கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2013.05

Page 1
பன்முதலுற்றிலுள்ள
୭୮୭ ଡn
 


Page 2
r
ддолба длЈ2. co2,2ьсдѣСе
NØgi
Jood
Designers and Ma 22kt Sovereign Gol Quality Jewellery
101, Colombo Stre Te: O81 - 2232545
Supplierst
DEALERS IN ALL KIND FOOD COLOURS, I CAKE INGRE
76B, Kings S Tel: 081 - 2224187, 081 -
 
 
 

اس
N
At ESSENGE
SÜPEPCOERS
O Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, EDIENTS ETC.
treet, Kandy.
2204480,081 - 4471563
اسے

Page 3
பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது Seifl - 13 анії -
étoffluff திஞானசேகரன்
நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன்
8@aman ófífluff ஞானம் ஞானசேகரன் ஓவியர்
சிவாகௌதமன்
தொடர்புகளுக்கு ஞானம்" அலுவலகம் 3-8, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - O6, இலங்கை
தொலைபேசி 0094 - 11 2586013, 0094 - 777 306506
0061 - 286778989 (Aus)
தொலைநகல் 0094. 11 2362862
மின்னஞ்சல்
editor(agnanam.info
இணையத்தளம் http://www.gnanam.info http://www.tignanasekaran.lk உள்நாட்டு சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா : ரூபா 1000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5,000/= ஆயுள் சந்தா : GþLIT 20,000/= வெளிநாட்டு சந்தா ஓராண்டு Australia(AUS) 50 Europe(s) 40 India(Indian Rs.) 1250 Malaysia (RM) 100 Canada($) 50 UK(£) 35 Singapore(S$) 50 Other(US$) 50
வெளிநாட்டு உள்நாட்டு வங்கித் தொடர்புகள் SwiftCode:- HBLILKLX
T. Gnanasekaran Hatton National Bank, Wellawatha Branc A/C No. 009010344631
மனியோடர் மூலம் சந்தா அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்புதல் வேண்டும்
 
 
 

So இதழினுள்ளே O O. O.
9 கவிதைகள்
சி. சிவநேசன் 13 எல். வளிம் அக்ரம் 27 செ. சுதர்சன் 39 ஜின்னாஹ் ஷரிபுத்தின் 47
O 35(56DJ36
தெணியான் 03 என். செல்வராஜா 14 i. இ. இராஜேஷ்கண்ணன் 34 யசோதா பத்மநாதன் 48
9 சிறுகதைகள்
ஆ. தங்கராசா 08 அகளங்கன் 20
9 பத்தி எழுத்து
எம். கே. முருகானந்தன் 25 பேரா. துரை மனோகரன் 30 கே. பொன்னுத்துரை 40 மானா மக்கீன் 46
O afpassT60 as6D6D 6605a5uj
நிகழ்வுகள் 50
9 கொற்றாவத்தை கூறும்
குட்டிக்கதைகள் 28
9 நூல் மதிப்புரை
குறிஞ்சி நாடன் 52
O graffa5 & 1 JasraépTñT 55
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின்
கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே
பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப்பெயர்,முகவரி ஆகியவற்றைவேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
ஞானம்
கலை,இலக்கிய
trgibilonoith
அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட தமிழ
வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் சுவீகரித்துதமிழ்மக்களின்இனப்பரம்பலைப தமிழ் மக்களின் இன அடையாளங்களை நாடாக்கும் முயற்சியை மேற்கொள்கிறது.
இதன்காரணமாகப் பத்தாயிரம் கு( குடியேறமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இ ஆயிரம் பேரும் அகதிமுகாம்களில் இருக்கிற இதற்கும் மேலாக பல இலட்சம் மக்கள் அ இவர்களது சொந்த இடங்களிலிருந்து இரா அனுமதிக்கவேண்டும்.
இப்பிரதேசங்கள் செம்மண்ணைக்கெ களாகும். முன்னர் இக்காணிகளில் ஏற்று மக்கள் வாழ்வும் நாட்டின் பொருளாதாரமு மேற்கொள்ளக்கூடிய துறைமுகவசதிகளையு அரசாங்கம் இவற்றை இராணுவம் மூ6 அமைத்து சிங்கள மக்களின் சமூக திட்டமிட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு உயர்பாதுகாப்பு வல தாக்கல் செய்யப்பட்டு 2006ல் இடைக்கா இராணுவம் அபகரித்த நிலங்களை மக்க அது நடைபெறவில்லை. கடந்த ஆண்டிலு ஐ. நா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மண்ணில் இருந்து மக்கள் வெளியேற்றப்பு குடியேற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டு எதுவும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக மக்கள் திரண்டெழு வந்துள்ளனர். ஆனால் அரசாங்கம் எதற்கும் ஊதிய சங்காகத்தான் முடிகிறது.
தற்போதுள்ள ஒரேவழி, வலிகாமம் 6 காணி உறுதிகள் வைத்திருப்போர் அலை எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவே செய்யப்படவேண்டும். இதனை ஒர் இய அப்போதுதான் அது சர்வதேசத்தின் பார் என்பதும் தமிழரின் காணிசுவீகரிப்புப் பி கொள்ளும் என்பதும் இன்றைய சட்டவல்லு உள்ளூர் நீதிமன்றத்தில் நியாயம் கிடை இவ்வழக்குகளைக் கொண்டு செல்லவும் வழி இதன்மூலம் எழும் குரல்கள், இலங்கை அ ஏற்படுத்த வழி வகுத்து நீதியான முடிவொன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தின் பெருக்கைப்போல் தலைப்பெருக்கும்
தவிப்பெருக்கு
ரின் காணிகளை மீளப்பெற வழிதானென்ன? அரசாங்கம் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை மாற்றிஅமைக்கும்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அழித்து, இலங்கையை ஒரு சிங்கள பெளத்த
டும்பங்களைச்சேர்ந்த 20000 மக்கள் மீளக் இந்தியாவில் 80 ஆயிரம் பேரும் வலிவடக்கில் 10 ார்கள் என ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ணுவம் வெளியேறி இவர்களை மீளக் குடியேற
ாண்ட விவசாயம் செய்யக்கூடிய நிலப்பரப்பு மதிப் பயிர்கள் பல பயிரிடப்பட்டு இதனால் ம் உயர்வடைந்திருந்தன. மீன்பிடித் தொழிலை ம் இப்பிரதேசங்கள் கொண்டுள்ளன. லம் தம்வசப்படுத்தி சிங்களக் குடியேற்றங்களை பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தத்
யம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் லத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. அதன்படி ளுக்கு விட்டுக் கொடுக்கவேண்டும். ஆனால் ம் இந்த ஆண்டிலும் சர்வதேசத்தின் மத்தியில் - தீர்மானத்தின் முதலாவது ஷரத்தில் எந்த பட்டார்களோ அந்த மண்ணிலேயே அவர்கள் ள்ளது. ஆனால் இத்தீர்மானத்தில் உள்ளதுபோல்
ழந்து அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு மசிந்து கொடுப்பதாயில்லை. செவிடன் காதில்
வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களில் எவரும் அரசாங்கத்தின் காணி சுவீகரிப்புக்கு வண்டும். ஆயிரக்கணக்கான வழக்குகள் தாக்கல் க்கமாக முன்னெடுத்துச் செயற்படவேண்டும். ாவையை இப்பிரச்சனையின் பக்கம் திருப்பும் ரச்சனை தொடர்பாக சர்வதேசம் கவனத்தில் னர்கள் பலரின் கருத்தாக உள்ளது. க்கவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு முறைகள் இருக்கின்றன. புரசாங்கத்தின் மீது உலக நாடுகள் அழுத்தங்களை ாறு கிட்ட வகைசெய்யும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 5
அட்டைப்பட அதிதி
பன்முக ஆற்றலுள்ள (கல்விமான் ?
கலாநிதி கு. கலாமணி
கலாநிதி த. கலாமணி இன்று மணி விழாக் காணுகின்றார் என்பதனை, இவரை நேரில் அறிந்து வைத்திருப்பவர்கள் நம்புவதற்கு மறுத்தால், உண்மையில் அது அதிசயமான ஒன்றன்று. கலாமணியின் தோற்றம் அத்தகையது. அகவை அறுபது கடந்த பின்னரும் இளமை கலையாத தோற்றப் பொலிவு. ஒருவர் தனது வாழ்நாளில் அறுபது ஆண்டுகளைக் கடந்து வருவதென்பது வாழ்க்கையின் விசேடித்த காலப் பகுதிக்குள் நுழைந்து விட்டாரென்பதுதான் அதன் பொருள். அவர் பெற்றுக் கொண்டுள்ள கல்வி அறிவு, வாழ்வனுபவங்களால் பட்டை தீட்டி ஒளிரச் செய்யும் காலமிது. இன்றுள்ள கலாமணி அவர்கள் மேலும் பிரகாசித்து மிளிரும் மணி விழா அகவையை இப்பொழுது வந்து
அடைந்து விட்டார்.
கலாமணி அவர்களின் சிறப்புகளுக்கெல்லாம் முதற்கண் அடிப்படைக் காரணமாக அமைந் திருப்பது அவர் பெற்றுக் கொண்டுள்ள கல்வி. இவர் தனது ஆரம்பக் கல்வியை யா/ தேவரையாளி இந்துக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். அக்கல்லூரியில் கற்கும்போது ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்து, பின்னர் யா/நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவனாக இணைந்து கொண்டார். அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பினைப் பெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறை (பௌதிகவியல் சிறப்பு மாணவனாகப் படித்துக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

கொண்டிருந்த காலத்திலேயே தனக்குள் கரந்திருந்த கலை, இலக்கிய உணர்வினை வெளிப்படுத்த ஆரம்பித்தார் எனலாம்.
'அக்காலத்தில் சிறுகதை எழுதும் முயற்சியை இவர் தொடங்கினார். இலங்கைச் சிறுகதைகள் எழுச்சியுற்று விளங்கிய ஐம்பது, அறுபதுகளைத் தொடர்ந்து வந்த எழுபதுகளின் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதுவதற்குத் தொடங்கிய இவர், கடந்த நாற்பதாண்டு காலத்தில் தொகையிற் பல படைப்புகளைப் படைத்திருக்க வேண்டும். ஆனால், தரமான படைப்புகளாக நாற்பது சிறுகதைகள் மாத்திரம் இவர் எழுதி இருக்கின்றார். அவற்றினுள்ளே முப்பது சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, "நாட்கள், கணங்கள்... நமது வாழ்க்கைகள்', "பாட்டுத் திறத்தாலே", "அம்மாவின் உலகம்" என்னும் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இந்த மூன்று தொகுதிகளுள் "அம்மாவின் உலகம்" மிக அண்மையில் இவ்வாண்டு வெளிவந்திருக்கும் ஒரு நூல் முதல் தொகுதி " நாட்கள், கணங்கள் ... நமது வாழ்க்கைகள்” வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சின் இலக்கிய விருதினைப் பெற்றுக் கொண்டது.
இத்தொகுதியிலுள்ள சில சிறுகதைகளை எழுதிய காலகட்டத்தில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை நிறைவு செய்து (B.Sc (Special-Physics).), பின்னர் பெளதிகவியல் உதவி விரிவுரையாளராகப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, பிறகு யா/சம்பத்தரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். நெருக்கடிகள் மிகுந்த அக்காலகட்டத்தில் இவர் பெற்ற அனுபவமே " நாட்கள், கணங்கள்...

Page 6
நமது வாழ்க்கைகள்” என்னும் சிறுகதையாகப் பதிவானது. அச்சிறுகதையில் இவரால் சிருஷ்டிக்கப் பெற்றுள்ள மறக்க முடியாத பாத்திரம் பற்றிப் பேராசிரியர் கா. சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:-
“நாட்கள், கணங்கள். நமது வாழ்க்கைகள்” நமது இன்றைய இயலாமைகளுள் முடங்கி நிற்கும் மெளனமான சோகத்தை வெளிக் கொணருகின்றது. பங்கிறாற்றியஸ் மறக்க முடியாத சிறுவனாகி விடுகிறான்”
அதே சமயம் இந்த இலக்கியப் படைப்புக் கூடாகப் பேராசிரியர் சி. தில்லைநாதன் இவரது இலக்கிய ஆளுமை பற்றி முறையான ஒரு கணிப்பீட்டினைப் பின்வருமாறு தெரிவித் திருக்கின்றார்:-
"..மனித நடத்தைகளையும் வாழ்வினையும் கூர்ந்து அவதானிக்கும் அவரது வல்லமை, புரிந்துணர்வு, மனிதாபிமானம் மனித மேம்பாட்டைஅவாவும்தன்மை, பொருத்தமான உத்திகளைத் தேர்ந்து அனுபவங்களைக் கதை வடிவில் வெளியிடும் ஆற்றல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுவனவாக இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் அமைகின்றன. யதார்த்த நெறிக்குட்பட்ட அவரது கதையில் இழையோடும் மனிதாபிமானமும் வாழ்க்கை நிகழ்வுகளை விஞ்ஞான அடிப்படையில் விளக்க முனையும் திறனும் விதந்து பேசத்தக்கவை”
கலாமணி அவர்களின் கலை, இலக்கிய ஈடுபாடுகளுக்கு அவர் பிறந்த குடும்பப் பின்புலம் காரணம் எனலாம். இந்த ஈடுபாடுகள் உள்ளவர்களின் உள்ளத்து உணர்வுகள் ஒருபோதும் உறங்கிக் கிடந்து வருவதில்லை. பேராதனைப் பல்கலைக்கழக மாணவனாகக் கலாமணி இருந்த காலத்தில் நாடகத் துறையில் இவர் தனது நாட்டத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை. இவரது தந்தையார் அல்வாய் தெற்கு ச தம்பிஐயா சிறந்த இசைநாடக நடிகர். தனக்குப் பின்வந்த நடிகர்களை வழிப்படுத்தி வந்த நல்ல அண்ணாவியார். அவரது ஏகபுத்திரனாக 04.02.1952இல் பிறந்தவர் கலாமணி, தாயார் பர்வதம். இவருக்குச் சகோதரிகள் இருவர். இவரையும் சகோதரிகள் இருவரையும் தந்தையார் தம்பிஐயா தான் நடிக்கும் நாடகங்களில் ஈடுபடுத்திலோகிதாசன், அசலாத்துப் பிள்ளைகள் (அயல் அகத்துப் பிள்ளைகள்) ஆகிய சிறுபிள்ளைகளுக்குரிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் பயிற்சியினை அக்காலத்தில் அளித்து வந்தார். அதே சமயம் படித்து உயர் நிலையை எய்தும் வரை நாடகத் துறையில் நாட்டம் கொள்ள வேண்டாமென
4.

ஆலோசனையும் கூறி வைத்தார். இன்று கலாமணி போலவே அவர் சகோதரிகளும் பட்டதாரிகளாக விளங்குகின்றனர்.
கலாமணி அவர்களின் மனைவியும் ஒரு பட்டதாரி ஆசிரியை. இன்று M. A. பட்டப் படிப்பினையும் நிறைவு செய்து விட்ட ஒருவர். கலாமணி அவர்களுக்குக் கலை இலக்கிய ஈடுபாடு இருந்த வந்தபொழுதிலும் தனது கல்வியிலும் அக்கறையுள்ள ஒருவராக இருந்து வருகின்றார். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியியற்றுறை சார்ந்த உயர்கல்வியைப்(PG.D. in Edu) பெற்று, பின்னர்விரிவுரையாளராக அங்கு நியமனம் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் புலமைப் பரிசில் பெற்று அவுஸ்திரேலியா சென்று Wolongong பல்கலைக்கழகத்தில் கற்றுக் கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தினைப் (Ed.D) பெற்றுக் கொண்டார். இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியியற்றுறைச் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அதே சமயம் சட்டத் துறைத் தலைவராகவும் இருந்து வருகின்றார்.
கல்வியியற்றுறை சார்ந்த இவரின் பணிகள், கலை, இலக்கியப் பணிகள் என அவை பரந்து காணப்படுகின்றன. வருகை விரிவுரையாளர், இணைப்பாளர், ஆய்வரங்கங்கள்/ கருத்த ரங்குகள் என்பனவற்றில் கட்டுரைகள் சமர்ப்பிப்பவர், நூல் வெளியீடுகளில் தலைமை/ ஆய்வுரை/ மதிப்பீடு எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றார். இவ்வளவு செயற்பாடுகளுக்கு மத்தியிலும் சிறந்த விரிவுரையாளர் என்ற மதிப்பார்ந்த நல்ல பெயர் மாணவர் மத்தியில் இவருக்கு உண்டு.
கல்வித் துறையில் உயர்ந்த கலாநிதிப் பட்டம் பெற்றிருக்கும் இவர் இன்றும் வேடந் தரித்து மேடைகளில் நாடகம் நடித்துக் கொண்டிருக்கின்றார் என்பது நாடகத் துறைக்குக் கிடைத்த பேரதிஷ்டம் என்றே கூறலாம். இசைநாடகத்தின் ஆத்மா இசை இசை இன்றேல் இசைநாடகம் அழிந்து போய் விடும் கலாமணி அவர்களுக்கு இயல்பான, இனிமையான குரல் வளம் உண்டு. அத்தோடு நல்ல இசை ஞானமும் உள்ள ஒருவராகக் காணப்படுகின்றார். யாழ்ப்பாணநாட்டார் வழக்கியற் கழகத்தின் தலைவராக இன்று விளங்கும் இவர்சிறந்த இசைநாடக நடிகராகவும் அரங்குகளை அலங்கரித்து வருகின்றார். பூதத்தம்பி, சத்தியவான் சாவித்திரி, பூறிவஸ்ளி, கோவலன் கண்ணகி, பவளக்கொடி, பக்த நந்தனார், பாஞ்சாலிசபதம் வாலிவதை ஆகிய இசைநாடகங்களிலும்வேறுசிலநாடகங்களிலும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 7
பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ஓர் இசைநாடக வல்லுநர் இவர். ஆண் வேடம் மாத்திரமன்று, பெண் வேடமும் தாங்கி நடிக்கவும் வல்லவ ரென்பது இவ ரினது நாடக நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் சிறந்த ஓர் அம்சம். இவர் பெண் வேடம் புனைந்து மேடையில் தோன்றினால் இவரது அழகுத் தோற்றம் கண்டு பெண்களே
மோகிப்பார்கள். இவரது இசைநாடக முத்திரை இவர் பூதத்தம்பியாக வேடந்தாங்கி நடிப்பது தான். தந்தையார் வழி வந்த பாரம்பரியக் கலையான இசைநாடகத் துறையில் தனது பிள்ளைகளை ஈடுபடுத்தி, தொடர்ந்து
அக்கலைத் துறையை வளர்த்து வர வேண்டும் என்னும் நாட்டம் இவர் உள்ளத்தில் இருந்து வருகின்றது. அதன் காரணமாக மூத்த மகன் பரணீதரனை ஈடுபடுத்தி வருகின்றார். இவர் இன்று வளர்ந்து வரும் இசைநாடக நடிகராக விளங்குகின்றார்.
கலாமணி அவர்கள் சிறந்த இசைநாடக நடிகராகத் திகழ்வதுடன், இளைய தலைமுறையினரை இந்தத் துறைக்குள் கொண்டு வந்து, இன்றைய நவீன உலகத்தில் இத்துறை அழிந்து போகாதவண்ணம் பாதுகாத்து வரும் பணியையும் செய்து வருகின்றார். இளைஞர்கள் நடிப்பதற்குத் தகுந்த இசைநாடகங்களை எழுதி, அவர்களை நடிக்க வைத்து அண்ணாவியம் செய்து வழிநடத்துகின்றார்.
தமிழ்ச் சினிமாவில் நடிகர்களாக விளங்கிய மூத்த தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள் பெரும்பாலும் மேடை நாடக நடிகர்களாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் தான். மேடை நாடக அனுபவங்கள் சினிமாவில் அவர்கள் நடிப்பதற்குப் பயன்பட்டிருக்கின்றன. கலாமணி அவர்களை அவதானிக்கும்பொழுது, இவரது மேடை நாடகங்கள் இவர் நடித்த 'ஒப்பிலாமணியே' குறும்படத்தில் சிறப்பாக வெளிப்படுவதனைக் கண்டு கொள்ளலாம். இவர் வித்தியாசமான பார்வையுடன் கனதியான நூல் விமர்சனங்கள் செய்து வருகின்ற ஒருவர். "நூல் விமர்சனங்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த கொள்கைகள் சிலவற்றை அளவுகோலாகக் கொண்டே முன்னர் செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த விமர்சனங்கள் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

எழுத்தாளர் கவனத்தில் கொள்ளத் தகுந்தவையாக அமைந்ததுடன், அத்த கைய விமர்சனங்களை எழுதி வந்தவர்கள் சிறந்த விமர்சகர்களாக இலக்கிய உலகில் கணிக்கப் பெற் றுள்ளார்கள். இன்றும் கோட பாட டி ன
அடிப் படையிலான விமர்சனங்கள், நவீன கோட்பாட்டு விமர்சனம் சிலரால் செய்யப்பட்டு
வருகின்றன. அவ்வாறின்றி எந்தக்
கோட்பாட்டு அடிப்படையும் இல்லாது எழுதுகின்றவர்கள் தமக்கென்றொரு தளமில்லாது நூல் விமர்சனங்கள் எழுதும் வேடிக்கையும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்தச் சூழலுக்குள்ளே கலாமணி அவர்கள் வித்தியாசமான, கவனத்தில் கொள்ளத் தகுந்த விமர்சனங்களைச் செய்து கொண்டிருக்கிறார். கலாமணி அவர்களின் நூல் விமர்சனங்கள் பெரும்பாலும் உளவியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே எழுதப்படுகின்றன. இவரது உளவியல் அறிவும் பாத்திரங்களின் நடத்தைகளைக் கூர்ந்து நோக்கி இலக்கியம் படைக்கும் ஆற்றலுமே இவர் எழுதும் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணங்களாக இருந்து வருகின்றன எனலாம். இத்தகைய பார்வையுடனான சிறப்பான விமர்சனங்களை இன்று எழுதுவதில் கலாமணி அவர்கள் முன்னணியில் நிற்கின்றாரென்பதனை உறுதியாகக் கூறலாம்.
இசைநாடக நடிகர்கள்
நாடகப் பாடல்கள் அனைத்தையும் மனனஞ் செய்ய வேண்டிய அவசியமும் தேவையும் இருக் கின்றன. பாடல்களை மனனஞ் செய்து இசையுடன் பாடி வந்த அவர்கள், அந்த இசை, சுருதிக்கு அமையப் (சந்தத்திற்கேற்ப) புதிய பாடல்களைத் தாமே ஆக்கிப் பாடும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள். சந்தத்துடன் இசைக்கின்றவர்களிடத்துக் கவிதை இயல்பாகப் பிரவாகிக்கின்றது. கலாமணி அவர்கள் இசை நாடக நடிகர். வேறு சில கலை, இலக்கிய ஆற்றல்கள் உள்ளவர். இவரிடமிருந்து கவிதை பிறப்பது புதுமையன்று. அந்தத் துறையில் ஈடுபாட்டுடன் இவர் சில கவிதைகளைப் படைத்துள்ளார்.
மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது ஒரு மொழியின் செழுமைக்கு வேண்டப்படுகின்ற ஒன்று. மொழிபெயர்ப்பு வழியாகத் தமிழுக்குக்

Page 8
கிடைத்த சில இலக்கியங்கள் தமிழை வளப்படுத்தி வருகின்றன என்பதனை மறுக்க இயலாது. ஒரு படைப்பினைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யும் ஒருவர், அந்தப் படைப்பு என்ன மொழியிலுள்ளதோ, அந்த மொழியிலும் தமிழிலும் பாண்டித்தியமுடைய ஒருவராக இருத்தல் வேண்டும். அதே சமயப் கவிதைகளை மொழி மாற்றஞ் செய்வது இலகுவான ஒரு செயற்பாடன்று. கலாமணி அவர்களின் இருமொழிப் புலமை காரணமாக சில கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அத்துடன்,மாணவர்களுக்குட் பயன்படத்தகுந்த கல்வியியற்றுறை சார்ந்த பெறுமதியான கட்டுரைகளையும் அவ்வட் போது தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகின்ற ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர் இவர்.
கலாமணி அவர்கள் தன்னை மாத்திரப் கலை, இலக்கியத் துறைகளில் வளர்த்துச் கொள்வதனை நோக்கமாகக் கொள்ளாமல் சமூகத்திற்குப் பலன் விளைவிக்கத் தகுந்த செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த நோக்கத்துடன் அவை (Forum) என்னும் ஒர் அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்துவதுடன், 'ஜீவநதி'(கலை, இலக்கியச் சஞ்சிகை), கடல்" (கல்வி சமூக உளவியல் ஏடு) என்பவற்றின் தொடர்ச்சியான வருகைப் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றார். அவையில் ᏧᎦ5ᎶᏡᎶul, இலக்கியவாதிகள், ஆர்வலர்களின் சந்திப்பு மாதம் ஒரு முறை இவர் இல்லத்தில் நிகழ்ந்து வருகின்றது. தகுதியான ஒருவரின் கருத்துரையைத் தொடர்ந்து பயனுள்ள கலந்துரையாடல் அவையில் இடம்பெற்று வருகின்றது. கடந்த ஜனவரி 2005இல் ஆரம்பித்த அவையில்இதுவரைநாற்பத்தைந்து நிகழ்வுகள் நடந்துள்ளன.அவை உறுப்பினர்கள் பரிசில்கள், கலாபூஷணம் ஆளுநர் விருது என்பவற்றைப் பெற்றுக் கொள்ளும் தருணங்களில் எல்லாம், அவை நிகழ்வின்போது கெளரவிக்கப்பட்டு வருகின்றார்கள். அவைக்கு வருகையாளர்களாக இருந்து கருத்துரை வழங்கியவர்களை, பின்னர் அழைத்து விருது வழங்கிக் கெளரவித்த பெருந்தன்மையான செயலையும்இவர்கடந்தகாலத்தில்நிறைவேற்றி இருக்கின்றார்.
இவரது குடும்பத்திலுள்ள அனைவரும் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருப்பது இவருக்குரிய ஒரு சிறப்பு. மூத்த மகன்மார் இருவரும் அவர்கள் வழியில் வந்த மருமக்கள் இருவரும் பட்டதாரிகள். இளைய மகன் O/L பரீட்சையில் 6

5
மிகச் சிறந்த சித்தி பெற்று, இப்பொழுது A/L படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.
கலாமணியின்இத்தனைசெயற்பாடுகளுக்கும் ஆதரவாகப் பின்னணியில் இருக்கின்றவர் அவரது மனைவி கலை, இலக்கியவாதிகள் பற்றிப் பொதுவாக ஒரு குறைபாடு கூறப்படு வதுண்டு. தமது சொந்தக் காரியங்களில் கவனம் கொள்ளாது விட்டு விடுவது அனேகமாக அவர்களது இயல்பு. அவர்களை விளங்கிக் கொண்டு நடப்பதற்கு இயலாத மனைவிமாரால் கலைஞர்களின் குடும்பங்கள் இடையில் தெறித்துப் போவதுண்டு. பன்முகச் செயற்பாட்டாளரான கலாமணி அவர்களின் தனிப்பட்ட குடும்பப் பொறுப்புகளைச் செம்மையாகநடத்தி இவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றவர் இவரது மனைவி.
கலாமணி அவர்களின் கலை, இலக்கியச் செயற்பாடுகளுக்குப் பலமான ஒரு துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர் மூத்த மகன் ஆவார். இவரேஜீவநதி சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் பரணிதரன்.
கலாமணி அவர்களின் மணி விழா, இவர் படித்த நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் கண்டவர் கண் வியக்கத்தகுந்தவண்ணம் 07. 04, 2013இல் நடைபெற்றது. பேராசிரியர்எஸ் சிவலிங்கராஜா தலைமையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடக்கம் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் அரங்கு நிறைந்திருந்தது. உயர்பதவியில் உள்ளவர்கள், கல்விமான்கள், இவரது பல்கலைக்கழக மாணவர்கள் என்பவர்களால்விழாமண்டபம்நிறைந்திருந்தது. விழாவுக்கு வருகை தந்தவர்கள் பெரும்பாலும் மாலை சூட்டி, பொன்னாடை போர்த்தி, பரிசில் வழங்கிக் கெளரவித்தார்கள். இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு மணி விழா நடைபெறவில்லை என வியந்து பாராட்டத்தகுந்தவண்ணம் நடைபெற்ற விழாவின் உச்சம் நூல் வெளியீடு ஆகும். ஜீவநதி வெளியீடு" ஆக இவரது பல் துறைசார்ந்தஐந்துநூல்கள்வெளியிடப்பட்டன. இவற்றுக்கெல்லாம் சிகரமாக “பல்துறை வல்லோன் கலாநிதி த. கலாமணி மணிவிழா மலர்-2013” என்னும் மிகப் பெறுமதியான ஒரு நூலும் வெளியிட்டு வைக்கப்பெற்றது. இன்று மணி விழாக் காணும் கலாநிதி த. கலாமணி அவர்கள் இன்னும் நீண்ட காலம் பல்துறை சார்ந்த கலை, இலக்கியப் பணிகளையும் கல்வியியற்றுறை சார்ந்த பணிகளையும் தொடர்ந்து ஆற்றி வர வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 9
POOBALASIN
IMPORTERS, EXPORTERS
STATIONE
பூபாலசிங்கம் புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்
தலை இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11, இலங்கை, தொ.பே.: 2
கிளைகள் : 340, செட்டியார் தெரு, கொழும்பு 1
தொ.பே.: 2395665
இல. 309 A-2/3, காலி கொழும்பு 06 தொ.பே.:45575,
புதிய வ
| பதிப்பாசிரியர்
ந.முருகேச பாண்டி
சுரேஸ்குமார் இந்தி யூமா வாசுகி வெங்கடசுப்புராய ர குமுதம் இரா.மணிகண்டன்
புத்தகங்களின்பெயர் மறுவாசிப்பில் மரபிலக்கியம் சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை , நானும் ஒருவன் புதினான்காவது அறை கலகம் செய்யும் இடதுகை ரஜினி ஸ்பெஷல்
வீரம் விளைந்த தமிழ் பூமி பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி காந்தியை சுட்ட பின் எப்படி எழுதுகிறார்கள் ஒத்தையடிப் பாதை உலக வரலாற்றுக் களஞ்சியம் விகடன் இயர்புக் 2013' வாக்குமூலம் தமிழ்த்தேசியம் எனும் ] அடையாள அரசியல் | நுகர்வெனும் பெரும் பசி சிறைப்பட்ட கற்பனை
வெளிச்சத்தின் நிறம் கருப்பு என்பெயர் பட்டேல் பை.
லோகநாயகி பா.முருகானந்தம் ரஞ்சன்
இரா.மணிகண்டன்
ஐ.சண்முகநாதன் விகடன் பைம்பொழில் மீரா
கானகன் ராமச்சந்திர குஹா
வரவரராவ் முகில் பொன்.சின்னத்தம்!
முருகேசன் காலித் ஹீசைனி
ஏ.எஸ்.கே.
பட்ட விரட்டி கடவுள் கற்பனையே பத்தொன்பதாவது நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900 காஞ்சி
மயிலை சீனிவெங்
மு.நஜ்மா, மு.கஸ்து அ.மோகனா, மு.கா அய்யப்பணிக்கர்
ந.மனோகரன்
வீ.அரசு
இந்திய இலக்கிய கோட்பாடுகள் சங்க இலக்கியம் பன்முக
வாசிப்பு தமிழ் யாப்பிலக்கண உரை
வரலாறு பால் நிலாப்பாதை எனக்கு எதுவோ. உனக்கும் அதுவே
முனைவர் பா.இள இளைஞானி இலை
இசைஞானி இளை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

TGHAM BOOK DEPOT
5, SELLERS & PUBLISHERS OF BOOKS, RS AND NEWS AGENTS.
புத்தகசாலை க்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள் ஊமை :
2422321. தொ. நகல்: 2337313 மின்னஞ்சல் : pbdho@sltnet.lk
வீதி,
இல.4A, ஆஸ்பதிரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
2504288
சரவுகள்
விலை -
பதிப்பகம் நற்றிணை பதிப்பகம்
உயன்
390.00
ரெஜித்
நாயகர்
காலச்சுவடு நற்றிணை பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் குமுதம் வெளியீடு குமுதம் புத்தகம் வெளியீடு
390.00 468.00 351.OO 468.00 390.00
T
குமுதம் புத்தகம் வெளியீடு குமுதம் புத்தகம் வெளியீடு குமுதம் புத்தகம் வெளியீடு குமுதம் புத்தகம் வெளியீடு
390.00 429.00 507.00 312.00
விகடன் பிரசுரம் விகடன் பிரசுரம் உயிர்மை பதிப்பகம்
1033.50 487.00 507.00
ர
மதுரை பிரஸ் எதிர் வெளியீடு எதிர் வெளியீடு சிகத்சென்ஸ் பப்ளிகேஷன்
பாப்பா பாப It 1 1ா
624.OO 741.00 585.00 780.00
எதிர்வெளியீடு எதிர் வெளியீடு எதிர் வெளியீடு
1168.00 975.00 273.00
பரிசல்
780.00
டசாமி கரி
Tமாட்சி
பரிசல்
702.00
மாற்று
780.00
மாற்று
702.00
மாறன் ராயராஜா
மாற்று குமுதம் புத்தகம்
780.00 487.50
யராஜா
குமுதம் புத்தகம்
585.00

Page 10
முற்றி விளைந்த முதிரைமரக் குத்திபோல் பீப்பாவயிறும் திடகாத்திரமான 6035 கால்களோடு முறுக்கு மீசையும் கொவ்வைப் பழங்கள் போல் எந்த நேரமும் சிவந்து கிடக்கும் கண்களுமாக கரும் குரு மென்ற தார் நிறத் தோற்றத்தோடு, பார்ப்பதற்கு புராண காலத்து வீமன் போல் ஆசான பாவனாகத் தோற்றம் தருவான் துறைக்காறன் செம்பாப்போடி, ஆனால் கல்லுக்குள் நீர் மறைந்து கிடப்பது போல் அவனது முரட்டுத் தோற்றத்துக்குள்ளும் எவரையும் நேசிக்கும் மனித நேயம் மறைந்துகிடந்தது.
பதினைந்து வயது நடக்கும் போதே துறைக்காறனாக, வள்ளத்திலே சனங்களை ஏற்றிப் பறித்த தகப்பன் வேலாப்போடிக்கு உதவியாக வள்ளத்திலே ஏறிக்குந்தியவன்ஐம்பது வருடங்களாக வள்ளத்தை ஊண்டிச் சனங்களை ஏற்றிப்பறித்த செம்பாப்போடி, தனது அறுபத்து ஐந்தாம் வயதில் மண்முணை ஆற்றிலே ஜலசமாதி ஆனது எவரும் எதிர்பார்க்காத துயரச்சம்பவந்தான்.
துறைக்காறனாகச் ஜிவியம் நடத்திய தகப்பன் வேலாப் போடிக்கு பத்து பால்கறக்கும் எருமை மாடுகளும் பதினைந்துபசுமாடுகளும்இருந்தன. பள்ளிக் கூடப்பக்கமே கால் வைக்காத ஊர் சுற்றும் விடலைப் பருவமான செம்பாப் போடி அந்த மாடுகளுக்குப் புறகால் உப்புக் கரைச்சைப் புல்வெளிப் பக்கமும், அறுவடையான வேளாண்மையல் பக்கமும் மேய்ச்சல் காட்டி மாடு மேய்த்துத் திரிந்தவன் தான். தனது தகப்பன் வேலாப்போடிக்கு வயது ஏறி தைரியம் குறைந்து வரும் பொழுது தங்களது பரம்பரைச் சொத்தான சேகப்பத்துத்துறையில் தகப்பனுக்கு உதவியாக வள்ளம் ஊண்டத் தொடங்கினான்.
 

பெட்டிகள் நிறைய அரிசிகளோடு வரும் பெண்களை சாதுரியமாகப் பட்டப் பெயர் சூட்டிக் கிண்டலாகப் பகிடிபேசி வள்ளத்திலே ஏற்றவைப்பான்செம்பாப்போடி, கறுத்தமைனா, கடல் காகம் முசல்குட்டி, ஊமத்தம்பூ பூக்காரி கொண்டையம்மா, கூனித்தாய், புட்டுக்காரி இப்படியெல்லாம் வாய்க்கு வந்த மாதிரி அரிசி கொண்டுவரும் பெண்களுக்கும் பட்டம் சூட்டி, சிரிப்புக் காட்டி, கண்இமை வெட்டும் நேரத்துக்குள் எழுவான் பக்கம் இருக்கும் சேகப்பத்துத்துறைக்கு வள்ளத்தைக் கொண்டு வந்து விடுவான் செம்பாப்போடி,
இப்படி அவனது வள்ளத்திலே அரிசிப் பெட்டியோடு பிற ஊர்களுக்கு அரிசி விற்க வந்து திரிந்து, காஞ்சிரங்குடாத்துறைைைய அக்கரைப்பட்டுப் போனால் Lעוibg5 வேளாண்மை வயல்களின் உறைவிடமாக விளங்கிய இலுப்படிச்சேனை கந்தையாப் போடியாரின் மகளான செண்பகம், செம்பாப் போடியின் கண்களுக்குப் பட்டு, எப்படியாவது அவளை அடைய வேண்டுமென்ற துடிப்பால் வெட்கத்தைப் பாராமல் செண்பகத்திடமே ஒருநாள், "ஏம்புள்ளஉன்னன்னக்குப்புடிச்சிருக்கு. என்னக் கலியாணம் கட்டிக்கிறாயா” என்று வாய் நிறையச் சிரிப்பைச் சிந்தியவாறு அவசரம் அவசரமாகக் கேட்டு விடுகிறான். அவளோ அடக்க முடியாத வெட்கத்தால் தலை குனிந்தவாறு ஒன்றுமே பேசாமல் போய் விடுகிறாள். நல்லவேளை வேறு பெண்கள் இதனைக் கவனிக்கவில்லை. 豪
அழகு ததும்ப, கை வண்ணம் நிறைந்த சிற்பியால் செதுக்கப்பட்ட அற்புதச் சிலையாக மிளிர்ந்தவள்
ம்பதி ஆதங்கராசா
1a
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 11
செண்பகம். மூக்கும் முளியுமாகப் பால் போன்ற வெள்ளையோடு, கமுகம் பாளையை விரித்தாற்போல் நீண்டு செறிந்து கிடக்கும் கூந்தல் அழகோடு பார்க்கும் இளந்தாரிகளை கொக்கிபோட்டு இழுக்கும் அழகுத் தேவதை அவள். தகப்பன் கந்தையாப் போடி தாந்தாமலைக்காட்டிலே மரம் வெட்டப்போய் வெட்டிய மரத்தின் உறுதியான கிளை ஒன்று காலிலே வந்து விழுந்து ஒரு கால் முடமாகிப்போய்நடக்கமுடியாமல்வீட்டோடு முடங்கிப் போனதனால், தாயும் வயது போன காரணத்தினால் குமர்ப்பெண்ணான செண்பகம் அரிசிப் பெட்டியைச் சுமந்து கொண்டு ஊர் ஊராக விற்க நேர்ந்தது.
ஒரு வருஷமாக செண்பகம் சேகப்பத்துத் துறையால் அரிசிப் பெட்டியோடு அக்கரப்பட வருவதும் செம்பாப்போடியும் அவள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் என்று, அவசர உலகத்தில் காலத்தைத் தள்ளிவர, இனிமேலும் பொறுத்திருக்க முடியாத அவஸ்த்தையில் எப்படியாவது அவள் செண்பகத்தை இலுப்படிச் சேனைக்குப் போய் அவளது தாய் தகப்பனிடம் கதைத்துக் கலியாணத்தை முடித்துத் தரும்படி உடும்புப்பிடியாக தகப்பனிடம் கலியாணவரம் கேட்டு வலுக்கட்டாயமாக உறுதியாக நிற்க, மகனின் இளம்பருவத்து கலியாண மோகத்தொல்லை பொறுக்க முடியாமல் காஞ்சிரங்குடாத் துறையை அக்கரப்பட்டு வேலாப் போடியாரும் அவரது பொஞ்சாதி சீதையும் செண்பகத்தைக் கலியாணம் கேட்டு அவளது ஊரான இலுப்படிச் சேனைக்குப் போய் வேளாண்மை வயல்கள் இருக்கும் வட்டைக்குள் பெரிய களிமண் வீடு இருக்கும் வளவுக்குள் கால்வைத்தனர்.
செண்பகந்தான் அவர்களைக் கண்டதும் "யாரோ வந்திருக்காங்க வாகா அம்ம" என்று சத்தம் போட்டு அழைக்க அவளது தாய் தெய்விமுற்றத்துக்கு வந்து எட்டிப்பார்க்கிறாள். வயது போன ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் முற்றத்திலே நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். உடனே அவர்களைப் பார்த்து, "வாங்க ஆரப் பாக்கவேணும்” என்று மெதுவாகக் கூறியவாறு இருக்கச் சொல்லி வீட்டு முற்றத்திலே காங்கேயனோடை முஸ்லீம் பெண்கள்குடிசைத்தொழிலாகப்பின்னிவிற்கும் பன்பாயை விரித்துப் போடுகிறாள் தெய்வி,
அவர்கள் வந்த ரகசியம் செண்பகத்துக்கு ஒரளவு புரிந்த மாதிரி உணர்வு ஏற்பட அவள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

ஒட்டமாக ஓடிப் போய் பள்ளத்து வயல் பக்கம் நின்ற தகப்பனைக் கூட்டி வருகிறாள். மரம் விழுந்து கால் முடமாகிப் போன கந்தையாப் போடியார் கெந்திக்கெந்தி ஒரு பக்கம் சாடையாகக் கெழிந்தவாறு வந்தவர், பாயில் இருப்பவர்களை உற்றுப் பார்த்தவாறு “யாரு துறைக்காறன் வேலாப் போடியா" என்று கேட்டவாறு அருகில் அவதிப்பட்டுக் குந்திக்கொள்ளுகிறார்.
"ஒண்டா கூட்டாளி, நீங்க முனக்காட்டச் சேர்ந்த ஆக்கள்தானே. அந்தநாளில் இலுப்படிச் சேனையில் காடு வெட்டி சேனப்பயிர் செய்யக் குடியேறிய ஆக்கள். ஒரு வகையில் நீங்க எங்களுக்குச்சொந்தமான உறவுக்காரர்கள்தான்” என்று செண்பகத்தின் தகப்பனைப் பார்த்துக் கூறியவாறு வெற்றிலை போட்டுச் சிவந்து போய்க்கிடக்கும் வாயை அகல விரித்தவாறு சிரிக்கிறார் வேலாப் போடியார்.
"என்னகா இந்தப் பக்கம் திடீரென்று புறப்பட்டிருக்கிறியள்? குத்தகைக்கு வெள்ளாம வயல் பார்க்க வந்ததா? இல்லாட்டி பால்கறக்கிற எரும, பசு மாடுகள் வாங்க வந்ததா? இல்ல உழவுக்கு மாடுகள் தேவையா?” கந்தையாப் போடியார் வினயமாக அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
"அதெல்லாம் ஒண்டுமில்லகா. உங்கட மகள எண்ட மகனுக்கு பொண் கேட்டு வந்திருக்கம்” மெதுவாக வந்த சங்கதியை வேலாப் போடியார் கூறினார்.
"அப்படியா சங்கதி, உங்களுக்கு எத்தன ஆம்புளப்புள்ளங்கள்?
“எனக்கு ஆம்புளையோ, பொம்புளையோ பருப்புப் போல ஒண்டுதான்கா எண்ட LD56ig5/Tait சேகப்பத்துத்துறைய இப்ப பாத்துக்கிற, நல்ல தைரியசாலி எந்தக் கெட்ட பழக்கமும் கிடையா. முதலக்குடா ஆத்தோரம் உப்புக் கரைச்சையை வெளியாக்கி வெள்ளாம செய்வதோடு, இருநூறுக்கு மேல் இளம் தென்னைகள் குலைகட்டிக் காய்ச்சிக் கிடப்பதோடு, சகல விதமான வாழை மரங்கள், மாமரங்கள், பிலாமரங்கள், கறி ஆக்கிற ஆசணிப் பிலா மரங்கள், கொய்யா, தோட, இலுமிச்சு அன்னமுன்னா, பப்பாசி, கரும்பு, அன்னாசி, முருங்கமரம், இலுப்ப, வேம்பு, தேக்கு என்று சோலையாக முப்பது ஏக்கர் பூமி பரந்து கிடக்குது. இதவிட நூத்துக் கணக்கான பால் கறக்கிற மாடுகளும், ஆடுகளும் கோழிகளும் நிற செல்வமாக இருக்கு. அதுக்குள்ள நாட்டு ஒடுபோட்ட நாலறவீடும் பெரிய மண்டபமும்
9

Page 12
குசினியும் இருக்கு. இதெல்லாம் எண்ட புள்ளைக்குத்தான். எனக்கு வேறுயாரு இருக்கா. நானும், எண்டமகனும் கஸ்ரப்பட்டுச்சம்பாரித்த சொத்துகள். கரச்சப் பூமிக்கு எண்ட மகன்ட பேரில் உறுதியும் வாங்கி எடுத்திட்டன். எண்ட புள்ளையிரகடும் உழைப்பால் தான் உப்புக்கரச்ச தங்கம் விளையும் பூமியாகக் காட்சி தருது." துறைக்காறன் சுயபுராணம் பாடி முடித்தார்.
"அப்படியா, நல்லா கஸ்ரப்பட்டு உழைச்சிருக்கியள். முனக்காடு, முதலக்குடா ஆக்கள் வெள்ளாமச் செய்கையில் யாருக்கும்
பாபரி பவ HE
சோட போகாத ஆக்கள்தான். எங்களுக்கு இந்த எட்டு ஏக்கர் வெள்ளாமப் பூமிதான் சொந்தமா இருக்கு. மூண்டு பொம்புளப் புள்ளங்களுக்கும் காணியப் பிரிச்சு எழுதிப் போட்டன்." என்று கந்தையாப் போடியார் விக்கி விக்கிக் கூறினார்.
சிரித்துக் கொண்டே வேலாப் போடியார்,

"வேணுமெண்டா புள்ள பேரில் இருக்கிற காணித்துண்ட நீங்க செய்யுங்க. நான் உங்கிட புள்ளைய அந்த முப்பது ஏக்கருக்கும் சொந்தக்காரியாக கூட்டித்துப் போயிடுவன்" என்று துறைக்காறன் உண்ம நிலையப் புட்டு வைக்க, செண்பகத்தின் தாயும், தகப்பனும் பூரண சம்மதம் தெரிவித்துக் கலியாணத்துக்கு நாள் பார்க்கத் தீர்மானம் எடுத்து விட்டார்கள்.
ஊருக்குள் அரிசி விற்பதற்காக நாளாந்தம் சேகப்பத்துறையால் அக்கரப்பட வந்த, பார்ப்பவரை ஒரு தரம் திரும்பிப் பார்க்க வைக்கச் செய்யும் அழகியான செண்பகத்தைத் தனது மனைவியாகக் கலியாணம் முடித்து முதலைக்குடா ஆற்றோரம் செழிப்பாகப் பசுமை பூத்துக் குலுங்கும் உப்புக்கரைச்சைத் தோட்டத்துக்கு அழைத்து வந்து சந்தோஷமான வாழ்க்கையை நடத்தி வந்தான், துறைக்காறன் செம்பாப்போடி. உப்புக்கரைச்சையின் ஒரு பக்கம் தங்கக் கதிர்களைத் தூவி விட்டதுபோல் தென்றல் காற்றிலே நடனம் செய்யும் நெற்பயிர்கள் நிறைந்த வயல் நிலங்களின் சிறப்பும், எந்த நேரமும் நிறை கர்ப்பிணிக் கோலம் பூண்டு பாளைகளைத் தள்ளித் தள்ளி குலைகுலையாக காய்த்துக்கிடக்கும் தென்னை மரங்களின் சுகந்தம் தரும் குளிர்ச்சிக் காற்றும், கைகளாலே ஆய்ந்து வெட்டிக் குடிக்கும் அமுதமான இனிப்பு இளநீரும், விதம் விதமான பழ வகைகளின் அற்புதச் சுவையும் செண்பகத்தைக் கருக்கொள்ள வைத்தன. முதல் குழந்தை ஆணாகவும், அதன் பிறகு ஐந்து பொட்டைக் குட்டிகளும் பெற்று நிறை செல்வமான இல்லறவாழ்க்கையை அனுபவித்து செண்பகம், துறைக்காறன் செம்பாப்போடியின் தர்மபத்தினியாக வாழ்ந்து, துறைக்காறனுக்கு சகல கருமங்களிலும் கைகொடுத்து உதவினாள்.
கள்ளு இறக்கும் இந்தியாக்காறச் சுப்பையாவுக்கு முதிர்ந்த தென்னை மரங்களைக் கொடுத்ததனால் செம்பாப் போடிக்கு மத்தியானமும், பின்னேரமும் இனிப்புக்கள்ளும், வச்சிக்கள்ளும் எந்த நாளும் குடிப்பதற்குக் கிடைத்தன. எத்தனை போத்தல் கள்ளுக் குடித்தாலும் துறைக்காறன் செம்பாப்போடி ஒரு போதும் நிலை குலைந்து, தன்உணர்வு கெட்டு கேவலமாக நடந்தது கிடையாது. ஒவ்வொரு நாளும் வள்ளம் சேகப்பத்துத்துறை ஆற்றிலே ஓட்டம் கண்டு மக்களை ஏற்றி இறக்கும் எப்படியான மோசமான, வள்ளத்தைப் புரட்டி விடக்கூடிய வெறித்தனமான காற்று அடிக்கும்போதும், காற்றுக்கு ஈடு கொடுத்துச்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 13
சாதுரியமாக வள்ளத்தைத் திசை திருப்பி ஒரு முள்ளுக் கொப்பும் முறியாமல் வள்ளத்தைக் கரைசேர்த்து Luu GOOTLb செய்பவர்களை பவித்திரமாக இறக்கி விடுவான் துறைக்காறன் செம்பாப்போடி,
தனது உப்புக்கரைச்சைத் தோட்டத்துக்கு அருகில்தான் தனது அக்கரைப்படுத்தும் வள்ளத்தைத் துறைக்காறன் செம்பாப்போடி கட்டி வைப்பது வழக்கம் இரவு வேளைகளில் யாருக்கும் பூச்சி கடிச்சாலோ, ஆஸ்பத்திரி இல்லாத ஊரிலுள்ள கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளைப் பெறுவதற்கு மட்டக்களப்பு பெரிய ஆஸ்பத்திரிக்குப் போவதற்கோ பதட்டத்தோடு வந்து துறைக்காறனைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டு அக்கரைப்படுத்தச் சொன்னால் மறுபேச்சுக் கூறாமல் எந்தப் பயமும் இல்லாமல் உடனே எழும்பி, அந்த வேதனைக்குரியவர்களை அக்கரையில் சேர்த்து விட்டுத்தான் செம்பாப்போடி திரும்புவான். தலை கெட்ட கள்ளுவெறியில் நித்திரை கொண்டாலும் அவன் தனது மனித நேயம் மிக்க கடமையைச் செய்வதற்கு ஒரு பொழுதும் பின் வாங்கியதில்லை. கண்ணியமும் கடமை உணர்வும் மனிதநேயமும் மிக்கவனாக வாழ்ந்த துறைக்காறன்செம்பாப்போடிஅந்தப்படுவான் கரை மக்களுக்கு அக்கரைப்படுத்தும் காவல் தெய்வமாக விளங்கினான்.
நாடு குழம்பிப்போய் எங்கும் பயமும் பீதியும் தலைவிரித்தாடிய வேளையில் செம்பாப்போடி துணிந்து சேகப்பத்துத் துறையால் மக்களை அக்கரைப்படுத்தும் ஊழியத்தைப் பிசகாமல் செய்து கொண்டுவந்தான். மண் முனைத்துறை ஒரம் பாரிய இராணுவ முகாம் அமைத்திருந்தார்கள். அந்த முகாமிலிருந்து வரும் ஆமிக்காறனுகள் சேகப்பத்துத் துறைக்கு வந்து துறைக்காறனை அச்சுறுத்தி, பயம் காட்டி இயக்கங்களைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவன் எதற்கும் பயப்படாமல் சாதுரியமாக அவர்களோடு கதைத்துப் பழகி நல்ல துறைக்காறனாக நடந்ததால் பயந்து பயந்து பயணம் செய்யும் பெண்களுக்கும் அவன் ஒரு பாதுகாப்புக் கவசமாக விளங்கினான்.
மண்முனைத்துறைக் கேம்பிலிருந்து எந்த நேரமும்துவக்குவெடிகளும் ஷெல்வீச்சுக்களும் நடந்ததனால் படுவான்கரைப் பகுதியிலே வாழ்ந்த குடிமக்கள் எரிமலைக் குழம்புக்குள் சிக்குண்டது போல் பயந்து வாழ்ந்து வந்தார்கள் இயக்கங்களின் உறைவிடமாகப் படுவான்கரைப் பகுதி இருந்ததனால்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

ஆமிக்காறனுக்கு அங்கிருந்து துறையால் அக்கரப்படுபவர்களை சந்தேக் கண்களோடே பார்க்கத் தொடங்கினார்கள். றவுண்டப்பும் சுற்றி வளைத்துத் தேடுதலும், துருவித்துருவி சோதனை நடத்துவதிலும், ஆட்களைப் பிடித்து வைத்துப் பயம் காட்டுவதிலும் ஆமிக்காறனுகள் தீவிரமாக இருந்ததனால் வாலிப வயதான ஆண் பிள்ளைகளும், இளம் குமர்ப் பெண்களும் துறையால் அக்கரப்பட வருவதில்லை. ஆனாலும் வயது போனவர்களை அக்கரப்படுத்தும் தொழிலை அவன் கிரமமாகச் செய்து வந்தான்.
காலம் பந்தயக் குதிரை வேகத்திலே ஓடி தனது கடமையை நிறைவேற்றிக் கொண்டு வரும் பொழுது, துறைக்காறன் செம்பாப் போடியும்வயதுஏறிநரையும், மூப்புமாகி, தனது பிள்ளைகள் எல்லோருக்கும் கல்யாணம் முடிச்சு அவர்கள்வேறுவேறுஊர்களுக்குப்போனபிறகு கடைசி மகள் கனகந்தான் துறைக்காறனுக்கும் மனைவிக்கும் உதவியாக இருந்தாள். வயது மூப்பேறி அறுபத்தி ஐந்து வயது நடக்கும் போதும் துறைக்காறன் செம்பாப்போடி தனது வள்ளம் ஊண்டி அக்கரைப்படுத்தும் தொழிலை கைவிடவேயில்லை. தனக்குப்பிறகு துறையைப் பார்க்க தனது மக்களை அந்தத் தொழிலைச் செய்யப் பழக்கவுமில்லை. உடம்பிலே ஒரு தளர்ச்சி இருந்தாலும் சேகப்பத்துத்துறையை தைரியமாகநடத்திவந்தான். சேகப்பத்துத்துறை, செம்பாப்போடியின் உயிர்மூச்சாக விளங்கியது. இந்தப் Luu IsildjLDITGOT போர்க்காலத்தில் சேகப்பத்துத்துறை பயணம் செய்வதற்கு ஒரு பாதுகாப்பானதுறையாக விளங்கியது. அவசரத் தேவைகளுக்கு மட்டக்களப்பு நகரத்துக்குப் போக வருபவர்கள் குறுக்கு வழிப் பாதையான சேகப்பத்துத்துறையையே நாடினார்கள். அரிசிவிற்கும் பெண்களும் ஏன் பொதுவாகப் பெண்கள்எவரும்துறையால்அக்கரப்படுவதற்கு வருவதுமில்லை.
துறைக்காறன் செம்பாப் போடி மனம் கலங்காமல் பயம் கொள்ளாமல் வள்ளத்தால் அக்கரப்படுத்திக் கொண்டே வந்தான். சேகப்பத்துத்துறையில் பழைய கலகலப்பு இல்லாவிட்டாலும் மனஉறுதி கொண்ட செம்பாப்போடியால் அந்தத்துறையில் வள்ளம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. நம்பி வரும் பயணிகளை அவன் ஏமாற்றுவதில்ல.
அன்று கொஞ்சம் வச்சிக்கள்ளைத் தாறுமாறாகக் குடித்த படியால் தன்னை அறியாமல் நித்திரையில் கிடந்தான்
11

Page 14
துறைக்காறன். மழை வேறு பெரும் எடுப்பாகப் பெய்து கொண்டிருந்தது. புதுவெள்ளம் பரவி ஓடிய நேரம் லேசான காற்று வீசியதால் பழுத்த தென்னை மரங்களிலிருந்து தேங்காய்கள் மண்ணிலே தொப்புத் தொப்பென விழும் ஓசை பரவலாகக் கேட்கிறது. இலுப்பை மரத்திலே குடிகொண்டு கிடக்கும் ஆந்தைகளின் மரண அலறல் காதுளைக் குடைகிறது. மழைக்குளிர் தாங்காமல் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த மாடுகள் ஓயாமல் சத்தம் போட்டுக் கத்துகிறது. எந்த வெள்ளம் வந்தாலும் துறைக்காறனின் உப்புக்கரைச்சைத் தோட்டத்துக்குள் ஒரு சொட்டுத் தண்ணியும் ஏறாது. அப்படிக் களியும், மண்ணும் போட்டு உயர்த்தி எந்த வெள்ளமும் போகாதபடி உப்புக்கரைச்சையை சுற்றிவளைத்து இறுக்கமான அணை போட்டிருந் தான் துறைக்காறன்.
மழை கொஞ்சம் ஓய்ந்த நேரம். நேரம் பன்னிரெண்டு மணிக்கும், இரண்டு மணிக்கும் இடையிலிருக்கும் ஊரிலே எந்த அசுமாத்தமும் இல்லாத நேரம் ஊர் நாய்கள் மட்டும் தூரத்திலே ஓயாமல் குரைக்கும் சத்தம் மட்டும் மெலிந்து கேட்கிறது. மண்முனைத்துறைக் கேம்பிலே அடித்த ஷெல் அடியும் ஓய்ந்து கிடந்தது.
அந்த நேரம் துறைக்காறனின் கேற்றடியில் வந்து கத்திக் குழறி சத்தம் போட்டுக் கூப்பிட்ட ஒரு வயது போன பெண்ணின் அபயக் குரல்
தமிழ்நாடு அரசின் சி அயலகத் தமிழ் படைப்பிலக் விருதினை எழுத்தாளர் அகி
2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில்
சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்க மற்றும் அந்நூல்களைப் பதிப்பித்த 22 | மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல் அவர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்முறை அயலகத் தமிழ் படைப் ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளர் அகில (அ சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகு தொகுப்பில் உள்ள மகுடக்கதை உள்ளிட்ட பெ சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றவை என் அகில் அவர்களை 'ஞானம்' வாழ்த்தி மகிழ்கி

கேட்டு கள்ளு வெறியில் படுத்துக் கிடந்த துறைக்காறனின் காதுக்குள் வந்து பட்டுச் சிதற, துடித்துப் பதைத்துச் செம்பாப் போடி கேற்றைத் திறந்து பார்த்தால் பிள்ளைப் பெறத்துடிக்கும் ஒரு இளம் பெண்ணோடு, இன்னுமொரு வயது போன பெண்ணும் நிற்பதைப் பார்த்து, ஒரு பேச்சும் பேசாமல் கட்டிவைத்திருந்த வள்ளத்தை ஆற்றுக்குள்ளே இழுத்து இறக்கிவிட்டு இரு பெண்களையும் லாவகமாகத் தூக்கிப் பலகையிலே இருக்கவைத்து விட்டு ஒரு ஆவேசத்துடிப்போடு வள்ளத்தை மிகவும் வேகமாக அந்த வயதிலும் அசையாத தைரியத்தோடு அந்தக்கரையை நோக்கி ஊண்டிக் கொண்டு போனான் துறைக்காறன்.
கொஞ்சத்தூரம் வள்ளம் ஓடியிருக்கும். மழை இருட்டில் ஆற்றிலே எந்த அசுமாத்தமும் தெரியாத நேரம் ஓடிப் போன வள்ளம் எதிர்பாராத விதமாக படீர் படீரென்ற ஓயாத வெடிக்குள் அகப்பட்டு துண்டு துண்டாகச் சிதறி, துறைக்காறனும் வள்ளத்திலே பயணம் செய்த பிள்ளைப் பெறத் துடித்த இளம் பெண்ணும் அவளுக்கு உதவியாக வந்த வயது போன பெண்ணும் சின்னா பின்னமாகப் போய் சேகப் பத்துத் துறை ஆற்றிலே இரத்த வெள்ளத்திலே சங்கமமாகிப் போனதை விடிந்த பிறகுதான் அந்த முதலைக்குடாக் கிராமமும், படுவான்கரைப்பகுதியும் அறிந்து கொண்டது.
சிறந்த
கியத்துக்கான ல் பெறுகிறார்!
ல் 28 வகைப்பாடுகளில் களுக்கான ஆசிரியர்கள் திப்பகத்தாருக்கு பரிசு அமைச்சர் ஜெயலலிதா
பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் கிலேஸ்வரன் சாம்பசிவம்) எழுதிய "கூடுகள் பயிற்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சிறுகதைத் பரும்பாலான சிறுகதைகள் 'ஞானம் நடத்திய பது குறிப்பிடத்தக்கது. பரிசு பெறும் எழுத்தாளர்
றது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 15
எங்கள்
கதை ே
த ஐ
அகத்துள் அழியாப் பதிவுகளாக இந்த இகத்துள் நடந்த போரனர்த்தங் கேள் நகர்ந்து போனதப் போர்காலத்தே நாசம் புகுந்து இளைத்த கொடுமைகள் கேள்
பாப;1LEELHRபயப்படாLAAEEாரியா
நந்திக் கடற்கரை ஓரத்திலே நம்மின் நம்பிக்கை மாண்டு புதைந்தது கேள் கெந்தகக் குண்டுகள் கொட்டுண்டு வெடிக்க கூண்டோடு நம்மவர் அழிந்தனர் கேள்
இயறு
மனித மாண்மியம் மறந்த மனத்தினர் மனித சங்காரம் ஆடினர் கேள் புனிதரை போற்றும் புண்ணிய பூமியில் மனிதப் புனிதம் மரித்ததை கேள்
மனதினுள் வலியிடும் கண்ணீர்க் கதைகள் வரலாற்றுப் பதிவான நாளவை கேள் இனமொன்று அழிவில் ஆன பொழுதினில் சனநாயகம் மீண்டது என்றனர் கேள்
பரந்து விரிந்த போர்க்களம் எங்கிலும் உயிரறுந்த பிணங்கள் குவிந்தன் கேள் இறந்து கிடந்த அன்னை மடியில் பாலுவிந்த பிள்ளையின் பரிதாபங் கேள்
பயங்ELEAEHபாட்டாபு
இருண்ட பொழுதுகள் புலருமுன்னே எங் இருப்பிடச் சுவடுகள் அழிந்தன கேள் உற்றதம் பசிக்கு உணவின்றிக் குடல் வற்றிச் செத்தார்க்கு கணக்கில்லை கே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

-களீைபரிதி சி.சிவநேசன் -
அல்வாயூர்
கந்தக நாற்றக் காற்றிடை எம்மின் சாந்தங்கள் திணறித் துடித்தனர் கேள் அந்தரப் பட்டுப் பலதிசை ஓழயோர் அவலத்தின் வாய்க்கிரை ஆனாரே கேள்
உயிர்காப்புக் குழிக்குள் அடைக்கலம் புகுந்தவர் அதற்குள்ளே அந்திமம் ஆனாரே கேள் உயிரற்றுக் கிடந்த உடலங்களை நாய்நரி கடித்துக் குதறித் தின்றதைக் கேள்
எத்தனை எத்தனை கோக் கொடுமைகள் களமாடிய கறுப்பு நாளங் கேள் எத்திசைத் தேசமும் ஏதென்று அறியுமுன் எம்மவர் செத்துத் தொலைந்தனர் கேள்
சித்தம் கலங்கிடும் சமர்க்களக் கோரங்கள் தமிழரின் உயிர்வலிக் கணங்களாயின கேள் யுத்தத்தின் சத்தங்கள் மௌனித்துப் போனாலும் யுத்தத்தின் எத்தனம் சத்தமிடுதே கேள்
மனுநீதியை தேடி ஓடிய பாதையில் மனிதச் சாவுதான் பெருகுது கேள் இனியென்ன ஆகுமோ ஆகுமோ என்றே எமதினம் ஏங்கித் தவிப்பதை கேள்
கள்
ஆண்ட பரம்பரைப் பேர்பூண்ட நாமின்று ஆண்டிருக்க நிலமின்றி அலைகிறோம் கேள் மீண்டு வாழந்திடக் காலம் வருமென்று விழிவரும் கனவில் வாழ்கிறோம் கேள்.
கள்

Page 16
ஈழமண்ணில் இந்திய நூல்வழிப் பதிவுகள்
அறிமுகம்
இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1987 ஜூலை 29இல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் - இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கையில் சமாதானத்தை நிலைநிறுத்தவென அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஜூலை 1987இல் எமது தாயகத்துக்குள் புகுந்து நிலைகொண்டது. முகம் மலர, மங்கல வாத்தியம் முழங்க, தளபதிகளின் நெற்றியில் திலகமிட்டு இந்திய அமைதிப்படையை எம்மவர்கள் ஈழத்தமிழ் மண்ணில் வரவேற்றார்கள். அதன்பின்னர் அமைதிப்படை- இந்திய ஆக்கிரமிப்பு இராணு வமாகி எமது அமைதியையே குலைத்த வரலாறு என்றுமே ஈழத்தமிழர் மனதை விட்டு அழியப்போவதில்லை. இரு நாடுகளிலும் தொடர்ந்த தேர்தல்களினால் ஏற்படுத்தப்பட்ட
அரசியல் காய் நகர்த்தல்களினால் இந்தியாவில் வி.பி.சிங்கும் இலங்கையில் ஆர்.பிரேமதாசாவும் அரசியல் தலைமைத்துவத்தைப் பொறுப் பேற்றனர். அதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையின் மாற்றத்தால் 1989 தொடங்கி, படிப்படியாக இந்திய இராணுவம் இலங்கை யிலிருந்து வெளியேறியது. மார்ச் 1990இல் இறுதி இராணுவ அணி இலங்கையைவிட்டு வெளியேறிச் சென்றது.
இந்திய - இலங்கை ஒப் பந்தத்தையும், அதற்கான தேவையையும் இராணுவ ஆக்கிரமிப்புக் காலகட்ட நட வ டிக் கை க ளை யும் விரிவாக ஒருபக்கச் சார்பாகப் பதிவு செய்யும் நடைமுறை வெற்றிகரமாக இந்திய அரசினதும் இந்திய இராணுவத்தினதும்

இரான ஆக்கிரமிப்பு: பwwதொரு தேடல்
சார்பில்
மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத் தளபதிகளான லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர்சிங் Lieutenant General Depinder Singh, மேஜர் ஜெனரல் ஹார்கிரத்சிங் Major GeneralHarkirat Singh, லெப்டினன்ட் ஜெனரல் சர்தேஷ் பாண்டே Lieutenant General S.C. Sardeshpande மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.ஆர்.கல்கட் Lieutenant General A.R. Kalkat ஆகியோரின் பார்வையிலும் பிற இராணுவ ஆய்வாளர்கள், புலனாய்வு அதிகாரிகளின் பார்வையிலும் அவ்வப்போது ஆங்கில மொழியில் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்து இந்திய ஆக்கிரமிப்பாளரின் பார்வையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமது போரின் நியாயத்தன்மை பற்றி விரிவாகவே பேசப்பட்டிருந்தது.
ஈழத்தமிழர்களின் சார்பில், அவர்களது இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் இடை யேநின்று மாற்றுப் பார்வையை இந்திய அரசியலாளர்களுக்கு தமிழ் தவிர்ந்த பிற மொழிகளில் போதிய அளவில் வழங்கப்படவில்லை என்பது பொதுவான நிலைப்பாடாகும். இந்திய இராணுவத்தின்
ஆக்கிரமிப்பால் உயிர் இழந்து, உடைமைகள் இழந்து, கதியற்றுப்போன ஈழத்துக் குடும்பங்கள் பல. அவர்களின் பார்வையில் இந்த ஆக்கிரமிப்பு வர லாற்றைப் பதிவுசெய்ய முன் வந்தவை - ஈழத்துப் படைப்பாளிகளினதும் இளம் போராளிகளினதும் ஆக்க இலக்கியப் படைப்பு
என்.செல்வராஜா (நூலியலாளர், லண்டன்)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 17
களும், துணிச்சலும் அறிவும் கொண்ட ஒரு சில புத்திஜீவிகளின் ஆய்வுக் கட்டுரைகளுமே. ஆக்க இலக்கியத்துறையில் கவிதைகளாகவும், கதைகளாகவும் பத்திரிகை களில் அக்காலகட்டத்தில் வெளியாகிய பல படைப்புக்களில் ஒருசிறு பகுதியே பின்னாளில் நூலுருவில் நிலைகொண்டன. எஞ்சியவை கவனிப்பாரற்று சிற்றிலக்கிய ஏடுகளிலும், வாரப் பத்திரிகைகளினுள்ளும் முடங்கிவிட்டன. ஈழத்தமிழரின் அந்த அவலம் நிறைந்த வாழ்வின் கொடுமையால், தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து அயல்நாடுகளுக்கு அகதியாகச் சென்றோர் ஏராளம். இந்திய இராணுவம் ஏற்படுத்திய ஆறாத வடுக்களைச் சுமந்து கொண்டு எம்மவரில் பலர் இன்றும் அந்தக் காயங்களின் வலிகளுடனும் வடுக்களுடனும் தாயகத்திலும் புகலிடத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்திய அமைதிப்படையின் வரவை வரலாற்றுப் பதிவாக்கிய சில ஈழத்துப் பிரசுரங்கள் பற்றிய விரிவானதொரு ஆய்வே இக் கட்டுரையாகும். முடிந்தவரையில் முழுமையை நோக்கியதொரு தேடலாக இக்கட்டுரை அமைந்துள்ளபோதிலும், என்னை வந்தடையாத நான் அறிந்துகொள்ளாத இன்னும் சில படைப்புக்களும் இருக்கக்கூடும்.
நிக்கின்ற படத்தில் கைகளுடனே
ஆக்கிரமிப்புக்கு முன்னைய எதிர்வுகூறல்கள்
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத் தாவதற்கு முன்னர் இருந்த சூழலில், பின்னைய பாதக நிலைமைகள் பற்றிய எதிர்வுகூறல்களை ஒருசிலர் முன்வைத்திருந்தனர்.
இந்துசமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப் பிரச்சினையும் என்ற நூல் உதயன் (மு.திருநாவுக்கரசு ) , விஜயன் (இ.ஜெயராஜா) ஆகிய இரு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புத்திஜீவிகளால் இணைந்து
மார்ச் 1987இல் (இந்திய இராணுவம் ஜூலையில் உள்நுழைவதற்கு முன்பாக) யாழ்ப்பாணத்திலிருந்து எழுதப்பட்டிருந்தது. இந்நூல் பின்னாளில் சென்னை ரோசா லக்சம்பேர்க் படிப்பு வட்டத்தினரால் மார்ச் 1988 இல் மீள்பிரசுரமாக தமிழகத்திலும் வெளியிடப்பட்டது. சர்வதேச உறவு, இந்துசமுத்திரப் பிராந்தியமும் வல்லரசுகளும், இந்து சமுத்திரப் பிராந்தியமும் இந்தியாவும், தென்னாசியப் பிராந்தியமும் இந்தியாவும், இந்தியாவும் இலங்கைப் பிரச்சினையும்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெளிநாடுகளின் நிலையும், ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பின்னணியில் இலங்கையின் இனப்பிரச்சினை ஆராயப்பட்டிருந்தது. இந்திய நிலைப்பாட்டின் நல்லதொரு எதிர்வுகூறலாக இந்நூல் இன்றளவில் கருதப்படுகின்றது.
யாருக்காக இந்த ஒப்பந்தம்? என்ற மற்றொரு நூலும் இதே காலகட்டத்தில் மு.திருநாவுக்கரசுவினால் உதயன் என்ற புனைபெயரில் எழுதப்பட்டு யாழ்ப் பாணத்திலிருந்து வெளியிடப்பட்டது. ஆகஸ்ட், 1987 வரை 3 பதிப்புகளை குறுகிய காலத்தில் கண்ட பிரபல்யமான சிறுநூல் இது. ஜே. ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்திடும் தறுவாயில் அதன் பின்னணியில் மறைந்திருந்த தமிழர்களுக்கு எதிரானதும் தீங்கானதுமான
அம்சங்களை வெளிப்படுத்துமுகமாக இந்நூல் எழுதப்பட்டிருந்தது.
விடுதலை இயக்கங்களின் நிலைப்பாடு
இந்திய அமைதிகாக்கும்படை இலங்கை மண்ணில் இயங்கும் தீர்மானம் தொடர்பாக ஒரு சில விடுதலை இயக்கங்களின் கருத்துக்கள் அக்காலகட்டத்தில் நூலுருவில் வெளிவந்திருந்தன. அவ்வகையில் ஜூலை இருபத்தொன்பது உடன்பாடும் எமது நிலையும் என்ற தலைப்பில் ஈழப்புரட்சி அமைப்பு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு பிரசுரத்தினை வெளியிட்டிருந்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பான ஈரோஸ் அமைப்பின் கருத்துக்களும் அது பற்றி வெளிவந்த பத்திரிகைக் குறிப்புக் களினது தொகுப்புகளுமாக இந்நூல்
அமைந்திருந்தது.
இந்திய இராணுவத்தின் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரின் ஒப்பந்தம் சார்ந்த கருத்துக்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தம் : விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ற தலைப்பில் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியிடப்பட்டது. வெளியிட்ட ஆண்டு குறிப்பிடப்படாத போதிலும், இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கை இதுவாகும். இந்திய அரசு தனது தேசிய, பூகோள நலன்களைக் கருதியே இந்த ஒப்பந்தத்தினைச் செய்திருக்கிறது என்று
15

Page 18
குறிப்பிடும் இந்நூல், தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணித்து
அவர்களது நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளை உதாசீனம் செய்து இந்திய அர இவ்வொப்பந்தத்தில் தனது பூகோள நலன்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்துள்ளதா அந்நூல் குற்றஞ்சாட்டியுள்ளது.
பின்னாளில் சமாதானப்படை முற்று முழுதான தாக்கியழிக்கும் படை என் நிலைக்கு வந்த வேளையில் விடுதலை புலிகள் தமது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு பிரசுரத்தின் மூலம் பதிவு செய்திருந்தார்கள் இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சினையும் சில உண்மை விளக்கங்கள் என்ற தலைப்பில் அது டிசம்பர் 1987 இல் வெளிவந்திருந்தது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை குறைபாடுகளும், இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே எழுந்து முரண்பாடுகளும் அதற்கான மூலகாரணமும் இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராட, தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமும்
இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
இலங்கையின் இனப்போராட்டமும் இந்திய - இலங்கை ஒப்பந்தமும் என் தலைப்புடன் தமிழ் ஈழ மக்கள் மன்றம் யாழ்ப்பாணத்திலிருந்து 1988இல் விரிவால் நூலொன்றை வெளியிட்டிருந்தது. இந்நூலில் முதற்பகுதி இலங்கை இனப்பிரச்சினை பற்றிய வரலாற்றுக் குறிப்பினையும் இரண்டாம் பகுதி 1987 ஜூலை 29இல் கைச்சாத்தாகிய இலங்கை - இந்திய உடன்படிக்கையையும் அது தொடர்பான விமர்சனங்களையும் உள்ளடக்கியிருந்தது.
புத்திஜீவிகளின் நிலைப்பாடு
விடுதலை இயக்கங்களின் நிலைப்பாடுகளுக்கு ஈடாக ஒரு சில புத்திஜீவிகளும் சமூக விழிப்புணர்வு நோக்குடன் தமது கருத்துக்களை நூலுருவில் பதிவு செய்யத் தலைப்பட்டனர் துர் அதிர்ஷ்டவசமாக, ஈழத்து அறிவுஜீவிகள் இந்திய இலங்கை உடன்படிக்கை பற்ற முழு நூலாக அக்காலப்பகுதியில் எழுதும் சூழல் இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேசியப் பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதியிருந்தபோதிலும் நூலுருவில் அவை தொகுக்கப்படவில்லை
அவ்வகையில் இமயவரம்பனின் இ ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும் என்ற நூல் இங்கு குறிப்பிடத்தக்கது 16
நூலுருவில் இடம் போராட்.
EEET

கு
க
ற
...
ன் சென்னையிலிருந்து புதிய பூமி வெளியீட்
டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், ஜூன் 1988இல் வெளியிட்ட இந்நூலில் 3 கட்டுரைகளும் இரு பின்னிணைப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இவை செம்பதாகை, புதிய பூமி ஆகியவற்றில் வெளிவந்தவை. அதில் சமாதானமும் ஒப்பந்தமும் என்ற கட்டுரை இலங்கை - இந்திய சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.
தமிழகத்தவரான சாலய் இளந்திரயன் . எழுதிய இந்தியம், ஈழம், நக்சலியம்
என்ற நூலைப்பற்றியும் குறிப்பிடுவது நல்லது. சென்னையிலிருந்து மே 1989 இல் இந்நூல் வெளியிடப்பட்டிருந்தது. தமிழ கத்தில் வீரநடை அறிவியக்கம் மாத இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இந்தியம், ஈழம், நக்சலியம் ஆகிய மூன்று பிரிவுகளில் இதிலுள்ள 18 கட்டுரைகளும் பகுக்கப்பட்டுள்ளன. ஈழம் என்ற பிரிவில் ஈழத்தமிழர் பிரச்சினையை இந்திராமகன் தீர்ப்பாரோ? ஈழத்தமிழர் பிரச்சினை வெறும் சோற்றுப் பிரச்சினையா? தமிழனின் முதுகிலே மீண்டும் ஒரு குத்து,
இதுதானா ஐயா ஈழத்தமிழருக்கு ஆதரவு? எ
பின்னணி தெரியாமல் பேரம் பேசுவதா? யார் தேசப் பக்தர்கள் - யார் தேசத் துரோகிகள்? இந்தியா நடத்தி வைத்த ஒரு ஜிகினா நாடகம் ஆகிய ஏழு கட்டுரைகள் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளின்
அரசியல் பின்னணியை தமிழகத்துக்கு ம் தோலுரித்துக்காட்டுவதாக அமைந்திருந்தன.
ம்
S
த்
8
b'
b'
கு
தி
ள்
இந்திய இராணுவத்தின் இருப்பிற்கான ஆதரவுக் குரல்கள்
விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பு இராணுவ எதிர்ப்புணர்வும், இந்திய இராணுவத்தின் தமிழர்களுக்கு எதிரான போக்கும் இந்திய அமைதி காக்கும் படை யினரின் செயற்பாடுகளுக்கு ஆதாரமான கட்டுரைகளையோ நூல்களையோ வழங்கவில்லை. இருப்பினும், இந்திய அமைதிப்படையின் செல்லப்பிள்ளையாக அந்நாளில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரச்சாரப்பிரிவு வெளியிட்டிருந்த நூலொன் றினைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். எ
சகோதரப் படுகொலைகளும் தமிழினத்
துரோகிகளும் என்ற தலைப்பில் கே.சி.என். - என்ற புனைபெயரில் ஈழமக்கள் புரட்சிகர
ܐ̄
ல்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 19
விடுதலை முன்னணி (EPRLF) யின் பிரச்சார வெளியீட்டுப் பிரிவு, கார்த்திகை 1988 இல் ஒரு நூலை வெளியிட்டிருந்தது. 1987ம் ஆண்டு புரட்டாதியில் ஈழப்போராட்டத்தில் சகோதரப் படுகொலைகளும் சயனைட் தற்கொலைகளும் என்னும் தலைப்பில் கே.சி.என். அவர்களால் எழுதப்பெற்று அவ்வமைப்பு வெளியிட்ட நூலின் திருத்திய வடிவமே இதுவாகும். 1974 இலிருந்து தொடங்கி 1987இல் இடம்பெற்ற இலங்கை - இந்திய ஒப்பந்தம் வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் நிகழ்ந்த சகோதரப் படுகொலை நிகழ்வுகளை இந் நூல் விரிவாகப் பதிவு செய்திருந்தது. இந்நூல் அக்காலகட்டத்தில் இந்திய இராணுவத்தின் பிடியிலிருந்த தமிழ்ப் பிரதேசமெங்கும் பரவலாக விநியோகிக்கப்பட்டன.
.
இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் கிழக்கின் தேர்தல்
இலங்கையின் ஈழ விடுதலைப் போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஜூலை 29, 1987 அன்று கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும். இதனடிப்படையில் 1988 பெப்ரவரியில் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. ஒப்பந்தத்தின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிர்வாகத்தின்கீழ் இரண்டு மாகாணங்களையும் கொண்டுவர உடன்பாடாயிற்று. இதன் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சியின் போது, முதலாவது மாகாணசபைத் தேர்தல் இந்திய இராணுவத்தினரின் மேற்பார்வையில் வட -கிழக்கில் நவம்பர் 19, 1988 அன்று இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி பங்கேற்காது ஒதுங்கியிருந்த நிலையில் இந்திய ஆதரவுடன் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் இத் தேர்தலில் வெற்றியீட்டி முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் தலைமையில் ஆட்சியமைத்தனர்.
மேற்கண்ட அரசியல் பின்புலத்தில் மோசடித் தேர்தல் உண்மை விளக்கம் என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் டிசம்பர் 1988 இல் ஒரு நூலை வெளியிட்டிருந்தனர். இந்திய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

அமைதி காக்கும் படை, இலங்கையின் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த வேளையில் இடம்பெற்ற அத்தேர்தல் தொடர்பான நூலில், 1988ம் ஆண்டு நவம்பர் 19 இல் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பெற்ற மாகாணசபைத் தேர்தலின்போது இடம் பெற்ற மோசடிகளைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தியிருந்தது.13.12.1988 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு இது குறித்து வெளியிட்ட பகிரங்கக் கடிதமும் இந்நூலின் முன்-பின் உள்ளட்டைப் பக்கங்களில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிப்புக்கால இராணுவச் செயற்பாடுகள்
இந்திய இராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டிருந்த வேளையில் ஊடகங்களின்மீது தீவிரமான பார்வையைச் செலுத்திவந்தார்கள். தமது பணிகளுக்குக் குந்தகமான நிலைமையை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயற்பட முற்பட்ட வேளைகளில் தமது ஆதரவாளர்களின் மூலம் அதனை அச்சுறுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் பக்கச் சார்பற்ற சுதந்திரமான கணிப்பீடுகளையோ, நேர்மையான கருத்துக்களையோ மக்கள் உள்வாங்கச் சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.
இந்நிலையிலும் துணிச்சலுடன் சில பிரசுரங்கள் அவ்வப்போது வெளிவந்தன. அவை பெரும்பாலும் விடுதலைப்புலிகளினால் அச்சிடப்பட்ட பிரசுரங்களாகவே இருந்தன. இந்திய இராணுவம் மார்ச் 1990 இல் இலங்கையை விட்டு நீங்கிய பின்னரே அந்த இருண்டகாலம் பற்றிப் பலரும் எழுத வாய்ப்பேற்பட்டது.
அவ்வகையில் மேஜர் கிண்ணி
என அழைக்கப்பெற்ற விடுதலைப் போராளியான வி.மணிவண்ணன் பற்றிய ஒரு நூல் இங்கு பதிவு செய்யப்படவேண்டியதாகும். பிரான் ஸில் இயங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினால் 2வது பதிப்பாக, பெப்ரவரி 1997இல் வெளியாகிய மேஜர் கிண்ணி என்ற தலைப்பிலான இந் நூல் 10.7.92 இல் இயக்கச்சி மோதலில் பலியான விடுதலைப்புலிகளின் போராளி மேஜர் கிண்ணியின் போராட்டகாலச் சரிதையை உள்ளடக்கியிருந்தது. நெடுங் கேணி இந்திய இராணுவ மினி முகாம் புலிகளால் தாக்கப்பட்ட வரலாறும் இந் நூலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
17

Page 20
இதே போன்று நினைவில் சில நிகழ்வுகள் என்ற தலைப்பிலான மற்றுமொரு நூலும் முக்கியமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே அமைப்பு, (Tamil Coordinating Committee Norway), ஓகஸ்ட் 1993 இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வெளியீடுகளில் வெளிவந்த வவுனியா சிறை உடைப்பு (01.05.1989 அன்று வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த இந்தியப் படையின் சிறையை உடைத்து 42 கைதிகள் தப்பியோடிய நிகழ்வு), நினைவில் சில நிகழ்வுகள் (மேஜர் கிண்ணியின் முக்கிய பங்களிப்பில் நடந்தேறிய நெடுங்கேணிப் பாடசாலையில் அமைந்த இந்திய இராணுவத்தின் மினிமுகாம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றிய பகிர்வு), சிலாவத்துறை - ஒரு வரலாற்றுச் சமர் (19.03.1991 முதல் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடந்த மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை இராணுவ முகாம் அழிப்பு) ஆகிய மூன்று விவரணக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருந்தன. நோர்வேக் கிளையின் சுதந்திர தாகம்” எழுச்சி நிகழ்வினையொட்டி சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
அவலங்களின் பதிவுகள்
ஒரு போரின் இறுதியில் அவ்வரலாறு வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. அதற்குள் தோற்றவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன. தோற்றவர்களின் பார்வையில் அவர்கள் பக்க நியாயங்களை வரலாற்றில் பதிவு செய்பவை - ஆக்க இலக்கியங்களே. பின்னாளில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது இடம் பெற்ற நிகழ்வுகள், நியோ ஜேர்னலிச முறையில் கதைசொல்லிகளால் பதிவு செய்யப்பட்டு நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளன. அவ் வகையில் எழுந்த முதலாவது நூலாக வல்வைப் படுகொலைகள் அமைகின்றது. வல்வை ந.அனந்தராஜ் எழுதிய இந் நூல் 1989 இல் முதற்பதிப்பைக் கண்டது. இந்திய இராணுவத்தினர் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வேளையில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகளில் உலகையே உலுக்கிய படுகொலைகளாக வல்வெட்டித்துறைப் படுகொலைகள் இடம் பெற்றிருந்தன. 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2, 18

3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் ஊரடங்குச்சட்டத்தைப் பிரகடனப்படுத்தியபின் இந்திய இராணுவத்தினரால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான
• விபரங்கள், கதைகளாக நெஞ்சை உருக்கும் வகையில் இந்நூலில் எழுதப்பட்டிருந்தன. மக்களின் அவலங்களைச் சித்திரிக்கும் கறுப்பு வெள்ளை, வண்ணப் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டிருந்த இந்நூல் பாதிக்கப்பட்ட வல்வைமக்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலங்களை உள்ளடக்கியதாக INDIA'S MYLAI என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நூலுக்கான அணிந்துரை முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டசினால் மிக உணர்வுபூர்வமாக எழுதி வழங்கப்பட்டிருந்தது.
இவ்வகையில் இரண்டாவதாகக் குறிப்பி டக்கூடிய நூல், நாவண்ணன் எழுதிய அக்கினிக் கரங்கள் என்ற நூலாகும். ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்டஉண்மை நிகழ்வுகளைகலாபூர்வமாகப் பதிவுசெய்து வைக்கும் பணியிலே ஈடுபட்ட சில ஈழத்து எழுத்தாளர்களுள் திரு நாவண்ணன் குறிப்பிடத்தகுந்தவர். இவரின் இலக்கிய வாழ்வின் பெரும்பகுதி இத்தகைய தகவல்களைத் திரட்டிப் பதிவுக்குள்ளாக்கும்' பணியிலேயே கழிந்திருக்கிறது. கிழக்கின் சூறாவளி, வடக்கின் இராணுவ எரியூட்டல்கள், நவாலித் தேவாலயப் படுகொலை, பாடசாலை மாணவர்கள் குண்டுவீச்சுக்குள்ளாகிப் பலியான மறைக்கப்பட்ட வரலாறு என்று இவரது நேரடித்தகவல் திரட்டலும், அவற்றை களத்தில் நின்றே இலக்கியார்த்தமாகப் பதிவு செய்தலும் ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் அழிக்கப்பட முடியாதவையாகும்.
அக்கினிக் கரங்கள் என்ற அவரது நூல் யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீடாக ஐப்பசி 1995 இல் வெளியிடப்பட்டது. அக்கினிக்கரங்கள் : இந்திய இராணுவ அராஜகத்தின் மற்றொரு பக்கத்தை முகத்தில றைந்தாற்போல் எமக்குச் சொல்கின்றது. முற்று முழுதான உண்மை நிகழ்வுகளையே இவர் இக்கதையில் கோர்த்திருக்கின்றார் என்பதை அக்காலகட்டத்தில் யாழ்மண்ணில் வாழ்ந்திருந்த வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். 1987ம் ஆண்டு ஒக்டோபர் 21ம், 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய அமைதிகாக்கும் படையினர் புகுந்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 21
புரிந்த படுகொலைகளை மையமாக வைத்து இவ்விலக்கியம் படைக்கப்பட்டுள்ளது. இரத்த வங்கிப்பிரிவில்பணியாற்றியதாதிஒருவரினதும் அந்தப்படுகொலைநிகழ்வில்தப்பியவைத்தியர், தாதியர், சிற்றுாழியர், நோயாளர் ஆகியோரின் நேரடி அனுபவங்களைக் கொண்டும் காங்கேசன்துறையில் வாழ்ந்து இடம்பெயர்ந்த நூலாசிரியர் பெற்ற அனுபவங்களும் அக்கினிக் கரங்களின் கதையாகின்றது. இந்நூலின் முதற் பதிப்பு ஒக்டோபர் 1995இல் வெளியிடப்பட்ட கையோடு வலிகாமத்தில் பாரிய புலப்பெயர்வு நிகழ்ந்தமையால் முதற்பதிப்பு திருப்திகரமான
முறையில் விநியோகிக்கப்படவில்லை. இந்நிலையில் மேற்படி அக்கினிக் கரங்கள் கதையுடன், நினைவாலயம் அருட்திரு
நேசன் அடிகளார் அவர்களின் துன்பியல் அனுபவங்கள் ஆகியன சேர்க்கப்பெற்று நூலின் 2வது பதிப்பு, 2005இல் வெளியாகியது. நியோ ஜேர்னலிசம் என்ற வகையில் அமைந்த மேலும் பல நாவண்ணனின் நூல்கள், இலங்கை அரசின் போர்க்காலக்குற்றங்களை அழுத்தம்திருத்தமாகப் பதிந்து வைத்தி ருக்கின்றன. காலம் காலமாக பல மறுபதிப் புக்களை இவை காணப்போகின்றன.
முறிந்த பனை இலங்கையில் தமிழர் பிரச்சினை உள்ளிருந்து ஒரு ஆய்வு என்ற நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புத்திஜீவிகளான ராஜினி திரணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. பூரீதரன் ஆகியோரால் ஜூலை 1988இல் எழுதி வெளியிடப்பட்ட The Broken Palmyra என்ற நூலின் தமிழாக்கமாகும். யாழ்ப்பாணம்: மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு, 1996 இத்தமிழாக்கத்தை வெளியிட்டிருந்தது. இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்நூலின் முதற்பகுதி 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியப்படையின் வருகையும் நிகழ்ந்த காலகட்டத்தில் நின்று ஈழத்து இனப்பிரச்சினையின் ஒரு பரிமாணத்தைஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றைப் புரியவைக்கும் நோக்கில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமாகவும், இரண்டாம் பகுதி இக்காலகட்டத்தில் இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிய பல்வேறு அறிக்கைகளும் ஆய்வுகளும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. The Broken Palmyrah 6Taip gay,6ir eupa)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

நூல் ஆங்கிலத்தில் வெளியான சிறிது காலத்தில் இந்நூலின் உருவாக்கத்தின் முக்கிய பங்காளியான வைத்திய கலாநிதி ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இன்றளவில் அக்கொலையாளிகள் கண்டறியப் படவேயில்லை.
குருதிக் குளியல் என்ற பெயரில் கலையார்வன் என்றறியப்பெற்ற கு.இராயப்பு அவர்கள் யாழ்ப்பாணம், நெயோ கல்சரல் கவுன்சில் மூலம் வெளியிட்ட நூலும் இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மை நிகழ்வுகளின் உணர்வுப் பதிவுகள் என்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூலில் ஈழத் தமிழர்களின் வாழ்வில் குறிப்பாக, குருநகரையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் சேர்ந்த மக்கள் மத்தியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போர்க்கால இனவன்முறையின் பாரிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மூன்று பகுதிகளில் இக்குருதிக் குளியல்களைப் பதிவு செய்திருக்கும் நூலாசிரியர், முதலாவது குளியலில் வேட்டை என்ற தலைப்பில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு முன்னதாக, 10.6.1986ம் ஆண்டு கரைவலைத் தொழிலுக்குச் சென்ற 31 மீனவர்கள் மண்டைதீவுப் பகுதியில் வேட்டையாடப்பட்ட சம்பவமும், இரண் டாவது குளியலில் அறுப்பு என்ற தலைப்பில் இந்திய இராணுவத்தின் காலகட்டத்தில் 10.10.1987 முதல் 22.10.1987 வரையிலான இருவார கால இடப்பெயர்வின்போது யாழ்ப்பாண மண்ணில் 38பேர் கொல்லப் பட்டும் 66பேர் காயமடைந்தும் நடந்த அவலங்களும், மூன்றாவது குளியலில் அழிப்பு என்ற தலைப்பில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னதான காலகட்டத்தில், 13.11.1993 முதல் 5.12.1993 வரையிலான காலப்பகுதியில் 140 வருடப் பழமையான குருநகர் யாகப்பர் ஆலயம், சின்னக்கடைச் சந்தை போன்றவற்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட விமானத்தாக்குதலையும் அதில் பலியான 27 பேர் பற்றியும் பதிவுசெய்துள்ளார்.
(தொடரும்) O O O
19

Page 22
இகல்
அகளங்கன்
வவுனியா வைத்தியசாலை நோயாளிகளால் நிரம்பி வழிந்தது. இப்படிச் சொல்வது பொருத்தமில்லைத்தான். 'நோயாளிகளாக ஆக்கப்பட்டவர்களால்' என்று தான் சொல்ல வேண்டும். வாசலில் பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. நோயாளி களில் எவரும் 'கள்ளமாக' வெளியேற முடியாத படி துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் காவலில் இருந்தனர். நோய் மாறி விட்டாலும் அவர்கள் தங்கள் விருப்பப்படி வெளியேற முடியாது. எந்த அகதி முகாமிலிருந்து கொண்டு வரப்பட்டார்களோ அங்கு தான் கொண்டுபோகப்படுவார்கள்.
அரசாங்கம் என்னதான் 'நலன்புரி நிலையம்' என்று பெயர் வைத்திருந்தாலும் தமிழர்கள் வாயில் 'அகதிமுகாம்' என்ற பெயரே உச்சரிக்கப்பட்டது. 56ஆம் ஆண்டிலிருந்து 53 ஆண்டுகளாக நெஞ்சில் பதிந்திருக்கும் பெயரை அவ்வளவு சுலபமாக மாற்றிவிட முடியுமா. இலங்கைத் தமிழன் என்றால் அகதி என்று அகராதியிலேயே அர்த்தம் போடுமளவுக்கு எங்கள் நெஞ்சங்களில் ஊறிப்போன அப்பெயரை அவ்வளவு சுலபமாக மாற்றிவிட முடியுமா. வெளிநாடுகளிலும் எங்களை 'அகதி' என்று பதிந்து அகதி அந்தஸ்து?) தரும்படிதானே வேண்டுகிறோம்.
பார்வையாளர்கள் சுலபமாக உள்ளே சென்று நோயாளிகளைப்பார்க்கமுடியாது. பல 'கழுகுக் கண்கள் அவர்களை நோட்டம் விட்டன.

சிறுகதை
பார்வையாளர்களுக்குரிய நேரத்தில் அடையாள அட்டையை வாசலில் ஒப்படைத்து, உறவு முறைகளைச் சொல்லி, சோதனை முடித்து பல இடையூறுகளின் பின்தான் பார்வையார்கள் உள்ளே செல்லலாம் அவசர சிகிச்சைப் பிரிவில் பலர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குச் சத்திரசிகிச்சை செய்தே வைத்தியர்கள் களைத்துப் போய் விட்டனர். செல்பட்ட காயம் நாள்பட்ட காயமாயும், உடன் காயமாயும் பலர்
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
திருகோணலையிலிருந்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி நலன்புரி நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களில் கதிரேசரும் ஒருவர். காலில் செல்லடி பட்டு திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்ட அவர், அங்கு அவசரச் சிகிச்சை அளிக்கப் பட்டபின் வவுனியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டார். அவரது வலது காலில் 'செல்' துண்டு இருந்தது. அதை அவர்கள் கவனிக்காததால் வலித்துக் கொண்டிருந்தது. வலி வேதனை தாங்க முடியாதிருந்ததால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலை 'எக்ஸ்றே' கதிர்ப்படமெடுத்த வைத்தியர்கள் செல்த் துண்டு அகற்றப்படாமல் இருந்ததைக் கண்டு பிடித்தனர். மறுநாள் அவருக்குச் சத்திர சிகிச்சை செய்ய இருப்பதாக அறிவித்தனர். அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கட்டிலிலே கிடந்து கொண்டு அன்று சத்திர சிகிச்சை முடிந்து வருபவர்களை உற்றுப் பார்த்தார். அவரால் தாங்க முடியவில்லை. சிறுபிள்ளைகள் முதல் குடுகுடு கிழவன்கள் வரை, ... ஒரு கால் கழற்றப்பட்ட நிலையில் இரண்டு கால்களும் கழற்றப்பட்ட நிலையில் கை, கைகள், கழற்றப்பட்ட நிலையில்.. கட்டில்களில் கொண்டு வந்து போடப்பட்டார்கள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 23
உள் நாட்டு வைத்தியர்களும் வெளி நாட்டு வைத்தியர்களும் உண்மையில் சிறந்த சேவையாற்றினர்.:
கதிரேசர் நினைத்துப் பார்த்தார். நாளை தனது வலது கால் என்ன கொடுமை.
கேட்டுப் போராடியது பிரிவினை தானே. கதிரேசர் மனம் கலங்கிப் போய் கட்டிலில் அண்ணாந்து பார்த்தபடி கிடந்து யோசித்தார்.
கதிரேசருக்கு 70 வயது இருக்கும். பக்கத்து வீட்டுப் பச்சைப் பிள்ளை (சிறுபிள்ளை) ஒன்றைக் காப்பாற்றச் சென்று காலிலே செல்லடிபட்டு செஞ்சிலுவைச்சங்கக் கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு வந்து பின் வவுனியாவிற்கு
வந்தவர் அவர்.
தனது ஊரான கருங்காலிக் குளத்திலிருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டுவரை மட்டுமே படித்தவர் அவர். அங்கிருந்த பாடசாலையில் அவ்வகுப்பே உயர் வகுப்பு. இளம் வயதில், தன் ஊர்ப் பெயருக்கேற்பக் கருங்காலிக் கட்டை போன்ற வைரம் பொருந்திய உடலோடு கன்னங் கரேலென்ற நாய்க் கறுப்பு(கருப்பு) நிறத்தில் கம்பீரமாகக் காட்சியளித்தார். இப்போது தளர்ந்து போனார்.
பச்சைக் குறியன் சாக்கில் போட்டுத் தைக்கப்பட்ட உழுந்து மூடைகளை (120kg) முதுகில் தூக்கி வண்டியில் ஏற்றியிருக்கிறார். புழுதி உழவின் போது வயலில் ஸ்ராட் வராமல் நின்ற உழவு இயந்திரத்தைத் தனியாளாகத்தள்ளி ஸ்ராட் வரப்பண்ணியிருக்கிறார். அவ்வளவு பலசாலி. பன்றிக் கருக்கலும், எருமைத் தயிரும் அவருடலை அப்படி வைரம் பாய்ந்ததாக வைத்திருந்தன.
கட்டிலில் கிடந்தபடி தனது பார்வையைத் தன் வலது கால்மேல் படரவிட்டார். அவரை வந்து பார்ப்பதற்கு அப்போது அங்கு உறவினர் யாரும் இல்லை. அவரின் நிலையில் பலர். உறவினர்கள் இருந்தாலும் கூட வந்து பார்ப்பதற்கு அச்சப்பட்டனர். "இந்த வயதில் ஒரு காலை இழந்து விட்டு என்ன செய்யலாம் எவரின் ஆதரவில் எப்படி வாழுவது" யோசித்துப் பார்த்தார். கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது.
ஊரூராக இடம்பெயர்ந்து கால் நடைகள் போலக் கால் நடையாகச் சென்றதை நினைத்துப் பார்த்தார். தனது மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் நிலை என்னவாகியிருக்குமோ என்று நினைத்துப் பார்த்தார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

இளமைப் பருவத்து நினைவுகள் அவரை வாட்டி வதைத்தன. 'பந்தயம்' பிடித்து தொட்டாச்சுருங்கிச் செடிகளை வெறுங்காலால் உழுக்கி ஓடி இளநீரைப் பரிசாகப் பெற்றுக் குடித்த நினைவு முதல் நினைவாக வந்தது. முள்ளி முள் குத்தினாலும் முள் வளையுமே அன்றி அவரது காலில் ஏறியதில்லை. சில வேளைகளில் கரம்பை முள் அவரின் காலில் குத்தி ஏறியிருக்கிறது. சாதாரண முள் எதுவும் அவரது காலில் குத்தி ஏறியதில்லை. அவ்வளவு வலிமையான கால்கள். செருப்பே போடாமல் வளர்ந்த காரணத்தால் எந்தச் சுடுமணலும் அவருக்குச் சுட்டதில்லை.
ஒரு தடவை வேலமர முள்ளொன்று காலில் குத்தி ஏறியபோது அவர் செய்த காரியத்தைப் பார்த்த சிறுவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இரண்டு கைகளையும் சேர்த்து ஒரு விதமாகப் பொத்திப் பிடித்துக் கொண்டு சங்கூதுவது போல ஊதினால் ஊரிலுள்ள வேட்டை நாய்கள் எல்லாம் ஓடோடி வந்துவிடும். கைக்குழல் அடித்தல்' என்று இதனைச் சொல்வார்கள். கைக்குழல் அடிப்பதில் அவர் விண்ணன்.
அது மட்டுமல்ல கைகளைப் பொத்திப் பிடித்துக் கொண்டு காட்டுக் கோழி போல ஒலி எழுப்புவார். அந்தச் சத்தங் கேட்டுப் பறந்து வரும் காட்டுக் கோழியைத் தடியால் அடித்து விழுத்துவார்.வேட்டை என்றால் அவருக்குப் பெரு விருப்பம்.
ஒரு நாள் கைக் குழல் அடித்து வேட்டை நாய்களை அழைத்தார். இரண்டு மூன்று பேர் அவர் வயது இளைஞர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள். உடும்பு வேட்டைக்கு ஏற்ற வகையில் மழைவிட்டு சூரிய ஒளி மின்னிக் கொண்டிருந்தது. வெளிச்சத்தையும் வெப்பத்தையும் விரும்பி உடும்புகள் பொந்துகளுக்கு வெளியில் வந்து வெயில் காய்ந்து கொண்டு கிடந்தன. ஒரு பெரிய உடும்பை நாய்கள் துரத்த நாய்களோடு அவரும் சேர்ந்து துரத்தினார். துரத்தும் போது தான் அந்த வேலம் முள்ளு அவரின் காலில் ஏறியது. உடும்பைத் துரத்திப் பிடிக்கின்ற அவசரத்தில் அதைப் பொருட்படுத்தாது துரத்திச் சென்று உடும்பு மரப் பொந்தினுள் நுழைய வாலில் பிடித்து விட்டார்.
முயலைத்
துரத்தி
அடித்துக் கொன்று வேட்டையாடும்
அவருக்கு உடும்பைத்
துரத்துவது
அவ்வளவு

Page 24
கடினமானதாயிருக்கவில்லை. நாய்களையும் முந்திக் கொண்டு காடுகளில் ஒடிப் பழக்கப்பட்டவர் அவர் வாலில் பிடித்து இழுத்தால் இலேசில் வரவில்லை,உடும்புப் பிடி என்பார்களே. அப்படிக்கெட்டியாகப் பிடித்துக் கொண்டது உடும்பு. ஒருவாறு உடும்பை இழுத்தெடுத்தார்.பெரிய உடும்பு முட்டை உடும்பு, உடும்பை வளைத்துக் கால் நகங்களால் கழன்று போகாதபடி வேட்டைகட்டினார். உயிரோடு கொண்டு வந்தார்.
கால் வலித்தது. ஊசியினால் முள்ளை எடுக்க முயன்றார் முடியவில்லை. வீட்டுக்கு வந்தவர் தனது கூரிய வில்லுக் கத்தியால் முள் குத்தி இருந்த பகுதியை அறுத்துத் தசையோடு முள்ளை எடுத்துச் சிறுவர்களுக்குக் காட்டினார். வெட்டிய இடத்தில் உப்பை வைத்து கொள்ளிக் கட்டையால் சுட்டுக் காய்ச்சினார்.
முள்ளுக் காலில் குத்தி முறிந்து விட்டால் ஊசியினால் மெது மெதுவாகக்குத்திக்குத்தி முள்ளை எடுத்து விட்டு ஏதாவதொரு இலையின் நடுப்பகுதியைக் கிள்ளி எடுத்து விட்டு அந்த இலையை முள் தைத்த இடத்தில் வைத்து உப்பை ஈரமாக்கி முள் எடுத்த துவாரத்தில் வைத்து கொள்ளிக் கட்டையால் உப்பைக் காய்ச்சினால் முள் குத்திய வலி ஒரு நாளிலேயே பறந்து போகும்.இது தான் வன்னிக் கிராமத்தில் நடைமுறை. ஆனால், கதிரேசர் வில்லுக் கத்தியால் வெட்டிய முரட்டுத்தனம் அவர்களை ஆச்சரியப்பட வைத்தது. -
ஒரு நாள் கிளித்தட்டு மறித்துக் கொண்டிருந்தார்கள். கிளித்தட்டு மறிப்பதில் கதிரேசருக்கு ஈடு இணை இல்லை. அவர்தான் தனது கன்னைக்கு (அண்)த் தாச்சியாயிருப்பார். (தலைமை). ஊர்ப் பெரியவர்கள் பலர் கிளித்தட்டைப் பார்க்க வந்து பாலை மரத்தடி வேரில் குந்தியிருப்பார்கள்.கதிரேசரை உச்சிக் கொண்டு யாரும் பழம் பாய்ந்துவிட முடியாது. கதிரேசர் உச்சினால் அவரை மறிக்கவும்
22
 

முடியாது. ஒற்றைக் கோட்டுக் குள்ளேயே இரண்டு பக்கங்களுக்கும் இழுத்து இழுத்து உச்சி ஒற்றைக் கால் நுனியில் நிற்பார். மறிப்பவரை இரண்டு பக்கமும் மாறிமாறி இழுத்து இழுத்து உச்சி எல்லைக் கோட்டின் அருகில் ஒற்றைக் கால் நுனியில் நின்று திரும்பினாரென்றால் மறிப்பவர் விழுந்து விடுவார். கிளியையும் உச்சிக் கொண்டு பழம் பாய்ந்து விடுவார்.அவரது கன்னைக்கு அவர்தாச்சி மட்டுமல்ல அவர்தான் கிளி. "கிளிதான் என்று சொல்லிக்கொண்டு நாலுபக்கத்திலும்நடுவிலும்ஓடிவந்தாரென்றால் ஒன்றில் யாராவது அடிபடுவார்கள் அல்லது பயத்தில் காயும் பழமும் ஆகக் கலந்து விடுவார்கள். 60களில் வவுனியாக் கச்சேரியில் நடைபெற்ற கிளித்தட்டு மறித்தல் சுற்றுப் போட்டியில் (தாச்சிப் போட்டி என்பர் யாழ்ப்பாணத்தில்) அவருக்கே சிறந்த வீரர் பரிசு கிடைத்தது.
கட்டிலில் கிடந்து கொண்டு தான் கிளித் தட்டு மறித்த அந்த இளமைக் காலத்தை நினைத்துப் பார்த்தார். காலையும் பார்த்தார். அந்தக் கால் நாளை.
ஒரு நாள் கிளித் தட்டு மறித்துக் கொண் டிருந்த போது வயல் வெளியில் காட்டுக் கிடா மாடுகள் (எருமைக் கடா) சில நிற்பதைக் கண்டு விட்டார். அவற்றைப் பிடிக்கவேண்டுமென்ற ஒர் ஆவேசம் அவ ருக்கு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காட்டெருமைக் குழு மாடுகள் ஐந்து பட்டு வேலியையும் உடைத்து உள்ளே சென்று அவரது நல்ல வெடி குடலை நெற்பயிரை மேய்ந்திருந்தன.அந்த ஆத்திரத்தில் விளையாட்டை நிறுத்திவிட்டு "வாங்கடா உந்தக் குழுவன் களப் புடிப்பம்" என்று கூறிக் கொண்டு நல்ல நறுவிலி நார்க் கயிற்றை எடுத்துக் கொண்டு வயல் வெளிக்குச் சென்றார். Շ: அவரது விளையாட்டுத் தோழர்களும் கயிறுகளோடு சென்றனர். நறுவிலி மரத்துப் பட்டையை உரித்தெடுத்து, வில்லுக்
BTTBoTñ - assoGo SsoášaấSuuáë arsi5afsoas - Bun 2013

Page 25
கத்தியால் கிழித்து நார் நாராக வார்ந்து எடுத்து தண்ணிரில் ஊறப் போட்டு முறுக்கித் திரித்தெடுத்தால் மிகவும் உறுதியான நார்க் கயிறு உண்டாகும்.தண்ணிர் படப்பட இன்னும் பலம் ஏறும்.வன்னிக் கிராமங்களில் மான்தோல் மரைத்தோல் என்பவற்றை வார்ந்தெடுத்து முறுக்கித் திரித்தெடுத்த வார் வடங்கள்தான் மிகவும் உறுதியான கயிறுகள் நறுவிலி நார்க் கயிறுகளும் இவை போன்று உறுதியானவையே.
கதிரேசரும் நண்பர்களும் வயலுக்குள் வைத்துக் (5(ԼՔ மாடுகளாக நின்ற காட்டெருமைகளை மறித்தனர். சீவி விடப்பட்டது போன்ற கூரிய வளைந்த கொம்புகளைக் கொண்ட அந்த எருமை மாடுகள் கொம்பால்குத்தினால்தப்பமுடியாது. காட்டுக் கிடா மாடுகளின் வல்லமையைப் பற்றி வன்னியில் வாழ்ந்த முதியவர்களைக் கேட்டால் தான் தெரியும்."காளை, அடக்குதல் என்றும் ஜல்லிக் கட்டு’ என்றும் கொல் ஏறுதழுவுதல்' என்றும் தைப் பொங்கற் காலங்களில் தமிழகத்துக் கிராமங்களில் நடைபெறும் 'காளை மாட்டை அடக்கும் போட்டி காட்டுக்கிடாமாட்டைக்கயிறெறிந்து பிடித்தடக்குவதற்குக் கால் தூசுக்கும் ஒப்பாகாது. நீண்ட நேரமாக மறித்து ஒருவாறு ஒரு கிடாமாட்டைச்சுற்றிவளைத்துவிட்டனர். அந்தக் கிடா மாட்டுக்குக் கயிறெறிந்து சுருக்குப் போட அவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல. கயிறெறிந்து சுருக்குப் போட முடியாமல் வெறுங்கையோடு திரும்பி வரவும் தன்மானம் விடவில்லை.கொஞ்சம் நெருங்கினால் குத்திக் கிழித்து விடும்.கோபப்படுத்தப்பட்ட கிடாமாடு மூசிக்கொண்டு தலையைக் கீழும் மேலும் ஆட்டிக் கொண்டு நின்றது.அதன் கண்கள் சிவப்பேறி இருந்தன.இயம தர்மனின் எருமைக் கிடா இது தானோ என்றெண்ணக்
கூடிய தோற்றப் பொலிவு.
"புடிக் கேலாது வா போவம்"என்று மற்றவர்கள் திரும்பவும் கேட்காமல் கிடாமாட்டை நெருங்குவதும் வளம்
பார்ப்பதும் திரும்புவதும் என கதிரேசர் எருமைக் கிடாவோடு போராடி ஒருவாறு சுருக்குக் கயிற்றை எறிந்து கழுத்தில் சுருக்குப் போட்டு விட்டார்.அதை இழுத்து வந்து விளையாட்டிடத்தின் அருகிலிருந்த ஒரு கல்வீரை மரத்தில் கட்டி வைத்தார்.பின் அதற்குக் குறிகட்டுச் சிறப்பை கட்டிப் பழக்கி வயல்வேலைக்குப் பயன்படுத்தியது இப்போது அவரது மனக்கண்ணில் வந்து நின்றது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

கதிரேசர் கிடந்து கொண்டு நினைத்துப் பார்க்கிறார்.கிடாமாட்டைத் துரத்தி மறித்தது மட்டுமல்ல இன்னும் பல நினைவுகள் வந்துகொண்டிருந்தன. ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது நாய்கள் ஒரு பெரிய பன்றியை மறித்துக்கொண்டன. ஒரு தனியன் பன்றி. பன்றி பதினாறு குட்டிகளை முதல் தடவையில் போடுமாம்.அடுத்த அடுத்த தடவைகளில் ஒவ்வொன்றாகக் குறைந்து கடைசித் தடைவை ஒரே ஒரு குட்டியை மட்டும் போடுமாம். அந்தத் தனியன் குட்டி பதினாறு குட்டிகள் குடிக்கக் கூடிய பாலையும் தனியாகக் குடித்து வளர்வதால் மிகவும் வல்லமையுள்ள பன்றியாக வளருமாம்.அந்தப் பன்றியை 'மைந்தன் பன்றி என்பார்கள். வன்னிக் கிராமத்தில் அந்தப் பன்றிதான் மனிதர்களை வெட்டுகின்ற பன்றி. பயம் இல்லாமல் திரிகின்ற பன்றி.நாய்களால் மறிக்கப்பட்ட பன்றி ஒரு தனியன் மைந்தன் பன்றி என்பதனை அதன் செயலைப் பார்க்கும் போது தெரிந்தது. தன்னைச் சுற்றி வளைத்த நாய்களைத் தன் பற்களால் வெட்டுவதற்கு முயன்று பாய்ந்து பாய்ந்து கலைத்தது.
கதிரேசரோடு சென்ற தங்கரத்தினம் கையிலிருந்ததுப்பாக்கியைநீட்டிச்சுடுவதற்காக இலக்குப் பார்த்தார். "அண்ண! அண்ண! ஏனண்ண ஒரு SG.(குண்டுத் தோட்டா); தோட்டாவ மினக்கடுத்துவான். கொஞ்சம் பொறுங்கோ.இப்பவிளையாட்டப்பாருங்கோ” என்று சொல்லி மறித்து விட்டுத் தனது கண்டக் கோடாலியோடு பன்றிக்கு முன்னே பாய்ந்தார். பன்றி பெருஞ் சத்தத்தோடு கதிரேசரை நோக்கிப் பாய்ந்தது. கொஞ்சம் விலகிய கதிரேசர் கோடாலியால் ஒரே கொத்தாகப் பன்றியின் தலையில் கொத்தினார். பன்றி அலறிக் கொண்டு வீழ்ந்தது.அதை இப்போது சொல்வதற்குத் தங்கரத்தினம் இல்லை. அவரோடு வேட்டைக்குச் சென்றவர்கள் யாரும் இல்லை.
குளக்கட்டில் பதுங்கி இருந்து செல்லப்பர் நாலாம் நம்பர் சன்னத் தோட்டாவால் நீர்க் காகங்களைச் சுட்டு வீழ்த்திவிட்டு அலை நீர்க்காகங்களைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வரை காத்திருந்தார்.அங்கு வந்த கதிரேசர்நிறைகுளத்தில் பாய்ந்து நீந்திச் சென்று நடுக்குளத்துக்கும் அப்பால் தண்ணிரில் மிதந்து கிடந்த பன்னிரண்டுநீர்க்காகங்களையும் எடுத்து வந்துகொடுத்ததற்குச்சாட்சிசொல்லஇப்போது செல்லப்பரும் இல்லை. தண்ணிருக்குள் சுழியோடி நீர்க்காகத்தைத் துரத்திப் பிடித்தாவர் கதிரேசர் என்று சொன்னால் யார் தான் இன்று நம்புவார்கள்.
23

Page 26
கதிரேசர் கட்டிலில் கிடந்து கொண்டு தனது வலது காலைப் பார்த்தார். ஆட்டி அசைத்துப் பார்த்தார்.கொஞ்சம் அசைத்தாலும் வலித்தது.
மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தார். யானைக் காவலா,
சிறுபோக வெள்ளாண்மைக்கு மரத்துப் பரணில் கிடந்து யானையை விரட்ட கதிரேசர்தான் வேண்டும். பயம் என்றால் அவருக்கு என்ன என்றே தெரியாது. சுடலைக்குக் கட்டை தறிக்கவும், கட்டை அடுக்கவும் கதிரேசர் தான் முதல் ஆள். நாகபாம்மை பக் கையால் பிடித்துக் காட்டியிருக்கிறார். விஷப் பாம்புகளை வாலில் பிடித்துத் தூக்கிச் சுழற்றி எறிந்து வேடிக்கை காட்டியிருக்கிறார். ஊர்ச் சிறுவர்களுக்காக ஒரு வெங்கிணாந்திப் பாம்பை (மலைப் பாம்பு போன்றது) சுருக்குப் போட்டுப் பிடித்து உயிரோடு இழுத்துவந்து ஊர்ச் சந்தியிலே போட்டுக் காட்டியவர்.
எதை நினைப்பது எதை விடுவது என்று . தெரியவில்லை. ஒரு நாள் கோப்பைப் பந்து (பிள்ளையார் பந்து) விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் ஊர்ச் சிறுவர்கள். இளைஞர்களுக்கு உற்சாகமான விளையாட்டு அது. அந்த மைதானத்துக்குப் பக்கத்தில் ஒரு பாலை மரத்தில் கொஞ்சம் மந்திக் குரங்குகள் இருப்பதைக் கண்டு விட்டார் கதிரேசர். மந்திக் குரங்குகள் மாமரங்களில் மாங்காய்களைப் பிடுங்கி நாசஞ் செய்வது ஞாபகத்துக்கு வந்தது.
அவரது வீடு அந்த மைதானத்துக்குப் பக்கத்திலே தான் இருந்தது. "இண்டைக்கு இந்தக் குரங்குகளுக்கு ஒரு வழி பண்ணோணும்” என்று சொல்லிக் கொண்டு விளையாட்டை நிறுத்திவிட்டு கைக் குழல் அடித்து வேட்டை நாய்களை அழைத்தார். பத்துப் பன்னிரண்டு வேட்டை நாய்கள் வந்து குவிந்து விட்டன. மரத்திலே இருந்த குரங்குகளுக்குக் கல்லெறியத் தொடங்கினார்கள் சிறுவர்கள்.குரங்குகள் பக்கத்திலே இருந்த ஒரு வீரை மரத்திற்கு மட்டும் தான் தாவிப் பாய முடியும். பக்கத்தில் வேறு மரங்கள் இல்லை ஓரிரு குரங்குகள் பக்கத்து மரத்துக்குத்தாவி அதிலிருந்து அடுத்த மரத்திற்குத் தாவித்தப்பிச் சென்றன. அதைக்கண்ட சிறுவர்கள் சிலர் அந்த மரத்தில் ஏறினர்.குரங்குகள் தாவிப் பிடிக்கக்கூடிய மரக்கிளைகளை வெட்டி வீழ்த்தி விட்டு மரத்திலேயே இருந்தார்கள். இருபது இருபத்தைந்து குரங்ககள் வரையில் மரத்திலே இருந்தன. கீழே குதித்துத் தப்ப முயன்ற ஓரிரு குரங்குகளை வேட்டை நாய்கள் துரத்திப் பிடித்துப் பதம் பார்த்தன. பக்கத்து மரத்துக்குத் தாவ முயன்று கீழே விழுந்த குரங்குகளை வேட்டை நாய்கள் பிடித்துக் கொன்றன. ஊரே அந்த இடத்தில் வந்து கூடிவிட்டது. வேடிக்கை 24

பார்ப்பவர்களும் கல்லால் குரங்குகளுக்கு எறிபவர்களும் என பலரும் பங்குகொண்டனர். குரங்குகள் பயந்து கிளைக்குக் கிளை தாவின. அந்த மரத்தை விட்டுத் தப்ப அவற்றுக்கு ஒரு வழியும் இல்லை. உயரத்திலுள்ள கிளைகளுக்குத் தாவிப் பாய்ந்து பெரும் சத்தமிட்டன. நிலத்தில் நின்ற வேட்டை நாய்களின் சத்தம் குரங்குகளைக் கிலிகொள்ள வைத்தது.கதிரேசர் கைக்களவான . ஒரு கருங்காலித் தடியும் கொண்டு மரத்திலே ஏறினார். அவரோடு இன்னும் சில இளைஞர்களும் மரத்தில் ஏறினார்கள். மரத்திலே ஏறிக் குரங்குகளைக் கலைத்தனர். ஒவ்வொன்றாகக் கிளைக்குக் கிளை தாவி ஓலமிட்டன. மரத்தில் ஏறியவர்களைக் கடிக்க முயன்றன. கதிரேசரும் மற்றையோரும் எட்டி எட்டிக் குரங்குகளுக்கு அடித்தனர். குரங்குகள் வேறு வழியின்றி தொப் தொப் என்று கீழே குதித்தன. வேட்டை நாய்கள் பாய்ந்து பிடித்தன.
ஊர்ப் பெரியவர்கள் சிலர் ஏசினார்கள். சிலர் ' உற்சாகப் படுத்தினார்கள். அத்தனை குரங்குகளையும் மரத்திலிருந்து கலைத்து வீழ்த்தினார் கதிரேசர். அத்தனை குரங்குகளும் நாய்களால் கடித்துக் கொல்லப்பட்டன. கதிரேசருக்கு இந்த நினைவு வந்ததும் பயம் வந்துவிட்டது. உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது.கண்களை இறுக மூடிக் கொண்டார்.
"என்ன மடத்தனம் மோட்டு வேல, எவளவு பாவம். சீ.." என்று அவரது மனம் அடித்துக் கொண்டது. இரவு நித்திரை வரவில்லை. இரவு விடிந்து விட்டால்... இந்த இரவு விடியாமலே இருக்கக் கூடாதா. அவரென்ன நளாயினியா இரவை விடியாதிருக்கச் சாபம் இட பொழுது விடிந்து விட்டது.
காலையில் வைத்தியர் அவரது கட்டிலடியில் வந்து நின்றார். "அப்பு ! என்ன மாதிரி." மிகவும் பரிவுடன் விசாரித்தார்.
"ஐயா! உங்களைக் கும்பிட்டன். என்ர கால மட்டும் எடுத்திராதேங்கோ. வேணுமெண்டா என்ர உசிர எடுத்திருங்கோ."கதறி அழுதார்.
கைகள் இரண்டையும் கூப்பித் தலையில் வைத்து மன்றாட்டமாகக் கேட்டார்.
"அப்பு ! ஆர் சொன்னது உங்கட கால் எடுக்கப் போறதெண்டு. அப்பிடி ஒண்டும் செய்யமாட்டம் செல்துண்ட மட்டும்தான் எடுப்பம்"
கதிரேசர் கால்வலியையும் மறந்து கட்டிலில் இருந்து இறங்கி வைத்தியரின் காலில் விழுந்து கும்பிட்டார்.
"ஐயா! நீங்கள் கடவுள்... நீங்கள் கடவுள்."
0 0 0 ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 27
Dே கை 04டு!
50 (
எ
எட்டுகள் திருப்தியாக இருக்கு...'' என்றேன். நான் சொல்லி முடிப்பதற்கிடையில் அவளது கண்களில் இனம் தெரியாத சோர்வு தட்டி, முகம் தொய்ந்தது போலிருந்தது.
கொலஸ்டரோல் அளவாக சரியாக இருந்தது. இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்திருக்கவில்லை. சிறுநீரகம், ஈரல் எவற்றிலும் பாதிப்பு இல்லை என்பதாலேயே அவ்வாறு சொன்னேன்.
இன்னமும் அவளது பிரசரைப் பார்க்கவில்லை. தொடர்ந்து அதையும் சோதித்தேன். அதுவும் 120/80 என சரியான அளவைக் காட்டியது. வழமையாக நீரிழிவு இருக்கவில்லை. பிரசாரும் கொல்ஸ் டரோலும் மட்டும்தான் அவளுக்கு உள்ள பிரச்சனைகள் என்பது எனக்குத் தெரியும். அவை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் திருப்தியாயிற்று.
இருந்தபோதும் ஒழுங்காக வந்து சிகிச்சை பெற்றிருக்கவில்லை என்பதை அறிக்கைகள் சுட்டின. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்தான் வந்திருந்தாள். அவ்வாறான நீண்ட இடைவெளிகளில் பிரஷர் அதிகரிக்கலாம். வேறு பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். காலக்கிரமத்தில் பரிசோதிக்காமல்
இருப்பது தவறுதான். ஆயினும் யாவும் திருப்தி யாக இருப்பதால் அவளைப் பாராட்டலாம் எனத் தோன்றியது.
"எல்லாத்தையும் நல்ல கட்டுப்பாட்டிலை வச்சிருக் கிறியள். நல்ல சந்தோசம்" என்றேன்.
விம்மல் சத்தம்தான் விடை யாக வந்தது. பாறையின்
அனுயவப் பகிர்வு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

னைரூம்
படுகரும் ..
ம்.கே.முருகானந்தன்
நீருற்றுப்போல கரிய முகத்திலிருந்து முத்துக்கள் சிந்த ஆரம்பித்தன.
ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தேன். தனது உடல்நலம் சரியாக இருக்கிறது என்பதை அறிந்து கண்ணீர்விட்டு அழுத முதல் நபர் இவளாகத்தான் இருப்பாள்.
"எல்லாம் சரி எண்டால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிக்கப் போகிறாங்களோ? விடிவே இல்லையா எனக்கு?” என்று சொல்லி முடிப்பதற்குள் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது அவளுக்கு.
"உனக்கு எல்லாம் நல்லாத்தானே இருக்கு. உன்ரை பாட்டிலை உன்ரை வேலையளைச் செய்யிறபடி உடம்பு நிலை இருக்கு. உதவி தேவையில்லை. உங்கையே இரு என்கிறாங்கள்."
"பத்து வருசமா தனியாகக் கஷ்டப்படுகிறன். ஐந்து வருஷமா செய்யாத முயற்சியெல்லாம் செஞ்சு பாத்திட்டன். இல்லை எண்டுட்டாங்கள். இப்படியே கிடந்து சாகவேண்டியதுதான்.”
சாவை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு அல்லது அதைத் தேடுகிற அளவிற்கு அவளது மனம் தளர்ந்துவிட்டதை உணர்ந்தபோது மனம் வேதனைப்பட்டது.
ஆனால் துன்பம் இவளுக்கு மாத்திரம் இல்லை
இவளைப் போலை எத்தனை முதியவர்கள் தன்னந்தனிமையில் துன்பப் படுகிறார்கள் பலரைப் பார்த்த அனுபவத்தில் எனக்குத் தெரிந் திருந்தது. சில இடங்களில் உதவிக்கு ஒரு வேலை ஆள் இருக்கிறார்கள். சிலருக்கு அதுவும் இல்லை. செத்துப் பிணமாகி நாற்றமெடுத்து பொலீஸ்காரன் வீட்டை உடைத்துப் பார்த்தால் தான் நிலைமை தெரியும்.
25

Page 28
“முந்தி5ே வயசுவந்தால்தருவம் எண்டாங்கள். இப்ப 65 வந்திடுத்தெண்டு சொன்னால் நீ நல்லா இருக்கிறாய்தானே உன்னாலை முடியும் ஏன் இஞ்ச வரப்போறன் என்கிறாய் எனத் தடுக்கிறாங்கள்.”
"தான் அம்மான்ரை செலவெல்லாம் பாப்பேன். உங்கடை உதவி ஒண்டுமே தேவையில்லை எண்டு மகன் சொல்லியும் இஞ்சை வரவேண்டிய அவசியமே இல்லை எண்டு மறுத்துப்போட்டாங்கள்.”
பழைய ரக்கோட்டுகளைத் தட்டிப் பார்த்தபோது வருடம் ஒருமுறை மட்டும் இவ்வாறு பரிசோதனை முடிவுகளுடன் வருவது தெரிந்தது. கடந்த 5 வருடங்களாக அப்படித்தான் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு தோற்றுப் போனதருணங்களில்
நாலு பிள்ளைகள். அனைவரும் வெளிநாடுகளில் கணவன் இறந்து 5 வருடங்களாகிறது. பிள்ளைகளோடு போய் வாழவேண்டும் என்பதுதான் அவளது ஒரே இலட்சியம். அதற்காகப்பாடுபடுகிறாள்.ஆனால் ஒவ்வொரு வருடமும் கசப்பான முடிவுகள்தான். வாழ்வே வெறுத்து தற்கொலை எண்ணம் வந்து சிகிச்சை பெற்றிருக்கிறாள்.
தற்கொலை எண்ணத்திற்குக் காரணமான மனச்சோர்வு நோய்க்கு மருந்து சிலகாலம் கொடுத்தேன். தொடர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால் பிரசர் கொலஸ்டரோல் மருந்துகளை ஒழுங்காக உபயோகிப்பதாகச் சொன்னாள்.
நீண்டநேரம்பேசிக்கொண்டிருந்துவிட்டேன் போலிருக்கிறது. நோயாளிகள் காத்திருக் கிறார்கள் என உதவியாளர் இன்ரகொம்மில் சொன்னார்.
சுருக்கமாக மீண்டும் விளக்கிவிட்டு, அதே மருந்துகளைஉபயோகிப்பதற்கானபிரிஸ்கிரிப்சன் எழுதிக்கொடுத்து அனுப்பினேன்.
அடுத்ததாக நுழைந்ததும் ஒரு வயதான பெண்மணிதான்.
முகத்தில் மலர்ச்சியோடு உள்நுழைந்தாள். “எனக்குப் பிரச்சனை ஒன்றும் கிடையாது. நீங்கள் எழுதித் தந்த கொலஸ்டரோல் மருந்துகளையே பாவிக்கிறன். மூன்று மாசமாப்போச்சு. அதுதான்இரத்தம் சோதித்துக் கொண்டு வந்தனான். ரிப்போட்டைப் பாருங்கோ. ஒருக்கால் பிரசரையும் பாத்து விட்டீங்கள் என்றால் சரி”
ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது.
26

பிரசரைப் பார்த்தேன். ரிப்போட்டுகளையும் பார்த்தேன். எல்லாம் வலு நோர்மலாக இருந்தது.
"எல்லாம் சரியாகத்தான் இருக்கு” என்று நான் சொன்ன மாத்திரத்தில் "அப்ப நான் அந்த மருந்துகளையே போடுறன்” என்று சொல்லிக் கொண்டே இருக்கையிலிருந்து எழ முயன்றாள். எனக்கு இவவையும் நீண்டகாலமாக நன்றாகத் தெரியும் இளைப்பாறிய ஆசிரியை. இப்பொழுது தனது வீட்டில் வைத்து பிள்ளைகளுக்கு ரியூசன் கொடுக்கிறாள். தனது வேலையை ஏனோதானோ எனச் செய்யாது அர்ப்பணிப்புடன் செய்கிறார். இவரது மாணவர்கள் சிலரும் என்னிடம் சிகிச்சைக்காக வருவதால் இவரது நல்லாசிரியத் தகைமை பற்றியும் தெரியும்,
கணவணைஇளவயதிலேயேபறிகொடுத்தவர். ஒரே ஒரு மகன். நன்றாகப் படிப்பித்து ஆளாக்கிவிட்டிருந்தாள். இப்பொழுது மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். குடும்பத்தோடு அங்கேயே வாழ்கிறான்.
"மகன் என்னவாம் சொல்கிறார்?" என்று கேட்டன்
"உங்கை தனிய இருந்து ஏன் கஷ்டப் படுகிறயள். இஞ்சை வாங்கோவன் எண்டு நச்சரிக்கிறான்”
"அப்ப போறதுதானே" வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஒரு முறை மகனிடம் சென்றிருக்கிறாள். மகன் வேலை வேலை என இராப்பகலாகத் திரிவான். மருமகளுக்கும் பகல் வேலை. இவள் மட்டும் வீட்டில் தனியாக இருக்க நேரிடும். ஒருவேளை அவர்கள் வீட்டில் நின்றாலும் "ஹாய் மம்" என்று சொல்லிவிட்டு தங்கள் கணனியில் மூழ்கிவிடுவார்கள். பேசுவதற்கும் நேரம் கிடைக்காது. எவ்வளவு நேரம்தான் இவளால் ரீவீபார்த்துக் கொண்டிருக்க முடியும்.
நாள் முழுவதும் மாணவர்களுடன் பேசித் தன் பொழுதைப் பயனுள்ள முறையில் கழித்த அவளுக்கு அந்தத் தனிமை பிடிக்கவில்லை. தனது அறிவை கறள் கட்ட விடுவதிலும் விருப்பமில்லை.
இங்கு வந்து மாணவர்களுடன் பொழுதுகளைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டுவிட்டாள். வாசிப்பு, தமிழ்ச் சங்கம் இலக்கியக் கூட்டங்கள், கோயில் என இன்னும் பல சோலிகள் மகிழ்ச்சியான சோலிகள் நேரம் போதவில்லை.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 29
மருந்திற்கு வந்தாலும் வந்த வேலையை முடித்துக் கொண்டு பறந்து செல்வதைப் பல முறை அவதானித்திருக்கிறேன்..
மகிழ்ச்சி என்பது எமது மனத்தில் இருக்கிறது.. அதற்கான சூழலை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கணவன், மனைவி பிள்ளை குட்டி இவற்றிற்கு அப்பால் தமக்கென்று பிரத்தியேகமான ஒரு சிறிய உலகமாவது இருக்க வேண்டும்.
பிள்ளைகள் அருகில் இல்லாத வாழ்வு அர்த்தமற்றது. செத்துப் போகலாம்' என மற்றப் பெண் நினைத்தற்குக் காரணம் அவளுக்கு என்று ஒரு பிரத்தியேக உலகு இல்லாமல் போனதேதான்.
இதற்குக் காரணம் தனது முதுமையைத் திட்டமிடுதல் எமது கலாசாரத்தில் இல்லை. அன்றைய கூட்டுக் குடும்ப வாழ்வில் அதற்கான தேவை இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் இன்றைய இயந்திர மயமான கடுகதி வாழ்க்கை ஓட்டத்தில் தனது முதுமைக்கும் தனிமைக்கும் ஏற்றபடியான வாழ்வை, அதுவும் தான் இரசித்து மகிழக்கூடிய வாழ்வை அமைப்பது அவசியம்.
கற்பனைக்குள் புகுந்தேன். ஒருபடி விசா கிடைத்து இவள் மகனிடம் போய்ச் சேர்கிறாள்.
மகன் ஆலாய் பறக்கிறான். பேரப்பிள்ளைகள் ஆங்கிலத்தில் கசாமுசா என்கிறார்கள். மருமகளுக்கு இவளது கட்டுப்பெட்டித்தனம் பிடிக்கவில்லை. இவளுக்கு அவள் ஓட்டப்பந்தயக் குதிரை போல திமிர்த்திக் கொண்டிருப்பதாக எரிச்சல் வருகிறது. பேசி மனம் ஆறுவதற்கும் வேறு உறவுகள் இல்லை. வாசிப்பதில் நாட்டமில்லை. கணனி தெரியாது. ரீவியும் அலுக்கிறது.
என்ன செய்வது? மீண்டும் அழுகிறாள்.
அழுவதற்காகவே பிறந்தவள். தன்வாழ்வில் ஒளிக்கீற்றை துாண்டிவிடத் தெரியாத பேதமையில் அழுகிறாள்.
பிள்ளைகளும் அழுகிறார்கள். கடல் மீனைத் தரையில் துாக்கிப் போட்டது போல இவளை அங்கு அழைத்த மடமையான செயலுக்காக அழுகிறார்கள்.
கனவு கலைந்தது. "அவளது வாழ்வு அவ்வாறு சிதைந்து போகக் கூடாது. பிள்ளைகள் பேரப் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்” என மனதிற்குள் வாழ்த்திக் கொண்டேன்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

வாத்திரை .....
பிரித்தல் கோடுகள் கீறிக் கொண்டு
மனக் கூட்டில் வீடு கட்டியிருந்த பறவையை
கல்லெறிந்து துரத்திய பொழுது
எனது ஆப்தக் காதல் ஒடுங்கி
எனது சுயத்தின் விருட்சக் கிளைகளும் வேர்களும்
அசைந்து அசைந்து உதிர்கின்றன
நான் போர் குற்றவாளி அல்லது தீவிரவாதி
என்றான முரண்களால்
உன்னிலான எதிர்வினைகளில்
சிக்கிக்கொண்டு இருக்கின்றேன்.
எனது இருத்தலின் சுயாதீனத்தின்
அடையாளங்கள் அற்றுப் போன பின்னும்
எனது வாழ்தலை அறுத்துப் போட முடியாது
என்ற வாக்கியம் மட்டும் விஞ்சி நிற்க
நான் எனது பயணத்தின் நீட்சியை
எனது புனித யாத்திரையின் அழகை
நெருங்கிக் கொண்டு இருக்கிறேன் என்ற
பெறுமதியினை மட்டுமே உனக்கு சமர்ப்பிக்கின்றேன்
எந்த அனர்த்த வர்க்கங்களாலும்
எனது ஆத்ம சக்தியை உடைக்கவோ அல்லது
அழிக்கவோ இயலாது என்பது
காலத்தின் எழுதுகோல் உனக்குச் சமர்ப்பணம் செய்யும்
- எல். வஸீம் அக்ரம்
27

Page 30
கொற்றாவத்தை கூ
குட்டிக் கதைகள் எனக்கும் சாலையி
தொண்ணூறுகளின் முற்பகுதி - இப்போது மெகா சீரியல்கள் ரசிகப் பெருமக்களை முழுமையாக அடிமைப்படுத்தி வைத்திருப்பது போல் தென்னிந்தியத் திரைப்படங்கள் வீடியோ மூலம்
அடிமைப்படுத்தி வைத்திருந்தன.
வடபகுதியில் மின்சாரம் இல்லாது போனதால் சினிமாப் பார்க்க முடியாமல் மக்கள் அந்தரித்துப் போனார்கள்.
பொதுமக்களுக்கென அனுப்படும் உணவுப் பொருட்களில் ஒருபகுதி புலிகளுக்குப் போய்ச் சேர்கின்றது என்ற கண்டனத்தை நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் வைத்தபோது அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிறேமதாசா "புலிகள் என்ன புல்லையா தின்னுவாங்க? அவங்களும் இந்த உணவுப்பொருட்களைத்தானே சாப்பிட வேண்டும்" என்று கூறியது போல
அத்தியாவசிய தேவைக்கென கப்பலில் அனுப்பப்படும் மண் எண்ணெய்யில் மிகச் சிறு பகுதி ஜெனரேட்டர் மூலம் வீடியோப் பார்க்கும் மிகமிக அத்தியாவசியத் தேவைக்கும் பயன்பட்டது.
வசதி படைத்தவர்களென்றால் அதிக விலையில் மண் எண்ணெய்யை வாங்கி, தமது பிறந்தநாள், திருமணநாள் போன்ற கொண்டாட்டங்களில் படங்காட்டுவர். அயலில் உள்ள மக்களும் இராமனின் பட்டாபிஷேகத்தின் போது மக்கள் அயோத்திமா நகருக்குத் திரண்டது போலத் திரண்டு வந்து வீடியோ மூலம் சினிமாப்படங்களைப் பார்த்து மகிழ்வர்.
அல்லாதபோது சாதாரண மக்கள் சில குடும்பங்களாக வேற்றுமையில் ஒற்றுமைகண்டு ஒவ்வொரு குடும்பமும் 1/4 லீற்றர் மண் எண்ணைய் வீதம் சேர்த்து ஐந்து அல்லது ஆறு லீற்றர் மண் எண்ணெய்யுடன் வீடியோ படக்காட்சிக்கு ஓர் இடத்தில் ஒழுங்கு செய்வார்கள். அருமையாகக் கிடைக்கும் சந்தர்ப்பம் என்றபடியால் மூன்று படங்கள் சில சமயங்களில் நான்கு படங்கள் கூட இரவில்
5:13:13:34

றும்.
(34)
நந்தால்
பார்த்து மகிழ்வர். விடிந்த பின்னும் கூட படம் முடியவில்லையென்றால் முடித்துவிட்டுத்தான் ரசிகப் பெருமக்கள் | வெளியேறுவார்கள்.
"கமலஹாசன் என்றால் கணவனையும் மறந்திடுவர்"
கவிஞர் வதிரி கோவிநேசன் கவியரங்கத்தில் பாடிய வரிகள் தான் அப்போது ஞாபகத்தில் நிற்கும்.
அன்று நான்கு திரைப்படங்கள் ஒருவருடைய வீட்டு முற்றத்தில் வீடியோ மூலம் காண்பிப்பதற்கு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. கந்தசாமி அண்ணை அந்தக் காலத்திலிருந்தே சினிமாவில் அலாதிப்பிரியன். இரவு எட்டு மணிக்கே வந்து வீடியோவுக்கு முன்னால் தரையில் உட்கார்ந்து விட்டார். மகன் வாகீசனும் தனது நண்பர் குழாத்துடன் தனக்குப் பின்னே கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருப்பதை அவதானித்தார். இது ஒரு பிரச்சினையல்ல. இது சகசம். அவன் இன்னும் O/L பரீட்சைக்குத் தோற்ற நான்கு மாதங்களே இருந்தன.
இரவு 3.30 மணியளவில் மூன்றாவது படத்தின் முடிவுடன் வீடியோ டெக் ஒத்துழைக்க மறுத்து விட்டது. வீடியோக்காரன் எவ்வளவோ முயற் சித்தும் முடியாமற் போய்விட்டது. சனங்களுக்கு நான்காவது படத்தைப் பார்க்காமல் வீட்டிற்குத் திரும்பும் போது "சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் அருந்தாமல் விட்டது" போன்ற உணர்வு தான் இருந்தது.
கந்தசாமியண்ணையும் தாளாத சோகத் துடன் வீடு வந்து சேர்ந்துவிட்டார். மகன் வாகீசன் வீடு வந்து சேரவில்லை. விழித்துக் கொண்டே படுத்திருந்தார். வைகறைப் பொழுதை வரவேற்கும் வகையில் பறவையினங்களின் பாட் டொலிகள் தொடங்கிவிட்டன. வாகீசன் இன்னும் வரவில்லை.
கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 31
"இயக்கதிலை சேரப் போயி ருப்பானோ?"
படங்களை நிறைவாகப் பார்க்காத கவலையுடன் இந்தப் பயமும் அவரைத் தொற்றிக் கொண்டது. வெளியே போய் விசாரிக்க நினைத்தும் நித்திரை "முழித்த" அலுப்பு அதற்கு இடங்கொடுக்கவில்லை. மனைவி பிள்ளைகள்
இவை எவற்றையும் அறியாத நிலையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள்.
ஒருவாறு விடிந்தது. வாகீசன் கேற்றைத் திறந்து பயத்துடன் வீட்டிற்குள் நுழைகிறான்.
வரும் இவரும் 35
சுமார் நாற்பது வருடங்களுக்கு முந்திய கதை இது. இக்கதையின் நாயகர்கள் இருவரும் தமிழ்வாத்தியார்கள். ஒருவர் பொன்னம்பலவாத்தியார் மற்றவர் கதிர்காமத்தம்பிவாத்தியார். கஞ்சத்தனத்தில் ஒருவருக்கு மற்றவர் எள்ளளவும் குறைவின்றி நிகரானவர்.
வெள்ளை வேட்டி, தேசிய உடையில் மேற்சட்டை (National) தோற் செருப்பு இத்தியாதி தோற்றத்தில் பார்த்தவுடன் தமிழ் வாத்தியார்கள் என்ற எண்ணத்தை மனதில் தோற்றுவித்துவிடும் வடிவம்.
பாடசாலையில் ஒன்றாகப்படித்தவர்களாம் பின்னர் ஆசிரியப்பதவி பெற்று மலையகத்தில் வெவ்வேறு பாடசாலைகளில் படிப்பித்து ஐந்து வருடங்களில் ஒன்றாக மாற்றலாகி ஊருக்கு வந்து இங்கும் வேறு வேறு பாடசாலைகளில் படிப்பித்துக் கொண்டிருந்தார்கள்
இவர் அவருடைய காசு என்று சொல்லி வட்டிக்குக் கொடுப்பார். அவர் இவருடைய காசு என்று சொல்லி வட்டிக்குக் கொடுப்பார்.
இருவரும் தோட்டம், வயல் என்று வைத்திருந்தார்கள். திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் வடபகுதியில் உணவுப்பஞ்சம் ஏற்பட்ட போது இறக்குமதி அரிசிக்குப் பிரதியீட்டுப் பொருளாக மக்கள் மரவள்ளிக்கிழங்கைக் கொஞ்சக்காலம் பயன்படுத்தினார்கள். தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கைப் பயிரிட்ட பொன்னம்பல்வாத்தியாருக்கு குருசந்திரயோகம் அடித்தது. சனங்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

"டேய் நில்லடா... படம் முடிஞ்சு இவ்வளவு நேரமாச்சு. எங்கையடா போய் நிண்டிட்டு வாறாய் ...?"
ஆவேசம் வந்தவராய் கேட்டார் தந்தை. "வள்ளுவர் வாசிகசாலைக்குக் கிட்ட படம் போடுகிறாங்கள் எண்டு மேனனும் சுரேசும் போனவங்களப்பா.... பின்னை நானும் அவங்களோடை போய் ஒரு படம் பார்த்திட்டு வாறனப்பா..."
பயந்து பயந்து சொன்னான் மகன். தந்தைக்குக் கோபமும் கவலையும் கட்டுக் கடங்காமற் போய்விட்டது.
"அட.. பொறுக்கி....... நீ எனக்கும் சொல்லிப்போட்டுப் போயிருந்தால் நானும் வந்திருப்பேனே.... ஆ... ஆ...." கியூவில் நின்று இறாத்தல் கணக்கில் மரவள்ளிக்கிழங்கை வாங்கியபோது நகைக் கடைக்காரன் பவுண் நிறுத்தமாதிரி நிறுத்து விற்றவர் என்று இப்போதும் ஊரில் கதைப்பார்கள்.
கதிர்காமத்தம்பி வாத்தியார் பத்து நாட்களாகத் தொடர்ச்சியாக லீவில் நின்று வயல்வேலை செய்துவிட்டு, பதினோராம் நாள் "அடியே செல்லம்மா... சரியான அலுப்பாக்கிடக்கு.... இண்டைக்கு ஒய்வெடுக்கவேணும் நான் இண்டைக்குப் பள்ளிக்கூடம் போகப்போறன்"
என்று தனது இல்லக்கிழத்திக்குக் கூறியதாக இப்போதும் ஊரில் கதைப்பார்கள்.
மலையகத்திலிருந்து ஊருக்குவந்த காலத்தில் கிடைக்கவேண்டிய சம்பள உயர்வு கிடைக்காமலிருந்தது. அலுவல் பார்த்து அதைப் பெறும் நோக்கில் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் முருங்கைக்காய் நெத்தலிக்கருவாடு சகிதம் மலையகத்தில் பெற்ற சிங்கள மொழிப்பரிச்சயத்துணிவுடன் இருவரும் கொழும்புக்குப் புகையிரதத்தில் புறப்பட்டார்கள்
ஒருவர் ரயில்வே ரிக்கற்றுக்கு போகும்போது பணம் கொடுத்தார். மற்றவர் வரும்போது பணம் கொடுத்தார். ஒருவர் சாப்பாட்டுக்கடையில் ஒருநேரம் பணம் கொடுத்தால் மற்றவர்மறு நேரம் பணம் கொடுப்பார்.
இப்படியே மாறி மாறி வலுசிக்கனமாகச் செலவழித்து ஊர்வந்து சேர்ந்தார்கள்.
இருவரும் அவரவர் வீட்டிற்குப் பிரிந்து செல்ல வேண்டிய சந்தியில் கதிர்காமத்தம்பி வாத்தியார் சொன்னார்.
"சரிதானே வாத்தியார் நாளைக்குச் சந்திப்பம். ஒருத்தரை ஒருத்தர் பாதிக்காதபடி சரியாகச் செலவழிச்சிருக்கிறம் திருப்திதானே..."
பொன்னம்பல வாத்தியார் சொன்னார் "இல்லை வாத்தியார்...... எனக்கு உங்களால் ஒருவடையும் பிளேன்ரீயும்வருமதியிருக்கு."

Page 32
எழுதத் அ எண்ண
மல்லிகை மீண்டும் மலரவேண்டும்
இலங்கையின் தரமான கலை - இலக்கியச் சஞ்சிகைகளுள் ஒன்றாக, ஏறத்தாழக் கடந்த 48 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்தது, மல்லிகை. பல இலக்கிய வாதிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. பல இலக்கிய வாதிகளைக் கெளரவித்தது. பல இலக்கியக் களங்களை வெளியுலகுக்கு
அறிமுகப்படுத்தியது.
பல சிரமங்களுக்கும், சலால்க
ளுக்கும் மத்தியிலும் யாழ்ப்பாணத்திலிருந்தும், கொழும்பிலிருந்தும் அது வெளிவந்து கொண்டிருந்தது ஆனால், கடந்த சில மாதங்களாக மல்லிகை பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் உடல்நலக்குறைவு மல்லிகையையும் பாதித்துவிட்டது. ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு, ஏறத்தாழ இன்னும் இரண்டே ஆண்டுகள் இருக்கும் நிலையில், மல்லிகை ஓய்ந்திருப்பது வருத்தத்தைத் தருகிறது."
எனது முதல் சிறுகதை வெளிவந்தது மல்லிகையிலேயே. எனது சில சிறுகதைகள், கட்டுரைகள் மல்லிகையில் வெளிவந்துள்ளன. மல்லிகை இப்போது வெளிவராமையினால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் மல்லிகைக்கு எழுதிய கட்டுரையொன்றும் வெளிவர முடியாமல் போய்விட்டது. என்னைப் போன்ற பலருக்கும் மல்லிகை களம் அமைத்துத் தந்தமையை ஒருபோதும் மறக்க முடியாது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் என்னைக் காணும் போதெல்லாம் "மல்லிகைக்கும் எழுதுங்கள்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். எப்போதும் உற்சாகமாகச் செயற்பட்டு வரும் அவர், இப்போது முடங்கிக் கிடப்பது, இலக்கிய உலகுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 30

தூெண்டும் மல்கள்
பேராசிரியர் துரை மனோகரன்
மல்லிகை
தொடர்ந்து வெளிவரும்
என்பதிலும், தொடர்ந்து வெளி வரவேண்டும் என்பதிலும் மல்லிகை ஆசிரியர் எப்போதும் உறுதியாகவே இருந் துள்ளார். தமக்கு இயலாத போது, தமது மகன் அதனைக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையும் அவரிடத்து இருந்தது. அவரது அந்த நம்பிக்கையை, அவரது மகனும், அவருடன் நெருங்கி ஒத் துழை த த வர் க ளு ம்
செயற்படுத்த வேண்டும் குறைந்தது ஐம்பது ஆண்டுகள் வரையாவது மல்லிகை வெளிவந்தது என்ற பெருமையை அது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் மல்லிகை மீண்டும் மலரவேண்டும். அதுவே இன்றைய இலக்கிய உலகின் எதிர்பார்ப்பு.
FREALE 4TTAs24747421:14:42tr1477+FMHArk=1414trl+HAttrl+4414745At:4trIFA11111114THETIAN 1124tinHTTA11111144 A1117449Attr1474%AttMTRIWA111111111WiFirl4 ATMAT111TMWTழAntMmk 1411 TNTANHMIMTwரா'TTRAHMANAMITMATATIMTruArt/TT:பொயTMAT&MTrsitlATH4யurn451:4thiruAr144546447f+4174-2477ாடி[147471&14:11:47MHTHAH1471HTHA14744f1474
மறக்க முடியாத பாடகர்
தமிழ்த் திரையுலகின் மறக்கமுடியாத ஒரு பாடகராக விளங்கி வந்தவர், பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ். அண்மையில் அவர் காலமான செய்தி ஒரு சோகச் செய்தியாகும். ஆந்திராவைச் சேர்ந்த அவர், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத போதிலும், உச்சரிப்புச் சுத்தத்துடன் தமிழில் பாடியவர். பிற மொழிகளிலும் பாடியவர். அவரது குரல் மென்மையானது. தமிழ்ப் பின்னணிப் பாடகர்களில் ஏ. எம் ராஜா , பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கே.ஜே.ஜேசுதாஸ் போன்றோர் மென்மையான குரல்வளம் படைத்தவர்கள் (இப்போது பாடும் பெரும்பாலான ஆண் பின்னணிப் பாடகர்கள் மென்மையான குரல் கொண்டவர்களே. ஆனால் குரல் வளம்தான் குறைவு) இவர்களுள் ஏ.எம்.ராஜாவின் குரல் எனக்கு மிகவும் பிடித்தமானது (செளந்தரராஜனுக்கு அடுத்து என்னைக் கவர்ந்தவர் ஏ.எம்.ராஜா) ஆயினும், பல இனிமையான பாடல்களைப் பாடி,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 33
பிரபல நடு பொருந்தியிருந்தாவைப் போல்
தமக்கெனச் சினிமா உலகில் ஓர் இடத்தினை ஸ்ரீநிவாஸ் பெற்றிருந்தார்.
இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் பாடத் தொடங்கி, அறுபதுகளில் உச்சத்திற்குச் சென்ற ஸ்ரீநிவாஸ், எழுபதுகளிலிருந்து பின்னணி பாடும் வாய்ப்புகளை இழக்கத் தொடங்கினார். அறுபதுகளில் 25 ஆண் அ 2 பாடகர்களில் செளந்தரராஜனை அடுத்துப் புகழ் பெற்ற பின்னணிப் பாடகராக அவர் விளங்கினார். ஜெமினி கணேசனுக்கு மிகப் பொருத்தமான பின்னணிப்பாடகராகக் கருதப்பட்டுவந்த ஏ.எம். ராஜாவுக்கு அடுத்து, இன்னொரு பொருத்தமான பின்னணிப் பாடகராக ஸ்ரீநிவாஸ் விளங்கத் தொடங்கினார். ஜெமினி கணேசனுக்கான சினிமா வாய்ப்புகள் எழுபதுகளிலிருந்து குறையத் தொடங்கியதாலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கே.ஜே.ஜேசுதாஸ் ஆகியோரின் வருகை யினாலும் பி.பி.ஸ்ரீநிவாஸுக்குப் பின்னணி பாடும் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. ஸ்ரீநிவாஸ் பல நடிகர்களுக்குக் குரல் கொடுத்திருந்தாலும், ஜெமினி கணேசனுக்கே அவரது குரல் (ஏ. எம். ராஜாவைப் போல) கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. கன்னடத்தின் பிரபல நடிகர் ராஜ்குமாருக்கும் அதிகமான பாடல்களை ஸ்ரீநிவாஸ் பாடியிருக்கிறார். தமது சாரீரமாக விளங்குபவர் ஸ்ரீநிவாஸ் என ராஜ்குமார் மகிழ்வோடு சொல்லிக் கொண்டார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எம்.எஸ்.விஸ்வ நாதன் முன்னிலையில் பி.பி.ஸ்ரீநிவாஸின் பாடலைப்பாடிக்காட்டித்தான் பின்னணி பாடும் வாய்ப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எப்போதும் நன்றியோடு நினைவு கூர்வார், பாலசுப்பிரமணியம்.
ஐம்பதுகளில் இடையிடையே
பாடி வந்த ஸ்ரீநிவாஸை, அறுபதுகளில் வெளிவந்த "காலங்களில் அவள் வசந்தம்" (பாவமன்னிப்பு) என்ற பாடல் உச்சத்திற்குக் கொண்டுசென்றது. அவர் பாடிய பல இனிய பாடல்களில், சுசீலாவோடு இணைந்து பாடிய "காற்றுவெளியிடைக் கண்ணம்மா" (கப்பலோட்டிய தமிழன்), “யார் யார் யார் அவள் யாரோ?" (பாசமலர்) போன்றவையும் தனித்துப் பாடியவற்றுள் "பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா?” (இதயத்தில் நீ) முதலியவையும் என்னை மிகவும் கவர்ந்தவை. செளந்தரராஜனோடு இணைந்து ஸ்ரீநிவாஸ் பாடும்போது, கம்பீரமும், மென்மையும் சங்கமமாகும். இருவேறுபட்ட குரல்களின் இனிமையையும், சுவையையும் அனுபவிக்கலாம் படித்தால் மட்டும் போதுமா? ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

பார் மகளே பார்! போன்ற திரைப்படங்களில், அவர்கள் இருவரின் குரல்களும் இணைந்த இனிய சுவையை ரசிக்கலாம். எண்பதுகளில் திரைப்படமொன்றுக்கு அவர் பாடிய "தோல்வி நிலையென நினைத்துவிட்டால்” என்ற பாடல், அக்காலச் சூழலில் பலரையும் கவர்ந்ததோடு, நெஞ்சையும் நெகிழ வைத்தது. அவரது குரல் மென்மையானது மட்டுமன்றி, வித்தியாசமானதும் கூட
ஸ்ரீநிவாஸ் ஒரு பின்னணிப் பாடகர் என்பதோடு, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், உருது முதலான மொழிகளிலும் புலமை உள்ளவர். இம்மொழிகளில் கவிதைகள் எழுதவல்ல கவிஞராகவும் விளங்கியவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்ரீநிவாஸ் ஒரு நல்ல மனிதர். எவரையும் பாராட்டிப் போற்றும் பண்பாளர். யார்மீதும் பொறாமை பாராட்டாதவர். பாலசுப்பிரமணியம் உட்படப் பலரின்திறமைகளையும் மதித்தவர்.பிற்காலத்தில் பின்னணி பாடும்வாய்ப்புகள் போய்விட்டனவே என்று வருத்தப்படாதவர். எவரையும் வசை பாடாதவர். அவரிடம் ஒரேயொரு குறை காணப்பட்டது. வானொலி, தொலைக்காட்சி நேர்காணல்களின்போது சற்று வழவழா என்று பேசிக் கொண்டேயிருப்பார். நேர்காண்பவர்கள் அவரை அவ்வப்போது நிறுத்தி, அடுத்த விடயத்திற்கு அவரைக் கொண்டு செல்வதற்குச் சற்றுச் சிரமப்பட வேண்டியிருக்கும். பி.பி.ஸ்ரீநிவாஸ் இன்று இல்லாவிடினும், அவர் பாடிய பல இனிய பாடல்கள் எதிர் காலத்திலும் அவரை நினைவுறுத்திக் கொண்டே இருக்கும்
விசித்திர கோலங்கள் முன்பென்றால்,
இலங்கை
பற்றி அறியாதவர்கள் நிறையவே
உலகில் இருந்திருக்கிறார்கள். இன்று என்றால் இலங்கை பற்றி அறியாதவர்களே உலகத்தில் இல்லை எனலாம். அந்த அளவுக்குப் பேரின் வாதிகள் இலங்கையை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். முன்னர் இலங்கைத் தமிழ் மக்களால் பொதுவுடைமை நாடுகள் எனப் போற்றிப் புகழப்பட்ட நாடுகள், தற்போது பேரின் வாதத்துக்குத் தலை சாய்த்து நிற்கின்றன.
இந்தியா விலாங்கு மீனைப் போன்று அங்கும் இங்கும் தலையையும், வாலையும் காட்டிக்கொண்டு நழுவி நழுவி நாடகம் ஆடுகிறது. அவ்வப்போது அது வேஷம் போட்டுக் கொண்டு ஆடினாலும், வேஷம் கலைக்கப்பட்டு விசித்திர ரூபத்தோடு

Page 34
காட்சியாளிப்பது சாதாரண விடயமாகப் போய்விட்டது. உண்மையில் அந்நாடு நல்லதொரு நாடகக் கம்பனியைத்தான் நடத்துகிறது. ஒரு தலைவி, ஒரு தலைவன், ஒரு வில்லன் ஆகிய முக்கிய மூன்று பாத்திரங்களைக் கொண்டது, அந்த நாடகக் கம்பனி. நாடகத்தின் கதை வசனம், இயக்கம் எல்லாம் தலைவியின் பொறுப்பில்தான் உள்ளது. தலைவன் பாத்திரம் எப்போதும் தலையாட்டிக் கொண்டிருக்கும். வில்லன் பாத்திரம் சற்று வித்தியாசமானது. தலைவி சொற்படி வெளியுலகத்து வேலை களைப் பார்ப்பதே அதன் பொறுப்பு. நாட்டின் ஆளுமைக்கும், பெருமைக்கும், வல்லமைக்கும் எப்போதும் குந்தகம் ஏற்படுமாறு பார்த்துக் கொள்வது வில்லனின் வேலை. நாடகத்தில் தலைவி குரல் கொடுக்க, தலைவன் வாயசைப்பான். வடநாட்டு ரசிகர்கள் வாயைப் பிளந்து கொண்டு ரசிப்பார்கள்.
தமிழ்நாட்டிலும் இந்த நாடகத்தை ரசிப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. நாடகத்தின் தலைவி பாத்திரம் "இந்த நாடகத்தைத்தான் நீங்கள் ரசிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டால், குறிப்பிட்ட ரசிகர் குழுதலையாட்டித் தலையாட்டி ரசிக்கும் அந்த ரசிகர்குழுவுக்கு "ஞானசூனியம்” என்ற பெயரில் தலைவர் ஒருவர் உள்ளார். "இதுதான் நல்ல நாடகம் இதைத்தான் தமிழ்நாட்டு ரசிகர்கள் ரசிக்கவேண்டும்" என்று கூக்குரல் இடுவார்.
இதே நாடகம் வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்து மேடையேற்றப்பட்டதன் விளைவாகதமிழ் நாட்டின் இளம் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். "இதே நாடகத்தைத் தொடர்ந்து நாம் ரசிக்க மாட்டோம்" என்ற எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இந்தப் புதிய இளம் ரசிகர் குழுவின் எதிர்ப்புணர்வு பலரைச் சிந்திக்கத் தூண்டியது. இன்னும் ஓராண்டில் இந்த நாடகக் கம்பனி கலைக்கப்படலாம் என்று கண்டதமிழ்நாட்டின் முக்கிய கலைஞர் ஒருவர், தமிழ் மக்கள் மீது கொண்ட "கருணை"யின் காரணமாக அக்கம்பனிக்கு அளித்து வந்த ஆதரவை மீளப் பெற்றுக்கொண்டார். அவரும் தமிழ் நாட்டின் சிறந்த நாடகக் கலைஞர் என்பதால், தமது நடிப்புத்திறனையும் நன்கு பயன்படுத்திக் கொண்டார். எதிர்காலத்தில் வடநாட்டு நாடகக் கம்பனிக்கு ஒரு நடிகரையாவது தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்வது கடினமாகவே இருக்கப் போகிறது.
நாடகக் கம்பனிக்கு வெளியே மிகச் சிறந்த அரசியல் கோமாளி ஒருவர் அந்நாட்டில் இருக்கிறார். தம்மீது அபிமானம் கொண்ட
11: 23188 8425
32

பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதே அந்தச் "சுவாமியின் ஒரே இலட்சியம். பேரினவாதிகளுக்கு உவப்பான முறையிலேயே "சுவாமி" எப்போதும்திருவாய்மலர்ந்தருளுவார்.
பேரினவாதிகளைத் தவிர, "சுவாமியை யாரும் பொருட்படுத்துவதேயில்லை. நல்ல நகைச்சுவைக்குச் “சுவாமியை விட்டால் வேறு
ஆள் இல்லை.
தமிழ் நாட்டின் இன்னொரு விசேடம், 'த ஹிந்து' என்ற பத்திரிகையின் அற்புதமான பணி. தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கொச்சைப்படுத்தி, பேரினவாதத்துக்குச் சார்பாகவே எப்போதும் அது செயற்பட்டு வந்திருக்கிறது. மகாகவி பாரதியின் மரணச் செய்தியைக் கூட அக்காலத்தில் ஹிந்து பத்திரிகை எங்கோ ஒரு மூலையில் ஏனோதானோ என வெளியிட்டது என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அப்பத்திரிகை தமிழ் மக்களுக்குச் செய்யும் சேவை அமைந்துள்ளது. பேரினவாதிகளுக்கு மிகவும் பிடித்த இந்தியப் பத்திரிகை 'த ஹிந்து' வாகும்
நமது நாட்டில் தர்மத்தை வளர்க்க வேண்டிய குருக்கள்மார் அதர்மத்தை வளர்த்து வருகின்றனர். (அவர்களுள் நல்லவர்களும் இல்லாமல் இல்லை) தர்மத்தைப் போதித்து, அதன் வழியில் நடந்து, மக்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டியவர்கள், வீதியில் இறங்கி, தமது துறவுக்கோலத்துக்கே அலங்கோலத்தை ஏற்படுத்திவிட்டனர். ஆசைகளைத் துறந்து, எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டியவர்கள், ஆசைகளைச் சுமந்து அலைந்துதிரிகின்றனர்.
எமது இந்துமதக் குருமார்களில் சிலர் (எல்லோரும் அல்லர்) தகுதியற்றவர்களுக்கு ஆசி வழங்குவதிலும், அடிக்கடி அத்தகையவர்களைத் தேவையின்றிப் புகழ்ந்து பேசி ஆனந்தம் கொள்வதிலும் . ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டவனைப் போற்றுவதைவிட அரசியல் வாதிகளை அவசியமில்லாமல் அடிக்கொருதரம் புகழ்ந்து பேசுவது ஆதாயத்தைத் தரும் என்று இவர்கள் நம்புகின்றனர் போலும்! அரசியல் வாதிகளுக்குக் கை கட்டி வாய்பொத்திச் சேவகம் செய்வதைவிட, ஆண்டவனுக்குச் சேவை செய்வதே மேலானது. இவர்கள் இறைவன் நாமத்தை உச்சரிப்பதைவிட, அரசியல்வாதிகளின் பெயர்களையே அடிக்கடி உச்சரிக்கின்றனர்.
எத்தனை காலந்தான்
இப்போது ஒரு பகுதியினரால் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வு திட்டமிட்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 35
வளர்க்கப்பட்டு வருகிறது. நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டு விட்டு அடங்கி அமைதியாகிவிடுவர். காலஞ்சென்ற முஸ்லிம் அரசியல்வாதியொருவர் தீர்க்க தரிசனத்துடன் மரம் ஒன்றை நட்டு வளர்த்து வைக்க பின்னால் வந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர் நட்ட மரத்திலிருந்து ஆளுக்கொரு இலையைப் பிடுங்கியெடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, “நானே தலைவன் நானே தலைவன்” என்று கூறிக்கொண்டு, ஆளுக்கொருகட்சியையும்ஏற்படுத்திக்கொண்டு பதவிச்சுகத்தில் மிதக்கின்றனர்.
மக்கள் அவையொன்றில் குந்தியிருக்க ஆசனம் கிடைத்த சகல முஸ்லிம் அரசியல் வாதிகளும் தங்களுக்குள் ஆளுக்காள் எதிர்ப்புணர்வு கொண்டிருப்பினும் பேரினவாதச் சேற்றுக்குள்ளே ஒற்றுமையாக <ԶԱՔ அமுங்கிவிட்டனர். அவ்வப்போது முஸ்லிம் மக்களின்எதிர்ப்புணர்வுகள்வெளிப்படும்போது மட்டும் மூச்சுத்திணறிக் கொண்டுதிக்குமுக்காடி வெளியே வந்து, தாங்களும் மக்கள் பக்கம் தான் என்பது போல் காட்டிக் கொள்வர். மக்களின் சலசலப்பு அடங்கியதும் மீண்டும் பதவிச்சுகத்தில் ஆழ்ந்து விடுவர். இவர்களை ஆட்டிப் படைக்கும் எசமானர்களுக்கும் இது தெரியும்
சூரியன் உதிக்கும் திசையில் அமைந்துள்ள அவையொன்றில் தமிழ்க்கட்சி ஒன்றுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பும் தனது கட்சியிலிருந்தே முதல்வர் ஒருவரைத் தெரிவுசெய்யக் கூடிய வாய்ப்பும் கிடைத்தபோதும் ஒரு முக்கிய முஸ்லிம் கட்சி அதனைத் தட்டிக் கழித்துவிட்டு, தனது எசமானர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் பதவிச்சுகங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் மாபெரும் வரலாற்றுத் தவறு ஒன்றைச் செய்துவிட்டது. அந்த அவையில் குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி #ழ்க்ட்ரியுள் இணைந்து
STsori - assoso Soväastus arsefsos - C3an 2013
 

ஆட்சியமைத்திருப்பின், பேரினவாதத்துக்குச் சிறந்த சவாலாக அமைந்திருக்கும் அற்ப பதவிச் சுகங்களுக்காகத் தன்னை ஆதரித்த முஸ்லிம் மக்களுக்கே அது தவறு இழைத்துவிட்டது. வரலாற்றுத் தவறொன்றை இழைத்துவிட்டு, முஸ்லிம் மக்களைச் சமாதானப்படுத்தவும் எசமானர்களைத் திருப்திப்டுத்தவும் முயல்வது நகைப்புக்கு இடமானது.
மக்கள் அவையொன்றில் ஆசனங்களைக் கொண்டிருக்கும். முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் மக்கள் தொடர்பாகத் தாமும் பேசமாட்டார்கள், பிறரையும் பேசவிட மாட்டார்கள். அண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதை நிரூபிக்கிறது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகத் தமிழ் அரசியல்வாதியொருவர் குறிப்பிட்ட அவையில் குரல் கொடுத்தபோது, சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மிகவும் கோமாளித்தனமான முறையில் நடந்து கொண்டமையைப் பத்திரிகைகள் வெளிப்படுத்தின. முஸ்லிம் மக்களுக்குஎதுநேர்ந்தாலும்சமாளித்தவிடலாம். ஆனால் தங்களது எசமானர்களுக்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடக் கூடாதென்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விடும்போதுமட்டும் தாங்கள்முஸ்லிம்மக்களின் காவலர்கள் என்பது போல் காட்டிக்கொள்வர்.
முஸ்லிம் மக்கள் மிக நல்லவர்கள். ஆனால் அவர்களுக்கு மறதி அதிகம் எப்போது அவர்கள் தங்களது ஞாபகசக்தியை புதுப்பித்துக் கொள்கிறார்களோ, அன்றுதான் அவர்கள் விழித்துக் கொள்வர். அவர்கள் விழிப் படையாமல் இருக்கவேண்டும் என்பதே தமது ஆசனங்ளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் விருப்பமும் ஆகும்
O O O
படைப்பாளிகள் கவனத்திற்கு,
ஞானம் சஞ்சிகைக்குத் தமது ஆக்கங் களை அனுப்புபவர்கள் அவற்றை கணி னியில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்புவதுடன் அதன் பிரதியை தபாலி லும் அனுப்புதல் விரும்பத்தக்கது. பிரதி யில் பெயர், முகவரி, கைத்தொலைபேசி எண் ஆகிய விபரங்களையும் தருதல் வேண்டும்.
- ஆசிரியர்
33

Page 36
நிலைபேறும் மாற்றமு
சில சிந்தனை
ன்றையஉலகமயமாக்கற்சூழலில்உலகமே ஒரு கிராமம் என்று பொதுநிலைக் கருத்து ஒன்று எல்லோராலும் ஏற்கப்பட்டு விட்டது. இந்த நிலையிலும் சமூகங்களை கிராமிய சமுதாயம் நகரமய சமுதாயம் என்று வகைப்படுத்திப் பார்க்கும் நிலையும் உள்ளது. அதேநேரத்தில் கிராமங்கள் தமக்கேயான இயல்புகளை இழந்து வருவதும் கவனிக்கத்தக்கது. இதனாற்றான் கிராமிய வாழ்வு வழக்கொழிந்து போவது தொடர்பாக கூடிய அக்கறை ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் தொடக்கம் ஆய்வாளர்கள் வரை சமூகத்தின் சகல தளத்தினரும் மறைந்து போன, போய்க்கொண்டிருக்கின்றவாழ்வியலின் மரபுகளை மீள நினைந்து இன்புறவும் ஆவணங்களாக பதிவாக்கவும் பேணவும் அக்கறை கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பழையவற்றைப் பேணுதல் மற்றும் ஆவணமாக்குதல் தொடர்பாக முனைபவர்கள் கிராமிய சமூக உருவாக்கத்தின் பின்னணியிலுள்ள காரணிகள் குறித்துத் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் கிராமிய வாழ்வின் எச்ச சொச்சங்களும் நின்று நிலைக்கும் வகையிலான பணிகளையும் தற்காப்புக்களையும் செய்ய முடியும் அவற்றிலும் குறிப்பாக கிராமிய வாழ்வின் பண்பாட்டுச் சூழலைப் பாதுகாத்தல் என்பது இன்று பாரிய சவால்களுக்கு முகம் கொடுப்பதால் அது குறித்து இங்கு அதிக கவனமெடுக்கப்படுகின்றது.
கிராமிய வாழ்வு என்பது என்ன? என்ற வினாவுக்கு விடையளித்தல் சிக்கலானது. ஆயினும் கிராமிய சமூகத்தின் உறவுமுறை பற்றிய ஒரு முறைப்படுத்தப்பட்ட அறிவுதான் கிராமியவாழ்வின்சமூகவியல்என்றவிளக்கத்தின் அடிப்படையில் கிராமிய வாழ்வு என்பது கிராம சமுதாயத்தின் உறவுமுறையினாற்றான் தீர்மானமாகின்றது என்ற முடிவுக்கு வரமுடியும்,
34
 

疆讓讓讓讓鬍露露鬣 屬麗 蠶獸
ஒரு கிராமமானது தனது கட்டமைப்பு
பெளதீகமான இயல்புகள், சமூக இயக்க முறை, போன்ற பல்வேறு விடயங்களில் பன்னெடுங்காலமாக பல மாறுதல்களைப்
பெற்று வந்த போதிலும் இன்றுவரை கிராமியப் பண்பு மாறாதிருப்பதற்கான அடிப்படையினை இந்த உறவுமுறைதான் தருகின்றது இதுவே கிராமிய வாழ்வாகி உயிர்ப்புடன் நிலைக்கின்றது.
கிராமிய சமூக உருவாக்கத்தைத்தீர்மானிக்கும் காரணிகளில் பின்வரும் மூன்று சூழல்கள் மிக முதன்மையானவை.
1. புவிசார் சூழல்
2. சமூகம் சார் சூழல்
3. பண்பாடுசார் சூழல்
இவற்றுள் புவிசார் சூழல் என்பது கிராமத்தின் அமைவிடம் காலநிலை, இயற்கை வளங்கள், நிலத்தின் பண்புகள் போன்ற விடயங்களைக் குறிக்கின்றது. சமூகம்சார் சூழல் என்பது சமூக வேறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வும் அடுக்கமைப்புக்களும் குடியகல்வுகள், சமூக அசைவியக்கம் என்பவற்றைக் குறிக்கின்றது. பண்பாடுசார் சூழல் என்பது பண்பாட்டு வெளிப்பாடுகளின் எளிமை, சமூகக்கட்டுப்பாடுகள், கிராமிய அறிவு மற்றும் திறன்கள் வாழ்வின் தரங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகும். மேற்கண்ட மூன்று காரணிகளிலும் கிராமிய வாழ்வினை அடையாளப்படுத்துவதில் அதிக செல்வாக்குள்ளகாரணியாக பண்பாடுசார்சூழல் அமைகின்றது. ஏனைய இரண்டு காரணிகளில் ஏற்படும் குழப்ப நிலைகளால் உருவாகும் விவகாரங்களைக் காட்டிலும் பண்பாடுசார் காரணிகளிலான குழப்பநிலையால் உருவாகும் விவகாரங்கள் அதிகளவில் கிராமிய வாழ்வைப் பாதிக்கின்றன. இதனால் பண்பாடுசார் காரணிகள் குறித்து சற்று விரிவாக நோக்க வேண்டும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 37
பண்பாடுசார்சூழல்சமூகம்சார்சூழலிலிருந்து சற்று வேறுபட்டது. தனிமனிதர்களின் ஆளுமை விருத்தி மற்றும் தனிமனிதனது சமூக மயமாக்கலிலும் பண்பாடுசார் சூழலின் செல்வாக்கு அதிகம் கிராமிய மனிதர்கள் இதனாற்றான் பண்பாடுசார் சூழலில் வரும் இடர்பாடுகளால் அதிகம் பதட்டத்துக்கு உள்ளாகின்றனர். பண்பாடுசார் சூழலில் அடங்கும் பண்பாட்டு வெளிப்பாடுகளின் எளிமைத்தன்மை என்பது அந்த மக்களின் விவசாயம் இயற்கையுடன் இணைந்த
வாழ்வுடன் தொடர்புடைய சூழலைக் கருதுகின்றது. கிராமத்தவர்களின் வாழ்வின் வெளிப்பாடுகளான கொண்டாட்டங்கள்,
திருவிழாக்கள், நாட்டார் பாடல்கள் மற்றும் நாட்டார் கதைகள் யாவும் அவற்றுடன்
வெளிப்பாடுகளான குழல் இசைத்தல் நடனமாடுதல் இரவுமுழுவதும்மதுஅருந்துதல் என்பனவும் இத்தகைய வெளிப்பாடுகள் தான். இவற்றை நாட்டார் இலக்கியங்கள் தான் வெகுவாக வெளிப்படுத்துகின்றன.
பண்பாடுசார் சூழலில் அடங்கும் சமூகக் கட்டுப்பாடுகள் என்பது கிராமிய சமுதாயங் களில் முறைசாராத வகையில் வழங்கிவரும் கட்டுப்பாடுகளைக் கருதுகின்றது. கிராமிய மனிதர்கள் இத்தகைய கட்டுப்பாடுகளிலிருந்தும் விலகுகின்ற போது அயலவர்களின் குறைகூறும் கதைகளுக்கு (அரட்டை) உட்படுகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகளை தமக்குத் தாமே சுயமாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். கிராமியத் தலைவர் ஒருவருக்குக்கட்டுப்படுதல் கிராமியத் தெய்வங்களுக்கும் பயந்து வாழ்வை ஒழுங்கு படுத்துதல் கிராமிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மரபுவழி ஒழுக்கங்களைப் பேணுதல் போன்றன யாவும் இந்தக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இவை யாவற்றுக்கும் மேலாக மனிதர்களிடையே ஒருவரைப்பற்றி இன்னொருவர்முற்றாக அறிந்து பழகும் நிலை இந்தச் சமூகக் கட்டுப்பாட்டின் மிகவும் அடிப்படையான ஓர் அம்சமாக அமைந்து விடுகின்றது.
பண்பாடுசார் சூழலின் அடுத்த விடயமாக கிராமிய அறிவு மற்றும் திறன்கள் அடங்குகின்றன. இது கிராமியத்தின் செய்வதிலான பாரம்பரியமான நுட்பங்கள், மண் தொடர்பான அறிவு, மரபுவழி நீர்ப்பாசன நுட்பங்கள் பயிர்களின் தன்மையும் அவற்றைப் பராமரிக்கும் உத்திமுறைகளும் கிராம மனிதர்களின் கைவினை ஆற்றல்கள், கிராமிய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

கலைஞர்களின் படைப்பாக்க ஆற்றல்கள் போன்ற பல்வேறு அறிவு மற்றும் திறன்கள் கிராமியத்துக்கென தனியானவை.
வாழ்வின் தரங்கள் என்பது ஒரு பண்பாடுசார் சூழலில் ஒரு வித்தியாசமான எண்ணக்கரு எல்லோருக்கும் இதனை வாழ்க்கைத் தரம் என்பது கருதிவிடும் தவறான புரிதல் உள்ளது. ஆனால் அப்படியல்ல பொதுவாக கிராமத்து வாழ்வில் வறுமை அதிகம் இருக்கும் ஆனால் அதனை மகிழ்வாக அனுவிப்பது அவர்களின் வாழ்வாகி விடுகின்றது. பல புதிய கருவிகள் பொருட்கள் வந்துவிட்ட போதிலும் பழைய கருவிகள் மற்றும் புழங்கு பொருட்களை உபயோகிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். அலுமினியப் பாத்திரங்களால் அவர்கள் பெறும் மகிழ்வைவிட மட்பாண்டங்களால் அதிகம் மகிழ்வார்கள். அதனைத் தரநிலையில் உயர்ந்ததாகக் கருதுவார்கள்.
கிராமிய பண்பாடுசார் சூழலின் இந்த நான்கு வகையான அம்சங்களும்தான் கிராமிய வாழ்வினை இறுதிவரை பிரதிபலித்து நிற்பவை. ஆனால் இன்று இவற்றின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும் புறவிசைகள் ஏராளம் இவற்றின் மீது விழும் அடிகள் பெரும்பாலும் திட்டமிடப்பட்டவையாக அமைவதால் கீழைத்தேசக் கிராமிய வாழ்வின் தனித்துவங்கள்அலுக்குலையதொடங்கிவிட்டன. உலகம் ஒரு கிராமம் என்று பேசுபவர்கள் மிகவும் அடிப்படையான பலம் பயிர் குறிப்பிடத்தக்க தனித்தனியான கிராமங்களுக்கான அடையாளங்களைக் கண்டுகொள்ள மறுப்பவர் களாகின்றனர். கிராமிய வாழ்வின் பண்பாடுசார் சூழல் எதிர்கொள்ளும் சவால்கள்எவை? என்பது குறித்த அறிவுத் தெளிவு ஏற்படும் போதுதான் அவற்றை அவற்றுக்குரிய அடையாளங்களுடன் பேணுவதற்கானஉபாயங்கள்குறித்துச்சிந்தித்துச் செயற்பட முடியும்
கிராமிய வாழ்வின் பண்பாடுசார் சூழலிலான சவால்கள் மேற்கண்ட அதன் நான்கு கூறுகளுக்கும் தனித்தனியானவை. அவை விரிவாக ஆராயப்பட வேண்டியவை. இங்கு விரிவஞ்சிமிகச்சுருக்கமாக நோக்கப்படுகின்றது. நாட்டார் வழக்காறுகள் சந்ததிகளுக்கிடையே கடத்தப்பட / பரிமாற்றப்பட போதுமான ஏற்பாடுகள் கிராமியச் சூழலில் இல்லை. இன்றைய தொழிநுட்ப விஞ்ஞான் விருத்தியை நாட்டார் மரபுகளின் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக் கொள்வதிலான தயக்க நிலை உள்ளது. நாட்டார் வழக்காறுகள் பயில் நெறிகளாக மாற்றம் பெறுவதிலான வேகம்
35

Page 38
' கிராமியவாழியிபாட்டு
குறைவதுடன் அவ்வாறான பயில்வுகள் கிராமிய சூழலுக்கு அப்பால் நிகழ்வது பொருத்தமற்றதாகின்றது. நாட்டார் மர. களில் வல்லுனர்களாக இருப்பவர்களை அவர்களுக்குரிய பெறுமானத்துடன் பேன வதிலான தயக்கநிலை உள்ளது. கிராமி வாழ்வில் நகர வாழ்வுக் கூறுகளின் அபரிதமாக ஊடுருவலும் குடியகல்வுகளின் வழியாக அனுபவ விரிவாக்கமும் வாழ்வின் தரங் குறித் பதட்டங்களை கிராமிய மனிதர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கிராமிய வாழ்வில் கட்டு . பாட்டை ஏற்படுத்தும் மரபு வழிபாட்டு கூறுகளும் வழக்காறுகளும் சமஸ்கிரு; மயமாக்கப்பட்டு அல்லது நவீனத்துவ படுத்தப்பட்டு அவற்றுக்கேயுரிய தனித்துவ பெறுமானங்களை இழந்துவிடுகின்றன கிராமியப் பண்பாட்டுச் சூழலுக்கான அறிவும் திறன்களும் கபளீகரம் செய்யப்பட்ட புதிய வடிவில் தோன்றிய இடத்திலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞான புரட்சி என்ற பெயரில் ஏற்பட்டுள்ள வேகம் உற்பத்தி அல்லது விளைவின் அளவை கருத்திலெடுக்கின்றதே தவிர அதன் தரத்தையோ நிலைபேற்றுத் தன்மையினையே கருதுவதில்லை. இதனால் கிராமிய அறி. மற்றும் திறன் என்பன பிள்ளைப் பேற்றுக்கு பத்தியம் பார்ப்பதில் கூட இன்று அதிகம் நம்பப்படுவதில்லை. கிராமிய மனிதர்களின் வாழ்க்கைத் தரம் என்பது இன்று பெ நகரங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை தரத்தைக் கணிப்பிடும் சுட்டிகளால் தான் பார்க்கப்படுகின்றன. உலகில் மனிதர்களும் அவர்களின் சமூக, பண்பாட்டு நிலைகளும் அடிப்படையான பல வேறுபாடுகளை கொண்டிருக்கும் போது வாழ்கைத் தரத்தினை. கணிப்பிடும் குறிகாட்டிகள் மட்டும்
அறிவும் தம் பண்பாட் இழந்துவிடுத்துவ
36

3 ) 5 5
- அ
க்
க ..] . 5 5
எப்படி ஒரே மாதிரியானவையாக அமைய முடியும்? இவை குறித்து ஆழமாக சிந்திக்கும் போதுதான் கிராமியப் பண்பாடுசார் சூழலைப் பேணுவதற்கான அடிப்படை உணர்வூக்கமும் அதற்கான உபாயங்களும் கண்டறியப்படும். இது விரைவு படுத்தப்பட வேண்டிய ஒரு முக்கியமான முயற்சியாக எம்முன் கிடக்கின்றது.
முடிவாக, கிராமிய அடையாளத்தை அப்படியே பேணுவதனால் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டு விடுமா? புதிய மாற்றங்களை அனுசரிப்பதில் என்ன தவறு? மாற்றங்களும் அவற்றின் பரவுகையும் தவிர்க்க முடியாதவை அல்லவா? போன்ற வினாக்களும் உள்ளன.
உண்மையில் பண்பாடு என்பது ஒரு தேங்கி நிற்கும் குட்டை அல்ல. அது ஒரு நீரோட்டம் தான். எங்கோ ஒரு மலையில் உற்பவித்த நீரோட்டம் தனக்கு இயைந்த வழிகளால் ஓடி வளைந்து நெளிந்து ஒரு பொதுவான சமுத்திரத்தில் சேரும் மார்க்கத்தினைத் தானே வகுத்துக்கொள்கின்றது. சமுத்திரம் போன்ற உலகப் பண்பாட்டுப் பன்மைத்துவத்தில் தனித்தனிக் கிராமியப் பண்பாடுகள் கலப்பதில் எந்தத் தவறுமில்லை. அது இயல்பானதுதான். ஆனால் நீரோட்டம் உற்பவித்த இடமும் அது ஓடிவந்த வழிகளும், காவிச் சென்ற நீரின் குணங்களும் இழக்கப்பட்டுவிட்டால் என்ன பயன்? நீரோட்டத்தின் வழியே புதிய கால்வாய்கள் வெட்டப்படலாம் நீர்த்தேக்கம் அமைந்து தேவைக்குப் பயன்படுத்தலாம். இவை காலம் எமக்கிட்ட கட்டளைகள். அவ்வாறே புதிய நுட்பங்கள், கருவி கரணங்கள் வரும்போது கிராமியப் பண்பாடு சார் சூழலை புதிய வடிவில் நிலைபெறச் செய்வதற்காக அவற்றை தந்திரோபாயமாகப் பயன்படுத்தும் அறிவுத் தெளிவைப் பெறவேண்டும்.
0 0 0
S 2. சி. 9: '.
ப ய- 1 காயம்!!
17 18 1:
நாம் '-1);
#14:44:4:.." "
15442 !
- அருள்மொழிச்செல்வர்.அருட்கலைமாமணி,சொற்பேராழி,
- மணிமொழிவாரி, சித்தாந்த பண்டிதர், - வாங்ச கலாநிதி.செஞ்சொல் வார், நவரலக் கலைஞானி
பாக்டர் கனகசபாபதி நாகேஸ்வரன்
- அகில இலங்கைச் சமாதான நீதிபதி அவர்களின் மணிவிழா 06-04-2013 அன்று யாழ்ப்பாணம், நல்லூர் தர்க்கா மணிமண்டபத்தில்
சிறுபாடு நடைபெற்றது. 5 மணிபேரு நம்பதியினரை காமவாறத்தி மகிழ்கிறது
11-[14. )
"'''11
1 Ahu11: *
'ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 39
Bas-el- Daesner
இவிரலிIறுரு peడe
ஈழத்தமிழர் இனப்படுகொலையில் இந்தியாவின் அப்பட்டமான பங்களிப்பு பற்றியும், முப்பது ஆண்டுகளாக நீடித்த
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்துக்கு இந்தியாதான் காரணம் என்றும் இலங்கை கடந்தமாதம் உத்தியோக பூர்வமான
முத்திரை குத்திவிட்டிருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுகளவும் காதில் போடாமல் நான் நண்பேன்டா என்று கட்டித்தழுவி இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுப்பணியில் கல்லும் மண்ணும் கொடுத்து வீடுகள் அமைத்துக் கொடுப்பதாக இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நீலிக்கண்ணி வடிக்கிறது என்றால், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டில் எந்தவித அங்கீகாரமுமின்றி, தாய்த்தமிழகம். தொப்புள்கொடி உறவு’ எனும் அரசியல் சுத்துமாத்துகளுக்கிடையே வாழ்ந்து, அகதி" சிறப்பு முத்திரைமட்டும் குத்தப்பட்ட தமிழகம் வாழ் இலங்கைத் தமிழர்கள்; (தமிழ் நாட்டில் மொத்தமாக உள்ள 132 முகாம்களில் ஒரு லட்சம் பேர் என்றால் முகாம்களுக்கு வெளியே, பொலிஸ் பதிவுடன் பல ஆயிரம் என்று கணக்கிடலாம்) தமிழக அரசியல் கட்சிகளினாலும் மத்திய அரசினாலும் கண்டு கொள்ளப்படாத ஒரே காரணத்தினால்தான் மானம் கெட்ட இந்த வாழ்க்கை வேண்டாம்" என்று உயிரைப் பணயம் வைத்து இலங்கைத் தமிழர்கள் பலரும் அவுஸ்ரேலியா புகலிடம் தேடுகின்றனர் என்பது இன்று வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது!
உள்ளம் குமுறும் ஆஸி.புறப்பாடு அகதிகள்
கடந்த மாதம் ஆறாம் திகதி தமிழ் நாட்டிலிருந்து நூற்று இருபது இலங்கை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013
 

பிேன்னணி
கரிக்கப்படுவார்கள?
அகதிகள், ஒரு மீன்பிடிப்படகில் அவுஸ்ரேலியா செல்லப்புறப்பட்டு, நடுக்கடலில் தத்தளித்து, இந்திய கடலோர காவல் படைக்கு செல்போன் செய்தி கிடைத்து, அவர்களால் தேடமுடியாதநிலையில் விமானப்படைக்கு தகவல் அளிக்கப்பட்டு விமானம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் விசாரணையைத் தொடர்ந்து அகதிகள் அனைவரும் தத்தமது முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவுஸ்ரேலியா கனவில் கரைமீண்டவர்களை தொடர்பு கொண்டபோது, சில உண்மை களை வெளிக்கொணர்ந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நிறைமாதக் கர்ப் பிணிகள் என்று காணப்பட்ட இவர்கள் விசாரணைக்குட்பட்டபோது, அமைதிகாக்க முடியவில்லை.
"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான், இலங்கையிலிருந்து மீன் பிடிப் படகுகள் மூலமாக தமிழ்நாடு வந்தோம் நாங்கள் தங்கவைக்கப்பட்ட, சுகாதாரமற்ற முகாம்கள் பொதுவாக சுதந்திரமற்ற சிறைவாழ்வு போலத்தான். அரிசி, மண்ணெண்ணெய், சிறிய தொகை பண உதவி, இவை மட்டும் எங்கள் வாழ்க்கைக்குப் போதுமா? வாழ்வாதாரம் தேடி வெளியில் வேலைதேடி போவதானால் விசாரணைக் கைதிமாதிரி பதிவேட்டில் கையெழுத்திட்டு மாலைக்குள் திரும்பிவிட வேண்டும்.இரண்டு நாட்கள் தாமதித்தால் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கப்பட்டுவிடும். இதனைச் சரிக்கட்ட வருவாய்த்துறை அலுவலர்களை திருப்திப் படுத்த வேண்டும். கல்வி ஒன்று தான் எங்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரே சொத்து. பிள்ளைகளின்படிப்பை முன்னிட்டுத்தானே இந்த தாய்த் தமிழகம் வந்தோம்
37

Page 40
'தரமான பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் பிரச்சினை. கிடைத்தாலும் உயர்கல்வி பெறுவதில் சிரமம் அதனையும் சரிக்கட்டி, பட்டம் பெற்று வேலை தேடினால் "நீ இலங்கையா. அகதியா. வேலை இல்லை” பதில் தான். தனியார் நிறுவனங்களில் இந்த நிலை என்றால், அரசு வேலை முயல்கொம்பு பிள்ளைகளின் கல்விக்காக ஊரில் எல்லாவற்றையும் இழந்து இங்கு வந்து, கேள்விகளுக்கு பதில் அளிக்க கூனிக்குறுகி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து, பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்தால் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம். " ஏய் நீ அகதிதானே. கம்மென்னு கிட." என்பார்கள். குழந்ைைத என்றும் பாராமல் இத்தகைய கேவல அர்ச்சனைகள் நாளை எனது மனைவிக்கு குழந்தை பிறந்தால், அகதி" அந்தஸ்தில் தான் பிறப்பையும் பதியனும் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? இத்தனை அவலமும் வேண்டாம் என்றுதான், வழியில்உயிர்போனாலும்பரவாயில்லைஎன்று அவுஸ்ரேலியா புறப்பட்டோம் பிரஜாவுரிமை கிடைத்திடும் கை நிறைய பணமும் இருப்பிட வசதியும் அளிப்பார்கள். கல்விக்கு அங்கு முன்னுரிமை. இவற்றை விட எங்களுக்கு வேறு என்ன தேவை! தமிழ்நாடு வந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டோம் எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடாவிட்டாலும், கைகள் சுத்தமாக இருந்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இலங்கையிலிருக்கும் தமிழர்களுக்கு உரத்துக்குரல் கொடுக்கும் தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள் முகாம்களுக்கு வந்து பார்க்கவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை. எங்களிடம் வாக்குவங்கி இல்லாததால் அதாவது வாக்குரிமை இல்லாததால் தேர்தல்களில் எங்கள் பங்களிப்பு அரசியல் கட்சிகளுக்குத் தேவைப் படாது! இலங்கையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இங்கு, அதுமட்டும்தான் சாதகம்” என்று உள்ளம் குமுறினர்.
“அகதி நிலை வேண்டாம் ஈழத்தவரை அங்கீகரியுங்கள்" - தினமணி சாட்டை
இந்த நிலையில் கடந்த மாதம் மதுரையில் ஒரு அகதிமுகாமில் ஈழத்தவர்களைச் சந்தித்த இந்திய கடலோர காவல் படையின் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, " நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பி சுமார் இரண்டு, மூன்று லட்சம் ரூபா கொடுத்து அவுஸ்ரேலியாவுக்கு ஒரு சாதாரண மீன்பிடிப்படகில் போகின்றீர்கள். 38

இப்படகில் வசதிகளே இல்லை. ஆபத்தான நேரத்தில் உதவி கேட்க, நவீன வசதிகளும் கிடையாது. இம்மாதிரியான சட்டவிரோத பிரயாணத்தை தெரிவுசெய்து உங்கள் உயிரை பலியாக்காதீர்கள். கனவுகளை மறந்து, உங்கள் பிள்ளைகளைஇங்குநல்லமுறையில்படிப்பித்து, டாக்டராகவோ, என்ஜினியராகவோ உயர்த்தி வெளிநாடு செல்ல முயற்சியுங்கள்” என்று அறிவுரை கூறினார். பிள்ளைகளின் படிப்புத் தான் இங்கு அடிப்படை பிரச்சினை என்ற அரசியல் இந்த உயர் அதிகாரிக்கு தெரிய வாய்ப்பில்லைத்தான்!
தமிழ்நாட்டின் முன்னணி நாளேடு தினமணி தனது ஆசிரியர் தலையங்கத்தில்; தமிழகம் வாழ்ந்த ஈழத்தவர்களை கண்டுகொள்ளாத மத்திய அரசையும் மாநில அரசியல்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து சாட்டை அடி கொடுத்திருப்பதுடன், அகதி முகாம்களை இழுத்து மூடி அங்கீகாரம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. தினமணி ஆசிரியர் தலையங்கம் மேலும் கூறுவதாவது:
"தமிழ்நாட்டில் உள்ள 132 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளின் வாழ்க்கைச் சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இந்த முகாம்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இவர்களின் வாழ்வாதாரம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் பெரிதும் பேசியது இல்லை. ஏழை இலங்கை அகதிகள் சிறைக் கைதிகள் போல் வாழும் நிலைமை எந்த வகையிலும் நியாயமற்றது. அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி, முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் பற்றி கவலைப்பட்டதுண்டா? குறைந்த பட்சம் ஏதாவது ஒரு அகதிமுகாமுக்கு அந்தக்கட்சிகளின்தலைவர்கள்போனதுண்டா? போகமாட்டார்கள். காரணம் இலங்கை அகதிகள், இவர்களுக்கு வாக்குவங்கிகளாக பயன்படமாட்டார்கள். ஈழத்தமிழர்கள்வெறும் அகதிகள் என்பதால் அரசியல் ஆதாயமும் கிடையாது.
"இலங்கை அகதிகளுக்கு நிதிஉதவி கல்வி தொழில் ஆகியவற்றுக்கு இந்திய அரசு முன்னுரிமை கொடுத்து நல்வாழ்க்கையை வழங்கவேண்டும். அல்லது, முகாம்களைக் கலைத்துவிட்டு முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பொலிஸில் பதிவு செய்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் அதன் பிறகு மற்றைய இந்தியர்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 41
போல் தங்கள் உழைப்பிலும்,
திறமையிலும் அவர்கள் வாழ்க்கை நடத்த வழிவகுக்க வேண்டும். தமிழ் நாட்டில்
உள்ள இலங்கைத் தமிழர்களில் விருப்பமுள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி விட்டு, இங்கேயே வாழ விரும்பு பவர்களுக்கு இரட்டைக் குடி யுரிமை வழங்கமுடியாதநிலையில் இந்தியக் குடியுரிமை dall அளித்தவிடலாம். உடனடியாக பரிசீலிக்கவேண்டும். இனியும் தமிழ்நாட்டில் அகதிமுகாம்கள் தேவை இல்லை!" என்று தினமணி சுட்டெரிக்கிறது.
ஒரு சிறு குறிப்பு: தமிழக கடல் எல்லையிலிருந்து அவுஸ்ரேலியா ஐயாயிரத்து எழுநூறு கடல் மைல் தூரத்தில் இருக்கிறது. பயண நாட்கள், நிச்சயமாகஒருமாதத்தைத் தாண்டும். அவுஸ்ரேலியா கூட்டிச் செல்வதாகக் கூறி, கிறிஸ்மஸ் தீவுகளிலும் அகதிகள் படகு நங்கூரம் போடுவதுண்டு. இந்த கிறிஸ்மஸ்தீவு’அவுஸ்ரேலியாவுக்கு முன்னதாக சுமார் இரண்டாயிரம் கடல்மைல்தூரம்கொண்டதாகும். படகுகளில் முக்கியமான வசதிகள் எதுவும் இருக்காது. பிரயாணிகளும் இரண்டு LDLsig5IT35 ஏற்றப்படுவார்கள். இடையில் தரகர்கள் தப்புவது பிரயாணிகளுக்குத் தெரியவர, மிகவும் தாமதமாவதால், தங்களிடமிருக்கும் செல்போன்' மூலமாக தெரிந்தவர்களைத் தொடர்புகொண்டு ஆபத்தை தெரிவிக்க வேண்டியது தான். சாதாரண மீன்பிடிப் படகுகளில், நீண்டதூரம் பயணிக்க முடியுமா என்பதை அறிந்துகொள்ளாமல், குற்றவாளிகள் போல் தப்பிக்க முயற்சிப்பது, கண்களை அகலத் திறந்துகொண்டு கிணற்றில் குதிக்கும் நிலைக்கு ஒப்பானது. இதுவரை ஐநூறுபேர் இப்படியாக பயணித்து கடலுக்கு பலியானதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
O O O
6tf. U.
புகை மண்டிய ெ புழுதி மேவிய வ சன்னங்கள் வே
குருதி பாவிய இ கருணை போட்டு வயிறு தள்ளிய கூரைபற்றி
எரியும் நெருப்பு கருவாட்டு வாச இழுவை இசைப் நுரை தள்ளித் 6 நிலக்கரை மடிப்
இன்னும் விழியில் அடங் ஒட்டினார்கள்;
“சிங்கம் தின்ற
பிறப்பெனுங் கா இறப்பெனு மோர் ஒன்றிக் கவ்விய கிளைத்துப் பெரு Б6)Т цjђl ШТе முளைத்து எழும்
கண்மூடியறியாத் நூறாயிரமாண்( விரையுமொரு ப
வேரோடி விளை பூந்துகள் மெழுக மூலநினைவோன இடுப்பிருக்கையி ஒட்டினார்கள்
காணி நிலம் 6ே
O
ஆசுகவி குந்திய கள்ளுண்டுபாட அருகில் தொடரு நெடுங்கதைத் ெ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

தர்சன்
காண்டல்
Lab
யு மூரின் நீருள்
IDEMitDip
வெளி
Dargo
Ianir
தெறிக்கு மொரு
காதிருக்கையில்
barb
லையும் ர் மாலையும் வெளியில்
நகிய கிராமம் ரூம்முதுமையிலும்
தெருக்களில் டுகளாய்
VLIGIOOTID
ந்த முன்னவரின் கிய தரையின்
பற்றிய கவிதைகள்
நகர்ந்தும் முடியா மனிதர்களும் மாடுகளும் வண்டில்களும் கோள்மாறும் நெடும்பயணம்
ஆயினும் முகவரி ? மறவாக்கிராமமே. ஒட்டினார்கள்
அநாதை நிலம் முகம் கீரியாய் மாறிற்று.
O
கள்ளியிலும்
காட்டுப் பூவரசிலும்
பாலூறுமென்று கட்டிக்
காற்றாட்டும்
ஆட்டிளங்கொடிகள்
கருகத் தொடங்கிய மாலையில்தான்
கால் நடைகளானோம்
நஞ்சூறிப் பெயர்ந்தன நாட்கள் துக்கித்துத் திரும்ப IDITØTibîTITrii î6ir«)6ITULIITyflar பூதப் பெருவயிற்றிலும் ஒட்டினார்கள்
“செம்பாட்டுத் தமிழ்த்தரையும் தா?
39

Page 42
பேராதனைப் பல்கலைக்க 'ஞானம்' ஈழத்துப் போர் இலக்கி
'ஞானம் சஞ்சிகையின் 150ஆவது இதழ் . ஈழத்தப்போர் இலக்கியச்சிறப்பிதழ் அறிமுகவிழா 11-04-2013 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ்த்தறையினரால் நடத்தப்பெற்றது. இவ் விழாவிற்கு தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்த்துறை விடுகை வருட மாணவிகளின் தமிழ்மொழி வாழ்த்துடன் அறிமுக விழா ஆரம்பமானது. வரவேற்புரையை திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் நிகழ்த்தினார்.
விழாவை ஆரம்பித்து உரையாற்றிய தலைவர் வ. மகேஸ்வரன் தமது உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார். "எமது நாட்டில் இடம்பெற்ற போர், கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் இலக்கியக் சூழலை ஒரு மடைமாற்றம் செய்திருக்கிறது. அந்த மடைமாற்றம் செய்த நிகழ்ச்சிகளை தமிழ் இலக்கியம் எவ்வாறு பதிவு செய்திருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு கருப்பொருள் அடிப்படையில் ஒரு பெரிய தொகுப்பை ஞானம் வெளியிட்டிருக்கிறது. ஞானத்தினுடைய முயற்சி ஒரு மிகமுக்கியமான முயற்சி. பாராட்டக்கூடிய முயற்சி. ஞானம் என்ற இதழினுடைய முயற்சியில் நாங்களும் ஒரு பங்காளராக இருந்திருக்கிறோம். ஞானப் ஆரம்பித்த காலத்திலிருந்தே கலாநிதி துரை மனோகரன் அவர்கள் எழுதத்தூண்டும் எண்ணங்கள் என்ற பத்தியைத் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். நான் தஞ்சைட் பல்கலைக்கழகத்தில் இருந்த காலகட்டத்தில் அங்கிருந்து தஞ்சைக் கடிதம்' என்ற பத்தியை தொடராக எழுதி வந்தேன். தஞ்சைட் பல்கலைக்கழகத்தில் ஞானம் இதழ்களை அறிமுகம் செய்தேன். அங்குள்ள மாணவர்கள் ஞானம் இதழ்களை எம்.பில்., பி.எச்டி பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை சமீபத்தில் அறிந்து மகிழ்வடைந்தேன் பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் பலரும் ஞானத்தில் எழுத வருகிறார்கள். ஞானத்தின் வளர்ச்சிக்குட் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். அந்த
கே. பெ

\IN
பகத் தமிழ்த்துறை நிகழ்த்திய யச் சிறப்பிதழ் - அறிமுக விழா
F
வகையில் இந்த 150 ஆவது இதழை இங்கு இன்று அறிமுகம் செய்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் ஞானம் சம்பந்தமான வாதப் பிரதிவாதங்கள் எல்லோருக்கும் உண்டு. அது அல்ல முக்கியம் ஞானம் சில விடயங்களை அவ்வப்போது அப்பட்டமாக எழுதுகிறது. அப்படி எழுதுவதால் பலர் பாதிக்கப்பட்டதுமுண்டு. ஞானம் அதற்கான பத்திரிகா தர்மத்தைச் சொல்லவும் கூடும். எங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பும் இருக்கிறது. நட்பும் இருக்கிறது. ஈழத்தைப் பொறுத்தவரை ஈழத்துச் சிற்றிதழ்களை
வளர்த்தெடுக்க வேண்டும். மாற்றுச் |
சிந்தனைகளையுடைய ஒரு பண்பாட்டுத் தளத்தை சிற்றிதழ்கள் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் அசையாத நம்பிக்கையுடையவர்ளாக இருக்கிறோம். ஆகவே வெகுஜன இலக்கிய வாசிப்புத் தளம் ஒன்றைத் தாண்டி மாற்றுச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்ளக்கூடியதும், விரிவுபடுத்தக் கூடியதுமான ஒரு இலக்கியச் சூழல் - குறிப்பாகச் சிற்றிலக்கியச்சூழல் ஊடாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற ஒரு பெரு விருப்பு எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் ஞானம் முதலான சஞ்சிகைகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதும் ஒத்தாசை புரிவதும் அதனுடைய பணிகளைப் பாராட்டுவதும் இன்றியமையாததாக அமைகிறது. அந்த வகையில் இன்று பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையூடாக இந்நிகழ்ச்சியை ஒழுங்கு
செய்ததில் நான் பெரிதும் மிகழ்கிறேன்.” - தொடர்ந்து போர் இலக்கியச் சிறப்பிதழின்
அறிமுக உரையை நிகழ்த்திய பேராசிரியர் துரை மனோகரன் தனது உரையில், "திருவாளர் ஞானசேகரனும் நானும் யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பராய் இந்துக் கல்லூரியில் படித்தவர்கள். அவர் எச்எஸ்.ஸி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். உங் களுக்கு அவர் ஒரு சஞ்சிகை ஆசிரியராகவும், சிறுகதை ஆசிரியராகவும் நாவலாசிரியராகவுமே தென்படுவார். ஆனால் இத்துறைகளிலே அவர்
பன்னக்கரை -
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 43
ஈடுபடுவதற்கு முன்னராக அவர் ஈடுபட்ட துன் கல்லூரி நாட்களில் நாடகங்களை எழுதி நடிப்ப "பொலிடேல் பொன்னர் என்ற நாடகம் இப்பே இருக்கிறது. நான் ஞானசேகரனுடைய நாடக எனக்கும் நாடகத்துறையில் ஈடுபடவேண்டும் எ அவரை முன்னோடியாகக் கொண்டு நான் என உரும்பராய் இந்துக் கல்லூரியில் ஆரம்பித்
ஞானசேகரன் மலையகத்திலே வைத்திய அதிக கடமையாற்றினார். அதன் காரணமாக மலையக பிரதிபலிக்கும் பல படைப்புகளை வெளிக் ெ மிக முக்கியமானது குருதிமலை நாவலாகும். அ. ஆசிரியருமாவார். அதன்பின்னர் அவரது பரிமா வந்திருக்கிறது. அவருடைய ஞானம் என்ற சஞ் கலை இலக்கியச் சஞ்சிகைகளில் ஒன்றாக வி வெளிவந்திருக்கும் 150 ஆவது இதழ் போர் ! 600 பக்கங்களிலே வெளிவந்திருக்கிறது. ஒன்று இத்தகையை பாரிய இதழை வெளிக் முதற்தடவையாகும். இது ஒரு பெரும் சாதனைய பின்னால் அவருடைய கடும் உழைப்பையும் பெ பாரிய செலவையும் அது கொண்டிருக்கிறது. இவற் ஈழத்திலே போர் இலக்கியச் சிறப்பிதழைக் கொன சிரம் சாத்தியமான விடயம் இலங்கையினுடை அதற்கு ஒரு பெரும் சவாலாக அமைந்த விட சிறப்பிதழை ஒரு சஞ்சிகை ஆசிரியர் வெளிக்கெ துணிச்சல் வேண்டும். அந்த அசாத்திய துணிச்சல் 150 ஆவது ஞானம் போர் இலக்கியச் சிறப்பிதழ்க
போர் என்பது பல சார்பு நிலைகளைக் ெ வேறுபாடுகளைக் கொண்டது. இத்தகைய நின 'போர் இலக்கியச் சிறப்பிதழைக் கொண்டுவ விடயமல்ல. இன்னொரு விதத்தில் சொல்வதா முடியாத விடயத்தை ஞானம் ஆசிரியர் சாதித்திரு இலக்கியம் என்பது இலங்கைக்கு மட்டுமே செ தமிழ் இலக்கியத்திற்கு தனியான சொந்தமானது பொறுத்தவரையில் ஐந்து விதமான விடயங்க கூடியதாக இருக்கிறது. ஒரு வகையானவை கருத் வகையானவை நேர்காணல்கள். இன்னொரு வலை இன்னொரு வகை சிறுகதைகள். பிறிதொரு வகை வகையான பல்வேறு அம்சங்களைக்கொண்டு இந்த விளங்குகிறது. ஒரு கருத்தாடல், இரண்டு நேர்கா 26 சிறுகதைகள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றிருக் முன்னர் ஞானம் இதழ்களில் வெளிவந்த நேர் பகுதிகள், ஞானம் ஆசிரியத் தலையங்கத்திலிருந் வெளிவந்த ஞானம் கட்டுரைகளிலிருந்து சி சிறப்பிதழிலே இடம் பெற்றிருக்கின்றன. அழ காணக் கூடியதாக இருக்கிறது. ஞானம் சஞ்சி சிவா கெளதமன் அவர்களுடைய ஓவியங்களும் இந்த வகையில், இலங்கையின் சஞ்சிகை வரல இலக்கியச் சிறப்பிதழ் ஒரு மைல்கல்லாகத் தி. பரிமாணங்களையும் இந்த இதழ் எமக்குக் காட்டு பேசப்படும்; பேணப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய பேராசிரியர் எம்.ஏ. சஞ்சிகையைப் பொறுத்தவரையில் ஞானம் ஆசி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Dற நாடகத்துறை . அவர் கார். அவர் எழுதி நடித்த பாதும் என் ஞாபகத்தில் ங்களைப் பார்த்தபோது என்ற ஆசை ஏற்பட்டது. து நாடகப் பயணத்தை தேன். அதன் பின்னர் காரியாக நீண்ட காலம் - மக்களின் வாழ்வியலை காணர்ந்தார். அவற்றில் வர் சிறந்த ஒரு சிறுகதை ணம் சஞ்சிகைத் துறைக்கு சிகை ஈழத்தின் தரமான ளங்குகிறது. இப்போது இலக்கியச் சிறப்பிதழாக இலங்கை சிறுசஞ்சிகை கொணர்ந்தது இதுவே பாகும் இந்த இதழுக்குப் ரும் அர்ப்பணிப்பையும், மறைவிடமுக்கியமானது, ண்டு வருவது என்பது ஒரு டய அரசியல் பின்னணி டயம். போர் இலக்கியச் காணர்வதற்கு அசாத்திய லின் பெறுமதியை இந்த எட்டுகிறது. காண்டது. பல கருத்து லயிலே நடுநிலை நின்று பருவது சாதாரணமான னால், பலரால் சாதிக்க க்கிறார். தமிழிலே போர் எந்தமானது. இலங்கைத் 5. இந்தச் சிறப்பிதழைப் களை நாங்கள் பார்க்கக் த்தாடல்கள். இன்னொரு கயானவை கட்டுரைகள். கவிதைகள். இவ்வாறு 5 கஞானம்150 ஆவது இதழ்
ணல்கள், 43 கவிதைகள், க்கின்றன. இவற்றை விட காணல்களிலிருந்து சில து சில பகுதி, ஏற்கனவே ல பகுதிகளும் இந்தச் மகான ஓவியங்களையும் பிகையினுடைய ஓவியர் ம் சிறப்பு சேர்க்கின்றன. Tற்றிலே, ஞானம் போர் கழ்கிறது. போரின் பல் நிகிறது. இந்த 150 ஆவது இதழ் எதிர்காலத்திலும்
நுஃமான் தனது விமர்சன உரையில் "ஞானம்' சியர் ஒரு சாதனையாளர் என்று நான் சொல்வேன்.
41

Page 44
iiiiiiiiiiiiiiii1
ஏனெனில் அவர் தொடர்ச்சியாக இதுவரை 155 இதழ்களை வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஒரு சஞ்சிகையை 155 இதழ்கள் வெளியிடுவது என்பது ஒரு பெரிய விஷயம். இலங்கையில் தொடர்ச்சியாக 10 அல்லது 15 இதழ்களை வெளிக் கொணர்வதே பெரிய சாதனை. அதற்குப்பல காரணங்கள் உள்ளன. வாசகர்களும் ஒரு காரணம்தான். இலக்கியத்துறையிலே சாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் இதனைச் செய்து வருகிறார். அந்த வகையிலே எனது பாராட்டு அவருக்கு உரியது. இதிலே இரண்டு செய்திகளைப் பற்றி நாம் பேசலாம். ஒன்று போர் மற்றது இலக்கியம். "போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர்” என்று லெனின் சொன்னதாக ஞாபகம். அரசியலுக்கும் போருக்கும் இடையிலே நெருங்கிய தொடர்பு உண்டு. உலகம் முழுவதிலுமே போர் என்பது மக்கள் அனுபவிக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது. போர் = அழிவு. போர் என்பது அழிவுதான். மனிதனை மனிதன் அழிப்பது. இந்த முப்பது ஆண்டு யுத்தத்திலே இலங்கையில் அழிந்தோர் எத்தனை போர் என்பதற்குச் சரியான கணக்கு இல்லை. "ஒன்றுமே இல்லை இதுவெல்லாம் பொய்" என்று அரசாங்கம் சொல்கிறது. தமிழ் உணர்ச்சியாளர்கள் மிகைப்படுத்தி நான்கு லட்சம், ஐந்து லட்சம் பேரைக் கொன்றொழித்தார்கள் என்கிறார்கள். சரியான கணக்கு எவருக்கும் தெரியாது. உடல் ஊனம் அடைந்தவர்கள் பலர். போராளிகள், மக்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள். பொருள் இழப்பு இன்னொருபுறம். 30 ஆண்டு யுத்தத்தில் குறைந்த பட்சம் 10 லட்சம் பேர் அகதியானர்கள். இது இலங்கையை பொறுத்த கணக்கு. உலகம் முழுவதையும் எடுத்துக்கொண்டால் கோடிக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். சமீபத்திய கணக்கெடுப்பின் படி 1945 கிரோஷிமாவில் அணுக்குண்டு போட்டதிலிருந்து இன்றுவரை அமெரிக்கா உலகம் முழுக்க 1 கோடி 43 லட்சம் பேரை கொலை செய்திருக்கிறது. ஜப்பானிலே, வியட்நாமிலே, லத்தீன் அமெரிக்க நாடுகளிலே, ஆப்கானிஸ்தானிலே, ஈராக்கிலே வேறுபல நாடுகளிலே நேராகவும் மறைமுகமாகவும்
அமெரிக்கா மக்களைக்
கொன்று குவித்திருக்கிறது. ஈரான் என்ற ஒரு பழைய நாகரீகம் இருந்த நாடு அழிக்கப்பட்டுள்ளது. யுத்தம் என்பது யாருடையதோ நலன்களுக்காக மக்கள் மீது திணிக்கப்படுகின்ற ஓர் அழிவு. எவனிடம் அதிகாரம் இருக்கிறதோ, அதிகாரம் இருப்பவன் சொல்வது நீதி.
42

3
அவன் பேசுவதுதான் உண்மை. இப்படியான நிலைமை தான் இன்று உலகம் முழுவதும் இருக்கிறது. போர் என்பது மனிதர்களின் மீது திணிக்கப்படுகின்ற ஒரு பெரிய அவலம். உளவியல் ரீதியாகவும் போரினால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் இந்த அனுபவங்களுக்கு உட்படாத நாடுகள் மிகவும் சொற்பம். குறிப்பாக வளர்ச்சியடைகின்ற நாடுகள் எல்லாம் இந்த யுத்த நிலைக்குள் தள்ளப்படுகின்றன. யுத்தம் காரணமாக நிறைய இலக்கியங்கள் உலக மொழிகளில் வந்திருக்கின்றன. போர் நிகழ்ந்த நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் தங்கள் உணர்வுகளை அனுபவங்களை எழுதி வந்துள்ளார்கள். போர் இலக்கியம் என்பது போருடைய அனுபவத்தை வெளிப்படுத்தும் இலக்கியங்கள் ஒன்றில் போரின் புகழ்பாடுவதாகவும் அமையலாம். புறமுதுகிலே ஈட்டி பாயாமல் நெஞ்சிலே ஈட்டி பாய்ந்து இறக்கவேண்டும் என்கிறது புறநானூறு. போர் இலக்கியம் தமிழுக்கு புதிது அல்ல. புறநானூற்றிலேபோர் அவலங்கள் பற்றிப் பேசுகின்ற பாடல்கள்தான் நிறைய இருக்கின்றன. புறநானூற்றுக் காலத்திலே யாருக்கு எதிராகப் போரிட்டார்கள்? யார் எதிரி? தமிழர்களே போராளிகளாகவும் அவர்களே எதிரிகளாகவும் இருந்தார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் என்ற உணர்வு - அந்தச்சிந்தனை இருக்கவில்லை. அது பிற்காலத்திலே வந்த வளர்ச்சிதான். சங்க கால சமூகம் ஓர் இனக்குழு சமூகம் ஒரு குழுவோடு மற்றக்குழு போரிட்டு தனது அதிகாரத்தை, பரப்பை அதிகரிப்பதற்காகப் போரிட்டு வாழ்ந்தது. போர் புரிவது மகிமைக்குரிய விடயமாகப் பேசப்பட்டது. புதுவை இரத்தின துரையின் கவிதை ஒன்று போரை மகிமைப்படுத்திப்பாடுகிறது. "துப்பாக்கியோடு திரிகின்ற சிறுவனே..." என்று பாடுகிறார். இந்த வகையான பாடல்கள் போர்க்கால உலக இலக்கியங்களில் காணப்படுகின்றன. சேரன் சிறுவர் போராளியைப் பற்றி எதிர்மறையாகப் பாடுகிறார். "காலை பாடசாலை செல்லும் வழியில் சிறைப்பட்டேன் யுத்தத்தின் நாய்களிடமே..." இந்த நிலைமை சங்க காலத்திலிருந்தே இருக்கிறது. ஒரு புறத்தில் யுத்தத்தை மகிமைப்படுத்தும் போக்கு இன்னுமொரு புறத்தில் யுத்த அவலத்தை எடுத்துச் சொல்லி யுத்தத்தின் மீது வெறுப்பை எடுத்துச் சொல்கிற போக்கு. போர் இலக்கியங்களைப் படைப்பவர்கள் யார்? என்ன நோக்கத்திற்காக அவர்கள் இதனைப் படைக்கிறார்கள் அவர்களது கருத்து நிலை என்ன? எதை அவர்கள் வெளிப்படுத்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 45
விரும்புகிறார்கள் என்பது எமக்கு முக்கியம். ஏனெனில் போர் இலக்கியம் என்பது போரின் விளைவானது. அது குருதியில் தோய்ந்தது. அது துன்பத்தில் இருந்து வெளிவருவது. அது ஆக்குரோசத்தில் இருந்து வருவது வெறுப்பிலிருந்து வருவது. எனவே யார் இதைப் படைக்கிறார்கள் அவற்றின் பின்னணி என்ன என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கும். போர் இலக்கியத்தில் மனித விரோத அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இன உறவுகளை பிளவுபடுத்தும் கூறுகளும் இருக்கின்றன. அல்லது இன உறவுகள் அர்த்தமற்றவை என்று காட்டும் கூறுகளும் இருக்கின்றன. சில உதாரணங்கள் சொல்லலாம், இந்து முஸ்லிம் கலவரங்கள் இந்தியாவில் நடந்த பின்னணியில் 20 லட்சம் பேர் இரண்டு பக்கங்களிலும் கொல்லப்பட்டனர். இந்துக்களும் முஸ்லிம் களும் கொல்லப்பட்டனர். பல இலட்சக் கணக்கானோர் அகதிகளாகினர். அந்தச் சூழலிலே எழுத்தாளர்கள் அதனை எவ்வாறு கையாண்டனர் என்பது முக்கியம். சதன் ஹஸன் மன்டோ என்பவர் உருது மொழியில் இனமுரண்பாட்டின் அபத்தங்களைப் பற்றி எழுதியுள்ளார். அதேபோல கே.ஏ.அப்பாஸ், குஷ்வர்சிங் இப்படிப் பலர் எழுதியுள்ளார்கள். இந்தியப் பிரிவினை காலத்து இலக்கியங்களில் இத்தகைய நிறைய விடயங்களைப் பார்க்கலாம். அவர்களெல்லாரும் இந்தப் போரின் அழிவுகளுக்கு எதிரான உணர்வுகளைக் கொண்டிருந்தனர். இலங்கையைப் பொறுத்த வரை சில பிரச்சினைகள் எமக்கு இருக்கின்றன. போர் இலக்கியங்களைக் கவனமாகப் பார்த்தால், இன உணர்வு அல்லது இனக்குரோதம் ஆழப்பதிந்திருப்பதை நாம் பார்க்கலாம். பெரும்பாலான எழுத்துக்கள் யாரோ ஒருவர் மீது குற்றஞ்சாட்டுவதாக இருக்கும். உதாரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த நாவல்கள் சிறுகதைகளைப் பார்த்தால் மிகப் பெரும்பாலானவை இராணுவ ஒடுக்குமுறையினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், செல்லடியில் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள். பதுங்குகுழியில் எவ்வாறு கஷ்டப்பட்டார்கள் என்பது பற்றியெல்லாம் இருக்கும். அவையெல்லாம் உண்மை. ஆனால் அதே காலகட்டத்தில் இயக்கங்களிடைய நடந்த உள்போராட்டங்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை பற்றி பேச முடியாத நிலை இருந்தது. அந்தச் சுயாதீனம் எழுத்தாளர்களும் இருக்கவிலை. எழுத்தாளர்களால் எழுதமுடியாத நிலைமை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

இருந்தது. அவ்வாறு எழுதியவர்கள் சிலர் இருந்தார்கள். என்னுடன் உடன் மாணாக்கராக இருந்த நேபேட் என்பவர் கோவிந்தன் என்ற பெயரில் ஒரு நாவலை எழுதினார். இயக்கத்தில் இருந்தார். உள்ளுக்குள் இருந்த முரண்பாடுகளை சகிக்க முடியாமல் வெளியேறி அந்த நாவலை எழுதினார். பின்னர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதேபோன்று செல்வி என்ற கவிஞர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இப்படிப் பலர். சில உண்மைகளைப் பேச முடிந்தது. எல்லா உண்மைகளையும் பேச முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. மஞ்சுள வெடிவர்த்தனா என்ற சிங்களக் கவிஞர் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகத் தனது கவிதையை எழுதினார். அவரால் இந்த நாட்டில் இருக்க முடியவில்லை. புலம்பெயரவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. போரில் ஈடுபடுபவர்கள் தங்களது கருத்தியலைத்தான் முன்னெடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். தங்களது குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை, அவர்களை விமர்சிப்பவர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவும்தான். இந்தியாவும் தான். எல்லா அரசுகளும் ஒரு வன்முறை நிறுவனங்கள்தான். ஆயுதம் தாங்கிய போராட்டங்களை அது நசுக்கிவிடும். உலகம் முழுவதும் இந்த நிலைமையை நாங்கள் பார்க்கலாம். சமீபத்தில் அருந்ததிராய் எழுதிய "நொறுங்குண்ட குடியரசு” என்ற நூல் தமிழில் வெளிவந்துள்ளது. இந்தியாவின் மறுபக்கத்தை புரிந்துகொள்ள அது உதவும். எல்லா நாடுகளிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. இன்று நாங்கள் போர்க்குற்றம் பற்றிப் பேசுகிறோம். போரே ஒரு குற்றம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு எமது நாட்டில் 1971இல் சிங்கள இளைஞர்கள் போராடத் தொடங்கியபோது, கிராமப் புறத்து ஏழைச் சிங்கள இளைஞர்கள் பலர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். பலர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார்கள். சிங்கள அரசு இதைச் செய்தது. உலக நாடுகள் இது பற்றி பேசவில்லை. இப்போது தமிழர் கொல்லப்பட்டது பற்றி பேசுகிறது என்றால் அதிலே அரசியல் இருக்கிறது. போர் என்பது கொடூரமானது அதற்கு நீதி நியாயம் இல்லை. எழுத்தாளர்களுக்கு யுத்தத்திற்கு எதிரான குரலை எழுப்பவேண்டிய கடப்பாடு இருக்கிறது. யுத்தத்தின் குரூரத்தை எடுத்துக்காட்டவேண்டிய தேவை எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. போர் இலக்கியங்களைப் படைக்கும்போது எழுத்தாளர்களது கருத்துநிலை எவ்வாறு உள்ளது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த அடிப்படையில் இந்த சிறப்பிதழை நீங்கள்
43

Page 46
படித்தால் இதில் மூன்று விடயங்கள் தெரியும் மூன்று நூல்கள் ஒரு கட்டுக்குள் இருக்கிறது. ஒன்று கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் இந்தக் கட்டுரைகளைப் படித்தால் கட்டுரைகள் எழுதியவர்களின் கருத்தியல்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். கருணாகரன், நிலாந்தன் போன்றவர்களுடை கட்டுரைகளில் கோட்பாட்டு ரீதியில் அவர்கள் பிரச்சினைகளை ஆராய்ந்துள்ளார்கள். யுத்தத்தோடு நெருங்கிய தொடர்பு அவர்களுக்கு இருந்தது. பெரும்பாலான கட்டுரைகள் விவரணப் பாங்காயுள்ளன.
திரைப்படங்களைப் பற்றி யேசுராசா எழுதிய கட்டுரை யுத்தகாலத்தில் குறிப்பாக வடக்கில் வெளிவந்த குறுந்திரைப்படங்கள் அவை பல செய்திகளைத் தருகின்றன. இப்னு அஸுமத்தின் கட்டுரை எப்படி போரை சிங்களத் திரைப்படங்கள் கொண்டுவந்தன என இரண்டு பங்கங்களில் எழுதியுள்ளார். ஆனால் அதில் முழுமை இல்லை. இசைட் பாடல்கள் பற்றிய இரண்டு கட்டுரைகள் இதில் உள்ளன. ஒன்று சுதர்சனுடைய கட்டுரை. இந்த இரண்டு கட்டுரைகளும் முக்கியமானவை. அவை எல்லாம் எமக்குக் கிடைக்காதவை. புலிகளுடைய காலத்தில் அவர்கள் இப்பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய பிரசாரத்துக்காக எழுதப்பட்ட பாடல்கள். இது ஒரு முக்கியமான தொகுப்பு. இதில் பல செய்திகள் உங்களுக்கு புதியவையாக இருக்கும். துரை மனோகரன் ஒரு போராளியின் சிறுகதைத் தொகுப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனைப் படித்தபோது அச்சிறுகதைத் தொகுப்பைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் துப்பாக்கி முனையிலும் எழுத்திலும் செயற்படுகிறார்கள் என்பதை
44

பார்க்கக் கூடியதாக இருக்கிறது. புதுவை இரத்தினதுரையின் யுத்தங்கள் மலிந்த பூமி என்ற சிறப்பான கவிதை இருக்கிறது. இதே அனுபவங்களை கிழக்கிலங்கையில் வாழும் முஸ்லிம்களும் அனுபவித்திருக்கிறார்கள். இந்தத் தொகுப்பு ஒரு முக்கியமான தொகுப்பு என நான் கூறுவேன். இந்தத் தொகுப்பில் உள்ள தாட்சாயணியின் சிறுகதையான 'சாருமதியின் வீடு' என்ற கதையைப் படித்தேன். அது ஒரு நல்ல கதை. யுத்தம் பற்றிய உணர்வை இரத்தம் சிந்தாமல் அந்தக்கதை கொண்டுவருகிறது. இப்படியான ஒரு தொகுப்பைத் தந்த ஞானசேகரன் அவர்களுக்கு நான் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொகுப்பை நீங்கள் எல்லோரும் வாசிக்க வேண்டும்" என்றார்.
தி.ஞானசேகரன் தனது ஏற்புரையில், "முப்பது வருடங்கள் எங்களுடைய நாட்டிலே போர். நிகழ்ந்தது. இக்காலகட்டத்தில் பிறந்த இலக்கியங்களை போர்க்கால இலக்கியம் என்று சொல்லலாமா? இல்லை, இதனை போர் இலக்கியம் என்றே பெயர் சூட்டியிருக்கிறோம். ஏனெனில் போர்க்காலத்தில் பலவகையான இலக்கியங்கள் வந்திருக்கின்றன. அவை எல்லாம் போர் இலக்கியங்கள் அல்ல. போரைத் தொடர்புபடுத்தி கற்பனையில் எழுதிய எழுத்துக்கள் பல இந்தப் போர்க்காலத்தில்
பிரசுரமாகியுள்ளன. அவற்றைப் போர் இலக்கியங்கள் என்று கூற முடியாது. உலகில் எங்கெல்லாம் போர் நிகழ்ந்திருக்கிறதோ அங்கெல்லாம் போர் இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. முத லாம் உலக மகா யுத்தத்தின் பின்னரும் இரண் டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரும் பல உள்நாட்டுப் போர்களின் பின்னரும் போர் இலக் கியங்கள் தோன்றியிருக்கின்றன. அவை சில பல்கலைக்கழகங்களில் பாடநூலாகும்
-க .
r,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 47
என் திேயத்திற்போர்இ இல்
தகுதியைப் பெற்றுள்ளன. இவை ஆங்கிலத்தில் WARLITERATURE என்றே குறிக்கப்படுகின்றன. அவை WAR PERIOD LITERATURE என்றோ WAR TIMELITERATURE, என்றோ
குறிப்பிடப்படுவதில்லை. போர் இலக்கியத்திற்குச் சில இலக்கணங்கள் இருக்கின்றன. போர் இலக்கியத்தில் கற்பனைக்கு இடமில்லை. ஒரு போர் இலக்கியம் எப்படி இருக்கும் என்பதை பேராசிரியர் நுஃமான் மொழிபெயர்த்த பலஸ்தீனக் கவிதைகள் மூலம் நாம் முதன்முதலில் அறிந்து கொண்டோம். போர் இலக்கியம் என்பது போரின் சாட்சியமாக இருக்கும். அவை போரில் இடம்பெற்ற உண்மை நிகழ்வுகளை பதிவு செய்யும் ஆவணப் பெறுமதி வாய்ந்தவை. போரின் வலிகளை எடுத்தியம்புவதாக இருக்கும் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக இருக்கும். அங்கே கற்பனைக்கு இடமில்லை. எமது நாட்டிலே முதன்முதலாக போர் இலக்கியக் கவிதையை தந்தவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃ மான். யாழ்ப்பாணம் எரிந்த போது துப்பாக்கி அரக்கனும் மனிதனின் விதியும், நேற்றைய மாலையும் இன்றைய காலையும் ஆகிய கவிதைகளைத் தந்தார். அதன் பின்னர் ஏராளமான கவிதைகள், சிறுகதைகள் எனப் போர் இலக்கியங்களை எமது எழுத்தாளர்கள் தந்துள்ளனர். இந்தக் தொகுப்பை தயாரிக்கும் போது போர் இலக்கியம் பற்றிய ஒரு தெளிவுடன் இத்தொகுப்பை தயாரித்திருக்கிறோம் போர் இலக்கியம் பற்றிய தெளிவில்லாத பலர் தாம் போர்க்காலத்தில் பிரசுரத்தேவைக்காக எழுதிய கற்பனைக் கதைகளையும் போர் இலக்கியங்களாகக் கருதி அவற்றை இத்தொகுப்பிலே சேர்த்துக்கொள்ளவில்லை என என் மேல் குறைப்பட்டுக்கொண்டார்கள். இத்தொகுப்பிலே இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் பதிவாகியுள்ளன. அதே போன்று முஸ்லிம்கள் வடபுலத்திலிருந்து ஒரே இரவில் வெளியேற்றப்பட்டபோது எழுந்த எதிர்ப்பு இலக்கியங்கள் பதிவாகியுள்ளன. நடந்து முடிந்த போரின் பல்பரிமாணங்களும் பதிவாகியுள்ளன. இத்தொகுப்பில் பல் வேறுபட்டவர்கள் எழுதியுள்ளார்கள். போராளிகள் எழுதியுள்ளார்கள். ஈழத்துப் போரிலே தான் பெண்கள் பேராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அத்தகைய நிலைமையை நாம் முன்னைய இலக்கியங்களில் காண முடியாது. பல பெண் போராளிகளின் படைப்புகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. அவை இத்தொகுப்புக்குச் சிறப்புச் சேர்க்கின்றன.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

AILilitiis)
போர் இலக்கியம்
ஈழத்தமிழருக்கு மட்டும் சொந்தமானது. ஏனெனில் போர் இந்தியாவிலோ மலேசியாவிலே சிங்கப்பூரிலோ இடம்பெறவில்லை. அது இங்குதான் நடைபெற்றது. இன்னொரு விதமாகச் சொல்வதானால் மார்க்சியம் என்றொரு கருத்து நிலை இருக்கிறது. அது மேலைத் தேயத்தில் தோன்றி கீழைத்தேயத்துக்குப் பரவியது. அதற்கான தேவை கீழைத் தேயத்திலும் இருக்கிறது. அதுபோல் பெண்ணியம் என்ற கருத்துநிலை மேலைத்தேயத்தில் தோன்றி கீழைத்தேயத்துக்குப் பரவியிருக்கிறது. அதற்கான தேவை கீழைத்தேயங்களில் இருக்கிறது. தலித்தியம் இந்தியாவில் தோன்றி தமிழர்கள் வாழும் இடங்களில் பேசப்படுகிறது. அதற்கான அங்கு தேவை இருக்கிறது. அதேபோன்றுதான் "போர் இலக்கியம்" எமது நாட்டில் தோன்றியது அதனைப் பேணிப் பதிவு செய்யவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. இதற்கு முன்னர் மரணத்துள் வாழ்வோம், சொல்லாத செய்திகள் போன்ற இன்னும் சில தொகுதிகள் வந்தபோதும் அவை போர் இலக்கியம் என்ற மகுடத்திலே தொகுக்கப்படவில்லை. ஞானம் 150 ஆவது இதழே முதன்முதலில் "போர் இலக்கியம்" என்ற மகுடத்தில் தொகுக்கப்பட்ட தொகுப்பாகும்.
ஏன் இந்தப் போர் இலக்கியம் தொகுக்கப்பட வேண்டும்? புறநானுறு 400 பாடல்களைக் கொண்டது. அப்பாடல்கள் தொகுக்கப்பட்டதனாலேதான் இன்று 2000 வருடங்களின் பின்னரும் நாம் அவற்றைப் படிக்கிறோம் அதேபோன்றுதான் எமது போர் இலக்கியம் ஒரு நூற்கட்டமைப்புக்குள் தொகுக்கப்படும் போது அது காலத்தையும் வென்று ஒரு அறிவுப் பெட்டகமாக திகழும் உதிரிகளாக இருந்தால் அவை சிதைந்து போகும்
நிறைவாக ஞானம் சஞ்சிகையின் இன்றைய வளர்ச்சிக்கு பேராதனைப் பல்கலைக்கழத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர் கள் தொடர்ந்தும் உதவிவந்துள்ளார்கள். அதன் ஒரு முக்கிய நிகழ்வாக இன்று இந்த அறிமுகவிழாவை நடத்தியுள்ளார்கள். எல் லோருக்கும் எமது மனப்பூர்வமான நன்றி. இந்த தொகுப்பு முயற்சி ஒரு ஆரம்ப முயற்சியே. இது போன்ற தொடர் முயற்சிகள் எதிர்காலத்தில் வெளிவரவேண்டும் என்பது எனது பெருவிருப் பாகும்." எனக்கூறினார்.
தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. எம். எம். ஜெயசீலன் அவர்களது நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது.
0 0 0

Page 48
30) களின் பின் ஈழ முஸ்லிம் பெண் | சிறுகதையாசிரியர்களி
சிறுகதைகள்
A # FH 2
* = 8 பகுர் B & 19 N #
* ய (இத த 04 4 HP - 22
பல்கலைக்கழகம் சார்ந்த புத்திஜீவிகள் பலரும், தாங்கள், ஒரு கட்டுரையை எழுத எத்தனிக்கும் பொழுது, காலடி தூரத்தில் இருக்கிற - அதுவும் சேவை புரிகிற இடத்தில் இருக்கிற - நூலகத்தின் துணையை மட்டும் நாடி வேலையை ஒப்பேற்றி விடுவது வழக்கமாகியுள்ளது.
பெண்மணிகளுக்கு இவ்விடயத்தில்முதலிடம்
கசப்பான மாத்திரையே! - மார்ச் 154ஆம் 'ஞான'த்தில், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை துணை விரிவுரையாளர் எஸ்ஐ கே.மஹரிபா, சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது எனக் குறிப்பிட்டு '80களுக்குப் பின் ஈழ முஸ்லிம் பெண்கள் படைத்திட்ட சிறுகதைகளை அலசியிருக்கிறார்.
'நயீமா' முதற் கொண்டு 'ரதிமாட் வரை 26 பேரைப் பட்டியலிட்டிருக்கிறார்!
இதில் ஓர்! "ஆடவரும்” அடக்கம்! அடக்கம்!
அதிசயமா இருக்கா? நான் என்ன செய்வது? "ஜுனைதா ஷெரீப்” என்ற பெயரை 19வதாகப் பட்டியலிட்டிருக்கிறவர் அவர் ஒரு பக்கா 'காத்தான்குடி” ஆம்பிள்ளை - உண்மைப் பெயர் 'கே.எம்.எம். ஷெரீப்' என்பதை அறியாது புரியாது ஆய்வுக்குட்படுத்தி உடல் நலத்திற்கு நல்ல சிரிப்பு வழங்கியிருக்கிறார். சிரிப்போம்!
மேலும் நகைக்க பற்பல தகவல்கள் உண்டு.
தர்ஹா நகர் சுலைமா சமி இக்பால் (தற்சமயம் வதிவிடம் மாவனல்லையில்) இன்னொருவரது நூலின் ஆசிரியராக்கப்பட்டிருக்கிறார்.
மாத்தறை றஸினா வஹாப் '92இல்' வெளியிட்ட 'வதங்காத மலரொன்று சுலைமா சமீக்குச் சொந்தமாக்கப்பட்டிருக்கிறது!
இதே சுலைமாவுக்கு இன்னும் சில ஆக்கினைகள். '87இல் இவர் வெளியிட்ட 'வைகறைப் பூக்கள்' - சிறுகதைத் தொகுதி ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. அத்தோடு, இவரது 'மனச் சுமைகள்' ('87லில் அல்ல 88) முஸ்லிம் மாதர் அமைப்பு வெளியீடுமன்று.
மற்றொரு தர்ஹா நகர் பெண் எழுத்தாளரான 'இர்ஃபானா , ஜப்பார்' 1990 களில் வெளியிட்ட 'புதுமைப்பெண்' சிறுகதைத் தொகுதியைப் போல, மற்றொன்று 'துணிவின் எல்லை '90களில் வந்துள்ளது. அதுவும் ஆய்வுக்குட்படவில்லை.
மேலும், கெக்கிறாவை ஸஹானாவின் 'ஒரு கூடும் இரு முட்டைகளதும்' தொகுதியின்
#6 422 ந ா மம் 2 நா! 3 4 == ச = 47 ஓ 5
46

விட்ட தவறுகள் விடக்கூடாத 'தகவல்கள்
தலைப்பு 'ஒரு கூடையும் இருமுட்டைகளதும்' எனப் பதிவாகியுள்ளது. (ஒரு வேளை, கணினிப் பிழையோ?)
இதேபோல, 2005இல் நயீமா சித்தீக் வழங்கியது, 'வாழ்க்கை வண்ணங்களா அல்லது 'வாழ்க்கை வசந்தங்களா?
- கிண்ணியா ஜெனீசா அமான் அறிமுகப் படுத்திய தொகுப்பை 'பிரியமான சினேகிதி' என்பதா 'பிரியமான சினேகிதியே!' என அழைப்பதா? (இதுவே சரி!)
'மல்லிகை - இதயங்கள்'
(2010). சொந்தக்காரி 'ஹாரா'வா? அல்லது 'சாராவா? (இதுவே சரி உண்மைப் பெயர் சாக்கிரா இஸ்ஸதீன் - தர்ஹா நகர்)
விடுபட்ட சிறுகதைத் தொகுப்புகள் 1980இல் வெளியான 'யுகங்கள் ஒரு கணக்கல்ல' அக்கரைப்பற்றுக் கவிஞரும், அரசியல் பிரமுகருமான 'வேதாந்தி' சேகு இஸ்ஸதீனின் துணைவியார் 'நாதிரா' என்ற கவிதாயினி படைத்தது. காத்தான்குடி ஃபாத்திமா முஹம்மதுவின் 'அத்தனையும் முத்துக்கள்' 'பொய்த் தூக்கம்' - இரு தொகுப்புகள். மலையகம் ஃபாத்திமா இன்சிரா. இக்பாலின் 'புதுமுகத்தில் புன்னகை' வேர்விலை - சீனக் கோட்டை ஃபுர்ஹா ஃபாயிஸா கைஸ்' வழங்கிய 'எரிகின்ற தீபங்கள்' தர்ஹாநகர் றம்சியாவின் |
'மெளனத் தூரிகை'. 2000க்குப்பிறகு, 2008இல் 'அஸ்தமனத்தில் ஓர் உதயம்', 2010இல் ரயிலுக்கு நேரமாச்சு' (இவ்விரண்டின் படைப்பாளி 'கவிப்பிரியா நிஷா' திருமதி ரூஹின் நிஷா
ஹஸன்) 2010இல் 'கண்ணுக்குள் சுவர்க்கம்' காத்தான்குடி நஸீலா (கொடகே சாகித்ய விருது பெற்ற சிறப்புண்டு) ஷமீலா இஸ்மத் என்பவரது 'இளமை எனும்
- 'பூங்காற்று'
2009 இல் வெளியாகியுள்ளது. முடிவாக - கடைசித் தகவல்: கடந்தாண்டில் பிரபல முஸ்லிம் பெண் நாவலாசிரியை திருமதி றரீனா முஸ்தஃபாவின் முதல் சிறுகதைத் தொகுப்பாக 'யதார்த்தங்கள்' சகலரது கைகளிலும் யதார்த்தமாக உலாவந்து. கொண்டிருக்கிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 49
முட்டாளின் சமாதியாக ஏழைகட்கு முதிராத சிறுமழலைக் குழுந்தை யாக கட்டிவைத்துப் பணம்சேர்க்கும் பணக்காpக்குக் கடைச்சரக்கால் அரசியலில் இலாபம் தேடும் வெட்கமற்றேற் தமக்(கு)இருப்புத் திரையுலக விவேகமுள்ள கவிஞனுக்கு பரிசு மாக அட்டதிக்கும் மானிடனை ஆட்டி வைக்கும் அற்புதவேற் சக்தி புகழ் அறிகு விரே!
தான
தரித்( தன தரித்சன்
தானம்
புகழ்சேரும் விதங்கள்பல ஓர்ந்தால் அ':தேம் புமைஅதை உரைத்திடுங்கால் புரியும் கேண்மின்
இகழ்வுஎன்றே அறிந்சும்அதைத் தேடித் தேடி இப்பேற்கள் பலருண்டு கிட்டா ராயின் தகவில்லா வழிகளிலென் றாலுந் தம்மின் புகழ்பரவ வேண்டுமென முயல்வோர் உண்டு தொெைதாகையாய்ப் பொருள்அள்ளி வீசி யேனும் தொடர்ந்த புகழ்தேடுகின்ற கன டுண்டாம்.
தரித்து
தான
தமிழிய
உயர் தமிழியல் விருது: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
மிகச் சிறந்த மூத்த படை WRITERS MOTIVATION CENTRE
மைய ஸ்தாபகர் ஓ.கே.ப
கெளரவிக்கப்படும். |தமிழியல் விருது:தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு
பேருக்கு, வவுனியூர் ஸ்ரீராமகிருஷ்ணா கமலநாய வழங்கிக் கெளரவிக்கப்படும். தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது: ஈழத்துப் படை கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருதுடன் ரூ |இனநல்லுறவு தமிழியல் விருது: இன நல்லுறவுக்காக உ. வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருதுடன் சிறந்த நூலுக்கான தமிழியல் விருது: 2012ல் வெல வழங்கிக் கௌரவிக்கப்படும். ஓவியருக்கான தமிழியல் விருது: மிகச் சிறந்த ஓவியர் ஒ ரூபா 10,000/- வழங்கிக் கௌரவிக்கப்படும். 2012ம் ஆண்டுக்கான தமிழியல் விருதுக்கான நு இருந்து நூல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஈழத் தமிழ்ப் படைப்பாளிகள் நூலுக்கான தமிழியல் | நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சிறு அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இ எனப் பல்துறை சார்ந்த நூல்களை தேர்வுக்காக அனுப்பப் பெறுதல் வேண்டும். நூல்கள் 2012 ஜன பிரசுரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.முதல் பதி. ல்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 15.05. படைப்புக்களையும் அனுப்பி வைக்கலாம். நூலும் |கொண்ட விபரத்தினை இணைத்து அனுப்புதல் ே
எழுத்தாளர் ஊக் 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி தொ.பேசி : 077-6041503, 065-22266.
----- -----------------
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

புகழ்
- ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
"a வந்தடையும் புகழேல் நாளும்
16 உலகில் நிலைக்கவைக்கா(6)ஒழியா மாறாய்த் மகத் தேடியலைந்(க)ஏற்ப தெல்லாம் உலகில் நிலைக்கவைக்க வந்தாற் போல "கத் தொலைந்து ஒழியும் தேடிக் கொண்டோர் உலகில் வாழுங்கல் அருபோல் அன்றி *க வந்தடையும் புகழ்கொண் டோற்கள் உலகில் நிலைத்திருப்பர் திறன்கொண் டோரே,
பல் விருது 2013
இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த | பப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கிக்
உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள் 10]. பகி தமிழியல் விருதுடன் தலா ரூபா 15,000/- |
டப்பாளி அல்லாத அயல்நாட்டவர் ஒருவருக்கும் தபா 25,000/- வழங்கிக் கெளரவிக்கப்படும்.
ழைத்த சிங்களமொழி படைப்பாளர் ஒருவருக்கு) T ரூபா 10,000/- வழங்கிக் கௌரவிக்கப்படும். சிவந்த சிறந்த 15 நூல்களுக்கு, தலா ரூ10,000/4|
ஒருவருக்கு ஓவியர் கிக்கோ தமிழியல் விருதுடன் )
பல்களைத் தேர்வு செய்ய படைப்பாளிகளிடம் திலும் வெளிநாடுகளிலும், வாழ்கின்ற ஈழத்து விருதுக்காக நூல்களை அனுப்பி வைக்கலாம். றுவர் இலக்கியம், விடலை இலக்கியம், நாடகம், லக்கியம், மொழி பெயர்ப்பு, தொழில்நுட்பம் || - அனுப்பி வைக்கலாம். நூல்களின் 3 படிகள் சவரி 1 முதல் 2012 டிசம்பர் 31 காலப்பகுதியில் | ப்பு மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும். நூ ) -2013 ஒரு படைப்பாளி, எத்தனை வகையான உன் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் வண்டும்.
- டாக்டர் ஓ.கே.குணநாதன் குவிப்பு மையம் , மட்டக்களப்பு, இலங்கை. 58 மின்னஞ்சல் : okkuna@gmail.com

Page 50
இடைசுமரக் கே எல்லை தாண்டா கலை இலக்கிய
கையெழுத்துப் பிரதிகளும் அச்சுயந்திர சாலைகளும் மையூறும் பேனாக்களும் தலைப்பாகை கட்டிய தமிழுமாக கொலுவீற்றிருந்த இலக்கிய காட்சிப்பொருளாய் வரலாற்றுப் பக்கங்களின் கடந்த போனதொரு அத்தியாயமாய் ஆகிப்போயிற்று
கால ஒளியில் துலங்கும் ஒரு நட்சத்திரமாய் எதிர்காலத்தில் அது நின்று ஜொலிக்கக் கூடும்.
விரும்பியோ விரும்பாமலோ பூகோளம் அவற்றைக் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று. மாற்றங்கள் மாறாது நிகழ, டிஜிட்டல் என்றொரு மாய உலகம் சிருஷ்டிக்கப்பட்டு புதிய உலகப்பண்பாடு ஒன்று தனித்தனி வீடுகளுக்குள்ளும் குடியிருக்கும் சிறு சிறு அறைகளுக்குள்ளும் புகுந்து கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் புத்துருவாக்கி திருப்பித் தந்திருக்கிறது.)
அது வீட்டில் இருந்து தொடங்கி, வீதியில் இறங்கி, வாகனங்களில் பயணித்து, அலுவலகத்தில் உட்புகுந்து, மீண்டும் வீதி வாகனம் வழி திரும்பி வரவேற்பறையில் உட்கார்ந்து ரீ.வி. பார்த்து, சமையல் அறையில் பதார்த்தங்கள் செய்து, உலகு பரந்த உறவுகளோடு உரையாடி உறங்கப்போகும் வரை ஒரு மனிதனை தன் அத்தனை செயல்பாடுகளு டாகவும் அவனைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதனை முதலாம் இரண்டாம் மூன்றாம் உலக நாடுகள் என்று பார்த்தால் என்ன, வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் என்று பார்த்தால் என்ன, செல்வந்த நாடுகள் வறிய நாடுகள் என்று வகை பிரித்துக் கொண்டாலென்ன? - இவை எல்லாவற்றிலும் அது வேறுபாடு எதுவும் காட்டாமல் புகுந்து கொண்டு விட்டது.
உலகத்தில் 4000இற்கும்
அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அதில் எட்டே எட்டுத்தான் செம்மொழிகள் எனக் கொண்டாடுகிறோம் அதில் தமிழ் ஒன்று என்று பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம். யாதும் ஊரே யாவரும் கேளிர்!! என நாம் இந்தியா இலங்கை என்ற எல்லைகளுக்கப்பால் உலகம் முழுக்கப் பரந்து போனோம்.
அதற்குக்காரணம் என்னவாக இருப்பினும் கூட சுதேச அரசியலை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, புலம்பெயர்ந்தோர் புலம்பல் இலக்கியம்
48

படுகளும்
நங்களும்
சொல்லும் ஏக்கப் பாடல்களை இன்னும் ஒரு புறமாகவைத்து விட்டுத் தமிழ் வாழும் உலகைப் பார்த்தால் அது போக வேண்டி இருப்பது வெகு தூரம்.
பொது உலகம் புது வெளியில் நாமோ இன்னும் பழைய இருட்டில் இலட்சுமணன் கீறிய பாதுகாப்பு வளையத்தைத் தாண்டாத சீதை போல மரபு வெளியில் இன்னும் பழம்பெருமை பேசிய படிக்கு.
'எல்லாம் நன்மைக்கே'
என்பதன் தாற்பரியத்தை ஏந்தியவாறு செல்ல அது சொல்வது யார் காதிலும் கேட்பதாயில்லை. தமிழினுடைய தளம் இப்போது வேறு. தமிழ் இணையத்துக்குள் புகுந்து தசாப்தங்கள் தாண்டி விட்டது. உலகத் தமிழர் என்று ஒரு புதிய அடையாளம் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. தாம் தாம் வாழும் நாடுகளின் பண்பாடுகள் வாழ்க்கை முறைகள் முன்னெப்போதும் - இல்லாத வாறு தமிழுக்குள்; வாழ்க்கை முறைக்குள் சுவறுகின்றன. புதிய எல்லைகளை புதிய பார்வைகளை அவை
தமிழ் பண்பாட்டுக்குத் தருகின்றன. எல்லைகளற்ற கல்வி வேலைவாய்ப்புகள் புதிய புதிய விதைகளை வாழ்க்கை முழுக்கத் தூவிச் செல்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் வாழ்க்கை முறையிலும் அவை தம் வனப்பினை எழுதிச் செல்கின்றன.
கலை இலக்கியங்கள் இவற்றை ஆவணங்களாய் ஆபரணங்களாய் ஆக்கிய தாய், தனக்குச் சூட்டிக் கொண்டதாய் தெரியவில்லை.
நம் சந்ததிக்கும் நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? பண்பாட்டுத் தொடரோட்டத்தில் தடி இப்போது நம்கையில் தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது பண்பாட்டுக்கான கையளிப்பு என்பர் எனின்மாறிச்செல்லும் அதன் இயல்புகளை நாம் பதிந்து செல்லக் கூடாதா?
விடுபட்ட 'பேசாப்பொருள்கள்' என்னெ ன்னெ? ஏன் அவை விடுபட்டன? இக்கேள்விகள் புலம்பலின் ஒப்பாரியிலும் அரசியல் கூப்பாடுகளிலும் தொலைந்து போய் விடக் கூடாது கலை இலக்கிய கர்த்தாக்கள் தம் வலிய கரங்களை சற்றே இளக்கி புது வெள்ளம் பாய் இடம் தரவேண்டும்.
- யசோதா பத்மநாதன் -
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 51
முதலில மனதால்.
ஒரு வருடம் ஒன்றில் புலம்பெயர்ந்த நாடுகளில் எத்தனை அரங்கேற்றங்கள் நிகழ்கின்றன? எத்தனை கவிதைகள் புனையப்படுகின்றன?
எத்தனை எத்தனை இசை வல்லுனர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்?
வாசிக்கும்வல்லமையுடன் எத்தனை எத்தனை விதமான வாத்தியக் கருவிகளும் கலைஞர்களும் 'மெளனப்பொக்கிஷங்களாய் கடலுக்குள் முத்தாய் புதையுண்டு போயிருக்கிறார்கள்?
இவர்களிடம் இருந்து ஏன் ஒரு புதிய படையல் "சொந்தப் பார்வையில்" புத்துருவாக்கம் பெறவில்லை? மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கர்ப்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன? சமாதி நிலை கொள்கின்றன?
ஏதோ ஒரு நூற்றாண்டில் பாடியதையே மீண்டும் மீண்டும் பாடி ...
ஏதோ ஒரு நூற்றாண்டில் ஆடிய பரத்தையே மீண்டும் மீண்டும் ஆடி ....
வாசித்துக் காட்டிய விற்பன்னங்களையே மீண்டும் மீண்டும் வாசித்து ....
பழம்பெருமையையே மீண்டும் மீண்டும் மேடைகளில் முழங்கி ....
இன்னும் இன்னுமாய்... புதிய களங்களும் புதிய உத்திகளும் புதிய வாய்ப்புகளும் நம் முன்னே சீண்டுவாரற்று விரிந்து கிடக்கின்றன.
கற்பனையும் செயலாக்க வல்லமையும் ஆர்வமும் புழுதி மண்டிக் கிடக்கிறது.
மரபுகளைப் பிடித்திழுத்து ஈழத்துக் கலைக்குழந்தைக்கு பலவந்தமாய் சூப்பி மாட்டி பாரதத்தாயின் சேலைத்தலைப்பை பிடித்தபடி பின்னுக்கு பின்னுக்கு நின்றதில் கழிந்து போயிற்று ஈழக் கலை இலக்கியத்தின் கடந்த காலங்கள்.
ஈழத்தமிழ் தீவிரங்களின் நிலைக்கான தனக்கான தனியான பார்வையும் பாதையும் கொண்டது அது இப்போது புலம்பெயர்ந்தோரின் உலகமும் எண்ணிமமும் அதனோடு இணைகிறது. அமானுஷ்மான் பண்பாட்டு அச்சுறுத்தலுக்கெதிரான கலை இலக்கிய கடமைகளும் அதற்குப் பிரத்தியேகமாக இருக்கின்றன.
குறும் படம் ஒன்றை அதன் அத்தனை தாற்பரியங்களோடும் கைத்தொலைபேசி ஒன்றினாலேயே உருவாக்கி விடலாம்!
சிறந்த கவிதை ஒன்றை உள்ளூர் கலைஞர்களின் கலைக் கருவிகளில் மெல்லிசைப்பாடலாய் - கொஞ்சம் மினைக் கெட்டால் பாடி மகிழ்ந்து குறுந்தகட்டில் பொதித்து வைத்து விடலாம்.
பொப்பிசையை துள்ளிசையை நினைத்துப் பார்ப்பீர்களாக!
வெளிச்சத்துக்கு வராத விடயங்களை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

-=-=====ன.
இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.
கனவுத் தொழிற்சாலைகளை பாரதம் உற்பத்தி செய்தால், மகிழ்ச்சி! ஆனால் ஈழத்தாய் தன் இயல்பு மாறாது குறும்படங்களை உற்பத்தி செய்யட்டும்.
பாரதத்து சினிமாப்பாடல்கள் வெகு அருமை. ஆனால் அதில் புதைந்து போய் விடாமல் ஈழ மங்கை மெல்லிசைப்பாடல்களில் தன்னை வெளிப்படுத்தட்டும். - இலங்கைத்தமிழையும் இந்தியத்தமிழையும் இலக்கிய தராசால் தரநிர்ணயம் செய்யட்டும் புத்தகங்கள்.
நம் பாரம்பரிய கலை வடிவங்கள் எண்ணிமத்தை ஏற்றுக் கொண்டபடி புது விசை கொண்டெழட்டும்.
போர்க்கால இலக்கியம் போல் புலம்பெயர் இலக்கியங்களும் புதிய திசையை உலகுக்கு காட்டட்டும்.
மலையகத்தின் வெப்பியாரமும் இஸ்லாமியரின் வியாகூலமும் ஒரே தீரத்தோடு கருத்தில் எடுக்கப்படட்டும்.
நாம் பெரு அலைகளில் அடிபட்டுப்போய்விடக் கூடாது! நம் சுயத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும் அடையாளத்தை அழுத்தமாய்பதிய வேண்டும்
பிரசுரமாக்க, படைப்பினைப் பகிர்ந்து கொண்டு மகிழ, யூரியூப்பும் வலைப்பூக்களும் வலைத்தளங்களும் மின் சஞ்சிகைகளும் கூட இருக்கவே இருக்கின்றன.
டிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற கேள்வியை உங்கள் சிந்தனைகளும் ஆற்றலுக்கும் விட்டு விடுகிறேன்.
தேங்கிய குட்டையில் எத்தனை நாளைக்கு மீன் பிடித்த படியும்...
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்த படியும்...
வீண்பெருமையை மேடைகளில் பேசிய படிக்கும்.....
இலட்சுமணன் கீறிய வட்டத்தைத் தாண்டி வெளியே வா சீதா!
வானுக்குக் கீழே ஒரு பெரும் பூகோளப் பரப்பு உனக்காகக் காத்திருக்கிறது.
0 0 0
(ஈழத்தின் வடபுலத்தில் இருந்து புலம்பெயர்ந்து ஓசானியாக் கண்டத்தில்வாழும்கமலேஸ்வரியின்மகள்
யசோதாபத்மநாதன் எழுதியது)
49

Page 52
சம க நிலை 5
நீக
மாத்தளை பெ. வடிவேலனின் “அட்சய வடம்” நூல் வெளியி
மலையகத்தின் பிரபல எழுத்தாளர் இ வடிவேலன் எழுதி கொழும்பு பூபாலசிங்கம் வடம்” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு வ சிரேஸ்ட பாடசாலை மண்டபத்தில் (07.04.2 நடைபெற்றது. பிரதம விருந்தினராக கண்டி நடராஜனும், கலந்து கொண்டனர். கெரளவ கொண்டனர். வரவேற்புரையை கண்டி தமிழ்ச் நூலின் அறிமுகத்தை பேராதனைப் பல்கலை விமர்சன உரைகளை பேராதனைப் பல்கலைக் தமிழ்ச் சங்கத் தலைவர் ரா.நித்தியானந்தன் - புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசி. அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவி
நிகழ்விற்கு கொழும்புத் தங்கள் கழகம் சொ
சொற்சிலம்பம் 2013
இலங்கை தமிழ் விவாதிகள் கழகம் சொற்சி ஒன்றினை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பி நிகழ்விற்கு உலக அறிவிப்பாளர் பி.எச்அப்துல்ல தமிழ் விவாத வடிவங்களின் பழைமையான விவாதம், பாராளுமன்றவிவாதம் எனமூன்றுவி அரசியல் என பல்வேறுபட்ட தளங்களில், பலவ நிகழ்த்தப்பட்ட இந்த விவாதங்களின் அர விவாதிகளுக்கும் ஆதர்சனமாக திழ்ந்தது என்ப விவாதப் போட்டிகளின் விருத்திக்கும், விவாதி ஆலோசனைகளையும் வழங்கி வந்த சான்றே செல்வி ஸ்ரீகுமாரி கதிரித்தம்பி, க. கலாகரன், க. கழகத்தால் கெளரவிக்கப்ட்டனர். இளைய வேண்டியதாகும்.
சூரன் ஏ. ரவிவர்மாவின் "வடக்கே போகும் மெயில்"
சூரன் ஏ. ரவிவர்மாவின் “வடக்கே போகும் முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர் ராஜஸ்ரீ சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மூத்த ஊடகவி தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி திலகா மகே நிகழ்த்தினார். நூல் அறிமுகத்தை பேராசிரியர் ! கே.எஸ்.சிவக்குமாரன், ஏ.வி.ஆர். வாமலோசன் தினகரன் பிரதம ஆசிரியர் ராஜஸ்ரீகாந்தன் ஏற்புரையை நூலாசிரியர் சூரன் ஏ. ரவிவர்மா
அவுஸ்திரேலியாவில் முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற எழு
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்த மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை சிட்னியில் | சிட்னி ஹோம்புஸ் ஆண்கள் உயர்தர பாடக
50

கே. பொன்னுத்துரை ால ...
கலக்தி ழ்வுகள்
Iாள் :
ட்டு விழா. லக்கிய செம்மல், கலாபூஷணம் மாத்தளை பெ. ம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள "அட்சய் பிழா கண்டி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்து
2013 )பேராசிரியர் துரை.மனோகரன் தலைமையில் இந்திய உதவித் தூதுவர் ஏ.நடராஜன், திருமதி. விருந்தினராக எஸ் சிவபாலன் ஆகியோர் கலந்து சங்கத்தின் செயலாளர் இரா. அ. இராமன் நிகழ்த்த, மக்கழக துணை நூலகர் ஆர்.மகேஸ்வரன் நிகழ்த்த, கழக தமிழ்த்துறைத் தலைவர் வ. மகேஸ்வரன், கண்டி ஆகியோர் நிகழ்த்தினார்கள். கொழும்பு பூபாலசிங்கம் ங் கண்டி இந்திய உதவித் தூதுவர் ஏ.நடராஜன் மக்கப்பட்டார்.
லம்பம் 2013 என்ற மாபெரும் விவாதங்களின் அரங்கு ள்ளை மண்டபத்தில் (7.04.2013) நடைத்தியது. இந் ஹமீத்சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். சுழலும் சொற்போர் உள்ளடங்கலாக, பாரம்பரிய வாத நிகழ்வுகளை மேடையேற்றினார்கள் இலக்கியம், வருட அனுபவம் கொண்ட முன்னாள் விவாதிகளினால் சங்கம் தற்போதைய விவாதிகளுக்கும் எதிர்கால தில் ஐயமில்லை. கொழும்பிலே பல ஆண்டுகள் தமிழ் கெளின் வளர்ச்சிக்கும், ஊக்கமும், ஆக்கமும் நிறைந்த மார்களான த. இராஜரட்ணம், மா.கணபதிப்பிள்ளை, க. உதயகுமார் ஆகியோர் இலங்கை தமிழ் விவாதிகள் தலைமுறையினரின் இம்முயற்ச்சி பாராட்டப்பட
ம் மெயில்" சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவும் காந்தன் நினைவு நிகழ்வும் கொழும்புத் தமிழ்ச் சங்க யலாளர் வி.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. -ஸ்வரன் பாட, வரவேற்புரையை வதிரி சி.ரவீந்திரன் மா.கருணாநிதி நிகழ்த்த , நூல் பற்றிய கருத்துரைகளை ஆகியோர் மிகச் சிறப்பாக வழங்கினார்கள்.முன்னாள் நினைவுரையை கவிஞர் மேமன் கவி நிகழ்த்தினார்.
வழங்கி விழாவை இனிதே முடித்து வைத்தார்.
முத்தாளர் விழா தின் 13 ஆவது எழுத்தாளர் விழா கடந்த ஏப்பிரல் முழுநாள் விழாவாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 53
காலை நிகழ்ச்சிகள் பிரபல எழுத்தாளர் மாத்த தலைமையிலும், மாலை நிகழ்ச்சிகள் சங்கத் சட்டத்தரணி சு. பூரீகந்தராசா அவர்கள் தலைமையி நிகழ்ச்சித்தலைவர் மாத்தளை சோமு அ உரையைத் தொடர்ந்து, இந்த எழுத்தா சமர்ப்பிக்கப்பட்டிருந்த கட்டுரைகள் உள்ளடங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.
எழுத்தாளர் விழாவின் செயற்பாட்டுக்குழுத திருநந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைெ எல்லோரது கவனத்தையும் மிகவும் ஈர்த்தது.
விழாவுக்கு ஆசியுரை வழங்க வருகை தந்திரு திரு.எஸ். பொஅவர்கள்தனக்கேயுரியநகைச்சுவை உரையாற்றி, மாணவர் அரங்கில் கலந்துகொண்ட திறமைகளையும் மெச்சிப் புகழ்ந்துரைத்தார்.
"தமிழ் இனி” என்கின்ற குறும்படமும் திரையி மதிய உணவின் பின்னர், நடைடெ தெரிவுசெய்யப்பட்ட கட்டுரையாளர்களின் கட இடம்பெற்றன. திரு.ம.தனபாலசிங்கம் அவர் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பிரபல எழுத்தா மகேந்திரன், திரு.சி.பூரீநந்தகுமார், திரு.ச.ஜெயக் திரு சிவசண்முகம் முனியப்பன், கலாநிதி. ஞான குமாரபாரதிஆகியோர்கலந்துகொண்டுகருத்துக்க சமர்ப்பித்தார்கள்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்க தலைவர் பாடும்மீன் சுபூரீகந்தராசா அை தலைமையில் இடம்பெற்ற மாலை நிகழ்ச்சி முதலாவதாக நூலரங்கு இடம்பெற்றது. சங்க செயற்குழு உறுப்பினரும் பிரபல வி எழுத்தாளரமான திரு. சுெகிருஸ்ணமூர்த் "மறுவளம்” என்ற நுால் வெளியிட்டு வைக்கப்பட் வேவ்வேறிடங்களில் முன்னர் வெளியிடப் ஐந்து நுால்கள் இந்த அரங்கில் மீண்டும் அறி செய்துவைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் அமரர் கவிஞர் கதிரேசபிள்ளை அவர்களின் “பா “கண்ணிரினுாடே தெரியும் வீதி, சிவராசா கரு குறிப்புக்கள்", "ஞானம்" சஞ்சிகையின் 150 ஆவது ஞா.பாலச்சந்திரன்எழுதிய "அங்கோர் உலகப்பெரு அறிமுகம் செய்தனர்.
கருத்தரங்கினைத்தொடர்ந்துகவியரங்கம்இட வழங்கியமஹாகவி உரத்திரமூர்த்தி அவர்களின்"ே நாடகக்கலாவித்தகர்திருமதி கோகிலா மகேந்திரன் நடிகர்கள் பங்கேற்று நடித்த இந்த நாடகம் பார்வை அவுஸ்திரேலிய இலக்கியக் கலைச்ச திரு. கே. எஸ். சுதாகர் நன்றியுரை வழங்கினார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013
 

ளை சோமு அவர்கள்
தலைவர், பாடும்மீன் g|ഖുബ(jി தமிழ் இலக்கி 5606 ligitish
பிலும் நடைபெற்றன.
புவர்களின் தலைமை ளர் விழாவிற்காகச் ய விழாமலர் ஒன்றும்
த் தலைவர் திரு. த. பற்ற மாணவர் அரங்கு
ந்த மூத்த எழுத்தாளர் யோடு சிலநிமிடங்கள்
ட மாணவ மணிகளின்
டப்பட்டது. பற்ற கருத்தரங்கில் ட்டுரை வாசிப்புக்கள் களின் தலைமையில் ளர்திருமதி கோகிலா குமரன், பாரதி 5ளைச்
த்தின் வர்கள் களில்
மரசக தியின்
-gil. L IL L - முகம் சேர்ந்த ாரதம் தந்த பரிசு", தேவராசா முகுந்தன் எழுதிய ணாகரன் எழுதிய “ஒரு பயணியின் போர்க்காலக் இதழாக மலர்ந்த ‘ஈழத்துப் போர் இலக்கியம்", 5ங்கோயில்-பயண இலக்கியம்” ஆகிய நூல்களை
டம்பெற்றது. சோலைக்குயில்அவைக்காற்றுக்களம் தரும்திங்களும்” என்ற பாநாடகம் இடம்பெற்றது. Tஅவர்களது நெறியாள்கையில் சிட்னியின் பிரபல வயாளர்களை மிகவும் கவர்ந்தது. சங்கத்தின் செயலாளரும் பிரபல எழுத்தாளருமான - சோனா பிரின்ஸ்

Page 54
நூல் : மாமன்னன் சங்கிலியன் ஆசிரியர் : செங்கை ஆழியன் வெளியீடு :
கமலம்
பதிப்பகம், யாழ்ப்பாணம். பதிப்பு : டிசம்பர் 2012 ISBN: 978-955-1624-18 -7
மாமன்னன் சங்கிலியன்
சாகித்திய ரத்னா செங்கை ஆழியான் எழுதிய 46வது நாவல் இது. யாழ்ப்பாண இராச்சியத்தின் புகழ்பூத்த மன்னனான சங்கிலி செகராசசேகரனின் வரலாற்றைத் தழுவியது இந்நாவல். ஏற்கனவே சங்கிலி மன்னன் தொடர்பான, நாடகம், குறுநாவல், நாவல்கள் என்பன பிறரால் , எழுதப்பட்டுள்ளன. காவியம் ஒன்றும் வெளியாகியுள்ளது செங்கை ஆழியான் எழுதிய இந்த நாவல் முன்னைய எழுத்தாளர்களால் தரப்படாத சொல்லத் தவறியவற்றை தான் இந்த நாவலில் தந்திருப்பதாக செங்கையாழியான்
குறிப்பிட்டுள்ளார்.
சங்கிலி மன்னன், ஒரு அரசனின் வைப்பாட்டி மகன். அவனுக்கு யாழ்ப்பாண அரசு கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அரச பதவியை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்ற நோக்கில் மூத்த இரண்டு பட்டத்து இளவரசர்களை சதிசெய்து கொல்லுவித்தவன். அவன் மன்னனாகிய வழி பிழையானதாகினும் நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை. நாட்டை அந்நியர்வசம் போகவிடவில்லை. ஒப்பந்தப்படி போர்த்துகேயருக்குச் சிறை செலுத்தவும் இல்லை. சங்கிலி மன்னன் தான் ஆட்சிசெய்த 34 வருட காலத்தில் மக்கள் மதம் மாறுவதை அனுமதிக்கவில்லை. மதம் மாறுவது அரசியல் காரணி. மதப் மாறியவர்கள் நாடு பிடிக்கவும் உதவுவார்கள் என்ற காரணத்தினால் மதம் மாறிய 600 உயிர்களை பலிகொண்டதோடு மதம் மாற உதவிய மதகுரு பிரான்சிஸ் சேவியரையும் பலியெடுத்தவன் சங்கிலி மன்னன் என்ற தகவல் கதையோட்டத்தோடு காட்டப்பட்டுள்ளது இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய நாவலாசிரியர் என்ற பெருமைக்குரிய செங்கை ஆழியான் தனது அனுபவத்தினூடாக இந்த
52

குறிஞ்சிநாடன்
JS 09
அ -
நாவலையும் மிகவும் சுவைபட நகர்த்திச் செல்கிறார். இந்த நூலில் எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்துகின்றன. தவிர்த்திருக்கலாம். சங்கிலி மன்னனை அறிந்து கொள்வதற்கு இந்த நாவல் பெரிதும் உதவும் - பாராட்டுக்கள்.
- தியாகராஜன்
நூல் :
S V1 v1 0 •
'குதிரைகளும் பறக்கும்
குதிரைகளும் பறக்கும் ஆசிரியர் : பதுளை சேனாதிராஜா வெளியீடு : எஸ்.கொடகே சகோதரர்கள் விலை :ரூபா 350/-
"கதை
எழுத
'பதுளை சோதிராஜா
வேணும்
என்று ந ைன த த ா ல
நினைத்த நேரத்தில் எழுதமுடிவதில்லை. தாளையும் பேனா வையும் எடுத்து உட்காந்தா ஒண்ணும் வரமாட்டேங்குது. அதுக்கெல்லாம் ஒரு மூடு வரணும்” என தனது சிறுகதையான 'கனவுகளுக்கு விடுமுறையில் பதிவு செய்யும் பதுளை சேனாதிராசாவின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதிதான் "குதிரைகளும் பறக்கும்". இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி. பாடசாலை நாட்களில் இவர் எழுதிய 'சலனம்' சிறுகதை முதற்பரிசைத் தட்டிக் கொண்டது. தன்னை பால் வன்முறைக்கு உட்படுத்த முயன்ற மேசன் பிரேமதாசவை செங்கல்லால் தலையில் போட்டுவிட்டு தான் செய்தது எல்லாவிதத்திலும் நியாயம் என்பது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

Page 55
போல படுத்துக்கிடக்கும் மீனாட்சியின் கதை இது. இச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான குதிரைகளும் பறக்கும்! கொழும்பில் வேலைக்கமர்த்தப்பட்ட மலை நாட்டுச் சிறுமியின் மேல் அபாண்டப் பழியை சுமத்தி, தனது தோட்டை திருடிவிட்டதாகக் கூறும் எசமானி உதிர்த்த கடுஞ்சொற்களை தாங்காது "சொன்ன வார்த்தையை திருப்பி பொறுக்க முடியுமா?" எனக் கேட்டு கௌரவத்துடன் தனது மகளைத் திருப்பி அழைத்துச் செல்லும் கார்மேகத்தின் கெளரவத்தை வெளிப்படுத்தும் கதை.
சலூனில் முடிவெட்டப் போனவன், காலந் தாழ்வதால் பொறுமை இழக்கிறான். அவன் அங்கு வருவதற்கு முன்னரே பத்திரிகையையும், தொப்பியையும் தமது வரவின் அடையாளங்களாக வைத்துவிட்டு வெளியே சென்று தத்தமது வேலைகளை முடித்துவிட்டு உரிய நேரத்தில் வந்து குந்திக் கொள்பவர்களைப் பார்த்து சினங்கொள்கிறான். ஆனால் தனது முறை வரும்போது ஓர் இளம்தாய் கொண்டுவந்த குழந்தைக்கு முடி வெட்ட மனிதாபிமானத்துடன் தனது 'சான்ஸை' கொடுக்கிறான். தகவம் முதல் பரிசு பெற்ற கதை இது.
நூறு வருஷப் பழமைவாய்ந்த தோட்டப் பாடசாலை உடைந்துவிடும் நிலையில் மந்திரி ஏதாவது காரணம் கூறி புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்காத நிலையில், அக்கட்டிடம் மழைக்கு உடைந்து விழுவதற்கு அவரே வழிவிட்ட ரவி மாஸ்டரின் திட்டம் ஆச்சரியப்பட
வைக்கிறது இட்லரின் இடைவேளை. "வகை வகையான வடிவங்கள் உத்திவேறுபாடுகள், உரையாடல் மாற்றங்கள், கதை சொல்லும் முறைமைகள் மொழி நுணுக்கம் என்று பெரும்பாலான கதைக்காரர்கள் கவனத்தில் கொள்ளாத விடயங்களை பதுளை சேனாதிராஜா கவனத்தில் கொள்கிறார்" என தெளிவத்தை ஜோசப் தனது முன்னுரையில் குறிப்பிடுவது மெத்தச் சரியானது என்பதை எல்லாக்கதைகளுமே நிரூபிக்கின்றன.
பெரும்பாலான கதைகள் பாத்திர உரையாடல் மூலவே வளர்க்கப்படுவது மண்வாசனைக்கு மேலும் உரமூட்டுகிறது. சிறந்த ஒரு சிறுகதைத் தொகுதியை வெளிக்கொணர்ந்த பதுளை சேனாதிராஜா பாராட்டுக்குரியவர்.)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

நூல் : ஆத்மாவின் புண். ஆசிரியர் : அஸாத் எம் ஹனிபா வெளியீடு : ஆசிரிமாவத்த களுபோவில
விலை: குறிக்கப்படவில்லை.
களா எTய் வரிபா
கிழக்கிழங்கை கல முனை யை
பிறப்பிடமாகக் கொண்டவர் நூலாசிரியர், கல்முனைவெஸ்லி கல்லூரி , ஸாகிறாக் கல்லூரி ஆகியவற்றில் கற்று பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். மகப்பேற்று வைத்திய நிபுணர்.
- டாக்டர் நந்தி, ஞானசேகரன், சதாசிவம், முருகானந்தன் ஜின்னா ஷெரிப்தீன் ஆகியோரின் குழுமத்துக்குள் இவரும் இணைந்துவிட்டார்.
பாடசாலைக் காலம் பல்கலைக்கழக காலங்களில் தான் அனுபவித்த நேரிடையாகக் பார்த்துக் கண்ணீர்விட்ட நிகழ்ச்சிகளே நெஞ்சில் ஊறிய கவிதைகளாக பரிணமித்துள்ளன. நெஞ்சின் ஆறாத வடுவின் சின்னங்களே இக்கவிதைகள். எண்பத்து நான்கு பக்கங்களில் முப்பத்து நான்கு கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
போர்க்காலத்தில் ஏற்பட்ட அவலங்கள் அழிவுகள் அதிகார வர்க்கத்தின் ஆக்கிரமிப்பு கெடுபிடிகள் எல்லாம் கவிதைகளாக மலர்ந்துள்ளன.
தேசத்தை எரித்துவிட்டு சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டு உன் கறுப்பு வார்த்தைகளை யாராலும் வாசிக்க முடியாது.
அர்த்த புஷ்டியான கவிதை அறிந்தாரே அறிவர்.
வித்துக்கள் என்ற கவிதை ஆணவக்காரர்களின் அடக்கு முறைக்கும் அட்டூழியங்களுக்கும் பயந்து கைகட்டி வாய்பொத்தி அடிமைகளாய் ஆமைகளாய் இருக்கும் செய்தியை கவிஞர் பின்வருமாறு சொல்கிறார்.
தலையில் அடிக்கடி குட்டு நான் குனிந்து கொள்கிறேன் வாயை இறுகப் பூட்டு
53

Page 56
நான் மூடிக் கொள்கிறேன்
காதுகளை ஒட்டு
நான் அடைத்துக் கொள்கிறேன்.
இத யதார்த்தின் வெளிப்பாடு. 'கிழக்கு வெளுக்கும், சுதந்திர பூமி பிறக்கும் இது ஒரு நம்பிக்கை மின்னல்.
- குறிஞ்சிாநாடன்
நூல் : (9fforu 6 Lif (9dful: பெ.வழவேலன் வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை விலை - ரூபாய் 350/-
மாத்தளை இலக்கிய கர்த்தாக்களுக்கு பெயர் போன இடம் மாத்தளை சோமு. மாத்தளை மலரன்பன், மாத்தளை வடிவேலன், பன்னாமத்துச் கவிராயர் வரிசையில் மாத்தளை பெ.வடிவேலன் ஒரு நல்ல சிருட்டி கர்த்தா.
இவர் நோர்த் மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர். பல்கலைக்கழக பட்டதாரி. இந்துசமய ராஜாங்க அமைச்சின் உத்தியோகத்தர். LJ/TL-9FTT606) அதிபர். எழுத்தாளர், ஆய்வாளர், பேச்சாளர், சமூகத்தொண்டர் சமுதாயத்தை நேசிக்கும் மனித நேயம் கொண்டவர்.
பல மேடைகளில் பரிசும் பாராட்டும் பெற்றவர். இலக்கியச் செம்மல் கலாபூஷணம் முதலிய விருதுகள் பெற்றவர். இலங்கையின் எல்லா செய்தித் தாள்களிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்று வாசகர்களின்
 
 

நெஞ்சைக் கவர்ந்துள்ளன. LDG60) Gol) L55 பாரம்பரியக் கலைகள், இறத்தோட்டை அருள்மிகு செல்வ விநாயகர் வரலாறு, முத்துமாரியம்மன் திருப்பள்ளி எழுச்சி, முத்துமாரியம்மன் திருப்பொன்னூஞ்சல், ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகள் மூன்று நாவல்கள், கவிதைத் தொகுதி என்பவற்றை வெளியிட்டுள்ளார்.
அட்சயவடம் என்னும் இச்சிறுகதைத் தொகுதி இருபது கதைகளைக் கொண்டது. அருமையான கதைகள். அட்சயவடம் என்ற முதலாவது கதை ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. நிகழ்வுகளின் தரிசனத்தை இக்கதை மூலம் அறியலாம். சொல்லாட்சித் தொடர்களும் எழுத்துவன்மையும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. அநேகமாக எல்லாக் " கதைகளிலும் தோட்டமக்களின் துயரமும், வறுமையும், ஏழ்மையும்இழையோடுகின்றதை தரிசிக்கக் கூடியதாகவுள்ளது.
புத்தாண்டு புதிதல்ல என்னும் கதை காமாச்சிப்பாட்டிகொடுமையானஏழ்மையிலும் பேரனின் ஆசையை நிறைவேற்றும் பாங்கு கண்ணில் நீரை வரவழைக்கிறது. ஆங்கோர் ஏழைக்கு’ என்ற கதை படித்தவர்களின் பண்பற்ற செயலை எடுத்துக்காட்டுகிறது. உரிமை வேண்டும் என்று போராடிய வேதநாயகம் ஆசிரியருக்கு தான் தொடங்கிய பாடசாலையை அரசு சுவீகரித்த பின்னர் பிரஜாவுரிமை இல்லாமை காரணமாக வேலை செய்ய உரிமை இல்லை என்று உதறிவிடுவது வேதனையைத் தருகிறது. பிஞ்சு உலகம் மிக அருமையான கதை. இடாப்பின் வரவைக் ) கூட்டி குடும்பத்திற்கு வேலை தேடும் கயமையை எடுத்து விளக்குவது இந்தக் கதை. r - குறிஞ்சி நாடன்
O O O
BD தினகரன் அவர்களுக்கு கவிதாயினி
ரு அவர்களுக்கும் சமீபத்தின் திருமணம் லையகக் கவிஞர்களு ைஇவர்கள் இருவரும் சிகையில் இதலைமுறையடையாளிகளாக
செய்யட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் பதிகளை ஞானம் மனப்பூர்வமாக வாழ்த்தி
STORTñ - assuooo Sooáša6uuă arsi5aAlessoas - Bun 2013

Page 57
வாசகா
வர இ இ ஆகும்'
ஞானம்154 ஆவது இதழ் கிடைத்தது நன்றி. இல் அவர்களின்கவிதையை படித்தபோதுகீழ்வரும்குறிப் இந்தப் பட்டம் பரிசு பற்றி ஒரு பனுவல் எழுத வே கொண்டார். அவரது பாவின் 'தீமும்' அதுவாக அை
வணிக மயப்பட்டுப் போன வாழ்க்கையில் இப் இயலுமை பெருகிவிட்டது. வாழ்வியல் வியாப ஏன்? பணங்கூடப் பணத்தினாற் கொள்வனவு செய் காசிருந்தால் அம்மாவைக்கூட வாங்கக்கூடிய காலம்
இன்று கலாபூஷணங்கள் பெருகிவிட்டன! தொலைபேசி அழைப்புக்களால் செய்யும் தொல்லை ஆலாபனை அடங்கிய வேண்டுதல்கள்! இவற்றால் வழங்கப்பட்டு வருகின்றன. இது போதும் பட்டா அல்லது போதாது என்று தெரிந்திருந்த போதிலும்கு பெறவேண்டும் என்னும் முனைப்புடையோரால் ஏ தலை குனிகின்றனர். தமக்களிக்கப்பட்ட பட்டங்க ை
பணம் பற்றிக் கவலை இல்லை பட்டம் பெற்றே பறப்பவர்களுக்குப் பட்டங்கள் விற்பதற்கு என்றே பட்டியலிட்டுள்ள பட்டங்களெல்லாம் இவ்வமைப்பு அவ்வாறான அமைப்பொன்றினூடாக எனக்குமெ என்னிடம் சொன்னார். - ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார்.
"மச்சான் நீ முதலில் எமதமைப்பின் சந்தாதாரர் செலுத்த வேண்டிவரும்"
"எனக்கு ஆத்திரம் வந்தது. நண்பன் அல்லவா நா
"காசுக்குப் பட்டமா? எனக்கது வேண்டாம் ! தனக்கொரு பட்டம் வேண்டும் என்று ஒருவர் ஆ
அவரது பெயரை நான் முன்மொழிந்தேன்.
இன்று அவரது நாம வானத்தில் தேசகீர்த்தி பப் கேள்விப்பட்டதில் அந்தப் பட்டத்திற்கான சொ
மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவா அவர் முன்வந்த போது அவர் அதனை ஏற்க மறுத்தார். தரப்பட்ட பட்டமாயினும் சில காரணங்களை முன் கூறிய காரணங்களுள் ஒன்று அது கௌரவப்பட்ட Acadamic Qualification இல்லை இல்லாத தொன்றுக்க நாங்களோ.......? ஒய்த்தா மாமா
ஞானம்153ஆவது இதழில் காட்டப்பட்டுள்ள என்ற சொல்லின் வேர் - உஸ்தாத் என்பதாகும் இது ஒ ஆசிரியர். பேச்சுவழக்கில் மாமா என்பதை இணைத் முஸ்லிம் நாவிதர்களையும் இப்பெயரால் அழைப்பர்
ஞானம்155 ஆவது இதழில் அரச இலக்கிய வி க மலர்விழி என்பவர் எழுதிய பத்தி தொடர்பாகவும் தலைப்பில் ஆசிரியர் குறிப்பையும் காண முடிந்தது. விடயமல்ல. இது தொடர்பில் அறுபதுகளிலேயே
வைத்தவர்கள் அவர்கள் அது தொடர்கிறது. ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2013

பேசுறார்
விதழிற்பிரசுரமாகி இருந்த கவிஞர் எஸ் முத்துமீரான் பைஎழுதத் தூண்டிற்று எனதுள்ளம் எனக்குள்ளேயும் பண்டுமெனும் விருப்பிருந்தது. முத்துமீரான் முந்திக்
மந்ததில் ஆனந்தம் போது எதையுமே விற்கலாம் - வாங்கலாம் என்னும் ரமாகிப் போனதாற்தான் இன்று பட்டம் பதவி, பப்படும் கேவலமான நிலைமை தோன்றி விட்டது. மாச்சு அல்லவா?
தேசகீரத்தி, தேசமான்யங்கள் பெருகிவிட்டன! தொந்தரவு! நேரிலே சென்று சந்தித்துச் சமர்ப்பிக்கும் இந்தப் பட்டங்கள் அவர்களின் தாரதம்மியம் பாராது ங்களைச் சுமப்பதற்கான தகைமை தமக்கு இல்லை, றுக்குவழியில் அப்பட்டத்தைக்காசுகொடுத்தாகிலும் கனவே இப்பட்டங்களைத்தகுதிகண்டு பெற்றவர்கள் ளவாபாஸ்வாங்கிக் கொள்ளவிரும்புகின்றனர்.
ஆக வேண்டும் என்னும் வேணாவாவோடு ஆலாய்ப் சில அமைப்புகள் நாட்டில் உள்ளன. முத்துமீரான் புகளின் ஊடாக விற்பனைக்குக் காத்துக்கிடக்கின்றன. Tரு பட்டம் தரப்போவதாக எனது நண்பரொருவர்
Tக வேண்டும் சந்தாப்பணமாக இரண்டாயிரம் ரூபா
என் அவனுடன் கோபிக்கவில்லை.
மச்சான். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! லாய்ப் பறக்கின்றார். அவரிடம் போய்க் கேள் என்று
பம் பறக்கின்றது. லவு பத்தாயிரம் ரூபாவாம்! களுக்கு ஒரு பல்கலைக்கழகம் எம் ஏ. பட்டம் வழங்க அப்பட்டம் தனக்குக் கெளரவந் தரும் பொருட்டுத் ன்வைத்தார். அதனை ஏற்க மறுத்தேவிட்டார். அவர் மாயினும் கல்வி சார்ந்த பட்டம் என்னிடம் அதற்கான பாக ஏனிந்த பட்டம் என்பதுதான் அவருடைய வினா
கிண்ணியா ஏ.எம்.எம்.அலி.
உதாரணங்களில் முதலாவதாக உள்ள ஒய்த்தா மாமா ரு பாரசீக மொழிச்சொல் இதன் கருத்து குரு அல்லது து ஒய்த்தாமாமா என வழங்கப்படுகிறது. தமிழகத்தில்
"டி.
-நளஷாத் சாய்ந்தமருது
ருது வழங்கல் -2012 சில குறிப்புகள் என்ற தலைப்பில் ம் அதன் கீழ் நடுவர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற அரச இலக்கியக் குளறுபடிகள் இன்றைய நேற்றைய முட்டையடி நடந்ததை யாவரும் அறிவர். தொடக்கி
55

Page 58
நடுவர்கள் தமது சரியான தீர்ப்பைக் ே தலையீடுகள் இருக்கின்றன. இடைத்தரகர்கள் தொகுதிக்கு வேறொருவரின் பெயரில் காசோன சில வருடங்களுக்கு முன்னர் நடந்தது. மொத்த பல்வேறு மட்டங்களில் பலர் இருக்கிறார்கள் சந்தேகக்கண்ணோடு பார்க்கப்படும்நிலை இருச்
சென்ற இதழில் அனைத்துலகப் புத்தகப் பரிசு கிடைத்த செய்தியும் இருந்தது. உலகளாவி மு. பொ. வின்நூலே சிறந்ததாக தெரிவு செய்யப் ஆனால் நமது நாட்டு தேசிய சாகித்திய தீர்மானிக்கப்பட்டது. இதிலிருந்து எமது அரச விளங்கிக்கொள்ளலாம் நாய்வாலைநிமிர்த்தவே
சுஜாதா அறக்கடளை-உயிற்மை இணைந்துவழர் மேற்படிவிருதுவழங்கலில்ஞானம்சஞ்சிசை பெறுகிறது என்பதனையும் அதற்கான விருது சென்னையில்நடைபெறுகிறது என்பதனையும் இதழ்என்பதில்ஐயமில்லை. ஞானம் இதழ்மீதா ஒரு தவத்தைப்போன்று இதழ்நடத்தி வருகிறார் மூத்த இதழாளர்களில்ஒருவர். அவருக்கு என்நல்
-கவிருர
தமிழகத்தில் நமது ஞானத்திற்கு சுஜாதா வி முன்னர்தான் அறிந்தேன் மட்டில்லா மகிழ்ச்சிட தமிழகம் மதிக்கும் நிலைக்கு தியாகம் செய்து ( இதயங்கனிந்த வாழ்த்துக்கள்
அமரர் செம்பியன் செல்வன் (
ஞாபகார்த்தச் சிறுகை
(அனுசரணை செம்பியன் செ6
O முதற பரிசு ejlis இரண்டாம் பரிசு ரூ மூன்றாம் பரிசு ரூப ஏனைய ஏழு சிறுகதைகளுக்கு பரிசுச் ச போட்டிக் சிறுகதைகள் முன்னர் எங்கும் பி போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது ெ இணைத் தபால் உறையின் இடது பக்க மூலைய சிறுகதைப் போட்டி" என
அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் கிளை அலுவலகம் - 3
முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கை
56
 

காடுத்தாலும் அதனை மாற்றி அமைக்க அரசியல் இருக்கிறார்கள் மரணமடைந்த ஒருவரின் கவிதைத் ல வழங்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்ட விடயமும் த்தில் அரச இலக்கிய விருதுகளில் குளறுபடிகள் செய்ய இதனால் தரமான புத்தகங்கள் பரிசு பெறும்போதும் கிறது. போட்டியில் மு. பொ. அவர்களுக்கு 10,000 டொலர் ய நிலையில் நடைபெற்ற போட்டியில் 150 நூல்களில் பட்டதாகவும்குறிப்பு இருந்தது.
விருதுக்கு அந்நூல் அனுப்பப்பட்டு தகுதியற்றதாக இலக்கிய விருது வழங்கலில் இடம்பெறும் சீர்கேட்டை (PL-lLIIIgl. -θ8. ΦαίΠh IM, απή ΜΜKOOH
கும்சுஜாதாவிருதுகள்-2O3 சிறந்தசிறுபத்திரிகைக்கானசுஜாதாசிற்றிதழ்விருதினைப் வழங்கல் சுஜாதாவின் பிறந்தநாளான மே 3ஆம்திகதி அறிந்து மகிழ்ந்தேன். ஞானம்பரிசுக்குமுழுத்தகுதிபெற்ற னமதிப்பும்மதிப்பீடும்அதிகரிக்கிறது. பல ஆண்டுகளாக "ஐயா டாக்டர் ஞானசேகரன் அவர்கள் இலங்கையின் வாழ்த்துக்கள் வுதிைைபிரபா,தைைவப்உகைத்தமிழ்சசிறிதழ்கள்சங்கம் ருது கிடைத்துள்ளதை இதை எழுத ஒரு நிமிடத்துக்கு ாக்டர் எவ்வளவு வாழ்த்துரைத்தாலும்தகும் எம்மையும் வெற்றிகண்ட ஞானம் ஆசிரியர்க் குழுவினருக்கு எனது
இராஜகோபால்)
(Bumig 2O3
ல்வன் குடும்பத்தினர்) 5OOO /=
um 3OOO/= In 2000/=
ான்றிதழ்கள் வழங்கப்படும். கான விதிகள் ரசுரிக்கப்படாததாக இருத்தல் வேண்டும். பயர், முகவரி போன்ற விடயங்களை வேறாக தல் வேண்டும்.
ல் "அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் ாக் குறிப்பிடப்படல் வேண்டும்.
B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு O6.
565 d5 : 31.O7.2O3
தகள் போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. -ஆசிரியர்
SBmsTiñ - assoso SoášaÁSuuáë arsaAlessoas - Bun 2013

Page 59
/キ
ஞானம் ஈழத்து ே
கடந்த முப்பெருப் 6LDITUplooouuuqb é ஆயுதமாக ஏந்த தொடர்பான ப ஆவணம் பற்றி பக்கங்களைக் ெ
இலங்கையில்
"ஞானம்" அலுவலகத்தில் இவ் தபாலில் பெற விரும்புவோர் தபாற்செலவு ரூட
தொடர்புகளுக்கு
た
அவுஸ்திரேலியாவில் இதழின் விை தபாலில் பெறவிரும்புவோர் தபாற்ெ தொடர்புகளுக்கு (0
ஞானம்" சஞ்சிகை
பூபாலசிங்கம்
202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309A/2/3, காலி வீ.
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வி
துர்
சுன்ன
ஜீவ
அல்வாய். தொை
லங்கா சென்ற 84, கொழும்பு
 
 

ர் இலக்கியச் சிறப்பிதழ்
ம் தசாப்தங்களான ஈழத்துப் போர்க்காலத்தில் அதன் வழியான இலக்கியத்தையும் கலாசார நிய பேனா மன்னர்களின் போரிலக்கியம் டைப்பு, ஆய்வு, மதிப்பீடு, கருத்தாடல், ய பெருந்தொகுப்பாக இச் சிறப்பிதழ் 6OO காண்டு வெளிவந்துள்ளது.
இதழின் விலை ரூபா 1500/=
விதழ் ரூபா 1000/= மாத்திரமே! un 250/= சேர்த்து அனுப்ப வேண்டும்.
: O777 3O65O6
லை - அவுஸ்திரேலிய டொலர் 25
செலவு வேறாக அனுப்ப வேண்டும்.
O61) 408 884 263 سZل
N 5DLG SLG6
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை தி, வெள்ளவத்தை.
புத்தகசாலை தி, யாழ்ப்பாணம்.
க்கா
னாகம்
நதி
லபேசி: 0775991949
ல் புத்தகசாலை
வீதி, கண்டி,
لس

Page 60
GNANAM - Registered in the Department of
With Best Con
(Luck
உலக சாதனை
Gavalho
Luckyland)
OD 10)
LUCKYLAN
MANUFA NATTARANPOTHA, KU TEL: 0094-081-2420574, 2420
Email: luckyl

Posts of Sri Lanka under No. QD/43/News/2013
ppliments from
yland)
ங்கள் பாரபேரியம் வதேன்!
Creacker
zgretario *
ND BISCUIT
CTURERS NDASALE, SRI LANKA. 1217. FAX: 0094-081-2420740 and@sltnet.lk