கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.06

Page 1
ஜூன் 2013
ஞா
கலைஇலகம்
Www.gnanan.info
"இலக்கியத் தாரகை? திருமதிநயீம்
விலை ரூபா 63/2

எம் 5
கியச் சஞ்சிகை
ஆவது
"கலாபூஷணம் ! ரசித்திக்

Page 2
gaunam anwa ngomaanse Nagalingan
Tew
Designers and Manufac 22kt Sovereign Gold
Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Suppliers t
DEALERS IN ALL KIND FOOD COLOURS, I
CAKE INGRE
76B, Kings S Tel: 081 - 2224187, 081.

Fellers
turers of
AL ESSENCE SUPPLIERS
0 Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, EDIENTS ETC.
treet, Kandy. - 2204480, 081 - 4471563

Page 3
பகிர்தலின் மூலம் அ/ விரிவும் ஆழமும் பெறுவது ஞ ஒளி - 14 ai-Lit -
ஆசிரியர்
திஞானசேகரன்
C
நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன்
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன் ஓவியர்
சிவா கௌதமன்
தொடர்புகளுக்கு ஞானம்' அலுவலகம் 3-8, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06, இலங்கை,
தொலைபேசி 0094 - 11 2586013, 0094 - 777 306,506
0061 - 286778989 (Aus)
தொலைநகல் O094 II 2362862
Iósi GDI gjởfið editor(agnanam, info
இணையத்தளம் http://www.gnanam.info
http://www.t.gnanasekaran, lik உள்நாட்டு சந்தா விபரம் ஆண்டுச் சந்தா : IbLITT 1,000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/- ஆயுள் சந்தா : e5UT 20.000/= வெளிநாட்டு சந்தா ஓராண்டு Australia(AUS) 50 Europe() 40 India(Indian Rs.) 1250 Malaysia (RM) 100 Canada($) 50 UK(£) 35 Singapore(S$) 50 Other(US$) 50
வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள் SwiftCode:- HBLILKLX
T. Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branch A/C No. 009010344631
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும் ノ
 
 

jТатић)
)1
3- இதழினுள்ளே .
0 கவிதைகள்
செ. சுதர்சன் 07 மட்டுவில் ஞானக்குமாரன் 20 சி. அம்பலவாணர் 28 கெகிறாவ ஸசலைகா 33 சண்முகம் சிவகுமார் 56
0 கட்டுரைகள்
கே. பொன்னுத்துரை 04 என். செல்வராஜா 14 எம். ஏ. நுஃமான் (ஏற்புரை) 18
0 சிறுகதைகள்
உ. நிசார் 08 வி. ஜிவகுமாரன் 22 வேல் அமுதன் 25 சீனா உதயகுமார் 34
0 பத்தி எழுத்து
கே. ஜி. மகாதேவா 41 எம். கே. முருகானந்தன் 44 துரை மனோகரன் 47 எம். ஜலாலுதீன் 54
O 31 pasTGD 356D6D 660585uj
நிகழ்வுகள் 52
9 கொற்றாவத்தை கூறும்
குட்டிக்கதைகள் 50
O 6:JTsa5j é31Jaraé)prí 55
O grá enolopsib 29
வே. தில்லைநாதன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப்பெயர், முகவரி ஆகியவற்றைவேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
ஞானம்
கலை,இலக்கிய
சஞ்சிகை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர் மாணவன் எச். எம். எம். மன்சூர் முதல் சஞ்சிகை" - ஒரு நோக்கு என்ற தலைப்பில் * சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி க.தயா கலைமாணி விசேட கற்கை B.A.(Hons) நெறி 0. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சே ஆய்வு” என்ற தலைப்பில் சிறப்புக் கலைம செய்துள்ளார். * யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர் சஞ்சிகை ஜூன்2002 -மே2006 இதழ்களி தலைப்பில் தமது முதுமாணிப்பட்டப்பட செய்துள்ளார். * கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஞ்சிகைச் சிறுகதைகள் ஒர் ஆய்வு என்ற சிறுகதைகளை ஆய்வு செய்து தமது முதும் செய்துள்ளார். * தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக மாணவி இதழ்களை ஆய்வு மேற்கொண்டு இலங்ை பங்களிப்பு குறித்து முனைவர்- கலாநிதி ட பெற்றுள்ளார். இவையெல்லாம் ஞானம் சஞ்சிகையின் அங்கீகாரங்கள்.
கலாநிதிப்பட்டப்படிப்பு உள்ளடங்கலாக உட்படுத்தப்பட்ட ஈழத்தின் ஒரே சிற்றிதழ் அடைகிறோம்.
இவை தவிர இலங்கை நூலக சங்கத்தி நூலக விஞ்ஞான டிப்ளோமா பரீட்சைக்கான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒவறிதவிளி
Tபு நெஞ்சங்களே! னம் தனது பதின்னான்காவது அகவையில் எடுத்து வைக்கிறது என்பதில் நாம் பெருமகிழ்வு றோம். ஈழத்தில் மாதந் தவறாது ஒழுங்காக ந்து பதின்மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்த ஞ்சிகையென்றால் அது "ஞானம்' சஞ்சிகை ம என்பதில் எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. த வேளையில் தரமான சஞ்சிகையாகவும் ஞானம் ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சியாக உயிர்மை இதழும் சுஜாதா அறக்கட்டளையும் 3து வழங்கிய சிறந்த சிற்றிதழுக்கான விருது டம் ஞானம் சஞ்சிகைக்குக் கிடைத்திருக்கிறது. தோடு ஞானம் இதழ்களை தமிழகத்திலும் கயிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பல ர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி தமது பட்டப் ப நிறைவு செய்து வருகிறார்கள் என்பதும் ாயத்தின் சான்றாகிறது. சைப் பல்கலைக்கழக மாணவிமா. ஷரீலா ஞானம் தழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வு M.Phil பட்டம் பெற்றுள்ளார். ந்த தமிழ் கலைமாணி விசேடத்துறை B.A.(Hons) நான்கு ஆண்டு இதழ்களை ஞானம் இலக்கிய ஆய்வு செய்துள்ளார். ாழினி 2004-2005ஆம் வருட இதழ்களைத் தனது க்காக ஆய்வு செய்துள்ளார். ஈர்ந்த திரு க. காந்தரூபன் ஞானம் சஞ்சிகை ஒர் ாணிக்கான B.A.(Hons) ஆய்வினை (2004) நிறைவு
ல் வெளிவந்த சிறுகதைகள் ஒர் ஆய்வு என்ற டப்புப் பகுதித் தேவையை (M.A.) 2011ல் பூர்த்தி
திருமதி கோமகள் அருண் றோஜன் ஞானம்
தலைப்பில் 1 முதல் 100 இதழ்களில் வெளிவந்த )ாணிப்பட்டப் படிப்பினை (M.A.) 2011ல் நிறைவு
திருமதி கு. ரேணுகாதேவி ஞானம் முதல் 50 கத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஞானம் இதழின் பட்டப்படிப்பினை (PhD)நிறைவுசெய்து பட்டம்
r லக்கிய தரத்தின் சாட்சிகள், அறிவுலக
தரத
அதிகமான பல்கலைக்கழக மட்ட ஆய்வுகளுக்கு ஞானம் என்ற வகையிலும் நாம் பெருமை
ன் தகவல் விஞ்ஞானப் பட்டநெறி மற்றும் ஈட்டியாக்கம் ஆகியவற்றிற்கும் பல மாணவர்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 5
ஞானம் இதழ்களைப் பயன்படுத்தி தமது பரீட் குறிப்பிடத்தக்கது. விரிவஞ்சி அவர்களது பெயர் இதுவரை வெளிவந்த 156 இதழ்களில் 825க்கு சிறுகதைகள், 710க்கும் மேற்பட்ட கட்டுரைகள் நாவல்கள், 3 புனைவுக்கட்டுரைகள், 1 பயண இல பற்றிய கட்டுரைகள் ஆகியவை வெளிவந்துள்ளன நேர்காணல்களைப் பொறுத்தவரை, கதாசி சகர்கள், கலைஞர்கள், பத்தி எழுத்தாளர்கள், பே பெண்ணிலைவாதிகள் எனப் பலதிறத்தினரது தசாப்தங்களுக்கு மேலாக இலக்கிய அல்லது நேர்காணல்களுக்காகத் தெரிவு செய்தோம். இவ எழுத்தாளர் எஸ். பொ, கலாநிதி செங்கை ஆ தொடர் நேர்காணல்களும் அடங்கும். இவற்றின் கலை இலக்கிய வரலாற்றுப் போக்கினை வெளிக் என்ற நோக்கிலேயே நேர்காணல்களுக்கான கேள் கலாம். இந்த நேர்காணல்கள் ஈழத்து நவீன இலக் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வு மாணவர்களு அட்டைப்பட அதிதிகளாக நாம் இதுவரை யாபேரும் 60 வயதைத் தாண்டியவர்கள். ஈழத் தம்மை இணைத்துக்கொண்டார்கள் என்பதனை அதிதிகள் தொடர்பான கட்டுரைகள் அமைந்துவ மலையத்தின் மூத்த படைப்பாளி கே. கணே படைப்பாளிகளான வரதர், எஸ்.பொ., இதழாளர் படைப்பாளி தெளிவத்தை ஜோசப் ஆகியோருச் மலர்கள் ஆகியவை அவர்களதும் அவர்களோ( வளர்ச்சியினதும் போக்கினை வெளிப்படுத்தும் 6 கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதிய தமிழி: - வரலாறு - புதிய எல்லைகள் என்ற தொடர்கட் இலக்கிய ஆர்வலர்களாலும் எழுத்தாளர்களாலு விதந்து பாராட்டப்பட்டது. அந்த வகையில் ஈழ யமைந்த காத்திரமான பங்களிப்பாக நாம் இதை நவீனத் தமிழ் இலக்கியத்தில் “போர் இலக் பெருமை ஈழத்துப் படைப்பாளிகளையே ச உறுதிப்படுத்தும் வகையில் ஞானம் 150ஆவது இ வெளிக்கொணர்ந்தோம். தமிழ்நாட்டிலும் நமது புத்திஜீவிகளிடையேயும் இலக்கிய ஆர்வலர்க பெரும் வரவேற்பு எமக்கு உற்சாகமூட்டுவதாக அ மகுடத்தில் 600 பக்கங்களில் அமைந்த இந்தப் மூலம் தமிழ் இலக்கியத்திற்குப் போர் இலக்கி பல்பரிமாணங்களை முதன்முதலில் ஒரு நூற். ஞானம் சஞ்சிகைக்கேயுரியது. போர் இலக்கிய எதிர்காலத்தின் ஆய்வுத் தேடல்களுக்கும், ஈழத் அறிந்து கொள்வதற்கும் இத்தொகுப்பு முயற்சி தமிழ் இலக்கியத்திற்கு ஞானம் இதுவரை ! கருதுகிறோம்.
இவையாவும் ஞானம் சஞ்சிகையின் தனித்துவமான இச்சிறப்புகளோடுதான் நாம் பதின்னான்கா எண்ணிப்பார்க்கும்போது நிச்சயமாக இது ஒ நன்றாகவே புரிகிறது. இது ஒரு கூட்டு முயற்சி ( விளம்பரதாரர்கள், விற்பனையாளர்கள் ஆகியே எமக்குத்தந்த ஒத்துழைப்புத்தான் ஞானம் சஞ்சி காரணங்களாய் அமைந்தன என்பதனைப் பணி முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவு நல்க வேண்டும் இவ்வேளையில் எதிர்வரும் காலத்திலு ஞானம் சஞ்சிகையூடாக ஆற்றுவோம் என உறுத இவிஇெஇஇஇஇஇஇஇனிஜஇைடுவி~ெ
 

ட்சைகளை நிறைவு செய்கிறார்கள் என்பதும் ப்பட்டியல் இங்கு தரப்படவில்லை.
ம் மேற்பட்ட கவிதைகள், 490க்கும் மேற்பட்ட ; 55க்கும் மேற்பட்ட நேர்காணல்கள், 4 குறு 0க்கியத் தொடர், 101 அட்டைப்பட அதிதிகள்
江T。 ரியர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள், விமர் ராசிரியர்கள், புலம்பெயர்ந்த படைப்பாளிகள், நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று கலைத்துறையில் ஈடுபட்டவர்களையே நாம் பர்களுள் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, ழியான், தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் * ஒட்டு மொத்த வாசிப்பானது ஈழத்து நவீன கொணரக் கூடிய வகையில் அமையவேண்டும் விகள்தொடுக்கப்பட்டமையையும் அவதானிக் கிெய வளர்ச்சிபற்றி அறிந்து கொள்ள விரும்பும் நக்கும் பயன்மிக்கவையாக அமைந்தன.
101 பேரைக் கெளரவித்துள்ளோம். இவர்கள் து இலக்கிய வளர்ச்சியில் இவர்கள் எவ்வாறு அறியக்கூடிய விதத்தில் இந்த அட்டைப்பட NT6)T6ծT, ஷ, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, மூத்த ர் சிற்பி சிவசரவணபவன், மலையகத்தின் மூத்த 5கு வெளியிடப்பட்ட பவளமலர்கள் - சிறப்பு டு சமாந்திரமாக இணைந்த ஈழத்து இலக்கிய வண்ணம் அமைந்ததையும் அவதானிக்கலாம். ல் இலக்கியத் திறனாய்வியல் - அடிப்படைகள் டுரையானது மிகவும் பயனுள்ள கட்டுரையாக பும் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களாலும் 2த்தின் திறனாய்வுத் துறைக்கு ஞானத்தின் வழி னக்கருதி மகிழ்வடைகிறோம். கியம்” என்ற தனியான பகுப்பை உருவாக்கிய ாரும் என்ற உண்மையை வெளிச்சமிட்டு தழை 'ஈழத்துப் போர் இலக்கியச்சிறப்பிதழாக நு நாட்டிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் ளிடையேயும் இச்சிறப்பிதழுக்குக் கிடைத்த அமைந்தது. ஈழத்துப் போர் இலக்கியம்’ என்ற பாரிய தொகுப்பினை வெளிக்கொணர்ந்ததன் யம்' என்ற புதிய வகைப்பாட்டினை - அதன் கட்டமைப்புக்குள் கொண்டுவந்த பெருமை ங்கள் அழிந்துபோகாமல் பாதுகாப்பதற்கும், துப் போர் பற்றி உலகலாவிய ரீதியில் மக்கள் காலத்தின் தேவையாகிறது. இந்த முயற்சியை காலத்தில் வழங்கிய உச்சப் பங்களிப்பாகக்
சிறப்புகள். வது அகவையில் தடம் பதிக்கிறோம் என்பதை ரு தனிமனித சாதனையல்ல என்பது எமக்கு வாசகர்கள், எழுத்தாளர்கள், நலன்விரும்பிகள், பாரது கூட்டு முயற்சி. இவர்கள் யாபேரும் கையின் இத்தகைய வளர்சிக்கும் வெற்றிக்கும் வோடு பதிவுசெய்கிறோம். எமது இலக்கிய வேண்டும் என எல்லோரையும் அன்புடன் ம் நாம் பல காத்திரமான இலக்கியப்பணிகளை நிகூறுகிறோம். ~~~~~~~~~~~~~~~

Page 6
1றில்லவை செய்திட நல்லவை எ நல்லவை வளர்ந்திட வேண்டும் அல்லவை அழிந்திட அல்லல்கள் த எல்லோரும் முனைந்திட வேண் செய்தவர்தான் "இலக்கியத் தாரகை” அவர்கள்.
ஈழத்தமிழரின் படைப்பிலக்கிய 6 முக்கியமானதாகும். மலையகப் படை வாங்காத எந்தவொரு ஈழத்து இலக்கி கருதமுடியாது. ஈழத்துத் தமிழ் இலக்க மலையக இலக்கியவாதிகள் பலர், நூ வந்திருக்கின்றனர். மலையகத்தின் மூ மீனாட்சியம்மாள் நடேசையர், "தூரத்து சுப்பையா, திருமதி சிவபாக்கியம் கும இலங்கைமலையகத்தைப்பிறப்பிடமாக வரிசையில் முன்னோடியாகத் திகழ்பவர் இலங்கையில் 1940 களில் ஆரம்பம இவர் மூன்றாம் தலைமுறைக்குரியவர்.அ தும் எழுதி வருகிறவர். மலையகத்தில் பரப்பில் மிகக் காத்திரமான இலக்கிய எண்ணிவிடலாம். அந்த வரிசையில் நயி மலையக இலக்கியத்தை நோக்கும் ே காலம்’ என்றே குறிப்பிலாம். அதற்கு அ சிவம்இணையாசிரியராகஇருந்து வெளி கூற்று. மலைமுரசில் தனது ஆரம்ப எழு சிறந்த படைப்பிலக்கியவாதிகளாக மின் வரிசையில் மலைமுரசில் முகிழ்ந்தவர்க அலங்கரிக்கும் திருமதி நயீமா சித்திக் அ "ஈழத்து இலக்கியத்திற்குத் தரமான என்ற நயிமா சித்திக் சமுதாய யதார்த்த
0900 próóóó முஜ்ஜேழர் 20ஷ் படைப்பிஸ்க்கிறுதி
இத்திக்
 

நீர்ந்திட 豪 ரும்” என "இளம் தென்றலாகப் பிரகடனம் “கலாபூஷணம்" திருமதி நயீமா சித்திக்
வரலாற்றில் மலையகத்தவரின் பங்களிப்பும் ப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பினை உள் ய வரலாற்றுப் பதிவும் முழுமைபெற்றதாகக் கியத்திற்கு புதிய வடிவத்தைக் கொடுப்பதில் ாற்றாண்டுகள் கடந்த நிலையில் பங்களித்து மத்த பெண் படைப்பாளிகளான திருமதி துப் பச்சை” நாவலாசிரியர் திருமதி கோகிலம் ாரவேல் என்று தொடரும் இவ்வரிசையில், 5க் கொண்டமுஸ்லிம் பெண்எழுத்தாளர்களின் ர் திருமதி நயீமா சித்திக் அவர்கள் ான முஸ்லிம் பெண் எழுத்தாளர் பரம்பரையில் றுபதுகளில் எழுதத் தொடங்கியவர் தொடர்ந் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் இலக்கியப் ப் பங்களிப்பு செய்தவர்களை விரல் விட்டு மா சித்திக் எனபவரும் ஒருவர் எனலாம். போது அந்த அறுபதுகளின் பின் 'மறுமலர்ச்சிக் டிதளமாக விளங்கியது " கலாபூஷணம்” க.ப. யிட்ட“மலைமுரசு”என்பதே ஆய்வாளர்களின் ழத்துருவை வெளிக் கொணர்ந்த பலர் இன்று ளிர்வது கவனிக்கத்தக்க விடயமாகும். அந்த 5ளில் ஒருவரே இம்மாத அட்டைப்படத்தை வர்கள்.
சிறுகதைகளைத் தந்துள்ள நயீமா ஏ. பஷீர் த்தைப் புரிந்து கொண்டு இஸ்லாமிய குடும்ப விமர்சனமாக இவரது சிறு கதைகள் அமைந்துள்ளன' என்றுபிரபலபடைப்பாளியும் நாவலாசிரியருமான செங்கை ஆழியான் சுதந்திரன் சிறுகதைத் தொகுப்பில் அறிமுகப்படுத்துகிறார். அவர் குறிபிட்டுள்ளபடி அந்த அறுபதுகளில் மலை யகத்தில் தோன்றிய ஆத்திரப் பரம்பரை எழுத்தாளர்களில் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு தனது எழுத்துலகப் பங்களிப் பைச் செய்தவர்களில் மிக
.ேபொன்னத்தை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 7
முக்கியமானவர்தான் இன்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி நயீமா சித்திக்.
பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை
யைப் பிறப்பிடமாகவும் தற்போது கம்பளையை வதிவிடமாகவும் கொண்ட நயீமா, பவுர் மரைக்கார் - தாஜ்பீவி
தம்பதியினரின் ஏக புதல்வியாவார். பசறை மத்தியகல்லூரி, காத்தான்குடிமத்தியகல்லூரி ஆகியவற்றில் கல்வியைப் பெற்றுக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டதாரியுமாவார். அத்து டன் தொழில் நிமித்தம் கல்வித்துறை டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டார்.
இலங்கைத் தமிழ் இலக்கியத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு தனது பெற்றோர் தன்னுள் ஏற்றிவைத்த ஆழமான வாசிப்பு மீதான ஆர்வமும், பசறை மத்திய கல்லூரியின் தமிழாசிரியரான அமரர் ஐ. சாரங்கபாணியின் தூண்டுதலும் ஆசியும்தான் காரணங்களாக அமைந்தன எனக்கூறும் நயீமா சித்திக் தனது தாயார் மூலமே அக்காலத்தில் தமிழ் எழுத்துலகில் சிறந்து விளங்கிய புதுமைப் பித்தன், கல்கி, ஜெயகாந்தன், லக்ஷமி, அகிலன், போன்ற பலரின் படைப்புகளைப் பற்றி அறிந்து கொண்டதாகக்கூறி மகிழ்கிறார்.
ஏழாவது வகுப்பு படிக்கும் போது, தான் எழுதிய சிறுகதையை தினகரன் பத்திரிகை பிரசுரம் செய்து தன்னை இலக்கிய உலகிற்கு இனம் காட்டியது என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் இவர் இதுவரை நான்கு நாவல் களையும்நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும், கல்வி சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தினகரன், வீரகேசரி, சுதந்திரன், சிந்தாமணி, தினபதி, நவமணி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும், LI6Ն) சிற்றிதழ்களிலும் எழுதியதுடன் தமிழகத்தில் நா.பார்த்தசாரதியின் "தீபம்” மற்றும் “மணிவிளக்கு” போன்ற இதழ்களி லும் தனது இலக்கியப் பங்களிப்பைச் செய்துள்ளார். எழுத்துலகப் பணிகளுக்கு அப்பால் அறுபதுகளிலிருந்து இலங்கை வானொலியிலும், வானொலி நாடகங்கள், இலக்கிய உரைகள், கவியரங்குகள், உரைச் சித்திரம் என்பவற்றையும் படைத்து காற்றில் தவழச் செய்த பெருமையும் இவருக்குண்டு. இவற்றில் "தமிழ் வளர்த்த முஸ்லிம்கள்” “சிறப்புமிக்க சீறா” என்ற தொடர் சொற்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

பொழிவுகளும் குறிப்பிடத்தக்கவை.
எழுபதுகளில் இருந்து ஆசிரியராகப் பணியாற்றி இப்பொழுது ஒய்வுநிலையில் இருக்கும் நயீமா ஆரம்பத்தில் ஒரு சிறுகதைப் படைப்பாளியாகவே இலக்கிய உலகில். பிரவேசித்தவர். பின்னரான அவரின் தேடல் களே அவரை ஒரு சிறந்த நாவலாசிரியராக மிளிரச் செய்தது.
தனது இளமைக் காலத்திலே சிறுகதை, வானொலிப் பணிகளோடு சமூகப் பணி களிலும் தன்னை இணைத்துக் கொண்டு மலையகச் சமூக மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துள்ளார். மலையகப் பெண்களின் வாழ்க்கையின்அவலங்களைத்தனது மேடைப் பேச்சுக்களின் மூலமும் மிக வீறாப்புடன் இவர் வெளிகொணர்ந்ததைக் காணமுடியும்.
கல்லூரிக்காலம் முடிந்து வீட்டிலிருக்கும் காலங்களில் மலையகச் சிறார்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற் கொண்டு அப்புத்தளையில் "அசோகா வித்தியாலயம்” எனும் கல்விக் கூடத்தை நிறுவி அதன் மூலம் மலையக் கல்வி அபிவிருத்திக்குப் பங்காற்றியுள்ளார்.
இவரின் அருமை, பெருமை, ஆற்றல்களை அறிந்த மறைந்த தோழர் ஏ. அஸிஸ் அவர்கள் தனது ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மாதர் பிரிவுத் தலைவியாக இவரைநியமித்தார். இந்தப் பதவியின் மூலம் நயீமா உழைக்கும் மலையக தோட்டப் பெண் தொழிலாளர்களின் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு செயற்திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயற்படுத்தி இந்த மக்களின் வாழ்வின் விடிவிற்கு வழி சமைத்தார்.
படைப்பிலக்கியத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நயீமா பத்திரிகைத் துறையையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறவேண்டும். இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் அப்புத்தளைச் செய்தி யாளராகப் பணி புரிந்து இந்த பிரதேசத்தில் நடைபெற்றசமூக அவலங்களை வெளிச்சத்திற் குக் கொண்டுவந்து மலையகத்தில் பெண் பத்திரிகை நிருபராக முதன் முதலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு அந்தக் காலத்தில் வெளிவந்த "தீப்பொறி” இதழின் பெண்கள் பகுதியை பொறுப்பேற்று "இளம் தென்றல்” என்ற புனைபெயரில் பின்வருமாறு எழுதினார். 'உன்மகனுக்கு கல்வி இல்லை யாம்! பிரஜா உரிமை வேண்டுமாம்!
5

Page 8
நாதியற்ற குழந்தைகள் தானே! என்று எள்ளி நகையாடுகிறார்கள். தலைவிதி என்று தலை சாய்ந்து விடாமல் பொறுத்தது போதும் என் தாயே! பொங்கி எழுவாய்' என்று மலையகப் பெண்களைத்தட்டிஎழுப்பினார். பெண்களின் விடிவிற்காகப் பல கேள்விகளைப் படைத்து அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்து பல பதிவுகளைப் புனைந்துள்ளார்.
கண்டி திருமதி சிவபாக்கியம் குமாரவேல் அவர்களேடு இணைந்து "மங்கை” என்ற பெண்களுக்கான இதழையும் நடத்தியவர்.
படைப்பிலக்கியம், தொழிற்சங்கம், கல்வி என்று பல தளங்களில் தனது உழைப்பை வெளிக்கொணர்ந்த அவரின்பத்திரிகைத்துறை சார்ந்த பங்களிப்பு தனியாக நாம் கவனிக்கதக்க விடயமாகும்.
எனது அறிவு வியாபிக்கும் போது நான் வாழ்ந்த பெருந்தோட்ட மக்களின் அவலங்கள் பலவற்றைக் காண நேர்ந்தது. அவற்றைப் போக்க நாம் என்ன செய்ய முடியும்? என்று என்னுள் எழுந்த வினாவிற்கு விடையாகவே படைப்பிலக்கியங்களைப் பதிவு செய்யத் தொடங்கினேன் என்று கூறிப் பெருமைப் படும் இவர் அந்த மக்களின் ஏக்கங்கள், சிறிய எட்டடி காம்பிராவில் வாழும் வாழ்க்கை, கூட்டுக் குடும்ப பாரம்பரியம், மிக வறுமையான சூழலிலும் நெறி பிறழாத வாழ்க்கை முறை, பத்து மணித்தியாலயங்கள் தொடர்ந்து தேயிலை மலையில் பாடுபட்டு வேலை செய்து வீடு திரும்பிய பின் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன்,ஆகியவற்றோடு அவர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளி வர்க்கம், தொழிற்சங்கவாதிகளின் கபட நாடகம் என்பவற்றைக் கண்டதாலும் கேட்டதாலும் அவற்றுக்கெதிராக மேடைகளில் பேசவும், எழுதவும் முடிந்தது. என்கிறார்.
இவரின் படைப்பிலக்கியப் பணியை பாராட்டிப் பலவேறு சமூக, பொது நிறுவனங் கள் விருது வழங்கிக் கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1986ம் ஆண்டு மலையக கலை இலக்கிய பேரவை இவரது இலக்கியப் பணிகளுக்காக விருது வழங்கி கெளரவம் செய்தது.
1991ம் ஆண்டு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் அமைச்சு "நஜ்முல் அதீப்”(இலக்கியதாரகை) எனப்பட்டமளித்து விருது வழங்கியது.
6

1994 Lib ஆண்டு அவர் பிறந்த மாவட்டமான ஊவா மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவில் விருதுடன் சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
2002լb ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அகில இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
2002ம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும், ஞானம் இலக்கியப் பண்ணையும் இணைந்து நடத்திய “சுதந்திரன் சிறுகதைகள்” நூல் அறிமுக விழாவின் போது யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
2002ம் ஆண்டு இலங்கை அரசால் “கலாபூஷணம்” விருது வழங்கிக் கெளரவிக்கப் LILLITU.
2004ம் ஆண்டு உடத்தலவின்ன சிந்தனை வட்டம் இவருக்கு சிறுகதைச் செம்மணி என்ற விருதினையும் வழங்கியிருந்தது.
ஈழத்துத் தமிழ் இலக்கிய பரப்பில் சிறுகதைத் துறையில் இவரின் பங்களிப்பு விசாலமானதாகக் காணப்படுகின்றபோதிலும் இவரின் கதைகள் மீதான சரியான விமர்சனப் பார்வை முன்வைக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
நூலுருவில்வெளிவந்தஇவரதுமுதலாவது நாவலான “வாழ்க்கைப் பயணம்” வீரகேசரி வெளியீடாக 1975ம் ஆண்டு வெளிவந்தது. இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஒருவரினால் எழுதப்பட்ட முதலாவது நாவல் என்று குறிப்பிடப்படுகிறது.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி யான"வாழ்க்கையின்சுவடுகள்”என்றநூல்எஸ். எம். ஹனிபாவின் கல்ஹின்னை தமிழ் மன்றத்தினரால்வெளியிடப்பட்டது. இவரின் பதினொரு சிறுகதைகள் இதில் அடங்கி யுள்ளன. இந்த நூல் தற்பொழுது ஆசிரியப் பயிற்சிக்கலாசாலையில் தமிழ்ப்பாடத்தில் ஒரு பாடநூலாக சேர்க்கப்பட்டுள்ளது.
இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதியான “வாழ்க்கை வண்ணங்கள்” என்ற நூல் உடத்தலவின்ன “சிந்தனை வட்டம்” சார்பாக வெளியிடப்பட்டது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 9
8/டம்பெற்றி-த்திக்கின் 'மந்திருந்த
இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதியான "வாழ்க்கை வளைவுகள்” என்ற நூல் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தால் 2005ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இத் தொகுப்பில் இருபது சிறுகதைகள், மக்களின் உள் உணர்வுகளை வெளிக் கொணருமுகமாக அமைந்திருந்தன.
மானா மக்கீனை தொகுப்பாசிரியராகவும் லேனா தமிழ்வாணனை பதிப்பாசிரியராகவும் கொண்டு “தியாக திருநாள் கதைகள்” என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவந்தது. இத்தொகுப்பில் எட்டு இந்திய எழுத்தாளர்களினதும் ஏழு இலங்கை எழுத்தாளர்களினதும் ஹஜ் திருநாளைப் பற்றிய சிறுகதைகள் அமைந்திருந்தன. அதில் நயீமா சித்திக்கின் கதையொன்றும் இடம்பெற்றிருக்கிறது. (1999)
அந்தனி ஜீவா தொகுத்த 25 பெண் படைப்பாளிகளின் “அம்மா” என்ற சிறுகதைத் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது.
படைப்பிலக்கியத்திற்கு அப்பால் நயீமா சித்திக் கல்வித்துறை சார்ந்த "ஆயிரம் வினாக்களும் விடைகளும்”, “சீறாப்புராணம் நபி அவதாரப் படலம்” என்ற இரு நூல் களையும் வெளியிட்டுள்ளார். இநயீமா சித்திக் அவர்களின் இலக்கியப் பணியைக் கெளரப்படுத்தும் வகையில் மல்லிகை இதழ் இவரைத் தனது 2006ம் ஆண்டு ஜூலை மாத இதழின் அட்டைப் பட அதிதியாக பிரசுரம் செய்து கெளரவம் செய்திருந்தது.
கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன் தொகுத்திருக்கும் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் விபரத் திரட்டிலும் இவரைப்பற்றிய பதிவு இடம் பெற்றுள்ளது.
இலங்கையின் மலையக
மண்ணில் அமைதியாகவும் ஆரவாரம் எதுவுமின்றியும் வாழ்ந்து வரும் மலையகத்தின் மூத்த முஸ்லிம் தமிழ் பெண் எழுத்தாளர் திருமதி நயீமா சித்திக் அவர்களின் பணிகளை விதந்து நினைவு கூர்வது அவருக்கு நாம் செய்யும் கெளரமாகும்.
0 0 0 க்ல்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

மணி வயிறு திறக்கும் ,
செ.சுதர்சன்
அணையுடைக்கும் அரசு
பூவரசிலும் புத்தர் முளைக்கும் படியாய் நிலங் குடித்து நீளும்
குடியேற்ற வைகை போதி மரத்திலை உதிர்ந்து
புத்தர் செத்து யாழ்பாடித் தெரு பாழாக மனக்கூடை நிறைய வழிகிறது
“மண்”
நிலமற்ற மனிதர்
நீர்த்தி வைக்க வெற்றிக் கொடிகள்
கோவணங்களாயின புண் சுமந்த பொன் மேனி கொண்டு
வீரஇசை மெட்டுக்கு மண் சுமக்கும் விதைக்காய் மணி வயிறு திறந்தே
எம் நிலத்துச் செம்மனச் செல்விகள்
காத்துக் கிடப்பர் காத்துக் கிடப்பர்

Page 10
©ண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பேராசிரியர் அப்துல் சலாம் மாவனல்லை நகரை வந்தடைய அஸர் நேர அதான் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர் ஐவேளைத் தொழுகையை - உரிய நேரத்தில் நிறைவேற்றப் பழக்கப்பட்டிருந்ததை சாரதியாகச் செயற்பட்ட ரோபோமனிதன் அறிந்து வைத்திருந்தான். அதனால் தான் ஓட்டி வந்த வாகனத்தைப் பக்கத்தில் இருந்த சர்வமத வணக்கஸ்தலத்தின் அருகே நிறுத்தி, அதிலிருந்து இறங்கி வந்து வாகனத்தின் பின் கதவைத் திறந்து விட பேராசிரியர் அப்துல் சலாம் அதில் இருந்து இறங்கிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து - அவரின் உதவியாளர் கலாநிதி குமரகுருவும் இறங்கிக் கொண்டார். - பேராசிரியர் அப்துல் சலாம் - சர்வமத வணக்கஸ்தலத்தின் இஸ்லாமியர்களுக்காக ஒதுக்கப்பட்ட மஸ்ஜிதுக்குள் நுழைந்து அஸரை நிறைவேற்ற, கலாநிதி குமரகுரு அங்கிருந்த
இந்துக்கோயிலுக்குள் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நவீன விஞ்ஞான வளர்ச்சியும் அதன் மூலம் மனித சிந்தனைகளில் ஏற்பட்ட திருப்பமும் மனித நம்பிக்கைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கி.பி. இருபத்தொன்பது நூற்றாண்டுகள் முடிவடைந்து, மூன்றாவது மிலேனியம் ஆரம்பமாக இருக்கும் நிலையில், சகல மதங் களும் மனிதனை நல் வழிப்படுத்துவதற்கே உலகில் தோன்றின, எனும் உன்னத முடிவுக்கு மனிதன் வந்துவிட்டான் போலும். அத்துடன் வெவ்வேறு மதங்களுக்கு இடையேயும், ஒரே மதத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயும் நடைபெற்ற சொற்போர்,
5 88 6 5 (பு

மரம் தைய உ.நிசார்
ஆயுதப்போர், கலகங்கள், இரத்தக்களரிகள் என்பவை மனித நாகரிகத்துக்கும் அவனின் முன்னேற்றத்துக்கும் ஒரு தடையென்பதை உலகளாவிய ரீதியில் மனிதன் உணர்ந்து கொண்டதன் ஒரு முதிர்ச்சியாகவேதான், ஒரே இடத்தில் சகல மதங்களினதும் வணக்கஸ்தலங்கள் அமைக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்திருக்க வேண்டும். மேற் குலக நாடுகளில் மத நம்பிக்கைகள் அழிந்து போகும் நிலையில், கிழக்குலக நாடுகளில் மனிதர்கள் இவ்வாறு நடந்து கொண்டது ஒரு வரவேற்கத்தக்க விடயமே.
மஸ்ஜிதுக்குள் சென்ற பேராசிரியர் அப்துல் சலாம் தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வர கலாநிதி குமரகுருவும் கோயிலுக்குள் இருந்து வெளியே வந்து விட்டார். அதன் பிறகு இருவருமாக வாகனத்தில் ஏறி அமர, ரோபோ மனிதன் வாகனத்தை மீண்டும் ஓட்ட ஆரம்பித்து விட்டான். பேராசிரியர் ஏற்கனவே வாசித்த புத்தகத்தை மீண்டும் வாசிப்பதற்காகக் கையிலெடுத்துக் கொண்டார்.
"புரொபசர் சார், உங்களுக்கு வாசிப்பதற்கு நல்லதொரு புத்தகம் கிடைத்திருக்கு போல. அந்தப் புத்தகத்தை அவ்வளவு சுவாரசியமாக நீங்கள்வாசிப்பதற்கு அதன்கருப்பொருள் என்ன என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?”
"ஆம், குமரகுரு ஆம். இந்தப் புத்தகம்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 11
இருபதாம் நூற்றாண்டில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட பிரயாணக் கட்டுரையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இருபதாம் நூற் றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு பயணி, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் போது கண்ட காட்சிகள் இங்கே விபரிக்கப்பட்டுள்ளன. அன்று பாதை இரு மருங்கிலும் அழகான மலைத்தொடர்கள், நீர்வீழ்ச்சிகள், வயல்வெளிகள், தென்னந் தோட்டங்கள், இறப்பர் தோட்டங்கள், கிராமங்கள், பட்டினங்கள் என்பவை இருந் துள்ளன. இப்புத்தகத்தை வாசிக்கும் போது அவை மிக அருமையாக நம் கண் முன்னே வந்து நிற்கின்றன. குமரகுரு, கடந்த ஆயிரம் வருடங்களாக அந்த அழகிய காட்சிகள் படிப்படியாகச் சிதைந்து, நாளடைவில் பாதை இருபுறத்தையும் மாடிக் கட்டடங்கள் ஆக்கிரமித்து, இன்று ஒரு கொன்கிறீட் வனம் உருவாகியிருப்பதை நீங்கள் அவதானித் தீர்களா?
"புரொபசர் சார், அதை ஏன் சொல்ல? "குமரகுரு நாம் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி வெற்றியளித்துவிட்டால் இந்த மாடிக் கட்டடங்களின் உயரம் இன்னும் உயர்ந்து கொண்டு போகலாம். அது மட்டுமல்ல, பச்சை மனிதனால் மேலும் பல அபாயங்கள் எமக்கு ஏற்படலாம். அவை இந்த உலகின்நிலைப்பாட்டுக்கு எதிர்காலத்தில் மிக அச்சுறுத்தலாக அமையலாம்."
"புரொபசர் சார், நாம் உருவாக்கப் போகும் பச்சை மனிதனுக்கும் உயர்ந்து கொண்டு போகும் மாடிக் கட்டடங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்புதான் என்ன?”
"மனித மரபணுக்களுக்குள் இருக்கும் நிறமூர்த்தங்கள்நாற்பத்தாறையும் இலகுவாகப் பிரித்தறிந்ததுபோல்தாவரமரபணுக்களுக்குள் இருக்கும் நிற மூர்த்தங்களை பிரித்தறிய முடியாத நிலையில், அவை இணைந்து உரு வாகும் பச்சை மனிதனால் பல நன்மைகள் இருப்பதைப் போல பல பாதிப்புக்களையும் நாம் சந்திக்க வேண்டி வரலாம்."
"பச்சை மனிதன் தனது உணவைத் தானே தயாரித்துக் கொள்வது ஒரு நன்மை. பச்சை மனிதன் தனது உடல் உறுப்புக்களை இழக்கும் தறுவாயில் அவை வளர்ந்த இயல்பு நிலைக்கு வருமென்பது இரண்டாவது நன்மை, பச்சை மனிதனில் இன்னும் பல நன்மைகள் இருக் கலாம். ஆனால், அவனால் நாம் சந்திக்க இருக் கும் பாதிப்புக்கள் என்ன புரொபசர் சார்?"
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

"குமரகுரு ஏற்கனவே கண்டறிந்த பாதிப்புக்களை விட பச்சை மனிதனால் மேலும் பல பாதிப்புக்கள் இருக்கின்றன. உங்களில் நம்பிக்கை வைத்து அவற்றுள் ஒன்றைச் சொல்கிறேன். அதுதான் தாவரங் களைப் போல அவனின் உயரத்துக்கும் வரையரை அற்றுப் போகுமென்பது. அதனால் வானளந்த இந்த மாடிக் கட்டடங்கள் அவனின் உயரத்துக்கேற்ப இன்னும் உயர்ந்து கொண்டு போகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம்."
"புரொபசர் சார், இயற்கையின் படைப்பு கள் அனைத்திலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கி றது. மனிதன் அவற்றுள் தலையிடும் போது அந்தக் கட்டுக்கோப்பு அழிந்துவிடுகிறது. நீங்களும் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்."
"அது உண்மை. அதனால் தான் பச்சை மனிதன் சம்பந்தமான ஆராய்ச்சியை நிறுத்தி விடுவோமா என்று கூட இப்போது எனக்குத் தோன்றுகிறது."
"புரொபசர் சார், அரசு அதற்கு இணங் காது. பச்சைமனிதன்சம்பந்தமான ஆராய்ச்சிக் காக அரசு பல பில்லியன் ரூபாய்களை செலவு செய்திருக்கிறது. அது மட்டுமல்ல, பச்சை மனிதனை வேறொரு நாடு உருவாக்குவதற்கு முன், நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் நமது அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. அவர்கள் அதன் மூலம் பல விடயங்களைச் சாதித்துக்கொள்ள இருக் கிறார்கள். இவ்வாராய்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், நீங்கள் எதிர்த்தா லும் அரசு வேறொரு விஞ்ஞானியின் உதவி யைப் பெற்றுச் சரி இதில் வெற்றி கண்டே திரும்.”
"குமரகுரு பச்சை மனிதனை உருவாக்கு வதற்கு முன் ஜனாதிபதியுடனான இறுதிக் கலந்துரையாடலுக்கு நான் ஒரு விண்ணப்பம் செய்துள்ளேன். அது கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பச்சை மனிதனால் எதிர் காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எடுத் துரைக்க நான் உத்தேசித்துள்ளேன்."
"உலகில் இன்று உயிரியல் துறையில் ஆழ அகலங்களை நன்கு கற்றறிந்த விஞ்ஞானிகளுள் நீங்களும் ஒருவர். இருந்தாலும் விஞ்ஞானம் என்றும் போல, இன்றும் அரசியலின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தான் செயல்படு கின்றது."
பேச்சோடு பேச்சாக பேராசிரியரின்
9

Page 12
வாகனம் கொழும்பின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த அவரது ஆய்வுகூடத்தை வந்தடைந்தது. ரோபோ மனிதன் அதிலிருந்து இறங்கி வந்து கதவைத் திறந்துவிட, இருவரும் அதிலிருந்து இறங்கிக் கொண்டனர்.
அங்கே ஆய்வுகூடத்தைச்சுற்றிவரப்பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது. இயற்கைக்கு மாறாகப் பிறக்கப் போகும் பச்சை மனிதனுக்கு எதிராக, தீவிரவாத இயற்கை அமைப்புகளால் ஏற்பட்டனதிர்ப்பும் அச்சுறுத்தலும் அதற்குரிய காரணமாக அமைந்திருக்க வேண்டும். அத்து டன் வெளிநாட்டுச் சக்திகளின் ஊடுருவலால் ஆய்வுகூடத்துக்கோஅல்லது ஆய்வுகளுக்கோ பங்கம் ஏற்படலாம் எனவும் அரசுக்கு பெரும் அச்சமொன்று இருந்தது.
அங்கிருந்த பாதுகாப்பரண்களைக் கடந்த பேராசிரியர், ஆய்வுகூடத்துக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். அப்போது அவர் முன்னே ஒரு ரோபோ மனிதன் தோன்றினான். அவனின் கைகளில் ஜனாதிபதி அவர்களின் செயலாளரால் கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதம் இருந்தது.
அக்கடிதத்தின் மூலம் அன்று 16:00
அமரர் செம்பியூன்செல்வன் (ஆ
ஞாபகார்த்தச் சிறுகதைப்
(அனுசரணை செம்பியன் செல்வ முதற் பரிசு : ரூபா 50 இரண்டாம் பரிசு ரூபா
மூன்றாம் பரிசு ரூபா :
ஏனைய ஏழு சிறுகதைகளுக்கு பரிசுச் சான் போட்டிக்க சிறுகதைகள் முன்னர் எங்கும் பிரசு போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பெய இணைத்தல் தபால் உறையின் இடது பக்க மூலையில் சிறுகதைப் போட்டி" எனக்
அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் கிளை அலுவலகம் - 38, 4
போட்டி முழவுத் தி
முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கதைகள்
10
 

மணிக்கு ஜனாதிபதி அவர்களின் தலைமை யில் கீழ் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு பேராசிரியர் அப்துல் சலாம் வரவழைக்கப்பட்டு இருந்தார். அத்து டன் ஏற்கனவே அவர் செய்து கொண்ட விண்ணப்பத்துக்குஅமைய, பச்சைமனிதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் சம்பந்தமாக அமைச்சரவைக்கூட்டத்தில்எடுத்துரைக்கவும் அவருக்குச் சந்தர்ப்பம் தருவதாக அக்கடிதத் தில் குறிக்கப்பட்டிருந்தது.
அன்று சரியாகப் 16:00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமானது. செயலாளரின் உரையை அடுத்து பச்சை மனிதனின் எதிர்காலப் பாதிப்புகள் சம்பந்தமாக தனது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு பேராசிரியர் அப்துல் சலாமுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
"மாண்புமிகுந்த ஜனாதிபதி அவர்களே, பச்சைமனிதன்சம்பந்தமானசகல ஆய்வுகளும் 90% முற்றுப் பெற்று விட்டன. அதனுடன் சம்பந்தமான நூறு கருக்களும் மிகவும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஆய்வுகூடத்தில் தயார் நிலையில் உள்ளன. இருந்தாலும்
இராஜகோபால்)
UIL g) 2013
ன் குடும்பத்தினர்) DOO /= 3OOO/= 2OOO/=
றிதழ்கள் வழங்கப்படும். ான விதிகள் ரிக்கப்படாததாக இருத்தல் வேண்டும். ர், முகவரி போன்ற விடயங்களை வேறாக ) (86) 600TGL b. "அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் குறிப்பிடப்படல் வேண்டும்.
6ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
ள் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. -ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 13
பச்சை மனிதன் உருவானதும் நாம் ஏற்கனவே அனுமானித்தது போல் அல்லாமல் அவனால் இந்த உலகிற்கு சாதகங்களை விட பாதகங்களே அதிகமாக ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், தற்போதைக்கு பச்சை மனிதன் உருவாவதை தடுத்து விடுவதே சாலச் சிறந்தது
(6 Т60T வேண்டிக்கொள்ளும்
நிலைப்பாட்டுக்கு நான்
தள்ளப்பட்டுள்ளேன்.
"பேராசிரியர் அப்துல்
சலாம் அவர்களே, உங்களது அறிவு, திறமை, அயராத முயற்சி அனைத்துக்கும் இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. நீங்கள் எமது நாட்டுக்குப் பெரும் புகழை ஏற்படுத்தித் தர இருக்கிறீர்கள். உங்களை நம்பியே நாம் இப்பணியை உங்களிடம் ஒப்படைத்தோம் அவ்வாறிருக்க நீங்கள் தற்போது இவ்வாறு சொல் வது எமக்கு மனவருத்தத்தைத் தருகிறது."
"மான்பு மிகுந்த ஜனாதிபதி அவர்களே, புகழ் இன்று வரும் சில நேரம் அது நாளை மறைந்துவிடும். ஆனால் நாம் ஒரு தவறை உணர்ந்து கொண்டு அதைச் செய்து விட்டால் அதனால் வரும் பாதிப்பு சதா காலமும் இருந்து கொண்டே இருக்கும்.”
“எதிர்காலத்தில் பச்சை மனிதனால் வரும் சாதக பாதகங்களை ஏற்கனவே நீங்கள் பட்டியல் படுத்தி எமக்குக் கையளித் துள்ளீர்கள். அது தவிர மேலும் அவனது சாதக பாதங்கள் உங்களது அறிவுக்கு எட்டி இருக்கிறதா?”
"ஆம், நான் இப்போது உங்களுக்கு அவற்றில் ஒரு சிலவற்றை அறியத்தருகிறேன்.” 1) பச்சை மனிதன் இறக்கும் வரை அவனின் வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கும். அதனால் அவனின் உயரத்துக்கு ஒரு எல்லை இல்லாமல் போகலாம். எனவே அவனுக்குக் குடியிருக்க உயர்ந்த கட்டடங்கள் தேவைப்படலாம். அது மட்டுமல்ல அவனின் உயரத்துக்கேற்ற வாகனங்களும் தேவைப் படலாம்.
2) வெளியே அவன் நடமாடும் போது உயர்ந்த மரங்களும் அவற்றின் கிளைகளும் தடையாக இருக்கலாம். அதனால் அந்த மரங்களை வெட்டிவிட வேண்டி வரும். அதன் மூலம் வளிமண்டல வெப்பநிலை மேலும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)
 

அதிகரிக்கலாம். மழை குறையலாம் வரட்சி ஏற்படலாம். அதன் ஒரு பிரதிபலிப்பாக உணவுப் பற்றாக்குறையும் ஏற்படலாம்.
3) தற்போதைய மனிதனின் சராசரி ஆயுட்காலம் 150 வருடங்களெனினும் பச்சை மனிதனின் ஆயுட்காலம் 500 வருடங்கள் வரை உயர்ந்து நிற்கலாம்.
4) பச்சை மனிதன் சில நேரங்களில் உடற்பலம் மிக்கவனாகவும் விவேகமற்ற வனாகவும் இருக்கலாம். அது உலகை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லலாம்.
5) பச்சை மனிதனின் பிறப்பு வீதம் எமது பிறப்பு வீதத்தை மிஞ்சிப் போகலாம். அதனால் உலகின் ஆட்சி அவனது கைகளுக்கு மாறிவிடலாம்.
"மாண்புமிகுந்த ஜனாதிபதியவர்களே பச்சை மனிதனின் வருகையால் மேற்கூறிய விடயங்களுடன் நமது கற்பனைக்கு எட்டா தவை பல நடைபெறுமெனின், உலகில் உயிரியல் சமநிலை அற்றுப்போய், இந்த உலகம் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படலாம்."
"பேராசிரியர் அவர்களே, நீங்கள் கற்றறிந்தவர். அறிவில் மிக முதிர்ச்சியடைந் தவர். இப்பாதிப்புக்களுக்கு உரிய காரணங் களையும் நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.”
"மனித நிறமூர்த்தங்கள் நாற்பத்தாறுக்குள் இருக்கும் மரபணுக்களை பிரித்தறிந்தது போல், தாவர நிறமூர்த்தங்களுக்குள் இருக்கும் மரபணுக்களை பிரித்தறியும் கலை இன்னும் வளரவில்லை. அதனால்தான்நாம் உருவாக்கப் போகும் பச்சை மனிதனால் இப்பாதிப்புக்கள் வரப்போகின்றன. ஏற்கனவே நான்குறிப்பிட்ட தாவர நிறமூர்த்தங்களுக்குள் இருக்கும் மர பணுக்களை பிரித்தறியும் கலை வளரும் வரை, பச்சை மனிதனை உருவாக்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவது தான் சாலச் சிறந்தது என நான் நினைக்கிறேன்."
அப்போது விஞ்ஞானத்துறை அமைச்சர் எழுந்து நின்றார்.
"பேராசிரியர் அவர்களே, நீங்கள் பச்சை மனிதனின் வளர்ச்சி நடந்து கொண்டே தான் இருக்குமென்றீர்கள் அதனால் அவன் தனது உடல் உறுப்பொன்றை இழக்கும் போது அது மீண்டும் வளர்ந்து சுமுக நிலையை அடைந்துவிடும் என்பதால்,அவனின் வளர்ச் சியை நாம் சாதகமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மரங்கள் வெட்டப் படுவதால்
11

Page 14
ஏற்படும் பாதிப்பை பச்சைமனிதனின் உடலில் இருக்கும் பச்சையம் நிவர்த்தி செய்துவிடும். பச்சை மனிதனின் ஆய்வுகளின் மூலம் பிரபஞ்சத்தின் இரகசியங்களை அவனால் நன்கு அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும். பச்சை மனிதனின் உடற்பலத்தையும் விவேகத்தையும் குறிப்பிட்டீர்கள். உலகில் என்றும் விவேகம் உள்ளவன் கைகளிலேயே ஆட்சி தங்கியிருக்கும் என்பதால் அதைப்பற்றி நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை."
அப்போது ஜனாதிபதியவர்கள் குறுக்கிட் ш птfтдѣ6ї.
"பேராசிரியரவர்களே, எமது விஞ்ஞானத் துறை அமைச்சரும் ஒரு சிறந்த கல்விமான். உயிரியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அத்துறையில் முன்னாள் பேராசிரியரும் கூட அவர் சொல்லும் விடயங்களில் எமக்கு உடன்படக்கூடிய அம்சங்கள் அதிகம் இருக்கின்றன. அத்துடன்
T ஒடு மாத கலத்திக்குள் ச்ெசிெனிெத்ெ கருக்களும் தயார் நிலைக்கு வந்துவிட்டன. சுமக்க விண்ணப்Uம் செய்து கொண்ட Uல்லn சுகதேகில்ான நூறு பெண்கள் தெரிவு கருவறைகளுக்குள் அந்தக் கருக்கள் வைக்க
நாம் பச்சை மனிதன் பற்றிய ஆய்வுக்காக பல பில்லியன்களை செலவழித்துவிட்டோம். இம்முயற்சியை நாம் கைவிட்டாலும் வேறு ஒரு நாடு பச்சை மனிதனை உருவாக்குவதில் வெற்றியடைந்தே தீரும். பேராசிரியர் அவர் களே, அதனால்90%முற்றுப்பெற்றுள்ளபச்சை மனித ஆய்வினை இன்றிலிருந்து சரியாக ஒரு மாத காலத்துக்குள் பூரணப்படுத்தி, நமது நாட்டுக்கு பெருமை தேடித்தருமாறு நான் உங்களைப் பணிக்கிறேன். இப்பணிப்பை ஒரு கட்டளையாகவல்ல, எனது அன்பு வேண்டுகோளாகவே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
விஞ்ஞானிகளுக்கு இருக்கும் தூரநோக்கு, அரசியல்வாதிகளுக்கு இல்லாததையிட்டு பேராசிரியர் அப்துல் சலாம் கவலை கொள்ளாது அங்கிருந்த அமைதியாக வெளி யேறினார்.
அடுத்த கணம் விஞ்ஞானத்துறை அமைச்சரை அழைத்த ஜனாதிபதி, பச்சை மனிதன் சம்பந்தமான சகல ஆய்வுகளையும் இருபத்துநான்கு மணிநேரக் கண்காணிப்புக்கு
12

உட்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார். அதன்படி இக்கண்காணிப்புக்கு பேராசிரியர் அப்துல் சலாம், அவரது ஆய்வுகூடம், அவரது உதவியாளர்களாக செயற்பட்ட விஞ்ஞானிகள், ஊழியர்கள் அனைவரும் உட்படுத்தப்பட்டனர். அதற்காக்பாதுகாப்புத் துறை மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மனித உள்ளத்தை ஊடுருவும் ஸ்கேன் இயந்திரம் கூட பயன்படுத்தப்பட்டது. அதன் அறிக்கைகளை விஞ்ஞானத்துறை அமைச்சர் சதா பார்வையிட்ட வண்ணம் இருந்தார்.
அவ்வறிக்கைகளின் படி பேராசிரியர் அப்துல் சலாமின் நடவடிக்கைகள் விஞ் ஞானத்துறை அமைச்சருக்குத் திருப்தி அளிக்கவில்லை. அது ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட அடுத்த கணம் பச்சை மனிதன் சம்பந்தமான F556) ஆய்வுகளையும் முன்னெடுத்துச் செல்ல விஞ்ஞானத்துறை அமைச்சர்
உற்பத்தி செய்யும் நூறு அவற்றைத் தமது கருவாகச் யிர்க்கணக்கான பெண்களுள்
செய்யப்Uட்டு அவர்களின் ύνύι ως
பணிக்கப்படுகிறார். அது LDL (5) LDGG) பேராசிரியர் அப்துல் சலாம் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அதற்காக விஷேட பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
பச்சை மனித ஆய்வைப் பொறுப்பேற்ற விஞ்ஞானத்துறை அமைச்சர், பேராசிரியர் அப்துல் சலாமின் பணியை, அவருடன் ஏற்கனவே செயற்பட்ட விஞ்ஞானிகளுள் ஒருவரைத் தெரிவுசெய்து அவரிடம் கையளித்து விடுகிறார். அதன்படி ஒரு மாத காலத்துக்குள் பச்சை மனிதனை உற்பத்தி செய்யும் நூறு கருக்களும் தயார் நிலைக்கு வந்துவிட்டன. அவற்றைத் தமது கருவாகச் சுமக்க விண்ணப்பம் செய்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பெண்களுள், சுகதேகி யான நூறு பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் கருவறைகளுக்குள் அந்தக் கருக்கள் வைக்கப்பட்டன. அவர்களின் தேகாரோக்கியத்தைக் கண்காணிக்க விசேஷ வைத்தியர் குழுவொன்று எந்நேரமும் தயார் நிலையில் இருந்தது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 15
விஞ்ஞானிகள் எதிர்பார்த்த குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நூறு பச்சை மனிதக் குழந்தைகளும் பிறந்துவிட்டன. பச்சை மனித ஆய்வுக்கு 100% வெற்றி கிடைத்துவிட்டது. அதனால் நாடெங்கும் விழாக்கோலம் பூண்டுவிட்டது. மகிழ்ச்சி ஆரவாரத்தில் மக்கள் திரண்டு ஊர்வலங்கள் நடத்தி, பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியுற்றனர்.
சர்வதேசத் தலைவர்களால் பாராட் டுக்களும் வாழ்த்துக்களும் ஜனாதிபதிய வர்களுக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தன. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஜனாதிபதி, மீண்டும் ஒருமுறை தமது நாட்டுக்குச் சர்வதேசப் புகழ் கிடைத்ததையிட்டு பெருமிதம் கொண்டார். தமது மகிழ்ச்சியை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள அன்றைய தினத்தை அவர் தேசிய விடுமுறையாகவும் பிரகடனம் செய்துவிட்டார்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அப்துல் சலாம், இவ்விடயத்தை ஊடகங்கள் மூலமாகவே அறிந்து கொண்டார். விஞ்ஞானம் மட்டுமல்ல உலகில் எந்தத் துறையும் என்றும் போல அரசியல்
வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வருவதனால், நடந்து முடிந்த சம்பவங்களையிட்டு அவர் 5GO I GÖ)GN)
கொள்ளவில்லை. அது அவ்வாறாயினும் பச்சை மனிதனால் உலகுக்குக் தீங்கு வரும் போது, அதற்கு வித்திட்ட தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதை நினைக்க, அவருக்கு பெரும் கவலையாக இருந்தது. அதனால் அதற்கேற்ற வகையில் ஆவணமொன்று தயாரித்து அதை எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாத்து வைக்க திட்டமிட்டு செயலில் இறங்கினார். அதில் அடுத்துவரும் ஐந்து நூற்றாண்டுகளின் இறுதியில் பச்சை மனிதனின் நிலை எவ்வாறு இருக்கும் எனும் எதிர்வுகூறல்களை பதித்து வைக்கவும் அவர் தவறவில்லை.
கி.பி.3000 ஆண்டு : பச்சை மனிதன் பிறந்துவிட்டான். அவனுக்கு உணவு உற்பத்தி செய்யும் திறன் இருப்பதனால் தாய்ப்பாலின் தேவை இருக்காது. உடல் வளர்ச்சிக்கு எல்லை இருக்காது. இழக்கும் உறுப்புக்கள் கூட நாளடைவில் சீரடைந்து விடும்.
கி.பி 3100 ஆண்டு : பச்சை மனிதனின் உயரத்துக்கு ஏற்றவகையில் கட்டடங்கள் அமைக்க வேண்டி வரும். அவனின் நடமாட்டத்துக்கு ஏற்ற வகையில் மரங்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

வெட்டி அகற்றப்படலாம். மற்றைய நாடுகளிலும் பச்சை மனித ஆய்வுகள் வெற்றி பெறும்.
கி.பி 3200 ஆண்டு : பச்சை மனிதன் வேகமாகப் பரவத் தொடங்கி விடுவான். சாதாரண மனிதர்கள் சிறுபான்மையாராகி விடுவார்கள்.
கி.பி 3300 ஆண்டு : பச்சை மனிதனில் ஒருவனே நாட்டின் தலைவனாக வருவான். பச்சை மனிதனால் சாதாரண மனிதர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும். அராஜகம் தலை தூக்கும்.
கி.பி 3400 ஆண்டு : பச்சைமனிதன்தனது உணவை சூரிய ஒளியைக் கொண்டு தானே தயாரித்துக் கொண்டாலும் தாவரங்கள் அழிக்கப்படுவதனால் சாதாரண மனிதனுக்கு உணவுப் பஞ்சம் ஏற்படலாம்.
கி.பி 3500 ஆண்டு : சாதாரண மனிதர்கள் அருகிப் போகும் நிலையில் இருப்பார்கள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒர் உயிரினமாக அறிவிக்கப்படுவார்கள். 3501வது வருடப் பிறப்பைக் கொண்டாடுபவர்களுள் 3000ம் ஆண்டு பிறந்த பச்சை மனிதர்களுள் ஒரு சிலர் கட்டாயமாக இருப்பார்கள்.
“ஒன்பது மணி ஆகிவிட்டது. இன்னும் படுத்துத் தூங்கினால் எப்படி? அவசரமாக எழுந்து ரெடியாகுங்கள் யூனிவசிட்டியில் பத்து மணிக்கு உங்களுக்கான பிரியாவிடை வைபவம் ஆரம்பமாக இருக்கிறது."
“பேகம், வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ள நான் எப்படி பாராட்டு விழாவில் பங்குபற்றுவேன்."
“என்ன? வீட்டுக் காவலா? யூனிவசிட்டி யென்றும் லபோரட்டரி என்றும் எக்ஸ்பெரி மென்ட் என்றும் அறுபத்தைந்து வயது வரை உழைத்து, ஓடாகி, ஒய்வு பெறப் போகும் உங்களை, யார் வீட்டுக்காவலில் வைத்துள்ளார்கள்? பக்கத்து அறையில் இருக்கும் மினிலப்புல, இரவு இரண்டு, மூன்று மணி வரை என்னென்னமோ எக்ஸ்பெரிமன்ட் செய்யக்குள்ள நான் நினைத்தேன். சரி, சரி எழும்புங்கள், நீங்கள் என்னமோ கனவு கண்டு விட்டு இப்போ இது உளறுகிறீர்கள்.”
"பேகம், அப்போ, ஜனாதிபதி என்னை வீட்டுக்காவலில் வைக்கவில்லையா?”
“ஜனாதிபதிஏன்உங்களைவீட்டுக்காவலில் வைக்க வேணும்? இன்று பென்ஷன் எடுக்கும் நீங்கள் இனி என்னுடைய வீட்டுக்காவலில் தான் இருப்பீர்கள்.
O O. O.
13

Page 16
"ஈழமண்ணில் இந்தி. நல்வுழிப் பதிவுக
இந்திய இராணுவ காலத்தைச்சித்திரிக்கும் படை
இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தின்பே. குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் பல ஆ படைப்புக்கள் கவிதைகளாகவும், கதைகள் நவீனங்களாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த இந்திய இராணுவத்தினரது பார்வைக்கு செல்லப்பிள்ளைகளின் பார்வைக்கும் தப்பே காரணமாக அக்காலத்தைய பிரசுரங்கள் எதிர்ப்பலைகள் இடம்பெற்றிருக்கவில்லை. கதைசொல்லியின் நளினமான எழுத்து நடை வாசகர் தகவலை மறைமுகமாகத் தெரிந்துகெ இருந்தது. பின்னாளில் வெளிவந்த படைப்புக். வெளிப்படையாகவும் இந்திய இராணுவ அ பேசின. இந்த ஆய்வில் நூலுருவில் ெ இலக்கியங்கள் பற்றிய தகவல்களையே குற் பல படைப்புக்கள் நூலுருவில் வெ சஞ்சிகைகளுடனும், பத்திரிகைகளின் வார தமது வாழ்வை சுருக்கிக்கொண்டன. அவை இக்கட்டுரை ஆராயவில்லை.
சிறுகதைத் தொகுதிகளில் இந்திய அமைதிப்படை
சிறுகதைத் தொகுதிகளில் வெளிப்படை சிறுகதைகளை உள்ளடக்கிய முதலாவது நூ க.தணிகாசலம் அவர்களின் சிறுகதைத் தொ கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. ஆக் வருத்தமும் வாய்ப்பின்மையும் பீடித்த ஒரு மக் விமோசனத்திற்காகவும் உழைக்கவேண்டும் வேட்கையின் சுவாலையாகச் சொரூபங்.ெ சொல்கின்றன இக்கதைகள். நூலின் தலை அழிப்புக்குட்பட்ட ஈழமண்ணில் யாழ்ப்பா சிற்றூர் ஒன்றின் பெயராகும். இந்திய இரா நள்ளிரவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியில் வான்மார்க்கமாகத் தரையிறங்க தாக்குதலில் தப்பிப்பிழைத்த ஒருசில இந்தியப் பிரம்படி மண். அன்று மாலை அவர்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிலேச்சத்தனமான இவ்வூராகும். இந்நூலிலுள்ள கதைகளுக்குப் பிரம்படி என்ற பெயர் அமைகின்றது. இலா 14

0 இராணுவ ஆக்கிரமிப்பு: * பன்றியதொரு தேடல்
ப்பிலக்கியங்கள் இது இலங்கையில் ஆக்க இலக்கியப் Tகவும், தொடர் வண்ணமிருந்தன. ம், அவர்களின் வண்டிய தேவை ரில் தீவிரமான
இருப்பினும், டகளுக்கூடாகவும் ாள்ளக்கூடியதாக கள் தீவிரமாகவும் ட்டூழியங்களைப் வளிவந்த ஆக்க ப்ெபிட்டுள்ளேன். ளிவராது, சிறு
இதழ்களுடனும் என்.செல்வராஜா " பற்றி விரிவாக (நூலியலாளர், லண்டன்)
- - யாக இந்திய அமைதிப்படை பற்றிப் பேசிய லாக, பிரம்படி என்ற தலைப்பில் வெளியாகிய குதியைக் குறிப்பிடலாம். கொழும்பு தேசிய சென்னை சவுத் ஏஷியன் புக்ஸ், ஜூலை 1988 கிரமிப்பின்காரணமாக வறுமையும் பிணியும் கேட்பிரிவின் மீட்சிக்காகவும் விடுதலைக்காகவும் என்னும் வேட்கையினால் உந்தப்பட்டு அந்த காண்டுள்ள போராளிகளின் நியாயங்களைச் ப்பான பிரம்படி என்பது, இந்திய இராணுவ சணம், கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள "ணுவம் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக
மருத்துவபீடத்துக்கு அருகில் அமைந்திருந்த கினர். விடுதலைப்புலிகளின் பலத்த எதிர்த் படையினரின் பதுங்கிடமாக அமைந்துவிட்டது ளை மீட்கவந்த இந்திய இராணுவத்தினரால் இராணுவ அடக்குமுறையில் படுகாயப்பட்டதே
பொருத்தமான தலைப்பாக இந்நூலுக்கான ங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அக்கால வரலாற்றுச்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 17
s
சூழலிலேயே தோய்ந்து நின்று எழுதப்பட்ட கதைகளில் பொருளுருவமும் மொழியுருவமும் இந்நூலாசிரியரை நல்லதொரு சிறுகதை எழுத்தாளராக நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. உறவுகள் தெரிகின்றன, மண்ணின் மைந்தர்கள், கூலிக்குழப்பம், ஒரு பாதை திறக்கப்படுகின்றது, மழை, சிவந்த பாதையில், கல், தெற்கு நோக்கி, வேலிகள், அகதி, நாய்களோ, பிரம்படி, நல்லநாள் ஆகிய தலைப்புகளில் அமைந்த 13 சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
விடுதலைப் புலிகளின் சார்பான எரிமலை, வெளிச்சம் போன்ற ஊடகங்கள் அவ்வப் போது போராளிகளினால் படைக்கப்பெற்ற படைப்பிலக்கியங்களுக்குக் களமமைத்துக் கொடுத்து வந்துள்ளன. அத்தகைய ஊடகங் களினூடாக வளர்த்தெடுக்கப்பட்ட பல போராளிகள் பின்னாளில் தரமான படைப் பிலக்கியவாதிகளாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலங்களில் எழுதப்பட்ட அவர்களது படைப்புக்கள் பெரும்பாலும் FLD5ITG) வாழ்வியல் அவலங்களை உள்வீட்டுப்பிள்ளையாக நின்று எடுத்துரைப்பதாக அமைந்திருந்தன. அவ்வகையில் அம்மாளைக் கும்பிருறானுகள் என்ற தலைப்பில் வெளியாகிய சிறுகதைத் தொகுதியை முக்கியமானதாகக் குறிப்பிட லாம். லண்டனிலிருந்து தமிழீழ விடு தலைப்புலிகளின் வெளியீட்டுப்பிரிவு வெளி யிட்டிருந்த இந்நூலின் இரண்டாவது பதிப்பு ஒகஸ்ட் 1997இல் வெளிவந்தது. முதற்பதிப்பு ஆகஸ்ட் 1994இல் தாயகத்தில் வெளியாகியிருந்தது. உண்மைச் சம்பவங் களைக் கருவாகக் கொண்ட 15 கதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றிருந்தன. இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்புக்காலகட்ட வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையின் அவலங்களையும் சோகங்களையும் சித்திரிக் கும் படைப்புக்களாக 14 கதைகளும் பூரீலங்கா இராணுவத்தின் கொடூரத்தினைச் சித்திரிப்பதாக ஒரு கதையும் அமைகின்றன.
அம்மாளைக் கும்பிடுறானுகள் என்ற நூலை அடுத்து அதன் இரண்டாம் பாகமாகக் கருதப்படக்கூடிய வில்லுக்குளத்துப் பறவைகள்: உண்மைக்கதைகள் தொகுதி என்ற நூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவினால், ஆடி 1995இல்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

வெளிவந்தது. 17 உண்மைக்கதைகளைக் கொண்ட இத்தொகுதியில் இந்திய அமைதிப் படையின் வேட்டைக்குப் பலியான அப்பாவித் தமிழ் மக்களின் கதைகள், போராட்டத்தில் தம்மைப் பலியாக்கிய மக்களின் கதைகள், போராளிகளை நேசித்து அவர்களைக் காப்பாற்றத் துணிவுடனும் சாதுரியத்துடனும் செயற்பட்ட மக்களின் கதைகள் எனப்பலவாறான உண்மைக்கதைகள் பதிவுபெற்றிருக்கின்றன. அவ்வகையில்இந்திய இராணுவத்தை போர்க்காலத்தில் நேரில் எதிர்கொண்டவர்களின் உண்மைக்கதைகள் பக்கங்கள் தோறும் தமது உணர்வை பதியவைத்திருக்கின்றன.
கவிதைத் தொகுதிகளில் இந்திய அமைதிப்படை சிறுகதைகளைவிட கவிதைகளிலேயே இந்திய அமைதிப்படை தொடர்பான செய்திகள் அதிகம் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் அவை தனித்தொகுதிகளாக எங்கும் வெளியிடப்படவில்லை. ஆயினும் அக்காலகட்டத்துக்கவிதைகள்பெரும்பாலும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கால அவலங்களையே பதிவுசெய்திருந்தன. சோகங்களிலும் துயரமனது என்ற கவிதைத் தொகுதியை உதாரணமாகக் கொள்ளலாம். கெளரியின் கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுதி சென்னையிலிருந்து சமூக ஆய்வு வட்டத்தினால், சித்திரை 1988இல் வெளி யிடப்பட்டது.
ஈழப் போராட்டக் களத்திலிருந்து கனல் மணம்பரப்பியஇளங்கவிஞர்களுள்கெளரியும் ஒருவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்காளியாக இருந்த வேளையில் ஈழத் தின் போர்க்குரலாக இவரது கவிதைகள் வெடித்தன. தமிழ் மண்ணை ஆக்கிரமித்த சிங்கள இராணுவத்துக்கும், இந்திய இராணு வத்துக்கும் அதன் அரசுகளுக்கும் எதிரான மக்களின் உள்ளக் குமுறல்கள் இவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்பட்டன. இத் தொகுப்பிற்கான நீண்ட முன்னுரையினை சென்னை மாநிலப் புதுக் கல்லூரிப் பேராசிரியர் கவிஞர் இன்குலாப் அவர்களும், பின்னுரையினை தமிழ்நாடு, குடியாத்தம் அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயரறியாப் பெரியோன் : கால மும் கவிதையும் என்ற கவிதைத்
15

Page 18
தமிழ் மண்ணை ஆக்கிரமித்த சி இராணுவத்துக்கும் அதன் அரசுக குமுறல்கள் கௌரியின் கவிதைகள்
தொகுதி, தி. உதயசூரியனால் எழுதப் பட்டு யாழ்ப்பாணம் பட்டப் படிப்புகள் கல்லூரி வெளியீடாக ஆடி 2002 இல் வெளிவந்தது. கவிதைத்துறையிலே தீவிர ஈடுபாடுகொண்டு, நவீன கவிதைகளை எழுதிவரும் இளங்கவிஞர் தி.உதயகுமார் போர் உலாவரும் மண்ணில் இருந்து தன்னைச் சூழ்ந்து நடக்கும் நிகழ்வுகளை கவிதைகளாகப் பதிவுசெய்திருக்கிறார். முதல் இருபாடல்களையும் செம்மணி புதைகுழிகளுடன் தொடங்கும் இவர், ஜெயசிக்குறு போர் நடவடிக்கை, கிபீர் விமானத்தாக்குதல், எரிபொருள் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு என்று எதையுமே விட்டுவைக்கவில்லை. இந்திய இராணுவம் தமிழர் மண்ணை ஆக்கிரமித்திருந்த வேளையிலும், இரண்டாம் கட்ட ஈழப் போரின் போதும், இடப்பெயர்வின் பின்னர் வன்னியில் வாழ்ந்தபோதும், யாழ்ப் பாணத்துக்கான பாதைதிறக்கப்பட்டபின்னரு மாக அவ்வப்போது தான் எழுதியவற்றுள் தேர்ந்த 25 கவிதைகளை இத்தொகுப்பில் சேர்த்துள்ளார்.
பி ட்டம்
நாவல்களில் இந்திய அமைதிப்படை
02 இந்திய இராணுவம் ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தைப் பின் புலமாகக் கொண்டு சில நாவல்கள் இது வரை
வந்துள்ளன.
மீண்டும் புதிதாய்ப் பிறப்போம் என்ற பெயரில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் எழுதிய நாவலொன்றை முதன்மையாகக் குறிப்பிடவேண்டும். துன்பங்களும் சோதனை களும் தொடர்ந்து வந்த போதும், தளராத மன உறுதியுடன் இந்த மண்ணை நேசித்து மானமுடன் தலைநிமிர்ந்து வாழமுனையும் ஒரு குடும்பத்தின் கதை இது. இது 12.7.1987 முதல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழமுரசு தினசரியின் வார வெளியீட்டில், தொடராக வெளிவந்தது.
- 10.10.1987 அன்று இந்திய அமைதிகாக்கும் படை பத்திரிகைச் சுதந்திரத்தில் கைவைக்கும் நடவடிக்கையின் வெளிப்பாடாக, ஈழ
16

ங்கள இராணுவத்துக்கும், இந்திய ளுக்கும் எதிரான மக்களின் உள்ளக் ரில் வெளிப்படுத்தப்பட்டன.
முரசு அலுவலகத்தைக் குண்டுவைத்துத் தகர்க்கும்வரை இந்நாவல் தொடர்ந்தது. பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து டேவிட் லிகோரியின் மீரா வெளியீடாக, ஆனி 1992 இல் நூலுருவில் இந்நாவல் முழமையாக வெளிவந்தது.
ஓ கனடா என்ற நாவல் பாரதிநேசன் என்ற புனைபெயரில் வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த வீ.சின்னத்தம்பி அவர்களால் எழுதப்பட்டு மார்ச் 1994 இல் வெளியானது. மார்க்சிய கோட்பாட்டில் பற்றுறுதி கொண்ட நூலாசிரியர், மக்கள் சீனக் குடியரசில் 15க்கும் மேலான ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சமூக பொருளாதாரம் தொடர் பான வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெளிநாடு செல்வதே ஏற்புடையது என்ற கருத்தைக்கொண்ட ஈழத்தமிழர்களிடையே நாட்டின் பொருளாதார விடிவும் இப்பிரச் சினையைத் தீர்க்க முக்கியம் என்ற கருத்தை இந்நாவலில் வலியுறுத்துகின்றார். சாதாரண வாழ்க்கையில் தமிழ் எழுதுவினைஞர் ஒருவர் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச் சினைகளையும், அவரது வாழ்க்கையில் சமுதாய ரீதியில் ஏற்படும் நிகழ்வுகளையும், அந்த நிகழ்வுகள் அவரில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இந்நாவல் விபரிக்கின்றது. இந்திய இராணுவத்தின் ஈழமண் ஆக்கிர மிப்பும் கதையின் பின்னணியில் சொல் லப்படுகின்றது.
ஈழத்து எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை என்ற நூல் ஐந்து பாகங்களில் வெளிவந்த பெருநாவலாகும். சென்னை இலக்கு நூல்கள் வெளியீடாக 1வது பதிப்பினை ஜூன் 1998 இல் கண்டிருந்த இந்நாவல் தமிழ் இலக்கிய உலகில் நீண்டகாலத்தின் பின் வெளிவந்த பல பாகங்களைக்கொண்ட நாவல் என்றவகையில் ஈழத்துப் படைப்பிலக்கியத்துறையில் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த நாவல் - யுத்தத்திற்கானதாகவோ அன்றி சமாதானத்துக்கானதாகவோ எழுதப்படாது சமகால அரசியல் நியாயமொன்றை விசுவாச மாகச் சொல்லியிருக்கின்றது. இது நகரும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 19
காலத்தை பிரதானப்படுத்தி 5 பாகங்களில் எழுதி முடிக்கப்பட்டதாகும். 1981 தொடக்கம் 2001 வரையிலான காலப்பகுதிக்குரிய 21 ஆண்டுகால இலங்கையின் வாழ்நிலைக் களத்தில் நின்று 5 பாகங்களிலும் கதை அழகாக நகர்த்தப்படுகின்றது.
1981 முதல் 2001வரையான 21 ஆண்டு களில் 21 நூற்றாண்டுகளின் இலங்கைச் சரித்திரத்தை புல்லின் தலைப்பணித்துளியின் பிரபஞ்சப் பிரதிபலிப்பாக இந்தநாவல் மீளுருவாக்கம் செய்கின்றது. சமகாலத்து எரியும் அரசியல் பிரச்சினையொன்று, உலகமளாவிய கதை நகர்ச்சியின் மூலம் பேசுகின்ற தமிழ் நாவல் இது. 1981இல் அக்கினிப் பொறி போன்ற மையச் சம்பவமொன்றின் உந்திப்புடன் ஆரம்பிக்கும் நாவலில் 1983 கறுப்புஜூலை, தேசம் தாண் டுதல், அகதிமுகாம் அவலங்கள், மேற்குலகின் அடையாளச் சிக்கல்கள், சமூக நிலை மாற்றங்களும் தேசமளாவிய கருத்துருவின் புத்தாக்கமும் என்று வியாபிக்கும் சரித்திர வெளியில் இன்னொரு சரித்திரம் சொல்லப் பட்டுள்ளது. ஈழத்துடன் இணைந்த சிறு தீவான நயினாதீவின் வடகரையிலிருந்து தொடங்கும் கதை, கட்சிப் பூசல்கள், கூட்டணி அமைப்பு, தமிழீழத்தின் தத்துவார்த்த உதயம், போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி என்பவற்றின் இலக்கியச் சாட்சியமாகின்றது கனவுச்சிறை.
நோயிலி இருத்தலி என்ற பிரபல்யமான நூல்ஈழத்துப்படைப்பாளிமு.பொன்னம்பலம் அவர்களால் 1999இல் வெளியிடப்பட்ட நாவலாகும். 1984 ஒக்டோபரில் தான் மயிலிட்டி TB சனடோரியத்தில் நோயாளி யாக இருந்த வேளையும் (இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டதும், போராளிக்குழுக்கள் அதன் சோகத்தை வெளிப்படுத்தியதுமான காலகட்டம்) 1987 இல் யாழ். பெரியாஸ்பத்திரியில் பொலி நியுரைரிஸ் நோயாளியாகக் கிடந்தபோதும் (தமிழ் ஈழப் போராளிகளையும் பொதுமக் களையும் இந்திய இராணுவம் வேட்டை யாடிக்கொண்டிருந்த காலம்) இந்த இரு காலகட்டங்களில் தனக்கு நேர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடு இந்நாவலின் பேசுபொருளாக அமைந்திருந்தது. நாவலினூ டாக இந்திய அரசியலில் ஈழப்பிரச்சினை பெற்ற மாற்றங்களை கூர்ந்து அவதானிக்க
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

முடிகின்றது.
போர்க்காலப் படைப்பிலக்கியங்கள் பற்றி ஆராயப்புகும் எந்தவொரு இலக்கிய ஆய்வாளராலும் தவிர்க்கப்படமுடியாதவர் தாமரைச்செல்வி. விண்ணில் அல்ல விடிவெள்ளி (1992), தாகம் (1993), வேள்வித் தீ (1994), ஒரு மழைக்கால இரவு (1998), அழுவதற்கு நேரமில்லை (2002), பச்சை வயல் கனவு (2004), வன்னியாச்சி (2005) ஆகிய தொகுதிகளின் வழியாகச் சிறுகதைகளாகவும் குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் ஈழத்தின் போர்க்கால அவலங்களைப் பதிவாக்கியவர். இவரது வீதியெல்லாம் தோரணங்கள் என்ற நாவல் நவம்பர் 2003 இல் வெளிவந்தது. 1989இல் யாழ் இலக்கிய வட்டம்- வீரகேசரியுடன் இணைந்து நடத்திய போட்டியில் 2ம் பரிசினைப் பெற்ற இந்த நாவல் பின்னர் 1.3.1992 முதல் 3.5.1992 வரை வீரகேசரி வார வெளியீட்டில் தொடராகவும் வெளிவந்திருந்தது. இந்திய இராணுவம் இந்த மண்ணில் நிலைகொண்டிருந்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. ஏற்கெனவே நொந்து போய்க்கிடந்த மக்கள் மீது IPKF என்ற பெயரில் இந்திய அமைதிகாக்கும் படை வந்து வேல் பாய்ச்சிய காலம் அது. ஈழமண்ணில் ஒரிடத்தில் ஏற்படும் போரின் அனர்த்தங்களின்விளைவுகளை அதன்
வாழ்கின்ற மனிதர்களை இந்நாவலில் சந்திக்க முடிகின்றது.
ஈழத்தின் முதுபெரும் ஜனரஞ்சக படைப் பிலக்கியவாதியாகக் கருதப்படும் செங்கை ஆழியானும் (இயற்பெயர்: கந்தையா குணராசா)யுத்தபூமிஎன்ற பெயரில் ஒருநாவலை எழுதியிருக்கிறார். ஏப்ரல் 2006இல் வெளிவந்த இந்நாவல் இலங்கையில் இனமோதல்கள் வெடித்த நிலைமையில் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் சென்ற இந்திய அமைதிகாக்கும் படை, அங்கே தமிழர்களுக்கு எதிராக இழைத்த வரலாற்றுத் தவறுகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் வாழும் ஈழத்தமிழர்கள் எப்படி எல்லாம் மண்மீது பற்றும்பாசமும் கொண்டிருந்தார்கள்என்பதை இந்த நாவல் விரிவாகவும் அழுத்தமாகவும் சித்திரிக்கின்றது.
O O O
(அடுத்த இதழில் நிறைவுறும்)
17

Page 20
1ெல்லோருக்கும் வணக்கம் இது எனக்கொரு புது அனுபவம். இது கைய விருது விழாக்களில் விருதுபெறும் ஒரு இருந்ததில்லை. விருதுகளுக்கு எதிரான ஒரு இவ்வளவுகாலமும் இருந்து விட்டேன். இன் னைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாக எண் என்று யோசித்தேன். எழுத்தாளர்கள் பரிசுக பாராட்டுகள் பற்றியே பேசலாம் என்று நினைத் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் "காத்தி தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். என வயது பூர்த்தியாவதை முன்னிட்டு எனது சில மாணவர்களும் எனக்கு ஒரு விழா எடுக்கும் நோ அணுகிய போது அதை மறுதலித்த மனநிலை விருதுகள் பாராட்டுகளுக்கு எதிராக எழுதிய கவிதை இதுதான்:
மன்னிக்கவேண்டும் எனக்கு எதற்கு இப்போது பாராட்டு, பட்டம், பரிசு, விருதுகள், விழாக்கள் எல்லாம்?
காத்திருங்கள் நான் இறந்து நூறாண்டுகள் ஆகட்டும் நான் புதைக்கப்பட்ட இடத்தில் புல் முளைக்கட்டும் இன்னும் நூறாயிரம்பேர் புதையுண்டு போக அதன்பின்பும் என் புதைகுழியின் அடையாளத்தை உங்களால் கண்டுகொள்ள முழந்தால், என் எச்சங்களில் ஏதாவது ஒரு துணுக்கு எஞ்சியிருந்தால், மின்மினிபோல் அது சற்றேனும் ஒளி உமிழ்ந்தால் என்னை நினைவுகூருங்கள்
அதுவரை காத்திருங்கள் தயவுசெய்து காத்திருங்கள் இப்போதும் அதே மனநிலையில்தான்நான் இந்த விருதைப் பெறுவதற்கு இவ்வளவு தூர் ஏதாவது அர்த்தம் உண்டா என கடைசி நிமிட யோசித்ததுண்டு.
பரிசுகள் விருதுகள் பாராட்டுகள் எல் சூழலில் மலினப்படுத்தப்பட்டிருப்பதுபோல் மலினப்படுத்தப்பட்டிருக்காது என்பது என பாராட்டு விழாக்களும் கெளரவிப்புகளும் அ அர்த்தத்தையும் மதிப்பையும் இழந்துவிட்டன டைகள் பன்னாடைகளுக்குச்சமனாகிவிட்டன. அலங்காரமான பட்டங்கள் வழங்கப்படுவதும், படைப்பாளிகள் பலர் ஆவலுடனும், ஆர்ப்பாட சுமந்து திரிவதும் சுயமதிப்பீட்டின் வீழ்ச்சிை உணர்த்துகின்றன. பரிசுகள், விருதுகளுக்காக
18

துவரை இத்த நவனாக நான் மனநிலையில் று இவ்விருதி ான பேசுவது ள், விருதுகள், ந்தேன்.
ருங்கள்' என்ற க்கு அறுபது நண்பர்களும் க்கில் என்னை )யில் பரிசுகள் கவிதை அது.
5ட்டும்
இருக்கிறேன். ரம் வருவதில் ம் வரை நான்
லாம் தமிழ்ச் வேறு எங்கும் ர் எண்னம், அவற்றுக்குரிய ன. பொன்னா அபத்தமான, அவற்றை நம் ட்டத்துடனும் யயே நமக்கு
நம் படைப்
எம். ஏ. நுஃமான்
“எழுத்தாளர்கள்
பரிசுகள்,
விருதுகள்,
சென்னை பல்கலைக்கழக பவள விழாக் கலையரங்கில் 26.04.2013ல் C நிகழ்ந்த αλονιά (3, ல்த% வழங்குழு வைபவத்தில்
ஆற்றிய ஏற்புரை
பாராட்டுகள்?
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 21
பாளிகள் பலர் படும் பாடுகளும், ஒவ்வொரு முறையும் இவை தொடர்பாக எழும் சர்ச்சைகளும் இவற்றை மதிப்பிறக்கம் செய்து விட்டன.
இத்தகைய சூழலில் விருதுகள் எவையும் பெறாது இருப்பதே ஒரு எழுத்தாளனுக்குக் கெளரவம் என்ற கருத்து எனக்குள் உறுதி யாகிவிட்டது. இந்த உறுதியுடனேயே, தவிர்க்க முடியாத இரண்டொரு சந்தர்ப் பங்களைத் தவிர, இவற்றை நான் புறக் கணித்துவந்திருக்கிறேன். இலங்கை அரசு வழங்கிய கலாசூரி விருது, கலாசார அமைச்சு விருது, வடகிழக்கு மாகாண கவர்னர் விருது ஆகியவற்றை இவ்வாறு நான் நிராகரித் திருக்கிறேன். இலக்கிய விழாக்களில் கெளரவிப்புக்கான அனேக அழைப்புகளை மறுதலித்திருக்கிறேன். அரச அல்லது தனி யார் நிறுவனங்களின் பரிசுத் தேர்வுக்காக இதுவரை எனது நூல்கள் எவற்றையும் நான் அனுப்பியதில்லை.
எனக்குள் ஒளித்து வாழும் எனது மன அமைப்பும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லவேண் டும். எனது முதலாவது நூல் தவிர வேறு எதற்கும் நான் வெளியீட்டு விழாக்கள் செய்ததில்லை. எனது எழுத்துக்கள் மூலமாக அன்றி வேறுவகையில் எனது இருப்பை வெளிக்காட்ட நான் முயன்ற தில்லை. அலுவலகத் தேவைகளுக்காக அன்றி, வேறு சந்தர்ப்பங்களில் எனது பெயருக்குமுன் கலாநிதி என்ற கல்விசார் பட்டத்தையோ, பேராசிரியர் என்ற பதவிப் பெயரையோ நான் பயன்னடுத்தியதில்லை. இதை நான் ஒரு பெருமையாகச் சொல்லவில்லை, இதுவே என் இயல்பாக இருந்திருக்கிறது. நான் என்ன எழுதுகிறேன், என்னைப்பற்றிப் பிறர் என்ன ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

எழுதியிருக்கிறார்கள் என்பதையெல்லாம், தாங்களாக அறிந்துகொண்டாலன்றி, எனது மனைவி, மக்களுக்குக் கூட நான் சொல்வ தில்லை. இன்றுவரை அதில் எனக்கு ஒரு கூச்சம் இருக்கிறது. ஒரு நல்ல கவிதை எழுதியிருக்கிறேன், ஒரு நல்ல கட்டுரை எழுதி யிருக்கிறேன் என்று சொல்லும் தற்துணிபு இன்றுவரை எனக்குச் சித்திக்கவில்லை. என் எழுத்துக்களின் தரம் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.
இத்தகைய மன அமைப்புடைய ஒருவனுக்குத்தான் இவ்வாண்டு விளக்கு விருது அறிவிக்கப்பட்டது. பலவகையில் இது என்னை மிகுந்த சங்கடத்துள் ஆழ்த்திய அறிவிப்பு. இதை எவ்வாறு எதிர்கொள்வது என பல நாட்கள் யோசித்தேன்.
ஏற்கனவே நான் நிராகரித்த விருதுகள் போல் அத்தனை எளிதாக நிராகரிக்கக் கூடிய ஒன்றல்ல இது. 'தீவிர எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நோக்கில்' விளக்கு இலக்கிய அமைப்பு புதுமைப்பித்தன் நினைவாக நிறுவிய விருது இது. இதுவரை விளக்கு விருது பெற்றவர்கள் எல்லோரும், சி. சு. செல்லப்பா முதல் திலிப்குமார் வரை, நவீன தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்ற ஆளுமைகள். விளக்கு விருது தன்னை மலினப்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்கு இவர்கள் சாட்சி. இந்த விருதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது வரை விருதுபெற்ற இப்படைப்பாளிகளை அவமதித்து விடுவேனோ என்ற தயக்கம் எனக்கு இருந்தது. அதேவேளை விருதுகள் பெறாதிருப்பதே ஒரு எழுத்தாளனுக்குக் கெளரவம் என்ற என் நிலைப்பாட்டை விட்டுக்
19

Page 22
N
கொடுப்பதும் சங்கடமாக இருந்தது. இதை ஏற்றுக்கொள்வதனால் கிடைக்கும் பாராட்டு சங்கோசத்தை ஏற்படுத்தியது. இத்தகைய உணர்வு பூர்வமான தடுமாற்றங்களுக்கு மத்தியில், இறுதியில், தயக்கத்துடனும், சங்கோசத்துடனும், சுந்தர ராமசாமி, அசோக மித்திரன் ஆகிய நம் காலத்துப் பெரும் சாதனையாளர்கள் பெறாத விருதை நான் பெறுகிறேன் என்ற குற்ற உணர்வுடனும் இந்த விருதை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானித்து அமைப்பாளர்களுக்கு அறிவித்தேன்.
ஒரு விருதின் மதிப்பு அதை வழங்குபவர் யார், அதைப் பெறுபவர் யார் என்ற இரண்டு அம்சங்களில் தங்கியிருக்கின்றது. இரண்டுக்கும் இடையிலான சமன்பாட்டி லேயே ஒரு விருதின் பெறுமதி உயர்கின்றது. இவற்றுக்கிடையே முரண்பாடு காணப் படும் போதே விருது பற்றிய சர்ச்சைகள் எழுகின்றன. 'விருதுகளால் ஒரு படைப்பாளி யின் மதிப்பு உயர்வதில்லை, பதிலாக விருது பெறும் ஆளுமைகளைப் பொறுத்தே ஒரு விருது மதிப்புப் பெறுகிறது' என சில ஆண்டுகளுக்கு முன் 'இயல் விருது' தொடர்பான ஒரு சர்ச்சையின் போது நான் எழுதியதாக ஞாபகம். நோபல் இலக்கியப் பரிசின் அரசியல் பற்றிப் பல விமர்சனங்கள் இருந்தாலும், மூன்றாம் தரப் படைப்பாளிகள் யாருக்கும் அப்பரிசு வழங்கப்படவில்லை என்பதாலேயே உலகளாவிய நிலையில் நோபல் பரிசு மதிக்கப்படுகின்றது. தமிழில் இத்தகைய மதிப்பீட்டைத் தொடர்ச்சியாகப் பேணுகின்ற இலக்கிய அமைப்புகள் மிகச் சிலவே உள்ளன. விளக்கு இலக்கிய அமைப்பு
அவற்றுள் ஒன்று என்பது என் கருத்து.
ஆனால், விளக்கு விருதுக்கு நான் தகுதியானவன்தானா? எனக்கு வழங்கப் பட்டதன் மூலம் விளக்கு விருது தன் தரத்தை உயர்த்திக் கொண்டதா அல்லது தாழ்த்திக்கொண்டதா என்ற கேள்விகள் உள்ளன. இதற்கு என்னிடம் விடை இல்லை. இந்த விருது அறிவிக்கப்பட்ட கடந்த நான்கு மாதங்களில் இது பற்றிய சர்ச்சைகள் எவையும் எளவில்லை என்று நினைக்கின்றேன். பல்வேறு சஞ்சிகைகளும், இணைய தளங் களும் இச்செய்தியை வெளியிட்டு எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தன. என்னைப்
20

நோன-Eா'
காயப்பு
மரம் விட்டு மரம் தாவுகிற மனசு ...! குருவிகள் வந்து குந்தி இருப்பதற்கு எந்த மாக்கொம்பு என்ன சாதியிது
- வளைவா நெளிவா என்றேதும் பார்ப்பதில்லை வந்து குந்தி கூடுகட்டி சீவிதம்
நடத்துகிறது.
கிளை முறிந்தால் வேறு இடம்
தேடிப்போகவும். சிறகு முளைக்கும் வரை தொண்டைக்குள் இருந்து கக்கி எடுத்து ஊட்டி விடுகிறது
முதிர்சியடைந்த | ஒரு நாளில் பறக்கும் குஞ்சுகளை
எங்கே போயின பாருடனோவென்றோ எப்போதாகினும்
தேடியலைவதில்லை. மனித மனசு மட்டும் ஏனோ
அப்படியல்லவே
வாழப்போகிறது. வாழ்வியல் இது தானென்று
விளங்க மறுக்கிறது.
குடில்
- மட்டுவில் ஞானக்குமாரன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013

Page 23
பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லாத நண்பர் ஜெயமோகன் கூட தன் இணையத்தில் இச்செய்தியை வெளியிட்டு எனக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார். அவ்வகையில் என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர்களும் விளக்கு இலக்கிய அமைப்பும் திருப்தி அடையலாம்.
ஆயினும், என்னைப் பற்றி எனக்கு ஒரு சுயமதிப்பீடு உண்டு. அது எனக்குச் சாதகமானது அல்ல. 68 வயதுவரை ஆரோக்கியமாகவும், சற்றுப் பொருளாதார வசதியுடனும் வாழக் கிடைத்திருக்கிறது எனக்கு. இந்த நீண்ட வாழ்க்கையில் எழுத்துத் துறையில் என் சாதனைகள் என்ன? இதுவரை முப்பது நூல்கள் வெளியிட்டிருக்கிறேன், இன்னும் பத்து நூல்கள் அளவுக்கான ஆக்கங்கள் என் கோப்புகளில் உள்ளன என்பது எனக்குத் திருப்தி தருவதாக இல்லை. என்னைப் பொறுத்தவரை எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. 40 வயதுக்குள் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்ட பாரதி, புதுமைப்பித்தன் சாதனைகளுடன் ஒப்பிடும்போது நான் எங்கு நிற்கிறேன் என்பது எனக்கு முக்கியமாகப்படுகின்றது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்க யாரும் இருக்கவில்லை. பரிசுகளையும் விருதுகளையும் எதிர்பாராம் லேயே, பஞ்சத்தோடும், பட்டினியோடும் வாழ்ந்து பெரும் சாதனைகள் படைத்தவர்கள் அவர்கள். நமது அதிஷ்டமோ, துர திஷ்டமோ, நமக்குப் பரிசுகளும், விருதுகளும் பாராட்டுகளும் வழங்கிக் கௌரவிக்க இன்று ஏராளமான அமைப்புகள் உள்ளன. அவைதான் இல்லாவிட்டாலும், நாமேஒரு இணையத்தை, ஒரு பத்திரிகையைத் தொடங்கி நம்மைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைச் சுழலவிடும் வாய்ப்புகள் இன்று நமக்கு உள்ளன.
- இன்றுவரை நான் எனக்கென்று ஒரு இணைய தளத்தை உருவாக்கிக் கொள்ள வில்லை. படைப்பிலக்கியத் துறையில் 1960 - 70கள்தான் எனது வளமான காலம். 1980க்குப் பின்னர் நான் 100 கவி தைகள்கூட எழுதியிருக்கமாட்டேன். அவையும் பெரும்பாலும் துப்பாக்கி பற்றிய கவிதைகள்தான். எண்பதுக்குப் பின்னர் நாங்கள் துப்பாக்கிகளுடன் வாழ்ந்த அனு பவத்தின் வெளிப்பாடுகள் அவை. அவற்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013

றைக் கவிதைகள் என்று ஏற்றுக் கொள்ளாத தீவிர படைப்பாளிகள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
ஆராய்ச்சி, விமர்சனம், மொழிபெயர்ப்புத் துறைகளில் நான் சிறிது பங்களிப்புச் செய்திருக்கிறேன். ஆனால் அவை போது மானவை அல்ல என்பது என் கணிப்பு. நான் செய்திருக்கக்கூடியவற்றுள் பத்தில் ஒரு பங்குதானும் நான் செய்யவில்லை என்பது என்னைப் பற்றிய எனது குற்றச்சாட்டு. 'இன்னும் பத்து ஆண்டுகள் வாழக் கிடைத்தால் ஏதேனும் சாதிக்கலாம்' என மூன்றாவது மனிதன் சஞ்சிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில் நான் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு சொல்லி சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் திருப்தியுறும் அளவுக்கு, குறிப்பிடும்படி ஒன்றும் சாதிக்க வில்லை. நான் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்வதற்கான வாய்ப்பு சந்தேகத்துக்குரியது. வாழ்ந்தாலும் எழுதுவதற்கான ஆரோக்கியம் இருக்குமா என்பதும் ஐயத்துக்குரியது. அவ்வகையில் இவ்வளவுதான் நான் என்று அமைதிகாண்பதைத் தவிர எனக்கு வேறுவழி இல்லை.
இவ்வளவையும் பெரிதாக மதித்து விருது வழங்கி என்னைக் கெளரவிக்க முன்வந்த விளக்கு இலக்கிய அமைப்புக்கும், என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் இங்கு குழுமியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விருது வழங்கும் வைபவத்தை முன்னிட்டு என் எழுத்துகள் பற்றி ஒரு காத்திரமான கருத்தரங்கை ஏற்பாடு செய்த சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைக்கும், அதன் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களுக்கும், கட்டுரை படித்த வ. கீதா, அ. மங்கை, அ. சதீஷ், வி. அரசு ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
இதுவரை விளக்கு விருது தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இப்போது முதல் முறையாக இலங்கை எழுத்தாளர் ஒருவர் இவ்விருதுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். இதை இலங்கை எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் ஒரு கௌரவ மாகவும் கருதுகின்றேன். அதற்காகவும் மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
O O O

Page 24
அரோகரா! அரோகரா!... அரோகரா!! அரோகரா!!! அரோகரா!!!... அரோகரா!!!
0 0 0 விகாரைக்கு முன்னால் ரோட்டோரமா நின்ற அரசமரம் இளம் பச்சை இலைகள துளிர்த்து குதூகலித்திருந்தது.
காலையின் வெய்யிலும் கொப்புக நிறைத்திருந்த குருவிகளின் அழகும், சிறிய அர கேட்கும் பொழுது அவை ஒன்றாக எழு பறப்பதும் பின் சிறிய வட்டமடித்து விட்டு வ பார்க்க மனதுக்கு இதமாய் இருந்தது.
குணாவதி கிழவி காலையில் இருந்து அரச கூட்டுமாறு கொண்டு பெருக்கிக் கொண்டு நி ஈர்க்கு கூட்டுமாறின் ஈர்க்குகள் நிலத்தில் கோ மாலையிலும் செய்து விட்டுத்தான் காலையில் மாலையில் சீனியும் பாலும் கலந்த கோப்பி என் வந்து இரண்டொரு நாள் தங்கிச் செல்லும் என வழக்கத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள்.
பகல் நேரத்தில் பாலைப்பழமோ... நாவல் எது எது எந்தக் காலத்தில் கிடைக்குமோ அத வியாபாரம் பார்க்க போய்விடுவாள்.
குணாவதிக் கிழவியின் நதிமூலம் ரிஷிமூல பரம்பரையில் இருந்து வந்தவள் இல்லை என அவளின் பரம்பரையில் ஒரு கலப்பு நடந்திருச் தர்மகத்தாவின் மகளும் சிங்கள இராணுவ வீ அவளின் பரம்பரை ஆரம்பமாகி இருந்ததாம் சிங்களவராய் போய் விட்டார்களாம். [ றோட்டின் மறுகரையில் உல்லாசப் பிர களைப்பாற ஏற்ற வகையிலும் இளநீர், சோட கடைப்பேரிகள் அதிகம் உண்டு. இங்கே தென் தொடக்கம், கிழக்கு மகாணத்தில் இருந்து வரு பாய் கடகம் வரை எல்லாமே வாங்கலாம். ஆம் என்றே இருக்கும். அது அனைவருக்கும் புரிந்த
வைகாசி மா நெருங்க நெருந் அதிகரிக்கத் தொ. வீடு போடும் மீ தொகையும் கூடி
எவ்வாறு மா அதையும் தாண் ஏற்றுக் கொண். பரிநிர்வாணமும் வசந்தத்தை கொ இந்துக்களும் ந
எனவே இந்த தி. வி. ஜீவகுமாரன்
மேலாக இ. (டென்மார்க்)
இலங்கையிலேே
22

12.
SேSGSதின்
ய்
எல்
ளை"
ரவம் ஐந்து வந்து அமர்வதும்
மரத்தைச் சுற்றி தண்ணீர் தெளித்து சிறிய பிற்கின்றாள். தலையையைச் சீவி விட்டது போல லமிட்டு இருந்தன. இதனை கிழவி காலையிலும் பனங்கட்டியுடன் வெறும் தேநீர் என்றாலும் சரி, ஏறாலும் சரி குடிப்பது வழக்கம். இந்த விகாரைக்கு ல்லா யாத்திரிகர்களும் இந்தக் கிழவியின் பழக்க
பழமோ... நெல்லிக்காயோ... விளாம் பழமோ... னைக் கொண்டு பள்ளிக்கூட வாசல்களில் நின்று
ம் அறிந்தவர்கள் அவள் முற்று முழுதான சிங்களப் னக் கூறுவார்கள். ஏதோ ஒரு கால கட்டத்தில் க்க வேண்டுமாம். அதுவும் ஒரு சைவ கோயிலின் ரனும் காதலித்து திருமணம் செய்ததில் இருந்து - ஆனால் காலப் போக்கில் அவளின் சந்ததியே
யாணிகளின் பஸ்கள் தங்கவும், உணவு உண்டு டா, கடலை, இத்தியாதி இத்தியாதி கொண்ட எனிலங்கையில் பின்னப்படும் பிரப்பம் கூடைகள் 5ம் கட்டித்தயிர், யாழ்ப்பாணத்தில் பின்னப்படும் னால் வியாபாரிகளின் மொழி லாபாய்...லாபாய்
மொழியாயும் இருந்தது. சதத்தின் பூரணையில் வரும் வெசாக் திருநாள் பக வீதியெல்லாம் மக்களின் எண்ணிக்கையும் சடங்கி விடும். வாடைக்காற்றுக் காலத்தில் வாடி மீனவர்கள் போல வீதியெங்கும் வியாபாரிகளின்
விடும். னிப்பாய் அந்தோனியாரையும் மடுமாதாவையும் டி அன்னை வேளாங்கன்னியையும் இந்துக்கள் டார்களோ அவ்வாறே புத்தர் அவதரித்ததும் தியும் அடைந்த இந்த தினமும் தங்கள் வாழ்விலும் எண்டு வரும் என்று இந்தப் பிரதேசத்து தமிழ் நம்பிக்கை கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். னத்தில் கூட்டத்திற்கு குறைவேயிராது. ந்த ஆண்டு விகாரையின் தெற்குப் புறத்தில் யே மிகப்பெரிய தியானம் செய்யும் புத்தர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 25
சிலையை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டத் திட்டமிட்டு இருந்தார்கள். உள்ளே சுவரின் உயரத்தில் இருக்கும் தியானம் செய்யும் புத்தரின் பெரிய படத்தின் அளவின் நூறு மடங்கு பெரிதாக இருக்கப் போகின்றது
எனப் பேசிக் கொண்டார்கள். புத்தர் சிலை கட்டி முடிக்கப்படும் பொழுது புத்தரின் முன் விகாரை சின்னக் குடிசை போல காட்சியளிக்கு மாம். விகாரையின் உள்புறத்தே சென்று அதன் பிற்புறத்தின் அமையவிருக்கும் புத்தரின் காலைத் தொட்டு வணங்க முடியுமாம்.முழு உருவத்தையும் தரிசிப்பது என்றால் நாற்சந்தி வரை வெளியே நடந்து செல்ல வேண்டும். இதற்காகவே விகாரையின் நான்கு வீதியில் உள்ள வீடு காணிகளை அரசாங்கம் அதிக விலை கொடுத்து கட்டாயத்தின் பேரில் வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.
விகாரையில் வாசம் செய்யும் புத்த பிக்குகளுக்கு ஒவ்வொரு மாதமும் அந்த ஊரில் இருக்கும் 30 குடும்பங்கள் சாப்பாடு கொடுப்பது வழமை. ஆனால் இந்த வெசாக் மாதம் மட்டும் சிறியதும் பெரியதுமான 30 ஊர்களிலும் அதனைச் சார்ந்த பன்சாலை களிலும் இருந்து சாப்பாடு கொடுக்க ஏற்பாடு
ஆகியிருந்தது. அதிகமாக வருகை தரும் பிக்குகளின் உணவுத் தேவை போக மிகுதி அன்னதான மடத்திற்கு செல்லும். அந்த உண வின் ஒரு கையளவே எல்லாச் சாப்பாட்டுத் தட்டிலும் இடப்படும். பன்சாலை அமுது என்று அடியவர்கள் அதை பெருமிதமாக உண்பார்கள்.
0 0 0 "நீ செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி உன் உயிருக்கு கூட ஆபத்தாய் வந்து முடியலாம் தெரியுமா”
"தெரியும்” "தெரிந்தும் எதுக்கு இந்த விஷப்பரீட்சை" "என்னைக் கொலை செய்து போடு வாங்கள் என நீ பயப்பிடுறாய்"
-- "கொல்லுறது மட்டுமில்லை... உனக்கு இறுதிக்கடன் செய்ய உன்ரை உடம்பே கிடையாது போயிடும்”
"அதுக்கு நான் பயப்பிடேல்லை. எல்லாத்தையும் எங்கடை எம்பசிக்கு சொல்லிப் போட்டுத்தான் வந்திருக்கிறன். எனக்கு ஏதாவது நடந்தால் இலங்கை பதில் சொல்லியே ஆக வேண்டும்”
"இல்லையடா... ஒரு நாட்டிலை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

கலம்பகம் நடக்கேக்கை சரி... புயல் சுனாமி போலை இயற்கை அனர்த்தங்கள் நடக்கும் போதும் சரி அதுக்கு அரசாங்கங்கள் பதில் சொல்லிக் கொண்டு இருக்கேலாது..... அப் பிடித்தான் நீ செய்யப் போற வேலை. கலம்பகம் ஒண்டை வெடிக்க வைக்கப் போறாய். அந்தக் கலம்பகத்தை சாட்டாக வைச்சுக் கொண்டு உன்ரை கதையையும் முடிச்சுப் போடுவாங்கள்"
"உண்மை உலகத்துக்கு தெரிய வரட்டுமன்”
"அந்த உண்மை உலகத்துக்கு தெரிய வரேக்கை எத்தனையோ உயிர்கள் வீணாய் போயிடும்... ஆயிரம் வருசத்துக்கு முதல் நடந்த முள்ளிவாய்க்கால் அவலம் ஒரு பிரதேசத்திலை மட்டும் நடந்தது. இது ஒட்டுமொத்த இனத்தையே சூறையாடிப் போடும். நீ பிழையான ஒரு இடத்திலை கை வைக்கப் போறாய்” -
"இப்ப நீ இறுதியாய் என்ன சொல்லுறாய்... நான் போகவா? வேண்டாமா?"
"நீ செய்த ஆராய்ச்சிகளும் வீணாய் போக வேண்டாம். அப்பாவி மக்களும் சாக வேண்டாம். அதுபடியாலை நீ போ! ஆனால் ஆராய்ச்சியின்ரை முடிவை மட்டும் வெளி யிலை விடாதை. உன்ரை ஆராய்ச்சி உண்மை எண்டால் அது எங்களுக்கு அடுத்து ஒரு வீரமான சந்ததி வரும் எண்டால் அதை அவை பயன்படுத்தப்பட்டும்."
ஆம் என சக்திவேல் தலையாட்டினான்.
0 0 0 கடந்த சில தினங்களாக அரசமரத்தின் கீழ் வந்தமர்ந்திருந்த சிக்குமுடிச்சாமியாரை எல்லாரும் விநோதமாகப் பார்த்தார்கள். அவரின் கோலமும் நெற்றியில் பட்டையாகப் போடப்பட்டிருந்த விபூதியும் சந்தனமும் பெரிய குங்குமப் பொட்டும் பிக்குமாருக்கு எரிச்சல் ஊட்டுவதாய் இருந்தன. அதே உணர்வு பெரிய பெரிய பஸ்களில் வந்திறங்கும்
பெளத்தமதப் பக்தர்களுக்கும் இருந்தது.
மேலாக காலையிலும் மாலையிலும் அரசமரத்தைச் சுற்றிப் பெருக்கும் குணாவதி கிழவிக்கும் சிக்குமுடிச் சாமியாரின் வரவு அறவே பிடிக்கவில்லை. அவரின் அழுக்குத் தோற்றம்... இரவில் அவரைச் சுற்றி அவரே துப்பியிருக்கும் வெற்றிலைத் துப்பல்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி குணாவதிக் கிழவிக்கு சிக்கு முடிச் சாமியாரைப் பார்க்கும்
23

Page 26
பொழுது ஒருவித பயமும் ஏற்பட்டது.
முன் வீதியில் கித்துள் பனங்கட்டி விற்கும் குணசிங்கா ஒருநாள் கிழவியிடம் சொன்னான், “உனக்கு விருப்பமில்லாட்டி சொல்லு.
ஆமியிட்டைச் சொல்லி தூக்கிடுவம்”.
"வேண்டாம் குணசிங்கா. சாமிகுத்தம் வந்திடும். சாமி முதலிலை சன்னதியில் இருந்தவராம். பிறகு - கதிர்காமத்திலை இருந்தவராம். இப்ப இங்கை வந்திருக்கிறார்.”
அதன் பின்பு குணசிங்கா சரி, குணாவதிக் கிழவி சரி சிக்கு முடிச்சாமியாரைப் பற்றி பெரிதாக எதுவும் கண்டு கொள்ளவில்லை - இரவில் வெற்றிலையை துப்பி வைத்தாலும் சரி கஞ்சா துகள்கள் அவரைச் சுற்றி பரவியிருந்தாலும் சரி.
இந்த வருடம் வெசாக் பண்டிகை நெருங்க நெருங்க அதிகமாகவே மக்கள் வரத்தொடங்கி இருந்தார்கள். அனைவருக்குமே அரசமர நிழல் தங்குமடம் போல் ஆகிவிட்டிருந்தது. இரவில் சிக்குமுடிச்சாமி உட்பட பலர் அரசமரத்தை சுற்றி அசிங்கப்படுத்துவதால் அதனைச் சுற்றி அரைவேலி உயரத்திற்கு கம்பி வேலி போடுவது எனத் தீர்மானமாயிற்று.
இந்த கம்பிவேலி போட்ட விவகாரத் தால் சிக்குமுடிச்சாமியார் இரவில் தனது இருப்பிடத்தை மாற்ற வேண்டியிருந்தது. நன்கு இருட்டிய பின்பு அந்த இடத்தை விட்டு விலகிப் போவார். மறுநாள் அதிகாலை யிலேயே மீண்டும் அங்கே வந்து விடுவார். இரவில் எங்கே போகின்றார்... எங்கே படுக்கின்றார் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் சாமியாரின் தோற்றத்தின் மீதான பயமோ அன்றி பக்தியோ பெளத்தர்களோ அல்லது இந்துகளோ யாரும் எதுவும் சொல்வதில்லை.
காலையிலும் மாலையிலும் உள்ளே போய்க் கூட்டுவதற்கு குணாவதிக் கிழவிக்கு மட்டும் ஒரு திறப்பு கொடுக்கப்பட்டது. அதில் கிழவிக்கு பெருமிதம். சாமியார் மட்டும் ஏதாவது பிரச்சனை கொடுப்பார் என சின்னப்பயம் இருந்தது. ஆனால் இப்போ சில தினங்களாக குணாவதிக் கிழவிக்கு சாமியாரைப்பார்க்கும்போதெல்லாம் இதயம் அதிகமாக அடிக்கத் தொடங்கியிருந்தது.
0 0 0 சக்திவேலின் வெளித் தோற்றத்தில் அவன் ஒரு சிங்கள இளைஞனா அல்லது தமிழ் இளைஞனா என்று எளிதில் யாராலும் 24

கண்டு பிடிக்க முடியாது. மழிக்கப்படாத ஒரு மாதத்தாடி... மீசை... தலைமுடி... இடைக்கிடை சில வெள்ளை நரைகள்... முதுகில்ஒரு தோல்பை ... கொழும்பில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிளை எடுத்து தானே ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.
விகாரையின் - வீதியில் ஒரு தங்கு விடுதியில் விகாரையை அங்கிருந்து பார்க்கக் கூடியவகையில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டான்.
யன்னல் கரையில் தனது திசைகாட்டிக் கருவியை வைத்து வடக்கு திசையை முடிவு செய்து கொண்டு தான் கொண்டு வந்த வரைபடத்தை அதன் வடதிசை நோக்கி வைத்துக் கொண்டு வரைபடத்தைப் பார்ப்ப தும் வெளியால் பார்ப்பதுமாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
கதவு தட்டப்பட்டது.
வாசலில் ரூம் பையன் நெளிந்து கெண்டிருந்தான்.
“என்ன வேணும்?”
“இல்லை சார்... உங்களுக்கு ஏதாவது விசேசமாக வேணுமா?”
“என்னட்டையே ஸ்கொட் விஸ்கி இருக்கு”
“இல்லை சார்... இது... சிங்களம்.. தமிழ்... எல்லாம் இருபது வயதுக்கு உள்ளேதான். சிங்களம்.. தமிழ்... எல்லாமே இருக்கு சார்”
| “பிளீஸ் கெட் அவுட்”
சக்திவேல் ஒரு சிகரட்டை மூட்டிக் . கொண்டு தனது வரைபடத்தினுள் மூழ் கினான்.
வரைபடத்தை எடுத்துக் கொண்டு வீதியில் நடமாடி
னால் மற்றவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்பதால் சின்னக் காகிதத் துண்டில் திசைகளை யும் தூரங்களையும்
கு ற த து க கொண்டான்.
அ வ ன து ஆரம்பப் பு ள் ளி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 27
விகாரைக்கு முன்னேயிருந்த அரசமரமாய் இருந்தது.
அங்கிருந்து முதலில் மேற்கு திசையில் 40 மீற்றர் செல்ல வேண்டும். பின்பு. பின்பு. அத்தனையையும் குறித்துக் கொண்டான். மணிக்கூட்டில் பதித்திருக்கும் திசைகாட்டி கருவியையும் மறு கையில் வைத்திருக்கும் குறிப்புத் துண்டையும் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் எப்படி நடந்து செல்லது என அறைக்குள் நடந்து பார்த்துக் கொண்டான்.
முதல் சாமக்கோழி கூவவும் இரண்டாம் இரவு சினிமா காட்சி பார்த்து விட்டு றோட்டால் செல்லும் மக்களின் சத்தம் அடங்கவும் சக்திவேலுக்கு கண்களை நிறைந்து கொண்டு வந்தது.
கட்டிலில் மெதுவாக சாய்ந்தான். திடீரென உடுக்கு அடிக்கும் சத்தம் கேட்டது.
எட்டிப் பார்த்தான். சிக்குமுடிச்சாமியார் இவனின் அறை யன்னலையே நிமிர்ந்து பார்த்துக் கொண்டு நின்றார்.
சிறை உடைப்பு நடக்கப் போகுது. சிறை உடைப்பு நடக்கப் போகுது. எல்லாரும் தப்ப போகினம் தப்ப போகினம். எல்லாரும் தப்ப போகினம் தப்ப போகினம். உடுக்கு சத்தம் கேட்ட மற்ற மற்ற கடைக்காரரும் தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டார்கள் - தங்கள் நித்திரை குழம்பி விட்டது என
குணாவதிக் கிழவிக்கும் உடம்புக்குள் உதறல் எடுத்தது. இது வழமைக்கு மாறுபட்ட ஒரு உதறலாய் இருந்தது.
சக்திவேல் அறையின் யன்னலை உள் புறமாய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான்.
வெளியில் உடுக்குச் சத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. O
“சம்மா சம்புத்த வேசனவா
சம்மா சம்புத்த லோககம்மின்
சம்மா சம்புத்த தேனமு.”
அதிகாலையில் விகாரையின் முன் மண்டபத்தில் வெள்ளை நிறச் சேலைகளுட னும் பாவாடைகளுடனும் பெண்கள் அமர்ந்திருந்து இளம் துறவி ஒருவரின் வழிகாட்டலில் ஒதிக்கொண்டு இருந்தார்கள்அவர்களின் கைகளில் வெள்ளைநிறத் தாமரை யும், தேமாப்பூக்களும், தென்னம்பாளையின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

பல்பொருள் அங்காழக்குப்போன ஐங்கரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஐங்கரனுக்கு முற்கூட்ழத் தெரிந்த அந்தப் பணியாள் அவனைக் கவனிப்பவனாக இல்லை. நல்ல பொருட்களைத் தெரிவு செய்ய உதவி தேவைப்பட்டு அவனைக்கூப்பிட்டபோதும், *வாரன்” “ഖനൃa് என்று தட்டிக் கழித்தானே யொழிய, ஓடோடி வந்து உதவினானில்லை.
தான் முதற் தடவையாக அந்த அங்காழக்கு வந்த நாள் காட்டிய ஆர்வம் அற்றுப் போனது, ஏன்? -தருமாறினான் ஐங்கரன்.
அந்நேரம் வழமையாக வந்து போகும் இன்னொரு வாழக்கையாளன் அந்த அங்காழயூள் உள்நுழைந்தான்.
ராஜமரியாதை அவனுக்கு
உன்னிப்பாக அந்த வாழக்கையாளனின் செயற்பாட்டை அவதானித்தான்.
கப்சிப்பென அலுவல்கள் முழவடைந்து அவன் வெளியேறும் வேளை, மர்மம் ஐங்கரனுக்குத் தெளிவானது. அவன் பணியாளைச் சந்தோசப்படுத்திய மையே அந்த ரகசியம்.
ஆனால்,
அன்றைய சந்தோசம் பணியாளுக்குப் பக்கென்று பறந்து போனது.
ஏன் என்றால், வாழக்கையாளன் வெளியேறிய கையோடு, அங்காழ நிர்வாகி அந்தப் பணியாளை உடனடியாகத் தன்னை வந்து காணும்பழ பணித்தான்.
பணியாள் நிர்வாகியின் புறம்போக்கான அறையுள் நுழைந்தபோது, அங்கே நவீன பாதுகாப்பு ஒளிப் uldjadj6 (Security camera) செயற்பட்டுக் கொணிழருந்தது தெரிந்தது.

Page 28
பூக்கதிர்களும் நிறைந்திருந்தன.
“அட்டமிசி சம்மா சம்புதுரயானன் வகன் சேலாகே தானாதி பாரமீத தர்மஅங்கே சம்பூர்ண கிரிமமகா ஆச்சர்ய ஜனகய தான பார மிதாவ புரண சமயகே”
வெசாக் தினம் நெருங்க நெருங்க இந்த ஓதுதலில் பங்குகொள்ளும் கூட்டமும் அதிகரித்துக் கொண்டு போகும். காலையில் மட்டுமின்றி மதியம் மாலை இரவு எனவும் இந்த ஓதுதல் அதிகரித்துக் கொண்டு போகும். இந்த தியானநிலையின் உச்சக்கட்ட ஓதுதல் பிரதான தேரோவின் வழிகாட்டலில் பூரணை அன்று நிறைவேறும். அந்த வெசாக் இரவு பக்தியின் உச்சக்கட்ட இரவாக அமையும்.
அதற்கு இன்னமும் மூன்று நாட்களே இருந்தன.
மிகப் பெரிய வெசாக் வர்ண விளக்கு வளைவுகளினால் நாலு வீதியும் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தது. 2 வீதிகள் எல்லாம் கடைகளால் மறையத் தொடங்கி விட்டிருந்தன. விகாரையைச் சுற்றியிருந்த பெருவீதிகள் எல்லாம் இரவில்
விகாரையின் நான்கு வீதியில் உள் விலை கொடுத்து கட்டாயத்தின் பேரி
யாத்திரிகர்களின் பாய்கள், தலையணைகள், பெட் சீற்றுகளால் மறைந்து போயிருக்கும். அத்தனை தூக்கமும் காலையில் ஓதுதல் தொடங்க விழித்து விடும். படுக்கை நிலம் மீண்டும் பசிய புல்நிலமாகவும் மண்
வீதிகளாயும் மாறி விடும். -
சக்திவேல் அறையிலிருந்து மெதுவாக இறங்கி வந்தான். கூட்டம் குறைந்த நேரமே தனக்கு உகந்ததாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். அரசமரத்தடியில் இருந்து 40 மீற்றர் மேற்காக.... ஆரம்பப் புள்ளியை மனதுள் சொல்லிக் கொண்டான்.
அரசமரத்தடியைச் சுற்றியிருந்த கம்பி வேலிக்கு உள்ளேயும் வெளியேயும் குணாவதிக் கிழவி வழமை போல தண்ணீர் தெளித்து கூட்டிக் கொண்டு நின்றாள்.
சுமார் பத்து ஆண்கள் கண்டிய நடன ஆடைகள் போன்ற உடையை அணிந்த வாறு நீண்ட மத்தளங்களை கழுத்தில் தொங்கவிட்டவாறு அதனை தாளத்திற்கு ஏற்றவாறு வாசித்துக் கொண்டு நின்றார்கள்.
26

அந்தத் தாளத்துக்கு உரு வந்தது போல குணாவதிக் கிழவி தலையை சிறிது சிறிதாக ஆட்டிக் கொண்டு நின்றாள். சென்றவருடமும் வெசாக் தினத்துக்கு குணாவதிக் கிழவிக்கு உரு வந்தது எனப் பேசிக் கொண்டார்கள். அதுவும் சிக்குமுடிச் சாமியாரைப் பார்க்கும் பொழுது கிழவிக்கு அந்த படபடப்பு இப்போ சில நாட்களாக அதிகமாகவே ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதனாலேயே சிக்குமுடிச் சாமியாரைப் பார்ப்பதை குணாவதிக் கிழவி தவிர்த்துக் கொண்டு இருந்தாள்.
சக்திவேல் கம்பிவேலியின் ஒரு கரையில் நின்று முழு இடத்தையும் கண்ணால் அளந்து கொண்டு நின்றான்.
அரசமரம்... வீதிகள்..... விகாரை... பிரமாண்டமாக எழ இருக்கும் தியானநிலை புத்தருக்குரிய இடம் அனைத்தையும் கண் ணோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான்.
திடீரென தன்னை யாரோ கவனிப்பது போல இருக்க சக்திவேல் தலையைத் திருப்பி பார்த்தான். சிக்குமுடிச் சாமியார் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டு நிற்பது போலத்
ர வீடு காணிகளை அரசாங்கம் அதிக 5 வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.
தெரிந்தது. அந்தக் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. அதை எங்குமே சக்திவேல் முன்பு கண்டதில்லை.
மத்தளம் அடித்துக் கொண்டு நின்றவர்கள் இப்போது விகாரையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
அவர்களின் அடியொற்றிச் செல்லுமாப் போல குணாவதிக் கிழவியும் பின்னால் சென்றாள்.
சக்திவேல் தனது மணிக்கூட்டின் திசையறியும் கருவியையும் பார்த்துக் கொண்டு குறிப்பேட்டில் உள்ள அளவுகளை கணக்கிட்டு கால் கணக்கில் அளந்து அளந்து மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தான்.
அவன் செல்ல வேண்டிய பாதையிலே முன்னால் மத்தளம் அடிப்பவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னால் குணாவதிக் கிழவி. இவர்களுக்குப் பின் சக்திவேல்.
ஏதோ ஒரு உணர்வில் சக்திவேல் திரும்பிப் பார்த்தான். சிக்குமுடிச் சாமியார் கைத்தடியால் நிலத்தை தட்டிக் தட்டிக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 29
கொண்டு வந்து கொண்டிருந்தார்.
சக்திவேலுக்கு மனம் படபடப்பு கண்டது.
மத்தளம் அடிப்பவர்கள் விகாரைக்குள் நுழைந்து கொண்டார்கள். பின்னால் குணா வதிக் கிழவி சென்றாள்.
சக்திவேலின் திசைகாட்டியும் கால் அளவு நடையும் அவனை விகாரையின் வெளிப்பக்கத்தின் இடது பக்க வளைவால் பின்பக்கத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியது.
சிக்குமுடிச் சாமியாரோ விகாரையின் வெளிப்பக்கத்தின் வலது பக்க வளைவால் சக்திவேலையையும் முந்திக் கொண்டு பின்பக்கத்திற்கு வந்து நின்றார். சக்திவேலுக்கு அது மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அதைவிட ஆச்சரியமாக விகாரையின் முன்வாசலுக்குள்ளால் வந்த மத்தளக்காரரும் குணாவதிக் கிழவியும் பின் வாசலால் அவர்கள் இருவரும் நின்ற இடத்துக்கு வந்தார்கள்.
சிக்குமுடிச் சாமியார் உரு வந்தவர் போல தனது கைத்தடியால் நிலத்தில் அடிக்கத் தொடங்கினார்.
குணாவதிக் கிழவி கலைவந்தது போல தலையை சுழற்றி சுழற்றி புரியாத பாஷையில் உளறத் தொடங்கினாள்.
மத்தளக்காரர் இன்னம் பெரிதாக தங்கள் மத்தளத்தை வாசிக்கத் தொடங்கினார்கள்.
வழமைக்கு மாறான இந்த மத்தளச் சத்தம் இளம் துறவிகளுக்கும் பிரதான தேரோக்களுக்கும் ஆச்சரியாமாக இருந்தது.
அடுத்த விநாடி மஞ்சள் காவி அணிந்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)
 

இளம் துறவிகளும் செம்மண்ணிற காவி அணிந்த பிரதான தேரரும் வெள்ளைத் துணியணிந்த பக்தைகளும் அவ்விடத்தில் கூடிவிட்டார்கள்.
மத்தளக்காரரின் வாத்திய இசையின் அதிர்வு அதிகரிக்க அதிகரிக்க குணாவதிக் கிழவி பெரும் மூச்சை உள்ளே இழுத்த படியும் வெளியே விட்டபடியும் உரு ஆடத் தொடங்கினாள்.
கிழவிக்கு பேய் பிடித்திருக்க வேண்டும் - இளம் துறவி ஒருவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
“இல்லை. இல்லை. குணவதி மீண்டும் பிறந்து வந்திருக்கிறாள். இவள் குணாவதி இல்லை. இவள் குணவதி. இந்த ஆதீனம் இவளுடையது” சிக்குமுடிச் சாமியார் சொல்வது புரியாமல் இளம் துறவிகள் விழி பிதுங்கினார்கள்.
சிக்குமுடிச்சாமியார் நிலத்தை ஓங்கி ஓங்கி தனது தடியால் அடித்தார்.
சக்திவேலுக்கு எல்லாமே ஆச்சரியமாய் இருந்தது.
தான் குறித்து வந்த புள்ளியும் சிக்குமுடிச் சாமியார் தடியால் அடிக்கும் புள்ளியும் ஒன்றாகவே இருந்தன.
அந்தப் புள்ளியிலேயே கட்டப்பட இருக் கும் பெரிய புத்தர் சிலையின் பெருவிரல் அமைய இருந்தது.
"இந்த இடத்தை தோண்டு” சிக்குமுடிச் சாமியார் குணாவதிக் கிழவிக்கு கட்டளை இட்டார்.
இளம்துறவிகள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.
மத்தள மேளம் தொடர்ந்தது. குணாவதிக் கிழவி எங்கேயோ இருந்து ஒரு கடப்பாறையை எடுத்துக் கொண்டு ஓடிவந்தாள்.
விகாரையின் பிரதான துறவிக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும்.
ஓடி வந்து தடுக்க முயற்சித்தார். கடப்பாறையால் ஒர் அடிதான். கடப்பாறை தொடர்ந்து மண்ணில் இறங்கியது.
இளம் துறவிகள் வந்து குணாவதிக் கிழவியை தாக்க முற்பட்டார்கள்.
சக்திவேலுக்கு தன் ஆராய்ச்சி முடிவுக்கு வந்து விட்டது எனப் புரிந்தது.
“விகாரைக்கு பின்னால் புதையல் கிடக்குதாம். போய் கிழவிக்கு உதவுங்கோ”
27

Page 30
அரச மரத்தடிக்கு சக்திவேல் வந்து சொன் னதுதான் தாமதம் முழுச் சனக் கூட்டமும் தங்கள் தங்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு விகாரையின் பின் பகுதிக்கு ஓடினார்கள்.
இளம் பிக்குகளும் மூத்த பிக்குகளும் தடுத்தும் கேட்காமல் நிலத்தைத் தோண்டத் தொடங்கினார்கள்.
“சிறை ஒன்று உடையப் போகுது. சிறை ஒன்று உடையப் போகுது. புருசனும் பெண்சாதிமாரும் தப்ப போகினம். புருசனும் பெண்சாதிமாரும் தப்ப போகினம்.” சிக்குமுடிச்சாமியார் பலத்த குரலில் சொல்லிக் கொண்டு இருந்தார். அலவாங்கு ஒன்று வெண்கலத்தில் படும் சத்தம் கேட்டது.
எல்லோரும் திகைத்தார்கள். மெதுவாகத் தோண்டத் தொடங் கினார்கள்.
என்ன ஆச்சரியம்! வாளுடன் சங்கிலியன் சிலை! அதற்கு கீழே. அதற்கு கீழே.
" ܐܝܓܠ ܐܝܓܠ ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐܝܓܠ ̄ܐ
வந்து பிடித்ததுவும் -
வாழ்ந்தாரைச் சேர்ந்ததுவும் -
சிந்தையிலே தன்னலத்தைத்
தெளிவாய் வளர்த்ததுவும் -
எங்கும் பரந்ததுவும் -
எம்மண் சுரண்டியதும் - வாய்ப் தங்கள் குறிக்கோளில்
தாம் அம்பாய் நின்றதுவும் - ഖ്;
பச்சை என - நீலம் எனப் μούσω.
பாசம்போல் காட்டியதும் - நச்சு நினைப்புடனே O
நாவினிக்கப் பேசியதும் - குனG
கொண
எட்டப்பர் கட்டத்தை
எம்மில் உருவாக்கியதும் - குருட்டு
கட்டாய நண்டு மொழி
கருத்தில் திணித்ததுவும் - வெருட்
28

நல்லூர் எழுந்தருளி முருகன் வள்ளி தெய்வானையுடன்!
எல்லோரும் திகைத்துப் போய் நின்றார்கள்.
யாழ் குடாநாடே நல்லூடவா என்றஅந்த நல்லூரை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருந்தது.
"அரோகரா!”
“நல்லூடவா முருகனுக்கு அரோகரா!!”
இராணுவ வாகனம் நல்லூடாவை நோக்கி கோட்டையில் இருந்து புறப்பட்டது.
இந்திய, சிங்கப்பூர், மலேசிய மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் விசேட அதிரடிச் செய்தியாக இது ஒளிபரப்பப்பட்டது.
சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் கொழும்பை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.
அவன் கண்களின் முன் அயோத்தி. பாபர்மசூதி. பொற்கோயில். எல்லாம் வந்தும் போயும் கொண்டும் இருந்தன.
O O O
郤列
நாட்டி ஒப்பந்தம்
பெரிதாய் வரைந்ததுவும் -
பை உருவாக்கி
வருத்திக் கிழித்ததுவும் -
து அகிம்சைக்கு
வாட்சிங்கம் காட்டியதும் -
ப உருவாக்கிப்
போரை நடாத்தியதும் -
டை அடித்ததுவும்
குடியெல்லாம் சாய்த்ததுவும் - ர்ட பெருநஞ்சர்
கொடுத்ததுவும் போர்க்கருவி லகே உந்தனுக்குக்
கொஞ்சமுமே தெரியாதா? ட வெருண்டாயா?
வேண்டாம் - போ - சாவ விடு
c
Q
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 31
பொதுநலவாய ஆசிய பிராந்திய மட்டத்தில்
நயோமி இலங்கையில் பிறந்து நைஜீரி யாவில்வளர்ந்துவளரிளம்பருவத்தில்அமெரிக் காவில் குடியேறியவர். தனது இனத்தை மதிக் கும் அதேவேளை அயலவரையும் நேசிக்கும் அவரது பெருந் தன்மை இந்த நாவல் மூலம் எமக்குத் தெரியவருகிறது.
கொழும்பில் வாழும் ஒரு வசதியான சிங்களக் குடும்பம், குடும்பத் தலைவனின் மரணம் காரணமாக நொடித்துப் போகிறது. குடும்பத்தின் மூத்த மகனும் அமெரிக்காவில் மருத்துவக் கல்வி பெறுகையில் தாயாரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இலங்கையி லிருந்து அங்கு சென்ற பரங்கிப் பெண்ணை மணந்து அங்கேயே தங்கி விடுகிறான். குடும்பச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு குடும்பத் தலைவி தயக்கத்துடன் ஒரு தமிழ்க் குடும்பத்தை மேல் மாடியில் வாடகைக்கு அமர்த்துகிறாள்.
இரு குடும்பங்களுக்குமிடையே ஏற்படும் சிறுசிறு கலாசார ரீதியிலான பிணக்குகளுக்கு மத்தியிலும் தமிழ்க் குடும்பம் அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறது. மேல் வீட்டுக் கும் கீழ் வீட்டுக்குமிடையே ஒரு காதல் மலர்ந் தது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அது கருகிப் போகிறது.
நயோமி முவிைறவிnைல் uேnர்க்கால நிக் Uகைப்புலமாகக் கொண்டு யுனையப்Uட் இது Uோறnட்டத்தை வெறுமனே Uய யிற்ச்சினையாக நோக்காத நாவலாசிரில்றது மனப்Unகு காரணமாக "ஞானம்' வ இந்நூல் ஜூறிமுகமாகிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)
 

2013° வருடத்திற்கான பரிசு பெற்ற நாவல்
A
வே, தில்லைநாதன்
காலப்போக்கில் காதல் வயப்பட்ட தமிழ் இளைஞனும் சிங்கள யுவதியும் தத்தமது இனத்தைச்சேர்ந்தவர்களையே மணம்முடித்து அதே வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார்கள். ஒரே காலப் பகுதியில் தமிழ்க் குடும்பத்தில் ஒர் ஆண் குழந்தையும் சிங்களக் குடும்பத்தில் ஒரு பெண்குழந்தையும் பிறந்து இரு குழந்தைகளும் பாசப் பிணைப்போடு வளர்ந்து வருகின்றனர். மூன்றாண்டுகள் கழித்து பெண் குழந்தைக்குத் துணையாக இன்னொரு பெண் குழந்தை பிறக்கிறது. மூத்த பெண்குழந்தையே நாவலின் கதாநாயகி. அவளது தங்கையான லங்காவும் தமிழ்க் குழந்தையான சிவாவும் முக்கியமான
கதாபாத்திரங்கள்.
கதாநாயகியின் பெரியம்மா நீண்ட காலம் குழந்தைப் பேறின்றியிருந்து கர்ப்பம் தரிக்கிறாள். 1983 கலவர சமயத்தில் அவளுக் குப் பிரசவ வலி கண்டு கணவன் காரில் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கையில் வழியில் காடையரிடம் சிக்கித் தவிக்கும் ஒரு தமிழ்ச் சிறுவனுக்கு அபயக் கரம் நீட்டியமையால் காடையரினால் கொல் லப்படுகிறான். மனைவியின் கர்ப்பமுங் கலைகிறது. காலப் போக்கில் அவள் தன்னிடம் பணிப்பெண்ணாக இருப்பவளும்,
20aoo
டி நாவல் *== Qހަރާ& கறவரிதU د2ހަޝއި விசாலித்த @%UUL<ޙުގ
சகர்கட்கு
29

Page 32
குடிகாரக் கணவனின் சித்திரவதைக்குள்ளாகி அநாதரவாக விடப்பட்டவளுமான தமிழ்ப் பெண்ணின் குழந்தையைத் தத்தெடுக்கிறாள்.
கலவரத்தின் போது வீட்டுச் சொந்தக் காரியினால் காப்பாற்றப்படும் தமிழ்க் குடும்பம் கலவரம் ஓய்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறுகிறது. வெளியே நடந்த கொடுமைகளையும் வீட்டில் நடந்த அனர்த் தத்தையும் சகித்துக் கொள்ள முடியாத கதா நாயகியின் பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்கின்றனர். அங்கே பரங்கிப் பெண்ணை மணந்து வைத்தியராக இருக்கும் கதாநாயகியின் மாமனாரின் உதவியுடன் தொழில் பெற்ற கதாநாயகியின் தகப்பனார் தனது பொறியியற் கல்வியை மேம்படுத்திக் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு செல் கிறார். சிவாவும் வைத்தியக் கல்வியை முடித்து அமெரிக்காவில் தொழில் புரிகிறான்.
இதேவேளை நாவல் வடபுலத்தில் வாழும் ஒரு போராளிக் குடும்பத்தையும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு நடன தாரகை யான தமிழ்ப் பெண்மணி அவளிலும் சற்றே வயது அதிகமான மிருதங்க வித்துவானைக் காதல் மணம் புரிந்து மூன்று ஆண்பிள்ளை களுக்கும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் தாயாகிறாள். மூத்த புதல்வர் இருவரும் புலி இயக்கத்தில் சேர்ந்து மரணித்து மாவீரர்களாகின்றனர். மூன்றாவது மகன் வெள்ளை வான் கடத்தலுக்காளாகிக் காணாமலே போய்விடுகிறான். மூத்தமகள் லஷ்மியையும் இயக்கத்தில் சேருமாறு போராளிப் பெண்கள் வற்புறுத்துகின்றனர். மகன்மார் இயக்கத்தில் இணைந்தபோது பெருமையுற்ற தாய் மகள் இணைவதை எதிர்க்கிறாள். ஆயினும் லஷ்மி அரச படையினரால் கடத்தப்பட்டுக் கெடுக்கப் பட்டபின்னர் ஏற்கனவே இராணுவத்தினரால் கெடுக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றமுடியாது புறக்கணிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஓர் அயலவ இளம் பெண்ணின் அவல நிலையைப் பாடமாகக் கொண்டு தாயின் பிடிவாதம் தளர்கிறது. காலப்போக்கில் இளைய மகளான சரஸ்வதியும் இயக்கத்தில் இணைந்து கொள்வதுடன் அவளது தீவிரப் போக்குக் காரணமாக முழு மூச்சுடன் முயன்று தற்கொலைப் போராளியாகிறாள்.
கல்வியில் மேன்மையுறும் கதாநாயகி அமெரிக்கக் காதலனால் கைவிடப்பட்டுப் பெற்றோரின் வற்புறுத்தலினால் சிங்கள் வைத்தியர் ஒருவரை மணந்து கொள்கிறாள். 30

கணவன் தனது முன்னாள் காதலியுடனான உறவைக் கைவிடாதது கண்டு மனம் வெதும்பி விரக்தியுறுகிறாள். அவளது சகோ தரி லங்கா பிரபல ஓவியராக மிளிர்ந்தும் அவளும் தனது காதலனால் கைவிடப்பட்டு விரக்தியுறுகிறாள். விரக்தியுற்ற சகோதரிகள் இருவரும் கொழும்பு திரும்பிப் போரி னால் பாதிப்புற்ற சிறுவர்களுக்குக் கல்வி போதிப்பதிலும் அவர்களைப் பராமரிப்பதி லும் ஈடுபடுகின்றனர். அவர்களுடன் வைத்திய ரான சிவமும் இணைந்து கொள்கிறான்.
தற்கொலைப் போராளியான சரஸ் வதி ஒரு தமிழ் அரசியல்வாதியைக் குறி வைத்துக் கொழும்பை வதிவிடமாகக் கொள்கிறார். ஒரு நாள் அவள் கர்ப்பிணித் தோற்றத்தில் தற்கொலை அங்கி அணிந்து தனது இலக்கு நோக்கிப் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது சந்தேகமுற்ற படையின ரால் சோதனைக்குள்ளாக்கப்படவும் குண்டை வெடிக்க வைக்கிறாள். அந்தப் பஸ்ஸில் பயணஞ் செய்தலங்காவும் குண்டு வெடிப்பில் உயிரிழக்கிறாள்.
சிவமும் கதாநாயகியும் இலங்கையில் வாழப் பிடிக்காது மீண்டும் அமெரிக்கா செல்கின்றனர். கணவனைக் கைவிட்டிருந்த கதாநாயகி தன்னுடன் உறவைப் புதிப்பிக்கு மாறு அவன் விடுத்த வேண்டுகோளை உதாசீனஞ் செய்து சிவத்துடன் புதிதாக வாழ்க் கையை ஆரம்பித்து ஒரு பெண் குழந்தைக்கும் தாயாகிறாள்.
நாவலின் இறுதிப் பகுதி தம்பதியினரின் நாட்டைத் துறந்து அந்நியமாகும் முயற்சி பற்றியும் யுத்தத்தின் இறுதிக் கட்டம் பற்றியும் பேசுகிறது. கதாநாயகியின் வாய்மொழி மூலமாகவே அவற்றைப் பற்றி அறிந்து கொள் வோம்.
"நானும் சிவாவும் அமெரிக்காவின் மேற் கெல்லைப் புறமாக எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் ஓடினோம், லொஸ் ஏஞ்ஜெல்சில் ஆற்ற முடியாத துயருடனும் விடை தெரியாத வினாக்களுடனும் தவிப்புடன் காத்திருந்த அப்பா அம்மாவை விட்டு.. பசியு டன் காத்திருந்த, பிசாசு போலாகிவிட்ட கண வனை விட்டு.....
இந்நாட்டில் அந்த இடம் (இலங்கை) குறித்து என்னுடன் நானே வார்த்தையாடுவதில்லை. அங்கே இனி எனக்கு ஒட்டுறவில்லை. கத்தும் கடல் என்னை அழைப்பதில்லை. பசுமை கொழிக்கும் பலதரப்பட்ட பச்சை வர்ண ஜாலங் களுக்காக நான் ஏங்குவதுமில்லை...
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 33
Navoini Munaweera
"!ாபர் சேர்ப் பதர்சயம் 1ார் யார்
பாயா காயம்
14 in பாபய
யா யா
SLAND A
THOUSAND MIRRORS
if Hnel/
அப்பா தொலைபேசியில் என்னை அழைக்கிறார். அவரது குரலில் ஆனந்தம் ததும்புகிறது, "ஒரு மாதத்துள் எல்லாம் சரிவந்துவிடும். அந்தப் புலிகளின் கதை முடிகிறது. மிக விரைவிலேயே சமாதானம் மலரும்” நான் தொலைபேசியைவைத்துவிட்டு நீண்ட நேரம் அசைவின்றி நிற்கிறேன். புலிகள் என் சகோதரியைக் கொன்றவர்கள். அவர்களது ஆவேச வெறியாட்டத்தை நான் கண்டுள்ளேன். படையினர் செய்த கொடூரங் களும் என் கண்ணுக்குத் தப்பவில்லை. பகையாளிகளான இரு தரப்பினரதும் மூர்க்கத்தனத்தை நானறிவேன். என் வாழ் நாளில் பெரும்பகுதியை இந்த யுத்தம் விழுங்கி யிருக்கிறது. இதனால் யுத்தமற்ற உலகு என் கண்ணுக்குத் தெரிவதேயில்லை.
உலகம் முழுவதிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வீதிகளில் வெள்ளம்போல் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; இங்கே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

சான்பிரான்ஸிஸ்கோவிலும்தான்.
உலக நாடுகளின் ஆதரவு பெருகுகிறது. ஸ்ரீலங்கா அரசு மீது போர்க் குற்றம் சுமத்தப்படுகிறது. ஐ. நா. பொருளாதாரத் தடை விதிக்கப் போவதாகப் பயமுறுத்துகிறது. நாம் அதிர்ச்சி யுற்று மெளனித்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சாமாதனத்தின் விலை தான் என்ன என்று வியக்கிறோம். எத்தனை மரணங்கள்.மரணங்களின்றி - இத்தகைய மூர்க்கத்தனமான பகையை முறியடிப்பதும் சாத்தியந்தானா? எமது உலகம் எப்படி அமையப்போகிறது? அமெரிக்கப் பெண்ணா கவும், இலங்கைப் பெண்ணாகவும், தமிழச்சி யாகவும், சிங்களத்தியாகவும் இருக்கும் எமது மகளின் உலகம் எவ்வாறு அமையப் போகிறது?
திடீரென இலங்கையை பற்றி எதுவுமே பேசாத நண்பர்கள் கேள்விக்கணை தொடுக் கிறார்கள். அவர்களது கேள்விகள் எனது இதயத்தை ஈட்டியாகக் கிழிப்பதை அவர்கள் உணரவில்லை. "புலிகள் விடுதலைப் போராளிகள் அல்லவா?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
தியாகிகள் என்று அங்கு யாருமேயில்லை. கறை படிந்த இரு சாராருக்கிடையே நடக்கும் மோதல் இது என நான் அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறேன்... சிக்கலான விடை அவர்களது ஆர்வத்தைத் தூண்டுவதில்லை என்பதை என்னால் உணர முடிகிறது. எளிமைப்படுத்தப்பட்ட தேவ - அசுர யுத்தத் தையே அவர்கள் விரும்புகிறார்கள்.
நடக்க முடியாத ஒன்று நடந்து விடுகிறது. கம்பியூட்டர் திரையில் ஒரு காட்சி விரிகிறது. அலை மோதும் குடாக் கடலின் சேறு படிந்த கரை தெரிகிறது.. படையினரின் காலடியில் ஒரு பருத்த உருவம் மல்லாந்து கிடக்கிறது. விழிகள் பிதுங்கி, வாய் திறந்த நிலையில்.. அவர்கள் தலைவனைக் கொன்றுவிட்டார்கள். போர் முடிந்து விட்டது.
தீவெங்கணும் கொண்டாட்டங்கள். ஜனாதிபதி ஜோர்டானிலிருந்து திரும்புவதைக் காண்கிறோம். கட்டுநாயக்காவில் அவர் முழங்கால் பதித்துத் தரையை முத்தமிடுகிறார். பொதுமக்களின் உயிரிழப்புக் காரணமாக யுத்தக் குற்றவாளியாகக் கணிக்கப்படும் இந்த மனிதர் இந்தக் கணத்தில் வெற்றி வீரனாக நிற்கிறார்.. மிகக் கொடூரமான பகைவனை மிகக் கொடூரமான வகையில் வெற்றி கொண்ட இம்மனிதரின் செயல்கள் மக்கள் மனங்களில் நியாயமானவையாகப் படுகின்றன. அவர் கள் அவரை மாமன்னன் மஹிந்த என்று போற்றுகிறார்கள்.
43ஆம் பக்கம் பார்க்க.....
31

Page 34
டேவிட் ஹேர்பர்ட் லோரன்ஸ் என்ற . முழுப்பெயருடைய D.H. Lawrance இருபதாம் நூற்றாண்டின் அற்புதமான நாவலாசிரியரும், கவிஞருமாவார். 1885 இல் ஒரு ஏழைக் குடும்பத்திற் பிறந்தவர். 1930 இல் இறந்தார். தந்தை ஒரு நிலக் கரிச் சுரங்கத்தில் பணியாற்ற, தாயார் ஆசிரியப்பணிபுரிந்தார். தன் தாயாரை மிக நேஸித்தார் லோரன்ஸ். பின்னாட்களில் தன் அம்மாவை மொடலாகக் கொண்டு தான் புரிந்த ஆசிரியத் தொழிலை, தன் எழுத்துகளுக்காக இடையில் கைவிட்டார். அவரது நன்கறியப்பட்ட நாவல்கள் பல. 'Sons and Lovers' (1913), 'The Rain bow' (1915), 'Woman in Love' (1921), 'Lady Chatterley's Lover' (1928) போன்றவை அவற்றில் சில. வகுப்புவாதம், நகரமயமாக்கல், நவீன வாழ்க்கை முறை மைகள் என்பவற்றைச் சாடி நின்றவை அவரது எழுத்துக்கள். அழகிய கவிதைகள் பல எழுதியிருக்கிறார். விலங்குகளைப் பற்றி அவர் எழுதிய கவிதைகள் மிக ரசிக்கத்தக்கவை. அவற்றின் மீது அவர் காட்டிய கரிசனையை அவை இயம்பி நிற்கின்றன.
D. H. LAWRENCE
>

> அந்தப்
UO
என் தண்ணீர்த் தொட்டிக்கு வந்திருந்தது நீரருந்திப் போகவென்று ஒரு பாம்பு. வெப்பம் தகிக்கும் ஒரு நானாதலால் சூட்டைத் தாங்கிடும் வண்ணம் நானிருந்தேன் ஏன் பிஜாமா ஆடையில்.
கத்தயாசமான மணம் கமழும் அந்தப் பெரு விருட்ஷத்தின் இருள்சூழ் நிழலில் என் பாத்திரம் ஏந்தி நான் வந்தேன் படியிறங்கி. ஆயினும் நான் காத்திருக்க வேண்டும், நின்று நான் காத்திருக்கத்தான் வேண்டும். ஏனெனில், எனக்கு முன்னம் தொட்டியருகில் இருந்தது அஃது.
இரும் போதொன்றில் பூபீச்சுவரின் வெடிப்பொன்றிலிருந்து வந்திருக்கிறது அந்தப்பாம்பு. மஞ்சளும், கபிலமும் கலந்த தன் தார் வயிற்றுப்புறத்தை பின்னே இழுத்து இழுத்து முன்னேறி தண்ணீர்த் தொட்டிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் அது. தன் தொண்டைப்பகுதியை கற்றரை மீதில் மெல்ல வைத்தே குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாய் வழியுமிடத்தே தன்னை நிலைநிறுத்தி நக்கி உறிஞ்சிற்று தன் கூர்வாயால். மெதுவாய் குடிக்கிற நீர தொண்டைக்கூடாய் மெல்ல மெல்ல உரfறங்குகிறது.
என் தண்ணீர்த்தொட்டியருகே யாரோ எனக்கு முன்னம். இரண்டாம் வருகையாளனைப்போல காத்திருந்தேன் நான். குடித்தபின் மனம் தன் தலையை உயர்த்திற்று மந்தைகள் செய்வதே போன்று. தெரிவற்று நோக்கிற்று என்னை மந்தைகள் ஏதாகிலும் அருந்துகையில் செய்வதேபோன்று. உதட்டோடு தன் இருகூர் நாக்கை நக்கியபடி சிந்தித்தது ஒரு கணம். மறுபடி குனிந்து இன்னும் கொஞ்சம் அருந்தற்று அது. 'சீசலீ'யீன் ஜூலை 'எட்னா' எரிமலையின் குழம்பெனத் தகித்திடும் நாளில் கபீல நிறத்துப்பூமியில் எரியும் நெருப்பின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 35
மஞ்சள் நிறத்துச் சுவாலையாய் அஃது. என் கல்வியின் குரல் சொல்லிற்று எனக்கு அது கொல்லப்படல் வேண்டுமென. ஏனெனில் 'சிசிலியில் கபில நிறப் பாம்புகள் சாதாரணம்தான். பொன் நிறத்தினதோ கடும் விஷமுடையன. எனக்குள் ஒலிக்கும் குரல்கள் மேலும் சொல்லின. நீ ஒரு மனிதனாயீன் தடியெடுத்துப் பிறந்து கொல்ல வேண்டும் அதை இப்போதே. எனக்குள் நான் ஒப்புக் கொண்டேன் எந்தளவு அதனை நான் உர்ரூர நோஸிக்கிறேன் என்று. என் தண்ணீர்தொட்டிக்கு நீரருந்த ஒரு விருந்தினனேபோலும் விஜயம் செய்திருக்கும் அப்பாம்பீனால் எனக்குள் பொங்கிய மகிழ்ச்சி பற்றி என்ன சொல்ல? சமாதானமாய் பிரிந்து நன்றியேதும் சொல்லாமல் பூமியின் கொதிக்கும் வயிற்றினுள் மறுபடி செல்கிறதே அது.
அதனைக் கொன்றிடத் தேவையில்லை என உறுதி பூண்டது எந்தன் கோழைத்தனமோ? அதனோடு பேசி உறவாட அவாவுற்றமை ஏன் தப்போ? அதனை கம்பீரமாய் உணர்கிறேனே என் தன்னடக்கமோ? என்னும் மிகைத்துக் கிடக்கிறது மரியாதையுணர்ச்சி.
மறுபடி அதே குரல்கள் என்னுள் ஒலித்தன இங்ஙனம்:- அச்சம் ஏதும் இல்லையெனில் அதனைக் கொல்வாய் நீ!
உண்மையாகவே நான் அஞ்சினேன்;அஞ்சித்தானிருந்தேன்.
இரகசியப்பூமீயீனது இருக்கதவு திறந்து என் விருந்தோம்பல் நாடி வந்திருக்கிறது ஆதலினால் அச்சத்தையும் விட மிகைத்துக் கிடந்தது அதன் மீதான மரியாதை. போதுமானவரை பருகீற்று அது. தூக்கியது தலையை கனவில் மிதக்கிறமாதிரி போதையில் இருக்கும், ஒருவனே போலும். தன் நாவு நக்கீற்று காற்று தவழும் இரவைப்போல கன்னங்கறுப்பாய். நக்குகையில் சுற்றுமுற்றும் பார்த்தது ஒரு கடவுளே போலும். காற்றும் தன் தலையைத் திருப்பி மெல்ல மிக மெல்ல ஒருகனவில் மிதப்பதேபோலும்
தமிழில்:-கெகிறாவ ஸுலைஹா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

சுவரமுகத்து உடைந்த ஓரம் வழியே மீண்டும் ஏறி மெல்ல தன் நீர்தேகம் சுருட்டி வரைத்து உள்ளே போனது. தகீல் நீறை பொந்தும் தன் தலையை உள் நுழைக்கையில் தன் புஜங்கர் மடக்கிச் சுருக்கீற்று.
அதன் பயங்கரப் பொந்தும் அதுலே பின்வாங்குகிறாற்போல ஒரு வகை அச்சம், பீக, ஒருவித எதிர்ப்பு. எனினும் தீட்டபீட்டபடியே போகிறது அது. மெல்ல நுழைகிறது அது. என் பாத்திரம்தனை மெல்ல கீழே வைத்து சுற்றுமுற்றும் பார்த்து ஒரு சின்னத் தடியெடுத்து சலசலப்போடு என் தண்ணீர்த்தொட்டி நோக்கி எறிந்தேன்.
தடி ஒன்றும் அதைத் தாக்கியிருக்காதுதான் நான் அப்படித்தான் எண்ணுகிறேன். ஆனாலும் வெரீத் தெரியும் தன் உடற்பகுதியை மெல்ல உர்னெடுத்து ஒரு மின்னலைப்போல துடிதுடித்துப்போயிற்று அது இருட்பொந்த்தின் பிறந்த பூமீக்கூடே முன் சுவற்று வழியாய். நடுப்பகல் மீகக்கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. வியப்பு மாறாமல் பார்வை பதித்துக் கிடந்தேன் நான் அதன் மீதில். உடனடியாய் உரம் வருந்தினேன் என்ன அற்பச் செயல், என்ன வன்மம், என்ன கீழ்த்தரச்செயல் எனது ஏன்ணியெண்ணி ஏனையே இகழ்ந்தேன் நான்.
கூடவே ஏன் சபிக்கப்பட்ட மனிதக் கல்வியின் உர்ரூர ஒலித்த எல்லாக் குரல்களையும்.. அந்த 'அல்பட்ரஸை' எண்ணினேன் நான். அது மீன வரமாட்டாதா நான் ஏங்கினேன் என் பாம்பே,
அஃது எனக்கு அரசன் போலும். கீழ் உலகில் முடிசூட்டப்படாமல் நாடு கடத்தப்பட்ட ஒரு அரசனைப்போலும் அவனை மறுபடி அரசனாக்கிப் பார்க்கும் ஆவலில் தகித்தேன் நான்.
ஆதலினால் நான் என் வாழ்வின் உன்னதமான பிரபுக்கரில் ஒருவரோடு அனவராவும் அற்புத வாய்ப்பை இழந்தவன் என்றானேன். என்ன பரிதாபம், நான் ஏதேனும் பிராயச்சித்தங்கள் செய்தாக வேண்டும்.
குறிப்பு:- 'அல்பட்ரஸ் என்பது பசுபிக் கடற்பிராந்தியங்களில் அதிகம் காணப்படுகிற அதிக தூரம் பறந்து செல்லும் ஆற்றல் படைத்த ஒரு விசாலமான கடற்பறவை யாகும்.
33

Page 36
1ெனக்கு அந்தப் பள்ளிக்கூடம் ரொம் குறைந்தது இரண்டு வருடங்களாவது அங்கு கடிதத்தில் கிளிநொச்சி வலயம் என்றதும் ப
அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போகும் மரங்களின்நிழலும், பச்சைப் பசேல் என்ற வ நிறக் கொக்குகளும் கண்களுக்கு விருந்தளி குளிர்ச்சியாக இருக்கும்.
பென்னம் பெரிய பச்சைக் குடைகை நிழல்களுக்குக் கீழே ஒன்று இரண்டு வகுப் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போகவேனு என்று சொல்லி இறங்கி சில தூரம் கிழக்குத் அந்த சிறு வீதியின் இரு அருகு வழியேயு மூடியிருக்கும். இடையிடை பெட்டிக்கடை பப்பாசி, மாம்பழங்கள், பாலப்பழங்கள் என் அந்தப்பள்ளிக்கூடஅதிபர்மென்மையா செயற்படுவார். போன சில நாளிலேயே என் தாய், தந்தை, உறவுகளை இழந்த பிள்ை அதிகமாக இருந்தார்கள். மிகவும் துன்பமய
கால் கைகள் இல்லாத தாய், தந்தை தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் இருக்கிறார்கள்.
சின்ன வயதிலேயே கூலி வேலைக்கு சிறுவர்களை எண்ணிச் சொல்லச் சொல்லிச் மாணவர்கள் இங்குதான் வாழ்கிறார்கள்.
இந்த யுத்தம் வந்து எப்படி எப்1 துப்பியிருக்கிறது தெரியுமா? மனித தின்றிருக்கிறது. அது மிகப் பெரிய தோன்றியிருக்கின்றது.
34
 

பவே பிடித்திருந்தது. கட்டாய இடமாற்றலில் நான் படிப்பிக்க வேண்டும். எனது இடமாற்றக் Dனது சந்தோசமாயிருந்தது.
வீதி ஒரம் எங்கும் ஓங்கி உயர்ந்த சடைத்த யல்களும், வயல்களில் பறந்து திரியும் வெள்ளை ரிக்கும். சோலைவனங்களாக பாடசாலை குழு
ளை நிமிர்த்தி நட்டது போல் தெரியும் மர புகள் இயங்கி வந்தன. னும் எண்டால், கிளிநொச்சி தண்ணி டாங்கியடி திசையாக நடந்து செல்ல வேண்டும். ம் உயர்ந்து வளர்ந்த மரங்களால் பச்சைநிறமாய் டகளும் கண்களில் தெரியும். அந்த கடைகளில், று வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். னமனசுநிரம்பியவர். மிகவும்அர்ப்பணிப்போடு னையும் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. )ளகளும் வீடு வாசல் இல்லாத பிள்ளைகளுமே மான ஒரு சூழல்,
யர்கள் இருக்கிறார்கள். வாழுகிற பிள்ளைகளும்
தப் போய் உழைக்கிற சொன்னால் அதிகமான
படி எல்லாம் சப்பித் உயிர்கள் பலவற்றைத் அவல விம்பங்களாய்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 37
இத்தனை கஷ்டங்களிலும் மாணவர்கள் பலர் நன்றாகவே படிக்கிறார்கள். சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனாலும், அவர்களை அரவணைத்து உதவுவோர் மிக மந்தமாக இருப்பதை நானும் உணர்ந்து கொள்கிறேன்.
நிறையக் காசுகளை அள்ளிக் கொடுத்து அந்தப் பிள்ளைகளுக்கு உதவி செய்ய என்னால் முடியாதுதான். ஆனாலும், நிறைவான கல்வியினை என்னால் வழங்க முடியும். இப்படியாக ஒவ்வொரு பொழுதும் நான் நினைத்து என் மன நிறைவான கல்வியினை மாணவர்களுக்குப் போதித்து வந்தேன்.
இரண்டு வாரமாகக் காலை வந்து அன்று பின்னேரமே வீடு போகிற நான், இப்ப என் எண்ணத்தை மாற்றி அமைத்திருந்தேன்.
திங்கள் வந்து வெள்ளி பின்னேரம் வீடு போகலாம் என்பதுதான் அந்த எண்ணம். நானும் இன்னும் இரண்டு ஆசிரியர்களும் அந்தப் பள்ளிக்கூடத்தின் ஒரு வகுப்பறையில் தங்கி இருக்க அதிபரின் அனுமதியினைக் கேட்டிருந்தோம். மன நிறைவோடு பூரண சம்மதம் தந்தார் அதிபர். தனது அறையில் இருந்த ஒரு அலுமாரியினையும் எங்களுக்குத் தந்திருந்தார்.
உடுப்புகள், புத்தகங்கள், உணவு என்று அந்த அலுமாரிக்குள் வைத்து பக்குவாக எடுப்போம்.
நிமிர்ந்து கால் நீட்டித் தூங்க நிம்மதியாய் இருந்தால் போதும். விடிய ஐந்து மணிக்கெல் லாம் எழுந்து எல்லாக் கடமைகளும் முடித்து ஆயத்தமாகிவிடுவோம். - பள்ளிக்கூடப் பாட நேரம் முடிந்த பிறகு சின்னதாக ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுவோம். பள்ளிக்கூட சின்ன மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த ஊர்ப் பொடியள் வந்து எங்களோடு விளையாடு வார்கள்.
பின்னேரம் ஐந்தரை போல வகுப்புத் தொடங்கும். பிள்ளைகள் வலு ஆர்வமாக வருவார்கள். எங்களுக்கும் படிப்பிக்க ஆசை வரும்.
இரவு ஏழரை போல வகுப்பு முடியும். எல்லாப் பிள்ளைகளினதும் தகப்பன் அல்லது சகோதரர்கள் வந்து கூட்டிப் போவார்கள். பெற்றோர் சிலர் பழங்கள் தருவார்கள். வேறு சிலர் பிட்டு அல்லது கொத்துரொட்டி என்று தருவார்கள்.
எங்களை - அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருக்க வேணும். மாணவர்களும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

ஒழுக்கமானவர்களாக இருந்தார்கள். பழக்க வழக்கங்கள் புதுமையாய் இருந்தன. அவர்கள் ஒவ்வொருத்தர் முகத்திலும் பயபக்தி வெளிச்ச மாக மின்னி மறையும்.
எனக்கு பள்ளிக்கூட நியமனம் கிடைத்து ஏழு ஆண்டுகள் முடிந்திருந்தன. கணித பாடம் கற்பிப்பதில் மிகவும் தேர்ச்சியான ஒரு ஆசிரியனாக நான் இருந்தேன். வலிகாமம் மல்லாகத்தில் நான் இருந்து கல்வி கற்பித்த காலங்களில் எனக்கிருந்த அந்தத்தனித்துவத்தை இங்கு நிலை நாட்டுவதில் மனது ரொம்பவே விருப்பமாய் இருந்தது.
ஆனாலும், சித்திரா ரீச்சரின் அறிமுகம் பாரிய மாற்றங்களைத் தந்திருந்தது.
சில நாட்களாக சித்திராவின் நினைவுகள் என்னை இதமாய்த் தாலாட்டத் தொடங்கின. சித்திரா ஆரம்பப் பிரிவுகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற ஒரு ரீச்சர்.
ஒரு நாள் சவுக்காரம், சம்போ, சீனி வாங்கவென்று ஏ-நைன் ரோட்டில் இருக்கிற கடைக்குப் போய்க்கொண்டிருந்தேன். சித்திரா ரீச்சரைக் நான் கண்டிட்டேன். அவர், கன நேரமாக என்னோடு நின்று கதைத்தார். உரை யாடும் போது அவரிடம் இருந்து என்னை நோக்கித் தெறிக்கும் அபிநயங்களை ரசித்துக் கொண்டிருந்தேன்.
என்னோடு கதைத்துக் கொண்டு இருக்கும் நேரங்களில் எல்லாம் இடையிடை நாக்கை இலேசாக மடித்து மென்மையாகக் கடித்துச் சிரிப்பார். கூரிய கண்களில் சிரிப்புச் சிதறல் விரிந்து வந்து என் நெஞ்சைத் தாக்கும். இதமான மூச்சு இழுப்பு அடிக்கடி எனக்கு வந்து போகும்.
அவர் அபிநயிக்கும்போது அசைந்து நிமிரும் அழகுகள் எல்லாம் அள்ளி வந்து என்னை நோக்கி வீசும். அவை என்னைச் சிதைத்துப் போகும். அப்பால் பார்த்து, பிறகு திரும்பி அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்யும்போது என் மனம் நல்லாக ஆறுதல் பெறும்.
இந்த நீண்ட ஒரு அறிமுகத்தின் பின்பு சித்திராரீச்சர் என்னோடு வலிந்து வந்து கதைப் பார். நிரம்ப விருப்பங்களோடு கதைப்பார். முதலில், அவர் சாதாரணமாகவே என்னோடு கதைத்துப் பழகினார். நாள் செல்லச் செல்ல ரொம்ப மாற்றங்களை நான் அவதானித்தேன்.
சித்திராவுக்கும் எனக்கும் ஒரே வயதுதான் இருக்கும். இல்லை என்றால், ஒரு வயதோ

Page 38
பளபளாபயாய--
'ரீச்சர்.. பிளீஸ் வெளியால போங்க.. ஆரும் பாக்கிறவை என்ன நினைப்பினம் ரீச்சர்.' என்று நான் கெஞ்சிச் சொன்ன போது 'சொறி.. சொறி..' என்று சொல்லிவிட்டு 'நாளை மத்தியானம் கட்டாயம் வீட்டை வாங்கோ' என்று மட்டும் சொல்லி வெளியே போனார். அன்று இரவு எனக்கு நித்திரையே வரவில்லை. நாளை சித்திரா ரீச்சர்
வீட்டுக்குப் போவோமா? போகாமல் விடுவோமா? என்று மனம் அங்கலாய்ப்பாய் அலைந்தது.
36

இரண்டு வயதோ எனக்குக் கூடுதலாக இருக்கலாம். அவர் கல்யாணம் செய்து ஒரு பிள்ளைக்குத் தாயாகி இருந்தார். மகளுக்கு ஏழு வயதுதான் இருக்கும். காதலித்து கல்யாணம் செய்தவர் சித்திரா ரீச்சர். புருசன் கனடா போய் ஆறு வருடங்களுக்கு மேலாகி விட்டன.
தானும் தன் மகளும் என்று உலவித் திரிந்த சித்திரா ரீச்சருக்கு என் குறும்புக் கதைகள் நல்லாகவே பிடித்திருந்தன. என்னோடு கதைக் கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இதை எனக்கு உரிமையோடு சொல்லுவார்.
புலமைப் பரிசில் பரீட்சை வகுப்பு பிள்ளைகளுக்குப் படிப்பிக்க என்னையும் சித்திராரீச்சரையுமே அதிபர் இம்முறை சிபார்சு செய்திருந்தார். அதிபருக்கு அந்தளவுக்கு என்னில் நம்பிக்கை வந்திருந்தது.
மேல் வகுப்புகளுக்கு கணிதம், தமிழ் படிப்பித்து வந்தேன் நான். என் கற்பித்த லின் சுவாரஸ்யம் பற்றி பொடியள் சொல்லக் கேட்டிருக்கிறார். அது எனக்குச் சந்தோசங் களைத் தந்தது.
அந்தப் பள்ளிக்கூடத்தின் மேல் மாடியில் உள்ள நீண்டதொரு மண்டபத்தில் அந்த வகுப்பு நடைபெறும்.
ஒரு நாள் மாலை நேர வகுப்பு முடிந்து பிள்ளைகள் எல்லோரும் போய் விட்டார்கள். சித்திரா ரீச்சர் மட்டும் போகாமல் என்னோடு கதைத்துக் கொண்டிருந்தார். வெளியே ஏதோ அலுவலாகப் போன அதிபரும் இன்னும் வரவில்லை. அந்த இடைவெளியில் நானும் சித்திரா ரீச்சரும் நிறைய விடயங்களைக் கதைத்து மகிழ்ந்தோம்.
தன் உருண்டை விழிகளை உருட்டி உருட்டி கதைக்கும் போதெல்லாம், அவர் ஒரு பிள்ளைக்கு தாயாகியிருந்தார் என்பதை மறக் கச் செய்தன. - உடல் கட்டழகு குலையாமல் வருவார். அவர் நடந்து வரும் நடையும், அடர்த்தியாக நீண்டு பின்னியிருந்த கூந்தலின் மெல்லிய அசைவுகளும், வாளிப்பான உடல் மேனி யினையும் காணும் போது யாருக்கும் மனங் கிறங்கத்தான் செய்யும்.
அதிலும் திருமணமாகாத வாலிபன் நான். நாம் இருவரும் அருகருகாய் இருக்கின்றோம். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவரோடு இன்னும் இன்னும் உரையாட வேண்டும் என்ற அவாவைத் தூண்டிக் கொண்டிருந்தன.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 39
அந்த நேரம், அதிபர் உள்ளே வந்து கெண்டிருந்தார். அவருக்குப் பின்னால் எங்கள் பள்ளிக்கூட பிள்ளைகளின் பெற்றோர் இருபது பேரளவில் வந்து கொண்டிருந்தார்கள்.
பிறகு கதைக்கிறன். குமரன் சேர். என்று கீழ் போக்கிய தன் வார்த்தைகளை சாடையாச் சொல்லிப் போனாள் சித்திரா. என் உள்ளம் புதுவித உணர்வுகளுக்குள் அகப்பட்டது போன்ற ஒரு பிரமையினை நான் உணர்கிறேன்.
'சித்தரா ரிச்சர் நில்லுங்க. ஸ்கொலசிப் பிள்ளைகளின்ர தாய் தகப்பன்மாரோடு ஒரு சின்ன மீற்றிங். பிளிஸ் நில்லுங்க” என்று அதிபர் மறிச்சார்.
இன்று கூட்டம் என்று முந்தநாள் அதிபர் சொன்னது இப்ப என் ஞாபகத்துக்கு வந்தது.
நீண்டஅகன்ற மேசையில் ஒரு விளிம்போர மாக ஆண்களும் மறு விளிம்போரமாக பெண்களுமாக அமர்ந்திருந்தார்கள். சித்திரா ரிச்சரும் நானும் அதிபர் பக்கமாக இருக்கி றோம். சித்திரா ரிச்சருக்கு அருகாக இருக்கும் எனக்கு ஒரு இனிய சுகம் கிடைத்தது. மாலைப் பொழுதின் இனிய சரிவினில் பொன் வசந்தங்களை எனக்குள் நிரப்பி மகிழ்ந் திருந்தேன்.
«Х» (X X
சித்திரா ரிச்சர், ஒரு நாள் ஜீன்ஸ் வாங்கி வந்து தந்தார். இன்னொரு நாள் சேட்டும், ரீ சேட்டும் வாங்கித் தந்தார். அந்த நேரங்கள் எனக்குச் சங்கடமான பொழுதுகளாக இருந்தன.
என்னாலும் என்ன செய்ய முடியுமோ அதையும் நான் செய்துவிடுவேன். எதுவென் றாலும் சுட்டிப் பொண்ணுக்குத்தான் வாங்கி வந்து சித்திரா ரிச்சரிடம் கொடுப்பேன்.
ரெலிபோனில் கதைக்கும் போது சுட்டிப் பொண்ணுதான் குறும்புடன் கதைப்பாள். அவை எனக்குச் சந்தோசங்களை வழங்கிச் செல்லும்,
வீட்டுக் வாங்கோ அங்கிள். என்று கெஞ்சுவாள். வருவேன். கட்டாயம்வருவேன்.' என்றுஒவ்வொருமுறையும்கதைக்கும்போதும் சொல்லி விட்டு போகாமல் விட்டு விடுவேன். ஒன்றும் அறியாத அந்தப் பிஞ்சு நெஞ்சுடன் பொய் பேசியதற்காக வருந்தியதும் உண்டு.
ஒரு நாள் ஆசிரியர்கள் எல்லோருக்கும் சின்னச் சின்ன பார்சல்கள் ஒவ்வொன்றாகக் கொடுத்து வந்தார் சித்திரா ரிச்சர். இயல்பான
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

புன்னகை வடிவான அந்த முகத்தில் இன்று கொஞ்சம் அதிகம் மகிழ்ச்சி தெரிந்தது. எனக்கும் ஒரு பார்சல் தந்தார். தன் மகளின் பிறந்த நாள் என்று சொன்னார். எனக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது.
தாங்யூ சித்திரா ரிச்சர். உங்கள் செல்ல மகளுக்கான என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று நான் சொல்லும் போது வெட்கப்பட்டார் சித்திரா ரிச்சர். வெட்கத்துக்குள்ளும் இத்தனை அழகா? அவை எல்லாமே என்னைத் துவம்சம் செய்து விட நினைக்கின்றன. என்னையே சுற்றிச் சுற்றி வந்தன.
வெளியே சென்று'சொக்லற்கிறீம்பிஸ்கட', மிக்சர் பை' ஒன்று, "சோபரி சுவையில் பெரிய "வேபேர்ஸ் பிஸ்கட் பை' என்று வாங்கி வந்து சித்திரா ரிச்சரிடம் கொடுத்தேன். அப்போதும் மெளனமான ஒரு சிரிப்பு. அந்த மெளனச் சிரிப்பிற்குள் நிறைய அர்த்தங்களை உள்வாங்கி மகிழ்கின்றேன் நான்.
பகல் ஒரு மணி இருக்கும். ஸ்ராவ் றுரமில் நான்இருக்கிறேன். அந்த நேரம் நான்சாப்பிட்டு முடித்த நேரம், ஒய்வாக இருந்து விட்டு, இன்வென்ரறி புத்தகங்களில் பாடசாலைப் பொருட்களின் பதிவுகளை செம்மைப்படுத்தி மீதிகளை எடுத்துக் கொண்டிருந்தேன்.
படாரென உள்ளே வந்த சித்திரா ரிச்சரின் வரவு எனக்கு உள்ளம் சுளிர் என்று இருந்தது. இருக்கையில் இருந்து எழுந்து விடுகிறேன்.
"ஏன் பயப்பிடுறியள்? உக்காருங்க.." என்று சொல்ல நானும் உட்கார்ந்து விடுகிறேன்.
என் உள்ளம் பட படவென்று அடித்தது. என் வெறுமை நெஞ்சுக்குள் துருப்பிடிச்ச முட்கம்பியினை விட்டு இழுப்பது போன்ற வலியை உணர்கிறேன் நான்.
‘என்ன விசயம் சொல்லுங்க சித்திரா ரிச்சர்.’ என்றதும்
குமரன் சேர் போன கிழமை வீட்டுக்கு வரச் சொல்லியெல்லோ நான் சொன்னனான். ஏன் வரேல.?
நாளைக்கு மத்தியானம் வாங்கோவன் சேர். பள்ளிக்கூடமும் லீவுதானே' என்று என்னிடம் வினவினாள்.
சித்திரா ரிச்சர் கதைக்கக் கதைக்க என் நெஞ்சுப் படபடப்பின் வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. ஆனாலும் அவவின் உள்ளத்திலோ அல்லது முகத்தில் ஏற்படும்
37

Page 40
சலனமோ என்று எதுவுமே துளியளவும்
அவரிடமிருந்து பிரதிபலிக்கவில்லை.
'ரீச்சர்.. பிளீஸ் வெளியால போங்க.. ஆரும் பாக்கிறவை என்ன நினைப்பினம் ரீச்சர்..' என்று நான் கெஞ்சிச் சொன்ன போது
'சொறி.. சொறி..' என்று சொல்லிவிட்டு 'நாளை மத்தியானம் கட்டாயம் வீட்டை வாங்கோ' என்று மட்டும் சொல்லி வெளியே போனார்.
அன்று இரவு எனக்கு நித்திரையே வரவில்லை. நாளை சித்திரா ரீச்சர் வீட்டுக்குப் போவோமா? போகாமல் விடுவோமா? என்று மனம் அங்கலாய்ப்பாய் அலைந்தது.
- சீசீ.. ஆண் இல்லாத வீட்டுக்கு நான் எப்பிடிப் போறது. அங்கே போகக் கூடாது. போனால் வீணான பழியள் வரும். இதால அதிகம் பாதிக்கப்படப்போறது ரீச்சராகத்தான் இருக்கும். கட்டாயம் அங்கு போறதில்லை என்ற ஏகமனதான ஒரு முடிவுக்கு நான் வந்து விடுகிறேன்.
என் முடிவை நானே முன்மொழிந்து நானே வழிமொழிந்தேன். சமாதானமாக தூங்க ஆயத்தமாகினேன். அந்த நேரம் என் கைபேசி அலறியது.
கைபேசியின் திரையில் சித்திராவின் பெயர் பளிச்சென்று தெரிந்தது. வந்த அழைப்பைச் செயல்படுத்துவதா? துண்டிப்பதா? என்ற அவாவில் நான் தவித்த போது அது தானாகவே துண்டிக்கப்பட்டது..
சில வினாடிகள் கழித்து மீண்டும் கைபேசி அலறியது. உடனடியாகவே செயல்படுத்தி ரீச்சரோடு உரையாடத் தொடங்கினேன்.
'அங்கிள் நாளைக்குக்கட்டாயம் வீட்டுக்கு வாங்க அங்கிள்' என்று சித்திரா ரீச்சரின் செல்ல மகள் கதைக்கும் போது ஆறுதலாக இருந்தது.
'கட்டாயம் வருவேண்டா.... இப்ப நீங்கள் சாப்பிட்டீங்களா?'
- 'ஓம்.. ஓம்.. நான் சாப்பிட்டன். நீங்கள்...'
"ஓம்... செல்லம்... நாளைக்கு நான் வருவன் போனை அம்மாவிடம் குடுடா' என்று சொன்ன வேகத்திலேயே போன் துண்டிக்கப்பட்டு விட்டது.
சித்திரா ரீச்சருக்கு என்னில கோபம் போலும். கடந்த முறையும் வாறன் என்று சொல்லிப் போட்டு போகாமல் விட்டனான். அந்தக் கோபம்தான் போலும்.
அடுத்த நாள் புதன்கிழமை அன்று
38

லீவு நாள் என்றபடியால் என்னோடு நிற்கிற இரு ஆசிரிய நண்பர்களும் தங்கள் ஊரான யாழ்ப்பாணம் போகாமல், பாஸ்போட் எடுப்பது சம்மந்தமாக வவுனியா போய் விட்டார்கள்.
பகல் பதினொரு மணி இருக்கும். நான் மட்டுமே தனிய இருந்தேன். அதிபர் வந்து கொண்டிருந்தார். 'குமரன் சேர். பதினொண்டரை மணி போல என்ர ஒபிசுக்கு வர முடியுமோ..? இன்வென்டரி தொடர்பான வேலையள் கொஞ்சம் இருக்குது. வந்து உதவி செய்து தர முடியுமோ?'' என்று கேட்டார்.
'ஓம் சேர் நான் வாறன் சேர்..." என்றேன். தன் ஒபிஸ் நோக்கிப் போய்க்கொண்டிருக் கும் அதிபரையே நான் கொஞ்ச நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். அதிகாரத் துஷ்பிரயோகம் கொஞ்சமும் தன்னகத்தே கொண்டிராதவர். அவரின் இளகிய மனது எனக்குள் சென்று ஏதோ உறுத்தல்களைச் செய்து கொண்டிருந்தது.
- பதினொன்றே கால் மணி ஆகி விட்டது. சித்திரா ரீச்சரிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் இன்று எனக்கு வரவில்லை. அதிகாலையில் குட்மோனிங் என்று ஒரு எஸ்.எம்.எஸ். போடுவார். அது கூட இன்று வரவில்லையே. பழகிய நல்ல உறவுகள் தள்ளிச் செல்லுகிற போதுதான் அதன் இறுக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும் போலும்.
இந்த நினைவுகளோடு அதிபரின் ஒபிஸ் அறையை நோக்கிப் போய்க் கொண்டிருந் தேன். என்னைக் கண்ட அவர் சிரிக்கிறார்.
"உள்ளே வாங்க குமரன் சேர்..' என்ற அவரது அழைப்புடன் அறையின் உள்ளே சென்று விட்ட என்னை உட்காரும்படி சொல்லுகிறார்.
கதிரையை இழுத்து விட்டு உட்காரு கிறேன். என் இனிய நண்பராக அதிபர் என்னோடு கதைத்துக் கொண்டிருந்தார். ஆனாலும், சித்திரா ரீச்சரிடம் இருந்து ரெலி போன் அழைப்பு இன்னமும் வரவில்லை. அந்த நினைவுகள் என்னைச் சிதைத்தபடி இருந்தன.
'குமரன் சேர் இண்டைக்கு இன்வென்டரிக் கணக்குகள் கொஞ்சம் முடிக்கக் கிடக்கு ரண்டு
பேரும் கணக்குப் பாப்போமா?'
'ஓம்' என்ற எனது சம்மத்தோடு, அந்த இன்வெண்டரி புத்தகத்தை எனக்கு முன்னால்
வைக்கிறார். .
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 41
அதிபரோடு சேர்ந்து கணக்கு செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், என் மனது கொஞ்சமும் அமைதி கொள்ளேவே இல்லை. மனம் போனபடி குழம்பிக் கொண்டிருப்பதை அதிபரும் கவனிகிறார்.
இப்போது, சித்திரா ரிச்சரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை நான் அவசரமாக ரிசீவ் பண்ணிய போது சித்திரா ரீச்சரின் சுட்டிப் பெண்தான் கதைத்தாள்.
அங்கிள் இண்டைக்குக் கட்டாயம் வாங்கோ. உங்களை வீட்டுக்கு வரும் எண்டு அம்மா சொன்னவ. கட்டாயம் வாங்கோ அங்கிள்'
"கட்டாயம் வருவேன்டா கடவுள்." சுட்டிப் பெண்ணுக்காக எண்டாலும் நான் அங்கை போக வேணும். சித்திரா ரிச்சருக்கு என்னில சரியான கோபம். ஆனாலும், காட்டிக் கொடுக்காமல் நடந்து கொள்கிறார். சமூகத்தை நினைச்சு ரொம்பவே பயப்பிடும் எனக்கு சித்திரா ரிச்சரைக் காணப் போகிறேன் கண்டு கதைக்கப் போகிறேன் என்ற ஆவல்கள் நீண்டு வந்தன. அவை, கட்டாயம் அங்கே நான் போக வேணும் என்ற ஆசையை ஆவலைத் தூண்டின.
மீண்டும் இரண்டு தடவை சித்திரா ரிச்சரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. ரிசீவ் பண்ணாமல் இருந்து விடுகிறேன். மூன்றாம் முறையும் அழைப்பு வந்து கொண்டிருந்தது. என் அந்தர நிலை கண்ட அதிபர் என்னைப் பார்த்து ரிசீவ் பண்ணிக் கதையுங்கவன்' என்றார்.
குமரன் சேர் இன்று கட்டாயம் வாங்கோ' என்று சித்திரா ரிச்சர் பதில் சொன்னார்
இன்னுமொரு அரை மணித்தியாலத்தில் வந்திடுவேன். இப்ப சரியான வேலையாய் இருக்கிறேன்' என்று மட்டும்சொன்னேன்.
சரி குமரன் சேர் மிச்சம் பிறகு பாப்பம். இப்ப நீங்கள் போற இடத்துக்கு போட்டு வாங்கோ’ என்றார் அதிபர்.
இப்படி அவர் சொல்லும் போது எப்பவும் அவர் எனக்கொரு இனிய அதிபர் என்பதை நினைத்து மகிழ்ந்து போனேன்.
யார் கதைத்தது? எங்கே வரட்டாம்? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர்.
என் நிலை உணர்ந்து தன்நிலை மாற்றி உதவி செய்யும் உத்தம நண்பராகவே எப்பவும் எனக்குக் கிடைத்திருக்கிறார் எங்கள் அதிபர்.
சித்திராரிச்சர் சொன்னகுறிப்பின்பிரகாரம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

அவர் வீட்டுத்தெருவாசலை வந்து சேர்ந்து விட்டேன் நான்.
அவர் வீட்டு முற்றம் எங்கும் ஒரே மாஞ் சோலை. அவற்றோடு தென்னை மரங்களும் நிறையவே நின்றன. அயல் வீடுகளிலும் அதேமாதிரியான மரங்கள் நின்றன. சில வீடுகளில் பலா மரங்களும் செழிப்புடன் காட்சி தந்தன. அழகான, குளிர்மையான ஒரு கிராமம் சித்திரா ரிச்சரின் கிராமம்.
சுட்டிப்பெண் கேற்றுக் கம்பிகளைப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறாள்.
அங்கிள் எண்டு செல்ல மொழியுடன் கூப்பிட்டாள். சித்திரா ரிச்சர் கேற்றினைத் திறந்து உள்ளே வரும்படி அழைக்கிறார். வீட்டு நாய் என்னைக் கண்டு பலமாகக் குரைக்கிறது.
ஜிம்மி அங்கால போ. என்று சித்திரா ரிச்சர் சொல்ல அது வாலை ஆட்டியபடி மெது மெதுவாக அப்பால் சென்று போய் படுத்துக் கொண்டது.
வீட்டுக்குள்ளே சென்றதும் வீட்டின் பிரமாண்டங்களை நினைத்துப் பிரமிக் கிறேன். யுத்த அடிபாடுகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிய எத்தனையோ கட்டிடங் களுக்குள், இந்த வீடு மட்டும் எப்பிடி? ஒ. புருசன் கனடாவல்லவா..? வலு வேகமாகவே வீடு கட்டி முடித்திருக்கிறார்.
அழகான வர்ணப் பூச்சு. சோபா செற், பிறிச் குஷன் கதிரைகள் என்று எல்லாமே நவீன மயப்படுத்தப்பட்டிருந்தன. சுட்டிப் பெண்ணைக் கூப்பிட்டேன். அன்பாக வந்து என்னொடு அணைந்தாள். அவள் சொக்கில் மென்மையாய்க் கிள்ளிக் கொஞ்சிவிட்டு நான் கொண்டு சென்ற அந்தப் பார்சலை பிள்ளையின் கைகளிலேயே கொடுத்தேன்.
தாங்யூ அங்கிள். செல்லமாய் சொல்லி விட்டு தாயிடம் ஒடிப் போனாள்.
ரீப்போவில் இருந்த அவள் வீட்டு அல்பம் ஒன்றை எடுத்துப் பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டிருந்தேன். சித்திரா ரிச்சரின், புருசனின் வெளிநாட்டு படங்களோடு சுட்டியின் அனேக படங்களும் என் கண்களுக்குத் தெரிகின்றன. கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தபோது கொஞ்சம் திகைத்துப் போய் இருந்துவிட்டேன் நான்.
அந்த நேரம் சித்திரா ரிச்சர் வந்து கொண்டிருந்தார். கூலான மென் பானம் ஒன்றை என் முன்னே வைத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்.
39

Page 42
இவர் ஆர் ரிச்சர்.?’ என்று படக்கென்ற என் கேள்விக்கு ரிச்சர் உடனே திரும்பி நின்றார்.
அந்தப் படத்தை நான் காட்டியபோது
அதைப் பார்த்து கண்கலங்கி நின்றார் ரிச்சர்.
இவர்தான் என் அண்ணா'
இப்ப எங்கே’
"வீரமரணம் அடைஞ்சிட்டார்.
‘எங்க..?’
கண்ணில் வடிந்து வரும் நீரினை கைகளால் துடைத்து விட்டபடி மெளனமாக சில நேரங்கள் நின்று விட்டு,
இரண்டாயிரத்தோராம் ஆண்டு ஆனை யிறவு அடிபாட்டில வீரமரணம் அடைஞ்சவர். மேஜர் ஜஸ்ரின் என்பது அண்ணான்ர இயக்கப்பேர்’ என்று சொல்லி முடித்தார்.
சில நேரங்களுக்கு நானும் மெளனமாகவே இருந்துவிட்டேன்.
'பள்ளிக்கூடத்தில உங்களைக் கண்ட நாளிலேயே. என் அண்ணா நீங்கள் தான் என்று எனக்கொரு நினைவு வந்தது. நீங்கள் தலை முடியினை மேவி இழுத்திருக்கிற மாதிரியும், அதே சொக்கும், எடுப்பான உயரமும், நிமிந்த நடையும் எண்டு எல்லாமே அச்சு அசலாக அண்ணா மாதிரியே நீங்கள் இருக்கிறியள். என்று சித்தரா ரீச்சர் சொல்லிக் கொண்டு போனார்.
அல்பத்தின் கடைசிப் பக்கத்தில் இருக்கிற அதே போட்டோவை மீண்டும் ஒரு தடவை உற்றுப் பார்க்கிறேன். பத்து வருடங்களுக்கு முன் நான் எடுத்த போட்டோவும் இதுவும் கிட்டமட்ட ஒரே மாதிரித்தான் இருக்குது. என்ர இப்போதைய தோற்றமும் சாடையாய் தெரியுது.
இத்தனை நாளும் சித்திரா ரிச்சர், தன் அண்ணாவைப் போல் நான் இருக்கிறேன் என்ற நினைவோடு தான் என்னைப் பார்த்திருக்கிறார். அடிக்கடி என்னோடு கதைத்திருக்கிறார்.
கடவுளே. கல்யாணம் ஆகாமல் என்னைப் போன்ற எத்தனையோ வாலிபர்கள் பெண்களை இப்படித்தான் இளக்காரமாக எடை போடுகிறார்கள் போலும், அவர்களைப்
40

போன்ற மிகக் கேவலமான ஒருவனாகவே நானும் மாறியிருக்கிறேன்.
ஒரு பெண் ஒரு ஆடவனை அடிக்கடி பார்க்கிறாள் என்றால் உடனடியாகவே அது காமம் சேர்ந்த எண்ணமென்று நினைப்பது எவ்வளவு கேவலமான நினைவு.
முன்னர் உவரை எங்கோ பார்த்த ஞாபகமாய் இருக்கு’ என்ற நினைவோடு பார்த்திருக்கலாம்.
"என் தம்பி மாதிரியோ அல்லது அண்ணா மாதிரியோ இருக்கிறார்’ என்று நினைவுகளோடு பார்த்திருக்கலாம்.
இப்படி எத்தனையோ நல்ல எண்ணங்களோடு பார்த்திருக்கலாம். பழகியிருக்கலாம். அப்பிடித்தான் சித்திரா ரிச்சரும் என்னை நோக்கி இருக்கிறார்.
இவை தெரியாமல் ஏதோவெல்லாம் நினைத்து நடந்து கொண்டு விட்டேனே. என் வக்கிரமான அந்த அந்தரங்கநினைவுகளுக்காக வெட்கப்பட்டேன். மனம் வேதனையால் துடித்துச் சுழன்றேன். -
சித்திரா ரிச்சர் எனக்கொரு தங்கை, வீரமரணமான மேஜர் ஜஸ்ரின் எனக்கொரு அண்ணன். தாயகக் கனவுகளோடு சொந்தம், பந்தம், சுற்றம், சூழல், ஆசாபாசங்கள் எல்லாம் மறந்து தமிழினத்திற்காகக் களமாடியவன் அவன். தமிழ் உறவுகளால் நினைக்கப்படும் புனிதமான ஒரு மாவீரன் அவன்.
என்னைப் போன்ற சுயநல புத்தியுள்ள ஆண்களுக்கு இவை எல்லாம் ஒரு பாடமாக அமையட்டும். இவை பற்றியெல்லாம் இனி மற்றவர்களுக்கும் எப்பிடி எடுத்துரைப்பேன். கடவுளே என்னை மன்னித்து விடுங்கள் என்று மனதால் இறைஞ்சி நின்றேன். நெஞ்சு விம்பி அழுகை வந்தது. அதை ஒருவாறு அடக்கிக் கொண்டேன்.
இந்தாங்கோ அங்கிள்' என்று சுட்டிப் பெண் தண்ணீர்ச் செம்பினை என்னை நோக்கி நீட்டிக் கொண்டிருந்தாள்.
என் கண்கள் பனித்து நின்றன. தண்ணிர்ச் செம்பினை வாங்கிப் பக்கத்தில் இருந்த வெற்றுப் பாத்திரத்திற்குள் தண்ணிர் ஊற்றிக் கையினை அலம்பிக் கொண்டிருந்தேன். O O
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 43
(தமிழகச்
செய்
கே.ஜி.மகா
நாளைய பொழுதில் நம்பிக்கை இழந்து, இருபத்து இரண்டு ஆண்டுகள் மரணபயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தூக்குத் தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் மீதும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கருணைப் பார்வை விழுமா? தூக்குக் கயிற்றின் முடிச்சை அவிழ்த்து, மூன்று தமிழர்களின் உயிரைப்பாதுகாக்க தமிழக அரசிடம் தான் இன்று முதல்வாய்ப்பு இருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் தராசுக்கு
///
/மூவர் தூக்கு : கலை முதல்வர் ஜெயா க
காத்திராமல், தமிழ்நாடு முதல் அமைச்சரையே உலகத் தமிழர்கள் கடைசி நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னர் எல்லாம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாள், முன்கூட்டியே தெரிந்துவிடும். பிரணாப் முகர்ஜி கடந்த வருடம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், தண்டனையை நிறைவேற்றும் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பம்பாய்தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச்சூட்டில் மரணதண்டனை பெற்ற முஹமது அஜ்மல் கஸாப், கடந்த வருடம் நவம்பர் 21-ல் திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்ட பின்னர், விரைவாகவே இவ்வருடம் பெப்ரவரி 9 ல் முன்கூட்டியே அறிவிக்காமல், பாராளு மன்றத் தாக்குதலில் மரணதண்டனை பெற்ற அப்ஸல் குரூஸ் தூக்கிலிடப்பட்டார். தூக்கு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

திகள்
தேவா
நிறைவேற்றப்பட்ட பின்னரே இச்சம்பவம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. இந்த ரகசிய நிலைப்பாடுதான், மூன்று தூக்குக் கைதிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, தமிழ் மக்களையும் கவலைக்குள் ஆழ்த்தி இருக்கிறது. இந்த வழக்குப் பற்றி ஒரு பின்னோட்டம்.
--ய.
காப்பாற்றத் தவறிய கலைஞர் இன்று பல்டி அடிக்கிறார் !
- ராஜீவ்காந்தி 1991 ல் கொலைசெய்யப் பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில்
மஞர் கைவிட்டார், டு
மொத்தம் இருபத்து ஆறுபேருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இது ஒரு உலக சாதனையாகும். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுதாக்கலானதும், விசாரணையின் பின்னர் முருகன், முருகன் மனைவி நளினி, பேரறி வாளன், சாந்தன் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டு, றொபர்ட் பயஸ், ஜெயக்குார் - புழல்சிறை, நளினி - வேலூர் சிறை, ரவிச்சந்திரன் - மதுரை மத்திய சிறை ஆகிய நால்வருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு - 18 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வழக்கின் உண்மைத் தன்மையை மக்கள் முன்பாக கொண்டு செல்லவும், மரண தண்டனை ஒழிப்பு பிரசாரத்தை சென்னை முதல் குமரி முனைவரை மேற்கொள்ளவும்,
41

Page 44
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் தமிழுணர்வாளர்கள் திட்டமிட்டபோது, பயண நாளன்றே கலைஞர் கருணாநிதி தடைவிதித்தார். ஆனாலும், தடைக்கு எதிராக மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற்று நடைப் பயணம் தொடர்ந்தது.
இ நால்வரின் மரண தண்டனையை ரத்துச் செய்யக் கோரி பன்னிரண்டு லட்சம் மக்களிடம் கையொப்பம் பெற்று, ஐம்பதினாயிரம் பேருடன் ஊர்வலம் சென்று கையொப்ப விண்ணப்பத்தை கருணாநிதியிடம் சமர்ப்பித்தபோது, மரண தண்டனையைக் குறைக்க ஆவன செய்வதாக கருணாநிதி வாக்களித்திருந்தார். ஆனாலும் வார்த்தை தவறிவிட்டார்.
மாநில அமைச்சரவையின் கூட்டத்தைக் கூட்டி, நால்வரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக கவர்ணருக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தண்டனையை நீக்கலாம், இந்த அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதைக் சுட்டிக்காட்டி, இத்தீர்ப்பின் பிரதியையும் தமிழுணர்வாளர்கள் ஒப்படைத்த போதும், அமைச்சரவையைக் கூட்டி அதிகாரத்தைப் பயன்படுத்த அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி முன்வரவில்லை!- மத்திய காங்கிரஸ் அரசின் மீதான பயபக்தி அவரைத் தடுத்துவிட்டது.
மரணதண்டனைக்கு எதிராக நாடுதழுவிய மக்கள் இயக்கம் வலுப்பெற்று வருவதைக் கண்டு, வேறு வழியில்லாமல், "தூக்கை தூக்கிலிட வேண்டும்" இத்தண்டனையை ஆயுளாகக் குறைத்தால், குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து திருந்த வாய்ப்புண்டு. தூக்குத் தண்டனை தேவையற்றது எனும் கருத்துக்கு இப்பொழுது ஆதரவு பெருகி வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் இது பொருந்தும்” என்று 1999 ல் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினாலும் செயல்படுத்தவில்லை. நான்கு தூக்கு கைதி களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்று சோனியா காந்தி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பதாக கசிந்த செய்திகளுக்குப் பின்னர் கருணாநிதி ஒரு படி இறங்கி, பெண்பாவம் பொல்லாதது என்று நினைத் தாரோ; நளினியின் தண்டனையைக் 42

குறைக்க, அமைச்சரவை கூடி முடிவெடுத்து கவர்ணருக்கு அனுப்பி வைக்க தண்டனை ஆயுளாக குறைந்தது. அவர் நினைத்திருந்தால் நால்வரின் மரண தண்டனையையும் நீக்குவதுடன், மரண தண்டனையையும் ஒழித்திருக்கலாம். கை வரவில்லை! மரண தண்டனையை தூக்கிலிட வேண்டும் என்று கைைலஞர் விடுத்த அறைகூவலை நினைவூட்டி, 2008-ல் பேரறிவாளன் அவருக்கு எழுதிய கடிதத்தில்; "ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட போது, "ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களை கிழித்து விடாதீர்கள்” என்றீர்கள். 18 ஆண்டுகளாக வசந்தத்தை தொலைத்து நிற்கும் எங்களின் தூக்கை மாற்ற ஏன் தயங்குகிறீர்கள்” என்று கண்ணீர் விட்டிருந்தார். கருணாநிதி கண்டு கொள்ளவில்லை.
முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர், அன்று கருணாநிதி முதல்வராக இருந்தபோது கலைஞருக்கு எழுதிய கடிதத்தில், மூன்று தூக்கு கைதிகளுக்கும் கருணை காட்டுமாறு வலியுறுத்தி இருந் தார். ஆனாலும் கலைஞரின் நெஞ்சு நீதி கூறவில்லை. மூவரின் தூக்கில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழுணர்வாளர்கள் அன்றைய சட்டத்துறை அமைச்சர் ராம்ஜெத் மலாணியை சந்தித்தபோது, “உங்கள் முதல்வர் கருணாநிதியிடம் தானே எல்லா அதிகாரங்களும் உண்டே....... அவரே தூக்கை ரத்துச் செய்யலாமே ....." என்று
கூற, அவரை சந்தித்தவர்கள் மெளனமான தயக்கம் காட்டவே, அது கருணாநிதியின் நிலைப்பாட்டை வெளிக்காட்டியிருக்க வேண்டும். "சரி... சரி... நானே முதலமைச்சர் கருணாநிதியுடன் பேசுகின்றேன்” என்று சொல்லி, ராம்ஜெத் மலாணி கருணாநிதி யுடன் உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உங்களுக்கு தயக்கம் எதுவும் வேண்டாம்..... நான் உங்கள் பக்கம் இருக்கின்றேன்...” என்று நம்பிக்கை கூற, மறுமுனையிலிருந்த அன்றைய முதல்வர் மு.கருணாநிதி "நீங்களே அந்த ஏற்பாட்டை செய்யுங்கள்” என்று நழுவிய மீன் ஆனார்! மாநில அரசுக்குரிய சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டம் 71 மற்றும் 161 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் அமைச்சர் கருணாநிதி மிகவும் சுலபமாக, சட்டப்படிஅன்றே இம்மூவரையும்காப்பாற்றி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 45
இருக்கலாம். அவர் மனசு கரையவில்லை. இன்று கலைஞர் என்ன சொல்கிறார்?
ஜெயலலிதாவையும் கலைஞர் குழப்புகிறாரா?
முதல்வர் ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருக்கிறார். தனது மூன்று தூக்குக் கைதிகளின் தூக்கையும் ரத்துச் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி, கவர்ணருக்கு அனுப்பி வைத்து, அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தானே.” என்று கொட்டாவி விடுகின்றார். இத்தனைக்கும் கலைஞருக்குத் தெரியும்; தான் ஒன்று சொன்னால் அல்லது செய்தால், முதல்வர் ஜெயலலிதா அதற்கு மாறாகத்தான் செயல்படுவார் என்று! ஆனாலும் மூக்கை நுழைத்துவிட்டார் மூவர் தூக்கு விஷ யத்தில்! மூவரின் தூக்குத் தண்டனை விஷ யத்தில், முதல்வர் நிச்சயம் நல்லமுடிவு எடுத்து, காப்பாற்றுவார் என்பது உலகத் தமிழர்களின் நம்பிக்கை. ஆனாலும் இதனை காலம் தாழ்த்தாமல் அவசர கெதியில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்கிறார்கள். கலைஞர் சற்று பொறுமைகாப்பதைத்தான் தமிழ்மக்கள் விரும்புகின்றார்கள். அவரது அவசர அறிக்கைகள் தடைக்கற்களாகி விடக்கூடாது.
“எங்கள் உயிர் உங்கள் கையில்” ஜெயாவுக்கு பேரறிவாளன் கோரிக்கை.
தூக்குக் கைதி பேரறிவாளன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமது வழக்கறிஞர் மூலமாக விடுத்துள்ள கோரிக்கையில்"22ஆண்டுகளாக, என்ன நடக்கப் போகிறது எனும் சிந்தனையில் தவித்து வருகின்றோம். எங்களுக்கு மரண தண்டனை அளித்த நீதியரசர்களின் ஒருவரான கே.டி.தோமஸ், எங்கள் வழக்கில் தண்டனை வழங்கிய பிரிவுகளில் சில குறைபாடுகள் இருப்பதால், மரண தண்டனை விதிப்பது ஏற்புடையதல்லனன்றுகருத்துவெளியிட்டார். மாநில அரசுக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, விரைவாக எங்களைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று கண்ணிர் விட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் மனம் இரங்குவார், காப்பாற்றுவார். ஆனால் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை முந்தவிடக் கூடாது என்பதே தமிழ்மக்கள் எதிர்பார்ப்பு!
O O O
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

ஒரு வெளிநாட்டு நிருபரின் கேள்விக்குப் பதிலாக, “பழையதைக் கிளற நான் விரும்ப வில்லை. ரணத்தைக் கீறிப்பார்க்கவும் விரும்ப வில்லை” என்று அவர் கூறுகிறார். மேலே தெரியாதவாறு ஆழத்திலிருக்கும் புண்ணைப் பற்றி அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. அது ஆறுமா அல்லது சீழ்ப் பிடிக்குமா என்பது கால ஓட்டத்தில் தெரிய வரத்தான் போகிறது.
வீதிகள் தோறும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் ஆட்டங்களும் பாட்டங்களும். என் கன விலோ உயிரற்ற எண்பதாயிரம் உடல்கள் குடாக் கடலிலும் நெல்வயல்களிலும் விடப்பட்டவர்கள் சிறைக்கூடங்களில் கிடப்பவர்கள் வெள்ளை வான்களில் ஏற்றப்பட்டவர்கள் கடலுக்கடியில் புதைந்தவர்கள். உடைந்து உருக்குலைந்து போனவர்கள், காணாமல் போனவர்கள், டயர்களில் எரிந்தவர்கள், உலங்கு வானூர்த்தி யிலிருந்து கடலில் வீசப்பட்டவர்கள், ஷெல் அடிபட்டுச் சிதறியவர்கள், நிலக்கண்ணி வெடியில் உடற் பாகங்கள் சிதறியவர்கள், உடலில் குண்டுகளைப் பொருத்துமாறு கேட்கப்பட்டவர்கள், மேடைப் பேச்சின் போது உயிர் நீத்தவர்கள், மின்கம்பங்களில் கட்டப்பட்டவர்கள், இரவு வேளையில்துக்கக் கலக்கத்தில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என விரியும் எண்ணிக்கையில் எனக்குத் தெரிந்த ஒரேயொரு பெயர் எனது சகோ தரியின் பெயரான லங்கா ராஜசிங்க என்பது மட்டுமே. அவளும் அவளைக் கொன்ற பெயரில்லாதவளும் கூட என் கனவில் வருகிறார்கள்.
இவ்வாறாக இறந்தவர்களுக்காக கண்ணிர் சிந்தும் கதாநாயகி இறுதியில்தான் மகளுடன் நாடு திரும்பும் நாளுக்காக ஏங்குகிறாள். மகள் அங்கே என்னென்ன செய்வாள் என்ற கற்பனையிலும் மூழ்குகிறாள்.
இந்த நாவல் போருக்கான அகப் புறக் காரணிகள் பற்றிப் பேசாதது ஒரு குறைபாடாகத் தோன்றினாலும் ஒர் இளம் சிங்களப் பெண் படைப்பாளி தனது கன்னிப் படைப்பிலேயே போர் பற்றிப் பேசத் துணிந்ததும் அவரது மனிதாபிமானம் மிகுந்த கண்ணோட்டமும் போற்றத் தகுந்த அம்சங்கள் எனலாம். இந்நூலை இலங்கை யில் துணிச்சலுடன் வெளியிட்ட பெரேரா ஹ"செயின் வெளியீட்டகமும் பாராட்டுக் குரியதே. r
O O O
43

Page 46
“ஊருக்கு போயிருந்தே. அதான் 3 மாதமாக டொக்டரட்டை வரல்லை”
மேலுக்கு அணிந்திருந்த சட்டை கொழு கொழுவெனத் தளர்ந்திருந்தது. நைந்தும் நரைத்தும் நீயா நானா' என அவளது வயதோடு போட்டிக்குநின்றன. தக்காளிபோல மொழுமொழுவென இருக்கும் முகம் சற்றுக் காய்ந்திருந்ததாக மனதிற் குப் பட்டது. பழுப்பில் சாம்பல் பூசியது போல நிறமும் சற்று மங்கி இருந்திருந்து.
வழமையாக நல்ல
6) ITL L d'ITL LL DIT 60T பெண்மணி, வயது 67 யைத் தாண்டிவிட்டது. 5 அடி உயரத்திற்கு 70 கிலோ எடையில் இருந்தாள். இப்பொ ழுது 5 கிலோவாவது குறைந்திருக்கும். இன் னும் மூன்று மாதம் அங்கேயே இருந்திருந் தால் மேலும் எவ்வளவு குறைந்து ஆரோக்கிய மான எடையை நோக்கி நகர்ந்திருக்கும் என மருத்துவக் கிறுக்கு மனம் கணக்குப் போடத் தொடங்கியது.
அந்தப் பெண் சற்று வசதி குறைந்தவள். ஆயினும் கடந்த ஆறு வருடங்களாக தனியார் மருத்துவரான என்னிடம் மருந்து
44
 
 

எடுத்து வருகிறாள். பெரும்பாலும் முழங்கால் வருத்தத் தரிற் குத் தானி , அவளது பாரத்தை 5-6 தசாப்தங்களாக சுமந்து திரிந்ததில் முழங்காலுக்கு முடியாமல் போய்விட்டது. தேய்ந்துவிட்டது.
முழங்கால் தேய்ந்ததற்கு முக்கிய காரணம் அவளது அதீத எடைதான் என்ற போதும், வயது அதிகரிப்பும்,
முன்னைய காலங்களில் மலை ஏற்றங்களில் ஏறி இறங்கியதால் ஏற்பட்ட
அளவிற்கு மீறிய உழைப்பும் காரணங்கள் என்பதை மறுக்க முடியாது. மலையைத் தன் உழைப்பால் வளப்படுத்தினாள். உழைப்பின் பலனாக முழங்கால் வலுவிழந்து பரிசாகியது. அதோடு புகையோடும் அடுப்போடும் தினமும் மாய்வதால் அடிக்கடி சளி வருத்தம்
வரும்.
"களுபோவல ஆஸ்பத் திரிக்கு கடுதாசி குடுத்து அனுபரினிங் கள் தானே டொக்டர். இரண்டு நாள் வைத்திருந்து ஊசிபோட்டு, இரத்தம் சோதிச்சு படம் பிடிச்சுப் பாத்து நல்லாக் கவனிச்சாங்க, மருந்து தந்து வீட்டை போஎன்னாங்கள். அதோடை ஊருக்கு போயிட்டேன்”
நன்றாக ஞாபகம் இருக்கிறது. மூன்று மாதங் களுக்கு முன் அவளது கெண்டைக் கால் சவ்வில் அழற்சி ஏற்பட்டிருந்தது. கால்களில் சில புண்களும் தோன்றி சீழ் பிடித்து வீங்கியிருந்தது. வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் நோயோடு இருக்க முடியாது. தனியார் மருத்துவனைக்கு செல்ல அவளால் முடியாது என்பதால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தேன்.
“என்னாங்க செய்யிறது. மகே வீட்டிலை போயிருந்தே. அங்கிட்டு இருக்கேலாம திரும் பியந்திட்டே."
äääää
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 47
பரதேசி படத்தை முதல்நாள்தான் பாத்திருந்தேன். தமிழ்நாட்டின் மேற்குக் கரையோரமான தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாகச் சென்ற மக்கள் மிருகங்களிலும் கேவலமான அடிமைகளாக சிதைந்து போனதை மிக அற்புதமாகச்சித்தரித்திருந்தார்
L JITG6)T.
தேனொழுகப் பேசி ஒப்பந்தக் கூலி 56TIT55 அழைத்துச் சென்றவர்களது சுதந்திரம் முற்றாக மறுக்கப்படுகிறது. கம்பியும் அடைப்பும் இல்லாத வேலிக்குள் கங்காணிகளும், குண்டர்களும் அவர்களை அடக்கி வைக்கிறார்கள். எதிர்த்துப் பேச வாய் திறக்க முயன்றால் தடிகளும் சவுக்குகளும் சாகசம் காட்டி காயங்களுடன் அடங்கிக் கிடக்கச் செய்கின்றன.
தப்பி ஓட முயன்றால் கெண்டைக் கால் சவ்வை கொடுரமாக அறுத்தெறிந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
கங்காணிகளும், துரையும் கண் வைத்த பெண்கள் வாய் மூடி, யோனி விரித்துக் கிடக்க வேண்டியதுதான். தப்ப முடியாது.
"ஐயா நம்ப பிள்ளைங்க நல்லா வேலை செய்யுறாங்க. மாசம் பன்ரெண்டாயிரத்திற்கு மேலை விழும். டோபிக்கு பார்பருக்கு, சலவைக்கு, புரவிடண்டு எண்டு எல்லாத்தை யும் புடுங்கிட்டு ஐயாயிரம் ஆறாயிரம்தான் கையிலை குடுக்கிறாங்கள் பாவிங்க” இது இவள்.
ஆம் சுமார் எண்பது வருடங்களுக்கு முன்னர். கடதாசி எழுத இரண்டணா, வாசிக்க இரண்டனா, சிரைக்க காசு. மந்திரித்து நூல் கட்டிய பணம், இவர்களிடமே பழகி இவர்களிடமே கற்று இவங்களுக்கே மருத்து வம் செய்யும் கம்பவுண்டருகளுக்கு, கணக்குப் பார்ப்பவருக்கு காசு என்று எரிகிற காட்டில் புடுங்கியது லாபம் எனப் புடுங்கினார்கள்.
வருடம் ஒருமுறைதான் கணக்குப் பார்த்து சம்பளம். ஒரு சில காசு சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு எதுவுமே கிடையாது. இவனோடு வந்து செத்துப்போனவுனுக்காக இன்னும் 5-10 வருடங்கள் உழைக்க வேண்டும் என ஏய்த்துவிடுவார்கள்.
இன்று என்ன தேறிவிட்டது? புதிய வழிகளில் நாகரீகமாகச் சுரண்டு கிறார்கள். அவ்வளவுதான்.
அரசுகளும் தோட்டத் தொழிலாளர் சங்கங்களும், இந்தப் பாவப்பட்ட மக்களுக்கு அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

எனத் தம்பட்டம் அடித்தபடி அவர்களைக் கொள்ளை அடித்து வயிறு வளர்க்கின்றன. போதாக் குறைக்கு சாராயக் கடைகள், கள்ளச் சாராயக் கடைகளைப் பரப்பி மிச்ச மீதியைச் சுரண்டுகிறார்கள். போதையிலும் மாயையிலும் மயங்கிக் கிடக்கையில் மேய்ப்பர்களது இரட்டை வேடங்கள் மங்கிப் போகின்றன.
பரதேசி படம் முழுவதும் மங்கிய வண்ணத்தில், கருகிய அவர்களது வாழ்வு போலவே. மனதைச் சூம்பவைத்து திகைத்து அதிரவைக்கும் சம்பவங்கள், அருமையான புகைப்படக் கோணங்கள் மனம் உறைந்து கிடந்தது படம் பார்க்கையில்,
ஆனால் சற்று நெருடலான காட்சிகளும் இல்லாமல் இல்லை. ஆங்கில மருத்துவராக வருபவரது செயற்பாடுகள் நகைச்சுவைக் காட்சிகளாக இருந்தன. பாத்திரத்திற்கு ஒவ்வாததாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த மக்களோடு சேர்ந்து டப்பாக் கூத்து ஆடுகிறார். காலாபூர்வமான படத்தோடு இக்காட்சி ஒட்டவே இல்லை.
மக்கள் மனங்களை மாற்றி அவர்களை மதம்மாறச் செய்தமையை நாசூக்காக உள்ளதை ரணமாக்கும் காட்சிகளாக அமைக்க முடியாதவர் அல்ல பாலா. சில பிரிவினரிடமிருந்து எதிர்ப்புகள் ஏற்படு வதைத் தடுக்கவா? அல்லது வழமையான மசாலா டைரக்டர்கள் போல நகைச்சுவைக் காட்சி ஒன்றையும் புகுத்த வேண்டும் என எண்ணியதால் இவ்வாறு செய்தாரா?
ஆனால் எதற்காக அந்த மக்கள் தமது மகிழ்ச்சியும் செழுமையும் மிக்க கிராம வாழ்வை விட்டு தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றார்கள். வறுமைதான் அடிப்படைக் காரணம். ஒரு விருந்துச் சோறு தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இறந்த உடலையே ஒளித்து வைத்துவிட்டு உண்டு மகிழ்கிறார்கள். சாதியமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. நாயகன் சாதியில் குறைந்தவன் என்பதால் செய்த வேலைக்கு ஊதியம் கொடுக்காது கலைத்தும் விடுகிறார் ஒரு கிராமத்தவர்.
இருந்தபோதும் வாழும் சூழல் இனிமை யானது. வஞ்சமில்லா மக்கள், வறுமை இருந்த போதும் ஒரளவு தொழில் கிடைத்தது. கொண்டாட்டங்களும் இருந்தன. கள்ளின் போதையுடனும் பல்வேறு பட்சணங்களுட
45

Page 48
னும் அவர்களது சடங்குகள் மட்டுமாவது செழிப்பாக இருந்தன.
திடீரெனக் கங்காணி வந்தான். அவனது சிரிப்புப் பேச்சில் கிறங்கி சொந்தச் சொர்க் கத்தை விட்டு அந்நியமான நரகத்திற்குச் சென்றார்கள்.
"மகே என்னை அங்கேயே இருக்கச் சொன்னான். எப்படி இருக்கிறதுங்க. குழந்தை குட்டிங்க தின்னக் குடிக்க இல்லாம பசியோட கிடக்குதுங்க. சின்னனுகள் துண்டுத் துணி கூட இல்லாம அம்மணமாத் திரியிதுங்க. அவங்களுக்கே தின்ன உடுக்க பணம் இல்லேங்க. நானும் அங்கேயே பாரமா இருக்கிறதா. அதா வந்துட்டேங்க” என்றாள் இவள்.
கொழும்பில் இருக்கும்போது முதலில் வீட்டு வேலைகள் பார்த்தாள், அவளால் முடியாமல் போனது. சமையல் செய்தாள். வயசும் நோய்களாலும் அதுவும் இயலவில்லை. கடைசியாக வேறு வீட்டில் ஒரு வயசான அம்மாவிற்கு துணையாக இருந்தாள். நோய் வந்தது. இங்கு நல்ல உணவு கிடைத்தது. உடுதுணி கிடைத்தது. தனக்கு கிடைத்த சொற்ப சம்பளத்தில் தனியார் மருத்துவமும் செய்ய கூடியதாக இருந்தது. ஆனால் உடல் இடங்கொடுக்காததால், இனியும் இந்த வயசில் வேலை செய்ய முடியாதது என்ற முடிவில் சொந்த ஊருக்குப் போனாள்.
அங்கு பசியாறவே வழியில்லை. தொய்ந்து நைய்ந்ததில் நரகமே சொர்க்கமானது போல தள்ளாத வயதில் வேலைக்கு திரும்பவும்
வரவேண்டியதாயிற்று.
இங்கு இவள் பாடு பரவாயில்லை. வயிறாவது நல்லா நிறைகிறது. தான் பராமரிக்க வேண்டிய முதலாளிக் கிழவியின் தொணதொணப்பைச் சகிக்க முடிந்தால் போதும்.
இங்குள்ள பெரும்பாலான கடைகளில் மலையக இளைஞர்கள் வேலை செய்கிறார்கள். தினமும் வேலை. அங்கேயே தங்கல், அங்கேயே உணவு. வெளிக் காற்றுப்படாமல் உள்ளேயே அடங்கிக் கிடக்கிறார்கள்.
மலையகக் குமர்ப் பெண்கள் கொழும்பு வீடுகளில் வீட்டோடு இருந்து எடுபிடி வேலை செய்கிறார்கள் பலர், வருடக் கணக்காக. லயத்தில் கிடைக்காத உணவும், வசதியான இருப்பிடமும் இவற்றிலிருந்து 46

விடுபட முடியாது கட்டிப் போட்டிருக்கிறது. அதிகாலை முதல் நடுச் சாமம்வரை சாறாகப் பிழியப்படுகிறார்கள்.
பதின்மங்களின் செழுமை பளிச்சிடும் பலரை வீட்டுக்கார அம்மாக்களும் நோனாக் களும் கூட்டி வருவார்கள்.
ரிப்போட்டைப் பற்றிச் சொன்னதும் அவள் கண்கள் ஒரு கணம் நிமிர்ந்து பார்த்துவிட்டுத்தாழ்ந்தன. விம்மலை அடக்கப் பிரயத்தனப்பட்டாள் முடியவில்லை. தனி யாகத்தான் வந்திருந்தாள்.
ஹிந்தி நடிகைகளைதலைகுனிய வைக்கும் அழகுள்ளவள். இங்கு ஒரு சிறு நிறுவனத்தில் வேலை. ஒரு ரூமில் தங்கியிருக்கிறாள்.
முதலாளியும் ஒரு இளம் பையன்தான்.
சிறுநீர்ரிப்போட்HCG+ எனக் காட்டியது. அதாவது கர்ப்பம் தங்கியிருக்கிறது.
"நான் ஒருத்திதான் வேலை. வீட்டிலை அம்மா தங்கச்சி தம்பி எல்லாரையும் பார்க்கிறது நான்தான்..." சொல்ல அவளுக்கு நிறைய விடயங்கள் இருந்தன. குடும்ப வறுமை நிலை காரணமாகத்தான் இங்கு வேலை.
எதிர்பாராதது நடந்துவிட்டது.
வயிற்றுப் பசியுடன் நான்கு உயிர்கள் காத்து நிற்கையில் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் வலுவை இழந்திருந்தாள்.
சட்டத்தை மதிக்கும் மருத்துவர்களால் அவளுக்கு உதவ இலங்கையில் வழியில்லை.
அவளது எதிர்காலமும் வாழ்வும் கேள்விக் குறியில் நிற்கின்றன.
பரதேசியில் கதாநாயகிக்கு உடல் முழு வதும் எவ்வளவு கரி பூசி அலங்கோலப் படுத்தியும் பொன்வண்ண அழகு எட்டிப் பார்த்தது. மறைக்கவே முடியவில்லை. சருமம் வரண்டு கருகி, முகம் ஒடுங்கிக் செழிப்பிழந்து கிடக்கும் சக கிராமத்து மக்களிடமிருந்து
அவள் தனித்தே நின்றாள்.
இவளும் தனித்துவிட்டாள். இவளது உடலில் எவரும் கரி பூசவில்லை.
ஆனால் மறையாத கரி அவள் உள்ளம் முழுவதும் அப்பிக்கிடக்கிறது.
நூற்றாண்டு கழிந்துவிட்டது. ஒடுக்கு முறைகள் ஒழியவில்லை.
அவற்றின் முகங்கள்தான் நிறம் மாறிக்கிடக்கின்றன.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 49
எழுதத் இது
ண்ெணos
பேராசிரியர் துரை. மனே
பழைய புராணக் கதை - புதிய பதிப்பு
முன்னொருகாலத்தில் அசுரர்தலைவனாகிய சூரபத்மன், அண்ட சராசரங்களை எல்லாம் வெற்றி கொண்டு அரசாள வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் மனத்தினால் தவம் செய்து வந்தான். தேவர்கள் விட்ட மாபெரும் தவறினால் சூரபத்மனின் நீண்ட நாள் கனவு நனவாகியது. அவனின் ஆசை நிறைவேறியதோடு, - ஆணவமும் தலைக்கேறியது. அவன் எள் என்றால், எண்ணெயாகி நிற்கக் கூடிய இரு தம்பிமார்கள் அவனுக்கு வாய்த்திருந்தனர். ஒருவன் பெயர் சிங்கமுகாசூரன். மற்றவன் பெயர் தாருகாசூரன். இருவரும் அண்ணனின் ஏவலை அப்படியே நிறைவேற்றக் கூடியவர்கள். சூரபத்மனுக்கு பானுகோபன் என்ற மகனும் இருந்தான். தனது தம்பிமார்களின் உதவியோடு அண்ட சராசரங்களையும் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டுவந்து, தனக்குப் பின் தனது புத்திரன் பானுகோபனுக்கு முடி சூட்டுவதே அவனது நோக்கமாக இருந்தது. அதற்கேற்ற முறையிலேயே சூரபத்மனின் செயல்கள் அனைத்தும் அமைந்தன.
சூரபத்மனுக்கு அனுசரணையாக அசுரர் களின் குருமாராகிய சுக்கிராச்சாரியர்கள் செயற்பட்டு வந்தனர். தேவர்களுக்கு எதிரான போதனைகளை முன்வைப்பதும், அவர்களுக்கு எதிராகச் செயற்படுவதுமே அவர்களது முக்கிய தர்மங்களாக - அமைந்தன. தேவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைத்துவிடக் கூடா தென்பதில் சுக்கிராச்சாரியர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
தேவர்களில் பலர் சூரபத்மனதும் அவனது தம்பிமார்களதும் கொடுமைகளைத் தாங்க முடியாமல் தவித்தபோதும், அவர்களில் ஒருசாரார் தங்களது சுய நன்மைகளுக்காக அசுரர் தலைவர்களுடன் இணைந்திருந்தனர். அற்ப பதவிச் சுகங்களில் திளைத்திருந்தனர். தேவர்களின் குருமார்கள் சிலரும் சுயலாபம் கருதி, சூரபத்மனின் ஆலோசகர்களாக விளங்கி, அவனை ஆராதித்து வந்தனர். தேவர்களின் நலன்களுக்காகவே அசுரர் ஆட்சி நடைபெறுகிறது என்பதை இவர்கள் அனைவரும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
- பிரசாரம் செய்து வந்தனர். தேவர்களில் சிலர் தமது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013

வண்டும் கேள்
ராகரன்
வயிற்றுப் பிழைப்புக்காக நாள் தோறும் காலையிலும் இரவிலும், நாசூக்காகவும், வெளிப்படையாகவும் அண்ட சராசரங்கள் முழுவதும் கேட்கக் கூடியதாக சூரபத்மனின் புகழைப் பரப்பிக் கொண்டிருந்தனர். தேவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் தவறானவை, சூரபத்மன் மாத்திரமே தேவர்களின் நலனில் அக்கறை கொண்டவன் என்பதே, சூரபத்மனை அண்டிப் பிழைக்கும் சில தேவர்களின் பிரசாரக் குரலாக இருந்தது.
சூரபத்மனின் தம்பிமார்களில் ஒரு வனான சிங்கமுகாசூரன் தேவர்களின் நிலங்களை யெல்லாம் படிப்படியாக அசுரர் படைக்குச் சொந்தமாக்கும் முயற்சி களில் ஈடுபட்டு வந்தான். தேவர்களில் பெரும்பாலானவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தேவர்களுக்குச் சொந்த மான நிலங்களில் அசுரர்களைக் குடியேற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தான். தாரு காசூரன் சூரபத்மனுக்குச் சார்பான முறையில்
அசுரர் அரசியலை நெறிப்படுத்தி வந்தான்.
சூரபத்மனின் அரசவையில் அமைச்சர்கள், பிரதானிகள் வீற்றிருப்பர். அவனது அமைச் சர்களும், பிரதானிகளும் சூரபத்மனின் சிந்தனைகளை வானளாவப் புகழ்ந்துரைத்து, அவனின் கடைக்கண் பார்வை தங்கள் மீது படுமாறு பார்த்துக் கொள்வர். அவனை அண்டிப் பிழைக்கும் தேவர்களும் அரசவையில் அவனது புகழையே பேசி, தமது நன்றி விசுவாசத்தைக் காட்டிக் கொள்வர். தேவர்களின் தலைவனான இந்திரனும், அவனது சகாக்களும் சூரபத்மனின் ஆட்சியில் தேவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், அதனால் அவர்கள் படும் துன்பங்களையும் விலாவாரியாக அரசவையில் எடுத்துக் கூறுவர். பலவேளை களில் இந்திரனின் சகாக்களுக்கும், சூரபத்மனை ஆதரிக்கும் தேவர்களுக்கும் இடையே சூடான வாய்த்தர்க்கங்களும் அரசவையில் இடம்பெறுவதுண்டு. தேவர்கள் சூரபத்மனுடன் இணக்கப்பட்டு அரசியலை மேற்கொள்ளாமையே தேவர் களின் துன்பங்களுக்குக் காரணம் என, அவனை ஆதரிக்கும் தேவர்கள் அரசவையில் தெரிவிப்பர். சூரபத்மன் யாரையும் அரசவைக் கோமாளியாக நியமிக்காத போதிலும்,
47

Page 50
அச்சபையில் உள்ள ஒருவன் தானே முன் வந்து அரசவைக் கோமாளியாக நடந்து கொள்வான். சூரபத்மனைப் பற்றி யாரும் குறைசொல்லாதபடி பார்த்துக் கொள்வதே அவனின்முக்கிய பணி. தான்சார்ந்தவர்களைப் பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை.
இவ்வாறு சூரபத்மன் அண்ட சராசரங் களையும் அடக்கியொடுக்கி ஆட்சி புரிந்து வரும் காலத்திலே, யாராவது அவனது ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தால், வகைதொகையின்றி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிங்கமுகாசூரனின் அசுரர் படைகளால் வெள்ளைக் குதிரைகளில் கடத்தப்பட்டனர். யாராவது இவை பற்றிக் கேள்வி எழுப்பினால் “கண்டதார் கேட்ட தார்" என்று அசுரர் படைகளால் பதில் வழங்கப்பட்டது.
சூரபத்மன் தனது பெருமையை நிலை நாட்டுவதற்காக நூற்றுக்கணக்கான தனது மந்திரிபிரதானிகளோடுசர்வலோகங்களுக்கும் அடிக்கடி திக்விஜயங்களை மேற்கொள்வான். சமதர்மத்தை நிலைநாட்டுவதாகக் காட்டிக் கொள்ளும் சில உலகங்கள் தேவர்களை அடிமைப்படுத்திச் சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சூரபத்மனுக்கே ஆதரவாக நடந்து கொண்டன.
அண்டசராசரங்களிலும் தமக்கென்று ஒரு பெயரை நிலைநாட்டியிருந்த நாரதரிடம் இந்திரனாதி தேவர்கள் தங்களது குறைகளைக் கூறி முறையிடுவர். நாரதர் அவர்கள் கூறுவன வற்றையெல்லாம் கூர்மையாக அவதானிப்பது போல் பாவனை செய்துவிட்டு, சூரபத்மனு டன் நட்புறவு கொண்டாடுவார். அசுரர் படைகளை வலுப்படுத்துவதற்கு வேண்டிய உதவிகளையெல்லாம் தாராளமாக நாரதர் செய்து கொடுப்பார். அவர் அதிகமாக உறையும் வைகுண்டத்தில் உள்ள தேவர் கள் அவரது செயலைப் பார்த்துக் கொதித்தெழும்போது, சூரபத்மனை எதிர்ப் பதாகக் காட்டிக்கொள்வார். ஆனால், நாரதருக்கு எப்போதும் சூரபத்மன்மீதே ஒரு கடைக்கண் பார்வை இருந்தது. எனினும், சூரபத்மன்நாரதரைமதிப்பதே இல்லை. அவர் மாபெரும் முனிவராக இருந்தபோதிலும், சூரபத்மன் தனது தேவைகளுக்காக மாத்திரம் அவரைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி யெறிந்து விடுவான். நாரதருக்குப் பட்டும் பட்டும் பழக்கதோஷம் போகவில்லை.
தேவர்களுக்கு எதிராகச் சூரபத்மனும், அவனது தம்பிமார்களும் நடந்துகொள்ளும் முறை, பொதுவாகச் சூரபத்மனின் மனைவி பதுமகோமளைக்குப் பிடிப்பதில்லை. சூர பத்மனின் தம்பிமார்களால்தான் தனது கணவனுக்குத் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதாக அவள் கவலைப்படுவது 48

உண்டு. தேவர்களோடு சமாதானமாகப் போகுமாறு தன் கணவனைப் பதுமகோமளை கேட்டுக்கொள்வதுண்டு. ஆனால், “கெடுகுடி சொற்கேளாது" என்பதைப் போலவும், “தம்பி யுள்ளவன் சண்டைக் கஞ்சான்” என்பதைப் போன்றும் சூரபத்மன் நடந்து கொள்வான்.
சூரபத்மனது அநியாயங்களைத் தாங்க முடியாத இந்திரனாதி தேவர்கள், சர்வலோகங் களையும் பரிபாலித்துக் கொண்டு கைலாய மலையில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பரமசிவனிடம் முறையிட்டார்கள். நீண்ட காலமாகத் தியானத்தில் அமர்ந்திருந்த இறைவன், தேவர்களின் குறைகளைக் கேட்டு, மெதுவாகக் கண்களைத் திறந் தார். இதுதான் சமயம் என்று பார்த் திருந்த பார்வதிதேவி கோபத்தோடு பொரிந்து தள்ளினாள். "நீங்கள் இப்படிக் கண்களை மூடிக்கொண்டிருப்பதால்தான் சர்வலோகங்களிலும்பலபிரச்சினைகள் இடம் பெறுகின்றன. உங்களையே நம்பியிருக்கும் தேவர்களை இப்படியா கைவிட்டுவிட்டுத் தியானத்தில் அமர்ந்திருப்பது? தேவர்கள் நாரதரை நம்புகிறார்கள். ஆனால், நாரதர் நம்பிக்கைக்குரியவரல்லர். தேவர்களுக்கு நன்மை செய்வதுபோல் காட்டிக் கொண்டு சூரபத்மனுக்கே உதவிகள் செய்கிறார். நாரதருக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சூரபத்மனையே ஆதரிக்கிறார்கள். நாரதருக்குப் பக்கத்தில் இருக்கும் பெரியமல்லன்ஒருவன்தொடர்பாக அவருக்குப் பெரும் பயம் உண்டு. எப்போதும் நாரதரோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் பெரிய மல்லன் சூரபத்மனோடு நெருங்கி உறவாடுவதால் தாமும் சூரபத்மனோடு நட்பாக இருப்பதே நல்லது என்று அவர் கருதுகிறார். இதனால், எம்மை நம்பியிருக்கும் தேவர்களுக்குத்தான் தொடர்ந்து துன்பங்கள் ஏற்படுகின்றன. சுவாமி, நீங்கள்தான் தேவர் களைக் காப்பாற்ற வேண்டும்” என்று பார்வதி கேட்டுக்கொண்டாள்.
பரமசிவன் பார்வதியைப் பரிவுடன் நோக்கிவிட்டு இவ்வாறு கூறினார். "தேவி, கவலைப்படாதே. தேவர்கள் விட்ட
மாபெரும் தவறினால்தான் சூரபத்மன் அண்டசராசரங்களையும் தன் ஆளுகையின் கீழ்க் கொண்டுவர முடிந்தது. தேவர்களிலும் சில தவறுகள் இருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் தேவர்களில் ஒருபகுதியினர், தேவமொழியைப் பேசுகின்ற இன்னொரு
இனத்தவரை, அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து இரவோடு இரவாக வெளியேற்றினார்கள். அதுமட்டுமன்றி,
தேவர்கள் தங்களது இனத்துக்குள்ளேயே
சமூக ஏற்றத்தாழ்வு பார்த்து நடக்கிறார்கள்.
அவர்கள் செய்த பாவங்கள்தான் இப்போது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 51
அவர்களை அலைக்கழிக்கின்றன. தேவர்கள் இப்போது தங்களது குறைகளையெல்லாம் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். தேவர்களின் குறைகளை இப்போது அண்டசராசரங்களும் அறியத் தொடங்கி விட்டன. சூரபத்மன் தனது மாயாஜால வித்தைகளினால் சில உலகங்களைத் தன்வசப்படுத்தி வைத்துள்ளான். ஆயினும், அண்டசராசரங்கள் இப்போது விழிப் படைந்து விட்டன. தேவி, நீசொன்னதுபோல் நாரதனை நம்பமுடியாது. அவன் எப் போதும் அப்படித்தான். சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நடந்து கொள்வான், ஆனால், வைகுண்டத்தில் வாழும் தேவர்கள், அவன் நினைத்தபடி ஆட அவனை விடமாட்டார்கள். பிரமா, விஷ்ணு முதலிய பலம் வாய்ந்த தெய்வங்கள் எல்லோரும் தேவர்களுக்கு அருள் செய்யுமாறு என்னிடம் வேண்டுகிறார்கள். தேவர்கள் தொடர்பான விடயங்களைக் கைலைமலையில் தலைமைப் பொறுப்பில் இருந்து கவனிக்குமாறு ஒருவனை நியமித்தேன். ஆனால், அவன் எப்போதும் பொறுப்பில்லாமல் அரைக்கண் தூக்கத்தில் சந்திரனைப் பார்த்தபடி இருக்கிறான். தேவி, உனது அருளால் நீ தோற்றுவித்த ஒரு பெண்பிள்ளை மீதுதான் சூரபத்மனும், அவனது சகாக்களும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். தங்களது நல்லாட்சியைக் கண்டுகளித்து, அதனை அண்டசராசரங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்று விரும்பி மகேந்திரபுரிக்கு வருமாறு அவளைப் பலமுறை அவர்கள் அழைத்தபோதும், அவள் மறுத்துவிட்டாள். அவள்தான் தேவர்களுக்கு எதிரான அநியாயங்களை எல்லாம் என்னிடமும், கைலாயமலைக் கூட்டங்களுக்கு வந்து போகிற பல்வேறு உலக உறுப்பினர்களிடமும் தெரிவிக்கிறாள், தங்களது அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறாள் என்பதே அவர்களது கோபத்துக்குக் காரணம். "தேவி, வருந்தாதே. "தன்வினை தன்னைச் சுடும்", "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்", "வினை விதைத்தவன்வினையறுப்பான்"என்றெல்லாம் தேவர்கள் மத்தியில் பழமொழிகள் உண்டு. பிறருக்கு எவ்வகையிலும் தீமை செய்பவர்கள் நன்றாக வாழ்ந்ததாக வரலாறே இல்லை. அவர்கள் அதனை அனுபவித்தே தீர்வார்கள். அண்டசராசரங்களிலும் இப்படி எத்தனை பேரை நான் பார்த்திருக்கிறேன்! தேவர்களின் துன்பங்கள் படிப்படியாய்க் குறையும்” பரமசிவன் சொல்லி முடித்தார்.
பரமசிவன் கண்களில் அருள் கனிந்த பார்வை. அவரின் உதடுகளில் வழக்கமான மெல்லிய புன்முறுவல். அவரது நெற்றிக்கண் மெகவாகச் க்கக. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

பூவுலகில் இருந்து கச்சியப்பர், "ஒருதிரு முருகன் வந்தான் உலகெலாம் உய்ய" என்று பாடிக் கொண்டிருப்பது கைலாயமலை வரை கேட்டது.
அவர் வருவாரா?
இப்போது இலங்கை வாழ் தமிழ் மக்களின் உதடுகளில் அதிகமாக உச்சரிக்கப்படும் முக்கிய ஒரு பெயர், முன்னாள் நீதியரசர் உயர்திரு. சி.வி. விக்கினேஸ்வரன்அவர்களதுபெயராகும்.அவர் பற்றி முன்னரும் ஒரு தடைவை இப்பத்தியில் எழுதியிருந்தேன். நல்நோக்கோடு சிந்திக்கும் தமிழர்களின் நெஞ்சங்களில் தாமாக வந்து குடியேறியிருப்பவர், அவர். அந்த அளவுக்கு அவர் ஒரு பெருமகனார். அன்பு, அறிவு, ஆற்றல், நேர்மை, துணிவு, முயற்சி, பெருந்தன்மை போன்ற நல்லியல்புகளுக்கு ஒர் உருவம் கொடுத்தால் எப்படியிருக்கும்? அது முன்னாள் நீதியரசர் திரு.சி.வி. விக்கினேஸ்வரனைப் போல்தான் இருக்கும்.
இலங்கைத் தமிழ் அரசியல் இப்போது அவரை “வாருங்கள்!” என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. அவரோ அலட்டிக் கொள்ளாமல் நிதானமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வடமாகாண சபையின் எதிர்கால முதல்வராக அவரைக் காண்பதற்குப் பலரும் ஆவல் கொண்டுள்ளனர். எனக்கும் அவரை அவ்வாறு பார்ப்பதற்கு உள்ளூரஆசை இருக்கிறதுதான். நேர்மையும், துணிச்சலும், நாவன்மையும், ஆற்றலும், நல்லியல்புகளும் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது அபூர்வம். ஆனால், அத்தகையவர்கள்தான் அரசியலுக்குத் தேவை.
அதேவேளை, இன்னொரு பக்கப் பார்வையும் உண்டு. அண்மையில் தினக்குரல் பத்திரிகையில் பாலு தமது பத்தியெழுத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் எனது மனத்தைத் தொட்டது. முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் வாக்குக்கேட்டு மக்கள் முன் கைகூப்பி நிற்பது போன்ற தோற்றத்தை நினைக்கும்போது ஒருமாதிரியாக இருக்கிறது என்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கருத்திலும் நியாயம் இருக்கிறது.
தமது அரசியல் வருகை பற்றி விக்கி னேஸ்வரன் அவர்கள்தான் தீர்மானம் எடுக்க வேண்டும். அவ்வாறு அவர் வடமாகாண சபையின் எதிர்கால முதல்வராக வருவாராக இருந்தால், இலங்கையின் மாகாண சபைகளில் வடமாகாண சபையே பிறவற்றுக்கு முன்னோடி யாகவும் முதன்மையானதாகவும் விளங்கும் என்பது நிச்சயம் நல்லது நல்ல நேரத்தில் நல்லபடி நடக்கும் என்று எதிர்பார்ப்போமாக!
O O O
49

Page 52
கொற்றாவத்தை
ELS 25 25209225)
திலீபன் அப்போது 6ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். ஒருநாள் ஆசிரியர் நாயைப்பற்றி ஒரு கட்டுரை எழுதும்படி மாணவருக்குக் கூறினார். மற்றைய எல்லோருடைய கட்டுரை களையும்விடதிலீபனின் கட்டுரை வித்தி யாசமாக இருந்தது. I5TUI
நாய் ஒரு வீட்டு மிருகம். நாய் ஒரு நன்றியுடைய மிருகம். அது தனது நன்றியை வாலை ஆட்டுவதன் மூலம் வெளிக்காட்டும். இந்தநாயின்காதுகளில் உண்ணிகள் இருக்கும். கழுத்திலும் உண்ணிகள் இருக்கும். சிலசமயம் நாயின் உடல் முழுவதும் உண்ணிகள் இருக்கும். இந்த உண்ணிகள் எந்தநேரமும் நாயை நித்திரை கொள்ளவிடாமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உண்ணிகளைப் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கும்.
இப்படியே நாயைப்பற்றி எழுதியதை விட உண்ணிகளைப்பற்றியே கட்டுரை தொடர்ந்தது. இதைக் கவனித்த ஆசிரியர் அடுத்த நாள் "மாடு” என்று தலையங்க மிட்டு கட்டுரை எழுதச் சொன்னார். திலீபன் எழுதினான். IDITdb
மாடு ஒரு வீட்டு மிருகம். மாடு பசு என்றால் பால் தரும். எருது என்றால் வண்டில் இழுக்கும். மாட்டின் சாணம் பசளையாகப் பயன்படும். இந்த மாட்
புளுகுப்போட்டி-01
ஆண்டுதோறும் விசேஷ தினங்களில் எங்கள் ஊர் இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்படும் கலை நிகழ்வுகளில் ஒரு முறை புளுகுப்போட்டி என்றொரு நிகழ்ச்சியையும் சேர்த்திருந்தார்கள்.
50
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டின் கழுத்திலும் உண்ணிகள் இருக்கும். சிலசமயம் உடல் முழுவதும் உண்ணி கள் இருக்கும். உண்ணிகள் மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன.
உண்ணிகளைக் காகங்கள் வந்து தின்றாலும் உண்ணிகள் அழியாது. உண்ணிகள்.
இதைக் கவனித்த ஆசிரியர் திலீபனை ஆடைப்பற்றி எழுதச்சொன்னார்.
(b ஆடு ஒரு வீட்டு மிருகம். ஆட்டின் பால்சுவையானது. ஆட்டின்காதுகளில் உண்ணிகள் இருக்கும். உண்ணிகள்.
ஆசிரியருக்கு கோபம் வந்துவிட்டது. இனி மிருகங்களைப்பற்றி எழுதச் சொல்லாமல் தென்னையைப்பற்றி எழுதச் சொன்னார். திலீபன் எழுதத் தொடங்கினான். தென்னை
தென்னை பயனுள்ள ஒரு மரம். அதன் தேங்காய், ஒலை மட்டை, பாளை மக்களுக்குப் பயன்படுகின்றது. தென்னை மரத்தை வெட்டி வீடு கட்டவும் பாவிக்கின்றனர். சில சமயங்களில் ஆடு, மாடுகளை நீளக்கயிற்றினால் தென்னை மரத்தில் கட்டி மேய விடுகின்றனர். இந்த ஆடு, மாடுகளின் காதுகளில் உண்ணிகள் இருக்கும். கழுத்திலும் உண்ணிகள் இருக்கும். உண்ணிகள் எப்போதும் .
கட்டுரை தொடர்ந்தது.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
37
இந்தப் புளுகுப்போட்டியில் பங்கு பற்றிய ஒரு புளுகர் கதை சொல்லத் தொடங்கினார்.
"நான் ஒரு நாள் காட்டின் அருகாகப் போய்க் கொண்டிருக்கும் போது கரடி ஒன்று என்னை துரத்தத் தொடங்கியது. நான் ஒடி, ஒடி
i
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 53
முடியாத பட்சத்தில் ஒரு மரத்தில் ஏறி கிளையில் அமர்ந்து கொண்டேன். கரடி மரத்தின் கீழே வந்து என்னை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றது. பயத்தில் எனது கை கால்கள் நடுங்கத்தொடங்கின. தன்பாட்டில் சலம் - போகத்தொடங்கிவிட்டது. சலம் கயிறு போல கீழே போய்க் கொண்டிருக்க கரடி திடீரென என் சலத்தைப்பிடித்துக்கொண்டு மேலே
வந்து கொண்டிருந்தது.
கரடி எனக்குக் கிட்ட நெருங்கி விட்டது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் தம்மடக்கி சலத்தை அடக்கினேன். கரடி தொம் எனத் தலை கீழாக விழுந்து செத்துப் போய்விட்டது". புளுகுப்போட்டி - 02
இன்னுமொரு புளுகர் மேடைக்கு வந்தார். கதை சொல்லத் தொடங் கினார்.
"ஒரு நாள் எனது நண்பன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றி ருந்தான். ஒரு குட்டையில் தண்ணீர் குடிக்கப் போய் நின்றபோது எதிரே குட்டையின் மறுபக்கத்தில் இவன் மேல் பாய்ந்து குதறிக் கொல்வதற்குத் தயாராக ஒரு வேங்கைப்புலி நிற்பதைக் கண்டான். இவனிடமோ துப்பாக்கி மட்டுமே தோளில் இருந்தது. தோட்டாக்கள் ஒரு தோற்பையில் சற்று தூரத்தில் ஒரு மரத்தின் கீழ் இருந்தன. கொஞ்சம் அசைந்தாலும் உயிருக்கு ஆபத்து. இவனுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. வெறுந் துப்பாக்கியை புலிக்கு எதிரே தூக்கிக்
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
வேதம்
வாசகர் பேசுகிறார் பகுதிக்கு கடிதங்களை அனுப்புபவர்கள் 300 சொற்களுக்குள் அடங்கக்
கூடியதாக அனுப்ப வேண்டும். 300 சொற்களுக்கு மேற்பட்ட கடிதங்கள் நிராகரிக்கப்பட இடமுண்டு.
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

காட்டினான். புலி பயந்து ஓடிவிட்டது.
இன்னொரு நண்பன் வேறொருநாள் இதே போலவே வேட்டைக்குச் சென்றான். இதே போலவே குட்டையின் எதிர்ப்பக்கத்தில் வேங்கைப்புலி இவன் மேல் பாய்வதற்கு தயாராக நின்றது. இப்போது துப்பாக்கி சற்றுத் தூரத்தில் மரத்தின் அடியில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. தோட்டாக்கள் மட்டும் இவனது சட்டைப்பையில் இருந் தன. இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சற்று நகர்ந்து துப்பாக் கியை எடுக்கப் போனாலும் ஆபத்து. உடனே சட்டென்றுஞாபகம் வரசட்டைப்
பையிலிருந்த தோட்டாக்களைத் தூக்கிக் காட்டினான். புலி பாய்ந்து ஓடி விட்டது
எனது நண்பர்களைப் போலவே நானும் ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்றேன். அதே குட்டை. அதே புலி. என்னிடம் இப்போது துப்பாக்கியுமில்லை. தோட்டாவுமில்லை. தோட்டாக்கள் நிரப்பியபடி துப்பாக்கி சற்று தூரத்தில் மரத்தடியில் சாத்தப்பட்டிருந்தது. புலி என்மீது பாய்வதற்கு தயாராகிவிட்டது. துப்பாக்கி இருக்கும் இடத்திற்கு நான் நகர்ந்தாலே ஆபத்து. அப்போது தான் எனக்குத் திடீரென ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. உடனே விரைந்து செயற்பட்டேன். எனது சட்டைப் பையுள் இருந்த துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரத்தையும் (License) குறி பார்த்துச் சுடுவதில் நான் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட சான்றிதழையும் - புலிக்குத் தூக்கிக் காட்டினான். புலி வீரிட்டுக்குக் கத்திக் கொண்டு பாய்ந்தோடிவிட்டது". கதையை முடித்தார் புளுகர்.
IIIIIIIIIIIIIIIIIயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயIIulHINullII
படைப்பாளிகள் கவனத்திற்கு, ஞானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங் களை அனுப்புபவர்கள் அவற்றை கணி னியில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்புவதுடன் அதன் பிரதியை தபாலி லும் அனுப்புதல் விரும்பத்தக்கது. பிரதி யில் பெயர், முகவரி, கைத்தொலைபேசி எண் ஆகிய விபரங்களையும் தருதல் வேண்டும்.
- ஆசிரியர்
51

Page 54
Sை பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்க ஈழத்துக் கூத்துக் கலையை பல்கலைக்கழ வித்தியானந்தன் அவர்களின் நினைவுப்பரவை மண்டபத்தில் (08.05.2013) ஏற்பாடு செய்த பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் ந வித்தியானந்தன் திருவுருவப்படத்திற்கு சங்கத் அணிவிக்க, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் (
லைப்பில் நினைவுரையை ஆற்றினார்.
ஈழத்து இலக்கியத்தில் சாதிய அடக்கு முை கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெள்ளிக்கிழமை ஈழத்து இலக்கியத்தில் சாதிய அடக்கு முறை சட்டபீட மாணவி செல்வி மாதினி விச் வைத்தியகலாநிதி ச. முருகானந்தன் தலைமை தொடர்பாகவும் சபையோர் பல்வேறு கருத்துக இலங்கைத் தமிழ் மக்களின் பாரம்பரியக் க கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழ் மக்களின் பாரம்பரியக் கூத்து தலைப்பில் திருமறைக் கலாமன்றத்தைச் சேர் இந்நிகழ்விற்கு சட்டத்தரணி ந. காண்டீபன் சம்பந்தமாகவும், அதனால் ஏற்படும் மன ெ கருத்துகளை முன் வைத்தனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் ந கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தி தில்லைநாதன் பிரதம விருந்தினராக கலந்து சிற பேராசிரியர் மு. சின்னத்தம்பி, பாராளுமன்ற சிறப்பித்தனர். மங்கல விளக்கினை கொழும்ட ஜெயராசா உட்பட பலர் ஏற்றி வைத்து விழாவி புஷ்பாஞ்சலி, கர்நாடக இசை அரங்கம், தமிழ் மாணவிகளின் சிறப்பு நிகழ்வுகள் பல இடம் பெ
வானொலிக் குயில் ராஜேஸ்வரி சண்முகத்
புத்தக வெளியீடும் வானொலிக்குயில் கலாபூஷணம் அமரர் ர தினமும், 75ஆவது பிறந்த தின நிகழ்வும் கொழு நடைபெற்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலை நடைபெற்ற இந்நிகழ்வில் வானொலிக்குயில் ச புகைப்பட ஆவணத் தொகுப்பும் பார்வைக்கு சண்முகம் எழுதிய ஹரே ராமா ஹரே கோபால் கலாசாரத்திணைக்களப்பணிப்பாளர்திருமதிசா அம்பாள் ஆலய பிரதமகுரு சிவபூரீபா, குருக்கள் 52
 

கே. UெTன்றுத்துறுை
ரின் நினைவுப்பரவல்
]க மட்டத்திற்கு உயர்த்திய பேராசிரியர் சு. ல கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை நிருந்தது. கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் டைபெற்ற இந்நிகழ்வில் அமரர் பேராசிரியர் சு. துணைத்தலைவர். மு. கதிர்காமநாதன் மாலை இலங்கையின் கல்வி முறையில் சிக்கல்கள் என்ற
களில் நடாத்தும் இலக்கியக் களத்தில் (10.05.2013) என்ற தலைப்பில் கொழும்புப் பல்கலைக்கழக 5னேஸ்வரன் உரையாற்றினார். இந்நிகழ்விற்கு வகித்தார். சாதியம் சம்பந்தமாகவும், தகவல்கள் ளை முன் வைத்தனர். வத்து முறைமையும் சமகால அணுைகுமுறையும் களில் நடத்தும் இலக்கியக் களத்தில் (17.05.2013) ஏ முறைமையும் சமகால அணுகுமுறையும் என்ற ாந்த கொண்சன்ரைன் ராஜன் உரையாற்றினார். தலைமை வகித்தார். பாரம்பரியக் கூத்துகள் நகிழ்வு தொடர்பாகவும் சபையோர் பல்வேறு
ம் நடத்திய "குறிஞ்சிச்சாரல்" 5டத்திய குறிஞ்சிச்சாரல் கடந்த 12.05.2013 ந் திகதி ல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.பேராசிரியர் சி. ப்பு செய்த இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உறுப்பினர் பூரீரங்கா மற்றும் பலரும் கலந்து புத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சபா. னை ஆரம்பித்து வைத்தனர்.தமிழ்த்தாய் வாழ்த்து, இசை அரங்கம், நாட்டியாம்ருதம் என மாணவ, றறன. நின் 75 ஆவது பிறந்த தின நிகழ்வும்
ாஜேஸ்வரி சண்முகத்தின் முதலாவது நினைவு ம்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் Lவர் பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் கலாபூஷணம் அமரர் ராஜேஸ்வரி சண்முகத்தின 5 வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அமரர் சி. ) நாடக நூலும் வெளியிடப்பட்டது.இந்து சமய ந்திநாவுக்கரசன், மொரட்டுவபூgராஜராஜேஸ்வரி ா, சக்தி டி.வி. தலைமை அதிகாரி பா. காண்டீபன்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 55
சூரியன் எப்.எம். ஆலோசகர் நடராஜசிவம், தலை பலர் கலந்து சிறப்பித்தனர்.ஹரே ராமா ஹரே ஜீவாவும், விமர்சன உரையை கலைஞர் கலைச்ெ னைப்பெற்றுச் சிறப்புச் செய்தனர்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரதேச
"ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறியும் | இலங்கையின் அனைத்துப் பிரதேசங்கள் முதன்முறையாக கொழும்புத் தமிழ்ச் சங்கத்தா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மன மலையகம், வடமத்தி, தெற்கு என்ற பிரதேசங்க சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றையொட்டிய கா பெற்றன. பிரதேசங்களின் தனித்துவங்களைப் இருநாட்களும் மாலையில் இடம்பெற்றன.
இந்நிகழ்வு மே. 18ந் திகதி சனிக்கிழமை காலை பேராசிரியர் சபா. ஜெயராசாதலைமையில் ஆரம்ப இந்நிகழ்வின் தமிழ் மொழி வாழ்த்துப் பாட செல்வி வைஷாலி ஆகியோர் பாட, தொடக்கவும் சிறப்புரையை பரிசில் நிதியச் செயலாளர் தெ.ம் காலை 10.00 மணிக்கு ஆய்வரங்கின் முதலாவது ணம் ஜவாட் மரைக்கார் தலைமையில் “உடப்பு கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், எழுத்தாளர் உடப்பு கி. ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் ஆய்வறிக்கை சமர் "சண்முகம் சிவலிங்கம் அரங்கில் ”பேராசிரியர்
அப்துல்லா, வி.மைக்கல் கொலின், அப்துல் ரக ஆய்வறிக்கை சமர்ப்பித்தார்கள். மாலை கலை நி தொடக்கவுரையுடன் ஆரம்பமாகியது. பசறையூர் பாடல்கள் மற்றும் நாட்டார் பாடல்கள் பாடப் ெ சப்தம் வில்லுப்பாட்டு, சித்திரை செவ்வாய் பாட் மேடை ஏற்றினர். நன்றியுரையை சங்கத் துணைச்
இரண்டாம் நாள் நிகழ்வு (19.05.2013) கால தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமாகியது, தொடக்க இராஜகுலேந்திரா நிகழ்த்தினார். ஆய்வரங்கு மூ அரங்கில் ”பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலை ை சோ.பத்மநாதன், முனைவர்பட்ட ஆய்வாளர் சு ராஜ்குமார் ஆகியோர் ஆய்வாளராக கலந்து பெற்றன. அமர்வு இரண்டு மலையக “மீனாட் தலைமையில் எழுத்தாளர் மு.சிவலிங்கம், எழுத் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வறிக்கை பிரதேச "எம். எச். எஸ். ஷம்ஸ் அரங்கில் ”தென் கி க. குருபரன் தலைமையில் எழுத்தாளர் திக்குவல் செல்வி விஜிதா சிவபாலன், கவிஞர் மேமன்கவி மாலை கலை நிகழ்வு எஸ்.எழில்வேந்தன் தெ பேராசிரியர் சி. மௌனகுருவின் அரங்க ஆய்வு பாடல்கள் ஆற்றுகை இடம்பெற்றது. மாணவ, ம
ஆழ்த்தியது. நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச் கந்தசாமி நிகழ்த்த இரண்டுநாள் நிகழ்வும் இனிே தமிழ்ச் சங்க முகப்பைத் தாங்கிய ஞாபக விருதுப் கொண்ட அனைவருக்கும் இரு தினங்களும் பகல்
0 0 ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

மை அதிகாரி ஏ.வி.ஆர். வாமலோசன் உட்படப் கோபால் நாடக நூலின் அறிமுகத்தை அந்தனி செல்வனும் நிகழ்த்தினர். பிரமுகர்கள் பலர் நூலி
இலக்கிய ஆய்வரங்கு பிரதேச இலக்கியங்களும்” ளையும் உள்ளடக்கிய இலக்கிய ஆய்வரங்கு
ல் கடந்த மே மாதம் 18, 19 ஆம் திகதிகளில் ண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு, ளை அடியொற்றிய இலக்கிய ஆய்வறிக்கைகள் நத்துரைகளும் கலந்துரையாடல்களும் இடம் பிரதிநிதித்துவப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளும்
9.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் மாகியது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்மாகிய லை ஆசிரியர் திருமதி நீதிமதி யோகராஜன், மரயை இலக்கியச் செயலாளர் மு.தயாபரன் ஆற்ற, துசூதனன் நிகழ்த்தி ஆரம்பித்து வைத்தார்கள். அமர்வாக வடமத்திய பிரதேச அமர்வு கலாபூஷ பெரி சோமஸ்கந்தர் அரங்கில்” ஆரம்பமாகியது. பூர் வீர சொக்கன், எல்.வஸீம் அக்ரம், எழுத்தாளர் சபித்தார்கள். அமர்வு இரண்டு கிழக்குப் பிரதேச செ. யோகராசா தலைமையில் கலாநிதி ரமீஸ் சாக் ஆகியோர் ஆய்வாளராக கலந்து கொண்டு கேழ்வுகள் வைத்தியகலாநிதி ச. முருகானந்தனின் 5 கே. வேலாயுதத்தின் மலையகக் காமன் கூத்து பற்றன, உடப்பூர் கலைக்குழுவினரின் "பாஞ்சாலி ல்கள் என்பனவற்றை கலைஞர்கள் மிகச் சிறப்பாக செயலாளர் ப.க. மகாதேவா நிகழ்த்தினார்.
லை 9.00மணிக்கு திருமதி பவானி முகுந்தனின் கவுரையை துணைத்தலைவர் சட்டத்தரணி ஜீ. மன்று வடக்குப் பிரதேச " ஏ.ஜே.கனகரட்னா மெயில் ஆய்வாளர்கள் த. அஜந்தகுமார், கவிஞர் 5. குணேஸ்வரன், நாடகக் கலைஞர் ஜோன்சன் கொண்டார்கள்.கருத்துரைகள் பலவும் இடம் சி அம்மாள் அரங்கில் ”தெளிவத்தை ஜோசப் தோளர் ரா.நித்தியானந்தன், எழுத்தாளர் அந்தனி கயை சமர்பித்தார்கள். அமர்வு மூன்று தெற்குப் ழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரியுரையாளர் கலை கமால், நாடக கலைஞர் கலைச்செல்வன், 77 ஆகியோர் ஆய்வறிக்கையை சமர்பித்தார்கள். தாடக்கவுரையுடன் ஆரம்பமாகியது. நிகழ்வில் க் கூடம் அளித்த 'மட்டக்களப்புக் கூத்திசைப் Tணவிகளின் கூத்திசைசபையோரை மகிழ்ச்சியில் சங்கப் பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை த முடிவுற்றது. ஆய்வாளர்கள், கலைஞர்களுக்கு D சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன. கலந்து D உணவும் வழங்கப்பட்டது.
> O
53

Page 56
'ஞானம்' சஞ்சிகைக்கு சிறந்த சிற்றிதழுக்கான சுஜாதா விருது - 2013
சென்னையிலிருந்து கவிஞர் எம். ஜலாலுதீன்
25
5
உயிர்மை _ - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகள் - 2013 பரிசளிப்பு விழா நிகழ்வு சுஜாதாவின் பிறந்த நாளான 03 -05 -2013 அன்று சென்னையில் மிகக் கோலாகலமாக நடை பெற்றது. இந்நிகழ் வில் கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை, இணையம், சிற்றிதழ் ஆகிய துறைகளில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த சிற்றிதழுக்கான விருது இலங்கை யிலிருந்து வெளிவரும் 'ஞானம்' சஞ்சிகைக்கு வழங்கப்பட்டது.
ஞானம் இதழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்வையும் துயரங்களையும் மிக ஆழ மாகச் சித்தரிக்கிறது. அது வெளியிட்ட போர் இலக்கியச் சிறப்பிதழ் தமிழ் கூறும் இதயங்களில் ஆழ்ந்த அதிர்வுகளை ஏற்படுத் தியது எனப் பரிசு வழங்கலின்போது குறிப் பிடப்பட்டது. இந்த விருதுத் தெரிவுக்கான நடவர்களாக தமிழவன், கழனியூரன், அ. முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கடமையாற்றி னார்கள்.
இந்த விருதினைப் பெறுவதற்காக இலங் கையிலிருந்து தி.ஞானசேகரன் வந்திருந்தார். அவரிடம் மேடையில் வைத்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது:
""இலங்கையில் தற்போது அரசியல் பிரச்சினைகள் உச்சக்கட்டத்தில் - இருக்கின்றன. இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது மிகப் பெரிய சவால். அதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?”
ஞானம் ஆசிரியரின் பதில் பின்வருமாறு அமைந்தது. "ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த 2000 ஆம் ஆண்டு ஞானம் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு இனத்தின் உரிமைப் போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு சிற்றிதழின் தார்மீகப் பொறுப்பு யாது? - அதன் பங்களிப்பு எப்படி இருக்கவேண்டும்? என்பதை நன்கு உணர்ந்தே நாங்கள் ஞானம் இதழை நடத்தி வருகிறோம்..
"ஞானத்தின் முதலாவது இதழிலிருந்து கடைசியாக வெளிவந்த 156ஆவது இதழ்கள் வரை எடுத்துப்பார்த்தீர்களானால் ஒவ்வொரு இதழிலிலும் போர் இலக்கியம் தொடர்பான கவிதைகள்,சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்திருப்பதைப்பார்க்கலாம். போர் நடந்து கொண்டிருக்கையில் பல விடயங்கள் சமகாலத்திலேயே கேட்ட பதிவாகியுள்ளன. கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், இங்கு தமிழகத்திலிருந்து 54

உயிர்மை தாது விருதுகள் உயிர்மை - சுஜாதா அறக்கம்
(பக்கம்
போர் தொடர்பான விடயங்களை நீங்கள் - மிகவும் வெளிப்படையாக எழுதுவது போல் நாங்கள் இலங்கையிலிருந்து எழுதமுடியாது. ஆனால் பத்திரிகா தர்மம் என்று ஒன்று இருக்கிறது. சில விடயங்களை நாங்கள் எழுதித்தான் ஆகவேண்டும். அவற்றை நாங்கள் வெளிப்படையாக இல்லாமல் பூடகமாக ம் - குறியீடாக எழுதுகிறோம். இப்போது எங்கள் நாட்டில் எரியும் பிரச்சனையாக இருப்பது அரசாங்கத்தால் தமிழர் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு இராணுவமயமாக்கப்படுகிறது. இதனை இந்த மே மாத ஞானம் 2013 இதழில் ஆசிரியத் தலையங்கத்தில் எழுதியுள்ளேன். சில சந்தர்ப்பங்களில் 'ரிஸ்க்' எடுக்க வேண்டித்தானிருக்கிறது. நாங்கள் எழுதுவது அரசாங்கத் தரப்பிலும் கவனிக்கப்படுகிறது. உதாரணமாக, 'காரணங்கள்' என்ற தலைப்பில் போர் இலக்கியக் கவிதை யொன்று சில காலத்துக்கு முன்னர் ஞானம் சஞ்சிகையில் பிரசுரமானபோது அது இலங்கைப் பாராளுமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டது. அக்கவிதை ஹான்சாட்டிலும் பதிவாகியுள்ளது. நாங்கள் ஞானம் 150 ஆவது இதழை ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக வெளிக் கொணர்ந்தோம். போர் இலக்கியம் என்பது போரின் சாட்சியாக இருப்பது. போரின் பல்பரிமாணங்களை அது தந்த வலிகளை நாங்கள் - ஒரு நூற்கட்டமைப்புக்குள் கொணர்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறோம். ஆவணப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. ஏனெனில் தமிழர் போராட்டம் எமது நாட்டிலேதான் இடம்பெற்றது. நவீனத் தமிழ் இலக்கியத்தில் போர் இலக்கியம் என்ற வகைப்பாட்டினைத் தந்தவர்கள் ஈழத் தமிழர்கள்.
அந்த இலக்கியம் காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்கும், சிதைந்து போகாமல் இருப்பதற்கும், எதிர்காலத்தில் ஆய்வுத் தேவைகளுக்கும், ஈழத்துப் போர்பற்றி உலகளாவிய ரீதியில் மக்கள் அறிந்து கொள்வதற்கும் இந்தப் போர் இலக்கியத்தைப் தொகுத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது" என்றார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 57
டாக்டர் அவர்களே! முதலில் தங்களுக்கு அனைவருக்கும் என் இதயம் கலந்த வாழ்த்துக் இதழுக்குக் கிடைத்தது தமிழ் பேசும் நல்லியதங் தருகிறேன்.
ஞானம் 156ம் இதழின் ஆசிரியர் தலைப்புச் தருகிறது. தமிழ் பேசுவோரின் குடியிருப்புக்கை பொய்க் காரணங்களைக் காட்டி கூடுதலாகச் சு6 வழி காண்பது எல்லாரினதும் கடமையாகு குட்டுகின்றவனும் மடையன். “மனிதனை மணி மாறுவதெப்போ தீர்வதெப்போ ஏழைத் தம்பி வருகிறது. இந்நிலை நீடித்தால் மனித உணர்வு உலகம் காறி உமிழும். வரலாறு சிரிக்கப் போகி விட்ட தவறுகள்; விடக் கூடாத தவறுக! மக்கின் அவர்கள் சரியான நேரத்தில் சரியானத தமிழறிஞர் அல்லவா. பிழையில்லாத தகவல்கள் படிக்கலாம். பட்டம் பெறலாம் என்றாலும் அ புரிந்து கொள்ள வேண்டும். மானா மக்கீன் அவ
பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் உணர்வு மனித நேயம் மிக்கது. அரசியல் வாதிக பதவி கிடைத்தால் குடைபிடிப்பவர் பின்னணியிலிருந்து காட்டிக் கொடுப்பவர்கள பொம்மலாட்டக்காரர்களின் சிறப்பு மிக்க பெ வரை ஆடட்டும். ஒரு நாள் இரத்தக் கண்ணிர்
ஞானம் சஞ்சிகைக்கு சுஜாதா விருது இலங்கையிலிருந்து வெளிவரும் சிறு சஞ்சிகை இலங்கையரான நாமும் பெருமிதமடைகிறோம் ஞானம் சஞ்சிகை ஏப்ரல் இதழில் “அரச இ எனும் தலைப்பில் க. மலர்விழி எழுதிய கட்டு போவதில்லை. அவர்களுக்குத் தெரிந்தே இந்த வழங்கலின் பின் இத்தகைய நியாயமான கேள்வி நடுவர்களின் கவனத்திற்கு இந்தத் தகவன தார்மீகப் பொறுப்பல்ல. ஞானம், ஜீவநதி, மல்லி நிவர்த்தி செய்வதற்குரிய ஆலோசனையை வழ விருதைப்பெறுவதற்குரிய புத்தகம் இலங்கைய அதே வேளை எழுத்தாளர், இலங்கைப் பிரஜை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களும், எழுத்தாளர்களும் இந்த விருை மூலம் அறிவிக்கவேண்டும்.
ஏப்ரல் மாத ஞானத்தில் 31ஆம் பக்கத்தில் 2013 என்ற செய்தியில் “பரிசீலனைக்கு அனுப்பு பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ஐ.எஸ்.பி.என். என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. அரச வேண்டும்.
மொழிபெயர்ப்புக்கு நான்கு விருதுகள் என் பார்க்காது எப்படி தரமான மொழிபெயர்ப்( நியாயமான கேள்விதான்.
மே மாத ஞானத்திலும் இதுதொடர்பா சாகித்திய விருதுத் தேர்வு நடுவர்களால் நிராகரி கிடைத்துள்ளது. இரட்டிப்பு மகிழ்ச்சியான செ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)
 

ம்; ஞானம் இதழைப் போசித்துக் காப்பாற்றும் கள். சிற்றிதழ் விருது தமிழகத்தில் எமது ஞானம் களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்பதையும் அறியத்
செய்தி நடுநிலைச் சிந்தனையாளருக்கு சிறப்பைத் ளை படிப்படியாக சுவீகரித்தவர்கள் தற்பொழுது வீகரிக்க முற்படுகின்றனர். இவற்றைத் தீர்ப்பதற்கு ம். குட்டக் குட்ட குனிபவனும் மடையன்; ரிதன் சாப்பிடுகிறான்டா அருமைத் தம்பி; இது " என்ற எம்.ஜி.ஆர் படப் பாடல் ஒன்று நினைவு வில்லா - மனிதம் வாழும் பூமி இலங்கையென றது. ள் எனச் சுட்டிக் காட்டிய தமிழ் மணி மானா கவல்களைச் கோடிட்டுக் காட்டியுள்ளார். மூத்த 1. படித்தால் மட்டும் போதுமா..? எந்த வயதிலும் னுபவமும், அறிவும் தேடலில் உள்ளது என்பதை பர்களுக்கு எனது நன்றி. தமது பத்தியெழுத்தில் முஸ்லிம்களைப் பற்றிய 5ளின் நோய்களை நாடி பிடித்துக் கூறியுள்ளார். களாகவும், கூஜா தூக்குகிறவர்களாகவும், ாகவும் இவர்கள் மாறிவிட்டனர். இவ்வாண்டின் ாம்கைகள் ஆயிரத்தில் நாட்டம் வைத்து ஆடும் வடிப்பார்கள்.
-Uானந்துறை 3ெ.பி.63.நில்வீான் கிடைத்தது ம்கிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ககள் உலகளாவிய ரீதியில் விருது பெறுவதால் D. |லக்கிய விருது வழங்கல் - 2012 சில குறிப்புகள் டுரைக்குரிய பதிலை நடுவர் குழு வெளியிடப் த் தவறு நடந்துள்ளது. அரச இலக்கிய விருது விகளுக்கு இதுவரை யாரும் பதிலளித்ததில்லை. லக் கொடுத்து விடுவது மட்டும் ஞானத்தின் ைெக போன்ற சங்சிகையின் ஆசிரியர்கள் இதனை pங்க வேண்டும். இலங்கையின் அரச இலக்கிய பில் பதிப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். யாக இருக்க வேண்டும். இந்த விதி முறையைக் இலங்கையில் இருந்து வெளிவரும் சஞ்சிகை த ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு எழுத்து
பிரசுரமான கொடகே தேசிய சாகித்திய விருது பப்படும் நூல்கள் முதல் பதிப்பாக இலங்கையில் பெற்றுக்கொண்டநூல்களாக இருக்க வேண்டும் ச இலக்கிய விருதிலும் இதனையே பின்பற்ற
பது சற்று அதிகம் தான். தவிர மூல நூல்களைப் பெண் நடுவர்கள் தீர்மானித்தார்கள் என்பதும்
ன வாசகர் கடிதம் பிரசுரமானது. இலங்கை
க்கப்பட்ட நூலுக்கு உலகளாவிய ரீதியில் விருது ய்தி.
-ல்ெ.பிரகாஷ், கொடியே -12
55

Page 58
உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 'சிற்றிதழ் விருது' 2013 உங்களது ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை பெற்றிருப்பதையிட்டு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். உங்களது போர் இலக்கியச் சிறப்பிதழ் மற்றும் ஞானம் ஒவ்வொரு தனி இதழும் தமிழ் பேசும் உலகிற்கு முக்கியமானதொரு வரலாற்றுச் சான்றாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உங்கள் நற்பணி தொடர வாழ்த்தி விடைபெறுகிறேன்.
-ட்ாக்டர் அலுத் 3ெ ஜனிUா, ஒைத்திர் ஆத்தியிட்ச்கர் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் வாழ்த்து
ஞானம்சஞ்சிகைக்குசிறந்தசிற்றிதழுக்கான விருது தமிழகத்தில் வழங்கப்பட்டமைக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் 28-04-2013 ஆம் திகதி நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது என்பதைத் தங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
-ஆழ்விஸ்பிள்ளை கந்தசாெே, பொதுச் செயலாளர்-கொடிtேத் தழ்ெச்சங்கல் ஞானம் 156 கிடைத்தது. என். செல்வராஜவின் ஈழமண்ணில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புப் பற்றிய தேடல் L IGU) தகவல்களைத் தருகின்றது சில விடுபட்டுள்ளன. கொற்றாவத்தை கூறும் குட்டிக் கதைகள் சமூகப் போலியதார்த்தங் களைக் குட்டவும் தவறவில்லை. பண் பாட்டு வாசம் அங்கதத்தோடு கலக்கிறது. பத்தி சிறந்த புனைவு ஆகிறது. கொற்றை பி.கிருஸ்ணானந்தனின் தொடர் தொடரட் டும் வாழ்த்துக்கள். போர் இலக்கிய சிறப்பிதழ் அறிமுக விழா பேராதனைத் தமிழ்த்துறையில் நிகழ்ந்ததையும் அவ்விதழ் பற்றிய பேராசிரியர்களான எம்.ஏ.நுஃமான், துரை. மனோகரன், மகேஸ்வரன் ஆகியோரின் மனப்பதிவுகளையும் அறிய முடிந்தது. எழுத்தாளர் தெணியானது கட்டுரை நல்லதொரு பதிவு.
- செல்லத்துரை.சுதர்சன், واعته நான் இலங்கை நூலகச் சங்கத்தால் நடத்தப்படுகின்ற நூலகவியல் டிப்ளோமா பாடநெறியைப் பயின்றுவருகிறேன். இதன் ஒரு பகுதியாக Level iஐ பூர்த்தி செய்வதற்கு சுட்டியாக்கம் (Index) என்னும் செயற் பாட்டை செய்து முடிக்க வேண்டும். அதற்காகத் தங்களது ஞானம் சஞ்சிகையைத் தெரிவு செய்துள்ளேன். இதற்கு 2003 தொடக்கம் 2007ஆம் வருடம் வரையான ஞானம் இதழ்களைத் தந்துதவுமாறு மிகவும் பணிவாக வேண்டுகிறேன்.
- தி.ஞ்Uாகர், அன்விழிர3, திருகேர்ன9லை.
56

வயலின் இசைத்தபடி "வளரும் கவிதை உயர எழும் தேயிலை அரும்புகளின் மனதாய்
வேர்களின் ஜீவன் நீளும் ரகஸிய மொழி வெளியேறும் வழிகள் நிரம்பிய ப்பைகளை எடுத்து வருகிறது
レキ
عكا
Z
முதல் சுவட்டில் பதித்த துயரம்
திரும்ப திரும்ப வீசும் விஷக் காற்றில் பெருகிறது e ஆன்மாவின் உயிரேறிய S3 தேயிலைக் காடுகளில் நீ அவர்களைப் பாருவது தவறு என வெளியேறும் வழிகள் நிரம்பிய 汇 கையகப்படுத்தியவர்கள்
மேடையிலிருந்து முழங்குகிறார்கள்
வயிலின் இசைத்தப்படி வளரும் கவிதையின் முருக்கொன்றில் கூர் தீட்டிய கத்திகள் மினுங்குகின்றன
பின்
நிலாவொளி குடித்த பனித்துளி காலையொன்றில் கோப்பைகளைச் சுற்றி கிடக்கும் அவர்களின் பினங்களில் 《། செருகியிருக்கும் கத்திகளும் அவை போலவே. இருக்கையிலும் வயலின் இசைத்தபடியே வளரும் கவிதை
அனல்முகம் $لمہ@onز
கொட்டகலை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2013 (157)

Page 59
'ஞானம்' “ஈழத்துப் பே
ஞானம்
3ரலால்.
கடந்த முப்பெரும் மொழியையும் ஆயுதமாக ஏந்த தொடர்பான ப ஆவணம் பற்றி பக்கங்களைக்
எழுத்துப்
) இலக்கியச்
சிறப்பிதழ்
இலங்கையில் 4
“ஞானம்” அலுவலகத்தில் இவ் தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூ.
தொடர்புகளுக்கு
அவுஸ்திரேலியாவில் இதழின் வி தபாலில் பெறவிரும்புவோர் தபாற்
தொடர்புகளுக்கு: (0
“ஞானம்” சஞ்சிகை
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309AI 2/3, காலி வீ
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வி
தூர்.
சுன்
ஜீவ அல்வாய். தொன லங்கா சென்ற 84, கொழும்பு

ரர் இலக்கியச் சிறப்பிதழ்”
2 தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் அதன் வழியான இலக்கியத்தையும் கலாசார நிய பேனா மன்னர்களின் போரிலக்கியம் டைப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், ய பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 600 கொண்டு வெளிவந்துள்ளது. . இதழின் விலை ரூபா 1500/=
விதழ் ரூபா 1000/= மாத்திரமே! பா 250/= சேர்த்து அனுப்ப வேண்டும். : 0777 306506
லை - அவுஸ்திரேலிய டொலர் 25 செலவு வேறாக அனுப்ப வேண்டும். 1061) 408 884 263
கிடைக்கும் இடங்கள் )
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை தி, வெள்ளவத்தை.
புத்தகசாலை பீதி, யாழ்ப்பாணம்.
க்கா வாகம்
பந்தி
லபேசி: 077 5991949
ல் புத்தகசாலை | வீதி, கண்டி.

Page 60
GNANAM - Registered in the Department of P
With Best C Luck
உலகசாதனை
பிஸ்கட்டில்
ckyland)
ilir
Lepunkt
LUCKYLAN
MANUFA NATTARANPOTHA, KU TEL: 0094-081-2420574, 242
Email: luckyl
Printed by : Thai

osts of Sri Lanka under No. QD/43/News/2013
Compliments from
yland)
ங்கள் பாரம்பரியம் தோன்!
SD BISCUIT CTURERS
NDASALE, SRI LANKA. 1217. FAX: 0094-081-2420740 and@sltnet.lk
ranjee Prints - Tel : 2804773