கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாம் 2012.06

Page 1


Page 2

நாம் / இதழ்-2
இணிை விடுன்ெnைaலின் இலக்கிலம் மிஷ்
இதழ் - 2 ceboof 2012
வெளியீடு: யாழ், இலக்கியக்குவியம்

Page 3
நூல்
நாம் இதழ்-2
ஆசிரியர் வேலணையூர் தாஸ்
தொகுப்பு சி.கிரிஷாந், ஜெ.வினோத்
இதழ் வடிவமைப்பு எல்.கோபி
9Iਸੰi
மெகா டிஜிற்றல் கண்டி வீதி, கச்சேரியடி, யாழ்ப்பாணம்.
தொடர்பு முகவரி யாழ். இலக்கியக் குவியம் 37, 2ம் குறுக்குத்தெரு, கொழும்புத்துறை,
ofla)6) :
மின்னஞ்சல்
yarielakiyakuviyamOgmail.com
நாம் / இதழ் -2
மவும் திறந்து.
நாம் இரண்டாவது இதழுடன் சந்திக்கிறோம் கவிதையோடிணைதல் சுகமான அனுபவம் ஆனாலும் பொருளாதார சூழ்நிலை இணைவை தாமதப்படுத்தியிருக்கிறது. ஈழத்து கவிதைப் பரப்பில் இளம் கவிஞர்களை அடையாளப்படுத்துகிற இம்முயற்சிக்கு நீங்கள் தரும் ஆதரவிற்கு நன்றி நசுக்கப்படும் எம் சமுகத்தின் எழுச்சிக்கு நாம் கவிதைகள் பங்களிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கவிதைகளால் பேசுவோம். -ஆசிரியர்=
இவ் இதழில் கவிதைகளுக்காக பெறப்பட்ட படங்கள் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை. அவ் இணையத்தளங்களுக்கு நன்றி.
 

හීහ්”ද්‍යාත්‍රණිජිරිසff
tíl. SILD6öJITeg தி.திருக்குமரன் குறீபன் த.அஜந்தகுமார் கெளசி - யாழ் ந.சத்தியபாலன் ஷோகி உஸ்மான் வேலணையூர் தாஸ் மன்னுரான் ஜே.எஸ்.ராஜ் LDg56)grt LDmgsåles கிரிஷாந் கஷலிஷாப் பித்தன் அமிர்தம் சூர்யா அய்யப்ப மாதவன் எஸ் மதி uT.8LD600T60 த.எலிசபெத் ஹேமி கிருஷ் வெற்றி துஷ்யந்தன் டுஷாந்திக்கா சுகுமார் கி.பிறைநிலா நிந்தவுர் ஷிப்லி சிவனேஸ்வரன் பிரியங்கனி
S.2 LDT யோ.நித்யா ந.மணிகரன் துவாரகன் ஹட்டன் சுந்தர் நெடுந்தீவு முகிலன் நேற்கொழுதாசன் கயல்விழி வின்சன் வே.இந்து
நாம் / இதழ் -2 ப&8ம்
5
6
8
9
1Ο
11
12
13
14
15
16
17
19
2O
21
23
25
26
27
28
3O
32
33
34
35
36
37
38
4O
42
43
45
46

Page 4
நாம் / இதழ் -2 படைப்புகள் சமூகப் பிரக்ஞை உள்ளதாய் இருக்க வேண்டும்
அறிவியல் எமக்களித்த பேஸ்புக் எனும் சமூக வலையமைப்பினுTடாக இலக்கிய ஆர்வலர்கள் பலரை ஒருங்கிணைத்துக்கொண்ட யாழ் இலக்கியக் குவியம். தமது இலக்கியப் படைப்பாகிய "நாம்” எனும் கவிதை நூலை இரண்டாவது தடவையாக எம் கைகளில் தவழ விட்டிருப்பது தமிழ்மீது பற்றுடைய எம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் இவ்வேளையில் இன்றைய கவிதைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற எனது விருப்பினையும் கருத்தையும் இக்கவிதை இதழினூடாக பகிர்ந்து கொள்கிறேன்.
கவிதை என்பது படிப்பவர் எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடியதாகவும் சமூகம் சார்ந்த கருத்துக்களை அதிகம் தாங்கியவையாகவும் அமைய வேண்டும். அன்றைய காலம் சமூகம் சார்ந்த எண்ணக்கருக்களை தமது பாடுபொருளாகக் கொண்டு கவிபுனைந்த கவிஞர்கள்தாம் வாழ்ந்த காலப்பகுதியில் தமது சமூகத்தில் புரையோடிக் காணப்பட்ட புண்மைகளை தமது கவிகளினூடாக சுட்டிக் காட்டி அவற்றைக் களைய முற்பட்டனர். ஆனால் இன்று எமது படைப்பாளிகளால் சமூகத்தை ஆற்றுப்படுத்தக்கூடிய கவிதைகள் வெளியிடப் படுவது மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
இன்றைய கவிதைகள் பெரும்பாலும் காதல் பற்றியும் பெண்களைப்பற்றியுமே அதிகமாக பேசுகின்றன. எனவே இந்நிலைமாற்றி இன்று வளர்ந்து வரும் எமது இளைய தலைமுறைக் கவிஞர்கள் எமது சமூகத்தின் தேவையோடு ஒட்டியதாக தமது எண்ணங்களைப் பதிவுசெய்ய வேண்டும். தமிழர்தம் கலாசார அம்சங்களைத் தாங்கி உங்கள் கவிவரிகள் அமையவேண்டும் என்பதே சமூகப்பிரக்ஞை உள்ளவர்களது பெருவிருப்பாகும்.
ஜெ.வினோத் யாழ். கலாசாரமையம்
 

நாம் / இதழ் -2
ரயில் சித்திரவதை
பதிவு செய்யப்பட்ட புகையிரத இருக்கையைவிட வேறு எதுவுமே எனக்காய் காத்திருப்பதில்லை.
மெல்ல நகரும் ரயிலும் - நான் மென்றே உமிழும் எச்சிலும், இம்முறை கொஞ்சம் உவஷ்ணமாய்.
என் ரத்தத்தின் ஒட்டமோ இந்த ரயிலின் வேகத்தை மிஞ்சும்.
யன்னல் தாழ்ப்பாள் களற்றப்பட்டும் வேர்த்துக்கொட்டுவது இங்கே எனக்கு மட்டும்தான்.
பையில் இருந்த ரயில் டிக்கெட்டை மறந்து, டிக்கெட் பரிசோதகரிடம் இருமுறை தோற்றதும் .
f240ains

Page 5
நாம் / இதழ் -2
கடிதங்கள்.
விம்மி அழுதென்னை வீழ்த்தாதே, மூக்கிழுத்து கம்மிய குரல் செருமிக் கதைக்காதே, உனைவிட்டு எப்படியென் வாழ்க்கையென ஏதுமினிச் சொல்லாதே முப்பொழுதும் உன் நினைவே மூச்சென்று முனகாதே
எப்பொழுதோ எம் வழிகள் எழுதப் பட்டாயிற்று இப்பொழுதே எம் இருப்பு எமக்குத் தெரிகிறது தப்பான காலத்தின் தாழ் திறந்து இவ்வளவும் எப்படி நாம் வாழ்ந்திருந்தோம் எனுமுண்மை புரிகிறது
போகப் போவதென்று புறப்பட்ட பிறகென்ன தாக நினைவும் தவிப்பும்? தள்ளாடும் மோக நினைவை முழுதும் எரித்து விடு
 

நாம் / இதழ்-2 ஆக வேண்டியதில் ஆயத்தப் படுத்துன்னை சிவப்பு நரம்பூறிச் சிந்தும் விழிகளினால் தவிப்பொழுகப் பார்த்தென்னைத் தள்ளாட வைக்காதே நெஞ்சுயர்த்திப் பெருமூச்சை நெரிப்பது போல் விட்டெந்தன் கொஞ்ச உறுதியையும் குலைக்காதே, சாவீட்டுக்
காரியத்தை முடித்த காடாற்றுப் பூசாரி வாரிச் சுருட்டி வந்த இடம் பார்க்காமல் நேரே பார்த்தபடி நிம்மதியாய்ச் செல்வது போல் அப்படியே போ அணுவளவும் திரும்பாதே இப்படியே என் பாட்டில் ஏதோ நான் போகின்றேன்.
திதிருக்குமரன்

Page 6
நாம் / இதழ்-2 களவுமணம்
குறியிடந்தழுவிய உன் மேனியின் வசீகரத்தால்
எனது சொற்கள் கட்டவிழ்கின்றன
மீண்டும் மீண்டும் காமம் துய்த்தலால் களவுமணமே நீள்கிறது உனக்கான எனது சொற்களில் செறிவு சேர்ந்திருக்கிறது இரவுக்குறியின் காவலையும் மீறி அச்சமூட்டும் புதர்களிடையே
உன்வரவுக்காய் காத்திருக்கிறேன் கொலைக்களங்களில் கேட்கும்பேரிரைச்சலாய் அதிர்வுகளால் நிரம்பியிருக்கிறது எனது இதயம் திட்டமிட்ட நாளொன்றில் எனது உடன்போக்கு
உறுதிசெய்யப்படும் வலிய காவலையும் மீறி உன்வரவில்தான் எனக்கான பழம் மணம்வீசும்
குறefபன்
 
 
 
 

நாம் / இதழ் -2
உயிர்த்துளி
நதியில்
நான் வார்த்தைகளைக்
கரைத்துவிட்டேன்
நீ குளித்துச் சென்றாய்
ஒட்டியிருக்கும் வார்த்தைத் துளிகளைக்
கொஞ்சம் வாழவிடு உன்னோடு
ஒட்டியிருக்கும் கணமாய்
உயிர்க்கிறேன்.
த.அஜந்தகுமார்

Page 7
நாம் / இதழ் -2
மனமே நீ இயந்திரமா..?
உடல் மேல் அடி பொறுத்துக் கொள்ளலாம் மனம் மேல் அடி யார் தாங்குவார்.?
மனமும் ஒருவகை
சலவை இயந்திரம் தான்
சதாகாலமும்
சலவைக்கு வரும் எண்ணங்கள்.
அழுக்கு எடுத்து துவைத்து காய வைத்து அணிந்து கொண்டால். வெண்துாய்மை தான்
மறுபடியும்
அழுக்குப்படிந்து
சலவை தேடும்.
ഉLൺ உறுப்புக்களுக்கு
காப்பீடு செய்கிறார்கள்
மனம் என்ற வானமும்
உடலுக்குள் தானே இருக்கிறது
அதற்கு மட்டும்
ᎶᎢ60Ꭲ
காப்பீடு இல்லை.?
கெளசி /ார்
 

நாம் / இதழ் -2
தாயிடமிருந்து மகளுக்கு .
எனதருமை மகளே வெட்கப்படாமல் சொல் நானே உனது தாய் என்றும் இந்த நகரமே உனது தந்தை என்றும் .
கற்பிலுயர்ந்த மனைவியரிடம் போய்ச் சொல் நானே அவர்களின் ஆண் மக்களுக்குக் காதலைக் கற்றுத் தருகிறேன் ஆயிரம் பெண்களுக்கீடாய் என்னையே அவர்களிடம் சமர்ப்பித்தேன் அங்ங்னம் நானொரு துறவியானேன் . ஆண் என்பவன் எண் மகளே முடிவற்ற ஆசையின் பேருரு அந்த ஆழியினை நீ கடந்தாக வேண்டும் நான் எவ்வாறு எண் உடலைக் கடந்தேனோ அது போல
தலையை நிமிர்த்து எனதான இடத்தினை நீ நிரப்பு உன்னதமானவளாய் உயர்வு பெறு நாளை அதிரசம் ததும்பும் காதலனுபவம் உனக்குக் கிட்டலாம் அப்போது நான் காண முடியாது போன சூரியனை நீ காண்பாய் . யேசு பிரான் முன்னே நின்று நான் கண்ணீர் விடவில்லை

Page 8
நாம் / இதழ்-2 என் முன்னே வந்து கண்ணிர் விடும் உபகுப்தனும் வேண்டாம் . ஒவ்வோர் இரவும் நான் எரிந்து கனியும் இரும்பு ஒவ்வோர் காலையும் சுடர் விடும் பொன் காமத்தை நான் வென்றேன் பேராசைச் சுயநலத்தை நீ தாண்ட வேண்டும் . நாமே தான் நிறைந்து தளும்பும் பூமி என்றும் கொடுக்கும் இயற்கை
மலையாளம்,ஆங்கிலம் மூலம் கே.சச்சிதானந்தன், தமிழிலிரு.சத்தியபாலன்.
ஹைக்கூ கவிதைகள் வாங்கி இழுத்துப் போர்த்திக் கொண்டார்களே தவிர
விழித்தவர்கள் யாருமில்லை சமவுடமை"
குட்டையான கயிறுகள் அறுக்கப்பட்டு நீண்ட சங்கிலிகள் வழங்கப்பட்டன சுதந்திரம்"
வாழும் போதே நமக்கு நாம் கொள்ளி வைத்துக்கொள்கிறோம் ஜனநாயகம்"
ஒரே தடவையில் கட்டணம் தவணைமுறையில் ஏமாற்றம்
தேர்தல்"
ஷோகி உலிமா) -
 
 

நாம் / இதழ் -2
வரலாறு காற்றில் சேமிக்கப்படுகிறது
இசைப்பொழிவொன்றில் இதயம் கரைகிறது காற்றின் வழியே காதில் மெல்லிசையாய் இறங்கும் உன் குரல் ஏழுஸ்வரங்களின் எத்தகைய இணைப்பால் இதயத்தை ஒத்தடமிடும்
இவ் ஓசை பிறக்கிறது. எண்ணிறந்த ஓசை விரியும் பிரபஞ்சத்தில் உன் குரலை மட்டும் காற்று எப்படிப் பிரிக்கிறது காற்றில் கலந்த அந்த ஒலித்துகளில் எம் மரபணுவின் கூறுகள் இருக்குமோ தந்தையிடம் நாம் பெற்ற சுருதியின் சிறு சாகித்யம் இதில் இருப்பது சாத்தியமோ மனமெங்கும் பரவுகிறது மகிழ்ச்சி சிகப்பணுக்களில் ஈமோகுளோபின் அதிகரிக்கிறது வானலையில் உன் குரல் கலந்து கொண்டிருக்கிறது எம் வரலாறு காற்றில் சேமிக்கப்படுகிறது வளரும் விஞ்ஞானம் ஒலித்துகளைப் பிரித்து வேறாக்கும் போது ஓர் இசைப்பதிவு எமக்குரியதாக சொல்லப்படும்.
-வேலணையூர்-தாஸ்

Page 9
நாம் / இதழ் -2 நீ - நான் - அவர்கள்
கரை தொடும் அலைகளாய் அடிக்கடி என் மனதைத் தொட்ட வண்ணம் உன் நினைவுகள்
விட்டுப் போன அலையின் ஈர ஸ்பரிசத்தை சுமந்தபடி காத்திருக்கும் கடற்கரை மணலாய் நான்
அலைக்கும் கரைக்கும் கடற்குமிந்த
6L66)6)
வேடிக்கை பார்த்தபடி காற்று வாங்கும் மனிதர்களாய் இந்த சமூகம்
மன்னூரான்
 

நாம் / இதழ்-2
பாவம். விட்டுவிடுங்கள்
நீ தூக்கிச்செல்லும் கற்கள் .கரையும் உம் நிலைகண்டு பூச்சிமனிதரே உங்கள் சந்ததி சரித்திரத்தில் இடம்பிடித்தாலும் ஏழையின் சாபம் மகிழ்ச்சியை மழுங்கச்செய்யும் புத்தகம் தூக்கவேண்டிய கைகள் நாளைய வசந்தத்தின் கைகளை கிழிஞ்சல் செய்கிறது மாக்சீசம் புரியாத மக்கள் என்று ஒதுக்கிவிட்டாலும். உண்மைகள் புரிகையில் உங்கள் பணம் உங்களுக்கு வாய்க்கரிசி இடும் கொத்தடிமை செய்து உங்கள் பாதங்களுக்கு செல்வம் ஈட்ட
எங்கள் செல்வங்கள்
பாவம் . விட்டுவிடுங்கள்
ஜே.எஸ்.ராஜ்
15

Page 10
நாம் / இதழ்-2
நீ வந்திருந்தாய்
நினைவுகள் நீக்கி தொலைவுபடுத்தப்பட்ட ஒரு நீண்ட நெடிய இரவில்
நீ வந்திருந்தாய் நான் காணாமல் போதலில் கரைந்து கொண்டிருந்தேன் எங்கு தேடியும் என் விம்பத்தின் துகள் கூட பெறமுடியாத ஒர் இடத்தில்
மன்னிப்புக்களால் சாவடிக்கப்பட்டிருக்கலாம்
அல்லது
நம்பிக்கைகளால் நசுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நான் நிராகரிப்புக்களால் நிரம்பிவழிகிறேன் ஒரு துளி கணிணிரோ
நீண்ட ஒரு பெருமூச்சோ என்னிடம் இருந்து வெளிப்படவில்லை
ஆனால் நான் காணாமல் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். வேரின் விசும்பல்கள் விறகு வெட்டிகளுக்கு தெரிவதில்லை என் காணாமல் போதலிலும் அறியப்படாத முடிச்சு ஒன்று இருக்கதான் செய்தது
நீ வந்திருந்தாய் காணாமல் போதலில் நான் கரைந்து கொண்டிருந்தேன்
மதுஷா மாதங்கி
 

நாம் / இதழ் -2
உரைநடைக் கவிதைகள்
சிலிர்த்தேறும் பச்சை நரம்புகளில் ஊர்கிறது உயிர் ஆழமான வரிகளை மேய்ந்து கொண்டிருந்தேன். அரசமரத்தின் இளஞ்சிவப்பு நிறத் தளிர்களின் கீழ் கசிகிறது வெளிச்சம் , மெளனமான பொழுதொன்று தனக்கென்ற அழகியலையும் அர்த்தங்களையும் உடுத்திக் கொண்டு என்னைப் பின்னியிருந்தது . நான் தனிமையை வாசித்துக் கொண்டிருந்தேன் . கூட்டின் மேல்த் துணையிழந்த பேடொன்று பெருமித் தன் குரலெடுத்துப் பாடத் தொடங்கியது . சிறகுகள் உரசிய வெப்பத்தோடு உதிர்கிறது அந்தப் பாடல் . விரல்களில் நுழைந்த இறகொன்றிலிருந்து வழிகிறது தனிமை ததும்பும் கவிதையொன்று .
2 கிளைத்துப் படர்ந்திருந்த மேல்ப்பக்கக் காம்புகளில் அடர்ந்திருக்கும் இலைகளின் நிறைப்பில் நிலவின் கிரணங்கள் மறைத்து விட கீழே வேர்களில் புல்லாங் குழலாக நான் . வருகின்ற போகின்ற தென்றலின் வாசிப்பில் ராகமாக அபசுவரமாக மாறி மாறி வெளிவந்தேன் . கணுக்கள் நிறைந்த மூங்கில் காட்டிலிருந்து நான் வெட்டி எடுக்கப்பட்ட குழல் .
17

Page 11
நாம் / இதழ் -2
கீழிறங்கிய நிலவின் வெள்ளை நிறக் கைகளால் என்னுடல் மெழுகியிருந்தேன். துளைகளை நிறைக்கின்ற தெய்வீகக் காற்றில் இதமாக நான் மிதந்து மெளனத்தில் வாழ்ந்த அந்த மரத்தை என் இசையால் மொழி பெயர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தேன் . நதியின் மேல் தளர்ந்து நடந்து வரும் இளஅலையாக என்னுள் ஏதேதோ தளும்பல்கள்
வழிந்து வருகிறது . காதலில் சில நிமிடம் கரைகின்ற பனித்துளியாய் காயமாக ஒரு துளியில் கசிகின்ற ரத்தமாய் ஊமையான உணர்வுகளில் முகிழ்கின்ற இசைத்தலாய் கழிகின்ற மோனத்து நிமிடங்களின் தொடர்ச்சியில் என்னிலிருந்து நான் ரகசியமாக வெளிவந்து கொண்டிருந்தேன் .
கிரிஷார்
 

உளி வழி ஊடல்ச் சிலை
இருபது விரல்களும் சேர்ந்தது இறையடி உனதிரு விழிகளும் எனதடி
கணையென எறிகிற பார்வைகள் விருந்தடி கூழினுள் ஒடியலாய்ப்
பொருந்தடி
துரு துரு இதழிடை தெரிந்தது தேன் அடை கடைவிழிப்
பார்வையால்
முறி வெறி ஏற்று உறிக் கள்ளாய் கருவாடாயப் எனைக் கடி நாவில் சொர்க்கம் காட்டு
நாம் / இதழ் -2
உடல் பொழில் அமிர்தோட்ட அருவி நீ கடல அலைக கவியோட்டப்
இரவி நிலா அரசாட்சிக் கலவை நீ மடை திறந்து மருவி வந்த தென்றல் வடி
பிரபஞ்ச நெறி ஆணவ அழகு LDUL!....!
உளி வழி part_Qುà: äkmaು விலை புரிந்தால் என் மனதினில் கூறிட்டுத்
திளை.!
கஸலிஷாப்பித்தன்

Page 12
நாம் / இதழ் -2
தோழர் சாத்தானின் பரிசளிப்பு
ஏதேனுமொரு தருணத்தில் ஆலிங்கணத்தின்போது தேடித் துழாவும் விரல்களில் முளைத்துவிடும் கணிகள் கண் வலையில் சிக்காமல் அரூபமாகி விளையாடும் மெல்லுடல் காமக்கொடி தொற்றி, பின்னி, பரவி மறதிவெளியில் வன்னுடல் மிதக்கையில் . திடீரென மெல்லுடல் தோன்றி நிகழ்வாழ்வுக்கு மீட்டெடுத்துப் புணர விரல்கள் குருடாகி போகும். அரூபமாகும் விந்தை அழிந்த பொழுதில் எடுத்தணைக்கையில் பொருந்தாமல் விலகியிருக்க அந்நியமென்று கதறித் துப்பும் இருளை மெல்லுடல் நனைய கைப்பற்ற ஓடும் முகாந்திரமின்றி தொலைந்துபோன தன் விலா எலும்பை முளைவிட்ட ஆதாமின் ஒரு நான் அல்குல் வெறியனென வசைவீசி தன்னோடு பொருந்தும் மார்பு எதுவென யோசிக்கையில் உடலெல்லாம் முளைத்துவிட்ட கண்களோடு அலையுறும் ஏவாளின் ஒரு நான் ஆதிக்கணிகளைப் பரிசளிக்க தோழர் சாத்தான் தட்டும் கதவோசை கேட்கிறதா அதுவுன் வீடாயிருக்கக் கூடும்.
அமிர்தம் ஆர்யா,

நாம் / இதழ் -2 அய்யப்ப மாதவன் கவிதைகள்
இருட்டைத் தின்கின்ற நிலவின் கீழ் இருள் தின்கின்ற நான்
குரல் மட்டும் ஒலிக்கும் இருட்டினிடையே இருட்டாக யாவரும்
நகர்ந்த நிலவில் நகரும் ஒளியில் வெள்ளை பூசிய இருட்டு வீதிகளில் நானும் என்னுள் ஒளியாக இருளாகிய உடலுள்
நிரந்தரமற்ற இருள் இருக்கின்ற மமதையில் பெரிதாக விரிந்து குரூபியாக இருக்கும்வரை வீழ்த்தியது பயத்தில்
நிலவின் ஒளியிருந்தும் முழுவதுமாய் கரைந்து விடாத இருட்டு முணுமுணுக்குமோசையில் பீதியில் விதும்பும் தனிமையில் விடியலைத் துரிதப்படுத்தினேன்
நிலவும் இருளும் நெய்த கோடையில் துவண்ட அம் மரத்தின் காட்சியில் சடை விரித்தாடிய
கோர முகங்களை

Page 13
நாம் / இதழ் -2 கண்ணுறப் பயந்து இறுக மூடிய இமைகளிலும் கருப்பின் வரவுகள் ஓயாத இருட்டின் ஓய்ந்த மூளையில் நிலவின்
ஒளி பருகி ஒளி பருகி இருட்டையொழித்து இரவை மறைத்தேன் கைகோர்த்த நித்திரை முடிய இருட்டுமில்லை நிலவுமில்லை பிறகு பயமுறுத்தாத பகல்
அய்யப்ப மாதவன்
 

நாம் / இதழ் -2
என் தோழி
என் யன்னலோர வேப்பமர தோழி
தலை நிறைய பூச்சூடி என் முன்னே வெட்கப்பட்டு வெட்கப்பட்டு நிற்கிறாள்
தலைகொள்ள பூவோடு நிற்கும்
அவளை அண்ணாந்து பார்க்கும் போது என் மனசுக்குள்ளும் மத்தாப்புச்சிதறல்கள்
6T6ar LTLL6t கைகளில் சிறுமியாய் சிரித்தவள் இன்று
குமரியாயப்
காதலியாய்
தாயாய்
பாட்டியாய்
பல வடிவங்களில் எனை பார்த்து சிரிக்கிறாள்
அவள் வீட்டில்
இப்போது விருந்துக்காலம் புதுப்புது விருந்தாளிகள் அவர்கள் பெயர் எல்லாம் எனக்குத் தெரியாது
23

Page 14
நாம் / இதழ் -2
எட்டிப்பார்க்கும் என்னையும் வா என்கிறாள் தன் வீடு முழுக்க வெள்ளைக்கம்பளம் விரித்து தன்னோடு கதை பேச வரச்சொல்லி சில்லென்ற காற்றை
என் முகத்தோடு மோதவிட்டு வேடிக்கை காட்டி சிரிக்கிறாள் என் தோழி
எஸ்.மதி
 

நாம் / இதழ் -2 என்னைக் கொடு
காதலுக்காய் காற்றுடன் கவி பேசி
ரும்பாய் உடைந்ததடி ன் தூங்காத கனவுகளும் ருப் பிடித்த மனமும்
எனக்காய் ஒரு தடவை என்னைக் கொடு
உயிர்க் காதல் செய்ய !
ப7.சுமணன்

Page 15
நாம் / இதழ்-2
மாயவலை சுற்றிக்கொண்டிருக்கின்றது
மனதெங்கும் வியாபித்த அந்த
மாயவலை தற்செயலாய்
சுற்றிக்கொண்டது தான்
உறுதியில்லாத நூல்களினாலும் உண்மையில்லா பிணைப்புக்களினாலும் ஊருக்காக பின்னப்பட்டது. உதடுகள் மட்டும் மலரும் புன்னகைகள் உயிரில்லாத உச்சரிப்புக்கள் ஊமையாயப்ப் போன நேசங்கள் என்பவற்றால் நிறமூட்டப்பட்ட அந்தமாயவலைதான் மிக மிக இறுக்கமாக சுற்றிக்கொண்டது சிக்கிக்கொண்ட இதயவலிகள் மட்டும் கணிணிர்ப் பூவைச் சொரிந்துகொண்டே இருந்தது. அபத்தமான பொய்களெல்லாம் அலங்காரமிட்டுக்கொண்டு வெட்கமேயில்லாமல் வெளியேவந்தது மெய்யைப் போன்று. நிஜங்களைப்போல வேடமிட்டாலும் நீர்த்துப்போய் விடுகின்றது பல சந்தர்ப்பங்களில். பிரியமில்லாத பரிவுகள் அன்பேயில்லாத ஆதரவுகள் உண்மையில்லா உருகுதல்களென்று வெற்றுத்தனங்களை ஒப்புவித்துக்கொண்டிருக்கும் இந்த மாயவலையில் மனதை சிக்கவைப்பதென்பது எத்தனை மடமையென்று மனங்களுக்கு மட்டும் புரிவதேயில்லை
மாயவலை மிக
து.எலசபெத்
 

நாம் / இதழ்-2
ஓர் துரோகம் ஓர் மன்னிப்பு
சிறுக சிறுகச் சேகரித்த சுமைகளைக் கொண்டு ஓர் துயரக் கூட்டினை கட்டியிருந்தேன் நான்!
போகிற போக்கில் ஓர் பெருந் துரோகத்தை வீசி விட்டிருந்தான்
அவன். ஏமாற்றங்களை உதிர்த்துக் கொண்டே கண்ணீரைக் கொண்டு நிரப்பினேன் அக் கூட்டினை.
பெருங் கூச்சலிட்டபடியே இருந்தன துரோகமும் வன்மமும். சிறிதும் பெரிதுமாய் புலம்பல்கள் .
பின் நீண்டிருந்த நேரந்தனில் விசும்பல்கள் வெதும்பியபடியே உறங்கிப் போயின. நிசப்தம் தளும்பிய சமயத்தில் எட்டிப் பார்த்தேன்
ஓர் மன்னிப்பு துளிர் விட்டிருந்தது. நான் பார்த்து விட்டிருந்த கணத்தில் நிர்மூலமாகியிருந்தது அக்கூடு
ஹேமிகிருஷ்

Page 16
நாம் / இதழ் -2
கனவுகளில் வாழ்தல்
என்னுள் நிறைந்து போயிருக்கும் உன்னை பற்றிய என்
சிந்தனைகளில்
உன்னோடு
எப்போதும் இருக்கும் அத்தனையுமாக நான் மாறிடவேண்டும் போலான மனக் கிலேசத்தில் நான் உன்னை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கின்றேன் . உன் வீட்டில் நாளும் பொழுதும் பூத்துக் குலுங்கி உன் பிஞ்சு விரல்களில் ஸ்பரிசம் செய்யும் உனக்குப் பிடித்தமான அந்த சிவப்பு ரோஜா செடியாய் நான் மாறவேண்டும் . எப்போதும் உன் மோதிர விரலில் குடிகொண்டிருக்கும் அந்தச் சிவப்புக் கல்லு மோதிரமாய் நான் மாறவேண்டும் . உன்னைப் பார்த்த பூரிப்பில் என்றும் உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆரவாரப்படும் உன் வீட்டு வாண்டுகளாய் நான் மாறவேண்டும் . உன் கைப்பையில் உனக்கு துணையாய்
 

நாம் / இதழ் -2
என்றும் இருக்கும் அம்மன் படமாக நான் மாறவேண்டும் . உன் கேசத்தில் என்றும் குடி கொள்ளும் நித்தியா கல்யாணிப் பூவாய் நான் மாறவேண்டும் .
எப்போதும் உன் கல கல பேச்சொலிகளை சேமித்து வைக்கும் உன் தொலை பேசியாயப் நான் மாறவேண்டும்
எல்லாமே கானலாகிப் போன இந்தக் கணப்பொழுதில் இப்படி இப்படியாய் உன்னோடு இருக்கும் அத்தனையுமாக நான் மாறி விடவேண்டும் போலென உன் நினைவு வெளியில் நான் தொலைந்து போய்க் கிடக்கின்றேன்.
வெற்றிதுஷ்யந்தன்

Page 17
நாம் / இதழ் -2 கையில் ஊரும் உயிரின் உணர்வு
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புக்கள் என் உள்ளத்திலே உன்னை தடவிடும் என் விரல்கள் அதை கூறவில்லையா உனக்கு?
மெளன மொழிகளில்
உரையாடும்
என் வார்த்தைகள் விளங்கவில்லையா உனக்கு?
இரு நாடிகள் துடிக்க
ஒரு நொடியும் உன்னை நீங்கவில்லை என் நினைவு அது தெரியவில்லையா உனக்கு? நிசப்தத்தில் கூட
என் விரல்கள் உண்னை விலகியதில்லையே!
அது கூட விளங்கவில்லையா உனக்கு?
மெல்லிசை கேட்டு நான் உன்னை தடவிடும் சுகம் தெரிகிறதா உனக்கு? பாலர் பாடல்களை என் நாவும்
 

நாம் / இதழ்-2
அசை போட்டுத்திரியும் சத்தங்கள் கேட்கிறதா உனக்கு? என் கால்களின் வீக்கங்கள் வரவிருக்கும் உன் குறும்புகளின் சுகத்தை விளக்குகிறதே எனக்கு காலங்கள் கடப்பதை உதைத்து கொண்டே காட்டுகிறாயா நீ எனக்கு? நீ என் கை சேரும் போது தான் வசந்த காலங்கள்
யாவும் வரமாகும் என் வாழ்வில்
ருஷாந்திக்காசுகுமார்
31

Page 18
நாம் / இதழ் -2
சபிக்கப்பட்ட வாழ்க்கை
விழிகளின் தொலைவுகள் வழியே கனவுகளின்
கால எல்லை.
மெளனத்தின் ஸ்வரத்தினிலே LDITUuğglasör
மனவலைகள்.
வாழ்வியலில் தொலைந்த வசந்தம் மீண்டும் பூக்குமென
எண்ணங்கள்.
சிதைக்கப்பட்ட நினைவுகளில் சித்திரமாய் பல வலிகள்.
காலத்தின் வேதனையில் கவிகளின்
ல் இங்கே.
மெளனித்த நாதத்துள் இசைக்கீறலாய் ஓர் அழுகுரல் ஒலித்திட
விதி எனும் விதைக்குள் அறையப்பட்ட ஆணியாக நகர்கிறது
இந்நாட்கள்.
நிர்க்கதியாகி நடையினமான உடலைச் சுமந்து காட்டுவழியில் ஓர் LujoОСТLћ.
இசையாகிக் கசிவதற்குள் விறகாகி தணலான மூங்கில் களியொன்று மூர்ச்சையாகிறது இங்கு.
விதைக்கப்பட்ட விதைகள் முளைகளிலே கருகிப்போக சப்பித் துப்பப்பட்டு சபிக்கப்படுகிறது இங்கே ஓர் வாழ்க்கை
கீ7.?றுைநில7
 

நாம் / இதழ்-2 பயணம் பற்றிய குறிப்பக்கள்
எதிரெதிர்த்திசைகளூடே நீயும் நானும் தூரமாய் வெகுதூரமாய் பிரிந்துவிட்ட நேரத்தில் வலுத்துப்பெய்த மழைபற்றி நமக்கெந்த அக்கறையும் இருக்கவில்லை. உன் நிழல் பார்த்துத்தொடர்ந்த என் வாலிபப்பயணங்களின் மெல்லிய இழையை காலத்தின் கூர்வாள் சடுதியாக கிழித்தபோது திகைப்பையும் கணிணிரையும் தவிர வேறென்ன செய்தோம் நாம்? அதோ நீ செல்லும் பாதை இருள் சூழ்ந்தது இதோ நான் செல்லும் பாதை முள் நிறைந்தது நமக்கே தெரியாத பயணமொன்றின் நிர்ப்பந்தத்தில் அவசர அவசரமாக நகர்ந்து கொண்டிருக்கும் கணப்பொழுதில் எப்போதாவது நினைத்துப்பார். என் கைகோர்த்தபடி நாம் நடந்த பயணங்களின் ரம்யத்தையும். நிம்மதியையும்.?
நிந்தவூர்ஷிப்லி

Page 19
நாம் / இதழ் -2
சுதந்திரப் பறவை
சிதைந்து போன நகரத்தின் எஞ்சிய துண்டில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது உயிர் . இனத்தின் எஞ்சிய விதைகள் வாழ்வின் பாடலை பாடிக் கொண்டும் வானமதிரக் கத்திக் கொண்டும் இருக்கின்றன . இரத்தமும் சதையுமான அதே பூமியில் இன்னலுறும் நினைவுகள் . கனவுகளால் ஆன சிறகுகளில் மிதந்து கொண்டிருகின்றன . கூடுகள் பறிபோன அவ்வூரின் சுதந்திரப் பறவைகள் என்றோ ஓர் நாள் வாழ்வு மீட்கப் படும் என்ற ஆதங்கத்தோடு .
சிவனேஸ்வரன் பிரியங்கனி
34
 

நாம் / இதழ் -2 சோமாலியத் தாய்
வெளியில் இவ்வளவு காற்றிருக்க ஏனடா மகனே என் முலையில் வாய் வைத்து காற்றைக் குடிக்கிறாய்
ஏனடா அழுகிறாய் வஞ்சகம் செய்கிறேன் என்றா ? சத்தியமாய்ச் சொல்கிறேன் எனக்கும் தெரியாது தாய்ப் பாலின் சுவை என்னவென்று
ஏன் என்றால் உன் பாட்டியின் முலைகளுடன் பாலுக்காகப் போராடித் தோற்றுப் போனவள் நான்
Øሃ &) ዕ0//

Page 20
நாம் / இதழ் -2
நடைமுறைச் சாத்தியம்
இரவு இன்னுமொருமுறை தோற்றுப்போகும் மற்றுமொரு வைகறை! என் சாகாத கற்பனைகளுக்குச் சந்தம் சேர்க்கும் வகையிலான செளந்தர்ய வரிக்கோர்ப்புக்களும் மனதைக் குடையும் ஜதார்த்த நடைமுறைகளால் செறிவூட்டப்பட்ட சொற்பிணைப்புக்களும் இன்னமும்கூடப் பற்பல நிகழ்கால நெளிவுசுழிவுகளும்என் ஓயாத உள்ளார்ந்த உணர்வுப்பெருக்கோடு காகிதமேடையில் எழுத்தாணியின் நட்டுவாங்கத்தோடு
அரங்கேறத் துடித்தாலும்... ஏதோ ஒன்று இடையில் வந்து தடாச்சட்டம் இட்டுக்கொள்கிறது! சூழ்நிலைகளின் சீரியத்தன்மைகளும் சோகமுலாம் பூசிய பொழுதுகளும்-ஏன்? சுதந்திரத்தின் தணிக்கைகளாய்க்கூட அவை இருந்திடலாம்! உள்ளங்காலில் ஏறிடும் முள்ளின் வலியும் மண்ணோடு அளாவிடும் குழந்தைத்தனமும் பாலை வெம்மையில் தீண்டும் தென்றலின் சுகமும் நதியில் இறங்கி நீந்திடும் சுவாரஷ்யமும் என் உணர்வின் அதிர்வுகளோடு பரிபாஷித்துக்கொள்கின்றன! எத்தனை? உணர்வின் விதைகள் உள்ளம்) வயலில் தூவப்பட்டாலும் கவி விளைச்சலாய் சாகுபடியாகும் சாத்தியம் சிலவற்றுக்கு மாத்திரமே இருப்பதாய் நான் உணர்ந்து கொள்கின்றேன்!
யோ.நித்யா 36

நாம் / இதழ் -2
முரண்பாடு
வானம் சிவக்கிறது உன் நாணத்தை நினைவு படுத்தியபடி
கடலலை ஓசையை காற்று அள்ளிவருகிறது உன் சிரிப்பலையோடு ஒத்திசைகிறது வானத்தின் கார்முகில் திட்டுக்கள் என் கண்களில் உன் கூந்தலை கனவாக்கின்றது இனித் தோன்றப்போகும் நட்சத்திரம் உன் விழிகளை ஞாபகப்படுத்தலாம் நீ இயற்கையோடு இசைகிறாய் வாழ்வோடு மட்டும் முரண்படுகிறாய் என்கிறார்கள் இயற்கை அழகை ஆராதிக்கிறது சமூகம் என்ன எதிர்பார்க்கிறது..!!
ந.மணிகரன்

Page 21
நாம் / இதழ்-2 வமளனமாகவே.
நீண்ட நேரமாக இருந்த நிசப்தத்தைக் கலைத்தபடி திறந்து வைத்த யன்னலுடாக ஓடிவந்த காற்று விரித்து வைத்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கிறது.
மாமரத்திலிருந்து காய்ந்து விழுந்த சருகுகள். யாரின் காலடியும் படாமல் மெளனித்திருக்க எங்கிருந்தோ வந்த
ஒரு தொகைக் காற்று ஓடி வரும் ஒரு குட்டிச் சிறுவனைப்போல் எல்லாவற்றையும் அள்ளிச் செல்கிறது. குசினி யன்னல் கம்பியூடாக உள்நுழைந்த சின்னஞ்சிறிய அணிற்பிள்ளை ஒன்று சிதறுண்டு மிச்சமாயிருந்த சோற்றுப் பருக்கைகளுக்காக இரண்டு கால்களை ஊன்றி எட்டிப் பார்த்தபடி வருவதும் போவதுமாய்.
வேலியோரப் பூவரசில் இருந்து
விக்கல் எடுத்தாற்போல் அடிக்கடி கரைந்து கொண்டு
38
 

நாம் / இதழ் -2 எப்படியும் இந்த நிசப்தத்தைக் குலைத்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது காகமொன்று.
எனது நான் மட்டும்
நீண்ட நேரமாக
யாருக்கும் தெரியாமல் என்னுடனேயே பேசிக் கொண்டிருக்கிறது. அந்த நிசப்தத்தை குலைத்துவிடாதபடிக்கு மிக மெளனமாகவே
துவாரகன்
39

Page 22
நாம் / இதழ் -2
புத்தகசாலிகள் நாங்கள்
நாங்கள் புதியவர்கள் புத்தகத்தில் பொதிந்தவர்கள் புத்தகத்தால் தெரிந்தவர்கள்
நாங்கள் புத்தகப் பூச்சிகள் தான் ! ஏனென்றால், பூக்கள் கூட எங்களுக்கு புத்தகங்கள் தான்
தினமும் ஒரே இடத்தில் இருந்துக்கொண்டு உலகம் சுற்றும் வாலிபர்கள் !
அறுபது பக்கங்களில் பூமியை ஆராய்ந்தவர்கள் நாங்கள் ஆய்வுக்கட்டுரை அத்தனையும் எங்கள் ஆயுளை வெளிப்படுத்தும்
திரும்பும் பக்கமெல்லாம் எங்கள் திறனாய்வு திருப்பிய பக்கத்தில் தான் எங்கள் புலனாய்வு
சிந்துவெளியிலும் நாம் சீரிய சிந்தனையாளர்கள் - சான்றுக்கு கூட்டி வரலாம் சாகாத கல்வெட்டுக்களை
 

நாம்/ இதழ்-2 ஆதி முதல் அறிவின் சுடர் எரிந்து கொண்டிருந்த அணையா விளக்கு எம்பெருமை
நாங்கள் எங்கள் முதாதையர்களுடன் கதைக்கும் மந்திரவாதிகள் ! இது எப்படி சாத்தியம்? கேட்பது புரிகிறது இந்த மாயஜாலம் புத்தகத்தில் தான் உள்ளது
எனவே
உலக அறிஞர்களுடன் பேச வேண்டுமா ? உடனே எல்லா புத்தகங்களுடனும் தொடர்பு கொள்ளுங்கள்
புத்தகங்கள் - திறக்கட்டும் பூமி புனிதமடையட்டும் !
பொறுமையடைகிறோம் திறமையடைகிறோம் பெருமையடைகின்றோம்"
எல்லோரையும் விட நாங்கள் மிக்க அதிஷ்டசாலிகள !
ஏனென்றால் புத்தகசாலிகள் நாங்கள் !
ஹட்டன் சுந்தர்

Page 23
நாம் / இதழ் -2 காணாமல் போன(அ)வள்
எனது உயரம் இருப்பாள். கொலுசு கூச்சப்பட நடப்பாள். யாரையும் நிமிர்ந்து பார்க்க மாட்டாள். கன்னத்தில் குழி விழச்சிரிப்பாள். பேர் ஊர் தெரியாது ஆனால் தமிழ் பேசுவாள். பஸ்சில் ஜன்னல் ஓரத்தில்தான்
தாவணி அணிந்திருப்பாள் - அடிக்கடி துப்பட்டாவை சரிபார்ப்பாள். கீழ் உதட்டின் ஓரத்தில் ஒரு மச்சமும் இருக்கிறது. உள்ளங்கையில் மருதாணி பூசி இருப்பாள். கைக்குட்டையை கசக்கிப் பிடித்திருப்பாள். மேலும் சொல்வதானால் கூந்தல் இரவைப் போலவும் முகம் நிலவைப் போலவும் இருக்கும். கடைசியாய் மஞ்சள் தாவணியில்தான் &EITGOOTITLD66 CCLUTT60TTT Giff. தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் கேட்கும் சன்மானம் வழங்கப்படும் - அது என் உயிர் என்றாலும்
பரவாய் இல்லை
 

நாம் / இதழ் -2
த(யறங்கிய வேர்கள்
ஒற்றைப்பனை, வஞ்சகமில்லா நெடுவளர்த்தி காற்றுக்கு காவோலை கழண்டால்
மாற்றமில்லாமல் தாண்டும் நூறடி !
ஆடுமாட்டமும் கரியவுருவமுமாக மின்னலொளியில் பார்த்தால் , மயிர்கூச்செறியும் மழையிரவுகளில் அதிகாலை அப்பாவியாய் நிற்கும் ,
கூடுவிழுந்து காகம் போனபின்னே வீடாக்கிக் கொண்டது அணிலொன்று வட்டை !
கறையான் தின்ன இறங்கிவரும் அணிலை , இரையாக்க காத்திருக்கும் கடுவன்பூனை வெள்ளைதான் மனசெல்லாம் கள்ளமதுக்கு , காத்திருப்பும் தப்பித்தலுமாக அணிலும் பூனையும் கொஞ்சகாலம்.
பாணியதிகம் பழத்தில், அணிலோ பருவத்தில் கோதிவிடும் அம்மாவின் ஏச்சு சிலவேளை அணிலுக்கும் விழும் பாணியெடுத்து பனாட்டு போடுவதைவிட பணியாரம் சுடுவதை வழக்கமாக்கியிருந்தாள்
43

Page 24
நாம் / இதழ் -2
கொக்காரை பன்னாடையென்று எதுவிழுந்தாலும் தொட அனுமதிப்பதில்லை புருனை சிலந்தியிருக்கும் என்று சொல்லி , தட்டித்தானெடுத்து வைப்பா !
மாடு முதுகுதேய்க்கவும் சிலகாலத்தில் கொடிகட்டி புகையிலை போடவும் , எப்பவாவது சாய்ந்துகொள்ளவும், அவதிக்கு அப்பாடா என்றுஒண்னுக்கு அடிக்கவும் போனதைதவிர பலவேளைகளில் ஒற்றையாகவே!
இப்போதெல்லாம் நினைவில் தினமும் வந்துதொலைக்கிறது அந்த ஒற்றைப்பனைமரம் .
ஓ வென்று அழவேண்டும் போலிருக்கிறது , தனிமையை எண்ணி |
நேற்கொழுதாசன்
 

நாம் / இதழ் -2
தேடுவாரற்றுக் கிடக்கும் என் தேசம்
நேற்று வரை நேசிக்கப்பட்ட எண் தேசம் இன்று தேடுவாரற்றுக் கிடக்கிறது . நீண்டு வளர்ந்த பனை மரங்களும் பல கதை சொல்லும் பச்சை வயல்களும் காணாமல் போய் விட்டது . பின்னப்பட்ட கூந்தலும் பின்னலில் சூடப்பட்ட மல்லிகையும் நெற்றியில் பூத்த குங்குமமும் நெறி காட்டிய திருமாங்கல்யமும் நெறி பிறழாத திருமணங்களும் நேற்று வந்த பேருந்துடன் ஏறிச் சென்று விட்டது தூரதேசம் . பெண்ணுக்குரிய மரியாதை தாய்மைக்குரிய பாசம் இவற்றைத் தந்த என் வாலிப ஆண்களும் -இன்று வயோதிபர்களாகிவிட்டனர் நவீனம் என்ற போர்வைக்குள் நசுங்கிப் போகிறது எம் பண்பாடு கனவுகளுக்குள் வாழும் என் சமூகமே கணி திறந்து பாருங்கள் ஒருமுறை உங்கள் கால்களின் கீழேயும் கணிணிவெடிகள் புதைக்கப் பட்டிருக்கும் .
கண்விழிவின்சன்

Page 25
நாம் / இதழ் -2 முகவரியில்லாக் கடிதங்கள்.
என் பிஞ்சுக் கரங்களைப் பற்றிக் கொண்டு வெகு தூரம் எனை அழைக்கிறாய். கனத்துப் போன இதயத்தை உன் அன்பு மொழியால் வருடிவிடுகிறாய். சிவந்த கன்னங்களை உன் முத்தங்களால் ஈரம் செய்கிறாய். குழந்தை போல எனை எண்ணி அழகாய் அலங்கரிக்கிறாய். உனக்கு எப்போதும் நான் குழந்தை தான்.
கணி திறக்கும் போது எல்லாமே கனவாய்ப் போகிறதே உறக்கத்தைத் தொலைத்து விட்டு இரவுகளோடு போராடும் உன்னவளைக் காண வரமறுக்கிறாயே. உனைத் தொலைத்து இன்றோடு மூன்று வருடங்கள் .
நினைவுகள் மட்டும் போதுமா? ஆசையின்றி ஓசையின்றி வார்த்தையின்றி மெளனமின்றி வேகமின்றி மோகமின்றி காத்திருக்கிறேன்.
 

நாம் / இதழ்-2 என் தவிப்புக்கள் எல்லாம் உனையடையாது போகிறதே முகவரியில்லாக் கடிதங்களாய். உடலாலும் மனதாலும் பத்து மாதம் எனைச் சுமந்தாய் உனக்குப் புரியாதா உன்னவளின் உணர்வுகள். இந்த நம்பிக்கையில்
உன் நினைவுகளோடு மெல்ல நகர்கிறது என் நாட்கள்.
வே இந்து

Page 26
நாம் / இதழ் -2
நாம் வெளிவர
வாழ்த்துகின்றோம்
அபிராமி சூ சென்ரர் Abirami Shoe Centre
TP : 155, 156 Model Market. 021 222 3525 Power House Road, Jaffna.
Gaztaz, DS
Lingam’s Slik House
18, Power house Road, Jaffna.
TP: 021222 2138
 
 
 
 

יין
g
i.
ز- "?
3.
ܢ ܢܝ .
st ... " .
".
r
A

Page 27