கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கனீமத்

Page 1


Page 2

666flufG: தமிழ்ச்சங்கம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகப்பூங்கா ஒலுவில்
دہر معمضere محب۔ سلام 4رو کہ صمہ anae 2

Page 3
கனிமத் கவிதைத் தொகுதி
ஆசிரியர் மன்சூர் ஏ. காதிர்
குலிஸ்தான், 54, அலிவன்னியா வீதி, சம்மாந்துறை-09
9 fooLD ஆக்கியோனுக்கே
முதற்பதிப்பு : 2OO995(3LTuji O1 s
ஓவியங்கள் ருத்ரா
வெளியீடு தமிழ்ச் சங்கம், ::يُني
தென்கிழக்குப்பல்கலைக்கழகம், ஒலுவில்
அச்சுப் பதிப்பு : பேஜ் அன்ட் இமேஜ்
விலை : 2OO/-
*GHANEEMIATH*
Collection of Poems
Author Mansoor A. Cader
"Gulistan, 54, Alivanniya Road, Sammanthurai-09. mansooracoseu.ac.lk/ mansoorcaderGgmail.com 067.2260212
C) : Author
First Edition : 2009 October, 01
Art Rudra
Publisher Tamil Changam,
South Eastern University of Sri Lanka University Park, Oluvil
Printer Page & Image
Price 200/-
ISBN
978-955-51155-0-6

கனிமத்தைப் படித்ததால் ஏற்பட்ட கருத்துரை கவிஞர். ஏ. இக்பால்
கனிமத் என்னும் இக்கவிதைத் தொகுதிக்கு நான் இப்பொழுது எழுதுவது முன்னுரையா, சிறப்புரையா, மதிப்புரையா,திறனுரையா, விமர்சனமாஎன்பதற்கு எனக்கே பதில் கூற முடியவில்லை. வாசிப்பவர்கள் உற்றுணர்ந்தோ, கற்றுணர்ந்தோ இது எத்தலைப்புள் புகுந்துநிற்கின்றது என்பதை முடிவுசெய்தல் மிக அவசியம்.
கனிமத் என்ற தொகுதிக்குள்ளடங்கும் முப்பத்தேழு கவிதைகளும் 1978 களிலிருந்து 2007கள் வரை எழுதப்பட்டவை. இக்கால இடைவெளி தமிழ்க் கவிதைப் புலத்தின் பின்னணியை மிக விசாலமாக்கி நிற்கின்றது. கவிதைப் பிரதேசம் இவ்விசாலிப்புக்குள்ளடங்கும். புலம்பெயர் நிகழ்வின் காரணத்தால் கவிதைபிறக்கும் எல்லைகள், கவிதைக்குரிய பொருள் தேடும்புலம்கள் நோர்வே, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனிஎன விரிந்துள்ளன. இதனால் மரபு மாற்றமும் வடிவப்பிறழ்வும் வேண்டாதொதுக்கா மதிப்புடன் வளர்ந்துள்ளன. அழகியல், புவியியல், வரலாறு, அரசியல் யாவும் கவிதைக்குள்ளடங்கிக் கலந்து நிற்பதைகனிமத் தொகுதிக்குள் கண்டுணரலாம். கவிதைப் பிறப்புக்குத் தொடர்பில்லாத கருத்துக்கள் அவசியமற்றவை. கவின் பெறக் கருத்துக்கள் மிக இன்றியமையாதவை. இவ்வித நுணுக்கங்கள் கனிமத் கவிதைத் தொகுதியைச் செம்மைப்படுத்திநிற்கின்றன. தகவல்கள், சான்றுகள், தேடல்கள் தாக்கத்தடன் நிரப்பப்பட்டுள்ளன. சமூகத்தில் உரையாடப்படும் இக்கவிதைகள் இன்றையக் கவிதை வரலாற்றுக்கு எடுத்துக்காட்டெனத் துணியலாம்.
தமிழில் இதுவரையில்லாத பண்பாட்டம்சங்கள், கவித்துவப் புதுமைகள், மொழியாற்றலின் வேகத்தால் நிலைத்துநிற்பதை இத்தொகுதிநமக்கு எடுத்துக் காட்டுகின்றது. பாரதியின் தேசிய அக்கறை முடிந்துவிட்டது. பாரதிதாசனின் சீர்திருத்த ஆவேஷம் தமிழ்வேக அழுத்தம் கடந்து கன நாட்கள். ஆனால், அல்லாமா இக்பாலின் சர்வதேசியச் சிந்தனை, மனிதச் சீர்மை, மனிதத்துவம் இன்னுமின்னும் வளர்ந்து நிற்கின்றன. இச்சிந்தனைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகள் இத்தொகுதியில் மட்டந்தட்டப்படுகின்றன. இத்தொகுதியில் துலங்கும் கவிதைகளின் கவிதா வெற்றிக்கு இதுவே காரணமாகலாம்.

Page 4
புராதன கவிதை மரபுபுதுமை பெறுவதற்கு புற உலகின் நடைமுறை காரணமாகும். அந்நடைமுறையில்தான் இத்தொகுதியின் கவிதைகளில் இப்புதுமை நடைபெற்றுள்ளது.
II
... ம்மா', 'வாப்பா', 'பாத்திரவார்ப்பு', 'காலைக்கனவு' தொடர்ந்து படித்துப் பாருங்கள். ஆத்ம திருப்பதியுடன் அகலும்போது காகம், நாய், குயில்கள் என்பன குறுக்கிடுகின்றன. இக்கவிதைகள் உருவாகக் காரணங்கள் எவை? படைப்பாளியை விட்டுவிட்டு ஒரு வாசகனை நோக்கியே நான் கேட்கின்றேன். வாசகனும் நானும்தான் இத்தொகுதியே ஏன் உருவாகியது என அலசவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளோம். மொழி உலகத்தில் பெற்றவிரிவால் உலகம் புரட்சிகரமாக மாறியுள்ளது. அதனால் ஏற்பட்ட மொழிக்குரிய பொருள் விரிவு ஒவ்வொருவரது மனதிலும் வேறுபட்டு விரிகின்றது. இன்றையக் கவிதைக்குள்ளடங்கிய விடயம் இது. அதனால்தான் வாசகனைக் கேட்கின்றேன் இத்தொகுதியை வாசித்து என்னுடன் உரையாட முடியாதா? உரையாட முன் உங்களுக்குச் சில சமிக்ஞை களை உலவ விடுகின்றேன்.
தத்துவ நிலை, இலக்கியக் கொள்கை, படைப்புமுறை இவற்றையெல்லாம் பார்க்கும் கவிஞன் சமுதாய இயக்கத்தை ஆழமாகப் பார்க்கின்றான். கனீமத் ஆசிரியரின் ஆழப்பார்வை படிப்பினை தரும் வரலாற்றுப் பதிவாகின்றது. இதுபற்றித்தான் வாசகன் என்னுடன் உரையாடல் அவசியமாகின்றது. சிந்தித்தல், தீர்மானித்தல் மிக முக்கியம். கையாண்டுள்ள இக்கவிதைக்குள் பிரதேசம் பற்றிய பின்னணியும் நடந்து முடிந்த பிறழ்வுகளும் மிக முக்கியம். மொழி, யாப்பு, நடைமுறை பற்றியதல்ல இது. முதன்மை பெறுவது பிரதேசப் பின்னணிதான். இன்றையக் கால கட்டத்தில் கவிஞர்கள் தோற்றம் விரிவடைந்த அளவுக்கு அவர்கள் கையாளும் மொழி விரிவடையவில்லை. அவர்கள் விடும் பிமைகளை நவீனத்துவத்தின் தலையில் போட்டுத்தப்பநினைப்பதாலோ என்னவோ, கனீமத் தந்த கவிஞர் கவனமாகவிருந்து அவர் ஆண்ட மொழி பற்றிய விமர்சனத்துக்கு இடம் வைக்கவில்லை. ஆதலால், இத்தொகுதி தரும் வரலாற்றுப் படிப்பினைகள் எவை? காலம், அதன் மாற்றம், மாற்றத்துக்குரிய செயற்பாடுகளை அப்படியே வடித்திருப்பதுதானவை. அகத் தூண்டல் ஏற்படும்போது எழுந்த இக்கவிதைகள் படிப்போரையும் அகத் தூண்டலுக்குள் ஆட்படுத்தும். அதுதான் இங்கு வெளிவர வேண்டும். காட்டும் காட்சி, காணும் காட்சி கவிதை உணர்வுக்குரிய ஆழ்ந்த சம்பவங்கள்.

III
இழப்பு, இருப்பு முரண்தொடை கூறும் தமிழிலக்கணம் இக்கவிதைத்தொகுதியின் 35ஆவது கவிதையான கனீமத் புதுக்கவிதையாக மரபு விரிவாகியமைந் துள்ளமை ஒரு புதுமைதான். தொகுதியின் தலைப்புக்குரிய கவிதை விசாலித்து நிற்கும் ஓர் ஆலமரந்தான். விசாலிப்புள் தொங்கி நிற்பவை, கிளை விட்டுப் பரந்துள்ளமை, நிலத்தேறிப் பதிந்து நிற்பவை, பலங்கொண்டு பழுத்து நிற்பவை இவ்விதம் தனித்தனிநோக்கவல்லவை.கோணங்களும் கோணல்களும் எவ்விதம் கூறப்படுகின்றன என்பதை இக்கவிதை வெளிக்கூறுமல்லவா? கலை தன் செயற்பாட்டு முறைமைகளை மாற்றும்போது ஏற்படும் புதுமைகள் நோக்கங்கள், வாதுக்கழைக்கப்படும்போது எழும் விமர்சனங்கள் காலம், இடம், பொருளுடன் (செறிந்து தென்படுவதை கனீமத் எடுத்தியம்பும்.
எதிரிகள் விட்டுச்சென்றபொருள் போர்ப்பொருளானதா? இருந்தவர் விட்டுச்சென்ற பொருள் இழப்புக்குள்ளானதா..? கிடைத்ததை ஐந்தாகப் பங்கிட்டு நான்கு பங்கு ஈடுபட்டோருக்கும் ஒரு பங்கு தலைமைக்கும் இறைவனுக்குமானவையா? கனீமத் தின் அகப்பொருள் என்ன? புறப்பொருள் என்ன? இவற்றை மிகவும் அலசி அலசி அதிகம் சிந்திக்கக்கூறும் இக்கவிதையின் பாரம் தூக்க முடியாததே அந்தளவு இதற்குள் புகுந்து நிற்கும் செயற்பாடுகளும் மெய்ப்பாடுகளும் அதிக மதிகம். உணர்வு உடைமைகொண்ட ஒரு சமுதாயத்தின் அடாவடித்தனம், இன்னொரு சமுதாயத்தை நோக்கிச் சென்ற செய்திகள் இக்கவிதைக்குள் காணமுடிகின்றதா? வாசகரும் விமர்சகரும்தான் இவற்றை அலசி ஆராயவேண்டும். கவிதை ஒரு மன நிகழ்வு. இது புறவயப்படும் தன்மையால் சிறப்புறும். கனீமத் சிறப்புற்றிருப்பதைப் படிக்கலாம். இக்கவிதைத் தொகுதியிலுள்ள 37 கவிதைகளில் மேட்டுமை நிலையை எய்துயர்ந்துள்ள 'மே17.1989", 'சாக்காடு தெரிகிறது', 'ஓவியக்கனவுகள்', 'படர்க்கைகள் முன்னிலையாகும்போது ', 'காணாமற்போன நூற்றாண்டுகள்', 'சீரழிவு', 'குருட்டு நிலவில் பரட்டைத் தலைகள்', 'இன்னும் சத்தமாய்', 'புனிதம்', 'மாதவிப் பூ', 'சுவர்க்கம் நோக்கிய ஷுஹதாக்களே', 'ஒற்றைமுகாம் மேலாண்மை' ஆகிய கவிதைகள் கூர்ந்து நோக்க வேண்டியவை. இப்பார்வை சிலருக்கு வேறுபடலாம். உணர்வலைக் காவியத்தின் எச்சம், அலக்கழிந்து விடுமென்ற அச்சம், உருவழிந்து போகுமென்ற கூச்சம், என்றாவது ஒருநாள் எல்லாம் சாத்தியமாகும் என்ற சத்தம் இயல்பு மாறாதிருக்க வேண்டும். தனிமனிதத் தன்னிறைவைசெல்வம் மறைத்து நின்றாலும் சமூகம் பார்த்து பெருமதிப்பிடுமா?
5

Page 5
எனும் சிந்தனைகள் மானிதத் தொலைவை ஏற்படுத்தும் என்றெல்லாம் எண்ணக்கூடிய கருத்து நிலைப்பாடும் சிலேடையாக நோக்கித்தள்ளும் மனநிலையும் படிப்போரை சங்கடப்படுத்தும். முக்கிய உலக வரலாற்றையும் செயற்பாட்டால் ஏற்பட்டதடங்களையும் இத்தொகுதிக்கவிதைகள் சிலாகிக்கின்றன. அதிகமாக ஆசிரியர் எழுதிய கால உணர்வு நிலைகளை மையப்படுத்தியே இக்கவிதைகள் வெளிவந்துள்ளதைக் கவிதை கூறும் கருத்துக்கள் சிலாகிக்கின்றன. 'கடவல்', 'கான்' போன்ற இயல்பு வழிச்சொற்கள் நிறைந்த கவிதைகளைப் படித்துணரலாம். அவற்றைத் தேடி வரிசைப்படுத்துங்கள். தமிழ்க் கவிதையின் ஆரோக்கியம் மொழிதலின் மேம்பாட்டால் உயர்கின்றது என்பதை இத்தொகுதி வெளிக்காட்டும். காதல், வீரம், கொடைப்பண்பு என்பன இங்கே மரபாகப் பேசப்படவில்லை. காரணம் இக்கவிதை எழுந்த காலப் பின்னணி இடங்கொடுக்கவில்லை. புதுமுறையான சாதனைக்கு இக்தொகுதி ஓர் உதாரணம். அந்தரங்க உரை (monologue) வெளிப்பாடு கவிதையாக உருவெடுத்திருப்பதால் உண்மைத்தன்மை கருத்தாக்கம் பெற்று சந்தர்ப்பங்களை அவிழ்த்துவிட்ட பொருளடங்கிய இத்தொகுதியை வாசகன், விமர்சகன் இருவருமே எடைபோடவேண்டும். எழுதியவரின் இலட்சியக் கனவின் வெளிப்பாடும் அதுதான்.
IV
எண்ணக்கருக்களைத் திறனாய்வாக உருவாக்குவதற்கு இலக்கியம் பிறக்க வேண்டும், அவ்விலக்கியம்தான் இத்தொகுதி. அதைப்படித்ததன் விளைவுதான்
இவ்வுரை.
றிபாயா மன்ஸில் தர்கா நகர்
25.04.2008

குறிப்பு உமா வரதராஜன்
மன்சூர் ஏ. காதிர் என் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். நாங்கள் 1985இல் வியூகம் என்ற கலை - இலக்கிய அமைப்பில் ஒன்றாக இயங்கியவர்கள். வியூகத்திலிருந்த எல்லோருமே இலக்கிய ரசனையில், எழுத்துப் போக்கில், வெளிப்பாட்டு முறையில், நடையழகில் ஒத்த இயல்பினர் என்று சொல்ல முடியாது.
'சீட்டுக்கட்டைக் கலைத்துப் போட்டுத் தலைகீழாக அடுக்கி ஆடினால் எப்படி இருக்கும்' என்று யோசிக்கக் கூடியவர்களாக சோலைக்கிளியும், நானும் இருப்போம். எச்.எம்.பாறூக்கின் எழுத்தோ சற்று தத்துவ விசாரங் கொண்டது. சாமியாரின் உச்சாடனமாக வார்த்தைகள் வந்து விழும். மு. சடாட்சரனுடைய உலகம் மரபு சார்ந்தது. முற்றிய வேர்களைக் கொண்ட விருட்சத்தில் அவர் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பார். துளிர்களுக்கு அங்கே இடமில்லை. வியூகத்தில் அவர் பங்கேற்ற காலத்தை இன்றைக்கு யோசிக்கையில் பாலு மகேந்திராவின் படத்தில் வி.எஸ். ராகவனுக்கும் பாத்திரம் கிடைத்தது போலிருக்கின்றது. வீ .ஆனந்தன் மலையாளப் படைப்புகளை மொழிமாற்றம் செய்ததாக நினைவு. மலையாளம் எங்களில் யாருக்குமே தெரியாததால் அவற்றை வெளியிடுவதில் ஒரு பிரச்சனையுமே இருக்கவில்லை. மற்றொரு நண்பரான இராஜேந்திரா வியூகம் இதழுக்கான முகப்பு ஓவியத்தை வரைந்தார். அவர் வரைந்த குருவி குருவியைப் போலவே அமைந்து விட்டதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். இன்னொருவரான நண்பர் மன்சூர் ஏ. காதிர் செய்ய விரும்புவது ஒரு செப்பனிட்ட பாதையில், விரைந்து செல்லும் வண்டியில் பாய்ந்தேறுவதையெல்லாம் அவர் நிராகரித்து விடக்கூடியவர். எனினும், நாங்களெல்லோரும் ஆளுக்கொரு ருசியுடன் சமைத்துப் படைத்துக் கொண்டிருந்தோம்.
மன்சூரின் கவிதைகளைத் தொகுப்பாக இன்றைக்கு வாசிக்கின்றபோது காலத்தின் குரல்களாக அவை மனதில் பதிவுறுகின்றன. மன்சூர் ஏ. காதிரின் ஆரம்ப காலக் கவிதைகள் அனுபவ மீட்டலாக, உறவுகளின் நினைவாக, இயற்கைலயிப்புகளாக அமைய பின்னாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் அரசியலை முதன்மைப் படுத்துகின்றன.
இலங்கையின் குரூர அரசியலின் அக்கினித் தகிப்பு பின்னாட்களில் மன்சூரின் கவிதைகள் ஆகியிருக்கின்றன. கவிஞன் என்பவன் வெறும் சடமல்ல என்பதை உணர்த்தும் கவிதைகள் இவை.
{ }.

Page 6
மன்சூரை எடுப்பார் கைப்பிள்ளை என எவராலும் கூறமுடியாது; தான் கொண்ட கொள்கையில் அவர் தெளிவாக இருப்பவர். 'மானுடம் எரியுண்ட சாம்பல்' கவிதை இதற்கு சரியான உதாரணம்.
'உமது நண்பரை இனங்கண்டீரா, உமது எதிரியை இனங்கண்டீரா?' என்ற அவருடைய கேள்வி நிச்சயம் உணர்ச்சிக் கவிஞர் ஒருவரிடமிருந்து வரக் கூடியதல்ல. சற்று நிதானமான பரந்த பார்வை இதற்குத் தேவைப்படுகின்றது.
'மாட்டுப்பட்டியும், பச்சை மரங்களும் உங்களுக்கிழைத்த உக்கிரம் என்ன' என்ற கேள்வி மன்சூரின் கேள்வி மாத்திரமல்ல; மனச்சாட்சியை மதிக்கும் ஒவ்வொரு வருடைய வினாவும்கூட.
சரணடைந்தோர் அவலமாக, நிராயுதபாணியாய் நீங்கள் கரங்களை உயர்த்தியும் கதறியும் உங்களைக் குப்புறப் படுக்க வைத்துக் குறிபார்த்துக் குதறின அந்தத் துப்பாக்கி மிருகங்கள்' என்ற வரிகளையும் இதன் பின்னணியிலேயே உணர வேண்டும்.
கச்சிதமான படைப்புகளில் வார்த்தைகளின் விரயம் இருப்பதில்லை. ஆனால் மன்சூரின் கவிதைகள் அதிகமாகப் பேசி மையத்தை நோக்கி நகர்கின்றது. ஒரு மீனைப் பிடிக்க ஏராளமான கடலைப்பொரிகளை வீணாக்குகின்றாரோ எனச் சற்று எண்ண வைக்கும் பாணி அவருடையது. கவியரங்குப் பாதிப்புகள் அவரை
விட்டகலாமல் உள்ளன. முத்தாய்ப்பாக ஒன்று. கனீமத் என்ற அரபுச் சொல்லுக்கு போரில் கைப்பற்றப்பட்ட பொருட்ளைப் பங்கீடு செய்தல்' என்று பொருள். இந்தப் புராதன அரபுச்சொல்லை எள்ளலாகவும், பொருத்தமாகவும் மன்சூர் பயன்படுத்திக் கொண்ட விதம் ஆச்சரியப்பட வைத்தது. போர்கள் போன்ற தேர்தல்களின் பின்னர் இன்று இடம்பெறும் கனீமத்தை கவிதையாக்க மிகவும் துணிச்சல் வேண்டும். அந்த நெஞ்சுரம் பெற்ற கவிஞராக என் நண்பரே அமைந்து விட்டதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
மட்டக்களப்பு வீதி பாண்டிருப்பு
2008.08.01

முன்னுரை
எனது ஆக்கங்களுள் சிலவற்றை கால எல்லைகளைப் பொருட்படுத்தாது ஒரு தொகுதியாக்கும் முயற்சியின் வெளிப்பாடே 'கனீமத்' என்னும் இச்சிறு கவித் தொகையாகும்.
என் வாழ்வியல் சூழலானது இளமைக் காலம் முதல் ஓய்வு பெற அண்மிக்கும் இன்று வரை ஒடுக்குமுறையோடும் கொடூரத்தோடும் துயரத்தோடும் சோகத்தோடும் வேதனையோடும் பயங்கரத்தோடும் அழிவோடும் இரத்தத்தோடும் மரணத்தோடும் முழுவதுமாகச் சம்மந்தப்பட்ட ஒரு காலக் கட்டமாகும். எனது நாட்டின் தேசியப் பிரச்சினையானது முளைவிட்ட காலம் முதல் அது அசுர வேகத்துடன் கொடூரமாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் காலம்வரை எனது வாழ்தலும் நகர்ந்து கொண்டிருந்த தினால் அந்தச் சூழல் ஏற்படுத்திய பாதிப்புக்கள் எனது படைப்புக்களிலும் பிரதி பலிப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.
அதிலும் விசேடமாக போர்ச் சூழலுக்குள் வலோத்காரமாக இழுத்துவிடப்பட்டு அதில் நின்றும் தப்பிக் கொள்வதற்கான வழியை அறிந்து கொள்ளாத அதேவேளை அந்த சதிவலைப் பின்னலை ஒற்றுமையாக நின்று நறுக்கிவிடும் திராணியற்றதும் ஆழ்ந்து புரையோடிப்போன சுயநலத்துடன் கூடிய தனிநபர்களின் கூட்டத்தைக் கொண்டதுமான ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக நான் என்னைக் காண்பதினால், கலைப் படைப்பின் இலட்சணங்கள் தொடர்பில் கோட்பாட்டுரீதியாக நான் கொண்டிருக்கும் தெளிவான அபிப்பிராயங்கள்கூட வெளிப்படையான அத்துமீறலுக்குள் ஆட்பட்டிருப்பதை என்னாலும் உணர முடிகின்றது.
அத்துடன் தனிமனிதன் என்ற வகையில் எனது சுய அவலங்களும் பெருமூச்சுக்களும் ஒப்பாரிகளும் ஆற்றாமைகளும் மட்டுமன்றி தனி மனித உணர்வுகளும் அதன் எத்தனங்களும் சில படைப்புக்களில் தலைகாட்டியுள்ளன. அவைகள் சிலவேளை களில் படைப்புக்களின் முழுமை தொடர்பில் உடன்பாடான அபிப்பிராயங்களை என்னுள் தோற்றுவித்திருத்தல் கூடும்.
எது எப்படிப்போனாலும் ஆவணப்படுத்தல் இங்கு நடைபெற்றிருக்கின்றது. காலம் தனது கடமையைச் சரிவரச் செய்யும்.
இறுதியாக, இலக்கியப் பயணத்திலும் தீவிர வாசிப்பிலும் என்னை ஆர்வப்படுத்திய எனது தந்தை மர்ஹூம் அப்துல் காதிர் ஆலிம் அவர்களுக்கும், எனது அன்பான தாயார் ஏ. கதீஜா உம்மா அவர்களுக்கும், எனது சகோதரர் கலாபூஷணம் மௌலவி ஏ.ஸி.ஏ.எம். புஹாரி அவர்களுக்கும் இத்தொகுதியைக் கொணர தொடர்ச்சியாக அனைத்து வழிகளிலும் என்னை ஆர்வப்படுத்திய எனது ஆப்த நண்பரும் இலக்கிய
9

Page 7
ஆர்வலருமான ஹற்றன் நெஷனல் வங்கி தலைமையகத்தைச் சேர்ந்த முகாமையாளர் ஏ.எல்.எம். நஸிர், எனது மரியாதைக்குரிய ஆசிரியர் பாவலர் பஸில் காரியப்பர் அவர்களது இடைவெளியை நிரப்ப அன்புடன் ஒப்புதல் தந்து இத் தொகுதிக்கு சான்று வழங்கிய கவிஞரும் இலக்கிய ஆய்வாளருமான ஏ. இக்பால், நட்பின் உரிமையுடன் சான்றுரை பகர்ந்த எனது இளமைக்கால நண்பரும் நவீன இலக்கியப்பரப்பில் எனக்கு தீவிர ஆர்வம் ஏற்படுவதற்கு மறைந்த விமர்சகர் வீ. ஆனந்தனைப்போல மற்றொரு தோன்றாத்துணையாகநின்றவருமான நண்பர் உமா வரதராஜன் மற்றும் இத்தொகுதிக்கு கலைநயம் சேர்த்த ஓவியர்களான நண்பர் எஸ். நளிம், வியூகம் தந்த நண்பர் உருத்திரா, தம்பி ஆஸாத், பிரதி தயாரித்த சகோதரி ஜெஸ்மின் மற்றும் கவிதைகள் தொடர்பிலும் தொகுதி தொடர்பிலும் ஆலோசனைகள் கூறும் எனது அன்பு மனைவி தாஜுன்னிஸா, ஆரம்ப அச்சக வேலைகளில் ஈடுபட்ட நண்பர் ஆதம்பாவா, நூல் வடிவ நுட்பங்களையெல்லாம் புகுத்திப் படைத்த நண்பர் ஆத்மா, இத்தொகுதியை வெளியீடு செய்ய முன்வந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினர் ஆகியோருக்கும், ஏற்கனவே சில படைப்புக்களை வெளியிட்ட பத்திரிகைகள் - சஞ்சிகைகள் ஆகிய எல்லாத்தரப்பினருக்கும் என் ஆழிய நன்றிகள் உரித்தாகட்டும். -
மன்சூர் ஏ. காதிர்
G 5 ான்' 54, அலிவன்னியா வீதி, சம்மாந்துறை-09 O1. O9.2OO8
 

வெளியீட்டுரை வாலிபம் குலையாத இளந்தாரிக் கவிதைகள்
எமக்கான அடையாளங்கள் இத்துப் போன சூழ்நிலையில் எமக்கான
அடையாளங்களை நாமே தேடவேண்டிய கடப்பாடு எம்மீது சாட்டப்பட்டுள்ளது.
எம்மைநாம் தேடுகின்ற எமக்கான பயணத்தில்தடயங்களும், பதிவுகளும் மிகவும் உக்கிரமான இரு வேறுபட்ட அம்சங்களாகின்றன. இந்த அடிப்படையில் கனிமத் கவிதைகளின் தொகுதியானது எமக்கான கலாசார அடையாளங்களைத் தேடித்
தரும் என்பதில் மாறுபாடு கிடையாது.
வரலாற்று முன்நிகழ்வுகளின் பதிவுகளும், ஆதாரங்களும் கவிதை இலக்கிய வடிவில் சாதுவாக ஆவணப்படுத்தப்படுகின்றது. எம்மீது திணிக்கப்பட்ட கலவரங்கள், எம்மீதான அட்டூழியங்கள் மற்றும் அழிச்சாட்டியங்கள் என்பனமே 17, 1989) மிகவும் துல்லியமாக கவிப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுக்காலங்களின் அரசியலையும், பொருளாதாரத்தையும், கலாசாரத்தையும் இன்னும் மற்றைய விடயங்களையும் இலக்கியங்களின் ஊடாகவே உலகறிந்தது. இதுபோல எமது இத்தகையதான இலக்கியப் படைப்புகளும் ஒரு காலத்தில் கோலமிடும் என்பதில் சந்தோஷமடைகிறோம்.
1980களில் விறுவிறுப்பான இலக்கியங்கள் செய்த எம்.ஏ. நுஃமான், சோலைக் கிளி, உமா போன்றோரில் விரல்விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகளில் மிகவும் விசேடத்துவம் வாய்ந்த ஒருவராக மன்கர் ஏ. காதிர் காணப்படுகிறார். இத்தொகுதி யில் இடம்பெறுகின்ற அனேகமான கவிதைகள் நல்ல வயதான கவிதைகளாகும்.
இருப்பினும் இதன் விசேடத்துவம் இன்னும் வாலிபம் குலையாது இருக் கின்றமையை எம்மால் உணர முடிகின்றது. 80களில் எழுதிய கவிதைகள் இன்னும் இளந்தாரிக் கவிதைகளாக இருக்கின்றமை வியப்பையே தருகின்றது. மட்டுமல்லாமல் இன்றுவரையும் தொடர்ந்து செல்லும் இவருடைய இலக்கிய முயற்சிகளானது எமக்குதகுரியத்தினையும், தெம்பினையும் அள்ளித்தருகிறது. மாரிகாலத்து மழை வெள்ளம் போல.
தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின்தமிழ்ச்சங்கத்தின் வெளியீபாகவந்தபாவலர் பஸில் காரியப்பரின் 'ஆத்மாவின் அலைகள்’ எனும் கவிதைத் தொகுதிக்கு அடுத்ததாக வெளிவர இருக்கும் மன்சூர் ஏ. காதிரின் 'கனீமத் எனும் கவிதைத்
11

Page 8
தொகுதியானது சிறந்த தரமான இலக்கிய பாரம்பரியத்தை எமக்கு அன்னி யோன்னியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஆய்வுக்குட்படுத்தக்கூடிய அற்புதமான கவிதைகளை நூலாக்க முன் வந்தமைக் கும், வெளியீட்டு உரிமையினை எமது தமிழ்ச் சங்கத்திற்கு தந்தமைக்கும் நாம் மனம்கொள்கிறோம். திணறிக்கொண்டிருக்கும் நம்மவர்க்கு இதமான ஒட்சிஜனாய் 'கனீமத்'
எம்.எஸ்.எம். அஸாறுதீன
தலைவர்,
தமிழ்ச் சங்கம், தென்கிழக்குப் பல்கலைக் கழகம்
01-09-2008
12

... ம்மா ....
வாப்பா.
0 ( 6
பாத்திர வார்ப்பு
காலைப் பொழுது
21
மே 17, 1989
23
26
28
மாயையும் நிஜமும் நிஸப்த வெளியில் துரத்தப்பட்ட இருப்பும் மழைத்தவளைக் குரல்களும் பூர்வீகத்தை நோக்கி
30
32
மாலைக் கனவு
34
|
36
38
40
சாக்காடு தெரிகிறது ஓவியக் கனவுகள் படர்க்கைகள் முன்னிலையாகும்போது... காணாமல் போன நூற்றாண்டுகள்
சீரழிவு குருட்டு நிலவில் பரட்டைத் தலைகள் ஒயாஸிஸ் போல
42
46
48
51
அந்நியன்
53
இன்னும் சத்தமாய்...
55

Page 9
புனிதம்
சலனம்
யதார்த்தம்
... طالlLک56 LDIT
தாண்டவம்
நேற்றைய இளைஞனே
அவஸ்தை
மாமிசக் காவல்
முலாம்
துலங்கல்
அந்நியச் சுமைகள்
ஹிரோ
சுவர்க்கம் நோக்கிய வுஹதாக்களே
மானுடம் எரியுண்ட சாம்பல்
பிரபஞ்சத்தின் ஸ்தம்பிதம்
கனிமத்
ஒற்றை முகாம் மேலாண்மை
பரவசம்
14
57
59
61
63
65
67
7 O
73
75
79
81
83
85
87
91
93
95
97
 

பஞ்சுப் பொதியா. புகைச் சுருளா. * புனிப்புகாரின்
நுரைப் பூக்களா?
யாருக்கு இந்தச் சிம்மாசனம்? சந்திரனுக்குத்தானே
நிச்சயமாய். சந்திரனேயில்லை.
Yo *
கன"மத 15
அது நீயேதான் உம்மா. s முக்காடு விலகையில் தெரியும் சுருண்ட வெள்ளிக் கம்பிகள் இப்போது கருகருவென்று இன்னும் இளமையாய்.
நிச்சயமாய்.
அது நீயேதான் உம்மா.

Page 10
யார் அந்த அள்ளு குழந்தை. அந்தத் தங்கத் தொட்டிலில்.
உனது பேரனா எனக்குப் பிறகு மரித்துப் பிறந்த தம்பியா பொக்கை வாயால் அவன் என்னமாய்ச் சிரிக்கிறான் கன்னக் குழிகளினுள் வைரங்கள். வைரங்கள்.
என்னைப் பார்த்து ஏன் அவன் சிரிக்கிறான்? அவனாய் நான். அந்தத் தொட்டிலில். உன் தாலாட்டில்.
ஓ. மின்னல் ஒன்று வெட்டி மறைக்கிறதே. LĎ...LDIT...
LĎ... LDT...
.ub.LDT.
1989
16 மண் சூர் ஏ. காதிர்

வாப் பா.
இமைத்திரை மூடுகையில் ம்னத்திரை விரிகிறதே. 'மனத்திரை விரிகையிலே.
வாப் பா அந்த முகநிலா உதிக்கிறதே.
சொர்ப்பனத்தைத் துரத்தும்
இரவைத் துரத்தும் நினைவலைகள்.
காலம் எத்தனை கடந்துள்ளபோதும் மனச்சிறைப் பதிவுகள் மறையவே இல்லை. s இத்தனை மாற்றம்
நிகழ்ந்ததன் பின்னரும் உங்கள் நிஜத்தின் நிழல்கள் கரையவே இல்லை தந்தையே.
கனிமதி 17

Page 11
துங்க மறுக்கும் ராத்திரிகள் துயரைச் சுமக்கும் விழித்திரைகள் மூடமறுக்கும் இமை இலைகள் முடமாய்ப்போன எதிர்பார்ப்புக்கள்.
கனவு அம்புகள் கணிகளைத் துளைக்க எய்த வடுக்கள் இன்னும் ஈரம்காய மறுக்கும் முன்னர் கூறிய வார்த்தகைள் நுளம்பாய் சிணுங்கிச் சிணுங்கி தூக்கம் கலைக்கும்.
மனம் எனும் காக்கை மீண்டும் உங்கள் நிஜத்தை நினைந்து நினைந்து கரைந்து இரையும்
சொர்ப்பனக் கள்வன் நுழைகையிலும் நனவு நாய்கள்
குரைக்கத் தொடங்கும்.
1982
18 மணி சூர் ஏ. காதிர்

பாத்திர வார்ப்பு
சின்ன ஒரு பீடித்துண்டில்
சொர்க்கத்தைச் சுவைத்துவிடும் அங்கலாய்ப்பு சீமென்ற் புழுதி வியர்வை நீரில் சந்தனக் குழம்பாக ஒற்றைக்காலை ஒய்யாரமாய் மடித்துவைத்து மூட்டைப் பஞ்சணையில் முதுகை இறக்கி வைத்தான். அவன் சுமந்த மூட்டை அவனைச்சுமக்கின்ற காலத்தின் சுழற்சி. அந்தச் சன நெரிசலுக்குள் மார்க்கட் வீதியின் அலங்கோல ஒழுங்கில் அந்த ஆத்மா எதனை எதிர்பார்க்கின்றது?
கனிமதி 19

Page 12
வாழ்க்கையை வெறும் நையாண்டியாயப் மிக அலட்சியமாய்ப் பார்க்கும் பார்வை. கஷட அரக்கனை எந்தச் சலனமுமின்றி சினிமா ஹிரோ வில்லனைப் பார்ப்பதாய் வாழ்க்கையைக் காணும் துணிச்சல்.
உலக நாடகத்தின் ஒவ்வோர் பாத்திரமும் அற்புதமே.
1979
20 மன்சூர் ஏ. காதிர்

காலைப் பொழுது
பூத்தும் துளிர்த்தும் புலர்ந்தும் ஒளிரும் காலை வேளையில் கனவின் லீலைகள் தங்கத்தட்டாய் தக. தக. கதிரவன்.
சிலைகள் உயிர்த்து பாடுதல் போன்றும் சித்திரம் எழுந்து ஆடுதல் போன்றும் எங்கும் எங்கும் இயற்கையின் விரகம்.
சொர்க்க யாழின் நரம்பை கடனாய் பெற்ற பெருமையால் குயில்கள் கூவும் அர்த்த ராத்திரிநிகழ்வை மீட்டு ஆனந்தத்தைப் பிறரிடம் பகிரும் பருவம் பூத்த இளைய புட்கள்.
காதல் நினைவின் கனவுச் சுகத்தை ஆதங்கிக்கும் அரிவையர்போல விரகவேள்வியின் தொடர்நிலைப் புள்ளியாம் காலை வேளையில் கனவுகள் விரியும்.
கனிமதி 21

Page 13
பிள்ளைச் சுமையில் மகிழ்வினைக் காணும் கன்னித் தாயின் கனவுகள்போல நினைவின் பாரம் நெஞ்சினை வருடும்
காலை புலர்வது மறு மாலை வருவதன் கட்டியமாகும்
என்னும் மகிழ்வில் மாலையின் இனிய மங்களங்களுக்காய் காலை புலர்வுக்கு நல்வரவு கூறும்.
நெருஞ்சிப் பூக்கள் கதிர்களின் உறவில் தங்களை மறந்து நாட்டியமாடும். தாங்க இதழ்களைத் தளிர்களில் பரப்பி தாரகைபோன்று நிலம் எனும் வானில் பகலில் ஒளிர்ந்து எழிலால் நிறையும்
மொட்டு விரித்து முகங்கள் மலர்ந்து பட்டுமெத்தையின் மென்மையைப்போல மெல்லிய சுகந்தம் பரவக் கரையும் சந்தனக் குச்சியின் இளமணம்போல மெல்லிசை ராக மென்மையைப் போல காலை வெய்யில் கணிகளில் நிறையும்.
1981
22 மண் சூர் ஏ. காதிர்

GLD 17, 1989
மேற்குத்திசை முதல் அக்னிமூலைவரை வடமுகாக்னியின் செங்கானல்.
பட்டிப்பளையாற்றின் தொடுகரையில் மரகதச் சால்வை போர்த்து இறால் மீன் கொதித்தெழும் மட்டக்களப்பு வாவியின் தென்தொடுகரையின் செல்வச் செழிப்பினதும் கலாசார சேகரத்தினதும்
பெட்டகமான ܐ எனது ஊரின் மண்டுமனைகள் பிராந்திய விஸ்தரிப்புவாத புவிசார் அரசியல் ஜவான்களும் அவர்தம் கைக்கூலிகளும் செய்த காட்டுமிராண்டித்தனங்களினால் அக்னியோடு சங்கமித்தன.
கனிமதி 23

Page 14
அன்று
பச்சை வயல்வெளியும் கல்லோயாவின் கரைநுரையும் பசும்பாலும் தயிரும் பொங்கிய எனது தாய் மணி மீன்பாடும் மட்டக்களப்பு வாவியின் பட்டுப்பாதையால் மலபாருடனும் காயல் பட்டினத்துடனும் இணைப்புணர்டிருந்ததாம்
GFT JUpLD 5 LDL untu upLD
கலாசாரமும்
கவிதையும் காதலும் பரிமாறப்பட்டதாம்
இன்று 134 இராணுவ டாங்கிகள் எங்கிருந்து? ஏனிந்த முற்றுகை. ஏனிந்த முற்றுகை. பச்சைத்தளிர்போன்ற பலஸ்தீனத்தை அழிக்க
இஸ்ரேல் அனுப்பியதுபோல ஏ.கே. 47 ஜவான்களும் அவர்தம் முண்டாசும் தாடியும் சாரம் உடுத்த உள்ளுர் எஸ்.எல்.ஆர். சிப்பாய்களும் எனது கன்னிக் கிராமத்தை முற்றுகையிட்டதேன்.?
மண்டு மனைகள் எரிந்து முடிந்த சாம்பல்மேட்டை பூட்ஸ் கால்களால் கடந்து வந்து எங்கள்
பெரிய பள்ளி வாசலின்
24 மணி சூர் ஏ. காதிர்

மிம்பர் அருகே வந்து நேற்று வேறு யாரோ இந்த அநீதியை இழைத்ததுபோல மேஜர் ருரீநிவாஸ் ராவ் பொறுமை காக்குமாறு பொது மக்களுக்கு உபன்னியாசம்.
எனது மண்ணில் எரியும் நெருப்பில் இந்தி மொழியையும் எவர் சில்வர் கலாசாரத்தையும்
புடம்போடும் கனவுகள்.
அவை எரியும் நெருப்பில் புடமிடப்படுமா..? விறகாயப்ப்போகுமா..?
1989
கனிமத 25

Page 15
மாயையும் நிஜமும்
உள்ளப்பாலை பசுமையாய் மாறுமா....
இன்றேல் ஒரு துளி விஷம் விடியலைக் காட்டுமா?
இருட்டு நிலவின் குருட்டு விழிகளில் விடுதலை நாடும் மனிதப் பறவை சிறகை விரிக்குமா உள்ளப்பாலை பசுமையாய் மாறுமா.... வெறுமைப் போஷாக்கால் விளைகின்ற புது நோய்கள் .... எக்ஸிஸ்டென்ஷியலிஸ ஏமாற்றங்கள் டாடாயிஸத்தின் அப்நோமல் சங்கதிகள் ஆலமரமாய்.. நிலைக்கும் விரக்திகளால்
அந்நியமாதலை ஆதங்கிக்கும் புதிய புதிய மன நெருக்கடிகள் புராணக்கதை
ஹீரோவின் சாகசத்துள்
26 மன்சூர் ஏ. காதிர் -

சங்கமிக்கும் அசட்டுத்துணிவுகள் எல்லாம் ....
நிஜப் பேய் தன் முரட்டு நகங்களை நீட்டி வருகையில் டிஸம்பர் பனியிடம் தோற்கும் சுறுசுறுப்பாய்
முருங்கையில் ஏறும் வேதாளங்கள் இவனின் உள்ளப்பாலை பசுமையாய் மாறுமா.... உமர்க்கையாமின் திராட்சை ரசமும் உணர்வை ஈர்க்கும் காவியமும் நாஸியா ஹஸனின் மாணிக்கக் குரலும் மனவறுமையை மாற்றிட முயலுமா? உள்ளப்பாலை பசுமையாய் மாறுமா....
1980
கனீ மத 27

Page 16
நிஸப்த வெளியில்
~:
*சம்..?"
மௌனத்தின் யாத்திரைகள் .... மனவெளியில் போர்க்களங்கள் போர்க்களங்கள் எல்லாமே மரணத்தின் ஊர்வலங்கள்
மனவெளியும் மணல் வெளியே மனம் அழிந்தும் உடல் அழியா பிணம் இன்னும் வாழ்கிறது
எதற்காக வாழ்கிறது இதன் பயணம் எதை நோக்கி? பசையற்ற மணல்வெளியில் பயணம் தொடர்கிறதே. நிஸப்தப் பெருவெளியில் நிம்மதியும் நிச்சயமும் இல்லாத ஒரு வாழ்க்கை தொடர்கிறதே.
28 மன் சூர் ஏ. காதிர்

பொன்னிறப் போத்தல்களை வெறுமையாய் ஆக்குவதும் கஞ்சாப் புகையின்
அசைவினை ரசிப்பதுவும் இப்படியாய் .. இப்படியாய் தகாத இயல்புகள் கடத்தப்பட்ட தாவரமாய் ஒருவாழ்க்கை நடக்கிறதே. பாலைவனத்தின் பயங்கர நிஸப்தத்தில் போதை மயக்கத்தில் பொழுதை கழித்து விடைகளுக்காய் வாழாது வினாக்குறியாய் வாழ்கிறதே.
1980
கனீ மத் 29

Page 17
துரத்தப்பட்ட இருப்பும் மழைத் தவளைக் குரல் களும்
துஆ
நெருக்குதல்களுக்குள்ளான ஓர் இரவின் சாபக்கேட்டில்
ஞாபகங்கள் கொலுவேற்றப்பட்டன.
அவநம்பிக்கைகளை நெஞ்சு நிறையச் சுமந்துகொண்டு காத்திருக்கின்ற அப்பாவிகளை உயிர்க்கொல்லி நினைவுத் தழும்புகள் இடைவிடாமல் விரட்டின. மாங்காய் பிடுங்க மரமேறிய சிறுவனின் கனவுகளை முசுறுக்கொப்பொன்று சிதறடித்ததுபோல பலாத்காரமாக வினியோகிக்கப்பட்ட விழுப்புண்கள் மரணத்தின் நிஜமாக அச்சுறுத்தின.
30 மன்சூர் ஏ. காதிர்

மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக கணம் வெடித்த ஆற்றின் வெளிச்சுவாசம் வெண்புறாவின் மெல்லிய இறக்கைகளைக் குறிபார்த்தன.
அதனால் ஏற்கனவே வாழத்துடிக்கும் நப்பாசையால் எவ்வித ஆட்சேபங்களையும் எதிரொலிக்காது மெளனித்துப்போன ஒரு வடபுலத்துச் சோனி துரத்தப்பட்ட தனது இருப்பை மறந்துவிட முயல்கையிலே மீண்டும் அவை மழைத்தவளைக் குரல்களாய் கண்தலை புரியாமல்
மூதூரில்.
2006
கனீ மத் 31

Page 18
பூர்வீகத்தை நோக்கி
-----
அகன்ற முகிற் பரப்பினூடே என் ஆத்மா அலைந்தது.
காலமும் இடமும்
அர்த்தமற்றுப்போன அண்டவெளியில் சூட்சும *புறாக்கின் சுகானுபவத்தோடு ஒரு யாத்திரை நடந்தது.
தறிகெட்டுப்போன
வாழ்க்கைச் சுமைகளுக்கு வடிகானாக கனவு அமைவதைப்போல நிலப்பரப்பின் :
குறுகிய எல்லை வரம்புகளின் நெருக்குதலால்
அலுத்துப்போன ஆத்மாவுக்கு காலத்தினதும் வெளியினதும் நியமங்கள் தொலைக்கப்பட்ட ஒரு பயணம் சுயாதீனத்தின் தரிசனமே.
32 மன்சூர் ஏ. காதிர்

சூரியக் கறையான் அரித்த குழிக்குள் ஆயுளைத் தொலைத்த மனித ஆத்மா ஒளியாண்டை ஊடறுத்து ஒரு யாத்திரை சென்றது. பூர்விகத்தை நோக்கிய ஆகர்ஷப் பூரிப்பில் அது நினைவை இழந்தது.
2005
*புறாக் - ஒளி வேக வாகனம்
கனீ மத் 33

Page 19
மாலைக் கனவு
நிலவுப்பொய்கையில் இடறும் தாரகை மீன்களின் குதூகலம் வான்வெளி எங்கும் திருவிழாக்கோலமாய் தோரணம் அமைக்க
முகில் எனும் வீரர்
அணிநடைகண்டு
சிவந்த சூரியன்
திரையினுள் மறையும். சூரியக் குளியலின் நீர் துடைப்பதற்காய் வெண்பனித் துவாயின் சந்தன ஒத்தடம் வையக மேனியின் நாணம் விலக்கும்.
சந்திரக் காய்ச்சலின் வெண்பனித் தூற்றலில் மேகத் துகிலை இழுக்க முனையும் துச்சாதனனாய் தென்றல். துச்சாதனனின் அச்சம் மிகுவதால்
34 மண் சூர் ஏ. காதிர்
 

ஆடையுடனே கூந்தலைச் சேர்த்து மானங்காக்க முயலும் முழுமதி.
காற்றின் இடையும் அனுமதிக்காத காதலர் மனத்தின் அவாவினைப்போல நீலவானம் கவிஞர் சிந்தையைத் தன்பால் இழுக்க தலைகீழாய். நிற்கும். வித்தை முடிவில்
கவர்ச்சியைக் கூட்ட ஆர்வங்கொள்ளும் வித்தைக் காரனாய் மாலைக் காட்சி
மன்மதம் தடவி
ராத்திரி அவாவினை மேனியில் பரப்பும்.
தனிமை உணர்வில் தணலை வார்த்து உடலம் முழுவதும் உஷ்ணம் பரவும் உஷணம் அடைய. உஷணம் அடைய.
உணர்வுகள் அனைத்தும் ஒருமுகப்பட்டு படைப்பின்
ரகசிய ரிஷி மூலத்தை. உயிரினச் சுழற்சியின் உண்மை நிலையை ஆதங்கித்து
அடையத் துடிக்கும்.
198O
கனிமதி 35

Page 20
சாக் காடு தெரிகிறது
சாரளத்தைத் திறக்கின்றேன் சாக்காடு தெரிகிறது. வாழ உள்ள ஆசையெலாம் வக்கரித்துப் போகிறது.
என்னோடு வாழ்ந்தவரும் எனக்கு முனம் வாழ்ந்தவரும் மணிணோடு மணி னாகி மாண்டொழிந்து இவ்வுலகின் கண்ணில் விழிக்காது கரைந்ததின் அறிகுறியாம் வெண்குன்றம் த்ெரிகிறது விதி பார்த்துச் சிரிக்கிறது.
வாழ்வென்னும் போர்க்களத்தே வஞ்சகமும் கதுகளும் தாழ்குணமும் தாக்கியதால் சஞ்சலங்கள் உற்றோரும்
36 மன்சூர் ஏ. காதிர்
 

பாழடைந்து நாசமுறப்பட்டோரும் ஊழ் முடிவை அடைகின்ற ஊர் அதோ தெரிகிறதே.
வாழ்வென்ற ஊருக்குச் சாதானே தலைவாசல் நாள் முழுதும் எத்தனைபேர் வருகின்றார். போகின்றார். சீழ்பாயும் இந்நரகில் சீரழிந்து போகின்றார் ஊழ் என்று கூறிடுவார். உலகமே அழிவதுதான்.
சாரளத்தைத் திறக்கின்றேன் சாக்காடு தெரிகிறது. வாழ உள்ள ஆசையெலாம்
வக்கரித்துப் போகிறது.
1978
கனிமதி 37

Page 21
ஓவியக் கனவுகள்
தூரிகையைக் குழம்பினிலே துவட்டுகிறேன் என்னுடைய ஓவியத்தின்
அழகுக்கு உயிரூட்ட உணர்வலைக் காவியத்தின் புதிய பரிமாணம் கண்டுவிட தூரிகையைக் குழம்பினிலே துவட்டுகிறேன்.
ஓடிவரும் உணர்வலைகள் ஒருங்கிணைந்து ஒருசீர்மை நாடாது நர்த்தனங்கள் புரிவதினால் குழம்பினது சிதறல்கள் சித்திரத்தில் கொட்டுண்டு
அழகிழந்துவிடும் என்ற ஐயம் என்னுளத்தினிலே வளர்கிறது. என்றாலும் தூரிகையைக் குழம்பினிலே துவட்டுகிறேன்.
38 மன்சூர் ஏ.காதிர்

கற்பனைப் பெருவெளியில் காட்சித் தொடர்களெலாம் ஒப்பனைக்கும் அப்பாலே உணர்வலையை அசைப்பதினால்
ஒருசீர்மை நிலைகுலைந்து உருவழிந்துபோகும் என்ற காட்சி தெரிந்திடினும் கவலையுறாமல் தூரிகையைக் குழம்பினிலே துவட்டுகிறேன்.
ஓ.... மரித்துப் பிறந்த குழந்தையாய்.... வழக்கம்போல் மீண்டும் தூரிகை விளிம்பில் ஸ்கலிதமாகி
முருங்கையில் ஏறும் ஓவியக் கனவுகள். எனினும் .... எனினும்..... என்றாவது ஒருநாள் சாத்தியமாகும் ஓவியத்துக்காய் இன்றும் தூரிகையைக் குழம்பினிலே துவட்டுகிறேன். :
1979
கனீமத் 39

Page 22
படர்க்கைகள் முன்னிலையாகும் போது...
படர்க்கைகள் முன்னிலையாகும்போது பரிகாசத் தேனீக்கள் மொய்க்கின்றன. அதனால் ஒரு விலைமாதின் கழுத்தையும் திருமாங்கல்யம் சிறப்பிக்குமாம்.
காலப்பனையேறும் சீவல் தொழிலாளியாய் ஒரு யுகத்தின் பரிணாமம்....
துருவ நட்சத்திரங்கள் திசைகாட்டத் தவறினால் பருவ மங்கையர் பாதை மாறுவதில் தவறு காண்பதெங்கனம்?
மின் மினிப் பூச்சிகள் பகலில் மட்டும் மின்னமுயன்றால் இரவுப் பூக்காரி கருவாட்டு வியாபாரம் செய்தால் என்ன?
40 மன் சூர் ஏ. காதிர்

பஞ்சசீலங்கள் சோரம் போனபோது
வஞ்சகர்கள் வேதம் ஓதினால் என்ன செய்யமுடியும்?
ஹோட்டல் அழகியை தர்மகர்த்தா அர்ச்சனை செய்கையில் மழை பயிர் வளர்க்கவா பெய்யும்?
ஆறுகள் தாறுமாறாகச் செல்லும்போது தர்மத்தோணியும் தடம் புரளலாம்.
புலிகள் நரியாகும்போது புறாக்கள் சிலந்தியாகும் தானே.
படர்க்கைகள் முன்னிலையாகும்போது தன்மைகள் மாறாவிடின் கடலில் ஆழ்கின்றபோதும் துடுப்பைத் தொடாமல் இருப்பதைப் போன்றதே.
அதோ தெரிகிறதே என் தொலைக்கப்பட்ட துடுப்பு ஒரு துப்பாக்கி வடிவில்.
1985
கனீ மத் 41

Page 23
காணாமல் போன நூற்றாண்டுகள்
3
எங்கே தொலைத்தீர்... எங்கே தொலைத்தீர் உங்கள் கூர்ப்பின் நூற்றாண்டுகளை எங்கே தொலைத்தீர்... எங்கே தொலைத்தீர்
சொரணை அற்ற தலைமுறையினரே ... இலட்சியமில்லா அலட்சிய மாந்தரே. மூளிப்பிறவியாய்ப்போன இனத்தரே..
எங்கே... எங்கே.... . உங்கள் முதிசம்... எங்கே.... எங்கே.... உங்கள் தேசம்...
நூற்றாண்டுகளாய் .... நூற்றாண்டுகளாய் .... உங்கள் கூர்ப்பின் சுவடுகள் உளவாம்
42 மன்சூர் ஏ. காதிர் -

எங்கே அவைகள் ... எங்கே அவைகள்......
இப்னு பதூதா .. சுலைமான் தாஜிர். இப்னு ஷyறயார்.. இப்படிப் பலபேர் முந்தைய நாட்களில் அரேபியாவிருந்து வந்ததாய்ப் பதிந்த வரலாற்று ஏட்டை பிதுரார்ஜிதம் எனச் சொல்லும் இனத்தரே....
முஹம்மத் காசிம் படைகள் கொணர்ந்து
இந்திய மண்ணை ஆளும் முனமே உங்கள் முன்னோர் இங்கே வாழ்ந்த கதைகள் சொல்லி மகிழ்ந்து வாழும்
சொரணை அற்ற தலைமுறையினரே எங்கே தொலைத்தீர்... எங்கே தொலைத்தீர்... உங்கள் கூர்ப்பின் நூற்றாண்டுகளை.
நூற்றாண்டுகளாய் ..... நூற்றாண்டுகளாய் ...... வாணிபம் செய்த வரலாறு சொல்கிறீர் இரத்தினக் கல்லால் செல்வம் குவித்து இந்த நாட்டின் முதலாளியானீர் எங்கே உங்கள் வாணிபத் தலங்கள்...?
இரத்தினபுரியிலும் பர்பரீன் ஸ்தலத்திலும் நீங்கள் குவித்த செல்வக் குவியலால் உங்கள் இனமே பெருமைப்பட்டதாம்
கனீ மத் 43

Page 24
எங்கே உங்கள்
இரத்தின புரிகள் எங்கே உங்கள் சோனகத் தெருக்கள் .....
காணிநிலங்கள் பொன்னாய்ப் பொலிந்ததாம் காசு பணத்திற்கு பஞ்சமே இல்லையாம் எங்கே உங்கள் காணி நிலங்கள்...... எங்கே உங்கள் காசு பணங்கள்......
இரத்தின் மொணபொலி உம்மிடமில்லை சோனகத் தெருக்கள் உம்மிடமில்லை. ஏற்றி இறக்கும் கப்பல் வாணிபம் மாற்றம் பெற்றுச் சென்றே விட்டன. காணிநிலங்கள் புனித நகராய்
ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டன.
செல்வம் குவித்த இறுமாப்பாலே கல்வியின் கண்ணை மூழியாய் ஆக்கினீர் கற்றோர் சிலரையும் திகதியின் அடிமை பட்டம் வழங்கி கெளரவம் தந்தீர் படர்க்கை இடங்களில் நடப்பவை பற்றி எண்ணிப் பார்க்க நேரம் இன்றி உங்களுக்குள்ளே பிரிவினை செய்தீர்
44 மன் சூர் ஏ. காதிர்

சொரணை அற்ற சோனக இனமே.. சரித்திர ஏட்டில் பல நூற்றாண்டாய் சிங்கத்தின் தோட்டத்திலே சிக்கிய பட்டங்களாய்... உங்கள் முகவரி அந்நியப்பட்டதேன்? எங்கே தொலைத்தீர் நூற்றாண்டுகளை எங்கே தொலைத்தீர் பிதுரார்ஜிதத்தை ..
1984
கனீ மத 45

Page 25
ཤཱ་
சீரழிவு
46 மண் சூர்
சிந்தனை வானில் சிறகடிப்பதை விட்டு விட்டு கனவுக் கறையானாய் அவன் அரவங்கட்டுகிறான்.
நிஜத்தராசை நிறுக்க மறந்து மணற்கோட்டையில் மல்லாந்து கிடக்கிறான்
பகலவனின் வெளிச்சத்தில் பாதைகண்டு பயணஞ்செய்ய வேண்டியவன் சந்திர வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கிறான்
சமூகம்
தனது மாலுமியாக அவனை எதிர்பார்க்க
96)(36OTT வெறும் தோணிக்காரன் ஆவதில் திருப்தி கொள்கிறான்.
ஏ. காதிர்

ஜண்னல் இடுக்கை
சாலையாய்க்காட்டி
சமூக மந்தையை மேய்க்கப்பார்க்கிறான். மெழுகுவர்த்தியாய் எண்ணப்பட்டவன் விட்டில் பூச்சியாய்க் கச்சை கட்டுகிறான். சிற்பியாய் மக்களால் எண்ணப்பட்டவன் அம்மிபொழிய ஆயத்தப்படுகின்றான். புதிய ஸர் எனப்
புலர்த்தப்பட்டவன் புல்லாங்குழலை கையில் பிடித்து அடுப்பை ஊத ஆயத்தப்படுகின்றான்.
1987
pá
கனிமதி 47

Page 26
குருட்டு நிலவில் பரட்டைத் தலைகள்
நீலக் கடல் மடியில் தொடுவானின் தொங்கலில் ஓர் தங்கச்சரம் தொடுத்த தாவணியில் மசண்டைக்குள்
பொட்டொன்று மெல்லப் போர்ைைய விலக்கி
உற்றுப் பார்ப்பது என்ன?
மலர்க்கணைகள் இதழ்களுக்குள் மாந்தி. மாந்தி. மயங்க குளிர்த்தென்றல் சோளகமாய் சில்லென்று ஊசியேற்ற தீவட்டித் தாரகைகள் கண்சிமிட்டல் நீண்டு செல்ல பனித்தோகை விரித்த பீச் மயிலாள் சகலரையும் போர்த்தினளே.
48 மண் சூர் ஏ. காதிர்
 
 

அலுவலக பைல்களுக்குள் மானுடத்தைத் தொலைத்துவிட்ட அதிகாரிகள். இயந்திரத்துள் இயந்திரமாய்
சுயம்தொலைத்து இரைச்சலிடை சங்கமித்தோர்.
கியூடெக்ஸ் சாயத்தை கீ போர்டில் கொட்டிவிட்டு அவசரஅவசரமாய் லிப்ஸ்ரிக்கால் முகங் கழுவி அலுவலக போய் பிரண்டுக்கு 60du.60du.6h3FIT6565 காதலனை நாடிவந்து களித்திருப்போர்
அன்று பெற்ற அன்பளிப்பை நுரை கமறும் விஸ்கியுடன் கரைப்பதற்காய் விரைந்தோர்கள்.
இளமைச் சிலிர்ப்புக்கள் அடங்குதற்காய் இளம் மெய்கள் தேடியலையும் நாய்கள். அன்றையப்பொழுதின் அவலங்கள் நெஞ்சச் சுவர்க்குள் அடங்காது வீங்கியிருப்பதனால்
a
சுமை இறக்க அங்கலாயப்ப்போர். நீல வயல் கதிரலையின்
இரைச்சலுக்குள் தனிமைச்சுகம் வேண்டும் ஜீவன்கள். இப்படியாய். இப்படியாய். இத்தனை முட்டைகளையும் அடைகாக்கும்
கனிமத
49

Page 27
குறுக்குக்கோழியாம் கடற்கரை அன்னையை ரசித்த நிலவை முகில்தேமல் முற்றாய் மறைத்ததே.
ஒ. குருட்டு நிலாவின்மேல். பரட்டைத் தலைகள்.
பரட்டைத் தலைகள்.
1990
50 மன்சூர் ஏ. காதிர்
 

ஒயாஸிஸ் போல
என்னை வாழவிடுங்கள் என் கனவுகளோடு
யதார்த்தம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? என்னை வாழவிடுங்கள் என் கனவுகளோடு
நான் மானுடத்தை நேசிக்கின்றேன்
”ܘ
ஆயுதங்களையல்ல
நான் மனிதாபிமானத்தை விதைக்கின்றேன் குருதிச்சுவடுகளையல்ல.
கனிமதி 51

Page 28
உலகப் பாலைவனம் ராஜாளிகளை விரகிக்கின்றபோது நான் ஓர் ஒயாஸிஸ் போல சமாதானப் புறாக்களை மட்டும் நேஸிக்கின்றேன்.
இரத்தச் சுவடுகளும் அணுகுண்டுகளும் பிரியாவிடைபெற்ற ஓர் உலகில் வேண்டுமென்றால் என் கனவுகளை சம்ஹாரம் செய்து விடலாம்
அதுவரை என்னை வாழவிடுங்கள் என் கனவுகளோடு.
1990
52 மன்சூர் ஏ . காதிர்

அந்நியன்
வாசற்படி வழி மறிக்கும் வளர்த்த கடாக்களே மார்பினில் பாயும்.
துடைப்பங்கட்டை கடப்பலுக்கு வரும் தூரத்து ஏச்சுக்களும் தோலில் மோதி சிராய்க்கும் நஞ்சென வார்த்தைகள் ரோமத்தை உரசும் வளர்த்த நாய் கூட வள்ளெனக் குரைக்கும்
கனீ மத் 53

Page 29
பார்த்த இடமெலாம் வேற்று முகமாய் பழகிய அனைவரும் தேய்ந்த நிலவாய் எல்லாம் எல்லாம் ..... அந்நியம் உணர்த்தும்.
தனிமை அவனுக்கு போதி மரமாய் ஞானம் உணர்த்தும்.
2006
54 மன் சூர் ஏ. காதிர்

இன்னும் சத்தமாய்...
நாதம் எழுப்பும் வீணையினை வெட்டிப் புதையுங்கள் மடுவினுள்ளே.
புதைத்த இடத்தில் நின்று மண்டையோட்டு மாலை போட்டுக்
கூத்தாடுங்கள்.
பாட்டுக்குள்ளே புதைந்துள்ள தாளத்தை உரித்தெடுத்து குப்பைக்கூடைக்குள்ளே போடுங்கள்.
காக்கைக் கூட்டத்திலிருந்து குரலால் மட்டும் வேறுபட்ட குயிலை பிடித்துக் கூட்டிலடைத்துப்
கனீமத் 55

Page 30
56 மண் சூர் ஏ. காதிர்
பட்டினிபோடுங்கள் அவை கூவாமல் சாகட்டும். காலத்தின் போக்கை உணராமல் கூவித்திரியும் குயில்கள் வாழவும் வேண்டுமோ?
கவிஞனின் பேனாவை எடுத்து அடுப்பினிலே போடுங்கள்
அவனுடைய நாக்கை வெட்டி நாய்களுக்கு விருந்து வையுங்கள்
இன்னும் சத்தமாய் ஊழையிடட்டும் இன்னும் சத்தமாய். இன்னும் சத்தமாய்.
1990
 

புனிதம்
நிலவு பெய்யும் போதை ஒளியில் கனவின் இறக்கை விரிய. விரிய. கோலிபேஸ் அன்னையின் மடியில் படரும் மனிதக் கொடியாய் துவஞம் பெண்மைகள்.
ஒரத்தே ஒதுங்கிடும்
உவர்நீர் நுரையுள் பதுங்கிடும் ஒளியின் பிரகாசத்தை நிஜமாய்க்கருதி s வாழ்வினைக் காணும் உணர்ச்சியின் குழந்தைகள்.
தீயாய் எரியும் பருவத் தவிப்பில்
நாயாய் அலையும் நோய் கொள் பிறவிகள்.
கன"மத 57

Page 31
தாரகைத் தீவுகள் போர்வையை விலக்கினும் கொடிய ஜூவாலையுள் எரியும் விறகாய். துவளும் உடலில் துடிக்கும் அவள்கள்..
சொர்க்க உணர்வைப் பவித்திரப் படுத்தி முழுமையின் இலக்கை எட்டித்தொடாது சங்கிலிபூட்டும் நாய்களைப்போல சந்தடியிடையே காட்சிப்படுத்தல்.
மனிதம் விலங்கிடை கருக்கொள் காட்சிகள்...... புனிதமாய்க் கற்பு போனதன் சாட்சிகள்...
1985
58 மன் சூர் ஏ. காதிர்

சலனம்
சிலந்தி வலையிடை சிக்கிய பொடுகாய் இமைகளின் சிறைக்குள் இறுகிய தூசாய்... சாவுக்குளவி கொட்டக் ... கொட்ட... ஆயுள் கடுவன் அசைந்து நடக்கும்.
கடற்கரை மணலிற் பதிந்த சுவடாய் மனிதக் கடலுள் தொலையும் சுழியாய்..
முகவரியற்ற மூட்டை முடிச்சாய் கிழித்து எறியும் கலண்டர் தாளாய்.. கழிந்து அசைந்து செல்லும் வாழ்க்கைத் தோணி.
கனீமத் 59

Page 32
விரக்தி மலையின் முகட்டில் இருந்து மனப்பால் குடிக்கும் ஞானக் குரங்கு ஆற்றங்கரையின் பற்றை இடுக்கில் ஆடை மாற்றும் அழகியின் தேகம் கண்டதும் வாழும் ஆசையால் நெளியும்.
விரக்திப் பாறையும் விரக நெருப்பில் பனியாய் உருகி வழிந்து ஓடும்.
1982
60 மன்சூர் ஏ . காதிர்

யதார்த்தம்
கனவு முகில்கள் கலைந்தே சென்றன! யதார்த்தச் சூரியன் முகத்தை நீட்ட எல்லாம் இங்கே பயங்கரமாகின.
எங்கும்... எங்கும் ... நிஜப்பேயின்
முரட்டு நகங்கள் முரட்டு நகங்கள்
கற்பனைத் தொட்டிலின் கயிறு அறுந்தது. நினைவுக் கறையான் நெஞ்சை அரிக்குது. தெருவில் போன சோகங்கள் எல்லாம் வீட்டுக்குள்ளே புகுந்து கொண்டன.
எத்தனை நீண்ட ஆண்டுகள் போயும் வங்குரோத்தானதே வாழ்க்கைப் பெட்டகம்.
கனீமத் 61

Page 33
சிந்திய வியர்வையும் சீறிய குருதியும் அர்த்தம் கெட்டன.
பற்றாக் குறையால் வெந்த வார்த்தைகள் நஞ்சென ரோஷ மயிர்களில் உரசும்!
நகரம் தந்த கனவுப் பனிமலை யதார்த்தச்சூரியன் வரவால்
உருகி ஓடின.
ஆயுள் மரத்தின் ஜீவ வேர்கள் விரக்திக் கறையானின் விருந்தாய்ப் போயின.
1992
62 மண் சூர் ஏ. காதிர்

மா தவிப் பூ .
நிலவு அவளை ஆடச் சொன்னது நிமிர்ந்து அவளும் நிலவை நோக்கினள்.
கனவு கடலாயப் விரிய. விரிய. கண்கள் தொலைவை நோக்க. நோக்க. பாவக் காதலன் முகமதில்
நடமிட. நடமிட. நிலவை அவளும் நிமிர்ந்து நோக்கினள்.
தாம். திமி. தீம். தாம். திமி. தீம்.
வா. இணை.வோம். வா. இணை.வோம்.
தரிகிட. தரிகிட. இசைமழை. பொழிந்திட. இவள் அதில் நனைந்திட.
கனிமத 83

Page 34
வீழ்ந்து. வீழ்ந்து. வரந்தா. வரந்தா. எனவிழி மயங்கிட. கனவினில் மிதந்திட. மனம் அதில் கலந்திட. கணி.ணா. கணி.ணா. சந்திரக் காதலன் தோளினில் சாய்ந்திடும் தவ.நட.ணம்.
தோகையுள்.
96)6OD6T... மூடிக்கொள்ளவும்
பனிக் குளிர் ஈரம் துவட்டிக் கொள்ளவும்
க.ண்ணே.
கணி.ணே.
6T6OT
கதிர்மின் வலையுள் நிலா அவளை. கைது செய்ததே.
தாம். திமி. தீம். தாம். திமி. தீம்.
6)J.T...
இணை.வோம்.
6T
இணை.வோம்
64 மண் சூர் ஏ. காதிர்
 

தாணி டவம்
மானுடனின் வாழ்வியலை தன் கரிநாக்காலி நக்கிச் சென்றது கணப்பொழுதிலே கடல்.
பால்மணம்மாறாத பாலரையும் வாலிபத்தின் தலைவாசலில் அரும்பி நின்ற இளைஞரையும் முதியோர் தம்மையும்
தன் கரிநாக்கால்
கணப்பொழுதிலே நக்கிச் செல்ல மனம்கொண்ட கடலே x
நீ
முட்டையிட முடியாத ஒரு பிள்ளைத்தாச்சிப் பென்குயின் பின்புறங்காட்டி நிமிர்ந்து நிற்பதுபோல் என்னுடைய பாட்டன் அமானிதமாய்த் தந்த
எனது
அழகிய தாய்நாட்டின் வரைபடத்தை அலங்கோலப்படுத்தியதில் வியப்பேது.
கனிமத 65

Page 35
பட்டிப்பளையாற்று மரகதக்கரையின் பல்லாண்டு பல்லாண்ட பவித்திரங்கள் கல்லாற்றின் அக்கரையும் இக்கரையும் திமிலரின் பசும்பால் கழுவிய நாகரீகம் பனைவட்டு நாண நிமிர்ந்த வன்னியனின் பாலியாறு வளைந்தோடும் செம்மண் பிதுரார்ஜிதங்கள்
மகாவலியாள் வங்கக்கடலைச் சேர் பொழுதில் உருண்டோடும் வெண்முத்துப் புன்னகைகள்
ஹிக்கடுவ தொடுகரையின் பூரணைப் பால் நிலவில் பொன்னுரை பொங்கிய மதுக்குளியல்
நில்வளா கங்கைப் படுகையின் 'துன் சிங்ஹல' கலாசாரம்
ஏடுகள் புகழ்ந்த பர்பரீன் இறங்குதுறை கெச்சிமலை தர்ஹா . அதன் புகழ் பூத்த கரணங்கள்
எல்லாம் எல்லாம் தன் கரிநாக்கால் நக்கிச் சென்றது. கணப்பொழுதிலே கடல்.
2004
66 மன்சூர் ஏ. காதிர்

நேற்றைய இளைஞனே
குருவியின் முயற்சிபோல் அந்த மாமனிதன் நிருமாணித்த இல்லம் சிதறுண்டுபோன மனக்குமுறல் அழுத்தினாலும் இடைக்கிடை இவனும் துயில் கொள்ளும் அதிசயம் நடக்கும்.
4: *
அந்த அதிசயத்துள் அதிசயமாய் .... பூரண நிலவு கீழே இறங்க.. இறங்க.... அதே மாமனிதனாய் .... வெண்ணிற குர்தாவும் ஜீன்சும்
கொடிமல்லிகையின் மென்சுகந்தமும் கமழ
அதே அகன்று பருத்த அழகிய சிரசும் நெற்றி நிறைந்த தொழுகைக் காயும் .....
"நேற்றைய இளைஞனே நேற்றை இளைஞனே நில்”. அதே கட்டளைக் குரலும் காம்பீர்யமும்.
கனீ மத 67

Page 36
68
மண் சூர் ஏ. காதிர்
என்னையும் எனது ஈரற் குலையையும் சின்னாபின்னம் செய்வது தெரியுதா காணும்.
குரங்கினக் கிளையும் மரத்துக்கு அழகே என்பது நமது
பலஹினமா காணும்
இன்று
குரங்கின சேஷடைகள் முற்றி கோடரிக் காம்பாய்மாறி நமது மரத்தின்
கிளைகள் ஒடித்து அடிமரத்தின் இடையைக் குடைந்து என்னை வதைக்கும் நிலைகள் புரியதா நேற்றைய இளைஞனே.
நாளைய இளைஞன் வீதிக்கு வந்து சுடுகலன் தோளில் சுமந்தவனாக அழிவதைத் தடுக்க நேற்றைய இளைஞனே
நேற்றைய் இளைஞனே. நீதன்னந்தனியே புறப்பட்டுச் செல்வாய்.
பாவத்தின் சம்பளம் பெறத்துடிக்கின்ற பாவிகள் கூலிபெற்றிடுங்காலம் முடுகிவிட்டது.
ஈசா (அலை) அருளிய வார்த்தைகள்தானே பாவத்தின் சம்பளம். நாம் என்ன செய்யலாம் நேற்றைய இளைஞனே
 

எங்கே . உன் கணிகளை மூடு கண்களை மூடி உன் வலக்கரம் நீட்டு"
வலக்கரம் பாரம் அழுத்த வலக்கரம் பாரம் அழுத்த
கணிகளைத் திறந்தேன்.
கண்ணிர் வழிந்த ஈரத்தாலே ஆழ்துயில் கலைந்ததே.
2OO5
as GLD 69

Page 37
அவஸ்தை
அந்தி சரிகிறது. நகரத்தின் மனிதக் குப்பைகள் அந்த பஸ்ஸிலும் திணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பஸ்ஸிலும்
ஒவ்வொரு
கிராமத்தின் ஜனத்தொகை
ஏ.எல். பேப்பர் மாக்கிங் முடித்த அசதியுடன் பஸ்ஸக்காய் நின்ற நானும்
96.8FULDITui
அந்த பஸ்ஸினுள் இழுத்து நுழைக்கப்படுகிறேன்.
வார்க்கப்பட்ட பிளாஸ்டிக் வெண்சிலை ஒன்றும் அந்த பஸ்ஸினுள்ளே.
70 மண் சூர். ஏ. காதிர்
 

சாயம் பூசப்படாத இதழ்களும் நகங்களுமாய்.
இடை எனும் வெண்பரற் கோர்வையை மூடும் ரவிக்கையினுள் சேலை கட்டிய பொம்மை நெளியுது.
முன்னாலும்.
பின்னாலும். மதியம் சாய்ந்த காரியாலய இளசுகள் கண்களால் வல்லுறவு!
முன்பக்கம் தடித்த பிளாஸ்டிக் பைல் ஒன்று கேடையமாகுது.
நெரிசலிடையே விறாண்டும் விரல் கரப்பான் பூச்சிகளை என் மனத்தீ எரிக்கும்.
தாங்க முடியாத 685TCB60)LD 83UT...
இடையில் நின்ற பஸ்ஸில் இருந்து இறங்கிச் சென்றனள் அழகி
86LC36)] எனது கண்களும் இறங்கிச் சென்றன.
எனினும் பஸ் மீண்டும் முனகி நகர்ந்தது.
கனிமதி 71

Page 38
இந்த வைகாசி வெய்யிலில் மிகுந்த தூரம் நடந்தே செல்வாள் அழகி.
வீட்டில் பெற்றோர் "பிள்ளை ஏன் லேற்றம்மா..." என்று நிட்சயம் வினாவுவர். CIMA க்ளாஸ் லேற்றாய் கலைந்தது என்பது பதிலா.........
வண்டி நெரிசலிடையே விளைந்த அவஸ்தையை எப்படி தன் பெற்றோருக்கு எடுத்துச் சொல்வாள்.
1991
72 மன்சூர் ஏ. காதிர்

மாமிசக் காவல்
மே
என் கற்பனைப் பதாகையையும் அழுக்குக்கூடையுள் போட்டுவிட்டேன்.
தூரப்பட்டுப்போன
ஸ்பரிசங்களுக்காகவும் | என் உறவுக் கொடியையும்
அது பூத்த முல்லைப்பூக்களையும் நுகர முடியாத ஆக்கினைக்காகவும் மனசெல்லாம் ரணமாய் வடிகிறது.
இந்த யெளவன உலகின் நீச்சல் தடாகங்களில் நீந்த முடியாமல் என்கால்கள் விலங்கிலிடப்பட்டுள்ளன. இங்கு இறக்கைகள் முளைக்காத
கனீ மத் 73

Page 39
வெள்ளைத் தேவதைகள் மிதந்து.... மிதந்து... வந்து.... புன்னகை மின்னல்களால் என் கண்ணொளியை மங்க வைத்தாலும் அவர்கள் எல்லோருமே தொடக்குடன் திரிவதாய்.... பலாத்காரமாய் எண்ணிக்கொண்டு
அக்னி கனலும் என் உடலையும் மனசையும் இரும்புச்சாட்டை கொண்டு ஆக்கினைப்படுத்தியவனாய்..... நான் ..... மாமிச மலை குவிந்திருக்கும் துருவக்காட்டை காவல்காக்கும் கடுவன் பூனையாக.
1999
74 மன்சூர் ஏ . காதிர்

முலாம்
சுரங்கத்தின் நுழைவாயிலில் சிறுத்தையின் காவலாக நகரத்தின் பின்புலக் காட்சி.
நேற்றுவரை இரவுப்பாடகனின் ஒற்றை றபானாக இருந்த காலப்பத்திரிகை
இப்போது அபஸ்வரமாய்....
நிமிஷக் கறையானின்
அரிப்புக்குள்ளாகிய ஆயுள் மரம் தனக்குள்ளே நிதானப்பட்டு கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தது.
கனீமத் 75

Page 40
உள்மனசுக்குள் அமுக்கப்பட்டுப்போன ரௌத்திரம் தாளம் தப்பிய தாண்டவமானது.
ஆனாலும், எல்லாம் இப்போது போலி ஆடைகளுடனும் ஜோடனைகளுடனும் கெளரவ முலாம்.
மனச்சாட்சியும்தான்.
2000
76 மன்சூர் ஏ. காதிர்

துலங் கல்
கொம்
என்மீதான உன் அதிருப்தியை முதன்முதலாக நீ வெளிக்காட்டியிருந்தாய்!
என் மீதான உன் அதிருப்தியை என்னை உனக்குள் ஊடுருவவிட்ட நபரின் பிரசன்னம் இருக்கையிலே
முதன்முதலாக நீ வெளிக்காட்டியிருந்தாய்! ஓ.... நான் கூனிக் குறுகினேனா?
என்மீதான உன் அதிருப்தியை மேற்காவுகையின் அடைகிடந்த திடீர் முழக்கமாய் நீ வெளியிட்டதாய் என் உள் மனத்திலே ஓர் மின்னல் பொறி மின்னி... மின்னி... மறைந்ததே...
முதன்முதலாய்?
----
கனீமத் 77

Page 41
உனது தூண்டலும் அதனால் விளைந்த எனது துலங்கலும் நனவிலி மனதில் ஆண்டாண்டுகளாய் அடைகிடத்தல் என்ற
சிக்மண்ட் பிராய்டின் கூற்று முதன்முதலாய். என்னுள் நிதானப்பட்டதன் பட்டவர்த்தனமான தரிசனமா? என் உள்மன சாகரத்தின் அடிப்பாகத்தில் என்னை அறியாமலேயே அடைகிடந்த ஐஸ்கட்டி உள் மனத்திலேற்பட்ட பூகம்பத்தின் தூண்டலால் துலங்கப்பட்ட சுனாமியா..?
அந்தச் சம்பவத்தை உனது கணிகளால் எனக்குப் பார்க்கத் தெரியவில்லை என்பதை மட்டும் நிரூபிக்க ஒரு தாண்டவம் தேவையா..? என் மீதான உன் அதிருப்தியை அவருக்குப் பிரத்தியட்சிக்க உன் உள் மனம் அவாக்கொண்டதா? என் மீதான உன் அதிருப்தியை நான் ஏற்றுக்கொள்வதே நியாயம்.
என் ஈகோ. அதோ. அந்தக் குப்பைக் கூடைக்குள்.
2OO6
78 மன்சூர் ஏ. காதிர்
 

அந்நியச் சுமைகள்
கரத்தையிலே பூட்டப்பட்ட எருதாக நான். சிரத்தையில்லாமல்
சாய்க்கப்பட்டபடி.
பளுவைச் சுமந்தவனாக பாதையிலே நடந்தபடி.
என்னில் சவாரி செய்யும் என் எஜமானையும்
6bJG860I||9تک முழுவதுமாய் சுமக்கவேண்டிய அவனின் சொந்தச் சுமைகளையும் நாள் முழுவதும் சுமந்து சுமந்து. அவனின் கட்டளைப்படி பாதையிலே நான்.
கனிமதி 79

Page 42
8O
மன்சூர் ஏ. காதிர்
எஜமானனின் கையிலுள்ள என் விதியெழுதும் பேனா ஒரு துப்பாக்கியாக என்னைக் குறிபார்த்தபடி
மேலும். மேலும். புதிய. புதிய. சுமைகள். புதிய. புதிய. வேதனைகள். புதிய. புதிய. பாதைகள். புதிய. புதிய. உத்தரவுகள்.
புதிய. புதிய. அலைச்சல்கள்.
இதன் முடிவு எங்கே. ஓ. என் ஜனநாயகமே...!
2O O7
 

ஹீரோ
ஒடு.
அவசரமாய் ஓடிப்போய்ச் சேர்ந்துவிடு ஓர் இயக்கத்தில் அவசரமாய். ஒடு. ஒடு.
உனது பருவத்துக் கனவுகளின் எதிரியைப் பயமுறுத்த உனது தந்தையுடன் வயலில் எல்லைப் பிரச்சினைப்படும் பக்கத்து வயற்காரனைப் பழிவாங்க.
UTLSFT60)6O
டிசிப்ளின் வாத்தியின் கொட்டத்தை அடக்க. உன் ஆயுத ஆபரண மோகத்துக்கு தீனிபோட. ஏதாச்சும் ஒரு காரணத்துக்காக 'கொள்கைப் பிடிப்போடு
கனிமதி 81

Page 43
ஓடு... அவசரமாய் ஓடிப்போய்ச் சேர்ந்துவிடு ஓர் இயக்கத்தில் அவசரமாய்... ஓடு.. ஓடு!
பயிற்சி முடிந்ததும் உன் ஆண்மையின் எக்காளத்தை விலாசப்படுத்தலாம்
சவாலிடப்பட முடியாதவனாய் ஊருக்கு பொறசுத்தம் அடிக்கலாம்
ஸீரோவாயினும் நீரோவாயினும் உனை ஹீரோவாய் காட்சிப்படுத்தலாம். உன்னையும் .
ஓர் அரசியல் விடிவெள்ளியாய் இந்த ஊத்தைவாளிச் சமூகம்
வருத்திக்கொள்ளவே செய்யும். ஆகவேதான் ஓடு...! அவசரமாய் ஓடிப்போய்ச் சேர்ந்துவிடு ஓர் இயக்கத்தில் அவசரமாய்... ஓடு.. ஓடு...
பயிற்சிபெற
நீ'
இந்தியாவுக்கும் லெபனானுக்கும் போகலாம்
82 மன் சூர் ஏ. காதிர்

இங்கே...! மெற்ஸ் ஸேருடன் மல்லுப்பிடிக்கவும் ஃபோமியுலாக்களை நெட்டுருப்பண்ணவும் சே.. யாருக்கு வேணும் இந்த நாய்ப்படிப்பு நீ... ஓடு...
அவசரமாய் ஓடிப்போய்ச் சேர்ந்துவிடு . ஓர் இயக்கத்தில் அவசரமாய்... ஓடு.. ஓடு...!
பயிற்சி முடித்து மீண்டுவிட்டாயா! இனியென்னவேண்டும் உனக்கு..? இந்த இயக்கத்தை விட்டும் உடன் விலகு முடிந்தவரை அவர்களைக் காட்டிக்கொடு காசு கிடைப்பின். முடிந்தால் உனது தலைமையில் ஓர் இயக்கத்தை
ஓர்கனைஸ் பண்ணு அல்லது அடுத்த இயக்கத்துக்கு விரைவில் மாறு உனது பரம்பரைக்கா தெரியாது கட்சி மாற உனது மூத்தப்பாமாரும் உனது பெரியப்பாமாரும் போட்டிருந்த தொப்பிகள் வீட்டிலே இருக்கும் போட்டுப்பாரு வேண்டிய பக்கம் வலியத் திரும்பும்
கனீ மத் 83

Page 44
உனது பழைய தோழர் உன்னைக் கடத்தினால் என்ன மண்டைபோட்டால் என்ன சோனி இருக்கிறான் கடைகள் அடைக்க புள்ளயள் இருக்கிறான் ஹர்தால் பண்ண.
போற உயிர் ஒருநாள் போகவே செய்யும் பயந்தவன் கிடக்கிறான் பற்றைக்குள்.
நீ... ஓடு...! அவசரமாய் ஓடிப்போய்ச் சேர்ந்துவிடு ஓர் இயக்கத்தில் அவசரமாய்... ஓடு.. ஓடு...
1986
84 மன்சூர் ஏ. காதிர்

சுவர்க்கம் நோக்கிய ஷஹதாக்களே
பிணம் தூக்க மட்டுமே தெரிந்துள்ள
ஒரு சமுதாயத்தவர்களின் முள்ளந்தண்டுகளில் முளைவிட்ட பால் மணம் மாறா விடலைப் பிஞ்சுகளே
சமுதாயத்தின் சவக்களையைப் போக்க
அக்னி ஜுவாலையெனப் புறப்பட்ட விடிவெள்ளிகளே யூதப் பிசாசுகள் அகதி முகாமிலே குண்டுகள் போட்டமைபோல வெள்ளிகள் பூக்காத ஒரு வெள்ளிக்கிழமையின் கரிய இரவிலே "சரணடைந்தோம் அபயம்" என நிராயுதபாணியாய் நீங்கள் கரங்களை உயர்த்தியும் கதறியும் உங்களைக் குப்புறப் படுக்க வைத்து குறி பார்த்துக் குதறின அந்தத் துப்பாக்கி மிருகங்கள்
கனீமத 85

Page 45
சரணடைந்தோரில் முஸ்லிம் பொலீசாரை மட்டும்தானாமே அந்தத் துப்பாக்கிகளுக்குச் சுடத் தெரியுமாம்.
சத்திர சிகிச்சை செய்யும் கத்தி கொலைகாரனின் கையிற் கிடைப்பின்
அதுவும் கொலைதான் செய்யும் அதுபோல் போராளியின் கரங்களை அலங்கரிக்கின்ற துப்பாக்கி இனவெறியனின் கையிற் கிடைத்தால் அது மனச்சாட்சியின் ஆணையைப்பெற்றா வெடிக்கப்போகிறது.
மைய்யித்தாய்க் கிடக்கும் நம் சமுதாயத்திற்கு ஜீவனாய் வந்த உங்களையே மைய்யித்தாகக் காணும் விதிதானா?
இந்தச் சமுதாயத்துக்கு ஆடையெனப் புறப்பட்ட உங்களுக்குப் பதிலாக * கபன் அணிவிக்க மட்டுமே இந்தச் சமுகத்தால் இன்று முடிந்துள்ளது. வீர வாழ்த்துக்கள் சொரிய வேண்டிய நாம் *தல்கீன் வரிகளைத்தானே உங்களுக்குத் தாரைவார்த்தோம். சுவர்க்கம் நோக்கிப் பயணம்செய்த உசாமாக்களே, இனவாத மண்வெட்டியால்
86 மன் சூர் ஏ. காதிர்

அவர்களின் சவக்குழியை அவர்களே வெட்டிக் கொண்டனர்.
சென்று வருக எம் இளைய புதல்வீர், சுவர்க்கத்து * ஹர்லீன்கள் உங்களுக்குப் பூச்சொரியட்டும் சுகமான கபுறறைகள் உங்களுக்குப் பூங்காவாய் ஆகட்டும்.
அல்லாஹ்வின் நல்லருள் உங்கள்
ஆத்மாவுக்குக் கிடைக்கட்டும்.
நாளை நிட்சயம் நமக்காய் விடியும்.
அந்த விடியலிலே உங்கள் ...... சந்ததிகள் ... சந்ததிகள் .... சந்ததிகள் ...
1991
*கபன் - மரணித்த உடலுக்கு அணிவிக்கப்படும் ஆடை *தல்கீன் - அடக்கஸ்தலத்தில் வைத்து பாராயணம் செய்யும் ஓதல் * ஹர்லீன்கள் - சுவர்க்கத்துக் கன்னியர்
கனீமத் 87

Page 46
மானுடம் எரியுணர்ட சாம்பல்
88
மன்சூர் ஏ. காதிர்
எல்லாம் முடிந்தது எல்லாமே எரிந்து சாம்பலாய்ப் போனதே
பூக்கள் ஜொலித்த முற்றம் சாம்பல் பூத்த தணலாய்ப்போனதே.
கல்லும் தோன்ற முன்னர் தோன்றிய வென்றிகொள் மானுட வீரயுகங்கள் ஆலாட்சி மணியில் நீதியின் நாதம் ஓங்கி ஒலித்த பாரம்பரியம் வள்ளுவம் சொல்லிய தெள்ளிய வாழ்க்கை எல்லாம் எல்லாம் சாம்பராய்ப் Guntu 360T.
நாகரிகத்தின் உச்சாணியில் நின்றமை அந்தலூஸின் ஆட்சிப் பெருமைகள் ஜபலுத்தாரிக். உஸ்தர் லாப். பைதுல் ஹிக்மா. மானுக்குப் பிணைநின்ற ஜீவகாருணியம் எல்லாம் எல்லாம் சாம்பராயப்ப் போயின.
 
 
 
 
 

ஓ. போராளிகளே.
ஒ. முஜாஹிதீன்களே. பெற்றோல் கலனும் துப்பாக்கியுமாய் செல்லும் வீரரே. އި எந்த எதிரியைக் கொல்லப்போகிறீர் யாரின் வீட்டைக் கொழுத்தப்போகிறீர்? உமது எதிரியை இனங்கண்டீரா. உமது நண்பரை இனங்கண்டீரா..?
தப்லீக் செய்யும் தாடி மனிதரும் தியேட்டர் பொடியன் சாமித்தம்பியும் ஐஸ்பழம் விற்கும் ஹபீப் காக்காவும் பண்டிதர் ஐயா செல்லத்துரையும் உங்களுக்கிழைத்த கொடுமைதான் என்ன?
அழகிய வீடும் அழகிய காரும் மாட்டுப்பட்டியும் பச்சை மரங்களும் உங்களுக்கிழைத்த உக்கிரம் என்ன..?
சர்வதேசிய ஆயுதச் சந்தையில் தோற்றம்பெற்ற சாணக்கியங்கள் காரைதீவில் காத்தான்குடியில் கல்முனையில் மீராவோடையில் மாளிகைக்காட்டில் சம்மாந்துறையில் 2יל இரத்த ஆறாய் சிவந்து பாய்ந்ததே. ஓ. போராளிகளே. ஒ. முஜாஹிதீன்களே. உங்களை. உங்களை உஷார்படுத்தும். தலைவர்மாரை ஆட்டிப்படைக்கும் தவிசுக் கனவுகள் எத்தனை மக்களின் உயிரைப்பறித்தன. எத்தனை மக்களின் அமைதி தொலைந்தது?
கனிமத 89

Page 47
எல்லாம் முடிந்தது. எல்லாம் தீயின் நாவிலே அவிந்தது. வாசிகசாலை. சினிமாக் கூடம். பாடசாலை. டியூஷன் சென்டர். பல்கலைக்கழகம் இலக்கிய மன்றம். தத்துவ விசாரணை. சைக்கிள் சவாரி. காதல். சுழட்டல். புன்னகை புரிதல் புத்தக இரவல் தொழில்சார்உறவு அரசியல் தோழமை எப்படி இவை இனிச் சாத்தியமாகும்?
பிழையும் சரியும் புரியா நிலையில் பொதுஜனக் கப்பல் சாகரச் சுழியில்.
முட்டை முந்தியா. கோழி முந்தியா. என்ற விவாதம் காகிதப் புத்திஜீவிகள் மத்தியில்.
எல்லாம் முடிந்தது அற்பக் கணத்தில் இனவெறித்தீயில் -
மானுடம் எரிந்து சாம்பராயப்ப்போனதே.
1985
90 மணி சூர் ஏ. காதிர்
 

பிரபஞ்சத்தின் ஸ்தம்பிதம்
அண்டத்தின் சுழற்சி அப்படியே ஸ்தம்பித்துப்போன பிரமை.
புவியின்,
அதன் உயிரினங்களின்
இயக்கம் அசைந்திடாமல் அப்படியே தரித்துப்போன சூட்சுமம்.
கவிதையும் வயலினும் பொன்னிற மதுவும் சித்திக்காத அற்புதம்.
காலத்தின் ஸ்தம்பிதம் கலண்டரின் பொய்ம்மை
கனிமதி 91

Page 48
ஆயுள் முடிவிலியின் உச்சாணியில் மிதந்து..... மிதந்து...
உடன்பாடும் .... எதிர்மறையும் ... எதிர்மறையும் ... உடன்பாடும் ... ஒன்றையொன்று விஞ்சும் ஆஸ்திகம்... ஒன்றில் ஒன்று சமநிலை காணும் வேற்றுமையும் ஆட்கொள்ளலும் ..........
இணைந்த மனத்தின் இயற்கைக் கலப்பில் விரகத்தவிப்பில்.... கிரகம் சுழலா... காலமும் வெளியும் அர்த்தம் புரியா...
1983
92 மன் சூர் ஏ. காதிர்

கனீமத்
வா
கூக்குரல்கள் எங்கெங்கும் அகோரமாய்... கேட்கிறதே கனீமத் பங்குகளுக்காய் மாரித் தவளை இரைச்சல்போல்.
தங்கள் தங்கள் ..... தியாகங்களை விலைபேசிக்கொள்ளும்
தேசிய சந்தையில் சந்தூக் தூக்கிய முஜாஹிதீன்களும் கனீமத் பங்குகளுக்காய் கையேந்திக்கொண்டு அகோரமான கூக்குரல்கள், வெட்டுக்காயத் தழும்புகள் கூட மாறாத விழுப்புண்களாய் ஞானஸ்நானம் கொள்ளும் காட்சிகள்
அந்த தியாகத்தின் தடயங்கள் அளக்கப்பட்டும்... நிறுக்கப்பட்டும் ..... விலாவாரியாக விலை குறிக்கப்பட்டு கனீமத் பங்கிடப்படும் அழகிய காட்சிகள்....
கனீமத் 93

Page 49
கூக்குரல்களின் திராணிக்குச் சமமாக அமைச்சுக்கள் என்றும் தவிசுகள் என்றும் நிறைவேற்றுத் தரங்கள் என்றும் பணிப்பாளர் என்றும் பணியாளர் என்றும் ... கனீமத் பவிசுகள்...
கொப்புகள் தாவிடும் குரங்குக் கிளைக்கும் அவரவர் செய்த சேஷ்டைகள் அளவில் பதவித் தவிசாம் கனீமத் அபிஷேகம்.
ஓ... வடம்பிடித்தவனே ... அப்பக்கம் நிழலுக்குத்தானும் ஒதுங்கிடாதே... கனீமத் பவிசு உனக்கு ஹறாம். ஏனெனில் நீ இழக்கப்போனவன் இரக்கப் போகக் கூடாது.
1995
94 மன்சூர் ஏ. காதிர்

ஒற்றை முகாம் மேலாண்மை
பனிமலை படர்ந்த
பட்டாணியர் மண்ணிலும்...
அமைதி குலைக்காது அசைந்து நெளியும் தஜ்லா நதியின் தாழ்வாரத்திலும் ...
அழகியல் விளையும் அதிசய பூமியாம் பாரசீகத்துக் கம்பள விரிப்பிலும்
வீட்டோ கரங்களின் ஓநாய் வியூகம்.
பலஸ்தீனத்து அகதிமுகாம்களில் குண்டுமாரி பெய்த வேளையும் .....
திரிப்போலி நகரின் அதிபர் மாளிகை தஹஜ்ஜத்வேளை தீப்பிழம்பானதும் ....
கனீமத் 95

Page 50
சத்தாம் ஹசைனின் சந்ததிப் பூங்கா மகரந்தம்கூட மிஞ்சவிடாது திட்டம் தீட்டிய அமிலக் குளிப்பும்.
புதிய உலக ஒழுங்கின் போர்ப் பிரகடனங்கள்.
ஒற்றைமுகாம் மேலாண்மையின் ஒத்திகை அரங்கங்கள்.
*டோரா போரா சாரல் தொடரில்
குரூஸ் ஏவுகணைகளின் ஜூவாலைகள்.
கஸ்பியன் கடலின் உவர்நீர்த்திட்டின் அமில மழைகள்.
அரபிக் கடலின் ஆதிக்கக் கரைகளில் கலாசார ஊடுருவல்கள். புதிய ஒழுங்கின் கருத்தியல் அதிகார எல்லை போர் வியூகத் தேசப் படங்களா?
சுயநலக் கடலில்
முத்துக் குளிக்கும் பெற்றோலிய டொலரின் அதிஷ்டப் புதல்வீர் *ஜபலுத்தாரிக் அற்புதக் கனவில் இன்னும். இன்னும். புதையுண்டுபோன போதைப் பிரியீர் உங்கள் போதை கலைவதெப்போ உங்கள் ஈமான் புடமிடப்படுவதெப்போ?
1995 *டோரா போரா - ஆப்கானிஸ்தானிய மலைத்தொடர்
*ஜபலுத்தாரிக்- ஸ்பெய்னில் உள்ள மலை
96 மணி சூர் ஏ. காதிர்
 

றப்.றப். யாறப். என.
ஒற்றைப் புல்லாங்குழலின் ஓசையை தன் அசலை நோக்கிய பிரிவுத் துயரின் பிரலாபமாய்
உணர்ந்த மெளலானாறுமியின் தரிசனமாய். ஒவ்வோர் உயிரினதும் இருதயத்துடிப்பு
குடத்துள்ளே அதன் உருவாய் இணங்கியநீர்போல அரூபமாய்ப்போன றுஹற் எனும் ஒளிப்புறாவின் பெளதிக இருப்பாம்
இருதயத்தின் ஸப்தஸ்வரங்கள் றப்.றப்.
யாறப். என.
கனிமதி
97

Page 51
காலத்தினதும் பெருவெளியினதும் அனார்த்தம் கரைந்து ஸ்தூலமாய் அவை துலங்க அண்ட சராசரங்களை அடக்கியாளும் வல்லமையை தன் இருப்பாய்க்கொண்ட அல்லாஹ் ஒவ்வோர் உயிரினதும் பௌதீகக் கணங்களை கணித்தல் செய்யும் நியமங்களாய்
இருதயத் துடிப்பு றப் ... றப்... யாறப் ... என... தஸ்பீஹின் ரீங்காரமாகும் பரவசங்கள்... சுப்ஹானல்லாஹ்... றப்... றப்... யாறப் ...
2008
றப் - இறைவன் நூஹ் - ஆத்மா தஸ்பீஹ் - துதித்தல்
யாறப் - ஓ இறைவனே. அனர்த்தம் - அர்த்தமின்மை சுப்ஹானல்லாஹ் – இறைவன் தூயவன்
98 மன்சூர் ஏ. காதிர்


Page 52
நண்பர் மன்சூர் ஏ. காதிர் சிறு வயது முதலே 'கலை இலக்கியத்துறையில் ஆற்றல்
நிறைந்தவராகக் காணப்பட்டார். 'ஆதலினால்தான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே மாணவர் முன்னேற்ற மன்றம் எனும் இயக்கத்தை நிறுவி எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டோம். இன்று அவர்
' இத்துறையில் அபார வளர்ச்சி 'கண்டுள்ளமை எமக்கு மிக்க மகிழ்ச்சியைத்
தருகின்றது. 'சம்மாந்துறை தாறுல் உலூம்
'வித்தியாலயம், மத்திய கல்லூரி, 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்புப்
'பல்கலைக்கழகம், அவுஸ்திரேலிய '- வுலுங்கொங் பல்கலைக்கழகம் 'ஆகியவற்றில் கல்வி பயின்ற இவர் ஆசிரியர் சேவையிலும் மற்றும் இலங்கை
ஆசிரியர் கல்வி நிபுணர் சேவையிலும் 'சேவையாற்றிய பின்னர் தென்கிழக்குப் 'பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் 'பதிவாளராகவும் தற்போது அங்கே பதில் 'பதிவாளராகவும் பணிபுரிந்து வருகின்றார். 'கவிதை, சிறுகதை, இலக்கிய விமர்சனம் 'மட்டுமன்றி கல்வியியல் மற்றும் சமூகம் ' தொடர்பான ஆய்வுகளிலும் இவர்
ஈடுபட்டுள்ளார். இலங்கைச் சமூகங்களின் மத்தியில் அசாதாரண நிலை தலைவிரித்தாடியபோது அமைதியை உருவாக்குவதிலும் இனத்துவ
'திரிபு நிலைமைகளில் தான்சார்ந்த 'சமூகத்தின் சுயத்தைப் பாதுகாப்பதிலும் 'புரிந்துணர்வை வளர்ப்பதிலும் கோட்பாட்டு
'ரீதியாகவும் பிரயோக ரீதியாகவும் அர்ப்பணிப்புடன் இவர் பாடுபட்டமைக்கு
'நம்மில் பலர் வாழும் சாட்சிகள். இஃவானுஸ்ஸபா நண்பர்களுக்காக
ஏ.எல்.எம். நஸீர் 'அனைத்துக் கிளைகளுக்குமான முகாமையாளர்
தலைமையகம் 'ஹட்டன் நெஷனல் வங்கி
கொழும்பு
தமிழ்ச்சங்கம் தொழெடு பாவகரம்

(U
r f\r
((771
|lon 9. 如好
ISBN:978-955-51155-0-6
|
91789555|| 15506