொட்டிக்கு உன் கோப்பிக்கு உன் தொடுகைக்கு
ஏங்குகிறேன்! ஒவ்வொரு நாளும் பிள்ளைப் பருவ நினைவுகள் என்னுள் எழுகின்றன நான் சாகும் வேளையில்
பெறுமதியுள்ளதாய் இருக்கவேண்டும் என் வாழ்வு! நான் சாகும் வேளையில்
பெறுமதியுள்ளதாய் இருக்கவே என் தாயின் கண்ணீர்!
என்றோ ஒருநாள் நான் திரும்பி வந்தால் உன் புருவங்களை மூடும்
முகத்திரையாக என்னை ஏற்றுக்கொள்! உன் பாதங்களால் ஆசீர்வதிக்கப்பட புல்லால் என் என்புகளை மூடிவி உன் குழற்கற்றையால் உன் ஆடையிலிருந்து தொங்கி நிலத்தில் இழுபடும் நூலால்
என்னை உன்னோடு சேர்த்துக் கட உன் இதயத்தின் ஆழத்தைத் தொ நான் அமரன் ஆவேன், கடவுள் ஆவேன்!
நான் திரும்பி வந்தால் உன் அடுப்புக்கு என்னை விறகாகப் பயன்படுத்து உன் கூரைக்கு மேல் துணி காயவிடும் கொடியாகக் கட
உன் ஆசியின்றி என்னால் எழுந்து நிற்க இயலாது எனக்கு வயதாகிவிட்டது தூக்கணாங் குருவிகளோடு சேர்ந் உன் கூட்டுக்கு வழிதேடிவர
என் பிள்ளைப் பருவத்து பிரபஞ் எனக்குத் திருப்பித் தா!
மூலம்: மஹ்மூத் தர்விஷ் தமிழில்: சோ.ப

ன்டும்
பட்ட
டு!
ட்டிவிடு! ட்டால்
-டு
து
ச ரகசியங்களை

Page 3
புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு பதியபண்பாடு
தாபம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
ஜனவரி-மார்ச் 2014
இதழ் 84 பிரதம ஆசிரியர்:
க. தணிகாசலம் தொ.பே. 021-2223629 ஆசிரியர் குழு:
சி.சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி
சோ. தேவராஜா அழ, பகீரதன் ஜெ. சற்குருநாதன் சி. இதயராஜா
த. கோபாலகிருஷ்ணன் பக்க வடிவமைப்பு:
சிவ. பரதன் ஓவியங்கள்:
முன்னட்டை-யோகி தொடர்பு:
ஆசிரியர், ஆடியபாதம் வீதி கொக்குவில்
மின்னஞ்சல்: thayakam_1@yahoo.com ISSN NO 2345-9492 அச்சுப் பதிவு:
வந்தனம் பிறைவேற் லிமிற்றட்
சில்லாலை வீதி பண்டத்தரிப்பு
தேசிய கலை இலக்கியப் பேரவை
நிதி அனுப்பல்களுக்கு : 'தாயகம் ஆசிரியர் குழு editorial board of thayakam சேமிப்பு கணக்கு இல 72361444 இலங்கை வங்கி, சங்கானை கிளை

உள்ளே...
கவிதைகள்
குழந்தை ம. சண்முகலிங்கம் சோ. பத்மநாதன் சி.சிவசேகரம் எஸ். பாதவன்
மு. மயூரன் மு. கீர்த்தியன் சு. தவச்செல்வன் தெ. தா. மீறலங்கோ.. டிப்டா*
11. மீந்ல பொதுசன நூலகம்
சிறுகதைகள்
பால்வர் பல் பாம்பு :
ஸ்ரீலேக்கா பேரின்பகுமார் அநாதரட்சகன் சு. தவச்செல்வன்
கட்டுரைகள்
சு. கைலாசபதி 4. சிவசேகரம் தெ. தா. மீந்லங்கோ4. சிவகரன் க. தணிகாசலம்
நா. சிறிமனோகரன்

Page 4
தலம்
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
மாற்றுச் சிந்தன
மாகாணசபை அமைக்கப்பட்ட பின் நிலைமைகளிலும், மக்கள் எதிர்கொள்ளும் . ஏற்படவில்லை. மத்திக்கும் மாகாணங்களுக்கும் இலங்கையின் இனமைய அரசியல் பேரில் இனவாதமாகவும் மேலும் வலுவடைந்து வளர்க்கப்படுகிறது. இது ஒடுக்கப்படும் தமிழ் | சிங்கள உழைக்கும் மக்களுக்கும், முஸ்லிம், சுபீட்சமான வாழ்வைத் தரப்போவதில்லை. மா வாக்களித்த மக்கள் இன்று இத்தகைய அர முதலாளித்துவ சமூக அமைப்பில் வாக்குச் எல்லைகளை இவை வெளிப்படுத்துவதாகவே அ
ஏற்றத் தாழ்வுகளும் ஒடுக்கு முறைகளும் பேணிவரும் ஒருநாட்டில் மக்கள் இன, பிளவுபட்டிருப்பதே ஆட்சியில் இருக்கும் அதி வாழ்வையும் தடையின்றித் தொடர்வதற்கான மேலும் வளர்த்து பலப்படுத்தி தமது அதிகாரத்
கையாள்கிறது. இதற்காக மக்களின் உணர்வே பழமையான பண்பாட்டுக் கருத்தியலையும், முறைமையையும் இலகுவான ஒடுக்கும் கருவி கருத்துத் திணிப்புடன் அரசு மக்கள் மீது
அடிமைத்தனங்களையும் மறைத்து அவர்களது மாயையை ஏற்படுத்துவதே இன்றுள்ள 'ஜனநாயக அரசியலால் பெறப்படும் பெரும்பான்மை வ இவற்றை மீறி அரசுக்கு எதிராக மக்கள் 6 முனைந்தாலும் கூட அரசின் உண்மையான எதிர்கொள்ள முன்வரும். இதுவே அரசின் படி இலங்கை அரசுக்கு மட்டுமல்ல ஒருசில பொருந்துவதாகும்.
இத்தகைய அரசகட்டமைப்பை ஒடுக்குமுன் வெறும் தேர்தல்கால வாக்களிப்பு அரசியலாக ப மேலாக இலங்கை மக்களைப் பிளவு படுத்தி ஆ விடுபடவேண்டும். இனவாத அரசியலுக்குள் இனம் மட்டுமல்ல, ஏனைய சிறுபான்மைத் ே எதிர்நோக்கும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் சுபீட்சமும் நிறைந்த வாழ்வைப் பெறமுடியாது பெரும்பான்மையான மக்கள் ஐக்கியப்படுவத

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
இதழ் 84
ஜனவரி-மார்ச்சு 2014
ஒன வேண்டும்
னரும் வடக்கின் அரசியல் பொருளாதார வாழ்க்கை அவலங்களிலும் மாற்றங்கள் எதுவும் ான அதிகார இழுபறியுடன் காலம் தொலைகிறது. எவாதமாகவும் அதற்கு எதிரான குறுந்தேசிய
தொடர்வதற்கான சூழலே தொடர்ந்தும் மக்களுக்கு மட்டுமல்ல பெரும் எண்ணிக்கையான
மலையக மக்களுக்கும் ஒடுக்குதல்களற்ற ஒரு காண சபைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையாக ரசியல் சூழலால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சீட்டு ஜனநாயகத்தின் குறுகிய பயன்பாட்டு புமைகின்றது.
ம் நிறைந்த இச்சமூக அமைப்பை தொடர்ந்து மத, வர்க்க, சாதி, பால் வேறுபாடுகளால் கார வர்க்கங்கள் தமது சுரண்டலையும், சுகபோக முன் தேவையாகும், இதனால் அப்பிளவுகளை தெ பாதுகாப்தற்கு வாய்ப்பாக பலவழிகளை அரசு வாடும் வாழ்வோடும் இறுகிக் கலந்து விட்ட அதனைக் காலத்துக்கேற்ப பேணிவரும் கல்வி யாகவே அரசு பாதுகாத்து வருகிறது. இத்தகைய திணிக்கும் ஏனைய ஒடுக்கு முறைகளையும் | ஒப்புதலுடனேயே ஆட்சி நடத்துவதாக ஒரு 5' வழிமுறையின் சாராம்சமாகும். இதற்கு இனவாத க்குகள் அரசுக்கு போலி நியாயமாக அமையும். பளத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்பட ஆதார அமைப்பான ஆயுதப்படைகள் அதனை யமைப்பும் அதன் செயல்முறையுமாகும்; . இது வேறுபாடுகளுடன் அனைத்து அரசுகளுக்கும்
றகளுக்கு உட்படும் மக்கள் எதிர்கொள்வது என்பது மட்டும் இருக்க முடியாது. அறுபது ஆண்டுகளுக்கு ட்சி செய்யும் இனவாத அரசியலில் இருந்து மக்கள் இறுகிப்போய் இருப்பதன் மூலம் தமிழ்த்தேசிய தசிய இனங்கள், உட்பட சிங்கள மக்களும் தாம் இருந்தும் விடுபட்டு சுதந்திரமும் சமத்துவமும் எனவே பொதுவான பிரச்சினைகளில் நாட்டின் ன் மூலம் குறிப்பான பிரச்சினைகளின் தீர்வை

Page 5
தாயகம்- இதழ் 84
இலகுவாக்கும் மாற்று அரசியல் வழிமுறை நோக்கி ம உள்ளது. -
"மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி” என கொள்ளும் போதுதான் சாத்தியமாகிறது. வரலாற்றில் உள்ளளன. அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களிடை! எல்லைக்குள் நின்று சிந்திக்கும் பொழுதுதான் ஒடுக். உணர்கின்றனர். இத்தகைய உணர்வு நிலையை சாதக பலத்தில் நம்பிக்கை கொள்ளும் அரசியல் மக்கள்ம் மக்களை ஒடுக்கும் அரசுகளுடன் இணைந்து தத்தமது எப்பொழுதும் குறியாக இருக்கும் என்பது இத்தல் மக்களிடம் பதியப்படவில்லை. பதிலாக தம்மை அரசியல் இங்கு தொடர்ந்தும் முனைப்படுத்தப்ப அதிகாரங்களைச் சார்ந்து வாழும் அடிமைத்தன அரசிய
பொதுநலவாய அமைப்புகள் போன்றவை கா நவதாராளவாத சுரண்டல் பொருளாதார பண்பாட் வாய்ப்பான களங்களாக உள்ளன. இவற்றிடமிருந்து பெறமுடியாது. போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட கடினமான அரசியல் பணியைச் செய்து இந்த நா ஏற்படுத்த வேண்டும். பதிலாக போர்நிலைக்கு 2 போர்களைத் திணித்து உலகெங்கும் கொலைக் கள அரசுகளையும் அவர்களைச் சார்ந்திருக்கும் அமைப் தீர்ப்பாளர்கள் தண்டனையளர்கள் என மக்களுக்கு அரசியல் வழிமுறையாகும். அவர்கள் தமது அத மேற்கொள்வார்கள். இது இனவாத அரசியலைப் ! உலகமய ஆதிக்கக் கருத்தியல் சார்ந்த அரசியலாகு அனைத்து மக்களையும் தொடர்ந்து அடிமைத்தனங்க
இலங்கை மக்கள் இன்று தமது யதார்த்த வாழ்நி சஞ்சரிக்க வைக்கப் படுகின்றனர். கட்டணம் செலுத்த வேகமாக உயரும் அடுக்கு மாடிக்கட்டிடங்க அபிவிருத்தியின் அடையளங்களாக காட்டப்படுகி அவர்களது உழைப்பையும் வாழ்வையும் சூறையாடு செலவுத் திட்டத்தில் விலைகளை அதிகரிப்பது வேண்டியளவு விலைகளை ஏற்றுவது இன்றைய 1 வேலை நிறுத்தங்களாலும் அதிகரிக்க முடியாத ஒன்று பல அத்தியாவசியத் தேவைகள் படிப்படியாக தனிய மறிவருகின்றன. மக்கள் அனைவரையும் பாதிக்கும் ! அமைப்புக்கு எதிராக சிங்கள விவசாயிகள் கொழு நின்று தமது எதிர்ப்பைக் காட்டினர். இது மட்டும் ே திணிக்கப்படும் நுகர்வுக் கனவுகளில் இருந்து விடு! பண்பாட்டுச் சூழலை மாற்றி அமைப்பதற்கான மாற். வேண்டும்.
உலகமய நவதாராள வாத பொருளாளதார, பண் மேற்கு நாடுகள் உட்பட உலகெங்கும் மக்கள் வீதிகள் இத்தகைய எழுச்சிகளைக் கண்டு அச்சமடையும் | அதிகார வர்க்க அரசுகளும் இவற்றைத் திசை திருப் இவற்றுக்கு எதிராக அடிப்படை சமூக மாறுதல்க கற்றலையும் விழிப்புணர்வையும் பெற்று ச அணிதிரளவேண்டும்.

ஜனவரி மார்ச் 204
க்கள் முன்செல்வது காலத்தின் தேவையாக இன்று
Tபது மக்கள் தமது பலத்தை இவ்வாறு உணர்ந்து பல விடுதலை எழுச்சிகள் இதனை உறுதிப்படுத்தி
ய காலம் காலமாக திணித்துவரும் பிளவுகளின் கப்படும் மக்கள் பலவீனமானவர்களாக தங்களை மாக வைத்து அன்னிய, அயல் நாடுகளின் ஆதிக்க து திணிக்கப்படுகிறது. அந்நிய ஆதிக்க சக்திகள் ( அதிகார நலன்களைப் பேணிக்கொள்வதிலேயே னை பேரழிவுகளுக்குப் பின்னரும் பட்டறிவாக மிதித்தவர்களது கால்களில் தொடர்ந்து வீழும் படுகிறது. இது விடுதலை அரசியலை அல்ல, 1லையே மக்களிடம் மேலும் வளர்க்க உதவுகிறது.
லனித்துவத்தின் தொடர்சியாக நவகாலனித்துவ டு உறவுகளை தொடர்ந்து பேணிக்கொள்வதற்கு 5 ஒடுக்கப்படும் மக்கள் எத்தகைய பயனையும் ட வேண்டும் என்பது நியாயமானது. அதற்கு ட்டு மக்களே தீர்ப்பளித்து தண்டிக்கும் சூழலை உலக நாடுகளை இழுத்துச் சென்று மக்கள்மீது எங்களை உருவாக்கும் ஏகாதிபத்திய பயங்கரவாத புக்களையும் நம்புவது தவறாகும். அவர்களையே நம்பிக்கை அளிப்பது மக்களை ஏமாற்றும் ஒரு திகார வர்க்க நலன்களுக்கு ஏற்பவே இதனை போலவே மக்கள் இலகுவாக ஏற்றுக்கொள்ளும் ம். இது பேரினவாதத்தை மேலும் பலப்படுத்தி ளில் தள்ளுவதற்கே வழிவகுப்பதாக அமையும். லையைக் கண்டுகொள்ளாத வகையில் கனவுலகில் நீதிப் பயணிக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளும், ரூம், மின் விளக்குகளின் அலங்காரங்களும் ன்றன. நுகர்வுக் கனவுகளில் மக்களை ஆழ்த்தி ம்ெ நிகழ்வு நடந்தேறுகிறது. பட்ஜட்டில் - வரவு
அன்றைய நடைமுறை, நாளும் பொழுதும் நடைமுறை. ஆனால் சம்பள அதிகரிப்பு மட்டும் மாகவே தொடர்கிறது. கல்வி, மருத்துவம் போன்ற பார்மயமாகி சாதாரண மக்களுக்கு எட்டாதவையாக இத்தகைய நவதாராளவாத பொருளாதார சுரண்டல் கம்பு புகையிரத நிலையம் முன் கோவணத்துடன் பாதுமானதல்ல. அனைத்து இன மக்களும் தம்மீது பட்டு தம்மை ஒடுக்கும் அரசியல் பொருளாதாரச் று அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றினைந்து நிற்க
2ம் நிகழ நடை, சம்பள மருத்துவ
என்றைய நடந்தேன்;
பாட்டு, சூழலியல் தாக்கங்களுக்கு எதிராக இன்று ரில் இறங்கி போராடும் நிலை உருவாகி வருகிறது. ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றிற்குச் சார்பான பி மழுங்கடிக்கும் செயலைச் செய்து வருகின்றன. ளை ஏற்படுத்தும் விடுதலை அரசியல் பற்றிய கல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக மக்கள்
பொதுசன நாலகம்
-- பட12 -

Page 6
தாயகம்" இதழ் 84
மண்டோலா: திரித்துக் கா படிமங்களும் பாடங்களும்
ஒத்தால் பிரிக்கா கொன்னா உலகில் பில் 6
எவர் ஒருவரை மெச்சுகிறார் என்பது அவ ஏகாதிபத்திய உலகின் தலைவர்கள் மண்டேலான சிறிது ஆழ விசாரிக்க வேண்டியிருக்கிறது. மேற்குல மண்டேலா. அதிலும் சிலபகுதிகளைப் பூசி மெழுகி
மண்டேலா தனது மக்களுக்காகச் சிறை செ சிறையிற் கழித்துத் தன்னை அநீதியாகத் தண்டித்தல் ஒரு மகாத்மா. சொல்லப்போனால் ஒரு கறுப்பு “மக வேறு தலைகளிலும் அணிவித்திருக்கிறார்கள். பலருடையை மனதில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது இறங்கவில்லை, ஏனெனில் அவர் யாரும் எட்ட ( பின்பு வேறு கடுங்காவல் சிறைகளிலும் அடைப் விட வேறு வழியில் தென்னாபிரிக்கவில் வெள்ளை வலியுறுத்தியவர் மண்டேலா.
மண்டேலா சிறை சென்ற பிறகும் ஆபிரிக் பாதையைத் தொடர்ந்தது. தென்னாபிரிக்கா முழு பொருளாதாரம் மட்டுமல்லாது ஆயுத வலிமையி மட்டுமல்லாது ஆபிரிக்காவின் தெற்கில் இருந்த சுயாட்சி பெறுவதற்குத் தடையாக இருந்த நாடாகத்
அந்தப் பிராந்திய மேலாதிக்க அரசுக்கு அபெ பிரித்தானிய ஆட்சியிலிருந்து பல ஆபிரிக்க தென்னாபிரிக்காவிற்கு மிரட்டலாக அமையாதட போர்த்துக்கேயக் கொலனிகள் போர்த்துக்கலில் 1 பெற்ற விடுதலை தென்னாபிரிக்காவுக்கு ஒரு ே கனிவளத்தின் மீதான மேற்குலகின் ஆதிக்கத்தை
அங்கோலாவில் உள்நாட்டுப் போரில் தென்னாபி படைகள் குறுக்கிட்டுத் தென்னாபிரிக்காவை மேலாதிக்கத்திமிர் அடங்கியது.
19 7 0 களின் சர்வதேசச் சூழலும் தென்ன விளையாட்டும் உட்படப் பல்வேறு துறையிலும் ! பிரித்தானியாவும் மறைமுகமாகவே தென்னாபிரிக் அரசாங்கம் தனது நிறப்பாகுபாட்டுக் கொள்ை ஏற்கக்கூடிய சூழல் கனிந்து வந்தது. ஆயினும் ஆஃப்கானிஸ்தானில் அதன் தோல்வியாற் துரி தென்னாபிரிக்காவில் ஒரு அமைதியான ஆட்சி மா தென்னாபிரிக்கப் பிரதமர் டிக்ளேக்கிற்கும் இடை கறுப்பினத்தவரின் கைகட்கு ஆட்சி மாறுவது ஏற் என்று கூறப்பட்டாலும் ஆபிரிக்க தேசிய கா. மாருக்குமிடையிலான சமரசங்களில் ஆபிரிக்கத் தே
சிறைமீள்வதற்கு ஒரு மாதம் முன்பு தென் நிறுவனங்களின் தேசியமயத்தையும் விவசாய நில உறுதியாகப் பேசிய மண்டேலா, சிறை மீண்ட மட்டுமல்லாது நவதாராளப் பொருளாதாரத்தை உலகவங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திட

ஜனவரி மார்ச் 2014
ட்டப்படும்
ரைப்பற்றி நமக்குச் சிறிது கூறும். எனவே தான் வ மெச்சுகிற போது, மண்டேலாவைப் பற்றி நாம் கத்தலைவர்கள் மெச்சுகிற மண்டேலா சிறை மீண்ட இக்காட்சிப்படுத்தப்படுகிற ஒரு மண்டேலா.
ன்று தனது வாழ்நாளின் முக்கியமான பகுதியைச் பர்களை மன்னித்துத் தவறுகளை மறக்க ஆயத்தமான காத்மாகாந்தி”. இந்த மாதிரியான காந்திக் குல்லாவை மண்டேலா ஒரு அகிம்சைவாதி என்ற எண்ணம் 5. 19 6 4 க்குப் பின்பு மண்டேலா வன்முறையில் இல்லாத தொலைவில் முதலில் றொபென் தீவிலும் ட்டிருந்தார். ஆனால் ஆயுதமேந்திப் போராடுவதை = நிறவெறி ஆட்சியை முறியடிக்க இயலாது என்பதை
க தேசிய காங்கிரஸ் தனது ஆயுதப் போராட்டப் ஐ ஆபிரிக்க கண்டத்திலும் இருந்து வந்த வலிய லும் முன்னிலையில் நின்றது. தென்னாபிரிக்காவில் அனைத்துக் கொலனிகளிலும் கறுப்பின மக்கள் தென்னாபிரிக்காவைக் கொள்ளலாம். மரிக்காவும் பிரித்தானியாவும் ஆதரவாக இருந்தன. நாடுகள் விடுதலை பெற்ற போதும். அவை டி மேற்குலகு கவனித்துக்கொண்டது. எனினும் 974 இல் ஏற்பட்ட சனநாயகப் புரட்சியையடுத்துப் பரதிர்ச்சியாயிற்று. எனினும் தென்னாபிரிக்காவின் ந் காக்கவேண்டி, சோவியத் செல்வாக்கிற்குட்பட்ட பிரிக்கா நேரடியாக ஈடுபட்டது. அங்கு கியூபாவின் - முடியடித்த பின்னரே தென்னாபிரிக்காவின்
Tாபிரிக்காவுக்குப் பாதகமாயிருந்தது. வணிகமும் தென்னாபிரிக்கா தனிமைப்பட்டது. அமெரிக்காவும் காவுக்குக் கைகொடுத்தன. எனவே தென்னாபிரிக்க கயைக் கைவிடவும் சர்வசனவாக்குரிமையையும் , சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரச் சரிவு தமடைந்தது. இப்பின்னணியிலேயே மேற்குலகு Tற்றத்திற்கு உதவ முன்வந்தனர். மண்டேலாவுக்கும் யே பேச்சுக்கள் நடந்தன. சில உத்தரவாதங்களுடன் கப்பட்டது. அது கறுப்பினத்தவர்கட்கு ஒரு வெற்றி ங்கிரஸுக்கும் தென்னாபிரிக்கப் பெருமுதலாளி சிய காங்கிரஸ் ஏமாந்துவிட்டது. ) னாபிரிக்கச் சுரங்கங்கள் உட்படப் பெரு வணிக பங்களை நிலமற்றவர்கட்குப் பகிர்வதைப் பற்றியும் பிறகு அக்கொள்கைகளைக் கைகழுவினார். அது பும் ஏற்பதாகப் பகிரங்கமாக அறிவித்தார். இது மும் பன்னாட்டுக் கம்பனிகளிடமும் அவருடைய
4

Page 7
- தாயகம்- இதழ் 84.
சரணாகதியாகும். இது தென்னாபிரிக்காவின் வெள் துரோகமுமாகும்.
எனினும் மண்டேலாவினுள் இருந்த விடுத இடையிடை வெளிக்காட்டத் தவறவில்லை. கள் போன்றோருடனான நட்புணர்வையும் மதிப்ை அதுவுமன்றிச் சில சர்வதேச நிகழ்வுகள் பற்றி அ பேசினார். மேற்குலகு அதை வெறுத்தாலும் அவரு அவருடைய தேசிய சர்வதேசிய நற்பெயரின் கார் நமக்கும் நமக்குப் பின்பு வரவுள்ளோருக்கும் கா அகிம்சாவாதியும் பகைவனுக்கும் அருளும் பெ நெஞ்சருமாக இருப்பார். ஒரு ஆயுதப் போராள காட்டமாட்டார்கள்.
எனவே மண்டேலாவை ஒரு மாமனிதராகக் வகையினர் ஏகாதிபத்தியச் சார்பு நோக்கில் அதனுட என்ற படிமத்தை முன்னிறுத்துவர். மற்ற வகையினர் குறைபாடானதாயினும் அதை இயலுமாக்கிய ஒரு கொண்டாடுவர். பின்னதே உண்மையான மண்டே
மண்டேலாவின் தவறுகளைத் தென்னாபிரிக்க இயலும். மண்டேலாவே ஒருமுறை கூறியதுரே பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறுமானால், லெ போராடியதுபோல ஆபிரிக்கத் தேசிய காங்கிரசையு.
தென்னாபிரிக்கா நமக்கான பாடங்களையும் ெ ஏகாதிபத்தியத்தின் மீது நம்பிக்கையுடன் பெறும் புதைந்திருக்கும் என்பதே அப்பாடமாகும்.
டேவிட் கமானைத் தமிழ்த் தலைவர்கள் தலை நினைவுகூருவது நல்லது
வேதனைப் பற
5. எழுது தளத் தாக் மேலான
ஆற்றல்மிகும் வேதனைதரும் பறவைகள் இந்த 'ஹெலி'கள் மீண்டும் என் தலைக்கு மேலான இலக்குக்களைத் தாக்குகின்றன. என் எழுது மேசையோடு அமர்ந்தபடி நான் குலுங்குகிறேன் எனது குறிப்பேட்டை நோக்கிக் குனிந்து நடுங்கும் என் பேனாவைப் பற்றுகிறேன். அவை அறியலாம் என்றவாறு. உள்ளோடும் ஒரு தடங்காணியை, ஒரு சிவப்பு லேசர் சைகையை அவை அறியலாம் என்றவாறு. அவர்கள் இன்னொரு குண்டை

ஜனவரி மார்ச் 2014
ளையரல்லாத மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய
லைப் போராளி தனது ஏகாதிபத்திய எதிர்ப்பை கற்றோ, யாஸிர் அரஃபாத், முசும்மர் கடாஃபி பயும் அவர் வெளிக்காட்டத் தவறவில்லை. வர் தெளிவாகவே ஏகாதிபத்தியத்தை மறுத்துப் டைய விட்டுக்கொடுப்புக்களின் பின்னணியிலும் ணத்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ட்சிப்படவுள்ள மண்டேலா ஒரு அப்பழுக்கற்ற பருமனத்தவரும் நடந்ததை மறந்துவிடும் நன் யும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளரையும் நமக்குக்
காண்போரில் இரு வகையினர் இருப்பர். ஒரு ன் தமது இணக்கத்தை நியாயப்படுத்த மண்டேலா தென்னாபிரிக்க மக்கள் பெற்ற வெற்றி எவ்வளவு 5 மனவுறுதி மிக்க போராளி என்ற படிமத்தைக் 3ாவின் படிமம். ாவின் மக்கள் போராட்டங்கள் மட்டுமே திருத்த பால ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் மக்களின் பள்ளை இன ஒதுக்கற்காரர்களை எதிர்த்துப்
ம் மக்கள் எதிர்த்துப் போராடவேண்டும். கொண்டுள்ளது. எந்த விடுதலைப் போராட்டமும் வெற்றிகளுள் பெருந் தோல்விகளின் வித்துக்கள்
மற்தூக்கிவைக்கும் இவ்வேளையில் நாம் அதனை
வைகள்
ஓடவிடுகின்றனர். இம் முறை தன் அறைகளைக் களையவும் வெளிகள் துயரும் வேதனையும் நிரப்பிய கரிய தாங்கிகளாகவும் எளிதான இலக்குக்களாகவும் மந்த வேக வாகனங்களாகவும் ஆகிவிட்டன போல அவற்றை வெறிதாக்க முந்தும் என் வயது முதிரும் இதயத்திற்கு மேலாக அது வட்டமிடுகிறது.
ஏலிஷா பொராற் (Elisha Porat) சமாதானத்துக்கான இஸ்ரேலியக் கவிஞர்

Page 8
தாகம் இதழ் 34
விடுதலை
எனது தாய் நாடே உனது திரிபு படு கனவுகளால் வடிவமைக்கப் பட்ட மாயப் பேயுருவாம். அச்சத்தில் இருந்து விடுதலைஇந்த விடுதலை ஒன்றினையே உனக்காக நான் வேண்டி நிற்கிறேன்;
எனது தாய் நாடே உன்னை உற்று நோக்கியவாறு "வா” எனச் சைகை காட்டி அழைக்கும், எதிர்காலத்தின் அழைப்பினைக் கண்டுகொள்ள விடாது. உனது தலையினை வளைத்து அழுத்தியும், முதுகினை மடக்கி முறித்தும், கண்களைப் பொத்திக் குருடாக்கியும் நிற்கின்றயுக யுகாந்திரங்களின் சுமைகளிலிருந்து விடுதலைஇந்த விடுதலை ஒன்றினையே உனக்காக நான் வேண்டி நிற்கிறேன்;
எனது தாய் நாடே இடர் பல வரினும், எவற்றுக்கும் அஞ்சாது, வீரம் மிக்க துணிவொடு செயற்படும் சத்தியத்தின் வழியினைக் காட்டி நிற்கும், அந்த விடிவெள்ளி மீது நம்பிக்கை வைக்காது, இருள் நிறை இரவின் அசைவுறு அமைதியுடன் உன்னைப் பிணைத்துக் கொண்டு கிடக்கும் உனது ஆழ்துயில் தளைகளிலிருந்து விடுதலை
இந்த விடுதலை ஒன்றினையே உனக்காக நான் வேண்டி நிற்கிறேன்;
எனது தாய் நாடே 'ஊழ்வலி' என்றதோர் அராஜகத்திடமிருந்து விடுதலைஉனது கப்பலை உந்தித் தள்ள உதவும்

ஜனவறார்ச் 204
-வங்கக் கவி ரபீந்திரநாத் தாகூரின் ஆக்கங்களிலிருந்து ஒரு கவிதை தமிழில் குழந்தை சண்முகலிங்கம் பாய்ச் சேலையினை செல்திசை தன்னில் உறுதியற்றிருக்கும் குருட்டுக் காற்றிடம், பல மிழந்த நிலையில் விட்டுக் கொடுத்துவிட்டும்; மரணத்தை ஒத்த விறைத்த பிடிவாதமும், அக்கறை சற்றேனும் அற்ற அலட்சிய அகம்பாவமும் குடிபுகுந்திருக்கும் கையொன்றிடத்தில் உனது சுக்கான் பிடியினைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டும்; 'விதியே' என்று வாளாதிருக்க வைக்கும்ஊழ்வலி' என்றதோர் அராஜகத்திடமிருந்து விடுதலைஇந்த விடுதலை ஒன்றினையே உனக்காக நான் வேண்டி நிற்கிறேன்.
எனது தாய் நாடே கூத்தாட்டு பொம்மைகளது உலகமொன்றில் வாழ்ந்திடும் நிந்தையிலிருந்து விடுதலைஅறிவு சாராத சம்பிரதாயச் சரடுகளால் முடுக்கி விடப்பட்டு, கருத்தற்ற பழக்கதோச நடத்தைகளால் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும், கூத்தாட்டு பொம்மைகளின் உலகமொன்றில் வாழ்ந்திடும் நிந்தையிலிருந்தும், வாழ்வின் ஒருகணப் பொழுதினை ஒப்புப் போலியாக, விகடப் பாவனை செய்து காட்டுவதற்கு பொறுமை மிக்க கீழ்ப்படிவோடு பெரும் பொழுதைப் போக்கி நிற்கும் வெற்று உருவங்களைக் கொண்ட கூத்தாட்டு பொம்மைகளது உலகமொன்றில் வாழ்ந்திடும் நிந்தையிலிருந்தும், விடுதலைஇந்த விடுதலை ஒன்றினையே உனக்காக நான் வேண்டி நிற்கிறேன்
oest

Page 9
கிணபதியின் வீட்டிலிருந்து பிரதான வீதி நூறு மீற்றர் தூரம் இருக்கும். வீட்டிலிருந்து புறப்படும் போது விரிந்த பெரிய பஞ்ச வர்ணக் குடையினை இழுத்துச் சுருக்கினார் சுருக்கிய குடையை தாங்கலாக ஊன்றியபடி பிரதான வீதியில் ஏறினார். அங்கு வாகனங்களால் விரட்டப்பட்ட புழுதிகள் கணபதியின் எட்டு முழ வேட்டி யிலும், சட்டையிலும் ஒழிந்து கொண்டன.
மதியப்பொழுது வைகாசி வெய்யில் குளித்தது. அன்று வெய்யில் வழமையை விட சற்று அதிகமாகவே இருந்தது. சாதாரண கண்களால் சூழலைப் பார்க்க முடிய வில்லை. கணபதியின் தலையில் ஏறிய சூடு நெற்றி வழியாக வியர்வையாக எழுந்து மண்ணில் வீழ்ந்தது. மீதமிருந்த வியர் வையை கழுத்தின் முன்பக்கமாக தொங்கிய சால்வையை எடுத்து துடைத்துக் கொண் டார் நெற்றியில் இருந்த மூன்று திரு நீற்றுக்கீறு ஒரு கீறாகியது. ஐம்பது மீற்றர் தூரத்தில் இருந்த பேருந்து தரிப்பிடம் நோக்கி நடந்தார். இராஜேஸ்வரி நினைவுப் பேருந்து தரிப்பிடம் புதிய தோற்றத்தோடு கம்பீரமாக நின்றது.
கணபதி வெய்யிலில் தப்பித்து தரிப் பிடத்திற்குள் நுழையும் பொழுது அது அவருக்கு கோவர்த்தன மலையாகத் தோன் றியது. அங்கு நின்ற நான்கு பேரில் ஒருவர் இவரை இனங்கண்டார்
"கணபதியே, வா. வா. துலைக்கே.?"
 

Jüෂුෂී(Jüඹීගඕ0......
ரீலேக்காபேரின்பகுமார்
"ஒ. இராசுவே. வங்கிக்குப் போக வேணும்."
"கணக்க வைச்சிருக்க கள்ளனுக்குப் பயம் தானே.?”
"போடாப்பா. கொண்டுபோய்ப் போட என்ன கிடக்கு. பென்சன் காசு எடுக்க வேணும் அதுதான் ஒருக்கா வெளிக்கிட்
டனான்."
'பிந்திப் போச்சு போல.?"
"ரண்டு மணி வரைக்கும் எடுக்கலாம். இண்டைக்கெண்டு தோட்டத்திலை மினக் கெட்டுப் போட்டன். நீ எங்க போறாய்..?”
"இந்தக் கால் வைத்தியத்திற்குத் தான் போறன்."
அங்கு நின்ற மூன்று பெண்களும் கணபதியைப் பார்த்து மரியாதை கலந்த புன்முறுவலைச் சிந்தியபடி ஒரமாய் ஒதுங்கினர் இவர்கள் ஊர்ப் பள்ளிக் கூடத்தில் இவரிடம் படித்த பெண்கள்
தூரத்தில் சிற்றுார்தியொன்று வருவது தெரிந்தது. எல்லோரும் தரிப்பிடத்தை விட்டு வெளியே வந்தனர். சிற்றுார்தி கீழே விழுந்து விடும் போல் வீதியோரமாகச் சரிந்து வந்தது. அதன் மிதிப்பலகையில் நாலைந்து பேர் தொங்கிக் கொண்டு வந்தனர்.
"என்ன இராசு. உவ்வளவு சனத்தோடை
வருகுது..?"

Page 10
"போவம். கணபதி. அடுத்த வான் இன்னும் அரைமணித்தியாலம் கழிச்சுத்தான் வரும்.?”
சிற்றுார்தி தரிப்பிடத்தில் மெதுவாக வந்து நின்றது. மிதிபலகையில் நின்ற நால்வரும் கீழே இறங்கினர்
அதில் நீளவாக்கில் கோடு போட்ட சட்டையும் கை இடுக்கில் கறுத்தப் பையினையும் இடது கையின் நடுவிரலில் பணத்தாள்களை முன் இருமுனையும் பின் னங்கைப்பக்கமாக விட்டுச் சுற்றி இருந் தவரின் தோற்றம் அவர் நடத்துனர் என இலகுவாக இனங்காணமுடிந்தது.
"ஏறுங்கோ. ஏறுங்கோ. உங்களுக்கு நான் சீற் தாறன்."
வழிநடத்துனர் பெண்கள் மூவரையும் பலவந்தமாக ஏற்ற முற்பட்டார். அவர்கள் ஏற முடியாது திணறினர்
"என்னதம்பி. என்னெண்டு. ஏறுறது."
வழிநடத்துனர் மளமளவென சிற்றுார்தி யின் பின்பக்கமாக வேகமாகச் சென்று யன்னல் ஊடாகத் தலையை உள்நுழைத்து,
"இஞ்ச. எவ்வளவு இடங்கிடக்கு..! வாங்கோ இஞ்சாலை. வான் ஒடுறபக்கம் திரும்பி நில்லுங்கோ."
சிற்றுார்தியில் அடையப்பட்டவர்கள் வியர்த்து விறுவிறுத்து கைதிகள் போலி ருந்தனர் வழிநடத்துனர் ஒரு மாதிரியாக பெண்கள் மூவரையும் சிற்றுார்தியில் ஏற்றி விட்டார்
“என்ன. தம்பி. உப்பிடி ஆக்களை
அடையிறாய். கால் வைக்கேலாமல்
கிடக்கு ”
சிற்றுார்தியின் நடுவில் நின்றவர்
கோபமாகக் கத்தினார்.
"ஆர். உங்க கத்துறது. கீழை இறங்கு. கீழை இறங்கு."
வழிநடத்துனரின் சத்தத்தில் அவர் அமைதியாகிப் போனார் என்ன செய்வ தென்ற ஏக்கத்தோடு பேருந்துத் தரிப்பி டத்திற்கும் சிற்றுார்தியின் வாசலுக்கும்

ஜனவரிமார்ச் 204
இடையில் நின்ற கணபதியையும் இராசு வையும் உள்ளே தள்ளி ஏற்றினார். அவர்கள் நாலு பேரோடு இணைந்து மிதிபலகையில் நிற்க சிற்றுார்தி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.
வழிநடத்துனரும் மிதி பலகையில் தொங்கிக்கொண்டே "அண்ணை, பின் னாலை சீற்ரிபி வருகுது. எடுங்கோ. எடுங்கோ. ”
சாரதி கண்ணாடியில் அதை உறுதிப் படுத்திக் கொண்டு வேகத்தை அதிகரித்தார் சிற்றுார்தியின் நகர்வோடு பயணிகள் சுற்றி இருந்தவர்கள் மீது சாய்ந்து வீழ்ந்தனர். ஆண் பெண் பேதம் அங்கு இருக்கவில்லை. ஒருவர் வியர்வை மற்றவரில் விழும் அளவில் LIL 600TLD.
இருக்கை கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் சிற்றுார்தியில் போடப்பட்ட மெல்லிசைப் பாடலைக் கேட்டுக்கொண்டு வீதியை ரசிப்பதும் நிற்பவர் படும் தடுமாற்றங்களை ரசிப்பதுமாக இருந்தனர். போக்குவரத்து நேரத்திலை பாடலைக் கேட்பதும் ஒரு தனிச்சுகம். கணபதி ஒரு கையினால் குடையினைப் பிடித்துக் கொண்டு மறுகையினால் வாசலின் இரும்புச் சட்டகத்தை இறுகப் பிடித்துக் கொண்டார்
"ஐயா. ஆட்கள் நிற்க இடமில்லை. உங்களுக்கு ஒரு குடை. தாங்கோ இறங்கேக்கதாறன்.”
வழிநடத்துனர் குடையினைப் பறித்து சிற்றுார்தியின் மேலே போட்டார் கண பதிக்கு வந்த கோபத்தை வெளிப்படுத்த முடிய வில்லை. அங்குமிங்குமாக இடிபட்டு அவரின் வெண்ணிற ஆடை கசங்கியது. அவரின் பேத்தி வீட்டிலை இருந்து புறப் படும் போது, "தாத்தா பொடியன் மாதிரி இருக்கிறியள்"எண்டு சொல்லி வழியனுப் பேக்கை அவர் எவ்வளவு சந்தோசப்பட் டார்.
கணபதி தனது உடையை ஏற இறங்க பார்த்துவிட்டு, "இனி சாண் போனால் என்ன? முழம்போனால் என்ன? உயிர் போனால் என்ன?’ என மனதிற்குள் புறுபு றுத்தவாறு மிதி பலகையை விட்டு முடிந்த வரை உள்ளே நுழைய முயற்சித்தார்

Page 11
/
"ஏன் ஐயா தள்ளுறியள். சலிப்புடன் கேட்ட இளைஞனைப் பார்த்து சிரித்துவிட்டு ஒரு மாதிரியாக உள்ளேநுழைந்து விட்டார்
அந்த நேரம் பார்த்து, சாரதி இடது பக்கக் கண்ணாடியைப் பார்த்து கத்த ஆரம்பித்தார் "அட. தம்பி, புட்போட்டிலை நிக்கிற வையளை உள்ள தள்ளடா. சந்தியிலை பொலிஸ் நிக்குது. பைன் அடிக்கப் போறான். உள்ளதள்ளு. கெதியாத்தள்ளு."
ஏற்கனவே நொந்து போய் தொங்கி யவர்கள் உள்ளே திணிக்கப் பட்டு அசைவ தற்குக் கூட இடமின்றி ஒற்றைக்காலில் நின்றனர்
இப்பொழுது கணபதியைச் சுற்றி நான்கு பெண்கள் வாழ்க்கையில் அதிக ளவான வெக்கத்தோடு நெளிந்தார். அவர் களின் தலைகளின் இடுக்குகளுக்கு ஊடாக வீதியைப் பார்க்க முற்பட்டார். முடிய வில்லை.
நல்லகாலம். ரவுணுக்குப் போறதால. தப்பிச்சன் இல்லாட்டி. முணுமுணுப்பைக் கேட்ட பக்கத்துப் பெண் ஞாபகம் வந்த வராக 'தம்பி, ஒருக்கா கொண்டெக்ரரிடம் சொல்லு. தம்பி அரசடி இறக்கமெண்டு.”
"அரசடி இறக்கமாம். அரசடி இறக் கமாம்.'
இளைஞனின் சத்தத்தைக் கேட்ட வழி நடத்துனர் தன் தலையை இரு பெண்களுக்கு இடையேயாக உள் நுழைத்து, "உங்கை
யென்ன நித்திரையே கொள்ளிறியள்.?”
"ஒம் தம்பி நித்திரை கொள்ளுகிற
சவதியோடை தான் நீ கூட்டிக்கொண்டு
 

ஜனவரி மார்ச் 204
கிடைக்கப்பெற்றோம்
துவிட்ட புதுயுகத்தில் ருப்பெறும் உணர்வுகள்)
சந்திராதனபாலசிங்கம் திய தலைமுறையின் எழுச்சிக்குரலாகவும் ண்ணினத்தின் உரிமைக்குரலாகவும் ஒலிக்கும் கதைகளின் தொகுப்பு
I IT 250/=
கணன், யாழ்ப்பாணம்
போறாய்."
பெண் எரிச்சலோடு கத்தினாள்
'அரசடி, போட்டுது. ” வழி நடத்துனர் சர்வசாதாரணமாகச் சொன்னார்.
"ஐயோ. நிப்பாட்டுங்கோ. நிப்பாட் டுங்கோ "
"கண்ட இடத்திலை நிப்பாட்டேலாது.”
என்று சொன்ன வழிநடத்துனர் சற்றுத் தள்ளிச்சிற்றுார்தியை நிறுத்தினார்.
பெண் பதட்டத்தோடு எல்லோரையும் இடித்துக் கொண்டு இறங்க முற்பட்டாள் இடிபட்டவர் இன்னொருவரை இடிக்க, அது சங்கிலித் தொடராக சிற்றுார்தி முழுவதும் நகர்ந்தது. இடிபட்டுக்கொண்டவர்கள், "சி" என்று கூறிக்கொண்டு தம்மை மீண்டும் நிதானப்படுத்திக் கொண்டனர். கீழே இறங் கிய பெண்ணின் உருவம் சிற்றுார்திக்குள் நின்றவர்களுக்குத் தெரியாத போதும் அவ ளின் குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது.
"வந்துவிட்டுக் கிடங்கு. நான் காசுதர மாட்டன்."
“நல்ல கதையாய்க் கிடக்கு. நீங்கள் நித்திரையாய்ப் போட்டு. உங்களுக்குச் சொல்லுறதுக்கு. என்ன? பதினைஞ்சு ரூபா தந்திட்டு. போக்கா. ”
'டேய் தம்பி, பின்னாலை சீற்ரிபி வருகுது, கெதியாக."
சாரதியின் அவசர அழைப்பில் வழி நடத்துனர் உள்ளே வர, சிற்றுார்தி வேகத்தை
அதிகரித்து அந்த சத்தத்தில் பெண்ணின் குரல் தேய்ந்து மறைந்தது. கணபதிக்கு பெண் காசு

Page 12
கொடுத்தாளா? கொடுக்கவில்லையா? எனச் சந்தேகம் வழிநடத்துனரிடம் அதைக் கேட்க நினைத்த மனதைக் கட்டுப்படுத்திக் கொண் டார்.
"உவனாவது வேண்டாமல் விடு றதாவது.' மனதிலை தோன்றிய எண்ணத் தோடு மெலல இருக்கைகளின் பக்கமாக வந்து ஒர் இருக்கையினைக் கைத் தாங் கலாகப் பிடித்தார். அந்த இருக்கையில் ஒர் இளம் பெண்ணும் இளைஞன் ஒருவனும் இருந்தனர். கணபதி வீதியைப் பார்த்துக் கொண்டே அவர்களையும் கவனிக்க ஆரம்பித்தார்
இருவருக்கும் இடையில் ஏதோ சண்டை போலும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராது இருந்தனர். பையன் தொலைபேசியை முன் இருக்கையில் சாய்த்து வைத்து அதில் இருந்த பாடல்களில், 'மைனா. மைனா. நெஞ்சுக்
லின் முதல் வரியை போடுவதும் நிப்பாட்டு வதும் திரும்பப் போடுவதுமாக இருந்தான். பிறகு ஒருத்தரை ஒருத்தர் பார்ப்பதும் கோபத்தோடு திரும்புவதுமாக இருந்தனர் அவர்கள் சுற்றி இருந்தவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
"கணபதி. உந்தப் பிள்ளைக்கு. மைனா பேரோ? காதோரமாக முணுமுணுத்த இராசுவை அப்பொழுதுதான் பார்த்தார் கணபதி. அவர் சனத்துக்குளை தேடித் தேடி கணபதியின் பக்கத்திலை வந்து நின்றி ருந்தார்
சிற்றுார்தியின் வேகம் மேலும் அதிகரிக்க கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்ற வர்களால் நிதானமாக நிற்க முடியவில்லை.
"உவன் ஏன் உப்பிடி. ஓடுகிறான்,?” "பின்னாலை. சீற்ரிபி. வருதாம்.' "வரட்டுமன். மெதுவாகப்போறது." "சீற்ரிபிக்கு முந்திச் சனத்தை ஏத்தோ ணுமே..?”
"இன்னுமோ. இஞ்ச மணிசர். மூச்சு
விடேலாமல் கிடக்கு."
பயணிகளின் ஆதங்கத்தோடு இன்
 


Page 13
தாயகம்- இதழ் 84
குரு
திட
யாரும் தனிை
இராசு கண்களைத் தாழ்த்தி தலையினை அசைத்துக் கேட்டார், இளைஞன் அமைதியானான்.
"ஐயா, அங்க என்ன சத்தம்... எல்லாரும் இறங்குங்கோ...."
ராசு கணபதியரைப் பிடித்து மெல்ல நகர்ந்து சிற்றூர்தியை விட்டு இறங்கினார். இருவரும் தமது தலையினையும் உடை யினையும் சரி செய்து கொண் டனர். பின் இராசு இருவருக்கு மான பணத்தைக் கொடுத்தார்.
கணபதிக்குத் தன்குடை ஞாப கத்திற்கு வந்தது.
"தம்பி... என்ர குடையை எடுத்துத்தா தம்பி.. ”
“பொறுங்கோ... என்ன அவ சரம்.. எல்லாரும் போகட்டும்...''
கணபதிக்கு முழங்கால் வலி யெடுத்தது. அந்த வலியோடு நடத்துனரை யாசிப்பது போல் பார்த்தார். அவர் நிதானமாக எல் லோரையும் அனுப்பி விட்டுக் குடையை எடுத்துக் கொடுத்தார். சிற்றூர்தி மீண்டும் இயங்கு நிலைக்குச் சென்று அந்த இடத்தை
விட்டு நகர்ந்தது.
“இராசு... என்னாலை நடக் கேலாமல் கிடக்கு...''
"அப்ப வா டொக்டரிட்டை போவம்...”
"ஓம், அதுதான் சரி. நாளைக்கு வங்கிக்குப் போவம்”
கணபதி குடையை ஒரு கையினால் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு மறு கையினால் நண் பனின் தோளைப் பிடித்தபடி நகர்ந்தார்.
அச்சத் மெள ஓ, என நீ உன் வெளி
பாலை வேறு அவர்க
ஓ... எ6
முட்க
திடமா. உன்பா புயலம் விளக் உனக் நீயே 2
அவ்வ
நீயே 6 ஒளி வ
ரபீந்திர

ஜனவரி-மார்ச் 2014
தி வழிப் பாதையிலும் மாக கால் பதித்து நட
உனக்குச் செவி சாய்க்கவில்லையானால் மயில் நடந்து செல்
தினால் அவர்கள் சுவரைப் பார்த்தபடி சிகளாகிவிட்டால் ன் தோழனே... மனந்திறந்து ப்படையாகவே பேசிவிடு
D வனத்தை நீ கடந்து வரும்போது திசைப் பக்கம் பார்த்தபடி - கள் உன்னை அலட்சியப்படுத்துவார்களேயானால்
ன் தோழனே ள் நிறைந்த குருதி வழிப் பாதையிலும் எகக் கால் பதித்து நட. நட.. நட யணம் தனிமையில் தொடரட்டும், டிக்கும் துன்பமான இரவுச் சூழலிலும் கூட
கை உயர்த்திப் பிடித்து வெளிச்சம் தர கு ஏற்பட்ட மன வலியின் மின்னலினால் உன் இதயத்தைப் பற்றவைத்துக் கொள்
ாறானால், வழிகாட்டும் விளக்காவாய்.
நாத் தாகூர்

Page 14
தாயகம் இதழ் 84
ஸ்பாட்ரகஸ்
புராதன - காலத்து ஸ்பாட்ரகசைப்பற்றி விபரமாக எழுதியவர் புளூராச் என்ற கிரேக்க நாட்டைச்சேர்ந்த எழுத்தாளராகும்.
"ஸ்பாட்டகஸ் திறேசியா(தற்போது கிட்டத் தட்ட பல்கேரியாவைக் குறிக்கும்) என்ற இடத்தைச்சேர்ந்த இடையர் குலத்தவன். அவனி டத்தில் சிறந்த உணர்வும், திடகாத்திரமான உடலமைப்பும் (அன்றைய சூழலில் மிகவும் மதிநுட்பமும் கொண்ட பண்பானவன். அவனை ஒரு திறேசியன் என்பதைவிட ஒரு கிரேக்கன் என்றே கூறலாம்.” என புளூராச் அவனைப் பற்றி வர்ணிக்கிறார்.
ஸ்பாட்ரக்சின் முழு வாழ்க்கையைப் பற்றி எழுத்து மூலமான தகவல்கள் இல்லையென்பதே பிரச்சினை. அவனது சிறப்பு, சிறுபராயம் என்பன வெல்லாம் வெறுமையாகவே உள்ளது. திறேஸ் என்ற இடத்தில் ஸ்பாட்டகோஸ் என்ற குடியி ருப்பு இருப்பதைக் கொண்டு அவன் அங்கிருந்து வந்தான் என ஊகிக்கலாம்.
அவன் ஓர் அடிமை. அவள் ஒரு பயிற்சி பெற்ற வாள்சண்டை வீரன். 2அ க்கு 30 வய துக்கு கீழ் இருக்கலாம்.
70000த்திற்கு மேற்பட்ட தப்பி ஓடியவர்கள் அடிமைகள் சுதந்திரமோனால் என்போர் ) வயதுக்கு குறைவான வயதுடைய ஒருவனுக்கு அத்தனை மதிப்பு வைத்திருக்கமுடியாது.
ஸ்பாட்ரகஸ் கி.மு 100க்கும் 91க்குமிடைப் பட்ட காலத்தில் பிறந்திருக்கவேண்டும். கி. மு. 100ல் பிறந்தவனென்றால் மாபெரும் ரோமானிய தளபதி யூலியஸ் சீசர் பிறந்த ஆண்டாயிருக்கலாம்.
ஸ்பாட்ரகசை ரோமாபுரிக்கு விற்பதற்காக எடுத்துச் சென்றபோது ஒரு பாமபு அவனது தலையில் சுற்றியிருந்ததாக புகராச் சாறுகிறார்.
கிரேக்கர் அவனை வீரன் என்கின்றனர். ஸ்பார்டகசுக்கு முந்திய 2000 ஆண்டுகளில் ஆரிய காலத்திற்கு முன்னரான கோவில்களில் மூன்று தலையுடன்கடவுள்கள் தோற்றமெடுத்தன.
ஸ்பாட்ரகஸ் மாவீரன் என்பதால் சிலசமயம் அவனுக்கு மூன்று தலைகள் இருப்பதாக உருவமைக்கப்பட்டான். திறேசிய கற்பனைக் கதைகளில் குதிரை ஓட்டிகள் முக்கியமானவர்கள் கிரேக்கருக்கு முன்பே திறேசியர்கள் குதிரை களை வீட்டுப் பிராணியாய் பயிற்றுவித்தனர்.

ஜனவரி மார்ச் 2014
ஞா.சிறிமனோகரன் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு முழுமையான பகுதியாக திறேசியா விளங்கியது. திறேசியர்கள் குதிரைப் படைவீரர்களாயிருந்தனர். ரோம் இராணுவத்தில் படையை விட்டு தப்பி ஓடுவது ஒரு நிரந்தரப் பிரச்சினையாய் இருந்தது.
" "அடிமைகளின் வீரத்தின் சின்னமாக மட்டும் ஸ்பாட்ரகஸ் விளங்கவில்லை. சகல வகையான கொடுங்கோலுக்குமெதிரான ஒரு பிம்பமாக அவன் விளங்கினான்."
கார்ல் மாக்ஸ் அவனை ஒரு வீரனாக கருதினார். ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இத்தாலிய சுதந்திரப் போராளி கரிபாலிடியுடன் ஸ்பாட்ரகஸ் ஒப்பிட்டிருந்தார்.
ஸ்பாட்ரகஸ் போராடிய அதே கம்பானியா மலைகளை ஊடறுத்து கரிபால்டியன் மலை களை ஊடறுத்து கரிபால்டியன் செஞ்சட்டைப் போராளிகள் மத்திய இத்தாலியில் போரா டினார்கள்.
லெனின் ஸ்பாட்ரகஸ் பற்றி என்ன கூறு கிறார்?
''பல தசாப்தங்களாக நிலவிய அடிமைத் தளையின் சரித்திரத்தில் விடுதலைக்கான யுத் தங்கள் Lல் இடம்பெற்றுள்ளன. இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் அடிமைகள் கிளர்ச்சியில் மிகப்பெரியதான கிளர்ச்சியானது ஸ்பாட்ரகசை ஒர உன்னத வீரனாக்கியது.
1.1லவரு..ங்களாக, பார்வையில் சர்வ வல்லமை பொருந்தியதாக கருதப்பட்ட அடி மைகளிலேயே தங்கியிருந்த ரோம சாம்ராஜ்ய மானது ஸ்பாரகஸ் தலைமையில் அணிதிரண்ட ஆயுதந் தரித்த பிரமாண்டமான படையின் தாக்கத்தால் அதிர்ந்து போனது”
-ஸ்பாட்ரக்சை புராதன சரித்திரத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பிரமுகர்களின் இடத்திற்கு உயர்த்தியவர் தோழர் ஸ்டாலின்.
மானிட வரலாற்றில் ஸ்பாட்டக்சிற்கு ஒரு தனியான சிறப்பிடம் உண்டு. தேசியவாதிகள் மன்னர்களை மட்டுமே உதாரண புருசர்களாகக் காட்டுவர். மக்களின் விடுதலைக்காக போராடிய வர்களை நினைவுகூர்ந்து அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வேண்டிய பாடங்களை மக்களுக்கு நினைவூட்டுவது - மாக்சிஸ்டுகளின் கடமை
யாகும்.
உன் நகல்

Page 15
தாயகம் இதழ் 34
டேனிஷ் வரலாற்றுப் பதிவினர் சேக்ஸோவா எடுத்துரைக்கப் பெறுகின்றது. ' எவர்படை எறி கால்வழியினரைக் காப்பர்? போர் பெருங்குடிப் குடிவழியினரே போரை உண்டாக்குவோர் ஏனெனி எளிய மனிதர்களின் முயற்சிகளால் அவற்றை மேற்கெ
வீரரும் வீரரல்லாதோரும்
வரும் சான்றை அடிப்படையாகக் கொண்டு வீர பிரிக்கப்பட்டிருந்தது என ஒருவர்நியாயமாக முடிவு ெ என்பன அப்பிரிவுகள் நாம் முன்பே அகன்ற ஒரு சமூக அல்லாதவர் என்பன இவ்விரு வகைப் பிரிவுக குறித்துக்காட்டத் தேவையில்லை. முடிவாகத் தொழி பாகுபாட்டின் விளைவே இவை என்பது ஐயத்துக் பிரிவினருக்கும் இடையமைந்த கொள்கை அடிப்பன வேலை, போரில் அருஞ்செயல், அடிமைத் தன்மை கவனிக்கத்தக்கது. "அருஞ்செயல்கள் எனப் மதிப்புடையவை, உயர்ந்தவை, மற்ற வேலைகள் பணிந்தும் ஒழுக வேண்டிய குறிப்புடைய தகுதியற்ற, அவர் அகப்பாடல்களில் தலைவனைப் பற்றிய பிற்காலக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டிருப்பினும், அ ஒரு வேறுபாட்டை வரைகிறார். இது தற்போது குறித்த
பண்டைக் காலத் தமிழர்களிடையே நாம் இப் ஒப்புக்கொள்ளப்பட்டதாகும். பொது மக்களின் பாகு தொழில் சார்ந்த இந்தச் சிறிய பாகுபாடுகளை அடிப்படையான பாகுபாடு, வீரர் வீரரல்லாதார் காட்டுங்கால், இப்பாகுபாடு கீழ்வருமாறு வரையறை
வீரர்
உரிமையுடையவர்
அருஞ்செயல்கள் இந்தப் பாகுபாடும். இதனால் குறிக்கப்படும் எ சுருக்கப்பட்டு விட்டன. பின்னது இழி என்பதின்று சூழல்களில் குறைக்கப்பட்ட கீழான, ஒப்பிடும்போ பொருள்களை இச்சொல் பெற்றது. இதன் பொருள்'கீ சாதி விலக்கப்பட்டவர் தாழ்ந்த சாதியினர் என மொ இல்லாதபோது, இதனை அவ்வாறு மொழிபெயர் இலக்கியத்தில் அஃது இப்பொருளைப் பெறும் இச்சொல்லின் பொருளைத் தரும் மற்றொரு சொல்
 

ஜனவரிமார்ச் 204
பேராசிரியர்கைலாசபதிநினைவாக
ல், உயர்குடி மனப்பாங்கு என்பது தெளிவாக மீள வர்? எவர் வேல் சுழற்றுவர்? எவர் அரசரின் பிறப்பினரிலிருந்து தொடங்குகிறது. புகழ்பெற்ற ல் இடர்மிகு செயல்களைப் பெரியோரே முயல்வர்; 5ாள்ள இயலாது" என்கிறார் அவர்
நிலைச் சமுதாயம் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் சய்யலாம். வீரர்களாக இருந்தவர் வீரராக அல்லாதவர் ப் பிரிவைக் குறித்தோம். அது உயர்குடியினர் உயர்குடி ளும் ஏறத்தாழ ஒன்றை ஒன்று ஒத்திருத்தலைக் ல், அதற்குள்ள சமூகத் தொடர்பு என்ற அடிப்படைப் கிடமின்றி விளங்கும். வீரநிலைச் சமூகத்தில், இரு டையிலான வேறுபாடென்பது முறையே அவர்களின் என்பவற்றைப் பொறுத்ததாகும். வெப்லனின் கருத்து பிரிவுபடுத்தப்பட்ட வேலைகள் தகுதிமிக்கவை, இந்த அருஞ்செயற் கூறுபெறாதவை, கீழ்ப்படிந்தும் மதிப்புக் குறைவுடையவை, தகவற்றவை' என்கிறார் கோட்பாடு குறித்துக் கூறுகையில், தொல்காப்பியர் டிமைப்பட்டவர்கள் அடிமைப்படாதவர்களிடையே 5 பாகுபாடுகளை மறுபடியும் ஒத்தமைந்த தேயாகும். போதறியும் சாதிமுறை இல்லை என்பது பொதுவாக பாடு நிலமும் தொழிலும் சார்ந்ததாய் இருந்தது. நிலம் ப் புறக்கணிக்கும் நிலையில் முன்னர்க் குறித்த என்பதிருந்தது. எல்லாச் சான்றுகளும் கொண்டு ப்படுத்தப்படலாம்: வீரரல்லாதோர்
அடிமைகள்
தாழ்ந்த குடியினர்
இழிந்தபணி ல்லாமும், சான்றோர், இழிசனர் என்ற இரு சொற்கள் ம் பெறப்பட்டது. தாழ்த்தப்பட்ட அவமதிக்கப்பட்ட து கீழ்நிலையான விழ, கீழே விட்டுவிட்ட முதலான ழான, நாகரிகமற்ற ஆள்" என்பது இஃது எப்பொழுதும் ழிபெயர்க்கப்படும் செய்யுள் தொகுப்பில் சாதிமுறை ப்பது சரியா என்ற வினா எழும். ஆனால் பிற்கால
என்பது மறுக்கமுடியாதது. பண்டைக் காலத்தில் புலையர் என்பது 'சான்றோர் என்ற சொல்லிற்குச்

Page 16
சரியான எதிர்ச் சொல்லாக இருந்தது எனக் கருதுவது என்பது 'புல்" என்ற சொல்லினடியாகத் தோன்றிய பிற்காலத்தில் பறையர்களைக் குறிக்க வந்தது. ஆன இழிந்த கீழான அடிமையான தொழில்களில் வழங்கப்பட்டமையினைக் காணுமுன்பு இவ்விரு
முன்னது, உழைப்பால் அமுக்கப்பட்டவர்கள், க உதவாதவர் தகுதியற்றவர் கயவர் இழிந்தவர் கோ என்பது துன்பத்தை அனுபவிப்போர் இழிந்தவர் மூலநிலையில் இச்சொற்கள் சமூகத்திற்கு இன்றிய சிறப்புடைய வீர வெற்றிகளுக்குரிய வாய்ப்பற்றோ பின்னர் இச்சொல் ஒழுக்கத்தின் கறையைக் குறி பொருந்துவது இனித் தெளிவாகப் புலப்படும்.
தலைவர்களுக்கு மாறாக, எளியநிலை மக்கள் உடலுழைப்பில் ஈடுபட்டிருந்தனர். எளிய நிை கிடைக்காமையின் அவர்களைக் குறித்த ஒரு விரிவா தொடக்கத்திலேயே குறிப்பிட வேண்டிய தேவை உ6 காண்பது கடினமன்று மற்றெங்கும் உள்ள வீரநி அரசகுடியினர் மீது சார்த்தி உரைக்கும் ஆர்வம் பெ நடைமுறையில் புறக்கணிக்கப் பட்டிருக்கின்ற விளிம்பிலேயே இடம்பெறுகின்றனர் பெயர் கு உயர்குடிக்குரியனவாகவே உள்ளன; மிக அரிய ெ யாரேனுமாக இருப்பர் இவ்வகையில் அவைப் புலவ
எளிய மக்களைக் குறிக்கும் சில எடுத்துக்காட்டு பலவாக இல்லாவிடினும் கருத்தை வலியுறுத்தப்போ
க. கட்டில் பின்னுபவன்(இழிசினன்) உ. பெரிய பறையறைவோன்(இழிசினன்) ந. பெரிய பறையறை வோன்(புலையன்) ச. ஆடைகளைத்துவைப்பவள்(புலைத்தி) கடைசி எடுத்துக்காட்டு, இம்மக்கள் இழிவுபடு: காட்டுகிறது. இத்தகைய வேலை தொழில்' எனப்பட் இருப்பதாகக் கருதப்பட்டது. புறநானூற்றில் ஒரு தொழிலாளிக்கும் உள்ள வேறுபாட்டைப் பொருத்த எப்படி அடிமையானார் என்பதைக் காட்டுகின்றது.
நீருக்காகக் களர்நிலந்தோண்டும் புலைத்தி தே அவன் மலர்களாலான மாலையும் அணிந்துளன். அ போரில் பிறர் உதவியின்றித் தானே பொருகின்றனன் ஒற்றைக்கிடுகு கொண்டு பகைவர்தன்னைக் குறித்தெ நன்கு கழுவப்பட்ட உடைகள்தலைவன் உடுத்தி தொழில் தேவைகளுக்குப் புலைத்தியின் தொழில் அ புதியதுய உடைகளை அணிந்திடவேண்டும்.
உயர்குடியினருக்கும் அடிமைகளுக்கும் இடை சிறிதும் குறையாவாறு அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள குயவர் நெசவாளர் ஆகியோர் உயர்குடியைச் பொதுப்படையானதெனினும், உயர்குடிப் பணித் து விளையாட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அடிை -க கைலாசபதியின் தமிழ்வீரநிலைக் கவிதை'நூ மொழிபெயர்ப்பாளர் கு. வெ. பாலசுப்பிரமணிய

ஜனவரிமார்ச் 204
சரியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமாகும் புலையர் து. இழிந்த கீழான என்ற பொருளுடைய இச்சொல் ால் கீழே காட்டுமாறு செய்யுட்களிலேயே அச்சொல், ஈடுபட்டதாகக் குறிப்புள்ளது. இச்செய்யுட்கள் சொற்களுக்கும், சுவையான ஒப்புமை கொண்ட இரு ாஸ்' என்பவற்றை இங்கு குறிப்பது தகும். இவற்றில் டுமையாக உழைப்போர் பயனற்றவர் ஒன்றுக்கும் ழையர் என்ற பொருள்களை உடையது. மாக்தெரோஸ் கயவர் வீணர் முதலான பொருள்களை உடையது. மையாத பணி செய்வோரைக் குறித்தன. இவர்கள் ர், செல்வமற்றோர் அரசியல் வலிமையற்றோராவார் 'ப்பதாயிற்று. இந்த ஒப்புமை தமிழ்க் கருத்தோடு
தங்கள் பிழைப்புக்காக ஒவ்வொரு நாளும் செய்யும் ல வகுப்பினரைப் பற்றிப் போதுமான தரவுகள் ன காட்சியைப் பெறக் கடினமாக உள்ளது என்பதைத் ர்ளது. குறிப்புகள் சிலவே உள்ளதற்குரிய காரணத்தைக் லைச் செய்யுளைப் போல, வீரநிலைக் கதைகளை ரும்பான்மையான எளிய மக்களைப் பொறுத்தவரை து. கூடியவரையில், உயர்குடியினரல்லாதவர்கள் றிப்பிடப்படும் எல்லாப் பாத்திரங்களும் தனிப்பட பிதிவிலக்காக அவர்கள் பரிவாரத்தில் இடம்பெறும் ர்களைச் சேர்த்துக் கொள்ளல்ாம். களை நாம் இங்கு காட்டலாம். இதற்குரிய இடங்கள் துமானவை.
த்தப்பட்டதற்குரிய அடிப்படையை மிகத் தெளிவாகக் டது. இஃது உடல் வலியுடையவரின் தகுதிக்குக் கீழே
பாடல், போர்வீரர் ஒருவருக்கும், எளிய நிலைத் முறக் காட்டுகின்றது. அது பின்னவர் முன்னவருக்கு
ாய்த்த தூவெள்ளாடையினை அவன் அணிகின்றனன் புவன் எப்போதும் பிறர்க்கு உதவிபுரிபவன். ஆனால் மூர்க்கமும் வலிமையும் வாய்ந்த அத்தலைவன் தன் றியும் கருவியெல்லாம் தாங்குவன்.'
க்கொள்ளும் அளவே முக்கியமானவை, போர்வீரனின் டிமைத் தன்மை கொண்டது. போருக்குச் செல்லுமுன்
யே கைவினைஞர் உள்ளனர். அவர்களின் சமூகநிலை ானர் உண்மையில் இக் கைவினைஞர் கொல்லர் தச்சர் சார்ந்து வாழ்வோராவர் அவர்களின் வேலை 1றைகளில் அரசு போர்த்தொழில், சமயச் சடங்குகள் மத் தொழில் செய்வதாகும்.
லிலிருந்து
65

Page 17
தாயகம்" இதழ் 84
கவிதையும் 1 இலத்தின் அமெரிக
பப்லோ நெருடா
அறிமுகம்
விஞர்க$ட்டொவு''
இலத்தின் அமெரிக்காவின் முதன்மையான கவிஞர்களில் ஒருவரான பப்லோ நெருடாவின் உடல் மீட்டெடுக்கப்படவுள்ள ஓரு காலப் பகுதியில், நெருடாவும் அவர் உரைத்த உண்மை களும் உயிர்த்தெழுந்து உலகின் மனச்சாட்சியை உலுக்கும் பொழுதுகளுக்கான எதிர்பார்ப்பில், நெருடா உலகெங்கும் அறிவித்த இலத்தின் அமெரிக்கக் கவிதைகளைப் பற்றிப் பேசுவது பொருத்தமானது.
உலகம் பாரிய நெருக்கடியிற் சிக்கியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு அரபுலகம் விழித் துள்ளது. அரபு மக்கள் தங்கள் உரிமைகளுக் காக விடாது போராடுகிறார்கள். ஆபிரிக்கா வெங்கும் இரத்தம் வழிகிறது. ஏகாதிபத்திய நலனுக்காக இலட்சக்கணக்கான ஆபிரிக்க மக்கள் தொடர்ந்து பலியாகிவருகிறார்கள். நவதாராளவாதம் தன்னை நிலைநிறுத்தப் புது வழிகளைத் தேடுகிறது. இந்தியா, இந்தோனே சியா போன்ற நாடுகள் துரிதமான பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன எனப் பாராட்டுப் பெற் றாலும், அந்நாடுகளில் அரைவாசிப் பேர் பசியால் வாடுகிறார்கள். இப்போது அரபுலகம் நோக்குகின்ற திசைவழியில் பத்தாண்டுகட்கு முன் இலத்தின் அமெரிக்கா நோக்கி இருந்தது என்கிறார் நோம் சொம்ஸ்கி. மலைகளிலும் காடுகளிலும் பல்லாண்டுகளாய் அலைந்து இடையறாது போராடிய மக்கள் இலத்தின்

ஜனவரி-மார்ச் 2014
- கட்டுரை .
புரட்சியும்: க்கக் கவிதைகள்
தெ.ஞாலசீர்த்தி மீGலங்கோ
அமெரிக்காவையும் அதன் மனச்சாட்சியையும் மீட்டிருக்கிறார்கள். அன்டீஸ் மலைத்தொடர் களிலும், மச்சு பிச்சுவின் உச்சியிலிருந்தும், அமேசன் காடுகளிலிருந்தும், பழங்குடியினரின் குரல்வளைகளிலிருந்தும் ஒலித்து எதிரொலித்த குரல்களே கொலனி ஆதிக்கத்திலிருந்தும் சர்வாதிகார ஆட்சிகளிலிருந்தும் “வாழைப்பழக் குடியரசு" நிலையிலிருந்தும் அந் நாடுகளை மீட்டது. இன்று நவ தாராளவாதத்திற்கு எதிரான முக்கியமான போராட்டக் கருவிகளாக நின்று நிலைப்பன அதே குரல்கள்தான்.
கவிதை பற்றிப் பேசாது கட்டுரை உலக நடப்புக்களைப் பேசுவதாக யாரும் நினைக் கலாம். இலத்தின் அமெரிக்காவின் புரட்சிகளில் கவிதையும் பாடல்களும் ஆற்றியுள்ள தவிர்க்க வியலாத பாத்திரத்தைப் பேசுதற்கான முகவுரை யாகவே இதைக் கூறுகிறேன். இலத்தின் அமெரிக்க மக்களின் விடுதலைக்கான போராட் டத்தில் - கவிதைகள் - பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. புரட்சிகள் மூளைகளாலும் ஆயுதங்களாலும் மட்டும் வெல்வனவல்ல. புரட்சி இதயங்களை ஈர்ப்பதிற் தொடங்கி, இதயங்களை வருடி மக்களை வென்றெ டுப்பதில் முடிகிறது. இலத்தின் அமெரிக்காவில் எளிமையானவையாயினும் புதிது புதிதானதும் மாறுபட்டதும் மக்களைக் கவருகின்றதுமான படைப்புக்களைத் தர வல்ல மனிதர்களே போராட்டங்கட்கு வலுச் சேர்த்தனர். மக்களைப் பாடிய ஆண்களும் பெண்களும் தமது படைப்
15

Page 18
பாற்றலாற் பிறரை முக்கியமாகத் தங்கள் கண் டத்தின் பெரும்பான்மையோரைத் தம்வசப் படுத்தி, மக்களை ஒன்றிணைத்தனர். அவர்களது கவிதைகளும் பாடல்களும் மக்களை ஊக்கு வித்தன, மக்கள் அவற்றைப் பாடியவாறே அநியாயங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினர் கவிதைகள் எவ்வாறு புரட்சிக்கான கண்ணிகளாக அமையலாம் என்பதை இலத்தின் அமெரிக்கக் கவிதைகளினூடு தரிசிக்கலாம். " மக்களைப் பாடுவோம், மக்களைப் பேசுவோம்” என்ற பாடிப்பறை நிகழ்வின் பிரகடனத்திற்கமைய இக் கட்டுரை அமைகிறது. வரலாற்றினூடு இலத்தின் அமெரிக்க இலக்கியம்
இலத்தின் அமெரிக்க இலக்கியத்தின் நீண்ட வரலாற்றில், 1940கள் வரை மரபுசார் செவ்வியல் ஆக்கங்களே பெருமளவிற் தோன்றின. அவை பெரும்பாலும் இலக்கியத்துக்காக இலக்கியம் படைக்கும் படித்த மேட்டுக்குடியினரின் படைப்புக்களாகவும் பழைய இலத்தின் அமெ ரிக்கக் கவிதைகள் பெரிதும் மரபுசார்ந்தும் இருந்தன. ஸ்பானிய, போர்த்துகேயக் கொலணி களாயிருந்த இலத்தின் அமெரிக்காவில் கொலனி ஆதிக்கத்துக்கெதிரான போராட்டம் முனைப் படைந்த போதே இலத்தின் அமெரிக்க இலக் கியம் மக்கள் இலக்கிய நோக்கிற் பயணப்படத் தொடங்கியது.
அரபு இலக்கியம் எவ்வாறு பலஸ்தீனப் பிரச்சனையுடன் புதிய திசையில் பயணந் தொடங்கியதோ அவ்வாறே இலத்தின் அமெரிக் கக் கவிதையும் திசை மாறியது. 1967இல் நடந்த அரபு-இஸ்ரேல் யுத்தமும் அதில் அரபுலகின் தோல்வியும் அரபுத் தேசிய மீளெழுச்சிக்கு வழிவகுத்ததோடு பலஸ்தீனத்தை அரபு தேசியப் பிரச்சனையின் மையமாக மாற்றின. அதன் பின்பான அரபுக் கவிதைகள் குறிப்பாக இரண்டு அம்சங்களைப் பாடுபொருட்களாகக் கொண்டி ருக்கக் காணலாம். ஒன்று அரபு சர்வாதிகார ஆட்சிகளை எதிர்ப்பது மற்றது நேரடியாகவோ மறைமுகமாகவோ பலஸ்தீனம் பற்றிய குறிப்புக்களைக் கொண்டிருப்பது அந்தளவுக் குப் பலஸ்தீனப் பிரச்சனையின் தீவிரமும் பலஸ்தீன விடுதலையும் அரபுத் தேசியத்தின் முக்கியமான அம்சமாகி இன்னமும் அவ்வாறே தொடர்கின்றன.
இலத்தின் அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியிலும் இலக்கியம், குறிப்பாகக் கவிதை, மத்தியதர வர்க்கத்துக்காயும் அதன் அங்கீகாரத்தை வேண்டுவதாயும் இருந்தது. பாடுபொருட்கள் இயற்கை பற்றியனவாயும்

Bigarraig Darjä 2o14
நடுத்தர வர்க்க வாழ்வின் இன்ப துன்பங்கள் பற்றியனவாயும் மேட்டுக்குடி வாழ்வு பற்றிய கனவுகளின் வெளிப்பாடுகளாகவுமே இருந்தன. இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் தொடங்கிய நவகொலனிய விரோத விடுதலைப் போராட்டங்கள் இலத்தின் அமெரிக்க இலக் கியங்களின் தன்மையை மாற்றின. பாடு பொருட்கள் மாறத் தொடங்கின. இம் மாற்றத் தைக் கவிதைகளிற் சிறப்பாகக் காணமுடியும்.
இலத்தின் அமெரிக்காவில் கவிதைகட்குச் சிறப்பான ஒரு இடமுண்டு. மத்திய அமெரிக் காவில் எதிர்ப்பைத் தெரிவிக்கக் கவிதை எழுதுவதே அதி பயன்தரும் வழியாகும் கவி தைகள் மிக வலுவானவாயிருந்த அதேவேளை பிரசித்தமாயும் இருந்தன. நிக்கராகுவா, கியூபா, எல் சல்வடோர் கொஸ்ற்ற ரீகா குவாட்டமாலா ஆகிய நாடுகளிற் கவிதைகள் இலக்கிய வடிவ மாகவும் மக்களின் பிரதான கருத்து வெளிப் பாட்டுக்கருவியாகவும் உருப்பெற்றன.
இலத்தின் அமெரிக்க இலக்கியத்தின் திசை வழியை மாற்றியதில் 1959இல் நிகழ்ந்த கியூபப் புரட்சிக்கு முக்கிய பங்குண்டு. அதன் வெற்றி முழு இலத்தின் அமெரிக்காவிலும் புது நம்பிக் கையை விதைத்த புரட்சிகர உந்துசக்தியானது. சமூக மாற்றத்துக்கான இலத்தின் அமெரிக்க மக்களின் இடையறாத போராட்டத்திற்குக் கியூபப் புரட்சியின் வெற்றியும் அதனினும் மேலாக அதன் நிலைப்பும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
1 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்; ஐரோப்பியக் கொலனி ஆட்சியை நீக்கிய இலத்தின் அமெரிக்காவில், பெரும் நிலவுடை மையாளர்களதும் கணிச்சுரங்க உடைமையாளர் களதும் சார்பான அடக்குமுறை ஆட்சிகள் தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலிருந்து ஜனநாயகப் புரட்சிகள் எழுந்த போதும், இலத்தின் அமெரிக்கப் பொருளாதாரம் நேரடியான அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. அங்கு அமெரிக்க மூலதனத்திற்கு மிரட்டலான ஆட்சி எதுவும் இல்லாதவாறு அமெரிக்கா கவனித்துக்கொண்டது.
1959 இல் நடந்த கியூபப் புரட்சி அமெரிக் காவை அதிர்த்தது. புரட்சியைக் கவிழ்க்கும் அடுத்தடுத்த முயற்சிகள் தோற்றதுடன், வியற் நாம் போரில் அமெரிக்காவின் பின்னிடை வுகளும் சேர்ந்து இலத்தின் அமெரிக்காவில் இடதுசாரி எழுச்சிகளைத் தூண்டின. அப்போக்கு அமெரிக்க நலன்கட்குக் கேடானது என்பதால் 1960களிலும் 70களிலும் ஆட்சிக் கவிழ்ப்புக்கள் மூலம் வலதுசாரிச் சர்வாதிகார ஆட்சிகள்

Page 19
தாயகம்- இதழ் 84
நிறுவப்பட்டன. இவற்றில் மிகக் கொடியது 1973 இல் சிலியின் ஆட்சிக் கவிழ்ப்பாகும். 1960 களிலும் 1970களிலும் நவகொலனியவாதிகளிட மிருந்து வென்ற விடுதலைகளைத் தொடர்ந்து அதிகாரத்தைக் கையேற்ற ஆட்சிகள் சர்வாதி காரங்களாக மாறிய பின்னணியில் சரவாதி காரங்கட்கும் அடக்குமுறைக்கும் எதிரான குரல்களாக இலத்தின் அமெரிக்கக் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கின.
மேற்குலகு இத் திசை மாற்றத்துக்கு நவீனத்துவம் என்ற பெயருடைய கோட் பாட்டுருவை வழங்கியது (சான்றாக, Blackwell Companion of Latin American Literature). இது தவறானதும் வஞ்சகமானதுமாகும். இலத்தின் அமெரிக்க இலக்கியப் பாடுபொருள் நவீனத் துவத்தால் மாறவில்லை. அதன் மாற்றத்தின் மூலங்கள் வேறு என்பதுடன், 1950களில் நவீனத் துவம் ஏழ்மைப்பட்ட இலத்தின் அமெரிக்க மக்களைச் சென்றடையவில்லை. அன்றாட வாழ்வுக்காகவும் அடக்குமுறைக் கெதிராகவும் போராடும் மக்களின் இலக்கிய வெளிப்பாட்டின் தளம் நவீனத்துவமல்ல.- 'கலாசாரங்களின் மோதல்' பற்றிப் பேசிய சமுவெல் ஹண்டிங்டன் தான் நவீனத்துவக் குறுக்கீடு பற்றியும் பேசினார் என்பதில் வியப்பில்லை.
இவ்விடத்து, 2 0 ம் நூற்றாண்டின் சிறந்த கதைசொல்லியாகக் கருதப்படும் கப்ரியேல் கார்ஷியா மாக்குவெஸ் சொன்னதை நினைவு கூரலாம்:
“என் மக்களின் வாழ்க்கையை அவர்களது சொந்த அனுபவங்களின் வழியாகத் தரு கிறேன். அதுவே அவர்களது யதார்த்தமும் அவர்களது சமூகக் கலாசார யதார்த் தமுமாகும். உங்களுக்கு விசித்திரமானவை யாயும் மாந்திரீகமாயும் தெரிவன என் மக்களின் யதார்த்ததின் பிரிக்கவொண்ணா அங்கங்கள். ஐரோப்பிய அறிவுவாத யதார்த்த விதிகட்கமைய உலகைச் சித்தரிக்க வேண்டும் எனும்போது, எனது பண்பாடு செழுமை நலிந்து தட்டையாகி விடுகிறது. யதார்த்தம் என்பது முட்டை, தக்காளி விலை விவரங்களோடு முடிவதில்லை என்பதை விளங்க அவர்களது பகுத்தறிவு வாதம் தடையாயுள்ளது. இலத்தின் அமெரிக்காவின் அன்றாட வாழ்வு, யதார்த் தம் என்பது அசாதாரணமான விடயங் களைக் கொண்டது என நிறுவிக் கொண்டி ருக்கிறது. எங்களைப் பேசவிடுங்கள், எங்களை நம்ப விடுங்கள், எங்களை எங்கள் சொந்த விதிகளின்படி வாழ விடுங்கள்.

ஜனவரி-மார்ச் 2014
எங்கள் கலாசாரம் எங்களை அறிவிக் கட்டும். உங்கள் புள்ளி விபரங்களும் உலகத்தை உய்வித்தற்கான உங்கள் முற் போக்குத் திட்டங்களும் இதுவரை எங்க
ளுக்குத் துயரையே தந்திருக்கின்றன.” மக்கள் இலக்கிய நோக்கில் கவிதை
மக்கள் இலக்கியம் என்பதை மக்களின் நன்மைக்கான இலக்கியம், மக்களை விழிப் பூட்டும் இலக்கியம், மக்களைக் கிளர்ந்தெழுந்து போராடத் தூண்டும் இலக்கியம், மக்களால் உருவாக்கப்படும் மக்கள் நலனுக்கான இலக் கியம் எனப் பலவாறாக நோக்கலாம். இவற்றுள் முக்கியமானது மக்கள் நலனுக்கான இலக்கியம் எனும் பண்பாகும். மக்கள் இலக்கியத்தின் அவசியத் தேவை மக்களிடமிருந்து அந்நியப் படாமையே ஆகும். மக்கள் இலக்கியத்தைப் படைப்போர் கைக்கொள்ள வேண்டிய அதி
முக்கிய விதி இதுவே.
இலத்தின் அமெரிக்காவில் இலக்கியம் ஒரு வெகுஜன இயக்கமாக இருக்கிறது. 19 6 0 கள் தொட்டு இப் போக்கு வளர்ந்திருப்பதைக் காணலாம். இலத்தின் அமெரிக்காவிலே, பலஸ் தீனத்தினும் மேலாக, இலக்கியம் வெகுஜன இயக்கமாகவும் மக்களை ஒன்றிணைக்கும் வழிமுறையாகவும் எதிர்பை வெளிப்படுத்தும் வடிவமாகவும் மாறியிருக்கிறது. -
அங்கு கவிதைகளின் எழுச்சிக்குக் காரணம், கவிதைகளும் கவிதை எழுதுதலும் மக்கள் மயப்படுத்தப்பட்டமையாகும். மக்களை இலக் கியத்தினுட் கொண்டுவரும் ஒரு இயக்கம் அங்கு செயற்பட்டது. எல்லோராலும் எழுத முடியும் என்ற சாத்தியப்பாட்டை இலத்தின் அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இது இலக்கியம் ஒரு வெகுஜன இயக்கமாக செயற்படுவதைச் சுட்டுகிறது. இதுவே இலத்தின் அமெரிக்கக் கவிதைகளின் வெற்றியின் அடித்தளம். இங்கு, இலத்தின் - அமெரிக்காவின் முக்கியமான கவிஞர்களில் ஓருவரான நிக்கராகுவாக் கவிஞர் ஏர்னெஸ்டோ கர்தினாலைக் (Ernesto Cardinal) குறிப்பிட வேண்டும். அவர் கவிஞர் மட்டு மல்லர். முக்கியமான விடுதலை இறையியற் (Liberation Theology) கோட்பாட்டாளரும் விடுத லைப் போராளியும் ஆவார். சான்டினிஸ்டாக்கள் புரட்சி மூலம் நிக்கராகுவாவை விடுவித் ததையொட்டி நிக்கராகுவாவின் பண்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார். விடுதலை இறையியலை முன்னிலைப்படுத்திய பாதிரி யாரான அவரை, சான்டினிஸ்டா அமைச்சரவை யிலிருந்து விலகும்படி போப்பாண்டவர் 1983
இல் கட்டளையிட்டார். அதை ஏற்க மறுத்ததால் 17

Page 20
அவராற் பாதிரியாராகத் தொடர இயலாமற் போனது. அவருடைய கவிதை வாசிப்பைக் கேட்க மக்கள் ஆயிரக்கணக்கிற் கூடுவார்கள் தன் கவிதைகளாலும் கவிதை வாசிப்பாலும் மக்க ளைக் கட்டிப்போட்ட அவரது இலக்கியப் பணிகளில் மிகப் பெரியது அவர் சொலொன் றினாமே (Solentiname) தீவுக்கூட்ட மக்களுக்கு ஆற்றிய சேவையாகும்.
முப்பத்தெட்டுத் தீவுகளைக் கொண்ட சொலொன்றினாமே மிகப் பின்தங்கியிருந் தது. வயதுவந்தோரில் 96% பேருக்கு எழுத்தறி வில்லை. அங்கு பாடசாலையோ மருத்துவ மனையோ இருக்கவில்லை. 1976 இல் அங்கு கவிதை இயக்கமொன்று உருப்பெற்றது. விவ சாயிகளும் மீனவர்களுமான அவர்களிடமிருந்து ஏராளமான கவிதைகள் விளைந்தன. அவற்றிற் சில 9 8 0 இல் நிக்கராகுவாவின் பண்பாட்டு அமைச்சால் நூலாக்கப்பட்டன. நூலானவற்றிற் பெரும்பாலானவை, குழந்தைகள் உட்பட இருபது வயதுக்குட்பட்டோர் எழுதியவை. (மேலுந் தகவல்கட்கு: The Peasant Poets of S 0 1e n t in a m e கவிதைகளில் 2 0 அளவிற் தமிழாக்கப்பட்டுக் குறிப்புக்களுடன் சிவசேகரத் தின் "மறப்பதற்கு அழைப்பு' என்ற தொகுப்பிற் தரப்பட்டுள்ளன). சொலொன்றினாமே விவசாயி களைக் கலைஞர்களாகவும் கவிஞர்களாகவும் ஒவியர்களாகவும் சிற்பிகளாகவும் மாற்றிய பெருமை ஏர்னெஸ்டோ கர்தினாலைச் சாரும் அவர் அடிப்படைக் கல்வியுடன் சேர்த்துக் கவிதைப் பட்டறைகளையும் நடத்தினார் அவரது தலையீடின்றிப் பங்குபற்றியோரே கவிதைகளைச் செப்பனிட்டனர். கவிதைப் பட்டறைகளில் கொஸ்டரீகா பெண் கவிஞர் மிரா ஹிமெனெஸின் (Myra Jim ene 2) பங்கு முக்கி யமானது கவிஞர்கள் யாவரும் சான்டினிஸ் டாக்களின் விடுதலைப் போராட்டத்துடன் இணைந்தவர்களாவர் அவர்களது கவிதையின் பிரதான பாடுபொருட்கள் புரட்சியும் சர்வாதிகார எதிர்ப்புமே, இலத்தின் அமெரிக்கக் கவிதை களில் நிக்கராகுவாவின் போராளி விவசாயக் கவிஞர்களின் இடம் தனித்துவமானது. கவிதை யை வெகுசன இயக்கமாக்கியதன் மூலம் இலத்தின் அமெரிக்கக் கவிதை புரட்சி படர்தற் கான பந்தற் காலாக நிற்கின்றது.
மிகவும் அறியப்பட்ட இலத்தின் அமெரிக்கக் கவிஞரான பப்லோ நெருடாவுக்கு ஒரு இடதுசாரிப் பின்னணி உண்டு. அவரது கவிதைகள் அழகியலையும் வாழ்வியலையும் அற்புதமாகச் சித்தரிப்பதுடன் இலத்தின் அமெரிக்காவைக் கண்முன் நிறுத்துகின்றன. நுண்ணிய சொற்பிரயோகத்தினூடும் காட்சிப்

ஜனவரிமார்ச் 204
படுத்தல்களினூடும் மக்களைத் தட்டியெழுப் புதல் நெருடாவின் சிறப்பாற்றல் நெருடாவின் கவிதையின் உள்ளாந்த ஒரு கூறு அரசியல் தனது கவிதையிலிருந்து அரசியலைப் பிரிக்க விரும்பு வோர் உண்மையிற் கவிதையின் எதிரிகள் என்று நெருடா சொன்னார் மக்களுக்காகப் பாடியதால் நெருடா பிரச்சாரக் கவிஞன் என்று தூற்றப் பட்டார் தொடர்ந்து எழுதியதன் மூலம், நெருடா தன்னை மக்கள் கவிஞன் என நிறுவி நிலைநாட்டினார் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றுக்கும், குறிப்பாகத் தென்னமெரிக்கக் கண்டத்தின் நிகழ்வுகட்கு நெருடாவின் கவிதைகள் சாட்சி கூறுகின்றன. வரலாற்றை ஆளுபவர்களின் பார்வையிலன்றி ஆளப்படுவோரின் பார்வையில் அவர்களில் ஒருவராகக் கவிதைகளைப் பாடியமையிலேயே நெருடாவின் ஆளுமை சிறக்கிறது. அதனாற் தான் இலியில் பினோஷேயின் சர்வாதிகாரம் கோலோச்சியபோது நெருடாவின் கவிதைகள் போராட்டக் கருவிகளாயின. அதனால் அவை தடைசெய்யப்பட்டன. சிலியில் பினோஷேயின் ஆட்சிக்காலத்தில் இருந்த கொடிய ஒடுக்கு முறையாற் புலம்பெயர்ந்த சிலியர்கள் முக்கி யமான கவிதைகளையும் படைப்புக்களையும் தந்தனர். சிலியைச் சேர்ந்த ஏரியல் டோர்வ்மனின் ஆக்கங்களில் முக்கியமானவை அவருடைய புலப்பெயர்வின்போது உருவானவையே. புலம் பெயர்ந்த இலத்தின் அமெரிக்கர்கள் எழுதிய கவிதைகள் இலத்தின் அமெரிக்கக் கவிதையின் முக்கியமான ஒரு பகுதியாகின்றமையும் கவ னிப்புக்குரிய முக்கிய பண்பாகும்.
மக்கள் கவிதைகள் என்ற வகையில் ஒட்டோ ரெனே காஸ்ற்றியோவும் ரொக் டால்ற்றனும் முக்கிய கவனிப்புக்குரியவர்கள் 1965ம் ஆண்டின் மத்திய அமெரிக்காவின் சிறந்த கவிஞருக்கான பரிசை இருவரும் பகிர்ந்தனர் இருவரது கவிதைகளும் சர்வாதிகார ஆட்சியின் போதும் பின்னரும் அவரவரது நாடுகளிற் தடைக் குட்பட்டிருந்தன. ரொக் டால்ற்றணின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டதால் அவர் ஐரோப் பாவிலும் அதற்கு வெளியிலும் அறியப்பட்டார் ஒட்டோ ரெனே காஸ்ற்றியோ அந்தளவுக்கு அறியப்படவில்லை.
குவாட்டமாலாவில் பிறந்த ஒட்டோ ரெனே காஸ்ற்றியோ ஒரு புரட்சியாளரும் கெரில்லாப் போராளியும் கவிஞருமாவர் 1 9 5 4 இல்
Arbenz Guzman) ஐனநாயக ஆட்சியை சி.ஐ.ஏ. சதிப்புரட்சி கவிழ்த்தபோது எல் சல்வ டோருக்குத் தப்பியோடினார். 1957இல் சர்வாதி காரி ஆர்மாஸ் இறந்த பின் நாட்டுக்கு
-

Page 21
/
Дb/ Д5/ வி
வி G.
N
மீண்டு உழைப்பாளர் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரானார் குவாட்டமாலாவின் புரட்சிகர கெரில்லா இயக்கங்களுடன் இரகசிய மாக இணைந்து ஸகப்பா மலைகளில் (Za cap a mountains) இருந்து நாட்டை
விடுவிக்கப் போராடிய இவரைப் படையினர் 1 9 6 7 இல் கைதுசெய்து கொடும் வதைகட்கு உட்படுத்தி உயிருடன் எரித்தனர். அவரது கவிதைகள் மக்கள் எழுச்சியை மையட படுத்தியும் சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்தும் அமைந்திருந்தன.
எல் சல்வடோரில் பிறந்தவரும் அந்நாட்டுகி கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரொக் டால்ற்றன் சர்வாதிகார ஆட்சிக்கெதிரான ஆயுதப் போராளியுமாவார் கொலனியாதிக்க ஒடுக்குமுறை, ஆயுதப்போராட்டம், இராணுவ ஒடுக்குமுறை என்பன அவரது பாடுபொருட்கள் அவரது கவிதைகளில் கூர்மையான விமர்சனப நிறைந்திருக்கும். அவர் 1 9 75 இல் தவறான சந்தேகங் காரணமாகச் அவரது இயக்கத்த வர்களாற் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே அவர் மீது கவனங்குவியக் காரணமானது டால்ற்றன் அறியப்பட்டமைக்கும் காஸ்ற்றியே அறியப்படாமைக்குமான அரசியற் பின்புலட விளங்கக் கடினமானதல்ல.
பெண்கவிஞர்கள்
இலத்தின் அமெரிக்க இலக்கியங்களின் பெண்களின் ஆக்கங்கட்குத் தனிப் பங்குண்டு அங்கு ஆணாதிக்கத்துக்குச் சவாலான பல படைப்புக்கள் உருவாகியுள்ளன.
இலத்தின் அமெரிக்கக் கவிதைகளில் பெண் கவிஞர்களின் இடம் முக்கியமானது மு! குறிப்பிட்டது போல, இலத்தின் அமெரிக் மக்களின் வாழ்விற் குறிப்பாக புரட்சிகள்
 

ஜனவரிமார்ச் 204
கிடைக்கப்பெற்றோம்
ால் "பருத்தித்துறையூராடம்" "லாசிரியர் : பா. இரகுவரன்
டயடம் பருத்தி நகர் பற்றிய
சமூகவியல் வரலாற்று ஆவணமாக்கலுடம் ஆய்வுடம் முன்னோடி நூல் லை ரூபா 750/= தடல் வெளியீடு -6
ار இடம்பெற்ற சமூகங்களில், கவிதைகட்கான இடம் தனியானதும் சிறப்பானதுமாகும். அடக்குமுறைக்குட்பட்ட நாடுகளிற் கவிதை அன்றாட வாழ்வின் பகுதியாகிக் கவிதைகளைப் படிப்பதும் உரக்க வாசிப்பதும் வாழ்வின் தவிர்க்கவியலாத அம்சங்களாகி விட்டன. இதிற் பெண் கவிஞர்களின் வகிபாகம் அடிப்படை யானது மக்கள் போராட்டங்கள் முனைப்புற்ற மத்திய அமெரிக்க நாடுகளிற் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கவிதைகளை எழுதினர் மக்களை ஒன்றுதிரட்டவும் புரட்சியில் பெண் களின் முக்கியத்துவத்தை விளக்கவுமாக அவர் களது கவிதைகள் வீறுகொண்டெழுந்தன. அக் கவிதைகள் அன்றாட வாழ்வின் அவலங் களையும் புரட்சியின் தேவையையும் வலியு றுத்தின. இன்றும் வலியுறுத்துகின்றன. சிலி, ஆர்ஜென்ற்றினா போன்ற தென்னமெரிக்க நாடு களில் சர்வாதிகார ஆட்சிகளை எதிர்க்கும் குரல் களாகப் பெண்களின் கவிதைகள் இருந்தன. அவற்றுட் பல புலம்பெயர்ந்த பெண் எழுத்தாளர் களால் எழுதப்பட்டவை. பெண்களின் எழுத் தறிவும் கல்வியறிவும் குறைவாகவே இருந்த இலத்தின் அமெரிக்கச் சூழலில் புரட்சிகளின் விளைவாகப் பெண் கல்விக்கான புதிய வாசல் கள் திறந்தன. பெண்களில் பலர் எழுத வாசிக்கத் தெரிந்தோராயினர் அது புதிய பெண் கவிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்கு வழியமைத்தது.
பாடல்களும் புரட்சியும்
நெடுங்காலமாகப் பல்வேறு தேவைகட் 5 ITS LÚ பாடல்கள் இசைக்கப்படுகின்றன. மகிழ்ச்சியைக் கொண்டாடவும் அன்பைக் கூறவும் இழப்பின் துயரைக் கூறவும் பிரார்த்திக் கவும் உலகை மாற்றப் போராடவும் எனக் கருத்து வெளிப்பாட்டு வடிவமாகப் பாடல்களும் இசையும் விரிந்து கொண்டே போகின்றன.
亦

Page 22
இலத்தின் அமெரிக்கப் போராட்டப் பாடல்கள் சென்ற நூற்றாண்டிற் பாரிய மாற்றங்களைக் கண்டுள்ளன. அவற்றில் மூன்று வகையின முக்கியமானவை:
1. 1910 இல் மெக்சிக்கோவில் ஸப்பட்டா வின் தலைமையிலான புரட்சியோடு தொடங்கிய நாட்டுப்புறத்தாரின் எதிர்ப் புப் பாடல்கள் அவை கொரிடொஸ் (Corridos) எனப்பட்டன.
2. 1960களில், குறிப்பாக கியூபப் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, சர்வாதிகார ஆட்சி எதிர்ப்புக்களிலும் புரட்சிகளிலும் பாடப்பட்டவை. அவை பெரும்பாலும் சந்தக் கவிதைகளாக இருந்தன. அவை புதிய பாடல்கள் (Nu e y a C a n y i 0 n) எனப்பட்டன.
3. கடந்த பத்தாண்டுகளில் ரப்பும் (Rap) ஹிப் ஹொப்பும் (Hip Hop) ஸம்பாவும் (Samba) எதிர்ப்புப் பாடல் வடிவங்களாகி விட் L— ତ01.
இலத்தின் அமெரிக்காவின் புரட்சிப் பாடல் களின் மனச்சாட்சியாய் இருந்தவர் விக்ற்றர் ஹாரா " பாடல்கள் இல்லாமல் புரட்சிகள் இல்லை" என நிறுவிய அவர் இன்றும் இலத்தின் அமெரிக்கப் புரட்சிகரப் பாடகர்களின் முன்னோ டியாகக் கொள்ளப்படுகிறார். அவரது பாடல்கள் சிலி மக்களின் மனச்சாட்சியைத் தட்டியெ ழுப்பின. சல்வடோர் அயென்டே சிலியின் ஜனாதிபதியாவதற்கும் அவரது மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் அறிவூட்டவும் விக்ற்றர் ஹாரா பங்களித்தார் 1 9 7 3 செப்றெம்பர் பதி னொன்றில் இராணுவச்சதி மூலம் அயென்டே கொல்லப்பட்ட பின்னர் இராணுவ ஆட்சி யாளர்கள் அவரைக் கைதுசெய்தனர். கைகள் வெட்டப்பட்ட நிலையில்; அவரைப் பாடுமாறு கேட்டனர். அங்கு தன்னோடிருந்த தோழர்கட்கு நம்பிக்கையூட்டும் ஒரு பாடலை அவர் எழுச்சியோடு பாடினார் பாடிக்கொண்டிருக்கும் போதே அவர் சுட்டுக்கொல்லப் பட்டார் அவரது பாடல்கள் பினோஷேயின் ஆட்சிக்கெதிரான போராட்டக் கருவியாகின. துயர்மிகுந்த காலங் களில் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவனவாக அவரது பாடல்கள் திகழ்கின்றன.
பிளாசா டி மாயோவின் தாய்மார் (Mothers of the Plaza de Mayo) என்ற இயக்கம், ஆர்ஜென்ற்றி னாவிற் காணாமல்போன தங்கள் பிள்ளைகளைத் தேடுவதையே தம் ஒரே இலக்காகக் கொண்டு, தாய்மார்கள் இணைந்து உருவாக்கிய அமைப் பாகும் வெள்ளைத் தலைப்பட்டியைக் (he a d

ஜனவரிமார்ச் 204
S c a rf) கட்டியபடி நகரை அமைதியாக சுற்றி வந்ததே அவர்களது முதல் நடவடிக்கையாகும். காணாமற்போன தங்கள் பிள்ளைகளைத் தேடிய பதினான்கு தாய்மார் சேர்ந்து இவ்வியக்கத்தை உருவாக்கினர் அவர்கள் அனைவரும் ஒவ் வொரு வியாழக்கிழமை மாலையிலும் ஒன்று கூடி அரைமணி நேரத்துக்கு அமைதியாக நகரைச் சுற்றி வந்தனர் விரைவிலேயே காணாமற்போன பலரது தாய்மாரும் அவ்வியக்கத்தில் இணைந் தனர் பாடல்கள் அவர்களின் முக்கிய போராட் டக் கருவியானது தங்களது இழப்புக்களை ஆற்றுப்படுத்தவும் தங்களது துயரத்தைப் பிற ருடன் பகிரவும் தங்களது போராட்ட நியாயத்தை எடுத்துரைக்கவும் அவர்கள் பாடல்களைப் பயன்படுத்தினர்
தொடர்ச்சியாக ஒவ்வொரு வியாழக் கிழமையும் அவர்கள் கூடிப் பாடல்களையும் கவிதைகளையும் இசைத்தார்கள் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு சவால்விடும் ஒரே சக்தியாக அவர்களது பாடல்கள் இருந்தன. அவர்களது பாடல்கள் ஆர்ஜென்ற்றினாவெங்கும் பாடப்பட்டன. மக்கள் எதிர்ப்பின் முக்கியமான கருவியாக அப் பாடல்கள் மாறின. 1983 இல் இராணுவச் சர்வாதிகார ஆட்சி முடிவுற்ற பின்னரும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. காணாமல் போன தங்கள் பிள்ளைகளைப் பற் றிய தகவல்களை வெளியிடுமாறு அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்கள் 1980களின் இறுதிப் பகுதியில் ஆர்ஜென்ற்றினிய அரசாங்கம் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உதவித் தொகை அளிக்க முன்வந்தது. உதவித் தொகையை மறுத்த தாய்மார் தங்கள் பிள் ளைகளுக்கு என்ன நடந்தது என்று அரசாங்கம் சொல்ல வேண்டும் என்றும் காணாமல் போதல்களுடன் அரசுக்குத் தொடர்பிருக்கிறது என்பதை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர் இந்தத் தாய்மாரின் இயக்கம் ஆர்ஜென்ற்றினிய அரசியற் பண் பாட்டிற் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள்மயப்பட்ட இயக்கங்கள் உருவாகின. மக்கள் துணிந்து அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கித் தங்கள் உரிமைகட்காகப் போராடினர் அவற்றிற் கவிதைகளினதும் பாடல்களினதும் பங்கு பெரியது. இறுதியாக 2006இல் ஆர்ஜென்ற்றினா அரசாங்கம் காணமல் போதல்கட்கும் அரசுக்கும் தொடர்பிருந்ததை ஏற்று மன்னிப்புக் கோரியது. அவர்களது வியாழன் ஒன்றுகூடல்கள் இன்னமும் தொடர் கின்றன. பாடல்களும் தொடர்கின்றன. காணா மற் போகக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி

Page 23
| ඊtlyāt" ගිණුම් 84 |
நூல் 'அபிவி நூலாசிரியர் விடயபம் கி
ஏற்பட்ட Gof) G u5FTu u எனப் பை திட்டங்க விலை ரூப குருடம்பசிட்ட
N
அவர்கள் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்
இவை இலத்தின் அமெரிக்க இலக்கியத்தில் எதிர்ப்பின் குரலாகப் பாடல்கள் எப்படிச் செயற்பட்டன என்பதற்கான சான்றுகள் இன்று இளையவர்களின் முக்கிய எதிர்ப்பின் குரலாகப் பாடல்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. பழங்குடிகளினதும் நிலமற்ற வர்களினதும் தொழிலற்றவர்களினதும் வெளிப் பாட்டு மொழியாக இலத்தின் அமெரிக்கா முழுவதிலும் பாடல்கள் வடிவெடுத்திருக் கின்றன.
நிறைவாக
புரட்சியிற் கவிதைகள் முக்கிய பங்காற்று கின்றன என்பதை இலத்தின் அமெரிக்கக் கவிதைகள் உணர்த்துகின்றன. தற்கழிவிரக்கமோ முகத்துதிகளோ சொற்சிலம்பங்களோ கடின மான மொழியோ இன்றி மக்கள் நல நோக்கில் உருவாகும் கவிதை போராட்டங்களின் ஆதார மாகி மக்கள் இயக்கங்களைக் கட்டுதற்கான அடிப்படையாக அமைவதை இக் கவிதைகளிற் காணலாம். இது மக்கள் நலன் நோக்கிய படைப்பாளிகள் கற்றுக்கொள்ளத்தக்க பாட LD(T(5LB.
இன்னொரு முக்கிய பாடம் மக்கள் படைப் புக்களை வெளிக்கொணர்வதில் போராட்ட இயக்கங்களின் பங்கைப் பற்றியதாகும். ஒரு போராட்ட இயக்கம் எவ்வளவு ஜனநாயகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அதனூடு மக்களின் படைப்புக்கள் வெளிவரும் இதை எமது சூழலுக்குப் பொருத்திப் பார்ப்பது தகும்.
இலத்தின் அமெரிக்கக் கவிதைகளைப் பொறுத்தளவில் ஒரு பெரிய குறைபாடு அவற்றின் மொழிபெயர்ப்புக்கள் போதியளவில் வராமையாகும். கவிதைகள் அம் மக்களின் அன்றாட வாழ்வின் பகுதியாகியுள்ளபோதும் அவை போதியளவில் மொழிபெயர்க்கட் படுவதில்லை. புலம்பெயர்ந்த இலத்தின்
 
 

ஜனவரிமார்ச் 204
கிடைக்கப்பெற்றோம்
பிருத்தி வங்கியியல்
பொன். பாலகுமார் ராமியக்கொடுகடன் துறையில்
படிமுறை வளர்ச்சி மற்றும் க் கடன்கள் ஏதிலிகளுக்கான கடன் லதரப்பட்ட கிராமியக் கடன் 5ள் பற்றிய அறிவூட்டும் கட்டுரைகள் | 200/=
டி சன்மார்க்க சபை வெளியீடு
الرـ
அமெரிக்கப் படைப்பாளிகளின் படைப்புக்கள் பொதுவெளிக்கு வருமளவுக்கு இலத்தின் அமெரிக்காவின் உள்ளிருந்து எழும் குரல்கள் வருவதில்லை.
இலக்கியம் என்பது ஒரு மக்கள் இயக்கமாக இருப்பது இலத்தின் அமெரிக்காவின் முக்கியமான அம்சம் இலக்கியத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவது எம் முன்னுள்ள பணி எங்கெல்லாம் மக்கள் உரிமைகட்காகப் போராடுகிறார்களோ அங்கெல்லாம் கவிதை போராட்டத்தின் முக்கிய ஆயுதமாக இருக்கிறது. இங்கு துணைத் தளபதி மார்க்கோஸின் வரிகள்
நினைவுகூரத்தக்கன. " கவனமாக இருங்கள், சொற்களும் ஆயுதங்களே என்பதை மறந்து விடாதீர்கள்"
யாக மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இலக்கியமும் போராட்டத்தின் பகுதியாக உள் ளது. அவ்வாறான சூழலில் அதை வலுவூட் டுவதாயின் போராட்டத்தை இலக்கியமாக முன்னெடுக்கும் அமைப்புக்கள் தேவை. அவ் வாறு அமைப்புவயப்பட்ட சூழலில் இலக்கியம் முக்கிய போராட்டக் கருவியாக நெடுந் தொலைகளைக் கடக்கிறது. இது முக்கியமா னதும் நாம் கற்க உகந்த பாடமும் ஆகும். ஸ்தாபனரீதியான ஊக்குவிப்புக்குத் தேவை உள்ளது. உதிரியான எழுத்துக்களும் படைப்புக் களும் பயனிழக்கின்றன. உதிரியான எழுத்து அமைப்பாகாது அமைப்புவயப்படும் தேவை யையும் இலத்தின் அமெரிக்க இலக்கியங்கள் கூறுகின்றன. (சமூக விஞ்ஞானக் கல்வி வட்டத்தின் மாதாந்த கவித்துறை நிகழ்வான 'பாடிப்பறை" நிகழ்வில் 2013 பெப்பிரவரியில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

Page 24
தாயகம் இதழ் 34
பழியும் பழ மரமும்
தழைக்கவில்லை என்பதற்காய்க் காய்க்கவில்லை என்பதற்காய்க் கனிமரத்தை ஏசாதீர் செழிக்கவில்லை என்பதற்காய் மரத்தைக் குறை கூறாதீர் மற்றவரைப் பழியாதீர் உம்மையே நீர் கேளும்நீரென்ன செய்தீர்? ஒரு பொழுது நீர்மொண்டு உம் கையாற் பெய்தீரா? மண்ணில் உரம் இட்டீரா? குனிந்து களை எடுத்தீரா? புல்லுருவி, தொற்றினங்கள் பரவமுனம் களைந்தீரா? அனைவரிலும் குறைகண்டு பழியுரைப்பதைத் தவிர்த்தால்
நூல் யாழ்ப்பாணசமூக உருவாக்கமும் விபுலானந்தரும் நூலாசிரியர்:அ.கெளரிகாந்தன் விடயம்.1920களில் யாழ்குடாநாட்டில் நிகழ்ந்த சமூக உருவாக்கத்தினைமுதன்மைமையப்பொருளாகக்கொண்டு அச்சமுக உருவாக்கத்தில் பங்காற்றிய சிந்தனைப்போக்குகளின் பிரதிநிதிகளில் கனமிகுபாத்திரத்தை வகித்த யாழ்வாலிபர் காங்கிரஸ் குறித்தும் அவ்வமைப்பின்பங்களிப்பாளர்களுள் ஒருவராக இருந்த கிழக்குமாகாணத்தைச்சேர்ந்த விபுலானந்தரின்பங்குகுறித்து இந்தூல்பேசுகிறது. விலை:10ரூபா
இது ஒருஎழுதாவெளியீடு
 
 

ஜனவரிமார்ச் 204
சி.சிவசேகரம்
எதனிலுமே ஒட்டாமல் தாமரையின் இலைமேலே நீர்த்துளிபோல் நின்றிருந்தீர்
மரம் மட்டும் எவ்வாறோ கடுங்காற்றைக் கொடுவெய்யிலை விலங்குகளின் கடி, மிதிப்பை மீறி உயிர் பிழைத்து மெதுவாய் மிக மெதுவாய் வளர்கிறது, உயர்கிறது வேளை வரும்- அப்போது யாவினையும் மேவியெழும் யாவர்க்கும் கனிவழங்கும். சும்மா இருந்து குறை சொன்ன உமக்குந்தான்
நூல் யாழ்ப்பாணத்தமிழர்கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்
நூலாசிரியர் அகெளர்கந்தள்
விடயம்புத்தம் இடம்பெயர்வுமற்றும்சமூகபொருளாதார
அபிவிருத்தியால்துண்டப்பட்டுமாற்றத்திற்குள்ளாகும்
அடையாளங்கள்
aflaG: GO GUIT
இது ஒருஎழுதாவெளியீடு

Page 25
தாயகம் இதழ் 84
சடுதியில் வந்த அவனது மரணச் செய்தி என்னை அதிரவைக்கிறது. அதைக் கேட்ட திலிருந்து மனம் கனத்துப்போய் கண்கள் இருண்டு கொண்டுவருகிறது.
செபஸ்தியன் தற்கொலை செய்துவிட் டானாம்!
அந்த வாட் முழுவதுமே பரபரத்துக் கொண்டிருந்தது.
நோயாளிகள் முதல் தாதிமார், சிற்றூழி யர்கள் வரை தங்களது புரிதல்களுக்கேற்ப நியாயம் கற்பித்தபடி இருக்கிறார்கள்.
முகங்களில் வியப்பைத் தேக்கியபடி தமக்குள் விசாரணையில் ஈடுபட்டுக் கொண் டிருக்கிறார்கள்.
'அவிச்செபத்தி எனப் பெயர் சூட்டி அழைக்கப்பட்ட அவன் ஆஸ்பத்திரி வட் டாரத்தில் விசித்திரமான ஒரு பிறவி.
எல்லோருக்குமோ பிரசித்தமான ஒரு பேர்வழி அவன்.
அங்கிருந்த சிலருக்கு அந்த மரணச் செய்தி வழமையாக பத்திரிகைகளில் வந்து போகும் செய்தியாக, எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
கேட்டுவிட்டு தம்பாட்டில் ஒதுங்கிக்

ஜனவரி-மார்ச் 2014
சிறுகதை
ஆறாத் துயர்.
அநாதரட்சகன்
கொள்கிறார்கள்.
இன்னும் சிலரோ, அதனைச் சுவாரஸ் யமிக்க ஒன்றாக எடுத்துக்கொள்வது போலத் தெரிகிறது. அன்றைய பொழுதை, கதை அளந்து கழிக்க கிடைத்த செய்தியாகப் பட்டிருக்கவேண்டும்.
மாய்ந்து மாய்ந்து தமக்குள் குசுகுசுத்தபடி இருக்கிறார்கள்.
ஒரு சில பொழுதேனும் அவனுடன் பழகி, உதவி பெற்றவர்களுக்கோ அது கவலை தரும் இழப்பாகிவிட, விறைத்த முகங்களுடன், தமக்குள் சோகத்தைப் பகிர்ந் தபடி நிற்கிறார்கள்.
ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் எப்படி...?
எப்படி அவனது அவலச்சாவைத் தாங்கிக் கொள்வது? என்னால் ஜீரணிக்க
முடியாமல் இருக்கிறது.
எனக்குள் அதிர்ந்து ஒடுங்கிப் போயி ருக்கிறேன்.
ஏதோ என் உறவுக்குள் சடுதியில் நிகழ்ந்துவிட்ட துர்க்காரியமாகத் துயர் தந்தபடி இருக்கிறது,
செபஸ்ரியன் - மூன்று வாரங்களாகத்
23

Page 26
நான் வந்தபோ தான்றில் ,
| தாயகம்- இதழ் 84 தான் என்னுடன் பழகியவன். ஆனாலும், அதற்குள் அப்படியொரு பாசப் பிணைப் பினையல்லவா என்னுள் ஏற்படுத்தி விட் டிருந்தான்.
நான் விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு இங்கு வந்தபோது, எனக்கு அபயம் தந்து, நான் படிப்படியாக சொஸ்தமாகி வர உதவியவனல்லவா...!
பகல் முழுவதும் என்னுடனிருந்து வேண்டியவற்றைக் கவனித்து வந்தவ
னல்லவா...!
எனக்கு அவனிடம் பிடித்துப்போனது அவனது பேச்சும், பாவனையுந்தான். அந்தக் கூட்டின் விளைவாக வெளிப்படும் உடல் மொழியில் விகசித்திருக்கும் ஒருவித நளினமும், இலாவகமும் யாரையும் கவர்ந்துவிடும்.
அவை இன்னும் என் மனதைவிட்டு அகல மறுத்து நிற்கின்றன.
இந்த மன அவஸ்தையிலும், அவனது நினைவுகள் மனக்கண்ணில் வந்து முகங் காட்டி என்னை அலைக்கழித்தபடி இருக் கின்றன.
***
***
***
க?துக் கின் இந்த 'வாட்டுபவர்களுக்
இது இருபத்தெட்டாம் வாட் 'காயவாட் என்று பிரபலமாகிப்போன மற்றொரு பெய ரும் கூட இதற்குண்டு.
விபத்துக்களில், வெட்டுக்கொத்து சண் டைகளில் காயப்பட்டு வருபவர்களுக்கு அபயம் தருவது இந்த 'வாட்'தான். வலியில் துடித்துக் கிடப்பவர்களின் வேதனைக் கூச்சலும், அழுகையும் விரவி நிற்கும் வாட்டும் இதுதான். நோயாளிகள் ரண வேதனையில், புத்திக் கொண்டு கிடப் பதைப் பார்க்க, மனிதப் பிறப்பே வெறுத்து விடும்,
நானும் இந்த வாட்டுக்கு வந்து மூன்று வாரங்கள் ஓடிக்கழிந்துவிட்டன.
விபத்தொன்றில் சிக்கி எழுந்து நடக்க முடியாதபடிக்கு காலில் பாதிப்பு. படுக்கை யாகியே போய்விட்ட என்னை கூட நின்று பராமரிக்க ஒருதுணை தேவைப்பட்டது.
இரவிலென்றால் பரவாயில்லை. மகன்
நானும் டிக்கழிந்து எழுந்து

ஜனவரி மார்ச் 2014
வந்து கூட நின்று கவனிப்பான். பகல் வேளைக்குத்தான் ஆள் தேவைப்பட்டது. ஆள் தேடி அலைந்தபோதுதான், எனது நண்பனின் சிபார்சில் செபஸ்தியன் அறி
முகமானான்.
பொதுநிறம், உரமேறிய உடற்கட்டு, கறுத்த சுருண்டமுடி, முழங்காலுக்குக் கீழே இறங்கி நின்ற யம்பர்காற்சட்டை, கலர்ரீசேட் சிரிக்கையில் குழிவிழும் கன்னங்கள் வெற்றி லைக் கறை படிந்து போன பற்கள்.
-இதுதான் அவனது புறத்தோற்றம்,
முதற்பார்வையிலேயே அவனைப் பிடித் துப் போய்விட்டது.
செபஸ்தியன் அன்றிலிருந்து தனது பணி யினைத் தொடங்கிவிட்டான்,
சிலநாட்கள் பழகியதில், அவன் உரு வத்தில் வளர்ந்தவனான போதிலும், மனத் தளவில் பச்சைக் குழந்தையாகவே இருந் தான். - கல்மிசமில்லாத நெஞ்சு அவனுக்கு, கபடத்தனங்கள், தந்திரங்கள் அண்டாத அற்புதப் பிறவி, எந்த வக்கணைகளிலும் சிக்குண்டு போகாதவனாக எனக்குத் தென் பட்டான்.
ஒருநாள் வலியில் உழன்று கொண்டு எதேச்சையாக மறு பக்கம் திரும்புகையில், றேடியோவில் கசிந்துவந்த குத்திசைப் பாட லொன்றின் தாளத்துக்கு இடையை நெளித்து நெளித்து ஆடிக்கொண்டிருந்தான்.
படி அவன் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை பண்ணி ஆடிக்கொண்டிருதான், வேடிக்கை பார்த்துக்கிடந்த நோயாளிகளைப் பார்த்து கண்ணடித்தான். கண்களை கிறங்க வைத்துப் பாவனைகாட்டினான். பெண்மைக் குரிய அங்கலாவண்யம் காட்டி அவன் ஆடியது வேடிக்கையாகத்தான் இருந்தது.
அது அடிக்கடி நிகழ்வாகிப் போக, மற்றவர்கள் அவனைக் கேலியாக ரசித்துப் பார்த்துக் கதைப்பதையும் கண்டிருக்கிறேன்.
இப்படியான விகர்ப்பமான அசாதாரண செய்கைகளே, அவனை 'அவிப்பிறப்பு' என மற்றவர்கள் பரிகசிக்கவும் வைத்துவிட்டது.
உண்மையிலேயே செபஸ்தியன் அவிப்
றேடியோக மறு புகழன்று கொக

Page 27
தாகம்- இதழ் 34
பிறப்புத்தானா..?
அதை மனம் ஒப்ப மறுக்கிறது. இந்த விசாரணையில் தீவிரங்கொள்ள விரும்பா மல் எழுந்திருக்க முயல்கிறேன், முடியாம லிருக்கிறது,
அவன் என்னிடம் வந்ததிலிருந்து ஏதோ அறியாத பாசம் அவனில் ஒட்டிக்கொண்டு விட்டது. அவனுக்கும் என்மேல் அலாதியான விருப்பந்தான். அதை ஒவ்வொரு செயல் களிலும் வெளிப்படுத்திய வண்ணமிருந்
தான்.
ஒரு அடி கூட எழுந்து அசைய முடியாத நான் இயற்கை உபாதைகளில் அவஸ்தைப் படுகின்ற வேளைகளில் முகங்கோணாது உதவுவது வேதனையில் திணறி முனகு கையில் பக்கத்திலிருந்து தடவித் தடவி ஆறுதல் கூறுவது, நளினங்கள் செய்து என்னைச் சிரிக்க வைப்பது என எனது
நலனிலேயே குறியாக இருப்பான்.
இப்போதும் அவை எனது நினைவுச் சுழியில் மிதந்து வருத்தியபடி இருக்கிறது, என்றுமில்லாதபடி அவன்மேல் பச்சாதாபம் ஏற்படுகிறது,
ஒருநாள் காலைச் சாப்பாட்டின் பின் ஒய்வாக இருந்தவேளையில் அவனைப் பற்றியறிய ஆவல் கொண்டு, அருகில் அழைத்தேன். அவனது பூர்வீகம் பற்றி விசாரித்ததில், தான் குருநகரில் இருப்ட தாகவும், தாய் தந்தையரை இழந்து சகோதரியுடன் இருப்பதாகவும் கூறினான் தொழில் பற்றிக் கேட்க, தான் முன்ட கடற்றொழில் செய்ததாகவும், அதில் கட்டுட பாடுகள் வலுக்க, இந்த வேலைக்கு வந்து இது பிடித்துப்போக இதிலேயே நிலைத்து விட்டதாகவும் அவன் கூறியது மனதில் வந்து நிற்கின்றது.
செபஸ்தியன் எப்போதும் காலை ஆறுமணிக்கே சரியாக ஆஜராகி விடுபவன் என்னைக் கவனித்து, கூடவே பக்கத்து கட்டில்காரரின் சேமநலன்களையும் விச ரித்து உதவிசெய்வது அவனது சுபாவம்
அப்படியான ஒருவன் எனக்குக் கிடை தது எனது அதிஸ்டமென எண்ணி கொண்டிருந்தேன். நேற்று என்றுமில்லாதபடி
 

ஜனவரிமோர்ச் 204
முகம் வாடிப் போயிருந்தவனை இன்று எப்படியாவது தேற்றிவிட வேண்டும் என்று எண்ணமிட்டபடி இருந்தேன்.
率米米米 米米率率米米米 米米米米
நேற்று என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் போது அடியோடு மாறிப்போயி ருந்தான்.
முகம் சோகம் கவிந்துபோய் களையிழந்
திருந்தது.
ஏதோ சுமக்க முடியாத பாரத்தைச் சிலு வையாக சுமந்து நிற்பவன் போல தோற்றம் தந்தான்.
எதையோ நினைத்து நினைத்து நெட்டு யிர்த்தபடி நின்றான். அவனிடம் அந்த இயல்பான கலகலப்பையும், நளினத்தையும் காணமுடியவில்லை.
மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை உணர்ந்தேன். அதை என்னிடம் கொட்டித் தீர்க்க வழி தெரியாது விக்கித்து நின்றான்.
"செபஸ்தி. ஏன் ஒருமாதிரி இருக் கிறாய்..? உனக்கு என்ன நடந்தது.?”
நிலைமை புரிந்துபோக, பொறுமை யிழந்து நானே முந்திக்கொண்டு கேட்டேன்.
நூல் அடையாளமற்றிருத்தல் நூலாசிரியர் சம்பூர்வதனரூபன் விடயம் கவிதைகள் விலை ரூபா = பதிப்பு வடலி வெளியீடு

Page 28
"சேர். என்ரை டொறின். வெளிநாடு போறாளாம்."
மெளனம் கலைத்து விம்மலாக வெடித் துப் பதில் தந்தான்.
"அதுக்கென்ன? நீயும் போகலாம் தானே.!"
"வெளிநாட்டிலை வேறை மாப்பிளை பார்த்திருக்கினையாம்.'
'ஆர் சொன்னது உனக்கு."
"அவாட தாய் வீட்டை வந்து சொன் னவா..?” வார்த்தைகளை விழுங்கி விழுங்கிச் சொன்னான்.
"இப்ப வெளிநாட்டுகாசு அவைக்கு வருகிது. முந்தியெல்லாம் என்னைத்தான் எல்லாத்துக்கும் நம்பியிருந்தவை. இஞ்சை உழைச்சுழைச்சி அவளுக்குத்தானை குடுத் தனான். சிலவேளை ரண்டு நேரவேலையும் செய்திருக்கிறன், வேறை, வேலையாலே போகேக்கை அவளுக்கு விருப்பமான சாப் பாடுகள் வேண்டிக் குடுத்தன். விதம் விதமான உடுப்புகள். கடைசியா போன கிழமை என்தை போனையும் வாங்கிப் போட்டாள் சேர்."
ஆவேசம் வந்தவனாக எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தான்.
"செபஸ்தி. நீ ஒருக்கா அவளோடை
நேரிலை கதையன் என்ன சொல்லுறா எண்டு LITTL LILћ.?”
அவனுக்கு ஆறுதல் கூறுவதாக நினைத் துக் கூறி வைத்தேன்.
“சேர், அவா இப்ப என்னோடை கதைக்கிறதையும் விட்டிட்டா. பிறகு எப்பிடி.? அவாக்கு என்ன செய்யிறனெண்டு
போக விடமாட்டன்."
ஏமாற்றம் மேவிட வார்த்தைகள் கனத்து பழிதீர்க்கும் வைராக்கியம் அவனுள் வலுப்பெற்றது.
இப்படி அவன் பேசியது வெகுளித் தனமாகப் பட்டாலும், அதில் சத்திய ஆவேசம் தெரிந்தது.
நொந்துபோயிருக்கும் அவனுடன்
 

O ஜனவரிமார்ச் 2o
பேச்சை வளர்த்துக்கொள்ள விரும்பாமல், மறுபக்கமாகத் திரும்பிப்படுத்தேன்.
அவன் யன்னல் வழியாக எதையோ வெறித்தபடி இருந்தான்.
அவனில் பச்சாதாபப்பட்டுக்கொண்டு கிடந்த நான் கண் அயர்ந்து போனேன்.
சொற்பவேளையில் என் கால்களை யாரோ வருடிக் கொண்டிருப்பதை உணர்ந் தேன்,
அசதியுடன் கண்களைத் திறக்க,
"சேர், நான் போட்டுவாறன். சுடு தண்ணி எடுத்து வைச்சிருக்கிறன் இடை யிலை பசிச்சால் ரீ போட்டுக் குடியுங்கோ."
அவனது பணி முடிவடையும் நேரம் நெருங்கிவிட்டதை மணிக்கூட்டில் அவ தானித்தேன்.
என்னுடன் செபஸ்தியன் பேசிய கடைசி வார்த்தைகள் அவை,
என் கைகளைப்பிடித்து இன்னும் ஏதேதோ சொல்ல முயன்றான். வார்த்தைகள் அவனுக்கு வெளிவரவில்லை.
தோற்றுப்போனவனாக வெளியே நடந் தான். மனசுக்குள் அழுதழுது முகம் இருண்டு போய்க்கிடந்தது. அவன் நடையில் தளர்வு தெரிந்தது.
அவன் போவதையே பார்த்துக்கொண் டிருந்தேன்.
米米米※ 米米米米 米米米米
இன்று அவன் வரவை எதிர்பார்த்து குறியாய்ப்படுத்திருக்கின்றேன்.
அவனுடன் நிறையவே பேசவேண்டும்.
அவனுக்கு ஆறுதல் கூறி அவன் மனச் சுமையைப் போக்கவேண்டும்.
அவனை முடிந்தளவுக்கு ஆற்றுப்படுத்தி பழைய செபஸ்தியனாகப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் அவனுக்காகக் காத்துக் கிடக்கிறேன்.
எனது உடல் காயங்கள் ஆறிவர துணையிருந்து உதவியவனல்லவா! மனம் காயப்பட்டுப்போய், வேதனையைச் சுமந்து திரியும் அவனை அமைதிப்படுத்த வேண்

Page 29
தாயகம்- இதழ் 84
உன்னால் விற் இறகு விரிக்கு பூக்களையும், ! செடிகளையும்
சு, தவச்செல்வன்
நீ விற்கிறாய் மீன் விளையா சூரியனை துல பசு மேயும் பு6
((DI909 ( பாhhd) ஒ0(100 T098
நீயறிவதில்லை எம் மூதாதைய நதிகள் அவர்க பழைமையான
நீ விற்கும் எல் அவை என்னு அவை நம்முள்
எல்லாவற்றை எப்போதாவது புயலை உன்ன கட்டுக்கடங்க உன்னால் விற்
டும். அவனுக்கு அமைதியைத் தேடிக் கொடுக்க வேண்டும் என எண்ணிக் காத் திருந்த வேளையில் தான்...
"மாஸ்ரர்.. மாஸ்ரர்.., உங்களைப் பாக்கிற செபத்தி செத்துப் போச்சுதாம். ஆரோ பெட்டையையும் வெட்டிப்போட்டு இராத் திரிதானும் தூக்குப்போட்டு...''
"என்ன...?" அதிர்ந்து போய் கேட்கிறேன், “வெளியிலை ஒரே கதையாக்கிடக்கு, இரண்டுபேரையும் கொண்டு வந்து மோச் சரியிலை போட்டிருக்காம்...?"
கன்ரீனுக்குப் போய்விட்டுவந்த பக்கத் துக் கட்டில்காரன் வந்து சொல்கிறான்.

ஜனவரி மார்ச் 204
க முடிகிறது ம் பறவையின் காற்றை இலைகளையும் இன்னும் பல
'டும் குளங்களை, பாவிடும் மரங்களை, ப்வெளிகளை,
ல சூழ்ந்து நிற்கும் மலைகள் பரின் சிரசுகளென்று ளின் குருதியிலும் எவையென்று
லாமும் உன்னுடையவைதான்: டையதும்தான் டெயது; மக்களுடையது
யும் விற்கிறாய்! - J அவர்கள் தோற்றுவிக்கும் பால் விற்கமுடியுமா?
எது வரும் வெள்ளத்தை கமுடியுமா?
இதனைக்கேட்டு அந்த வாட்டே பரபரத்துப் போயிருக்கிறது.
அவனில் அனுதாபப்பட்டவர்கள் என் னிடம் துயரைப் பகிர்ந்து கொள்ள அருகில் வந்து நிற்கிறார்கள். வெளிநாட்டு மோகத் தால் வந்தவினை இது, இரண்டு உயிர்களை பலிகொண்டுவிட்டதை எண்ணி மனம் கனத்துப்போயிருக்கிறது.
அவர்களுக்காக இரக்கப் படுவதைத் தவிர, வேறென்ன செய்ய முடியும்..?
எனக்குள் திகைப்பும், கலக்கமும் மேவிட, அவனது நினைவுகளோ அழியாக் கோலங்களாக என்முன் விரிகிறது.
27

Page 30
தாகம் இதழ் 84
நெல்லைமறைத்துப்புல்வளர்ந்தால்பட்டினியால்வ புல்லைப் பற்றிப் பேசுதல், புல் வளர்ந்தது பற்றிப் பேசு புல், நெல்லை மறைத்ததைப் பற்றிப் பேசுதல், ஏன் புல் நுனியில் இருப்பவனைப் பேசுதல், இவை எப்போதுமே நடப்பவைதான்.
ஆகையால் நான் அவற்றைப்பற்றிப் பேசப்போவதில்ை அவனையும் பேசப்போவதில்லை. அதற்குப் பதிலாக ஒரு கதையை சொல்லிவிட்டு போகிறேன்.
பூமியின் மையம்வரை ஊன்றிய தன் வேரை ஏழு கடல், எண்ணிலடங்கா நதிகள் இன்னும் பல குளர் எல்லாவற்றையும் எட்டித் தொடுவதற்காய் பரப்பி வானம் மறைக்கத் தாள் விரித்து எல்லாவற்றுக்கும் ஆதாரமாய்க் கதிர் தந்து நின்ற பல்லாயிரம் ஆண்டுகால நெல்லைப் பற்றிச் சொல்லப் போகிறேன். நெல்லை மறைக்கவென இடையில் வளர்ந்த புல்லைப் பற்றியும், சிலவேளை இந்தக் கதை உங்களுக்குச் சொல்லக்கூடும்.
இடையில் வளர்ந்த புல்லும் நெல் போலே வேரூன்றி, வேர் பரப்பி தாள் விரித்து நிற வேகமாய் வளர்ந்தது- நெல்லுக்காய் இறைத்த நீரைக் (
புல் வளரும் போது அதன் அழகை ரசித்தவர்களும்
அதன் அழகை வர்ணித்தவர்களும் அது நெல்லைப் போல் கதிர்தராது எனத் தெரிந்தபோது
下表
 

ஜனவரிமார்ச் 204
Uଶ୍ରାର୍ଥୀ
தி.அனோஜன்
டும்பாவப்பட்டவன்களுக்கம் தல்,
iபதற்காய் 5டித்து.

Page 31
அமைதியாயினர் அது நெல்லை மறைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் அ இன்னும் பெரிதாய் வளர்ந்த போது புல்லில் பிழையில்லை எனச் சொல்லி புல்லின் நுனி மேலிருப்பவனைத் திட்ட ஆரம்பித்த நெல்லின் அழிவால் வாடிய பாவப்பட்ட ஜீவன்களு அவனையே திட்ட ஆரம்பித்தன.
ஆனால் நான், ஒருபோதும் அந்தப் புல் நுனியில் இருப்பவனை மட்டுமே திட்ட அவன் மட்டுமே எல்லாக் கண்களுக்கும் தெரிந்திரு நெல்லை மறைப்பது அவன் மட்டும்தான் என எல்லா மூளைகளும் நினைத்திருந்தாலும் நான் அவனை மட்டுமே திட்டமாட்டேன்.
விடியலில் சூரியன் வரும்போது கரைந்து காணாமற் போகின்றவனைத் திட்டி என்ன
ஒவ்வொரு முறை சூரியன் வரும்போதும் புல் நுனியில் இருப்பவன் காணாமற் போவான் புல் அப்படியே இருக்கும் தொடர்ந்து சூரியன் வரும்போது புல் சற்றே அழிவதான தோற்றத்தைத் தந்தபோது அது என்றும் அழிந்ததாய் கதையில் பதிவுகள் இல்ை புல் புதுப்பரிணாமம் எடுத்ததாயும் முன்பைவிட வேகமாய் நெல்லை அழித்து வளர்ந்த பதிவுகள் உண்டு.
உண்மையில் வேகமாய் வளரும் இந்தப் புல்லையுய புல்லின் வேர்களையும் தான் திட்டவேண்டும் நீரை உறிஞ்சுபவையும், புல்லை காப்பாற்றுபவையு எனவே இவற்றைத்தான் திட்டியாகவேண்டும்.
திட்டுவதுமட்டும் போதாது அரிவாளைக் கொண்டு கருவறுப்போம்" என்று என் தோழன் குரல் பலமாக வாடுகின்ற ஜீவன்களையும், அந்த ஜீவன்களுக்காய்
விளிக்கிறது அந்தக் குரல்.
தோழனே உனக்கொரு வேண்டுகோள் நெல்லை மறைப்பது புல்தான் என்று உரத்து சொல் எல்லோரும் விழித்தெழும்படி பலமாய் சொல்லிவி இல்லையேல், அரிவாள்கள் வரும், கருவறுப்பும் ந1 புல் நுனியில் இருப்பவனை மட்டும். புல், பத்திரமாய் இருக்கும்.

ஜனவரிறார்ச் 204
அழித்து
னர்
மாட்டேன். ந்தாலும்
| Ljul săi!
ம் இவையே
GIFT க் கேட்கிறது. பேசுபவர்களையும்
லிவிடு
டு
டக்கும்

Page 32
வாசகர் விமர்சனம்
ÜOUCO
பூரீலேக்கா பேரின்பகுமார் அவர்கள் எழுதிய சிறுகதையான 'அப்பம் மனித உணர்வுகளின் பிரதிபலிப்பாய் அமைந்துள்ளது. இச்சிறு கதையை வாசிக்கும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்களை இவ்விமர்சனத்தின் மூலம் உங்களுக்குத்தருகின்றேன்.
இச்சிறுகதையில் கிராமியச் சூழலை அடிப் படையாகக் கொண்டே கதைக் களம் அமைகின்றது. அதில் வாழும் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம் அவர்களின் தொழில் என்பவற்றை இச்சிறுகதை விளக்கி நிற்கிறது. மேலும் இதில் முக்கிய அம்சமாக கதையை நகர்த்திச் செல்ல பாத்திரங்கள் மிக முக்கியம் அந்த வகையில் இக்கதையில் முக்கிய பாத்திரமாக பார்வதி என்னும் பாத்திரத்தை வைத்து அதனோடு தொடர்புடையதாக பார்வதி என்னும் பாத்திரத்தை வைத்து அதனோடு தொடர்புடையதாக சில பாத்திரங்களை அமைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. அப் பாத்திரங்கள் யாவை என்று பார்த்தால் சரஸ்வதி ரீச்சர் விசாலாட்சி, கதிர்காம்பபிள்ளை ஒரு சிறுமி, மோட்டார்வண்டியில் வந்த இளைஞர்கள் போன்றோர் இதில் இடம்பெறும் பாத்திரங் களாகும.
இதில் கையாளப்பட்டிருக்கும் கிராமிய பண்பாடு, கிராமிய பேச்சுவழக்கு என்பவற்றை வாசிப்போரை ஒரு கிராமியச் சூழலுக்கு அழைத்துச் செல்கிறது. மேலும் இக்கதையில் இக்கிராமத்து மக்களின் பழக்கவழக்கங்களையும் அறியக் கூடியதாய் உள்ளது. உதாரணமாகப் பார்த்தால் நித்திரை விட்டு எழும்பும் முன் இறைவனை வணங்கிவிட்டு எழல்" "பிறருக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவுதல்" போன்றவற்றைக் கூறலாம்.
இக்கதையின் ஆசிரியர் ஒரு சிறு விடயத்தையும் உவமைகள் கொண்டு கையாளுகிறார். உதாரண மாகப் பார்த்தால் "மல்லிகை மலர்கள் உதிர்ந்து வீழுவது போல் தேங்காய் துருவல்கள் வீழ்ந்து தட்டை நிரப்புகின்றன." போன்ற உவமைகளைக் கூறலாம். மேலும் கதை ஆசிரியர் சாதாரண மக்களும் வாசித்து விளங்கும் படியாக மிகவும் எளிமையான மொழிநடையும் பரிச்சயம் உள்ள பிறமொழி கலப்பும் கையாளப் பட்டுள்ளது.
 

ஜனவரிறார்ச் 204
செல்வி பிரவீணா- விளான், இளவாலை
இக்கதாசிரியரின் சிறப்பம்சம் வாய்ந்த உத்தியாக காணப்படுகின்றது.
இவை அனைத்தையும் விட ஒரு சிறப்பு யாது என்றால் இவர் படைத்திருக்கும் பார்வதி என்ற பாத்திரம் இப்பாத்திரம் இக்கதையில் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது என்றால் எதற்கும் கவலைப்படாமல் மிகவும் துணிவுடன் போராடும் பாத்திரமாக சித்தரித்துள்ளார் எக் கஷ்டம் வந்தாலும் தானே உழைத்து வாழ்வேன் எனும் போராடும் குணம் கொண்ட வயது முதிர்ந்த பெண்ணாகவும் யார் துணையும் இன்றி தனிமையிலேயே வாழும் துணிவு கொண்ட பாத்திரமாகவும் சித்திரிக்கப்படும் இப்பாத்திரம் ஒரு சிறு பிள்ளை அப்பம் கேட்டு கொடுக்க முடியாது போனபோது கண்ணிர் விடுகையில் அப்பெண்ணின் மனதிலும் ஒரு மூலையில் பாசமும் ஏக்கமும் இருப்பது தெரிகிறது.
இதனை சிறப்பு மிக்க இச்சிறுகதையை வாசிப்பவர்கள் ஒரு முறையேனும் சிறுதுளி கண்ணிராவது விடுவர் ஏனெனில் அத்தனை பெரிய உணர்ச்சியை தாங்கியுள்ளது.
மேலும் இக்கதையின் தொடக்கத்தில் இடம்பெறும் ஒரு முதியவரின் ஒவியம் இக்கதையின் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் அப்பம்
அன்னம் உண்டது போல் பரிபூரணமாக உள்ளது.
தாயகம் வாசகர்களுக்கு
ஆக்கங்கள் பற்றி உங்கள் காத்திரமான விர்சனங்களை எதிர்பார்க்கின்றோம். உங்கள் விர்சனங்கள் அடுத்த இதழில் இடம்பெறும்.
dpass
ஆசிரிyர்
தாயகம்
ஆடிய பாதம் விதி
கொக்குவில்

Page 33
தாயகம்- இதழ் 84
கல்வியும் சமூக ஒரு கல்விச் சமூகவியல்
கல்வியானது தனிமனித வளர்ச்சிக்கு மட்டுமன்றி சமூக மேம்பாட்டிற்கும் உரியது. என்பது கல்விச் சமூகவியல் நோக்கு ஆகும். கல்வியை ஒரு சமூகச் செயற்பாடாகவே கல்விச் சமூகவியல் கருதுகின்றது. கல்வி வழங்கும் நிறுவனங்களை சமூக நிறுவனங்களாகக் கொண்டு அவற்றின் கல்விச் செயற்பாடுகளை கல்விச் சமூகவியல் நோக்குகின்றது. இந் நிலையில் சமூக மேம்பாட்டிற்கான பிரதான கருவியாக கல்வி விளங்குகின்றது. இவ்வடிப் படையில் கல்வியின் போக்கையும் அதன் உள்ளடக்கத்தையும் கல்வி முறைகளின் வளர்ச்சி யையும் அதன் சமூகப் பயன் கொண்டு நோக்க வேண்டிய தேவை எழுகின்றது. இவ்வகையில் கல்வியின் செயற்பாட்டு ஒழுங்கையும் அதன் தற்கால மாற்றங்களையும் அதன் அடிப்படையில் பெறப்படும் சமூக மாற்றங்களையும் கல்விச் சமூகவியல் அடிப்படையில் நோக்குவது சிறப் பானதாக அமைய முடியும். தனியே தனிமனித விருத்திக்காகவோ அல்லது தொழில் மேம்பாட் டிற்காகவோ அன்றி சமூக மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கல்வியில் தனது ஆளுமைகளைப் பதித்து தமிழ் சமூகத்தில் தனக்கென ஒர் தனிஇடத்தை பிடித்து இன்று வரையும் தமிழியற் பார்வைகளில் சமூகப் பார்வையை ஏற்படுத்திய பேராசிரியர் க. கைலாசபதியை நினைவு கூரும் இவ்வேளையில் சமூக மேம்பாட்டிற்கு கல்வியின் நோக்கத்தினை இந்நிலையில் கல்விச் சமூகவியல் கோட்பாடு களை விளக்கிக் கொள்வதும், அவற்றினை விமர்சனக் கண் கொண்டு நோக்குவது எமது அனுபவங்களின் அடிப்படையில் பொருத்தமான கல்விச் சமூகவியல் - பார்வை ஒன்றைத் தேடுவதும் ஆரம்பமுயற்சியாகின்றது. கல்விச்சமூகவியல் நோக்கங்கள்
சமூகவியல் கோட்பாடுகளையும் முறை களையும் பல கல்விப் பிரச்சனைகளுக்கு

ஜனவரி மார்ச் 2014
கட்டுரை
மேம்பாடும்: > நோக்கு
க.சிவகரன்
விடைகாண கல்விச் சமூகவியல் (Educational So cio 10 g y) பயன்படுத்துகின்றது. என ஸ்மித் குறிப்பிடுகின்றார். "கல்வி நிலையங்களைச் சமூக நிலையங்களாகக் கருதி ஆராயும் அறிவியற் பிரிவே கல்விச் சமூகவியல்" என குல்ப்(Kulp) குறிப்பிடுவார். கல்விப் பிரச்சினைகட்கு சமூகவியலின் அடிப்படையில் விளக்கம் தரும் இயலே கல்விச் சமூகவியல் என மேலும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். கல்வியின் சமூக நோக்கு (Social Ai n) கல்விச் சமூகவியலின் அடிப்படையாகின்றது. கல்விச் சமூகவியல் எனும் சொற்றொடரை முதன் முதல் டாக்டர் ஜெ.எம். கில்லெட் (Dr.J.M.Gillette) எனும் அறிஞர் பயன்படுத்தினார்.
கல்விச்சமூகவியல் அடிப்படையில் சமூ கத்தில் ஆசிரியரின் பணி, கற்றலை ஊக்குவிக்கும் சமூக விசைகளை இனங்காணல், பாடசாலை அல்லது கல்வி முறைக்கும் சமூகத்தேவைகட்கும் இடையே உள்ள பொருத்தப்பாட்டை இனங் காணல், சமூக உலகமாற்றங்கள் எந்தளவிற்கு சமூகங்களைப் பாதிக்கின்றன என்பதை இனங் காணல், கற்பிக்கும் முறைகளையும் கலைத் திட்டத்தியும் இனங்காணல், பெறப்படும் கல்வியின் சமூகப் பயன்பாட்டை இனங்காணல், சமூதாய மேம்பாட்டை இனங்காணல், சமுதாய மேம்பாட்டையும் கல்வியையும் தொடர்பு படுத்தல், மாணவர் மையக் கல்வி, சமுதாய மையக் கல்வி, வாழ்க்கை மையக் கல்வி என்பவற்றின் பயன்பாட்டை அறிதல் என்பன சாத்தியமாகின்றது. கோட்பாட்டு வளர்ச்சிகள்
- கல்விச் சமூகவியல் வளர்ச்சியடைந்த முறையில் அது அக்காலத்தில் பிரபல்யம் பெற்ற சமூகவியற் கோட்பாடுகளுடன் தொடர்புபட்டு விளக்கம் பெற முற்பட்டதை காணமுடிகின்றது. இவ்வகையில் கீழ்வரும் கோட்பாட்டியல் அணுகுமுறைகளை பரிசீலிப்போம்.
31

Page 34
- தாயகம்- இதழ் 84
6ே ;
சமூகமயமாக்கலும் கல்வியும்
சமூகவியலாளரான எமில் டுர்கையீம் (Emile Durkheim) சமூகமயமாக்கலை விளக்குகையில் "சமூகமயமாக்கல் என்பது ஒரு தனியாள் தனது சுற்றாடலின் சமூக சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைவதாகும்” எனக் குறிப்பிடுகின்றார். இச் சமூகமயமாக்கல் - எவ்வாறு நிகழ்கின்றது என்பதற்கும் - பல விளக்கங்கள் உள்ளன. இக்கோட்பாட்டின் படி சமூகமயமாக்கல் என்பது சமூகம் தான் விரும்பும் சமூகத்தை மீளவும் படைப்பதற்கு உதவும் கருவிகள் தொடர்பாக கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவை எவ்வாறு கலைத்திட்டம் மறை கலைத்திட்டம் ஊடாக அமுல்படுத்தப் படுகின்றன என்பதை கல்விச் சமூகவியலில் கண்டு கொள்ள முடிகின்றது. சமூகமயமாக்கம் என்பது ஒரு மரபார்ந்த அணுகுமுறையாகும். இதுவே தொழிற்பாட்டு வாதத்தின் அடிப் படையாகும். இதன்படி சமூகம் மனித உடல் போன்றது எனவும் கல்வி அதற்கு ஊட்டமாக அமைகின்றது எனவும் கருதப்பட்டது. இந்தக் கருத்து நிலையானது இருக்கின்ற சமூக அமைப்பை பேணிப்பாதுகாக்க வேண்டிய சமூகமயமாக்கற் செயற்பாடுகளை நியாயப் படுத்துவதாக அமைந்தது. இவையே பழமை வாதம் பின்பற்றப்படவும் சமூக ஒழுங்குகள் மனிதர்கட்கு மனிதரால் உருவாக்கப்பட்டவை என்பதை மறுப்பதாயும் சமூகத்தில் அதிகாரம் கொண்டவர் எற்படுத்தும் கல்வி முறையின் ஊடாக மேற்கொள்ளப்படும் சமூகமயமாக்கல் வலுவற்றவரின் பண்பாடு அடையாளம் என்ப வற்றை சிதைப்பதுடன் தமது சுய இலாபங்களை எட்டவும் வழிவகுத்தது என்பதையும் கண்டு கொள்ள முடிகின்றது. கல்வியும் சமூக அசைவும்
" வகுப்பு அமைப்பில்லாமலோ படிநிலை அமைப்பில்லாமலோ எந்த ஒரு சமூகமும இல்லை. 2 செயற்பாட்டு நிலையில் - கூற வேண்டுமாயின் எந்த ஒரு சமுதாய அமைப்பும் அதன் செயற்பாட்டு நிலையில் ஏதோ ஒரு வகையான சமநிலையின்மையைக் (In equality) கொண்டிருக்கும். இது ஓர் உலகளாவிய விதியாகும்" எனும் சமூகவியல் அறிஞரின் கண்டுபிடிப்புகட்கு ஏற்றதாக மேற்படி சம நிலையற்ற சமூகத்தில் மேலே அசைந்து செல்லு வதற்கு கல்வி எவ்வாறு துணை செய்கின்றது என சமூக அசைவினை விளங்குவோர் எடுத்துக் காட்டுகின்றனர். இவர்களின் படி கல்வி சமூக அசைவிற்கு உரிய கருவியாகவும் ஒருவர் அடையும் அந்தஸ்தைப் பெறுவதற்கு கல்வி

ஜன வரி மார்ச் 2014
துணை செய்வதையும் விபரித்து விளக்கு கின்றனர். இச் சமூக அசைவானது குறிப்பிட்ட கல்வி பெற்றுக் கொண்ட தனியாள்கட்கு சமூக மேம்பாட்டை அடைய உதவும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் சமூக அசைவு படி நிலைகளைத் தாண்டி மேற் செல்கின்ற பொழுதும் கீழைநாடுகளின் சாதிய கட்டமைப்பில் மேல் எழல் என்பது எந் தளவிற்குப் போலியானது என்பதையும் ஒரு வர்க்கு உரித்துடைய அந்தஸ்து மாறாத தன் மையின் கல்வியின் சமூகப் பயன்பாடும் சமூக மேம்பாடும் கேள்வி குறிபாக்கப்படுகின்றது என்பதும், இங்கு கவனிக்கப்பட வேண்டி யுள்ளது. கல்வியும் சமூக மீள் உருவாக்கமும்
கல்வியானது மனிதர்களை இட்டு நிரப்பு கின்ற ஓர் செயலைச் செய்வதுடன் அது சமூகத்தை மீளவும் உருவாக்கும் செயன்முறையையே செய்கின்றது என முரண்பாட்டு நிலை நோக்குகள் எடுத்துக்காட்டுகின்றன. (Conflict Theory) மிகச் சிறந்த சமூக அறிஞரான கார்ல்ஸ் மார்க்ஸ் (Karl mm a r x ) இக் கோட்பாட்டின் தோற்றத்திற்கு அடிப்படையானவர். இவர் முரண்பாட்டை இயங்கியலின் வழி விளக்குகினார். மார்க்சிய அறிக்கையின் படி சமூக அடிக்கட்டு மானமும் அதன் மேன்மையும் அடுக்கமைவுகளும் மனி தனை வரலாற்றின் பொருளாக காணும் பண்பை உணர்த்துகின்றன. - மார்க்சிய பகுப்பாய்வு இயலை அடிப்படையாகக் கொண்டு போலோ பிறேறி (Paulo Freire) முன்வைத்த கருத்தாக்கங்கள் உலகப் பிரசித்தமானவை. அவர் சுட்டிக்காட்டிய 'மெளனித்து வாழுதல்" (Culture of Silence) வங்கி முறை (Banking) முதலாம் கருத்தாக்கங்கள் கல்விச் சமூகவியலியல் மாற்றுச் சிந்தனைக்கு இடம் கொடுத்தன. சமகாலகல்விச்சமூகவியல் பார்வைகள்
சம் - காலத்தில் கல்வியில் சமத்துவம், சமசந்தர்ப்பம், தரம், தரநிர்ணயம், உலகளாவிய தரம், அறிவுமையம் போன்ற கருத்துக்கள் பேசப்படுகின்றன. இவற்றை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அவை கல்வி மேம்பாட்டு வரப்பிரசாதங்கள் ஆகத் தோற்றமளிக்கின்றன, ஆயினும் அவற்றின் அடியில் மறைந்துள்ள ஏமாற்றுத் தனங்களையும் அவை எந்தளவிற்கு நடைமுறையில் பயன்பாட்டையும் சமூக மேம் பாட்டையும் - கொண்டுவரக் கூடியன என்பதையும் ஆய்வு செய்யும் பார்வைகளும் உள்ளன. இவற்றின் அடிப்படையில் அறிவிற்கும் அதிகாரத்திற்கும் உள்ள தொடர்பு விஞ்ஞானத் தின்- சமூகவியலில்- அறிவின் சமூகவியல், மனித

Page 35
தாயகம்" இதழ் 84 |
நூல் : 'தமி
- வ நூலாசிரிய விடயம் : 4
விலை : ரூ ஜீவநதி 6ெ
மூலதன ஆக்கமும், பின்னைய முதலாளித்துவ வளர்ச்சியும், சமகால சமூக உளவியல் நிலையில் காணப்படும். கோளமயமாக்கலின் தாக்கம் ஆகிய துறைகளில் கல்விச் சமூகவியற் பார்வை கள் விரிவுபடுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க
முடிகின்றது. கல்வியும்- சமூக மேம்பாடும் சிலகல்விப் புலங்கள் மீதான பார்வை
இன்றைய கோளமயச் சூழலில் எமது கல்விச் சமூகவியற் பார்வைகளை வடிவ மைப்பதும் பொருத்தமான சமூக மேம்பாட்டு அணுகுமுறைகளின் வழித் தடங்களில் எமது சூழலிற்கு ஏற்ற பார்வை ஒன்றைக்கட்டி எழுப்புவதும் அவசியமாகின்றது. சமூக மேம் பாடு கல்வியால் எட்டப்படும் பொழுது அதனை நடைமுறைப்படுத்தும் குறிக்கோள்களும் நோக்கங்களும் அவற்றை நடைமுறைப் படுத்தும் முறைசார், முறைசாராமுறையில் கல்வி நிறுவனங்களின் பங்கும் பணியும் ஆசிரியர் தம் சமூக மேம்பாட்டு கருத்தியல்களும் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டியனவாகின்றன. இவ்வடிப் படையில் பின்வரும் துறைகளின் ஊடே எமது
பார்வைகளை முன்வைப்போம். பொதுக்கல்வியும்- சமூக மேம்பாடும்
பொதுக் கல்வியானது பொதுவாக பாடசாலைக் கல்வியைக் கருதுகின்றது. இன்று பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி என்ற நடைமுறை காணப்படுகின்ற பொழுதும் இருக்கின்ற பொதுக் - கல்வி நடைமுறையில் பாரிய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
பொதுக் கல்வியின் பிரதான பண்பு அதன் சமமற்ற கல்வி வாய்ப்புகளாகும். கிராமிய பாடசாலைகளில் காணப்படும் வளமற்ற கல்வியும் நகர்ப்பாடசாலைகளின் வாய்ப்புகளும் தொடர்ந்து விரிவுபட்டே செல்கின்றது. கல்வி யில் சமவாய்ப்பு என்பதும் கிராமிய பிள்ளை கட்கு தரமான கல்வி என்பதும் தொடர்ந்தும்

ஜன வரி மார்ச் 2014
கிடைக்கப்பெற்றோம்
ழ் சினிமாவின் பார்வையில் ஈழம்' ணிகமாக்கப்பட்ட வலிகள் ர்: இ. சு. முரளிதரன் சினிமாவின் பலதளங்களைப்
பற்றிப் பேசுகிறது
பா - /= வளியீடு-27
பிரச்சினைக்கு உரிய விடயமாகவே உள்ளது. இலங்கையின் பொதுக் கல்வி முறையானது பிரித்தானிய காலனித்துவத்தின் எச்சமாயும் அதன் ஏட்டுக் கல்விமுதன்மை இன்றும் குறைவு படாத ஒன்றாகவும் உள்ளது. இப்பொதுக் கல்வி முறையின் வெளியே தள்ளப்பட்ட வேலையற்ற இளம் பராயத்தினருக்கு வேண்டிய வழி வகைகள் கண்டறியப்படவில்லை. - மூன்று இலச்சம் மேர் வருடந்தோறும் பொதுக் கல்வியை முடித்து வெளியேறுகின்ற பொழுதும் இருபத்தையாயிரம் பேர் மட்டுமே உயர் கல்வியைப் பெற முடிகின்றது.
உழைப்பை வழங்க கூடிய மனிதவளம் பொதுக்கல்வியால் பூரணத்துவம் பெறாத ஒரு தொகுதியினராக நாட்டிற்கு வழங்கப்பாடல், இன்றும் தீர்க்க முடியாத பிரச்சினையாகவே யுள்ளது. எனவே கல்விச் சமூகவியல் பார் வைகளின் அடிப்படையில் பொதுக்கல்வியின் பண்பும் பயனும் சீர்தூக்கிப் பார்க்கப்பட
வேண்டியுள்ளது.
பொதுக்கல்வியின் கலைத்திட்ட வடிவ மைப்பில் நாட்டின் வளம், நாட்டின் தேவைகள், சமூக மேம்பாடு, பொருளாதார சமத்துவம் முதலிய உட்படுத்தப்பட்டு சீர்செய்யப்பட வேண்டியது அடிப்படையான கல்விச் சமூக வியல் பார்வையாக அமைய முடியும். பல்கலைக்கழகக்கல்வி
நாட்டிற்கு வேண்டிய மனித வளத்தில் ஆய்வாளர்களையும் திட்டமிடலாளர்களையும் தலைவர்களையும் உயர் சேவையாளர்களையும் கொண்ட மனித வளத்தை உருவாக்குவதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாகும். இலங் கையில் பல்கலைக் கழக கல்வியின் புக முடியாத " தந்தக் கோபுர” வடிவமைப்புத் தொடரவே செய்கின்றது. பிரித்தானிய மாதிரி பல்கலைக் கழக் வடிவமைப்பு மேல் நாட்டிற்கு வேண்டிய மனித வள உற்பத்திச் சாலைகளாகவே பல் கலைக்கழகங்களை உருவாக்கிவிட்டுள்ளது. நீண்ட காலமாக விஞ்ஞான தொழில்நுட்ப
33

Page 36
தாகம் இதழ் 34
கல்விக்கான தேவைகள் உணரப்பட்டபொழு தும் பல்கலைக்கழகங்கள் அவற்றை பூர்த்தி செய்யவில்லை. வடக்கில் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பொழுது அதன் சமூகப் பயன் பாடும் பிரதேச வளங்கட்கு என்பதன் ஆய்வுப் பணியும் சுட்டிக்காட்டப்பட்ட பொழுதும் அதன் தேவைகள் இன்றும் அப்படியே இருப்பதை கண்டுகொள்ளமுடிகின்றது. தொழில் மற்றும் தொழில்நுட்பக்கல்வி
அறிவை மையப்படுத்திய பொருளா தாரமும் சமூக மேம்பாடும் என்ற அடிப் படையில் தொழில்நுட்பக் கல்வியின் தேவை யும் புதிய தொழில்களையும் தொழில் வாய்ப்பையும் இளைய தலைமுறையினருக்குப் பெற்றுக் கொடுப்பது சமகால முன்னெடுப்பு களாக உள்ளது. திறன்மிகு ஊழியப் படையுடன் கூடிய உள்நாட்டு வளர்ச்சிகளைப் பயன்படுத்தி சர்வதேச போட்டிகட்கு முகங்கொடுக்க கூடிய சமூகமென்பது தொழில் நுட்பக் கல்வியாலே எட்டப்பட முடியும். மாறாக வெளிநாட்டுச் சந்தைக்கும் பாரிய கைத்தொழில் பல்தேசிய நிறுவனங்கட்கும் மனித வளத்தை வளங்கும் தொழிற்கல்வி புகட்டப்படல் நாட்டின் சமூக ஏற்றத்தாழ்வுகட்கும் வறுமை மேலும் வளர்ச்சி யடையவும் உள்நாட்டு மனித வளம் சுரண் டப்படவும் வழிவகுக்கும் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் உள்நாட்டு வளங்கட்கு பொருத்தமான தொழில் நுட்பக் கல்வியுடன் புத்தாக்கத்துடன் கூடிய உள்நாட்டு வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகவுள்ளது. பெண்களும்-கல்வியும்
ஒரே படித்தான சமூக கட்டமைப்பை பேணக்கூடிய துறைகளில் பெண்களை ஊழியப்படையில் சேர்க்கும் கல்வி முறைகட்கு மாறாக திறன் மிகு உற்பத்தியாளராக மாறக் கூடிய பெண்கட்குரிய கல்வி வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பெண்களின் உழைப்பு நாட்டின் பொது உழைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டு தேசிய வளங்களை நாட்டிற்காகப் பயன்படுத்தக்கூடிய கல்வி முறைக்கு ஊடே அவர்கள் மேம்படுத்தப் பட வேண்டும் வெளிநாட்டுப் பணிப் பெண்கள் மற்றும் மலிவான கூலி உழைப்பாளர் படையில் இருந்து பெண்களை மீட்டு உற்பத்தித் திறன் உடைய பொருத்தமான உள்நாட்டு வளர்ச்சி களின் இணைக்கின்ற பொழுது சமூக மேம் பாடும் நாட்டின் ஆரோக்கியமான சூழலும் கட்டியெழுப்பப்படும்.

ஜனவறிறோர்ச் 204
விழுமியம்-மற்றும் ஒழுக்கக்கல்வி
விழுமியங்களையும் ஒழுக்க நெறிகளையும் மாணவர்கட்கு புகட்டுகின்ற கல்வி முறையன்றி கல்வியின் பயனாக அவை மலருகின்ற கல்வி முறை வடிவமைக்கப்பட வேண்டும் சமய மற்றும் மதக் கல்வியை வழங்குவதற்குப் பதிலாக ஒழுக்கநெறி மனித நேயம் எனும் பாடப்பொருட்களை வழங்கும் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். இது வாழ்க்கைக் கான கல்வி எனும் கல்வி சமூகவியற் பார்வை யின் அடிப்படையில் மேம்படுத்தப்பட வேண் டும்.
ஆசிரியரும்-சமூக மேம்பாடும்
கல்வி பற்றிப் பேசும் பொழுது ஆசிரியர் தொடர்பான அவதானம் மிகவும் வேண்டப் படுவதாகும். எமது பொதுக்கல்வித் துறையில் சேவையாற்றும் ஆசிரியர்களையே இங்கே குறிப்பிடுகின்றோம். எந்தவொரு கல்வித் திட்டத்தையும் மாற்றத்தையும் அதன் முற் போக்குத்தனங்களையும் வகுப்பறையில் பிர யோகிப்பவர்கள் ஆசிரியர்களேயாவார் எமது ஆசிரியர்களில் சமூக மேம்பாட்டு சிந்தனை, தூரநோக்கு இவை நோக்கிய செயற்றிறன் கொண்டோர் உருவாக வேண்டிய தேவை இன்று பொதுவாக எல்லோராலும் உணரப்படுகின்றது.
இன்றைய ஆசிரியத்துவம் என்பது காணப் படும் சமூகத்தின் படைப்பாகவும் அதன் இருப்பை உறுதிப்படுத்துவதாகவும் அமை கின்றது. எத்தகைய புதிய சிந்தனைகளையும் சமத்துவம், சமநீதி முற்போக்கு சமத்துவ சமுதாயமாற்றம் என்பன பற்றி பேசப்பட்டாலும் லெனின் கூறியது போன்று "ஆசிரியர்களே சமத் துவ சமுதாயத்தின் பொறியாளர்கள்' எனும் சிந்தனை ஆசிரியர்களிடம் ஏற்பட மேலும் முயற்சிகள் செய்ய வேண்டியுள்ளது.
கல்வியும் சமூக மேம்பாடும் எனும் அடிப்படையில் கல்விச் சமூகவியல் நோக்கில் ஏற்பட்ட சிந்தனைகளின் வளர்ச்சிகள் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றது. உண்மையான சமூக
மேம்பாட்டிற்கான கல்விச் செயன்முறை எதுவெனக் கண்டறியும் பார்வைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை பற்றிப்
பேசுவோரும் எழுதுவோரும் சிந்திப்போரும் குறைவாகவேயுள்ளனர். இவை தொடர்பான ஆரோக்கியமான மேலதிக கலந்துரை யாடல்களும் சிந்தனை கிளர்வுகளும் கல்விச் சமூகவியல் ஊடே முன்னெடுக்கப்பட வேண்டும். இவையே திடமான திட்டங்கட்கும் செயற்பாடுகட்கும் என்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளாக அமையமுடியும்.

Page 37
5055- ෂිෂී 84
இதுவரை எவரும் போகாத ஊர்கள் குழந்தை ஒரு வெள்ளைத் தாளைப்போல, கடற்கரை ம எண்ணற்ற விளையாட்டுக்களைத் தம்முள் ஒ6 அங்கே இராசாக்களும் முனிவர்களும் பூதங்க சிறுவர்களும் குழந்தைகளுக்காகக் காத்திருக்கி மாயாவியின் மண்டையோட்டுக்குகைகளின் வளர்ந்தவர்கள் கேட்டறிய முயல்வதில்லைய வழிகளைப்பற்றிய தகவல் குழந்தைகளிடைே
இதுவரை எவரும் போகாத ஊர்கள் வளர்ந்தவ அவ்வூர்களில் கடவுளர் உலாவுவார்கள் பரந்த புல்வெளியும் அழகிய நடனப் பெண்க இறப்பே இல்லாத இனிக்கும் வாழ்க்கையும் ! வளர்ந்தவர்கள் போகாத வேறு சில ஊர்களில் அவ்வூர்கள் அவர்களால் மட்டுமே ஆளப்படு! அவர்களது இனங்களும் குழுமங்களும் அங்ே இன்னும் சிலர் இன்னமும் போகாத ஊர்களிே வானவிற்கொடிகள் பறக்கின்றன. சமத்துவமும் விடுதலையும் தோழமையும் ந6 இன்னமும் போகாத ஊர்களுக்குப் போகும் வ அதிகம்
ஒடுக்குமுறையும் வலியும் வாழ்வும் துரத்த வ வழிகளோ நினைத்தபடி நேர்கோடாய் இல்ை ஒரு பொய்மானைப் போல அவற்றின் முடிவி வழியின் முடிவிடப் பொய்மான்கள் நகர்கின் ஓடினால் ஒடுகின்றன. உயர ஏறினால் துள்ளிட பொய்மான் வழிமுடிவைப் பின்தொடர்ந்து பு கூட்டத்தில் சிலரின் கைகளில் வரைபடங்கள்
திட்டமான வரைபடங்களை முன்கூட்டியே ெ கண்ணுக்கெட்டிய வழிநுனிப் பொய்மான்கை அவர்கள் திசைகளையே நம்பியிருந்தனர்.
திசை மாறிப்போன வழிகளை இடைநடுவிற்
 

ஜனவரிமார்ச் 204
ଔU($(\ଞ୍ଜ ୬×(})() பெரிய்யான வழியும்
மு.மயூரன்
5ளுக்கு விருப்பமானவை.
னல் போல, - ரித்துவைத்திருப்பவை. ளும் மகிழ்ச்சி கொண்ட ஏழைச் சிறுமிகளும் றார்கள்.
வாயிலில் அருவி கொட்டுகின்றது. ாதலால் அவ்வூர்களுக்குப் போகும் யே ஒர் இரகசியம்போல் இருந்துவருகிறது.
பர்களாலும் அதிகம் விரும்பப்படுபவை.
ளும் துன்பமே இல்லாத இன்ப நிலையும்
மதுவும் மகிழ்வும் நிறைந்திருக்கின்றன.
அவர்களது மொழிக்கொடிகள் பறக்கின்றன.
கின்றன.
கதூய்மையாய் இருக்கிறன.
லா செங்கொடிகள் கருங்கொடிகள்,
ல்வாழ்வும் தோன்றி வளர்ந்துளது. 1ழிகளோ ஊர்களை விடவும் எண்ணிக்கையில்
1ழிகளில் ஏறினர் மக்கள்
| ᎧhᎧ. டங்கள் துள்ளித்துள்ளி ஒடுகின்றன. நகர்ந்தால்,
Ꭰ ᎶᏡᎢ.
ப் பறக்கின்றன. றப்பட்டு அலைமோதி நகரும் மனிதக் இருந்தன.
வரைந்து கொண்டவர்கள் ளை வழிகாட்டிகளாய்க் கொள்ளவில்லை.
கைவிட்டு வேறு வழிகளில் ஏறி நடக்க அவர்கள்

Page 38
தாயகம் இதழ் 34
தயங்கவுமில்லை; வெட்கப்படவுமில்லை.
பொய்மான் வழி தொடர்ந்த போகாவூர்ப் பயன எறியச்சொல்லி எரிந்து விழுந்தனர்.
திசை பற்றிக் கதைத்தவர்கள் வேகத்தைத் தடுக்
எண்ணிக்கை வேகம்! எழுச்சி பாய்ச்சல் என்ற பொய்மானும் வெட்டி விரைந்து ஓடியது. இவ்வளவு விரைந்தும் ஏன் வரவில்லை ஊர்? பொய்மானை இயக்குவது யார்?
பொய்மானின் கால்களினின்று மேல்நோக்கிச் தற்செயலாய்க் காணுமுன்னரே, பாராளுமன்றச் சகதிக்குள்ளும் சகோதரரைக் ெ முள்ளுக் குழிகளுள்ளும் முள்ளிவாய்க்காலிலும் முடிந்துபோயினர் போ முடிந்து போயின பயணிகளின் நடைவழிகள்
ஓரிடத்தில் நிதானித்து, வரலாற்று மரத்தின் பட்டறிவுக் கொப்புகளைட் உயரத்தில் நின்று பார்த்தாள் ஒருத்தி வழிகள் போகும் திசைகள் எல்லாம் தெளிவாய் போகாதவூர்கள் மங்கலாய்த் தெரிந்தன. படுகுழிக்குள் போய்முடியும் வழிகளும் - அவ்ெ கேள்வியின்றித் தளபதியைத் தொடருகிற மனி
வழிகளை வளர்த்துச்செல்லும் பொய்மான்களி வெளியிலிருந்து இயக்குவோரைக் கண்டதும் கத்தினாள்! "ஐயோ! அவ்வழி பொய்வழி' 'பொட்டென நெற்றிப் பொட்டைத் துளைத்து "துரோகி" எனும் ஒரு சொல் O "முட்டாள்" எனும் ஒரு சொல்"எதிரி" எனும் ஒரு 5F6T66 ILD. வீழ்ந்த அந்த விசரியைத் தூக்கி வீசிவிட்டுப் பே பொய்வழி தொடர்ந்து போகாத ஊர்போகும் வழிபோக்கர் அவளருகிற் சாகாமற் கிடந்த சொற்களை அள்ள திருத்திக்கொண்டார்கள்; வரைபடங்களை இற்றைப்படுத்திக்கொண்டார் இன்னும் சிலர் அவர்களது பயணமோ மெதுவானது, நிதானம அவர்களது பாதச் சுவடுகளோ அழுத்தமானவை அவர்கள்? ஒன்றுக்குமுதவாத வரட்டுக் கொள்கைகொண்ட என்றார்கள் தளபதிகள்
 


Page 39
தாயகம் இதழ் 34
கற்றதனாலா
கல்வியின் முக்கியம் காலத்திற்குக் காலம் கூறப்பட்டு வந்தாலும், கல்வி எல் லாக்காலத்தும் எல்லா விடத்தும் ஒரே தன்மையினதாக இருந்ததில்லை. அதை விட ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுள்ளேனும் எல்லாருக்கும் எட்டும்விதமாகக் கல்வியை வழங்க எல்லாக் காலத்திலும் முயன்ற தில்லை. ஒவ்வொரு சமூகமும் ஏற்றத்தாழ் வாயும் பிளவுண்டும் இருக்கையில் கல்வி யின் தன்மையும் தரமும் மிக வேறுபடுவது இயல்பு.
பிற்பட்டது. எல்லாருக்குமான பாடசாலை களும் பொதுப் பாடத்திட்டங்களும் கல்வி வரலாற்றில் அண்மையன. எனினும், எப் போதும், சமூகத் தேவை கருதியே கல்வி வழங்கப்பட்டு வந்துள்ளது. கல்வியை யாருக்கு எந்த அளவிற்கு வழங்க வேண்டும் என்பதை ஒருவரது பிறப்புத் தீர்மானித்து வந்த சமூக அமைப்புக்களில், கல்வியின் நோக்கம் ஒவ்வொருவரதும் சமூக இருப்பால் முடிவாகியது. இவ்வாறான சமூக அமைப் புக்கள் மனிதரின் சிந்தனையாற்றலினதும் உழைப்பாற்றலினதும் முழுமையான பல னைப் பெறத் தவறி வந்துள்ளன.
முதலாளியத்தின் வருகை, மனிதரைக் கொத்தடிமைத் தனத்தினின்றும் நிலவு டைமைச் சமூக பண்ணையடிமைத் தனத்தி னின்றும் விடுவித்து மனிதர் தமது உழைப் பாற்றலைத் தாம் விரும்பிய எவருக்கும் விற்பதற்கான உரிமையை வழங்கியபோதும், உழைப்பிற்குத் தேவையான அளவிற்கு மேலாக உழைப்போர்க்குக் கல்வியை
 

ய பயன்
சி.சிவசேகரம்
வழங்க விரும்பவில்லை. எனினும், தொழிற்
பயன்பாடு பரவலாகிய நிலையில், இயந் திரங்களைச் செவ்வையாக இயக்கும் தொழில்நுட்ப ஆற்றலுடைய உழைப்பா ளிகள் தேவைப்பட்டனர். எனவே எல்லா ருக்குமான அடிப்படைக் கல்விக்கான தேவை ஏற்பட்டது. முன்னேறிய முதலாளிய நாடுகளில் கல்வியின் விருத்தியும் பரவலாக் கமும், சமுதாய உற்பத்தியின் தேவை களாலும் தொழில் விருத்தியின் போக்கில் கல்வியை ஒரு அடிப்படைத் தேவையாகக் கொள்ளும் சமூகச் சூழலாலும் நிகழ்ந்தமை தொழில் விருத்தியும் தொழில் நுட்ப விருத்தியும் தொடர்வதற்குக் கல்வியின் தரத்திலும் அதன் உள்ளடக்கத்தின் தன்மை யிலும் மாற்றங்கள் தேவைப்பட்டன.
அறிவுக்குத் தன்னளவிலேயே ஒரு பெறுமதி உண்டென்றால், மனிதர் தம்மைச் சூழவுள்ள உலகை அறியவும் தமது தேவைகட்கமைய உலகை மாற்றவுமான ஆற்றலை அது மனிதர்க்கு வழங்குமள விலேயே அப்பெறுமதி தங்கியுள்ளது. முதலாளிய சமூகம் சந்தை விதிகளால் ஆளப்படுவது. எனினும், முதலாளிய வளர்ச்சியின் முக்கியமான கால கட்டங்களில் சமூக அளவில் கல்விக்கும் உடல் நலத்திற்குமான பொறுப்பை அரசே ஏற்றுக் கொண்டமை நம் கவனத்திற்குரியது. ஆற்றல் மிக்க உழைப்பாளிகளை உருவாக்கி அவர் களை முதலாளிய உற்பத்திச் சந்தையில் விடும் பொறுப்பை முதலாளிய முறையின் காவலனான அரசு ஏற்றது. அதற்கான செலவின் ஒரு பகுதி முதலாளிகளின்

Page 40
தாயகம்- இதழ் 84
லாபத்திலிருந்தும் கறக்கப் பட்டது. மாறாக, இன்று, மேற்குலகில் இலவசக் கல்வி பலவாறான நெருக்கு வாரங்கட்குட்படுவதை நாம் காண்கிறோம். அதற்கான அரசியற் பொருளியற் காரணங்களை இங்கு ஆராய்வது என் நோக்கமல்ல. நான் நமது சூழலிற் கல்வியின் பயனைச் சுருக்கமாக விசாரிக்க முயல்கிறேன்.
நமது சூழலில் நவீன கல்வி எவ்வாறு அறிமுகமானது என்பதையும் அதன் நோக்கத்தையும் விளங்குவதற்கும் - ஓரள வேனும் உதவுமென எண்ணுகிறேன். முதலாளியமும் நவீன கல்வியும் கொலனியச் சூழலிலேயே நம்மை வந்தடைந்தன. அதனால் அவை வேண்டாதனவாகவோ தீயனவாகவோ ஆகமாட்டா. கொலனிய நிருவாகத்தின் கீழ், இலங்கையின் பொரு ளாதாரம், சமூகத்தின் அடிப்படைத் தேவை யான உணவு உற்பத்தியிலும் கொலனிய ஆதிக்கவாதிகட்குப் பெரும் இலாபம் ஈட்டிய தோட்டப் பயிர்ச்செய்கையிலுமே தங்கி யிருந்தது. எனவே கல்வியின் நோக்கம் கொலனிய நிருவாகத்தையும் தோட்டப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதையும் சந்தைப் படுத்துவதையும் சார்ந்திருந்தது. கொலனியத் தேவைகளையொட்டியே நகரங்களின் விருத்தியும் தொழில்விருத்தியும் நிகழ்ந்தன. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் தொழில் சார் துறைகள் - முழுச்சமு தாயத்தினதும் விருத்திக்காகத் திட்டமிடப் படவில்லை. வசதி படைத்தோர் தமது பிள்ளைகளை வெளிநாடுகட்கு அனுப்பி உயர் கல்வி பயிற்றினர். எனினும், நாட்டின் கல்விமுறை, கொலனிய நிருவாகத்தின் சீரான செயற்பாட்டுக்கு அமையக் கொலனிய நிருவாகத்தின் பலவேறு துறைகட்கும் தேவையான அறிவையும் ஆற்றலையும் உடையோரை உருவாக்குவதிற் கூடிய கவனங்காட்டியது.
நாடு நேரடிக் கொலனி ஆட்சியினின்று விடுபட்டபின், நாட்டின் பொருளாதாரத்தைத் தேசிய அடிப்படையில் கட்டி வளர்க்கும் தேவை இருந்தது. ஆயினும், நமது கல்வி முறை அதற்கமைய - மீளமைக்கப் படவில்லை. ஏனெனிற், கல்வி பற்றிய நமது பார்வை, கல்வியையும் உத்தியோகத்தையும்
3!

ஜனவரி மார்ச் 2014
தொடர்புபடுத்திய அளவுக்குக் கல்வியைச் சமூக உற்பத்தியுடன் தொடர்புபடுத்தியதாக இருக்கவில்லை. இன்னமும், உயர் கல்வியை நாடும் மாணவர்களிற் பெருவாரியானோர் தாம் தெரிந்தெடுக்கும் துறை பற்றிய ஆர்வத்தாலன்றி வேறு நிர்ப்பந்தங்களா லேயே பல்வேறு துறைகளிலும் இறங் குகின்றனர், அதற்கான காரணங்களில் முக்கியமானது பாடசாலைக் காலத்தில் ஒவ்வொரு கல்வித்துறை பற்றியும் அதன் சமூகப் பங்கு பற்றியும் அறிவதற்கான வாய்ப்புக்களும் இல்லாமை எனலாம். உயர் கல்வி என்பது உத்தியோகங்கட்கான போட்டியின் ஒரு முக்கிய பகுதியாகிவிட்ட ஒரு சூழலே தரப்படுத்தல் உட்படப் பலவேறு அரசியற்பிரச்சனைகட்கும் காரணமாகியது என அறிவோம், - பாடசாலைக் கல்வி எதற்கானது என்ற கேள்விக்குரிய பதிலைக் கல்வியாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் தெளிவாகவே வழங்கக்கூடியோராவர். அவர்களின் நோக் குக்களிடையே பொதுவான உடன்பாடு இருப்பினும், அவர்கள் விரும்புமாறான கல்வியை வழங்க அவர்கட்கு இயன்ற தில்லை. நாட்டின் கல்விக் கொள்கையின் போதாமைகளும் கல்வியின் நோக்கம் பற்றிச் சமூகத்தில் நிலைகொண்டுள்ள தவறான சிந்தனைகளும் பாடசாலைக் கல்வியைத் தவறான திசைகளில் நெறிப்படுத்தியுள்ளன, அவற்றின் விளைவுகள் உயர்கல்வியையும் கடுமையாகப் பாதித்துள்ளன,
இடைநிலைப் பாடசாலைக் கல்வியின் போதிருந்து, குறிப்பிட்ட துறைகள் சார்ந்த உயர் கல்விக்கான போட்டியை மனதிற் கொண்டே கல்வியைப் பயிலுமாறு மாண வர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். அதன் பயனாக, அவர்களுடைய கல்விக் குறிக் கோள்கள் தனிப்பட்ட முறையிலும் ஒரு மாணவர் குழாம் என்ற முறையிலும் மிக வரையறைப்படுகின்றதால் அவர்களுடைய ஆளுமை விருத்தி குன்றுகிறது. இக்குறை பாடுகட்குப் பரீட்சைகள் ஒரு முக்கிய காரணமாகின்றன.
பரீட்சைகள் மாணவர்களின் சில ஆற்றல்களை அளக்கின்றன. ஆனால்,

Page 41
துேடஞ்ைேலஇ
கழிக்கரை நண்டுகள் கரைதனில் உலாவி எம்மைக் கண்டதும்
ஈச்சந் திட்டியில் இனிய பழம் பிடுங்கி திரிபோஷா பைக்கற்றில் சேர்த்துத் திரும்புகையில்
ஆலமரம் நிழல் பரப்பும் ஐயனார் கோவில் வாத்தியார் அடிக்கப்படாதெனும் வரந்தனைக் கேட்டு விபூதி அள்ளிப்பூசி
காசுகள் இரண்டு காலுக்குள் கிடந்து கண்ணுக்குள் குத்தியது.
விரசிங்கம் கடையில
வெளிப்பாக வைத்திருக்கும்
தோடஞ்சுளை இனிப்பு தோன்றிட மனதில் முடிஞ்ச காற்சட்டை
கிழியாத டெ பத்துச் சத்த் பத்திரமாய் சிநேகிதன் சி சேர்ந்தான் L 856).j60TLs) TL எனக்கொன்று உனக்கொன்
6)ILLIGloQ6)J6ff) விடதை அன வாய்தனில்
கிடப்பதை ே பள்ளிக்கூடத் படலைக்குள் பன்னைக் க
gഞണ്ഡങ്ങഥ 6 நேரம் செண் நீட்டு கையெ
ஒரு கரம் ம இரு கரம் நீ அடி வலி த அழுதிடும் ( தேம்பிக்கொ
மாணவர் எவரும் எவ்வளவு ஆழமாகத் தாம் கற்றவற்றை விளங்கிப் பயன்படுத்த வல்லோர் என அவை அளக்கின்றனவா என்பது மிகக் கேள்விக்குரியது. பரீட்சைக்கு வரக்கூடிய வினாக்கள் 6 TGÖ)G) J. (6. T6ð ஊகிப்பதையும் கற்றதை இரை மீட்குப ஆற்றலையும் ஆதாரமாகக் கொண்டே மாணவர்கள் றியூட்டரிகளிற் பயிற்றட படுகின்றனர். ஒரு பாடத்திற் கற்றதற்குப இன்னொரு பாடத்திற் கற்றதற்கு மிடை யிலான உறவைப் பற்றியோ ஒரே பாடத்தின்
 

ஜனவரிமார்ச் 204
}оби
ாக்கற்றில் எனக்குச் சொன்னான் தையும் காசு எடுத்ததிற்குதான் வைக்க கடவுள் தண்டிக்கிறார் 6) UT கவனமாய் வைத்திரு |ங்குக்கு எடுத்த இடத்திலயே வைத்திரு எறிவோம் நாளைக்கு.
LI GiT6ffiċj53o), LLħ 6ilL (B
பயணிக்கும் போது தாண்டி கடைதனில் போத்தலில் டந்து கலர்கலராய் கிடந்த ஏதோ தோடம் பழ சுளை இனிப்பு LIIIL (9 தூண்டியது மனதை 5 ്ങു காற்சட்டை பொக்கற்றில் ம்புடன் கைதனை நுழைக்க பாத்தியார் கிழிந்த பொக்கற்றால் டதற்கு கீழிறங் கியது கை என் ஏக்கம் கண்டு
ாற்றி நண்பனும் ஏங்கி ட்டி உந்தப் பொக்கற்றும் ாங்காது கிழிஞ்சதோ என்றான்.
6166Tuា6b 6ö0TGEL - ġlejT
எஸ். யாதவன்
வெவ்வேறு பிரிவுகளிற் கற்றவற்றுக்கு மிடையிலான உறவைப் பற்றியோ ஒரு புரிதலும் இல்லாமற் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற இயலுமானால், அப்பரீட்சை மிக குறைபாடாகவே அறி வாற்றலை அளக்கிறது என்பேன்.
தமது பரீட்சை முறையும் வெறுமே பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக் கும் வழமையும் இளவயதினரது உள

Page 42
தாகம் இதழ் 34
வளர்ச்சியையும் சமூக உறவுகளையும் உலக நோக்கையும் மந்தமாக்குகின்றன. ற்பூட்டறி களின் எழுச்சி, சமூக நோய் ஒன்றின் தெளிவான அறிகுறி என்பேன். அந்த நோயின் விளைவாகப் பாடசாலைகள் முறையான கல்வி நிறுவனங்களாக மட்டுமன்றி சமூகத்தின் ஒரு முக்கியமான கூறாகவும் இருந்து வந்த நிலைமை மாறி விட்டது, இன்று பொதுவாகவே ஆசிரியர்கள் தமக்கு விதிக்கப்பட்ட கல்வி புகட்டற் பணிக்கு அப்பால் வேறெதிலும் அக்கறை காட்டு வதில்லை. அது அவர்களுடைய சமூக அக்கறையின்மையாலோ பணிக்குப் புறம் பான பொருளீட்டலில் பலருடைய காலம் செலவழிவதாலோ மட்டுமல்ல. அவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு நேரடியாக உதவாத எதிலும் மாணவர்களை ஊக்குவிப் பதைப் பெற்றோரும் விரும்புவதில்லை. சிறுவயதிலிருந்து பரீட்சை நோக்கில் மட்டுமே கற்றுவந்த மாணவர்களிற் பெரும்பாலோருக்கு வேறு அக்கறைகள் இருப்பது கடினம்.
இவ்வாறு, பாடசாலை எனப்படுவது வரையறுத்த பாடத்திட்டங்களுள் பரீட்சை கட்காக மாணவர்கட்குக் கல்வி வழங்கும் ஒரு நிறுவனமாயிருக்கையில், பரீட்சைக்கான பிரதான பயிற்றல் பாடசாலைக்கு வெளியே நிகழுமாயின் ஒரு பாடசாலையோ அதன் ஆசிரியர்களோ எந்த மாணவரின் ஆளுமை விருத்தியிலும் பங்களித்தல் கடிது. இலங்கை பாடசாலைகளில் கணிசமானவற்றில் மாண வர் தொகை ஐயாயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. உலகில் வேறெந்த நாட்டிலும் இத்தனை மாணவர்கள் ஒரே பாடசாலையில் கற்பதாக நான் எண்ணவில்லை, அத்துடன் வகுப்பறை மாணவ எண்ணிக்கையும் தரமான கல்விபுகட்டலுக்குப் பாதகமாகவே உள்ளது. இவற்றின் விளைவாகக் கல்வியின் நோக்கமென்ன என்பதை மேலுந்தவறாகவே மாணவர்கள் விளங்கிக்கொள்ளும் வித மாகப் பாடசாலை ஒழுங்கும் ஏட்டுக் கல்விக்குப் புறம்பான பயனுள்ள செயற் பாடுகளின் புறக்கணிப்பும் அமைகின்றன.
1970களின் முற்பகுதி தொட்டு நிதிப் பற்றாக்குறைக் காரணங்காட்டிப் LITL
FTសាលមធារាំងសិr விருத்தி தடைப்பட்டது.
 

ஜனவரிறார்ச் 204
1978க்குப் பின்பு திட்டமிட்ட முறையிலே அரச பாடசாலைக் கல்வி புறக் கணிப்புக் குள்ளாகியது. கல்வி என்பது குறிப்பிட்ட பாடத்துறைகளைச் சார்ந்த அறிவையும் ஆற்றல்களையும் மட்டுமே விருத்தி செய்வதைப் பற்றியதாக இருக்க முடியாது. அந்த அறிவும் ஆற்றல்களும் மாணவர் களுடைய பிற ஆற்றல்களுடனும் அவர்கட்கு இருக்க உகந்த தனிப்பட்ட சமூக அக்கறைகளுடனும் சேர்ந்து வளர வேண்டும். எனவே உடற்பயிற்சி, விளையாட்டுக்கள், கலை இலக்கிய ஈடுபாடு, பல்வேறு மன்றங்கள் ஊடான கூட்டுச் செயற்பாடு போன்றவற்றுக்கு மாணவர்கள் அன்றாடம் கூடிய நேரத்தை ஒதுக்கவேண்டும்.
இது தகவல் யுகம் எனப்படுகிறது. ஏராளமான தகவல்கள் எட்டுந் தொலைவில் உள்ளன. ஆனால் தீர விசாரிக்கும் பழக்கமின்றிக் கைக்கெட்டிய தகவல்களை அப்படியே எடுத்தாள்வது ஆபத்தானது. மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் வளரவேண்டும் பல்வேறு இடங்களிலிருந்து பெற்ற தகவல்களை ஒன்று கூடிக் கலந்துரையாடி ஒப்பிட்டும் விவாதித்தும் பெற்ற தகவல்களின் உண்மை பொய்களை அறியும் ஆற்றல் தேவை. பாடசாலைகள் மூலமே இளையோர்அதைப் பெற இயலும்
போட்டி தேவையெனச் சிலர் கருதுவர் ஆனால் அதுவே மனிதரை வழிநடத்தும் சக்தியாக இருக்கலாகாது.
சாதனைகளைப் பற்றிப் பலர் பேசுவர் எனினும் மனிதரது மகிழ்ச்சிக்கும் சமூகத்தின் நலனுக்கும் தனிமனிதச் சாதனைகள் அளித்த பங்கு அற்பமானது. சாதனைகளைவிடச் சமூக அக்கறையுடன் கூடிய பங்களிப் புக்களே முக்கியமானவை.
கற்றதாலாய பயன் என்னவாயிருக்க வேண்டும் என்பதில் நாம் கருத்து வேறுபடலாம். எனினும், கல்வி, ஒருவரை முழுமையான ஒரு சமூகப் பயனுள்ள ஒருவராக வளர்க்க வேண்டும் என்பதில் நமக்குட் கருத்து வேறபாடாது என நம்புகிறேன்.

Page 43
தாயகம்" இதழ் 84
கனவு துரத்தும் ஒரு காதற் கன
பச்சை வயற்பரப்பில் தலையுயர்த்தும் வரம்புகளில் கடற்கரையின் ஒரத்துப் பரந்த மணல் வெளியதனில் என் வீட்டில் நிற்கும் பனை வடலி ஓரத்தில் உன் வீட்டில் விரிந்து நிற்கும் மாமரத்தின் விழு நிழலில் காற்று மட்டும் இருவரையும் உரசிக் கடந்திட்ட அந்தப் பொழுதுகளை மீள நினைக்கின்றேன்
காதல் ததும்பும் அந்தக் கட்டிளமைப் பருவத்தில் கோடு தாண்டி வந்தெங்கள் உறவுக்குக் கோடு கிழித்தாய் - நீ
கோடு தாண்டி வந்தாய் என்பதற்காய் மட்டும் - நான் எங்கள் உறவில் கோடு கடப்பதில்லை என்று முடிவெடுத்தேன்
ஊரில் இன்று நீயுமில்லை நானுமில்லை - அதைவிடவும் இன்று நாமிருந்த ஊருமில்லை
நகரப் பெருவெளியின் பிரம்மாண்டத்தில் அதன் அவசரத்தில் எங்கள் காதல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்றென்னை நான் கேட்டுக்கொள்கிறேன்
காலை 8 மணி தொட்டு மாலை 5 மணிவரையும் வேலைக்கு நான் போவேன் மதியம் 1 மணி தொட்டு இரவு மணி 10 வரை பணிநேரம் உன்னுடையது
கண்கள் சொருகி - எனது
முதலாஞ் சாமம் அரைவாசி முடிகையில் வீடு திரும்புகிறாய் நீ
கண்ணயர்ந்து உனது இரண்டாஞ் சர்மம்

ஜனவரி மார்ச் 2014
வாழ்வு:
வு
மீGலங்கோ தொடங்குகையில் வேலைக்குக் கிளம்புகிறேன் நான் உனது உணவு வேளையும் எனது உணவு வேளையும் வேறு
உனது பொழுதுபோக்கு நேரங்களும் எனது பொழுதுபோக்கு நேரங்களும் வேறு
உனது இரவு எனது பகல் எனது இரவு உனது பகல்
சனிக்கிழமைகளில் பல சோலி எனக்கு காலை புறப்பட்டு மாலையே வீடு மீள்வேன் எனக்காய் மதிய உணவு சமைத்து வழிமேல் விழி வைத்து வரும்வரை சலிப்பில்லாமல் காத்திருப்பாய்
வீடு திரும்புகையில் தெருவோரக் கடையில் மதிய உணவை உண்டுவிட்டதாக எந்தவித குற்றவுணர்வுமற்று நான் சொல்வேன்
சமைத்துவைத்துக் காத்திருப்பதாக நீ சொல்ல யார் காத்திருக்கச் சொன்னதாக நான் சொல்ல கடைச் சாப்பாடு உடம்புக்கு ஆகாது என்று நீ இடித்துரைக்க பதில் இல்லாமல் தடுமாறித்; தப்பிப்பது காய் உனது சமையலிலும் கடைச்சாப்பாடு பிழையில்லை என்று பதிலுரைத்து சண்டைக்கு வழி சமைப்பேன்
இந்தச் சண்டையில் நன்மையடைபவன் விரைவுணவுக் கடைக்காரன் தான் எங்கள் இரவுணவு யாரோ ஒரு விரைவுணவுக் கடைக்காரன் உபயம்
ஞாயிற்றுக்கிழமையில் முன் தூங்கி பின்னெழும் பழக்கமெனக்குண்டு - நீ முன்னெழுந்து வீட்டு வேலைகள் முடித்து என் பங்கு வேலைகளை எனக்கு நினைவூட்டுவதற்காய் என்னை எழுப்புவாய்
41

Page 44
தாயகம் இதழ் 84
சினத்தபடி கண்விழிப்பேன் நான்
ஆனால் அன்றைய நாளே எனக்கு விடியாது
எங்கள் ஒவ்வொரு கிழமையும் இவ்வாறே கழியும் வீட்டில் உணவுசமைத்து ஆற அமர இருந்து கதைபேசிக் கதைபேசிக் உணவுண்ட தருணங்கள்
அரியன அதற்காய் ஏங்கும் தருணங்கள் அதிகம்
பல சமயம்; விடுமுறை எடுத்து வெளியே செல்ல முடிவெடுப்போம் எங்கே செல்வதென்று நீள உரையாடி - இறுதியில்
எனக்கு விடுமுறை கிடைத்தால் உனக்குக் கிடைக்காது உனக்கு விடுமுறை கிடைத்தால் எனக்குக் கிடைக்காது
விடுமுறை பற்றிய நீண்ட உரையாடலே பல சமயங்களில் எங்கள்
விடுமுறையாகிறது
"எனக்காக ஒரு நாளேனும் நீங்கள் விடுமுறை எடுத்ததுண்டா” - என . நீ கரித்துக் கொட்டுகிறாய்
***
வாழ்க்கைச் சக்கரத்தை சுழற்றிச் சுழற்றி முன்னெம்பி நானும் ஒடுகிறேன் நீயும் ஒடுகிறாய்
கையில் உள்ள பணத்தால் பயனேது - நீயும் மகிழ்வாயில்லை நானும் மகிழ்வாயில்லை
ஊர் மீள்வதே ஒரே வழி என
முடிவு செய்தபோது - ஊரே இல்லாமல் போய்விட்டது.
பச்சை வயல்வெளிகளும் என் வீட்டுப் பனை வடலி வளர்ந்தும் உன் வீட்டு மாமரம் மேலும் சடைத்தும் நிற்கின்றன போரின் துயரவடுக்களைத் தாங்கியபடி
ஆனால்

ஜனவரி மார்ச் 2014
என் அப்புவோ ஆச்சியோ உன் மாமனோ மாமியோ எங்கள் பள்ளித் தோழர்களோ யாருமில்லை ஊர் மட்டும்
பார ஊர்திகளைச் சுமக்கும் பெருவீதிகளைச் சுமந்தபடி அவர்களது வார்த்தைகளில் 'அபிவிருத்தி" காணும்.
ஆச்சியும் அப்புவும் மாமாவும் மாமியும் பனிபொழியும் கனத்த பொழுதுகளில்
வீட்டுக்குள் இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பள்ளித் தோழர்கள் புலம்பெயர் வாழ்வில் =8 மணிநேரம் ஓடி ஓடி உழைக்கிறார்கள் மாடாய்த் தேய்கிறார்கள்
ஊர் திரும்பவும் முடியாது
புலம்பெயரவம் விரும்பாது திரிசங்கு நிலையில் வாழ்க்கை
***
தீண்ட உறக்கத்தின் முடிவில் கண்விழித்து எழுந்தபோது கண்டுகொளடேன் - கண்டது கனவென்ற
இப்படியொரு வாழ்க்கை எனக்கு அமையுமோவென்று அஞ்சிக் கண்ட கனவைஅப்பாவிடம் சொன்னேன்
அப்பா சொன்னார்: நடுஉச்சியில் நல்லா தேசிக்காய் தேய்ச்சுக் குளி எல்லாஞ் சரியாகும்” என்று
ஆனால் நான் இன்னமும் கனவுகளை அஞ்சுகிறேன்

Page 45
ஒடுக்கும் கருவியாக பண்பாட்டுக்
உலகமய நுகர்வுப் பண்பாடும் அதனை நியாயப்டுத்தும் கருத்தியலும் இன்று மக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவிவருகிறது. நவதாராளவாத உற்பத்தி முறைமையின் வெளிப் பாடான இந்நுகர்வுப் பொருட்களின் பெருக்கம் மக்களது தேவைகளுக்காகப் பொருடகள் என்ற நிலையை மாற்றி பொருட்களுக்காக மக்களின் தேவைகள் என்பதாக மாற்றம் அடைந்து வரு கிறது. மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களு டன் சந்தைகளிலும் கடைகளிலும் மட்டுமல்ல வீட்டுப் படிகள் வரை தேடிவரும் நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கான ஆவல் மக்களிடம் தூண்டப்படுகிறது. அவைகளைப் பெறுவதற்கான போட்டியில் பணத்தைத் தேடுவ தற்கான முயற்சியில் குடும்ப, சமூக உறவுகளைத் தொலைத்தவர்களாக மனிதர்கள் மாறி வருகின் றனர். அடுத்தவர்கள் மீதான அன்பும், அக்க றையும் இன்று அருகி அந்நியமாதல் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். மனித நாகரிக வளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோளான மனிதரை மனிதர் நேசிக்கும் 'ஒருவர் எல்லோருக்குமாக, எல்லேரும் ஒருவருக்காக" என்ற உயர்ந்த உணர்வும், வாழ்வும் இன்று திட்டமிட்டே அழிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தமக் காக, கடவுள் எல்லோருக்குமாக" என்ற முதலா ளித்துவ சமூக அமைப்பின் மூலதன மந்திர முழக்கத்தின் உணர்வோடு சுதந்திர போட்டிச் சந்தையில் அவரவர் வல்லமைக்கேற்ப போட்டி யிட்டு மற்றவர்களை ஒடுக்கி மிதித்தாவது வேண்டியவற்றை அள்ளலாம் என்பதே - வாழ் வின் இலக்காக - உலகமய நுகர்வுப் பண்பாட்டுக் கருத்தியலாக மக்கள்மீது திணிக்கப்படுகிறது. "வல்லது வாழும்" என்ற இயற்கையின் இயல்பான விலங்கினக் கூர்ப்புக் கோட்பாட்டை மனித வாழ்வுக்கும் பொருத்தி இலகுவான தற்காலிக வெற்றியை ஏகாதிபத்திய உலகமயம் இன்று அடைந்துள்ளது.
உலகமயம் என்பது ஏகாதிபத்திய நாடுக

ஜனவரிமார்ச் 204
கருத்தியல்
க.தணிகாசலம்
ளினதும், பன்னாட்டு நிறுவனங்களினதும் சுரண் டலுக்காக நாடுகளைத் திறந்து விடுவதும், அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்ப தற்காக உள்நாட்டு அதிகார வர்க்கத்தினர் மக்கள் மீதான அதிகாரத்தை வலுவாக்கிக் கொள்ளலு மாகும். இலங்கையில், அவற்றின் வீச்சுக்கான கதவுகள் 1977ல் ஜே. ஆர் அரசால் திறக்கப்பட்டது. அதனை எதிர்க்கக்கூடிய தொழிற்சங்க இயக்கங் களையும், இடதுசாரி இயக்கங்களையும் முதலில் ஒடுக்கியதுடன், போர் என்றால் போர் என்று தேசிய இனங்களுக்கெதிரான யுத்தத்தை கட்ட விழ்த்து விட்டதன் மூலம் சிங்கள மக்களின் கவனத்தையும் அவற்றிலிருந்து திசை திருப் பியது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மக்கள்மீது திணிக்கப் பட்ட இப்பொருளாதார நுகர்வுப் பண்பாடு, யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு கிழக்கு மக்களி டமும் இன்று திணிக்கப்படுகிறது. தொழிற்சா லைகளை அமைத்து வேலை வாய்ப்புக்களைப் பெருக்குவதற்குப் பதிலாக, நுகர்வுப் பொருட் களை இலகுவாக கொண்டுவருவதற்கான நெடுஞ்சாலைகளும், அவற்றை கடன் பெற்று வாங்குவதற்காக கிராமங்கள் தோறும் பல்வேறு வகையான அரச தனியார் வங்கிகள் பலவும் திறக்கப்பட்டுள்ளன. அவை கவர்ச்சிகரமான வட்டி'களுடன் மக்களுக்கு கடன்களை அள்ளி வழங்குகின்றன. இதனால் வங்கிக் கடன்களிலும், லீசிங்'கிலும் பெற்ற பொருட்கள் வாகனங்கள் வீடுகள் தோறும் நிறைகின்றன. மின்கட்டண உயர்வுடன் குளிர்சாதனப் பெட்டி, சலவை யந்திரம் போன்ற பொருட்கள் பல பாவனைக் குரிய பொருட்களாக அன்றி வெறும் காட்சி பொருட்களாக வீடுகளில் மாறுகின்றன. இன் றைய விலைவாசி ஏற்றம் நாளாந்த வாழ்க்கைச் செலவுக்கே போதாதபோது வங்கிக்கடனையும் வட்டியையும் மீளச்செலுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர் வங்கி ஊழியர்கள் வீடுகள் தோறும் சென்று வட்டியையும் முதலை யும் தரும்படி கேட்கின்றனர் வாகனங்களைப்

Page 46
தாயகம் இதழ் 34
பறிமுதல் செய்கின்றனர். அதனால் வீட்டிலுள்ள பொருட்களை விற்றும், வட்டிக்குமேல் அதிக வட்டிக்கு கடன்பெற்று (மீற்றர் வட்டி) மேலும் மேலும் கடனாளிகளாகும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய கடன்பழுவைத் தாங்கமுடி யாமல் குறித்த காலப் பகுதிக்குள் மட்டும் இருபதுக்கு மேற்பட்ட வர்த்தகர்களும், பொது மக்கள் பலரும் தற்கொலை செய்து கொண்டனர் உலகமயப் பொருளாதாரத்தின் கீழ் தமது பொரு ளாதார நலன்களுக்கு உட்பட்ட நாடுகள் திவலா னால் தூக்கி விடுவதற்கு (டீயடைழரவ) இதுவரை திவலாகாத நாடுகள் உண்டு. இவர்களால் சுரண்டப்படும் மக்களை கடன் பளுவில் இருந்து மீட்பதற்கு உதவ எவருமில்லை. அவர்களுக்கு தற்கொலைக்கான உணர்வையும் அறிவையும் மட்டுமே இவ்வுலகமயப் பொருளாதார நுகர்வுப் பண்பாட்டுக் கருத்தியல் அவர்களிடம் விட்டு வைத்துள்ளது. இதுபோன்றே இன்றைய இலத் திரனியல் தகவல் தொழில் நுட்ப யுகத்திலும் உலகெங்கும் பெரும் எண்ணிக்கையான மக்கள் வறுமையிலும், நோயிலும், யுத்தங்களிலும் செத்து மடிவது பற்றி இச்சமூக அமைப்பு அக்கறை கொள்வதில்லை. மக்களையும் இது போன்ற பிரச்சினைகளில் அக்கறை கொள்ள வைப்பதில்லை. அதற்குப் பதிலாக நவீன ஊட கங்களின் துணையோடு மக்களின் கவனத்தை திசை திருப்பி பண்பாட்டுக் கருத்தியல் ஒடுக் குதல்களை மேற்கொள்கிறது. மக்களிடம் இலகு வாகச் சென்றடையக் கூடிய சினிமா, தொலைக் காட்சி, போன்ற தொடர்பு சாதனங்களுக்கூடாக வன்முறை, பாலுணர்வு, தனிமனித வக்கிர உணர் வுகள் என்பன முனைப்படுத்தப் படுவதுடன், அறியாமையையும், மூடத்தனங்களையும், பழ மைவாதக் கருத்துக்களையும் வளர்த்துச் செல்லும் போக்கும் காணப்படுகிறது.
மக்களை ஒடுக்குகின்ற சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இவ்வமைப்பைக் கட்டிக் காப்பதில் அரசுகளும், ஆயுதப் படை களும் மட்டுமல்ல அன்ரோனியோ கிராம்சி குறிப்பிட்டுள்ளது போல பண்பாட்டு கருத்தியல் ஒடுக்குமுறையும் கூட பெரும் பங்கை ஆற்று கின்றன என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பண்பாட்டுக் கருத்தியல் ஒடுக்குமுறை என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பிரபுத் துவ ஆணாதிக்க, வர்ணாச்சிரம தர்மக் கருத்தி யலும் நடைமுறைகளும் மதச் சடங்குகள் சம்பிரதாயங்களாக பண்பாட்டின் பேரால் கேள் விக்குட்படுத்தப்படாமல் தொடர்வதாகும் சாதி யமும், பெண்ணடிமையும் இன்று கேள்விக்கு உட்படுத்தப் பட்டாலும் இன்றுவரை அவை
 

ஜனவரிமார்ச் 204
தொடர்வதற்கான காரணம் இதுவே ஆகும். பண்பாடு என்பது வெறும் சடங்குகளும் வாழ்க்கை முறையுமாக மட்டும் நின்றுவிடாது உலகை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற உலகப் பார்வையையும் மக்களுக்கு வழங்குகிறது. அத்தகைய உலகப் பார்வை எப்பொழுதும் அதிகாரத்திலிருக்கும் வர்க்கங் களின் நலன்களைப் பேணுவதாகவே இருக்கும். எனவே அதிகாரத்தில் உள்ள அரசுகள் மதத்தை பும், பழமைவாதப் பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதுடன் மக்களின் விருப்புடன் மக்களது சிந்தனைக்கு இடப்படும் பொன் விலங்குகளாக எப்பொழுதும் அவற்றைப் பேணிக்கொள் கின்றன.
இலங்கையில் அன்பை அடிப்படையாகக் கொண்ட பெளத்த மதம் அரச மதமாக உள்ளது. ஆணவத்தை - சுயநலத்தை - நீக்கவேண்டிய மலமாகக் கொண்ட சைவசமயத்தை தமிழர்களில் பெரும்பான்மையோர் தமது மதமாகக் கொண் டுள்ளனர் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இஸ் லாம் மதத்தையும், 'உன்னைப்போல பிறரையும் நேசி' என்று போதிக்கும் கிறிஸ்தவ மதத்தையும் மக்கள் பின்பற்றுகின்றனர். இலங்கையில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் தொகை தொண்ணுாறு வீதத்தினருக்கு மேலாக உள்ளது. வயது வந்த எல்லோர் கைகளிலும் வாக்குச் சீட்டைத் தந் துள்ள தேர்தல் ஜனநாயகம் இந்த நாட்டில் இருக் கிறது. இவை யாவும் இருந்தும் மக்கள் யாவரும் ஏன் தங்களது தலைகளில் தாங்களே மண்ணை அல்ல குண்டுகளையும், துப்பாக்கி ரவைக ளையும் அள்ளிப்போட வைக்கப்பட்டனர் இவர்களுக்கு வழிகாட்டும் இருபக்கத் தலைவர் களும் ஏன் அடிக்கடி தங்களது தலைகளில் முடிசூடிக் கொள்கின்றனர். இச்சடங்குகளுக்குப் பின்னால் உள்ள கருத்தியல் மக்களின் சுதந்தி ாத்துக்கும் நல்வாழ்வுக்கும் சார்பானதா? வர லாற்றை இவர்கள் பின் தள்ளுகிறார்களா? அல்லது முன்கொண்டு செல்கிறார்களா?
இங்கு மக்களுக்கான பண்பாட்டுக் கருத் தியல் தளம் மக்களிடம் இல்லை என்பது தெளிவாகிறது. அதிகார வர்க்க நலன்களுக்கான பண்பாடும் கருத்தியலுமே பேணப்படுகின்றன என்ற உண்மை வெளிப்படையாகவே தெரிகிறது. மனிதகுல வரலாறு தோறும் இதுவே நடந்து வந்துள்ளது. எகிப்திய, கிரேக்க, ரோமானிய, இந்திய, சீன நாகரிகங்கள் அனைத்துக்கும் அடி உரமானவர்கள் பெரும் எண்ணிக்கையான அடி மைகள்தான் எண்ணிக்கையில் குறைந்த அதிகார வர்க்கம் அவர்களை ஆயுதப் படைகளின் பலத் தால் மட்டுமல்ல "கடவுள் விதித்த விதி' என்ற கருத்தியல் பலத்தாலும் தான் அடக்கி ஆள

Page 47
/
இன் நோ
சமுத் go US
அகத்
GUCI
se-6) சுமந் LIL-(5
துரிய
L(60|(الکتب புதிய
seG)
[(6)[(تکے
N
முடிந்தது. அதற்காகவே மோட்சம், வீடுபேறு பரலோகம், சுவர்க்கம், நரகம் என்ற புனைவுகள் பொருள் உற்பத்தியிலிருந்து பிரிந்த ஆளும் வர்க்க அறிஞர்களால் முன்வைக்கப்பட்டன. இயற்கை வழிபாட்டை மட்டுமே கொண்டிருந்த அடித்தள மக்களிடம் அதிகார வர்க்கக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட புதிய சடங்குகளும் வழிபாடுகளும் திணிக்கப்பட்டன.
மக்களுக்கு மறு உலகில் நம்பிக்கை இல்லாவிட்டால் அரசுக்கும் அரசனுக்கும் பாதுகாப்பில்லை' என அர்த்த சாத்திரத்தில் சொல்லி வைத்ததுடன் அரசைப் பாதுகாக்க எவ்வாறெல்லாம் மக்களை அறியாமைக்குள் தள்ளவேண்டும் என்பதையும் விளக்கி வைத் துள்ளது சாணக்கியரின் அர்த்த சாத்திரம்.
பதிநான்காம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த மாக்கியவல்லியும் அரசு எனும் நூலில் அரசன் தனது ஆட்சியை நிலை நிறுத்த எப்படியெல்லாம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என எழுதிச் சென்றார். ' பண்ணை அடிமைகளும் கடவுளின் குழந்தைகள்தான் ஆனால் கடவுளின் சித்தத்தால் அவர்கள் அந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என ஏற்றத் தாழ்வுகள் ஒடுக்குமுறைகளை மதங்களின் தத் துவங்கள் நியாயப்படுத்தின. இவற்றிலிருந்து அரசின் கட்டமைப்பு தனது ஆரம்ப நிலையி லிருந்தே தனக்கு எதிராக மக்கள் விழிப்புற்று எழாதபடி பண்பாட்டுக் கருத்தியலை வல்லமை

ஜனவரிமார்ச் 204
னும் பல நூறு வாக்களே! வருக.
3திரங்களின் மீது ரை சுமந்து திரியும் திகளுக்காக.
ர்களின் தாய்நாட்டிலிருந்து நந் தொலைவிற்கு ர்களின் கனவுகளை து செல்ல
நகள் கொணர்க.
னுக்கு கீழாக
மதியை விழித்திருக்கும் தேசமொன்றை நோக்கி ர்களை அழைத்துச் செல்க.
ノ
வாய்ந்த ஒரு கருவியாகப் பாவித்து வந்துள்ளமை தெளிவாகிறது.
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ மன்னராட்சிகளுக்கு அரணாக விளங்கிய கத்தோலிக்க மதபீடம் உலகம் உருண்டை என கண்டுபிடித்த விஞ்ஞானி கலிலியோவை சிறையிலிட்டு சித்திரவதை செய்தது. (அதற்காக நான்கு நூற்றாண்டின் பின் 5 1987 ல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது), மதக் கருத்தியலுக்கெதிராக விஞ்ஞானக் கருத்துக்களை முன்வைத்தவர்கள் தீயிலிட்டு எரிக்கப்பட்டனர். ஐரோப்பிய கைத்தாழில் புரட்சியின் பின்னர் வளர்ச்சியடைந்த புதிய முதலாளித்துவ வர்க்கத் தினரின் வளர்ச்சிக்கு பிரபுத்துவ மன்னராட்சி முறையும் அது மக்கள் மீது திணித்திருந்த பண்பாட்டு மதக்கருத்தியலும் தடையாக இருந்தது. எனவே வோல் ரேர் ரூஸோ, மொன்ரிஸ்கியூ தீதரோ போன்ற பல அறிஞர்கள் தமது எழுத்துக்களால் இதுவரை விண்ணுலகை நோக்கியிருந்த மனித சித்தத்தை மண்ணுலகை நோக்கி இழுக்க முயன்றனர். அதுவரை இறைவன் மீது வைக்கப்பட்டு வந்த நம்பிக் கையை மனிதர்கள் மீது திருப்ப முயன்றனர். பிரான்ஸ் நாட்டில் பிரபுத்துவ மன்னராட்சியின் கீழ் பெருங் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவசாயிகள், புதிதாக உருவாகிய தொழிலாளி
வர்க்கத்தினர் யாவரையும் இணைத்துக் கொண்டு " | 7 8 9 ου பிரெஞ்சுப் புரட்சியை முதலாளித்துவ ) வர்க்கம் தலைமை தாங்கி நடத்தியது. "சுதந்திரம்,

Page 48
தாயகம் இதழ் 3
தாயகம் இதழ் 34
சமத்துவம், சகோதரத்துவம்' என்ற முழக்கத்துடன் எழுந்த அந்தப் புரட்சி ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் மறு மலர்ச்சிக்கான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருந்தும் முதலாளித்துவம் ஒடுக்கும் வர்க்கம் என்ற வகையில் சில ஆண்டுகளின் பின் மீண் டும் முடியாட்சியுடன் சமரசம் செய்துகொண்டு அதே பண்பாட்டு மதக் கருத்தியலை சாதமாகக் கொண்டு ஏனைய வர்க்கங்களை ஒடுக்க ஆரம் பித்தது. இத்தகைய முதலாளித்துவ ஒடுக்கு முறைக்கு எதிராக பிரான்சியப் புரட்சி நடை பெற்ற அதேமண்ணில் 1 8 71 ல் பரிஸ் கம்யூன் புரட்சியை பிரன்சின் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு நடத்தினர் எழுபத்தி இரண்டு நாட்கள் மட்டுமே அது நீடித்தாலும் அவற்றின் படிப் பினைகளை பிரெஞ்சுப் புரட்சி உட்பட வர லாறுதோறும் நடந்த மக்கள் எழுச்சிகளின் அது பவங்களை கால் மாக்ஸ் தொகுத்து அளித்ததன் மூலம் பின்னர் நடந்த புரட்சிகளுக்கு அவை வலுவூட்டுவனவாக அமைந்தன.
ருஷ்யாவில் 1917ல் லெனின் தலைமையில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஏற்பட்டது. வர லாற்றில் முதன் முதலாக அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கம் சுதந்திரமாக வாழக்கூடிய அரசு உருவாகியது. அதன் எழுச்சியால் உந்தப்பட்டு சீனா, வியட்னாம், கொரியா, கியூபா உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தொழிலாளி வர்க்க அரசுகள் உருவாகின. உலகெங்கும் காலனித்துவத்தின் கீழ் அடிமைப்பட்டிருந்த நாடுகளின் விடுதலைக்கு இப்புரட்சிகளின் எழுச்சி பெரும் உந்துதலை அளித்தது. 1917 ல் இருந்து 70 கள் வரை பழமைவாதக் கருத்தியல் கள் அறியாமை, முடத்தனங்களுக்கு எதிராகவும், சாதி, இன, மத, பால், வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒரு புதிய மானுட விடுதலை நோக்கிய பண்பாட்டு மாற்றததை நோக்கி உலக
80களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் மீண்டும் முதலாளித்துவக் கருத்தியல்களையும், புதிய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பலத்தோடு ஏகாதிபத்திய பொருளாதார நுகர் வுப் பண்பாட்டையும் உலகெங்கும் திணிப்ப தில் அமெரிக்கா மிகவும் முனைப்பாக உள்ளது. அத்துடன் தனக்கு எதிராக இல்லாதவரை உலக நாடுகளின் பழமைவாதப் பண்பாடுகளை தனக்கு சாதகமாக பாதுகாப்பதற்கும் தயாராக உள்ளது. 8 0 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் சார்பு அரசை வீழ்த்துவதற்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான தலிபானையும் அதன் தலைவர் பின்லாடனையும் அமெரிக்கா ஊக்கிவித்து வளர்த்தமையை இங்கு உதாரணமாகக் கொள்

毅 ஜனவரிமார்ச் 204
ளலாம்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் சார்பு அரசு இருந்போது பர்தா அணியாமல் பல்கலைக் கழகம் வரை சென்று பெண்கள் கல்விகற்கும் வாய்ப்பு இருந்தது. 'அமெரிக்க விடுவிப்பின் பின்னர் பெண்கள் பாடசாலைகளை குண்டு வைத்து தகர்க்கும் நிலை அங்கு தொடர்கிறது. இங்கு மட்டுமல்ல திபெத்திலும், சீனாவிலும் இந்தியாவிலும் கூட பழமைவாத மதவாத அமைப்புகளுடனான அமெரிக்காவின் தொடர்பு கள் வெளிப்படையானவை.
எமது நாட்டிலும் உலகமய நுகர்வுப் பண்பாடும் மதங்களை அடிப்படையகக் கொண்ட பழமைவாதப் பண்பாடுகளும் கைகோர்த்து நிற்கின்றன. சாதி, இன, மத, வர்க்க வேறுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் பாதுகாக்கும் பழமைவாத ஆதிக்கக் கருத்தியலே அரசின் துணையோடு சிங்கள பெளத்த பேரி னவாதக் கருத்தியலாகவும் அதற்கு எதிரான குறுகிய தேசிய இன மதப் பண்பாட்டுக் கருத்தியலாகவும் மக்களிடம் தொடர்ந்தும் திணிக்கப்பட்டு வருகினறன.
இப்பண்பாட்டுக் கருத்தியலுக்கு எதிராகவே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் "பலநூற் றாண்டு செய்த பாவம் பெருஞ் சுமையாய், நமதாண்மையை நசுக்கி நம் அறிவை மயக்கி விட்டது. அவற்றின் பெருஞ் சுமையை தள்ளி எறிய ஒரு பெருமுயற்சி செய்யக் காலம் இதுவேயாம் நாம் முன்னே போகவொட்டமல் இந்தச் சுமை பின்னே இழுக்கிறது. சென்றகாலப் புழுதியும் சருகும் புதிய உதயத்தை மறைக் கின்றன. மனிதசாதி எப்போதம் முன்னோக்கிச் செல்கிறது. இந்த மனிதசாதியுடன் நாம் சமநடையாகச் செல்ல விரும்பினால் இந்த முதுகுச் சுமையைக் கூசாமல் வீசி எறிந்து விடவேண்டும்" என வங்கக்கவி ரவீந்திநாத் தாகூர்குறிப்பிட்டிருந்தார்
இதனையே இரண்டாயிரமாண்டுப் பழைய சுமை' என குறிப்பிட்ட கவிஞர் முருகையன் 'குப்பை விலக்கி மணி பொறுக்கி அப்பாலே செல்லும் அறிவு விழிப்பு வேண்டும் என பழமையிலும், மக்கள் நலன் சார்ந்தவற்றை தேடிப் பெற்று முன் செல்ல வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். எனவே இன்றும் மக்கள்மீது தொடரும் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கும் கருவியாக அமையும் இப்பழமைவாதப் பண் பாட்டுக் கருத்தியலின் ஒடுக்குதலில் இருந்து விடுபட வேண்டுமானால் மக்கள் விடுதலை சார்ந்த புதிய பண்பாட்டுக் கருத்தியலை முன் னெடுப்பதுடன் மதசார்பற்ற ஒரு அரசை

Page 49
தாகம் இதழ் 34
இவறுங்கல்லும் §§_ ¢i:
"சிரியாக ஆறு மணி”
சூரியன் அந்த மலைகளின் இடுக்கில் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறான். என்பது போல அவ்விடமெங்கும் மங்கலான இருட்டு கவ்வியிருந்தது. சிறிய சத்தங்களை கூட தொலைந்துபோன அந்தக் காலைப் பொழுதில் இருட்டை கிழித்துக் கொண்டு செல்லும் இருசோடி பாதச்சுவடுகளின் அரவம் விடியலை துரிதப்படுத்திக் கொண் டிருந்தன.
"G)6)JJgFIT வாடி! கலியாணத்துக்கு போறமாரிதான் ஒவுட்டு நட' என்று கடுகடுத்துக் கொண்டு எட்டி எட்டி நடந்தான் கந்தசாமி.
பத்தடிக்குப் பின்னால் சாரியை தூக்கி பிடித்துக்கொண்டு தொங்கு தொங்குனு நடந்து போய்க்கொண்டிருந்தாள் காமாட்சி, கந்தசாமி வெள்ளையு சொள்ளையுமாக உடுத்தியிருந்தான் கையில் பெரிய கருப்பு குடை காமாட்சியும் காலத்துக்கேத்தாற் போல சீக்குயின் சாரியொன்றை சுருட்டிக் கொண்டுதான் மினுக் மினுக்கென்று ஒடி யோடிப் போகிறாள். எப்படியாச்சும் "ஆரர மணிக்கு எடுக்கிற அந்த பஸ்ஸ புடிச்சி
 
 

ஜனவரிமார்ச் 204
சு. தவச்செல்வன்
புடனும்' என்ற கந்தசாமியின் நோக்கம் நிறைவேறினாற் போல பஸ் ஸ்டாண்டரில் பஸ் நின்று கொண்டிருந்தது. அதுக்கு முன்னுக்குள்ள மொடக்கில் தண்ணிகானு பக்கத்தில் உள்ள கருப்புசாமி கோயிலை பார்த்து ஒரு கும்புடு போட்டுவிட்டு ரெண்டுபேரும் பஸ்ஸில் ஏறினார்கள்
கந்தசாமியைக் கண்டதும், "வாடா கந்தா!
வா' நேரத்துக்கு வந்துட்டயே சீட்ல ஒக்காந்துக்க" என்று அவனது தோட்டத்து நண்பன் சுந்தரம் கந்தசாமியோடு குலாவிக் கொண்டான்.
காமாட்சி ஒரு ஜன்னலோரம் பார்த்து உட்கார்ந்து கொண்டதும் அவளருகில் வந்து அமர்ந்தாள் சுந்தரத்தின் மனைவி அன்னம்மா காமாட்சி கையில் வைத்திருந்த பாக்குத் தோலை எடுத்து பற்களைத் தேய்த்துக் கொண்டே "இன்னிக்கிதா வீட வளிக்க லாம்னு இருந்தே அடுப்பு மொழுவனும்னு இருந்தே எங்க ஓங்கண்ணேதா இங்க கூப்பீட்டு வந்துட்டதே' என்று அங்கலாய்த் தாள்.
"நா மட்டு என்னா வீட்ல உடுப்பு துணிமணி அவளோ குமிஞ்சி கெடக்கு தொவைக்க இந்த மனுசனுக்கெங்க அது

Page 50
தாயகம்” இதழ் 84
தெரியப் போவுது” என்று சகட்டுமேனியாய் பேசினாள் அன்னம்மா. தமது கணவன் மார்களை ஒருவர் பேச்சில் ஒருவர் நொந்து கொண்டனர்.
ஒரு தாளை வைத்து ஆட்களின் பெயர்களை சரிபார்த்துக்கொண்டிருந்த கண்ணாயிரம் தலைவர், “இந்தா கந்தா!.. ஒனக்கு , இது காமாட்சிவுட்டு...'' என்று இருநூற்றைம்பது வீதம் ஐநூறு ரூபாவை எண்ணி கையில் கொடுத்தார். கந்தசாமி இருநூற்றம்பதை எடுத்துக்கொண்டு இருநூற் றைம்பதை காமாட்சியின் கையிலேயே கொடுத்தான். பஸ் முழுதும் வெறும் கறுப்பு மனிதர்களும் அவர்களின் வெற்றிலை சிவந்த சிரிப்பொலிகளும் கூச்சலும் கும்மாளமும் பரவின.
"எல்லா வந்தாச்சா எடுங்கப்பா பஸ்ஸ. ' என்று தலவர் கண்ணாயிரம் சத்தம் போட்டார்.
அந்த பஸ் ஒரு மேதின கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்தது. இடையிடையே ஒவ்வொரு ஸ்டாண்டிலும் ஆட்கள் ஏறி பஸ்ஸை நிரப்பினர், கண்ணாயிரம் தலவரிடம் பணத்தை வாங்கியவர்கள் பல வாறு கதையளக்கத் தொடங்கினார்கள். "கண்ணாயிரண்ணே ஒனக்கு நல்ல வாசி! இல்லையாண்ணே"
என்றவர்கள் தான் அதிகம்.
"தலவரே இன்னொரு ஏரணுத்தம்பது சேத்து குடுத்தா என்ன” என்றான் முனுசாமி.
"சேத்து தாரே... ஓவுட்டு இன்னொரு பொண்டாட்டியும் சேத்து - கூப்பீட்டு வாரியா?" என்ற தலவரின் வார்த்தையை கேட்டு பஸ் முழுதும் பயங்கர சிரிப்பொலி பரவியது.
"போன மாசோ திருவுலாவுக்கு கண்டது அப்பறோ இன்னிக்கிதா ஒன்னிய காங்குரே” என்றான் முனுசாமி கந்தசாமியைப் பார்த்து. பக்கத்து தோட்டத்து ஆளுகளும் கல்கந்தை தோட்டத்தவர்களுக்கு அறிமுகமானவர் களாக இருந்ததால் பஸ் கலகலப்பாகவே இருந்தது. கண்டக்டரும் டிரைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அலுத்துக் கொண்டார்கள்.
48

ஜனவரி மார்ச் 2014
பேருந்து வேகமாக மஸ்கெலியா, நோர்வூட், டிக்கோயா ஆகிய நகரங்களை கடந்து பறந்து கொண்டிருந்தது. இடையே தலவர் கண்ணாயிரம் வாங்கி வைத்திருந்த மூன்று போத்தல்களை உடைத்து கொஞ் சமாக பரிமாறினார். நாய்க்கு உசி காட்டுவது போல், கந்தசாமியும் வாங்கி மடக்கென்று வாயில் ஊத்திவிட்டு காமாட்சியின் முகத்தை சாடையாக கவனித்தான். அவள் வீட்டுக்கு வா ஒனக்கு வச்சிக்கிறேன்.'' என்றதை கேட்டதும் வெடுக்கென்று திரும்பிக் கொண்டான்.
இப்போது காளை மாட்டின் வாலை முறுக்கிவிட்டது போல் பஸ் இன்னும் களை கட்டத் தொடங்கியது. தோட்டத்திலுள்ள பல பிரச்சினைகளை அவர்களது வாய் அவிழ்க்கத் தொடங்கியது.
"வரவர வேலநாள் கொறையுது”
"சம்பளத்த இப்படி கூட்டி வச்சிருக் காணுங்க”
“தேல தோட்டத்த மூடப் போறாங் களாம்''
“வெலவாசி கண்டவாக்குல ஏறுது”
என்றவாறெல்லாம் பல குரலொலிகள் பேரூந்தின் நான்கு சக்கரங்களுக்குள் சுழன்றன.
தலைவரின் - பதாகையுடன் கட்சிக் கொடியையும் தொண்டர்களையும் தாங்கிச் சென்ற பேருந்து மேதின கூட்டத்திற்குள் ஊர்ந்து ஓரமாகி நின்றது. எல்லோரும் அடிச்சி பிடிச்சிக் கொண்டு இறங்கினார்கள். முதல் நாள் கந்தசாமி முதலியோர்
- தேடிக் கட்டிக்கொடுத்த மாலையுடன் கண்ணாயிரம் அந்த இடத்திலிருந்து மாறினார். கந்தசாமி காமாட்சியுடன் ஒரு ஓரத்தில் போய் நின்றான். தூரத்தே மேடையில் தலைவர்
பேசிக்கொண்டிருந்தார்.
"தொழிலாளிய யாராலயு ஏமாத்த முடியாது.'', "தோட்ட தொரயோ கம்பனி காரனுங்களோ யாரும் எனிய மீறி மயிர கொட புடுங்க முடியாது” , “நாங்க எப்போது உங்களுக்கு பக்கபலமா இருப்போம்” என்று ஆவேசம் பொங்கும் அவரது பேச்சை கேட்டு ஒவ்வொரு வசன முடிவிலும் கைத்தட்டலும்

Page 51
தாகம் இதழ் 34
ஆலின் விதை கடுகின் நுணிதாய் மண்ணுட் புதையும். ஆலின் விழுது நூலின் மெலிதாய் மண்ணிற் பதியும். ஆல்
கிளை பரப்பி விரிந்து பரவி நிழல்விசி நிற்கும்.
விசில் சத்தமும் அந்த நகரமெங்கும் எதிரொலித்தது.
தலைவரின் பேச்சை கேட்டு உணர்ச சிவசப்பட்டு கந்தசாமியும் கைதட்டி. “ச்சா எப்புடி பேசுறாரு” என்று புல்லரித்துக் கொண்டான். தலவர் பேச்சு முடிய, அவர்கள் சென்ற பஸ்ஸுக்கு சாப்பாட்டு பார்சல்களை கொண்டு வந்தார்கள் பார்சல்கள் வழங் குவதற்கு தலைவர்கண்ணாயிரம் வந்தார்
"தலவரே நம்ம கட்டுன மாலய போட்டாச்சா?” என்றான்கந்தசாமி
“எங்கப்பா போடுறது ஒன்னா ரெண்டா அங்கத்தா குமிஞ்சி கெடக்கே வாங்கி வச்சிக்கிட்டாங்க” என்று சொல்லி கந்த சாமியின் கைகளில் ரெண்டு பார்சல்களை கொடுத்தான். சாப்பாட்டு பார்சல்களை ஒரு பஸ் சீட்டில் வைத்தவாறே சாப்பிட்டுவிட்டு “இங்னயே ஒக்காந்துரு சட்டுன வாரேன்' என்றவன் பொசுக்கென்று பஸ்ஸை விட்டு இறங்கி சுந்தரத்துடன் ஓடினான். காலையில் கொடுத்த இருநூத்தைம்பதை போட்டு இருவரும் கொஞ்சம் ஏற்றிக் கொண்டார்கள்
கூட்டம் முடிந்து பேரூந்து புறப்படத் தொடங்கியது. கூட்டத்துக்கு சென்ற ஆட்கள் எல்லோரும் பதமாகி விட்டனர்.
“முனுசாமியும், ராஜீம் எங்க
போனாய்ங்க?"
 

ஜனவரிமார்ச் 204
ழைகள்
சி.சிவசேகரம்
ஆலின் நிழலிற் பயிரெதுவும் உயிர்ப்பதில்லை. உயிர்த்திருந்த எதுவும் தொடர்ந்து நிலைப்பதில்லை.
தவறானதும் தீதும் நம கணகள காணாமல நம் மண்ணில் வேர்கொண்டு நம்மையும் மூடி நிழல்விசி நிற்கலாம்
"இந்தப் பயலுங்கல இன்னும் காணோமே?” என்று தலைவரும் எரைவரும் கண்டெக்டரும் பேரூந்தை ஸ்டார்ட் பண்ணிவைத்தவாறு காத்திருந்தார்கள்
'அவிங்க இப்போ வரமாட்டானுங்க நம்ம போவோ எடுங்க பஸ்ஸ" என்றார் தலவர்கண்ணாயிரம்
டிரைவர் G36)15LDT5 மிதிக்கத் தொடங்கினான், கிரகணம் தோன்றியதைப் போல திடீரென்று இருட்டத் தொடங்கியது. கந்தசாமி காமாட்சியின் தோளில் கையைப் போட்டுக் கொண்டான். சாப்பிட்டதும் போட்ட வெற்றிலையை மென்றுகொண்டே வந்த காமாட்சி இப்போதுதான் ஜன்னலைத் திறந்து அதைத் துப்பினாள். கந்தசாமியின் எண்ணமெல்லாம் இப்போது காமாட்சி யிடமுள்ள இருநூற்றைம்பது ரூபாவின் மேலாக இருந்தாலும் அவளது மார்புகளுக் இடையில் கையைப்போட்டு எடுக்கவும் முடியாது. அவளும் அதை கொடுக்க மாட் டாள் என்பது அவனை இன்னும் தூங்கச் செய்தது. பேருந்து ஏழரை மணியளவில்
நோர்வூட்டை வந்தடைந்தது. தலைவர்
கண்ணாயிரம் பேருந்தை கொஞ்சம் நிறுத்தி வீட்டிற்கு ஏதெதோ வாங்கிக் கொண்டார்
அதற்குள்ளாக சுந்தரம் கந்தசாமியைக் கூட்டிக்கொண்டு எங்கோ போப் வந்தான் பஸ் மறுபடியும் புறப்படத்

Page 52
தாயகம் இதழ் 繼
தொடங்கியது. பஸ்ஸும் சோபையிழக்கத் தொடங்கியது. ஆண்கள் எல்லோரும் தலையைக் கவிழ்த்துக் கொண்டனர். சிலர் அவரவர்களது பெண்டாட்டிகளின் மடியி லும் தோளிலும் சாய்ந்து கொண்டனர். அந்த பேருந்தில் பெண்கள் மட்டுமே இப்போது நிதானத்துடன் அமர்ந்திருந்தார்கள் மருண்ட அவர்களது விழிகள் ஜன்னலில் தெரியும் இருட்டில் தொலைதூர வெளிச் சத்தை மட்டுமே அவதானித்துக் கொண்டி ருந்தது. பேருந்து காற்றை கிழித்துக்கொண்டு சென்று மஸ்கெலியா நகரையும் தாண்டி மல்லியப்பு சந்தியை அடைந்தது.
திடீரென்று பரவிய கூச்சல், ஒலிகளால் உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் திடுக் கிட்டு எழுந்து பார்த்தனர் எதிரே குறுக்காக இன்னொரு பேருந்து! அது வேறொரு மேதின கூட்டத்திற்கு போய் வந்திருந்தது. தலவர் கண்ணாயிரம் முன்னுக்கு வந்து கதவு வழியே பார்த்தார் எதிரேயுள்ள பேருந்திலிருந்து "சலங்குடத்து தப்பு வாங்குனே டனட டன்டன்” என்று தம்மையும் தமது கட்சித் தலவரையும் நக்கல் பாட்டு பாடுவதாகவும் கூச்சல் போடு வதாகவும் உணர்ந்த கண்ணாயிரத்துக்கு கோபம் கண்களை பொத்துக்கொண்டு வந்தது.
உடனே தமது ஆட்களை ஏவிவிட்டார் "ஆம்பளைகளா இருந்தா பஸ் வுட்டு எறங்கி வந்துபாருங்கடா?" என்று கூக்குரலிட்டார் வாய்த்தர்க்கம் முற்றியதை பார்த்த டிரை வரும் கண்டெக்டரும் பஸ்ஸில் உள்ளோரை சமாதானப்படுத்தி பேருந்தை எடுக்க முயன்றனர். “உம்ப பஸ்ஸெக்க கனிங் கொல்லா” என்று அந்த வயதான கண்டக்டர் டிரைவரை பார்த்து ஏசினார். அதற்குள் கல்லொன்று வந்து பேருந்தின் கண்ணாடி யொன்றை பதம்பார்த்தது. அமர்ந்திருந்த பெண்கள் நரிகளைப் போல் கூச்சலிட்டனர்.
வெறுந்தேயிலைக்குள் கல்லெறிந்ததும் பாய்ந்நோடும் வேட்டை நாய்களைப்போல உடனடியாக வெளியே பாய்ந்த ஆட்கள் எதிரேயுள்ள பேருந்தையும் ஆட்களையும் தாக்கத்தொடங்கினர் சாராயவெறி அவர் களின் குருதியை உசுப்பிவிட்டிருந்ததால் அந்த நடுநிசியில் எதை செய்வதென்று தெரியாமல் மிருகங்களாய் மாறினர் தாறு
 

ஜனவரிமார்ச் 204
மாறாக குடித்திருந்ததால் வாந்தி யெடுத்த சுந்தரம் ஒரு மூலையில் கிடந்தான் எகிறிக்கொண்டு பாய்ந்த கந்தசாமியை இருக்க பிடித்த காமாட்சி, "நீ பேசாம இரு மனுசெ அவிங்கதா கண்ணு முண்ணு தெரியாம ஆடுறானுங்கனா நீ வேற எங்க பாயுற" என்று மல்லுக்கட்டிய காமாட்சியை ஒரு சீட்டில் தள்ளிவிட்ட கந்தசாமி வெளியே பாய, தலவர் கண்ணாயிரம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த விக்கெட் பொல் கந்தசாமியின் கைகளுக்குள் அகப்பட்டது. எதிர் பஸ்ஸின் உள்ளே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தலவரின் மண்டையை கண்ணாடியுடன் சேர்த்துத் தாக்கினான்கந்தசாமி.
சண்டையும் சத்தமும் கும்மிருட்டில் உடனே தொலைந்து நிசப்தமானது. ஐய்யோ. ஐயையோ என்ற அலறல் ஒலி அப்பக்கம் எங்கும் எதிரொலித்தது. இவ் வாறான காலங்களில் ரோந்துவரும் பொலிஸ் உடனே அவ்விடம் விரைந்தது. நடந்த சம்பவங்களை விசாரிக்காத பொலிஸ் முன்னிலையில் கந்தசாமி பெரும் குற்ற வாளியாய் முன்னிறுத்தப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத காமாட்சி பொங்கி எழுந்தாள். கந்தசாமியையும் இன்னும் சிலரையும் ஏற்றிக்கொண்டு பொலீஸ் வண்டி பறந்தது.
"வருசம் வருசம் இதே அக்கப்போறா இருக்கு”
"ஏ கண்ணாயிரோ ஒ மாரி கூட்டி குடுத்த பயலுக இருக்குற வரைக்கு இதேமாதி தாண்டா நடக்கும்” என்று சீறினாள் கூட இருந்த ஏனைய பெண்களும், "ஆமாண்டி காமாச்சி இவிங்கல காலங்காலமாக நம்பி ஏமாந்துட்டோண்டி" என்று எல்லாப் பெண்களும் சேர்ந்து கொண்டனர்.
"இந்த மாதிரி சாப்பாட்டுக்கும் சாராயத்துக்கும் நம்பமாறி ஆலுகள ஈடு வைக்கிற பயலுகல சும்மா வுடக்கூடாதடி இவனுங்களுக்கு நல்ல பாடம் படிச்சி கொடுக்கனும்" என்று சாரியை வரிந்து கட்டிக்கொண்டு வரும் பெண்கள் நிச்சயம் நம்மை தொலைத்து கட்டிவிடுவார்கள் என்று திகிலடைந்த தலவர் கண்ணாயிரம் ஒடத்தொடங்கினார்

Page 53
தாயகம்" இதழ் 84
இந்தியத் தத்துவப் ஓர் அறிமுகம்
மக்களுக்கான ஓர் அறிமுக நூலானது இயன்ற வரையில் சுருக்கமானதாகவும், எளிதில் வாசிக்கத்தக்கதாகவும், நுட்பமான சொற்களைக் கொண்டிராதனவாகவும் இருக்க வேண்டும் நுட்பமான பல அம்சங்களையும் பனுவல் சார்ந்த பல விவரங்களையும் கைவிடும் பட்சத்தில் மட்டும்தான் மேற்கண்ட தேவைகளை நிறை வேற்ற முடியும். இதனால், இந்தியத் தத்துவப் பற்றிய மேலோட்டமான சித்திரம் மட்டுடே நமக்குக் கிடைக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது என்னால் இதைவிட மேலான எதையும் கொடுக்க முடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். நூற்புலமை பற்றி அலட்டி கொள்வது போன்ற தோற்றம் ஏற்பட்டு விட! கூடாது என்பதற்காக, குறிப்புகளும், சுட்டுநூல்கள் பற்றிய விவரங்களும் நூலின் இறுதியில் கொடு கப்பட்டுள்ளன. என்னுடைய விவாதங்களில் காணப்படும் குறைபாடுகளை ஏதேனும் ஒரு விதத்தில் நிவர்த்தி செய்யக்கூடியவையாக இல் விவரங்களை மிகவும் தாராள உள்ளம் படைத் வாசகர்கள் கருதுவார்கள் என்று நம்புகிறேன் ஏனென்றால், இந்தியத் தத்துவத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒரு சிலவற்றையாவது குறிட பிடுவதற்கு எனக்கு இது வாய்ப்பளித்தது. ஆனால் வாசகருக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய நூல்கள் லிருந்தே மேற்கோள்களைத் தர வேண்டும் என் எனது கவலையின் விளைவாக, மிகச்சிறந்த படைப்புகள் அனைத்தையும் பற்றி என்னால் குறிப்பிட முடியவில்லை. குறிப்பாக, இந்தி யத்தத்துவம் பற்றி இந்தியாவின் பிராந்தி

ஜனவரி மார்ச் 2014
கட்டுரை
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
சி. C* *
மொழிகளில் நமது தத்துவ அறிஞர்கள் எழுதிய மிகச்சிறந்த நூல்களைப் பற்றிக் குறிப்பிட முடி யாமற் போனதற்காக நான் மிகவும் வருந் துகிறேன். வங்கமொழியே எனது தாய்மொழி என்பதால், மகாமகோபாத்யாய சந்திரகாந்த தர்க்காலங்காரர், பாணிபூஷண தர்க்கவாகீசர் ஆகியோரின் பெயர்களையாவது என்னால் குறிப் பிட முடிந்தது. சுக்லால்ஜி சங்கவி, ராகுல சாங்கி ருத்யாயன் ஆகியோரின் இந்தி நூல்கள் பற்றித் துண்டு துக்காணியாகத்தான் என்னால் குறிப்பிட முடிந்தது. மற்ற இந்திய மொழிகளிலும் முக்கி யமான நூல்கள் ஏராளமாக உள்ளன என்பது எனக்குத் தெரியும். எனவே, நமது தேசிய மொழிகளின் கெளரவத்திற்கான அங்கீகாரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருப்பதால் இதுவரையில் உள்ளதை விடவும் அதிகமான அளவுக்கு நாம் அந்நூல்களின் மீது எதிர்காலத்தின் அக்கறை காட்டுவோம் என்று நான் உறுதியாக நம்பு கிறேன்.
இருப்பினும், நமது நாட்டின் மரபார்ந்த தத்துவ அறிஞர்களின் முக்கியத்துவம் இவ்வாறு வலியுறுத்தப்படுவதைப் பற்றித் தவறான புரிதல் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது. வழக்கமாக இந்தத் தத்துவ அறிஞர்கள் வெளியிட்டு வந்த, மரபான மதிப்பீடுகளை ஆதரிக்கும் ஒரு போக்கு என்று இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. தத் துவக் கருத்துகளைக் காலந்தோறும் புதிய தலை முறையிடம் கையளிப்பதற்கான மிகவும் முக் கியமான வழிமுறையாக ஆசிரியர்-மாணவர் உறவு என்ற மரபே பல நூற்றாண்டுகளாக நீடித்து 51

Page 54
5ts- g5 34
வந்ததால், நமது நாட்டின் மரபான தத்துவ அறிஞர்கள் பொதுவாகவே நமது மரபார்ந்த கருத்துகளின் மிகச்சிறந்த பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் வேறுவிதமாகக் கூறுவதெனில், நமது பண்டைக்கால மற்றும் மத்திய காலத் தத்துவ அறிஞர்கள் உண்மையில் எவற்றைச் சிந்தித்தார்களோ, அவற்றைப் புரிந்து கொள் வதற்கு உதவுகின்ற சிறந்த வழிகாட்டிகள் இவர்கள்தான். எனினும், இந்தச் சிந்தனைகளைக் குறித்தும் கூட ஒரு விமர்சன மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது இன்று நமக்கு முக்கிய மானதாகும். குறிப்பிட்ட சில மரபார்ந்த மதிப் பீடுகளின் விரிவான கட்டமைப்புக்குள் அடக்கி விட முடியாத விமர்சன மனப்பான்மையை நமது மரபார்ந்த தத்துவ அறிஞர்கள் பொதுவாகவே எதிர்த்து வருகிறார்கள் சுருக்கமாகச் சொல்வ தெனில், இவர்கள் குறிப்பிட்ட சில மரபார்ந்த மதிப்பீடுகளைப் புனிதப்படுத்தும் போக்கின் காவலர்களாகவும் இருக்கிறார்கள் ஏற்கனவே செல்வாக்கு வகித்து வரும் உணர்வுகள் எந்த அளவுக்குப் புண்படக்கூடும் என்ற போதிலும், இந்தப் புனிதப்படுத்தும் போக்கை ஒதுக்கித் தள்ள வேண்டியது இன்று நமக்கு முக்கிய மானதாகும்.
மக்களுக்கான அறிமுகம் என்பதை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்பதை இன் னும் முழுமையாக விளக்கும்படி இது என்னை நிர்ப்பந்திக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், மக்களுக்கான அறிமுகம் என்பது நூலின் உள்ளு றையை எளிய முறையில் முன்வைப்பதாகவும், நுட்பம் சார்ந்ததாக இராத அணுகுமுறையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். தத்து வத்தை மக்களுக்கு எளிய முறையில் அறிமுகப் படுத்துவது என்பது மக்களின் தத்துவ ரீதியான தேவைகளையும் கணக்கிலெடுத்துக் கொண் டதாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத் தின்படி, உண்மையில் இந்தப் பணியானது எளிதில் வாசிக்கத்தக்க நூலை எழுதுவது என்பதைவிடக் கடினமானதாகும். ஒரு நூலில், நமது பண்டைக்காலத் தத்துவ அறிஞர்கள் உண்மையில் என்ன சிந்தித்தார்கள் போதித் தார்கள் என்று விளக்கமளிப்பது மட்டும் போது மானதல்ல; இவையனைத்திலும் நிலைத்திருப் பவை எவை, மடிந்து போனவை எவை என்பதை வேறுபடுத்திக் காட்டுவதும் அவசியமாகும். ஏனெனில், நமது தத்துவ மரபில் மதிப்பில்லா தவற்றை ஒதுக்கித் தள்ளுவதைப் போலவே, மதிப்பு வாய்ந்தவற்றைத் தக்கவைத்துக் கொள் வதும் மிகமிக அவசியமாகும். கடந்த காலத்தின் தத்துவச் சிந்தனைகள் நம்மைப் பொறுத்த வரை ஆர்வத்தைத் தூண்டுகிற விசித்திரப் பொருட்கள் மட்டுமல்ல என்பதே இதற்குக் காரணம். இந்தத்
 

ஜனவரிமார்ச் 204
தத்துவச் சிந்தனைகள் நமது தற்கால முன்னேற் றத்திற்கு உதவக்கூடும், அல்லது தடைக்கற்களாக இருக்கக்கூடும். எனவே, நமது முன்னோர்களின் தத்துவக் கருத்துக்களில் நமது முன்னேற்றத் திற்குத் தேவையானவற்றுக்கு எதிரானவையாக விளங்குகின்ற கருத்துகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுக் கைவிடப்பட வேண்டும்; நாம் அடையவிரும்புகின்ற எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்ற கருத்துகள் சிறப் பான கவனத்தைப் பெற வேண்டும்.
இந்தக் கண்ணோட்டத்தின்படி பார்க் கும்போது, நம் நாட்டின் விடுதலைப் போராட் டக் காலத்தில் இருந்த நிலைமையில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நினைவிற் கொள்வது நல்லது நாட்டு விடுதலைக்கு முன்பு, கடந்த காலத்தைப் பற்றிய குருட்டுத்தனமான புனி தப்படுத்தல் கூட நமது தேசபக்தியின் ஆற்றல் மிக்க ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. திலகர் போன்றவர்களின் எழுத்துக்களில் நாம் காண்கின்ற, நமது மரபார்ந்த தத்துவத்தை முரட்டுத்தனமாக ஆதரிக்கும் போக்கானது, அந்த தத்துவத்தின் உள்ளார்ந்த மதிப்பைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமலே நமக்கு ஒருவித மான நம்பிக்கை மனப்பான் மையைக் கொடுத்திருக்கிறது. அப்போது ஏகா திபத்திய வாதிகள் நமது சுயமரியாதைக்கு ஊறு விளைவிக்க முயன்றார்கள் உடலியல் ரீதி யாகவும் அறிவுரீதியாகவும் உள்ளார்ந்த விதத்தில் கீழானவர்களான இந்தியர்களுக்குத் தங்களைத் தாங்களே அரசாளும் தகுதி கிடையாது என்று அவர்கள் வாதிட்டார்கள் இதற்கு எதிராக, நமது தத்துவத்தை நியாயப் படுத்துவதற்குப் போர்க் குணத்துடன் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் நம்மைச் சிறந்த விடுதலை வீரர்களாக ஆக்கின என்பது ஒரு புறமிருக்க, வருங்காலத் தத்துவ வளர்ச்சிக்கு அவை மிகப்பெரிய தீங்கையே செய்தன. மேற்கத்திய நாடுகளின் மாபெரும் தத்துவ அறிஞரை விட நமது சங்கரர் மகோன்னத மானவர் என்று நிறுவுவதற்காக அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை இதற் கான உதாரணமாகக் கொள்ளலாம். பகவத் கீதையின் ஒரு பிரதி தனது கையில் இருந்தால் போதும், ஒரு தேசபக்தனால் அச்சம் சிறிது மின்றித் தூக்கு மேடையை நோக்கி அன்றைக்கு நடந்து செல்லமுடிந்தது என்பது அனைவருக்கும் தெரிந் ததுதான்.
ஆனால் இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டது. நமது நாட்டின் விடுதலையை நாம் உறுதியாக நிலைநாட்டிவிட்டதால், நமது நம் பிக்கையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக எந்த

Page 55
தாயகம்" இதழ் 84
வொரு போலி நம்பிக்கையும் இப்போது நமக்குத் தேவையில்லை. மாறாக, நமது நாட்டின் திட்ட மிட்ட பொருளாதார வளர்ச்சிக்காக நாம் அர்ப் பணிப்புணர்வுடன் உழைப்பதற்குத் தேவையான நம்பிக்கை நம்மிடம் போதுமான அளவுக்கு இருக்கிறது. எனவே, மோட்சம் - அதாவது 'மண்ணுலக பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவது - என்பது பற்றிய நமது கருத்துத்தான் தத்துவத் துறையின் ஆகவுயர்ந்த இலட்சியம் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இனியும் நமக்குக் கிடையாது. நாகார்ஜுனரும், சங்கரரும் தத்துவஞானிகள் அனைவரிலும் மிகச் சிறந் தவர்கள் என்ற கருத்தைக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது நமது இன்றைய இலட்சி யத்திற்கே எதிரானதாகும். ஏனென்றால், இந்த உலகத்தை உண்மையானது எனக் கருதக்கூடாது என்றும், உண்மையான அறிவைப் பெறுவதற் குப் பகுத்தறிவையும், அனுபவத்தையும் நம்பத் தேவையில்லை என்றும் நமக்குப் போதித்தவர் கள் அவர்கள். நம் முன்னாலோ, நாம் உடனடியாக ஆற்றவேண்டிய பணிகள் காத்துக்கிடக்கின்றன. இயற்கையைச் சிறந்த முறையில் வெல்லுகின்ற, ஆகவே இயற்கையினுள்ளும் அதன் விதிகளுக் குள்ளும் ஊடுருவிப் பாயக் கூடிய தெளிந்த தொலைநோக்கைக் கோருகின்ற, பணிகள் அவை. எனவே, அறிவியலை வளர்த்தெடுப்பதற்கு உத வக்கூடிய கருத்துகள் எவையேனும் நமது மரபார்ந்த சிந்தனையில் இருந்தால், அவற்றை வளர்ப்பது அவசியமாகும்; அறிவியிலின் வளர்ச் சிக்கு எதிரானவை என்று உறுதியாகத் தெரிந்து விட்ட கருத்துகளைப் புறந்தள்ளுதலும் அதே அள வுக்கு அவசியமானதாகும்.
மிகத்தெளிவான எடுத்துக்காட்டு ஒன்றை இங்கே காணலாம். நமது - விவசாயிகள் நிலச்சீர்திருத்தங்களின் மீதும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற, வளர்ச்சியடைந்த விவசாயத் தொழில்நுட்பத்தின் மீதும் முழுமையான ஆர்வங் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்களுடைய துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் அவர்களின் பின்தங்கிய தொழில் நுட்பமும், அதே அளவுக்குப் பிற்போக்கான (நம் மால் நிலப்பிரபுத்துவம் என்று அழைக்கப் படுகின்ற) சமூக அமைப்பும்தான் என்று எடுத்துக் கூறுவதற்குப் பதிலாக முற்பிறப்பில் அவர்கள் செய்த தவறுகளின் விளைவாகவே அவர்களுக்கு அத்தகைய துன்பங்கள் ஏற்படுகின்றன என்று காலந்தோறும் அவர்களை நம்பவைக்கின்ற கன்மவினைக் கோட்பாடு அவர்களுடைய தலையில் நிறைந்திருக்கிறது. அண்மையில் நிகழ்ந்த சுதந்திர தின விழாவின் போது குடியரசுத் தலைவர் இராதா கிருஷ் ணன் நாட்டு மக்களுக்கு

ஜனவரி மார்ச் 2014
விடுத்த செய்தியில், நம்நாட்டில் நிலப்பிரபுத் துவம் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். ஆனால், நிலப்பிரபுத் துவக் கருத்துகளின் வடிவத்தில் நிலப்பிரபுத்துவம் இன்னும் நமது உணர்வில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது; பழங்காலத்துச் சிந்தனைகள் சிலவும் அதில் அடங்கும் என்பதை மறுக்க முடியாது. இவற்றைக் குறித்து மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்தவாறே நிலப் பிரபுத்துவத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவது என்பது சாத்தியமில்லை, நிலப் பிரபுத்துவச் சிந்தனைகளை ஒழிப்பதற்கான மிகவும் முக்கிய மான முன்நிபந்தனையானது, இச்சிந்தனைகள் உருவாகக் காரணமான பொருளாயத நிலைமை கள் ஒழிக்கப்படுவதுதான் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இத்தகைய சிந்தனை களும் கூடப் பொருளாயத நிலைமைகளின்மீது வினை புரிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தித் தளை யிட முயல்கின்றன என்பதால், இத்தகைய பொருளாயத நிலைமைகளுக்கு எதிரான திறன் மிக்கப் போராட்டமானது, அவற்றின் மறுபக்க மாகிய கருத்தியல் நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தையே அடிப்படையாகக் கொண்டி ருக்கிறது.
மோட்சம் மற்றும் அவித்யை, கர்மம் மற்றும் யோகம் ஆகிய கருத்துகள் இந்தியத் தத்துவத்தின் தலையாய முக்கியத்துவத்திற்கான ஆதாரங்க ளாகும் என்று நம்மிடம் சொல்வதன் மூலம் தங்கள் தனிச்சிறப்பான பெருமையுணர்வை நமது ஆசிரியர்கள் அனுபவித்து வந்த ஒரு சூழலில் வளர்ந்தவர்கள் நாம். இந்தக் கருத்துகள் எந்த அளவுக்குப் புனிதமானவையாகக் கருதப்பட்டன என்பது குறித்து நமக்கு மாயை எதுவும் கிடையாது. இந்தக் கருத்துகளைப் பற்றிய விமர்சனப் பார்வை - யைக் கொண்டிருப்பது என்பது, மிகப்பெரும் துன்பத்தை வலியச் சென்று தேடிக்கொள்வதாகவும், தேசவிரோத உணர்வு டையவர் என்று சந்தேகப்படுவதற்கு இடம் கொடுப்பதாகவும் கூட இருக்கும் என்று தோன் றுகிறது. ஆனால், பல நூற்றாண்டு காலமாக நாம் உண்மை என்று எதை நம்பிக் கொண்டிருந் தோமோ, அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை; குறிப்பிட்டதொரு காலத்தில் செல்வாக்கு வகித்தது என்பதற்காகவே அது ஏற் றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவசிய மில்லை. உடன் கட்டையேறுதல் (சதி), விதவைத் திருமண எதிர்ப்பு, தீண்டாமை ஆகியவையும் கூட நமது நாட்டில் இதே அளவுக்குச் செல்வாக்கு வகித்தவை அல்லவா? இருப்பினும், இவற்றை எதிர்த்து ஓய்வொழிச்சலற்ற போராட்டத்தை நடத்திய சூழல்தான் ராம் மோகன், வித்யாசாகர், காந்தி ஆகியோரை நமது சமூகச் சீர்திருத்தவாதி
53

Page 56
gin- ඕසූත්‍රී 34 墓
களிலேயே மகோன்னதமானவர்களாக மாற் றியது.
இதே அளவுக்குப் புகழ் வாய்ந்த ஒரு சிந்தனைச் சீர்திருத்தவாதியைப் பெறுவதற்கு இன்னும் சிறிதுகாலம் நாம் காத்திருக்க வேண் டியிருக்கலாம். எனினும் அதுவரையில் நாம் ஒரு பணிவுமிக்க பணியை மேற் கொள்ளலாம். இந்தப் பணியை நாம் செய்வதற்கான வாய்ப்புகள் நமது தத்துவ மரபின் ஒரு மகிழ்ச்சியான சூழலினால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப்பணியை நாம் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், இன் றைக்கு அறிவியலின் வளர்ச்சிக்காகவும், நமது முன்னேற்றத்திற்காகவும் எந்தெந்தச் சிந்தனைப் போக்குகளை எதிர்த்து நாம் போராடுகின் றோமோ, அந்தச் சிந்தனைகளை நம்மைப் போன்றே கடுமையாக எதிர்த்துள்ளவர்களையும் மரபார்ந்த தத்துவ அறிஞர்களின் மத்தியில் நாம் காண முடியும். இங்கே ஒருசில எடுத்துக் காட்டுகளை மட்டும் காண்போம். உபநிடதங் களுடனும் அத்வைத வேதாந்தத்துடனும் பிணைந்துள்ள கருத்து முதல்வாதக் கண் ணோட்டம் நமது மரபார்ந்த தத்துவ அறிஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கெளரவத்தைப் பெற் றிருந்தது. எனினும் இந்தக் கருத்துமுதல் வாதக் கண்ணோட்டத்தை உறுதியுடன் கண்டனம் செய்து வந்தவர்களும் அந்த மரபார்ந்த தத்துவ அறிஞர்களின் மத்தியில் இருந்தார்கள் அறிவு மறுப்புவாதத்தை ஆதரிக்குமாறும், தர்க்க வியலைக் கைவிட்டு விடுமாறும் கருத்து முதல்வாதிகள் வேண்டுகோள் விடுத்துக் கொண் டிருந்தபோது, அறிவு மறுப்பு வாதத்தை எதிர்த்துப் போராடி வென்றதுடன், தர்க்கவியலைக் காத்துநின்ற மற்ற தத்துவ அறிஞர்களும் இருந்தார்கள் கன்மவினைக் கொள்கை நமது தத்துவ அறிஞர்களில் பெரும்பாலானோரால் எந்த மறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற போதிலும், இந்தக் கன்மவினைக் கொள்கையைப் பரிசோதனையின் அடிப்படையில் நிராகரிக்கும் முயற்சியில் பாயாசியைப் போன்ற தத்துவ அறிஞர்கள் கி. மு. ஆறாம் நூற்றாண்டிலேயே ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள் என்பதையும் நாம் நினைவிற்கொள்வது நல்லது. அதேபோன்று, இந்தியத் தத்துவத்தில் யோகானுபவம் மிகப் பெரிய செல்வாக்கைப் பெற்றிருந்த போதிலும், குமாரிலரைப்போன்ற தத்துவ அறிஞர்கள் அதனை நகைப்புக்குரியதாகக் கருதியதுடன், அதனை அகவயக் கற்பனையின் மிகச்சிறந்த எடுத்துக் காட்டு என்று விமர்சித்தார்கள் சுருக்க மாகச் சொல்வதெனில், கருத்துமுதல் வாதமும் அதற்கு ஆதரவான அனைத்துக் கருத்துகளும் இந்தியத் தத்துவத்தில் வலிமை வாய்ந்தவையாக இருந்தன என்றாலும், இவ்வனைத்தையும்
 
 
 

ஜனவரிமார்ச் 204
எதிர்த்துப் போராடிய தத்துவப் போக்குகள் பலவீனமாக இருந்தன என்று இதற்குப் பொரு ளல்ல. இன்றுவரையில் கருத்துமுதல்வாதச் சிந் தனைப் போக்கிற்கு அளிக்கப்பட்டுவரும் முக்கியத்துவம் ஒருதலைப் பட்சமானது என்பதே இதன் பொருள் எடுத்துக்காட்டாக, அத்வைத வேதாந்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது தத்து வார்த்தப் பொறுப்புணர்வின் ஒர் அடையாள மாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. இத்தகைய சூழல் அறிவியலின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத் திற்கும் உகந்ததல்ல. கருத்துமுதல் வாதக் கண் ணோட்டத்தையும், அதனால் ஊட்டி வளர்க்கப் பட்ட அனைத்துவிதமான மூட நம்பிக்கை களையும் குறித்து ஒரு புறவயமான அணுகு முறையை வளர்த்தெடுப்பது இச்சூழலை மாற்று வதற்கான ஒரு வழியாகும். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், பின்வரும் கேள் வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இது எங்கிருந்து வந்தது? இது நம்மை எங்கே அழைத்துச் செல்லப்போகிறது? இந்தக் கேள்விக்குத் திருப்திகரமான பதில் நமக்குத் தேவை என்றால், இந்தியத் தத்துவ மரபின் விவரங்களை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டால் போதாது. நமது தத்துவ மரபில் கருத்துமுதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்துக் காணக்கிடைக்கும் ஊதிப் பெருக்கப்பட்ட கருத்துகளிலிருந்து இந்திய வாசகரை விடுபட வைப்பதற்கு மற்றொரு வழியும் இருக்கிறது. கருத்துமுதல்வாதத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான தீவிரமான முயற்சிகளும் நமது தத்துவ மரபிலேயே இருந்திருக்கின்றன என்பதை அந்த வாசகருக்குத் தெரிய வைப்பதுவே அந்த வழி ஆகும். வேறு சொற்களில் கூறுவதெனில், கருத்துமுதல்வாதப் போக்கிற்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவத்திற்கு எதிராக, அக்கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து வந்த மரபுகளுக்கு நாம் அழுத்தம் கொடுப்பதானது. ஒருகுறிப்பிட்ட அளவுக்காவது நமது உண் மையான தத்துவரீதியான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள உதவக்கூடும்
இந்த விஷயத்தை இன்னும் அதிகமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கருத்து முதல் வாதத்திற்கு எதிரான பல்வேறு தத்துவப் போக்குகளின் ஆரோக்கியமான அம்சங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒட்ட வைப்பதன் மூலம், அறிவியல் பூர்வமாகத் திருப்தியளிக்கக்கூடிய , ஒருங்கிணைந்த கண் ணோட்டத்தை உருவாக்க முடியும் என்று நான் கூறவில்லை. இவ்வாறு ஒட்டவைப்பது என்ற கருத்தே தான்தோன்றித் தனமானது. நமது நாட்டின் கருத்து முதல்வாதிகள், தங்கள் மத்தி யில் நிலவி வருகின்ற குறுங்குழுவாத

Page 57
5055- නිෂ්ග්‍රී 84
வேறுபாடுகள் அனைத்தையும் மீறி ஒருபடித் தான தத்துவ அமைப்பு ஒன்றிற்குப் பங்களித் திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஆனால், அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத் துகள் பல்வேறு நிலைகளிலிருந்து உருவாக்கப் பட்டவை: அடிப்படையில் பொருந்திப் போகாத நிலைப்பாடுகளிலிருந்து தோன்றியவை. இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒட்டவைக்கும் முயற்சியால் எந்த ஒத்திசைவையும் ஏற்படுத்த முடியாது. இரண்டாவதாக, இந்தக் கருத்து முதல்வாதப் போக்குகளைப் போலவே வர லாற்று ரீதியாகத் தீர்மானிக்கப்பட்டவை; அதா வது பண்டைக்கால மற்றும் மத்தியக்கால இந்தி யாவின் சமூக பொருளாதார நிலைமைகளில் அவை வேர்கொண்டிருந்தன. எனவே அவை தவிர்க்க இயலாத வகையில் தங்களுக்கே உரித் தான வரம்புகளைக் கொண்டிருந்தன. அறிவியல் ரீதியாகத் திருப்தியளிக்கின்ற ஒரு தத்துவத்தை உருவாக்கும் அளவுக்கு இந்த நாட்டில் அறிவியலும் தொழில்நுட்பமும் போதுமான முன்னேற்றத்தை அடையவில்லை. இருப்பினும், கருத்துமுதல் வாத எதிர்ப்புத்தத்துவப் போக்கைப் பற்றிய ஒரு பார்வையும், அவற்றுக்கு அளிக்கப் படும் புதிய முக்கியத்துவமும் மதிப்பு மிக்க வையே. கருத்துமுதல்வாத மரபுக்கு அளிக்கப் பட்ட (தவறான) மரியாதையைப் பற்றிய மாயைகளிலிருந்து விடுபடுவதற்கு அவை உதவுகின்றன. அறிவியல் ரீதியாகத் திருப்தி யளிக்கக்கூடிய தத்துவத்தை நோக்கி முன்னேறிச் செல்வதற்கு இத்தகைய மாயைகளிலிருந்து விடு படுவது ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும். மேலும் புறவய மான வரம்புகள் பல இருந்த போதிலும் கருத்துமுதல்வாத- எதிர்ப்புத் தத்துவப் போக்கு கொண்டுள்ள நேர்மறையான முக்கியத்து வத்தைப் புறக்கணிப்பது தவறாக ஆகிவிடும். ஹெராக் விட்டஸின் தத்துவக் கருத்துகள் அறிவியல் ரீதியான வரம்புகளைக் கொண்டி
ங், இ 品n நீர o
KA2RA.MIL (TA22]
 
 
 
 
 

ஜனவழிமர்ச் 204
கிடைக்கப்பெற்றோம்
நூல் : "இவன் தான் மனிதன்' நூலாசிரியர்: சூசை எட்வேட் விடயம் சிறுகதைத் தொகுப்பு விலை ரூபா 250/= வெளியிட்டோர். இந்திரா எட்வேட் 1004 அன்புவழிபுரம் திருகோணமலை
ஹெராக்ளிட்டஸ் பெற்றுள்ள நேர்மறையான முக்கியத்துவத்தைப் புறக் கணிப்பதற்கு ஒப்பான தவறு இது,
இந்த நூல் மற்றொரு விதத்திலும் வரம் L-35(5 L IL-L-gil எனபதையும சுருக்கமாகக் குறிப்பட விரும்புகிறேன், நமது தத்துவத்தின் மரபான போக்குகளை அமைப்புகளை ஆய்வு செய்ய மட்டுமே நான் முயன்றுள்ளேன். இவையே இந்தியத் தத்துவம் என்று அழைக்கப் படுவதன் அடிப்படையாகவும் பெரும்பகுதி யாகவும் உள்ளன. எனினும், நூற்புலமை வாதிகளின் வட்டத்திற்கு வெளியே, உண்மையில், இந்த நூற் புலமைவாதிகளுக்கு எதிரான வெளிப் படையான கலகம் என்ற வடிவத்தில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் இந்தி யாவின் தத்துவப் போர்க்களத்தில் மத்திய காலத்திலேயே நடைபெற்றிருக்கின்றன. இவற் றின் உண்மையான உள்ளடக்கமானது சாராம் சத்தில் நிலப் பிரபுத்துவத்திற்கு எதிரான கலகமே என்ற போதிலும், குறிப்பட்ட வரலாற்று நிலை மைகளின் கீழ், இவை மதச்சீர்திருத்தங்கள் என்னும் வடிவத்தையே எடுக்க வேண்டி யிருந்தது. எனவேதான் சைதன்யர் கபீர்தாசர் குருநானக் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட மாபெரும் வெகுமக்களியக்கங்கள் (இவை மிகச்சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே) அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பகுத் தாராயப்படும்போது, நிலப்பிரபுத்துவத்தின் மீதான புரட்சிகர எதிர்ப்பின் சில முக்கியமான கூறுகள் அவற்றில் பொதிந்துள்ளதைக் காண முடிகிறது. தாமஸ் முன்ஸருடன் தொடர்புடைய ஜெர்மானிய இயக்கத்துடன் பெரிதும் ஒத் திருப்பது இது மத்தியகால ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்தின் எதிர்ப்பானது, மதரீதியான நிலப்பிரபுத்துவத்தின் மீதான எதிர்ப்பு என்ற வடிவத்தில் மட்டுமே தோன்றியது ஏன் என்பதை ஏங்கெல்ஸ் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்

Page 58
தாகம் இதழ் 34
பதினோராம் நூற்றாண்டில் நடைபெற்ற, மதரீதியான போர்கள் என்று அழைக்கப்பட்ட போர்களும் சிவL நேர் மறையான பொருளாயத, வர்க்க நலன்களைக் கொண் டிருந்தன. பிற்காலத்தில் இங்கிலாந்திலும் பிரான்சிலும் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களைப் போலவே இவையும் வர்க்கப் போர்களே. அந்தக் காலத்தில் நடைபெற்ற
வர்க்கப் போராட்டங்கள் மதரீதியான முழக்கங்களை ஆடையாகத் தரித்திருந்த போதிலும், பல்வேறு வர்க்கங்களின்
நலன்களும், தேவைகளும், கோரிக்கைகளும் ஒரு மதத்திரையின் பின்னால் ஒளிந்திருந்த போதிலும், இதனாலெல்லாம், இப்போராட் டங்களின் உள்ளடக்கம் மாறிவிடவில்லை என்பதுடன், அவ்வக்காலச் சூழல்களின் அடிப்படையில் அவற்றைப் புரிந்து கொள்வதும் எளிதாகவே இருக்கிறது. மதபோதகர்களின் கைகளில் இருந்த அரசியலும் நீதி நிர்வாக முறையும் அறிவி யலின் மற்ற பல பிரிவுகளையும் போலவே இறையியலின் வெறும் கிளைகளாகவே நீடித்தன; இறையியலில் மேலோங்கியிருந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே அவை கையாளப்பட்டன. திருச்சபையின் வறட்டுக் கோட்பாடுகள் அரசியற் பொன்மொழிகளாக வும் இருந்தன; விவிலியத்தின் மேற்கோள் வாசகங்கள் எந்தவொரு நீதிமன்றத்திலும் மதிக்கப் படக்கூடிய சட்டங்களாக இருந்தன. அறிவுத்துறை சார்ந்த செயல்பாடுகளின் வட்டாரத்தில் இறையியல் செலுத்தி வந்த இந்த சர்வ வல்லமையானது, அதே நேரத்தில், நடப்பிலிருந்து வந்த நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் சர்வாம்சமான கூட்டிணைவு என்ற முறையிலும், மிகவும் பொதுவான அங்கீகாரம் என்ற முறையிலும், திருச்சபை வகித்த இடத்தினுடைய தவிர்க்க இயலாத பின்விளைவேயாகும், இத்தகைய சூழல் களில், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான பொதுவான எதிர்ப்புக்குரல்கள் அனைத்தும், எல்லாவற்றுக்கும் மேலாக, திருச்சபைக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களும் அத்துடன் புரட்சிகரமான அனைத்துச் சமூக அரசியற் கோட்பாடுகளும் அதே நேரத்தில் இறையியல் ரீதியான புறச் g-LDLld கருத்துகளாகவும் இருக்க வேண்டிய நிலை யில் இருந்தன என்பது தெளிவு, நடப்பிலுள்ள சமூக நிலைமைகளைத் தாக்குவதற்கு முன் னால், அவற்றைச் சூழ்ந்துள்ள புனிதமான அங்கீகாரம் என்னும் ஒளிவட்டத்தை அகற்ற வேண்டும் நிலப்பிரபுத்துவத்தின் மீதான புரட்சிகர எதிர்ப்பு மத்தியக்காலம் (ԼՔ(Լք வதிலும் உயிரோடிருந்தது. அது அவ்வக்
 

寢 ஜனவரிறார்ச் 204
SS
காலத்து நிலைமைகளுக்கு ஏற்ப இயல் கடந்த வாதமாகவோ, வெளிப்படையான புறச் சமயக் கருத்தாகவோ, ஆயுத எழுச்சி யாகவோ வடிவமெடுத்தது. இயல் கடந்த வாதத்தை (அனுபூதி வாதத்தை) பொறுத்தவரையில், பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதிகள் அதை எந்த அளவுக்குச் சார்ந்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். முன் ஸரே பெருமளவிற்கு அதற்குக் கடன்பட் Lq (5155Tj. (The Peasant War in Germany, Moscow, 1956.pр 54-5)
மத்தியகால ஐரோப்பாவின் நிறுவன மயமாக்கப்பட்ட திருச்சபைக்கு இணையான எதுவும் அறிவுத்துறை சார்ந்த செயல்பாடுகளின் வட்டாரத்தில் இறையியலின் சர்வ வல்லமையை நேரடியாக ஆதரிப்பவர்களாக இருந்தார்கள் என் பதை இந்நூலில் காணப் போகிறோம். மத்தி யகால இந்தியாவில் நடைபெற்ற வெகுமக்களின் இயக்கங்கள் தவிர்க்க இயலாதவாறு மதச்சீருடை தரித் திருந்த போதிலும் மக்களின் கலகங்களாக இருந்தன என்று நாம் கூறுவது இந்த அர்த்தத்தில் தான். ராம்மோகன், வித்யாசாகர் விவேகானந்தர் தாகூர் காந்தி போன்ற நவீனக்காலச் சீர்திருத்த வாதிகளுக்கும், கூட இந்த மதச்சீருடை மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருந்தது. என்பது உண்மை. புது நியாயத்தத்துவம் (Neo Nyaya) என்று அறியப்பட்ட மிகவும் சூழ்ச்சியான நூற் புலமைவாதம் மிகப் பெரிய நடைமுறைப் பாணியாக இருந்த போது நடைபெற்றதைப் போன்று, மேற் குறிப்பிடப்பட்ட மாபெரும் சீர்திருத்த வாதிகள் அனைவரும், இந்தியத் தத்துவ முறைகளின் இறுகிப்போன வடிவங்களின் மீது புதிய உயிராற்றலைச் செலுத்திப் புத்து யிரூட்டினார்கள் இந்தியத் தத்துவத்தின் மர பார்ந்த அமைப்புகள் என்று கறாராக அழைக்கப் படுகின்றவற்றுக்கு வெளியே, மத்தியகால மற்றும் நவீனகால இந்தியாவில் நடைபெற்ற இந்த மாபெரும் மக்களியக்கங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இந்தியத் தத்துவம் பற்றிப் பேசும் ஒரு நூல் முழுமையற்றதாகவே இருக்க முடியும். இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன் என்ற போதிலும், இதை ஒருவர் முறையாகச் செய்ய வேண்டுமெனில், மத்தியகால மற்றும் நவீ னக்கால இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்றுடன் தொடர்புடைய ஏராளமான சர்ச்சைக்குரிய ஆதாரங்களை (Up(p68) LDLIT5 வழங்க வேண்டியிருக்கும். முற்றிலும் வேறா னதோர் ஆய்வில் இதைச்செய்வதே சிறந்த தாக இருக்கும்.
தமிழில் எஸ். பாலச்சந்திரன்

Page 59
யே.ம.ஜோசப் இயக்கியுள்ள "அப்பாவின் மிதிவண்டி" ( நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள செல்வா மஹா சொல்லும், யே.ம. ஜோசப் இயக்கியுள்ள இந்த குறும்ப படத்தொகுப்பினை புலவரும், இசை கேதீஸ், பாடல் ஜே
ஐ
தேசிய கலை இலக்கிய பேரவை இராகலையில் நட சட்டதரணி மோகனராஜன், செல்வகுமார், மகேந்திரன்

குறும்பட வெளியீட்டு நிகழ்வு அண்மையி ல் லில் நடைபெற்றது. எமது மண்வாசனையை படத்தின் ஒளிப்பதிவினை சங்கரும், ஜாசித்தன், ஒலிப்பதிவு முரளி ஆகியோர் செய்துள்ளார்கள்.
ஜோசித்தன் மன்
அப்பாவின்
பிபிவண்டி
ஈரத்து- இயக்கம்
யே.ம.ஜோசப் இntinதிவ சங்கர் Ihாம் புலவர் இ Bககள்
mi ல் ஜாத்தின் பரிவு INTnt nே Bயாடு tளன் 2010லார் 3. ஆ,நள்
fill காறாம்
த்திய நூல் அறிமுக விழாவில் பி.மரியதாஸ், மை.பன்னீர்,
ன் ஆகியோர் உரைநிகழ்த்துகின்றனர்.

Page 60
தேசிய கலை இலக்கியப் பேரவையும் ட இணைந்து நடாத்திய உழவர் பெருவிழா
லைம் உழன்
கசலை சி.
மத்திய மாகாணத்தின் எல்கடுவ தமிழ் மகா வித்திய மாணவர்களுக்கான நாடக அரங்க களப்பயிற்சி
தேசிய கலை இலக்கியப் பேரவை பனை அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் ந
சோரி
கைலாச இணைளநT

புத்தூர் கலைமதி சனசமூக நிலையமும்
அ ண்டபம்
பாலயத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவையின்
உத்தும் மனங்களில் ஓர் மரம்" தெருவெளி நாடக ஆற்றுகை
தேசிய கலை இலக்கியப் பேரவை யாழ் நாவலர் மண்டபத்தில் நடாத்திய பேராசிரியர்
கைலாசபதியின் முப்பத்தோராம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு
4 மாநாடு