கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.01

Page 1
ஜனவரி 2013
ஞா6
கலை இலக்
புனைவுக் கட்டுரை
ஆசி. கந்தராஜா
கட்டுரைகள்
மு. பொ.
எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
சிறுகதைகள்
வி. ஜீவகுமாரன் (4 ச. முருகானந்தன் (
www.gnanam.info
செல்வன் சத்திய/0லரவன்
பரிசுக் கவிதைகள் துெவைப் பிர/
செ.குணரத்தினம்
விலை ரூபா 65/=

எம் 12
என் கான்
கியச் சஞ்சிகை
பா
பத்ர்
மூதூர் கேலை மேகம்”
கவிஞர் ஜனாப் ஏ.எஸ்.இப்றாஹீம்

Page 2
தரமான தங்க நகைகளுக்கு...
NAGALING
de:
Design Manufacture Sovereign G
Jewe
Nabooooooooooooo
0000000000
101, Colombo
Tel : 081.
CENTR
SU
SUPPLIERS TO CONFE
Dealers in all kinds Food Colours, Food Chemi
76 B, Kings S Tel : 081-2224187, 081.

AMS
wellers
Rosa
8 9 ***
Brs and ers of 22KT -old Quality -llery
0 0-0 U
0-0-0-00
Oko
Street, Kandy - 2232545
AL ESSENCE PPLIERS
CTIONERS & BAKERS s of Food Essences, cals, Cake Ingredients etc.
Street, Kandy -2204480, 081-4471563

Page 3
பகிர்தலின் மூலம் நான் விரிவும் ஆழமும் பெறுவது
ஒளி – 13
சுடர் - ஆசிரியர்
தி.ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர்: ஞா. பாலச்சந்திரன்
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர்
சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு
'ஞானம்' அலுவலகம் 3-3, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06, இலங்கை.
தொலைபேசி 0094 - 11 2586013, 0094 -- 777 306506
0061 - 286778989 (Aus)
தொலைநகல் 0094 11 2362862
அக்கக்காட்சி |
மின்னஞ்சல் editor@gnandam.info
இணையத் தளம் http://www, gnanamm.info
http://www.t.gnanasekaran.lk உள்நாட்டு சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா : ரூபா 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/- ஆயுள் சந்தா
: ரூபா 20,000/= வெளிநாட்டு சந்தா
ஓராண்டு Australia (AU$)
50 Europe(-)
40 India(Indian Rs.)
1250 Malaysia (RM)
100 Canada($)
50 UK(£)
35 Singapore(S$)
Other(US$) வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள் SwiftCode :- HBLILKLX T.Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C No.009010344631
50
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக
அனுப்புதல் வேண்டும் - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - செப்டெம்பர் 2012

ஞானம்
ஓ இதழினுள்ளே ...
6
12
கவிதைகள் சத்தியமலரவன் புதுவைப்பிரபா
ஆ. முல்லைதிவ்யன் செ. குணரத்தினம் சித்திரா சின்னராஜன்
20 34 41 43
03
கட்டுரைகள் செ. ஞானராசா ஆசி. கந்தராஜா
மு. பொ. எம். ஐ. எம். அப்துல் லத்தீப்
21 42
சிறுகதைகள்
வி. ஜீவகுமாரன் ச. முருகானந்தன்
13
1ார்ச்சர்ச் சர்தார்
பத்தி எழுத்து
ஏ.எம்.எம். அலி கே.ஜி. மகாதேவா மு.பொ. கோவை. ஞானி
25 27 35
39
நூல் அறிமுகம்
குறிஞ்சி நாடன்
45
சமகால கலை இலக்கிய நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை
37
கொற்றாவத்தை கூறும் குட்டிக்கதைகள் கொற்றை பி. கிருஷ்ணானந்தன் 29
வாசகர் பேசுகிறார்
47
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள் ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
வெள்ளத்
ஞானம் கலை,இலக்கிய சஞ்சிகை
பள்ளத்தி
உலகத் தமிழ் ஆ அயல்நாட்டுத் தமிழ் இலக்கிலங்கள்
நடதி
தமிழ்நாடு - சென்னை தரமணியில் அ6 கடந்த சில வருடங்களாக ஒரு சிறப்புமிக். வருகிறது. இந்நிறுவனத்தில் இயங்கிவரும் பு என்பதாகும்.
பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் தம் சேகரிப்பதும், பராமரிப்பதும் அவர்கள் (பு இப்புலத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்நிறுவனப் பணிகளின் தொடர்ச்சியாக என்னும் பொருண்மையில் இரண்டுநாள் தே. ஆம் திகதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஈழத்தைப்பொறுத்தவரை கடந்த மூன் உரிமைக்கான உள்நாட்டுப் போர் ஈழத்த இலக்கியத்திலும் பெரும் மாறுதல்களை ஏற்ப
இலக்கியத்தைப் பொறுத்தவரை இந்தப் கிடைத்துள்ளது. தமிழில் ஒரு புதிய வீச்சான இ என்ற புதிய வகைப்பாடு நவீன இலக்கியத்து இவற்றுள் பெண்போராளிகள் எழுதிய கவி புதியவை. தமிழ் இலக்கிய வரலாற்றில் பெண் வடிவங்கள் வந்ததாகக் கூறமுடியாது.
மேலும், போர்காரணமாக பெருந்தொ புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளிடம் தமிழ் இலக்கியத்துக்கு புதிய களங்கள், அறிமுகமாயின. இவையும் போர் விளைவு இ - தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையிலே இலக்கியத்திலும் பெரும் மாறுதல்கள் சமீபகா
உ இந்த மாற்றங்களை ஆவணப்படுத்து தேவையாகும்.
உலகெங்கணும் பரந்து வாழும் ஈழத்துக் க மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் இந்த ஆய்வு நடைபெறவிருக்கும் ஆய்வுக்கருத்தரங்கிற்கு பயனுள்ள பணியாக அமையும்.
படைப்பாளிகள் ஞானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங்களை அனு மின்னஞ்சலில் அனுப்புவதுடன் அதன் பிரதியை த கைத்தொலைபேசி இலக்கத்தைத் தவறாது குறிப்பி
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
N|

தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
விப்பெருக்கும் மேவுமாயின்
வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் பெற்று பதவி கொள்வார்
ந்தும்
ராய்ச்சி நிறுவனம்
தொடர்பான தேசியக் கருத்தரங்கம் மைந்துள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் க தமிழ் உயராய்வு மையமாகச் செயற்பட்டு "லங்களில் ஒன்று அயல்நாட்டுத் தமிழர் புலம்
நிழர்கள் பற்றிய முழுமையான தகவல்களைச் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும்
இப்புலம் 'அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்' சியக் கருத்தரங்கினை 2013 பெப்பிரவரி 14, 15 |
எறு தசாப்தங்களில் இடம்பெற்ற தமிழர் | தமிழர்களின் சமூக வாழ்விலும் அவர்தம்
டுத்தியுள்ளது.
போரினால் தமிழுக்கு ஒரு புதிய பரிமாணம் லக்கியம் உருவாகியுள்ளது. 'போர் இலக்கியம்' புக்கு ஈழத்தமிழர்களால் வழங்கப்பட்டுள்ளது. தைகள், சிறுகதைகள், நாவல்கள் தமிழுக்குப் (போராளிகளால் இத்தகைய மரபில் இலக்கிய |
கையான தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். பிருந்து புலம்பெயர் இலக்கியம் தோன்றியது. புதிய கருக்கள் கொண்ட இலக்கியங்கள் லக்கியங்களே. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தான் தமிழர்தம் சமூக வாழ்விலும் அவர்தம் |
லங்களில் ஏற்பட்டுள்ளன. தலும் ஆய்வு செய்வதும் ஒரு வரலாற்றுத் )
ல்விமான்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், மையத்துடன் தொடர்புகளைப் பேணுவதும் தம்மாலான பங்களிப்பை வழங்குவதும்
1 கவனத்திற்கு, ப்புபவர்கள் அவற்றை கணினியில் தட்டச்சு செய்து ? தபாலிலும் அனுப்புதல் விரும்பத்தக்கது. பிரதியில் நிதல் வேண்டும்.
- ஆசிரியர் I: articles@gnanam.info
************* ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 5
கவிஞர் ஜனாப் ஏ.எஸ்
கிடந்த ԶgւbLog/ வருடங்களாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துக் கொண்டவர் மூதூர் கலைமேகம் 1962ஆம் ஆண்டு 'தினகரன்” பத்திரிகையில் சிறுவர் உலகம் பகுதியியல் இவரது சிறிய கட்டுரைகளும் பாப்பாப் பாடல்களும் வெளிவந்தன. 1967இல் "தினபதி” பத்திரிகையில் "பைங்கிளியே” என்னும் தலைப்பில் இவரது முதல் கவிதை வெளியானதைத் தொடர்ந்து உற்சாகத்துடன் எழுத்துப் பணியை முன்னெடுத்துச் சென்றுள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும் 2011ஆம் ஆண்டு கிண்ணியா ஏ.எம்.எம்.அலி அவர்களின் ஒரு தென்னை மரம்' என்னும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டின்போது கிண்ணியா பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இவரை முதல்முறையாக நேரடியாகச்சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பின்னர் 11.02.2012இல் திருமலை நவம் அவர்களின் திருகோணமலை கலை, இலக்கிய வரலாற்று நூல் வெளியீட்டின் போது புனித சூசையப்பர் கல்லூரியில் சந்தித்து உரையாடினேன்.
எழுத்தே சீவியம் எளிமையே வாழ்க்கை' என்ற தாரக மந்திரத்துடன் வாழ்ந்து வருபவர் மூதூர் கலைமேகம் இவர் அன்புடனும் பண்புடனும், ஆர்வத்துடனும் பழகக்கூடிய இனிமை நிறைந்தவர். சகோதரத்துவம் சமத்துவம் போன்ற கோட்பாடுகளுக்கு இணங்க ஒழுகுபவர். இலங்கையில் வெளிவரும் தினகரன், தினக்குரல், தினமுரசு, வீரகேசரி, சுடரொளி போன்ற தேசியப் பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கடல் கடந்தும் பேசப்படும் சிறந்ததொரு கவிஞராகத் தன்னை இனங்காட்டியுள்ளார்.
காயல் பட்டினத்தின் பாட்டனார் வழி உறவு இவருக்கு உண்டு. புலவர் வழிமரபில் தந்தை வழியைப் பின்பற்றும் தணயனாக விளங்குகின்றார். காதல் கனிரசக் கவிதைகளுடன் ஞான வழி அறிவுரைகளையும் தருவதோடு நகைச்சுவை ததும்பும் கிராமிய நாட்டுப்பாடல்களைத் தனியாகவும் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பாடுவதாகவும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வண்ணமாகவும் பாடல்கள் யாத்துள்ள மூதூர் கலைமேகம்
ஒதகுரரைாசா, திருகோணமலை
SL SSSSSSS SSSS SSSSS SLS L SLSLS SLS SLSL SLL L S L L S SSLSLL
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013
 

ព្រះញg .இப்றாஹிம்
அவர்கள். தமிழ் கலையுலகிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்றும் கூறலாம் சொல் நயமும் சுவைநயமும் இவர் பாடல்களில் கைகோர்த்து களிநடனம் புரிவதைக் காணலாம்
09.07.1943இல் அபூபக்கர் - முகைதீன் பீவி தம்பதியினரின் தவப் புதல்வனாக ஆலிம் வீதி, மூதூர் - 06இல் அவதரித்தார். பாலகப் பராயத்தில் தந்தையை இழந்ததால் பெரிய தாய் அலிமா உம்மா என்பாரின் வளர்ப்பு மகனாக வாழ்ந்தார்.
இக்கவிஞரின் இளம்பராயம் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டதன் காரணமாக அவரின் உயர்கல்வி வாய்ப்புகள் அற்றுப் போயின. பின்னர் இவரின் நிலைகண்டு அரவணைத்து போசித்து வளர்த்தவர்கள் மர்ஹிம்களான அகமது முகைதீன் நூர்ஜஹான் தம்பதியரே என நன்றியோடு நினைவு கூருகின்றார். இவரின் ஆரம்பக்கல்வியை இன்றைய மூதூர் மத்திய கல்லூரியாக இயங்கும் அன்றைய முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் மார்க்கக் கல்வியை மூதூர் பெரிய பள்ளிவாசல் குர்ஆன் மத்ரஸாவிலும் மேற்கொண்டார்.
1955களில் சமூக சேவைகள் மற்றும் கலை இலக்கியப் பணிகளில் ஈடுபடத்தொடங்கிய இவர் மூதூரில் 25 வருடகாலம் இயங்கி வந்த இக்பால் சனசமூக நிலையத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார். சேர் அல்லாமா இக்பால் அவர்களை தனது மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்ட இவர் அவரின் பாணியிலேயே தனது கவிதையாக்கங்களை மேற்கொண்டார்.
இலக்கியத்துறையில் பிரபல்யம் பெற்றிருந்த ஈழமேகம் பக்கீர்தம்பி, கிண்ணியா அண்ணல் சாலி, அமரர்.வ.அ.இராசரெத்தினம் போன் றோரின் வழிகாட்டுதலின் கீழ் கவிதை, கதை, கட்டுரை ஆக்கும் ஆற்றல்களைப் பெற்றுக் கொண்டார். இவர் கலை இலக்கியத் துறையில் ஏற்படுத்திவரும் சாதனை கண்டு கலாசூரி கலைமேகம், கலாபூசணம், கலைநேசன் போன்ற சிறப்புப் பட்டங்களுக்கு சொந்தக்காரரானார்.
கலைஇலக்கியத்துறைக்கப்பால்இவர்ஆற்றிய சமூக சேவைகளைக் கண்டு 2004ஆம் ஆண்டு திருகோணமலைமாவட்டசமாதானநீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.
喻 翰 鲁 ● 酸 ● ● 鲁 鲁 * 昏 鳞 ● ● ● 馨 ● 翻 翰 ● * 自 ● ● * 酸 * 隐 ● 畿 歌 酸 ● é 像
3

Page 6
தங்கப்பாளம் (2003), மகரந்தம் (2004) என்ற இரு கவிதைத் தொகுப்புக்களும் 2006ஆம் ஆண்டு வன்காவியம் என்ற குறுந்தொகுப்பு நூலொன்றும் இவரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.
11.02.1971இல் முகமது மதார் - சக்கினா தம்பதியினரின் செல்வப்புதல்வி உம்மு பரீதா (தங்கம்) என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களின் இனிய இல்லற வாழ்வில் ஜபானாபேகம், நியாஸ்(பூட்) முகம்மதுசப்றாஜ் சீரின் சிதாறா ஆகிய நான்கு குழந்தைகளைப் பெற்றார். இதனை இறைவன் கொடுத்த அருள் என்று கூறுகின்றார்.
கவியரசு கண்ணதாசன், அல்லாமா இக்பால் போன்ற பல்வகைப்புகழ் பெற்று விளங்கியோருக்கு இரங்கற்பா, வரவேற்புப்பா, வாழ்த்துப்பா! முதலிய பாமாலைகள் சூடியுள்ளார். சனசமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள், ஏனைய கழகங்கள் நடாத்திய கவிதைப் போட்டிகளில் பங்குபற்றி பலபரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். அண்மையில் கலைஞர் ஒய்வூதியக் கொடுப்பனவு பெறத் தகுதியுடைய கலைஞராகவும் கவிஞர் கலைமேகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல கவியரங்குகளில் பங்குபற்றி கவிதை பாடி மக்கள் மனங்களில் நிலையான இடம் பிடித்துள்ளார். இன, மத மொழி, சாதிப் பாகுபாடு நீங்கவும் தமிழினத்தின் அல்லல் கண்டு ஆறாத்துயரம் கொண்டு தமிழரின் நல்வாழ்வு வேண்டியும் கவிதையாத்துள்ளமை இவரின் மனித நேயமிக்க தன்மையை வெளிக் காட்டுகின்றது.
காதலைப் போற்றியும் பாடியுள்ளார். அதே நேரம் பள்ளிப் பருவத்தில் படிப்பினில் கோட்டைவிடவைக்கும்"காதல்தேவைதானா?” என்னும் தலைப்பிலும் கவிதையாத்துள்ளார். காளமேகம் ஈழமேகம் என்ற வரிசையில் இந்த கலைமேகமும் மாரிமழை பொழிவது போல தாராளமாகத் தனது கவிதைகளை இலக்கிய உலகிற்கு பொழிந்து மகிழ்ச்சிக் கடலில் குளிக்கச் செய்துள்ளார்.
அந்நிய நாட்டிற்கு தொழில் தேடிப் போய் அநியாயமாக அண்மையில் பலியான மூதூர் "ரிசானா நபீக்" பிறந்த ஷாபிநகர் கிராமத்திலும் கலைமேகம்'கணிசமானகாலம்வாழ்ந்துள்ளார். அம்மக்களின் வாழ்வியல் கோலங்களையும் அவ்வப்போது கிராமியக் கவியமுதங்களாய் சித்திரித்துள்ளார்.
2007இல் திருகோணமலை பிரதேச சாகித்திய விழாவில் மாவட்ட மட்ட திறந்த கட்டுரைப் போட்டியில் பங்குபற்றி மூதூர் கலைமேகம்அவர்கள்முதலாமிடத்தைப்பெற்று பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்களிடமிருந்து சான்றிதழையும், புத்தகப் பரிசையும் பெற்றுள்ளார். அத்துடன் 2007இல்
4.

கிழக்கு மாகாண சபை கல்வியமைச்சால் நடாத்தப் பெற்ற தேசிய விழாவின்போது கெளரவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி "ஆளுநர் விருது” பெற்றார்.
2009ஆம் ஆண்டு புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் நூல் வெளியீட்டின் போது கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் முன்னாள் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி அவர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இவரது ஆக்கங்கள் ஈழத்தில் வெளியான ஈழநாதம் உட்பட அநேக வார மாத, காலாண்டு இதழ்களிலும் இடம் பெற்றுள்ளன. இன்றும் எழுதி வருகின்றார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் முப்பது சிறுகதைகளையும் முன்னூறு (300) கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
30.12.2012 தினகரன்' ஞாயிறு வாரமஞ்சரியில் திரும்பிப் பார்க்கின்றேன். (52) பகுதியில் அ.பசுராமன் அவர்கள் புகைப்பட ஆதாரங்களோடு இவரது கலைச்சேவை பற்றி நேர்காணல் செய்து எழுதியுள்ளார். அவர் கூறுகையில் எப்போதும்வெண்ணிற ஆடைக்குள் தன்னைப் புதைத்து நிற்கும் கலைமேகம் அவர்களின் இதயம் கூட வெண்மையானதே. மலர்ந்த முகமும் வாய் நிறைந்த புன்னகையும் நயமிக்க சொல்லாடலும் அவரின் தனித்துவ அடையாளமாகும் இவரின் சாதாரண பேச்சு நடையில்கூட செந்தமிழ் அருவியாகக் கொட்டும் ஒரு ஆசுகவிக்குரிய அனைத்து இலட்சணங்களும் இவரிடம் அமையப் பெற்றுள்ளன. இன்று எமது சமூகத்தில் வாழும் வரகவி என்றும் இவரைப் போற்ற முடியும் இனிய சொல்லெடுத்து எளிமை மிகு மரபுக் கவிதைகளை யாத்தளிக்கும் "கலைமேகம்" அவர்கள் தனது கவிதை போலவே இனிமையானவர்.
1968/69 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்துவெளிவந்த"வெற்றிமணி"பத்திரிகையில் தொடர்ச்சியாக இவரது கவிதைகள் வெளிவந்துள்ளமையும் அக்காலத்தில் அவை பெருவரவேற்பை பெற்றமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
"மகரந்தம்” கவிதைத் தொகுதி தன்னுரையில் மூதூர் கலைமேகம் அவர்கள் வாசகர் மத்தியில் புரையோடிப் போன அறியாமையில் இருந்தும் புரிந்துணர்வற்ற நடத்தையிலுமிருந்தும் காப் பாற்றும்கீரிய பணியினை மனதிருத்தி சமாதானம் செளசன்யம் ஒருமைப்பாடு, ஒற்றுமை கொடிய அனர்த்தங்களையும் உள்ளடக்கி ஒரு சில கவிதை ஆரங்களை இந்த மகரந்தம் என்னும் நாமமிட்ட நூலின் மூலம் அர்ப்பணம் செய்ய முன்வந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரை, "ஞானம்" மூலம் வாழ்த்தி மேலும் இவரது எழுத்துப் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 7
கோயில் குருக்கள் தொலைபேசியில்
தொடர்பு கொண்டதாக மனைவி சொன்னாள்.
கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்!
"வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர். கோயில் விஷயமப்பா., சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ."
மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும். ? என்ற தகவல் உட்பட விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு!
கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவாறு ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று. என ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கலசங்கள்
உண்டு. கலசங்களுள் வரகு, நெல்லு, சாமை, குரககன போன்ற தானியங்கள் கும்பாபிஷே கத்தின்போது நிரப்பப்படும். சில கோயில்களில், வரகை மாத்திரம் எல்லாக் கலசங்களிலும் நிரப்புவார்கள்.
ಲಿಕ್ರಿಕ್ ಹjónಣಗ :
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013
 
 

COCOG கட்டுரை Creative Essay) O 2. O
மின்னலையும் தாங்கும் சக்தி வரகுக்கு உண்டென்றும், அது ஒரு இடிதாங்கியாக செயல்படுமென்றும் இதற்குக் காரணம் சொல்லப்படுவதும் உண்டு. இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கோபுர கலசங்களிலுள்ள தானியங்கள், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு, புதிய தானியங்கள் நிரப்பப்படும் மரபினைக் கோயில் குருக்களும் உறுதி செய்தார்.
இந்தியாவிலுள்ள பிரபலமான கோவிலொன்றின் கும்பாபிஷேகத்துக்கு விவசாயத்துறைப் பேராசிரியர் ஒருவருடன் கடந்த ஆண்டில் சென்றிருந்தேன். அந்தக் கோயிலின் கட்டிட அமைப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டின் தமிழ்க் கட்டடக் கலை சார்ந்தது என்று சொன்னார்கள். சரியான தகவல் தெரியவில்லை. பேராசிரியரின் தந்தை அந்தக்காலத்தில் இந்தியத் திரைப்பட விநியோகஸ்தராய்க் கொழும்பில் வாழ்ந்தவர். தனது பட்டப்படிப்பை பேராசிரிய நண்பர் இலங்கையில் மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தவர். இந்த உறவின் காரணமாக எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம். பேராசிரியர் பணிபுரியும் பல்கலைக் கழக உபயத்தில், அவரே தர்ப்பை அணிந்து கும்பாபிஷேகத்துக்கு தலைமை ஏற்றதால், கோபுரத்தின் உச்சிக்குச் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது. பதின்மூன்று பாரிய கலசங்களிலிருந்த பல்வேறு வகையான தானியங்களை மாற்றும் சடங்குகள் அங்கே நடந்தன. பின்னர், நடுவிலுள்ள பெரிய கலசத்தில் வரகை மாத்திரம் நிரப்பினார்கள். இரண்டு கலசங்களிலே ஒரு தானியம் என்கிற கணக்கில் மற்றைய கலசங்களில் ஆறு தானியங்கள் நிரப்பப்பட்டன.
5

Page 8
'வரகு இடிதாங்கியாக  ெச ய ற ப டு வ த ா க ச சொ ல் க ற ார் க ளே , உண்மையா....?' என்று என் சந்தேகத்தைப் பேராசி ரியரிடம் கேட்டேன்.
' ெசால் வ து ண் டு. இதில் இருக்கும் உண்மைத் தன்மை ஆராய்ச்சிக் குராயது. தானியங்களை நிரப்புவதன் உண்மைக் காரணம் அதுவல்ல. இது 'Germplasam conservation' எனப்படும் பரம்பரை அலகுகளைப் பாதுகாக்க, சைவத் தமிழர்களான நமது மூதாதையர்  ெச ய ற ப டு த த ய நடைமுறை என்பது ஐதீகம். முற்றுமுழுதாக விதைகளை நம்பியே பண்டைய காலங்களில் விவசாயம் நடந்தன. விவசாயத்தில் விதைகளின் வாழுமையும் (viability) வீரியமும் முக்கியமானது. இதனால் விதைகளின் 'முளைக்கும் திறனை' நீடிக்க, நம்முன்னோர் சில முன்னேற்பாடுகளைச் செய்திருக்கலாம். நீங்கள்தான் பரம்பரை அலகுகளைப் பாதுகாக்கும் தொழில் நுட்பத்தில், நிபுணராச்சே! கலசங்களுள் இருந்தெடுத்த பழைய தானியங்களின் 'முளைக்கும் திறனை' எனது ஆய்வுகூடத்தில்
சோதித்துப்பாருங்களேன்,
உண்மை தெரிந்துவிடும்' என்றார் நண்பர்.
அநேகமான விதைகளுக்கு, அதன் முளைக்கும்திறன், ஓர் ஆண்டுகாலம் மட்டுமே நிலைத்திருக்கும். முதல் வருடத்திலிருந்த வீரியம் அடுத்த வருடத்திலிருக்காது. மாங்கொட்டையின் முளைக்கும் திறன் மூன்று மாதங்கள் மட்டுமே. விளா, வில்வம், கருவேப்பிலை, தோடை, எலுமிச்சை, நாரத்தை ஆகியன ஒரே குடும்பத் தாவரங்கள். இவற்றின் விதைகளைப் பழத்திலிருந்து பிரித்த ஒருசில வாரங்களுக்குள் விதைக்க வேண்டும்.
6

SO அதடுப
இன்றைய விஞ்ஞான யுகத்தில் மழை, வெள்ளம், புயல், இடி போன்றவற்றினால் ஏற்படும் இயற்கை அழிவுகளினாலோ, யுத்தங்களினாலோ, அல்லது நோய்களி னாலோ, பயிர்கள் அனைத்தும் அழிந்து போனால், பரம்பரை அலகுகளைப் பாதுகாக்கும் நிலையங்களிலிருந்து ('Germplasam bank') விதைகளையோ தாவரங்களையோ பெற்று விவசாயத்தைத் தொடர முடியும். இதற்கு இப்போது பல நவீன தொழில் நுட்பங்கள் உள்ளன. பரம்பரை அலகுகளைப் பாதுகாக்கும் வங்கியில் விதைகளாகவோ, கலங்களாகவோ (Cells) அல்லது இழையங்களாகவோ (Tissue) இவை பாதுகாக்கப்படுகின்றன. திரவ நைதரசனில் -180 பாகை சதமளவு உறைநிலையில், இவற்றைப் பலநூறு - வருடங்களுக்கு சேதமுமின்றிப் பாதுகாக்கும் முறையும் பயிற்சியில் உள்ளது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 9
கலசங்களிலிருந்து சேகரித்த, தானி யங்களுடன், ஆய்வு கூடத்துக்கு சென்று, தானியங்களின் முளைக்கும் திறனைப் பரிசோதித்தேன். பேராசிரியர் சொன்னது உண்மைதான். பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்பும், ஐம்பத்திரண்டு சதவீதமான வரகும், முப்பதுக்கும் நாப்பதுக்கும் இடைப்பட்ட சதவீத எண்ணிக்கையில் மற்றைய தானியங்களும் முளைக்கும் திறனைக் கொண்டிருந்தமை என்னை வியப்பிலாழ்த்தியது. கலசங்கள் செய்யப்பட்ட உலோகக் கலவை, பன்னிரண்டு வருடங்களாக தானியங்களின் முளைக்கும் திறனைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வரலாம். ஆனால் இன்றைய கோயில்களிலே வைக்கப்படும் கலசங்கள் அதே உலோகக் கலவையியில் செய்யப்படுகின்றனவா? அல்லது அந்த உலோகக் கலவை என்ன? என்பதற்கான சான்றுகள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.
பேராசிரிய நண்பரின் உறவுப் பெண் ஒன்று குழந்தை வரம் வேண்டிச் சுற்றாத கோயில் இல்லை. இம்முறை பார்த்தபோது கருத்தரித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஐ.வி.எவ். (IVF - Invitro fertilization) முறைப்படி கருத்தரித்தாக பேராசிரியர் சொன்னார். எ. ஐ.வி.எவ். மூலம் கருத்தரித்தலுக்கும், தாவரங்களின் பரம்பரை அலகுகளை பாதுகாக்கும் நடைமுறைதான் கடைப்பிடிக்கப் படுகின்றது. இங்கும் பெண்ணின் கரு முட்டை அல்லது ஆணின் விந்து திரவ நைதரசனில் பாதுகாக்கப்படும். இது 'கருமுட்டை-விந்து' வங்கி எனச் சொல்லப்படும். தம்பதிகளின் விந்தும் முட்டையும் ஆரோக்கியமாக இருந்து, கருக்கட்டலில் மாத்திரம் சிக்கல் இருப்பின், தந்தைதாய் இருவரினதும் முட்டையும் விந்தும் பரிசோதனைக் குழாயில் கருக்கட்டப்பட்டு, தாயின் கருப்பைக்குள் வைக்கப்படும்.
'கருக்கட்டிய கருவை வைப்பதற்கு தாயின் கருப்பை ஆரோக்கியமாக இல்லாவிட்டால் என்ன செய்வது..?' என பேராசிரியரின் மனைவி கேட்டார் IVF சிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சென்னைவந்த என் உறவுப் பெண் ஒருத்தி இத்தகைய பிரச்சினையை எதிர்நோக்கியதை நான் அறிவேன்.
'அதற்குத்தான் வாடகைத் தாய்மார்கள் உள்ளார்களே. இந்த வசதி இந்தியாவிலும் உண்டு. தம்பதிகளின் கரு, வாடகைத் தாயின்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

என
கருப்பையில் வைக்கப்பட்டு, குழந்தை வளரும். குழந்தை பிறந்ததும் ஒப்பந்தப்படி வாடகைப் பணத்தை கொடுத்துவிட்டால் குழந்தை உங்களுடையது.'
'இதென்ன கோதாரியப்பா...' யாழ்ப்பாணப்பாணியில் சலித்துக்கொண்டார் பேராசிரியரின் மனைவி.
'இதுக்கே தலையில் கையை வைத்தால், இதுக்கென்ன சொல்லப்போறாய்...' என பேராசிரியர் தொடர்ந்தார்.
'கருமுட்டையை விற்பனை செய்யும் பெண்களும், விந்தணுக்களை விற்பனை செய்யும் ஆண்களும் இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் உண்டு. கவர்ச்சிகரமான இந்த வியாபாரத்தில், அழகான இளம் பெண்களுக்கும், விடலைப் பருவத்து ஆண்களுக்கும் கிராக்கி அதிகம்.'
'அதை வாங்கி என்னப்பா செய்யிறது...?' 'குழந்தை இல்லாத தம்பதியினருள் பலருக்கு, ஒன்றில் ஆணின் விந்து அல்லது பெண்ணின் முட்டை, கருக்கட்டும் வல்லமையற்றதாக இருக்கும் இவர்களுக் காகத்தான் இந்த வியாபாரம். பெற்றோரின் உயிரணுக்கள் எதுவுமேயில்லாத, பிறரின் பிள்ளையைத் தத்தெடுப்பதிலும் பார்க்க, இந்த முறையில் விந்தையோ அல்லது முட்டையையோ வாங்கி ஐ.வி.எவ்.(IVF) முறைமூலம், பரிசோதனைக் குழாயில் கருக்கட்டிப் பிள்ளை உருவானால், ஒன்றில் தாயினதோ அல்லது - தந்தையினதோ உயிரணுக்கள் அந்தக் குழந்தையில் இருக்குமல்லவா?'
| 'சோரம்போய் பிள்ளை பெறுவதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசமப்பா...?'
'வம்பிலை பிள்ளை பெறுகிறதென்று, உன்னுடைய யாழ்ப்பாணப் பாஷை யில் வெளிப்படையாகவே சொல்லு, நீ தமிழ்க் கலாசாரத்தில் ஊறிய மனுஷி. இப்பெல்லாம் பெண்கள் கலியாணம் கட்டாமலே "எனக்கு இன்னமாதிரியான குழந்தைதான் வேண்டுமென” விந்தணுக்களை 'விந்துவங்கியில்' வாங்கி, பிள்ளை பெறுவது மேலைத் தேசங்களில் பெருமளவில் நடைபெறும் சமாச்சாரம்.''
'அம்மான்ரை பாஷையிலை சொன்னால், இது கடையிலை கேக்செய்ய ஓடர் குடுக்கிற மாதிரித்தான்' என இடையில் புகுந்து கொமன்ற் அடித்தான் பேராசிரியரின் மகன்.

Page 10
பெண் ஒரினச் சேர்க்கையாளர்கள் இந்த முறை மூலம்தான் பிள்ளை பெற்றுக் கொள்ளுகிறார்கள். இவர்கள், எமக்கு இன்னஇன்ன இயல்புகள் கொண்ட ஆணின் விந்தணுதான் வேண்டுமென விந்து வங்கியில் வாங்கி, தமக்கு விரும்பியபடி குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள்’ என இது பற்றி ஒரு அறிவியல் பிரசங்கம் செய்தார் பேராசிரியர்.
பேராசிரியரின் மனைவிக்கு எங்களுடைய D - JULJITL 6i) பிடிக்கவில்லை என்பது அவரின் முகத்தில் தெரிந்தது. உலகம் அழியப்போகுது.’ எனப் புறுபுறுத்தவாறே எங்களுக்கான சாப்பாட்டைத் தயாரிப் பதற்காகச் சென்றுவிட்டார்.
மாதத்துக்கு ஒரு கருமுட்டையே பெண்ணின் சூலகத்திலிருந்து (Overy) வெளிவரும். அது வெளிவரும் கால இடைவெளி ஆளுக்கு ஆள் வேறுபடும். பின்பு ବTl'iuliql இந்த கருமுட்டை வியாபாரம் இந்தியாவில் களைகட்டுகிறது? என தன் ஐமிச்சத்தை வெளியிட்டான் பேராசிரியரின் மகன். அவன் மரபியல் (Genitics) பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவன்.
"பன்றி, முயல், பூனை, நாய் போன்ற விலங்குகளுக்கு ஒரே தடவையில் பல முட்டைகள் உதிர்வதால் ஒரேதடவையில் பல குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல." என விளக்கம்சொல்ல முனைந்த என்னை இடைமறித்து, 'மனிதர்களுக்கும் ஒரேசூலில் பல குழந்தைகள் பிறக்கின்றனவே? என இடைக் கேள்வி ஒன்றைச் செருகினான் மகன்.
இது உடலுக்குள் நடைபெறும் எதிர்பாராத கோர்மோன் (Hormone) மாற்றத்தால் நிகழ்வது. சூலகத்திலிருந்து (Overy) அரிதாக பல முட்டைகள் உதிர்ந்தால், ← 9d6Ꮱ6)Ꭻ விந்துகளுடன் இணைந்து கருக்கட்டும்போது மனிதர்களுக்கும் பல குழந்தைகள் கருப்பையில் உருவாகும். சில வேளைகளில் ஒரு முட்டை இரண்டாகப் பிரிந்து கருக்கட்டும் போது, ஒத்த உருவமுள்ள இரட்டைக் குழந்தைகள் (Identical twins) பிறப்பதுண்டு. இந்த உடற்தொழில் இயல்பே' கருமுட்டை வியாபாரத்துக்கு வழிவகுத்தது. கோர்மோன்களை செயற்கையாக ஊசிமூலம் ஏற்றும்போது ஒரே தடவையில் பல முட்டைகள் வெளிவரும். இதைத்தான் விற்பார்கள்' என கூறினேன்.
8

'முப்பது வயதுக்குட்பட்ட அழகான ஏழைப் பெண்களைத்தான் பணத்தைக்காட்டி இதற்கு இணங்க வைக்கிறார்கள். தொடர்ந்து இதைச்செய்த பெண்கள், கோர்மோன்களின் பக்க விளைவுகளினால் உருக்குலைந்து அலைவது பற்றி சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொலைக்காட்சியில் சமீபத்தில் காண்பித்தார்கள் என்று பேராசிரியர்
விரிவாகவே விளக்கினார்.
என்னதான் விஞ்ஞான விளக்கங்களாக இருந்தாலும், எங்கள் சம்பாவு
னையில் மகன் கலந்து கொண்டது பேராசிரியரின் மனைவிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். 'கதைச்சது காணும் சாப்பிட வாருங்கோ’ என அழைத்தார்.
நான் பேராசிரியர் வீட்டுக்கு போகும்போதெல்லாம்அங்கு யாழ்ப்பாணத்துச் சமையல்தான். தமிழ் நாட்டில், இட்லியும் தோசையும் சட்னியும் சாம்பாரும் சாப்பிட்டு நாக்குச் செத்துப்போயிருக்கும் எனக்கு பேராசிரியர் வீட்டுச் சாப்பாடு எப்பொழுதும் விருந்தாகவே இருக்கும். அன்று குழாய்ப் புட்டும் நிறைய நல்லெண்ணை ஊற்றி வதக்கிய கத்தரிக்காயும், அதற்கு உவப்பாக நாட்டுக் கோழிக் குழம்பும் வைத்திருந்தார்.
பேராசிரியர் வீட்டு சாப்பாடு பற்றி, சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவாறே நனவிடை தோய்ந்த என்னைத் தட்டி எழுப்பி, கோயில் கும்பாபிஷேகத்தை நினைவூட்டினாள் என் மனைவி இந்தத் தொல்லை இப்போதைக்கு நிற்கப் போவதில்லை. வரகு வீட்டுக்கு வருகிற வரை இது தொடர்ந்து இருக்குமென்பது எனக்கு நன்றாகவே தெரியும். கோயிலுக்கு தேவையான வரகை இந்திய பேராசிரியர் நண்பரைத் தொடர்பு கொண்டுதான் பெற்றுக் கொடுக்க வேண்டும். இலங்கையில் வரகு இப்போது பயிரிடப்படுவதில்லை. சாமை மிக அரிதாக பயிரிடப்படுவதாக எனது பால்ய நண்பன் பாலன் செசான்னான். சலரோக வியாதிக்காரருக்கு குரக்கன் தேவைப்படுவதால் அது பரவலாக அங்கு பயிரிடப்படுவதாக அறியலானேன்.
உடல் உழைப்பற்ற சொகுசு வாழ்க்கையால் இப்பொழுது பலருக்கும் சர்க்கரை வியாதி. இதனால் குரக்கன்மா அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை இந்திய சரக்குக் கடைகளில் தாராளமாக வாங்கலாம். கேரளாவிலிருந்து ராகிப்புட்டுமா என்ற
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 11
பெயருடன் இறக்குமதியாகும் குரக்கன் மா நல்லதென்று என் மனைவி சான்றிதழ் வழங்குவதில் சலிப்படைவதேயில்லை.
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் வரகு, சாமை, குரக்கன் ஆகிய சிறுதானியங்கள் பெருமளவில் பயிரிடப்பட்டன. இவற்றை பொதுவாக மிலற் (mlet) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இவற்றின் பொதுப் பெயர்கள் நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் மாறுபடும். குரக்கனை கேரளாவில் ராகி என்றும் தமிழ் நாட்டில் கேழ்வரகென்றும் அழைப்பார்கள். இதற்கு ஆபிரிக்கன் மிலற் என்ற பெயரும் உண்டு. இதன் லற்ரின் விஞ்ஞானப் பெயர் Eleusine Coracana, ஆங்கிலத்தில் பொதுவாக Finger millet என்பார்கள். இவற்றின் கதிர்கள் ஐந்து கைவிரல்களைப்போலத் தோன்றுவதால் இந்தக் காரணப் பெயர் வந்திருக்கலாம். இதன் பூர்வீகம் எதியோப்பியாவின் மேட்டு நிலம் என்று விக்கிபீடியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரகை ஹிந்தியில் கோத்ரா (Kodra) என்பார்கள். ஆங்கிலேயர்களின் வாயில் கோத்ரா திரிபடைந்து KOdo millet ஆகியது, தெலுங்கில்இதைArikeluஎன்றும், கன்னடத்தில் Harka என்றும் அழைப்பார்கள். கபிலர் தன் பாடலில் (115) 'ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சாமையின் பொதுப்பெயரில் சில குளறுபடிகள் உண்டு. இதை கம்பு என தமிழ்நாட்டில் தவறாகச் சொல்வதும் 2_60öTCB), FT60LD563 Pearl millet, little millet GTGöıp ஆங்கிலப் பெயர்களை உசாத்துணை நூல்கள் சொல்கின்றன. Panicum Sumatrense என்பதே இதன் லற்ரின் விஞ்ஞானப் பெயர்.இவை அனைத்தும் மூன்று மாதப் பயிர்கள், வரகு வளருவதற்கு மிகச்சிறிதளவு தண்ணிர் போதுமானது. அது தரிசு நிலத்திலும் வளரும். சாமை குரக்கன் ஆகிய பயிர்கள், யாழ்ப்பாணத்தில் புகையிலை வெட்டிய பின்பு தோட்டத்தில் பயிரிடுவார்கள். இவற்றிற்கு அதிகபட்சம் இரண்டு பட்டை இறைப்புப் போதும்.
மொட்டைக் கறுப்பன் நெல்லரிசியும் சாமியரிசியும் கலந்து ஆக்கிய சோறும், வேலம்பிராய் கடலில் பிடித்த விளைமீன் குழம்பும், முருங்கையிலை வறையும் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

இதோடு கொஞ்சம் ஒடியல் புட்டையும் கலந்து விட்டால் அதன் சுவைக்கு நிகர் எதுவுமில்லை. இவையெல்லாம் எனது அம்மாவின் கைப்பக்குவத்தில் நான்சுவைத்துச் சாப்பிட்டவை. என்னுடைய மனைவிக்கு இவை புரியாது. அவளது பார்வையிலோ நான் ஒரு படித்த பட்டிக்காட்டான்!
தொண்ணுாற்று இரண்டு வயதையடைந்த என்னுடைய அம்மா இன்றும் சிட்னியில் வாழ்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக அவருக்கு அல்ஷைமர்' எனப்படும் ஞாபக மறதி நோய். என்னைக்கூட அடையாளம் காணமாட்டார். ஆனால் பழையதெல்லாம் நல்ல ஞாபகம். இந்த வியாதியின் இயல்பு இது, அவரை நிஜ உலகத்துக்கு கொண்டு வர முயலும் பயிற்சிகளில் ஒன்றாக அம்மா, என்ன சாப்பிட்டீர்கள். என நான் கேட்பேன். "சோறும் குரக்கன் பிட்டும் வெந்தயக் குழம்பும்' என்பார் எப்பொழுதும். இவை இயல்பாகவே அவரது அடிமனதிலிருந்து வரும் வார்த்தைகளேயல்லாமல், 5 J சிந்தனையில் வருவதல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.
அம்மாவின்சகோதரியின் கணவன்-எனது பெரியையா - ஒரு விவசாயி குழந்தையில்லை. நாங்கள் கூட்டுக் குடும்பமாக கைதடியில் வாழ்ந்தோம். ஐயாவும் பெரியையாவும் சண்டை போட்டதை நான் பார்த்ததில்லை. ஒருவரை ஒருவர் மதித்து ஊரில் மிக மரியாதையாக வாழ்ந்தவர்கள். பிறைவசி (Privacy) நாடி தனிக்குடித்தனம் போகும் இந் நாள்களில் இவையெல்லாம் நம்பமுடியாத பழைய சமாசாரங்கள்.
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் நடுக்கூறு வரை யாழ்ப்பாணத்தில் புகையிலைதான் காசுப்பயிர். மண்ணின் தன்மைக்கேற்ப தாவடி, கோண்டாவில், இணுவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் 'சீவு காம்பு’ எனப்படும் சுருட்டுப் புகையிலை பயிரிடுவார்கள். மற்றய கிராமங்களில் தறிகாம்பு பயிரிட்டார்கள். தறிகாம்பு புகையிலைக்கு பனங்கட்டிப் பாணிபோட்டு, தென்னம் பொச்சும் பனை ஊமலும் எரித்து வரும் புகையில் உலரவிடுவார்கள். இதற்காகவே வீட்டுக்கு வீடு களிமண்ணாலான வட்டவடிவ 'புகைக் குடில்கள் இருந்தன. தறிகாம்பு புகையிலை சுருட்டுச்சுத்தப் பயன்படாது. இது சீவு காம்பு போல நிண்டெரியாது என திறம் சுருட்டுக்களை
9

Page 12
மாத்திரம் புகைக்கும் என்னுடைய ஐயா சொன்னார். தறிகாம்பு புகையிலை வாய்க்குள் போட மட்டுமே பயன்படும். மலையகத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிடையே இதற்கு கிராக்கி அதிகம். பாடம் பாடமாக அப்போது இவை யாழ்ப்பாணத்துக்கு வெளியே அனுப்பப்பட்டன. 'புகையிலை விற்றபின் கடனை அடைக்கிறேன்' என்று சொல்லி அக்காலங்களில் காசு கடன் வாங்குவார்கள். பின்னர் ஸ்ரீமாவோ அரசு உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க மிளகாய் உட்பட பல விவசாய விளைபொருட்களின் இறக்குமதியை நிறுத்தவே, மிளகாய் விலை திடீரென உயர்ந்தது. இதனால், மிளகாய் காசுப் பயிரானது. யாழ்பாண விவசாயிகளெல்லாரும் புகையிலை பயிரிடுவதைக் குறைத்து மிளகாய் பயிரிட்டுத் திடீர் பணக்காரர்களானார்கள். செத்தல் மிளகாய் விற்ற காசில் சிலர் உழவு மிசின் வாங்கினார்கள். மண் வீடுகள் கல்வீடுகளாக மாறின. வீட்டுக்கு வீடு நீர் இறைக்கும் யந்திரங்கள் வந்தன. அதுவரை தோட்டத்தில் பட்டை இறைப்புத்தான். பெரிஐயாவும் பட்டை இறைப்பில்தான் பயிர் செய்தார். கைதடிமண்ணிற்குதறிகாம்பு புகையிலைதான் நன்றாகவளர்ந்தன. இருப்பினும்விவசாயத்தில் புரட்சி செய்வதாக நினைத்து, ஒருமுறை சீவுகாம்பு சுருட்டுப் புகையிலை பயிரிட்டு கையைச் சுட்டுக் கொண்டதுமுண்டு.
யாழ்ப்பாணத்தில் பல தோட்டங்களுக்கு நடுவில் ஒரு பொதுவான கிணறு இருக்கும். பட்டை இறைப்புக்கு நேரமெடுக்குமாதலால் இரவுபகலாக முறைவைத்து இறைப்பார்கள். பெரிஐயாவின் தண்ணி இறைப்புக்கு துலா மிதிப்பது கட்டையர். ஆழக் கிணறென்றால் இரண்டு பேர் துலா மிதிப்பதுமுண்டு. துலாமிரிப்பது இலேசுப்பட்டதில்லை. ஒரே சீராக மேலும் கீழும் ஏறி இறங்குமாறு, முன்னும் பின்னுமாகத் துலாவில் நடந்து வரவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. இரவு இறைப்பின்போது அலுப்பிலும் நித்திரையிலும் துலாவால் தவறி விழுந்து முடமானவர்களும் இறந்தவர்களும் பலர். ஆனால் கட்டையர் துலாமிதிப்பில் விண்ணன் என்று பெயரெடுத்தவர். அவர் நன்கு பாடுவார். சதிலீலாவதி படப் பாடல் தொடக்கம், காத்தவராயன் கூத்துப் பாடல்வரை ராகம் - தாளம் தப்பாமல் பாடுவதில் அவரை யாரும் வெல்ல ஏலாது.
10

இரவு நேர இறைப்பில் துலா மிதிக்கும்போது நித்திரையிலே கீழே விழுந்துவிடாமல் இருக்க, கட்டையர் காத்தவராயன் கூத்துப்பாடல்களை குரலெடுத்துப்பாடுவார். அவரின் பாட்டு இறைக்கும் மூவரையும் விழிப்பாக வைத்துக் கொள்ளும். பட்டைக் கொடி பிடித்து, கிணத்து மிதியடியில் நின்று தண்ணி இறைப்பது சோமர். பெரிஐயா பயிர்களுக்கு அளவாகத் தண்ணி விட்டு பாத்திகட்டுவார். தண்ணீரை வீணாக்காத சொட்டு நீர்ப்பாசனம் நடைமுறைக்கு வந்த இக்காலகட்டத்தில், பாத்திகளில் தண்ணீர் விடும் 'வெள்ள நீர்ப்பாசனமே' (Flood Irrigation) இன்றும் குடாநாடெங்கும் பயன்பாட்டிலுள்ளது. இது எதிர்காலத்தில் குடாநாட்டை வறண்ட பூமியாக்கிவிடும் என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு.
கட்டையர், சோமர் போன்றவர்களை, ஊரிலுள்ள ஒவ்வொரு கமக்காரர்களும், பட்டை இறைப்புக்காகத் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள். இவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் விவசாய நிலமில்லை. இவர்கள் தங்கள் உடலுழைப்பை நம்பி உயர்சாதிக் கமக்காரர்களைச் சார்ந்து வாழ்ந்தார்கள். இவர்களுக்கு நாட்கூலியோ மாதச்சம்பளமோ இல்லை. விளைபொருட்களும் சாப்பாடும் மட்டும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் வீட்டில் நடந்த நல்லது கெட்டதுகளையும் பார்த்துக் கொள்வார்கள். அநேகமாக பெரிஐயா அதிகாலை இறைப்பையே விரும்புவார். இறைப்பவர்களுக்கு அதிகா லையில் களைப்புத் தெரியாது. பெரிஐயா நாலுமணிக்கு எழும்பி, வீட்டு முற்றத்தில் நின்று உரத்துக் 'கூ...' என்பார். கட்டையரும் சோமரும் பதிலுக்குக் 'கூ...' என்பார்கள். அலை பேசியில்லாத அந்தக் காலத்தில் 'கூ...' தான், அவர்களின் தகவல் பரிமாற்றத்துக்கான சாதனம்.
பெயர்தான் கட்டையரே தவிர அவர் உருவத்தில் கட்டையில்லை. திடகாத்திரமான நெடிய உடம்பு. இப்பொழுதெல்லாம் 'Four pack, six pack' உடம்புக்காக இளைஞர்கள் ஜிம்முக்கு அலைவார்களே? கட்டையர் ஜிம்முக்கு போகாமலே வரகும் குரக்கனும் சாமையும் சாப்பிட்டு அத்துடன் உடல் உழைப்பும் சேரவே அவருக்கு 'six pack' உடம்பு தானாகவே வந்தது. அவர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 13
கறுப்பென்றாலும் மினுமினுத்த கறுப்பு நிறம். விதி வசத்தால் அவர் இலங்கையில் பிறந்தார். மேலைத் தேசத்திலென்றால், வெள்ளைக்காரிகள் மத்தியில் அவர் நல்ல மவுசுடன் வாழ்ந்திருப்பார்.
யாழ் குடாநாட்டில் தோட்டங்களுக்கு அருகே அண்ணமார், வைரவர், புதிராயர், வீரபத்திரர் போன்ற ஏதோவொரு சுவாமிக்கு கோயிலிருக்கும். எண்பதாம் ஆண்டுகள் வரை இச்சுவாமிகள் கல்லாக, மரத்தின் கீழ் மழையில் நனைந்தோ அல்லது ஓலைக் கொட்டிலிலோ குடியிருந்தார்கள். வருடத்துக்கு ஒருமுறை, அறுவடை காலங்களில் பொங்கலோ பூசையோ இக் கோவில்களில் நடைபெறும். கூடுதலாக அண்ணமார் கோயில்களிலே காத்தவராயன் கூத்தும் நடைபெறும். கைதடியில் காத்தவராயனாக வேஷம் கட்டுவது எங்கள் கட்டையரே. அவரிடமிருந்த நடிப்பாற்றல், பாடும் திறனெல்லாம் பெரியையாவுக்கு துலாமிதித்ததில் தொலைந்து போனதோ எனப் பிற்காலத்தில் நான் நினைத்ததும் உண்டு. இப்பொழுதெல்லாம் - இந்த உபரிச்சுவாமிகள் 'இன்னாரின் உபயம்' என்ற பெயஷ் விலாசத்துடன், வெளிநாட்டுக் காசில், கோபுரத்துடன் கூடிய வஉணக் கட்டிடங்களில், தினப் பூசைகள் கண்டு சுகமாக வாழ்வது தனிக் கதை.
புகையிலை வெட்டுவதற்கு முன்பு, எங்கள் ஊர் வழக்கப்படி பெரியையா தோட்டத்துக்கு நடுவே படையல் சடங்கினை மேற்கொள்வார். அன்று எங்கள் வீட்டுக் குசினி திமிலோகப்படும். பெரிய பெரிய மண் பானைகளில், வரகுச்சோறு, சாமைச்சோறு, மற்றும் எங்கள் வயலில் எங்களின் சாப்பாட்டிற்காகவே உரம் போடாமல், மாட்டுச் சாணமும் சாதாளையும் போட்டு விளைவித்த மொட்டைக்கறுப்பன் நெல்லரிசிச் சோறும் ஆக்கப்படும். வெங்கலப் பானையில் வரகு, சாமை, நெல் அரிசிகள் மூன்றும் கலந்து பனங்கட்டி வெல்லம் சேர்த்து புக்கை வைத்தல் சமையலிலே அம்மாவின் பங்கு. எங்களின் வயலில் விளைந்த அரிசிச்சோறு சமைக்கும்போது உப்புபோட பெரியம்மா அனுமதிக்கமாட்டார். உப்புப் போட்டால் வயல் உவர்பத்திப்போகும் என்பது அவரது யாழ்ப்பாண மண்ணின் கலாசாரம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

படையலுக்காக பலவிதமான மீன் வகைகள் - கோவிலாக்கண்டி கடற்கரை யிலிருந்தும் சாவகச்சேரி சந்தையிலிருந்தும் பெரிஐயாவுடன் சந்தைக்குப் போகும் சோமர் வாங்கிவருவார். கோவிலாக்கண்டி கொய் மீன் பெயர் பெற்றது. கொய் மீனில் நிறைய முள்ளிருக்கும். ஆனாலும், அதில் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் அரிந்து போட்டு வைக்கும் தேங்காய்ப் பால் சொதியின் சுவை கலாதியானது. பெரிஐயா மீன் வாங்குவது மரியாதைக் குறைவு என்பது, பெரியம்மாவின் அபிப்பிராயம். அதனால் கூடப்போகும் சோமரே மீன் வாங்குவார்.
படையலுக்கு
- பெரியையாவின் தோட்டத்தில் விளைந்த பயத்தங்காய், பாகற்காய், கத்தரிக்காய், மரவள்ளிக்கிழங்கு, மற்றும் பல வகை மீன்கறிகள், குரக்கன் பிட்டு, ஓடியல் பிட்டு எல்லாம் அமர்க்களமாக எமது வீட்டுக் குசினியில் தயாராகும். இரவானதும், பனை ஓலைகளில் கோலிய தட்டுவங்களில் அவை பரிமாறப்பட்டு சுருட்டு, சாராயம், சுட்ட கருவாடு, சகிதம் புகையிலைக் கன்றுகளுக்கு நடுவில் படைக்கப்படும். படையலிலே தண்ணீர் தெளித்ததும் அவை கட்டையருக்கும் - சோமருக்குமுரியது. படையல் முடிந்து" பெரிஐயா வீடு வந்ததும் நாங்கள் சாப்பிடலாம். சின்ன வயதில் பெரிஐயா வீடு வருவதற்கு முன்னர் நான் தூங்கி விடுவேன். |
இப்பொழுதெல்லாம் நான் பேராசிரி யராகி உலகமெல்லாம் சுற்றி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அரச செலவில் தங்கிச் சாப்பிட்டாலும், தோட்டத்துப் படையலின்போது நான் சாப்பிட்ட பெரியம்மாவின் மீன் கறிக்கும் அம்மாவின் புக்கையின் சுைைவக்கும் ஈடு இணை எதுவுமில்லை என்று சத்தியம் செய்வேன். வரகு சாமை போன்ற சிறு தானியங்களும் நெல் அரிசியும் கலந்து சமைத்த சோறு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட!
கோவில் குருக்கள் ஒரு விடாக்கண்டர். கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேண்டுமென்று நேரடியாக - என்னைப் பல்கலைக்கழக தொலைபேசியிலே தொடர்பு கொண்டு சொன்னார்.
அடுத்த நாள் வந்தது மின்னஞ்சல்...
(மிகுதி அடுத்த இதழில்)
11

Page 14
'ஞானம்' சஞ்சிகை நடத்திய செம்பியன் செல்
' முதற் பரிசு ெ
வன்டிதேச!
கீழே தள்ளிப்பெருத்த காலையில் நீ வற்றாத கடலென ஆர்ப்பரிக்கும் அலையில் எழுகிறாய் பதுங்கிய வன்நாக்குகள் உன் சுனையை ஒரு போதுமறியா உறுத்தலிலிருந்து பகையின் கைகள் கொடிய நஞ்சு நாகமென கூர்கொண்ட குறுவாளுடன் அணிநெய்கிறான் பொன் நிலத்தை கபளீகரம் செய்பவன் எனக்குள் கிடக்கும் ஊருக்குள் புகுந்தது பெரு மரணம் என் வரலாற்றல் என் கூடவே பிடல்காஸ்ரோவும், சேகுவரா இனிய சனங்களுடன் வந்தமர்கின்றனர் என் நெடிய பெரு நகரம் கந்தகப் புகைக் காட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறது மேகங்கள் மொட்டைக் குடிலிலிறங்கி புதைதோப்பில் சமராடுகின்றன என் தெய்வமே! என் மதிப்பற்ற மண்ணுக்கு என்ன விலை கொடுப்பேன் புத்தனும், காந்தியும் மகாசனங்களுக்குக் காட்டிய
ஞானோபதேசம் எங்கே போயின? பூக்கள் பேசுகின்றன போரும் பேசுகின்றன வற்றாத குண்டில் விழும் ஒளியுமுறையுமொரு காலம் நாம் எதுக்கும் தயாரானோம் இரண்டிலொன்று வாழ்வு அல்லது சமரான சாவு பழைய சாயலோடு களத்தின் கண்கள் மின்னிக்கிடக்க
ஆங்காங்கு புணரப்படுகின்றன போர்கள் சவங்களின் வாசனை பெருகி ஊளைச்சத்தம் பெருக்கெடுக்கிறது தடையே தகர் விண்ணை இடி பலமுள்ள தோள்கள் சேரட்டும் ஆயிரம் உலகும் ஆயிரம் கடலும் நமக்காக வரட்டும் குதிரைப்படையும் யானைப்படையும் பல ஆயிரம் அணுத்திரளுடன் சூழட்டும் கடலில் படகுடன் தளம்பும் வீரர்கள் அந்தி அழைப்பு வருகிறது வாழ்க்கை ஒரு கரிய மலரல்லவோ
12

-வன் ஞாபகார்த்தக் கவிதைப் போட்டி 2012 பற்ற கவிதை
சத்தியமலரவன்
நட்சத்திரங்கள் ஒவ்வொரு மரத்தின் இலைகளிலும் விம்மிக் கொண்டிருக்க நான் களம் புகுந்தேன் முழக்கத்துடன்
நீ தேடுவது தெரிகிறது வும் காற்றும் குமுறும் கடலும் பெருகும்
நிலம் பிரிய அண்டவெளியில் நடக்கிறாய் இரந்த அலை சடலங்களில் உலகம் கிடக்கிறது இரக்கமில்லாதவர்களின் இதயங்களை ஈட்டி முனையில் குத்தி நிறுத்தி விடுதலையின் விலைபற்றி பேசுவோம் கருணை காட்டவில்லை- பேதமில்லை
விழி மூடவில்லை குழந்தை, ஊர்க்குருவி பாதைமாறிப் போகிறது உக்கிரம் நெருப்பு மழை மரணம் வாய்பிளக்கிறது அன்னியன் உடல்கள் பிணமாக மிதக்க சுதந்தர ஒளி பற்றி வளர்கிறது பிரகாசம் என் இதயத்தை இரக்கமில்லாச் சுவரில் என் மக்களுக்காகத் தீட்டுவேன் புறப்படத் தயாராகயிரு புயலென்று அடங்கிப் போகாமல் விசமுள்ள காடு பூவால் சொரியட்டும் என் தேவனே! நான் அஞ்சுகிறேன் தியாகம் எவ்வளவு பெரிது மஞ்சள் மாலையில் கார்த்திகையைக் கொண்டு வர நான் காத்திருக்கிறேன் கிழக்கின் நம்பிக்கைப் புலர்வுடன் நம் குழந்தைகளும் அப்படியே! எல்லோரின் இதயமும் மென்மையிலும் மென்மையாய் வருடுகிறது எல்லோரின் மூச்சும் பெருகுகிறது புதைந்தவர்கள் வருகிறார்கள் நீ தொட்டுத் தழுவு - ஆரத் தழுவு அன்பின் வெற்றியாய் பல மலர்கள் பல மலர் வனங்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 15
தட்ட
லங்கள்
மரண அறிவித்தல் அகிலம் சிதம்பரநாதன் தோற்றம்: 05-06-1958 இறப்பு: 15-03-2013 பார்வைக்கு : நேற்று கிரியைகளும் தகனமும் : இன்று எனக்குத்தான் இந்தக் கிரியைகளும் தக வடிவான பெட்டியுள் என்னை கிடத்திய நான் செத்தால் என்ரை முதல் 8 சொல்லியிருந்தனான். அது போலை வடி வந்துதான் எனக்கு சீலை கட்டினவை. மரு வரவில்லை.
அவர் கல்லுப்போலை நிற்கிறார். சந் காட்டத் தெரியாத சீவன் அது. ஆனா பிள்ளைகளுக்குச் சரி எந்தக் குறையும் இல்ல
அதிலை வாறது மதுஷினி போலை இரு பூப்போட வந்தவர்களின் வரிசையில் அ வெள்ளைச்சீலை கட்டியிருக்கிறபடிய செத்திட்டான் போலை கிடக்கு.
இவர் கொஞ்சம் பதட்டப்படுகிறார் பே ”இனிச் சொந்தக்காரர் வந்து வாய்க்கரி சொல்ல, கனடாவிலும் ஜேர்மனிலும் இ ஆக்களும் முன்னாலை வருகினம்..
முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாளளவும் அந்தி பகலாச் சிவனை யாதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழன் மூட்டுவேன்
சிவன் கோயில் ஓதுவார்கள் உச்சஸ்து கடமையைச் செய்து கொண்டு இருக். தொட்டாச்சுருங்கி. மற்ற இரண்டு பிள்ளை ”அப்புராசா அழாதை” என அவருக்கு 6 அவற்றை கண் சனத்துக்கை யாரையோ அவளைத்தான் அவர் தேடுறாரோ? “ஐயா நீங்கள் சுத்திவந்து பூப்போட்டுக் குடத்தோடை வரட்டும்” கிரியை செய்யும் 4
கை நிறைய உதிர்த்தியிருந்த பூக்களை 6 மணக்குது. குசினிச் சுவரிலை நான் வளர்த்த காலடியில் இருந்து தலைமாட்டை நோக்கி
இந்த 31 வருசத்திலை அவருக்கு சரி, குறையையும் நான் வைக்கேல்லை. அப்பிடி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

இன் கதை
வி. ஜீவகுமாரன்
னமும். பிருக்கினம். கூறையைத்தான் கட்டவேணும் என்று வாய் கட்டியிருக்கினம். மகளும் அவரும் மகள்கள் இரண்டு பேருக்கும் பயம் என்று
தோசம் துக்கம் இரண்டையும் வெளியில் -ல் இந்த 31 வருடமும் எனக்குச் சரி, மாது பார்த்தவர். 5க்கு! வெள்ளைச்சீலை கட்டியிருக்கிறாள். புவளும் நின்றிருந்தாள். Iாலை கலியாணம் கட்டி புருஷனும்
ாலை கிடக்கு. சியைப் போடுங்கோ” ஐயர் உரத்த குரலில் நந்து வந்திருந்த என்ரையும் அவரின்ரை
தாயியில் பாட மூத்தவன் விக்கி விக்கி கிறான். இவனும் என்னைப் போலை பளும் அவரைப் போல இறுக்கம்தான்.
சால்லத் தெரியேல்லை. தேடுது.
தம்பிடுங்கோ. பின்னாலைமகன்கொள்ளிக் சைவம் அவருக்குச் சொல்லுகின்றார். கொண்டு வாறார். அதுக்கை மல்லிகைப் பூ : மல்லிகை பூத்திருக்க வேண்டும். என்ரை
மெதுமெதுவாய் வாறார். அவர் தந்த 3 பிள்ளைகளுக்கு சரி எந்தக் ந்தான் அவரும்.

Page 16
அவரை ஒருநாளுமே அது வேண்டித் தாங்கோ இது வேண்டித்தாங்கோ என எந்த ஆக்கினையும் செய்யுறேல்லை. அவருக்கு தெரியும் எனக்கு என்ன வேணும் எண்டு. கொஞ்சநோம் கடையிலை நிண்டு ஆசையாய் எதையும் பார்த்துக் கொண்டு நிண்டால் வேண்டித் தந்து போடுவார். அப்பிடித்தான் இந்த வீடு முழுக்க பூக்கண்டுகள் நிறைந்தது. அப்பிடித்தான் இப்ப அவர் மகாண்டந்திருக்கிற மல்லிகையும் வீட்டுக்கை வந்தது.
எனக்கிருந்த ஆசையெல்லாம் ஐயா தந்த ஊர்க்காணிக்கை ஒரு வீடு கட்டி என்ரை பேரப்பிள்ளைகளுக்கு குடுக்க வேணும் எண்டதுதான். எங்கடை கிணற்று தண்ணிக்கு அப்பிடி ஒரு ருசி. அதுகள் லீவுக்கு இலங்கைக்குப் போகும் பொழுது மற்றவை யாரின் வீட்டுத் திண்ணைகளில் போய்க் குந்த வேண்டாம். உரிமையோடை தங்கடை பாட்டி வீடு என்று போய் வரட்டும்.
"கொஞ்சம் கெதிப்படுத்துங்கோ. நேரம் போகுது” சடங்கை செய்பவர் அவரசப் படுத்துகின்றார்.
அவருக்கும் இப்பிடித்தான் அவசரம். பகிடியாக சொல்லுறனான் "என்ரை பிரேதம் மட்டும் ஆறுதலாய் போக வேணும் எண்டு”
அவர் என்ரைதலைமாட்டிலை பூக்களைப் போட்டுவிட்டு என் கன்னங்களைதடவுகிறார். அவரின் கைகள் விரல்கள் நடுங்கிறது. பாவம் அவரைத் தனிய விட்டுட்டு போறன்.
மதுவினி வந்து நிற்கிறதுதான் மனதுக்கு சங்கடமாய் இருக்கு. இந்தனை வருசமும் மானம் மரியாதையோடை வாழ்ந்தாச்சு. அந்தச் சிறுக்கியாலை ஒருக்கால் எங்கடை மானம்போகப்பார்த்தது. கடவுள்காப்பாற்றிப் போட்டார். இப்ப ஏன் வந்தவள்?
"அப்பிடியே போய் கால்மாட்டிலை விழுந்து கும்பிடுங்கோ ஐயா"
கடவுளே அவர் என்ரை காலடியிலை விழுறதோ? அந்த தெய்வத்தை நான்தானே இவ்வளவு நாளும் கும்பிட்டுக் கொண்டு இருந்தனான்.
பேரப் பிள்ளைகளும் இளைய மகளுமாக அவரைத் தூக்குகினம், !
எனக்கு கண் எல்லாம் முட்டி அழுகை வாற மாதிரி இருக்கு. ”ܨ ܘ
"ஐயாவை இனி வெளியிலை கொண்டு போங்கோ, கொள்ளிக் குடம் உடைக்கேக்கை அவர் உள்ளுக்கை நிற்க வேண்டாம்"
இன்னும் கொஞ்சநேரழ்தான் என்னை மின்சார அடுப்புக்குள் வைத்துவிடுவார்கள்.
14

இனி அவர் தனித்துப் போகப்போகிறார். பிள்ளையஞம் மருமக்களும் இருக்கினம் தான். ஆனால் என்னைப் போலை யார் அவரைப் பார்க்கிறது. பசி எண்டாலும் கேட்டு வேண்டிச் சாப்பிட மாட்டார். அவையாக குடுத்தால்தான் உண்டு. அதுதான் எனக்குப் பயமுமாய் இருக்குது. உவள் மதுவினி வந்திருக்கிறதுதான் இன்னமும் பயமாய் இருக்கு முந்தி வேலையிடத்திலை இவரோடை ஒட்டி ஒட்டித் திரியிறாள் எண்டு சனம் கதைக்கத் தொடங்கேக்கை நான் இவரிட்டை எதுவும் கேட்கேல்லை. கடவுளோடைதான் இருந்து மன்றாடினனான். நல்ல காலம் அவளாய் அவரையும் விட்டுட்டு தன்ரை வீட்டையும் விட்டு ஒடிட்டாள். இனியும் கடவுள் தான் அவரைக் காப்பாற்றவேணும். அவளையும் தான்.
"5ւbւ Ո! பின்புறமாய் கொள்ளியை வைச்சிட்டு திரும்பிப் LITirgig, ITLDG) போங்கோ"
என்ரை பிள்ளையவள் துடிக்கப் போதுகள் இனிப்பெட்டியையும் மூட என்னவென்று தாங்கப் போதுகளோ தெரியாது. மூன்று பிள்ளையஞம் கலியாணம் கட்டினாலும் கூட தகப்பனிடம் எதுவும் கேட்கப் பயம் எண்டால் மூன்றும் குசினியுள் நின்று என்னைத்தான் துளைத்தெடுக்குங்கள். நான் சொன்னால் அவர் புன்சிரிப்புடன் கேப்பார்.
இனி அதுகளுக்கு யார் இருக்கினம். மண்டபத்தில் ஆள்மாறி ஆள்மாறி கண்ணிர் அஞ்சலிகள் வாசிக்கினம். அதில் அதிகம் அவரின்ரை முன்னேற்றம் எல்லாத்துக்கும் எப்பிடி நான் பக்கத் துணையாக இருந்தனான் எண்டு எழுதி வாசிச்சினம். இவையள் உது எல்லாம் வாசிக்க வேண்டுமென்றோ என்ரை ராசாவை நான் பார்த்தனான். ஆனால் அவர் இண்டைக்கு தலை நிமிர்ந்து நிற்கிறது எனக்குத் தானே பெருமை.
இறுதியாக யாரோ ஒருவர் "இவ்வளவு காலமும் இன்பத்திலும் துன்பத்திலும் இந்தப் பத்தினித் தெய்வத்தை கண் கலங்காமல்." ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
எனக்கு கண்கள் பாரமாய் இருந்தது. அவர்தனக்குள்ளைதான் எரிச்சல்படுவார். ஆனால் கோபிக்கமாட்டார். இந்த எரிச்சல்படுறது, கோபப்படுறது எல்லாம் அவள் ஊரை விட்டு ஒடும்வரையும்தான். அதுக்குப் பிறகும் கொஞ்ச நாளைக்கு அப்பிடித்தான் இருந்தார். பிறகு எல்லாம் சுமுகமாகப் போட்டுது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 17
அடுத்த18 வருசமும் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. இரண்டு வருஷத்துக்கு முதல் ஒருநாள் பேஸ்புக் பார்த்துக் கொண்டு இருந்தவர் சரியாக மூட் அவுட் ஆகிவிட்டார். ஆனால்நானாகஏதும்கேட்கவில்லை. ஆனால் உவள் மதுஷினி தான்திரும்பி வந்திட்டாளோ என எனக்குள்ளை ஒரு நடுக்கம்.
இப்போ அவளை மண்டபத்துக்கை காணேல்லை. போய் விட்டாளோ தெரியேல்லை. அப்பிடியே போய் தொலைந்து விட்டால் போதும்.
எல்லோரும் எழுந்து நின்று சிவபுராணம் சொல்ல மூத்தமகன் மின்சார சுவிட்சை அழுத்த பெட்டி மின் அடுப்பினுள் நகரத் தொடங்கிறது.
என் பிள்ளைகளை தனியாக விட்டு விட்டுப் போறன் என்ட கவலைதான். கண்கள் குழமாகுது.
அவர் என்னவோ சொல்லுகிறார் போலை இருக்கு.
எனக்கு கேட்குதில்லை.
இரண்டு பக்கத்தாலையும் நெருப்பு சுவாலை வீசுகிறது.
சுந்தரேசன் வயது 57
இருபது வருடங்களுக்கு பின்பு அவளைக் காணுறன்.
மதுஷினி ! வெள்ளைச் சேலையில்!! அதுவும்
என்
மனைவியின் மரணவீட்டில்!!!
என் பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் எல்லோரும் அகிலாவின் பெட்டியைச் சுற்றி நின்று கதறிக் கொண்டிருக்கும் - கடைசி நேரத்தில் வரிசையாகப் பூப்போட வந்தவர்களின் வரிசையில் அவளும் நிற்கின்றாள்.
அவளின் கோலத்தை எனக்குப் பார்க்க சகிக்கேல்லை.
மனைவியின் காலடியில் பூக்களைப் போட்டு விட்டு குனிந்த தலை நிமிராமல் மெதுவாக கண்களை மட்டும் நிமிர்த்தி என்னைப் பார்த்து விட்டு நகர்ந்து செல்கின்றாள்.
அதே பார்வை!! பார்வை மட்டும்தான், மாறவில்லை மற்றும்படி அவளின் தோற்றம் முற்றாக மாறியே இருந்தது.
| "இனிச் சொந்தக்காரர் வந்து வாய்க்கரிசியைப் போடுங்கோ” ஐயர் உரத்த
ஞானம் - என் இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

குரலில் சொல்ல கனடாவிலும் ஜேர்மனிலும் இருந்து வந்திருந்த எனதும் அகிலத்தினதும் ருெங்கிய உறவினர்கள் அனைவரும் முன்னே வருகின்றார்கள்.
முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாளளவும் அந்தி பகலாச் சிவனை யாதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழன் மூட்டுவேன் சிவன் கோயில் ஓதுவார்கள் உச்சஸ்தாயில் பாட மூத்தவன் விக்கி விக்கி கடமையைச் செய்யுறான்.
என்.
கண்கள்
மதுஷினியைத் தேடிக்கொண்டு இருக்கிறது.
“ஐயா நீங்கள் சுத்தி வந்து பூப்போட்டுக் கும்பிடுங்கோ. பின்னாலை மகன் கொள்ளிக் குடத்தோடை வரட்டும்” கிரியை செய்யும் சைவம் எனக்குச் சொல்லுகின்றார்.
கை நிறைய உதிர்த்தியிருந்த பூக்களையும் என்னுடனேயே எடுத்து வந்திருந்த அகிலத்தின்மல்லிகைப் பூக்களையும் எடுத்துக் கொண்டு அகிலத்தின் காலடியில் இருந்து தலைமாட்டை நோக்கிப் போகின்றேன்.
அகிலம்! இன்னமும் முகத்தின் களை மாறவே இல்லை.
இருபது வயதில் என்னிடம் வந்தவள். இந்த 31 வருடமும் என்னுடன், எனக்குப் பின்னால், எனக்காகவும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து விட்டுப் போய்விட்டாள்.
சென்றவாரம்கூட சொல்லிக் கொண்டி ருந்தாள், தனக்கு சீதனமாக கொடுத்த 2 பரப்புக்காணிக்குள்ளை எல்லா வசதி களோடையும் ஒரு சின்ன வீடு கட்டி எல்லாப் பேரப்பிள்ளைகளின் பெயரில் எழுத வேண்டும் என்று. லீவுக்கு போகும்போது ”இது பாட்டி எங்களுக்கு தந்த வீடு" என்று அவர்கள் சொல்ல வேண்டுமாம். இதைத்தவிர அவள் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.
எதுவாயினும் நானாக யோசித்து அவளுக்குச் செய்தால் உண்டு.
அவளின் வங்கிக் கணக்கும் எனது வங்கிகணக்கும் இணைந்தே இருந்தது. எவ்வளவு வருகிறது எவ்வளவு போகிறது என எதுவுமே அவளுக்குத் தெரியாது. என்னுடன் கடைக்கு வரும் பொழுது மட்டும் ஏதாவது
அழகான பூக்கண்டுகளை கண்டால் அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டு நிற்பாள்.
15

Page 18
“வேண்டித் தாருங்கள்”, எனக் கேட்க மாட்டாள். ஆனால் வேண்டிக் கொடுத்தால் மிகவும் மகிழ்வாள்.
டென்மார்க் குளிருக்கை செத்துவிடாமல் அவள் பார்த்து பார்த்து வளர்ந்த மல்லிகையில் இன்று காலை ஆறு பூக்கள் பூத்திருந்தன. அதனையும் கையில் எடுத்து வந்திருந்தேன். அவள் விரும்பி வளர்த்த மல்லிகை. அவளின் சின்ன சின்னச் சந்தோசங்களை அவளுடன் எங்கு போட்ட மல்லிகை.
"கொஞ்சம் கெதிப்படுத்துங்கோ. நேரம் போகுது” சடங்கை செய்பவர் அவசரப் படுத்துகின்றார்.
இதே மாதிரி நான் காரில் ஏறியிருந்து அவசரப்படுத்தும் பொழுது அகிலம் அடிக்கடி சொல்வாள், "என்ரை பிரேதத்தையாவது அவசரப்படாமல் எடுங்கோ” என்று. இன்று எல்லாமே முடிந்து விட்டது.
அவளின் தலைமாட்டில் பூக்களைப் போட்டு விட்டு கன்னங்களை வருடி விடுகின்றேன்.
முகம் நல்லாய் குளிர்ந்திருக்கிறது. “அப்பிடியே போய் கால்மாட்டிலை விழுந்து கும்பிடுங்கோ ஐயா”
சுற்றி வரும் பொழுது என்னையும் அறியாது என் கண்கள் மதுஷினியைத் தேடுகிறது.
இந்த 31 வருடமும் ஒவ்வொரு கலியாணநாளன்று அகிலம் என் கால்களில் விழுந்து கும்பிடுவாள். எத்தனையோ தரம் சொல்லிப் பார்த்தும் அவள் அதனை நிறுத்தவே இல்லை. ஐரோப்பாவுக்கு வந்த பின்பாவது நிறுத்துவாள் என நினைத்தேன்.
அது நடக்கவே இல்லை.
இப்ப முதல் தடவையாக அவளின் காலடியில் நான் விழுந்து கும்பிடுகிறன்.
பேரப் பிள்ளைகளும் இளைய மகளுமாக என்னைத் தூக்குகின்றார்கள்.
எனக்கு கண் எல்லாம் முட்டி இருக்கிறது எதுவுமே தெரியவில்லை.
“ஐயாவை இனி வெளியிலை கொண்டு போங்கோ. கொள்ளிக் குடம் உடைக்கேக்கை அவர் உள்ளுக்கை நிற்க வேண்டாம்”
ஐரோப்பாவில் எல்லாத்தையுமே ஒரு இடத்தில் தான் செய்யுறது.
இனி அவள் மின்சார அடுப்புக்குள்ளை போயிடுவாள்.
நான் தான் தனியே... கண்கள்
தானாக
மதுஷினியைத் தேடுகிறது.

எதுக்காக? இருபது வருடங்களுக்குள் வாழ்க்கை அவளை எப்படி மாற்றிப்போட்டிருக்கு.
எல்லாமே நேற்றுப் போல் இருக்கின்றது. நான்கு காலங்களின் சுழற்சி வேகத்தில் இலங்கையை விட இந்த ஐரோப்பாவில்காலம் கொஞ்சம் வேகமாக ஓடுவது போலத்தான் தெரிகிறது.
அப்போ அவளுக்கு 23. எனக்கு 38. எனது மூன்றாவது கடைக்குட்டிக்கு 1 மாதம் என்று நினைக்கின்றேன். அகிலம் பிள்ளையுடன் வீட்டில்.
நான் தனியத்தான் வேலைக்குப் போய்க்கொண்டு இருந்தேன்.
வேலையிடத்தில் எனது மேற்பார்வையில் பயிற்சிக்காக மதுஷினி வந்திருந்தாள்.
அன்று முழுக்க நான் நானாக இருக்கவில்லை.
என் வாழ்வில் ஏதோ தவறு நடக்கப் போகின்றது என் மனம் அடிக்கடி சொல்லிக் கொண்டது.
அந்தத் தவறை என்மனம் ஏற்கத்தயாராகிக் கொண்டு இருந்தது.
திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கும் தகப்பனாகிய பின்பு,15 வயது வித்தியாசத்தில் 23 வயதுப் பெண்மீது ஏற்படும் சபலம் தப்புத்தான். உலகமே நான் என அகிலம் எண்ணியிருக்க மதுஷினி மீது நான் கொண்ட சபலம் தப்புத்தான். ஆனாலும் அந்த தப்பை மனம் விரும்பியது.
ஐரோப்பியக் கலாசாரம் அதற்கு துணை போனது. அவள் பயிற்சிக்கு வந்து ஒரு மாதத்தின் பின்பு என நினைக்கின்றேன்.
அந்த தப்பு அல்லது சரி நடந்து விட்டது. நிச்சயம் அகிலத்திடம் இல்லாத ஒன்று அவளிடம் இருந்திருக்க வேண்டும். அல்லது அவ்வாறு காரணப்படுத்திக் கொண்டு அவளுடனான தொடர்பை நான் வளர்த்துக் கொண்டிருந்தேன்.
அதன் பின்பு அவளுக்கு என்னுடனான நெருக்கம் இன்னமும் கூடியது. என்னால் விலத்தவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை.
ஆனால் விடயம் சக ஊழியர்களுக்குள் பரவத்தொடங்கியது.
நாங்களோ தொடர்ந்தும் கண்ணை மூடிய பூனைகளாக......
"தம்பி! பின்புறமாய் கொள்ளியை வைச்சிட்டு
திரும்பிப்
பார்க்காமல் போங்கோ”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 19
எழுந்து பார்க்கின்றேன்.
தொடர்ந்து பெட்டி மூடலும் அதன் மேல் அடித்துக் கொண்டு எல்லோரின் கதறலும் கேட்கிறது.
இந்த உலகத்தினுடனான அவளது வாழ்வு முடிந்து விட்டது.
பெட்டியை மின்சார
அடுப்புடன் இணைந்திருந்த மண்டபத்துக்கு தூக்கிக் கொண்டு போகிறார்கள்.
என்னையும் கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு போகிறார்கள்.
போகும்பொழுது மெதுவாக திரும்பிப் பார்க்கின்றேன்.
மதுஷினியைக் காணவில்லை. எங்கள் விடயம் மதுஷினி வீட்டில் அரசல் புரசலாக தெரியத் தொடங்கியதும் கட்டாயமாக அவளுக்கு திருமணம் பேசப்பட்டதும் அவள் அதை மறுத்து வீட்டை விட்டு ஓடியதும் அடுத்தடுத்து ஒரு மாதத்துள் நடந்து முடிந்தது.
எங்கள் நகரம் மௌனமாகவே இருந்தது.
ஏதோ ஒரு இருள் எனக்குள் சூழ்ந்த உணர்வு.
மேலாக குற்ற உணர்வு.
எதிலுமே விருப்பற்று, எல்லாத்திற்குமே குடும்பத்தில் கோபித்துக் கொண்டு அந்த ஒரு வருடமும் நான் நானாக இருக்கவில்லை. அகிலமும் காரணம் தெரியாமல் தவித்தாள்.
பின்பு பிள்ளைகளும் வளர வளர அவளின் நினைவும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. தூக்கமில்லாத சில இரவுகளில் மட்டும் அவளின் நினைவுகள் வந்து என்னை மகிழ்வித்து விட்டுப் போனது...
மண்டபத்தில் ஆள்மாறி ஆள்மாறி கண்ணீர் அஞ்சலிகள் வாசிக்கப்படுகின்றன. அதில் அதிகம் என் முன்னேற்றம் எல்லாத்துக்கும் எவ்வாறு அகிலம் பக்கத் துணையாக விளங்கினாள் என்றே சொல்லப்பட்டது.
இறுதியாக யாரோ ஒருவர் ”இவ்வளவு காலமும் இன்பத்திலும் துன்பத்திலும் இந்தப் பத்தினித் தெய்வத்தை கண் கலங்காமல்.” ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
எனக்கு மனதுள் குற்றியது.
சென்ற வருட இறுதிப் பகுதியில் எனது பேஸ் புத்தகத்தில் மதுஷினியின் அழைப்பு
வந்திருந்தது.
ஒரு தரம் அதிர்ந்து போனேன். உள்ளே போய் பார்த்ததும் அதிர்ந்து போனேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

இருக்", இதை ககின்ற
இருபது வருடமாக எந்தத் தொடர்பும் இல்லாது எதற்காக இந்தப் பக்கத்தை எனக்கு காட்டவேண்டும்.
அதிர்ந்து போனேன். ஐரோப்பாவிற்கு இப்படி ஒரு முகமும் இருக்கா?
ஏன் இதை எனக்கு காட்ட வேண்டும்? என்னைத் தண்டிக்கின்றாளா?
பெண்களும் பெண்களும், பெண்களும் ஆண்களும், ஒரு குடும்பத்தின் ஆணும் இன்னோர் குடும்பத்தின் பெண்ணும், அவ்வாறே இந்தக் குடும்பத்தின் ஆணும் மற்றக் குடும்பத்தின் பெண்ணும், அவர்களுக்கிடையில் இடையில் மதுஷினியும். எல்லோரும் பணக்காரர்களாகத் தெரிந்தார்கள். எல்லோர் கண்களிலும் போதை தெரிந்தது. அவர்கள் புகைப்பது போதை வஸ்தாகத்தான் இருக்க வேண்டும்... ஒரு படத்தில் ஒரு ஊசியை மதுஷினி தனது தொடையில் ஏற்றிக் கொண்டு நின்றாள்.
| “ஸ்ரில் ஐ லவ் யூ” என எழுதியிருந்தது.
“நீ எனக்குத் சொல்லாமல் போன போதே நான் இறந்து விட்டேன்” எனப் பதில் போட்டிருந்தேன். ..
நிச்சயம் அவள் போனபோது எனக்கு ஏமாற்றமே. அது இந்தனை வருடத்தின் பின்பும் அவள் மீது மாறவில்லை. அதுதான்
அப்படி நான் எழுதியிருக்க வேண்டும்.
“நீங்கள் இறந்திருந்தால் நானும் விதவையே” என எதிர்ப்பதில் வந்திருந்தது.
அதன் பின்பு அவளின் பேஸ்புத்தகப் பக்கத்துக்கு செல்வதில்லை. அவ்வாறு தொடர்ந்து அவளுடன் பேஸ்புக்கில் கதைத்தால் இந்த 57 வயதிலும் அவளை நான் தேடிப் போவேன் என எனக்குத் தெரியும்.
இறுதியாக எல்லோரும் எழுந்து நின்று சிவபுராணம் சொல்ல மூத்தமகன் மின்சார சுவிட்சை அழுத்த பெட்டி மின்அடுப்பினுள் நகரத் தொடங்கியது.
எனக்கு தொண்டை கட்டத் தொடங்கியது.
"அகிலம், என்னை மன்னிச்சுக்கொள்” எனக்குள் நான் சொல்லிக் கொண்டேன்.
*******
மதுஷினி வயது 42 சரியாக 20 வருசத்துக்கு பிறகு அவரை இன்றைக்கு கண்டிருக்கிறன்.

Page 20
நான் சாவீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாமோ என எத்தனையே தடவை யோசித்தன்.
20 வருடங்களுக்கு முதல் எப்படி என் அறிவு சொன்னதை மனம் கேட்காமல் அவரிடம் போனேனோ அப்படியே இன்றும் அவரைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அகிலம் அக்காவின் பிரிவு அவரை ரொம்ப பாதித்து இருக்கும். நிச்சயம் என்னைக் கண்டால் அவர் ஆறுதல்படுவார்.
"நீ எனக்குத் சொல்லாமல் போன போதே நான்இறந்துவிட்டேன்"எனசிலமாதங்களுக்கு முன்பு அவர் பதில் போட்டதும், "நீங்கள் இறந்திருந்தால் நானும் விதவையே” என நான் எதிர்ப்பதில் போட்டதும் விளையாட்டாக நடந்தது அல்ல.
கொஞ்சம் நாடகத்தன்மையானது தான். ஆனால் அன்று நானாகவே எடுத்துக் கட்டிய இந்த வெள்ளைச் சேலை, வெள்ளைக் கோலம் என்னை ஒரு புதிய வாழ்க்கைக்கு அழைத்து வந்தது. அதை அவர் பார்க்க வேண்டும். தொடர்ந்தும் நான் அந்த உலகத்தில் இல்லை என நம்ப வேண்டும்.
எப்பிடி அவர் தாலி கட்டாமலே நான் அவர் மீது உரிமை எடுத்துக் கொண்டனோ அப்பிடியே அவர் இறக்காமல் இருக்கும் பொழுதே நான் விதவையாகி விட்டேன். அவர் அதை பார்க்க வேண்டும் என்று ஒரு பிடிவாதத்திலைதான் இங்கு வந்திருக்கின்றேன்.
எல்லோரும் பூப்போட எழுந்து சென்றபொழுது நானும் போனோன்.
பல பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவருக்கு கிட்டவாக அவரை விலத்திச் சென்ற பொழுது அவர் என்னை நன்கு அடையாளம் கண்டு கொண்டார். அவரின் முகம், கை, கால்கள் எல்லாமே ஒரு தரம் உதறிக் கொண்டது. பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. வயதுதான் போயிருந்ததே தவிர அவர் அப்படியே தான் இருந்தார்.
"இனிச் சொந்தக்காரர் வந்து வாய்க்கரிசியைப் போடுங்கோ” ஐயர் உரத்த குரலில் சொல்ல கனடாவிலும் ஜேர்மனிலும் இருந்து வந்திருந்த அவரினதும் அவரின் மனைவியினதும் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் முன்னே வந்தார்கள்.
நானும் சொந்தக்காரிதானே என மனம் சொல்லிக் கொண்டது. இல்லை என மனச்சாட்சி மறுதலித்தது.
18

முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாளளவும் அந்தி பகலாச் சிவனை யாதரித்துத் தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழன் மூட்டுவேன் சிவன் கோயில் ஒதுவார்கள் உச்சஸ்தாயில் பாட அவரின் மூத்தமகன் விக்கி விக்கி கடமையைச் செய்து கொண்டு இருந்தான்.
என் கண்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தது. ஆனால் அவருக்கு எங்கே நான் இருக்கின்றேன் எனத் தெரியாமல் சனக்கூட்டத்துக்கை என்னை தேடிக் கொண்டு இருந்தார்.
20வருடங்களுக்கு முதல் தப்பான உறவு உது என அப்பா, அம்மா சொன்னபோது அவர்களின் சொல்லைக் கோட்காமல் அவரிடம் இருந்த அதே ஈர்ப்பு இப்போதும் அவரிடம் எனக்கு இருந்தது. அதுவும் மரண வீட்டில், இப்போ அவருக்கு 57 எனக்கு 42. வாழ்வில் நான் சந்தித்த ஒரு நல்ல ஆண் அவர் என்பதைத் தவிர எந்தக் காரணமும் இருக்கவில்லை.
நான் பருவம் அடைய முதலே வீட்டுக்கு சுருட்டு சுருட்ட வந்த மாமாக்கள், தாத்தாக்கள் விளையாட்டாக என் மார்பைப் பிடித்துக் கசக்கியதும் தொடையில் கை வைத்து விளையாடியதும் இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. வெத்திலை வாயிலிருந்து வரும் புகையிலை மணங்களை இப்ப நினைத்தாலும் வயிற்றைக் குமட்டுகிறது.
பெரிய பிள்ளையான பிறகு ரியூசனுக்கு படிக்கபோன பின்பும் சரி, வீட்டுக்கு அதிகாலையில் படிப்பிக்க வந்த வாத்தியார்கள் சரி என்னுடன் செய்த சிலுமிசங்கள் கொஞ்சம் இல்லை.
போருக்கு பிறகு கலாசாரம் பிறழ்ந்து விட்டுது என்று எல்லாரும் கூய் மாய் போடுறாங்கள். ஆனால் அது என்றைக்கோ பிரண்டு விட்டது என்டதுக்கு நான் தான் சாட்சி.
"ஐயா நீங்கள் சுத்தி வந்து பூப்போட்டுக் கும்பிடுங்கோ, பின்னாலை மகன் கொள்ளிக் குடத்தோடை வரட்டும்” கிரியை செய்யும் சைவம் சொல்ல, கை நிறைய உதிர்த்தியிருந்த பூக்களையும் எடுத்துக் கொண்டு தலைமாட்டை நோக்கிப் போகின்றார்.
எனக்கும் இப்பிடிச் செய்வாரோ?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 21
அவர்தான் தான் செத்திட்டேன் என்று சொல்லிவிட்டாரோ? நான்தான்விதவையாகி விட்டேனே?
| “மதுஷினி நீ இனிமேலும் விளை யாடதே”
எனக்கு நான் சொல்லிக் கொள்கின்றேன். நான் அவர் வாழ்க்கையில் விளையாடி விட்டேனா? இல்லை அவர் என் வாழ்வில் விளையாடி விட்டாரா?
அப்படி ஏதும் இல்லை. அவரை நான் சந்திக்கேக்கை அவருக்கு 3 பிள்ளைகள். எங்களுக்கை 15 வயது வித்தியாசம்.
ஆனால் எதுவுமே எனக்கும் அவருக்கும் குறுக்காய் இருக்வில்லை.
நான் என்னைக் கொடுத்தேன். அவர் எடுத்துக் கொண்டார். அதற்கு என்ன பெயர் வைத்தாலும் சரி!
"தம்பி! பின்புறமாய் கொள்ளியை வைச்சிட்டு திரும்பிப் பார்க்காமல் போங்கோ”
தலையை நிமிர்த்திப் பார்க்கின்றேன்.
மூத்த மகன் கொள்ளிக் குடத்தோடை மூன்று முறை சுற்றிவந்து சின்ன நெருப்புக் கொள்ளியை தலைமாட்டினுள்செருகி விட்டு சின்னப் பிள்ளை போலை கதறி கதறிக் கொண்டு வெளியே போறான்.
பெட்டியை இருவர் மூட அதன் மேல் எல்லோரும் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள்.
சனம் சுற்றி நிற்பதால் இவரை வடிவாக தெரியவில்லை.
தொடர்ந்து பெட்டியை மின்சார அடுப்புடன் இணைந்திருந்த மண்டபத்துக்கு தூக்கிக் கொண்டு போகிறார்கள்.
அவரை கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு போகிறார்கள்.
போகும் பொழுது மெதுவாக திரும்பிப் பார்க்கிறார்.
என்னால் தொடர்ந்தும் மண்டபத்துள் இருக்க முடியவில்லை.
எழுந்து வெளியே வந்து விட்டேன். வெளியே வந்த பிறகு கடைசிவரை உள்ளே இருந்திருக்கலாமோ என மனம் தவித்தது.
இப்பிடித்தான் வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும் ஒன்றைச் செய்வதும் - பின் அதனை யோசித்து பதற்றப்படுவதும் - இது முதல் தடவையில்லை.
இவரோடை இருந்த தொடர்பு வீட்டை தெரிந்ததும் - முன்பின் தெரியாத ஒருத்தனை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

கட்டாயமாக கலியாணம் செய்ய வீட்டார் வெளிக்கிட்டதும் - பின் நான் வீட்டை விட்டு ஓடினதும் - பின் அதுக்காக வருத்தப்பட்டதும் - இப்பிடித்தான் ஒவ்வொரு விடயத்தை செய்வதும் பின் வருத்தப்படுவதும்.
ஆனாலும் வீட்டை விட்டு ஓடாமல் என்ன செய்யுறது? எனக்கு பேசியது ஊரில் ஒரு புகையிலைக்கடை முதலாளியின் மகனாம் அப்போதே எனக்கு வயிற்றைப் பிரட்டியது.
வீட்டை விட்டு வந்தது நூறு வீதம் பிழையில்லாவிட்டாலும் போய் விழுந்த இடம்தான் பிழை. இன்று எனக்கு தெரியுது. ஆனால் அன்றைய வெறுமையில் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. |
ஒரு டெனிஷ்வீட்டின் மேலே வந்து வாடகைக்கு குடியிருந்த பொழுதுதான் முதல் தப்பு அல்லது அந்த பழக்கம் ஏற்பட்டது.
ஹெரோயின்!
வாழ்வே சூனியமாய் போச்சு என நினைத்த பொழுது அந்த வீட்டு டெனிஷ்காரி காட்டியவழிதான் ஹெரோயின்!
குளிர்மலையின் உச்சியில் அவருடன் கைகோர்த்துக் கொண்டு பறந்து போவது போல இருக்கும். பூமிக்கு திரும்பி வந்ததும் மீண்டும் பறக்கத் தோன்றும். மீண்டும் ஒரு ஊசி! மீண்டும் ஒரு பறப்பு!!
ப ஆரம்பத்தில் தனியேயும் பின் அந்த வீட்டுக்காரியின் சில நண்பர்களுடனும் பின் அவளின் நண்பர்களின் குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களது வீட்டின் வரவேற்பறையில் இருந்து மாறிமாறி ஊசி போட்டுக் கொள்வோம்.
எத்தனை பேர் சுற்றியிருந்தாலும் என் மனமும் கையும் அவரை அரவணைத்தப்படிதான். அந்த எண்ணங்கள் தான் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். அல்லாவிட்டால் நிச்சயம் நான் சீரழிந்து போயிருப்பேன்.
ஏன் அந்த வாழ்க்கையுள் போனேன்? ஏன் அதற்கு சம்மதித்தேன்? எதுவுமே எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஒரு நரகம் எனத் தெரிந்தும் வெளியில் வரமுடியாது தவித்தேன். ஆனால் வாழ்வு தன்பாட்டில் போனது.
கடைசியாக18 வருடம் கழிந்து ஒரு நாள் பேஸ்புக்கில் அவரைச் சந்தித்தன்.
“நீ போன அன்று நான் செத்திட்டன்” என உரிமையாக அவர் திட்டிய பொழுதுதான் நான் விழித்துக் கொண்டன்.
"அவர் செத்தால் நான் விதவைதானே”.
19

Page 22
ஏன் அப்படி ஒரு எண்ணம் எனக்குள் அன்று வந்தது?
அன்றுடன் எல்லாத்தையும் விட்டு விட்டு வெளியில் வந்தேன்.
ஹரே ராம இயக்கத்திலை போய்ச் சேர்ந்திட்டன். என்னைப் போலை அங்கு எத்தனையோ பேர். தொலைந்து போன கன்றுக்குட்டிகள் வீட்டுக்கு திரும்புவது போல அங்கு நாங்கள் அடைக்கலம் வேண்டி நின்றோம். கிருஷ்ணனிடமே என் வாழ்வைக் கொடுத்தேன். அவரிடம் என் வாழ்வைக் கொடுத்தது போன்றிருந்தது.
அதன்பிறகும் பிறகும் அவரை நான் குழப்பேல்லை.
எனது பேஸ்புக்கிற்கும் மூடுவிழா நடாத்தி விட்டேன். அது இருந்தால் மீண்டும் அவரையும் குழப்பி என்னையும் குழப்பிப் போடுவேன் என்று ஒரு பயம்தான்.
கடைசியாக நேற்று லங்காசிறியில் மரண அறிவித்தலைப் பார்த்த போது அவர் தனித்துப் போய்விட்டார் என மனம் படபடத்தது.
எல்லோரும் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து புகைக்கூண்டில் இருந்து வரும் புகையைப் பார்க்கின்றார்கள்.
"அம்மம்மா" கடவுளிடம் போறா" - அவரின் மகளாக இருக்க வேண்டும்.
அவரும் வெளியே வருகிறார். சுற்றும் முற்றும் பார்க்கின்றார். நிச்சயம் என்னைத்தான் தேடுகிறார். தொடர்ந்து இந்த இடத்தில் நின்றால் நானே என்னையும் பலவீனப்படுத்தி அவரையும் பலவீனப்படுத்திப் போடுவேன்.
ஒடிப்போய் அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதுவிடுவேன் ଟTଟ01 பயமாய்க்கிடக்கு.
அவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் எல்லோரும் அவரைச் சுற்றி நின்று ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.
நான் அவர்களில் ஒருத்தி இல்லை. மெதுவாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினேன்.
மலர்வளைத்துடன் வைத்திருந்த என் பெயர் பொறித்த அட்டையை மட்டும் அவர் தினம் தினம் இனி எடுத்துப் பார்ப்பார்.
(முற்றும்)
2
O

ஞானம் சஞ்சிகை நடத்திய செம்பியன் செல்வன்
ஞாபகார்த்தக் கவிதைப் போட்டி 2012
இரண்டாம் பரிசு பெற்ற கவிதை
மாட்டப்பட்டிருக்கிறது வரவேற்பறை எங்கும்
சட்டத்திற்குள் அடைப்பட்டு கிடக்கும் ஏழெட்டு பட்டங்களும் அதில் அடக்கம்
கோப்பைகளும் &យ៣Luកំយោpú ஓவியங்களும் பொம்மைகளுமான uffiថា6UTញLយ6TIT) நிரம்பிவழிகிறது 9ល្អហIffiយរ៉ា
புதுவைப் பிரபா உ. பிரபாகரன்
BLIBញប៉ាយមួយ தொலைக்காட்சிப்பெட்டியின் மீதும் சமையலறையில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியின் மீதும் கூட அமர்த்திவைக்கப்பட்டிருக்கின்றன flល uffiថាLITញLយចាំ
என்னைப் LITរ៉ាប៉ាយ ណញuលរ៉ាយ= 'ួរៃចំuff. To ஆச்சரியப்படுபவர்களுக்கும் "நீங்க பெரிய ஆளு" என்று என் தோளை தட்டுபவர்களுக்கும் ஒரு உண்மை தெரியாது
என் தோல்விகளையும் அவமானங்களையும் மாட்டி வைக்க
9តំលង្ឃ அடுக்கி வைக்க நேரிட்டால் ណ្ណរ៉ាថ្លាល្អ ញ៉ាថារ៉ា លូប៉ាញ60នាំព្រួ],
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 23
சோ.u,வின் : தென்னிலங்கைக் 2 பற்றிய ஒரு பா
மொழிபெயர்ப்பு என்பது ஒரு தனிக்கலை. அதுவும் புனைவு இலக்கியம் சம்பந்தப்பட்டவற்றை மொழி பெயர்ப்ப தென்பது இன்னுந் தனியானது. அத்தகைய ஆக்கங்களின் உயிரோட்டத்தோடு தம்மை ஒன்றிணைக்கக் கூடியவர்களாலேயே அது சாத்தியப்படலாம். அதனால்தான் ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புகளைTrans-creations என்று சொல்வதுண்டு. இதை ஒருவகை மீள் உருவாக்கம் என்றே சொல்லலாம். இத்தகையவற்றுக்கு உதாரணமாகக் காலஞ் சென்ற சுந்தரராமசாமியால் மொழி பெயர்க்கப்பட்ட தகழி சிவசங்கரம் பிள்ளையின் 'செம்மீன்' 'தோட்டியின் மகன்' ஆகியவற்றைக் காட்டலாம். கவிதைமொழி பெயர்ப்புக்கு உதாரணங் 'களாக நம்மூர்க் கவிஞர்களான எம்.ஏ.நுஃமான், சிவசேகரம் ஆகியோரால் ஆங்கிலம் வழியாகத் தமிழில் வெளிவந்த பலஸ்தீனக் கவிதைகளைக் காட்டலாம். இன்னும் இவர்களுக்கெல்லாம் முந்தி முருகையன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட 'எனக்கொரு சுருட்டுக் கடை வேண்டும், ஒரு சுருட்டுக்கடை வேண்டும்' என்ற தலைப்பில் வெளியான ஆங்கிலக் கவிஞர்களின் மொழி பெயர்ப்புக் கவிதைகளையும் நாம் சுட்டுவது - மிக முக்கியமானதாகும். இதன் பின்னணியிலேயே தற்போதய கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட தென்னிலங்கைக் கவிதை தொகுப்பையும் பார்க்க வேண்டும்.
'தென்னிலங்கைக் கவிதை தொகுப்பில் அடங்கிய கவிதைகள் அனைத்தும் ஒரு சில புறநடைகளைத்தவிர (pன் அரசநாயகம், அரசநாயகம் பார்வதி, ஆன்றன்சிங்க) சிங்களக் கவிஞர்களால் சிங்களத்தில் எழுதப்பட்டு ஆங்கில வழிவந்தவையும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவையுமே. இக்கவிதைகளே சோ.ப. அவர்களால்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

5 கவிதை பர்வை
தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றை சோ.ப. மொழி பெயர்த்திருக்கிறார் என்பதைவிட தமிழ்க்கவிதை வடிவில் மீள் உருவாக்கம் செய்துள்ளார் என்று சொல்வதே இவற்றுக்காக அவர் செலவிட்ட உழைப்பைக் கௌரவப்படுத்துவதாகும்.
ஒரு படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கொண்டுவருவதற்கு பலகாரணங்கள் உள்ளன. ஒரு படைப்பு எழுதப்பட்ட மொழியில் கலைத்துவ உச்சமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் ஏனைய மொழியினரும் அக்கலை வெளிப்பாட்டைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் அது மொழிபெயர்க்கப்படலாம். அடுத்தது ஒரு படைப்புகலைத்துவரீதியாகவெளிப்படுத்தும் செய்தி, இன்னொரு மொழியினருக்கு அவர்களின் தேசிய எழுச்சிக்கு மிக அத்தியாவசியமானதாக இருக்கலாம். அதன் உந்துதலில் அது மொழிபெயர்க்கப்படலாம். பலஸ்தீனக் கவிதைகள் மொழிபெயர்ப்பை அப்படிக் காணலாம். மூன்றாவதாக ஒரு இனக் கூடத்தின்கலை.கலாசாரஒழுக்கவிழுமியங்கள் பற்றிய கலைத்துவ வெளிப்பாட்டை பிற மொழியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையின்பாற்பட்டு மொழி பெயர்க்கப்படுவதாகும். என். கே.மகாலிங்கம் அவர்களால் 'சிதைவுகள்' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டசினுவா ஆச்சுபேயின் ThingsFallApartஎன்ற நாவல்நான்மூன்றாவதாகக் கூறியவற்றுக்கு சிறந்த உதாரணமாக நிற்பதோடு நான் இரண்டாவதாகச் சுட்டிய ஒரு தேசிய இன எழுச்சிப் பேராட்டத்துக்கும் இம்மொழிபெயர்ப்பு கோடி காட்டுவதாக நிற்கிறது.
இப்பின்னணியில் நாம் கேட்க வேண்டிய கேள்வி, சோ.ப. அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட சிங்களக் கவிஞர்களின் இக்கவிதை நூல் நான் மேலே குறிப்பிட்ட எந்த வகைக்குள் அடக்கப்படலாம் என்பதே.

Page 24
சிங்கள இனம் இலங்கையின் பெரும்பான்பை இனமாக இருப்பதோடு தனது பேரினவாத எழுச்சியால் ஏனைய சிறுபான்பை இனங்களை அடக்கியொடுக்கும் வெறியோடு செயல்படுவதாக இன்று காணப்படுகிறது 1956, 58, 77, 83 ஆகிய காலங்களில் நடந்தது இனக்கலவரங்கள் இதற்கெடுத்துக்காட்டு இன்னும் 1971, 89களில் ஜே.வி.பி யினரால் மேற்கொள்ளப்பட்ட சமூக > எருளாதார விடுதலைக்கான அரசியல் புரட்சியொன்றையும் இலங்கை சந்தித்துள்ளது ஆகவே இன்றுள்ள சிங்களக் கவிஞர்கள் மேற்கூறப்பட்ட பேரினவாத எழுச்சிக்குப் அதன் நிழலில் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வைக் கட்டிக்காக்கும் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் எதிராகக்கவிதைகளில் எதிர்வினைகள் ஆற்றியிருக்க வேண்டும்.
ஒப்பீட்டளவில் அத்தகைய கவிதைகலை எழுதியவர்கள் மிகக் குறைவே. பிரபலப் பெற்ற கவிஞர்களான ரணவீர ஆரியவான்ஸ மஹகமசேகர போன்றவர்களிடம் அத்தகைய கவிதை வெளிப்பாடுகள் வந்ததாய் இல்லை இன்னும் சிங்கள இனவாதம் பற்றிக் கண்டித்த எழுதியவர்களாக - குறிப்பாக 83 இனக்கலவரப் பற்றி - இருப்பவர்கள் அனைவரும் ஆங்கிலப் கற்ற, ஆங்கிலத்தில் எழுதிய கவிஞர்களாகவே உள்ளனர். மொறின் செனவீரத்ன எழுதிய ஜூலை 83, யஸ்மின் குணரத்ன எழுதிய கிறிக
ஆட்டம் 1983, பஸில் பெர்னன்டோ எழுதிய 1983 ஜூலையில் இன்னொரு சம்பவம் நீதியான சமுதாயம், ஆன்றன் சிங்காவில ஜூலை 83, கமலா விஜயரத்னவில பிரியாவிடை ஆகியவற்றை இவற்றுக்கு உதாரணமாகக் காட்டலாம். இவற்றி எவையும் சிங்களத்தில் எழுதப்பட்டவையல்ல 1971இல் சிங்கள இளைஞர் மேற்கொண்ட புரட்சியும் அதனால் நேர்ந்த உயி இழப்புகளும் ஏற்படுத்திய குற்ற உணர்வால் 'ஏப்பிரல் 1971' என்ற கவிதையை ஆங்கிலம் பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே எழுதியுள்ளார் இச்சந்தர்ப்பத்தில் 1983இனக் கலவரங்களைத் தொடர்புபடுத்தி றெஜி
| சிறிவர்தன கூறுகையில் மட்டரகமான சினிமா, கலை களியாட்டங்களை ரசிக்கும் சாதாரண சிங்கம் மக்கள் ஆபத்தான நேரங்களில்தமிழ்மக்களை காப்பாற்றினார்கள் என்றும் ஆனால் உயர்களை இலக்கியங்களில் ஈடுபட்டவர்கள் அதற்கு எதிர்மாறாக இயங்கினர் என்றும் கூறுவது இந்த இடத்தில் பொருத்தப்பாடுடையதே இவற்றுக்கு அடுத்ததாக இடதுசாரிய பார்வையுடைய, பராக்கிரம் கொடி துவக்குவின்
'ஒரு
புரட்சிவாதிமீது 22

D
1
ப
D நீதிவிசாரணை' 'குசுமாவதி' ஆகிய இரண்டு 5
கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு ஏழைச் சிறுமி, பாடசாலைக்கு மாற்றி அணியக்கூட உடுப்பில்லாத நிலையில்தன் கிராமத்திலிருந்து ஐந்து மைல் தூரத்திலுள்ள பாடசாலைக்கு காட்டு வழியே யானைகளையும் குரங்கு களையும் பறவைகளையும், சந்தித்தவாறு தனக்குள் கதைத்துக் கொண்டு போகும் காட்சி, 'குசுமாவதி' கவிதையை தனித்துவம் உடையதாகவே செய்துள்ளது. இவை நீங்கலாக இத்தொகுப்பில் உள்ள ஏனைய கவிதைகள் காதல், மரணம், பிரிவு, ஞானம், வரலாறு, வரலாறு பற்றிய மறுவாசிப்பு, தொன்மம் என்று பல விடயங்களைப் பற்றிப் த
பேசுகின்றன. இவற்றின் கலைப் பெறுமானம் எத்தகையது? இவற்றை மீள் உருவாக்கமாகத் தமிழில் தந்துள்ள சோ.ப. எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறார் என்பவை எம்முன் நிற்கும் அடுத்த கேள்விகளாம்.
இத்தொகுப்பிலுள்ள முதலாவது கவிதை யான 'பிரபுத்தன்' (விழித்துக் கொண்டவன் - அல்லது ஞானம் பெற்றவன்) மஹமசேகரவால் எழுதப்பட்ட நீண்ட கவிதை. இக்கவிதை ஞானமடைய வேண்டின் என்னைப்போல் சகலவற்றையும் துறந்துவிட்டு வாருங்கள் என்ற சித்தார்த்தருடைய - அழைப்புக்கு, எதிர்வினையாக அவரோடு நிகழ்த்தப்படும் உரையாடல் வடிவில் இக்கவிதை தரப் பட்டுள்ளது. இப்படித்தான் அக்கவிதை
ஆரம்பிக்கிறது. “சித்தார்த்த உன்னைப்போல் நான்
அரசபோகத்தில் பிறக்கவில்லை! கோடைக் கென்று குளிருக்கென்று எனக்கு மாளிகைகள் இல்லை எனவே, உன்னைப்போல் இல்வாழ்க்கை துறப்பது எளிதல்ல, எனக்கு நான் போனால் | என் மனைவி மக்கள்
ஆதரவின்றியோர் வாடகை வீட்டில்... அவர்களுக்கு பால்மா தேடுவது ஆர்? நான் இல்லாவிடின்
அவர்களை
மருத்துவரிடம் கொண்டு செல்வது ஆர்?” ப் என்று ஆரம்பிக்கும் கவிதை, புத்தர்
ஞானமடைவதற்கு உபதேசித்த வழி 5 முறைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.
9'
ப
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 25
'உலகமே மாயை. மனித வாழ்க்கையே துன்பமானது. ஆகவே இதைத்துறப்பதே ஞானமடைவதற்கு வழி” என்ற இந்து பௌத்த, சமண மதங்களின் பார்வையே ஆசிய நாடுகள் எழுச்சி பெறாமைக்கு காரணம் என்று சொல்வாரும் உளர். அதனால்தான் வாழ்க்கையை மாயை என்று ஒதுக்காமல் வாழ்க்கையை ஆமோதிக்கும் புதிய ஞான வாழ்க்கைக்கான தரிசனங்கள் இன்று போடப்பட்டுள்ளன. அப்பார்வையின் ஒரு சிறு மீட்டலாகவே இக்கவிதை முடிகிறது. அதனால் தன் மகனை நோக்கி கவிஞர் இப்படிக் கூறுகிறார்.
ஓராயிரம் வருடம் உனக்காய் ஒரு கனவு
ஆராத காதலொடு கண்டு கொண்டி ருந்தேன்.
அந்த உலகை உனக்கென்றமைக்காமல் மைந்த, துறக்க மனஞ்சற்றுமில்லையடா” இங்கே சோ.பவின் மொழிபெயர்ப்பு மூலக்கவிதையின் உயிர்ப்புக் கெடாமல் வெளிவந்திருப்பதாகவே உணர்கிறேன். (இச்சந்தர்ப்பத்தில் இக்கவிதைகளோடு இவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஆங்கில மூலங்களையும் தந்திருந்தால் எம்போன்றோர்க்கு வசதியாக இருந்திருக்கும் என்றும் நினைக்கிறேன்.)
அடுத்துவரும்
இரண்டாவது கவிதையை 'ராகுலனுடைய பிறப்பு என்ற தலைப்பில் ரணவீர ஆரியவான்ஸ் எழுதியுள்ளார். இக்கவிதை சொற்செட்டும் கவித்துவமும் நிறைந்ததென்பதை சோ.ப. தனது தேர்ந்தெடுத்த சொற்கள் மூலம் அறியத்தருகிறார். புத்தர் தன் மகனான ராகுலனுக்கு சொல்வதுபோல் அமைந்த
அழகிய கவிதை இது.
“இளங்குருத்தே கண்ணுறங்கு என்னைத் தேடாதே ஒளிமயமான உலகொன்றை உனக்களிக்கிறேன்.... ஒருநாள் உன்மெல்லடி பெயர்த்து என்னைப் போலவே நீயும் இருட்டில் நடப்பாய்
அந்நாள் நீ நடக்கும் பாதையில் விளக்கு வைக்க இந்நாள் நான் ஒளிதேடிச் செல்கிறேன்” என்று வரும் வரிகள், ஓர் ஆத்மீக தேடலைப் பற்றிச் சொல்லும் பொழுதும் இனந்தெரியாத துயர் ஒன்றையும் எழுப்பி வருவது ஒரு சிறந்த கவிதைக்கு எழுத்துக்காட்டு எனலாம்.
| 'ஞாபகம்' என்ற தலைப்பில் கமலா விஜயரத்னவால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

கவிதை, நிறைவேறாது போன காதலை ஞாபகப்படுத்தி மெல்லிய துயர்க்கசிவை அடியோடு விடுகிறது. பிசுபிசுத்துப் போன காதலுக்கேற்றாற்போல் கவிதையும் வெடித்துக் காற்றில் பறக்கும் பருத்திப் பஞ்சோடுதான் ஆரம்பிக்கிறது.
“நெடிய பருத்தி மரங்களில் பஞ்சு வெடித்து விட்டது
இந்த வெக்கையில் அதன் இறக்கைகள் புகார்போல் மிதக்கின்றன. இக்காலத்தில் தான் நீயும் நானும் பட்டுப்போன்ற இறக்கைகளைத்துரத்திக்கொண்டு ஒரு பஞ்சு முகிலை இருவர் விரல்களும் பொத்த ஒருவர் மீது ஒருவர் மோதி விழுவோம்...” என்று ஆரம்பிக்கும் கவிதை, பறக்கும் பஞ்சு முகில்போல
அவையெல்லாம் அநித்தியமாய்ப் போயின இதயங்கள் உறவை மறக்க அரும்பிய முளையை கருக விட்டோமே...” என்று நிலைக்காது போன காதலை எழுதிச் செல்கிறது.
'அப்பா'
என்ற
தலைப்பில், உபாநந்த கருணதிலகவினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கவிதை வித்தியாசமான சொற்கையாள்கையால்
கலைத்துவம் பெறுகிறது. தமக்காக வாழ்ந்த, தம்மால் கைவிடப்பட்ட தந்தையை நினைவு கூரும் பிள்ளைகளின் கூற்றாக வெளிப்படுத்தப்படும் கவிதை இது:
மழை நகரத்தின் கன்னங்களிலும் ஒளி உமிழும் கண்ணாடிகளிலும் வழியும் போதும் தார்ச்சாலையின் மீது துப்பும் போதும் கடினமான கூரைகள் மீது முரசறையும் போதும் நாம் கண்களை மூடுவோம் அவரைக் காண்போம் மாலையில் தனிமையில் தம் வாசற்படியில் இருப்பார்
இவ்வாறு 'அப்பா' என்ற கவிதை தம்மக்களால் கைவிடப்பட்ட தந்தையைப் பற்றிக் கூறிச்செல்கிறது. இறுதியாக இனக்கலவரம் பற்றி பஸில் பெர்னன்டோ, “1983 ஜூலையில் இன்னுமொரு சம்பவம்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி
”யால்
23

Page 26
தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதையையும் இங்கு காட்டுவது மிக முக்கியம்.
83 கலவரம் உச்ச நிலைமை எட்டியபோது றோட்டில் வாகனங்களிலும் கால்நடையாகவும் போய்க் கொண்டிருந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர். கொல்லப் பட்டனர். தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். இவ்வாறான ஒரு சம்பவத்தையே 1983 ஜூலையில் இன்னொரு சம்பவம் கவிதை ` தரிக்கிறது. கார் ஒன்றில் தந்தையும் தாயும் பின் சீட்டில் இரண்டு பிள்ளைகளுமாக வருகின்றனர். இடையில் காடையர்கள் காரை நிறுத்தி பெற்றோலால் குளிப்பாட்டுகின்றனர். இவ்வேளை காரின் கதவுகளைத் திறந்து யாரோ பிள்ளைகளைத் தூக்கினர். பிள்ளைகள் தம்பெற்றோரைப் பிரிய மறுத்து அழுதன. அவர்கள் உணர்வுகளுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்பதுபோல் இன்னொருவன் தீக்குச்சியை உரசி அவர்களுக்கும் தீயிடுகிறான். அப்போது காருக்குள் இருந்த தந்தை கதவைத்திறந்து எரியும் நெருப்போடு வெளியே வந்து தன் இரு பிள்ளைகளையும் தூக்கி அணைத்தவாறு எரியும் காருக்குள் ஏறி கதவைச் சாத்திக் கொள்கிறான். இத்துன்பம் நிறைந்த நிகழ்வை பின்வருமாறு கவிஞர் முடிக்கிறார்.
இன்னமும்
எரிந்து கருகிய அக்கார்
தெருவோரத்தில் கிடக்கிறது
ஏனைய பொருள்களுடன்
மாநகரசபை
அதை அகற்றிப் போய்
குப்பை மேட்டில் போடக்கூடும்
ஆம்,
தலை நகரின் சுத்தம்
முன்னுரிமை பெறும் - நிச்சயம்"
என்று கவிதை முடியும்போது அதில் வெளிப்படும் உச்ச அங்கதம் இன்றைய இனவாத அரசை குதறி எறிகிறது - அது நிச்சயம்.
மேலே நான் குறிப்பிட்டுக் காட்டிய கவிதைகளில் இருந்து தமிழாக்கம் அதன் கவித்துவத் தரத்தைப் பேணுகிறதென்பதை நாம் உய்த்துணரலாம். இதற்குரிய காரணம் இதை மொழி பெயர்ப்புச் செய்தவரும் தரமுள்ள கவிஞராக இருப்பதே. கவிஞர் சோ.ப. அவர்கள் மரபுவழிக் கவிஞராகவே தன்னை அடையாளம் காட்டிக்கொள்பவர். இதற்குதாரணமாக அவரது ‘வடக்கிருத்தல் கவிதைத் தொகுதி நிற்கிறது. அப்படி இருந்தும் இம்மொழி பெயர்ப்புக் கவிதைகளை மரபுவழிச் செய்யுள் வடிவில் தராது.
24

புதுக்கவிதை வடிவில் தரமுயன்றிருக்கிறார். இதன் காரணம் என்ன என்பது நமது முக்கிய கேள்வியாக நிற்கிறது. தனது அணிந்துரையில் பேராசிரியர் சிவத்தம்பி, ஆங்கிலம் வழி வந்த உமர் காயம் கவிதைகளை,
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலயம் நிறைய மதுவுண்டு என்று மரபு வழிச் செய்யுட்களில் தேசிய விநாயகம்பிள்ளையும், “மாதவிப்பூங்கொடி நிழல், மணிக்கவிதை நூலொன்றும், திதறு செந்தேன் மதுவும் திங்கனியும்" என்று சதுசு யோகியும் பாடியுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். அவ்வாறெனில், மரபு வழி கவிதை எழுதும் சோ.ப. தென்னிலங்கைக் கவிதை மொழி பெயர்ப்பை கட்டற்ற வழியில் பாடமுனைந்தமை எதனால்?
இது முக்கியமான கேள்வி மரபு வழிச் செய்யுளில் மொழி பெயர்க்க முனையும் போது, அதற்குரிய எதுகை மோனைகள் மூலத்தின் கருத்தை நேராகத் தொட முடியாது தூரக் கொண்டு போய்விடும் என்பதனாலா? எதுகை மோனையைப் பாவித்து நம் சொந்தக் கவிதையை எழுதும் போது கூட எமக்குள் கருக்கொண்ட மையப்பொருளிலிருந்து எதுகை மோனைகள் எம்மை வேறெங்கோ வழிமாறிச் செல்ல (deviate) வைப்பதுண்டு. அதிர்ஷ்டவசமாக இவை சில நல்ல கவிதைகளைச் சில வேளைகளில் தருவதுண்டு. ஆனால் அது அருந்தலாகவே நடைபெறுவது. ஆகவே செயற்கையானனதுகை, மோனைகளை ஒதுக்கிவிட்டு நேரடியாகவே ஆழ்நிலைக் கவிதைக்குச் செல்வதே இன்றைய தேவை. இங்கே முன்னொரு கவிஞர் எம்.ஏ.நுஃ மான் அகவல் பாவை புதுக்கவிதையாக தான் முறித்தெழுதுவதாகச் சொன்னதும் ஞாபத்தில் உண்டு. அவ்வாறான TWist களை இக்கவிதைகள் தொடர்பாக காட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இயல்பாகவே எதுகை மோனைகள் வந்து விழுவது வேறு விஷயம். ஆனால் அதற்காக அதன் பின்னால் ஒடுவதல்ல கவிதை. இந்த உணர்வும் விளக்கமும் இன்றைய மரபு வழிக் கவிஞர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் தமக்குள் ஊற்றெடுக்கும் கவிதை உணர்வுகளைக் கொண்டு உன்னதப் படைப்புகளைத் தரலாம். ஆகவே இன்றைய காலம், சூழல், தேவைகளை உணர்ந்து அதன் நுட்பங்களில் கவிதையாத்தலே இன்றுள்ள கட்டற்ற ஒழுங்கு.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 27
கிழக்குமாகாணகலைஇ
ஒரு சிறு கண்eே
கிழக்கு மாகாண கல்வி
பண் பாட்டலுவல்கள்
காணி,
காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிழக்கு மாகாண கலை இலக்கிய விழா 2012-10-18ஆம் நாளன்று திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
- இவ்விழா பற்றி எழுத வேண்டும் எனும் எண்ணம் எனக்குள் எழக் காரணமாய் அமைந்து விட்டது. முன்னைய வருடங்களில் நடந்த கிழக்கு மாகாண கலை இலக்கிய விழாக்களை இவ்விழாவோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது எழுந்த கவலைதான் காரணமாயிற்றென்பேன். அவ்விழாக்கள் ஆத்மாவைத் தொட்டன்! முழுத் தமிழ் விழாக்களாகவே கண்ணிற்பட்டன! தமிழ் மரபும் பண்பாடுகளும் முழுமையாகக் கலந்து செந்தமிழ் மணம் வீசிய விழாக்களாகவே அவை விகாஷித்த தென்னின் மிகையில்லை.
ஆனால் இவ்வாண்டு நிகழ்ந்த விழாவின் தொடக்கமே பெரும்பான்மைச் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்ட சிங்கள - தமிழ் கலை இலக்கிய விழா வென்பதைக் காட்டிற்று! எதிர்காலத்து விழாக்கள் என்னவாகுமோ என்னும் அச்சத்தை ஊட்டிற்று! இவ்விழா நிகழ்ந்தது ஒரு தமிழ்க் கல்லூரியின் சூழலிலாயினும் சிங்கள மணமே ஆரம்பம் முதல் இறுதிவரை கலையரங்கில் வீசிற்று! தமிழுணர்ச்சி அடங்கியே பேசிற்று!
தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசிய கீதம் பாடப்பட்டு இலங்கையின் புகழ் போற்றப்பட்டது. இரு மொழிகளை கலை இலக்கிய விழாவென்பதால் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டிருக்கலாம் அல்லவா? முதலே கோணிற்று. தமிழ் அங்கு நாணிற்று! இதனால்
வருத்தமும் கோபமும் வராதா?
கிழக்கு மாகாணத்தில் தமிழ் கலை இலக்கிய விழாவாகத்தான் கடதாண்டு வரையும் இவ்விழாக்கள் தமிழ் மணம்பொலிய நடத்தப்பட்டு வந்தன. இந்த விழா இரு மொழியும்கலந்தவிழாவாகமாற்றப்பட்டதேன்? ஒரு விழாவாக நடந்த இந்தத் தமிழ்த் திருவிழா - இரு விழாவாக மாற்றப்பட்ட காரணத்தால் அன்றைய விழாக்களில் இடம் பிடித்த
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

லக்கியவிமா20E
அட்டம்
கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி
அம்சங்கள் இன்றைய விழாவில் இல்லை என்று தமிழன்பர்கள் ஆதங்கப்பட்டனர். இதனாற் தான் நாற்காலிகள் பல காலியாகக் கிடந்தன. இது ஆரம்பம் தானே போகப் போக எல்லாமும் அமுலாகிவிடும். ஆச்சரியப்படுவதற்கில்லை. திட்டமிட்டு வரைவுபடுத்தி முடிக்கும் போது கிழக்கு மாகாண இலக்கிய விழா நடக்கும்.
ஆனால் பெரும்பாலும் சிங்களத்தில்.
- "இனிக் கிழக்கில் பிரித்துப் பேச விடோம். பிரித்துச் செய்ய விடோம்” என்ற வன்மையான தொனியின் வடிவம் இவ்விழாவில் தென்பட்டது. இது போலும் விழாத்தான் எதிர்காலத்தில் நடைபெறும் என்பது இவ்விழா மூலம் நிரூபணமாயிற்று.
இவ்விழாவுக்கு அழைக்கப்பட்ட அதிதி களுள் பெரும்பாலானோர் பெரும் பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. தமிழ் மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய புலமையாளர்கள் எவருமே அழைக்கப் படவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சரின் நாமம் மட்டுமே அழைப்பிதழிற் காணப்பட்டது. அவரது தலைமையின் கீழ் இவ்விழா நடந்த போதிலும். இவ்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் அவருடையதென்று எழுத்துருவிலான எந்தச் செய்தியும் அம்மலரில் இடம்பெறவில்லை. இடம் பெற்றிருக்கும் ஆசிச் செய்திகள் அத்தனையும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடையதே. இந்த விழாச் சிறப்பு மலரைத் தயாரிப்பதில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைச் சார்ந்த தமிழ் அன்பர்களும் நிச்சயம் பங்கேற்றிருப்பர். அப்படியாயின் முதலமைச்சரிடமிருந்து ஆசிச் செய்தி ஒன்றைப் பெற்றுப் பிரசுரிக்க இயலாது போய் விட்டதா?
ஏனென்றால் பிரதான நிகழ்வான “முதலமைச்சர் விருது” வழங்குதலே இவ்விழாவின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பேசவந்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு பெரும் பிரமையும் சேர்ந்து கொண்டது. அதாவது தமிழ் நாட்டின் அன்றைய - இன்றைய முதலமைச்சர்கள் வகித்த - வகிக்கின்ற பெருமைக்குரிய பதவி பேணும் ஒன்றல்லவா இது! என்ற பெருமையும் பிரமையும் தான் அது.
25

Page 28
முகமதில் சிறுத்துப் பதயைப் டே
ஆசிரியர்களாகத்திற்குள் பேசினால் நடக்கும்
கிழக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றத் தொடங்கினார். நறுக்குத் தெறித்தாற்போல நாலு வார்த்தைகள் பேசினாலே போதுமென எதிர்பார்த்தேன். அவர்சோர்ந்துகாணப்பட்டார். சொற்களில்சோபை இருக்கவில்லை.விழாவுக்குத் தொடர்பற்ற வேறு விடயங்களைக் கூறிவிட்டு சீக்கிரமே பேச்சை முடித்து விடைபெற்றார்.
முதலமைச்சருக்கு முதலிற் பேசிய கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் பேசினார் அல்லர் முழக்கினார். அரசியல் வாதிகள் முதல் ஆசிரியர்கள் வரை தொட்டுச் சென்றது அவரது பேச்சு. கல்விக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசினார். இற்றைய பொழுதில் சிறுவர் - சிறுமியர்க்கு நடக்கும் தீங்குகளை எடுத்துப் பேசினார். சிறுவர் துஷ்ப்பிரயோகத்திற்குக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் கூட காரணமாயிருப்பது பற்றி கடிந்து கூறினார். சொந்த உறவுகளாலும் சிறுவர்கள் துஷ்ப்பிரயோகத்திற்கு ஆளாவது பற்றி அவர் கவலைப்பட்டுப் பேசினார். இவர்கள் போன்றவர்களை மன்னிக்கவே கூடாது. தகுந்த தண்டனை தரப்பட வேண்டும் என்று ஆவேசப்பட்டுப் பேசினார். அவரது உரை கல்வியைச் சார்ந்த வண்ணமாய்ச் சென்று முடிந்தது. திருப்தி தந்தது. சிங்கள மொழி! சிங்கக் கர்ஜனை!
இறுதியாககிழக்குமாகாணஆளுநரின்உரை இடம்பெற்றது. ஒரு கடற்படைத் தளபதி என்ற கம்பீரம் இன்னமும் அவரிடம் காணப்பட்டது. அவரது உரை கடந்த காலச் சமர்க்களத்துச் சங்கதிகளைச் சார்ந்ததாக இருந்தது. நாம் ஒரு பலம் பொருந்திய பயங்கரவாத இயக்கத்தை முறியடித்து வெற்றி கொண்டோம். அவர்கள் தரை, கடல், ஆகாய மார்க்கப் பலம் பெற்று ஒரு படையை ஒத்து இயங்கியனர். எம்மோடு போரிட்டனர். அவர்களை வெற்றி கொள்வதற்கு ஜனாதிபதி அவர்களின் சிந்தனைத் திறனும் வழிகாட்டலும் எமது முப்படை வீரர்களினது தைரியமும் துணிச்சலும் தியாகமுமே காரணம் என்றார். அவரது பேச்சும், சொல் வீச்சும் கலை இலக்கியத்தைத் தொடவில்லை. கடந்த காலப் போரையும் வெற்றியையும் பற்றியதாக அமைந்து முடிந்தது. .
இவர்கள் இவ்விழாவில் ஆற்றிய பேச்சுக்களின் சாராம்சத்தை நான் ஏன் இக்கட்டுரையில் குறிப்பிட்டேன் என்றால் நாம் மொழியிற் செல்வந்தர்களாயினும் எதிர்காலத்தில் தமிழை தக்கவைத்துக் கொள்ளுவதற்கும் தக்கபடி விழா நடத்துதற்கும் இயலாதவர்களாகிப்
போய்விடுவோம் என்பதற்காகத்தான் இக்குறிப்பைப் பதிவு 26

செய்தேன். தரமான விழாக்கள் இனித் தமிழில் மட்டும் நடக்காதென்பது இவ்விழாவின் மூலம் பட்டவர்த்தனமாக உணர்த்தப்பட்டு விட்டது.
இவர்களுக்கு முதலில் நடிகை அனோஜா வீரசிங்கவும் கிழக்கு மாகாண கலை இலக்கிய விழாவிற் கலந்து கொண்டு உரையாற்றினார். நாட்டியக் கலையூடாக நலிந்தவர்களுக்கு, அவர் உற்சாகமூட்டி வருவதாகவும் உதவி வருவதாகவும் அவர்களின் நரம்புகளில் புத்துணர்ச்சியைப் பாய்ச்சி இயலாமையைப் போக்கி வருவதாகவும் கூறினார். நடிகை அனோஜா மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தனது நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்திய போது, அங்கே அநேகமான ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் தனக்குக் கிடைத்ததாகவும், திருகோணமலை மாவட்டத்தில் தமது நற்பணிக்கு ஆசிரிய சமூகத்திடமிருந்து அவ்வளவு தூரம் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை
என்றும் ஆதங்கப்பட்டார்.
எப்படிப் பார்த்தாலும் விழாத் தொடங்கிய நேரத்திலிருந்து முடியும் வரைக்கும் பெரும் பான்மைச் சமூகத்தின் மொழி மழை அங்கே பெய்து கொண்டிருந்தது. யாது செய்யலாம். நாங்களும் தமிழ்க்குடை பிடித்துக்கொண்டு நனைந்தும் - நனையாமலும் இருந்தோம்.
ஆக, திருகோணமலையில் - 2012ஆம் ஆண்டிலிருந்து இருமொழிகள் இணைந்ததான கிழக்கு மாகாண கலை இலக்கிய விழாவின் "ஆரம்பம்” ஆரம்பமாகிவிட்டது. இனி வருங் காலங்களில் தமிழரும், முஸ்லீம்களும் சிங்கள மொழி நிகழ்ச்சிகளை, உரைகளை விளங்கிக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் தொன்மையையும் மரபையும் தொலைத்த வர்களாகக் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயமே இருக்கின்றது.
இது காறும் நிகழ்ந்து வந்தது போலத் தமிழ்மொழிக்கான கலை இலக்கிய விழாவாக இனி வரும் விழாக்கள் அமையாது என்பதைத் துல்லியமாகச் சொல்லிற்று, இவ்வாண்டு நடந்த விழா! இதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்குத் தெரிய வருவது யாதெனின் மெல்ல, மெல்லத் திருகோணமலை மாவட்டமும் பெரும் பான்மைச் சமூகத்தின் கைக்குப் போய்க் கொண்டிருப்பதுதான்! சென்ற ஆண்டுவரையுஞ் சிறப்பாக நிகழ்ந்த கிழக்கு மாகாணத் தமிழ்க் கலை இலக்கிய விழா இனி அவ்வண்ணம் நடவாது என்பதற்கான கருத்துருவத்தைத் திருகோணமலை -உவர்மலையில் அமைந்துள்ள விவேகானாந்தக் கல்லூரியில் நடைபெற்ற விழா காட்டிற்று!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 29
தமிழகச்
சப்
சட்டத்துக்கு ! பாலியல் வன்கொடுமைக்
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று வெளிப்படையாக விஸ்வரூபமெடுத்திருக்கும் பாலியல் வன் கொடுமைச் சம்பவங்களை தினமும் பத்திரிகைகளில் படிக்கும்போது, முப்பது நிமிடங்களில் ஒரு பெண்வீதம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றாள் எனும் இந்திய தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் கண்டுபிடிப்பு (பதிவு)கள் பொய்த்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.!
இப்பொழுதெல்லாம் தினமும் வெளி வரும், மூன்று வயதுக் குழந்தை முதல் அறுபது வயது பெண்கள் வரை மீதான பாலியல் வன்செயல் செய்திகளைப் பார்க்கும் போது, இவைகள் ஒன்றும் நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் கதை மாதிரி தோன்றவில்லை. நேற்றுவரை, கெளரவப் பிரச்சினை மற்றும் அவமானம் ஏற்படுவதை மூடிமறைத்தும், பொலிஸ் நிலையம் சென்று அங்கும் பலியாகாமல் அல்லது பஞ்சாயத்து காணப்பட்டு பணப்பட்டுவாடா நடந்து குற்றமே குழி தோண்டி புதைக்கப்பட்டு உண்மைகள் உறங்கப்பட்ட நிலையிலும் இன்று, இவற்றுக்கு மாறாக புற்றீசல் போல் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் விரைவு நீதிமன்றங்கள் நோக்கி நகர்வதற்கு ஒரே காரணம் கடந்த டிசம்பர் மாதப் 16ம் திகதி டில்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி கற்பழிப்புக்குள்ளாகி உயிர்ப் பலியான சம்பவம் தான்! இதனைக் கண்டித்து எழுந்த போராட்டம், நாட்டையே
கொந்தளிப்புக்குள்ளாக்கிய
பின்னர்தான் இந்தியா கண்திறந்திருக்கிறது!
கேலிக்கூத்தான சட்டங்கள் இந்திய அரசு பணித்தது!
கற்பழிப்பு சம்பவங்கள் எல்லாம் இந்தியாவில் சகஜமப்பா என்று பேசப்படுப நிலையில், டில்லியில் மருத்துவ மாணவி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

திகள்
5ாதேவா
முன் சமம் என்றால்
கு வயது வரம்பு அவசியமா?
கொடூரமாக கற்பழிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல ஊடகங்கள் வழியாகப் பரவியதும்; யாருடைய தூண்டுதலும் இல்லாமல், அரசியல் காற்றே படாமல் இளைஞர்கள் யுவதிகள், மாணவ மாணவிகள் மத்தியில் மனித உணர்வுகளை எழுப்பி, டில்லியை மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளையும் ஸ்தம்பிக்க வைக்கும் நெருக்கடி காணப்பட்டதும் இந்திய அரசே பயந்து பணிந்தது! கறையான் அரித்து கேலிக் கூத்தாகி ஓட்டைகள் விழுந்த பாலியல் வன்கொடுமை எதிர்ப்புச் சட்டங்களை தூசு தட்டாமல், இரும்புக்கரம் கொண்டு அடக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் கமிட்டி தனது அறிக்கையை இம்மாத ஆரம்பத்தில் சமர்ப்பித்ததும், மத்திய அரசு உடனடியாக சட்டவடிவம் கொடுக்கத் தயாராகிவிடும்.
கதையை மாற்றும் காமக் கொடூரங்கள்!
டில்லி சம்பவமே இந்தியாவில் கற்புக்கண்களை திறந்துவிட்ட போதிலும், தாமதிக்கப்பட்ட நீதி சரியான தீர்ப்பாகாது எனும் நிலைப்பாட்டில்; "நாங்கள் கொலைகாரர்கள், எங்களைத் தூக்கில் போடுங்கள்” என்று கைதான போது கதறிய அந்த ஓநாய்கள் கடந்தமாத இறுதியில் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது; "நாங்கள் குற்றமற்றவர்கள், எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கின்றோம். அரசுதரப்பு சாட்சிகளாகவும் மாறத்தயார். எங்களது உயிர்ப் பாதுகாப்புக்கருதி, நீதிமன்ற விசாரணையை டில்லியிலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் தங்கள் வழக்கறிஞர் மூலமாக மனுதாக்கல் செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை துணிச்சல் வேண்டும்!
27

Page 30
1
சர்வதேச மனித உரிமை சாசனத்தின்படி; "மைனர்' குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்றால்; 1987ம் ஆண்டில் இந்திய அமைதிப்படையினராலும், முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை யிலும் எத்தனை இளம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இன்றும் அந்தப் பாவத்தை சுமக்கிறார்களே..... சர்வதேச மனித உரிமை சாசனம் இன்றும் தூங்குகிறதா? இஸ்லாமிய நாடுகளைப் போன்று கற்பழிப்புக் குற்றத்துக்கு பகிரங்கமாக கசை அடியோ, கல்வீசி கொலையோ, மனச்சாட்சியை உலுக்கும் சிரச்சேதமோ வேண்டாம். மரண தண்டனை போன்று; கொடூரமாகத் தாக்கிய நிலையிலும் தனது கற்பை காப்பாற்ற முயன்று தோற்றுப் போய் உயிரையும் இழந்த பெண்ணுக்கு இழைத்த பாலியல் வன்கொடுமைக் குற்றத்துக்கு உயர்ந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டாமா? டில்லி சம்பவ ஆறுகாமக் கொடூரன்களில் ஒருவன், 'வயதுக்கு வராத' பதினேழு வயது 'மைனராம்', அவன் மரணதண்டனை பெற வாய்ப்பில்லையாம்! இத்தனைக்கும் இந்த 'மைனர்'தான், மருத்துவப் பெண்ணை கூடுதல் சித்திரவதைக்குள்ளாக்கி, இருதடவை கற்பழித்து, பெண் உறுப்பில் இரும்புக் கம்பியால் தாக்கி, குடலைக் கிழித்து, சிதைத்து, தலையிலும் இரும்புக் கம்பியால் தாக்கி அவள்சாவுக்கு மூலகாரணம் என்பது அப்பெண்ணின் மரணவாக்கு மூலம். இப்படியான ஒரு காமக் கொடூரனை 'மைனர்' போர்வையில் எடை போட முடியுமா? குற்றத்தின் தன்மை கொடூரமானது. இதில், 'மைனர்', 'சீனியர் சிற்றிஸன்' என்ற பார்வையே கூடாது என்பது போராட்ட மக்களின் ஒட்டுமொத்தகருத்தாகும் மரணதண்டனையைத் தவிர்த்து, தனிச்சிறையோ, மத்திய அரசின் யோசனைப்படி முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையோநியாயமானதண்டனை அல்ல என்பதும் இவர்கள் கருத்தாகும். சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம்தான்!
பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கி மருத்துவப் பெண்ணின் உயிரைப்பறித்த ஆறு காமவெறியர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால்; இளை ஞர்களும் யுவதிகளும், மாணவர்களும், மாணவிகளும் எப்படி தன்னிச்சையாக, எந்தத் தலையீடுமின்றி போராடினார்களோ அதே நிலைமை மீண்டும் வெடிக்கலாம். இது நிகழும் பட்சத்தில் இந்தியா கடுமையான
1
XU
A G A டு
0 9. 9 G 9 - 3 டி
28

நெருக்கடிக்குள்ளாவதை மத்திய அரசினாலும் தவிர்க்கமுடியாது! புரட்சிகளின் எழுச்சியும் இளைஞர் - மாணவர் மட்டத்திலிருந்து தானே முளைத்திருக்கிறது. இந்தியா விழித்தால் சரி.!
இப்படியும் நடக்கிறது
- * மனிதனுக்குள் மிருகக் குணம் புகுந்து, மிருகமாகி விட்டநிலையில், மிருகம்_ உயர்ந்துவிட்ட ஒரு சம்பவம் புதுக் கோட்டையில் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி என்பவருக்கு மாடுகள் என்றால்உயிர். நாற்பது ஆண்டுகளாக மாட்டுப்பண்ணை நடத்திவரும் இவர் தனது செல்லப்பொண்ணு' - பசுவுக்கு மாட்டுப் பொங்கல் நடத்தவில்லை. உறவினர்கள், பிரமுகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்வைத்து, தடபுடலாகவரவேற்று, செல்லப்பொண்ணுக்கு வளைகாப்பு சடங்கு நடத்தியுள்ளார். ஊரின் முக்கிய பிரமுகரான மெய்யநாதன், வெள்ளிக்காப்பு எடுத்துக்கொடுக்க, ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜன் பசுமாட்டின் கொம்பில் அணிவித்தார். மற்றவர்கள் பசுவுக்கு மஞ்சள், தங்குமம்தடவி வணங்கினர். இதுமட்டுமல்ல, விழாவில் கலந்து -- கொண்டவர்கள் பணமும் அன்பளித்து, விருந்திலும் பங்கு கொண்டனர்.
*நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் தறித்து இன்றும் சர்ச்சை எழுப்பப்படும் திலையில், ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் 1945 ம் ஆண்டுமுதல் இருக்கும் நேதாஜியின் அஸ்தியை இறுதிச் சடங்கு செய்வதற்காக இந்தியா கொண்டுவரப்படுகிறது. குறிப்பிட்ட கோயிலில் மூன்று தலைமுறை குருக்கள் அஸ்தியைப் பாதுகாத்து வருகின்றனர்.
• மயிலாடுதுறைக்கு அருகில், திருக்குரக் நாவல் எனும் திருத்தலத்தில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. இக் கோவிலிலுள்ள சிவனை அனுமான் வழிபட்டு தரிசனம் பெற்றுள்ளார் என்பது ஸ்தல வரலாறு. அதிசயம் என்னவென்றால், ஆண்டுக்கு ஒருமுறை பூக்களை ஏந்திக்கொண்டு தரங்குகள் கூட்டமாக இத்தலத்துக்கு வந்து பூச்சொரிந்து விட்டு போகிறது. தரங்கிலிருந்து மனிதன் வந்தான் பரிணாமம், மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. ஆனாலும் மனித அசுர குணத்துக்கு இங்கு குரங்குகள் எவ்வளவோ மேல்!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 31
கொற்றாவத்தை கூ - குட்டிக் கதைகள்
போனமுயலலரியரு
சேனந்தன, மீன்படி,
மோட்டார் சைக்கிளில் நெல்லி யடிச்சந்தி வரையும் வந்தவுடன் சிவானந்தனின் வீடு பற்றி விசாரித்தார்
இராஜேஸ்வரன். அதன்படியே மேலும் ஒரு கிலோ மீற்றர் தூரம் ஓடி சிவானந்தனின் வீட்டிற்கு வந்து
சேர்ந்துவிட்டார். முப்பது கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தாலும் தனது நண்பனின் வீட்டையோ, மனைவி பிள்ளைகளையோ முன்பின் நேரடியாகத் தெரிந்து கொள்ளாதவராக இருந்து விட்டதற்காகச் சற்று மனம் வருந்தினார்.
தனது நண்பன்சிவானந்தனின் மரணச் செய்தியைப் பத்திரிகையில் பார்த்ததும் ஒரு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்ல விருந்த அலுவலைத்தவிர்த்து, நண்பனின் இறுதி நிகழ்வில் கலந்து
கொள்ள வந்து விட்டார்.
வந்ததும் நேரே பூதவுடல் இருக்கு மிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். கண்கள் கலங்கிவிட்டன. வெளியே வந்து ஒரு கதிரையில் உட்கார்ந்தார். தெரிந்தவர்கள் என்று எவருமே இல்லை.
சிவானந்தனும் இராஜேஸ்வரனும் கொழும்பில் ஒரே திணைக்களத்தில் ஒன்றாக மூன்று வருடங்கள் வேலை செய்தவர்கள். ஒரே அறையில் தங்கிய வர்கள். ஜே.ஆர் .அரசாங்கத்தில் பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பற்றியதற்காக இருவருமே வேலையை இழந்தவர்கள்.. த ஒரு வருடத்தின்பின் இருவருமேவூதி அரேபியாவிற்குப்போய்வேலைசெய்தார்கள். ஆறு ஏழு வருடங்களுக்கு முன்னர்தான் ஒரேயடியாக தாய் நாட்டிற்கு வந்து Settle ஆகினார்கள். இருவரும் வந்த பின் அவரவர் குடும்பச்சூழல், சோலி காரணமாக இருவருக்கும் தொடர்பு இருக்கவில்லை. இப்போது செத்த வீட்டிற்கு வந்துதான் சிவானந்தனின் உடலைப்பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

றும்
(30) பல்தான்
அஞ்சலியுரை ஒழுங்கு பண்ணிப் பேசத் தொடங்கி விட்டார்கள். தலைமையுரை நிகழ்த்துபவர் பேசினார்.
"அமரர்
சிவானந்தன் அவர்கள் தான் வாழுங்காலத்தில் பொதுப்பணி பொது நலம் என்ற சிந்தனையோடு செயற்பட்டவர். மற்றவர்களுக்கு உதவுவதில் உயிர் கொடுக்கவும் தயங்கமாட்டார் அவரது சிந்தனை செயல் யாவும், தான் மற்றவருக்கு எப்படிப் பயன்படலாம் என்பதாகத்தானிருந்தது.”
சிவானந்தன் பற்றி தலைவர்  ேப சு வ  ைத க'  ேக ட ட து ம இராஜேஸ்வரன் அதிர்ச்சிக் குள்ளாகி விட்டார். தான் வேறு யாரோ ஒரு சிவானந்தனின் செத்தவீட்டிற்கு வந்துவிட்டேனோ என்று கலவரம் அடைந்தார்.
“இது அவனாக இருக்க முடியாது. ஆனால் முகத்தைப் பார்க்கும் போது இறந்தபின்கொஞ்சம்கறுத்திருந்தாலும் அவன் மாதிரித்தானே இருந்தது. உ யோசித்தவாறு எழும்பிப்போய் எட்டிப்பார்த்தார். " ஊ ஹும்.... அவன் தான். அவனே தான். வழுக்கைத்தலை, பெரிய மூக்கு, நாடியில் சிறுவெட்டு .அவனே தான்”.
வந்து உட்கார்ந்தார். இப்போது இன்னொருவர் பேசினார்.
"சிவானந்தன் அவர்கள் குறுகிய மனப்பான்மையற்றவர், சுயநல மற்றவர், தன்னைப்பற்றி ஒருபோதும் சிந்தித்தது கிடையாது. தனிப்பட்ட இன்பதுன்பங்களில் பங்கெடுத்து அவசியமான உதவிகளைச் செய்பவர். பொறாமையென்பது அவரிடத்தில் கிஞ்சித்தம் கிடையாது. தன்னால் யாருக்கும் எந்தத்தீங்கும் ஏற்படக் கூடாது
என்பதில் கவனமாக இருந்தவர்.
கொற்றை பி. கிருஷ்ணானந்தன்

Page 32
این نتیجتالاقصی جهت خاصی به أصبح
இராஜேஸ்வரனுக்கு மீண்டும் சந்தேச வருடங்கள் சவூதியில் பத்து வருடங்கள், ஒ பற்றியா இவர்கள் பேசுகிறார்கள்!
யோசித்துக்கொண்டு மீண்டும் எழுந் பார்த்தார். அதே சிவானந்தன் தான சந்தேக
வந்து உட்கார்ந்தார்.
'அஞ்சலிச்கூட்டமென்றாலென்ன பார
சகசமப்பா” இராஜேஸ்வரன் தன்னைச் சமா
அன்று கந்தசஷ்டி விரதம் தொட செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரன் பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திளைத்திருந்தார்கள்.
பெரும்பாலான பக்தர்கள் அங்கே விரதம் அனுஷ்டிப்பவர்கள். சிலர் தி வீட்டிற்குப்போகிறார்கள்.
ஆட்டிறைச்சிக்கடையைத் தொழிலாக பக்தர் கந்தசஷஷ்டி விரதத்தைத் தவறாது க பரவசமாகி நின்று பூசை முடிந்ததும் சூரசங் கீழ் உட்கார்ந்திருந்தார்.
பூசை நடைபெற்றுக் கொண்டிருந் விரதகாரர் தன்னிடம் வந்து ஏதோ டே கதிரமலை அதற்குச் சந்தர்ப்பம் கொடுக் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் ஒவ்வொ வந்து உட்கார்ந்தார்கள்.
" என்ன கதிரமலை . நாளை முடியுது தானே வாற சனிக்கிழமை ஆடு ( கதிரமலை "ஆம்" எனத்தலையசைத்தார்.
"அப்ப, பெரியாட்டுக்கிடாயாப் பார்த் பங்கு .
" எனக்கு இரண்டாயிரம்" " எனக்கு ஆயிரம் ரூபாப்பங்கு " எனக்கு இரத்த வறைக்குரிய அனைத்ை கதிரமலை சம்மதித்தார். " அரோகரா அரோகரா" சத்தம் கேட்க எல்லோரும் திரும்பிப் பா வாசலைத் தாண்டி வீதியில் யுத்தத்திற்கு தயா முருகா, என்ற படியே அங்கே ஒடினார்கள்.
 

ம் வந்துவிட்டது. "கொழும்பில் மூன்று ன்றாக வேலை செய்த அந்தச் சிவானந்தன்
துபோய் ஆட்களுக்கு மேலாக எட்டிப் மில்லை.
ாட்டுவிழா என்றாலென்ன இதெல்லாம் தானப்படுத்திக்கொண்டார்.
31
ங்கி 6ம் நாள். தொண்டமனாறு ன்போர் ஆரம்பிப்பதற்கு முன்னரான பக்தர்கள் பக்தி வெள்ளத்தில் மூழ்கித்
யே ஆறு நாட்களும் தங்கியிருந்து னமும் வந்து பூசை கண்டதும்
க்கொண்ட கதிரமலையும் தீவிர முருக டுமையாக அனுஷ்டிப்பவர் பக்தியில் காரம் தொடங்கும் வரை ஆலமரத்தின்
3தபோது ஐந்து அல்லது ஆறு பச விரும்புவதை அவதானித்தாலும் கவில்லை. இப்போது ஆசுவாசமாக
ாருவராகக் கதிரமலைக்குப் பக்கத்தில்
ாக்குப் பாறணை எங்களுக்கு விரதம் வெட்டுறாய்தானே. gy
து எனக்கு ஒரு மூவாயிரம் ரூபாய்
தையும் தந்திடு
ர்த்தார்கள். சூரனும் முருகனும் ஆலய Tராக வருவதைக்கண்டதும் "அப்பனே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 33
UTகுலன் சோர்வோடு அந்தப் புடவைக் கடையை விட்டு இறங்கி வீதியில் நடந்தான். அவனுக்குப் பசி எடுத்தது. நடக்க முடியாமல் சோர்வாக இருந்தது. கொடிது, கொடிது வறுமை கொடிது அதிலும் இளமையில் வறுமை அதனிலும் கொடிது என எப்போதோ யாரோ சொன்னது அவனது நினைவுக்கு வந்தது. எங்கு போனாலும் வேலை காலி இல்லை என்கிறார்களே. இவர்களுக்கு இரக்கமே இல்லையா? இவர்களுக்காகப் போராடித்தானே இன்று இந்த நிலைமை
ஏற்பட்டது? ராகுலனுக்கு நெஞ்சை அடைத்து
கண்கள் பனித்தன.
காலம் எவ்வளவு வேகமாக இப்படி மாறிப் போய்விட்டது! ம். மனிதரில் இத்தனை நிறங்களா? .இரக்க சுபாவம் மனிதாபிமானம் எல்லாமே இவர்களிடமிருந்து விடை பெற்றுவிட்டதா? அவன் மனதில் ஆயிரம் கேள்விகள.
அவனுக்கு ஒரு வேலை வேண்டும். எந்த வேலையானாலும் பரவாயில்லை தன்னால் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் அவன் செய்யத் தயாராகவே இருந்தான். செயற்கைக்காலை இழுத்து இழுத்து அவன் மெல்ல மெல்ல நடப்பதைக் கண்டதுமே முதலாளிகள் முகத்தைச் சுழிப்பார்கள். அவர்களுக்கு ஒடி ஒடி வேலைசெய்யக் கூடியவர்களே தேவை. தொடைக்கு கீழே காலை இழந்துவிட்ட அவன் செயற்கைக் காலுடன் கவுடப்படுகிறான் என்ற அனுதாபம் எவருக்கும் இல்லை. இந்த மக்களின் விடுதலை வேட்கைக்காக போராடிய அவனுக்கு இந்த நிலை.
“எனக்கு முழுச்சம்பளம் தேவையில்லை. அரைச்சம்பளம் போதும் முதலாளி." அவன் கெஞ்சாதகுறையாக கேட்பான். அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.
எதிரிகளின் கையிலே அகப்பட்டால் உடனே குப்பியைக் கடிக்க வேண்டும். .
é
ug:
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013
 

பயிற்சியின் போது போதிக்கப்பட்டதை செய்திருந்தால் இன்று அவனுக்கு இந்த நிலையில்லை. எங்கிருந்தோ வந்து விழந்த செல் அவனது காலைப் பதம்பார்த்தபோது அவனால் எதனையும் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. இரத்தம் பெருக மெல்ல மெல்ல அவன் சுயநினைவிழந்த அந்தக் கொடிய நாள் இப்போதும் அவன் மனதில் முள்ளாய் வருத்துகிறது. மறுபடி அவன் கண்விழித்துப் பார்த்தபோது வவுனியா வைத்தியசாலையில் படுத்திருந்தான். ஒரு காலை இழந்து விட்டதை உணர நீண்டநேரம் பிடித்தது. அவனது உள்ளம் பொருமியது. அழுது ஆறதல் பெறுவதைத் தவிர தேற்றிட பாருமில்லை.
குணமானபின்னர்அவனுக்கு செயற்கைக் கால் பொருத்திய பின்னர் படையினர் அவனை புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள் காலை இழந்திருந்ததால் அவனை அவர்கள் துன்புறுத்தி விசாரிக்கவில்லை. அங்கு ஏற்கனவே இருந்தவர்கள், விசாரணையின்போது தாம்பட்ட வேதனைகள் பற்றி கூறியபோது இவனுடைய உள்ளம் கொதித்தது. புனர்வாழ்வு முகாமில் நிறையவே மூளைச்சலவை செய்யப்பட்டார்கள் சிலதொழில்பயிற்சியும்தந்துஇரண்டுவருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட போது வாழ்வு இனி மலரும் என்று அவனைப் போலவே அனைவரும் எதிர்பார்த்தார்கள் பெற்றோரிடம் அவர்களைக் கையளித்த தினத்தில் அவனது பெற்றோர்கள் வரவில்லை. மாமாதான் வந்திருந்தார். முள்ளிவாய்க்காலில் அம்மாவும், அப்பாவும் செல் வீச்சுக்குப் பலியானதையும், அவர்களை அடக்கம் செய்யவும் முடியாமல் அப்படியே விட்டு விட்டு உயிர் தப்பி வந்ததையும் மாமா
கூறியபோது அவன் உறைந்து போனான்.
ராகுலன் மாமாவுடன்தான் திரும்பினான் அவர்களது ஊர் சுடுகாடு போல் காட்சியளித்தது. மீள் குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகளின்றி, வதிவிட மின்றி,
31

Page 34
தொழிலின்றி கஸ்டப்பட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். மாமா குடும்பத்தினர் அவனுக்கு உணவளித்து பார்த்தாலும், அவர்களது நிலைமையும் கஷ்டம்தான் என்பதை அவன் கண்டுகொண்டான். அவர்களுக்கு சுமையாக இருக்காமல் ஏதாவது வேலை தேட முயன்றான். அவனது அங்கவீனமும், முன்னாள் போராளி என்ற பெயரும் அவனது வேலை தேடலுக்கு இடைஞ்சலாக இருந்தது. எனினும் மனம் சோராமல் அவன் இன்னமும் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கிறான்.
வேலை வேண்டாம்..ம்... அவனை யார்தான் மதிக்கிறார்கள்? தெரிந்தவர்கள்கூட கண்டு கொள்வதில்லை. ம்... இவர்கள் எல்லாம் ஏன் இப்படி மாறிப்போனார்கள். பரமசிவன்கழுத்திலிருந்தபோதுமதித்தவர்கள் இப்போது தடியையெடுத்து அடிக்காத குறை! இவர்கள் அவன் போராளியாக வலம்வந்தபோது காட்டிய பாசம் எல்லாம் பொய்வேஷம் தானா? வெறும் பயத்தினாலா அன்றி சுயநல நோக்கில் நடித்தார்கள்?
நீங்கள் எல்லாம் எங்கட இனத்தின்ர விடுதலைக்காக உயிரையும்
துச்சமாக மதித்து போராடுறியள். எங்கட பிள்ளையள் நீங்கள் என பரிவு காட்டி உணவும், ஊக்கமும் அளித்தார்களே, அவை எல்லாம் பொய்தானே? சீ.. கேவலம்! ஒரு சில வருஷத் திலை இத்தனை மாற்றங்களா? எங்களுக்குப் பக்கபலமாக நின்ற பொடியள் கூட அவங்களுக்குக் கொடி பிடிக்கிறாங்கள்ராகுலன் நெடுமூச்செறிந்தான்.
எத்தனை பேர் எத்தனை எத்தனை உதவியளைப் பெற்றவை. கொழும்புக்குப் போக பாஸ் எடுக்க முடியாதபோது சிலருக்கு உதவியிருக்கின்றான். இப்ப அந்தப் பொடியள் வெளிநாட்டில் நல்லாக இருக்கிறாங்கள். சின்ன மாமாவின்ர வசந்தி இயக்கத்திற்கு வந்திட்டாளெண்டு மாமாவும் மாமியும் அழுது குளறி அவனிடம் வந்தபோது தளபதியோட கதைச்சு அவளைவிடுவிச்சவன். இப்ப அவள் படிப்பிக்கிறாள். சின்னமாமாவை சரி, அவள் சரி ஒரு ஒப்புக்கொண்டாலும் அவனை வந்து பார்க்கவில்லை. படிக்கிற காலத்தில அவனைச் சுற்றி சுற்றி வந்து எதிர்பார்ப்போட பழகினதை எல்லாம் மறந்திட்டு கண்டதும் காணாதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போறாள். பெரிய மாமாவை மட்டும்தான் ஏதோ சொந்தத்தை மறவாமல்
அவனைக் கவனிக்கினம். அதுவும் எத்தனை நாளைக்கு?

குமர் பிள்ளையை வைச்சிருக்கிறனாங்கள். வீட்டோடமச்சான்காரனையும் வைச்சிருந்தா நாளைக்கு ஊர் என்ன சொல்லும்? என மாமியும் முணுமுணுக்கத் தொடங்கியிட்டா. மச்சாளும் அவனோட ஏனோ தானோ என்றுதான் பழகிறா- ராகுலனின் மனதில் போராட்டமாக இருக்கிறது.
ஏதாவது சிறியளவில் ஒரு கடையை ஊரோட திறக்கலாமெண்டாலும் முதல் இல்லை. வெளிநாட்டில் உள்ள சொந்தக் காரங்களும், நண்பர்களும் பெரிதாக உதவி செய்ய முன்வரவில்லை. ஓரிருவர் மட்டும் ஒப்புக்கு சிறு தொகை அனுப்பினார்கள். அதை மாமாவிடம் தான் கொடுத்தான். அவர்கள் பாடும் கஸ்டம் என்பதால் தண்டச் சோறு தின்ன அவனுக்கு மனம் வரவில்லை.)
மாமிதான் அப்பாவின்ர சகோதரி. மாமா பிறத்தி என்டாலும் அவனில் பாசம். எங்கட சுமதிக்கும் வயசு ஏறிக்கொண்டு போகுது பேசுற ஒரு இடமும் சரிவருகுதில்லை. எங்களிட்டையும் பெரிசாக காசுபண மென்டில்லை... சுமதியை ராகுலனுக்கு கட்டிவைச்சிட்டு வீட்டோட ஒரு கடையை போட்டுக் கொடுப்பம் என்று மாமியிடம் கூறியபோது மாமி வெகுண்டெழுந்தா. இந்த நொண்டியைக் கட்டிக்கொண்டு அவள் காலமெல்லாம் கஸ்டப்படுறதா?
இந்த உரையாடல் எதுவும் அவனுக்குத் தெரியாது அவன் மனதில் அப்படி ஒரு எண்ணமும் இல்லை. கால் போன பின் அவன் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. எனினும் இளமை உணர்வுகளின் உறுத்தல்களும், வாழ்வு பற்றிய ஆசாபாசமும் எல்லோரையும் போலவே அவனுக்கும் இருக்கவே செய்கின்றன.
முடவனாகி விட்ட பின்னர் வெளிநாடு போய்த்தான் என்ன செய்வது? அவனுக்குத் தெரிந்த சிலர் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டு அவுஸ்ரேலியாவுக்குப் போனார்கள். அப்பயணத்திற்குச் செலவிடக் கூடியளவு பணத்திற்கு எங்கே போவது? இந்தக் காலுடன் பயணிக்க முடியுமா? ஆபத்து ஏற்பட்டால் நீந்தத்தான் முடியுமா?
ஏமாற்றத்தோடு வீதியில் நடந்து கொண்டிருந்த ராகுலனுக்கு பசி வயிற்றை விறாண்டியது. பொக்கற்றில் சிறிதளவு பணமே இருந்தது. வீடு திரும்ப பஸ்ஸிற்கு பணம் வேண்டும். இப்போது சாப்பிட்டால் பஸ்ஸிற்கு போதாமலிருக்கும். சாப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டபடி நடந்தான்.
- "ஐயா, பசிக்குது... இரண்டு நாளாகச் சாப்பிடல்ல... தெருவோரத்திலிருந்த வயசான
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 35
aקה של כ-17% לחחחחוזר, אף > Då \\W\\||\|||| سفلی ཟེ་ * .ー 、 லுன
நொண்டிப் பிச்சைக்காரன் கெஞ்சினான். அவனுக்கு ó5@l@)@し)LssTー இருந்தது. தன்னிடமிருந்த பணத்தில் சில்லறையாக இருந்தவற்றை நீட்டிய ஏழையின் கையில் திணித்தான்.
இன்னும் சிறிது தூரம் நடந்தபோது வீதி ஒரத்தில் ஒரு பெண் சுவீப் ரிக்கற் விற்பனை செய்யகூவி அழைத்தாள். அவனுக்கு என்றுமே குருட்டு அதிஸ்டங்களில் நம்பிக்கையில்லை. அவனது அமைப்புநிர்வாகத்தில்இருந்தபோது இவ் விற்பனையை அனுமதித்ததில்லை. பலரிடம் சுரண்டி ஒருவருக்கு வழங்கி மீதமும் பார்க்கும் சுவீப்பை அவன் வெறுத்தான்.
விற்பனை செய்து கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை தொலைவிலிருந்து பார்க்கும்போது அவளது முகம் விகாரமாக இருந்தது. அழகான சிவந்த உடலுள்ள அந்தப் பெண்ணின் முகத்தின் ஒரு பக்கம் கருமை படர்ந்து கட்குழியில் போலிக் கண்
வைக்கப்பட்டிருப்பதை அவதானித்தான். ம் .இந்தக் கொடிய யுத்தம் எத்தனை பேரை அங்கவீனமாக்கிவிட்டது.
இத்தனை இழப்புகளுக்குப் பின்னர் எதைக் கண்டோம்?.ம். இருந்தும் இல்லாததாகி எல்லாம் புஸ்வாணமாகி . அவன் மனதில் வேதனை!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013
 

முன்னரெல்லாம் சிலர் சொல்வார்கள் "தலைவருடைய காலத்தில் எங்களுக்கு ஒரு விமோசனம் கிடைத்தால் தான் உண்டு. இல்லாட்டில் உங்கள பேய்க்காட்டிப் போடுவார்கள்.ஒ. எவ்வளவு யதார்த்தமான கூற்று என்பதை அவன் அந்த நாளில்
உணர்ந்திருக்கவில்லை. இலட்சியங்கள், இலக்குகள் யாவும் வெறும் கவலையாய் போய்விட்ட போருக்குப் பின்னரான
இன்றைய காலகட்டத்தில் இராஜ தந்திரமாக நடந்திருந்தால் எங்கட இனத்துக்கு இந்த அழிவு வந்திருக்காது. ம். அவருக்கு அமைப்பில் அதீத நம்பிக்கை. யார் எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டார். ராகுலன் நெடுமூச்செறிந்தான்.
அவன் அந்த சுவீப் ரிக்கற் விற்பவளை தாண்டிச் செல்கையில் அவள் அவனை உற்றுப் பார்ப்பதாக உணர்ந்தான். பசி ஒரு புறம், வேலை கிடைக்காத சலிப்பு ஒரு புறம். கடந்து நடந்து சென்றான்.
"ராகுலன்' பின்னாலே கேட்கும் அழைப்பு. திரும்பிப் பார்த்தான் "என்னைத் தெரியல்லையா..?" அவன் நெற்றியைச் சுருக்கியபடி அவளை நோக்கினான். முக அடையாளம் தெரியாவிட்டாலும் அந்தக் குரல் பரிச்சயமானதாக இருந்தது.
அவளும் அவனை நோக்கி வர
அவனும் அவளிடம் வந்தான். "நான் சாந்தி. வண்ணேரிக்குளம் மகளிர் படையணிப் பொறுப்பாளராக இருந்தனான். அப்ப நீங்கள் அக்கராயன் வலய அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்தனிங்க” அவளை இப்போது இவனுக்கு விளங்கியது. என்னமாய் ஓபி- ஓபி- சுறுசுறுப்பாக இயங்கியவன் ஒ. இன்று இப்படி ஒரு நிலையா?
அவனது மனதைக் கவர்ந்த அழகான போராளிப் பெண்ணாக இருந்த சாந்தி, சில போர் முனைகளில் சாதனை புரிந்த வீராங்கனை இயக்கத்தில் சேர்ந்து பத்து வருடங்கள் நிறைவு செய்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என அமைப்பு அறிவித்தபோது ராகுலனின் மனதில் தெரிந்தவள் சாந்திதான். இருவருக்கும்
சம்மதமென்றால் திருமணம் செய்து வைப்பார்கள்.
அவன் -9|6)/6006IT அணுகினான்.
அவள் அவன் சொல்வதை நிதானமாக உள்வாங்கினாள் சிறிது நேர அமைதியின் பின் சொன்னாள் "எனக்கு அந்த எண்ணம் இல்லை."
33

Page 36
"ஏன் என்னைப் பிடிக்கேல்லையோ?
"அப் படியில்லை...... கலியாணத்தில் எனக்கு உடன் பாடில்லை...”
தெளிவாகக் கூறிய அவளை உற்று நோக்கியபடி கேட்டான். "ஏன்?”
“நாங்கள் ஒரு இலட்சியத்தோட ஆயதம் ஏந்திப் போராடுறம்... திருமணபந்தம் அதுக்கு இடைஞ்சலாகிவிடும்.”
“தலைவரும் கட்டியிருக்கிறார் தானே? “அவர் ஆம்பிள்ளை, நீங்களும் ஆம்பிள்ளை ஆ ண க  ைள ப் பொறு த் த வ ரை யி ல் கட்டினபிறகும் போராடலாம்..... பெண்கள் அப்படியில்லை மகப்பேறு குழந்தை வளர்ப்பு எண்டு பல சோலி... போராட முடியாமல் தடங்கல் ஏற்படும்...”
சாந்தி நிதானமாகவும் உறுதியாகவும் உரையாடினாள். அவனுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. எனினும் “யோசியும்... ஒரு கிழமைக்குப் பிறகு வருவன்... நல்ல முடிவாகச்சொல்லுங்கோ”
அவன் ஒரு வாரம் கழித்து வந்தபோதும் அதே பதில். " நீங்கள் ஒரு வருஷம் கழித்துவந்தாலும் இதுதான் என்ர முடிவு... தயவு செய்து என்னை வற்புறுத்தாதையுங்க” அவளது உறுதியான பதில் அவனை நிதானப்படுத்தியது.
அதன் பின்னர் இயக்கப் பணிகளின் நிமித்தம் ஒரு தடவை மாத்திரம் சந்தித்திருக்கிறான். சில வருடங்கள் கழித்து இன்று இப்போதுதான் சந்திக்கிறான்.
இவரது கண்களும் பனித்தன. பரஸ்பரம் நலம் விசாரித்தார்கள். இருவர் நிலையும் ஒரேமாதிரியாகவே இருந்தது. இந்த நிலையிலும் ஏதோ உழைத்து உண்ண சுவீப் ரிக்கற் விற்கும் அவளைப்பார்க்க அவனுக்கு பெருமிதமாக இருந்தது.
| "ஒரு பெண்ணான உங்களுக்கு இருந்த வல்லமை எனக்கு இல்லாமல் போச்சு...”
அவன்பாராட்டும்போது அவள்சிரித்தாள் “உங்களுக்கு சோறு போட மாமாவாவது இருந்தார். எனக்கு யாருமே இருக்கவில்லை. வேறு வழி? நீர்த்துளிகள் அவள் கன்னத்தில் வடிந்தன.
“நானும் இனி மாமா வீட்டுக்குப் போறதில்லை. இங்கேயே ஏதாவது நடைபாதை வியாபாரம் செய்யப்போறன்.
முதல் தான் இல்லை” நெடுமூச்செறிந்தான்.
“யோசிக்காதையுங்கோ ராகுலன், எனக்கு அறிமுகமான மொத்த விற்பனைக் கடை ஒன்றிற்கு காலையில் கடனுக்கு சில
34

சாமான்களை வாங்கி வியாபாரம் செய்திட்டு பின்னேரம் பணம் செலுத்தலாம்.”
அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த போது அவனது மாமாக்களின் மகள்களான வசந்தியும் சுமதியும் வீதியின் மறுபக்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ராகுலன் அவர்களைக் கவனித்த போதிலும் அவர்கள் அவனைக் காணவில்லை. அவர்களை விட முகத்தில் எரிகாயம் பட்ட ஒரு கண்ணிழந்த சாந்தி பேரழகியாக அவனுக்குத் தெரிந்தாள்.
DIOபகலி
ஏங்குமே கொட்டித் தீர்க்காத கடும் மழையின் பின்னர் அந்த எறும்புகளின் இருப்பிடங்கள் தொலைந்திருக்கின்றன பல எறும்புகள் காணாமல் போயிருக்கின்றன எறும்புகளின் இருப்பிடங்கள் புதைகுழியாய் மாறியிருக்கின்றன
இழப்புகளோடும் எறும்புகளின் மீள் குடியேற்றம் புதிய வகை எறும்புகளின் ஆக்கிரமிப்பின் மத்தியில் இந்த எறும்புகள் இருப்பிடத்தைத் தேடியபடி இருண்டு போன வானம் மழைவருவதற்கான அறிகுறி... ஆனால் இங்கே எப்போதும் வானம் இருண்ட படியே இருக்கிறது.
ஆ. முல்லைதிவ்யன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 37
LDருத்துவர்கள் சட்டத்தரணிகள் என்று தொழில்சார் வேலைகளில் ஈடுபடுவோர் எப்பொழுதும் தம் அறிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் (UPDATE) என்பது எவரும் அறிந்த உண்மை இல்லையெனில் இவர்கள் தம்துறையில் தமக்கு இருக்கவேண்டிய அறிவின் போதாமை காரணமாக மக்களால் ஒதுக்கப்பட்டு விடுவர். இவர்களையும் விட இன்றுள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்பவர்களுக்கு இது இன்னும் முக்கியமானதாகக் கொள்ளப் படுகிறது. கலைஇலக்கிய உலகில்சதாநிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் புனைவுகளில் ஏற்படும் புதுமைகள், அவற்றின் கருத்தியல் பின்னணி, விமர்சனப் போக்கு என்பனபற்றி ഉഗ്ര எழுதுலகவாசி தெரியாதிருக்கும் பட்சத்தில் அவரிடமிருந்து எந்தவிதமான தற்புதுமை மிக்க படைப்புகள் வெளிவரப் போவதில்லை. அதனால் நாளடைவில் அவர் அலுப்புத் தட்டும் படைப்பாளியாக சீரியஸ்ஸான வாசகர்களால் ஒதுக்கப்பட்டு விடுவார்.
இன்று எழுதப்படும் அனேகமான சிறுகதைகள் என்பவற்றைப் பார்த்தால் அதை எழுதுவோர் எத்தகைய வாசிப்பின்மை என்கிற இருண்மையில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்பது தெரியவரும். 1930களில் சம்பந்தன், வைத்திலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கருப்பொருள் என்கிற மையத்தை நோக்கி ஒடிவரும் நேர்கோட்டு கதை சொல்லும் முறை எப்பவோ கைவிடப்பட்டு விட்டதென்பதை இவர்கள் இன்னும் அறியார் மேற்குலக 3.5LDjargija, Git. The LINEARITY OF CONVENTIONAL STORIES எப்பவோ கைவிடப்பட்டாயிற்று
என்று கூறியுள்ளனர். அண்மையில் ஷோபா சக்தியும் ரஞ்சகுமாரும் காலம் சஞ்சிகையில் வகையில்
அலுப்புத்தட்டும்
இத்தகை imiT。TL-sh Tணி
வீசஞ்சிகை - ஜனவரி 2013
Զ-Լ(ԼՔgh/Ա 1I(Այ[hջ։ ஞானம் - கலை இலக்
 
 
 
 
 

சிறுகதைகளைப் படித்துவிட்டு "இரண்டு கதை சொல்லிகளின் தோல்வி" என்று ஒரு கடிதம் அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரித்தார்களோ, இல்லையோ, நான றியேன். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இவர்கள் என்னதான் நல்ல ஆக்கங்களைத் தந்திருந்தாலும் மேலும் தம்மை வளப் படுத்தும், வாசிப்பின் தொடர்ச்சி இல்லை யென்றால் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டும் நிலை இவர்களிலும் தொற்றிவிடும்.
மேலே குறிப்பிட்ட கருப்பொருளை நோக்கிய நேர்கோட்டு கதை சொல்லும் முறைக்கு எதிரான போக்கு தமிழ் நாட்டில் எழுபதுகளில் ஆரம்பித்ததாகவும் ஈழத்திலும் அவ்வாறான கதைகளை அக்காலத்தில் எழுதினார்கள் என்றும் சிலரின் பெயர்களை தரும் விமர்சனங்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் உண்மை இதுவல்ல. 1965இல் புதுயுகம் பிறக்கிறது' என்ற சிறுகதைத் தொகுதி ஈழத்தில் வெளிவந்தபோது இது பிரக்ஞை பூர்வமாக நம்மரபு வரும் கதைகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது என்று சொல்வதே சரி. அத்தொகுப்பின் பின்னுரையில் அதன் ஆசிரியர். "..... மொத்தத்தில் இத்தொகுப்பு ஒருANT மரபு, ANT உருவம், ANT உள்ளடக்கம் என்பதற்குரியது" என்று தெட்டத் தெளிவாகக் கூறுகிறார். இத்தொகுப்பு ஒரு தமிழ் நாட்டுக்கும் முன்னுதாரணமாக நிற்கிறதென்றால் மிகை யாகாது. இவ்விஷயங்கள் பற்றி நான் குறிப்பிட்ட விமர்சகர்கள் நன்கறிவர். ஆனால் நான் குறிப்பிட்ட சிறுகதைத் தொகுப்பையோ அதன் ஆசிரியரைப் பற்றியோ இவர்கள் தம் ஒவ்வாமை காரணமாக ஒத்துக் கொள்ளாது மூடி மறைக்கவே செய்வர் என்பது எவரும் அறிந்த உண்மை.
சிறுகதை எழுதுவோர் மையமாகக் கொள்ளும் கருப்பொருளை, "கதாசம்பவிந்து'
-என்று-நீட்டிடமுழக்கி பெயரிட்டழைப்பழ்

Page 38
எஸ். பொ. ஆனால் அவர் கூட இத்தகைய மரபு உடைப்புகள் பற்றிய பிரக்ஞை உடையவராய் இருந்ததில்லை. அவர் மரபு உடைப்பு என நினைத்தது. தனது சொல்லலங்கார உத்திகளையே. அவர் 'ஆண்மை' என்ற ஒரே தலைப்பில் எழுதிய கதைகள், மற்றும் இதற்கு முன்னர் 'மத்தாப்பு' என்ற ஒரே தலைப்பில் வேறு சிலரோடு சேர்ந்து எழுதிய கதைகள் என்கிற வகையாறாக்களே அவரது மரபுடைப்பாகும். பின்னர் அவர் எழுதிய “தேர்', மற்றும் “நன்விடை தோய்தல்' போன்றவற்றை அவரது “கதாசம்பவித்துவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கதைகளுக்கு உதாரணமாகக் காட்டலாம்.
இன்று இலங்கையில் - இளம் எழுத்தாளர்கள் பலர் கதைகள் எழுதிய வண்ணம் இருக்கிறார்கள். இவர்களுக்கு நேர் கோட்டு கதை சொல்லலுக்கு எதிரான மையமற்ற கதைகள் பற்றிச் சொன்னால் விளங்குமா? சாத்தர் எழுதிய (SATARE) INTIMACY தொகுதியில் உள்ள கதைகளை இவர்கள் எவ்வாறு விளங்கிக் கொள்வர்? இப்போ பலரால் எழுதப்படும் ESSAY TYPE STORIES இவர்களால் விளங்கிக் கூடியனவாய் இருக்குமா?
கருப்பொருள் என்கிற மையத்தை தூக்கி எறியும் கதைகள் தான் எழுதவேண்டும் என்று கட்டாயம் இல்லை. மையத்தை முன்னிறுத்தி எழுதுவோர், ஏனைய மையமற்ற கதைகள், கட்டுரைக் கதைகள், கவிதையாய் விரியும் கதைகள் என்பவற்றையும் அறிந்து கொண்டு, அவை அப்படியேன் எழுதப்பட வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு தம் கதைகளை எழுதினால் அவற்றின் தாக்கம் வித்தியாசமாய் இருக்குமென்று நான் நினைக்கிறேன்.
நூல் அறிமுகத்திற்கு நூல்களை வேண்டும். ஒரு பிரதியை 0 கம் இடம்பெற மாட்டாது. ! அறிமுகத்திற்கு ஏற்றுக் கொள்:
அறிமுகம்

அண்மையில் வெளிவந்த கீதாகணோசின் கன்னித் தொகுப்பான 'எத்தனங்களில்' காணப்படும் கதைகள் மரபு ரீதியான மையத்தை முன்வைத்துச் சொல்லப்படும் கதைகளே. ஆனால் இக்கதைகளில் தூக் கலாகத் தெரியும் வித்தியாசமான 'வீர்யம்' அவற்றுக்கு தனிமுத்திரை குத்துவனவாய் உள்ளன. தடுப்பு முகாம்களில் இருந்து விடுதலையாகி வருவோரை மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்பதை மிகுந்த உயிர்த்துவத்தோடு, 'அவர்கள் அழவே இல்லை' என்ற கதையில் அவர் விபரிக்கிறார். 'இவர்களுக்காகவா நாம் போராடினோம்' என்று ஒரு கட்டத்தில் அவர் எழுப்பும் கேள்வி எவரையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. யாழ்தர்மினிபத்மநாதனின் எங்கடகதைதான்' என்றதொகுப்பிலும் இத்தகையகதையொன்று உள்ளது. இளம் எழுத்தாளர்களில் தர்மினி பத்மநாதனின் 'எங்கட கதைதான்' தொகுதியில் உள்ள கதைகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்விடத்தில் ஈழத்து இலக்கிய உலகில் நடைபெறும் இன்னொரு 'இலக்கியத் துஷ்பிரயோகம்' பற்றியும் குறிப்பிடுவது
அவசியம். ஈழத்து இலக்கிய உலகில் யாராலும் அறியப்படாதவர்கள் தமது இலக்கிய ஆக்கங்கள் மூலம் தம்மை இது காலவரை தெரியப்படுத்தாதவர்கள், திடீரென தம் 'படைப்புகளை' இந்தி மொழியில் வெளியிட்டு பெரும் சேவை செய்வதாகக் கூறும் இலக்கிய துஷ்பிரயோகங்கள் பற்றியும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும், இந்தப் பொய்மைகளை ஊக்குவிக்காது இருக்கவும் முனைப்புக் கொள்ள வேண்டும்.
யாரால ஈழக் அறியும் - இலக்கியம்
ா அனுப்புபவர்கள் இரண்டு பிரதிககளை அனுப்ப ட்டும் அனுப்பினால் அதற்கான நூல் அறிமுஒரு வருடத்திற்குள் வெளிவந்தநூல்களே நூல் ரப்படும்.
- குறிஞ்சி நாடன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 39
சிம் காலம் 1ம் நலம்
- நிகழ்வும்
இலக்கியக்களத்தில் சாரதா என்றொரு சஞ்சிகை
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை நிகழ்வில் "யாத்ரா' ஆசிரியர் அஷ்ரப் சிஹாப்தீ உரையாற்றினார். இந்நிகழ்விற்கு கொழும்புத் த ஜீவா தலைமை வகித்தார்.
நூல்தேட்டம் தமிழ் நூலியலாளர் என் செல்வராஜா சொற்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெ லண்டனிலிருந்து நூல்தேட்டம் என்ற பெயரில் உலகளாவிய ரீதியில் தேடித் தொகுத்து பதிவா “புலம் பெயர்நாடுகளில் ஈழத்து நூல்களின் வ உரையாற்றினார். அந்நிகழ்விற்கு ஞானம் சஞ் ஞானசேகரன் தலைமை வகித்தார். உரையாற்றி சங்க வெளியீடுகளை சங்கத்துணைத்தலைவர் வழங்கி கெளரவம் செய்தார்.
பொங்கல் திருநாள்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநா. ஜெயராசா தலைமையில் வெகு விமரிசையா பார்த்தீபன், விக்னேஸ்வரன் இரகுராம் ஆகி இந்நிகழ்வில் இலக்கியப்பணிச் செயலாளர் மு. தையில் பொங்குவது என்ன? என்ற தலைப்பில் என்று மு.மயுரன்,ஹரிசன், எழில்மொழி இராஜ கே.என் சண்முகதாசன், சுகந்தன், ஆகியோர் கா சிறப்பு சொற்பொழிவை அடுத்து திருமதி பா கலைக்கோவில் மாணவிகள் வழங்கிய “அபிந பெற்றது. கொழும்புத் தமிழ்ச் சங்க துணைச் செ
" இலக்கவரன் 9 விமரிநோ
உபாலி லீலாரத்னாவின் ஐந்து நூல்களின் வெளியீடு
இலங்கையின் பிரபல மொழிபெயர்ப்ப மொழிபெயர்க்கப்பட்ட மூன்று நூல்களினது "பஸ்தியங்மாமா” ஆகிய நூல்களினதும் வெளிப் ஆவணமாக்கல் சபை கேட்போர் கூடத்தில் சிங். அமரசிங்க குடகல் ஆர தலைமையில்(17.01. அதிதியாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அனுலா டி சில்வா, திம்பிரியாகம பண்டார திக்குவல்லை கமால், ரவி ரத்னவேல் ஆகியோ, எழுத்தாளர் வவுனியூர் (லண்டன்) இரா.உதயம்
போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

அடுற ர்
கே. பொன்னுத்துரை
மகளில் நடத்தும் இலக்கியக்களம்(04.01.2013) ன் சாரதா என்றொரு சஞ்சிகை என்ற தலைப்பில் மிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் அந்தனி
பொழிவு றும் அறிவோர் ஒன்றுகூடலில் (09.01.2013) இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை க்கிவரும் தமிழ் நூலியலாளர் என் செல்வராஜா விநியோகமும் விரிவாக்கமும்” என்றதலைப்பில் 5சிகையின் ஆசிரியர் வைத்தியகலாநிதி தி. ய தமிழ் நூலியலாளர் என் செல்வராஜாவிற்கு - வைத்தியகலாநிதி ஜின்னாஹ் ஷரிப்புத்தீன்
எள் நிகழ்வைச் சங்கத்தலைவர் பேராசிரியர் சபா. க கொண்டாடியது. செல்வன்கள் ஜெயநந்தன் யோரின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான தயாபரன் வரவேற்புரை நிகழ்த்தினார். "பூக்கிற - கவிஞர் சடாகோபன் தலைமையில் நெருப்பு -குலேந்திரா ஆகியோர் கவிபடிக்க, நீர் என்று விபடைத்தனர்.திருமதி கோகிலா மகேந்திரனின் வானி குகப்பிரியாவின் கொழும்பு தியாகராஜ பயச்சரம்” நடனம் சபையோரின் பாராட்டைப் யலாளர் ப.க. மகாதேவா நன்றியுரை நல்கினார்.
Tளர் உபாலி லீலாரத்னாவின் சிங்களத்தில் தும், தனது சுய படைப்பான "தேகஹட்ட” யீட்டு விழா தேசிய நூலக ஆவண சேவைகள் கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஆலோசகர் 2013) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு கலந்து சிறப்பித்தார். நூல்களைப்பற்றி திருமதி ர, மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் ர் உரையாற்றினார்கள்.சாகித்திய விருது பெற்ற ணன் உபாலி லீலாரத்னாவிற்கு பொன்னாடை

Page 40
தமிழ்த்தூது வணபிதா தனிநாயகம் அடிகளாரின் நினைவு
தமிழ்த்தூது வணபிதா தனிநாயகம் அடிகள் தமிழ்ச் சங்கம் நினைவுப்பரவல் நிகழ்வைத் தலை (18.01.2013) நடத்தியது. இந்நிகழ்வில் வரவே "தமிழ்த்தூதரும் தமிழியலும்” என்ற தலைப்பு நன்றியுரையை இலக்கியக்குழு செயலாளர் மு. த
அரச சாகித்திய விருது பெற்ற நாவலாசிரியர் நீ. பி. அ
| "பதினான்காம் நாள் சந்திரன்” (நாவல்), மொழிபெயர்ப்பு) சிறுகதைத் தொகுதி ஆகிய 8 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மண மண்டபத்தில் "அரச சாகித்திய விருது பெற்ற (லண்டன்) தலைமையில் நடைபெற்றது. திரும் ஆரம்பமாகிய இவ்விழாவில் வரவேற்புரையை ( ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்த, முதன்மை பொருளாளரும், மட்டக்களப்பு மாவட்ட வர்த்த புரவலர் வி. றஞ்சிதமூர்த்தி கலந்து சிறப்பு 6 கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய அதிபர்கன ஆசிரியர் கவிஞர் த. இன்பராசா ஆகியோரும் க கே. முருகானந்தன் வழங்கினார்.
| “பதினான்காம் நாள் சந்திரன்”நாவலின் | கோபாலகிருஷ்ணனும், ஆங்கில மொழிப்1ெ திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனும் வழங்கி சோ. தேவராசா வழங்கினார். "பதினான்காம் நா ணம்”- அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் be Denied" சிறுகதை (ஆங்கில மொழிப்பெயர்ப்பு வேலழகன் பெற்று சிறப்பு செய்தார். ஏற்புரையை
கொழும்பில் நாவலர் விழா
கொழும்புத் தமிழச் சங்கம் “நாவலர்" விழா சங்கத்தலைவர் பேராசிரியர் சபா. ஜெயரா இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்களின் இவ்விழாவில் வரவேற்புரையை கல்விக்குழுச் ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவச் சிை ஆறுமுகநாவலர் பெருமானின் பணியை மேன் நிறுவனர் ந. கருணையானந்தனுக்கு பேராசி கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது. அகில போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பத வழங்கி வைக்கப்பட்டன.வாழ்த்துரையை சங்கத் துணைவியூர் கேசவன் “நாவலர் வாழ்வும் பணி நிகழ்த்தினார். “இலங்கையர்கோன் நினைவுப் 6 கொழும்புத்தமிழச் சங்க ஆட்சிக்குழு உறுப்பி உரையாற்றினார். அத்துடன் “இலங்கையர்! வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பை அவர்
கொழும்புத் தமிழச் சங்கம் நடத்திய குறுந்தி பெற்ற “விளைவு” “த.மூன்” " (The Moon)" “பால்மர் பரிசுகளும் வழங்கப்பட்டன. "குறுந்திரைப்பட கொழும்புத் தமிழச் சங்க ஆட்சிக்குழு உறுப்பின நிகழ்வின் இறுதியாக கொழும்புத் தமிழச் சங்க ெ நன்றியுரை நிகழ்த்தினார்.

ப்பரவல் Tாரின் நூற்றாண்டை முன்னிட்டு கொழும்புத் வர் பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் பற்புரையை மர். கணபதிப்பிள்ளை நிகழ்த்த, பில் தெ. மதுசூதனன் உரை நிகழ்த்தினார்.
யாபரன் வழங்கினார்.
நளானந்தத்தின் இரு நூல்கள் வெளியீடு "Changes Cannot be Denied" என்ற (ஆங்கில இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா (கடந்த
க்கு) கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை > படைப்பாளி வவுனியூர் இரா.உதயணன் தி றஜனி சந்திரலிங்கத்தின் தமிழ் வாழ்த்துடன் கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச்செயலாளர் ம விருந்தினராக மட்டக்களப்பு தமிழ்ச் சங்க க, கைத்தொழில், விவசாய சம்மேளன தலைவர் செய்தார். சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு எபதிப்பிள்ளை பிரபாகரன், "கதிரவன்” சஞ்சிகை மந்து கொள்ள, வாழ்த்துரையை மருத்துவர் எம்.
அறிமுகவுரையை "செங்கதிர்” ஆசிரியர் த. பயர்ப்பு நூலின் அறிமுகவுரையை பிரபல னார்கள். நாவலின் நயவுரையை சட்டத்தரணி ள் சந்திரன்” நாவலின் முதற்பிரதியை “கலாபூஷ (ஸ்தபதி) பெற்றுக் கொள்ள, "Changes Cannot பு) நூலினை புனைகதை எழுத்தாளர் ஆ.மு.சி. ப நீ. பி. அருளானந்தம் நிகழ்த்தினார்.
வை (26.01.2013) சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஈசா தலைமையில் நடத்தியது. கொழும்பு - தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிய செயலாளர் க.க. உதயகுமார் நிகழ்த்தினார். "லக்கு பூஜை ஆராதனையும் இடம் பெற்றது. மையுறச் செய்துவரும் நாவலர் நற்பணி மன்ற சியர் சபா. ஜெயராசா அவர்களால் சிறப்பு - இலங்கைரீதியில் நடைபெற்ற கட்டுரைப் க்கமும், பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் துணைத் தலைவர் மு.கதிர்காமநாதன் நிகழ்த்த, பும்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு போட்டிச் சிறுகதைகள்” பற்றிய அவதானத்தை
னர் திருமதி வசந்தி தயாபரன் முன்னிறுத்தி கோன் நினைவு சிறுகதைகள் போட்டியில் என் மகன் திரு. ஜெயவர்தன் வழங்கி வைத்தார். ரைப்படப் போட்டியில் முதல் மூன்று பரிசுகள் ரம்” ஆகிய படங்கள் காட்டப் பட்டு அதற்கான
ம் பற்றிய ஒரு பார்வை” என்ற தலைப்பில் எர் கலைஞர் கலைச்செல்வன் உரையாற்றினார். பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 41
ஞானம்
ஞா "போர் இல
பற்றி
mil இலக்கியம் இறபிரம்
போலதமிழ் தில் பேதொடர்பு
கொழும்பிலிருந்து
பன்னிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் தரமான இலக்கிய இதழாகிய 'ஞானம்' இதழின் ஆசிரியர் திரு.ஞானசேகரன். 150ஆவது 'ஞானம்' சிறப்பிதழ் என்ற முறையில் சிறப்பாக அணியப்படுத்தியிருக்கிற போர் இலக்கியம் என்ற 600 பக்க அளவிலான இலக்கிய இதழை, கொழும்பில்சென்றமாத இறுதியில் வெளியிட்ட கையோடு தமிழகத்திற்கு, மகனோடு வந்தார். திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை முதலிய நகரங்களில் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு தமிழின் மிக முக்கியமான இந்த நூலை அறிமுகப்படுத்துவது அவரது நோக்கம். இம்மாதம் முதல்வார இறுதியில் கோவையில் சிபி அகாடமியில் இலக்கிய நண்பர்கள் பலரை அவர்சந்தித்து உரையாடினார். போர்இலக்கியம் என்பது புலம்பெயர் தமிழிலக்கியம் என்பது போலதமிழிலக்கியப் பரப்பில் இன்னொருவகை என்றார். ஈழத்தில் போர் நடைபெற்ற முப்பதாண்டுக்கிடையிலான போர் தொடர்பாக எழுதப்பட்ட 45 கட்டுரைகள், 43 கவிதைகள், 26 சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் பெருநூல் இலங்கையில் விலை ரூ.1500/- தமிழகத்தில் விலை ரூ.600/- என்று குறிப்பிட்டார். தரமான இலக்கியத் தொகுப்பு. ஈழத் தமிழறிஞர்க்கே இது சாத்தியம். ஈழம் மக்கள் விடுதலைக்கு துரோகம் செய்த 'இந்திய' தமிழராகிய நாம் இதற்காகவும் தான் தலைகுனிய வேண்டும். ஈழப்போருக்கு அனுசர ணையான படைப்புகள் மட்டு மல்லாமல் ஈழப்போரை திறனாய்வுக்கு உட்படுத்தும் கட்டுரைகள் முதலியனவும் இத்தொகுப்பில்
உள்ளன. குறைந்த கால்
அளவில்
கோவை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

னம் 150ஆவது மக்கியச் சிறப்பிதழ்”
ப ஓர் பார்வை
Tக
முக்கியமான கட்டுரைகள் பலவற்றை நான் படித்துப் பார்த்த பொழுது பெரும் வியப்படைந்தேன். இத்துணை தரமாக நம்மவரால் எழுத முடியுமா? என்பதும் என்
சிந்தனை.
போர்க்காலத்திலேயேதம்வெவ்வேறு இனம் என்ற முறையில் வடக்கில் உள்ள தமிழர்க்கும் கிழக்கில் உள்ள இசுலாமியர்க்குமிடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. தமிழ் குழுக்களுக்கிடையிலும் பிளவும் மோதலும் ஏற்பட்டன. இவை குறித்தெல்லாம் இலக்கியப் படைப்புகள் எழுந்துள்ளன. ஈழத்துப் பெண்களின் போர்த்திறன் குறித்தும் கல்வித்திறன் குறித்தும் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். இந்திய அமைதிப் படை செய்த அக்கிரமங்கள் குறித்தும் படைப்புகள் இத்தொகுப்பில் உள்ளன. கட்டுரைகள் அனைத்தும் விவரத் தொகுப்புகளாக உள்ளன. குறிப்பாக சொல்வதென்றால் நம் காலத் தமிழிலக்கியத்திற்கு மாபெரும் வரவு என்ற முறையில்நம்அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய தொகுப்பு இந்தப் பெருநூல்.
'ஞானம்' இதழாசிரியர் திரு.ஞானசேகரன்
கோவை இலக்கிய சந்திப்பின் போது தன்னைப் பற்றியும் சில விவரங்களை வெளிப் படையாக எங்களோடு பகிர்ந்து கொண்டார். சென்ற ஆண்டு கொழும்பில் சனவரியில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு பற்றி, மாநாட்டில் தன்பங்கு பற்றிக் கூறினார். தனக்கென அரசியல் சார்பு இல்லையென்றாலும் ஈழத் தமிழரின் விடுதலையை தான் என்றும் போற்றி வந்தது குறித்துச் சொன்னார்.
மருத்துவராக மலையகத் தமிழர் மத்தியில் பல்லாண்டுகள்
0 நான்
39

Page 42
பணியாற்றியபோது மலையகத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் செயல்பட்டது பற்றித்தான்எழுதிய 'குருதிமலை' என்றதன்நாவல்பற்றிச் சொன்னார். இலங்கையில் தமிழ்க் குடும்பங்கள் எங்கு வாழ்ந்தபோதிலும் போரின் பாதிப்புக்கு உள்ளாகாத குடும்பம் என்று எதுவும் இல்லை என்றார். தன் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சில கடுமையான பாதிப்புகள் குறித்தும் சில விவரங்கள் மட்டும் கூறினார். தமிழில் முதன்முறையாக திருத்தமான தொல்காப்பியத்திற்கு இளம் பூரணர் உரையை பதிப்பித்தவராகிய மரியாதைக்குரிய கணேச ஐயரின் பேரன்தான் திரு.ஞானம். தரமான இலக்கிய ஆய்விதழாகிய 'ஞானம்' இதழுக்கு நிகராக தமிழ் இதழ் என்று எதையும் குறிப்பிடுவதற்கு இல்லை. கடுமையான போர்க்காலத்திலும் இடைவிடாமல்
N பவளவிழா நாயகர் கலா
கவிஞர் ஏ. இக்பா
கவிஞர், சிறுகதை ஆசிரியர்,விமர்சகர், ப நூலாசிரியர், வெளியீட்டாளர், சமூக உ பன்முகங்களைக்கொண்ட கவிஞர் இக்பால் ஆண்டில் திகழ்கிறார் என்பது கலை இலக்கிய தரும் விடயமாகும்.
இளம் வயதிலிருந்தே முற்போக்கு சங்கத்துடனும் அதன் ஆதரவாளர்களுட தொடர்புகள் இவரது இலக்கிய நோக்கை ஒ வெளிக்குக் கொண்டு சென்றது.
- பத்தொன்பதாவது வயதிலேயே த மலர் நடத்திய சிறுகதைப்போட்டியில் மு; எழுத்தாளரானார்.
அக்கரைப் பற்று மாணவர் மன்றம் 19 அன்று முதல் தனது பெயருக்கு முன்னால் “க வருகிறார்.
இவர் எழுதிய “மறுமலர்ச்சித் தந்தை எ மண்டலப் பரிசு கிடைத்தது. அறிஞர் எம். சீ. அறிமுகப்படுத்தியதன் மூலம் மிக இளம் வயதி என்ற சாதனையை இவர் தனதாக்கிக் கொண்
தமது ஆக்கங்களுக்காக கலாசார அலு விருது வழங்கப்பட்ட இவரை, தேசிய இலக் பட்டங்களையும், அல்-ஹிக்மா தொழில் ! பட்டத்தினையும் அக்கரைப்பற்று மக்கள் மா உலக இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகத்தின, கெளரவித்துள்ளனர்.
இவரது கல்விப் பணியின் உச்சமா அமைச்சின் பாடநூல் ஆலோசனை உறு! பணியாற்றியுள்ளார்.
பவளவிழா ஆண்டில் கால்பதித்துள்ளவாழ்ந்து தமது இலக்கியப் பணியினை மெ வாழ்த்தி மகிழ்கிறது.

மாதந்தோறும் இலக்கிய இதழை இவர் கொண்டு வந்திருக்கிறார். ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப்போர் தொடர்பாக நாமும் தான் அங்கும் இங்கும் என சில கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். இவற்றின் தரம் பற்றியும் தகுதிபற்றியும் நம்மால் பெரிதாகச் சொல்வதற்கில்லை என்றாலும் ஈழத்தின் போர் தொடர்பான ஒரு சிறு இலக்கியத் தொகுப்பையாவது நம்மவர் தொகுத்து பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும். போர் இலக்கியம் எனப் புறநானூற்றைக் கொண்டாடும் தகுதி ஈழத் தமிழருக்குத்தான் இருக்கிறது. இந்தியாவிற்குள் முடங்கியிருந்து எதை நாம் சாதித்துக் கொண்டோம். தன்மானம்
முதலியவற்றை இழந்ததைத் தவிர.
நன்றி: புதுப்புனல், ஜனவரி 2013 NAA
பூஷணம்
பத்தி எழுத்தாளர், ஊழியர் எனப் தனது பவளவிழா ப உலகில் மகிழ்வு
5 எழுத்தாளர் டனும் ஏற்பட்ட ஒரு பரந்து பட்ட
தினகரன் புதன்
தற்பரிசு பெற்றதன் மூலம் இவர் நாடறிந்த
71ல் இவருக்கு கவிஞர் விருது வழங்கியது. விஞர்” என்ற அடைமொழியை உபயோகித்து
ன்ற நூலுக்கு 1972 ஆம் ஆண்டில் சாகித்திய சித்திலெப்பையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு மலேசாகித்திய மண்டலவிருதினைப்பெற்றவர் Fடார். "வல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் 5கியப் பேரவை கலைஞர், இலக்கிய மாமணி நுட்ப நிலையம் இலக்கிய வாருதி என்னும் ன்றம் இலக்கிய விற்பன்னர் பட்டத்தினையும், ர் கௌரவப் பத்திரத்தினையும் வழங்கிக்
க 1971- 1976 காலப்பகுதியில் கல்வி ப்பினராகவும் பாடநூல் எழுத்தாளராகவும்
கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் பல்லாண்டு மன்மேலும் தொடரவேண்டும் என ஞானம்
NNCNN
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 43
'ஞானம்' சஞ்சிகை நடத்திய செம்பியன் செல்
ஞாபகார்த்தக் கவிதைப் போட்டி 2012 மூன்றாம் பரிசு பெற்ற கவி
பென்சனை எடுத்துவரக் கச்சேரிக்கு
போகநான் புறப்படும் போது எந்தன் பெண்சாதி மெதுவாகப் பக்கம்வந்து,
பிரியமுடன் எனைப்பார்த்துப் பேசலானாள் “என்னயிது முகமெல்லாம் முடி வளர்ந்து
இராவணன் மீசையாட்டம்! எதிரேநிற்கும் என் கண்ணைத் துளைக்கிறது! ஜீ-ஏ- பார்த்தால்
ஏசுவார், இரப்பதற்கா வந்தீர் என்பார் போட்டிருக்கும் 'சேட்' கூடப் புனிதமில்லை,
பிச்சைவாங்கப் போனாலும் புனிதம் கெட்டால் கேட்டவுடன் யார்தருவார் நமக்குப் பிச்சை?
கேவலமாய்ப் பார்ப்பார்கள், ஐயாமார்கள் காட்டமாட்டார் 'பேசீற்றைக், கடன்பட்டாச்சும்
கொக்குவெள்ளைச் சேட்டணிந்து, மீசை, தாடி நீட்டாமல் மளித்தவற்றை மகிழ்ச்சியோடு
நிம்மதியாய்ப் போய்வருக!” என்றாளில்லாள்.
கலைஞருக்கு அரசளிக்கும் கெளரவமாய்
காசாக இரண்டாயிரம் மாதாமாதம் வழங்குகின்ற பென்சனதை விடியற்காலை
வாங்குவதற்கு நான்போக வேண்டும்; எங்கள் கலைவளர்க்கும் கலாசாரப் பதவிபார்க்கும்
கந்தசாமி ஐயாதான் சொன்னார் நேற்று, இதை எவர்க்கும் இதுவரைநான் சொல்லவில்லை.
எப்படித்தான் இதையறிந்தாள் என்மனைவி? காலமெல்லாம் கதைகவிதை எழுதியெந்தன்
காலத்தைக் கடத்தியதால் முடிகளெல்லாம் பால்வெள்ளை நிறமாச்சு, வயதும் ஏழு
-பத்துக்கும் மேல்தாண்டி, நோயும் வந்து கால்கைகள் கடுக்கிறது, மேலேயுள்ள
கடவுளிதைக் கண்டுதானோ பாவமென்று ஊழ்வினையை முடித்து, இந்த உதவிசெய்தான்?
ஓ இன்னும் எத்தனைநாள் உயிர்வாழ்வேனோ? ஏற்கனவே நாம்பெற்ற இருமைந்தர்கள்
இன்றிருந்தால் ஓரளவு எங்கள்வாழ்வு ஏற்றமொன்றும் பெறாவிடினும், கவலையின்றி
இலைக்கஞ்சி வைத்தாச்சும் வாழ்ந்திருப்போம் ஆற்றலுள்ள மக்களவர், தமிழ் ஈழத்தை
அமைத்திடுவோம்! என்றவரின் பின்னால் சென்று, கூற்றுவனாய் வந்தஆமிக் கூட்டத்தாரால்
கொலையுண்டு இடைநடுவில் தொலைந்து போனார்.
கலைஞர் பென்சயின்டுக்கப்போன கவிஞ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

வன்
தை
- செ. குணரத்தினம்
மனைவியும், நானுமாய் மாதாமாதம்
மடிப்பிச்சை போலெடுக்கும் பிச்சைக்காசை இணைந்து போய் எடுப்பதுவும், எழுதிவந்த
என்னுடைய கதைகளுக்கு பேப்பர்காரர் அனுப்புகின்ற பணமும்தான் எங்கள்வாழ்வில்
ஆறுதலைத் தருகிறது, இதற்கும்மேலே எனக்கில்லை சொல்வதற்கு! என்ன செய்வோம்?
எழுத்தாளர் பென்சனைத்தான் எதிர்பார்க்கின்றேன் என்மனைவி சொன்னதுபோல் சவரம்செய்து
இரவலுக்கு சேட்வாங்கி அணிந்து கொண்டு, சொன்னபடி கச்சேரி வாசல் சென்றேன்
சிலகலைஞர் அங்கிருந்தார் கிழவனென்போல். “இன்னுமெங்கள் கலாசாரக் கிளாக்கரய்யா
இங்குவரக் காணோமே!” எங்கே போனார்? ஒன்பதுக்கும் மேலாச்சே இப்போ நேரம்!”
"ஓமெ”ன்றார், அவர்பக்கம் போயமர்ந்தேன். ஒன்பதென்றும் பத்தென்றும் நேரமோட
உட்காந்து இருந்தோம் நாம், ஒருவர்கூட அங்குவரக் காணவில்லை, “ஐயாமார்கள்
ஆறதலாய்த் தான்வருவார்; ஆனதாலே முன்செய்த வினையிதென்று மூடிவாயை
மூச்சைவிட்டுக் காத்திருப்போம்!” என்று நானே முன்வைத்த யோசனையைக் கேட்டிருந்தோர்
முகம் வாடிப் பார்த்திருக்க, ஐயா வந்தார் கந்தசாமி ஐயா தான் கலை வளர்க்கும்
கலாசாரப் பகுதிக்குத் தலைவராவார். வந்திருந்த சகலருமே எழுந்து நின்று
'வணக்கமய்யா' என்றார்கள், நானும் சொன்னேன். அந்தளவில் கதிரையில்போய் அவரமந்து,
அனைவரையும் ஆசனத்தில் அமரச்சொல்லி முந்தியெனை வருமாறு அழைத்தார், போனேன்.
முகமெல்லாம் வாட்டமுற என்னைப் பார்த்தார். 'நீண்டகாலம் கலைக்காக உழைத்தீரென்று
நானுன்னை சிபார்சு பண்ணி அனுப்பிவைத்தேன் வேண்டுமென்று உம்பெயரை நீக்கவில்லை.
வேறேதோ விபரீதம் நடந்து போச்சு ஆண்டவனுக்காக இதைப் பொறுத்துக் கொள்வீர்
அடுத்தமுறை கட்டாயம் உமக்குப்பென்சன் வேண்டிநான் வேலைசெய்வேன்! என்றார் ஐயா
வேதனையில் நான்திருப்பி வீடுவந்தேன்!
41

Page 44
கலாபூஷணம் எம்.ஐ.எம்.அப்துல்லத்தீப்
ஞானம் 147ல் தீரன் ஆர்.எம்.நெளஸ் ாத் அவர்கள் ஒய்த்தா மாமா' என்ற தலைப் பில் தனது பத்து வயது அநுபவத்தைச் சிறு கதையாகச் சுவைப்பட எழுதியிருந்தார், அது சமயம் சம்பந்தமான ஒரு விடயம் என்பதையும், தான்சார்ந்த இஸ்லாம் சமயத்தில் சுன்னத் (கத்னா) என்ற கடமை வகிக்கும் ஸ்தானம் பற்றியும் மாவனல்லை எம்.எம்.மன்ஸDர் அவர்கள் ஞானம் 149ல் தெளிவு படுத்தி இருந்தாலும், இக்கடமை முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரியதல்ல ஏனைய் சமயத்தாருக்கும் இதில் பங்குண்டு. இக்கடமையானது எப்போது இறைவனால் பிரகடனப்படுத்தப்பட்டஅதி, போன்ற வரலாறு சமயங்கள் சார்ந்த விளக்கங்களை முஸ்லிம் மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும் சுருக்கமாகத் தெளிவுபடுத்துவது இக்கட்டு ரையின் நோக்கம். 'கத்னா மன்ஸDர் அவர்கள் குறிப்பிட்டிருப்பூது போல முற்று முழுதாகச் சுகாதாரம் சம்பந்தம்ானதே, எந்த ஆண்களும் இதைச் செய்து கொள்ளலாம். எமது புத்தளம் பிரதேச மிக்ஸ் ஒய்த்தா அல்லது ஒஸ்த்தா மாமாவை நரீசுவர் என்பர், இது நாவிதர் என்பதிலிருந்து மருவிய யது. 'கத்னா என்பதை 'சடங்கு செய்தல் சுன்னத் செய்தல்"எனவும் அழைப்பர். ,
முஸ்லிம்கள் ஆதிபிதா ஆதம்(அலை) முதல்இறுதிஇன்றத்தூதர்முஹம்மதுநபி(ஸல்) அவர்கள்வரை இறைவனால்காலத்துக்குக்காலம் அனுப்பப்பட்ட 1,24,000 நபிமார்களும் மக்களுக்கு நேர்வழி காட்டிட அனுப்பப் பட்ட உண்மையாளர்கள் என்று நம்புவதும், இவர்களில் ஆதம், ஷரீத், இத்ரீஸ்,இப்றாஹீம், மூஸா ஆகிய ஐவருக்கு வழங்கப்பட்ட 110கட்டளைகளும்(கொமான்ட்மன்ஸ்), மூஸா, தாவூத், ஈஸாமுஹம்மத் ஆகிய நால்வருக்கும் வழங்கப்பட்ட நான்கு வேதங்களும் உண்மை யானவை என்று நம்புவதும் அனைத்து முஸ்லிம்களும் நம்பிக்கை(ஈமான்) கொள்ள
42
 
 

முதலலைமுற்றிப8
வேண்டிய ஆறு விடயங்களில் இரண்டாகும். இவர்கள் அனைவரும் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தியவர்கள், இவர்களுள் 10 கட்டளைகள் வழங்கப்பட்ட நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் நபி சிரேஷ்டர்க ளான 25 இறைத்தூதர்களுள் ஆறாவதானவர், கி.மு. 1686 முதல் 1861 வரை 175 வருடங்கள் வரை வாழ்ந்த இவர் முதலில் பபிலோன்(ஈராக்) நாட்டையும், பின்பு பாலஸ்தீனின் ஹெப்ரோன் பிரதேசத்தையும் முறையே பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர், ஏக இறைக் கொள்கைக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர், நம்றுா த் என்னும் மாபெரும் மன்னனை எதிர்த்துப் போராடி நாட்டை விட்டும் வெளியேறினார், இவருக்கே முதன் முதலாக கத்னா என்னும் விருத்த சேதனம் செய்யப் பட்டதாக பழைய, புதிய ஏற்பாடுகள் அடங்கிய பைபிள் என்னும் பரிசுத்த வேதாகமம் நூல் பல இடங்களில் விபரிக்கின்றது. (இது பற்றிய விபரங்கள் பின்னிணைப்பில்) .
இப்றாஹிம் - ஆப்றகாம் இவரது ஏகதெய்வக் கொள்கையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைப் பரிசோதிக்கப்பல்வேறுவழிகளிலும் இவரைப் பலவாறாக இறைவன் சோதித்தபோதும் அவை அனைத்திலும் வெற்றி கண்டார், பாலஸ்தீனிலிருந்து சுமார் இரண்டாயிரம் கி.மீ தூரமான அரபு நாட்டுப் பாலை வனம் மக்காவில்மனைவிஹாஜரா(ஆகார்), புதல்வன் இஸ்மாயிலையும்(இஸ்மவேல்) தனியே விட்டு வருமாறு இறைவன் பணித்த போதும் அதனை நிறைவு செய்தார். பின்பு பல தடவைகள் அம்மகனை
அறுத்துப் பலியிட கனவில் அறிவிக்கப்பட்டு சோதனையான போது அதற்கும் துணிவு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 45
கொண்டார். அனைத்திலும் வெற்றிகண்ட நபி இப்றாகீமையும், புதல்வர் இஸ்மாயீலையும் கொண்டு இறைவன் மக்காவில் புனித கஃ பா ஆலயத்தையமைத்தான். இவ்வாறாக ஈராக்கில் பிறந்த இப்றாஹீமினதும், எகிப்தில் பிறந்த மனைவி ஹாஜரா வினதும், இருவருக்குமாக பாலஸ்தீனில் பிறந்த இஸ்மாயீலினதும் இறைவனுக்கான அரும் பெரும்தியாகங்களையும், சோதனைகளையும் நினைவு கூருமுகமாகவே லட்சோப் லட்சம் இறை விசுவாசிகளான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ஹஜ்ஜுக்காக மக்காவில் ஒன்றிணைகின்றனர்.
- இந்நிலையில் இப்றாஹீம் நபிக்கு சுமார் 2371 ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி.571ல் புனித மக்காவில் - பிறந்த - முஹம்மது (ஸல்) அவர்களும் தமது மண்ணில் இறைவ னுக்காகப் பெரும் தியாகங்கள் செய்திருந்த இப்றாஹீம்(அலை) அவர்களின் ஏக தெய்வக் கொள்யிைலும், தியாகத்திலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு இறைவனின் ஆணை யின் பிரகாரம் அவரும் ஏகதெய்வ கொள்கையை தமது நாற்பது வயது முதல் பிரச்சாரம் பண்ணி இஸ்லாம் சமயத்தைப் புதுப்பித்து நிறைவு படுத்தினார்.
பைபிள் வேத நூலில், இற்றைக்கு 3770 ஆண்டுகள் முன்னர் இப்றாஹீம் என்னும் ஆப்ரகாமுக்கு வழங்கப்பட்ட கட்டளைப் பிரகாரம் அவருக்கும், அவரைச் சார்ந்தோ ர்களுக்கும் ஒரே தினத்தில் விருத்த சேதனம் செய்யப்பட்ட விபரங்களும், தொடர்ந்து அக்கடமை அமுலாகி இயேசு நாதருக்குப் பின்னர் அது அமுலாகாது விடப்பட்ட விபரங்களும் தரப்பட்டுள்ளன. இயேசு நாதருக்கும் கூடபிறந்து எட்டாம் நாளில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே ஆபிரகாம் காலம் முதல் வேதக்காரர்கள் பின்பற்றி யதையே இயேசுவுக்கு 571ஆண்டுகள் பின்னர் தோன்றிய முஹம்மது நபியும், ஆப்ர காமைப் பின்பற்றி தனது முஸ்லிம் சமூகத்துக்கும் இறையாணைப்படி
விதியாக்கினார் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் விருத்த சேதனம் செய்யப்பட்டவராகவே பிறந்தார். -
இப்போது வேதாகம (பைபிள்) குறிப்புகள் சிலதைப்பார்ப்போம்: --
ஆதியாகமம் - அதி.17ல் வசனங்கள் 1 முதல் 14 வரையும், தொடர்ந்து 23 முதல் 26 வரையும், ஆப்ரகாமுடன் கர்த்தரின் வசனிப்புகள்விருத்தசேதனத்தின் அவசியத்தை விபரிக்கின்றன. 1. ஆபிரகாம் தொண்ணூ ற்றொன்பது வயதானபோது, கர்த்தர் :
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

எங்கள் தேசத்து சமாதான கங்கையின் சனநாயக நீரோட்டம் முள்ளிவாய்க்கால் இரத்தத்தில் பெருக்கெடுத்து ஓடியதோ = ?
முன்பெல்லாம் வைகாசிப் பௌர்ணமியில் வற்றாப்பளைக் கண்ணகிக்கு பொங்கல் விழா எடுப்போம்
அப்போது வானம் முழுவதும் கருமுகிற் கூட்டங்கள்..!
ப ய |
கந்தகவாடை வீசிய ஒரு கறுப்பு வைகாசியில் எங்கள் வானம் ஏனோ சிவந்து கிடந்தது என்ன...!
நரபலி வேள்வியில் இரத்தம் தோய்ந்த நந்திக் கடலின் இரத்தக் கறைகளோ...?
- சித்திரா சின்னராஜன்
எப்போதும் பச்சை ஆடை கட்டிக்கொள்ளும் எங்கள் வன்னிமாதா அன்று மட்டும் ஏனோ முள்ளி வாய்க்காலில் கறுப்பு ஆடையைக் கட்டிக் கொண்டாள் எரிந்து கொண்டிருக்கும் அக்கினிச் சுடலையில் அவளும் தீக்குளித்தாளோ..?
@ ேவண்வேலி
பண்டார வன்னியன் பதினெட்டாம் போரிலே அந்நியரை எதிர்த்து இரத்தம் சிந்தினான். எமது மக்கள் முள்ளி வாய்க்காலில் யாருக்காக இரத்தம் சிந்தினர்...?

Page 46
ஆபிரகா முக்குத் தரிசனமாகி, நான் சர்வ வல்லமையுடைய தேவன், நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாய் இரு... 4. நான் உன்னோட பண்ணுகிற என் உடன் படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்... 6. உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவர். 10. எனக்கும், உங்களுக்கும் உனக்குப் பின் வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குப் பிறக்கும் சகல ஆண் பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். 11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்கும் உள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். 12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண் பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்... 23. அப்பொழுது ஆபிறகாம் தன் குமாரன் இஸ்மவேலையும்தன்வீட்டில் பிறந்த யாவரையும், தான் பணத்துக்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகள் எல்லோரையும் சேர்த்து தேவன் தனக்குச் சொன்னபடி அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளில் தானே விருத்தசேதனம் பண்ணினான். 24. ஆபிரகாமின் வயது
99. 25. அவன் குமாரனாகிய இஸ்மவேலின் வயது 13. 26. ஒரே நாளில் ஆப்றகாமும், குமாரன் இஸ்மவேலும், விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
புதிய ஏற்பாடு லூக்கா1. 1அதி. வசனம் 56, மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் அவளுடன் : (சகரியா மனைவி எலிஸபத்) இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப் போனாள். 57. எலிஸபத்துக்கு பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப்பெற்றாள். 59. எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்கு சகரியா எனப் பெயரிடப் போனார்கள். 60. அப்பொழுது அதன் தாய், அப்படியல்ல அதற்கு யோவான் எனப் பேரிட வேண்டுமென்றாள்.
லூக்கா1. 2. அதி. வசனம் 16... தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பை யும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.....
வச.21 பிள்ளைக்கு - விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது
44

கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே,
அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
இவ்விதமாக ஆபிறகாம்(இப்றாஹீம் அலை.) முதல் இயேசு (ஈஸா அலை.) காலம் வரையான சுமார் 1800 ஆண்டுகாலம் அமுலில் இருந்த விருத்தசேதனம் செய்விக்கும் முறை, இயேசுவுக்குப் பின்னர் அப்போஸ்தலர்கள் காலத்தில் நீக்கப்பட்டதாக அறிகின்றோம். இதன்படி,
1 கொரிந்தியர் 7 அதி. வச. 19லும், கலாத்தியர் 5. 5 அதி. வச. 2 முதல் 11 வரையும்,6 அதி. வச.11 முதல் 15வரையும், விருத்தசேதனத்துக்கு மாறான கருத்துக்கள் உள்ளன. உ-ம்: - கலாத்தியர்5. 5அதி.வச.2. ... இதோ நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகி ய நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
பிறகு இயேசு நாதருக்கு 571 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய முஹம்மது நபி(சல் அவர்கள் முன்னைய வேதங்களின் பிரகாரம் இஸ்லாத்திலும் விருத்தசேதனம் செய்வதை அமுல்படுத்தினார்கள். இதற்கு ஆதாரமாக நபியின் வாக்கு: -- - முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அபூஹுறைாரா(ரழி) அறிவிக்கிறார்கள்: - 'இயற்கை விடயங்கள் ஐந்து, 1. ஹத்னா (விருத்தசேதனம்) செய்வது, 2. மர்மஸ்தானங்களது முடிகளை அகற்றுவது, 3. கக்கத் தில் உள்ள முடிகளை அகற்றுவது, 4. மீசையைக் கத்தரிப்பது, 5. நகங்களை வெட்டுவது'
ஆதாரம்: - புஹாரி, முஸ்லிம் நபி(ஸல்) கூறினார்கள்: - 'ஹத்னா' செய்த இரண்டு பகுதிகள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக குளிப்பு கடமையாகும்' (புஹாரி). (இங்கே ஆணையும், பெண்ணையும் குறிக்கின்றது, பெண்ணுக்கும் கத்னா உண்டு.
இங்கே தரப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்களின் வாக்கு (ஹதீஸ்) - இரண்டும் முற்று முழு தாக சுகாதாரம் சம்பந்தமானது என்பது இலகுவில் புரிகின்றது, இஸ்லாம் சமயத்தில் இவை கட்டாயமானது என்பதுடன், விரும்பியோர் எவரும் நிறைவேற்றிக்கொள்ளலாம்.
அண்மையில் ஜேர்மன் நாட்டில் யூதர்களும், முஸ்லிம்களும் விருத்தசேதனம் செய்ய அங்கீகாரம் வேண்டி எடுத்த போராட்டம் வெற்றியளித்துள்ள செய்தியும், ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயிலும் இது சட்டமாக்கப்பட்டுள்ள செய்தியும் ஊடகங்களில் காணக்கூடியதாய் இருந்தது.
"ஐந்து மஸ்தி", உ எரிப்பத
முழு தாக தக புரிகின்றது, மோனது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 47
வரல
குறிஞ்சி நாடன்
அறிமுகம்
நூல் - மனக்காடு (கவிதைகள்) ஆசிரியர் - மேரா வெளியீடு - பட்டிப்பளை பிரதேச சலச ஒன்றியம்
விலை - ரூபா 175/= மேல
நூலாசிரியரின்.
இ ய ற'  ெப ய ாட் மேகராசா. அவர் தமிழ் மொழியில் சிறப்புப் பட்டம் பெற்றவர். ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இலக்கியவாதி, 'மனக்காடு' என்ற இக்கவிதை நூல் இவரது மூன்றாவது படைப்பாகும். கலங்கிய வானம் 2005 இல் வெளிவந்தது. காலத்தின் காயங்கள் 2007 வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. இவருக்கென்று தனிவாசகர் கூட்டம் உள்ளது என்பதும் உண்மையாகும்.
இவர் பல புனைபெயர்களில் எழுதியுள்ளார். ஈழப்பித்தன் அரசையூரான், அரசையூர் மேரா, மாரிமகன் என்பன சிலவாகும். இந்நூல் அறுபத்து எட்டு பக்கங்களைக் கொண்டு முப்பத்து மூன்று கவிதைகளைச் சுமந்துவருகிறது. அவலத்தைக் காட்டும் அட்டைப்படம் முள்வேலிக்குள் அகப்பட்டு பொறி மயங்கி நிற்கும் - மனித உருவங்களை சித்திரமாக்கியுள்ளது. இவரது கவிதைகள் போர்க்கள நிகழ்வுகளின் நிசங்களை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

விளக்குகிறது. மனித நேயங்கொண்ட கவிஞரின் கவிதைகளில் நெருப்புப் பொறி பறக்கிறது. சமூக அழிவுகளைக் கண்டு சீறி எழுகிறது கவியுள்ளம். ஏமாற்றுவோர், ஏளனம் செய்வோர் என்போருக்கு எதிராக சாட்டை அடி கொடுக்கிறது கவிதைகள். அரசியல் வாதிகளை சாடி திரைமறைவு விடயங்களை வீதிக்குக் கொண்டுவருகிறார். பாசாங்கு செய்வோரை பழித்துப் பாடுகிறார்.
- 'புதிய மரண விசாரணை' என்னும் கவிதை சிலருடைய முகத்திரையை கிழிக்கிறது. அரச வானகம் விளம்பரம் செய்கிறது. “பல்லிகளைக் கொல்லாதீர்” வாகனம் வீதியில் ஒரு பல்லி மீது நச்சென்று ஏறுகிறது. உடனே தீர்ப்பு வருகிறது.
“உயிர் காக்கும் பணியில் உயிரிழப்பு தவிர்க்க முடியாது என
மரண விசாரணை முடிக்கப்பட்டது. அர்த்தம் பொதிந்த கவிதை வரிகள்
பற்றி எரியுது காடு' என்னும் கவிதை பேசுவதைக் கேளுங்கள்
உன்புன்னகை ஊர்களை விழுங்கிய சுனாமி
பூமியைத் தாக்கும் பூகம்பம் சிரிப்பின் அர்த்தம் சிந்தனைக்கு விருந்து
அமாவாசை நிலவு
(கவிரோத4)
நூல் :
அமாவாசை நிலவு ஆசிரியர் : தம்பித்துரை ஐங்கரன் வெளியீடு: குரும்பசிட்டி சன்மார்க்க சபை விலை : ரூபா 300/=
4 கேது
அகிலேஷை ஜ:36:ான்
நுT லாசிரியர் ஐங்கரன் குரும்ப
ச ட' டி  ைய ப பிறப்பிடமாகக் கொண்டவர். தம்பித்துரை சிவயோகம் தம்பதிகட்கு மகனாய்ப்பிறந்து சிறந்த பேச்சாளராய் இலக்கிய கர்த்தாவாகப் பிரகாசிப்பவர். குரும்பசிட்டி என்றால் உள்ளம் குதுகலிக்கும். ஈழகேசரி பொன்னையா, கனக செந்திநாதன், ஏ.ரி. பொன்னுத்துரை, வி.கந்தவனம் போன்ற இலக்கியவாதிகள் கோலோச்சிய இடம்.
45

Page 48
நூலாசிரியர், கணினி ஆசிரியாகவிருந்து வவுனியா மக்கள் வங்கியில் பணிசெய்பவர். நல்லாசிரியர்களும் குடும்பப் பின்னணியும் இவருக்கு இலக்கிய இன்பத்தை நுகரச் செய்தது. இனுவில் பண்டிதர் ச.வெ. பஞ்சாட்சரம் இவரது ஞான குருவாக விளங்கியுள்ளார். கவியரங்குகளில் சக்கை போடு போட்டு வருபவர்.
அமாவாசை நிலவு இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி இந்தப் பூக்களும் பூக்கும்' என்ற முதலாவது கவிதைத் தொகுதி 2005 ஆம் ஆண்டில் வெளியானது. இக்கவிதை நூல் 25 கவிதைகளைச் சுமந்து 76 பக்கங்களில் வெளிவந்துள்ளது. கவிதைகள் L IGU கோணங்களில் பயணிக்கிறது. வாழ்வியல் அம்சங்கள் பலவற்றைக் கொண்டது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும் குறைபாடு களையும் மனிதநேய மற்ற உறவுகளையும் கண்முன்னே கொண்டு வருகிறார் கவிஞர்.
இக்கவிதைத் தொகுதியை கையில் எடுத்தால் முழுவதையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டும். எளிமையான சொற்பதங்கள் பாமரரும் ரசிக்கும் வண்ணம் சில பாடல்கள். வாழ்க்கை வங்கி எப்படி இருக்க வேண்டும் என்பதை வர்ணிக்கிறார்.
கீதாசாரம் என்பது தான் வாழ்க்கை வங்கியின் சாராம்சம் விளங்கிக் கொள்ள முடியாமல் வீடுகளில் மாட்டியுள்ளார். அழகுக்கு மாட்டியவர்கள் அதன் கருத்தை புரியவில்லை என்கிறார். ஏன் தேர் ஒரடியும் நகரவில்லை என்பதற்கு அவர்காட்டும் வடம் பிடித்தோரின் பட்டியல் சிந்தனைக்கு உரியது. ‘எறிந்து விடாதே’ என்ற கவிதையும் பொருள் பொதிந்தது. இன்னும் தரமான கவிதைகளைத் தரவேண்டும் என்பது சுவைஞர்களின்
கருத்தாகும்.
நூல் : பள்ளிச் சட்டையும் புத்தகப் பையும் ஆசிரியர் : நிலா தமிழினி தாசன் வெளியீடு : அஸ்ரா பிரிண்டர்ஸ் - திருகோணமலை விலை - ரூபா 200/=
 

நிலா தமிழின் தாசன் இலக்கிய உலகில் ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக எழுதிவருவர். இவர் இருபத்தைந்துக்கு மேற்பட்டசிறுகதைகளையும் ஒருநாவலையும் எழுதியுள்ளார். நாளை என்ற தலைப்பில் 1993 இல் கவிதைநூலும் புலர்வு' கவிதைத் தொகுதி 1994 ஆம் ஆண்டிலும் நெருப்பாறு குறுங்காவியம் 1999திலும் இளைஞர்கள் ஏற்கவேண்டிய சபதம் 2009திலும் நெருப்புக்கிடையே நீந்தும் நிலாக்கள் 1999லும் வெளிவந்துள்ளன. பல விருதுகளும் பணப்பரிசும் பெற்ற கவிஞர் இவர்.
பள்ளிச்சட்டையும் புத்தகப் பையும் என்ற சிறுகதைத் தொகுதியில் 14 கதைகள் இடம் பெற்றுள்ளன. பாம்புப்புற்று, மயக்கம் ஆணவம், சபலப்பன்றி, ஒட்டுண்ணி, யுத்தவடுக்கள், சொந்தநிலம் இரண்ய அறுவடைகள். அறுவடை, நிழல்மரம் போன்ற கதைகள் இடம்பெற்றுள்ளன. கதைகளின் சம்பவங்கள் சமூகத்தோடு தொடர்புடையவை. கதைகளின் மாந்தர்கள் நம்மிடையே இன்னும் உலாவரத்தான்
செய்கிறார்கள். சமூகப்பிரச்சினைகளை முனைப்பாக எழுதிக்காட்டியுள்ளார்.
முதல்கதையான 'பள்ளிச்சட்டையும்
புத்தகப்பையும்' ஏழை ஆறுமுகத்தின் ஏழ்மையை விரித்துக் காட்டுகிறது. மகளின் ஆசையை நிறைவேற்ற அவன் எடுத்துக் கொண்ட சிரமங்களையும் மகளின் ஆசையை நிறைவேற்றவந்து அகால மரணம் அடைவதையும் காட்டுகிறது.
ஆணவம்' என்ற கதை ஒரு வாத்தியாரின் அசுர குணத்தை வெளிப்படுத்துகிறது. பாம்புப் புற்று' என்ற கதை ஊருக்கு வேஷ மிடும் முத்துலிங்கத்தாரின் கபடடத்தியை வருணிக்கிறது.
"மயக்கம்' என்ற கதை மேலாளர் சொர்ணகாந்தனின் ஈர நெஞ்சையும் மனித நேயத்தையும் விளக்கிக்காட்டுகிறது. 'சாகடிக்கப்படும் சத்தியங்கள்' ஏழை சவரத் தொழிலாளி பீற்றர் அநியாயமாக சாத்தான்களால் கொல்லப்பட்ட துயரத்தை இயம்புகிறது. செஞ்சு வெடித்துச் சிதறும் அளவுக்கு அட்டகாசம் புரிந்த அறிவினர்களின் அடக்கு முறைக்கு அளவே கிடையாது. ஆண்டவன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். விதைத்த வினைக்கு பலன் எப்போது கிடைக்கும் என்பதே ஏக்கம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

Page 49
(2/2777
தாங்கள் அனுப்பிய ஞானம் இணையத்தள இதழைத் தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது மிகுந்த பொறுப்புணர்வோடும் அதிகபட்சழு முதற்பார்வையிலேயே தெரிகிறது.
இது உங்களது வாழ்நாட் சாதனையாகக் கன ஈழத்தின் போர்ச்சூழலின் இலக்கியச் செல் மலரை வெளிக்கொணர முடிந்தமைபற்றித் தாங்
149ஆவது இதழ் ஒக்டோபர் 2012 கிடைத்த புதிய கட்டிடங்கள் கட்டுவதில் அதிக ஆர்வம் கா புத்தகங்கள், சஞ்சிகைகள் குறைவாகவே க அனேகமாகப் பாடத்திட்டங்களுக்கு அமைய எ
கொழும்பிலேயுள்ள பிரபல்யமான சர் பலபிரிவுகளாக சிறுவர்பிரிவு, உயர்தரமாணவர் பிரிவுகள் காணப்படுகின்றன.
கொழும்பு சர்வதேசப்புத்தகக் காட்சிக் எழுதியிருந்தீர்கள்.
பயிற்சிப் புத்தகங்களைப் படித்து ஒருவ இலகுவாகப் பெற்றுவிடுகிறார்கள்.
கொற்றாவத்தை கூறும் குட்டிக்கதைகளை பஞ்சதந்திரக்கதைகள், தென்னாலி ராமன் கதை கதைகளைப் படித்த எம்மவர்களுக்கு கொற்ை எழுதிவரும் கதைகள் பெரும் வரப்பிரசாதம் உண்மைகளையும் உன்னதங்களையும் கிருஷ்ண அதேவேளை பொய்மைகளையும் போலிகள் தோலுரித்துக் காட்டுகிறார்.
குட்டிக்கதைகள் மூலமாக மனித வாழ்வி உளவியல் நடத்தைக் கோலங்களையும் சித்திரி நல்ல சாட்சியங்களாக மிளிர்கின்றன. எனவே கிருஷ்ணானந்தன் பாராட்டுக்குரியவர்
ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 150 இ படித்தேன். புறநானூற்றுக்குப் பின்பு தமிழில் போர் இலக்கிய நூலாக இதைப் பார்க்கிறேன். இ ஞானம் ஆசிரியருக்கு நன்றியுடையதாக இருக்கு
ஞானம் 146 ஆவது இதழ் படித்தேன். "இல ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்” என்ற தேவ முகுந் உள்ளதை உள்ளபடி சொன்னால் அது யதார் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கு வக்கிரங்க6ை ஆசிரியன் ஒரு மன நிலை பாதிக்கப்பட்டவன் எ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜனவரி 2013

ா முகவரி பெற்றேன். மிக்க நன்றி.150 ஆவது
மயற்சித்திறனுடனும்தாங்கள்தயாரித்துள்ளமை
1ணிக்கக் கூடியது.
நெறியை மையப்படுத்தி இப்படியொரு பாரிய
கள் மனநிறைவடையலாம்
கலாநிதி நா. சுப்பிரமணியன் (கனடா)
து. யாழ்ப்பாணத்தில் பெரிய பாடசாலைகளிலே ாணப்படுகிறது. அங்குள்ள நூல்நிலையங்களிலே ாணப்படுகின்றன. புத்தகங்கள் இருந்தாலும் ழுதப்பட்டவையாகக் காணப்படுகின்றன.
வதேசப்பாடசாலைகளிலே நூல்நிலையங்கள் களுக்கான பிரிவு, தனியாள் பிரிவு என்று பல
கு குறைவான தமிழ் மக்களே வந்ததாக
Iர் அறிவாளியாக முடியாது. பட்டங்களை
சி. குமாரலிங்கம், நல்லூர்
நான் மிகவும் ஆவலோடு படித்து வருகிறேன். கள், தென்கச்சி சுவாமிநாதன் கதைகள் போன்ற ற பி. கிருஷ்ணானந்தன் ஞானம் சஞ்சிகையில் ம் ஆகும். இக்கதைகள் கூறும் வாழ்வியல் ானந்தன் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றார். ளையும் நகைச்சுவையோடும் எள்ளலோடும்
பியலின் பல்வேறுபட்ட பரிமாணங்களையும் த்துக் காட்டமுடியும் என்பதற்கு இக்கதைகள் இதுவரை 29 கதைகள் எழுதிய கொற்றை பி.
இதழான ஈழத்துப் போர் இலக்கியச்சிறப்பிதழை தோன்றிய மிகச் சிறந்த பெறுமதிவாய்ந்த ஒரு இதற்காகத் தமிழ் கூறும் நல்லுலகம் எக்காலமும்
மென நம்புகிறேன்.
- சித்திரா சின்னராசன்
க்கிய வாதிகளைப் பாத்திரங்களாகக் கொண்ட தனின் ஆய்வு மிக மிக அற்புதமானது. ாத்தம். ாவலிந்து திணிக்கும் பொழுது, கதை சொல்லும் ன்றே யாரும் கருத இடமுண்டு.
47

Page 50
ஓர் எழுத்தாளனின் மனைவி தன் தந்தையின் கணவன் நிலையில் உள்ள எழுத்தாளன் அவரை
அழுகிறான்.
“நீவா, நீ இல்லாமல் நான் வாழ புலம்பியிருக்கிறான்.
“போயிலை போடுவதையும், வெத்திலை வெளிக்கிட வேணும். ஸ்ரைலாக இருக்க வேன "ஆம் இனி அப்பிடி நடந்து கொள்கிறேன்” என
"போ வாறேன்...” என்று சொன்ன அவன போய்ச்சேர்ந்தாள்.
இந்தளவு மிகக் கீழ்த்தரமான நிலையில் வ வக்கிரம் பண்ண முடியும் (மன நிலை பாதிப்பு : தனி ஒருவனில் இருந்து கூடஅது ஆரம்பிக்கல
ஞானம் பிரதம ஆசிரியர் தி.ஞானசேகரன். அவர்களும் இணைந்து ஞானம் ஈழத்துப் போர் வெளிக்கொணர்ந்தமையை ஈழத்திலும் தமி இலக்கிய கர்த்தாக்களும் இலக்கிய இரசிகர்க பெரும் வெற்றி என்றே கூறவேண்டும்!
அதைக்காட்டிலும் 2012 நவம்பர் 25ம் திகதி செய்த ஞானம் குழுவினர் 07.12.2012ல் தமிழ் அதே தினம் தஞ்சை பல்கலைக்கழகத்திலும் 0. கல்லூரியிலும் திருச்சியில் பல இடங்களிலும் 09.1 ஆங்கில தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பிலும் நூலை அறிமுகம் செய்ததுடன் ஈழம் திரும்பி திருக்கோணமலையிலும் அதனை தொடர்ந்து யாழ். தேவரையாளி இந்துக்கல்லூரியிலும் அ நடாத்தி முடித்ததுடன் அனைத்து நிகழ்வுகள் டிசம்பர் 2012 இதழில் பதிவு செய்த திறனை எ அ தவிர, ஓவியர் ஆசை. இராசையா ஒரு சி இருக்கும் அவரது புகழை வெளிக்கொணர்ந்து ஆசை இராசையாவின் பள்ளித்தோழன் என்ற (
ஞானம் செப்ரெம்பர் 2012 இதழின் ஆசிரி தோன்றிய எண்ணங்களை வாசகர்களுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரச்சனைகள் தொடர்புகளைக் கொண்டவையாக இருக்கி தீர்வு வரும்வரைக்கும் போரால் பாதிக்கப்ட்ே போட்டு விடமுடியாது.என்ற ஆசிரியரின் ஆத ஆசிரியர் கோருவது போலவே சமூக அமை பெயர்ந்த தமிழர்களும் போரால் பாதிக்கப்பட உதவிகளைச் செய்ய முன்வரவேண்டுமென்று விடுக்கிறேன்.
150ஆவது இதழ் என்பது 12 1/2 வருட இலக்கியச்சிறப்பிதழ்600பக்கங்களையும் சிறந்த ஒரு சிறப்புமலர் இதற்கு முன்னும் வெளிவரவி

5 வயதை ஒத்த ஓர் ஆடவனோடு ஓடிவிட்டாள். எத் தேடிச்சென்று அவள் முன்னே நின்று விம்மி
மாட்டேன்” என்று அவன் அழுகிறான்,
சப்புவதையும் நீ நிறுத்த வேணும். துப்பரவாக றும்” என்று பெரிய அட்வைஸ் செய்தாள் அவள் Tறு தலை அசைத்தான் அவன் T, இரண்டு நாட்கள் கழித்தே தன் கணவனிடம்
Tழும் ஓர் எழுத்தாளன் எப்படி மற்றவர்கள் பற்றி என்பது அது ஒரு பரம்பரை நோய் மட்டுமில்லை ரம்)
ஆ.தி. சிவானந்தன், நல்லூர்
அவர்களும் நிர்வாக ஆசிரியர் ஞா.பாலச்சந்திரன் இலக்கிய சிறப்பிதழை அழகுறவும் கனதியாகவும் ழ் நாட்டிலும் ஏராளமான கல்விமான்களும் நம் பாராட்டி இருப்பது ஞானத்திற்கு கிடைத்த
தி கொழும்புத் தமிழ்சங்கத்தில் நூலை வெளியீடு நாட்டில் பாரதி தாசன் பல்கலைகழகத்திலும் 3.12.2012 ல் நாமக்கல் செல்வம் ஆசிரிய பயிற்சிக் (2.2012 ல் கோயம்புத்தூரிலும் மேலும் பல முக்கிய 12.12.2012ல் சென்னையில் பல இடங்களிலும் 27.12.2012 ல் மட்டக்களப்பிலும் 28.12.2012ல் து 29.12.2012ல் வவுனியாவிலும் 30.12.2012ல் றிமுக விழாக்களை துரித வேகத்துடன் சிறப்புற -ளையும் நிழல்படங்கள் சாட்சியாக ஞானத்தின் ப்படி பாராட்டினாலும் தகும்! சிறந்த ஓவியர் இலங்கையில் இலைமறைகாயாக து, பாராட்டவும் செய்த ஞானத்துக்கு நண்பர் முறையில் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.
- கலாபூஷணம் வீ.என்.சந்திரகாந்தி சியர் தலையங்கத்தை வாசித்தபோது என்மனதில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். போரால் இந்நாட்டின் இனப்பிரச்சினையுடன் நேரடித் ன்றன. ஆயினும் இனப்பிரச்சினைக்குத் தகுந்த டாரின் உடனடிப் பிரச்சனைக்கான தீர்வை பின் ங்கத்துடன் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆகவே ப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் புலம் ட்ட தரப்பினருக்குத் தொடர்ந்தும் காத்திரமான வ ஞானம் வாசகர்கள் சார்பில் வேண்டுகோள்
கா. கவபாலன் , கண்டி வரலாற்றைக் குறிக்கிறது. இந்த ஈழத்துப் போர் தஉள்ளடக்கங்களையும் கொண்டது. இவ்வாறான
ல்லை. இனிமேலும் வரப்போவதில்லை
அன்புமணி, மட்டக்களப்பு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஐனவரி 2013

Page 51
f
தொடர்புகளுக்கு (00
கடந்த முப்ெ போர்க்காலத்த இலக்கியத்தைய மன்னர்களின் ஆய்வு, மதிப் ! பெருந்தொகுப்ப கொண்டு வெளி
இலங்கை
சிuபிதழ்
"ஞானம்" அலுவலகத்தில் இவ்வி தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூபா தொடர்புகளுக்கு :(
அவுஸ்திரேலியாவில் இதழின் வி6ை
தபாலில் பெறவிரும்புவோர் தபாற்செ
O @ பூபாலசிங்கம் 202, 340, செட்டியார் ெ
பூபாலசிங்கம் 309A/2/3, காலி வீதி
பாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீதி
துர்க்
சுன்னா
ஜீவற
அல்வாய். தொலை
லங்கா சென்றல்
84, கொழும்பு
 
 
 

இலக்கியச் சிறிதழ்
பரும் தசாப்தங்களான ஈழத்துப் தில் மொழியையும் அதன் வழியான பும் கலாசார ஆயுதமாக ஏந்திய பேனா போரிலக்கியம் தொடர்பான படைப்பு, பீடு, கருத்தாடல், ஆவணம் பற்றிய ாக இச் சிறப்பிதழ் 600 பக்கங்களைக் ரிவந்துள்ளது. யில் இதழின் விலை ரூபா 1500/=
தழ் ரூபா 1000/= மாத்திரமே!
250/= சேர்த்து அனுப்ப வேண்டும்.
)777 3O65O6
ல - அவுஸ்திரேலிய டொலர் 25
லவு வேறாக அனுப்ப வேண்டும்.
Ꮾ1Ꭰ ᏎᎤ8 88Ꮞ 2Ꮾ8
夕
கிடைக்கும் இடங்கள் )|
புத்தகசாலை தரு, கொழும்பு-11
புத்தகசாலை , வெள்ளவத்தை.
புத்தகசாலை ,ெ யாழ்ப்பாணம்.
65 ாகம்
நதி
பேசி: 0775991949
புத்தகசாலை வீதி, கண்டி.

Page 52
-—
 

sts of Sri Lanka under No GD143||NeWS2OME
SRI LANK
–2420740
3 அணிசூட்ஸ் இறைவிநிறுவனத்தில் அசிட்டுவிட்