கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடக்கு முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது

Page 1
வடக்கு |
எதிர்ப
வெ வடக்கு முஸ்லிம்களின்

முஸ்லிம்கள்
மர்ப்பது
ளியீடு T உரிமைக்கான அமைப்பு

Page 2

வடக்கு முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது
நேர்காணல் வழங்கியவர் மெளலவி. பி. ஏ. எஸ். சுப்யான் (யாகூத்தி)
உப தலைவர் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு
வெளியீடு வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு

Page 3
TITLE
1St Edition
Publishers
Price
PrinterS
WADDAKKU MUS-WGAL AHRPARPAT-U? (THE EXPECTATIONS OF THE NORTHERN MUSLIMS2)
May 1997.
Northern Muslims' Rights Organization (NMRO) 15 A, Rohini Road, Colombo - 6.
Sri Lanka.
TP:593523
Fax : 586660
RS. 15/-
A. J. PRINTS,
No. 1 - B, PT. De Silva Mawatha, Dehiwela.

அணிந்துரை
வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் (NMRO) குறிக்கோள்களை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாகிய சாத்வீக நடவடிக்கைகளின் வெளிப்பாடே இவ்வமைப்பின் வெளியீடுகள் ஆகும். இவ்வெளியிட்டு வரிசையில், இன்னுமொரு வெளியீடான இந்நூல் 61 மது அமைப்பின் தோற்றத்தையும், 61 மது மக்களின் தேற்றத்தையும் நன்கு தெளிவுபடுத்துகின்றது. எமது (NMRO) அமைப்பின் தோற்றத்தின் முக்கிய கர்த்தாவும், அமைப்பின் உப தலைவருமான மெளலவி B.A.S. சுப்யான் (யாகூத்தி) அவர்களின் பேட்டிகள் 6 மது நாட்டில் வெளிவரும் வெகுஜன தொடர்பு சாதனங்களின் ஓர் ஊடகமாகத் திகழும் பத்திரிகைத் துறையில் முன்னிலை வகிக்கும் வெளியீடுகளான, தினகரன் வாரமஞ்சரி, சரிநிகர், அல்ஹஸனாத், யுக்திய (சிங்களம்) ஆகியவற்றில் கடந்த ஆண்டில் வெளிவந்தன. அவற்றை தொகுத்து நூலாக வெளியிடும்படி அநேகர் வேண்டுகோள் விடுத்தனர். அத்தகைய பேட்டிகளின் தொகுப்பே இவ் வெளியீடாகும்.
இந்நூல் இரண்டு முக்கிய விடயங்களை குறிக்கோள்களாகக் கொண்டு வெளியிடப்படுகின்றது.
1. இப் பேட்டிகளில் தெளிவுபடுத்தப் பட்டுள்ள வட க்கு முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாஷைகள் பற்றி எமது மக்களும் நன்கு தெளிவு பெற்று, அவ்வுரிமைகளையும், அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்தில், தெளிவான சிந்தனையுடன் ஒன்றுபட்டு உழைத்திடும் தெம்பை ஏற்படுத்துவது.
2. வடபுலத்து முஸ்லிம்களின் மீது அக்கறையுள்ள , அரசியல்
கட்சிகளும், அரசியல் வாதிகளும், வேறு அமைப்புகளும் 61 மது விடயத்தில் தெளிவு பெற்று, வடக்கு முஸ்லிம்களின் இழந்து போன உரிமைகளை மிளப் பெறும் போராட்டத்திற்கு ஆதரவு தந்து உதவ முன் வர வேண்டும். இக் குறிக்கோள்களை அடைய இந்நூல் வழிவகுக்கும் என
நம்புகின்றேன். இப் பேட்டிகளை வெளியிட்ட அனைத்துப் பத்திரிகை
யாளர்களுக்கும் 61 மது நன்றிகள்
எம்முடைய தாயகமும் வடக்கே
அன்புடன் Eng. A. L. Lyg)/60/D/769)/3ögsör (647 u/6/767/7 வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு (NMRO)
iii

Page 4
உள்ளடக்கம்
வடபுலமே எங்கள் தாயகம் அங்கே வாழ்வது எமது பிறப்புரிமை.
2.
தாயக
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மண்ணிலேயே இடம்பெற வேண்டும்.
3.
வடக்கு முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளின் பகடைக்காய்களா?
4.
வடபகுதி முஸ்லிம் அகதிப் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினை.

வடபுலமே எங்கள் தாயகம் அங்கே
வாழ்வது எமது பிறப்புரிமை
கேள்வி: வடபுலத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பொழுது முஸ்லிம்கள் சிலரை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருந்தமை அனைவரும் அறிந்த விடயம். அவர்களுள் ஒருவராக நீங்களும் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டீர்கள். விடுதலைப் புலிகள் உங்களைத் தடுத்து வைத்த காரணம் என்ன? அக்கால கட்டத்தில் உங்களது மனநிலை, வாழ்க்கை எவ்வாறு அமைந்திருந்தது?
பதில்: முக்கியமாக செல்வந்தர்களே தடுத்து வைக்கப்பட்டனர். போராட்டம் தொடர்பான செலவுகளுக்கு எங்களிடமிருந்து பணம் பெறுவதற்காகவே தடுத்து வைத்தனர்.
1990 ல் போர் உச்ச கட்டத்திலிருந்த காலத்தில் முஸ்லிம் இளைஞர்கள் அடிக்கடி புலிகளினால் விசாரணைக்கழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் பின்னர் சிலர் விடுதலையாகினர். இவ்வித விசாரணை அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருந்தது. எனினும் தொண்ணூறின் கடைசிப் பகுதியில் முஸ்லிம்களில் சிலர் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டனர். இவ்வித தடுப்பு இரு நோக்கங்களுக்காக நடைபெற்றதாகத் தெரிந்தது.
புலிகளின் எதிரிக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் தடுத்து விசாரணை செய்யப்பட்டனர். போருக்கு வேண்டிய பண உதவி கேட்டும் தடுத்து வைக்கப்பட்டனர்.
நான் பண உதவி பெறுவதற்காகவே தடுத்து வைக்கப்பட்டேன். அவ்வப்பொழுது விடுதலை செய்யப்பட்டவர்கள் போக 18 பேர் பணம் பெறும் நோக்கிலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம்.
இக்காலகட்டத்தில் எமது சமுதாயத்திற்கு, குடும்பத்திற்கு உதவி செய்ய முடியாது போய் விட்டதே என்றும் அவர்கள் எங்கே போனார்களோ, என்ன ஆனார்களோ என்று கவலைப்பட்டேன்.

Page 5
(கேள்வி: அக்காலகட்டத்தில் உங்களுக்கு எவ்வாறான வாழ்க்கை வசதிகள் அளிக்கப்பட்டன என்பது பற்றி சற்று விரிவாகக் கூற முடியுமா?
பதில்: தடுத்து வைக்கப்பட்டவர்கள் அநேகமாக படித்தவர்கள். வியாபாரிகள் வடபுலத்திலே வெளியிடப்பட்ட பத்திரிகைகள் அனைத்தையும் எங்கள் பொழுது போக்குக்கு வாசிக்கத் தந்தார்கள். எங்களுக்கு வானொலி ஒன்றும் தந்தனர். படுக்கை, குளிப்பு போன்ற எந்தக் காரியங்களிலும் ஆரம்ப நாட்களில் இருந்த மாதிரி பின்னர் எவ்விதக் கட்டுப்பாடு மிருக்கவில்லை. தடுத்து வைக்கப்பட்டவர்களுக்குத் தொழுகையின் பின்னர் வேண்டிய போதெல்லாம் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதிலும், அல்குர்ஆனுக்கு விளக்கமளிப்பதிலும் ஈடுபட்டு வந்தேன். அல்குர்ஆன் தொடர்பான நூல் ஒன்றையும் எழுதினேன். விரைவில் வெளியிட எண்ணியுள்ளேன்.
கேள்வி : இவ்வாறு நீங்கள் எவ்வளவு காலம் தடுத்து வைக்கப் பட்டிருந்தீர்கள்? ஒரே இடத்தில் இருந்தீர்களா? அல்லது வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தீர்களா?
பதில்: ஏறத்தாழ 15 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். இக்கால எல்லையுள் ஏறத்தாழ 9 இடங்களுக்கு மாற்றப்பட்டேன். இவ்வாறு மாற்றப்பட்டமை எங்கள் மீது சந்தேகம் கொண்டோ அல்லது எங்களுக்குத் தண்டனை வழங்கும் நோக்கத்துடனோ நிகழவில்லை. யுத்தக் கெடுபிடி , ஷெல் அடி போன்றவற்றின் தாக்கத்தால் பாதிக்கப்படாதிருக்கவே நாங்கள் அடிக்கடி இடமாற்றப்பட்டோம்.
கேள்வி: தடுப்புக் காவலில் இருந்தபோது நீங்கள் உயிருடன் திரும்புவீர்கள் என எண்ணியிருந்தீர்களா?
பதில்: இஸ்லாமியர்களாகிய நாம் கஷ்டங்கள் ஏற்படும்போது அல்லாஹ்விடம் மனமுருகி பிரார்த்தனை செய் கின்றோம். இவ்வாறான கஷ்ட நிலைமையில் ஒவ்வொரு வேளைத் தொழுகையின் பின்னர் மட்டுமல்ல, மற்றும் எல்லா நேரங்களிலும் கஷ்டத்தை நீக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தோம். அவன் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை

வீண்போகவில்லை. நாங்கள் தங்கியிருந்த தடுப்பு முகாம்களில் மோசமான ஷெல் அடி விழுந்தது. விமானத் தாக்குதல் நடந்தது . அல்லாஹ் பாதிப்புக்களிலிருந்து எங்களைக் காப்பாற்றினான். சில இடங்களில் விஷஜந்துக்களில் இருந்து கூட நாம் காப்பாற்றப் பட்டிருக்கின்றோம். அவைகள் எங்களுக்கு அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையை ஊட்டின. மேலும் பிற்பகுதி யில் புலிகள் எம்மை நடாத்திய முறையைக் கொண்டும் ஆரம்பத்தில் எம்மைக் கொன்று விடுவார்கள் என்றிருந்த அச்சம் நீங்கியிருந்தது.
கேள்வி: தடுப்புக் காவலில் இருந்து விடுபட்ட பின்னர் வடபுலத்தை விட்டு வெளியேறினீர்களா?
பதில்: இல்லை. 1991 டிசம்பர். 8 ல் புலிகளால் விடுவிக்கப்பட்ட பின்பு 1 1/2 மாதங்களாக யாழ்ப்பாணத்திலேயே இருந்தேன். சில நோக்கங்களுக்காகவே அங்கிருந்தேன். இக்காலத்திலே நான் விடுதலைப்புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களோடு பல விடயங்கள் பற்றிப் பேசினேன். முஸ்லிம்களை வெளியேற்றியது அவர்கள் விட்ட தவறு என்பதைச் சுட்டிக்காட்டினேன். அது தவறு என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டதோடு, சமாதான சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் முஸ்லிம்கள் தமது தாயகத்திற்கு வந்து குடி யேறுவதில் தடையில்லையெனவும் கூறினர். பணத்துக்காக தடுத்து வைக்கப்பட்டவர்கள் தருவதற்கு வழியில்லாதவாறு எல்லாவற்றையும் இழந்த நிலையில் எவ்வாறு பணம் தர முடியும் என்று வாதிட்டேன். அதைப்பற்றி தாம் பரிசீலனை செய்வதாகக் கூறினர். புலிகளின் தடுப்புக் காவலிலுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறும் வேண்டினேன்.
கேள்வி: தடுப்புக் காவலில் இருந்தபோது சக முஸ்லிம்களோடு நீங்கள் இருந்திருக்கின்றீர்கள். விடுவிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்களே இல்லாத அச்சூழலில் எவ்வாறு வாழ்ந்தீர்கள்?
பதில்: 90ஆம் ஆண்டில் வடபுலத்திலிருந்து சுமார் 75,000 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். யாழ் முஸ்லிம் வட்டாரம், சாவகச்சேரி போன்ற இடங்களிலிருந்தும் இவர்கள் வெளியேறினர். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சுன்னாகம், மல்லாகம், வட்டுக்கோட்டை , பருத்தித்துறை போன்ற பகுதிகளில் ஒன்றிரண்டு குடும்பங்களாக வாழ்ந்த முஸ்லிம்களும் கலப்புத் திருமணம் செய்து
3

Page 6
கொண்ட முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறவில்லை. இவ்வாறு 100க்குட்பட்டோர் யாழ்ப்பாணத்திலிருந்தனர். இவர்களைப் போய் சந்திக்கவும், அவர்களுடன் அளவளாவவும் முடிந்தது. மார்க்க சம்பந்தமான உபந்நியாசங்களைச் செய்யவும் வசதி கிடைத்தது. இவர்களை ஒன்று சேர்த்து மஸ்ஜிதுல் அபூபக்கர் பள்ளியில் ஐந்து நேரத் தொழுகையும் ஜூம்ஆத் தொழுகையும் நடத்தினேன். இவ்வாறு ஐந்து ஜும்ஆத் தொழுகை அக்காலகட்டத்தில் நடத்தினேன். இந்தக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு 'கத்னா' எனும் சுன்னத் கடமையையும் நிறைவேற்ற ஒழுங்குகள் மேற்கொண்டேன். டாக்டர் கங்காதரனே சுன்னத்தைச் செய்தார். இந்த முஸ்லிம் சிறார்களை யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் சேர்த்து கல்வி பயிலக் கூடிய ஏற்பாட்டைச் செய்தேன். இது மட்டுமல்ல, யாழ். நகரிலுள்ள பள்ளிவாசல்களின் புனிதத் தன்மையைக் காப்பாற்றப் புலிகளோடு கதைத்து ஒழுங்குகள் மேற்கொண்டேன். திறந்திருந்த பள்ளிவாசல்களை மூடி வைக்கவும் யாரும் பாவிக்காதவாறு தடுக்கவும் புலிகள் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க ஆலோசனை கூறினேன். புலிகளும் அவ்வாறே செய்தனர். மேலும் புனித அல்குர்ஆன் பிரதிகள் தேநீர்க் கடைகளிலும், வீதிகளிலும் கிடப்பதைப் புலிகளுக்கு எடுத்துக்காட்டி, புனித அல்குர்ஆனை முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிப்பதாகவும் ஆகவே இப்படிச் செய்ய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டேன். அவர்கள் கொடுத்த வாகனத்தில் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று அல்குர்ஆன் பிரதிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அராலி வீதியில் உள்ள மஸ்ஜித் அபூபக்கர் பள்ளியில் வைத்துப் பூட்டிப் பாதுகாப்பாக வைத்தேன். பள்ளிவாசல்கள் இன்னும் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன என்று அங்கிருந்து வரும் தமிழ் நண்பர்கள் கூறுவது பெரு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.
கேள்வி: என்.எம்.ஆர்.ஓ எனும் வட்புல முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் உபதலைவராக நீங்கள் இருக்கின்றீர்கள். இந்த அமைப்பின் நோக்கங்கள் என்னவென்று கூறுவீர்களா?
பதில்: இந்த அமைப்புக்கிடப்பட்ட பெயரின் கருத்தைச் சற்று நாம் விளங்கிக் கொள்வோம். வடபுல முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு என்று கூறும்போது இந்த அமைப்பு முஸ்லிம்களின் உரிமையைப் பெற அவாவி நிற்கின்றது என்பது புலனாகின்றது.

அதன்படி முஸ்லிம்கள் தமது உரிமையை இழந்திருக்கின்றார்கள். அதனால்தான் இந்த அமைப்பு உரிமைக்காகச் செயல்படுகின்றது . வடபுலத்து முஸ்லிம்கள் பலநூறு ஆண்டுகளாக வடபுலத்திலே வாழ்ந்து வந்தவர்கள். வடபுலம் அவர்களது தாயகம். தமிழ் மக்களுக்கு வடபுலம் எவ்வாறு பாரம்பரிய பிரதேசமாக விருக்கின்றதோ அவ்வாறே வடபுல முஸ்லிம்களுக்கும் அது! பாரம்பரிய பிரதேசம். வடபுலத்தில் வாழ வேண்டியது அங்குள்ள முஸ்லிம்களின் பிறப்புரிமை. அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இந்த நிலையில் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் சிதறுண்டு பரந்து வாழ்கின்றனர். நிலபுலங்கள், சொத்துப்பத்துக்கள், தொழில்களை இழந்து வாழ்வுக்காக ஏங்கித் தவிக்கும் இந்த முஸ்லிம்களுக்குப் பல்வேறு அமைப்புக்களும் நிறுவனங்களும் உதவி புரிந்தன. உதவி புரிந்தும் வருகின்றன. இந்த அமைப்புக் களின் உதவி உணவாக, வாழ்க்கை வசதிப் பொருள்களாக, வீடமைப்புக்கான பொருள்களாக கிடைக்கின்றன. ஆனால் வெளியேற்றப்பட்டவர்களுடைய பிறப்புரிமை, வாழ்வுரிமை, அரசியல் உரிமை பற்றிய சிந்தனையோட்டத்திலே இந்த அமைப்புக்கள் ஈடுபடுவதில்லை. அது அவர்களுடைய குறையுமல்ல. ஆனால் இந்த அமைப்புக்களை விட்டு மிகவும் மாறுபட்ட சிந்தனை கொண்டதாகவே என்.எம்.ஆர்.ஓ. இருக்கிறது. இதன் நோக்கம் தேவையான பொருள்களை வழங்குவதல்ல. அவர்களுடைய உரிமைகள், கல்வி மேம்பாடு, அரசியல் எதிர்காலம், பிற்சந்ததியினுடைய வாழ்க்கை முறை பற்றி சிந்தித்து அவற்றிற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதே என்.எம்.ஆர்.ஓ. வின் குறிக்கோள்கள் ஆகும். வெளியேற்றப் பட்டு சிதறுண்ட முஸ்லிம்களுக்கிடையே தாயகத்தில் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும், என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு முகமான, சிந்தனையைத் தூண்டக் கூடிய அமைப்பே என்.எம்.ஆர்.ஓ.
கேள்வி : இவ்வாறான நோக்கங்களை நிறைவேற்ற கடந்த காலத்தில் இந்த அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைக பற்றி கூறுங்களேன்?
பதில்: வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டோரில், சுமார் 10,000 குடும்பங்களின் சொத்து விவரங்களைத் திரட்டி , கணணிமயப்படுத்தி அமைச்சர் அஷ்ரப் மூலம் 1992ம் ஆண்டில் பாராளுமன்றில் சமர்ப்பித்தோம்.

Page 7
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு, வாழ்க்கை முறை, இழப்பீடுகள் சம்பந்தமான ஆய்வுகளை நடத்தியுள்ரேம். தற்போது இவர்கள் வாழும் பிரதேசங்கள், அவர்களது தேவைகள், அபிலாஷைகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆய்வுகளை நடத்தி அவற்றை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
வெளியேற்றப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று கலந்துரையாடல்களை நடத்தி மீள்குடியேற்றம் சம்பந்தமான அவர்களது கருத்துக்களை ஒன்று திரட்டி வெளியிட்டுள்ளோம்.
எமது மக்களின் எண்ணங்கள், அபிலாஷைகள், கருத்துக்களை பிறரறியும் வண்ணம் 'அகதி' என்ற பத்திரிகையொன்றின் மூலம் வெளிக்கொணர்கின்றோம். இதுவரை 9 இதழ்கள் வெளிவந்துள்ளன.
அரசியல் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் சந்தர்ப்பத்தில் வடபுல முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப் படாதிருக்க புத்தளம் மாவட்டத்தில் வாழும் 18 ஆயிரம் அகதிகளின் கையொப்பத்தோடு ஒரு மனுவை தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்தோம். எமது அரசியல் உரிமை சம்பந்தமாக தமிழ்க்கட்சிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவுடன் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டுள்ளோம்.
கேள்வி உங்கள் கூற்றுப்படி வட்புல முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பாக என்.எம்.ஆர்.ஓ., விளங்குகின்றது. அப்படியானால் அரசியல் தீர்வு தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் ஆக்கபூர்வமான முயற்சிகளில் உங்கள் அமைப்பின் பங்களிப்பு என்ன?
பதில்: அரசியல் தீர்வு முயற்சி தொடர்பாக தெரிவுக்குழுவுக்கு என்.எம்.ஆர்.ஓ. சமர்ப்பித்த ஆலோசனைகளைச் சுருக்கமாகக்
கூறுகின்றேன்.
இந்நாட்டில் வாழும் தனி நபரின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அத்துடன் சிறுபான்மை இன மக்கள் தமது இன, மத கலாச்சாரத்தைப் பேண அரசியல் யாப்பில் உத்தரவாதம் வேண்டும்.
6

நாட்டில் இயற்றப்படும் சட்டங்கள் பெரும்பான்மையினருக்கு மட்டும் நன்மையளிக்கக் கூடியதாக மட்டும் அமையாது சிறுபான்மை யினருடைய உரிமைகளையும் அவர்களது நலன்களையும் பாதுகாக்க கூடிய வகையில் இயற்றப்பட வேண்டும்.
சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இவற்றை நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்லும் உரிமை வேண்டும்.
வடபுல முஸ்லிம்கள் சில பிரதேசங்களில் செறிந்தும், பல இடங்களில் பரந்தும் வாழ்கின்றனர். வடபகுதியின் மொத்த சனத்தொகையில் 5% ஆனவர்களே முஸ்லிம்களாவர். இவ்வாறான சூழலின் கீழ் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் பிரதிநிதிகளுள் முஸ்லிம்களின் நலன் காக்க ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெறுவது கஷ்டமாக அமைகின்றது . தேசிய மட்டத்தில் மன்னார்த் தொகுதியில் சனத்தொகை விகிதாசாரத்தில் 30 சதவீத முஸ்லிம்கள் வாழ்வதால், அதனை இரட்டை அங்கத்தவர்கள் தொகுதியாக மாற்ற வேண்டும். அதன்மூலம் வடபுலத்திலே முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைத் தெரிந்தெடுக்க முடியும்.
வடபுலத்திலே அமைக்கப்படும் சட்டசபையின் பிரதிநிதிகளுள் 5 சதவீதத்தினர் முஸ்லிம்களாக அமைவதற்கான உறுதிப்பாடு வேண்டும்.
யாழ்மாவட்டத்தில் முஸ்லிம் வட்டாரம், மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவு பெரியமடு முசலி எருக்கலம்பிட்டி, முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று ஹிஜ்ராபுரம் நீராவிப்பிட்டி, ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து ஒரே நிர்வாக அலகின் கீழ் அமையுமாயின் அவை முஸ்லிம்களின் நலனைப் பேண உதவும்.
வடக்கில் பரந்து வாழும் முஸ்லிம்களின் சமூக, கலாசார விழுமியங்களைப் பேணுவதற்கேற்ப கலாசார சபை ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனை.

Page 8
கேள்வி: அண்மைக் காலத்தில் புனர்வாழ்வு அமைச்சு அகதிகளை மீளக் குடியமர்த்தி இருக்கின்றது. இவ்வாறான மீளக்குடியமர்வு பற்றி என்.எம்.ஆர்.ஓ. எதிரான கருத்துக் கொண்டுள்ளதாக பரவலாக கதை அடிபட்டது. இதைப் பற்றி உங்கள் அபிப்பிராயத்தைக்
கூறமுடியுமா?
C.)
பதில்: தற்போது நடைபெற்றிருக்கும் மீள்குடியேற்றம் ஒரு தற்காலிக குடியேற்றமாகவே கருதப்பட வேண்டும். நிரந்தர மீள்குடியேற்றமாக அதை எண்ணிவிடக் கூடாது. நிரந்தர குடி யேற்றம் என்பது அவரவருடைய சொந்த மண்ணில் அமைந்த குடியேற்றமாகவே இருக்க வேண்டும் என்பதே என்.எம்.ஆர்.ஓ.வின் கருத்தாகும்.
தற்போதைய குடியேற்றம் ஓர் இன்றியமையாத தேவையாகவே கருதப்பட வேண்டியிருக்கின்றது. ஏனென்றால் 90ம் ஆண்டிலிருந்து இதுகாலவரை முகாம்களில் உள்ள சிறிய நிலப்பரப்பில் பல குடும்ப உறுப்பினர்கள் மிகவும் சிரமத்துடனேயே வாழ்ந்து வந்தனர். எவ்வித சுகாதார வசதிகளுமின்றி முகாமில் அடைப்பட்டுக் கிடந்த எமது மக்களுக்கு வசதிகளுடன் கூடிய ஓர் இருப்பிட அமைப்பு அவசியமானதே. என்.எம்.ஆர்.ஓ. இதனை வலியுறுத்தியே வந்திருக்கின்றது. ஆனால் தற்போதைய குடியேற்றத்தை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு மீள்குடியேற்றம் கிடைத்து விட்டது. இனி இருக்கும் வசதிகளே போதும், இனி போனால் என்ன, விட்டால் என்ன என்ற ஒரு மனோநிலையில் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான எண்ணம் பிழையானது என்பதையும் இவ்வெண்ணம் எதிர்காலத்தில் பல பிரச்சினை களை உருவாக்கும் என்பதையும் எங்கள் அமைப்பு மக்களுக்கு உணர்த்தி வருகின்றது. ஒரு சிறிய உதாரணத்தை எடுப்போம். வடபுலத்தில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் விவசாயி பல ஏக்கர் வயற்காணிக்கும், தோட்ட நிலத்துக்கும் உரிமையாளராக இருந்தார். வேண்டியளவு வீட்டு நிலம் உடையவராகவும் இருந்தார். அவருடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய பிள்ளைகள் கூட அவருடைய சொத்தைப் பிரித்து அவற்றில் உழைத்து வாழக்கூடிய வாய்ப்பிருந்தது. ஆனால் தற்போது 10 பேர்ச் காணியில் நாம் குடியேற்றப்பட்டுள்ளோம். பிள்ளைகளை வாழ வைக்கும் போது காணிக்கு எங்கே போவது? அவர்களுடைய பிள்ளைகளுக்கு என்ன செய்வது? என்ற பிரச்சினை எழுகிறது. இங்கு நான் காணியை மட்டும்தான் குறிப்பிட்டேன். ஆனால் கல்வி, தொழில், மற்றும் பல்வேறு வாழ்க்கைத் துறைகள் ஒவ்வொன்றிலும் இவ்வாறு
வது? என்ற அவ அவர்களுடைய துவக்கும் போது

மட்டுப்படுத்தப்பட்ட ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேதான் நாம் வாழ வேண்டி வரும். தற்போதைய குடியேற்றம் தேவையில்லை என்பது எமது கருத்தல்ல. இதன் மூலம் தாயக மீள்குடியேற்ற எண்ணம் மழுங்கடிக்கப்படக் கூடாதென்பதே. இதனை வடபகுதி யிலுள்ள பெரும்பாலான புத்திஜீவிகள் ஏற்றுள்ளனர்.
கேள்வி: வடபகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு அவர்கள் மத்தியில் தகுதியான தலைமைத்துவம் இல்லாமல் போனது ஒரு காரணம் என்று கருதலாமா?
பதில்: நிச்சயமாக, முன்னர் நான் குறிப்பிட்டது போல் வடபுலத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் தத்தம் கிராமத்துக்குட்பட்ட, நிர்வாக அமைப்புக்களுக்கேற்ப வாழ்ந்தார்களே தவிர எல்லோரையும் ஒன்றிணைக்கக்கூடிய ஓரமைப்பு இல்லாதது பெருங்குறையே. பல பிரதேசங்களையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஓரமைப்பு இருந்திருந் தால் புலிகளோடு கதைத்திருக்கலாம். அல்லது போதுமான ஒரு காலக்கெடுவை எடுத்துக் கூட, பொருள் பண்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஒரு கூட்டுத் தலைமைத்துவம் இல்லாமையும் நாம் வெளியேறுவதற்குக் காரணம் என்றே கூற வேண்டும்.
கேள்வி: புதிய அரசியலமைப்பிலே அதிகாரப் பரவலாக்கம் செயல்படுத்தப்படும் போது கிழக்கிலே 'முஸ்லிம் அலகு' ஒன்று அமைய வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. அதேவேளை வடக்கிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் நிலைமை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி எவ்வித கோரிக்கைகளும் இல்லையெனப் பரவலான மனக்குறை நிலவுகின்றது. இதைப்பற்றி ஏதாவது கூற முடியுமா?
பதில்: வடக்கையும், கிழக்கையும் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் கிழக்கில் செறிந்து வாழ்வது தெரிந்த விடயம். அதனால் முஸ்லிம் அலகு ஒன்று அமைவது கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. தற்போதைய முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கிழக்கில் இருப்பது போல், வடக்கிலே முஸ்லிம் தலமைத்துவம் ஒன்று இல்லாதிருப்பது துரதிஷ்டமாகும். வடபுலத்து முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் அபிலாஷகளை அரசுக் குணர்த்தக் கூடிய நிலைமை தற்போது இல்லை. இதனால் அரசியல் அநாதைகள் போன்று வாழ வேண்டிய துர்ப்பாக்கிய

Page 9
சாலிகளாக எமது மக்கள் இருக்கின்றனர். பிரதேச ரீதியாக பிரச்சினைகளை முன்வைக்கக் கூடிய ஒரு துடிப்புள்ள கூட்டுத் தலைமைத்துவம் வடக்கில் இல்லாததை அனேகமான புத்திஜீவிகள் உணர்கின்றனர்.
கேள்வி பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷரப் 9/6/736fL - Lib, உங்கள் -9/60), Ol ly சில கே//ரிக்கைகளை7 முன்வைத்ததாக அறிகின்றோமே?
பதில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பேணிக் காக்க சர்வகலாசாலை அனுமதியிலும், வேலை வழங்கலிலும் விசேட ஒதுக்கீட்டு முறையைப் பெற்றுதர வேண்டும்.
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட காரணத்தை விசாரிப்பதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க முயற்சியெடுக்க வேண்டும்.
வடபுல முஸ்லிம்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற தனி நபர் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தென்கிழக்கு மாகாண சபையில் அல்லது முஸ்லிம்களின் நிலம் தொடர்பான தனி அலகில் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி, முசலி போன்ற பிரதேசங்கள் உள்ளடக்கப்படக்கூடாது. என்பவற்றுடன் மேலும் சில கோரிக்கைகளைச் சமர்ப்பித்தோம். எதுவுமே நடைபெறவில்லை.
கேள்வி: தமிழ் முஸ்லிம் ஒற்றுமை மிகக் கணிசமான அளவு பாதிக்கப் பட்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை மீண்டும் கட்டி யெழுப்ப ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தினகரன் மூலம் கூறுவீர்களா?
பதில்: தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை வடகிழக்கில் மாத்திரம் ஏற்பட்டால் மட்டும் போதாது. ஏனைய பகுதிகளிலும் உருவாக்கப்பட வேண்டும். இந்த இரண்டு சமூகங்களும் பேரினவாதத்திடமிருந்து விடுபட, ஒற்றுமைதான் அடிநாதமாகும். தமிழ்-முஸ்லிம் உறவைப் பற்றி சிந்திப்பவர்கள் எமது இரு சமூகங்களிடையே அதிகம் அதிகமாக உருவாக வேண்டும்.
- தினகரன் வாரமஞ்சரி -
O

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தாயக மண்ணிலேயே இடம்பெற வேண்டும்
கேள்வி: வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஆறு வருடங்கள் சென்று விட்டன. வெளியேற்றப்பட்ட இம் மக்களின் வாழ்நிலை எவ்வாறுள்ளது?
பதில்: வடக்கிலிருந்து எமது மக்கள் வெறுங் கையோடு வெளியேற்றப்பட்டார்கள். தற்பொழுது, ஒலைக் குடிசைகளில் சமைப்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் தேவையான சில உடமைகளோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆறு வருடங்களுக்கு முந்திய எமது நிலையோடு இதனை ஒப்பிட்டு பார்க்கின்ற போது ஒரு பாரதூரமான சமூக ஆரோக்கிய வீழ்ச்சியை நாம் அவதானிக்கலாம்.
இதில் குறிப்பாக கல்வி, ஒழுக்கம், கலாசாரம் ஆகியவற்றில் பாரதூரமான தாக்கம் காணப்படுகின்றது. உதாரணத்துக்கு கல்வியை எடுத்துக் கொண்டால், இன்று பாடசாலை செல்லும் LOTT 60076) / 17 J,67f76öT விகிதாசாரம் என்பன | || || || || || || || || || Ш. П. Ј. வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் பாரதூரம் எதிர்காலத்தில் எமது மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கப்போவதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.
கேள்வி வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அரசின் புனர்வாழ்வு அமைச்சினால் புத்தளம் போன்ற அகதிகள் தங்கியிருக்கும் மாவட்டங்களில் தற்போது மீளக் குடியமர்த்தப் படுவது பற்றி?
பதில்; அவர்களது பாரம்பரியப் பிரதேசத்தில் குடியேறுவதே
மீள்குடியமர்வு ஆகும். ஆனால் புனர்வாழ்வு அமைச்சினால்
அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் அகதிகளுக்காக திறக்கப்பட்ட
குடியேற்றம், "மீள்குடியேற்றக் கிராமம்" (Re-Settlement Village)
என்று அழைக்கப்படுகின்றது. எமது மக்களின் அகதிப்

Page 10
பிரச்சினையை தனித்துவமாக நோக்குகின்ற போது இது பொருத்தமானதாக இல்லை. ஆறு வருட அகதிமுகாம் வாழ்க்கையில் மக்கள் மிகவும் சோர்வடைந்து விட்டார்கள். அகதி முகாம் வாழ்க்கையில் உடல், உள, ஆரோக்கியம், சமய, கல்வி, கலாசார ஒழுக்கம் போன்றவற்றில் ஏற்பட்ட மோசான பாதிப்புக்கள் எமது மக்களின் முகாம் வாழ்க்கைக்கு மாற்று ஒழுங்கொன்று தேவை என்பதை வேண்டி நிற்கின்றது. இதனை வலியுறுத்தியே இம்மக்களுக்கு பொருத்தமான இடைக்கால வாழ்க்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக் குரல் எழுப்பிக் கொண்டு வரும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு (NMRO) கடந்த வருடம் UNHCR க்கு முன்னால்கூட வடக்கு முஸ்லிம்களுக்கு 'அகதி' அந்தஸ்து தர வேண்டும் என்ற போராட்டத்தை நடத்தியது.
இதன் வெளிப்பாடாக தற்பொழுது நடைமுறைப்படுத்தும் சில வாழ்விட வசதி முயற்சிகள் வரவேற்கத் தக்கனவாக இருந்த பொழுதிலும், அவைகள் மீள்குடி யேற்றம் என்ற அடிப்படையில் அமையாது. இதனை இடைக்கால வாழ்விட ஒழுங்கு (Interim living Arrangment) என்று அழைப்பதே பொருத்தமானதாகும். மீள்குடியேற்றம் என்பது தாயக மண்ணிலேயே இடம்பெற வேண்டும் என்பதை நாங் கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றோம்.
கேள்வி: ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் முன் வைத்திருக்கும் வட -கிழக்கு முஸ்லிம் மாகாணசபை அல்லது முஸ்லிம் அலகு இவற்றைப் பற்றி வடக்கு முஸ்லிம்கள் எவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளனர்?
பதில்: உண்மையில் ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் முன்வைத்திருக்கும் திட்டமானது வடகிழக்கு இணைந்த சபையில் முஸ்லிம்களின் நலன்களைப் பாது காப்பதற்காக "முஸ்லிம் மாகாணசபை" அல்லது "முஸ்லிம் அலகு” என்ற ஒன்று உருவாக்கப்பட்டு இச்சபைக்கு சட்டம், பாதுகாப்பு, காணிப்பங்கீடு போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
இச்சபைக்குள் வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற புவியியல் தொடர்ச்சியற்ற பிரதேசங் கள்
12

உள்ளடக்கப்பட வேண்டும். வடக்கைப் பொறுத்தவரை மன்னார். மாவட்டத்தில் உள்ள முசலி, எருக்கலம்பிட்டி ஆகிய இரண்டு முஸ்லிம் பிரிவுகளும் முஸ்லிம் மாகாண சபைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதாகும்.
மு.காங்கிரஸ் முன்வைத்திருக்கும் முஸ்லிம் மாகாணசபை அரசியல் அபிலாஷைகளையும் பொருளாதார நலன்களையும் பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. எனினும் இவ்வாறான சபையினால் எதிர்காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் நடைமுறைப் பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சம் காணப்படுவதால் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு (NMRO) ஒழுங்கு செய்த வடக்கு புத்திஜீவிகளினதும், சமுதாயப் பிரமுகர்களினதும் கூட்டத்தில் அதனை ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.
கேள்வி: வடக்கு முஸ்லிம்கள் அச்சப்படும் பிரச்சினைகள் என்னவென்பதை சற்று விளக்கமாகக் கூற முடியுமா?
பதில்: விளக்கமாகக் கூறுவதாயின் வடக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முசலி, எருக்கலம்பிட்டி ஆகியவை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத் திருக்கும் மாகாண சபைக்குள் உள்ளடக்கப்படுகிறது. வடமாகாணத்தின் மொத்த முஸ்லிம்களில் 35% மானவர்கள் மேற்குறித்த இரண்டு முஸ்லிம் பிரதேசத்திற்குள்ளும் வாழ்கின்றார்கள். எஞ்சிய 65%மானவர்கள் இம்மாகாணத்துள் வேறு பிரதேசங்களில் பரந்தும் சிதறியும் காணப்படுகின்றனர். பரம்பல் ரீதியான பலவீனத்தைக் கொண்ட இந்த 65%மான முஸ்லிம்கள் முஸ்லிம் மாகாண சபைக்குள் உட்படுத்தப்பட மாட்டார்கள். இவர்களின் குரல்கள் ஒலிக்கக்கூடிய வசதிகள் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருக்கும் மாகாணசபைக்குள் செய்யப்படவில்லை. இந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த முஸ்லிம் மாகாணக் கோரிக்கை வடக்கைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் சிறுபான்மை பாதுகாப்பு என்ற நோக்கத்தில் முரண்பாட்டினைக் கொண்டதாகவும் நடைமுறைக்கும் பொருத்தமற்றதாகவும் காணப்படுகிறது.
மேலும் வடக்கில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பொருளாதார நடவடிக்கைகள் - தமிழ்ப் பெரும்பான்மை மக்களில் தங்கியிருப்ப துடன் தமிழர் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில்
13

Page 11
அமைவுற்றதாகவும் காணப்படுகின்றது. இது முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக பெரும்பான்மை தமிழ் மக்களில் தங்கி வாழும் தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக முசலி, எருக்கலம்பிட்டி ஆகிய பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக முசலி பகுதி முஸ்லிம்கள் நீர்ப்பாசனத்துக்கு அருவி ஆற்றையும், எருக்கலம்பிட்டி பகுதி முஸ்லிம்களின் தென்னை, பனை, நெல், விவசாய நிலங்கள், சங்கு, அட்டை குளிக்கும் கடல் வலயங் கள் அத்துடன் பலவகைக்கட்ட வியாபார நிலையங்கள் என்பனவும் தமிழர் பெரும்பான்மையான நிர்வாகப் பிரதேசங்களில் காணப்படுகிறது . வடக்கு முஸ்லிம்களின் பொருளாதார நடவடிக்கைகள் இனரீதியாக மட்டுப்படுத்தப்படுகின்ற போது எதிர்மறையான விளைவுகளையே அது தரக்கூடியதாக இருக்கும்.
மேலும் கூறுவதானால், அரசியல் பிரதிநிதித்துவ ரீதியாக வடக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் மாகாணசபை அமைப்புக்குள் பாரிய அளவில் நன்மையடையப் போவதில்லை. முஸ்லிம் மாகாண சபைக்குள் அடக்கப்படும் மொத்த சனத்தொகையில் 10%க்கு குறைவானவர்களே வடக்கு முஸ்லிம்கள். அவ்வாறாயின் முஸ்லிம் மாகாணசபைக்குள் அரசியல் பிரதிநிதித்துவ, நிதி வள ஒதுக்கீட்டில் குறைவான முக்கியத்துவமே வடமாகாண முஸ்லிம்களுக்கு வழங்கப்படும்.
பிரதேச ரீதியாக கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து தூரக் காணப்படும் வடக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அவர்களையும் உள்ளடக்கும் முஸ்லிம் மாகாணசபை பொருத்தமற்ற தீர்வு
முயற்சியாகவே காணப்படுகின்றது. உண்மையில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தனித்துவமானது. வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக தமிழ்க்கட்சிகள் உட்பட எவரும் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசித் தீர்மானிக்க முடியாது. எமது மக்களின் அபிலாசைகளை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் எமது மக்களுடனேயே பேச வேண்டும்.
கேள்வி: தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பரவலாக்கம் ஒன்றை மேற்கொள்வதே பொருத்தமானதாக பெரும்பாலானோரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் வடமாகாண முஸ்லிம்கள் எவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர்.?
14

பதில்: உண்மையில் இந்நாட்டில் அமைதி ஏற்பட வேண்டுமாயின் அதிகாரப் பரவலாக்கம் இந்நாட்டுக்கு முக்கியமானதாகும். ஆனால் இவ் அதிகாரப்பரவலாக்கத்தில் வடமாகாண முஸ்லிம் சிறுபான்மையினரின் விகிதாசார முக்கியத்துவம், புவியியல், பரம்பல், அரசியல் அபிலாஷைகள் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு இச்சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கக் கூடியதான அரசியல் யாப்பு விதிகள் அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
கேள்வி: இங்கே நீங்கள் 'சிறுபான்மை பாதுகாப்பு என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்?
முதலில், முஸ்லிம்கள் தனித்துவமான இனம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். இரண்டாவது சுதந்திரமாக வாழ, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட, சொத்துக்கள் வைத்திருக்க சமய, கலாசார தனித்துவத்தைப் பேணுவதற்கு தடையாயிருக்கக் கூடாது. மூன்றாவது தனிமனித அல்லது சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படும் போது அவ்வுரிமையை மீண்டும் உறுதிப்படுத்தக் கூடிய நீதிமுறை ஒழுங்குகள் யாப்பின் மூலமாகச் செய்யப்பட வேண்டும். நான்காவது சிறுபான்மையினரின் நலன்கள் பாதிக்கப்படக்கூடிய யாப்புக்கள், யாப்புத் திருத்தங்கள், இயற்றப்படாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கேள்வி: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு ஆறுவருடங்கள் முடி வடைந்த இக்கால கட்டத்தில் அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் 'மக்கள் முறைப்பாட்டு மன்றம்' என்ற பெயரில் பல கூட்டங்களை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு ஏற்பாடு செய்ததாக அறிகிறோம். என்ன நோக்கத்திற்காக இதனை ஒழுங்கு செய்தீர்கள்?
பதில்: உண்மையில் ஆறாவது வருடம் முடிவடைந்திருக்கும் இக்கால கட்டத்தில் எமது மக்களின் தற்போதைய பிரச்சினைகள் என்ன என்பதை அறிவதோடு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் மக்களுடன் நடத்தும் கலந்துரையாடல்களின் மூலம் கண்டு கொள்வதே நோக்கமாகும்.

Page 12
அந்த வகையில் கடந்த ஒக்டோபர் 26,27ம் திகதிகளில் புத்தளம் மாவட்டத்தில் நாம் நடாத்திய பல கூட்டங்களிலும் மக்கள் பேரார்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அவற்றுள் ஐந்து விடயங்களை மிக மிக முக்கியமானதாகக் கொள்ளலாம்.
1. அம்மக்கள் தமது தாயக மண்ணுக்கு எவ்வாறாயினும் மீளச் செல்ல வேண்டும் என்ற உறுதியான குறிக்கோளுடனேயே இருந்தனர். முகாம் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களினால், எவ்வகையான அர்ப்பணங் களுடனாவது மீண்டும் தமது தாயகத்துக்குச் செல்லவே விருப்பமுடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
2. ஆனாலும் அது வரையில் தங்களது 'அகதி அந்தஸ்து' தேசிய சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அது வரையில் உணவு நிவாரணங்கள் தொடர்ச்சியாக வழங் கப்படுவதுடன், தற்காலிக வாழ்விட வசதிகள் , பாடசாலைகள், நீர்மலசல கூடம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
3. மேலும் அண்மையில் புத்தளத்தில் புனர்வாழ்வு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட குடியேற்றம் அகதிகளுக்கான வாழ்விடப் பிரச்சினைகளுக்கான இடைக்காலத் தீர்வுதான் என்பதை தெட்டத் தெளிவாக அகதிகளுக்கும் தேசிய சர்வதேசத்துக்கும் அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் முன் வைத்தனர்.
4. இன்னும் அண்மையில் புத்தளத்தில் புனர்வாழ்வு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட குடியிருப்பு வசதிகள் இதுவரையில் இவ்வசதிகள் கிடைக்காத ஏனைய 90% எமது மக்களுக்கும் அது (புத்தளத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் வாழும்) அளிக்கப்பட வேண்டும்.
5. அத்துடன், தம் தாயகத்துக்கு திரும்பிச் செல்லல் என்ற
அடிப்படைப் பிரச்சினைக்கு அரசும் ஏனைய சமாதான சக்திகளும் உரிய நடவடிக்கையை எடுப்பதோடு இனப்பிரச்சினை பேச்சுவார்த்தைகளிலும், சமாதானத் தீர்வுக் கூட்டங்களிலும்
16

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமது பிரச்சினை எடுக்கப்பட்டு பொருத்தமான தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு எமது மக்களின் இந்த அபிலாஷைகளை முதலில் ஜனாதிபதிக்கும், தேசிய சர்வதேச ஸ்தாபனங்களுக்கும், குறிப்பாக ஐ நா வின் தலைமைச் செயலகத்துக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
கேள்வி: முஸ்லிம்களின் விவகாரத்தில் புலிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறதே. வடக்கு முஸ்லிம்களின் பிரதான அமைப்பாகிய வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு புலிகளுடன் ஏதாவது பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?
ஒரே வார்த்தையில் கூறுவதானால், புலிகளுடன் இது வரையில் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை. ஆனால், தாங் கள் கூறுவதைப் போன்று முஸ்லிம்கள் தொடர்பாக அவர்களிடத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பது போல் தென்படுகின்றது. ஆனாலும் அவர்களது இந்த மாற்றங்களில் எமது மக்கள் முன்னர் நம்பிக்கை வைத்தது போன்று தற்போது நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை.
குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது இயக்கத்தின் தவறாக அதன் தலைவரே பேட்டியொன்றின் மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவ்வாறாயின் இந்த நிலைப்பாட்டை வெறும் பேட்டியொன்றின் மூலம் வெளிப்படுத்தியதோடு நில்லாமல், வடக்கு முஸ்லிம்களுக்கு அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைப்பாகிய NMRO மூலமாவது அவர்கள் எடுத்துக்கூற முன்வந்திருக்கலாம். இது பேச்சுவார்த்தைக்கான வாசல்களை நம்பிக்கையொடு திறக்க வழிவகுத்திருக்கும். அது போன்ற விடயங்கள் இதுவரையில் ஏதும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. உண்மையில் புலிகள் முஸ்லிம்கள் மீதும் குறிப்பாக வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றி யதையிட்டும் கவலை கொள்வார்களாயின், முஸ்லிம்கள் மீது அவர்கள் தற்போது கொண்டுள்ள நல்லெண்ணம் உண்மையாயின் அவர்கள் அடையாளத்திற்காவது ஆறு வருடங்களாக வடக்கில் தடுத்து வைத்திருக்கும் அனைத்து முஸ்லிம்களையும்
17

Page 13
விடுதலை செய்ய வேண்டும். இது அவர்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும். கடந்த ஆறு வருடங்களில் தடுத்து வைத்திருக்கும் முஸ்லிம்களின் குடும்பங்கள் இங்கு படும் கஷ்டம் சொல்லில் அடங்காதது. எனவே முஸ்லிம்களின் புனிதமான நோன்பு இன்னும் இரு மாதங்களில் வரவுள்ளது. அக்கால கட்டம் முஸ்லிம்களுக்கு புனிதமானது. இதனைப் புலிகளும் அறிவார்கள். தங்களது நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அவர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல முஸ்லிம்களையும் விடுவிப்பதன் மூலம் புதிய நம்பிக்கை எமது மக்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இது நல்லெண்ணத்துக்கு அடித்தளமாகவும் அமையும்.
கேள்வி: அண்மையில் ஜனாதிபதி புலிகளுடன் பேசுவது குறித்து வெளியிட்டிருக்கும் நிபந்தனைகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்: இனப்பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்க்க முடியாது. இது சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் அதிகாரங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலமே சாத்தியமாகும். இன்றைய நிலையில் இனப்பிரச்சினையில் புலிகள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறார்கள். இதற்கு முன்னரும் பல சமாதானப் பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று தோல்வியுற்றதை நாம் அறிவோம். எனவே கடந்த காலத்தில் இடம் பெற்ற தவறுகளை இருசாராரும் நன்குணர்ந்து இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு இருவரும் பரஸ்பரம் பேச்சுவார்த்தைகளில் மாறி மாறி ஆளை ஆள் குற்றம் சாட்டுவதை தவிர்க்கு முகமாகவே இரு சாராரினதும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நடுநிலையான மூன்றாவது தரப்பினரையும் இணைத்து முன்னெடுத்துச் செல்வதே வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இங்கு ஜனாதிபதி இரு நிபந்தனை களை முன்வைத்துள்ளார். இந்நிபந்தனைகள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாகவே அமையும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.
கேள்வி: தற்பொழுது வடக்கில் மீட்கப்பட்ட பகுதியில் மீளக் குடியமர்த்தும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மீட்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்த N.M.R.0 ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா?
வடக்கு முஸ்லிம்கள் தங்களது பாரம்பரிய பூமிக்குச் செல்ல வேண்டும். மகிழ்ச்சியுடன் முன்பு போல் தமிழ் மக்களுடன்
18

அந்நியோன்யமாக வாழ வேண்டும். அவர்களது நல்லுறவுகள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே N.M.R.0 வின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு பல்வேறு விதமான தடைகள் இருக்கின்றன. அவை வென்றெடுக்கப்படாமல் எமது மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதானது எமது மக்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கக் கூடியதாக அமையுமெனக் கருதும் N.M.R.0 அவற்றை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.
கேள்வி: தடைகள் என்னவென்று கூற முடியுமா?
பதில்: வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஏன் பலவந்தமாக வெளியேற் றப்பட்டார்கள்? வடக்கில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை உட்பட ஏனைய எல்லா உரிமைகளும் ஏன் பறிக்கப்பட்டன? இந்த வினாக்களுக்கு நியாயமான விடையை வெளியேற்றிய வர்களினால் இதுவரையில் கூறப்படவில்லையே. இதுவே மிகப் பெரும் தடை.
கேள்வி: வடக்குக்கு மீளத் திரும்புவது பற்றி என்ன நிலைப்பாட்டை N.M.R0 கொண்டுள்ளது?
சம்பந்தப்பட்டவர்கள் இரு முக்கிய உத்தரவாதங்களை சர்வதேச சமாதான அமைப்புக்களின் முன்னிலையில் வழங்குவதன் மூலம் எமது மக்கள் தமது தாயகத்துக்கு மீளச் செல்லலாம் என்று கருதுகிறது .
1. முஸ்லிம் மக்களது சகல உரிமைகளும், வழங்கப்பட்டு
அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்கள் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவது - 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதிப்பகுதியில் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது போன்ற ஒரு சம்பவம் இனியொரு காலத்திலும் எவ்வாறான வடிவங்களிலும் இடம் பெறாது என்பதை உறுதிப்படுத்துவது .
2
- சரிநிகர் -
19

Page 14
வடக்கு முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளின் பகடைக்காய்களா?
)ெ டமாகாணத்தில் 2d 6i 61 மொத்த னத்தொகையில்
முஸ்லிம்கள் 5%த்தினரே தற்பொழுது உச்ச நிலையை எய்தியுள்ள இனப்பிரச் சினைக்கு சரியான அரசியல் தீர்வு காணும்பொழுதே எங்களது பிரச்சினைக்கும் ஒரு விடிவு கிடைக்கும். அங்கு முன்னர் எங்களது கலாச்சாரப் பாரம்பரியங்களை பாதுகாத்துக் கொண்டதுபோல் எதிர்காலத்திலும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
எம்முடைய தாயகமும் வடக்கே. அத்தகைய்ய எமது பாரம்பரிய பூமியிலிருந்துதான் நாங்கள் விரட்டப்பட்டிருக்கிறோம். இதனைச் செய்தவர்கள் LTTE தான் உண்மையில் 1987ல் அறிமுகப் படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கு தகுந்த அதிகாரங்களை ஒழுங்கான முறையில் வழங்கி செயற்பட அனுமதியளிக்கப் பட்டிருந்தால் இப்பிரச்சினை இவ்வளவு தூரம் உக்கிரமடையாது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
மாகாண சபைகள் இயங்கியிருந்தால் நாமும் இணைந்து செயலாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும், நாங்கள் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு LTTE. மட்டுமல்ல U.N.P யும் பதில் சொல்லியாக வேண்டும்.
நாங்கள் தேசப் பிரேமியர்கள். நாங்கள் இஸ்லாமியர்கள். எங்களிடம் இனவாதம் இல்லவேயில்லை. வடகிழக்கில் தமிழ் மக்களுடனும், தெற்கில் சிங்கள மக்களுடனும் கைகோர்த்துக் கொண்டு ஐக்கியமாக ஒற்றுமையாகவே வாழ விரும்புகின்றோம்.
20
 
 

நாம் வாழ விரும்புவது வடமாகாணத்தில், ஆண்டாண்டு காலமாக வாழையடி வாழையாக அங்குதான் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் நிம்மதியாக மகிழ்ச்சிகரமாக சமாதானமாக வாழவே விரும்புகின்றோம்.
முஸ்லிம் காங் கிரஸ் வடக்கு முஸ்லிம்களை பிரதிநிதிப் படுத்துவதாகக் கூறுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இது அவர்களின் நடவடிக்கைகள் மூலமாகவே நன்கு அவதானிக்கக்கூடிய விடயமாகும். தற்பொழுது எமது மக்களும் அவர்களைப் பற்றிய உண்மை நிலைகளைப் புரிந்து கொண்டார்கள்.
அவர்களது கருத்துக்களுடன் நாம் இணக்கம் கொள்ளவில்லை. எங்களது பாரம்பரியத் தாயகமும் தாயக பூமியும் வடக்குத்தான். எனவே நாங்கள் வடக்கிலே வாழ விரும்புகின்றோம். அங்கு எங்களது கல்வி, கலாச்சாரம், காணி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணிகள் சம்பந்தமாக அரசியல் ரீதியிலான உத்தரவாதம் எமக்குத் தரப்பட வேண்டும். அப்பிரதேசத்தில்
செயற்படும் நிர்வாகத்தில் மேற்குறிப்பிட்ட காரணிகள் சம்பந்தமாக முடிவு எடுக்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த பிரதிநிதித்துவம் எ மக்கு அவசியம் வடக்கில் மிகச்
சிறுபான்மையாக இருக்கும் நாம் எங்களது புவியியல் சூழ்நிலை காரணமாகும் எங்களை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் அலகுக்குள் கொண்டு செல்வதை நாங்கள் விரும்பவில்லை.
முஸ்லிம் காங் கிரஸ் எங்களைத் தெட்டத் தெளிவாகவே அவர்களது பகடைக்காய்களாகப் பயன்படுத்த முனைகிறது. எங்களைக் கிழக்கு மாகாண அலகுடன் இணைப்பதன் மூலம் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்துக்கு ஆளாக்கப் படுகிறோம். இவ்வாறான நிலையினால் ஏற்படும் கொந்தளிப்பில் அவர்கள் எங்களை கிழக்கு மாகாணத்துக்கு விரட்டக் கூடிய சந்தர்ப்பம் எதிர்காலத்தில் உருவாகலாம். இப்படியான நிலையை சந்திக்க நாங்கள் விரும்பவில்லை.
கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்காக தனியான அலகு ஒன்றை
உருவாக்கிக் கொடுப்பது தமிழ் கட்சிகளால் மாத்திரம் முடியாத
ஒன்றாகும். அது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதுபோன்று 21

Page 15
வடக்கில் எங் களது உரிமைகளைப் பெற்றுத் தருவதும் அரசாங்கத்தினதும் வடக்கை நிருவகிக்கும் தமிழ் அமைப்புக்களினதும் பொறுப்பாகும். தமிழ் முஸ்லிம் பிரச்சினை இன்று தேசியப் பிரச்சினையாக முன் எழுந்துள்ளது . இது ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்வு காண முன்வராத வரையில் இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஏற்படப் போவதில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கட்சிகளுடன் நடாத்திய இனப் பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை ஒரு செப்புக் காசுக்குக் கூட மதித்து எடுத்துக் கொள்ளாதது வேதனைக்குரியதே. அது போன்று ஐந்து தமிழ் கட்சிகளும் எம்முடன் கலந்தாலோதோசிக்கவுமில்லை.
நாட்டின் முழு முஸ்லிம் மக்களினதும் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் காணக்கூடிய உரிமை தங்களுக்கு உண்டென முஸ்லிம் காங்கிரஸ் எண்ணிக் கொண்டிருக்கிறது. அதுவும் நாம் எமது பிரச்சினை பற்றி முஸ்லிம் காங்கிரஸை அணுகி முன்வைத்த பொழுதிலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்று
ஆகி விட்டது. இது தான் உண்மை.
- 'யுக்திய' (சிங்கள வார இதழ்) -

வடபகுதி முஸ்லிம் அகதிப் பிரச்சினை
ஒரு தேசியப் பிரச்சினை Tாப்பா
அல்ஹஸனாத் நிருபர்கள் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலையும் பெற்ற பின்பு அவர்கள் தெரிவு செய்த கேள்விகளையும் அதற்கான பதிலையுமே அல்ஹஸனாத்தில் பிரசுரித்துள்ளனர். அதனையே இங்கு தரப்படுகிறது. அவர்கள் முழுமையாக அவற்றைப் பிரசுரித்திருந்தால் வாசகர்களுக்கு எமது பிரச்சனை தொடர்பாக சரியான ஒரு விளக்கத்தை கொடுத்திருக்க முடியும். 4
கேள்வி: மீள்குடியேற்றத்தின் வழியிலுள்ள தடைகள்...'
பதில்: வடபகுதி முஸ்லிம் அகதிப் பிரச்சினை ஒரு தேசியப் பிரச்சினையாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் போதுதான் இதுவும் தீரும். இல்லையெனில் முகாம் வாழ்வு நீடிப்பது தவிர்க்க முடியாதது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வராமையே பிரதான தடையாக உள்ளது.
கேள்வி: ரிவிரெச நடவடிக்கையின் பின் முஸ்லிம்கள் மீளக் குடி யேறுவதற்கான சூழல் உள்ளதா...?
பதில்: மக்கள் ஊர் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அது இன்றோ நாளையோ நடக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்க முடியாது. ராணுவ வெற்றிகள் மாறிமாறி வரக்கூடியவை. அங்கே பகலில் இராணுவம், இரவில் புலி என்ற நிலை நிலவுகிறது. அரசின் பிரச்சாரத்தை மையமாக வைத்து அங்கே அமைதி நிலவுகிறதெனக்கூற முடியாது. அங்கிருந்து வரும் மக்களின் கூற்றுப்படி இன்னும் யுத்த சூழல் காணப்படுகிறது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற மக்கள் ஒத்துழைப்புடன் கூடிய சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டால் அமைதி ஏற்படும். அரசு சிவில் நிர்வாகத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அதேவேளை புலிகள் அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். சிவில் நிர்வாகம் உருவாகும் வரை பொருத்தமான சூழல் உள்ளதெனக் கூறமுடியாது.
23

Page 16
கேள்வி விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் மீள்குடியேற்றமும் பற்றி.P
பதில்: விடுதலைப் புலிகளின் எதிரிகள் கூட அவர்களின் ஒத்துழைப்பின்றி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினம் என்பதை உணர்கின்றனர். இந்த யதார்த்தத்தை முஸ்லிம்களும் தெரிந்து கொள்வது அவசியம். புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு அல்லது பலவீனப்படுத்தப்பட்டு மக்கள் உள்ளங்களிலிருந்து அகற்றப்பட்டு விட்டால் முஸ்லிம்கள் அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. புலிகளின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் அதற்குப் பலமில்லாத நிலையில் சீரான சிவில் நிர்வாகம் வந்ததன்பின் முஸ்லிம்கள் திரும்பிப்போக முடியும். புலிகள் எமக்குப் பொருட்டல்ல. ஆனால் எமது பிரச்சினைகளை அவர்களுடன் கதைப்பதைக் கோழைத்தனமாக கருதமாட்டோம். புலிகளுடன் இதன் பிறகு எமக்கு ஏதாவது உடன்படிக்கைகள் நிகழ வேண்டுமானால் அது சர்வதேச சமூகத்தின் முன்னிலையிலேயே நடக்க வேண்டும். இதுதான் எமது பாதுகாப்புக்கு பொருத்தமான உத்தரவாதம்.
கேள்வி புத்தளம் மாவட்டத்தில் புனர்வாழ்வு அமைச்சின் மீள்குடியேற்றத் திட்டம் பற்றி.P
பதில்: இந்த தற்காலிக குடியேற்றம் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுவதில்லை என்பது வடபகுதி முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் விதப்புரையாகும். இன்னும் ஒழுங்காகத் திட்டமிட்டால்தான் அவை கலாச்சார சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய உதவும். புனர்வாழ்வு அமைச்சின் இத்திட்டம் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நோக்கில் என்றால் தப்பில்லை. நல்லது. ஆனால் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் போக்கு சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. அவர்கள் மக்கள் இங்கேதான் மீளக்குடியமர்த்தப் படுகிறார்கள் என வெளிப்படையாகப் பல கூட்டங்களில் கூறியுள்ளனர். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட அண்மையில் (23.08.96) இந்த மீள்குடியேற்றம் நிரந்தரமானதா? தற்காலிகமானதா? என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
- அல்ஹஸனாத் -
24


Page 17
நாம் தய
நமக்கு ஏற்பட்டுள்ள அவல விரும்புகின்றனர்? ஒவ்வொரு இருக்கின்றனர். இந் நிலை மாற மீள வேண்டும் என்றே எல்லோ
அதனால் நாளை தாய வாழ்வதற்காக, இன்று சிரமத்ன தயாரில்லையே.
நமக்கு முற்றிலும் தெ சக்திதான் நமது பறிக்கப்பட்ட வேண்டுமென்று நாம் விரும்புகி
உண்மையில் எமது தாயகம் வாழ வேண்டுமென்றால் வென்றெடுப்பதற்கான போராட் வேண்டும்.
அதற்காக போராடும் கட எல்லோரும் அதற்குத் தயார்தா

ார்தானா?
மான நிலையை நம்மில் யார்தான் வரும் அதிருப்தி யோடுதான் ) வேண்டும். தாயக மண்ணுக்கு
ரும் விரும்புகின்றனர்.
க மண்ணில் உரிமைகளோடு தை மேற்கொள்ள நாம் எவரும்
காடர்பேயில்லாத ஏதாவதொரு - உரிமைகளை பெற்றுத் தர "ன்றோம்.
க மண்ணில் நாம் உரிமையோடு
அதற்கான உரிமைகளை -டம் நம்மிலிருந்து தான் துவங்க
டமை நம்முடையதே! என்ன நாம்
னா?