கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளைத்தோல் வீரர்கள்

Page 1


Page 2


Page 3

வெள்ளைத் தோல் வீரர்கள்
திசேரா
'காவுக்காக
வெளியீட்டகம்

Page 4
வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு) ஆசிரியர் - திசேரா, முதற்பதிப்பு 26 ஆகஸ்ட் - 2004, பக்கம் - 108, வெளியீடு - மூன்றாவது மனிதன் பதிப்பகம் 119/15, விவியன் குணவர்தன மாவத்தை வெல்லம்பிட்டிய (இலங்கை), தொலைபேசி - 077 3035803, முன் அட்டை உள்வடிவமைப்பு ஏ.எம்.றஸ்மி, உள் படங்கள் கிக்கோ.
விலை. 150/= மூன்றாவது மனிதன் பதிப்பக வெளியீடு - 20
VellaithoL Virrarkal (5hort Stories) Author : Thisera. First Ldition - 26Augest 2004, Pages 108VIII, PubLlished by- Moonravathu Manithan Publication, 119/I5, Vivian unavardena Mawatha, \Vellampittiya (Sri Lanka), Tele Phone - 077 3035802. Cover Designed, Layout AM: உazmy, Drawing Zikco. Price - 50/= Moonravathu Manithan Book Series - 20

வெள்ளைத்தோல் வீரர்கள்
உள்ளே ...
'ள்' என்பதனால்
01 - 08
09 - 16
1 1 1 1 1
3 : > * 8
17 - 27
28 - 33
1 |
34 - 40
41 - 46
சாவு கொண்ட நாள் இறக்கை விரித்த மரம் சிங்கக் குட்டிகளின் சொர்க்கம் ஒளிப் பொட்டின் விரிவு உணவு முறை குறித்த அறிக்கையும், பற்களின் பிரச்சினையும்
மூன்று மரணங்கள் பற்றிய முற்குறிப்பு... - மறைந்து போன உருக்கள் கண்ணியத்தின் காவலர்கள் கறுப்பு மரணம் வெள்ளைத் தோல் வீரர்கள் முகமணியும் மனிதன்
* *
47 - 54
55 - 68
69 - 77
1 1 1 1 1
78 - 83
84 - 89
90 - 99
| திசேரா III

Page 5

வெள்ளைத்தோல் வீரர்கள்
சில குறிப்புகள்
மூன்?சி மே இலேன்.கறேன்.
மூன்றாவது மனிதன் இதழின் ஆசிரியரும் நண்பருமான எம். பெள்ஸர் அவர்கள், திசேராவிற்கு இத் தொகுதிக்கான முன்னுரையை எழுதுமாறு என்னிடம் கேட்டபோது, எனக்கு ஒரு வகையில் திகைப்பாகவும் இன்னொரு வகையில் வியப்பாகவும் இருந்தது. திசேராவின் கதைகளை அவ்வப்போது . பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஏற்கனவே வெளிவந்திருந்த அவரது தொகுப்பொன்றையும் வாசித்திருக்கிறேன். ஒரு சில சிறுகதைகள், தொகுப்புக்கள் தொடர்பான விமர்சனங்களை அறிமுகக் குறிப்புக்களை எழுதி இருக்கிறேன் என்கிற தகுதி ஒருவருக்கு முன்னுரை எழுதப் போதுமா என்ற திகைப்பை எனக்கு ஏற்படுத்தியது. கூடவே திசேராவின் நூலுக்கு என்னிடம் முன்னுரை கேட்டதற்கான காரணம் என்ன என்ற வியப்பும் ஏற்பட்டது.
நண்பர் பௌசரிடம் காரணத்தைக் கேட்டேன் . 'அதுதான் திசேராவினதும், எனதும் விருப்பம்' என்றார் அவர். இதற்கு என்ன பதில் சொல்ல? மறுக்கமுடியாமல் ஒப்புக் கொண்டேன்.
ஒப்புக் கொண்டு விட்டாலும், தொகுதியைப் படித்து முடித்தபின் அது பற்றி என்ன எழுதுவதென்று முடிவு செய்வது மிகவும் சிரமமாக இருந்தது. தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரு கதைகளைப் பற்றியுமான எனது
அபிப்பிராயங்களைச் சொல்வதா? ஈழத் தமிழ்ச் சிறுகதைகளின் மத்தியில் திசேராவின் கதைகளுக்கு இருக்கக்கூடிய இடம் பற்றிப் பேசுவதா? அல்லது திசேரா என்ற படைப்பாளியின் படைப்புலகம் என்ன என்று கூறுவதா? என்ற என்னுடைய கேள்விகளுக்கு உடனடியாக என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.
நூலின் முன்னுரையிலேயே அதிலுள்ள படைப்புகள் தொடர்பான எமது
அபிப்பிராயங்களைத் தெரிவிப்பது நூலை வாசிக்கப்போகும் வாசகர்களுக்கு தேவையற்ற முற்சாய்வை ஏற்படுத்துவதாக அமையும் என்பது எனது பொதுவான அபிப்பிராயம். வாசகர்கள் சுயமாக தாமே தமது சொந்த அனுபவத்தை பெறுவதும், விமர்சகர்கள் சுயாதீனமாக நூலை விமர்சிப்பதும் முக்கியம் என்று கருதும் ஒரு நூலின் முன்னுரை, ஒரு போதும் இத்தகைய விமர்சனங்களை, அபிப்பிராயங்களை கொண்டிருக்கக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயமாக இருந்து வருகிறது. எனவே அதைத் தவிர்த்து விடுவதென்று முடிவு செய்தேன்.
0 திசேரா V

Page 6
வெள்ளைத்தோல் வீரர்கள் ஈழத் தமிழ் சிறுகதை இலக்கியத்துள் திசேராவின் கதைகளுக்குண்டான இடம் பற்றிப் பேசுவது கூட ஒருவகையில் மேற்கூறிய முற்சாய்வை ஏற்படுத்தி விடும் என்பதுடன், அது சற்றுக் காலத்திற்கு முந்திய முயற்சியும் கூட என்று தோன்றியது. இது அவரது இரண்டாவது தொகுப்பே என்பதுடன், அவர் இன்னும் பல சிறுகதைகளையும் படைக்கும் பணியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளம் படைப்பாளியும் கூட இதுவரைவெளிவந்துள்ள தனது படைப்புகள் மூலமாக அவர் தனக்கென ஒரு இடத்தை நிச்சயமாக பிடித்துள்ளார் என்றபோதும், அவரது இடம்பற்றிய ஒரு குறிப்பாக முன்னுரை அமைவது பொருத்தமான ஒன்றல்ல என்று எனக்குத் தோன்றியது.
படைப்பாளியான திசேரா அவர்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளி என்ற அளவுக்கும், சரிநிகரில் சிறுகதைகள் எழுதியவர் என்பதற்கும் மேலாக, உண்மையில் அவர் பற்றி அதிகமாக எனக்கு எதுவும் தெரியாது. சரியாகச் சொல்வதென்றால் அவரது கதைகளுடன் எனக்கிருக்கும் பரிச்சயமளவுக்கு அவருடன் நேரடிப் பரிச்சயம் இருந்ததில்லை. ஓரிரு சந்தர்ப்பங்களில் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டதோடு சரி. அதுவும் இலக்கியம் சம்பந்தப்பட்ட உரையாடலாக இருந்ததில்லை.
ஆகவே, சுருக்கமாக அவரது இத்தொகுப்பிலுள்ள கதைகள் மூலமாக வெளிப்படுகிற அவரது படைப்புலகம் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்வது மட்டுமே பொருத்தப்பாடுடையதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
安 安
திசேராவின் படைப்புலகம் எத்தகைய தன்மையை வெளிப்படுத்துகிறது? தன்னைச் சூழவுள்ள உலகு பற்றி, நிகழ்வுகள் பற்றி அதன் இயக்கம் தன்னுள் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றியெல்லாம் அது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றுகிறது? அந்த எதிர்வினைகளை அது வெளிப்படுத்தும் முறைமை என்ன? அந்தப் படைப்புலகில் படைப்பாளி தன்னை எவ்விடத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றார்? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேட முற்படுவது திசேரா என்ற படைப்பாளியை இனங்காண எமக்கு உதவும் என்று கருதுகிறேன்.
திசேரா, தான் வாழும் சூழலின் அனைத்து நிகழ்வுகளாலும் பாதிக்கப்படுகின்ற எல்லோரையும் போன்ற ஒரு நிஜ மனிதராக முதலில் தன்னை இனங்காட்டிக் கொள்கிறார். அச்சம் , கோபம், வெறுப்பு, விரக்தி ஆற்றாமை, நம்பிக்கை என்று மிக இயல்பான மனித உணர்வுகள் அவரது எதிர்வினைகளாக வெளிப்படுகின்றன. இந்த எல்லா உணர்வுகளூடாகவும் அவரிடம் விடுதலை உணர்வும், மனிதநேயமும் அடிநாதமாக நின்று செயற்படுகின்றன.
sega V

வெள்ளைத்தோல் வீரர்கள் கோட்பாடுகளுக்கும் சமூக நீதி நியாயங்களுக்கும் கட்டுப்பட மறுக்கின்ற எதிர்ப்புணர்வும் விடுதலை வேட்கையும் அவருக்கே உரிய பாணியில் மேற்சொன்ன உணர்வுகளாக வெளிப்படுகின்றன. அவருக்கே உரிய கோட்பாடுகளும், கருத்துக்களும் எப்படி இருப்பினும் வாழ்வு பற்றிய நம்பிக்கையை அவர் உறுதியாகப் பற்றி நிற்கின்றார். மரணத்தை வரவேற்கின்ற போதிலும் கூட என்பதை அவரது உலகுள் புகுந்து உலவும்போது தெளிவாகக்
5.T600TG)Tib.
முன் கிடந்த கல்லை உதைத்து. நடந்து கொண்டிருந்தேன். . அது என் வழியும் கூட (ஸ் என்பதால்) வாழ்க்கை குரூரமானதென மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டாலும் வாழ்வின் மீதான காதலை யாராலும் உதறி விட முடிவதில்லை' (சாவு கொண்ட நாள்)
மரம் செத்துப்போன மகிழ்ச்சியில் மரம் இருந்த இடத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த போது அண்ணன் தோளில் கைபோட்டு அழைத்துப்போனான்.
இறக்கை விரித்த மரம்)
நிஜத்துள் எங்கேயும் இப்படித் தீப்பற்றிக் கொண்டால் சந்தோஷமாய் இருக்கும். நனவாக்கப்படவேண்டிய தேவையாய் தோன்றிய உணர்வுடன்.
(ஒளிப் பொட்டின் விரிவு)
நம்பிக்கைகள் வாழ்வின் குரூரத்தனங்களாலும், அவமானங்களாலும்
கேள்விக்குறிகளாக்கப்பட்டாலும் ஆத்மாவினுள் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு
அணுவிலேனும் எதிர்பார்ப்புமிச்சமிருந்துகொண்டே இருக்கிறது.
(மறைந்துபோன உருக்கள்
இப்படி கதைகள் ஒவ்வொன்றிலும் அடையாளங்களைக் காணலாம். யுத்தக் கொடுமை, அதிகாரத்துவத்தின் பலமும் அது தன்னை நியாயப்படுத்தும் விதமும் ஆழமான கிண்டல், விரக்தி மற்றும் கோபம் கலந்த உணர்வுகளுடன் வெளிப்படுகையில் அவரது மனிதநேயம், விடுதலை பற்றிய உணர்வுகள் தெளிவாக மேலெழுகின்றன. சிங்கக் குட்டிகளின் சொர்க்கம், உணவு முறை குறித்த அறிக்கையும் பற்களின் பிரச்சினையும், கண்ணியத்தின் காவலர்கள், கறுப்பு மரணம் போன்ற கதைகளில் இவற்றை நேரடியாகக் காணலாம்.
அவரது படைப்புலகம் புலக்காட்சிகள், நிகழ்ச்சி அனுபவங்கள் என்பவற்றில் சாரத்தை சிந்தனைத் தளத்தில் வைத்து ஆராயும் தன்மையையும், அத் தளத்தினூடே உணர்வுகளை வெளிப்படுத்தும் இயல்பையும் கொண்டதாக அமைகிறது. வரலாறு அறிவியல், பட்டறிவு எல்லாவற்றினதும் சாரமாக தொகுக்கப்பட்ட சிந்தனைக் கீற்றுக்களில் பின்னப்பட்டவையாக இந்த உணர்வுகள் வெளிப்படுகின்றன.
0 #e8ezyor VII

Page 7
வெள்ளைத்தோல் வீரர்கள் இதனால் அவரது கதைகளில் பல புதிய உத்தி முறைகளினூடாகச் சொல்லப்படும் முறையில் படைக்கப்பட்டுள்ளன. வெள்ளைத் தோல் வீரர்கள், சிங்கக் குட்டிகளின் சொர்க்கம், கறுப்பு மரணம், மூன்று மரணங்கள் பற்றிய முற்குறிப்பு ஏன் முகமறியும் மனிதன் கதைகள் எல்லாம் இந்தத் தன்மையாகவே அமைகின்றன. இக்கதைகளின் குறியீட்டுத் தன்மையும் சொல்லப்படும் முறையும் புதிய சோதனை முயற்சிகள் என்ற அளவில் கவனிப்புக்கும் முக்கியத்துவத்திற்கும் உரியவையாகின்றன. அவை சொல்லப்படும் முறையினூடாக சிறுகதைகளின் வெளிப்பாட்டு முறையினை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் அவரது இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியது.
அதேவேளை இந்த முயற்சி, கத்தியில் நடப்பது போன்ற மிகவும் ஆபத்தான ஒரு முயற்சி என்பதை படைப்பாளிகள் கவனத்தில் எடுத்தாக வேண்டும். சிறிய கவனக்குறைவும் மிக எளிமையான ஒரு உருவகக் கதைக்கு உரிய ஸ்தானத்திற்கு சிறுகதையை வீழ்த்தி விடும். திசேராவின் இந்த முயற்சியின் பலம், பலவீனத்தை ஆராயும் பொறுப்பை வாசகர்களும் விமர்சகர்களும் எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.
திசேராவின் மொழி மிகவும் இறுக்கமும், ஆழமும் வாய்ந்தது. மெல்லிய எள்ளலுடன் கவனமாக செப்பனிடப்பட்ட தன்மையைக் கொண்டது. வரிகளுக்கிடையிலும் அர்த்தங்களை தாங்கி நிற்கும் சிறப்பினைக் கொண்ட நடை அவருக்கு கைவந்துள்ளது. மூன்று மரணங்கள் பற்றிய முற்குறிப்பு அவரது இந்த செட்டான நடைக்கு உதாரணமான ஒரு கதை என்று சொல்லலாம்.
சமூக கட்டுப்பாடுகள், சமூக நியாயங்களின் போலித்தனத்தை காக்கும் விதத்தில், சமூகமும் அதிகார மையங்களும் செயற்படும் விதத்தை எரிச்சலும் எள்ளலுமாக சாடுகின்ற அவரது உணர்வு, ஒடுக்கு முறைக்கும் பொய்மைக்கும் எதிராகக் கோபம் கொள்ளும் அவரது இதயம், மானிட விடுதலைக்காக ஏங்கும் அவரது பார்வை என்பவற்றுாடாக சமூக விழிப்புணர்வும், அக்கறையும், பொறுப்புணர்வும் தனது சிந்தனைக்கு நேர்மையானவருமான ஒரு படைப்பாளியாக தனது படைப்புலகினூடாக வெளிப்பட்டு நிற்கிறார் திசேரா.
அவரது பார்வையில் சமூக நியதிகள் மீதான அதிருப்தியும் கேள்விகளும் அவற்றின் மீதான எதிர்ப்புணர்வும் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றன. ஒரு படைப்பாளிக்குரிய அடிப்படையான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒருவராக அவர் நம்முன் நிற்கின்றார். இந்த எதிர்ப்புணர்வும், வாழ்வின் மீதான அவரது நம்பிக்கையும் அவருக்கு வாழ்வின் அந்தப் போக்குக் குறித்த தீவிர தேடலை ஊக்குவிக்கும் என்றும், அது அவரது வாழ்வு தொடர்பான பார்வையை முழுமையாக்கும் என்றும் நம்பலாம்.
Seserar VIII

வெள்ளைத்தோல் வீரர்கள் ஈழத் தமிழ் இலக்கிய உலகு இன்னொரு படைப்பாற்றல் மிக்க ஒரு படைப்பாளியை உருவாக்கி விட்டுள்ளதற்காக நிச்சயம் பெருமைப்படலாம். அவரிடம் உள்ளார்ந்துள்ள படைப்பாற்றல் எமக்கு மேலும் பல நல்ல படைப்புக்களை வழங்குமென நம்புகின்றேன்.
மூன்றாவது மனிதன் பதிப்பகம்' இந்த நூலை வெளியிடுவதன் மூலம் தனது தொடர்ச்சியான தமிழிலக்கியப் பணியில் இன்னுமொரு முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளது என்பதையும் நான் குறிப்பிட்டாகவேண்டும்.
இறுதியாக, தனது நூலுக்கு முன்னுரை எழுதுமாறு என்னை அழைத்தமைக்காக நூலாசிரியர் திசேராவிற்கும், நண்பர் பெளசருக்கும் எனது நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன்.
நன்றி
அன்பின், எஸ்.கே. விக்னேஸ்வரன். 12-07-2004.
வத் தளை.
O ണ്ടെത X

Page 8

வெள்ளைத்தோல் வீரர்கள்
'ள்' என்பதனால்
K) 7 pL
திசேரா /

Page 9
வெள்ளைத்தோல் வீரர்கள்
- 'ள்' என்பதனால்
அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். வழமையாக வரும் நேரமானதும் தேனீரைத் தயார் பண்ணி வீதியில் கண்களை வைத்திருப்பாள். போகமுடியாமல் போகும் நாட்களில் அவளது முகம் சிவந்து விடுவதாக அவளின் அம்மா சொல்வாள். அடுத்த தினத்தில் கோபிப்பாள். "இனிப் பேசப் போவதில்லை எப்போதுமே"
இரண்டு நிமிடத்தில் " ஏன் வரவில்லை" ஏதாவது பொய்க் காரணம் சொல்வேன்.
"உனக்கு பொய்கூட சொல்லத் தெரியாது' எனது வரவின்மைக்கான காரணத்தை அவளாகவே கூறுவாள். அது ஒன்றிரண்டு முறை மாத்திரமே தவறாக இருந்தது . பெரும்பாலும் உண்மையைக் கண்டுபிடித்து விடுவாள். நான் புகைத்த சிகரட்டுகளின் எண்ணிக்கை தொடங்கி, என் சிரிப்பு - அழுகை, கவலை எல்லாவற்றுக்கும் காரணங்களை அறிந்து வைத்திருந்தாள்.
நீ கவலைப்படுகிறாய் ஏனெனில், நீ அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறாய், நீ அவசரப்படுகின்றாய், ஏனெனில், நீ கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறாய்.
என்ற கவிதையையும், பெஞ்சமின் ஸஃபானியாவையும் அவள் தான் அறிமுகப்படுத்தினாள்.
எனை உட்காரப் பண்ணி சென்ற ஆண்டின் சாதனைகளையும், புத்தாண்டின் எண்ணங்களையும் வரையச் சொல்வாள். அவள் தாதியாய் இருந்ததாலோ என்னவோ, அவளது அணுகுமுறைகள் மெதுவானதாயும், இதமானதாயும் இருந்தன. என் கால்கள் பந்தில் அடிப்பட்டு - பந்தின் பின் ஒருவனின் கால் இருந்தது - பாதம் விலகி வேறுபக்கமானபோது காலைத்தடவி எண்ணை விட்டு சுளுக்கிழுத்து, என்னவெல்லாமோ வறுத்து கலவையாக்கி ஒத்தனம் கொடுத்தாள். காதை முறுக்கி விளையாடாமல் படிக்கச் சொல்வாள். பின்னர் மெதுவாக
[ திசேரா ?

வெள்ளைத்தோல் வீரர்கள் "விளையாடாமல் உன்னால் இருக்கமுடியாது. விளையாடு கவனமாய், காலுக்கு எதுவும் ஆகாமல்"
அவளைக் காணாமல் கதைக்காமல் இருக்க முடியாதிருந்தது. என்னால் தாங்கமுடியாது, என நான் கருதியவற்றைக் கூட ஏற்றுக்கொள்ளக் கூடிய சக்தி அவளிடமிருந்துதான் வந்தது. கண்கள் இரண்டும் வீசிய ஒளி நெற்றிப் பொட்டை அருட்டி நரம்புகளுடாக உடலெங்கும் பரந்து திரட்சி தந்தது. என் வாழ்க்கையைக் கூட அண்ணளவாய் அவள்தான் ஓட்டிக்கொண்டிருந்தாள். என் நண்பர்களெல்லாம் அவளது நண்பர்கள். அவள் எப்போதும் இனிமையாகக் கதைப்பதாகவும், குறைவிடாமல் உபசரிப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள். வீட்டில் எல்லோருக்கும் அவளைத் தெரியும். அவள் எனக்கு யார் என்பதும், எனை எப்படி மாற்றியிருக்கிறாள் என்பதும் கூடத் தெரியும். அப்பா இறந்த போதும், அம்மப்பா இறந்திருந்த போதும் வந்து அந்நியப்பட்டு நின்று கொள்ளாமல் வேலைகளெல்லாம் செய்தார்கள். காலைச் சாப்பாட்டுக்கு இடியப்பமும், சம்பலும் கூடக் கொண்டு வந்து தந்தார்கள். ஆனாலும் செத்த வீட்டுக்கு வருமுன்பிருந்தே என் சொந்தங்களுக்கு அவர்களெல்லோரையும் தெரிந்திருந்தது.
நானும் அவளும் கடைக்குக் கிளம்பினோம். அவளை அழைத்துக் கொண்டு சென்றுவர யாரும் இல்லாததனால், தன்னை அழைத்துப் போகும்படி நேற்றே கூறி இருந்தாள். நாளை அவளின் கல்வியகத்தில் நடைபெற இருக்கும் விழாவிற்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்து விட வேண்டுமெனவும், முன்புறம் நீளாமலும் - கட்டையாய் சுறுளாமலும் இருக்கும் தலைமயிரைச் சீர்படுத்திக்கொள்ள வேண்டும். என்ற நோக்கில்தான் கிளம்பினோம். இதற்கு முன்னம் பெண்கள் யாரையும் ஏற்றிக் கொண்டு சென்றதில்லை. அம்மாவுக்குச் சைக்கிளில் இருக்க முடியாது. அக்காவைச் சிறியவளாய் இருக்கும்போது ஏற்றிச் சென்றிருக்கின்றேன். அதுவும் மனதுக்குள் ஏசிக் கொண்டுதான், எனை தூக்கம் கவ்வும் போதுதான் அவளுக்கும் வகுப்புகள் இருக்கும். எனது கால்கள் பெடலை எட்டமுடியாத நிலையில் கஷ்டப்பட்டு வகுப்புகளுக்கு கொண்டு போய் விட்டிருக்கிறேன், வெள்ளைப்பால் இறக்கத்திலும், நடராஜா டீச்சர் வீட்டுக்கு முன்னும் விழுத்தியும் இருக்கிறேன். இவற்றை விட சந்தைக்கருகில் நிற்கும்போது நகரினுள் வெடித்த குண்டுக்குப் பயந்து மிதித்ததில் முன்னே போய்க்கொண்டிருந்த கிழவரை இடித்து விழுத்தியும் இருக்கின்றேன். இதன் பின் அவள் தானாகவே சைக்கிளோட்டக் கற்றுக்கொண்டாள். எனக்கு இப்போது சைக்கிள் தொடர்பான சகல வல்லமைகளும் வந்துவிட்டது. கையை விட்டு ஓட, "பிரேக்கே" இல்லாத சைக்கிளில் ஓட. இன்னொன்றைப் பிடித்துக்கொண்டு இரு சைக்கிள்களைக் கொண்டு சேர்க்க எனவும், இன்னும் பல திறமைகளும் கைவந்துவிட்ட பின்னர் அவளை ஏற்றிச் செல்கிறேன்.
மனது அலைந்தது. வரண்ட நிலப்பரப்பில் குளிர்க்காற்றின் வீச்சம் கண்டது. தளர்வு கண்ட மனம் இளகி சந்தோசத்தில் துடித்தது. என்னை நம்பியும் ஒருத்தி. எனை
0 திசேரா 3

Page 10
வெள்ளைத்தோல் வீரர்கள்
நம்பி ஒப்படைக்கப்படும் பொறுப்புக்கள். அவளது தலைமயிர் பறந்து என் முகத்தில் படும்போதெல்லாம் அவளை மிகவும் நெருங்கியவனாகிப் போய்விட்டதாய் உணர்ந்தேன். இனங்கண்டு கொள்ள முடியாத சந்தோச உணர்வுடன் வேகமாய் பல முகங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தேன், சென்று கொண்டிருந்தோம். தெரிந்த - தெரியாத முகங்களெல்லாம் கலப்புண்டு கிடந்தன பிரித்துணர முடியாமல், எல்லா முகங்களும் அறிமுகப்பட்டவைபோலவே இருந்தன. எங்களால் பின்னோக்கித் தள்ளப்பட்ட முகங்களில் அதிகமானவை உற்றுநோக்கிக் கொண்டுதான் கடந்துசென்றன.
கடைக்குச் சென்று இறங்கினோம். அவளுக்கு ஏற்கனவே அறிமுகமாயிருந்த கடையாக இருக்க வேண்டும் என அவளது கதையாடல்களினூடாக ஊகித்துக் கொண்டேன். எனைக் காட்டி ஒருத்தி ஏதோ கேட்டாள். இவள் சிரித்து விட்டுப்பதில் சொன்னாள். என்னவாக இருக்குமென்பதை ஊகித்துக் கொண்டதனால் சுவரில் அசையாமல் ஓடிக்கொண்டிருந்த குதிரையை அவதானித்தேன். தொடர்ந்து உரையாடலுடன் பொருட்களை வாங்கினாள்.
"அபி." எனை அவ்வாறுதான் அழைப்பாள். "இது நன்றாய் இருக்குமா"? "உனக்குப் பிடித்திருக்குமானால்" "உனக்காக எதையும் செய்யமாட்டாயா"?
அவளுக்குப் பிடித்த நிறமொன்றில் தொங்கவிடும் அலங்களிப்பானை வாங்கினாள். அது எனக்கும் பிடித்துத்தான் இருந்தது.
"நல்லநிறம் - அழகானது" "உனக்கெல்லாம் நல்லதுதான். நட சலூனுக்கு" விரைவாய் நடந்தாள். அவளின் பின்னே நானும்,
காற்றைக் கிழித்து, முகங்களைத் தள்ளி சைக்கிள் போனது. சலூனைத் தாண்டியே நிப்பாட்டச் சொன்னாள். எச்சரிக்கை உணர்வு - மனது கேட்டது. ஏன் பயப்படவேண்டும். நானோ, நண்பர்களோ இப்படியான எச்சரிக்கையுடன் கண்ணைத் திருப்பி யாரையும் தேடுவதில்லை, "ன்" - "ள்" ஆகும்போது எச்சரிக்கைப்பட அதிகமிருந்தது.
சலூனுக்கு முன் நின்றவர்கள் கிண்டல் பேச்சுடன் விரிந்து கொண்டார்கள். அந்த விரிவு எனக்குமட்டுமோ, அவளுக்கு மட்டுமோ உரித்தானதல்ல. இருவருக்கும். உள்ளே தலை முடியைத் திருத்த, தாடியை வழிக்க யாரும் இருக்கவில்லை. தலை சீவிக்கொண்டிருந்தவன் மட்டும் இழித்துக்கொண்டு வெளியேறினான்.
f #eerr ø.

வெள்ளைத்தோல் வீரர்கள் இங்கு வருவதற்குப் பயமாம், அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு,
அவளது விம்பத்துக்கு மட்டும் தெரிய, முன்னுக்கு நீட்டிக் கொண்டிருந்ததை வெட்டும்போதே அழகில்லாமல் போய்விட்டதாம்.
எனக்கு காதருகில் முடி சுருண்டிருந்தால் முடிவெட்டிக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதென்றால் சலூனில் வெட்டிக்கொள்வேன். யாருக்கும் தெரியாமல் வெட்டிக் கொள்வதில்லை. இவளும் கூட வெட்டிக் கொள்ளலாம். அது
معاملا) للاسا (656) ل6 وك
"போவோமா"?
மீண்டும் இருவரும் சைக்கிளில், அவள் தலைமயிர் என் முகத்தில் படர, தெரிந்து தெரியாத முகங்களைக் கடந்து விரைந்தோம். எங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கூட்டமாய் ஒருமித்த முகங்களும், தனியான முகங்களும் பறந்தன.
அம்மா அழைத்திருந்தாள் கிழமையொன்றாக அவளைப் பார்க்கச் செல்லாததால் இருக்கலாம். அவசரத் தகவல்களின் பொருட்டு இப்படி அழைப்பு விடுப்பாள். பெரும்பாலும் அவள் அழைப்புக்கெனக் காத்திராமல் அவளிடம் இருக்கும் தகவல்களைப் பெறச் சென்று வந்து விடுவேன். இக்கிழமைக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதாக இருக்கலாம். சுருங்கிய முகத்துடன்,
"வா" என்றாள்
"தேனீர்"
"வேண்டாம்." "யாரையோ சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திரிகிறாயாம்" "யார் தெரியுமா? "நான் உனது அம்மா - தெரியாமல் இருக்காது." "மகனைச் சந்தேகப்படும் தாய்." "அவளைக் கட்டப்போவதாகக் கதையடிபடுகிறது." "ஊர் ஆயிரம் கதைக்கும்"
"உனக்கும் புத்தி தேவை." அது நன்றாக இருப்பதாக உணர்கிறேன்" "சொந்தக்காரர்கள் கூடக் கேட்டார்கள்." "முட்டையில் மயிர்பிடுங்க எல்லோருக்கும் விரும்பம்."
கூரான ஊசியொன்றுடனும், முடிவில்லா நூலைக் கொண்டும் அலைய வேண்டும். இரு உதடுகளையும் சேர்த்துத் தைத்துவிட்டு மெளன உரையாடல்களில் எல்லோரையும் திணித்து விட்டால் புண்ணியம்.
t ൧ത 5

Page 11
வெள்ளைத்தோல் வீரர்கள்
எனக்குப்போல அவள் இனிப்பானவள் எல்லோருக்கும். வாய்க்குள் போட்டு மென்று கொண்டிருந்தார்கள்.
விடுதியில் கட்டிலில் சாய்ந்திருந்தபோது கஜன் - நண்பன் கேட்டான். "நீ அவளை ஏற்றிக் கொண்டு போனாயா?
"கடைக்கார அக்கா சொன்னாள்."
விரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்காதவர்களிடமிருந்து அவளைப் பற்றிய கதையாடல். அவளிடம் கூட நிறையப்பேர் கேட்டிருக்கலாம். இதுவரை அவள் சொல்லவில்லை. நான் நொந்துவிடுவேன் என்ற மெளனம்.
அங்கு நுழையும் போது ஒவ்வொருமுறையும் புதிதாய்ப் பிறப்பேன். குறும்பும், விளையாட்டும் முளைவிடும் மூலைகளில் கிடந்த சந்தோசமெல்லாம் திரட்சியடையும். அங்கிருந்த சக்தியொன்று எனை வசப்படுத்தி விட்டதாக உணர்வு உறுத்தியது.
நான் வீட்டுள்நுழையும்போது அவள் இல்லை. அவள் அம்மா நின்றாள். எனக்குப் பெரியம்மா அவள் கடைக்குச் சென்றிருப்பதாகச் சொன்னாள். நேற்று வராததையிட்டு கண்டிப்புடனும், அதிகாரத்துடனும் கேட்டாள். நான் அம்மாவிடம் சென்று வந்தமையிட்டு சந்தோசித்தாள். குடும்ப நிலவரம் பற்றியும், சுகதுக்கங்கள் பற்றியும், இருவரும் சம்பாசித்துக் கொண்டிருக்கும்போது அவள் சில பொருட்களை இட்ட பையுடன் வந்து சேர்ந்தாள். சிரிப்புடன் தேனீர் ஊற்றி வருவதாகக் கூறி எனை அமர்ந்திருக்கப் பணித்துவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தாள்.
மீண்டும் பெரியம்மா தான் விட்டதிலிருந்து கதையைத் தொடங்கி இருக்க வேண்டும். எனக்குள் அவள்-அம்மா - கடைக்கார அக்கா - கஜன் - பெரியம்மா - அவள் - அம்மா . உருவங்கள் பெண் - பெண்" என்ற பின்னணியுடன் வலம் வந்து கொண்டிருந்தார்கள். பெரியம்மா கதைத்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் விட்ட இடத்திலிருந்துதான் தொடர்ந்தாளா. அவள் கதைக்கின்ற வார்த்தையில் கவனம் செலுத்துபவள் என்பதால் விட்ட இடத்திலிருந்துதான் தொடர்ந்திருப்பாள். அவள் விட்ட இடம் ஞாபகமில்லை. தொடங்கிய இடத்தில் நான் இல்லை. எனக்குள் சுழன்ற விம்பங்களும், பின் குரலும் எனை எங்கோ கொண்டு சேர்த்தது.
அவளை அறைக்குள் இட்டுப் பூட்டினார்கள், முன் கதவில் "ஆண்கள் இங்கே நுழையாதிருப்பார்களாக" வாசகம் ஒட்டப்பட்டிருந்தது. வீதியெங்கும் சுவரொட்டி "திருமணத்தின் பின் மட்டும் ஆண் - பெண் கதைக்கலாம், பார்க்கலாம்" தலையில் வெயில் சுட நடக்கிறேன். நேற்று முடிவெட்டிய சலூன் முன் அதன் பெயருடன் புதிதாய் சிவப்பு நிற வாசகம் "ஆண்களுக்கு மட்டும்" ஆண்கள் தனியாய் அல்லது மனைவியுடன் சைக்கிளில், தலையைக் குனிந்த வண்ணம் பெண்கள்.
| (r 6

வெள்ளைத்தோல் வீரர்கள்
பெரியம்மா "அப்படித்தானே" என்றாள். அவளின் கதையை நான் கவனிக்கவில்லை. என்பதை அவள் உணரவில்லைபோல், என்ன சொல்வது எனத் தடுமாறிய போது அவளை ஒருகுரல் அழைத்துப் போனது. அது அவளின் அக்காவினுடையது.
தேனீருடன் வந்தவள் "என்ன" என்றாள் "ஏன்? ஒன்றுமில்லை."
"நல்லவார்த்தை" "இல்லை நீயார்?" என்றேன்
"Gugger"
"அக்கா" "வேறு உறவுமுறை இருக்கின்றதாம்" "எனக்கும் தெரியும்" "நீ என்னிடம் சொல்லவில்லை." "அனாவசியமானது எனக்கருதினேன்."
胃 f
"எனக்கும் உனக்கும் புரிந்தால் போதும்" எதுவும் தோணவில்லை, சிந்திக்கின்றேன். முன்னர் இருந்த பின் குரல் அரட்டுகிறது.
"நீ பெண்ணாய்ப் பிறந்தது பற்றிச் சிந்தித்திருக்கிறாயா?" நிறைய நிறைய வார்த்தைகளுள் அடக்க முடியாத வண்ணம், அம்மா அடிக்கும்போது, நீ பெண்பிள்ளை தானே எனக் கேட்டுக் கொள்வாள். மேல்சட்டை பொத்தான் பூட்டப்படாமல் இருக்கின்றபோதும், தூங்கும் போது, முழங்கால் தெரிவது கண்டு, சிரிக்கும்போது, நண்பர்களுடன் கதைக்கும் போது, அண்ணன் இரவாகி வீடு திரும்பும் போது எனப் பலதடவைகளில்
நினைத்தபடி வாழமுடியாததையிட்டு அழுவதாகச் சொன்னாள். இதுவரை முடிந்ததில்லை. இனியும் முடியப் போவதில்லை. என்ற நிலைக்கு வந்த போது சிரிக்க - சகிக்கப் பழகியதாகச் சொன்னாள்.
"நடக்கப் போவதையோ, நடந்ததையோ யாரோ தீர்மானிக்கின்றார்கள். நமது தோள்களிளெல்லாம் சிலுவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. விரும்பியதை இயலுமானதைச் செய்ய ஆசைப்படுகிறோம். அவைகள் அனுமதிக்கப்படு வதில்லை."
"தத்துவம் கதைக்கிறாய்"
| (r 7

Page 12
வெள்ளைத்தோல் வீரர்கள் "எனக்குத் தெரியாது, ஏதோ நினைப்பு, ஏக்கமும் கூட, இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதே - இதெல்லாம் சகஜம்."
எங்களின் கதையாடல் தொடர்ந்து கொண்டே போனது. சூரியன் மறைந்து, இருள் கவிழ்ந்து கொண்டதனால் புறப்படச் சொல்லித் தள்ளினாள்.
அவள் அடிக்கடி சொல்லும் வசனம் ஞாபகத்துள் நீண்டது. "பிரிவு தற்காலிகமானது மட்டுமல்ல அன்பைப் புரியவைப்பதும் கூட" புறப்பட்டேன். "அக்கா வருகிறேன்" - கிண்டலுக்குச் சொன்னேன். இன்றுதான் முதல் முதலாக அக்காவென அழைத்தேனாக இருக்க வேண்டும்.
"நாளை கட்டாயம் வா"
இழந்து போன வெறுமையுடன் நடக்கின்றேன். மனம் திரும்பச் சொன்னது. அம்மா இன்னும் பலருடன் வந்து துரத்தினாள். ஓடிவிடு - ஓடிவிடு, வேகமாய் நடக்கிறேன். அக் கா - நண் பியை நாளை சந் திக் கும் போது கதைப்பதைப் பற்றி நினைத்துக்கொண்டு தூரத்தே குரைக்கும் நாயைப் பொருட்படுத்தாமல் முன் கிடந்த கல்லை உதைத்து சிறுபிள்ளைத் தனத்தில் நடந்து கொண்டிருந்தேன். அது இருப்பிடம் செல்லும்வழி, என் வழியும் கூட.
பங்குனி 2000
0 திசேரா ?

வெள்ளைத்தோல் வீரர்கள்
சாவு கொண்ட நாள்
[ திசேரா 9

Page 13
வெள்ளைத்தோல் வீரர்கள்
ட் சாவு கொண்ட நாள்
குண்டுகள் எங்காகிலும் வெடித்துக் கொண்டே இருக்கின்றது. அமைதியாகக் கருதக்கூடியதாக ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் வெடிக்கின்றது. யார் வைக்கின்றார்கள், எங்கு எப்படிக் கொண்டு செல்லப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாவண்ணம் வெடிக்கின்றது. அல்லது கண்டெடுக்கப்படும் போது அது குண்டுகளாக இல்லாவிட்டாலும், கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் அவை குண்டுகள் தான் பெற்றியும், ஒரு துண்டு வயரும் இருப்பின் அது குண்டு எனவும், அங்கு ஊடுருவல் நடந்திருக்கின்றதெனவும் இனங்காணும் பொழுதுகள் இவை.
ஆனால், இங்கு வெடித்தது உண்மையான குண்டுதான். சில அதிரடியான உடைகளையும், சாதாரணச் சட்டை ஒன்றையும், சேட்டையும் கொண்றிருக்கின்றது. இதன்போது அதிரடி உடைகள் மரணித்தது பற்றி அதிசயப்பட ஏதுமில்லை. ஏனெனில், இது அவர்களுக்காக, அவர்களின் வரவுக்காக வைக்கப்பட்டதால் குறித்த அவர்களின் பயணப் பாதையில் வெடித்தது. அவர்களைப் பாவம் என்பதற்குமில்லை. அவர்கள் அம்மணமாக இருந்திருப்பின் அல்லது சாதாரணமாகவே மனிதனாக இருந்திருப்பின் "பாவம்" என மனம் வருந்திக் கொண்டோ, ஒரு துளிக் கண்ணிராகிலும் சிந்திக் கொண்டோ போயிருக்கலாம். அவர்களது உடை கரடுமுரடானது.வியர்வையை நக்கி எடுக்கக் கூடியது. இரத்தச் சுவையை - கறையை அறியத் துடிப்பது, பெண்களின் அங்கங்களைத் தடவத்துடித்துக் கொண்டிருப்பவை இதனால் அவைகள் இறக்கும் போதெல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதை விடவும் அவைகள் அழிக்கவெனக் கொண்டுவரப்பட்டவையாகவே கருதப்பட்டன.
அந்த உடல்கள் கிடக்கும் நிலை, ரசிக்கக் கூடியதாக இருந்திருக்காது. ஏதோ ஒரு அங்கம் குறைவு பட்டவையாகவே கிடந்திருக்கும். வீதியெல்லாம் இரத்தம், காலில் குருதியை ஒட்டிக் கொள்ளாமல் மறுபக்கம் போகமுடியாதளவு பரவிக்கிடந்திருக்கலாம். ஒருகால் எலும்பு - சதையுடன் போக, தோல் மட்டும் கோது போலவும், மற்றுமொரு கால் யாருடையதென்று இனங்காண முடியாமலும் கிடந்திருக்கலாம். இது வழமையும் கூட
கடை அலுமாரியின் கண்ணாடியில் சதைத்துண்டொன்று சப்பென்று ஒட்டிக்கீழே விழுந்தது. கண்ணாடியில் அதன் தடம் தெரிந்தது. குண்டு பிளவுபடும் கணத்தில் () ൧ന്ന ഗ

வெள்ளைத்தோல் வீரர்கள்
தள்ளிய காற்றில் சுவர்கள் சரிய ஒட்டுத்துண்டுகள் பறந்தது. இந்த சத்தத்தில் தான் குண்டு வெடித்திருக்கின்றதெனத் தெரிந்தது. அதிர்வின் பரவலில் இரண்டு, மூன்று கடை தள்ளி நான் அமர்ந்திருந்த சாப்பாட்டுக் கடையின் அலுமாரி திறவு பட்டு உழுந்து வடையொன்று கீழே விழுந்தது. மேசை மீது தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த குவளை நீரைச் சிந்தியது. "கல்" மழை கொட்டுவது போல, மேலே ஒட்டில் துண்டுகள் கொட்ட தூசுகள் என் தலைமேல் இறங்கியது. நானிருந்ததற்கு முன் மேசையில் தேனீர் குடித்துக்கொண்டிருந்த சிலர் எங்கோ மறைந்தார்கள். அந்தக் கடையின் பின் புறம் பற்றி யாதுமே அறிந்திராத நான் தெரிந்த முன் வழியால் செல்லவும் பயந்து வாயைத்திறந்து விழி பிதுங்க நின்ற நிலை பின்னர் நினைக்கும் போதும் எனக்குச் சிரிப்பு வந்தது.
அங்கு வேலை செய்த பையன், என்னைக் கூப்பிட்டுக் கொண்டே வீதியைக் கடக்க முயல வெடிச்சத்தத்தில் கீழே விழுந்தான். அதன் பிறகும் வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. கடையில் முதலாளியாக இருந்த அம்மா கத்திக் கொண்டு இரு காதுகளையும் பொத்திக் கீழே குந்தினாள். கடையின் அலுமாரியினூடு குண்டு பயணித்த போது கண்ணாடியும் வடையும் துண்டு துண்டாய்ச் சிதற சுவரில் பட்டு குழியாக்கியது. இப்படியே சன்னங்கள் மாறிமாறிப் பாய கீழே குப்புறப் படுத்துக் கொண்டேன். வெளியில் ஐயோ அம்மா" என்ற சத்தம் வெடிச் சத்தத்துக்கு போட்டியாக கேட்டுக்கொண்டே இருந்தது. வெளியேற, முன் கதவால் போனால் நானும் செத்துத்தான் விழ வேண்டும். அப்பா இல்லாத என் அம்மாவை, யார் பார்த்துக் கொள்வது. குழந்தை குட்டியோ, மனைவியோ எனைப் பார்த்திருக்க இல்லாததால் பரவாயில்லை. இருந்திருந்தால் அவர்கள் கதி அம்மாவை யாராவது அவளின் தங்கையோ, தம்பியோ பார்த்துக் கொள்ளக் கூடும். என்னை எப்படியும் புதைத்து விடுவார்கள்.
தவழ்ந்து கொண்டு உட்பக்கம் செல்ல, அது சமையலறை, கடந்து சென்றால் கிணறும், மலசல கூடமும் இருந்தது. சுற்றி மதில் இருந்ததால், அதில் பாய்ந்து போக வீட்டுக்காரர்கள் கத்திக் கூச்சல் போட என்னை மட்டுமல்லாமல், சத்தம் போட்ட வீட்டுக்காரரையும், என்னவென கேள்விகூட கேட்காமல் சுட்டு விடுவார்கள் தெரியாத பகுதிக்குள் குதிக்கவொண்ணாமல் தடுமாறிய வேளை சமையலறைக்கு வரும் கதவால் வந்த சன்னம் இரு தகரங்களைத் துளைத்து கிணற்றுப் பக்கம் போனது. எதிலோபட்ட சன்னமொன்று வேகமிழந்து எனதருகில் விழ, உடல் எகிறித் தலை கதவு நிலையில் பட்டு வலியெடுத்தது. நான் செத்துப் போகத்தான் வேண்டும் சாவதைவிட சாவுக்கு முன்னான, கண் இமையில் ஊசி குத்தலும், குதிகாலில் ஏறும் ஆணியும், சிரைக்கப்பட்ட மொட்டையும்தான் கண்முன்னே நின்றது. இந்த நிலையில் சுட்டுக் கொன்று போடப்படுவேன். ஆனாலும் தப்பிக்கத் தூண்டியது வாழ்க்கை.
குசினிக்குள் என்னை விட உயரமாக, "சீலிங்குக்கு" ஒரு அடி ஒன்றரை அடி
! My 7

Page 14
வெள்ளைத்தோல் வீரர்கள் குறைவாக விறகு அடுக்கப்பட்டிருந்த இடம்தான் சரி. நீர்த்தாங்கியோ, சாமான்கள் மூடப்பட்டு சாக்குகள் நிறைந்த இடமோ சரிவராது. விறகுக்கு மேலால் ஏறி சுவர் ஓரமாகக் குப்புறப்படுத்துக் கொண்டு, எப்போதும் போர்த்திக்கொள்ள அம்மா தரும் சேலையை பக்கத்தில் கிடத்துவதற்குப் பதில் பெரிய வீரக்கட்டை இரண்டை என்னை மறைப்பது மாதிரி வைத்துக் கொண்டேன். வெடிச்சத்தம் முடிவதாக இல்லை வெடிச்சத்தம் நின்ற போது ஏதோ வாகனம் வந்து நின்றது. யார் யாரோ குதிப்பதாய்க் கேட்டது. வாகனமும் சத்தத்தை நிறுத்திக் கொண்டது. மீண்டும் வெடிச் சத்தம் பொங்கி எழுந்தது. இப்போது வெடிச்சத்தத்துக்கு எதிராகவோ, நிகராகவோ சத்தம் எதுவும் கேட்கவில்லை. சத்தம் போடக் கூடியவர்கள் என்னைப் போல மறைவிடமாக ஒழிந்திருக்கலாம். அல்லாமல் போனால் மெளனமாய் செத்துப் போயிருக்கலாம். வெடிகள் ஓய்ந்து போக காலடிச் சத்தமே கூடுதலானது. ஆரவாரப் பட்டுக் கொண்டு காலடிகள் பரவியது என்னையும் நெருங்குவது போல கடைக்குள் நுழைந்தது. ஏதோ குறியீட்டுப் பாணியில் சம்பாசித்துக் கொண்டு நெருங்கியது. திடீரென நானில்லய்யா" என்ற பெண்குரல், கடையின் முதலாளியம்மாவாக இருக்க வேண்டும். அவள் தான் வெடிச்சத்தத்துக்கு பயந்து கீழே ஒழிந்திருந்தவள்.
"எனக்குத் தெரியாதய்யா" "என்ன விட்டிருங்கைய்யா" "கையெடுத்துக் கும்பிடுகிறேன்" "புள்ள குட்டிக்காரி சாமி".
அவளது வேண்டுதலை விளங்கக் கூடியதாக இருந்தது. அதற்கு அவன்கள் ஏதோ பாசையில் உறுக்கிக் கதைத்தார்கள். "பாவம்" என்று அவன் கதைத்திருந்தாலும் தெரியாது. ஆனால் அப்படி இருக்க முடியாது. அப்படி அவனுடைய தொனியும் காட்டவில்லை ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டியது போல் இருந்தது. கோபத்தில் ஒருவன் கண்ணாடியில் அடித்திருக்க வேண்டும். கண்ணாடிக்கே உரித்தான சத்தத்துடன் அது உடைந்து ஒலி எழுப்பியது. காலடிகள் இப்போது என்னை நெருங்கி வந்தன. தகரத்தால் மறைக்கப்பட்ருந்த பின் பகுதியில் எட்டிப் பார்த்து திரும்பி ஏதோ சொன்னான். இப்போது தண்ணிநிரப்பப்பட்டிருந்த நீர்த்தாங்கியில் தட்டும் சத்தம் கேட்டது காலடிச் சத்தங்கள் திரும்பி ஒலிந்தன. எனதுயிர் எங்கிருந்தோ வந்து விட்டதாகத் தோன்றியது. மீண்டும் அவளை அதட்டும் சத்தம் கேட்டது. அவளால் இப்போது எதையும் கதைக்க முடியாமலும், அடக்க முடியாமலும் இருந்திருக்க வேண்டும். வாய்விட்டு அழுத சத்தம் மட்டுமே இழுப்பட்டுக் கொண்டு போனது. இந்த இழுவை அவர்கள் அழைத்துக் கொண்டு செல்லவில்லை. இழுத்துக் கொண்டு செல்கிறார்கள் எனக் காட்டியது. அவளது அழுகை மேலோங்கி இருந்தபோது வெடிச் சத்தமொன்று அதைத் தணித்து விட்டது. மீண்டும் காலடிச் சத்தங்களோடு வெடிச்சத்தமும் தொடர்ந்து கேட்டது.
என்னைப் பிடித்திருந்தாலும் இப்படித்தான் இழுத்துக்கொண்டு சுட்டிருப்பானுகள்
[ திசேரா 2

வெள்ளைத்தோல் வீரர்கள் காலையில் நாய்களோ, காகமோ தீனிக்காக சுவைத்திருக்கும் காகங்கள் முன்னமே தலைகளை அடிக்கடி கிழித்து விட்டுப் பறக்கும். அம்மா சொல்வாள் சனியன் கழிந்துபோனதாய். இந்த நேரம் அம்மா ஊர் முழுக்கத் தேடிக் கதறி இருப்பாள். இனிப் போக முடியாவிட்டாலும் காலையில் ஓடிப்போய் முதல் வேலையாக வெற்றிலை வைத்துக் கேட்டிருப்பாள். அவனும் கண்ணை மூடி உயிரோடுதான் இருக்கின்றேனென்று சொல்லியிருப்பான். அவனைப் பொறுத்த வரையில் அம்மாவைத் திருப்திப் படுத்த வேண்டியது முக்கியமாகும். அவள் கண்கள் சிவந்து இருந்ததும், கழுத்திலுள்ள கழலையையும் கண்டு செத்துப் போயிருக்கலாம்" என்று சொல்லியிருந்தாள். அவளும் செத்துப் போய் விடுவாள் என்று அவன் பயந்து போய், பொய் சொல்லியிருக்கலாம் அம்மாவினது கழுத்தில் இருக்கும் கழலைக்கட்டி அவளைப் பாவமாகக் காட்டும் முன்னரே சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் அது இப்போதும் வளர்ந்து போய் இருந்தது. அதே போல முதலாளிப் பெண்ணுக்கும் கழலை இருந்தது. அவளது உடலை நாய்கள் நக்கி இருக்காது. இப்போதெல்லாம் நாய்களே, முதலில் தலைமறைவாகி விடுகின்றன. முதல் இந்த உடுப்பைக் கண்டால் குரைத்துக் கொண்டே இருக்கும். கடிக்கவும் பார்க்கும், குரைப்பது கூடப் பிரயோசனமில்லாமல் போனபோது பயம் கவ்விக் கொண்டதால் அவைகள் மணத்தை நுகர்ந்தே தொலை தூரத்தில் நின்று கொள்கின்றன.
ஒன்றிரண்டு வாகன இரைச்சல் கேட்டது. நுளம்புகள் காதுக்குள் பறந்து கத்தியது. கையைத் தூக்கி அடிக்கப் பயமாக இருந்தது. கடிக்கும்போது மெதுவாக அந்தப் பாகத்தை ஆட்டிக் கொள்ளவே முடிந்தது. ஆனாலும் மீண்டும் வந்து குத்திக் கொண்டு தும்பிக்கையை நீட்டிக் குத்தியது. கடை திறந்து கிடக்கு. யாரும் வந்தாலும் தெரியாது. யார்தான் வரப் போகின்றார். சில நேரம் யாராவது என்னைப் போல ஒழிந்து இருக்கலாம். கையைத் தூக்க விறகுக்கட்டை விழலாம். அதுவே காட்டிக் கொடுத்து விடும். பின்னர் அவ்வளவுதான் இதையெல்லாம் யோசித்துக் கொண்டே நுளம்புகளைக் குத்த விட்டு பேசாமல் இருந்தேன். கண்களை மூடும் போதெல்லாம் சுடப்பட்டு யாரோ செத்துக் கிடந்தார்கள். சில வேளைகளில் கடைக்கார அம்மா போலும், முன் மேசையில் இருந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் போலவும் மாறி மாறி வந்தது.
அப்பா செத்து பிணத்தைக் கிடத்தி இருந்த போது அம்மா தலையில் அடித்துக் கத்தியது போலவே, ஆஸ்பத்திரிக்கு முன் ரோட்டில் சுடப்பட்ட பலர் கிடத்திக் கிடக்க எனக்கருகில் கிடந்த பிணத்தின் பின் மண்டையில் மஞ்சள் கூழ் வடிந்தது. இன்னொன்றுக்கு கண்ணுக்குள்ளால் வெடி பாய்ந்து இருந்தது. சில முண்டங்கள் கூடக் கிடந்தன. இப்படித்தான் தலையை வெட்டி வேலிக் கட்டையில் குத்தி விட்டுச் செல்வார்களாம். தோட்டத்து வெருளி" போல் இது பயமுறுத்துமாம். பெண்களோ, சிறு பிள்ளைகளோ, சில ஆண்களும் கூட நினைவழியும் வரை அப்பக்கம் போகமாட்டார்கள். திடீரென என் தலை கூட வேலிக்கட்டையில் குத்தி இருந்தது. கண் திறந்தே கிடக்க கன்னம் ஊதி அழகாக இருந்தேன். இந்த முகத்துடன் பெண்
ர திசேரா க

Page 15
வெள்ளைத்தோல் வீரர்கள்
பார்க்கப் போயிருந்தால் திருமணமாகியிருக்கலாம். சில வேளை காதலித்துக் கொண்டாவது இருந்திருக்கலாம். அவளும், நானும் கண்களால் பேசிக் கொண்டு மெளனத்தை மொழியாக்கி எத்தனை கவிதைகள் எழுதியிருப்பேன். ஆனால், இந்நிலையில் அவளது கதி. கவலைக்குள் பயம்பிடித்துக் கொள்ள, நுளம்பு குத்தியது.
காகங்களும், குருவிகளும் கத்திக்கொண்டு எங்கெல்லாமோ பறந்து பலரைக் கூட்டிக் கத்தியது. எனக்கு மட்டும் பயம் தெளிந்தபாடில்லை. எலி மூத்திரமடித்த நாற்றம் தடவும் போதுதான் தெரிந்தது. நான் செத்துக்கிடந்த போதோ, எனது தலை வேலிக் கட்டையில் குத்தப்பட்ட போதோ, பயத்தில் ஆடை நனைந்திருக்க வேண்டும். வயிற்றுள் பசி கத்தியது. வாங்கி மேசையில் வைத்திருந்த தேனீரைக் குடிக்க முன்னமேயே அது நிகழ்ந்து விட்டது. வெடிப்பட்ட வடையை நினைக்கும் போது பசி தொலைந்து போக, பயந்தான் கவ்வியது. பசியைத் தாங்க முடியாமல் அழுது, சுடச்சுட மரவள்ளிக் கிழங்கையும், சம்பலையும் தின்று விட்டுப் படுத்த அந்த நாட்களிலெல்லாம் பசி அடக்க முடியாததாகவே இருந்தது. அடியில்லாத தகரடின்னைத்தேடி எடுத்து மார்கழி வெள்ளத்துக்குள் இறங்கி மின்னிக் கண்ணனைப் பார்த்து டின்னை வைத்து கைக்குள்ளால் அள்ளி எடுத்து மீன் வளர்க்கும் ஆசையில் விளையாடும்போது கூட பசிக்கு ஓடிவந்து மரவள்ளிக் கிழங்கைத் தின்று, அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணியைக் குடித்து விட்டு குப்புறப்படுத்து பசியை அடக்கிய பொழுதுகளிலும், சோறுதான் தெய்வமாய்ப் போயிருந்தது. இப்போதெல்லாம் உயிரே தெய்வமாகிப் போனது.
"வாழ்க்கை குரூரமானதென மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டாலும் வாழ்வின் மீதான காதலை யாராலும் உதறிவிடமுடிவதில்லை"
இந்தக் கவிதை தான் ஞாபகத்துள் இருந்தது. அம்மா மடிக்குள் படுத்து "பசி பசி" எனக் கத்திக் கொண்டு மண்ணைக் காலால் உதைக்க வேண்டும் போல இருந்தது. விறகுக் கட்டை ஒன்று கூட கீழே விழுந்தது.
கண்ணாடி அலுமாரி திறந்துதான் கிடந்தது. அது திறக்கப் படாவிட்டாலும் உடைந்த கண்ணாடிக்குள்ளால் கையை விட்டு எடுக்கலாம். பத்து வடையாவது சாப்பிடலாம். அதற்காகப் பத்து வடைப் பசி என்பதற்கில்லை. அதற்கு மேலான பசி. இது நேற்றுப் போட்ட வடையாக இருக்க வேண்டும். நூல் இழுபடுவதாக இருந்தால் சாப்பிட முடியாது. ஆனால் ஏதோ ஒன்றைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வடையைப் பிளக்க நூல் இழுபடவில்லை. ஐந்து வடையை இடைவிடாது சாப்பிட்டு ஆறாவது வடையைக் கடிக்க முயலும் போது விக்கல் எடுத்துக் கொண்டது. பசியின் கோரப் பிடியில் கடிக்க முனைகையில் கடிக்க முடியாமல் இருந்தது.
| ൧ന്ന

வெள்ளைத்தோல் வீரர்கள் பசியின் வக்கிரத்தை பற்களில் காட்டிக் கடிக்க, வடையில் இருந்து ஏதோவொன்று முரசில் குத்தியது. கொச்சிக்காய் காம்பு தைத்து நின்றது. நாக்கால் தடவ சிறுகுச்சி போல இருந்தது. வயிறு இன்னமும் பசியால் அழுதது. வாய்க்குள்ளிருந்து வீணி வடிந்தது. வாய்க்குள் குத்தியதை எடுக்க கையை எடுக்கும் போது, கையிலும் குத்துப்பட்டது. கண் விழிக்க தெரிந்தது. நான் கடித்தது வடையில்லை விறகுக் கட்டை என்று, உமிழ்நீர் விறகுக் கட்டையில் விழுந்து, அதுக்குள் வழிந்து கொண்டிருந்தது. விறகு அடுக்கிலிருந்து மெல்ல இறங்கி நிற்கும் போது தலை சுற்றிக் கொண்டு வந்தது. இருண்ட மேகம் கண்ணுக்குள்ளால் பறந்து போய்க் கொண்டிருந்தது. சுயமாக நிற்கவொண்ணாமல் விறகடுக்கில் சாய்ந்து நின்றேன். வயிறுக்கு ஏதாவது தேவைப்பட்டது. எனக்கெதிரில் நீர்த்தாங்கி நிரம்ப தண்ணீர் இருந்தது. தண்ணீருக்குள் வாயை வைத்து உறிஞ்சினேன். அப்படியே தலையையும் அதற்குள் முக்கி எடுக்க நன்றாக இருந்தது. தலைநீர் உடம்பில் படும்போது உடல் ஒரு தரம் சிலிர்த்துக் கொண்டது,
இன்னமும் முன்னால் போகபயமாக இருந்தது. பிற்பகுதியில் ஒருபக்கச் சுவரால் ஏறிக் குதிக்க எண்ணி கால் அந்தப்பக்கம் நோக்கி இழுத்தது. மதிலில் காலை வைத்துக் கொண்டு இருக்கும்போது, அந்த வீட்டுக் கிழவன், எதேச்சையாக வெளியே வந்தவன் என்னென்னமோ சொல்லித்திட்டினான். - பசி காதை அடைத்திருந்ததனால் எதுவும் கேட்காமல் போனது - எதையும் சொல்லிக் கொள்ளவும் முடியாமல் நா குடலுக்குள் புதைந்து போனது. ஆனால், என்னை இறங்கி போகச் சொல்லி ஏசுகின்றான் என்று பட்டது. நெற்றியில் மூன்று கோட்டில் இட்டிருந்தபட்டை சுருங்கி விரிந்தது. மதிலில் குத்தி இருந்த வலது கையை எடுத்து கடையையும், அவனது வீட்டையையும் காட்டி வீட்டுப்புறமாக வெளியே போக வேண்டும் என்றேன். ஏதோ நினைவு வந்தவன் போல உப்புறமாகப் போனான். போகச் சொல்லித்தான் போகின்றான். எனத் தெரிந்து ஒற்றைக் காலையும் தூக்கி மதிலில் போட்டு கிடையாகக் கிடக்க உள்ளிருந்து தும்புத்தடியுடன் வந்தவன் வலது தோட்பட்டையில்\தும்புத்தடிக் கம்பைக் குத்தித் தள்ளினான். கையைப் பிடித்து நிற்க பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்த போது, செத்துப் போய் விட்டேன் எனப்பட்டது எழும்ப முடியாமல் இருக்க முள்ளந்தண்டு உருவுப்பட்டு மண்ணுக்குள் புதைத்து விட்டது போலிருந்தது. மெல்ல கைகளை ஊன்றி நிமிர்ந்து இருக்க శ్లో தோற்றுப்போய், இரண்டாம் முறை வென்றேன். சுவரின் உதவியுடன் கிழவனாய் மூதாதை போல குனிந்து கொண்டே நிற்க முடிந்தது.
மற்றைய வீட்டுக்காரனும் என்னைத்தள்ளிவிடத் தயாராக நிற்க, தாயும் ஏசுவதாகவும் புலப்பட முன்வழி தஞ்சமென நடந்து தகரக் கதவையும் விறகடுக்கு, நீர்த்தாங்கி கடந்து கதவு நிலையில் சாய்ந்து தலையை மட்டும் வெளியே நீட்டும் போது மேசையில் ஈக்கள் மட்டும் கூட்டம் போட்டு இருந்தது. ரோட்டில் யாரையும் காண முடியாமல் இருக்க பயமும், பசியும் வயிற்றைச் சுருட்டியது. இந்தப் பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டு இருக்குமோவென எண்ணும் போதே மீண்டும் அந்த
() ൧ന്ന 6

Page 16
வெள்ளைத்தோல் வீரர்கள் இருண்ட மேகம் கண்ணுக்குள்ளால் பறக்க, கதவு நிலையை இறுக்கிப் பற்றித் தஞ்சமெனச் சாய்ந்தேன். பெண்கள் ஓடக்கூடிய சைக்கிளில் ஒரு உருவம் போனது. அது ஆண் என இனங்கண்டு கொள்ள முடிந்தாலும், அவனது வயதையோ, உருவத்தையோ மதித்துக் கொள்ள முடியாமல் கண் மங்கிப் போயிருந்தது. இதற்கு மேல் உயிரைப் பெரிதாக நினைக்க முடியாமல் வெளியே, பசி - பயவெறியுடன், நெஞ்சைக் குண்டு துளைக்காத கவசம் போலாக்கி நடந்தேன். சாதாரணத்தையும் விடக் குறைவாகவே நடமாட்டம் இருந்தது. குண்டு வெடிப்புத்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். வீட்டுக்குத்தான் நடக்க வேண்டும். நடந்து கொண்டே போக முடியாத தூரம், பின்னுக்குத் திரும்ப ஆயுதங்களுடன் சந்தியில் இரண்டு, மூன்று உருவம் நின்று முன்னுக்குத் திரும்பி ஒரு அடி எடுத்து வைக்கவும், டும்" - பெரிய சத்தம்மொன்று பசி அடைத்திருந்து காதைத் துளைத்து செவிப்பறையையும் கிழித்து என்னைத் தூக்கிப் போட்டது.
கண்ணைத் திறக்க முடியாமல் இருந்தது. இமைகள் நடு நடுங்கி மேலே விரிய அம்மா தெரிந்தாள். இன்னமும் நாக்கு வெளியே வரவில்லை. புதைந்துதான் கிடந்தது. நாக்கை வெளியே இழுத்து விடுமோமென கையைத் தூக்க முயல, அம்மா, என்னமோ சொல்லி கையைப் பிடித்துக் கொண்டாள். கையை ஆட்ட வேண்டாமென்கின்றாள் போல. எனக்கு மேலால் சேலைன்" போத்தலொன்று முடியும் தறுவாயில் தொங்கியது. அம்மாவின் கண் சிவந்து இருந்தது. கால்மாட்டில் இன்னும் பலர் நின்றிருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் கண்டபோது பயம் போனது, நாக்கு ஒருவாறு இழுபட்டு மேலே வந்தது, மெல்லமாக பசி" என்றேன். அம்மா சிரித்தாள். என்னால் சிரிக்க முடியாமலேயே இருந்தது. தலையைத் தடவிக் கொடுத்தாள். உயிர் தலைக்கூடாக இறங்கி பரவி உடல் சிலிர்த்தது.
ஐப்பசி 2000
| (്ത് 6

வெள்ளைத்தோல் வீரர்கள்
த்த மரம்
இறக்கை விரி
தினகரன /

Page 17
வெள்ளைத்தோல் வீரர்கள்
இறக்கை விரித்த மரம்
அது ஒரு மரம் பெரிதாக அடர்ந்திருந்த மரம். புத்தனும், பிள்ளையாரும் குந்தி இருந்து ஞானம் பெறவும், பெண் பார்க்கவும் மறந்து போன மரங்களில் இதுவுமொன்றாக இருந்தது. அவர்களைக் குந்த வைக்க யாருக்கும் தோணாமல் போனதுதான் அதிசயமாயும் இருந்தது.
வேதாளங்கள் தலைகீழாகத் தொங்கி கீச்சிடும் இரவுகளில், கேட்டல் புலனுக்கு அப்பாற்பட்ட ஒலியை எழுப்பி பறந்தும் திரிந்தன. இவைகளைக் கூட சுட்டுத் தின்னவெனவும் ஒரு கூட்டம்.
இந்த மரம் அப்பாவித்தனத்தினதும், பயங்கரத்தினதும் குறியீடாகவும் இருந்தது. இதில் குடியிருந்த காக்கைகளையும், ஊர்ந்து திரிந்த எறும்புகளையும் , பொந்துகளுள் கிடந்த பாம்புகளையும் எண்ண முடியாது. பருவமாற்றக் காலங்களில் வந்து தங்கிக் கிடக்கும் கொக்குகளும், சிவப்பு வெள்ளையிலான பறவைகளும் ஏராளம். என்னதான் அடைக்கலம் கொடுத்தாலும் இந்த மரம் பயங்கரமாய்த்தான் இருந்தது. முன்னமொரு காலப்பகுதியில் காக்கை எச்சங்களுக்கு மட்டும் பயந்து நிழலாறிய இடம். இந்நிழலே வெயிலேற்றத்தில் பறந்து எல்லோரையும் கவ்விப்பிடிப்பதாக ஓடி மறைந்தார்கள்.
இதற்கு பல பெயர்கள் இடப்பட்டிருந்தாலும் இது அரசமரந்தான் என அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் அதைப் பேய்மரம், தூக்கு மரம் என அறிந்து கொண்டேன்.
காற்றுப் பலமாக அடித்துக் கொண்டிருந்த வெள்ளிக்கிழமை இரவொன்றில் கோயிலுக்குப் போய் திரும்பி வரும் போது பேயாட்டம் ஆடி ஆணி வேரைப் பிடுங்கிக் கொண்டு துரத்தி வந்தது. அதை விட தலை தெறித்துப் போக நானும், அண்ணனும் ஓடி வந்து விட்டோம். அன்றிலிருந்து இரண்டு தினங்களாக காய்ச்சல் பிடித்திருந்தது. அன்றைய தினம் முதல் அதன் கீழான பாதையைத் தவிர்க்க வேண்டுமென எண்ணினாலும் அது முடியாததாகவே இருந்தது. அம்மரம் பிரதான வீதியில் ஆஸ்பத்திரிக்கு அருகாமையிலும், பெரியம்மாவின் வீட்டு ஒழுங்கைக்கு முன்னாலும் இருந்தது.
0 திசேரா ற

வெள்ளைத்தோல் வீரர்கள்
இன்னுமொருமுறை தலையில் பாதிப்பந்தளவில் இருந்த கட்டை ஆஸ்பத்திரியில் வெட்டி விட்டு வரும் போது அந்த மரத்துக்குக் கீழ் போக நேர்ந்தது. ஏற்கனவே கட்டு வெட்ட வைத்திருந்த கத்தியைப் பார்த்துப் பயந்து கத்தத் தொடங்கி இருந்ததால், வெட்டி முடிந்த பின்னரும் வலியுடன், அந்த அழுகையுடன், பயமும் தொடர்ந்திருந்தது. மரத்தைக் கண்டபோது அழுகை இல்லாவிட்டாலும் பயம் இருந்தது. என் அழுகையைத் தணிக்க அப்பா பலூன் வாங்கித் தருகிறேன் என்றார். அழுகை நின்றிருந்தாலும், இனி வராமல் தடுத்து - விம்மலைத் தணிக்கவும், மகிழ்வுபடுத்தவுமெனக் கேட்டார். வேண்டாமென்று. தூக்கிவைத்திருந்த அம்மாவினது கழுத்தை இறுகப்பற்றிக் கதறினேன்.
பரவாயில்லை வாங்கித் தருகிறேன் என மரத்துக்குக் கீழ் நின்ற வண்டிக்காரனிடம் வாங்கித் தந்தார். தரும்போது பயமாக இருந்தாலும் பலூனின் மீதிருந்த ஆசையினால் வாங்கி வைத்துக் கொண்டேன். சிறுபிள்ளைக்கே உரிய சுயநலத்துடன் யாருக்கும் கொடாமல் நானே விளையாடினேன். அதை அழுத்தும்போது உள் அழுந்தி - மீளுருப்பெறுவதையும் ரசித்தேன். தட்டி மேல் நோக்கிப் போனவை என்னிடம் திரும்பி வருவதில் சந்தோசித்து விளையாடிக் கொண்டிருக்கும் போதே தூங்கியும் போனேன். கடைசியாக என்ன விளையாட்டில் தூங்கினேன் என ஞாபகமில்லை. விழிப்புத் தட்டிய போது இரவு, மிகவும் கோர இருளுடன் கூடிய நடு இரவு.
வேட்டைப்பல் முளைத்த வெள்ளை முயல்கள் ஆடிக் கொண்டும் தாவிக் கொண்டும் திரிந்தன. என்னைக் கடிக்கவென கோர் வாயைத் திறந்ததும், பயம் உச்சிக்கேறியது. கத்தினேன். வீரிட்டுக் கத்தினேன். அப்போதும் இரத்தம் வடியும் . பற்களுடன் அவை அங்குதான் நின்றன.
அம்மாவும், அப்பாவும் எழுந்து கொண்டார்கள். வேட்டைப் பல்லுடன் இரத்தம் வடியும் வெள்ளை நிற முயலைக் காட்டிக் கத்தினேன். அம்மா "குப்பி" விளக்கை பற்றவைக்க, அப்பா என்னவெனக் கேட்க கையினால் சுட்டிக்காட்டும் வேளை முயல்கள் இல்லை. விளையாடிக் கொண்டிருந்த பலூன்கள் தான் கிடந்தன. இது அந்த மரத்தினுடைய வேலை என எனக்குத் தெரியும். பயந்துவிட்டதாகக் கூறி அம்மா விபூதி பூசி படுக்க வைத்து முதுகில் தட்டினாள். அன்றுடன் போன் ஆசை இன்றுவரை பலூன் மீது வந்ததில்லை. இது மாதிரியாக பல இரவுகளுள் இந்த மரம் என்னை குலுக்கி தூக்கி, பந்தாடி தூக்கத்தைக் கொண்டு போனது. இதற்கு அபூர்வசக்தி இருக்கின்றதெனக் கருதுகின்றேன்.
இதைவிடச் சற்றுப்பருமனில் குறைந்திருந்தாலும், இதைப்போலவே அந்த மாமரமும் இருந்தது. அவற்றின் வயதுகளைக் கணக்கிட்டுச் சொல்லக்கூடிய வயது
[ திசேரா ந

Page 18
வெள்ளைத்தோல் வீரர்கள்
எனக்கில்லாதது முதல் பிரச்சினையாக இருப்பினும் அரசமரத்துடன் ஒப்பிடுகையில் மாமரத்துக்கு சக்தி இல்லை என்றே கூற வேண்டும்.
குறிப்பிட்ட அந்த மாமரம் எங்கள் வளவின் மூலையில்தான் நின்றது. நான் இப்படி ஒப்பிட்டுக்கூறக் காரணமும் இருந்தது.
புயல் வருமாம் என அப்பா கூறும் போதே ஆறுமணியளவில் வாசலுக்கு முன்னிருந்த நிழல் மரவள்ளி சாய்ந்து போனது எவ்வளவு முயன்றும் எப்போதுமே ஏற முடியாதிருந்த நிழல் மரவள்ளியின் உச்சிவரை பயணிக்க முடிவதையிட்டு சந்தோசித்தேன். அதன் காய்களைக் குண்டு" விளையாடவென பவுடர்" டின்னுக்குள் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தேன். மழைத்துளி பாரமாய் மண்ணுள் பாய்ந்து கொண்டிருந்தது. காற்று துரத்தி வந்ததனாலேயே மழைத்துளிகள் சுறுசுறுப்பாய் மண்ணுள் இறங்கிக் கொண்டிருந்தது. என்னுள்ளும் கூட ஊசியாய் இறங்கியது. அப்பா அழைத்து சத்தம் போடாமல் கதிரையில் இருக்கச் சொன்னார். நேரத்துடன் சாப்பிட்டுவிட்டு படுக்கும்படி அம்மா குசினிக்குள் இருந்து கத்தினாள்.
அம்மா மடிக்குள் படுத்திருந்த எனக்கு மாமா தூக்கும்போது விழிப்புத் தட்டியது. எங்கள் வீட்டை விட்டு இன்னுமொரு வீட்டுக்கு ஓடிப் போனோம். ஒடும்போது அக்கா ஆ. எனக் கத்தினாள். கையில் எதுவோ கிழித்த காயத்திலிருந்து இரத்தம் வடிந்தது.
இன்னுமொருமுறை விழிப்பு வந்தபோது அப்பா, மாமா - இன்னுமிருவருமாக நான்கு பேர் வீட்டுக்கூரை சீற்றை" பிடித்துக் கொண்டிருந்தார்கள். முன்னம் ஓடிய வீடு இதில்லை. அது குடிசை, இது கல்வீடு. இப்படியே அந்த இரவு விழிப்பதும் உறங்குவதுமாய்ப் போனது.
காலையில் பெரிய அண்ணன் இரவு நடந்த கதையெல்லாம் சொன்னான். அதுதான் சூறாவளியெனவும், புயல் கோரமானதெனவும். அது எல்லாவற்றையும் வீழ்த்தி விடும் எனவும் சொன்னான். அதனால் தான் நமது வீடு தரைமட்டமாகிப் போனதெனவும் கவலையுடன் சொன்னான்.
வளவின் மூலையிலிருந்த மாமரம் புடுங்குண்டு கீழே கிடந்தது. அது வீழ்ந்து மட்டும் கிடக்கவில்லை. கீழே சாய்ந்து ஆணி வேர் மையத்தைச் சுற்றி சுழன்று பின்னர்தான் இப்படிக்கிடக்கின்றது. அதற்கான அடையாளங்கள்தான் அருகிலிருந்த சின்ன மரங்கள் முறிபட்டும், விழுந்த அடையாளம் மண்ணில் தெரிவதும் - அக்கா அழகாய் சொல்லிக் காட்டிக் கொண்டே அவளொரு மாங்காயை எடுத்துக் கொண்டு எனக்கொன்றையும் துடைத்துத் தந்து யாருக்கும் தெரியாமல் உண்ணுமாறு பணித்தாள்.
|' (ന്ന് 20

வெள்ளைத்தோல் வீரர்கள்
பெரும்பாலும் எல்லா மரங்களும் வீழ்ந்து தான் கிடந்தன. ஆனால் இந்த அரசமரம் மட்டும் ஒரு கிளையை முறித்து விட்டு கம்பீரமாய் நின்றது. அது கூடச் சிறிய கிளைதான். அதன் மேல் கிளையின் இடுக்குள் ஒரு குழந்தையை வைத்திருந்தது.
அக்குழந்தைக்கு உனையொத்த வயது' என்றாள் அம்மா. குழந்தைக்குள் மழைத்துளி நுழைந்து உப்பச் செய்து இருந்தது.
இடம் பெயர முடியாத இதனால் எப்படிக் குழந்தையை எடுத்து வர முடிந்தது. சில வேளை கீழே போய்க் கொண்டிருந்த தாயிடமிருந்து பறித்து விட்டதோ,
இனிமேல் இதன்கீழால் என்னைக் கொண்டு வர வேண்டாமென்று அம்மாவிடமும், எல்லோரிடமும் சொல்ல வேண்டும். கொணர நேர்ந்தாலும் இறுக்கிப் பிடித்திருக்கும் படியும் கூறியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் எனதுயிருக்கு உத்தரவாதமளிக்க (Լplգն III3;l.
இது நிறையப் பேரைத் தின்று, மழையைக் குடித்துவிட்டுத்தான் இப்படிப் பருத்துக் கிடக்கின்றது. இதற்காகவேனும் கிளைபரப்பி வளர்ந்திருக்கின்றது. இதற்கு அபூர்வசக்தி இருக்கின்றது. எல்லா மரமும் வீழ்ந்து கிடக்க இதனால் மட்டும் எப்படி நிமிர்ந்து நின்று ஜீவிக்க முடியும்.
எனக்குத் தெரிந்த சகல அறிவுகளுக்கும் எட்டிய வரையில் பருத்த உருவம் இந்த அரச மரந்தான்.
மனிதர்களில் கறுப்பாய், வெள்ளையாய் பலர் உலாவிக் கொண்டு திரிந்தார்கள். ஆனாலும் இதன் பருமனுக்கு இல்லை. அப்படியான உருவமொன்றுதான் அதில் கட்டப்பட்டுக்கிடந்தது. மரத்தையும், அந்த உருவத்தையும் சுற்றிக் கட்ட ஐந்தாறு முடிச்சுக் கயிறு தேவைப்பட்டிருக்கும் சின்னண்ணன் அறிமுகப்படுத்தினான், இது தவராசா மாமா என்று. என்னை அண்ணன் தூக்கி வைத்திருந்தது போல குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டும், யாரையும் தூக்கி வைத்திராமல் தனியே நின்றும் பலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த மரத்தைப் புரிய முடியாமலேயே இருந்தது. அவரை எப்படி இழுத்து வந்து கட்டி கொன்றிருக்கின்றது. ஏன் அதற்காக அவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தன்னைவிட அவர் பருத்துவிடுவாரென்று பொறாமையாக இருக்குமோ?
சுற்றி நிற்பவர்கள் பார்த்துக் கொண்டு மட்டுமிராமல் பல பல அபிப்பிராயங்களையும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கதைப்பது பற்றி சரியான விளக்கம் கிடைக்காவிட்டாலும் கொஞ்சங் கொஞ்சம் விளங்கியது.
| My

Page 19
வெள்ளைத்தோல் வீரர்கள் "துரோகி." ". இருபத்தையாயிரம்."
இந்த திடீர் திடீர் சொற்கள் எந்தவித அறிவையும் தராவிட்டாலும் இவற்றைத் தொகுத்தறிய வேண்டிய நிலைக்குள் இருந்தேன், இந்தப் பெருமனிதன் இருபத்தையாயிரம் ரூபாய்க்கு இம்மரத்தை வெட்டி விடத் தீர்மானித்திருக்கலாம். இதனால் கோபமுற்ற மரம் இவரைத் துரோகியாக்கிக் கொன்றிருக்கலாம்.
இதைவெட்டிப் போட வேண்டும் என என்னுள் துளிர்விட்டுக் கொண்டிருந்த எண்ணம் இவரையும் ஆக்கிரமித்து இருக்கின்றது.
என்னுள் சுருண்டிருந்த வெறுப்பு இவரைத் தொடக் காரணம்.
புயலன்று இது தூக்கி வைத்திருந்த பிள்ளை இவருக்குரித்தானதாக இருக்குமோ அதற்காக கோபத்தில் மரத்தை வெட்டி இல்லத்தாக்க நினைத்தது நியாயம் தான். ஆனாலும், இவர் எப்படி மாட்டிக் கொண்டாரெனத் தெரியவில்லை.
அடுத்தது என்னைக் கொல்லத் தீர்மானம் எடுத்திருக்கின்றதோ தெரியவில்லை. என்னை விடவும் அதை வெட்டிவிட வேண்டுமென எண்ணம் யாருக்கும் வியாபித்திருக்காது.
நான் சின்னவனாக இருப்பதனால் அதற்கு கொல்லுதல் இலகுவாயிருக்கும். சிறியதொரு கிளையால் ஒரு அடி அடித்தோ, கவர் துண்டொன்றை கழுத்துள் வைத்து இறுக்கி கொன்று போடமுடியும். நான் இப்படி நினைத்துக் கொண்டாலும் எப்படி என்னைக் கொல்வதென்று அது தீர்மானம் எடுத்திருக்கின்றதோ தெரியவில்லை. அதை நினைக்க, நினைக்க சரியான பயமாய் இருந்தது.
இந் நினைவுகளில் தலை குழம்பிப்போய் இருக்கும் போதுதான் இடமாற்றம் வந்திருப்பதாய் கூறி அப்பா எங்களை அழைத்தும் போனார். அது சந்தோசத்தை அளித்தது. அந்த மரம் இடம்பெயர முடியாமையினால் அங்கு வருவது சாத்தியமில்லை என்பது சந்தோசத்தை வர்க்கமாக்கியது.
இநத ஊர் என்றுமே என் கனவுக்குள் அகப்படாத இடமாக இருந்தது. ஆண், பெண், குழந்தைகள் என எல்லோருமே சுருட்டுக் குடிக்கப் பழகி இருந்தார்கள். அதிலும் காலை வேளைகளில் "மண்டான் சுருட்டு" எனப்பட்ட மிகப் பெரும் சுருட்டை பாவிக்கப் பழகி இருக்க வேண்டும். நிறையப் புகைகளை ஊதித் தள்ளினார்கள். ஆனால், அப்பா சொன்னார் நீ புகையை சுருட்டுத்தான் குடிக்கின்றார்கள் எனத் தீர்மானம் எடுத்தது பிழை என்றார். அது குளிரினால்
) ൧ന്ന ze

வெள்ளைத்தோல் வீரர்கள்
வரும் ஆவி நீயும் ஊதிப்பார், உனது வாயிலிருந்தும் நீ புகை எனக் கூறிய ஆவி வரும் என்றார். இப்படியாக அந்த ஊர் நிறையக் கற்றுத் தந்தாலும் குளிரைக் காட்டி நடுங்கவைத்துக் கொண்டிருந்தது.
இப்படியாக குளில் மட்டும் நடுங்கிக் கொண்டிருந்த எனக்கு பயமும் நடுக்கமும் ஆரம்பித்தது. மறந்து போக நினைத்துக் கொண்டிருந்த அரசமரத்தை அந்த நகரின் அண்டிய பகுதியில் காணப்பட்ட கருப்பந்தைல மரம் என அழைக்கப்பட்ட யூகலிப்பிரஸ் மரங்கள் ஞாபகமூட்டின. அரச மரளவிற்கு தடித்திராவிட்டாலும் ஓங்கி வளர்ந்தே இவை பயமூட்டின. இப்பயத்தைக் கூட இவை நேரடியாக ஊட்டவில்லை. அந்த மரத்தை ஞாபக மூட்டியே பயமுறுத்தின. சாதுவானதாக கரடுமுரடற்ற அழகாய் நீண்டிருந்தாலுங் கூட பயம் தொடர்ந்திருந்தது. இதற்குப் பயந்தே பஸ்ஸில் போக அப்பாவிடம் காசு கேட்டேன். பஸ்ஸினுள் இருக்கும்போது எப்படியும் இதைக் காணக்கிடைக்காது அல்லது பார்க்கத் தேவை இராது. பாடசாலை விட்டு பஸ் வராது போனால் நடந்து வர நேரிடும் வேளை அப்பகுதியை நெருங்கும் போது என்னபாடல் பாடிவரினும் பயம் மூலையில் குந்தியே இருக்கும்.
இப்படியாக ஒருநாள் வரும்போது அம்மரப்பகுதியில் இரு பாம்புகள் பிணைந்து நின்றன. இதே மாதிரியே அரசமரத்துக்கு சற்றுத்தள்ளி இருந்த எண்ணம் பாலைக்கருகில் சாரையும், நாகமும் வாலில் நின்று கொண்டு பிணைந்ததை நானும் அக்காவும் கண்டு பாடசாலை செல்லப் பயந்து திரும்பி ஓடி இருக்கின்றோம். இதைப்பார்த்தபோது, எண்ணம் பாலையில் இருக்கும் வெள்ளை நிறப்பூவின் மணம் மூக்கைத் தாக்கியது. அன்று மட்டுமன்றி அதன்பின் நாட்கள் ஒவ்வொன்றிலும் அந்தப் பூவின் மணம் வீசியது. பலராய் நடந்து கொண்டிருக்கும் போது கூட அம்மணம் என் நாசியை மட்டுமே துளைத்தது. என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த மணம் கூட புலக்காட்சியில் எண்ணம் பாலையையும், அதன் சூழலையும், அரசமரத்தை விகாரமாகவும் காட்டியது.
அக்கொலை மரம் தொடர்பான எண்ணங்கள் இப்போது அதிகமாகவே வந்தன. அது எப்படியும் என்னைக் கொன்றுவிடும் என்ற பயம் தலை தூக்கிக் கொண்டிருந்தது. எப்படியும் இறத்தல் உறுதி எப்போவாக இருந்தாலென்ன என சாந்தப்படுத்தினாலும் பயம் குளிருடன் சேர்ந்து நடுங்கிக் கொண்டுதான் இருந்தது. வரவர இந்த நினைப்பு வலுப்பட்டதே தவிர, குறையவில்லை.
ஒரு நாள் நான், அக்கா, அண்ணன் எனவும், நாங்கள் இருந்த வீட்டுப் பிள்ளைகளுமாக கொய்யா மரத்தில் காய்பறித்துக் கொண்டு வந்திருந்தபோது எனக்குக் கிடைத்த காய் வாயை விடப் பெரிதாக இருந்ததால் கடிக்க முடியாமல் இருந்தது. வெட்டி உண்ண கத்தி தேவைப்பட்டது. என்னை விடவும் இளையவனான வீட்டுக்காரப் பையன் மேசைக்கத்தியால் வெட்டி உண்டான். அக்காவிடம் கேட்டபோது புதிதாக வாங்கி இருந்த முனைப் பக்கம் வளைந்திருந்த
திசரா அச

Page 20
வெள்ளைத்தோல் வீரர்கள்
கோப்பிக்கத்தியைத் தந்தாள். கையில் வாங்கும் போதே அது பாரமாய் இருந்தது. கத்தியைக் கையில் வைத்து அழுத்தக் கூடிய பலம் என்னிடம் இருக்கவில்லை. மேலே தூக்கி வெட்டும்போது கத்தியானது காயைப்பிடித்திருந்த இடது கைப் பெருவிரலின் ஓரத்தில் பட்டு நகத்தின் சிறு பகுதியைத் துண்டு பண்ணியது. இரத்தங் கீழே சொட்டுச் சொட்டாய் விழுந்தது. மற்றைய எல்லாருமாய்ச் சேர்ந்து அதைத் துடைத்ததுடன், கையில் துணியையும் சுற்றிக் கட்டினர். எனது கோபமெல்லாம் கத்திமேல் தான் இருந்தது. புடி பெரியதாக இருந்ததால்தான் என்னால் பிடிக்க முடியாமல் நகம் வெட்டுப்பட்டது. அந்தக் கத்தியை எப்படியும் வீட்டைவிட்டுத் தொலைத்தாக வேண் டும் எனப்பட்டது. அப்பாவிடம் சொன்னபோது ஆடத்தெரியாதவன் மேட கோணல் எண்டு சொன்னானாம்" எனச் சிரித்தார். இது பற்றி வீட்டுக்கார மாமியிடமும் சொல்லி இருந்தார்.
அடுத்த நாள் தற்செயலாக அங்கு வந்த ஒருவரிடமும் இக்கதைப்பற்றி அப்பா சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார். நான் குசினிக்குள் இருந்து வரும்போது.
ஏன் தம்பி கத்தியுடன் கோபமா?" எனச் சிரித்ததுடன் அது நல்ல புடி சேர். அரசமரத்தில் போட்டது" என்றதும் எனக்குப் பகீர் என்றது. அரசமரம் என்னைப் பழிவாங்க அரம்பித்து விட்டதையும் எனை நோக்கி இறக்கை விரித்து பறந்து வந்து விட்டதாயும் பட்டது. இரு கைகளையும் அகலவிரித்து இரண்டு காதுகளை நோக்கி அறைந்தது போலிருந்தது. நான் நின்று கொண்டிருக்க தலைமட்டும் சுற்றியது.
அடுத்தடுத்த நாட்களில் அவரைக் காண நேரின் என் ஊர் அரசமரத்தினால் ஆனதுதானா அந்தப்புடி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தாலும் அது முடியாது போனது.
அரசமரத்தின் இருத்தல் பற்றி அறிய வேண்டிய தேவை எழுந்தது. அது இருக்கின்றதா? இல்லையா? அதன்பின்னர் யாரையாவது கொன்றிருக்கின்றதா? என நாவூறிக் கொண்டிருந்த வேளையில் தான், பெரியம்மாவின் மகன் - எனக்கு அண்ணன் முறையானவனை வாகனம் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கிடைத்த தந்தியை அடுத்து ஊர் சென்றோம்.
என் ஊர் நிறைய, நிறையவே மாறிப்போயிருந்தது. பாலைவனப் பிரதேசம் போல காய்ந்திருந்தது. வெயில் தோலைச் சுட்டுப் பொசுக்கி விடுமாப்போல் இருந்தது. இரத்தங் கொதித்தது. கொள கொள்" வென வயிற்றுள் சுத்தஞ் செய்தது.
நகரில் இறங்கி ஊர்ப் பக்கம் செல்லும் சிறிய வேனில் பயணிக்கும் போது, வாவியைக் கடக்கவெனக் கட்டப்பட்டிருந்த கறுப்புப் பாலத்தை பிரமாண்டமானதாக உணர்ந்தேன். கீழ் வாவியில் நிறையத் தோணிகள். முன்னர் பல தடவைகள்
[ தசேரா 2

வெள்ளைத்தோல் வீரர்கள் இதனூடு பயணித்திருப்பினும் நீண்ட கால இடைவெளியின் பின் புதிதாகவே அதை நோக்கினேன்.
ஆஸ்பத்திரிக்கு முன்னால் இறங்கியதும் நான் மறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த அரசமரத்தைத் தேடிக் கண்கள் அகல விரிந்த போது அந்த இடம் வெட்ட வெளியாய்த் தென்பட்டது. எங்கிருந்தென அறிய முடியாத சந்தோசமொன்று என்னுள் இறங்கியதா? அல்லது, பொசிப்பற்றுக் கிடந்தது எழுந்து கொண்டதா? எனத் தெரியாவிட்டாலும் ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடியது.
அப்பா அரசமரத்த வெட்டித் தாங்க"
கைகளைத் தட்டி முழங்காலை மடக்கி உடலைப் பின்னுக்காக்கி சத்தம் போட்ட போது.
'அதுக்கென்ன சத்தம் போடாம வா , அங்கு எல்லாரும் பார்த்துக் கொண்டு இருக்காங்க" பெரியம்மா வீட்டு ஒழுங்கைக்குள்ளால் நடந்தோம். என்னிடம் எனது உடுப்புக்கள் வைக்கப்பட்டிருந்த பேக் மட்டும் இருந்தது. பெரியம்மா வீட்டுக் கேற்றுக்கருகில் நிறைய உருவங்கள் கூட்டமாய் நின்றார்கள். எல்லார் முகங்களிலும் சோகம் தெரிந்தது. அப்பா, அக்கா, அண்ணன் முகங்களை மாறி மாறிப் பார்த்தேன். அவர்கள் முகங்களும் சோகத்தில் தான் இருந்தது. அண்ணனின் கண்கள் கலங்கி இருந்தது. அவனின் வயது தானே செத்துப்போன அண்ணனுக்கும். என் முகத்தைப் பார்க்கக் கண்ணாடி இல்லை. அது சந்தோசமாய்த்தான் இருக்கும். மீண்டும், மீண்டும் திரும்பிப் பார்த்தேன் அரசமரம் இருந்த இடத்தை. 'ஐயோ அத்தான் புள்ளயப் பறிகொடுத்த பாவியாயித்தனே"
பெரியம்மாவின் சத்தங் கேட்ட போதுதான் பார்த்தேன். வாசலுக்கருகில் வந்து விட்டிருந்தோம். பெரியம்மா அப்பாவைப் பார்த்துத்தான் கத்தினாள்.
பிரபா அண்ணனின் தலையை ஹெல்மட்" போட்டது போல் வெள்ளைத் துணியால் கட்டி இருந்தார்கள்.
புயலில் ஒடிந்து வீழ்ந்திருந்த அரச மரக்கிளையை இவர்தான் வீட்டுக்கு இழுத்து
வந்தவர்.
காய்ஞ்சா நல்லா எரியும்" என்றார். இழுத்துக் கொண்டு போவதில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் அதை எரிப்பதில் எனக்குச் சரியான சந்தோசம். அந்தச் சந்தோசம் இப்போ மேலோங்கி இருந்தது.
0 திசேரா சக

Page 21
வெள்ளைத்தோல் வீரர்கள் பெரியம்மா அருகில் வரும்படி அழைத்தாள்.
"பிரபா மகனே பாருடா, தம்பி எப்படி வளர்ந்திருக்கிறான், கண்ணமுழிச்சிப்பாருடா" என்றவள்.
எனை மடியில் இருத்திக் கொண்டு
"உன்ட அண்ணன் போய்த்தானே.... நீ பெரியாளா வந்ததப் பார்க்காம போய்த்தானே.... எமன் பஸ்ஸில் வந்தல்லோ கொண்டு போனான். அரிசி வாங்கி வாறேனெண்டு போனவன் அநியாயமாய்ப் போனானே......"
அவன் இறந்த கதையைச் சொல்லி ஒப்பாரி வைத்தாள். என் நினைப்பெல்லாம் அரசமரம் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது.
மெல்ல எழுந்து வெளியே வரும்போது நிறையக் கண்கள் எனை மொய்த்திருந்தது. அவற்றில் சிலவற்றைத் தவிர பலவற்றை எனக்குத் தெரியாது.
வெளியில் அப்பா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். இப்படித்தான் நிறையப்பேர் கூடி ஏதேதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். அண்ணனையும். அக்காவையும் காணவில்லை. அப்பாவிற்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். ஏதோ பாடசாலை சம்மந்தப்பட்ட கதை கதைத்துக் கொண்டிருந்தார்கள். இடையில் வந்த வார்த்தை அவர்கள் கதையுள் எனை இழுத்தது.
"இப்ப பிரச்சினை இல்லத்தானே, ரோட்டெல்லாம் பெரிசாக்கி, மதிலெல்லாம் உள்ள தள்ளி, அரசமரத்த வெட்டி..." குறுக்கிட்ட நான்
"அங்கிள் ரோட் பெரிசாக்கத்தான் அரசமரத்த வெட்டினாங்களா?"
இடையில் நுழைந்த என்னை யாரென அப்பாவிடம் கண்ணால் கேட்டார். "இது கடை மகன்" பிறகுதான் அவர் பதில் சொன்னார். "ஓம் தம்பி" "வெட்டியதை என்ன செய்தாங்க" "அது எங்க உள்ளுக்குள்ள பொந்து மாதிரித்தான் இருந்தது. அதையும், கந்துகளயும் கொள்ளிக்கு கொண்டு போய்த்தாங்க."
"அது பலகை எடுக்க, புடி போட பாவிக்கேலாதா?"
[ திசேரா 20

வெள்ளைத்தோல் வீரர்கள்
"அதெல்லாம் அப்பிடிப் பாவிக்கிற நிலையில் இல்லப்பன்." அப்பா எனைப் போகச் சொன்னார்." "இவன் இப்பிடித்தான் நிறையவே குறுக்குக் கேள்வி கேட்பான் - அந்தா அண்ணனிடம் போ"
மொத்தத்தில் மரம் இல்லாமல் போனது. அந்தக் கத்திப்புடி இந்த மரத்தில் செய்தது இல்லை.
மரம் செத்துப் போன மகிழ்ச்சியில் மரம் இருந்த இடத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தபோது அண்ணன் தோளில் கை போட்டு அழைத்துப்போனான்.
பங்குனி - 2001
[ திசேரா 27

Page 22
வெள்ளைத்தோல் வீரர்கள்
சிங்கக் குடிகளின் சொர்க்கம்
| (് 2്
 
 

வெள்ளைத்தோல் வீரர்கள்
- சிங்கக் குட்டிகளின் சொர்க்கம்
விக்கிரமாதித்தன் சிந்திக்கத் தொடங்கினான். தலையை பிழிந்து கசக்கிக் கொண்டு யோசித்தான். ஊர்வசி, ரம்பை இருவரில் நடனத்தில் சிறந்தவர் யார் எனத் தீர்மானிக்கும் போதோ, வேதாளம் கேட்ட இருபத்து மூன்று கதைகளுக்குமான கட்டை அவிழ்க்கும் போதோ, இந்த மாதிரியாக மூளை குழம்பிப்போக யோசித்ததில்லை, தலை குழம்புவதிலிருந்து இது முக்கியமான கேள்விகளில் ஒன்றாய் இருக்குமென நினைத்தான். ஆனாலும் இந்த எண்ண வளர்வை நிறுத்தி சிங்கக் குட்டிகள் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.
இறந்த உடல்களை சிங்கங்கள் ஒரு போதும் உண்பதில்லை. பசித்த புலிகள் புல்லைத் தின்னாதது போல இறந்த உடல்களை உண்ணாத சிங்கங்கள்தான் எல்லாம். அடைத்து வைத்திருக்கும் குட்டியாயினும் கூட அதற்கு இடும் இறைச்சியில் பச்சைரெத்த வாடை அடிக்க வேண்டும். அவ்வேளையில்தான் சொரசொரத்த நாக்கால் நக்கிப் பார்க்கும். இதெல்லாம் அவனுக்கு வேட்டைக்கு போக முன்பிருந்தே தெரியும். ஆனால் யார் சொன்னார் என்பதுதான் மறந்து போனது. இதனடிப்படையில் உயிருள்ளவைதான் சிங்கக் குட்டிகளின் சொர்க்கமாய் இருக்க வேண்டுமெனக் கருதினான்.
பெண் சிங்கங்களுடன் கூடிக்களித்தல்தான் சொர்க்கமாய் இருக்குமோவென எண் ணினாலும் அவை எப்போதும் வேட்டைக் கென அலைந்து கொண்டிருப்பதனால் காமுறுதலுக்கென காலவேளைதான் விதித்திருந்தன. பதுங்கி இருந்து ஏதாவதொரு விலங்கைத்துரத்தி, அடித்து உண்டு மகிழ்ந்து வயிறு புடைத்தன. அதைவிட சொர்க்கம் வேறெதிலும் இருக்குமோ? கிரிடத்தைக் கழற்றி வைத்துவிட்டு தலைகுழம்பிக் குழம்பிச் சிந்தித்தான். மயிர்களெல்லாம் கலைந்து போய் நெட்டாய் நின்றன.
அவனைப் பார்க்கும்போது வேதாளத்துக்குச் சிரிப்பாய் இருந்தது. சிங்கக் குட்டிகள் யாரையும் நிம்மதியாய் இருக்க விடுவதில்லை. கூராய் இறைச்சி கிழிக்கவென இருக்கும் வேட்டைப் பல்லும், வெட்டும் முன் பின் கடைவாய்ப் பற்களும் தெரிய அகன்ற செங்குகைபோல இருக்கும் வாயைத் திறந்து கள்ஜிக்கும், பயமுறுத்தும், சிங்கங்களை விடவும் அதை வளர்ப்பவர்கள் வீரபராக்கிரமங்களை மெச்சித்
| βεσοπηγ 2ο

Page 23
வெள்ளைத்தோல் வீரர்கள் தள்ளினார்கள். குப்புற வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது பற்றியும், முதுகு நிலம் படாமை பற்றியும் பயத்தில் தலைதெறிக்க ஓடும் போதெல்லாம் தந்திரமான பின் வாங்கல் பற்றியும் கதை கதையாய்ச் சொன்னார்கள். அந்த வீரதீர சிங்கக்
குட்டிகள்தான் விக்கிரமாதித்தனையும் குழப்பி இருந்தன.
விக்கிரமாதித்தனால் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் இருந்தது. சொர்க்கம் என்பது மேலான இடமாக இருக்கும் அதை எவ்வின்பங்களும் மிஞ்சிவிட முடியாது திரிசங்கு போல சிங்கங்கள் வானுக்கும், பூமிக்கும் இடையில் சொர்க்கமொன்றை நிர்மாணிக்கக் கூடியவையுமல்ல. அவற்றுக்கு விசுவாமித்திரர் போல் உருவாக்கிக் கொடுக்கக் கூடிய மாமுனிகளுடன் நட்பும் இல்லை. அவற்றின் நட்பெல்லாம் வெறியர்களுடனேயே இருந்தது. அவற்றின் சொர்க்கம் பூமியில் தான் இருந்தது, அது எதுவென்பதுதான் பிரச்சினையாயிருந்தது. அவனுக்கோ சிங்கங்களைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் ஏமாற்றி கிணற்றுள் தள்ளிய கதையும், சாயத்துள் விழுந்தெழும்பிய நரி, கோர மிருகமாய்க் குகைக்குள் இருந்த சிங்கத்தைத் துரத்திய கதையுமே கண்ணுக்குள் வந்து குறுக்கிட்டது.
அவனால் முடியாமல் போனது. அவனால் மட்டுமல்ல அது பற்றி அடிப்படை உணர்வில்லாத யாராலும் முடியாதுதான். சொர்க்கங்கள் எப்போதும் புலக்காட்சிக்குத் தெரியாதது. அதிலும் சிங்கங்களின் சொர்க்கத்தை அறிந்து கொள்வதென்பது இடியப்பத்தின் தொடக்கம் போலவேதான் இருந்தது.
"ஆனாலும் நீ செய்தது பிழையான வேலை நான் சிங்கமல்ல, மிருகங்களுமல்ல, வேடனுமல்ல , அரசன். நாட்டை நிருவகிப்பது என் தொழில். என்னிடம் சிங்கக் குட்டிகளின் சொர்க்கங்கள் எதுவென் வெறுமனே கேட்டது எனை மடக்கிவிட வேண்டுமென்ற எண்ணம் உனக்குத் தலை தூக்கியது தானே காரணம்" எனக் கோபப்பட்டான் விக்கிரமாதித்தன். இயலாமையினால் எழுந்த கோபமாகக் கூட இது இருக்கலாம். வேதாளம் எதையோ யோசித்ததாய் சிரித்தது. தலையை ஆட்டிக் கொண்டது.
"பிழையை உணருகிறேன். ஆட்சி செய்பவர்கள் எப்போதும் மக்களைப் பற்றிச் சிந்திப்பது குறைவு தானே மன்னனே. நான் உன் விடயத்தில் அதை மறந்தது
தவறு."
"வேதாளமே என்னையும் அப்பட்டியலில் தானா சேர்க்கிறாய்"
"மன்னாதி மன்னா எனை மன்னிக்க வேண்டும். தங்களேன் காடாறு மாதம் நாடாறு மாதம் வாழ்கின்றீர்? இரண்டாயிரமாண்டு வாழ வேண்டுமென்ற எண்ணத்தில் தானே. காடாறு மாதப் பகுதியில் மக்களைப் பற்றிச் சிந்தித்தீரா? அது வேண்டாம். விட்டு விடுவோம். சிங்கக் குட்டிகளின் சொர்க்கத்திற்கு வருவோம். அதைப்பற்றிச்
1 தசரா ச

வெள்ளைத்தோல் வீரர்கள் சொல்கிறேன் கேள். கேட்டு விட்டு பதிலிறுத்தாக வேண்டும். இல்லாமற் போகில் நானுனைவிட்டு முருங்கை மரத்திற்கே போய் விடுவேன்" எனக் கதையைச் சொல்லத் தொடங்கியது.
அண்டையிலுள்ள தீவில் சந்திரகுமார் விஜயத்துங்கன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியும், தன் ஆட்சிக்காலம் நீடித்திருக்க வேண்டுமென்ற நோக்கிலும் ஒரு படையை ஆக்கி வைத்திருந்தான். அது சிங்கக் குட்டிகளிலாலான படை அவற்றை அவன் வளர்த்தெடுக்கக் காரணமும் இருந்தது. ஒரு சமயம் நட்புறவாட நம் தேசம் வந்திருந்த போது அவனைச் சந்தித்த ஒரு முனிவர் உனக்கும் உனது ஆயுளுக்கும் எந்த மனிதர்களாலும், தேவர்களாலும், அரக்கர்களாலும் கூட அழிவேற்படாது. ஆனால் விலங்குகளால் தான் அழிவு. அதில் சிங்கம் அடக்கப்படாது" என்றதும், நாடு திரும்பிய மன்னன் சிங்கங்களை மேலும் வலுவுள்ள தாக்கியதுடன், மேலும் சிங்கக் குட்டிகளைப் பெற்று பயிற்சி அளித்து வளர்க்கத் தொடங்கினான். பின்னர் அவற்றைக் காட்டிற்குள் இறக்கி ஏனைய மிருகங்களை வேட்டையாட வைத்தான். அந்நாட்டு மக்களுக்கு யானைகளில் பிடிப்பு இருந்ததனால் அவற்றை நேரடியாக அழிக்க முடியாமையினால் யாருக்கும் தெரியாமல் அவைகளை அழிக்கவென வேடர் கூட்டமொன்றையும் ஏற்பாடு செய்து அவ்வப்போது கொல்லச் சொன்னான். யானைகளின் அட்டகாசம் தாங்கமுடியாமல் இருக்கின்றதென பிரசாரம் செய்தான்.
அத் தீவின் காட்டில் இருந்த மிருகங்களுக்கு அதீத பலம் இருந்ததனால் சிங்கங்கள் நுழையும் போதெல்லாம் அவற்றைத் தாக்கியழித்தன. அவற்றின் தோல்வியைக் கேள்வியுற்று தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையில் இருந்தமையினால், அவைகள் வெற்றியீட்டி வருவதாக மக்களுக்கு பறை சாற்றப்பட்டதுடன் ஏனைய விலங்குகளைக் கொல்ல வேண்டும் மென்ற மன்னனின் எண்ணத்துடனேயே மக்களும் இருக்க வேண்டும் மென விரும்பி சிங்கங்களைத் தவிர்ந்த மிருகங்களெல்லாம் பொல்லாதவை எனவும். அவற்றை அழிப்பதனால் நிம்மதி கிடைக்குமெனவும், ஒற்றர்களினுடாகச் செய்தியனுப்பி, மக்கள் மத்தியில் மன்னன் பரப்பச் சொன்னான். இராஜதந்திரிகளுக்கும், மந்திரிகளுக்கும், அரசனையும் - அவனது செயற்பாடுகளையும் புகழ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இல்லாவிடில் சிரச்சேதம் செய்யப்பட்டு விடுவோம் என்ற பயமும் இருந்தது. இதன் காரணமாக அவனையும், அவனது நடவடிக்கைகளையும் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.
சிங்கக் குட்டிகள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே போனது. ஏனைய விலங்குகளினால் தாக்கி அழிபடும்போதும், தாக்கப்பட்டு காயமடையும் போதும். ஊரினுள் புகுந்து மக்களைக் குதறி, பிய்த்தெறிந்து இருப்பிடங்களைச் சின்னாபின்னமாக்கின.
இது பற்றி மக்களாலும் அரச பிரதிநிதிகளாலும் முறையிடப்படும்போதெல்லாம்,
திசேரா ஜா

Page 24
வெள்ளைத்தோல் வீரர்கள் மன்னன் சிங்கக் குட்டிகளைத் தட்டிக் கொடுத்தான். பிடரியைத் தடவி "அவற்றுக்கு குறும்புதான்" என அவற்றின் வீரச் செயல்களை மெச்சினான்.
ஊருக்குள் சென்று மனிதச் சதையும், இரத்தமும் சுவைக்கண்ட சிங்கக் குட்டிகள் ஊருக்குள்ளேயே திரிய ஆரம்பித்தன. காட்டின் எல்லைகளில் முன்னங்காலை நீட்டி பின்னங்கால்களை பக்க வாட்டில் போட்டு ஒருக்கழித்துப்படுத்துக்கிடந்தவை ஊரின் மூலைகளிலும், வீடுகளிலும், பாடசாலைகளிலும் குடியமர்ந்தன.
ஆண்களை அதுவும் இளம் இளைஞர்களைத் தின்ன ஆரம்பித்தன. அவர்களின் இரத்தம் சூடாக இருப்பதனால் அவற்றை உறிஞ்சிக் குடித்தன. இதனால் பயந்து ஊர் இளைஞர்கள் ஓடினார்கள். காட்டுள் சென்று பாதிப்பேர் விலங்காகவும், மீதிப் பேர் விலங்குகளுடனும் வாழ்ந்தார்கள். யாருமில்லாத ஊரினுள் குட்டிகள் பெண்களின் சதைகளை ருசி கண்டன. இளம் பெண்களின் சதைகளை நக்குவதனால், காட்டு விலங்குகளின் பயத்திலிருந்து நிம்மதியாய் இருப்பதை உணர்ந்தன.
இவ் வேளையில் காட்டுள் நுழையாத சிங்கக் குட்டிகளைப் பார்த்திருந்து ஏமாந்த ஏனைய விலங்குகள் முதலில் இரவுகளிலும், பின்னர் பகலிலும் கூட ஊருக்குள் புகுந்து வேட்டையாடிப் போயின. ஆனாலும் சிங்கக் குட்டிகளோ இளம் பெண்களைப் போகிப்பதில் அலாதி இன்பம் கண்டன. இளம் பெண்களை ருசி கண்ட குட்டிகள் அதிலேயே திளைத்திருந்தன.
ஏனைய விலங்குகளின் படையெடுப்பால் அழிந்து கொண்டிருக்கும் சிங்கக் குட்டிகளின் படைக்கு புதிதாய்ப் பல குட்டிகளை இணைத்துக்கொள்ள யோசித்த சந்திரகுமார விஜயதுங்க மன்னன் மந்திராலோசனைக் குழுவை ஏற்பாடு செய்தான். தன் கவலை குறித்து அவர்களிடமும் சொல்லி ஆலோசனை கேட்டான்.
விலங்குகளின் தாக்குதலால் கால்பாதிக்கப்பட்டு முன்னைய தனது வீர கம்பீர நடையை இழந்து மூன்றாவது காலுடன் நடந்து கொண்டிருந்த மந்திரி அனுருத்தன் "விலங்குகளை அடக்க சிங்கக் குட்டிகளின் வீரதீரச் செயல்களைக் கூறிப்பறை சாற்றுவோம். மக்களிடமுள்ள சிங்கக் குட்டிகளை காட்டுக்கு அனுப்புமாறு கேட்போம்" என்றான்.
அந்த ஆலோசனையின்படி குட்டிகளின் பாராக்கிரமங்கள் பறைசாற்றப்ப்ட்டன. சந்தோஷத்தில் வண்டிகளில் பயணிக்கும் சிங்கக் குட்டிகள் பெண்களைக் கண்டு குதூகலிப்பதாகவும், இயல்பாக வேலைகளில் ஈடுபட்டிருக்கும் குட்டிகள், பெண்களைக் கண்டு அதிர்ச்சி இன்பம் பெறுவதாயும், விளையாடிக் கொண்டிருக்கும்போது பெண்களைக் கண்டு நாக்கைத் தொங்கவிட்டு உமிழ்நீரை வடியவிடுவதாயும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஊருள் கிடந்த குட்டிகள்
ീ ജൈത (

வெள்ளைத்தோல் வீரர்கள்
படையெடுத்துப் போயின. சில அவை இறக்கவெனப் போவதாகவும் காட்டு விலங்குகளுக்கு பலம் அதிகம் என்று கூறிப் பேசாதிருந்தன.
மன்னாதி மன்னா, வீரம், அறிவு, புகழ் நிறைந்த விக்கிரமாதித்தனே! இப்போது சொல், சிங்கக் குட்டிகளின் சொர்க்கம் எது? இதில் சிந்திக்க என்ன இருக்கிறது. பெண்கள்தான்" என்றான் விக்கிரமாதித்தன். சந்தோசப்பட்ட வேதாளம் ஞானசீலனின் வஞ்சக வலையிலிருந்து விடுபடுவதைச் சொல்கிறேன் கேள். ஞானசீலன் குனிந்து காளியை வணங்கச் சொல்வான். நீ அவனை வணங்கி காட்டச் சொல். அவ்வேளையில் அவன் தலையை வெட்டி ஓம குண்டத்தில் போடு. அப்போது உன் வரத்தைக் கேள்." என்ற வேதாளம் திருப்பிக் கேட்டது.
"நீ காளியிடம் என்ன வரம் கேட்பாய்" விக்கிரமாதித்தன் சொன்னான்.
"அந்தத் தீவு மக்கள் பாவப்பட்ட ஆன்மாக்கள். அவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு நலமாய் இருக்க வேண்டுமெனக் கேட்பேன்."
பாவம் காளி என முணுமுணுத்த வேதாளம், எதுவும் பேசாமல் அவன் தோளிலேயே கிடந்தது.
ஆவணி - 2001

Page 25
வெள்ளைத்தோல் வீரர்கள்
ஒளிப் பொட்டின் விரிவு
د ده دادم نو د سلواه في الط
نهاده بد لو !a م إصه برهان نهاد. دو اتھ ط\
او امولو او له او د کېدو زدہلو
الدانم دو اFo له دنده د واده امواد
د اديانو د لو
( دهواره !a
الله ! هند
J*1+3
انهار
دن انه به په
CSS
«نها
KIFE
ح2p
ولد
اند (دا/ نه ده
له ۱ دهغه له ها دمية له إنه لم ! دهد
بو داود إنها ما نه دهلواده ۸ل إح او له امله دود بدر منه إ۲۹ دلوادي
U %g« 54

வெள்ளைத்தோல் வீரர்கள்
ட
ஒளிப்பொட்டின் விரிவு
அரசியற் கூட்டத்துக்கெனவேயான தனியான அலங்கரிப்புடன் மேடை திகழ்கிறது. மெல்லிய பாடலுடனும், இசையுடனும் மேடை திறவுபட கையில் சோதியுடன் குனிந்து நிற்கின்றான் பாரதி.
வெற்றி கூறச் சொல்லியும், வெண்சங்கை ஊதச் சொல்லி, கற்றவரால் உலகு காப்பாற்றப்பட்டதாகவும், பற்றைய அரசர் பழிபடு படையுடன் இருந்து, சொற்றை நீதியைத் தொகுத்து வைத்திருப்பது பற்றியும், விடிவு நெருங்குவதாகவும் சொல்லிச் சிலையானான். அவன் உயிருடன் இருந்து இறப்பு நிகழும் வரை இப்படித்தான்
விடிவு பற்றியே கதைத்தான்.
விடியல் ஒன்றிற்கான குறியீடாய் அச்சேதியை வைத்திருந்திருக்க வேண்டும். சபையின் பின்புறப் பகுதியில் இருந்து வந்தவர்களின் கூச்சல் காதைத் துளைத்தது. 'எங்கள் தலைவர்" - 'தங்கத் தலைவர்", 'எங்கள் தலைவர்" - 'சொந்தத் தலைவர்" தலைவரைக் கண்டு கொள்ள முடியா வண்ணம் சூழ்ந்து கொண்டு அழைத்து வந்தார் கள். கழுத்தில் மாலையுடனும், அவர் களுக்குரித்தான வெள்ளை உடையுடனும் வருவது - கூட்டத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பினூடு தெரிந்தது. நிறங்கள் எல்லாவற்றினதும் சேர்க்கைதான் வெண்மையாம். அதனுள் எல்லா நிறங்களும் மறைந்து இருக்குமாம். அதனால் வேண்டிய வேளைகளில் தன்னுள் உள்ள நிறங்களில் ஒன்றை அல்லது இரண்டு மூன்றையேனும் காட்ட முடிகின்றதாம். எப்போதோ எனக்குச் சொல்லப்பட்டிருந்தது - பிரதானமாகக் கத்திக்கொண்டு வந்த தொண்டனும், கூட்டத்தை நெருங்கிக் கொண்டு வந்த காப்பாளனும், கைகளிரண்டையும் இடது புறமாக உயர்த்தி வணங்கிக் கொண்டு வந்த தலைவனும் மேடையிலேற கத்திக் கொண்டு கூட்டத்தினர் கீழே குந்திக் கொண்டனர். தலைவனது கண், சோதியில் குத்தியது. அவர்களுக்கு எப்போதும் அது பிடிப்பதில்லை. அவனுக்குப் பின்னிருந்த கறுப்பு உருவம் (அவனுள் இருக்க வேண்டியது) அதையணைத்து விட்டுப் போனது. தலைவன் சிரித்துக் கொண்டு தன் கண்களுக்கு சக்திகள் அதிகம் என்றான். காவலனிடம், கூட்டத்துக்கு நோட்டமிட வந்தவன் போல முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்த ஒருவன் 'இவர்களுக்கு வேறு வேலை இல்லை" - என்னையும் முறைத்துவிட்டு அமர்ந்தான்.
] திசேரா 25

Page 26
வெள்ளைத்தோல் வீரர்கள் மனிதர் களுக்கு முகங் கள் அதிகரித்த காலம், தலைவனாக இனங் காணப்பட்டவர்களுக்கு கட்டாயமாகவே பல முகங்கள் இருந்தன. மக்களுக்கு, தனித்துவம் காக்க, சொந்தத் தேவை கருதி சாந்த - கோப் - ஞான - சத்திய - காம் எனப் பல முகங்கள் இருந்து கொண்டோ, தோன்றிக் கொண்டோ, தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டோ இருக்கலாம். அதனால் எல்லாமுமாய் அவன் உருவாக்கப்பட்டிருந்தான். "உங்களுக்காய் எதுவும் செய்வேன். நான் என்றால் நீங்கள் - நீங்கள் என்றால் நான், உங்களுக்கு வருபவை எல்லாம் எனக்கும் வருபவை, உங்கள் குடிசைகளை மாளிகையாக்குவேன். வீடுகளை வெள்ளிப் பாத்திரங்களால் நிரப்புவேன், தங்கத் தட்டில் உணவருந்த வைப்பேன்." அடுக்கிக் கொண்டே போனான் மக்களுக்குச் செய்ய முடியாதவைகளை மக்களுக்கோ பூரிப்பு, ரொட்டித் துண்டுகள் தங்கத் தட்டில் இருந்தது. தண்ணீர் வெள்ளிக் கிண்ணத்தில் இருப்பதைக் கண்டு பெருமை கொண்டார்கள்.
ஆனால் ரொட்டி, மாவும் தேங்காயும் இல்லாத ரொட்டியாகவே இருப்பது கூடத் தெரியாமல் கை தட்டினார்கள். பின்பு வந்தமர்ந்து கொண்டவன் எழுந்து நின்றான். அவனது முகம் கோபத்தில் விகாரமடைந்திருந்தது. என்னவோ கத்தினான். அவனது சத்தம் என்னையும் தாண்டி பின்புறம் நீண்ட தூரத்துக்குப் பயணித்தது. "கைதட்டித் தட்டி, கோசம் போட்டு ஏமாந்து போனவர்கள் நாம். அதனால் உயர்ந்தவன் அவன்", இன்னமும் சொல்லி மக்களைத் திட்டினான். அவன் சொல்லியவைகள் கேட்கக்கூடிய வார்த்தைப் பிரயோகத்தில் இருந்தாலும் எனக்கு நினைவில் நிற்கவில்லை. குழப்பக்காரனாகத் தோன்றியதால் எல்லோரும் முறைத்தார்கள். - குறிப்பாக மேடையில் நின்றவர்கள் - தலைவரை இழிவு படுத்துவதாய் எண்ணி தொண்டன் பொங்கினான். 'நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டியவர்கள் தான் நீங்கள்" அது எல்லோரையும் அடக்கும் வார்த்தையாக மட்டுமில்லாமல், தாழ்த்தி இழிவுபடுத்துவதாகவும் பட்டது. அந்தச் சலசலப்பை தன்னை நோக்கி ஈர்க்க வேண்டி தலைவன் "உங்களுக்குச் குறைகள் இருக்காது. உணவும், வீடும், தொழிலும், வழங்கப்பட்டாயின" - "அவ்வளவு தானா" - "அவ்வளவு தான் எங்கள் தேவையா" கூட்டத்தில் பலர் கதைக்கத் தொடங்கி இருந்தார்கள். வேறென்ன இருக்கிறது" தலையைச் சாய்த்துக் கொண்டான் தலைவன். அவனது கேள்வி எல்லோரையும் எழுப்பி நிறுத்தியது. தலை "நகருக்குச் சென்ற மகனைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை." - 'சிதைக்கப்பட்ட என் மகளுக்கு நியாயம் வேண்டும்." மகனைக் காட்டிய இன்னொருத்தி 'இவனின் தந்தை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? எனத் தெரியவில்லை." என்றாள். 'என் கடை கொள்ளையிடப்பட்டது. வீடு எரிக்கப்பட்டது. நட்ட ஈடு ஏதுமில்லை." மாறி, மாறிப் புலம்பினார்கள். நிம்மதியைத் தொலைத்துவிட்டுச் சோகத்துடன் வாழ்வதாய்த்தான் சொன்னார்கள். இப்படி நிறையவை பேசவும், எழுதவும் முடியாமல் கட்டிப் போடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
இதற்குரிய முடிவுகளைச் சொல்ல முடியுமா? என்றான் குழப்பக்காரன். ஆயுதத்துடன் நின்று கொண்டிருந்தவனுக்கு முகம் மாறியது. தலைவனை
0 திசேரா கே

வெள்ளைத்தோல் வீரர்கள் எதிர்த்ததாலாக இருக்கலாம். "நீ கதைப்பது பற்றியும், யாரிடம் என்பது பற்றியும் அறிவாயா? - புரிந்துதான் கதைக்கிறாயா?" - "கொள்ளைக்காரனிடம் என்பதும், நீங்கள் கடற்கொள்ளைக்காரர்கள் என்பதும் கூட" கீழிருந்தவனுக்கு வாய் நீண்டு விட்டதாய், தொண்டன் கத்தினான். "நான் யாரெனக் காட்ட வேண்டுமா?'' எனக் கைகளை மூடி இருந்த சட்டையின் கைகளை மடித்தது கண்டு கீழிருந்தோர் சத்தமிட்டனர். "ஏய்" கூட்டுச் சத்தம் அவனதை விட பல மடங்கு கூடியதாகவும் இருந்தது. ஒன்றுபட்டு விட்டதையும் காட்டியது. கோபத்தில் ஆடினார்கள். கூத்துமுறையை ஒத்திருந்த ஆட்டத்துடன், உரிமைகள் வேண்டுவதாயும், நினைத்ததைப் பேசிட வேண்டியது பற்றியும், கைகள் ஓங்கிடவும், நாட்டைச் சுற்றி
வரவும், சுதந்திரமாய் எங்கும் திரிந்திடவும் வேண்டுமெனவும் பாடினார்கள். அடக்கப்பட்டிருந்தவர்கள் தீடீரென எழுந்து கொண்டார்கள் என்பதை விட கனன்று கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டதாகவும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவுமே பட்டது. அருகில் வெற்றிலையைக் குதப்பி காவியேறிய பற்களுடன் இருந்தவன் எனைத்தட்டி ஏன் ஆடுகிறார்கள்" என்றான். அவனுக்கு பூரணத்துவமாய் விளக்கி முடிக்கவும், உடலியல் மொழிக்கூறுகளை எடுத்துரைக்க காலத்தின் போதாமையையும் உணர்ந்து கொண்டு கோபத்தில் ஆடுகிறார்கள்" என்றேன். மாண்புறும் மக்கள் வீறுடன் எழுந்ததாகவும், பகைமையை ஓட்டி சுதந்திரம் பெற்று வாழ்ந்திட எழுந்ததாகவும் தோன்றியது. "அது ஒன்றும் கடைச்சரக்கல்ல எனவும், எல்லோருக்கும் கொடுக்கக் கூடியதுமல்ல. அதுவும் உங்களுக்கென - கண்களை சிவப்பாக்கி, பல்லைக் கடித்து அசையாது நிற்க, பாரதி அசைவு கொண்டு என்று தணியும் இந்தச் சுதந்திரத்தாகம், என்று மடியும் இந்த அடிமையின் மோகம், என்றெம் இக் கை விலங்குகள் போகும், என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்" என்ற கவலையுடனே அசைவற்றுப் போனான்.
மக்கள் புலம்பத் தொடங்கினார்கள். தீராத கவலைகள் பற்றியும், சந்தோசித்து வாழக் கிடைக்காத வழி பற்றியும் புலம்பும் போது தான் ஒருவன் "ஆண்டான்கள் அழிபடும் போதும், அடிமைத்தளைகள் விடுபடும்போதும், சம உரிமை பெறப்பட்டு சந்தோசம் கிடைப்பதாய்ச் சொன்னான். அவன் சொல்லியது அவர்கட்குப் புரிந்தது. முகங்கள் முன்னை விடவும் அகன்றது. 'நாங்கள் யாருக்கும் கீழானவர்களல்ல" கோஷித்து மேடையில் ஏறத் தொடங்கினார்கள். கீழே இறங்காவிட்டால் தலையைச் சுட்டுப் பொசுக்கி விடுவதான காவலின் எச்சரிப்பையும் மீறி "தலைகளுக்குப் பயந்தவர்களல்ல நாங்கள்" என ஏறினார்கள். ஒவ்வொருவராய் ஏறும் போது அவர்களது பாதங்கள் முகத்தில் வைக்கப்பட்டது போல தலைவனின் முகம் சுருங்கிக் கறுத்தது. "ஏய் அடிமைகளே" உரக்கக் கத்தினான். இயலாமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தம் பெருத்திருந்தது. பின்னுக்கு ஒழிந்திருந்த கருத்த உருவத்தின் உறுமல் பயங்கரத்தை உண்டாக்கியது. இன்னமும் சத்தமாய்,
[ திசேரா சா

Page 27
வெள்ளைத்தோல் வீரர்கள் கொழுப்பெடுத்து ஒற்றுமையில்லாமல் காட்டிக் கொடுப்பது பற்றியும் திட்டினான். "சாதிகளைக் காட்டி சங்கம் அமைத்தது நீ" "சாதிகளைக் காட்டி பிணங்களைக் குவித்ததும், உண்டியலுக்காய் கோயில்களை அமைத்ததும் நீங்கள் தான் " பொறுமினார்கள். இன்னொருவன் "உங்கள் சாதியினருக்கு மட்டும், இந்தாவென எல்லாவற்றையும் வாரி வழங்கி எங்களை ஏய்க்கின்றீர்கள்." "இவைகளைக் கதைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. முதுகெலும்பு அற்றவர்களே, நீங்கள் வந்தேறு குடிகள். எங்களைச் சுற்றும் கொடிகள் குறுக்கிட்டுக் கத்தினான் தொண்டன். கூட்டத்திலிருந்து முன்னே பாய்ந்தான் ஒருவன். - தொடக்கத்திலிருந்து இவனே தான் கதைத்திருந்தான். இங்கு நடப்பவையெல்லாம் நிஜமாய் இருந்தால் நாளை இவனைப் பார்க்க முடியாதே என்ற கவலை எனக்கிருந்தது, நரம்புகள் கூட புடைத்திருந்தது கைகளில் அதைத் தெளிவாகக் கண்டேன்.
"கொடிகள் படர்ந்து நிலத்தை மூடி விடுவதையும், திரண்டு மிடுக்காகும் அடம்பன் கொடியையும் உதாரணப்படுத்தினான். அவர்களால் திரள முடியாது. காட்டிக்கொடுத்து அழியக் கூடியவர்கள் தலைவன் சிரித்தான். கோபம் அதிகமாகி எழுந்தார்கள். (நெஞ்சை நிமிர்த்தினார்கள். "நீ பல முகங்களைக் கொண்டவன், எங்களுக்கு சாந்தமானதை மட்டும் காட்டுகின்றாய், உன்னுடைய கோரத்துவம் எங்களுக்குத் தெரியாதென நினைத்தது தவறு. அதன் தாண்டவமும் தெரியும்" - "எச்சங்கள் இன்னமும் இருக்கின்றன." - தலைவனது கோபம் பின்னிருந்த உருவை ஆடப் பண்ணி வெளியே இழுத்தது. கடித்துக் குதறி விடுவது போல நெருங்கி கத்தி ஆடியது. "சாதியின் அரசன் நானே - நானே உங்களை ஆட்டிட வந்தேன் - வந்தேன். பூவுலகெங்கும் சாதியை நாட்டி உங்களைப் பிரித்திட வந்தேன் - வந்தேன்.
வர்க்கத்தின் அரசன் நானே - நானே வக்கிரம் தீர்த்திட வந்தேன் - வந்தேன்" சுயத்தைக் காட்டிவிட்டு பின்னே சென்று ஒழித்துக் கொள்ளவில்லை தலைவனுக்குப் பக்கபலமாய் இடுப்பில் கைவைத்து அடிமை வேலையே சரியானது. ஈனமான உங்களுக்கு உகந்தது. நாடு காக்க ஞானமில்லாதவர்கள்" எனத் துரத்தினான். போக மறுத்துக் கொண்டு மனிதர் தோளில் மனிதர் ஏற முடியாதெனவும், சமமாய் வாழ வேண்டுமெனவும் கோசமிட்டனர். கத்தி அடக்க முனைந்தான் தலைவன் கொடுத்து விட முடியாது. பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை உங்களுக்கு ஊத்தை பாட்டுக் கிடக்கும் எனது காலை, நாக்கை நீட்டி நக்கித் துடைக்க வேண்டியவர்கள் நீங்கள் " "அதற்கு நாங்கள் இருக்கின்றோம் என நினைத்துக் கொண்டிருக்கின்றாய். அது கனவு, விழித்துக் கொள் எங்களது கால்களை நீ துடைப்பது பற்றி ஆட்சேபனை இல்லை. நாக்காலா? கைகளாலா? என்பது உன் விருப்பம் குனிந்து கொண்டும், முகத்தை சுழித்தும் நாக்கை நீட்டி அழகாய்ச் சொன்னான் ஒருவன், "உதிரத்தை
[ திசேரா தா

வெள்ளைத்தோல் வீரர்கள் வியர்வைத் துளிகளாக்கி தோலினூடு வெளியேற்றியவர்கள், இன்னும் உன் விருப்பின் கீழ் அடக்க முடியாது." அவர்களுக்கு உண்மைகள் எல்லாம் புரிந்திருந்தது. யானைகளைப் போல இழைக்கப் பட்ட கொடுமைகளை ஞாபகத்துள் வைத்திருந்தார்கள். கொடுமைகளிலிருந்தும், சித்திரவதைப்பட்ட வாழ்க்கையில் இருந்தும் வெளியேற வேண்டுமென்பதில் உறுதிப்பட்டிருந்தார்கள். இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனைப் போலவே பாரதிக்குக் கூட சந்தோஷமாய் இருந்தது. நான் மனிதனாய் இருந்து பேச நினைத்துப் பயந்ததை சிலையாய் நின்றவன் பேசினான். யுகப் புரட்சியொன்று எழுந்ததாகக் கூறி சந்தோசத்தைக் காட்டியவன், அப் புரட்சி பற்றியும் எதிர்வு கூறினான். "கொடுங்காலன் அலறி வீழ்வான், பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர் போகாமல் கண் புகைந்து மடிந்துபோம். வையகத்தீர் புதுமை காணீர்" என்றான். ஆனாலும் தலைவன் இழகிப் போவதாக இல்லாமல் வீரியத்தைப் பற்றிக் கதைத்தான். உருவம் உறுமியது. "நான் சக்தி - பலம் வாய்ந்த சக்தி " எனவும், "உங்கள் எல்லோரையும் விழுங்கிவிடப் போகின்றேன். நீங்கள் அடிமைகள், உங்கள் இரத்தம்." - நாக்கை நீட்டி விழுங்கிக் கொண்டு 'என் தாகம் தீர்க்கும் பானம்" பயங்கர சத்தத்துடன் சிரித்தது. அதன் வாய்க்குள் இரத்தச் சிவப்பு, தெரிந்தது. நெடியும் அடித்திருக்க வேண்டும். பல் ஈறுகளில் சதைத்துண்டுகளும் சிக்கிக் கொண்டிருக்கலாம். அவர்களுள் ஊடாடி இருந்த கோபம் இன்னமும் அதிகரித்திருந்தது. சலுகைகள் வேண்டாம். உரிமைகளைப் பெற விழித்தெழச் சொல்லி மேடையை அதிரச் செய்தார்கள். - எப்போதும் இது தான் நிகழ்ந்தது. தரவேண்டியதில் பத்திலொரு பகுதியை இரகசியமாகக் கொடுத்து பத்திரப்படுத்தக் கூறுவார்கள். அது பாராட்டித் தரப்பட்டதாகவோ தலைவரின் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதாகவோ எண்ணிக் கொள்வதற்கு - சோர்ந்து வீழ்ந்து கிடந்த காலம் போனது. மிரட்டலுக்குப் பணிந்து இனியும் வாழ முடியாது" எனக் கூவினான் ஒருவன். அவர்களுள் கூனிக் குறுகி கிடந்தது எழுச்சியுற்றதாய்க் கண்டேன். 'இப்படித்தான் இருக்க வேண்டும்" நிமிர்ந்து அமர்ந்து கொண்டு "விடக்கூடாது இவர்களை ஒழிக்க வேண்டி இருக்கின்றது" - "முடியுமா" என்றேன். "எதையும் முடியாதெனக் கூற முடியாது" என்றான், பக்கத்தில் இருந்தவன். ஒன்றாய் இணைந்திருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாமாம் , உலகத்தைக் கூட அடக்கி விடக் கூட முடியுமாம்" என்றான். அடிமைத்தளைகள் போய் கொடுங்கோலாட்சி முடிந்ததாம். மேடையில் இருந்த கூட்டத்திலிருந்து ஒருவன் சொன்னான். எல்லோராலும் எழுந்து நிற்க முடியும் என்றும் சொன்னான். - மனது சம்மந்தப்பட்டதாய் இருக்கும் - அனேகமானவர்கள் உணர்ச்சிவசத்தில் தான் நின்றார்கள். இருப்புக் கொள்ளாமல் முன்னிருந்தவன் எழுந்து உடலைச் சரி செய்து விட்டு அமர்ந்து கொண்டான். மனதுக்குள் முணுமுணுத்த ஒலிகளும், குறிகளும் அவரவர் முகங்களில் தெரிந்தது, பாரதி நின்று கொண்டிருக்க முடியாமல் பீடத்திலிருந்து குதித்தான். அதிகமாய் உணர்வு கொள்பவன்தானே -
[ திசேரா தா

Page 28
வெள்ளைத்தோல் வீரர்கள்
'மாசக்தி - மக்கள் சக்தி திரண்டெழுந்தது. சிறு துளியொன்று பெருந்தீயாய் ஆனது இனி, வெந்து தணியும் இந்தக் காடு" கண்கள் அகலித்திருந்தது. கோபத்தில் நிற்க முடியாமல் மக்களையும் கூட்டுச் சேர்த்து ஆடினான். பயமெனும் பேயை விரட்டி பொய்மைப் பாம்பைக் கொன்றுயிரைக் குடிப்பதாகவும், அடிமைத்தளையை அழித்து நல்லறிவுடைய வித்தை வளர்த்திடுவதாகவும், மக்களெல்லாம் ஒன்று கூடி புரட்சி விதையதை நாட்டிடுவதாகவும் கூறி, கொடுங்காலர்களைச் சுற்றிச்சுற்றி ஆட, ஆண்டான்கள் குனிந்து சுருங்கிப் போனாலும் கறுப்புரு கூட்டத்தின் வெடிப்பால் வெளியேறி மாரைத்தட்டி நின்றான். 'நான்" நிமிர்ந்துக் கொண்டு 'நான் சாதிகளின் தலைவன் - வர்க்கங்களின் அரசன் - கோரங்களின் சக்கரவர்த்தி அழிக்க முடியாது என்னை, யாராலும் முடியாது" இறங்கி ஓடி மறைந்தான் அவனையும் கொன்றிருக்கலாம் - உண்மையாகாது - திரண்டெழுந்து தீயாய்மாறி சுட்டெரித்து விட்டதாகவும், ஒன்றுபட்டு வாழ்வோமெனவும் (கைகளை இணைத்து உயர்த்திக் கொண்டார்கள்) ஆண்டான்களை அடக்கி விட்டதாகவும் கூறிச் சந்தோசப்பட்டு நின்ற போது மூடிக் கொண்டது.
இப்போது யாரும் யாருக்குக் கீழேயும் குனிந்து கொள்ள விரும்புவதில்லை. உணர்ந்து கொண்டவர்கள் நிமிர சந்தர்ப்பம் தேடியவர்களுக்கு இது உரிய கணமாய்க் கூடத் தோன்றியிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் போகும் பாதை தென்பட்டாலும், அச்சம் காரணமாக வழிகாட்டிகள் தேவைப்பட்டார்கள். அல்லது சேர்ந்து போக எண்ணினார்கள். சேர்த்துக் கொண்டவன் தலைவனானான். ஆனால் காட்டப்பட்ட வழிகள் சரியானதென உறுதிப்படுத்த முடியாது. பலரது அபிப்பிராயமும் இதுவேயாக இருந்ததில் ஆச்சரியப்படவோ, கேள்வி கேட்கவோ முடியாதிருந்தது. அவைகள் முரடானது என்பதைக் காட்டிலும் கொடூரமானது என்பது உண்மை. சுயவளர்ச்சிகள் முன்னின்று கொண்டதால் மீண்டும் மீண்டும் முதுகுகளின் மீதே கால்கள் வைக்கப்பட வேண்டியிருந்தது. நிமிர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அவ்வப்போது, குறிப்பாக ஐந்து வருடங்களுக்கொருமுறை வருவதால், மாரை நிமிர்த்திக் கொள்ள முடியும்.
நிஜத்துள் எங்கேயும் இப்படித் தீப்பற்றிக் கொண்டால் சந்தோசமாய் இருக்கும் நனவாக்கப்பட வேண்டிய தேவையாய் தோன்றிய உணர்வுடன் அரங்கிலிருந்து வெளியேறினேன்.
ஐப்பசி - 2001
| திசேரா 40

வெள்ளைத்தோல் வீரர்கள்
உணவு முறை குறித்த அறிக்கையும்,
பற்களின் பிரச்சினையும்
---- 7 A L. 2
] திசேரா 41

Page 29
வெள்ளைத்தோல் வீரர்கள்
உணவு முறை குறித்த அறிக்கையும், பற்களின் பிரச்சினையும்.
நான் ஒழுங்கு முறைப்படி உணவை உண்பதில்லை. அதற்கான கால அவகாசத்தை எனது வேலை எப் போதும் விட்டு வைப்பதில்லை. உணவுக்காக வரையறுக்கப்பட்டிருந்த நேரம் வெளியில் கழிந்து போனதுதான் உண்மை. அதற்கென நேரகாலத்தை ஒதுக்கி வைத்திராமையினாலும், பசி பழகிய ஒன்றாகிப் போய்விட்டிருந்ததனாலும் மெலிந்து போயிருந்தேன். அது ஒரு குறையாக எனக்கோ, யாருக்குமோ வேதனையை அளித்திருக்கவில்லை என்பதனால், தொடர்ந்து இயல்பிலேயே வாழ்க்கை நகர்ந்து போனது.
இவ்வாறு பசியுடன் பாதிகழிந்த நாளொன்றின் பகலில், உத்தியோகபூர்வமற்ற அறிக்கையொன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. அது உத்தியோகபூர்வமற்றது. மட்டுமல்லாமல் யாரால் அனுப்பப்பட்டது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் இருந்தது. அதிலேயே முதன்முதலில் எனது உணவு முறை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. புற்களை நீர் சாப்பிடுவதில்லை எனவும், எவ்வளவு பசியெடுத்தாலும்) இரத்த நெடியுடன் கூடிய மாமிசங்கள் எனக்கு விருப்பமானதென்பதும் அவர்களுக்குத் தெரிந்த செய்தியாம். அவற்றைக் கிழித்துண்ணக்கூடிய வகையிலே என் பற்கள் சிறத்தலடைந்து காணப்படுவதனால், அவையே எனது உணவுகளாக இருக்கின்றதெனவும் அவ்வறிக்கை கூறியது. நான் உணவு உட்கொள்ளலில், ஒழுங்கு முறை எதுவும், தாங்கள் அறிந்த வகையில் இருப்பதாகத் தெரியவில்லை எனவும், அதற்குரிய வலுவான காரணமொன்றை
அறிந்து வைத்திருப்பதாகவும் அவ்வறிக்கை மேலும் கூறியது.
என் தாவர உணவுகளுள் புழுக்கள் நெளியத் தொடங்கியது. ஒவ்வொரு பிடிக்கும் ஒரு புழுவேனும் தலையை நீட்டிச் சிரித்தது. தன்னை உண்ணமுடியாதென எக்காளமிட்டது. அரைக்கக் கூடிய பற்கள் எனக்கில்லை என்பது அவற்றின் எண்ணம், கிழித்துப் போடமுடியும் என்பதை மறந்திருந்தது. அவ்வறிக்கை வந்ததிலிருந்து தாவரங்களும், முழுச் சோறும் அரைபடாமல் முழுமையாகவே வயிற்றுள் கிடந்து உருண்டது. வயிறு பாரம் மெடுத்ததுடன், வலி கொண்டது. இதனால் மாமிசத்தை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இறைச்சித் துண்டுகள் பல் ஈறுகளில் சிக்கிக் கொண்டதனாலோ என்னவோ, பல்வலி ஆக்கிரமித்தது.
[ திசேரா 42

வெள்ளைத்தோல் வீரர்கள் இதனாலும், பல் பற்றி அறிக்கையில் வெளியிடப்பட்ட விபரத்தை அறிந்து கொள்ள வேண்டியும் வைத்தியரை அணுகினேன். ஆச்சரியப்பட்டார். உறுதியைக் கண்டு பாராட்டினார். வாய் நாற்றம் இருப்பதாகவும் அவை மாமிசத் துண்டுகள் இடைவெளியினுள் சிக்கிக் கொள்வதனால் ஏற்பட்டிருக்கலாம். உப்பு நீரில் வாய்கொப்பளிப்பதை வழமைக்குக் கொண்டு வரும்படி ஆலோசனை சொன்னார். "மனிதர்களுக்குரிய முறையில் பற்கட்டமைப்பு காணப்படுவதனால் தாவர உணவுகளை நன்றாக அரைத்து உண்ண முடியும். அவை குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமானால் கண்ணாடியில் அதைப்பார்த்துக் கொள்ளலாம்." என எனக்குத் தோன்ற மறந்த எண்ணத்தை ஞாபகப்படுத்திக் கண்ணாடி ஒன்றை நீட்டினார். வெட்டும்பல், வேட்டைப்பல், முன் பின் கடைவாய்ப்பற்கள் பற்சூத்திரத்தின்படி ஒழுங்காக இருந்ததை விளக்கிக் காட்டினார். தாவரங்களில்தான் சத்துக்கள் அதிகம் இருக்குமென காதுக்குள் சொல்லி அனுப்பினார்.
வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்புகின்றேன். நோய் கொண்டு வளைந்து கிடந்த என் கட்டிலில் நோயாளியாக ஓய்வுக்கு வரலாம் என்ற எண்ணம் பரவி இருந்தது. உண்மையில் நோயாளியாக நான் இல்லை. ஆனால் அவர்களுக்குரிய களைப்பும், சலிப்பும், ஓய்வெடுக்க வேண்டிய அவசரத் தேவையும் எனக்குமிருந்தது. நினைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே பயணம் முறிவு பட்டது. பரிசோதனைக்கு உட்பட வேண்டுமென சிலரால் கட்டளையிடப்பட்டேன். சம்மதம் கேட்டுக் கொள்ளாமலேயே வாயைத் திறக்கப்பண்ணி பற்களைப் பரிசோதித்தார்கள். எல்லாப் பற்களும் வேட்டைப் பல்லாக திரிபடைந்திருப்பதாகக் கத்தினார்கள். எல்லோரும் மாறி மாறி வாய்க்குள் எட்டிப்பார்த்தார்கள். "இல்லை அவை மனித பற்சூத்திரத்தின் படியே கட்டமைக்கப்பட்டுள்ளன. வைத்தியரிடம் காட்டி அதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளேன்." அதைப்பற்றிக் கவலையில்லை. அக்கறைப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை. மாமிசத்தை உண்பதற்காக திருட்டுத்தனமாக வாங்கியிருக்கின்றாய். இதற்காகவே நீ காலதாமதமாகி வீடு திரும்புகின்றாய்." - 'இதை முற்றாக மறுக்க வேண்டிய கட்டாயமுள்ளது. இதற்கான ஆதாரங்கள் என் வசமுள்ளன. என் நாயின் பொருட்டே இறைச்சியைக் கொள்வனவு செய்கின்றேன். எனக்காகவல்ல. எனக்குத் தரப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்வதில் நேரம் கரைகின்றது. இன்னமும் கூட நிறைவு செய்யப்படவில்லை. அதனால் நேரத்துடன் வீடு திரும்பக் கூடிய சூழ்நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை. வேலைத்தளம் அமைந்துள்ள தூரம், பளுவும் இணைந்து இருட்டிய பின்பே வீடு செல்ல அனுமதிக்கின்றன. நாங்கள் கையொப்பமிடும் புத்தகத்தை பார்வையிட்டால் அந்த உண்மை தங்களுக்குப் புரியலாம். அதற்கு வாசிக்கும் திறமையும், ஒப்பு நோக்கும் இயல்பும் இருக்க வேண்டியது அவசியம். இதன் காரணமாக என் உடல் மெலிந்து போனாலும், - மாமிசம் உண்பதால் - நாய் பருத்து இருக்கின்றது. அதன் குரைத்தல் வலுவானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். அதன் உருவம் பார்ப்போரைப்
0 திசேரா சக

Page 30
வெள்ளைத்தோல் வீரர்கள்
பயங்கொள்ளச் செய்யும், வேண்டுமானால் அதையும் என்னால் காட்டமுடியும்." எதையும் ஏற்க மறுத்த அவர்கள், நான் பிறந்தது சமதரையான காட்டுப்பகுதி என்பதனால் பற்களின் அமைப்பு கூரானதாகவே இருக்கவேண்டுமெனத் தீர்மானம் எடுத்து வைத்திருந்தார்கள். பிறந்த இடத்துக்கு காடுகளைக் கடந்து செல்லவேண்டி இருந்தது. ஆனால் காட்டுப் பகுதியல்ல. இப்படியாக பிரச்சினைகள் வெடிக்கும் எனத்தெரியாமல் அங்கே அவள் பிரசவித்துப் போட்டதில் யாரையும் குறைகூற முடியாது. நியாயப்படுத்தவேண்டிய தேவையும் இல்லை. விளங்கிக் கொள்ளக்கூடிய தன்மையோ, மனப்பக்குவமோ அவர்களுக்கு இருக்கவில்லை. - என்னை மிருகமாகக் காட்டவேண்டும் என்ற தேவையைத்தவிர - குறித்த தினமொன்றில் தங்களுடைய நிலையத்தில் மனிதக் காப்பகப் பிரிவில் பற்களைப் பரிசோதிக்கச் சொன்னார்கள். அவ்விடத்திலிருந்து தற்காலிகமாக அனுப்பப்பட்டாலும், அவர்களுடைய பார்வைகள் எப்போதும் என் பின்னாடியே வந்து கொண்டிருந்தது.
+ + +
இருவார இடைவெளியில் என் உணவுமுறை குறித்த அறிக்கை பதிவுத்தபால் மூலமாக கிடைக்கப் பெற்றது. மனிதக் காப்பகத்தின் தலைமையகத்தில் இருந்து எனக்கு - என் விலாசமிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. அதன்படிக்கு, நான் தாவர உணவுகளை எப்போதும் உண்டதில்லை என நம்புவதாகவும், இது அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு தரப்பினரின் கடிதங்கள் மூலம் ஊர்ஜிதப்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மனிதனாகக் கருதிக் கொள்ள முடியாத என்னிடமிருந்து ஏனைய ஜீவன்களைக் காக்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கின்றமையினால், அதிலும் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதனாலும் இதையே Losefsé Sm LüLSLĐ (Shelter for Human) GTsst so gÉ 8, 6ff 96ouot Lவலியுறுத்துவதாகவும் - என்னை மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டிருப்பதால், ஏழு தினங்களுக்குள் தங்கள் சிகிச்சை முகாமில் வந்து சேருமாறும், எவ்வித குறைபாடுகளும் என்னிடமில்லை என தாங்கள் கருதும் பட்சத்தில் வீடு சென்று இயல்பு வாழ்க்கையைத் தொடர அனுமதி வழங்கி விடுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரத்தவறும் பட்சத்தில் தாங்கள் பலவந்தமாக அழைத்துச் செல்ல நேரிடும், அவ்வாறான இக்கட்டான நிலைக்கு தங்களை உட்படுத்துவதென்பது. என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது போல அமையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையில் அதன் உருவாக்கம் பற்றிய வரிகளும் காணப்பட்டது. இது உமக்கெதிராக எதேச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் என நீர் கருதிக் கொள்ளக்கூடாது. பல மாதங்களாக எமது ஒற்றர்களினால் உமது நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டது. அது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை எனவும், மனிதர்களுடன் ஒப்புநோக்குகையில் மாறுபாடுடையதாக காணப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். அதோடு நீர் தொடர்பு கொண்டிருந்த
| Mത ര

வெள்ளைத்தோல் வீரர்கள் அனைவரது அறிக்கைகள், விசாரணையின் பின்னர் பெறப்பட்டது. (குறிப்பாக மேலதிகாரி - நண்பர்கள்) அவர்கள் மூலமாகத் தந்த அறிக்கைகளும் எம்மிடமுள்ளன. இவற்றைக் கொண்டு மாத்திரம் முற்றாக நீர் மிருகம் என கருதப்பட்டுவிடவில்லை. கருதிக்கொள்ளவும் முடியாது என்பதையும் நாம் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும். - நீர் பழி சுமத்துவதாக எண்ணிவிடக் கூடாது - உம்மைப்பூரண சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னரேயே எம்மால் இறுதிமுடிவைத் தெரியப்படுத்த முடியும் என்றிருந்தது.
இவ்வறிக்கை எனைக்கேள்விக்குள்ளாக்கியதுடன் முன்னைய நடவடிக்கைகளை மீளுருக்கொள்ளச் செய்தது. நான், என் வழமையான காரியங்களை விடவும் எதையும் செய்யவில்லை. அன்றாட கடமைகளுக்கே எனக்கிருந்த நேரத்தின் போதாமையை அவர்களுக்கு உணர்த்துவது பற்றிச் சிந்தித்தேன். எனை ஆறுதல் படுத்துவதற்காகவென இல்லா விட்டாலும் தங்கள் அமைப்பின் குறையை வெளிக்காட்டா வண்ணம் இறுதி முடிவு தீர்மானிக்கப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் முடிவு என்பது எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்டிருக்கவேண்டும். எனைப்பற்றிய முறைப்பாடு கிடைத்த உடனாகக்கூட இருக்கலாம். அதன் பின்னரேயே எனக்கு இவ்வறிக்கை அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
எப்போது மனிதர்களை அழிக்க வேண்டுமென முடிவெடுத்திருந்தேன் என எனக்கே தெரியாது. இவ்வாறானதொரு முடிவை நினைத்திருந்ததுமில்லை. - கனவில்கூட - அது மோசமானதும் கூட உயிர்களை மட்டுமல்ல, அவர்களது உரிமைகளையும் பேண வேண்டுமென்பதில் எனக்கு பெரும் உடன்பாடு இருந்தது. இதன் நிமித்தமே பல எதிரிகளையும் சம்பாதித்திருந்தேன். அவர்களுக்குக் காட்சியளித்த மிருகக் குணத்தின் எதிர்வினையாக, என்னை மிருகமாகக் காட்ட முயன்றதன் உச்சக்கட்ட வெளிப்பாடாக இவ்வறிக்கை அனுப்பப்பட்டிருக்கலாம்.
கண்ணாடி முன்நின்று பற்களின் வரிசையைப் பார்த்தேன். தாவர உணவுகளை உண்பதற்காகத் தேடி கீரை வகைகளையும், கிழங்குவகைகளையும் வாங்கி சமையலறைத் தட்டில் நிரப்பினேன். உண்டபின்னர் சாப்பிடுவதற்காக பெருமளவு பழங்களையும் கொள்வனவு செய்தேன். - பாதி காய்த்தன்மையுடனும் - அவை என்தேகத்துக்கு ஆரோக்கியமளித்தது. நான் தாவர போசணிதான் என்ற உணர்வை இதனூடாகவேனும் பலருக்கு நிறுவ முயன்று கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.
இம்மரக்கறிகள் தீர்ந்து போவதற்குள்ளாவே, எனக்கு விடுமுறையான தினமொன்றில் என்னைத்தேடி வந்துவிட்டிருந்தாள்கள். பலவந்தமாகத் தட்டப்பட்ட கதவை உடைக்கும் முன்னம் படுக்கையிலிருந்து எழுந்து திறந்தேன். இரும்புக் கூண்டுடன் நால்வர் நிற்க ஐந்தாமவனே கதவைத் தட்டினான். மிருகங்கள்
} (ത ഗ്

Page 31
வெள்ளைத்தோல் வீரர்கள்
பிடிக்கவென பயன்படுத்தும் விசித்திரமான ஆயுதங்கள் அவர்கள் கைகளில்
t
இருந்தது. அவர்களைப்போல பலர் ஆங்காங்கே நின்றார்கள். திரு. தி. எனது பெயரை உச்சரித்ததனால் நான்தான்" என்றேன் அறிக்கை கிடைத்ததா?" -நீங்கள்" - மனிதக் காப்பகம்" வேறு எதுவும் சொல்லப்படவில்லை, கழுத்தில் சங்கிலியை பூட்டிய ஒருவன் சிகிச்சைக்கு அழைத்துப்போக வந்தோம்" என்றான். நான் இரவு உடையில் இருந்ததனால் அதை மாற்றிக்கொள்ள விரும்பினேன். மிருகங்கள் உடையணிவதில்லை." சிரித்தவன் விசித்திர ஆயுதத்தால் கூட்டினுள்ளே தள்ளிப் பூட்டினான். அது மிருகங்கள் அடைக்கப்படும் கூடு. உள்ளிருந்த நான் வெளியேற எவ்வித எத்தனத்தையும் செய்யவில்லை. - அது முடியாத காரியம் எனத் தெரியும். - உறுமவும் இல்லை. ஆனாலும் அவர்கள் கைகளிலிருந்த ஆயுதங்களால் குத்தப்பட்டேன். உதட்டை பல்குத்திய இடத்திலிருந்து இரத்தம் வடிந்தது. இரத்தத் துளியை சிந்த மனம் இடம் கொடுக்கவில்லை. உதட்டை உள்வளைத்து உறிஞ்சிக் குடித்தேன். நால்வர் கூண்டைத்தூக்கி வாகனமொன்றில் ஏற்றினார்கள். ஒருவன் சத்தமிட பலர் எங்கிருந்தோவெல்லாம் ஓடிவந்து ஏறிக்கொண்டபோது வாகனம் புறப்பட்டது.
என் மேசையில் மடித்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் அறிக்கை காற்றில் பறந்து கல்லில் முட்டுப்பட்டு, பின்னாடியே பறந்து வந்து கொண்டிருந்தது.
கார்த்திகை - 2001
திரே னது

-
| (്ത് ?

Page 32
வெள்ளைத்தோல் வீரர்கள்
- மூன்று மரணங்கள் பற்றிய
முற்குறிப்பு...
துக,யாக நிறைஅதை நடாத உட்படுத்த முடியாதாம்.
தூக்கம் கலைந்து போக முன்னரே தட்டினார்கள். எனக்குரிய தண்டனையை உடனடியாக நிறைவேற்றியாக வேண்டுமென்பதால், நான் எழுந்து வர வேண்டுமாம். இங்கு அதை நடாத்தினால், கட்டில் இரத்தத்தினால் நனைந்து, மெத்தையில் ஊறி மீள் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்படுமாம். எனக்காகத் தண்டனையை மாற்றிக் கொள்ளவும் முடியாதாம். வேண்டுமானால், வழியை மாற்றிக்கொள்ள முடியுமெனக் கயிற்றைக் காட்டினார்கள். அதற்கும் வெளியேதான் போயாக வேண்டுமாம். சரியாகப்பட்ட வசதி இல்லையென்பது முக்கிய காரணமாக இருக்கின்றதாம். உத்தரவை தங்களால் மீறமுடியாது என்றார்கள். உடன் போக எழுந்து போ தூக்கம் கலைந்தது. இப்படிக் கனவுகளுள் தினமும் யாராவது வந்து சொன்னார்கள்.
அன்றைய தினம் வந்தவன் - வைத்தியனாக இருக்க வேண்டும். அவர்கள் போலவே உடையணிந்திருந்தான் செய்கைகள் கூட அவ்வாறே இருந்தது. இதயத்துடிப்பைப் பார்த்து முதுகில் தட்டி, நாக்கை நீட்டவைத்துப் பார்த்துவிட்டும், அந்தச் செய்தியைச் சொல்லிப் போனான். கனவில்தான் அதுவும் நிகழ்ந்தது. துரத்தினார்கள் அருகில் நிற்க வேண்டாமென. தற்செயலாக நிற்கநேரினும் தள்ளி நின்று கொண்டு மூக்கைப் பிடித்தார்கள். பிணக்களையும் பிணவாடையும், என்னிடமிருந்தது என்பது அவர்கள் முறைப்பாடு ,
இது நனவுகளில் இப்படியான ஒரு நாளில்தான், கனவுக்குள் அந்த ஒலி கேட்டது. என்னுடைய குரல் போலவே இருந்தது. என்றாலும், எங்கிருந்து எப்படி என்பது ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தது. 'நீ ஏன் இன்னமும் தாமதித்துக் கொண்டிருக்கிறாய். எனத்தான் விளங்கவில்லை. தாமதமாக்கப்படுவதாகவும் இருக்கலாம். எல்லோருக்கும், நிட்சயிக்கப்பட்டதாக இருந்தாலும் உனக்கு விரைவாய் வந்து சேரும் - தேவையாய் இருப்பதும் அதுதான். அதுவேதான் என்னை விடுதலையடையச் செய்யும், உன்னால் நானும் அவமானப்பட்டுப் போனேன். இனிக் கவலை இல்லை" - இருமியது. - உனக்குரிய மரணம் நெருங்கிவிட்டது. அதை எதிர்கொள்ளத் தயாராய் இரு பயப்படமாட்டாய் அதையும் நானே செய்ய வேண்டி இருக்கும். எதற்கும் அறிவிக்கிறேன். இனிமேல் சுற்றித் திரிய முடியும். என்ற சந்தோசம் எனக்கிருந்தாலும், உருக்குலையப் போகின்றாய் என்பதில் சிறிது வருத்தமுண்டு" என்னால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூடச் சொன்னது.
1 தசேரா சர

வெள்ளைத்தோல் வீரர்கள்
எதிர்பார்த்திருக்கிறேன். அது நல்லதுதான், ஆனாலும் எனக்குமட்டும் முதலில் .." நேரடியாக விடை சொல்லாமல் கதை சொன்னது. உமாதேவியைச் சிவன் ஒருநாள் நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார். செடிகள் அழகாய்ப் பூத்துக் குலுங்கியது. மலரொன்றைப் பறித்துத் தரமுடியுமா? என்றார். அதிகமாகச் சிந்தித்தாள்.
முன்னர் பறிக்கப்பட்ட அடையாளங்கள் தென்பட்ட கிளை சாய்ந்து கிடந்த செடியிலிருந்து பூவொன்றைப் பறித்து வந்தாள். அதற்காக அவள் சற்றுத் தூரம் செல்ல வேண்டி இருந்தது. ஏன் இத்தனை செடிகளைத் தாண்டி அதில் சென்று பறித்தாய் என்றார் சிவன். அவள் சொன்னாள். 'இவைகளின் அழகு கெட்டுவிடுவதில் எப்போதும் உடன்பாடு இருக்கவில்லை" என்று, அவளை நோக்கிச் சிரித்த சிவன் 'இதன் காரணமாகவே துன்பப்பட்டவையே இன்னமும் உழலுகின்றன" - 'நீ கூட அதுபோலத்தான்" கனவிலும் அழுகை வந்தது. என் விடுதலைக் கருத்திற் கொண்டேனும் அதை ஏற்றுக் கொள்ளுதல் நல்லம். நானும் விரும்புகிறேன் எனக்குச் செய்யும் பேருதவியாகக் கூட இருக்கும். அதைவிடச் சிறந்த உதவி உன்னால் செய்ய முடியாது. எனவே நினைக்கிறேன். இதன் காரணமாக உனக்கேதும் நடந்துவிடப் போவதில்லை என்பதில் நீ தெளிவுற்றிருக்க வேண்டும்." மறைந்துபோனது அது என்னுடைய ஆத்மா எனவும், எனது குரலிலேயே உரையாடிக் கொண்டிருந்தது என்பதையும் பின்நாட்களில் உணர முடிந்தது. இப்படியான கதைகளும், கனவுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன.
வீட்டுக்காரப் பெண்மணி எனக்காகக் காத்திருந்தது போல் ஒரு பார்சலை நீட்டினாள். என் வரவை எதிர்பார்த்திருந்திருக்கிறாள். வழமையை விட அழகான உடையுடன் காணப்பட்டாள். அன்று அவளுடைய பிறந்ததினம் என்பதை ஞாபகப்படுத்தினாள். அதனால் தான், அது தனக்கானது என நினைத்துக் கொண்டாளாம். ஆனாலும் அதைத்தந்தவன் எனக்கானது என்பதை வலியுறுத்தி, நான் மட்டுமே பிரித்துப்பார்க்க வேண்டும். எனக் கட்டளையிட்டுச் சென்றதால் பிரிக்கவில்லை என்றாள். குண்டுப் பொதியாகவோ, அசம்பாவிதங்களை ஏற்படுத்தக் கூடிய பொதியாகவோ இருக்கலாம் எனக்கூட ஒரு கணம் எண்ணிவிட்டிருந்தாளாம் . சிரித்துக் கொண்டே பூவினால் அலங்கரிக்கப்பட்டு வெட்டப்பட்டிருந்த ஒரு துண்டு கேக்கைத் தந்தாள். மௌனமாய் இருந்துவிட்டு இருவரும் ஒன்றாய்க் கதைத்த போது வார்த்தைகள் கலந்து கொண்டாலும், என் குரல் பெரிதாக இருந்ததனால் அவளுக்கு விளங்கி இருக்க வேண்டும். அவனை எங்குமே பார்த்ததில்லையாம் அதற்கான ஞாபகங்கள் கூட இல்லை என்றாள். பிச்சைக்காரனுடைய தோற்றத்தில் இருந்தாலும் சென்றபின் சந்தன வாசம் வீட்டை நிறைத்துக் கொண்டதாம் . கண்கள் பக்குவப்பட்டவன் என்பதைக் காட்டியதால் அதிகம் பேசாமல் இருந்திருக்கலாம் என ஊகித்துக் கொண்டாளாம். வெட்கத்தை மறைத்திருந்த ஒரு துண்டுத்துணியை விட வேறு எதுவும் இல்லாத போது, இதை அவனால் எப்படி வாங்கியிருக்க முடியும்
1 தீசேரா 49

Page 33
வெள்ளைத்தோல் வீரர்கள் என்பதைச் சிந்திக்க வேணும் முடியவில்லையாம் என்றவள், அதற்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை என்றும் சொன்னாள். தன்னைப் பற்றியோபார்சலைத்தட்டி - இதைப்பற்றியோ எதுவும் சொல்லவுமில்லை, வந்தமர்ந்து கொள்ளவுமில்லை. நான் அழைக்கவில்லை எனக் கருதிக் கொள்ளக்கூடாது.
பொதியைக் கையளித்து விட்டுச் சென்றவள், சட்டையின் இரு பொத்தான்களை கழற்றி இருந்த போது அறையின் கதவைத் தள்ளிவிட்டு, தலையை நீட்டி அவனின் முகத்தில் உன் சாயல் தென்பட்டது." தலையை இழுத்து மறைந்தாள். என்னவாக இருக்குமென்பதில் சந்தேகமிருந்தது. யார் என்பதிலுங்கூட அவள் சொன்ன உருவத்திற்கு மனதிலிருந்த படங்களில் எதுவும் ஒத்துவரவில்லை. சுற்றியிருந்த கடதாசியை அகற்றி கூடைக்குள் போட்டேன். பெரிதான புத்தகம், விஷ்ணு புரத்தைப் போல தடிப்பானது, ஆனால் நீள அகலங்கள் கூடியது, அட்டை பல நிறங்களில் அலையலையாக இருந்தது. உள் முகப்பில் மரணம்" என்ற வாசகத்தைத் தவிர வேறு எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. நான்காக மடிக்கப்பட்ட ஒரு துண்டு இருந்தது. உட்பக்கங்களெல்லாம் எழுத்துக்களால் நிறைந்திருந்தது. எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. நான்காக மடிக்கப்பட்ட ஒரு துண்டு இருந்தது, உட்பக்கங்களெல்லாம் எழுத்துக்களால் நிறைந்திருந்தது. எதுவும் வாசித்துப்புரிந்துக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. அரைகுறையானவை போலத் தென்பட்டது. தேவைப்படும் போது மாத்திரம் திறக்கப்பட வேண்டும். உன் ஐயங்களைப் போக்கும், சஞ்சலத்தின் விளக்கம். இது மரணம் மட்டுமல்ல, வாழ்க்கையும் உலக நியதியும்" துண்டில் எழுதப்பட்டிருந்தது. நிறையவே தத்துவங்கள் உள்ளிருக்க வேண்டுமெனத் தோன்றியது. கொஞ்ச வார்த்தைகளும் வாழ்க்கையை முழுமையாகச் சொன்னது.
கனவுகளின் ஆக்கிரமிப்பை தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. திறக்க முற்பட்டேன் "வரலாமா" கதவைத் தட்டி வந்தவள், தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு புத்தகத்தைப் பார்த்தாள். தேசப்படமா' - தேசப்படமா - "ஆம் எழுதியுள்ளதைச் சொன்னேன்" தலையைத் திருப்பிக் கொண்டு போனாள். திறந்த பக்கத்தில் உனக்கு சந்தோசம் அருகில் இருக்கிறது" என்று மட்டும் இருந்தது. திரும்பவும் அட்டையையும், கொஞ்சம் தாள்களையும் விலக்கிய போது தெரிந்த பக்கத்தில் மரணம் நெருங்கிவிட்டது" என்றிருந்தது. இன்னமும் குழப்பம் சந்தோசம் - மரணம், இருதிசைப்பட்ட சொற்களைச் சேர்த்துக் கட்டியது போல இழுபட்டிருந்தாலும் மங்கிய ஒளிபோல புரிந்திருந்தது. விடுதலையின் மார்க்கமாகச் சூட்டப்பட்டிருக்கலாம். மேலும் விளக்கம் தேடிப் புரட்டினேன். அது எழுத்துக்களால் நிரப்பப்பட்டிருந்த பக்கம், மாபெரும் கடல் எல்லோரும் மூழ்க வேண்டியதும், தளுவிக் கொள்ளவென அலைகளை நீட்டிக் கொண்டே இருக்கும். அதன் சுருளைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறோம். அதைப்பற்றிக் கதைக்கக் கூட அஞ்சி வாயில் கைள்வத்து வார்த்தைகளை அடைத்துக் கொள்கின்றோம். அது ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல, அதன் ஆழம் சலனமற்றது. மரணம் அழகிய பாடல், நறுமணம் கொண்டது சுதந்திரமானதும் ஆகும். அங்கு யாரும்
() (ത മ

வெள்ளைத்தோல் வீரர்கள்
ஒதுக்கப்படுவதுமில்லை அணைக்கப்படுவதுமில்லை. அவரவர் எண்ணங்கள் பாதுகாக்கப்படும். காதுகளுள் இனிய ஓசை ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்." இன்னமும் நிறையச் சொல்லப்பட்டிருந்தது. மரணம் சந்தோசமானதென்ற சாராம்சத்தினால், முன்னையை விட அதிகமாகவே மரணத்தை நேசிக்கத்
தொடங்கினேன்.
"நான் இடைவிடாமல் போராடுகிறேன். அது யாருக்கும் தெரியாது. ஒரு சிலர் அதைப் புரிந்து கொண்டிருக்கலாம். அது தவிர்க்க முடியாததுதான். ஆனால் எவருக்குமே அதைப்பற்றிச் சரியாகத் தெரியாது. ஆனாலும் தினசரிக் கடன்களைப் பூர்த்திசெய்து கொணர்டு வருகிறேன். ஓரளவிற்கு கவனக் குறைவு என்னிடமுள்ளதைப்பற்றி குறைகூற முடியும். ஒவ்வொரு மனிதனும் போராடுகிறான். ஆனால், நான் மற்றவர்களை விட கூடுதலாகப் - போராடுகிறேன். கனவில் ஏதோ உருவத்தை விரட்டக் கைகளை அசைப்பது போன்று பிறர் தூக்கத்தில் போராடுவார்கள். ஆனால், நான் விழிப்புடன் என்னிடமுள்ள சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி மிகவும் கவனமாகவும், நன்கு திட்டமிட்டும் போராடுகிறேன். தங்களுக்காக மட்டும் கூவிக்கொண்டு, அதே நேரத்தில் பயத்தைக் கிளப்பும் அமைதியில் ஆழ்ந்திருக்கும் கூட்டத்திலிருந்து எதற்காக நான்விலகி எழுந்து போராடுகிறேன்? ஏன் பிறர் கவனத்தை என் பால் ஈர்க்கிறேன்? விரோதிகளின் முதல் பட்டியலிலேயே ஏன் என் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது." இறப்பைப்பற்றி புரிந்துகொள்ள முன்னான வேளைகளில் குழும்பியிருந்த என் நினைவுகளைப் போன்று, காஃப்காவை நாட்குறிப்பில் காணமுடிந்தது. குழப்பங்கள் தெளிவில் முடியுமாம். உலகம், லீலை, விளையாட்டு அதிக கவனத்துடன் ஒன்றித்து பங்காளியாகப் போகின்றபோது அதீத போராட்டம் கவலை - வெறுப்பு தொற்றிக் கொள்கிறது. சோககீதத்துள் மனம் தொங்கிப் போகின்றது. தொடர்ந்து கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும்.
படைப்பு விளங்கிய பின், வாழ்க்கை இலகுவாகும், மரணம் தெரிவதால் முயற்சி வேகங் கொள்ளும், சந்தேகம் இல்லாமற்போகும். இப்போது நண்பர்களுக்கு நான் மரணம் பற்றி விளக்கம் தர ஆரம்பித்திருந்தேன். என் ஆத்மாவை புரியவும், சந்தோசப்படுத்தவும் தவறியிருந்ததால் போக துடித்துக் கொண்டிருந்தது. கனவுக்குள் பயமுறுத்தியது. மற்றைய ஆத்மாவைச் சந்தோசப்படுத்துவதுதான், அதற்குச் சந்தோசமாம். எப்படியும் அவைகள் தான் ஓரிடத்தில் வாழப்போகின்றவையாம். சடப்பொருளின் மதிப்பில் பிரிவினைகள் காட்டக் கூடாதாம். முதல் இறப்பு சடப்பொருளிலான உடல் இறந்து போதலில் ஆரம்பிக்கின்றது. உண்மையான மரணமும் கூட, இதன் பின்னான எதுவும் நமக்குத் தெரிவதில்லை. ஆனாலும் அரைகுறையானது. இதன் பின் இன்னமும் இரண்டுள்ளது. மூச்சு நின்றுபோதல், முழு மரணமில்லை, நரம்புகளும் கலங்களும் துடித்துக் கொண்டிருக்கும்
() ൧ത്ത് 57

Page 34
வெள்ளைத்தோல் வீரர்கள் சுற்றியிருந்து சும்மாவேனும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்கள். பாதிப்போர் குடும்பக் கதை கதைக்கவும் வெற்றிலை போட்டுக் கொள்ளவுமென அமர்ந்திருப்பார்கள். தசையும், தோலும் போர்த்த எலும்புக் கூட்டைப் பார்க்க யாராவது வரும் வரை வைத்திருக்க வேண்டியுமிருக்கும், வயிற்றைக்குமட்டும் நாற்றமெடுக்கும் வரை அது நீடிக்கலாம். மூக்கைப் பொத்திக் கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டியுமிருக்கும். சொந்தங்களின் குரல் அடைத்து, புத்தி பேதலித்து, அவசர அவசரமாய் தொலைந்த எதையோ தேடிக் கொண்டிருப்பார்கள்.
என்னுடன் கதைப்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாகக் குறைந்து போயிருந்தது, ஒதுங்கித் தலைமறைவானார்கள். மரணத்தின் தூதுவன்" என பெயர் சூட்டப்பட்டிருந்தது. சில வேளைகளில் மரண தேவன்" எனக் கூட
அழைக்கப்பட்டேன்.
அப்பா
மிக விரைவாகவே சில விடயங்களை தங்களுக்கு அறிவிக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. அதையிட்டு தங்களின் உணர்வு பற்றி சரியாகக் கூறமுடியாதுள்ளேன். மகன் எனக் கவலையும் படலாம், தொலைந்தான் என சந்தோசமும் படலாம், எப்படியாகினும் சந்தோசப்படுதலை விரும்புகின்றேன்.
இது கடிதமாக இருக்கின்றபடியினாலும், தாங்கள் கேட்டு எழுதுகின்ற படியினாலும், உடல் பற்றி எழுதவேண்டுமென நினைக்கின்றேன். அது நலமாகக் காணப்படுகின்றது. ஆனபடியினால் சுகமாய் இருப்பதாக முடிவெடுக்க வேண்டாம். அதுதான் எல்லோருக்கும் வேண்டியதாய் இருக்கின்றது. நிலையாமைப்பற்றியே அனைவரும் சிந்திக்கின்றோம். இன்புறுகின்றோம். அதையே சகலமுமாய்க் கருதுகின்றோம். வாழ்க்கையில் தத்தளித்துக் கிடந்த எனக்கு துடுப்புக் கிடைத்திருக்கின்றது. அதன்படி விரைவாக எனது பயணத்தை மரணம் நோக்கியதாக்கிக் கொண்டுள்ளேன். எல்லோர் பயணமும் அதை நோக்கியதாக இருந்தாலும், நான் பயமேதும் இன்றி மரணத்தை நோக்கி சரியான திசையில் எதிர்கொள்ளச் செல்கின்றேன். தாங்கள் சந்தோசப்பட இதில் நிறையவுள்ளது. பயமொழித்தல் கண்டும், திசையைத் தேர்வு பண்ணியது கண்டும் என்னைப் பாராட்ட வேண்டும். இவற்றுக்கு கனவில் தோன்றிய ஆத்மாவும், கையளிக்கப்பட்ட மரண புத்தகமும் பேருதவியாய் அமைந்தன. மரணம் நெருங்கி இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுவிட்டது. அது பற்றி தெரியப்படுத்தவும் உடலைப்பற்றிக் கூறவுமே எழுதத் தொடங்கினேன்.
ஆவி போனபின்னர் எவ்வித காரணத்தினாலும் நாற்றமெடுக்கும் வரை வைத்திருக்க
() ൧ത ♫

வெள்ளைத்தோல் வீரர்கள்
வேண்டாம். அது பலரை சங்கடப்படுத்துவதுடன் வேலையையும், இடைஞ்சலையும் உண்டாக்கும். எரித்துப்போட சிரமப்படவேண்டாம். அதனால் இறந்து போகாத கலங்களும், உறுப்புக்களும் துடித்துப்போகும், எங்காகிலும் தொங்கவிட நேர்ந்தால் சந்தோசப்படுவேன். பலவற்றுக்கு இரையாகும். - நாட்டு நிலைமையைக் கருத்திற் கொண்டால் முடியாமல் போகலாம் - ஆறடிக்குள் போட்டு மண்ணைப் போடுங்கள். சிறு அங்கிகளாவ்து தின்னட்டும், கறையான்கள் வாய்க்குள் புகுந்து, குடலை ஒரு குழுவும், நுரையீரலை இன்னொரு குழுவுமாக அரிக்கட்டும், உணவாகிப்போன திருப்தி இருக்கும். சிந்தனைகளேனும் அவைகளைச் சென்றடையட்டும். மரணம் சந்தோசமானது மட்டுமல்ல, சந்தோசப்பட வேண்டியதும், எப்படியும் என்மறைவு பலரை மகிழ்ச்சி கொள்ளச் செய்யக் கூடியது. அதில் எல்லோரையம் இணைந்து கொள்ளச் சொல்லுங்கள், அழுவதனால் பயன் ஏதும் இல்லை. இது தொடர்பில் யாவருக்கும் அறிவித்துள்ளேன். இனிமேல் சந்தோசப்பட்டவனாகவே இருப்பேன். மன உழைச்சலில் இருந்து அந்நியப்பட்டு சந்தோச மரணத்துள் மூழ்கக்காத்திருக்கும்.
இவன்
இரண்டாம் இறப்பு எனக்கில்லையாம். சந்ததியில் உயிரணுக்கள் வாழ்ந்து கொண்டிருந்து, அவர்கள் இறப்பதனால் ஏற்படுகின்றதாம். திருமண வயதைத் தாண்டி இருப்பினும் நிகழாதது மகிழ்வாக இருந்தது. என்பாவச் சுமைகளை யாரும் சுமக்க வேண்டிய தேவையிராது போனது. அவைகள் என்னுடனேயே புதைந்து போகும். அதிலிருந்து நீ பிழைத்ததனால் என்விடுதலை விரைவுபடும்." என்றது ஆத்மா, அதற்கு விரைவாகப் போய்ச்சேர வேண்டுமென்ற நோக்கம் இருந்தது.
மூன்றாம் மரணம் ஏற்பட வாய்ப்பிருந்தது, ஆனாலும் உடலழிந்து ஒரு வாரத்துள் அதுவும் நிகழ்ந்து விடும். அது புகழின் மரணமாக இருக்கும், ஆண்டுக் கணக்காக விவாதிக்கப்படும். அளவிற்கோ, ஆய்வு செய்யப்படும் அளவிற்கோ எதையும் சாதித்திருக்கவில்லை என்பதனால், கூடிய அவகாசம் தேவைப்படாது. ஆனால் திட்டித்தீர்க்கவென கொஞ்சமாவது தேவை. பாரிய பாவங்கள் நிகழ்த்த பாடவிட்டாலும் செய்தவற்றுக்கு தூஷிக்க ஒரு வாரகாலம் போதுமானதாயிருக்கும். என எண்ணுகிறேன். அதன் பின் நிகழும் மூன்றாவது மரணத்துடன் முற்றாய் நீங்கிடமுடியும், என்ற நம்பிக்கை இருந்தது. மீள் பிறப்பு, கதைகளுக்கு மட்டும் உரித்தானதாக இருக்க வேண்டும். விஞ்ஞானம் அதை மறுதலிப்பதனால் இன்னமும் மகிழ்வாய் இருந்தது. நிகழினும், அறிந்து கொள்ளக்கூடிய பூர்வஜென்ம பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பின் நல்லதாய்ப் போகும். உன் மூன்று இறப்புகளிலும், எனக்கு இடைஞ்சல் இருப்பதாகத் தெரியவில்லை." சந்தோசப்பட்ட ஆத்மா எதிர்கொள்ளத் தயாராகும்படி மறுபடி, மறுபடியும் வலியுறுத்தியது.
திரோ அச

Page 35
வெள்ளைத்தோல் வீரர்கள்
6
சகோதரங்களே. ஆத்மாவைப் போன்ற நண்பர்களே,
என் மரணம் குறித்து கவலை கொள்ளாதிருப்பீர்களாக, ஆன்மா போக வேண்டுமென உரைத்ததற்காக நீங்களும் விட்டுப்போக எண்ணுகின்றீர்கள், என்றில்லை அவ்வாறு எண்ணிக்கொள்வதுதான் சாலச் சிறந்தது எனக் கருதுகின்றேன். தங்களனைவரையும் முற்றாகப்புரிந்து கொண்டு நடந்தேன் என்பதற்கில்லை. எனைப்புரிய வழியின்றி முடியாமல் தவித்தேன். என்பது தெரிந்திருக்கும், தங்களுக்காக வேண்டிய எவ்வித உதவிகளையும் - முடிந்ததைக்கூட செய்யவில்லை எனக் கருதுகின்றேன். கவலையீனமும், சோம்போறித்தனமும் முற்றாக என்றில்லா விட்டாலும் ஓரளவுக்கேனும் ஆட்கொண்டிருந்தது.
என்னால் இழைக்கப்பட்டவற்றுக்கும், கொட்டப்பட்ட வார்த்தைகளின் பொருட்டும் மறுபிறப்பில் பிராயச் சித்தம் தேடமுடியாது. - நம்பிக்கை இல்லை. - இவ்வேளையிலேயே மன்னித்து மறந்து போகுமாறு வேண்டிக் கொள்கின்றேன். இன்னமொன்றும் கேட்டுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. ஆத்மாவின் பொருட்டு, உடலின் மரணத்தின் போது அழுது கொண்டிருக்க வேண்டாமாம். அது மகிழ்வாய் வழியனுப்புப்படி கேட்கிறது. இருக்கும் போது பட்ட துன்பம் போதுமாம். புதைக்கப்பட்ட பின்னரும் உடலது செய்கைகளைக் கதைக்க வேண்டாம் என்கிறது. தன் பயணம் இதன் பொருட்டு பாதிக்கப்படலாம் என அஞ்சுகிறது. என் நினைவுகள் நீங்காவடுவாக தங்களிடம் நீடித்திருக்கக் கூடியதல்ல என்பதையும் நான் அறிவேன். அந்தளவிற்கு ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. இவைகள் சாத்தியப்படுத்தக் கூடிய செயல்களாக உள்ளதனாலும், தங்களனைவர் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாகவும், செயற்படுத்துவீர்களென கருதிக்கொள்கின்றேன். - அவ்வாறே நினைக்க வேண்டியும் உள்ளது.
இவன்
தை - 2002
| Gന്ന ബു
 
 

'NA
ہے۔
2.
རྗེས་ ཡོད།འོ། །

Page 36
வெள்ளைத்தோல் வீரர்கள்
(-) மறைந்து போன உருக்கள்
வாழ்க்கை
J
நம்பிக்கை
J
V v
அவமானம் - 1 அவமானம் - 2
கேள்விக்குறி
எதிர்பார்ப்பு
வாழ்க்கை
யுகங்கள் தோறும் பிரளயங்கள் தோன்றி உலகை மூழ்கடித்துக் கொண்டிருக்க, இடியும் மின்னலும் புதிய பிறப்புகளையும், சமூகங்களைக் காண மகாத்மாக்களையும், மகாகவிகளையும் தோற்றுவிக்கலாம் என்ற நம்பிக்கை நிலவி வந்து கொண்டே இருந்தது. நம்பிக்கைகள் வாழ்வின் குரூரத்தனங்களாலும், அவமானங்களாலும் கேள்விக்குறியாக்கப்பட்டாலும், ஆத்மாவினுள் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு அணுவிலேனும் எதிர்பார்ப்பு மிச்சமிருந்து கொண்டே இருந்தது.
திசரா அச

வெள்ளைத்தோல் வீரர்கள்
நம்பிக்கை
வானம் இடி கொண்டது. மின்னல் பக்கவேரொன்று போல் பளிச்சிட்டது. மேகங்கள் ஏதுமிராமல் வானம் நீலமாய் மேற்பரப்பெங்கும் விரிந்து கிடந்தாலும் இடி மின்னிக் கொண்டு இருந்தது. அந்தச் சத்தமும் அதிர்வும் 23.5° சரிவில் இருந்து உலகை இன்னமும் சாய்த்து விடுமாப் போலவோ, சரிவைக் குறைத்து நிமிர்த்தி விடுவது போலவோ உலுக்கியது. கண்ணைக் குருடாக்கும் மின்னல் இரு கிளைகளாய் நீண்டு பூமியைத் தாக்கி தீக்குழம்பாய், இரு குவியல்களாய் உருவாகியது. வெம்மையாய் சூடு கக்கி அருகிலிருந்தவற்றைக் கருக்கி, காற்றைக் கலக்கி நடுங்கச் செய்து சிறிது சிறிதாய் ஒளியிழந்து கொண்டிருந்தது. அகோரம் குறைந்து வீசிய காற்று குழம்புக் குவியல்களைக் குளிரச் செய்தது. இடியதின்வில் புவி நடுக்கத்தில் குவியல்கள் இரண்டினதும் அடிப்பரப்புக் குறைந்து மேல் நோக்கி உயர்ந்தது. நீண்டு நிமிர்ந்தும், நீண்டது உச்சியின் பாரம் தாங்கொணாமல் வளைந்ததுமாக இரு உருவங்கள் தோன்றின. பாகுநிலைக் குழம்புகள் திண்மங்களாய் உறைந்தன. வெளிப்புறம் குளிர்ந்து காய்ந்ததாக இருந்தாலும், உட்புறக் குழம்பு உறைந்து போக எடுக்கும் ஆண்டுகளைப் பற்றி கணக்கிட்டுக் கூறமுடியாது. குளிர்காலம் முடிந்து அனல்காற்று வீசினாலோ, கோபத்தில் சூடாகினாலோ அதன் உறைதல் நிகழாமலேயே போகக் கூடியதாகவும் இருக்கலாம். வெம்மையில் கனன்று குழம்பாகவே போய் விடக்கூடிய சாத்தியக் கூறுகளுமிருந்தன.
அவ்வுருவங்கள் உருக்கொண்டிருக்கும் இடம் சூனியமாயிருந்தது. இவை பற்றி விஞ்ஞானிகளோ, மக்களோ கூட அறிந்து இருக்கவில்லை. இது நடு இரவில் நிகழ்ந்ததனால் வசதியாயிருந்தது. இல்லாவிடில் கூட்ட நெரிசலும் அவர்களின் சுவாசச் சூடுமே உருக்கொள்ளவிடாமற் பண்ணியிருக்கும். விஞ்ஞானிகள் இருந்திருந்தால் உருக்கொண்டவுடன் அவ்வுருவங்களை ஆய்வு கூடங்களில் கிடத்தி, கத்தியால் கீறி, "வெப்" தளங்களில் வெளியிட்டிருப்பார்கள். (சில வேளைகளில் நோபல் பரிசுகளும் கூடக் கிடைத்திருக்கலாம்) உலகின் மீதுள்ள அநியாயங்களை அழித்துப்போடவென இறைவனின் கோபக் கனல்களில் இருந்து வந்து விழுந்தவை. இவ்வுருவங்கள் அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, ஈசத்துவம், வசித்துவம், பிராகாமியம் என்பவை கைவரப் பெற்றவையாக இருக்குமெனவும் கருத்துக்கள் வந்திருக்கும்.
சுழல் காற்று வீசத் தொடங்கியது. எங்கேயோ ஆரம்பமாகிய காற்றுவட்டம் ஆரையைக் குறைத்து சிறிய வட்டமாகி இரு உருவங்களையும் மையமாகக் கொண்டு சுழன்றது. இரு வட்டச் சுழலும் ஒன்றையொன்று இடைவெட்டா வண்ணம் தூரப் பிரதேசங்களிலேயே சுழன்றன. சுழலின் வேகம் பற்றிக் கூற முடியா வண்ணம் கண் இமைப்பதற்குள் நூற்றுக் கணக்கான சுற்றுக்களைச் சுற்றியிருக்க வேண்டும். சிறிது நேரம் சுழன்றபின் மேலெழுந்து ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தொலைவில் ஒன்றாகி வான்வெளியுள் மறைந்தது.
| (്ത് 57

Page 37
வெள்ளைத்தோல் வீரர்கள் இரு உருவங்களும் ஆடையணிந்து நின்றன. ஒன்று வெள்ளை உடையுடன், கறுப்புக் கோட் அணிந்து, தலைப்பாகையுடன் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்க, மற்றையது வெள்ளைச் சேலையுடன் கூனல் விழுந்து குனிந்து நின்றது. கையில் ஊன்றுகோலொன்றும் கூட இருந்தது. இவ்விரு உருவங்களும் முன்னமே உலகில் வாழ்ந்த்வர்களின் தோற்றத்தைக் கொண்டிருந்தது. யாராலும் மறக்க முடியாத மூன்றாம் மரணம் ஏற்படாத உருவங்களாகவே பட்டது. பாடல்களால் பாரைச் சமன் செய்ய முனைந்த தோற்றங்கள் ஒரே தேசமொன்றின் வடக்கெல்லையிலும், மத்தியின் மேலெல்லையிலும் தோற்றம் பெற்றவைகள் சூழலைப் புரிய வேண்டி நகர ஆரம்பித்தன. இரண்டும் வேறுபட்ட சூழலில் இருந்தாலும் "அடக்கப்பட்டிருந்தவை" என்பதில் ஒற்றுமையாயிருந்தது. உருக்கள் நடக்க ஆரம்பித்திருந்த வேளை விடியல் ஆரம்பித்தது. சூரியன் மெல்லென எழுந்து எல்லோரையும் உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது.
அவமானம் - 1
பிரட்டுக் கலைந்து மக்கள் கதையளந்து கொண்டு போனார்கள். "கங்காணி போய்க் கொண்டிருக்கிறார்" - "பனியிலிருந்து தலையைத் தலைப்பாகை பாதுகாக்கும்" இவரது கோலம் எல்லோருக்கும் கங்காணியைத்தான் ஞாபகமூட்டியது. இதற்கெல்லாம் அவரது கறுத்த நிறத்தையுடைய கோட் காரணமாயிருக்க வேண்டும். வீதியோரத்தில் காலைக் கடன் முடிக்கக் குந்தி இருந்த சிறுவன் கண்டுவிட்டு ஓடினான். "அம்மோவ் கங்காணிமோவ்" திரும்பிக் கூடப்பார்க்காமல் வீட்டினுள் சென்று மறைந்தான். அவர்களுக்கு கங்காணி உருவங்கள் பயமுறுத்தக் கூடியவை. கீழாடைகளை நனைத்து விடுவார்கள். கையிலிருக்கும் கம்பும், கத்தியும் கூட காரணமாய் அமைந்திருக்கக் கூடியவைதான். ஆனாலும் இவரிடம் ஏதுமில்லாமல் இருப்பினும் முன்னமே தொற்றி ஊறியிருந்த பயமே அவ்வகை உருக்களைக் கோரமாய்க் காட்டியது. அந்த உருவம் பாரதி" என்பதைக் கூட மறந்து அவனைப் போக விட்டார்கள். வாழும் பொழுதுகளில் யாரும் புரியப்படுவதில்லை என்பது நிஜமாய்ப் போயிருக்கக் கூடியது.
உச்சி வெயிலாகியும் நடந்தான். இயற்கையை சுவாசித்துக் கெண்டே அற்ப உலகில் தான் கண்டு இலயித்த உலகு நிஜத்துள் இறங்கியிருப்பதாய் மகிழ்ந்து கொண்டே நடந்தான். பார்க்கும்போது புறவயப்பட்ட பார்வைக்கு எல்லாம் நன்றாய்த்தான் இருக்கும் என்ற நியதியை மறந்து இயற்கைக்குள் மூழ்கி நடந்தான். புரட்சி விதையினால் உலகு அழகாய் வளர்ந்திருக்கிறதெனவும், யாவரும் சமமாய் இருக்கிறார்கள் எனவும் எண்ணிப் புன்னகைத்தான். "குறிஞ்சி என்பதே இயற்கை கொஞ்சுவதுதான்" இயற்கை மயக்கத்திலிருந்து மீளவொண்ணாமல் கிடந்தான். வெயில் தகிப்பும், நடைக்களைப்பும் நாவை உலரச் செய்திருந்ததால் தாகமெடுத்தது. தீர்க்க முடியாத தாகத்தை தீர்த்து விட்டதாய் உணர்ந்தான். இது தொண்டை காய்தலுக்கும் நாவரட்சிக்குமான தாகம், கருங்கல் இடவுகளுள் மண் நிரப்பி இருந்த
FěHeyr ar

வெள்ளைத்தோல் வீரர்கள் படிகளையும், பாசிபடிந்த ஓரங்கள் சிதைந்து கிடந்த கானையும் தாண்டி நீண்டு கிடந்த லயத்து வீடொன்றின் கதவைத் தட்டினான். உள்ளிருந்து வந்தவன் ஆண், "என்ன", "தாகமாய் இருக்கிறது தொண்டை வறண்டுவிட்டது." என்றான் பாரதி. அவன் கீழிருந்து தலைப் பாகை வரை உற்று நோக்கினான். களைத்துத்தானிருக்கின்றான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். கண்களில் என்றும் பார்த்திராத பிரகாசமான ஒளி வீசுவதைக் கண்டான்.
"இதற்கு முன் தங்களைக் கண்டதில்லை" "எனைத் தெரியவில்லை" பாரதி கேட்கவும், "ஞாபகமில்லை, அப்படி இருத்திக் கொள்ளக் கூடியதாக அறிமுகம் ஏற்படவில்லை. என நினைக்கிறேன்" முறுக்கு மீசையையும், அவன் பின்புறம் யாரும் நிற்கிறார்களா எனவும் பார்த்து விட்டு, எந்தத் தோட்டம்" என்றான். "குறித்த பிரதேசத்துள் அடங்கிக் கொள்பவனல்ல, உலகமே வீடு, அனைவருக்கும் உரியவன் மகாகவி மரணமில்லாதவன், - பாரதி"
"பாரதி" யோசித்தவனாய் உள்நுழைந்து கொண்டான். ஆண்களும் வீட்டில் வேலை செய்கிறார்கள். ஆணுக்கு பெண் சமன்" சிரித்தவன், மண் பயனுற வேண்டும். வானகமிங்கு தென்பட வேண்டும். வாய்க்குள் முனகினான். உள் நுழைந்தவன் குசுகுசுத்த சத்தமும், எதையோ இழுத்து உண்டாக்கிய சத்தமும் கலந்து வந்தது. சில்வர் டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தான். அது சுத்தமாய் கழுவப்பட்டதற்கு ஆதாரமாய் பள பளத்தது.
"இனி தங்களது வறட்சி நீங்கிவிடும் என நினைக்கிறேன்" "நன்றி" குடித்து விட்டுக் கானைத் தாண்டியவன் கானினுள் முன்னரை விட அதிக அழுக்குடன் நீர் சென்று கொண்டிருப்பதைப் புரிந்துக்கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. அழுக்குச்சட்டை, கிழிந்த சாரனுடன் நின்றவன் அழுக்கைச்சுரண்டி நீருடன் அனுப்பிக் கொண்டிருந்தான். அவன் முன்னமே பாரதிக்கு அறிமுகமாகி இராவிட்டாலும் அவனிடம் கொண்ட ஈர்ப்பின் காரணமாக அவனது தோளைத் தட்டியதும் அவன் அதிர்ந்துபோய் இரண்டடி பின் சென்று நின்று எனைத் தொட்டதால் பயந்துவிட்டேன். தொட்டுப் பேசுபவர்கள் குறைவு, அதுவும் இம்மாதிரியான வேலை செய்யும் போது அறவே இருக்கமாட்டார்கள்."
"தொடுவதால் நீ தேய்ந்து விடுவாயா" அவன் முகத்தைப் பார்க்கவும் அவன் இடம் வலமாய்த் தலையை ஆட்டினான். "அப்படியானால் நான்" ஏதோ பிழையை உணர்ந்தவனாய் பதற்றத்துடன், "எங்கள் பிறப்பின் - தொழிலின் பொருட்டு தாழ்ந்தவர்களாய் ஒதுக்கப்பட்டவர்கள்." இதைக் கேட்டதும் பாரதிக்குக் கோபம் வந்தது. "ஏன் கூனுகின்றீர்கள். உங்களைத் திருத்த முடியாதா? மானிடனில்
இழிந்தவனுமில்லை" உரத்து "உயர்ந்தவனுமில்லை" அவன் கைகளைக் கட்டிக் குறுகி நின்றான்.
() ൧r 6

Page 38
வெள்ளைத்தோல் வீரர்கள் இப்படி நிற்பது தவறு நீயும் எல்லோருக்கும் சமமானவன்" பாரதி சொன்னதும் தன்னுள் இருந்தவற்றைக் கதைக்கலாம் என்ற நம்பிக்கை வந்திருக்க வேண்டும். தாங்கள் அதைச் சொல்லலாம் சொல்வதால் பாரதூரமான பிரச்சினை வந்துவிடுமென நினைக்கவில்லை. நாங்கள் சொல்வதனால் யோசிக்க வேண்டியிருக்கும் எத்தனை காலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றோம்."
நீங்கள் தொட்டதும் மயிர்கள் சிலிர்த்துக் கொண்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இப்படி யாரும் தொடுவதில்லை. நீங்கள் சொன்னதைப்போல அவர்கள் சிந்தித்திருக்கலாம். கதைக்க அழகாய் இருந்தாலும் நடைமுறைக்கு. அவன் இழுத்துக் கொண்டு முடிக்க முன்னமே பாரதி கத்தினான். நடைமுறைப்படுத்த வேண்டும். வண்ணங்களில் வேற்றுமை இருக்கலாம். ஆட்சேபனையில்லை, மானிடரில் இல்லை. உங்கள் கைகள் வலிமையானவை என்பது தெரியாது." எதையோ நினைத்துத்தான் கதைத்தான். என்பதும் அது அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும். தலையைச் சொறிந்து கொண்டே கும்பிட்டு பழகி விட்டதாய் கூறினான். மாற வேண்டும் குட்டக்குட்ட குனியக் கூடாது. விடியலைத் தேடி நகருமாறு கூறிவிட்டு, வேலிச்சந்தினுள் இவர்களின் உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்ற வெள்ளை உருவைக் கவனிக்காமல் கோபமாய் நடந்தான். இது சாதாரணமாய் நடப்பதுதான். கதைத்துக் கொண்டிருக்கும் போது மூன்றாவது மனிதனின் இரு காதுகளும் நீண்டிருப்பது இயல்புதான். இதுவேதான் தகவல்கள் காற்றைவிட வேகங்கொள்ளக் காரணமாயிருந்தது. சற்றுங் குறையாத வெம்மை அவன் மூச்சுக்காற்றில் வீசியது. கண்ணீர் குடித்த வீட்டு ஆணைக் கொண்டு வந்தான். பெண் வேலைக்கு போயிருக்கிறாள்.
இந்த உலகில் வர்க்க சமத்துவம் இல்லாமற் போனாலும் ஆண் - பெண் நிகராக வாழ்வதாய்ச் சந்தோசித்தான். அதில்தான் கொஞ்சம் குளிர்ந்தான். இது நிகழ்ந்திரா விட்டால் கோபத்தினால் அவன் முழுவதுமாய் கரைந்து போயிருக்கலாம். உட்பகுதியில் கனன்று கொதித்த குழம்பு அசையாமல் பாகுத்தன்மையில் நின்றது. படிகளை எண்ணாமல், எண்ணிக்கொள்ள பெறுமையில்லாமல் ஏறினான். அவன் நினைத்ததெதுவும் நடக்கவில்லை. எல்லாம் மாறாய்த்தான் நடந்தது. சிந்தனைக்குள் மூழ்கி நிற்கும் இடத்தை மறந்து நின்றவனை அந்த நிகழ்வுதான் அங்கு கொண்டு வந்தது. அரும்பக்கிள்ள வேண்டாம்" மலையைவிட்டுத் துரத்தி விடுவதாகவும், சில அசிங்கமான வார்த்தைகளையும் சேர்த்து திட்டினான். மலையில் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து கறுத்தக் கோட்டும், அரைக்கால்சட்டையும் அணிந்திருந்தவன் தான் சத்தமாய் திட்டினான். அவன் கங்காணியென அழைக்கப்பட்டவனென இவனுக்கும் தெரியாதிருக்க வேண்டும். தெரிந்திருக்க நியாயமும் இல்லை. இப்பேச்சுக்குரியவர்களும் ஏனையவர்களும் தலையில் துணிகளை மடித்து கொங்காணி போட்டிருந்தார்கள். அவர்கள் பின்புறம் மாட்டியிருந்த கூடையின் பட்டி தலையை அழுத்தி வடுவையோ, காயத்தையோ உண்டுபண்ணி விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்திருக்கிறார்கள். ஆனாலும்
(്ത മ

வெள்ளைத்தோல் வீரர்கள்
அவர்களுக்குத் தெரியாமல் இரு தோள்களில் கால்களை வைத்துக் கொண்டோ, தலையில் உட்கார்ந்தோ, நின்ற வண்ணமோ உள்ள உருவங்கள் சிலரது பார்வைக்கு மட்டுமே புலப்பட்ட்து. இதைத் தடுக்கவென எதுவிதத் தடுப்புகளும் இல்லாததிலிருந்து இது பற்றியதான புரிதலோ, அருட்டலோ அவர்களிடம் இருக்கவில்லையெனத் தோன்றியது.
கறுப்புக் கோட் அணிந்திருந்த கங்காணி இன்னமும் நிறையத் திட்டினான். வெற்றிலைக் குதம்பலைத் துப்பி விட்டும் திட்டினான். அவன் வெளியிட்ட வார்த்தைகள் பாரதியின் செவியினுள் நுழைந்து அவனுள் இருந்த குழம்பைக் கொதிக்கப் பண்ணிக் கண்ணால் ஆவி பறக்கச் செய்தாலும் வேலை செய்பவர்கள் தலையைக் குனிந்து தங்களுள் சிரித்துக் கொண்டு வேலையில் கவனமாய் இருந்தார்கள். அவர்களுக்கு பழசுபட்ட வார்த்தைகளாய் இருந்திருக்க வேண்டும். அவன் பைத்தியத்தைப்போல சிறு கற்களை உதைப்பதும் நிமிர்ந்து கை நீட்டிக் காட்டுவதுமாய்த் திட்டிக் கொண்டே மேலும் கீழும் நடந்தான். பாரதியுள் கொதித்துக் கொண்டிருந்த தீக்குழம்பு தொகுதிப் பெருநாடி - பொதுச் சிரசு நாடி - மூளை நாடிகளென ஓடி மூளைக்குள் பரவி இருக்க வேண்டும். எதுவும் செய்யத் தோன்றாமல் வேகமாய் இறங்கி நடந்தான். ஒவ்வொரு படியெனத் தாண்டாமல் சில படிகளை விட்டு விட்டு விரைவாய் கொதித்து இறங்கினான். அவனைப் பார்க்கும்போது அவசரத்துக்கு ஓடிக் கொண்டிருப்பவன் போல பட்டது. மக்கள் அஞ்சியஞ்சிச் சாவதாகவும், இவர்கள் அஞ்சாத பொருள் உலகில் இல்லையெனவும், மூடர்களாய் குனிந்து, கைகட்டி நிற்பது பற்றிப் பொருமினான். காய்ந்து வெறியேறிய கண்களின் பார்வைகள் சுட்டெரித்து விடுவிக்கப்பட வேண்டிய கட்டுக்கள் அதிகம் இருப்பதை உணர்ந்தான்.
வீறாய் கோயிலின் படிகளில் ஏறினான். கோயில் பூட்டித்தான் இருந்தது. ஆண், பெண், அலிக்கற்களை அறிந்தோ, சிற்ப சாத்திர முறைப்படி தேர்ந்தோ, புவியீர்ப்பின் மையத்தளத்தை இனங்கணர்டோ, ஆகமமுறைப்படியாக அமைக்கப்படாத ஆலயம் (கிராமிய வழிப்பாட்டுடன் இருந்த மாரியம்மனுக்கு வைதீகநெறி சார்ந்து அமைக்கப்பட்ட ஆலயமாக இருக்க வேண்டும்) சென்ற வருடத் திருவிழாவிற்கென அமைக்கப்பட்ட பந்தலின் மேல் இடப்பட்டிருந்த யூகலிப்பிரஸ் இலைகள் காய்ந்து சருகாகி விழக் காத்திருந்தன. தலைப்பாகையை, சரி செய்து தலைக்குள் அழுத்தினான். அது விழுந்து விடுமென்ற அச்சத்தை விட உறுதியாய் இருக்க வேண்டுமென எண்ணியிருக்க வேண்டும். கோபப்பொறி பறக்கக் கத்தினான்.
"உங்களைப் போன்ற பயந்தான் கொள்ளிகளை நான் எங்கும் கண்டதில்லை, காண வேண்டிய கட்டாயமோ கூட இருந்திருக்க முடியாது. அதற்கான ஞாபகங்கள் கூட என்னிடமில்லை, கைகளைக் கட்டியும், வாய்களைப் பொத்திக் கொண்டும் இருக்க வேண்டிய நிலை உங்கள் எல்லோருக்கும் இல்லையெனத் தோன்றுகின்றது.
| (r ബ

Page 39
வெள்ளைத்தோல் வீரர்கள்
அது நியாயமானதாகக் கூடப்படவில்லை. இன்னமும் அடங்கிக் கிடப்பதற்கான வழியாகவே அது இருக்கப் போகின்றது. இவற்றை வைத்துக் கொண்டு பயந்தவர்கள் என்றோ, புரியாதவர்கள் என்றோதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. இதுவே தொடருமானால் உங்கள் இரத்தங்களை உறிஞ்சிக் குடிக்கக் கூட யாரும் பயப்படப் போவதில்லை."
ஆத்திரத்தில் எழுந்து உருண்டை தொண்டைக் குழிக்குள் அடைக்க, உதடுகளும் நாவும் காய்ந்து போனது. கண்கள் அகல விரிந்து கொள்ள எழுந்து நடந்தான். இவர்களை நினைத்துக்கொள்ள நெஞ்சு பொறுக்கவில்லை என்றும் சொன்னான்.
வீதி அவனுக்காய்ப் பிரிந்து நின்றது. எங்கு? எதற்கு? ஏன்? என்ற எதுவிதக் கேள்விகளையும் எழுப்பிக் கொள்ளாமல் தன் பாட்டில் நடந்தான். அவனால் விடைகான முடியாத ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்து நிலைக்குத்தாய் நின்றன. உடல் புவியீர்ப்புடன் சிக்குண்டு பூமியுடன் தொடர்பு கொண்டு நடக்க, எண்ணங்கள் தாண்டி சூரியனைக் கவ்விப் பிடிக்கவெனவோ, சுட்டெரிக்கவெனவோ பறந்தது.
"பாரதி" ஒரு குரல் அவனது எண்ணங்களை புவிக்கிழுத்து உடலுடன் இணைத்தது. குவளையின் ஞாபகத்துடன் திரும்பினான். அழைத்த குரலுக்கும் பாரதிக்குமிடையில் ஆங்காங்கே மயிர்களை இழந்து காயம்பட்டிருந்த நாய் குறுக்கோடியது. இருவரது பார்வையும் அதில் லயித்துத்தான், எதிரெதிராய்ச் சந்தித்தன, தங்களைக் கண்டதிலும், எங்களுக்காய்ப் பேசவெனவோ, எங்கள் நிலைமையைக் கண்டு மனம் வருந்திக் கொள்ளவெனவோ ஒரு ஜீவன் உள்ளதை நினைத்துப் பெருமை கொள்வதுடன் சந்தோசப்படுவதாகவும் சொன்னான்.
அவனது வசனங்களில் அது தென்பட்டதாக இல்லை. மனவயப்பட்டதாக இருந்திருக்கலாம். பாரதியைக் கேட்டிருப்பவனாக்கி தொடர்ந்து கொண்டே போனான். தேங்காய், மாசி தேடிவந்த காலம் முதலாய் நிமிர்ந்து நடக்கவில்லையா, விடப்படவில்லையா என்பது பற்றி சரியான தெளிவில்லை. ஆனாலும், மழைக்குள் ஊர்ந்து, நிரைகளுள் நுழைந்து, சரிவில் விழுந்து, சகதியுள் புரண்டு, வாழ்க்கையுள் ஏற முனைந்து வழுக்கி விழுந்தும், கீழிருந்து வெள்ளையாய் நின்ற உருவங்கள் இழுத்து விடுவதும், சாரனை முழங்கால் வரைத் தூக்கி, அடிபட்டோ, உராய்வுபட்டோ சரியான வடிவில்லாமல் தோலின் நிறத்தை விட வெளிறியிருந்த அடையாளத்தைக் காட்டினான். - அட்டைகள் ஊர்ந்து இரத்தங்குடித்துப் பெருப்பதும், தொந்தி விழுந்த உருவங்களின் நடமாட்டம், கவிதை சொல்லி அங்கங்களை இழந்த உருக்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாரதியின் நரம்புகள் புடைத்து, கண்ணுள் இரத்தம் வலைப்பின்னலானது. மயிர்க்கணுக்கள் புடைக்க மயிர்கள் சிலிர்க்க எழுந்தான். சற்றுக் கூனிய நிலையிலிருந்து மார்பை நிமிர்த்திக் கண்களைப் பெரிதாக்கி புருவங்களை உயர்த்தி, வலதுகரத்தை உயர்த்தினான்.
() (ത ശ്ലേ

வெள்ளைத்தோல் வீரர்கள்
ஏழையென்றும், அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனிதரென்பது இவ்வுலகில் இல்லை." என முழங்கினான். இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்க ஒன்றுமில்லையென்றும், அதற்கு அவசியமில்லை, கை விலங்குகளை உடைத்தெறிவதற்கு புறப்படுவது தான் மீதியாய் இருக்கின்றது. இதிலிருந்து பின் வாங்குவதென்பது கால தாமதத்தை ஏற்படுத்துவதுடன் எதிரிகளுக்கு பாதுகாப்பைத் தேட அவகாசத்தை வழங்கிவிடும்." அவன் கதைத்துக் கொண்டிருக்கும் போதே சுற்றிக் கூட்டமாகியது. நின்றவர்களில் அதிகம் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவனுள் குழம்பு பொங்கிக் கொண்டிருக்க வேண்டும். வார்த்தைகள் பொங்கி வந்தன. கவிதைகளும் சொன்னான்.
அவ்வாறாக கவிதையொன்று சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான், சக்கரங்கள் பூட்டி நகர்ந்து வந்த இயந்திரம் உறுமிக் கொண்டு நின்றது. உள்ளிருந்து நீளக்குழாய்களுடன் இறங்கியவர்களில் பலர் அவர்கள் அனைவரையு சுற்றிக் கொண்டபின் இருவர் பின்பு இறங்கிவந்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு இடது தோளிலிருந்து குறுக்காய் பட்டி போடப்பட்டிருந்தது. கறுப்பு நிறமான அது இடுப்பில் கட்டும் பெல்ட்டை போலவே இருந்தது. இங்கு தமிழ்க் கதைக்கும் ஒருவன் வந்திருப்பதாய் தெரியும். உங்கள் மொழியை விட அவனுடையது அர்த்தமாயும், செறிவுடையதாகவும், கடினம் கூடியதாகக் கூட இருந்திருக்கின்றது." கத்திக் கொண்டிருந்த அதிகாரியின் பின் வெள்ளை முழுக்கை சட்டையுடன் ஒருவன் நின்றிருப்பதை இப்போதுதான் பலர் கவனித்தார்கள் சாரனும் கூட அதே நிறத்தில் இருந்ததனால் இவனை இனங்காண உதவியாய்க் கூட இருந்தது. "அவன்தான்." பாரதியை நோக்கிச் சுட்டினான். பின் எதுவித வார்த்தைகளும் வரவில்லை. இரும்புக் குழாயின் பிற்பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்த மரப்புடி கூட்டத்தை விலக்கியது. இதனாலேயே பலர் முகங்களில்சிவப்புச் சிதறல் தெரிந்தது. பாரதிக்குக் கூட வலது கன்னத்தில் சிவப்பாய் மின்னல் போன்று கிளைவிட்ட வெடிப்புத் தெரிந்தது. குழப்பநிலைக்கேயான குரலையோ, வார்த்தைகளையோ பிரித்தறிய முடியாத சத்தம் சூழ்ந்து கொண்டிருந்தது.
ஒருவன் கழுத்தைப் பிடித்து முன்னோக்கிச் சரிந்தான். தடுமாறி இடறி நின்ற பாரதியின் தலைப்பாகை வாகனத்தின் கீழ் உருண்டுபோனது. யாராவது அதை எடுத்துக் கொள்வார்கள், "ஏன்"? மரப்புடி முள்ளந்தண்டை வயிற்றுப்புறம் நோக்கித் தள்ளியது. தாங்கமுடியாமல் விழுந்தவனை இழுத்து இயந்திரப் பெட்டியினுள் அள்ளிக் கொண்டு வந்து போட்டார்கள். (கிட்டத்தட்ட நாய்கள் பிடிப்பது போல)
அவமானம் - 02
கூன் விழுந்தவள் பொல்லை ஊன்றிக் கொண்டே நடந்தாள். எந்த ஜீவ
நடமாட்டமும் இல்லாத பாலைவனப் பிரதேசம் போல வறண்டு கிடந்தாலும், கணுக்காலளவு புற்கள் ஆங்காங்கே தென்பட்டது. காணக்கிடைத்த வீடுகள் கூட
| (ത ഒഴ

Page 40
வெள்ளைத்தோல் வீரர்கள் வீடுகள் என்று சொல்லமுடியாத பக்கச் சுவர்கள் மட்டுமுடையதாகவோ, பாழுண்டவையாவோ தான் கிடந்தன. காட்டெலிகளும், கரப்பான் பூச்சிகளும், சிலந்திகளும் இன்னமும் சில ஊர்வன மட்டுமே இருக்கலாம். நெடுந்தூரத்தில் சில மரங்கள் தென்பட்டன. எந்தவித நடமாட்டமும் தெரியவில்லை. பார்வைப் புலத்துக்குட்பட்ட பிரதேசம் முழுவதும் சோகம் நிரம்பி இருந்ததை அவளும் உணர்ந்தாள். கால்கள் வலியெடுத்ததுடன் சூடு காலை வைக்க முடியாதபடி பண்ணியிருக்க வேண்டும். நின்று நிழலாற இடமில்லாததால் வேகமாய் நிழல் தேடி ஓட்டமாய் நடந்தாள். சில மரங்கள் எரிபட்டு அடியுடன் வேரை மேல் காட்டி சாய்ந்து இருந்ததையும் கண்டாள். சூனியப் பிரதேசமொன்றின் மையப்பகுதியில் நிற்பதாய்த் தோன்றியது. கூரை இல்லாத எரியுண்டு புகைப்படிந்து கிடந்த வீடொன்றுக்கருகில் இருந்த மரத்தின் நிழலில் குந்தினாள். மங்கிய கண்களுடன் சுற்றி நோக்குகையில் யுத்தமொன்று நடந்து ஓய்ந்ததற்கான அறிகுறிகளே தென்பட்டது. உடல்கள் வீசப்பட்டதா? எரிக்கப்பட்டதா? என்பதில் அவள் சிந்தனை போனது. காலிரண்டையும் நீட்டி முதுகை மரத்தில் வைத்திருந்தவள் அருகில் குவித்துக் கிடந்த மண் குவியலில் கையிலிருந்த கம்பை நுழைத்துக் கிளறினாள். குண்டு வெடித்துச் சதைத்துண்டுகள் சிதறுவது போல் மண் பறந்தது.
"சூய்" எதையோ விரட்டுவது போல - கோழி அல்லது காகம் இவ்வாறு விரட்டப்படுதல் இயல்பு - அண்ணாந்து மரத்தின் மேல் பார்த்தாள். காகமொன்று மரத்திலிருந்து பறந்தது. அதன் எச்சம் வெள்ளையாய் காலுக்கருகிலும், கறுப்பு உறுண்டை போல மடியில் ஒன்றும் விழுந்தது. கையிலெடுத்து உற்று நோக்கினாள். அது நாவற்பழம். அவள் அப்படியாக எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னர் களைப்புற்ற போது கூட, மேல் நோக்கினாள் தான் இருந்தது நாவல் மரத்தின் கீழ் என்பதும் தெரிந்தது. பழம் இருக்கின்றது என்பதை தெரிந்திருக்கக் கூடியதாக முன்னர் எதுவும் நடக்கவில்லை. நிழல் மாத்திரமே தேவைப்பட்டிருந்தது. பாலமுருகன் மேலிருந்து "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்றான். அவள் எவ்வித யோசனையும் இல்லாமல் 'சுட்டபழம்" சத்தமாகவே கத்தினாள். சப்புக் கொட்டும் அவள் வாய்க்குள் சிதைந்த வண்ணம் உருண்டு ஓடிக் கொண்டிருந்தது நாவற்பழம்.
மண் குவியலுடன் ஒட்டியிருந்த குழிக்குள் இருந்து ஒரு பிஞ்சுத்தலை எட்டியது. "என்ன செய்கிறாய்" மேல் நிலைத்திருந்த பார்வையை கீழே எடுத்தவள் சிறுவனைக் கண்டு கையிரண்டையும் இணைத்துக் கும்பிட்டாள். "முருகா" எதுவும் விளங்காமல் குழம்பிய சிறுவன் "நான் முருகனில்லை" என தனது பெயரைச் சொன்னான். "உன் பெயர் எதுவாக இருப்பினும் எனக்கு முருகனாகவே தெரிகிறாய் மரத்திலேறி சுட்டபழங்களைப் போடேன். களைப்பாய் இருக்கிறேன்" - "நான் சுடுபட வேண்டும் என்கிறாய்" பின்புறம் இடதுகையை நீட்டிச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வரும் குண்டு என்னைக் கொன்று விடும், நீயும் என்னுடன் வருதல் உன் ஆயுளைக்
[ திசேரா எ

வெள்ளைத்தோல் வீரர்கள்
கூட்டும்" - "எங்கே" என எட்டிப்பார்த்தாள். அவன் குழிக்குள் இருந்து கொண்டு மேலே எட்டுவதற்காக வேரில் ஒற்றைக்காலில் நிற்பதையும் கண்டாள். "எதனால் " - "இருந்தால் செத்துப் போய்விடுவாய் இறங்கிக்கொள், யுத்தம் நடக்கிறது" கைகளைப் பிடித்து இழுத்து குதிக்கப் பண்ணினான். பனங்குற்றிகளை நிறுத்தி செவ்வகமாக அறை போன்றிருந்த உட்புறப்பகுதியில் இருக்கச் சொன்னான். உள்ளே பாயொன்று விரிக்கப்பட்டிருந்தது. பையன் சம்மணங்காலிட்டு அமர்ந்து அருகிலிருந்த புத்தகத்தைத் தள்ளி வைத்தான். அவளும் காலை நீட்டி பனங்குற்றியில் முதுகைச் சாய்த்தாள். மேலேயும் கிடையாக பனங்குற்றிகள் அருகருகில் வைக்கப்பட்டிருந்தது. அவைகள் மணலை கீழ்நோக்கி வராமல் தடுத்துக்கொண்டிருந்தன. "சோழர்களுக்கும், பாண்டியர்களுக்குமா" பழைய நினைவிலிருந்து மீட்டுக் கொண்டுவர வேண்டியிருந்தது.
"இல்லையில்லை இங்குள்ளவர்களிடம் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை விட நவீன துப்பாக்கிகள் இருக்கின்றன. அவைகள் இரும்பினால் தயாரிக்கப்பட்டவை. இப்போவெல்லாம் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது." - ஆயுதங்களின் வீரியம் பற்றியும் இறந்து போன, இறந்து போவதற்கென காத்துக்கிடப்பது போல அவஸ்தைப்படுபவர்களைப் பற்றியும் சொன்னான். அதில் தமிழர்களே அதிகமாய் இருப்பது பற்றியும், மொழி முன்னணி கொண்டிருப்பதையும் அவனுக்குத் தெரிந்திருந்தது, அவன் அறிவுக்கு எட்டியிருந்த யுத்த காண்ட பகுதியையும் சொன்னான். கூனல் நிமிர்ந்து விட்டதுபோல் உடலை நிமிர்த்தியவள் "இப்படியான வாழ்க்கையா இங்கு" - "ஆயுதங்கள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது." என்றவன் நீ யார் பாட்டி" சிறுவர்களுக்கே உரித்தான அறிந்து கொள்ளும் இயல்புதான் அவனுக்கும் இருந்தது. நான் தான் ஒளவையார். இன்றைய உலகை தரிசிக்க வந்தேன்." சலித்துக் கொண்டவள் 'இந்த உலகோ இப்படியானதா" - "எனக்குத் தெரியும் உன்னை , ஆத்திசூடி, கொன்றை வேந்தன், அரிது - பெரிது பாடியவள். எனக்கு நன்றாய்த் தெரியும் உன்னை அவனுக்குள் சந்தோசமும், பெருமையும் தோன்றியது. கூடவே ஆவலும் நிறைய நீ இக்காலத்தில் அரியதைப் பாடினால் என்ன பாடுவாய்" யோசித்தவள் அவனால் சொல்லப்பட்டதிலிருந்து தொகுத்துக் கொண்டாள்.
"அரியது கேட்கும் அருமையான பையா
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது மானிடராய்ப் பிறப்பினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தலரிது பிறந்த காலையும்,
ஞானமும் கல்வியும் நயத்தலரிது - நயத்த காலையும் வாழ்க்கையை உணர்தலரிது - உணர்ந்து விடினும் உயிரோடிருத்தல் அரிது - உயிரோடிருப்பினும், கை, காலுடன் அங்கவீனமுறாதிருத்தல் அரிது.
1 திசேரா 5

Page 41
வெள்ளைத்தோல் வீரர்கள்
அங்கவீனமுறாதிருப்பினும்
பயத்தில் நடுங்காதிருத்தலரிது
பயமுறாதிருந்தால் - வாழ்வை வென்றிடலாம்." கைகளைத் தட்டியவனுக்குத் தத்துவங்கள் போதிக்கப்பட்டது போல "நன்றாய்ப் பாடினாய் போ, பெரிது எது" கை தட்டல்கள் அவளை எப்போதும் பாதித்திருந்ததில்லை. அவனால் பூரித்துத்தான் போனாள்.
"பெரியது கேட்கும் பேரறிவுச் சிறுவா, பெரிது பெரிது புவனம் பெரிது, புவனமோ வல்லரசுகளுக்குள் அடக்கம் வல்லரசோ ஆயுதத்துள் அடக்கம் ஆயுதங்களோ உயிர்களையும் கொல்லும் ஆயுதங்களின் பெருமை சொல்லவும் பெரிதே."
இரு கால்களையும் மடக்கி கீழ்த் தாடையை அதில் வைத்துக் கொண்டான். - "சோழனுக்கும் பாடியது போல, இந்த மரண வாழ்க்கையையும், ஆயுத உலகையும் நான்கு கோடிப்பாட்டுக்குள் அடக்கேன்." - "தாகமெடுக்கிறது, நீர் சிறிது தரமுடியுமா?" அருகிலிருந்த போத்தலை எடுத்து தலைகீழாக்கி நோக்கியவன் "நில் எடுத்து வருகிறேன்" அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வேரில் காலை வைத்து மேலே தாவியவன், தலையை நீட்டி "கவனமாய் இரு. மேலே வராதே" ஏதோ நினைவுக்கு வந்த ஒளவை கேட்டாள். "உனது பெற்றோர்" - "வந்து சொல்கிறேன்." தலையை இழுத்துக் கொண்டு மறைந்து போனான். சிறுவன் சொன்ன கதைகளை உருப்படுத்தினாள். வாழ்வை நினைக்க நினைக்க அவளுள் ஏதோவொன்று உருளத் தொடங்கியது. நினைவுக்குள் அமிழ்ந்து இருந்தவளை வெடிச்சத்தங்களும், ஐயோ பாட்டி" என்ற குரலும் குலைத்தது. கைகளை ஊன்றி எழுந்து கொண்டவள், வேரில்காலைக் குத்தி மேலே தாவினாள். அது அவளுக்குக் கூடத்தெரியாது - வயது ஒரு தடையாய் இருக்க முடியாது.
குப்புறக் கிடந்தவனுக்கு அருகில் கீழே கிடந்த போத்தலில் இருந்த தண்ணீர் மண்ணைக்குழியாக்கி விட்டு, ஊறிப்போனது போக மீதி சிவப்பாய் ஓடியது. உடலைச் சூழ ஐந்தாறு பச்சைகள் கலந்து உருக்கள் நின்றிருந்தன. இவளைக் கண்டதும் அதிலொன்று இவளை நோக்கி இரும்புக் குழாயை நீட்டியது. அருகில் இருந்தவன் அதை கீழ் நோக்கிப் பிடிக்கத்தள்ளிவிட்டு, காதுள் என்னவோ சொன்னான். சொல்லும்போது அவனது கண்கள் விரிந்து, புருவங்கள் உயர்ந்து நீள்பட்ட வாயிலிருந்து வீணி வடிந்ததையும் கண்டாள். அவளை நோக்கி திரும்பியவன் குழலின் பட்டியை தோளில் மாட்டி பின்னுக்குத் தள்ளிவிட்டு அவளருகில் வந்தான். கம் பைத் தட்டிவிட்டு கைகளை உயர்த்தி, அப்படியே நிற்கும் படி மணிக்கட்டுகளைப் பற்றி உலுக்கி, தன் இருகைகளையும் அவளுடலில் ஒட்டிகீழ் நாக்கிக் கொண்டு வந்து கைகளைப் பின்னுக்காக்கி அவளை முன்னுக்கிழுத்து
(്ത ഭ

வெள்ளைத்தோல் வீரர்கள் இறுக்கி அணைத்தான். அரக்கத்தனப் பிடியிலிருந்தவளுக்கு மூச்சுத் திணறியது. அவனைத் தள்ளிவிடக் கூடிய பலம் இல்லை. என்பதை உணர்ந்தாள். முருகாமுருகா"கத்தினாள் புதிதாய் யாரும் வரவில்லை அவன்கள்தான் நின்றிருந்தான்கள். கைகளைக் கட்டிப்பார்த்துச் சிரித்தவண்ணம் அவனின் மாரில் கைகளைக் குத்தியவள், கண்ணை மூடி பலம் முழுவதையும் திரட்டித்தள்ளினாள் பலம் திரண்டு கைகளுக்கு வந்தது. விலகியவன் நிலைதடுமாறி கீழே விழாமல் இரண்டடி பின்னுக்கு வைத்து ஏனையோரைப்பார்த்து திரும்புவதற்குள் குனிந்துக் கொண்டே ஓடினாள். - வேகமாய் நடந்தாள் - தடுமாறிக் கொண்டே முன்னம் குந்தியிருந்த நாவல் மரத்துக்கு பின்னே போனாள். பாதுகாப்பிற்கு தகுதியான இடமென உறுதியிட முடியாவிட்டாலும் தற்போதைக்கு சமாளிக்கும் எண்ணமாக இருந்திருக்கலாம்.
கேள்விக்குறி
தீக் குழம்புருவங்கள் உறைதலுக்கான எவ்விதக் கூறுகளும் கிடைக்காமல் போனது. மனதுள் தோன்றிய வெம்மை குழம்பைக் கொதிக்கப்பண்ணியது. இயலாமையும் கூடச் சூடாக்கி இருந்தது. பாகுநிலையாகி, திரவங்களாய் கொப்பளித்து கொதித்ததில் புறத் தோற்றங்கள் கரைத்து நீட்டப்பட்டிருந்த அங்கங்கள் கரைந்து ஒழுகத் தொடங்கியது. விரல்களும், காதுச் சோணைகளும், மூக்கும் சொட்டு சொட்டாய் விழுந்தது. உருவங்கள் முற்றாய் கரைந்து உருத் தெரியாமல் குழம்புக் குவியலாய் தரையில் படர்ந்து சிறைக்கம்பிகளுக்குப் பின்னான தரையிலும் - மரத்தின் பின் மணலிலும் கிடந்தது. அவையும் கொதிப்பெடுத்து ஆவிபறந்து சிறிது சிறிதாய் அதன் பரப்புக் குறைந்தது. ஆவியானாலும், நெருப்பு வீழ்ந்ததற்காக கறுப்பான நிலமும் - புற்கள் கருகி சூடுகண்ட மண்லும், மீதிப்பட்டிருந்தது.
அவர்கள் இரு உருவங்களையும் தேடினார்கள். அவற்றின் பூர்வீகம், தோற்றம், மறைவு எதுவும் தெரியாதவர்களாய்த் தேடி தலைமைச் செயலகத்துடன் தொடர்புகளை இணைத்து தகவல்களைக் கொடுத்தார்கள். பயங்கரமானவர்கள் எனவும் முக்கிய புள்ளிகள் எனவும் தகவலில் சேர்க்கப்பட்டிருந்ததால், அவர்களைக் கண்டு பிடித்தேயாகவேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டது. அதன் காரணமாக மக்களின் உதவி தேவைப்படுவதாகவும், தகவல்கள் பத்திரமாயும், இரகசியமாகவும் வைக்கப்படுமாம். தேவையாயின் பாதுகாப்பும் வழங்கப்படும் , உறுதியானவையெனக் கருதப்படும் பட்சத்தில் பரிசில்கள் வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வந்தன.
எதிர் பார்ப்பு
காற்றாய் செய்திகள் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாய் சேர்த்து வானைநோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிசயத்தைக் கண்டுகொள்ள, மேகங்கள் கறுப்பாய்,
[] ቃöörፖ ሪፖ

Page 42
வெள்ளைத்தோல் வீரர்கள் சாம்பல் நிறம் கொண்டதாய் மிதந்து கொண்டிருந்தது. ஏதாவது இரண்டு முட்டி மின்னலை, இடியைத் தோற்றுவிக்கலாம். அதிலொரு துகள் பூமியில் வீழ்ந்து, உருவம் தோன்றி விடியலை நோக்கிக்கொண்டு செல்லலாம் என நம்பிக்கையுடன், நடு இரவுகளிலும் வானைநோக்கிக் காவல் இருந்தார்கள் வந்தவர்களை விட்டுவிட்ட கவலையும் இருந்தது. பாதுகாப்பளித்து தலைவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாம், சிந்தனையும், அனுபவத்தையும் கேட்டறிய வேண்டுமாம். கூட்டம் கூட்டமாய்க் கதைத்த வண்ணம் வானையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
| (്ത് 6്

வெள்ளைத்தோல் வீரர்கள்
கண்ணியத்தின் காவலர்கள்
| (ന്ന് 6്

Page 43
வெள்ளைத்தோல் வீரர்கள்
கண்ணியத்தின் காவலர்கள்
தங்கள் தங்களுக்கென அவர்களாலேயே உருவாக்கப்பட்ட சட்டப் புத்தகங்களுடன் ஒவ்வொருவரும் வலம் வந்து கொண்டிருந்தார்கள். வீடு, கடை வீதி, மலசலகூடம், குளியலறை குசினி, வேலைத்தளம் என எல்லா இடங்களிலும் சட்டப் புத்தகங்களை இறுக்கி அணைத்தபடி இருந்தார்கள். அதில் இடப்பட்டிருந்த ஓட்டையினூடு எதிர்ப்படுவோரை நோக்கிக் கொண்டிருந்தார்கள். இயல்பாகிப்போன நடையும், அசைவுகளும் சட்டப்படி இருக்கும் போது மட்டுமே அவர்களது இதயம் சாதாரண வேகத்துடன் துடிப்பதுடன், உணவு ஜீரணிக்கும், கால்கள் நிலம்பட நடக்கும்.
மீறிய நடை பாவனையைக் காணும்போது தண்டனை வழங்க முடியாத கையாலாகாத தனம் மேலோங்கும். ஏனைய நீதிபதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் புத்தகங்களின் படியும் இது குற்றமாகுமோ? என விசாரித்து, அது பற்றிய குறிப்பு இல்லாத பட்சத்திலும், நடத்தை சரியானது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்திலும் விவாதித்துக் கொள்வார்கள். அவனும், அவனது புத்தகமும் அநீதியானதென நிராகரிக்கப்படும் வரை விவாதம் தொடரும். பின் தன் சட்டங்களுக்கு ஒப்பான புத்தகத்தைக் கொண்டிருப்பவனை நெருங்கி அவனது நடை பாவனை சட்டத்தை மீறிய தென் அறிக்கை விடுவார்கள். அது பறக்கும் காற்றுப்போகும் திசையெங்கும் செய்தி பரப்பும் மரம் - தூண் - கம்பி - வேலி - வாகனம் - கட்டிடம் எல்லாவற்றிலும் மோதிக் கிழிந்து துண்டு துண்டாகும் வரை அல்லது காய்ந்து முறுகி சருகாக நுண்ணிப்போகும் வரை பறக்கும்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நீதிபதிகள் தான், தாங்களே சட்டங்களை வரையறுத்துக் கொண்டு சம்பளமில்லா கடமையிலீடுபட்டிருந்தார்கள். ஏனைய தொழிலை விட நீதிபதி பதவி இலகுவானதாகவும் பகுதி - முழு நேரக்கடைமைக்குரியதாகவும் இருந்தது. வைத்தியனாக - கைமருந்துகளுடன். பொறியியலாளனாக - அளவுத்திட்டத்துடனும், உயிரியலாளனாக - மரக்கன்றுடனும், ஆசிரியனாக - பேனையுடனும், வியாபாரியாக - தொந்தியுடனும் அரசியல்வாதியாக - பொய்யுடனும் அலைந்து திரிந்தாலும், நீதிபதிகளாக தங்கள் தங்கள் சட்டப்புத்தகங்களைப் புரட்டி மற்றவர்களினுடைய வாழ்க்கையைத் தோண்டிக் கிளறி கூறுபோட்டு குறைகளைக் கண்டுபிடித்து குற்றப்பத்திரிகை அனுப்புவது போல இலகுவான, சுவாரசியமான தொழில் எதுவுமில்லை.
0 திசேரா »

வெள்ளைத்தோல் வீரர்கள்
தனக்கென உரித்தான சட்டங்களை உருவாக்கிக் கொள்ள முடியாமல் நீதிபதிகளாக ஆசைப்பட்டவர்கள், கற்காலம் முதல் வழங்கிய மதப்புத்தகங்களையும், அட்டவணைகளையும் தங்கள் தங்கள் சட்டப்புத்தகங்களாக பிரகடனப்படுத்தி அதில் ஓட்டை இட்டு எல்லோரையும் கவனித்தார்கள். சட்டப்புத்தகங்களில் இடப்பட்டிருந்த ஓட்டை அவர்கள் மட்டும் நுழைந்து கொள்வதற்குப் பயன்பட்டது.
நீதிபதிகள் பலரினால் குற்றமாகக் குறிப்பிடப்படும் சட்டத்தை சமூகச் சட்டமாக அமுல்படுத்தினார்கள். அதனூடாகத் தண்டனை வழங்கி விட எத்தனித்ததுடன் அவர்கள் தங்களை மேலானவர்களாகக் கருதி மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் விரும்பினார்கள்.
முடி நரைத்து, பற்கள் காவியேறிய கிழட்டு நீதிபதிகள் சிலர் தூசு படிந்து, கறையான் அரித்துக் கிடந்த தங்கள் சட்டப்புத்தகங்களைத் தட்டி, பகல் நீண்டிருந்த அந்தப் பின்னிரவுக் காலமொன்றில் அறிக்கையொன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். தூசுகள், மூக்குள் நுழைந்து பிசிர்களை ஆட்டி தும்மலை உண்டு பண்ணி சட்டப்புத்தகங்கள் மீது எச்சிலைத் தெளித்து ஈரப்படுத்தினாலும், குற்றப்பத்திரத்தைத் தயார் பண்ணி முடிப்பதில் மும்முரமாய் இருந்தார்கள். களைப்பு, வேலைக் காலங்களைத் தின்று விடக் கூடாது என்பதில் விழிப்பாய் இருந்த, தலைமயிர் பழுத்துப்போன கிழவிகள் இஞ்சி கலந்த சாயத்தைப் பகிர்ந்து கொண்டோ, சிறிய உரல்களில் வெற்றிலையை இடித்துக் கொண்டோ இருந்தார்கள். அவர்களில் பலருக்கு பொக்கைவாய் - கன்னங்கள் உட்குழிந்து போயிருந்தது. அவர்களெல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகக் கூடிய அனுபவம் வாய்ந்தவர்களாம். அக்கிழட்டு நீதிபதிகளின் பின்னால் பதவி உயர்வில் ஆசைகொண்டு காத்துக்கிடந்த இளைய நீதிபதியின் வால் களைப்பிடித்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் அனைவரதும் அயராத உழைப்பினால் இரவு பகலாகத் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரம் இரு இடங்களுக்கு அதிகாலையிலேயே அஞ்சல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரம்
இந்து சமூக நீதி, நிருவாக வலயத்தின் சமூக நீதிமன்றம், சட்டமா அதிபர் இலக்கம்: டி.கே.77 -15 - 01
சமூக நீதிமன்றத்தின் குற்றவழக்கு இலக்கம் 0027 -74320 இந்து சனநாயக சோசலிசக் குடியரசு எதிர் பழனியான்டி சுகுமார்: சற்குணம் சதீஸ்குமார்:
0 திசேரா ?

Page 44
வெள்ளைத்தோல் வீரர்கள் இந்து சனநாயக சோசலிசக் குடியரசின் சட்டமா அதிபர் கதிவேல் கணபதி அவர்களின் கட்டளைப்படி உங்களுக்கெதிராகக் குற்றப்பகர்வு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கெதிரான குற்றச் சாட்டுகள் பின்வருமாறு:-
1) இந்த நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பிறப்பு - இறப்பு - திருமணப் பதிவாளர் காரியாலயம் இருந்தும், ஆலயங்கள் இருந்தும் நீங்கள் இருவரும் பதிவுத் திருமணமோ, சடங்கு முறையான திருமணத்தையோ நிகழ்த்திக்கொள்ளாமல், 2001ஆம் ஆண்டு மாசி மாதம் 08ம் திகதி முதல் இருவரும் இணைந்து. இந்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே தங்கள் குடியிருப்பையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் இருவரும் ஆண்களாக இருந்தும் கூட்டாக ஒத்தியைந்து சமூகக் கட்டுமானத்தை உடைப்பதுடன் எதிர்கால சந்ததியினரிடையே கண்ணியம் தொடர்பான எண்ணக் கருவில் விரிசலை ஏற்படுத்த முனைவதாகவும் உள்ளது. இவைகள் பெண்கள் மீது எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வாத்சாயனரையும் அவமதிப்புள்ளாக்குவதாகக் கருதப்படுகின்றது. இதன் காரணமாக ஒத்தியைந்த எங்கள் சட்டப்புத்தகத்தின் 5 (1)
ஆ பிரிவின் கீழ் தண்டனை விதிக்கக் கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர்கள்.
2) இந் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பிறப்பு - இறப்பு - திருமணப் பதிவாளர் காரியாலயம் இருந்தும், ஆலயங்கள் இருந்தும் நீங்கள் இருவரும் பதிவுத் திருமணமோ. சடங்கு முறையான திருமணத்தையோ நிகழ்த்திக்கொள்ளாமல், 2001ம் ஆண்டு மாசி மாதம் 08ம் திகதி முதல், இணைந்து வாழ்கின்றீர்கள். நீர் இருவரும் இரு வேறுபட்ட சாதியினராகக் காணப்பட்ட போதிலும் ஒருவரை ஒருவர் மணம் புரிந்துள்ளீர்கள். இது இரு இனக்கூட்டத்தாரிடையே ஒற்றுமையின்மையை, அல்லது காழ்ப்புணர்ச்சியை, அல்லது வெறுப்பை ஏற்படுத்துவதற்காக எத்தனிக்கப்பட்ட முயற்சியாகும். இது இருக்கு வேதம் 10ம் மண்டலம் புருஷ சூக்தத்துக்கு அமையவும், மனுதர்மச் சட்டத்தின் படியும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட சட்டப்புத்தகத்தின் 2 (1) பிரிவின் கீழ் நீங்கள் இருவரும் தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளீர்கள்.
கையொப்பம் சமூக சட்டவாதி 2002 ஆம் ஆண்டு 01ம் மாதம் 10ம் திகதி.
குறிப்பு:- இக்குற்றப் பத்திரத்திலடங்கும் குற்றச் சாட்டுகளுக்காக இந்து, சமூக நீதி, நிருவாக வலயத்தின் சமூக நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கெதிராக வழங்கப்படவுள்ள தண்டனைக்கு உதவும் முகமாக கீழ்வரும் தண்டனைகளைப் பரிந்துரை
செய்கின்றோம்.
[ திசேரா 2

வெள்ளைத்தோல் வீரர்கள் 1) மொட்டையடிக்கப்பட்டு, கரும்புள்ளி - செம்புள்ளி குத்தி, செருப்பு மாலை அணிவித்து, கழுதை மீது ஊரை வலம் வரச் செய்தபின் முச்சந்தியில் கல்லால் அடித்துக் கொல்லப்படுதல்.
2) கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மக்கள் கூட்டத்தின் முன். எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் தள்ளுதல், அல்லது இவர்களின் தலை மட்டும் தெரியும் வண்ணம் டயர்களுள் இட்டு பெற்றோல் ஊற்றி எரியூட்டல் .
3) மக்கள் குழுமி இருக்கும் போது குற்றத்தை உணரும் வரை முகமூடி இடப்படாமல் சாகும்வரை தூக்கிலிடப்படல்.
மேற்படி இரு நபர்களுக்கும் எவ்வித காரணங்கொண்டும் மன்னிப்போ, அல்லது தண்டனைக் குறைப்போ மேற்கொள்ளக் கூடாதென்பதில் உறுதியாகவுள்ளோம். தவறும் பட்சத்தில் இது போன்ற ஓரினச் சேர்க்கையாளர்கள், அல்லது சாதியை மீறுபவர்கள் சமூகத்தில் அதிகரித்து விடுவார்கள் என்பதையும், சமூகக் கட்டமைப்பு சிதைவுறும் என்பதையும் தங்கள் கவனத்தின் கீழ் கொண்டுவர விரும்புகின்றோம்.
உண்மையுள்ள, சமூக நீதிபதிகள்
1.
மூலப்பிரதி - உயர்நீதிமன்றம் பிரதி - எதிராளிகள்.
"இன்று அவனால் எப்படியும் வேலை செய்யமுடியாது. காலையில் போக விருப்பமில்லாதவனை தள்ளி அனுப்பவேண்டி இருந்தது, சிலவேளைகளில் திரும்பி வந்துவிடுவானோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் வரவில்லை. ஆனாலும் வழமையைப் போல் படிப்பிக்க முடியாது. இருப்பினும் சமாளிப்பான். எப்போதும் இப்படித்தான் குழந்தைத்தனம். எனக்குத் தடிமன் என்றால் கூட பக்கத்திலேயே . இருந்து கொண்டிருப்பான். யாரைக் காட்டிலும் அன்புடையவன்.
இரண்டு நாள் காய்ச்சல், நேற்று ஞாயிற்றுக்கிழமையாயிருந்ததால் எனை எழும்பவிடவில்லை. இன்று கூட சமைக்கவோ, தேனீர் ஊற்றவோ வேண்டாமென உனை அனுப்புவதாகக் கூறினான். எனை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதில்
அவனுக்கு எப்போதும் அக்கறையுண்டு."
} திசேரா 5

Page 45
வெள்ளைத்தோல் வீரர்கள் "எங்கள் வாரிசு பற்றிக் கதைத்தோம். வெள்ளி இரவு தொடங்கியது. சனி இரவு வரை தொடர்ந்தது. இருவரும் பெண்களாய் இருந்திருப்பின் ஆணின் அணுக்களைப் பெற்றுக் கொண்டு ஒருவரின் கர்ப்பப்பையில் வளர்த்து பிரசவித்திருக்கலாம் என நினைத்தோம். இக்கதை ஆரம்பமானது முதல் என் முகம் மாறி, உடல் சூடாகி இருந்ததை அவதானித்தானாம். "காய்ச்சலா......" இல்லை. அந்த ஏக்கமும், சிந்தனையும் தான் எனது காய்ச்சலுக்கு மூலகாரணம் எனக் கூறினான். என்னால்
அதை வரையறுக்க முடியவில்லை."
குழந்தை எங்களில் ஒருவரின் இரத்தத்தைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதில் இருவருக்கும் உடன்பாடிருந்தது. கர்ப்பப்பையை யார் வைத்துக்கொள்வதென்பதில் இன்னமும் சிக்கலுண்டு. அதிலுள்ள நடைமுறைச் சிக்கலை உணராமலேயே வாதிட்டோம் அவன் குழந்தைத் தனமானவன் என்பதும், எதையும் தாங்கிக் கொள்ள முடியாதவன் என்பதையும் நான் அறிந்திருந்ததனால் அதை நான் பொருந்திக் கொள்கின்றேன் என வாதிட்டேன் அவனது சிந்தனை கூரானது என்பதனால் ஆண் அணுக்கள் அவனுடையதாக இருக்கட்டும் எனக் கூறினேன். அதைப்பற்றிய முடிவினை எடுத்துக் கொள்ளாமல் முதலில் வைத்தியரை அணுகி வசதி - செலவீனம் பற்றிக் கதைத்துக் கொள்வோம்." கண்களை மூடி மெளனமானவன்.
எங்கள் இருவரின் - ஒருவரினுடைய விந்தைக் கொடுத்து பெண் ஒருத்தியை அணுகி அதைக் கருவாக்கி - குழந்தையாக்கித் தரும்படி கேட்கலாம். இதுபற்றியும் வைத்தியருடன் ஆராய்ந்த பின் முடிவெடுக்கலாம். எதற்கும் முதலில் வைத்தியரை..." மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். உடன் உறங்கிப் போய்விடமாட்டான். குறைந்தது அரை மணி நேரம் புரண்டபின்பே தூக்கம் தளுவும். அவனால் தூக்கத்தை விரட்டியடிக்க முடியாது. உறக்கத்தில் கனவு காண்பதென்றால் சரியான பிரியம். அதனால் உறக்கத்தில் ஆழ்ந்து போகவிட்டு
தொல்லை பண்ணாமல் நானும் உறங்கிப் போனேன்.
ஞாயிறு பகலில் இது பற்றிக் கதைக்கவில்லை. காலையில் என் நெற்றியில் முத்தமிடும் போது உடல் சூடு அதிகரித்திருந்தது கண்டு காய்ச்சல் என்பதைக்கூட அவன்தான் உறுதியுடன் கூறினான். காலை உணவு விருப்பமில்லாமல் இருந்தது. காய்ச்சலினால் சுவை அரும்புகளையும், நுகர் அரும்புகளையும் சளியடைத்திருப்பதனால் உனக்கு உணவு விரும்பமில்லாமல் போய் இருக்கின்றது. நாக்குக்கு உணர்ச்சியைக் கொண்டுவரக் காரமாகக் கறியும், மூலிகை ரசமும் வைத்துத் தருவதாயும் கூறி சமயலறையுள் மூழ்கிப் போனான். எனது காய்ச்சல் பற்றிக் கதைத்துக்கொண்டு பாடக்குறிப்பு எழுதுவதில் பின்னேரம் ஓடிப்போனதால் இது பற்றிக் கதைக்க முடியாமல் போனது. இன்று எப்படியும் இதுபற்றிக் கதைக்க வேண்டும். என நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதனுள் நுழைய அவனால் முடியாதிருக்கும். எனைப்பற்றி அதாவது உடல் நலக்குறைவைப் பற்றியே இன்று சிந்தித்துக்
0 திசேரா %

வெள்ளைத்தோல் வீரர்கள் கொண்டிருந்திருப்பான் என்பதும் எனக்குத் தெரியும். குழந்தை பற்றிச் சிந்திக்க நேரம் இருந்திருக்காது. வேலைகளும் தலைக்கு மேலாக இருந்திருக்கும். 'சுகு அண்ணன் நீங்கள் ஏன் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது."
எங்கள் ஒருவரின் இரத்த வாரிசை விரும்புகின்றோம். முடியாமல் போனால் இது பற்றி யோசிக்கலாம் என்றிருக்கின்றோம்."
நீங்களே இன்னமும் ஏற்றுக்கொள்ளப் படாமல் தள்ளப்பட்டிருக்கும் போது .... நீங்கள் கல்வெட்டுக்காரர்கள் என்பதைத்தவிர எதுவும் தெரியாது. - முன்னர் எனக்கும் கூட - " உண்மை, காலம் யாருக்காகவும் எதையும் தருவதில்லை பெற்றுக் கொள்ள இடம் கொடுக்கும் அவ்வளவுதான். ஓட்டைப் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரம் வந்துள்ளது. அதுபற்றி அலட்டிக்கொள்ள எதுவுமில்லையாம். அதற்கெதிராக எங்களினால் மனுவொன்றும் தயாரிக்கப்பட்டாயிற்று. அதன் பிரதியொன்று சட்டத்தரணியிடம் கேட்டு ஆலோசனை பெறுவதற்காக அவனிடமுண்டு - பையினுள் இருப்பதைக் கூட மறந்து போயிருப்பான். - எதற்கும் ஆரம்பம் தடையாய்த்தான் இருக்கும். பின்னர் தானே வெளிக்கும்." "இது எங்களின் மனு" -
சுய உரிமை - மேன்முறையீடு
ஐயா, இந்த சனநாயக சோசலிசக் குடியரசு எங்களுக்கெதிராக அனுப்பிய குற்றப்பத்திரம் தொடர்பாக (டி.கே. 77 - 05-01) எங்கள் இணைவின் அடிப்படை அம்சங்களை விளக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களாவன. 1) ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் 5(1) (அ) 2) வேறுபட்ட சாதியினர் (211)
என்ற வகையில் இருவரும் தண்டனைக்குரிய குற்றத்தை ஆற்றியுள்ளதாகவும், இதனால் சமூகக் கட்டுமானம் உடைந்து போவதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருமணம் என்பது புரிந்துகொண்ட இருவரின் இணைவு என்பது எங்களின் கருத்து. ஆனால் பெண்ணை ஆண் அடக்கியாள்வதற்காக வழங்கப்படும் அனுமதி என்றோ சந்ததியை உற்பத்தி செய்யும் நிறுவனம் மட்டும் என்றோ சமூக நீதிபதிகளால் கருதப்படுகின்றது.
ஒத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்துகொள்வது எந்தவகையிலும் பெண்களை அவமதிப்பதாக அமையாது. பெண்களைக் கட்டிலில் கிடத்தி கவிழ்ந்து
[ திசேரா 75

Page 46
வெள்ளைத்தோல் வீரர்கள் கொள்வதாலோ, குழந்தையை - குடும்பப்பாரத்தை அவளுக்கென ஒதுக்கிக் கொடுத்து விடுவதாலோ அவர்கள் போற்றப்படுகிறார்கள் எனக்கருதிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் ஆணுக்குப் பின்னானவள் என்ற அவமதிப்பை சடங்குகள் நடாத்திக் காட்டுகின்றன. என்பதை சமூக நீதிபதிகள் மறந்தது எங்ஙனம் என விளங்கவில்லை.
ஆண் - பெண் காம உணர்வைப் பகிர்ந்து கொள்வதற்காக, அல்லது ஆணின் காமணர்வைத் தனித்துக் கொள்வதற்காகவென் மட்டுமே திருமணங்கள் உள்ளன என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே வாத்சாயனரை அவமதிப்பாகக்
கூறப்பட்டுள்ளது,
வேறுபட்ட சாதியினர் என்று, பிறப்பை வைத்துக் கொண்டு மனுவைத் துணைக்கழைத்தவர்களுக்கு, அதிலுள்ள குறிப்பின்படி சாதிகள் பிறப்பைக் கொண்டோ தொழிலைக்கொண்டோ தீர்மானிக்கப்படுவதில்லை - ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும், கூட்டு சம்பந்தி பற்றியும், அனுலோமம் - பிரதிலோமம் என்ற திருமண முறைகளையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
இருப்பினும், எங்கள் கருத்தின்படி ஆண் - பெண் - அலி என்ற மூன்று சாதியினரைத்தவிர வேறு சாதியினர் இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு இதுகூட உடலின் அடிப்படையில் காட்டப்படும் வேறுபாடுகளே எனக் கருதுவதாலும், எண்ணங்கள் செய்கைகளெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் - இருக்கும் என்பதாலும், சாதியின் கொடுமைக்குள் எங்கள் இருவரையும் தள்ளி தீ மூட்டிவிட வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
கறையான் அரித்த, ஓட்டைப் புத்தகங்களின் அடிப்படையில் மனிதாபிமானமற்ற நீதிபதிகள், குற்றப்பத்திரத்திலேயே - விசாரணை எதுவுமின்றி தண்டனையை சிபாரிசு செய்தது, எந்தவிதத்திலும் நியாயமாக இருக்கமுடியாது என்பதைத் தாங்களும் அறிவீர்கள். குற்றமே இல்லாத குற்றப்பத்திரத்திலும், எங்களின் தாழ்வான மேன்முறையீட்டையிட்டும் தங்களின் மேலான கவனத்தைச் செலுத்தி நியாயமான தீர்ப்பை வழங்குவீர்களென நிம்மதியடைகின்றோம்.
இவ்வண்ணம். உண்மையுள்ள,
(ஒப்பம்)
பழனியாண்டி சுகுமார்
ஒப்பம் சற்குணம் சதீஸ்குமார்.
+ + +
( திசரா %

வெள்ளைத்தோல் வீரர்கள் அவன் போய்விட்டான். சுகு மட்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு காலை நீட்டி கதிரையில் சாய்ந்திருந்தான். மூடிய கண்ணுள் பின்புற இருளில் தோன்றிய ஒளி நிறைந்த மனிதன் முன்னோக்கிக் கிடந்த இருளுக்குள் மங்கலாய் ஒளி வீசிக்கொண்டிருந்தான். அவன் நெருங்க ஒளி பரப்பை விரித்துக்கொண்டே போனது. ஒளிமனிதனுக்கு அருகில் சுகு நடந்து வந்து கொண்டிருந்தான். பின் - வலது - இடது இருளுக்குள் இருந்து கற்கள் வந்து தாக்கியது.
ஒளி மனிதன் - சதீசின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது. பச்சை இரத்தம் அவன் வேற்றுச் சாதி என்பதால் பச்சை நிற இரத்தம் வடிந்தது. - வடிவமில்லாத கற்கள் வந்து விழுந்துகொண்டே இருந்தது. இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றார்கள். ஆட்களில்லாத வெறுமைக்குள் - காற்றை இரு புறமும் தள்ளி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். காற்றுச் சிரிக்கிறது. "கல்வெட்டுக்காரர்கள்" பலமாய்ச் சத்தமிடுகிறது - சிரிக்கிறது. சுகு வாய்விட்டுக் கத்துகிறான். "எங்களைப் பிரித்து விடாதீர்கள் - எனக்கு இவன் வேண்டும்." அழுகிறான். ஓட்டத்தில் கலங்கிய குரல் காற்றில் கலந்து அழிவுறுகிறது. ஓட முடியாமல் ஓடுகிறார்கள்.
கதவு தட்டப்படும் ஓசை சுகு எழுந்து கதவைத் திறக்கிறான். தலையில் காயத்துடன் சதீஸ் சிரிக்கிறான். தலை வெடிப்பிலிருந்து கண்ணுக்கும், காதுக்கும் நடுவால் சிவப்பு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
பங்குனி 2002
] திசேரா 7

Page 47
வெள்ளைத்தோல் வீரர்கள்
கறுப்பு மரணம்
தன்(?).
2AA
' >
[ திசேரா 78

வெள்ளைத்தோல் வீரர்கள்
கறுப்பு மரணம்
1720 ஆம் ஆண்டு மூன்றாம் மாதமான பங் குனியின் நடுப்பகுதி என நினைக்கின்றேன். ழான் பிரான்சிஸ் மன்செஸ்டர் நகரில் இறந்து போனான். அவனது மனைவியும், மகனும், மகளும் உறவினர் களைக் கட்டித் தளுவி அழுது கொண்டிருந்தார்கள். அவன் இன்னமும் நீண்டகாலம் வாழ்ந்திருக்கக் கூடியவன் எனவும், அவனால் இன்னமும் நன்மைகள் அந்த நகருக்குச் செய்ய வேண்டி இருந்ததாகவும் தெருவாசிகள் கதைத்தார்கள். அவன் இறந்து போனதன் ரகசியம் யாருக்கும் புரியாமல், மரணச் சடங்கு இயல்பாகவே நடந்தது. மலர் வலயங்கள் முன் நகர தேவாலயம் கொண்டு செல்லப்பட்ட பூதவுடல், பாதிரியாரின் செபித்தலின் பின்பாக, அடக்கம் செய்யப்படவேண்டிய குழிக்கு கொண்டு செல்லபப்பட்டு நகர மக்களின் அஞ்சலியின் பின் புதைக்கப்பட்டது.
அவன் உண்மையில் இறந்து போனான் என்பதும், அவனது உடற்சூடு தணிந்து போனது பற்றியும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டபின்பே இவைகள் நடந்தேறின.
மரணம் என்பது எல்லோருக்கும் உரியது. தங்களுக்கும் நிகழும் என்பது பற்றிய விளக்கம் அனைவருக்கும் இருந்திருப்பினும் வெகுவிரைவில் அது நிகழ்ந்து விடப் போவது பற்றியோ, அது தங்களைச் சூழ்ந்து கொண்டு விட்டதையோ அவர்கள்
அறிந்திருக்கவில்லை.
ழான் பிரான்சிஸ் சுத்தத்தை விரும்பி இருந்தான். தனது வீடு முழுவதும் அழகாகக் காட்சிதர வேண்டும் என எண்ணி அறைகள், மண்டபம், சமையலறை எல்லாவற்றையும் அழுக்கு நீக்கவென வேலை நேரம் தவிர வீட்டில் இருக்கும் காலத்தின் பல மணித்தியாலங்களை எடுத்துக் கொண்டான். அத்தோடு, வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தூசுதட்டி அழகுபடுத்தினான். மீள்பாவனைக்கு உட்படுத்தக்கூடியதும், தேவை எனக் கருத்திற் கொண்டதுமான பழைய பொருட்களை ஒரு அறையினுள் இட்டிருந்தான். அதனுள் தன் தாத்தாவின் ஞாபகத்தின் பொருட்டு வைத்திருந்த வெண்கலப் பானையும், பழைய உடுப்புக்களும் கூடக் கிடந்தன.
| திசேரா 79

Page 48
வெள்ளைத்தோல் வீரர்கள்
எப்போதாவது மேலதிகமான விடுமுறை கிடைக்குமாக இருந்தால் அதனுள் நுழைந்து கொள்வான். அதற்கெனத் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகக்குறைந்தது தேவைப்படும். இப்படிப்பட்ட விடுமுறையை அவனது தொழில் அடிக்கடி வழங்குவதில்லை என்ற காரணத்தினால் அவ்வறையினுள் நுழைதல் வருடத்துக்கு ஒருமுறை, இருமுறையாகவே இருக்கும். அவ்வறையினுள் நிறைந்து கிடக்கும் தூசு மூக்கினுள் நுழைந்து அதிக மூச்சிழுப்புடன் ஆஸ்த்துமாவை ஏற்படுத்திவிடும். என்பதால், அவன் மனைவியும், அதனுள் நிறைந்திருக்கும் இருட்டிற்கான பயத்தினால் மகளும் அக்கதவைத் திறப்பதே இல்லை. இருளென்பது குறைந்த ஒளி என்பது பற்றிய அறிவு கிடைக்கக்கூடிய வயதை மகள் எட்டியிருக்கவில்லை. மகன் மாத்திரம் தந்தைக்கு தெரியாமல் அதனுள் இருந்து விளையாடுவான். விளையாடுவது மட்டுமே அவனுடைய முக்கிய நோக்கமாக இருந்ததில்லை. அதனுள் கிடந்தவற்றை ஆராய்ச்சி செய்து பொழுதைக் கழிக்கவென அப்பா இல்லாத நேரங்களில் நுழையும் அவன் அம்மா தேடிக் கண்டு பிடித்தபின் அல்லது பொருட்களை உருட்டிச் சத்தத்தை எழுப்பும்போது அம்மா போடும் கூச்சலின் பின்னே தான் வெளியே வருவான். ழான் பிரான்சிஸ்ஸைத் தவிர எவரும் வீட்டைச் சுத்தப்படுத்துவதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. அன்றாடம், மனைவி கூட்டித்துப்பரவு பண்ணினாலும் பெருமளவு ஈடுபாடு அவளுக்கு இருக்கவில்லை.
அவ்வறையைச் சுத்தம் பண்ணவென இரு நாட்கள் தீர்மானித்தானாகில் அதில் இருபத்து நான்கு மணி நேரமோ அதைவிடக் கூடிய நேரமோ எலிக்குட்டிகளை அகற்ற, எலிகளை அடிக்க, கரப்பான் பூச்சி துரத்தவெனக் கொலை செய்யும் பொழுதாக கரைந்து போகும். ஆனாலும் அவற்றை முற்றாக ஒழித்துவிட அவனால் முடிந்ததில்லை. அவைகள் முற்றாக அழிக்கப்பட்டாயிற்று எனக் கருதிப் பெருமைப்பட்டுக் கொண்ட நாற்பத்தியெட்டு மணித்தியாலத்துக்குள்ளாகவே எலியை, எலியின் சத்தத்தையோ அல்லது கரப்பான் பூச்சியையேனும் கண்டு விடுவான். இப்படியான அறையினுள் நுழைந்து அதன் சுத்தத்துக்காக மூன்று நாட்கள் உழைத்து சரியான நாற்பத்தைந்து நாட்களின் பின்தான் இறந்து போனான்.
ழான் பிரான்சிஸின் மரணம் நிகழ்ந்து ஒருவாரத்திற்குள்ளாகவே எடின் தோமஸ், பீற்றர் ஜோன் என்ற இருவரும் இறந்து போனார்கள். அவர்களிருவரும் அத் தெருவைச் சேர்ந்தவர்கள்தான். ழான் பிரான்சிஸ் உடைய மகன் கூட அவன் இறந்து ஒன்றரை மாதமளவில் இறந்து போனான். இவர்களுடைய அடக்கங்கள் சம்பிரதாயப்படி நடந்து முடிந்தன. இதன் பின்னான நாட்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு, மூன்று என நிகழ்ந்து கொண்டிருந்த இறப்பு, நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே போனது.
செப்டம்பர் மாதத்தில் ஒருவருக்கும் அடக்கத்துக்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயமான காரியங்களைக் கூடச் செய்யமுடியா வண்ணம் கூட்டமாக இறந்து போனார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குழிகளை வெட்டிக்
| (r ♫

வெள்ளைத்தோல் வீரர்கள் கிடத்த முடியாத நிலை உருவாகி இருந்ததனால், பெரியதொரு குழிவெட்டி உடல்களைத் தூக்கி வீசிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் இறப்பை ஊர்ஜிதம் செய்து கொள்ள அவகாசமேதும் கிடைத்திருக்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வித நோய் கண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர எதையும் அறிந்து கொள்ள முடியாதநிலை இருந்ததனால் உடற்சூடு அடங்க முன்னதாக துணியில் சுற்றிக்கட்டி எதிர்பார்த்து வெட்டப்பட்டிருந்த குழியில் இட்டு நிரப்பினார்கள். அதை மூட வேண்டிய நிலை உருவான போது இன்னமொரு பெரிய குழி தயாராக இருந்தது. நகரில் மக்கள் தொகை குறைந்து போக இறப்புகளும் குறைந்து போய் அடுத்த ஆண்டின் காற்பகுதியில் முடிவுக்கு வந்தது. கிட்டத்தட்ட அவ்வூரின் மக்கள் முற்றாக அழிந்து போனபின்,
+ + +
250 ஆண்டுகள் மேற்பட்டுப் போனதன் பின் தற்செயலாகத் தோண்ட நேர்ந்த பெரியகுழி ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. தொகையான மக்கள் இறந்து போனதன் காரணத்தை ஆராய வேண்டி ஏற்பட்டது. சின்னத் தேடல்களில் இருந்த அறிவு விஞ்ஞானமாக பெருவளர்ச்சி கண்டிருந்ததனால் பாதி உக்கலும், சிதைவும் கண்டிருந்த எழும்புக் கூடுகள் ஆராய்ச்சிக்கென கொண்டு செல்லப்பட்டது. என்பு மச்சைகளைக் கிண்டி ஆய்வு நடாத்தினார்கள். எழும்புக் கூடுகளின் பெருவிரல்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணி இன்னமுமாக அவர்கள் சிந்தனையைத் தூண்டி இருந்தது. ஆய்வு பத்தாண்டுகளை அண்மித்துப் போய் இருந்ததனால் முடிவுகளை அவர்கள் வெளியிட வேண்டிய நிலையில் இருந்தார்கள்.
இறப்பைத் தளுவிக் கொண்ட எவரும் அதற்கான வயதுகளை அடைந்திருக்கவில்லை. என்பதை தாங்கள் அறிந்து கொண்டதுடன், தொற்று நோயின் காரணமாகவே இத் தொகையான மரணம் ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கருதி பற்களைக் கிண்டி மரபணுக்களின் மூலம் அந்த நோயையும், காவி - தன்மை - தாக்கம் என எல்லாவற்றையும் அறிந்து கொண்டதுடன், ஆணி அடிக்கப்பட்டிருந்த காரணத்தையும் ஊகித்துக்கொள்ள முடிந்ததாகத் தெரிவித்திருந்தார்கள்.
"பிளெக்" எனப்பட்ட அந்த நோய் எலி, கரப்பான்களினூடாக உடலை அடைந்து தன் வேலையைத் தொடங்கி உடலின் ஒரு துண்டு தசையைக் கட்டியாக்கி அதைப் பெருப்பித்து அழுகச் செய்து கிருமிகளை உடல் முழுவதுமாகப் பரப்பி நாற்பத்தைந்து நாட்களுக்குள் இறக்கடித்து விடக்கூடிய சக்தி அவற்றுக்கு இருந்ததாம். அத்தோடு ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்குத் தாவிவிடக் கூடியவாறு இருந்ததனாலும் அப்போது (1720ல்) அதைக் கண்டுபிடித்துவிடவோ, தடுத்து விடவோ கூடிய எதுவித எண்ணமும் தோன்றியிராமையினாலும் தான் இப்படியாக இறந்துபோக நேரிட்டதாம்.
' () (ത 7

Page 49
வெள்ளைத்தோல் வீரர்கள் பெருமளவிலாக இறக்க ஆரம்பித்ததும் உடற் சூடு அடங்குமுன்னம் புதைத்ததாகவும், அதற்கு தனித்தனியே குழிகளைத் தோண்ட நேரமின்மையினால் ஒன்றாகப் போட்டிருக்கலாம் எனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். இதனால் தான் அவர்கள் இறந்து விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி காலின் பெருவிரலில் ஆணியை அடித்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முனைந்திருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்கள்.
நோயை இனங்கண்டு முடித்த பின்பே அதற்கு கறுப்பு மரணம் எனப் பெயர் சூட்டினார்களாம்.
250 ஆண்டுகளுக்கு மேலாக அவ் எலும்புக்கூடுகள் சிதைந்து போகாமல் எப்படி இருந்தது என்பதும், தோண்டப்படும் போதாவது அவைகள் துகள்களாகிக் கொள்ளாமல் அவர்கள் எடுத்து பயன்படுத்தத்தக்கதாய் இருந்தது என்பதும் அதிர்ச்சியைத் தந்தது எனக்கு, அவைகள் சரியான நிலையில் இல்லாததனாலேயே உறுதியான பற்களைக் கொண்டு ஆராய்ந்திருக்க வேண்டும்.
பின்னர் கூட பற்கள் தொடர்பாய் எனக்குத் தகவல் ஒன்று கிடைத்தது. பற்களைக் கொண்டு ஒரு மனிதனின் சரித்திரத்தைக் கூறிவிட முடியுமாம் (புறத்தோற்றத்தை வைத்து என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது அதன் உள்ளிருக்கும் மரபணுக்களின் மூலம் - அவனுக்கு நேர்ந்த மரணம் கொலையா, தற்கொலையா, இயற்கையானதா என்றும் கூட இனங்கண்டு கொள்ள முடியுமாம். (பல்லுப் பறக்க அடிக்கும் ரகசியம் கூட அப்போதுதான் புரிந்தது)
+ + + எந்தக் காட்சிப்படுத்தலும் தன்னை மீறி நிகழ்ந்திரா வண்ணம் எச்சரிக்கையுடையதாய் கறுப்பு - இருண்மை சூழ்ந்திருந்தது. தன்னை மட்டும் காட்டி காரணகாரியங்களை மறைத்தது.
மரணங்கள் எல்லாமே இருண்மை சூழ்ந்த கறுப்பாய்த்தான் இருந்தன என்பதையும், - இருக்கின்றன, - இருக்கப் போகின்றன என்பதையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமென நினைக்கின்றேன் - இது மேலோட்டமாகக் கூறியது என எண்ணிவிட வேண்டும்.
எனது தந்தை சீனி நோய் கண்டு படுக்கையில் கிடந்த வண்ணமே இறந்து போனார். அவர் நோயினால் இறந்து போனார் என ஏமாந்து போயிருந்தோம். பின் அவரது செய்கைகளை இரண்டாம் நினைவுக்குக் கொண்டுவந்தபோது அவர் வாழ்வில் ஏற்பட்ட விரக்தியிலிருந்து விடுபட உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது புரிந்தது, ஆனாலும் அவரது ஆத்மா எங்கு அலைகின்றது அல்லது மறுபிறப்பினை எடுத்துவிட்டது என்றோ, அதற்கு இதுதான் நடந்திருக்கும்
[ திசேரா ற

வெள்ளைத்தோல் வீரர்கள்
என்றோ என்னால் கூறமுடியாது. - உங்களாலும் கூட -
நான் தினமும் செல்ல வேண்டி இருந்த பேரூந்து அந்த அறுபதடி பள்ளத்தில் வீழ்ந்து விடக்கூடாது என நினைத்திருந்த பள்ளத்திலிருந்த ஆற்றில் ஒரு தாய் தன் மூன்று வயது மகளை வயிற்றில் கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டாளாம். அவளின் வயிற்றினுள் ஆறுமாதச் சிசுவும் இருந்ததாம். அவள் கோழை எனவும், பிழைக்கத் தெரியாதவள் எனவும் ஊரவர்கள் கதைத்த வார்த்தையில் எந்த விதமான நியாயப்பாடும் இருந்ததாக அவளின் பின்புலத்தை அறிந்து கொள்ள முனைந்த போது எண்ணினேன்.
இவற்றைவிடவும் எம்பிலிப்பிட்டியும், செம்மணியும் கூட கறுப்பு மரணத்தின் வகையாகவே இருந்தது. இன்னமும் எத்தனை செம்மணிகள் உறங்குகின்றன தெரியுமா? எப்படியும் மரணங்கள் எல்லாமே கறுப்பாய்த்தான் இருக்க வேண்டும்.
தை - 2003
[ திசேரா 2

Page 50
வெள்ளைத்தோல் வீரர்கள்
வெள்ளைத் தோல் வீரர்கள்
13
7 A>
0 திசேரா 84

வெள்ளைத்தோல் வீரர்கள்
வெள்ளைத் தோல் வீரர்கள்
இது நான் தங்கி இருக்கின்ற வீட்டின் வரைபடம். நீங்கள் என்னுடன் வர நேரும் வேளைகளில் முன்னெப்போதோ வந்தவர் போல இயல்பாய் திரிந்து கொள்ள இது உதவியளிக்கும். தங்கி இருக்கின்ற வீடு என்பதிலிருந்து இன்னொருவருடன் தேவையின் பொருட்டுத் தங்கி இருக்கின்றேன் எனவோ, ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருக்கின்றேன் என்றோ, எண்ணி விட்டிருந்தால் அது உங்களின். சிந்தனையில் ஏற்பட்ட கோளாறாய் எண்ணப்பட்டுவிடும். எனது சகோதரனுடன் தங்கி இருந்தது. அதற்காக வீடு அவனுடைய.து என அர்த்தப்படுத்திக்கொண்டு விட வேண்டாம். ஒரு வீட்டை வாங்கி விடக்கூடியளவு சேமிப்பை அவனோ, அவனுடையதும், என்னுடையதுமான தந்தை மேற்கொள்ளவில்லை. என்னிடம் சேமிப்பென்பது நிகழ்ந்துவிடக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடவில்லை. அதற்கான அவசியம் உணரப்படும் போதெல்லாம் எடுக்கும் முடிவு உறங்கி எழுந்து முகம் கழுவும்போது கரைந்து போய்விடும்.
இந்த வீட்டிற்கு மாதத்துக்கென மதிப்பிடப்பட்ட தொகை அவன் ஊதியத்திலிருந்து கழிக்கப்பட்டு விடுவதால் வாடகைக்கு இருக்கின்றான் எனக் கூறிக்கொள்ள முடியும். ஆனாலும் எனது இருப்பு முறை பற்றி தெளிவுபடுத்த முடியாது.
0 திசேரா 85

Page 51
நுழையா வரம் தூங்கிக்னலூடு உன்கிறது சுதந்தி
வெள்ளைத்தோல் வீரர்கள் காலையில் பிரதான வாசலூடு பரவிக் கொள்ளும் ஒளிக்கதிர்கள், எனது அறைக்குள் நுழையா வண்ணம் அறைக்கதவு மற்றொரு திசை பார்த்ததாக இருக்கும் இதனால் நீண்ட நேரம் தூங்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்பிருக்கும் பகலைத் தாண்டிய மாலையில் தான் ஒளி யன்னலூடு உள்நுழையும். நீங்கள் குறிக்கப்பட்ட என்னறைக்குள் வந்து சுதந்திரமாய் இருந்தாலும் தாராளமாய் நடமாடக் கூடியளவில் அறையினுள் இடவசதி போதுமானதாயிருக்காது. மேசை ஒன்றும், புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள அலுமாரிகள் மூன்றும், உடைகள் அடுக்கப்பட்டுள்ள அலுமாரி ஒன்றும், கட்டில் ஒன்றுமாக அறை நிறைந்திருக்கும். மேசையில் புத்தகங்கள் குவிந்து கிடக்கும். நீங்கள் ஒரு வாசிப்பாளராக இருந்தால் இவைகள் உங்களுக்கு எவ்விதத்திலும் சங்கடங்களை ஏற்படுத்தாமல் அமைதியைப் பேணும் புத்தகத்துள் மூழ்கிப்போக அறை சாந்தி காப்பதுடன், அதை ஊக்கப்படுத்தி அறிவை வளர்க்கும் படி கூறும் வாசகங்கள் படங்களுடன் ஆங்காங்கு சுவரில் தொங்கும். என்னைத் தேடி வரும் நீங்கள் நான் இல்லாத போது கூட அறையை நூலகம் போல் பாவித்துக் கொள்ள முடியும் - இதற்கு, முன்னெப்போதாவது என்னுடன் வருகை தந்திருப்பது அவசியம். இந்தப் புத்தகங்கள் தான் என்னை நிறைய வழிப்படுத்தி இருந்தது என்பதையும், குழப்பத்துள் ஆழ்த்தியது என்பதையும் நீங்கள் நம்பிக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படலாம். அப்பாவின் கண்டிப்புடனும், பாடசாலை விடுதியின் இறுக்கத்துடனும் சிறு வயது முதல் இருக்க நேர்ந்ததால், இருக்கும் இடத்துக்கும், பழகும் நபருக்கும் ஏற்றாற் போல் என்னை வளைத்துக் கொள்ள முடிந்திருந்தது - உளவியலாளரின் கருத்துப்படி - இதை விட நான் பிறந்திருந்த தேதிக்குரிய எண்ணும் இதைத்தான் வலியுறுத்துகின்றதாம். இந்த அறையில் என்னுடன் வந்து தங்கியிருந்த நண்பர்களைக் கணக்கிட்டு விரல்களுள் அடக்கி விடலாம். வீடு நோக்கிய எனது வருகையே மிகக் குறைவாகவே இருந்தது. அத்தனை பளு என்மேல் இருந்தது என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியும் என நினைக்கின்றேன். வேலைக்காலம் குறைவாக இருந்தாலும் அத்தளத்தில் நின்று செயற்படவும், சிந்திக்கவும் அதிகமிருந்தாலும், அடுத்த நாளைய வரவை இலகு படுத்தவுமாக - வீட்டுக் கும் வேலைத்தளத்துக்குமான தூரம் அதிகமாக இருந்தது. - அங்கு தங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இப்படியாக திடீர் விஜயம் செய்யும் நாட்களில் மேசைமீது புதிதாக சில புத்தகங்கள் முளைத்திருக்கும்.
அன்று என் விஜயம் வீடு நோக்கி நிகழ்ந்தது. மேசை மீது சில புத்தகங்கள் கிடந்தன. மண் வாசனை அறையினுள் நிறைந்திருந்தது. யாரோ ஆக்கிரமிப்பாளர்கள்
[ திசேரா ந

வெள்ளைத்தோல் வீரர்கள் என் தேசத்துள் நுழைந்துவிட்ட உணர்வு மேசை மீது கிடந்த புத்தகங்களுள் ஒன்றுதான் அதை உண்டுபண்ணியது. அது என்னை "பாட்டி வடை சுட்ட" காலத்துக்கு கொண்டு செல்வதாகவோ, தன்னுள் இழுத்து என்னை அமிழ்த்தி விடுவதாகவோ பட்டது. கூர்ந்து நோக்குகின்றேன். புத்தகத்திலிருந்து வெள்ளைத் தோல் வீரர்கள் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆயுதம் உடலுடன் பிணைக்கப்பட்டே இருந்தது. இதற்காகவே பிறந்திருக்கலாம் என ஊகிக்க இடமும், அவகாசமும் இருந்தது. என்னைக் கண்டு எவ்வித எச்சரிக்கையும் அடையாமல் வழியைத் திருப்பி போய்க்கொண்டே இருந்தார்கள். இந்த நடவடிக்கை குறித்து எந்த அபிப்பிராயத்தையும் சொல்லிக் கொள்ள முடியாமல் எனது வாய் அடைத்துப்போய் இருந்தது. அவர்களுக்கு மிகப்பெரிய வல்லமை இருந்தது. மிகுந்த பலமும், எதையும் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையிலும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான . பயிற்சியானது எதையும் தன்கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாலேயே முடியும். எங்கள் சிந்தனைகளைக் களவாடிக் கொண்டுபோய் மூடநம்பிக்கையாக்கி விடக்கூடிய வல்லமை அவர்களிடம் இருந்ததை நான் கண்டேன்.
"நீ நினைத்துக்கொள்வது போல எதுவுமே இங்கு நடக்கவில்லை. நாம் எச்சரிக்கையுடன் இருக்கும் போது அவ்வாறானதொன்று நிகழ்ந்து விடக்கூடியதாக ஏற்பட்டு விடாது." அண்ணனின் கூற்றிலும் உண்மை இருக்கலாம். "உனக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. ஒரு காலகட்டத்தில் இவைகள் அடக்கப்பட்டிருந்தன. அப்போது இவைகளை விட மிகப் பெரும் சக்தி இருந்தது. அதனால், அப்போது இருந்த ஆதங்கத்தை அதிகாரமாக்க முனைந்து கொண்டிருக்கின்றன. வெள்ளைத் தோல் வீரர்களால் எமது புத்தகங்கள் அனைத்தும் அழிபடப்போகின்றன." எச்சரிக்கை உணர்வுடன் அவற்றை அகற்றவும், கூட்டத்தோடு அழிக்கவுமாக என் அறையினுள் அவைகளின் இருப்பிடத்தை அறியும் முயற்சியில் இறங்கி இருந்தேன். இதற்கெல்லாம் முன்னோடியாக என் நிலைப்பாட்டினை அவைகளுக்கு தெளிவு படுத்தினேன். "எனக்கு உங்களை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அதுதான் சரியென்றால் செய்துவிடுவேன்." - "நீ புரியாத மனிதன் என்பதை விடவும் எனக்கு அடங்க மறுக்கின்றாய் என்பதுதான் முக்கியமானது. உனை அழிக்கும்வரை ஓயப் போவதில்லை."
அதன் கூற்று எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது. அவற்றை நசித்துவிடக் கண்கள் சிவப்பாயின.
0 திசேரா 7

Page 52
வெள்ளைத்தோல் வீரர்கள் என்னறைக்குள் அத்துமீறி நுழைந்த வெள்ளைத் தோலாலான வீரர்கள் பற்றி எல்லோரும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்கள். எனை பலவீனப்படுத்துவதில் அவை தீவிரம் காட்டுகின்றனவாம். அவைகளை அழித்துவிடச் சொன்னார்கள். ஆனால் யாரும் துணைக்கு வரவில்லை. பகல் முழுவதுமாகப் போராடி கொஞ்சங் கொஞ்சமாய் அகற்றினேன். புத்தக அலுமாரியினுள் இருப்பிடம் அமைத்து தங்கியிருந்த கூட்டை உடைத்து வெளியில் அள்ளிப்போடும் வேளையில் இருட்டிவிட்டது. காலைக் கீழே வைக்கவே அருவருப்பாக இருந்தது. அவற்றை அழிக்கத்தக்க மருந்து இருப்பின் தூவிவிட்டு மறுநாள் துப்பரவு பண்ணி இருக்கலாம். அது இல்லை என்பது அவற்றுக்கும் தெரிந்ததால் தான் பயமின்றித் திரிந்தன. மிக நல்ல புத்தகங்கள் என என்னால் மதிக்கப்பட்டவற்றைக் கூட துளைத்துக்கொண்டு முன்னேறி இருந்தன. என்பதை அலுமாரியைத் திறக்கும்போது அறிந்து கொள்ள முடிந்தது.
அழித்து விடக்கூடிய உபாயம் வேண்டி கனவுகளுள் நுழைய, தலைவரை போர்த்தியிருப்பினும் மின்மினி போலவும், நுளம்புகள் போலவும் ஒளி விட்டு விட்டும், சத்தம் எழுப்பியும் குழப்பிக் கொண்டிருந்தன. அவற்றின் வெள்ளையுடல்கள் இருட்டிலும் தெரிந்ததால் அவைகள் தான் கனவுகளைக் கலைக்கின்றன என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. பல்லைக் கடித்துச் சகித்துக் கொண்டுதான் நித்திரையுள் அமிழ்ந்து போனேன்.
கால்களை அசைக்க முடியாமல் இருந்தது. கட்டி இருக்கக்கூடிய மாதிரி இல்லை. உயிருடன் வைத்து கல்லறை கட்டப்பட்டது போல் அப்படித்தான் நடந்திருந்தது. கால்களின் மேலால் புற்றைக் கட்டிக்கொண்டிருந்தன. அது மண்போல தெரிந்தாலும் அதைவிடவும் இறுக்கமாக இருந்தது. அதன் கட்டுமானப் பணிகள் முழங்கால் வரை வந்திருந்தது.முற்றாக மூடிவிட வேண்டிய எண்ணத்துடன் வீரர்கள் மும்முரமாக மண்ணை உமிழ்நீருடன் கலந்து துப்பி ஒட்டிக் கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். கட்டில் முழுவதும் அவர்களின் ஆக்கிரமிப்பாகவே இருந்தது, மற்றைய புறம் இரு கைகளையும் அடக்கிவிடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மணிக்கட்டைத் தாண்டி அவைகளின் வேலை தொடர்ந்து கொண்டே இருந்தது. கைகளையும், கால்களையும் நீட்டிக் கொள்ள வழியின்றி திணறிக் கொண்டிருந்தேன். அவைகளிடமிருந்து இவ்வாறானதொரு நடவடிக்கையை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவைகளுக்கான வழிநடத்தல் சரியாகவே இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
மார்பின் மயிர்களூடு நுழைந்து வந்த ஒரு சிப்பாய் எச்சிலைத் துப்பி விட்டுக் கத்தினான். "உன் விருப்பப்படி - நீ நடந்து திரிய முடியாது. உன் கால்களை மடக்கி என்னிடம் மண்டியிடு, எங்களை வல்லவர்களாக உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமானால் உனது அங்கங்களை விடுவிக்க எங்களால் முடியும். இவை மட்டுந்தான் எங்கள் திட்டத்துள் அடங்குகின்றது என நினைத்துக் கொள்ளலாம்.
] திசைரா சா

வெள்ளைத்தோல் வீரர்கள்
அதையும் தாண்டி இன்னமும் உள்ளன. ஒரு போதும் உனைக் கொல்லப் போவதில்லை. எமது வீரர்கள் காதுள் நுழைந்து, மூக்கினால் வெளியே வருவர் - அப்போது உன் மூளை சிதைக்கப்பட்டிருக்கும். இவற்றிலிருந்து விடுபடுதல் என்பது உன் கனவாக மட்டுமே இருக்கும். மறந்து விடாதே - மண்டியிடுதலை"
அதைக் கொன்று வீசிவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர எதுவும் எழவில்லை. வாயால் காற்றை இழுத்துத் தள்ளினேன். வீசுப்பட்ட அது. காலைக் கட்டும் பணியாட்களுடன் கலந்து போனது. வேறு "மீட்பர்களே!, ஓடி வாருங்கள் தெய்வங்களே - ஒவ்வொரு பெயராக அழைத்து - இறங்கி வாருங்கள்!" இன்னமும் பல பெயர்களைச் சொல்லி கட்டிலில் கிடந்த வண்ணம் அரற்றிய போதுதான், நான் யன்னலில் எட்டிப்பார்த்தேன். அவனை விட யாரும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் பாதி மூடப்பட்ட நிலையில், அவனின் சகோதரன் பற்றி எதுவும் தெரியாது. - கேட்கவும் இல்லை - வெள்ளைத் தோல் வீரர்கள் அவனைச் சூழ நகர்ந்து கொண்டு இருந்தார்கள். அவற்றை எதிர் கொள்ளக் கூடிய தைரியம் என்னிடம் இல்லாத்தனால் இதையும் சேர்த்துக்கொள்ளக் கூறினான். இப்போதும் நீங்கள் வரலாம் - வரைபடம் உங்கள் வசம் இருப்பது ஞாபகம் இருக்கும் - முழு எச்சரிக்கையும் பாதுகாப்பும் உங்களிடம் இருத்தல் வேண்டும். என்பதைப் புரிந்திருப்பீர்கள். - வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க கூடிய தையரியமும் கூட -
முடிந்தால் என்னைக் காப்பாற்றும் எண்ணம் இருக்கட்டும்.
சித்திரை - 2003
[ திசேரா 9

Page 53
வெள்ளைத்தோல் வீரர்கள்
முகமணியும் மனிதன்
*<1('''
N \ >
] திசேரா 70

வெள்ளைத்தோல் வீரர்கள்
முகமணியும் மனிதன்
அவன் அவனுடைய முகத்தைத் தூக்கிக்கொண்டு போனான். எல்லோரிடமும் இருந்த பலமுகங்களைப்போல அவனிடமிருந்த நான்கில் ஏதாவதொன்று கையில் எப்போதும் இருக்கும். எது இருக்குமென்பதை தீர்மானிப்பது போகும் இடமும், சந்திக்க வேண்டிய நபர்களுமே. எப்போதாவது பலரும் கண்டுகொண்ட முகமானாலும் ஞாபகமிருக்காதவை. அவைகளை வைத்துக்கொண்டு எதுவும் செய் து விட முடியாதெனவும் கருதி இருந் தான். ஆனாலும் அடையாளப்படுத்திக் கொள்ளவென ஏதாவதொன்று தேவையென்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதிலும் முழுப்பெயரிடப்பட்ட முகம் கட்டாயம் தேவைப்பட்டது. அதுதான் அடையாள அட்டையில் இருந்தது.
இவைகளுக்குப் பெறுமதி இல்லை யெனக் கருதியவன் அதைப்பற்றி
அசைபோட்டுக்கொண்டு முடிவெடுத்த நாளொன்றின் நடு இரவில் வாகனமொன்றில் வந்த ஐந்துபேர் நான்கு முகங்களுடனும் கடத்திக்கொண்டு போனார்கள். அவனுடைய சகல முகங்களுக்கும் தெரிந்திருந்த இன்னொருவர் ஐந்து கோடியுடன் தலைமறைவாகி விட்டதாகவும், அந்த இடம் இந்த முகங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கின்றது எனவும், அதைப்பற்றிய தகவல்களை தங்களுக்கு தெரியப்படுத்தும் படியும் வற்புறுத்தினார்கள். அதிலும் ஒரு முகத்துக்கு அவை தொடர்பான பூரண விபரங்களும் தெரிந்திருக்கின்றதாம். அந்த முகமும் மறைந்த ஐந்து கோடிக்கு பங்காளியாக இருக்கலாமென எண்ணிக்கொள்கின்றார்களாம். விசாரணை தொடர்ந்தது, கிட்டத்தட்ட விடியல் அண்மித்துப்போன மங்கிய ஒளிக்குள் அவனுக்கும், முகங்களுக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. உண்மையில் விசாரணை முடிந்துபோகவில்லையாம். சகல முகங்களுடனும் உறவாடிக் கொண்டிருந்த சகோதரன் அமைச்சருடன் தொடர்பு கொண்டதனால் விசாரணை முறிக்கப்பட்டதாம். அதன் பின்தான் அந்த முகத்தை அவன் கைகளில் காணமுடியாமல் போனது. அலுமாரியில் உடுப்புக்குக் கீழேயோ, புத்தக அடுக்கில் புத்தகமாகவோ ஒழித்து வைத்திருக்கலாம். அல்லது அவனுக்குள்ளே போட்டு புதைத்தும் வைத்திருக்கலாம். அது பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. எப்படியாகிலும், காணமுடியாமல் போயிருந்தது.
- | திசேரா 2

Page 54
வெள்ளைத்தோல் வீரர்கள்
கொஞ்சம் வெளுப்பாயிருந்த அந்த முகத்தில் கண்கோட்டுக்கு சமாந்தரமாக மூக்கு முடிவிடத்துக்கு நேராய் கன்னத்தில் ஒரு கீறு இடப்பட்டிருந்தது. உலோக ஆயுதமொன்றினால் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென நினைத்தேன். அது காகம் கிழித்ததுதானாம். கையில் வைத்திருந்த வடையைப் பறிக்கவந்த காகம் இட்டுப்போன அடையாளம் என்றான். சனியன் பிடித்துக்கொண்டதன் ஆரம்பம் என்றாளாம் அம்மா.
தன்னால் எதையும் எதிர்கொள்ளமுடியும் என்றும், பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதென்பதும், தீர்வுகாண்பதென்பதும் தனக்கு எப்போதும் விருப்பமானதெனவும் கூறினான். தன்னிடமுள்ள பயத்தை மறைக்கவே இவ்வாறெல்லாம் கூறுகின்றான் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. கோழைத்தனம் என்பது அவனுடைய எல்லா முகங்களிலும் பரவிக்கிடந்தது. தனக்கானவள் ஆத்மா - தேவதை என்றெல்லாம் எண்ணி, கிடைக்க வேண்டுமென இரவுகளில் நினைத்தழுத பெண்ணிடம்கூட காதலைச் சொல்லாமல்போன கோழை. இது தற்கொலை வரையும் சென்றது. எல்லோருடைய இயல்புகள் வழியும் செல்ல பழகிப்போயிருந்தான். அவர்களுடைய பிழைகளைச் சுட்டி விவாதித்து பிரயோசனமில்லை என்று கருதிக் கொண்ட பட்சங்களில் ஆமாம் போட்டுக்கொண்டான். நினைப்பதை சொல்லிக்கொள்ள இயலாதிருப்பவனே கோழையாம். - யாரோ கூறிய ஞாபகம். அதனால்தான் அவன்பற்றி உறுதியிட முடிந்தது. ஆனாலும் முகங்களெல்லாம் கணத்துக்குக் கணம் வெவ்வேறு இயல்புகளை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அழுகை-சிரிப்பு-சோகம்-இன்பம்மயக்கம்-தெளிவு எதையும் இனங்கண்டுகொள்ள முடியாமல் இறுகிக்கிடந்தது. இதனால்கூட எந்தத் தரப்படுத்தலுக்குள்ளும் இணைத்துக்கொள்ள முடியாமல் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அவனுடைய நான்கு முகங்களைப்பற்றிய செய்திகள் சுவாரசியமானவை தொகுத்து நாவலாக்கக் கூடியதகுதிகள் அவற்றுக்கிருந்தன. நைந்து கூரான முகங்கள் ஒவ்வொன்றும் என் தலைக்குள் சுழன்றுகொண்டிருந்தது.
1974ல் அவன் பிறக்கும்போது ஒருமுகம் மட்டும் இருந்தது. அதை அழைப்பதற்கான பெயரிடலை, அவன் அப்பா தன் நண்பனின் ஞாபகத்தின் பொருட்டு - இரவீந்திரன் என இட்டிருந்தார். பெயரின் நீளம் காரணமாகவும்.வீட்டில் அழைப்பதற்காகவும் - ஜெனி - எனச்சூட்டினாள் அக்கா. அது அவளின் சிநேகிதியினுடையது. இரவீந்திரன்-ஜெனி, ஒரு முகத்துக்கே இரு பெயர்களும் இருந்தாலும் காலப்போக்கில் ஜெனி என்பது தனியான முகமாகவே வளரத்தொடங்கியது. சிரிக்காமலும், அழாமலும் வளரத் தொடங்கியதை எல்லோரும் அடித்துக் கொண்டிருந்தார்கள். குழப்படி காரணமாக இருந்தாலும், அழவேண்டும் என்பதற்காகவே தான்அடிப்பதாக அம்மா சொன்னாள். குழந்தைகள் அழ வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தாள். அதிலிருந்துதான் பசியையும்,
() (ത ?

வெள்ளைத்தோல் வீரர்கள் வலியையும் அறிந்துகொள்ள முடியுமாம். அதற்காகவே முகத்தின்மீது கல்லைத்தூக்கி வைத்தாள் இதனால் குழப்படியும் தடுக்கப்பட்டது. ஒரு கல்லில் இருகாய்கள் அடித்த மகிழ்ச்சி - மூன்றாவது காய் ஒன்றும் கூட விழுந்தது. அப்பாவைப்போல வட்டமாக இருந்தமுகம், கூரானதாக அவளுடையதைப்போல மாறிப்போனது. அம்மாவின் முகம்போலவே வளர்ந்தும் போனது.
அந்த முகத்தை உறவினர்களிடம் காட்டிக்கொள்வதற்காக வைத்திருந்தான். அவர்களால் மட்டுமே அதன் பெயரை சரியாக உச்சரிக்க முடிந்ததுடன் இனங்கண்டுகொள்ளவும் முடிந்திருந்தது. அழகில்லை என்றாலும் அமைதியானது எனக் கதைத்துக் கொண்டார்கள்.
அதன் வாய்க்குள் முன்பிருந்த பல் விழுவதற்கு தயாராக ஆட்டம் கண்டிருந்தவேளையில், எதையும் தானாகச் செய்ய பழகிக்கொள்ளாத நேரத்திலும் அம்மா அலுமீனியப்பறவையொன்றில் பறந்து போனாள். பறந்து திரிவது அவளுக்கு விருப்பமானதும் கூட, கடன் தொல்லைகளைக் குறைக்க வேண்டுமென்பது அவளின் கூற்று.
முகத்தில் தாடியும், மீசையும் தானாகவ்ே வளர்ந்துபோன பின்னைய காலமொன்றின் மழைக்கால பிற்பகலில்தான் அவளைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இடைப்பட்ட காலப்பகுதியை அப்பாவுடன் கழித்துக்கொண்டிருந்தான். இதன்போது அந்த முகம் உப்பு நீரால் கழுவப்பட்டிருந்த நாட்களும், ஏக்கங்களில் கரைந்த பொழுதுகளும்தான் அதிகமாக இருந்தது. உவர்த்தன்மையின் செழுமை அவனது முகமெங்கும் படர்ந்திருந்தது.
எட்டு வருடங்களாக வெள்ளை முகங்களைக் கண்டுகொண்டிருந்தவளுக்கு சுருங்கி கறுத்திருந்த அவனுடையதை அடையாளங்காண முடியாமல் போயிருக்க வேண்டும். மயிர்கள் முளையாமல் இருந்த பிஞ்சில், விகாரம் தாக்கி இருந்ததால் ஏற்பட்டிருந்த மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கலாம். எப்படியோ ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியாமல் மறந்துபோயிருந்தாள். இது யாருடைய முகம்" அவனிடம், பின்னின்ற அக்காவிடமும் கேட்டு விசாரணை செய்தாள். அதுவரை தொங்கிக்கொண்டிருந்த ஏக்கம், வெறுப்பு இயலாமை கோபமாகமாற ஆரம்பித்திருந்தது. அப்பாவின் செய்கையினால் அது உச்சக்கட்டத்தை அடைந்தது.
நோயின்காரணமாக பலம் முழுவதையும் இழந்துபோயிருந்த அப்பா, எழுந்திருக்க முடியாத நிலையில் நாட்கள் போனது. மங்கிப்போன கண், கேளுணர்வு குறைந்த காது. நிம்மதி அவருடைய தேவைமுழுவதுமாக இருந்ததனால் ஜெனி எனப்பட்ட முகத்தை அடகுவைத்துவிட்டு மீட்கமுடியாமல் இறந்துபோனார்.
இப்போதெல்லாம் அடிக்காமலேயே அழுவதற்குப் பழகிப்போனான். அடகு வட்டி
(ത 9

Page 55
வெள்ளைத்தோல் வீரர்கள் எதையும் ஒப்புமைப்படுத்த முடியாதளவு வளர்ந்து குட்டி குட்டியாய் ஈனத்தொடங்கி பெருகி இருந்தது.
பரந்து பெருக்கெடுத்து மெளனமாய்க்கிடந்த குட்டிகளின் நடுவிலிருந்து தலைவன் எழுந்துகொண்டான். முகத்தினுடைய தந்தை ஊதாரியெனவும், தனக்குக் கிடைத்த பணத்தில் வாழ்க்கையை நடாத்த முடியாமல்தான் தன்னிடம் வட்டிக்கு வாங்கினான் எனவும் கத்தினான். அது தன்னுடைய வருமானத்தின் பாதிப்பங்கெனவும் இதனை இழந்தவனாய்ப் போனால் தன்னால் நீடித்து வாழ்க்கையை நடாத்த முடியாதாம். இவனின் தந்தையின் கடன் உடனடியாக மீளளிக்கப்பட வேண்டும் என்றும், அல்லாமல் போனால் எனது கடையில் பணிசெய்து கழிக்கட்டும் எனவும் உத்தரவிட்டான். மீளளித்துக்கொள்ள பணம் இல்லாததனால் கடைக்குப்போக வேண்டி இருந்தது. அவனை ஆதாரமாய்கொண்ட நான்கு முகங்களில் ஜெனி சுற்றித்திரிந்தாலும், இரவீந்திரன் என்ற முழுப்பெயரிடப்பட்டது வேலைபார்த்தது அதனிடமிருந்து செலவீனங்களுக்கு போதுமான படி பெறப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் வாழ்க்கையை துரத்தும்படிக்கு போதுமானதாயிருந்தது. அதனுடைய வேலையையும் இடைநிறுத்திவிட்டுத்தான் புறப்பட்டுப்போனான்.
அத்தோடுதான் சுயமிழத்தல் ஆரம்பமானது. உணர்வுகளை ஒடுக்கி வைத்து அடிமையாக செயற்பட்டுக்கொள்ள வேண்டி இருந்ததாம். அக்கால கட்டமே ஜெனியின் வரலாற்றில் நிறையலுமே கற்றுக் கொடுத்தது. பணத்தின் தீவிரத்தன்மைக்குள் சகலமும் அடிபட்டுப் போவதாய் கருதிக்கொண்ட பலரை தரிசிக்க முடிந்திருந்தது. இக் கோமான்கள் வியர்வை சிந்தாமல், உழைக்காமல், மூலதனத்தை பெருக்க தெரிந்து வைத்திருந்தார்கள். உண்பதும், குடிப்பதும், உறங்குவதும், பணம்பெருக்க வழிதேடுவதும், அமர்ந்திருப்பதுமாக - கடவுளையும், ஏமாளிகளையும் தேடுவதிலும் கூட காலத்தை வீணாக்கிக் கொண்டிருந்தாலும், தொந்தியும், சேமிப்பும் மட்டும் பெருகிக்கொண்டு போனது. முகத்தை இழந்து போய் காகிதநோட்டுக்களால் மறைத்துக்கொண்டு திரிந்தவர்களையும், பணத்தின் சீடர்கள் எனப் பட்டவர்களையும். அப்போது அவனால் சரியாக இனங்கண்டுகொள்ள முடிந்திருந்ததாம். அக்காலப் பகுதியிலேயே அழவேண்டும் போலிருந்த நாட்கள் அதிகமிருந்ததாகக் கூறினான். யாருடைய மடியேனும் கிடைத்திருந்தால் அந்த அழுதல்கூட சுகமாக இருந்திருக்கலாம். தனியே வழிந்தோடிய கண்ணீரில் குட்டிகளும், வட்டிகளும் மூழ்கி கரைந்துபோனதன் பின்தான் அங்கிருந்து திரும்பியோடிவர முடிந்ததாம்.
இதுதான் அவனுக்குரியமுகம், இரவீந்திரன், சமூகத்தை இதனூடாகவே எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பதற்காக அவன் பொருட்டு உள்ளது.
புாடசாலையிலும், பின் வேலைத்தளத்திலும் காணும்போது அவனிடம் இந்த
] (r (

வெள்ளைத்தோல் வீரர்கள்
முகம்தான் இருக்கும். சாந்தமான இந்த முகத்துடன்தான் அறிவைத்தேடி அலைந்தான். ஆனால் காலம் போராட இவனைத்தேடிக் கொண்டிருந்தது. பிடரியில் குதிகால் அடிபட புத்தகங்களைத் தூக்கி வீசிவிட்டு தப்பியோடியதனால், மீண்டும் புத்தகங்களைத் தூக்கி நடக்க முடியாமல் போயிருந்தது. அவனது வகுப்பிலும் சிலரைத்தவிர வேறு யாருக்கும் இந்த முகம் ஞாபகத்துக்கு வந்துவிட முடியாது. பிரகாசமும் இல்லாமல், மங்கலுமில்லாமல் பத்துடன் பதினொன்றாக வகுப்புள் புதைந்து கிடந்தது. முக்கியமாக எந்தக் காலத்திலும் அதன்பின் ஒளிவட்டம் தோன்றியிருக்கவில்லை. ஆனாலும் மற்றைய மூன்றையும் விடவும் அவனில் அக்கறை கொண்டிருந்ததென்னமோ இதுதான். தனிமையைப் புரிந்துகொண்டு எல்லாவற்றுக்குமான துணையைத் தேடி அலைந்தது தோல்விகளையும் சந்தித்தது.
அம்மா பறந்து போய்விட்டதன் பின்னர் அப்பாவின் கண்டிப்புத்தான் அவனை உயரமாக்கியதாம். வாய்ப்பாட்டையும், இலக்கணத்தையும் இவனுக்குள் திணித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்திருக்கிறார். அதற்காக திரும்பும் பக்கங்களிலெல்லாம் கொடிப்பிரம்புகளை தொங்கவிட்டிருந்தார். அவைகள் முறைத்த வண்ணமே ஆடிக்கொண்டிருக்கும். அவனையும் மற்றவர்களையும் வளர்ப்பதில் அவற்றுக்கு முக்கிய பங்கிருந்ததனால் பிள்ளை வளர்த்தான் எனப்பெயரிட்டிருந்தாராம். நான்தான் உன்னை வளர்ப்பேன் - உன்னை வளர்ப்பேன் - கண்முன் ஆடிக்கொண்டே சொல்லுமாம். கனவில் கூட அதன் ஆட்டத்தை நிறுத்த முயன்று கைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவன் பற்றி முறைப்பாடுகளுக்கெல்லாம் அதுதான் பதில் சொல்லிக் கொண்டிருந்ததாம். அதன் மொழி அவனது காலில் வரியாய் ஒடித்திரிந்ததைக் காட்டினான். அதனிடமிருந்த கட்டுப்பாடு மீறப்பட்ட போதுதான் விடுதியில் அனுமதிக்கப்பட்டானாம். ஒரு கையில் பெட்டியுடனும், மறுகையில் முகங்களுடனும் போய்ச்சேர்ந்தானாம்.
தானாகக் கதைத்து, தானாக அழுது, தானாகத் துடைத்து, தானாகவே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டிய காலமாக இருந்ததாம். பலகாரங்களுடனும், சீனி மா டின்னுடனும் மற்றைய நண்பர்களின் முகங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் சனி, ஞாயிறுகளிலும், விடுமுறை தினங்களிலும் தவறாது சூரியனை அழுத்தும் வரை நின்றார்கள். உன்னைப் பார்க்க யாரும் வரவில்லை நண்பனோ. வந்தவர்களோ கேட்கும் போது கண்ணிரால்தான் பதில் சொல்ல முடிந்ததாம்.
தனிமைக்குள் இருந்து மீளவேண்டி துணைதேடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொண்டானாம். சோகம் பகிர்ந்து கொள்ளவென இல்லாமல் போனாலும், பொழுதைக் கழிக்கவென மன உழைச்சலில் இருந்து மீறி - சுற்றித்திரிந்ததாகவும் கூறினான். அவர்களுக்கு, சந்தோசமாக இருப்பதாக துடைக்கப்பட்ட முகத்தைக் காட்டிக்கொண்டான்.
| Gr !്

Page 56
வெள்ளைத்தோல் வீரர்கள்
சைக்கிளில் சுற்றித்திரிந்தது முகம், சினிமா தியேட்டர் வாசலிலும், பஸ் நிலையத்திலும், இந்த முகத்தைக் கண்டுகொள்ளலாம். ரவி மற்றைய முகங்களிலிருந்து முற்றாக மாறுபடாவிட்டாலும், ரவியுடன் அலையும் போது கொஞ்சமாவது சந்தோசம் இருக்குமாம்.
அதிகமாக மாலை வேளைகளில் மைதானங்களிலும், மங்கிய இருள் கவியும்போது பார்களிலும் காணமுடியும். போதை அவனுக்குத் தேவைப்பட்டது என்பதைவிட மற்றைய முகங்களின் தாக்கம் - ரவீந்திரன், ஜெனி - பீடிக்காமல் இருத்தலே முக்கியமாகப்பட்டதால், சுயநினைவிழந்திருத்தலே சந்தோசம் என்றான்.
அது தனித்திருத்தலுக்கு சந்தர்ப்பம் ஏற்படாமல் போயிருந்ததாகவும், நிறையப்பேர் சூழ்ந்துகொண்டோ, அல்லது சூழ்ந்துகொண்ட கூட்டத்துள் ஒருவனாகவோ நின்று கொள்ள வேண்டி இருந்ததாம். அதனுடன் ஆத்மாக்கள் எனப்பட்ட ஏழு முகங்கள் சேர்ந்திருந்ததாகவும், ஒன்று கீறல் படும்போது எல்லா முகங்களுக்கும் விழுந்தது போல அவஸ்த்தைப் பட்டுக்கொண்டிருந்ததாகவும், அவர்களுள் சகல திறமைகளும் அடங்கி இருந்ததாக கதைக்கப்பட்ட கூட்ட முகத்தை காலம் திசைக்கொன்றாய்ப் பிரித்து அனுப்பி விட்டதாக நொந்து கொண்டான். அதன் பின்னர் பகலின் மீது கருமேகம் கவிழ்ந்து இருளாக்கியதைப்போல் தனிமை சூழ்ந்து கொண்டதாம். அந்த முகத்துடன் உறவாடிக் கொள்ள, துணையாக யாரும் கிடைக்காமல் போனமையால் அந்த முகத்தைத் தொலைத்துவிட தீர்மானம் எடுத்துக்கொண்ட போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினான்.
மழை தூறிக்கொண்டிருந்த பகல் அவனுடன் கடமையாற்றுபவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். நீ எனக்கு நண்பன், உனது முகத்து ரகசியத்தை நான் அறிந்து வைத்திருக்கின்றேன். ஆனால் உன்னால் எதுவும் இதுவரைக்கும் எனக்கு கூறப்படவில்லை. இனி மேலாவது நல்ல நண்பனாய் இருக்க வேண்டும். அவள் கட்டளையிட்டுப் போனதன் பின்னால் அவளிடம் எல்லாவற்றையும் கூறிவிட முனைந்தானாம். கொஞ்சம், கொஞ்சமாகக் கூறியும் இருந்தான். சமூகக் கட்டுப்பாட்டுள் அந்த நட்பு எதுவரை நீடிக்கும் என்ற சந்தேகம் இருந்ததாகவும், அவன் - ஆண், அவள் - பெண், அவளது அல்லது அவனது திருமணம். அவர்களைக் கடந்து போகும் கண்கள், எதையோ ஊகித்துக் கேட்கும் காதுகள், வீட்டிலுள்ளோரின் வினாக்கள் எல்லாம் அவனின் முன் கேள்விக்குறியாய் வளைந்து நின்றதாகவும், காலம் புரியப் பண்ணும். நீ பயப்படாதே உனக்கொரு அம்மாவைத் தேடித் தருவேன் என்று கூறியிருந்ததையும் நினைத்துக்கொள்வதாகச் சொன்னான். தனக்கு தேவையாகிய மரணத்தைப் பற்றி அவளிடம்தான் மனம் விட்டுக் கதைக்க முடிந்ததாம். கோபத்துடன் அதை நிராகரித்து விட்டு, சாந்தமாய் உயர்ந்து கொள்வதற்கான திடம் பற்றியும் எடுத்துக் கூறினாளாம். இது முழுவதையும் பின்பற்ற முடியாது. - சோம்பேறித்தனம் - இல்லை வரலாறு - வரலாறுதான் பின்னைய கட்டத்தைத் தீர்மானிக்கும் என்பதை நீ அறிவாயா? அன்றுதான்
[ திசேரா %

வெள்ளைத்தோல் வீரர்கள் முழுமையாக தரித்திரமான, சரித்திரத்தை சொன்னானாம். இப்போதெல்லாம் அவளால் மட்டுமே அந்த முகத்தை இனங்கண்டு கொள்ள முடியும். மறந்துவிடக்கூடியதல்ல எனவும் சொல்லியிருந்தாளாம்.
அத்தனை காலம் பயணித்த பாதையில் போதை நிலவியதாம். நிழலாற மரம், வரண்ட நாவுக்கு நீர், குளிர் காற்று எதுவும் இல்லா வறட்டு வெளியாகவுமே இருந்ததாம். எந்த முகத்தை மாற்றிக் கொண்டாலும், சில கணம் சகிப்பும், பின் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையுமே எஞ்சியிருந்ததால்தான், சகிப்புத்தன்மை கூடியதும் வேதனையை ஆவியாக்குவதுமான இயந்திர முகத்தை - வீரன் - உருவாக்கிக் கொண்டானாம். அது 1990களில் தான் நடந்தேறியதாம்.
பல குதிரை வலுக்களில் ஓடினான். குழம்படி மணலில் வீசப்பட்டு சிதறிக் கிடந்தது. வித்தியாசமான கோணங்களில் முகம் குரூரத்தைக் காட்டியது. மனதின் உள்ளிருந்ததையெல்லாம் கரைத்துக்கொண்டு பறக்கும்போது நிற்கும் காற்றோ, வீசும் காற்றோ முகத்திலறைந்ததும் தனக்கு அறைவதற்காகவே காத்திருக்க வேண்டும் அல்லது அதற்காகவே வந்திருக்க வேண்டும் எனவே நினைத்துக் கொண்டானாம். அவனின் முகங்களும், ஞாபகங்களும் வேகத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்க வேண்டும். இதுபற்றிய குறிப்புகள் பத்திரிகைகளில் கூட வந்து கொண்டிருந்தது. ஒரு நாள் தொலைக்காட்சியிலும் அந்த முகம் காட்டப்பட்டதாம். ஆனால் ஞாபகத்திற் கொள்ளக்கூடிய அளவிற்கு அதனிடம் தெளிவிருக்கவில்லையென கதையடிபட்டது. மூன்றாம் கை இரண்டாம் வாயாகவும், தனிமொழியாலுமே அது படைக்கப்பட்டிருந்தது. குரூரமான அந்த முகம் கனவுகளுள் வந்து பயங்கொள்ளச் செய்ததாக பலர் தகவல் தந்தார்கள்.
இம்முகத்துடன் வரும்படி அழைப்பொன்று வந்துகிடந்தது. வருவதனால் தாங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள முடிவதுடன், முகத்தை அனைவரும் இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருக்குமெனவும் குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்ததாம்.
அன்று இரவில் 'இது அறிமுகப்படுத்திக் கொள்வதற்கோ, இனங்கண்டு கொள்வதற்கென்னவோ தோற்றுவிக்கப்பட்டிருக்கவில்லை. பெருமைப்படுவதற்குக் கூட, உப்புக்கரிக்கக்கூடிய மற்றைய முகங்களை நக்கித் துடைக்க அதிகமான எச்சிலும், ஆறுதல்படுத்த கறுப்பு - நீல மையாலான நிறைய வார்த்தைகளும் அதனிடம் உள்ளது. அனுபவங்களே பாடமாக அமைவதோடு, கற்பனையாகவும் பீச்சிடும் என்பதனால் மூன்று முகங்கள் குறித்த சுயசரிதமே இதனுடைய தோற்றத்தின் காரணமாக இருந்தது. இவை பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை. அவசியமும் இல்லை. அதனால்தான் நான் போய்க்கொண்டே இருக்கின்றேன். முட்கள் கிழித்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கவே என் நான்கு முகங்களும் என்னிடமுள்ளன. அவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், சுயம் தேவை. மூக்கை வடித்துக் கொண்டேனும் கிடக்கட்டும் என்னிடமே ".
1 திசேரா 7

Page 57
வெள்ளைத்தோல் வீரர்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிவிட்டு கட்டிலில் முடங்கிக் கிடந்தான். டாம் காய்கள் கறுப்புக் கட்டங்களுக்கே மீண்டும் மீண்டும் மாற்றப்படுவதைப்போல இருளுக்குள்ளேயே தூக்கிப் போடப்பட்டான்.
இவற்றைவிடவும் முகத்தினுள் புதைந்து கிடந்த இன்னமுமொரு விடயம் உள்ளது. விண்ணிலிருந்து வரும் தேவதைகள் ஆத்மாக்களுக்கு வழிகாட்டுவார்களாம்.
தோல்விகளைத் தாங்கி இருண்ட வெளிக்குள்ளால் நடந்து கொண்டிருந்தான். எதிரே அதா? அவனா? அவளா? இனங்கண்டு கொள்ள முடியாத மங்கிய ஒளியாய் மின்னிக் கொண்டிருந்தது ஒரு உருவம். நட்சத்திரங்களைப்போல மின்னி, மின்னி ஒளிர்ந்தது. அவனின் பின்னிருந்து கடந்த வாகனம் ஒளியைப் பீச்சியடித்து காட்சிப்படுத்தியது. அவள் - தேவதை தேவதை - பெயர் தெரியாத தேவதை. வெற்றி நிறைந்த அன்பான தேவதை அகன்ற விழி, சாந்தமான முகம். மௌன மொழிபேசும் உதடுகள்.
வானம் வெடித்து குதித்து வந்த மீட்பாளியாய் நின்று கொண்டிருந்தாள் என்றும் பேரண்டம் மங்கிப்போகும் ஒளியை வீசிய நெற்றிப்பொட்டு ஒழித்து வைத்திருந்த நான்கு முகங்களையும் ஒரு சேர கொணர்ந்தது என்றும் கூறினான்.
ஒளிக்குவிவில் தோன்றிய வாழைகளுக்கும் வெப்பத்தில் தோளை அழுத்திக் கிடந்த சிலுவை எரிந்து போனதாகவும், மும் புறம் எரிபட்ட திருப்தி இருந்ததாம். எட்டுக் கண்களும், எட்டு உதடுகளும் சிரித்து கண்ணிலிருந்து நீர் உதிர்ந்ததை வர்ணித்தான். அவ்வாறானதொரு அருட்டல் அன்றுதான் அவைகளுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றான்.
அவனது கையைப் பற்றிக் கொண்டதும் தாயின் மடியில் தலையை வைத்த நிம்மதி கிடைத்ததாகவும் மோட்சப் பிரயாணம் பற்றி அவள் சொன்ன கதையைக் கேட்டு நான்கு முகங்களுடன் கூடிய தலையை ஆட்டிக் கொண்டிருந்தானாம். வழிகாட்டிக் கொண்டு அவள் பாடிய பாடல் வட்டமிட்டு காதுள் ரீங்காரித்துக் கொண்டிருப்பதாக கூறியவன் தன்னை மறந்து பாடத் தொடங்கினான்.
நம்பிக்கையே உங்கள் அங்கங்கள் நீங்களெல்லாம் பூமியில் சிங்கங்கள் துன்பங்களை சோதனையாய் கொள்ளுங்கள் சோதனையை நம்பிக்கையால் வெல்லுங்கள்
தேவதை பாடிய தேவகானம் மானிட ரகசியப் பாடலும் கூட கண்களை மூடிக்கொண்டே புலம்பினான்.
0 திசேரா எ

வெள்ளைத்தோல் வீரர்கள்
அவனிடமிருந்த நான்கு முகங்கள் பற்றி யாருக்கும் தெரிய வந்ததில்லை. எவரும் தெரிந்து கொள்ளவும் விரும்பியிருக்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு தெரிந்திருக்கலாம். இந்தத் தெரிதல் கூட புரிதலாகியிருக்கவில்லை என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அவனுடன் தொடர்புபட்டிருந்த யாதொரு முகத்தை விடவும் இக்கதைகளை அழகாக எடுத்துச் சொல்லிவிடக்கூடியளவிற்கு எதுவும் இருந்ததில்லை. அதிலும் வீரன் சிறப்பாகப்பட்டது.
என் சரிதத்தை எனது உறவுகளை என்னைவிட யாரும் அறிந்திருக்க நியாயமிருக்கவில்லை. மேலே மேலே செல்ல வேண்டும். யாரும் இனங்கண்டிருக்க முடியாத என்னைக் காட்டிக் கொள்ள வேண்டும். எவரேனும் நடந்திருக்க முடியாத அந்தரத்தில் என்பாதையின் வரைபடத்தை கீறிக்கொண்டு நடந்தேன். எல்லோரும் கைதட்டி ஆரவாரிக்கும் வண்ணம் விகாரப்பட்ட முகத்தை மறைத்து செதுக்கப்பட்ட வார்த்தையைக் காட்டினேன். தேவதை சொன்ன மானிட ரகசியப் பாடலைப்பாடிக் கொண்டே...
0 திசேரா 99

Page 58


Page 59
கப்பம் E
திசேரா, தான் வாழுப் நிகழ்வுகளாலும் பாதி எல்லோரையும் போ முதலில் தன்னை இல அச்சம் , கோபம், டெ ஆற்றாமை, நம்பிக்ை மனித உணர்வுகள் அ வெளிப்படுகின்றன.
பாம்-2
இந்த எல்லா உணர்வு விடுதலை உணர்வும், அடிநாதமாக நின்று . கோட்பாடுகளுக்கும் ; நியாயங்களுக்கும் கட எதிர்ப்புணர்வும் விடு அவருக்கே உரிய பா உணர்வுகளாக வெளி
அவருக்கே உரிய கே கருத்துக்களும் எப்படி பற்றிய நம்பிக்கையை பற்றி நிற்கின்றார். மர போதிலும் கூட என்ட புகுந்து உலவும்போது
La,

6 சூழலின் அனைத்து
க்கப்படுகின்ற ன்ற நடுநிலை மனிதராக சங்காட்டிக் கொள்கிறார், வறுப்பு, விரக்தி,
க என்று மிக இயல்பான |வரது எதிர்வினைகளாக
புகளூடாகவும் அவரிடம்
மனிதநேயமும் செயற்படுகின்றன.
சமூக நீதி உடுப்பட மறுக்கின்ற தலை வேட்கையும்
ணியில் மேற்சொன்ன ப்படுகின்றன.
ரட்பாடுகளும், 2 இருப்பினும் வாழ்வு 1 அவர் உறுதியாகப் பணத்தை வரவேற்கின்ற
தை அவரது உலகுள் | தெளிவாகக் காணலாம்.
வெளியீட்டகம்