கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அஸீஸூம் தமிழும்

Page 1
|-
 
 


Page 2

Saf M'll hlfi(sú
இக்ரஃ வெளியீட்டகம் நிந்தவூர்

Page 3
ខ្លាឃ្លាយ៉ា
உரிமை: ஏ. எம். 156)(57 uur
முதற்பதிப்பு : மார்ச் 1991
அச்சு : குமரன் அத்து இம், கொழும்பு-12
அட்டை அமைப்பு : எஸ். துரைசாமி
வெளியீடு இக்ரஃ வெளியிட்டம்
233 கிட்டங்கி வீதி நிந்தவூர் - 5
விலை 3 ரூபா 130,00
Azeezum Tamilum
Copyright: A. M. Nahiya
First edition: March 1991 Printed at . The Kumaran Press, Colombo -12. Cover designed by : S. Doraisamy Published by: ORA” Publishers 233, Kittangi Road,
Ninta Vur-5,
Price : Rs. 30.00
 
 
 

முன்னுரை
O
இந்நூலின் கதாநாயகன் அல்ஹாஜ் எ. எம். எ. அஸிஸ் அவர் கள் அதிபராக இருந்த காலத்தில் கொழும்பு ஸாஹிறாக் கல் லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கின்றேன். Muslim Contribution to Tamil Literature” GTGör no 560) av Lùn Giốio Grib. Gr. பட்டத்திற்கான ஆய்வை மேற்கோள்ளுமாறு என்னை ஊக்கு வித்தவர்களுள் முக்கியமானவர் அஸிஸ்தான். அவரின் சில எண் ணங்களை நிறைவேற்றுவதிலும் நான் முயற்சிகள் செய்திருக் கின்றேன். அவர் இன்றியமையாதது எனக் கருதிய அறபு-தமிழ் அகராதியை, "தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி" என்ற நூலைத் தயாரித்ததன் மூலம் நிறைவேற்றினேன். இஸ்லாமிய நூல்கள் பாடநூல்களாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற அவ ரது கோரிக்கையை நான் க. பொ.த. சாதாரண, உயர்தரப் பரீட்சைகளுக்கான தமிழ் பாடப் புத்தகக் குழுக்களில் அங்கத் துவம் வகித்தபோது நிறைவேற்றி வைப்பதில் பெரிதும் உதவி யிருக்கிறேன். அறிஞருடன் பல மகாநாடுகளில் பங்குபற்றினேன். அந்த வகையில் அஸிஸின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்க முனைந்து நிற்கும் நஹியாவின் இம் முயற்சியை மனமார வாழ்த்துகின்றேன்.
நஹியா அவர்கள் எனது இலக்கிய நண்பர். அஸிஸ் அதிபராக இருந்த ஸாஹிறாக் கல்லூரியின் உதவி அதிபர் ஆசனத்தை ஒரு கால் அலங்கரித்தவர் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதுவதில் தனக் கெனத் தனியிடம் பிடித்திருப்பவர். தான்கொண்ட கொள் கைகளிலிருந்து நிலைபிறழாத நேரிய நெஞ்சம் கொண்ட தமிழ் எழுத்தாளர். அவரின் எழுத்துக்களில் அறமும் விறலும் தோளோடு தோள் நிற்கின்றன. பிறரை இயங்கவைக்கும் ஆற் றல் அவரின் எழுத்துக்களுக்குண்டு. இலங்கை முஸ்லிம்களின் வாழ்வை வளமாக்கவும், வரலாற்றைத் தெளிவுபடுத்தவும், விடி வுக்கு வழிவகுக்கவும் எத்தகையதொரு எழுத்தாளன் தேவையோ அத்தகையதொரு எழுத்தாளனாக ஜனாப் நஹியா சுடச்சுடச் சுடரும் பொன்போல ஒளி வீசி வருவதைக் காண்கிறேன்.
தமிழ்ப் பணி என்பது தமிழைக் கொண்டு தான் வாழ்வதல்ல; தமிழைப் புகழ்ந்து பேசுவதுமல்ல; தமிழ் வாழ, தமிழ் பேசும் இனம் வாழ தன்னாலானவற்றைச் செய்வதே என்ற எண்ணம்

Page 4
அஸிஸ் அவர்களிடம் இருந்ததைப் போல நஹியாவின் அடிமன திலும் உறைந்துகிடக்கின்றது. அவரின் எழுத்துக்களும் வெளிப் பாடுகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.
நஹியா அவர்கள் ஒரு கல்விமான்; சிறந்த பேச்சாளன் நல்ல விமரிசகன் தெள்ளு தமிழ்க் கட்டுரையாளன்; பண்பு நிறைந்த மனிதன் கண்ணியமும் கட்டுப்பாடும் கொண்டோன். அடக்கம், ஒழுக்கம் ஆகியவற்றை அணிகலன்களாகக் கொண்ட இலக்கிய வாதி. சென்ற இடமெல்லாம் மன்றம் வைத்துத் தமிழ்ப் பணி செய்தவர். கல்வி கற்ற மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில், பல் கலைக் கழகத்தில், தொழில் புரிந்த கொழும்பு ஸாஹிறாக் கல் லூரியில் தமிழ் வளர்ச்சிக்குப் பெருமளவு பணிபுரிந்தவர். அவ ரது எழுத்துக்கள் வாழ்கின்றன; தொடர்ந்தும் வாழும்.
எடுத்துச் சொல்லும் திறன், கூர்மையான அவதானிப்பு, தேர்ந்த சொற்பிரயோகம், நீரோட்ட நடை, உள்ளதை உள்ளவாறே கூறும்பண்பு என்பன அவரின் தனித்துவமான எழுத்தாற்றலின் தன்மைகளாகும். தான் எடுத்துக்கொண்ட விடயத்தில் சின்னஞ் சிறு அம்சங்களையும் சிறப்பாக எடுத்துச்சொல்லும் பண்பு இவ ரிடம் காணப்படுகின்றது.
இந்நாட்டில் பழைய இலக்கியச் செல்வங்களையும் அறிஞர் பெருமக்களையும் பற்றி ஆராய்ச்சி செய்வோர் இருக்கின்றார் கள். புதிய இலக்கியச் செல்வங்களைப் படைத்து நல்குவோரும் இருக்கிறார்கள். இந்நூலாசிரியர், நம்மிடையே வாழ்ந்து தொண் டாற்றிய முஸ்லிம் அறிஞர் ஒருவரின் தமிழ்ப்பணியை நிகழ் கால எதிர்கால ஆராய்ச்சியாளருக்குச் சமர்ப்பணம் செய்கிறார். இன்னும் சில ஆண்டுகள் கழியின், இத்துணைக் குறிப்புகள் கிட்டு தல் அரிதாகிவிடும். இவற்றுள் பல மறக்கப்பட்டுப் போதல் கூடும். அந்நிலை நேருமுன்னரே அரும்பாடுபட்டுக் குறிப்பு களைத் திரட்டி இந்நூலை ஆக்கியுள்ளார் ஆசிரியர். இந்நூலின் பொருளைப் பொறுத்தவரை இந்நூலாசிரியர் அஸிஸ் அவர் களுடன் ஒத்த கருத்துள்ளவர் என்பது எனது அனுபவம் சார்ந்த முடிவாகும்
அஸிஸ் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளோரினால் இது வரை நோக்கப்படாத அஸிஸின் ஒர் அம்சத்தை இந் நூல் விரிவாக ஆராய்கிறது. இருபத்தொரு தலைப்புகளில் அஸிஸின்
iy
 

தமிழ் மொழிச் சிந்தனைகளையும் பணிகளையும் நடுநிலை நின்று இந்நூல் பரிசீலனை செய்கிறது. இந்த வகையில் அளீஸ் இயலுக்கு இது ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
இந்நூலில் அஸிஸ் அவர்களை மட்டுமின்றி நூலாசிரியர் நஹியா அவர்களையும் தரிசிக்கிறோம். தமது உணர்வுகள், கருத்துக்கள், சமுதாயத்துக்குத் தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆலோசனைகள், அறிவுரைகளையெல்லாம் அளnஸினுரடாக ஆசிரியர் முன் வைக்
கும் பாங்கு சிறப்புடையது.
அஸிஸின் தாய்மொழி, கல்விமொழிக் கொள்கைகளுடன் தமது கருத்தையும் கலந்து தமிழ் தான் முஸ்லிம்களின் தாய்மொழி, அதுதான் அவர்களின் கல்விமொழி என்றெல்லாம் சொல்கிறார் ஆசிரியர். இந்த வகையில் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்த அஸிஸுக்குத் தமது மானசீக ஆதரவை வழங்குகிறார்.
முஸ்லிம் அல்லாதோரும் இஸ்லாமிய இலக்கியங்களை நுகர்வு செய்ய வழிவகைகள் காணப்படவேண்டிய அதே வேளை, இஸ் லாமிய இலக்கியங்களும் அறபுத் தமிழ் இலக்கியச் செல்வங் களும் அதிகம் அதிகமாக வெளிவருதலும் பேணிப் பாதுகாக் கப்படுதலும் வேண்டும் என்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு நிலைப்பாடுகளுக்கிடையில் இணக்கம் காண முயலும் அளவீஸின் முயற்சியில் நஹியாவும் அவருடன் ஒத்துழைக்கிறார். அதற்குப் பரிகாரமாக அளவீஸ் முன் மொழிந்த அறபு - தமிழ் அகராதியை அவர் வழி மொழிகிறார். முஸ்லிம் பத்திரிகை ஆய்வும் தேடுகையும், இஸ்லாமிய இலக்கியங்களுக்குப் பாட நூல் அந்தஸ்து", "மொழி பெயர்ப்பும் வெளியீடும்" என்ற அத்தியாயங்களில், அஸிஸின் தனித்துவமான இலக்கிய முயற்சி கள் பற்றிப் பல பிரயோசனமான கருத்துக்களை ஆசிரியர் தருகிறார். மகாநாடுகளில் அஸீஸ் அவர்கள் எழுப்பிய குரல் களும் ஆய்வாளருக்கு அவர் விட்டுச் சென்ற வழிகாட்டலும் ஆசிரியரின் கூர்மையான பார்வைக்குத் தப்பவில்லை.
அளவீஸின் விழுமிய பண்புகளை வா யாரப் புகழும் ஜனாப் நஹறியா, அவரின் எழுத்துக்களில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. "அறிஞர் அஸிஸின் கட்டுரை களின்றி சிறப்பிதழ்களோ, சொற்பொழிவுகளின்றி விசேட வைப வங்களோ பூரணத்துவம் அடைவதில்லை என்ற நிலை 1950, 1960களில் இருந்தது' என அஸிஸின் பெருமை பேசும் நஹியா, 'அளபீஸின் கட்டுரைகள் பலரினால் மொழி பெயர்க்கப்பட்
Yy

Page 5
டமையினால் அவற்றில் உரைநடை ஒருமைப்பாட்டைக் காண முடிவதில்லை" என்று கூறவும் தயங்கவில்லை. இது அவரின் , நேர்மையான எழுத்துக்கும், நடுநிலை நின்று விடயங்களைப் பார்க்கும் பண்புக்கும் தக்க சான்றாகும், உள்ளதை உள்ள வாறே நோக்கும் எழுத்துத் துறைத் தர்மத்தைப் பேணுபவர்
யாழ்ப்பாண மண்வாசனை அஸிஸின் எழுத்துக்களில் வீசுவ தைப் போல கல்முனை - நிந்தவூர்ப் பிரதேச உணர்வுகளும் நிகழ்வுகளும் நஹியாவின் எழுத்துக்களில் துல்லியமாகத் தெரி கின்றன. அதனால் அஸிஸின் கிழக்கிலங்கை நினைவுகளும் சம்ப வங்களும் நஹியாவின் பார்வையில் கூடிய தெளிவும் விளக்க மும் பெறுகின்றன.
நஹியா ஒரு தமிழ் அபிமானி தமிழைத் தனது பட்டத்திற்கு ஒரு பாடமாகப் படித்தவர். பேராசிரியர்களான வி. செல்வ நாயகம், ஆ. சதாசிவம், க. கைலாசபதி, பொ. பூலோகசிங்கம், கலாநிதி திருமதி. தியாகராசா ஆகியோரிடம் பல்கலைக்கழகத் தில் தமிழ் பயின்றவர். கணேசையரிடம் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் தமிழ் கற்ற வித்துவான் சுப்பையா பிள்ளையிடமும், பண்டிதர் நாகலிங்கம் அவர்களிடமும் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் தமிழை முறையாகப் பயின்றவர். கொழும்புப் பல் கலைக்கழகத்தில் தமிழ் மன்றத் தலைவராகவும் தமிழ் விவாதக் குழுத் தலைவராகவும் விளங்கியவர். இந்தப் பின்னணியில் அவர் பெற்ற தமிழுணர்வு 1972 இல் அவர் ஸாஹிறாக் கல் லூரியில் பிரவேசித்ததில் இருந்து உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கியது. இந்த உணர்வின் ஒளியில் அவர் சாதித்தவை பல. இவ்வகையில் பார்க்கும்போது செய்திருக்க வேண்டியவர் செய்த சிறந்த படைப்பு அஸிஸும் தமிழும்" எனக் கூறுவது பொருத்தமாகத் தோன்றுகிறது.
இந்த நூலை வாசித்து முடிக்கின்றபோது அஸிஸ் ஒரு முஸ்லிம் தமிழ் அறிஞர் என்ற உணர்வு எமக்கெல்லாம் ஏற்படுகின்றது. இது இந்நூலாசிரியரின் நோக்கத்திற்குக் கிடைத்த பெரு வெற்றி LILI f (ġjati -
இது போன்ற பல நூல்களை இந் நூலாசிரியர் வெளியிட்டு இப் பேரறிஞரின் எண்ணங்களையும் பணிகளையும் உலகறியச் செய்ய வேண்டும். மேதைகளின் மேதைமையை மதிப்பது நல்ல தொரு காரியமாகும். இதன் மூலம் நாம் எமக்கிடையே மென்
yi

மேலும் செயலூக்கமும் அறிவாற்றலும் வாய்ந்த தலைவர்களை பும் அறிஞர்களையும் உருவாக்க முடியும் அந்த வகையில் இந்நூலின் நோக்கம் மகத்தானது.
தமிழுக்கும் அஸிஸுக்கும் உள்ள உறவை, முஸ்லிம்களுக்கும் தமிழுக்கும் உள்ள உறவை, தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கவேண்டிய உறவை கோடிட்டுக் காட்டுகின்றது இந்நூல். இன்னுமொருவகையில் சொன்னால், தமிழின் நிலையை இந் நூல் இன்னுமொரு படி உயர்த்தியிருக்கிறது.
பொதுவாகச் சொன்னால், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் வாசித்துப் பயன்பெற வேண்டியதொன்றாக இந்நூல் அமைந் திருக்கிறது. இது காலத்தின் தேவை. தமிழ் கூறு நல்லுலகு இதனை ஏற்றுப் போற்றும் என்பது எனது நம்பிக்கை.
ம. மு. உவைஸ் 3_präfluff, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், Lಖಿತ್ತಿಗಿಳಿರಿ?974

Page 6
என்னுரை
O
இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றில் குறித்துச் சொல்லக்கூடிய பல முஸ்லிம்கள் தமிழறிஞர்களாக வாழ்ந்து, தாம் சார்ந்த சமூ கத்துக்கும் தாய் மொழி தமிழுக்கும் தம்மாலானவற்றையெல் லாம் செய்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். அவர்களுள் அஸி ஸின் பணி விதந்துரைக்கத் தக்கது. தமிழுலகு அவரின் பணிகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். ஒப்பீட்டடிப்படையில் அவரின் பணிகள் மதிப்பீடு செய்யப்படவேண்டும். இந்த எண் ணத்தை "அளபீஸும் தமிழும் நூல் நிறைவேற்றிவைக்குமெனில், நான் மகிழ்ச்சியடைவேன். அஸிஸ் பற்றிய பிற்கால ஆய்வுகளுக்கு இந்நூல் களமமைத்துக் கொடுக்கவேண்டுமென்பதே எனது விருப்பம்.
தான் வாழ்ந்த சூழலுக்கும் அடியெடுத்து வைத்த அரசியலுக் கும் அப்பால் நின்று, தனது சமூகத்தின் தனித்துவம், ஐக்கியம், எதிர்காலம் என்ற அத்திவாரத்தில் காலூன்றி நின்றவர் பெரி யார் அஸிஸ், அவரின் மொழிவழிச் சிந்தனைகள் இதற்கு விதி விலக்காக அமையவில்லை. அவரின் தமிழியற் சிந்தனைகளில் காணப்பட்ட பலத்தையும் பலவீனத்தையும் எடுத்துக்காட்டு வ துடன், வாசகர்களும் தமது மொழியியல் எண்ணங்களையும் கருத்துக்களையும் உரைத்துப் பார்ப்பதற்கு இவ்வாய்வு வழி செய்யுமெனில் அதனை எனது நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி யாகக் கருதுவேன்.
அஸிஸ் எழுதிக் குவித்த நூல்கள், கட்டுரைகள், நிகழ்த்திய சொற்பொழிவுகள், அவர் பற்றியும் அவரின் ஆக்கங்கள் பற்றி யும் பிறர் கொண்ட கருத்துக்கள், எனது தனிப்பட்ட அவதா னிப்புகள், முடிவுகள் என்பன இவ்வாய்வின் மூலாதாரங்களாக அமைந்தன.
அஸிஸ் பற்றிய தகவல்களை முடிந்தளவு பெற்று இப்பணியைச் செய்திருக்கிறேன். சில தகவல்கள் எனக்குக் கிடைக்காது போயி ருக்கலாம். எனவே, இதனை முற்று முடிவான தொன்றெனக் கொள்ள நான் விழையவில்லை. இத்துறையில் செய்யப்பட்ட முதல் முயற்சியெனக் கொள்வதே பொருத்தமானது. இந்நோக் இல் மென்மேலும் சிந்திப்பதற்கு இந்நூல் வழிவகுக்குமெனில் எனது முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்ட திருப்தியடைவேன்.

அறிஞர் எ. எம். எ. அஸிஸின் அறிவுப் பணி - சில குறிப்பு கள் என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் 24-11-198029-11-1980 வரை தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதி னேன். ஸாஹிறாக் கல்லூரி கபூர் மண்டபத்தில் அஸிஸின் உரு வப் படம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட 1983 ஒக்டோபர் 30 ஆம் திகதி, தினகரனில் அவரைப் பற்றிய எனது சிறப்புக் கட்டுரையொன்று பிரசுரமானது. தினகரனிலும் வீரகேசரி யிலும் 24 நவம்பர் 1987 இல் எனது அஸிஸ் ஞாபகார்த்தக் கட்டுரைகள் வெளிவந்தன. இவை எல்லாம் அளவீஸ் பற்றிப் பல நூல்களை எழுத வேண்டுமென்ற எண்ணத்தையும் ஊக்கத் தையும் எனக்குத் தந்தன.
எ. எம். எ. அளவீஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும் பங் களிப்பும் நூல் வெளியீட்டு விழாவில், 1981 ஜூன் 24 ஆம் திகதி, தப்ரபேன் ஹோட்டலில் சொற்பொழிவு நிகழ்த்தினேன். அகில இலங்கை வை. எம். எம். எ. பேரவையின் ஆதரவில், அதன் தெமடகொட தலைமையகத்தில், 1987 ஜூன் 6 ஆம் திகதி "முஸ்லிம் கல்விக்கு அறிஞர் அளnஸின் பங்களிப்பு' என்ற மகுடத்தில் சிறப்புரை ஆற்றினேன். இலங்கை வானொலி யின் தேசிய சேவையில் 23-1-1987 இல், அஸிஸ் ஞாபகார்த்தச் சொற்பொழிவு ஒன்றையும் நிகழ்த்தினேன். 1990-91 ஆம் வரு டத்துக்கான எ. எம். எ. அஸிஸ் பவுண்டேசன் செயலாளரும் நான்தான் . இவையெல்லாம் இத்தகையதொரு நூலை வெளி யிடுவதில் என்னைத் துரிதமாக இட்டுச்சென்றன.
அஸிஸுடனான எனது உறவுகளும் தொடர்புகளும் சுவாரஸிய மானவை. எனது சிறு பிள்ளைக் காலத்தில் ஒரு நாள் நிந்த வூரில், எங்கள் வளவில், சில நண்பர்களுடன் துரத்திப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பன் என்னைத் துரத்த நான் வீதிக்கு ஓடி வந்தேன். அப்போது அங்கு எனது மாமன் அல்ஹாஜ் பி. எச். எஸ். பி. அச்சி முகம்மது அவர்கள் (சிலி ஸின் அபிமான மாணவன் பேராசிரியர் ஏ. எம். இஷாக் அவர் களின் தந்தை) சாந்தமே உருவான ஊருக்குப் புதியவரொரு வருடன் நின்று கொண்டிருந்தார். மாமாவைக் கண்ட நான் ஓடாமல் அப்படியே நின்று விட்டேன். இதைக் கண்ணுற்ற அவர் என்னை அருகே அழைத்து எனது மேனியில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டபடி இது எனது மருமகப்பிள்ளை என அந்தப் புதியவரிடம் கூற அவரும் பதிலுக்குப் புன்முறுவல் செய்து கொண்டு எனது தலையை வருடி விட்டார். இப் பெருந்
i寫

Page 7
தகைதான் பேரறிஞர் அஸிஸ் என்பதைப் பின்னர் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்த இளமை நினைவுகள் இன் றும் எனது மனத்திரையில் நிழலாடுகின்றன. எனது தமிழ்ப் பேராசான் கலாநிதி வி. கைலாசபதி இந்த உறவுக்கு உயிரூட்டி னார். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் இந்த உறவை இறுக்கமடையச் செய்தன. அவசரகால கல்முனைக் கச்சேரியில் அஸிஸின் இலிகிதராகக் கடமையாற்றிய எனது சிறிய தாயின் கணவர் எம். பி. தம்பி லெப்பை அவர்கள் கூட அஸிஸ் பற்றிய நல்லதொரு எண்ணம் என் மனதில் கருக் கொள்ள உதவியிருக்கிறார். அவற்றுக்கெல்லாம் மேலாக, 1972
மே மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஸாஹிறாக்கல்லூரியில் பட்ட தாரி ஆசிரியராக நான் சேர்ந்தபோது, அஸிஸ் பற்றியும், அவரது பணிகள் பற்றியும் அறிந்துகொள்ளவும், அவரது மாணாக்கருட னும் குடும்பத்தினருடனும் நெருங்கி உறவாடவும் வாய்ப்புக் கள் கிடைத்தன. இவையெல்லாம் இந் நூலாக்க முயற்சிக்குப் பெரிதும் உதவின.
இந் நூலின் உருவாக்கத்தைப் பொறுத்தவரையில், நூலின் தட் டச்சுப் பிரதிகளைப் படித்துப்பார்த்து பயனுள்ள ஆலோசனை கள் கூறி உதவினர் - எனது தமிழாசா ன் பேராசிரியர் பொ. பூலோக சிங்கம் அவர்களும், நண்பன் கலாநிதி எம். ஏ. நுஃமான் அவர்களும், அணிந்துரை வழங்கியிருக்கிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழிலக்கியத்துறைப் பேராசிரியர், பெரியார் ம. மு. உவைஸ் அவர்கள், பின் அட்டை யில் என்னை அறிமுகம் செய்பவர் பேராதனைப் பல்கலைக்கழ சத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். தில்லைநாதன் அவர்கள். இவர்கள் எல்லோரும் என் நன்றிக்கு உரித்தான a FR 3 G
மிகக் குறுகிய காலத்தில் இந் நூலைச் சிறப்பாகப் பிரசுரித் துதவிய குமரன் அச்சக உரிமையாளர், பிரபல நாவலாசிரியர் செ. கணேசலிங்கன் அவர்களுக்கும், நூல் முகப்பை அழகுற அமைத்துத் தந்த எஸ். துரைசாமி அவர்களுக்கும் எனது நன்றிகள்.
ஏ. எம், நஹியா நிந்தவூர் 5

O
Ο
O
9FELDİ ÜZ 6 E635 g)
பெற்றோருக்கு
Ο
O
O

Page 8
சூழல் ஆக்கிய தமிழறிஞன் மொழிக் கொள்கை முஸ்லிம்களின் தாய் மொழி முஸ்லிம்களின் கல்வி மொழி அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் தமிழ் மொழி ஞானம் இராமாயண மோகம்
சிங்களம் மட்டும் சட்டம் தமிழர் - முஸ்லிம் ஐக்கியம் ஸாஹிறா.வில் தமிழ்ப்பணி மகாநாடுகளில் அஸீஸ் ஆய்வியல் வழிகாட்டி
அறிஞர் அறிமுகம் முஸ்லிம் பத்திரிகை ஆய்வும் தேடுகையும் அறபு - தமிழ் அகராதி இஸ்லாமிய இலக்கியங்களுக்கு பாடநூல் அந்தஸ்து மொழி பெயர்ப்பும் வெளியீடும் கட்டுரையாசிரியர்
பன்னூலாசிரியர் பிரயாண இலக்கிய கர்த்தா தமிழ் அபிமானி
O
09
7 2鑫
霹7
65
7.
78 82
07
6
2.
44
I 54
6
168
8.
19
20
器翼及
 
 

N
அறிஞர் எ. எம். எ. அளவிஸ் அவ்ர்கள் சூழலினால் உரு வாக்கப்பட்ட ஒரு தமிழறிஞர். 1911ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி பிறந்த அளிஸ் 1973இல் இவ்வுலகை விட் டுப் பிரியும்வரை தமிழுடன் இணைந்திருந்தார். தமிழ்வேந்தர் ஆறுமுக நாவலர் வாழ்ந்த வண்ணார்பண்ணைச் சூழலில் பிறந்து வளர்ந்த அவர், தனது சின்னப் பெரியப்பா சு. மு. அசனா லெப்பைப் புலவரின் அரவணைப்பில் தமிழுக்கம் பெற் றார். அவர் கற்ற பாடசாலைகளில் நிலவிய தமிழ்ச் சூழல், கிழக் கீந்த தமிழ் முனிவர் விபுலானந்தரின் உறவு, மலையகம் தந்த இஸ்லாமியக் கொழுந்து முகம்மது காசிம் சித்திலெவ்வை செய்த தமிழ்ப்பணி பற்றிய அறிவு, கிழக்கிலங்கை மக்களின் வாழ்வு, அவர்களுடனான தனது உறவு, ஸாஹிறாக் கல்லூரி யில் அவர் பெற்றுக்கொண்ட நல்லதொரு களம், அவருக் கிருந்த சமூக அந்தஸ்து போன்ற பல காரணிகள் அஸிஸை நாடறிந்த தமிழறிஞராக்கின. சாகித்திய மண்டலப் பரிசு பெறுமளவுக்கு அஸிஸ் தமிழுலகில் பிரக்கியாதி பெற்றிருந்தார், அவர் ஆற்றிய செனட்சபை உரைகளில், நிகழ்த்திய சொற் பொழிவுகளில், எழுதிய கட்டுரைகளில், நூல்களில் எல்லாம் அவரின் தமிழுணர்வு வெளிப்பட்டுத் தோன்றியது.
தமிழ் மொழி அரசோச்சும் யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர் அளிஸ் நாவலர் தமிழ்ப் பணி செய்ததும் அசனாலெப்பைப் புலவர் அறபுத் தமிழ்

Page 9
2 / அஸிஸும் தமிழும்
வளர்த்ததும் இந்த மண்ணில்தான். அஸிஸ் பிற்காலத்தில் தமி ழறிஞராக உயர்ந்ததில் இந்த வண்ணார்பண்ணைச் சூழலுக் கும் கணிசமான பங்குண்டு.
மூன்றாம் வகுப்புச் சித்தியடையும்வரை அரசாங்க முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலையில் அஸிஸ் கல்வி கற்றார். யாழ்ப் பாணம் கலீபா அப்துல் காதர் வீதியில் அமைந்துள்ள கதீஜா மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவாக விளங்கும் அன்றைய அல்லாப்பிச்சை பள்ளிதான் இந்த அரசாங்க முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலை. 1918ஆம் ஆண்டு இப் பாடசாலையில் சேர்ந்த அஸிஸ் தனது மதக் கல்வியையும் ஆரம்பக் கல்வியை யும் அங்கு கற்றார். கற்றலும் கற்பித்தலும் முற்றிலும் தமிழில் தான் இங்கு நடைபெற்றன.
1921 பெப்ருவரி 2ஆம் திகதி தனது 10ஆவது வயதில் வண் ணார்பண்ணையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷன் வைத் தீஸ்வர வித்தியாலயத்தில் சேர்ந்து தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இவருடன் சேர்ந்து மூன்று முஸ்லிம் மாணவர் அங்கு கல்வி கற்றனர். சாரம் உடுத்து, துருக்கித் தொப்பி அணிந்து இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிப்பவராக அலிஸ் இந்தத் தமிழ்ப் பாடசாலைக்குச் சென்றார். ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போது மாணவர் மன்றம் ஒன்றைத் தானே முன்னின்று அமைத்தார். அதன்மூலம் தனதும் சக மாணவரினதும் பேச்சாற் றலையும் தமிழார்வத்தையும் வளர்த்தார். அவர் படித்துக் கொண்டிருந்தபோது இவ்வித்தியாலயத்தில் நிலவிய நல்லதொரு சூழல் அவரின் தமிழுணர்வை வளர்த்தது. இக்காலத்திய தனது இளமை நினைவுகளை எண்ணிப் பார்த்த அஸிஸ்,
*"... of the many events during my stay of nearly thirty months I recall one most clearly - the visitation of Swami Sharvananda... and yet the talk of the day centred on Pandit Mailvaganam (Swami Vipulananda) who had decided to resign his post of Principal, Manipay Hindu and renounce the World, with deliberate intent, in favour of a sanyasin's life. The violent shocks experienced that day should have produced a mental revolution in my young mind.' .

ஏ. எம். நஹியா 3
GrGST 6T(up S) 60,6 ugi gCaigh spiriř. The West Re-appraised Girsår pro
அவரின் நூலில் இடம்பெறும் Vaidyeshwara Vidyalaya என்ற
கட்டுரையில் தான் அஸிஸின் இந்த இளமை நினைவுகள் நிழ லாடுகின்றன.
இடை நிலைக் க ல் வி  ைய க் கற்பதற்காக 1923 இல், 6ஆம் வகுப்பில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேர்ந்தார். அன் றைய நிலையில் இந்து மாணவர் மட்டும்தான் கற்கும் பாட சாலையாக இப் பாடசாலை விளங்கியது. தனித்துவமான அப் பாடசாலை அஸிஸின் திறமையை மதித்து அவரையும் மாண வராகச் சேர்த்துக்கொண்டது. அஸிஸ்தான் இந்தக் கல்லூரியில் சேர்ந்த முதலாவது முஸ்லிம் மாணவன். 1929இல் பல்கலைக் கழகக் கல்லூரியில் அனுமதி கிடைக்கும்வரை இங்கு கற்றுக்கொண்டிருந்த அஸிஸின் தமிழார்வத்தை வளர்ப்பதில் இக் கல்லூரியும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளது. சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் இந்துசமய பாடத்தில் விசேட சித்தி பெறுமளவுக்கு இப் பாடசாலையின் சூழ்நிலைக்கு அஸிஸ் ஆட்பட்டிருந்தார்.
திருவாளர்கள் சி. பி. சுந்தர சர்மா, ஏ. கே. பொன்னம்பலம்,
ருட் சிலர். இவர்களின் ஊக்கமும் வழிநடத்துகையும் அலி ஸ்"க்கு வழிகாட்டின.
அஸிஸின் சின்னப் பெரியப்பா சு. மு. அசனாலெப்பைப் புல வரின் அரவணைப்பு 1918 டிசம்பர் 18ஆம் திகதி அவர் இவ்வு லகை விட்டு நீங்கும்வரை அஸிஸுக்குக் கிடைத்தது. ஏறக் குறைய ஏழு வருடங்கள் நீடித்த இக்காலகட்டத்தில், இளம் அஸி ஸின் மனதில் புலவர் ஏற்றிவைத்த தமிழுணர்வும், ஆய்வார்வ மும் பசுமரத்தாணிபோல் பதிந்திருந்தன. எப்போதுமே இன்ப நினைவுகளாக இழையோடிய அந்த இளமை நினைவுகள் அளி ஸின் பிற்கால வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந் தன. அதனாற்றான் போலும்,
** இளவயதில் என்மனதில் ஆய்வு ஆர்வத்தைச் சிலை யெழுத்தாகப் பதித்தவரும் அறபு, ஆங்கிலம், தமிழாம் மும் மொழி வல்லுநரும், அறபுத் தமிழ் வளர்த்த ஈழத்து முஸ்

Page 10
4| அஸிஸும் தமிழும்
லிம் புலவருமாகிய என் 'சின்னப் பெரியப்பா" சு. மு. அசனா லெப்பை ஆலிம் புலவரின் அன்பறா நினைவிற்கு இந் நூல் சமர்ப்பணம்."
என எழுதி, தனது முதலாவது வெளியீடான "இலங்கையில் இஸ் லாம்' நூலைத் தனது முதலாவது தமிழாசானுக்கு சமர்ப்பணம் செய்து நன்றிக் கடனிறுத்தார் அஸிஸ் அஸிஸின் தந்தை சு. முஹம்மது அபூபக்கரின் இளைய தமையன்தான் இந்த சு. மு. அசனா லெப்பைப் புலவர் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
அவசரகால உதவி அரசாங்க அதிபராக அலிஸ் கல்முனைப் பிரதேசத்தில் பணியாற்றிய காலம் பல விடயங்களில் அவருக் குத் தெளிவேற்பட்ட காலம். தமிழ்ப் பேசும் இப் பிரதேச மக் களின் வாழ்வு, வரலாறு, கலாசார பண்பாட்டுக் கோலங்கள், இலக்கியப் பாரம்பரியம் என்பவற்றையெல்லாம் அறிந்துகொள் ளும் வாய்ப்பு இக் காலை அளவிஸசக்குக் கிட்டியது. கல்வியின் முக்கியத்துவத்தைத் தான் முழுமையாக உணர்ந்ததும் அதன் மீது தீவிர அக்கறை கொள்ளச் செய்ததும் இக்காலமே என்கி றார் அவர்,
அவசரகால கல்முனை அரசாங்க அதிபர் பதவியின் மூலம்
கல்முனை மக்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கேற்பட்டது. இப் பிரதேசத்திலேயே கல்வி யின் முக்கியத்துவத்தை நான் முழுமையாக உணர்ந்தேன். முன்னேற்றப் பாதையின் எல்லாக் கதவுகளையும் திறந்து விடக்கூடிய திறவுகோல் கல்வி மட்டுமேயாகும். முஸ்லிம் களின் எந்தவொரு சமுதாய முன்னேற்றத் திட்டத்திலும் தலையாய இடம் கல்விக்கே அளிக்கப்படவேண்டும். தனிப் பட்ட குறிப்புரையொன்று நான் கூறுவதாயின் கல்வியில் எனக்குள்ள தீவிர அக்கறை இக் காலத்திலேயே ஏற்பட் டது." 2
என கல்முனையில் 1949 மே 15ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் கல்வி மகாநாட்டுக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரையில் குறிப்பிடுமளவிற்கு, அஸிஸின் எண் ணத்திலும் போக்கிலும் கல்முனைக் காலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. முஸ்லிம்களின் தாய்மொழி, கல்விமொழி பற்றியெல்லாம் திடமான கொள்கையொன்றை வகுத்துச் செயற்

ஏ. எம். நஹியா 15
படும் தைரியத்தையும் திராணியையும் இக்காலம் அஸிஸுக்கு வழங்கியது, "அளபீஸ் துரை' என கிழக்கிலங்கை முஸ்லிம்கள் அழைத்து நினைவு கூரும் இப் பெருமகனின் வாழ்விலும் பணி யிலும் இக் கல்முனைக் காலம் மிக முக்கியமானது.
சுவாமி விபுலானந்தருடனான அஸிஸின் உறவு நெருக்க மடைந்ததும் இக்காலத்தில்தான். கல்முனைக்குத் தெற்கே மூன்று மைல்கள் தொலைவில் அமைந்திருந்த "காரேறு மூதூர்" என அழைக்கப்படும் தொன்மை மிக்க ஊரான காரைதீவில் பிறந்து வளர்ந்தவர் சுவாமி விபுலானந்தர், அளவிஸின் கல் முனைக் காலத்தில் சுவாமி காரைதீவிலும், கல்லடி உப்போடை யில் அமைந்திருக்கும் சிவானந்த வித்தியாலயத்திலும் மாறி மாறி வாழ்ந்து வந்தார். இவ்விரு இடங்களிலும் அளவிஸ், சுவா மியை மாறி மாறிச் சந்தித்து பல விடயங்கள் பற்றி அள வளாவினார்.
* கல்முனை அவசரகாலக் கச்சேரியில் அளnஸ் உதவி அர சாங்க அதிபராகக் கடமையாற்றிய காலத்தில், சுவாமி விபுலானந்தர் மட்டக்களப்பு - கல்லடி உப்போடை சிவா னந்த வித்தியாலயத்தில் வாழ்ந்து வந்தார். அக்கால கட் டத்தில் அஸிஸ் அடிக்கடி மட்டக்களப்பிற்குச் சென்று சுவாமி விபுலானந்தரைச் சந்திப்பார். சில மாலை வேளை களில் ஐந்து மணி வாக்கில் சுவாமியின் அறையின் முன்னால் உள்ள வேப்பமரத்தின் கீழ் இரு கதிரைகள் போடப்பட் டிருக்கும். அப்படிப் போடப்பட்டிருந்தால் அன்று மாலை சுவாமியைச் சந்திக்க உதவி அரசாங்க அதிபர் வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்" 3
என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்வித் துறைப் பேராசிரியர் அமரர் ப. சந்திரசேகரம் அவர்கள் தரும் தகவல் இதனை ஊர்ஜிதம் செய்கிறது.
சுவாமி விபுலானந்தர் - அஸிஸ் உறவுகள் அஸிஸின் கல் முனைக் காலத்துடன் முறிந்து விடவில்லை. 1958ஆம் ஆண்டு R.K.M. Souvenir gāo Vidyalaya and Vipulananda' GT35rp தலைப்பில் அஸிஸ் எழுதிய கட்டுரையொன்றிலிருந்து இது தெளிவாகிறது. அக்கட்டுரையில் அவர்,

Page 11
6/ அஸிஸும்:தமிழும்
"நான் 1942 - 43ஆம் ஆண்டுகளில் கல்முனை உதவி அர சாங்க அதிபராகக் கடமையாற்றிய வேளைகளில் சுவாமி விபுலானந்தரோடு நெருங்கிய தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறிது காலம் கல்முனையில் இருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள தனது பிறந்த ஊரான காரை தீவில் அவர் தங்கியிருந்தார். பின்னர் 1944இல் கண்டி உதவி அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ் தலமான 'மெளண்ட் எயிறி" எனும் வீட்டில் என்னுடன் பன்னிரெண்டு நாட்கள் தங்கியிருந்தார். இவ் வேளையில் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பத வியைத் துறந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியர் பதவியை ஏற்றிருந்தார். இப் பன் னிரு நாட்களும் சுவாமி விபுலானந்தரை மிக அந்நி யோன்னியமாக அறிய முடிந்தது. அநேக விடயங்களை யிட்டு மனம் திறந்து உரையாடினோம். பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியை ஆரம்பித்துத் தளராது நடாத்திச் செல்வதற்கும், கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி அதிபர் பதவியை ஏற்று நடாத்துவதற்கும் இக் கலந்துரையாடலின்போது நான் உருவாக்கிய கருத்துக்கள் துணையாக இருந்தன. அறபு - தமிழ் அகராதி ஒன்றின் தேவையை வற்புறுத்தியும் அதை ஆக்குவதற்குத் தான் உதவி அளிக்கமுடியும் என்றும் கூறினார். மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம்களிடையே வழக்கில் இருந்து வரும் நாட் டார் பாடல்களின் சிறப்புத் தன்மைகளையும் விரிவாக எடுத்துக் கூறினார்,' "
என எழுதியிருக்கிறார். இவ்விருவரினது உறவின் வலிமையை யும் அஸிஸ் மீதான இவ்வுறவின் தாக்கத்தையும் அஸிஸின் இக் குறிப்புரை நன்கு காட்டுகிறது. மட்டக்களப்புப் பிரதேச முஸ் லிம்களிடை வழக்கிலிருக்கும் நாட்டார் பாடல்களில் பொதிந்து கிடக்கும் சிறப்பியல்புகள், அறபு - தமிழ் அகராதியொன்றின் தேவை, அதன் ஆக்கத்திற்குத் தேவையான முயற்சிகள் என் பன பற்றியெல்லாம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியைப் பிற்காலை ஆரம்பிக்கவும், கோழும்பு ஸாஹிறாக் கல்லூரியைப் பொறுப்பேற்று நடத்தவும் இக்கலந்துரையாடலின் போது அவர் பெற்றுக்கொண்ட கருத் துக்கள் அவருக்குப் பெரிதும் உதவின. வைத்தீஸ்வர வித்தியா

ஏ. எம் நஹியா / ?
லயத்தில் அஸிஸ் படித்துக்கொண்டிருந்த காலை சுவாமி சர்வா னந்தா நிகழ்த்திய சொற்பொழிவொன்றிலிருந்து தனது இள மனதில் கருக்கொண்ட சுவாமி விபுலானந்தர் பற்றிய எண்ணக் கரு இங்கு செயலுருப் பெறுவதைக் காண்கிறோம். இவை யெல்லாம் அஸிஸுக்கு சூழல் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பு $ର୍ଦr.
கண்டியில் சிவில் சேவை அதிகாரியாக அளவிஸ் பணியாற்றிய போது அவருடன் சுவாமி விபுலானந்தர், 'மெளண்ட் எயிறி" வாசஸ்தலத்தில் தங்கியிருந்த பன்னிரு நாட்களும் அஸிஸின் வாழ்வில் மிக முக்கிய நாட்கள். மலையக மாமேதை முகம்மது காசிம் சித்திலெவ்வை பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும், அவர் வெளியிட்ட நூல்கள், சஞ்சிகைகளைத் தேடிப் பெறும் சந்தர்ப்பமும் இந்தக் கண்டிக் காலத்தில் தான் அஸிஸுக்குக் கிட்டின. இவ்வாறு பெறப்பட்டவையெல்லாம் பிற்காலத்தில் ஸாஹிறாக் கல்லூரி நூலகத்தில் வைத்துப் பாது காக்கப்பட்டன. வரலாற்றார்வம் காரணமாகவோ இஸ்லாமிய இலக்கியப் பேரார்வம் காரணமாகவோ அஸிஸ் சித்திலெவ்வையின் ஆக்கங்களில் கூடிய அக்கறை காட்டினார். அஸிஸின் சிந்தனை யிலும் செயற்பாட்டிலும் இப் பேரறிஞரின் கருத்துக்கள் இழை யோடின. அவரின் நிறைவேறாத எண்ணங்களை நிறைவேற்று வதிலும் அஸிஸ் பிற்காலை பேரூக்கம் காட்டினார்.
ஸாஹிறாக் கல்லூரியில் அஸிஸ் அதிபராக இருந்த காலம் அவரின் புகழ் மேலோங்கிய காலம், பிரபல தமிழ் எழுத்தாளராக, சொற்பொழிவாளராகவெல்லாம் அவரது புகழ் பரவிய காலம். இதுவரை அறிந்தவற்றை, அனுபவம், தொடர்புகள் மூலம் உணர்ந்தவற்றை செயற்படுத்தக் கிடைத்த நல்லதொருக் கள மாக ஸாஹிறா. அஸிஸுக்குப் பயன்பட்டது. 1948 இல் அஸிஸ் ஸாஹிறாவின் அதிபராக அமர்ந்த போது அவர் பெற்றுக் கொண்ட சமூகத் தலைமை, உயர்ந்த அந்தஸ்து என்பன அவ ரின் தமிழ்ப் பணிக்குப் பெரு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந் தன. ஆய்வு மகாநாடுகளில் கலந்து கொள்ளவும், ஆய்வுக் கட் டுரைகள் படிக்கவும், சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவு மான சந்தர்ப்பங்கள் அஸிஸுக்கு நிறையக் கிடைத்தன. அக் காலை அளவிஸ் ஸாஹிறா.வில் ஏற்றி வைத்த தமிழுணர்வு நாடெங்கும் சுடர் விட்டுப் பிரகாசித்தது. தமிழ் கூறு நல்லுலகு அவ்வொளியில் பெரும் பயன் பெற்றது.

Page 12
8 / அஸீஸும் தமிழும், *"'
பொதுவாக, அஸீஸின் மேதாவிலாகத்தில் சூ ழ் நி  ைல யி ன் பங்கு மிகப் பிரதானமானது."சூழ்நிலையினால் உருவான தமி ழறிஞன் என்று கூட அவரை அழைத்துக் கொள்ளலாம். வர லாற்றுத்துறைப் பட்டதாரியான அஸீஸ், சிவில் சேவை உயர திகாரியாகப் பணிபுரிந்த அஸீஸ், தமிழில் பேசியதில், தமிழில் எழுதியதில், தமிழறிஞன் எனப் புகழ் பெற்றதில், சாகித்திய மண்டலப் பரிசு கூடப் பெற்றதில், அவர் வாழ்ந்த சூழ்நிலைக்
குப் பெரும் பங்குண்டு,
1: Azeez A. M. A.
*Vaidyeshwara Vidyalaya' The West Re-appraised Maharagama 1964
PP. 80 - 81 2. Azeez A. M. A.
• Muslim Education' Presidential address, Muslim Educational Conference, Educational Branch of the all Ceylon Muslim League,
Kalmunai, Sunday 15th May, 1949. 3. ஜெமீல் எஸ்.எச்.எம்.
எ. எம். எ. அஸீஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்க வெளியீடு, டிசம்பர் - 1980 பக் : 23 Azeez A. M. A. Vidyalaya and Vipulananda R. K. M, Souvenir, 1958.

EPDP
மொழிக் கொள்கை
தனது சமூகத்தையும் அது எதிர்நோக்கிய பிரச்சினைகளையும் நன்கு உணர்ந்திருந்த அஸீஸ் புத்திசாலித்தன மாகவும் தீர்க்க தரிசனத்துடனும் அதற்கான மொழிக்கொள்கையை வகுத்திருந் தார். ஆங்கில மொழி அரசோச்சிய காலை ஆங்கில மொழிக் கல் வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அஸீஸ் சுதேச மொழி களினூடு கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது தாய்மொழிக் கல்வியை ஊக்குவித்தார். 'சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதனை முழுமூச்சாக எதிர்த்த அஸீஸ், அது அரசகரும மொழியாக அந்தஸ்துப் பெற்றதும் அதன் முக் கியத்துவத்தையும் தனது சமூகம் உணரவேண்டுமென்பதில் அக் கறை காட்டினார். அவரின் மொழிக்கொள்கை காலத்திற்கேற்ப அமைந்திருந்தபோதும் அடிப்படை எண்ணக்கரு மாறவில்லை. தமிழ், அறபு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளை யும் இலங்கை முஸ்லிம் சிறார்கள் கற்கவேண்டுமென்பதும், அவற் றைக் கற்பதிலுள்ள சிரமம் தவிர்க்க முடியாததென்பதும் அலீ ஸின் நிலைப்பாடு. உயர்தர இஸ்லாமிய இலக்கியங்கள் பலவற் றைத் தன்னகத்தே கொண்டுள்ள உருது மொழியைக் கூட இலங்கை முஸ்லிம்கள் தெரிந்திருக்கவேண்டுமென அவர் விரும் பினார்.
''இந்த ஊரிற் குடியிருக்கிறவர்கள் அறபு, தமிழ், இங்கிலீஷ், சிங்களம் ஆகிய பாஷைகள் படிக்கிறது மிகவும் அவசிய மாயிருக்கிறது. நமது மார்க்கம் நமது வணக்கம் குறுவான் ஆகியவைகளெல்லாம் அறபுப் பாஷையிலிருப்பதால் அறபு

Page 13
10 / அஸிஸும் தமிழும்
படிக்கிறது எல்லாவற்றிலும் மிகவும் பிரதானம். இரண் டாவது, தமிழ்ப்பாஷை, இது நாம் பேசுகிற பாஷையாயி ருப்பதால் அதை அறியாதவன் குருடனைப் போலாயிருப் பான். எந்த வேளையும் இவனுக்கு வழிகாட்ட ஒருவன் வேண் டியதாயிருக்கும். மூன்றாவது இங்கிலீஷ் பாஷை, அரசாளு கிற சாதியுடைய பாஷையாயிருப்பதால் எந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இந்தப் பாஷை தேவையாயிருக்கும். நாலாவது, சிங்களப் பாஷை, இந்தத் தீவிற் குடியிருப்பவர் களில் மிகுதியானவர்கள் சிங்களவரானபடியால் அந்தப் பாஷை படித்திருந்தால் மிகவும் பிரயோசனமுண்டு. இந்தப் பாஷைகளைப் பிள்ளைகள் ஆறு வயது முதல் பதினொரு வயதுக்குள் படித்து அந்தப் பாஷையிலுள்ள சாஸ்திரங் களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது." 1
இது ஈழத்து முஸ்லிம்களின் கல்வி, மொழி, எதிர்காலம் பற்றி
யெல்லாம் தீவிரமாகச் சிந்தித்த அன்றைய முஸ்லிம் சமூகத்தின் தானைத் தலைவன் முகம்மது காசிம் சித்திலெவ்வை தனது சமூ கத்துக்கென விட்டுச் சென்ற மொழிக்கொள்கை. அந்தத் தலை வனின் சிந்தனை சுயநலமற்றது ; தூய்மையானது. கொழும்பு
புதிய சோனகர் தெருப் பாடசாலை (1861), வாணியத் தெருப்
பாடசாலை (1883), அல் மத்ரஸ்துஸ்ஸாஹிறா. கண்டி திரு கோணமலை வீதி முஸ்லிம் மகளிர் பாடசாலை, கண்டி கட்டுக் கலை முஸ்லிம் மகளிர் பாடசாலை போன்ற அவரினால் ஆரம் பிக்கப்பட்ட பாடசாலைகளிலெல்லாம் இம் மொழிக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அறபு, தமிழ், ஆங்கிலம்,சிங்களம் ஆகிய நான்கு மொழிகளும் இப் பாடசாலைகளின் கலைத் திட்டத் தில் இடம்பெற்றிருந்தன. இந்த எண்ண ஓட்டத்தையும் சிந்தனையையும் அஸிஸின் கொள்கையிலும் காண்கிறோம். இது ஒரு மரபு ரீதியான நிலைப்பாடாகும்,
ஸாஹிறாக் கல்லூரியின் 1956ஆம் ஆண்டைய பரிசளிப்பு விழா உரையில் ஜனாப் அளவீஸ்,
"நாங்கள் நான்கு வேறுபட்ட லிபியில் எழுதப்படும் நான்கு வேறு மொழிகளை அறிந்திருக்கவேண்டிய அவசியம் ஏற் பட்டிருக்கிறது. வேறுபட்ட சமய வரலாற்றுப் பின்னணி யைக் கொண்டவையான தமிழ், அறபு, சிங்களம், ஆங்கிலம் ஆகியனவே அவை,' ?
 
 
 
 
 
 
 

ஏ. எம். நஹியா 11
எனக் குறிப்பிட்டு எம். ஸி. சித்திலெவ்வையின் கருத்துடன் உடன் பட்டு நின்றார். வைப்பு முறையில் சிறிது வேறுபாடு காணப் படினும் எண்ணக்கரு ஒன்றாகவே காணப்படுகிறது.
பிரித்தானியர் காலை முகம்மது காசிம் சித்திலெவ்வை அவர்கள் ஆங்கிலமொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்ட தைப் போல, அஸிஸ் அவர்களும், சுயமொழிகளின் முக்கியத் துவம் உணரப்படும்வரை, ஆங்கில மொழிக் கல்வியை முஸ் லிம்கள் மத்தியில் ஊக்குவித்தார்.
"எமது வரலாற்றில் ஒரு கட்டத்தில் ஆங்கிலத்தைக் கற் பது இஸ்லாத்துக்கு விரோதமானது எனக் கூறும் மடமை யான தூரத்துக்குச் சென்று ஆங்கிலக் கல்வியைக் கண்டித் தோம். இப் பாதக நோக்கின் விளைவுகளை இன்றும்கூட அனுபவிக்கிறோம்." 2
என ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்த தனது சமூகத்தின் மட மையை அவர் சாடினார். 1939ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி "இஸ்லாமும் எங்கள் புனித நபியும்" என்ற மகுடத்தில் அலிஸ் நிகழ்த்திய மீலாத் தின சொற்பொழிவில் இவ்வாறு தெரிவித்திருந்தார். பிரித்தானியர் காலத்தில் அஸிஸ் பின்பற் றிய மொழிக்கொள்கையில் ஆங்கிலம் பெற்றிருந்த முக்கியத்து வத்தை இச் சொற்பொழிவு காட்டுகிறது.
சுதந்திரத்தை அடுத்து சுதேச மொழிகளின் முக்கியத்துவம் உண ரப்பட்டபோது அஸிஸின் மொழிக்கொள்கையிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ஒரு சமூகத்தை வழிநடத்தும் ஒரு பொறுப்புள்ள தலைவன் என்ற நிலையில் அஸிஸை வைத்து நோக்கும்போது இந் நெகிழ்வுத் தன்மை அவரிடம் இருந்திருக்க வேண்டியதே. 1953ஆம் ஆண்டைய அஸிஸின் அறிக்கையொன் றில் இப் புதிய போக்கை நாம் இனம்காண முடிகிறது.
*ஏனைய சமூகங்கள் ஆங்கிலத்தைப் படிக்கும் பொழுது முஸ் லிம் சமூகம் ஆங்கிலத்தைப் படியாது தனியே வேறு வழி யில் சென்று விட்டது மன்றி ஏனைய சமூகங்களைப்போல் முன்னேற்றம் அடையவில்லை. ஆனால், தாய்மொழிகட்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ள இக் காலத்தில் நாம் ஆங்கி லத்தை மட்டுமே படிப்போமானால் இன்னுமொருமுறை இலங்கையின் ஏனைய சமூகத்தாருடன் ஒத்துழைக்கத் தவ றியவர்களாவோம் என்று எனக்குத் தோன்றுகிறது." 1

Page 14
12 | அளnஸ"ம் தமிழும்
என்று தனக்குச் சரியெனப்பட்டதைத் தனது சமூகத்துக்கும் கூறிவைத்தார். காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏ ற் ப த ன து மொழிக்கொள்கையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்து தனது சமூகத்தைச் சரியான பாதையில் வழிநடத்திச் சென்ற அளி ஸின் தலைமைத்துவப் பண்பை, தீர்க்கதரிசனத்தை, இங்கு நாம் காண்கிறோம்.
எல்லா இன மாணவருக்கும் பொருந்தக்கூடிய மொழிக்கொள்கை யொன்றை அளிஸ் வகுத்திருந்தார். அந்த மும்மொழித் திட் டத்தை, தான் அதிபராகவிருந்த ஸாஹிறாக் கல்லூரியில் பரீட் சித்துப் பார்த்து வெற்றியும் கண்டார். ஆங்கில மொழிப் பாட சாலையாக அப்போது விளங்கிய ஸாஹிறாக் கல்லூரியில் முஸ் லிம் மாணவருடன் தமிழ், சிங்கள மாணவரும் பயின்றுகொண் டிருந்த காலமது. அஸிஸின் இப் பரீட்சார்த்த மும்மொழித் திட்டம் மிகு பயனுள்ளதென அப்போது வெகுவாகப் பாராட்டப் பட்டது. 1952ஆம் ஆண்டைய ஸாஹிறாக் கல்லூரிப் பரிசளிப்பு விழா அறிக்கை கூட இத் திட்டத்தின் அமுலாக்கம், பயன்பாடு
பற்றி,
"ஸாஹிறாவிலே படிப்படியாக மூன்று மொழிகளைப் பயிற்று விக்கும் திட்டம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதலாவது பாரத்தில் சிங்களவரல்லாத பிள்ளைகளுக்கு சிங்களமும் சிங்களப் பிள்ளைகளுக்குத் தமிழும் கட்டாய பாடமாக ஆக் கப்பட்டு வருகிறது. இவ்வேற்பாட்டினால் எல்லா மாண வர்களும் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழி களிலும் பயிற்சியுடையவர்களாக முடியும்,' "
எனத் தெரிவித்தது. இதே மும்மொழித் திட்டத்தை 1954ஆம் ஆண்டைய ஸாஹிறாக் கல்லூரிப் பரிசளிப்பு தின அறிக்கையில் மீண்டும் அஸிஸ் வலியுறுத்தியபோது, தாய்மொழி, கல்விமொழி, நேசமொழி ஆகிய இன்றைய வகைப்பாடுகளினதும் சிந்தனை யினதும் ஆரம்பத்தைக் காணமுடிந்தது
**ஆங்கிலத்தைக் கைவிட்டுவிடவோ புறக்கணிக்கவோ கூடாது என்பதே என் சொந்தக் கருத்தாகும். ஆங்கிலத்தை ஒன் றாகக் கொண்ட இரு மொழிக் கொள்கையே சாலச் சிறந்த முறையாகும்.' "

ஏ. எம். நஹியா 113
என அஸிஸ் தனது கொள்கையை விளக்கியபோது அதில் தேசிய ஒற்றுமை, இன ஐக்கியம், பரந்த மனப்பான்மை என்பன பளிச் சிட்டுத் தெரிந்தன. கல்லடி- உப்போடை சிவானந்த வித்தியா லயத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த தமிழ் மாணவர்கள் சிங் களம் படிப்பதற்கான ஏற்பாடுகளை 1932இல் செய்து வைத்த சுவாமி விபுலானந்தரின் முயற்சியை இது ஒத்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளையும் தமிழ் மாணவர் கற்கவேண்டியதன் அவசியத்தை முதன் முதலாக உணர் ந் து அதைச் சிவானந்த வித்தியாலயத்தில் செயற்படுத்திக் காட்டிய அடிகளாரின் வழிநின்று சிந்தித்த அளவிஸ் அதன்மூலம் பல்வேறு இனங்களிடை ஐக்கியமும் சகோதரத்துவமும் வளரும் என நம்பினார்.
அஸிஸின் மொழிக் கொள்கையில் அறபு மொழி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. இலங்கை முஸ்லிம்களின் வீட்டு மொழி யாக அறபு மொழியைக் கொணருவதில் முகம்மது காசிம் சித்தி லெவ்வை தனது அந்திம காலத்தில் செய்த பிரயத்தனத்தை அஸிஸ் செய்யாவிடினும் அம் மொழிக்குரிய இடத்தைத் தனது கொள்கையில் ஒதுக்கியிருந்தார். எகிப்திலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இலங்கை மாணவர் நால்வருக்கு இட மெடுத்துக் கொடுத்து அறபுமொழி, ஞானம், நீதி போன்ற துறைகளில் படிப்பை மே ற் கொள் ள அஸிஸ் எடுத்துக் கொண்ட முயற்சி 1946 நவம்பரில் கைகூடியமை இலங்கை அறபுமொழிக் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றின் ஆரம்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை முஸ்லிம்கள் தமது சமய மொழியாக அறபைக் கற்கவேண்டுமென்பது அஸிஸின் கொள்கை, ஒறாபிபாஷா, மகுமூது சாமிபாஷா போன்றவர்களுட னும் மகல்ல தீவைச் சேர்ந்த தனவந்தர் இப்றாகீம் தீதியுடனும் கலந்தாலோசித்த பின் சில மாணவர்களை எகிப்துக்கனுப்பு வதன் மூலமே இலங்கையின் அறபுமொழிக் கல்வியை விருத்தி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, அதற்காக முயற்சி செய்த முகம்மது காசிம் சித்தி லெவ்வையின் முயற்சியும் இதனுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது. வெற்றியடையாத முகம்மது காசிம் சித்தி லெவ்வையின் இம் முயற்சிதான் அஸிஸின் பிற்கால முயற்சிக்கு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்று கூறுவதும் தவறாகாது.

Page 15
14 அலிஸாம் தமிழும்
உருதுக் கவிஞர் அல்லாமா இக்பால் மீது அஸிஸ் கொண் டிருந்த அளவற்ற ஈடுபாட்டின் நிமித்தமாகவோ என்னவோ, உருதுமொழியையும் இலங்கை முஸ்லிம்களுக்கு அறிமுகம் செய்ய அவர் துடியாய்த் துடித்தார்.
உருது பாஷையின் முக்கியத்துவத்தை நாம் உணரவேண் டும். ஆகவே கைதராபாத் நிஜா மைக் கொண்டு உஸ் மானியா சர்வகலாசாலையில், நிதியால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களைப் பயிற்றுவிக்க நினைத்திருக்கிறோம்' "
என்று இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதித் தலைவரின் 1947ஆம் ஆண்டைய அறிக்கையில் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார் அளிஸ்.
* முஸ்லிம்களாகிய நமக்கு உருதுமொழியின் முக்கியத்துவத் தைப் பற்றி நான் கூறத் தேவையில்லை. முஸ்லிம் நாடு களுள் மிகவும் பெரியதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு நாட்டின் அரசியல் மொழியாக உருதுமொழி விளங்கி வருகிறது. மேலும், இம் மொழியில் மிகவும் உயர்தர இஸ் லாமிய இலக்கியங்கள் மலிந்துள்ளன. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் ஏற்கனவே தொடர்பு ஏற்படுத் தப்பட்டுள்ளது. உருது இலக்கியத்தையும், இஸ்லாமிய மதக் கல்வியையும் தேடுவதற்காக இலங்கை மாணவரை கல்விச் சகாய நிதியின் மூலம் அனுப்பி வைக்க இது தக்க தருணமென்று நாம் கருதுகிறோம்.' 8
என மீண்டும் கருத்து வெளியிட்டார். இலங்கை முஸ்லிம் கல் விச் சகாய நிதித் தலைவரின் 1948ஆம் வருட அறிக்கையில் தான் அஸிஸ் இவ்வாறு உருதுமொழி பற்றிய தனது கருத்தை இரண்டாவது தடவையாகத் தெரிவித்திருந்தார். அக்கால இந்திய, பாகிஸ்தானிய அரசியல் நிலைமைகள் சீர்குலைந்திருந் தமையால் அஸிஸின் இந் நோக்கம் நிறைவேறவில்லையாயினும் அவரது மொழிக் கொள்கையில் உருதுமொழிக்கும் குறிப்பிடத் தக்க இடம் ஒதுக்கப்பட்டிருப்பது நன்கு தெளிவாகிறது. ஸாஹி றாக் கல்லூரி இக்பால் நிலையத்தில், ஜனாப் எஸ். எல். எம். ஷாபிமரைக்கார் அதிபராகவிருந்தபோது ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் உருது மொழி வகுப்புகள் அஸிஸின் எண்ணத்துக்குக் கிடைத்த பெரு வெற்றியாகக் கொள்ளப்பட வேண்டியன.

ஏ. எம். நஹியா / 15
போர்த்துக்கீசரின் வரவு இலங்கையில் 1505இல் நிகழ்ந்தது. இந்த வரவுடன் இலங்கையில் முஸ்லிம்கள் இதுவரை பெற் றிருந்த செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடையலாயிற்று. வெளியுலகுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்புகளெல்லாம் அறுந்து போகலாயிற்று. இத்தகையதொரு சூழ்நிலை உரு வான பின்னர், 1528இல் பாபரினால் நிறுவப்பட்ட முகலாய சாம்ராச்சியம் இந்தியாவில் வலுப்பெற்றதை அடுத்து, செல்வாக் குப் பெற்ற மொழிதான் உருதுமொழி. வெளியுலகத் தொடர் பற்றிருந்த அன்றைய இலங்கை முஸ்லிம்கள் உருது மொழியைக் கற்க முடியாது போனமைக்கு இதுவே காரணம் என்கிறார் அஸிஸ். ஐரோப்பியரின் ஆட்சி இலங்கையில் அஸ்தமனமாகி சுதந்திரச் சூரியன் உதயமானபோது நிலவி அமைதியான சூழலில் அஸிஸ் உருதுமொழி பற்றிச் சிந்தித்தார். இஸ்லாமிய இலக்கியங்கள் நிரம்பி வழிந்த அம்மொழியை ஈழத்தவரும் கற்பது பயனுள்ளதென்று அவர் கருதினார்.
அறபுத் தமிழ் எங்கள் அன்புத்தமிழ்' என்று குரலெழுப்பிய அஸிஸ் அதைத் தனிமொழியென்று கொள்வது சாத்தியமல்ல என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்குக் கிளை மொழி அந்தஸ்தை அளித் திருந்தார். அம் மொழியில் எழுந்த இஸ்லாமிய இலக்கிய நூல் களைத் தனது சமூகம் நுகர வேண்டும், தனித்துவமான இலக் கியப் பாரம்பரியம் பேணப்படவேண்டும் என்பதற்காகவே அறபுத்தமிழின் முக்கியத்துவத்தை அவர் அதிகமாகப்பேசினார்.
முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்பதிலும் கல்வி மொழி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமென்பதிலும் தீர்க்க மான கொள்கையுடையவராகவிருந்த அளவிஸ், தவிர்க்க முடியாத வேளைகளில் சிங்களப் பிரதேச முஸ்லிம்கள் சிங்களத்தைக் கல்விமொழியாகக் கொள்வதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், முஸ்லிம் பாடசாலைகளின் கலைத் திட்டத்தில் தமிழ், அறபு,
சிங்களம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் இடம்பெற
வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்தார். இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்துள்ள மொழி என்ற வகையில் உருது மொழியையும் முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டுமென அவர்
அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் கோஷத்தைக் கூட இந்நோக்கில் தான் அஸிஸ் முன் வைத்தார். காலத்துக்கும்

Page 16
* ܕܡ -
冯
'*
16 / அஸிஸும் தமிழும்" G35rrj; I. (sh Gr ř స్ట్రీస్ట్రో స్టో
நரத்துக்கும் ஏற்ப அமைந்திருந்த அஸிஸின் மொழிக் கொள்கை என்றும் பயன் மிக்கது: தத்து முஸ்லிம்கள் ஒரே குரலில் ஏற்றுச் செயற்படுத்த ஷ்ேண்டிய அருமையான திட்டம் அது.
1. முகம்மது காசிம் சித்தி லெவ்வை
முஸ்லிம் நேசன் Vol 4 கொழும்பு, 1886 தை 7, No. 1
2: Az-Zahira 1956
Prize day Report, 1956
3. Azeez A., M. A.
Islam and our Holy Prophet Meelad day Broadcast May 1, 1939
4. The Ceylon Muslim Scholarship Fund
Year Book 1953 Ninth Volume P 125
5. Az-Zahira 1953
பரிசளிப்பு விழா அறிக்கை 1952
6. Az-Zahira 1954
பரிசளிப்பு விழா அறிக்கை 1954
7. அஸிஸ் எ. எம்; எ.
தலைவரின் 1947ஆம் ஆண்டு அறிக்கை The Ceylon Muslim Scholarship Fund - 3, 1947. 置j岛。夏莎5
8. அளபீஸ் எ. எம். எ.
நிருவாக சபைத் தலைவரின் 1948ஆம் ஆண்டு அறிக்கை The Ceylon Muslim Scholarship Fund - 1949 Li& I52
 
 
 
 

முஸ்லிம்களின் தாய்மொழி
" தாய்மொழியென்பது கணவனும், மனைவியும் ஒருவரோ டொருவர் உரையாடுவதும் இருவரும் தங்கள் பிள்ளைக ளுடன் பேசுவதுமான மொழியாகும்"
தாய்மொழி என்றால் என்ன? என்பதற்கு அளவீஸ் அவர்களின் வரைவிலக்கணம் இது. 1941 டிசம்பர் 10ஆம் திகதி "சிலோன் GLuigi figs' Luigilaoasugi. The Ceylon Muslims and the mother tongue" என்ற கட்டுரையில் மேற்கண்ட வரை விலக்கணத்தைத் தெரிவித்திருந்தார் அஸிஸ்
பரம்பரை பரம்பரையாக தமிழ் மொழியைப் பேசிவரும் முஸ்லிம்களின் தாய்மொழி பற்றிச் சர்ச்சை கிளப்பப்படுவது வேடிக்கையானது, விந்தையானது. ஒர் இனத்தின் தாய்மொழி ஆக்கப்படுவதல்ல; ஏற்கனவே ஆகியிருப்பது. இந்த உண்மையை அஸிஸ் ஏற்றிருந்தார். "தாய்மொழி' எனும் சொல்லை முதல் மொழி', 'கல்வி மொழி என்ற சொற்களால் விளங்கப்படுத்த முடியாதென்பதும், 'தாய்மொழியும் முதல்மொழியும் ஒரே கருத்தைத் தரா தென்பதும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியன:
* இலங்கை முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மையோரின் வீட்டுப் பாஷை வடக்காயிருந்தாலும், தெற்காயிருந்தா லும் தமிழே

Page 17
, , ,
18 அஸிஸும் தமிழும்
என்ற உண்மையை அஸிஸ் தெளிவாகக் கூறியிருந்தார். *இலங்கை முஸ்லிம்களுக்குரிய பாட அமைப்பில் மொழிகள் பெறும் இடம்" என்ற விடயம் பற்றி ஆராயவென அகி ல இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்கத்தினர் 1959 ஜூனில் கூட் டிய மகாநாட்டில் அஸிஸ் இந்த உண்மையை அனைவருக்கும் எத்தி வைத்தார்.
முஸ்லிம்கள் வீடுகளில் பேசும் தமிழ் சுத்தத் தமிழல்ல என் பதை ஏற்ற அளிஸ்,
"முஸ்லிம் வீடுகளில் பேசப்படும் தமிழ் வித்தியாசமானதென் பது உண்மை. ஒரு சில சுத்தத் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக அறபுப்பதங்கள் பாவனையில் வந்து சேர்ந்து கொண்டன. தென்பகுதியில் சிங்களச் சொற்களும் பாவனை யில் சேர்ந்துகொண்டன. தமிழ்ப் பண்டிதரும், சுத்தத் தமிழ் வாதிகளும் அவ்வறபுச் சொற்களைத் தமிழ் அகரா தியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டதால் அறபுத் தமிழ்' என்ற பதம் ஒரு ଜନ୍ମ ଓ fl கருத்தோடு வழங்கலா யிற்று-வளரலாயிற்று" ?
என்று அதற்கு விளக்கம் கொடுத்தார், முஸ்லிம்கள் சுத்தத்தமி ழைத் தம் வீடுகளில் பேசவில்லை என்பதற்காக அவர்களின் தாய்மொழி தமிழல்ல என்று எவரும் கருதி விடக்கூடாது என் பதில் அஸிஸ் மிகக் கவனமாக இருந்தார். முஸ்லிம்கள் இந் நாட்டின் எக்கோடியில் வாழ்ந்தாலும் அவர்களின் தாய்மொழி தமிழே எனத் திடமாகக் கூறினார்.
முஸ்லிம்கள் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளலாமா? என வினவப்பட்ட போது,
* ஆங்கிலம் எமது தாய்மொழியன்று. ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்வதினால் நாம் ஒரு பயனும் அடைய மாட்டோம். ஏனெனில் சிங்களவர், தமிழர் இருபாலாரும் ஆங்கிலத்தைக் கைவிட்டு விட்டனர்." 3
என விடை பகர்ந்தார் அவர்.


Page 18
20 | அளnஸ"சம் தமிழும்
கற்பிக்கப்படுகின்றன. சில முஸ்லிம் சிறுவர்கள் அண்மை யில் தமிழ்ப் பாடசாலைகளின்மையால் சிங்களப் பாட சாலைகளுக்குச் செல்கிறார்கள். தமிழ், முஸ்லிம்களின் தாய் மொழியல்ல என்பதற்கு இது தகுந்த ஆதாரமல்ல." "
என ஆதாரம் காட்டி வாதிட்டார். The Ceylon Muslims and the Mother Tongue - Claims of the Tamil Language 4 என்ற தலைப்பில் Ceylon Daily News பத்திரிகையில் 1941 டிசம்பர் 10ஆம் திகதி எழுதிய கட்டுரையில் தான் அஸிஸ் மேற்கண்ட வாதத்தை முன் வைத்தார். அதே கட்டுரையில் தமிழ் மொழி முஸ்லிம்களின் தாய் மொழியாகத் தொடர்ந் திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
* எந்த ஒரு இலங்கை முஸ்லிமும் தனது இனத்தை, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு பிரிவும், வேறு மொழி களைத் தமது மொழிகளாகத் தெரிந்த வேறொரு பிரிவு மாக இரு கூறுகளாக்க நினைக்க மாட்டான். எனவே, தனது இயற்கையான பெறுமதி காரணமாகவோ அல் லது இன்னொரு மொழியை ஏற்பதில் உள்ள கடுமை யான கஷ்டம் காரணமாகவோ தமிழ் முஸ்லிம்களின் தாய் மொழியாகத் தொடர்ந்திருக்கவேண்டும். தமிழ்மொழி முத னிலை முஸ்லிம் இலக்கியங்களைத் தன்னகத்தே கொண் டுள்ளது. இதற்காக தென் இந்தியக் கவிஞர்களுக்கும் நன்றி கூறவேண்டும். அது மட்டுமன்றி இம் மொழிதான் குத்பாப் பிரசங்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. கதீப் மார்களும் உள்ளூர் இமாம்களும் ஆலிம்களும் தமிழுக்குச்
சாதகமானவர்கள்."
எனக் கூறி தமிழ் தான் முஸ்லிம்களின் தாய்மொழி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவ முனைந்தார் அஸிஸ். சரியான சந் தர்ப்பத்தில் அஸிஸ் எழுப்பிய இக்கோஷம் முஸ்லிம்களின் தாய் மொழி, கல்விமொழி பற்றிச் சரியான முடிவுகளை எடுப்பதில் அன்றைய முஸ்லிம்களுக்கு வழிகாட்டியது. சிங்கள வாக்காளர் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் தீர்க்க தரிசனமற்ற, சுயநல நோக்குள்ள முஸ்லிம் களின் தாய்மொழி, கல்விமொழி பற்றிய கொள்கைளுக்கு அஸிஸின் தனித்துவமான, சுதந்திரமான எழுத்துக்கள் விடை பகர்ந்தன.

ஏ, எம். நஹியா / 21
மத்திய இலங்கை முஸ்லிம் கல்விச் சங்கம் - கம்பளையின் செய லாளருக்கு 1953 ஏப்ரல் 11ஆம் திகதி அஸிஸ் எழுதிய கடிதத் தின் முக்கிய வாசகங்களை இங்கு தருவது பயனுள்ளது.
* 'இலங்கை முஸ்லிம் சமூகம் எண்ணிக்கையில் சிறியதாகும், தனித் தமிழ் பேசும் பிரதேசங்களான கிழக்கு மாகாணம், மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே கூடுத லாகவோ அல்லது குறைவாகவோ அரசியல் பலம் உண்டு. தெற்கு, மத்திய இலங்கை முஸ்லிம்கள் தமிழைக் கைவிடுவ தன் மூலம் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேச முஸ்லிம் களுடனான தொடர்புகளை நிச்சயமாகத் துண்டித்துக் கொள்வர்,
சிங்கள மொழியில் இஸ்லாமிய இலக்கியங்கள் இல்லை. பண மிருந்தாலும் கூட இலக்கியங்களைப் படைத்துவிட முடியாது என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ளவேண்டும், இஸ்லா மியத் தமிழ் இலக்கியச் செல்வத்தை தென் இந்தியா படைத்து அளித்து வந்திருக்கிறது. படைத்து அளித்துக் கொண்டிருக் கிறது. இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழியைக் கைவிடுவ தன் மூலம் இவ்விலக்கியங்களின் பலனை இழக்க நேரிடும்.
இலங்கையிலுள்ள இஸ்லாமிய மத்ரஸாக்கள் சிங்கள மொழி யில் தொழிற்படுவதானது என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. ஏனெனில் அவ்வாறு செய்ய முற்படு கையில் இலங்கைக்குள் மட்டுமே தமது பணியை ஒடுக்கிக் கொண்டு தனித்து நிற்க வேண்டிய நிலை அவற்றுக்கு ஏற் படும். தென்னிந்தியத் தொடர்புகள் யாவும் அறுபட்டுப் போகும்;
எமது வெள்ளிக்கிழமை குத்பாப் பிரசங்கங்கள் தீவடங்கிலும் தமிழிலேயே இன்று நிகழ்த்தப்படுகின்றன. முஸ்லிம்களில் சிலர் தமிழைக் கைவிடின் இலங்கையில் அந்நிலை இல்லா மற்போய்விடும். அவ்வாறு ஏற்படும் மொழிப் பிரிவினை எமது நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும். ஏனெனில் நாம் இந் நாட்டில் சிறு தொகையினரே
இன்றைய இலங்கை நிலையில் நாம் சிங்களத்தைப் புறக் கணிக்க முடியாது. கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி சம்பந்த

Page 19
22 அஸிஸ்-சம் தமிழும்
மாக இப் பிரச்சினை எனது கவனத்தை ஈர்த்தது. சிங் களத்தை 6ஆம் வகுப்பிலிருந்து கட்டாய மொழியாக்கு வதே அதற்கான தீர்வாகக் கொள்ளப்பட்டது. அதனால் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியிலிருந்து விலகும் ஒரு மான வன் ஆங்கிலத்திலும், தமிழிலும், சிங்களத்திலும் அறி வுள்ளவனாகவிருப்பான். எமது மொழிப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வாக இது படுகிறது. ஒரு மாணவன் 6 ஆம் தரத்திலிருந்து சிங்களத்தைக் கற்பது இலகுவானது. ஏனெ னில் வரிவடிவிலும் இலக்கணத்திலும் சிங்கள தமிழ் மொழி களிடை நெருங்கிய ஒற்றுமையுண்டு. அது மட்டுமன்றி, மத் திய அல்லது தென் இலங்கையைச் சேர்ந்த ஒரு மாணவன 6ஆம் வகுப்பிற்கு வரும்போது பெரும்பாலான பேச்சுச் சிங்களச் சொற்களையும் அறிந்திருப்பான். எனவே, தமிழ் மொழியைக் கைவிடுதலானது இனத்தின் ஒற்றுமையை அழித்துவிடும், அரசியல் பலத்தை பலவீனப்படுத்தும், முஸ் லிம் கலாசாரத்தின் அத்திவாரத்தையே அழித்துவிடும.”
என அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவ்விளக்கம் இது சம் பந்தமான பல சந்தேகங்களுக்கு விடையளிக்கின்றது. முஸ்லிம் களின் தாய்மொழி பற்றிய அஸிஸின் தீர்க்கமான போக்கையும் கோடிட்டுக் காட்டுகிறது. 'தமிழ்ப் பாஷை, இது நாம் பேசு கிற பாஷையாயிருப்பதால் அதை அறியாதவன் குருடனைப் போலிருப்பான், எந்த வேளையும் இவனுக்கு வழிகாட்ட ஒரு வன் வேண்டியதாயிருக்கும்' என்ற மூதறிஞர் முகம்மது காசிம் சித்திலெவ்வையின் கருத்துடன் அஸிஸின் கருத்தும் சங்கமமா வதை இங்கு நாம் காண்கிறோம்.
பெரியார் முகம்மது காசிம் சித்திலெவ்வையும் சேர் றாஸிக் பரி தும் கால் ஊன்றி நின்ற "முஸ்லிம்களின் வீட்டு மொழி அறபுத் தமிழ்" என்ற நிலைப்பாடு அஸிஸையும் விட்டுவைக்கவில்லை. அதனாற்றான் போலும் அஸிஸும் தமிழைத் தாய்மொழி என அழைக்காது "வீட்டு மொழி" என அழைக்க நேர்ந்தது. தேசிய எல்லைகளைக் கடந்து நிற்கும் இஸ்லாமியச் சகோதரத்துவத் துக்கும், கஃபாவை முன்னோக்கி வளர்ந்திருக்கும் உலக முஸ்லிம் ஒற்றுமைக்கும் முதன்மை அளிக்கும் வகையில் அறபு மொழியின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடித்த அஸிஸ், முஸ்லிம்களின் தனித்துவத்தைக் கட்டிக்காத்து தேசிய சிறுபான்மை இனமாகத்

στ. ετώ. நஹியா/ 23
தன்னினத்தைக் காண விழைந்த அஸிஸ், தமிழ்ை இலங்கை முஸ் லிம்களின் வீட்டு மொழி என அழைத்தமை காரண்முடைத்து, கொழும்புச் சூழலின் தாக்கமும், பேரின அரசிங்ற் பேரலை களின் வீச்சும் அஸிஸின் இந்த வீட்டு மொழிகோஷத்துக்குத் துணை போயின. ஆயினும், அஸிஸ் ஆண்ட இந்த வீட்டுமொழிப் பிரயோகம் பற்றி எவரும் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவை யில்லை. ஏனெனில் அந்த ஆய்வில் நாம் காணப்போவது வெறும் சொல் மாறாட்டத்தையேயன்றி பொருள் மாற்றத்தையல்ல. அவரது உள்ளார்ந்த எண்ணமும் சிந்தனையும் தமிழைத் தாய் மொழியாகவே கொள்கிறது. இந்த எண்ண அலைகள் அவ ரைத் தெரியாமலே பல இடங்களில் வெளிப்பட்டுத் தோன்று கின்றன.
சமுதாயத்தின் உண்மையான, தன்னலமற்ற தலைவர்களின் சிந்தனைகள் நியாயமானதாக, "சமுதாயத்தின் ஒற்றுமை" என்ற அடிப்படையிலிருந்து எழுந்ததாக, சமூக உணர்வின் வெளிப் பாடுகளாக அமையும் என்பதற்கு ஈழத்து முஸ்லிம்களின் தாய் மொழி பற்றிய அஸிஸின் எண்ணங்களும் கருத்துக்களும் தக்க உதாரணங்களாகும்.
1. அஸிஸ் எ. எம். எ.
பாட அமைப்பில் பல மொழிகள் இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963 Lij 546: I98
2, ൩.
19:9 ܘܚ܂ 8 9 7 : 1 8 ܛܶLI
3. The Ceylon Muslim Scholarship Fund
Year Book 1953, Ninth Volume p 124
4. Azeez A. M. A.
The Ceylon Muslims and the Mother Tongue Claims of the Tamil Language"
Ceylon Daily News, 10th Dec. 1941
5. ைெடி -
منية في

Page 20
A முஸ்லிம்களின் கல்விமொழி
' குழந்தைக்கு இயல்பான மொழி தாய்மொழி, குழந்தை கள் தாய்மொழி மூலமே தமது உணர்ச்சிகளையும் கருத் துக்களையும் தெளிவாக வெளியிட முடியும். அவர்களது படைப்பாற்றல் தாய்மொழி மூலம் வளரும் ஓர் இன மக் களின் தாய்மொழி சிதையின் அம்மக்களின் பண்பாடும் உயர்நிலையும் அழியும் நிலையுண்டாகும். தாய்மொழியே மக்களின் ஆளுமையை மலரச் செய்யும். எனவே, தாய் மொழியே போதனா மொழியாக இருக்க வேண்டும்." 1
என்பது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வித்துறைப் பேரா சிரியராகவிருந்த அமரர் ப. சந்திரசேகரம் அவர்களின் கல்வி உளவியல் சார்ந்த கருத்து. ஆறுமுக நாவலரின் க ரு த் தும் இதுவே. காந்தியடிகளின் கல்வித் திட்டமும் கல்வி மொழி தாய் மொழியாகத்தான் இருக்க வேண்டுமென்று இயம்புகிறது. ஆங்கிலக்கல்வி இந்தியர்களை அவர்களது சொந்தமண்ணிலேயே அந்நியர்களாக்கி விட்டதென மனம் வெதும்பிய காந்தி, தாய் மொழி போதனா மொழியாவதன் மூலமே நாடு விழித்தெ ழும் என்ற கருத்துடையவர். இன்றைய கல்வி நூல் வல்லா ரும் கல்வி உளவியலாளரும் அபிப்பிராயபேதமின்றிக் கூறும் கருத்தும் இதுவே. இவ்வழி நின்று தான் அறிஞர் அஸிஸும் சிந்தித்தார்.
முஸ்லிம் சிறார்களின் கல்வி மொழி எதுவாக இருத்தல் வேண்டுமென்ற சர்ச்சை கிளப்பப்பட்ட கால கட்டத்தில்
 
 

ஏ. எம்3 நஹியா | 25 نتني
வாழ்ந்த தலைவர் அஸிஸ். அவ்வப்போது அவர் தனது சமூ கத்தின் சிந்தனைக்காகச் சமர்ப்பித்த கருத்துக்கள் முஸ்லிம் களை இவ்விடயத்தில் கவனமாக இயங்கச் செய்தன. இதுசம்பந் தமாக தனது இனம் நல்லதொரு முடிவை எடுக்க முடியாது தடுமாறிய போது அஸிஸ் தெரிவித்த கருத்துக்கள் வரப் பிரசாதமாக அமைந்தன. 1951 ஆம் ஆண்  ைடய அகில இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி நிருவாக சபைத் தலை வரின் அறிக்கையில் அஸிஸ் பின்வருமாறு இதற்கு ஒரு விளக் கத்தை அளித்தார்.
* முஸ்லிம் பிள்ளைகள் விரும்பிய பாஷை மூலம் கல்வி கற் பதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்த போதிலும் பிரதம பாடசாலையில் உள்ள எங்கள் பிரச்சினைகள் அதனால் தீரவில்லை. முதலாவதாக, ஆங்கிலம் எமது தாய்ப்பாஷை யன்று. சிங்களவரும் தமிழரும் கைவிட்ட ஒரு புதிய பாஷையை (ஆங்கிலம்) நாம் தெரிந்தெடுப்பது எமக்கு லாபத்தைக் கொடுக்காது. ஜூனியர் பாடசாலையில் (6ம், 7ம், 8ம் வகுப்புகளில்) கல்வி பயிற்றப்படும் பாஷையாக ஆங்கிலம் கைவிடப்படுமென அரசாங்கம் எங்களுக்கு அறி வித்திருக்கிறது. பிரதம பாடசாலைகளின் கீழ் வகுப்பு, மேல்வகுப்புகளில் ஆங்கிலம் மூலம் கல்வியூட்டும் ஆசிரியர்கள் இனிமேல் பயிற்றப்பட மாட்டார்கள். தற்போதுள்ளவர் கள் இளைப்பாறியதும் அவர்களைப்போன்று புதியவர்கள் ஆங்கிலப் பயிற்சி பெற்று வர மாட்டார்கள். ஆகவே நாங் கள் கல்வி பயிலும் அல்லது உத்தியோகம் தேடும் பாஷை சிங்களம் அல்லது தமிழாக இருக்க வேண்டி ஏற்படுகி றது. எங்களுக்கென்று விசேஷமாக, குறைவாகவோ நிறை வாகவோ பயிற்றப்பட்ட ஆசிரியரை அரசாங்கம் தரவும் மாட்டாது. முஸ்லிம்கள் தாமாகவே தமக்குத் தேவையான ஆசிரியர்களைத் தேடி எடுப்பார்களென்பது இரம்பவும் சந்தேகம். எனவே, தற்போதைய நிலைபரங்களின் படி உத்தேசித்து எம் பிள்ளைகள் கல்வி பயிலும் பாஷையை கண்டிப்பாக நாம் தெரிந்தெடுக்க வேண்டிய நிலையில் வந் திருக்கிறோம். பிரச்சினை கஷ்டமானது. ஆனால் அதைத் தீர்ப்பதற்கு மேலும் தாமதிக்கலாகாது. சுமார் 40% முஸ் லிம்கள் தனியத் தமிழும் மற்றைய 60% முஸ்லிம்கள் தமி ழும் சிங்களமும் பேசுகிறார்கள். அவர்கள் சிங்களம் பேசும்

Page 21
26 | அளவிலாசம் தமிழும்
வன்மை இடத்துக்கிடம் வேறுபடுகிறது. அன்றியும் ஆண் கள் பெண்களை விடச் சிறந்த சிங்களம் பேசுகிறார்கள். முஸ்லிம்களுக்குச் செல்வாக்குள்ள வாக்காளர் தொகுதிக ளெல்லாம் அநேகமாக, முற்றாக, தமிழ் பேசும் பகுதிக ளிலேயே அமைந்துள்ளனவென்பது ஞாபகத்திலிருக்க வே ண் டு ம். இ ல் லா வி ட் டால் மேற் கூறிய தொகைகள் சிறிது மயக்கத்தை உண்டுபண்ணும். தமிழிலே முஸ்லிம்களுக்குச் சொந்த நூல்கள் இருக்கின்றன. இவை யும் தமிழும் எங்கள் கதீப்மார்களிடையும் மெளலவிமார்க ளிடையும் நன்கு பரந்து இருக்கின்றன. ஆனால், சிங்களம் நம் தேசத்தில் 70% மக்களின் பாஷையாகவிருக்கிறது. ஆனதால் அதுவே கூடிய பிரதானம் வாய்ந்த பாஷையா கும். சிங்களப் பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் சிங்களத்தையும் தமிழ்ப் பகுதிகளிலுள்ளவர்கள் தமிழையும் தாம் கல்வி கற் கும் பாஷையாகக் கையாளவேண்டுமென யோசனை கூறப் படுகிறது. இது தானாகவே முஸ்லிம் சமூகத்தின் பாஷை ஒற்றுமையைச் சீர்குலைத்து அவர்களின் ஒருமித்த வலிமை யையும் நசுக்கிவிடும். இதைத் தீர்ப்பதற்குத் திருப்தியான வழி தேடுவது இ. மு. க. ச. நிதியின் எல்லைக்கப்பாற்பட் டது. ஆனால், இப் பிரச்சினையை நம் சமூகத்தினருக்கு எடுத்து விளக்குவது எங்கள் கடமையாகும்." 2
இலங்கை முஸ்லிம்கள் தாங்கள் இலங்கையின் எக்கோ டி யி ல் வாழ்ந்தாலும் தாய்மொழியில்தான் கற்கவேண்டும் என்பது, அதாவது, தமிழ் மொழியில்தான் கற்கவேண்டுமென்ற கருத்து, அஸிஸின் இவ் விளக்கத்தில் தொக்குநிற்கிறது. 1949 மே 14ஆம் திகதி கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் லீக்கின் கல்வி மகா நாட்டுக்குத் தலைமைதாங்கி ஆற்றிய உரையிலும், 1953ஆம் ஆண் டைய இ. மு. க. சகாய நிதித் தலைவரின் அறிக்கையிலும் தாய் மொழிக் கல்வியை வலியுறுத்திக் கூறியிருந்தார் அஸிஸ்,
தமிழைப் புறக்கணித்து சிங்களத்தை முஸ்லிம்கள் போதனா மொழியாகக் கொள்வது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகிவிடும் என்ற உண்மையை அஸிஸ் நன்குணர்ந்திருந் தார். சில அரசியல் சுயநலமிகளின் கோஷத்திற்காக வளர்ச்சி யடைந்துள்ள முஸ்லிம் தமிழ்ப் பாடசாலைகளைச் சிங்களப் பாட சாலைகளாக்க முயற்சிப்பது முட்டை பொரிக்க முழு வீட்டை

ஏ. எம். நஹியா / 27
யும் எரித்த கதையாகிவிடும் என்பதும் அவருக்கு நன்கு தெரி யும். அதனாற்றான் கல்வி மொழி பற்றிய பிரச்சினையில் தனது சமூகத்தைச் சரியான பாதையில் சிந்திக்கச் செய்வதில் அஸிஸ் துடியாய்த் துடித்தார்.
தமிழ்தான் முஸ்லிம்களின் தாய்மொழி; வீட்டு மொழி: இஸ்லா மிய கலாசாரத் தொடர்பு மொழி. அது சர்வதேச மொழிகளுள் ஒன்று. அற்ப சுகம் தொழில் வாய்ப்புகளுக்காக எமது மதத்தை யும், கலாசாரத்தையும் பலியிட முடியாது. எமது மூதாதையர் இதைவிடச் சிறந்த சந்தர்ப்பங்களைச் சிங்கள மன்னர் காலத் திலும் காலனித்துவ ஆட்சிக் காலத்திலும் உதறித் தள்ளிவிட் டமை வரலாறு காட்டும் உண்மை. இதனை அஸிஸ் உணர்த் தும்வரை சமூகம் தெளிவாக உணரவில்லை.
தாய்மொழியில் கற்பது சுலபம். அந்நிய மொழியில் கற்கும் ஒரு வனின் கற்றல் தொழில் சில வருடங்களால் பின்தள்ளப்படுவ தாக உளவியலாளர் கூறுவர். சிங்களத்தைத் தாய்மொழியா கக் கொண்ட சிங்கள மாணவருடன் முஸ்லிம் மாணவர் போட்டி யிடுவது சுலபமானதன்று உத்தியோக வாய்ப்புகள் கூட சிங்களத் தில் கற்ற முஸ்ஸிம்களுக்குக் கிடைப்பது அருமையாகவே இருக் கும். பல்கலைக்கழக வாய்ப்புகள், ஆசிரிய பயிற்சிக் கல்லூரி களில் அனுமதி பெறும் வாய்ப்புக்களெல்லாம் மிகக் குறைவா கவே இருக்கும். இந்த உண்மைகளைச் சமூகம் உணராதிருந்த போது அஸிஸ் ஊட்டிய அறிவு அவர்களை உணரச் செய்தது.
மொழியென்பது வெறுமனே கருத்துக்களை வெளியிடும் சாத னம் மட்டுமல்ல, சிந்தனாகருவி மட்டுமல்ல, உணர்வுகளை வெளிக்காட்டும் சக்தியும் கூட, மனிதனின் இயற்கையான பேச்சு அவனின் நிழலைப் போன்றது. அவனின் ஆளுமையி விருந்து அதைப் பிரிக்கமுடியாது. அனுபவம் வாய்ந்த ஏற்றுக்கொள்ளப் பட்ட கல்வி உளவியலாளர்கள் இவ்வாறு கருதுகிறார்கள் என்று அஸிஸ் எழுதியிருக்கிறார்.
சேர், பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள், கல்வி மொழி தாய்மொழியாகத்தான் இருக்கவேண்டுமென்ற கொள்கையுடை யவர். அப்போதைய கல்வி அதிகாரி பரோஸ் அவர்களுக்கு 1900 ஜூலையில் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். கொழும் பில் அளிக்கப்பட்ட ஆரம்பக் கல்வியில் காணப்பட்ட குறை

Page 22
28 / அஸீஸும் தமிழும்
பாடுகளைச் சுட்டிக்காட்டுவதாக அக் கடிதம் அமைந்திருந்தது . பயனுள்ள அக் கடித்த வாசகம் வருமாறு :
'' ஆரம்பக் கல்வியின் அடிப்படைக்குறை, ஆங்கில மொழி மூலம் கல்வி பயிற்றப்பட்டதே ஆகும். இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கிலத்தை விட்டுவிட்டு ஜேர்மன் மொழி யில் ஆங்கிலச் சிறாருக்கு ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ அவ்வாறே சிங்கள, தமிழ் மாணவர்க்கு ஆங்கில மூலம் ஆரம்பக் கல்வி அளிப்பது இருக்கும்.'' 3
இந்த வாசகம் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் கல்வி மொழிக் கொள்கையைத் தெளிவாகக் காட்டுகிறது. தாய் மொழியில் தான் சிறார்கள் தம் கல்வியை மேற்கொள்ள வேண்டுமென்பது அவரின் கருத்தாயிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதி கூட தாய்மொழிக் கல்வியில் மிகவும் அக்கறை காட்டியவர். அதற்காகப் பல பிரயத்தனங்கள் செய்தவர். இந்திய மொழிகள் போதனா மொழியாகும் தகுதியற்றவை என பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி கருத்துரைத்த போது அதைப் பலமாகக் கண்டித்துக் கருத்து வெளியிட்டவர். இதை ஒத்த ஒரு கருத்தை, அதா வது போதனா மொழியாகும் தகுதி இந்திய மொழிகளுக்கில்லை, ஆங்கிலத்துக்கு மட்டுமே உண்டு என்ற கருத்தை சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த திரு. ஜே. சி. ரோலோ வெளியிட்டபோது,
' திரு. ஜே. சி. ரோலோ அவர்களின் கூற்று இந்திய மக் களின் ஏகோபித்த அபிப்பிராயத்துக்கு எதிரானதுடன், திரு. ஜே. சி. ரோலோவின் மனச் சாட்சிக்கே எதிரானது. ஏனெனில் ஒரு பிள்ளையின் தாய்மொழி போல் கல்வி யில் பயிற்சி மொழியாக இருக்கக்கூடிய மொழி வேறொன்று இருக்க முடியாது. இந்த உண்மையை ஜப்பான், இத்தாலி, மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் உள்ள கல்வியியலாளர்கள் மட்டுமல்லாது மனிதனை மனிதனாக மதிக்கும் எந் நாட்ட வரும் ஏற்றுக்கொள்வார்கள்.'' 4
என பாரதி சாடியிருந்தார். 1916 ஒக்டோபர் 'இந்து' நாளி தழில் தான் இவ்வாறு பாரதி எழுதியிருந்தார். தாய் மொழியே போதனாமொழியாதல் வேண்டுமென்பதைப் பல நாடுகளை உதாரணமாகக் கொண்டு வாதிட்டார் அவர். பாரதியோ,

ஏ. எம். நஹியா 29
பொன்னம்பலம் அருணாசலமோ சொன்னதெல்லாம் தாய் மொழி, கல்விமொழியாதல் வேண்டுமென்பதேயொழிய வேறு மொழிகளைக் கற்கக்கூடாதென்பதன்று. பண்பாடு, கலாசாரம் சூழ்நிலைகளுக்கு அமைவாக பல மொழிகளை மாணவர், தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மையை அவர்களும் ஏற்றிருந்தனர். அஸீஸின் கொள்கையிலும் இதே எண்ண ஓட்டத்தைக் காணலாம்.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி மொழிப் பிரச்சினையைப் பல கோணங்களில் நோக்கி, கேள்விகள் சந்தேகங்களை எழுப்பி விடை காண்பதன் மூலம் நியாயமாக ஏற்படக்கூடிய சந்தேகங் களுக்கு விடையளித்தார் அஸீஸ்.தமிழ் மொழி போதனா மொழியாக அமையவேண்டுமென்று அஸீஸ் கோரினாரேயொழிய சிங்களத்தை முஸ்லிம் கள் கற்கக்கூடாது எனத் தடை விதிக்க வில்லை. அஸீஸின் கலைத்திட்டத்தில் சிங்களமும் முக்கிய மான ஒரு பாடமாக அமைகிறது.
தங்களின் சொந்த நலன் கருதி முஸ்லிம்கள் தங்களின் போதனா மொழியாக ஆங்கிலத்தைக் கொள்வதை மறக்க வேண்டும். இந்நிலையில் போதனா மொழியாக சிங் களத்தை அல்லது தமிழைத் தெரிவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுக்கு இலகுவான தல்ல. சிக்கலான நிலையை ஏற்படுத்துகிறது. அவர்களின் தெரிவு அதிகமான முஸ்லிம்களின் வீட்டு மொழியான தமிழா யிருப்பின் மேற்கு தெற்குப் பகுதிகளில் வாழும் அதிகமான முஸ்லிம்கள் மீது அது வசதியீனங்களை ஏற்படுத்துமா? அவர்களின் அதிகமானோரின் வீட்டு மொழி சிங்களமல்ல. ஆனால், சிங்கள மொழியில் நல்ல அறிவு இல்லாத பட் சத்தில் அவர்கள் அப்பகுதியில் முக்கிய பங்கு வகிப்பது தடைப்படும்.'' 5
இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி விடை காணும் முயற்சியில் சிங்கள மொழியையும் முஸ்லிம் சிறார்கள் கற்கவேண்டுமென்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். ஆயினும், போதனா மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டுமென்பதில் அவர் உறுதியான

Page 23
30 | அளnஸ"சம் தமிழும்
கொள்கையுடையவராயிருந்தார். இந்நாட்டு மக்கள் தத்தம் சகோதர மொழிகளைக் கற்கவேண்டும். அதன் மூலம் தான் நாட்டு மக்களிடை ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். ஒருமை யிற் பன்மையும், பன்மையில் ஒருமையும் ஏற்பட இதுவே சிறந்த வழி, நாட்டில் சகோதர மனப்பான்மையும் கலாசார ஒற்றுமையும் இதன் மூலம் வளரும். தாய்மொழிமூலம் ஆளுமை மொழிப்பற்று, அம் மொழியின் அடிப்படையில் எழுகின்ற கலாசாரம், பண்பாடு என்பன வளரும். ஆங்கில மொழி மூலம் உலக அறிவு, உலக நெறி வளரும். நாவலரும் விபு லானந்தரும் இதனை ஏற்றிருந்தனர். அஸிஸின் கருத்தும் இது தான். இவற்றைவிட முஸ்லிம் சிறார்கள் தம் சமய மொழியான அறபையும் கற்க வேண்டிய அவசியமிருக்கிறது என அளtஸ் கருதினார்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி தாய்மொழியாம் தமிழ் மொழியின் அத்திவாரத்தில் அமையவேண்டும் என்பதன் தாற்பரியத்தை, அதன் பிரதிபிம்பத்தை, அட்டாளைச்சேனை, அழுத்காமம் முஸ்லிம் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் தாபிதமாகி மும் முரமாக வளர்ச்சியடைந்து செல்வதில் காண்கிறோம் என்று ஒரு முறை 1956இல் ஸாஹிறாக் கல்லூரி பரிசளிப்பு விழா அறிக்கையில் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார் அஸிஸ்: 1953 மார்ச் 12ஆம் திகதி அவர் Ceylon Daily News பத்திரி 60) i(5 6 repSuu Muslims and the Medium of Instruction என்ற கட்டுரையிலும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் பாடசாலைகளின் கலைத்திட்டத்தில் தமிழ், அறபு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் இடம் பெறச் செய்வது சம்பந்தமாக அஸிஸ் கருத்துத் தெரிவிக்கை யில்,
" வேறுபட்ட எழுத்துக்களையுடைய வித்தியாசமான சரித்திர, சமய, பாஷா அடிப்படைகளையுடைய சிங்களம், தமிழ், ஆங்கிலம், அறபு ஆகிய நான்கு மொழிகளையும் முஸ்லிம் சிறுவர் கற்கவேண்டியதால் உண்டாகும் சிரமம் தவிர்க்க முடியாததாகும்.'
எனக் கூறினார். அகில இலங்கை வை. எம். எம். ஏ. இயக் கத்தினர் நடாத்திய "இலங்கை முஸ்லிம்களுக்குரிய பாட

ஏ, எம். நஹியா | 31
அமைப்பில் மொழிகள் பெறும் இடம் என்ற தலைப்பில் 1959 ஜூன் மாதம் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய அஸிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். கலைத் திட்டத்தில் இந் நான்கு மொழிகளை அமைப்பது சம்பந்தமாக அதே ஆய் வரங்கில் அவர் பின்வரும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
? நான்கு பாஷைகளைக் கற்பித்தலுக்கான பாடத்திட்டங் களையும், பாடவிதானங்களையும் அமைக்கும் விடயத்தில் நாம் கண்மூடித்தனமாக நடந்துவிடக் கூடாது. இலங்*ை முஸ்லிம் சாகியம் எவ்வாறு புவியியல் ரீதியாகப் பரந்தும் செறிந்தும் வாழ்கிறது என்பதையும் மற்றும் முக்கிய காரி யங்களையும் கருத்திற் கொண்டு, பாட அமைப்பு ஒருமைப் பாடுடையதாயிருக்க வேண்டுமென்பதை நோக்கமாகக்கொள் ளாது, சாகித்தியத்தின் ஒற்றுமையையே இலட்சியாகக் கொண்டு அத்திட்டத்தை வகுக்கவேண்டும்.'
எனக் கூறியிருந்தார். 'சாகித்தியத்தின் ஒற்றுமை' என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களின் கல்வி மொழி தீர்மானிக் கப்படல் வேண்டுமென்ற அளவீஸின் கொள்கையில் அவர் முஸ் லிம் சமூகத்துக்குச் சிபாரிசு செய்யும் கல்வி மொழி என்ன வென்பது நன்கு தெரிகிறது. அவசியம் கருதி ஏனைய மும் மொழிகளையும் முஸ்லிம் மாணவர் கற்கவேண்டுமென அவர் கருதுவதிலும் நியாயம் இருக்கிறது. மல்ஹெர்வே என்ற ஆய் வாளரின் கருத்தும், யுனெஸ்கோ தாபனம் 1953இல் வெளியிட்ட கல்வியில் சுயபாஷைகளின் உபயோகம் என்றபிரசுரத்தில் பொதிந்து காணப்பட்ட தாய்மொழி பற்றிய விளக்கமும் முஸ்லிம்களின் கல்விமொழி பற்றி ஏற்கனவே அளிஸ் கொண்டிருந்த கருத்தை வலுப்படுத்தின.
முஸ்லிம்களின் கல்வி மொழி தமிழாக இல்லாத பட்சத்தில் முஸ் லிம் தமிழ்ப் பாடசாலைகள் பாதிக்கப்படும். முஸ்லிம் ஆசிரி யர்கள் பாதிக்கப்படுவர். முஸ்லிம் ஆசிரியர், முஸ்லிம் அதிபர், முஸ்லிம் கல்வி அதிகாரிகளின் இடத்தை சிங்கள ஆசிரியர், சிங் கள அதிபர், சிங்களக் கல்வி அதிகாரிகள் கைப்பற்றுவர். இந்த உண்மையை அளவிஸ் நன்குணர்ந்திருந்தார். அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் இஸ்லாமிய கலாசார வளர்ச்சி தடைப்படுவதுடன் நீண்ட காலத்தில் அது மறைந்துவிடவும் கூடு

Page 24
32 / அஸிஸும் தமிழும்
மென அஸிஸ் அஞ்சியதில் உண்மை இருக்கிறது. இஸ்லாத்து டனும் அதன் கலாசாரத்துடனும் தொடர்பில்லாத நிலையில் சிங்கள மொழியில் கற்கும் மாணவர்கள் பெளத்த சூழலில் தள்ளப்பட்டு சமயம் மாறும் நிலைகூட ஏற்பட்டமை நாமறிந் தது. வெவிப்பண்ணை, கேகாலை, கண்டி மாவட்டங்களில் இவ் வாறு சில மாணவர் மதம் மாறியமையைப் பலர் அறிவர். தலை நகரில் தலைநிமிர்ந்து நிற்கும் ஒரு தனியார் முஸ்லிம் கல்லூரி யில் கடமையாற்றிய, முஸ்லிம் பெயரில் நடமாடிய ஆசிரியர் ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை சிங்களப் பெய ரால் அழைத்துக்கொண்டதுடன் நில்லாது மாணவரிடம் இஸ் லாத்தைப்பற்றி இழிவாகவும் பேச முற்பட்டு ஏற்படுத்திய பர பரப்பைப் பலரறிவர். இதற்குக் காரணம் இந்த ஆசிரி ய ர் பெளத்த சூழலில் சிங்கள மொழியில் கல்வி கற்றதேயாகும். இந் நிலையிலிருந்து நோக்குகையில் அஸிஸின் கல்வி மொழிக் கொள் கையின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.
பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக் கழகம் வரை தாய் மொழி படிப்படியாகப் போதனா மொழியாக்கப்படவேண்டு மென கன்னங்கரா கல்விக் குழு 1943இல் சிபாரிசு செய்திருந் தது. உளவியல் மனிதாபிமானமான ரீதியில் ஏற்றுக்கொள்ளப் படவேண்டிய இச் சிபாரிசுகள் அப்போது கல்விச் சட்டமாகவும் உருவாக்கப்பட்டது. அஸிஸின் கல்வி மொழிக் கொள்கை இத னுடன் உடன்பாடானது. அஸிஸ் அவர்கள் இச் சிபாரிசுகளை அப்போது ஆதரித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இச் சட்டம் இப்போது நடைமுறையிலில்லாதிருப்பது வருந்தத்தக் கது. 1966 இல் வெளியிடப்பட்ட கல்விச் சுற்றறிக்கை தாய்மொ ழியே போதனா மொழி என்று கூறிவிட்டு, சிங்கள மொழி அல்லது தமிழ் மொழி என்றும் கூறி, மாணவர்களின் போதனா மொழி யைப் பெற்றோர் தேர்ந்தெடுக்கலாமென்றும் கூறிற்று. அத னால் தாய்மொழிதான் கல்வி மொழி எனும் சட்டம் மாற்றப் படுவதை அல்லது அவ்வாறு மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இச் சுற்றுநிருபம் ஏற்படுத்துகிறது, இது இந்நாட்டில் சிதறி வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை வாய்ப்பானதன்று. அஸிஸ் பயந்துகொண்டிருந்த மொழி அடிப்படையிலான சமூகப் பிளவை அதாவது, தமிழ் பேசும், சிங்களம் பேசும் இரு பிரிவுகளை முஸ் லிம் சமூகத்தில் ஏற்படுத்துவதில் இச் சுற்றுநிருபம் பெரும் பங்கு வகித்தது. அஸிஸ் அதிபராகவிருந்த லாகிறாக் கல்லூரியில்,

ஏ. எம். நஹியா | 33
இஸ்லாமிய சிந்தனைகளினதும் கலாசாரத்தினதும் உற்பத்தித் தானமாக விளங்கவேண்டுமென்று முஸ்லிம் கல்விமான்களும் தலைவர்களும் கனவு கண்ட அக் கல்லூரியிலேயே அத்தகைய தொரு பிளவு ஒரு பேரினவாதி முதல்வராக இருந்தபோது ஏற் பட்டது. அதற்கு சிலர் ஒத்தாசையும் புரிந்தார்கள். அஸிஸ் எது நடக்கக்கூடாதென்று நினைத்தாரோ அவர் அதிபராகவிருந்த கல்லூரியிலேயே அது நடந்தேறியது. கல்லூரி மட்டத்தில் ஏற் பட்ட இவ் வேதனைக்குரிய விடயம் சமூக மட்டத்தில் விளைவு களை ஏற்படுத்துவதற்கான நாட்கள் வெகு தூரத்திலில்லை. சமூக ஒற்றுமை பற்றி அப்போது பேசுவதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. 1972இல் அறிமுகம் செய்யப் பட்ட கல்விச் சீர்திருத்த அமைப்பிலும் 1981இல் வெளியிடப் பட்ட கல்விச்சீர்திருத்தத்துக்காய ஆலோசனைகளிலும் இந்நிலை நிவர்த்திசெய்யப்படவில்லை. 1972ஆம் ஆண்டைய கல் வி அமைச்சு வெளியீட்டில் "தாய்மொழி எனும் சொல் "கல்வி மொழி எனும் சொல்லாலும், கல்வி வெள்ளை அறிக்கையில் (1981) முதல்மொழி எனும் சொல்லாலும் அழைக்கப்பட்டது. கல்வி வெள்ளை அறிக்கையின் படி (1981) முதல் மொழி கட் டாய பாடங்களில் ஒன்று என்றும் கூறப்பட்டுள்ளது. சோவியத் நாடு, யூகோசிலேவியா போன்ற நாடுகளில் தாய்மொழி தான் கல்வி மொழி என அந்நாடுகளின் கல்விச் சட்டமும் அரசியல் சட்டமும் விதித்துள்ளன. அஸிஸ் வேண்டுவதும் இதுதான். அப் பெருமகனின் எண்ணம் நிறைவேறவேண்டுமாயின் தாய்மொழி தான் கல்வி மொழி என இலங்கையின் கல்விச் சட்டம் மாற்றி யமைக்கப்படவேண்டும். அப்போதுதான் அஸிஸ் கண்ட மொழி ரீதியில் ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகத்தை, சமய கலாசார பண் பாட்டு ரீதியில் உயர்வுபட்ட முஸ்லிம் சமூகத்தை, முன்னோ ரின் இலக்கிய, அறிவுச் செல்வங்களைப் படித்துப் பயன்பெறும் முஸ்லிம் சமூகத்தை நாம் காணமுடியும், -
தாய்மொழியே போதனா மொழியாதல் வேண்டுமென்று வாயள வில் மட்டும் அஸிஸ் கூறவில்லை. செயலிலும் காட்டியவர் அவர். தாய் மொழி மூலம் 5ஆம் வகுப்பில் தேறிய முஸ்லிம் மாணவிகளுக்கென தங்குமிட வசதிகளுடன் கூடிய தனியான

Page 25
34 அளnஸ்-9ம் தமிழும்
பெண் பாடசாலைகளை அமைத்துக்கொடுக்க வே ண் டு மெ ன இலங்கை முஸ்லிம் கல்விச் சகாயநிதி சார்பாக 1946இல் அஸிஸ் அப்போதைய அரசாங்கத்தைக் கேட்டிருந்தார். அப்போது கல்வி அதிகாரியாகவிருந்த டாக்டர் சாண்டிமனும் அஸிஸின் இக் கோரிக்கைக்கு ஆதரவளித்தமையால் முஸ்லிம் பெண்களுக் கென தனியான ஒரு மத்திய தமிழ்மொழி மூலமான பாட சாலையொன்று அளுத்காமத்தில் நிறுவப்பட்டது. இப் பாட சாலைக்குப் போதிய மாணவிகள் கிடைப்பார்களா? என்று டாக் டர் சாண்டிமன் வினவியபோது, இப் பாடசாலை பற்றியும் அது கொண்டுள்ள வசதிகள் பற்றியும் விரிவான அறிக்கையொன் றைத் தமிழில் தயாரித்து சகல பள்ளிவாசல் தர்மகர்த்தாக்களுக் கும் அனுப்பி வைத்தார் அஸிஸ். அதன் பின்னர் இப் பாட சாலை பற்றி அதிகமான பெற்றோர் தெரிந்துகொண்டது மட்டு மன்றி கூடுதலான மாணவிகளும் இப் பாடசாலையில் கல்வி கற்க வந்து சேர்ந்ததாகத் தெரிகிறது. -
முஸ்லிம் ஆசிரியைகளைப் பயிற்றுவிக்க, தனியான, தமிழ் மொழி மூலமான பயிற்சிக் கலாசாலை ஒன்று அவசிய மெ ன் ப  ைத உணர்ந்து செயற்பட்டார் அஸிஸ் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களான சேர். றாசிக் பரீத் , அல்ஹாஜ் எம். எம். இப் றாஹிம் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு தனது நோக் கத்தைப் பூர்த்திசெய்துகொண்டார் அவர், 1941இல் அளுத்கா மத்தில் நிறுவப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி 1954இல் முஸ் லிம் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக மறுநாமம் பெற இம் முயற்சியே காரணமாக அமைந்தது.
"முஸ்லிம்களின் வீட்டு மொழியாக விருக்கும் தமிழே அவர் களுக்குப் பாடசாலைகளில் போதனா மொழியாயிருக்க வேண்டும்." ே
என்று கூறுவதுடன் மட்டும் நின்றுவிடாது, முஸ்லிம் மாணவர் களுக்காக நாடெங்கும் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டுமென அவர் போராடினார்.
"தமிழ் பேசும் முஸ்லிம்கள் தீவெங்கிலும் சிதறி வாழும் தன்மை காரணமாகத் தமிழும் நாடெங்கிலும் போதனா மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டும். வடக்கிலும் கிழக்கி லும் மட்டுமன்றி இலங்கையின் தெற்கு, மத்தி, மேற்குகளி

ஏ. எம். நஹியா 35
லெல்லாம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் சிதறி வாழ்கிறார்கள் சமஷ்டி ஆட்சியை அமைத்துவிடுவதன் மூலம் அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துவிடமுடியாது. அப்பகுதி முஸ்லிம் களுக்கென முன்னைய அரசாங்கங்கள் நீண்ட காலமாக தமிழ்ப் பாடசாலைகளை அப் பிரதேசங்களில் ஆரம்பித்தன. அவர்களுக்காக இவ்வேற்பாடுகள் செய்யப்படவேண்டும்.'
என மேலவையில் குரலெழுப்பினார். தமிழும் நாடெங்கிலும் போதனா மொழியாக அங்கீகரிக்கப்படவேண்டும் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலை கள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பன போன்ற அளிலின் கோரிக்கைகள் பெறுமதி மிக்கவை.
சாகித்தியத்தின் ஒற்றுமை, தாய்மொழியே போதனா மொழி என்ற அடிப்படைகளில் நின்று முஸ்லிம் சமூகத்தின் கல்வி மொழியாகத் தமிழ் மொழியே இருத்தல் வேண்டுமென அளிஸ் எடுத்த முடிவு நியாயமானது. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனையின் விளைவாகப் பெறப்பட்ட அர்த்தமுள்ள முடிவு.சிங்கள மொழியே முஸ்லிம் சிறார்களின் போதனா மொழி யாக விளங்கவேண்டுமென்ற கருத்தை ஆரம்ப காலங்களில் கூறித் திரிந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ் மூத் அவர்கள், தமிழ் மொழிதான் அவர்களின் போதனா மொழியாக இருக்கவேண்டுமென்று பிற்காலத்தில் கருத்து வெளியிட்டபோது, அஸிஸின் கருத்து மகிமை பெற்றது. புத்
துணர்வும், புத்தூக்கமும் பெற்றது
1. சந்திரசேகரம், ப. *。
*கல்வியும் மரபும் மாற்றமும் .ே கல்வித்தத்துவம். அதிகாரம் 2; பக்: 21
2. அளபீஸ், எ. எம். எ
"நிர்வாக சபைத் தலைவரின் அறிக்கை" The Ceylon Muslim Scholarship Fund Year Book 1952, Eighth Volume PP 167 - 168

Page 26
36 அஸிஸும் தமிழும்
3.
சிவராஜா, வண்ணை சே கலைஞானம் (இரண்டாவது இதழ்) 1981 - 82 கல்விக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை L)。夏04
ஷெ
Azeez A. M. A,
Muslims and the Medium of instruction Ceylon Daily News, 12th March, 1953
தினகரன் வார மஞ்சரி 29 ஜூன் 1958
Azeez A. M. A. * The Status of Tamil Language
Senate Hansard, May 1956
 

அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்
அறபு மொழி, தமிழ் மொழிமீது ஏற்படுத்திய முக்கிய விளைவு களிலொன்றுதான், அறபுத் தமிழ், சோனகத் தமிழ்" என்றும், "முஸ்லிம் தமிழ்" என்றும் இது அழைக்கப்படுகிறது. அறபு எழுத்தில் எழுதப்படும் தமிழ் தான் அறபுத் தமிழ் என்பது பொதுவான கருத்து. 10.12.1941இல் அஸிஸ் Ceylon Daily News Luigia) and, acup SLI Ceylon Muslims and their Mother Tongue" என்ற கட்டுரையில் கூறும் கருத்தும் இதுதான். ஆனால், பிற்காலத்தில், அறபுச் சொற்கள் கலந்த தமிழை அறபுத் தமிழ் எனக் கருதும் நிலை ஏற்பட்டது. அறபுத் தமிழ் பற்றிய அஸி ஸின் பிற்காலக் கருத்தும் இதுவே. "
இலங்கையில் இஸ்லாம் நூலில் இடம்பெறும் "இலங்கை முஸ் லிம்களின் வரலாறு" என்ற கட்டுரையில் அஸிஸ்,
இலங்கை முஸ்லிம்களிற் பெரும்பாலோர் தமிழையே பேசு கின்றனர். ஆனால், இலங்கை முஸ்லிம்களின் பேச்சு வழக் கிலும், தென்னிந்திய முஸ்லிம்களின் பேச்சு வழக்கிலும் பல அறபுச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கான தமிழ்ச் சொற்களிருந்தும் அவ்வறபுச் சொற்களே கையாளப் படுவது கவனித்தற்பாலது. எனவே, முஸ்லிம்களது தமிழ் வழக்கினைக் குறிப்பதற்கு அறபுத் தமிழ் என்ற தொடர் கையாளப்பட்டு வருகின்றது. முன்னர் அறபுத் தமிழை அறபிலேயே எழுதினர். அறபு மொழியில் இல்லாத ட, ச, ங், ப தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்கு அறபு எழுத்துக்

Page 27
38 / அஸிஸும் தமிழும்
களோடு விசேஷ புள்ளிகளைச் சேர்த்து எழுதுவர். இக் காலத்தில் அறபுத் தமிழ் அதிகமாகத் தமிழிலேயே எழுதப் படுகின்றது." 1 ஒன
என அறபுத் தமிழுக்கு ஒரு விளக்கத்தை அளித்தார்.
இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய பண்பாட்டுக்கும் அறபு மொழிக்கு மிடையே நிலவும் பிரிக்க முடியாத உறவு காரணமாக முஸ்லிம் கள் பேசும் தமிழில் அதிகமான அறபுச் சொற்கள் விரவி வரு வது தவிர்க்கமுடியாததாயுள்ளது. இது ஏனையோர் பேசும் தமிழை முஸ்லிம்கள் பேசும் தமிழிலிருந்து வேறுபடுத்த ஏதுவாக அமைகிறது. இந்த அறபுத் தமிழ் பற்றியும், அம்மொழியில் வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான நூல்கள் பற்றியும், அறபுத் தமிழ் இலக்கியம் பற்றியும், மிகுந்த அக்கறை காட்டினார் அஸிஸ், அறபு - தமிழ் அகராதி ஒன்றின் தேவையையும் அவர் வலியுறுத்தினார். அறபுத் தமிழ் பற்றிப் பல கட்டுரை களையும் அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்ற தலைப் பில் ஒரு நூலையும் கூட அவர் வெளியிட்டிருந்தார்.
** அறபுத் தமிழ் மொழி என்றொரு மொழி இல்லை" 2 என பேராசிரியர் உவைஸ் கருதுகிறார். ஆனால் அஸிஸ் அவர்களோ,
* தமிழ் இலக்கணம் தவிர தனக்கென வேறான இலக்கணம் இல்லாமையால் அதனை ஒரு தனி மொழியென்று கொள் வது சாத்தியமன்று. ஆனால் மறுபுறத்தில் பார்த்தால், பிரிட்டிஷ் இங்கிலிஸுக்கும் அமெரிக்க இங்கிலிஸுக்கும் உள்ளதிலும் அதிக வேறுபாடு தமிழுக்கும் அறபுத் தமிழுக் கும் உண்டு. எனவே, கிளைமொழி என்னும் அந்தஸ்தை நாம் அதற்குத் தங்கு தடையின்றி அளிக்கலாம்." 2
என்று அபிப்பிராயப்படுகிறார். இது பற்றி மேலும் அறிவியல், மொழியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவு ஆள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இஸ்லாம் பரவியபோது பல நாடுகளின் சுதேச மொழிகளில் அறபு மொழியின் தாக்கம் காணப்பட்டது. இஸ்லாமிய மத சார்பான விடயங்களையும் சொற்களையும் விளக்கும் சக்தியற் றிருந்த சுதேச மொழிகளில் அத்தாக்கம் தவிர்க்கமுடியாதிருந் தது. ஸ்வாஹிலி, சோமாலி, துருக்கி, பாரசீகம், மலாய்

ஏ. எம். நஹியா / 39
மொழிகள் அறபு லிபியில் எழுதப்பட்டதாக அறியப்படுகிறது. இவற்றுள் சில தற்போது உரோமன் எழுத்துக்களில் எழுதப்படு கின்றன. அறபுத் தமிழைப்போல, அறபு-வங்காளம், அறபுமலையாளம் போன்றனவும் வழக்கிலுள்ளமை தெரிந்ததே. அறபு மொழியின் செல்வாக்கினால் தோன்றிய உருது மொழி, அறபு லிபியில் எழுதப்படுவதும் இங்கு நோக்கப்படவேண்டியது. இவற்றையெல்லாம் தெரிந்திருந்த அஸிஸ், வரலாற்று ஞானத் துடன் அறபுத் தமிழைப் பார்த்த அஸிஸ், அது பற்றி ஆராய விழைந்தார். அறபுத் தமிழை அன்புத் தமிழ் எனக் கூறிப் பெருமிதம் அடைந்தார்.
தென்னிந்தியாவுக்கு வருகை தந்த முஸ்லிம்கள் (அறபு மூதாதை யர்கள்) தமிழ் மொழியை "அறவம்' என அழைத்ததாக 'திரா விட மொழிகளின் ஒப்பிலக் கணம் நூலாசிரியர் கால்டுவல் பாதிரியார் குறிப்பிடுகிறார். அவர் தனது நூன் முகத்தில்,
The Tamil Language is called Aravam by the mussalmans of the Dekhan, the Telugus and the Canarese'
என அதனை எழுதிவைத்திருக்கிறார். ஆனால் "அறவம்" என்ற சொல் தமிழுக்கு ஏன் வழங்குகிறது, அச்சொல் எவ்வாறு வழக் கில் வந்தது என்பன பற்றிய இனது நிச்சயமற்ற நிலையை,
What is the derivation of this term Aravams? Its origin appears to me very uncertain
என கால்டுவல் தெரிவிக்கிறார். ஆயினும் டாக்டர் குண்டட் டின் இது பற்றிய கருத்தை கால்டுவல் தனது நூலில்,
Dr. Gundert suggested that as Tamil Literature excelled other Literature in ethics, it might have been perhaps from this circumstance that Tamilians were called Aravas"
என எழுதி வைத்திருக்கிறார்.

Page 28
40 / அளவீஸும் தமிழும்
அறபுத் தமிழ் நூல்கள், தமிழையும் அறபுத் தமிழையும் லிஸானுல் அறிவிய்யா" என்று அழைப்பதும், அறபு எழுத்துக் களில் எழுதப்பட்ட தமிழை அறிவிய்யா' என இஸ்லாமியத் தமிழறிஞர் அழைப்பதும் இது சம்பந்தமாகக் கருத்திற் கொள் ளப்பட வேண்டியன:
'அறபு" என்னும் சொல்லே "அறிவிய்யா" என்றும் "அறவம்' என்றும் மருவியிருக்கலாம். சிலர் வேறு வகையிலும் அதனை விளக்க முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும், "அறிவிய்யா" என்றோ "அறவம்’ என்றோ தமிழ் மொழி முஸ்லிம்களால் அழைக்கப்பட்டமைக்கான காரணத்தை அறிய முயல்வது அற புத் தமிழ் வாதிகளுக்கு பெரிதும் உதவுமென நம்பலாம்.
எழுத வாசிக்கத் தெரிந்திருந்த அறபு லிபியில், புதிதாகப் பேசப் பழகிக் கொண்ட தமிழை எழுதியது அறபுத் தமிழின் ஆரம்ப
சொற்கள் தமிழில் விரவி வருவதும் பிற்கால நிலை. இவை இரண்டுடனும் உடன்பாடுடையவர் அஸிஸ்,
"அறபு மக்கள் தமது மொழியை மறந்து காலக் கிரமத்தில் அறபுத் தமிழ் எனும் ஒன்றினை உருவாக்கிக் கொண்டார்
6. ''4
என்று கூறும் அஸிஸ்,
"முஸ்லிம்களின் தமிழ் மொழியில் சுத்தமான தமிழ்ச் சொற் களின் இடத்தில் அவற்றுக்கு நிகரான அநேகம் அரபிச் சொற் கள் இடம் பெற்றுள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பண்டிதர்களும் மொழித் தூய்மை வேண்டுவோரும் இந்த அரபிச் சொற்களை ஏற்க மறுத்ததன் விளைவாக அரபித் தமிழ் என்பது தோன்றலாயிற்று.”*
என்று அறபுத் தமிழின் இரண்டாவது நிலையின் தோற்றத்துக் குக் காரணம் கற்பிக்கிறார்.
இலங்கையில் அறபுத் தமிழின் நிலைப்பாட்டை விளக்க முனைந்த அளிஸ் குர்ஆன் பள்ளிக்கூடங்களில் அறபுத் தமிழே கல்வி மொழியாக இருப்பதைக் குறித்துச் சொன்னார்,

ஏ. எம். நஹியா | 41
"மக்தப் என்னும் பெயர் முஸ்லிம் உலகில் வெகு பிரசித்த மானதெனினும் இலங்கையில் அது பிரபல்யம் பெற்றதாகத் தெரியவில்லை. இலங்கையில் மக்தப் என்பதற்குப் பதிலாக குர்ஆன் பள்ளிக்கூடம் என்ற பெயரே உபயோகிக்கப்பட் டது. மக்தப்பில் அறபு மொழியே போதனா மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. குர்ஆன் பள்ளிக்கூடத்திலோ அற புத்தமிழ் போதனா மொழியாக விளங்கிற்று. அறபுத் தமி ழில் ஆசிரியர் "லெப்பை" என்றழைக்கப்படுகிறார். அறபி யில், முஅல்லிம்" என்பர். தென் இந்தியாவில் முஅல்லிம்" என்ற சொல்லே வழக்கிலிருப்பதாக அறிகிறேன்." ே
என எழுதி இலங்கை முஸ்லிம்களுக்கும் அறபுத் தமிழுக்குமுள்ள
பிணைப்பை விளக்கினார். "எங்கள் பாஷை அறபுத் தமி ழாகும்' என்று முதுபெரும் முஸ்லிம் அரசியல்வாதி சேர். ராஸிக் பரீத் அவர்களும், 'அறபுத் தமிழ் எங்கள் அன்புத்
தமிழ்' என மூதறிஞர் எ. எம். எ. அஸிஸ் அவர்களும் குர லெழுப்புமளவுக்கு அறபுத் தமிழுடன் இலங்கை முஸ்லிம்கள் இணைந்திருந்தனர்.
இஸ்லாத்தைப் புகட்டுவதற்கு மிகப்பொருத்தமான மொழியாக விளங்குவது அறபு மொழி. ஆரம்பகாலத்தில் தென்னிந்தியா விலும் இலங்கையிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் பேசவும் புரிந்து கொள்ளவும் தெரிந்திருந்த தமிழ் மொழியை அவர்கள் ஏற் கனவே எழுதத் தெரிந்திருந்த குர்ஆனின் மொழியான அறபு மொழியில் எழுதுவது சுலபமானதாக இருந்தது. குர்ஆன் விளக்கவுரைகள் (தப்ஸிர்), கிரந்தங்கள் என்பன அறபு விபியில் மட்டுமே எழுதப்பட வேண்டுமென்ற கொள்கையும் அப்போது நிலவியது. இஸ்லாம் தொடர்பான சொற்களை ஒலி, பொருள் சிதைவுகளின்றி அறபு மொழியில்தான் எடுத்துக் கூறமுடியும். இவ்வாறான காரணங்கள் தோற்றுவித்த அறபுத்தமிழ் நூல் களையும், இலக்கியங்களையும் முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ் லிம் அல்லாதோரும் படித்து மகிழவேண்டுமென்று அஸிஸ் விரும்பினார். அதற்காகப் பல முயற்சிகளும் பிரயத்தனங்களும் செய்தார். -
அறபுத் தமிழானது தமிழ் இலக்கண முறைமைகளை அப் படியே ஏற்றுக்கொண்டபோதிலும், அறபுச்சொற்கள் விரவி வரு வதனால் மணிப்பிரவாள நடைபோன்ற ஒரு நடை தோற்று

Page 29
42 / இnஸம் தமிழும்
விக்கப்பட்டது. அறபு மொழியைப் பாதுகாப்பதற்குத் தமிழில் எடுக்கப்பட்ட புத்திபூர்வமான ஏற்பாடாக இந்த அறபுத் த மி ழைக் கொள்ளலாம். அற்பும் தமிழும் தெரிந்தவர்களே இம் மொழியைப் பயன்படுத்தவும் பயனுறவும் முடியும். தமிழுக் குச் சிறப்பாக அமைந்த ட, ண, ப, ழ போன்ற எழுத்துக் களின் ஒலிகளைக் குறிப்பதற்கு விசேட அறபு எழுத்துக்களை அறபுத் தமிழ் இலக்கியவாதிகள் உண்டாக்கிக் கொண்டனர். ஆயி னும், அறபுக்குச் சிறப்பாக அமைந்த ஹே, ஃகே, ஃதால், ளாத். ஃகாஃப் போன்ற எழுத்துக்களின் ஒலிகளைக் குறிப்பதற்கு விசேட எழுத்துக்களைத் தமிழில் உண்டாக்கிக் கொள்ளக்கூடிய சுதந்திரம் அறபுத் தமிழ்வாதிகளுக்கு இருக்கவில்லை. அற்பு மொழியும், தமிழ் மொழியும் ஒலியமைப்பில் பெரிதும் வேறு பட்டவை. அறபு மொழி ஒலிகள் பல தமிழில் இல்லாதது போல, தமிழில் உள்ள ஒலிகள் பல அறபு மொழியிலும் இல்லா திருக்கிறது. எ, ஏ, ஒ, ஓ ஆகிய உயிர் எழுத்துக்கள் அறபு மொழியில் இல்லை. மெய் எழுத்துக்களைப் பொறுத்த வரை ங, ச, ஞ, ட, ண, ப, ள, ந, ர ஆகியவற்றுக்கு நிகரான அறபு எழுத்துக்களும் இல்லை. ஆயினும், தமிழை அறபு எழுத்துக் களில் எழுதியோர் இவற்றுக்கு நிகரான புதிய எழுத்து வடிவங் களை அறபு வரிவடிவத்தில் சில மாற்றங்களைச் செய்து ஏற் படுத்திக் கொண்டனர். ஐ. ஒள என்பன அய், அவ் எனப்பிரித்து எழுதப்பட்டன. அறபுமொழியிலுள்ள மொத்தம் 28 எழுத்துக் களுடன் புதிதாக ஏற்படுத்திக்கொண்ட..7 எழுத்துக்களும் சேர்ந்து அறபுத் தமிழில் மொத்தம் 35 எழுத்துக்கள் உள. 5 உயிர்க் குறிகளும், 2 மெய்க்குறிகளும் சேர்ந்து மொத்தம் 7 குறிகளும் உள்ளன. அறபு மொழியைப்போல் அறபுத்தமிழும் வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. 7
இஸ்லாமியப் புலவரும் எழுத்தாளரும் இத்தகைய சிரமங்களின் மத்தியிலும் அற்புத் தமிழ் நூல்கள் பலவற்றை எழுதி இஸ் லாமியப் பண்பையும், மரபையும் பேணினர். 'கஷ்ஃபுல்றான் அன்கல்பில் ஜான்' (1889 ) , ' அஜாயிபுல் அக்பர் * போன்ற அறபுத்தமிழ் வாரப்பத்திரிகைகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிகிறது. வட சொற் களை ஏற்று வளமும், வனப்பும் பெற்ற தமிழுக்கு முஸ்லிம் புலவரும், எழுத்தாளரும் பல அறபுச்சொற் களை வழங்கி அம் மொழியை வளம்படுத்தினர். அல்லாஹ். அதபு, அமல், ஆலிம், உடம்மத், தென் ஹீத், சகறாத், மையித்,

ஏ. எம். நஹியா / 43
ஜனாசா, வலீமா, கபுறு, ஹறாம், ஹலால், காபிர், குத்துபா, சுன்னத், திக்று, துஆ, பயான், மகர், மின்பர், மு அத்தீன், மீஸான், முசீபத்து, வாஜிப், ஸக்காத், றசூல் போன்ற சொற் களுக்கு ஓரளவு சமமான சொற்கள் தமிழில் இருந்தும் அவற்றை உபயோகிக்க முஸ்லிம்கள் மறுப்பதற்கான காரணமும் இதனுடன் இணைத்துப் பார்க்கப்படவேண்டியது.
தென் னிந்திய முஸ்லிம் கல்விக் கழகத்தின் பொன் விழா வின் 2ஆம் நாள் நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்றபோது அதற் குத் தலைமை தாங்கி 1955ஆம் ஆண்டு பெப்ருவரி 6ஆம் திகதி ஜனாப் அஸிஸ் ஆற்றிய உரை, தென்னிந்திய, இலங்கை முஸ் லிம்களை அறபுத்தமிழின்பால் சிந்திக்கச் செய்தது.அறபுத் தமிழ் வழக்கிழந்து கொண்டிருந்தபோது, அறபுத் தமிழ் நூல்களும் எழுதப்படாத ஒரு காலகட்டத்தில், அஸீஸ் எழுப்பியகுரல் எல்லோ ரையும் மீண்டும் ஒருமுறை அதன்பால் கவனம் கொள்ளச் செய் தது. அறபுத் தமிழ் இலக்கியப் புறக்கணிப்புக்கு நம்மை நாமே நொந்து கொள்ளவேண்டுமெனக் கூறிய அஸீஸ், அறபுத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை, இஸ்லாமிய இலக்கியச் செல்வத் தைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய முஸ்லிம்களின் தலையாய கடமை பற்றி, அங்கு குழுமியிருந்த அறிஞருக்கும் மக்களுக்கும் எடுத்துச் சொன்னார்.
"அறபுத் தமிழ் இலக்கியம் போதியளவு போற்றப்படாமலும் மக்கள் மத்தியில் பரப்பப்படாமலும் இருந்து வருவது மிக வும் வருந்தத்தக்கதொன்றாகும். இதன் காரணமாக முஸ் லிம்கள் மத்தியிலும் கூட அற்புத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அறிவு மிகக் குறைவாகவே இருந்துவருகிறது. இந்த அவல நிலைக்குக் காரணம் நாமேதாம். ஏனெனில், எமது இலக்கியத்தை நாமே தக்கவாறு போற்றாதிருக்கும்போது முஸ்லிம் அல்லாதோர் அதனைப் போற்றுவர் என்று எதிர் பார்ப்பது எங்ஙனம்?'' 3
என அங்கிருந்தோரை வினவினார் அஸீஸ். இவ்வகையில் தாமும் ஏனையோரும் பெரியதோர் தவறை இழைத்துவிட்டதாகக் கண் டனம் செய்தார். தாமே இழைத்துக்கொண்ட தவறினால் தமி ழகராதியில் இடம்பெறவேண்டிய சில சொற்கள் அங் கு காணப்படவில்லை. தமிழிலக்கிய சரிதையில் காணப்படவேண் டிய பல பெரியார்களின் பெயர்கள் அங்கில்லை, முஸ்லிம்களுக்கே

Page 30
44 அளவீஸஸும் தமிழும்
சிறப்பாகவும், ஆனால், பொதுத்தன்மையுடையனவாகவும் அமைந் துள்ள பல அரிய கருத்துக்களும் கொள்கைகளும் தமிழிலக்கிய அரங்கிலே அவற்றுக்குரிய இடம்பெறாது போயின எனப்பலத்த தொனியில் பேசினார். அறபுத் தமிழ் இலக்கியத்தைப் புறக் கணித்ததன் விளைவுகளை அங்கு குழுமியிருந்த கல்விமான்க ளுக்கு எடுத்துரைத்த அஸிஸ்,
'மரபு காக்காத மனித குலம் தனது பண்பையும், மாண்பை
யும், மேம்பாட்டையும் இழந்துவிடும் என்பது வரலாறு காட்டும் படிப்பினை, இதை நமது மூதாதையர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆகவே தான் தமது தனித்தன்மை யைப் பேணும் வகையில் தமக்கென ஓர் இலக்கியப் பாரம் பரியத்தை உருவாக்கினார்கள். அதுவே அறபுத் தமிழ் இலக் கியம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம். இன்று நம்மிற் பலர் இந்த இலக்கியத்தின் மாட்சிமையை அறியாது வாழ்கிறார் கள். மற்றவர்கள் அறிந்தும் அறியாதவர்கள் போல ப் பாவனை செய்கிறார்கள். வேறு சிலர் இக்காலச் சூழலில் அதன் அத்தியாவசியத்தை உணராதவர்களாயிருக்கிறார் фssўт. " " 9
என மனவேதனையுடன் பேசினார்.
"இலங்கை முஸ்லிம்களாகிய நாம் அறபுத் தமிழை விவேக மாக ஆய்ந்தோய்ந்து பார்த்துப் புனருத்தாரணம் செய்யா விட்டால் ஆக்க இலக்கியத் துறையில் பயனுள்ள தனித் தன்மை வாய்ந்த நூல் எதையும் தோற்றுவித்தல் முடியாத தாகிவிடும். அத்தகைய சூழலில் நம்மிடையே உண்மைக் கவிஞர்கள் தோன்றார்.' 10
என்று தனது கட்டுரைகளிலும் எழுதியிருந்தார்.
அறபுத் தமிழ் மரபு இலங்கையில் பேணப்படாமை பற்றி அஸிஸ் மிகவும் மன வேதனைப்பட்டார். கசாவத்தை முகம்மது லெப்பை ஆலிம்சாஹிபு அவர்களியற்றிய பத்துகுல் மிசிர் என்ற அறபுத் தமிழ் நூல் பற்றி, அஸிஸ் தனது "மிஸ்றின் வசியம்' நூலில் எழு தியபோது இந்த மனவேதனை தெட்டத்தெளிவாகத் தெரிந்தது. அந்த வாசகம் வருமாறு:

ஏ. எம். நஹறியா / 45
'1964ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் எனது நண்பர் உவைஸ் - ஜனாப் ம. முகம்மது உவைஸ் எம். ஏ. --கொடுத்துதவிய
நூலொன்றிலிருந்து இந்தத் தலைப்பைப் (பத்துகுல் மிசிர்) பெற்றேன். இதன் பொருள் மிஸ்றைக் கைப்பற்றுதல் என்ப தாகும்.
இந் நூலின் விபரம் வருமாறு:- பத்துகுல் மிசிர் - பஹனசா வசன காவியம்
இஃது இலங்கையுட் கசாவத்தையென்னுஞ் சிற்றூரில் வசிக் கும் முஹம்மது லெப்பை ஆலிம் சாஹிப்பவர்கள் அற புத் தமிழிலியற்றிய பிரதிக்கிணங்க, சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களால் தமது அச்சியந்திர சாலையில் ஹிஜ்ரி 1324ஆம் வருஷம் றபீஉல் ஆகிர் மாதம் பதிப்பிக்கப்பட்டது. இஃது நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்களின் கலிபாக்கள் நால்வரில் இரண் டாவது கலீபாவான உமறு கத்தாபு றலியல்லாகன் கவர் களாட்சியில், இரண சுத்த வீரர்களான அசுஹாபிமார்களை யனுப்பி மிசுறுதேச முழுமையும் பத்துகுல் செய்த சரித் திரத்தைக் கல்வியில் சிறந்த அல்லா மத்து செய்யிதினா ஷேய்கு முகம்மதிபுனு முகம்மதுல்மு அஸ்ஸ" றகு மதுல்லா அவர்களாலறபுப் பாஷையில் பைத் தென்னும் கவிதைகளாற் கோர்வை செய்துள்ளதைத் தழுவி எழுதப்பட்டது. இலங்கை வாசி ஒருவர் இயற்றிய இந் நூல் பற்றி அநேகருக்குத் தெரியாது. இன்று மட்டுமல்ல, நூல் வெளிவந்த காலத் திலும் கூட இது அவ்வளவு பிரபல்யம் அடையவில்லையென லாம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அறபுத் தமிழ் மரபு போதியளவு பேணப்படாமையே இதற்குக் காரணம்." 1
என எழுதினார். அறபுத் தமிழ் togւլ பேணப்படாமையையும் அவை பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இவ்வாறு எழுதிவைத்திருக்கிறார் அஸிஸ்
அறபுத் தமிழின் பிறப்பு, வளர்ச்சி பற்றியும், இக்காலத்திலும் முந்திய காலங்களிலும் அது நலிவடைந்தமைக்கான காரணங் கள் பற்றியும், ஆய்வுகள் நடைபெற வேண்டுமென்று அஸிஸ் விரும்பினார். அறபுத் தமிழ் மூலம் உலகின் தொல் இனங்

Page 31
46 அஸிஸும் தமிழும்
களான செமிற்றிக் இனமும் திராவிட இனமும் சங்கமமாகியுள் ளமை பற்றியும் தொல் பொருட்சாலைகளின் உதவியுடன் அற புத் தமிழின் தோற்றம் பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றும் அவர் கருதினார். ஒரு கிளை மொழி என்ற அந்தஸ்தை அறபுத் தமிழுக்கு அளிக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு அவர் வந்திருந்தார். அறபுத் தமிழ் ஒரு மொழியா? கிளை மொழியா? ஒர் இலக்கிய நடையா? என்பன பற்றியும், அது அறபு லிபியிலிருந்து தமிழ் லிபிக்கு எப்போது மாறியது என் பது பற்றியும் ஆய்வுகள் தேவை என்றார். 'முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களே அறபுத் தமிழ் எழுத்தாளர்கள்; அவர்கள் வேறு இவர்கள் வேறு அல்ல ” 12 என்ற கருத்துடையவரான அளவிஸ்,
* அறபுத் தமிழ் மரபைப் பேணாத முஸ்லிம் எழுத்தாளர் கள் தனித் தன்மை வாய்ந்த இலக்கியங்களைச் சிருஷ்டித் தல் சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை."
என்று கூறினார். தனித்துவமான இலக்கியத்தை அவாவி நின்ற அவரின் முயற்சி இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.
அறபுத் தமிழில் ஆர்வமுள்ளவராகவிருந்த அளtஸ் தனது சிறு பிள்ளைக் காலத்தில் கஸ்ஸால் அன்பியா' என்னும் தமிழ் லிபி யில் எழுதப்பட்ட அறபுத் தமிழ் நூலைப் படித்ததாக "ஆபிரிக்க அனுபவங்கள் என்ற தனது பிரயாண நூலில் (பக் 135) குறிப்பிடுகிறார். இரத்தின முஹம்மது காரணச் சரித்திரம், புதுகுஷ்ஷாம் முதலிய அறபுத் தமிழ் இலக்கிய நூல்களை யெல்லாம் தனது சிறு பிராயத்தில் கற்றதாக அலிஸ் கூறுகிறார்.
" அல்லாபிச்சை மாமாட பள்ளி என்று பேச்சு வழக்கில் குறிக்கப்பெற்ற அரசாங்க முஸ்லிம் தமிழ்க்கலவன் பாட சாலையில் ஆரம்பக் கல்வி கற்ற காலத்தில், இரத்தின முஹம்மது காரணச் சரித்திரம் , புதுகுஷ்ஷாம், கஸ்ஸால் அன்பியா முதலிய அறபுத் தமிழ் இலக்கிய நூல்களை வாசித்திருந்தேன். வகுப்பில் உபயோகிக்கப்பட்ட பாட நூல்களும் இந்த அறபுத் தமிழ் நூல்களுமே எனது முழு நூல் நிலையமாயிற்று. இதனால், பள்ளிப்படிப்பில் இஸ்லா மிய வரலாறு இடம் பெறாது விட்டாலும் கூட இஸ்லா

ஏ. எம். நஹியா 47
மிய சரித்திரத்தை ஒரளவு கற்றுக்கொள்ள வாய்ப்பேற் பட்டது. புதுர குஷ்ஷாம் என்ற நூல் இஸ்லாத்தில் படை யெடுப்புகள் பற்றியது. இந்நூல் வாயிலாக மிஸ்ர் நாடு முஸ்லிம் படையெடுப்புக்கு அடிபணிந்தமைக்கான பின்ன ணிக் காரணங்களை ஒரளவுக்குத் தெரிந்திருந்தேன். கஸ் ஸால் அன்பியா எகிப்தோடு பெரிதும் தொடர்பு கொண் டிருந்த யூசுப் (அலை)-யோசேப்பு, மூசா (அலை) -மோசேசுஆகியோரைப் பற்றிய சரிதைகளை உள்ளடக்கியதாயினும் மிஸ்றின் வரலாற்றை அல்லது ஒவ்வொரு நபியும் பிறந்த நாட்டைக் கருப் பொருளாகக் கொண்டதல்ல.'
என அஸிஸ் கூறுகின்ற போது சிறுபிராயத்தில் அவர் கற்ற அறபுத் தமிழ் நூல்கள் பிற்காலத்தில் அவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிகிறது. எகிப்தில் அஸிஸ் பிரயாணம் மேற் கொண்டிருந்த போது பெருமானார் (ஸல்) அவர்களின் திருமுடி பேணப்படும் இடங்களைத் தரிசிக்க நேர்ந்தது. அப்போ தெல்லாம் அளபீஸ்,
"என் சிறு பிராயத்தில் பெருவழக்கில் இருந்த திருமுடி இறக்கின ஹமீது என்ற அறபுத் தமிழ் நூலினை நினைத் துக் கொண்டேன். ' ܓܠ
என எழுதியிருக்கிறார். இவைகளெல்லாம் சிறு பிள்ளைக்காலத்தி லிருந்தே அளவிஸ் அவர்களிடம் வளர்ந்துவந்த அறபுத் தமிழ் இலக்கிய ஈடுபாட்டைக் காட்டுகின்றன. அறபுத் தமிழ் வளர்த்த சு. மு. அசனா லெப்பைப் புலவர் அளவிஸ் அவர்களின் சின்னப் பெரியப்பா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கிழக்காபிரிக்கக் காட்சிகள்" என்ற தனது பிரயாண நூலில் கிழக்கா பிரிக்காவில் வழக்கிலிருக்கும் ஸ்வாஹிலி மொழிக்கும் அறபுத் தமிழுக்குமிடையிலுள்ள ஒற்றுமையை அளவீஸ் விளக்கி யிருக்கிறார். இவ்விரு மொழிகளுக்கு மிடையிலான ஒருமைப் பாட்டை முதன் முதல் உணர்த்திய பெருமை அளவீஸஸுக்கே உரியது. ஸ்வாஹிலி மொழிக்கும் அறபுத் தமிழுக்குமிடையி லுள்ள ஒருமைப்பாடுகள் பற்றி ஆய்வு நிகழ்த்தப்பட வேண்டு மென அஸிஸ் வெகுவாக விரும்பினார். அவரது அபிமானத்துக் குரிய மாணவனும் இன்றைய ஜாமிய்யா நளிமிய்யா கலாபீடத் தின் பணிப்பாளருமான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரியை அவ

Page 32
48 / அஸீஸும் தமிழும்
ரது கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக அறபு, ஸ்வாஹிலி மொழி உறவுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு அடிக்கடி வற் புறுத்தி வந்தார். லண்டன் பல்கலைக் கழகத்தின் கீழைத் தேய, ஆபிரிக்கத் துறையில் இதற்கான சகல வசதிகளும் உண்டென்றும், அங்கு சென்று ஓராண்டு காலம் ஸ்வாஹிலி மொழியைப்படித்த பின்னர் இவ்வாராய்ச்சியைத் தொடரலாம் என்றும், அவருக்கு அஸீஸ் ஆலோசனை கூறினார்.15 ஆயினும், தனது கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக எடின்பரோ பல்கலைக்கழகத்துக்குச் செல்ல வேண்டி ஏற்பட்ட கலா நிதி சுக்ரியால் அஸீஸின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. வேறுயாராவது இத்துறையில் ஈடு பட்டு அஸீஸின் அவாவைப் பூர்த்தி செய்ய முனைகின்றபோது அறபுத் தமிழ் பற்றியும் அதன் தோற்றம் பற்றியும் பல அரிய கருத்துக்களும் புதிய தகவல்களும் கிடைக்கும் என்று நம்பலாம்.
லண்டன் பழைய புத்தகக் கடையொன்றில் 1935 ஜனவரி மாதம் 29 ஆம் திகதி அஸீஸ் வாங்கிக் கொண்ட ஆங்கில மொழி பெயர்ப்புடன் கூடிய ஸ்வாஹிலி மொழி நூலான 'உத் தெண்டி வாம் வானா கு போனா' (குடும்பப் பெண்ணுக்கு ம்வானா குப் போனாவின் புத்திமதி) என்ற நூலை 'பெண் புத்தி மாலை' என்ற இஸ்லாமியத் தமிழ்க் கவிதை நூலுடன் ஒப்பிட்டுப் பார்த்த அஸீஸ், பல ஒத்த கருத்துக்களை இவ்விரு நூல்களி லும் கண்டார். 'சஹன்' என்ற சொல்லின் பொருள் ஸ்வா ஹிலி மொழியிலும் அற்புத் தமிழிலும் ஒரே கருத்தைக் கொடுத் ததை உணர்ந்த அஸீஸின் ஆவல் இத்துறையின் மீது அதிகரித் தது. கிழக்காபி ரிக்காவின் உத்தியோக மொழியாகவும் கீன்யா வின் பிரதான அரசகரும மொழியாகவும் விளங்கும் ஸ்வாஹிலி மொழி பேசுவோரினதும், தென்னிந்தியாவிலும், இலங்கையி லும் அறபுத் தமிழுடன் இணைந்திருந்தோரினதும் , கலாசாரம் இஸ்லாமிய, கலாசாரமே, இவ்விரு மொழிகளிடையும் காணப் படும் மேலெழுந்த வாரியான சில ஒற்றுமைகளை அஸீஸ் தனது கிழக்காபிரிக்கக் காட்சிகள் நூலில் வாசகர்களுக்காகச் சமர்ப்பிக்கிறார்.
''அறபுத் தமிழில் அறபுச் சொற்கள் விரவிக் கிடந்தாலும் வசனங்கள் தமிழ் இலக்கணப்படியே அமையும். இவ்வாறு ஸ்வாஹிலி மொழியிலும் பல அறபுச் சொற்கள் இடம் பெற்றாலும் வசன ஆக்கம் கிழக்காபிரிக்கக் கரையோரங்

ஏ. எம். நஹியா / 49
களில் வழக்கிலிருந்த பாந்து மொழி மரபை யொட்டியே அமையும். அறபு அட்சரங்களால் குறிப்பிட முடியாத தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்கு நொக்கத்துக்களை (நுகத் -- குற்று) உபயோகிக்கும் வழக்கம் ஸ்வாஹிலி, அறபுத் தமிழ் இரண்டிற்கும் பொதுவாகும். அறபு லிபியில் எழு தப் பெற்று வந்த அறபுத் தமிழ், தென் இந்தியாவுக்கும் இலங் கைக்கும், அச்சு இயந்திரம் வந்து சேர்ந்தவுடன் தமிழ் லிபியில் அச்சாகியது. அது போலவே ஸ்வாஹிலியும் பிரிட்டி ஷாருடைய செல்வாக்கின் காரணமாக உரோமன் வி பியில் எழுதப்படலாயிற்று. முஸ்லிம் சாம்ராஜ்யம் கீர்த்தியின் சிகரத்தை அடைந்திருந்த காலத்தில் பல மொழிகள், அறபு லிபியிலேயே எழுதப்பெற்றன. இவற்றுள் மலாய், துருக்கி, உஸ்பெக் முதலிய மொழிகள் சிலவாகும். இன்று மலாயும் துருக்கியும் உரோமன் லிபியைப் பயன்படுத்துகின்றன. உஸ்பெக் ருஷ்ய லிபியில் எழுதப்படுகிறது. ஆட்சிக்கும் மொழிக்குமுண்டான பிணைப்பினை இந்தச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.''16
இந்த உண்மைகளை உணர்ந்திருந்த அஸீஸ், அறபுத் தமிழும் ஸ்வாஹிலி மொழியும் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதை யும் வரலாற்று அடிப்படையில் தேடிப் பார்த்தார். அத் தேடுகையின் போது அவர் கண்டு கொண்டது இது தான்;
மொம்பாஸாவுக்கு அண்மையில் ஹெதாவு என்னுமிடத்தில் குடி யேறிய முதலாவது அறபுக் கோஷ்டி பற்றி இங்கு குறிப் பிடல் பொருத்தமாகும். ஐந்தாவது உமையா ஹலீபா அப் துல் மாலிக் இப்னு மர்வான் (கி. பி. 685-705) ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களின் காரண மாகத் தப்பியோடிய (அறபு) அகதிகள் ஹெதாலிற் குடி யேறினார்கள். இலங்கையில் பல்வேறு இடங்களிலும் (ஏழெட்டு இடங்களில்) வந்து குடியேறிய ஆதி அறபு மக் களும் இதே ஹலீபாவின் ஆட்சியில் ஹாஸிமியர்களுக்கு இழைக்கப் பெற்ற கொடுமைகளுக்கு அஞ்சி நாடு துறந்த வர்களே யாவர், அறபு நாட்டின் இருப்பிடத்தைக் கவனிக் கும்போது, அந்நாட்டு மக்களுக்கு இந்து மகா சமுத்திரத் தின் ஒரு பாரிசத்திலுள்ள கிழக்கு ஆபிரிக்கக் கரையோரங் களும் மறு பாரிசத்திலுள்ள தென் இந்தியா, இலங்கைக்

Page 33
50 | அளிஸ"சம் தமிழும்
கரைப் பகுதிகளும் சம அளவிற் பழக்க முடையனவாக இருந்திருக்குமென்பது புலப்படும். இதன்ைக் கொண்டு ஸ்வாஹிலிக்கும் அறபுத் தமிழுக்குமுள்ள அன்புத் தளையை ஊஇக்கலாம்." 17
என அஸிஸ் இந்த உறவுக்குக் காரணம் கற்பிக்கிறார். இத னாற்றான் போலும் ஸ்வாஹிலி மக்களினதும் அறபுத் தமிழ்த் தொடர்புள்ள தென்னிந்திய, இலங்கை முஸ்லிம்களினதும் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஒற்றுமை காணப்படுகின்றது. இரு வகுப்பாரும் ஷாபி களாயிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு ஒற்றுமையாகும். இதனாற்றான் அஸிஸ் இவ்விரு மொழிகளையும் ஒப்பிட்டாய வேண்டுமென அவாவினார். அதற்குப் பொருத்தமான ஒருவரை, சமஸ்கிருத மொழியைத் துறை போகக் கற்ற கித்தாபுல் ஹிந்த் (இந்திய வைபவ நூல்) என்ற நூலை 11 ஆம் நூற்றாண்டில் எழுதிப் பெருமை பெற்ற அபூறை ஹான் முஹம்மத் பின் அஹ் மத் அல்பைறுானி போன்ற ஒருவரை, அஸிஸ் தேடித்திரிந்தார். ஆயினும், அஸிஸின் இந்த எண்னம் இதுவரை நிறைவேறாமை வருந்தத்தக்கது.
அறபுத் தமிழில் பார்ஸி மொழியின் செல்வாக்கினையிட்டு ஆரா யும் ஆர்வமும், மொழியியலாளரை அதன்பால் ஊக்குவிக்கும் எண்ணமும், அஸிஸுக்கிருந்ததாகத் தெரிகிறது.
"தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வழங்கிவரும் அறபுத் தமிழில் பார்ஸி மொழியின் செல்வாக்கு எவ்வளவுக்கு உண் டென்பதைப் பற்றி எவரும் ஆராயின் அரிய பல உண்மை களை அறிதல் கூடும். இலங்கை முஸ்லிம்களின் கலாசார தனித் துவத்தையும் இவ்வாராய்ச்சி வாயிலாக அறிந்து
என அஸிஸ் தனது "ஆபிரிக்க அனுபவம் பிரயாண நூலில் கூறி யிருப்பது இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. இது பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அளவிஸ் பின்வருமாறு கூறினார்;
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வழக்கிலுள்ள அறபுத் தமிழ் அ, இ, உ, ஆகிய ஒலிகளைச் சுட்ட உபயோகிக்கப் படும் குறியீடுகளைச் சுட்டும் ஸவர், ஸேர், பேஸ் ஆகியன

ஏ. எம். நஹியா | 51
பார்ஸி மொழிக் குறிச் சொற்களே யன்றி ஃபத்ஹ", கஸர், ழம்உ ஆகிய அறபு மொழிச் சொற்கள் அல்ல என்பது மேற் குறித்த ஆராய்ச்சியாளர்களுக்குப் புலனாகும். இதனடியாக அறபுத் தமிழில் பார்ஸி மொழியின் செல்வாக்கு எத்தகைய தென்ற பிரச்சினை கிளைத்தெழுகிறது.'
என்றார். அஸிஸ் சுட்டிக்காட்டும் இப்புதிய ஆய்வுத்துறையில் ஈடுபட முன்வரும் ஒருவர், அஸிஸ் ஆரம்பித்துவைத்த அறபுத் தமிழ் ஆய்வு முயற்சியில் பல புதிய திருப்பங்களைக் காண முடியும் என நம்பலாம்.
இஸ்லாமியப் பண்பினை விளக்குவதற்குச் சில அறபுச் சொற் களைக் கையாளுவது எந்தளவுக்கு அவசியமோ அத்தளவுக்கு சில தமிழ்ச் சொற்களைத் தவிர்த்தலும் அவசியம் என்பது அஸிஸின் கருத்து. உதாரணமாக, இந்து சமயப் பின்னணியில் தோன்றிய அவதரித்தல்", "காட்சியளித்தல்' , 'இரண்டறக் கலத்தல்" போன்ற பதங்களை அல்லாஹ் வைப் பற்றிப் பேசும் போது பிரயோகிப்பது இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கு முரணானதாக அமைந்து விடும் என்கிறார். இந்நிலை ஏற்ப டாது தடுக்கப்பட வேண்டிய அதே வேளையில், வேண்டாத அறபுச் சொற்கள் முஸ்லிம்களின் இலக்கியங்களில் மலிந்து கிடப் பதும் தவிர்க்கப்படவேண்டும் என்பது அவரது கொள்கை. ஏனெனில் அவ்வாறு அறபுச் சொற்கள் மலிந்து காணப்படும் போது முஸ்லிமல்லாதோர் எமது இலக்கியங்களை நுகர முடி யாமற் போகும் என்பது அவரது ஐயம். இந்நிலையிலிருந்து இஸ்லாமியத் தமிழிலக்கியத்தைப் பாதுகாத்து இஸ்லாமியரல்லா தோரும் அந்த இலக்கியங்களை நுகரும் வகையில் சில வழிவகை கள் கையாளப்பட வேண்டும் என அவர் சிந்தித்தார். அதா வது இஸ்லாமியத் தனித்துவம் குன்றாது பார்த்துக்கொள்ளும் அதேவேளை அவ்விலக்கியங்களில் தமிழ்ப்பண்பு மறைந்து விடா மலும் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது அஸிஸின் எண்ணம், அதற்காக அவர் பின்வரும் சில ஆலோசனைகளை முன் வைத் தT
1. ஒலிக் குறிப்பு ஒருமைப்பாடு 2. அறபுத் தமிழ் அகராதி
3. அறபுத் தமிழ் இலக்கியக் கோவை

Page 34
52 அஸிஸும் தமிழும்
4. ஜி. ஸி. ஈ. வகுப்புகளுக்கு மட்டுமல்லாமல் கீழ் வகுப்பு களுக்கும் உகந்த வாசினைப் புத்தகங்கள் வெளியிடப் 4. Lai
3. மொழி பெயர்ப்புக்கலை
6. அறபுத் தமிழில் சிறுவர் இலக்கிய நூல்கள். 7. இலட்சிய பூர்வமான திறனாய்வு
இவற்றைச் சிறப்பாக நிறைவேற்றத் துணை புரியும் வகையில் ஒரு சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டால் நன்றாகவிருக்கும் என்பதும் அவரது கருத்து.
தனித்துவமான இலக்கிய ஆக்கத்தை நாடி நின்றவர் அஸிஸ். பண்பாடு கலாசாரப் பின்னணிகளில் இலக்கியம் தோற்றம் பெற வேண்டுமென்பதுதான் அஸிஸின் வாஞ்ஞை, அதன் விளைவே அவரது அறபுத் தமிழ் கோஷம். முஸ்லிம்களின் தாய்மொழி பற்றிய சர்ச்சைகள் எழுந்தபோதெல்லாம் அறபுத் தமிழின் தோற்றம், வளர்ச் ஒ, தளர்ச்சி பற்றி அவர் தீவிரமாக ஆராய்ந்தார்.
முஸ்லிமல்லாதோரும் இஸ்லாமிய இலக்கியங்களை நுகரும் அள வுக்கு தமிழ் மொழி பல அறபுச் சொற்களை உள்ளடக்கிய தாக வளர்ச்சி பெற வேண்டுமென அஸிஸ் விரும்பினார். அற புத் தமிழ் இலக்கிய மரபு போற்றப்படவும் பேணப்படவும் வேண்டும் என அவர் அவாவினார். அம்மொழியின் தோற்றம், வளர்ச்சி, தேய்வு பற்றியும் ஸ்வாஹிலி மொழிக்கும் இதற்கு முள்ள தொடர்பு, இம்மொழியில் பார்ஸி மொழியின் செல் வாக்கு என்பன பற்றியும் ஆய்வுகள் நடைபெறவேண்டுமென் Lது அவரின் அவா. இஸ்லாமியத் தமிழிலக்கியப் பாரம்பரியம், தனித்துவமான இலக்கிய ஆக்கம் என்ற வகையில் சிந்தித்த அஸிஸின் எண்ணத்தில் அறபுத்தமிழ் அதி உன்னத இடத்தைப் பெற்றது. அதற்காக அவர் செய்த முயற்சிகளும், பிரயத்தனங் களும் அநேகம், முஸ்லிம் தமிழறிஞரும், இலக்கியவாதிகளும் இம்முயற்சியில் முன்னின்று உழைக்கவேண்டும். அப்போதுதான் அளிலின் எண்ணம் நிறைவேறும், துரதிஷ்டவசமாக, அவn ஸைப் போன்று இத்துறையில் ஈடுபட்டு உழைப்பதற்கு எவரும் முன்வந்திருப்பதாகத் தெரியவில்லை, அவரின் மரணத்தின் பின்

ஏ. எம். நஹியா | 83
இத்துறை மந்த கதியை அடைந்துள்ளது. ஆய்வாளர்களற்ற வரண்டதுறையாகிவிட்டது. தனித்துவமான இலக்கிய ஆக்கம் என்பது வெறும் கதை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
அறபு லிபியில் எழுதப்படும் அறபுச் சொற்கள் தமிழில் எழு தப்பட்டு, தமிழுடன் விரவி, மணிப்பிரவாளத்தை ஒத்தவாறு அமைந்துள்ள அறபுத் தமிழ்" இன்றுவரை வழக்கிலிருந்தாலும் அதன் பரப்பும் பயன்பாடும் குறைந்துவிட்டது. அதேவேளை, அறபு லிபியில் எழுதப்பட்டு வந்த அறபுத் தமிழ் அடியோடு பாவனையில் இல்லாமற்போய்விட்டது. ஐரோப்பியரின் வருகை யுடன் ஆரம்பித்த தென் இந்திய, இலங்கை முஸ்லிம்களின் அறபுலகத்துடனான தொடர்புகளின் துண்டிப்பு அறபுத்தமிழின் வீழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது. பொது எதிரியான ஐரோப்பி யரை எதிர்க்கும் நோக்குடன் முஸ்லிம்கள் சுதேசிகளுடன் நெருங் கிப் பழக ஆரம்பித்தபோதும், சுதேச மொழிகளில் குறிப்பாக, தமி ழில் இலக்கியம் படைக்கத்தொடங்கியபோதும் அந்த வீழ்ச்சியின் வேகம் அதிகரித்தது. அஸிஸ் போன்ற ஒரு சிலரின் முயற்சிகள் அந்தவிழ்ச்சியைத் தடுத்துநிறுத்தும் திராணி பெற்றிருக்கவில்லை. அறபுத் தமிழின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் ஏதுவாய்மைந்த காரணிகள் இல்லாமற் போனபோது அதன் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவது அசாத்தியமானதாயிற்று. அதனாற்றான் போலும், ஏற்கனவே படைக்கப்பட்ட அறபுத் தமிழ் நூல்களைப் பேணிப் பாதுகாப்பதிலும் அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்வதிலும் அஸிஸ் கவனம் செலுத்தினார். அறபுத் தமிழ் எங்கள் அன் புத் தமிழ்" என்று மீண்டும் மீண்டும் கூறி திருப்தி கண்டார்.
1. அஸிஸ் எ. எம். எ.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு" இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963, L鲇。65
2. உவைஸ், அல்ஹாஜ் டாக்டர் ம. மு.
இஸ்லாமும் இன்பத் தமிழும் சென்னை, 1976 Luči : 238

Page 35
54 அஸிஸ் 9ம் தமிழும்
器。
அஸிஸ் எ. எம். எ. "அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் செய்யிது ஹஸன் மெளலானா எஸ். ஏ. (தொகுப்பு) அரசு வெளியீடு -
கொழும்பு, 1967
i. jäğ; : 3 I
ஆளீஸ் எ. எம். எ. ஆபிரிக்க அனுபவங்கள் சென்னை, 1969
jij; : 1 5 5
தினகரன் வார மஞ்சரி 23 ಕ್ಲಿಲ್ಲ" air 195 8
தினகரன் வார மஞ்சரி
10 ਨੇ 1963
எம். ஏ. நூஃமான் அறபுத் தமிழ் - ஒரு விபரண ஆய்வு இன்கிலாப் 1981 | 82 முஸ்லிம் மஜ்லிஸ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ( ; ; 8.3 - 84.
அளவிஸ் எ. எம். எர். "அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963
i; : 54 - 55
அஸீஸ் எ. எம். எ. "அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் செய்யிது ஹஸன் மெளலானா எஸ். ஏ. (தொகுப்பு) அரசு வெளியீடு
கொழும்பு, 1968
பத்: 25 ம 26

εν. στιες நஹியா | 55 10. Gôg uš : 27
I I , 9 ΦΥυ είύ στ. στιο, 6. மிஸ்றின் வசியம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1967 7 جن سے 6 بڑھ ! ? نیچےLJ
12. அஸிஸ் எ. எம். 67。 தமிழ் யாத்திரை சென்னை, 1988 Lä: 66
13. அளtஸ் எ. எம். மிஸ்றின் வசியம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1967 ι 13 : 2 1
14 டிெ பக் 148
I 5 65ri gi, 3)". 657 Lify
"அறிஞர் அளவில-ம்ை அவரது ஆய்வு முயற்சிகளும் தினகரன், 28 டிசெம்பர் 93.2
16. அஸிஸ் எ. எம் .
கிழக்காபிரிக்கக் காட்சிகள் சென்னை, 1967 பக் 153
17 டிெ பக் ; 154
18. அஸிஸ் எ ஏ ##
ஆபிரிக்க அனுபவங்கள் சென்னை, 1969
Já o 2 |
49 സ്കെ, 18 , 8 18
-

Page 36
தமிழ் மொழி ஞானம்
ஆங்கிலப் பட்டதாரியான அஸிஸ், சிவில் சேவை அதிகாரியாக உயர்பதவிகள் வகித்த அளிஸ், சமூக உயர் மட்டத்தில் அமர்ந் திருந்த அஸிஸ், தமிழிலே பேசினார்; தமிழிலே எழுதினார்: தமிழிலே சிந்தித்தார். அம்மொழியைப் பேசியோரையும் எழுதி யோரையும் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தார்; ஆதரித்தார். தமிழாராய்ச்சி மகாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கருத் துக்களை அள்ளிச் சொரிந்தார். "தமிழனாய்ப் பிறந்தவனுக்கு தமிழ் தான் மூச்சு அவன் உயிர்ப்பது தமிழ்; அவன் நினைப் பது தமிழில் எழுதுவது தமிழில்; தமிழ் பேசும் இனத்தவ ரிடையேதான் எளிதாக மூச்சு விட்டு வாழமுடியும்' என்ற கருத்தை அர்த்தமுள்ளதாக்கினார்.
அஸிஸ் தனது எழுத்துக்களில் புலவர் பெருமக்களின் பாக்களை யும் அவர்தம் கருத்துக்களையும் தேவைக்கேற்ப உதாகரித்தார். இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் உதாரணங்கள் உவமான உவமேயங்களைப் பயன்படுத்தி தனது எழுத்துக்களுக்குச் சோபையூட்டினார். தமிழ் மொழிமீது அவருக்கிருந்த மோகத்தி னால் அம்மொழியில் ஞானம் ஏற்பட்டதோ அல்லது அம்மொழி யில் அவருக்கிருந்த ஞானத்தினால் அதன் மீது மோகம் ஏற் பட்டதோ என்பதை அறிவது சுவாரஸியமானது. அவரின் தமிழ் மொழி மோகமும், ஞானமும், இலக்கிய ஈடுபாடும் அவ ரின் எழுத்துக்கள், சொற்பொழிவுகளில் பளிச்சிட்டுத் தெரிந்
 

ஏ. எம். நஹியா | 57
தன. சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற பேரறிஞராக, பொன் னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழறி ஞராக விளங்கினார் அவர்.
ஒவ்வொருவனும் தனது தாய் மொழியே உலகிற் சிறந்ததென நினைக்கிறான். வடமொழி தனக்குரியது எனக் கருதுபவன் அதனைத் தேவ பாஷை" என அழைக்கிறான். தமிழ னும் தனது தாய் மொழி வட மொழியோடு ஒத்த பெருமை யுடையதாக, இறைவனால் படைக்கப்பட்டதெனக் கூறுகிறான்,
'விடை யுகைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்
வட மொழிக்குரைத் தாங்கியல் மலயமா முனிக்குத் திட முறுத்தியம் மொழிக் கெதி ராக்கிய தென்சொல்"
என்கிறது திருவிளையாடற் புராணம். தமிழ் மொழி இறைவ னைப் போல அழிவற்றது என்றும், கன்னித் தன்மையுள்ளது என்றும் கருத்துக்கள் கூறப்படுகின்றன.
' பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் த டைக்கினுமோர் ܗ
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமுந்துளுவும் உன்னுதரத் துதித் தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே"
என்றனர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள்.
**இந்தியாவில் தோன்றிய மொழிகளில் பூகோள ரீதியாக விசாலமாகப் பரந்துள்ள மொழி தமிழ் மொழி ஒன்றே. இந்தியா, இலங்கை, மலேசியா, மொறிஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பர்மா, வியட்னாம் முத லிய மாநிலங்களிலும் மக்கள் குழுவினர் மத்தியிலும் அது வழக்கிலிருந்து வருகிறது. வரலாற்று அடிப்படையில் தமிழே இந்திய மொழிகளில் தொன்மை வாய்ந்தது. அதன் பண்டை இலக்கியங்கள் கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னர் தோன்றியவை - என்ற கையேட்டின் 53 ஆம் பக்கத்தில் காணப்பட்ட குறிப்பு அர்த்த புஷ்டியுள்ளது"

Page 37
58/அளிஸம் தமிழும்
என அஸிஸ் கருதினார். தமிழின் தொன்மை பற்றிய கொள் கையில் மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கையேட்டுக் குறிப்புடன் உடன்படுகிறார் அவர்.
தமிழ் மொழி மீது அபார காதல் கொண்டிருந்த அவிஸ் அதன் வளர்ச்சியில் மையல் கொண்டிருந்தார். ஜொஹனாஸ் பேர்க் என்ற தென்னாபிரிக்க நகரில் அமைந்திருந்த பிரபல ஹோட் டல் ஒன்றில் 1954 இல் நடைபெற்ற சம்பவமொன்று அஸிஸின் தமிழ் மொழி மோகத்தையும் அம் மொழி பேசுவோர் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் காட்டப் போதுமானது. அஸிஸ் அவர்களே தனது வார்த்தைகளில் அந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு சித்தரித்துக் காட்டுகிறார்.
*ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பரிசார கன் ஒருவன் தென்னிந்தியனாக இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றவே, அவனோடு தமிழில் பேசினேன். தமிழ் கேட்ட அவன் முகம் ஆச்சரியத்தால் மலர்ந்தது; அது கண்டு என் உடல் சிலிர்த்தது. தென் ஆபிரிக்காவிலே குறிப்பாகத் தென் பகுதியிலே ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருவதாக அவன் அறிவித்தான். அவர்களின் மூதாதையர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலை தேடிச் சென்றவர்களாவர். சூழலை மறந்தவர்களாக, சொற்ப நேரம் நாங்கள் தமிழால் கட்டுண்டு நின்றபோது பாரதியா ரின் "கரும்புத் தோட்டத்திலே' என்னும் கவிதையை நினைத் துக்கொண்டேன்." 2
என அவரின் இதயம் இயம்பியபோது, அவரின் ஆத்மார்த்தத்தை, தமிழ் மீது அவர் கொண்டிருந்த உள்ளார்ந்த அன்பைக் காண முடிந்தது. ஆபிரிக்க மண்ணில், இருண்ட கண்டத்தில் தமிழ் உச்சரிக்கப்பட்ட போது அவரடைந்த மட்டற்ற மகிழ்ச்சியைக் காணமுடிந்தது. அஸிஸ் தன் மனதில் நினைத்துக் கொண்ட * கரும்புத் தோட்டத்திலே" என்ற பாரதியாரின் கவிதை களை அவருடன் சேர்ந்து நாமும் பாடவேண்டுமென்ற உணர்வு எமக்கும் ஏற்படுகின்றது.
தென் ஆபிரிக்க டர்பன் நகரப் பகுதியில் கரும்புத் தோட்டங் களைப் பார்க்கச் சென்றிருந்த அளிஸ் அங்கும் கரும்புத்

ஏ. எம். நஹியா / 59
தோட்டத்திலே என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வந்த தாகக் கூறுகிறார்.
*தோட்டத்திலே கண்ணுக்கெட்டிய தூரம் எங்கும் கரும்
புச் செடிகள், கரும்புச் செடிகள், கரும்புச் செடிகளே.
இந்தத் தோட்டத்தைக் கண்டதும் பாரதியின் கரும்புத்
தோட்டத்திலே. என்னும் கவிதையை நினைந்து கொண்
டேன், ஏனென்றால் சிந்தாமணி சினிமாப் படம் வந்த
சமயத்தில் தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்கள்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தது போல, நான்
பள்ளிச் சிறுவனாயிருந்த காலத்தில் பாரதியாரின்
"செந்தமிழ் நாடெனும் போதினிலே. ஆகிய பாடல்கள்
வெகுஜன வரவேற்புப் பெற்றிருந்தன. ஆகவே, அன்றைய
தினம் பாரதியாரின் முழுப் பாடலும் எனக்கு நினைவு வராவிட்டாலும்,
'பெண்ணென்று
சொல்லிடிலோ - ஒரு பேயும் இரங்கு மென்பார் தெய்வமே நினது எண்ணம் இரங்காதோ - அந்த ஏழைகள் அங்குச் சொரியுங் கண்ணிர் வெறு மண்ணிற் கலந்திடுமோ? நாட்டை நினைப்பாரோ? - எந்த நாளினிப் போயதைக் காண்ப தென்றே அன்னை வீட்டை நினைப் பாரோ? - அவர் விம்மி விம்மி விம்மி யழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே"
என்பன போன்ற வரிகள் மனதில் பளிச்சிட்டன. இந்தக் கவிதை தென்ஆபிரிக்கக் கரும்புத்தோட்டத்துப் பெண்களைப் பற்றிப் பாடப்பட்டதல்ல; பீஜித் தீவுப் பெண்களைப்பற் றியே பாடப்பட்டது என்பதையும் நினைந்துகொண்டேன். இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் பணி யா ற் றிய தொழிலாளர்களின் இயக்கங்களில் தீவிர பங்குகொண்டி ருந்தவர்களின் காரணமாகவே இக் கவிதை மிகுந்த பிரசித்தி

Page 38
60 / அஸீஸும் தமிழும்
பெற்றதெனலாம். இதனாலேதான் போலும், நான் அறிந்த வரையில், பாரதியார் 'தேயிலைத் தோட்டத்திலே' என் னும் தலைப்பில் பாடல் எதனையும் இயற்றாத போதிலும் பலர் அவர் அத்தகைய பாடலை இயற்றியுள் ளார் என்று நம்பிவருகிறார்கள்; எழுதியும் இருக்கிறார்கள்,'' 3
என தனது 'ஆபிரிக்க அனுபவங்கள் ' பிரயாண நூலில் அஸீஸ் எழுதியிருக்கிறார். அஸீஸின் தமிழ்ப் புலமை, ஞானம், எதை யும் தமிழ் வழி நின்று நோக்கும் பண்பு என்பவற்றை இங்கு காண்கிறோம். பாரதியாரின் இந்த 'கரும்புத் தோட்டத்திலே? கவிதையினால் கவரப்பட்ட அஸீஸ் அக் கவிதையைப் பின்பற்றி ஸ்ரீமதி மீனாட்சியம்மாள் இயற்றிய “'தந்திர முதலாளிகள், தர கர், கங்காணிகள், தன்ன லங் கருது தல் குறைத்திடுவோம்'' என்ற வாறமைந்த பாடலைத் தேடிப்பார்த்து ஏமாந்ததாகவும் தெரி கிறது. அத்தேடுகையின்போது தான், மீனாட்சியம்மாளின் ' இலங் கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு' என்னும் செய்யுள் நூலை அஸீஸ் பெற்றுக்கொண்டதாகவும் அறிகிறோம். இதுபற்றி ஜனாப் அஸீஸ் தனது 'கிழக்காபிரிக்க அனுபவங்கள்' பிரயாண நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
தேயிலைத் தோட்டத்தை நினைத்தால் என் மனதில் பளிச் சிடும் விஷயம் யூனியன் ஹாஸ்டலிலே என் சக மாண வன் ஒருவன் அடிக்கடி முணுமுணுக்கும், "தேயிலைத் தோட்டத் திலே...'' என்னும் பாடலாகும். பாரதியின் கரும்புத் தோட்டத்திலே....... ' என்னும் கவிதையைப் பின்பற்றி ஸ்ரீமதி மீனாட்சியம்மாள் என்பவர் இந்தப் பாடலை இயற் றினாராம். "தந்திர முதலாளிகள், தரகர், கங்காணி கள் தன்னலங் கருதுதல் குறைத்திடுவோம்'' என்ற பாணியில மைந்த இந்தப் பாடலை, மீனாட்சியம்மாள் தனது கணவ ரும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்க இயக் கம் கிளைத்துப் படர வழிவகுத்தவர்களில் ஒருவரு ம ா ன நடேசையரின் கூட்டங்கள் துவங்குமுன்னர் பாடுவாராம். இந்தப் பாடலின் முழுப் பகுதியையும் பெற எவ்வளவோ முயன்றேன். நாளதுவரை கைக்கு எட்டவில்லை. எட்டிய தெல்லாம் இதே மீனாட்சியம்மாள், 1931இல் இயற்றிய ''இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு' என்னும் சிறிய செய்யுள் நூல் ஒன்றே.'' *

ஏ. எம். நஹியா / 61
அஸீஸ் அவர்கள் தனது மன உந்தலை, கவிதையின் பாலான விருப்பை, கவிதை நூல்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் நடாத்திய தேடுகையை இவ்வாறு குறித்து வைத்திருக்கிறார்.
அஸீஸ், தான் எடுத்துக்கொண்ட பொருளைச் சிறப்பாக விளக் குவதற்கு தமிழ்ப் பாக்களின் துணையைப் பல இடங்களில் நாடி. யுள் ளார். அவரின் பிரயாண நூல்களில் இதனை நாம் தெளி வாகக் காணமுடிகிறது. பாறூக் மன்னர் மர9ே:3ா மடைந்தபோது அவருக்கு வயது நாற்பத்தைந்து. ஆனால் அறுபது வய து க் கிழ வரைப்போல் அவர் காட்சியளித்தவாற்றை,
''கு டை நிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்''
என்ற பாவின் மூலம் சிறப்பாக விளக்கினார், 'மிஸ்றின் வசியம்' என்ற நூலின் 95 ஆம் பக்கத்தில் இப் பாடலை உதாகரித்துள் ளார் அஸீஸ். 'ஆபிரிக்க அனுபவங்கள்' நூலின் 25 ஆம் அத்தி யாயத்துக்கு 'குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர்'' என்ற தலைப்பை அஸீஸ் இட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டுச் செயற்குழுவின் பொதுச் செயலாளராகவிருந்த வி. செல்வ நாயகம் அவர்கள் அஸீஸின் பாடசாலைச் சகாவும் நண்பருமாவார். அவரைக் காண்பதற்குக் காத்திருந்தமையை விளக்கப்போந்த அவர்,
''ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடியிருக்குமாம் கொக்கு என்பது போல செல்வநாயகத்தைக் காணக் காத்திருந்தேன் '
என எழுதினார். “தமிழ் யாத்திரை' என்ற அவர த/ நூலின் 79 ஆம் பக்கத்தில் தான் அஸீஸ் இவ் வாறு எழுதியிருக்கிறார். அஸீஸின் பிரயாண நூல்கள் இவ்வாறு தமிழ்ப் பாக்களினால் அழகு பெற்றன.
உழவரின் நிலை துயர் நிறைந்தது. இந்த 20 ஆம் நூற்றாண் டில் கூட சில இடங்களில் தரகர்களின் பிடியில் சிக்கி உழலும் உழவர்கள் பற்றிக் கூறவந்த அஸீஸ், இக் கருத்தமைந்த பாட

Page 39
62 / அஸிஸும் தமிழும்
லொன்று தனது நினைவுக்கு வருவதாகக் கூறி அப் பாடலையும் தருகிறார். அவரின் தமிழ்ப் புலமைக்கு இது நல்லதொரு சான் றாக அமைகிறது. அப் பாடல் இதோ தரப்படுகிறது:
'ஆஈன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக, மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் தள்ள வொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் கோவேந்தன் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்தட்சணைகள் கொடுவென்றாரே'
"மிஸ்றின் வசியம்" என்ற அவரது பிரயாண நூலின் 100ஆவது பக்கத்தில் இப் பாடல் காணப்படுகிறது.
பிள்ளைப்பேறு, குறை மாதக் குழந்தைகள் பராமரிப்பு, கருத் தடை போன்ற விடயங்கள் சம்பந்தமான பல கேள்விகளுக்கு விடையாக தான் பள்ளிப்பருவத்தில் படித்த வெண்பாவொன்றை அஸிஸ் தருகிறார்:
' கருப்பைக்குள் முட்டைக்கும்
கல்வினுட் தேரைக்கும் விருப்புற்று அமுதளிக்கும் மெய்யன் - உருப்பெற்றால் ஊட்டி வளர்க்கானோ ஒ கெடுவாய் அன்னாய் கேள் வாட்டம் உனக்கேன் மகிழ்."
இந்த வெண்பா அஸிஸின் ஆபிரிக்க அனுபவங்கள் நூலின் 29ஆம் பக்கத்தில் தரப்படுகிறது. தாம் எடுத்துக்கொண்ட விட யத்தை விளக்குவதற்குப் பொருத்தமான தமிழ்ப் பாக்களைத் துணைக்கழைக்கும் அலிஸின் பண்பு அவரின் தமிழ் ஞானத்தி னால் ஏற்பட்டது. பல எழுத்தாளரிடம் காணப்படாத அருமை யானதொரு பண்பு இது.
இலண்டன் மாநகரிலுள்ள பழைய புத்தகங்கள் விற்பனை செய் யும் கடையொன்றிலிருந்து அஸிஸ் அவர்கள் வாங்கிக்கொண்ட "உத்தெண்டி வாம்வானா குபோனா' (குடும்பப் பெண்ணுக்கு

'A
ஏ. எம். நஹியா | 63
ம்வான குப்போனாவின் புத்திமதி) என்ற ஆங்கில மொழி பெயர்ப்புடன் கூடிய ஸ்வாஹிலி மொழி நூலை, இலங்கை முஸ் லிம்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருந்த பெண்புத்தி மாலை" என்ற இஸ்லாமியத் தமிழ்க்கவிதை நூலுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வுகள் செய்தார்.
கிழக்காபிரிக்கப் பயணத்தின்போது மொம்பாஸாவில் அஸிஸை உபசரிக்கும் பாக்கியம்பெற்றவரான இந்தியர் டாக்டர் எஸ். எ. கார்வே, அஸிஸுடன் நடாத்திய உரையாடலில், குஜராத்தியர் கள் வியாபாரத்தை ஒரு தொழிலாக விரும்பி நடாத்திவந்தன ரென்றும், மராத்தியர்கள் அதனைப் புறக்கணித்து விவசாயத்தை நாடினரென்றும் ஒரு கருத்தை அளவிஸிடம் போட்டுவைத்தார். அக் கருத்துச் சம்பந்தமாக அளவிஸ்"க்கேற்பட்ட சந்தேகங்களை நிவர்த்திக்கத் தகுந்தவரென அவர் தேர்ந்தெடுத்த அவரின் இலக்கிய நண்பர் கவிஞர் அப்துல் காதர் லெப்பையை அணுகி இது சம்பந்தமாக ஆலோசனை கேட்டபோது, அவர், வருணப் பிரிவில் வைசியர் பங்கு' என்ற தலைப்பில் ஒரு கவிதையை எழுதி அஸிஸுக்குக் கொடுத்ததாக அறிகிறோம். கவிஞர் அப் துல் காதர் லெப்பை எழுதிக் கொடுத்த அக் கவிை இதோ தரப்படுகிறது:
'வைசியர்க் கழகு வளர் பொருளீட்டல், திரை கடலோடியும் திரவியந் தேடல் சிக்கன வாழ்க்கை தக்கதென் றோர்ந்து சேர்த்து வைத்தல் சேமித்து வைத்தல் ஒன்று பத்தாய் உயரச் செய்தல் இவ்விதஞ் சேர்த்த இருந்தனப் பெருக்கில் ஒதும் பிராமணர்க் குதவி செய்தல் உறையுள் கொடுத்தல் உண்டி கொடுத்தல் கோயில் திருப்பணிக் கீதல் அன்னவும் இரப்போர்க் கீதல் அறச்சாலை தூக்கல் அரசர்க்குப் பொருள் அலகற்றளித்தல் ஆளும் வர்க்கம் கோலோச்சி நிற்க வரிகள் மூலமும் பரிசுக ளன்னவும் பொருளும் பண்டமும் பொன்னும் மணியும் ஆடையும் அணியும் கோடின்றளித்தல் நாட்டைக் காக்கக் கோட்டை கட்டவும்

Page 40
64 1. அஸீஸும் தமிழும்
படைகளை வைத்துப் பரிபாலிக்கவும் அரசர்க் கரமனை புரிசை கட்டவும் சம்பளம் முதலிய உம்பளங் கொடுக்கவும் வரிகள் மூலம் தெரியக் கொடுத்தல் இன்ன பிறவும் வைசியர்க் குரிய
இவ்வாறு அஸிஸ் தமிழுடன் இணைந்திருந்தார். தமிழறிஞரின் அரவணைப்பில் வாழ்ந்தார். அவரின் தமிழ் மொழி மோகத் தையும் ஞானத்தையும் அவரெழுதிய நூல்களும் ஆற்றிய சொற் பொழிவுகளும் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றன. எதையும் தமிழுடன் இணைத்துப் பார்க்கும் பன்பு, கருத்துக்களைப் புலவரின் பாக்களுடன் ஒப்பிட்டு நோக்கும் பான்மை, பழந் தமிழ்ப் பாக்களை உவமையாக 2.தாகரிக்கும் பாங்கு என்பன அஸிஸிடம் காணப்பட்ட உதார பண்புகளாகும். அவரின் எழுத் துக்களும் சொற்பொழிவுகளும் இப்பண்புகளினால் உயர்வு பெற்றன.
தமிழ் யாத்திரை
ਰੰ1968
33 ميسي 323 * ہتھهLJ
2. ைெடி பக் 33 - 34
3. அளnஸ் எ. எம். எ
ஆபிரிக்க அனுபவங்கள் சென்னை, 1969 Lużi : 1 2 3 - I 24
4. அஸிஸ் எ. எம். எ.
கிழக்காபிரிக்கக் காட்சிகள் சென்னை, 1967
uğ; : 86
5, ൮ Lā; ; . 176 - 177

A. இராமாயண மோகம்
அஸிஸ் அவர்கள் சிறு பராய முதல் இராம காதைப் பிரிய ராக இருந்தார். பாடசாலைகளில் படித்த இராம கதை, கல் முனைப் பிரதேசத்தில் பார்த்து இரசித்த இராமாயண நாட கங்கள், கூத்துக்கள் என்பன அவரின் ஆர்வத்தை இராமா யணத்தின் பால் அதிகரிக்கச் செய்தன. மலேசியாவில் நடை பெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கலை இரவில் மேடை யேறிய பத்து நிகழ்ச்சிகளுள் தன்னைப் பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி "சீதா பஹரணம்" எனும் இராமாயணக் காட்சியே என்று அவர் கூறியிருக்கிறார்.
அஸிஸ் இராம காதையை அறிந்த கதை சுவையானது. அவரே அதைச் சுவாரசியமாகப் பின்வருமாறு கூறுகிறார்:-
1921ஆம் ஆண்டில் யாராவது என்னிடம் இராமருக்குச் ைேத என்னமுறை? என்று கேட்டிருந்தால், ஏன்? இரு வரும் ஒருவரல்லவா? என்று பதில் சொல்லியிருப்பேன். இந்தப் பதிலுக்குத் தத்துவார்த் தரீதியாக விளக்கம் கொடுக்கலாமெனினும், பள்ளிக்கூட மாணவனாக இருந்த நான் அதையெல்லாம் அறிந்திருக்கவில்லை. அப்பொழுது நான் வைதீஸ்வர வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந் தேன். எங்கள் தலைமையாசிரியரின் பெயர் தோராமன், இந்தப் பெயரைத் தவிர் ராமன், சீதையைப்பற்றியோ ராமாயணத்தைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியா திருந்தது. அந்தக் காலத்தில் என்னுடைய அறியாமைகண்டு

Page 41
88 / அஸிஸும் தமி
பிறர் எள்ளிநகையாடியிருப்ார்கள். ஆனால், அடுத்த ஆண்டில் 1922இல் இங்கிலிஸ் நாலாம் வகுப்பில் ராம கதை உப பாடப் புத்தகமாக இருந்தது. அந்த இங்கிலிஸ் புத்தகத்தில் இராம, இராவண யுத்தம் இலங்கையில் நடைபெற்றது என்ப் படித்தது முதல் ராம காதையில் எனக்கு ஆர்வமுண்டாயிற்று. இதை அடுத்த ஆண்டுகளில் யசழ்ப்பாண R இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பாடத்தில் கம்பராமாயணத்தின் சில செய்யுள் களைக் கற்றேன். கொக்குவில் பொன்னையா மாஸ்டர் அவர்கள் எங்களுக்குத் தமிழ் படிப்பித்தார். அவருக்குச் சங்கீதத்திலும் நாடகத்திலும் மிகுந்த ஈடு 1ாடு, யுத்த காண் டத்தில் வரும்:
*வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க் கேற்ற நயம்பட உரைத்த நாவும்
தாரணி மெளலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போக்கி வெறுங்கையோடிலங்கை
புக்கான்'
என்னும் செய்யுளுக்கு அவர் பதவுரையும், பொழிப்புரையும் கூறியதுடன் நில்லாது, தன்னை இராவணனாகக் கற்பித்துக் கொண்டு நடித்துக்காட்டி விளக்கிய காட்சி இன்றும் திரைப் படம் போல நினைவில் ஒடுகிறது. இதன் பின்னர் 1937இல் கேம்பிரிஜ் சீனியர் வகுப்பில் கம்பராமாயணத்தின் சிற்சில பகுதிகளைப் படித்தேன். கல்முனைப் பகுதியில் யுத்த அவசர கால அரசாங்க உதவி அதிபராகப் பதவி வகித்தபோது பாட சாலைகளில் நடிக்கப்பெற்ற ராமாயண நாடகங்கள் சிலவற் றைப் பார்த்திருக்கிறேன்." 1
இவ்வாறு இராமாயணத்தைக் கற்றறிந்த கதையை ஜனாப் அளவீஸ் கூறும்போது அவரின் இராமாயண மோகத்திற்கான பின்னணியைக் காணமுடிகிறது,
இராம காதை கல்முனைப் பிரதேச தமிழ் மக்களின் வாழ்வில் எம்மட்டுச் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை அலிஸ் ஆராய்ந்துபார்த்தார். அவசரகால உதவி அரசாங்க அதிபராக அவர் கல்முனையில் கடமையாற்றிய நாட்களில் இதனை அவ
 
 

σ. στιο, நஹியா / 67
தானிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இந்த அனுபவத் தைப் பின்வருமாறு அவர் தனது நூலொன்றில் குறித்துவைத் துள்ளார்:
* கல்முனைப் பகுதி மக்களின் கூத்துக்களில் இராமகாதை அதிகம் கையாளப்படாவிட்டாலும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அது நன்றாக வேரூன்றியிருக்கிறது. ராமர் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன என்பன போன்ற பழமொழிகள் அவர்கள் மத்தியில் வெகு பிர சித்தம். எந்த வன்னிமை பதவிக்கு வந்தாலும் செய்கைக் காரன்பாடு கொஞ்சமும் மாறப்போவதில்லை என்னும் கருத்தைத் தெரிவிப்பதற்கு அவர்கள் மேற்சொன்ன பழ மொழியைக்கையாளுவார்கள். இப்பகுதிகளிலுள்ள வெள்ளை யுள்ளம் படைத்த இந்து மதக் கமக்காரர்களுக்கு ராமன் கற்பனைப் புருஷனல்லன்; அதர்மத்தை அழித்துத் தர் மத்தை நிலைநாட்ட வந்த இலட்சிய புருஷனாக அவர்கள் ராமனைக் கொண்டாடுவதைக் கண்டேன். தந்தை சொல் தட்டாத மைந்தனுக்கும், பாசம் நிறைந்த சகோதரனுக் கும், முன்வைத்த காலைப் பின் வைக்காத வீரனுக்கும் இலட்சிய பூர்வமான அரசனுக்கும் சிறந்ததோர் உதாரண மாக அவர்கள் இராமனைக் காண்கிறார்கள். அதுபோலவே, சீதையைக் கற்புக்கரசியாகவும் ஒப்புயர்வற்ற மாது சிரோ மணியாகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள். பெண்ணுக் கடங்கி நடப்போருக்கு உண்டாகும் துன்பங்களை எடுத்துக் காட்டும் பாத்திரமாக தசரதன் விளங்குகிறான். பக்தி யினால் எதையெல்லாம் சாதிக்கலாமென்பதற்கு அனுமான் சான்று. ஆதர்சபூர்வமான சகோதரர்களுக்கு இலக்கண மாக பரத, லஷ்மணர் இலங்குகின்றனர்." 2
மீன்பாடும் தேனா டாம் மட்டுமா நகரின் தென்கோடியில் அமைந்து கிடக்கும் கல்முனைப் பிரதேசத் தமிழ்க் கிராமங் களில் இராமகாதை பெற்றிருந்த இடத்தை, அப்பிரதேச மக் கள் இராமகாதையைத் தமது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்ட வாற்றை, அதனைப் பிரயோகித்துப் பார்த்து மகிழ்ந்த பாங்கை, ஜனாப் அஸிஸ் இவ்வாறு கூறுகிறார். அலீஸ் எதி லும் யதார்த்தத்தை விரும்பியவர். அதனாற்றான்போலும் மக்களின் நடைமுறை வாழ்வில் ராமகாதையின் செல்வாக்கை

Page 42
68 அஸிஸும் தமிழும்
அவர் தேடிப்பார்த்தார். இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த சாதாரண இந்து மக்களின் வாழ்க்கையை நல்வழிப் படுத்தியவர்கள் இராமாயணத்திலும் பாரதத்திலும் வரும் கதா பாத்திரங்களே என்பது அஸிஸின் அபிப்பிராம். ஒவ்வொரு மதத்திலும், அம்மதத் தத்துவங்களை ஆதாரமாகக் கொண் டெழுந்த இலக்கியங்களில் இத்தகைய ஆதர்ச கதாபாத்திரங் களைக் காணலாமென்கிறார் அவர்.
மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் படிக்கப்பட்ட இராte காதை சம்பந்தமான மூன்று ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து, தான் புதிதாகத் தெரிந்து கொண்ட தகவல்களை அவர் தனது நூலொன்றில் குறித்து வைத்துள்ளார். வாசகர்களினதும் ஆய் வாளரினதும் சிந்தனைக்காக "தமிழ் யாத்திரை" என்ற தனது மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டுப் பிரயாண அனுபவங் களைக் கூறும் நூலில் பின்வருமாறு அஸிஸ் அதனை எழுதி வைத்திருக்கிறார்;
* ஜாவா நாட்டு ராம சரிதத்தைப் பின்பற்றியெழுந்த மலாய ராம கதையில், ராவணனை அவன் தந்தை சொந்திப் என்ற நாட்டுக்குப் பிரஷ்டம் செய்ததாகவும் சொந்திப் சென்றடைந்த ராவணன் பன்னிரண்டு வருட காலம் துறவு வாழ்க்கை நடத்தினானென்றும், அந்தக் கட்டத்தில் ஆதி பிதா ஆதம் அவர்கள் தோன்றி அவன் தந்தையிடம் அவ னுக்காகப் பரிந்து பேசியதாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது: இராமாயணம் சம்பந்தமாக மலேசிய மாநாட்டில் சமர்ப் பிக்கப் பெற்றிருந்த மூன்று ஆராய்சிக் கட்டுரைகள் வாயி லாக இத்தகவல்களை அறிந்து கொண்டேன். ராமாயணத் தின் செல்வாக்கு இந்தியாவுடனும் இலங்கையுடனும் நின்று விடாது இந்தோசீனா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதென்பதையும் மேற் குறித்த ஆராய்சிக் கட்டுரை கள் தெளிவுபடுத்தின. இந்தோசீனா என்னும் போது இன் றைய பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியத்னாம் ஆகிய நாடுகளும், மலேசியா என்னும்போது மலாயா, இந்தோனேசியா, பிலிப்பைன் தீவுகள் ஆகிய நாடுகளும் அடங்கும்." 3
மலேசிய மகாநாட்டில் தெரிவிக்கப்பட்ட மேற்கருத்துக்கள் இராம காதையில் ஈடுபாடு கொண்டோருக்கும் இலக்கிய வர

ஆர். எம். நஹியா | 69
லாற்றாசிரியர்களுக்கும், ஆய்வாளருக்கும் பயனுள்ள தகவல் களாகும். தென்கிழக்கு ஆசியா முழுவதும் பிரசித்தி பெற்று விளங்கும் இராம காதை ஈழத்தில் எம்மட்டுச் செல்வாக்குப் பெற்றுள்ள தென்பதை அறிவதில் அவிஸ் அதிக கவனம் செலுத்தியதற்கு, அவர் சிறுபிள்ளைக் காலத்திலிருந்தே இரா மாயணத்தை அறிந்திருந்தமை, அக்காவியத்தில் அவர் கொண் டிருந்த ஈடுபாடு, சீறாப்புராணத்தை ஒத்த காப்பியம் என்ற அறிவு என்பன காரணங்களாகலாம். மதம், ஒழுக்கம் சம்பந்தப் பட்டதென்ற வகையிலும் ஒரு சமூகத்தின் பண்பாட்டுப் பொக் கிஷம் என்பதாலும் இது பற்றி அதிக ஆர்வம் காட்டி ஆய்வு செய்தார். I
எதையும் இராம காதைப் பாத்திரங்களுடனும் சம்பவங்களுட னும் ஒப்பிட்டுப் பார்க்கும் பண்பு அஸிஸுக்குக் கைவரப் பெற் றிருந்தது. அதனைப் பின்வரும் சம்பவமொன்று சிறப்பாக விளக்குகிறது. இச்சம்பவம் அஸிஸின் ஆபிரிக்கப் பயணத்தின் போது நிகழ்ந்தது. அப்பயணத்தின்போது அஸிஸுடன் சென் றிருந்த கனடியப் பிரதிநிதி, ஆபிரிக்காவில் முதன் முதல் குடி யேறியவர்கள் ஒல்லாந்தர்களே யென்றும், ஒல்லாந்தரான ஹீபேக் கின் மனைவி பன்னிரண்டு மாதக் கைக்குழந்தையுடன் ஆபிரிக்கா வந்து சேர்ந்ததாகவும் அஸிஸிடம் தெரிவித்துக்கொண்டிருந்த போது, அஸிஸ் தான் அறிந்திருந்த இராம காதையைத் தனது ஞாபகத்துக்கு வருவித்துக்கொண்டதாகவும், "ராமன் இருக்கு மிடந்தான் சீதைக்கு அயோத்தி' என்ற இராமாயண பாடத்தை நினைத்துக்கொண்டு எதுவும் பேசா திருந்ததாகவும் தனது ஆபி ரிக்க அனுபவங்கள் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.4
வால்மீகியின் வடமொழி இராமாயணத்தை முதல் நூலாகக் கொண்டு தமிழர் பண்பாட்டுக் கேற்ப சில திருத்தங்கள் செய்து பன்னிரெண்டாயிரத்துக்கு மேற்பட்ட நாலடி விருத்தப்பாக்களில் ஆறு காண்டங்களாகவும் படலங்களாகவும் வகுத்துப் பாடி தமிழுக் களித்த கம்பரின் இராமாயணத்தை அளீஸ் விரும்பிப் படித்தார். இராமன், சீதை, இலக்குமணன், பரதன் முதலிய பெரும் பாத்திரங்களும் வாலி, குகன் முதலிய சிறு பாத்திரங் களும் புகட்டும் படிப்பினைகளையும், அவற்றினூடு கவிஞன் கூறவிழையும் அறக்கருத்துக்களையும் உதார பண்புகளையும் அளவீஸ் பெரிதும் நயந்தார்.

Page 43
70 / அஸிஸும் தமிழும்
கம்பன் மக்கள் வாழ்க்கையின் முழுமையை அறிந்த கவிஞன். அதனாற்றான் அவன் புனைந்த இராமாயணக் கதையும் பாத் திரங்களும் மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டுவனவாக அமைகின் றன. எனவே தான் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இராமகாதைப் பாத்திரங்களுடனும் சம்பவங்களுடனும் கருத்துக்களுடனும் அஸிஸ் இணைந்திருந்தார். தனது எழுத்துக்களில் இராம காதைச் சம்பவங்களை ஆங்காங்கே உதாகரித்தார். சம்பவங் களை இராமாயணக் காட்சிகள், படிப்பினைகள், சம்பவங்க ளுடன் ஒப்பிட்டுப்பார்த்தார். அவரது சிந்தனையில் இராம காதை நிகழ்ச்சிகள் என்றுமே நீங்காத நினைவுகளாக இழையோ டின. அவரது பேச்சும் எழுத்தும் அதனைத் தெளிவாகக் காட்
{'ಇಡಿ'
தமிழ் யாத்திரை சென்னை, 1968 Ljj; ; 71, 72
டிை பக். 73
ஐ
ഫ്ലേ. L: 69
4. அளபீஸ் எ. எம். எ.
ஆபிரிக்க அனுபவங்கள் (ଜ $f କର୍ତା’ ଶମ୍ଭୁ ଶ୍t 1969,
Já : | 64

S. சிங்களம் மட்டும் சட்டம்
மொழிப் பிரச்சினை தோற்றம் பெறுவதற்கு அடிப்படையாக அமைவது மொழிப்பற்று. இப் பற்று பிற மொழி மீதும் பிற மொழியைப் பேசுவோர் மீதும் வெறுப்பாக முற் றும் போது மொழிப்பிரச்சினை ஏற்படுகிறது. தூயமொழிக் கோஷம், பெரும் பான்மையினரின் மொழி அரசகருமமொழியாதல் வேண்டும் என் பன போன்ற தன்மைகளில் இப் பற்றும் உணர்வும் வெளிப்பட் டுத் தோன்றும், சிங்களம் மட்டும் கோஷமும், 1956இல் அம் மொழிக்குக் கிடைத்த அரசகரும மொழி அந்தஸ்தும், இவ்வா றான தோற்றப்பாடுகளே. பேரினவாத அரசியல் சுயநலமி களின் திட்டமிட்ட பிழையான வ பூழி நடத்து  ைக நிலை மையை மோசமடையச் செய்ததுடன் வகுப்புவாத உணர்வுக ளுக்கும் தூபமிட்டது. 1958இலும் 1983இலும் இதன் விளைவு கள் தெளிவாகத் தெரிந்தன. தமிழ் மக்கள் பெரும்பான்மையின ராக வாழும் இந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கேட்கும் தமிழ் ஈழ கோஷம் இதன் தவிர்க்கமுடியாத விளை வாகும். இந்நிலையில் நின்று நோக்கும்போது தான் அஸிஸின் அன்றைய தீர்க்கதரிசனக் கருத்துக்களின் பெறுமதியையும் தாற் பரியத்தையும் விளங்கிக்கொள்ளமுடிகிறது.
பிறமொழி பேசுவோரை "மிலேச்சர்" என ஆரியர் இகழ்ந்தனர். திருந்தாத மொழியைப் பேசுவோர் என்பது இச் சொல்லின் பொருள். ஆனால், ஆரியர் என்ற சொல்லுக்கும் "மிலேச்சர்" என்றுதான் தமிழ் மொழி நிகண்டுகள் விளக்கம் கூறுகின்றன. தமிழ் மொழியை அரவம் (பொருள் அற்ற ஒலி) என்றும், அத் வா நமு (நீர்ப்பசையற்ற பாலை நிலம்) என்றும், தெலுங்கர்

Page 44
72 / அஸிஸும் தமிழும்
அழைத்தனர். சீன மக்கள் தென் சீனத்தில் வாழ்ந்தோரை "தென் மிலேச்சர்", "அப்பாவிகள்" என்ற பொருள்படும் சொற்களால் அழைத்தனர். பிறமொழி பேசுவோரை பார்பெராய் (Barbarol) என கிரேக்கர் குறித்தனர். இவை பிறமொழி வெறுப்புக்கான சில உதாரணங்கள்.
தாய்மொழிப் பற்றும் உணர்வும்,
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன் பத்
தேன்வந்து பாயுது காதினிலே'
என்று பாரதியைப் பாடவைத்தது. ‘இனிமையான மொழி , *கன்னித் தமிழ்" என்றெல்லாம் தமிழைத் தமிழர் அழைத்தனர். தமது மொழியொன்றே கற்கத் தகுந்ததெனப் பிரெஞ்சுக்காரர் கருதினர். "தெளிந்த தேன்' என்ற பொருள்பட தேட" என்று தமது மொழியைத் தெலுங்கர் அழைத்தனர். சங்கீதத்துக்கு ஏற்ற மொழி தெலுங்கு என்பது தெலுங்களினதும் பிறரினதும் கருத்து இத்தாலியர்கூட தமது மொழியை இவ்வாறுதான் கருதினர். உலகிலுள்ள பல சாதியினரும் கலந்த கலவைச் சாதி யாரான ஸ்பானியரும் தம் நிலை மறந்து, மொழி அடிப்படை யில் தம்மை ஒரு வகுப்பினராகக் கருதுகின்றனர். இலங்கையி லும் சிங்கள, தமிழ் மொழிகளைப் பேசுகின்ற ஆரிய, திராவிட இனத்தவர்களின் தாய் மொழிப் பற்றும் பிற மொழி வெறுப்பும் இவ்வகையான தோற்றப்பாடுகளே.
முஸ்லிம் சிறுபான்மையினர் மொழியாலோ அல்லது இனத் தாலோ பிணையுண்டு இராமல் மதத்தால் பிணையுண்டிருக் கின்றனர். மொழி ஒற்றுமை அல்லது இன ஒற்றுமையைவிட இஸ்லாமிய சகோதரத்துவமே அதிக சக்தி வாய்ந்தது என்று அடிக்கடி கூறிவந்த அஸிஸ், சிங்களம் மட்டும்" மசோதா பாரா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, மொழியுணர்வு மீதூரப் பெற்றவராக,
"நான் சிங்களவருடன் என்றும் பிணக்குற்றதில்லை. நீங்கள் சிங்களத்தை உத்தியோக ரீதியில் அரசகரும மொழியாக்கி யுள்ளீர்கள், ஏன் தமிழ் மொழியைக் கொலை செய்ய முயற் சிக்கிறீர்கள்?' !

ஏ. எம். நஹியா | 73
என ஆவேசக் குரல் எழுப்பினார். 1956 மே மாதம் 8ஆம் திகதி "தமிழ் மொழியின் நிலை பற்றி செனட் சபையில் உரையாற்றிய செனட்டர் அஸிஸ் மேற்கண்டவாறு வினவினார். அன்றைய அவரது பேச்சில் அவரது தமிழுணர்வை, தாய்மொழிப் பற்றை சமுதாயத்தைப் பாதிக்கும் எதனையும் துணிவாகச் சாடும் திரா ணியைக் காணமுடிந்தது.
"சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்படுகையில் முஸ்லிம் களின் மொழிப் பிரச்சினை சிக்கலாகிவிடும் என்பதை அளீஸ் நன்குணர்ந்திருந்தார். முஸ்லிம்களின் தாய்மொழி, கல்வி மொழி பற்றிய தனது நீண்டகால வழி நடத்துகையும், கருத்தும், முஸ் லிம் இனத்தின் ஐக்கியமும், அதன் எதிர்காலமும், இச்சட்ட அமு லாக்கத்துடன் தவிடுபொடியாகிவிடும் என்ற பயம், உண்மை உணர்வு அஸிஸுக்கிருந்தது. அதனாற்றான், சிங்களம் மட்டும்" சட்டத்தை அளிஸ் வன்மையாக எதிர்த்தார். அம் மசோதா வைக் கண்டித்து மேற் சபையில் வீரமுழக்கம் செய்தார்.
"நான் சபை முதல்வருக்கூடாக பிரதரிடம் மொழி சம்பந் தப்பட்ட சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி விசேட கவனம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்" 2
என்று அச் சொற்பொழிவில் கேட்டுக்கொண்டார். தமிழ் மொழி யின் அந்தஸ்துக்காகவும் அம்மொழி பேசுவோரின் உரிமைக்காக இம் இரந்து நின்றார் அப் பெருந்தகை,
க் காலாக அமைந்த இச் சிங்களம் மட்டும்" மசோதா பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது முஸ்லிம் கல்வி மான்கள், தலைவர்கள், அரசியல்வாதிகளெல்லாம் ஒரே @pr லில் அதனை எதிர்த்தனர். 1956 ஜூன் 5ஆம் நாள் இச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது தமிழ்த் தலைவர்களும் மக்களும் காலிமுகத் திடலில் அறப்போர் நிகழ்த் தினர். உண்ணாவிரதமிருந்தனர். அப்போது முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும்தான் உடனிருந்தனர். காடையர் களினதும் இன வெறியர்களினதும் தாக்குதலுக்கும் இலக்காகி னர். 1956 ஜூன் 14ஆம் நாள் இச் சட்டமூலம் வாக்கெடுப் புக்கு விடப்பட்டபோது தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் இம்
'' மொழி பேசும் மக்களின் பிரச்சினை விசுவரூபமெடுப்பதற்

Page 45
74 அஸிஸும் தமிழும்
மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். முஸ்லிம் அங்கத்தவர் கள் கூட, இருவரைத் தவிர ஏனையோரனைவரும், எதிராக வாக் களித்து தமது சமுதாயத்தின் எதிர்ப்பையும் தெரிவித் து க் ଘିଞ! ଛାଞtLଣ୍ଟ! !!f.
ஜனாப் அலிஸ் 1932 இல் ஐக்கியதேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டவர், பிரதமர் டட்லி சேன நாயக்காவின் சிபாரிசின் பேரில் அதே ஆண்டு செனட்சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவ்வாறெல் லாம் ஐக்கியதேசியக் கட்சியின் உயர்மட்டத்தில் அமர்ந்திருந்த அஸிஸ், அரசகரும மொழிச் சட்டம் 11 ம் றி ப த ன து கொள்கை கட்சிக் கொள்கையுடன் முரண்பட்டதால் 1956 ஜூன் மாதம் அக் கட்சியுடனான தனது சகல தொடர்புகளையும் துண் \டித்துக்கொண்டார். கட்சியிலிருந்தும் இராஜினாமாச் செய்து கொண்டார். இது சம்பந்தமாக, அதாவது, ஐக்கியதேசியக் கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்ததற்கான காரணத்தை யிட்டு, விளக்கமாக கடிதமொன்றை 1956 ஜூன் 2ஆம் திகதி ஜனப் அஸிஸ் முஸ்லிம் லீக் தலைவருக்கு அனுப்பியிருந்தார். அக் கடிதத்தின் வாசகம் வருமாறு:
" நேற்று நடைபெற்ற கூட்டத்தில் (அரச கரும மொழிச் சட்ட மூலத்தை விவாதிப்பதற்கென பூரீ கோத்தாவில் நடை பெற்ற ஐ. தே. க. யின் பாராளுமன்றக் குழுக்கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர்களும் இச் சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமெனவும் அதற்கான கட்சி ஆணையைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் நீண்டநேர விவாதத்தின் பின் எடுக்கப்பட்ட முடிவு பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இத்தீர்மானத்தை நான் எதிர்த்துள்ளேன். எனது எதிர்ப்பை நிகழ்ச்சிக் குறிப்புகளில் பதிவு செய்யுமாறு செயலாளரைக்கேட்டுள்ளேன்.
விவாதத்தின்போது, இச் சட்டமூலம் இலங்கை முஸ்லிம் களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதை வலியுறுத்திக் கூறினேன். 1956 மே 20ஆம் திகதி அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் மத்திய குழுவினால் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தான் நான் மேற்கண்டவாறு தெரிவித்தேன் சட்ட மூலத்தில் பின்னர்

ஏ. எம் நஹியா | 75
சேர்த்துக்கொள்ளப்பட்ட மாற்றங்கள் எதுவாயினும் அவை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் நன்மை பயப்பதா யில்லை எனவும் குறிப்பிட்டேன்
1956ஆம் ஆண்டு ஜனவரி 19இல் டாக்டர் எம். சி. எம்: கலீல் அவர்களின் (அந்நாள் தொழில் அமைச்சர்) தலை மையில் சென்ற அகில இலங்கை முஸ்லிம் லீக், அகில இலங்கை சோனகர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தூதுக் குழுவுக்கு, சிறுபான்மையினரின் மொழி உரிமைகளும் ஏனைய உரிமைகளும் ஏற்று மதிக்கப் படும் என மாண்புமிகு சேர். ஜோன் கொத்தலாவலை கொடுத்த வாக்குறுதி பற்றி நான் அங்கு பிரசன்னமா யிருந்த உறுப்பினர்களுக்கு நினைவூட்டினேன்.
எனினும் அவ்வுறுப்பினர்கள் சிறுபான்மையினரின் உரிமை களை பூரீகோத்தா"வின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து பாது காக்க முயன்றார்களே தவிர வெளியேயும் அவ்வாறு செய்ய அவர்கள் தயாராக இல்லை.
இத்தகைய துக்ககரமான சூழ்நிலையில், நான் இலங்கை சிவில் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற காலம் முதல் விசு
வாசத்துடன் பணியாற்றி வந்த கட்சியிலிருந்து விலகுவதைத்
தவிர எனக்கு வேறு ஒரு வழியும் தோன்றவில்லை' 3
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்ய நேரிட்ட மைக்கான காரணத்தை ஒளிவு மறைவின்றி அகில இலங்கை முஸ்லிம் லீக் தலைவருக்கு மேற்கண்டவாறு எழுதியிருந்தார் அஸிஸ். தனது சமூகத்துக்காக, தனது இனத்தின் மொழிக்காக, தான் இதுவரை விசுவாசமாகப் பணியாற்றி வந்த கட்சியில் இருந்தே இராஜினாமாச் செய்துவிட்ட இவரைப் போன்ற தன் னலமற்ற அரசியல் தலைவர்கள், சமூக வழிகாட்டிகள், அறி ஞர்கள், மதியூகிகள் இன்று இன்மைதான் இன்றைய முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல சீரழிவுகளுக்குக் காரணம் எனக் கூறின் அது தவறாகாதுடு
அரச கரும மொழி மசோதா மீது சொற்பொழிவாற்றிய போதெல்லாம் தனது எண்ணத்தைத் தெட்டத் தெளிவாகக் கூறினார் அளnஸ். கட்சி, உயர் அந்தஸ்துகளைவிட, தான் பிறந்து வளர்ந்த சமுதாயத்தின் எதிர்காலத்தை, அதன் மொழி

Page 46
76 அளவீஸ்-பீம் தமிழும்
பெறவேண்டிய அந்தஸ்தை, பெரிதாக மதித்தார் அப்பெரியார். அவரது எண்ணத்தை அவரது சொற்பொழிவுகளும் எழுத்துக் களும் தெளிவாகக் காட்டின. எண்ணுவதை, சொல்லுவதை, செயலிலும் காட்டக் கூடிய துணிவுள்ள தலைவர்களை, அஸிஸ் போன்றோரை, இன்று முஸ்லிம் சமூகத்தில் காண்பது அருமை tாகிவிட்டது. அது முஸ்லிம் சமூகத்தின் துர்ப்பாக்கியமே.
சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத முஸ்லிம் சமூ கத்தை "சிங்களம் மட்டும் சட்டம் வெகுவாகப் பாதிக்கும் என்பதை செனட் சபை உறுப்பினர்களுக்குத் தெளிவாக அறி வுறுத்தினார் அப் பெருந்தகை, 1956 ஜூலை 3ஆம் திகதி அரச கரும மொழி மீது செனட் சபையில் உரையாற்றிய அளtஸ் பின்வருமாறு கூறினார் :
"இவ்வாறான ஒரு மசோதாவைக் கொண்டுவந்து இலங்கை யின் அரச கரும மொழியாக சிங்களத்தைத் திணிப்பத னால் முஸ்லிம் சமுதாயம் போன்ற ஒரு இனத்துக்கு ஏற் படும் அசெளகரியங்களை இன்றைய அரசாங்கம் அறிய வில்லை என நம்புகிறேன். சிங்களத்தைத் தாய்மொழியா கக் கொள்ளாத முஸ்லிம் இனத்தை இம்மசோதா மிகவும் பாதிக்கும் என்பது எனது வாதமாகும்.'
என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். சிங்களவர் பெரும் பான்மையினராக விருந்த செனட் சபையில் சிங்களத் திணிப்புக் கெதிராகக் குரல் கொடுத்த துணிவுமிக்க தலைவர் அவர், அதே மசோதா மீது தொடர்ந்து உரை நிகழ்த்திய அவிஸ் தமிழ் மொழியின் அந்தஸ்துப் பற்றிய அம் மசோதாவின் மெளனத்தையும் வெளியுலகுக்கு எத்தி வைத்தார்,
'இம்மசோதாவில் உள்ளடங்கியுள்ளவற்றுக்காகவும் உள்ள டங்காதவற்றுக்காகவும் நான் எனது வாக்கை அளிக்க முடி யாத நிலையிலுள்ளேன். தமிழ் மொழியின் அந்தஸ்துப் பற்றி இந்த மசோதா மெளனம் சாதிப்பதையும் இங்கு நான் அழுத்திக் கூற விரும்புகிறேன்."
என தனது கருத்தைத் துணிவாக எடுத்துச் சொன்னார். முஸ் லிம் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்த ೨೧ಳಿ್ನಳಿ: எண்ணத்தில் தமிழ் உன்னத இடத்தைப் பெற்றது: தமிழுக்

και σ. στιο, நஹியா | 77
காகப் பல தியாகங்களைச் செய்தி அஸிஸின் வாழ்வில், “ சிங் களம் மட்டும்" மசோதாவுக் கெதிராக செனட் சபையில் தனது வாக்கை அளித்தது, அம்மசோதா வை ஆதரித்து வாக்களிக்கத் தீர்மானித்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கத்த வர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தது என்பனவெல்லாம் சில நிகழ்வுகளே. அஸிஸ் தமிழுக்காகச் செய்தவை அனந்தம்.
i.
Azeez A. M. A.
The Status of the Tami Language' Senate Hansard of May 8, 1956
ைெடி
நூர் அமீன் ஏ. ஆர். ஏ. *இலங்கை முஸ்லிம் தலைவர்கள் - இல: ! எ. இாம். எ. அஸிஸ் அகில இலங்கை வை. எம். எம். எ. பேரவை வெளியீடு கொழும்பு, 1980
t. j.š. : 1 6 - 1 7
Azeez, A. M. A. Official Language Bill Senate Hansard of July 3, 1956
டிெ

Page 47
தமிழர் - முஸ்லிம் ஐக்கியம்
தமிழ் மொழி அரசோச்சும் யாழ்ப்பாண மண்ணில் பிறந்தவர் அஸிஸ். தமிழ் மொழியினால் பிணைப்புண்டு தமிழரும் முஸ்லிம் களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல, ஒரு பிட்டில் மாவும் தேங்காய்ப் பூவும் போல, ஒன்றிணைந்து வாழ்ந்த கல் முனைப் பிரதேசத்தில், உதவி அரசாங்க அதிபராகவிருந்து அம் மக்களின் சகோதர வாஞ்சையை உணர்ந்தவர் அவர். அண் ணன் தம்பிகள் போல், இருதயத்தின் ஈரிதழ்கள் போல், தமிழ ரும் முஸ்லிம்களும் இப் பிரதேசத்தில் வாழ்ந்தமை அளிஸைப் பெரிதும் கவர்ந்தது நாவலர் வாழ்ந்த வண்ணார்பண்ணைச் சூழலில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, விபுலானந்த முனிவர் வாழ்ந்த கிழக்கிலங்கையில் பணி செய்த அஸிஸிடம் காணப் பட்ட தமிழர் - முஸ்லிம் ஐக்கிய .ேணர்வு, தலைநகரில் தன்னி கரற்று ஒரு போது திகழ்ந்த ஸாஹிறாக் கல்லூரியில் அவர் அதி பராகவிருந்தபோது வெளிப்பட்டுத் தோன்றியது. தமிழ் பேசிய சைவரும், கிறிஸ்தவரும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து தமிழ் வளர்த்து ஐக்கியம்பேணியவாற்றை 1950 களில் ஜக் கல்லூரியில் தெட்டத்தெளிவாகக் காணமுடிந்தது.
கிழக்கிலங்கையிலுள்ள மருதமுனையூரில் குறித்துச் சொல்லக் கூடிய இரு மகாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று 1958இல் நடைபெற்ற அரசியல் மகாநாடு. மற்றது. 1966ல் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழிலக்கிய மகாநாடு. இந்த அரசியல் மிகாநாடு ஐக்கியதேசியக் கட்சி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட் டது. மேற்சபை உறுப்பினராக அப்போது பதவி வகித்த அஸிஸ்
 

ஏ, எம். நஹியா | 79
இம் மகாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவரின் தமிழுணர்வையும் தமிழர் - முஸ்லிம் ஐக்கியத்தில் அவ ருக்கிருந்த வாஞ்சையையும் அச் சொற்பொழிவு நன்கு காட் !്ജ്,
'கிழக்கிலங்கையிலே தமிழர்களும் இஸ்லாமியர்களும் எந்தச் சக்தியாலும் பிரிக்கமுடியாதபடி இணைந்து வாழ்கின்றார் கள். இந்த இணைப்புச் சாதாரணமான ஒன்றல்ல. தமிழ் மொழியினால் உண்டான இயற்கையான இணைப்பு. உயிர்ப் புள்ளது; துடிப்புள்ளது. இரண்டு இனமும் இந்நாட்டின் பழங்குடிகள். நம் முன்னோர்கள் இங்கே அண்ணன் தம்பி கள் போல் வாழ்ந்திருந்தார்கள். நமது சந்ததியிலும் இந்த ஐக்கியம் நிலைபெறவேண்டும், எதிர்காலச் சந்ததிக்கும் இந்த ஐக்கியமே பாதுகாப்பாக அமையவேண்டும்." 1
என அஸிஸ் அம்மகாநாட்டில் கூறியபோது, அவரின் வரலாற் றுணர்வை, அரசியல் சுயநலமின்மையை, மொழி அடிப்படை யில் இரு இனங்களும் இணைந்து வாழவேண்டியதன் அவசி யத்தை நன்கு காட்டுவதாயமைந்தது. அவரின் குரலில் உண்மை யையும் நேர்மையையும் காணமுடிந்தது.
அம்மகாநாட்டில் சொற்பொழிவாற்றிய இன்னுமொரு முக்கிய பிரமுகர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் அவ ரும் அஸிஸின் அதே வழிநின்று தனது கருத்துரையை நிகழ்த் தினார். தமிழரும் முஸ்லிம்களும"கிய நாம் மட்டக்களப்பு அன் னையுடைய இருதயத்தின் ஈரிதழ்களையும் போன்றவர்கள். இரு இதழ்களும் ஒத்து இயங்கினால்தான் இருதயத்துடிப்பு நிலை பெறும் ஒத்து இயங்காது போனால் இருதயத் துடிப்பு நின்று போகும். அன்னையின் உயிர் வாழ்வுக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவசியம் என்பதை நாம் உணரவேண்டும். பிரிவி னைச் சக்திகளுக்கு இடங்கொடுக்காது, அழிவுப்பாதையிலே செல்லாமல், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோமாக என் னும் பொருளமைந்த ஒரு பாடலைப் பாடி தனது சொற்பொ ழிவை ஆரம்பித்தார் அவர் அப் பாடல் இதோ தரப்படுகிறது:
"இருதயத்தின் ஈரிதழ் போல்
இந்து முசிலீம் யாம் ஒரு வயிற்றுப் பிள்ளைகள் போல் உள்ளோம் - அரசியலில்

Page 48
80 / அஸிஸும் தமிழும்
பேராசை கொண்டோர்
பிரித்து நமை வேறாக்கி ஆராயர் செய்வார் அழிவு." 2
உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டும் கருத்துள்ள இப் பாடல், அன்று, அந்த மகாநாட்டில் பாடப்பட்டாலும் இன்றைய நிலையிலும், அது பெறுமதிமிக்கதாகவே தெரிகிறது. தமிழரும் முஸ்லிம்களும் இப் பாடலை அடிக்கடி பாடவேண்டிய அவசி யம் இன்று ஏற்பட்டிருக்கிறது. இப் பாடலின் பொரு  ைள உணர்ந்து செயற்படவேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அறிஞர் அஸிஸும் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையும் தமிழர் முஸ்லிம் உறவு பற்றியும் அதன் அவசியம் பற்றியும் அன்று எழுப்பிய குரல்கள் இன்றும் எமது காதுகளில் ஒலித் துக்கொண்டிருக்கின்றன. தொன்மை வாய்ந்த இவ்வொற் றுமை நிலைபெற வேண்டும்; அரசியல் சுயநலமிகள் அதைக் கெடுத்துவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும் - என்ற கருத் துக்களில் இருவரும் உடன்பட்டு நின்றனர். அரசியல் மகா நாட்டையே தமிழர் - முஸ்லிம் ஐக்கியத்தை வலியுறுத்தும் மகாநாடாக்கிய இவ்விருவரினதும் தமிழுணர்வு மதிக்கத்தக்கது. என்றும் நினைவு கூரப்பட வேண்டியது.
வெறும் வார்த்தையளவில் மட்டும் தமிழர் - முஸ்லிம் இனக் கம் பேசியவரல்லர் அஸிஸ் மருதமுனையில் இதையிட்டுப் பேசுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே இந்த ஒற்றுமைக் காகப் பலவற்றைச் செய்தவர் அவர் ஒரு முறை கிழக்கிலங்கையி லுள்ள சம்மாந்துறை முஸ்லிம் கிராமத்துக்கும் அதனருகே அமைந்திருக்கும் தமிழ்க் கிராமமான வீரமுனைக்குமிடையே இனக்கலவரம் மூண்டு இரு இனத்தவரும் வஞ்சம் தீர்க்கக் கங் கணம் கட்டிச் செயற்பட்ட போது அதனை ஆற்ற மாட்டாத அஸிஸ் கொழும்பிவிருந்து உடனே புறப்பட்டு சம்ம்ாந்துறைக் குச் சென்று, அந்த ஊர் ஜாம் ஆப் பள்ளிவாசலில், 1954 ஏப் ரல் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஜூசம் ஆத் தொழுகையின் பின் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களான கேட் முதலியார் எம். எம். இப்றாஹீம் (பொத்துவில்) ஏ. எம். மிர்ஸா (கல்முனை)

Ge
ஏ. எம். நஹியா | 81
ஆகியோரும் இக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்தனர். அங்கு, அன்று குழுமியிருந்த பெருந்திரளான முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய அஸிஸ்,
* கிழக்கு மாகாணத்தில் இத்தகைய மோசமான கலவரம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. மனிதன் மிருக சுபாவம் மேலிடும்போது தவறுகளைச் செய்கிறான். ஆனால் இப் போதே இவ்வளவில் நிறுத்திவிட வேண்டும்.” (3)
என வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் நின்று விடாமல்
"இனிமேல் இப்படியான விடயங்கள் ஒரு போதும் நடக்க மாட்டாது" என தமிழ் மக்களின் சார்பாக உறுதி மொழி கூறினார். கல்முனைப் பிரதேச மக்களின் அன்பையும், அபி மானத்தையும் பெற்றிருந்த அளவிஸ் துரையின் வேண்டு கோளும் உறுதி மொழியும் கலவரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தன. தமிழர் - முஸ்லிம் ஐக்கியத்துக்குக் குறுக்கே போடப்பட்ட ஒரு தடைக்கல் அன்று தூக்கி வீசப்பட்டது.
இவ்வாறு, தமிழர் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அஸிஸ் செய் தவை அனந்தம். இந்த ஐக்கியம் நிலைபெற தம்மாலான வற்றையெல்லாம் தனது வாழ்காலத்தில் செய்து அந்த ஐக்கி யத்தையும் கண்டு மகிழ்ந்தவர் அவர், இனவாதம் விலை போகும் இக் காலத்தில் அஸிஸின் ஐக்கிய வாதத்தின் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளமை துரதிஷ்டவசமானது.
1. பெரியதம்பிப்பிள்ளை, புலவர்மணி ஏ.
"தமிழர் - இஸ்லாமியர் இணைப்பு மொழியின் பலத் தால் ஆனது. இந்த ஐக்கியத்தை என்றும் பேணிக் காக்க வேண்டும்." சிந்தாமணி (25-03-1979)
2. டிெ
3. தினகரன் வாரமஞ்சரி
(ஞாயிற்றுக்கிழமை)
1954 - 04 - 25

Page 49
GB) ஸாஹிறாவில் தமிழ்ப் பணி
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெருமளவில் பங்களிப்புச் செய்த கல்லூரிகளுள் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் பங்கு விதந்துரைக்கத் தக்கது. ரி. பி. ஜா யா அவர் க ள் அதிபராகப் பணி செய்த போது சிறப்புற்று விளங்கிய ஸாஹி றாவின் தமிழ்ப்பணி, அவsஸ் அவர்கள் அதிபராகவிருந்த போது உன்னத நிலையை அடைந்தது. அஸிஸின் தலைமை யில் ஆசிரியரும், மாணவரும் ஒன்றிணைந்து ஸாஹிறாவில் ஏற்படுத்தி வைத்த களத்தில் தமிழ் வளர்ந்தது. தமிழ் கூறு நல்லுலகு இப்பணியை ஏற்றுப் புகழ்ந்தது. பொதுவாகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், குறிப்பாக, இலங்கைத் தமிழி லக்கிய வரலாற்றிலும் ஸாஹிறா.வின் தமிழ்ப்பணி தனியிடம் பெற்றது.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, "ஸாஹிறா.வின் தமிழ்ப்பாரம்பரியம்’ என்ற மகுடத்தில் ஸாஹிறாக்கல்லூரியின் 85 வது ஆண்டு நிறைவு தின விழாமலர் வளர் பிறை"க்கு ஒரு கட்டுரை எழுதியிருந்தார், 1949 தொடக்கம் 1952 வரை ஸாஹிறா.வில் கல்வி கற்ற, அஸிஸ் கால மாணவரான இவர், ஸாஹிறாக் கல்லூரியின் ஆசிரியராகவும் பணி செய்தவர். இவ ரின் கட்டுரை தரும் கருத்துக்கள் அஸிஸ் கால ஸாஹிறாக் கல்லூரியின் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கோடிட்டுக் காட்டுகி றது. அக்கட்டுரையின் ஒரு பகுதி இதோ தரப்படுகிறது :
ά
 

ERA
ஏ. எம். நஹியா | 83
"கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி இலங்கைத் தமிழ் இலக் கிய வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற வேண்டிய ஒரு கல்வி நிறுவனமாகும். ஸாஹிறா., முழு இலங்கையி னதும் கல்வி வரலாற்றிலே பெற வேண்டிய இடத்தினை மதிப்பிடும் பொழுது, இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்
சிக்கு அது எவ்வாறு முக்கிய ஊற்றுக் கால்களில் ஒன்றாக விளங்கியது என்பதனை மட்டிட வேண்டிய அவசியம் உள்ளது. இக்கட்டுரை இம்முயற்சிக்கான பிராரம்பமாகும். கல்லூரி ஆவணங்களையும் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கிய ஆக்கங்கள், அவற்றுக்கான ஆதார காரணங்கள் ஆதியவற்றையும் ஒரு சேர வைத்து வரலாற்று அடிப்படையில் மிக விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டுவது அவசியமாகும். இக்கட்டுரைப் பொருள் அத் தகைய முயற்சிக்கு முதற் கோடிட்டு வைக்குமெனின் அதுவே போதுமானதாகும். . இவ்வாய்தல் பணியினை ஸாஹிறா.வின் வர்த்தமான அதிபர் தமிழ்ப் பொறுப் பாசிரியரின் உதவியுடன் செய்தல் வேண்டும். அல்லது செய்வித்தற்கு வேண்டிய அமைப்பினைத் தோற்றுவிக்க வேண்டும். ?
என்று எழுதியிருந்தார். ஈழத்தின் தமிழிலக்கிய வரலாற்றில் ஸாஹிறாக் கல்லூரி பெறும் இடத்தை மதிப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக பேராசிரியர் கருதும் அளவுக்கு ஸாஹிறாக் கல்லூரி செய்த தமிழ்ப்பணி அதிமான தும் முக்கியமானதுமாகும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் எண்ணங்களையும் கருத் துக்களையும் தேசிய மட்டத்தில் செயற்படுத்த முனைந்து நின்ற ஆர்வலர் கூட்டம் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற, 1950 ஆம் ஆண்டைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இலங்கைப் பல்கலைக்கழகம் தேசிய இலக்கியத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கியது. இடை நிலைக்கல்வியளித்து பல்கலைக்கழகத்துக்கு மாணவரை அனுப்பி வைத்த சில பிரதான கல்லூரிகளின் பங்களிப்பும் இவ்வகையில் விதந்துரைக்கத்தக்கது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கல்லடி உப்போடை சிவானந்த வித்தியா லயம், கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி என்பன இவ்வகையில்

Page 50
84 அஸிஸும் தமிழும்
முக்கியத்துவமுடையன. இக்கல்லூரிகளில் கல்வி கற்ற மான வரின் ஆர்வமும் கற்பித்த ஆசிரியரின் முயற்சியும் இவ்விடய மாகக் கவனத்திற் கொள்ளத்தக்கன.
அஸிஸ் கால ஸாஹிறா மிகப் பிரபல்யம் பெற்று விளங்கியது. ஸாஹிறா.வின் புகழ் நாடெங்கும் பரவியிருந்த காலமது. நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மாணவர்கள் அப்போது ஸாஹிறா.வில் கற்றுக் கொண்டிருந்தனர். கொழும்பு ஸாஹிறா விலே தமது பிள்ளைகளைப் படிக்கவைக் காத மாகாண, மாவட்ட முஸ்லிம் பிரமுகரின் சமூக அந்தஸ்து பூரணமானதாகக் கருதப் படவில்லை. முஸ்லிம் மாணவர் மட்டுமன்றி தமிழ், சிங்கள மாணவரும் அப்போது ஸாஹிறா.வில் கற்றுக் கொண்டிருந்த னர். ஆங்கில மொழியில் மாணவர் கல்வி கற்ற போதிலும், தமிழ் மாணவர் சிங்களமும், சிங்கள மாணவர் தமிழும் கற்க வேண்டியிருந்தது. சிங்கள மாணவர் தமிழைக் கற்குமளவுக்கு அஸிஸ் கால ஸாஹிறா.வில் தமிழ் கற்றலும், கற்பித்தலும் பரவலாக்கப்பட்டிருந்தன.
ஸாஹிறா.வில் 1961 ஆம் ஆண்டு வரை காணப்பட்ட ஆரோக் கியமான சூழலில் தமிழ் வளர்ந்தது.
* ஸாஹிறா முஸ்லிம்களின் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் பிரதிபலிப்பாக 1940-50களிலே விளங்கிற்று. தனியார் கல்வி நிறுவன அமைப்பு முறைமை அரசாங்கத்தினால் மாற்றப்படும் வரை இந்நிலைமை காணப்பட்டது."
என பேராசிரியர் சிவத்தம்பி கூறக்கூடிய அளவுக்கு முஸ்லிம் களின் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் பிரதிபலிப்பாக அக்கால ஸாஹிறா விளங்கியது. இப்பெருமைமிக்க காலத்தில் ஸாஹிறா ஆற்றிய தமிழ்ப்பணியில் கொழும்பில் வாழ்ந்த தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் கணிசமான பங்குண்டு.
1940, 50 களில் கொழும்பில் வாழ்ந்த கீழ்மட்ட, மத்திய தர வர்க்கத்தினரினதும், வெளி மாகாண உயர் வர்க்க முஸ்லிம்களி னதும் கல்விக் கூடமாக விளங்கிய ஸாஹிறாக் கல்லூரி தமிழு ணர்வு, இலக்கிய ஆர்வம் என்பனவற்றின் களமாகவும், தமி ழர் முஸ்லிம் இணைப்புத்தளமாகவும் விளங்கியது. வானொலி

ஏ. எம், நஹியா | 85
பத்திரிகைத் தொடர்புகள் என்பன ஸாஹிறா.வின் தமிழ்ப் பணிக்கு வாய்ப்பாக அமைந்தன. கல்லூரியில் அமைந்திருந்த நூலகத்தில் பொது நூலகங்களில் கூட கிடைக்கப் பெறாத பல அரிய தமிழ் நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு நூல்களும், சஞ்சிகைகளும் குறிப்பாக தென்னிந்திய வெளியீடு களும் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் அஸிஸ் கால ஸாஹிறாவின் தமிழ்ப்பணிக்குச் ଐf it && !d(T୫ அமைந்தன.
பெரியார் ரி.பி. ஜாயா ஸாஹிறா.வின் அதிபராகவிருந்த (1921-1948) காலம் முஸ்லிம் சமூகம் ஆங்கிலக்கல்வி பால் நாட்டம் செலுத்திய காலம், ஜாயா அவர்கள் அதிபராகப் பதவி ஏற்க முன்பே வாப்பிச்சி மரைக்கார் பிரதம நிருவாகி யாகவிருந்த போது, 1918 இல் மு. நல்லதம்பிப் புலவர் கல்லூரி யின் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பதவியேற்றுப் பணி செய்து வந்தார். 1945 ஆம் ஆண்டு வரை அவரது பணி தொடர்ந்தது. ஜாயா கல்லூரியை விட்டு விலகிச் செல்வதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு தான் புலவர் ஒய்வு பெற்றார். ஸாஹிறா.வில் பணி புரிந்தபோது 1940இல் தென்னிந்தியாவில் “முது தமிழ்ப் புலவர்' என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், இலங்கையின் சுதந்திரப் பேற்றையொட்டி ஒழுங்குசெய் யப்பட்ட கவிதைப்போட்டியில் 'மணித்தாய் நலமும் மரதனோட் டமும்" என்ற கவிதையை எழுதி முதற் பரிசைத் தட்டிக் கொண்ட பெருமைக்குரியவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவர் கூட "மருதன் அஞ்சலோட்டம்’ என்ற தலைப்பில் பாட லொன்றை இக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிப் பங்கு கொண் டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த முது தமிழ்ப்புலவர் செய்த தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்து சோமசுந்தரப் புல வரின் மகன் சோ. நடராசா ஸாஹிறா.வின் தமிழ்ப் பணி யைத் தொடர்பறாது பேணினார். இந்நிலையில் நின்று நோக் கும் எவரும் அஸிஸ் கால தமிழ்ப் பணிக்கான களத்தை ஜாயா காலம் அமைத்துக் கொடுத்ததென்ற உண்மையைப் புரிந்து கொள்வர். ஆயினும் , தமிழர் தமிழ் பயிற்றிய ஜாயா காலத்தன்மை மாற்றமடைந்து முஸ்லிம் ஆசிரியர் தமிழ் பயிற்ற, தமிழ் மாணாக்கர், அவர்களிடம் பயின்றமை அஸிஸ் காலத்தில் சிறப்பம்சமாக விளங்கிற்று.

Page 51
86 அஸிஸும் தமிழும்
ஜனாப் எ. எம். எ. அஸிஸ் அவர்கள் பெரியார் ஜாயா கால ஸாஹிறா.வில் 1933 ஆம் ஆண்டை ஒட்டிய காலங்களில் விடுதி ஆசிரியராகப் பணி செய்தவரென்பதும், முது தமிழ்ப் புலவரின் தமிழ்ப் பண்ணையில் வளர்ந்தவரென்பதும், இங்கு கவனத்திற் கொள்ளத் தக்கது. ஸாஹிறாவின் முதல்வர்களான ஜாயா, அஸிஸ் ஆகியோரின் காலங்களின் மகிமையை புலவர் மு. நல்லத்தம்பி பின்வருமாறு பாடினார்.
ஸாஹிறா வாழி!
திருந்து மெழிலுக் குறையுளெனத்
திகழுங் கொழும்பி னமைதியெனும் செறிந்த பொருளா ரிசுலாத்தின்
செவ்வி பரப்புந் திருவிளக்கே!
பொருந்து கலையி னாரமிழ்தம்
பொலியப் பொலிய நணிபுகட்டிப் புலத்தின் குன்றத் திருத்தி மகிழ்
பூப்ப வளர்க்கும் பொற் கொடியே!
பரந்த கலைஞன் ஜாயாவும்
படர்ந்த அறிஞனஸிஸு மிகப் பரிந்து வளர்ப்ப வளர்ந் தொளிரும் பயனார் செல்வச் செழுமணியே!
விரிந்த புகழின் திருத்தாயே!
விளங்கு மலரே! மங்கலமே!
மேதக்கவளே! ஸாஹிறாவே!
விறவின் வாழி! வாழியவே. (2)
ஆசிரியர் பங்களிப்பு
தமிழ் கூறு நல்லுலகு தமிழறிஞரெனப் போற்றிப் புகழும் பலர் அஸிஸ் கால ஸாஹிறாவில் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார் &@it. அக்கால ஸாஹிறாவினுடைய தமிழ்ப் பாரம்பரியத்தின் முதல் வராக விளங்குபவர் ஜனாப் எஸ். எம். கமாலுத்தீன் அவர்கள்.

ஏ. எம். நஹியா | 87
இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் இரு பட் டங்களைப் பெற்றவர். சிறந்த தமிழ் எழுத்தாளர், பேச்சாளர், பல கட்டுரைகளின் ஆசிரியர். ‘பர்பரீன்", "தாய்லாந்தின் தலைநகரிலே" என்பன இவர் எழுதிய நூ ல் கள். இவர் சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட, அஸிஸ் அவர்கள் நிகழ்த்திய கல்லூரிப் பரிசளிப்பு தின உரைகள் பல இவரினால் தமிழில் பெயர்க்கப்பட்டு அஸ்-ஸாஹிறா என்ற கல் லூரி ஆண்டு மலர்களில் பிரசுரமாயின. ஸாஹிறா.வில் அஸிஸ் தாபித்த இக்பால் சங்கத்தின் பல ஆங்கில வெளியீடுகளையும் இவர் தமிழாக்கித் தந்துள்ளார். பல வானெலிச் சொற்பொழிவு களையும் நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் நடாத்திப் புகழ் பெற்ற ஜனாப் கமாலுத்தீன் ஸாஹிறா.வினால் உருவாக்கப்பட்ட தமிழறிஞன். நவ லியூர் சோமசுந்தரப் புலவரின் மகன் சோ. நடராசா ஸாஹிறா.வில் செய்த தமிழ்ப் பணியைத் தொடர்ச்சி யறாது செய்து ஸாஹிறா.வின் தமிழ்ப் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்தவர் இவர். 1948இல் ஸாஹிறா.வின் ஆசிரியராகச் சேர்ந்த கமாலுத்தீன் கல்லூரியின் 1954ஆம் ஆண்டைய Az - Zahira, மலரின் பிரதம ஆசிரியராகவும், தமிழ்க் கதாப் பிரசங்கக் குழுவின் பிரதம உறுப்பினராகவும், துறை மேற் பார்வையாளராகவும், இவ்வாறு பல வகைகளில் பணிபுரிந்தவர். கொழும்பு பொது நூலக உதவி நூலகராகவும் தேசிய நூலக சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளராகவும் தொழில் புரிந்த இவரின் தமிழ்ப்பணியில் அஸிஸ் கால ஸாஹிறா வுக்குப் பெரும் பங்குண்டு.
திரு. நா. சண்முகரத்தினம் சென்னைப் பல்கலைக்கழகப் பட்ட தாரி. கமாலுத்தீனுக்கு ஒரிரு வருடங்களுக்கு முன்பே ஸாஹிறா.வில் பணியாற்றத் தொடங்கி பின்னர் கமாலுத் தீனுடன் இணைந்து செயற்பட்டவர். வண்ணார் பண்ணையின் தமிழிலக்கியப் பிரதிநிதியாக ஸாஹிறா.வில் பணி செய்தாரோ என்று கூறுமளவுக்கு அவரது தமிழ்ப் பணி ஸாஹிறா.வில் சிறப் புற்று விளங்கியது. ஜாயா கால ஸாஹிறாவின் பெருமை மிக்க தமிழ்ப் பணியை அஸிஸ் காலத்துடன் இணைத்து வைக் கும் பாக்கியம் இந்த சண்முகரத்தினத்துக்குக் கிடைத்தமை அவர் பெற்ற பேறாகும்.
ஸாஹிறாவில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று புவியியல் பட்டதாரியாக வெளிவந்த சோ. செல்வநாயகம் 1957 தொடக்

Page 52
88 அஸிஸும் தமிழும்
கம் சிறிது காலம் ஸாஹிறாவின் ஆசிரியராகப் பணி செய்தார். பிற்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் பேரா சிரியராக விளங்கிய அவர் தனது துறையில் தமிழுக்குச் செய்த சேவையை நாடறியும்.
எம். ஏ. முஹம்மது திக்வலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வர், முஸ்லிம் நாடகத் தயாரிப்பாளராக, நடிகராகவெல்லாம் புகழ்பெற்ற இவர் ‘சூறாவளி’ என்ற நாடக நூலொன்றைத் தமிழில் எழுதியுள்ளார். இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் 1950இல் ஒலிபரப்பான முதலாவது முஸ்லிம் சமூக நாடகமான "புயல்" நாடகத்தை எழுதியவர் இந்த முஹம்மத் மாஸ்டர் தான். ஸாஹிறாக் கல்லூரி இசை நாடகச் சங்கத் தின் செயலாளராக இவர் பணி செய்தார். அப்போது இலங்கை வானொலியில் ஸாஹிறா மாணவர் நடாத்திய முஸ்லிம் கதாப் பிரசங்க நிகழ்ச்சிக்குப் பாடல்களையும் இவர் எழுதியிருந்தார். 'இஸ்லாம் இத்திஹாஸ்ய', 'இஸ்லாம் தர்மய" போன்ற சிங்கள நூல்களை எழுதியதோடு வானொலியில் பல சிங்களச் சொற் பொழிவுகளையும் நிகழ்த்திய முஹம்மத், பல சிங்கள நாடகங் களையும் ஸாஹிறா.வில் மேடையேற்றியுள்ளார். இக்கலையார் வத்துக்குத் தூபமிட்டது ஸாஹிறா. தான் என்று இவர் அடிக்கடி கூறுவார்.
* பாடசாலையில் ஆரம்பமான எனது கலை ஆர்வம், மெரு கேறி பரந்த அளவில் விருத்தி அடைய எனக்குக் களம் அமைத்துக் கொடுத்தது கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியே."
என உண்மையை உலகுக்குச் சொன்ன ஆசிரியர் முஹம்மத் அவர்கள், அதிபர் எ. எம். எ. அலிஸ் அவர்கள் ஸாஹிறா.வின் ஆசிரியராகத் தன்னைச் சேர்த்துக் கொண்டமைக்குக் காரணமே தனது கலையார்வம் தான் என்று என்னிடம் பல முறை கூறு யிருக்கிறார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழிலக்கியத் துறைப் பேராசிரியராக ஐந்து வருடங்கள் பணி செய்தவர் கலாநிதி ம. மு. உவைஸ் அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக சுவாமி விபுலானந்தர் 1931ஆம் ஆண்டு ஆடி மாதம் பதவி ஏற்று இந்தியப் பல்கலைக் கழகமொன்றில் பேராசிரியராகப் பதவியிலமர்ந்த முதலாவது

്
ஏ. எம். நஹியா | 89
இலங்கையரென்ற பெருமைக்குரியவரானார். அவருக்குப் அப்பெருமைக்குரிய இலங்கைப் பேராசிரியர் உவைஸ் அவர் களே. இப்பெருந்தகை ஈழத்தின் தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியகர்த்தா. பன்னூலாசிரியர். முன்னர் வித்தியோதயப் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கியவர். 02.02.1953இல் ஸாஹிறா.வில் சேர்ந்து 31.03.1957 வரை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறைத் தலை வரும் தமிழ்ப் பேராசிரியருமான கலாநிதி கா. சிவத்தம்பி கூட ஸாஹிறா.வின் பழைய மாணவரே. 1957 தொடக்கம் 1961 வரை ஸாஹிறா.வின் ஆசிரியராகப் பணி செய்த இவர், இந்நாட் டின் தலைசிறந்த தமிழறிஞர், விமரிசகர் , சொற்பொழிவாளர், பன்னூலாசிரியர், அவரது தமிழ்ப்பணியின் ஆரம்பத்தை ஸாஹி நாக் கல்லூரிதான் ஏற்படுத்திக்கொடுத்ததென்பதை அறிய நேரும் எவரும் ஸாஹிறா.வினுடைய தமிழ்ப் பாரம்பரியத்தின் பெருமையை அறிந்து கொள்வர்.
அஸிஸ் காலத்தில் ஸாஹிறா.வில் பல நிருவாகப் பொறுப்புக் களை ஏற்று ஆசிரியப் பணி செய்தவர் ஏ. எம். சமீம், இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள்' என்ற இவரது நூல் 29-06-1979இல் நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமி ழிலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டினால் வெளியிடப்பட்டது. இஸ் லாமியக் கலாசாரம் என்ற நூலையும் இவர் வெளியிட்டிருக் கிறார். முன்னாள் கல்விப் பணிப்பாளரான இவர் ஸாஹிறா.வின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸாஹிறாவின் பழைய மாணவரும் பின்னர் அங்கு ஆசிரியராகக் கடமையாற்றியவருமான எம். எம். எம். மஃறுாப் கூட சிறந்த தமிழறிஞர் ஆய்வெழுத்தாளர்; விமரிசகர். தமிழ்நாட்டுப் புனை கதைகளின் தோற்றமும் வீழ்ச்சியும் பற்றி தினகரன் வார மஞ் சரியில், 1967-68களில் தொடர்ச்சியாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். 'பிறை வளர்ந்த கதை' என்ற தலைப் பில் 1971இல் எழுதியவர். 1981 தொடக்கம் 1983 வரை இலங்கை வானொலியில் "சுவடிக் கூட சுவடுகள்' நடத்தியவரும் இவர்தான்.

Page 53
90 | அஸிஸும் தமிழும்
ஸாஹிறாவின் கனிட்ட வகுப்புகளில் தமிழ் பயிற்றிய பொ. கந் தையா, எம். ஏ. ஸி. ஏ. றஹ்மான் போன்றோரும், இன்றைய தினகரன் உதவி ஆசிரியர் எம். எஸ். எம். பளீல், கே. முருகேசு. சிவசாமி ஆகியோரும், பிற்காலத்தில் பிரதான கல்வி அதிகாரி யாக விளங்கிய எம். எஸ். எம். யூசுபும் ஸாஹிறா வினுடைய தமிழ்ப் பாரம் பரியத்தின் சிறந்த ஆசிரியப் பிரதிநிதிகளாவர்.
அஸிஸ் கால ஸாஹிறா.வில் ஆசிரியப் பணி புரிந்தவர்கள் என்ற வகையில் இவர்களின் பணியிலும் புகழிலும் ஸாஹிறா ஷக்கும் அதன் அதிபராகவிருந்த அஸிஸுக்கும் சம்பந்தமுண்டு. ஸாஹி றாவும் அஸிஸும் பெருமை பெறும் அளவுக்கு இவர்களின் தமிழ்ப்பணி சிறப்புற்று விளங்கியது.
மாணவர் தமிழ்ப்பணி
அஸிஸ் கால ஸாஹிறா.வில் நா. சண்முகரத்தினம், எஸ். எம். கமாலுத்தீன், கா. சிவத்தம்பி, ம. மு. உவைஸ். பொ. கந் தையா, எம். ஏ. ஸி. ஏ. றஹ்மான் போன்றோரிடம் தமிழ் கற்ற பலர் தமிழ்கூறும் நல்லுலகில் புகழ்பெற்ற தமிழறிஞர்களாக இலக்கியம், தமிழியல், கல்வி, சமூக, பொருளாதார அரசியல் துறைகளில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றனர்;
எஸ். எம், கமாலுத்தீன், சோ. செல்வநாயகம், ஐ. எல். எம். சுஜப், கா. சிவத்தம்பி, ஏ. எம். சமீம், எம். எம். எம். மஃறுளப் போன்றோர் ஸாஹிறா.வின் ஆசிரியர்களாக மட்டுமன்றி மான வர்களாகவும் சிறப்புப் பெறுகின்றனர்.
தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன், ஈழத்தின் முதல் சிறுகதைத் தொகுதி வெளியிட்ட இருவர், மு. மீ. சீ" (மு. மீ. சாஹ7ல் ஹமீது) வும் குருசாமியும் (குருசாமி பல நாவல் கள் எழுதிப் புகழ்பெற்றவர்), எ. எம், எ. அஸிஸ் அவர்களின் கல்விச் சிந்தனையும் பங்களிப்பும் நூலாசிரியரும் அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான எஸ். எச். எம். ஜெமீல், ஐக்கியநாடுகள் சபையின் பொருளா தார ஆலோசகராகக் கடமையாற்றும் ஷிப்ளி காசிம், ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்களான ஏ. சி. எல். அமீர் அலி, எம். எல். ஏ. காதர், பன்னூலாசிரியர் சட்டத்தரணி எஸ்.

ஏ. எம். நஹியா 191
எம். ஹனிபா, முன்னாள் கல்விப் பணிப்பாளர்களான எம். ஷரீப், ஏ. எம். மஜீத், எம். எம். மன்சூர், பூரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.எச்.குத்தூஸ், அக் கூட்டுத் தாபன முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் வி. ஏ. கபூர், முற்போக்கு எழுத்தாளர் எச். எம். பி. முகைதீன், அல்ஹாஜ் மஷார் மெளலானா, எஸ். எம். ஏ, ஜப்பார், அல் ஹாஜ் சயீத் எம். இர்ஷாத் போன்றபலர் அஸிஸ் கால ஸாஹி
றாவின் தமிழ்ப் பாரம்பரியத்தின் சிறந்த மாணவப் பிரதிநிதிக
Gift Guti.
எஸ். எல். எம். ஹனிபா, எச். எம். ஷரீப், எம். எஸ். எம். இக்பால் எம். எச். முகம்மது, இராஜபுவனேஸ்வரன், பத்திரிகை யாளர் பி. பாலசிங்கம் போன்றோரும் இவ்வகையில் குறிப் பிடப்பட வேண்டியவர்கள். மூதூர் எம். ஈ. எச். முகம்ம தலியும், கிளிநொச்சி ஆனந்தசங்கரியும், பொத்துவில் ஆஸாத் மெளலானாவும் ஸாஹிறாவின் மாணவர்களே.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் 1952 ஆம் ஆண்டு ஜி. ஏ. கியு. பரீட்சைக்குத் தோற்றியோருள் இருவர் மட்டும் (எம். ஷரீபும், சோ. செல்வநாயகமும்) தமிழ்ப் பாடத்தில் அதிவிசேட தரத் தில் (ஏ) சித்தி பெற்றனர். அவர்களிருவருமே ஸாஹிறா.வி லிருந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள் தான். 1961 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி. ஏ. கியு. பரீட்சையில் தமிழ் மொழிப் பாடத் திற்குத் தோற்றிய ஏறக்குறைய 70 பேருள் மூவர் அதிவிசேட தரத்தில் (ஏ) சித்தி பெற்றனர். அவர்களுள் இருவர் கா. சிவத் தம்பியிடம் ஸாஹிறா.வில் தமிழ் பயின்ற எஸ். எச். எம். ஜெமீ லும், ஏ. சி. எல். அமீர் அலியும் ஆவர். ஆகக்கூடிய புள்ளி களைப் பெற்ற ஜெமீலுக்கு பிரான்ஸிஸ் கிங்ஸ் பெரி பரிசு (Francis Kingsbury Prize) கிடைத்தது. பேச்சுப் போட்டிகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அக்கால இலங்கைப் பல்கலைக் கழக விவாதக் குழுவில் நால்வர் இடம்பெற்றனர். அவர்களுள் மூவர் ஸாஹிறாவின் மாணவர்களான ஏ. சி. எல். அமீர் அலி, எம். ஏ. எம். சுக்ரி, எஸ். எச். எம். ஜெமீல் ஆகியோராவர். இதிலிருந்து இக்கால இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பணியில் ஸாஹிறா மாணவர்களின் பங்களிப்புப் பெறுகின்ற கூடிய முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

Page 54
92 / அஸிஸும் தமிழும்
இலங்கைப் பல்கலைக்கழக வருடாத்த வெளியீடான இளங்கதி ரின் முதலாவது முஸ்லிம் ஆசிரியராகச் செயற்பட்டு 1952-53இல் மலர் வெளியிட்டுப் புகழ் பெற்றவர் ஜனாப் எஸ். எம். ஹனிபா. ஸாஹிறா.வின் ஆண்டு மலரான Az-Zahira வின் முதலாவது மலரினுடைய (1948-49) தமிழ்ப்பகுதி ஆசிரியரான இவர் ஒரு பன்னூலாசிரியர், 52 நூல்களின் வெளியீட்டாளர். இலங்கை முஸ்லிம் கல்விச் சகாயநிதியின் 7 ஆம் வருட வெளியீட்டுக் கமிட்டியின் செயலாளராக விருந்து 1951 இல் மொ(த்)தாமர் மலரை வெளியிட்டவர். கல்ஹின்னையில் தமிழ் மன்றம் அமைத் துத் தமிழ் வளர்க்கும் இந்த ஹனிபா தனது தமிழ்ப்பணிக்கும் தமிழ் நூல் வெளியீட்டு முயற்சிகளுக்கும் ஆரம்ப ஊக்கத்தை யும் திராணியையும் ஸாஹிறா. தான் கொடுத்ததென அடிக்கடி கூறுகிறார்.
அஸிஸின் தமிழ்ப்பணி என்கின்ற போது இவைகளெல்லாம் இணைத்துப்பார்க்கப்பட வேண்டியன. ஏனெனில், இவையெல் லாமே அளிளினது தமிழுணர்வு பணிகளுடன் சென்று சங்கம மாகின்றன.
அறிஞர் வருகையும் விழாக்களும்
அஸிஸ் ஸாஹிறாவின் அதிபராயிருந்த காலத்தில் பல உள் தாட்டு வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் ஸாஹிறாஷக்கு வருகை தந்தனர். பல விழாக்கள் கொண்டாடப்பட்டன. அக்காலை நிகழ்த்தப்பட்ட அறிஞரின் சொற்பொழிவுகளும் விழாக்களும் ஸாஹிறாவின் தமிழ்ப்பணியை வெளியுலகுடன் இணைத்து வைத்தன.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 8 வது வருடாந்த மகாநாட்டில் கலந்துகொள்ள வந்த பிரபல தென்னிந்திய சஞ்சிகையான, "கல்கி" யின் ஆசிரியர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தியும், தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் ஆசிரியர் திரு. ம. பெரியசாமித்தூரனும் ஸாஹிறாஷக்கு வருகை தந்தனர். 1950 ஆகஸ்ட் 21 ஆம் திகதி இருவரும் ஸாஹிறாஷக்கு விஜயம் செய்தபோது, கல்லூரித் தமிழ்ச் சங்கத்தினர் அதிபர் அஸிஸின் தலைமையில் உற்சாக வரவேற்பளித்தனர். அன்று நடைபெற்ற வைபவத்தில் அதிபர் அஸிஸ், எஸ். எம். கமாலுத்தீன், ம, பெரியசாமித்தூரன், கல்கி ஆகியோர் சொற்பொழிவாற்றினர். தற்காலிகத் தமிழ்
 

ஏ. எம். நஹியா | 93
மன்றத் தலைவராக எச். எம். பி. முகைதீனும் செயலாளராக ஆர். சிவகுருநாதனும் செயற்பட்ட காலம் அது. தமிழை வளர்க்க, ஸாஹிறா.வில் அஸிஸ் அவர்கள் எடுத்த முயற்சிகளை, இருவரும் வாயாரப் புகழ்ந்து பேசினர்.
திருவாளர் ரா. கிருஷ்ணமூர்த்தியின் ஸாஹிறாக் கல்லூரி விஜ யம் பற்றி, திருநெல்வேலி எம். ஆர். எம், சுந்தரம் அவர்கள் (சுந்தா) "கல்கி மாசிகையில், 'பொன்னியின் புதல்வர்" என்ற தலைப்பில் 4-8-1974 இலிருந்து எழுத ஆரம்பித்த அமரர் திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி)யின் வாழ்க்கை வரலாற்றில், கல்கி என்ற பெயர்" என்ற தலைப்பிலான முதலாம் அத்தியாயத்தில், இதுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பூண்டிருந்த புனைப்பெயருக்கான காரணம்பற்றிப் பலரும் பல வாறு ஊகமெழுப்பிச் சர்ச்சைகள் செய்த காலப்பகுதியில் நிகழ்ந்த கிருஷ்ணமூர்த்தியின் இந்த ஸாஹிறாக் கல்லூரி விஜயம் மிக முக்கியமானதாகும். 'கல்கி" என்ற பெயரில் பொதிந்துள்ள இரகசியம் விடுவிக்கப்படவேண்டுமென்பதில் அஸிஸ் காட்டிய ஆர்வமும் வீரகேசரி நிருபர் ஒருவரின் விடாமுயற்சியும் இவ் விடயத்தில் நல்ல பயனளித்தது. இதுபற்றி "பொன்னியின் புதல் வர் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரையில் காணப்படும் சுந்தா" வின் குறிப்புரை வருமாறு:
**இந்தப் புனைபெயர் அமைந்திட்ட விதம் பற்றி இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்பதாக நெடுநாட்க ளாய்க் குழப்பம் இருந்து வந்தது. அந்தக் குழப்பத்தைக் கல்கியே, 1950ஆம் ஆண்டில், அவர் இலங்கையில் பிரயா ணம் செய்தபோது தீர்த்துவைத்தார்.
கொழும்பு ஸாஹிறக் கல்லூரித் தமிழ்ச் சங்கத்தின் ஆதர வில், கல்கியை வரவேற்பதற்காக நடந்த கூட்டம் ஒன்றில், அந்தக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் ஜனாப் அஸிஸ், கல்கி என்ற புனை பெயரில் ஒரு பெரிய ரகசியம் இருக்க வேண்டும் என்றும். அதுபற்றிப் பலர் பலவிதமாய் ஊகங் கள் செய்கிறார்கள் என்றும் சொல்லி, அந்த ரகசியத்தை வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Page 55
94 / அளnஸும் தமிழும்
அதற்குப் பதில் அளிக்கையில் கல்கி சொன்னார்:
"என் பெயரைக் கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லத் தலை வர் ரொம்பவும் கஷ்டப்பட்டார். இதுமாதிரிக் கஷ்டம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் என் பெயரைச் சுருக்க மாகக் கல்கி என்று வைத்துக்கொண்டேன். கல்கி என்ற பெயரின் ரகசியத்தை உடைத்துச் சொல்லும்படி ஜனாப் அஸிஸ் கேட்கிறார். ரகசியத்தை ரகசியமாய் வைத்திருக் கும் வரையில்தான் ரகசியம்."
மழுப்பலான அந்தப் பதிலைச் சொல்லிவிட்டு வேறு விஷ யங்களைப்பற்றிப் பேசலானார் கல்கி. தலைமை வகித்தவ ரும் சபையோரும் அதை அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனால் வீரகேசரிப் பத்திரிகையின் நிருபர் ஒருவர். கூட் டத்துக்குப் பிறகு கல்கியைத் தொடர்ந்து சென்று, கேள் விக்கு மேல் கேள்வி தொடுத்து. அந்த விந்தைப் பெயரின் ரகசியத்தை விண்டுரைக்கச் செய்தார்." 4
என "சுந்தா" எழுதியிருக்கிறார். திரு. கிருஷ்ணமூர்த்தி சூடியி ருந்த "கல்கி" என்ற புனை பெயரின் ரகசியத்தை விடுவிப்பதில் அஸிஸ் செய்த முயற்சியையும், அதற்குக் களமமைத்துக் கொடுத்த ஸாஹிறா.வின் முக்கியத்துவத்தையும் இக் குறிப்பு நன்கு காட்டுகிறது.
'இதுவரை கழிந்துபோன யுகங்களைத் தவிர்த்துப் புதிய யுகத் தைச் சிருஷ்டிக்கப் போவதாக ஒவ்வோர் இளம் எழுத்தா ளரும் எண்ணிக்கொண்டு எழுதுவது இயற்கை. அதுபோ லவே நானும் அந்தக் காலத்தில் ஒரு புது யுகத்தைச் சிருஷ் டிக்கப்போகும் பெரு வீரனாக என்னை நினைத்துக்கொண்டு, பகவானின் பத்தாவது அவதாரமும், புது யுகத்தைக் குறிப் பதுமான கல்கியென்ற புனைபெயரை அப்பொழுது வைத் துக்கொண்டேன். புதிய கருத்துக்களை வெளியிட்டு வாச கர்கள் மனதைப் புதிய திசையில் திருப்பி, புதிய யுகத் தைச் சிருஷ்டிக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன்தான் "கல்கி' என்ற புனை பெயர் பூண்டேனே தவிர, இதற்கு வேறு எந்த விதமான காரணமும் கிடையாது.' 8
என திரு. கிருஷ்ணமூர்த்தி வீரகேசரிக்குப் பேட்டி அளித்தபோது அஸிஸின் கோரிக்கை நிறைவேற்றிவைக்கப்பட்டது. வீரகேசரி
 

ஏ. எம். நஹியா | 95
நாளிதழில் 23-08-1950இல் பிரசுரமாகியிருந்த அப் பேட்டியின் முக்கிய பகுதி மேலே தரப்பட்டுள்ளது. இப் பேட்டியின் முழு விபரமும் "பொன்னியின் புதல்வன்' முதல் அத்தியாயத்தில் மறு பிரசுரஞ் செய்யப்பட்டுள்ளது. ஸாஹிறாக் கல்லூரியும் அளி ஸ"ம் தமிழுடனும் தமிழறிஞருடனும் தமிழ் வழிச் சர்ச்சைகளு டனும் கொண்டிருந்த தொடர்புகளைக் காட்ட இதுவொன்றே போதுமானது.
"செந்தமிழ் முரசு’ ஆசிரியர் திரு. ம. பொ. சிவஞானகிராமணி யார் 1950-51ஆம் கல்வி ஆண்டில் ஸாஹிறாஷக்கு விஜயம் செய்து சிறப்பித்தார். சுவாமி சுத்தானந்தபாரதியார் 1952 இலும், நகைச்சுவை எழுத்தாளர் "நாடோடி" 1953இலும் ஸாஹிறாக் கல்லூரித் தமிழ்ச் சங்கத்தில் சொற்பொழிவாற்றினர். பிதா தனிநாயகம் அடிகள் கூட இக்காலத்தில் கல்லூரித் தமிழ் மன்றத் தில் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது.
* தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு' என்ற தலைப் பில் 20-01-1953இல் பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் அளவிஸின் இக்பால் சங்கத்தில் சொற்பொழிவாற்றினார். "இலக்கியத்தில் புதுமை" என்ற தலைப்பில் ஜமால் முகம்மதுக் கல்லூரிப் பேரா சிரியர் அப்துல் கபூர் அவர்களின் சொற்பொழிவும் தமிழ்ச் சங் கத்தில் நிகழ்ந்தது.
சென்னை பல்கலைக் கழக நூலகப் பொறுப்பாளரும் இந்திய வாசிகசாலைகள் ஒன்றியத்தின் தலைவருமான டாக்டர் எஸ். ஆர்.ரங்கநாதன் ஸாஹிறாவக்கும் அதன் நூலகத்துக்கும் 1953இல் விஜயம் செய்து நூலகம் சம்பந்தமான பல பெறுமதியான ஆலோசனைகளை வழங்கி உதவினார். இக்பால் தின விழாவில், 22-04-1954இல், மெளலானா கலீலுற்றவிறமானின் சொற்
பொழிவு இடம்பெற்றது.
தமிழ்ச் சங்கத்தின் சார்பில் "கலை கலைக்காக" என்ற தலைப் பில், சிறந்த நடிகரும் நாடகப் புகழ் பெற்றவருமான டி. கே. சண்முகம் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். 2. ତ୪୪୮ ଗy அமைச்சரின் நிரந்தரக் காரியதரிசியாக அப்போது கடமையாற் றிய திரு. கே. ஆழ்வாப்பிள்ளையும் இதே வருடம் சொற்பொழி வொன்றை நிகழ்த்தியிருந்தார். மதுரைப் பல்கலைக் கழக இஸ்

Page 56
96 அஸிஸும் தமிழும்
லாமியச் சட்ட விரிவுரையாளர் ஜனாப் எம் எம். இஸ்மாயில் கூட அலிஸின் தலைமையில் இக்பால் சங்கத்தில் 1956 நவம் பர் 1ஆம் திகதி உரை நிகழ்த்தினார்.
ஸாஹிறாக் கல்லூரித் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா 1950 மார்ச் 17 ஆம் திகதி ஜனாப் எஸ். எம். ஹனிபா தலைமை யில் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது. அவ் விழாவின் பிர தான அம்சமாக ஸாஹிறாக் கல்லூரியில் 28 வருடங்களாகத் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணிபுரிந்த புலவர் மு. நல்ல தம்பி அவர்களுக்கு உபசாரப் பத்திரம் வாசித்து வழங்கப்பட் டது. இலங்கையின் சுதந்திரப் பேற்றை ஒட்டி அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றமை யைக் கெளரவிக்கு முகமாக இந்த உபசாரப் பத்திரம் வழங்கப் பட்டது. இந்த விழாவில் எ. எம். எ. அஸிஸ், பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் க. கணபதிப்பிள்ளை, கல்வி மந்திரியின் அப்போதைய பாராளுமன்றக் காரிய தரிசி திரு. கே. கனகரத்தினம், மேல் மாகாண வித்தியாதிபதி எஸ். யூ. சோமசுந்தரம், புலவர் மு. நல்லதம்பி, கல்லூரியின் மனேஜர் ஏ. எச். எம். இஸ்மாயில் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
கல்லூரித் தமிழ்ச் சங்கம் 1949 - 50 ஆம் வருட காலப் பகுதியில் கொண்டாடிய பாரதி விழாவில் பி. கந்தையா, வி. கணபதிப்பிள்ளை ஆகியோர் சொற்பொழிவாற்றினர். 1955 இல் நடைபெற்ற பாரதி விழாவில் மஹரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த கே. பி. இரத்தினம், முன் னாள் இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி நிருவாகி எஸ். சிவ பாதசுந்தரம், சங்கீத பூஷணம் திருமதி. பத்மா வெங்கடேஸ் வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 1956 செப்ரெம்பரி லும் ஸாஹிறா.வில் பாரதி விழா கொண்டாடப்பட்டது. திரு வாளர்கள் இலட்சுமண ஐயர், க. கணபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவற்றைத் தவிர, ஸாஹிறாக் கல்லூரி கிறசண்ட்லைற்" 1954 டிசம்பர் 2ம் நாள் ஆரம்பமானபோது பல தமிழ்ப் பிர முகர்களும் கலந்து அதனைச் சிறப்பித்தனர். டிசம்பர் 4 ஆம் திகதி அன்றைய கைத்தொழில், வீடமைப்பு அமைச்சர் சேர். கந்தையா வைத்தியநாதன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்

ஏ. எம். நஹியா | 97
பித்தார். டிசம்பர் 7 ஆம் திகதி அப்போது தபால் ஒலிபரப்பு அமைச்சர்ாக இருந்த திரு. எஸ். நடேசன் அவர்களினால் காணிவேல் நிகழ்ச்சி திறந்து வைக்கப்பட்டது. டிசம்பர் 15 ஆம் நாள் நிகழ்ச்சிகளுக்கு அப்போதைய தற்காலிக பிரதம நீதிபதி ஸி. நாகலிங்கம் அவர்களும், 16 ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சி களுக்கு சேர், அருணாசலம் மகாதேவாவும் பிரதம அதிதிக ளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்வாறு பல தமிழ் அறிஞரும் பிரமுகரும் ஸாஹிறாஷக்கு வருகை தந்தனர். பல விழாக்கள் கொண்டாடப்பட்டன.
மலர் வெளியீடுகள்
அஸிஸ் கால ஸாஹிறா.விலிருந்து பல மலர்களும் சஞ்சி கைகளும் தமிழில் வெளி வந்தன. இதுவரை வெளி வந்து கொண்டிருந்த கல்லூரியின் வருடாந்த வெளியீடான "The CLLLLLLL0LLLLL STTTT 0 0TTmTT S S LL S LL LLLLLLLLSS TTTT S S TTTTTT S TT யது. Az-Zahira வின் முதலாவது இதழை ஜனாப் அஸிஸ் 09, 12. 1949 இல் வெளியிட்டு வைத்தார். ஆண்டுதோறும் வெளிவந்துகொண்டிருந்த Az-Zahiraவில் தமிழுக்கும் பல பக் கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
தமிழ்ச் சங்கம் 05, 12. 1949 இல் "உதயம்" என்ற தமிழ்ச் சஞ்சிகையை வெளியிட்டது. போதனாசிரியர் எஸ். எம். கமா லுத்தீனும் தமிழ்ச் சங்சத் தலைவர் எஸ். எம். ஹனீபாவும் இணைந்து வெளியிட்ட இச் சஞ்சிகை கல்லச்சுப் பத்திரிகை யாக சில காலம் தவணைக்கொரு முறை வெளிவந்தது.
சில தமிழ் மாணவர் சேர்ந்து "தமிழ் ஒளி' என்ற சஞ்சி கையை வெளியிட்டனர். அச்சிட்டு வெளியிடப்பட்ட இச் சஞ் சிகை தொடர்ந்து வெளிவரவில்லை. ஆயினும் அன்றைய ஸாஹிறா மாணவரின் தமிழார்வத்தை இவ்வெளியீடு பிரதி பலித்தது.
பாக்கித்தானின் நிதியமைச்சராகவிருந்த கெளரவ செளத்ரீ முகம்மது அலி அவர்கள் 1952 ஏப்ரல் 21 ஆம் திகதி இக்பால் தினத்தில் லாகூரில் ஆற்றிய உரையை அளபீஸின் தலைமையில் இயங்கிய இக்பால் சங்கம் தனது 2வது பிரசுரமாக வெளியிட்

Page 57
98 / அஸிஸும் தமிழும்
டது. எஸ். எம். கமாலுத்தீன் அவர்களினால் அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இக்பால் காட்டிய வழி" என்ற பெய ரில் 21, 04, 1954 இல் வெளியிடப்பட்டது.
இவற்றைவிட, அஸிஸ் அவர்களின் "மொடோ ஸ்வீற் றைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியின் ஆண்டு மலர்கள் கூட இங்கு குறிப்பிடப்பட வேண்டியன. ஸாஹிறா.வின் பிரசுரங்களாக இவை வெளிவராத போதும் ஸாஹிறா.வின் பிரசுரங்களுடன் இணைத்துப் பார்க்கப் பட வேண்டியன. ஆங்கிலத்திலும் தமிழிலும் பல விடயங் களைத் தாங்கி வெளிவந்து கொண்டிருந்த இம் மலர்களில் சகாய நிதித் தலைவராக விளங்கிய அளtஸின் அறிக்கைகள்,
கோரிக்கைகள் போன்றனவும், பல தமிழ்க் கட்டுரைகளும், இஸ்லாம் சம்பந்தமான வினாக்கள், விடயங்களும் இடம் பெற்றன.
தமிழ்ச் சங்கமும் இக்பால் சங்கமும் இணைந்து தமிழ் வளர்த்த ஸாஹிறாக் கல்லூரியில் வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் பிரசுரங் களெல்லாம் ஸாஹிறாவின் தமிழ்ப் பணிக்குத் துணை நின்றன. ஊக்குவித்துத் துரிதப்படுத்தின.
தமிழ் நாடக மன்றம்
முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழின் வளர்ச்சிக்கும் ஸாஹி றாவில் குறிப்பிடத் தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்துறையில் 1950 அளவில் இலங்கை கலாசாரப் பேரவையின் பல முதற் பரிசுகளைத் தட்டிக் கொள்ளும் அளவுக்கு ஸாஹி றாக் கல்லூரி உன்னத நிலையில் இருந்தது.
தமிழ்ச் சங்கத் தலைவராக எஸ். எம். ஹனிபாவும், உப தலைவ ராக வி. ஏ. கபூரும், செயலாளராக எச். எம். ஹாஷிமும் செயற்பட்ட 1949- 50 ஆம் வருட தமிழ் மன்ற காலத்தில் , ஜனாப் எஸ். எம். கமாலுத்தீன் எழுதிய "திரை மறைவில்" நாடகம் நடிக்கப்பட்டது. ஜனாப் கமாலுத்தீன் மேற்பார்வை யாளராகக் கடமையாற்றிய இக்காலத்தில் மேடையேறிய இந் நாடகம் ஸாஹிறாக் கல்லூரியின் தமிழ் நாடக வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாகும்
 

ஏ. எம் நஹியா | 99
ஸேர் செய்யித் அஹமத் கான்' என்ற தமிழ் நாடகத்தை ஜனாப் எம். ஏ. முஹம்மது ஆசிரியர் எழுதித் தயாரித்து 1950 இல் மேடையேற்றினார். இந்நாடகத் தயாரிப்பில் அக்காலை ஸாஹி றாவில் ஆசிரியராகக் கடமையாற்றிய திரு. நவரத்தினமும் உதவியிருந்தார். காதர் எம். அலி, ஏ. எச். எம். அஸ்வர் போன் றோர் இந்நாடகத்தில் நடித்தனர். இக்கால கட்டத்தில் தான் ஸாஹிறாக் கல்லூரிக்கு கலாசாரப் பேரவையின் நாடகப் பரிசு கள் கிடைத்தன. அப்போது ஸாஹிறா.வில் ஆசிரியப் பணிபுரிந்த எம். ஏ. முஹம்மது அவர்கள் ஸாஹிராவின் சார்பில் இரு தட வைகள் நாடகப் பிரதிகளை கலாசாரப் பேரவைக்கு எழுதி அனுப்பியிருந்தார். அவை இரண்டுமே பேரவையின் முதற் பரிசு களைத் தட்டிக் கொண்டன. அவற்றுக்கான பரிசுப் பணமும், கிண்ணங்களும் ஸாஹிறாக் கல்லூரிக்கே வழங்கப்பட்டன.
ஸாஹிறாக் கல்லூரித் தமிழ் நாடகமன்றம் 1955 இல் தொடங் கப்பட்டது. இதன் போஷகராக அளவீஸ் அவர்களே விளங்கினார். எச். எம். ஷரீப் இம்மன்றத்தின் செயலாளராகவிருந்தார். "சீஸ் லெவ்வை நானா' போன்ற நாடகங்கள் இம்மன்றத்தி னால் மேடையேற்றப்பட்டன. இவ்வாறு தமிழ் நாடக வளர்ச் சியிலும் அஸிஸ் கால ஸாஹிறா. தனது பங்களிப்பைச் செய் திருக்கிறது.
போட்டிகளில் முதன்மை
ஸாஹிறா மாணவர் கலந்துகொண்ட போட்டிகளிலெல்லாம் அவர்கள் பெற்றுக்கொண்ட பரிசுகளும் பாராட்டுகளும் ஸாஹி றாவுக்குப் பெருமை தந்தன. இவ்வாறான ஒரு காலமும் நிலை யும் இருந்தமைக்கு ஸாஹிறா.வின் தரமும் சரியான வழி நடத்து கையும் காரணங்களாக அமைந்தன:
கொழும்பு விவேகானந்த சபையினரால் நடாத்தப்பெற்ற நாவ லர் பேச்சுப்போட்டியில் பல பிரபல கல்லூரிகள் கலந்து கொண் டன. 1949-50 ஆம் வருட தமிழ்ச் சங்க காலத்தில் நடை பெற்ற இப்பேச்சுப் போட்டியில் ஸாஹிறா மாணவர் ஷிப்ளி காசீம் 2 வது பரிசைத் தட்டிக்கொண்டார்.
விவேகானந்த சபையினரால் 02-12-1950 இல் நடாத்தப்பட்ட பரிசுப் போட்டியில், மேற்பிரிவில் முதலாம் பரிசை பொ. கணே

Page 58
100| அனtஸ"சம் தமிழும்
சன் என்பவரும் இரண்டாம் பரிசை எஸ். எல். எம். ஹனிபா வும் பெற்றனர். இருவருமே ஸாஹிறா மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வானொலி நடாத்திய பொது அறிவுப் போட்டியில் கலந்துகொண்ட ஸாஹிறாக் கல்லூரித் தமிழ்ச் சங்க அங்கத்த வர் எஸ். தியாகராஜா முதற்பரிசைத் தட்டிக்கொண்டார். 1953-54 ஆம் வருட தமிழ்ச்சங்க காலத்தில் இப்போட்டி நடை பெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர் வி. செல்வநாயகத் தின் பாராட்டையும் இம்மாணவன் பெற்றுப் பெருமையடைந் தார். -
இலங்கை வானொலி அகில இலங்கை ரீதியில் தமிழில் நடாத் திய 'உமக்குத் தெரியுமா?" போட்டியில் கலந்துகொண்ட ஸாஹிறா மாணவர், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி யைத் தோற்கடித்து சம்பியன் விருதைப் பெற்றுக்கொண்டனர். எஸ். எச். எல். அலியார் போன்றோர் இப்போட்டியில் ஸாஹி றாவின் சார்பில் பங்கு பற்றினர். திரு. சண்முகரத்தினம் பொறுப்பாசிரியராகவிருந்த காலத்தில், அதாவது, 1954 ஜூலை 24 ஆம் திகதி இது நடந்தது.
இலங்கை வானொலி நடாத்திய தமிழ் நாவன்மைப் போட்டி யிலும் ஸாஹிறா மாணவர் மீண்டுமொரு முறை 1954 ஜூலை 29 ஆம் திகதி சம்பியன் விருதைத் தட்டிக்கொண்டனர்.
அகில இலங்கை ரீதியில் 20 ஆகஸ்ட் 1955 இல் ஸாஹிறாக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் நாவன்மைப் போட்டியில் முன் னாள் மாணவன் எஸ். இஸட் மஷார் மெளலானா முதலாம் இடத்தைப்பெற்றார். முன்னாள் பிரதம நீதியரசர் ஸி. நாக லிங்கம் மெளலானா வைப் புகழ்ந்து பேசி தங்கப் பதக்கத்தை யும் அணிந்து விட்டார். ஸாஹிறா மாணவர் இவ்வாறு போட்டி களில் வெற்றியீட்டி, ஸாஹிறா வுக்கும் அஸிஸுக்கும் புகழ்தேடிக் கொடுத்தனர்.
விவாத மேடைகளில் ஸாஹிறா மாணவர்
ஸாஹிறா மாணவரின் விவாதத்திறமை அளவிஸ் காலத்தில் நன்கு வெளிப்பட்டுத் தோன்றியது. இக்கால ஸாஹிறாவின்

ஏ. எம். நஹியா | 101
விவாத மன்றத்தில் வளர்ந்தவர்கள் இன்று பிரபல சொற்பொழி வாளர்களாக, சமூகத் தலைவர்களாக, அரசியல் வாதிகளாகத் திகழ்கின்றனர்.
கொழும்பு றோயல் கல்லூரி மாணவருடன் ஸாஹிறாக் கல்லூரி மாணவர், "இலங்கை அதன் முன்னேற்றத்துக்காக மேல் நாடு களைப் பின்பற்ற வேண்டும்" எனும் தலைப்பில் ஒரு விவா தத்தை நடாத்தினர். 1953-54 ஆம் ஆண்டுத் தமிழ் மன்ற காலத்தில் இவ்விவாதம் நடைபெற்றது. றோயல் கல்லூரியில் அப்போது ஆசிரியராகப் பணிபுரிந்தவரும் பிற்காலை கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்ந்தவருமான திரு. கி. இலட்சுமண ஐயர் தனது தலைமை உரையில் ஸாஹிறாக் கல்லூரி மாண வரின் நாவன்மையையும் பேச்சு நடையழகையும் புகழ்ந்து ($usମିଶ୍Trtff.
"ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மதம் அவசியமா?" என்ற தலைப்பில் சைவ மங்கையர் வித்தியாலய மணவிகளுடன் ஸாஹிறா மாணவர் நடாத்திய விவாதமும் அக்கால (1953-54) ஸாஹிறா மாணவரின் தமிழார்வத்தையும் திறமையையும் நன்கு காட்டுவதாயமைந்தது.
ஸாஹிறாக் கல்லூரியில் 1955 களில் கூட தமிழ் விவாதக் குழு வொன்று சிறப்பாகச் செயற்பட்டதாகத் தெரிகிறது. எச். எம். ஷரீப் போன்றோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். அக் கால ஸ் ஹிறா மாணவர் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்ற போது அங்கும் தங்களின் திறமையைக் காட்டி தமக்கெனத் தனியிடம் பிடித்துக்கொண்டதை நாமறிவோம். இந்த மாண வர் கல்லூரி மட்டத்திலிருந்து விடுபட்டு தேசிய மட்டத்தில் செயற்படத் தொடங்கியபோது ஸாஹிறா மிகு புகழ் பெற்றது. அஸிஸ் பெருமை பெற்றார்.
தமிழ்க் கதாபிரசங்கக் குழு
தமிழ்க் கதாப்பிரசங்கக் குழு 27-07-1949 இல் ஜனாப் அஸிஸ் அவர்களினால் ஸாஹிறாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக் கப்பட்டது. நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஸாஹிறாக்

Page 59
102 அஸிஸும் தமிழும்
கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய திருச்சரிதை” என்ற வானொலி நிகழ்ச்சியுடன் இக்கதாப்பிரசங்கக் குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது. அன்றைய நிகழ்ச்சியின் போது அதிபர் அஸிஸ் முகவுரை நிகழ்த்தினார். ஆசிரியர் எஸ். எம். கமாலுத்தீன் அதுபற்றிச் சிறிது பேசினார். ஏ. ஜி. எம். சாகிர்கான், எம். வை. எம். ஹ"தைபா, எம். ஐ. எம். முதஸ்ஸிர் என்போர் கதாப்பிரசங் கம் செய்தனர். முது தமிழ்ப் புலவர் பண்டிதர் மு. நல்லதம்பி அவர்கள் இந்நிகழ்ச்சிக்குப் பாட்டுக்களை எழுதி உதவியிருந்தார். ஆரம்ப உரை நிகழ்த்திய அஸிஸ், தனது உரையில், கதாப் பிரசங்கத்தின் பயன்பாடுகள் பற்றித் தெளிவான விளக்கமளித் தார். கதாப்பிரசங்கமென்றால் என்ன? அதன் பயன்பாடுக ளென்ன? முஸ்லிம்கள் கதாப்பிரசங்கம் செய்யலாமா? என்பன போன்ற வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடை காண்பன வாக அமைந்திருந்தது அவரின் உரை.
* தமிழ் இலக்கியத்திலுள்ள சரிதங்களைக் கற்றோரும் அல்லாதவரும் இலகுவாய் அறிந்துகொள்ளக் கூடியதாக எழுதப்பட்டிருக்கும் புராணங்கள் அநேகம். இவற்றை மக் ளுக்கு எடுத்துக் கூறுவதற்காகக் கையாளப்பட்ட சிறந்த தோர் வழிதான் கதாப்பிரசங்கம். அரிய விஷயங்களைச் சங்கீதத்துடன் கலந்து கூறினால் யார்தான் விரும்பமாட் டார்கள். எனவே, பெரியோர்களின் அருங்குணங்களையும் தியாகங்களையும் வாழ்க்கையின் உன்னத இலட்சியங்களை யும் சங்கீதம் கலந்த கதைப் பிரசங்கங்கள் மூலம் எடுத்துச் சொல்லி மக்களின் பண்பை உயர்த்துவதற்கு இம்முறை கையாளப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் வழங்கி வந்த இம்முறையை எங்கள் முஸ்லிம்களும் கைக்கொண்டிருக்கி றார்கள். தங்களுடைய இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு முரண்படாத எந்தக் கலையையும், எந்தச் சிறந்த முறை களையும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப் பின்வாங்குவதில்லை. நாங்கள் நெடுநாட்களாக எண்ணிவந்துள்ள ஒரு திட்டத் தின் ஆரம்பந்தான் இன்று நீங்கள் கேட்கப்போகும் நிகழ்ச்சி. எமது இஸ்லாமிய உலகம் நிலை பெறுவதற்குக் காரணர்களாயிருந்த பெரியார்களின் சரித்திரங்களை மக்கள் மனதில் இலேசாகப் பதியக் கூடியதாகவும், யாவ ரும் விரும்புக் கூடிய எளிய நடையுள்ளதாயும், சங்கீதம்
 
 

ஏ. எம் நஹிய: | 103
கலந்ததாயும், எல்லோருக்கும் பயன்படும் முறையில் அளிக்க வெண்டுமென்பதே எங்கள் பேரவா' 8
என்பது அஸிஸ் அன்று நிகழ்த்திய உரையின் சாரமாகும். இஸ்லாத்துக்கு முரண்படாத எக்கலையையும் முஸ்லிம்கள் ஏற்கலாம் என்ற தன்மையில் அவரின் உரை அமைந்திருநீ தது, தமிழ் நாட்டில் வழங்கி வந்த இக்கலையை ஈழத்து முஸ்லிம் களிடையும் அறிமுகப்படுத்த விரும்பிய அஸிஸ் ஸாஹிறாவினூ டாக அதனைச் சாதிக்கவிழைந்தார்.
"திரு நபி (ஸல்) அவர்களின் சரிதம் நிகழ்ச்சியை, இலங்கை வானொலியில் நிகழ்த்தியதுடன் இக் கதாப் பிரசங்கக் (5(ԼՔ நின்றுவிடாது தொடர்ச்சியாகப் பல கதாப்பிரசங்கங்களை இலங்கை வானொலியில் நிகழ்த்திப் பாராட்டுப் பெற்றது.
அவ்வாறு நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகள் வருமாறு:-
1. நபி இபுறாகீம் (அலை) அவர்களின் சரிதம்
盔。 அல்-மிஃறாஜ் (மிஃறாஜின் மகிமை)
3. உத்தம வீரன்
4. ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி)
* றமழான் சிந்தனைகள்
6. தியாகத் திருநாள் 7. இடாம் ஹசைன் (ரலி) அவர்களின் சரிதம் - இந்நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் ஜனாப் அஸிஸ் பல ஆலோ சனைகளைக் கூறியதாக நிகழ்ச்சித்தயாரிப்பாளர் ஜனாப் எஸ். எம். சமாலுத்தீன் தெரிவிக்கிறார். முது தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி அவர்கள் பாடல்களை எழுதி உதவியதாகவும், பிற்காலத்தில் ஆசிரியர் எம். ஏ. முஹம்மது இதனைச் செய் ததாகவும், மெளலவி எம். இ. அபுல்ஹசன், ஜனப் ஏ. ஸி. ஏ. வதுாத் ஆகியோர் இந்நிகழ்ச்சிகள் வெற்றிபெறப் பல வழிக வில் உதவியதாகவும் கமாலுத்தீன் கூறுகிறார்.
ல கதாப்பிரசங்கங்களை வெற்றிகரமாக நிகழ்த்திப் பலரின் ாராட்டுக்களைப் பெற்ற இக்கதாப் பிரசங்கக் குழுவில் அதிபர் அஸிஸ், ஆசிரியர் எஸ். எம். கமாலுத்தீன் ஆகியோருடன் ர, எல். எம். யூசுப், எம். எச். குத்தூஸ், எம். எஸ். எம்.

Page 60
104 அஸிஸும் தமிழும்
நளீம், வி. ஏ. கபூர், ஏ. ஜி. எம். ஷாகிர்கான், எம். வை. எம். ஹ"தைபா ஆகிய மாணவரும் இடம்பெற்றிருந்தனர்.
இவ்வாறு பல வழிகளில் தமிழுக்குத் தனது பங்களிப்பைச் செய்த ஸாஹிறாக் கல்லூரித் தமிழ்ச் சங்கம் அதன் வருடாந்த விழாவை 1950 மார்ச் 17ஆம் திகதி கொண்டாடியபோது அப்போதைய இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரி யர் கலாநிதி க. கணபதிப்பிள்ளையும் கலந்துகொண்டு கருத் துரை நிகழ்த்தினார். அன்று அவர் கூறிய வார்த்தைகளில் பொதிந்திருந்த கருத்துக்கள் ஸாஹிறாவின் தமிழ்ப் பணிக்கும் அஸிஸின் தமிழார்வத்துக்கும் கிடைத்த ந ல் ல தொ ரு புகழாரமாகும்.
ஸாஹிறாக் கல்லூரியில் பண்டிதர் நல்லதம்பி அவர்கள் படித்துக்கொடுத்த காலத்திலே சில வேளைகளில் நான் இங்குவந்ததுண்டு. அக்காலத்திலே ஆங்கிலம் அதிகம் செல் வாக்குடையதாயிருந்தது. அந்நிலையிலும் இங்கு தமிழ்ச் சங்கம் ஒன்று நடந்து வந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். திரு. கமால்தீன் போன்ற மாணவர்கள் சர்வகலாசாலையில் தமிழையும் ஒரு பாடமாக எடுத்ததைக் கண்டு ஸாஹிறாக் கல்லூரியில் தமிழ் எந்த நிலையில் இருக்கிறதென்பதை நான் அறிந்துகொண்டேன். தமிழ்வளர்ச்சிக்கு நாம் எம்மா லியன்றவரை முயற்சி செய்யவேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் செய்த தொண்டு அளப்பரியது. இன்றும் அவர்கள் செய்து வருகிறார்கள். அதற்கு ஸாஹிறா போதிய ஆதாரமாகும். . உங்கள் அதிபர் தமிழில் அதிக ஆர்வமும் பற்றுமுள்ளவர். அவரது உதவியுடன் தமிழ் இயக் கம் வளர்ச்சியடைந்து தமிழுக்குப் பெருந்தொண்டு புரியும் என்று நான் எதிர்பார்க்கிறேன்." ?
பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் இவ்வார்த்தைகள் வெறும் பசப்பு வார்த்தைகளல்ல. ஜீவனுள்ளவை, அர்த்த புஷ்
itif}"Göf6ö}3) # »
இலங்கை கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கியக் குழுவி 1970-76 ஆம் வருட காலப் பிரிவில் 10 பேர் உறுப்பினரா விருந்தனர். அஸிஸின் இனிய நண்பர் பேராசிரியர் க. கைலாச் பதி தலைவராகவிருந்தார். எஸ். எம். கமாலுத்தீன், பேராசிரி

ετ. ετιο, βωδιμτ | 105
யர் கா. சிவத்தம்பி, எம். எம். எம். மஃறுாப் மூவரும் ஏனை யோருடன் இக்குழுவில் இடம் பெற்றனர். இம்மூவரும் ஸாஹி றாவின் மாணவராகவும் ஆசிரியராகவும் விளங்கியவர்கள். சிவத்தம்பியும் மஃறுTபும் கமாலுத்தீனிடம் தமிழ் பயின்றவர் கள். ஸாஹிறா.வின் தமிழ்ப் பண்ணையில் வளர்ந்த இவர்கள் இவ்வுயர் தேசிய தமிழ் இலக்கியக் குழுவில் இடம் பெற்றுப் பணி செய்ததானது ஸாஹிறாஷக்குப் பெருமை தந்தது, பேரா சிரியர் கணபதிப்பிள்ளையின் கணிப்பும் எதிர்பார்ப்பும் பிழை போகவில்லை என்பதைக் காட்டுவதாயமைந்தது.
அஸிஸின் ஸாஹிறா. இவ்வாறு பல வழிகளில் தமிழுக்குத் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறது. ஆசிரியரும் மாணவரும் அதிபர் அஸிஸின் தலைமையில் ஏற்படுத்தி வைத்த ஸாஹிறா வின் தமிழ்ப் பாரம்பரியம் இன்றுவரை பெருமைமிக்கதாக விளங்குகிறது. தென்னிந்தியத் தமிழறிஞரினதும் உள்நாட்டுப் பிரமுகரினதும் ஸாஹிறா. வருகைகளும் சொற்பொழிவுகளும், தமிழ் விழாக்கள், மலர் வெளியீடுகள், கதாப்பிரசங்கங்கள், விவாதங்களில் மாணவர் காட்டிய திறமை, போட்டிகளில் அவர்கள் பெற்ற பரிசுகளும் பாராட்டுதல்களும் ஸாஹிறாவக் குப் புகழ் தேடிக்கொடுத்தன. ஸாஹிறா.வின் தமிழ் த் தொண்டை உலகறியச் செய்தன. ஸாஹிறா.வில் அஸிஸின் காலத்தில் எடுக்கப்பட்ட தமிழ் முயற்சிகள் அனைத்தும், அவற்றுக்கு எவர் தான் பொறுப்பாக இருந்தபோதும், ஏதோ ஒருவகையில் அஸிஸின் தமிழ்ப் பணியுடன் சென்று சங்கமித்து விடுகின்றன. அந்த வகையில் அஸிஸின் தமிழ்ப்பணி என்று கூறும் போது இவையெல்லாமே இணைத்துப் பார்க்கப்பட வேண்டியன வாகின்றன. -
1. சிவத்தம்பி, பேராசிரியர் கார்த்திகேசு ஸாஹிறா.வின் தமிழ்ப் பாரம்பரியம்" வளர்பிறை, 1977-78 (ஸாஹிறாக் கல்லூரி 85 ஆவது ஆண்டு நிறைவு மலர்) ஆ. முகம்மது நகியா L13: I
2. Az-Zahira - 1951
Zahira College, Colombo 10. Kamaldeen S. M. (Chief Editor) Haniffa S. M. (Editor) P 176

Page 61
3.
6.
7.
106 அஸிஸும் தமிழும்
ifଗହୁଁ!". நூருல் ஆயின் * வானொலி முஷ்லிம் சேவையின் முதல் சமூக நாடகம் ւյսյ6ն" *ଷ୍ଟ
சிந்தாமணி, 27 ஒக்டோபர் 198
"சுந்தா "பொன்னியின் புதல்வன்" கல்கி
சி. ராஜேந்திரன் (ஆசிரியர்) பி. எஸ். மணி (உதவி ஆசிரியர்)
சென்னை, * 04 ஆகஸ்ட் 1974 葛 1 لأنه سي 0ته هي 1_L
ைெடி
23 ستدا 31 \| . نہیLJ
Az-Zahira - 1951 Zahira College, Colombo-10. Kamaldeen S. M. (Chief Editor) Haniffa S. M. (Editor) PP 168 - 169
ைெடி P 170

- மகாநாடுகளில் அவலிஸ்
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் குறிப்பாக 5 ஆம், 6 ஆம், 7 ஆம் தசாப்தங்களில் பல துறைகளிலும் மிகச் சிறப் புற்று விளங்கிய ஒரேயொரு ஈழத்து முஸ்லிம் தமிழறிஞர் எ. எம். எ. அஸிஸ் அவர்களே. அவர் கலந்து கொள்ளாத மகாநாடுகள் பூரணத்துவமுடையதாகக் கருதப்படவில்லை. தமி ழாராய்ச்சி மகாநாடுகள், இஸ்லாமியத் தமிழிலக்கிய மகாநாடு கள், கல்வி, சமய, மகாநாடுகள் இவ்வாறான எந்த மகாநாடுக ளாயினும் அஸிஸின் பிரசன்னம் மகாநாட்டு அமைப்பாளருக்குப் பெரும் கெளரவமாக இருந்த காலம் அது. உள்நாட்டு விழாக் களும் வெளிநாட்டு மகாநாடுகளும் அஸிஸை அழைத்துப் பெருமை பெற்றன. அந்த அளவுக்கு அஸிஸின் புகழ் பரவி யிருந்தது.
அஸிஸின் தென்னிந்தியது மலேசியத் தொடர்புகள் தமிழ்மொழி, சமயம், கல்வி சம்பந்தமானதாகவிருந்தன. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி மகாநாட்டை 1953 செப்ரம்பரில் சென்னையில் அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கும் சந்தர்ப்பம் அஸிஸுக்குக் கிட்டி யது. அஸிஸ் கல்விக்காற்றிய பணியைக் கெளரவிக்கு முகமாக இம்மகாநாடு அவரைப் பொ ன் னா டை போர்த் தி க் கெளரவித்தது,
தென்னிந்திய முஸ்லிம் கல்விக் கழகத்தின் பொன்விழா நிகழ்ச்சி கள் சென்னையில் நடைபெற்றபோது, அதன் இரண்டாம் நாள்

Page 62
108 / அஸிஸும் தமிழும்
நிகழ்ச்சிகளுக்கு அஸிஸ் தலைமைதாங்கினார்; 1955 பெப்ருவரி 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முஸ்லிம் தமிழ்க் கவிஞர் தினமாக இவ்விரண்டாம் நாள் நிகழ்ச்சி கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அறபுத் தமிழ் பற்றியும் அதைப்பேணிவளர்க்க வேண்டிய முஸ்லிம்களின் கடமை பற்றி யும் இம்மகாநாட்டில் உணர்ச்சி ததும்பப் பேசினார் அஸிஸ்,
அகில இலங்கை சோனக ஆசிரியர் சங்க மகாநாடு 1953 ஆகஸ் டில் நடைபெற்றபோது sy Gyó'GYI)-elb உரையாற்றினார். சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கரா, சேர். ராசிக் பரீத், டாக்டர் எம். ஸி. எம். கலில், எச். எஸ். இஸ்மாயில், கேட் முதலியார் எம். எம். இப்றாஹீம், ஐ. எல். எம். மஷ"சர் ஆகியோரும் இம் மகாநாட்டில் சொற்பொழிவாற்றினர்,
முஸ்லிம் வானொலிக் கலைஞர் சங்கத்தின் 2 வது இசைவிழா 1953 பெப்ருவரி 14 ஆம் திகதி ஸாஹிறாக் கல்லூரியில் நடை பெற்ற போது அஸிஸும் உரை நிகழ்த்தினார்.
"முஸ்லிம்கள் மத்தியிலே போதிய ஆற்றல் மிக்க மாணவ
மானவிகள் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் தக்க ஊக் கம் அளிக்கவேண்டியது நமது கடமையாகும். அதற்காக ஒரு இசை நிலையம் அத்தியாவசியம் வேண்டும். இஸ்லா மிய கலாசார அறிவும் சங்கீதத் திறமையும் வாய்ந்த ஆசிரி யர்களை நாம் வருவித்து நமது மத்தியிலே இசைக்கலை வளர்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வகையிலே முஸ்லிம் வானொலிக் கலைஞர் சங்கம் முயற்சிகள் எடுக்க வேண்டும்.'
என கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு விவேகானந்த அசபையினர் 1953 நவம்பர் 28 ஆம் திகதி ஆறுமுக நாவலர் குருபூசைத் தினத்தை விவேகானந்த சபை மண்டபத்தில் கொண்டாடிய போது அஸிஸின் சொற்பொழி வும் இடம்பெற்றது. வழக்கறிஞர் வே. அ. கந்தையா தலை மையில் நடைபெற்ற இவ்விழாவில் அஸிஸ், "நாவலரும் கல்வி யும்" என்ற பொருளில் ஆய்வுரை செய்தார். 1990-12-18ஆம்

ஏ. எம் நஹியா | 109
திகதி அதே மண்டபத்தில் நடைபெற்ற ஆறுமுகநாவலரின் நூற்று அறுபத்தெட்டாவது ஆண்டு ஜயந்தி தின நிகழ்ச்சிகளில், அஸிஸுக்கு வழங்கப்பட்ட அதே தலைப்பில் நான் பேச நேர்ந்தபோது, விவேகானந்த சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, முன்னர், அஸிஸ் நிகழ்த்திய சொற்பொழிவுகள் பற்றி தலைவர் வைத்தியகலாநிதி க. வேலாயுதபிள்ளையும் செயலாளர் க. இராஜபுவனேஸ்வரனும் அங்கு பிரசன்னமா யிருந்த சகலருக்கும் எடுத்துச் சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தனர். அஸிஸுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த அச் சந்தர்ப்பத்தை நினைத்து நானும் பெருமிதமடைந்தேன்.
ஸாஹிறாக் கல்லூரி ஆரம்பப் பிரிவு மைதானத்தில் அமைவுற்ற “மாதவி அரங்கில்" ஆரம்பமான திருக்குறள் மன்றத்தின் 2வது திருக்குறள் மகாநாட்டுக்குத் தலைமை தாங்கிய அஸிஸ் முன் னுரை நிகழ்த்தினார். இலங்கை வானொலியின் அன்றைய தமிழ் நிகழ்ச்சி அதிகாரி திரு. சோ, சிவபாதசுந்தரம் தொடக்கி வைத்த இம்மகாநாட்டில் திரு. சி. இராமலிங்கம், சென்னை பச்சை யப்பன் கல்லூரித் துணைப் பேராசிரியர் திரு. க. அன்பழகன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
அரசினர் இஸ்லாமிய ஆசிரியர் மகாநாடு ஜனாப் எ. எ. எ. ஜிப்ரி அவர்களின் தலைமையில் 1954 ஜனவரியில் நடைபெற்றபோது ஜனாப் அஸிஸும் சேர் ராசிக் பரீதும் சிறப்புரை நிகழ்த்தினர். அகில இலங்கை வை. எம். எம். ஏ.யின் ஏற்பாட்டில், 1954ஆம் ஆண்டைய மீலாத் விழா நிகழ்ச்சிகள் மருதானை ஜூம் ஆப் பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றபோது, ஜனாப்கள் எம். அப்துல்வஹஹாப், ஆ. கா. அ. அப்துஸ்ஸமத் ஆகியோரும் அஸி ஸும் பெருமானார் பற்றிப் பேருரை நிகழ்த்தினர். பளீல் ஏ. கபூர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
அகில இலங்கை ஆசிரியர் சங்க மகாநாடு 1955 ஏப்ரல் 9ஆம் திகதி கொம்பனித் தெருவில் நடைபெற்றபோது அன்றைய ஸ்தல ஸ்தாபன மந்திரி டாக்டர் சி. டபிள்யூ. டபிள்யூ. கன் னங்கரா, தொழில் அமைச்சர் டாக்டர் எம். ஸி. எம். கலில், ஏ. பி. தர்மவர்த்தன ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அஸி ஸும் கருத்துரை வழங்கினார்.

Page 63
110 | அளnஸ"சம் தமிழும்
அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் பழைய மாணவர் சங்க 2ஆவது மகாநாட்டின் கைப்பணி சித்திரக் கண்காட்சியை ஜனாப் அஸிஸ் திறந்துவைத்து தொடக்க உரை நிகழ்த்தினார், 1955 ஏப்ரல் 8ஆம் திகதி அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற் சிக் கலாசாலை மண்டபத்தில் இச் சொற்பொழிவு இடம்பெற்
م ألقي D
அரசினர் முஸ்லிம் தமிழாசிரியர் சங்க மகாநாடு 1956 செப்டம் பரில் நடைபெற்ற போது முஸ்லிம் தமிழ்ப் பாடசாலைகளின் நிலை பற்றி சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.
ஏறாவூர் முஸ்லிம் இயக்கத்தினர் 1956 அக்டோபர் 5ஆம் திகதி முதல் 1956 அக்டோபர் 7ஆம் திகதி வரை நடாத்திய குர்ஆன் மகாநாடு அன்றைய சபாநாயகர் எச். எஸ். இஸ்மாயில் அவர் களினால் தொடங்கிவைக்கப்பட்டது. 2ஆம் நாள் கூட்டத்துக்கு தலைமைதாங்கிய ஜனாப் அஸிஸ், "திருநபியும் திருமறையும் என்ற பொருளில் கருத்துரை வழங்கினார்.
ஸாஹிறாக் கல்லூரியில், 1958 ஜூன் 28ஆம் திகதி நடைபெற்ற முஸ்லிம்களின் போதனா மொழி பற்றிய கருத்தரங்கின் 2ஆம் நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அஸிஸ், இலங்கை முஸ் லிம்களின் போதனா மொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்துப் பேசினார். டாக்டர் மஹ்மூத் ஹசனின் தலைமையில் இக் கருத்தரங்கு நடைபெற்றது.
காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இலங்கையில் வாழ்ந்த இந்திய முஸ்லிம் கள் கொழும்பு மாநகர சபையில் 28-09-1958இல் மாபெரும் வரவேற்பொன்றை அளித்தனர். பெரியார் ரி. பி. ஜயாவின் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் இஸ்மாயில் ஸாஹி பின் தியாகப் பண்பையும் தலைமை ஆற்றலையும் புகழ்ந்து சிறப் புரை நிகழ்த்தினார் அஸிஸ்.
மத்திய மாகாண சைவ மகாசபையினரால் 1965 ஜுலை மாதம் 19ஆம் திகதி கண்டி புஷ்பதானக் கல்லூரி மண்டபத்தில் விபு லானந்த அடிகளார் விழா கொண்டாடப்பட்டபோது ஜனாப் எ. எம். எ. அஸிஸ் அவர்களும் அதில் கலந்துகொண்டு சொற் பொழிவாற்றினார். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
 

ஏ. எம். நஹியா / 111
செ. இராசதுரை (பின்னர் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்) யோகிராஜ் சுவாமி சச்சிதானந்தன், கலாநிதி சு. வித்தியானந் தன் ஆகியோரும் இவ் விழாவில் உரைநிகழ்த்தினர்.
"அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்ற தலைப்பிலான கட்டுரையொன்றை மருதமுனையூரில் 1968 ஜாசலை 2 ஆம் திகதி நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவுக்கு அனுப்பி யிருந்தார் அஸிஸ். அவரது கட்டுரை கலாநிதி ம. மு. உவைஸ் அவர்களினால் அங்கு படிக்கப்பட்டது.
மலேசியப் பிரதமர் துங்கு அப்துல்றஹமான் அங்குரார்ப்பணம் செய்துவைத்த முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டி லும் ஜனாப் அஸிஸ் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை படித் தார். 1966இல் கோலாலம்பூரில் நடைபெற்ற இம் மகாநாடு தமிழறிஞர் எக்ஸ். எஸ். தனிநாயக அடிகள் போன்றோரின்முயற் சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம் மகாநாட்டில் அஸிஸ் படித்த ஆய்வுக் கட்டுரை "பத்தொன்பதாம் நூற்றாண் டின் ஒன்பதாவது பத்தாண்டில் வாழ்ந்த இலங்கை முஸ்லிம் களின் சில சிறப்பியல்புகள்" என்பது, 19 ஆம் நூற்றாண்டின் 1880-1889 வரையிலான இலங்கை முஸ்லிம்கள் பற்றியதாக இக் கட்டுரை அமைந்திருந்தது. மூதறிஞர் எம். ஸி. சித்திலெவ் வையின் முஸ்லிம் நேசன்" பத்திரிகையை ஆதாரமாகக்கொண்டே இக் கட்டுரையை அளிஸ் எழுதியிருந்தார்.
தமிழ் தட்டச்சுப் பொறிக்கான திருத்தமான ஏக சீரான எழுத் துப் பட்டடையின் தேவையும் கலைச் சொல் அகராதியொன்றின் அவசியமும் அளeஸை எப்போதும் உறுத்திக்கொண்டிருந்தன. தமிழ்மொழி மூலம் பயிலும் மாணாக்கருக்கும் பிறருக்கும் இவ் விரண்டினதும் பயன்பாடுமிகஅதிகம் என்பதை அளிஸ் நன்குணர்ந் திருந்தார். 1934இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஈழத் துத் தமிழ் முனிவர் விபுலானந்தரின் தலைமையில் "சொல்லாக் கக் கழகம் கூடி எடுத்த முயற்சியின் விளைவாக சென்னை மாகாணத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த 'கலைச் சொற் கள் அகராதி பற்றிய அறிவும் அளிஸ"சக்கிருந்தது. பிற்காலை விபுலானந்த அடிகளாரின் நெருங்கிய நண்பனாக விளங்கிய அஸிஸ், அவருடைய எண்ணங்கள் நிறைவேற்றப்படவேண்டு மென்பதில் அக்கறையுடையவராகவிருந்தார். அதனாற்றான் போலும் தமிழில், தமிழிலக்கியத்தில், தமிழுடன் இணைந்த பல

Page 64
112 / அஸிஸும் தமிழும்
துறைகளில் பாண்டித்தியம் பெற்றோரும், நிபுணரும், ஆய்வாள ரும் கலந்துகொண்ட மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் தட்டச்சு, கலைச் சொல் அகராதி பற்றிய கருத்துப் பரிமாற் றங்கள் நடைபெறுமென அஸிஸ் எதிர்பார்த்தார்.
* மேற்படி மகாநாட்டில் இரண்டு விஷயங்கள் பற்றித் தமது கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒன்று, தமிழ் தட்டச்சுப் பொறிக்கெனத் திருத்தமான, ஏக சீரான எழுத்துப் பட்டடை (Key-board) சம்பந்தமானது. மற்றொன்று, கலைச் சொற்களின் அகராதி சம்பந்தமானது. ஏனெனில் தமிழ் பேசும் மாணாக்கர்களின் எதிர்காலக் கல் விக்கு இவ்விரு விஷயங்கள் பற்றியும் தீர்க்கமான ஒரு முடி வினை விரைவில் காணவேண்டியது இன்றியமையாததா கும். எதிர்வரும் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் வெளி யிடப்படும் விஞ்ஞான நூலொன்று இலங்கையிற் கல்வி பயி லும் மாணவர் விளங்கிக்கொள்ளத்தக்கதாயும், இதுபோ லவே இலங்கையிற் பிரசுரிக்கப்படும் புத்தகம் தென்னிந் தியத் தமிழக மாணவர்க்குப் புரியக்கூடியதாயும் அமைதல் வேண்டும்." 2
என்ற தனது எதிர்பார்ப்பை இவ்வாறு அஸிஸ் "தமிழ் யாத் திரை நூலில் குறித்துவைத்திருக்கிறார். தமிழ் பேசும் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒரே தன்மையில் இலக்கிய நுகர்வு செய்ய வும் விளக்கம் பெறவும் அஸிஸ் குறிப்பிடும் இவ்விரண்டும் நிச் சயம் உதவக்கூடியன. ஆயினும் தமிழ் தட்டச்சுப் பொறிக்கென திருத்தமான ஏக சீரான எழுத்துப் பட்டடை பற்றியும் கலைச் சொல் அகராதி பற்றியும் தன்னைப் போல பிற தமிழறிஞரும் மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் சிந்திப்பார்கள், கலந் துரையாடுவார்கள் என்ற அளபீஸின் நம்பிக்கை, அவர்கள் அவ் வாறு செய்யத் தவறியபோது அவரைப் பெரும் ஏமாற்றத்துக் குள்ளாக்கியது. -
கவிஞர் அப்துல் காதர் லெவ்வையின் செய்னம்பு நாச்சியார் மான்மியம் கவிதை நூல் வெளியீட்டு விழா கவிஞர் எம். சி. எம். சுபைரின் தலைமையில் கண்டியில் நடைபெற்றபோது அதில் அஸிஸ் பேசினார். 1970இல் நடைபெற்ற இவ்விழாவில் இரா. சிவலிங்கம், பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்றோ ரும் கலந்துகொண்டனர்.

ஏ. எம். நஹறியா / 113
இஸ்லாமியத் தமிழிலக்கிய மகாநாடு 1973 மே 12, 13 ஆம் திகதி களில் திருச்சியில் நடைபெற்றபோது அஸிஸும் அதில் கலந்து கொண்டார். ஜமால் முகம்மதுக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலை வர் பெரும் புலவர் பேராசிரியர் சி. நைனார் முகம்மது அவர் களின் அழைப்பின் பேரில் அறிஞர் அஸிஸ் இம்மகாநாட்டில் கலந்துகொண்டார். ஜமால் முகம்மது கல்லூரி மண்டபத்தில் மே 12ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற இம் மகாநாட்டி னுடைய முதலாம் நாள் நிகழ்ச்சிகள், ஆலோசனை அமைப்புக் கூட்டத்துடன் ஆரம்பமானது. இந்த அமைப்புக் கூட்டத்துக் குத் தலைமை தாங்கும் பெருமை அளeஸ"சக்குக் கிடைத் தமை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குக் கிடைத்த பெருமையா கும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் நிபந்தனைகள், சட்ட திட்டங்கள் பற்றியெல்லாம் இக் கூட்டத்தில் ஆராயப்பட் டது. சென்னை பிறைப்பள்ளி முதல்வரும் பேராசிரியருமான இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர், மெளலவி எம். அப்துல் வஹாப் போன்றோரும் அஸிஸுடன் மேடையில் அமர்ந்திருந் தனர். இம் மகாநாட்டில் ஜனாப் அஸிஸ் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். இறையருட் கவிமணி பேரா சிரியர் கா. அப்துல் கபூர், காயல்பட்டணம் வர்த்தகர் அல்ஹாஜ் எல். கே. லெப்பைத்தம்பி, தமிழகத்தைச் சேர்ந்த பெரும்புலவர் பனைக்குளம் அப்துல் மஜித், பன்னூலாசிரியர் ஜனாப் செய்யிது இப்றாகீம், ஜமால் முகம்மதுக் கல்லூரிப் பொருளாளர் அல்ஹாஜ் கே. அப்துல் காதிர் சாகிப் ஆகியோரும் இம்மகாநாட்டில் அஸி ஸுடன் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டவர்களா வர். இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் அமைப் பாளர்களுள் ஒருவராகவும் ஜனாப் அஸிஸ் தெரிவுசெய்யப்பட் டார். இவருடன் ஈழத்தவர்களான அல்ஹாஜ் எம். ஜ. எம். நளீம், அல்ஹாஜ் எம். எம். உவைஸ், ஜனாப் எஸ். எம் கமாலுத் தீன் ஆகியோரும் தெரிவாகினர். தமிழ்நாடு, மலேசிய பிரதிநிதி களும் இக் கழகத்தில் இடம்பெற்றனர். இது அஸிஸின் தமிழ் பற்றுக்கும் பணிக்கும் கிடைத்த பெரும் கெளரவமாகும்.
"அன்றைய ஆலோசனை அமைப்புக் கூட்டத்துக்கு இலங் கையின் மூதறிஞரான அல்ஹாஜ் எ. எம். அப்துல் அஸிஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தமிழகத்திலே காட் டப்பட்ட இந்த நல்லெண்ணத்தினால், சிறப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களும், பொதுவாக தமிழ் பேசும் இலங்கை மக்கள் அனைவரும் பெருமைப்படுத்தப்பட்டனர் எனக் கூறு வது பொருத்தமுடையது." ?

Page 65
114 / அலிஸும் தமிழும்
என அஸிஸுக்கு அளிக்கப்பட்ட இக்கெளரவம் பற்றி கலாநிதி ம. மு. உவைஸ் குறிப்பிட்டுள்ளார். அஸிஸ் அவர்களும் தனது தலைமையுரையில்,
* பேராசிரியர் நெய்னார் முகம்மது அவர்கள் சொன்னார்கள் இந்த ஆலோசனை அமைப்புக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும் முகமாக எனக்கு அளித்த கெளரவம் இலங்கை மக்களை, சிறப்பாக இலங்கைவாழ் முஸ்லிம்களைக் கெளர வித்தமை என்று. நானும் அப்படியேதான் கருதுகிறேன்.'
என்று கூறினார்கள். அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கி யக் கருத்தரங்கு மகாநாட்டு அங்குரார்ப்பணம் பற்றி அஸிஸ் தனது தலைமையுரையில் தெரிவித்த கருத்துக்கள் கவனத்திற் கொள்ளத்தக்கன.
"எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகையதொரு கழகத்தை நாம் அமைத்திருத்தல் வேண்டும். இப்போதா வது இத்துறையில் முற்பட்டுவிட்டோம் எ ன் று ஆறுதல் கூறிக் கொள்வோம். இத்துறையில் எங்களுக்கு ஆண்டவன் நல்லுதவி புரிவானாக. எங்களுடைய இந்தக் கழகத்தை நன்றாக முன்னேற்றம் அடையச் செய்து இந்தச் சங்கத்தி னால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு புத் துணர்ச்சி தோன்றத்தக்கதாக எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்புரிவானாக." 2
என அளிஸ் கூறி தனது தலைமைப் பேருரையை முடித்துக் கொண்டபோது, இஸ்லாம், தமிழ், இலக்கியம் என்பன தம்ம கத்தே கொண்டுள்ள ஆற்றல்கள் ஒன்றிணைவதனால் பிறக் கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அவர் கொண்டுள்ள விருப்பையும் அபிமானத்தையும் காண முடிந்தது.
கல்வி மகாநாடுகள், தமிழிலக்கிய விழாக்கள், தமிழாராய்ச்சி, இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வரங்குகளிலெல்லாம் அஸிஸ் ஆற்றிய உரைகள், வாசித்த ஆய்வுக் கட்டுரைகள் தனது இனத் தின் தாய்மொழிக்கு அவரின் பங்க்ளிப்பாகும். ஆழமான, கருத்து நிறைந்த அவரின் சொற்பொழிவுகள், எடுத்துக்கொண்ட பொருளைத் தெளிவாகச் சொல்லும் சக்தியுடையன. ஒரு அறி ஞருக்கிருக்கவேண்டிய அடக்கம், பண்பு என்பன அவரின் சொற்

ஏ. எம். நஹியா | 113
பொழிவுகளில் காணப்பட்டன. அமைதியான ஒட்டம், எடுத் துக்கொண்ட பொருளை அவசரமின்றி எடுத்துச் சொல்லும் பாங்கு என்பன அவரின் சொற்பொழிவுகளில் குறித்துச் சொல் லக்கூடிய அம்சங்களாக விளங்கின. இப் பண்புகள் கேட்போர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதனாற்றான் ஆய்வ ரங்குகளில் அஸிஸ் ஆற்றிய சொற்பொழிவுகள் படிப்பினை யூட்டுவனவாக, காலம் கடந்தும் மறக்கவொண்ணாதனவாகமதிக் கப்படுகின்றன.
1. தினகரன் வார மஞ்சரி
15, பெப்ருவரி 1953
2. egy 6yő'Gi) 6.T. Grab. 6.T.
தமிழ் யாத்திரை சென்னை, 1968 Lidi, 0.2
3. உவைஸ், பேராசிரியர் எம்; எம்.
இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு மகாநாடு, இலங்கைக் கிளை. கொழும்பு, 1974
Liğ: 73
4, ൩.
Ljš. 73
്. ബ.
Lii. 75-76

Page 66
T) ஆய்வியல் வழிகாட்டி
அஸிஸ் அவர்கள் தனது மாணாக்கருக்கும், அண்டி ஆலோசனை கோரியவர்க்கும், தன்னுடன் பழகியவர்களுக்கும் சிறந்த வழி காட்டியாகத் திகழ்ந்தார். இயல்பான ஆற்றல்களை நன் குணர்ந்து பொருத்தமானவர்களுக்குப் பொருத்தமான துறை களில் வழிகாட்டியவர் அவர். அவர் காட்டிய பாதையில் நடந்தவர்கள் தத்தம் துறைகளில் இன்று பிரசித்தி பெற்று விளங்குகின்றனர். இஸ்லாமிய இலக்கியத் துறையிலும் அது தொடர்பான ஆய்வியல் துறைகளிலும் அஸிஸ் ஊக்கிய பலர் இன்று பிரபல முஸ்லிம் தமிழறிஞர்களாகத் திகழ்கின்றனர்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக இஸ்லாமிய இலக்கியத் துறைப் பேராசிரியர் கலாநிதி ம. மு. உவைஸ் அவர்கள் அஸிஸினால் ஊக்குவிக்கப்பட்டவர்களுள் ஒருவர். இவர் தலை சிறந்த இஸ்லாமியத் தமிழறிஞர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்ற முதல் முஸ்லிம். எம். ஏ. பட்டத்திற்காக அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை "முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு" என்பது. இத் தலைப் பில் ஆய்வு மேற்கொள்ளுமாறு உவைஸ் அவர்களைத் தூண்டி யவர்களுள் ஜனாப் அஸிஸும் ஒருவர். இந்த உண்மையை ஜனாப் உவைஸ் அவர்களே பல தடவைகள் கூறியுள்ளார். "இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்" என்ற விவ ருடைய நூலில்,
 

sy. Grub, sailurt | 117
"இத்துறையில் என்னை ஊக்குவித்தவர்கள் காலஞ்சென்ற பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை அவர்களும் , அறிஞர் அல்ஹாஜ் ஏ. எம். அப்துல் அஸிஸ் அவர்களும், பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களுமே utrrastri. ”' 1
என வெளிப்படையாகவே எழுதி வைத்திருக்கிறார். அஸிஸின் இஸ்லாமிய இலக்கிய ஈடுபாட்டையும் அதன் பால் அறிஞரை ஆற்றுப்படுத்தும் அவரின் செயற்பாட்டையும், இக்குறிப்பு நன்கு காட்டுகிறது. ஜனாப் அஸிஸின் "இலங்கையில் இஸ்லாம்" நூலிலும் இது சம்பந்தமான ஒரு குறிப்புக் காணப்படுகிறது. அக்குறிப்புரை வருமாறு:
"எங்களது இலங்கை முஸ்லிம் கல்விச் சகானநிதியின் ஆத ரவு பெற்ற முஹம்மது உவைஸ் என்ற முஸ்லிம் மாணவர் ஒருவர் அறபுத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு "முஸ்லிம் கொன்றிபியூசன் ரு தமிழ் விற்றேட்சர்" என்ற ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியதன் காரணமாக இலங்கை சர்வகலாசாலையிடமிருந்து எம். ஏ. பட்டத் தையும் பெற்றுக் கொண்டுவிட்டார். புத்தக வடிவில் தற் போது வெளிவந்திருக்கும் அந்த ஆராய்ச்சிக் கட்டுரை பரிபூரணமான ஒன்று என நான் சொல்லத் துணியாவிட் டாலும் இத்துறையில் செய்யப்பட்ட முதல் முயற்சியும் வழிகாட்டியுமாகும் என்று குறிப்பிட விரும்புகிறேன். இத னைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஆதரவு பெறத்தக்க பல பெரு நூல்கள் தகுதியுடையோரால் இயற்றப்பட்டு வெளிவரல் வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்."
என அமைகிறது அந்த வாசகம். இது தான் அஸிஸின் உள்ளக் கிடக்கை. இஸ்லாமிய இலக்கியத்துறையிலும் அது தொடர்பான ஆய்வியல் துறைகளிலும் பலரை ஊக்குவித்த அஸிஸின் பெரு முயற்சியை இக்குறிப்புரை நன்கு காட்டுகிறது. 魯 முன்னாள் பல்கலைக்கழகவிரிவுரையாளரும் வேருவலை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளராக விளங்குபவருமான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களும் பெரியார் அஸிஸ் அவர்களினால் வழி நடாத்தப்பட்டவர்களுள் ஒருவரே. அறபுத் தமிழில் ஈடுபாடு கொண்டு அத்துறையில் ஆய்வுகள் மேற்

Page 67
118 அஸிஸும் தமிழும்
கொள்ள வேண்டுமென்று துடியாய்த் துடித்த அளிஸ், ஜனாப் சுக்ரியை இத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு அன்புக் கட்டளையிட்டார். கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை மேற் கொள்ளவிருந்த ஜனாப் சுக்ரியை அறபுத் தமிழுக்கும் ஸ்வாஹிலி மொழிக்கும் மிடையேயுள்ள தொடர்புகளையிட்டு ஆராய்ச்சி செய்யுமாறு கேட்டிருந்தார். பல சொற்பொழிவுகளில் இவ்வுண் மையைப் பிறருக்கு எடுத்துச் சொன்ன சுக்ரி, அறிஞர் அஸி ஸ7ம் அவரது ஆய்வு முயற்சிகளும்' என்ற தலைப்பில் தினகர னில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரையிலும் அது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
* இக்கட்டுரை ஆசிரியர் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக அறபுத் தமிழிற்கும் ஸ்வாஹிலி மொழிக்குமிடையேயுள்ள தொடர்பு பற்றி ஆராய்ச்சி நடத்தல் வேண்டுமென அவர் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். லண்டன் பல்கலைக் கழ கத்தின் கீழைத்தேய, ஆபிரிக்கத்துறையில் இதற்கான சகல வசதிகளும் உண்டென்றும், அங்கு சென்று ஓராண்டு காலம் ஸ்வாஹிலி மொழியைப் படித்த பின்னர் இவ்வாராய்ச்சியை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறுவார். ஆனால், இக்கட்டுரை ஆசிரியருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்க வில்லை. கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக இடம் கிடைத்த எடின் பரோ பல்கலைக்கழகத்தில் இத்தலைப்பில் ஆராய்ச்சி செய்வதற்கான வசதிகள் இருக்காததால் வேறு தலைப் பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,' "
என கலாநிதி சுக்ரி தனது கட்டுரையில் எழுதி வைத்திருக்கிறார். அளிஸ் அவர்கள் தன்னை இத்துறையில் ஊக்குவித்தமையை யும் அவரின் ஆசையைத் தன்னால் நிறைவேற்றி வைக்க முடி யாமற் போன துர்ப்பாக்கியத்தையும் ஜனாப் சுக்ரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
ஸ்வாஹிலி மொழிக்கும் அறபுத் தமிழுக்குமிடையிலான தொடர்பு கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென விரும் பிய அஸிஸ் அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேடித் திரிந்தமை பற்றிய தகவல் அவர் எழுதிய "கிழக்காபிரிக்கக் காட்சிகள்' நூலில் காணப்படுகிறது.

ஆர். எம். நஹியா / 119
" இதனைக் கொண்டு ஸ்வாஹிலிக்கும் அறபுத் தமிழுக்கு முள்ள அன்புத்தளையை ஊகிக்கலாம். ஸ்வாஹிலி மக்களின தும் சோனக மக்களினதும் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங் கள், இலக்கியங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஒற்றுமைகள் காணப்படுதலையும் காணலாம். இரு வகுப்பாரும் ஷாபி களாயிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்துறையில் ஆராய விளையும் எவரும் அறபு இங்கிலிஷ், தமிழ், ஸ்வாஹிலி ஆகிய நான்கு மொழிகளாவது தெரிந்தவரா யிருத்தல் அவசியம். நம்மிடையே ஓர் அல்பைறுானி உள 3g'&?' 4
என அஸிஸ் எழுதியபோது, ஸ்வாஹிலி-அறபுத் தமிழ் ஒப்பீட் டாய்வில் அஸிஸ் காட்டிய ஆர்வத்தைக் காண முடிந்தது. இத் துறையில் ஈடுபடுவதற்குப் பொருத்தமான ஒருவரை, நான்கு மொழிகள் தெரிந்த ஒருவரை, அல்பைறுானி போன்றவரை அஸிஸ் தேடித்திரிந்தமையைத் தெரிந்து கொள்ள முடிந்தது. துரதிஷ்ட வசமாக அஸிஸின் இப் பேராவல் நிறைவேறாமற் போனமை கவலைக்குரியது.
அறபுத் தமிழில் பார்ஸி மொழியின் செல்வாக்குப் பற்றிய ஆய்வு கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அஸிஸ் விரும்பினார். அஸிஸின் இந்த எண்ணம் கூட இதுவரை நிறைவேறவில்லை.
பினாங்கிலிருந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்த குலாம் காதிறு நாவலரின் வித்தியா விசாரிணி'யையும் அதே காலத்தில் இலங்கையிலிருந்து வெளிவந்த முகம்மது காசிம் சித்தி லெவ்வை யின் “முஸ்லிம் நேசனை'யும் ஒப்பிட்டாயும் எண்ணமும் அளவி ஸுக்கிருந்தது. இவ்விரு பத்திரிகைகளுக்குமிடையிருந்த தொடர்பு கள், இலக்கியச் சர்ச்சைகளை மட்டுமன்றி அக்கால இலங்கை சம்பந்தமான பல வரலாற்றுத் தகவல்களையும் இவ்வாய்வுகள் வெளிக்காட்டும் என அஸிஸ் கருதினார். அஸிஸின் இவ்வெண் ணம் கூட நிறைவேறாமற் போனமை எமது துரதிஷ்டமே.
இத்துறையில் பலர் ஈடுபட்டு ஆய்வுகள் மேற்கொள்ள முடியு மென்பதை அஸிஸ் தெரிவித்துப் பல்லாண்டுகள் கழிந்துவிட்ட பின்னரும் இதுவரை குறித்துச் சொல்லக்கூடிய எம் முயற்சியும் மேற்கொள்ளப்படாமை வருந்தத் தக்கது.

Page 68
120 / அஸீஸும் தமிழும்
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துறையிலும் அது தொடர்பான துறைகளிலும் பலரை பாக்கியமைக்கும் ஆய்வியல் துறைகளை இனம் காட்டியமைக்குமான ஒரிரு உதாரணங்களும் ஆதாரங் களுமே மேலே தரப்பட்டவை. அவர் இனம் காட்டிய துறை களில் இதுவரை ஆய்வுகள் நடைபெறாத பகுதிகளை இனம் கண்டு ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் அஸீஸின் நிறை வேறாத ஆசைகளை நிறைவேற்றி வைக்கலாம். ஆய்வாளரும் நிறுவனங்களும் இவ்வகையில் கூடிய முயற்சிகளை மேற்கொள்ளு வது அவசியமாகும். அதன் மூலம் தான் முஸ்லிம் சமூகத்தைக் கைதூக்கிவிடப் பல வழிகளிலும் தன்னந்தனியனாக நின்று முயற்சித்த அப்பெருமகனின் எண்ணத்தை நாமும் கெளரவிக்க முடியும்.
1. உவைஸ், பேராசிரியர் எம்.எம்.
இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு மகாநாடு, இலங்கைக் கிளை கொழும்பு, 1974 பக்: 03,
அஸீஸ் எ. எம் . எ. * அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' இலங்கையில் இஸ்லாம் . கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963 பக்: 159
சுக்ரி, கலாநிதி அல்ஹாஜ் எம். ஏ. எம். 'அறிஞர் அஸிஸம் அவரது ஆய்வு முயற்சிகளும்' தினகரன், 28 டிசம்பர் 1982 பக்: 07
அஸீஸ் எ. எம். எ. ' கிழக்காபிரிக்கக் காட்சிகள்' சென்னை, 1967 பக்: 154)

EPDP
15
அறிஞர் அறிமுகம்
அஸீஸ் அவர்கள் பல அறிஞர்களையும் கவிஞர்களையும் தலை வர்களையும் தமிழுலகுக்கு அறிமுகம் செய்துவைத்தார். உருதுக் கவிஞர் அல்லாமா சேர் முகம்மது இக்பாலையும் வங்கக் கவி காஸி நஸ்றுல் இஸ்லாத்தையும் தமிழ்பேசும் இலங்கையருக்கு அறிமுகம் செய்துவைத்த முன் ன வர் அஸீஸ். பெரியார் எம். ஸி. சித்திலெவ்வையையும், சு. மு. அசனாலெப்பைப் புலவரையும் காலம் தேவைப்படுத்தியபோது அறிமுகப்படுத்திவைத்தவர் அவர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரையும், சுவாமி விபுலானந்தரை யும் மட்டுமன்றி கி.வா.ஜகந்நாதன் போன்ற தமிழ்ப் பேரறி ஞர்களையும் அடிக்கடி தனது எழுத்துக்களிலும், சொற்பொழி வுகளிலும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தினார். பாகிஸ் தானின் தந்தை முஹம்மது அலி ஜின்னாவையும் ஈழத்து முஸ்லிம் மறு மலர்ச்சிக்குழைத்த எகிப்தியரான ஒறாபி பாஷாவையும் இலங் கையரின் மனங்களில் அழியாத நினைவாக்கினார். கவிஞர் அப் துல் காதர் லெவ்வைப் புலவரின் புலமையை மதித்து அவருடன் நெருங்கி உறவாடினார்.
முகம்மது காசிம் சித்திலெவ்வை முகம்மது காசிம் சித்திலெவ்வை முஸ்லிம் சமூகத்துக்குச் செய்த கல்வி, சமூக, இலக்கியப் பங்களிப்புகளினால் கவரப்பட்ட அஸீஸ் அவரை மதித்தார்; அவர் வழி நடந்தார்; அவரை உலகறியச் செய்தார். 'The West Re Appraised' என்ற அவரது ஆங்கில நூலில் முகம்மது காசிம் சித்திலெவ்வை ப ற் றி ய கட்டுரை

Page 69
122 |அஸிஸும் தமிழும்
யொன்று இடம்பெறுகிறது. இந்நூல் 1964இல் வெளிவந்தது? "மறுமலர்ச்சித் தந்தை' எ ன் ற ஏ. இக்பாலின் நூ லு க் கு 18-03-1971இல் அஸிஸ் எழுதிய முன்னுரை முகம்மது காசிம் சித்திலெவ்வை பற்றிய சுருக்க விளக்கமாகும். அதே நூலின் "என்னுரை' யில் நூலாசிரியர் ஏ. இக்பால் அவர்கள்,
* அறிஞர் சித்திலெவ்வை பற்றிய மேதைமையை எனது பள் எளிப்படிப்புக் காலத்திலேயே சிதறலாக வாசிக்க வழிசெய்த கட்டுரைகளை அக்காலத்தில் எனக்கே அறிமுகமில்லாதிருந்த ஜனாப் எ. எம். எ. அஸிஸ் அவர்கள் தான் எழுதிவந்தார் မ္ဘ၉၄;#, *" !!
என எழுதியிருக்கிறார். சித்திலெவ்வையை அறிமுகப்படுத்தும் பெரும் பணியில் அஸிஸ் ஈடுபட்டுழைத்தமையை இக் குறிப் புரை தெட்டத்தெளிவாகக் காட்டுகிறது. "சித்திலெப்பை ஞாப கார்த்த நிதி' என்ற தலைப்பில் அஸிஸ் 1972-02-05இல் தின கரனில் எழுதியிருந்த கட்டுரையும் அதே தலைப்பில் 1972 ஏப் ரலில் மணிமஞ்சரிக்கு எழுதியிருந்த கட்டுரையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும். முகம்மது காசிம் சித்திலெவ்வையை முத்திரை வெளியிட்டுக் கெளரவிக்குமளவுக்கு நாடறியச் செய்த தில் அஸிஸுக்குப் பெரும்பங்குண்டு.
முகம்மது காசிம் சித்திலெவ்வை பற்றிய கட்டுரைகளை மட்டும் எழுதி அறிமுகப்படுத்தியதுடன் அஸிஸ் திருப்தி காணவில்லை. பல வழிகளில் அத் திருப்பணியைச் செய்து அப் பெருமகனை உலகறியச் செய்தவர் அவர் மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியக் கலைத்துறை நூலகத்துக்கு சித்திலெவ்வை வெளியிட்ட "முஸ்லிம் நேசன்" பத்திரிகையின் முதல் ஏட்டினுடைய சில பக்கங் களின் போட்டோப் பிரதிகளை அனுப்பிவைத்தார். கண்டியில் உதவி அரசாங்க அதிபராகவிருந்தபோது சேகரித்துவைத்த சித்தி லெவ்வையின் நூல்கள், பிரசுரங்களையெல்லாம் பிற்காலை அதிபராக அமர்ந்து பணிசெய்த ஸாஹிறாக் கல்லூரி நூலகத்தில் வைத்துப் பாதுகாத்தார், தனது ஆய்வுகளுக்கும் எழுத்துக்களுக் கும் அப் பெருமகனின் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டார்.
முகம்மது காசிம் சித்திலெவ்வையின் கல்வி, சமூக, இலக்கியப் பணிகளினால் அஸிஸ் கவரப்பட்டார் என்ற உண்மை மறைக் கப்பட அல்லது மறுக்கப்பட முடியாதது. இவ்வுறவுக்குக் கார ணம் கற்பிக்க முனைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி,

ஏ. எம். நஹியா / 123
* சித்திலெப்பையைப் பற்றிய ஆர்வம் இலக்கியம் காரணமாக ஏற்பட்டதன்று. வரலாறு காரணமாக ஏற்பட்டதாகும். அன காரிக தர்மபாலா, ஆறுமுகநாவலர் போன்று முஸ்லிம் சமு தாய விழிப்புக்குக் காரணம் யாரென்ற வரலாற்றுத் தேடு தலே சித்திலெப்பைபால் அவரை இழுத்துச் சென்றது. அக் காலத்தில் ஸாஹிறாவை முஸ்லிம் கலாசார மத்திய நிலைய மாகவும், முஸ்லிம் பல்கலைக்கழக முதற்கட்டமாகவும் ஆக்க முற்பட்டிருந்தார். சித்திலெப்பை பற்றி கலாநிதிப்பட்ட ஆராய்ச்சி செய்வதற்கும் இலண்டன் பல்கலைக்கழகத்திற் பதிவு செய்திருந்தார். இளைப்பாறியதன் பின்னர் சித்திலெப் பையின் ஆன்மஞானக் கருத்துக்களிலே கவனம் செலுத்தத் தொடங்கினார்." 2
என எழுதி அஸிஸின் வரலாற்றுத் தேடுகைக்கு முக்கியத்துவ மளிக்கிறார். முகம்மது காசிம்சித்திலெவ்வையைப் பற்றிய அஸி ஸின் ஆர்வம் வரலாற்றுத் தேடுகை, ஆன்மஞானக் கருத்துக்களி னால் மட்டும் ஏற்பட்டதெனக் கொள்ளமுடியாதபோதும் இவை யும் முகம்மது காசிம் சித்திலெவ்வைபால் அஸிஸ் ஈடுபாடுகொள் ளக் காரணங்களாயமைந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
சுருங்கக் கூறின், முகம்மது காசிம் சித்திலெவ்வையை அறிமுகப் படுத்திய முன்னவர்களுள் முதன்மையானவராக அ ஸி  ைஸ க் கொள்வது நியாயமானது. அவர் தொடங்கிவைத்த பணியைத் தொடர்ந்து செய்வதன் மூலமே அளிலின் எண்ணத்தை நாம் நிறைவேற்றிவைக்கலாம். பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். நிறுவனங்களும் இப் பணியில் முயற்சிக்கலாம்.
சு. மு. அசனாலெப்பைப் புலவர்
இந்த அறபுத் தமிழ் ஆலிம் புலவர் அஸிஸின் பெரியப்பா, அஸி ஸின் தந்தை எஸ். எம். அபூபக்கரின் தமையன், குலாம் காதிறு நாவலரின் இலக்கிய நண்பர். புகழ்பாவணி ஆசிரியர், இப் புல வரை அஸிஸ் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தும்வரை தமிழுலகு அவரை முழுமையாக அறிந்திருக்கவில்லை.
அசனா லெப்பைப் புலவரின் ஆக்கங்களிலிருந்து தமிழ் மொழி அவருக்கிருந்த பேரறிவையும் புலமையையும் காணமுடி கிறது. இஸ்லாத்தைப் பற்றி அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவினை எடைபோடமுடிகிறது.

Page 70
124/அளtஸம் தமிழும்
"தமிழ் மரபில் அதிகம் விளங்கப் பெறாதனவும், சாதாரண தமிழ் வாசகர்கட்கு நன்கு விளங்காதனவுமாகிய அறபுத் தொடர்களையும் இஸ்லாமியக் கோட்பாடுகளையும் அவர் தமது கவிதைகளில் கையாண்டுள்ள முறைமை மரபு தவறாது புதியன புகுத்துவதற்குத் தலை சிறந்த உதாரண மாகும். இத்துறையில் உழைத்த தென்னிந்திய முஸ்லிம் புலவர்களுடன் சரிநிகர் சமானமாக நிற்பவர் இவர். இவரது பாடல்கள் பல பக்திப் பாடல்களாகவே இருக்கின் றன. "புகழ்பாவணி' எனும் தொகுப்பிலே வரும் பாடல் கள் தன்மை நிலையில் நின்று தமிழ் மரபு தவறாது பாடப்பட்ட பாக்களாகும்.'3
என அஸிஸ், புலவருடைய எழுத்தின் தாரதம்மியத்தை எடை போடுகிறார். ஒப்பிட்டு நோக்கி உயர்வு காண்கிறார்.
"பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கை யில் தோன்றிய கலாசார மறு மலர்ச்சியின் இஸ்லாமியக் கொழுந்து அசனா லெப்பை அவர்கள் நாவலர் வளர்த்த தமிழ் மறுமலர்ச்சியை இஸ்லாமியத் துறையுட் பாய்ச்சி அறபும் தமிழும் வளர்த்து அதனால் தன் ஆத்ம ஞானத்தை ஒம்பியவர். ஈழத் தமிழ் இலக்கியத்தின் மூல புருடர்களில் ஒருவர். ஈழம் தமிழிற்களித்துள்ள பெருமைமிகு தொண் டுகளில் ஒன்று நமது புலவர் அசனாவெப்பையவர்கள். அறபு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லு நராக விளங்கிய இவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.'
என அஸிஸ் புலவரின் புகழ் பேசினார்.
"இலங்கையில் இஸ்லாம்" என்ற தனது முதலாவது தமிழ் நூலை இப்பெரும் புலவரின் அன்பறா நினைவிற்குச் சமர்ப் பணம் செய்திருப்பதொன்றே இப்புலவர் மீது அஸிஸுக்கிருந்த அளவற்ற அன்பையும் அவரைத் தமிழுலகறியச் செய்ய வேண் டுமென்ற அவரின் அவாவையும் காட்டப் போதுமானது.
"அறபுத் தமிழ் ஆலிம் புலவர்” என்ற தலைப்பில் 18, 12 1963 இல் அஸிஸ் தினகரனில் எழுதியிருந்த கட்டுரை, புல

ஏ. எம். நஹியா | 125
வரை அறிமுகப்படுத்தும் பணியில் அஸிஸ் செய்த முதல் முயற் Suit (5th. அதே கட்டுரை பின்னர் 1964 பெப்ருவரியில் *மணிவிளக்கு' என்ற தென்னிந்திய சஞ்சிகையில் "அசனா லெப்பை அறபுத் தமிழ் வளர்த்த ஆலிம் புலவர்' என்ற தலைப்பிலும், அஸிஸின் அறபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' நூலிலும் இடம் பெற்றது. இக்கட்டுரைகள் மூலம் அசனா லெப்பைப் புலவர் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் நன்கு அறி முகம் செய்து வைக்கப்பட்டார். அப்புலவரின் ஆக்கங்கள் பற்றி பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கெல்லாம் அஸிஸின் இக்கட்டுரைகளே ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத் தன.
இலங்கைச் சாகித்திய மண்டல வெளியீடான ஈழத்துத் தமிழ்க்
கவிதைக் களஞ்சியம் நூலில், அசனா லெப்பைப் புலவரின்
பாடல்களும் இடம் பெறக் காரணகர்த்தராகவிருந்தவர் அஸிஸ் அவர்களே.
ஆறுமுக நாவலர் கல்வி கற்ற அதே மெதடிஸ்த மத்திய கல் லூரியில் கல்வி கற்ற இப்புலவர், 1918 டிசம்பர் 18ஆம் திகதி இவ்வுலகை நீத்தபோது, அதனை ஆற்றாத அளவிஸ்,
'ஈழத்திலிருந்து அறபுத் தமிழ் இலக்கியம் வளர்த்த தலை சிறந்த தமிழ்ப்புலவர் அன்று மறைந்தார். யாழ்ப்பாணத் துத் தமிழ்ப் புலவர்களும் தென்னிந்திய முஸ்லிம் புலவர்க ளும் வாழ்த்திப் பரவிய வரகவியொருவர் அன்று காலமா னார். அரசாங்கத்தினால் நடத்தப்படும் எழுது வினைஞர் பரீட்சையில் தேறிய முதல் இலங்கை முஸ்லிம் எனக் கரு தப்படத்தக்கவர் அன்று காலமானார். பலராலும் போற் றப்பட்ட, சறஹ" நெறி தவறாத இஸ்லாமியப் பக்தர் அன்று மறைந்தார். புலவர் அசனா லெப்பை அவர்களது வாழ்வு பலதுறை முக்கியத்துவம் கொண்ட ஒரு வாழ்வா கும். ஈழத்து முஸ்லிம்கள் வாழ்வில் இடம் பெற வேண் டிய பண்புகள் அனைத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது அவர் வாழ்வு.
என எழுதித் தனது துயரத்தை வெளிக் காட்டினார். அஸிஸின் இவ்வாசகங்கள் அசனா லெப்பைப் புலவரின் பெருமையை

Page 71
126 | அளtஸ்-சம் தமிழும்
உலகுக்கு ஒதுகிறது. அவரின் இஸ்லாமிய இலக்கியப் பணி களை நினைந்து அவர் இன்று இவ்வுலகிலில்லையே என்பதை
எண்ணி ஒரு துளிக் கண்ணிராவது சிந்தாமலிருக்க முடியாத
நிலைக்கு அஸிஸ் புலவரை அறிமுகம் செய்து வைக்கிறார்.
இஸ்லாமியத் தமிழிலக்கிய வாதிகளை, அறபுத் தமிழ் அபி மாணிகளை அசனாலெப்பைப் புலவரின் இலக்கியப் பணிகளின் பால் திசை திருப்பிவிட்ட அறிஞர் அஸிஸ், அதன் மூலம், இதுவரை ஒளிந்திருந்த, இலைமறைகாயாகவிருந்த, ஒர் இஸ் லாமியத் தமிழறிஞனை உலகறியச் செய்த பெருமைக்குரிய
வரானார்.
விபுலானந்த அடிகள்
யாழ் நூல் தந்த வித்தகர் விபுலானந்தர் பல துறைகளில் உழைத்துத் தமிழை வளம்படுத்தியவர். அறிவும் ஆற்றலும் ஒரு சேரப் பெற்ற அந்த விபுலானந்தர் மீது அஸிஸ் அள வற்ற அன்பும் நட்பும் கொண்டிருந்தார். தனது எழுத்துக் களில் சுவாமியின் கருத்துக்களை ஆங்காங்கே உதாகரித்தார். R. K. M. Souvenil க்கு 1958இல் ஜனாப் அளவிஸ் எழுதிய “Vidyalaya and Vipulananda” GTGŠTAD 550 av til av frøðr sy tắría:Naviji கட்டுரையும் இதனுடன் இணைத்துப் பார்க்கப்படவேண்டியது.
அஸிஸின் சிந்தனையில் விபுலானந்தர் பெற்ற இடத்தை அவரது எழுத்துக்கள் தெளிவாகக் காட்டின. மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் பல இனத்தவரும், நாட்டவரும், நிறத்தவரும் கலந்துகொண்டு சிறப்பித்தமையைக் கண்ட அஸிஸ் மதுரை முத்தமிழ் மகாநாட்டில் சுவாமி விபுலானந்தர் வெளியிட்ட கருத்தொன்றை ஞாபகப்படுத்திக் கொண்டதாகத் தனது "தமிழ் யாத்திரை” நூலில் குறிப்பிடுகிறார். 'சாதி மத வேறுபாடின்றி யும் அரசியற் கட்சிப் பிரிவின்றியும் செய்யக்கூடிய தொண்டு தமிழ்த் தொண்டு' என்று சுவாமி கூறியதன் தாற்பரியத்தை இம் மகாநாட்டில் நிதர்சனமாகக் கண்டுகொண்டதாக அளீஸ் குறிப்பிடுகிறார்.
மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் 'தமிழ் இசையும் நடன மும்" என்ற தலைப்பில் மகாநாட்டுக்களரியில் கருத்தரங்கு நடைபெற்றபோது அதில் இந்திய கர்நாடக சங்கீதக் கல்லூரி

ஏ. எம். நஹறியா / 127
யைச் சேர்ந்த எஸ். ராமநாதன் அவர்கள் சிலப்பதிகார இசை
முறைகளை விளக்கிப் பேசினார். அந்த உரையில் அவர் சுவாமி விபுலானந்தரை வாயாரப் புகழ்ந்தார். முதன் முறையாக பண் முறைகளை அறிவியல் வழி நின்று ஆராய்ந்து, இன்றைய இராகங்களுக்கும் முன்னைய பண் முறைகளுக்குமிடையேயுள்ள தொடர்புகளை நிலை நாட்டிய பெருமை சுவாமி அவர்களுக்கே உரியதென்று பாராட்டினார். அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட அஸிஸ் ராமநாதனின் புகழாரத்தில் மகிழ்ச்சியடைந்தார். அச் சமயம் தனது ஞாபகத்தை மீட்டுப் பார்த்த அளவிஸ், விபுலானந் தர் பற்றிய தனது கடந்த கால எண்ணங்களையும் அனுபவங் களையும் பின்வருமாறு தனது தமிழ் யாத்திரை நூலில் வடித்து வைத்தார்.
' உலகத் தமிழ் அறிஞர்கள் குழுமியிருந்த தமிழ் மகாநாட் டிலே நம் நாட்டு அறிஞர் ஒருவருக்கு இத்தகைய பாராட் டுக் கிடைத்ததைக் கேட்ட போது, 1922ஆம் ஆண்டில் அடி களார் மாணிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் பதவியையும், பண்டிதர் மயில்வாகனம் என்னும் பட்டத்தையும் துறந்து, இராமகிருஷ்ண மிஷனின் வழியைப் பின்பற்றித் துறவு வாழ்க்கையினை மேற்கொண்ட சம்பவமும் வேறு நிகழ்ச்சி களும் என் நினைவில் பளிச்சிட்டன. கச்சேரியே மோட்ச வீடென்றும் அரைக்காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டுமென்றும் எல்லோரும் ஒற்றைக் காலில் நின்ற அந்தக் காலத்திலே இந்தச் சம்பவம் அப் பாடசாலையில் கல்வி பயின்று வந்த சுமார் 225 இளவட் டங்களிலேயே ஒர் உளப் புரட்சியை உண்டாக்கிற்றென லாம். யாழ்ப்பாணப் பகுதியில் இராமகிருஷ்ண மிஷன் நிர் வகித்து வந்த கல்லூரி வைத்தீஸ்வர வித்தியாலயம் ஒன்றே. அப்பகுதியிலுள்ள பெரிய பாடசாலையின் அதிபர் இராம கிருஷ்ணர் வழியில் துறவி வாழ்க்கையை மேற் கொண்டமை உலகத்திலே உயரிய பதவிகளை வகிக்கும் வாய்ப்புள்ளவர் கள் கூட ஆத்மார்த்தத் துறையின்பால் ஈர்க்கப்படலாம் என்னும் உள்ளுணர்வைக் கொடுத்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று 20 வருடங்களுக்குப் பின்னர், நான் கல்முனை யில் நெருக்கடி காலத்தில் அரசாங்க உதவி அதிபராகப் பணியாற்றியபோது அடிகளாரை நெருங்கி அறியும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது சுவாமி அவர்கள்

Page 72
128| அஸிஸும் தமிழும்
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராக நியமனம் பெற்று கல்முனைக்கப்பாலுள்ள தமது சொந்தக் கிராமமான காரைதீவில் சில நாள் தங்கியிருந்தார். இதன் பின்னர் 1944ஆம் ஆண்டில் கண்டி உதவி அரசாங்க அதி பரின் உத்தியோக வாசஸ்தலமாகிய "மவுண்ட் எயரி" (Mount Airy)இல் பன்னிரண்டு நாட்கள் வரை அடிகளாரை உபசரிக்கும் பெரும் பேறு எனக்குக் கிடைப்பதாயிற்று. அடிகளார் சண்டியிலே வரகவி பாரதியார் பற்றி நிகழ்த் திய பிரசங்கம் இன்னும் என் நினைவிலிருக்கிறது. அப் பிரசங்கத்திலே, பாரதி பாடலின் எளிமையைப் பார்க்கிலும் அவர் தேர்ந்தெடுத்த கவிதைப் பொருளே முக்கியமான தென்றும், பாரதிக்கு முன்னரும் பல கவிஞர்கள் எளிய நடையில் செய்யுள்களியற்றியுள்ளபோதிலும் தேசாபிமானம், சுதந்திர உணர்வு ஆகியவற்றைக் கவிதைப் பொருளாக முதன் முதலில் கையாண்டவர் பாரதியேயென்றும் சுவை படவிளக்கினார். மாயாவதி தபோவனத்திவிருத்து "பிரபுத்த பாரத" என்ற பத்திகையின் ஆசிரியராக விளங்கி, அதன் மூலமாக ராமகிருஷ்ண மிஷனின் அபிமானத்தைப் பெற்று, இலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் பணியை நிறைவேற்றும் பொறுப்பை மேற்கொண்டு, பின்னர் அண்ணாமலைப் பல் கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகச் சேவை புரிந்த அடிகளார், சிங்களத் தீவினுக்கும் தமிழகத்துக்கும் மட்டு மன்றி வட நாட்டுக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் பாலம் அமைத்தவராவர். அது போலவே ஈழத்தில் தமது ஆழ்ந் தகன்ற கல்வி ஞானத்தினாலும், சிவானந்த வித்தியாலயம் வாயிலாகப் பரப்பிய சகிப்புத்தன்மை, தோழமையுணர்வு ஆகியவற்றினாலும் கல்வித்துறையில் மேற்கொண்ட முயற்சி களினாலும் கிழக்கிலங்கை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் நட்புறவுப் பாலமமைத்தார்."
இவ்வாறு விபுலானந்தர் பற்றிய தனது கடந்த கால மன எண் ணங்களையும் நீங்காத நினைவுகளையும் அஸிஸ் இச் சந்தர்ப் பத்தில் மீட்டுப் பார்த்துக்கொண்டார். இவையெல்லாம் விபு லானந்த அடிகளார் மீது அஸிஸ் கொண்டிருந்த நட்பை மட்டும் காட்டுவதாயமையாமல் விபுலானந்தரின் பணிகளையும் மேதா விலாசத்தையும் தமிழ்கூறு நல்லுலகும் அறிந்து கொள்ள வேண்டு மென்ற அளவிலின் வேணவாவையும் காட்டி நின்றன.

ஏ. எம். நஹியா | 129
பூனிலழறீ ஆறுமுக நாவலர்
ஈழத்து முஸ்லிம்களின் பல்துறை மேம்பாட்டுக்காக உழைத்த முகம்மது காசிம் சித்திலெவ்வையைப் போல் சைவ மக்களின் மேம்பாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தம்மா லானவற்றைச் செய்த பெருந்தகை பூரீலறுரீ ஆறுமுக நாவலரின் பணியை, தமிழ் பேசும் இந்து கிறித்தவ மக்கள் மட்டுமன்றி பல மொழி யினரும் பல இனத்தவரும் தெரிந்திருக்க வேண்டுமென அஸிஸ் 65th GlaØTrTrř. “The West Re appraised” GT6ör pro g, Gorg s-2. Iš 6 av நூலில் நாவலர் பற்றிய கட்டுரையொன்றை இணைத்து தனது இவ்வெண்ணத்தைப் பூர்த்தி செய்து கொண்டார்.
'நாவலரும் கல்வியும் எ ன் ற த லை ப் பில் அலிஸ் 28. 11 1953 இல் கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் சொற்பொழிவாற்றிய போது பின்வருமாறு குறிப்பிட்டார்:
"இலங்கையிலே மத சார்புள்ள சுதேச பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் பூரீலபூரீ ஆறுமுக நாவலர் அவர்களே பிதா ஆவார். இவர் ஆங்கிலக் கல்வியையும் மதத்தையும் ஒன்று சேர்க்கலாம் என்பதை எடுத்துக் காட்டினார். அக் காலத்திலே ஆங்கிலம் கற்கப் புகுபவர் சமயமாற்றம் பெற வேண்டியிருந்தது. நாவலர் வழிகாட்டிய பின்பு அந்தந்தச் சமயத் தலைவர்களால் ஆங்கிலக் கல்லூரிகள் தாபிக்கப்பட்டன. ஆறுமுக நாவலர் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களின் முறைகளில் சிறந்தவற்றைப் பின்பற்றி னார். பிரசங்கங்கள் புரிந்தார். புத்தகங்கள் எழுதினார். பாடசாலைகள் தாபித்தார். ஆறுமுக நாவலரின் சேவைத் திறம் அக்காலத்தில் பெளத்தர்களுக்கு எட்டியதோ தெரி யாது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அது பரவியது என்றே கூறலாம்,
பாரதியார் பாக்கள் இக்கால இலக்கியத்தில் புரட்சி செய் தது போல நாவலர் வசனங்கள் வசன நடையில் பெரும் புரட்சி செய்தன. இன்றைய நாள் கைக்கொள்ளத்தக்க சிறந்த வசன நடைக்கும் அவர் தான் தந்தையார் என்ப தில் சிறிதும் சந்தேகமில்லை. தீர்க்கதரிசனமான முறையில் அப்பொழுதே தொண்டாற்றி இக்காலக் கல்வி முன்னேற் றத்துக்குப் பெரிதும் உதவி புரிந்தார்.

Page 73
130 | அளnஸும் தமிழும்
變 பிள்ளைகளுக்குப் பாடப் புத்தகம் எழுதுவதென்றால் எவ் வளவோ விஷயங்களைக் கவனிக்க வேண்டும். நாவலர் பால பாடங்கள் மிகச் சிறந்தவை. அச்சகம் நிறுவித்
தாமே நூல்களை எழுதி, சரி பிழை பார்த்து, பிரசுரம் செய்வதில் கவனம் செலுத்தினார். இவரைப் பின்பற்றி இலங்கையில் சிறந்த ஆசிரியர்கள் பாட நூல்கள் எழுதி வெளியிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்.""
என அங்கு குழுமியிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலை யில் அஸிஸ் நாவலர் பெருமை பேசினார்.
திரு. கி. வா. ஜகந்நாதன்
தமிழறிஞர் கி. வா. ஜகந்நாதன் பற்றியும் அஸிஸ் தனது நூல்களில் எழுதியிருக்கிறார். மலேசியத் தமிழாராய்ச்சி மகா நாட்டில் சொற்பொழிவு நிகழ்த்திய கி. வா. ஜகந்நாதனின் கருத்தாழமிக்க சொற்பொழிவினால் கவரப்பட்ட அஸிஸ், பின்
வருமாறு, தனது "தமிழ் யாத்திரை நூலில் அதனைக் குறித்து வைத்துள்ளார்.
"தெய்வ பக்திக்கும் பக்தர்களுக்கும் மதிப்புக் குன்றிவரும் இக்காலத்தில், தமிழ் நயமும் பக்திச் சுவையும் பாலும் தேனும் போலக் கலந்திருக்கும் தேவார திருவாசகப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, பொது மக்களுக்குப் பயன் படும் வகையில் அவற்றுக்கு விளக்கம் எழுதி, சமயத் தொண்டும், தமிழ்த் தொண்டுமாற்றிவரும் அறிஞர் கி.வா. ஜகந்நாதன் என்பதை நான் முன்னமே அறிந்திருந் தேன். அன்னாரது நூல்களால் பயனடைந்தோரில் நானு மொருவனாவேன். சில ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந் தித்து உரையாடியுமுள்ளேன். அவர் சிறந்த பேச்சாளரு மாவார் என்பதை மேற்படி கருத்தரங்கில் நேரிற் கண்டு கொண்டேன். அவரது சொற்பொழிவைக் கேட்டபோது இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற இராஜ தந்திரியாகிய கிளாட்ஸ்டோன் என் பாரின் கடல் மடை திறந்தது போன்ற பிரசங்கம் இவ்வா றிருக்குமோவென்று எண்ணத் தோன்றியது." 9

ஏ. எம். நஹியா | 131
என தனது உள்ளத்தில் பட்டதை உள்ளவாறே கூறி, கி. வா. ஜகந்நாதனின் சமயத் தொண்டையும் தமிழ் தொண்டையும் மகிமைப்படுத்தினார். அஸிஸின் இக்குறிப்புரை பெரியார் ஜகந் நாதன் பற்றியதொரு சிறந்த மதிப்புரையாகும். தமிழறிஞரை தானும் மதித்து பிறரையும் மதிக்கச் செய்யும் அஸிஸின் உயர் பண்புக்கு இது தக்கதோர் உதாரணமாகும்.
உருதுக் கவிஞன் அல்லாமா டாக்டர் சேர் முகம்மது இக்பால்
இஸ்லாமியக் கவிஞன், தத்துவஞானி அல்லாமா சேர். முஹம் மது இக்பாலின் கவிதைகளினால் உந்தப்பட்ட அஸிஸ், அம் மகா கவியின் கருத்துக்கள் உலகெங்கும் பரவும் வகையில் முயற்சித்தார். இக்பாலின் கருத்துக்களைத் தனது கருத்துக்க ளுடன் கலந்து வாசகர்களுக்கு அளித்த அளவிஸ் தமிழ் கூறு நல்லுலகுக்கு இக்பாலை அறிமுகப்படுத்துவதில் முன்னின்று உழைத்தார். ஈழத்தில் இக்பாலை அறிமுகப்படுத்திய முதல்வர் என்ற பெருமை அளtஸ"க்கே உரியது.
அஸிஸ் இக்பால் பக்தன். இக்பால் பித்தன் என்று கூறக்கூடிய அளவுக்கு தனது சகல எண்ணங்களையும் சிந்தனைகளையும் இக்பால் மயப்படுத்தியிருந்தார். இக்பால் எழுதிய சகல நூல் களையும் பெற்றிருந்த இலங்கையர் அஸிஸ் வாழ்ந்த காலை அஸிஸ் ஒருவரே என்று கூறுமளவுக்கு அஸிஸின் நூலகத்தில் இக்பாவின் சகல நூல்களுமே இருந்தன. இக்பாலின் கவிதைச் சோலையில் அஸிஸ் நுழைந்த கதை ஒரு தனிக் கதை, அதை அவரே பின்வருமாறு கூறுகிறார்:
" அல்லாமா இக்பாலைப் பற்றி முன்னரே நான் கேள்வி யுற்றிருந்த போதிலும், 1937 - 41 ஆம் ஆண்டைய காலப் பிரிவில் வைத்திய இலாகாவில் சேவைபுரிந்த சமயத்திலே அவரை இரசிக்கத் தொடங்கினேன். கார் கில்ஸ் கம்பெனிப் புத்தகப்பகுதி மனேச்சராயிருந்த நண்பரொருவர் கே. ஜி. ஸெய்யிதைன் எழுதிய ‘இக்பாலின் கல்விக் கொள்கை"
Iqbal's Educational Philosophy' 67 Girgo)) biggs gigogs arri குமாறு என்னைக் தூண்டினார். இதன் பின்ன? தத்துவத்து றையில் இக்பாலின் ஒப்பற்ற படைப்பாகத் திகழும் 'இஸ் லாத்தில் மத ச் சி ந் த  ைன யி ன் புன ரு த் தா ர ண ம்’ - The Re - Construction of religious thoughts on Islam

Page 74
132 / அஸிஸும் தமிழும்
என்னும் நூலும் கைக்கு எட்டியது. பிற்பாடு "ஆன்மாவின் இரகசியங்கள் (தாதான்மியத்தின் அஹமியங்கள்) - Secrets of the Self என்ற நூலை வாசித்து மகிழ்ந்தேன். இந்த நூல் இக்பாலின் சிந்தனைப் பாங்கினை நான் அறிந்துகொண்ட போதிலும், எமது நண்பராகிய டாக்டர் அஹ்தார் இமாமைச் சந்திக்கும்வரை அவரின் கவிதா சக் தியை நான் சுவைக்க முடியவில்லை. 1941 இலோ 1945இலோ இமாம் அவர்களின் நட்புக் கிடைத்த பின்னர் இக்பாலின் கவிதைகளில் மணிக்கண்க்கில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். இமாம் அவர்கள் இக்பாலின் செய்யுட்களை இங்கிலிஸில் மொழி பெயர்த்துச் சொல்வதுடன் நில்லாது, ஒவ்வொரு செய்யுளைப் பற்றியும் பயன் கொழிக்கும் நீண்ட பிரசங் கமே செய்வரர், ஜெர்மன் மொழியிலும் தேர்ச்சி பெற்ற வரான இமாம், ஜெர்மானிய தத்துவ ஞானியாகிய நீச்சேNietzche - என்ப7ரும் அவருடைய அதி மனித . இத்துவமும் எவ்வளவு தூரம் இக்பாலைக் கவர்ந்துள்ளன வென்பதை எடுத்துக் காட்டுவார். அத்தகைய சந்தர்ப் பங்களில் இக்பர் ல், இமாம் இருவருமே ஜெர்மன் சர்வ கலாசாலைகளில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் என்ற நினைவு என் மனத்தில் எழும் !
என்று இக்பாலை அறிந்து கொண்ட கதையை அளீஸ் கூறிச் செல்லும் போது, இக்பாவின் அபிமானியாக, தான் படிப்படி
'சி மாறியவாற்றை அவர் எல்லோருக்கும் விளக்கும் போது,
♔ |Tഞെ நாமும் அறிய வேண்டும், அவரின் கவிதைகளை துசுர வேண்டும், அதில் திளைத்து மகிழ வேண்டும், என்ற ஆவல் எல்லோருக்கும் ஏற்படுகிறது. தான் பெற்ற இன்பம் பெறுத இவ்வையகம் என்ற நன்னோக்கில் அஸிஸ் செய்த @ uT៨៦ அறிமுக முயற்சி பாராட்டப்பட வேண்டியது. முஸ் லிம் உலகெல்லாம் புதிய சிந்தனையைத் தூவி விட்டு மறைந்து போன கவிக்கோமான் இக்பால் இறந்து பல வருடங்கள் கழிந்து விட்ட போதும் அவரது கருத்துக்கள் இன்றும் போற் றப்படுகின்றன. உல: நாடுகளில் புதிய உத்வேகத்துடன் பரவி வரும் இக்பால் சிந்தனைகளின் தாக்கத்தை அஸிஸ் இன்று உயிர் வாழ்ந்திருந்தால் கண்டு மகிழ்ந்திருப்பார்.

ஏ. எம். நஹியா | 133
ஸாஹிறாக் கல்லூரியின் முதல்வராக அஸிஸ் பணி புரிந்த காலை 1950 இல் அவர் ஆரம்பித்து வைத்த இக்பால் சங்கத் துக்கு அவரே தலைவராகவிருந்து இக்பாலின் கருத்துக்கள் பரவ வகை செய்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் தனதும் கல்லூரி யினதுமாக, பன்னிரு இக்பால் பற்றிய படைப்புகளை வெளியிட்டி ருந்தார். தனது முதலாவது ԱչIT 607 63/ "இலங்கையில் இஸ்லாம் நூலில் கூட இக்பால் சம்பந்தமான இரு கட்டுரை களை இணைத்திருந்தார். 'ஆத்மீக ஒளியே அறிவின் சிகரம்" இக்பாலாற்றுப்படை என்பனவே அக்கட்டுரைகள், இலங்கை யில் இஸ்லாம் நூலுக்கு "இக்பாலாற்றுப்படை' என்று பெயரி டலாமோ என்று கூட தான் சிந்தித்ததாக அந்நூலின் நூன் முகத்தில் அஸிஸ் தெரிவித்திருக்கிறார். அக்குறிப்பு கீழே தரப்படுகிறது.
**இந்நூலுக்குப் பெயரிடுவது கூட சற்றுச் சிரமமாகவேயிருந் தது. இக்பாலாற்றுபபடை', 'இலங்கையில் இஸ்லாம்" எனும் இரண்டினுள் எதனைத் தெரிவது என்பது பற்றிப் பலவாறு சிந்தித்தேன். இத் தொகுப்புள் வரும் கட்டுரை கள் யாவும் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எழுதப் பட்டனவே. நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஈழதது முஸ்லிம்களது மத கலாசார, கல்விப் பிரச்சினைகள் பற் றிப் பேசுவன அவை. அவை யாவற்றிலும் இக்பாலின் செல்வாக்குப் பா விடை நெய்யாகப் பரந்திருப்பதைக் காண லாம். நான் பல்கலைக் கழகத்தில் பயிலும் பொழுது இக்பாலை அறிந்திருந்தேன். வசீகரிக்கும் அவர் சிந்தனைகள் என்னைக் கவர்ந்தன. ஈழத்து முஸ்லிம்களின் களை இக்பால் நெறி நின்று ஆராய்ந்ததன் பலன் இக் கட் டுரைகள் . எனினும் விளக்கச் சுலபம் நோக்கி இலங்கை யில் இஸ்லாம் என்ற பெயரையே இந் நூல் பெறுகிறது. எனினும் நற்கவியிடம் நான் பெற்ற கடனைத் தீர்க்கும் வகையில் இறுதிக் கட்டுரையாம் இருபத்து நான்காம் gil: டுரைக்கு இக்பாலாற்றுப்படை என்ற தலைப்பையிட்டுள் GGGTTGör. * * 10
"இலங்கையில் இஸ்லாம் நூன்முகத்தில் அஸிஸ் இவ்வாறு தெரி வித்திருப்பது, அவரது ஆக்கங்களில் இக்பாலின் செல்வாக்கைக் காட்டப் போதுமானது.

Page 75
t34 அஸிஸும் தமிழும்
கல்ஹின்னை மாணவ மன்றத்தின் 5வது ஆண்டு நிறைவை யொட்டி 1951இல் வெளியிடப்பட்ட "The Union" மலரில் Igbal's Message" என்ற கட்டுரையையும், ஸாஹிறாக் கல்லூரி ஆண்டு மலரான AZ - Zahira வுக்கு 1954இல் Igbal என்ற மகுடத்தில் ஒரு கட்டுரையையும் அஸிஸ் எழுதியிருந்தார். "இக்பாலுக்கு நமது அஞ்சலிகள் என்ற தலைப்பில் அவர் எழு திய கட்டுரையொன்று 1962இல் பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த வெளியீடான *Yarl Crescent இல் பிரசுரமாகியிருந்தது. இக்பால் சங்கத்தின் சார்பில் இக்பால் பற்றிப் பல சொற்பொழிவுகள் ஸாஹிறாக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்டன. அஸிஸ் அவர்கள் கூட பல ஆங் கில, தமிழ்ச் சொற்பொழிவுகளை இக்பால் பற்றி நிகழ்த்தி யிருக்கிறார். இவற்றை விட, தான் அதிபராகவிருந்த காலத் தில் ஸாஹிறாக் கல்லூரியில் கட்டி எழுப்பப்பட்ட புதிய கட் டிடமொன்றுக்கு இக்பால் கட்டிடம்" என்று நாமமிட்டதுடன் தனது இரண்டாவது அருமை மைந்தனுக்கும் இக்பால்" என்று பெயரிட்டு இக்பாலிடமிருந்து தான் பெற்ற பயனுக்கு நன்றிக் கடனிறுத்தார் அஸிஸ்.
அஸிஸ் ஈழத்தில் அறிமுகப்படுத்திய அந்த இக்பாலை, உருது மொழிக்கு உயிரூட்டிய அம்மாபெரும் கவிஞரை இஸ்லாமியக் கவிஞரை, அவரின் இதய ராகத்தை, சிந்தனைகளை, ஈழத்த வரும் அறிந்து அவரின் ஆக்கங்களை நுகர்ந்து மகிழ வழி செய்த பெருந்தகை அஸிஸின் பெரும் பணியைத் தமிழுலகு என்றும் நினைவு கூரும்.
வங்கக்கவி காவலி நஸ்றுல் இஸ்லாம்
வங்கக்கவி காஸி நஸ்றுல் இஸ்லாத்தை ஈழத்தின் தமிழ் பேசும் மக்களுக்கு முதல் தடவையாக அறிமுகப்படுத்தியவர் ஜனாப் அஸிஸ் அவர்களே. தனது "பெரு நாளுக்கொரு சிந்தனை விருந்து" என்ற கட்டுரையில் நஸ்றுல் இஸ்லாத்தை அளவிஸ், வங்காளத்தின் பிரசித்தி பெற்ற முஸ்லிம் புரட்சிக் கவிஞர் எனக் குறிப்பிடுகிறார். ஈதுல் பித்ர்" (றமழான் பெருநாள்) தினத்தின் தத்துவத்தைப் பற்றிக் கூறவந்த அஸிஸ் அது பற்றிய நஸ்றுல் இஸ்லாத்தின் கவிதையொன்றைத் தமிழாக்கித் தனது கட்டுரையுடன் இணைத்திருந்தார். அஸிஸ் மொழி பெயர்த் துத் தந்த அக்கவிதை கீழே தரப்படுகிறது:

ஏ. எம் நஹியா | 138
* புவன முழுவது மிப் புனித தினத்தில்
ஏதமில் இஸ்லாம் எழுப்பும் நாதம் ஒன்றே அதனை உற்றுக் கேளீர்
மேலோ ரென்றும் கீழோ ரென்றும்
ஏற்றத் தாழ்வு எம்மிட மில்லை. யாரும் ஒன்றே யாவருஞ் சமமே அடிமை யென்றும் ஆண்டா னென்றும் இஸ்லாமதத்தில் எவரு மிலரே. உயர் மாடத்தின் உச்சி மீதினில் வீற்றிருக்கும் வீறாப் புடையீர் அமீரென்றும் அரச னென்றும் அகந்தை பேசி ஆட்சி செலுத்த s நீவிர் யாவர்? உமக்கருகதை யென்ன? இப்படிச் செய நீர் இன்னு முயன்றால் அழியா நிற்கும் அவமானச் சின்ன மென்று உம்மைக் கூறத் தயங்க மாட்டேன். உத்தம கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் உமது நடத்தையால் உலகோ ரெமது சத்திய இஸ்லாம் சாற்று போதனையை தப்பாய் விளங்கத் தருணம் அளித்தீர் வையக மீதினில் வாழ்விலுந் தாழ்விலும் இன்பமே வரினும் துன்பமே நேரினும்
ஒன்றாய்ப் பங்கு உவந்து பற்றும்
சோதரர் நீரெனச் சாற்றுது இஸ்லாம். மற்றை யோர் துன்பம் மலிந்து நிற்கையில் ஒருவரே யனைத்தையும் சேர்த்துப் பதுக்க பாரினி லெவர்க்கும் பதிவல்ல உரிமை. அழுத கண்ணிர் ஆறாய்ப் பெருகி ஒளியிழந் தொருவர் ஒதுங்கி நிற்கையில் வண்ண வண்ண மால் தீபாலங்காரம் வகையுறச் செய்வது நீதியாகுமோ? இலட்ச மக்கள் இன்னலுறுகையில் இருவர் மாத்திரம் சுகிப்ப தெங்ஙனம்? இதனை இஸ்லாம் ஏற்குமோ கூறிர். ஈதுல் பித்ர் இயம்பு நியதியைக் கூறுவேனதனைக் கூர்ந்து கேண்மின், வாழ்வுக்குமக்கு வேண்டியது போக

Page 76
136 / அலிஸும் தமிழும்
மிகுந்த தனைத்தையும் தேவையுளார்க்கு வழங்கு வீரின்றே பசிக் குறு பரிசிலாய் மகிழ்ச்சிப் பெருக்கில் வழிந்திடுமுமது இன்பக் குளத்தில் அள்ளிப் பருக நா உலர்ந்தோருக்கு நல்லுரிமையுண்டு. அவருக் குரியதை அள்ளி வழங்கி மாண்புறு சோதரீர் மகிழ் வுறுவீரே. ஈகைப் பெரு நாளாம் இன்று தினத்தில் வீதிகள் தோறும் விரைந்து சென்று
ஈத் முபாரக்-வஸ்ஸலாம்' என்றும் மங்களம் பெருகுக சாந்தி நிலவுக என்றும் முரசொலி எழுப்பிடுவேன் நான் சாந்தியின் சின்னமாய் சகலருக்கு மின்று பாகு நிறைந்த பாயச மதனை வாய் சுவைக்க வாரி வழங்கிடுவேன்; நறு மணங்கமழும் வண்ணப் பூ போன்ற அல்லாஹ்வின் அருள் வாக்காம் வேத வசனங்களை விளங்கு மாறுமக்கு எடுத்து வழங்கிடுவேன் ஏற்பீர் மாந்தரே, இன்று தின மீகைத் திருநாளானதினால்," 1
என அமைகிறது இக் கவிதை, அந்த வங்கக் கவிஞனின் தங்கக் கவிதையை, இஸ்லாமிய சமதர்மக் கவிதையை, ஈதுல் பித்ர் தரும் படிப்னையாகக் கவிஞர் கண்ட கருத்துப் பொதிந்த கவிதையை, அஸிஸ் மொழி பெயர்த்துத் தனது கட்டுரையினூடு தந்ததன் மூலம் நஸ்றுல் இஸ்லாத்தின் கவிதைப் பண்பைத் தமிழுலகறி யச் செய்தவர் என்ற பெருமைக்குரியவரானார். ஆயினும் கவி நஸ்றுல் இஸ்லாம் தனது கவிதைகளில் காட்டிய தீவிரத்தை ஏற் கப் பயந்தமையினாலோ என்னவோ நஸ்றுல் இஸ்லாத்தைத் தமிழுலகுக்குப் பூரணமாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் அஸிஸ் சற்றுத் தாமதித்தார்; தயங்கினார் என்றுகூடக் கூறலாம்.
அஸிஸ் அவர்கள் 1950 களில் செய்த இவ்வாரம்ப முயற்சியைத் தொடர்பறாது செய்யத் தலைப்பட்ட சிலர், கவிஞன் காஸி நஸ்
றுல் இஸ்லாத்தை ஈழம் வாழ் தமிழ் பேசும் மக்களுக்குச் சிறப் பாக அறிமுகம் செய்து வைத்தனர். அபூதாலிப் அப்துல் லதீப் அவர்கள் கவிஞனைப் பற்றி பல வானொலிச் சொற்பொழிவு

ஏ. எம். நஹியா / 137
களை நிகழ்த்தியுள்ளார். வீரகேசரி, மணிக்குரல், இன்ஸான், Daily News, தேசாபிமானி பத்திரிகைகளில் நஸ்றுல் இஸ்லாம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவை கவிஞனின் முழு மையை வெளிக்கொணர்ந்தன. 1967-1969 வரை வெளிவந்து கொண்டிருந்த இன்ஸான்' பத்திரிகை 23-05-1969இல் வெளி யிட்ட நஸ்றுல் இஸ்லாம் மலர் இம் முயற்சியில் கோடிட்டுக் காட்டப்படவேண்டியதாகும். பண்ணாமத்துக் கவிராயர் (எஸ். எம். பாரூக்) கவிஞனின் கவிதைகளை அன்று தொட்டே உயிர்த் துடிப்புக் குன்றாது மொழி பெயர்த்து வந்துள்ளார். தாமரை' மஞ்சரி', 'தினகரன்', 'மல்லிகை”, “முஸ்லிம் ஜனதா போன்ற இதழ்களும் நஸ்றுல் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள், கவிதை களைப் பிரசுரித்து மகிமைப்படுத்தின. இவற்றுக்கெல்லாம் சிக ரம் வைத்தாற்போல் அமைகிறது இலங்கைப் பல்கலைக் கழக கொழும்பு வளாக முஸ்லிம் மஜ்லிஸினர் 1977 இல் வெளியிட்ட "நஸ்றுல் இஸ்லாம் நினைவு மலர்' கவிஞனை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்த ஈழத்தில் இதுவரை எடுக்கப்பட்ட முயற்சி களுள் விதந்துரைக்கத்தக்கதாக இது அமைகிறது.
அறிஞர் அவிஸ் 1950களில் செய்த நஸ்றுல் இஸ்லாம் அறி முக முயற்சி மிகப் பயனளித்துள்ளது. வங்கக் கவி இன்பத் தையும் தமிழுட் பாய்ச்சி தமிழைச் செழுமைப்படுத்துவதில் ஆரம்ப முயற்சி செய்த அஸிஸ், பிறநாட்டு நல்லறிஞர் சாத் திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்ற பாரதியின் கொள்கைவழி நடந்தவர். அக்கொள்கையை உயி ருள்ளதாக்க முயன்றவர் :
அஹ்மது ஒறாபி அல்மிஸ்ரி
எகிப்தில் புரட்சிசெய்த குற்றத்திற்காக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் இவர் 1883 ஜனவரி 11ஆம் திகதி முதல் 1901 செப்ரெம்பர் 18ஆம் திகதிவரையுள்ள ஏறக்குறைய 19 வருடகாலத்தை இலங்கையில் கழித்த இப் புரட்சி வீரனை ஈழத்தவர்களுக்குப் பொதுவாகவும், இந்நாட்டு முஸ்லிம்களுக் குச் சிறப்பாகவும் அறிமுகப்படுத்தியவர் முகம்மது காசிம் சித்தி லெவ்வை அவர்கள். தனது 'முஸ்லிம் நேசன்" பத்திரிகை யில் ஒறாபி பாஷாவைப்பற்றித் தொடர்ச்சியாகக் கட்டுரை கள் எழுதியதுடன் நில்லாது, பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி இப் பெரியாரைச் சிறப்பாக அறிமுகம் செய்து

Page 77
138 / அஸிஸும் தமிழும்
வைத்தார் சித்தி லெவ்வை. இவரின் முயற்சியைத் தொடர்ந்து ஒறாபி பாஷாவின் பணிகளை மதித்துப் பெரு மைப்படுத்தி மீண்டும் அவரை ஈழத்த வருக்கும் பிறருக்கும் அறிமுகப்படுத்தியவர் அஸிஸ். மறந்துவிடப்பட்ட ஒறாபி பாஷாவை மீண்டும் சமூகத்தின் முன் கொணர்ந்து நிறுத்திப் பெருமைப்படுத்தியவர் அவர்.
ஒறாபி பாஷாவின் உருவப்படம் 1955 மே 17ஆம் திகதி முஸ்லிம்களின் கலைக்கூடமான ஸாஹிறாக் கல்லூரி கபூர் மண்டபத்தில் அஸிஸ் அவர்களினால் திரைநீக்கம் செய்துவைக் கப்பட்டது. அவ்வைபவத்தில் அஸிஸ் நிகழ்த்திய உரை ஒறாபி பாஷா பற்றிய சிறந்ததொரு அறிமுக உரையாக அமைந் திருந்தது. அஸிஸ் அவர்கள் 1963இல் வெளியிட்ட இலங்கை யில் இஸ்லாம்" என்ற நூலில் அடங்கியிருக்கும் "இலங்கையில் அறபி பாஷா என்ற கட்டுரை இந்த உரைதான் என் பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இடம்பெறும் இக் கட்டுரை வாயிலாக ஒறாபி பாஷாவை அறிந்துகொள்ளும் வாய்ப்பை தமிழுலகு மீண்டுமொருமுறை பெற்றது. இக்கட்டுரை வெளி வந்தபின்னர் தான், ஒறாபி பாஷா பற்றியும், ஈழத்தில் வாழ்ந்த காலை அவர் முஸ்லிம் சமூகத்துக்குச் செய்த அரும் பெரும் பணி கள் பற்றியும் முஸ்லிம் சமூகம் மீண்டும் சிந்திக்கத் தலைப்பட் டது. அவரது பணிகள் இதன் பின்னர்தான் மதித்து எடை போடப்பட்டன என்று கூறுவதும் நியாயமானது. முகம்மது காசிம் சித்திலெவ்வையின் மரணத்துடன் மறந்துவிடப்பட்ட இப் பெரியார் இப்போது பெறுகின்ற முக்கியத்துவம் அஸிஸி னால் ஏற்பட்டது.
அஸிஸ் அவர்கள் தனது பிரயாண நூல்களில்கூட ஒறாபி பாஷா வைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எகிப்திலிருந்து தன்னை இலங் கைக்கு நாடு கடத்தப்போகிறார்கள் என்பதை அறிந்தபோது ஒறாபி பாஷா,
பூலோக நந்தவனமாகிய மிஸ்றியிலிருந்து நான் விரட்டப்படு
கிறேன். ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் தரிப்பிட மாகிய புண்ணிய ஸ்தலமாம் இலங்கைக்குப் போகவிருக் கிறேன். இதனை ஒரு நற்சகுணமாக நான் கருதி வரவேற் கிறேன்.'
 

ஏ. எம். நஹியா / 139
எனக் கூறியதாக அஸிஸின் "கிழக்காபிரிக்கக் காட்சிகள்' நூல் தகவல் தருகிறது. வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம் அந்த எகிப்தியப் புரட்சி வீரனை, ஈழத்து முஸ்லிம்களின் ஒரு காலகட் டத்தின் வழிகாட்டியை, அஸிஸ் அறிமுகம் செய்துவைக்கத் தவற
-
ஒறாபி பாஷாவைப்பற்றி நூலொன்றைக்கூட வெளியிடும் எண் ணம் பெரியார் சித்திலெவ்வைக்கு இருந்ததைப்போல அள8ஸ"க் கும் இருந்தது. ஈழத்து முஸ்லிம்களின் கல்வி, கலாசார, பண் பாட்டு மறுமலர்ச்சிகளுக்காக முன்னின்றுழைத்த முன்னவர்க ளுள் ஒருவரான ஒறாபி பாஷாவை, தான் பிறக்காத, ஆனால், சேர்ந்துவாழ்ந்த ஈழத்து முஸ்லிம்சமூகத்தின் உயர்வுக்காக அப்போ தைய தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட தன்னலமற்ற தலைவனை, தனது சமூகத்துக்காகத் தன் வாழ்நாட்களை அர்ப் பணித்த வீரத் தியாகியை அஸிஸ் மறந்துவிடவில்லை. தனது சமூகம் அவரை மறந்துவிடவும் அஸிஸ் விடவில்லை.
காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னாஹ்
பாகிஸ்தானின் தந்தை வீரத்தியாகி காயிதே ஆஸம் முஹம்மது அலி ஜின்னாஹ் மறைந்தபோது அஸிஸ் ஸாஹிறாக் கல்லூரி யில் அவரைப் பற்றிய நினைவுச் சொற்பொழிவொன்றை நிகழ்த் தினார். இச் சொற்பொழிவுதான் "எங்கள் ஜின்னாஹ்” என்ற தலைப்பில் "இலங்கையில் இஸ்லாம் நூலில் இடம்பெறும் கட்
டுரை. ஜின்னாவின் மேதாவிலாசத்தை, அவர் வாழ்ந்த சமூகத்
துக்கும் நாட்டுக்கும் அவர் செய்த பெருந்தியாகங்களை, அளவி ஸின் அச் சொற்பொழிவு நன்கு காட்டியது.
ஜின்னாஹ் மறைந்து ஈராண்டுகள் பூர்த்தியடைந்தபோது, ஜனாப் அஸிஸ், பாகிஸ்தானின் முதல் மூன்றாண்டுகள்" என்ற தலைப் பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். பாகிஸ்தானின் முதல் மூன்றாண்டு அரசியல் வளர்ச்சியில் ஜின்னாவின் பங்களிப்பை இக் கட்டுரை துலாம்பரமாகக் காட்டிற்று. "இலங்கையில் இஸ் லாம் என்ற அஸிஸின் நூலில்தான் இக் கட்டுரையும் இடம்பெறு கிறது.

Page 78
140 அஸிஸும் தமிழும்
கவிஞர் அப்துல் காதிர் லெப்பை
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த கவிஞருள் ஒருவ ரெனக் கொள்ளத்தக்கவர் கவிஞர் அப்துல் காதிர் லெப்பை அவர்கள். இக்பால் இதயம்", "ருபாய்யாத்", "முறையீடும் தோற்றமும்", "இறசூல் சதகம்', 'தஸ்தர்ே சதகம்’, ‘கார்வான் கீதம்', 'செய்னம்பு நாச்சியார் மான்மியம்", "மெய்நெறி', 'என் சரிதை", "நான்" ஆகிய நூல்களைத் தமிழுக்களித்த பெருங் கவிஞர் அப்துல் காதிர் லெப்பை அவர்கள். அவரது ‘ருபாய்யாத் நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தமை குறிப்பிடத் தக்கது. -
கிழக்கிலங்கையின் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக்கொண்ட இப் புலவர் பல்கலைக் கழகப் பொருளியல் விரிவுரையாளரும் அஸிஸ் கால ஸாஹிறா மாணவருமான கலாநிதி ஏ. சி. எல். அமீர் அலியின் தந்தையாராவார். அதான்", "காத்தான்குடிக் கவிஞர்", "ஆய்வாளன்' என்ற புனை பெயர்களில் இலங்கை இந்தியப் பத்திரிகைகளில் எழுதிப் புகழ் பெற்ற இப் புலவரின் ஆக்கங்கள் மதம், அரசியல், தத்துவம், இலக்கியம் பற்றிப் பேசு வன; இலக்கியப் பெறுமதிமிக்கனகு அப்துல் காதிர் லெப்பையும் அஸிஸைப்போன்று இக்பால் பக்தர். இக்பால் காட்டிய வழி யில் நடந்தவர்.
இப்புலவருடனான அஸிஸின் தொடர்பு மிக நெருக்கமானது. அஸிஸின் மரண பரியந்தம் இத் தொடர்பு நீடித்தது. அஸிஸ் மரணமடைவதற்கு இரு கிழமைகளுக்கு முன்னர் கூட புலவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார், புலவரும் தனது "செய்னம்பு நாச்சியர் மான்மியம்' நூலை,
சமூக முயிர்ப்பச்
சவியாதுழைக்கும்
சால்பு மிக்கோன்
சான்றோன்! ஆய்ந்து,
அமைந்த அறிஞன்
அன்பா லெனையே

ஏ. எம். நஹியா / 141
ஆட் கொண்டியக்கும் அரிய நண்பன் இனிய பண்பார் εr. στιb, στ. -96γύου இணையில் அன்புக் கிந்நூல் அர்ப்பணம்!
எனப் பாடி அறிஞர் அளூஸ்-சக்கு அர்ப்பணம் செய்து அவர் மீதிருந்த தனது அன்புப் பசியைத் தீர்த்துக் கொண்டார்.
அறிஞர் அஸிஸ் அவர்கள், புலவருடனான தனது உறவையும் புலவரின் பெருமையையும் பின்வருமாறு கூறுகிறார்:
* முஸ்லிம் சமுதாயம் முழுவதற்கும் ஐந்தே ஐந்து பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள் இருந்து வந்த அந்தக் காலத்தில் அவர்களில் ஒருவராகக் கவிஞர் விளங்கினார். ஆசிரியராக இருந்து, தம்மைப் போலவே உரிய கல்வியறிவும், பயன் கருதாச் சேவை மனப்பான்மையுமுள்ள பல நற்பிரஜை களை நம் நாட்டிற்குக் கவிஞர் வழங்கியுள்ளார். கல்வி சம்பந்தமாகவும் இக்பால் பற்றியும் கருத்தொருமைப்பாடு கொண்டிருந்த நாங்கள், காலக்கிரமத்தில் சமுதாய, கலா, சார விடயங்களிலும் ஒத்த சிந்தனை கொண்டவர்களா G36ÖTT LÉ.” ” 2
இப்புகழாரம் கவிஞருக்கும் அறிஞருக்குமுள்ள தொடர்பையும் நட்பையும் நன்கு காட்டுகிறது. இது கவிஞருக்குக் கிடைத்த நல்லதொரு அறிமுகமாகும்.
இவ்வாறு அஸிஸ் பலரைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே அறிமுகமானவர்களின் புகழை மேலோங்கச் செய் தார். அஸிஸின் இம் முயற்சியினால் பல புதிய நண்பர்களைத் தமிழுலகு அறிந்து கொண்டது. தமிழ் மொழி மீதும் அதைப் பேசியோர் மீதும் அஸிஸ் கொண்டிருந்த அளவற்ற அன்பும் பாசமும்தான் இவற்றையெல்லாம் செய்ய அவரைத் தூண்டின.
13 இக்பால் ஏ.
மறுமலர்ச்சித் தந்தை விண்மதி வெளியீடு நாவலப்பிட்டி, 1971 Lğ: 24

Page 79
142 / அசீஸ்" ம் தமிழும்
2.
'எச். எம். பி.யின் அறிஞர் அளtஸ் சில நினைவுகள். நூல் விமர்சனம்"
பூரீலங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ் (தொகுப்பு)
தர்காநகர், 1975
Lj5: 14.
அஸிஸ் 6T. Grib. 67.
அறபுத் தமிழ் ஆலிம் புலவர் அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்
is 23
ைெடி
iš 3 2 5
െ.
jj; : 20
அவிஸ் எ. எம். எ. தமிழ் யாத்திரை சென்னை , 1968
jj; : ! 04 - 1 0 6
தினகரன் வார மஞ்சரி 29 நவம்பர் 1953
அளவீஸ் எ. எம். எ. தமிழ் யாத்திரை சென்னை, 1968 Lá, 87 - 88
கிழக்காபிரிக்கக் காட்சிகள் சென்னை, 1967
pig 19 - 20

0.
.
2.
ஏ எம் நஹியா | 143
அஸிஸ் எ. எம்; எ. இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963 6 ستمبر 5: نیچے {_t
டிெ
37 سے 35:تھائی 1_L
'
ஆப்தீன், மாத்தளை 岛。 இன்று "நான் வெளியீட்டு விழா தினகரன் 11 அக்டோபர் 1986

Page 80
瞿4 முஸ்லிம் பத்திரிகை ஆய்வும் தேடுகையும்
ஒரு சமூகத்தின் உயர்ச்சிக்கும் மொழி வளர்ச்சிக்கும் இலக்கியச் செழுமைக்கும் வரலாற்றுச் சீர்மைக்கும், பத்திரிகை, சஞ்சிகை களின் வெளியீடுகள் அவசியமென அளவீஸ் கருதினார். அத னாற்றான் அது பற்றிப் பேசியும், எழுதியும், அதனை ஊக்கி யும் வந்தார்.
சென்னை மாநகரில் 1955 பெப்ருவரி 6 ஆம் திகதி நடைபெற்ற தென் இந்திய முஸ்லிம் கல்விக் கழகத்தின் பொன்விழா 2 ஆம் நாள் நிகழ்ச்சிக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரையில் அளவீஸ்,
" நாம் வாழ்ந்து வரும் இக்காலம், நூற்றுக்கு நூறு பங்கு இலக்கியத் துறையில் நவீனங்கள், சிறு கதைகள், சரிதை
சிக் கட்டுரைகள் போன்றவைகளைக் கொண்ட சஞ்சிகை கள் வடிவில் மக்களையாட் கொண்டிருக்கும் காலமாக இருந்து வருவதேயாகும். இத்துறையிலும் நாம் சந்தர்ப் பத்தை நழுவவிட்டு விடாது தகுந்தவாறு முயன்று இஸ் லாமிய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட பல சஞ்சிகைகளை வெளியிட்டு மக்கள் பயன் பெற உதவ வேண் டும். இத் துறையில் மணி விளக்குச் செய்து வரும் மதிப் புக்குரிய சேவையைக் குறிப்பிடுதல் பொருத்தமாகும். இவ் வகையில் எவ்வித தங்கு தடையுமின்றியும் சிரமத்தைப்
 

ஏ. எம். நஹியா | 145
பொருட்படுத்தாமலும் இந்நாட்டு முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்களும் ஈடுபடுதல் வேண்டுரீஸ்ற்று மட்டும் வலி யுறுத்திக் கூறவிரும்புகிறேன். இவ்வாறு செய்வதால் அறபுத் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதோடு மாத்திரமின்றி பொது வாக தமிழ் இலக்கியச் செல்வத்தையும் பெருக்கியவர்க ளாகவும் ஆவோம்." 1
என அறிவுரை வழங்கினார். இஸ்லாமிய தமிழிலக்கியத்தை, அறபுத் தமிழிலக்கியத்தை வளம்படுத்தவும் அவற்றின் அளவைப் பெருக்கவும் முஸ்லிம் சஞ்சிகைகளின் வெளியீடுகள் அவசிய மென்பதை அம் மகாநாட்டில் அவர் வலியுறுத்திக் கூறினார். "அற்புத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் என்ற தலைப்பில் மருதமுனை மகாநாட்டில் படிக்கப்பட்ட அவரது கட்டுரையில் கூட இக்கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அறபுத் தமிழ் வளர்ச் சிக்காக அக்கட்டுரையில் அவர் தெரிவித்த ஏழு ஆலோசனை களையும் செயற்படுத்துவதற்கு ஒரு சஞ்சிகை ஆரம்பிக்கப் படவேண்டும் என்ற கருத்தையும் அக்கட்டுரையில் அவர் கூறி வைத்தார்.
'இவ்வேழு திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கென
ஒரு சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டால் நன்றாயிருக்கும்"
என அக்கட்டுரையில் அவர் தெரிவித்திருந்தார். அன்றைய நிலையில் மட்டுமன்றி இன்றைய நிலையிலுங்கூட இக்கருத்து முக்கியத்துவம் உடையதாகவே தெரிகிறது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அஸிஸ் படித்துக்கொண் டிருந்தபோது அவருக்கிருந்த பத்திரிகை படிக்கும் ஆர்வம், அக்காலை வெளிவந்துகொண்டிருந்த "தாருல் இஸ்லாம்" மாசிகையின் பெருமை, அப்போது நிலவிய முஸ்லிம் பத்திரி கைத் தட்டுப்பாடு பற்றியெல்லாம் தனது * கிழக்காபிரிக்கக் காட்சிகள்' நூலில் எழுதிவைத்திருக்கிறார்.
* யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் படித்தகாலத்தில் வெளிவந்து கொண்டிருந்த "தாருல் இஸ்லாம்" என்ற மாசிகை எனது மனத்திரையில் மின்னி மறைந்தது. ஜனாப் பா. தாவூத் ஷா அவர்கள் வெளியிட்டுவந்த இந்த மாசிகையின் வசன நடையும், ஆசிரியத் தலையங்கங்களும்,

Page 81
146 அளnஸ"ம் தமிழும்
சிறப்புக் கட்டுரைகளும் அந்நாட்களில் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஒவ்வொரு மாதமும் எப்பொழுது வெளி வரும்" என்று காத்திருந்து, வந்ததும் என் சாச்சாவிடம் இர வல் வாங்கிப்படிப்பது வழக்கம். இந்த நாட்களில், என்னைப் பொறுத்தவரையில் வாசினைப் புத்தகங்களுக்குப் பெருத்த பஞ்சம் இருந்தது. ** 2
என அவரது கல்லூரிக் காலத்தில் நிலவிய முஸ்லிம் பத்திரி கைத் தட்டுப்பாடுபற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
முஸ்லிம் பத்திரிகைகள் சிலவற்றின் கூடிய முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகமும் தமிழ் கூறு நல்லுலகும் உணரும் வகையில் செயற்பட்டவர் அஸீஸ், முகம்மது கா சிம் சித்தி லெவ்வையின் "முஸ்லிம் நேசனும் குலாம் காதிறு நாவலரின் வித்தியா விசா ரிணியும் அந்த வகையில் அஸிஸின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலங்கை வரலாற்றைப் பூரண மாக அறிந்து கொள்ளவும், ஆய்வுகள் செய்யவும், இன்றியமை யாத ஆதார ஏடாக விளங்குவது முஸ்லிம் நேசன்' என்ற கருத் துடையவரான அஸிஸ், "பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களின் சில சிறப்பியல்புகள்" என்ற தனது ஆய்வுக் கட்டுரைக்காக முதன்முதலில் "முஸ்லிம் நேச
லாற்றை, குறிப்பாக , இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை, விரிவாக எழுத முனையும் எவரும் முஸ்லிம் நேசனை' முக்கிய மான ஓர் ஆதார ஏடாகக் கொள்ள வேண்டுமென்பது அஸிஸின் துணிபு
முஸ்லிம் நேசன்", "வித்தியா விசாரிணி ஆகிய பத்திரிகை கள் பற்றித் தனது தமிழ் யாத்திரை நூலில் அஸிஸ்,
** இலங்கை முஸ்லிம்களின் தலைவராக விளங்கியவர் சித்தி லெவ்வை அவர்களாவர். 1839இல் தோன்றிய இவர் 1899இல் மெளத்தானார். இவர் 1882இல் "முஸ்லிம் நேசன்" பத்திரிகையைத் தோற்றுவித்தார். அக்கால இலங்கை, இந்திய முஸ்லிம்களின் மத்தியில் பெரு வழக் கிலிருந்த அறபுத் தமிழ் நடையில் எழுதப்பட்ட இந்த
 

ஏ. எம். நஹியா | 147
வார சஞ்சிகையை 1889 வரை சித்திலெவ்வை நடத்தி வந்
பத்திரிகை வெளியீட்டு முயற்சி இதுவே. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் ஆறுமுகநாவலரின் உரைநடையாலும் கண்டனப் பிரசுரங்களாலும் உரம் பெற்ற இம் முஸ்லிம் நேசனுக்குச் சென்னை, புதுச்சேரி, பினாங்கு, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் சந்தாதாரரிருந்தார்கள். இதன் சமகாலத்தில் பினாங்கிலிருந்து வித்தியா விசாரிணி வெளி வந்து கொண்டிருந்தது. நாகூர்தர்கா வித்துவான் குலாம் காதிறு நாவலர் நடத்தி வந்த இப்பத்திரிகை சில சமயங் களில் முஸ்லிம் நேசனுடன் வாதப் பிரதி வாதங்களிலீடு பட்டது. இந்த 'முஸ்லிம் நேசனே? எனது ஆராய்ச்சிக் கட்டுரையின் மூலாதார ஏடாகும்.' ?
என எழுதியிருந்தார். அதன் மூலம் முஸ்லிம் நேசனை'யும், வித்தியா விசாரிணியையும் சிறப்பாக அறிமுகப்படுத்தியிருந் தார். மலேசிய மகாநாட்டில் தனது ஆய்வுக் கட்டுரையை வாசித்தபோது அஸிஸ் தெரிவித்த மேற்கண்ட கருத்து இவ் விரு பத்திரிகைகளுக்கும் கிடைத்த நல்லதொரு விளம்பர மாகும். முஸ்லிம் நேசனை நன்கு பயன்படுத்திப் பயன்பெற்ற அஸிஸ், அது போன்ற பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளிவர வேண்டுமெனக் கருதியதில் நியாயமிருக்கிறது.
மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் கலந்து கொள்ளச் சென் றிருந்த அஸிஸ் "மியூஸியம் நெகாரா'வில் சித்தி லெவ்வையின் "முஸ்லிம் நேசன் பிரதிகளைத் தேடினார். 1966 ஏப்ரல் 16ஆம் திகதி அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டுப் பொருட் காட்சி நடைபெற்ற தேசிய நூதனசாலையான மியூஸியம் நெகாராவுக்குச் சென்றிருந்த அஸிஸ், தான் ஏற்கனவே அனுப்பி யிருந்த முஸ்லிம் நேசன் முதல் ஏட்டின் சில பக்கங்களின் போட்டோப் பிரதிகள் வந்து சேர்ந்து விட்டதா என்பதை அறி யும் ஆவலில் தேடிப் பார்த்து ஏமாந்த கதையைத் தனது "தமிழ் யாத்திரை நூலில் அவர் எழுதியிருக்கிறார்.
* பொருட் காட்சியில் வைக்கப்பெற்றிருந்த பொருட்களில் ‘முஸ்லிம் நேசன்" முதல் ஏட்டின் சில பக்கங்களின் போட் டோப் பிரதிகளும் உண்டோவென்று தேடிப் பார்த்தேன்; காணவில்லை. ஒருவேளை அவை போய்ச் சேரப் பிந்தி

Page 82
148| அளnஸ்-சம் தமிழும்
யிருக்கலாம் என்றாலும், அப்பிரதிகள் ஈற்றில் மலாய்ப் பல்கலைக் கழக இந்தியக் கலைத்துறை நூல் நிலையத் தைப் போயடையுந் தானே என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.' 4
என அவர் எழுதியபோது, "முஸ்லிம் நேசன்' பத்திரிகையின் முக்
யும் தமிழுலகறியச் செய்வதில் அவர் எடுத்துக்கொண்ட பிர யாசையை விளங்கிக் கொள்ள முடிகிறது.
பினாங்கில் குலாம் காதிறு நாவலர் பற்றியும் அவர் நடாத்திய "வித்தியா விசாரிணி' பத்திரிகை பற்றியும் அஸிஸ் அவர்கள் விசாரித்துத் தகவல் பெற முயன்றதாக அறிகிறோம். ஆனா லும் எத்தகவலும் கிடைக்கப்பெறாமையால் அவர் மனவருத்த முற்றார். மக்கள்,நாவலரைப்பற்றியோ அவரது பத்திரிகையைப் பற்றியோ அறியாதிருந்தமையும், சிங்கப்பூர் நூல்நிலையத்தில் கூட எத் தகவல்களையும் இது சம்பந்தமாகப் பெறமுடியா மற் போனமையும் அஸிஸுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதனாற்றான் போலும்,
'பினாங்கில் குலாம் காதிறு நாவலர் அவர்கள் பற்றியும்
அவர் நடாத்திய "வித்தியா விசாரிணி பத்திரிகை பற்றி யும் எவ்வித தகவலும் பெறமுடியவில்லை. பலருக்கு வித் தியா விசாரிணி பத்திரிகை என்னும் பெயரே விசித்திர மான பெயராகத் தோன்றியது. அடுத்த வாரம் சிங்கப்பூரி லுள்ள தேசிய நூல்நிலையத்திற் கூட ஒரு தகவலும் கிடைக்க வில்லை. அவரைப்பற்றி எவருக்குமே நினைவிருப்பதாகத் தெரியவில்லை." 5
தைச் சேர்ந்த ஜனாப் ஸைனுதீன் ஆசிரியரிடம் குலாம் காதிறு நாவலர் பற்றியும் அவரது பத்திரிகை பற்றியும் தகவல் பெற முயன்ற அளிஸ், அம் முயற்சியில் தானடைந்த தோல்வியைப் பின்வருமாறு தனது 'தமிழ் யாத்திரை நூலில் குறித்துவைத் துள்ளார்;
**வித்தியா விசாரிணி' ஆசிரியர் குலாம் காதிறு நாவலர் பற் றியும், விசாரிணி பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா

ஏ. எம். நஹியா | 149
வென்றும் விசாரித்தேன். அவரிடம் பிரதிகள் இருக்க வில்லை. ஆனால் அவற்றைத் தேடிப் பிடிக்க ஒத்தாசை செய்வதாக உறுதியளித்தார். பினாங்கில் நாவலர் தங்கி யிருந்த பகுதியிலேயே இவ்வளவு விரைவாக மறக்கப்பட் டமை நமது துரதிஷ்டமே.' "
அஸிஸின் இம் முயற்சியில் அவரடைந்த கஷ்டங்களை இவ்வார்த் தைகள் நன்கு காட்டுகின்றன. வரலாற்று ஆர்வலர் என்பதனால் மட்டுமன்றி, முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இப் பத்திரிகைகள் ஆற்றிய அளப்பரிய பணியையும் இஸ்லாமியத் கறிந்திருந்தவர் என்பதனாலும் அஸிஸ், அப்பத்திரிகைப் பிரதி களைத் தேடித் திரிந்தார். தகவல் பெற்று உலகறியச் செய்
சமகாலப் பத்திரிகைகளான “முஸ்லிம் நேசனை'யும், வித்தியா விசாரிணி'யையும் ஒப்பிட்டாயும் ஆர்வமும் அஸிஸ் சக்கிருந்தது. வித்தியா விசாரிணி பத்திரிகைத் தேடுகைக்கு இதுவும் ஒரு கார ணமாகவிருந்தது. கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி கூட இக்கருத் துடன் உடன்படுகிறார்.
"ஒரே காலப் பிரிவில் இரு வேறு நாடுகளில் வெளியான, ஒரே
நோக்கத்தைக் கொண்டிருந்த இந்த இரு பத்திரிகைகளை யும் ஒப்பிட்டு ஆய்வு நிகழ்த்தும் எண்ணம் அஸிஸிடம் இருந்திருக்கலாம். ஏனெனில் தமிழ் பொதுமொழியாக விளங் கியமை காரணமாக கொழும்பு, பினாங்கு, சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம் களுக்கிடையில் நிலவிய கலாசார உறவின் தனித்தன்மையை இவ்விரு பத்திரிகைகளுக்கும் பொதுவாய் அமைந்த சில அம் சங்கள் உணர்த்துவதாக அஸிஸ் கருதுவதுடன், இவ்விரு பத்திரிகைகளிலும் நடைபெற்ற சர்ச்சைகள், இலக்கியச் சுவையும், வரலாற்று முக்கியத்துவமுடையனவாகக் காணப் படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்."
"அறிஞர் அஸிஸும் அவரது ஆய்வு முயற்சிகளும்" என்ற கட்டு ரையில் சுக்ரி அஸிஸின் இம்மன எண்ணத்தை வெளிப்படுத்து கிறார். அஸிஸின் தமிழ் யாத்திரை நூலில் காணப்படும் பின் வரும் குறிப்பு இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

Page 83
150 / அஸிஸும் தமிழும்
* 'இவை யாவற்றையும் விட என்னைப் பெரிதும் கவர்ந்த விஷயம் பினாங்கில் வெளியான வித்தியா விசாரிணி என் னும் பத்திரிகைக்கும் அதே காலத்தில் இலங்கையில் சித்தி லெவ்வை அவர்கள் வெளியிட்டு வந்த முஸ்லிம் நேசனுக்கு முள்ள உறவாகும். வித்தியா விசாரிணியை நடத்தியவர் குலாம் காதிறு நாவலர் அவர்களாவர். "முஸ்லிம் நேசனில் வெளியான பல அம்சங்கள் வித்தியா விசாரிணியிலும் வெளியாயின. உதாரணமாக இரண்டு பத்திரிகைகளுமே உலகச் செய்திகள், மார்க்க வினாவிடைகள், இலக்கண, இலக்கியச் சர்ச்சைகள் ஆகியவற்றை வெளியிட்டு வந்தன. இதே நாகூர்தர்கா வித்துவான் குலாம் காதிறு நாவலர் அவர்களே 1896ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் சு. மு. அசனாலெப்பை ஆலிம் புலவர் அவர்களது அழைப்பின்
பேரில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து வண்ணார்பண்
னையில் வைத்து தமது ‘ஆரிபு நாயகம்" என்னும் நூலினை அரங்கேற்றியவராவார்.
1883ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி வெளியான 'முஸ் லிம் நேசன்" இதழில் பின்வரும் செய்தி காணப்படுகிறது:
1.இந்த நாமந்தரித்த பினாங்கில் வா. குலாம் காதிறு நாவ லரவர்களாற் பிரசுரஞ் செய்யப்பட்ட பத்திரிகை நமக்குக் கிடைத்து மிக மகிழ்ச்சியடைந்தோம். இலங்கை, இந்தியா பினாங்கு முதலிய தேசங்களிலுள்ள முஸ்லிம்கள் இப் பத்திரி கைக்குக் கையொப்பக்காரர்களாகி அது நெடுங்காலம் நடை பெறச் செய்யும்படி வேண்டுகிறோம்.'
இது, தமிழ் பொது மொழியாக விளங்கியமையின் காரண மாக கொழும்பு, பினாங்கு, சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கிடையில் நிலவிய கலாசார உறவின் தன்மையை எடுத்துக்காட்டுவதாக | விளங்குகிறது. இவ்விரு பத்திரிகைகளிலும் நடைபெற்ற சர்ச்சைகள், இன்றுள்ள நமக்கு இலக்கியச் சுவையும் வர
லாற்று முக்கியத்துவமுமுடையனவாகும். இவற்றின் தொனி யும் சாரமும் நமது சந்ததியினருக்கு நேரடித் தொடர் பற்றனவாக இருக்கலாம்; ஆயினும் அவற்றின் சுவை தனியானதென்பதில் ஐயமில்லை. அதிஷ்டவசமாக இந்த வித்தியா விசாரிணியில் தொடங்கப்பெற்ற சர்ச்சைகளிற்

ஏ. எம். நஹியா | 151
சில, முஸ்லிம் நேசனில் மறுபிரசுரஞ் செய்யப்பட்டுள் ளன. 1883 ஜூலை 16இல் வெளியான 'முஸ்லிம் நேசனி லும் வித்தியா விசாரிணி'யில் வெளியான பகிரங்கக் கடித மொன்று மறுபிரசுரஞ் செய்யப்பட்டிருக்கிறது.
"பெண்களுக்கு நாணமாவது ஒராபரணமாயிருக்குமென்றனை
நேசா. பெண்கட்கு நாணமானதியற்கையாயுள்ள குணமா? தட்டானாற் செய்த ஆபரணமா? விளங்கச் சொல் பார்ப் போம். வித்தியா விசாரிணியென்னும் பெண்ணே நாணமா கிய ஆபரணத்தைத் தரித்துக்கொள்ளென்றனை. நேசா, அந்நாணமுனக்கு வேண்டற்பாலதோ? அணியன்றோ நாணு டைமை சான்றோர்க்கு என்ற குறளைப் பார். யான் ஆணோ, பெண்ணோ, அலியோ என்பது தானும் எனக்குத் தெரியாதிருப்பது உனக்கும் விளங்கிற்றா நேசா? எப்படி விளங்கிற்று? சற்றே சொல்வாயா?
நகைச்சுவை ததும்பும் இந்தப் பகிரங்கக் கடிதத்துக்கு அடுத்த இதழ் 'முஸ்லிம் நேசனில் பதில் வெளியிடப்பட்டிருக்கிறது. இன்றைய பின்னணியில் இவற்றை வாசிக்கும் போது அந் நாட்களில் இலக்கணம், இலக்கிய நயம் ஆகியவற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்ட தென்பதையும் இக்காலத் தில் இம்மரபு மறைந்து விடுதலையுங் காணக்கூடியதாயிருக் கிறது.'
"முஸ்லிம் நேசனை', 'வித்தியா விசாரிணியுடன் ஒப்பிட்டா யும் எண்ணம் அஸிஸுக்கு இருந்தமையை இக்குறிப்பு நன்கு காட்டுகிறது. இவ்விரு பத்திரிகைகளுக்குமிடை நடைபெற்ற இலக்கியச் சர்ச்சைகள், ஒத்த கருத்துக்கள், இலங்கை முஸ்லிம் களினதும் மலாய முஸ்லிம்களினதும் வரலாறு போன்றன பற்றி யெல்லாம் அறிய விரும்பிய அஸிஸ் இவ்விருபத்திரிகைகளை யும் ஒப்பிட்டாய விரும்பினார்.
சித்திலெவ்வையின் 'முஸ்லிம் நேசன்" பத்திரிகை வெளியீட்டுக் குப் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் 1869 இல் இலங்கை யில் வெளியிடப்பட்ட மலாய் மொழிப் பத்திரிகையான ஆல மாத் லங்காபுரி பற்றியும் அஸிஸ் அக்கறை காட்டினார். 19 ஆம் நூற்றாண்டின் 7 ஆம் 8 ஆம் தசாப்தங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் வரலாறு சமூக பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொள்ள ஆலமாத் லங்காபுரி உதவுமென்பதனால் இம் மலாய்

Page 84
152 | அளnஸ9ம் தமிழும்
மொழிப் பத்திரிகையிலும் அலிஸ் கூடிய சிரத்தை காட்டினார். 1966 ஏப்ரல் மே மாதங்களில் மலேசியாவில் நடைபெற்ற முத லாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் கலந்து கொண்ட அஸிஸ் இப்பத்திரிகையினுடைய முதல் இதழின் புகைப்படப் பிரதியொன்றைக் கூட மலாய்ப் பல்கலைக் கழகத்திற்குக் கையளித்திருந்தார். 1873 ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி தொடக் கம் வெளிவந்த வாப்பு மரைக்கார் நயிந்தை மரைக்காரின் கல்லச்சுப் பத்திரிகையான புதினாலங்காரி", ஐ. எல். எம். அப்துல் அஸிஸ் வெளியிட்ட முஸ்லிம் பாதுகாவலன்', ஏ. டி. உதுமான் பிரசுரித்த இஸ்லாம் மித்திரன் போன்ற பத்திரிகை கள் பற்றிய அஸிஸின் ஆவலும் தேடுகையும் இவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியன.
முஸ்லிம் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அதிகமாக வெளி வர வேண்டுமெனக் கருதினார் அலிஸ், ஒரு சமூகத்தின் குரல் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கும் இலக் கிய விழிப்புணர்வுக்கும் அவசியமென்பதனாலும் இவ்விடயத் தில் கூடிய சிரத்தை காட்டினார் அவர், பத்திரிகைகள் வர லாற்று முதுசங்கள் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டி ருந்த அஸிஸ், சம காலப் பத்திரிகைகளை ஒப்பிட்டாய்வதில் ஆர்வம் காட்டினார்.
தனது வாழ் நாளில், 1967 களில் வெளிவந்த எண்ணற்ற பத் திரிகைகளை யிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர்,
** இன்றோ வாசிப்பதற்கு ஏதுமில்லையே என்ற நிலைமாறி
எதை வாசியாது விடலாம் எனப் பகுத்தறியக்கற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்கு ஏராளமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், புத்தகங்களும் வெளிவருகின்றன. '9
எனக் கூறி மன நிறைவெய்தினார். இது அவரது வாழ் காலத்தி லேயே நிகழ்ந்த மாற்றமாகும். அஸிஸ் இன்று உயிர் வாழ்ந்திருந் தால் தென்னிந்தியாவிலும் இலங்கையிலுமிருந்து வெளிவரும் பெருவாரியான பத்திரிகைகள், சஞ்சிகைகளையிட்டு பெருமிதம் அடைந்திருப்பார்.
 

ஏ. எம் நஹியா / 153
அஸிஸ் எ. எம். எ.
அறபுத்தமிழ் எங்கள் அன்புத்தமிழ்" இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963
LJë; : 164
அஸிஸ் எ. எம். எ கிழக்கா பிரிக்கக் காட்சிகள் சென்னை 1967 Ló I35
அலிஸ் எ. எம். எ.
தமிழ் யாத்திரை சென்னை, 1968
: 48
ைெடி :
െ. | g : 163
െ.
jä: 1 6 6
சுக்ரி, கலாநிதி அல்ஹாஜ் எம். ஏ. எம்.
அறிஞர் அஸிஸும் அவரது ஆய்வு முயற்சிகளும் தினகரன் வார மஞ்சரி, 26 டிசம்பர் 1982 Lg53 3
அஸிஸ் எ. எம். στ. தமிழ் யாத்திரை சென்னை 1968 148.146' : ;ئیLJ
அஸிஸ் எ. எம். எ. இழக்காபிரிக்கக் காட்சிகள் சென்னை 1967 Lig : I 35

Page 85
5 அறபு - தமிழ் அகராதி
அறபு - தமிழ் அகராதி ஒன்றின் ஆக்கம் மிக அவசியமென அஸிஸ் கருதினார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்ற அதிகமான அறபுப் பதங்கள் முஸ்லிம் அல்லா தாரை இவ்விலக்கியங்களின் பால் நாட்டம் கொள்ளாமற் தடுத் தது என்ற உண்மையை உணர்ந்திருந்த அளிஸ், அந்நிலையை மாற்றவேண்டின் இவ்வாறான ஒரு அகராதி மிக அவசியமெனக் கருதினார். இஸ்லாமிய இலக்கியங்களில் அடிக்கடி உபயோகிக் கப்படும் அறபுச்சொற்களைத் தமிழுட்செலுத்தி தமிழ் மொழியை வளிம்படுத்தவும், தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களுக்கும் உரிய இடத்தைப் பெற்றுக்கொடுக்க வும், அறபு-தமிழ் அகராதியொன்றின் ஆக்கம் மிகவும் இன்றிய மையாதது என அஸிஸ் கருதினார். அதனாற்றான் சென்ற இட மெல்லாம் அறபு - தமிழ் அகராதி பற்றிப் பேசினார். சிலரை அவ்வழியில் சிந்திக்கவும் வைத்தார்.
மக்களின் பண்பாட்டியல்புகளை இலக்கியங்கள் பிரதிபலிக்கின் றன. ஒரு இனத்தின் பண்பாடு பெரும்பாலும் அந்த இனம் பின்பற்றும் சமய நெறியை அடிப்படையாகக் கொண்டிருக்கும்: அந்த நெறி எந்தமொழியில் தோன்றியதோ அந்த மொழியின் தாக்கத்தை, அந்த நெறியை அடிப்படையாகக் கொண்டெழுந்த பிறமொழி இலக்கியங்களிலும் காணலாம். அது அம்மொழி இலக் கியத்தின் சிறப்பம்சமாகவும் அமைந்துவிடுகிறது. பெளத்த மதம் தோன்றிய பாளி மொழியின் செல்வாக்கை மணிமேகலையிலும்
 

ஏ. எம். நஹியா / 155
சமணத்துக்குரிய பாகத மொழியின் செல்வாக்கை சீவகசிந்தா மணியிலும் காண்பது இதனாற்றான். சங்கத மொழிச் சொற்கள் வைணவ தமிழ் இலக்கியங்களிலும் அறபு மொழிச் சொற்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலும் விரவி வருவதும் இக் கார னத்தினாற்றான். பார்சி மொழிச் சொற்கள் கூட இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களிற் காணப்படுகின்றன.
புனித குர்ஆனை ஓதவேண்டியவர்கள் முஸ்லிம்கள். அறபு மொழிதான் தொழுகைக்குப் பயன்படுத்தப்படுகின்றது. குர் ஆணின் மொழியாக, இஸ்லாத்தின் மொழியாக, இஸ்லாமிய பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த மொழியாக, ஒரு முஸ்லி முடைய நாளாந்த வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் மொழி யாக, அறபு மொழி விளங்குகிறது. அம் மொழியில் வழங்கும் இஸ்லாமியப் பதங்களை தமிழில் மொழி பெயர்ப்பது மிகக் கஷ்ட மானது. அவற்றின் சரியான கருத்துக்களைப் பெறமுடியாது, இஸ்லாமிய கலைச்சொற்களையும் கருத்துக்களையும் சிறந்த முறையில் விளக்குவதற்கு அறபு, பார்சிச் சொற்கள் இன்றியமை யாதன. அதனாற்றான், முஸ்லிம்களின் பேச்சு, எழுத்து மொழி களில் அதிக அளவில் அறபுச் சொற்கள் கலந்து வருகின்றன. உலகில் கலப்பில்லாத மொழியோ திசைச் சொற்களில்லாத பாஷையோ இல்லை. இந்த உண்மை உணர்வும், யதார்த்த எண் ணமும், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனப்பாங்கும் அறபு - தமிழ் அகராதி பற்றி அஸிஸைச் சிந் திக்கச் செய்தன.
கண்டி உதவி அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தல மான மெளண்ட் எயிறி'யில் 1944ஆம் ஆண்டு அஸிஸுடன் சுவாமி விபுலானந்தர் சில நாட்கள் தங்கியிருந்தார். இந்த நாட் களில் நடைபெற்ற உரையாடலின்போது அறபு-தமிழ் அகராதி யின் தேவை பற்றி அஸிஸிடம் சுவாமி வற்புறுத்திக் கூறியிருந் தார். அவ்வாறான ஒரு அகராதியை ஜனாப் அஸிஸ் தயாரிக்க முன்வரும் பட்சத்தில் தாமும் அம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அடிகளார் அஸிஸிடம் உறுதியளித்திருந்தார். இந்த மெளண்ட் எயிறி உரையாடல், அஸிஸின் பிற்கால முயற்சிகளை நெறிப்படுத்தியதுடன் அவரின் சிந்தனைகளிலும் செயற்பாட்டிலும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அறபு - தமிழ் அகராதி பற்றிய ஆரம்ப எண்ணத்தை அளி

Page 86
156 அஸிஸும் தமிழும்
ஸ்"க்கு ஏற்படுத்தியது அந்த உரையாடல்தான். இதனை அஸிஸ் தனது பல சொற்பொழிவுகளிலும் எழுத்துக்களிலும் குறிப்பிட்
முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்தான் அறபுத் தமிழ் எழுத்தாளர்; அவர்கள் வேறு இவர்கள் வேறு அல்லர் என்ற கொள்கையுடை யவர் அளவிஸ், முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்பு களில் இஸ்லாமிய வாடை வீசவேண்டும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு. அறபுத் தமிழ் இலக்கியங்கள் மென்மேலும் ஆக் கப்படவும் போற்றப்படவும் வேண்டும் என்று விரும்பியவர் அவர் ஆனால் அதே வேளை முஸ்லிம் அல்லாதாரும் இஸ்லா மிய இலக்கியங்களை நுகருவதற்கான வழிவகைகள் செய்யப் படவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கிருந்தது. ஒன்றுக் கொன்று முரண்பாடான இவ்விரு நிலைப்பாடுகளை ஒன்றி ணைக்கும் முயற்சியில் சிந்தித்த அளிஸ், அறபு-தமிழ் அகராதி யின் தேவையை வலியுறுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது:
தேவையற்ற அறபுச் சொற்கள் இலக்கியத்தில் விரவிக்கிடப்பதை வெறுத்த அளிஸ் தவிர்க்க முடியாத, பழகிப்போன அறபுச் சொற்கள் உபயோகத்திலிருப்பதையும், அவை இலக்கியத்தில் இடம் பெறுவதையும் வரவேற்றார். " " இஸ்லாமிய னல்லனான என்னைப்போன்ற வேறொரு சமயத்தவனும் ஈடுபட்டுச் சுவைக் கும் வண்ணம் அவை அமைந்துள்ளன. இப் பண்பையே நான் பெரிதும் பாராட்டுகிறேன்." என்று கலாநிதி க. கைலாசபதி
அவர்கள் புரட்சிக் கமால் கவிதைகளுக்கு எழுதிய மதிப்புரை
யில் கூறியதை, அறபுச் சொற்களை இஸ்லாமிய இலக்கியங் களிலிருந்து அகற்றிவிடுவதன் மூலம் அஸிஸ்காண விரும்ப வில்லை. அறபு - தமிழ் அகராதி ஒன்றின் மூலம், அடிக்கடி பாவனையிலுள்ள அறபுச் சொற்களைத் தமிழுட் பாய்ச்சுவதன் மூலமே அதனைக் காணவிழைந்தார்.
பேராசிரியர் எம். எம். உவைஸ் அவர்கள்,
"இஸ்லாமியத் தமிழிலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்கள் ஆராயப்பட்டு விளக்கப்படா விட்டால் அறபு மொழியில் பயிற்சி அற்றோர் இத்தகைய இலக்கியப் படைப்புகளைப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படு கிறது, குறைந்த பட்சம் இஸ்லாமிய அடிப்படையில்

ஏ. எம். நஹியா / 157
தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் இடம் பெற்றுள்ள w ܬ ܢ .
அறபுச் சொற்களையும் முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்களையும் சொற்றொடர் களையும் பொறுக்கி ஆராய்ந்து விளக்குவது எமது நீங்காத கடமையாகும்.' 1
என எழுதி அஸிஸின் கருத்தை ஆமோதித்தார். அறபு மொழி யில் பயிற்சி பெற்றோரும் இஸ்லாமிய இலக்கிய இன்பத்தை அள்ளிப் பருக வேண்டுமென்பது உவைஸ் அவர்களின் எண்ணம். வட மொழியினால் வளம் பெற்ற தமிழ் மொழி, அறபு மொழிச் சொற்களையும் பெற்று செழிப்புற வேண்டுமென அஸிஸைப் போல உவைஸ்வம் விரும்பினார்.
அறபு - தமிழ் அகராதி எவ்வாறு அமைபின் தனது இந்த நோக் கம் நிறைவேறும் என்பது பற்றி அஸிஸ் தெளிவான கொள்கை யுடையவராக விருந்தார். ‘இலங்கையில் இஸ்லாம்" என்ற தனது நூலின் நூன் முகத்தில் அஸிஸ் அதனைத் தெளிவாகக் குறித் தும் வைத்துள்ளார்.
* தமிழில் கையாளப் பெறும் அறபுச் சொற்களை எழுதும்
முறையைக் காட்டுகின்றதும், அச் சொற்களின் கருத்துக் களைக் கூறுகின்றதுமான ஒர் அகராதி தேவை. தற்கால அகராதி முறைப்படி தயாரிக்கப்படும் அத்தொகுப்பில், சொல்லின் பொருள் மாத்திரமன்று, நிகண்டு போன்று ஒரு பொருட் கிளவிகள் யாவும் குறிப்பிடப்படல் வேண்டும். தமிழில் அறபுக்கான ஒலிக்குறிப்புகளுடன் குறித்த சொல்லை எழுதி, அடுத்து அறபில் அதனை எழுதிப் பின்னர் அதன் கருத்தையும் ஒத்த பொருளுடைய பிற சொற்களையும் குறித்தல் வேண்டும். இவ்வாறான முறையில் ஒர் அறபுத் தமிழ்ச் சொற்கோவை தக்கவாறு தயாரிக்கப்படுமேல் அது இஸ்லாமிய @JU"@JITOJ, கலாசாரம் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக விளங்குமென்பது திண்ணம். தமிழ் மூலம் இஸ்லாம் பரப்பும் அறிஞர்கள் இத்துறையில் பணியாற்ற வேண்டுமென்பது என் அவா." 2
என அவர் ஆலோசனை கூறினார். அறபு - தமிழ் அகராதி பயனுள்ளதாக அமைய வேண்டுமாயின் எவ்வாறு அமைய வேண்டுமென்பதை இவ்வாறு விளக்கிக் கூறினார் அஸிஸ்

Page 87
158 / அஸிஸும் தமிழும்
அஸிஸ் தேவைப் படுத்திய அமைப்பில் இதுவரை அறபு - தமிழ் அகராதி எதுவும் வெளிவரவில்லை. தமிழ் பேசும் மக்களிடையே முதன்முதலாக வெளிவந்த அறபு - தமிழ் அகராதி சென்னை ஹக்கீம் பா. முகம்மது அப்துல்லா சாகிபு அவர்கள் 1905 ஆகஸ் டில் வெளியிட்ட அகராதியாகும். மெளலவி ஹாஜி குலாம் றசூல் சாகிபு அவர்களும் நாகூர் மகாவித்துவான் குலாம் காதிறு நாவலர் அவர்களும் இதனைப் பரிசீலனை செய்துள்ளனர். இது 504 பக்கங்களைக் கொண்டது. முதலில் அறபுச் சொல் லும் அதன் கருத்தும் அதன் அடிச் சொல்லும் வரிசைக்கிரம மாக இவ்வகராதியில் கொடுக்கப்பட்டுள்ளன. அறபுச் சொல் அறபு எழுத்திலும் அதன் உச்சரிப்புத் தமிழிலும் அதன் அடிச் சொல் அறபு எழுத்திலும் தரப்பட்டுள்ளன, ஒவ்வோர் அறபுச் சொல்லுக்கும் பல கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. பல சஞ்சிகை களாக வெளியிடப்பட்டு பின்னர் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது இந்த அகராதி.
"துஹபத் துஸ்ஸமதிய்யா பீ தர்ஜ"மதில் அல் பாழில் அறபிய்யா" என்ற அகராதி 1913 மார்ச் 7 ஆம் திகதி வெளிவந்தது. தென் னிந்திய முது குளத்தூர் மத்றசது மன்படல் ஹ ஸனாத் அற பிக் கல்லூரியின் போதனாசிரியராகக் கடமையாற்றிய மெளலவி அல்ஹாஜ் முகம்மது இப்றாஹீம் என்பவர் இதன் ஆசிரியர். இரு பாகங்களையுடைய இவ்வகராதி ஒரு தொகுதியாக வெளி யிடப்பட்டது. இதில் அறபுச் சொற்களுக்குக் கொடுக்கப்பட் டுள்ள தமிழ்க் கருத்துக்கள் அறபு லிபியில் எழுதப்பட்டுள்ளன. அறபுத் தமிழ் நடையில் தான் இவ்வகராதி அமைந்துள்ளது. அறபுத் தமிழ் வாசிக்கும் பிள்ளைகள் அறபு நடையில் பழக் கத்தைப் பெறச் செய்வதற்கென எழுதப்பட்ட இந்த அகராதி அறபு - அறபுத் தமிழ் அகராதி எனக் கொள்ளத் தக்கது.
காமூகல் அறபி வஅர்வி' என்ற அறபு - தமிழ் அகராதி இலங் கையில் தயாரிக்கப்பட்டது. இரண்டு பாகங்களைக் கொண்ட இவ்வகராதியின் ஆசிரியர் ஸையது யாஸின் மெளலானா என் பவர். வலிகாமத்தைச் சேர்ந்த பலப்பிட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் இவர் . இவருடைய இந்த அகராதியில் முதலில் அறபுச் சொற்கள் அறபு எழுத்திலும் பின்னர் அறபுச் சொல் லின் தமிழ்க் கருத்து அறபு எழுத்துக்களிலும் தரப்பட்டுள்ளன. அறபு - அறபுத் தமிழ் அகராதி என்றே இதனையும் அழைக்
 

ஏ. எம். நஹியா | 159
கலாம். அறபு எழுத்துக்களில் பயிற்சி இல்லாதோர் இதனைப் பயன்படுத்த முடியாது.
இம் மூன்று அகராதிகளும் அறபு மொழிப் பயிற்சி இல்லா தாருக்குப் பயனற்றவை ஆகின்றன. முதலாவதில் தமிழ் உச் சரிப்புக் கொடுக்கப்பட்டிருந்தபோதிலும் அது முழுமையான தாக அமையவில்லை. அந்த வகையில் அஸிஸின் எண்ணத்தை இவையெல்லாமே பூர்த்தி செய்யத் தவறி விட்டன.
*தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி என்ற பெயரில் மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழிலக்கியத் துறைப் பேராசிரியர் எம். எம். உவைஸ் அவர்கள் 1988இல் அறபு - தமிழ் அகராதியொன்றை வெளியிட்டார். அஸிஸ்கால ஸாஹிறாக் கல்லூரி ஆசிரியரான இவரின் இவ்வகராதி அளவிஸ் எதிர்பார்த்த அகராதியாக அமையாதபோதிலும் அவர் கருதிய நோக்கில் எழுந்ததென்ற வகையில் திருப்தி தருகிறது. இதில் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள தனித்த அறபுச் சொற்களும், அறபுச் சொற்களுடன் தமிழ் வடிவில் இணைந்த சொற்களும், தொடர்களும் தமிழ் எழுத்துக்களின் வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன. கிரந்த எழுத்துக்களில் தொடங்கி அமைந்த அறபுச் சொற்களின் வரிசை கடைசியாக இடம்பெற்றுள்ளது. இவ்வகராதியில் ஓர் அறபுச் சொல் அல்லது தொடரின் விளக்கம் பின்வரும் வரிசைப்படி தரப்பட்டுள்ளது:
1. இஸ்லாமியத் தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள
அறபுச் சொல் அல்லது தொடர். 2. அந்தச் சொல் அல்லது சொற்களுக்குரிய ஒலியனியல்
(5 gólufG) 95 Gir (Phonemic transcription). 3. இலக்கண விளக்கம். 4. இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறபுச் சொற்களின் அறபு மூலம் ஒலியனியல் குறியீட் டில் இடம் பெறல் 5. இடம் பெற்றுள்ள அறபுச் சொல் அல்லது தொடர்
களின் நேரடியான தமிழ் பொருள். 6; இஸ்லாமிய அடிப்படையில் தேவையான விளக்கங்கள். 7. அறபுச் சொல் அல்லது தொடர் இடம்பெற்றுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலிருந்து ஒரு எடுத் துக்காட்டு - நூலின் பெயர், படலம், பாடல் எண் ணுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

Page 88
160 / அஸிஸும் தமிழும்
இம்முறையின் கீழ்தான் இவ்வகராதியில் இடம்பெற்றுள்ள அற புச் சொற்கள் விளக்கம் பெறுகின்றன. இந்த ஏழு பகுதிகளும் ஒவ்வோர் அறபுச் சொல்லிலும் இடம்பெறத் தவறினும் 1, 2, 3, 5, 7 ஆகிய ஐந்து பகுதிகளும் இவ்வகராதியில் இடம் பெற்றுள்ள அனைத்து அறபுச் சொற்களுக்கும் தரப்பட்டுள் ளன. இவ்வகராதி முழுமையானதொன்றன்று. ஆயினும் இஸ் லாமியத் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்வோரும் நுகர்வு செய்வோரும் அவற்றில் விரவிவரும் அறபுச் சொற்களை இனங் கண்டு கொள்வதற்குப் பெரிதும் பயன்படுகிறது. அந்த வகை யில் அஸிஸின் எண்ணத்தின் பெரும் பகுதியை இந்த அகராதி நிறைவேற்றி வைக்கிறது.
அஸிஸ் கருதிய அமைப்பில் அறபு - தமிழ் அகராதி யொன்று தக்க தருணத்தில் தயாரிக்கப்பட்டிருப்பின் முஸ்லிம் களிடை புழக்கத்திலிருக்கும், இஸ்லாமிய இலக்கியங்களில் விர விக் கிடக்கும் பல அறபுச் சொற்கள் தமிழ் அகராதிகளில் இடம்பெற்றிருக்கும். அதன்மூலம் பல புதிய சொற்களைத் தன்னகத்தே கொண்டதாக தமிழ் வளர்ந்திருக்கும். தனித்துவ மான, அதே வேளை அனைவரும் நுகரும் வகையிலான இஸ் லாமிய இலக்கியங்கள் பல்கிப் பெருக வாய்ப்பேற்பட்டிருக்கும். இஸ்லாமிய இலக்கியங்கள் புறத் தொதுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றதாக்கப்பட்டிருக்கும். பேராசிரியர் ம. மு. உவைஸ் அவர்கள் இத்துறையில் முயற்சிக்கும்வரை ஆக்கபூர்வமான இத்துறையில் எடுக்கப்படாமை தூரதிஷ்டவசமானது.
இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித்திருப்பம் இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு மகாநாடு, இலங்கைக் கிளை G):5rr(Լքthւլ, 1974 I 15: 69
2 அளவிஸ் எ. எம். எ.
இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963 Lj;: Viii

இஸ்லாமிய இலக்கியங்களுக்கு பாடநூல் அந்தஸ்து
இஸ்லாமிய இலக்கியங்கள், முஸ்லிம் எழுத்தாளரின் நூல்கள் என்பவற்றுள் பொருத்தமானவை பாடநூல்களாக அங்கீகரிக்கப் படவேண்டுமென அஸிஸ் விரும்பினார். தேசிய ஒற்றுமையைப் பாதிக்காத வகையில் இனங்கள் தத்தம் தனித்துவத்தையும் பண்பாட்டையும் பேண வேண்டுமென்ற அல்லாமா சேர் முகம் மது இக்பாலின் கருத்தை அஸிஸ் பலவிடயங்களில் பிரயோ கித்துப் பார்த்தார். அதில் ஒரு முயற்சிதான் இஸ்லாமிய இலக் கியங்கள் பாட நூல்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோஷம். பூரீலபூரி ஆறுமுக நாவலரும் முகம்மது கா சிம் சித்தி லெவ்வையும் பிரயோகித்துப் பார்த்து சமுதாயத் தனித்துவம் பேணிய இம்முயற்சியில் அஸிஸும் அக்கறை காட்டினார். தனது வாழ்நாளில் அம்முயற்சியில் அவர் வெற்றியும் கண்டார்.
மரபு காக்காத மனித குலம் தனது பண்பாட்டையும் மேன்மை யையும் இழந்துவிடும் என்பது வரலாறு கூறும் உண்மை. எனவே தான் எம்முன்னோர் இனத்தின் தனித்துவம் பேணும் வகையி லான இலக்கியப் பாரம்பரியத்தைப் பேணினர். அதனைப் பேணுவதும் பாதுகாப்பதும் எம் மீது சுமத்தப்பட்டுள்ள பணி யும் கடமையுமாகும். இளந் தலைமுறையினர் பாடசாலைக் காலத்திலிருந்தே எம்மவரின் இலக்கியச் செல்வங்களை அறிந்து கொள்ளச்செய்வது எமது கடமையாகும். எமது இஸ்லாமிய இலக்கியங்களை, அறபுத் தமிழ் இலக்கியங்களை, இஸ்லாமியர்

Page 89
162 / அஸிஸும் தமிழும்
தமிழுக்குச் செய்த பங்களிப்பை, எமது இளம் சிறாரும் அறிந்து கொள்ளவும் நுகர்ந்து மகிழவும் இது வாய்ப்பளிக்கும்.
சைவ சமயத்தை வளர்க்க வேண்டும், அதன் பண்பாட்டைப் பேண வேண்டும், அதன் கருவியாகிய தமிழ் மொழி செழிக்க வேண்டும், கல்வி மேம்பாடடைய வேண்டும் என்பது நாவ லர் கொள்கை. இந்நோக்கில் அவர் எழுதிய நூல்கள், உரை எழுதிய நூல்கள் அநேகம், பாடசாலை மாணவருக்கென பால பாடங்களை ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உரைகளை, இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடைகளை, சைவ வினா விடைகளை மட்டுமன்றி பூமி சாஸ்திர நூலைக்கூட எழுதி இத் துறையில் வழிகாட்டியவர் நாவலர். அவரின் பல நூல்கள் இன்று ஜி. ஸி. ஈ. சாதாரண, உயர்தர வகுப்புகளிலும் பல் கலைக்கழகங்களிலும் பாட நூல்களாகப் பயன்படுத்தப் படுகின்
இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறை. முஸ்லிம்களின் கல்வி இஸ்லா மிய அடிப்படையில் அமைய வேண்டும். ஸாஹிறாக் கல்லூரி போன்ற தனியார் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப் பட்டமைக்கான காரணமும் இதுவே. தனித்துவம் பேணும் நோக்கில் தான் மூதறிஞர் முகம்மது காசிம் சித்திலெவ்வை பல பாட நூல்களை மாணவர்களுக்கென எழுதினார். தமிழ் முதற் புத்தகம், ஹிதாயத்துல் காஸிமிய்யா, அறபு முதலாம். இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் புத்தகங்கள் துஃபதுன் நகுவு, புவியியல், எண்கணிதம் போன்றன. இந்நோக் கில் எழுந்த இவரது நூல்களாகும். முஸ்லிம் மாணவர் தமது சமய, பண்பாடு, கலாசார வரம்புகளுக்குள் நின்று கல்வி கற்க வேண்டும் என்பதை இதன் மூலம் கோடிட்டுக் காட்டினார்: அறிஞர் அஸிஸும் இவ்வழி நின்று சிந்தித்தார். இஸ்லாமிய இலக்கியங்கள் பாட நூல்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென சென்ற இடமெல்லாம் குரலெழுப்பினார். அவர் கலந்துகொண்ட மகாநாடுகளிலெல்லாம் இக்குரல் ஒலித்தது. ஆறுமுக நாவலர், முகம்மது காசிம் சித்திலெவ்வை போன்ற பேரறிஞர்களின் வழி நின்று அஸிஸ் விடுத்த இவ் வேண்டுகோள் சமூகத்தைச் சிந்திக் கச் செய்தது.
தென்னிந்திய முஸ்லிம் கல்விக் கழகத்தின் பொன்விழாவில் 1955 பெப்ருவரி 6 ஆம் திகதி, 2 ஆம் நாள் நிகழ்ச்சிக் கூட்டத்

ஏ. எம். நஹியா | 163
துக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரையில் அஸிஸ் தெரிவித்த கருத்துக்கள் இவ்விடயமாகக் கருத்திற் கொள்ளத்தக்கன. அச் சொற்பொழிவில் அஸிஸ் கவலை தெரிவித்த விடயங்கள் உண்மையிலேயே கவலைக்குரியன.
"இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் பள்ளிக்குச் செல்லும் நமது மாணவர்கள் உமறு தந்த உயர் காவியமாம் சீறாப் புராணத்தை, காசீம் புலவர் தந்த கருத்துக்கினிய திருப் புகழை இராசநாயகத்தை, முதுமொழி மாலையை, நாகை யந்தாதியைக்கூடப் படிப்பத்ற்கு வேண்டிய வசதிகள் செய் யப்படவில்லை என்பதைச் சிந்திக்கும் பொழுது நம்முடைய கவலையினம் எவ்வளவு பெருந் தீங்கு விளைத்துவிட்டிருக் கின்றது என்பதை நாம் உணர்கிறோம். இன்று கலா சாலைகளில் பயின்றுவரும் மாணவர்களில் இறுதி வகுப் பில் உள்ளவர்களாகிய முஸ்லிம் சிறார்கள் - அதிலும் தமி ழில் நல்ல பாண்டித்தியம் உடையவர்களும் கூட அறபுத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, தமிழுக்கு முஸ்லிம்கள் ஆற்றியுள்ள தொண்டைப் பற்றியோ, தமிழ் இலக்கியம் அறபுப் பதங்களின் கலப்பினாலும் இஸ்லாமியக் கருத்துக் களினாலும் எவ்வாறு மேம்பாடடைந்திருக்கிறது என்ப தைப் பற்றியோ, ஞானமில்லாதவர்களாகவே இருந்துவருவ தைக் காண்கிறோம் என்றால், இது நாம் இழைத்துவிட்ட தவறின் தன்மையையே எடுத்துக்காட்டுவதாய் இருக்கின் றது. எனவே இந்த அவலநிலை மாற்றப்படவேண்டும்' !
என அஸிஸ் கோஷமிட்டார். கவலைப்படவேண்டியவர்களின் கவலையினத்தைச் சாடினார். தென்னிந்தியாவிலும் இலங்கை யிலும் பாடசாலைகளில் பயிலும் முஸ்லிம் சிறார்களுக்கு இஸ் லாமிய இலக்கியங்கள் போதிக்கப்படவில்லையே என அஸிஸ் வருத்தம் தெரிவித்தபோதும், எமது தவறினால்தான் அது நேர்ந் ததென குறைபட்டுக்கொண்டபோதும் இஸ்லாமிய இலக்கியங் கள் மீதிருந்த அவரது ஆவலும், அவை பாடசாலைகளில் கற் பிக்கப்படவேண்டுமென்பதில் அவர் காட்டிய அக்கறையும் தெளி வாகத் தெரிந்தன.
'ஜி. ஸி. ஈ. வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமன்றி கீழ் வகுப்
புகளுக்கும் உகந்த வாசினைப் புத்தகங்கள்
படவேண்டும், அவை முஸ்லிம் மாணவர்களை நல்வழிப்

Page 90
164 / அஸிஸும் தமிழும்
படுத்தக்கூடிய இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்கள், கதை கள், இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சி கள் ஆகியவற்றைச் சித்தரிப்பனவாக இருத்தல் வேண்டும்" 2
என அஸிஸ் விரும்பினார். கீழ் வகுப்புகளிலிருந்தே இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த வாசினைப் புத்தகங்கள் அறிமுகப்படுத் தப்படவேண்டும் என்பது அஸிஸின் கோரிக்கை. பரீட்சை வகுப் புகளின் பாடநூல்களாக இஸ்லாமிய இலக்கியங்கள் அங்கீகரிக் கப்படாது போனால் மாணவர் அவற்றைக் கற்பதில் அக்கறை காட்டமாட்டார்களென்பதும் அளவிஸ்"க்குத் தெரியும், அதனாற் றான் பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம்வரை வகுப்புக் கும் வயதுக்கும் ஏற்றதான இஸ்லாமிய இலக்கிய நூல்கள் அறி முகப்படுத்தப்படவேண்டுமென அஸிஸ் ஆலோசனை கூறினார்.
இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த சிறுவர்க்கான நூல்கள் பெரு வாரியாக வெளியிடப்படவேண்டுமென அஸிஸ் விரும்பினார்.
"வருங்காலச் சந்ததியினருக்கு நாம் அளிக்கக்கூடிய முது சொம் எமது கலாசார பாரம்பரியமே. இதன் அருமை பெருமைகளை அவர்கள் அறிந்துகொள்வதற்குச் சிறுவயதி லிருந்தே பயிற்சியளித்தல் அவசியம். இதற்கேற்ற சிறுவர் இலக்கியங்கள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், அறபுத் தமிழில் வெளிவருதல் வேண்டும்' 3
என அஸிஸ் கருத்துரைத்தார். முஸ்லிம் எழுத்தாளர், கல்வி மான்கள், ஏன் தனவந்தரும் நிறுவனங்களும் கூட அலிஸின் இக் கோரிக்கைக்குச் செவிமடுப்பது அவசியமாகும். அதன் மூலமே முஸ்லிம் சமூகத்தின் பெருமை மிக்க இலக்கிய, கலா சார, வரலாற்றுப் பாரம்பரியங்களை எமது சின்னஞ்சிறிசு களும் அறிந்துகொள்ளவும் தொடர்ச்சியறாது பேணிப் பாது காக்கவும் வாய்ப்பேற்படும்.
பாடசாலை மாணவர்க்கான பாடநூல்களைப் பிரசுரித்தல், இஸ்லாமிய அடிப்படையில் பாடநூல்களை ஆக்குதல், பழங் கால அறபுத் தமிழ் இலக்கியங்களையும் நவீன இஸ்லாமிய இலக்கியங்களையும் தகுந்த முறையில் உபயோகித்தல் ஆகிய வற்றை தென்னிந்திய முஸ்லிம் கல்விக் கழகமும், இலங்கை முஸ்

ஏ. எம் நஹியா 165
விம் கல்விச் சகாயநிதியும் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியும் இணைந்து செய்யலாம் என அஸிஸ் அபிப்பிராயப்பட்டார்.
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் கல்வி அமைச்சராகவும் திரு. எஸ். ஆர். பேரின்பநாயகம் பரீட்சை ஆணையாளராகவு மிருந்த 1961ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அஸிஸின் இந்த நீண்டகால எண்ணம் நிறைவேறச் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கை அறபு மொழி வளர்ச்சிக் கழகம், இஸ்லாமிய ஆராய்ச்சி மஜ்லிஸ், கல்ஹின்னை தமிழ் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இக்காலை மகஜரொன்றைப் பரீட்  ைச ஆணையாளருக்கு அனுப்பிவைத்தன. மூன்று பிரதான அம்சங்கள் அம்மகஜரில் முன்வைக்கப்பட்டிருந்தன.
1. தமிழ்ப் பாடப் புத்தகங்களைப் பற்றித் தீர்மானித்து விதந்தோதும் குழுவில் ஒரு முஸ்லிம் இடம்பெற வேண்டும்,
2. முஸ்லிம் மாணவருக்குப் பயன்படும் வகையில் இஸ்லா மிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியத் திலிருந்து ஒரு பகுதியை மாற்றுப்பாடமாகவாவது தமிழ் இலக்கியப் பாடத்தில் புகுத்தவேண்டும்.
3. தமிழ் இலக்கியப் பாடத்துக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவரின் விடைத்தாள்கள் முஸ்லிம் பரீட்சகர் களாலேயே திருத்திப் புள்ளியிடப்படல் வேண்டும்.
இவற்றுள் முதலிரண்டும் ஏற்கனவே நிறைவேறியிருந்தன. க.பொ.த. (சாதாரண) பரீட்சைக்கான தமிழ்ப் பாடப்புத்தகக் குழுவில் ம. மு. உவைஸ் அவர்கள் அப்போது நியமிக்கப்பட் டிருந்தார், சீறாப்புராண பதுறுப்படலம், கம்பராமாயண கும் பகர்ணன் வதைப்படலத்துக்கு மாற்றுப்பாடமாக அப்போது அங்கீகாரம் பெற்றிருந்தது. ஆனால், 3வது கோரிக்கை சற்றுச் சிக்கலானதாகவிருந்ததால் பரீட்சை ஆணையாளர் ம. மு. உவைஸ் அவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந் திருந்தார். அதன்படி, முஸ்லிம் மாணவர் தமிழிலக்கியம் "ஆ" பாடத்திட்டத்தையும், ஏனையோர் 'அ' பாடத்திட்டத்தையும் பின்பற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குத்பு நாயகம் நூலின் மூன்று படலங்களும், புது குஷ்ஷாம் வசன நூலின் முதலாம்

Page 91
166 அஸிஸ்ாசம் தமிழும்
காண்டமாகிய முகம்மதிய்யாவும், சாரணபாஸ்கரனின் யூசுப் சுலைகா'வும் பிறையன்பனின் கலையும் பண்பும்", "ஆ" Lfr一岳 திட்டத்திற்கான நூல்களாக ஜனாப் உவைஸினால் செய்யப்பட்டன.
இஸ்லாமிய இலக்கிய நூல்கள் பாட நூல்களாகப் பயன்படுத் தப்படுவதற்கான வாய்ப்புகள் பின்னர் க. பொ, த, (உயர் தர) வகுப்புகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. கலாநிதி க. கண பதிப்பிள்ளை க. பொ. த. (உயர்தர) பரீட்சைக்கான தமிழ்ப் பாடநூற் குழுவுக்குத் தலைவராகவிருந்தபோது ம. மு. உவைஸ் அவர்களும் அக்குழுவில் உறுப்பினராகவிருந்தார். ஆரம்ப முயற்சி யாக வண்ணக்களஞ்சியப் புலவரின் இராஜநாயகம் எனும் காப் பியத்திலிருந்து இரு படலங்களை க. பொ. த. (உயர்தர) பரீட் சைக்குத் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்கும் முஸ்லிம் மாணவர் மாற்றுப் பாடமாகக் கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் புதுகுஷ்ஷாம் எனும் காப்பியத்தின் இரு பட லங்கள் இப்பரீட்சைக்கிருக்கும் முஸ்லிம் மாணவருக்கான மாற் றுப் பாடங்களாக அமைந்திருந்தன. -
பேராசிரியர் வி. செல்வநாயகம் க. பொ, த, (உயர்தர) பரீட் சைக்குரிய தமிழ்ப் பாடப் புத்தகக் குழுவின் தலைவராக விளங் கியபோது பரீட்சைக்குச் சிபாரிசு செய்யப்பட்ட எல்லா நூல் களையும் எல்லா மாணவரும் கற்கவேண்டுமென்று பரீட்சைத் திட்டத்தை மாற்றியமைத்தார். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த சீறாப்புராணத்தின் ஒரு படலத்தையும் கிறிஸ்தவ சமய அடிப்படையில் தோன்றிய இரட்சண்ய யாத் திரிகத்தின் ஒரு படலத்தையும் இந்து சமய அடிப்படையில் எழுந்த பெரியபுராணத்தின் ஒரு படலத்தையும் தமிழை ஒரு u TL. DIT 35 j; கற்கவிழையும் சகல மாணவரும் இன மத வேறு பாடுகளின்றி கற்கவேண்டியிருந்தது, அஸிஸின் நீண்ட காலக் கனவு இத்திட்டத்தினால் நனவாகியது.
இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களை முஸ்லிமல்லாதோரும் நுகர்ந்து மகிழவும், தமிழிலக்கிய வரலாற்றில் அவற்றுக்கும் உரிய இடத்தைப் பெற்றுக் கொடுக்கவும், பெருவாரியாக இஸ்லாமிய இலக்கிய நூல்கள் வெளியிடப்படவும், இலக்கியப் பொதுமை யும் தனித்துவமும் ஒரே நேரத்தில் பேணப்படவும் இவ்வேற் பாடு வழி செய்தது.
 

ஏ. எம். நஹியா | 167
அஸிஸ் எ. எம். எ. "அறபுத் தமிழ் எங்கள் அன்புத்தமிழ்' இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம்
யாழ்ப்பாணம், 1963
jij; : 1 5 7 - 1 5 8
அலிஸ் எ. எம். எ. அறபுத்தமிழ் எங்கள் அன்புத்தமிழ்" இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் செய்யிது ஹஸன் மெளலானா எஸ். ஏ. (தொகுப்பு) அரசு வெளியீடு
கொழும்பு, 1968
Lsji, 3; 37
டிெ
LI: 37

Page 92
EZ/ மொழி பெயர்ப்பும் வெளியிடும்
மொழி பெயர்ப்பு
மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித்துறை. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே அதுவும் ஒன்று. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொல் லுக்குச் சொல்லாகப் பெயர்த்து அடுக்கி வைப்பதன்று மொழி பெயர்ப்பு வாக்கியங்களிலுள்ள சொற்களுக்கு மற்ற மொழியி லிருந்து நேரான சொற்களைப் பெய்து வாக்கியங்களாக்கி அமைத்துவிடுவதுமன்று. உண்மையில் பெயர்த்துரைக்கப்பட வேண்டியது பொருளேயாகும். எடுத்துக்கொண்ட பொருளின் கருத்தும் நுட்பமும் நயமுந் தோன்ற ஏற்றவாறு கூட்டியும் குறைத்தும், சுருக்கியும் விரித்தும் பெயர்த்தமைப்பதே மொழி பெயர்ப்பாகும். ܗܝ
மொழி பெயர்க்கும் போது ஒவ்வொரு மொழிக்கு முரிய மரபு பேணப்படுதல் வேண்டும். அதாவது மொழி பெயர்க்கப்படும் மொழியின் உடைகளை அக்கருத்துக்களுக்கு அணிவித்தல் வேண் டும். அதாவது அக்கருத்துக்களை மொழி பெயர்க்கப்படும் மொழிக்கு உரியதாக்கிக் கொள்ளுதல் வேண்டும். உண்மையில் மொழி பெயர்ப்பு ஒரு கடினமான முயற்சி. அது முதல் நூல் எழுதுவதைக்காட்டிலும் அதிக தொல்லை கொடுப்பது மூல நூல் எழுதும் ஆற்றலுள்ளவர்கள் தான் மொழிபெயர்ப்பும் செய்யலாம். மூல நூல் எழுதுபவர்களுக்கு ஒரு மொழிப்பயிற்சி போதும், ஆனால், மொழி பெயர்ப்பாளருக்கு இரு மொழிப்

ஏ. எம். நஹியா | 169
பயிற்சியும் ஞானமும் அவசியம். மரபறிந்து சொற்களை ஆள வேண்டும். போதுமான கலைச் சொற்கள் இயற்றப்படுவது மொழி பெயர்ப்பு விருத்திக்கு அவசியம்.
மொழி பெயர்ப்புக்கு எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய அறிவும் மொழியறிவும் இருத்தல் வேண்டும். மொழி பெயர்ப்பாளன் தகுதியற்றவனாக விருந்தால் மொழி பெயர்ப்பு உயிரற்று அல்லது சுவையற்றுக் கிடக்கும். அது தப்பான வழி யிலும் இட்டுச் செல்லும். பொருள் பொருத்தமற்றும் இருக் கும். நல்ல மொழி பெயர்ப்பு எழுத்தோடும் வேகத்தோடும் பற்றிக் கொள்வதுடன் யாப்பையும் பொருளையும் அணைத் துக் கொள்ளும். 'மொழி பெயர்ப்பாளன் மொழிச் சிதைப் பாளன்' என்ற இத்தாலியப் பழமொழி இதனாற்றான் போலும் நியாயமானதாகப்படுகிறது.
'அறபுப் பாஷையிலும் மற்றும் பாஷைகளிலுமுள்ள இல்மு களைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டு வெளியாக்கி வந்தால் இல்மு எங்கும். பரக்கும் முஸ்லிம்கள் யாவருக்கும் பிரயோசனங் கொடுக்கும்.'
என மொழிபெயர்ப்பின் அவசியம் பற்றி, முகம்மது காசிம் சித்திலெவ்வையவர்கள் 1897 இல் கூறியிருந்தார்.
'பிறநாட்டு நல்லறிஞர்
சாத்திரங்கள் தமிழ் மொழியிற்
பெயர்த்தல் வேண்டும்.'
என பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடி இக்கருத்தை ஆமோ தித்தான். அஸிஸும் இவ்வழி நின்று சிந்தித்தார். மொழி பெயர்ப்பு எவ்வாறு அமைய வேண்டும்? அறபு நூல்களைத் தமிழில் பெயர்ப்பதிலுள்ள இடர்பாடுகள் யாவை? என்பன பற்றியெல்லாம் அவர் கருத்துரைத்தார். மொழி பெயர்ப்புக் கலையின் வளர்ச்சிக்கான பல பயனுள்ள திட்டங்கள் அஸிஸிட
மிருந்தன.
மொழி பெயர்ப்புக்கலை" என்ற தலைப்பில் இளம் பிறை" கல்வி மலரில் 1965 இல் அஸிஸ் ஒரு கட்டுரை எழுதியிருந் தார் ‘அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்ற அவிஸின்

Page 93
170 அலிஸும் தமிழும்
நூலில் கூட இக்கட்டுரை பின்னர் இணைக்கப்பட்டது. மொழி
பெயர்ப்பின் அவசியத்தை அதிகமாக வலியுறுத்த வேண்டியிருந்த
மையாலோ என்னவோ, மொழி பெயர்ப்புக் கலை என்ற தலைப் பில் நூலொன்றைக் கூட வெளியிட்டு தனது நோக்கைப் பூர்த்தி செய்து கொண்டார். அஸிஸின் பல தமிழ்க் கட்டுரைகளும், தமிழ் நூல்களும் அவரின் ஆங்கில ஆக்கங்களின் மொழிபெயர்ப் புக்களே.
சுவாமி விவேகானந்தர் சம்பாஷனைகள்', 'விவேகானந்த ஞானதீபம்’, ‘கரும யோகம்", "ஞான யோகம்", "நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை போன்ற பல மொழிபெயர்ப்பு நூல் களையும் கட்டுரைகளையும் தமிழுக்கு வழங்கியதுடன் நில்லாது பலரை இத்துறையின் பால் ஈடுபாடு கொள்ளவும் செய்த சுவாமி விபுலானந்த அடிகளாரின் இத்துறையிலான ஊக்கமும் ஈடுபாடும் அஸிஸின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது; அஸிஸ் - விபுலானந்தர் சந்திப்புகளின் போதெல்லாம் மொழி
பெயர்ப்புத் துறையின் அவசியம் பற்றிக் கருத்துக்கள் பரிமாறப்
பட்டன,
டபிள்யூ ஜி. எம். ரெனால்ட்ஸ் அவர்களின் "ஓமர்" என்ற ஆங்கில நாவலை "கிரேக்க - துருக்கிய யுத்த சரித்திரம்' என்ற பெயரில் மொழிபெயர்த்து ஈழத்து முஸ்லிம்களின் இத் துறை முன்னோடியாகத் திகழ்ந்த முகம்மது காசிம் சித்திலெவ்வையின் வழி காட்டலில் அஸிஸ் வழி நடந்தார். ஜேர்மன் நாடகங் களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இத்துறையில் புது வழி வகுத்த பேரறிஞர் பேர்னாட்ஷா வின் முயற்சிகளையும் அஸிஸ் அறிந்திருந்தார்.
மொழி பெயர்ப்புக்கலை பாடசாலைகளினதும் ஆசிரியர் பயிற் சிக் கல்லூரிகளினதும் கலைத் திட்டத்தில் இடம் பெற வேண்டு மென அஸிஸ் விரும்பினார். இது அவரது நீண்ட கால ஆசை யாக விருந்தது.
"இடைநிலைப் பள்ளிகளில் இல்லாவிட்டாலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலாவது, மொழிபெயர்ப்புக் கலை ஒரு பாடமாகப் போதிக்கப்படல் வேண்டுமென்பது பல ஆண்டு களாகவே எனது கொள்கையாக இருந்துவருகிறது. இவ் விதம் செய்தாலல்லாமல் எமது சொந்தக் கலாசாரங்கள்

ஏ. எம். நஹியா | 171
பண்பாடுகள் ஆகியவற்றைப் பேணிக் கொண்டே மேற்கு நாடுகளின் விஞ்ஞானம், தொழிநுட்பவியல் ஆகியவற்றின் முழுப்பயனையும் அனுபவித்தல் இயலாது." 2
என்பது அஸிஸின் கொள்கையாகவிருந்தது. ஒரு மொழியின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் மொழி பெயர்ப்புக் கலை அத்தியா வசிய மென்பது அஸிஸின் நம்பிக்கை.
பாடசாலைகளினதும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளினதும் கலைத்திட்டத்தில் மொழிபெயர்ப்புக் கலை கட்டாய பாடமாக அல்லது விருப்புப் பாடமாக இடம் பெறலாம் என அஸிஸ் அபிப்பிராயப்பட்டார். மொழிபெயர்ப்புக் கலைக்கான பாடத் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டதாக படிமுறையானதாக அமைய வேண்டுமென்பது அஸிஸின் ஆலோசனை.
"எமது பாடத்திட்டத்தில் மொழிபெயர்ப்புக் கலைக்குச் சிறப்பிடமளிக்கப்படல் வேண்டுமெனுங் கருத்து, மலேசிய தமிழ் மகாநாட்டில் நான் கண்டு, கேட்டு, உய்த்துணர்ந்த அனுபவங்களால் என் மனதில் மேலும் வலுப் பெற்றிருக் கிறது. இக்கலை சம்பந்தமான பாட விதானம் திட்டவட்ட மான முறையில் தயாரிக்கப் பெறல் வேண்டும். பாடங் களை ஒழுங்கு முறைப்படி மாணாக்கருக்குப் பயிற்று வித் தல் வேண்டும் அப்பொழுது தான் நமது இலட்சியம் கைகூடும். ' 8
என்று அஸிஸ் எழுதினார். அத்துடன் நின்று விடாது,
"எங்கள் கலாசாரத்தை வளர்க்கத் தேவைப்படும் மொழி பெயர்ப்பாளர் குழாமொன்றினை அரசாங்க முஸ்லிம் ஆசிரியர்களிலிருந்து உருவாக்கப்பட வேண்டிய தேவை ஏற் பட்டிருக்கின்றது. அறபு மொழி மூலம் பெறக்கூடய அறிவை ஆசிரியர் பாடசாலைப் பிள்ளைகளுக்கும், அறபு மொழி தெரியாத பொதுமக்களுக்கும் இடையிற் செறியச் செய்வர். இவ்வகை மொழி பெயர்ப்பாளர் குழாத்தினர் இந்த நோக் கத்தைத் தனிப்பட்டவர்களாக, பிரித்து வைக்கப்பட்ட அங்கங்களாகப் பொதுவான நோக்கம் எதுவுமின்றி, பொது நிருவாகமின்றி, பொது அமைப்பின்றிச் செவ்வையாகவும் திருப்திகரமாகவும் நிறைவேற்ற முடியாது. மொழி பெயர்ப்

Page 94
172 அஸிஸும் தமிழும்
புத் துறையில் செயல் முறையில் அனுசரிக்கக் கூடிய விதி கள் மற்றும் விருத்தியடைந்த கலைகள், சாத்திரங்களுக்கு இருப்பது போல், இருந்தாற்றான் சமூகத்திற்கு வேண்டிய நன்மை பயக்கும்." 4
என அஸிஸ் அபிப்பிராயப்பட்டார். இக்கருத்து முகம்மது காசிம்
சித்திலெவ்வையினுடைய,
* இல்முகளைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்காக ஒரு சபை சேர்ந்து பணஞ் சேகரித்து உலமாக்களைக் கொண்டு மொழி பெயர்த்து வெளியாக்கினால் எவ்வளவு நன்மையுண்டாகும். இல்மின் ஒளி எங்கும் பிரகாசிக்கும். அறபிலிருந்து பாரிஸ் பாஷையில் பல இல்முகளை மொழி பெயர்த்திருப்பது போலாகிவிடும்.'
என்ற கருத்துடன் ஒத்திருக்கிறது. அறபு மொழி மூலம் பெறக் கூடிய அறவினை முஸ்லிம்களிடை நிறையப் பரப்பினாலன்றி கலாசார விருத்தி முயற்சிகளை அனுகூலமாகக் கையாள முடியாதென்பதில் இருவரும் ஒத்த கருத்துடையவர்கள். ஆங் கில மொழியிலிருந்து பெற்றுக்கொண்ட அறிவை பொது மக் களின் வாசலண்டை கொண்டு வந்து அவர்களின் அறிவுப் பசி யைத் தீர்க்க வேண்டுமென்பதும் இருவரும் இணக்கம் கண்ட கொள்கையாகவிருந்தது
மொழி பெயர்ப்புக் கலையின் அரிச்சுவட்டை அளவிஸ் கற்ற கதை சுவாரசியமானது. அவரே தனது 'தமிழ் யாத்திரை நூலில் அதனைப் பின்வருமாறு கூறுகிறார்,
* மொழி பெயர்ப்புக் கலையின் அகர, ஆகாரங்களை நான் முதன் முதலாகக் கற்றுக்கொண்டது கீரிமலை மணல் வெளி யில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டமொன்றிலாகும். வகுப்பறையிலோ, பல்கலைக் கழகத்திலோ அன்று. யாழ்ப் பாணத்தில் காந்தியுகம் மேலோச்சிய காலம் அது. தென்னகத் தின் அரசியல் வானில் சுடர்விட்டு ஒளிர்ந்ததீரர் சத்தியமூர்த்தி அவர்கள் 1928 இலோ 1929 இலோ யாழ்ப்பாணம் வந்தார் கள். யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் கூட்டத்தில் சொற் பொழிவாற்றினார்கள். அந்தக் கூட்டத்திலே தான் மொழி பெயர்ப்பின் நுட்பங்கள் பற்றிய முதலாவது பாடத்தை நான்

ஏ. எம். நஹியா / 178
கற்றுக்கொண்டேன். சத்தியமூர்த்தி அவர்களுக்கு அன்று கோலாகலமான வரவேற்பளிக்கப்பட்டது. வரவேற்புக் குழுத்தலைவர் அந்த வரவேற்பை Warm Welcome என்று குறிப்பிட்டார். இப்படி வர்ணித்தமை பொருத்தமற்ற தென்று சத்தியமூர்த்தியவர்கள் விரிவாக விளக்கிக்கூறிைேம, இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போற் பதிந்திருக் கிறது. இங்கிலிஷ்காரர் வாழும் நாடு குளிர்மிகுந்த பூமி, வெயிலோ மிக அரிது. எனவே, வெப்பமும் குடும் அவர் களுக்கு மன மகிழ்வை உண்டாக்குவன, நமக்குத் தென்ற லும், குளுமையும் இன்பமூட்டுவதைப் போல, அதனாலேயே உளங்கனிந்த வரவேற்பை அவர்கள் Warm Welcome என் கிறார்கள். யாழ்ப்பாண மக்கள் படைபதைக்கும் பங்குனி வெயில் காலத்தில் கீரிமலை மணல் வெளியில், அகங் குளிரத் தம்மை வரவேற்றதை Warm Welcome என்று வர் னிப்பது சரியல்லவென்று சத்தியமூர்த்தி விவரித்தார்.' ே
இது தான் அளவிஸ் படித்த மொழி பெயர்ப்புக் கலை பற்றிய முதலாவது பாடம். சத்தியமூர்த்தி கற்றுக்கொடுத்த இப் பாடம் அளிஸ் படித்த மிக முக்கிய பாடம்.
யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸில் சேர்ந்து அந்நாட்களில் தீவிரமாக உழைத்த ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் தனது கட்டுரையொன்றில் Warm Welcome என்பதை அகங்குளிர்ந்த வரவேற்பு என்றும் Snow White என்பதை பால் வெள்ளையே பன்றிப் பணி வெள்ளையல்லவென்றும் மொழி பெயர்த்திருந் தார். சத்தியமூர்த்தியிடம் மொழி பெயர்ப்புக் கலை பற்றிய ஆரம்பப் பாடத்தைக் கற்றவர்கள், உண்மையில் அத்துறையை ஒரு தனியான துறையாக வளர்ச்சியடையச் செய்திருக்கிறார் கள் என்பதற்கு இது நல்தொரு உதாரணமாகும். அஸிஸ் மட் டும் இதற்கு எவ்வாறு விதிவிலக்காக முடியும்?
தமிழை வளம்படுத்துவதில் முஸ்லிம்களும் முன்னின்று உழைக்க வேண்டும். அந்தச் சீரும் சிறப்புமிக்க தமிழ் மொழிக்கு முஸ் லிம்களும் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும். அதன்மூலம் இஸ்லாமியக் கருத்துகளையும், அறபு, பார்ஸி மொழிகளின் அரும்பதங்களையும் நாம் தமிழ் மொழிக்கு வழங்க முடியும் என அஸிஸ் கூறினார்:

Page 95
174 / அஸிஸம் தமிழும்
''தமிழ் இலக்கியம் சிறப்பும் தொன்மையும் வாய்ந்ததாய் இருப்பதுடன் புதுமையும் புகுந்ததாய் உள்ளது. அந்தச் சீரும் சிறப்பும் செழுமையும் வாய்ந்துள்ள தமிழுக்கு முஸ் லிம்களாகிய நாமும் நம்முடைய பங்கைக் கொடுத்து இன் னும் பன் மடங்கு சிறப்படையச் செய்ய முயல்வது நமக்கே பெருமை அளிப்பதாகும். நம்முடைய இந்தப் பணியை முஸ் லிம் அல்லாதாரும் வரவேற்று ஆதரவளிப்பார்கள் என்ப தில் ஐயமில்லை. ஏனெனில் நம்முடைய உதவியால் அறபு, பார்ஸி மொழிகளில் உள்ள அரும் பதங்கள் பல வற்றால் தமிழை வளம் பெறச் செய்வதோடு கடந்த காலங்களில் ஏனையோரால் கவனிக்கப்படாமலும், தற்பொழுது பல ரும் ஏற்றுக்கொண்டும் வருவது மான உலக நாகரிகத்தையே வளம்படுத்தி உருவாக்கிய உயர்ந்த இஸ்லாமியக் கோட் பாடுகளையும் கருத்துக்களையும் கூட தமிழுக்கு நாம் வழங்க முடியும்'' 7
என அஸீஸ் அறிவுரை வழங்கினார். மொழிபெயர்ப்புத் துறை யில் முஸ்லிம்கள் ஈடுபடத் தேவையிருக்கிறது. அத் தேவையை நிறைவேற்றுகையில் நம்மையறியாமலே தமிழை வளம்படுத்திய வர்களாவோம் என்ற கருத்தும் இதில் தொக்கு நிற்கிறது. அஸீஸ் எதையும் ஆழமாகவே சிந்தித்தார்.
ஜனாப் அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்தபோது அஸீஸ் பெரு மகிழ்வடைந் தார். அம் முயற்சியை வெகுவாகப் புகழ்ந்தார்.
''சமீப காலத் தில் வெளிவந்துள்ள ஜனாப் அப்துல் ஹமீத் பாகவியவர்களின் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு இஸ் லாமிய இலக்கிய உலகில் ஒரு புத்துணர்ச்சியை எழுப்பி யிருப்பதுடன் முஸ்லிம் அல்லாதார் மத்தியிலே, அவர்களுக் கும் திருக்குர்ஆனுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற் படுத்தி வைக்க ஒரு சிறந்த சாதனமாகவும் அமைந்திருக் கும் தன்மையால் மிகமிகப் போற்றுதற்குரிய தொன்றா
கும்'' 8
என அம் முயற்சி பற்றிக் கருத்து வெளியிட்டிருந்தார். தமிழில் குத்பா ஓதுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் அவ் வாறு ஓதுவதில் குற்றமில்லை என்று வேலூர் ஆலா ஹஜரத்

ஏ. எம். நஹியா (175
கருத்து வெளியிட்டபோது பெரியார் முகம்மது காசிம் சித்தி லெவ்வை அவர்கள் 1887இல் அடைந்த மகிழ்ச்சியை அப்துல் ஹமீத் பாகவி யின் திருக்குர் ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு வெளி வந்தபோது ஜனாப் அஸீஸிடம் காண முடிந்தது.
இஸ்லாத்தின் உயர்ந்த கருத்துக் களையும் தத்துவங்களையும் தமிழுட் செலுத்தவேண்டும், தமிழ் கூறு நல்லுலகு அதனாற் பயனுறவேண்டும் என்பது அஸீஸின் எண்ணமாகவிருந்தது. ஆயினும் அதே வேளை குர்ஆனைப் பிறமொழிகளில் மொழி பெயர்க்கின்றபோது எதிர்நோக்கவேண்டியிருந்த நடைமுறைப் பிரச்சினைகளையும் குர்ஆனின் மொழிக்குச் சமமான சொற் களைத் தேடுவதில் நேரிடக்கூடிய நிவர்த்திக்கமுடியாத கஷ்டங் களையும் அஸீஸ் இனம் காணத் தவறவில்லை.
* 'மனிதனால் உருவாக்கப்படாத அல்லாஹ்வின் வார்த்தை கள் அம் மொழியிற்றான் (அறபு) இறக்கப்பட்டன. ஆகவே தான் திருக்குர் ஆனுக்கே உரித்தான அதிலுள்ள விசேஷ மான கருத்து வடிவங்களுக்கும் சொற்களுக்கும் பொருத்த மான சம் சொற்களை வேற்று மொழியிற் காண்பதரிது. மற்றைய மொழிகளில் முற்றாக ---முழுமையாக உணர்ச்சி யோடு இதனை எடுத்துரைக்க முடியாத தொல்லை ஒருபுற மிருக்க திருக்குர் ஆனின் ஞான அருட்சி, தூதுசந்தம், மொழி நடை இவை காரணமாக இவ்விறைமறையை மற்றைய மொழிகளிற் பூரணமாக மொழி பெயர்க்க முடியாதென அழுத்தம் திருத்தமாக முடிவு செய்யப்படலாயிற்று. பிக்தோல் அவர்களின் கூற்றுப்படி திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பில் கண்ணீர் சிந்தவும் பரவசமடையவுஞ் செய்யும் அதி உன்னதமான இன்னிசையைக் கைநெகிழ விட்டுத் தகுதியான வார்த்தைகளோடு பெரும்பாலும் எழுத்துப் பெயர்ச்சியே செயற்பாலதாகின்றது. சரிசம சொற்களையும் சில சமயத்திற் காண முடியாது. அத் தன்மையுள்ள சொற் களையும் கருத்துப் படிவங்களையும் உதாரணங்களாகக் கொள்ளுவோம். அல்லாஹ், றசூல், உம்மத், தெளஹீத், சக றாத், மையித், ஜனாஸா, வலீமா போன்ற சொற்களுக்கு ஓரளவு சம்பதங்கள் தமிழிலிருந்தும் அவற்றை உபயோ கிக்க முஸ்லிம் மக்கள் ஏன் மறுக்கிறார்கள் என்பது இப் போது தெளிவாகின்றது" 9

Page 96
176 / அஸிஸும் தமிழும்
என குர்ஆன் மொழி பெயர்ப்பிலுள்ள கஷ்டங்களையும் பிரச் சினைகளையும் குர்ஆன் மொழி பெயர்ப்பாளருக்கும் இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்போருக்கும் அஸிஸ் அழகாகக் கூறி யிருக்கிறார்.
"ஆங்கிலம் வர்த்தகத்துக்கும், பிரெஞ்சு மொழி அரச உற வுக்கும், இத்தாலிய மொழி காதலுக்கும், ஜெர்மனிய மொழி தத்துவார்த்தத்துக்கும் சிறந்தவையாக விளங்கு மானால், தமிழ் மொழி பக்தி விசுவாசத்துக்குரிய மொழி யாய் மிளிர்கிறது."
என்ற தனிநாயக அடிகளாரின் கருத்தை ஆமோதிக்கின்ற
அஸிஸ், அவ்வழி நின்று பக்தி விசுவாசத்துக்குரிய தமிழ் மொழி யினுள் இஸ்லாமிய கருத்துக்களையும் அறபுச் சொற்களையும் பாய்ச்ச விரும்பினார். அதற்கு வாய்ப்பாகவே மொழிபெயர்ப் புக் கலையின் துணையை நாடினார்.
மலேசியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு நிகழ்ச்சிகள் 1966 ஏப்ரல் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லவேண்டியிருந்த அளவிஸ் அவர்களினால் காலை 11.30 இலிருந்து பி. ப. 1.00 மணிவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமுடியாமற் போயிற்று. துரதிஷ்ட வசமாக அவ்வேளையில் நடைபெற்ற மொழிபெயர்ப்புத்துறை சம்பந்தமான கலந்துரையாடலில் கலந்துகொள்ள அஸிஸி னால் முடியவில்லை. இதையிட்டு,
"மொழிபெயர்ப்புத் துறை பற்றி நிகழ்ந்த கருத்தரங்கையும்
தவறவிட நேர்ந்தமை விசனத்துக்குரியதாகும்' 19
என்று தமது கவலையைத் தெரிவித்திருக்கிறார் அஸிஸ் அவரின் மொழிபெயர்ப்புக் கலை மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்ட இதுவொன்றே போதுமானது.
@@uດຕົນໃ6
முஸ்லிம் அறிஞர்கள், கல்விமான்கள், இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகள் நூலுருவில் வெளிவருவதில் பல தடைகள் உள்ளன. நூல் வெளியீட்டுக்குத் தேவைப்படும் பெருந்தொகையான பண மும் விற்பனையின்போது ஏற்படும் கஷ்டங்களும் இவற்றுக்கான

ஏ. எம். நஹியா 177
சில காரணங்கள். இத் தடைகளையும் குறைபாடுகளையும் நீக்கி விடுவதன் மூலமே தரமான பல தமிழ் நூல்களை, இஸ்லாமிய இலக்கியங்களை, முஸ்லிம் எழுத்தாளரின் படைப்புகளை தமிழும் பெற்றுப் பயனுற முடியும். இந் நோக்கில்தான் வெளியீட்டு வாரியங்களின் அவசியத்தை அஸிஸ் வலியுறுத்தினார்.
தென்னிந்திய கல்விக்கழகத்தின் பொன்விழாவில் கலந்துகொண்டு அளவிஸ் ஆற்றிய உரையில் வெளியீட்டு வாரியங்களின் அவசியம் வெகுவாக வலியுறுத்தப்பட்டது. அங்கு அவர் தெரிவித்த கருத் துக்கள் கவனத்தில் கொள்ளத்தக்கன.
"உமறுப் புலவருக்கு கொடைவள்ளல் சீதக்காதி உறுதுணை யாய் அமைந்திருந்தது போன்ற காலம் அன்று இது அரசர் களும் தனவந்தர்களும் தனிப்பட்ட முறையில் புலவர் பெரு மக்களைப் போற்றி ஆதரித்து வந்த காலம் மாறிவிட்டது. ஜனநாயக தத்துவம் மேலோங்கி ஏழை பணக்காரன் என்ற பாகுபாடுகள் குறைந்து வருமான வரியும் அதற்கு மேற் பட்ட வரியும் தலைதூக்கி நிற்கின்ற இந்தக் காலத்தில் அத் தகைய வள்ளல்களை நாம் எதிர்பார்ப்பதும் பொருத்த முடையதாகாது. பொதுவாக தனிப்பட்ட புத்தகப் பதிப் பாளர்கள் தங்கள் சொந்த வருமானத்தைக் கருதியும் மக்க ளாதரவை நம்பியும் எழுத்தாளர்களுக்கு ஆதரவளிக்க முன் வரலாமென எதிர்பார்க்கலாம். இருந்தாலும் முஸ்லிம் எழுத்தாளர்களைப் பொறுத்தவரையில் அதுவும்கூடச் சாத் தியமற்றதாகவே காணப்படுகிறது. ஏனெனில் அறபுத் தமிழிலக்கியத்திற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் பொதுமக்க ளின் எண்ணிக்கை மிகக் குறைவானது என்பதை நாம் மறந்து விடலாகாது. தென்னிந்தியாவிலுள்ள சற்றேறக்குறைய முப் பது இலட்சம் முஸ்லிம்களும் இலங்கையிலுள்ள ஐந்து இலட் சம் முஸ்லிம்களுமே முஸ்லிம் தமிழிலக்கியத்திற்கு ஆதர வளிக்கவேண்டியவர்களாய் உள்ளனர். இவர்களும்கூட பொருளாதாரத் துறையில் மிகுந்த சு பீட்ச நி ைல யில் இல்லை. இந்த நிலைதான் தனிப்பட்ட புத்தகப் பதிப்பா ளர்கள் இம் முயற்சியில் ஈடுபடுவதற்கு தடையாக இருந்து வருகிறது. எனினும் அறபுத் தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பிக்காமலும் நாம் இருக்க முடியாது. அ வ் வாறு அயர்ந்து இருப்பது நம்முடைய கலாசார வளர்ச்சிக்கும்

Page 97
178/ அளவீஸஸும் தமிழும்
பாதுகாப்பிற்கும் இடையூறு விளைவிப்பதோடு எமது தனிப் பட்ட பண்பாட்டை நாம் இழக்கவும் காரணமாய் இருக் கும். ஆகவேதான் உறுதியான முறையில் அமைக்கப்பட்டு, ஒழுங்காகவும், முன்னோக்குடனும் நடத்தப்பட்டு வரும் நமது சங்கங்கள் இத் துறையில் ஈடுபட்டு சிறுவர் முதல் வாலிபர் வயோதிபர் வரை சகலருக்கும் தேவையான முஸ் லிம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். உங்கள் சங்கத்தின் சட்டதிட்டங்கள் இத்தகைய முயற்சிக்கு இடந்தராவிடின் அதற்கெனப் பிரத்தியேகமான சங்கத்தையோ அல்லது சங் கங்களையோ உடனடியாக நிறுவ வேண்டிய அவசியம் ஏற் படுகிறது. இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் எண்ணிக் கையில் மிகக் குறைவானவர்கள். ஆகையினால் இத்துறை யில் தென்னிந்திய முஸ்லிம் சகோதரர்களாகிய நீங்கள் எங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டுமென்று வேண்டு கிறேன்' 11 -
என அஸிஸ் கேட்டுக் கொண்டார். இஸ்லாமிய வெளியீட்டு வாரியங்கள் ஏன் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதற்கு தர்க்க ரீதியான விளக்கமாக அஸிஸின் சொற்பொழிவு அமைந்திருந் தது. அன்று அவர் நிகழ்த்திய சொற்பொழிவின் தாக்கத்தை யும் விளைவுகளையும் இன்று நாம் நிதர்சனமாகக் காண்கின் றோம்.
அஸிஸ் தனது அந்திம காலத்தில் பணி செய்த ஜாமிய்யா நளீமிய்யாவில் அமைந்திருக்கும் நளீமிய்யா இஸ்லாமிய வெளி யீட்டுப் பணியகம், கல்ஹின்னைத் தமிழ் மன்றம், 28-08-1983இல் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் ஆகியன வற்றின் இத்துறையிலான முயற்சிகள் பாராட்டத்தக்கன, கல் முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பணி யும் இதனுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது. எல்லா வற்றுக்கும் மேலாக அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகம் கூட இத்துறையில் செய்யும் அபார பணியை நாம் மறந்துவிடக் கூடாது. இந் நிறுவனங்களெல்லாம் அஸிஸின் கனவை நனவாக்கும் முயற்சியில் தீவிரமாக முயன்று வருகின்

ஏ. எம் நஹியா | 179
றன. இப்போது இந்தியாவில் செயற்பட்டு வரும் பல இஸ்லா மிய நூல் வெளியீட்டு வாரியங்களின் பணிகளும் இத்துறையில் விதந்துரைக்கத் தக்கனவே.
இஸ்லாமிய நூல் வெளியீட்டு வாரியங்களை மென்மேலும் ஏற் படுத்துவதன் மூலம் முஸ்லிம்களும் தமது முடிந்தளவு பங்களிப் பைத் தமிழ் மொழிக்கு வழங்க முடியும். பல இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களும், முஸ்லிம் எழுத்தாளரின் படைப்பு களும் வெளிவரும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். இந்நோக்கில் தான் அஸிஸ் வெளியீட்டு வாரியங்களின் அவசியத்தை வலி யுறுத்தினார். அஸிஸின் அந்நோக்கம் சிறப்பாக நிறைவேறும் காலம் அண்மித்து விட்டமைக்கான அறிகுறிகள் தென்படுகின்
ይወ6üff•
முகம்மது காசிம் மரைக்கார் சித்தி லெவ்வை மரைக்கார் அஸ்றாறுல் ஆலம் Gl&n (լքthւ, 1928
189
அளவிஸ் எ. எம். எ. தமிழ் யாத்திரை சென்னை, 1968 53 -- 52 ܇ ܗ݈ܽL7
Jáj;: 58
அவிஸ் எ. எம். r,
மொழி பெயர்ப்புக் கலை
Թ&frզքthւ 1965
Lječi : 03
முகம்மது காசிம் மரைக்கார் சித்தி லெவ்வை மரைக்கார் அஸ்றாறுல் ஆலம்
கொழும்பு, 1928
Ljš: 189

Page 98
180 அஸிஸும் தமிழும்
6,
7.
0.
.
9ίσΥύου στ, στιο. Φής தமிழ் யாத்திரை (ଗgfଜର୍ଯ୍ୟ ତୈଳ ତଥ୍ , 1968
is 59
அஸிஸ் எ. எம். எ. "அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963 نے 16 مئی 53 6 7 انچ پڑتgu
െ. Už 2 62 - 63
அஸிஸ் எ. எம். எ. * மொழி பெயர்ப்புக் கலை? அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் கொழும்பு
iš 3 35.
φίσΥθου στο στιο, στ. தமிழ் யாத்திரை (ରafé åäö) ଜଙ୍ଘ, 1968 Lá, 51
-96γύου στ, στιο, στα *அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம்
யாழ்ப்பாணம், 1963
166 سے 4 16 یونیقیi_g

圈翻 கட்டுரையாசிரியர்
இருபதாம் நூற்றாண்டின் 5 ஆம், 6 ஆம் தசாப்தங்களில் அஸிஸ் பிரபல தமிழ்க் கட்டுரையாசிரியராகத் திகழ்ந்தார். படித்தவர் முதல் பாமரர் ஈறாக எல்லோரும் விரும்பிப் படிக் கக் கூடியதாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. கருத் துச் செறிவு, வரலாற்றுப் பார்வை, உள்ளதை உள்ளவாறே கூறும் பண்பு, எதையும் தொடர்புறுத்தி நோக்கும் தன்மை என்பன அவரது கட்டுரைகளில் சிறப்பம்சங்களாகக் காணப் பட்டன. எளிய நடை, கதை சொல்லும் பாங்கில் அமைந்த கட்டுரை ஒட்டம் என்பன அவரது கட்டுரைகளுக்குச் சிறப் பளித்தன. பிரபல இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துக் கள் கட்டுரைகளில் இழையோடின. பழகிப் போன பாணியில் எல்லோருக்கும் விளங்கக்கூடிய அமைப்பில், பழகு நடையில் அவரது கட்டுரைகள் எழுதப்பட்டன. இஸ்லாமிய கலாசார பண்பாட்டு வாடை அக் கட்டுரைகளில் வீசியது. பொதுவாகச் சொன்னால் அவரது கட்டுரைகள் அக்காலை மிகவும் பிரபல் யம் பெற்றிருந்தன. முஸ்லிம் சமுதாயத்தின் போக்கிலும் எண் ணத்திலும் அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி பெற் றிருந்தன.
அறிஞர் அஸிஸின் கட்டுரைகளின்றி சிறப்பிதழ்களோ, சொற் பொழிவுகளின்றி விசேட வைபவங்களோ பூரணத்துவம் அடைவ தில்லை என்ற நிலை 1950, 60 களில் இருந்தது.

Page 99
182 / அஸிஸும் தமிழும்
தெளிந்த மனம், தெளிந்த அனுபவத்தோடு தெளிந்த நடை யில் எழுதுவது தான் கட்டுரை. நல்ல கட்டுரைகளை எழுதுவ தற்கு மனம் பக்குவமடைந்திருக்க வேண்டும். தான் கண்டதை, படித்துச் சுவைத்ததை, தனக்குச் சரியெனப்பட்டதை, அனுப வித்ததை பிறரும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் எழு தப்படுவதே கட்டுரை. இந்நோக்கில் தான் அஸிஸின் கட்டுரை களும் எழுந்தன.
மாந்தேன், பேகன், அடிஸன், ஹாஸ்லிட், லிஹண்டு, சால்ஸ், லாம்ப், லிண்ட், செஸ்டர்டன், சாமர்செட்மாகம், கோல்ட்ஸ்மித் ஆகியோர் புகழ் பெற்ற மேனாட்டுக் கட்டுரையாசிரியர் கள். திரு. வி. க., கல்கி, சுகி, திரு. சோம. லெ போன்றோ ரும் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், திரு. எஸ். வையா புரிப்பிள்ளை, திரு. டி. கே. சிதம்பரநாதச் செட்டியார், திரு. ரா, பி. சேதுப்பிள்ளை, திரு. சி. என். அண்ணாத்துரை, புது மைப் பித்தன், சொ. முருகப்பா, ஆ. முத்து சிவன், விசு, திரு நாவுக்கரசு, சோமு, சாமி பழனியப்பன், ஜி. சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் தமிழுலகில் பிர சித் தி பெற்ற எழுத் தாளருட் சிலர். இவர்களின் கட்டுரைகள் எல்லாமே மேற் சொன்ன நோக்கில் எழுந்தனவே. அதனாற்றான் அவர்களின் கட்டுரைகள் காலம் கடந்தும் நின்று நிலைக்கின்றன.
ஆசிரியரின் சொந்த நடையில் சிறந்த உணர்ச்சி வெளியீடாக கட்டுரைகள் அமைதல் வேண்டும். கட்டுரை ஆசிரியரின் மனக் கண்ணாடியாக வசன நடை அமைதல் வேண்டும். இந்த வகை யில் பேர்னாட்ஷாவின் கட்டுரை நடை அபூர்வமானது. உண்மை களைச் சிறந்த முறையில் எடுத்துக் காட்டும் ஆற்றல் வாய்ந்த அபூர்வ நடை அவருடையநடை ஆங்கில இலக்கியமே அவருடைய வசன சிருஷ்டி எழிலால் விரிவடைந்திருக்கிறது. ஷாவின் வசன எழிலை, வேறுயாராலும் கையாளமுடியாது. ஆங்கில அகராதியே ஷாவுக்கு மண்டியிட்டு அடிமையாகிவிடுகிறது. அவ்வளவு சர்வ சுதந்திரமாக ஷா வசனத்தைச் சிருஷ்டி செய்கிறார். அலிஸைப் பொறுத்தவரை காலத்துக்கேற்ற இலகு நடையில் அவரது கட்டு ரைகள் அமைந்திருந்தாலும் தனக்கென வகுத்துக் கொண்ட தனி நடையில் எழுதியவரல்லர் அவர். அவர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் எழுதிய கட்டுரைகளும் பின் னர் வேறு சிலரினால் தமிழாக்கம் செய்யப்பட்டன. இவ்வா

ஏ. எம். நஹியா / 183
றான மொழி பெயர்ப்புக் கட்டுரைகளே பெரும்பாலான அவ
ருடைய கட்டுரைகள். அதனால் மொழி பெயர்த்தோரின் அழகு நடை தான் அஸிஸின் கட்டுரைகளுக்கு உயிரூட்டுகின் [DଛOT.
"இலங்கையில் இஸ்லாம்" என்ற அஸிஸின் நூலில் இடம் பெறும் அதிகமான கட்டுரைகள் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவை.
"ஒரு சில கட்டுரைகளைத் தவிர மற்றவையாவும் ஆங்கிலத் திலேயே எழுதப்பட்டன. அவ்வப்பொழுது அவற்றினைத் தமிழாக்கியோரும் பலர்." 1
என அஸிஸ் அவர்களே இந் நூலின் நூன் முகத்தில் குறிப்பிட்டு உண்மையை ஏற்றுக் கொள்கிறார்.
"இக் கட்டுரைகளை அவை எழுதப்பட்ட காலங்களில் மொழி பெயர்த்துதவினோர் பலர் அவர்கள் ஒவ்வொருவ ருக்கும் என் நன்றி உரித்து', 2
என அதே இலங்கையில் இஸ்லாம்? நூன்முகத்தில் இன்னு மோர் இடத்தில் குறிப்பிட்டு தனது முற்கூற்றை ஊர்ஜிதம் செய்கிறார். திரு. கா. சிவத் தம்பி, திரு. இ. சிவகுருநாதன், ஜனாப் எஸ். எம். கமாலுத்தீன், ஆண் கள் பாடசாலையின் முன்னாள் தலைமை Είθήιμή στιb, στιο. யூசுப், எம். ஏ. எம். சுக்ரி போன்றோரும் காவலூர் இராச துரையும் அஸிஸின் கட்டுரைகளைத் தமிழாக்கி உதவினர். அத னாற்றான் போலும் (്ഥ1) A ി ി' : {}; மொழிநடை, ஆளுமை, சொல்லாட்சி என்பனவற்றை அழிசி, கட்டுரைக ளில் காணமுடிகிறது. அதனாலோ என்னவோ,
"இந்நூலிற் காணப்படும் வழக்கத்துக்குப் புறம்பான வாக் கிய அமைப்புக்கள், சொற்றொடர்கள், வார்த்தைப் பிர யோகங்கள் இவற்றுக்கெல்லாம் நானே பொறுப்பாளி: , 3
என எழுத வேண்டிய நிலை அஸிஸுக்கு ஏற்பட்டது. ஆபி ரிக்க அனுபவங்கள் நூலின் முன்னுரையில் தான் அலிஸ் மேற்கண்டவாறு எழுதியிருந்தார்.

Page 100
184| அஸிஸும் தமிழும்
அஸிஸின் கட்டுரைகள் பலரினால் மொழிபெயர்க்கப்பட்ட மையினால் அவற்றில் உரைநடை ஒருமைப்பாட்டைக் காண முடிவதில்லை. இலங்கையில் இஸ்லாம் நூலில் காணப்படும் கட்டுரைகளில் இத்தன்மையைச் சிறப்பாக அவதானிக்கலாம். வாசகர்களும் இந்த உண்மையை அறிந்திருக்க வேண்டும் என் பதனால் இலங்கையில் இஸ்லாம் நூன் முகத்தில்,
"இந் நூலில் உரைநடை ஒருமைப்பாட்டினைக் காண முடி யாது. அதற்காக வாசகர்களது மன்னிப்பை வேண்டிக் கொள்கிறேன்." 4
எனக் குறிப்பிடும் நிலை அளவிஸ்"க்கு ஏற்பட்டது. எதையும் ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளவாறே சொல்லும் அஸி ஸின் பண்பை இங்கு நாம் காண்கிறோம்.
அஸிஸின் கட்டுரைகள் சமயம், கலாசாரம், கல்வி, மொழி, இளைஞர் தலைமைத்துவம் பற்றிப் பேசுவன. பெரியார்கள், கல்விமான்கள், கவிஞர்கள், சமூக உயர்வுக்காக உழைத்தவர்கள் பற்றியெல்லாம் எழுதப்பட்டன. நாடுகள், வரலாறு, சமூகம், சகோதரத்துவம் பற்றியெல்லாம் குரல் கொடுத்தன.
1940 இலிருந்து மரணிக்கும் வரை அஸிஸ் எழுதிய கட்டுரை கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனநிலைகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் எழுந்தவை.
அளபீஸின் கட்டுரைகளில் உருதுக் கவிஞன் அல்லாமா இக்பா லின் கருத்துக்கள் இழையோடுகின்றன. எகிப்திய சிந்தனையா ளர் செய்கு முஹம்மது அப்துஷ்ற இந்தியச் சிந்தனையாளர் ஷாஹ் வலியுல்லாஹ், இலங்கை முஸ்லிம்களின் தன்னிகரில்லாத் தலைவன் பேரறிஞன் முகம்மது காசிம் சித்திலெவ்வை ஆகி யோரின் கருத்துக்கள் சிதறலாகக் காணப்படுகின்றன.
"இலங்கையில் இஸ்லாம்" என்ற அஸிஸின் நூலில் அவருடைய 26 கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவை பின்வருவன:
நேர்வழி காட்டிய நாயகம் கல்விக்கு மதிப்பளித்த உம்மி நபி வெற்றி கண்ட தீர்க்கதரிசி மனிதனை மனிதனாக்கும் மார்க்கம்

ஏ எம். நஹிபா ! 185
5. பரிசுத்த றமழானின் தத்துவங்கள் 6. பெருநாளுக்கொரு சிந்தனை விருந்து 7. சாத்திரமும் சமத்துவமும் சமயவாழ்வும் 8. முஸ்லிம் சகோதரத்துவம் 9. தியாகத் திருநாள் 10. இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 11 வேற்றுமையில் ஒற்றுமை 12. எங்கள் குறிக்கோள் 13. எங்கள் ஜின்னாஹ் 14, பாகிஸ்தானின் முதல் மூன்றாண்டுகள் 15. இலங்கையில் அறபி பாஷா 16. ஜாமிஉல் அஸ்ஹார் 17. எமக்கு ஒரு ஜாமியாஹ் 18. முஸ்லிம்களின் கல்விநிலை 19. பழமை என்ற விளக்கு 20. அறபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ் 21. முஸ்லிம் கல்விச் சரித்திரச் சுருக்கம் - 1 22. முஸ்லிம் கல்விச் சரித்திரச் சுருக்கம் - i 23. முஸ்லிம் கல்விச் சரித்திரச் சுருக்கம் - i 24. பாட அமைப்பில் பல மொழிகள் 25: ஆத்மீக ஒளியே அறிவின் சிகரம் 28. இக்பாலாற்றுப்படை
இக் கட்டுரைகளை ஆறு பிரிவுகளுள் அடக்குகிறார் அஸிஸ். முதல் ஒன்பது கட்டுரைகளும் இஸ்லாத்தைப் பற்றியன. இரண் டாவது பிரிவு முஸ்லிம்களை இலங்கையில் வாழும் ஒரு சமு தாயத்தினராகப் பார்ப்பது. மூன்றாவது பிரிவு பாகிஸ்தானின் எழுச்சியும் வளர்ச்சியும் இலங்கை முஸ்லிம்களிடையே தோற்று வித்த உணர்ச்சி பற்றிப் பேசுவது. நான்காவது பிரிவு மிஸ்றுட னான கலாசாரத் தொடர்பு பற்றியது. ஐந்தாவது பிரிவு இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றியது. இறுதிப் பிரிவு இக்பாலாற்றுப்படை,
gyGrởairólaör SF.C3.J" GLUIT CU5 segi, išgav Birão “The West Re Appraised.* இதில் 13 கட்டுரைகள் இடம் பெறுகின்றன. தமிழுடன் தொடர் புள்ள பெரியார்கள், கல்வி நிலையங்கள் பற்றியெல்லாம் கட் டுரைகள் இந் நூலில் உள்ளன. ஆறுமுக நாவலர்",

Page 101
186 அஸிஸும் தமிழும்
வைத்தீஸ்வர வித்தியாலயம்", "எம். ஸி. சித்திலெவ்வை' என்ற தலைப்புகளில் இந் நூலில் இடம் பெறும் ஆங்கிலக் கட்டுரை கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கன, தான் பிறந்து வளர்ந்த வண்ணார்பண்ணையில் வாழ்ந்து சைவமும் தமிழும் வளர்த்த நாவலரை, தனக்கு ஆரம்பக் கல்வியளித்த வைத்தீஸ்வர வித் தியாலயத்தை, தனது வழிகாட்டியும் முஸ்லிம் சமூகத்தின் நல் லாயனும் தமிழறிஞனுமான முகம்மது காசிம் சித்தி லெவ் வையை இக் கட்டுரைகள் மூலம் நாடும் உலகும் அறியச் செய் தார் அஸிஸ். தமிழ் மொழிமீது அவருக்கிருந்த அன்பும் அபி மானமும் இக்கட்டுரைகளை இந்த ஆங்கில நூலில் இடம் பெறச் செய்தன.
"அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்ற அவரது இறுதி நூலில் ஆறு கட்டுரைகள் இடம் பெறுகின்றன.
அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் நாம் என்ன செய்தோம் அறபுத் தமிழ் ஆலிம் புலவர் இன்றைய தேவைகள் மொழி பெயர்ப்புக் கலை ஸ்வாஹிலி மொழித் தொடர்பு
என்பனவே அவை. இக் கட்டுரைகள் இந்நூலுக்காக எழுதப் பட்டவையல்ல. மருதமுனை இஸ்லாமியத் தமிழிலக்கிய மகா நாட்டுக்காக எழுதிய கட்டுரை இலங்கையில் இஸ்லாம் நூலி லிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள், 'தினகரன்' பத்திரிகை யிலும் இளம்பிறை" சஞ்சிகையிலும் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை கள், கிழக்கா பிரிக்கக் காட்சி நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி கள் என்பன இந் நூலில் கட்டுரைகளாக அமைகின்றன.
கல்ஹின்னை மாணவர் மன்றத்தின் ஐந்தாவதாண்டு நிறைவை யொட்டி 1951இல் வெளியிடப்பட்ட "The Union" என்ற மலரில் "எங்கள் குறிக்கோள்' என்ற தலைப்பில் அஸிஸ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். "நாட்டு விடுதலைக்கு வித்திட்ட நற்பெரியார் சேர். அருணாசலம்" என்ற தலைப்பிலான அவரின் கட்டுரையொன்று 1953 செப்ரம்பர் 13ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமாகி இருந்தது. இக்பாலுக்கு நமது

ஏ. எம். நஹியா / 187
அஞ்சலிகள்" என்ற தலைப்பில் அளeஸ் எழுதிய கட்டுரையொன்று பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் வெளியீடான Yarl Crescent" இல் 1962இல் வெளியானது:
"முஸ்லிம் கல்விப் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் 11.10.1953 இலிருந்து ஜனாப் அஸிஸின் தொடர் கட்டுரையொன்று தினகரன் பத்திரிகையில் வெளி வந்து கொண்டிருந்தது. 1953 செப்ரம்பர் 22, 23ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் கல்வி மகாநாட்டின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு அஸிஸ் ஆற்றிய உரையின் சாரம் தான் இக் கட்டுரை.
தென்னிந்திய முஸ்லிம் கல்விக்கழகத்தின் பொன்விழா 1955பெப் ருவரி 6ஆம் திகதி சென்னையில் நடைபெற்றபோது அதன் 2ஆம் நாள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரையை * அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்ற தலைப்பில் அஸிஸ் தனது "இலங்கையில் இஸ்லாம் நூலில் பிரசுரித்திருந்தார். அட் டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஆண்டு வெளியீடான கலையமுதம்" கூட இதே கட்டுரையைத் தனது 1963ஆம் ஆண்டைய மலரின் முதலாவது கட்டுரையாகப் பிர சுரித்து பெருமைப்படுத்தியது. முகம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்ததின விழாக் கொண்டாட்டங்கள் 02-07-1966இல் மருத முனை அல்மனார் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றபோது அதில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவில் படிப்பதற்கென அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்ற தலைப்பில் கட்டுரையொன்றை அனுப்பியிருந்தார். இக் கட்டுரை இதே தலைப்பிலான அவரது முன்னைய கட்டுரையைவிட சற்று வித்தியாசமானது. செய்யிது ஹசன் மெளலானா 1968 செப்ரம் பரில் வெளியிட்ட 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழி வுகள்' என்ற கட்டுரைத் தொகுப்பில் இக் கட்டுரை இடம் பெறுகிறது. அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் நூலில் இடம்பெறும் கட்டுரையும் இதுதான்.
நோன்பின் மாண்பு' என்ற தலைப்பில் 1956 ஏப்ரல் மணி விளக்கில் அஸிஸின் கட்டுரையொன்று வெளிவந்தது. அதே வருடம் செப்ரம்பர் மாத மணிவிளக்கில் "இலங்கையில் இஸ்லா மிய கலாசார நிலையம்" என்ற மகுடத்தில் அவரது கட்டுரை

Page 102
188 / அளஸோசம் தமிழும்
யொன்று பிரசுரமாகியிருந்தது. அந்த நாள் மறக்க மனம் வருமோ என்ற தலைப்பில் தினகரன் வார மஞ்சரியில் பிர முகர் சிலரின் கட்டுரைகள் ஒரு போது வெளிவந்துகொண்டி ருந்தன. மகேசன் என்பவர் இதனை ஏற்பாடுசெய்திருந்தார். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அனுபவங் களை தாங்களாகவே எடுத்துக்கூறுவனவாக அமைந்த அக்கட்டு ரைகளில் முதலாவது கட்டுரை 1959 நவம்பர் 15இல் வெளி வந்தது. அது அஸிஸுடையதாகவிருந்தது.
*அறபுத் தமிழ் ஆலிம் புலவர்' என்ற மகுடத்தில் அ ஸி ஸ் 18-12-1963இல் தினகரனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். * அசனா லெப்பை அறபுத் தமிழ் வளர்த்த ஆலிம் புலவர்" என்ற தலைப்பில் 1964 பெப்ருவரி மணிவிளக்கு அதே கட்டுரையை மறுபிரசுரஞ் செய்திருந்தது. அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்"என்ற அவரின் நூலிலும் இதே கட்டுரை "அறபுத் தமிழ் ஆலிம் புலவர் என்ற தலைப்பில் இடம் பெறுகிறது.
"மொழி பெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் இளம் பிறை" கல்வி மலரில் அஸிஸின் கட்டுரையொன்று 1965இல் பிரசுர மாகியிருந்தது. "அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் நூலிலும் பின்னர் இக் கட்டுரை இணைக்கப்பட்டது.
* கல்வியில் முஸ்லிம் மரபு என்ற அளவிஸின் கட்டுரையொன்று இலங்கைக் கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சின் 1969ஆம் ஆண்டைய வெளியீடான "இலங்கையிற் கல்வி' என்ற நூற் றாண்டு விழா மலரின் 3 ஆம் பகுதியில் 1807-1820 ஆம் பக் கங்களில் அமைகிறது.
இலங்கை முஸ்லிம் குடியேற்றமும் அவர்தம் கலாசார வரலா றும்-இன்றைய நிலையில் கல்வி ஒன்று தான் இஸ்லாமியரைக் கைதூக்கி விடவல்லது" என்ற அளவிஸின் கட்டுரை 02-09-1967 சனிக்கிழமை தினபதியில் பிரசுரமாகியிருந்தது. தினபதி ஆண்டு மலர்க் கட்டுரையாக இக் கட்டுரை இடம்பெற்றிருந்தது.
முகம்மது நபி (ஸல்) அவர்களின் பெருமை பேசும் அகிலத்தின் அகல் விளக்கு" என்ற அளவீஸின் கட்டுரையொன்றும் சில வரு டங்களுக்கு முன் தினகரன் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.

ஏ. எம். நஹியா / 189
"சித்தி லெப்பை ஞாபகார்த்த நிதி என்ற தலைப்பில் ஜனாப் அஸிஸ் 05- 02-1972இல் தினகரனுக்கு ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அதே கட்டுரை 1972 ஏப்ரல் மணி மஞ்சரியில் அதே தலைப்பில் மறுபிரசுரஞ் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு பல கட்டுரைகளை அளிலிஸ் தமிழில் எழுதியிருந்தார்.
இவற்றையெல்லாம் விட நூல்கள் சஞ்சிகைகளுக்கு அஸிஸ் எழு திய முன்னுரைகள், முகவுரைகள், வாழ்த்துரைகளும் இங்கு கருத்தில் கொள்ளத் தக்கன. "மறுமலர்ச்சித் தந்தை' என்ற ஏ. இக்பாலின் நூலுக்கு அஸிஸ் எழுதிய முன்னுரை இவற்றுள் குறித்துச் சொல்லத்தக்கது. பேர்னாட்ஷா கூட தனது நாடகங் களுக்கு நீண்ட முன்னுரைகள் எழுதியிருக்கிறார். இவைகளெல் லாம் பொன்னுரைகள் எனக் கொள்ளத்தக்கன. தனது முன்னு ரைகளையெல்லாம் திரட்டி கட்டுரைக் கோவையாகவும் அவர் வெளியிட்டிருக்கிறார். வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவுள்ள பேருண்மைகள் அவரின் முன்னுரைகளில் மின்னலிடுகின்றன. அஸிஸின் முன்னுரைகள், முகவுரைகள், வாழ்த்துரைகள் கூட இத் தன்மையன. பேருரைகளாகவும் பெறுமதி மிக்கனவாகவும் அவை அமைகின்றன. -
இந்நூற்றாண்டின் 5ஆம் 6ஆம் தசாப்தங்களில் புகழ் பெற்று விளங்கிய ஈழத்து இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளராக அஸிஸ் விளங்கினார். அவர் எழுதிய உயிரோட்டமுள்ள கட்டுரைகள் என்றும் உயிர் வாழ்வன. ஈழத்து முஸ்லிம்களைப் பொறுத்த வரை இத்துறையில் கூடிய பங்களிப்புச் செய்து புகழ்பூத்த பெரு மகன் அஸிஸ் வாழ்ந்த காலை அவர் ஒருவரே எனத் துணிந்து கூறலாம்.
1. எ. எம். எ. அஸிஸ்
இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் سمي مصر யாழ்ப்பாணம், 1963 Luiši IV
2. ப்ெடி
g lagi; : V

Page 103
சென்னை, 1969 '
எ. எம். எ. அளபீஸ் இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963 L jd. i IV-V
 
 
 
 

பன்னூலாசிரியர்
அஸிஸ் அவர்களின் எட்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. *The West Re Appraised” 6T 6ör po gạ(15 gör Godavši g5 ag EJ 60063r யவை தமிழ் நூல்கள். இந்த எட்டு நூல்களுள் நான்கு நூல் கள் பிரயாண நூல்கள். அஸிஸின் பிரயாண அனுபவங்களைக் கூறுவன அவை. ஏனைய நான்கும் கட்டுரைத் தொகுப்புகள் எனக் கூறத்தக்கன. மூன்று நூல்கள் சென்னையிலும் ஐந்து நூல்கள் இலங்கையிலும் பதிப்பிக்கப்பட்டவை.
மரண பரியந்தம் நூலெழுதிக் கொண்டிருந்த அஸிஸ் 1963இலி ருந்து ஒரு வருடத்துக்கு ஒரு நூல் வீதம் எழுதினார். அவர் எழுதிய நூல்களின் விவரம் வருமாறு:
1. இலங்கையில் இஸ்லாம்
கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963
2. The West Re Appraised
Saman Publishers Limited Maharagama, Ceylon, 1964
3. மொழி பெயர்ப்புக் கலை இளம்பிறை வெளியீடு கொழும்பு, 1965

Page 104
1921 அலிஸும் தந்திழும்
4. மிஸ்றின் வசியம்
கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1967 5. கிழக்கா பிரிக்கக் காட்சிகள்
பாரி நிலையம்
66 , 1967 6. தமிழ் யாத்திரை
கமர்ஷியல் பிரிண்டிங் அண்ட் பப்ளிஷிங் ஹவுஸ் சென்னை, 1968 முதல் உலகத் தமிழ் மகாநாடு (அதே நூல்) 7. ஆபிரிக்க அனுபவங்கள்
திரியெம் பப்ளிஷர்ஸ் Gਫਰੰ60), 1969 8. அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்
L LLL U L-IDGöT L, , LS LT Gżi)
(வெளியீட்டுத் திகதி குறிப்பிடப்படவில்லை)
இலங்கையில் இஸ்லாம்
அஸிஸின் முதலாவது தமிழ் நூல் இது யாழ்ப்பாணம் கலைவாணி அச்சகத்தில் அச்சிடப்பட்டு, 1963 ஜூன் மாதம் முத லாவது பதிப்பாக வெளியிடப்பட்டது. அவரின் 26 கட்டுரைக ளைத் தாங்கி வெளிவந்த இந்நூல் கட்டுரைத் தொகுப்பு எனக் கொள்ளத்தக்கது. அளவீஸின் சின்னப் பெரியப்பா சு. மு. அசனா லெப்பை ஆலிம் புலவரின் அன்பறா நினைவிற்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. சாகித்திய மண்டலப் பரிசை அளிஸ் சக்குப் பெற்றுக் கொடுத்தது இந்நூல் தான்
THE WEST RE APPRAISED
இது அஸிஸின் இரண்டாவது நூல். அவர் வெளியிட்ட ஒரே யொரு ஆங்கில நூலும் இது தான், 1964 இல் மஹறகம சமன் வெளியீட்டு நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட இந் நூல் ஆங் கில நூலாக இருந்த போதிலும் தமிழுடன் தொடர்பான அறி ஞர்கள், கல்விக் கூடங்கள் பற்றியெல்லாம் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 13 கட்டுரைகள் இந் நூலில் அடங்கி யிருக்கின்றன.
 

ສ. நஹியா / 193
ஒர,
மொழி பெயர்ப்புக் கலை
இந்நூல் ஒர் இளம்பிறை வெளியீடு. "இளம் பிறை" கல்வி மல ரில் பிரசுரமான கட்டுரை தான் இளம்பிறை மறு பிரசுரத் திட் டத்தின் கீழ் நூலாக வெளியிடப்பட்டது. "அறபுத் தமிழ் எங் கள் அன்புத் தமிழ் நூலில் இடம் பெறும் மொழி பெயர்ப் புக் கலை பற்றிய கட்டுரையும் இதுவே. ஆனால், சுருக்கம் நாடி இக் கட்டுரையின் சில பகுதிகள் அக்கட்டுரையில் நீக்கப் பட்டுள்ளன. 231, வூல்பெண்டல் வீதி, கொழும்பு-13இலுள்ள Rainbow Printers gai) அச்சிடப்பட்டு 1965 செப்ரம்பரில் வெளி பிடப்பட்ட இந்நூல் அப்போது 15 சதத்திற்கு விற்கப்பட்டது. இந்நூலின் பின் அட்டையில் அளவில் பற்றிய விவரம் தரப் பட்டுள்ளது. தனது பல ஆங்கிலக் கட்டுரைகளையும் ஆக்கங் களையும் பிறரின் துணையுடன் மொழி பெயர்த்து அனுபவ முள்ளவர் அவரீஸ், மொழி பெயர்ப்புக் கலையின் முக்கியத்து வத்தையும், அவசியத்தையும் அனுபவ வாயிலாக நன்குணர்ந்த வர் அவர். அதன் சிறப்பான வெளிப்பாடே இந்நூல். இந் நூலின் பதிப்பாசிரியர் எம். ஏ. ரஹ்மான், தனது பதிப்புரையில் அலீஸின் இத்துறை முயற்சி பற்றிப் பின்வருமாறு எழுதியிருக் £ŝpr7rř:
' மொழி பெயர்ப்பு ஓர் அரிய கலையாகும். மொழிகளிலே தேர்த்த புலமையும், அம்மொழிகளின் கலை - இலக்கிய - சமய மரபுகளிலே திளைப்பும் ஒரு மொழி பெயர்ப்பாள இறுக்கு இகுத்தல் அவசியம். இஸ்லாமிய கலை - இலக் கியச் செல்வங்களை மொழி பெயர்ப்பதற்கு எமக்கே உரித் தீான தனி சிறந்த மரபொன்றை நமது மூதாதையர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள்: அறபுத் தமிழ்ப் பதங்களும் இணைந்து வரும் இத்தனி மரபு வளப்படுத்தப்படல் வேண்டுமென்கிற பெருவிருப்புடையவர் அல்ஹாஜ் எ. எம். எ. அஸிஸ் அவர்கள். அவர் மொழி பெயர்ப்புத் துறையில் - குறிப்பாக இஸ்லாமியக் கலை - இலக்கியங் களைத் தமிழாக்குந்துறையில் உள்ள சிரமங்களை விளக்கி, மிகப் பயன்தரும் பாதையையும் இக் கட்டுரையிலே அறி முகப்படுத்தியுள்ளார். இத்துறையிலே அவர் நீண்ட கால மிாக உழைத்து வருகின்றார்."

Page 105
1941 அஸிஸும் தமிழும்
"மொழி பெயர்ப்புக் கலை" நூலின் ஆசிரியர் எ. எம். எ. அஸிஸின் மொழி பெயர்ப்புப் பணி பற்றி அந்நூலின் தொகுப் பாசிரியர் எம். ஏ. ரஹ்மான் தெரிவித்திருக்கும் மேற்கண்ட கருத்து அஸிஸின் இத்துறைப் பங்களிப்புக்குக் கிடைத்த சிறந்த தொரு அணிந்துரையாகும்,
மிஸ்றின் வசியம்
கலைவாணி பதிப்பகத்தாரினால் வெளியிடப்பட்ட இந்நூல் 1967 ஏப்ரலில் முதலாவது பதிப்பாக வெளிவந்தது. மனைவி உம்மு குல்தூம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட இந் நூலின் பதிப்புரிமை கலைவாணி பதிப்பகத்தாருக்குரியது. இது ஒரு பிர யாண நூல். அஸிஸ் நான்கு முறைகள் எகிப்துக்குப் பிரயாணம் செய்தார். 1947இல் சுமார் 10 வார காலத்தையும் 1959 இல் ஒரு வார காலத்தையும் அவர் மனைவி சகிதம் எகிப்தில் கழித் தார். 1964, 65ஆம் ஆண்டுகளில் ஏறக்குறைய 5 வார காலத்தை அங்கு செலவிட்டார். இம்முறை தணியாகவே அவர் சென் றிருந்தார். இந்நூல் பெரும்பாலும் அவரது முதலாவது பிர யாணத்தைப் பற்றியதாகவே அமைகிறது,
"மிஸ்றின் வசியம் பிரயான நூல் மட்டுமன்று; கலாசார வரலாற்று நூலுமாகும். தமிழில் இத்தகைய நூல் இது வரை வெளிவந்ததில்லை. இந் நூலை அச்சிடுவதில் நாம் பெரு மகிழ்ச்சி கொள்வதோடு தமிழ் கூறும் நல்லுலகம் படித் துப் பயன் பெறவும் வேண்டுகிறோம்."
"மிஸ்றின் வசியம்" பிரயான நூலுக்கு கலைவாணி பதிப்பகத் தாரின் புகழாரம் இது. பதிப்புரையில் இக்கருத்துத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அஸிஸின் எகிப்திய பிரயாண அனுபவங்களைக் கூறும் இந் நூல் உண்மையில் எகிப்திய வரலாறு, பண்பாடுகளையெல்லாம் பற் றிக் கூறுகிறது. வரலாற்றுக் கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகும் அஸிஸின் பண்பே இதற்குக் காரணம். இந் நூலின் பெரும் பகுதி முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு திரு. கா. சிவத்தம்பி, எம். ஏ. எம். சுக்ரி, யூ. எல். தாவூத், காவலூர் இராசதுரை போன்றோரினால் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏ. எம். நஹியா / 195
கிழக்காபிரிக்கக் காட்சிகள்
அஸிஸின் இப் பிரயாண நூல் 1967 டிசம்பரில் முதற் பதிப் பாக வெளிவந்தது. சென்னை பாரி நிலையத்தினரால் வெளி யிடப்பட்ட இந்நூல் சென்னை ஜீவன் அச்சகத்தில் பதிப்பிக் கப்பட்டது. நூலின் வெளியுறை Neo art press" இல் அச்சிடப் பட்டது. நூலின் விலை ஐந்து ரூபாய்.
கிழக்காபிரிக்காவில் அஸிஸ் மேற்கொண்ட ஒரு மாத கால சுற் றுப் பிரயாண அனுபவங்களை 31 கட்டுரைகளில் தருகிறது இந் நூல். அஸிஸுக்கே உரிய வரலாற்றுப் பார்வையும் பண்பாட்டு கலாசாரத் தேடுகையும் இந்நூலில் விதந்துரைக்கத்தக்க அம்சங் களாகக் காணப்படுகின்றன.
அஸிஸின் கிழக்கா பிரிக்கச் சுற்றுலா அனுபவங்கள் நூலுருப் பெற வேண்டுமென்பதில் கூடிய அக்கறை காட்டியவர் தினகரன் பிரதம ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன் அவர்கள். அஸிஸ் அவர்கள் இதனை,
'தினகரன் ஆசிரியர் இ. சிவகுருநாதன் அவர்கள், இன் றைய சர்வதேச அரசியற் களரியில் முக்கிய அங்கம் வகிக் கும் ஆபிரிக்காவையும் அங்கு வாழும் மக்கள், அவர்களின் பிரச்சினைகள், ஆசாபாசங்கள், ஆகியவற்றையும் இலங்கை வாசகர்கள், குறிப்பாக இன்று தமிழ்மொழி மூலம் கல்வி பயிலும் மாணாக்கர்கள் அறிந்துகொள்வது அவசியமென் பதனால் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்குமாறு என்னைத் தூண்டினார்; நானும் தொடங்கினேன்"
என இந்நூலின் நன்றியுரையில் எழுதிவைத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந் நூலின் அத்தியாயங்களைத் தமிழாக்கி உதவியர் காவலூர் இராசதுரை. அதனாற்போலும், "இக் கட்டுரைகளில் காணப் படும் வழக்கத்துக்குப் புறம்பான வாக்கிய அமைப்புக்கள், சொற் றொடர்கள், வார்த்தைப் பிரயோகங்கள் இவற்றுக்கெல்லாம் நானே பொறுப்பாளி" என அஸிஸ் இந்நூலின் நன்றியுரையில் குறிப்பிட நேர்ந்தது.

Page 106
1961 அஸிஸும் தமிழும்
நூலின் பின்புற அட்டையில் அவரீஸைப் பற்றிய குறிப்புரை ஒன்று காணப்படுகிறது. தனது மகள் மறினா சுல்பிகாவின் கண வர் முஹம்மத் இஸ்மாயில் இப்னு முஹம்மத் அலி ஜே. பி.யின் நினைவுக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ் யாத்திரை
முதலாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா சென்றிருந்த அளtலின் 21 நாள் அனுபவங்களையும் அங்கு நடை பெற்ற நிகழ்ச்சி விவரணத்தையும் தருவதாக அமைகிறது இந் நூல் நூலுருப் பெறுமுன் கட்டுரைகளாகத் தினகரன் வாரமஞ் சரியில் 'மலேசியப் பிரயாணம்" என்ற தலைப்பில் ஏற்கனவே 1966 மே மாதம் 11ஆம் திகதியிலிருந்து பிரசுரமாகியிருந்தது. மகாநாட்டு நிகழ்ச்சிகளைத் தினகரனுக்கு எழுதுமாறு கேட் டதன் மூலம் இந்நூலின் காரண புருஷராக அமைகிறார் தின கரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன் அவர்கள். ஆங்கிலத் தில் எழுதப்பெற்ற இப் பிரயாணக் கட்டுரைகளைத் தமிழாக்கி யும் அவ்வப்போது ஆலோசனைகள் கூறியும் உதவி:வர் காவ் லூர் இராசதுரை.
புத்தகமாக வெளியிட முன்வந்தவர் பினாங்கு சவூத் ரெஸ் டாரட்ண் உரிமையாளர் வள்ளல் மணி எம். என் எம். யூசுப். நூலைச் சிறந்த முறையில் பதிப்பித்துதவியோர் மெளலவி பாஜில்
ஆலிம், கவிஞர் அல்ஹாஜ் ஜி. எம். எஸ். ஸிராஜ் பாக்கவி ஆகி GuLurriri".
அஸிஸின் பள்ளிப் படிப்பைப் பக்குவமாகப் பார்த்துவந்த ராசாத்தி அப்பா, யாழ்ப்பாணம் பெரிய கடை எம். எஸ். அப்துல் காதர் அவர்களின் நினைவுக்கு இந்நூல் சமர்ப்பணஞ் செங்யப் பட்டிருக்கிறது. முதலாவது பதிப்பாக 03-01-1968 இல் வெளியிடப்பட்ட இந் நூல் சென்னை-1 கமர்ஷியல் பிரிண்டிங் அன்ட் பப்ளிஷிங் ஹவுஸ் இனால் அச்சிடப்பட்டது. நூலின் வெளியுறை சென்னை-1 இல் அமைந்திருக்கும் எஸ். எம். அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
இதே தமிழ் யாத்திரை நூல் "முதல் உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் சென்னை - 1, 138 பழைக்காரத் தெருவிலுள்ள தணிகைப் பதிப்பகத்தாரினால் மீண்டும் அச்சிடப்பட்டு வெளி

ஏ. எம். நஹியா 197
யிடப்பட்டிருக்கிறது: "முதல் உலகத் தமிழ் மாநாடு" நூலில் "தமிழ் யாத்திரை" நூலின் பின்னட்டையில் காணப்படும் அஸிஸ் பற்றிய குறிப்புரை இல்லாதிருக்கிறது:
கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு 1968 ஏப்ரல் 15 ஆம் திகதி புறப்பட்ட அளவிஸ் மே மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்குப் புறப்படும் வரையிலான 21 நாள் அனுபவங்களையும் உள்ளடக்குவதாக அமைகிறது இந்நூல் 'தமிழ் மரபுணர்வு, வரலாற்று அறிவு, ஆராய்ச்சித் திறன், உலக அனுபவ ஞானம் யாவற்றையும் ஒருங்கிணைத்து எழுதப் பெற்றிருக்கும் இந்நூல், ஆசிரியரின் ஆற்றலையும் தனித்துவத் தையும் எடுத்துக் காட்டுகிறது."
ஆபிரிக்க அனுபவங்கள்
அஸிஸின் மத்திய ஆபிரிக்க, தென் ஆபிரிக்க அனுபவங்களை விவரிக்கும் 35 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. கிழக்காபிரிக்கக் காட்சிகளின் அடுத்த பாகமாக அமைந்துள்ள இந்நூல் தன்னளவில் தனித்த நூலாக விளங்குகிறது. அதனால், கிழக்காபிரிக்கக் காட்சிகளைப் படிக்கத் தவறியவர்களுக்கும் பயன்படக் கூடியது.
சர்வதேச அரசியலில் முக்கியம் பெறும் ஆபிரிக்காவையும் அங்கு வாழும் மக்கள், அவர்களின் பிரச்சினைகள், அபில சைகள் ஆகியவற்றையும், இலங்கை வாசகர்கள், குறிப்பாக தமிழ் மொழி மூலம் பயிலும் மாணவர்கள், அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டி கட்டுரை எழுது மாறு தூண்டிய தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன் அவர்கள் தான் இந் நூலும் எழக் காரண கர்த்தா.
தினகரன் வார மஞ்சரியில் முன்னர் 1966 நவம்பர் 26 ஆம் திகதி பிலிருந்து பிரசுரமான இக்கட்டுரைகளை நூலுருவில் வெளி யிட்டவர், "தமிழ் யாத்திரை' நூலை வெளியிட்ட பினாங்கு தாவூத் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் வள்ளல்மணி எம். எம். யூசுப் அவர்களே.
பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளைத் தமிழாக்கி உதவியவர் காவலூர் இராசதுரை, சென்னை-1 ஐச்

Page 107
1981 அஸிஸும் தமிழும்
சேர்ந்த அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ள திரியெம் பப்ளிஷர்ஸ் இனால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட இந்நூலின் முதலாவது பதிப்பு 1969 டிசம்பரில் வெளிவந்தது:
முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்குத் தன்னை அர்ப் பணித்த தர்கா நகர் அல்ஹம்றா முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் மர்ஹாம் எம். எ. பாரி அவர்களுக்கு இந் நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்
கொழும்பு டயமன்ட் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்ட இந்நூலில் மொத்தம் ஆறு கட்டுரைகள் இடம் பெறு கின்றன, இவை ஏற்கனவே பத்திரிகைகள், மலர்கள், அவரின் பிரயாண நூல்களில் வெளிவந்தவை. ஜாமி ஆ நளீமிய்யா பரிபாலன சபை உறுப்பினர் எனத் தன்னை இந்நூலில் அறி முகம் செய்து கொள்கிறார் அஸிஸ். இந்நூல் வெளியிடப்பட்ட திகதி தெரியவில்லை. நூலில் அதுபற்றிய எக்குறிப்பும் தரப்
அஸிஸ் அவர்கள் இறக்கும் போது கூட ஒரு பிரயாண நூலை அரைவாசி எழுதியிருந்தார். அவரது மருமகனும் மகளும் ஸ்கொட்லாந்தின் சென் அன்ருஸ் எனுமிடத்தில் வசித்தபோது ஜனாப் அஸிஸும் அவர்களுடன் சில காலம் தங்கியிருந்தார். அப்போது அவர் பெற்ற அனுபவங்களையே அரைகுறையில் விட்டுச் சென்ற நூலில் எழுத ஆரம்பித்திருந்தார். தினகரனில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த 'ஐரோப்பிய நினைவுகள் கட்டுரைகளை நூலுருப் பெறச் செய்வதிலும் அவர் முயற்சிகள் செய்தார்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் பூரணமாக எழுதும் முயற்சியில் கூட ஜனாப் அஸிஸ் ஈடுபட்டிருந்தார். இது தொடர் பான அநேக தகவல்களைச் சேகரித்து வைத்திருந்த அஸிஸ், அவ்வாறு எழுதப் போகும் வரலாறு மிகச் சிறப் ப_ா க அமைய வேண்டும் என்பதற்காக எழுதுவதை சற்றுக் காலம் தாழ்த்தியிருந்தார். இன்னும் ஓரிரு வருடங்கள் அவர் உயிர் வாழ்ந்திருப்பின் அவரின் இந் நோக்கமும் நிறைவேறியிருக்கும். இந் நோக்கத்தின் ஆரம்ப முயற்சியாக ஒல்லாந்து லெய்டனைச் சேர்ந்த ஈ, ஜே. பிறில் ஸ்தாபனத்தார் 1960இல் வெளியிட்ட

ஏ. எம்; நஹியா / 199
இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தில் இலங்கை முஸ்லிம்களின் வர லாறு பற்றி ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதன் தமிழாக்கம் அவரது இலங்கையில் இஸ்லாம்" நூலில் 38 ஆம் பக்கத்திலிருந்து 66 ஆம் பக்கம் வரை இடம் பெறு கிறது. "பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒன்பதாவது பத் தாண்டில் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களின் சில சிறப்பியல்பு கள் என்ற தலைப்பில் 1966 இல் அவர் மலேசியத் தமிழா ராய்ச்சி மகாநாட்டில் படித்த கட்டுரையும் இம் முயற்சியுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது. 1880 தொடக்கம் 1889 வரையிலான சுமார் பத்தாண்டு கால ஈழத்து முஸ்லிம்களின் வரலாற்றை அஸிஸின் இக் கட்டுரை விளக்கமாகக் கூறுகிறது.
"கல்வித்துறையில் தமிழும் வரலாறும் என்னை மிகவும் ஈர்த்து வருவன." எனக் கூறும் அளிஸ், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு சம்பந்தமாக கலாநிதிப் பட்டத்திற்கு ஆய்வு நிகழ்த் தும் எண்ணமுடையவராக இருந்ததாக கலாநிதி கா. சிவத் தம்பி தெரிவிக்கிறார். பேராசிரியர் அரசரத் தினத்துடனான அஸிஸின் தொடர்பு இவ்வடிப்படையிலேயே அமைந்திருந்த தென்பது சிவத்தம்பியின் கருத்து ? அஸிஸின் "முஸ்லிம் நேசன்" தேடுகையும் இவ்வடிப்படையில் தான் அமைந்திருந்த தெனத் தெரிகிறது. உண்மையில் அஸிஸ் இலங்கை முஸ்லிம் களின் வரலாற்றை எழுதியிருப்பின் அது பரிபூரணமானதாக இருந்திருக்கும் என நம்பலாம்.
அஸிஸ் பல நூல்களை எழுதியிருந்தார். சில நூல்களை எழு திக் கொண்டிருந்தார். பல நூல்களை எழுதவும் திட்டமிட்டுத் தகவல் திரட்டியிருந்தார். இந்த அறிஞனின் பார்வையில் அர்த்த புஷ்டியிருந்தது. கருத்துச் செறிவிருந்தது. தான் வாழ் வதற்காக நூலெழுதியவரல்லர் அஸிஸ்: சமூகம் வாழ வேண் டும், கலை கலாசாரம் வாழ வேண்டும், மொழி வாழ வேண் டும் என்பதற்காக அக் கைங்கரியத்தைச் செய்தவர் அவர், அவ ரது படைப்புகள் தமிழுக்குக் கிடைத்திற்கரியன. பயன் மிக்கன.

Page 108
200 | அளஸோம் தமிழும்
அஸிஸ் எ. எம். எ, தமிழ் யாத்திரை
சென்னை, 1968
Liš : 01.
சிவத்தம்பி, கார்த்திகேசு
எஸ். எச். எம். ஜெமீல் எழுதிய - எ. எம். எ. அஸிஸ் கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும் - நூல் அறிமுகம்" தினகரன் வார மஞ்சரி
13 செப்ரம்பர் 1981

பிரயாண இலக்கிய கர்த்தா
கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் என்பன போலவே பிரயாண நூல்களும் பிரயாணக் கட்டுரைகளும் இலக்கிய அந்தஸ்துடையன. "பிரயாணம்" எனும் சொல் வெளி நாட்டுப் பிரயாணங்களை மட்டுமன்றி உள்நாட்டுப் பயணங்க ளையும் குறித்து நிற்கிறது. பழமை வாய்ந்த இத்துறை வேறு பல மொழிகளில் வளர்ந்துள்ள அளவுக்கு தமிழில் வளர வில்லை என்றுதான் கூறவேண்டும். அண்மையில் தான் குறிப் பிட்டு சொல்லக்கூடிய சில முயற்சிகள் இத்துறையில் செய்யப் பட்டுள்ளன. வளர்ச்சியடையாத இத்துறையின் வளர்ச்சிக்கு அஸிஸின் பங்களிப்பு பிரமாதம்; விதந்துரைக்கத்தக்கது.
மதப் பிரசாரகர்களாக, வணிகர்களாக, போர் வீரர்களாக, இராச தந்திரிகளாகவெல்லாம் பண்டைக் காலத்தில் உலகம் சுற்றியோர் பலர். கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோதோத் தஸ், யவன நாட்டு மெகாஸ் தெனிஸ், வெனிஸ் நகர மார்க்கோ போலோ, இப்னுபத்துரத்தா போன்றோர் மட்டுமன்றி பாஹி யன், யுவான்-சுவாங் போன்ற சீன யாத்திரிகர்களும் இவ்வாறு பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்து நூல்களும் குறிப்புகளும் எழுதிவைத்துச் சென்றனர். தமிழில் எழுந்த ஆற்றுப்படை இலக்கியங்களில் கூட பிரயாண இலக்கியப் பண்புண்டு. இந் நிலையில் வைத்து அஸிலைப் பார்க்கின்ற போதுதான் அவர் எழுதிக் குவித்த பிரயாணக் கட்டுரைகளினதும் நூல்களினதும் பெறுமதி விளங்கும்:

Page 109
202 / அஸிஸும் தமிழும்
R *、
மிஸ்றின் வசியம் (1967),”, கிழக்காபிரிக்கக் காட்சிகள் (1987), தமிழ் பாத்திரை (1968) இதே நூல் முதல் உலகத் தமிழ் மாநாடு" என்ற மகுடத்தில் அதே வருடம் சென்னையில் வெளி யிடப்பட்டது), ஆபிரிக்க அனுபவங்கள் (1969) என்பன அளவிஸ் எழுதிய பிரயாண நூல்கள். இவற்றுள் "மிஸ்றின் வசியம்" நூலைத் தவிர ஏனையன சென்னையிலும், "மிஸ்றின் வசியம்" யாழ்ப்பாணத்திலும் பதிப்பிக்கப் பெற்றன.
இவற்றைத் தவிர, ஐரோப்பிய நினைவுகள்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரையொன்றையும் அஸிஸ் எழுதியிருந்தார். இன் னும் நூலுருப் பெறாத இக் கட்டுரைகள் 1968 டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து தினகரன் வார மஞ்சரியில் வெளிவந்து கொண் டிருந்தன. இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியின் அன்றைய அதிபர் ஆர். மார்ஸ் அவர்களிடமிருந்து, "1933 ஆம் ஆண்டுக் குரிய அரசினர் பல்கலைக் கழகக் கலைத் துறைப் பரிசில் வழங் கப்பட்டுள்ளது' என்ற கடிதம் அஸிஸ்"க்குக் கிடைத்த திகதி யிலிருந்து அஸிஸ் செய்த ஆயத்தம், பிரயாணம், கேம்பிரிஜ் நுழைவு, இங்கிலாந்தில் அவர் கண்டு மகிழ்ந்த சம்பவங்களெல் லாம் வரலாற்று மெருகூட்டப்பட்டு ஐரோப்பிய நினைவுகளாக வெளிவந்துகொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்து மகிழ்ந்தார்கள்.
அஸிஸ் ஒரு வரலாற்றுப் பட்டதாரி, கல்விமான், அரசியல்வாதி, சமயவாதி, இலக்கியவாதி. அவர் படைத்த பிரயாண இலக்கியங் களிலும் அவரது இத்தன்மைகள் இழையோடின. அவரது பிர யாண நூல்கள் வெறும் கதைகளாகவும் சம்பவக் கோவைகளாக வும் அமையாது பல்வேறு விடயங்களையும், தகவல்களையும் தரு வனவாக அமைகின்றன. அஸிஸ் சாதாரண பயண நூல் எழுத் தாளர் அல்லர், பல வித்தியாசமான கோணங்களில் நின்று வெளிநாட்டவரின் வாழ்க்கை முறையை அணுகி அவற்றை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தனிரக எழுத் தாளர். இப் பண்பை பொதுவாக அவரின் எல்லாப் பிரயாண நூல்களிலும், சிறப்பாக, மிஸ்றின் வசியம் நூலில் காணலாம். பொதுவாகச் சொன்னால் தமிழ் பிரயாண இலக்கியத்துறையில் அஸிஸின் பிரயாண நூல்கள் புது முயற்சிகளாகவே அமைந் துள்ளன.
 
 

ஏ. எம். நஹியா | 208
வெளிநாட்டுப் பயண நூல்களை எழுதுபவர்கள் சொந்த நாட் டைப் பற்றிய அறிவுக் களஞ்சியங்களாகத் திகழ வேண்டும். பல துறைகள் பற்றிய பரவலான செய்திகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் "See America First என்ற பெய ரில் ஒரு இயக்கம் இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் செல்லுமுன் தனது நாட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் கொள்கை, இத் தகுதி படைத்தவர் களின் பிரயாண நூல்களில் தான் ஒப்பீட்டடிப்படையிலான தகவல்களைக் காண முடியும். பலதுறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த அளிஸின் எழுத்துக்களில், உயர் நிருவாக அதிகாரி யாக நாடெங்கும் சுற்றித்திரிந்த அஸிஸின் எழுத்துக்களில், இப் பண்பைத் தெளிவாகக் காணமுடிகிறது. தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் தனது அனுபவத்தையும் வாசகர்களுக்கு ஒப்பிட்டு விளங்கவைக்கும் அளிஸின் பண்பு அவரின் பிரயாண நூல்களில் காணப்படும் சிறப்பம்சமாகும்
பிரயாண நூல் வாசகர்களில் சிலர் அந்நாட்டின் கல்வி பற்றிய தகவல்களை அறிய முயல்வர். வேறு சிலர் அரசியல் வரலாற் றுத் தகவல்களைத் தேடுவர். இன்னும் சிலர் பண்பாட்டு கலா சார அம்சங்களையும் வேறு சிலர் பொருளாதார தொழில் துறை சார்பான தகவல்களையும் பெற முயல்வர். சிலர் அந் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியையும் புதுமைகளையும் தெரிந்து கொள்ள விரும்புவர். எல்லோரும் எல்லாவற்றையும் அறிய விரும்புவார்கள் என எதிர்பார்க்க முடியாது. இந்நிலையில் வாசகரனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் பிரயாண நூலை எழுதுவதென்பது ஆசிரியரின் சாதுரியத்தில் தங்கியுள் ளது. அஸிஸின் பிரயாண நூல்களில் அவரின் இச் சாதுரியத் தைக் காணலாம். அதனாற்றான் அவரின் பிரயாண நூல்கள் வாசித்து முடியும்வரை அலுப்புத் தட்டாதனவாகவும் எல்லோ ரும் விரும்பிப் படிக்கத் தக்கனவாகவும் அமைகின்றன. சிலர் எழுதுவதைப்போல தனக்கு விருந்தளித்தவர்களையும், தான் தங்கியிருந்த ஹோட்டல்களையும், ஆகாய விமானத்தில் ஏறிய முதல் அனுபவத்தையும், காதுகளுக்கு பஞ்சடைத்த கதைகளை யும் தூக்கிப் பிடித்து பெரிதுபடுத்தி எழுதும் மலிவு எழுத்தாள ராக அஸிஸ் இருக்கவில்லை. பிரயாணம் செய்த நாடுகளின் குறைபாடுகளை மிகைப்படுத்திக் கூறி சந்தைக்கிழுத்த கீழ்த்தர மான ஆசிரியராகவும் அஸிஸ் விளங்கவில்லை. அதனாற்றான்

Page 110
204 அஸிஸும் தமிழும்
அலீஸின் பிரயான இலக்கியங்கள் காலத்தின் ஏலத்தில் மலிய ಛಿ:
வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்கு தான் பார்க்கும் தெருக் களையும் கட்டிடங்களையும் முக்கிய இடங்களையும் ஹோட்டல் களையும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்துகளையும் வரிசைப்படுத்தி "லிஸ்ட் தரும் பழக்கம் அஸிஸுக்குக் கிடையாது. வெளிநாடு ஒன்றுக்குச் செல்லும்போது அந்நாட்டின் வரலாறு, அரசியல், கலாசார பண்பாட்டுப் பெருமைகளைக் கற்றறிந்தவராக நுழை கிறார். திறந்த இதயத்தோடு அந்நாட்டின் தெருக்களில் நட மாடி ஆராய்ச்சி எண்ணத்துடன் அந்நாட்டின் கட்டிடப் படி களில் அடியெடுத்து வைப்பார். வெவ்வேறு கலாசாரம், மொழி கள் பேசும் மக்களின் பிரச்சினைகளை அளிவின் கண்ணோட் டத்தில் படிப்பதே அலாதி. ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் வாழ்ந்தாலும் அவர்களையும் நமது சகோதர சகோதரிகளாக்கி விடுகிறார் அஸிஸ்.
இன்றைய அனுபவத்தில் கனியாகவும் நாளைய வாழ்க்கைக்கு விதையாகவும் விளங்குவதே நல்ல இலக்கியம், பிரயான இலக் கியத்துக்கும் இது பொருந்தும். ஏனெனில் பிரயாண இலக் கியங்களும் வாழ்க்கையோடு தொடர்புடையன. பிரயாணம் செய்ய வேண்டும்; நாடுகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவ லுள்ளவர்கள் பிரயாண நூல்களையும் கட்டுரைகளையும் விரும் பிப் படிப்பார்கள். நாடுகளைப் பார்க்கும் பாக்கியம் பெறாத வர்கள் ஆசிரியரின் கண்களுக்கூடாக அவர் கண்டவற்றைக் கான விரும்புவார்கள். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் ஆசிரியரும் பயண இலக்கியங்களைப் படைக்க வேண்டும். பிரயாணத்தால் ஏற்படும் நன்மைகள் அநேகம். இந்த அனுபவமில்லாதவர்கள் பிரயாண நூல்களைப் படிப் பதன் மூலம் அந்த நன்மைகளைப் பெறலாம். வெளியுலகைப் பற்றிய பரந்த அறிவு வளர்வதற்குப் பிரயாண நூல்கள் உதவ வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு வழிகாட்டியாக வும் துணையாகவும் பிரயாண நூல்களும் கட்டுரைகளும் அமைய வேண்டும். இவ்விலக்கணங்கள் அனைத்தும் அஸிஸின் பிரயாண இலக்கியங்களில் புரையோடுகின்றன.
பிரயாண நூல்களும் கட்டுரைகளும் பெரிதாக இருக்கவேண்டும் என்பதற்காக வளவளவென்று உப்புச்சப்பில்லாமல் எழுதிக்

ஏ. எம், நஹியா 205
குவித்தவரல்லர் அஸிஸ், "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற எல்லைக்குள் நின்று இலக்கியம் படைத்தவர் அவர் அதனாற்றான் சாய்கதிரையில் சாய்ந்துகொண்டு சிலரின் நாவல்
களை வாசித்துத் தள்ளிவிடுவதைப் போன்று சிந்தனைக்கு
வேலை கொடுக்காமல் அவரின் பிரயான நூல்களை வாசித்துக் குவித்து விட முடிவதில்லை. ஆற அமர இருந்து படித்துப் பயன்பெற வேண்டிய இலக்கிய முதுசங்கள் அவை,
காலத்துக்கேற்ற நடையில், எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய நடையில், இலக்கிய ரசனையும் வரலாற்றுத் தக வல்களும் பண்பாட்டுக் கோலங்களும் விரவிக் கிடப்பனவாக அவரது பிரயாண நூல்கள் அமைந்துள்ளன. தேவையான விளக் கப் படங்களும் பொருத்தமான பக்கங்களில் இணைக்கப்பட் டுள்ளன.
குமரி மலரில் பிரசுரிப்பதற்காக ஏ. கே. செட்டியாரும், சக்தி ஆசிரியர் வை. கோவிந்தனும் சிரமப்படுத்தி பிரயாணக் கட் டுரைகளை எழுதத் தூண்டி சோமலெ" ஐப் பிரபல பிரயாண இலக்கிய கர்த்தாவாக்கியதைப் போல, தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் தனது அதிபர் அளtஸை ஈழத்தின் பிரபல பிரயான இலக்கிய கர்த்தாவாக்கிய பெருமைக்குரியவர். அவ ரின் தூண்டுதலினால் பல பிரயாணக் கட்டுரைகளை தினகரனில் எழுத ஆரம்பித்த அளீஸ் ஜான் பிற்காலை இத்துறையின் முன்னணிப் பங்களிப்பாளராகத் திகழ நேர்ந்தது.
ஆனந்த விகடனில் தேவன் எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்" கட்டுரைகள், தினகரன் வார மஞ்சரியில் கைலாசபதி எழுதிய "நான்கு நாடுகளில் 44 நாட்கள்" கட்டுரைகள், முன் னர் நாரதர் பத்திரிகையிலும் பின்னர் ஆனந்தவிகடனிலும் பிர சுரமான "அமெரிக்கா அழைக்கிறது என்ற சிதம்பரம் காந்தி மதியின் கட்டுரைகள், கலைக்கதிர் இதழில் ஜி. ஆர். தாமோ தரன் எழுதிய கட்டுரைகள், கல்கியில் பிஜித் தீவுகள் பற்றி வெளி யான கட்டுரைகள், பகீரதன் எழுதிய வட இந்தியப் பிரயாணக் கட்டுரைகள், காவேரியில் பிரிட்டனைப் பற்றியும் ஜெர்மனி யைப் பற்றியும் வெளியான கட்டுரைகள், அமுதசுரபியிலும், கலைமகளிலும் நீ, ரா. சீனிவாசன் எழுதிய ஆஸ்திரேலியா

Page 111
206 / அஸிஸும் தமிழும்
வைப் பற்றிய கட்டுரைகள், தமிழ்நாடு இதழில் வெளியான தி. மாணிக்கவாசகரின் ஜப்பானைப் பற்றிய கட்டுரைகள், எஸ். வி. ஏ. அண்ணாமலையின் மலேயாவைப் பற்றிய கட்டுரைகள் போல அஸிஸின் பிரயாணக் கட்டுரைகளும் தினகரனில் பிரசுரமா யின. அதிகமான மக்கள் விரும்பிப் படித்தார்கள். அக் கட்டுரை களுக்கிருந்த கிராக்கி அவற்றை நூலுருப் பெறச் செய்தது.
திரு. ஏ. கே. செட்டியார், சு. இராமசுவாமி நாயுடு, திருலோக சீதாராம், சோ. சிவபாதசுந்தரம், குல. சபாரத்தினம், சி. எம். இராமச்சந்திரன் செட்டியார், டாக்டர் மு. வரதராசன், பேரா சிரியர் அ. மு. பரமசிவானந்தம், திரு. வி. க., தனிநாயக அடி கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றோருக்கு எந்தவகையிலும் குறைந்துபோகாத பங்களிப்பை அளtஸ் தமிழ்ப் பிரயாண இலக் கியத்துறைக்குச் செய்துள்ளார்.
புவியியல் சார்பான தகவல்களுக்கு சில பிரயாண இலக்கிய கர்த் தாக்கள் முக்கியத்துவம் கொடுப்பர். சிலர் தாம்பெற்ற பிர பாண அனுபவத்துக்கும், வேறு சிலர் தாம் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் கற்றவற்றையும் அனுபவத்துடன் இணைத்து அறிவுபூர்வமாக ஆராய்ந்து எழுத முயல்கின்றனர். அஸிஸ் இந்த மூன்றாம் பிரிவில் அடங்குகிறார். அவரது பிரயாணக் கட்டுரை களும், நூல்களும் பெறுமதி மிக்கனவாய் அமைந்திருப்பதற்கு இத்தன்மையே முக்கிய காரணம்.
அஸிஸ் எழுதியுள்ள பிரயாண இலக்கிய நூல்களைப் படிக்கும் பொழுது அவரின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்வ தோடு, ஒரு தலைமுறையினரின் வாழ்க்கைமுறை, மதிப்பீடுகள், உலக நோக்கு, மனச் சாய்வுகள் என்பனவற்றையும் ஒரளவுக்கு அறிந்துகொள்ளக்கூடியதாயுள்ளது. மு க் கா ல ங் க  ைள யும் இணைத்து எழுதும் பண்பினை அவரிடத்தில் கண்டு இன்புற லாம். தனது அனுபவங்களை விவரித்து விட்டு அவற்றுக்கு குறிப் புரை கூறுமிடங்களில் ஆசிரியரது முதிர்ச்சியும் ஆழ்ந்த ஆய்வும், தொலை நோக்கும், நிதானமும் ஒரு வகையான பற்றற்ற மனப் பாங்கும் எழுத்துக்குச் சோபையூட்டுகின்றன. வெறுமனே விருப் பார்வமோ தகவல்களின் பழுவோ, தன்னை மறந்த பரவசமோ நிகழ்வுகளின் தகவுப் பொருத்தத்தைப் புறக்கணிக்கும் தன் முனைப்போ இன்றித் தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பிறர்க்

ஏ. எம். நஹியா | 207
கும் தொடர்புடையதாக்கும் பொதுமை நோக்கும் பரந்த மனி தாபிமான உணர்வும் நூலாசிரியரிடத்தில் காணப்படுகின்றன. மேல்நாட்டுக் கல்விப் பயிற்சி, நாட்டின் உயர் நிருவாக சேவை அனுபவம், நீண்டகாலக் கல்வித் தொடர்புகள், பொதுநல ஈடு பாடு, சமய கலாசார அக்கறை ஆகிய தகைமைகள் ஆசிரியருக் குத் தனிச் சிறப்பியல்புகளாய் அமைந்திருப்பதால் அவை உல கைப் பார்க்கும் ஆசிரியரை மட்டுமன்றி அவர் பார்க்கும் உல கையும் பாதிக்கின்றன.
அஸிஸின் பிரயாணக் கட்டுரைகளையும் நூல்களையும் விமரி
சனம் செய்த உலகறிந்த விமரிசகர் பேராசிரியர் கைலாசபதி பின்வருமாறு எழுதினார்:
'பயணநூல்கள் படைப்போரைத் தொழிலின் அடிப்படை யிலும் ஒருவாறு பாகுபடுத்தலாம் எனத் தோன்றுகிறது.
1. பத்திரிகையாளர் - எழுத்தாளர் 2. கல்வியாளர் - தொழில் துறையாளர் 3. அரசியல்வாதிகள் - பிரமுகர்கள்
no மேலே விவரித்த பிரிவுகள் மூன்றையும் இணைப்பவர் அளவிஸ் அவர்கள். இவ்வாறு சொல்வது மிகைக் கூற்றா காது என்பது எனது நம்பிக்கை. இம் மதிப்பீடு ஆசிரிய ரைப் பற்றியது மட்டுமன்று அவரின் எழுத்தின் தன்மை யைப் பற்றியதுமாகும். மூவகைப்பட்ட நோக்குகள் நூலிலே இழையோடுவதை அடிக்கடி காணலாம். இத்தகைய கூட் டுக் கலப்பு எல்லோர்க்கும் எளிதில் வாய்ப்பது ஒன்று அன்று. அபூர்வமாகத்தான் காணமுடியும். அஸிஸ் அவர் களின் பிரயான நூல்கள் தமக்கென அமைந்த சிறப்பியல்பு களுடன் திகழ்வதற்கும் இந்தத் தனித்தன்மையே காரண ιρτ (5ιi, !
என எழுதி பிரயாண இலக்கியத்துறையில் அளவீஸின் தனித் துவத்தையும் முதன்மையையும் உறுதிப்படுத்தினார். அஸிஸின் பிரயாண நூல்களில் பேராசிரியர் கண்ட சிறப்பியல்புகளைத் தான் இவ்வாறு எழுதிவைத்திருக்கிறார்.

Page 112
208 அஸிஸும் தமிழும்
யாழ்ப்பாணத்தவரான அஸிஸின் எழுத்துக்களில் அப் பிரதேச மண்வாசனை வீசுகிறது. அவரது பிரயாண நூல்களை வாசிக்கும் ஒருவன் அந்த வாசத்தின் சுகந்தத்தை நுகர்ந்து மகிழமுடியும்.
"சுட்டுநாயக்காவிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும் முற்றத்தில் நிற்கும் ஒற்றைப் பனை புதுப் பொலிவுடனும் வணப்புடனும் என் கண்களுக்குக் காட்சியளித்தது"
என எழுதித் தனது 'தமிழ் யாத்திரை" நூலை அளtஸ் முடிக் கின்ற போதும், அதே நூலின் அட்டைப் படத்தில் ஒற்றைப் பனை கம்பீரமாகக் காட்சியளிக்கின்றபோதும், அஸிஸின் பிர தேசப் பற்றைக் காணமுடிகிறது. வீடு திரும்பிய மனநிறைவை இவ்வாறு வெளிப்படுத்தும் அஸிஸ், தனது கொழும்பு பாண்ஸ் பிளேஸ் இல்லமான மெடோ ஸ்வீற்றின் முற்றத்தில் நிற்கும் ஒற்றைப் னை மரத்தையே இங்கு குறிப்பிட்டாலும்கூட, அதன் நிழலில் யாழ்ப்பாணப் பிரதேசத்தை அதன் இலட்சணமான பனை மரச் சோலைகளை அப்பிரதேசத்தின் பெளதிக பண் பாட்டுச் சூழலை, சமூகத்தையெல்லாம் காண்கிறோம். "கிழக் காபிரிக்கக் காட்சிகள்" நூலின் அட்டைப்படம் கூட பனை மரச் சோலையொன்றைச் சித்தரித்துக் காட்டுவதாகவே அமைகிறது.
அஸிஸ் கல்முனை உதவி அரசாங்க அதிபராகவிருந்த காலை பெற்றுக் கொண்ட அநுபவம், தெரிந்து கொண்ட அப்பிரதேச மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், சிறப்பியல்புகளெல் லாம் அவரின் பிரயாண நூல்களில் இழையோடுகின்றன. தான் பிரயாணம் செய்த நாடுகளில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக் கங்கள் பண்பாடுகளுடன் இவற்றை அளபீஸ் ஒப்பிட்டுப் பார்த்
g5 nT nr.
மலாய மக்களின் வாழ்வில் இராம காதையின் செல்வாக்கை எடை போட முனைந்த அளிஸ் கல்முனைப் பிரதேசத்தில் அக்கதை பெற்றிருந்த செல்வாக்கை எண்ணிப் பார்த்தார். கேப்குடாவில் நடைபெற்ற மலாய் இசை நடன நிகழ்ச்சிகளின் போது துருக்கித் தொப்பி இடம்பெற்றமை பற்றிச் சிந்தித்த அஸிஸ் இலங்கை முஸ்லிம்களின் துருக்கித் தொப்பி அணியும் பழக்கத்தின் வரலாற்றைத் தேடிப் பார்த்தார்.
 

ஏ. எம். நஹியா / 209
*" துருக்கித் தொப்பி அணியும் வழக்கம் இலங்கைச் சோனக மக்கள் எல்லோரிடமும் இருந்ததென்றும் சொல்வதற்கில்லை. இங்கிலிஷ் கற்றவர்களும் செல்வந்தர்களுமே, அந்தஸ்தின் சின்னமாக, இத் தொப்பியை அணிந்து வந்தார்கள். கிராம வாசிகளைப் பொறுத்தவரையில் துருக்கித் தொப்பி அணி யும் வழக்கம் பிரபலமடைந்ததாகத் தெரியவில்லை. முஸ் லிம்களில் பெரும்பான்மையோர் வாழும் மட்டக்களப்புக் கிராமவாசிகளினால் இவ்வுண்மை உணரப்படுகிறது. மிஸ்ர் நாட்டிலே கூட, ஃபாரூக் மன்னரின் ஆட்சிக் காலத்தில், ஃபலாஹீன்கள் - கிராம மக்கள் - துருக்கித் தொப்பி அணிந்ததாகத் தெரியவில்லை. அங்கும் அந்தஸ்தின் சின்ன மாக அது விளங்கியிருக்கலாம். அறபி பாஷா அவர்கள் மிஸ்றிலிருந்து நாடு கடத்தப்பெற்று இலங்கை வந்ததின் பின்னரே துருக்கித் தொப்பி பிரபலமடைந்தது எனலாம். துருக்கித் தொப்பி பிரபல்யமடையுமுன்னர் வண்ணத் தொப்பியெனப்பட்ட சூறாத் தொப்பியை இலங்கை முஸ் லிம்கள் அணிந்தார்கள். சூறாத் தொப்பிக்கு முன்னர் அதனிடத்தில் வெள்ளைத் தொப்பி வீற்றிருந்தது." 2
என அளவீஸ் எழுதியபோது அவரது வரலாற்றுப் பார்வையை யும் விடயங்களையும் சம்பவங்களையும் தொடர்புறுத்தி விளக் கும் அவரின் ஆற்றலையும் காண முடிந்தது.
ஆபிரிக்கப் பயணத்தின்போது அஸிஸ் யானைகளைக் காண நேர்ந்தபோதெல்லாம் கிழக்கிலங்கை இறக்காமத்து யானை
سیحوچg&&& களையும், அக்கிராமத்துப் பணிக்கரினதும் பெண்களினதும் துணிவையும், மந்திரத்தின் மூலம் யானைகளைக் கட்டுப்படுத் தும் அவர்களின் ஆற்றலையும் ஞாபகப்படுத்திக்கொண்டார். அக்கரைப்பற்று - சாகமம் - பொத்துவில் பிரதான வீதிகளில் காணப்படும் யானைகளின் நடமாட்டம் அஸிஸின் ஞாபகத் துக்கு அடிக்கடி வந்து சென்றது.
அளவீஸின் எழுத்துக்களில் வீசும் மண் வாசனை, ஒப்பிட்டாயும் பண்பு, பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் படித்தவற்றுட னும் அனுபவத்துடனும் இணைத்துப் பார்க்கும் பண்பு என்பன அவரின் எழுத்துக்களுக்குச் சோபையூட்டுகின்றன. அவரின் வர லாற்றுப் பார்வையும் விடயஞானமும் அவரது பிரயாண நூல்

Page 113
210 அளtஸ9ம் தமிழும்
களை வெறும் நிகழ்ச்சித் தொகுப்புகளாக அல்லது அனுபவத் திரட்டுகளாக அமைத்துவிடாது அவற்றுக்கு அறிவியல் சார்ந்த பெறுமதியை அளிக்கின்றன.
பொதுவாக, இலக்கிய ஆக்கத்தில் மூன்று கூறுகள் உள்ளன. படைப்போர், கூறப்படும் போருள், ஒன்பனவே அவை, இவற்றிடை சமநில ஏற்படும்போதுதான் உயரிய இலக்கியங்கள் பிறக்கின்றன. „ფიჭ65) კგ; 17 prtLif7685“ நூல்களில் இச்சமநிலை காணப்படுகிறது. நாடறிந்த தமிழறிஞர் பேரா சிரியர் க. கைலாசபதி அவர்கள்,
** இன்று தமிழில் எழு தப்படும் பிரயாண நூல்களில் அஸிஸ் அவர்களின் ஆக்கங்களுக்குத் தனியிடம் உண்டு. இத்துறையில் அவருக்கு இனை ஆவரே தான். அவர் ஈழத் தவர் என்பதில் நாம் பெருமையடைகிறோம்.' எனப் புகழ்பாடும் அளவீஸின் டெருமையில் நாமும் மகிழ்வடை (air b.
1. கைலாசபதி, கலாநிதி க.
* y } (t !!!.!! ଜୟ୍ଯ இலக்கியத்துறையில் அளவீஸ்"க்கு ଜୁଜ୍ଜଯୀ
gಛಿ(Bjrg 7 ಟಿಸಿ'
தினகரன் வார மஞ்சரி 2 டிசம்பர் 1973
2. அலீஸ் T. எம். எ. ஆபிரிக்க அனுபவங்கள்
15: 147 - 148
3. கைலாசபதி, கலாநிதி க.
*பிரயான இலக்கியத் துறையில் அலிஸ்-சக்கு இணை
அவரே தான்" தினகரன் வார மஞ்சரி

T தமிழ் அபிமானி
அஸிஸ் தமிழறிஞன் முஸ்லிம் தமிழறிஞன். இது முற்று முடி வான உண்மை, சென்ற இடமெல்லாம் தமிழுக்காக, இஸ்லா மியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக, அறபுத் தமிழ் மேம்பாட் டுக்காகக் குரல் கொடுத்தவர் அவர், கலாசாரப் பின்னணியில் இலக்கியம் படைக்கவேண்டுமென்பதில் அவர் விடாப்பிடியாக இருந்தார். முஸ்லிம் எழுத்தாளர்களை, கல்விமான்களை, கவி ஞர்களையெல்லாம் அதன்பால் ஊக்கியும் வழிநடத்தியும் வந் தார்.
"இதுகாறும் நாம் நமது சரித்திர சம்பந்தமான உண்மை
களை நுட்பமாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளோமா? முஸ் லிம்களால் ஆக்கப்பட்டுள்ள நூல்களைத் தகுந்த முறையில் விரிவுரைகளுடன் பிரசுரித்துள்ளோமா? எமது பெரியார் களின் வாழ்க்கைச் சரித்திரங்களை சாஸ்திர ரீதியாக ஆராய்ச்சியுடனும், ஆதாரத்துடனும் வழங்கியுள்ளோமா? ஆராய்ச்சிக் சுடங்கள் அமைத்துள்ளோமா? எமது கலைஞர் களின், இலக்கி tேதைகளின் பிறந்த தினங்களை ஞாபகப் படுத்தித் தக்கவாறு கொண்டாடியிருக்கிறோமா? இவற் றுள் எதையும் செவ்வனே செய்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை'
என பெரு விழாக்களிலும் ஆய்வு மகாநாடுகளிலும் அளவிஸ் தனது சமூகத்தினரை வினவியபோது பலர் அதன் தாற்பரி யத்தை உணரத் தலைப்பட்டனர்.

Page 114
212 | அளவீஸஸும் தமிழும்
ஆங்கில மோகத்தில் ஆழ்ந்து திளைத்து தமிழில் பேசுவதையே உயர் மட்டத்தினர் வெட்கமாகக் கருதிய காலத்தில் பிறந்து வளர்ந்தவர் அஸிஸ். ஆங்கில மொழியில் கல்வி கற்ற வரலாற் றுத்துறைப் பட்டதாரி அவர். முதல் முஸ்லிம் சிவில் சேவை அதி காரி. மேலவையில் புகழ் பூத்த அங்கத்தவராக இருந்தவர். அப் பெருமைமிக்க தலைமகன் தமிழில் பேசினார்; தமிழில் எழுதி னார். அம்மொழி மீதிருந்த ஆராத ஆசையினால் அம் மொழி அபிமானிகளுடன் ஊடாடி உறவாடினார். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடை இலக்கியப் பாலமாக அமைந்து நின்றார். தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடை இணைப்புப் பாலமாகத் திகழ்ந்தார். இஸ்லாமியக் கலைக்கூடமான ஸாஹிறாக் கல்லூரி யைத் தனது பணிகளின் நிலைக்களனாக்கி, பல சாதனைகள் புரிந்து, அநேக வாரிசுகளையும் தமிழபிமானிகளையும் உருவாக்கி விட்டு மறைந்துவிட்ட அம் மேதையின் வாரிசுகள் இன்று பரப்பி நிற்கும் தமிழ் மணம் அவருக்குப் பெருமை தருகிறது. அக்காலச் சூழலில் நின்று அஸிஸின் தமிழ்ப் பற்றையும் பணியையும் எடை போட முயலும் எவரும் அவருக்கு இணை அவரேதான் என்று கூறத் தயங்கமாட்டார். அவ்வாறு கூறுவதும் நியாயமானது. அதனாற்றான் அவர் பிறந்த மண்ணில் எழுந்த கலைக்கூடமான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அப்பெருமகனின் கல்வி, சமூக, மொழி, இலக்கியப் பணிகளைக் கெளரவிக்கு முகமாக இலக்கியக் கலாநிதிப் பட்டமளித்துக் கெளரவித்தது. 1980 செப்ரம்பர் 13ஆம் திகதி தேகாந்த நிலையில் அஸிஸுக்கு இக் கெளரவப் பட்டம் அளிக்கப்பட்டது.
தமிழ்ப் பெருமை பேசுவதற்குப் பதிலாக தமிழின் பயன்பாட்டு எல்லைகளை விரிவாக்குவதும் தமிழில் புதியன முயல்வதுமே தமிழபிமானத்தின் அடிப்படை என்ற பொருள்பட தெலுங்கு மகாசபை" என்ற கட்டுரையில் பாரதியார்,
"தமிழிலிருந்து பூ மண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபி மானியாக மாட்டான். பள்ளிக் கூடத்து சாஸ்திரங்களெல் லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி, தமிழராகப் பிறந்தோர் ஒரு வருக்கொருவர் பேசும்போது இதர பாஷைகள் பேசாமல் தமிழே பேசும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி, தமிழில் புதிய கலைகள் புதிய காவியங்கள், புதிய உயிர் தோன்றும் படிசெய்வோன் தமிழபிமாணி." 2

ஏ. எம் நஹியா 1213
என எழுதினார். தமிழபிமானி யார்? என்பதற்குப் பாரதி கூறும் வரைவிலக்கணம் இது. இதன்படி தமிழ்ப் பெருமை பேசுவதற்குப் பதிலாக தமிழின் பயன்பாட்டு எல்லையை விரி வாக்குவதும் தமிழில் புதியன முயல்வதுமே தமிழபிமானத்தின் அடிப்படை இந்த அளவு கோலின் படி பார்த்தால் அஸிஸ் ஒரு தமிழபிமானி.
மொழிச் சிந்தனை மிக்கோனாக, தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக் குக் குரல் கொடுப்போனாக, ஸாஹிறாவைத் தமிழ்க் களமாக்கி யோனாக, எழுத்தாளனாக, இலக்கியவாதியாக, சொற்பொழி வாளனாக, அறபுத் தமிழ் அபிமானியாக, முஸ்லிம் தமிழறிஞ னாக, இவ்வாறெல்லாம் பல வகைகளில் தமிழின் மேன்மைக் காகப் பணியாற்றினார் அஸிஸ். முஸ்லிம்களின் தாய் மொழி, கல்வி மொழி பற்றியெல்லாம் சர்ச்சைகள் எழுந்தபோது, தம் மினத்தைச் சரியான பாதையில் வழி நடாத்திய தீரர் அவர். தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிக் கேள்விகள் எழுந்த் போதும் சோதனைகள் நேர்ந்த போதும் அம்மொழி தளர்ந்து நின்ற போதும் பல தியாகங்களைச் செய்தவர் அவர், அத னாற்றான் போலும் அஸிஸ் இவ்வுலகை நீத்த போது அவரைக் கல்விமானாக, அரசியல் வாதியாக, சமூக சேவையாளனாக வெல்லாம் போற்றிப் புகழ்ந்தவர்கள் முஸ்லிம் தமிழறிஞனாக வும் தமிழபிமானியாகவும் புகழத் தவறவில்லை.
1. அஸிஸ் எ. எம். எ,
இலங்கையில் இஸ்லாம் கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம், 1963 157 سے 156 | 5ھ /L
நுஃமான் எம். ஏ.
* பாரதியின் மொழிச் சிந்தனைகள்
ஒரு மொழியியல் நேர்க்கு"
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட வெளியீடு
யாழ்ப்பாணம், 1984
ZLlé : 09

Page 115
“
 


Page 116
நூலாசிரியர் பற்றி .
இந்நூலாசிரியர் ஜனாப் 4 நிந்தவூரைப் பிறப்பிடமாக
பட்டதாரி கல்வித்துறையி
மாப் பட்டம்பெற்றவர்.
கொழும்புப் பல்கலைக் கழக 1970-71 ஆம் ஆண்டுகாலப் ட பட்டபோது இலங்கைப் பல் இப்பதவி வகித்த முதல் முன் ரானார். இதே பல்கலைக்க உபதலைவராக (1971-72), ராகவெல்லாம் சேவை செய்
கல்வித்துறையில் நீண்டகா கொழும்பு ஸாஹிறாக் கல்லு பலவருடங்கள் பணி செய்திரு சமய கலாசாரத் திணைக்கல விப் பணிப்பாளராகத் தொழி
இலக்கிய ஈடுபாடு மிக்கவரா கட்டுரைகளினதும் விமரிசனச் யர். இவரின் படைப்புகள் ே கைகள், பல்கலைக் கழக மல
திருக்கின்றன. ஸாஹிறாக் க
நிறைவு விழா மலர் வளர்பி
தான்.
ஜனாப் நஹியா சிறந்த ே பகிரங்கச் சொற்பொழிவுகள் காட்சிச் சொற்பொழிவுகள், ருக்கிறார். எ. எம். எ. அஸி வது செயலாளரும் இவரே.
சமூக உணர்வும் தமிழுணர்வு
முற்போக்குச் சிந்தனைகளை கூறு நல்லுலகும் நன்கு டய மென விரும்புகிறேன்.
பேராசிரியர் எஸ். தில்லைந
தலைவர்- தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழக
பேராதனை,
 

t
曾 -
ஏ. எம். நஹியா அவர்கள் க் கொண்டவர். ஒரு கலைப் ல் பட்டப் பின்படிப்பு டிப்ளோ
த் தமிழ்ச் சங்கத் தலைவராக குதிக்கு இவர் தெரிவுசெய்யப் கலைக் கழக வரலாற்றிலேயே ஸ்லிம் என்ற பெருமைக்குரியவ ழகத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் பேரவை உறுப்பின 安rr片。
Fல அனுபவமுள்ள இவர் ாரியில் உதவி அதிபராகப் 5க்கிறார். இப்போது, இந்து ாத்தில் தமிழ் விவகார 學-落 ல் பார்க்கிறார்.
ன இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளினதும் ஆசிரி தசியப் பத்திரிகைகள், சஞ்சி 'ர்களிலெல்லாம் வெளிவந் ல்லூரியின் 85 வது ஆண்டு ஐை" யின் ஆசிரியரும் இவர்
சந்தமிழ்ப் பிரசங்கி, பல வானொலி, தொலைக் கலந்துரையாடல்கள் செய்தி பவுண்டேசனின் முதலா
ம் மீதூரப் பெற்ற இவரின் முஸ்லிம் சமூகமும் தமிழ் படுத்திக் கொள்ளவேண்டு
தன்,