கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2013.07

Page 1


Page 2


Page 3
நதியினு
கவிதைகள்
யாழ்.ஸைனப் வே.ஐ.வரதராஜன் கெகிறாவ ទឋ°យលក្លាហា செ.மோகன்ராஜ் மன்னூரான் ஸிவூரார் கல்வயல் வே.குமராசாமி புலோலியூர் வேல்நந்தகுமார்
கட்டுரைகள்
த.அஜந்தகுமார்
கே.ஆர்.டேவிட்
அந்தனிஜீவா முருகபூபதி
அர்ச்சுனன்
பேசும் இதயங்கள் கலை இலக்கிய நிகழ்வுகள் அட்டைப்படம் - நன்றி இணையம்
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதைகள்
இப்னு அஸ்மத் மூதூர் மொஹமட் ராபி துறையூரான்
குறுங்கதை
வேல்.அமுதன்
நேர்காணல்
உமாலி லீலாரத்ன

Page 4
2013 ஆடி இதழ் - 58
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துவஜ்யந்தன்
பதிப்பாசிரியர்
d56OT55 5.d56DITLD6Ds
தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அலிவாய் வடமேற்கு
அலிவாய்
ෆිඛIකීගෆි.
ஆலோசகர் குழு:
திரு.தெரிையான்
திரு.கி.நடராஜா
தொலைபேசி 0775991949 0212262225
E-mail: jeevanathy(a)yahoo.com
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan
Commercial Bank Nelliady A/C - 810802 1808
CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக் களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும் படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர்
ܬ
དེ་
ls
GUITLpéOLD5
கண்களை
காதுகளை பொம்மை {
முறையே வற்றைக் அறிவுறுத்து
LO
இன்றும் வா தகவல் உல வழியாக்க
பொறிகள் காட்டும் சை கவும் கரு அமையும் னுடாக தீய
கண்ணியம
5旧
சிந்தனைக்கு கட்டுப்பாடு
கூட அவசி
வழிகாட்ட6 காரணம். அ
கவனத்தில்

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
காந்தியின் குரங்குப் பொம்மைகள்
காத்மாகாந்தியின் பிரசித்திபெற்ற மூன்று குரங்குப் 5ள் பற்றி அறிவோம். ஒரு குரங்குப் பொம்மை இரு கைகளால் மூடிக் கொண்டிருப்பது போன்றும் மற்றொரு பொம்மை இரு யும் பொத்திக் கொண்டிருப்பது போன்றும் மூன்றாவது வாயைப் பொத்திக் கொண்டிருப்பது போன்றும் அமைந்திருப்பது கண்களால் தீயனவற்றைப் பார்க்காதே, காதுகளால் தீயன கேளாதே, நாவினால் தீயனவற்றைப் பேசாதே" என்று |வதற்காகும்.
னித சமுதயாத்துக்கான இந்த மூதுரை காலத்தால் அழியாது. Tழ்கிறது; புதியபொருள் பெறுகின்றது. இன்றைய மின்னணுத் ]கில் (e-World), மனித மூளையானது கணினி மத்தியமுறை அலகாக (CPU) உருவாக்கப்படுகிறது. எமது உடலின் ஐம் உள்ளீடு செய்யும் சாதனங்களாகவும் எதிர் வினைககளைக் க, கால், நாக்கு போன்றவை வெளயிடு செய்யும் சாதனங்களா தப்படலாம். உள்ளீடுகளைப் பொறுத்தே வெளியீடுகளும் என்றவகையில், கண், காது, நாக்கு போன்ற இந்திரியங்களி னவற்றை உள்ளெடுத்துவிட்டு, உயர்வான சிந்தனைகளையும்
ான செயல்களையும் வெளிப்பாடுகளாகக் காணமுடியாது.
Tந்தியின் குரங்குப் பொதடமைகள் தெளிவான, உயர்வான த இந்திரியங்களின் கட்டுப்பாட்டை வலியுலுத்துகின்றன. இக் தொடர்பாடல் ஊடகங்களுக்கும் தொடர்பு சாதனங்களுக்கும் யம், "தெளிவானசெய்திப் பரிமாற்றம், மாணவர்களுக்கான ல் அறப்போதனையாக வலியுறுத்தப்படுவதற்கு இதுவே 1வ்வாறெனின், இலக்கிய சஞ்சிகைகளும் இக்கட்டுப்பாட்டைக்
கொள்வது அவசியமானதே.
க.பரணிதரன்

Page 5
உட94காண1
ஈழத்து இலக்கிய வரலாறு என்பது ஈழ ஆரம்பிக்கின்றது. 1310 ஆம் ஆண்டு தம்பதெனி பெற்றாலும் யாழ்ப்பாணத்தை மையமாகக் ே வரலாற்றிற்குரியதாக நாங்கள் கணித்து வந்தோம். அ போன்ற பகுதிகளிலிருந்தும் இக்காலத்தில் இலக்க மெதுமெதுவாக இலங்கையின் அனைத்துப் பிரதே தோன்றிக் கவனம் பெற்றுவரும் சூழலில் பிரதேச ரீதிய வரலாற்றுத் தெளிவிற்கும் ஆவண முயற்சிக்கும் கோருதல்களாக உள்ளன. இந்த வகையிலேதான் ஆராய்வது என்பது இப்பிரதேச புனைகதைகளின் பே இடமளிக்கும். அதுமட்டுமன்று இலங்கையின் பு6ை பாதிப்பையும் செல்வாக்கையும் விளங்கிக் கொள்வ நாவல், சிறுகதையாகிய வடிவங்கள் அடங்குவதால் இ போக்குகளையும் திருப்பங்களையும் இவ்வாய்வில் ச வடமாகாணம் என்பதற்குள் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்கள் அடங்குகின்றன. ஆரம்ப கா மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்கள் உள்ளட தனிப்பிரதேசமாகியது. எனவே ஒருவகையில் வன்னிப்பிரதேசங்கள் என்று சுருக்கிவிடுவது எளிை
• ჯაჯა: ჯ.· ஒவ்வொரு மாவட்டமும் தனக்கான தனித்துவங்களுட வருகின்றன. இதில் நாவல் வளர்ச்சி பற்றி நோக்குவத
6NLLDIEboo boof 666 (f
19 ஆம் நுாற்றாண்டில் தோன்றிய
கொண்டனவாக அமைந்தன. இலங்கையில் தோ முதலாவது நாவலாக வீரசிங்கன் கதை அல்லது சன்ம இது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டது ஆகு நாவலெனக் கொள்ளப்படும் மங்களநாயகம் தம்ை யாழ்ப்பாணத்தையே களமாகக் கொண்டது எனவே யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்றதுடன் யாழ்ப்பான
ஜீவநதி ঠু:ণ্ঠঃ&
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துப் பூதந்தேவனார் என்ற புலவருடன்தான் யாவிலே முதலாவது இலக்கியம் தோற்ற கொண்ட ஆட்சியையே ஈழத்து இலக்கிய ஆனாலும் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மன்னார் கிய முயற்சிகள் இடம் பெற்றிருந்தன. இன்று தசங்களிலிருந்தும் இலக்கியங்கள் பரவலாகத் பான ஆய்வுகள் முக்கியமானவையாகும். அவை தனித்துவ நிலைநாட்டலுக்கும் அவசியமான வடமாகாணம் சார்ந்த புனைகதைப் போக்ை ாக்கையும் வளர்ச்சியையும் விளங்கிக் கொள்ள னகதைப் போக்கில் வடமாகாணம் செலுத்து து மிக அவசியமாகும். புனைகதை என்பதற்குள் இப் பரப்பின் விரிவு பரந்தது என்பதாலும் முக்கிய கவனம் கொள்கின்றேன்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னா
5 வடமாகாணம் என்பதை யாழ்ப்பாண )மயானதாகும். ஆயினும் இன்றைய காலத்தில் உன் புனைகதைப் போக்கில் முன்னேற்றம் கண்டு ாக இக்கட்டுரை அமைகின்றது
நாவல்கள் மேலைத்தேயப் பின்னணியைக் ன்றிய ஈழத்துமண்ணை களமாகக் கொண்ட ார்க்கன் ஜெயம்(1905) நாவலை குறிப்பிடலாம் ம். இலங்கையில் தோன்றிய முதலாவது சமூக பையாவின் நொருங்குண்ட இருதயமும்(1914 வ வீரசிங்கன் கதையின் பின்னான நாவல்கள் னப் பிரதேசப் பின்னணியில் தோன்றியதையும்

Page 6
காணலாம்.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டு நாவல் தோன்றினாலும் முல்லைத்தீவு, மாவட்டத்திலே அந்த வன்னியின் கன்னிமை குன்றாத மண்வாசனையைத் தந்த நிலக்கிளி மூலம் பிரதேச நாவலுக்குரிய வெளிச்சமும் மண்வாசனை என்பதற்குரிய உண்மையான அர்த்தமும் வெளிக்கிளம்பின.
மண்வாசனை மட்டுமன்றி போராளி களே படைப்பாளிகளாகி போரியல் அனுபவங் களைப் பேசும் புத்தனுபவத் தொடக்கத்தையும் வன்னிப் பிரதேச நாவல்களே தந்தன. இன்று வவுனியாவில் நீ.பி அருளானந்தத்தின் "نن நாவல்களும், மன்னாரில் எஸ்.ஏ.உதயனின் ޙީ நாவல்களும் தோன்றி இலங்கை நாவல் வரலாற்றில் கவனிப்பைக் கோரிவருகின்றன. இவ்வாறு பார்க்கின்ற போதுதான் வடமாகாணம் என்பது யாழ்ப்பாணத்தில் மட்டும் தேங்கி
விடாமல் நாவல்வளர்ச்சி எல்லா இடங்களிலும் உடைப்பெடுத்துப் பரவி, "கொண்டும் கொடுத்தும்" தனித்துவம் பெற்று வருவதைக் காணலாம். இங்கே யாழ்ப்பாண எழுத்தாளர்கள் தொழில் காரணமாக வேறுமாவட்டங்களுக்குச் செல்லு கின்ற போது அங்கு தாம் சென்று வாழ்ந்த மாவட்டத்தின் அனுபவங்களையும் பிரச்சினை களைப் பேசியிருக்கிறார்கள். எனவே வட மாகாண நாவல்கள் என்று பார்க்கின்ற போது தனித் தனியான மாவட்டங்களினூடாக மாவட்டப் பகுப்பு சிலகுழப்பங்களை ஏற்படுத்தும் என்ப தனால் இலங்கைத்தமிழ் நாவல் வளர்ச்சியில் வடமாகாணத்தின் இடத்தினை விளங்கிக் இ. கொள்வதாகவும் அதே நேரத்தில் தேவையான இடங்களில் மாவட்ட நிலைப்போக்குகளை கவனப் படுத்துவதாகவும் இவ்வாய்வு மாறி மாறி இயங்கும்.
வடமாகாணநாவல்களின் வளர்ச்சி யினையும் பங்களிப்பையும் பின்வரும் வகைமை கள் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். 1. ஈழத்துநாவல்போக்கின் மையமாக அமைதல் 2. சாதிப்பிரச்சினையை தீவிரமாகப் பேசுதல் 3. சமூக வரலாற்றினை எழுதுதல் 4. மண்வாசனையைப் பிரதிபலித்தல்
5,
6.
பாலியல் வெளிப்பாடுகள் பண்பாட்டுப் பதிவுகள் 7. வரலாற்றுப்பதிவுகள் 8. பெண்ணியச் சிந்தனைகள் 9. தேசிய இனப்பிரச்சனையைப் பேசுதல் 10.போரியலின் நேரடி அனுபவங்களைப் பேசுதல்
ஜீவநதி
 
 
 
 
 

1) ஈழத்துநாவல் போக்கின் மையமாக அமைதல்
1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இளங்கீரனின் "தென்றலும் புயலும் ஈழத்தில் தோன்றிய சமுதாய விமர்சன நாவலாக எழுந்தது. அதே போல பிரதேசநாவல்கள் என்ற பகுப்பையும் தொடக்கி வைத்த பெருமை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பால மனோகரனுக்கே உரியது. தேசிய இனப் பிரச்சினைக்கான ஒரு தீர்த்ததரிசனக் குரலாக முதளையசிங்கத்தின் "ஒருதனிவீடு” நாவல் விளங்கியது. சாதிப்பிரச்சினைகளை தீவிரத் துடன் பேசியதில் செ. கணேசலிங்கன், டானியல் ஆகியோர் பெரும் வழிகாட்டிகளாக அமைந் தனர். மலரவனின்"போருலா" ஒருபோராளியே படைப்பாளியாகி தனது அனுபவத்தை பேசும் தொடக்கமாக அமைந்தது. பிராமணர் வேளாளர், வண்ணார், அருந்ததியர், வேடுவர், என்ற சாதிகுல வரலாறுகளையும் அவற்றின் பிரச்சினைகளையும் பேசும் தொடக்கம் இங்கே தான் எழுந்தது.
ii) சாதிப்பிரச்சினையைத் தீவிரமாகப் பேசுதல்
யாழ்ப்பாணப்பிரதேசத்தில் தாழ்த்தப் பட்ட சாதியினர் உயர் சாதியினரால் அனுப வித்த துன்பங்களையும் அவர்களுக்கு எதிராக இவர்கள் செய்த போராட்டங்களையும் பதிகை செய்ததில் டானியல் கணேசலிங்கன் ஆகிய இருவரது பங்களிப்பும் மிகமுக்கியமானது. இதனால் ஒருகால கட்டத்தின் மையப்புள்ளி களாக இவர்கள் கவனத்தைப் பெற்றார்கள். இதனை பேரா. நா. சுப்பிரமணியம் அவர்கள் "ஈழத்துதமிழ்நாவல் இலக்கியவரலாற்றில் 1960களில் இருந்து 1980களின் நடுப்பகுதி வரை கால் நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட கால கட்ட வரலாறு இவ்விருவரையும் மையப் படுத்தியது" எனக் குறிப்பிட்டுள்ளார். தனியே சாதிப்பிரச்சினை என்பதற்கு அப்பால் பிரதேச * உணர்வும் பண்பாட்டுப் பதிவும் சமூக வரலாறும் இவர்களின் நாவல் களில் தெளிவாக வெளிப்பட்டது.
கணேசலிங்கனின் நீண்டபயணம், போர்க்கோலம் ஆகியன குறிப்பிடத்தக்கன. "டானியலின் அடிமைகள், கானல், தண்ணீர், பஞ்சமர், கோவிந்தன் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. டானியல் ஈழத்தின் தலைசிறந்த பணி பாட் டு நாவலாசிரியர் என று

Page 7
சிறப்பிக்கப்படுமளவிற்கு நாட்டார் வழக்கியல் மரபுகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் பதிவு செய்துள்ளார். தெணியானின் நாவல் களும் சாதிப்பிரச்சினைகளையும் பேசுவதில் கவனத்தைக் கோருவன ஆகும். அகஸ்தியரின் "எரிபாதை நடுவே" முக்கியமான நாவல்
T.
i) சமூக வரலாற்றினை எழுதுதல்
சாதிப் பிரச்சினையைப் பேசுகின்ற போது அது ஒருவகையில் சமூகவரலாற்றினை எழுதும் செயலையும் நிகழ்த்துகின்றது. அப்பிரச்சினைகளின் மூன்றுநான்கு தலைமுறை வரலாற்றை அடிமைகள் (1984) கானல் (1986) தண்ணீர் (1989) ஆகிய டானியலின் நாவல்கள் பேசுவதைக் காண்கிறோம் இது ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு அதுமட்டுமின்றி பிராமணர்களின் பிரச்சினையைப் பேசுகின்ற நாவல் போக்குகளும் கிளை விட்டமை கவனத்திற்குரியது.
இந்த வகையரில் தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள், சோம
காந்தனின் "விடிவெள்ளி பூத்தது" ஆகியவை
குறிப்பிடத்தக்கன. தெணியானின் நாவலே முதல்
"பிரளயம்" என்ற நாவலை எழுதினார். உண்மையில் இதன் தொடர்ச்சியாகவே மிக விரிவான நிலையில் கிழக்கிலங்கையை மையமாகக் கொண்டு விமல் குழந்தைவேலின் "வெள்ளாவி நாவல் தோன்றியது. அருந்ததி பரின் வாழ்க்கை வரலாற்றை கிட்டத்தட்ட 40
ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேரி வாழ்க்கையை
பேசிநிற்கின்றது. காட்டுவாசிகள் பற்றி செ. யோகநாதனின் (1992) கிட்டி செங்கை யாழியானின் ஜன்மபூமி (1993) என்பன பேசிநிற்கின்றன.
மீனவக்குடும்பங்கள் அவர்கள் சார்ந்த வாழ்வியலை அ. கைலாசநாதனின் கடற்காற்று செங்கை ஆழியானின் வாடைக்காற்று கே. டானியலின் போராளிகள் காத்திருக்கின்றனர் அண்மையில் வெளிவந்த எஸ். ஏ. உதயணனின் ைோமியா", "சொடுதா", கலையார் வன் கு. ராயப்பு எழுதிய உப்புக் காற்று" ஆகிய நாவல்களில் தரிசிக்கின்றோம்.
தாமரைச் செல்வியின் பச்சைவயல்
வநதி
 
 

கனவு நாவலில் விவசாயிகளின் முயற்சியும் அவர்களின் வாழ்வும் போராட்டமும் பேசப் பட்டுள்ளது. தென்மராட்சியிலிருந்து வளமான வாழ்வு தேடிச் சென்ற மக்கள் கிளிநொச்சியைக் கட்டியெழுப்பி வளர்ந்த வரலாற்றையும் போரி னால் அது சிதைந்த தன்மையையும் கூறுவது. கிளிநொச்சி உருவாக்கப்பட்டதும். அழிக்கப் பட்டதுமான சமூக வரலாற்றுக்கு "பச்சைவயல் கனவு" நாவலில் தாமரைச்செல்வி உயிர் கொடுக்கின்றார்.
iv) மணிவாசனையைப் பிரதிபலித்தல்
1970 களின் ஆரம்பத்தில் வீரகேசரி நிறுவனம் ஆக்கங்களை வெளியிடும் களமாக மாறியபோது ஈழத்துப்படைப்பாளிகள் பலரும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொடுத்த உந்துதலால் ஈழத்து மண்ணையும் மக் களையும் கொணர் டு இலக் கரியம் படைத்தவர்களுக்கு பிரசுரவசதியும் கைகூடிய போது ஈழத்தின் பல்வேறு களங்களும் ஆக்க இலக்கியக் களமாக்கப்பட்டன. இந்தவகையில் அ. பாலமனோகரன் 1973 இல் வெளியிட்ட நிலக்கிளி முதற்தரமான நாவல் ஆகும். இது மண்வாசனை என்பதனை பிரதிபலித்த முதல் நாவலாகவும் பிரதேச நாவல் தோற்றத்துக்கான அடிப்படையாகவும் அமைந்தது. இதனைப் பேராசிரியர் ம. இரகுநாதன்.
"மண்வாசனை என்பது இதுதான் என்பதை முழுமையாக உணர்த்திய முதல் படைப்புகளும் வன்னியிலேயே உருவாகின எனலாம். வன்னிப் பிரதேச நாவல்களின் வருகையுடன் ஈழத்துத் தமிழ்நாவல் வளர்ச்சி யில் பிரதேச நாவல்கள் என்ற தனியொரு பிரிவினை வகுக்கவேண்டிய தேவையினையும் இவை வலியுறுத்தின" என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கிளியைத் தொடர்ந்து வீரகேசரி யின் பிரதேச நாவல் போட்டி மற்றும் உற்சாகத் தினால் யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் என்றிருந்த நாவற்களங்கள் வெளித்தெரியாத கிராமங்களை, மாவட்டங்களை, வட்டாரங் களை நோக்கி விரியத் தொடங்கின.
அந்தப் பிரதேசத்துக்குரியவர்கள் மாத்திரமல்ல ஏதோவொரு காரணத்தால் அங்கு வசித்தவர்கள் அச்சூழலை உள்வாங்கி இலக்கியம் படைத்தார்கள் இந்தவகையில் செங்கை ஆழியானின் காட்டாறு, நந்தி, தி.ஞானசேகரன், புலோலியூர் க.சதாசிவம்
இதழ் 58

Page 8
போன்றோரின் மலையகத்தை மையமாகக் கொண்ட நாவல்கள் முக்கியமானவை.
எ) LITGóluóò 666ńLITOGöb6
பாலியலை இயல்பாக எழுதி சர்ச்சை ܬܓ யினை நாவல் வழி பெற்றவர் எஸ். பொன்னுத் ) துரை இவரது தீ (1961), சடங்கு (1966) ஆகிய நாவல்கள் கவனத்துக்குரியன. இந்திரிய எழுத்தாளர் என்று பேராசிரியர் க. கைலாசபதி கிண்டல் செய்யும் அளவிற்கு பாலியல் வெளிப் பாடுகளை இயல்பூக்கத்துடன் இவர் நாவல்கள் பேசின. ஆயினும் பாலியலுக்கு அப்பால் இவரிடம் இருந்த நுண்ணுணர்வும் கலாபூர்வம் செறிந்த கவரும் நடையும் எப்போதும் வாசகரை ஈர்க்குந்திறன் கொண்டன. சடங்கு நாவல் குறித்த வ.அ. இராசரத்தினத்தின் குறிப்பு முக்கியமானது.
"யதார்த்தம் பேசுபவர்கட்கு நான் நிச்சயமாக ஒன்று சொல்வேன். நமது அரசியல் நிலைகளின் காரணமாக இன்னும் நூற்றாண்டு காலத்தில் நமது வாழ்க்கை நிலைகள் மாற்றமடையலாம். அப்போது நூற்றாண்டு களுக்கு முன்னால் ஒரு யாழ்ப்பாணத்து கிளறிக்கல் சேவன்ற் எப்படி வாழ்ந்தான் என்று அறிய விரும்பும் சரித்திர மாணவன் ஒருவன் நிச்சயமாக எஸ். பொவின் சடங்கைப் படித்தே ஆக வேண்டும்.
தெணியானின் காத்திருப்பு, பனையின் நிழல் ஆகிய நாவல்களும் இவ்விடத்தில் கவனத்துக்கு உரியன. பாலியலை விரசமின்றி கத்திமேல் நடையாய் கவனத்துடன் எழுதப்பட்ட நாவல்கள் இவை. உளவியல் ஆழமும் கவனமும் இந்நாவல்களை முக்கியப்படுத்துகின்றன.
இவர்களின் துணிவுக்கெல்லாம் எஸ். பொ. ஒரு முன்னோடியாக இருக்கின்றார்.
一
vi) பண்பாட்டுப்பதிவுகள்
நாவல்கள் தனியே கதைகளாக அமைந்து விடமுடியாது. வெறுங்கதைகள் நாவலாகவும் இருக்க முடியாது. தத்துவ விசாரணைகளும், பண்பாட்டுப் பதிவுகளும், வரலாற்றுக் கண்ணோட்டமும் கதையின் போக்கோடு இணைந்தும் பிணைந்தும் வருவது தவிர்க்க முடியாதது ஆகும்.
இலங்கை மண்ணைக் களமாகக் கொண்ட முதல் நாவலான வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் முதல் இன்றை வரையான நாவல்களில் பல்வேறு பிரதேச உணர்வும் பண்பாட்டுப் பதிவும் பயின்று
ஜீவநதி
 
 
 
 
 
 

வருவதைக் காண்கிறோம்.
யாழ்ப்பாணத்தின் பண்பாடு பற்றி அறிய முயல்பவர்களுக்கான உசாவல் நூல் களாக டானியலின் நாவல்கள் விளங்குகின்றன. அவரின் நாவல்களின் இயல்பாகப் பயிலுகின்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக்கு உட்பட்டி ருக்கின்றன. "பண்பாட்டுப் பாட்டனார்" என்று சிறப்புப் பெறும் நிலையை டானியல் விளங்கி யிருக்கின்றார். இதனைப் பேராசிரியர் செ. (3u JT85UTE-IT
"ஒரு காலத்துச் சமூக வாழ்வின் பண் பாட்டு ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு டானியல் எழுத்துக்கள் பெரிதும் துணை புரிவனவாய் உள்ளன" என்ற குறிப்பிட் டுள்ளதைக் கூறலாம்.
vii) வரலாற்றுப்பதிவுகள்
சமூக வரலாற்றை பண்பாட்டு வர லாற்றை ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணிரா லான வரலாற்றை வடபுலத்து நாவல்கள் பிரதி செய்ததைப் போலவே பழைய மன்னர்களின், வீரர்களின், ஆட்சியாளர்களின் வரலாற்றையும் கலையோடு இணைந்த மக்களின் வரலாற்றை யும் பதிவு செய்து கவனிப்பு பெற்று வருவதைக் காணலாம்.
தமிழர்களின் முற் பட்ட கால வாழ்க்கை முறையை "நேற்றிருந்தோம் அந்த வீட்டினில்" என்ற செ. யோகநாதனின் நாவல் பதிவு செய்கின்றது. முல்லைமணியின் வன்னியர் திலகம் கயிலை மன்னர்களின் வரலாற்றைப் பதிவு செய்கின்றது. கமுகஞ் சோலை என்ற அவரது நாவல் வெள்ளையர் களுக்கு எதிராக முல்லை மக்கள் செய்த போராட்ட வரலாற்றைக் கூறுகின்றது. "மழை யில் நனைந்து வெயிலில் காய்ந்து" என்ற செங்கை ஆழியானின் நாவல் இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்ட வரலாற்றையும் அங்கு குடியேறிய மக்களின் வரலாற்றையும் கூறுகின்றது. செங்கை ஆழியானின் குவேனி நாவலும் குறிப்பிடத்தக்கது.
Vi) பைண்ணியச் சிந்தனைகள்
சுதந்திரத்துக்குப் பிற்பட்ட வடபுலத்துப் பெண் நாவலாசிரியர்களுள் கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி தமிழ்க்கவி, ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். கோகிலா மகேந்திரன் பெண்ணியச் சிந்தனைகளை உளவியல் நோக் குட னி தருவதல்
இதழ் 58

Page 9
முதன்மையானவர். இவரது "துயிலும் ஒருநாள் கலையும்" அடக்கப்பட்ட பெண்களின் வாழ்வு ஒரு நாள் விழிக்கும் என்பதைப் பேசுவது "தூவானம் கவனம்" எயிட்ஸ் நோய் விழிப் புணர்வைப் பேசுகின்ற நாவல்.
தாமரைச்செல்வியின் நாவல்கள் போர்நிலை வாழ் வினைப் பெண் நிலை அனுபவங்களுடாக விரிப்பவை. பிரதேச மணம், வரலாறு, தேசியப் பற்று, போர் அவலம், மனிதம் என்று விரியும் குணாம்சங்களை இவர் நாவல்கள் பேசுகின்றன சுமைகள், தாகம், விண்ணில் அல்ல, விடிவெள்ளி, பச்சைவயல், கனவு ஆகியன முக்கியமானவை.
ix) தேசிய இனப்பிரச்சினை
தேவகாந்தனின் "எழுதாத சரித்திரங்கள்" உயிர்ப் பயணம், திசைகள், நிலாச் சமுத்திரம், கனவுச்சிறை, யுத்தத்தின் முதலாம் அதிகாரம் ஆகிய நூல் வடிவில் வந்துள்ளன. கனவுப்பிறை என்ற ஐந்துபாக நாவல் ஈழத் தமிழர் சமூகத்தின் 1981 - 2000 வரையான வரலாற்றியக்கம் இருப்பு, பண்பாட்டு ணர்வு சோதனை என்பவற்றை கூறுகின்றது.
போராட்ட இயக்க விமர்சன நூல்களாக 85களில் வெளிவந்த "புதியதோர் உலகம்" செழியனின் "ஒரு மனிதனின் நாட்குறிப்பி லிருந்து", சோபசக்தியின் "கொரில்லா", "ம்" ஆகியவை முக்கியமானவை. சாந்தனின் எழுதப்பட்ட "அத்தியாயங்கள், செங்கை யாழி யானின் மரணங்கள் மலிந்த பூமி, "போரே நீபோ" தெணி யானின் "சிதைவுகள் சமுருகானாந்தனின் “நெருப்பாறு திருச்செந்தி நாதன் "முடிவல்ல ஆரம்பம்" ஆகியன முக்கியமானவை. எஸ்.போவின் மாயினி என்ற நாவல்
ள்ே குடிய்ே
கனாக்காணும் கண்களுக்குள் காணாமலே போய்விட்டன கண்ணிர்த்துளிகள் எனதான அகதி வாழ்வும் எனதுரரின்
அவல நிலையும் எப்போதும் மாறி மாறி வருகின்ற இரவினிலும் பகலினிலும் எண்ணி எண்ணி அழுதழுதே என் கண்களும் காய்ந்தன ஊனமே நிலையாகி விட்ட
உண்மை உறவுகளினதும் சேதமே கதையாகி விட்ட
ஜீவநதி
 

சிறந்த அரசியல் விமர்சன நாவலாக விளங்குகின்றது.
X) சமூக அவலங்களைப் பேசுதல்
ஜகநாதனின் "நாளை” அகஸ் தியரின் "கோபுரங்கள் சரிகின்றன" தெணியானின் "கழுகுகள்", "மரக்கொக்கு", நெல்லை க. பேரனின் "விமானங்கள் மீண்டும் வரும்" செங்கைஆழியானின் "காற்றில் கலக்கும் பெருமூச்சுகள்” என்று இந்நாவல் வரிசை நீண்டு செல்லும், தத்துவம், ஆத்மீகம் சாாந்து மு.பொவின் நோயிலிருத்தல் கவனத்துக"குரிய படைப்பாகும்.
Xi) போரியல் வாழ்வைபோராளியே பேசல்
மலரவனின் போருலா (1992) புயல் பறவை, தமிழ்க்கவியின் இனிவானம் வெளிச் சிடும், இருள் இனி விலகும் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கன.
இவ்வாறாக போரின் பின்னான நாவல்களில் நீ.பி அருளானந்தத்தின் பதினான் காம் நாள் நிலவு (2012) கேப்பிலாவை மையமாகக் கொண்டது. வவுனியூர் இரா. உதயணனின் "பனி இரவு" ஆகியன குறிப்பிடத் தகுந்தது. எனினும் போரில் வாழ்ந்தவர் களின் நாவலுக்காக நாம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
வடபுலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்தவர் களின் நாவற் பங்களிப்பு இன்றைய கனதியை அதிகரித்து வருவதோடு யாழ்ப் பாணம் என்ற மையம் தகர்ந்து இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சியில் மன்னார், வவுனியா ஆகியனவும் முக்கியம் பெற்று வருகின்றன.
பறுகிறேன்.
உழைத்து சேர்த்த உடமைகளினதும் துயரக் கதைகளின் ஒப்பாரிச் சத்தங்கள் தான் ஓயாது கேட்டபடி. மீள் குடியேறச் சொல்கிறார்கள் வெற்றுத் தரையிலும் வேயாத கூரைக்குள்ளும் வெய்யிலிலும் மழையிலும் வாழ்வதெப்படி? வீட்டைத் தந்துவிட்டுத்தானே வாழ்வதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
இதழ் 58

Page 10
UITG ஸ்வரிக்கு நான்கு குழந்தைகள் நான்கும் ஒரே மாதிரி வாடி வதங்கி, சுருங்கி போயிருந்தன. அதில் இரண்டு பள்ளிக்கூடம் போவதாக கூறினாள். இத்தனைக்கும் அவளுக்கு வயது இருபது.
இருபது வயதில் நான் கவிதை எழுதிக் கொண் ருந்தேன். எழுதிய கவிதை ஏதாவது பத்திரிகைகளி அல்லது சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தா வானமும் பூமியும் தெரியாத மகிழ்வு. உடனே அந்த கவிதையை வெட்டி எடுத்து புத்தகத்தில் ஒட்டிக் கொள்வ கிடையாது. பத்திரிகையுடன் அல்லது சஞ்சிகையுடன் அ கவிதையை வைத்து திரும்பத் திரும்ப நாட் கணக்கி டிப்பதில் கிடைக்கும் சந்தோஷம் வேறெதிலுமில்லை. ဒ္ဓိ நான் கவிதை எழுத நினைத்திராத ஒ( காலத்தில் தான் இவள் கல்யாணம் செய்து கொண்டிரு கிறாள். 2007ம் வருடம் தனது கணவன் காணாம போனதாகக் கூறினாள். யாழ்ப்பாணத்தில் காணாம ானவர்களது உறவுகள் கூறும் பட்டியலைப் பார்க்கு போது 2006, 2007களில் காணாமற் போனவர்கள எண்ணிக்கையே அதிகம்.
“வேலைக்குப் போனவர். வீடு திரும்பவில்6ை
என்றாள்.
திருநெல்வேலிப் பக்கம் அவர்களது வீ இருந்தது. பலாலி வீதியில் அவன் காணாமற் போ!
ருந்தான். வீட்டிலிருந்து செல்லும் வழியில் அல்லது, வீ
ரும்பும் வழியில் காணாமற் போயிருக்கக்கூடும்.
கூலி வேலைக்குப் போனவனாம். அப்போ
மூன்று குழந்தைகள் பூமியில், ஒன்று அவளது வயிற்றில்,
"கணவருக்கென்ன வயது?"
"இருபத்தி ஒன்று”
பத்து வயதைத் தாண்டி பதினைந்துக்கு
திருமணம் செய்து கொண்ட இளைஞர், யுவதிகளின் என
பெண்கள்தான்.
இயக்கக்காரர்களின் எடுப்புக்கு எடுபட்டுப் டே விடுமோ என்ற அச்சத்தில் மணமுடித்துக் கொண்டவர் அதிகம்.
குழந்தைகளுடன் வரும் இப் பெண்களை வருகிறார்களோ இல்லை குழந்தைகள் இவர்களைத் கஷ்டமான காரியமாக இருக்கும்.
ராஜேஸ்வரியின் கணவன் கூலி வ்ேலைக்குப் C "என்ன கூலிவேலை?"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ணிக்கை இந்த யுத்த பூமியில் அதிகம் இதில் அதிகமானோர்
ானவர்கள் ஒரு பக்கம். இயக்கம் பிடித்துக் கொண்டு போய் கள் ஒரு பக்கம். இதில் இரண்டாவது நிலைக்குட்பட்டோரே
ப் பார்க்கும் போது, இவர்கள் குழந்தைகளைத் தாங்கி தாங்கி வருகின்றனவா என்பதைக் கண்டு பிடிப்பது மிகவும்
. . . * S " و ق o போகிறவன். கூலி வேலை என்றால்.
" • *

Page 11
"அவரா?”
“LDLs)"
“கிடைக்கிறதைக் செய்வார். அதிகமா தோட்டங்களில். தோட்டம் இல்லாத நேரம் வேற ஏதாவது."
"வேற ஏதாவதுன்னா?”
"கிடைக்கிறதைச் செய்வார்." இயக்கங்களுடன் ஏதாவது தொடர்புகள் இருந்திருக்குமோ?.
தொடர்பு இல்லா விட்டாலும் ஏதாவது வேலைகள் செய்யப் போய்.
"இயக்கங்களில ஏதாவது?" "தெரிஞ்ச வரைக்கும் அப்படியில்ல." இவளுக்குத் தெரியாமல் ஏதும்?. எனக்கு செல்லப்பாவின் ஞாபகம் வந்தது. அவர் காணாமற் போகவில்லை. கைது செய்யப்பட்டு சிறையில்.
அந்த இரண்டு பேரில் ஒருவர் எப்படியோ லனாய்வுத் துறையிடம் சிக்கிக் கொண்டார். பின்னர் ப் படியாக விசாரித்து வேன் உரிமையாளர் என்ற
கயில் செல்லப்பாவும் கைது செய்யப்பட்டார்.
ாவி. அதட்டி பேச மாட்டார்.
அவர் ஓர் அப்ப பசும் போது வார்த்தைகளுக்கு வலிக்காமல் பார்த்துக் கொள்வார். ஆறு வருடங்கள் கழிந்து விடுதலையானார்.
இப்போது அந்த வேனில்லை. வேறு எந்த வேனுமில்லை. முச்சக்கர வண்டி ஒட்டிக் கொண்டி ருக்கிறார். அதுவும் வாடகை.
ராஜேஸ்வரியிடமிருந்து தகவல்களைப் பதிவு செய்து கொண்டேன்.
இப்படி நிறையப் பெண்களை தொடர்ந்து பார்க்க வேண்டியதாயிற்று. காணாமற் போனோர் குறித்து முறைப்பாடுகளை உரிய இடங்களில் பதிவு செய்து கொண்டிருந்த பெற்றோரும் உறவினர்களும் பின்பு படிப்படியாக ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படியான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக் காரர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவரும். அவற்றில் எல்லாம் ராஜேஸ்வரியை நான் ஒருபோதும் கணர் டதில் லை. சில வேளை அவள் இருந்த புகைப்படங்களை நான் காணாதும் இருந்திருக்கலாம்.
வேம்படிச் சந்தியால் வரும் போது ஒரு முறை அவளைக் கண்டேன். பழைய சைக்கிலொன்றில் குழந்தையுடன் வந்தாள். குழந்தை பள்ளிக்கூட சீருடையில் இருந்தது.
சைக்கிளை நிறுத்தி நிலத்தில் காலூன்றும் போதே கேட்டாள்.
"அவரைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?”
எனது முதத்தைப் பார்த்தே, பதிலை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
"ஆர்ப்பாட்டங்களுக்கு போகவில்லையா? என்றேன்.
"மூன்று வீடுகளுக்கு வேலைக்குப் போகாட் எங்க பாடு போயிடும்” என்றாள்.
இப்போது மூன்றாம் குறுக்குத் தெருவில் ஒ
சின்ன அறை எடுத்து இருப்பதாகக் கூறினாள். ஒரு வீட்டுக்கு நூறு ரூபா தருவதாகவும், சில நேரம் தன் வீட்டுக்கு சாப்பாடும் கொண்டு செல்வதாகவும் கூறினாள்.
"ஆர் ப் பாட்டம் செய்தால் அவர் கிடைப்பாரா?” என்றாள்.
இதற்கு என்ன பதில் சொல்வது? இவர்களது வேதனைகளை மூலதனமாக்கி, இவர்களது கண்ணீரை ஊடகமாக்கி சிலர் அரசியல் பிழைப்பை யும் வயிற்றுப் பிழைப்பையும் நடாத்தி வருகின்றனர்.
அவள் எனது பதிலை எதிர் பார்க்கவில்லைப் போல் தெரிந்தது. மேலும் ஏதேதோ கூறினாள். குழந்தையை பாடசாலைக்கு விட வேண்டும் என்று கூறிக் கொண்டே புறப்பட்டாள்.
இதழ் 58

Page 12
குழந்தை சீருடையில் இருந்தது. சுருங்கி போன சீருடை அவர்களது வாழ்க்கையைப் போ நிமிர்த்துவதற்கு வசதி வேண்டும். ஒரு நாளைக் முன்நூறு ரூபாய். ஐந்து உயிர்கள் வாழ வேண்டு குழந்தையின் பாதங்களில் தேய்ந்து போ செருப்புகள். அவளது சைக்கில் டயர்களும் அதை போன்றே தேய்ந்திருந்தன.
ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் பாடசாை மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் வழங்கப் போவதாக கூறியிருந்தமை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு சோ சப்பாத்து வாங்கிக் கொடுக்க வேண்டும்.
அவளது சைக்கிள் மிகுந்த சிரமத்துட சென்று கொண்டிருந்தது. அது அவளது சைக்கிள்
காணாமற் போனவர்கள் உயிருட6 இருப்பார்களா? இருக்கிறார்கள், என்ற நம்பிக்ை அவர்களை இழந்தவர்களுக்கு இன்னும் இருக்கிறது ாளையும் நாம் உயிருடன் இருப்போம் என் ம்பிக்கை போல்தான் இதுவும். - இருக்க மாட்டார்கள் எனக் கூறினா வர்களது நம்பிக்கை சிதறிப் போய்விடும். எனே ன்னால் அப்படி ஒரு பதிலைக் கூற இயலாது.
நம்பிக்கைதான் வாழ்க்கை. இவர்கள் வாழ்க்கையில் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
யுத்த கால கட்டத்தில் யாழ்ப்பாணப் பக்கே லை வைத்தும் படுத்திராத அரசியல்வாதிகள் பல ன்று யாழ்ப்பாணமே கதி என்று வந்து தங்கி போகிறார்கள்.
அவ்வப்போது இந்த மக்கள் அந்த அரசியல்வா ளிடமும் போய் கேட்பதுண்டு. காணாமற் போ6 ர்கள் பற்றி இந்த அரசியல்வாதிகள் காணாம போகாமல் இருப்பதற்கே நாங்கள்தான் காரண என்பதை இந்த மக்கள் எப்போதுதான் உணர்வார்களே
தரியாது.
பின்பு ஒருநாள் உதவித் திட்ட நிகழ்வி ராஜேஸ்வரியைச் சந்தித்தேன். தூரத்தில் இருந்ே என்னைக் கண்டிருக்க வேண்டும். இரு குழந்ை களுடன் வந்திருந்தாள். இருந்ததை விட இன்னும் அவ6 இழந்து வருவது மட்டுமே தெரிந்தது. வளர்ச்சிகள் எதுவும் இல்லாத வாழ்க்கையில் மேலும் மேலும் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பது நன்றாகவே புலப்பட்டது கணவனைப் பற்றியே விசாரித்தாள். அவளுe அவன்பாலான காதல் இன்னும் அகன்று விடவில்லை நான்காவது குழந்தையைக் காணாமலேயே அவ6 காணாமற் போய் விட்டான். கிட்டத்தட்ட எட்( வருடங்களாக அவள் வாழ்கிறாள். குழந்தைகளுக்காக அவனும் கூட இருந்தால் இன்னும் நன்றாக வாழலா என எண்ணுகிறாள்.
அவளது கணவனைத் தேடுகின்ற அவளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

30T
T
ல்
前
ஆவல் ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அது சற்றும் குறைந்திருக்கவில்லை. காணாமற் போனவர்களைத் தேடிய பலர் ஆரம்பத்தில் காட்டிய அக்கறையை இப்போதும் கொண்டிருக்கிறார்களா? என நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. பல வருடங்கள் கழிந்த நிலையிலும் அந்தத் தேடலின் ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்துக் காணப்படுகிறதே அன்றி குறையவில்லை என்றே ராஜேஸ்வரியைப் பார்க்கும் போது எண்ணத் தோன்றுகிறது.
கணவரை இழந்த பெண்கள் சிலர் தவறான வழியில் ஈடுபட்டிருப்பது குறித்தும் அறிந்திருக்கிறேன். எரியும் வயிற்றுப் பசியை அணைப்பதற்காக யாரை யாரை எல்லாமோ அணைக்க வேண்டிய நிலைக்கு சிலர் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இவளைப் பொறுத்த வரையில் அப்படி எதையுமே நான் கேள்விப்பட்டதில்லை. வீடுகளேறி உழைக்கிறாள். அந்த உழைப்பின் வருமானம் குறுகியதுதான். என்றாலும் அதை வைத்து வாழ்க்கை யில் ஏதோ காணாமற் போகாதிருக்கிறாள். காணாமற் போன தனது கணவனைத் தேடுகிறாள். ی குழந்தை ஏதோ கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தது.
அதடடிய பாாததாள அழத் தொடங்கியது. "ஏன்?" "சோடா வேணுமாம்" என்றாள். பக்கத்தில் ஓரிரு குழந்தைகளுக் பெற்றோர் சோடா வாங்கிக் கொடுத்திருந்தன குழந்தைகள் மிகுந்த சந்தோஷத்துடன் குடித்துக் கொண்டிருந்தன.
ராஜேஸ் வரியின் குழந்தை அதை பார்த்துத்தான் சோடா கேட்டு நச்சரிக்கிறது போலும்,
ஒரு நூறு ரூபா எடுத்துக் கொடுத்தேன். அவள் வாங்க மறுத்தாள். விடாப்பிடியாக கொடுத்தேன். குழந்தைக்கு சோடா வாங்கிக் கொடுக்கும்படி கூறினேன்.
அவள் அக்கம் பக்கம் பார்த்தாள். நிறையப் பேர். மிகுந்த தர்மசங்கடத்துடன் அவள் அந்த நூறு ரூபாவை வாங்கினாள். அவள் முகத்தில் ஒரு திருப்தியற்ற தன்மை நிலவியது. கட்டாயப்படுத்திய தால்தான் வாங்குவதாக இருந்தது.
குழந்தைகளுடன் விருட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்.
அதன் பிறகு அவளை நான் காணவே இல்லை.
காணாமற் போன தனது கணவனைத் தேடுவதில் மும்முரமாகி இருக்க வேண்டும்!

Page 13
விகழ்துவர்த்தினியின்
இலக்கியப்படைப்புக்கள் சமூக இயங்கியல்
பண்புகளின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதால், இலக்கியப் படைப்புகளில் மாற்றங்களும், அம்மாற்றங்களுக்கான விவாதங்களும் நிகழ்வது தவிர்க்க முடியாததாகின்றது. இலக்கிய வடிவத்துக்குரிய இலக்கிய அழகியற் பண்புக்கூறுகள் அமைந்த ஒரு படைப்பை இலக்கியமாகக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது. இலக்கிய வடிவத் தினைப் பெறும் அப்படைப்பினுள் ஆழமானதும் கூர்மை யானதுமான ஒரு சமூகச் செய்தியும் உள்ளடங்கியிருக்குமே யானால் அப்படைப்பு "உன்னத இலக்கியம்" என்றொரு உயர் நிலைக்கு உயர்த்தப்படுமென்பதற்கு உதாரணமாக நமக்கு முன்னால் பல படைப்புக்கள் உண்டு.
இலக்கியவடிவத்திற்குரிய அழகியற் பண்புக் கூறுகளின் நியமங்கள் சகல படைப்பாளர்களுக்கும் பொதுவானது. ஆனால், படைப்புக்களின் உள்ளடக்கம் இப்பொதுமை நிலையை அடைவதில்லை. அடையு மென்று எதிர்பார்க்கவும் முடியாது. ஒரு படைப்பாளனின் சமூக தரிசனமானது அவனது மனத்தளத்தின் ஊடாகவே நிகழ்கிறது. தனது மனத்தளத்தில் நின்று தனது தரிசனத்திற்குரிய காரண காரியங்களை அவன் தேடு கின்றான். இச்செயல் இயல்பானது மட்டுமல்ல. தவிர்க்க முடியாததுமாகும். எனவே ஒரு படைப்பாளனுக்கு மிகத் தெளிவானதும் கூர்மையானதுமான ஒரு சமூகத்தளம் அவசியமானதென்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.
ஒரு படைப்பாளனின் சமூகத்தளமானது பல வழிகளில், பலவகைகளில் கருத்தேற்றம் பெறுகின்றது. ஒருவன் வாழ்கின்ற குடும்ப, சமூக அனுபவங்களும், 'நம்பிக்கைகளும் எதில் அதிகம் மூட்டம் கொள்கின்றதோ அதுவே அவனது மனத்தளமாக அமைய நிறைய வாய்ப்புக்கள் உண்டெனலாம்.
ஜீவநதி
 
 
 

2013 பங்குனி மாத "ஜீவநதி" சஞ்சிகையில் பிரசுரமான விஷ்ணுவர்த்தினியின் "நினைவு நல்லது வேண்டும்" என்ற சிறுகதைபற்றியும், கதாசிரியரின் மனத்தளம் பற்றியும் மேற்கூறப்பட்ட கருத்துக்களோடு பொருத்திப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
விஷ்ணுவர்த்தினியின் "நினைவு நல்லது வேண்டும்" என்ற சிறுகதையின் சுருக்க வடிவத்தை இங்கு கூறி வைப்பது வாசகர்களின் புரிதலிற்கு இலகுவாக இருக்குமென எண்ணுகின்றேன்.
சாந்தினி - இவள் தான் அச் சிறுகதையின் நாயகி. சாந்தினி, சாந்தினியின் தாய், இரண்டு ஆண் சகோதரங்களை உள்ளடக்கிய சிறுகுடும்பம். இவர்கள் முல்லைத்தீவை வாழ்விடமாகக் கொண்டவர்கள். விடுதலைப்புலிகளிற்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சாந்தினி தனது இரண்டு ஆண் சகோதரங்களையும் இழக்கிறாள். அதுமட்டுமல்ல சாந்தினியும் ஷெல் குண்டால் பாதிக்கப் பட்டு முல்லைத்தீவிலிருந்து கொழும்பு றோயல் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றாள்.
சாந்தினிக்கு ஒரு வாழ்வைத் தேடிக் கொடுக்கக் கூடிய தனது சகோதரங்களை இழந்து தாயுடன் வாழும் சாந்தினி, சத்திரசிகிச்சைச் செலவுக் காக அவர்களுக்கென்று இருந்த ஒருபரப்பு குடி நிலத் தையும் விற்றுவிட்டே கொழும்புக்கு தாயுடன் வந்தாள். சாந்தினி தனது வாழ்கைக்கு ஆதாரமாக இருந்த உறவுகளை இழந்ததோடு, தனது இருப்பையும் இழந்து விட்டாள். கொழும்பு றோயல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தினியைக் கவனிப்ப தற்காக ஒரு நேர்ஸ் நியமிக்கப்படுகிறாள். இந்த நேர்ஸ் சிங்கள இனத்தைச் சேர்ந்தவள். மருத்துவமனையில் உள்ள ஏனைய நோயாளர்களுடன் சரளமாகப் பழகும் அந்த நேர்ஸ், சாந்தினியோடு மட்டும் பழக மறுக்கிறாள்.
இதழ் 58

Page 14
நேர்ஸின் இந்நடத்தைக்கு சாந்தினி தமி இனத்தைச் சேர்ந்தவள் என்ற ஒரேயொரு காரணே
கூறப்படுகின்றது. அதே மருத்துவமனையில் கன்ரீனி சாந்தினி ஒரு தமிழ்ப் பெண்ணைச் சந்திக்கின்றால் வேறெந்த உதவிகளுமற்ற சிங்கள மொழியும் தெரியா சூழலில், கன்ரீன் அம்மாவின் உறவு சாந்தினிக் அவசியமாகின்றது. இருவரும் நண்பர்களாகின்றனர்.
சாந்தினி அந்த கன் ரீன் அம்மாவிடம் தனக்காக நியமிக்கப்பட்ட அந்த சிங்கள நேர்ஸின் நடத்தை பற்றிக் கூறி அவளிடம் தன்னைப் பற்றிக் கூறும் 3: படி வேண்டுகிறாள். அப்போது அந்தக் கன்ரீன் அம்மா அந்த சிங்கள நேர்ஸ் பற்றிய ஒரு சோகமான செய்தியை சாந்தினிக்கு கூறுகின்றாள்.
"அந்த நேர்ஸின் புருஷன் ஒரு படைவீரன். புலிகளுக்கும் இராணுவத் துக்குமிடையில் நடந்த யுத்தத்தில் அந்த நேர்ஸின் புருஷன் இறந்து விட்டான். அதன் பின்பே அந் நேர்ஸ் இப்படி நடந்து கொள்கின்றாள்." இதுதான் அந்த கன்ரீன் அம்மா, அந்த நேர்ஸ் பற்றிக் கூறிய செய்தியாகும். அது மட்டுமன்றி அந்தக் கன்ரீன் அம்ம அந்த நேர்ஸிடம் சாந்தினியைப்பற்றியும் கூறுகின்றாள் நேர்ஸ் சாந்தினி யைப் புரிந்து கொள்கிறாள், சாந்தின நேர்ஸைப் புரிந்து கொள்கிறாள். இருவருக்குமிடையில் இருந்த இனக் குரோதம் நீங்கி இருவருப நண்பர்களாகின்றனர்.
இதுதான் விஷ்ணுவர்த்தினியின் "நினைவு நல்லது வேண்டும்" என்ற
கதையின் சுருக்க வடிவமாகும்.
3. ஒரு சிறுகதையின் உள்ளடக்க மானது ஒரு கடுகின் பருமனிலேயே அமைகின்றது. கடுகின் பருமனில் அமையும் அந்த உள்ளடக்கத்தில் கடுகின் காரம் இருக்க வேண்டுமென இலக்கிய ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். கடுகின் காரம் விஷ்ணுவர்த்தினியின் இச்சிறுகதையில் உள்ளடங்கியிருப்ப
& தாகவே நான் உணர்கின்றேன்.
:::::::---------------- தனி மனிதனிலிருந்து ஆரம்பமாகும் இச்சிறுகதை றோயல் மருத்துவமனையை தளமாகச் கொண்டு, மருத்துவமனையின் நேர்ஸ், கன்ரீன் அம்மா போன்ற பாத்திரங்களால் விரிவடைந்து, இலங்கை
தேசியத்தையும், தேசியத்தில் உள்ள இனப்
பிரச்சினையையும், இந்த இனப் பிரச்சினையில் சிங்கள
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் பற்றியும் மிகப்பூடகமாக வெளிப்படுத்தும் ஒரு காத்திரமான சிறுகதையாகவே இக்கதையைக் காண முடிகின்றது.
சாந்தினி ஒரு தமிழ்ப் பெண். அதுவுமொரு கன்னிப் பெண். இவளது கன்னிமையை கரை சேர்க்கவென்று இருந்த இவளது இரண்டு ஆண் சகோதரங்களும் இவளது கண்ணுக்கு முன்னாலேயே ஷெல் குண்டுக்கு பலியாகி விடுகின்றனர். அடுத்து இவளுக்கென்று இருந்த ஒரு பரப்பு குடி நிலத்தையும் விற்கின்றாள். இப்போது சாந்தினிக்கு “உரிமை" என்று கூற, இந்த மண்ணில் எதுவும் இல்லை, உறவு என்று கூற தாய் மட்டுமே இருக்கின்றாள். இதற்குக் காரணம் இன முரண் பாட்டால் ஏற்பட்ட கொடூரமான யுத்தமாகும்.
மருத்துவமனை நேர் ஸை எடுத்துக் கொண்டால், ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்க்கையில் ஆத்மார்த்த உறவாக அமைவது அவளது கணவன் தான். இந்த நேர்ஸ் அந்த ஆத்மார்த்த உறவான கணவனை இழந்து "கைம்பெண்ணாக" நிற்கின்றாள். இதற்கும் அதே யுத்தம் தான் காரணம்.
இனப் பிரச்சினையால் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை விஷ்ணுவர்த்தினி மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார். அடுத்து மருத்துவமனையில் சாந்தினி சந்திக்கின்ற கன்ரீன் அம்மா மிக முக்கியமான பாத்திரமாக அமைந் துள்ளார். இக்கதையில் ஏற்பட்டுள்ள "முடிச்சை” இறுக்காமல், மிக சாதுரிய மாக அவிழ்த்து விடுகின்ற ஒரு அரசியல் தலைமைக் குறியீடாகவே கன்ரீன் அம்மாவின் பாத்திரம் சித்திரிக்கப்படு கின்றது. இக்கதையின் சிறப்புக்குரிய காரணங்கள் கன்ரீன் அம்மாவின் பாத்திர வடிவிலேயே மூட்டம் கொண்டுள்ளது எனலாம்.
சாந்தினிக்கும் நேர் ஸிற்குமிடையில் ஏற்படுகின்ற இனப் பிரச்சினையென்ற "முடிச்சை” கன்ரீன் அம்மாவால் மிகச் சுலபமாக அவிழ்க்க முடிந்திருக்கின்றது. கன்ரீன் அம்மாவால் இவ்வளவு சுலபமாக எப்படி முடிந்தது என்ற கேள்விக்குரிய
விடையிலேயே இக் கதையரின் "உயிர் ப் பு"
உள்ளடங்கியுள்ளது.
மனித சமூகம் தான் பிறந்து வளர்ந்த தளத்திற்
இதழ் 58

Page 15
கேற்ப மொழியாலும் மதத்தாலும் பண்பாடுகளாலும் மாறுபட்டு இருப்பினும், "மனிதம்" என்ற தத்துவத்தின் கீழ் பொதுமை பெறுகின்றனர். இந்த மனிதம் என்
தத்துவத்தின் அடிப்படையில் தான் கன்ரீன் அம்மா இப்பிரச்சினையை அணுகுகின்றாள். அந்த புரிதலினால் சாந்தினியும் நேர்ஸ்லிம் ஐக்கியமானார்கள். கன்ரீன் அம்மாவும் ஒரு அரசியல் தலைவியாக இருந்திருப்பின் அவளிடம் சுய நலச் சிந்தனைகளும் பொருளாதார முனைப்புக்களும் தலைமைத்துவத்தை தக்க வைக்கின்ற போட்டி நிகழ்ச்சி நிரல்களும் நிறைந்திருக்கும், அதன் அடிப்படையில் சாந்தினி நேர் ஸ் தொடர்பான பிரச்சினை அணுகப்பட்டு றோயல் மருத்துவமனை நிர்வாகத்திடம் இப்பிரச்சினை தெரிவிக்கப்பட்டு, விசாரணைகள் என்ற “பொம் மலாட் டங்கள்" அரங்கேறி. அரசியல் தலைவர்களின் தலையீட்டுக்கு உள்ளாகி. பணிப்புறக்கணிப்பு நடந்து, பலர் கைது செய்யப்பட்டு சிலர் காணாமல் போய் இருப்பார்கள். இவைகளை ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து மக்களின் கண்களை “காமாளை"கண்களாக்கியிருக்கும்!
அரை நுாற் றாணி டுகளுக்கு மேலாக இலங்கையில் நடக்கின்ற இனப் பிரச்சினையின்
அழகியல் அம்சங்கள் பற்றியும்
குறிப்பிட்டாக வேண்டும்.
வரலாறு இதுதான்! அதைத்தான் இச்சிறுகதை சுட்டிக் காட்டுகின்றது. ஒரு சிறுகதையி தமிழ் சிங்களப் பொது மானது ஒரு கருகி மக்களால் ஐக்கியப் பட்டிருக்க முடியும்; அமைகின்றது. க தமிழ் - சிங்கள அரசியல் தலைவர் அமையும் அந்த 3 களின் தேர்தல் நிகழ்ச்சி நிரல்களை கருகின் கார உள்ளடக்கிய போதனைகளே இன்று ഖങ്ങീന്ദ്രബാങ്ങ இலங்கையை ஒரு போர்க்களமாக்கி (9,6sse யுள்ளது என்பதுதான் உணர்மை வலியுறுத்துகின் என்பதைத்தான் எழுத்தாளர் விஷ்ணு காரம் விஷ்ணு வர்த் தனி அவர்கள் சுட்டிக் இச்சிறுகதையி காட்டுகின்றார். யிருப்பதாக 3. அடுத்து இக் கதையின் 96.Orrida.
சாந்தினிக்கும் கன்ரீன் அம்மாவுக்கும்
இடையில் நடக்கின்ற உரையாடலில்:
படைவீரனான தனது
"யுத்த பூமியில்
புருஷனைப் பறி கொடுத்திட்டாள். அதற்குப் பிறகு ஒரு பகுதி ஆட்களைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்காது. இருக்குந்தானே பிள்ளை” என கன்ரீன் all plot அந்த நேர்ஸ் பற்றி சாந்தினிக்குக் கூறுகிறாள்! இந்த உரையாடலில் "ஒரு பகுதி ஆட்களைக் கண்டாலே அவளுக்கு பிடிக்காது" என்று தான் கன்ரீன் அம்மா 翁 கூறுகிறாளே தவிர, "தமிழர்களைக் கண்டாலே
ஜீவநதி,
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரச்சினைகள்
அவளுக்குப் பிடிக்காது என்று இனத்துவேசத்தைக்
குறிக்கும் வார்த்தைகளைக் கூட அந்த கன்ரீன் அம்மாவின் உரையாடலில் கலக்காதளவிற்கு விஷ்ணு
வர்த்தினி அவதானமாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. K
அடுத்துள்ள உரையாடல்களிலும் இப்பண்பு நிறைந்திருப்பதை அவதானிக்கலாம்.
"யுத்தத்தாலை நாங்கள் எல்லோருந்தான் பாதிக்கப்பட்டிட்டம் அம்மா. போர் ஒஞ்சாலும் அதன் வடு மாற கனகாலம் எடுக்கும் அம்மா. நானும் என்ரை சகோதரங்கள் இரண்டு பேரைப் போரிலை பறிகுடுத்திட்டன். நாங்கள் நடந்து போனதை நினைத்துக் கொண்டிருக்காமல் ஆளுக்காள் விசுவாசமாய் இருந்தால்தான் சமாதானமாய் வாழலாம்" என சாந்தினி கன்ரீன் அம்மாவுக்குக்
கூறுகிறாள்.
இலங்கைப் பாராளுமன்ற முன்றலில் சப் பாணிப் போராட்டமாக ஆரம்பித்த இனப் “ஆயுதப்” போராட்டமாகி சர்வதேச நாடுகளுக்கே அச்சுறுத்தலாகும் வகையில் தமிழர் களின் ஆயுதக் கையாட்சி வலுப் பெற்று முள்ளிவாய்க்காலில் புலி களும்
ன் உள்ளடக்க
ன் பருமனிலேயே துயரமான வரலாற்றின் பின்பும், ருகின் பருமனில் "நாங்கள் விசுவாசமாக இருந்தால் உள்ளடக்கத்தில் தான் சமாதானமாக வாழலாம்" என ம் இருக்க சாந்தினி கூறுவது தமிழ் - சிங்கள இலக்கிய பொதுமக்களிடம் உள்ளுறைந்துள்ள ளர்கள் குரலாகவே அமைந்துள்ளது. றனர். கருகின் சாந் தனியின் உரை வர்த்தினியின் யாடலில் இனப் பிரச்சினையை கிளறி ல் உள்ளடங்கி விடுகின்ற எந்த வக்கிர வார்த் வே நான் தைகளும் இடம் பெறாதுள்ளமை ர்றேன். அவதானிப்புக்குரியதாகும்.
பொதுமக்களும் நீறாகிப் போன
அடுத் து நேர் ஸக் கு
சாந்தினி மீதிருந்த வெறுப்புணர்வு
நீங்கிய பின், நேர்ஸ் சாந்தினியிடம் பேசுகின்ற ஒரு உரையாடலில்,
"எப் படி இருக்கிறீங்க. படாதீங்க. "ஒப்பரேசன் நல்லபடியாய் முடியும்" என அந்த நேர்ஸ் சாந்தினிக்கு ஆறுதல் கூறுகின்றாள். இந்த இடத்திலும் சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த அந்த நேர்ஸ் தனத மன வக்கிரங்களையும் அரசியல் சுலோகங்
கவலைப்
களையும் பேசாது அமைதியாகவே பேசுகிறாள்.
பேசுகிறாள் என்பதைவிட விஷ்ணுவர்த்தினி பேசவைத்திருக்கிறார் என்று கூறுவதுதான் சரியானது.
இதழ் 58

Page 16
கதை நகர்வில் ஒரு சந்தர்ப்பத்திலாவது அரசியல் கலப்போ பிரச்சார வாடையோ இன்ற சாதாரண பொதுமக்களின் பண்புநிலை தவறாத வை யில் மிகவும் பக்குவமாக கதையை நகர்த்தியுள்ளா எழுத்தாளர்.
தமிழ் - சிங்கள இனங்களின் சமூகப் பரப் களையும் அச்சமூகங்களின் அரசியல் யதார்த்தங்களை யும் உள்ளடக்கிய இச்சிறுகதையை தெளிவானதும் நிதானமானதுமான ஒரு அரசியல் தளத்தில் பொருத்த பாத்திரப் பிறழ்வுகளும் உணர்ச்சி வசப்பாடுகளும் பிர சாரங்களுமின்றி படைத்திருக்கும் விஷ்ணுவர்த்தினி யிடம் படைப்பாற்றலின் முதுமை நிலையை காணக் கூடியதாகவுள்ளது.
முள்ளிவாய்க்காலில் புலிகளும் இராணுவத்
தினருக்குமிடையில் நடந்த யுத்தத்தில் சிக்கிய பொது மக்களின் அவலங்களைச் சித்திரிக்கும் கெந்தக நெடிலோடு இரத்தமும் சதையுமான எத்தனையோ படைப்புகள் பிரசவமாகி விட்டன. விஷ்ணுவர்த்தினியின் "நினைவு நல்லது வேண்டும்" என்ற இச்சிறுகதையும் போரின் அவலங்களைக் கூறும் ஒரு சிறுகதையாக இருந்தாலும் கதையின் உள்ளீடானது ஒரு கவனத்திற் குரிய தொன்றாகவே அமைந்துள்ளது.
போர்க்கால அவலங்களை தமிழ் - சிங்களட் பொதுமக்களால் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பது பற்றியும் இனப்பிரச்சினை வளர்ந்து இவ்வளவு "வன்மம் பெறுவதற்கு தமிழ் சிங்கள தலைவர்கள் எவ்வாறு
Q6).
புன்னகையைச் சுமந்து செல்கின்றோம் கிராமங்கள் தோறும் விற்பனைக்காக.
அழுதுவடியும் கிராமங்கள் புன்னகையை வாங்க இயலாதுதவிக்கின்றன.
புன்னகை, கிராமங்களில் மலிந்து கிடந்ததாகவும், புன்னகை வரண்ட நிலங்களோடு புதையுண்டதாகவும் விசனிக்கும் மக்கள்.
கிராமத்தின் வாசலில் கைக்குழந்தையுடன் சிறு பெண்
=66,834
ஜீவநதி
 

காரணமானார்கள் என்பது பற்றியும் எழுத்தாளர் விஷ்ணுவர்த்தினி அவர்கள் குறியீட்டு வடிவில் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் கூறியிருப்பதே இக்கதையின் உயிர்நிலையாக அமைந்துள்ளது.
குறிப்பு: விஷ்ணுவர்த்தினியின் "நினைவு நல்லது வேண்டும்" என்ற சிறுகதை பிரசுரமான 2013 பங்குனி மாத ஜீவநதி சஞ்சிகையில் ஐயந்த சிறீ விதான என்ற சிங்கள எழுத்தாளரால் எழுதப்பட்டு, இலக்கியப் பரப்பில் கவனத்திற்குரிய எழுத்தாளரான திக்கு வல்லை கமால் அவர்களால் தமிழில் மொழி பெயர்க் கப்பட்ட"கலைந்து போன கனவுகள்" என்ற சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. "நினைவு நல்லது வேண்டும்" என்ற சிறுகதை இனப் பிரச்சினையில் பெறுகின்ற முக்கியத்துவத்தை "கலைந்து போன கனவுகள்" என்ற சிறுகதை கல்விப் பரப்பில் பெறுகின்றது. உச்சமான கதை. கதையில் உள்ளுறைந்துள்ள சமூகச் செய்தியை உணர்ந்து அக்கதையை மொழிபெயர்ப்புச் செய்து
தமிழ் வாசகர்களின் கவனத்திற்குள்ளாக்கிய
எழுத்தாளர் திக்குவல்லைகமால் அவர்கள் நன்றிக்கும்
பாராட்டுக்கு முரியவர்.
சிங்கள மொழி வாண்மைமிக்க திக்கு வல்லைக்கமால் அவர்கள் தொடர்ந்தும் இப்படிப்பட்ட தேசிய கருத்தியல் உடன்பாடுகளை வளர்க்கும் சிங்கள சிறுகதைகளை மொழி பெயர்ப்பு செய்து தரவேண்டு மென தமிழ்வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Ꭷ060ᎧᏜᏏ
புன்னகை தொலைத்த முகத்துடன்.
விலை கொடுத்து வாங்க முடியாத புன்னகைக்கான பேரங்கள் செயலற்றுப் போகின்றன.
புன்னகை சுமந்த படகுகள் கரைசேர முடியாமல் கடலில் அமிழ்ந்ததால் வெறும் வலைகளை நீவும் மீனவர்கள், இறுகிய முகங்களுடன்.
கொண்டு சென்ற புன்னகையை விற்க முடியாது
2gyg55gyste336añt- திரும்புகின்றோம் சுமைகளோடு.
இதழ் 58

Page 17
ρφgυτό 6ιυOπΦιού σπύ
திலீப், முளலம் மற்றும் தீசன் குளுவில்
இதுவரையில் ஒருபோதும் பார்த்திராத ஒர் அழகான இளம் பெண் தனது இனிய குரலில், "எக்ஸ்க்யூஸ்மீ ஸேர். யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ் எக்ஸ்க்யூஸ்மீ ஸேர், யூ ஹேவ் டூ அட்டெண்ட் திஸ் கோல் ரைட் நவ். எக்ஸ்க்யூஸ்மீ." என்று இடைவிடாமல் தொடர்ந்து சொல்லியவாறு வெகுநெருக்கமாக வந்து.
"டேய் யார்டயோ போன் அடிக்குது. அதை எடுத்துத் தொலைங்களேண்டா ஞாயித்துக்கிழமை யிலயும் மனிசன நிம்மதியா தூங்க விட மாட்டாணுகள். சே!” என்று யாரோ எரிச்சலோடு அதட்டினார்கள்.
& உடனே அந்த அழகி சடுதியாய் உடைந்து உதிர்ந்துவிட அந்த இடத்தில் ஒட்டடைபிடித்த ஒட்டுக்கூரையும் சோகையாய் சுழன்று கொண்டிருந்த ஒரு பழைய மின்விசிறியும் தெரிந்தது.
.சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் திலீப் ܢܢ
இரவு வெகுநேரம் வரை விழித்திருந்து வரைபடங்களைத் தயாரித்து முடித்து விட்டுத் தூங்கச் சென்றதால்கண்கள் இரண்டும் தீயைக்கக்கின.
“எக்ஸ்க்யூஸ் மீ ஸேர். யூ ஹேவ் டு அட்டெண்ட்." நச்சரித்த செல்போனை தடவித் தேடியெடுத்தான். "ரிங்டோன் என்ன ஓட்டோமட்டிக்கா மாறிட்டுதா?" என்று யோசித்தவாறு அதன் வயிற்றிலே ஒரு அழுத்து அழுத்திவிட்டுக்காதிலே வைத்தான்.
"ஹலோ. யாரு?" "ஆ" தம்பீ நாந்தான் தீசன் தீசன் குரூஸ் அண்ணன் பேசுறேன் ஞாபகமிருக்கா. என்னை.?" என்றது மறுமுனை.
"ஆங். சொல்லுங்க!" என்றான் திலீப் தூக்கக் கலக்கத்தில் யாரென்று புரியாமலே, 缀
ஜீவநதி -1.
 
 
 
 
 

மில்
"ஜீவநதியில இந்த மாதம் வந்த உங்கட கதையை படிச்சன் தம்பீ. மிச்சம் நல்லாயிருந்தது. நல்லா எழுதியிருக்கிறீங்க அதுல என்ன விசேச மென்டா.." என்று தொடங்கி ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார் மறுமுனை. முதலில் திலீப்புக்கு எதுவுமே புரியவில்லை. திடீரென ஒரு சந்தேகம் பொறி தட்டவே பேசிக்கொண்டிருந்த செல்போனை சட்டெனத் திருப்பிப் பார்த்தான். அப்போதுதான் விடயமே புரிந்தது. ܤܡ
அது அவனுடைய போன் அல்ல. ஆம். அது அவனது அறை நண்பன் முஸம்மிலுடைய செல் போன். இருவருடைய செல் போன்களும் பார்வைக்கு ஒன்றுபோலவே இருப்பவை. இரவு திலீப்புக்கு அருகிலேதான் படுத்திருந்தான் முஸம்மில், இப்போது படுக்கையில் அவனைக் காணவில்லை.
திலீப்பும் முஸம்மிலும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நண்பர்களானது என்னவோ ଓ ରାଠୋଠରd நிமித்தம் இங்கே நுவரெலியாவுக்கு வந்த பின்புதான். ஆம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வீதி அபிவிருத்தி சபையில் தொழினுட்ப உத்தியோத்தராக நியமனம் கிடைத்து நுவரெலியாவுக்கு வந்திருந்த திலீப் எங்கு தங்குவது என்று புரியாமல் தடுமாறிய போது தனது குவார்ட்டஸில் அடைக்கலம் தந்தவன் முஸம்மில்தான். அவன் ஏற்கனவே இங்குள்ள ஒரு தமிழ் கலவன் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக கற்பித்துக் கொண்டிருந்தான்.
முஸம்மில் ஓர் ஆசிரியர் மட்டுமல்லாது வளர்ந்து வரும் ஒரு இளம் எழுத்தாளனும் கூட திலீப்பும் அவனுடைய வாசகர்களிலே ஒருவன்தான். முஸம்மிலின் விஞ்ஞானபூர்வமான எழுத்தாற்றல் மற்றும் வித்தியாசமான விடயங்களை எழுத்தில் முயன்று பார்க்கும் ஆர்வம் ஆகியவற்றை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
இருந்தாலும் முஸம்மிலின் சில இலக்கியக் கொள்கைகள் திலீப்பின் ஆன்மீக நம்பிக்கைகளுடன் ஒத்துப் போவதில்லை. இதனால் அவை பற்றி முஸம்மிலை கிண்டலடித்த வண்ணமே இருப்பது திலீப்பின் வழமை. இதனால் அவர்களிடையே
இதழ் 58

Page 18
அவ்வப்போது சிறு முரண்பாடுகளும் விவாதங்களும் எழுவதுண்டு. ஆனால் அவை எதுவுமே அவர்கள் இருவரின் நட்புக்கு இடைஞ்சலாக இதுவரை இருந்த தில்லை என்றால் நம்புவீர்களா..?
முஸம்மிலின் எழுத்தாற்றலை திலீப் எவ்வளவு தான் கிண்டலடித்தாலும் அவற்றை அவன் விளை யாட்டாகவே எடுத்துக்கொள்வான். மிஞ்சிப் போனால் அவனும் திலீப்புக்கு ஈடுகொடுத்து பதில் நையாண்டி புரிவானே தவிர ஒருபோதும் கோபித்துக் கொண்டதே யில்லை. அதுதான் முஸம்மிலிடம் திலீப்புக்கு மிகவும் பிடித்த குணமே.
எதிர்ச் சுவரில் நேரம் காலை 7:2O ஆகிவிட்டிருந்தது.
இத்தனை சுவாரஸ்யமாக முஸம்மிலின் கதையைப் பற்றி போனிலே மூச்சுவிடாமல் பாராட்டிக் கொண்டிருக்கும் நபரை இடைமறித்து, "அண்ணே, நான் முஸம்மில் இல்லை திலீப். அவனோடு ஒரே அறையில் வாடகைக்குத் தங்கியிருக்கிற நண்பன்" என்று எப்படிச் சொல்வது.? என்று யோசித்தான் திலீப்
ஆனால் அவரோ அவனது தவிப் பை அறியாமல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார்.
"...உங்களுக்கிட்ட அந்த தைரியமும் நேர்மையுமிருக்கு தம்பீ. இஞ்சை எழுதிற ஆக்கள் நிறையப்பேர் அப்படியில்ல. தெரியுமா? நீங்க ஒரு முஸ்லிமாக இருந்தாலும். தம்பீகேக்கிறீங்களா..?"
"ஆங். கேக்கிறன் நீங்க சொல்லுங்கண்ண." என்று சமாளித்து வைத்தான். அவர் சொல்லிக் கொண்டே போக "முஸம்மில் எங்கே போனான். இவரை எப்படிச் சமாளிப்பது.?" என்பதிலேயே திலீப்பின் யோசனை ஒடிக்கொண்டிருந்தது. இடையிலே போனைக் கட் செய்வோமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அறைவாசலிலே நிழலாடியது.
முஸம்மில்தான் கையிலே இரு டீ கப்களுடன் வந்தான்.
"ஆ" திலீப் நீ எழும்பிட்டியாடா? இந்தா டீ குடி! என்னடா இது என்ட போன்ல பேசிட்டிருக்கிறா. யாருடா அது?" என்று சொல்லிக் கொண்டே வந்தவனைப் பேசவிடாமல் வாயில் விரலைவைத்து மெளனமாக்கி போனைக் கொடுத்தான். பின்பு "போங்கடா நீங்களும் உங்கட கதைகளும்” என்று மனதுக்குள் திட்டிவிட்டு டீயை உறிஞ்சினான் திலீப். போனை காதில் வைத்தபடி வெளியிலே சென்ற முஸம்மில் சிறிது நேரத்தின் பின்பு மீண்டும் உள்ளே வந்தான்
"யப்பா பேசி முடிச்சிட்டியா..? அதுசரி முஸம்மில், அந்தாள் என்ன உன்னைப் போய் இப்பிடிப் பாராட்டிக்கிட்டேயிருக்கிறான்.? யாரு அது?"
"ஏன் உனக்குப் பொறுக்காதோ. டேய், அவரு நல்ல திறமையான ஒரு எழுத்தாளர்டா, அதோட நல்ல விமர்சகரும் கூட. ஆனா எளிமையானவர் .
ஜீவநதி
 
 
 
 
 

பிரபல்யத்தையே விரும்பாதவர்டா, நோட் த நெக்ஸ்ட் பொயிண்ட், மனிசன் நல்லா எழுதிறவங்களை மட்டும் வஞ்சகமில்லாம பாராட்டும்."
"அது தானி டா முஸ மி மரில் நானும் யோசிக்கிறேன். உன்னைப் போய் ஏன் பாராட்டினாரு என்று.?"
"டேய் திலீப், அவரு சாதாரண ஆள் இல்லடா. அவரைப்பற்றி நீ படித்தோ அல்லது நேரில சந்தித்தோ அறிந்தால்தான் அவரோட பாராட்டு எனக்கெல்லாம் எவ்வளவு பெரிய அங்கீகாரம் என்றதை புரிஞ்சு கொள்வாய்."
"அப்படியெண்டா பாவம் அவரு உன்னோட எழுத்துகளை சரியாப் படிக்கலையோ என்னவோ?"
"அடிவாங்கப்போறடா நீ. உனக்கு என்ட எழுத்தென்டா ஒரு நக்கல் என்ன..? இருந்து பாருடா ஒரு நாளைக்கு நீயே என்ட சிறுகதைப் புத்தகங்களை யெல்லாம் தேடி அலையப்போறா”
"எதுக்குடா பழைய பேப்பருக்கா..?" உடனே அவன் பொய்க்கோபத்தோடு துரத்தி வர டீக்கப்பை அப்படியே வைத்துவிட்டு எழுந்து பாத்ரூமுக்குள் ஓடிப்போய் கதவைச் சாத்திக்கொண்ட திலீப் உள்ளேயிருந்து நக்கலாகச் சிரித்தான். கூடவே இருந்த அறை நண்பர்களும் அவர்களது வேடிக்கை விளையாட்டை ரசித்தார்கள்.
"சரி, சரி கெதியா வெளியே வாடா, நான் குளிச்சிட்டு ஊருக்கு போகணும்"
OOO முஸம்மில் ஊருக்குச் சென்று சில நாட்கள் கழிந்திருந்தன.
ஒருநாள் வேலைத் தளம் ஒன்றைப் பார்வையிடுவதற்காக தலவாக்கலை வரையில் திலீப் போய் வரவேண்டியிருந்தது. இப்படியான துாரப் பயணங்களுக்கு அலுவலக பிக்அப் வாகனத்தை எடுத்துக் கொண்டு போவதுதான் அவனது வழமை. ஆனால் அன்றைய தினம் கண்டியிலிருக்கும் பிரதான அலுவலகத்திலிருந்து சீப்ஃ எஞ்சினியர் நுவரெலியா வுக்கு வரவேண்டியிருந்ததால் வாகனம் அங்கு சென்றிருந்தது. பஸ்ஸிலே தலவாக்கலைக்குச் சென்று வரத் தாமதமாகும் என்பதால் வேறுவழியின்றி தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் திலீப்.
இதமான குளிர்காற்று முகத்தில் மோதிக் கொண்டிருக்க துடைத்துவிட்டது போன்ற நீலவானப் பின்னணியில் பச்சை மலைகள் முழுவதும் நிறைந் திருந்த தேயிலைத் தோட்டங்களை ஊடுருவிக் கொண்டு பாம்பாய் நெளியும் நெடுஞ்சாலையினூடாக
"வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ..."
என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை
ಜೀ.

Page 19
முணுமுணுத்தவாறு சிட்டாய் பறந்து கொண்டிருந்தான். வழியில் அங்காங்கே முதுகிலே கூடைகளோடு கொழுந்து பறிக்கும் பெண்கள் வரிசையாகத் தென்பட்டார்கள்.
நுவரெலியாவிலிருந்து புறப் பட்டு ஏறத்தாழ அரைமணி நேரத்தில் லிந்துலையை தாண்டினான். அங்கு ஒரு கொண்டை ஊசி வளைவிலே அவன் திரும்பிய போது வீதியின் ஓரத்திலே ஒரு முதியவர் கையிலே ஹெல் மெட் ஒன்றுடன் தனியாக நின்றிருந்தார். அவரைத் தாண்டிச் செல் கையில் திலீப்பின் முகத்தை அவர் உற்றுப் பார்த்து கைகளை அசைத்தது போல அவனுக்குத் தோன்றியது. சிறிது தூரம் சென்ற பின்புதான் ஏதோ நினைத்தவன் சட்டென பைக்கை ஒரமாக நிறுத்தினான்.
தம்பி, அவசரமாவோ போறிங்கள்.? நான் கொஞ்சம் தலவாக்கல வரைக்கும் வரேலுமா?"
அருகில் வந்ததும் அவனுக்கு இதற்கு முன்பு அவரை எங்கோ பார்த்திருப்பது போலத் தோன்றியது. அவனது பயணம் சிறிது அவசரமாக இருந்தாலும் ஏனோ அவருக்கு உதவிசெய்ய வேண்டும் போலிருந்தது.
"சரி ஏறுங்க ஐயா! ஆனா கொஞ்சம் கவனமாகப் பிடிச்சிருங்க. நான் பைக்கை கொஞ்சம் பாஸ்ட்டாகத்தான் ஒடுவன்"
"ஆ! சரி, தம்பி நீங்க போற மாதிரி போங்கோ" என்று வேட்டியை மடித்துக் கட்டியபின்பு தொற்றிக் கொண்டார் அவர்.
"என்ன ஐயா ஏதும் அவசரப் பயணமா..?" "இல் ல ஒரு வேலையா மகளின் ட மாப்பிள்ளையோட தலவாக்கலைக்கு பைக்ல வந்தேன். வழியில பைக் பழுதாகிட்டுது. "ஒரு கராஜ்ல பைக்கை செய்து எடுத்திட்டு வாரேன் நீங்க பஸ்ல போய் முன்னால இறங்குங்க" என்டு சொல்லிட்டாரு. மிச்ச நேரமா நிக்கிறன் பஸ்ஸே இல்ல அதுதான்."
அவரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் போனதும் ஓரிடத்தில் சட்டென மழைபிடித்துக் கொண்டது. உடனே பாதையோரத்திலிருந்த ஒரு சிறிய தேனீர்க் கடையோரமாக பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கிகடையினுள்ளே அமர்ந்தனர்.
"இரண்டு டீ போடுங்க!” "தம்பீஒன்றுக்கு சீனி போடவேண்டாம்." “என்ன. டயபட்டீஸ் இருக்கு போல” என்று கேட்டான் சிறிது புன்னகைத்தவாறு. "வயசாகிட்டுதே. கவலைகளும் அதிகம் என்ன செய்வது? தம்பி எங்க வேலை செய்கிறீங்க?"
அவன் சொன்னான். அதன் பிறகு தொடர்ந்த
 
 
 

அவர்களது உரையாடலில் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.
அவர் திருகோணமலையில் ஒரு பாடசாலை அதிபராக இருந்து பின்னர் ஓய்வுபெற்றவராம். மனைவியின் திடீர் மறைவின் பின்பு தற்போது இடம்பெயர்ந்து ராகலையில் வசிக்கும் தனது மகள் ஒருவருடன் தங்கியிருக்கின்றாராம். இப்போது பத்திரிகை வாசிப்பது, ஆக்கங்கள் எழுதுவது, மகளின் குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடுவது என்று பொழுதைக் கழிப்பதாகவும் சொன்னார்.
"பேப்பருக்கு எழுதிறது என்று சொன்னிங்க தானே. ஐயா. என்ன எழுதுவீங்க செய்தியா..?
"இல்ல தம்பீ கட்டுரைகள், கதைகள். சில நேரம் கவிதைகளும் எழுதிறதுதான். இப்பவெல்லாம் என்னுடைய எழுத்து மூலம்தான் மற்றவங்களுக்கும் ஓரளவு என்னைத் தெரிஞ்சிருக்கு. முந்தி பாடசாலை அதிபராக வேலை செய்த காலங்கள்ல அதுக்கெல்லாம் நேரமிருந்ததில்ல. ஒபிஸ் ஸ்கூல் என்டு காலம் ஓடிட்டுது. இப்பதான் கொஞ்சம் நேரம் கிடைக்குது”
"அப்படியென்டால் உங்கட ஸ்கூல் அனுபவங் களைத்தான் கூடுதலா எழுதுவீங்க போல”
"அப்படியில்ல தம்பி. இன்னமும் நம்மட சனங்கள் படுகிற கஷ்டங்களைத்தான் நான் எழுதிறன். என்ட சொந்த கஷ்டத்தை எழுதி என்ன பலன்?"
"ஓ அப்படியா? அப்ப நீங்க சமூக நோக்க முள்ள எழுத்தாளர் போல." இதைச் சொல்லும்போது ஏனோ திலீப்புக்கு முஸம்மிலின் நினைவு வந்தது. அவனைப் பற்றியும் அவரிடம் பேசலாமென்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் ஒரு விடயம் நடந்தது.
"ஒருவன் எழுதினாலே சமூகநோக்கம்தான் அதில இருக்க வேணும் என்று நினைப்பவன்தான் தம்பி ஒரு உண்மையான படைப்பாளி" என்று குரலை
7- 毅 இதழ் 58

Page 20
சட்டென உயர்த்தி சற்றுக் காட்டமாக கூறினார்.
திலீப் சிறிது பயந்து போனான். கடைக்குள் அமர்ந்திருந்த சிலர் சட்டென அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
இதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. "ஏன் இவர் இப்படி திடீரென உணர்ச்சி வசப்பட்டார். இப்போது என்ன செய்யலாம்.?" என்று யோசித்தவாறே வெளியே பார்த்தான். இலக்கியத்துறையில் திலீப்புக்கு ஓரளவு ஈடுபாடு இருந்தபோதிலும் அவர் இவ்வளவு ஸிரியஸானது சிறிது வேடிக்கையாக இருந்தது.
"சரி ஐயா, டீயைக்குடிங்க ஆறிடப்போகுது" மழை மேலும் பலமாகப் பெய்து கொண்டி ருந்தது. வீதியெங்கும் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. இப்போதைக்கு பயணத்தை தொடர முடியாது என்பதால் டீயை உறிஞ்சும் அவரையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் திலீப்.
"எக்ஸ்க்யூஸ் மீ. உங்களுக்கு ப்ரசரும் இருக்குதா ஐயா..?"
அவர் உடனே சிரித்து விட்டார். "ஏன் தம்பி. நான் சத்தமா கத்திட்டேனா? இப்பல்லாம் எழுதிற சிலபேரையும் அவங்கட எழுத்து களையும் பார்க்கேக்க ஹை ப்ரசரும் வந்திரும் போலத் தான் இருக்குது. ஒரு சமூகப்பற்று கிடையாது. தமிழறிவு போதாது. என்னவோ எல்லாரும் ஆடுறாங்கண்டு வயித்து வலிக்காரனும் ஆடினானாம் என்கிற மாதிரி உப்புசப்பில்லாம எழுதுதுகள்."
சொல்லும்போதே அவரது கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்பியதைப் பார்த்தான் அவன்.
"அது வந்து உலகத்தில எல்லாமே மாறுகிறது தானே ஐயா. அதுபோலத்தான் இதுவும். அதுக்கு நாங்க என்னதான் பண்ணலாம்? இதுக்காக நீங்க உங்களை ஏன் ஐயா..."
'தம்பீ உங்களுக்கு சீத்தலைச் சாத்தனார் என்டாத் தெரியுமே..?" என்று கேட்டார் திடீரென்று. அவனுக்குதிக்கென்றது.
"ஆங். ம்ம் ஒரு தமிழ்ப்புலவர்தானே..?" என்றான் குத்துமதிப்பாக,
"அதுசரி, அவருக்கு அந்தப் பெயர் ஏன் வந்ததென்று தெரியுமே...?"
“வேற சிகரட் ஏதும் வேணுமா அண்ண.?" என்று கேட்ட கடைப்பையனை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டான் திலீப்.
"இல்ல போதும்!" என்று கடைப்பையனிடம் அவன் ஐநூறு ரூபா ஒன்றை நீட்ட அவனது கையை தட்டி விட்டு சட்டென எழுந்துவிட்டார் அந்த மனிதர். விரைந்து போய் கல்லாவில் இருந்தவரிடம் தனது சட்டைப் பையிலிருந்து காசைக் கொடுத்து விட்டு வந்து மீண்டும் அமர்ந்தார் அவர்.
 
 
 
 

"அதுசரி, எப்படி ஐயா இந்த வயதிலும் இவ்வளவு உசாரா இருக்கிறீங்க.?"
"அதை பிறகு சொல்றன், யாராவது தமிழில எழுதும்போது பிழைவிட்டா தன்ட தலையிலேயே குட்டிக் கொள்வாராம். அப்படிக் குட்டிக்குட்டி வந்த காயங்களால் தலைமுழுதும் சீழ்பிடித்துத்தான் செத்தாராம்."
"அப்பிடியா..?” “அன்டைக்கு பாருங்க ஒருவன் இன்ட நெட்டில இப்படி எழுதியிருக்கிறான். தலைவரின் அனுதாபச் செய்தி கேட்டு தொண்டர்கல் மேஞம் கவலையடைந்தனர்” என்று. சிறுகதைகள் என்று பலபேர் எழுதிறாங்கள். அம்புலிமாமா கதைகள் போல இருக்கு. பந்தியை உடைத்து படிக்கட்டுக் கவிதை எழுதிறாங்க சே!”
"அப்பிடித்தான் இப்ப உள்ள சிலபேர் பேப்பர்ல யும் புத்தகங்கள்லயும் பெயர் வந்தால் போதும் வெறும் புகழுக்காக பொறுப்பில்லாம எழுதிறதை வாசிக்கேக்க ஐயோ. இதயம் வெடிச்சி செத்தாலென்ன என்று தோணுது தம்பீ”
"சரி டென்ஸனாகாதீங்க பெரிசு. நீங்க இப்படியானவங்கள்ற எழுத்துகளைப் படிக்காதீங்க."
"ஆ. அது எப்படி முடியும் தம்பீ.? நம்மவங்க எழுத்துகள் எல்லாத்தையும் வாசிக்க வாசிக்கத்தானே இன்றைய இலக்கியப் போக்கு புரியும். அது சிறுபராயத்தில இருந்து வருகிற பலவருசப் பழக்கமல்லவா? இவ்வளவு காலமும் எப்படியோ ரசிச்சும் சகிச்சும் காலத்தை ஒட்டிட்டேன். ஆனால் இப்ப எழுதிறதுகள்ற தரத்தைப் பார்த்தா தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருக்கு." என்று மீண்டும் பல்லை நறநறத்தார்.
அவரது கோபத்தைப் பார்த்து மனிதருக்கு அங்கேயே ஏதும் ஆகிவிடுமோ என்று பயந்தான் திலீப்.
“என்னைக்காவது இந்தக் கிழவன் திடீர்னு செத்தா அது ஒரு மோசமான எழுத்தைப் படிச்சதினால தான் இருக்கும்." என்று கூறிவிட்டுச் சத்தமாகச் சிரித்தார் அந்த மனிதர்.
"சரி, வாங்க ஐயா! மழை விட்டுட்டுது போகலாம்" என்று அவரை அழைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான் அவன். தலவாக்கலை நகரில் அவர் செல்ல வேண்டிய தனியார் வங்கி வந்ததும் இறங்கிக்கொண்டார். திலீப்புக்கு நன்றியைத் தெரிவித்து விடைபெற்று அவர் உள்ளே சென்று விட்டார்.
அப்போதுதான் அவருடைய பெயரை மட்டும் கேட்க மறந்தது நினைவு வந்தது. ஏனோ அந்த மனிதரை நினைக்கப் பாவமாக இருந்தது திலீப்புக்கு. தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் அவருக்கிருந்த
இதழ் 58

Page 21
பிடிவாதமான அக்கறையை வியந்து கொண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தான்.
OOO
இது நடந்து ஒரு மாதம் கழிந்திருந்தது. ஒருநாள் சனிக்கிழமை காலை 11 மணி யிருக்கும். அன்றைய வேலைத் தலத்திலிருந்து மோட்டார் சைக்கிளிலே தனது அலுவலகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தான் திலீப். விக்டோரியா பூங்காவைக் கடந்து முதல் சுற்றுவட்டத்தை நெருங்கிய போது முஸம்மிலிடமிருந்து ஒரு போன்கோல் வந்தது. பைக்கை ஒரமாக நிறுத்தினான்.
திலீப் நீஇப்ப எங்க இருக்கிறா.?" "இங்க டவுண்லதான் நிக்கிறன், ஏன்டா?” "கொஞ்சம் நம் ம றுTம் வரைக் கும் வந்திட்டுப்போ!"
"நீஸ்கூலுக்குப் போகல்லயா..?" "இல்ல போய் ஹாப்ஃடே லீவு போட்டு வந்திட்டேன். நீநேர்ல வாயேன் சொல்றேன்"
உடனே பைக்கைத் திருப்பிக்கொண்டு தங்கள் வாடகை வீட்டுக்குச் விரைந்தான் திலீப், அறை வாசலிலேயே பதட்டமாக நின்றிருந்தான் முஸம்மில். திலீப்பைப் பார்த்ததும், திலீப் மத்தியானம் நீ ஃப்ரீயா..?" என்று கேட்டான்
"ஏன் இப்பவே ப்ரீதான். என்ன விசயம்?" "ஒருக்கா ராகலை வரைக்கும் பைக்ல போய் வரணும். எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் காலமாகிட்டார்டா திலீப்"
"ஓ! யாரு உன்ட ஸ்கூல் பார்ட்டியா...?” "இல்ல இவருவேற. தீசன் குரூஸ் என்று ஒரு எழுத்தாளர். யேய் திலீப் மறந்திட்டியா.நீ? அன்டைக்கு ஒருநாள் என்ட போன்ல உன்னோட பேசினாரே ஞாபகமிருக்கா. அவர்ட புக்ஸ் தந்தேனேடா வாசிக்க. அவருதான்டா பாவம் நல்ல மனிசன் மச்சான்"
"ஓ அவரா! முஸம்மில் அவரை நானும் பாத்திருக்கண்டா”
"இல்லடா. அவரை உனக்குத் தெரியாது” "இல்லடா மச்சான் எனக்கு அவரைத் தெரியு மென்டுதான் நினைக்கிறேன்! நான் சொல்றவர்தானா அவரெண்டு சொல் பார்ப்போம்" என்று விட்டு முஸம்மில் பாடசாலை விடுமுறைக்கு ஊருக்குப்போன மறுவாரம் தலவாக்கலை போகும் வழியில் தான் சந்தித்த மனிதரின் கதையைக் கூறி முடித்தான் திலீப்.
“ஓம் டா அவர் தாண்டா. அவரேதான். எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் தீசன் குரூஸ் அவருக்குத் தான் நீ பைக்ல லிப்ட் குடுத்திருக்கிறாய்" என்று உறுதிப்படுத்தினான் முஸம்மில்.
திலீப்புக்கும் கவலையாகவே இருந்தது. தமிழ் இலக்கியத்தையும் அது நேர்த்தியாக படைக்கப்பட வேண்டும் என்றும் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுப்
 
 
 

பேசிக்கொண்டிருந்தார் என்பதையும் முஸம்மிலிடம் சொல்லி வேதனைப்பட்டான்.
“ஓம் திலீப், ஒரு நல்ல திறமையான எழுத்தாளர். ஆனா பிரபல்யத்தை விரும்பாதவருடா. மனிசன் நல்லா எழுதிறவங்களை வஞ்சகமில்லாம பாராட்டும். அதே நேரம் பொறுப்பில்லாம யாராவது எழுதினா கோபம் வந்து கிழிகிழி யென் டு கிழிச்சிடுவாருடா."
"ஒம்டா, நீ தந்த அவரோட புக்ஸ் எல்லாம் படிச்சேன்டா நான். அவருட பேச்சைப் பார்த்தாலே தெரியுதே. அவரு உண்மையில நல்ல இலக்கிய வாதிதான். மோசமான எழுத்துகளை வாசிச்சா தான் உடனே செத்துப் போயிடுவேன் என்றுகூட என்னிடம் அன்டைக்குச் சொல்லிட்டிருந்தார்டா."
"உண்மையாவாடா..? பாவம், அவருக்குத் தான் எவ்வளவுதமிழ் பற்று பாத்தியா?”
“சரி, இப்பவே வா வெளிக்கிடுவோம். பின்னேரம் மழை வரும். ஜேர்கின் எடுத்துக்கோ."
திலீப்பும் முஸம்மிலும் ராகலையை அடைந்த போது மதியம் கடந்து விட்டிருந்தது. ராகலை தமிழ் கலவன் பாடசாலையைத் தாண்டியபோது வழி முழுவதும் "இலக்கிய மணி எழுத்தாளர் தீசன் குரூஸ் அவர்களுக்கு கண்ணிர் அஞ்சலி என்று சின்னதும் பெரியதுமாக ஏராளமான வெண்ணிறப் பதாகைகள் அவர்களை வரவேற்றன. மரணவீட்டு வாலிலே பெரிய டென்ட்ற் கட்டப்பட்டிருக்க ஏராளமானோர் குழுமி யிருந்தனர்.
இருவரும் தாமதிக்காது வீட்டினுள் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதும் பிரேதப் பெட்டியை முறையாக மூடி சடங்குகளை முடித்து வெளியிலெடுத்தார்கள். உள்வீட்டிலிருந்து எழுந்த அழுகைச் சத்தத்தோடு வெடியோசைகளும் கிறிஸ்தவ மதப் பாடல்களும் ஒலிக்க ஏறத்தாழ அரைகிலோ மீற்றர் நீளமான ஊர்வலத்தில் தீசன் குரூஸ் அவர்களின் பூதவுடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உள்ளுர் தேவாலய மயானத்தில் இறுதிக் கிரியைகள் முழுவதும் நிறைவேறியதும் திலீப்பும் முஸம்மிலும் மீண்டும் அவரது வீட்டிற்குச்சென்றனர். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறி விடைபெற்று மீண்டும் நுவரெலியாவுக் குத் திரும்பினார்கள்.
OOO தீசன் குரூஸ் அவர்கள் மறைந்து சில வாரங்கள் கடந்திருந்தன.
ஒருநாள் முஸம்மில் பாடசாலையிலிருந்து நேரே திலீப்பின் அலுவலகத்திற்கு வந்திருந்தான். அவனது கையில் இரண்டு மதிய உணவுப்பொதிகளும் ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிகையும் இருந்தன.
இதழ் 58

Page 22
"எ னி னடா சாப் பாட் டை கொணர் டே
வந்திட்டியா? சரி வா கெண்டீன்ல போய் சாப்பிடலாம்" என்று இருக்கையிலிருந்து எழுவதற்கு முயன்ற திலீப்பைப் பிடித்து அமர்த்தினான் முஸம்மில்.
திலீப் இதைப் படிச்சுப்பாரு..!" "என் ன புதிசா உன் ட கதை ஏதும் வந்திருக்கா.?" என்று கேட்டான்.
"உனக்குத்தான் என்ட கதைகள் பிடிக்காதே. இது என்னுடைய எழுத்துத் திறமையின் அருமையை நீ அறிவதற்கு ஒரு ஆதாரம். முதல்ல படிச்சுப் பாரு”
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான் திலீப். அதிலே "அண்மையில் மறைந்த எழுத்தாளர் இலக்கிய மணி தீசன் குரூஸ் அவர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள்" என்று ஒரு முழுப்பக்கம் வெளிவந்திருந்தது. அதிலே அவரது படமும் அவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் பிரசுரமாகியிருந்தன.
"ஆர்டிக்கிள் பெரிசா இருக்கேடா. சாப்பிட்டு வந்து படிப்போமே."
"ஓகே. ஆனா இப்ப இதை மட்டும் பார் போதும்" என்று அவன் காட்டிய மூலையில் மரணச் சடங்கில் அவர்கள் பார்த்த எழுத்தாளர் தீசன் குரூஸின் மகளின் படமும் பேட்டியும் வெளியாகியிருந்தது. அது
6616੭Upg56
வறட்சி வசந்தன் தனக்குக் கிடைத்தது நல்ல வாய்ப்பென மகிழ்ந்தான்.
கடந்த சில தினங்களாக மாணவருக்கான தேசியக் கவிதைப்போட்டி ஒன்றுக்கு தானும் ஆக்கம் எழுதி, அனுப்பும் விருப்புடன் இருந்தவனுக்கு கும்பிட்ட தெய்வம் குறுக்கே வந்தது போல் அமைந்தது அந்த பஸ் Lju600TL b.
அவன் பயணித்தது யாழ்ப்பாணத்திற்கு. அவனை அடுத்து ஒரு ஆசிரியர்.
சொற்ப நேரத்துள் ஆளுக்கு ஆள் அறிமுக மாகி, நெருக்கமாகிவிட்டனர்.
கிடைத்த அரும் வாய்ப்பை பயன்படுத்தும் ஆவலில் வசந்தன், "சேர் பகித்துண்டு பல்லுயிரோம்பல்” எண்ட குறள் நல்லாக எனக்கு பிடித்திருக்கு. அதைவிடத் திறமையான இன்னொரு குறள் குறிப்பிட முடியுமா?" எனக் கேட்டான்.
தம்பி, நீ சொன்னதே வலு திறம்", ஆசிரியர் சொன்னார்.
நல்லது சேர். உங்களுக்குப் பிடித்த நல்ல பாரதி பாடல் ஒண்டு சொல்லுங்கோ
"இப்ப ஞாபகம் வருகுது இல்லைத்தம்பி
 
 
 
 
 
 

ஒரு நீண்ட பேட்டி
"அ வட முழு ப் பேட் டியையும் பிறகு படிக்கலாம். இந்த கடைசிப் பகுதியை மட்டும் வாசிச்சுப்பாரு இப்ப" என்று அவன் விரல்கள் காட்டிய இடத்திலே.
கேள்வி: உங்கள் தந்தையாரின் வாசிப்புப் பற்றி..?
பதில்: எனது தந்தை தீசன் குரூஸ் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை வாசித்துக் கொண்டுதான் இருந்தவர். ஆம், தனது ஓய்வுக் கதிரையிலே அமர்ந்து ஒரு சிறுகதைத் தொகுதி ஒன்றை வாசித்துக் கொண்டி ருந்த போதுதான் அவர் திடீரென மாரடைப்பினால் இறந்தார். அந்த நூலை விரல்களால் பற்றியபடியேதான் அவரது ஆவி பிரிந்து கர்த்தரிடம் போய்ச் சேர்ந்தது.
கேள்வி: அப்படியா? அவர் வாசித்த அந்த கடைசி நூல் எது என்பதைப் பற்றி கூறமுடியுமா?
பதில்: ஆம்! அது ஒரு சிறுகதைத் தொகுதி. அதன் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அதை முஸம்மில் எனும் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்ததாக ஞாபகம்.
என்று தொடர்ந்து சென்றது பேட்டி.
"அப்ப பாவேந்தானி நல்ல பாடல் ஒண்ட சொல்லுங்கோ"
"இப் பிடிக் கேட்ட உடனே சொல் ல முடியுமே. தம்பி நான் தமிழ் ஆசிரியரல்ல; இங்கிலீஸ் ரீச்சர்"
"Breaths there man with soul so dead" GT6TD போயத்தை பாடிய போயற் ஆர் சேர்?"
"36 SIDIT600TLIT35(off-hand) (35LLITGb, என்னாலை சொல்ல ஏலுமா தம்பி"
ஆழம் அறியாது காலை விட்ட ஆதங்கம் வசந்தனுக்கு அவன் ஆசிரியரின் முகத்தை கூறு குறிப்பாய் பார்த்தான். ><< 雛
ஆசிரியரின் முகத்தில் அசடு வழிந்தது
இதழ் 58

Page 23
α)(ΛοGoa ܗܶܝ2
இயல்பாய்த்தான்நிகழ்ந்தது உன் வருகை.
பால்ய சினேகிதனைக் கவனித்தனுப்பிய தோழியாய் உனை வழியனுப்பியாகியும் விட்டது.
என்றாலும், உயிரென்ன உனை எதிர்பார்த்தே தவம் கிடந்ததாஇத்தனைக் காலமும்? உன் காலடியோசை கேட்டதுமே தளம்பிக் கிடக்கிறதே ஆத்மாவின் அனைத்துப் பக்கங்களும்,
நீயும் நானும் கைகோர்த்தபடி நடந்தலைந்த புல்வெளிகள் பச்சைப் புன்னகையைப் போர்த்தியிருக்கின்றன.
கற்றை முடி வீழும் உன்நெற்றி மீதில் தந்தனுப்பமுடியாது போனமுத்தங்களை என் குழந்தைக்கே கொடுத்துவிடுகிறேன்.
றம்புட்டான் இம்முறை நல்ல விளைச்சலாம். வாங்கிவந்த காய்களில் உன் சிவந்த கண்கள் காணுகிறேன்.
தங்கியிருந்த நாட்களில் நீ குளிக்கப் பயன்படுத்திய என் குளியலறைச்சுவர்களிலெல்லாம் உன் கண்கள் ஒட்டிக்கிடப்பதாய் உணருகிறேன்.
நீஇருந்து போன இடத்திலெல்லாம் போய் நிற்கிறேன். வெளியனுப்பிப்போன உன்சுவாசக் காற்றை என் உள்சுவாசத்தோடு எடுக்கும் பிரயத்தனத்தில்,
நான் வாழும் பிரதேசம்
ஜீவநதி
 

அழகாய் இருப்பதாய் நீசொல்லிப்போன பிறகு இந்தச்சூழலை பன்மடங்கு நேசிக்கிறேன்.
நீவந்து போனபிறகுதான் உனை எந்தளவு நேசித்தேன் என எனக்கே புரிவது போலத்தோன்றுகிறது.
கோப்பி குடித்து நீ வைத்துப் போன கோப்பையில்தான்
இப்போதெல்லாம் நான்தண்ணீர் குடிக்கிறேன்.
எல்லாமும் பைத்தியக்காரத்தனமாயும் இருக்கின்றன. அனைத்தும் ரொம்பத் தேவைபோலவும் தோன்றுகின்றன.
கிழக்கும் மேற்குமாய் பறக்கும் இரைக்கு அலையும் கிளிகளிடம் என் சேதிகளை உனக்குச் சொல்லிவரக் கெஞ்சுகிறேன். சோம்பலோடு அவை மறுப்பறிக்கை தெரிவித்துச் செல்கின்றன.
தவிப்பாய்த்தான் இருக்கின்றது. தள்ளாவயதிலும்
இதுவென்ன
பருவம் இப்படியும் தடம் புரளல் கூடுமோ?
இதழ் 58

Page 24
இவர் எமது நாட்டில் உள்ள சிங்கள எழுத்த பிரபலமான ஒரு படைப்பாளி. சிங்கள நாவல்கள், சிறு கட்டுரைகள் எனப் பல்வேறு தமிழ் இலக்கிய வகைகளைத் மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்துக்குச் சேவை செய்து கொடகே நூல் வெளியீட்டு நிறுவனத்தில் கடமையாற்றுகிற மதச் சமூகத்தைச் சேர்ந்த சகோதர எழுத்தாளரின் த மூலமாகவும் தமிழ் இலக்கியம் போஷிக்கப்படுகிறது எண்ணனும்போது தமிழ் பேசும் நாம் பெருமை கொள்ளாம
(Մ)IգաTՑl.
"மனுதெவ் அரண்”, “கொடவில்லவத்த" நாவல்க தமிழ் இலக்கியத்தில் காணப்படும் நாவல், சிறுகதை சிங்களத்துக்கு மொழிபெயர்த்திருக்கும், மொழி பெயர்த்துவரு லீலாரத்ன அவர்கள் எழுதிய "பிணிவன் தலாவ" எனு மலையாளத்தில் அதாவது கேரள மொழிக்கு மொழி ( பட்டிருக்கிறது.
- எம்.எம்
பிரபல தமிழ்மொழிபெயர்ப்பாளரான திரு.உபாலி லீலாரத்ன அவர் பற்றிச் சொல்லியிருந்தார், நேர்காணலை "லக்பிம" பத்திரிகைக்
தெரிவித்த கருத்துக்களை எம்.எம்.மன்ஸ?ர் அவர்கள் மொழிபெய
கேள்வி- உங்கள் பினிவன்தலாவ (Piniwarthalaea) ர அது பற்றிக் கூற முடியுமா?
உபாலி - இந்த நாவல் 2008ம் ஆண்டு வெளியிடப்பட் கருப்பொருளாக அமைந்துள்ளது. முதன்முதலாக இந் எழுத்தாளர் திக்குவல்லைக் கமால் அவர்களால் தமிழுக் வசந்தம்" என்ற பெயரில் சுவாமினி ஹரிஹரன் பத்மந கலாசாரப் பல்கலைக்கழகத்தில் வெளியீடு கண்டது. அங் பற்றியும் விஷேட அறிமுகத்தைச் செய்தேன். அதே போ6 கருப்பொருள், கதைப்பின்னணி என்பவற்றோடு ஏற்ட பெயர்ப்பாளர் என்னுடன் கலந்து ஆலோசித்தே செய்தார்.
கேள்வி - தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்களைச் சி உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
உபாலி - நான் சிறுவயதுமுதலே முஸ்லீம் பிள்ளைகளு தமிழ்ப் பிள்ளைகளுடனும் பழகியதால் மொழியைக் ை
ஜீவநதி
 
 
 

'ளர்களில் கதைகள், தமிழுக்கு வருகிறார். ார். மாற்று மிழ்ப்பணி என்பதை லி இருக்க
iT 2 LUL பலவற்றை „LĎ 2 UT6öl ம் நாவல்
பெயர்க்கப்
| ሆDqjGmj°ሽ
கள், அண்மையில் பேட்டி ஒன்றின் போது தமிழ் இலக்கியத்தைப் காக சுஜித் பிரசங்க செய்திருந்தார். அந்த நேர்காணலின் போது ர்துள்ளார்.
ாவல் மலையாளத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது
டது. எனது வாழ்க்கை அனுபவங்கள் தான் இந்நாவலின் நாவல் “விடைபெற்ற வசந்தம்" என்ற பெயரில் பிரபல த மொழிபெயர்க்கப்பட்டது. அதற்குப் பிறகு "படியிறங்கிய Tபா என்பவர் மலையாளத்துக்கு ருரீ சங்கராச்சாரியார் கு நான் நூலைப்பற்றியும் எமது நாட்டுக் கலாசாரத்தைப் மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பதற்கு முன்னர் இதன் டுகின்ற முரண்பாடு, சிக்கல்கள் என்பவற்றை மொழி
களத்துக்கு மொழி பெயர்க்க வேண்டும் என்ற எண்ணம்
ன் தான் நெருங்கிப் பழகினேன். அதே போல தோட்டத்து கயாளும் விதத்தைக் கற்றுக் கொண்டேன். பிற்காலத்தில்
2. இதழ் 58

Page 25
தான் மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தினேன். முதலாவதாக நான் சிறுகதைத் தொகுதி ஒன்றைத்தான் மொழிபெயர்ப்புச் செய்தேன்.
கேள்வி - தமிழ் நூல் ஒன்றை சிங்களத்துக்கு மொழிபெயர்க்கும் போது மூல நூலின் தன்மை
Řjdílairaabdašsběkaya Rygbi'r cysylltiski?
Mdinis Brabya f’kaxda Ba Xer i i, di
&šstat siškariɛx *** 领?。意辗鳍。芝樵卫 (Ces ixa à ski ossaisirxo) 97 &&eksid i’rifašią సీణి $.kakatt;#ష anarass seekly Rajetklfa časť
akagiyak dississa Y &sigsgradas fississa fYEræssassas *assassa SEKS sixx sess
assis emBLB LLL eeeeeeLLLLeeS eBLB eeLeBLDS SDBBLSSS SS SS SSLSLSS SzS S BBB S SS LL LL L S ;&', 'sib&&&}; {పేజతs Atapsభsvatski - N
శ్వీజీఖ్యఖ్య *ஃலை శోణజపాణ్యs
8 వీభtit$ఖ## {**$৪৯৩&&#$ • $$$$$ &৯৪৪&&৪ BuSBe Be B BeSCeLeeSBLBB S BCLS સ્ટ્રેડૂ\&&ડ્ઝ ડ્રિડ્ઝ x3x3 &ssis-sixx'ss
83& &
சிதைவுறாமல் அவ்வாறே வாசகனைச் சென்றடைய நீங்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்ன?
உபாலி - இங்கு முக்கியமாக தமிழைப் பற்றியும், தமிழ்க்கலாசாரத்தைப் பற்றியும் ஆழ்ந்த அறிவு இருப்பது அவசியமானது. அது பற்றிய அறிவு எனக்கு இருக்கிறது. முதலாவது மொழி பெயர்க்கும் நூலைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வது முக்கியமானது. அனேகமாக நான் நூலாசிரியரிடம் தொடர்பு கொண்டு அவரது கருத்தையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் நூல் ஒன்று மொழிபெயர்க்கப்படும் போது எமது நாட்டுக் கலாசாரத்தைவிட வித்தியாசமான அனுபவங்கள் காணப்படுகின்றன. அவற்றை வாசகர்களுக்கு உரிய முறையில் வழங்க வேண்டும். அவர்களது கடந்த
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 

Tra Gig
காலப் பின்னணியில் விவசாய முறைமைகள், பழக்க வழக்கங்கள் வித்தியாசமானதாகக் காணப்படுவதால் மொழி பெயர்ப்பின் போது முக்கியமாக அவை கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
கேள்வி - தமிழ் இலக்கிய நூல்களைச் சிங்கள
w & *****thari assiri Sibius was Niagray Si ristigi RFK * ge : 芝羧 WENYE Mässkaya - žiðið,3
*ស្សនៅនេះ Sజ్ఞఃఖీక్ష }శ్వkభst
vigskšsta šisdša faškšeria)
१84% ४ ईई**** 88x888& &#భళ్ల*భ###;&#థ***** *ܬܐܡܪ: « ;২৫৪৪ i^&***************** *xxxł kwał8. Xški Y- &ళ$జిటి మk
*్యజkఖ్య exsswax ti్యజన్వీకీ జీజ###
జోజు:భఖజ#*భజ
8<88XXX8%x%8&8&8888X$8ᏱᏕ%888
hikesferè 'sit Á8% k«8šхšж« 缀藻酸翰接、 tā katesజ*జwళ}}}}{ $్యఖ్యఖ్య ఖt;$$$$ కేhaఖ$2 *ణశిఖాకీ < Yšišssä8 *säsšxysi:
மொழிக்கு அறிமுகப்படுத்தும் போது தமிழ் இலக்கியம் உங்களுக்கு எவ்வாறு இருக்கிறது, எத்தகைய உணர்வுகளைத் தருகின்றது?
உபாலி - உண்மையில் தமிழ் இலக்கியத்தில் பிரதான ஊடகமாக இருப்பது கவிதையும் சிறுகதையும் தான். நாவல் இலக்கியம் இன்னும் முன்னேறவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அதற்கான காரணம் தமிழ் இலக்கியத்துக்கு வெளியீட்டாளர்கள் இல்லாமல் இருப்பது தான். எனினும் வெளியிடப்பட்டுள்ள குறைந்த அளவிலான நூல்களும் தரமான படைப்புகள் என்று சொல்லியாக வேண்டும். விற்பனையும் சிறப்பாக உள்ளது. தமிழ்ப்படைப்பாளிகள் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த முயற்சிகள் மேற் கொள்கிறார்கள் என்பதை அவர்களது படைப்புகள் தெளிவுபடுத்துகின்றன.
இதழ் 58

Page 26
ஒழுக்கு குடிசைக்குள் இடம்மாற்றி
பொருள் வைத்தே இரவு விலகிப்போனது. இயல
அட்டைகளாய் வரGM சுருண்டு கிடந்த
குழந்தைகளை எழுப்பி
விடை சொல்லி
வீதிவந்தாள்
நிறைமாத கர்ப்பிணியாய் நின்று நகர்ந்து சேறு குளித்து வந்து சேர்ந்தது எங்கள் கிராமத்து பேருந்து!
அவசரமாய் அதிலேறி தேங்காய், பனாட்டைச்சுமந்து கடல் கடந்து
விற்றுவர
கரைபோனாள் சனமேற்றிகடல் கடக்கும் குமுதினியக்கா,
பொரு ளேற்றிச் செல்ல அனுமதியில்லை.
பொருள்சுமக்கும் படகேதும் கடல் மிதக்குமா என காத்திருந்து பனாட்டும், ஒவ்வொரு படகுக் காரனும் தேங்காய் சொ ஒரு சில சாட்டுச் சொல்லி கடித்து பசிவிர தர்க்கம் கொள்கையில் பொழுது கழித் அன்றைய பொழுது தாய் சேலை பி அதிலே கழிந்தது. வரவேற்ற குழந்
நிறைவேறாத
வாழ்க்கையில் ஆசைகளோடு ဒ္ဓိဋ္ဌိ (3 ாற்றுத்தோற்று நித்திரையானா
3 டமனதோடு ॐ
மீண்டும் பொருள்சுமந்து
செ.மோகன்ற
-2
 
 
 
 

(ல் (நெடுந்தீவு)
காய்ந்து போய் கிடந்த பாத்திரத்தை கழுவிஈரமாக்கி கவிட்டு வைத்து, நனைந்து போன கன்னங்களோடு அவளும் தூங்கப் போனாள்.
வாழ்வு வலித்ததால் சுருண்ட உதடுகளில் அரசாங்க அரசியல் சண்டாளர்கள் ரவுசர் போட்ட ராட்சசர்கள் எனத் திட்டித் தீர்த்தாள் வலித்த நெஞ்சில் இரந்து அவள் யார்யாரையோ மெளனமூச்சில் கசக்கி கிளித்தாள்.
மண்ணோடும், கல்லோடும் மல்லுக்கட்டி சேமித்த பொருளை விற்று வரவக்கில்லாத மனிதர்கள் நாம்.
கல்லையும், முள்ளையும் சமைக்க முடியுமா? கருவாட்டையும், தேங்காயையும் தினம்
உண்ணமுடியுமா?
எங்கள் கனாக்களும் எதிர்காலமும்
நாங்கள் படுத்துறங்கும் சிலம்பாயாய்
கிடக்கிறது.
4

Page 27
ஐந்தும் ஆறும்
நெடுஞ்சாலை வழியாக நகரும் பேருந்து, பழைய பத்திரிகையொன்றை படித்தவண்ணமே வீதியோரச் சங்கதிகளை வேடிக்கை பார்த்தபடி பயணிக்கிறேன்.
திடீரென அக்காட்சி தென்படுகிறது விழிகளுக்கு, மாமிசத் துண்டொன்றைக் கவ்வியபடி சாலையின் குறுக்கே ஓடிவருகிறது நாயொன்று.
எதிரே வேகமாய் வந்த வாகனம் பதம் பார்க்கிறது நாயை,
அதன் உயிரையும் சேர்த்தே.
துடிதுடித்து இறந்த நாயை சூழ்ந்துகொள்கின்றன மாமிசத் துண்டுக்காய்த் துரத்திவந்த நாய்கள்.
ஆவேசமாய் வந்த அவை அதிர்ச்சியுற்று நிற்க மாமிசத் துண்டு மட்டும் அநாதையாய் இரண்டடி தள்ளி.
இறைச்சித்துண்டை ஏறெடுத்தும் பாராமல் இறந்துபோன நாய்க்கு அஞ்சலியாய்க் குரைத்தபடி அனைத்து நாய்களும்!
ஜீவநதி -

சம்பவம் மனதை சலனப்படுத்தவே பத்திரிகையின்மீது பார்வையைச் செலுத்துகிறேன். "கொழும்பில் குண்டுவெடிப்பு” கொட்டையெழுத்தில் தலைப்பு கொள்ளைகொள்கிறது கண்களை.
சம்பவத் தளத்திலிருந்து சற்றே தொலைவில் ஒரு ஆண் கையில் இரத்தம் வழிய கலைந்து செல்லவே அருகிருந்தோர் அந்நபரை உதவிக்காய் உடனழைத்தும் சட்டை செய்யாமல் தன் சட்டைகொண்டு கையைப் போர்த்தபடி அவசரமாய் அங்கிருந்து அகலும் முயற்சியில்அவர்.
வற்புறுத்தலாய் அவருக்கு வைத்தியம் பார்க்கவென்று இரத்தம் தோய்ந்த கையைப் இறுகப் பற்றுகையில் பதறி விலகும்போது படக்கென்று விழுந்ததாம்
தங்க வளையல்தரித்த, வெடியில் சிக்குண்டு வேறாகிப்போன வனிதையொருத்தியின் கை.
மன்னூரான் ஷிஹார்
இதழ் 58

Page 28
GTario. L'ÚN. UITGADGrŮULD60ofu JLb ம் விரக்தியும் கலந்த குரலில் சத்தமாக பாடத் தொடங்கினார். நான் இருந்ததற்கு நேர் எதிரே இருந்த ற்றுக்கு மேல் ஒலிபெருக்கி (பொக்ஸ்) இருந்ததால் காதுகளில் சத்தம் அறைவது போலிருந்தது. "இந்த பிறைவேட் பஸ் காரர்களுக்கென்றே தென்னிந்தியாவி லிருந்து தனியாக இசைத் தட்டுக்கள் வெளியிடுகிறார்களோ என்னவோ. வேறு எங்கும் இந்தப் பாடல்களைக் கேட்டதாகவே ஞாபகமில்லை. இடையிடையே கதை வசனம் வேறு. ஏதோ உலகத்திலுள்ள எல்லாக் காதல் தோல்விகளையும் சோகங் களையும் ஒன்றாக்கி தமக்கு ஏற்பட்டு விட்டதாகக் கருதி, எங்கள் மீது திணிக் கிறார்கள் பஸ்களின் ஒட்டுநர்களும், நடத்து நர்களும். எப்போது பார்த்தாலும் இந்த பஸ்களில், ஒன்று பெண்களைத் திட்டும் பாடல்கள் அல்லது பெண்களை கேலி செய்யும் பாடல்கள்தான் ஒலிபரப்பா கின்றன. ஏன் இப்படி என்று தனியாக ஓர் ஆய்வு செய்ய வேண்டும்." என மனசுக் குள் நினைக்கவும், நாளை தொடங்கப் போகும் புதுப் பட்டப்படிப்பில் ஆய்வு என்பது
முக்கியமான அம்சமாகவுள்ளமை ஞாபகம்
வர, நாளைய தின நிகழ்வுகளை நோக்கி மனசு தாவிற்று.
இப் பட்டப் படிப்புக்காகப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துவிட்ட தகவல் கிடைத்ததும் அடைந்த மகிழ்ச்சியை "இன்ரவியுவிலயும் கொஞ்சப் பேரத் தட்டுவாங்க." என்ற சக ஆசிரியையின் கூற்று மட்டுப்படுத்தியது. பின் நேர்காணல் முடிந்து வெளியிட்ட பட்டியலில் என் பெயரும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டபோது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்று பாடசாலையில் எல்லோருக்கும் "ரீபார்ட்டி"
நாளை வகுப்புகள் ஆரம்பமா கின்றன. அதற்கான ஆயத்தங்களுடன் இன்றே புறப் பட்டு இதோ பஸ் ஸில் இருக்கின்றேன். இரண்டு மணிக்கு பஸ் புறப்படுமாம். யாழ்ப்பாணம் போய்ச்சேர ஏழரை மணியாகிவிடும் என்று பஸ்ஸிற்குள்
கதைக்கப்பட்டது. "நூற்றுப் பத்துக் கிலோ
பெண் என்றால்
மீற்றர் தாே ஆசிரியை “வந்து பா அதிலயும் நல்ல ரோட ரீச்சரின் ப இருந்தாலு வியப்பாயி முகத்தில் 6 கணித்து வி
G
வசனம் டே நிறுத்தப்ப நிலையத்த முழங்கா6 நடத்துநர் சோதனை தொடங்கி
ஏறினார்க பொதிகள் அங்குமிா விட்டு, என் பேர் நின் நடத்துநர்
என்று சு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன. ஏன் அவ்வளவு நேரம் எடுக்குது..? என்று அருகில் போல தோற்றமளித்த இளம் பெண்ணைக் கேட்டேன். ருங்கோவன் ரீச்சர். ரோட் இருக்கிற கோலத்த. இண்டைக்கு கண்ணாடிக்காரர்தான் ரைவர். மனுசன் ட்டிலயே உருட்டிக் கொண்டுதான் போவார்." என்ற அந்த திலைவிட, சாரி கட்டாமல், ஸ்கேர்ட் அன்ட் பிளவ்ஸ்சுடன் ம் என்னையும் ரீச்சர் என அடையாளம் கண்டு விளித்தது ருந்தது. ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டாலே Tழுதி ஒட்டப்பட்டு விடுகிறதோ.. எதை வைத்து சரியா டுகிறார்கள். இதனையும் ஆராய வேண்டும். ஸ்.பி.பி. “பாசமாவது. பந்தமாவது." என்று தமிழி சி, ஆங்கிலத்திலும் ஏதோ கூற ஆரம்பிக்கும்போது பாடல் டு பஸ் ஸ்டார்ட் ஆனது. மன்னார் தனியார் பஸ் 翡 ல் இருந்து புறப்பட்டு மெதுவாக ஊரத் தொடங்க, ல், பூநகரி, யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம். என்று கத்திக் கொண்டே வர, மன்னார் பாலத்தருகில் உள்ள சாவடியில் பஸ் நிறுத்தப்பட்டது. இந்த இடத்தில் இருந்து பதுதான் இந்தக் கதை. ாலைந்து ஆணர்கள் கையில் சூட்கேசுகளோடு 劃 ர். அதில் ஒருவர் நான் இருந்த சீற்றுக்கு மேலேயுள்ள வைக்கும் இடத்தில், ஏற்கனவே இருந்த பொதிகளை கும் நகர்த்திவிட்டு நடுவில் தனது கட்கேசினை வைத்து எருகிலேயே நின்று கொண்டார். இன்னும் பத்துப் பதினைந்து று கொண்டுதான் பயணம் செய்ய வேண்டி யிருந்தது. றினார் "உங்களுக்கு கோவிற்குளத்தில சீற் தரலாம்" க்கற் போடும்போது, என்னருகில் நின்றவர் யாழ்ப்பாணம் , நடத்துநர் எனக்கு நேர் முன்னே இருந்த சீற்றைச்

Page 29
சுட்டிக்காட்டி "இவங்க கோவில் குளத்துல இறங்கு றாங்க. பிறகு நீங்க இருக்கலாம்." என்றார். நடத்துநர் நகர, இவர் நான் இருந்த சீற்றின் கம்பியில் பின் பக்கத்தைப் பொருத்தி வசதியாக நின்று கொண்டார், எனது ஒரு பக்க தோள்பட்டையில் அவரின் பின்பக்கத் தின் ஒரு பகுதி இடித்துக் கொண்டிருப்பதைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி. பஸ் மீண்டும் பயணப்பட்டது. மிக மெதுவாக பஸ்ஸை உருட்டத் தொடங்கினார் ஒட்டுநர்.
“ஒனர்ஸ் டிரைவரா வந்தா இப்படித்தான். ※ 、移 கண்ணாடிக்காரர்தான் ஒனராம். பாருங்களன் உருட்டுறத." என்றார் அருகில் இருந்த டீச்சர். உண்மையாகவே அப்படித்தான் ஒட்டினார் அவர். தவறுதலாக ஆக்ஸிலேட்டரில் கால் கொஞ்சம் அதிகமாக அழுத்தப்பட்டுவிடாமல் இருப்பதில் அதிக அக்கறை காட்டினார். பாலம் முடிந்து தள்ளாடியால் திரும்பி கொங்றிட் ரோட்டில் ஏறியது பஸ். அருகில் நின்றவரின் உரசல் தாங்கமாட்டாமல் சற்று முன்னோக்கிச் சாய்ந்து கொண்டேன் நான். அதற்கான தருணம் பார்த்திருந்தவர் போல கம்பியில் பின் பக்கத்தை சென்டராக பொருத்திக் கொண்டிருந்தவர், கம்பியை விட்டுவிலகி நான் விட்டுக் கொடுத்த சீற்றின் மேல்பகுதியில் தன்னைப் பொருத்திக் கொண்டு பக்கவாட்டாக நின்று கொண்டார். முன்பு பின்பக்கம் மட்டும்தான் உரசிக் கொண்டிருந்தது. இப்போது இடுப்பிலிருந்து முழங்கால் வரையான பாகங்கள் உரசத் தொடங்கின. நான் நிமிர்ந்து பார்க்க, அவர் நான் பார்ப்பதைப் பார்க்காதது போல எதிர்ப்பக்க ஜன்னலால் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆள் ஒரு நாற்பது தொடக்கம் நாற்பது மூன்று வயதுக்குள் இருக்கும். சராசரி உயரம், மெல்லிய டல்வாகு. சேர்ட்டை இன் செய்திருந்தார். காலில் றுப்புச் சப்பாத்து. ஆள் டீசன்டாகத்தான் தெரிகிறார் ஆனால் இப் படி அடுத்த வருக்கு இடைஞ்சல்
சய்கிறாரே.
பஸ் திருக்கேதீஸ்வரக் கோயில் வீதியில் ரும்பியது. அங்கே இரண்டு மூன்று பேரை ஏற்றிக் காண்டு மாந்தைச் சந்திக்கு வர ஆசிரியர்கள் குழு ன்று ஆண்களும் பெண்களுமாக ஏறிக் கொண்டது. வர்கள் அடம்பன் உட்பட மன்னாரின் பிரதான நிலப் பரப்பில் கடமையாற்றும் யாழ் மாவட்ட ஆசிரியர்கள். திங்கள் வந்து வெள்ளி செல்பவர்கள். வெள்ளிக் ழமைகளில் இந்த நேரத்தில் புறப்பட்டு வரும் பஸ்ஸலிக்கு எப்போதும் நல்ல கூட்டம் சேர்வதுண்டு என ருகில் உள்ள ரீச்சர் கூறினார். சனம் கூடியதால் ன்றிருப்போர்களைப் பார்த்து நடத்துநர் "நிற்கிற ட்கள் கொஞ்சம் கொஞ்சம் உள்ளுக்கு போங்கோ..." என சத்தம் போட, சிலர் நகர, என் சீற்றில் பொருந்தி நின்றவர், தானும் அசைவதாகக் காட்ட வேண்டுமே ன்பதற்காக என்பக்கமாகத் திரும்பி இரண்டு சீற்களின் கம்பிகளையும் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நின்றுகொண்டார். கிட்டத்தட்ட என்னைச் சிறைப் பிடித்த மாதிரி. அருகில் இருந்த டீச்சர் ஜன்னலோடு இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார். பஸ் நகர்ந்து ஊர்ந்து கொங்கிறீட் ரோட்டின் முடிவுக்கு வந்தது. நடத்துநர் முன்னால் வந்து ஒட்டுநருக்குப் பக்கத்தில் இருந்த சிப் டிரைவரில் பாட்டை மாற்றினார்.
"ஏடி கள்ளச்சி. என்னத் தெரியலயா. என்று பாடல் தொடங்க, என் சீற்றின் பாதியை நின்ற படியே பங்கு போட்டுக் கொண்டவர், தசாவதாரம் ராவ் கெரக்டர் கமல் மாதிரி இடுப்பை ஒரு சின்ன அசைவு டன் ஆட்ட என்மேல் உரசியது அவரின் முன்பக்கம். "இதென்னடா பெரிய கஸ்ரம்" என்று நான் பக்கத்து டீச்சர் பக்கமாக இன்னும் நகர்ந்து கொண்டேன். பஸ் குன்றும் குழியுமான வீதியில், கடலில் பயணிக்கும் கப்பலைப் போல ஆடி அசைந்து நகரத் தொடங்கியது.
ஒவ்வொரு பள்ளத்திலும் விழுந்து எழும்போது பஸ் அழுதது. ஓரளவு புது பஸ்தான் அது இருக்கைகளின் மேல் போடப்பட்டிருந்த பொலித்தீன் கவர் இன்னும் முழுமையாக கிழிந்து போகாததி லிருந்து அதனை உறுதி செய்யக் கூடியதாக இருந்தது. ஆனாலும் ஜன்னல்கள் கடகடவென அடித்து, கிறீச், கிறீச் என பஸ்ஸின் உடம்பு நோவுதாங்காமல் அழுவது போல சத்தமிட்டது. பின் சீற்றில் ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்த ஆண் ஒருவர் பஸ் புறப்படுவதற்கு முன்பே தூங்க ஆரம்பித்திருந்தார். எதிர்பாராத பள்ளம் ஒன்றில் பஸ் விழுந்து மேலேழும்போது ஆடிய ஆட்டத்தில் ஜன்னல் கண்ணாடியின் அலுமினிய விளிம்பில் பலமாக நெற்றியுடன் சேர்த்து தலை மோதிக் கொண்டதில் விழித்தவர் வலி தாங்க முடியாமல் "டேய் எவன்டா அவன். பஸ்ஸ பாத்து ஒட்டுடா..." என்று சற்றுச் சத்தமாகக் கத்தினார். இருந்தாலும் டிரைவருக்கு விளங்கியிருக்காது. நான் உட்பட பக்கத்திலிருந்தவர்கள் சிரித்துக் கொண்டோம்.
"பள்ளமடுச் சந்தி இறக்கம் இருக்கா. இறங்குற ஆக்கள் முன்னுக்குப் போங்கோ..." என்ற சத்தத்திற்கு ஒருவரும் நகர்ந்த மாதிரித் தெரிய வில்லை. ஒருவர் பள்ளமடுச் சந்தியில் இருந்து கை காட்ட, பஸ் நிறுத்தப்பட்டது. அவர் முன் வாசலால் ஏற, பின்பக்கம் நின்றிருந்த நடத்துநர் இறங்கி ஓடிவந்து கொண்டே ரைட். ரைட் என்று சொல்லிக்கொண்டு முன்பக்கம் ஏற, பஸ் புறப்படுவதற்கு உறும, கணிர் என பெல் அடிக்கப்பட்டது. "யாரது பெல் அடிச்சது..." என்று ஒரே குரலில் ஒட்டுநரும் நடத்துநரும் பஸ்ஸைவிட சத்தமாக உறும, "இறங்கணும்..” என்று சொல்லிக் கொண்டு ஒரு வயதான அம்மா கையில் ஒரு சாக்குப் பையோடு முன்வாசலை நோக்கி வந்தார்.
"இவ்வளவு நேரமும் என்ன செஞ்சு கொண்டிருந்தனீங்க. அப்ப இருந்து கத்திக்கொண்டு

Page 30
வாரன்." என்று உள்ளே பாய்ந்த நடத்துநர், அம்மா நின்றவரிடம் கொடுத்தார். பை கைமாறி மாறிச் சென் சிக்கியிருந்த அம்மாவால் பையைப் போல உடனடியாக கி பிந்திப் போனா பைன் அடிப்பான்." என்று ஒட்டுநர் "கிட்டவா இறங்குற ஆக்கள ஏன் சீற்ல இருக்க விட்டனி. சத்தத்துடன் கியரைப் போட்டு, பலத்த உறுமலுடன் பஸ்ெை வேகத்தில் போகும் ஆத்திரம் தெரிந்தது. ஆனால் பத்து நன்றாக நெருங்கியிருந்தார் "இவர், நானோ இனிமேல் ( இருந்த டீச்சரோஜன்னல் கம்பியைப் பற்றிப் பிடித்தபடி தன தூங்கிக் கொண்டிருந்தார்.
"கோவிற் குளம். முன்னால ரெண்டு பேர் இருந்த இருவரும் எழுந்து கொண்டனர். எனக்கு ஓரளெ
விடுதலை கிடைக்கப் போகிறது." எதிர்பார்த்தபடியே ஜன்னலோரத்தில் ஒருவர் ஒட்கார, அடுத்ததாக என்னை விட்டு விலகி "இவரும்” உட்கார்ந்தார். நான் டீச்சரை விட்டு விலகி, நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். மெல்ல கணி களைத் துT க்கம் தழுவியது. மலேசியா வாசுதேவன் "ஒரு மூடனின் கதை. "யைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
LJ Glü Ld65 (36) 5 LDII G5 ஓடியது. "இவ்வளவு ஸ்பீடா ஒடு றான். இதென்னடாப்பா சந்தைக் குள்ள ஓடுது பஸ். சனங்களெல்லாம் சிதறி ஓடுது. பஸ்சுக்க இருக்கிற சன மெல் லாம் ஒனர் டோ ட ஒன் டு இடி படுது. பரிரேக படிக் க
யில்லயோ.. அடக் கடவுளே. டிரைவரக் காணயில்ல முழுப்பிரயத்தனப்பட்டு எழுந்து கொள்ள முனையும் போது நினைவுக்கு வர அதே "ஆள்" முன்பைவிட அதிக சுதந்திரத்ே ஒருவர். பஸ் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
"வெள்ளாங்குளம்.வெள்ளாங்குளம்." மணித்தியாலத்திற்கு மேல் தூங்கியிருக்கிறேன். இலுப்பை நிறையப் பேர் ஏறியிருக்கின்றார்கள். அநேகர் ஆசரிய கொடுத்திருக்கிறார். "பாவி. எவ்வளவு நேரம் உரசிக் கெ என்று நினைத்திருப்பான். மெளனம் சம்மதம். இவ்: இப்படியே விடக் கூடாது. இன்னும் அதிக தூரம் இருக் போது, பின்னாலிருந்து சத்தம் கேட்டது,
“உரசாம போறதென்டா தனி பஸ் பிடிச்சுத்தா தள்ளி நிக்கிறது. வேணுமென்டா நீர் தள்ளிப் போய் நில ஒரு ஆண், கண்கள் சிவப்பாக இருந்தது. பக்கத்தில் ஒரு டீ நின்றிருந்தார். இன்னுமொரு டீச்சர் (மறுபடியுமா...?)"சும் நான் மெளனமானேன். இவன் வேண்டுபெ என்ன செய்வது. தள்ளி நிற்கச் சொன்னால் இவனும் நெருக்கினேன். அவர் தூக்கம் கலைந்து எழுந்திருந்தார்.
 
 
 
 
 
 

வின் கையிலிருந்த பையை பறித்தெடுத்து முன்னால் | தரையில் வைக்கப்பட்டது. ஆனாலும் கூட்டத்துக்குள் ழே செல்ல முடியவில்லை. "இறங்கம்மா.. அஞ்சு நிமிசம் துரிதப்படுத்த ஒருவழியாக இறக்கிவிடப்பட்டார் அம்மா. " என்று நடத்துநர் மேல் பாய்ந்த ஓட்டுநர், டமார் என்ற எடுத்த தோரணையில் குறைந்தது எண்பது கிலோ மீற்றர் லோ மீற்றர் வேகத்தில்தான் செல்ல முடிந்தது. இன்னு ]டியாது என்றளவுக்கு நெருக்கப்பட்டிருந்தேன். பக்கத்தி லயைக் கைகளில் சாய்த்து வைத்து, ஒரு இலட்சியத்துடன்
இறங்குங்கோ." என்ற சத்தத்திற்கு எனக்கு முன் சீற்றில் நிம்மதியாக இருந்தது. "அப்பாடா. இம்சையிலிருந்து
.யாரோ எனக்கு மேல விழுந்து நெரிக்கிறாங்க." விழிப்பு வந்துவிட்டது. "அப்பாடா. கனவு..." என்று சுய தாடு உரசிக் கொண்டிருந்தான். முன்னிருக்கையில் பெண்
ஒட்டுநரின் குரல் கேட்டு வெளியே பார்த்தேன். அரை க் கடவை தாண்டி வந்திருக்கிறது. இலுப்பைக் கடவையில் ர்கள். இவர் என்மீது உரசுவதற்காகத் தனது சீற்றைக் Tண்டு வந்தானோ. நான் தூங்குவது போல நடிக்கிறேன் 1ளவு சகஜமாக ஒட்டிக் கொண்டிருக்கிறானே.” “இதை கிறது. தள்ளி நிற்கச் சொல்லுவோம்." என நிமிரும்
ன் போக வேணும். இந்தச் சன நெருக்கடிக்குள்ள எங்க லும்." ஆஜானுபாகுவான உருவம் என்பார்களே அப்படி சர் (டீச்சராகத்தான் இருக்க வேண்டும்.) அழாக் குறையாக மாஇரும்." என முதல் டீச்சரை நோக்கிக் கூறினாள்.
ன்றேதான் உரசுகிறான். அப்பட்டமாகத் தெரிகிறது. இதே மாதிரித்தான் பேசுவான். நான் பக்கத்து டீச்சரை ான் படும்பாட்டைப் பார்த்து, வாய்க்குள் முணுமுணுத்தார்.

Page 31
இவன் கள் இப் படித்தான் டீச்சர், என்னதான் கிடைக்குதோ தெரியாது. உரசிக் கொண்டேதான் இருப்பான்கள்." டீச்சர் சப்போர்ட்டாக இருப்பார் என்ற நம்பிக்கையில் திரும்பாமலேயே "கொஞ்சம் தள்ளி நின்றால்தான் என்ன?. எனச் சற்று உரத்த குரலில் கூறினாலும் அவனுக்கு விளங்கியிருக்காது என்றே நினைத்தேன். அப்படியே விளங்கினாலும் அவன் என் பேச்சை பொருட்படுத்தப் போவதில்லை. எத்தனையோ தடவை முறைத் துப் பார்த்தும் விலகாதவனா இப்போது விலகிவிடப் போகிறான்? 業 முழங்காவில் செட்டியார் கடை முன்பாக பஸ் நிறுத்தப்பட்டது. ஒட்டுநர் கூறினார் "பத்து நிமிசம் பஸ் நிற்கும், சாப்பிடுற ஆட்கள் டக்கென்று சாப்பிட்டுட்டு வாங்க.." என்று கூற ஆட்கள் வாசலை நோக்கி நகர, "இவரும்" நகர்ந்து இறங்கினார். எல்லோருடைய உடையிலும் செம்மண் ஒட்டியிருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் முதல் வேலையாக தங்கள் தங்கள் தலைமுடி, உடைகளில் ஒட்டியிருந்த செம்மண்ணைத் தட்டிக்கொண்டார்கள். நானும் இறங்கி இயற்கை உபாதையைக் குறைக்கும் நோக்கில் கடைக்குள் நுழைந்து பின்பக்கம் சென்றால் அங்கே பெண்கள் வரிசையாக நின்றிருக்க வேண்டியிருந்தது. ஆண்கள் ாட்டுப் பக்கம் நகர்ந்து ஆங்காங்கே நின்று முதுகைக் காட்டியபடி விசயத்தை முடித்தாலும் பெண்களால் அது முடியாத காரியம். காத்திருந்துதான் ஆக வேண்டும். "இந்த சமூக அமைப்பு, சட்ட திட்டங்கள், பண்பாடு, கலாசாரம் எல்லாம் ஏன்தான் இப்படி பெண்களுக்கு ஒர வஞ்சனை செய்கிறதோ..." என்ற எண்ணம் வந்தது. ஸ்ஸிற்குள் பட்ட அவஸ்தை, இப்போது நிற்கும் கியூ எல்லாம் சேர்ந்து இந்தச் சிந்தனையை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது என எனக்கு நானே விடையையும் கூறிக் கொண்டேன்.
ஒரு ரோல்ஸ்ஐ உள்ளே தள்ளி, டீயைக் குடித்து விட்டு பணம் கொடுக்கும்போது பஸ் புறப்படுவதற்காக ஹார்ன் அடித்தது. நடந்து சென்று ஏறிக்கொள்ள, என் ற்றின் அருகில் தயாராக அவன் நின்றிருந்தான். நிற்பதற்குக் கூட இடம் பிடித்து வைத்துவிடுகிறார்கள். ற்றவர்களும் அதற்கு ஒத்துழைக்கிறார்களே. ஒருவர் நின்ற இடத்தில் மற்றவர்கள் நிற்கக் "கூடாதோ. எழுதி வைத்த இடம் மாதிரி அதே டத்திலேயே வந்து நின்று விட்டான். மற்றவர்களும் அவரவர் நின்ற இடத்திலேயே நின்று கொண்டார் ளோ.. எல்லோரும் தங்களுக்கு ஏற்ற ஒரு "செட் ப்"போடுதான் நிற்கிறார்களோ.." நான் சீற்றில் ருக்கவில்லை. இரண்டு சீற்றுக்கள் தள்ளி, நடுக் ம்பியைப் பிடித்து நின்றுகொண்டிருந்த நடுத்தர யதுடைய ஒரு பெண்ணை அழைத்து அவரை
"உட்காரச் சொன்னேன். மலர்ந்த முகத்துடன் அவர் அமர,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் தள்ளிப் போய் அவர் நின்ற இடத்தில் நின்று கொண்டேன். சற்று ஆறுதலாக இருந்தது.
நாச்சிக்குடாச் சந்திக்கு வந்ததும் பஸ் டீசல் அடிப்பதற்காக நின்றது. "மன்னாரில இருந்து வரும் போதே அடிச்சுக்கொண்டு வர மாட்டான்கள்." என்று ஒருவர் முணுமுணுக்க, "இப்பத்தான் காசு சேர்ந்தி ருக்கும்." என்று இன்னொருவர் பதில் கூற, டீசல் அடித்ததாலோ என்னவோ ஒரு புது உற்சாகத்தோடு ஏறி உட்கார்ந்த ஒட்டுநர், நிறுத்தப்பட்டிருந்த பாட்டை மீண்டும் போட்டார். "வானுயர்ந்த சோலையிலே. நீ நடந்த பாதையெல்லாம்." என மறுபடியும் தொடங்க எரிச்சலாக இருந்தது. எல்லா நேரமும் சோகம் தானா. அதிலும் காதல் சோகம்.
பல்லவராயன் கட்டு இராணுவ முகாமை
நிறுத்தப்பட்டது பஸ், "காத்துப் போயிட்டுது. இனி இவன் ரயர் மாத்த ஒரு மணித்தியாலம் ஆகும். என்று சொல்லிக் கொண்டே எனக்கு அருகில் நின்ற ஒருவர் இறங்க, நானும் இறங்கி பெண்கள் நின்றிருந்த பக்கமாகச் சென்று நின்று கொண்டேன். சற்றுத் தள்ளி "அவன்" நின்றிருப்பது தெரிந்தது. நான் பார்க்கும்போது அவனும் என்னைப் பார்ப்பது தெரிந்து உடனடியாக மறுபக்கம் திரும்பிக் கொண்டேன். "தன்னைத்தான் தேடுகிறேன் என நினைத்து மறுபடி தொற்றிக் கொள்ளப் போகிறான்."
ஒரு வழியாக அரை மணி நேரத்தில் பஸ் மீண்டும் புறப்பட்டது. நான் என் பழைய இடத்திலேயே கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டேன். சற்று முன்பு நிற்பதற்குக் கூட இடம் பிடித்து வைத்து விடுகிறார் களே. என நினைத்ததை எண்ணி எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். "அது மனித பிரயாண இயல்பு போலும்." என நினைத்து முடிப்பதற்குள் ஒரு உரசல். திரும்பிப் பார்த்தால் "அவன்". இப்போது அவனுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. இருட்டி விட்டது. லைற் வெளிச்சம் வேறு மங்கலாக இருந்தது. இருக்கையில் இருந்ததைவிட இப்போது முழுவதுமாக உரச முடிகிறது அவனால், “ இந்த வியர்வைக்குள்ளும், தூசிக்குள்ளும் இவனுக்கு எப்படித்தான் இப்படி நடந்து கொள்ள முடிகிறதோ. சாரியைக் கட்டிக் கொண்டு வந்திருந்தால் ஒருவேளை இவன் என்னைக் குறி வைத்திருக்க மாட்டானோ. பிரயாணத்திற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக இந்த உடையுடன் வந்ததை நினைத்து வருத்தப் பட்டேன். அதைவிட யாராவது ஒருவரை அழைத்து வரவில்லையே என அதிகம் நொந்தேன். அழைத்து வந்திருந்தால் மட்டும் என்னவாகப் போகிறது. ஆண்கள் சண்டை பிடித்துவிடப் போகிறார்களே என்ற பயத்தில் அப்போதும் பேசாமல்தான் இருந் திருப்பேன்.

Page 32
இவனுக்கு உரசல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கலாம் இருக்கிறது....
ஒருவாறு பூநகரி வாடியடி வளைவில் பஸ் த நின்றதும் ஜன்னலூடாக நல்ல காற்று வந்து அமைதியைத் இன்னும் ஒரு மணித்தியாலம் ஓட வேண்டும். மீண்டு விழுந்து எழுந்து செல்லத் தொடங்க “உதய கீதம் பாடுதே எனப் பாட்டுத் தொடங்கிப் பல்லவியோடு நின்றது. பின் இடைவெளி விட்டு மீண்டும் ஆரம்பத்திலிருந்து "உதய பாடுவேன்.." என்று தொடங்கி நின்றுவிட்டது. ஒவ் பள்ளத்தில் விழுந்து எழும் போதும் உதய கீதத் தொடங்கினார் பாலசுப்ரமணியம். ஆனால் ஒரு தட முடிக்கவில்லை. சங்குப்பிட்டி பாலத்தை நெருங்கும் இருபத்தோராவது தடவையாக உதய கீதம் தொடங்க, ! லிருந்து ஒரு ஆண் குரல் சத்தமாகக் கேட்டது, “இப் உருட்டிக் கொண்டு போனா உதய கீதந்தான் பாட்டு
வரும்.." எல்லோரும் சிரித்தார்கள்.
சங்குப்பிட்டி பாலம் கடந்து நல்ல ரோட்டுக்கு வந்ததும் வேகம் எடுக்கத் தொடங்கி, தனங்கிளப்புச் சற் சாவகச்சேரி நோக்கித் திரும்பி நின்றது பஸ். சற்று “அவனை” மறந்திருந்த நான் திரும்பிப் பார்க்க, நின்றிரு உரசல் பழக்கமாகி, இசைவாக்கமடைந்து நின்றிருந்தே அல்லது உரச மறந்து அவன் நின்றிருந்தானா... தெளிவாகக் கூற முடியவில்லை. சாவகச்சேரி சந்ன பின்புறம் கத்தரிக்காய் மூடைகளை இறக்கினார்கள். பதினைந்து மூடைகள் இருக்கும். எப்போது, எங்க ஏற்றினார்கள் என்று தெரியவில்லை. "சரி இறக்கிக் கெ போகட்டும்.... என்னிடம் கேட்டுவிட்டுத்தானா பஸ்ஸில் எ செய்ய வேண்டும்...' என நான் நினைத்ததை எண்ணி நானே மனசிற்குள் சிரித்தேன். பஸ் நகர்ந்து சாவகச்சே ஸ்டான்டில் நின்றது. “இவன்” முன்னால் நகர்ந்து தனது சூட் எடுத்துக் கொண்டு இறங்கினான். ஜன்னல் பக்கமாக வந்து எ ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போவது தெரிந்தது. பார்க்காதது போல நின்றேன்.
கைதடிப் பாலம், நாவற்குழிப் பாலம் கடந்து மு மணி நேர ஓட்டத்தின் பின் யாழ் மத்திய பேருந்து நிலைய பின்புறத்தை பஸ் வந்தடையும் போது மணி இரவு ஏழரை.
காலையில் குளித்து முழுகி, நல்ல சாரியை அ கொண்டு பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலை நெரு (போது ஒரு புது உற்சாகம் பிறந்திருந்தது. நேற்றைய ! களைப்பு, அவஸ்தையெல்லாவற்றையும் முற்றிலுமாக திருந்தேன். ஏற்கனவே அறிமுகமான ஆசிரியர்கள், ஆசிரி6 சிலரைக் கண்டு மகிழ்ச்சி இருமடங்காகியது. கதைத்துப் கொண்டு, எங்களது விரிவுரைகள் நடக்க விருக்கும் மண்ட நுழைந்தேன்.
ஏற்கனவே நிறையப் பேர் ஆசனங்களில் அமர் தார்கள். வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கதிரைகளின் ர நடந்து செல்லும்போது தற்செயலாகப் பார்த்தேன், மூ வரிசையில் முதலாவது கதிரையில் "அவன்" அமர்ந்திருந்தா
ஜீவநதி -

போல
ரும்பி
தந்தது.
பரம் சுபீட்சம்
> பஸ்
ன்..." சற்று கீதம் வொரு எதைத் Dவகூட
போது
பின்னா பிடியே
வண்டி
5 பஸ் நதியில் நேரம் ந்தான். கனா.. என்று தயின் பத்துப் ருெந்து காண்டு ல்லாம் மறுபடி ரி பஸ் கேசை ன்னை
களக குசேலம் காருண்யம் சோக முகூர்த்த பயணம்
அரச மரக் கிளையின் ஆர்ப்பரிப்பு இரவு எல்லாம் பெரியதொரு சத்தம் பெடியளோ பேயாக்கும் எண்டு பயந்து, நாற்சார், நடு முற்றம் தோற் செருப்பு ரண்டொரு கோடி ஒரு மூலை, வேப்பம் பழம் உதிர் வாசல் விரிசடை வேப்பமரம் கூப்பிடும் பெட்டைக் குயிலை சாப்பிடும் ஓர் அண்டம் காகம் சிறு குஞ்சைக் கத்தக்கத்த கால் இடுக்கில் வைத்துக் கொத்திச் சிறகு உதிர்ந்து காற்றில் சிதற வானம் மழை வில் வரைஞ்சு மழை சூடிய மலராய் கேணிப் படிநடையின் கீழ் நாணிப் போய் தாயை விட்டு மேய வந்த மாய மான் குட்டி மடியில் விளையாடத் தோயு மனசு நினைவில் கழுவக் கழுவ கறை அகலாக்கறைகள் | அக்கறைகள் அவர்கள் அக்கறைக்கு அழியாச் சான்றாய் அரிச்சந்திரனாய் ஆவணமாகி.
நான்
மக்கால் யத்தின்
ணிந்து
நங்கும் பயணக்
மறந் யைகள் பேசிக் பத்துள்
ந்திருந் நடுவாக மன்றாம்
- கல்வயல் வே.குமாரசாமி -
இதழ் 58

Page 33
6)
“சரி இதுதான் கடைசி" சொல்லிவிட்டு கணக்
திணித்துவிட்டுப் போகிறார் அப்பா.
“எந்த ஆச்சாரியப்பா?" "அதுதான் கமக்கட்டுக்கை ஒரு "பாக்கும் கையி
சப்பியபடி போவாரே அவர்தான்."
“ஐயய்யோ நான் அங்கை போக மாட்டன்!” "ஏன்ரா?" "அந்தாள் நல்ல மனிசன்தான். அவற்ரை மகன் யோ "அவன் உன்னை ஒண்டும் பிடிச்சு விழுங்க மாட்
 
 

கே.எஸ்.சுதாகர்
Uாது6ை
"மணி னானாலும் திருச் செந் துTரில் ண்ணாவேன்." கோவிலில் பாட்டுக் கேட்கத் தொடங்கி பிட்டது. நேற்றுத்தான் ஒரு சோடி புதுச்செருப்பு வாங்கி விருந்தேன். நங்கூரம் படம் போட்டது. அதைப் போட்டுக் காண்டு மடைக்குப் போய் ஒரு "ஷோக்" காட்டவேணும். பானமுறை மடைக்கு வரேக்கை உமாசுதன் புதுச் சருப்புப் போட்டுக் கொண்டு வந்தவன். அவனை ஒருத் ரும் கண்டுகொள்ளேல்லை. மண்ணை உதறிக் கொட்டு ாப்போல, பத்துப் பதினைஞ்சுதரம் நிலத் தோடை சருப்பைத் தாளம் போட்டு, அடிச்சு அடிச்சுக் காட்டின |ன். இந்த முறை நானும் போட்டுக் காட்ட வேணும்.
கோவிலிலை செருப்பைச் சும்மா கழட்டி >வக்கப்படாது. ஆராவது அடிச்சுக் கொண்டு போடுவான் ஸ். செருப்புக்கு காவல் இருக்கிறவரிட்டைக் காசைக் டுத்து கவனமாக வைக்க வேணும். செருப்புக் கொஞ்சம் பரிசாப் போச்சுதோ? எனக்கு ஆறாம் நம்பர்தான் சரி ரும்போல, பரவாயில்லை! ஆர்உதைக்கவனிக்கிறான்கள்.
"கணேஷ் இஞ்சை ஒருக்கா வந்திட்டுப் போ” |ப்பா கடைக்குள்ளிருந்து கூப்பிட்டார். வீட்டிற்கு }ன்பாக எங்களது பலசரக்குக்கடை இருந்தது. ாலையில் தான் நாலைந்து வீடுகளுக்குப் போய் பழைய டன் வருவாயைக் கறந்து வந்திருந்தேன். திரும்பவும் தற்காகக் கூப்பிடுகின்றார்.
"ஆச்சாரியார் 160 ரூபாதரவேணும். வாங்கிவா."
"அப்பா! நான் இப்ப வளந்திட்டன். "செக்கண்டரி" டிக்கிறன். வீடு வீடாப் போய் காசு கேட்க வெட்கமா ருக்கப்பா"
குவழக்கு எழுதின துண்டை என் கைகளுக்குள்
லை தளபாடங்களுமாக வெறும்மேலோடை பாக்குச்
கன்தான் மகா அலுப்பன்." டான். கெதியிலை போட்டு வா. கோயிலிலை ஐஞ்சு

Page 34
மணிக்கு தீ மிதிப்புத் தொடங்கி விடும்."
- கோவிலில் மடை நடத்துவதில் அப்பாவுக்கும் பெரும் பங்குண்டு. நிறையக் காசு செலவழிச்சு சித்திரை மாசம் செய்யிற திருவிழா. வருஷத்திலை ஒரு தடவைதான் கடன்காரர்களின் வீடுகளுக்குச் சென்று பணத்தை வாங்கிவரச் சொல்லுவார் அப்பா.
"சரி போட்டு வாறன் அப்பா!"
திடீரென்று என் மனக்கண் முன்னே தாமரை தோன்றினாள்.
அவளின் வீட்டைக் கடந்துதான் ஆச்சாரியாரின் வீட்டிற்குப் போக வேண்டும். நேரத்தைப் பார்த்தேன். மணி இரண்டு. உச்சி வெயில். அப்பாவும் பாவம். ஒரு பெட்டிக்கடையிலையிருந்து வாற வருமானத்தைக் கொண்டுதானே குடும்பத்தை நடத்துகின்றார்.
சைக்கிளை மெதுவாக எடுத்தேன். பக்திப் பாடல்கள் முடிந்து "பாவாடைத் தாவணியில்” தொடங்கி யிருந்தது. வடக்குப் பக்கமாக சைக்கிள் விரைகிறது. முன்பு ஆங்கில மகாவித்தியாலத்திலை படிக்கேக்கை ஒவ்வொருநாளும் இந்தப்பக்கமாகத்தானே போறது! ஏழாம் வகுப்பிற்கு யூனியன் கொலிச்சுக்கு மாறினாப் போல எப்பவாகிலும் கோயிலுக்கெண்டு இந்தப் பக்கம் வந்தால் சரிதான்.
கோவிலுக்கு எதிராகக் கிழம்பும் தெருவில் போனால் தச்சுவேலை செய்பவர்கள் இருக்கும் குடிமனை வரும். சைக்கிளை முதலில் கோவில் பக்க மாகச் செலுத்தினேன். ஒருக்கா கோயில் நடப்புகளை என்னண்டு பாப்பம்.
மடைப்பள்ளியருகே கிராமபோனில் தட்டை மாற்றிக் கொண்டிருந்தார் “குணம் சவுண்ட் சேர்விஸ்” உரிமையாளர் நற்குணம். அவர் ஒவ்வொரு தட்டையும் பக்குவமாக எடுத்து வைத்து, அடுத்ததைப் போடுவதற் கிடையில் குறைந்தது பத்து நிமிட அவகாசமாவது எடுத்தார்.
- அரசமரத்திற்கு எதிராக நீண்ட அகழி ஒன்று வெட்டி மரக்குற்றிகளை அடுக்கிக் கொண்டு இருந் தார்கள். தீ மிதிப்பதற்கான ஆயத்தங்கள் தொடங்கி விட்டன. போனமுறை நடந்த தீ மிதிப்பின் போது வேதக் காரர்களும் தீ மிதிச்சவை. நான் நினைச்சன் அவை யளின்ர கால்கள் அள்ளுப்பட்டுப்போம் எண்டு. ஆனால் அவைக்கு ஒண்டும் நடக்கேல்லை. மாலைக் கருக்கலில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புப் பாளங்கள் மீது நடப்பதைப் பார்க்க பக்தியுடன் பயமாகவும் இருக்கும்.
இரவு மடை முடிய “சங்குவேலிப் பெத்தாச்சி யின்” உரு நடக்கும். சினிமாக்காரர்கள் தோற்றுப் போவார்கள். அந்தமாதிரி இருக்கும் உரு ஆட்டம். உரு தொடங்க கனபேர் பயத்திலை ஓடி ஒழிச்சிடுவினம். உரு எண் ட போர்வையிலை அவரவற்ரை ஒழிப்பு மறைப்புகளை புட்டுக் காட்டுறதுதான் அவவின்ர வேலை.
ஜீவநதி

உச்சக்கட்ட உருவிலை அந்த வருஷம் அட்டூழியம் செய்தவர்களிலை ஒரு புண்ணியவானைத் தெரிஞ் செடுத்து அடி அடியெண்டு அடிச்சு தண்டனையும் வழங்கிப் போடுவா.
போனமுறை நடந்த மடைக்கு தாமரை வரேல்லை. மாவிட்டபுரத்துக்கு அங்காலையிருந்து என்னோடை முந்திப் படிச்ச பாலசுந்தரி, உமைபாலன் கூட வந்தவை.
"கண்ணெதிரே தோன்றினாள்” பாட்டுப் போய் கொண்டிருக்க, தாமரை மனதினில் வந்தாள்.
கோயிலுக்கு எதிரே வீதியைக் கடந்தால் ஒருபுறம் பனம் தோப்பும் மறுபுறம் அனிச்சமரங்களும். அதற்கு எதிர்த்தாப்போல் ஒரு இலந்தை மரம் சடை விரித்திருந்தது. அனிச்சமரத்தில் கொவ்வைச் செடி படர்ந்திருக்கிறது. அனிச்சம் பூக்களும் நிறையப் பூத்திருக்கு. அனிச்சமரத்தில தாவி ஏறிய குரங்கு மனம் இறங்கிவர மாட்டேனென அடம் பிடித்தது.
XXX இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவிட்டபுரம் மகாவித்தியாலத்தில் படித்துக் கொண்டிருந்த நேரம் - ஆறாம் வகுப்புத் தொடக்கம். அப்பவெல்லாம் எல்லாரது றிப்போட்டிலும் "வகுப்பேற்றமுண்டு” என எழுதி விடுவதால் - எல்லாரும் வகுப்பு மட்டுமே மாறுவோம். ஆக்கள் அப்படியே இருப்போம். ஆனால் அதிசயமாக எமது வகுப்பில் ஒரு புதுப்பெண் வித்தியாசமான ஆடை அணிவகுப்பில் வந்திருந்தாள். ஸ்கூலுக்கு என்று ஒரு பிரத்தியேக யூனிபோம் இல்லை. யாரும் எதையும் போடலாம். விடலாம். வரலாம் .போகலாம். அந்தப் புதுப்பெண் வெள்ளை ஆடையில் மல்லிகைப்பூக்கள் படம் போட்ட சட்டை அணிந்திருந் தாள். எல்லாவற்றிலுமே அதிகமாகவே இருந்தாள். வயதிலும், தோற்றத்திலும், அழகிலும் மிச்சம் அதிகமாகவே. அறிவைப் பற்றி என்னால் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு தடவைப்படி - ஐயிரண்டு பத்து; பத்தோடை ஆறு; பதினாறைத் தாண்டிய அக்கா முறை அவள் எனக்கு. ஆடைக்குள் பருவத்தின் பூரிப்பு போட்டிக்குத் தயாராகும் காளைகள் போல் நின்றன. அவள் வகுப்பின் கடைசி பெஞ்சின் கரையில் “திரு திருவென விழித்தபடி இருந்தாள்.
அன்று மதியம் எல்லாரும் தாமரையைச் சூழ்ந்து கொண்டார்கள்.
"அது என்ன தாமரை? ஆம்பல் அல்லி இல்லையோ?" கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். அவள் எல்லாவற்றிற்கும் "உம்மாண்டி” போல பதில் சொல்லாது நின்றாள்.
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும்போது, என் பின்னாலே வந்தாள். நான் நடையை நிறுத்தினேன்.
இதழ் 58

Page 35
அவள் என்னைக் கடந்து போனாள்.
“தாமரை இவ்வளவு காலமும் எங்கே படித்தாய்?"
என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். "முல்லைத்தீவில்" “இங்கே ஏன் வந்தாய்?" அவள் அங்குமிங்கும் பார்த்துவிட்டு "என் அண்ணா இங்கேதான் திருமணம் செய்தார்” என்றாள்.
"அதுக்கு? "அம்மாதான் அங்கை இருந்தால் நான் படிக்க மாட்டன் எண்டு சொல்லி அண்ணாவோடை அனுப்பி
வைச்சவா" -3-3-3-----
"அப்ப நீயும் இங்கேதான் திருமணம் GeFuj65uT?"
அவள் வெட்கித்து தலை குனிந்து குறுநகை புரிந்தாள்.
தாமரை நீரொம்ப அழகு" தாங்ஸ்சுங்கோ" ஒட்டியிருந்த உதடுகளைப் பிரித்து சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங் கினாள். தொங்கல் நடையில் போகும் போது அவளது இரட்டைப்பின்னல் ஆடி என்னை விரைந்து வா என்றது. போனவள் திரும்பி என்னை ஒருதடவை பார்த்துச் சிரித்தாள்.
அதன்பிறகு பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது அனேகமாக நாங்கள் இருவரும் ஒன்றாகவே திரும்புவோம். -
அவளால் வகுப்பு என்றுமே கலகலப்புத்தான். "ஹோம் வேர்க்" செய்து கொண்டு வரமாட்டாள். ஒழுங் காக செய்து கொண்டு வந்திருந்தால், அவள் இப்ப எல்லா வகுப்புகளையும் தாண்டி "ஹோம்"இல் இருந்திருப்பாள். -
&: கடந்த வருட முடிவில் எங்கள் பள்ளிக்கூடத் தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பத்தாம் வகுப்புப் பரீட்சையில் ஏழு பேர் பாஸ் பண்ணியிருந்தார்கள். ஐந்து பேருக்கு மேல் பாஸ் பண்ணினால் பதினொராம் வகுப்பு ஆரம்பிப்பேன் என்று கங்கணம் கட்டியிருந்தார். அதிபர். அந்த ஏழு பேரும் தாங்கள்தான் "ஹீரோ" என நினைத்து தலை கால் தெரியாமல் தவிண்டடித்தார்கள். மமதையில் வகுப்பு வகுப்பாகச் சென்று அட்டகாசம் செய்தார்கள். அந்தக் கூட்டத்தில்தான் முதன்முதலாக அந்தக்காவாலியைக் கண்டேன். அவன்தான் யோகன்
கரும்பலகையில் சில கெட்ட வார்த்தைகளை எழுதி எழுதி அழித்தான். அவற்றில் பெரும்பாலான சொற்களுக்கு எனக்கு பொருள் தெரியவில்லை. அந்த பாஷையில் Phd முடித்துவிட்டேன் என்றான் யோகன். ஒவ்வொருமுறை எழுதி அழிக்கும் போதும் தாமரையைப் பார்த்தான். ஒருவேளை அவள்கூட && ಜ್ನ வகுப்பறையை விட்டுப்
 
 
 
 
 

போகும்போது தாமரையின் காதிற்குள் ஏதோ குசுகுசுத்தான். அவளும் வெட்கம் தாளாமல் சிரித்தாள். எனக்குக் கோபம்தான் வந்தது. தாமரையின் அண்ணா திருமணம் செய்த வழியில் அவன் உறவு என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.
69(Dcup60sD "I wants to be" class BL-555). "நீங்கள் எல்லாரும் வருங்காலத்தில் என்னவாக வந்து தொலைக்கப் போகின்றீர்கள்?" என்பது அதன் தமிழ் அர்த்தமாகும். ஆசிரியர் கேட்கின்றார், "என்னவாக வந்து தொலைக்கப் போகின்றீர்கள்?"
“வேறை என்ன? உங்களைப் போலத்தான்" என்றார்கள் பெரும்பான்மையோர். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுமாப்போல் அடி அகோரத்தின் ருஷி அறிந்தவர்கள் அவர்கள். . 韃
"I wants to be an Engineer" என்றேன் நான். " wants to be a Doctor" GT6irpstair Ustaogb5f. "I wants" "I Wants" என்று மூன்று முறை முழுங்கிவிட்டு தமிழில் "டாக்குத்தர்” என்றாள் தாமரை. அதன் பிறகு ஆசிரியர் வகுப்பு நடத்தவில்லை. வாயைத் திறந்தால் சிரிப்புத்தான் வந்தது அவருக்கு. ২৪
எவ்வளவுதான் அழகும் தோற்றமும் கொண்டாலும் அவளிடம் கெட்டித்தனம் இருக்க வில்லை. தாமரை அழகாக இருந்தது அங்குள்ள ஆசிரியர்களில் பலருக்கும் பிடிக்கவில்லை. ஒருமுறை சமூகக்கல்வி படிப்பிக்கும் ஆசிரியர் அவளைச்"சோத்து மாடு" என்று திட்டினார். என்னதான் பேசினாலும் அவற்றைக் கணக்கில் எடுக்கமாட்டாள் அவள். இரண்டொரு தடவைகள் வகுப்பில் தன்னை மறந்து தூங்கியும் இருக்கிறாள்.
பாடசாலைக்கு வந்து மூன்று நான்கு மாதங்கள் இருக்கலாம். ஒருநாள் வகுப்பறையில் வாந்தி எடுத்தாள். தலையைச் சுற்றுகிறது எனப் படுத்து விட்டாள். எங்கள் வகுப்பு ரீச்சர் அவளைத் தனியே கூட்டிச் சென்று ஒபிஸ் றுமில் படுக்க வைத்தார். டாக்குத்தருக்கே வருத்தம் வந்துவிட்டது என்று நாங்கள் ஜோக் விட்டோம். அதன் பிறகு பாடசாலைக்கு வருவதை தாமரை நிறுத்தி விட்டாள்.
"தாமரை ஏன் பள்ளிகூடம் வருவதில்லை?" என ஆசிரியரிடம் கேட்டோம்.
“தாமரை டாக்குத் தருக்குப் படிக்கப் போறதாகச் சொன்னாள் அல்லவா? அதாலை பெரிய பள்ளிக்கூடத்துக்கு மாறிப் போய் விட்டாள்." என்றார் ரீச்சர். ஒருவேளை பாலசுந்தரியும் பள்ளிகூடம் மாறிப் போய்விடுவாளோ எனப் பயந்தேன். ஆனால் அவள் அங்கிருந்தே மருத்துவராவது என்று முடிவெடுத்துக் G65TGOOTLITGir. ধ্ৰুপ্পািঞ্ছ அதன்பிறகு இரண்டொரு மாதங்கள் கழிந்து نیروی یی பாடசாலை யரிலிருந் து வீடு தருமி பிக்

Page 36
கொண்டிருந்தோம். அனிச் சமரத்தில் நிறையப் பழங்கள் இருப்பதைக் கண்டு அணில்கள் போல மரத்துக்கு மரம் தாவினோம். "யாரோ பனை வடலிக்குப் பின்னால் ஒழித்திருந்து எங்களைப் பார்ப்பதாக உமாசுதன் சொன்னான். "அது தாமரை போல இருக்கு" என்றான் நாகநாதன். அவள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததாக நாகநாதன் சொன்னான். மரத்திலிருந்து குதித்து பார்க்கும்போது தாமரை பனைக்குப் பனை ஒழித்துப் பதுங்கிப் போவது தெரிந்தது.
ஏதோ எங்களைப் பார்பதற்காகத் தான் அவள் வந்திருக்க வேண்டும்; பின் ஏதோ தயக்கத்தால் ஒடியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அப் புறம் நானும் உமாசுதனும் வேறு பாடசாலைக்கு மாறி விட்டோம்.
XXX தாமரையின் வீடு வந்ததும் சைக்கிள் சில்லுகள் உருள அடம் பிடித்தன. வீடு மண்டிக் கிடந்தது. கோழியொன்று அடைகாத்த தன் குஞ்சுகளுடன் உல்லாசமாக விரைகின்றது. பூனையொன்று வெப்பை தாளாது வீட்டிற்குள்லிருந்து கிழம்பி பதுங்கிப் பதுங்கி புளியமரப் பக்கம் போகிறது. அங்கு ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எனது அசுமாத்தம் அறிந்து தெருநாய்கள் குரைக்கத் தொடங்கின. பயம் போக சைக்கிள் பெல்லை அடித்தேன். ஆச்சாரியார் வீட்டிற்கு வரும் வரைக்கும் தெருநாய்கள் மூச்சிரைக்கத்துரத்தின. சாரத்துடன் வெறும் மேலுடன் குடிசைக் குள்ளிருந்து துள்ளி வெளியே வந்தான் யோகன். நானும் சைக்கிளிலிருந்து துள்ளிக் கீழே குதித்தேன். காசுத்துண்டை நீட்டி, "காசு வாங்கி வரட்டாம்" என்றேன்.
"அப்பா நாலைஞ்சு வீடு தள்ளி வேலை செய் கிறார். கேட்டு வாறன்"துண்டைப் பறித்தான் யோகன்,
"நானும் வாறன்." "குச்சொழுங்கை நிறைய நெருஞ்சி முள்ளு இருக்கு சைக்கிள் காத்துப் போயிடும். நான் போய் வாங்கி வாறன், நீர் இதிலைநில்லும்."
போனவன் திரும்பி வந்தான். என்னை மேலும் கீழும் பார்த்தான். "செருப்பை ஒருக்காக் கழட்டித் தாரும். நிலம் ஒரே கடாக்கிடக்கு முள்ளும் வேறை குத்தும். உடனை வந்திடுவன்"
"அதுமட்டும் நான் என்ன செய்யிறது?"
"வீட்டுத்திண்ணையிலை வந்து இரும்!" : "பரவாயரில் லை. நான் இதரி ைலயே சைக்கிளிலைநிக்கிறன்"
குச்சொழுங்கைக்குள்ளாலை ஆடி அசைந்து
 
 
 

போனவன் போனதுதான். பிறகு வரவில்லை. அரைமணி நேரமாகியும் அவனைக் காணவில்லை. காசும் வரவில்லை. இருந்த செருப்பும் போய் விட்டது. செருப்பு என்ன பாடுபட்டு வரப் போகிறதோ என நினைக்க பயமாக இருந்தது. அந்தப் பயத்தில் கால்கள் வியர்வை கோர்த்து பிசுபிசுத்தன.
கோயில் மணி மூன்று முறை அடித்து ஓய்ந்தது. பூசை ஆரம்பமாவற்கு அறிகுறி. நானும் எனது சைக்கிள் பெல்லை மூன்று தடவைகள் அடித்தேன்.
"வீட்டிலை யாரும் இல்லையா?" குரல் எழுப்பினேன். ஜன்னல் சீலைக்குப் பின்புறம் ஒரு பெண் கையில் குழந்தையுடன் நிற்பது தெரிகிறது. அவளின் வயிறு பூசணிக்காய் போல் பெருத்திருக்கின்றது. இன்னொரு குழந்தையோ?
"வீட்டிலை யாராவது." மீண்டும் குரல் கொடுத்தேன். காசு வாங்காவிட்டாலும் பரவாயில்லை. பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஆனா செருப்பு வந்தாகனுமே!
“என்ன வேண்டும்?” ஜன்னல் சீலையை விலத்தி கொஞ்சம் முகத்தைக் காட்டினாள். அதிர்ச்சி. முப்பத்தைந்து வயதுத் தோற்றத்தில் முகம் காட்டி மறைந்த அந்தப் பெண் - தாமரை.
தாமரையின் முகம் சந்தோஷமில்லாமல் வாடியிருந்தது. நான் ஒன்றுமே கதைக்காமல் திரும்பிவிட்டேன். சேற்றில செந்தாமரை முளைக்கிற மாதிரி - தாமரை இந்த சமூகத்திலை ஏன் வந்து பிறந்தாள்? என்ற கவலையில் நெஞ்சு வெடிக்க மனம் விம்முகின்றது. திரும்பி வீடு நோக்கி நடக்கின்றேன். எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து ஒன்று பற்றைக்குள் பதுங்கி நின்ற கோழிக்குஞ்சுகளில் ஒன்றைக் கொத்திக் கொண்டு போனது.
ஓடிக்கொண்டிருந்த கிராமபோன்தட்டு சாவிக் குறைவினால் அவல ஒலிஎழுப்பியது. அதுவே கடைசிப்
பாட்டாக இருக்க வேண்டும்.
இதழ் 58

Page 37
கிருஷ்ணமூர்த்தி(அவுஸ்திரேலியா)
மெல்பனில் ட
குமிழ் - சிங்கள இலக்கி
அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேச பல்லின மக்களும் இங்கு வாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில், இங்கு நீண்டகாலமாக வாழும் இலங்கைத்தமிழர்கள் இருவருடைய தாய் மொழி இலக்கியப் படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன.
இந்த நூலகம் அமைந்துள்ள பிரதேசத்திலும் அதற்கு அண்மித்த நகரங்களிலும் சுமார் 120 மொழி பேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை. கிரகிபேர்ன் நகரத்தில் இலங்கைச்சிங்கள சமூகத்தினர் செறிந்துவாழ்கின்றனர். அதனால் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களுக்கு இங்கு பரவலான அறிமுகம் கிட்டியது மிகவும் பொருத்தமானதுதான்.
இந்த நகரம் ஹியூம் மாநகரசபைக்குள் வருகிறது. இந்த மாநகர சபையின் அங்கத்தவராக தெரிவாகியிருப்பவர் சந்திரா பமுனுசிங்க என்ற சிங்கள அன்பர். அவர் இனநல்லிணக்கத்தை மதிப்பவர். அத்துடன் சமூக ஒன்று கூடல்களின் ஊடாக புரிந்துணர்வை சமூகங்களுக்கிடையில் தொடர்ச்சியாகப் பேணுவதற் காக உழைத்துவருபவர். அவரது முன்முயற்சியினால் நடந்த இந்த தமிழ் - சிங்கள ஆங்கில பரிவர்த்தனை இலக்கிய நிகழ்ச்சியில் ஹியூம் மாநகர மேயர், கவுன்ஸி லர் ஜீயோஃப் போர்டர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியதுடன் குறிப்பிட்ட நூல்களையும் பெற்றுக்கொண்டு வெளியிட்டுவைத்தார்.
வெளியிடப்பட்ட நூல்கள். நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு சமணலவெவ. உனையே மயல்கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost in you முருகபூபதியின் மிழ்ச் சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு தகசெவனெலி.
கவுன்ஸிலர் சந்திராபமுனுசிங்க தலைமையில் டந்த இந்நிகழ்ச்சியில் எஸ். பி. எஸ். சிங்கள ஒலிபரப்பு ஜீவநதி
 
 
 
 

யப்பரிவர்த்தனை நிகழ்வு
மெல்பன் ஊடகவியலாளர் திரு. விஜய கருணாசேன வரவேற்புரை நிகழ்த்தினார். மேயர் தமது உரையில், " மக்கள் நூலகங்களை முடிந்தவரையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முதல் தடவையாக இந்த நூலகத் தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது ஏனைய மாநகர சபைகளுக்கும் முன்மாதிரியாகத்திகழும். மொழி பெயர்ப்புகள் இனங்களை தெரிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவும். இன்று இங்கு வாழும் இரண்டு இலங்கைத்தமிழர்களான நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோருடைய நூல்கள் சிங்களத்திலும் ஆங்கிலத் திலும் அறிமுகமாகின்றன. ஏனைய மாநகர நூலகங் களிலும் இதுபோன்ற இன நல்லிணக்கத்தை உருவாக் கும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும். இந்தப்பிரதேசத்தில் இலங்கை மக்களான தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கி இனத்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து நான் கவனம் செலுத்துவேன். அவர் களுக்கென சமூக மண்டபம் ஒன்று தேவைப்படுவதை உணருகின்றேன். இதுபோன்ற சந்திப்புகள் எதிர் காலத்திலும் தொடரவேண்டும்." என்று தெரிவித்தார். நூலாசிரியர்கள் பற்றிய அறிமுகத்தை சமூக செயற் பாட்டாளர் திரு.இராஜரத்தினம் சிவநாதன்நிகழ்த்தினார்.
Lost in you b TG))6CDG) el joup85 UGB55 உரையாற்றிய திருமதி முரீமாவோ எதிரிவீர தமது உரையில், "எமது சமூகங்களில் அன்றாடம் மறைக்கப் பட்டுவருகின்ற உளரீதியான நோய்கள் குறித்து இந்நாவல் பேசுகிறது. ஏற்கனவே தமிழில் வந்திருக்கும் இந்நாவல் ஏனைய சமூகத்தவரின் சிந்தனைக்காகவும் ஆய்வுக்காகவும் ஆங்கிலத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது." என்றார். சமணலவெவ நாவலை, விக்ரோரியா மாநில முன்னாள் இலங்கைத்தூதுவ ராலய கொன்ஸலேட் திரு.பந்து திஸாநாயக்கா அறிமுகப்படுத்தி உரையாற்றுகையில் தெரிவித்ததா வது: "இந்தக்கதை அரசியலும் பேசுகிறது காதலும் பேசுகிறது. இரண்டுக்கும் இடையே எமது இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது. தமிழில் வண்ணாத்திக்குளம் என்ற
- இதழ் 58

Page 38
பெயரிலும் ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரிலும் வெளியாகி தற்போது சிங்களத்தில் வெளியாகி யிருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு முயற்சி முன் மாதிரி யானது. இங்கு வாழும் எமது சிங்களசமூகத்தினர் மத்தியில் வெளியாகும் பஹன இதழிலும் இக்கதை தொடராக வெளியாகிறது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.”
முருகபூபதியின் சில சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் மதக செவனெலி பற்றி உரை யாற்றிய கடபத்த என்னும் மாத இதழின் ஆசிரியர் திரு. சாமந்த தென்னகே உரையாற்றுகையில் "தமிழ், சிங்கள். முஸ்லிம் மக்கள் இலங்கை அரசியல் நெருக்கடிகளில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது பற்றி யதார்த்தமாக சித்திரிக்கும் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. கொழும்பின் புறநகரில் வாழும் தேவகியும் ஜேமிஸ் ஐயாவும், யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த பாத்திமாவும் கிழக்கிழங்கையிலிருந்து வந்த ராணியும் கதைகளில் வருகிறார்கள் இவரது கதைகள் ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரித்தானது அல்ல." என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஏற்புரை வழங்கிய டொக்டர் நடேசன் தமது உரையில், “இலக்கியத்துறைக்கு நான் வந்தது தற்செயலானது. எனது மிருகவைத்திய தொழில் அனுபவங்களை முதலில் எழுத்தில் பதிவுசெய்தேன். அதன் தொடர்ச்சியாக நாவல்கள் எழுதத்தொடங்கினேன். எனது நாவல்கள் இரண்டும் எனது தாய்மொழியில் முதலில் வந்து தற்போது சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வரவாகியுள்ளன. இதன்மூலம் இனநல்லிணக்கத்திற்கு பெரிய சேவை செய்துவிட்டதாக நான் கருதவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளில் சிறுபங்காளனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.” என்றார்.
முருகபூபதி தமது ஏற்புரையில் இதுவரை காலமும் இலங்கையில் தமிழ் - சிங்கள் இலக்கியப் பரிவர்த்தனை ஊடாக வெளியான நூல்களின் விரிவான பட்டியலை சமர்ப்பித்ததுடன், மகாகவி பாரதியாரின் வாழ்க்கைச் சரிதம் மற்றும் அவரது கவிதைகள் சிங்களத்தில் வெளியாகியிருக்கும் தகவலையும் சொன்னார்.
சிஹனத் மாத இதழின் ஆசிரியர் திரு. வில்பிரட் ஸ்ரீவர்த்தன் நன்றி உரையாற்றுகையில், கலை, இலக்கிய, ஊடகவியலாளர்களுக்குரிய சமூகப் பொறுப்புணர்வை இந்த இலக்கிய பரிவர்த்தனை அரங்கு உணர்த்தியுள்ளது. இந்தப்பணி இத்துடன் முற்றுப்பெற்றுவிடாமல் ஏனைய பிரதேசங்களிலும் மாநிலங்களிலும் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் தொடரவேண்டும்” என்றார்.
ஜீவந்தி -

காலம் உருட்டும் சூதாட்டத்தில்
هجرة المسه..
காலம் மீண்டும் மீண்டும் உருட்டும் சொற்களின்
சூதாட்டத்தில் இம்முறை சகுனிக்குப் பின் பாண்டவரே நிற்கையில் விலைபோகப் போவது எங்கள் விடுதலை மட்டுமல்ல விருப்பங்களுந்தான் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
எம் வார்த்தைகளில் மட்டும் வாழும் மந்திரம் நிஜத்தில்
இரண்டுபட்டு மூன்றுபட்டு சிதறிப்போன தேங்காய்களாய் நாம் கஷ்டப்பட்டதெல்லாம் கனவாய்ப்போக ஆறடி நிலம் கூட தர மறுக்கும் துரியோதனாதிகளிடம் அடகு வைக்கப்படுகிறது எங்களின் எதிர்காலம் எந்த ஆண்டவன் தான் காப்பானோ!
-புலோலியூர்வேல்.நந்தகுமார்
பி
இதழ் 58

Page 39
தமிழ் அரங்கு வெ
சிட்னியில் நடந்த 13 ஆவது தமிழ் எழுத்தாளர் 6 எனக்குத்தந்த உடல் என்னும் காலாண்டிதழ் கனதியான உ இதழையும் விழாவில் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று 6 அவுஸ்திரேலியாவில் பல கலைஞர்கள் கூத்து, இன் இனிவரும் விழாக்களில் குறிப்பிட்ட துறைசார்ந்தும் இதழ் தொடர்பாக கருத்தரங்குகள் நடத்தலாம் என்று பரிந்துரைக்க "கூத்து பாரம்பரியமிக்க எமது கலை, அை கலைவடிவங்களைத் தோற்றுவிப்பதற்கான ஒரு முன்னெ( எமது உரிமைகளை மீட்டெடுக்கவும் முடியும்" என்ற நம் வெளியாகிறது உடல் இதழ். பிரான்ஸில் வதியும் கலைஞர் ஜெர்மனி, நோர்வே, அவுஸ்திரேலியா முதலான நா இருக்கிறார்கள். 2013 தை-மாசி-பங்குனி இதழ் ஈ அவர்களுக்கான சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது.
வைரமுத்து அவர்களைப்பற்றி இதழ் ஆசிரியர் தமது "வீறு , கனிவு, கவர்ச்சி மூன்றும் ஒருங்கிணைந்து ஒருவனாக அவரது இசையோடு இணைந்த நடிப்பைக் அவரைப்பக்கமாய் நின்று பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட மட்டுமல்ல, எப்போதும் என்னிடம் சொற்கள் இல்லை."
“பாடலை நடிப்பாக்கிய மகா கலைஞன்” என்ற த நாடக அரங்கின் நந்தாவிளக்கு நடிகமணியின் இசை ஆளு ரசித்த நடிகமணி" என்ற தலைப்பில் அப்புக்குட்டி ராஜ( பதிவுசெய்துள்ளனர். நடிகமணி குறித்த திறனாய்வு அறிமுகத்
கனடாவில் வதியும் கலைஞர் கே.எஸ். பாலச் சித்திரிக்கிறது சட்டத்தரணி மனுவேல் ஜேசுதாசன் எழுதியி தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் என்று ஆழமா கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலையும் அவர் பை சங்கரதாஸ் சுவாமிகள் ஊட்டிய தமிழ் நாடக இ தமிழுக்கும்தான் என்று சொல்கிறது, அவர்பற்றிய முனைவர் மெல்பனில் மாவைநித்தியானந்தனின் மூன்று சிறு இளையபத்மநாதன் சமர்ப்பித்த சிறுவர் அரங்கு என்னும் கட்( சில தேடல்கள், முல்லை அமுதனின் சுஜித்,ஜி. எனும் அற்பு வதியும் கலைஞ கிருஷாந்தி பாலசுப்பிரமணியம், ! நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. உடல் ஏப்ரில் - மேபேராசிரியர் மெளனகுரு, முனைவர் பா. இரவிக்குமார், பிரியசிவா, வாசுகி நல்லையா, யமுனா ராஜேந்திரன், சுபாஷ் ஆகியோரின் படைப்புகளும் பதிவாகியுள்ளன.நாடகம், நா திரைப்படம் தொடர்பாகவும் உடல் உள்ளடக்கம் இரு எம்மவர்களுக்கு இந்த காலாண்டிதழ் பயன்மிக்கது.
ஜீவநதி -37
 
 

விழாவுக்குசென்றிருந்தவேளையில் நண்பர் கருணாகரன் ள்ளடக்கத்துடன் அமைந்திருந்ததை கண்ணுற்றேன். இந்த ாண்ணத்தோன்றியது. சைநாடகம், நாடகம் என்பனவற்றுடன் ஈடுபாடுள்ளவர்கள். }களை நுால்களை வெளியிட்டு இந்தக்கலைத்துறைகள் விரும்புகின்றேன். தப்பேணிக்காப்பது மிக அவசியம். தமிழில் புதிய நிப்பு. கலைகளினூடாக தமிழ்த்தேசியத்தை வளர்க்கவும் பிக்கை வார்த்தைகளுடன் காலாண்டுக்கு ஒரு முறை எம். அரியநாயகம் இந்த இதழின் ஆசிரியர். பிரான்ஸ், டுகளில் உடல் இதழுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ழத்து கூத்துக்கலைஞர் மறைந்த வி.வி.வைரமுத்து
து ஆசிரியதலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:-
மலரும் ஒரு கலைமுகம். ஆயிரம் ஆயிரமாய் மக்களுள் *கண்டு, கேட்டு கண்கள் பனிக்க சுவைத்த எனக்கு அந்த இனிய உணர்வை வெளிப்படுத்துவதற்கு அப்போது
லைப்பில் பேராசிரியர் மெளனகுருவும், "ஈழத்து இசை மை” என்ற தலைப்பில் கலாநிதி த. கலாமணியும், "நான் கோபாலனும், நடிகமணியின் ஆளுமையை சிறப்பாக தை இந்த ஆக்கங்களில் காண முடிகிறது. *ந்திரனின் கலை உலக வாழ்வையும் பணிகளையும் ருக்கும் கட்டுரை. மேடை நாடகம், வானொலி நாடகம், கத்தடம்பதித்த கலைஞர் பாலச்சந்திரன். அத்துடன் >டத்தவர். இசை, நாடகத்துக்கு மட்டும் இனிமை சேர்க்கவில்லை, க. இரவீந்திரனின் கட்டுரை. ※ வர்நாடக நூல்களின் வெளியீட்டரங்கில் அண்ணாவியார் }ரை, க. ஆதவன் எழுதிய சிறுவர் அரங்கும் சவால்களும் நக்கலைஞன், முதலான கட்டுரைகளுடன் ஜெர்மனியில் நமிழகக்கலைஞ லட்சுமி அம்மாள் ஆகியோரின் ஜூன் மாதங்களுக்கான இதழில் அரவிந்த் அப்பாத்துரை, முனைவர் கரு. ஆழ. குணசேகரன், மணிபல்லவன், சிவா, குழந்தை சண்முகலிங்கம், ஜே.எஸ். அனார்க்கலி ட்டுக்கூத்து முதலான துறைகளைப்பற்றியும் குறும்படம் ப்பதனால் இந்தத்துறைகளில் ஈடுபடும் - பயிலும்
- இதழ் 58

Page 40
வானம் அழுதுகொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதில் எனது பேத்தி மாயாவும் அழத்தொடங்கி விட்டாள். எப்பொழுதும் மாயப்புன்னகையுடன் தோன்றும் அவளை அழுகையுடன் பார்க்கச் சகிக்க வில்லை.
திருவிளையாடல் படத்தில் நகேஷ் தருமி, சிவாஜி சிவனிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்று "சகிக்கமுடியாதது.?" பதில் பச்சிளம்குழந்தையின் அழுகை, ஆம். உண்மைதான். இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஏ.பி.நாகராஜன் தனது அனுபவத்தில்த ான் அதனை எழுதியிருப்பார் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருடைய அனுபவமும் அப்படித்தான்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை அவதானநிலையத்தினர் தொலைக்காட்சிகளிலும் வானொலி மற்றும் ஊடகங் களிலும் சொல்லியிருந்தனர். அத்தகைய மழைக் காலத் தில் ஒருநாள் மருத்துவ பரிசோதனை முடிந்து மெல்பனிலிருந்து தொலைவில் உள்ள எனது புதிய ஊருக்குச்செல்லவிருந்தேன்.
ரயிலையும் பஸ்ஸையும் தவறவிட்டபடியால் மெல்பனிலிருக்கும் மகள் வீட்டுக்குச்செல்லும்போது இரவு 11 மணியாகிவிட்டது. பேத்தி ஆழ்ந்த உறக்கம். காலை எழுந்ததும் அவளுடன் விளையாடலாம் பொழுதைப் போக்கலாம் என்று நம்பியிருந்தேன். பேத்தி வாரத்தில் ஒருநாள் குழந்தை பராமரிப்பு நிலையத்துக்கு சென்று வருகிறாள் என்பதை அறிந்தவுடன் சற்று கவலை வந்துவிட்டது. மறுநாள் விடிந்தால் வெள்ளிக் கிழமை, அன்று பேத்தி குறிப்பிட்ட ராமரிப்பு நிலையத் திற்குப்போகவேண்டும். மகளும் மருமகனும் காரை ரயில் நிலையத்தில் தரித்துவிட்டு நகரத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும். அத்துடன் மகளை வாரத்தில் ஒரு நாளாவது பராமரிப்பு நிலையத்தில் விடவேண்டும்.
நான் அந்த வீட்டிலிருந்து பேத்தியை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு குழந்தை பராமரிப்புக்கும் விசேட பயிற்சிகள் இருக்கின்றன. என்னிடம் அவை இல்லை இலங்கையில் எனது குழந்தை களையும் அக்கா, தங்கை குழந்தைகளையும் நன்றாக பராமரித்து வளர்த்த அனுபவம் இருந்த போதிலும் அந்த அனுபவம் இந்த கடல் சூழ்ந்த கங்காரு நாட்டுக்குப்பயன்படாது.
"அப்பா. உங்கள்.பேத்தி வெளியே ஏதாவது
ஜீவநதி
சொல்லவேண்டிய கதைகள் 7 -
@୫&ଶୀ
38
 
 
 

ஒரு பராமரிப்பு நிலையத்தில் வாரம் ஒரு முறை
யாவது சில மணிநேரங்கள் இருந்தால்தான் பின்னர் தன்னம்பிக்கையுடனும் சூழலைப்புரிந்து கொண்டும் வாழும் வளரும். அங்கே இவளைப் போன்று பல பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களுடன் இவள் பேசிச் சிரித்து விளையாடினால்தான் பின்னர் பாடசாலைக்குச் செல்லும்போது தயக்கம் பயம் இல்லாமல் படிப்பாள்" என்று எனக்கு ஆறுதல் சொன்னாள் மகள்.
மகளது கருத்தையும் ஏற்றுக்கொண்டு, அவர் களின் காரில் நானும் புறப்பட்டேன் பேத்தி உற்சாகமாகத் தான் சிரித்தவாறு புறப்பட்டுவந்து காரில் ஏறி தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தாள்.
மகள், "அப்பா. இவளை அங்கே விட்டு விட்டு புறப்படும்பொழுது BYE என்ற மூன்று எழுத்துக் களை சொல்லவேண்டாம்." என்று எச்சரித்தாள்.
அப்படிச்சொன்னால் அவள் அழத்தொடங்கி விடுவாளாம். அதாவது விட்டுவிட்டு போவதற்கான அடையாளச்சொல்தான் அந்த டீலுநு.
அந்தக் குழந்தை பராமரிப்பு நிலையத் திற்கு (Child Care Centre) வெளியே நின்றவாறு உள்ளே கண்ணாடி ஊடாகப்பார்த்தேன். அங்கு அந்த குளிர்காலவேளையிலும் எனது பேத்தியின் வயதை ஒத்த சில குழந்தைகள் வந்து விளையாடிக் கொண்டிருந்தன. மகளும் மருமகனும் பேத்தியை அங்கு கடமையிலிருந்த பெண்ணிடம் ஒப்படைத்த போது அவள்விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டாள். என்னால் அந்தக்காட்சியை சகிக்கமுடியவில்லை.
நான் எனக்குள் அழத்தொடங்கிவிட்டேன். மகளும் மருமகனும் வெளியே வந்தார்கள். எனது
வாடிய முகத்தைப்பார்த்த மகள் சொன்னாள்," அப்பா முன்பொரு காலத்தில் இலங்கையில் நீங்களும்
வேலைக்குப்போகும்போது என்னை பாலர் பாடசாலை யில் (Kinder Garden) விட்டுச்சென்றீர்கள்தானே..? அப்பொழுதும் நான் அழுதிருப்பேன். அதுபோன்றே இதனையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பேத்தி இப்போது அழுவாள். பிறகு சமாதானமடைந்து ஏனைய குழந்தைகளுடன் விளையாடத் தொடங்கி விடுவாள்." என்று எனக்கு ஆறுதல்சொன்னாள்.
எனினும் கனத்த மனதுடன் அவர்களிட மிருந்து விடைபெற்று வேறு ஒரு திசையில் செல்லும் ரயிலில் ஏறினேன். பேத்தியின் விம்மிய முகமே
இதழ் 58

Page 41
கண் களை நிறைத்திருந்தது. மகளும் மருமகனும் நகரத்திற்கு வேலைக்குச் செல்லும் திசையில் ரயில் ஏறினார்கள்.
உலகத்தில் எல்லோருமே வெவ்வேறு திசைகளில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் திசைகள் சிந்தனையாகவும் இருக்கிறது. மனிதப்பிறவியில் குழந்தைப்பருவத்திற்கும் முதுமைப்பருவத்திற்கும் இடையே நிரம்ப ஒற்றுமைகள் இருக்கின்றன. குழந்தை களும் முதியவர்களும் குறிப்பிட்ட பருவத்தில் பராமரிப்புக் குரியவர்கள்தான். அதனால்தான் உலகெங்கும் குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையங்கள் பல்கிப் பெருகியுள்ளன. இயந்திரமாக மக்கள் இயங்கிக் கொண்டி ருக்கும் நான் வாழும் அவுஸ்திரேலியா உட்பட மேலை நாடுகள் எங்கும் இந்த நிலையங்களில் பணியி லிருப்பவர்கள் விசேட தொழிற் பயிற்சிகளுக்குச்சென்று சான்றிதழும் பொலிஸ் சான்றிதழ் மற்றும் Working with children, Working with elderly people 316(DLUITGIT 360L யும் பெற்றிருக்கவேண்டும். பின்னர் காலத்துக்குக் காலம் நடக்கும் பயிலரங்குகளிலும் பங்கேற்க வேண்டும். முதலுதவிசிகிச்சைகள்பற்றியஅனுபவங்கள் பெறவேண்டும்
இலங்கையில் பலாங்கொடையில் எனது அக்காவின் கணவர் ஒரு தேயிலைத்தோட்டத்தில் Field officer co95 LJ600flufì6óìø555[TỦ. LJTLỡT6060 விடுமுறை காலங்களில் அக்காவீட்டிற்கு வந்து விடுவேன். மச்சானுடன் தோட்டத்தை சுற்றிப்பார்க்கப் போவேன் அங்கேகொழுந்து பறிப்பவர்களையும் தேயிலைக் கொழுந்து நிறுக்கும் இடம் மற்றும் பிள்ளை மடுவம் ஆகியனவற்றையும் அதிசயத்துடன் பார்ப்பேன்.
தோட்டப்புறங்களில் பிள்ளை மடுவத்தில் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் பச்சிளம்
காட்சிகளைப்பார்த்தவேளைகளிலும் என்னால் சகிக்கமுடியா டிதிருக்கும். அந்தப்பிள்ளை மடுவங்களையும் நாம் ஆங்கிலத்தில் Child care எனச்சொல்லலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் லண்டனில் நண்பர் ராஜகோபால் வெளியிடும் "தமிழன்" இதழில் ஒரு விளம்பரம் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
இதுதான் அந்த விளம்பரம்: " 80 வயது தமிழ் அம்மாவுடன் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையும் பேசிக்கொண்டிருப்பதற்கு GU60ct தேவை. வாராந்த ஊதியம் தரப்படும்."
இதனைப்படிக்கும் நாம் அந்த விளம்பரத் தின் பின்னணியை புரிந்துகொள்வது இலகுவானது. அந்த வீட்டிலிருக்கும் கணவன், மனைவி வேலைக்குப் போய்விடுவார்கள். பிள்ளைகள் UITL&FIT606)5(35T அல்லது வேலைக்கோ சென்றுவிடுவார்கள். வயது முதிர்ந்த அந்த மூதாட்டியை பகல் பொழுதில் பராமரிக்க ஆள் தேவைப்படுகிறது. முதியோர் இல்லத்திற்கு அந்த மூதாட்டி செல்லவிருப்பமற்றவராக இருக்கலாம். அல்லது அதற்கான செலவை சமாளிக்க முடியாமல் வீட்டுக்கு ஒரு ஆளை சில மணிநேரங் களுக்கு நியமித்து
ஜீவநதி
 
 
 
 

பராமரிக்க முடிவு செய்திருக்கலாம்.
அந்த மூதாட்டிக்குத்தேவையான மதிய உணவு குளிர்சாதனப்பெட்டியிலிருக்கலாம். பகலில் பராமரிக்க வருபவர் அதனை எடுத்து சூடாக்கி உண்ணக் கொடுக்கலாம். தொலைக்காட்சியை இயக்கி விடலாம். தேநீர், கோப்பி, சூப் தயாரித்துக் கொடுக்கலாம். குளிய லறைக்கும் மலகூடத்துக்கும் கைபற்றி அழைத்துச் GajabalogosTib.
குறிப்பிட்ட விளம்பரத்தை லண்டன் இதழில் பார்த்து சுமார் பத்துவருடங்களின் பின்னர் இலங்கை யில் கொழும்பில் ஒரு தமிழ் தினசரியிலும் அதே போன்றதொரு விளம்பரம் பார்த்து அதிசயித்தேன். அப்படியாயின் இலங்கையிலும் இயந்திரகதியான வாழ்க்கை முறை தொடங்கிவிட்டதா?
இலங்கையிலும் பல இடங்களில் முதியோர் இல்லங்களை காணமுடிகிறது. வெள்ளவத்தை யில் ஒரு தமிழ் முதியோர் இல்லத்தை பார்த்தேன். அங்கிருக்கும் மூதாட்டிகளின் பிள்ளைகள் வெளி நாடுகளில் வசிக்கிறார்கள். பணம் கிரமமாக வருகிறது. அதனால் அவர்கள் அங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் எம்மவருக்கும் அந்திம காலம் முதியோர் பராமரிப்பு நிலையம்தான் என்பது தெளிவானது. 6) (15 சம்பவத்தை இச்சந்தர்ப்பத்தில் சொல்லாம்.
ஒரு மூதாட்டியை அவளது மகள் ஒரு முதியோர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிப் பதற்கு அழைத்துச்சென்றாள்.
அந்த மூதாட்டி அழத்தொடங்கிவிட்டாள். "ஏனம்மா என்னை இங்கே அழைத்துவருகிறாய். வீட்டிலே நான் பேரப்பிள்ளைகளை பார்த்துக் கொண்டு சந்தோஷமாக இருந்திருப்பேனே." என்று கலங்குகிறார்.
உடனே மகள், " அம்மா ஒரு காலத்தில் நீங்கள் என்னை Child care இல் விட்டுவிட்டு வேலைக் குப் போனிர்கள். தற்போது நீங்கள் முதுமையடைந்து விட்டீர்கள். நான் வேலைக்குப் போக வேண்டும் கணவரும் போகவேண்டும் எனதுபிள்ளைகள் பாடசாலைக் குப் போகவேண்டும். அதனால்தான் உங்களை Age care இல் அனுமதிக்கின்றேன்." எனச் சொன்னாள்.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்பது
போன்று மகளும் ஒரு நாளைக்கு மூதாட்டிதான்.
வாழ்க்கையின் இந்த சுழற்சியிலிருந்து எவரும் தப்பவே முடியாது.
ஓரிடத்தில் பிறந்தாலும் பயணங்கள் வெவ்வேறு திசையில்தான். எனது மகளும் என்னை ஒரு நாள் முதியோர் இல்லத்தில் விடலாம். அதே போன்று தற்போது குழந்தை பராமரிப்பு நிலையம் செல்லும் எனது பேத்தியும் தனது தாயை அதாவது எனது மகளை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் விடலாம்.
அப்பொழுது விஞ்ஞான தொழில் நுட்பங் களும் மாறி இருக்கலாம்.
இதழ் 58

Page 42
0 சிறுவர் அமுதம்
சிறுவர் பாடல்களை இயற்றுவது என்பது மிகவும் சிரமL சிறுவர் பாடல்களை இயற்றும்போது சிறுவர்களின் ம கவனத்தில் கொண்டே பாடலை இயற்றவேண்டும். சிறுவர் 1 மட்டுமே இரசிக்கும் தன்மை வாய்ந்தது. ஒரு பொருளையே பறவையையோ சிறுவர் நோக்கும் போது அதன் உருவம், பயன்பாடு, செயற்படும் விதம் என்பவற்றையே நோக் வகையில் சிதம்பரபத்தினி அம்மாவின் பெரும் முயற்சியின் குரல் அமுதம்" என்னும் சிறுவர்பாடல்கள் தொகுப்பு வெளிவர இத்தொகுப்பில் 30 பாடல்கள் இடம்பெற்றுள்ள இயல்பான விருப்பார்வங்கள், ஆசைகள் என்பவற்றை சிதம்பர பத்தினி அம்மா இத்தொகுப்பில் உள்ள பாடல்க:ை சிறுவர்களை கவரும் எளிமையான கவர்ச்சியான மொழிந முக்கியத்துவத்தை கூட்டுகின்றது. சிறுவரைக் கவரும் வகை பொருத்தமான படங்களையும் ஆசிரியர் பாடல்க இணைத்துள்ளார். பாடல்கள் அனைத்துமே மொட்டோடு, நல் பாடப்பட வல்லவை.
சிறுவர்கள் அன்றாடம் காணும் பொருட்ச விளையாட்டுகள், காட்சிகள், மிருகங்கள், பற6ை உணவுவகைகள், மரங்கள் இவரது பாடல்களின் கருப் பொரு ஒவ்வொரு கதையை தம்முள்ளே கொண்டுள்ளன. சிறுவர் அனேகமான பாடல்கள் காணப்படுகின்றன; சிறுவர்களின் பாங்கு இப்பாடல்களில் காணப்படுகின்றது. உதாரணமாக, "வி
நாளும் பொழுதும் வளர்ந்த செடிகளில் காயும் கனியும் பெற்றிடலாம் ஆளும் பேரும் தோட்டம் செய்தால் நல்ல உணவும் பெற்றிடலாம்." இத்தொகுப்பில் உள்ள பாடல்களின் சொல்லாட் அலங்கரிக்கின்றது. ஆசிரியர் இவ்வாறான பாடல்களை இ இந்த பாடல்களை மேலும் பரவலாக்கம் அடையச் செய்ய வருகின்ற காலகட்டத்தில் இவ்வாறான நூல்களின் வருகை கதைகளையும் எதிர்பார்க்கலாம்.
ஜீவநதி -40
 
 
 
 
 
 

அம்மாவின் ான பார்வைகள்
)ான காரியமாகும். ன உணர்வுகளை மனம் மகிழ்ச்சியை பா, விலங்கையோ, அழகியல் தன்மை, குவார்கள். அந்த T பயனாக "சிறுவர் ந்துள்ளது.
Tன. சிறுவர்களின் மனதில் கொண்டு ள இயற்றியுள்ளார். டையே இந்நூலின் யில் பாடல்களுக்கு ளுக்கு அருகாக }ல இசை அமைத்து
1ள், மனிதர்கள்,
பகள், பழங்கள், நட்களாக அமைந்துள்ளன. இவரது ஒவ்வொரு பாடலும் களுக்கு நல்ல புத்திமதிகளை சொல்லும் பாடல்களாக சிந்தனையைக் கிளறி அவர்களை சிந்திக்க தூண்டும் ட்டுத் தோட்டம்" என்னும் பாடலில்:
சி, சந்தம், எளிமையான சொற்திரட்டு இத்தொகுப்பை துவட்டுகளில் நல்ல இசையுடன் வெளியிடுவதன் மூலம் லாம். சிறுவர் இலக்கிய முயற்சிகள் வீழ்ச்சியடைந்து மிகவும் அவசியமானது. ஆசிரியரிடம் இருந்து சிறுவர்
- இதழ் 58

Page 43
12) நானோ இதற்கு நாயகமேடுவாழ்
இந்த உலகில் காதலும், அன்பும், இசை ரசனைய உயிரிகள் இல்லை. அனைவருமே காதலும், அன்பும், மிக்கவர்களாக வாழ்ந்து வருவதைக் கண்ணுற்று வ வகையில் சிதம்பர பத்தினி அம்மா, தனது கணவர் தி அவர்கள் மீது கொண்ட காதலையும், இசைமீது அவர் செ இந்நூல் பேசி நிற்கின்றது.
ஈழத்து இலக்கிய உலகிற்கு இந்நூல் சற்று வித்திய படைப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. பொதுவ சொந்த அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக, சுய வருவதையும், ஒருவர் வாழ்வு பற்றி இன்னொருவர் அவ அல்லது மணிவிழா, பவளவிழா போன்ற மலரிலோ அனைவரும் அறிந்துள்ளோம். இவற்றில் பல சுயு பு எழுதப்படுபவையாகவும், கலைநயம் அற்று இருப்பதும் ( இந்நூல் மிகவும் கலைநயத்தோடு ஒரு நாவல் 1 மொழிக்கையாளுகையை பயன்படுத்தி வாசகனை நா மனப்பதிவோடு வாசிக்க செய்யும் கலைப்படைப்பாக படை பத்தினி அம்மாவின் வாழ்க்கை மிகவும் கல வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பத்தினியம்மா இசைமீது கொண வந்த திலகநாயகம்போலின் திறமையும், அவர்கள் இசை ச சிறப்பாக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருக்கி இணைத்து வைக்கின்றது. தமிழர்களைப் பொறுத்தவரையி இங்கு சொல்லப்படுகின்றது. இருவரும் காதலால் இ6ை அனுபவங்கள் பற்றியும், கலை ஈடுபாடுகள் பற்றியும், இரு தொழிற் சேவைகள், உதவித் திட்டங்கள் பற்றியும் இந்நூல உன்னதமான வாழ்க்கைக் காலங்களை இந்நூலில் மிகச்சிறப் இசை மீது கொண்ட தீராக்காதலும், அவர் இசைக்காக வேளையிலும் இசையை கற்றுக் கொடுத்து வந்த எளிமைய வியக்க வைக்கின்றது.
குடும்பங்கள் சீர்குலைந்து, Eg0 தலையெடுத்து வ புரிந்துணர்வு மிக்க காதல் மனத்தால் இணைந்து வாழ்ந்த 8 கூறப்பட்டுள்ளது. புதிதாக திருமண பந்தத்தில் இணையும் இந்நூலில் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நி தமிழர்களிடையே நிலவிய சடங்குகள், உணவுப் ப பேச்சு வழக்கு, மருத்துவக் குறைபாடுகள், சங்கீத ஈடுபாடு, த்ெ பாதிப்புக்களும் என பலவற்றை இந்நூலில் இருந்து அறிந்து ஊழியராக, நல்லதொரு மனைவியாக, நல்லதொரு தாயாக, மிக்க பெண்ணாக, மனிதாபிமானம் மிக்க ஒரு பெண்ணாக ! முடிகின்றது. புோலிகளைக் கண்டு அச்சாத ஒரு பெண்ணை இறுதி அத்தியாயம் திலகநாயகம் போலின் மரணத்துட உருக்கமானது. போலின் மறைவின் பின்னர் அவர் நினைவு
வெளிவந்த உண்மையான காதலின் வெளிப்பாடகவே இந் காலம் வாழும். . . . . . . .
 
 
 
 
 
 
 
 

28வாவியம்)
ம் இல்லாத மானிட
கலை ரசனையும் நகின்றோம். அந்த லகநாயகம் போல் ாண்ட காதலையும்
ாசமான இலக்கியப் பாக ஒருவர் தனது குறிப்பாக எழுதி ரது கல்வெட்டிலோ எழுதுவதை நாம் கழுக்காக “புழுகி” அறிந்ததே. ஆனால் பாங்கான சிறந்த வலை வாசிக்கும் க்கப்பட்டுள்ளது.
ாபூர்வமாக இங்கு ள்ட நாட்டமும், அவருக்கு பாடல்கள் சொல்லிக் கொடுக்க sற்ற விதமும், போலின் கலை அனுபவங்களும், மிகவும் டையேயும் தோன்றும் கனவு(Dream) இருவரையும் ல் கனவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகமாகவே னந்தது பற்றியும், அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட வரும் மேற் கொண்ட கலைச் சேவைகள், கச்சேரிகள், லில் வெறிப்படுத்துகின்றது. கணவனுடனான(போலுடன்) பாக இந்நூலாசிரியர் இங்கு பதிவு செய்துள்ளார். போல் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த விதமும், நோயுற்ற பும் இசைமீதான பற்றும் உண்மையில் பாராட்டத்தக்கன
ருகின்ற இன்றைய ஆண், பெண் உறவுகளுக்கு இடையே இரு உள்ளங்களின் வாழ்வனுபவங்கள் சுவைபட இங்கு தம்பதியர் கட்டாயமாக இந்நூலை படிக்க வேண்டும். றைய உண்டு.
ழக்க வழக்கங்கள், வழிபாடுகள், கலைகள், தொழில்கள், 5ாழில்கள், நம்பிக்கைகள், போர் அனர்த்தங்களும் அதன் கொள்ள முடிகின்றது. நல்ல தொரு பெண் அரசாங்க நல்லதொரு ஆலுோசகராக, நல்லதொரு கலை ஆர்வம் இந்நூலில் பத்தினி அம்மாவின் பன்முகங்களை தரிசிக்க இந்நூல் மூலம் அறநிந்து கொள்ள முடிகின்றது. நூலின் ன் முடிவடைகின்றது. இறுதி அத்தியாயம் மிகவும் களோடு வாழும் ஒரு பெண்ணின் இதயத்தில் இருந்து நூல் மலர்ந்துள்ளது. வாசகர் மனதில் இந்நூல் நீண்ட
- ལགས་། இதழ் 58

Page 44
நித்தியன்
பரலோகம் பக்தியில் மூழ்கிக் கிடக்கிறது. அண்டம் அசைவதில் அணுவேனும் பிழைத்து விடாமல், பரமன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தேவர்கள் சாந்தமே உருவான இறைவனை, நாலா பக்கமும் நின்று தொழுது கொண்டிருக்கிறனர். நாளிகையும் நாயனின் நாமத்தை துதிப்பதில் ஓய்வின்றி சுழல்கின்றது.
அப்பொழுது, உலகத்தில் பெருமையும் பேராசையும் கொண்ட அரசன் ஒருவன் மக்களை அடிமைகளாக்கி வதைத்துக் கொண்டிருந்தான். பெருமையின் உச்சியில் நின்று ஆடிக் கொண்டிருந்த அவன் நாட்டிலுள்ள கைதேர்ந்து சிற்பிகளை அழைத்து, அவனின் உருவச் சிலைகளை செதுக்கித் தருமாறு கட்டளை இட்டான். மன்னனின் ஆணைக்கு அடிபணிந்து, சிற்பிகள் சிலைகளை செதுக்கிக் கொடுத்தனர். சிலைகளை பார்த்து மன்னன் தன்னையே மறந்தான். மறுகணம் அவன் நாட்டிலுள்ள கோயில்களில் இருந்த நித்தியனின் சிலைகள் அனைத்தையும் அடித்து நொருக்கி, அவைகள் இருந்த கோயில்களில் அவனின் உருவச் சிலைகளை வைத் தான். இவனின் அறியாமையையும், அகங்காரத்தையும் கண்டு அண்டம் அதிர்ந்தது. சாந்தமே உருவான இறைவன் எதையும் சட்டை செய்ய்ாது, நேத்திரங்களை மூடி அமைதியாக இருந்தான். மன்னனின் மடமையைப் பார்த்து தேவர்கள் "இறைவா! என்ன கொடுமை இது? இதற்கு விடிவில்லையா?" என்று கேட்டுத் துதித்தார்கள். எதையுமே கண்டு கொள்ளாத ஈசன் அமைதியாக இருந்தான். அவன் ஆளுமை, ஒளிவிட்டு பிரகாசித்தது.
ஆணவம் பிடித்த மன்னன் அவன் நாட்டிலுள்ள மக்களை அழைத்து "நானே கடவுள் என்னை நீங்கள் நாளிகை தவறாமல் துதித்து வர வேண்டும். என் நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களும் என்னுடை யதே. என் கோயில்களில் உள்ள சிலைகள்தான், உங்கள்
ஜீவநதி
 
 
 
 
 

கடவுள். என்னைத் துதியாதவர்களை சிரச்சேதம் செய்து விடுவேன்" என்று கட்டளையிட்டான்.
பாவம் மக்கள் மன்னனின் ஆணையை ஏற்று அவனைத் துதித்தார்கள். மன்னன் மகிழ்ந்தான். இறுதி யரில் , மமதை தலைக் கே றி, பல மாடிக் கட்டிடமொன்றைக் கட்டி, அதன் உச்சியில் அமர்ந்து, அதைப் பரலோக மென்று கூறி மக்களை துதிக்க, ஆணையிட்டான். விரல் நொடிக்கும் நேரம். அண்டம் அதிர்ந்தது. தேவர்கள் பனிக்கட்டியாகினர். மூடியிருந்த இறைவனின் நேத்திரங்கள் திறக்க, மன்னனின் நாடு, மண்மேடாகி விட்டது. எங்கும் சூனியம், நித்தியன் சத்தியமாகி, இருக்கிறான். தேவர்கள், நாளிகை தவறாது அவனைத்துதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2- இதழ் 58

Page 45
அந்தனி ஜீவாவின் அரை
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில் 2011ம் ஆண்டு ஜனவரி முதல்வாரம் நான்கு நாட்கள் கொழும்புத் தமிழ்சங்க மண்டபத்தில் நடை பெற்றது. அதற்கு முதல் நாள் ஜனவரி 5ம்திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் முழுநாள் நிகழ்வாக உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் ஆறாவது மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ்ச்சிற்றிதழ்கள் மாநாட்டில், உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும்கலந்து கொள்வதற்காக நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதியுடன், தமிழகத்தில் வெளிவரும் சிற்றிதழ்களின் ஆசிரியர்களும், பிரதிநிதி களுமாக நாற்பது பேர் வருகை தந்திருந்தார்கள். இலண்டனிலிருந்து நாவலாசிரியர் இரா.உதயணனும் வருகை தந்திருந்தார். இலங்கை வருகை தந்திருந்த கு.சின்னப்பபாரதியுடன் அவருடைய நண்பர்கள் இருவரும் வந்திருந்தார்கள். அவர்கள் வந்தவுடன் எனக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார்கள். "மாநாடுகள் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் போக வேண்டும்” என்றார்கள். அதனை நானும் ஏற்றுக் கொண்டு ஏற்பாடு செய்வதாக சொன்னேன்.
உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறு வதற்கு முதல் நாள் ஜனவரி 5 ம் திகதி உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்க இலங்கை கிளையின் ஏற்பாட்டில் இராம கிருஷ்ணமிஷன் கருத்தரங்கு மண்டபத்தில் ஆறாவது மாநாடு நடைபெற்றது. இலங்கை கிளையின் ற்றிதழ்கள் சங்க தலைவரும் மூத்த படைப்பாளியுமான ருமதி பத்மா சோமகாந்தன் தலைமை வகிக்க, சங்க ஆலோசகர்களான மல்லிகை ஆசிரியர் டொமினிக் வா, பேராசிரியர் சபர்.ஜெயராசா, புரவலர் புத்தக
ஜீவநதி 43
 
 
 
 
 
 
 

நூற்றாண்டு அனுபவங்கள்
Tıp கதை
பூங்காநிறுவன புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் காலை நிகழ்வுகள் ஆரம்பமானது. சிற்றிதழ்சங்க செயலாளர் அந்தனிஜீவா வரவேற்புரை நிகழ்த்த பத்மா சோமகாந்தனின் தலைமை உரைக்கு பின்னர் சங்கத்தின் பொருளாளரும், "செங்கதிர்” ஆசிரியரு மான த.கோபாலகிருஷ்ணன் சங்கத்தின் செயற்பாடு களை எடுத்துரைக்கும் பொழுது சிற்றிதழ்கள் சங்கத்தின் 2010 இல் தமிழ் நாட்டில் குற்றாலத்தில் நடைபெற்ற மாநாட்டை பற்றி எடுத்துரைத்தார்.
சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் சாகித்திய அகடமி விருது பெற்ற தி.க.சிவசங்கரன், தினமணி ஆசிரியர் கே.வைத்திய நாதன், தீப.நடராசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்க ளாக கலந்து கொண்டனர். இலங்கை கிளையின் சார்பில் நானும், செங்கதிர் ஆசிரியர் கோபால கிருஷ்ணனும் கலந்து கொண்டோம். உலக சிற்றிதழ் சங்கத் தலைவர் வதிலை பிரபா தலைமையில் நடைபெற்றது மாநாட்டு அமைப்பாளர் சொக்கம்பட்டி ரஹீம் வரவேற்புரை நிகழ்த்தினார். சிற்றிதழ்கள் கண்காட்சியை மகாத்மா காந்தி சேவை மைய நிறுவனர் வி.விவேகானந்தன் துவக்கி வைத்தார். இலங்கையிலிருந்து கொண்டு சென்ற இருபதுக்கு மேற்பட்ட சிற்றிதழ்களும் பார்வைக்கு வைக்கப்பட்டன. உலகத்தமிழ் சிற்றிதழ் சங்க 5ஆவது மாநாடு குற்றாலத்தில் உள்ள திருவிதாங்கூர் அரண்மனை மண்டபத்தில் நடைபெற்றது. காலை நிகழ்வில் சிற்றிதழ்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. பகல் உணவுக்குப் பிறகு நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. நூல் வெளியீட்டு விழாவுக்கு திரைப்பட இயக்குநர் இராஜ்மோகன் தலைமை வகித்து நூல் களை வெளியிட்டார். கவிஞர் ஞானபாரதி எழுதிய "இன்னும் இருக்கின்றேன்", சுந்தரி எழுதிய “கருத்துக் கருவூலம்", கவிஞர் சந்திரா மனோகரன் எழுதிய "தூறலின் கடைசி துளி, கடைய நல்லூர் ஜமீலா எழுதிய “ஊமைக்காயங்கள்" ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் மாலை நிகழ்வில் இலக்கிய செயற்பாட்டாளர்களுக்கும், சிற்றிதழ்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
இதழ் 58

Page 46
முழுநாள் விழாப் பற்றி மறுநாள் திங்கட்கிழமை தினமணி" நாளிதழ் அரைப்பக்கத்திற்க மேல் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிகை செய்தியை ஜீவநதி இலக்கிய வாசகர்களுக்குதருகிறேன்.
"பெரும்பான்மை அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் மக்களின் பணிபாட்டைச் சீரழிக்கும் உளவியில் யுத்தத்தை நடத்திக் கொணர்டிருக்கும் போது, கொள்கைப் பிடிப்புள்ள சிற்றிதழ்கள் சிற்றுளிகளாகி, அந்த மலைகளைத் தகர்க்க வேணர்டும் என, சாகித்திய அகடெமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் வலியுறுத்தினார்.
குற்றாலத்தில ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற உலகத்தமிழ்ச் சிற்றிதழ்ச்சங்க 5-வது மாநில மாநாட்டில் பாரதி இலக்கிய விருது பெற்ற அவரது ஏற்புரை:
தமிழ் தேசியத்தை ஆதரிக்காத எவரையும் நேர்மையான எழுத்தாளர்களாகக் கருத முடியாது. தமிழ் மற்றும் தேசியம் பேசும் தினமணி மாதிரியான பெரிய பத்திரிகைகளுடன் இணைந்து சிறு பத்திரிகைகள் இயங்க வேணர்டும். சிறு பத்திரிகைகள் இயக்கம் முன்னேற வேணர்டும் என்றால் பெரிய பத்திாகைகளின் ஆதரவு தேவை. பாரதியாரும், பாரதிதாசனும் காட்டிய வழியில் தின மணிமட்டுமே பயணித்துக் கொணர்டிருக்கிறது.
கார்ப்பரேட் கலாசாரம் தீவிரமாக வளர்க் கப்படும் இன்றைய சூழலில் சிறு பத்திரிகைகளின் கொள்கை நெறியும் போக்கும் பாரதிதாசனர் பாதையில் இருக்க வேணடும். மனிதநேயம் மிக்க அழகியல், அறிவியல், அறவியல் என இம்மூன்றை யும் ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளியிடுவதும், படைப்பதுமான பணிகளைச் செய்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும். பாரதி புதுமைப்பித்தனர் முதலான மாபெரும் எழுத்தாளர்களும், கவிஞர்களும் சிற்றிதழ்களால் வளாந்தவர்கள்தான் என்றார் தி.க.சி.
இலங்கை எழுத்தாளர் அந்தனி ஜீவா: உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த வேணடும். அடுத்த ஆணர்டு ஜனவரியில இலங்கையில் அத்தகைய ஒரு மாநாட்டை நடத்தவும், அதற்கு தமிழக எழுத்தாளர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளோம். எழுத்தாளர் களும், தினமணி பத்திரிகையும் ஆதரவு அளிக்க வேணர்டும். என்றார்.
விழாவில் பாரதி இலக்கிய விருது(மூத்த படைப்பாளருக்கான விருது) தி.க.சிவசங்கரனுக்கும், வல்லிக்கண்ணன் இதழியல் விருது(மூத்த இதழாழருக் கான விருது) இலங்கையைச் சேர்ந்த "கொழுந்து"
, ട -4
 
 
 
 
 

ஆசிரியர் அந்தனி ஜீவாவுக்கும், புதியம்திரை குறும்பட விருது திரைப்பட இயக்குநர் இராஜமோகனுக்கும் வழங்கப் பட்டது. அவ்வை இலக்கிய விருது சென்னையைச் சேர்ந்த அரங்கமல்லிகாவுக்கும், தமிழ்த்தாய் அறக்கட்டளை விருது இலங்கையைச் சோந்த "ஞானம்" ஆசிரியர் தி.ஞானசேகரனுக்கும், அய்யன் திருவள்ளுவர் விருது இலங்கையைச் சேர்ந்த "செங்கதிர்” ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணனுக்கும், இனியமனா இலக்கிய விருது இலங்கையைச் சேர்ந்த "ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணிதரனுக்கும் வழங்கப்பட்டது. கருதவேலி இலக்கிய விருத(தாவர உணவைப் பினபற்றும் இதழுக்கானது) திருப்பத்தூர் சித்தர்பீடம் ஆசிரியர் உஸ்பி.வெங்கடாசலத்துக்கும், களம் இலக்கிய விருது சென்னையைச் சேர்ந்த "உரத்த சிந்தனை” ஆசிரியர் உதயம் ராமுக்கும், சிகரம் இலக்கிய விருத “மகாகவி ஆசிரியர் வதிலை பிரபாவுக்கும் வழங்கப்பட்டது.
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் மாநாட்டு மலரை வெளியிட செங்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் ஆதிமூலம் பெற்றுக்கொண்டார். அதைத் தெடர்ந்து ஆசிரியர் கே. வைத்தியநாதன் விழா பேருரையாற்றினார். பாரதி இலக்கிய விருது பெற்ற தி.க.சிவசங்கரனைப் பாராட்டி தீப.நடராசனும், கலாப்பிரியாவும் பேசினர். கழனியூரான், அந்தனிஜீவா, பூ.திருமாறன் சேயன் இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உலகத் தமிழ் சிற்றிதழ்சங்க இலங்கையில் நடைபெற்ற 6ஆவது மாநாட்டை சொல்ல வந்த பொழுது, முன்னீடாக ஐந்தாவது மாநாட்டை பற்றிய விபரத்தை உங்களுக்கு எடுத்து சொன்னேன்.
இனி இங்கு நடைபெற்ற 6ஆவது மாநாட்டிற்கு வருகிறேன். 6ஆவது மாநாட்டிற்காக வருகை தந்த சிற்றிதழாளர்கள் அனைவரும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் பங்கு பற்றினார்கள். இவர்கள் பங்கு பற்றியதால் மாநாடு சிறப்பாக இருந்தது. மாநாட்டு கருத்தரங்குகளிலும் பங்கு பற்றினார்கள். கட்டுரையும் வாசித்தார்கள். இங்கு நடைபெற்ற 6ஆவது மாநாட்டில் பல பிரதேசங்களை சேர்ந்த சிற்றிதழாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித் தார்கள். விழாவில் பாரதி இலக்கிய விருது மூத்த படைப்பாளியான நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதிக்கு வழங்கப்பட்டது. மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் இலக்கிய விருது மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, அவ்வை இலக்கிய விருது பத்மா சோமகாந்தனுக்கும் வழங்கப்பட்டது. 文
தமிழகத்தில் சிற்றிதழ்கள் சேகரிப்பாளரான க.பட்டாபிராமனுக்கு "செங்கதிர் இலக்கிய சஞ்சிகை சார்பில் விசேட விருது வழங்கப்பட்டது. மட்டக்களப்பி
- இதழ் 58

Page 47
லிருந்த வெளிவரும் “சுவைத்திரள்”, “தென்றல்", நுராதபுரத்திலிருந்து வெளிவரும் "படிகள்" ஞ்சிகைக்கும் திருகோணமலையிலிருந்த வெளிவரும் "நீங்களும் எழுத்தலாம்” ஆகிய சஞ்சிகைகளுடன் தமிழகத்தில் சிறப்பாக வெளிவரும் சில சிற்றிதழ் களுக்கும் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து "ஜீவநதி சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணிதரன், கவிஞர் சொர்ணபாரதி, பாண்டிச்சேரி கலாவிசு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இந்த மாநாட்டினை சிறப்பாக நடாத்துவதற்கு கே.பொன்னுத்துரை நிகழ்ச்சி அமைப்பாளராக செயற்பட்டார். மற்றும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஜனவரி 6,7,8,9 ஆகிய தினங்களில் கொழும்புத் தமிழ்சங்கத்தில் நடைபெற்றது. மாநாடு முடிவடைந்த பின்னர் நாவலாசிரியர் குசின்னப்பபாரதி அவரோடு வந்த இரண்டு நண்பர்களும் யாழ்ப்பாணம் பயணமானர்கள். அவர்களோடு சென்று வர முடியாத கழ்நிலை காரணமாக கலைஞர் கலைச்செல்வன்
பேசும் இதயங்கள்
1) ஜீவநதி ஏப்ரல் இதழில் வெளியா "விஸ்வரூபம்" என்ற கதை எனக்கு மிகவு பிடித்திருந்தது. சமகால விடயமொன்றை இ பாத்திரங்கள் மூலம் துணிச்சலாக அலசியிருக்கிற ஆசிரியர் மூதூர் மொஹமட்ராபி அவருக்கு எ பாராட்டுக்கள்.
- சடTச்சரதேவி(ச)தாண்டைமனாறு
2) இலக் கரிய நேசிப் பு மரிக்க டாக் ட எம்.கே.முருகானந்தன் அவர்களின் பேட்டி இே துறையைச் சேர்ந்த பலருக்கு முன்மாதிரியா அமைந்துள்ளது. தனியே தனக்குத் தனக்கெ இயங் கும் பலாரிடையே தனக் கென ஒ தனித்துவத்தைப் பேணும் இவரைப்போன்று சமூ உணர்வுமிக்க வைத்தியர்கள் தோன்றுவது காலத்தி 85 LITULOT(5Lib,
சமூகத்தில் உச்சமாக மதிக்கப்பட வேண்டி தொழில் கள் வியாபாரத் தன்மை மிக் கதா மாறிவருவது வேதனை தருகிறது. டாக்டர் நந்தியை போன்று மருத்துவர்கள் மத்தியில் சமூக நோக்ை வரி ைத க் கப் பாடு பட் டு உழைத் துவ ரு L டாக்டர்எம்.கே.எம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
- கிழைல்லதாசன் (திருகோணமலை
ஜீவநதி 4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்
כ
ଗଏଁt
அவர்களை அழைத்துச் சென்றார்.
நாவலாசிரியர் சினி னப் ப பாரதரி யாழ்ப்பாணத் தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உரையாடினார். எழுத்தாளர்களை சந்தித்தார். யாழ்ப் பாண பல் கலைக் கழகம் சென்று துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மற்றும் விரிவுரையாளர்கள் பட்டதாரி மாணவர்கள் உட்பட பலரையும் சந்தித்து உரையாடியுள்ளார். அதன் பின்னர் "ஜீவநதி" சஞ்சிகை குழுவினரை அல்வாயிலுள்ள கலையகத்தில் சென்று சந்தித்து, “அவை" ஏற்பாட்டில் எழுத்தாளர் தெணியான் தலைமையில் ஓர் இலக்கிய சந்திப்பில் உரையாற்றி விட்டு கொழும்பு சென்றார்.
கொழும்பு தமிழ் சங்கத்தில் "நானும் என் நாவல்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பின்னர் தமிழகம் பயணமானார்.
- தொடரும்.
நூல் தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம் வணிகமாக்கப்பட்ட வலிகள்
ஆசிரியர் - இ.சு.முரளிதரன்
வெளியீடு - ஜீவநதி
விலை - 250/=
இதழ் 58

Page 48
\ | የሽ
பிரபல எழுத்தாளர் தெணியானுக்கு வந்த கடிதங்
எழுத்தாளர் மலரண்பன் எழு
(4
எனதன்பு ஆசிரியருக்கு -
வணக்கம், தங்களின் கடிதம் கிடைத்தது. எனது நணர்பர் ஒருவரைக் காணச் சென்றேன். அவ்( நீங்கள் ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை” தானி காரணம் எனக் கூறிய எண்னை கட்டாயம் கை ரதம்" பிறந்த கதை இதுதான். தொடர்ந்து எழுதும் அடுத்த கதையையும் எழுதத் தொடங்கி விட்டே என்பதாகும். தங்களின் தம்பியார் நவம் அவர்களை ஒ அவர் எனது தம்பிக்கு நன்கு அறிமுகமானவர், ஒ தங்களின் தம்பிஎனது தம்பியின் நணர்பர்.
தங்களின் “கழுகுகள்” நாவல் பெருமு. விரிவுரையாளர் திரு.வேல் முருகு அவர்கள் மூல மிதிக்கும் சந்தர்ப்பம் எனக்கு இன்னும் கிட்டவில்
டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கனர், கே.டா
ஆகியோரினதும் தங்களினதும் எழுத்துக்களில் ந இதில் அடங்குவர். ஒவ்வொருவருடைய எழுத் வாழ்க்கையைப் படம் பிடித்து விமர்சித்து இருந்தன போது எனக்கு தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வ “பலங்கெட்டியோ"வசந்த ஒபயசேகர என்ற சிறந்த கலைப்படைப்பான இந்தப் படத்தை சில வருடங்க சோமுவும் பாாத்தோம். இப்படத்தில் வரும் ஒவ்வெ இருந்து விலகிய கற்பனைத்தன்மையுடைவர்களா அப்பால் ஒரு வசனம் தானும் பேசுபவர்களாக உலுக்குஉலுக்கி விடுகின்றது. தங்களின் கழுகுகளு இரணர்டும் வெவ்வேறான கதைகள். பலங் கெட்டி வரும் பாத்திரங்களும் வெறும் கற்பனை செய்யப்ப முதற் சிறப்பு. ஆறுமுகத்தாரின் புணர்களைப் காரியாலயங்களில் வைத்திய சாலையில காட்டியிருக்கின்றீர்கள். உறவுகளை பொருளாதார கோட்பாடாக கோஷமிடாமல், கதா மாந்தர் நிறுவியிருக்கின்றீர்கள். மனிதநேயம் கொணர்ட கழுகுகள் எனது பார்வைக்குபடுகின்றது.
 
 
 
 

கள் இ "
தியிருக்கும் சில கடிதங்கள்
܂ ܢ ܟ ܧܐܬܐ ܛܡ
அம்பாள் இல்லம் கவுடுபெலல்ல 14.6, 1983
நன்றி. சிலவாரங்களுக்கு முன்னர் வீரகேசரியில் வேளை கேசரி வார இதழாசிரியர் "நன்றாக எழுதும் எனக்கேட்டார். பல பிரச்சினைகளும் நேரமின்மை தயொன்று தரும் படி கேட்டுக் கொணர்டார். “ஞான படி உற்சாகப்படுத்தும் தங்களுக்கும் எனது நன்றி. ண், கதையின் பெயர் “விரைவில் மழை வரும்” ஒரு முறை கணர்டியில் சந்தித்துள்ளேன். பழக இனிய ற்றுமையைப் பாருங்கள். தாங்கள் எனது நணர்பர்.
பற்சிக்கு பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக ம் எனக்குக் கிடைத்தது. யாழ்ப்பாண மணர்ணை லை. ஆனால் யாழ் மக்களின் வாழ்க்கையினை னியல், செ.யோகநாதன், செங்கை ஆழியான் Tண் தரிசித்துள்ளேன். பெயர் குறிப்பிடாத சிலரும் துக்களிலும் அவரவரின் கோணத்தினர் படியே தயும் அவதானித்துள்ளேன். கழுகுகளை வாசித்த ந்தது ஒரு சிங்களத் திரைப்படம். படத்தின் பெயர் கலைஞனின் சிறப்பான நெறியாள்கையில் உயர்ந்த ளுக்கு முன்னர் நானும் எனது நண்பர் மாத்தளை ாரு பாத்திரமும் அணுவளவேனும் வாழ்க்கையில் க தோன்றவேயில்லை அன்றாட வாழ்க்கைக்கு இல்லை. படத்தின் முடிவு பார்ப்பவர்களை ஒரு ரும் அப்படித்தான். கதையைப் பொறுத்த மட்டில் யோவின் பாத்திரங்களைப் போலவே கழுகுகளில் டாத பாத்திரங்களாக தோன்றுவதே இக்கதையின் போலவே அழுகி சீழ் பிடித்து நிற்கும் அரச புரையோடி நிற்கும் ஊழல்களை சிறப்பாக தான் நிர்ணயிக்கிறது என்ற உணர்மையை வெறும் களினர் செயற்பாடுகளினி ஊடாக சிறப்பாக ஒரு சிந்தனாவாதியின் ஆன்மாவின் குரலாகவே
參

Page 49
எழுத்தாளர் கே.கனேஸ் எ
இனிய தெணியானுக்கு,
தங்கள் படைப்பான “பொற்சிறையில் வாடு ஆகியும் உங்கட்கு எழுதமுடியாமற் போய் விட்டது நீணர்ட மதிப்புரை எழுதிவிடலாம் என்ற எணர்ணத்தி
தோட்டமென்ற தொண்டுக்கட்டையினாலி இனிய நிகழ்வுகளிலும் பங்குபற்றவோ ஈடுபடவோ மு
பிறப்பில் உயர் குலமாய் சமூக அந் 戀 துயரக்கதையைக் கருவூலமாக எடுத்தாணர்டிருப்பு நேரத்தில் அளிப்பேன். சுணக்கத்திற்கு பொறுக்கவு
அன்புசால் அண்பர் தெணியானி அவர்கட்கு,
கணதிசை தலைசாய்த்து தென்திசை பெருமான் திருவருள் கூட்டுவதாக,
அன்பர் ஞானசுந்தரத்தினர் வேள்விச்சுடரா குறிப்பும்" அடுத்த இதழ் வழி உங்களது மணிவிழாநி பத்தாணர்டுகட்கு முன்னர் அன்பர் ராஜபூ இல்லத்தில் சந்தித்து உரையாடிய நினைவு பசுமை பின் நாம் காண வாய்காது போயிற்று. தீவுக்குள் தீ எனினும் உங்களது மணிவிழாவிற் கலந்து ெ வாழ்த்துக்களை ஏற்கவும். மற்றவை உங்கள் முதுமைக்கூறினால் இங்கு இயற்கைச் சூழலில் முட நடைபெறும் நகர வாழ்க்கையின் நரகச் சூழ்நிலைய ஒரு வகையில் ஆறுதல் அளிப்பனவே. விரிவான மட
ஜிவநதி தனிபிரதி - 80/= ஆண்டுச்சந்தா
மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
( வேண்டிய ܦ
K. Bharaneetharan, Kalaiah
வங்கி மூலம் சந்தா
K. Bhara Commercial Banl
A/C No.- 810802
FARRS
 
 
 
 
 

నే با همگی یابد.
CI)
Karandangolla Estate talatuoya 25.01.90
ம்ெ புனிதர்கள்" என் கைக்குக் கிடைத்துப் பலநாட்கள் 1. நண்பர் ராஜா தந்தவுடன் எழுதியிருக்க வேணர்டும். ல் தள்ளிப் போய் விட்டது. ம் பலவித இன்னல்கள் - உள்ளம் ஒட்டாத நிலையில் முடியாது போகிறது. தஸ்தில் தாழ்குலமாய்த் திகழும் இனத்தவரினர் து பாராட்டத்தக்கது. எனது மதிப்பீட்டினை உரிய ம். மேலும் மேலும் உங்கள் பணி வளர்க.
- அன்பனர் கே.கணேஷ்
I 7.09.2002
நம் இலங்கை நோக்கி அருளும் எம்திருவரங்கப்
ன “ஞானம்" இதழில் "எனது எழுத்துலகம் நினைவுக் கழ்வுகள் குறித்தும் படித்து மகிழ்ந்தேன். ரீகாந்தனி எமது புதல்வி வசித்த கொள்ளுப்பிட்டி பாக உளது. நாட்டுநிலைமைகள் காரணமாக அதன் வாக எட்ட வசிக்க நேர்ந்துளது. காலத்தின் கோலம்! காள்ள வாய்க்காது போயினும் எம் உளமார்ந்த ர் மடல் கணர்டு விரிவாக வரைய முயல வேனர். -ங்கிவருகிறேன்.முழு நேரமும் வாசிப்பில் கழிகிறது. பில் இங்கு சொந்த மணர்ணில் நாம் வாழ நேர்ந்தமை லை எதிர்பார்க்கும் அன்பு மறவாநணர்பன்.
- கே.கணேஷ்
சந்தா விபரம் - 12OO/= Goofsir, – $50U.S
மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப பெய்ர்/முகவரி
am, Alvai North west, Alvai. செலுத்த விரும்புவோர் neetharan
- Nelliady Branch
1808 CCEYLKLY

Page 50
கலை இலக்கி
() 28.04.2013 இல் சூரிச் Autolen என்ற இடத்திலுள்ளF உள்ளடங்கிய கவிநூலான நிஜத்திண் நிழல்" மண்டபம் நிரை நிழல்" அறிமுக விழாவிற்கான ஏற்பாட்டை சுவிஸ்
செய்திருந்தது.வரவேற்புரையை வே.கோசலா தொடக்கி வை தொடர்ந்தது. தலைமை உரையை உலகத்தமிழ் பண்பா அறிமுகவுரையை பிரான்சிஸ் பேபியும், திருமதி ஜெய தேவகடாட்சம், கவிஞர் நளாயினி தாமரைச்செல்வன், கண் பொலிகை ஜெயா, புவனேந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தில
2) ஆரண் ஏ.ரவிவர்மாவின் வடக்கே போகும் மெயில்" சி நினைவு நிகழ்வும் 9.8.2013 அன்று யா/தேவரையாளி இந்துக் நடைபெற்றது. நூலாசிரியர் அறிமுகத்தை பருத்தித்துறை மக் அறிமுகத்தை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் திரு.மா.நவநீதமணி நிகழ்த்தினார். ராஜருநீகாந்தன் நினைவு மதிப்பீட்டுரையை யாழ்பல்கலைக்கழக சமூகவியற்துறை ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார்.
3) கவிஞர் த.விஜயசீலனின் சனழுதாத ஒரு கவிதை" கவி மண்டபத்தில் 8.6.2013 அன்று பேராசிரியர் எஸ்.சிவலிங் கவிஞர் சோ.பத்மநாதன், யாழ்.பல்கலைக்கழக சட்டத்து நிகழ்த்தினார்கள். வாழ்த்துரைகளை கலாநிதி ஆறுதிருமுரு நல்கினர். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார்.
4) இ.சு.முரளிதரனின் தமிழ் சினிமாவிண் பார்வையில் ஈ அல்வாயிலுள்ள கலை அகத்தில் 16.06.2013 அன்று எ வரவேற்புரையை மா.செல்வதாஸ் நிகழ்த்தினார். வெ விரிவுரையாளர் அ.பெளநந்தியும் மதிப்பீட்டுரையை யாழ்.ப நிகழ்த்தினார்கள். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார். பதிப்பகம் வெளியீடு செய்யும் 27 ஆவது நூல் என்பது குறிப்பி
5) நாச்சியாதீவ பர்வீனின் சமணலிவளியிண் பிரதி" க நினைவுரையும் நிகழ்வு கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் ம கமால் தலைமையில் நடைபெற்றது. எம்.எச்.எம்.சம்ஸ் பற் ஆற்றினார். எம்.சிறஸ்மின், சி.விஜிதா, வதிரி.சி.ரவீந்திரன் அ ஆற்றினார்கள். ஏற்புரையை நூலாசிரியர் நல்கினார்.
6) த.ஜெயசீலனின் "எழுதாத ஒரு கவிதை” வெளியீடும் அறிமு மாநாட்டு மண்டபத்தில் து.குலசிங்கம் தலைமையில் பொன்சுகந்தனும், வெளியீட்டுரையை சு.குணேஸ்வரனும் எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகலிங்கம் ஆகியோர் நிகழ்
ஜீவநதி 4.
 

ய நிகழ்வுகள்
nwald மண்டபத்தில் திருப்பரங்குண்றணிண் 58 கவிதைகள் ந்த மக்களிண் மூண் அறிமுகம் செய்யப்பட்டது. "நிஜத்தின் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க கிளை ஏற்பாடு க்க, மிருதங்க கச்சேரி மற்றும் பரதநாட்டியத்துடன் விழா ட்டு இயக்க சுவிஸ் தலைவர் செ.சிவராசசிங்கமும், ாவும் நிகழ்த்தினர். மதிப்பீட்டுரைகளை திருமலை னன் ஆகியோர் நிகழ்த்தினர். பிரதம பேச்சாளர்களான ர். ஈற்றில் யோகனின் நன்றி கூறினார்.
- தகவல் சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா
றுகதைத்தொகுதி வெளியிட்டு விழாவும் ராஜ முநீகாந்தண் கல்லூரி மண்டபத்தில் திரு.சி.லோகநாதன் தலைமையில் கள் வங்கி முகாமையாளர் பி.கிருஸ்ணானந்தனும், நூல் கலாநிதி த. கலாமணியும் நிகழ்த்தினர். சிறப்புரையை
உரையை பிரபல எழுத்தாளர் தெணியான் ஆற்றினார். விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார்.
தைத்தொகுப்பு வெளியீட்டுவிழா யாழ்ப்பாணம் நாவலர் கராஜா தலைமையில் நடைபெற்றது. ஆய்வுரைகளை துறைத் தலைவர் கலாநிதி த.கலாமணி ஆகியோர் கன், அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் ஆகியோர்
ஓம் வணிகமாக்கப்பட்ட வலிகள்" நூல் வெளியீட்டு விழா ழுத்தளார் தெணியான் தலைமையில் நடைபெற்றது. ரியீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் காலாசாலை ஸ்கலைக்கழக விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணனும் ன்றியுரையை க.பரணிதரன் நல்கினார். இந்நூல் ஜீவநதி டத்தக்கது.
விதைத்தொகுதி வெளியீட்டுவிழாவும், எம்.எச்.எச்.சம்ஸ் ண்டபத்தில் 15.6.2013 அன்று எழுத்தாளர் திக்குவல்லை றிய நினைவுரையை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் கியோர் பர்வீனின் கவிதைபற்றிய விமர்சன உரைகளை
மும் 22.06.2013 அன்று பருத்தித்துறை பிரதேச செயலக டைபெற்றது. நூல் அறிமுகவுரையை சைவப்புலவர் நூல் பற்றிய நயப்புரைகளை பெரிய.ஐங்கரன், மூத்த தினார்கள் ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்தினார்.
இதழ் 58

Page 51


Page 52
* சகல வாகனங்கவிற்கும் அனுபவம்
ISOK-23)
| oಿಲ್ಲào→
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் போட்டோ பிர அடையாள அட்டை போட்டோ பிரதி. 31/2cm x 41/2cm அளவு கொண்ட 5 கறு
மருத்துவ சான்றிதழ் NT.M.1.
 

ன்மைச் சாரதிப் பயிற்சிப் பாடசாலை
in Learners ன் லேனர்ஸ்
hundukuli, Jaffna.
O777906064 Fax: 0212229.109
த்தில் இருந்து ஆற்றிக்கப்பரும், க்க அறுதிகளுல் சிறந்த முறையில்
ப்ரத்திறற் பெற்றுக் கொருக்கற்பரும்,
இவழயூ பயிற்சி காலங்கள்,
ங்கப்படும்
奥 ல் வாகன பயிற்சிகள்
赛