கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.08

Page 1
ஆகஸ்ட் 2008
ஞான
கலைஇலக்
www.gnanam.lk
www.gnanam.info
ஈழத்து 'தமிழ்த்தூது தனி
| விலை: நூற்றுவிடுதி
விலை :
| ரூபா 100/=

கியச் சஞ்சிகை
அறிஞர் நாயகம் அடிகளார் கண்மணி

Page 2
asunam anwas nomasogie. Nagaரே0969)
J00
Designers and Manufact 22kt Sovereign Gold Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Suppliers to
DEALERS IN ALL KINDS FOOD COLOURS, F
CAKE INGREI
76B, Kings Sti Tel: 081 - 2224187, 081 -

ellers
urers of
osasso
AL ESSENCE SUPPLIERS
Confectioners & Bakers
; OF FOOD ESSENCES, 'OOD CHEMICALS, DIENTS ETC.
reet, Kandy. 2204480, 081 - 4471563

Page 3
பகிர்தலின் மூலம் (ஞா) விரிவும் ஆழமும் பெறுவது ஞா
ஒளி - 14
சுடர் - O. ஆசிரியர்
தி.ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர்: ஞா. பாலச்சந்திரன்
இனை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர் சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு
ஞானம் அலுவலகம் 3- B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06, இலங்கை.
தொலைபேசி 0094 - 11 2586013, 0094 - 777 306506
0061 - 286778989 (Aus)
தொலைநகல் 0094 11 2362862
மின்னஞ்சல் editor@gnanam.info
இணையத்தளம் http://www, gnanam.info
http://www.t.gnanasekaran.lk உள்நாட்டு சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா : ரூபா 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/= ஆயுள் சந்தா
: ரூபா 20,000/= வெளிநாட்டு சந்தா
ஓராண்டு Australia (AU$)
50 Europe()
40 India (Indian Rs)
1250 Malaysia (RM)
100 Canada ($)
50 UK(£) Singapore (S$)
Other (US$) வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள் SwiftCode :- HBLILKLX T.Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C No. 009010344631
35
S
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும்

=னம்
ச
இதழினுள்ளே ...
3
07
21
கவிதைகள்
வேல்நந்தன் கோபன் மகாதேவா கே.எஸ்.சிவஞானராஜா வாகரைவாணன் ஷெல்லிதாசன்
32 43 46
03
i" கோரப்பு"
கட்டுரைகள் பேரா. சபா ஜெயராசா பேரா. எஸ்.சிவலிங்கராஜா
06 அதி.வண. எஸ். ஜெபநேசன்
15 பேரா. சு. சுசீந்திரராஜா
19 பேரா. சி. தில்லைநாதன்
28 பேரா. துரை மனோகரன்
34 பேரா. செ. யோகராஜா
39 அருட்திரு. தமிழ்நேசன் அடிகள் 47 க.இரகுபரன்
54 ச.சசீதரன் வசந்தி தயாபரன்
58
09
சிறுகதைகள்
வி.ஜீவகுமாரன் எஸ். முத்துமீரான் (உருவகக்கதை) கெகிராவ ஸுலைஹா
(மொழிபெயர்ப்பு)
நேர்காணல் கலாநிதி கார்த்திகா கணேசர்/ ஞானம் ஞானசேகரன்
22 22
சமகால இலக்கிய நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை
61
வாசகர் பேசுகிறார்
63
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
ஞானம்
கலை,இலக்கிய
சஞ்சிகை
ஈழத்து அறிஞர் தமிழ்த்தூது" இன்று தமிழ் மொழியானது உலக அனைத்துலக அறிஞர்கள் தமிழ் இயலில் விளங்கியவர் பேராசிரியர் தனிநாயகம் அடி அடிகளார் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாற தமிழர்களை இணைத்தார். தமிழர்களிை பழந் தமிழ்ப்பண்பாட்டிற்கு புதுவடிவம் ெ ஆராய்ச்சித் தந்தையாராகவும் விளங்கினார்.
அடிகளாரின் மொழி ஆற்றல் வியக்கத் பரிசயம் உடையவராக விளங்கினார். அவரது ஒப்பியல் ஆய்வாளராகவும் உலகத்தின் தமிழ் 1949, 1950ஆம் ஆண்டுகளில் 51 நாடு வரலாறு, ஆகியவை பற்றி ஆங்கிலத்திலு தமிழ் மொழியின், தமிழர் பண்பாட்டின் ெ பறைசாற்றினார். அந்நாடுகளில் தாம் பெற்ற வெளியிட்டார். மேலும் தான் சென்ற நாடுக கேட்டவற்றையும் ஒன்றே உலகம்’ என்ற மற ஐரோப்பிய அமெரிக்க நூல் நிலையங்க பிரதிகள்பலவற்றைத் தேடிக்கண்டுபிடித்துத அதேவேளை, இந்திய மொழிகளுக்குள்ளும் முதல்மொழி தமிழ்மொழியே என்பதைக் கன அடிகளார் சாதித்த சாதனைகளில் குறி பதிப்பித்த Tamil Culture சஞ்சிகையாகும். இ எழுதியுள்ளார். அதேவேளை இதில் தமி கட்டுரைகளும் காலந்தோறும் வெளிவந்த உலகளாவிய ரீதியில் ஆற்றிய பணி அளப்பரி இவர் ஆற்றிய தனித்துவமான பணிகளி உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைத்தபை அடிகளார் நடாத்திய மாநாடுகளாலு முயற்சிகளாலும் தமிழ் பல ஐரோப்பிய அபெ படுகிறது.
இத்தகைய தமிழ்ப்பணிபுரிந்த பெருமகன நாமெல்லாம் பெருமைப்படலாம். அடிகள சேர்ந்த கரம்பன் என்ற சிற்றுாரில் பிறந்தவ மறையியல் கலாநிதி பட்டம் பெற்றவர். அை மாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களை இலண்டன் பல்கலைக்கழகத்திலே கல்வியி பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை விரி கழகத்தில் இந்திய இயல் துறையின் தலைவர
இவரது தமிழ்ப் பணிகளினால் தமிழ் Tami) என அழைத்து மகிழ்கிறது.
1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தீ உலகளாவிய ரீதியில் நூற்றாண்டு விழாக்கள் இந்த ஆகஸ்ட் மாத இதழை (159) தமிழ்த்து மலராகத் தமிழ் அன்னையின் பாதங்களில் ச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
தனிநாயகம் அழகளார் நூற்றாண்டு அரங்கில் ஒர் இடத்தைப் பெற்றிருப்பதற்கும், ஆர்வம் காட்டுவதற்கும் காரணகர்த்தாவாக களார் ஆவார்.
நாடுகளை நடத்தி உலகெங்கும் பரந்து வாழ்ந்த டயே விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தார். காடுத்து தமிழ் மலர்ச்சிச் சிற்பியாகவும் தமிழ்
தக்கது. பதினைந்து உலக மொழிகளில் அவர் பன்மொழி அறிவும் ஆற்றலும் அவரைச் சிறந்த pத் தூதுவராகவும் செயற்பட வைத்தது. கள்வரை பயணம் செய்து தமிழ்மொழி, கலை, ம் தாம் அறிந்த மொழிகளிலும் உரையாற்றி பருமைகளைத் தனது சொற்பொழிவுகள் மூலம் அனுபவங்களை தமிழ்த்தூது’ என்னும் நூலாக ளில் தமிழ் தொடர்பாகத் தாம் கண்டவற்றையும் ற்றுமொரு நூலிலும் சுவைபட விளக்கியுள்ளார். களில் முடங்கிக் கிடந்த தமிழ்க் கையெழுத்துப் மிழ் ஆய்வாளர்கவனத்துக்குக் கொண்டுவந்தார். கிழக்காசிய மொழிகளுக்குள்ளும் அச்சுக்கண்ட ண்டறிந்து உலகிற்குத் தெரிவித்தார். ப்பிடத்தக்க மற்றொன்று உலகத்தரத்தில் அவர் வ்விதழில் அடிகளார் 24 ஆய்வுக்கட்டுரைகளை ழியல் தொடர்பான பிறமொழி அறிஞர்களின் ன. இவ்விதழ் தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கு யது. ல் மேலும் குறிப்பிடத்தக்கவகையில் அமைவது 0யாகும். லூம் சஞ்சிகைகளினாலும் தமிழ் ஆராய்ச்சி மரிக்கப்பல்கலைக்கழகங்களில் இன்று கற்பிக்கப்
எார்நம் ஈழநாட்டைச் சேர்ந்தவர் என்ற வகையில் ார் இலங்கையில் உள்ள ஊர்காவற் துறையைச் ர். உரோமாபுரி உர்பன் பலகலைக்கழகத்தில் ணணாமலைப் பல்கலைக்கழகத்திலே முதுகலை தமிழ்ப் புலத்திலே பெற்றுக்கொண்டவர். யற் கலாநிதிப்பட்டம் பெற்றவர். இலங்கைப் வுரையாளராகவும் பின்னர் மலேயா பல்கலைக் ாகவும் செயலாற்றியவர்.
உலகம் இவரைத் தமிழ்த்துது (Ambassador of
திகதியில் பிறந்த தனிநாயகம் அடிகளாருக்கு கொண்டாடப்படும் இவ்வேளையில், ஞானம்’ ாது தனிநாயம் அடிகளார் நூற்றாண்டுச் சிறப்பு மர்ப்பிப்பதில் பெருமைகொள்கிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 5
வனபிதா JøsgTULUS தமிழ்ச் சூழலில் “d
திமிழியல் ஆய்வை மேலுயர்த்தி உலகப் பரப்புக்கு விரிவடையச் செய்த பணியை முன்னெடுத்தவர் வண. பிதா.தனிநாயகம் அடி களார். "தமிழியல்” என்ற எண்ணக்கருவே ஆய்வுகளோடு சங்கமிக்கும் பரிமாணத்தைச் சுட்டி நிற்கின்றது. அடிகளாரின் முயற்சி யினால் முன்னெடுக்கப்பட்ட உலகத் தமிழ் ஆய்வு மன்றமும் மாநாடுகளும் உயர்நிலை யான ஆய்வுத் தளத்துடன் தமிழை இணைத் தன.
"ஆய்வு முறையியல்” என்ற புலமைத் துறை இன்று ஆழ்ந்து விரிந்து உலகில் வளர்ச்சியடைத் தொடங்கியுள்ளது. ஆய்வின் முடிவுகள் அவற்றிலே பயன்படுத்தப்பட்ட முறையியலைப் பரீட்சித்தல் வாயிலாகவே ஏற்புடைமையாக்கப்படுகின்றன. ஆய்வின் பரிமாணங்களோடு அதற்குரிய பண்பாடும் வளர்ச்சியடைகின்றது. r".
"ஆய்வுப் பண்பாடு” தமிழில் வளர்ச் சியடைவதற்கு பல்கலைக்கழகங்களின் பங் களிப்போடுதனிநாயகம் அடிகளாரின்தனித்த முயற்சிகளும் முக்கியத்துவம் பெறுதலைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
அவரது புலமைப் பின்புலம் ஆழ்ந்து பரந்தது. தமது பிறந்த ஊராகிய ஊர்காவத் துறையில் மரபு வழித் தமிழாசான்களிடத்துத் தமிழை வரன்முறையாகக் கற்றவர். அதன் தொடர்ச்சியும் நீட்சியுமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே முதுகலைமாணி முதுதத்துவமாணிப் பட்டங்களைத் தமிழ்ப் புலத்திலே பெற்றுக் கொண்டவர்.
அவரின் சமய வாழ்வும் உயர்கல்வி வாழ்வும் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்வதற்குரிய பின்புலங்களாயின. ஆங் கிலம், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு ஜேர்மன், வடமொழி, மலையாளம், சிங்க ளம், மலாய், போர்த்துக்கேயம், ரூசியன் போன்ற பல மொழிகளுடன் ஊடாட்டம் கொண்டவர். அத்தகைய பன்மொழி அறிவின் வழியாக விரிந்த ஆய்வை நோக்கியவர்.
தமிழியல், கல்வியியல், இறையியல் ஆகிய முப்பெருந்துறைகளில்ஆழ்ந்துவிரவிநின்றவர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)
 

tó GlptöbiuUtó, 2bůbyů USDUT6ů''
அருட்கலாநிதிப் பட்டத்துக்குரிய ஆய்வை இறையியலில் மேற்கொண்டவர். ஐரோப்பிய மரபுவழிக் கல்விமுறையினையும், தமிழ்க் கல்வி முறையினையும் ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்து இலண்டன் பல்கலைக்கழகத்திலே கல்வியியற் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டவர்.
அவருடைய காலத்திலே ஒப்பியல் ஆய்வு முறை எழுச்சி கொண்டிருந்தது. ஒப்பியல் ஆய்வு பல பரிமாணங்களைக் கொண்டது. இலக்கண ஒப்பியல் இலக்கிய ஒப்பியல், பண்பாட்டு ஒப்பியல், கருத்தியல் ஒப்பியல், குறுக்குநிலை ஒப்பியல், நெடுங் கோட்டு ஒப்பியல், நிறுவன ஒப்பியல், தொழிற்பாட்டு ஒப்பியல், கல்வி ஒப்பியல், ஆளுமை ஒப்பியல், சமய ஒப்பியல், மானிட ஒப்பியல், உடற்கூற்றியல் ஒப்பியல் என்ற பல தளங்களையும் பரிமாணங்களையும் ஒப்பியல் ஆய்வு கொண்டுள்ளது. அமைப்பியற் சிந் தனைகளின் வளர்ச்சியோடு ஒப்பியல் மேலும் கூர்ப்படையத் தொடங்கியது.
ஒப்பியல் என்பது உலக நோக்கையும் விரிந்த தரிசனத்தையும் உள்ளடக்கியது. அறிவுலகம் விரிந்த உலக நோக்கோடு தொடர்புடையது. அறிவின் விரிவு அயல் மொழிகளையும் பண்பாடுகளையும், மனித வாழ்வியலையும், பிற அறிவுத் தேட்டங் களையும் தரிசிக்கச் செய்தது. குறுகிய மனித உணர்வுகளைத் தகர்த்தது.
-

Page 6
தனித்து ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒரு மதம் என்ற ஒற்றை நிலையிலிருந்து பன்மை நிலை நோக்கிய விரிவுடன் அறிவின் வளர்ச்சி மேலெழுந்தது. பன்மை நிலையின் அலகுகளை ஒப்பியல் நோக்குடன் வாங்கிக் கொண்டது.
ஆய்வின் வழியாக உலக நோக்கு, உலக மனப்பாங்கு, குறுகிய மானிட அடைப்புக்களில் இருந்து வெளிவருதல் என்பவற்றுடன் பண்பாட்டுத் தனித்து வங்களை அடையாளப் படுத்துதல் முதலாம் இலக்குகளை அவர் முதன்மைப்படுத்தினார். "ஆய்வு ஆய்வுக்காக" என்ற வாதத்தில் அவர் கட்டுப்பட்டு இருக்கவில்லை.
கடந்த நூற்றாண்டிலே இடம்பெற்ற சமூக நலன் தழுவிய நடவடிக்கைகளும் கல்வி விரிவாக்கமும் எழுத வாசிக்கத் தெரிந்தோரின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கச் செய்தன. முதலாம் நிலை வாசகர் வளர்ச்சியோடு இரண்டாம் கட்ட வாசகர் வளர்ச்சியும் விரி வடையத் தொடங்கியது. இரண்டாம் கட்ட வாசகர் வளர்ச்சி என்பது ஆழமான கனதியான வாசிப்புடன் தொடர்புடையது. ஆய்வு சார்ந்த
தமிழ் நாட்டிலோ இலங்கையிலே பல ஆவணங்களை அவர் ஐரே ஆவணக் காப்பகங்களிலும் பெர் வேறெந்த ஆய்வாளரும் குறித்த
உயர்நிலையான எழுத்தாக்கங்களை வாசித்தல் இரண்டாம் கட்ட வாசிப்பின் நீட்சியாகின்றது.
நவீன மரபில் வ.வே.சு.ஐயர் மேற்குறித்த இருநிலைவாசிப்புக்குமான எழுத்தாக்கங்களை மேற்கொண்ட முன்னோடிகளுள் ஒரு வரா கின்றார். அதாவது, சிறுகதைகளையும் எழுதினார். ஆய்வு எழுத்தாக்கங்களையும் மேற் கொண்டாராம். இரு தள நிலை எழுத்தாக்க மரபு தமிழிலே தொடர்ந்து வளர்ச்சியடையத் தொடங்கியது.
முதலாம் நிலை அல்லது அடிப்படை நிலை வாசிப்பில் புனைகதை, நகைச்சுவைத் துணுக்குகள், எளிமையான கட்டுரை வடிவங்கள், செய்திகள் முதலியவை உள்ள டங்கும். அவற்றின் தொடர்ச்சியாக அமையும் இரண்டாம் கட்ட வளர்ச்சியில் திறனாய்வுகள், ஆழ்ந்த அரசியல் விமர்சனங்கள், ஆய்வுகள், செறிவு மிக்க கட்டுரைகள் உள்ளடங்கும்.

முதலாம் நிலை அல்லது அடிப்படை நிலை வாசிப்பு, மற்றும் இரண்டாம் நிலை வாசிப்பு ஆகியவற்றைப் பிரித்தறிய முடியாத நிலையிலே வாசிப்புக் குழப்பங்கள் தோன்றிய வண்ணமிருக்கும். எழுத்தாக்கங்கள் தொடர் பான் மதிப்பீடுக் குழப்பங்களும் அதனை அடியொற்றி மேலெழுந்த வண்ணமிருக்கும்.
ஆய்வுப் பண்பாடு என்பது வளர்ச்சி யடைந்த வாசிப்பு மரபோடும் எழுத்தாக்க மரபோடும் தொடர்புடையது. உயர்கல்வியின் விரிவாக்கத்தோடு அது விரிவடைந்து வளர்ச்சி யடையத் தொடங்கியுள்ளது.
வளர்ச்சியடைந்த இரண்டாம் நிலை வாசிப்புக்கு ஈடுகொடுக்கக் கூடிய சிற்றிதழ்களும் தமிழ்ச் சூழலிலே வளர்ச்சி யடையத் தொடங்கிவிட்டன. அதே வேளை முதலாம் நிலை வாசிப்புக்குரிய எழுத்தாக் கங்களும் வளர்ச்சியடைந்த இரண்டாம் நிலை எழுத்தாக்கங்களும் முரண்பாடு கொண்டவை என்று கொள்வது தவறாகும்.
ஆய்வு இதழ்களின் வளர்ச்சியும் ஆய்வுப் பண்பாட்டை அடையாளப்படுத்துவதற்குரிய கிடைக்கப் பெறாது அழிந்து போன ாப்பிய நாடுகளின் நூல்களிலும் bறுக்கொண்டார். அந்த அளவுக்கு பணியை மேற்கொள்ளவில்லை.
சுட்டியாகின்றது. உலகத் தரத்துக்கு ஒப்பான TAMIL CULTURE என்ற ஆய்வு இதழையும் வண.பிதா தனிநாயகம் அடிகளார் உருவாக்கினார். புலமையாளர்களின் மதிப் பீடுகளை அடிப்படையாகக் கொண்டே அந்த இதழிலே கட்டுரைகள் வெளியிடப்பட்டன. JOURNAL OF TAMIL STUDIS என்ற ஆய்விதழ் வெளிவருவதற்கும் அடிகளாரே பக்கபலமாக இருந்தார். - அடிகளார் மேற்கொண்ட ஆய்வுகளில் ஒப்பியல் நோக்கு மேலோங்கியிருந்தது. தமிழ்ப் பண்பாட்டையும் அவர் ஒப்பியல் ஆய்வு செய்தார். வள்ளுவரின் அரசியல் மற்றும் ஒழுக்கவியற் சிந்தனைகளை மேலைப் புலத்துத் தொல்சீர் அரசியல் மற்றும் ஒழுக்கவியற் சிந்தனைகளோடு ஒப்பு நோக் கினார்.
சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள இயற்கை பற்றிய காட்சிகளையும் சிந்தனை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 7
களையும் ஐரோப்பிய செவ்வியல் இலக் கியங்களில் இடம் பெற்றுள்ளவற்றையும் ஒப்பு நோக்கினார். அத்தகைய ஒப்புநோக்கு மரபு வழியான தமிழ் இலக்கிய ஆய்வு முறைகளிலே திருப்பங்களை ஏற்படுத்தியது. புதிய புலக்காட்சிகளைத் தோற்றுவித்தது.
பேராசிரியர் க.கைலாசபதியும் வண. பிதா தனிநாயகம் அடிகளாகும் சமகாலத்தவர். இருவரும்உயர்ந்தநிலையிலேஓப்பியல்ஆய்வை மேற்கொண்டிருந்தனராயினும் இருவரதும் கருத்தியல் வேறுபட்டிருந்தது. கைலாசபதி அவர்கள்மார்க்சியக்கருத்தியலைஅடியொற்றித் தமது ஆய்வை முன்னெடுத்தார். அடிகளார் மானிடக் கருத்தியலை (HUMANISTIC IDEOLOGY) அடியொற்றித் தமது ஆய்வுகளை முன்னெடுத்தார். இருவரும் ஆய்வினை தரமேம்பாட்டை விட்டுக்கொடுப்பின்றி ஆழ்ந்து கடைப்பிடித்தனர். தமிழ்ச் சூழலிலே ஆய்வுப் பண்பாடு செறிவுடன் வளர்வதற்கு இருவரது பங்களிப்புகளும் முக்கியமானவை. உறுதியும், நம்பகமும், தரமேம்பாடும் மிக்க ஆய்வுகளுக்குப் போதுமான தகவல்களும் தரவுகளும் முக்கியமானவை. உலகெங்கணுமுள்ள தமிழர் பற்றிய தகவல்களையும் தமிழ்ப் பண்பாட்டின் ஊறல்கள் நிகழ்ந்த நாடுகள் பற்றிய தகவல்களையும் அடிகளார் அந்த அந்த நாடுகளுக்குச் சென்று பெற்றுக் கொண்டார். அந்த அடிப்படையில் முதலாம் நிலைத் தகவல்களையும், தரவுகளையும் (PRIMARY SOURCES) அடிப்படையாகக் கொண்டே அவரது ஆய்வுகள் மேலெழுந்தன. ஆய்வு களைப் பொறுத்தவரை முதலாம் நிலைத் தரவுகளே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. 1970ஆம் ஆண்டில் பரிஸ் நகரில் நிகழ்ந்த உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் அவ்வாறு திரட்டப்பட்ட முக்கியமான தகவல்களை அவர் சமர்ப்பித்தார்.
தாம் சென்ற நாடுகளில் எல்லாம் கிடைக்கப் பெறும் தமிழ் நூற் பதிப்புக் களையும் ஆவணங்களையும் அறிக் கைகளையும், இதழ்களையும் அவர் நிழற் பிரதியெடுத்துப் பாதுகாத்துத் திரட்டியமை ஒரு சிறப்பார்ந்த நிகழ்ச்சியாகும். தமிழ் நாட்டிலோ இலங்கையிலோ கிடைக்கப் பெறாது அழிந்து போன பல ஆவணங் களை அவர் ஐரோப்பிய நாடுகளின் நூல்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் பெற்றுக்கொண்டார். அந்த அளவுக்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

வேறெந்த ஆய்வாளரும் குறித்த பணியை மேற்கொள்ளவில்லை.
ஆய்வு வளர்ச்சிக்கு நிறுவன மயப்பாடு முக்கியமானது. ஆய்வு வளர்ச்சிக்கு மாத்திர மன்றி எத்தகைய ஒரு சமூகச் செயற்பாட்டுக் கும் கல்விச் செயற்பாட்டுக்கும் நிறுவனமயப் பாடு முக்கியமானது.
1964ஆம் ஆண்டிலே கீழைத்தேய ஆய்வு மாநாடு புதுடில்லியில் நிகழ்ந்தவேளை, உலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒன்றை அமைக்க வேண்டி தேவையை அடிகளார் அறிந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாகத் தமிழ் ஆய்வாளர்களோடு கலந்து ஆலோசித்து உலகத்தமிழ்ஆய்வுமன்றத்தைஉருவாக்கினார். அதன் முதலாவது ஆய்வு மாநாடு 1966ஆம் ஆண்டில் கோலாலம்பூரிலே நடைபெற்றது. ஆடம்பரங்களும் கேளிக்கைகளும் அற்ற நிலையில் ஆய்வு அளிக்கைகளுக்கும் அவற்றோடிணைந்த கருத்தாடல்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டன.
அவ்வாறு அளிக்ககை செய்யப்பட்டுச் செப்பனிடப்பட்ட கட்டுரைகளைத் தொகுதி களாகவெளியிட்டமைஆய்வுவெளியீடுகளை முக்கியப்படுத்தும் நிகழ்ச்சியாயிற்று.
உலகு பற்றிய விரிந்த நோக்கு அடிகளாரிடத்துக் காணப்பட்டாலும் உலகெல்லாம் தமிழ்த் தூதுவராக அவர் சென்றாலும் தமது சொந்த நாட்டின் மண்ணோடும் மக்களோடும், கால் பதித்து நின்றார். இந்நாட்டிலே பணியாற்ற வேண்டும் என்ற நோக்குடன் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்துக் கல்வியியல் துறை விரிவுரையாளர் பதவியை ஏற்றுக் கொண் டார். கல்வித் தத்துவம் தொடர்பான பல ஆய்வுகளை அவர் மேற்கொண்டதுடன் மாணவர்களிடத்தும் ஆய்வுப் பண்பாட்டை வளர்த்தெடுக்க முனைந்தார். ஆசிரியர் வாண்மைக் கல்வியூடாக ஆய்வு நோக்கையும் பரவலையும் முன்னெடுப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியமானவை.
இந்நாட்டில் இயற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டமும் அவற்றின் தொடர்ச்சியாக நிகழ்ந்த அவலங்களும் அடிகளாரைப் பாதித்தன. அவற்றைவிட்டு ஒதுங்கி அவர் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்து நீதிக்கான துலங்கலை வெளிப்படுத்தினார்.
O O O

Page 8
தினிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கி புலமையுடையவராகத் திகழ்ந்தார். அத்துட தனிநாயகம் அடிகளார் சங்க இலக்கியத்தின் விளங்கியமைக்கான காரணங்களைச் சுட்டுவத
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் தீவிரமடைகின்றன. ஏட்டுச் சுவடிகளிலே இரு தொகையும் பத்துப்பாட்டும் தொல்காப்பியழு தவழத் தொடங்கியது. பழந்தமிழ் அறிஞ சங்க இலக்கியங்களை முன்னெப்போதும் இ தலைப்பட்டனர். உயர் பட்டப் பரீட்சைகளுக் தொல்காப்பியமும் இடம்பெற்றன. சங்க இல மக்களின் வாழ்வியல், பண்பாடு, மொழி, அர அறிஞர்களுக்குக் கிட்டியது. சங்க நூல்கள் உணர்த்தப் பலர் முனைந்தனர். இவற்றின் க அடையத் தொடங்கியது.
சங்க இலக்கியங்களின் துணையோடு த வரலாற்றையும் எடுத்தியம்பும் முயற்சியா வி.கனகசபைப்பிள்ளையின் 1800 ஆண்டுகட் வட்டுக்கோட்டை ஜே.வி.செல்லையாவின் ப; விபுலானந்தரின் யாழ்நூல் ஆராய்ச்சியும் இன தமிழ் நாட்டுப் பேரறிஞர்களான எஸ்.வை டாக்டர் சுபமாணிக்கம், பூரணலிங்கம்பிள்ை இலக்கியம் பற்றிய ஆய்விலே அதி கரிசனைே தான் வண.தனிநாயகம் அடிகளார் அண்ண சேருகிறார்.
பல்வேறு மொழிகளிலுமுள்ள பழைய இறையியலிலும் பட்டம் பெற்றிருந்த அடிகள இலக்கியக் கல்வி மிகவும் சுவைபயப்பதாக அ மொழி, தமிழ்ப் பண்பாட்டுப் பற்றாளராக இ பட்டப் படிப்புத் தேவைக்கும் அப்பால் ஊன் களும் நல்ல நண்பர்களும் கிடைத்தனர். அ தமிழைக் கற்றார். குறிப்பாக தே.பொ.மீ ட சிதம்பரநாதச் செட்டியார் முதலியோர் இவரது எனலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sg84. ஃலிங்கராஜா
யங்களிலும் தமிழ் மொழியிலும் மிகச் சிறந்த ன் பன்மொழிப் புலமையாளராகவும் விளங்கிய பால் மிகுந்த பற்றும் பயிற்சியும் உடையவராக நாகவே இச்சிறுகட்டுரை அமைகின்றது.
பின்னர் சங்க இலக்கியப் பதிப்பு முயற்சிகள் நந்து பலரின் கண்ணிற் படாமல் இருந்த எட்டுத் pம் நூலுருவாகித் தமிழ் அறிஞர்களின் கைகளிலே நர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் இல்லாத அளவுக்குப் படிப்பிக்கவும் ஆராயவும் குரிய பாடத்திட்டத்திலும் சங்க இலக்கியங்களும் க்கியப் பயில்வு பரவலாகியதும் பண்டைத் தமிழ் ாசியல், பொருளாதாரம் பற்றிய புதிய வெளிச்சம் ரின் தனித்துவத்தையும் சிறப்பையும் உலகுக்கு ாரணமாகக் கால ஆராய்ச்சியும் துரித வளர்ச்சி
மிழ் மக்களின், தமிழகத்தின் பண்பாட்டையும் ாக ஈழத்துத் தமிழறிஞர்களான மல்லாகம் ட்கு முற்பட்ட தமிழகம் முதலான ஆய்வுகளும் த்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பும் சுவாமி வை போன்ற இன்னபிற ஆய்வுகளும் அமைந்தன. யாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், ள, டாக்டர் மு.வரதராசன் முதலானோரும் சங்க யோடு ஈடுபட்டனர். இத்தகைய காலச் சூழலிலே ாமலைப் பல்கலைக்கழகத்திலே மாணவனாகச்
இலக்கியங்களைப் படித்த அனுபவத்தோடு ாருக்குத் தமிழ் இலக்கியக் கல்வி, குறிப்பாகச் சங்க புமைந்தது எனக் கருதலாம். இயல்பாகவே தமிழ் இருந்த அடிகளார் பழந்தமிழ் இலக்கியங்களைப் றிப் படிக்க விரும்பினார். இவருக்கு நல்லாசிரியர் ண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே பலரிடம் ாக்டர் சுபமாணிக்கம், மாணிக்கம் செட்டியார், ! வதமிழ்ப் புலமை ஆர்வத்திற்குத் தீனிபோட்டனர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 9
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், பேராசிரி யர் சாலை இளந்திரையன் முதலான அறிஞர் களுடன் மிக நெருக்கமாகப் பழகினார். பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் தமது
வாழ்க்கைக் குறிப்புப் பற்றி எழுதிய கட்டுரை
யொன்றிலே "தனிநாயகம் அடிகளார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையைச் சந்திக்க அடிக்கடி வருவார் என்றும் தான் அப்பொழுது வையாபுரிப்பிள்ளைக்கு ஆய்வு உதவியாளராக இருந்ததாகவும் அவர்கள் நீண்டநேரம் உரையாடுவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடிகளார் இலங்கையைச் சேர்ந்த பண்டிதர் க.பொ.இரத்தினம், வித்துவான் க.ந.வேலன், பேராசிரியர்கள் வி.செல்வநாய கம், சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா. இந்திரபாலா முதலியோருடன் நெருக்கமான நட்பைப் பேணினார். ஓயாத தேடலுடைய அடிகளார் தமது கருத்துக்களைப் பரிமாற வும் ஐயம் அகற்றவும் இவர்களைப் பயன்படுத்தினார் என்றே கருதவேண்டும். (பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கு.நேசையா முதலியோரின் இல்லங்களிலே அடிகளாரைத் தரிசிக்கும் வாய்ப்பு இக்கட்டுரை ஆசிரியருக்குக் கிடைத் தது)
சுவாமி விபுலானந்தர் அண்ணா மலையில் யாழ்நூலைப் பற்றிச் சொற் பொழிவாற்றியபோது அடிகளார் அச்சொற் பொழிவினைக் கேட்டார் என்றும் கூறப்படு கின்றது. எங்கெல்லாம் அறிஞர்கள் சொற் பொழிவாற்றுகின்றார்களோ அங்கெல்லாம் சென்று அச்சொற்பொழிவுகளைக் கேட்கும் வழக்கம் அடிகளாரிடம் இருந்தது.
நான்காண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே பயின்றார். தமி ழைச் சிறப்புப் பாடமாகவும் ஆங்கில இலக்கியத்தையும் ஆங்கில மொழியையும் துணைப்பாடமாகவும் கற்று 1947ஆம் ஆண்டு முதுகலைப் படிப்பை நிறைவுசெய்தார். பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை எனும் பொருளில் ஆய்வு செய்து 1949ஆம் ஆண்டு எம்லிட் பட்டம் பெற்றார். நாம் ஏலவே குறிப்பிட்டது போல அண்ணாமலைப் பல் கலைக்கழகம் அவரது புலமை விருத்திக்கும் தமிழ் ஆளுமைக்கும் வழிசமைத்தது எனலாம். 1955 முதல் 1957 வரை இலண்டன்
பல்கலைக்கழகத்தில் பண்டைக்கால ஐரோப்
பிய - இந்தியக் கல்விமுறைமைகள் ஒர் ஒப்பீடு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)
 
 

ஏறிவிளையாடும் பொய்க்கால்க் குதிரைகளாய் எங்கள் வாழ்வு அவரவர்க்கு ஏற்றபடி தலையாட்டி குதிரை நினைவிலே இடையிடையே கதிரையிலும் ஆடுகிறோம் கடும் இசையாய் பின்னணிகள் மாறும் போதும் கவலையின்றி ஆடுகிறோம் நேற்றுவரை “அவன்” இழுத்த இழுவைக்கு ஆழனோம் இன்றோ அவரவர்க்கு ஏற்றபழஆடுகின்றோம் கூட்டாக நின்றுநாம் ஆழனாலும் உள்ளுக்குள் ஒன்றுபடா உணர்வுடனே ஆடுகின்றோம் இங்குமாறினாலும் ஆட்டத்தின் சுதிமாறாமலே ஆடும் இந்தத் நெருக்கூத்தின் முகமூடிக்குள் யார் அதிகம்

Page 10
சிறப்பாகப் பண்டைத் தமிழ்க் கல்வி மரபினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு என்ற பொருளிலே ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார்.
தமிழ்மொழியின் தொன்மையையும் தமிழர்தம் பண்பாட்டின் சிறப்பியல்பு களையும் உலகத்திற்கு எடுத்தியம்ப வேண்டும் என்ற எண்ணம் அடிகளாருக்கு அண்ணா மலைப் பல்கலைக்கழகத்திலே பயிலும் காலத்திலேயே உருவாகிவிட்டது. தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழர் பண்பாட்டின் பெருமையையும் தமிழ் இலக்கியங்களின் வழி குறிப்பாகச் சங்க இலக்கியங்களின் துணை யோடு உலகுக்கு உணர்த்த விரும்பினார். உலகின்பலபாகங்களுக்கும் சென்ற அடிகளார் அங்கெல்லாம் சங்க இலக்கியங்களின் தொன்மையையும் பெருமையையும் ஆய்வு நெறி நின்று புலப்படுத்தினார். தம்மிடம் கையெழுத்துக் கேட்கவரும் மாணவர்களுக்கு “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சங்க இலக்கிய அடியைத் தமிழிலே எழுதி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் எழுதி விடுவாராம்.
அடிகளாரும் சங்க இலக்கியங்களை ஆழமாகக் கற்றார். சங்கச் செய்யுள்களின் பொருளும் சுவையும் அடிகளாரைக் கவர்ந்ததில் வியப்பில்லை. தமிழ் மொழியிலும் தமிழர்தம் பண்பாட்டிலும் ஈடுபாடுடைய ஒருவர் சங்க இலக்கியங்களினாற் கவரப் படுவது இயல்பானதே எனலாம். பிற மொழி இலக்கியங்களையும் அவை கூறும் பண்பாட்டுச் செய்திகளையும் படித்தறிந்த அடிகள் அவற்றிலும் பார்க்கச் சங்க இலக் கியங்கள் சிறப்பானவை எனக் கருதினார். அகில உலகத்திற்கும் தமிழர்தம் பண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தெளிவாகப் புலப் படுத்தச் சங்க இலக்கியங்களை இவர் நன்கு பயன்படுத்தனார்.
தமிழர் பண்பாட்டில் நாட்டமுடைய அடிகளார் Tamil Culture என்ற ஆங்கில முத்திங்கள் ஏட்டினை நடத்தினார். இந்த வெளியீட்டினால் தமிழ் தெரியாத பிறநாட்டு அறிஞர்கள் தமிழர் பண்பாட்டினை அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.
வடமொழி இலக்கியங்களையே இந்தியஇலக்கியம் எனக் கருதியிருந்த மேலைப்புல அறிஞர்களுக்கு அடிகளாரின் கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழர் பண்பாட்டின் பெருமை யையும் புலப்படுத்தின. உலகளாவிய
8

ரீதியில் சங்க இலக்கியங்களைப் பரப்பிய பெருமைக்குரியவராக நாம் அடிகளாரைக் கொள்ளலாம்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்ற திருவாக்கை எங்கும் எப்பொழுதும் கூறிக்கொள்ளுவார். நெடுந்தீவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆசிரியருக்கும் கரம் பொன்னைச் சேர்ந்த இராசம்மா தம்பதி யினருக்கு 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபத்தியோராம் நாள் அடிகளார் பிறந்தார். நெடுந்தீவுச் சூழலும் கரம்பொன் சூழலும் கூட இவருக்குச் சங்க இலக்கியங்களில் ஈடுபாட்டினை ஏற்படுத்தி இருக்கும் எனக் கருதலாம். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் சங்க இலக்கியங்களைச் சிறப்பாகக் கலித் தொகையை அதிலும் பாலைக் கலியை விரும்பிப் படிப்பார் என்று இவரது வரலாற்றை எழுதிய அந்தனிஜான் அழகரசன் குறிப்பிட்டுள்ளார். இவரது தாய்மண்ணும் தந்தையர் நாடும் பாலைக் கலி பால் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்திருக்கும் எனக் கருதுவது தவறாகாது.
சங்க இலக்கியம் பற்றி அவருக்கு இருந்த கருத்து நிலையைச் சங்க இலக்கியத்தின் சிறப்பு, மலரும் மாலையும் முதலான கட்டுரைகளினூடு கண்டுகொள்ளலாம்.
இன்று எல்லோராலும் விதந்து போற்றப் படும் சங்கச்செய்யுள்களை அன்றே அடிகளார் தமது உரைகளிலும் கட்டுரைகளிலும் மேற்கோள் காட்டியுள்ளார் என்பது சங்க இலக்கியத்தில் அவருக்கு இருந்த பற்றினையும் பயிற்சியையும் புலப்படுத்துகின்றது. 1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழ் விழாவில் சங்க இலக்கியத்தின் சிறப்பு என்னும் பொருளிலே நீண்டதொரு சொற்பொழிவினை ஆற்றினார். ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட அக்காலத் தமிழ் அறிஞர் பலர் அடிகளாரின் சொற் பொழிவினை வெகுவாகப் புகழ்ந்தனர் என்று அறிய முடிகின்றது. இந்த உரை பின்னர் இவரது தமிழ்த்தூது என்ற நூலிலேயும் பதிவாகியுள்ளது.
பழந்தமிழ் இலக்கியங்களில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியுமுடைய பன்மொழிப் புலவரான அடிகளார் ஒப்பியல் நோக்கில் சங்க இலக்கியங்களே சிறப்பானவை என உலகுக்கு உணர்த்திய பெருமைக்குரியவர்.
O O O
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 11
சிறுகதை
பிள்ணைறோரும் பணக்ண்றவர்களும் அண்ணகையால
கண்ணன். வயது 6. முதலாம் ஆண்டு. கார்த்திகா. வயது 12. ஆறாம் ஆண்டு. "சமூகசேவை அமைச்சின் குழந்தைகள் நலன் காப்புத் திட்டத்தின் கீழ் கண்ணனுக்கும் கார்த்திகாக்கும் தமது சொந்த வீட்டிலே தம் பெற்றோர்களுடன் வாழ்வதற்கு போதியளவு பாதுகாப்புச் சூழல் இல்லாத காரணத்தாலும், தொடர்ந்தும் அவர்கள் அங்கு வாழ்ந்தால் எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக வளரமாட்டார்கள் என நகரசபை கருதுவதாலும் அவர்கள் இருவரையும் இன்றிலிருந்து இந்த நகரசபை பொறுப்பேற்று குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கின்றது.
அவர்களின் பெற்றோர்கள் இரு வாரங் களுக்கு ஒரு முறை சென்று அவர்களைப் பார்வையிடலாம். அச்சமயம் சமூகசேவை பணி யாளர் ஒருவரும் உடன் இருப்பார்"
தீர்ப்புச் சொன்னதும் சிவமதி, "ஐயோ என்ரை பிள்ளையள் இல்லாமல் நான் செத்துப் போவன் அண்ணை. இனிமேல் நாங்கள் வீட்டிலை சண்டை பிடிக்கமாட்டம் என்று சொல்லுங்கோபாவி... பாவி ... சொன்ன னான் தானே ..... குடியாதையுங்கோ..... எனக்குப் போட்டு அடிக்காதையுங்கோ
வி.ஜீவகுமாரன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 20

வம்09
எண்டு ......
இப்ப பார்த்தியளே....." என சிவமதி தங்கராஜனையும் என்னையும் நீதிபதி யையும் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
க ண ண னை யும் கார் த தகாவை யும் சமூகசேவைப் பிரிவின் உயர் அதிகாரி அணைத்து
வைத்திருந்தாள்.
சிவமதியை பரிதா
பமாகப் பார்த்தபடி நீதிபதி எழுந்து போய் விட்டார்.
என்னால் எதுவும் செய்ய முடியாது.
எனது மொழிபெயர்ப்புப் பணி முடிந்து விட்டது.
சிவமதியின் அழுகைக் குரல் காதில் கேட்டபடியே இருக்க காரில் போய் ஏறினேன்.
நகரசபைக் கட்டடத்திற்கு வெளியே தங்கராஜன் தலையைக் குனிந்தபடி சிகரட்டின் அடிக்கட்டையை உறிஞ்சிக் கொண்டு நின்றான்.
தங்கராஜனைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
71

Page 12
தங்கராஜான் என்னளவில் பத்தோடு பதினொன்று இல்லை. மிக மதிப்பு வைத்து இருந்தேன். எந்த விழாக்களில் கண்டாலும் அண்ணா, அண்ணா என்று நன்றாகக் கதைப்பான். இவனுக்குள் எப்படி இன்னொரு தங்கராஜன்? என்னால் நம்ப முடியவில்லை.
எங்களை வைத்துத் தானே நாம் சக மனிதர்களை அளக்கின்றோம். என்னைப் போன்ற ஒரு ஆளாகத்தான்நான் மற்றவர்களை நம்புவதும். . .பின்பு ஏமாறுவதும். . .இது ஒன்றும் புதிதில்லை. . . 2010வரை அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. . . என்னதான் அலேட்டாக இருந்தாலும் அது நடந்து விடுகிறது. . .
இப்பொழுதெல்லாம் யாராவது அண்ணா என்று அழைத்துக் கொண்டு என்னருகில் நெருங்கினால் ஒன்றில் பயமாக இருக்கிறது. . அல்லது அருவருப்பாக இருக்கிறது.
“சமூகசேவை அமைச்சின் குழந்தை கண்ணனுக்கும் கார்த்திகாக்கும்.தமது வாழ்வதற்கு போதியளவு பாதுகாப் தொடர்ந்தும் அவர்கள் அங்கு வாழ்ந்த வளரமாட்டார்கள் என நகரசபை க இன்றிலிருந்து இந்த நகரசபை பெ மையத்தில் ஒப்படைக்கின்றது.”
எனது கார் புறப்பட்டது.
அடுத்த அரைமணித்தியாலத்துள் மற்ற சிற்றியில் உள்ள ஆஸ்பத்திரியின் அவசர நோயாளர் பிரிவில் நிற்க வேண்டும் - மொழிபெயர்புக்காக அழைத்திருந்தார்கள் - ரமணனுக்கு நெஞ்சிலை அடைப்பாம். ரமணனை பொது இடங்களில் கண்டிருக் கின்றேன். ஆனால் பெரிய பழக்கம் ஏதுமில்லை.
{0 {) {0
“எனக்கு உன்னைப் பிடிக்கேல்லை சிவமதி. . .நாங்கள் பிரிஞ்சு போயிடலாம்”
ஆறு வருடத்திற்கு முதல் தங்கராஜன் சிவமதியைப் பார்த்துச் சொன்னது. அதுவும் கண்ணன் பிறந்து நாலாம் நாள் ஆஸ்பத்திரியில் இருந்து துண்டு வெட்டிக் கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்தபொழுது தங்கராஜன் சொன்னது.
10

தங்கராஜன் சொன்ன பொழுது அவன் விளையாட்டுக்கு சொல்லுகின்றான் என்று தான் சிவமதி நினைத்தாள்.
“பகிடிக்கு சொல்லுறியளோ"
"இல்லை உண்மையாய்த்தான்சொல்லுறன்"
"நான் என்ன பிழை விட்டனான்”
“எந்தப் பிழையும் விடேல்லை. . .ஆனால் எனக்குப் பிடிக்கேல்லை”
"அப்பா. விளையாடாதையுங்கோ. பிள்ளை பிறந்த வயிற்றுப்புண் எனக்கு இன்னமும் மாறேல்லை”
"நான் விளையாடேல்லை. . . ஆனால் எனக்கு உம்மோடை வாழவிருப்பம் இல்லாமல் இருக்கு”
“என்னப்பா சொல்லுறியள். . . உங்களுக்கு என்ன குறை விட்டனான்"
"எந்தக் குறையும் விடேல்லை. . ஆனால் வாழவிருப்பம் இல்லாமல் இருக்கு”
நகள் நலன்காப்புத் திட்டத்தின் கீழ் சொந்தவீட்டிலேதம் பெற்றோர்களுடன் புச் சூழல் இல்லாத காரணத்தாலும், நால் எதிர்காலத்தில்நல்ல பிரஜைகளாக ருதுவதாலும் அவர்கள் இருவரையும் ாறுப்பேற்று குழந்தைகள் பாதுகாப்பு
"ஐயோ தயவு செய்து சொல்லுங்கோ. நான் இல்லாத ஒரு கிழமையுள் என்ன நடந்தது?"
தங்கராஜன் மெளனமாக இருந்தான். நேரம் போய்க் கொண்டு இருந்தது. அவன் இளகுவதாய் காணவில்லை. "தயவு செய்து சொல்லுங்கோ. . . எனக்கு நெஞ்சுக்கை அடைக்குது. . .இந்த பச்சை மண்ணுக்கு பால் குடுக்கேலாமல் இருக்கு. . .” "இனிமேல் நீர் வேலைக்கு போக
வேண்டாம் . . . வீட்டிலை இருந்து கார்த்திகாக்கு படிப்பீச்சா போதும். . .”
"நான் வேலைக்குப் போறதுக்கும்
கார்த்திகாக்கு படிப்பிக்கிறதுக்கும் என்ன தொடர்பு”
"நீர் ஆஸ்பத்திரியிலை இருக்கேக்கை பள்ளிக்கூடத்திலை இருந்து கதைக்க கூப்பிட்டவை”
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 13
"அதுக்கென்னப்பா... அது வழமையாய் நடக்கிறது தானே"
"இந்த முறை அப்பிடி இல்லை" சிவமதி நிமிர்ந்து பார்த்தாள்.
"கார்த்திகா வகுப்பில் உற்சாகமாக இல்லையாம்.... மாக்ஸ்களும் நல்லாய் இல்லையாம்...... மேலாக பிள்ளை தனிச்சுப் போனமாதிரி இருக்கிறாளாம்..... பள்ளிக்கூட மனோதத்துவர் கூப்பிட்டு அவளோடை கதைத்தவராம்... அது தான் இனி நீர் வேலைக்குப் போக வேண்டாம்.....”
"பிள்ளையோடை கொஞ்சம் கூட இருக்க வேணும் எண்டது சரியாய் இருக்கலாம்..... ஆனால் அதுக்காக வேலைக்குப் போகாமல்... யோசிச்சுப் பாருங்கோ .. ஊரிலை இருந்தால் தம்பியை இழுத்துக் கொண்டு போயிடுவங்கள் எண்டுதானே அதுகள் இந்தியாக்கு வந்ததுகள்.
அதுவும், என்னை நம்பித் தானே"
"நீ உன்ரை குடும்பத்தை பார்க்கிறதுக்கு என்ரை பிள்ளை பலி ஆக வேணுமோ"
அவளுக்கு சுள் என்றது.
வாழ்க்கையில் முதல் தடவை "நீர்" என்பது "நீ" ஆனது.
மடியில் கிடந்த குழந்தை மார்பை முட்டியது.
கண்கள் தன்பாட்டில் கொட்டியது.
"அப்பா நான் பின்னேரத்திலை ஆக நாலு மணித்தியாலம் வேலைக்குப் போறன். அந்த நேரம்தான் நீங்கள் வொலிபோல் எண்டும், கிறிகட் எண்டும், புட்போல் எண்டும் திரியுறனிங்கள் ....
"நிற்பாட்டு கதையை - நீ எங்கை வாறாய் எண்டு எனக்குத் தெரியுது... நான் சந்தோஷ மாக இருக்கிறதே அந்த நேரங்களிலை தான்...”
இரண்டாது தடவையும் "நீர்" என்பது "நீ" ஆனது.
"அப்பா நீங்கள் விளையாட்டைப் பற்றிக் கதைக்கிறியள்... நான் இந்தியாவிலை றோட்டிலை நிக்கிறதுகளை பற்றிக் கதைக்கிறன்"
"வந்தவை மண்டபத்திலை இருக்கிறது தானே ... அதுக்கு நானே பொறுப்பு. அதுகள் வந்தது தொடக்கம் இந்த ஒரு வருஷமும் நீ நீயாக இல்லை. எப்பவும் அவையின்ரை யோசினையும்... அவைக்கு ரெலியோன் எடுத்து அலட்டிக் கொண்டு. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

... அவை சந்தோஷமாய் இருந்தால் தான் நீ இங்கை சந்தோஷமாய் இருக்கிறாய், எனக்கு என்னவோ இரண்டு வீடு நடக்கிற மாதிரி இருக்கு.”
சிவமதி ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.
ஆனால் முடியவில்லை. இரண்டு வீடு! "இதுக்காகத் தானா என்னைப் பிடிக்கேல்லை” சிவமதி தனக்குள் தான்.
அது அவளை உலுக்கி எடுத்தது.
அவருக்கு மட்டும் இரண்டு வீடு இல்லையா?
தனது தங்கச்சிக்கு கலியாணம் என்றதும் ஐந்து வீத வட்டிக்கு காசு புரட்டி அனுப்பினவர் தானே?
நானும் இளைய மச்சாளின் கலியாணம் நல்லாய் நடக்கட்டும் என்று சேர்ந்து தானே
செய்தனான்.
பெரிய தமக்கையின் மகனைக் கூப்பிட பாங்கில் கடன் எடுக்க நானும் தானே கையெழுத்துப் போட்டனான்.
பெரிய மச்சாளின் மகன் நல்லாய் வரட்டும் என்று தானே செய்தனான்.
இப்போ இது இரண்டாவது வீட்டுப் பிரச்சனையாய் போய் விட்டது.
பிரச்சனை சிவமதி வீட்டுக்கு காசு அனுப்புவதா? ... இல்லை கார்த்திகா படிக்காமல் இருப்பதா?
திருப்பிக் கதை என மனது சொன்னது. வேண்டாம் என அறிவு சொன்னது.
மனது சொல்வதைக் கேட்பதா... அறிவு சொல்வதைக் கேட்பதா.. என்று போராட்டம் முடிய முதல்... கார்த்திகா பந்தை எடுத்துக் கொண்டு வெளியில் போகப் புறப்பட்டாள்.
"எங்கையடி போறாய்?” தங்கராஜன் முறுகினான்.
குழந்தை திகைத்து நின்றது. சிவமதியால் மேலும்
அடக்க முடியவில்லை.
"என்னிலை உள்ள கோபத்தை ஏன் பிள்ளையிடம் காட்டுறியள்"
"பொத்தடி வாயை...." என்றவன் மகளின் பக்கம் திரும்பி, போயிருந்து படியடி ......”
"ஸ்ரீனா கீழை எனக்காக.....” கார்த்திகா சொல்லி முடிக்கவில்லை, தங்கராஜன் பளார் என பிள்ளையின் கன்னத்தில் அறைந்தான்.
11

Page 14
கார்த்திகா போய் சோபாவின் கரையில் விழுந்தாள்.
இது இவர்தானா? இவருக்கு என்ன நடந்தது. சிவமதிக்கு எதுவுமே புரியவில்லை. "கொம்மா மாதிரி நீயும் வாய் காட்டத் தொடங்கீட்டாய். . .துலைச்சுப் போடுவன்”
கார்த்திகா நடுங்கினாள் - கடைவாயில் இருந்து இரத்தம் கொஞ்சம் கசிந்தது.
“என்ரை கோபத்தை ஏன் அவளிலை காட்டுறியள்?” சிவமதி பலத்துக் கத்தினாள்.
"ஏனடி இப்ப கத்துறாய். . . * என திரும்பியவனின் புறங்கை சிவமதியின் கன்னத்தை விளாசியது.
கார்த்திகா ஓடி வந்து தாயைக் கட்டிக் கொண்டாள்.
"வீட்டை இருக்கிற எண்டால் ஒழுங்காய் இருங்கோ. . . இல்லாட்டி எங்கையாலும் போய்த் துலையுங்கோ" என்றவாறு சேட்டைப் போட்டுக் கொண்டு வெளியே போய்விட்டான்.
ஒரு சின்னத் தீக்குச்சி. . .ஒரு சின்ன உரசல். .கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தங்கராஜனும் சிவமதியும் அன்று முழுக்க தூங்கவே இல்லை.
0 0 0
 

அடுத்தநாள் பின்நேரம் கார்த்திகாவின் வகுப்பாசிரியர், அந்த நகரசபையின் சமூகசேவை உத்தியோகஸ்தர் ஒருவர் கார்த்திகாவுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
கார்த்திகா முதன் நாள் வீட்டில் நடந்ததை தானாக சொல்லியிருக்க வேண்டும். அல்லது கடைவாயின் கண்டலைப் பார்த்து வகுப்பாசிரியர் கேட்டிருக்க வேண்டும்.
வீட்டுக்குள் வந்தவர்கள் சிவமதியின் கன்னத்தில் இருந்த கண்டலைப் பார்த்த பொழுது விக்கித்து நின்றார்கள்.
தங்கராஜன் தலையைக் குனிந்து கொண்டான்.
சிவமதி தங்கராஜனைக் காப்பாற்ற எவ்வளவோ கதைகளைச் சோடித்துப் பார்த்தாள் - எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
எதுவுமோ பிரயோசனப்படவில்லை.
கார்த்திகாவின் வார்த்தைகளைத்தான் அவர்கள் நம்பினார்கள்.
அதன் பின்பு என்ன?
ஒரு அரை மணித்தியாலமாக தங்கராஜனுக்கு ஆயிரம் புத்திமதிகள். அந்தப் புத்திமதிகளுக்குப் பின்னால் ஆயிரம் மிரட்டல்கள். உடலையோ அன்றில் மனத்தையோ. தாக்கும் எந்த வன்முறையையும் இந்த நாட்டில் பாவிக்க கூடாது என்பதுதான் தொனிப்பொருளாய் இருந்தது. அதை மீறினால் பிள்ளையை நகரசபை எடுத்துவிடும் என்ற மிரட்டல் இருந்தது.
சனியன் வீடு மாறுவதற்கும் நகரசபை வீட்டுக்குள் கால் வைப்பதற்கும் இங்கு பெரிய வித்தியாசம் இல்லை.
முதலாவதை எள் எண்ணை எரித்தும் விரதங்கள் இருந்தும் அகற்றலாம். ஆனால் மற்றதை அகற்றுவது மிகவும் கடினம். சோரம் போன மனைவியை கணவன் ஏற்றுக் கொண்டாலும், திருந்தி விட்டேன் என்று சொல்லும் இந்த கிழக்காசிய, ஆபிரிக்க நாட்டு ஆண்களை டென்மார்க் நம்புவதற்கு அதிக காலம் எடுக்கும்.
அவர்கள் போகும்வரை தங்கராஜன் தலை நிமிரவே இல்லை.
அவர்கள் போன பின்பு அவன் சிவமதியைப் பார்த்துக் கேட்டது,
"இப்ப் திருப்தி தானே. . .”
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 15
ஆனால்
சிவமதி
எதுவும் கதைக்கவில்லை.
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தவன், பின் என்ன நினைத்தானோ சேட்டை மாற்றிக் கொண்டு வெளியே போனான்.
போனவன் திரும்பி வந்த போது அவனில் ஒரு புது வாடை வீசியது.
நடையிலும் தள்ளாட்டம் இருந்தது. கெட்ட காலம் தொடங்கி விட்டது என சிவமதி மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள்.
பின்பென்ன?
கார்த்திகாவிற்கு பாடசாலையில் விசார ணைகள்..... வீட்டில் அவர்கள் வந்து சம்பாஷ ணைகள்..... பின் நகரசபையில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஆராய்வுகள்.. ... .. கூட்டங்கள்.... இடைக்கிடை நானும் மொழி பெயர்ப்பாளராக.
தங்கராஜன் தனக்குள்ளே ஒரு உலகத்தை வரிந்து கொண்டு... பிள்ளை படியாது போனதற்கு தனது தவறுகளுக்கு எல்லாம் சிவமதியே காரணம் என்று சொல்லிக் கொண்டும்... குடித்துக் கொண்டும்..... அடித்துக் கொண்டும்.... சிவமதியும் தனக்குள் புளுங்கிக் கொண்டும் ... அழுது கொண்டும். ....... சிவமதியின் பெற்றார்கள் இலங்கைக்கு திரும்ப முடியாமலும்... சிவமதி களவாக அனுப்பும் சின்னத் தொகை பணத்துடன் இந்தியாவில் நிம்மதியாக வாழமுடியாமலும். ... சிவமதிக்காக கோயில்களுக்கு விரதம் இருப்பதும்... சாத்திரம் கேட்பதும் என வாழ்க்கை தன் வழியில் ... விதியை நொந்தபடி.....
கார்த்திகாவும் தாயின் கெஞ்சல்களுக்கு இரங்கி பாடசாயிைல் பொய் சொல்லப் பழகியிருந்தாள் - எதுவும் வீட்டில் நடப்பதில்லை என்று.
உச்சி மரத்தில் இருக்கும் கழுகு எப்போ கோழிக்குஞ்சைத் தூக்குவோம் என்று பார்த்துக் கொண்டிருப்பது போல தங்கராஜனின் குடும்பத்தின் மீது குறிபார்த்துக் கொண்டிருந்த நகரசபையின் பக்கம் பலம்
கூடிக்கொண்டே வந்தது.
காலமும் கணனி வேகத்தில் ஓடிக் கொண்டு போக கைக்குழந்தையாய் இருந்த கண்ணன்பாலர் வகுப்புக்கு போன இரண்டாம் நாள் உச்சக் கட்ட நாடகம் நடந்தது. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

எல்லாப் பிள்ளைகளும் சாப்பாட்டு மேசையைச் சுற்றி இருந்திருக்கிறார்கள்.
எல்லோருக்கும் அருந்துவதற்காக தண்ணீரும் சோடாவும் யூசும் கொடுக்கப்பட்ட பொழுது, கண்ணன் தனக்கு முன்னால் பியர் போத்தல் கொண்டுவந்துவைக்கும்படி சொல்லியிருக்கிறான். அனைத்துப் பிள்ளைகளும் 'கொல்' எனச் சிரிக்க, முகம் சிவந்த அவன் முன்னால் இருந்த சோடாப் போத்தலை தூக்கி எறிந்திருக்கின்றான்.
முன்னே இருந்த பெண் டெனிஷ் பிள்ளையின் நெற்றி கண்டியது.
போதாததுக்கு இப்பிடித்தான் அப்பா அம்மாக்கும் அக்காக்கும் எறிகிறவர் எனச் சொல்லியிருக்கிறது குழந்தை.
இது போதுமே...... உச்சி மரத்தில் இருந்த கழுகு நேராக கீழே வந்து அவர்கள் வீட்டு நடுக்கூடத்தில்
அமர்ந்தது.
மிகுதி எதுவும் வெள்ளித் திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ரமணன்
அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவை அடையும் வரை என் மனம் முழுக்க தத்துவ விசாரணைகள் தான்.
தங்கராஜனில் பிழையா? சிவமதியில் பிழையா? வன்னியில் இருந்தால் தம் பிள்ளை யைப் பிடித்துக் கொண்டு போவார்கள் என்ற பயத்தில் கட்டிக் கொடுத்த மகளின் காசில் வாழ இந்தியாவுக்கு வந்த அவளின் பெற்றோர் களின் பிழையா? எது சரி?... எது பிழை?
எல்லாமே நாங்கள் போட்ட வேலிகள்.... காலத்திற்கு காலம் புதுக்கதியால்களை நாங்கள்தானே போடுகின்றோம். கிளுவை வேலி பூவரசு வேலியாகிறது ... வெங்காயம் போட்ட இடத்தில் புகையிலை போடுகின் றோம்...... அச்சுவேலியானின் நியாயங்கள் ஐரோப்பாவில் தோற்கிறது... ஐரோப்பாவின் அரசியல் அமெரிக்காவில் நசுங்கிப் போகிறது. எல்லாமே அரசியல்....... பொய்களை நியாயமாக்கும் அரசியல்... உண்மை உண்மை என்று கூறி பொய்களை விற்கும் அரசியல். தப்பித்து வாழ தன் மனைவியையே சோரம் போக வைக்கும் அரசியல். பாங்பலன்ஸ் மட்டும் வைத்து வாழ்வைத் தீர்மானிக்கும்
அரசியல்.
13

Page 16
இந்த சாக்கடைக்குள் சிவமதியின் குடும்பம் நசுங்கிப் போனதில் எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை.. அங்கும் கழுகுகள்.. இங்கும் கழுகுகள்.... அங்குள்ளவர்களின் சிரிப்பிலும் அழுகையிலும் தான் இங்குள்ளவர்களின் காலை சந்தோஷத்துடன் அல்லது துக்கத்துடன் விடிகிறது என அண்மையில் நான் தமிழ்ச்சங்கத்தில் பேசியது நினைவுக்கு வந்தது.
அவசரச் சிகிச்சைப் பிரிவு வாசலை முழுக்க எங்களின் சனம் நிறைத்திருந்தது.
பெரிய டாக்டர் வந்து ரமண்ணின் மனைவியையும் என்னையும் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
ரமணன் மயக்க நிலையில் இருந்தான். கணனித்திரை அவன் உயிருடன் இருக் கின்றான் எனக்காட்டிக்கொண்டு இருந்தது.
அடுத்து ரமணனுக்கு நடக்க இருப்பவை களை டாக்டர் விளக்கமாக சொல்லத் தொடங்கினார்.
நான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.
மொழிபெயர்ப்பு முடிந்த பொழுது ரமணனின் மனைவி தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு என்னையும் டாக்டரையும் இரண்டு
கைகளாலும் கும்பிட்டாள்.
வெளியே நான் வந்த பொழுது எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.
நான் சொன்ன தகவல் அவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும் - அவர்களின் முகங்களில் அது தெரிந்தது.
ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த பொழுது யாரோ தொடர்ந்து வருவது போல இருந்தது.
திரும்பிப் பார்த்தேன். "அண்ணா உங்களோடை
ஒருக்கா கதைக்க வேணும்”
ரமணனின் தங்கச்சியார். "சின்ன அடைப்பு எண்டாலும் டென்மார்க் அரசாங்கம் கொஞ்சக்காசு ஆவது கொடுக்கும் தானே... எங்கடை அண்ணைக்கு எவ்வளவு காசு குடுப்பினம் எண்டு சொன்னவை?"
"ஏன் கேக்கிறியள்...'' "இல்லை..... அண்ணி உண்மையை
14

சொல்லமாட்டா. . . தங்கடை ஆட்களுக்கு குடுத்துப் போடுவா... அண்ணைக்கும் 2 பொம்பிளைப் பிள்ளையள் இருக்குதுகள். ... 3ம் வகுப்பும், 5ம் வகுப்பு படிக்குதுகள்... அதுகளுக்கும் நாளைக்கு நாலு காசு தேவை தானே"
பெண் என்றும் பார்க்காமல் அவள் மீது காறித் துப்ப வேண்டும் போல் இருந்தது.
எனக்குள் எழுந்த கோபத்தை காரின் கியரிலும் பின் சக்கரங்களிலும் காட்டியபடி அங்கிருந்து புறப்பட்டேன்.
இவ்வளவு வேகமாக என்றும் நான் கார் ஓட்டியது இல்லை.
திடீரென மேகம் இருள்வது போல இருந்தது.
வானம் முழுவதையும் நிறைத்தபடி ஒரு கருடன்.
வட துருவத்தில் அதன் தலை. தென் துருவத்தில் கால்கள். கிழக்கும் மேற்குமாக அதன் விரிந்த இரண்டு இறகுகள்.
அந்த இறகுகளின் மேல் ஆண்களும் பெண்களுமாக ஆயிரம் ஆயிரம் சின்னப் பிள்ளைகள். சிலரின் கைகளில் துப்பாக்கிகள்.
கூரிய நகங்கள் கொண்ட அதன் ஒரு காலில் தங்கராஜனின் இரண்டு பிள்ளைகள் தொங்கியபடி.
மறுகாலில் ரமணின் இரண்டு பிள்ளைகள் போலத் தெரிகிறது.
நெஞ்சு பதைக்க பிறேக் போட்டு காரை வீதியின் ஓரத்தில் இழுத்து நிறுத்தி விட்டு மீண்டும் வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.
அங்கு எதையும் காணவில்லை. நான் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த கார்கள் என்னைத் திட்டியபடியும் நடுவிரலைத் தூக்கி காட்டியபடியும் போய்க் கொண்டு இருந்தார்கள்.
நான் தலையை குனிந்து கொண்டேன்.
மனத்தின் படபடப்பு கொஞ்சம் இறங்க மீண்டும் காரை ஸ்ராட் செய்தேன்.
ரமணனின் பிள்ளைகளுக்காக மனம் கடவுளை மன்றாடியது.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 17
1 தவத்திரு தனிநா - சாதித்தது என்ன.
தவத்திரு தனியாக அடிகள் 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஊர்காவற்றுறையில் பிறந்தார்." 1980ஆம் ஆண்டு பண்டத்தெருப்பிலுள்ள ஞான ஒழுக்க மடத்தில் தமது வாழ்வை முடித்துக் கொண்டார். அறுபத்தேழு வருடங்கள் இப்பூவுலகில் வாழ்ந்த அடிகளாரின் சாதனைகளைப் பற்றிய மதிப்பீடு இளந் தலைமுறையினருக்கு ஆன்மீக உணவாகவும், கல்விசார்பயிற்சியாகவும் விளங்குமென்பதில் ஐயமில்லை.
அடிகளாரின் தந்தை நாகநாதன் கணபதிப்பிள்ளை ஹென்றி ஸ்ரனிஸ்லாஸ் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆசிரியராகவும் தபாலதிபராகவும் பணியாற்றியவர். அடிகளாரைப் பெற் றெடுத்த சிசில் இராசம்மா கரம்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர். அடிகளாருக்கு பெற்றோரிட்ட பெயர் சேவியர். இவர் கத்தோலிக்க துறவியாகி இறைப்பணி செய்ய வேண்டுமென்பது சிசில் இராசம்மாவின் கனவு.
அடிகளார் தமது ஆரம்பக்கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆங்கிலப் பாடசாலையிலும், பின்னர் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் தொடர்ந்தார். புனித பத்திரிசியார் கல்லூரியில் தமது கட்டுக்கடங்கா அறிவுப் பசியையும் எழுத்தார்வத்தையும் வெளிப்படுத்தினார். அவருக்குக் கிடைத்த கல்லூரி சஞ்சிகை (Bottled Sunshine) ஆசிரியர் பதவி அவரின் எழுத்தாற்றலை வளர்க்க அரிய வாய்ப்பளித்தது. இந்தச் சஞ்சிகையில் 1928ம் ஆண்டு நவம்பர் மாதம் “My Favorite Hero In History - Napoleon'' என்ற கட்டுரையை எழுதினார். இதுவே அவருடைய நீண்ட எழுத்துப்பணியில் முதலாவது ஆக்கமாகவிருந்தது. இக்கட்டு ரையை எழுதிய பொழுது அவருக்கு வயது பதினைந்து. பள்ளிப்பருவத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் பல இயற்கையின் வனப்பையும் சிறப்பையும் விளக்கின. அடிகளார் தந்தை செல்வாவைப் போலவே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

யக அடிகள்
0000000000000000000000
விளையாட்டுத்துறையில் அதிக நாட்டங் கொள்ளவில்லை. தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல் என்னும் பாடங்களில் தங்கப்பதக்கம் பெற்ற அடிகளார், வாசிப்பதிலும், எழுதுவதிலும், பேசுவதிலும் தமது பள்ளிப் பருவத்தைக் கழித்தார்.
பள்ளிப்பருவம் முடிந்த பின்னர் தமது தாயாரின் கனவை நிறைவேற்ற முனைந்தார். முதலில் யாழ்.குருத்துவக் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு புனித பெர்னாட் இறையியற்கல்லூரியிலும் இறைப்பணிக்கான பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். 1934 ஆம் ஆண்டு உரோமாபுரியிலுள்ள புகழ் பூத்த இறையியற்கல்லூரியில் (CollegiodePropaganda Fide) சேர்ந்து கொண்டார் இக்கல்லூரியில் முதன் முதலாக அனுமதி பெற்ற இலங்கையர் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கல்லூரியிலேதான் அடிகளாரின் பன் மொழிப் புலமைக்கு அத்திவாரமிடப் பட்டது. எட்டு மொழிகளில் மிகுந்த பாண்டித்தியமுடையவராகவும் வேறு ஏழு மொழிகளில் பயிற்சியுடையவராகவும் வளர்ச்சிபெற்றார். இலத்தீன், எபிரேயம், இத்தாலியம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜேர்மன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏற்கெனவே விற்பன்னராகவிருந்தார்.
பெயர் மாற்றம்
1938ஆம் ஆண்டு
உரோமாபுரியில் குருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.
அதி.வண. கலாநிதி எஸ்.ஜெபநேசன் (முன்னாள் பேராயர் தென்னிந்திய திருச்சபை, வருகை விரிவுரையாளர் யாழ்.பல்கலைக்கழகம்)
15

Page 18
அப்பொழுதுான்
தமது
பெற்றோர் தமக்கிட்ட சேவியர் எனும் பெயருடன் தந்தைவழி மரபுப்பெயரான "தனிநாயகம்" என்பதனையும் இணைத்துக் கொண்டார். அன்று முதல் வண.பிதா தனிநாயகம் என்று உலகிற்கு அறிமுகமானார். அடிகளார் முதலில் இறைத்தொண்டுசெய்தவிடம் தூத்துக்குடிக்கு அருகாமையிலிருந்த வடக்கன் குளமாகும். இங்கு ஒரு கத்தோலிக்க பாடசாலையில் துணை அதிபராகப் பணியாற்றினார்.
அண்ணாமலைப்படிப்பும் "சுப்புவின் நட்பும் (1945 - 1948)
தென்னிந்தியாவிற் பணியாற்றிய காலத் தில் தமிழ் இலக்கியத்தினை ஆழ்ந்து கற்க வேண்டும் என்னும் ஆவல் அவருள்ளத்தில் உதித்தது. தமிழ்க்கல்வியின் தலைமை நிறுவனமாக விளங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் M.A, M.Litt நெறிகளைப் பின்பற்றி தமிழின் இனிமையையும் இலக்கியச் சிறப்பினையும் உணர்ந்து கொண்டார். இந்தப் பயிற்சியே தமிழைப் பற்றி அவர் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வேண்டிய துணிவையும் தன்னம்பிக்கையும் வழங்கிற்று.
அண்ணாமலையிலிருந்த காலத்திலே தான் அடிகளாருக்கு வி.ஐ. சுப்பிரமணியம் என்ற தமிழறிஞரின் தொடர்பு ஏற்பட்டது. மாணவப்பருவத்திலே ஏற்பட்ட நட்பு மரணபரியந்தம் தொடர்ந்தது. அடிகளார் தமது நண்பரை "சுப்பு" என்றே பாசத்துடன் அழைத்தார். தென்னிந்திய பணிக்குப் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்து கல்வித்துறை விரிவுரையாளராக ஒன்பது வருடங்களும் (1952 - 1961) பின்னர் மலேயா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய இயல் என்ற துறையின் தலைவராக எட்டு வருடங்களும் (1961 - 1969) சேவை யாற்றினார்.
சர்வதேச தமிழ் ஆய்வுலகின் மையப்புள்ளி
பேராசிரியர் கா.சிவத்தம்பி அடிகளாரைப் பற்றி எழுதிய கட்டுரையொன்றில் அவரை சர்வதேச தமிழ் ஆய்வுலகின் மையப்புள்ளி என்று குறிப்பிட்டார். பேராயர் சபாபதி குலேந்திரன் தவத்திரு தனிநாயக அடிகள் தமிழை உலகின் வரைபடத்தில் குறியிட்டு வைத்தார் என்றெழுதினார். (He put Tamil on the Worldmap)" தவத்திரு தனிநாயக அடிகள் இந்தச் சிறப்பினைப் பெறுவதற்கு பல காரணிகள் துணைநின்றன. அவர் கட்டளைக்குருமார் என்ற ஓர் அணியைச் சாராமல் தனிப்பட்ட துறவியாகச் சமயப்பணியாற்றினார். (Secular
16

Priest) இதனால் தமிழ்த்தூதாக பல நாடு களுக்கும் சென்று நற்பணியாற்ற ஓரளவு சுயாதீனம் கிடைத்தது. இரண்டாவதாக அவர் ஒரு பன்மொழிப் புலவராகவும் விளங்கியமை இவ்வாறான பணியில் ஈடுபடவும் பிறநாட்டு நல்லறிஞர்களை அரவணைத்துச் செல்லவும். வசதியாகவிருந்தது. மூன்றாவதாக அவருடைய இனிமையான சுபாவமும் புறங்கூறாமையும் அவருக்கு ஒரு சக்திவாய்ந்த நல்லறிஞர்கூட்டம் பக்கபலமாகவிருக்கத் துணை புரிந்தன.
அகில உலக கீழ்த்திசை மகாநாடு புதுடில்லி 1964
தவத்திரு தனிநாயக அடிகளின் வாழ்வில் இந்த மகாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறின் தவறாகாது. ஏறத்தாழ இரண்டாயிரம் பேராளர்கள் இந்த மகாநாட்டிற் கலந்து கொண்டனர். இதில் பேச்சுக்களும் கட்டுரைகளும் உரையாடல் களும் வட இந்திய நாகரிகம், சமஸ்கிருதம், வட இந்திய இதிகாசங்கள், கங்கை சமவெளி என்பன பற்றியதாகவேயிருந்தன. தென்னாடு பற்றியும், திராவிடம் பற்றியும் சில மேனாட்டு அறிஞர்கள் முன்னர் எழுதியிருந்தாலும் இந்தியாவென்றால் வடநாடு என்ற எண்ணமே மேனாட்டு அறிஞர்கள் மத்தியில் மேலோங்கி நின்றது. அடிகளார் இந்த நிலை மாற வேண்டுமென முடிவு செய்தார். தமது ஆப்த நண்பனாகிய வி.ஐ. சுப்பிரமணியத்திடம் பின்வருமாறு கூறினார்.
''சுப்பு நாம் தமிழுக்கென உலக மகாநாடு ஒன்று நடத்த முயல வேண்டாமா? அதற்குரிய கூட்டம் ஒன்றைக் கூட்டி ஒரு நிறுவனம் அமைக்க வேண்டாமா" என்றார்.
இந்த உரையாடலுடன் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகியது. இந்த நிறுவனத்தின் மகாநாடுகள் மிகச் சிறப்பாக உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றன. கோலாம்பூர் (1966), சென்னை (1968), பாரீஸ் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981) துரதிஷ்டவசமாக மதுரை மகாநாட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர் அடிகளார் தம் வாழ்வை முடித்துக் கொண்டார். கோலாம்பூர் மகாநாட்டிற் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மு.திருச்செல்வம் அங்கு கண்ட காட்சியொன்றைக் கூறி மகிழ்ந்தார். "பல்வேறு மொழி பேசும் பேராளர்கள் மகாநாட்டிற்கு வந்தார்கள். அடிகளார் அவர்களையெல்லாம் விமான நிலையத்தில் அவரவர் மொழிகளில் வரவேற்று விடுதிகளுக்கு அழைத்துச் சென்றமை கண்டு பெருமிதமடைந்தேன்".
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 19
பேராசிரியர்அ.சண்முகதாஸ்1970ஆம் ஆண்டு பாரீஸ் மகாநாட்டிற் கலந்து கொண்டவர். அம்மகாநாட்டில் தவத்திரு தனிநாயக அடிகள் தூய்மையானபிரெஞ்சுமொழியில்கம்பீரமாக ஆற்றிய உரை பலரை ஆச்சரியப்பட வைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கியத்தின் சிறப்பு
அடிகளார் சங்க கால இலக்கியத்தின் மீதும் வாழ்வியல் மீதும் பேரன்பு பூண்டவர். சங்ககாலம் தமிழ் மக்களின் பொற்காலமன்று, அதுபோரும், அழிவும், வறுமையும் ஏமாற்றும் நிறைந்த காலமெனச் சிலர் வாதிடுவர்.பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. இந்திய பத்திரிகை ஆசிரியர் வலம்புரி ஜோன், லெய்டன் பல்கலைக்கழகத்து தமிழ்ப் பேராசிரியர் ஹேர்மன்ரிக்கன் ஆகியோர் இந்த வகையிற் குறிப்பிடத்தக்கவர்கள். தவத்திரு தனிநாயகம் அடிகள் சங்க இலக்கியம் என்னும் கடலில் மூழ்கி அதிலிருந்த முத்துக்கள் வெளியே கொண்டு வந்து காட்டியவர். சங்க காலத்தில், வாழ்க்கை மறுப்போ வாழ்க்கை வெறுப்போ கிடையா. இனியது இனியது உலகம் என்ற நம்பிக்கையுடன் LD535Git GITyppö3560Tir (Life affirmation) Fiii 55 காலத்தில் கடவுளர் இருந்தனர் சமயங்கள் இருக்கவில்லை. இயற்கையை இரசித்த சங்க கால மக்கள் மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்ந்தனர். சங்க காலத்தில் கொண்ட ஈடுபாட்டினாலேதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து எம்.லிட் பட்டத்திற்கு "Nature in Ancient Tamil Poetry” GTGirg/lib பொருளிலும் லண்டன் பல்கலைக்கழகத்து 356UITs5735) Lul "L-5,5)gb(5 Educational Thought in Ancient Tamil Literature GTGörggyLib Gol unTQU56f6Jub ஆய்வுரைகளை எழுதினார். சங்ககால காதல் ஒழுக்கம் தூய்மையானது. கைக்கிளையும் பெருந்திணையும் பிறசேர்க்கை என்பது அவரின் கருத்து."
தமிழ் கலாசாரம் பற்றிய ஆங்கில இதழ்
அடிகளாரின் சாதனைகளில் குறிப்பிடத் தக்கதின்னொன்று அவர் பதிப்பித்த Tamil Culture என்னும் ஆங்கில சஞ்சிகையாகும். இப்பத்திரிகையை அடிகளார் 1952இல் ஆரம்பித்தார். இது 1966 ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. இந்த அரையாண்டு மலரில் சுவாமி விபுலானந்தர், மு.வ, பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர் இரா. பி.சேதுப்பிள்ளை, டி.கே.சி பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் முதலிய தமிழ்ச் சுடர் மணிகள் கட்டுரைகளை ஆங்கிலத்தில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

எழுதியுள்ளனர். பத்திரிகை ஆசிரியரான தவத்திரு தனிநாயக அடிகள் 24 கட்டுரைகளை எழுதியுள்ளார். 1966 ம் ஆண்டிற்குப் பின்னர் இதனைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆனால்இக்குறையைநிவிர்த்திசெய்யுமுகமாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், தமிழியல் LDGuir (Journal of Tamil Studies) 6Tarp 69Cl5 சஞ்சிகையை அடிகளாரின் நெறியாள்கையில் ஆரம்பித்தது. இந்த இதழில் அவர் கடைசியாக எழுதிய கட்டுரையில் பாணினி இலக்கணத்தை விட தொல்காப்பியம் எளிமையானதும் பரவலானதுமாகும் என்பது அறிஞர் முடிவு என்று குறிப்பிட் டுள்ளார்." அடிகளார் நடாத்திய மகாநாடு களினாலும் சஞ்சிகைகளினாலும் இன்று தமிழ் பல ஐரோப்பிய, அமெரிக்க பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படுகின்றது.
முதன்முதலில் அச்சு வாகனமேறிய தமிழ் நூல் களைக் கண்டு பிழத்தல்
அடிகளார் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்குள்ள பல்கலைக்கழகங்களிலும் நூல் நிலையங்களிலும் தமிழ் நூல்களையும் தமிழ் பற்றிய நூல்களையும் தேடிக்கண்டு பிடித்து பேரானந்தமடைந்தார். பதினா றாம் பதினேழாம் நூற்றாண்டுகளில் அச்சு வாகனமேறிய, தமிழ்மொழி இலக்கணக் கலை, கார்த்தில்யா (Cartilha) சுவிசேஷ விரித்துரை, தமிழ் - போர்த்துக்கேசிய அகராதி என்பனவற்றை ஐரோப்பிய நூல்நிலையங்களிலும் அருங்காட்சி சாலை களிலும் கண்டு பிடித்தார். இவ்வாறாக அவர் கண்டுபிடித்த நூல்களில் மூன்று தமிழ் உரைநடை வரலாற்று ஆசிரியர்களினால் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன தம்பிரான் வணக்கம் : இது 1578ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதனை ஹென்றி ஹென்றிக்கஸ் என்னும் தொண்டரும் புனித பேதுருவின் மனுவேல் அடிகளாரும் இணைந்து எழுதினர். கிரிசித்தியானி GuGOOTě535Lib : g35GODGOT Doctrina Christam Marcos Jorge என்பவர் 1599இல் பதிப்பித்தார். அடியார் வரலாறு அல்லது திருத்தொண்டர் g(5LDGvir: (Flos Sanctorum) ஹென்றி ஹென்றிக்கஸ் எழுதிய இந்நூல் 1586இல் பதிப்பிக்கப்பட்டது. இப்பொழுதுவத்திக்கன் நூல்நிலையத்திலுள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளில் தமிழின்
செல்வாக்கினை கண்டுபிழத்தல்
சங்ககாலத்திலிருந்து தமிழ் நாட்டு
வணிகர்கள் தென்கிழக்காசிய நாடுகளுடன்
17

Page 20
வர்த்தகம் செய்து வந்தனர். சோழர்காலத்தில் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றை வெற்றி கொண்டு ஆட்சிபுரிந்தனர். அங்கு நின்று நிலைத்த தமிழ்ச் சின்னங்களையும் இலக்கிய புதையல்களையும் தேடிக் கண்டுபிடிப்பதில் அடிகளார் மிகுந்த ஆர்வமுடையவராய் விளங்கினார். சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பயணங்கள் மேற்கொண்ட பொழுது தமிழியற் கோலங்களைக் கண்டு அகமகிழ்ந்தார். தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்கள் இசைக்கப் படுவதனைக் கண்டு கொண்டார். வியட் நாமிலுள்ள தமிழர் கட்டடக்கலை, இந்தோனீசிய மொழியில் காணப்படும் தமிழ்ச்சொற்கள் என்பன பற்றி "ஒன்றே உலகம்" என்ற நூலில் எழுதியுள்ளார்.
தமிழ்மொழியின் பாதுகாவலன்
அடிகளாரின் தமிழ்ப்புலமை வெறும் கல்விசார் ஆர்வமாக இருந்துவிடவில்லை. இலங்கையில் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட ஆபத்துக்களைக் குறித்து மெய்யாகவே மனங்கலங்கினார். தமிழரசுக்கட்சியார் 1956இல் காலிமுகத்திடலிலும் 1961இல் நாட்டின் பல்வேறு செயலகங்களுக்கு முன்பாகவும் நடாத்திய சத்தியாக்கிரங்களுக்கு சமூகமளித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினார். இலங்கையில் கனடாவைப் போல் இரு மொழிக் கொள்கை அமுலாக்கப்படல் வேண்டுமென பிரதமர் எஸ்டபிள்யூ.ஆரடி பண்டாரநாயக்காவுக்கு எடுத்துரைத்தார். அதற்குத் திரு பண்டாரநாயக்கா "இது வாள்வீச்சினால் தீர்க்கப்பட வேண்டிய விஷயம் என்று சினந்தார். இவருடைய அரசியல் செயற்பாடுகளினால் இந்தியாவிலும் இலங்கையிலும் காவல் துறையினர் இவரைப்பின் தொடர்ந்தனர். அவருடைய கடிதங்கள் திறக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன.
தவத்திரு தனிநாயக அடிகள் சோர்ந்து போகவில்லை. பாரதிதாசனைப் போல் தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற மனவுறுதியுடன் தமிழ்த்தாயின் கண்ணீர் துடைக்க முன்வந்தார்.
சான்றோன்
அடிகளார் தமிழ்க்காதலராக விளங் கியவர். அத்துடன் தமிழர் சால்பின் மொத்த உருவாகவும் வாழ்ந்து காட்டியவர். அவருடன் பணியாற்றிய பலரும் அவருடைய நற்பண்புகளை விதந்து போற்றினர். அவருடைய சால்பிற்கு குருத்துவப்பயிற்சி
18

மட்டுமன்றி சங்க இலக்கியம் விளக்கிய மனிதநேயமும், குறள் எடுத்தியம்பிய வாய்மையும் காரணமாக அமைந்தன. மறந்தும் ஒருவரின் குறைகளைப் பற்றிப் பேசமாட்டார். அடிகளாருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரின் உள்ளக் கிடக்கையை யாருமே அறிய முடியாது என்று கூறுவர். யாழ்ப்பாணத்தில் அடிகளாரின் சகோதரியின் வீட்டுக்கு முன்னால் சிலகாலம் குடியிருந்தேன். அப்பொழுதுதான் அடிகளாரை அடிக்கடி சந்திக்க வாய்ப்புக் கிட்டியது. சென்னை தமிழாராய்ச்சி மகாநாட்டிற்கு முன்னர் கலைஞர் மு.க.விற்கும் அவருக்குமிடையில் சிறிது மனக்கசப்பு இருந்ததனை அறிந்தேன். கலைஞர் சிறப்பாக மகாநாட்டை நடத்துவாரா? என்று கேட்டேன். "அவர் மிகவும் கெட்டிக்காரர் சிறப்பாக நடத்தி முடிப்பார்" என்று கூறினார். அடிகளார் தமது புகழின் உச்சக்கட்டத்தில் இருந்தபொழுது சிலர் அவரைத் தூற்றி எழுதினர் அவர்களில் ஒருவர் "தினபதி" ஆசிரியர் எஸ்.டி சிவநாயகம். ஞா.தேவநேயப்பாவணர் தாம் எழுதிய 'தமிழர் வரலாறு" என்ற நூலில் அடிகளாரைக் கடுமையாகத்தாக்கி எழுதினார். "வணிகப் புலவரும் தமிழறியாதவருமே திருத் தனிநாயகத்தின் துணைவர்" என்று குறிப்பிட்டார். ஆனால் அடிகளார் தேவநேயப் பாவாணரைப்பற்றி குறை கூறவில்லை. உண்மை ஒருநாள் வெளியாகும் என்று அமைதி காத்தார். வள்ளுவர் சுட்டிய சான்றோனாக அடிகளார் வாழ்ந்தமையினால் பல்லின மக்களும் தமிழ் மொழி மீதும் தமிழ்ச் சமுதாயம் மீதும் நன்மதிப்புக் கொண்டனர்.
அறிஞர்கள் மத்தியில் முனிவராய் வாழ்ந்த தனிநாயக அடிகள் இன்று கண்ணுக்கெட்டா கருத்தொளியில் மறைந்துவிட்டார். மறைந் தாரன்றி முடிந்தாரல்லர். "தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை. தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ? என்றார் பாரதிதாசன். அடிக்குறிப்புக்கள் [1] Rajan Philipupillai - A Biographical Sketch Tamil aram, Jaffna 1983. Page 2. [2] Ibid Page 97. [3] சிவத்தம்பி கா: ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள். குமரன் புத்தக இல்லம் பக்கம் 194. [4] குலேந்திரன் பேராயர் சபாபதி Tamilaram Page 61. [5] அமுதன் அடிகள் : தனிநாயகம் அடிகளார் (உல கத் தமிழாராய்ச்சி நிறுவனம்) 1992 - பக்கம் XII [6] மேலது பக்கம் 114 [7] மேலது பக்கம். [8] அரியநாயகம் புலவர் A.W தனிநாயக அடிகளின் ஒன்றே உலகம் தமிழ்த்தூது ஐந்தாம் பதிப்பு 2001 பக் 102. [9] Wilson A.J. The dedicate Patriotism of Father Thaninayagam. Tamilaram Page 84.
0 0 0 ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 21
தமிழ்ப் பேரறிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள் அவ்வப்போது தோன்றி மறைகின்றனர். ஆனால், அவர்களுள், ஒருசிலரையே , மக்கள் என்றென்றும் போற்றிவருகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் முறையே, தம் அறிவாலும் தொண்டாலும் பெற்ற தனிச்சிறப்பேயாகும். தனிநாயக அடிகளாரை, நாம் இன்றும் போற்றுகின்றோம் என்றால், அவருக்கு, நூற்றாண்டுவிழா எடுக்கின்றோம் என்றால் அதற்குக் காரணம், அவர், தம் அளப்பரிய தமிழ்த் தொண்டால் பெற்ற தனிச்சிறப்பேயாகும். தமிழ்த் தொண்டு என்று கருதும் போது, தனிநாயக அடிகளார் தனிநாயகமாகவே திகழ்கின்றார். இதுகுறித்து, மாற்றுக்கருத்து இல்லை எனலாம். தமிழ்த் தொண்டில், அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்றால், அது அர்த்தமுள்ள கூற்றாகவே அமையும்.
தனிநாயக அழகா
தனிச்சிறப்பு
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று பாரதியார் பாடிச் சென்றார். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்டகாலம் யாரும் முன்வரவில்லை. அது, எளிதான காரியமன்று. அதற்குத் தகுந்த அறிவும் ஆற்றலும் வேண்டும். தனிநாயக அடிகளார் அதனைச் செய்ய முற்பட்டு, வெற்றிகண்டார்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2012

என்று, இன்று பலரும் அவரைப் போற்றும் பொழுது, நாம் பெருமிதப்படுகின்றோம். அடிகளார், தமது இளமைக் காலத்தில் தமிழார்வமின்றி, ஆங்கிலத்தையே போற்றிக் கற்றுவந்தார். ஆங்கிலத்தில் திறம்படப் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் சிறந்த ஆற்றல் பெற்றார். இவ்வாற்றல், அடிகளாரின் பிற்காலத் தமிழ்த் தொண்டிற்குப் பெரிதும் உதவியது. தமிழார்வமின்றி வளர்ந்த அடிகளார், ரோமாபுரியில் மதக்கல்வி பயிலுங்காலத்தில்தான் (1934 - 39), சூழல் காரணமாகத் தமிழார்வங் கொண்டார் என அறிகின்றோம். தமிழ் பற்றிப் பிறருக்குக் கூறவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு
பெற்றார், தமிழ்த் தொடுமின்றி
28
திரும்ப தர் ஒருத்தொன்
அன்றே தோன்றியிருக்கலாம். தமிழ் பற்றித் தெரியாத நிலையில், தமிழைக் கற்கும் விருப்புடன் இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் - வயது வந்ததற்குப் பின் - பண்டிதர் ஒருவரிடம் தமிழ் பயின்றார். இது, அவரது தமிழ்த்தொண்டின் அடித்தளம். அப்பொழுதே அவர் தமிழ்த்தொண்டை ஒரு "மிஷன்” ஆகக் கொண்டுவிட்டார். தமிழ் இலக்கியங்களைக் கற்குந்தோறும் சுவைகண்ட அடிகளார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாகத் தமிழ்கற்று, ஆராயவிரும்பினார். தமிழில் எவ்விதமான பல்கலைக்கழகப் படிப்பும் இல்லாத அடிகளாரை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் விதிவிலக்காகச் சேர்த்துக் கொண்டது. இது, அடிகளாருக்கு ஓர் அரியவாய்ப்பு.
பராசிரியர் சு.சுசீந்திரராஜா
19

Page 22
அக்காலத்தில், தமிழ்க்கல்வி, ஆய்வு என்றால், அண்ணாமலைப் பல்கலைக்கழகமே சிறந்த இடம். அங்கு, அடிகளார் தெ.பொ. மீனாட்சிசுந்தரன் முதலானோரிடம் கற்று, ஏ.சிதம்பரநாதன் செட்டியாரின் மேற் பார்வையில் ஆராய்ந்து, இலக்கியம், கலை, சமயம், பண்பாடு என்பன பற்றி நன்கு அறிந்து, அவைபற்றிப் பிறநாட்டவர்க்கு எடுத்து விளக்கும் தகுதியையும் ஆற்றலையும் பெற்றார். அன்றிருந்து, கருமமே கண்ணாகச் செயற்பட்டார். உலகநாடுகள் மிகப் பலவற்றிற்குச் சென்று, தமிழியல் பற்றி ஆங்கிலத்திலும், தாம் அறிந்த ஏனைய மேலைநாட்டு மொழிகளிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இதனை அனைவரும் அறிந்து, “தமிழ்த்தூது தனிநாயகம்" என்று பேச ஆரம்பித்தனர். இச்சிறப்பை, வேறுயாரும் பெற்றிலர். எனவே, தமிழை உலகமெங்கும் குறிப்பிட்டவாறு கொண்டுசென்றமை அடிகளாரின் தனிச் சிறப்பாகும்.
உலகளாவியரீதியில் தமிழுக்கு ஆய்விதழ் எதுவும் அடிகளார் காலம் வரை வெளிவந்ததில்லை. இது, ஒரு பெருங்குறையாகவே இருந்துவந்தது. தமிழை வளர்ப்பதற்கும், பரப்புவதற்கும், ஓர் ஆய்விதழின் இன்றியமையாத் தேவையை அடிகளார் உணர்ந்தார். "தமிழ் கல்சர்" (Tamil Culture) என்ற பெயர் கொண்ட ஆங்கில முத்திங்கள் இதழ் ஒன்றினை அடிகளார் தூத்துக்குடியிலிருந்து (1952) வெளியிட ஆரம்பித்தார். அதற்கு, தாமே முதன்மை ஆசிரியராக இருந்து செயற்பட்டார். உலகநாடுகளில் தமிழார்வங் கொண்டிருந்தவர்கள் அவ்விதழைப் போற்றி வரவேற்றனர். அதனில், பன்னாட்டு அறிஞர்களின் தமிழியல் பற்றிய கட்டுரைகள் வெளிவரவேண்டும் என்றும், ஆங்கிலம் அறியாத தமிழறிஞர்க்கும் வாய்ப்பளிக்கவேண்டும் என்றும், தமிழை ஆய்வுமொழியாகவும் வளர்க்கவேண்டும் என்றும் அடிகளார் விரும்பினார். சற்றுப் பிற்காலத்தில், அவ்விதழில் ஒருசில கட்டுரைகள் தமிழிலும் வெளிவந்துகொண்டிருந்தன. இவ்விதழில் வெளிவந்த கட்டுரைகள் தரம் வாய்ந்தவை. தரத்தை நிறுவுவதற்கு அடிகளாரே பொறுப்பாக இருந்தார். உள்நாட்டு அறிஞர்களும் வெளிநாட்டறிஞர்களும் இவ்விதழைத் தத்தம் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டனர். "தமிழ் கல்சர்” 20

நீண்டகாலம் வெளிவந்து கொண்டிருந்தது. அது, செயற்கரியதைச் செய்த தனிநாயக அடிகளாருக்குத் தனிச்சிறப்பை ஏற்படுத்தியது.
அடிகளார், தமக்குப் பல்கலைக் கழகங்களில் பணியாற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பையும் தமிழ்த் தொண்டாற்றுவதற்குப் பயன்படுத்தினார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் துறையில் விரிவுரை யாளராக நியமனம் பெற்று, தம் கலாநிதிப் பட்டத்திற்காக இலண்டன் சென்றபோது (1955 - 57) "பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள்" என்னும் பொருள் குறித்தே ஆய்வு செய்தார். தமிழர், பண்டுகொண்டிருந்த கல்விச் சிந்தனையைத் தாம் அறிவதற்கும், உலகிற்கு எடுத்துக் கூறுவதற்குமே இப்பொருள் குறித்து ஆராய்ந்தார். தமிழர் நாகரிகம் மிகப் பழமை வாய்ந்ததன்றோ! அடிகளார். தமக்கு மலேசியாப் பல்கலைக்கழகத்தில், இந்திய இயற்துறையில் 1961 ஆம் ஆண்டு தொடக்கம் 1969 ஆம் ஆண்டுவரை பேராசிரியராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பையும் தமிழ்த் தொண்டாற்றுவதற்குப் பயன்படுத்தினார். அவர், தமிழ்த் தொண்டில் ஊறிவிட்டார். யாழ்ப்பாணத்தில், பரமேசுவரக் கல்லூரி யில் 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் விழாவில், அடிகளார், தாம் "சங்க இலக் கத்தியத்தின் சிறப்பியல்பு" என்னும் பொருள் குறித்து ஆற்றிய உரையின் இறுதியில்,
என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே. என்று கூறியதை மறந்திலம்.
மலேசியாப்பல்கலைக்கழகத்திலும், அச்சிந் தனையுடனேயே பணியாற்றினார் என்றால், மிகை யாகாது. அப் பல்கலைக்கழகத்தில். இந்திய இயற்துறை விரிவடைந்து, தமிழியல் துறை போலவே தோற்றமளித்தது. இன்று பெருகிவரும் தமிழியல் சிந்தனைக்கு, அடிகளார், அன்று ஊற்றாக அமைந்தார். இவற்றையெல்லாம், அடிகளாரின் சிறப்பாகக் கொள்ளுதல் வேண்டும்.
தனிநாயக அடிகளாருக்கு முற்பட்ட காலத்தில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என எதுவும் இருக்கவில்லை, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என, எதுவும் நடைபெற்றதில்லை. இவை பற்றிய சிந்தனை அடிகளாரின் பரந்த, முதிர்ந்த அனுபவத்தில் முகிழ்த்தது. மன்றம் அமைப்பது குறித்து, அடிகளாருக்கு வி.அய் சுப்பிரமணியம் துணை நின்றார் பேராசிரியர்கள் பிலியோசா, தொமஸ்பரோ, குய்ப்பர், ஆஷர் போன்ற வெளிநாட்டு அறிஞர்களும் ஆர்வம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 23
கொண்டனர். மன்றம் நன்கு அமைந்தது. பொதுச் செயலாளர் இருவருள், அடிகளார் ஒருவர். இம்மன்றம் மூலம், மலேசியாப் பல்கலைக்கழக வளாகத்தில், உலகத் தமிழாராய்ச்சிமாநாடொன்றை நடத்துவதற்கு அடிகளார் துணிந்தார், பலர் உதவினர். மாநாடு வெகுசிறப்பாக நடைபெற்றது. இருபத்தொரு நாடுகளிலிருந்து அறிஞர்கள் தமிழ் சம்பந்தமாக வெவ்வேறு பொருளில் ஆய்வுக்கட்டுரைகள் படித்தனர். கட்டுரைகள், இருபெரும் தொகுதிகளாக வெளிவந்தன. கோலாலம்பூரில், மாநாட்டுச் செயற்பாடுகள் அனைத்தையும் அடிகளாரே, ஏனையோரின் உதவியுடன், தாங்கிநின்று செய்துமுடித்தார். மாநாடு, தொடர்ந்து சென்னை, பரிஸ், யாழ்ப்பாணம், மதுரை ஆகிய இடங்களில், வெவ்வேறு காலங்களில் இடம்பெற்றன. ஆராய்ச்சிமன்றமும் மாநாடுகளும் அடிகளாரின் அரும் பெரும் சாதனைகள். அவை, அவரது தனிப் பெரும் சிறப்பாக அமைபவை.
இருபதாம் நூற்றாண்டில், தலை சிறந்த தமிழ்ப் பேரறிஞர்களாக விளங்கிய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனும்
நித்திரையே வாராத நீண்ட கோடை
நித்திரையே வாராத நீள் இரவின் நதியினில் 1 பத்தரை மாத்தாள் எனப் பல் மக்கள் புகழ்ந் பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகு
எத்தனையோ எண்ணங்கள் எனது நுனி மன
நத்தைகள்போல் நெளிந்து நித்திரையை அணி புத்தியையும் புண் ஆக்கி, செல்லும் வேகமு
சத்தியமும் சபலமும் சாக்கடையின் சேறையு மெத்தையிலே நீர்ஊற்றாய் மேனி தனைக் குளி எத்தையுமே நிரல் போட்டு எத்தனிக்கும் அ6
முத்துமுத்தாய் முன்னாளில் கவி புனைந்த எ குத்திக் குடைவதனால் குழப்பத்துக்கு உருச் கத்திக் கதற வைத்துப் பல கலவரங்கள் உண
சத்தம் இல்லா இரவினிலே சலசலப்பால் நிை செத்து ஒழிந்த நாட்களுக்கு நான் செல்லாம6 உத்தி ஒன்றும் தோன்றாது உருளுறேன், தீச்
கோபன் மகாதேவா சனி, 20-07-2013
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

பேராசிரியர்மு.வரதராசனும், மற்றும் பேராசிரியர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார் பேராசிரியர் மொ.அ.துரை அரங்கசாமி ஆகியோரும், பேராசிரியர் தனிநாயக அடிகளாருக்கு வழங்கிய கெளரவத்தை யான் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக ஆய்வாளனாக விரிவுரையாளனாக இருந்த காலங்களில் (1961 - 67), அவ்வப்போது, நேரில் கண்டு வியந்துள்ளேன். அன்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பல இடங்களிலிருந்து தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், வெவ்வேறு நிகழ்வுகளின் பொருட்டு வந்துசெல்வதுண்டு. அடிகளார், அங்கு அடிக்கடி வந்தபோதெல்லாம், அவருடன் நன்குபழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை குறித்துப் பெருமைப் படுகின்றேன். மொழியியல் ஆய்வில், அவர் என்னை ஊக்கப்படுத்தியமைக்கு என்றென்றும் நன்றியுணர்வுடன் உள்ளேன். அடிகளார் போன்றவர், வருங்காலத்திலும் தோன்றி, தமிழ்த்தொண்டாற்றுவராக!
O O O
- நாட்கள்
நீந்துகிறேன். து சொன்ன து, இன்று.
ாக் குகையில் த்து உண்டு ம் அடக்கிச்
ம் கலந்து ப்ெபாட்டி தை நிறுத்தி
ன் மனசைக்
க் கொடுத்து ன்டு செய்து
ஹற குலைத்து ல் முன் போக SiLifso
21

Page 24
கூடி ஆடும் ந இந்த தனி ஒரு பென பல தமிழகக் கோயில் கூறும் நாட்டிய நாடச மேழ நாடகம், தெலு அத்தனையும் பரதநா நாடக வகைகளே.
இன்றைய நடைமு தேவதாசிகளால் கே பாடியாடிய ஆடலின் பரதநாட்டியம் எனும் அ தாளலயத்துடன் கூடி அத்துடன் இணைந்த இருந்துவிட்டாலும் ந
22
 

ஞானம் : முதலில் பரதநாட்டியக்கலை பற்றிய ரு சிறு அறிமுகத்தை எமது வாசகர்களுக்குத் ாருங்கள்.
கார்த்திகா: பரத நாட்டியம் என இன்று வழங்குவதுதமிழகக்கோயில்களில்பெண்களால் ஆடப்பட்டு வந்த கலை வடிவமே. பரதரின் நாட்டிய ஸாஸ்த்திரத்திலே பலர் கூடி ஆடும் நாட்டிய நாடகங்களையே காண்கிறோம். பலர் ாட்டிய நாடகங்களில் இருந்து பரிணமித்ததே ன் ஆடும் பரதநாட்டியம். இன்றும் பரவலாக ஸ்களிலே நாட்டிய நாடகங்கள், கூத்தாக கதை 5ங்கள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. பகவத ங்கு தேசத்து கூச்சிப்புடி, தமிழக தெருக்கூத்து ட்டிய ஸாஸ்திரத்தை அடியொற்றிய நாட்டிய
Dறையில் பரதநாட்டியம் என வழங்கப்படுவது ாயில் கிரிகைகளிலும் மற்றும் இறைபுகழ் ல் இருந்து பரிணமித்த ஆடல் வகையே. ஆடல்பலகலைகளைத்தன்னுள்ளே கொண்டது. .ய இசையும் அர்த்தம் பொதிந்த பாடலும் நடிப்பும் பரதத்தின் உயிர்நாடி. அத்தனையும் ாட்டியம் உயிர்பெறாது. அவற்றை உணர்ந்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 25
தன்னை முழுமையாக அர்ப்பணித்து நர்த்தகி ஆடும்பொழுதுதான் நாட்டியம் சோபிக்கும்.
ஞானம்: பரதநாட்டியம் எக்கால கட்டத்தில் தோற்றம்பெற்று இன்றைய வளர்ச்சியை அடைந்துள்ளது?
கார்த்திகா: பல நூறு ஆண்டுகளாக எமது முன்னோர் எமக்கு அளித்த செல்வமே இந்த ஆடல், இன்றும், எம்மிடையே உயிரோட்டமுள்ள கலையாக உள்ளது. இதன் பாரம்பரியம் கி.பி.2ஆம்நூற்றாண்டில் இருந்து 4ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படும் நாட்டிய ஸாஸ்திரத்தின் பரிணாமமே.
ஞானம்: பரதரின் நாட்டிய ஸாஸ்த்திரத்திலே இந்த ஆடற்கலையின் நோக்கம்பற்றி பரதர் என்ன கூறியுள்ளார்?
கார்த்திகா: இன்பமும் துன்பமும் மகிழ்வும் துக்கமும் கலந்த இவ்வுலகத் தன்மை அத்தனையையும், மனம் வாக்கு காயத்தின் உதவியுடன் மக்களுக்கு எடுத்துக்காட்டுவதே நாட்டியம் என்கிறார் பரதர். அதாவது மனதிலிருந்து வெளிப்பட வேண்டிய உணர்ச்சி பாவங்கள் மூலமும் மொழியின் மூலமும் உடலைக் கருவியாகக் கொண்டு, உலகில் காணும் அத்தனை இயல்புகளையும் மக்களுக்கு எடுத்துக்காட்டி அறிவினை ஊட்டவல்ல கலைப்படைப்பே நாட்டியம் என்கிறார் பரதர்.
“மக்கள் யாவரும் இரசிக்கவும் மகிழவும் அதன் வழியாக அறிவு பெறுவதற்கும் ஏற்றதொரு கருவியே நாட்டியம். பார்த்தும் கேட்டும் இரசிப்போர் அத்துடன் நின்று விடாது அதன்மூலம் தர்மம் யாது அதர்மம் யாது எனப் பிரித்தறியவும் நன்மை எது, தீமை எது என புரிந்து அறிவுபெறவும் ஏற்றதொரு சாதனம் நாட்டியம்” என்கிறார் பரதர்.
ஞானம்: பலர் கூழ ஆரும் நாட்ழய நாடகங் களில் இருந்து பரிணமித்ததே இந்த தனி ஒரு பெண் ஆடும் பரதநாட்டியம் என்றீர்கள். இந்த பரிணாமத்தில் ஒரு ஆடல்நங்கையாளவள் எவ்வாறு தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்? நர்த்தகி என்ற நிலையில் அவளது பொறுப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
கார்த்திகா: ஆடல் நங்கை இசையில் இணைந்து பாடலின் அர்த்தத்தை தன் உடலின் மூலம் வெளிப்படுத்தி அர்த்த புஷ்டியுடன் முத்திரைகளை கைகளில் காட்டி, தாளலயத்திற்கேற்ப கால்கள் ஆட ஒரு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

முழுமையான ஆடல் பிறக்கும். பலர் பாவம் என்பது வெறுமே முக பாவம் எனத் தவறாக கருதுகின்றனர். உள்ளத்திலே உணர்ந்து உடலிலே தோன்றும் மாற்றம்தான் பாவம். உள்ளத்து உணர்வு அற்ற முகபாவம் வெறும் பரிதாபத்துக்குரிய பாவமே,
மிகவும் நளினமான கலையழகுடன் கூடிய நுட்பமான இந்த நடனம் பார்ப்போரை மெய்மறக்க வைப்பது. தேர்ந்த நர்த்தகியின் கைகள் மலர் என விரிய அங்கே வண்டுகள் ரீங்காரம் செய்ய பறந்தோடும் பறவையாக விரல்கள் ஜாலம் காட்டும். உடல் அதற்கியைய ஆட முகமோ அத்தனை உணர்வுகளையும், பொழியும். ஷணநேரத்தில் தோன்றி மறையும் உணர்வுகள், கண்கள் வண்டென சுழல புருவம் நெளிந்தும் வளைந்தும் பலபல அர்த்தம் பேச உதடுகள் காட்டாத பாவமா பரதம்!
இந்த ஆடலில் வரும் காட்சிகளோ மகாபாரதம் இராமாயணம் புராணங்கள் முதற்கொண்டு அத்தனை பாத்திரங்களும் உருவகப்படுத்தப்படும். இந்த இதிகாசங்களும் புராணங்களும் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துபவை. இங்கு தெய்வமே மனித உருவில் மனித உணர்வுகளுடன் தோன்றுபவர்.
நாட்டியம் ஒரு யோகம் எனக் கூறப்படும். அதை அடைய நர்த்தகி பல வருடங்களாக உடலையும் மனதையும்
பயிற்ற வேண்டி உள்ளது. ஆடுபவர் தான் உணர்ந்தவற்றை பார்வையாளரும் புரிந்து உணர்ந்து தன்னுடன் அவர்களையும் உன்னத நிலைக்கு இட்டு செல்ல வேண்டும் ஆடுபவரின் உணர்வை பார்வையாளர்களும் பெறவேண்டும். 5606) வளருவதற்கு அதுபற்றிய ஆழ்ந்த அறிவு. ஆய்வு பரிட்சார்த்த அனுபவம் அத்தனையும் வேண்டியதே.
ஞானம்: சிலர் பரதம் மரபுவழி எமக்கு வந்தது, அந்த சம்பிரதாயத்தை மாற்றமுழயாது மாற்றவும் கூடாது என எண்ணுகின்றனர். அதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் யாது?
கார்த்திகா: உடலை ஊடகமாகக் கொண்ட இக்கலை காலத்திற்கு காலம் பல மாறுதற்கு உட்பட்டே எம்மை வந்தடைந்துள்ளது என வரலாறு எமக்கு எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு எம்மை வந்தடைந்த அரும்பெரும் கலையே நாம் வெறும் குட்டை நீராக தேக்கிவிடக் கூடாது. நாமோ விஞ்ஞான யுகத்தில் வாழ்கிறோம். பாய்ந்தும் நெளிந்தும்
23

Page 26
குதித்தும் ஓடி ஜாலம் காட்டும் நதி எவ்வாறு நிலத்தைப் பண்படுத்தி செழிப்புறச் செய்ய உதவுகிறதோ, அதே போன்றே எமது பரதநாட்டியம் என்ற கலையும் பாய்ந்தோடும் நதியாக சமூகம் செழிக்க உதவ வேண்டும்.
ஞானம்: தனி நாட்டியக் கச்சேரியில் என்ன என்ன அம்சங்கள் இடம்பெறல் வேண்டும்?
இதனை விபரியுங்கள்.
கார்த்திகா: - இன்றைய பரதநாட்டியக் கச்சேரிகளில் காணப்படும் ஆடல்முறை வகுத்தவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த பந்தனை நல்லூர் சகோதரர்களான சின்னையா, பொன்னையா, சிவானந்தன் வடிவேலு என்போரே. தனி யொரு நர்த்தகி தனது திறமையைக் காட்டி ஆடக்கூடிய படி அமைந்துள்ளது இந்த கச்சேரி முறை. முதலில் - அலாரிப்பு, இங்கு நர்த்தகி இறைக்கும் குருவுக்கும் சபையோருக்கும் நாட்டிய முறையில் ஆடி அஞ்சலி செலுத்து
வாள். இது அதிக நேரம் இல்லாது வெகு சில நிமிடமே அமையும். நர்த்தகி மேலே ஆடப்போகும் ஆடலுக்கு முன் நோட்டமாக அமையும். 2வது ஜதீஸ்வரம் - இது அபிநயம் இல்லாது குறிப்பிட்ட ஒரு ராகத்திலான சுரங்களுக்கு ஜதியுடன் விஸ்தாரமாக நர்த்தகி
ஆடுவாள். பற்பல அடவுகோர்வையுடன் கூடிய ஆடல் இது. இங்கு முகபாவமோ, அபிநயமோ அற்ற ஆடல். நாம் அலாரிப்பில் ஆடிய ஆடலில் இருந்து ஒரு விரிவுபெற்ற ஆடலை இங்கு ரசிக்கலாம்.
அடுத்து வருவது சப்தம் எனப்படும் ஆடல். இங்கேதான் முதலிலே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அர்த்தம் பொதிந்த பாடலுடன் தாள லயத்துக்கான அடவு கோர்வையும் இடம்பெறும். அடுத்து பரதத் தின் முழு அம்சமும் பரிமளிக்கும் வர்ணத்திற்கு ஒரு முன்னோட்டம் போலக் கொள்ளலாம்.
அடுத்து 4 ஆவதாக வருவது வர்ணம். இங்கு பரத நாட்டியம் என்ற ஆடலின் பூரண பொலிவையும் காணலாம். அடவுடன் கூடிய ஜதிகள்சுரங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாடல் அத்தனையும் வெகுவிரிவாகக் கையாளப்படும். நாட்டியக் கச்சேரியில் மிக நீண்ட உருப்படி வர்ணம்.
வர்ணத்தை அடுத்து நர்த்தகிக்கும் பார்வையாளருக்கும் இடைவேளை.
24

பான.
இடைவேளையின் பின் கீர்த்தனங்கள், பதம் என மிக இனிமையாக நர்த்தகி நவரசங்களையும் காட்டியாட அதை அடுத்து வருவது தில்லானா, விறுவிறுப்பான ஆடலுடன் கச்சேரி நிறைவேறும்.
காலத்தின் ஓட்டத்திலே இந்த அமைப்பு சிறுசிறு மாறுதற்கு உட்பட்டே வருகிறது. வளர்ச்சி எப்பொழுதும் மாற்றத்திற்கு இடம் கொடுப்பதே.
ஞானம்: சாஸ்திரிக பரதம் என்ற எண்ணக்கருவின் அர்த்தம் பலருக்கும் தெளிவின்மையுளது. அது பற்றி விபரிக்கவும்.
கார்த்திகா: சாஸ்திரீயம் என்ற பதத்திற்கு அர்த்தம் ஆங்கிலத்தில் Classical என கூறலாம். அதாவது நுண்கலை. சிலப்பதிகாரமும் வேத்தியல் - பொதுவியல் என கலையில் இரு பிரிவை காண்கிறது. Classical என்பது வேத்தியலே, கற்றோருக்கான நுணுக்கங்கள் நிறைந்த கலை வடிவம். பொதுவியல் பொதுமக்கள் ஆடிக்களிக்கும் ஆடல். அல்லது இதுவே அகக்கூத்து சாஸ்திரீய ஆடல் .புறக்கூத்து பொதுமக்கள் ஆடல் என சிலப்பதிகாரம் குறிக்கும்.
என
ஞானம்: பழந்தமிழ் இலக்கியங்களில் நடன மாந்தர் என்பதனை பலவிதமான அர்த்தங்களுடன் நோக்கியுள்ளனர். இதுபற்றி தங்களது அபிப்பிராயம் எத்தகையது.
கார்த்திகா: சங்க இலக்கியங்களிலே கூத்தர் பாணர் விறலியர் என கலையைத் தொழிலாகக் கொண்டவரை காண்கிறோம். இவர்கள் கலை வடிவங்கள் மக்களை மகிழ்விப்பதுடன் அன்றைய அரசுக்கும், மக்களிடம் ஆக்கம் தேடியது. இன்றைய அரசியல்பிரசாரகருவியாக ஊடகங்கள் பயன் பெறுகிறது. ஆனால் அன்றே
இவர்களே அவற்றைச் செய்து வந்தனர்.
சிலப்பதிகார காலத்திலே ஆடல் நங்கையான மாதவி நிருத்தம், கீதம், வாத்தியம், யாவிலும் - சிறந்து விளங்கினாள் என . அறிகிறோம். இங்கு ஆண்களின் இன்பத்தையும் கலையுடன் கலந்து வழங்க ஒரு பெண் இனம் இருந்ததை அறிகிறோம். இவர்கள் கணிகையர் எனப்பட்டனர்.
அதே நேரம் ஆண் கலைஞர்கள் பல இசைக் கருவிகளையும் திறம்பட கையாண்டமையை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 27
அறிகிறோம். பிற்பட்ட சிற்றிலக்கியமான குறவஞ்சிகளும் பள்ளுக்களும் நடன மாந்தரால் ஆடப்பட்டவையே. தேவாரத்திலோ மாணிக்க வாசரின்பரவையார்கோயில்தேவர்அடியாளே. மாதவியும் பரவையாரும் ஆடினர் என்பதற்காக பெண்கள் மட்டுமே ஆடினர் எனக் கொள்ள வேண்டாம் ஆண் நர்த்தகரும் ஆடியதற்கு வரலாற்று கல்வெட்டு சான்றுகள் உண்டு. ஆடல் இரு பாலாருக்கும் பொதுவானது.
ஞானம்: இப்போது உங்களைப்பற்றிய கேள்விக்கு வருகிறேன். பரதத் துறையில் நீங்கள்நாட்டம் கொள்வதற்கானபின்னணியைக் கூறுங்கள்.
கார்த்திகா: நான் பரதத்தில் நாட்டம் கொள்வதற்கு எனது தாயாரே காரணமாக இருந்தார். அவருக்கு நடனத்தில் இருந்த ஆர்வத்தால் எனக்கு சின்னவயது முதல் நடனம் கற்பித்தார். எனது தகப்பனார்தமிழகத்தில் பல இசை நாட்டிய, நிகழ்ச்சிகளை இரசித்தவர். அதனால்நடனம் இசைபற்றி பல விடயங்களை ஆழமாக என்மனதில் பதித்துவந்தார். மாதா பிதா எனக்கு சிறந்த குருவையும் தேர்ந்தார்கள். மாதா பிதாவின் அன்பும் சிறந்தகுருவின் வழிநடத்தலும் பெற்ற எனக்கு இறை அருளும் இருந்ததால் ஒரு கலைஞராக உருவாக முடிந்தது.
ஞானம்: ஒரு குருவின் நெறியாக்கை மூலந்தான் பரதத்தை பயில முழயும். தாங்கள் பரதத்தையாரிடம்பயின்றீர்கள்? அதுதொடர்பான அநுபவங்களை விளக்குங்கள்.
கார்த்திகா: இசை வாருதி யாழ்ப்பாணம் வீரமணிஜயரை குருவாகப் பெறும் பாக்கியம் பெற்றவள் நான். அவர் மாபெரும் கலைஞர் மட்டுமல்ல ஒரு அபூர்வமான குருவும் ஆவார். என்னை ஒரு ஆக்கக் கலைஞராக உருவாக்கியவர் அவரே. என்னுள்ளே கற்பனை வளத்தை வளர்த்து, நடனத்தில் நான் பேராவல் உற காரணமானவரும் அவரே. எனது நடனம் மேலும் செப்பனுற திருநாட்டிய கலாநிதி வழுவூர் இராமையா பிள்ளையிடம் சேர்ப்பித்தார். நான் குருகுல முறையில் நாட்டியத்தை வழுவூராரிடம் கற்றுக் கொண்டேன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

ஞானம்: ஏறத்தாழ நான்கிற்கு மேற்பட்ட தசாப்தங்களாக நாட்டியத்துறையில் துறை தேர்ந்தவராக உள்ளீர்கள். இதுவரை எவ் வகையான பரத நிகழ்ச்சிகளை அரங்கேற்றி யுள்ளீர்கள்.
கார்த்திகா: எனது நீண்ட நாட்டியப் பயணத்தின் அனுபவமாகப் பெற்றவை பல. எனது அனுபவங்களே எனது ஆக்கங்களாகும். நர்த்தகியாக இலங்கை, இந்தியா, U.K, Australia முதலான இடங்களில் தனிக் கச்சேரி நிகழ்த்தி உள்ளேன். பல மாணவிகளையும் ஆடற் கலைஞராக்கி உள்ளேன். ஓர் எழுத்தாளனுக்கு பேனா எவ்வாறு அவனது கருத்தைக் கூறுகிறதோ, அதே போன்று நாட்டிய கலைஞர்தம் உணர்வை வெளிப்படுத்த உதவும் ஊடகம் அவரது உடலே. அந்த வகையில் எனது கருத்தைக் கூற நாட்டிய நாடகங்களைப் பயன்படுத்தி உள்ளேன். இராமாயணநாட்டிய நாடகத்தில் மட்டக்களப்பு வடமோடி ஆடல் வகையை திரு. மெளனகுருவின் உதவியுடன் தயாரித்து புதுமை புகுத்தினேன்.
வார்த்தைகள் அற்ற வாத்திய இசையுடன் 3 சக்திகளாக லக்ஷமி, ஸரஸ்வதி, துர்க்கையை நாட்டியத்தில் உருவகப்படுத்தினேன். சின்னஞ் சிறுசுகளும் புரிந்து இரசிக்க அவர்களுக்காக உதயம் நாட்டியத்தைத் தயாரித்தேன். எல்லாளன் காமினி கதையை இரு இனம் ஒன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரித்தேன். “இந்நாட்டின் இரு இனத்தை இரண்டாக பிரிப்பதற்கு தம்பாட்டில் கதை அளப்போர்தாம் இங்கு உள்ளார். இனம் பிரிக்க எல்லாளன் காமினி கதை எடுத்தியம்பியது போதும்"
அன்று போர் வராமல் தடுக்க வேண்டும். இருஇனம் ஏன்ஒற்றுமையாகவாழமுடியாதா? என்ற சிந்தனை கருத்தை வெளியிடவே எல்லாளன் காமினி நாட்டியம் தயாரித்தேன்.
வேறும்பலநாட்டியநாடகங்கள்தயாரித்து பல பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் ஆற்றியுள்ளேன். இன்றும் நாட்டியத்தை கற்பிக்கிறேன். ஆய்வுகள் நடாத்தி வருகிறேன். நாட்டியத் தயாரிப்பாளராகவும் வாழ்கிறேன்.
ஞானம்: பரதம் என்றாலே அதன் உடைகளுக்கு பெரும் செலவினம் ஏற்படு கின்றதே. பரத உடைகள் தொடர்பான நுணுக் கங்கள் எவையேனும் உண்டா?
25

Page 28
கார்த்திகா: இன்றைய பரத உடை பெரும் செலவினம் உடையதாக எம்மவர் ஆக்கி கொண்டனர். இலங்கை அரசு 1982 இல் பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடியது. நான் M. B. பூரீநிவாசனின் இசை அமைப்பில் பாரதி பாடல்களுக்கு நாட்டியம் தயாரித்து வழங்கினேன். 12 பாடல்கள். அத்தனைக்கான ஆடல்களுக்கும் வெறும் பருத்தித் துணியிலேயே உடை தயாரித்திருந்தேன். மிக மிக கவர்ச்சிகரமாக gD 60) அலங்காரம் அமைந்திருந்ததாக பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவை வெறும் பருத்திதானா எனப் பலர் வியந்தனர். நாட்டியத்திற்கு அழகிய ஆடை அவசியமே. அதிலும் கற்பனைக்கு இடம் உண்டு. விலையுயர்ந்தவை மட்டுமே தான் அழகல்ல. நாட்டிய உடை தயாரிப்பும் ஒரு கலையே.
ஞானம்:நாட்டியத் துறையில் ஆய்வாள ராகவுள்ளீர் என்பதனை தங்களது நூல்கள் சான்று பகர்கின்றன. நூல்கள் தொடர்பான தகவல்களை விபரமாக கூறுங்கள்.
கார்த்திகா: எனது ஆய்வு நூல்களில் தமிழர் வளர்த்த ஆடற்கலை, காலம் தோறும் நாட்டியக் கலை, இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு அத்தனையும் தினகரன் வார சஞ்சிகையில் வெளி வந்தவையே. நாட்டியக் கடலில் புதிய அலைகள் எனது விரிவுரைகளின் தொகுப்பு.
ஞானம்: இந்த நூல்கள்பெற்ற பரிசுகள் கெளரவங்கள் பற்றி விளக்கவும்
கார்த்திகா: எனது நாட்டிய ஆய்வு நூல் கள் முதலிலே தினகரன் வார சஞ்சிகையில் வெளிவந்தவையே. தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் 1969 இல் சென்னை தமிழ் புத்தகாலயத்தினரால் நூல் உருப்பெற்றது.
அதையடுத்து "காலம் தோறும் நாட்டியக் கலை"என்றநூல்சமகாலத்தில்இலங்கையிலும், தமிழகத்திலும் நூல் உருபெற்றது. இதற்கு தமிழக அரசின் பரிசை1980 இல் பெற்றேன்.
"இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு” என்ற நூலுக்கு 1984 இல் தஞ்சை பல்கலைக்கழகத்தின் பரிசைப் பெற்றேன். "நாட்டியக் கடலில் புதிய அலைகள்” எனது விரிவுரைகளின் தொகுப்பு.
26

ஞானம்:இலங்கையில் பல வானொலி நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளீர் 660 அறிகின்றேன். அத்துடன் தங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமுள்ள 5606) இலக்கிய உறவு எத்தகையது.
கார்த்திகா: இலங்கை வானொலியில் 1967 தொடக்கம் 1983 நான் இலங்கையை விட்டு வெளியேறிய காலம் வரை பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். திரு. C. ராஜசுந்தரம் தமிழ்ப் பகுதி இயக்குநராக இருந்த காலம், "கலைக் கோலம்” என்ற நிகழ்ச்சியில் நாட்டிய விமர்சனங்கள் செய்ய என்னை அழைத்தார். அதைத் தொடர்ந்து பலவகையான நிகழ்ச்சிகள் விவாத அரங்கு, மாதர் பகுதி, கல்விப் பகுதி எனப் பற்பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.
பேராசிரியர் சிவத்தம்பி எனது கணவரின் நீண்டகால நண்பர். இவரது கலை ஆர்வத்தால் எனது தனிநாட்டிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். நான் முதலிலே எனது ஆசிரிய பிரானான வழுவூரார் நட்டுவாங்கத்துடன் ஆடும்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நண்பர் சிவதம்பியே. இந்த நட்பு எனது கலை வாழ்வில் தொடர்ந்தது. எனது முதல் நூலான தமிழர் வளர்த்த ஆடற்கலை தினகரனில் வாராவாரம் வெளிவரும்போது அதுபற்றி என்னுடன் கலந்துரையாடுவது அவரது வழக்கம். அது நூல் உருப்பெற்ற போது நாம் Scotland இன் Gasgo விலும், அவர் தனது ஆய்வின் நிமித்தம் Bermingham இலும் வாழ்ந்தோம். அங்கிருந்து எனது நூலுக்கான விமர்சனத்தை தினகரனுக்கு எழுதி அனுப்பினார் சிவத்தம்பி.
அதைத் தொடர்ந்து சிவத்தம்பியின் தயாரிப்பில் அடிக்கடி வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். எனது நாட்டிய நாடகங்களைத் தவறாது வந்து பார்த்து விமர்சிபவர் அவர். 1983 நாம் இனக் கலவரம் காரணமாக சென்னையில் வாழ்ந்தபோது அவர் சென்னை வரும் போது நாம் சென்று உரையாடுவது வழமை.
இறுதியாக 2007 இல் எனது கணவரை இழந்தபின் ஏனோ என்மனம் இனிமேல் எனது கணவரின் இனிய நண்பர் எனக்கு கலை உலகில் ஊக்கம் அளித்த சிவத்தம்பியும் நீண்டநாள் வாழமாட்டார் எனத் தோன்ற அவரை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்தேன். எனது கணவர்பற்றியும் என்நாட்டியம் பற்றியும் உரையாடினோம். அதுவே இறுதியான சந்திப்பாக அமைந்து விட்டது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 29
ஞானம்: பல வெளிநாடுகளுக்கு சென்றுள் ளிர்கள். அந்தந்த நாடுகளில் பரதம் என்ன பங்கினை வகிக்கின்றது. ஏதாவது நடன நிகழ்வுகளை நடாத்தியுள்ளீர்களா?
கார்த்திகா: வெளிநாடுகளில் எமது பண்பாட்டின் சின்னமாக இருப்பது எமது கலைகள். முக்கியமாக எமது கோயில்களும் பரதமுமே. அதனால் பல நம்மவர் தமது பிள்ளைகட்கு நடனம் கற்பித்து வருகிறார்கள். நான் சில வெளிநாட்டுப் பெண்களுக்கும், நாட்டியம் கற்பித்துள்ளேன். ஏன் அவர்கள் நடனங்களையும் முடிந்தளவு நான் கற்றுள்ளேன். சென்ற இடம் எல்லாம் நாட்டியம் கற்பிப்பதுடன் நில்லாது, தயாரித்து மேடையேற்றியதுடன் மேலை தேயத்தினருக்கு எமது நடனத்தை பற்றிய விரிவுரைகளும் நிகழ்த்தி உள்ளேன்.
ஞானம்: நடனத் துறை சார்ந்த நீங்கள் தற்பொழுது அவுஸ்திரேலியா வானொலி நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றீர்கள். இது தொடர்பான அநுபவம் எத்தகையது?
கார்த்திகா: நாட்டியம் போன்றே உங்கள் உள்ளக் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற ஊடகம் வானொலி ஏற்கனவே இலங்கை வானொலியில் நான் பெற்ற அனுபவம் மட்டுமல்ல, மக்களுக்கு எமது கருத்துகளைப் பகிரக்கிடைத்த ஊடகம் வானொலி. அதனால் எனது வானொலி நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியாக நடாத்திவருகிறேன். வாரத்தில் 5 நாட்கள் நிகழ்ச்சி நடத்தும் நான், வாரம் 2 முறை பண்பாட்டுக் கோலம் என்ற நிகழ்ச்சிமூலம் பல கனமான விஷயங்களைப் பற்றி விரிவாக உரை
நிகழ்த்தியும் வருகிறேன்.
ஞானம்: நீண்ட இடைவெளிக்கு பிற்பாடு இலங்கைக்கு வந்தபொழுது பரதக் கலைக்குரிய போக்கு எத்தகையதாகவுளது என அவதானித்தீர்கள்?
கார்த்திகா: இலங்கை வந்தபோது நாட்டிய நிகழ்ச்சி எதையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஆனால் பாடசாலுை கல்வித்திட்டம் முதல் பல்கலைக்கழகம்வரை நாட்டியம் கற்பிப்பது வரவேற்க வேண்டியது. அதிகமானோர் நாட்டியத்தை கற்கும்போது, நாட்டியம் கற்போர் பல வகைகளிலும் அக்கலை வளர உதவுவர். ஆயிரம் மலர்கள் மலரட்டுமே.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

ஞானம்; ஏனைய நடன வகைகளை விட பரதத்தை மட்டும் தெய்வீகக் கலை என ஏன் வழங்குகின்றனர்.
கார்த்திகா:பரதம் மட்டும் தெய்வீகக் கலை அல்ல, கலைகள் அத்தனையையும் இறைக்கு சமர்ப்பிப்பது எமது இந்துக்கள் மரபு. இசை நடனம், சிற்பம், சித்திரம் அத்தனையிலும் இறையை காண்பவர் நாம், கலைகள் யாவும் தெய்வீக அம்சம் கொண்டவையாகும்.
ஞானம்: பரதம் கற்பிப்பவர்க்கு தாங்கள் வழங்கும் ஆலோசனைகள் யாவை?
கார்த்திகா: பரதமும் ஒரு நுண்கலையே. கலைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனை உணர்ச்சி வெளிப்பாடு. அந்த நுண்கலையை கற்பிப்பவரும் சிறாரின் உள்ளத்து உணர்வைத் தூண்டி மலரவைக்கும் வகையாகக் கற்பிக்க வேண்டும். கலை கல்வி ஒருவரின் கற்பனைகளை வளர்ப்பதாக அமைய வேண்டும். கண்டிப்பும் கடுமையும் இதை அழித்துவிடும்.
ஞானம்: எதிர்காலத்தில் பரதம் தொடர்பான திட்டங்கள் எவையேனும் உண்டா?
கார்த்திகா: இலங்கையிலே பாடசாலை முதற்கொண்டு பல்கலைக்கழகம் வரைநடனம் பாடமாக கற்பிக்கப்படுகிறது. இதை மேலும் விரிவாக அறிவதற்கு அவர்கட்கு போதிய நூலின் பற்றாக்குறையை உணர்ந்தேன். எனது நீண்ட அனுபவத்தை நூலாக்கி அவர்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணி உள்ளேன். இந்த வகையிலேயே எனது "காலம் தோறும் நாட்டியக் கலை” என்ற நூல் பூபாலசிங்கம் புத்தகசாலையினரால் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
ஞானம்: நிறைவாக, நாட்ழயக்கலா ரசிகர்களுக்கு தாங்கள் என்ன கூற விரும்பு
கார்த்திகா: கலா ரசிகர் இல்லாது கலை வளர முடியாது. சிறந்த கலை படைப்புக்களை இனம் கண்டு அவற்றைப் பொது மக்களுக்கு எடுத்து விளக்க விமர்சகர் பங்கு அவசியமானது. இத்தகைய ஒரு சமூகத்தில் தான் கலை செழித்து வளர முடியும். அதுதான் எனது பேரவாவாகும்.
O O O
27

Page 30
ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டை அறிவதற்கு வடமொழி அறிவு இருந்தாற் போதும் என்று மேல் நாட்டார் நினைத்தனர். ஆனால் இன்று திராவிட மொழிகளிற் சிறந்த தமிழ் மொழியை அறியாது இந்தியாவின் அடிப்படைப் பண்பாட்டையும் கலைகளையும் உணர முடியாது என்றே வடமொழியுடன் தென் மொழியையும் பயின்று வருகின்றனர். மேல்நாட்டு அறிஞர், எங்கு மேல் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆழ்ந்த வடமொழிப் பயிற்சி உண்டோ அங்கு தமிழையும் பயிலத் தொடங்கி விட்டனர்.” என்று பேராசிரியர் தனிநாயகம் அடிகள் 1974 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுத் தொடக்க உரையில் திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் கூறியபோது எதனை இலக்காகக் கொண்டு வலிய முயற்சிகளை அவர் மேற்கொண்டார் என்பது தெளிவாக விளங்கியது.
தமிழியல் அடித்தளம் !
18 ஆம் நூற்றாண்டில் இந்தியப் பண் பாட்டை அறிய விழைந்த மேலைத்தேய மொழி ஆராய்ச்சி யாளர்களும் இலக்கிய ஆராய்ச்சி யாளர்களும் அதற்கு வடமொழி அறிவே போதும் என்று கருதினர். அந்த நிலை மாறி, இந்தியப் பண்பாட்டைப் பூரணமாக அறிந்து கொள்வதற்குத் தமிழ் அறிவும் இன்றியமையாதது என்ற உண்மை புலப்பட்ட நிலையில், தமிழியலை ஒரு துறையாக உருவாக்கி அதற்குச் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டதில் தனிநாயகம் அடி களுக்கு பிரதான பங்கு உண்டு.
பேராக் 20 ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்திலே
கூடத் சி. தில்ல 28

தமிழ் மொழியினதும் பண்பாட்டின் தும் பெருமை பிறரால் போதிய அளவு அறியப்படாமல் இருந்தது மட்டுமன்றி தமிழரே தங்கள் மொழியினதும் பண் பாட்டினதும் சிறப்பினைச் சரியாக அறிந்திருக்கவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, 1931 ஆம் ஆண்டிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியருக்கான பதவி உரு வாக்கப்பட்டுச் சுவாமி விபுலானந்தருக்கு அது வழங்கப்பட்டது. இலங்கைப் பல்கலைக் கழகம் தோன்றிய 1943ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதமிழ்ப்பேராசிரியர் பதவியும் சுவாமி விபுலானந்தருக்கு அளிக்கப் பட்டது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னரே, தமிழ் நாட்டின் தலைநகரில் 1853இல் நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் தவிசு ஒன்று நிறுவப்பட்டது.
நய்வுகளுக்கு கட்ட அடிகள்
இத்தகைய நிலையில், தமிழ் ஆய்வுகளின்பால்
பிற நாட்டார் கவனம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதனைக் கூறவேண்டியதில்லை.
இந்நிலையில், தமிழ் மக்கள் தங்கள் பண்பாட்டையும் பாரம்பரியப் பெருமை களையும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமன்றி உலகமும் அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் ஆர்வம் மீதூ ரப்பெற்ற தனிநாயகம் அடிகள் அதனைச் சாத்தியப்படுத்துவதற்கு
வேண்டிய திறமைகளை வளர்த்துக் ரியர்
கொண்டதும் வழிமுறைகளை
வகுத்துக் கொண்டதும் எண்ணிப் லநாதன் பார்க்கப்படவேண்டியவையாகும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 31
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினது முதுகலைமாணி, முதுஇலக்கியமாணிப் பட்டங்களைப் பெற்று 1952இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித்துறை விரிவுரை யாளரான அடிகள், 1957இல் இலண்டன் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். 1961இல் மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியக் கற்கைகள் துறைப் பேராசிரியரென்ற உயர் பெருமைக்குரிய பதவியினைப் பெற்றுக் கொண்டார். பெற்ற வாய்ப்புக்கள் அனைத்தையும் தாம் எடுத்துக் கொண்ட இலட்சியத்தை எய்து வதற்குத் திறம்படப் பயன்படுத்தியமை முக்கியமானதாகும்.
இச்சந்தர்ப்பத்தில், கால உணர்வோடு அவர் வளர்த்துக் கொண்ட, வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுல கைக் கடந்த, ஒர் உலகப் பார்வை விதந்து குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். உலகம் நம்மை உணர்தல் வேண்டும் என்பதற்காக உழைத்த அடிகள் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றன் கூற்றையும், "எதிர்காலத்தில் எமது சிந்தனை உலகளாவியதாய் இருத்தல் வேண்டும்” என்ற Gaugirl Gi) of aidsdufair (Wendell Willkie) uigit கூற்றையும் அடிக்கடி மேற்கோள்காட்டினார். உலகம் தழுவியதொரு பரிபாலன முறை பற்றிப் பேசிய வென்டல் வில்க்கியின் ஒரே உலகம் (One World) என்ற, 1943இல் வெளியிடப்பட்ட நூல் அன்று பெரும் பிரசித்தி பெற்றிருந்தது.
பல்கலைக்கழகங்களில் உயர் பட்டங் களைப் பெற்ற தனிநாயகம் அடிகள் பல மொழிகளைக் கற்றுக் கொண்டது உலகத்தோடு உறவினை வளர்க்கும் ஆவலினால்என்றேதோன்றுகிறது. ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன், கிரேக்க, ஸ்பானிஷ், இத்தாலிய மொழிகளைக் கற்றுக் கொண்ட அடிகள் இலத்தீன், போர்த்துக்கேய, ரஷ்ய, மொழிகளோடும் பரிச்சயத்தை வளர்த்துக் கொண்டது அந்நாடுகளுக்குச் சென்று பிழைக்கவல்ல. தமிழ்ப் பண்பாட்டின்பால் பிற தேசத்தவர் கவனத்தைத் திருப்பவே. ஒருவருடன் அவர் புரிந்துகொள்ளக் கூடிய மொழியில் பேசினால் அது அவருடைய தலைக்குட் புகும். அவருடைய சொந்த மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்துட் புகும்” என்று நெல்சன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

மண்டேலா கூறியது இங்கு நினைத்துப் பார்க்கக் கூடியதாகும்.
உலகின் பன்முகத் தன்மையினைச் செவ்வனே விளங்கிக்கொண்டவரும் பன்மொழிப் புலமையை வளர்த்துக்
கொண்டவருமான அடிகள் மலேசியா, சீனா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிலி, ஆஜென்டைனா, பிரேசில், இத்தாலி, எகிப்து, பலஸ்தீன், ஈரான், ஈராக் முதலான ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு பற்றிய உரைகளை நிகழ்த்தினார். மற்றவர் கவனித்து மெச்சும் வகையில் தொடர்பாடுவதற்கு உகந்த ஒர் ஆளுமையினையும் பேச்சாற்றலையும் அவர் வளர்த்துக்கொண்டார். இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு மண்டபத்தில் 1968ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய நாளன்று, தமிழக முதலமைச்சரும் ஏனைய பல அமைச்சர்களும் சர்வதேச அறிஞர்களும் வேறு பல பெரியார்களும் அமர்ந்திருந்த மாபெரும் சபையில் ஏற்பட்ட ஒரு சலசலப்பைக் கட்டுப்படுத்தத் தலைவரால் இயலாத நிலையில் தனிநாயகம் அடிகள் கம்பீரமாக எழுந்துநின்று கணிரென்ற குரலில் சபையினைப் பக்குவமாகவும் கண்ணியத்தோடும் கட்டுப்படுத்தியபோது அவரது சொல்லும் சொல் வன்மையினையும் ஆளுமையினையும் கண்டோம்.
பழம் பெருமைகளைப் பற்றி உணர்ச்சிகர மாகவும் வசீகரமாகவும் அலங்காரமாகவும் பேசிக்கரகோஷம் பெற்ற மேடைப் பேச்சாளர் பலர் பிரசித்தி பெற்றிருந்த சூழ்நிலையில், பெருந்தன்மையோடும் நயநாகரிகமாகவும் கருத்துக்களை முன்வைத்து மக்களுடைய மதிப்பினைப் பெற்றவர் தனிநாயகம் அடிகள். மக்களுடைய கைதட்டல் பெறுவதைக் குறியாக வைத்து கண்டதைப் பற்றியெல்லாம் கண்டவாறு பேசாது, தேர்ந்தெடுத்த முக்கிய விடயங்களைப் பற்றி ஆராய்ந்து சிந்தித்துக் கேட்டாரை உடன்படுத்தும் வகையில் துல்லியமாகப் பேசியவர் அடிகள். யாரையும் புண்படுத்தாது, பிற மொழிகளையும் பண்பாடுகளையும் மதித்து நிதானத்துடன் பேசும் வழக்கம் அவருடையது.
தாம் மேற்கொண்ட விசாலமான பணிக்கு, அடிகள் ஆங்கில அறிவினை நன்கு
29

Page 32
இது மூக்குக் கூறும் பஞ்ச .
வளர்த்துப் பயன்படுத்திக் கொண்டார். மேலைத்தேயத் தொடர்பினால் எமக்கு வாய்த்த ஆங்கிலம் 'பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் புத்தம் புதிய கலைகளை' தமிழுக்குக் கொண்டுவர மட்டுமன்றி, தமிழ் மொழியினதும் பண்பாட்டினதும் சிறப்பினையும் மானிடப் பண்பாட்டிற்கும் சிந்தனைக்குமான தமிழ் மக்களின் பங்களிப்பு அலட்சியப்படுத்தக் கூடியதல்ல என்பதையும் உலகுக்கு உணர்த்தவும் உதவியது.
இலங்கையில், தமிழ் படிப்பதில் ஆர்வம் குன்றியிருந்த காலத்தில், வலிது முயன்று தமிழ் கற்ற அடிகள் தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டது மட்டுமன்றி, தமிழ் மக்களுடைய அடையாளத்தையும் உரிமைகளையும் கெளரவத்தையும் பேணிக் காப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரானார். அந்த வகையில், இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்ற 1952 இல் கொழும்பில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தை நிறுவியதும், Tamil Culture என்ற பெயரில் ஓர் ஆங்கில முத்திங்கள் இதழினை ஆரம்பித்ததும், 1955 இல் கொழும்பு நகர மண்டபத்தில் 'இலங்கையும் தமிழ்ப் பண்பாடும் - நேற்றும் இன்றும் நாளையும்' என்ற தலைப்பில் ஓர் காத்திரமான ஆங்கிலச் சொற்பொழிவினை நிகழ்த்தியதும், மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அமர்ந்த 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் ஒன்றினை நிறுவியதும் விதந்து குறிப்பிடப்பட வேண்டியவை ஆகும். தமிழ் மொழியையும் பண்பாட்டையும் குறித்து அவர் இறுமாந்து பேசுவார். 'உயர்வானதும் விசாலமானதும் தொன்மை வாய்ந்ததுமான ஓர் இலக்கியத்தைத் தன்னுடைய முது சொமாகத் திரும்பிப் பார்க்கத் தமிழனால் முடியும். பழமை வாய்ந்த ஒரு செம்மொழி இலக்கியத்திற்கும் இடைக்கால இலக்கியத் திற்கும் நவீன இலக்கியத்திற்கும் அவன் வாரிசாகத் திகழ்கிறான்" என்று யாழ்ப்பாணக் கல்லூரியில், 1972 இல் ஆங்கிலத்தில் இடம்பெற்ற பங்கர் நினைவுச் சொற்பொழிவில் அவர் குறிப்பிட்டது அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
தமிழர் இருப்புக்கும் கெளரவத் துக்கும் இடர் நேர்ந்தபோது அதனைத் தடுக்கத் தன்னால் இயன்ற எத்தனங்களில்
30

ஈடுபட்டார். இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் சுய மரியாதையினைப் புறக் கணிக்கும் வகையில் சிங்களத்தினை மட்டும் அரச கரும மொழியாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதனைக் கண்டித்து சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரச கரும மொழிகள் ஆக்கப்பட வேண்டும் என்பதை அடிகள் கட்டுரைகள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் வலியுறுத்தினார். மொழிப் பிரச் சினையை வாக்குப் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக் கூடிய ஓர் அரசியல் பிரச்சினையாகவன்றி, குடியாட்சி நடை முறைப் பிரச்சினையாக, சமூகவியல் பிரச்சினையாக, மனித இயக்கவியல் பிரச்சினையாக நோக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். 1956 இல் Tamil Culture யூலை இதழில் அவர் எழுதிய 'இலங்கையில் மொழி உரிமை' என்ற ஆங்கிலக் கட்டுரையும் கண்டித் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தால் அதே ஆண்டு வெளியிடப்பட்ட நம் மொழியுரிமைகள் என்ற பிரசுரமும் கவனத்திற்குரியவை. தமிழுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் வேண்டி இலங்கையிலும் பிற நாடுகளிலும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் கடைசிவரை தொடர்ந்தன.
உலக அரங்கில் தமிழரை ஒக்க இருத்த உறுதி பூண்ட அடிகள் அதனை உணர்ச்சிகரமான வெறும் பேச்சுக்களினாலும் எழுத்துக்களினாலும் செய்ய முடியாது என்பதை உணர்ந்திருந்தார். நாமே நம்மைத் தக்கவாறு உணர்ந்து கொள்ளாத விடத்து உலகத்துக்கு நம்மை உணர்த்துவது இயலாது என்பதையும் அவர் மனங் கொண்டார். அந்தப் பிரக்ஞையுடன் அவர் சுயநலன்கருதாத அறிவுப் பரப்புகைக்காக மேற்கொண்ட முயற்சிகள் முக்கியமானவை. ஜே. வி. செல்லையாவின் பத்துப் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு, திராவிடர் வரலாறு முதலான நூல்கள் வெளிவர ஏற்பாடு செய்தார். சைமன் காசிச்செட்டி எழுதிய தமிழ்ப் புலவர்கள் பற் றிய The Tamil Plutarch என்ற ஆங்கில நூல், தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் மேலதிக தகவல்களுடன் வெளிவர ஏற்பாடு செய்தார். இலங்கையில் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture in Ceylon) பற்றிய எம்.டி. ராகவனின் ஆங்கில நூற்பிரதிகளையாழ்ப்பாணத்தில் நடைபெற்ற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 33
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது பேராளர்களுக்கு வழங்கினார். ஐரோப்பிய, அமெரிக்க நூல் நிலையங்களில் முடங்கிக் கிடந்த தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழ் ஆய்வாளர் கவனத்திற்குக் கொண்டு வந்தார். தமிழியல் ஆய்வுகளில் நாட்டங் கொண்ட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆய்வாளர்களுடன் தொடர்பினை வளர்த்து அவர்களை உற்சாகப்படுத்தினார். பல் வேறு திசைகளில் பல்வேறு அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்த தகவல்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு வெளிவரக் காலா ufa0TTj. 9155 6/605uigi) A Reference Guide to Tamil Studies (gL6 fugi) DITai) J56ir gliol Iisai), Tamil Studies Abroad (வெளிநாடுகளில் தமிழ் ஆய்வு), Tamil Culture and Civilization (gLÉpi Lugoir ITG) b நாகரிகமும்) ஆகிய நூல்கள் குறிப்பிடப்பட வேண்டியவை.
தமிழியல் ஆய்வுகளை ஊக்குவிக்கவும் ஒருமுகப்படுத்தவும் அதற்கான களத் தினை அமைத்துத் தரவும் அடிகள் பல இயக்கங்களையும் கழகங்களையும் அமைத்தார். நிறுவன ரீதியாக அவர் மேற் கொண்டவற்றுள் தலையானது 1964இல் உருவாக்கப்பட்டு, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளுக்கெல்லாம் அடிகோலிய, உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஆகும். அதற்குப் பின்னரே சமஸ்கிருத, தெலுங்கு, கன்னட, மலையாள, இந்தி மொழிகளுக்கு உலக ஆராய்ச்சி மன்றங்கள் அமைக்கப்பட்டன.
ஒர் இயக்கத்தையோ நிறுவனத்தையோ கட்டியெழுப்புவதற்கு மிகுந்த ஆற்றலும் அர்ப்பணிப்பும் தியாகமும் தேவைப்படும். ஆனால், நிறுவன மயப்பட்டு செல்வமும் செல்வாக்கும் பெற்றுவிட்டால் அதனைக் கைப்பற்றுவதற்கும் அதிகாரத்திற்கும் பதவி களுக்குமான போட்டிகளும் தோன்றலாம். அத்தோடு, அரசியல்வாதிகளும் அதனைச் சுரண்டிப் பிழைக்க எத்தனிப்பார்களேயாயின் நிலைமை எப்படியாகும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. சென்னையில் 1968 ஜனவரியில் இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற வேளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினின்றும் தனிநாயகம் அடிகளை அகற்றும் எத் தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர் வெளியேற்றப்பட்டு விட்டார் என்று இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

வெளியிட்டது. ஆனால், செக்கிலோசி லாவாக்கியா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கமில் ஸ்வெலபில், பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்ஜீன்பிலியோசாமுதலான அறிஞர்கள் அவரைக் கைவிடவில்லை. காய்த்த மரம் கல்லெறிபடும் என்ற பழமொழி இங்கு நினைவிற்கு வரலாம்.
ஒருவர் பலமும் செல்வாக்கும் பெற்று விட்டால் அவரை அண்டிப் பிழைக்கப் பலர் போட்டியிடுவர். மற்றவரை அண்டவிடாது விரட்டித் தாம் பெறக் கூடிய நன்மைகளைப் பெருக்குவதில் கண்ணாயிருப்பர். அப் படியான செயல்களால் உண்டாகும் அடாத் துக்களையும் அனர்த்தங்களையும் அரசியலில் மட்டும்தான் பார்க்கலாம் என்றில்லை. சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சிமாநாடு நடைபெற்றபோது மலேசியாவிலிருந்து வருகைதந்திருந்த தனிநாயகம் அடிகளிற்குத் தனிப் பெருமையும் செல்வாக்கும் இருந்தது. அவர் தன் நாரிப்பிடிப்புக்குத் தைலம் ஒன்று பெற்றுத் தரும்படி பண்டிதர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டார். பண்டிதர் தைலத்தைக் கொண்டு வந்த வழியில் அதனைக் கண்ட ஒர் அறிஞர் யாருக்குத் தைலம் கொண்டு போகிறீர்கள்?"எனக் கேட்டார். அது யாருக்கு என்பதை அறிந்த அறிஞர், அடிகளிடம் நல்ல பெயர் எடுக்க அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டார். சற்று நேரத்திற்குப் பின்னர் அடிகளாரிடம் சென்று மிகுந்த பணிவுடன், நீங்கள் என்னைக் கேட்டிருந்தால் நான் கொண்டுவந்து கொடுத்திருக்க மாட்டேனா? பண்டிதர் தன்னிடம் நீங்கள் வேலை வாங்குவதாகப் புறுபுறுத்துத் திரிகிறார். உங்களுக்கு இதெல்லாம் மரியாதைக் கேடல்லோ?” என்று கூறினார். அவர் விடைபெற்ற சற்று நேரத்தின் பின்னர் அடிகள் பண்டிதரை அழைத்து, 'உங்களுக்கு நான் கேட்டது பிடிக்கவில்லை என்றால் என்னிடம் நேராகக் கூறியிருக்கலாமே? மற்றவர்களிடம் சொல்லி ஏன் குறைபடுவான்?" என்று கேட்டார். திடுக்குற்ற பண்டிதர், தான் ஒன்றும் குறை சொல்லவில்லை என்றும் யாருக்குத் தைலம் என்று கேட்டதற்கு எதேச்சையாகப் பதிலளித்ததாகவும் கூறினார். புன்னகை செய்த அடிகளார் அதனை மறந்து விடும்படி பண்டிதருக்குக் கூறினார்.
இங்கு குறிப்பிட்ட அறிஞர் தன்னிடம் பெற விழைந்த உதவியை அடிகள் செய்யாமல் விடவும் இல்லை. நேர்மை
31

Page 34
யாக விசாரித்து உண்மையை அறிந்து கொண்டதால் எல்லாம் சுமுகமாக முடிந்தது. அவ்வாறு உண்மைகளைத் திறந்த மனதுடன் ஆராய்ந்து அறியும் இயல்பும் வல்லமையும் பொறுப்பான இடங்களில் உள்ளவர்களுக்குஇருந்துவிட்டால் உலகம் எவ்வளவோ நன்றாயிருக்கும்.
ஆராய்ச்சி முறையியலில் வல்லவரான அடிகள் ஆய்வுகளும் முடிவுகளும் தர்க்க ரீதியானவையாகவும் விஞ்ஞான பூர்வமானவையாகவும் இருக்க வேண்டும் எனக் கருதினார். கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பொறுத்தவரை அவர் கண்டிப்பானவர். அவரது கட்டுப்பாட் டில் நடைபெற்ற ஆராய்ச்சி மாநாடுகளை யும் அவரது கட்டுப்பாடின்றி நடந்த
ஆராய்ச்சி மாநாடுகளையும் கண்டவர் களுக்கு அவற்றுக்கிடையிலான வேறுபாடு புலப்படும். ஏனையவர்களை உற்சாகப்
படுத்தும்தன்நம்பிக்கையின் அடியாகப் பிறந்த பரந்த மனப்பாங்கும் எந்நிலையிலும் சினம் கொள்ளாது ஆதரவாகவும் நிதானமாகவும் மரியாதையாகவும் பேசும் இயல்பும் இக்கட்டான நிலைமைகளிலும் ஒழுங்கை
நிலைநாட்டும் அவரது அற்புத ஆற்றலுக்கு ஆதாரமாயின.
குந்:
ஓய்வும்
ஒவ்வொரு நோயும் வர நோகாகுமழ 8
InՄալf
மாபிளு வாயிலேகொறு
bagp6. Tas CasTubj கும்பிடும் நேர Tuition
LTToof 6T. "ஏ" யிலேயழத்து "ஏ" ஆனால், அவர்களின் குழந்குைே தீயிலேதொ தேழயயனம் கே தெய்வக் குழந்குை
S S
32
 

எடுத்த காரியம் கைகூட வேண்டும் என்பதிலேயே அடிகளின் கவனம் குவிமையப் பட்டிருந்ததால் “யார் குத்தினாலும் அரிசியானால் சரி’ என்ற மனப்பான்மை கொண்டவராக அவர் விளங்கினார். அரிசி யாவதெனின் அதனைக் குத்தியதற்கான பெருமை எனக்குத்தான் கிடைக்க வேண்டும்” என்ற மனப்பான்மை அவருக்கு இருந்ததில்லை. மற்றவர்கள் தமிழியல் ஆய்வுகளைத் தொடர்ந்தபோது அவர் அதனை உவந்து உற்சாகப்படுத்தினார்.
அவரை நினைவுகூரும் இத்தருணத்தில் 1950கள் தொடக்கம் கடைசி வரை அடிகளோடு நல்லுறவும் மதிப்பும் கொண்டிருந்தவரும், அடிகள் காலம் சென்ற வுடன் அவரைப் பற்றிப் பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி அதனை ஒரு சிறு நூலாக வெளியிட்டவரும், தனிநாயகம் பண்பாட்டு சமுதாய நிறுவனத்தின் மூலம் 1989இல் தனிநாயகம் அடிகள் நினைவுச் சொற்பொழிவினை நிகழ்த்தும் வாய்ப்பினை எனக்கு நல்கியவருமான ஆ. தேவராசன் அவர்களையும் நினைவு கூராதிருத்தல் சாலாது.
O O O
குாயும் வேலை செய்யவேணுமாம் குையும் வேலை செய்யவேணுமாம், இல்லாகுயழயழக்கவும் வேணுமாம், கதிரையாய் பகுவியும் வேணுமாம், க்கூடாகு நுணுக்கமும் வேணுமாம், இரண்டு பிள்ளைகளும் வேணுமாம், இவ்வுடம்புக்கு வழவும் வேணுமாம், நம், மாழயும்,கேபிளும் வேணுமாம், ரிக்க நொறுக்குத்தீனி வேணுமாம், வெளிக்கிட்டு போகவும் வேணுமாம், ல் நின்றுதான் கும்பிட வேணுமாம், த்தில் நாடகம் பார்க்க வேணுமாம், அல்ல பருக்க கட்ழல் வேணுமாம், ாங்கக் கூட பெற்ரோல் வேணுமாம், யிலேமாஸ்பன்ைனவும் வேணுமாம், பா அருத்தவர் கையில் வளர்கிறது, ட்டு சத்தியம் செய்து சொல்கிறேன், ாழயோ மாழயோ யாவும் சேதாரமே! களை மற்றவர் பசியரவிடலாமா?
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 35
உருவகக் கதை
ஈசன்
எங்கும் பயங்கரம். அண்டம் அசைந்தது. புயற்காற்று ஆடிக்கொண்டிருந்தது. மக்கள் பயத்தால் நா மரங்களெல்லாம் புயலின் சீற்றத்தைத் தாங்க முட பிராணிகளும், பறவைகளும் உயிருக்கு அஞ்சி திரிந்தன. மக்களின், வீடுகள் உடைந்து அழிந்து ! கொண்டிருக்கும் களிப்பில் எக்காளமிட்டு சிரி மரங்களும் பிராணிகளும் அதன் கோர வெறிய பார்த்து மேலும் மேலும் தன் வேகத்தைக் கூட சிந்தை குலைந்து ஈசனிடம் கெஞ்சினர், மன்றாடி
"இறைவா! எங்களைக் காப்பாற்று, இந்தப்ப உயிர் பிச்சை தந்துவிடு”
மக்களின் மன்றாட்டம் மேலும் மேலும் நேத்திரங்களை மூடி நிஷ்டையில் அமைதியாக
அப்பொழுது, கோரைப் புல்லொன்று புய தாண்டவமாடும் புயலைப் பார்த்து சிரித்துக் செடிகளையும் சின்னாபின்னமாக்கி சிதைத்துக் புல்லை அசைக்க முடியாமல் இருப்பது பெரு புல்லின் இறுமாப்பையும், திமிரையும் பார்த்த அழிக்கத் துடித்தது. கோரப்புல் எதற்கும் அஞ் எண்ணி, அமைதியாக நின்றது. புயலின் ஆத்திர
மறுகணம், புயலின் ஆட்டத்திற்கெல்லாம் "ஏ! அற்பப் புல்லே, என் சக்தியின் முன்னே இ கண்டுமா எனக்கு பயப்படாமல் தலை நிமிர்ந்து நான் அழியாமல் விடமாட்டேன். என் பலம் தெரியுமா? என் முன்னால் உன் சக்தி ஒரு தூ. அசையாமல் நிற்கும் கோரைப் புல்லை அழித்து பயங்கர சப்தத்தடன் விசியது. கோரைப்புல் புய மண்ணில் விழுந்து ஈசனை துதிப்பதும் மீண்டும் புயலால் கோரைப்புல்லை எதுவுமே செய்ய | அழித்துவிட முடியாத புயல் சில மணிநேரங்கள் மிருகங்களையும், மனிதர்களையும் அடித்து நெ புயல், ஒரு சிறு புல்லிடம் தோல்வியடைந்து வெ சிரித்தான். எல்லாச் சக்தியிலும் தன் சக்தியே பே ஆடிய புயல் இறைவனிடம் மண்டியிட்டு பிரார்
"இறைவா! இது என்ன புதுமை? உலகை கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொ சக்தியில் என்ன குறைபாடு?" என்று புயல் கேட்டு
எங்கும் நிசப்தம். புயலின் கோரத்தாண்டவத்தாலும் அதன் அண்டம் அழுது கொண்டிருந்தது. எல்லாச் ச சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனை திறந்து அண்டத்தைப் பார்த்தான்.
விரல் நொடிக்கும் நேரம்,
புயலின் கோரத்தாண்டவத்தில் அடிபட்டு கிடந்த மாடொன்று, ஓடி வந்து பச்சைப் பசேல் கோரைப்புல்லைக் கடித்து அசைபோட்டுக் கொ.
கருணையே வடிவான இறைவன் சிரிக்கிற தத்துவங்கள் முகிழ்விட்டுக் கொண்டிருக்கின்றன
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

சிரிக்கிறான்
= பயங்கரமாக -
ருத்திர தாண்டவம் லா பக்கமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். +யாமல் முறிந்து உடைந்துகொண்டிருந்தன. - செய்வதறியாது திசை தெரியாமல் சிதறித் கொண்டிருந்தன. புயல் அண்டத்தை ஆட்டிக்
த்து கொண்டிருந்தது. திமிர் பிடித்த புயல், பால் உடைவதையும் ஓடுவதையும் பார்த்துப் டிக் கொண்டிருந்தது. அப்பொழுது மக்கள்
னர். யங்கரப் புயலிலிருந்து எங்களைக் காப்பாற்றி
1 விரிவடைந்து கொண்டிருந்தது. ஈசன் இருந்தான். லுக்கு கிஞ்சித்தும் அஞ்சாது நின்று, கோரத் கொண்டிருந்தது. எண்ணற்ற மரங்களையும் கொண்டிருக்கும் புயலுக்கு அற்ப கோரைப் ம் அவமானமாகப் போய் விட்டது. புயல் 1 மீண்டும் தன் வேகத்தை கூட்டி, புல்லை சாது. புயலையும் அதன் அறியாமையையும்
ம் அதன் சென்னியைத் தாண்டியது. அசையாது நிற்கும் புல்லைப் பார்த்து புயல் இந்த அண்டமே ஆடிக்கொண்டிருப்பதை நீ - சிரிக்கிறாய்? திமிர் பிடித்த நாயே! உன்னை எவ்வளவு உறுதியானது என்பது உனக்குத் சி என்பதை மறந்து விடாதே.” என்று கூறி - விட, புயல் தன் பலத்தையெல்லாம் கூட்டி பலின் வேகத்திற்கு ஏற்றாய் போல் அசைந்து
எழுவதுமாக நின்று ஆடிக்கொண்டிருந்தது. முடியவில்லை. பாவம்! கோரைப் புல்லை ளால் அமைதியாகிவிட்டது. மரங்களையும், மறுக்கி சிதைத்து சீரழித்து விட்ட அகோரப் ட்கித் தலைகுனிந்து நிற்பதைப் பார்த்து ஈசன் மலென்று தலைக்கனம் பிடித்து பேயாட்டம்
த்தித்தது. யே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்ப ப! இதன் மர்மமென்ன? எல்லாச் சக்தியிலும் ன்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி? என் தி அமைதியடைந்து அடங்கிவிட்டது.
ன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த க்திகளுக்கும் மேலான யில், நேத்திரங்களைத்
எஸ்.முத்துமீரான்
அல்லலுற்று பசியால் லென்று நிமிர்ந்து நின்ற ரண்டிருந்தது. மான். அவன் சிரிப்பில்
33

Page 36
தன்னிகரற்ற தமிழ்ப்பணிபரிந்த தனிநாயகம் அடிகள்
பெயர்ப் பொருத்தம் என்பது, சிலருக்குச் சிறப்பாக வாய்த்த ஒன்றாகும். அந்த வகையில் பெயர்ப் பொருத்தத்தைச் சிறப்பாகக் கொண்டவர்களுள் ஒருவர், தனிநாயகம் அடிகள் ஆவர். 1913இல் பிறக்கும்போது சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்ற பெயரையும் பின்னர், வண.பிதா சேவியர் தனிநாயகம் என்ற பெயரையும் அவர் பெற்றார். பெயருக்கேற்ப இறுதிவரை அவர் தனிநாயகமாகவே வாழ்ந்து மறைந்தார். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கியர், தனிநாயகம் அடிகளார்.
இளம் வயதில் அவர் கொழும்பு அர்ச். பேர்னாட் செமினரியில் 1931 முதல் கற்றார். மனிதப் பண்பியல், மெய்யியல், கல்வியியல் ஆகிய பாடநெறிகளை அங்கு அவர் பயின்றார். அவற்றோடு சமய ஒப்பியல், சிங்களம், தமிழ் ஆகியவற்றையும் அவர் அங்கு கற்றார். இவ்வாறான பாடநெறிகள் அவரின் பிற்கால ஆளுமை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின எனலாம். 1934 முதல் 1939 வரை ரோம் நகரில் மறையியலில் அருட்
பேராசிரியர் துரை.மனோகரன்
34

44. HE கபார்15-1ா: ப்பா
கலாநிதிப்பட்ட ஆய்வில் ஈடுபட்டபோது கிரீக், இத்தாலிய மொழிகளையும் பயின்றார். ஐரோப்பியக்கலை, தொல்பொருளியல் என்பவற்றைக் கற்றறிவதிலும், ஆர்வம் செலுத்தினர். ரோம் நகரில் கலாநிதிப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட காலத்திலேயே ஒன்றே உலகம்' என்ற பொதுப்பார்வை அவரிடம் ஏற்படத் தொடங்கியது. ரோமாபுரியில் கற்ற காலத்தில் வீரமாமுனிவர் கழகத்தைத் தொடங்கி, தமிழ்ப் பயிற்சியையும் பெற்று வந்தார். அங்கு கற்ற காலத்திலேயே உலகளாவிய நோக்கு அடிகளாரைப் பற்றிக் கொண்டது. தமது ரோமாபுரி அனுபவம் பற்றி அடிகளார் குறிப்பிடும் பொழுது, "அயல்நாடு செல்லும் தமிழ் மாணவர் தமிழ்ப் பயிற்சி மிக்குள்ரேல், எத்துணை உயரிய தமிழ்த்தொண்டு இயற்றுதல் கூடும் என்பது இனிதுணர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.
தனிநாயகம் அடிகளார் தமக்குப் போதிய அளவு தமிழ் அறிவு இல்லை என உணர்ந்த நிலையில், முறையாகத் தமிழ் கற்கும் பொருட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவராக இணைந்தார். அங்கு பேராசிரியர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அ. சிதம்பரநாதன் முதலியோரிடம் தமிழ் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்திலேயே தமிழின் சிறப்புப் பற்றி உலகறியச் செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் அவரிடத்து ஏற்படத் தொடங்கியது. "தமிழ்க் கலைகளில் மூழ்கியிருந்த நான் அந்தக் காலத்திலேயே நம் ஒப்பற்ற இலக்கியத்தைப் பற்றி உலகு அறியச் செய்யவேண்டும். ஒரு சிறிதாவது அதற்கு உழைக்க உறுதி பூண்டேன்" என்று தமது அண்ணாமலைப் பல்கலைக்கழகக் காலத்து அனுபவத்தை அடிகளார் வெளிப்படுத்தியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1947இல் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்ற பின், அங்கேயே எம்.லிற் (M.Lit)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 37
பட்டத்திற்காக 'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர் அ. சிதம்பரநாதனின் கீழ் ஆய்வு செய்து, பட்டத் தினையும் பெற்றுக் கொண்டார். அவரது ஆய்வேடு Nature in Ancient Tamil Poetry என்ற பெயரில் வெளிவந்தது. இதே நூல் காலப்போக்கில் மறுபதிப்புகளாக வெளிவந்தபோது, Nature Poety in Tamil - The classical Period என்றும், Landscape and Poetry - A Study of Nature in classical Tamil Poetry எனவும் வெளிவந்தன. (கடைசிப் பதிப்பு என் கைவசம் உள்ளது). அடிகளார் 1955 முதல் 1957 வரை லண்டன் பல்கலைக்கழகத்தில் பழந்தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள் (Educational thoughts in Ancient Tamil Literature) என்ற தலைப்பில் ஆய்வு செய்து, கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.
தனிநாயகம் அடிகளார் 1952 முதல் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை விரிவுரையாளராகப் பணி புரிந்தார். மலாய்ப்பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறையில் 1961 முதல் 1969 வரை துறைத்தலைவராகப் பணியாற்றினார். பேராசிரியராகவும் விளங் கினார். அங்கு பணியாற்றியபோது, தமிழ் நாட்டிலிருந்து பேராசிரியர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு.வரதராசன் போன்றோரையும், பிற நாடுகளிலிருந்து ஆஷர், கிளாரன்ஸ், எட்கர் கோல்டன், காரில் மெங்கெஸ் முதலியோரையும் தமது பல்கலைக்கழகத்திற்கு அழைத்திருந்தார்.
அடிகளாரின் மொழியாற்றல் வியக்கத் தக்கது. அவர் தமிழ், ஆங்கிலம், லத்தீன், கிரீக், இத்தாலியம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜேர்மன் மொழிகளில் புலமையுடையவராகவும், சமஸ்கிருதம், மலையாளம், சிங்களம், போர்த்துக்கீசம், எபிரேயம், மலாய், ரஷ்யன் ஆகிய மொழிகளைத் தெரிந்தவராகவும் விளங்கினார். அவரது பன்மொழி அறிவு, அவரைச் சிறந்த ஒப்பியல் ஆய்வாளராகவும், தமிழ்த்தூதுவராகவும் செயல்பட வைத்தது.
தனிநாயகம் அடிகளாரைத் தனித்துமாக இனங்காட்டும் அம்சங்களுள் ஒன்று, 1952 இல் அவர் தொடங்கிய Tamil Cultre என்னும் இதழாகும். அவரது உலகப்பயணங்களின்போது தமிழ் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் தமிழ் ஆய்வு இதழ் ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிடவேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர். எனவே, உலகின் பல்வேறு நாடுகளிலும் பணிபுரிந்துவரும் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழ் ஆய்வை ஒருமுகப்படுத்தி வளம்படுத்த ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

அடிகளார் 1952 இல் ஆங்கில ஆய்விதழைத் தொடங்கினார். மேலைநாட்டு ஆய்வு களைப் போன்று, பண்பாடு, வரலாறு, சமூகவியல், மானிடவியல், புவியியல், மொழியியல், உளவியல், ஒப்பியல் முதலான பிறதுறைகளோடும் தொடர்பு கொண்டதாகத் தமிழ் ஆய்வு இடம் பெறவேண்டும் என்று தனிநாயக அடிகளார் விரும்பினார். தமிழ் ஆய்வை நவீனத்துவப்படுத்த விரும்பிய அவர், குறிப்பிட்ட முத்திங்கள் இதழைத் தொடங்கினார். 1966 வரை Tamil Culture வெளிவந்தது. இவ்விதழில் அடிகளார் 24 ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகத் தமிழ்ப் பண்பாடு நேற்று இன்று நாளை - இலங்கை பற்றிய சிறப்பாய்வு (Tamil Culture Its Past, Its Present and Its Future – with special Reference to Ceylon) இந்தியச் சிந்தனையும் உரோம் ஸ்டாயிக் சிந்தனையும் (Indian Thought and Roman Stoicism) தமிழில் அச்சேறிய முதல் நூல் (First Book Printed in Tamil) ஐரோப்பிய நூலகங்களில் தமிழ்க் கையெழுத்துப் படிகள் (Tamil Manuscripts in European Libraries) தென்கிழக்கு ஆசியாவில் தமிழ்ப்பண்பாட்டின் செல்வாக்கு (Tamil Cultural influence in Southeast Asia) முதலானவற்றை ஆய்வறிஞர்கள் எடுத்துக் காட்டுவர். அதேவேளை, தமிழியல் தொடர்பான பிறமொழி அறிஞர்களின் கட்டுரைகளும் அவ்விதழில் காலந்தோறும் இடம்பெற்று வந்தன. சுனித்குமார் சட்டர்ஜி, சேர் மார்ட்டிமர் வீலர், எம்.பி. எமனோ, ஜே. ஆர்.மார், எம். எஸ். எச். தொம்ஸன், பிலியோசா, எச். ஹெராஸ், எம். ஆந்திரனோல், கமில் சுவலபில் போன்ற பலரின் ஆய்வுக் கட்டுரைகள் அவ்விதழில் வெளிவந்தன. இவ்விதழ் தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கு ஆற்றிய பணி அளவிடற்கரியது.
இவ் ஆய்வு இதழ் நின்ற பின்னர், தமிழயல் ஆய்வில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த தமிழ் அறிஞர்கள், 1968 இல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது புதிய ஓர் ஆய்விதழைத் தொடங்குவதற்கு முனைந்தனர். இம் முயற்சிக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர், தனிநாயகம் அடிகளார். 1969இல் Journal of Tamil Studies என்னும் பெயரில் தொடங் கப்பட்ட அவ் ஆய்விதழுக்கு முதல் ஆசிரியராக அடிகளாரே பொறுப்பேற்றார். இவரது பொறுப்பில் நான்கு இதழ்கள் வெளியாகின. இதன் முதல் இதழில் 'இருபதாண்டுக் காலத் தமிழ் ஆய்வுகள்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை வெளியாகியது.1949 முதல்
35

Page 38
1969 வரையிலான இருபது ஆண்டுக் காலத் தமிழ் ஆய்வுகள் பற்றி அவ் ஆய்வுக்கட்டுரை பேசுகிறது. அந்த ஆய்விதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து அடிகளார் விலகிய பின்னரும் 1972இல் 'தொல்காப்பியம் மிகப் பழைய ஆவணம்" என்னும் ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார்.
தனிநாயகம் அடிகளாரின் தனித்துவமான பிற பணிகளாக இரண்டு அமைந்துள்ளன. அவை உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைத்தமையும், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதற்கு முன்னோ டியாக விளங்கியமையும் ஆகும். 1964இல் புதுடெல்கியில்நடைபெற்றகிழைத்தேயஆய்வு மாநாட்டில் அடிகளாரும் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் பேராசிரியர்கள் பிலியோசா, ரொமஸ் பறோ, க. கணபதிப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், வ. ஐ. சுப்பிரமணியம், கலாநிதி றொன் ஆஷர், பண்டிதர் கா. பொ. இரத்தினம் போன்றோரும் கலந்து கொண்டனர். மாநாட்டின்போது, அண்ணாமலைப் பலைக்கழகத்தில் தம்மோடு ஒன்றாகப் படித்தவரான பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியத்திடம் (முன்னாள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்), "சுப்பு, நாம் தமிழுக்கென உலக மாநாடு ஒன்று நடத்த முயலவேண்டாமா? அதற்குரிய கூட்டம் ஒன்றைக் கூட்டி ஒரு நிறுவனம் அமைக்க வேண்டாமா?” என்று கேட்டார். தமது விருப்பத்தை நிறைவேற்று முகமாக மாநாடு முடிந்த பின்னர், அம்மாநாட்டில் கலந்து கொண்ட மேற்கண்ட அறிஞர்களை ஒன்றுகூட்டி, உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டது. 1966ல் மலேசிய அரசின் அனுசரணையுடன் கோலாம்பூரில் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தி, பின்னர் நடைபெற்ற அனைத்து மாநாடு களுக்கும் முன்னோடிகளாக விளங்கினார். இதுவரையில் எட்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. உலகத்தமிழாராய்ச்சிமன்றம் அமைத்தமையும், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியமையும் தமிழ் ஆய்வை உலகளாவிய நிலைக்கு விரிவுபடுத்தி, உயர்வடையச் செய்தன.
தனிநாயகம் அடிகளார் தன்னிகரற்ற தமிழ்த் தூதுவராகவும் விளங்கினார். 1949, 1950ஆம் ஆண்டுகளில் உலகின் பல நாடுகளுக்கும் அவர் சென்று வந்தார். அதன்
36

பயனாகத் தமிழ்த்தூது என்ற அரிய நூலினை அடிகளார் எழுதி வெளியிட்டார் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்துவரும் தமிழர் பற்றிய செய்திகள், தமிழ் பற்றிய தகவல்கள், பண்பாடு, பழக்கவழக்கங்கள், கலைகள் முதலானவற்றில் தமிழோடும், தமிழரோடும் தொடர்புடைய பல்வேறு நாடுகள், மக்கள், மொழிகள் பற்றிய விடயங்களை இந்நூல் தெரிவிக்கிறது. தமிழக ஆய்வாளர் முனைவர் ம. செ. இரபிசிங் குறிப்பிடுவதைப் போன்று, "தமிழ் ஆய்வு செய்வதற்குரிய வாயில்களையும், அதற்குரிய களங்களையும், ஒப்பியல் ஆய்வுகள் செய்வதற்குரிய வாய்ப்புக்களையும், தமிழைப் பரப்புவதற்கு உரிய கருத்துக்களையும் இந் நூலில் கூறுகிறார் அடிகளார்.”
தமிழ்த்தூது (1961) என்னும் நூலில், தமிழைப் பற்றி அறியாத நிலையும், தமிழின் முக்கியத்துவம் பற்றித் தெரியாத நிலையும் உலக அரங்கில் காணப்பட்டமையைப் பற்றிக் கவலையுடன் கருத்துக்களை அடிகளார் வெளியிட்டுள்ளார். “இந்தியாவைப் பற்றியும், அதன் தொன்மைச் சிறப்பினைப் பற்றியும் தெரிந்து கொள்ள விழையும் மேலைநாட்டார், சமஸ்கிருதத்தைமட்டும்கற்றுஅதன்வாயிலான செய்திகளை மட்டுமே இந்திய நாட்டைப் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பியல்பைச்சரியானமுறையில் மேலைநாட்டவருக்குஎடுத்துஇயம்பவில்லை. மேலைநாடுகளில் வெளிவந்துள்ள இந்திய இலக்கிய வரலாற்று நூல்களில் தமிழிலக் கியத்தைப் பற்றிய கருத்துச் சிறிதேனும் இல்லை. ஒரு சொல்லேனும் இல்லை. இந்திய நாட்டில் இந்தியக் கலைஞரால் யாக்கம் பெற்ற இலக்கிய வரலாற்று நூல்களிலும், தமிழுக்குத் தகுந்த இடமும் புகழும் அளிக்கப்படவில்லை. இந்தியக் குடியரசின் முதல் அமைச்சர் திரு. நேரு தாமும், தம் நூல்களில் தென்னாட்டிற்குச் சிறிதளவே இடம் ஈந்துள்ளார்” என்று தமிழும், தமிழரும் புறக்கணிக்கப்பட்டமையையிட்டுத் தமது வேதனையைத் தெரிவித்துள்ளார். அடிகளார் இதுபற்றிக் குறிப்படும்போது, "மாக்ஸ்முல்லர், வின்றாலிட்ஸ் போன்றவர் முதலாகப் பலரும் வடமொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். இந்திய இலக்கியங்களின் வரலாற்றிலே தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, திராவிட நாகரிகத்தைப் பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப்பேனும், ஒரு கருத்தேனும் காணக் கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 39
இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என அவர் மொழிவனவெல்லாம் திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திராவிட மொழிகள் இவற்றையே அடிப்படையாகக் கொண்டவை. ஆயினும், பல்லாண்டுகளாக நடுநிலை கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஒழித்தும் நூல்கள் யாத்தமையின் இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதும் மக்கள் மனத்தில் ஐயம் விளைப்பதாக இருக்கின்றது" என்று தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். இத்தகைய வேதனையே, அடிகளாரை உலகளாவிய ரீதியில் தமிழியல் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடத் தூண்டியது எனலாம்.
அடிகளார் தமது உலகப் பயணங்கள் வாயிலாக இரண்டு விடயங்களை இயன்ற வரை நிறைவு செய்தார் எனலாம். (1) தமிழோடும், தமிழரோடும் தொடர்பான புதிய விடயங்களைக் கண்டறிந்தார். (2) தமிழின், தமிழ் இலக்கியங்களின் பெருமையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். தமது உலகப் பயணங்களின்போது, பிறநாடுகளில் கிடைக்கும் தகவல்களையெல்லாம் திரட்டி யுள்ளார். Tamil Culture இதழின் 1958 ஜூலை இதழில் தமிழில் அச்சேறிய முதல் நூல் (First Book Printed in Tamil) என்ற கட்டுரையில் முதல் தமிழ் நூலைப் பற்றிய விபரங்களைத் தந்துள்ளார். அவரது கருத்தின்படி, கி. பி. 1554இல் லிஸ்பனில் அச்சிடப்பட்ட Cartilha என்ற நூலில் தமிழ் எழுத்து ஒலிகள் உரோமன் எழுத்துக்களால் அச்சிடப்பட்டு, அச்சேறிய முதல் தமிழ்நூலாகவிளங்குகிறது. கத்தோலிக்க வழிபாட்டு முறைகளும், செபங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழ்ச் சொற்களை உரோமன் எழுத்துக்களில் அச்சிட்டு, அவற்றின் உச்சரிப்பையும் பொருளையும் போர்த்துக்கீசிய மொழியில் அச்சிட்டுள்ளனர். "இந்திய மொழிகளுக்குள்ளும் கிழக்கு ஆசிய மொழிகளுக்குள்ளும் அச்சுக்கண்ட முதல் மொழி தமிழ் மொழி என்பது தனிநாயகம் அடிகளாரின் கருத்து. இதேவேளை, தமிழில் அச்சேறிய இரண்டாவது நூலகத் தம்பிரான் வணக்கம் என்ற நூலை அவர் குறிப்பிடுகிறார். கி.பி.1577 இல் கேரளாவின் கொல்லம் என்ற இடத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது. இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட முதலாவது நூல் இதுவாகும். இதில் கிறித்தவ செபங்கள் அடங்கியுள்ளன. தமிழில் தோன்றிய மூன்றாவது நூல் கிரீசித்தியானி வணக்கம் என்பதாகும். இது கி.பி. 1579இல் கொச்சியில்
அச்சிடப்பட்டது.
தமிழில் அச்சுருவம் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

பெற்ற தியிருக்க நாற்பெரப்
முளைப்பற%தரிவிக்கி2ப்படித்?
பெற்ற நான்காவது நூல் கி.பி.1586 இல் பிரசுரமாகியிருக்கவேண்டும் என்று அடிகளார் கருதுகிறார். நூற்பெயரைக் கொண்ட முன்னட்டையும், முன்னுரைப் பகுதியும் நூலில் இல்லை. இத்தகைய பல தகவல்களை, தமது உலகப் பயணங்களின் போது அடிகளார் பெற்றுள்ளார்.
பாரிஸில் தேசிய நூலகத்தில் ஏறத்தாழ ஆயிரம் பழைய தமிழ் ஏடு களும், கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன என்று தனிநாயக அடிகளார் தெரிவித்துள்ளார். இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்க முடியாதவையாகும். பாரிஸில் உள்ள தமிழ் நூல்களைப்பற்றி அடிகளார் குறிப்பிடும்போது பின்வருமாறு தெரிவிக்கிறார். "அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்த பொழுது தற்காலம் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்கள் அங்கு உள. எதிர்பாராத இடங்களிலும், நூற் கூடங்களிலும் தமிழ் ஏடுகளைக் கண்டுள்ளேன் சில ஆண்டுகளுக்கு முன் பாரிஸ் மாநகரில் ஒரு ஐரோப்பியப் பெண்மணி தமிழ் ஏடுகள் சிலவற்றை விலைக்கு விற்க முயன்றதாக அறிந்தேன். மேலும், நெப்போலிய மன்னர் தம்முடைய நூற்கூடத்தில் கம்பராமாயண ஏடு ஒன்றை வைத்திருந்ததாகவும், அஃது இப்பொழுது 'பொன்ரையின் புளோ' நூ ற்கூடத்தில் இருத்தல் வேண்டும் என்று பிரான்சு அறிஞர் ஒருவர் எனக்குக் கூறினார். நெப்போலிய மன்னர் நூற்கூடத்தில் அத்தகைய ஓர் ஏடு இருப்பின், அச்செய்தி வியப்பை உண்டாகத் தேவையில்லை. ஏனெனில் அவர் கீழ்த்திசை நாடுகளுடைய இலக்கியங்களை அறிவதற்குப் பெரிதும் முயன்றவர். இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து பார்க்கவேண்டுவது தமிழ் அறிஞர்கள் கடமை"
தமிழ்த்தூதுவராக விளங்கிய தனிநாயகம் அடிகளார் மேலைத்தேச நாடுகளுக்கும், கீழைத்தேச நாடுகளுக்கும் சென்று வந்து ள்ளார். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, போர்த்துக்கல், நோர்வே, சுவீடன், பின்லாந்து, ஆஸ்திரியா, வத்திக்கான், கிரேக்கம், ஐக்கிய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கம்போடியா, வியட்னாம், பர்மா, ஜாவா, இந்தோனேசியா, ஜப்பான், மொரிசியஸ் போன்ற பல நாடுகளுக்கும் பயணம் செய்து, தமிழ்த்தூ துவராகப் பணியாற்றினார்.
37

Page 40
அமெரிக்க அரசியல் அறிஞராகிய வெண்டல் வில்கி எழுதிய ஒரே உலகம் (One World) 6Taip biTai dal)35ll Ljajip பெற்றதாகும். ஆனால், அதற்கு ஆயிரகக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் ஒன்றே உலகம்' என்ற சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை அடிகளார் எடுத்துக் காட்டினார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பெரிதே உலகம் பேணுநர் பலரே” “எத்திசைச் செலினும் அத்திசைச்சோறே” எனப் புறநானூற்றில் இடம்பெறும் கருத்துக்களைச் சான்றுகளாக அடிகளார் குறிப்பிட்டார். இவ்வகையில், தாம்பயணம்செய்தநாடுகளைப் பற்றி அவர் எழுதிய இன்னொரு நூல், ஒன்றே உலகம் (1974 இரண்டாம் பதிப்பு).
அடிகளாரின் இன்னொரு சிறப்பியல்பு அவரின் ஒப்பியல் ஆய்வு முயற்சிகள் ஆகும். ஐரோப்பிய இலக்கியங்களில் காணப்படும் இயற்கை தொடர்பான பாடல்களையும், சமஸ்கிருதத்தில் இடம்பெறும் இயற்கை தொடர்பான பாடல்களையும் படித்தபின்னர், அவற்றுடன் தமிழில் உள்ள இயற்கை பற்றிய பாடல்களையும் ஒப்புநோக்க வேண்டும் என்ற ஆர்வம்தனிநாயகம்அடிகளாருக்குஏற்பட்டது. இலங்கைத்தமிழ் அறிஞர்களில் ஒப்பியல் ஆய்வில் அதிக அக்கறை செலுத்தியவர்களாகச் சுவாமி விபுலாநந்தரையும், தனிநாயகம் அடிகளாரையும், பேராசிரியர் க. கைலாச பதியையும் குறிப்பிடலாம்.
தனிநாயகம் அடிகளார் தமது நூல்கள் வாயிலாகவும், தமது ஆய்விதழ்கள் வாயிலாகவும் தமிழ் ஆய்வுப்பணி செய்ததோடு, பல்வேறு கருத்தரங்குகளிலும், இதழ்களிலும் தமது ஆய்வுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவ்வகையில், தமிழில் நீதி இலக்கியங்களின் காலம், தமிழ் வணிகம், வெளிநாடுகளில் தமிழ் ஆய்வுகள், தமிழ்ப் பண்பாடும் சமயமும், தமிழ் ஆய்வுகள், சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு, தமிழின் வளர்ச்சி, தமிழ்ச் செல்வங்கள் திருக்குறளும் கிரேக்க ஒழுக்கஇயலும், சங்கஇலக்கியத்தில்விரிவாகும் ஆளுமையின் இயல்பு, வீரமாமுனிவர் - தமிழ் ஆராய்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த ஐரோப்பியரில் தலைமகன் முதலானவை குறிப்பிடத்தக்கன.
பண்டைய இலக்கியங்களில் அடிகளார் ஈடுபாடு கொண்டிருந்தமை போலவே, நவீன இலக்கியங்களிலும், ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.மகாகவி பாரதி, பாரதிதாசன் முதலானோரின் கவிதைகளில் அவர் ஈடுபாடு காட்டினார். அதேவேளை, கல்கி.மு.வரதராசன்
38

ஆகியோரின் எழுத்துகளிலும் ஆர்வம் காட்டினார். இவர்களின் ஆக்கங்கள் பற்றி ஆய்வு பூர்வமாக அடிகளார் எழுதியுள்ளார். கல்கியின் வரலாற்று நாவல்கள் என்ற தமிழ்க் (5L (660JTulb, Urbanisim in Dr. Varatarajan Novels என்னும் ஆங்கிலக் கட்டுரையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
தனிநாயகம் அடிகளார், தமது சொற்பொழிவுகளின் மூலமாகவும் தமிழ்ப் பணி புரிந்துள்ளார். வெளிநாடுகளில்
அவர் ஆற்றிய உரைகள் தமிழ் பற்றிய அறிமுக உரைகளை அமைந்தன. இது பற்றி அடிகளார் குறிப்பிடும்போது, "இந்நாடு களில் நான் ஆற்றிய விரிவுரைகளில் பெரும் பாலும் தமிழைப் பற்றிய சில பொதுக் குறிப்புக்களே அமைந்துள்ளன. தமிழைப் பற்றி ஏதேனும் அறியார்க்கு ஆராய்ச்சியுரை நிகழ்த்துதற்கு இடமின்று. தமிழ் மொழியின் வியத்தகு இயல்புகளையும், தமிழரின் இயற்கை ஈடுபட்டினையும், ஐந்திணை இலக் கணத்தையும், மலர்மாலைகளைநம்முன்னோர் கையாண்ட முறைகளையும் எடுத்துக் கூறி னேன்” என்று கூறியுள்ளார்.
தனிநாயகம் அடிகளாரின் தன்னிகரற்ற பணி வியக்கத்தக்கது. தமிழை உலகறியச் செய்த பெருமை அவருக்கு உண்டு. ஆறுமுகநாவலர், சுவாமி விபுலாநந்தர் ஆகியோருக்குப் பின் தமிழ்நாடு அறிந்த தமிழ் அறிஞராகவும், முதன்முதலில் உலகம் அறிந்த தமிழ் அறிஞராகவும் அடிகளார் விளங்கினார். அதேவேளை, பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் தெரிவித்த கருத்துகளும் குறிப்பிடத்தக்கவை. "தமிழகம் அவர் செய்த பெருந்தொண்டை முழுமையாக உணர்ந்திடவில்லை. அவரால் உலக அரங்கில் தமிழுக்கு ஏற்பட்ட சிறப்பை இதுவரை விலை மதித்திடவில்லை. தமிழ்நாட்டில் நல்ல தொண்டுகளைச் சீர்தூக்கிப் பாராட்டப் பல ஆண்டுகள் ஆகும். வளராத மனநிலை உடையவர்கள் பலராகையால், அந்த மனநிலை மாற பல ஆண்டு நீடித்திடும். ஆனால் விரைவில் அந்த நிலை மாறாமல் இருக்காது. அன்று தனிநாயகம் அடிகளைச் சிரமேற் கொண்டு போற்றுவர்” என்று சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிட்டவை உண்மையே. நீண்டகாலம் தனிநாயகம் அடிகளாரை மறந் திருந்த தமிழ்கூறு நல்லுலகம், அவரது நூற் றாண்டில் மீண்டும் அவரை நினைவு கூருவது வரவேற்கத்தக்கதாகும்.
O O O
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 41
தனிநாயக அடிகளாரது ஆய்வு மு என்றவுடன் சங்க இலக்கியம் தொடர்பான ஆ நினைவுக்கு வருவது வழக்கமாகவுள்ளது. இலக்கியம் தொடர்பான ஆய்வுகளிலும், ஈடுபட்டிருக்கின்றாரென்பதனைப் பலரும் அறில் ஆதலின் அவை பற்றியும் அவற்றின் முக்கி பற்றியும் கவனிப்பது அவசியமானதொன்று. மேற்கூறியவாறு நோக்கும்போது, நாவலாசிரியர்கள், நவீன தமிழ்க் 巴5( தமிழ்த் திறனாய்வு முதலான விடயங்களி கவனஞ்செலுத்தியிருப்பது தெரியவருகின்றது.
தமிழ் நாவலாசிரியர்களுள் "கல்கி, மு.வ மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஆகியோர் தனிநாயக அடிகளார் கவனஞ் செலுத்தியுள்ளார் தமிழ் நாவல் வரலாற்றில் - வளர்ச்சியில் - " முக்கியத்துவம் பலராலும் அறியப்பட்டே புனைகதை, இதழியல், கட்டுரை முயற்சி பல துறைகளிலும் ஈடுபட்டு அவற்றில் ஆழம இடமுள்ளது. 'கல்கியின் வரலாற்று நாவல்கை அடிகளார் ஈடுபட்டுள்ளார்.
மேற்கூறிய ஆய்வு முயற்சிக்கு முக்கியமானே பல்கலைக்கழகஇந்தியத்துறையும்(அதன்தலை6
அடிகளார்) மலாயாத்தமிழ் எழுத்தாளர் சங்கழு வாசிக்கப்பட்டதொன்று. ‘எழுத்தாளரொருவ எழுத்தாளர் சங்கமும் ஒரு பல்கலைக்கழகமும் மன்றத் தலைவர் க.பொ.இரத்தினம் குறிப்பிட்டி (க.பொ.இ. அவ்வாறு குறிப்பிடுவது தமிழ் ந அமைப்புகள் என்ற கருத்திலா என்று தெரியவி உலகப் பணி குறித்துக் கட்டுரை சமர்ப்பித்திரு ஆசிரியர்) முருகுசுப்பிரமணியன் தனது உரையி குறிப்பிட்டிருப்பதும் இவ்வேளை கவனத்திற்குர
“...இன்னுஞ் சொல்லப்போனால், தய வழிகாட்டியாகவும் இக்கருத்தரங்கம் அ தமிழ் நாட்டில் புலவர் பெருமக்களுக்கு எழுத்தாளர்களுக்கும் அத்துணை இணக்க இன்னும் ஏற்படவில்லை. இருபிரிவின( கூட்டமாகச் செயல்புரிந்து வருகின்றனர். புலவ தமிழ் எழுத்தாளரென்று மறுமலர்ச்சி எழுத்தாள செய்வதும் புதுமை எழுத்தாளர்களை ஆழமற் புலவர்கள் புறக்கணிப்பதும் தமிழகத்தில் காண் கல்கி, புலவர் கூட்டத்தைச் சார்ந்தவர் அன் எழுத்தாளர்களின் வரிசையில் சேர்க்கப்பட
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)
 

முயற்சிகள் பூய்வுகளே நவீன அவர் வதில்லை. யத்துவம்
தமிழ் விஞர்கள், ல் அவர்
பரதராசன்
பற்றித்
T. கல்கி'யின் தொன்றே. முதலான )ான தடம் பதித்தவர்களுள் கல்கிக்கு முக்கிய ள் பற்றிய ஆய்வு முயற்சியிலேயே தனிநாயக
தொரு பின்னணியுள்ளது. இவ் ஆய்வு, மலாயாப் வராக அவ்வேளைகடமையாற்றியவர்தனிநாயக
மம் சேர்ந்து (1963ல்) நடத்திய கருத்தரங்கிலே வரின் எழுத்துத் திறனை முதன்முதலாக ஒர் ) சேர்ந்து ஆய்ந்துள்ளன என்று உலகத்தமிழ் உருப்பது இவ்வேளை கவனத்திற்குரியதொன்று ாட்டினையும் சேர்த்தா அல்லது அயல்நாட்டு பில்லை). அவ்வரங்கிலே கல்கியின் பத்திரிகை நந்த (தமிழ்நேசன் லே பின்வருமாறு Kயதே: மிழ் நாட்டுக்கு மைந்திருக்கிறது. ம் மறுமலர்ச்சி மான சூழ்நிலை ரும் தனித்தனிக் ர்களை விளங்காத ார்கள் நையாண்டி ற குப்பை என்று கின்ற நிலைமை. ாறு. மறுமலர்ச்சி பேராசிரியர் :
வேண்டியவரே சிெ. 6tumayman
39

Page 42
அவர். இவ்வகையில் தமிழ்ப் புலவர்களின் பாராட்டிற்குக் கல்கி இலக்காவது அரிது. தமிழகச் சூழ்நிலையில் கல்கிக்குப் புலவர் பெருமக்களின் பாராட்டு இன்னும் உரிய அளவில் வழங்கப்படவில்லை. அக்குறையை இப்போது இங்கு நடைபெறுகின்ற கருத்தரங்கம் போக்கிவிடுகிறது. பேராசிரியர் தனிநாயக அடிகளாரும், இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர் திரு.க.பொ.இரத்தினம் அவர்களும் புலவர் பெருமக்களின் சார்பில் கல்கியின் எழுத்துப் பணிக்குத் தக்க சிறப்பு வழங்க முன்வந்திருக்கின்றனர். அதனால்தான் தமிழகத்துக்கு இக்கருத்தரங்கம் நல்ல வழி காட்டுகின்றது என்று குறிப்பிட்டேன். புலவர் பெருமக்களுக்கும் மறுமலர்ச்சி எழுத்தா ளர்களுக்கும் இடையே இறுகிய தொடர்பு ஏற்படுவது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்."
கல்கியின் வரலாற்று நாவல்கள் என்ற விதத்தில் அவரது 'சிவகாமியின் சபதம்' மட்டுமே தனிநாயக அடிகளாரின் விசேட கவனிப்பிற்குள்ளாகிறது. அந்நாவல் பற்றி
ஆரம்பத்தில் தனிநாயக அடிகளார் பின்வரு மாறு குறிப்பிடுவார்.
"... ஆனால் வரலாற்று நாவல் துறையில் கல்கியின் காலத்திற்குமுன், கல்கியெழுதியவை போன்ற வரலாற்று நாவல்கள் தோன்றவில்லை. கல்கியின் காலத்திற்குப் பின் தோன்றிய வரலாற்று நாவல் ஆசிரியர், பெரும்பாலும் கல்கியின் மாணவர் என்றே கூறுதல் வேண்டும். சோமு, அகிலன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், பார்த்தசாரதி போன்றோரின் நூல்கள் எத்தகைய பொருட்சுவையும் நடைச்சுவையும் கதைமாந்தர் படைப்புச் சுவையும் வரலாற்றுச் சுவையும் நல்கினும் இத்துறையில் கல்கியின் சிவகாமியின் சபதம் அடைந்த உச்சியை இந்நூல்கள் அடைந்ததாகத் தெரியவில்லை”
தொடர்ந்து, மேற்கூறியவாறான முதன்மை கல்கியின் நூல்களுக்கு எக்காரணம் பற்றி எழுந்தது என்று ஆராய முற்படுகின்றார். அவ்விதத்திலே மேனாட்டில் அவ்வேளை புகழ்பெற்றிருந்தவால்டர்ஸ்காட்டின் எழுத்து முயற்சிகளுடன் கல்கியின் எழுத்து முயற் சிகளை ஒப்பிட்டு கல்கியின் சிறப்பினைக்
கூறமுற்பட்டுள்ளார்.
பின்னர், 'வரலாற்று ஆசிரியரின் வரலாற் றுக் கற்பனைக்கும் வரலாற்றுக் கட்டுக்கதை
40

ஆசிரியரின் கற்பனைக்குமிடையிலான வேறு பாடு பற்றி விளக்குகின்றார், இவ்வேளை 'ஒவ்வொரு வரலாற்றுக் கட்டுக்கதையிலும் கற்பனைக்கூறு எத்தனை, உண்மைக்கூறு எத்தனையென்பதை நிறுத்துப்பார்த்தலும் திறனாய்வின் கடமை' என்று குறிப்பிடுவதும் கவனத்திற்குரியது.
வரலாற்றுக் கட்டுக்கதைகளின் தோற் றம் பற்றியும் காரணங்கள் பற்றியும் தொடர்ந்து ஆராய முற்படுகின்றார். ஜோர்ஜ் லூக்காஸ் கூறுவது போன்று "வரலாற்றுக் கட்டுக்கதைகள் நாட்டுப் பற்று, இனப்பற்று முதலிய பற்றின் காரணமாகவும் தோன்றும். அவை இப்பற்றினை வளர்க்கும் கருவிகளாகவும் அமைகின்றன." என்ற ரீதியில் கல்கியின் நூல்களும் அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை என்று குறிப்பிட்டு அவ் அடிப்படையில் சிவகாமியின் சபதத்தை அணுக முற்படுகின்றார். கல்கி எத்தகைய ஆதாரங்களைப் பயன் படுத்தியுள்ளார் என்ற முக்கியமான விடயத்தினை அவதானிப் பதிலும் கவனஞ் செலுத்து கின்றார்.
தமது காலத்து உலக அரசியல் விவகாரங்களைக் கொண்டு முன்னைய காலத்து உணர்ச்சிகளையும் காட்சிகளையும் கல்கிவிவரிக்கமுற்படுவதனையும் (உ-ம்:8ஆம் எட்வேட் அரசரின் காதலுக்கான முடிதுறப்பு ஹிட்லருடைய கொடுமைகள் முறையே நரசிம்ம பல்லவர், புலிகேசி ஆகியோர் பற்றிய செயற்பாடுகளினூடே வெளிப்படுதல்) அடிகளார் அலசுவது விதந்துரைக்கப்பட வேண்டியது. ஏனெனில் இவ்விதத்தில் கல்கியின் வரலாற்று நாவல்கள் பற்றிய அடிப்படைக் குறைபாடொன்றையும் நாகரீக மான முறையில் வெளிப்படுத்த அடிகளார் முற்பட்டிருப்பது புலப்படுகின்றது!
திறனாய்வு நடத்துவதற்குப் பல்வகை ஆதாரங்கள் இன்றியமையாதவை என்ற அடிப்படையில் எவ்வாறு நூல் எழுத முற்பட்டார், எவருடன் கலந்தாலோசித்தார், எழுதும்போது அவர் தமது நூலை பற்றி என்ன கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்ற செய்திகளையும் ஆசிரியர்வாயிலாகவும் ஆசிரியரது நண்பர்கள் வாயிலாகவும் ஆசிரியரது குறிப்புகள் முதலியனவற்றினூ டாகவும் அறிதலவசியம்' என்று குறிப்பிட்டு அது பற்றிய அவதானிப்பிலும் அடிகளார் கவனஞ் செலுத்தியிருப்பதும் அன்றைய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 43
S!
(
8
6
தி
திறனாய்வுலகிற்கு புதியதொரு விடயமாகும்.
மு.வரதராசனின் (மு.வ) நாவல்கள் பற்றிய ஆய்வொன்றினையும் 'சென்னை நகரத்து நாவலாசிரியர்' என்ற தலைப்பிலே தனிநாயக
அடிகளார் செய்துள்ளார்.
தமிழ்நாவல் வளர்ச்சியில் நாற்பது ஐம்பதுகள் காலப்பகுதி முக்கியமானது. ஏனெனில், அடிகளார் கூறுவது போன்று, மேலைத்தேய நாவல் செல்வாக்கிலிருந்து விடுபட்டு சுயமான தமிழ் நாவல்களின் தோற்றம் உருவான காலம் இதுவாகும். மு.வ, இக்காலத்திற்குரியவர். அதிக நாவல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். ஒரு காலகட்ட வாசகர்கள் அவரது நாவல் வாசிப்புடனேயே வாசிப்புலகினுள் புகுவது வழக்கம் : இலட்சிய நோக்குடைய நாவல்களாக இருந்த நாவல்களில் அடிக்கடி வரும் பொன்மொழிகள் அக்காலகட்ட வாசகர் களைப் பெருமளவு ஈர்ப்பது வழக்கம். (திருக்குறளுக்கான இக்கால விளக்கமே அவரது நாவல்கள் என்ற கடுமையான விமர்சனமும் அவரது நாவல்களுக்கிருந்தது). அறுபதுகளிலே கைலாசபதி தினகரனுக்குப் பத்திரிகையாசிரியராகவிருந்த காலத்திலே இவரது நாவல்கள் பற்றிய வாதப்பிரதி வாதங்களும் தினகரனில் நடைபெற்றுள்ளன. இவ்வாறு 'மு.வ.வின் நாவல்கள் பற்றிய ஆய்வு முக்கியம் பெற்றிருந்த சூழலிலே இத்தகைய மு.வ.வின் நாவல்கள் பற்றி புதிய கண்ணோட்டத்தில் அதாவது
அவரது நாவல்களில் நகர வாழ்க்கைச் சித்திரிப்பு பற்றிய நோக்கிலே அடிகளார் அணுகுவது குறிப்பிடத்தக்கது. சமூகச் சீர்திருத்தப் பார்வையில் அத்தகைய நகர வாழ்க்கையில் நிலவிய வறுமையும் ஒழுக்கமின்மை காணப்பட்ட நிலையில் ஒழுக்கமான
வாழ்வு பற்றி விவரிப்பதிலும் கவனஞ் செலுத்துகின்றார். பாத்திர உருவாக்கம் பற்றியும் தனித்துவமான மு.வ. நடை பற்றியும் அவதானிக்கின்றார். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய அடிகளாரின் ஆய்வு 'பிரதேசத் தேசியவாதம்' என்ற பார்வையில் அமைகின்றது. பொதுவாக இரசனை நோக்கிலோ மார்க்சிய நோக்கிலோ நவீன தமிழ் இலக்கியங்கள் அணுகப்பட்ட
அன்றைய சூழலிலே அடிகளாரின் அணுகு முறை பிரதேசத் தேசியவாத நோக்கில் இடம்பெறுவது மனங்கொள்ளத்தக்கது. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)
1> >
9 10
- -
- 9 0 UெSI |

தேசியம்
பற்றிய விளக்கமும், மறுமலர்ச்சிக்கால அறிஞர்கள் என்ற விதத்தில் சுந்தரம்பிள்ளை, ஜே.எம். நல்ல சுவாமிப்பிள்ளை, மறைமலையடிகள் ஆகி யோரின் செயற்பாடுகளும் கவிதையில் தேசியவாதம் என்ற நோக்கில் பாரதியார், நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை, கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ஆகியோரின் கவிதைகளும் உரைநடையில் தேசிய வாதம் என்ற அடிப்படையில் திரு. வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.) முயற்சி களும் விரிவாக அணுகப்படுகின்றன. இத்தகைய தேசியப்பார்வை திராவிட இயக்கக் கவிஞர்களான பாரதிதாசன், முடியரசன் ஆகியோரிடம் பிரதேசத் தேசியவாதமாகப் பரிணமித்தமை பற்றியும் விரிவாக நோக்கப்படுகின்றன. இறுதியாக, இலங்கையில் தேசியவாதம் தமிழ்த் தேசியவாதமாக பரிணமித்தமை பற்றிய சுருக்கமான நினைவு கூர்தலுடன் ஆய்வினை முடித்துக் கொள்கின்றார்.
இலக்கிய ஆளுமைகள் என்ற விதத்தில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை ஆகியோர் பற்றிய ஆய்வுகள் அடிகளாரால் நிகழ்த்தப் பட்டுள்ளன.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பற்றிய ஆய்விலே அவரது பல்துறை இலக்கியப் பணிகளும் பேசப்படுகின்றன. தாவலாசிரியரென்ற விதத்திலே பலராலும் அறியப்பட்டவரான மாயூரம் வேதநாயகம் பிள்ளை இப்போது முழுமையான பார்வைக் தட்பட்டுள்ளார். சர்வசமய சமரசக்கீர்த்தனை, பெண் கல்வி, தேவ தோத்திரமாலை, திருவருள் மாலை, தேவமாதா அந்தாதி என்பன பற்றி எடுத்துரைக்கின்ற அடிகளார் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு முதல் நாவல் ஆசிரியரென்ற அந்தஸ்தை ஏற்படுத்திய தாவல் முயற்சிகள் பற்றி பின்வருமாறு நோக்கியுள்ளார் :
"நீதி மொழிகளை எத்துணை எளி தாகப் பாட்டில் இயற்றியிருப்பினும் படிப் பறியாதார்க்கும் இளைஞர்க்கும் எளிதில் விளங்கவல்லது உரைநடையும் கதையுமே ஆகும். ஆதலின் 'பெண் கல்வியை உரைநடையில் வரைந்ததுடன் இருகதை நூல்களையும் இயற்றினார். அவற்றின் பெயர்
41

Page 44
பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி. பிரதாப முதலியார் சரித்திரத்தைத் தமிழில் தோன்றிய முதல் நாவல் (Novel) என்பர். இதுவோ உரைநடையில் புனைந்த பெருங் காப்பியம் போல், பல கதைகளையும் நீதிகளையும் கொண்ட களஞ்சியம். இதனை ஒருவாறு (Didactic Novel) அறிவுரைக் கதைநூ
ல் என்று கூறலாம்... மகளிர்க்குப் பொருந்தும் இலக்கணங்கள் அனைத்தையும் திரட்டி, சுகுணசுந்தரியை இலக்கியமாக வரைந்தார். இக்கதைகளில், தாம் செய்யுளின் அமைத்த நீதிகள் வாழ்க்கையில் எவ்வாறு அமைவன என்றும் பயன்படுவன என்றும் காட்டினார்."
மாயூரம் வேதநாயகம்பிள்ளை பற்றிய முழுமைப் பார்வை கொண்ட மேற்கூறிய ஆய்வு ஐம்பதுகளளவிலே எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்து ஆய்வாளர் பல ரும் இத்தகைய விடயம் பற்றிச் சிந்திக்க முற்பட்டிராத காலம் அது என்பது மனங் கொள்ளப்பட வேண்டியதாகின்றது! வேத நாயகம்பிள்ளையின் நாவல்கள் பற்றிய அடி களாரது கண்ணோட்டமும் அன்றைய தமிழ்நாவல் ஆய்வுலகிற்குப் புதியதென்பது மனங்கொள்ளப்பட வேண்டியது!
தமிழின் முக்கியமான இதழியலாளராக வும் தொழிற்சங்க வாதியாகவும் சிந்தனை யாளராகவும் நன்கறியப்பட்ட 'திரு.வி.க வின் மேதைமையை, திரு.வி.கவின் ஆக்கங் களிலே 'இயற்கை பெறும் முக்கியத்துவம்' தொடர்பாக அடிகளார் அணுகியிருப்பது புதுமையானது. இயற்கை அழகின் மீதும் இயற்கைச் சூழல் மீதும் தீராத காதல் கொண்டிருந்த அடிகளார் (அவரது சங்க இலக்கிய ஆய்வுகூட அத்தகையதே) திரு. வி.க.வை அவ்வாறணுகியிருப்பது வியப் பிற்குரியதன்று. எவ்வாறாயினும் வாசகரைப் புதிய திசைநோக்கி அழைத்துச் செல்கின்றது அவ் ஆய்வு.
டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை (ஒரு காலத்தில் அன்னாரது 'அலையும் கலையும்' நூல் இலங்கையில் தமிழ் மாணவர்களுக்குப் பாடநூலாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது) யின் பல்துறை இலக்கிய முயற்சிகளுள் அன்னாரது இலக்கிய ரசனை, பிரதேசப் பற்று, நடையழகு என்பன வெளிப்படுத்தும் விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு அடிகளாரால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவை பற்றி மட்டுமன்றி புலமையாளர், திறனாய்வாளர், எழுத்தாளர் என்ற விதங் களிலும் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை 42

பார்வைக்குள்ளாகியிருப்பதும் கவனத்திற் குரியது.
தனிநாயக அடிகளாரின் பிறிதொரு ஆய்வு முயற்சியானது ஈழத்து ஆரம்பகால விமர்சன முன்னோடிகளுள் ஒருவராக அவரை இனங்காண வைத்துள்ளது. Apperception in Tamil literary studies என்ற அடிகளாரின் கட்டுரையே (1966) அவ்விதத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கட்டுரையிலே அடிகளார் சமகால் மேற்கத்தைய விமர்சகர்கள் கவிதையை கவிதை என்ற விதத்திலே அணுக வேண்டுமென்று கூறுவதனைக் குறிப்பிட்டு அது பற்றி ஆழமாகச் சிந்தித்து அதனை ஏற்றுக்கொள்கின்றார். அதேவேளையில் அக்கண்ணோட்டம் பற்றிய அடிப்படைக் கேள்விகளையும் எழுப்புகின்றார். அவற்றோடு தமிழ் இலக்கியங்களை 'வெளியில் நின்று, உளவியல் சமூகம், வரலாறு, மானிடவியல் சார்ந்த உண்மைகளைப் பின்னணியாகக் கொண்டு ஆய்வு செய்வதன் அவசியம் பற்றியும் வற்புறுத்துகிறார். முதலில் குறிப்பிட்ட அணுகுமுறை இலக்கியத்தை Micro context ல் வைத்துப்பார்ப்பதாகவும் பின்னர் குறிப்பிட்ட அணுகுமுறை Macro context ல் வைத்துப் பார்ப்பதாகவும் எடுத்துரைக்கின்றார். மேற்கத்தைய விமர்சனப் போக்கை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளாமல் அது தொடர்பான கேள்விகளை எழுப்பி முடிவில் பொருத்தமானதொரு விமர்சன அணுகு முறை பற்றி அறுபதுகளில் அடிகளார் சிந்தித் திருப்பது கவனத்திற்குரியது. முக்கியமானது! இவ்விதத்தில், ஈழத்தில், தமிழ் விமர்சன முறைமை பற்றிச் சிந்தித்த ஆரம்பகால முன்னோடிகளுள் ஒருவராக அடிகளாரையும் இனம்காண முடிகின்றது!
சுருங்கக்கூறுவதாயின், மேற்கூறியவா றான, அடிகளாரின் நவீன இலக்கிய ஆய்வுகள் பற்றிய முக்கியத்துவமும் சிறப்பும் ஐம்பதுகள் அறுபதுகள் காலத்து ஈழ, தமிழக ஆய்வுச் சூழலை நினைவுகூர்ந்து நோக்குகின்றபோது முக்கிய கவனிப்பிற்குள்ளாகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை !
ஆதார நூல்கள் : - தமிழ்த்தூது (1952), தமிழ் இலக்கியக் கழகம் தூ த்துக்குடி - எழுத்தாளர் கல்கி (1966), பழனியப்பா பிரதர்ஸ் சென்னை - Collected papers of Thani Nayagam Adigal (1995), IITS, Chennai.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 45
தமிழுக்கொ னிநாயகம்
தனிநாயகம் போலொரு
தமிழ்நாயகம் உண்டோ? இனி ஒரு நாயகம்
இங்கு பிறப்பாரோ? முனியவர் திருமூலர்
மூதுரையின் படியே பணி செய்த அடிகள்
பாருலகம் போற்றும்.
தூதன் அ.
தூய த காதல் மிக
கடைசி தாதன் அ.
தன் ம வேதம் அ
விவில
உலகெலாம் தமிழை
உணர வழி வகுத்தார் பல மொழிகள் கற்றும்
பைந்தமிழில் திளைத்தார் விலை மதிப்பில்லா
வித்தகனாய்த் திகழ்ந்தார் நிலமுள்ளவரைக்கும்
நிலைக்குமவர் நாமம்.
அரிஸ்டோ
அறிவு திருவள்ள
சேர்த் ஒரு பெரும்
ஓங்கு கரம்பன் ம
கை d
துறவியவர் ஆயினும்
தூயதமிழ் மறவாப் பிறவியவர் இந்தப்
பேறு யார் பெற்றார்? குறுமுனி அகத்தியன்
குலம் என்றே உலகம் பெருமையுடன் பேசும்
பிறகென்ன வேண்டும்?
பக்திக்கெ
பைந்த வித்தகன
விரும் சித்தன் 8
செய்த நித்தம் கு
நிகரத
ஒன்றே உ
உரைம்
தூத்துக்குடி மண்ணில்
தூய தமிழ் மொழியின் ஊற்றுக் கண் திறந்தார்
ஓடி அது பாய்ந்து நாற்றிசையும் பரவும்
நன்கு தமிழ் செய்யும் ஆற்றல் மிகக் கொண்ட
அடிகளார் வாழ்க!
நன்று அ
நம் ர என்றுமவர்
இன்ல மன்று எல
மகத்
படர்
41 p;
11EhHம்
+GH -
19412
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

வர் என்றும் தமிழ் மொழியில் கக் கொண்டு சிவரை வாழ்ந்தார்
வர் அதனைத் மனதில் சுமந்த வர்க் கென்று தியத்தைப்பே
ட்டில் என்னும் ஓர் கருத்தோடு நவர் கருத்தைச் து வைத்தாய்ந்த 3 அறிஞர் புகழாளர்
ண் நோக்கிக் ஒவித்து நிற்போம்!
எரு மொழி 5மிழ் என்று
ர் உரைத்தார் பியவர் உள்ளம் 1வர் வாசகர் - தமிழ் தன்னில் டிகொள்ளும் ற்குண்டோ?
- வாகரைவாணன் -
EயாdHE
TEARA
லகம் என பவர் பகரினும்
அவர் நெஞ்சம் ழம் வாழும் 1 தமிழை வயிராய்க் கொண்டார் தாம் இந்த துவத்தைப் பேசும்!
43

Page 46
அப்துல்கனிTபெக் அத்தார் ஜம்முகாஷ்மீர் பிரதேசத்தவர். 1943 இல் பிறந் தார். ஒர் ஆசிரியர். கவிதைகள், சிறு கதைகள், நாடகங்கள் என்பவற்றை காஷ்மீர் மொழியில் எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளியாகியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மொழி கலாசாரத் தினைக்களத்தி லிருந்து வெளியாகும் "சீராஸா'வில் அவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.
நீர்ஜா மாத்து மொழிபெயர்த்துத் தொகுத்தளித்த காஷ்மீர் சிறுகதைத் Genesium GOT The Stranger Beside Me நூலிலிருந்து பெறப்பட்டது இக்கதை.
O ep6Obs O அப்துல் கனிவபக் அத்தார்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
கெகிறாவ ஸ்லைஹா
From:- The Stranger Beside Me”- Short Stories from Kashmir-UBS Publishers’ Distributers Ltd
New Delhi- 1994
44
 
 

நான் இந்தியத் தடுப்புத்தரண் தாண்டி நடந்தேன். ஏறக்குறைய பகல் பொழுதாகி விட்டிருந்தது. எவரும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. சிலவேளை அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கக்கூடும், அல்லது ஒய்வெடுத்துக் கொண்டிருக்கலாம். இப்படியொரு பகல் பொழுதின் வெளிச் சத்தில் தம் தாய்ப்பிள்ளை எவரேனும் இவ்வெல்லையைத்தாண்டிப்போக தைரியமாய் உறுதி பூணக்கூடும் என்பதை அவர்களால் கற் பனையில் கூட நினைத்துப்பார்க்க முடி யாதிருக்கும். வியர்வையில் குளித்து, ஒரு புகைவண்டியைப்போல விரைந்தேன் நான். என் சகோதரன்முகம் வந்து என் கண்முன்னே நிழலாடிற்று. செய்தி கொணர்ந்தவர் நிலைமை கவலைக்கிடம் என்பதை வேறு சொல்லிவிட்டுப் போயிருந்தார். நீலம் நதிக் கரை ஓரத்தே தன் சொந்தமென்று சொல்லிக் கொள்ளவும் எவருமின்றி அவன் ஒரப்பட்டு ஒதுங்கிப் போய் இருக்கக்கூடும்.
நான் மறுகரையில் இந்திய அடை யாளத்தை என் முகத்தே தரித்து நிற்க, என் சகோதரனோ பாகிஸ்தான் அடையாளத்தை பதித்த முகத்தோடு மறுகரையில் வாழ்ந் திருந்தான். செய்தி சொன்னவர், "அவன் உன் பெயரைத்தான் ஓயாமல் உச்சரித்தபடி இருக்கிறான்” என்று சொல்லிப் போயிருந்தார். அப்படி ஒரு சேதியைக் கேட்ட பின்னும் எப்படி நான் நிம்மதியாய் இருப்பது? எல்லாவற்றுக்கும் மேல் இது இரத்தப் பிணைப்புமல்லவா..?
நான் ஆத்முகாம்' பாலத்தை அடைந்திருந்தேன். அவனது குடிசை ஆற்றோரமாக சரியாக அடுத்த பக்கத்தே இருந்தது. இன்னும் ஐந்தே நிமிடங்களில் அங்கடைந்து விடலாம் எனக்கு. ஒரு கள்வனைப்போல வலதும் இடதுமாய் ஒரப்பார்வை பார்த்துப் பார்த்து நான் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தேன். சில அடிகள் மட்டுமே தாண்டுவதற்கு இருக்கும் நிலையில் இடியாய் ஒலித்த அந்த குரல் என்னை நிறுத்திற்று. "நில்!” பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன் போல உறைந்து நின்றேன் நான். தலைநிமிர்த்தி மேலே பார்த்த போதுதான் அவர்களைக் கண்ணுற்றேன். கைத்துப்பாக்கிகளை என்னை நோக்கி நீட்டியபடி பாலத்துக்கு மேலே உயரத்தே அவ்விரு படைவீரர்களும் நின்றிருந்தனர்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 47
அவர்கள் செவிசாய்க்கவில்லை. நகங்களைப் பிடுங்கினர் நான் கதறத் என் காயங்களின் மீது உப்பு வீசி நான் முயக்கமுற்று வீழ்ந்தேன்.
என் முக அடையாளத்தை அறிந்து கொண்டஅவ்விருவரில் ஒருவன் சொன்னான், “இந்தியன்” அடுத்தவன் வழிமொழிந்தான் “கைது செய் அவனை."
“இல்லையில்லை ஐயா! நான் இந்தியன் அல்லன், பாகிஸ்தானியனும் அல்லன். நான் காஷ்மீர்க்காரன். 'கெரான் பக்கத்தே தெரியும் மரக்கட்டைகளால் ஆன ஒரு குடிசை அதோ தெரிகிறதே. ஐயா அதுதான் என் வீடு. மறுகரையில் அதோ தெரிகிறதே இன்னொரு குடிசை அங்குதான் என் சகோதரன் வசிக்கிறான். மிகவும் நோய்வாய்ப்பட்டு நாதியற்றுக்கிடக்கிறான் அவன். தயவுகூர்ந்து ஒரு அரை மணித் தியாலம் நேரம் கொடுங்கள். அவன் எப்படியிருக்கிறான் எனப்பார்த்துவிட்டு ஒரு மிடறு தண்ணிர் கொடுத்துவிட்டு கொஞ்சம் மருந்தெடுத்துக் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்.”
ஒரு துப்பாக்கியின் முனை என் கழுத் தோடு இறுக்கிற்று. என் பாதத்தடியே பூமியே சுழல்வது போலிருந்தது எனக்கு. அவர்கள் என்னை நிலவறைக்குள் இழுத்துப் போயினர். ஆங்கே இன்னும் நிறைய படை வீரர்கள் நின்றிருந்தார்கள். அவர்களும் நான் இந்தியன் எனப் பிரகடனப்படுத்திக் கொண் டிருந்தார்கள். நான் எதிரி உளவாளியாம் என்னை வதைக்கத் தொடங்கினார்கள். நான் இந்திய உளவாளியென்று ஒப்புக் கொள்ள வேண்டுமாம். கூடவே பாகிஸ்தானின் எதிரி யென்றும். எதை நான் ஒப்புக் கொள்ள..? நான் என்ன என் சகோதரனின் எதிரியா..?
என் சகோதரனது குடிசைக்கு மிக அருகிலுள்ள தலைமையகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டேன் நான். மறுபடியும் கெஞ்சி னேன். "ஐயா என் சகோதரனின் குடிசை இதோ இங்கே பக்கத்தேதான் இருக்கிறது. அவன் நோயினால் ரொம்ப வதைபட்டுக் கொண்டிருக்கிறான். கைவிலங்குடன் என் றாலும் பரவாயில்லை. அவனை போய் பார்த்து வர என்னைத் தயவு செய்து அனு மதியுங்கள். அவன் நலம் பற்றி ஒரிரு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

என் ஆகுற *னர
வார்த்தைகள் கேட்டுவிட்டால் கூடப் போதும் எனக்கு."
அவர்கள் செவி சாய்க்கவில்லை. என் நகங்களைப் பிடுங்கினர் நான் கதறக்கதற.
என் காயங்களின் மீது உப்பு வீசினர். நான் மயக்கமுற்று வீழ்ந்தேன்.
அடுத்து, சரியாக நேர்கிடையாக, இறுதி மூச்சிழுத்தபடி தண்ணிர் கேட்டு என் ககோதரன் கெஞ்சுவது கண்டேன். நானோ கைவிலங்கோடு சங்கிலியால் பிணைக் கப்பட்டிருந்தேன். நீர் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கைவிலங்கின் கூர்முனையொன்று குத்தியதில் என் இடது கையிலிருந்து பீறிட்டது இரத்தம். என் வலது கரத்தையேகிண்ணம்போலும் ஏந்திப்பிடித்து, அந்தத் திரவத்தைச் சேகரித்துத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளக்கூறி, என் சகோதரனிடம் நீட்டினேன் நான். சங்கிலியால் பிணைக்
45

Page 48
கப்பட்டிருந்ததில் அவன் உதட்டை எட்டு மளவு என் கை நீண்டு வரவில்லை.
இறுதியில், நீருக்காக அலைமோதிய அழுகை விக்கலாகி, மரணம் மோதியெழு கின்ற பேரோசையோடு நிகழ்ந்தும் விட நான் கத்திக் குழறினேன்.
"எல்லாமும் முடிந்து போயிற்று. முடிந்தே போயிற்று. ஒரு சொந்தச் சகோதரனையே அவனது எதிரியாகக்கருதி கடவுளின் சாம்ராஜ் யமே துண்டாகிச் சிதறுமளவு ஐயோ இந்த மனித மனங்கள்.”
முறுக்கு மீசையுடனான படைவீரர்களுள் ஒருவனின் கண்களிலிருந்து விழும் கண்ணிர்த்துளிகளை உணர்ந்து திடுமென விழித்தேன் நான். அவர்கள் யன்னலூடாக சவப்பெட்டியில் என் சகோதரனின் மூடப் பட்ட உடல் வைக்கப்படும் காட்சியைப் பார்க்குமாறு என்னைக் கேட்டுக் கொள்ளவே நானும் பார்த்தேன்.
“என்னைப் போக விடுங்கள். என் சகோதரனின் முகத்தைப் பார்க்க என்னை அனுமதியுங்கள். இறுதி மரியாதைச் செலுத்தவேனும் விட மாட்டீர்களா ஐயோ என்னை.? அவன் என் சகோதரன் நீங்கள் அறிவீர்களா..?”
இறந்தவன் என் சகோதரன் என்பதை அவர்கள் நன்கறிந்து வைத்திருப்பதாகக் கூறினார்கள். "என்றாலும், இறுதி மரியாதை செய்து வருவதற்கு அனுமதி அளிக்க முடியாத நிலையிலிருக்கிறோம். நம்மால் நாம் நினைத்தமாதிரி எதுவும் செய்ய முடியாத நிலையிலிருப்பவர்கள் நாங்கள்." அவர்கள் சொல்லி முடித்தார்கள்.
“உங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து எனக்கு அனுமதி வாங்கித் தாருங்கள் தயவுசெய்து. ”நான் கெஞ்சினேன்.
"அவர்களும் இந்த விடயத்தில் நாதி யற்றவர்கள்" அவர்கள் பதிலிறுத்தனர்.
"ஆயின், அதிகாரிகளின் அதிகாரி களிடம்.”நான் கெஞ்சினேன்.
"அவர்களும் இந்த விடயத்தில் நாதியற்ற நிலையில் இருப்பவர்களே." இதுவே அவர்கள் பதிலாகயிருந்தது.
"ஆயின், இதிலே யாரால்தான் நமக்கு உதவ முடியும்.? சொல்லுங்கள். யாரிடம் அந்த அதிகாரம் இருக்கின்றது.?" நான் கேட்டேன்.
"அதுதான் நமக்கும் தெரியவில்லை.
O O O
46
 
 

an وي a
56 IGCHE 56 மனிதப் புலன்களை ܕ ܓ ܐ பிசாசுப் பிடிக்குள் கையகப்படுத்தும் போதைச் சனியன்கள்,
வெறுமனே போத்தல்களுக்குள்ளும் பொருட்களுக்குள்ளேயும் மட்டும் இவைகளெல்லாம்
蠶
சாமானியர்களை விடவும் பற்றுக்களைத் துறந்துவிட்ட சில காவியுடைகளைத்தான் கண்மூடித்தனமாக பற்றிக்கொண்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 49
“SQų பல்கலைக்கழகம்
Gh ef U u G bau bur ya. U umfluu Gufi uGushtunuu தனி இருவராக நின்று செய்தார்."
அருட்திரு தமிழ் நேசன் அடிகள் பிடத்தக்கது.
தி گنجم தமிழ்த்தூது
தமிழ்த்தூது த தமிழ்ப் பேரறிஞர். ஒ தன்னிகரில்லாத்தமி சொல்வதிலோர் ே வெளிநாட்டோர் ஆ மகாகவி பாரதியின் பண்டிதர்களுக்குள்ளு அடிகளார் உலக வரைபடத்தில் பொ
O தமிழுக்கு இடம்ெ
இருபதாம் நூற்றா பணி புரிந்தவர் வேே ஒருமித்த கருத்தாய்
இந்தக் கட்டுரை பற்றி மட்டுமே ஆ வரலாறு பற்றியோ பற்றியோ, தமிழ் ( குறிப்பிடப்படவில்6 ஆய்வுக்குரிய விட தொடர்புடைய முக் இந்தக் கட்டுரை தூதுப் பயணங்கள் நூல்களை அவர் கண மற்றும் உலகத் தமி அமைப்புக்களை மாநாடுகளை நடத் போன்றவற்றை அ தமிழ்பணி எடுத்து பணிகள் வெறுமனே திறனாய்வு அடிட்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)
 
 
 

தனிநாயகம் அடிகளார்
னிநாயகம் அடிகளார் உலகப் புகழ்பெற்ற ஒரு கத்தோலிக்க குரு. நம் ஈழநாடு பெற்றுத்தந்த ழ் மகன். “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பெருமையில்லை திறமான புலமையெனில் அதை வணக்கம் செய்தல் வேண்டும்.” என்ற கனவை நனவாக்கியவர். புலவர்களுக்குள்ளும் ளும் முடங்கிக் கிடந்த தமிழை தனிநாயக அரங்கில் ஏற்றி வைத்தார். தமிழை உலக றித்தவர்தனிநாயகம்அடிகளார். உலகஅரங்கில் பற்றுத்தந்த ஒப்பற்ற தமிழ்த் தொண்டர். ண்டில் இவரைப்போல் உலகளாவிய தமிழ்ப் றெவருமில்லை என்பதை தமிழியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்வர். யில் தனிநாயகம் அடிகளாரின்தமிழ்ப்பணிகள் ராய விழைகின்றேன். அவருடைய வாழ்க்கை 1. படைப்புகள் பற்றியோ, சமயப்பணிகள் மொழிப் போராட்டங்கள் பற்றியோ இங்கு ᏈᎠᎶu). இவையெல்லாம் தனித்தனியான யங்கள். அடிகளாரின் தமிழ்ப் பணியோடு க்கிய அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதாக அமைகின்றது. அவருடைய தமிழ்த் 1. அப்பயணங்களின்போது மறைந்த தமிழ் *டுபிடித்தமை, உலகத் தமிழ் ஆராய்ச்சிமன்றம் விழாராய்ச்சி நிறுவனம் போன்ற உலகத்தமிழ் தோற்றுவித்தமை, உலகத்தமிழராய்ச்சி நதியமை, அவருடைய இதழியல் பணிகள் டிப்படையாகக் கொண்டே அடிகளாரின் க்காட்டப்படுகின்றது. அவருடைய தமிழ்ப் ன சம்பவங்களின் கோர்வையாக அல்லாமல் படையில் நோக்கப்படுகின்றமை குறிப்
47

Page 50
தமிழ்த்தூதுப் பயணங்கள்
உலக நாடுகளில் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், கலைகளைப் பற்றியும் உரைகள் நிகழ்த்த வேண்டுமென்னும் எண்ணம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது அடிகளாரின் உள்ளத்தில் முகிழ்த்தது. தமிழ் இலக்கியத்தில் மூழ்கி யிருந்த அடிகளார் அதனை உலகறியச் செய்யும் வகையில் உழைத்திட அப்போதே உறுதிபூண்டார்.
"நான்காண்டுகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று எம். ஏ. சிறப்புப் பட்டமும் எம்.லிட் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றேன். தமிழ்க் கலைகளில் மூழ்கியிருந்த நான் அந்தக் காலத்திலேயே நம் ஒப்பற்ற இலக்கியத்தைப் பற்றி உலகு அறியவேண்டுமென ஒரு சிறிதாகுதல் உழைக்க உறுதி பூண்டேன்." என்று அடிகளாரே தெரி வித்துள்ளார். இவ்வாறு உலக நாடுகளில் தமிழ்க் கலைத்தூது நிகழ்த்துவதற்கு அடிகளார் மிகவும் பொருத்தமானவரே. ஏனெனில் ஏற்கனவே ஐரோப்பாவில் பயின்றதால் அந்நாட்டு மக்களுடனும், மொழிகளுடனும் தொடர்புடையவர் அவர். ஆங்கிலம், இத்தாலியம், ஸ்பானிஷ், போர்த்துக்கேயம், பிரெஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் மிக அருமையாக உரையாடவும் உரை நிகழ்த்தவும் வல்லவர் அடிகளார்.
1949 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டுவரை ஈராண்டுகள் மலேயா, சீனா, யப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு, தென் அமெரிக்காவிலுள்ள பனாமா, எக்குவதோர், பெரு, சிலி, அர்ஜென்ட்டீனா, உருகுவே, பிரேசில், மெக்சிக்கோ, மேற்கிந்தியத் தீவு களானட்டினிடாட், ஜமேய்க்கா, மார்த்தினீக், நடு ஆபிரிக்கா, வட ஆபிரிக்கா, இத்தாலி, பாலஸ்தீன், எகிப்து எனப் பல நாடுகளில் பயணம் செய்து தமிழ் மொழி, கலை, வரலாறு ஆகியவை பற்றி அடிகளார் உரையாற்றினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஒரே ஆண்டில் இருநூற்றுக்கு மேற்பட்ட சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தினார்.
மேனாட்டு மொழியாராய்ச்சியாளரும் இலக்கிய ஆராய்ச்சியாளரும் இந்திய நாக ரீகத்தை அறிவதற்கு வடமொழி இலக்கியப் பயிற்சியே போதும் என நினைத்திருந்ததையும், மேனாடுகளில் வெளிவந்துள்ள இந்திய இலக்கிய வரலாற்று நூல்களில் தமிழ் 48

இலக்கியத்தைப் பற்றிய கருத்து சிறிதேனும் இடம்பெறாமையையும் தம் தூதுப் பயணத் தின்போது கண்டு அடிகளார் மிகவும் மனம்
வருந்தினார்.
அடிகளாரின் உலகத் தமிழ்த்தூதுப் பணி பெரும்பாலும் விரிவுரைகள் மூலமே நடைபெற்றது. எனினும் வானொலி, தொலைக்காட்சி செய்தித்தாள் நேர்காணல் கள் மூலமும் அவரது பணி நடைபெற்றது.
தம் பன்னாட்டுப் பயணங்களின்போது அடிகளார் ஆற்றிய தமிழ்த் தொண்டினைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். தமிழ் மொழி, இனம், இலக்கியம், நாகரிகம், வரலாறு ஆகியவை பற்றி எதுவுமே அறியாமல், இந்தியா என்றாலே இந்தியாவின் வடபுலம் தான் என்று மேனாட்டார் நினைத்துவந்த நிலையைத் தம் விரிவுரைகள் மூலமும், வானொலி தொலைக்காட்சி, செய்தித்தாள் நேர்காணல்கள் மூலமும், பல அறிஞர்களோடு நேரடித்தொடர்பு கொண்டு விளக்கியமை மூலமும் அடிகளார் மாற்றியமைத்தார். அடிகளாரின் தொண்டு காரணமாகவே உலக அரங்கில் தமிழ் இடம்பெற்றது என்பது மறுக்கவியலாத உண்மை..
இந்திய மொழிக் குடும்பங்கள் பற்றியும் வரலாறு பற்றியும் அறிந்தும் ஆராய்ச்சி மேற்கொண்டுமிருந்த மேனாட்டு அறிஞர்கள் திராவிட மொழிக்குடும்பங்கள் பற்றியும் குறிப்பாக தமிழ் பற்றியும் அடிகளார் மூலம் அறிய வந்ததால், தமது தூண்டுதல் காரண மாகத் திராவிட மொழிகளைப் பற்றியும் - குறிப்பாக தமிழைப்பற்றியும் - ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்ள வழிவகுத்தார்.
அடிகளாரின் உலகப் பயணம் வெறும் பொழுதுபோக்காக அமையவில்லை. தமிழ் மொழியின் பண்டைய சிறப்பு, இலக் கியச் செறிவு, உலகக் கண்ணோட்டம், தமிழ்ப்பண்பாட்டினுடைய மேம்பாடு போன்றவற்றை பாரெங்கும் பரப்புவதாகக் அவரது தமிழ்த்தூதுப் பயணங்கள் அமைந் திருந்தன. தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவச் செய்தார். அடிகளாரின் 'ஒன்றே உலகம்' என்ற நூலில் அடிகள் தமிழ் தூதாகச் சென்ற 25 நாடுகளில் தாம் கண்டதையும், கேட்டதையும் சுவைபட விளக்குகின்றார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 51
மறைந்த தமிழ் நூல்களை கண்டுபிழத்தமை
பல பழையதமிழ்நூல்கள்மறைந்துவிட்ட கொடுமையையும் அவற்றுள் சிலவற்த்ை தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதஐயர் தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து கண்டெடுத்துப் பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பு நோக்கியபின் திருத்திய பதிப்புகளை வெளியிட்டு தமிழுக்குப் புதுவாழ்வு வழங்கியதையும் நாம் மறக்க இயலாது. சாமிநாத ஐயர் இல்லையேல் நாம் இப்போது காணும் பல பழந்தமிழ் நூல்கள் அழிந்துபோயிருக்கும் என்பது உண்மை.
அவ்வாறே பதினாறாம் நூற்றாண்டிலும், அதன் பின்னரும் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த மேனாட்டுக் கிறிஸ்தவ அறிஞர் சிலர் இயற்றிய தமிழ் இலக்கணம், அகராதி, உரைநடை நூல்கள் போன்றவை மறைந்து கிடந்த சூழ்நிலையில் தனி நாயகம் அடிகளார் அவற்றைத் தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். ஐரோப்பிய அமெரிக்கநாடுகளுக்குச்சென்றபோதெல்லாம் அந்நாடுகளிலுள்ள நூலகங்களுக்குச் சென்று தமிழ் நூல்களைத் தேடுவதை வழக்கமாகக் கொண்டார். அம்முயற்சியில் வெற்றி பெற்று, மறைந்து கிடந்த பல நூல்களைத் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
தமிழில் அச்சேறிய ஏடுகளுள் கொல் லத்தில் 1578ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் நாள்.அச்சான'தம்பிரான்வணக்கம்'அமெரிக்க நாட்டு “Harvard பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றிருப்பதைக் கண்டுபிடித்து தமிழ் மக்களுக்குச் சொன்னார். 1579ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 14ஆம் நாள் கொச்சி அம்பலக்காட்டில் அச்சிடப்பட்ட "கிரித்தியானி வணக்கம்’ பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிச நூலகத்தில் இருப்பதைக் கண்டுபிடித்துத் தமிழ் உலகுக்குச் சொன்னார். 1586ஆம் ஆண்டு புன்னைக்காயலில் பதிக்கப்பெற்ற அடியார் வரலாறு' (Flos Sanctorum) என்ற நூலைக் கண்டுபிடித்து அது வத்திக்கான்நூலகத்தில்இடம்பெற்றிருப்பதை உலகத் தமிழர்களுக்கு எடுத்துக்கூறினார்.
தனிநாயகம் அடிகளார் இத்தகைய பழந்தமிழ் நூல்களைத் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லையெனில் இவ்வரிய நூல்களைத் தமிழுலகம் இழந்திருக்க வாய்ப்புண்டு. பதினாறாம் நூற்றாண்டின் தமிழ் நடை, அச்சுக்கலை, மேனாட்டு தமிழ் அறிஞர்களின் அரிய முயற்சிகள் ஆகியவை பற்றிய பல
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

உண்மைகளைத் தமிழுலகம் உணரத் தனிநாயகம் அடிகளாரின் அரும்பணி உதவுகின்றது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
தனிநாயகம் அடிகளாரின் நிலைத்த புகழுக்குக் காரணமாக அமைந்தது அவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை (International Association of Tamil Research - 1ATR) நிறுவியதும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தியதுமே ஆகும். 1964ஆம் ஆண்டில் டில்லியில் நடைபெற்ற கீழைத்தேய அறிஞர்களின் உலக மாநாட்டின்போதுதான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங் கப்பட்டது.
இந்த மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி தனிநாயக அடிகளார் இவ்வாறு கூறுவார், "சங்க இலக்கியத்திற் கூறிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் கொள்கையையும், இந்த நூற்றாண்டிற் பாரதியார் கூறிய “திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” எனும் கோட்பாட்டையும் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருப்பது அனைத் துலகத் தமிழாராய்ச்சி மன்றம். இம்மன்றம் ஆற்றிவரும் தொண்டுகள் பல. உலகில் உள்ள தமிழ் அறிஞர் பலரையும் ஒன்றுசேர்ப்பதும், அவர்களை அறிமுகப்படுத்துவதும், அவர்கள் ஆராய்ச்சியை வெளிப்படுத்துவதும் இம் மன்றத்தின் சிறப்புப் பணிகள். இம்மன்றம் ஓர் ஆராய்ச்சி மன்றம். அதுவும் பல்கலைக்கழக நிலையிலுள்ளஆராய்ச்சிமன்றம். உலகில்எங்கு தமிழ்த் துறைகளில் ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றதோ அங்குள்ள அறிஞரை ஒன்று சேர்ப்பது இம்மன்றத்தின் நோக்கம். மேலும் இம்மன்றத்திற்குப் பொருந்திய ஆராய்ச்சி, இலக்கணம், இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி மட்டுமல்ல தமிழ்த்துறைகளோடு தொடர்புள்ள எல்லாத் துறைகளையும் ஆராய்ச்சிக் களமாகக்கொண்ட ஆராய்ச்சி இம்மன்றத்திற்குரியது.”
1964ஆம் ஆண்டு தொடங்கி தம் மறைவு வரையில் அடிகளார் உலகத் தமிழராய்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர்களுள் ஒருவராகத் தொடர்ந்து பணியாற்றியதோடு, அம்மன்றத்தின் முதுகெலும்பாகவும், முன் னணித் தலைவராகவும், உயிர் மூச்சாகவும் செயற்பட்டு வந்தார். அடிகளாரின்
49

Page 52
மறைவுக்குப்பின் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் தன் செயற்பாடுகளில் தளர்ச்சி கண்டது என்பதும் உண்மையே. கீழைநாட்டுத் தமிழ் அறிஞர்களையும், மேலை நாட்டுத் தமிழ் அறிஞர்களையும் இணைக்கும் பாலமாகப் பணியாற்றும் ஆற்றல்மிக்க ஒரு பேரறிஞரை அடிகளாருக்குப் பின் தமிழ் ஆராய்ச்சியுலகம் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது என அமுதன் அடிகளார் குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமான மதிப்பீடாகவே உள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
தமிழ் மொழியியல், இலக்கியம், தொன்மையியல், பண்பாட்டியல், சமூக மானிடவியல் எனப்பல துறைகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வுக் கல்வியை வழங்கவும், பட்டங்கள் வழங்கவும் தகுதிமிக்க உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) அமைப்பதைப் பற்றி சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தனிநாயகம் அடிகளார் பாரிசில் நடந்த மூன்றாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதியில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்றார். அங்குள் ளோர் அனைவரும் அதனை ஒரே மனதாக ஏற்றுக்கொண்டனர்.
சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகளார் பலவாறாகப் பாடுபட்டார். ஐந்தாம் மாநாடு யாழ்ப் பாணத்தில் நடந்தபோது உலகத்தமிழா ராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுச் செயற் படத் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் தமிழோடு தொடர்புள்ள பல்வேறு துறைகளிலும் உயர் ஆய்வுகளை மேற்கொண்டு உலக அறிஞர்களால் ஏற்று மதிக்கப்படுவதாக அமைய வேண்டுமென்பதே அடிகளாரின் வேணவா. உலகத் தமிழ் ஆய்வுத் துறையில் அடிகளார் தம் உலகப் பயணங்கள், தொடர்புகள், கட்டுரைகள், விரிவுரைகள், நூல்கள், முத்திங்கள் இதழ், அரையாண்டு இதழ் என்று பலவகையிலும் தொடர்ந்து ஆற்றிவந்த பணிகளே உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமாக வடிவம் பெற்றன என்பார்
பேராசிரியர் வேலுப்பிள்ளை.
50

உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள்
1964 ஆம் ஆண்டு - சனவரி ஏழாம் நாள் புதுடில்லியில் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்ட நாள் முதல் தனிநாயக அடிகளார் முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துவதற்காக பம்பரம்போல் சுழன்று பணியாற்றினார். மாநாடு நடத்துவது பற்றி பல நாடுகளுக்கும் பயணமானார். பல நாட்டின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைச் சந்தித்தார். பல அரசியல் தலைவர்களோடு உரையாடினார். மாநாட்டை எங்கே நடத்துவுது? எப்போது நடத்துவது? யார் யாரை மாநாட்டிற்கு அழைப்பது? யார் மாநாட்டைத் திறந்து வைப்பது? போன்ற சிந்தனைகளில் மூழ் கினார். இரண்டு ஆண்டுகள் கடுமையாக மாநாட்டிற்காக ஏற்பாடுகள் செய்தார்.
1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் 23 ஆம் நாள் வரையும் உலகின் 22 நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்களும், தமிழில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் பலரும் தமிழ் அன்னையின் புகழை உலக அரங்கில் ஒலிக்க வந்து கூடினார்கள். 140 பேராளர்களும், 40 பார்வையாளர்களும் கலந்து கொண்டார்கள். தமிழ் மொழி, தமிழ் பண்பாடு பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்தார்கள். இப்படிப்பட்ட மாநாட்டை கோலாலம்பூரில் நடத்த மூல காரணமாக இருந்தவர், விழா நாயகனாக விளங்கியவர் தனிநாயக அடிகள் ஆவார்.
மலேசியத் தமிழ் பத்திரிகையான 'தமிழ் நேசன்' தன் ஆசிரியர் தலையங்கத்தில் அடிகளாரை இவ்வாறு பாராட்டியது. "உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தாரும் சிறப்பாக அம்மன்றத்தின் செயலாளரான பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் இப்படி ஓர் உலகக் கருத்தரங்கு நடத்த முடிவெடுத்தது அவர்களின் பரந்த முன்னோக்கையும், எண்ண வலிமையையுமே புலப்படுத்துகின்றது. ஏற் கனவே உலகின் பல நாடுகளுக்கு தமிழ்த் தூது சென்று பெருமை பெற்றவர் அடிகளார்.
ஆகவே, அடிகளாரின் சிந்தனையில் இத்தகைய உலகக் கருத்தரங்குத் திட்டம் முகிழ்த்ததில் வியப்பில்லை.''
அடிகளார் முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தியதால் சிதறிக்கிடந்த தமிழர் களை இணைத்தார். தமிழர்களிடையே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 53
விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தார். தமி ழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களை இணைக்கும் பாலமாக விளங்கினார். பழைய தமிழ் பண்பாட்டிற்குப் புது வடிவம் கொடுத்த தமிழ் மறுமலர்ச்சிச் சிற்பியாகவும், தமிழ்
ஆராய்ச்சித் தந்தையாகவும் விளங்கினார்.
அவருடைய ஆலோசனையில், வழி காட்டலில் நான்கு உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகள் சிறப்புடன் நடந்து முடிந்து இருக்கின்றன. ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மதுரையில் நடக்க இருந்த ஒருசில மாதங்களுக்கு முன் அடிகளார் இறையடி சேர்ந்துவிட்டார்.
1968 ஆம் ஆண்டு சனவரி 3 முதல் 10 வரையும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு, அதை நடத்துகின்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். இம்மாநாட்டின் பொதுச் செய் லாளர் வி. கார்த்திகேயன் மாநாட்டிற்கு முன் அடிகளாரைப் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கன. "இன்று தமிழ் மொழியானது உலகப் பூகோளப் படத்தில் ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அனைத்துலக நிலையில் அனைத்துலக அறிஞர்கள் தமிழ் இயலில் என்றும் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்றால் இதற் கெல்லாம் மூலகாரணம் பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரின் பரந்த நோக்கும், அவர் முன்னோடியாக நின்று எடுத்த முயற்சிகளுமாகும்."
மூன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பிரெஞ்சு நாட்டின் தலைநகரான் பாரிஸ் நகரத்தில் 1970 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையும் நடந்தது. இம்மாநாடு அடிகளாரின் பெருமுயற்சியால் நடந்தது.
நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழர்களின் தலைநகரான யாழ்ப் பாணத்தில் 1974 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3ஆம் நாள் தொடங்கப்பட்டது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையுரை நிகழ்த் தினார். தம் உரையில் தனிநாயக அடி களின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டிப் பேசினாார். "தனிநாயகம் அடிகள் தமிழ் மொழியின் தூதுவராவார். இவர் உலக இன்பத்தைத் துறந்தாலும் தமிழ்ப் பற்றை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

இவரால் துறக்கமுடியவில்லை.'' என அவர் குறிப்பிட்டார். தனிநாயக அடிகள் நான்காம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடக்கிவைத்து ஆரம்ப உரை நிகழ்த்தினார். அடிகளார் தம் உரையில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பணிகளை விளக்கிக்கூறினார்.
கோலாலம்பூரிலும் சென்னையிலும் பாரீசிலும் யாழ்ப்பாணத்திலும் மதுரையிலு மாக அடிகளாரின் முயற்சியால் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளால் என்ன நன்மை விளைந்திருக்கிறது? இத்தகைய ஒரு வினாவை முன்னாள் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் எழுப்பி, அதற்கு விடையும் தந்திருக்கிறார்.
"இதுவரை நடத்திய மாநாடுகள் மூலம் தனிநாயகம் அடிகளார் சாதித்தவை யாவை? முதலாவதாக, தமிழ் இலக்கியம் பற்றியோ மொழி பற்றியோ ஆராயும் உரிமை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கே உரியதென்பதை இவர் தகர்த்தெறிந்துவிட்டார். தமிழாராய்ச்சி குறுகிய எல்லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில் விருத்தியடைந் திருக்கிறது. தமிழ் இலக்கியம் பற்றியும் தமிழ் இலக்கணம் பற்றியும் உள்ள ஆராய்ச்சி மட்டும் தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்துவங்கள், தமிழ் தொல்பொருளியல், தமிழ் நாட்டவர் பிறநாட்டவரோடு கொண்ட தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னோரன்ன பல துறைகளிலும் தமிழாராய்ச்சி விரிந்து சென்றிருக்கின்றது. இவர் முயற்சியின் பயனாகத் தமிழ் இலக்கியத்தின் சிறப்புப் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி பற்றியும், தொன்மை பற்றியும் மொழியியல் பற்றியும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. மேலும் இவரது தொண்டினால் இன்று பிற நாடுகள் பலவற்றிலுள்ள பல்கலைக் கழகங்களில் தமிழை ஒரு பாடமாக அமைத்திருக்கின்றனர். தமிழ் ஆராய்ச்சியில் அப்பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு காலத்தில் மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் பற்றியும், இந்தோ - ஆரிய மொழிகள் பற்றியுமே
ஆராய்ச்சி செய்துவந்தனர்.
51

Page 54
இப்பொழுது அந்நிலை மாறத் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு, முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை இப்பல்கலைக்கழகங்களில் உருவாகி வளர்ச்சிபெற்றிருக்கின்றது. முன்பு பிறநாட்டார் சமயப்பிரச்சாரத்திற்கும், வணிகப் பெருக்கத்திற்கும், அரசியல் ஆதிக்கத்திற்கும் தமிழைப் பெரும்பாலும் கற்றனர். ஆனால் இன்று ஆராய்ச்சிக்காகவும், தமிழ் மொழியின் சிறப்பிற்காகவுமே தமிழை அவர்கள் கற்கின்றனர். மொழிகளில் சிறந்த தமிழ் மொழியை அறியாது இந்தியாவின் அடிப்படைப் பண்பாட்டையும் கலை களையும் அறியமுடியாதென உணர்ந்து தமிழைப் பயின்று வருகின்றனர். இவ்வாறு தமிழியல் ஆய்விலே பல புரட்சிகள் ஏற்படுவதற்குக் கர்த்தாவாக இருந்தவர் அடிகள்." தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் மூலமாக தனிநாயக அடிகளார் ஆற்றிய அளப்பரும்பணிகளை இதைவிட அருமையாக யாரும் தொகுத்துக்கூற முடியாது!
அடிகளாரின் இதழியல் பணிகள்
உலகின் பல நாடுகளிலும் வாழும் அறிஞர்கள் தமிழ் பற்றி அறியாதவர்களாக இருப்பதைத் தம் உலகத் தமிழ்த் தூதின்போது கண்டுணர்ந்த தனிநாயகம் அடிகளார் பெரிதும் வருந்தினார். இக்குறையைப் போக்கினால்தான் தமிழின் பெருமையை உலகம் அறிய முடியும் என்று அவர் நம்பினார். தமிழைப்பற்றி தமிழில் எழுதப்படும் கட்டுரைகளும் நூல் களும் தமிழறிந்தோரிடையே மட்டுமே உலவ முடியுமே தவிர, தமிழறியாத பிற நாட்டறிஞர்களுக்குத் தமிழை அறிமுகப் படுத்த அவை உதவிடல் இயலாது என்பதை அடிகளார் நன்றாக உணர்ந்தார். ஆகவே மேலை நாட்டார் பெரிதும் புரிந்து கொள் ளக்கூடிய ஆங்கில மொழியில் ஓர் ஆய்வு இதழ் நடத்துவதே இக்குறையைப் போக்கிடச்
தமிழில் அச்சேறிய ஏடுகளுள் கொல்லத்தில் அக்டோபர் 20ஆம் நாள் அச்சான தம்பிரான் வ நாட்டு 'Harvard' பல்கலைக்கழகத்தில் இ. கண்டுபிடித்து தமிழ் மக்களுக்குச் சொன்னார்.

சரியான வழி என்னும் முடிவுக்கு அவர் வந்தார்.
அண்ணாமலை, சென்னைப் பல்கலைக் கழகங்கள் தமிழைப்பற்றிய ஆய்வு நூல் களை வெளியிட்டிருப்பதை அடிகளார் அறிவார். அன்றைய எம். லிட், முனைவர் - பட்ட ஆய்வேடுகள்கூட ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டன. ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ் ஆய்வு நூல்கள் பெரும்பாலும் இலக்கண - இலக்கிய ஆய்வு நூல்களாகவே இருந்தன. பண்பாடு, வரலாறு, நிலவியல், மொழியியல், ஒப்பியல் ஆகிய துறைகளுக்கு அத்தகைய நூல்கள் சிறப்பிடம் வழங்கவில்லை. ஆனால் மேலை நாடுகளில் மொழி பற்றிய நூல்கள் இலக்கிய - இலக்கண நூல்களாக மட்டும் இல்லாமல் மொழி பேசும் மக்களோடு தொடர்புடைய எல்லாத் துறைகளையும் தழுவியனவாக இருப்பதை அடிகளார் அறிவார். எனவே தமிழ் பேசும் மக்களுடன் தொடர்புடைய எல்லாத் துறைகளையும் தழுவிய கட்டுரைகளைத் தாங்கிவரும் ஆங்கில இதழ் இல்லாத குறையைப் போக்குவதற்காகவே தம் சொந்த முயற்சியில் அடிகளார் Tamil Culture' (தமிழ்ப் பண்பாடு ) என்னும் ஆங்கில முத்திங்கள் இதழை 1952 ஆம் ஆண்டு தொடங்கினார். இவ்விதழ் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தைக் கவரும் விதத்தில் வெளிவந்தது. பல உலகப் புகழ்பெற்ற பேராசியரியர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வந்த 'Tamil Culture' உலகப் புகழ் பெற்றதில் வியப்பில்லை.
முதல் மூன்று ஆண்டுகளிலும் இதழின் பொறுப்பை முழுவதுமாக அடிகளாரே ஏற்றுச் செயற் பட்டார். 18. 09.1954 அன்று 'தமிழ்ப்
*DCCTRINA CHRISTAM
* cnLinguaMatatar Tamil. பண் பாட்டுக்
+++++*+*+*+*+*+* கழகம்' (Academy of Tamil Culture) சென்னையில் நிறுவப்பட்டது.
(578ஆம் ஆண்டு ணக்கம் அமெரிக்க டம்பெற்றிருப்பதைக்
*க*க*ர்சwாக*******************
+க+*+*+*+*+*+*+*
************************f4!
+++++++++++
காமசூசூயதோசகு * வதையாசினம்-சிககியம் *
பாதிரியா-தமிழின் சி 29மர் தடுதழுத்ன தம்பி *.
ஈா ன ய ன க க ம் - 2 +1#ixtwifswf+*+*****
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 55
இக்கழகம் அமைவதற்கு முன்முயற்சிகளை மேற் கொண்டவர்களில் அடிகளார் முக்கிய மானவர். 1955ஆம் ஆண்டுமுதல் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பில் இவ்விதழ் வெளிவரத் தொடங்கியது. ஆசிரியர் குழுவும் நியமிக்கப்பட்டது. அடிகளாரே இதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். 1966ஆம் ஆண்டிற்குப் பின் இவ்விதழ் வெளிவரவில்லை.
தமிழாய்வுத் துறையில் விடிவெள்ளியாக வலம்வந்து உலக அரங்கில் தமிழுக்கு உரிய சிறப்பிடத்தைப் பெற்றுத்தர வகை செய்த இவ்விதழ் பன்னிரெண்டு ஆண்டுக்காலம் வெளிவந்தபோது அது ஆற்றிய பணிகள் அளப்பரியன. அது வெளிவராமல் நின்ற போது பல தமிழாய்வாளர்கள் மிகவே வருந் தினர். அதன் பணியை யார் தொடர்வரோ என ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அந்த எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. என்னகாரணத்தாலோTamilCulture'இதழைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில், புதிய ஒர்ஆய்வுஇதழைத்தொடங்கவேண்டுமென்று சென்னை உலகத் தமிழ் மாநாட்டின்போது கூடிய அறிஞர்கள் முடிவு செய்தனர். Journal of Tamil Studies 6Tairgilb Ligug)5up D 655 தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் வெளி வந்தது. இம்முயற்சிக்கு பக்கபலமாக இருந்தது தனிநாயகம் அடிகளாரே ஆவார். தனிநாயகம் அடிகளாரை முதன்மை ஆசிரியராகக்கொண்டே இவ்விதழை வெளியிட மன்றம் முடிவுசெய்தது. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் வெளியிட்டு Quig, Journal of Tamil Studies gaof புதிதாக நிறுவப்பட்டுள்ள உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாகப் பதிப்பிக்கப்படும் என 1970ஆம் ஆண்டு இதழில் தனிநாயகம் அடிகளார் அறிவித்தார்.
நிறைவுரை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் அடிகளாரின் நீண்ட நாள் நண்பருமாகிய பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் அவர்கள் அடிகளாரின் பணிகளை இப்படி நினைவுகூர்கின்றார், "தமிழ் மொழி பழமையானது. அதன் சங்க இலக்கியம் ஏற்றமுடையது. அதன் பக்தி இலக்கியம் மனதை உருக்கும் இயல்புடையன. சிலப்பதிகார காவியம் உலக இலக்கியங்களில் சிறப்பிடம் பெறத்தக்கது என்று பிறநாட்டார் அறிந்திடச் செய்தவர் அடிகளாவார். உலக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

மாநாடு மலேசியாவில் நடத்தியதும், அதன் பின்னர் சென்னை, பாரீஸ், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் நடத்துவதற்கு வழிகாட்டியாய் நின்றவரும் அடிகளாவார். அதன் பின்னர்தான் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி முதலிய மொழிகள் உலக மகாநாடுகளை நடத்த முயன்றன. அவற்றிற்கெல்லாம் முன்னோடி அடிகளாவார். தமிழகம் அவர் செய்த பெருந்தொண்டை முழுமையாக உணர்ந்திடவில்லை. அவரால் gol6)35 அரங்கில் தமிழுக்கு ஏற்பட்ட சிறப்பை இதுவரை விலை மதித்திடவில்லை. தமிழ் நாட்டில் நல்ல தொண்டுகளை சீர்தூக்கிப் பாராட்ட பலவாண்டுகளாகும். வளராத மனநிலை உடையவர்கள் பலராகையால் அந்த மனநிலை மாற பலவாண்டு நீடித்திடும். ஆனால் விரைவில் அந்த நிலை மாறாமல் இருக்காது. அன்று தனிநாயக அடிகளாரை சிரமேற்கொண்ட தமிழர்கள் போற்றுவர்”
தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீன முன்னாள் ஆயர் சபாபதி குலேந்திரன் அவர்கள்எழுதியதுஇங்குநினைவுகூரத்தக்கது. "கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தனிநாயகம் அடிகளாரைப்போலத் தமிழுக்குத் தொண் டாற்றியவர் வேறு எவருமிலர்." என அவர் திட்டவட்டமாக மொழிகின்றார்.
புலவர்களுக்குள்ளும் பண்டிதர்களுக் குள்ளும் முடங்கிக் கிடந்த தமிழை தனிநாயக அடிகளார் உலக அரங்கில் ஏற்றி வைத்தார். தமிழை உலக வரைபடத்தில் ப்ொறித்தவர் தனிநாயகம் அடிகளார். தமிழ் தெரியாத அறிஞர்களும் தமிழை ஆய்வுசெய்ய முடியும் என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்தவர் அவர். தமிழின் சிறப்பை எடுத்துச் சொல்ல பல வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டார். அதனால்தான் அவரை (Ambassador of Tamil) g5L6p5gilgil' 6Taipi தமிழ் உலகம் அழைத்து மகிழ்கின்றது. ஒரு பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பாரிய தமிழ் பணியை தனி ஒருவராக நின்று செய்தார். "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை”என்றார்பாவேந்தர்பாரதிதாசன். தனிநாயகம் அடிகளாரும் தமிழுக்கு தொண்டுசெய்து வாழ்ந்தவர். தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தமிழுக்காகவே அர்ப்பணித்தவர். தமிழ் உள்ளவரை அவரும் வாழ்ந்துகொண்டிருப்பார்.
O O O
53

Page 56
தமிழியல் விருத்தியின் தனிநாயகம்
பிற அறிவுத் துறையியலுக்கு, மறையாக,
தமிழ் ஆய்வு என்ற அளவில் இருந்ததை, தமிழ்மொழி, தமிழிலக்கியம், தமிழ்ச் சமூகம், தமிழ்ப்பண்பாடு என்ற வகையில், தமிழோடு பிற அறிவுத் துறைகளையும் தொடர்புபடுத்திய நவீன ஆய்வு முறையியலுக்கு அமைவான , தமிழியல் என்னும் ஆய்வு நெறிமுறையாக, உலக அரங்கில் 'திருநிலைப்படுத்திய' ; பெருமை வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளுக்கு உரியது. தமிழின் தொன்மையையும் வளத்தையும் வன்மையையும் நிறுவதிலே அடிகள் ஆக்கபூர்வமான கரிசனை காட்டியவர். அதற்கு வேண்டிய அறிவும் ஆளுமையும் அவரிடம் இருந்தன. தமிழ்மொழி, இலக்கியம், தமிழ்ச் சமூகம் என்பன தொடர்பான வரலாற்று நோக்கிலான அறிவும், சர்வதேச மொழியான ஆங்கிலத்தில் இருந்த அபாரமான ஆற்றலும், வேறும் பல உலக மொழிகளில் அவருக்கு இருந்த பரிசயமும், சமய அடிப்படையிலும் கல்வி, தொழில் என்பவற்றின் அடிப்படையிலும் அவருக்கு வாய்த்திருந்த நாடுகடந்த தொடர்புகளும் செல்வாக்கும், அரசியல் சமூக உணர்வுகளும், எல்லாவற்றுக்கும் மேலாக அஞ்சாமையும், உடைவிலா ஊக்கமும் அவரது ஆளுமை விகசிப்புக்கான அடிப்படைகளாக அமைந்தன. இவையே அவர் ஆற்றிய தமிழ்ப்பணி ஒவ்வொன்றுக்குமான மூலாதாரமாக அமைந்தன.
உலக அரங்கில் தமிழின் தொன்மையையும் வளத்தையும் நிறுவுவதற்கு ஏற்றதாக உலகதமிழ் ஆராய்ச்சி மன்றம்; என்ற அமைப்பை நிறுவுவதற்கு அடிகள் விரும்பினார். 1964ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற கீழைத்தேய அறிஞர்களின் உலகமாநாடு, அவரது 54

க. இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர்,
மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,
ஒலுவில், இலங்கை.
எண்ணத்தைச் சாத்தியப்படுத்துவதற்குக் களம் அமைத்துக் கொடுத்தது. அடிகளும் அவரது கல்லூரி நண்பர் வி.ஐ. சுப்பிரமணியமும் கையெழுத்திட்டு விடுத்த அழைப்பால் 196412 - 07 பகல் 12.00 மணியளவில் ஒன்று கூடிய, உலக அறிஞர்கள் பலரின் ஒத்துழைப்போடு அம்மன்றம்
அங்குரார்ப்பணமானது. கீழைநாட்டு மேலைநாட்டுத் தமிழறிஞர்களை ஒன்றிணைப்பதில் உறுதியான பாலமாக விளங்கிய அடிகள், அம்மன்றத்தின் துணைச் செயலாளர்களுள் ஒருவரானார் (மற்றயவர்கமில் சுவலபில் - சார்லர் பல்கலைக்கழகம் ப்ராக்). மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் பேராசிரியர் ழான் ஃபீலியோசா . (பிரான்ஸ் கல்லூரி, பாரீஸ்).
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அங்குரார்ப் பணத்துக்காக அடிகளால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் கூடியவர்கள் இருபதாறு அறிஞர்கள். அவர்களிற் பலர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களையும் சார்ந்த வர்கள். பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பண்டிதர் க.பொ.இரத்தினம், பேராசிரியர் வண.தனிநாயகம் ஆகியோர் இலங்கையர்கள். பேராசிரியர் ழான் ஃபீலியோசா, பேராசிரியர் தாமஸ் பர்ரோ (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), பேராசிரியர் எஃப்.பி.ஜே.கியூப்பர் (லைடன் பல்கலைக்கழகம்), பேராசிரியர் கமில் சுவலபில், பேராசிரியர் சார்ல்ஸ் ஃப்யுவேசி (ஹார்வாட் பல்கலைக்கழகம்), பேராசிரியர் ஹேரல்ட் பவர்ஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பேராசிரியர் ஆர்.சி.ஆஷர் (லண்டன் பல்கலைக்கழகம்) ஆகியோர் மேலைத்தேயத்தவர்கள்.
பேராசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 57
ஏ.கே.இராமானுஜம்
இந்தியராயினும் சிக்காக்கோப் பல்கலைக்கழகத்தில் கடமை யாற்றியவர். (அதுபோலவே தனிநாயக அடிகளும் இலங்கையராயினும் மலேசியப் பல்கலைக் கழகத்திலேயே அக்காலத்தில் கடமையாற்றினார்).
தனிநாயகம் அடிகள் முன்னின்று பாடுபட்டு உலகத் தமிழராய்ச்சி மன்றத்தை அமைத்தார். ஆயினும் அது தமது முயற்சியால் உருவானதே என்று உரிமை கொண்டாடியோரும் இல்லாமல் இல்லை. அடிகளை அம்மன்றத்திலிருந்து அகற்றிவிட முயன்றவர்களும் இல்லாமல் இல்லை. ஆயினும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் உருவாகத்தில் அடிகளுக்கு உள்ள உரிமைப்பாடு பலராலும் ஏற்கப்பட்டது. சான்றாதாரங்களால் நிறுவப்பட்ட உண்மை
அது.
அடிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களையெல்லாம் ஒன்று கூட்டுவதற்கு . நாம் முன்பே கண்டவாறு டில்லியில் இடம்பெற்ற கீழைத்தேய அறிஞர்களின் உலகமாநாடு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் அத்தகைய வாய்ப்புகள் அற்ற நிலையிலும் உலகளாவிய அறிஞர்கள், கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு வாய்ப்பான ஒரு களத்தினை ஏலவே ஏற்படுத்தி அறிஞர் பலரை அடிகள் ஒருமுகப்படுத்தியிருந்தார். அக்களம் Tamil Culture என்னும் ஆங்கில மொழி மூலகாலாண்டு ஆய்விதழாகும். தமிழியலை உலகளாவிய நிலையில் கொண்டு செல்லத்தக்க இதழ் எதுவும் இல்லாத அன்றைய நிலையில், அடிகள் தாமே சிந்தித்து, தமது நிதியிலேயே, தாமே பாடுபட்டு, தமிழறிஞர் பலரும் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும் தமிழியல் சார்ந்த கருத்துக்களின் பரவலுக்குமான தக்க களமாக. அந்த ஆய்விதழை வெளியிட்டார். அதன்மூலம் (நேர்முகமாக அல்லவாயினும்) உலகத் தமிழறிஞர்களை ஒன்று கூட்டினார் எனலாம்.
1952 - 1966 ஆண்டுக் காலப்பகுதியில் பன்னிரண்டு ஆண்டுகள் (1960, 1962, 1965 ஆம் ஆண்டுகளில் வெளிவரவில்லை) Tamil Culture வெளிவந்தது. வெளிவந்த இதழ்களில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர் சுனித்திகுமார் சட்டர்ஜி, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலாக இருபத்தைந்துக்கு மேற்பட்ட இந்திய முன்னணி அறிஞர்களும், சு.வித்தியானந்தன்
வழமையாக இடமபெறும் பத்தி எழுத்துக்க போன்றவை அடுத்த இதழில் இடம்பெறும், ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

முதலான இலங்கைத் தமிழறிஞர்களும் தமது கட்டுரைகளை வெளிப்படுத்தினர். ஆங்கில மொழியில் எழுதக் கிடைத்த வாய்ப்பு இவர்களிற் பலருக்கு உலகளாவிய புகழையும் தொடர்புகளையும் பெற்றுக் கொடுத்தது.
இந்திய, இலங்கை அறிஞர்கள் மாத்திரமன்றி மேலைத்தேய அறிஞர்கள் பலரும் Tamil Culture இல் எழுதினர். அவர்கள் விவரம் வருமாறு:
சர். மார்ட்டிமர் வீலர், சி.வான் ஃப்யூரர் ஹைமன்டோர்ஃப், எம்.பி.எமனோ, ஜே.ஆர். மார், சி.ஜே.டீல், இ.சி. நோல்ட்டன், வி.ஏ. மக்காரென்கோ, ஆலிஸ்டர் லாம்ப், எம்.எஸ். எச் தொம்சன், யூ.ஆர். ஏரன்ஃெபல்ஸ், ஆர்னோ லேமான், ழான்ஃபீலியோசா, எக்ஹீராஸ், எஃப் லெக்ரான், எல்.பாஃஜு, எம்.ஆந்திரனோவ், கமில் சுவலபில்.,
இந்த மேலைத்தேய அறிஞர்களின் எண்ணிக்கை பதினேழு. இது பின்னர் 1964 இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை அங்குரார்ப்பணம் செய்தபோது கூட்டிய மேலைத்தேய அறிஞர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது அவதானிக்கத்தக்கது. தொலைத் தொடர்பு, வெகுஜன தொடர்புத் தொழில் நுட்பங்கள் அதிகம் விருத்தியுறாத அந்தக் காலத்திலே வாழ்ந்த அடிகள், இருந்த இடத்தில் இருந்து கொண்டே (இக்காலப்பகுதியில் 1961 வரை இலங்கையிலும் பின்னர் மலேசியாவிலும் பணியாற்றினார்.) உலகளாவிய நிலையில் தொடர்புகளை ஏற் படுத்தவும் அத்தொடர்புகளைத் தமிழியலுக்குப் பயனுடையனவாக்கவும் வல்ல ஆளுமையைக் கொண்டவராகத் திகழ்ந்தமையே, இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையில்லாத தமிழ்ப் பணியாளராக தனிநாயகம் அடிகளாரைத் திகழ வைத்தது; அவரது இயற்பெயரைக் காரணப் பெயராகக் கருத வைத்தது. உலகளாவிய நிலையில் முன்னணித் தமிழியலாளர் பலரையும் ஒன்று கூட்ட வல்ல தனிமனித ஆளுமை, தமிழ்ச்சூழலில், அடிகளாருக்கு முன்பும் இருந்ததில்லை. பின்பும் இதுவரையில் வந்ததில்லை. (இக்கட்டுரைக்கான அடிப் படைத் தகவல்கள், அமுதன் அடிகள் எழுதி உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் வெளி யிட்ட 'தனிநாயகம் அடிகளார்' என்ற நூலி
லிருந்து பெறப்பட்டன.)
0 0 0
ள். நூல் அறிமுக
- அசிரியர்
55

Page 58
தனிநாயகம் அழகளாரும் தமிழ் ஆராய்ச்சியும்:
சிந்தனையினதும் கருத்துக்களினதும் உயிர்துடிப்பான சாதனமாய் விளங்குவது மொழி என்றால், அந்த மொழி சார்ந்த விருத்தியை இன்னுமொரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்வது அந்த மொழியின் கண்ணே நிகழும் ஆராய்ச்சிகளே ஆகும். இந்தவகையில் சென்ற நூற்றாண்டின் தமிழ் ஆராய்ச்சித் துறையில் தடம்பதித்த தனித்துவமான ஆய்வாளராக மதிப்பிடப்படுபவர் "தமிழ்த் தூது" தனிநாயகம் அடிகளாராவார். அடி களாரின் நூற்றாண்டு விழா, தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணும் உணர்வெழுச்சியோடு கொண்டாடப்படுவதற்கான முனைப்புகள் பல்வேறு மட்டங்களில், பல்வேறு அமைப்பு களால் முன்னெடுக்கப்படும் தருணம் இது. இத்தருணத்தில் தமிழாராய்ச்சியின் புதிய திசைகோள் பற்றி அடிகளாரோடு தொடர் புறுத்திச் சிந்திப்பது மிகப் பொருத்தமானது ஆகும்.
தனிநாயகம் அடிகளார் 21.08.1913 ஆம் ஆண்டு கரம்பனில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை புனித அந்தோனியார் பாடசாலையிலே பெற்றுக்கொண்டார். கல்லூரிக் காலத்திலேயே இலக்கிய ஈடுபாடு மிக்கவராய் இருந்தார். 1931 - 1934 வரை கொழும்பு பேணார்ட் குருத்துவக் கல்லூரியில் இணைந்து குரு ஆவதற்குரிய பயிற்சியைப் பெற்றார். 1934-1939 வரை உரோம்மாநகரத்து குருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கலாநிதிப் பட்டம் பெற்றார்.
அடிகளார் மறைக் கல்வியை பெறுவதற் காக உரோம்மாநகரத்திற்குச்சென்றசந்தர்ப்பம் அவரதுஆழமானதமிழ்உணர்விற்குவித்திட்ட பொற்காலமாக நாம் கொள்ளலாம். மகாத்மா காந்திக்கு தென்னாபிரிக்காவிலே முகிழ்த்த
56
 

தேசாபிமான உணர்ச்சிபோல, அடிகளாருக்கு உரோமிலே தமிழ் பற்று அரும்பியது. அங்கே வீரமாமுனிவர் கழகம் தொடக்கம், வேறு பல அமைப்புகளோடும் தொடர்பு கொண்டு தமிழ்ப்பற்றினை ஏற்படுத்திக் கொண்டார். வத்திக்கான் வானொலியில் ஒலித்த அடிகளாரின் குரல் அன்றைக்கு உலகத் தமிழ் ஆய்வுக்கான முதற் குரலாக நாம் கொள்ளலாம்.
தனிநாயகம் அழகளாரின் தனித்துவம் தமிழியல், தமிழ் ஆய்வு என்பனஒரு குறுகலான வீச்செல்லையினுள் சுழன்ற வேளையில், அடிகளாரின் பிரசன்னமும் கடின உழைப்பும் ஆழ்ந்த புலமையும் அவரின் கல்விச் சிறப்பும் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு புது இரத்தம் பாய்ச்சியது எனலாம். அந்தவகையில் தமிழ் அறிஞர்களுள் தெ.பொ.மினாட்சிசுந்தரனார், பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை, பேரா.அ.சிதம்பரநாதன் முதலானோர் தமது ஆங்கிலப் புலமையைப் பயன்படுத்தி மொழி, பண்பாடு தொடர்பாக ஒருசில கட்டுரைகளைப் படைத்துள்ளனர். சிலர் குறிப்பிடத்தக்க சில ஒப்பியல் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆயின் தமிழின் மேன்மையை ஆய்வு பூர்வமாகவும் திடமாகவும் பிறருக்குப் பரப்புகின்ற கடின முயற்சியிலே ஈடுபட்டு வெற்றிபெற்ற ஒருவராக தனிநாயகம் அடிகளார் ஒருவரையே வரலாறு பதிவுசெய்கின்றது.
தமிழை முறையாகக் கற்றுத் தெளிய வேண்டும் என்பதன் பொருட்டு அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாண வராகச் சேர்ந்து ஐயந்திரிபற தமிழை கற்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நாம் நினைத்துப் பார்க்கும் பொழுது நாம் எண்ணித் தெளியலாம். “ தமிழ்க் கலைகளில் மூழ்கியிருந்த நான் அந்தக் காலத்திலேயே நம் ஒப்பற்ற இலக்கியத்தைப் பற்றி உலகு அறியச் செய்ய வேண்டும். ஒரு சிறிதாவது அதற்கு உழைக்க உறுதிபூண்டேன்” என்பது அடிகளாரின் வாய்மொழியாகும்.
சந்திரசேகரம் சசீதரன் (விரிவுரையாளர், சமூகவியல் துறை கிழக்குப்பல்கலைக்கழகம்)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 59
பன்மொழிப் புலமை
மொழிக்கும் அதிகாரத்திற்குமான தொடர்பை பின்நவீனத்துவ வாதியான பூக் கோவின் எழுத்தாக்கங்கள் எமக்குத் படுத்தும். கட்டமைப்புவாதிகள் மொழியின் இயங்கியலுக்கும் சமூக உறவுகளுக்குமான வலுவான தொடர்பினை எடுத்துக்காட்டுவர். சமகாலத்தில் மொழியானது ஒரு அரசியல் ஆயுதமாகப் பிரயோகிக்கப்படுவதையும் கண்டுவருகிறோம். இவற்றையெல்லாம் மீறி, இவற்றுக்கெல்லாம் அப்பாலாக நின்று அசாத்தியமான வகையிலே பன்மொழிப் புலமையை ஈட்டிக்கொண்டு அதனை நேர் நிலையானசமூகப்பயன்பாட்டிற்கும், சமுதாய, இனத்துவ, பண்பாட்டு மீட்டுருவாக்கத்திற்கும் பயன்செய்து கொண்ட அடிகளாரின் சால்பு
நலம் விதந்துரைக்கற்பாலது.
அடிகளார் தமிழ், ஐழ் பிரஞ்சு ஜெர்மன், இலத்தீன், ரேக்கம்,
எபிரேயம், மலாய், சிங்களம், சமஸ்கிருதம், போர்த்துக்கேயம், ஸ்பானிஷ், ரஷ்ய மொழி, இத்தாலி முதலான மொழிகளில் நிறைந்த புலமையும், பாண்டித்தியமும் உடையவர். பன்மொழித் தேர்ச்சியினால் தமிழின் தனித்துவமும், சமூகவியல் அறிவும் கைவரப் பெற்றவர். தமிழைத் தனித்து நோக்காமல் உலகத்தோடு இணைத்து நோக்கும் விசால மான பார்வை அவரிடத்தே வளர்ந்தது. இதனால் தமிழ் ஆய்வுத் துறையினை புதிய எல்லைகளுக்குஎடுத்துச்செல்ல அடிகளாரால் இயன்றது.
தமிழ்த்துதுப் பணி
“திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்ய வேண்டும்” என்பது பாரதியின் வாக்கு. இதற்கிணங்க இளமைக் காலம் முதலே வெளிநாட்டுக் கல்வியும், பல நாட்டவரின் தொடர்பும் பிணைப்பும் அடிகளாருக்கு பெருவாய்ப்பாக அமைந்தன எனலாம். உரோமில் இறையியலில் உயர்கல்வி கற்கும் காலத்தில் சுமார் ஐந்தாண்டு காலம் 43 தேசங்களைச் சார்ந்த சுமார் 240 மாணவர்களுடன் உடனுறைந்து கற்ற அநுபவம் அடிகளாருக்கு உண்டு. எனவே அடிகளாரின் தொடர்புவட்டமும், அதன் எல்லைகளும் பிற்காலத்தில் தமிழை உலகத்திற்கு எடுத்துச்செல்ல அவருக்கு உறுதுணை புரிந்தன எனலாம்.
தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மியன்மார், அமெரிக்கா, தென்அமெரிக்கா, சோவியத்ஒன்றியம்(முன்னாள்), இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, ஆபிரிக்கா, கனடா, ஆஸ்த்திரியா முதலான உலகின் பல திசைகளுக்கும் பயணம் செய்து தமிழை அறிமுகப்படுத்தி, உலகத்தோடு தமிழைஇணைக்கச்செய்தபணிஅளப்பரியது. இந்தவகையில்அடிகளார்ஒருநிறுவனம் ஆற்ற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

வேண்டிய பணிகளை தனிமனிதனாக நின்று சாத்தியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தமிழை நிறுவனமயப்படுத்தியமை
சென்ற நூற்றாண்டிலே அடிகளார் சாத்தியப்படுத்திய தமிழாராய்ச்சி மாநாடு உண்மையில் தமிழை நிறுவனமயப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியின் விளைபேறாகும். இந்த அம்சமே இன்றுவரை அடிகளாரின் பெயரை பறைசாற்றிக் கொண் டுள்ளது. தமிழ், தமிழ் சார்ந்த ஆய்வுகள் இன்றுவரை புலமைத்துவ உலகத்தினுள் குறிப்பிடத்தக்க ஸ்தானத்தைப் பெறுகிறது என்றால் அதற்குப் பின்புலமாக அமைந்த அடிகளாரின் முயற்சிகளே காரணம் எனலாம்.
"Tamil Culture' 6169/Lib geysiidal) g560) நிறுவி, உலகின் ಅಜ್ಜೈಣಿ: தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து அவர்தம் ஆய்வின் முடிவுகளை முன்வைக்கவும் பரப்பவும் அடிகளார். எடுத்துக்கொண்ட முயற்சி குறிப்பிடத்தக்கது. இதனைவிட அடிகளாரின் தொல்காப்பிய ஆய்வுகள், சங்க இலக்கிய ஆய்வுகள், கல்வியியல் சிந்தனைகள், பாரதி பற்றிய சிந்தனைகள், ஒப்பியலாய்வுகள் என்பவை தனித்து ஆய்வுசெய்வதற்குரியன.
கல்வியாளராக, பல்கலைக்கழகம் சார்ந்தவராக, மொழி உணர்வுமிக்கவராக, சொற்பொழிவாளராக, பதிப்பாளராக, செயல் வாதியாக எல்லாம் பல பரிமாணங்களில் விளங்கி தமிழுக்கும் தமிழ் ஆய்வுக்கும் உயிர்த்துடிப்பான பங்களிப்பை நல்கிய அடிகளாரின் நூற்றாண்டு கனிந்துள்ள இந்த வேளையில், தமிழ் ஆய்வு உலகமும், தமிழ்ச் சமுதாயமும், தமிழ்ப் பண்பாட்டியலும் புலப்படுத்தும் பலமும் பலவீனங்களும் எவை? தமிழர்களாகிய நாம் செல்லுகின்ற திசைகோள் யாது? சுயநலமும், வெளிநாட்டு மோகமும், ஒருமைப்பாடின்மையும் நம்மைப் பீடித்த பெரும் பிணிகளாகத் தொடர்கின்றன. நாமே நமது அடையாளத்தைத் தொலைக் கின்றவர்களாக உள்ளோம். எனவே 左
சூழலில் நிலமும் கவிதையும் தந்த தமிழ் வீரன், உலகின் பல திசையும் பறந்து தமிழ் ஒதிய தமிழ்க் காதலன், தமிழிற்கு ஆராய்ச்சி LD5ITTBITG) புலமையாளன் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நினைவுகளை வெறும் சோடனையாகக் கொண்டு அமைந்து விடாமல் தமிழியல் ஆய்வுப் பாதைக்கான புதிய திசை வழிகளை உத்வேகமான தேடுவதும், ஒருங்கிணைந்து தமிழை மீண்டும் உலக அரங்கில் ஏற்றுவதுமே நம்முன் உள்ள பணியாகும்.
O O O
57

Page 60
G) ITழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண் பற்றியபடி எப்போதும் தேடல்களுடன் வாழ்ந்தத மனிதர்களை நாமறிவோம். அவர்கள், தம இந்த அரிய மானுடப் பிறவியை மனித குலத்த நாடிய உழைப்பிற்கென அர்ப்பணித்தார்கள். அ ஓர் ஆன்மீக வழிகாட்டியாகவும் தான் வரித் குறிக்கோளுக்கென உழைத்த ஒரு செயல்வீரராகவ தமிழ்த்துாது தனிநாயகம் அடிகளார். அவ6 நினைவுகள் மேற்கிளம்பியுள்ள அவரது நூற்றாணி அடிகளாரது பணிகள் பற்றிய ஆய்வுநிை எம்மை வியக்கவைக்கின்றன. அப்பணிகளை முன் அவரைத் தூண்டிய விடயங்கள் எவை; பின்பு என்ற வினாக்களும் எம்முள் எழாமலில்லை.
வாழ்வது ஒருமுறை, எனவே, உன்னால் முடி நல்ல செயல்களைச் சற்றேனும் தாமதியாமல் சகமனிதனுக்கு ஏதேனும் இரக்கம் காட அதனையும் அசட்டை செய்யாதே - ஒத்திப் போ இது, அவரது பாடசாலை நாட்களில் அ நேசித்த ஓர் ஆங்கில மேற்கோள். அந்தக்கூற்று, இள நெஞ்சில் வித்தாக விழுந்தது. அதற்கு இவை அதிர்வை, கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊ கேளிர்' என்ற கவிதைவரிகளும் ஏற்படுத்தின. அ அடிகளார் தோற்றுவித்த தமிழ்ப்பண்பாடு'இதழி தம்மைப் புலப்படுத்திக் கொள்கின்றன.
நீண்ட காலமாக உணரப்பட்ட தேவை நிறைவு செய்யும் நோக்குடனும் நம்பிக்கையுடனு
அவர் தனது பணிகளைத் தொடங்குகிறார். இன்னும் பரந்த அளவில் நோக்கினால், அவர் ( உலகப்பயணங்கள் அவரது பார்வையின் அதன் நவீனமயமாதலுக்கும் பெருமளவு உதவி அறிந்துகொள்ளலாம். ஐம்பத்தொரு நாடுகள் பயணித்து, அவை குறித்து எழுதிய இருபத்தொரு ஒன்றே உலகம்’ என்ற தொகுப்பாக வெளிய அங்கெல்லாம் அவர் கண்டும் கேட்டும் அறிந்து ெ அடையாளங்கள், பண்பாட்டு எச்சங்கள் என்பன பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. தமிழ்ப்பண்பாடு அவரது புரிதல்களை அவை இன்னுமின்னும் வள அடிகளாரது பன்மொழிப் புலமைவு பெற்றுக்கொண்ட முழுமையானதோர் உலக இ அவரிடத்து மேலுமொரு உந்துசக்தியாகத் தெ வெவ்வேறு மொழிகளின் பழைமையான இல கற்றறிந்தமை, அவ்வம்மொழிப் புலமைய தொடர்பு என அது பரந்துபட்டது. அம் கற்குந்தோறும், தனது தமிழ்மொழிப்பற்று வளரக்கண்டதாக அடிகளாரே குறிப்பிடுகி இலக்கியங்கள் குறித்த இத்தகு பிரக்ஞையுடன் தமிழாய்வுகளை முன்னெடுத்தமை நாம் பெற்ற அ 58

மைநெறியைப் iனித்துவமான க்கு வாய்த்த தின் மேன்மை அந்தவகையில், துக்கொண்ட ம் வாழ்ந்தவர் ரைப் பற்றிய ாடு இது.
ல முடிபுகள், னெடுப்பதற்கு லங்கள் எவை
டந்த ஏதேனும் 9)
செய், உன்
ட்டமுடிந்தால், ત8 ாடாதே"
வர் வாசித்து 12 ாம் சேவியரின்
ணயானதொரு ரே, யாவரும் வை, பிற்பாடு லே இவ்வாறு
/யொன்றினை [Lh*
மேற்கொண்ட விரிவுக்கும், பின என்பதை வரை அவர் கட்டுரைகள், பிடப்பட்டன. காண்ட தமிழ் அவரிடத்துப் தொடர்பான "ப்படுத்தின. பழி அவர்
ாழிற்பட்டது. க்கியங்களைக்
பாளருடனான மொழிகளைக் மென்மேலும் றார். 92D - Gol)55 ன் அடிகளார்
ரும்பேறே. வசங்கி தயாபாணி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 61
உலகளாவியரீதியில் அடிகளாரது ஆய்வுப்பணி வரவேற்புப் பெற்றமை குறித்து அடிகளாரின் நினைவுமலராக வெளிவந்த தமிழாரம், இவ்வாறு பதிவு செய்கிறது.
ஐரோப்பியரின் இலக்கியம், பண்பாடு, மொழி பற்றிய நிறைவான அறிவும் இரசனைப்பண்பும் கொண்ட கல்விமானான அடிகளார். தமிழ்மொழி - தமிழிலக்கியம் - பண்பாடு என்பவற்றின் மிது கொண்டிருந்த பற்றும் அபிமானமும் மேற்குலகினரை தமிழ்மொழி குறித்துச் சிந்திக்கத் தூண்டியது.
உலகெங்கும்தமிழர்வாழ்ந்துவருகின்றனர் என்பதை மேற்குலகினர் அறிந்து கொள்ளவும், தமிழ் ஒரு தொல்சீர்மொழி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவும் பணியாற்றிய உலகத் தமிழ்த்துதுவராக அடிகளார் உருவானார்.
அவரது பன்முகப்பட்ட பணிகளை உற்று நோக்குவோர் மறைப்பணியை விஞ்சியதாக அவரது தமிழ்ப்பணிகள் அமைந்திருந்தமை கண்டு வியப்புறலாம். அதற்கான விளக்கத்தை
அல்லது விடையை அடிகளாரின் வார்த்தைகளிலேயே நாம் பெறக்கூடும்.
கடவுளுக்குப் பணிந்து, தன்
பண்பாட்டுக்காகவும் தன் நாட்டுக்காகவும் ஒருவர் தன் ஆற்றல்களையும் நேரத்தையும் செலவிடுவது, தன்னலமற்றதும் உன்னத மானதும் ஆகும்.'
கத்தோலிக்கத் திருச்சபையின் துறவியாக அவர் அறியப்பட்ட போதும் ஏனைய மதங்கள் மனித இனத்திற்கு வழங்கிய கொடைகளை மதிக்கவும் அவற்றின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. அன்றையநாட்களில் அத்தகு பரந்தமனப்பாங்கு மிகச்சிலருக்கே வாய்த்திருந்தது.
தனது இலட்சியப் பயணத்தில் நடைபோட அடிகளாருக்குப் பெரிதும் துணைபுரிந்தது, அவரதுமிகச்சிறந்தஆளுமை. அது, அவரது கம்பீரமான தோற்றப்பொலிவு, ஒப்பற்ற பேச்சாற்றல், இனிய பண்பு எனப்பல நுண்ணிய கூறுகளால் ஆனதொன்று. இன்பமாகப் பேசுவார்; பண்புடன்பழகுவார்; பணிவுடன் தொண்டாற்றுவார்' எனப் பலரும் நயப்பது அது.
அவரது சொற்பொழிவுகளை நினைவு கூர்வோர், அடிகளாரின் மிகத் தெளிவான உச்சரிப்பு, சொற்களின் தேர்வு, அவற்றின் கோர்ப்பு, குரல்வளம் என்பவற்றை வியக்கத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

தவறுவதில்லை. அவரது சொற்களில் ஆற்றல் மிகுந்திருந்தது; அணுகுமுறைகளில் நவீனத்துவம் செறிந்திருந்தது. அவரது பேச்சுக்களோ தெளிந்த சிந்தனை யோட்டத்துடன் செழித்திருந்தன. அங்கு வெற்றுப் பேச்சுக்களுக்கோ வார்த்தை ஜாலங்களுக்கோ இடமிருக்கவில்லை. அவையே அவரது நுண்மாண் நுழைபுலத்தின் சான்றுகளாகின. அவ்வாறே அடிகளார்வடித்த கட்டுரைகளும் மிகுந்த தூரநோக்குடனான சிந்தனைத் தேறல்கள், மறைவாக நம்மிடையே பழங்கதைகள் பேசி மகிழ்வதை விடுத்து, உலக அறிஞர்களின் கவனத்தை நம்பால் ஈர்க்கும் வகையில் செயற்படும் நவீனநோக்கு அவரிடம் இருந்தது. உணர்ச்சிபூர்வமாகப் பிதற்றுதலின்றி அறிவுபூர்வமாக அடிகளார் வடித்த கட்டுரைகள், அவர் விழைந்தபடியே உலகளாவிய ரீதியில் ஒர் அருட்டுணர்வை ஏற்படுத்தின.
தமிழியலின் தளத்தை விரிவாக்கவும் கட்டியெழுப்பவும் அவர் வெளியிட்ட
இதழ்கள், தமிழ்ப்பண்பாடு, தமிழ்க் கற்கைகளுக்கான ஆய்விதழ், தமிழ்க் கற்கைகளுக்கான ஆய்வுத்துணை வழிகாட்டி எனப் படிமுறை வளர்ச்சி கண்டன.
பேராசிரியர்களான எஸ்.வையாபுரிப்பிள்ளை, இரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் என்ற நீண்ட புலமைப் பாரம்பரியத்தின் உயர்ந்த சிந்தனைகள், அடிகளார் வெளியிட்ட தமிழ்ப் பண்பாடு’ இதழின் கட்டுரைகளுடே தம்மைப் புலப்படுத்திக் கொள்கின்றன. அதுபோலவே, அடிகளாரால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் நிறுவனங்களும், மாநாடுகளும் அவர் கருதிய விளைவினைப் பெருமளவில் பெற்றுத் தந்தன. வெறுமனே தமிழ்ப்புலமையாளர்களை அன்றி பல்பரிமாணங்கொண்ட தகைசால் தமிழாய்வாளர்களை உருவாக்க அவர் விருப்புற்றார். தமிழாராய்ச்சி மேலும் ஆழமும் அகலமும் பெறவென, வடக்கிலும் கிழக்கிலும் பல்கலைக்கழங்கள் தேவை” என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். இந்தியப் பண்பாடு - கலைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வோர் தமிழ்மொழியைப் பயில வேண்டியது இன்றியமையாதது என்ற விழிப்பு, அடிகளார் உருவாக்கியதொன்று.
தமிழ் இன்று செம்மொழித் தகுதி பெற்றுவிட்டது எனச் செம்மாந்து நிற்கும்
59

Page 62
நாம், அடிகளாரின் தூரநோக்குடனான கனாக்களை மெய்ப்பிக்க எத்தகு முயற்சிகளை எடுக்கின்றோம் என்பது சிந்திக்கத்தக்கது. இன்னும் தொடர்ந்து வழக்கிலுள்ள செம்மொழிகளுள் வரலாற்றுக்கு ஏற்ற எடுத்துக்காட்டு தமிழே’ என்று ஆராய்ந்து கூறிய அடிகளார், "வெறும் புகழ்ச்சிக்காகவோ, காரணமின்றிப் போற்றுதற்காகவோ நாம் தமிழாராய்ச்சியில் இறங்குவதில்லை" என அறுதியிட்டுக் கூறவும் செய்தார். தமிழை எதற்கெல்லாமோ பயன்படுத்திக் கொள்ளும் சிலர் அடிகளாரின் இவ்வரிகளை அடிக்கடி உச்சாடனம் செய்தல் நலம்பயக்கும்.
தமிழியல் கற்கைகள், தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கைநெறியாக அமைந்தன. 'கார்த்தில்கா, தம்பிரான் வணக்கம், "கிரித்தியானி வணக்கம், அடியார் வரலாறு என்பன அவர் தேடிக் கண்டடைந்த நூல்கள். ஒருவகையின் உ.வே.சா அவர்களின் பணியின் நீட்சியாக நாம் இதனைக் கொள்ளலாம். சிதைவடையும் நிலையிலுள்ள அரிய ஒலைச்சுவடிகள் தொலைதல், அழிவடைதல், விற்கப்படல் என்ற செயற்பாடுகளைக் கண்டு அவர் மனங்கவன்றார். அவற்றைத் தடுக்கும் சட்டங்களின்மை குறித்து அடிகளார் மிகுந்த விசனங்கொண்டிருந்தார் என்பதும் அவரது தமிழ்ப்பற்றின் மாண்பை எடுத்தியம்புகிறது.
அதைப்போன்றே, தமிழர் தம் வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற கரிசனையும் அவரிடம் மிகுந்திருந்தது.
எப்போது வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றைஎழுதுகையில், கங்கைக்கரையுடன் நின்றுவிடாது காவிரிக்கரையில் நின்று எழுதுகிறார்களோ, அன்றுதான் இந்திய வரலாறு முழுமையானதாகும்.'
என்ற அவரது கூற்று மிகச்சரியானதும் சமகாலப் பொருத்தப்பாடு உடையதும் ஆகும்.
தமிழ்மீதான அவரது அபரிமிதமான பற்று, பேராசிரியர் சு.வித்தியானந்தனை 'உலக ஆசையைத் துறந்திருப்பினும் தமிழ் ஆசையைத் துறவாதவர் அடிகள்' என வியக்கவைக்கிறது. அந்த ஆழமான பற்றே, வெறுமனே ஒரு தமிழ்ப்புலமையாளர் என்ற எல்லையைக் கடந்து சில சிகரங்களை அடிகளார் தொடக்காரணமானது. மனித நேயத்தினதும் துறவறத்தினதும் ஓர் அற்புத மான கலவையாக அவர் ஓங்கிநிற்பதும் அதனால் தான் எனலாம்.
60

தமிழின் பெருமையைக் கடல்கடந்து கொண்டு சென்ற அடிகளாரை, இந்து மதத்தின் பெருமையை அவ்வாறே எடுத்துக்கூறிய சுவாமி விவேகானந்தரோடு பலவாறு ஒத்துநோக்க முடியும் தமக்கென மேலான இலட்சியங்களை வரித்துக்கொண்டவர்கள்; தூரநோக்குடன் செயலாற்றியவர்கள்; தோற்றப்பொலிவு - சொல்வன்மை - செயலூக்கம் மிக்கவர்கள் எனப் பல பொதுமைப் பண்புகள் அவர்களிடையே உண்டு. இதேபோல, பேராசிரியர் எஸ். துரைராஜசிங்கம் அவர்களும் தமிழியல் பண்பாடு தொடர்பான ஆய்வுகளின் அடிப்படையில் தனது குருவாகிய சுவாமி விபுலாநந்தருடன் அடிகளாரை ஒரே தளத்தில் வைத்து நோக்குகிறார்.
தனிநாயகம் அடிகளார் நம்மவர் என்ற பெருமித உணர்வு நமக்கு இருக்கிறது; இருக்கவும் வேண்டும். ஆயினும் நினைவுகளை மீட்டிச் சுகம் காண்பதுடன் மட்டும் எமது பணி முடிவுபெறலாகாது. அடிகளாரின் மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, மனிதப்பற்று முதலியவற்றை நாம் பற்றிக்கொண்டோமாஎன்பதேநம்முன்னுள்ள கேள்வி. அவர் ஆதாரங்களோடும் நடுவு நிலைமையோடும், தக்க பரிசீலனை முறைமைகளோடும் முன்னெடுத்த ஆய்வுகள் மேலும் முனைப்புப் பெறவேண்டிய அவசியம் இன்று உணரப்படுகிறது. அவை நவீனத்துவத்துடன் இணைந்து செல்லல் இன்றியமையாத தேவையாகவும் உள்ளது.
இன்று ஆய்வு இதழ்கள் அருகிய மைக்கான காரணங்கள் என பேராசிரியர் செ.யோகராஜா சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அறிவுச் சோம்பேறித்தனம், பிறமொழிப் பயிற்சியின்மை, புலமைப் பாரம்பரியம் தோற்றம் பெறாமை என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கன. அங்கொன்றும் இங் கொன்றுமாகச் செய்யப்படும் ஆய்வுகள், ஒருங்கிணைக்கப்பட்டு நிறுவனரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் நாடு கிறார்கள். உலகளாவிய வீச்சையும் அறிவுப் புலத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த தனிநாயக அடிகளாரின் அந்த அறிவார்ந்த ஆய்வுப்பார்வை இன்றைய இளம் ஆய்வாளருக்கும் வாய்க்க வேண்டும் என்பதும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழின்' பெருவிருப்பு.
O O O
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 63
சம கா
கலை மி
நீக
அகவை 87ல் டொமிக் ஜீவா கடந்த ஐந்து தசாப்த காலமாக இலங்கைத் த மல்லிகையின் ஆசிரியர் டொமினிக்ஜீவாவின் அபிமானிகள் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோ தலைமையில் மிக கோலாகலமாக நடத்தினர்.
மகிழ்ந்தார்.
வாழ்த்துரைகளை கலாநிதி ந.இரவீந்திரன், காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புத்தீன். ஞா
கோ. சேனாதிராஜா, உடுவை தில்லை நடராஜா எஸ். சிவகுமாரன், புகலிட எழுத்தாளர் நளாய படைப்பாளி ப. ஆப்டீன், மாவனெல்லை
பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் பாலஸ்ரீதரன், வதிரி ரவீந்தரன், நஜீமுல் ஹுசை வழங்கினார்கள்.
மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான 6 இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மா முற்போக்கு இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்த கெளரவம் செய்ததுடன் அவர்கள் பற்றிய உன் உரையாக நிகழ்த்தப்பட்டது. நிகழ்வை செல்வி
முற்போக்கு இலக்கியவாதிகளான பிரேம்ஜ லிங்கன், நீர்வை பொன்னையன், முகமது சமீம், காவலூர் இராஜதுரை ஆகியோரே கெளரவிக்கப்
இ “ஆடல்வல்லானும் தமிழ் இசையும்"
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் புதன் கிழன் நிகழ்வில் "ஆடல்வல்லானும் தமிழ் இசையும்" கி.அ.சச்சிதானந்தம் உரையாற்றினார். இந்நிகழ பவானி முகுந்தன் தலைமை வகித்தார்.
இ வெலிகம ரிம்ஸா முஹம்மதின் “கவிதைகள்
வெலிகம ரிம்ஸா முஹம்மதின் "கவிதைகள் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தலைமையில் நடைபெற்றது.
கெளரவ அதிதியாக பேராசிரியர் சபா. ஜெய நிறுவனர் அல்ஹாஜ் முஹம்மது அகரம் சிறப்ப
முதற்பிரதியையும் பெற்றுக்கொண்டார்.
சிரேஷ்ட ஒலிபரப்பாளர் புர்கான் பி. இப்தி . கலை இலக்கியவாதிகள் பலர் கலந்து சிறப்பித்த
பி அற்றைத்திங்கள் நிகழ்வில் க. சண்முகலிங்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோ அற்றைத்திங்கள் நிகழ்வில் வடக்கு கிழக்கு சண்முகலிங்கம் தமது வாழ்வியல் அனுபவங்க
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

கே. பொன்னுத்துரை
பி)
லேக்கிய
ஏவுகள்
தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து நடைபயிலும் ர 87ஆவது பிறந்த நாள் விழாவை அவரது தன் மண்டபத்தில் பேராசிரியர் மா. கருணாநிதி
“கம்பவாரதி” இ. ஜெயராஜ் சிறப்புரை ஆற்றி ,
தினக்குரல் பிரதம ஆசிரியர் வி.தனபாலசிங்கம், னம் ஆசிரியர் தி ஞானசேகரன், சட்டத்தரணி 7, கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன், திறனாய்வாளர் கே. பினி தாமரைச் செல்வன், தகவம் மு.தயாபரன்,
மன்சூர், வைத்தியகலாநிதி ச.முருகானந்தன், கம் ஸ்ரீதரசிங், திக்குவல்லை கமால், ஆ.இரகுபதி
ன் ஆகியோருடன் பலர் ஜீவாவிற்கு வாழ்த்துரை
கெளரவிப்பு
ன்றம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இலங்கை மூத்த முற்போக்கு எழுத்தாளர்களைப் பாராட்டி ரைகளையும் ஆளுமைமிக்க பலரைக் கொண்டு திருச்சந்திரன் தலைமை ஏற்று நடத்தினார்.
ஞானசுந்தரன், டொமினிக் ஜீவா, செ. கணேச என்.கே.ரகுநாதன், ஏ. இக்பால், எம்.ஏ.நுஃமான், ப்பட்டவர்கள்.
மகளில் நடைபெறும் அறிவோர் ஒன்று கூடல் என்ற தலைப்பில் தமிழ்நாடு மூத்த எழுத்தாளர் ழ்விற்கு சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் திருமதி
5டனான கைகுலுக்கல் ஒரு பார்வை” நடனான கைகுலுக்கல் ஒரு பார்வை" என்ற நூல் ல் (07.07.2013) வைத்தியகலாநிதி தாஸிம் அகமது
ராசாகலந்து சிறப்பித்தார். "அக்ரம் பவுண்டேசன் திதியாக கலந்து சிறப்புச் செய்ததுடன் நூலின்
கார் அவர்களுக்கு கெளரவிப்பும் நடைபெற்றது. ார்கள்.
கம்
ரும் பெளர்ணமித் தினங்களில் நடைபெறும் மாகாணசபை ஓய்வுநிலை செயலாளர் க. ளை கல்வி, தொழில்துறை நுழைவு, அன்றைய
61

Page 64
நாட்டின் நிலை இவற்றை மிக இலாவகமாக சன சங்க துணைக்காப்பாளர் சைவப்புலவர் சு. செல்
இை சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின்
விழாவும், நூல்கள் မျိုဇွို 9 இலங்கை மக்களிடையே இனஒருமைப்பா துறையில் தமது பங்களிப்பினை செய்து வரும் கு ஆகிய மூன்று மூத்த படைப்பாளிகளை கெளர நூல்களின் வெளியீட்டு விழாவும் லேக்ஹவுள தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரட் மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.
வரவேற்புரையை சிங்கள தமிழ் எழுத்தா உபசெயலாளர் மேமன்கவி ஆகியோர் நிகழ்த்தி சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றிய வெளி பெற்றது.
அதனைத் தொடர்ந்து கெளரவம் பெறும்ப வெளியீட்டுநிகழ்வுநடைபெற்றது.இந்நூல்கள்( அந்நூல்களை இலக்கியப் புரவலர்ஹாசிம் உம முதுபெரும் படைப்பாளிகளுக்கு பொன்ன கெளரவமும் நடைபெற்றது. படைப்பாளிகள் விஜேரத்ன, தெளிவத்தை ஜோசப், பத்மா சோம அத்துடன் சிங்கள, தமிழ் கலை நிகழ்வுகளு நன்றியுரையை சிங்கள தமிழ் எழுத்தாள உபதலைவர் அந்தனிஜீவா ஆகியோர் நிகழ்த்தின்
குணசேன விதான தி. ஞா
L
t
( (
G
(G
g தொடர்பான கையேடு ஒன்று தொகுத்து வெளிய வழங்கப்பட்டது.
62
 
 

பயோர்க்கு எடுத்துரைத்தார். கொழும்புத் தமிழ்ச் Iலத்துரை நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
மூத்த படைப்பாளிகளைக் கெளரவிக்கும் நிகழ்வும்,
ட்டைகட்டி எழுப்பும் முகமாக படைப்பிலக்கியத் தணசேன விதான, தி.ஞானசேகரன், நயீமா சித்திக், விக்கும் நிகழ்வும், இவர்களின் மொழிப்பெயர்ப்பு ல் ஆசிரியபிடப் பணிப்பாளர், சீலரத்ன செனரத் பிள்ளை மண்டபத்தில் 27.07.2013 சனிக்கிழமை
ளர் ஒன்றியத்தின் செயலாளர் கமால் பெரேரா, னார்கள.
ரியீடான 'தீபம்" சஞ்சிகை வெளியீடும் இடம்
டைப்பாளிகள் மூவரின் மொழிபெயர்ப்புநூல்கள் கொடகேநிறுவனத்தினரால்வெளியிடப்பெற்றன. ர் பெற்றுச் சிறப்புச் செய்தார். ாாடை போர்த்தி மாலையிட்டு விருது வழங்கிக் ர் பற்றிய அறிமுகத்தை முறையே மடுள்கிரிய காந்தன் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்தார்கள். ம் இடம் பெற்றன. ர் ஒன்றிய அமைப்பாளர் டெனிசன் பெரேரா, னார்கள்.
னசேகரன் நயீமா சித்தீக்
சிறப்பு நிகழ்வாக புசலலாவை 55606) இலக்கிய வட்டத்தின் தலைவரும் ஞானம் பதிப்பக வெளியீடுகளின் ஆரம்ப நூலின் சொந்தக் 5ாரருமான கவிஞர்
நிஞ்சி ன் அவர் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களின் இலக்கியச் சாதனைகள்' பிடப்பட்டு சபையோர்க்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (59)

Page 65
1ெனது சிறுகதையான”3013"நம்பும்படிய விமர்சனத்திற்கு நன்றிகள். சொல்லப்பட்டகார இப்படியாக இருக்குமா என்ற நியாயமானகே என்பது தங்களதுஆலோசனை.
இந்தஅபூண்டுப் பிரச்சனையை அதிகப
ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட இருக்கும்
காட்டப்படவில்லை. ஆனால் உலகம் பொருளாதாரம் இன்னும் பின்னால் போய் அச்சத்தால் அந்தமுன்னேற்றங்களைக் காட் ஆண்டுகளில் நல்லூரைதொல்பொருள் ஆராய் இந்தக் கதைக்கு எனக்கு அருட்டுணர்வா உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் நிர்ணயிக்கப்பட்டு 1992ல் (அதாவது 462 ஆ மசூதிதான். எனவே இவ்வாறு தொல்பொரு என்றால் குறைந்தது கதையை 500ஆண்டுகள் எனவே இந்தக்கதையை எனது தொகுப்பில் இருக்கின்றேன். மீண்டும் சகோதரி மு. குமுதினி
O
ஞானம் 150ஆவது இதழில் பேராசிரியர்துன அவர் வருவாரா? என முன்னாள் நீதியரசர்திரு. சி நடக்கும் என எதிர்பார்ப்போமாக என எழுதியிரு எதிர்பார்ப்பும் அதுதான். அது இன்று நிறைவேற
ஞானம் 150 ஆவது ஈழத்துப் போர் இல -மேலெழுந்த வாரியான நோக்கு என்னும் கட்டு தமிழர் ஏற்றமுடன் வாழும் காலம் வரும்” என வருகை ஈழத்தமிழர்களின் விடிவெள்ளியாக அை
ஞானம் 156 ஆவது இதழில் யசோதா பத் தாண்டாகலை இலக்கியங்களும்' என்னும் கட்டு எப்படிக் கழிந்து போயின என்பதை அழகாக விட
O பேராசிரியர்எம். ஏ. நுஃமான்ஆற்றிய உரைஅ மயங்காத அவர் உள்ளம் போற்றுதற்குரியது.
பரிசுகள், விருதுகள், பாராட்டுகள்எல்லாம்த வேறு எங்கும் மலினப்பத்தப்பட்டிருக்காது என் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்ட
O ஞானம் 158ஆவது இதழில் கே. ஆர். டே தரும்” என்ற கட்டுரையை வாசித்த பொழுது ஞா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் எனக்கு இ அதிகரித்தது.
டாக்டர் அவர்கள் தனது பதவி நிலை, ே ஞானத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைப்பது மகன் பாலச்சந்திரனையும் அதில் ஈடுபடுத்தியிரு என்பது புரிகிறது.
ஞானத்தின் உதயமும் அதன் வளர்ச்சியும் வைத்திருப்பது என்றால் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)
 

ாக இல்லை என்ற சகோதரி மு. குமுதினியின் ணம் ஆயிரம் வருடங்கள் சென்றபின்பும் உலகம் ள்வி. 2018 அல்லது 2019 ஆக இருந்திருக்கலாம்
0ாக நானும் யோசித்திருந்தேன். காரணம் அதிகமான விஞ்ஞான வளர்ச்சிகள் கதையில் எவ்வளவோமுன்னேறினாலும் யாழ்ப்பாணப் ப் விடக்கூடிய அபாயம் இருக்கின்றது என்ற டவில்லை. அதேவேளை இன்னும் ஒரு 5, 6 ப்ச்சிக்குரிய விடயமாக்கிவிடவும் முடியாது. ய் அமைந்த சம்பவம் யாதெனில் இந்தியாவின் 1527ல்முதலாவது மொகாலயசக்கரவர்த்தியால் ண்டுகளுக்குப் பின்னால்) இடிக்கப்பட்ட பாபர் நள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் முன் கொண்டு செல்ல வேண்டும். சேர்க்கும் பொழுது இதன் பெயரை2513 எனமாற்ற க்குநன்றிகள். - வி. ஜீவகுமாரன், டென்மார்க், O O ரமனோகரனின் எழுதத் தூண்டும் எண்ணங்களில் சி. வி. விக்னேஸ்வரனை கேள்விக்குறியுடன், நல்லது ந்தார். அவர் மாத்திரமல்ல, பலருடைய ஆதங்கமும் பியிருக்கிறது. க்கியச் சிறப்பிதழில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் ரையில் "செம்மையான இலக்கியம் படைத்த எம் முன்னாள் நீதியரசர் குறிப்பிட்டிருந்தார். அவரின் மயப் பிரார்த்திப்போமாக. த்மநாதனின் இலட்சுமணக் கோடுகளும் எல்லை ரையில் ஈழக்கலை இலக்கியத்தின் கடந்த காலங்கள் பரித்துள்ளார். இவருக்கு எனது பாராட்டுக்கள்.
- PD. LITGogia:Orio, asaingo. O O புருமை. பொன்னாடைக்கும் புகழ்மாலைகளுக்கும்
மிழ்ச்சூழலில்மலினப்படுத்தப்பட்டிருப்பதுபோல பது என் எண்ணம்' என்னும் அவரது திருவாக்கு டியதொன்று. - வாகரைவாணன், மட்டக்களப்பு.
O O
விட் அவர்கள் எழுதியிருந்த “மெய்வருத்தம் கூலி னம் ஆசிரியர் டாக்டர்திரு.ஞானசேகரன் அவர்கள் ருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்னும் ஒருபடி
தொழிலையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு மாத்திரமல்லாது தமது பாரியார் திருமதி ஞானம் ப்பது அவரது வேள்வியின் வேட்கை எத்தகையது
) இன்று 14ஆவது ஆண்டில் காலடி எடுத்து சாதனைதான். சிற்றிதழ்கள் பிறந்த வேகத்திலேயே
63

Page 66
இறந்து விடுகின்றன. சில சிறிது காலம் உயிர் வா மறைந்து விடுகின்றன. ஆனால் ஞானம், சர்க படைப்புகளுடன் வீறு நடைபோடுகிறது என் இறுமாப்பு அடையாமல் இருக்க முடியாது.
ஒருகாலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை எவ்வாறு ஈடுபட்டிருந்தார்களோ அதே போன்று ஞானம் ஆசிரியர் குடும்பமே உழைக்கிறது என் குறிப்பின் மூலமும், கே. ஆர். டேவிட் அவ கண்ட அனுபவங்களின் மூலமாகவும் அறிய | கிடைத்ததையிட்டு எனது உளம் நிறைந்த பாராட்
துக்கள்.
ஞானம் இதழில் மூன்று வாரங்களாக ஈழமண் பதிவுகள் பற்றியதொரு தேடல் என்ற எனது கட்டு இக்கட்டுரைகள் கனடா தமிழர் தகவல் ஆண்டு காரணமாக கட்டுரையின் அறிமுகத்தையும் இறு நூல்களின் நூற்பட்டியலையும் மாத்திரம் பிரசுரி நூலாக வெளியிடவிருப்பதாகப் பின்னர் அறிந்து கண்ட வேளையில் அதற்கு நீங்கள் கொடுத்த முக்கியத்
மேலும், கடந்த இதழில் (இதழ் 157) வாசகர் சுதர்சன் சில தகவல்கள் விடுபட்டுள்ளதாக எதிர். ஒரு பகுதியைத்தான் அக்கடிதத்தை எழுதியமே இரு பகுதிகளையும் வாசித்த பின்னரும் . தவறவிடப்பட்ட நூல்கள் பற்றிய விபரங்களைத் விரும்புகின்றேன். காரணம் அடுத்த ஆண்டின் நூற்பதிவுகள் பற்றிய தொகுப்பு நூலொன்று வெ பற்றிய கட்டுரையும் இடம்பெறவுள்ளது. நான் அறி சேர்த்து இக்கட்டுரையை மேலும் முழுமையை றே
ஒரு ஆய்வுக் கட்டுரையில் தமிழில் வெளிவ முழுமையாகப் பதிவு செய்யமுடியாது என்பதை இராணுவகாலம் பற்றிய பல்வேறு கவிதைகள், கதை சிறுசஞ்சிகைகளில் வெளிவந்து பலகாணாமல் போ இடம்பெற்றுள்ளன என அனைத்தையும் நாம் 6 இல்லை. ஆனாலும் எந்த ஆய்விலும் முழுமை விரும்பத்தக்கது. அவ்வகையில் செல்லத்துரை | விரும்பத்தக்கது. பத்திரிகை வாயிலாக அதைத் ெ தகவல்களைத் தந்துதவலாம் ஆர்வத்துடன் காத்தி
சர்த்து இக்கரையும் இந்தப்பு நூலே ஆண்டின்
228
எனது விளக்கு விருது ஏற்புரை தொடர்பான (ஞானம் 158). எழுபது வயது தாண்டிய பின்பும் ? பாராட்டப்படவேண்டும் என்ற ஆசை தணியாத பேராசான்களின் உருவேற்றத்துக்கு ஆடுபவ சுயவிமர்சனத்தை வளர்த்துக்கொண்டவன் எனி கருதும் மு.பொ.வை ரசிக்கவும் பாராட்டவும் கழிவிரக்கப்படுகிறேன். இனியும் காலம் தாழ்த்த . பதிவுசெய்ய விரும்புகிறேன்.
முபொதான் ஈழத்தின் முதல் முபொதான் தமிழின் முதன் முபொதான் உலகின் முதன் முபொதான் முதன்மைச் சிந் முபொதான் இன்றைய விம முபொதான், முபொதான் இனியேனும் முபொவின் ஆன்மா சாந்திய எனது புதைகுழியில் புல் மு

சழ்ந்து உயிர் துறக்கின்றன. சில காலப் போக்கில் வதேச சிற்றிதழ் தரத்தில் நேர்த்தியாக, தரமான பதை நினைக்கும்போது இலக்கிய உள்ளங்கள்
னபேரும் சிரித்திரன் சஞ்சிகையின் செயற்பாடுகளில்
இன்று ஞானம் சஞ்சிகையின் செயற்பாடுகளில் பதைக் கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவாவின் பர்கள் ஞானம் அலுவலகத்தில் நேரிடையாகக் முடிகிறது. ஞானம் இதழுக்கு சுஜாதா விருது டுக்கள். அதன் இலக்கிய வேள்வி தொடர வாழ்த்
- எம். எம். மன்ஸுர், மாவனல்லை
..
ரணில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு நூல்வழிப் ரையைப் பிரசுரித்தமைக்கு முதற்கண் எனது நன்றி. மலருக்காக எழுதப்பட்டது. இடப்பற்றாக்குறை தியில் நான் இணைத்திருந்த பயன்படுத்தப்பட்ட த்திருந்தார்கள். அதனை அடுத்த ஆண்டில் தனி கொண்டேன் கட்டுரையை முழுமையாக அச்சில் த்துவம் என்னை மிகவும் மகிழ்ச்சியாக ஆழ்த்தியது.
கடிதம் பகுதியில் கண்டியிலிருந்து செல்லத்துரை ரவு கூறியிருந்தார். அவர் கட்டுரையின் மூன்றில் வளையில் பார்த்திருக்க வழியுண்டு. பின்னைய அவர் அந்நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் தெளிவாக எனக்குத் தெரிவிப்பதை நான் மிகவும் முற்பகுதியில் தமிழகத்தில் எனது போர்க்கால வளிவரவுள்ளது. அதில் இந்திய இராணுவகாலம் லியாமல் தவறவிடப்பட்ட தகவல்களை அப்போது 5ாக்கி நகர்த்தலாம். பந்த அனைத்துப் படைப்புகளையும் எவராலும்
அனைவருமே அறிவோம். குறிப்பாக இந்திய தகள் வெளிவந்திருக்கின்றன. அவை பத்திரிகைகள் ய்விட்டன. சில கவிதை, சிறுகதைத் தொகுதிகளுள் தடிப்பதிவு செய்யவில்லை. அதற்கான வாய்ப்பும் மய நோக்கியதாகவே எமது பதிவுகள் அமைவது சுதர்சன் மற்றும் பிறவாசகர்களின் பங்களிப்பும் தெரிவிக்காது போனாலும் தனிப்பட்டமுறையில்
ருக்கிறேன்.
- என்.செல்வராஜா, இலண்டன்
7 நண்பர் மு.பொ.வின் குறிப்பினைப் பார்த்தேன் உயர்வுச் சிக்கலில் இருந்த விடுபடமுடியாத, தான் அவருடைய நிலை குறித்து வருத்தப்படுகிறேன். ன் நான் அல்ல, எனினும், என்னைப் பற்றிய னும், என்னைவிட மேலானவராகத் தன்னைக் தவறிவிட்டேன் என்பதை நினைத்து மிகுந்த எது மு. பொ. பற்றிய எனது புகழுரையை இங்கு
எமைக் கவிஞர் மைக் கவிஞர் மைக் கவிஞர் தனையாளர் ர்சன மேதை மபொவேதான்
படையட்டும் ளைக்கட்டும்
- எம்.ஏ.நுஃமான்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஆகஸ்ட் 2013 (159)

Page 67
'ஞானம்' “ ஈழத்துப் போ
ஞானம்
25ார்
கடந்த முப்பெரும் மொழியையும் அ ஆயுதமாக ஏந்தி தொடர்பான பல ஆவணம் பற்றிய பக்கங்களைக் கெ
:: உள்:
சிறப்பிதழ்
இலங்கையில் இ
“ஞானம்” அலுவலகத்தில் இவ்வி தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூப
தொடர்புகளுக்கு :
அவுஸ்திரேலியாவில் இதழின் வின் தபாலில் பெறவிரும்புவோர் தபாற்கெ
தொடர்புகளுக்கு: (00
“ஞானம்” சஞ்சிகை !
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார் (
பூபாலசிங்கம் 309A/ 2/3, காலி வீதி
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீ
தூர்க்
சுன்ன
ஜீவ அல்வாய். தொகை
லங்கா சென்ற6
84, கொழும்பு

ர் இலக்கியச் சிறப்பிதழ்”
தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் தன் வழியான இலக்கியத்தையும் கலாசார ய பேனா மன்னர்களின் போரிலக்கியம் நடப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், 1 பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 காண்டு வெளிவந்துள்ளது. தேழின் விலை ரூபா 1500/=
இதழ் ரூபா 1000/= மாத்திரமே! 1 250/= சேர்த்து அனுப்ப வேண்டும். 0777 306506
கல - அவுஸ்திரேலிய டொலர் 25 சலவு வேறாக அனுப்ப வேண்டும். 161) 408 884 263
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை ,ெ வெள்ளவத்தை.
புத்தகசாலை தி, யாழ்ப்பாணம்.
கோ பாகம்
நதி லபேசி: 077 5991949
ல் புத்தகசாலை
வீதி, கண்டி.

Page 68
GNANAM - Registered in the Department of I
With Best
(Luck
உலகசாதனை
பிஸ்கட்டில்
(Luck
LUCKYLAT
MANUFA NATTARANPOTHA, KI TEL : 0094-081-2420574, 242
Email: luckyl
Printed by : Tha

Posts of Sri Lanka under No. QD/43/News/2013
Bompliments from
yland
பங்கள் பாரம்பரியம் வந்தான்!
(Lauckylant
Creacker
Hauphologie an der
ND BISCUIT CTURERS
INDASALE, SRI LANKA. 1217. FAX: 0094-081-2420740 and@sltnet.lk
Franjee Prints - Tel : 2804773