கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இறைவனும் பிரபஞ்சமும்

Page 1
தேசமானிய, டாக்டர். இ.ெ
 

5.முஹம்மத் சஹாப்தீன்

Page 2


Page 3
|-|-
- -|- |- |-
|- |- , ,|-
|-
|- |- |- ! - |-· |-|- -
- - - |- |- |-
|- | |-
· - |- |- |- |- |-|- |- ||- |-
|-
 
 
 
 
 
 
 

இறைவனும் பிரபஞ்சமும்
இஸ்லாமிய தத்துவக் கருத்துகள்
தேசமானிய, டாக்டர். ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் B.A. (Hons) Ph.D., Formerly C.C.S.
வெளியீடு:
ஏ.எம்.எம்.சஹாப்தீன் டிறஸ்ட் பவுண்டேசன் (incorporated by Act of Parliament No.3 of 1991 Sri Lanka) 10, வார்ட் பிலேஸ், கொழும்பு - 7. சிறிலங்கா

Page 4
முதற் பதிப்பு : ஹிஜ்ரி 1415
ஈஸவி 1995 ஜனவரி
உரிமை : வெளியீட்டாளருக்கே
Published by:
ABDULMAJEED MOHAMED SAHABDEEN TRUST FOUNDATION
Incorporated by Act of Parliament No.3 of 1991 Sri Lanka 10, Ward Place, Colombo-7, Sri Lanka
Printed by: THREEYEMPRINTERS,
83, Angappa Naickan Street, Madras-600 001.
Typeset by: 'SUMATHILASERS, Madras-6. Ph: 8523424

ལོ་༥)
பெற்றாருக்கு சமர்ப்பணம்
பரம்பொருளான இறைவன் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள எல்லாப் படைப்புக்களையும் படைத்து அவைகளில் வியாபிக்கும் மகத்துவத்தை சூஃபி மெய்ஞ்ஞானிகள் அட்சரங்களின் குறியீடு" என விமர்சனம் செய்தி ருக்கிறார்கள். (பார்க்க பக்கம்: 45) இக்குறியீடு இந்நூலின் அட்டையில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

Page 5
பொருளடக்கம்
அறிமுகம்
அணிந்துரை
முன்னுரை
நன்றி
தோற்றுவாய் அத்தியாயம் -
இஸ்லாத்தில் சூஃபித்துவ இறைஞானம் அத்தியாயம் - I
பலதரப்பட்ட இருப்பு நிலைகளில்
இறைவன் வியாபித்தல் அத்தியாயம் - I
இறைவன் சிருஷ்டிகளில் வியாபிக்கும் நிலையும்
அந்நிலைக்கு அப்பாற்பட்ட ஏகத்துவ நிலையும் அத்தியாயம் - IV
பரம்பொருளைச் சிந்திக்கும் இலக்கிய
உருவகங்களும், குறியீடுகளும் அத்தியாயம் - V
ஆத்மீக முன்னேற்றப் பாதையும்
தன்னைத் தானறியும் மெய்ஞ்ஞானமும் அத்தியாயம் - V
இறை அனுபவமும் இறைஞானமும்
குறிப்பு விளக்கம்
INDEX
ஆய்வுக்குதவிய மூல நூல்கள்
14
1 Ο3
126
149
175
257
265
275
281

"ஷெய்குத் தர்ஜமா” மெளலானா M.அப்துல் வஹ்ஹாப் சாஹிப் MA, BTh. வழங்கிய
அறிமுகவுரை
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் நஹ்மதுஹ" வ நுஸல்லி அலா ரஸ9லிஹில் கரீம்
தேசமானிய டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் அவர்கள், 'இறைவனும் பிரபஞ்சமும்’ என்ற தலைப்பில் நமக்குத் தந்திருக்கும் இந்த அருமையான ஆய்வு நூலுக்கு ஒர் அறிமுகவுரை வழங்கும் நற்பேறு பெற்றமைக்காக வல்ல நாயனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின் றேன், அல்ஹம்துலில்லாஹ்.
முழுமையான இறை நேசத்தோடு முற்றிலும் அவனையே சார்ந்திருப் பது (தவக்குல்), தஸவ்வுப் என்னும் இறைஞான இறையனுபவத்தின் அடிப்படையாகும்.
நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள், ஒருதடவை முகம் வாடியவர்க ளாக மஸ்ஜிதுந் நபவியில் அமர்ந்திருந்தார்கள். முகவாட்டத்துக்குக் கார ணம் கேட்ட ஸஹாபிகளிடம்; 'என் உம்மத்தின் வருங்காலத்தை நினைத்து வருந்துகிறேன்' என்று சுருக்கமாகப் பதிலளித்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.
'யா ரஸ அலல்லாஹ்! இப்போதிருப்பதை விட இன்னும் வறுமை யில் வாடிவிடப் போகிறார்களா? வருங்கால உம்மத்தினர்' என்று தோழர் கள் கேட்க, 'இல்லை! அதிகமான செல்வத்தைக் குவித்து, ஆண்டவனுக் குச் செய்ய வேண்டிய கடமைகளில் அலட்சியமாக இருந்து விடுவார் களோ?' என்று அஞ்சுகிறேன் என அண்ணல் நபி(ஸல்) பதிலிறுத்தார்கள்.
பணம் தேடுவதைப் பாவம் என்று அவர்கள் கூறவில்லை. ஆனால் பணப்பெருக்கு, இறை நெருக்கத்தை விட்டும் நம்மை தொலைவிலாக்கி விடுமோ என்றுதான் ரஸ் அல் (ஸல்) அவர்கள் பெரிதும் கவலைப்பட்டார் கள்.
gi/Saggai) scis LuypGLDITyssuygia G). 'MONEY IS A GOOD SERVANT; BUTA BAD MASTER பணம் நல்ல பணியாளன்; ஆனால் அதனையே நம் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்துவிட்டால் அது, கெட்ட எஜமானனாகி விடும்.

Page 6
இதுபோல்தான் பதவியும், செல்வாக்கும் ஆகும். 'ஸைபுல்லாஹ்" என்று பெருமானாரால் போற்றப்பட்ட காலிதுப்னு வலிது (ரலி) அவர்கள் போர்க்களங்களில் வெற்றிமேல் வெற்றி குவித்தார்கள். ரோமானிய ராணு வம் அவர்களுடைய பெயரைக் கேட்டாலே நடுநடுங்கும்.
'காலிதைப் போல ஒரு வீரமகனை எந்த தாயும் பெற்றதில்லை" என்று முதற் கலீபா அபூபக்ரு ஸித்தீக் (ரலி), காலிது (ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். உமறுல் பாரூக் (ரலி) ஆட்சிக் காலத்தில் காலிதுப்னு வலீத் (ரலி) அவர்களின் புகழ் மேலும் உயர்ந்தது.
ஆனால் அவர்கள் பெற்ற வெற்றிகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி விட்டு அவர்களைப் பதவி நீக்கம் செய்தார்கள் உமறுல் பாரூக் (ரலி) அவர்கள்.
தம் பதவிநீக்கத்துக்குக் காரணம் கேட்ட ஹல்ரத் காலிதிடம்: 'உம்மு டைய வீர சாகசங்களுக்காக உம்மை வாழ்த்துகிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக உம்மைப் பெரிதும் நேசிக்கிறேன். ஆனால் இம்மாபெரும் வெற்றிகளுக்கெல்லாம் நீரே காரணம் என மக்கள் கருதி, தனிநபர் வழி பாட்டில் (Hero Worship) அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். அந்நிலை ஏற்படாதிருக்கத்தான் இந்த நடவடிக்கை எடுத்தேன்' என்று இதமாகப் பதிலளித்தார்கள் கலீபா அவர்கள்.
பணம், பதவி மட்டுமல்ல நரக பயமோ, சுவர்க்கத்தின் ஆசையோ கூட இறைவன் மீதுள்ள பற்றையும், பாசத்தையும் திருப்பி விடக் கூடாது என்று இறைநேசச் செல்வர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
'இறைவா! நரக நெருப்பை பயந்து உன்னை நான் வணங்கி வந்தே னானால், என்னை அந்த நெருப்பிலேயே தள்ளிவிடு!
சுவன வாழ்வின் சுகங்களுக்காக உன்னை வணங்கி வந்தேனானால், அந்த சொர்க்கத்தை எனக்குத் தராமல் தடுத்துவிடு!
ஆனால் உனக்காக, உன்னுடைய மஹப்பத்துக்காக - எந்தவிதப் பிரதி பலனையும் எதிர்பாராமல் உன்னை வணங்கி வந்தேனானால், எனக்கு உன் அருளை வழங்குவாயாக!' என்று ராபியத்துல் பஸரிய்யா என்ற இறை நேசச் செல்வி துஆச் செய்ததாக அவர்கள் தம் வரலாறு கூறுகிறது.
ஸஅபித்துவ நெறியில் ஒர் அரிய பயிற்சி நப்ஸை - மனதைக் கட்டுப்ப டுத்துவதாகும். 'அந் நப்ஸ" அப்துது மின் ஸப்ஈன ஸயாதீன' 'நப்ஸ" எழுபது ஷைத்தான்களை விடக் கெட்டது' என்று அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அறிவுறுத்தினார்கள்.
இவ்வாறு பணம், பதவி, மனமாயைகள் ஆகிய எவற்றிலும் சிக்கித் தவிக்காது, இறைநேசர் செல்வமெனும் இனிய சம்பத்தைப் பெற்று

ix
வாழ்ந்த ஸஅபிப் பெருமக்களைப் பற்றி அளப்பரும் புலமையும், ஆழ்ந்த ஆராய்ச்சியும் கொண்டு எழுதியிருக்கின்றார்கள் டாக்டர்சஹாப்தீன் அவர் கள். ஆங்கிலத்திலும், அருந்தமிழிலும் போற்றத்தகுந்த பாண்டியத்துவம் பெற்றுள்ள அவர்கள் வரைந்துள்ளதைப் படிப்பதே ஓர் அருமையான ஆத்மானுபவமாகும்.
"It is quite evident that the accomplishments of all the sciences having man as an object remain insufficient and that our knowledge of ourselves is still most rudimentary (ALEXIS CARREL: MAN, THE UNKNOWN) - வியத்தகு விஞ்ஞான சாதனைகள் எத்தனையோ இருப்பி னும், மனிதனுக்குத் தன்னைப் பற்றிய அறிவு இன்னும் மிகக் குறைவாக - வளர்ச்சியடையாத நிலையிலேதான் இருக்கிறது" என்று அலெக்ஸில் கார்ரெல் என்ற உயிர் நூலறிஞர் (Bionogist) கூறுவார்.
ஆனால், இது ஸ ஜூபித்துவ அறிஞர்களுக்குப் பொருந்தாது என்பதை யும், இறையனுபவமும் இறைஞானமும் தனிப்பட்டோருக்கு எப்படி சித் தியாகும் என்பதையும் நூலாசிரியர் அருமையாக விளக்கியிருக்கிறார்.
நூல் நெடுகிலும், தவஞான சீலர்களின், சீரிய கருத்துக்களை டாக்டர் அவர்கள் ஆங்காங்கே - பொருத்தமாக எடுத்துக்காட்டியிருப்பது ஆசிரியர் அவர்களின் ஆய்வுக்கும், ஆழ்ந்த புலமைக்கும் சிறப்பான சான்றாகும்.
அதிலும், தமிழகத்தின் மெய்ஞ்ஞான மேதைகளின் மாண்பார் கவி தைகளிலிருந்து, ஆசிரியர் அவர்கள் நமக்கு வாரி வழங்கியிருக்கும் வள மார் மேற்கோள்களுக்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்நூலைப் படித்து, பெறற்கரிய பயனைப் பெற்றேன். 'யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்" என்று தமிழ் கூறும் நல்லுலகை அழைப்ப தில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
நூலாசிரியர் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டை உரித்தாக்கிய வனாக அமைகின்றேன். வஸ்ஸலாம்.
வ ஆகிரு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
26.9.1415 27.2.1995 அப்துல் வஹ்ஹாப். ஆலந்துரர், சென்னை-16

Page 7
அணிந்துரை
சூஃபித்துவத்தைப் பற்றிப் பொதுவாகவும், தமிழ் இலக்கியத்தில் சூஃபித்துவக் கொள்கைகள் வளர்ச்சியுற்றமை பற்றிச் சிறப்பாகவும் ஆழ மாய் ஆராய்ந்து கலாநிதி ஏ.எம்.எம். சஹாப்தீன் அவர்களால் எழுதப்பட்ட 'இறைவனும் பிரபஞ்சமும்’ என்னும் இந்நூல் தலைசிறந்த ஒரு படைப்பா கும். கலாநிதி ஆய்வேட்டுக்கான பொருளாக அமைந்த இந்நூலின் கருப் பொருள் சிறிது மாற்றங்களுடன் மூலப் பிரதியைப் பாதிக்காத வகையில் இனிய நடையில் தயாரிக்கப் பட்டுள்ளது. இங்ங்னம் தரப்பட்டுள்ள வற் றுள் பெரும் பாலான பகுதி முறைப்படியான ஆய்வின் பெறுபேறுகளா கும். இதுவரை பண்டித மட்டத்தவரும், பாமரமக்களும், மேலோட்டமாக அறிந்திருக்கும், சூஃபித்துவத்தின் மறைபொருளின் ஓர் அம்சத்தை நன்கு அறிந்து கொள்வதற்கு இந்நூல் வெளியீடு வழிவகிக்கும் என்பது திண்ணம்.
இந்நூல் வரவேற்கப்படுவதற்கான மற்றொரு காரணம், இந்நூலாசிரி யர் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருப்பது மாத்திரமன்று, இலங்கை சிவில்சேவையின் முழுநிலை பரிபாலகராக, இயக்குநராக, ஆணையாளராக, பாரிய அரச நிறுவனங்களின் பிரதான நிர்வாகியாக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மிக உயர்ந்த பணியாற்றிய வராகவும் விளங்கினார். பல்வேறு துறைகளில் பெற்ற பாண்டித்தியத்தையும் அனுப வத்தையும் பயன்படுத்தி இந்நூலாசிரியர் பல்கலைக் கழக விஷயம் ஒன் றாக அன்றி, வாழ்க்கைத்தத்துவமாக, சூஃபித்துவத்தை மதிப்பீடு செய்துள் ளார். இந்நூல் மூன்று பிரதான அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்
ளது. அவையாவன:
(1) சூஃபித்துவக் கொள்கையின் வளர்ச்சி பற்றிய வரலாற்றுப் பின் னணி, அதன் மூலாதாரங்களான (அல்-குர்ஆன், அல்ஹதீஸ்)வற்றிலிருந்து இஸ்லாமிய ஞானிகளின் மெய்ஞ்ஞானக் கொள்கைகள் வரையிலான வரலாறு. (2) தமிழ் இலக்கியத்திலுள்ள சூஃபித்துவக் கொள்கைகள் தொடக்கத்தி
லிருந்து தொடர்ந்து வளர்ந்த முறைமை. (3) சூஃபிக் கொள்கையும் அதனால் சமயத்தத்துவ ஞானத்தில் ஏற்பட்ட
பாதிப்பும்.

ܛ .
༡ལ(
xi
(1) முதலாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இயன்றளவு முக்கியமான சூஃபி ஞானியரின் கொள்கைகளின் சிறப்பியல்புகள் அவர்க ளுடைய சொற்களிலேயே தரப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் சூஃபிக் கொள்கைகளின் வளர்ச்சியுற்ற பாங் கினை, தொடர்ச்சியாக விளக்குவதோடு தமிழ்நாட்டில் தோன்றிய சூஃபி ஞானியரினதும், சூஃபிக் கவிஞரினதும் படைப்புக்களைவிபரிப்பதையும் இந்நூல் கொண்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தின் புல்வேறு துறைகளையும், தத்துவ ஞானத்தையும், தமிழ் இலக்கியத்தையும் தமிழ் மொழி வன்மையையும் ஒருங்கே கொண்டிராத காரணத்தினால், ஆய்வா ளர்கள் எவரும் இப்பாரிய கைங்கரியத்தை ஏற்க முன்வந்தார்களில்லை. இத்தகைய ஒரு பணியை மேற்கொள்ள இவை அனைத்தும் அவசியமாகின் றன. எவ்வளவுதான் மொழியாற்றல் இருந்தாலும், சூஃபித் தத்துவத்தின் நுணுக்கமான அம்சங்களில் பரிச்சயம் இல்லாத விடத்து, அக்கருத்துக்களை திருப்தி அடையக்கூடிய விதத்தில் ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்குப் பெயர்க்க முடியாது. ஆனால் இந்நூலாசிரியரோ இங்கு கூறப் பட்ட துறைகளிலெல்லாம் பாண்டித்தியம் பெற்றிருப்பதால் இப்பணி இவருக்கு இலகுவான ஒரு காரியமாயது. சூஃபிச் சிந்தனைகளையும், கருத்துக்களையும், இந்நூல் நன்கு விளக்கிச் செல்கிறது. இத்துறையில், இந்நூல் தலைசிறந்து விளங்குகிறது எனக் கூறின் அது மிகையாகாது.
பேராசிரியர், அல்லாமா, எம். முஹம்மத் உவைஸ்
'மர்களிலி' ஹேனமுல்லை, பாணந்துறை.

Page 8
முன்னுரை
gig), 6) ICD, Lildsey.d5(5 (Upair The Sufi Doctrine in Tamil Literature 6Tairg/lib நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டேன். இஸ்லாமிய தத்துவக் கொள்கை கள், சூஃபித்துவ ஞானம் என்பனவற்றை முஸ்லிம் இறைஞானிகளின் எழுத்துக்களில் இருந்தும், தமிழகத்தில் தோன்றிய பீர் முஹம்மதப்பா, குணங்குடி மஸ்தான் போன்றவர்களின் ஞானப் பாடல்களில் இருந்தும் எடுத்து எழுதினேன். முக்கியமாக திருக்குர் ஆன் ஹதீஸ்களிலிருந்தும் அவைகளைப் பற்றிய ஆதாரபூர்வமான விளக்கத்தை ஆங்கில பாஷையில் எடுத்துரைத்தேன்.
மேற்கூறிய நூல் ஆரம்பத்தில் இலங்கைப் பல்கலைக் கழக டாக்டர் பட்ட ஆய்வுக்காக எழுதப்பட்டது. இதை பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய பல்கலைக்கழகங்களில் சமயங்களின் கற்கைத்துறைப் பேராசிரிய Unts (Professor of Religious Studies, University of California, Santa Barbara and the University of Lancaster, England) sLGOLDuLumpibgpJub LITášLi silaofuLu Gör ஸ்மாட் (NINIAN SMART) அவர்கள் பரிசீலனை செய்தது மட்டுமல்லாமல் இந்நூலை கட்டாயம் ஆங்கிலத்தில் பிரசுரிக்க வேண்டுமென்று என்னை வேண்டிக் கொண்டார். ஏனெனில் அராபிய, பாரசீக மெய்ஞ்ஞானிகளின் கருத்துக்கள் ஆங்கிலத்தில், பிரபல்யம் பெற்ற ஆராய்ச்சி நூல்களாக வெளி வந்த போதிலும், தமிழ் மொழியில் பிரசுரமான தமிழ் பேசும் மெய்ஞ்ஞா னிகளின் இலக்கிய ஆக்கங்கள், ஆங்கிலத்தில் வெளிவராத காரணத்தால் மேற்கத்திய அறிஞர்களின் ஆய்வுக்கு அவை கிட்டவில்லை. எனவே மேற் கூறிய நூல் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டால், ஆராய்ச்சியாளர்களுக்கும், தத்துவ சாஸ்திர மாணவர்களுக்கும், சர்வமத எழுத்தாளர்களுக்கும் பேருத வியாக இருக்குமென்று பேராசிரியர் நினியன் ஸ்மார்ட் அபிப்பிராயம் கூறினார். எனது ஆங்கில நூலுக்கு அழகியதொரு அறிமுகம் எழுதியுதவி 607(Tii. yairGoTITfair Gouaia (6Gassrofair Sussmulb (The Sufi Doctrine in Tamil Literature) என்னும் ஆங்கில நூல் 1986ல் வெளிவந்தது.
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகளில் இந்நூலைப் படித்த தமிழ் அறிஞர்கள் சிலர், தமிழில் இதனை எழுதினால், ஆங்கிலம் தெரியாத வாசகர்களுக்கு பேருதவியாக இருக்குமென்று இதை தமிழில் எழுத என்னை வேண்டிக்கொண்டனர். இவ் வேண்டுகோளுக்கு இணங்கியே இந்நூலின் ஆங்கிலப் பெயரை மாற்றி "இறைவனும் பிரபஞ்ச மும்’ என்னும் பெயரில் வெளியிடுகிறேன். இதைப் பற்றிய வாசகர்களின் அபிப்பிராயங்களை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்.

xiii
வாசகர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி, நான் இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்தபோது, மொழிபெயர்ப்பில் பல பிரச்சினைக ளுக்கு தீர்வுகாண வேண்டியிருந்தது. இஸ்லாமிய தத்துவக் கருத்துக்களும், மெய்ஞ்ஞான இலக்கியங்களும் அறபு, பாரசீக மொழிகளில் தான் வெகு வாக ஆக்கப்பட்டிருக்கின்றன. சரித்திர ரீதியில் முக்கியமான நூல்கள் ஆங் கிலத்திலும், மேற்கத்திய பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்த போதும், தமிழில் அவ்விதமான மொழிபெயர்ப்புகள் இல்லாமல் இருந் தன. அதுமட்டுமன்றி, அறபு, பாரசீகம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம் வாய்ந்த அறிஞர்களைச் சந்திப்பதும் அரிது. மேலும் மும் மொழிகள் தெரிந்திருந்தாலும், தத்துவஞானத்தில் (Philosophy) நிபுணத்து வம் வாய்ந்த அறிஞர்களின் ஆலோசனையைப் பெறுவது பிறிதொரு பிரச்சி னையாக இருந்தது.
ஒரு பாஷையில் உள்ள மெய்ஞ்ஞான இலக்கியங்களை, இலக்கிய ரசனையுடன் மொழிபெயர்ப்பதென்பது இலேசான காரியமல்ல என்பதை அறிஞர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனவே இந்நூலைப் பொறுத்தவரை யில், அறபு, பாரசீக மெய்ஞ்ஞான இலக்கியங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். இம் முயற்சியில் பல குறைகள் இருக்கலாம் என்பதை நான் ஒப்புக் கொண்டு, மேற்கூறிய மொழி பெயர்ப்பை, மொழிபெயர்ப்பு மூலநூல்க ளின், சில பகுதிகளின் கருத்துச்சுருக்கமாகவே ஏற்றுக்கொள்ளும்படி வாச கர்களுக்கு கூறிவைக்க விரும்புகிறேன்.
"எவ்வித நீண்ட பிரயாணமும் முதல் அடி வைத்தலில் இருந்தே துவங்
குகிறது' என சீனப் பழமொழி கூறுகிறது. இந்நூலும் இதைப் போன்று தமிழில் தத்துவ ஆராய்ச்சியில் ஒரு முதல் படியாக நான் கருதுகிறேன்.
நன்றி
கீழ்வரும் ஆங்கில நூல்கள் இப்புத்தகத்திலுள்ள ஆராய்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தன. அந்நூல்களின் சில பகுதிகளை நான்தமிழில் மொழி பெயர்த்து, இப்புத்தகத்தின் பல இடங்களில் சேர்த்துள்ளேன். அந்நூல் களை எழுதிய ஆசிரியர்களுக்கும், அவைகளைப் பிரசுரித்த ஸ்தாபனங்க ளுக்கும், அவற்றை இந்நூலில் குறிப்பிட வழங்கிய அனுமதிக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Page 9
xiv
அந்நூல்களாவன:
An introduction to Sufi Doctrine by Titus Burckhart; Sh. Muhammed Ashraf, 1959 edition, Lahore.
The laea of Personality in Sufism by R.A.Nicholson; Sh. Muhammed Ashraf, Lahore.
Rumi Poet & Mystic by R.A.Nicholson; M/s George Allen & Unwin, London.
The mystics of Islam by R.A.Nicholson; M/s. Bell & Hyman Ltd., London.
Studies in Islamic Mysticism by R.A.Nicholson; The Press Syndicate of the University of Cambridge, Australia, Cambridge University Press.
Kashf Al-Mahjub of Al-Hujwiri translated by R.A.Nicholson, Gibb Memorial Trust, Cambridge.
Readings from the Mystics of Islam by Margaret Smith; Lauzac& Company, London.
Guide to Philosophy of Morals and Politics by C.E.M. Joad; M/s Victor Gollancz Ltd., London and to Mr. B.A. Howard.
Sufism by AJ Arberry; M/s George Allen & Unwin, London.
The Perennial Philosophy by Aldous Huxley; Mrs. Laura Huxley and M/s Chatto & Windus, London.
A Moslem Saint of the Twentieth Century by Martin Lings; M/s George Allen & Unwin, London.
History of philosophy, Eastern & Western edited by S.Rad hakrishnan; M/s George Allen & Unwin, LOndOn.
Islam's Alternative to Fundamentalism by T.O. Ling; The John Rylands University Library, Manchester.
Sufi Essays by Seyyed Hossein Nasr; M/s. George Allen & Unwin, London.
Man, The Unknown by Alexis Carrel; Penguin Books, New York.
The Varieties of Religious Experience by William James; The New American Library,
New York.
The Mysterious Universe by Sir James Jean; Cambridge University Press.

XV
மேலும் இந்நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத எனக்குப் பலத ரப்பட்ட உதவிகள் செய்தும், பல ஆலோசனைகளைக் கூறியும், என்னை ஊக்குவித்த பின் வரும் அறிஞர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள் ளேன்.
சிறிலங்கா, பேராதனை சர்வகலாசாலையில் தத்துவஞானப் பேராசிரிய ராக கடமையாற்றிய, டாக்டர் பத்ம சிறி சில்வா, பிரித்தானிய லான் கெஸ்டர் பல்கலைக்கழக சர்வமத கற்கைத்துறைப் போராசிரியர் டாக் டர் நினியன் ஸ்மாட், மதுரை காமராஜர் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழ் இலக்கிய பீடப் பேராசிரியர், டாக்டர்எம்.எம்.உவைஸ், தக்கலை 6Tib.6J. Lugróir (B.Sc.M.A.), Glassropibly politou J. pg. 5th, (B.A. (Hons) LLB), முன்னைநாள் அச்சக உத்தியோகத்தர் என்.எம். ஹனீபா ஆகியோருக் கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேல்கூறிய நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த் தும், சில பகுதிகளை நீக்கியும், புதுப்பகுதிகளை உட்புகுத்தியும், சில பகுதிகளை மாற்றி எழுதியும், இன்னும் இந்நூலின் பல அம்சங்களை புதிதாக எழுதியும் பதிப்பித்து வெளியிட வேண்டியிருந்ததினால் இன்னும் பலரின் உதவிகள் தேவைப்பட்டன. ஆரம்பத்தில் AWM. ஹன்ஸிர் (B.A.) அவர்கள் எனக்கு சில தத்துவ கருத்துக்களை மொழி பெயர்த்தும், ஆலோ
சனை கூறியும் உதவினார்.
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பிரசுரமாகும் மட்டும் என்னுடன் நெருங்கி பல மாதங்களாக இம்முயற்சியில் ஈடுபட்டு பல கஷ்டங்களுக்கு மத்தியில் இந்நூலை வெளியீடு செய்வதற்கு உழைத்த கவிஞர் தாஜுல் அதீப், எஸ்.ஏ.ஆர்.எம். செய்யித் ஹஸன் மெளலானா (நிந்தவூர்) அவர்க ளுக்கு, ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னார்எனக்கு முக்கியமான இறைஞான சம்பந்தப்பட்ட இலக்கியப்படைப்புக்களை யும், தமிழில் வெளியான பல நூல்களையும், வாசித்து அதன் சாராம்சங் களை எனக்கு சுருக்கமாக எடுத்துக்காட்டி, உதவி செய்தார். அதுமட்டு மன்றி இந்நூலை அச்சிடு முன் பல்வேறுபகுதிகளை, திருப்பி எழுதியும், அச்சுப்பார்வைப்படி திருத்துதல் (proofreading) செய்து, ஒவ்வொரு பகுதி யையும் ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலனை செய்தார். மேற்கூறிய அவரின் உதவியின்றேல் இந்நூல் சீக்கிரம் வெளிவந்திருக்காது. அவரின் பலதரப்
பட்ட சேவைகளுக்கு நன்றி.

Page 10
xvi
இந்நூலை தமிழில் மொழிபெயர்த்த பின் கொழும்பு எம்.எச்.ஷா ஹ"ல் ஹமீது ஆலிம் (பஹ்ஜி) அவர்களிடத்தில் பார்வையிட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேற்பார்வை செய்து, வேண்டிய குறிப்புக்களைக் கூறியும் தந்தமைக்கு அன்னாருக்கு எனது நன்றி.
தமிழ் பேசும் உலகம் நன்கறிந்த "ஷெய்குத் தர்ஜமா' மெளலானா M.அப்துல் வஹ்ஹாப் சாஹிப் M.A., BTh. அவர்களின், திருக்குர்ஆன் கருத் தின் தமிழ் மொழிபெயர்ப்பு (குர்ஆன் தர்ஜமா)" இந்நூலுக்கு இன்றியமை யாதிருந்த காரணத்தால், அதிலிருந்து பல பகுதிகளை இந்நூலில் எடுத் தாண்டுள்ளேன். அன்னார், இந்நூலை அச்சிலிட்டுப் பிரசுரமாக்குமுன், அதன் பல பகுதிகளையும், அவைகளில் அடங்கிய கருத்துக்களையும், அதில் நிரம்பிக் கிடக்கும் அறபுச் சொற்களையும், வசனங்களையும் மிகக் கவனத்துடன் பரிசீலனை செய்து முக்கியமான திருத்தங்களை உட்புகுத்தி யும் எனக்கு உதவியது மட்டுமன்றி, அன்னாரின் புலமை சான்ற அறிமுகவு ரையையும் எழுதி உதவியமைக்கு எனது மனம் நிறைந்த நன்றியையும் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலை சிறந்த முறையில் அச்சிட உதவிய திரியெம் பிரிண்டர்ஸ் அல்-ஹாஜ். எம்.முஹம்மத் மீராசாஹிப் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
86. காலி வீதி, டாக்டர் ஏ.எம்.முஹம்மத் சஹாப்தீன் கொழும்பு - 3.
* வெளியீடு: திரியெம் பிரிண்டர்ஸ்

தோற்றுவாய்
LTரசீகப் பெரும்புலவர் ஒருவர், இப்பிரபஞ்சத்தை கையால் எழுதப்பட்ட ஏட்டுப் பிரதிக்கு ஒப்பிடுகின்றார். அவ்வேட்டுப் பிரதி பழமையானதால், அதன் முதல் அத்தியாயமும், இறுதி அத்தியாயமும், காணாமல் போய்விட்டதென்றும் அவர் கூறுகின்றார்.
MĀ ZI ĀGHÄZ O ZI ANJÄM-I-JAHAN BI KHABAR ÎM AWWAL - O - AKHIR-I-IN KUHNA KITAB UFTAB AST
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றிய அறிவும், அதன் முடிவைப் பற்றிய அறிவும், அந்தரங்கமானது என்பதை பாரசீகப் பெரும்புலவர் உணர்த்துகின்றார். சுருங்கக் கூறின், காணாமல் போன முதல் அத்தியாயமும், கடைசி அத்தியாயமும், முறையே பிரபஞ்சம் உண்டான மர்மத்தைப் பற்றியும், அதன் கடைசிகால முடிவைப் பற்றியும் கூறும் விடயங்கள்தான் அதில் அடங்கியுள்ளன எனலாம்.
அண்ட சராசரங்களிலுமுள்ள எல்லாப் படைப்புக்களையும், படைத்தளித்துக் காக்கும் அந்தப் பரம்பொருளின் உண்மைத் தன்மையென்ன? அப்பரம்பொருளால் படைக்கப்பட்ட படைப்புக்களின் கடைசி முடிவென்ன? என்பதைப்பற்றி திருக்குர்ஆன் எவ்வாறு பிரகடனஞ் செய்கின்றது என ஆராய்வோம்.
'நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே மீளவேண்டியவர்கள்."
(அல்-குர்ஆன், 2:156) அதன் பூமி மீது இருக்கும் சிருஷ்டிகள் அனைத்தும் அழிந்து போகும். மிக்க கண்ணியமும் பெருமையும் தங்கிய உமது இறைவன் மட்டும் (அழியாது) நிலைத்திருப்பான்.'
(அல்-குர்ஆன், 55:26,27) மேற்கூறிய வசனங்களின் மூலம் வான்மறை குர்ஆன், இறைவன் உண்டென்று கூறும் எல்லா மதங்களிலும், பொதுவாக அடங்கியுள்ள முக்கியமானதொரு தத்துவத்தை, மிகச் சுருக்கமாகக்

Page 11
2
கூறுகின்றது. எல்லா மதங்களுக்கும் பொதுமையான தத்துவம் என்னவென்றால், தாவர வர்க்கம், மிருக வர்க்கம், மனித வர்க்கம் என்பனவும், காலத்தாலும் நேரத்தாலும் வரையறுக்கக் கூடிய ஜடப்பொருள் உலகங்களும், அணுவிலிருந்து அண்டம் வரையுள்ள எல்லாப் படைப்புக்களும், பரம்பொருளான ஆதியும், அந்தமும் இல்லா இறைவனிடமிருந்தே பிறக்கின்றன என்பதும், மீண்டும் அந்த இறைவனிடமே மீளப் போகின்றன என்பதுமாகும். படைப்புக்கள் எல்லாம் இறைவனிடமே தஞ்சமடைகின்றன.
இறைவனின் சிருஷ்டியைப்பற்றி நோக்கும் போது உணர்வற்ற (Unconscious) egyGüGug| 2 GooTiG)| LDIš16)U (Sub-Conscious) gLü பொருள்களையும், தாவர வர்க்கம், மிருக வர்க்கம் முதலான உணர்வுள்ள (Conscious) படைப்புக்களையும், தன்னுணர்வுள்ள (Self-Conscious) படைப்பாகப் படைக்கப்பட்டுள்ள மானிட வர்க்கத்தையும், இவற்றுக்கெல்லாம் மேலாக தன்னறிவுக்கும் அப்பாற்பட்ட ஞானநிலையை (Super - Conscious) உடைய, இறையனுபவமடைந்த இறை ஞானிகளையும், இறைவனில் தொடங்கி அவனிலேயே முடியும், ஒரு ஜீவித வட்டமாக அமைந்திருப்பதை, நாம் அவதானிக்கின்றோம்.
மேற்கூறிய ஜிவிதவட்ட அமைவில், ஐம்புல மலங்களை வென்று, ஆத்மீகப் பரிபூரணமடைந்த சம்பூரண மனிதன், 'ஒளலியா' 'இன்சானுல் காமில்” என்னும் நிலையில் அண்ட சராசரத்தின் நுண்மாதிரிப் படிவமாகி (Microcosm reflecting the macrocosm) இறைவனின் தாத்பரியங்களை, தன் ஆத்மா மூலமாகப் பிரதிபலிக்கின்றான்.
புத்த மதத்தில் மனித குணாதிசயங்களற்ற, ஓர் இறைவனைப் பற்றிக் குறிப்பிடாத போதும், அசைவு, காலம், நேரத்துக்கு அப்பாற்பட்ட, பிரபஞ்சத்திற்கு அடிப்படையான அல்லது காரணியான, ஒரு பரம்பொருள் இருக்கின்றது என்னும் உண்மையை அம்மதம் ஏற்றுக் கொள்கின்றது.
காலம், நேரம், காரண கட்டுப்பாடு நிரம்பிய பிரபஞ்சத்தில் இறங்கிய இறைசக்தி, தன்னுணர்வு, ஆறறிவு படைத்த மானிட ஜன்மம் வாயிலாக, தன்னைத்தானே அறிய ஏகாந்த நிலைக்கு ஏறும் மர்மத்தை, ஜலாலுத்தீன்ரூமி என்னும் பாரசீக ஞானி, ஓர் அழகான தத்துவக் கவி மூலம் வர்ணிக்கின்றார். அந்தக் கவிதையின் சாரம் பின்வருமாறு:-
உலோகமாய் இறந்தேன், தாவரமாய்ப் பிறந்தேன் தாவரமாய் இறந்தேன், மிருகமாய் பிறந்தேன் மிருகமாய் இறந்தேன், மனிதனாய்ப் பிறந்தேன்

3
பயமில்லை பயமில்லை இறப்பினால் குறைவில்லை மனிதனாய் இறப்பேன், றுாஹானியாய் மிதப்பேன் அதனையும் கடப்பேன், கடந்துகொண்டே போவேன் ஏன்? அவனன்றி எல்லாம் நிலையற்றதே ஆத்மீகப் பிறவியிலும் இறப்பேன் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஏகாந்த நிலையில் பிறப்பேன் ஏன்?
(திருக்குர்ஆன் கூறுவதுபோல்) 'நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்கள்,
நிச்சயமாக அவனிடமே மீள வேண்டியவர்கள்."
பரம் பொருளாகிய சிருஷ்டிகர்த்தாவான இறைவனுக்கும், சிருஷ்டிக்கப்பட்ட ஜீவாத்மாவான சிருஷ்டிகளுக்கும், இடையேயுள்ள உறவைப் பற்றி, பற்பல தத்துவக் கருத்துக்கள் வேதாகமங்களிலும், தத்துவ சாஸ்த்திரங்களிலும் நிறையக் கிடக்கின்றன. இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறும் வேதங்கள், இவ்வுலகம் இறைவனால் படைக்கப்பட்ட ஒர் அநித்தியமான வஸ்து என்று கூறுகின்றன.
இறைஞான தத்துவங்கள், இந்தக் கருத்தை தத்துவ ரீதியாக இறைவன்தான் பிரபஞ்சத்தில் வியாபிக்கின்றான், என்றும் கூறுகின்றன. அதாவது பிரபஞ்சத்துக்கும் இறைவனுக்குமிடையில் ஒரு பிரிக்க முடியாத உறவு இருக்கின்றதென்பதே அவர்களின் வாதமாகும். இறையருளுடன் இரண்டறக் கலந்துள்ள ஞானிகள் கூறுவதென்னவென்றால் 'இறைவனன்றி மற்றெல்லாம் மாயையே இந்தக் கூற்றின்படி இறைவனே பரம்பொருள், மற்றவை யாவும், ஒரு பொருளின் நிழலுக்குச் சமமானது. அவைகளெல்லாம் வெறும் தோற்றங்களே. இக்கருத்தை இப்னு அறபி (ரஹ்) என்னும் ஞானி பின்வருமாறு கூறுகின்றார்.
இறைவன் தனது கற்பனையில், தான் விரும்பிய சிருஷ்டியை 'ஆகுக' என்றவுடன் அதன் நாமம், ரூபம், குணங்கள் சத்து எல்லாம் அடங்கக்கூடிய ஒரு வஸ்துவாக உண்டாகின்றது. அப்படைப்புக்கு, முன் சிருஷ்டிகளெல்லாம், இறைவனின் சிந்தனை மயமாக இருந்தன. ஜடப் பொருளிலிருந்து உயிரினங்களாக மாறும் படிமுறை வளர்ச்சி (Evolution) எனப்படும் விஞ்ஞானக் கூற்றை, வேதங்கள் - இறைசிந்தனையில் இருக்கும் கருத்துக்களே பிரபஞ்ச வஸ்துக்களாக உண்டாகின்றன எனக் கூறுகின்றன.
* மேற்கூறிய கவிதையில் ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) கூறும் தத்துவக் கருத்து விஞ்ஞானத்தில் பிரபல்யமாகியிருக்கும் பரிணாமவாதம் (Evolution) எனக் கருத்துக் கொள்ள முடியாது. இது இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன சக்தியின் நானாவித படித்தரங்களாகும்.

Page 12
4
இறையனுபவம் அடைந்த ஞானிகள் சில உண்மைகளை மானிட வர்க்கத்தின் ஆத்மீக வளர்ச்சிக்காகப் போதிக்கிறார்கள். இறையனுபவமென்பது அப்போதனைகளைக் கையாண்டு அயராது தேடும் அடியார்களுக்குக் கிடைக்கும் ஒரு சன்மானமாகும். ஞானிகளின் கூற்றுக்களடங்கிய இலக்கியங்கள், இந்த இறையனுபவத்திற்கு நிச்சயமான ஒரு சான்றாகும். அறிஞர்கள் சிலர், இறையனுபவத்தைப் பற்றி பற்பல வருணனைகள் இருந்தபோதும், சில அடிப்படைக் கருத்துக்கள் பொதுவாக இவ்வருணனைகளில் இருக்கின்றன எனக் கூறுகின்றார்கள். இறையனுபவத்தைக் கூறும் இறைஞான இலக்கியங்களில் பின்வரும் முக்கியமான சில அம்சங்கள் பொருந்தி இருக்கின்றன.
எல்லாம் ஒன்றே என்ற உணர்வு நிலை.
எல்லா உயிரினங்களிலும் அவைகளின் உயிருக்கு உயிரான ஒரு சக்தியாக இயங்கவைக்கும் பரம்பொருள் உண்டு.
இறைவனே உண்மை மற்றவைகளெல்லாம் அநித்தியமானது.
இறையருள் உணர்வு நிலையில் மர்மமான சாந்தி நிலையை உணர்வது.
எல்லாச் சிருஷ்டிகளையும் ஒரு புனிதமான நிலையில் அவதானிப்பது.
முரணான உண்மைகளில் ஒற்றுமை காண்பது. வசனங்களால் வருணிக்க முடியாத அனுபவத்தையும், ஏகாந்த உணர்வு எனும் ஒருமை நிலையையும் அடைவது.
அந்த ஏகாந்தத்தில் எல்லா வஸ்துக்களும் ஒரு ரீதியில் அடங்கியுமிருக்கும், இன்னொரு ரீதியில் வெறுமை யாகவுமிருக்கும். (உ-ம். காரிருளில் பொருள்களெல்லாம் மறைந்திருக்கும். இன்னொரு ரீதியில் அவைகளெல்லாம் நிரம்பியிருக்கும்.)
காலம் இடம் என்னும் வரையறைகள் ஏகாந்த நோக்கில் உண்மையற்றவை எனும் உணர்ச்சி. மனம் வாக்குக்கு அடங்காத தத்துவ ரூபமான உணர்வு நிலை.
மேற்கூறிய இறையனுபவத்தைக் கூறும் இறைஞான இலக்கியங்களை ஆராய்ச்சி செய்யும் தத்துவ ஞானிகள் சிலர், இவ்விறை அனுபவங்களில் ஒருமைக் கருத்துக்கள் ஒன்றுமில்லை என்று வாதாடுகின்றார்கள். உதாரணமாக, இறைவனே ஏசுவாகவும், தன் புத்திரனாகவும் பிறந்தார் என்னும் கூற்று
ܬ ܢ
i

5
இஸ்லாமியக் கோட்பாட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் கிறிஸ்துவ பைபிலுக்கும் இஸ்லாம் கூறும் திருக்குர் ஆனுக்கும் முரண்பாடு தோன்றுகின்றது. மேலும் யூத மதம்கூட கிறிஸ்தவக் கூற்றை நிராகரிக்கின்றது. இன்னுமொரு கருத்து வேறுபாடு யாதெனில் இந்து மதத்தில் கூறப்படும் ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணையும் மோட்ச நிலை, கிறிஸ்து நாதர், பரம பிதாவோடு மனிதன் சேரும் ஒன்றிய நிலைக்கு முரணாகின்றது. புத்த ஞானிகள் இறைவனைப் பற்றியோ, பிரமனைப் பற்றியோ, பரமாத்மாவைப் பற்றியோ பேசவில்லை. அவர்கள் வியாக்கியானங்களில் ஜீவாத்மாவுக்கோ அல்லது நிலையாயிருக்கும் மாறுபடாத ஆத்மாவுக்கோ இடமில்லை. மேலும் இஸ்லாமிய ஞானிகள் கூறும் ஃபனாபில்லாஹ் (Fanat Allah) என்னும் ஆத்மீக நிலை புத்தர்கள் கூறும் நிர்வாணம் என்பதற்கு வேறாயிருக்கிறது. ஏனென்றால் சூஃபியாக்கள் கூறும் 'ஃபனா (Fana) என்னும் நிலையில் ஒரு ஞானியின் றுாஹானது (ஆத்மா), மாறுவது மட்டுமின்றி 'பகா (Baqa) எனும் நிரந்தர நிலையையும் அடைகின்றது. புத்தர் கூறும் நிர்வாண நிலையில், அப்படியோர் நித்தியமான புதுநிலை அடைவதை நாம் காணுவதில்லை.
மேற்கூறிய கூற்றுக்களை அவதானிக்கும் போது, பல மதங்களின் கருத்தொற்றுமையைப் பற்றி, திட்டவட்டமான தீர்ப்பைச் சொல்ல முடியாத நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு கூற்றிலும் ஒரளவு உண்மை இருக்கவே செய்கின்றது. மேலும் ஒவ்வொரு கூற்றும், மனம், வாக்கு, கற்பனை, காலம், நேரம், வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட மகத்தான பரம்பொருளின் அம்சத்தை வேறு வேறாக்கி வியாக்கியானஞ் செய்கின்றது. இக்கூற்றுக்களை ஆழ்ந்து சிந்தனை செய்தால் வேறோர் அபிப்பிராயமும் வெளிப்படையாகின்றது.
இறையனுபவம் ஒன்றாயிருந்த போதும், இறையனு பவத்தைக் கூறும் வருணனைகள் வெவ்வேறாயிருக்கலாம். ஏனெனில் இறைஞானிகள், வார்த்தைகளுக்கும், வசனங்களுக்கும் அப்பாற்பட்ட ஓர் அனுபவத்தை வெளிப்படுத்தவோ அல்லது தெளிவு படுத்தவோ முயற்சிக்கின்றனர். இதனால், இறையனுபவத்தில் ஒருமை இருந்தபோதிலும் வருணனைகளில் வேற்றுமை காண்பது இயற்கை என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகின்றார்கள். இவ்விஷயத்தில் புத்த மதத்தில் முக்கியமான ஓர் உதாரணத்தை அவதானிக்கலாம். இம்மதம் இறைவன் அல்லது கடவுள் இல்லை என்று சொன்ன போதிலும், மனித குணாதிசயங்களோ, மனித சார்போ அற்ற, காலம், நேரம், அசைவு, மாற்றம், காரணிகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு

Page 13
6
பரம்பொருள் இருக்கிறதெனும் உண்மையை 'உதான' (Udana) என்னும் நூல் கூறுகின்றது.
இவ்விடயத்தில் வார்த்தைகளும், அவைகளின் கருத்துக்களும் விசேட முக்கியத்துவம் அடைகின்றன. இறைவன் என்றால் என்ன? பரம்பொருள் என்றால் என்ன? ஆத்மா என்றால் என்ன? மோட்சம் என்றால் என்ன? இவைகளெல்லாம் சாதாரண மானிட வாழ்க்கை சம்பந்தப்பட்ட, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட, விடயங்களைக் குறிப்பிடுகின்றன. இதனால் பல கருத்துக்களை சில வார்த்தைகளாலும், சில கருத்துக்களை பல வார்த்தைகளாலும், வார்த்தைகளேயற்ற சப்தங்களாலும், கவிதைகளாலும், காவியங்களாலும், இசையாலும், உருவகங்களாலும், இறைஞானிகளின் ரூபம் என்பவற்றுக்கு அப்பாற்பட்ட, அனுபவரீதியாக உணர்ந்த ஒரு மகத்தான உண்மையை மனித வர்க்கத்துக்கு போதனைகளாக வெளியாக்க எத்தனித்துள்ளார்கள். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பல மதங்களின் கருத்து வேற்றுமைகளில், சில முக்கியமான ஒற்றுமைகளையும் காணலாம்.
இறைஞானத்தைச் சிந்திக்கும் பொழுது இன்னுமோர் முக்கியமான அம்சம் வெளியாகின்றது. இறைஞானத்திலும் கூட, அனுபவ வேற்றுமை இருக்கவே செய்கின்றது. இவ்விடயத்தை இஸ்லாமிய தத்துவஞானி ஒருவர், பின்வரும் அழகான ஓர் உவமை மூலம் விளக்குகின்றார்.
சில வண்டுகள் மெழுகுத் திரியில் ஜொலிக்கும் நெருப்பு எப்படியாக இருக்கும் என்று கற்பனை செய்தன. தூர இருந்து பார்த்த ஒரு வண்டு, அங்கே தென்படும் நெருப்பு அழகான வெளிச்சமே என்று சொன்னது. இன்னொரு வண்டு தைரியமாக நெருப்பை அணுகி, இது வெளிச்சம் மட்டுமல்ல உஷ்ணமாகவும் இருக்கிறது என்று சொன்னது. இவ்விரு கூற்றுக்களிலும் அதிருப்தியான மூன்றாம் வண்டு அந்த நெருப்பினுள்ளே ஊடுருவிச் சென்றது. அப்படிச் சென்றதும் அது நெருப்பாக மாறிவிட்டது.
ஆத்ம ஞானத்திலும் இதேபோன்று ஏகாந்த நிலையை அடைந்தபோது அறிவது யார், அறிவதென்ன என்ற பாகுபாடுகளைக் கூற முடியாது. மேற்கூறிய உவமை இன்னுமொரு விடயத்தையும் தெளிவாக்குகின்றது. அதாவது, ஓர் அனுபவத்தை பல வருணனைகளால் வெளிப்படுத்தலாம் என்பதாகும். மூன்று வண்டுகள் ஓர் அனுபவத்தை அடைந்த போதும் மூன்று விதமான உண்மைகளை - அறிக்கைகளை வெளிப்படுத்தின

தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய தத்துவக் கொள்கைகள் என்பது இந்நூலின் முக்கியமான விடயமாகும்.
இக்கொள்கைகள் ஆரம்பத்தில் திருக்குர்ஆனில் கூறப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் கிரந்தங்களில் மேன்மையடைந்து, பல நூற்றாண்டுகளின் பின்னர், ஆத்மீக முன்னேற்றத்தில் மகத்தான நிலையை அடைந்த கீழ்க் கூறப்பட்ட ஒலிமார்கள் என்பவர்களினால் எழுதப்பட்ட மெய்ஞ்ஞான நூல்களின் மூலம் விருத்தியடைந்தன. இவ்வரிசையில் ஹஸன் அல்- பஸரி (ரஹ்) (110/728) அவர்களாலும், றாபியா அல் அதவிய்யா (ரஹ்) (185/801) அவர்களாலும், அபூயஸீத் தைஃபூர் அல்-பிஸ்தாமி (ரஹ்) (261/875) அவர்களாலும், ஹசைன் பின்-மன்சூர் அல் - ஹல்லாஜ் (ரஹ்) (309/922) அவர்களாலும், அபுல்காஸிம் அல்- குஷைரி (ரஹ்) (465/1074) அவர்களாலும், அபூஹாமித் அல்-கஸ்ஸாலி (ரஹ்) (505/1111) அவர்களாலும், முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) (561/1166) அவர்களாலும், பரீத் துத்-தீன் அத்தார் (ரஹ்) (626/1229) அவர்களாலும் முகியித்தீன் இப்னு அல்-அறபி (ரஹ்) (638/1240) அவர்களாலும், ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) (672/1273) அவர்களாலும், அப்துல் கரீம் pL (ரஹ்) (832/1428) அவர்களாலும், ஹாஜா பஹாஉத்தீன் முகம்மத் (ரஹ்) (இறப்பு கி.பி. 1088) அவர்களாலும், அபுமத்யன் (ரஹ்) (பிறப்பு கி.பி. 1197) அவர்களாலும், அலிஷாதுலி (ரஹ்) அவர்களாலும், அப்துல் சத்தார் (ரஹ்) (கி.பி.1415) அவர்களாலும், அஹ்மத் கபீர் ரிஃபாயீ (ரஹ்) (கி.பி.1175) அவர்களாலும், ஹாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி (ரஹ்) அவர்களாலும் மற்றும் பல சூஃபி ஞானிகளாலும் ஆக்கப்பட்ட மெய்ஞ்ஞான இலக்கியங்களே, இஸ்லாமியத் தத்துவக் கருத்துக்களுக்கு மூலாதாரமாக பிற்காலத்தில் விளங்கின.
காலக் கிரமத்தில் தீனுல் இஸ்லாம் இந்திய உபகண்டத்தில் பரவியபோது, மேற்கூறிய மெய்ஞ்ஞானிகளின் தத்துவக் கொள்கைகளும், அவர்கள் அடைந்த ஆத்மீக அனுபவங்களும், மேலும் பிரபலமடைந்து, கீழைத்தேய இந்திய உபகண்டத்தின் கலாசாரப் பரப்பில் அதன் செல்வாக்கைப் பதித்தது. சூஃபித்துவக் கொள்கைகளும், அவற்றின் மரபுகளும் விருத்தியடைவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்திய மண்ணில் பிறந்த இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள், தங்களுடைய ஆத்மீக அனுபவங்களையும், அவைகளைச் சார்ந்த கருத்துக்களையும் இந்திய மொழிகளில் ஏற்கனவே காணப்பட்ட கவியுருவங்கள், வசன நடைகள் மூலமாக, புது ஆக்கங்களைப் படைத்தார்கள். உருது, பஞ்சாபி, வங்காளம், தமிழ் போன்ற முக்கியமான இந்திய மொழிகளில், சூஃபித்துவ நெறி நூல்களை அவர்கள் எழுதினார்கள்.
இலக்கியங்கள், ஞானிகளால் பஸ்தி (ரஹ்)

Page 14
8
சென்ற 7-ஆம், 8-ஆம் நூற்றாண்டுகளில் நூற்றுக்குமதிகமான பிரபல்யம் வாய்ந்த ஆத்ம ஞானிகள், தென் இந்தியாவில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. அவர்கள் அனைவரும் நூல்கள் எழுதவில்லை. இவர்களில் சிலரே இலக்கியத் தரம் நிறைந்த தத்துவ ஞான ஆக்கங்களை பிற்காலத்தவர்களுக்கு எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள். அத்தத்துவ ஞான நூல்களை அடிப்படையாக வைத்தே இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
அரபி, பார்ஸி முதலான மொழிகளில் முன்னையவர்கள் எழுதிய மெய்ஞ்ஞானக் கருத்துக்களை, இந்திய சூஃபி ஞானிகள் மிகுந்த வாக்கு வல்லமையுடன், தமிழ்ப் பாஷையில் இலக்கிய அந்தஸ்துடைய ஞானக் கருவூலமாக ஆக்கியும், புதுக் கருத்துக்களை உண்டு பண்ணியும் வியாக்கியானஞ் செய்தார்கள். மேற்கூறிய தமிழகத்து சூஃபி ஞானிகளில் மிகப் பிரபல்யமடைந்தவர்களின் வரிசையில், கோட்டாறு ஞானியார் (ரஹ்) அவர்களும், தக்கலை பீர் முஹம்மது ஸாஹிப் (ரஹ்) அவர்களும், குணங்குடி மஸ்தான் ஸாஹிப் (ரஹ்) அவர்களும், மச்ச ரேகைச் சித்தன் என்னும் சையிது ஐதுருஸ் சையிது அப்துல் வாரிது ஆலிம் மெளலானா (ரஹ்) அவர்களும், இன்னும், பிற சூஃபி ஞானிகளும், தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமிய தத்துவஞானம் என்னும் இந்நூலினை அணிசெய்து நிற்கிறார்கள்.
காலக்கிரமத்தில் லிபி அறபாகவும், ஒலி தமிழாகவுமுள்ள அரபுத் தமிழிலும், சூஃபித்துவக் கொள்கைகளை விளக்கும் நூல்கள் பல எழுதப்பட்டன. இதன் மூலம் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் அரபுத் தமிழ் (Dialect) என்னும் பாஷைப்பிரிவும் உண்டு பண்ணப்பட்டது. அரபுத் தமிழில் அரபு, பார்ஸி, உர்து வார்த்தைகள் ஏராளமாகக் காணப்பட்டன. ஆனால் காலக்கிரமத்தில், சூஃபி ஞானதத்துவக் கொள்கைகள், பிறமொழிச் சொற்களின் கலப்பு மிகக் குறைந்த அளவில் இடம்பெறும் வண்ணம், சுத்தச் செந்தமிழில் எழுதப்பட்டன. இதற்கு உதாரணமாக மச்ச ரேகைச் சித்தர், இலக்கிய ஞானம் மிகுந்த செந்தமிழில் தம் சூஃபிக் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்நூலின் இறுதியில் சூஃபிஞான இலக்கியத்தின் அச்சுவாகனம் ஏற்றப்பட்டதும், அவ்வாறு பதிக்கப்படாததுமான சில நூல்களையும் பற்றிய, விபரப் பட்டியலை இணைத்துள்ளேன். இந்நூலின் முதலாம் அத்தியாயத்தில் சூஃபிஞானிகளின் வாழ்க்கை விபரங்களையும் சுருக்கமாகக் கூறியிருக்கிறேன்.
 

9
பல தரப்பட்ட சமய தத்துவ ஞானங்களுக்கும், இந்நூல் ஒரு பங்களிப்பாக இருக்க வேண்டும் என்னும் நோக்குடனே இதனை எழுதினேன். இந்நூல் எழுதுவதற்குக் காரணமான மூன்று முக்கிய நோக்கங்களையும் கீழ்க்குறிப்பிட விரும்புகிறேன்.
1. சூஃபித்துவத்தின் வரலாற்றை, திருக்குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் இருந்தும், ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹதீஸ்களின் மூலமும், இஸ்லாமிய வரலாற்றில் பிரபல்யமடைந்த மகோன்னத முஸ்லிம் இறைஞானிகளின் மெய்ஞ்ஞான நூல்களின் மூலமாகவும், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக விருத்தியடைந்த சூஃபித்துவக் கொள்கையை இந்நூலின்கண் சுருக்கமாகக் கூறியுள்ளேன். இவ்விடயத்தில் அன்னவர்களின் கொள்கைகளை முடிந்த அளவில் அன்னார் வார்த்தைகள் மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறேன். இம்முறையை நிறுவக் காரணம், இங்கே குறிப்பிடும் தத்துவ ஞானக் கொள்கைகளின் ஆதாரத்தைப் பற்றி, ஜயமோ, சந்தேகமோ இருக்கக் கூடாதென்பதற்காகவாகும்.
(2) அத்தியாயம் இரண்டிலிருந்து ஐந்து வரையும் தமிழ்ப்பாஷையில் காணப்படும் சூஃபித்துவக் கொள்கைக்கு அடிப்படையான, பதிப்பிக்கப்பட்டதும் பதிப்பிக்கப் படாததுமான மூல இலக்கியங்களின் நூல் பட்டியலைச் சுருக்கமாகத் தொகுத்துக் காட்டியுள்ளேன்.
இவ்வண்ணம் கீழ்க்காணும் அடிப்படையில் ஆறு தலைப்பின்கீழ் இந்நூலின் அடைவைத் தொகுத்துள்ளேன்.
அத்தியாயம்- இஸ்லாத்தில் சூஃபித்துவ இறைஞானம். அத்தியாயம்-I பலதரப்பட்ட இருப்பு நிலைகளில் இறைவன் வியாபித்தல்.
அத்தியாயம்-II இறைவன் சிருஷ்டிகளில் வியாபிக்கும் நிலையும், அந்நிலைக்கு அப்பாற்பட்ட ஏகத்துவ நிலையும்.
அத்தியாயம்-IV பரம்பொருளைச் சிந்திக்கும் இலக்கிய உருவகங்களும் குறியீடுகளும்.
அத்தியாயம்-V ஆத்மீக முன்னேற்றப் பாதையும் தன்னைத் தானறியும் மெய்ஞ்ஞானமும்.
அத்தியாயம்-V இறை அனுபவமும் இறைஞானமும்.
மேற்கூறிய ஒவ்வொரு அத்தியாயமும், எவ்வாறு சூஃபித்துவக் கொள்கையின் வெவ்வேறு அம்சங்களை,

Page 15
1 Ο
தென்னிந்திய கலாசாரச் சார்புள்ள தமிழ் இலக்கியப் படைப்புக்கள் மூலம் விமரிசையாக்கின என்பதைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றது.
சூஃபித்துவக் கவிகளை விமர்சிக்கும் போது குர்ஆனிலும் ஹதீஸிலும் மட்டுமல்லாமல், கடந்தகால அராபிய, பாரசீக, சூஃபிஞான இலக்கிய நூல்களில் இருந்து சூஃபித்துவ ஒருமைப்பாடுள்ள கருத்துக்களையும், கொள்கைகளையும், அன்றிலிருந்து இன்றுவரையுள்ள அதன் தொடர்ச்சியையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
இவ்வாறு சூஃபித்துவ மெய்ஞ்ஞானக் கருத்துக்களையும், ஆரம்பமிருந்து அதன் தொடர்ச்சியான வரலாற்றையும் எழுதுவதற்குரிய காரணங்கள் பல. ஏனென்றால் மிகவும் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்களும் கூட, தமிழ் இலக்கியத்தில் சூஃபித்துவ இலக்கியமென்பது பிறமத கலாசார அடிப்படையில் உண்டானதென்று கூறுவது சகஜமாகிவிட்டது. சிலர், மாணிக்க வாசகர், தாயுமான சுவாமிகள் என்போரைப் போன்ற இந்து ஞானிகளின் இலக்கியப் படைப்புகளில் இருந்தே இஸ்லாமிய ஞானிகளின் ஆக்கங்கள் உண்டானதென்று கூறுவர். இன்னுஞ் சிலர் வேதாந்த நூல்களில் உள்ள சில கருத்துக்களை, இஸ்லாமியப் புலவர்கள் இரவல் வாங்கி, தங்களுடையதென்று சூஃபிக் கவிகளாகப் பாடினார்கள் என்று கூறுவர். இவ்விதமான தப்பபிப்பிராயங்கள் ஒருபுறமிருக்க, இஸ்லாமியப் பழமைவாதிகள் சிலர், மேற்கூறிய தப்பபிப்பிராயங்களைக் காட்டி தென்னிந்திய சூஃபிகளின் இலக்கியக் கருத்துக்கள், உண்மையான இஸ்லாம் அல்ல, இணை வைத்தல் அல்லது ஷிர்க்குகள் என்று நிந்திப்பர்.
இக்குற்றச் சாட்டுக்களை மறுத்து, தமிழ் இலக்கிய சூஃபித்துவம் உண்மையான இஸ்லாத்தின் சாயலில் உண்டான தத்துவப் பாரம்பரியம் என்பதை நிரூபிப்பதே இந்நூலின் நோக்கம். இதற்காகவே அரபு, பார்ஸி தத்துவ நூல்களில் உள்ள, முக்கியமான அம்சங்களை இந்நூலில் உள்ள வியாக்கியானங்களில் உட்புகுத்தியுள்ளேன். இலக்கிய உருவகங்களின் ஒருமைப்பாட்டை அடிப்படையாக வைத்து ஒரு மத சார்புள்ள மெய்ஞ்ஞானி, வேறுமத சார்புள்ள மெய்ஞ்ஞானியிடம், தம் கருத்துக்களை இரவல் வாங்கினார் என்று சொல்வது தவறு. ஏனென்றால் இறைஞான இறை அனுபவ ஒருமைப்பாடு இலக்கிய ஆக்கங்களிலும் அறியக்கிடக்கின்றது. ஒரே அனுபவத்தைக் கண்ட, வெவ்வேறு மத ஞானிகள், தாம் கண்ட உண்மையை ஒரே இலக்கிய பருவகங்களினால் அல்லது ஒப்பிடக்கூடிய கவிகளாலோ,

11
வசனங்களாலோ வெளிப்படுத்தலாம். பல மதங்களைச் சேர்ந்த ஞானிகள், ஒரே பாஷையில் தம் அனுபவங்களை வெளியிடும்போது, ஒருமைப்பாடுள்ள உருவகங்களையும், வசனங்களையும், காவியங்களையும், வெண்பாக்களையும் LIT67 il g5 95ggb. GLUT5riuti aSpi (Professor T.O.Ling) '6)55T6T இலக்கிய நூல்களில் இந்து முஸ்லிம் கலாசார ஒற்றுமை’ என்பது பற்றி இவ்வாறு கூறுகின்றார்.
'பல நூற்றாண்டுகளுக்கு முன், இலக்கியங்களைப் படைத்த முஸ்லிம் புலவர்கள், வங்காளத்திலுள்ள வைஷ்ணவ, பக்தி, இலக்கிய உருவகங்களை, தம் கருத்துக்களை வெளியாக்க அடிக்கடி பாவித்தனர். இவ்வண்ணம் இந்து இலக்கிய உருவங்களைக் கையாள்வதினால், முஸ்லிம் புலவர்கள் இஸ்லாமிய மரபில் இருந்து வேறுபடவில்லை. வங்காள கலாசாரப் பண்புகளைத் தழுவி தம் கருத்துக்களை விமர்சனம் செய்த காரணத்தால் இஸ்லாம் மிகவும் துரிதமாக வங்காளத்தில் பரவியது."
இதேபோன்று முற்காலத்திலிருந்து தற்காலம் வரை
தொடர்ந்து வந்த தாராள மனப்பான்மை நிறைந்த தமிழ்நாட்டுக்
கலாசாரத்திலும், பற்பல மதங்கள் ஒன்றுடனொன்று மோதாமல் சாந்தியுடனும் சமாதானத்துடனும் ஒன்றித்து இயங்கி வந்தன.* 3. இந்நூலில் காணப்படும் சூஃபித்துவக் கொள்கைகள், மனித வர்க்கத்திற்குப் பொதுவான பற்பல கலாசாரங்களில் நிரம்பிக் கிடக்கும் ஆத்மீக அனுபவங்களுடன் ஒற்றுமைப்பட்டிருப்பதால், பற்பல தத்துவக் கேள்விகள், பலவிடங்களில் ஆராயப்பட்டிருக்கின்றன. பரம்பொருளின் உண்மையான தன்மையென்ன? பிரபஞ்சம் எப்படி உண்டானது? துக்கமும் கஷ்டமும் எல்லா உயிர்களிலும் ஏன் நிரம்பிக் கிடக்கின்றன. இறையனுபவம், ஓர் உண்மையான அனுபவமா அல்லது கனவு போன்ற ஒரு தோற்றமா, மனிதப் பிறவியின் கடைசி இலட்சியமென்ன என்னும்
★ "பொற்சைவ வைணவமும் புத்தரருள் நல்லுரையும்
நற்சமண கிறித்தவமும் நபிகள்பிரான் நல்லுரையும் பற்பலவாயிருந்திடினும் பாரதத்தின் பண்பேற்றுக் கற்போரைப் பிடித்திழுத்துக் கணிதமிழின் சுவையூட்டி நாயன்மார் நாவமுதும் நல்லாழ்வார் பாசுரமும் மேயபுகழ் மேகலையும் மேம்படு சிந்தாமணியும் மாமுனி தேம்பாவணியும் மாண்பேறு சீறாவும் காமுறவே எல்லோரும் கண்ணாரக் கண்டோதும் காவியமாய் இந்நாட்டில் கதிர்வீசக் காண்கின்றோம்." (இறையருட் கவிமணி - பேராசிரியர். கா.அப்துல்கழர்.)

Page 16
12
பாரம்பரிய தத்துவக் கேள்விகள் பல அத்தியாயங்களில் விமர்சிக்கப் பட்டிருக்கின்றன. தத்துவ ஞானமும், மத அனுபவமும் வெவ்வேறு விஷயங்களானாலும் ஒரு குறிப்பிட்ட அனுபவம் உண்மையா? அல்லது பொய்யா? என்னும் விஷயத்தை தத்துவ ஞானக் கோணத்திலிருந்து பரிசீலனை செய்யலாம். ஆராய்ச்சியாளர்கள் சில தத்துவக் கூற்றுக்களை, மேற்கூறிய பரிசீலனை மூலம் நிரூபிக்கலாம் என்று சொல்லுவார்கள்.
அதே நேரத்தில் இறையனுபவமும், இறைஞானமும் ஒரு தனிப்பட்ட நபர் அனுபவிக்கக் கூடிய உணர்விலேயன்றி, வேறொரு வெளிப்படை முறையாலும் நிரூபிக்க முடியாதென்பதே அறிஞர்களின் தீர்ப்பாகும். கடைசிக் கட்டத்தில், இறையனுபவமே இறையுண்மைக்கு மறுக்க முடியாத சான்றாகும்.
சூஃபித்துவம், திருக்குர்ஆனில் கூறப்படும் ஆத்மீக தாராள மனப்பான்மையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.
'அல்லாஹ்வையும், எங்களளவில் இறக்கப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவருடைய) சந்ததிகள்
ஆகியோரின்பால் இறக்கப்பட்டவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டவற்றையும், இன்னும் (மற்ற) நபிமார்களுக்கு, அவர்களுடைய ரப்பிடமிருந்து கொடுக்கப்பட்டவற்றையும் நாங்கள் ஈமான் கொண்டோம்; அவர்களிலிருந்து எவருக்குமிடையில் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; நாங்கள் (அல்லாஹ்வாகிய) அவனுக்கே (முற்றிலும்) வழிபடுகிறவர்கள்’ என்று (முஃமின்களே!) நீங்கள் கூறுங்கள். (அல்-குர்ஆன் - 2:136) என்று இறைவன் ஏவுகின்றான். இதனால்தான் சூஃபித்துவம் எல்லோரையும் ஆன்ம நேயத்தால் இணைக்கின்ற இலட்சிய புரியாகவும், பற்பல இனங்களுக்கும், கலாசாரங்களுக்கும், கவர்ச்சியானதொரு தத்துவ ஞானமாகவும் திகழ்கின்றது. இக்காரணத்தால்தான் இஸ்லாத்தின் அம்சமான சில வாதங்களைவிட, சூஃபித்துவ மஅரிபாக் கொள்கைகள் வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சாதி மத பேதமற்ற சமரச அழைப்பாகவும், சகல மனிதர்களுக்கும் விடுத்த சகோதர அழைப்பாகவும் திகழ்கின்றது. உலகில் இஸ்லாம் விரைவாகப் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது என ஆராய்ச்சியாளர் கூறுவர். பேராசிரியர் லிங் (Prof T.O.Ling) இவ்வுண்மையைப் பின்வருமாறு கூறுகின்றார்.

13
'சூஃபி ஞானிகளின் ஆத்மீக குணாதிசயங்களை, திரு நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் குணாதிசயங்களுக்கு ஒப்பிடலாம். திரு நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் நோக்கம், மனித சமுதாயத்தை ஓர் இனமாகக் கருதுவதாய் இருந்தது. உண்மையான இறைஞானம், மனித வர்க்கத்திற்குப் பொதுவான பரம்பொருளைத் தழுவியே இருக்க வேண்டும். ஆறாம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ட, உலகளாவிய பரம்பொருளின் பிரசன்னத்தையே பிற்காலத்து இறைஞானிகள், தம் இறை அனுபவத்தின் மூலம் நேரில் கண்டனர். மேற்கூறிய இறையனுபவம், மனித சமுதாயத்திற்குரிய பொதுவுடைமையாகும். பரம்பொருள் என்றும் மாறுவதில்லை. இறைஞானம் சூஃபித்துவ மெய்ஞ்ஞானத்திற்கு மிக நெருங்கி, இன, மத, கலாசார பாகுபாடின்றி, மனித சமுதாயத்திற்குப் பொதுவான மெய்ஞ்ஞானமாகத் திகழ்கின்றது. இஞ்ஞானம் பாகுபாடுகள் நிறைந்த இனவாதம் எனும் குகைகளில் இருந்து, மனித வர்க்கத்தை சகோதரத்துவம் என்னும் பிணைப்பினால் ஒன்றுபடுத்தும் தன்மை வாய்ந்தது. மெய்ஞ்ஞானம், ஒரு தனிப்பட்ட இனத்தைத் தேர்ந்தெடுத்த உயர் இனமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை."
இன்று சூஃபித்துவம் இஸ்லாமிய உலகத்தில் மட்டுமல்ல, இஸ்லாம் அல்லாத கலாசாரங்களிலும், மகோன்னதமான ஓர் ஆத்மீக சக்தியாக விளங்குகின்றது. இதனால்தான் பற்பல பாஷைகளில் சூஃபித்துவக் கொள்கைகள், உன்னத இலக்கியங்களை உண்டாக்கியிருக்கின்றன. இந்நூல் தமிழ் இலக்கியத்தில் சூஃபித்துவம் வளர்ந்த விடயத்தை ஆராய்கின்றது.
米

Page 17
அத்தியாயம் - 1 இஸ்லாத்தில் சூஃபித்துவ இறைஞானம்
இஸ்லாமிய ஆத்மீகப் பரம்பரையில் சூஃபி என்னுஞ்சொல் இஸ்லாமிய ஆத்மீக ஞானிகளைக் குறிப்பிடுகின்றது. சூஃபித்துவம் என்பது பரம்பொருளாகிய இறைவனை அனுபவரீதியில் உணரும் மெய்ஞ்ஞானம் என விளக்கம் கூறலாம். சூஃபியாக்களை அஹ்லுல் ஹக் (Ahl-ul-Haqq) என்னும் உண்மைப் பொருளை அடைய எத்தனிக்கும் பக்தர்கள் என்றும் சொல்லலாம். பொதுவாக சூஃபித்துவம் இஸ்லாத்தின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கியதென்று அறியப்படுகின்றது. ஆனால் சூஃபியாக்கள் அதனுடைய மரபுகளும், நம்பிக்கைகளும் திருநபி (ஸல்) அவர்களிலிருந்தே உண்டானதென்று கூறுவர்.
சூஃபித்துவம் என்னுஞ் சொல்லின் வரைவிலக்கணம்:
சூஃபித்துவம் (Sufism) என்னும் வார்த்தையின் உண்மையான கருத்து என்ன? இவ்விடயம் பற்றி, பலதரப்பட்ட கருத்துகளும், வியாக்கியானங்களும் இருப்பதனால் முதலில் அல்-ஹ"ஜ்வீரி (ரஹ்) என்னும் சூஃபி ஞானியும், அறிஞரும் எழுதிய (456 - கி.பி. 1063-ஆம் ஆண்டு மரணித்தார்) கஷ்ஃபுல்-மஹ்ஜ"ப் (KashfAl-mahjub) என்னும் நூலிலிருந்து, சூஃபித்துவம் பற்றிய வியாக்கியானத்தின் சாரத்தைக் கீழே குறிப்பிடுகின்றேன்.
'சூஃபித்துவம் என்னும் சொல்லின் கருத்தை அறிஞர்கள் பலர் பலவிதமாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். இதைப்பற்றி பல நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. கம்பளி ஆடை (Jamaus Suf) அணிவதனால்தான் இறைபக்தர்களை சூஃபி என்று சிலர் கூறுவர். இன்னுஞ் சிலர், முதல் வரிசையில் (Saffi-awwal)இருந்து இறைவனைத் தொழுவதனால் சூஃபி என்னும் நாமம் பெற்றார்களென்பர். வேறு சிலர் அஸ்ஹாபிஸ் ஸ"ஃபா (Ashab-i-Suffa) என்னும் திண்ணைத் தோழர்கள் என்று கூறுவர். மற்றுஞ் சிலர், அவர்களைத்

15
தூய்மையானவர்கள் (Purity) என்பர். மேற்கூறிய ஒவ்வொரு கூற்றுக்கும், சாதகமான பற்பல வாதங்கள் இருந்த போதும், இவை ஒன்றும் 'சூஃபி என்னுஞ் சொல்லின் வரைவிலக்கணமாக அமையவில்லை. முற்காலந் தொட்டே இறை பக்தர்களையும், மெய்ஞ்ஞானிகளையும் இஸ்லாமிய சூஃபி என அழைக்கப்பட்டதை நாம் அறிவோம். ஷைகுமார்களில் ஒருவர் மன் ஸஃப்ஃபாஹ7ல் ஹ"ப்பு ஃபஹ"வ ஸாஃப், வமன் ஸஃப்ஃபாஹ"ல் ஹபீபு ஃபஹ"வ ஸல்ஃபிய்யு எனக் கூறுகின்றார். இறையன்பினால் பரிசுத்தப்படுத்தினவன், தூய்மையானவன். இறைநேசத்தில் மூழ்கி எல்லாப் பற்றுக்களையும் துறந்தவனே ஒரு சூஃபியாவான். இக்கருத்தை வார்த்தை வியாக்கியானங்களினால் எங்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சூஃபித்துவம் என்னும் இறை ஞானத்துக்கு ஒருவிதமான வர்க்கமோ, தலைப்போ இல்லை. இதனால் சூஃபித்துவம் என்றால் இதுதான் என்று நிர்ணயம் பண்ண முடியாத விஷயமாயிருக்கிறது. இவ் அனுபவத்தை இதுதான் என்று நிர்ணயிக்க, முஜானஸாத் (Mujanasat) என்னும் பொதுச்சொல் தேவையாகும். சூஃபியாக்களின் அனுபவத்தை இதுதான் என்று சொல்லக்கூடிய பொதுச் சொல்லை நாமறியோம். சஃபா' என்பது தூய்மையையும் மெய்ஞ்ஞானத்தையும் குறிப்பதாகும். இதை தஸவுஃப் (Tasawwur) என்றும் கூறுவர்."
சூஃபித்துவம் என்னும் மெய்ஞ்ஞான மரபுகளின் தொடக்கத்தைப் பற்றி, வெவ்வேறு கருத்துக்களைப் பல அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். கிறிஸ்தவ கிரேக்க, ஆரிய இந்திய கலாசாரங்கள் இஸ்லாமியக் கொள்கைகளுடனும் கலாசாரத்துடனும் கலந்த பொழுது உண்டான ஆத்மீக மரபே சூஃபிஸம் என்று சிலர் கூறுவர். இதற்குச் சான்றாக பின்வரும் கருத்தைக் கூறுவர். இஸ்லாம் பிறந்த அரேபியாவில் இருந்து பல உபகண்டங்களுக்கும் இஸ்லாம் பரவியது. அவ்வாறு பரவிய போழ்து அங்குக் காணப்பட்ட கலாசாரங்களுடன், இஸ்லாமும் கலந்ததால் உருவான ஒரு கலப்புக் கொள்கையே "சூஃபிஸம்" என்பர். ஆனால் அண்மையில் இதுபற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இக் கூற்றுக்களெல்லாம் தவறெனத் தீர்ப்புக்
* ஸஅபி என்ற சொல் 'தஸவ்வுபு' என்றதிலிருந்து வந்தது. 'தஸவ்வுபு' என்ற சொல்
'ஸபா என்ற மூலத்திலிருந்து உண்டாயிற்று. 'ஸபா என்பதற்குப் பொருள் "தூய்மை" என்பதாகும். "ஸ"ப்" என்ற கம்பளி உடையணிந்தோர்களே, உண்மையான ஸஅபி யாரெனப் புரிந்து கொள்ளுங்கள். தன்னகத்தே தன் நாயனான அல்லாஹ்வைப் பற்றியதல்லாத வேறு சிந்தனை எதுவும் எழாவண்ணம் தூய்மையுடையவனே ஸ"பியாவான்."
(பத்ஹ"ர் ரப்பானி - ஹஜ்ரத் கெளதுல் அஃலம்)

Page 18
16
கூறியிருக்கின்றனர். இப்புது ஆராய்ச்சி, சூஃபித்துவம் என்பது திருக்குர்ஆன் ஹதீஸ"களின் அடிப்படையில் உண்டான ஞானமே என நிறுவுகின்றது.
இவ்விடயம் பற்றி டைட்டஸ் பேர்க்ஹாட் (Titus Burckhardt) என்னும் அறிஞர் பின்வருமாறு கூறுகின்றார். 'ஆத்ம அனுபவ ஒருமைப்பாடுள்ள ஞானிகள், அவரவர் அனுபவங்களை வருணனை செய்யும் பொழுது அவ்வருணனைகளில் சில ஒருமைப்பாடுகள் காண்பது சகஜம். இவ்வொருமைப்பாட்டை ஆதாரமாக வைத்து அறிஞர் சிலர், ஒருவர் இன்னொருவருடைய கருத்துக்களை இரவல் வாங்கினார் எனக் கூறும் கூற்று மிகப் பிழையானதாகும். இதன் காரணம் என்னவென்றால் வெளிக்கண்ணோட்டத்தில் பார்க்கும் அறிஞர்களுக்கு உண்மையான உள்ளுணர்வின் தன்மைகளைப் புரிந்து கொள்ள முடியாத அறியாமையே எனலாம்."
2. திருக்குர்ஆனும் ஹதீஸ்களுமே
சூஃபித்துவத்தின் அத்திவாரமாகும்.
தர்க்கத்துக்கோ, ஐயத்துக்கோ அப்பாற்பட்ட திருக்குர்ஆனும், ஹதீதுகளுமே இஸ்லாமிய ஆத்மீக அறிவுக்கு, அசைக்க முடியாத நங்கூரம் போன்று விளங்குகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே சூஃபித்துவம் முளைகொண்டு விருட்சமாகின்றது. உண்மை இப்படியிருக்க, இஸ்லாம் அல்லாத பிறமதக் கொள்கைகளில் இருந்து, ஒரு சூஃபிஞானி ஏன் தன்னுடைய ஆத்மீக மரபுகளையும், நம்பிக்கைகளையும் இரவல் வாங்க வேண்டும்? பேராசிரியர் ஆர்.ஏ.நிக்கல்ஸன் இவ்விடயத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.
'ஒரு சூஃபிஞானி நிறைந்த பக்தியுடனும் முழுக் கவனத்துடனும் திருக்குர் ஆனை ஓதும் பொழுது பரிசுத்த இறை வசனங்களின் மட்டில்லாத, மறைமுகமான ஆழ்ந்த கருத்துக்கள் அவ்ஞானியின் அகக் கண்ணுக்கு ஒளியைப் போல் தாவுகின்றன. இதைத்தான் இஸ்டின்பாத் (stinbat) என்று சூஃபியாக்கள் கூறுவார்கள். இதுவோர் உள்ளுணர்வின் விமர்சனமாகும் (Intuitive deduction). பாவமன்னிப்பினால் தூய்மையாக்கப்பட்டு பக்தி ததும்பும் அகத்தினுள் மர்மமாக ஏற்படும் இறைஞானமும், அந்த இறைஞானத்தை விமரிசை பண்ண வெளியாகும் மெய்யறிவுமே என்பது இவ்வார்த்தையின் கருத்தாகும்.'
 

17
தத்துவக் கருத்துக்களும், மெய்ஞ்ஞான உண்மைகளும் நிறைந்த எத்தனையோ வசனங்கள், திருக்குர் ஆனில் பரவலாகக் காணப்படுகின்றன. இவ்வசனங்களை நன்கு ஆராய்ந்த சூஃபி ஞானிகள் இவ்வசனங்களின் அந்தரங்கக் கருத்துக்களையும் (பாத்தின் - Batin) வெளிரங்கக் கருத்துக்களையும் (ஸாஹிர் - Zahir) வெவ்வேறு படுத்தினார்கள். இறைவனால் இறக்கப்பட்ட திருவசனங்களின் அந்தரங்கக் கருத்துக்களே தஸவ்வுப் (at-tasawwuf) என்னும் இறைஞானமாகப் பிற்காலத்தில் வளர்ச்சியடைந்தது.
மானிட வாழ்க்கையின் ஆத்மீக பொருளாதாரச் சமூக அம்சங்களெல்லாம் தழுவி இறக்கப்பட்ட ஒரு கிரந்தமே திருக்குர் ஆன். இதை முழுமையாக பாகுபாடின்றி ஒதியுணர்ந்தால்தான் இஸ்லாத்தின் மகத்துவத்தை எங்களால் அறியலாம். சூஃபித்துவக் கொள்கையை தெளிவாக உணரச் செய்வதற்காக, முஸ்லிம்களின் ஆத்மீகச் சிந்தனைக்கும் தியானத்திற்கும் அடிப்படையான தத்துவக் கருத்துக்கள் நிரம்பிய திருக்குர் ஆன் வசனங்களைத் தொகுத்து எழுதியிருக்கின்றேன். ஏனென்றால் திருக்குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களுமே பிற்காலத்தில் சூஃபித்துவம் வளர உடந்தையாக இருந்தன. இத்தொகுப்புக்களை வெவ்வேறு பிரிவாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளேன்.
திருக்குர் ஆன் போதனையின் பிரகாரம், ஆதியந்தம் இல்லாப் பரம்பொருளான அல்லாஹ"தஆலாவே, எல்லா உலகங் களையும், அவைகளில் இருக்கும் எல்லா வஸ்த்துக்களையும் படைத்துக் காப்பவனாவான். அவன் எல்லாப் படைப்புகளிலும் வியாபித்து, அவைகளின்
உண்மைப் பொருளாகியும் அவைகளுக்கு அப்பாற்பட்டு ஏகாந்த தனித்துவ நிலையிலும் சதா இயங்குகின்றான்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகின்றேன்).
அனைத்துப் புகழும், அகிலங்கள் அனைத்தி(னையும் படைத்துப் பரிபக்குவப் படுத்துகி)ன் (ற)ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
(அவன்) அளவற்ற அருளாளன், மிகக் கிருபையுடையவன். (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
(யா அல்லாஹ்!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Page 19
18
எங்களை நீ நேர்வழியில் நடத்துவாயாக! எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழியில் (நடத்துவாயாக!) (அது) உன் கோபத்துக்குள்ளானோர் வழியுமல்ல, நேர்வழி தவறியோர் வழியுமல்ல." (நபியே!) நீர் கூறுவீராக; அவன் - அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை; அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை - இன்னும் அவனுக்கு ஒப்பாக எவரும் இலர்." கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; நீங்கள்
எப்பக்கம் திரும்பினாலும், அங்கு அல்லாஹ்வை முன்னோக்குதல் (கிப்லா) உண்டு. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; முற்றும் அறிந்தவன். 2:115
மேலும், 'அல்லாஹ் (தனக்கு) புதல்வனை ஏற்படுத்திக் கொண்டான்' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் கூறுவதை விட்டும்) அவன் மகாத் தூய்மையானவன், அன்றியும், வானங்களிலும் பூமியிலுமுள்ளவை அவனுக்கே உரியவை; அனைத்தும் அவனுக்கே பணிந்து வழிபடுகின்றன.
(அவன்) வானங்களையும் பூமியையும் (முன் மாதிரியின்றி) நவீனமாகப் படைத்தவன்; ஏதேனும் ஒரு கருமத்தை(ச் செய்ய) அவன் நாடினால், அவன் அதற்குக் கூறுவதெல்லாம் "குன்’ (ஆகிவிடு) என்பதுதான்; அது ஆகிவிடும்." மேலும், உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; அவன் அளவற்ற அருளாளன். மிகக் கிருபையுடையோன்.
அல்லாஹ் (எத்தகையவனென்றால்) - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் (வேறு) இல்லை; (அவன் என்றும்) உயிருள்ளவன்; (என்றும்) நிலைத்திருப்பவன்; அரிதுயிலோ (சிறு தூக்கமோ), ஆழ்ந்த நித்திரையோ அவனைப் பீடிக்கா; வானங்களிலுமுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியவை; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன்னால் உள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னால் உள்ளவற்றையும் அவன் அறிவான். அவனுடைய இல்மில் (ஞானத்தில்) இருந்து அவன் நாடியவற்றைத் தவிர (வேறு) எதனையும் அவர்கள் சூழ்ந்தறிந்து கொள்ள முடியாது; அவனுடைய

19
குர்ஸிய்யு (என்னும் அரியாசனம்) வானங்களையும் பூமியையும் 960)- 1 வளைந்து கொண்டுள்ளது; அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது - அவன் மிக உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.' (நபியே!) நீர் கூறுவீராக; அல்லாஹ சம்மர் ஆட்சிக்கு அதிபதியே! நீ நாடுகிறவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்; நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைக் கழற்றியும் விடுகிறாய்; இன்னும் நீ நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய், நீ நாடியவரை இழிவுபடுத்துகிறாய், நன்மை (தீமை)யெல்லாம் உன் கைவசமே உள்ளன - நிச்சயமாக நீ எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி உள்ளவன்.
இரவைப் பகலில் நீ நுழையச் செய்கிறாய்; பகலை இரவில் நுழையச் செய்கிறாய்; உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீ வெளிப்படுத்துகிறாய்; மேலும் நீ நாடியவருக்கு கணக்கின்றி (வாழ்க்கை வசதிகளை)க் கொடுக்கிறாய்."
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன; அவற்றை அவனைத் தவிர (வேறு எவரும்) அறிய மாட்டார். இன்னும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான்; ஒர் இலைகூட - அதனை அவன் அறியாமல் உதிர்வதில்லை - பூமியின் இருள்களிலுள்ள எந்தவிதையும், எந்தப் பசுமையானதும், எந்தக் காய்ந்ததும் (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை.
இன்னும் அவன் எத்தகையோனென்றால், இரவில் உங்களை
அவன் (நித்திரையில்) மவ்த்தா (னவர்களைப் போலா)க்குகிறான்; பகலில் நீங்கள் சம்பாதிக்கின்றவற்றையும் அவன் அறிகிறான்; பிறகு அதில் (-பகலில்) குறிப்பிடப்பட்டதவணை பூர்த்தி
செய்யப்படுவதற்காக உங்களை அவன் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீளுதல் அவன் பக்கமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான்." நிச்சயமாக அல்லாஹ்தான் விதையையும், கொட்டையையும் பிள(ந்து முளைப்பி)க்கிறவன், இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் வெளிப்படுத்துகிறான் - அவன்தான் அல்லாஹ்! எனவே (அவன் மீது நம்பிக்கை கொள்வதை விட்டும்) எவ்வாறு நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்?"

Page 20
2O
இன்னும் அவன் எத்தகையவனென்றால் வானிலிருந்து மழையை அவன் இறக்கினான்; பிறகு அதனைக் கொண்டு ஒவ்வொரு பொருளின் தாவரங்களையும் நாம் வெளியாக்கினோம். இன்னும், அதிலிருந்து பசுமையானதை நாம் வெளிப்படுத்தி, அதிலிருந்து அடுக்கடுக்கான வித்துக்களையும் நாம் வெளியாக்குகிறோம்; பேரீச்ச மரத்திலிருந்து - அதன் பாளையிலிருந்து (தாழ்ந்து) தொங்குகின்ற (பழக்) குலைகளும் உள்ளன; (இன்னும் அத்தண்ணீரின் மூலம்) திராட்சைத் தோட்டங்களையும் (தோற்றத்தில்) ஒரே மாதிரியாகவும், (சுவையில்) வெவ்வேறாகவும் உள்ள ஜைத்தூனையும், மாதுளையையும் (நாம் வெளிப்படுத்துகிறோம்); அதனுடைய பழத்தை - அது காய்த்து(ப்பின்) அதனுடைய கனியை - கவனித்துப் பாருங்கள் - நிச்சயமாக இதில் ஈமான் கொள்கின்ற சமூகத்தினருக்கு (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன." அவன்தான் உங்களுடைய ரப்பாகிய அல்லாஹ்! அவனைத் தவிர (வணக்கத்துக்குரிய வேறு) எந்த நாயனுமில்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன், எனவே,அவனையே நீங்கள் வணங்குங்கள் - அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பொறுப்பேற்கிறவன். பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனோ (எல்லாப்) பார்வைகளையும் அடைவான்; அவன் நுணுக்கமானவன்; தெளிவாகச் செய்திகளை அறிகிறவன்." இன்னும் அவன்தான் உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், இதயங்களையும் உண்டாக்கினான்; (இதற்கு) மிகக் குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். இன்னும் அவன்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். இன்னும் அவன்தான் (உயிர்கொடுத்து) வாழ வைக்கிறான். (அன்றியும்) அவனே மரணிக்கச் செய்கிறான்; இரவும், பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதேயாகும்; எனவே நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?"
அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக இருக்கின்றான்; அவனுடைய ஒளிக்கு உதாரணம்; ஒரு மாடத்தைப் போன்றதாகும்; அதில் ஒரு விளக்கு இருக்கிறது; அவ்விளக்கு ஒரு பளிங்குக் கோளத்தில் இருக்கிறது; அப்பளிங்குக் கோளம் இலங்குகின்ற நட்சத்திரத்தைப் போன்றிருக்கிறது; அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன்

21
எண்ணெயி)னால் எரிக்கப்படுகிறது; (அம்மரமானது) கிழக்கைச் சேர்ந்ததுமல்ல; மேற்கைச் சேர்ந்ததுமல்ல; நெருப்பு அதனைத் தொடாவிட்டாலும் அதனுடைய எண்ணெய் பிரகாசிக்கத் தொடங்குகிறது; (அது) ஒளியின் மீது ஒளியாகும்; தான் நாடுபவரை அல்லாஹ் தன்னுடைய ஒளியின் பக்கம் வழி நடத்துகிறான்; (இவ்வாறு) மனிதர்களுக்கு உதாரணங்களை அல்லாஹ் விபரிக்கிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் முற்றும் அறிந்தவன். சில வீடுகளில் - (அவை எத்தகையவை என்றால்) அவை உயர்த்த(ப்பட்டு, மேன்மையாக்க)ப்படவும், அவனுடைய திருப்பெயர் அதில் நினைவு கூரப்படவும் அல்லாஹ் உத்தரவு கொடுத்துள்ளான்; அவற்றில் அவனைக் காலையிலும், மாலையிலும் தஸ்பீஹ் செய்கின்றனர்.
சில மனிதர்கள் - (தஸ்பீஹ் செய்கின்றனர்;) அவர்களை - வியாபாரமோ (வாங்குவது) விற்பதோ, அல்லாஹ்வை திக்ரு செய்வதை விட்டும், தொழுகையைக் கடைப்பிடிப்பதை விட்டும், ஜகாத்துக் கொடுப்பதை விட்டும் - பராமுகமாக்காது; இன்னும் ஒருநாளை அவர்கள் பயப்படுவார்கள்; அதில் இதயங்களும், பார்வைகளும், (திடுக்கத்தால்) புரண்டு விடும். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு மிக அழகானதை அவர்களுக்குக் கூலியாக அல்லாஹ் வழங்குவதற்காகவும், இன்னும் தன்னுடைய கருணையிலிருந்து, அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்காகவும், (தஸ்பீஹ் செய்கின்றனர்) - தான் நாடியவருக்குக் கணக்கின்றி அல்லாஹ் கொடுப்பான். காபிர்கள் - அவர்களுடைய செயல்கள் வனாந்தரங்களிலுள்ள கானலைப் போன்றதாகும், தாகித்தவன் அதனைத் தண்ணீர் என்று எண்ணிக் கொள்வான்; இறுதியில் அங்கு அவன் வரும்போது அதனை (த்தான் தேடிய) எந்தப் பொருளாகவும் அவன் காணமாட்டான்; (மாறாக) அவ்விடத்தில் அல்லாஹ்வை (அவனுக்காக அல்லாஹ் ஏற்பாடு செய்கிறதை)க் காண்பான். (இவ்வாறு) அவனுக்கு அவனுடைய (வாழ்க்கைக்) கணக்கை அவன் நிறைவு செய்கிறான் - அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன் - அல்லது (காபிர்களின் செயல்களுக்கு உதாரணம்:) ஆழிய கடலிலுள்ள இருள்களைப் போன்றதாகும்; அதனை அலை மூடிக் கொள்கிறது - அதற்கு மேல் மற்றோர் அலை

Page 21
22
(இருக்கிறது); அதற்கு மேல் மேகம் (சூழ்ந்து) இருக்கிறது; இருள்களோ அவற்றில் சில, சிலவற்றின் மீது கவிழ்ந்து இருக்கின்றன; (அப்போது) தன் கையை (ப் பார்க்க) வெளியாக்கினாலும், அதை அவன் காண முடுக மாட்டான் - அல்லாஹ் யாருக்கு ஒளியை ஆக்கவில்லையோ, அவனுக்கு எந்த ஒளியும் கிடையாது.
நிச்சயமாக அல்லாஹ் - அவனை வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், இறக்கைகளை விரித்த நிலையில் (பறக்கின்ற) பறவைகளும், தஸ்பீஹ் செய்கின்றன என்பதை (நபியே) நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் - அதன் தொழுகையையும், அதன் தஸ்பீஹையும் திட்டமாக அறிந்துள்ளன - அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை முற்றும் அறிந்தவன்.
(அன்றியும்) வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வின் பக்கமே (அனைத்தின்) மீளுதலும் இருக்கிறது."
பரம்பொருளான இறைவன் (அல்லாஹ்) இருக்கிறான் என்பதற்கு இப்பிரபஞ்சத்தில் நிராகரிக்க முடியாத சான்றுகள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் - அவனை வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், இறக்கைகளை விரித்த நிலையில் (பறக்கின்ற) பறவைகளும், தஸ்பீஹ் செய்கின்றன என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் - அதன் தொழுகையையும், அதன் தஸ்பீஹையும் திட்டமாக அறிந்துள்ளன - அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை முற்றும் அறிந்தவன்.
(அன்றியும்) வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வின் பக்கமே (அனைத்தின்) மீளுதலும் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை (மெதுவாக) ஒட்டுவித்துப் பின்னர் (சிதறிக் கிடக்கின்ற) அதன் மத்தியில் ஒன்றாக இணைத்து, பிறகு அதனை அடர்த்தியாக (அடுக்கடுக்காய்) ஆக்குவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? பின்னர் அதனிடையிலிருந்து வெளியாகின்ற மழையை நீர் பார்க்கிறீர், இன்னும் வானத்திலிருந்து அதிலுள்ள மலைபோன்ற மேகங்களில் இருந்து, ஆலங்கட்டியிலிருந்து (சிலவற்றை) அவன் இறக்கி வைக்கிறான்; தான் நாடியவருக்கு அதனை (வேதனையாக)ப் போடுகிறான். இன்னும் தான் நாடியவரை விட்டும் அதனைத் திருப்பி விடுகிறான் - அதனுடைய

23
மின்னலின் பிரகாசம் பார்வைகளைக் கொண்டுபோக முடுகி விடுகிறது. இரவையும், பகலையும் அல்லாஹ் மாற்றி மாற்றி வைக்கிறான்; நிச்சயமாக இதில் (அகப்) பார்வையுடையவர்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமை பற்றி) உறுதியான படிப்பினை இருக்கிறது. அல்லாஹ் எல்லாப் பிராணிகளையும் தண்ணீரிலிருந்து அவன் படைத்தான். எனவே அவற்றில் சில தன் வயிற்றின் மீது (ஊர்ந்து) நடப்பவை; இன்னும் அவற்றில் சில இரு கால்களால் நடப்பவை; இன்னும் அவற்றில் சில நான்கின் மீது நடப்பவை; அல்லாஹ் தான் நாடியதை படைப்பான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன்." அவன் மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிகிறவன்; (யாவற்றையும்) மிகைத்தவன்; மிகக்கிருபையுடையவன் -
அவன் எத்தகையவனென்றால் எதனை அவன் படைத்தானோ அந்த ஒவ்வொரு பொருளையும் அழகியதாக்கினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவங்கினான்.
பிறகு அவனுடைய சந்ததியை (நழுவும்) அற்பத் தண்ணீரின் (- இந்திரிய) சத்திலிருந்து உண்டாக்கினான். பிறகு அதனைச் சரியாக அமைத்து, அதில் தன்னுடைய றுகை ஊதினான்; இன்னும் உங்களுக்குச் செவியையும் பார்வைகளையும், இதயங்களையும் ஆக்கினான் - மிகக் குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்." மண்ணிலிருந்து உங்களை அவன் படைத்திருப்பதும், பிறகு இப்பொழுது நீங்கள் (பூமியில்) பரவிச் செல்லும் மனிதர்களாக இருக்கிறீர்கள் என்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
உங்களிலிருந்தே (உங்களுடைய) ஜோடிகளை மனைவியரை அவர்களின் மூலம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காக உங்களுக்காக அவன் படைத்ததும்; உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் அவன் ஆக்கியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் -நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தினருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Page 22
/ 1 ما (ك
24
அன்றியும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும், உங்களுடைய நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - நிச்சயமாக இதில் அறிவாளிகளுக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
இரவிலும் பகலிலும் நீங்கள் உறங்குவதும் அவனுடைய கருணையிலிருந்து உணவு சம்பத்துப் போன்றவற்றை நீங்கள் தேடிக் கொள்வதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - நிச்சயமாக இதில் செவியேற்கும் கூட்டத்தினருக்கு உறுதியாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அச்சமும் ஆதரவும் கொண்டதாய் மின்னலை உங்களுக்கு அவன் காண்பிப்பதும்; வானத்திலிருந்து தண்ணீரை அவன் இறக்கி வைத்து அதன்மூலம் பூமியை - அது மரணித்தபின் அவன் உயிர்ப்பிப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் -
நிச்சயமாக இதில் விளங்குகின்ற கூட்டத்தினருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
வானமும் பூமியும் அவனுடைய கட்டளையைக் கொண்டு நிலைபெற்றிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; பிறகு பூமியில் இருந்து (வெளியாகுமாறு) ஒரு தடவை உங்களை அவன் அழைத்தால், அப்பொழுது நீங்கள் வெளிவந்து விடுவீர்கள்.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியவையாகும் - அனைத்தும் அவனுக்கே வழிபடுகிறவையாக இருக்கின்றன.
அவன் எத்தகையவனென்றால்-படைப்பை முதன்முதலாக ஆரம்பித்து; பிறகு அதனை (மரணத்துக்குப் பின் உயிர் கொடுத்து) மீள வைப்பான்; அது அவன் மீது மிக எளிதானதேயாகும்; வானங்களிலும் பூமியிலும் (அவனுடைய வல்லமைக்குரிய) மேலான வருணனை அவனுக்கே உண்டு - அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானமுள்ளவன்."
வானங்களையும், பூமியையும் படைத்தானே அவன் அவர்களைப் போன்று படைப்பதின் மீது சக்தியுடையவனாக இல்லையா? ஆம் (அவன் சக்தியுடையவனே) அவன் மிகப் பெரும் படைப்பாளன்; முற்றும் அறிந்தவன்.
அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால் அவனுடைய கட்டளையெல்லாம் "குன்’ (ஆகுக!) என்று அதற்கு அவன் கூறுவதுதான்; உடனே அது உண்டாகிவிடும்.

25
*孪。نسیسی *葵リZY○リミ எனவே, எவனுடைய கைவசத்தில்"ஒவ்ெ క్షత్ర §r-><%) அதிகாரம் இருக்கிறதோ அத்தகையவன்இதர்த் தூயவன். ^3 அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கே ܘ ܫ ܝ Y(YU) ܚ ሥኣ¶ لا J
/ لا تلمح م د . بی அவன் எத்தகையவனென்றால் - udਗੁ னாலுடி, பிற்கு விந்தினாலும், பிறகு இரத்தக் கட்டியின் ம் உங்களை அவன் படைத்து, பிறகு குழந்தைகளாக உங்கன்ஸ்வெளியாக்கினான், பின்னர் நீங்கள் உங்களுடைய்இவூதலிடத்தை அடைவதற்காகவும், பிறகு நீங்கள் Tவயேiதிகர்க்ளா" வதற்காகவும் - (உங்களை வாழவைத்தான்); இதற்கு முன் மவ்த் தாக்கப்படுபவரும் உங்களில் உண்டு; குறிப்பிடப்பட்ட, தவணையை நீங்கள் அடைவதற்காக (இவ்வாறு செய்கிறான்; இதிலிருந்து அவனுடைய மேலாதிக்கத்தை) நீங்கள் விளங்கிக் கொள்ளக் கூடும்.
ܵ
அவன் எத்தகையவனென்றால் - அவனே (அனைத்தையும்) உயிர்ப்பிக்கிறான்; இன்னும் மரிக்கச் செய்கிறான்; எனவே, ஏதேனும் ஒரு காரியத்தை(ச் செய்ய) அவன் நாடினால், அப்போது அதற்கு அவன் கூறுவதெல்லாம் ‘குன் (ஆகுக!) என்பதுதான் - உடனே அது ஆகிவிடும்."
வானங்களிலும், பூமியிலுமுள்ளவை அல்லாஹ்வைத் தஸ்பீஹ் செய்கின்றன; அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானமுள்ளவன்.
வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்கு உரியது; (எல்லாப் பொருட்களுக்கும்) அவன் உயிர் கொடுக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான் - மேலும் அவன் எல்லாப் பொருட்களின் மீதும் வல்லமையுடையவன்.
அவன் (தான் எல்லாவற்றிற்கும்) முந்தியவனும், பிந்தியவனும், பகிரங்கமானவனும், அந்தரங்க மானவனுமாவான்; அவன் எல்லாப் பொருட்களையும் முற்றிலும் அறிந்தவன். அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பிறகு அர்ஷின் மீது (தன் ஆட்சியைக் கொண்டு) நிலையானான்; பூமியில் புகுவதையும் அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான்; நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான் - அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை உற்று நோக்குகிறவனாக இருக்கிறான்."
நிச்சயமாக உம்முடைய ரப்பின் பிடி மிகக் கடினமானதாகும்.

Page 23
26
நிச்சயமாக அவன்தான் (படைப்புகளை இல்லாமையில் நின்று) துவக்கமாக உண்டாக்கியவன்; (அவற்றின் கால முடிவுக்குப் பின் அவற்றை) அவனே மீள வைக்கிறவன். அவன் மிக்க மன்னிக்கிறவன்; (தனக்கு வழிபடுவோரை) நேசிக்கிறவன் - அர்ஷையுடையவன்; மேன்மையுடையவன். தான் நாடியதைச் செய்து முடிப்பவன்."
இறைவன் தன் ர்கள் லம் மணி
5 ருததுரத மூ
சமுதாயத்திற்கு தன உபதேசங்களை வெளிப்படுத்துகின்றான்.
壽 'அல்லாஹ்வையும், எங்களளவில் இறக்கப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவருடைய) சந்ததிகள் ஆகியோரின்பால் இறக்கப்பட்டவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும்
கொடுக்கப்பட்டவற்றையும், இன்னும் (மற்ற) நபிமார்களுக்கு, அவர்களுடைய ரப்பிடமிருந்து கொடுக்கப்பட்டவற்றையும் நாங்கள் RFLDTaõT கொண்டோம். அவர்களிலிருந்து எவருக்குமிடையில் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; நாங்கள் (அல்லாஹ்வாகிய) அவனுக்கே (முற்றிலும்) வழிபடுகிறவர்கள்' என்று (மூமின்களே!) நீங்கள் கூறுங்கள். அது (அவருக்கு) அறிவிக்கப்படுகிற வஹியே தவிர வேறில்லை - வல்லமைமிக்க (ஜிப்ரயீலான)வர் (அவருக்கு) அதனைக் கற்றுக் கொடுத்தார் - (அவர்) உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில் நம் றசூல்முன்) நேராக வந்து நின்றார்அவர் மிக உயர்வான அடிவானத்திலிருக்கும் நிலையில் பின்னர் அவர் (நம் ரஸஅலிடம்) நெருங்கி வந்தார்; பின்னும் அதிகம் நெருங்கினார்.
அ(ந்த நெருக்கமான)து வில்லின் இருமுனைகளின் அளவுக்கு அல்லது (அதைவிட) அதிக நெருக்கமாக இருந்தது. பிறகு அவன் ( - அல்லாஹ்) தான் அறிவிக்க வேண்டியவற்றைத் தன் அடியாருக்கு அறிவித்தான். (நம் ரஸஅலுடைய) இதயம் அவர் பார்த்ததைப் (பற்றிப்) பொய் சொல்லவில்லை. ஆயினும் அவர் பார்த்ததைப் பற்றி அவரிடம் (மக்கத்துக் காபிர்களே!) நீங்கள் தர்க்கம் செய்கிறீர்களா?
அவரை (-நம் தூதர் ஜிப்ரீலை) இறங்குகையில் மற்றொரு தடவையும் திட்டமாக அவர் பார்த்தார் -

27
ஸித்ரத்துல் முன்தஹா (என்னும் கடைக்கோடியிலுள்ள இலந்தை மரத்து) அருகில் அவ்விடத்தில் தான் மஃவா என்னும் சொர்க்கம் இருக்கிறது. அவ்விலந்தை மரத்தை மூடிக் கொள்ளும் ஒன்று மூடிக் கொள்கின்ற போது
(அவருடைய) பார்வை வழுவவுமில்லை; (அதை விட்டும்) மாறவுமில்லை. தம் ரப்பின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைத்
திட்டமாக அவர் கண்டார். மனிதன் (இன்சான்) அவனுடைய இயற்கையான க்மீகப் பண்பினால் இப்பிரபஞ்சத்தில் இறைவனின் பிரதிநிதியாக இயங்குகிறான்.
(நபியே!) உம்முடைய ரப்பு வானவர்களை நோக்கி, "நிச்சயமாக நான் பூமியில் என்னுடைய பிரதிநிதியை (ஆதமை) உண்டாக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, 'நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும், உன் பரிசுத்தத்தைப் போற்றுகிறவர்களாகவும் இருக்கின்ற நிலையில், அதில் (பூமியில்) குழப்பஞ் செய்து, இரத்தங்களை ஒடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?" என்று அவர்கள் (வானவர்கள்) கூறினார்கள்; (அப்பொழுது) "நிச்சயமாக நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்' என்று அவன் கூறினான். மேலும் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் ஆதமுக்கு அவன் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்’ என்று கூறினான்.
அப்பொழுது (யா அல்லாஹ்!) நீ மகாத்தூயவன்! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை; நிச்சயமாக நீயே முற்றும் அறிந்தவனும், ஞானமுள்ளவனுமாயிருக்கிறாய்' என்று அவர்கள் கூறினார்கள். (அப்பொழுது) 'ஆதமே! அவற்றின் பெயர்களை இவர்களுக்கு அறிவிப்பீராக!' என்று கூறினான்; (அவ்வாறே) அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அவர் அறிவித்த பொழுது, '(மலக்குகளை நோக்கி) நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பதை அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துகிறதையும், மறைத்துக் கொள்கிறதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையா?" என்று அவன் கூறினான்.

Page 24
28
மேலும் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்கு சுஜூது செய்யுங்கள்’ என்று நாம் சொன்னபோது, இப்லீசைத் தவிர மற்ற அனைவரும் ஸ"ஜூது செய்தனர்; (இப்லீஸாகிய) அவன் மறுத்தான்; பெருமை கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களில் உள்ளவனாகி விட்டான்."
பிறகு, அவருடைய ரப்பு அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; அவருடைய தவ்பாவை ஏற்றுக் கொண்டு; நேர் வழியிலும் செலுத்தினான்." 'அல்லாஹ் அல்லாதவனையா? ரப்பாக (படைத்துப் பரிபாலிப்பவனாக) நான் தேடுவேன்? அவனே எல்லாப் பொருட்களின் ரப்பாகவும் இருக்கின்றான்’ என்று நீர் கூறுவீராக! ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கு பாதகமாகவே அல்லாது (பாவத்தைச்) சம்பாதிப்பதில்லை; அன்றியும் பாவத்தைச் சுமக்கும் எந்த ஆத்மாவும், மற்றொன்றின் பாவச் சுமையைச் சுமக்காது - பின்னர் உங்களுடைய மீளுமிடம் உங்கள் ரப்பின் பக்கமேயாகும்; அப்பொழுது எதில் நீங்கள் கருத்துவேற்றுமை கொண்டிருந்தீர்களோ அதனை உங்களுக்கு அவன் அறிவிப்பான்." தான்நாடுபவரை அல்லாஹ் தன்னுடைய ஒளியின் பக்கம் வழி நடத்துகிறான்." . மேலும் அல்லாஹ் விரும்புகின்றவருக்குக் கணக்கின்றியே அளிப்பான்." மனிதன் தொழுகையினாலும் 'திக்ர் என்னும் தியானத்தினாலும் ஸ்க்காத், சதக்கா என்னும் தர்மச் செயல்களினாலும், நோன்பு நோற்றலினாலும் தகுதியுடையவர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றுதலினாலும், மேலும் இறைவன் படைப்புக்களின்பால் காட்டும் கருணையினாலும், ஆத்மீகத் துறையில் முன்னேற்றம் அடைகின்றான். தவ்பாவை ஏற்றுக் கொள்வது அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருப்பதெல்லாம், அறியாமையினால் தீமையைச் செய்து, பிறகு விரைவிலேயே தவ்பாச் செய்(து மீள்) பவருக்குத்தான், அத்தகையோர் - அவர்களின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்; அல்லாஹ் முற்றும் அறிந்தவனாகவும், ஞானமுடையோனுமாகவும் இருக்கிறான்.

29
எவர்கள் தீமைகளைச் செய்து கொண்டேயிருந்து, அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிட்ட நேரத்தில் "நிச்சயமாக நான் இப்போது தவ்பாச் செய்கிறேன்’ என்று சொல்பவருக்கும், எவர்கள் காபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரணித்து விட்டார்களோ அவர்களுக்கும் தவ்பா (வை ஏற்றுக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாக) இல்லை; இத்தகையோர் - அவர்களுக்கு நோவினைதரும் வேதனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்." நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிலிருந்து தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்; தருமங்களையும் எடுத்துக் கொள்கிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்-அவனே தவ்பாவை ஏற்றுக் கொள்கிறவன்; மிகக் கிருபையுடையவன் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா?”
இன்னும் அவன் எத்தகையவனென்றால்; தன் அடியார்களின் தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களுடைய) தீமைகளை மன்னிக்கிறான்-இன்னும் நீங்கள் செய்பவற்றை அவன் அறிகிறான்." கிழக்குத் திசையிலும் மேற்குத் திசையிலும் உங்களுடைய முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையாக(க் கொள்ளப்படுவது) இல்லை, எனினும் நன்மையுடையவர் (யாரென்றால்) அல்லாஹ்வைக் கொண்டும்; மறுமை நாளைக் கொண்டும், மலக்குகளைக் கொண்டும், வேதத்தைக் கொண்டும், நபிமார்களைக் கொண்டும், FLDITaăT கொண்டவரும்; உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்பவருக்கும், (அடிமைகளையும், சிறைப்பட்டவர்களையும்) விடுவிப்பதிலும் (தம்) பொருளை மனவிருப்பத்துடன் கொடுப்பவரும்; இன்னும் தொழுகையை கடைப்பிடித்து, ஜகாத்தைக் கொடுப்பவரும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதியை நிறைவேற்றுபவரும், (வறுமையின்) துன்பத்திலும், (நோய் நொடியின்) சிரமத்திலும், கடினமான போர் நேரத்திலும், பொறுமையாய் இருப்பவர்களுமேயாவார்கள்; இத்தகையோர் தாம் (தங்கள் ஈமானில்) உண்மையாளர்கள்; இன்னும் இவர்களே தாம் முத்தகின் (என்னும் பயபக்தியாளர்)கள்." (நபியே!) நீர் கூறுவீராக; நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அப்பொழுது) அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்கு

Page 25
3O
மன்னிப்பான் - அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவனாகவும், மிகக் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.”
இன்னும் அவனுடைய அன்பினால் ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் திருமுகத்திற்காகத்தான்; (அதற்காக) உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றி செலுத்துதலையும் நாங்கள் நாடவில்லை (என்று கூறுவார்கள்.)"
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறிமாறிவருவதிலும் அறிவுடையோருக்கு உறுதியாக அத்தாட்சிகள் (பல) இருக்கின்றனஅவர்கள் எத்தகையோரென்றால் - நின்ற நிலையிலும் இருந்த இருப்பிலும், தங்களின் விலாப்புறங்களின் மீது (படுத்த நிலையிலும்) அல்லாஹ்வை திக்று செய்வார்கள்; இன்னும் அவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது பற்றியும் சிந்தனை செய்து, 'எங்கள் ரப்பே இதையெல்லாம் வீணாக நீ படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; ஆகவே நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை நீகாத்தருள்வாயாக!” (என்றும்;)" (முஃமின்களே!) உங்களுடைய ரப்பைத் தாழ்மையாகவும், மெதுவாகவும் நீங்கள் பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அவன் வரம்பு மீறுகிறவர்களை நேசிக்கமாட்டான். (நேர் வழி பெறும்) அவர்கள் ஈமான் கொண்டவர்கள் - அவர்கள் இதயங்கள் அல்லாஹ்வை திக்ர் செய்வதினால் அமைதி பெறுகின்றன - அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வை திக்ரு செய்வதினால்தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன." முஃமின்களே அல்லாஹ்வை மிக அதிகமான திக்ராக திக்ரு செய்யுங்கள்
காலையிலும், மாலையிலும் அவனைத் தஸ்பீஹ் செய்யுங்கள்." முஃமின்களே! உங்களுடைய பொருட்களும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வை நீங்கள் (நினைவு கூர்வதை) விட்டும் உங்களைப் பாராமுகமாக்கி விடவேண்டாம்; எவர் இதனைச் செய்கிறாரோ அவர்கள்தாம் நஷ்டவாளர்கள்."

31
(பாவங்களை விட்டும் தம்மைப்) பரிசுத்தப்படுத்தியவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார்
தம் ரப்பின் திருப்பெயரை அவர் தியானம் செய்து, பிறகு தொழுதார்." இன்னும் தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஜகாத்தையும் கொடுங்கள்; (தொழுகையில்) ருகூஃ செய்வோருடன் (ஜமாஅத்துடன் சேர்ந்து) நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அ(த்தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவர்க்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும்பாரமாகவே இருக்கும்." (ஐந்து நேரத்) தொழுகைகளை (குறிப்பாக) நடுத் தொழுகையை நிரந்தரமாகப் பேணி(த் தொழுது) கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு உள்ளச்சப்பாடுடையவர்களாக நில்லுங்கள்." பகலின் (காலை மாலை) இரு அருகுகளிலும், இரவின் பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடும் - இது, நினைவு கூர்வோருக்கு ஒரு நல்லுபதேசமாகும்." (நபியே!) சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (யுள்ள லுஹர், அஸர், மஃரிப், இஷா முதலிய) தொழுகையையும் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக பஜ்ருடைய தொழுகை (மலக்குகளின்) வருகைக் குரியதாக இருக்கிறது. இரவில் உமக்கு உபரியாக (நபிலாக, குர்ஆனாகிய) இதனைக் கொண்டு தஹஜ்ஜ"த் தொழுவீராக! உம்முடைய ரப்பு உம்மைப் புகழுக்குரிய இடத்தில் நிலைப்படுத்தப் போதுமானவன். எனவே அவர்கள் (உம்மைக்குறை) கூறுவதின் மீது நீர் பொறுமையுடன் இருப்பீராக! சூரிய உதயத்திற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், உம்முடைய ரப்பைப் புகழ்ந்து, தஸ்பீஹ் செய்வீராக! இரவு நேரங்களிலும், பகலின் ஒரங்களிலும் நீர் தஸ்பீஹ் செய்வீராக!
(இதனால் உமக்குக் கிடைக்கும் நன்மையைக் கொண்டு) நீர் திருப்தியடையலாம்.

Page 26
32
அல்லாஹ் வுடைய மஸ்ஜிதுகளை நிர்வாகம் செய்பவர்கள் எல்லாம் (யாரெனில்) அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர (வேறு எதையும் எவரையும்) அஞ்சவில்லையே அவர்கள்தாம் - அத்தகையோர் நேர்வழி பெற்றவர்களில் நின்றும் இருக்கப் போதுமானவர்கள்."
(அல்லாஹ்வுக்கு உதவி செய்கிற) அவர்கள் எத்தகையோரென்றால் பூமியில் அவர்களுக்கு நாம் சக்தியளித்தால், தொழுகையை அவர்கள்
கடைப்பிடிப்பார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள். மேலும் நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மக்களைத்) தடுப்பார்கள் - காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது."
- எனவே தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஜகாத்தைக் கொடுங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள்; அவன் (தான்) உங்களுடைய பாதுகாவலன்; பாதுகாப்பவனான (அ)வன் மிக நல்லவன்; இன்னும் உதவியாளனான (அ)வன் மிக நல்லவன்.
முஃமின்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்ததுபோல், உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது; (அதன்மூலம்) நீங்கள் பயபக்தி (தக்வா) உடையவர்களாகலாம்."
ரமலான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், இன்னும் நேர்வழியிலிருந்தும், (சத்தியத்தையும் - அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதிலிருந்து தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது; எனவே உங்களிலிருந்து எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும், (ஆனால்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் அவர் (அந்த சமயத்தில் நோன்பு நோற்காமல்) வேறு நாள்களில் (விடுபட்டுப் போன அதைக்) கணக்கிட்டு (நோற்றுக்) கொள்வ(து அவர் மீது கடமையான) தாகும் அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான்; உங்களுக்குச் சிரமமானதை அவன் நாடவில்லை; (விடுபட்ட நோன்பை நோற்று) எண்ணிக்கையை நீங்கள் நிரப்பமாக்குவதற்காகவும், அல்லாஹ்வை - உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக, நீங்கள்

33
பெருமைப்படுத்துவதற்காகவும், இன்னும் (அதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராக ஆவதற்கும் (அல்லாஹ் இதைக் கொண்டு நாடுகிறான்)" ஹஜ்ஜ"(க்குரிய காலம்) குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே எவரேனும் அவற்றில் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை(த் தம்மீது) கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜி(ன் காலத்தி)ல் சம்போகம், கெட்ட வார்த்தை பேசுதல், வீண் சச்சரவு ஆகியவை கூடாது; மேலும் நன்மையிலிருந்து நீங்கள் எதனைச் செய்தாலும், அல்லாஹ் அதனை அறிந்திருக்கிறான்; மேலும் (ஹஜ்ஜுப் பிரயாணத்திற்காக) கட்டமுது தயார் செய்து கொள்ளுங்கள்; (எனினும்) நிச்சயமாக கட்டமுதில் உன்னதமானது தக்வா (என்னும் பயபக்தி) ஆகும் - (எனவே) அறிவுடையோர்களே! என்னையே அஞ்சிக் கொள்ளுங்கள்.
(ஹஜ்ஜின்போது வியாபாரம் போன்றவற்றின் மூலம்) உங்களுடைய ரப்பிலிருந்து உண்டாகும் அருளை நீங்கள் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது; பிறகு நீங்கள் அறபாத்திலிருந்து திரும்பினால் 'மஷ் அருல் ஹராம்" என்னுமிடத்தில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; அவன் உங்களுக்கு நேர்வழிகாட்டியதற்கொப்ப அவனை நீங்கள் (இன்னும் அதிகமாக) திக்ரு செய்யுங்கள்; அன்றியும், நிச்சயமாக, இதற்கு முன் (நன்மை, தீமை என்னவென அறியாது) வழிதவறியவர்களில் உள்ளவர்களாக நீங்கள் இருந்தீர்கள். பிறகு (மற்ற) மனிதர்கள் (தங்கித்) திரும்புகின்ற (அறபாத் என்னும்) தலத்திலிருந்தே நீங்கள் திரும்புங்கள்; இன்னும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ்மிக்க மன்னிக்கிறவனாகவும், மிகக் கிருபையுடையோனாகவும் இருக்கிறான்."
மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸுகள், மேலும் விமரிசையாக்கியுள்ளன. ஹதீஸ"களென்பன நபி மொழிகளை உண்மையாக விசுவாசங் கொண்ட அறிவிப்பாளர் வரிசை மூலம், நன்கு அறிந்து, கிரந்தங்களாகக் கோவை செய்யப்பட்ட போதனைகளாகும். ஹதீஸுகள் இரண்டு வகையாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன. அவை முறையே, ஹதீஸ" குத்ளி (Hadith Qudsi) எனவும், ஹதீஸுன்நபவி (Hadith Nabawi) என்பனவாகும். ஹதீஸ் குத்R என்பது, இறைவன் நபி மூலம் நேராகக் கூறும் போதனைகளாகும். ஹதீஸுன்நபவி என்பது, இறைவனின் போதனைகளை நபிகள்தம் வார்த்தையால் சொல்வதேயாகும்.
*

Page 27
34
காலக்கிரமத்தில் மேற்கூறிய இரண்டு (6) I 6ð) 595 UL JITGÕT ஹதீஸ"களும் சூஃபித்துவ தத்துவ வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கின. அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
நான் ஒரு மறைவான பொக்கிஷமாயிருந்தேன். நான் என்னை அறியப்பட வேண்டுமென விரும்பியதால் உலகைச் சிருஷ்டித்தேன் (ஹதீது குத்ளியி)
நிச்சயமாக எனது கோபத்தை விட, கருணை மேலோங்கி விடுகிறது (ஹதீது குத்ஸி) அல்லாஹ், நம்பெருமானார் (ஸல்) அவர்களிடம் சொல்லியிருப்பதாக ஹதீஸ் குத்ளியில் வருவதாவது:
நபில் போன்ற இஷ்டபூர்வமான தொழுகைகள் மூலம் என் நல்லடியான், நான் அவனை என் நேசன் ஆக்கிக் கொள்ளும் வரை என் அருகிலாதலைக் கேட்கிறான். நான் அவனை என் நேசனாக்கியதும் அவன் கேட்கும் காதுகளாகவும், அவன் பார்க்கும் கண்களாகவும், அவன் பற்றும் கரங்களாகவும் அவன் நடக்கும் கால்களாகவும் நான் ஆகி விடுகிறேன். அதாவது அவன் என் மூலம் கேட்கிறான், என் மூலம் பார்க்கிறான், என் மூலம் பற்றுகிறான்; என் மூலம் புரிந்து கொள்கிறான். இது நிச்சயமாக "பனா’ எனும் நாஸ்தி நிலையேயாகும். (புகாரி)
என்னுடைய படைப்புக்களான சுவர்க்கமும் என்னை அடக்கிக் கொள்ளாது, உலகமும் என்னை அடக்கிக் கொள்ளாது. ஆனால் விசுவாசம் ஈமான் கொண்ட என் அடியானின் உள்ளமே என்னை நிறைவாக்கிக் கொள்ளும். (ஹதீது குத்ளி) அல்லாஹ் அறிவித்திருக்கின்றான். 6CU நன்மை செய்தவனுக்கு பத்து மடங்கு நன்மை கிடைக்கும். நான் விரும்பியவருக்கு அதைவிட அதிகமும் கொடுப்பேன். தீமை (பாவம்) செய்தவருக்கு அதே அளவுக்குத் தண்டனையுண்டு. நான் அத்தகையோரை மன்னித்தும் விடலாம். என்னை நெருங்கி ஒருவன் ஒரு சாண் தூரம் வந்தால், நான் அவனிடம் ஒரு முழதூரம் போவேன். என்னை நாடி யாராவது ஒரு முழ தூரம் வந்தால், அவனை நோக்கி நான் இருபாக தூரம் போவேன். என்னை நாடி ஒருவன் நடந்து வந்தால் நான் அவனை நாடி ஒடிப் போவேன். உலகளவு பாவங்களைச் சுமந்து கொண்டு, என்னையே நம்பிக் கொண்டும் ஒருவன் என் முன் வந்தானேயானால் உலகளவு பொறுமையான மன்னிக்கும் முகத்துடன் அவன் முன் நான் வருவேன். (முஸ்லிம்)

35
சிருஷ்டிகளின் அழகெல்லாம் இறைவனின் அழகிலேயே இருந்து உண்டாகின்றது. மனிதனுடைய உள்ளமே அல்லாஹ் ஜல்லஷான ஹ"தஆலாவின் சிம்மாசனம். ஒவ்வோர் இரவும் மூன்றில் இரண்டு பங்கு கழிந்த பின், கடைசி மூன்றில் (1/3) ஒரு பங்கு நேரத்தில், அர்ஷிலிருந்து (வானலோகம்) பூமியை நோக்கி வந்து அல்லாஹ் ஜல்லஷானஹ" தஆலா கேட்கின்றான்: யார் என்னை அழைக்கிறான்,நான் அவனுக்கு விடையளிக்க, யார் என்னிடம் ஏதேனும் கேட்கிறான் அதை நான் கொடுக்க, யார் என்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறான், நான் அவனை மன்னிக்க. (அல்-ஹதீஸ்)
தன்னை அறிந்தவன் தன் றப்பை அறிவான் (ஹதீஸ் - இஹ்யா உலூமுத்தீன்) இவ்வுலகில் 62CD அன்னியனாக அல்லது ஒரு வழிப்போக்கனாக வாழ் (ஹதீஸ் - புகாரி) கறைபிடித்த எல்லா வஸ்த்துக்களையும், சுத்தஞ் செய்வதற்கு வழிவகைகள் உண்டு. உள்ளத்தில் ஏற்பட்ட துருவை அகற்றுவதற்குரிய வழி இறைவணக்கம். நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனையை தூரமாக்குவதற்கு ஒரே ஒரு வழி, இறைவணக்கம்தான் (Bahagi) நிச்சயமாக அல்லாஹ் அழகுமயமானவன். அவன் அழகை விரும்புகிறவன். (ஹதீஸ்) 'ஷரியா’ என்பது நான் சொல்வது (அக்வாலி), தரீக்கா என்பது, எனது செயல் (அமல்) ஹகீகாஎன்பது நா' இருக்கும் உண்மை நிலை (அஹ்வாலி)" (ஹதீது குத்ஸி)
நீயே வெளிரங்கமானவன். உனக்கு மேல் ஒன்றுமில்லை. நீயே உள்ரங்கமானவன். உனக்குக் கீழும் ஒன்றுமில்லை. நீயே முதல்வன் (ஆதி - ஆரம்பம்) உனக்கு முன் ஒன்றுமில்லை. நீயே அந்தமானவன். உனக்குப் பி ~ம் ஒன்றுமில்லை." (அல்-ஹதீஸ்) வேத நூல்களில் அடங்கியுள்ளவையாவும், குர்ஆனில் அடங்கியுள்ளவை. அல்குர்ஆனில் உள்ளவையாவும், ஸஅறாபாத்திஹாவில் அடங்கிற்று. ஸ ஷூறாபாத்திஹாவில் உள்ளவை, பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் (Bismilahir - Rahmanir - Rahim) GTGăTLugsaiv அடங்கிற்று. பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர்றஹீம் என்பதில் அடங்கியவை பா (பா) என்னும் அசுஷ்ரத்துக்குள் அடங்கியுள்ளது. அதுவும், அதன் கீழேயுள்ள புள்ளி (நுக்த்து)க்குள் அடங்கிவிட்டது.*

Page 28
36
மேலேயுள்ள குர்ஆன் வசனங்களிலும் ஹதீதுகளிலும் கூறப்பட்டுள்ள தத்துவார்த்தங்களின் கருப்பொருளைப் பின்வருமாறு சுருங்கக் கூறலாம்.
(1) அல்லாஹ்வே பிரபஞ்சத்தின் மூலப் பொருளாக இருக்கின்றான். சிருஷ்டிகளுக்கெல்லாம் காரணியாகி, எல்லா உலகங்களுக்கும் சர்வ வல்லமையுள்ள றப்புல் ஆலமீனாகத் திகழ்கின்றான். அவனே தன்னைக் கொண்டு தான் உண்டாகி, பரிபூரணமான சர்வ வல்லமையுள்ள தனித்துவ நிலையில் இருக்கின்றான். பிரபஞ்சப் படைப்புகளையும், பிரபஞ்சமல்லாத படைப்புகளையும் படைத்துக் காத்து, காலம் நேரம் ஆதி அந்தத்திற்கு அப்பாற்பட்ட மகோன்னத பரம்பொருளாயியங்குகின்றான். அவனே மூலப் பொருளான உண்மையாகவும் (AL-Haq) சர்வ காரணியாகவும் இருக்கின்றான். (அல்-ஹக்) உலகில் உள்ள எல்லா வஸ்துக்களும் அவனின் சிருஷ்டிகளே (அல்-கல்க்) அவனன்றி ஓர்அணுவும் அசையாது என்ற ரீதியில் அவனே பரம உண்மை. சிருஷ்டிகளெல்லாம் அவனிலேயே தஞ்சமடைந்து, அவனையே சார்ந்து, அவனாதரவிலேயே இயங்குகின்றன.
2. பரம் பொருளான அல்லாஹ் எல்லா சிருஷ்டிக்கும் அப்பாற்பட்ட ஏகாந்த நிலையில் இருக்கின்றான். ஆனால் எல்லா சிருஷ்டிகளும் அவனிடமே தங்கித் தஞ்சமடைந்து இயங்குகின்றன. யாரும் அல்லாஹ்வைப் பெறவுமில்லை. அவன் யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு இணையான பொருள் ஒன்றுமில்லை. அவனுக்கு உவமையானவை ஒன்றுமில்லை. சகல படைப்பினங்களிலும் தோன்றி நிற்பவன். உற்பத்தி செய்பவனும் இனப் பெருக்கஞ் செய்பவனும் அவனே. வானத்திலும், பூமியிலும் அரசாள்பவன் அவனே. ஈற்றில் எல்லா வஸ்துக்களும் அவன் வசமே சென்றடையும். அவனே முதற்பொருளாகவும் இறுதிப் பொருளாகவும் தோன்றியும், மறைந்தும் நிற்பவன், எல்லாம் அறிந்தவன், மனிதனின் ஜீவநாடியை விட நெருக்கமாய் இருப்பவன்.
3. அல்லாஹ் எதையாவது படைக்க நினைத்து ‘ஆகுக' என்றால் அப்பொருள் ஆகிவிடும். வானங்களையும், பூமியையும் படைத்தவன், எதையும் சிருஷ்டிக்க விரும்பி 'ஆகுக' என்று சொன்னவுடனே அது உருவாகி விடும். பிறப்பும், இறப்பும் அவனிடமேயுள்ளன. படைப்பினங்களும், சகல தொழிற்பாடுகளும் அல்லாஹ்வின்

37
நாட்டத்தின் பிரகாரமே நடைபெறும். சூஃபித்துவக் கூற்றின்படி, அல்லாஹ் சிருஷ்டிகளைப் படைக்கமுன் எல்லாச் சிருஷ்டிகளும் அவனின் நினைவில் அஃயானுத் தாபிதா (Ayan Thabita) என்னும் சிந்தனை மயமாக இருந்தன. தெய்வீகச் சிந்தனைகள் சிருஷ்டி வரிசையில் தனித்துவ இறைவனுக்கும், சிருஷ்டிகளுக்குமிடையே தத்துவ ரூப மத்திய நிலையாக இருந்தன. இந்தக் கண்ணோட்டத்தில் சர்வ
வல்லமையுடைய அல்லாஹ்வே யாவும் அறிந்தவனாயிருக்கின்றான். அவன் எம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான். ஆனால் எம்
சிந்தனைகள் யாவையும் அறிந்தவனாயிருக்கின்றான்.
4. மனிதன் எல்லாச் சிருஷ்டிகளிலும் மிக உன்னத சிருஷ்டியாவான். இறைவன் தன்னுடைய பிரதிநிதியாக உலகத்தில் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்கு சிருஷ்டிகளின் நாமத்தையெல்லாம் கற்றுக் கொடுத்து, மனிதனை எல்லாச் சிருஷ்டிகளையும் விட மேம்பாடான சிருஷ்டியாய் மேன்மைப்படுத்தினான். சிருஷ்டிகளின் நாமங்கள் என்பது சிருஷ்டிகளின் குணாதிசயங்களையும் அவைகளின் அத்தியாவசியமான தன்மையையும் குறிப்பதாகும். இவ்வண்ணம் இறைவன், மனிதனுக்கு சிருஷ்டிகளின் நாமத்தைக் கற்றுக் கொடுத்து மனிதனை, அறிவும் ஆற்றலும் அதிகாரமும் பெற்றவனாக ஆக்கினான். இதற்காக மனிதனுக்கு உலகத்தை இறைவன்பால் திருப்பும் ஆற்றலைச் சன்மானஞ் செய்தான். இதனால் இறைவன் மனிதனுக்கு மகத்தான பொறுப்பையும், நம்பிக்கையையும் அருளி, தன்னை அடையும் கடைசி லட்சியத்தை நிர்ணயித்தான். இறைவனுக்கும் சிருஷ்டிகளுக்கும் மத்தியில் இருக்கும் மனிதனுக்கு, இறைவனை வணங்கி அவனைப் புகழ்ந்து அவனே தஞ்சமென நாடும் பொறுப்பைக் கொடுத்தான். அவனுடைய ஏவல்களுக்கு அடிபணிந்து, அவனையே தஞ்சமென நம்பி, அவனையே நேசித்து, அவனையே அடையும் பக்தர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்கள் அல்லாஹ்வை நேசிக்கும் பொழுது, அல்லாஹ் அவர்களை நேசிக்கிறான்.
5. இறைவன் தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்கள் மூலம், மனிதன் ஆத்மீகப் பாதையில் முன்னேறவும்
அம்முன்னேற்றத்திற்கு அவசியமான திருத்தூதர்களையும், போதனைகளையும் பலதரப்பட்ட கால நேரங்களில் மனித

Page 29
38
சமுதாயத்திற்கு வெளிப்படுத்தினான். இப்போதனைகளை, பிழைவிடாமல் உணர்ந்து நடைமுறையில் அனுஷ்டித்தால், அவை மனித வர்க்கத்திற்கு தவறில்லா வழிகாட்டிகளாகும். இந்நிலையில் நபிமார் வரிசையில் கடைசியாகப் பிறந்து, இஸ்லாம் மார்க்கத்தை போதித்த திருநபி முஹம்மத் (ஸல்) அவர்கள், முன்னே தோன்றிய திருத்தூதர்களின் போதனைகளை ஏற்றதுமன்றி, காலக்கிரமத்தில் அப்போதனைகளை மாசுபடுத்திய பிழைகளைத் திருத்தி, சதா காலமும் உண்மையாய் இருக்க, இஸ்லாமிய மார்க்கத்தை, திருக்குர்ஆன் என்னும் வேதம் மூலம் போதனை செய்தார்கள். இதனால்தான் அவரை கடைசி நபியென்றும், நபி வரிசையில் முத்திரை என்றும் கூறப்படுகிறது. 6. இஸ்லாத்தின் ஐந்து தூண்களெனக் கூறப்படும், ஐந்து கடமைகளையும் மனித சமுதாயம் ஏற்றுக் கொண்டு நடைமுறையில் அனுஷ்டானஞ் செய்தால், இறைவன்பால் ஈடேற்றம் அடையலாம் என்பதை திருமறைகுர்ஆன் கூறுகின்றது. அந்த ஐந்து கடமைகளாவன: இறைவன்பாலும் அவன் தூதர்பாலும் நம்பிக்கை என்னும் ஈமான் கொள்ளல், ஐந்து வேளைத் தொழுகை அனுஷ்டித்தல், ஸக்காத், ஸதக்கா என்னும் தருமம் கொடுத்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல், வசதியிருந்தால் ஹஜ் என்னும் புனித யாத்திரை செய்தல், ஏவல்களை மேற்கொண்டு விலக்கல்களைத் தவிர்த்து ஆத்மீகத் தூய்மையை உண்டுபண்ணும் நல்வாழ்க்கையைக் கடைப்பிடித்தல் என்பனவாகும்.
மேலும் அனைத்துக் காரியங்களிலும், எல்லாச் சிந்தனைகளிலும் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியிலும், சிருஷ்டி கர்த்தாவான இறைவனைத்தியானித்தல், திக்ர் (Dhikir) செய்வது ஆத்மீக முன்னேற்றத்துக்கு இன்றியமையாத ஒரு சாதனமும், அனுஷ்டானமாகும். சதாகாலத்திலும், சதாநேரத்திலும் இறைவனின் மகத்துவத்தைச் சிந்தனை செய்வது அவசியமாகும். திருக்குர்ஆன் வசனப்பிரகாரம் இறைவனைத் தவிர்த்து உலகத்திலுள்ள எல்லா வஸ்த்துகளும் அழிந்து விடும். 7. பிரபஞ்ச அமைப்பிலுள்ள மகத்தான மர்மங்களையும், அதில் பிரதிபலிக்கும் மட்டிலா இறை அறிவையும் சதாகாலமும் அவதானித்து இறைவனின் சர்வ வல்லமையையும், இறையருளையும் தியானிக்கும்படி திருமறை கூறுகின்றது. ஏனென்றால் எல்லா உலகங்களையும் எல்லாப் படைப்புகளையும் படைத்துக் காத்து அரசாளும்

39
பரம்பொருளின் மகத்துவமே, ஐயமற்ற இறைநம்பிக்கைக்குச் சான்றாகும். இஸ்லாத்தின் போதனைப்படி மனிதன் மூன்று விதமான அறிவுகளைப் பெறலாம். அவையாவன: ஐம்புலன்களால் பிரபஞ்ச்த்தை அவதானித்து ஜம்புல அனுபவங்களின் அடிப்படையிலும், தன்னுடைய இயற்கையான அறிவு, காரண சக்தி மூலமாகவும் பெறக்கூடிய விஞ்ஞான அறிவு. மேற்கூறிய விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டு சிருஷ்டிகளைப் பாகுபாடின்றி ஒன்றாக அறியும் உள்ளறிவு (Intuitions) இவ்வறிவுக்கு கருவியாயிருப்பது கல்பு (Al-qualb) என்னும் இதய உணர்ச்சியே. மேற்கூறிய உள்ளறிவினால் சில மர்மங்களைப் பாகுபாடின்றி உணரலாம். திருத்தூதர்கள் மூலமாக இறைவனாலே அறிவிக்கப்படும் 'வஹி' என்னும் தெய்வ அறிவிப்பு அல்லது இறையறிவிப்பு. இம்மூன்று அறிவுகளையும் மனித வர்க்கம் பயன்படுத்தினால் இறைவனையும் அவனுடைய மகத்துவத்தையும் எல்லாச் சிருஷ்டிகளிலும் சர்வ வியாபகமாக இயங்கும் மர்மத்தையும் நன்குணர்ந்து, தன்னைத் தானறியும் மகோன்னத நிலையை அடையலாம். 3. இறைவன், மனிதன், பிரபஞ்சம் என்பன பற்றி சூஃபித்துவம் கூறும் கருத்துக்கள்
சிருஷ்டி கர்த்தாவான அல்லாஹ"த் தஆலாவிற்கும் (ஹக் - Haqq) அவனால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளுக்கும் (கல்க் - Khalq) இடையேயுள்ள இணைப்பை திருக்குர்ஆன் எப்படிக் கூறுகின்றது என்பதை இத்தறுவாயில் ஆராய்வோம்:
அல்-குர்ஆனின் பிரகாரம்: சகல வஸ்துக்களையும் படைத்தவன் அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன் அவனே. இன்னும் அவனுக்கு ஒப்பாக எவரும் இலர் 'பார்ப்பவனும் கேட்பவனும் அவனே, புகழனைத்தும் மேன்மையும் அவனுக்கே உரியன. எதைக் குறித்தாலும் அவற்றுக்கெல்லாம் மேலானவன்.
தன்னைப் பற்றிய அறிவு ஞானத்தை உன்னிடமிருந்து மறைத்து வைத்திருப்பவன்.' 55.

Page 30
4Ο
ஹக் (Haqq) எனும் பரம்பொருளாகிய இறைவன், எல்லாச் சிருஷ்டிகளையும் (கல்க் - Khala) உண்டாக்குகிறான் என்று உரைப்பது திருக்குர்ஆன், ஹக் ஆகிய இறைவன் ஒன்றாகவும், கல்க்காகிய சிருஷ்டிகள் பலவாகவும் இருக்கின்றன. ஹக் ஆகிய இறைவன் எண்ணற்ற மட்டில்லா ஆற்றல்கள் உடைய வனாயிருக்கின்றான். பன்மையாகிய சிருஷ்டிகளோ தம் தம் வரையறுக்கப்பட்ட ஆற்றல்களை இறைவனிடமிருந்தே பெற்றுக் கொள்கின்றன. இறைவன் சிருஷ்டிகளைப் படைப்பது மட்டுமன்றி அச்சிருஷ்டிகளின் அந்தரங்கங்கள் யாவும் அறிந்திருக்கின்றான். வெளிக்கண்ணோட்டத்தில் பார்த்தால், வஸ்த்துக்களெல்லாம் இறைவனின் சிருஷ்டிகளாயிருக்கின்றன. அவைகளின் உள்ரங்க அந்தஸ்தை கவனித்தால், சிருஷ்டிகள் யாவும் இறைவனின் சிந்தனைகளாகவே யிருக்கின்றன. சிருஷ்டிக்கு முன், வஸ்துகளெல்லாம் இறைவனின் நினைவுமயமாக இருந்தன. ஏனென்றால் இறைவன் எல்லாம் அறிந்தவனாக இருக்கின்றான். ஹக் (Haqq) என்பவன் அறிகின்றவன், கல்க் (Khalq) என்னும் சிருஷ்டி அறியப்பட்ட வஸ்துக்களாகும். இந்நிலையில் இறைவனும், சிருஷ்டிகளும் பின்வரும் வெவ்வேறான அந்தஸ்துக்களை உடையவைகளாயிருக்கின்றன. அறிபவனும், அறியப்பட்ட வஸ்துக்களும் வெவ்வேறானவைகளாகின்றன. அதாவது பரம்பொருளாகிய இறைவனும், படைக்கப்பட்ட பிரபஞ்சமும், முறையே காலிக் (Khaiq) என்னும் சிருஷ்டிகர்த்தாவாகவும், மக்லூக் (Makhluq) என்னும் படைக்கப்பட்ட பொருளாகவும், றப் (Rabb) என்னும் அரசனாகவும், மர்பூப் (Marbub) என்னும் அடிமையாகவும், இலாஹ் (lah) என்னும் வணங்கப்பட்டவனாகவும், மலூஹ் (Maluh) என்னும் வணங்குபவர்களாகவும், மாலிக் (Malik) என்னும் எஜமானாகவும், மம்லூக் (Mamluk) என்னும் பணியாளனாகவும், வெவ்வேறு அந்தஸ்துகளைப் பெற்றிருப்பதை அறிகின்றோம்.
இறைவன் (அல்லாஹ்) எல்லாப் படைப்புகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் தனித்துவமாக இருக்கின்றான். அத்தகைய இறைவன் தன்னால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளின் வஸ்துக்கள் அனைத்துடையவும் உயிர், அறிவு, அதிகாரம், நாட்டம், பார்வை, பேச்சு என்பவைகளின் ஆற்றல்கள் அனைத்தையும் தனக்குள்ளே வைத்திருக்கின்றான். வரையறுக்கப்பட்ட இவ்வாற்றல்களை சிருஷ்டிகள், இறைவனிடமிருந்தே பெற்றுக் கொள்கின்றன. இந்நிலையில் சிருஷ்டிகள், அழிவு, மாற்றம் இவைகளுக்கு கட்டுப்பாடாகி தன்னுடையதெனச் சொல்லக் கூடிய ஒன்றுமே இல்லாதவையாக இருக்கின்றன. இக்கண்ணோட்டத்தில், இறைவன் படைக்கும் சக்தியுடையவனாகவும், பிரபஞ்சம் படைக்கப்பட்ட அடிமை அந்தஸ்துடையதாகவும் இருப்பதை அறிகின்றோம்.

41
மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களைப் பின்வரும் வசனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். பின்வரும் வசனங்களில் எல்லாப் படைப்புகளிலும் இறைவன் சர்வ வியாபியாகி ஏகனாய் இருக்கும் தன்மை தெளிவாகின்றது. அதாவது பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டு தனித்துவமாக இயங்கும் இறைவன் சிருஷ்டிகள் நிரம்பியிருக்கும் பிரபஞ்ச உலகில் ஊடுருவிக் கலந்திருக்கின்றான். அல்லாஹ் நமது உயிர் நரம்பைக் காட்டிலும் மிக அருகில் இருக்கின்றான்.
உம்மை விட நாம் அவனிடம் அதிக நெருக்கமாய் இருக்கின்றோம். எனினும் நீர் அதைப் பார்ப்பதில்லை.
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; நீங்கள் எப்பக்கம் திரும்பினாலும், அங்கு அல்லாஹ்வை முன்னோக்குதல் (கிப்லா) உண்டு - நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; முற்றும் அறிந்தவன். (அல்-குர்ஆன் 2:115) நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களோடிருக்கின்றான். அவனே முதல்வன். அவனே கடைசியானவன். அவனே வெளிப்பட்டிருப்பவன். அவனே உள்ளீடாய் இருப்பவன். அவன் வஸ்துக்களடங்கலையும், நன்றாயறிகின்றவன். *
இறைவன் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தான் என்னும் கருத்தின் அந்தரங்க உண்மையென்ன? மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களின்படி சிருஷ்டிப்பதென்றால்
அந்தரங்கமான epGvů பொருள், வெளிரங்கமான பிரபஞ்சத்தில் வெளியாகி, ஒன்றாயிருக்குந் தன்மையிலிருந்து பலவாயிருக்கும் சிருஷ்டிகளின் மூலம்
வெளிப்படுவதேயாகும். இறைவனின் நினைவுகளே சிருஷ்டிகளின் சாரமாகிய வித்துக்களாயிருக்கின்றன. ஒவ்வொரு இறைநினைவிலும் வெவ்வேறு ஷகீலத் (Shakiat) எனும் உன்னதமான குணம் அடங்கியிருக்கிறது. படைப்பு என்பது காலம் இடம் எனும் வரையறைகளுக்குக் கட்டுப்பாடான பிரபஞ்சத்தில், இறைவனின் நினைவுகள் வஸ்துமயமாகுவதாகும். சிருஷ்டிகளுக்குச் சாரமாயிருக்கும் நினைவுகள், இறைவனின் சிந்தனையில் ஆதியந்தமற்று சதாவுமிருக்கின்றன. இறைவன் தன்னுடைய எண்ணங்களை வெளியாக்கி அவ்வெண்ணங்கள் உருவாகும் நிகழ்ச்சியே சிருஷ்டி எனப்படுவதாகும். சூஃபி ஞானிகளின் கூற்றுப்படி, இப்பிரபஞ்சம் என்பது இறைவனின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். பிரபஞ்சம் எனும் கண்ணாடியில் ஒவ்வொரு படைப்பும் இறைவனின்

Page 31
42
மகத்துவத்தை ஒவ்வொரு விதமாகப் பிரதிபலிக்கின்றது. மேற்கூறிய பிரபஞ்ச வியாபித்தலினால் பரம்பொருளின் மகத்துவம் சற்றளவேனும் குறைவதில்லை. அவன் அவனாகவே இருக்கின்றான். பன்மையான, அழியக் கூடிய சிருஷ்டிகளில் வியாபித்த போதிலும், எல்லாச் சிருஷ்டிகளுக்கும் அப்பாற்பட்ட மகத்தான தனித்துவ நிலையில் அவன் சதா இயங்குகின்றான். இந்த உண்மையைத்தான் திருநபி முஹம்மது (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
அல்லாஹ்வே, நீயே, வெளியாயிருக்கும் எல்லாப்
படைப்புகளிலும் விளங்குகிறாய். உன்னை விட மேல்மட்டத்தில் ஒன்றுமேயில்லை. நீயே உள்ரங்கமாக எல்லா வஸ்துக்களிலும் இருக்கிறாய். உன்னை விடக் கீழ்மட்டத்தில் ஒன்றுமேயில்லை. நீயே மூலப் பொருளான ஆதியாய் இருக்கின்றாய். உனக்கு முன் ஒன்றுமேயில்லை. நீயே அந்தமாய் இருக்கின்றாய். உனக்குப் பின் ஒன்றுமேயில்லை. "
மேற்கூறிய ஹதீதில் சிருஷ்டி கர்த்தாவான அல்லாஹ"த ஆலாவும் (Haqq) சிருஷ்டிகளான எல்லா வஸ்துகளும் (Khalq) ஒரு கண்ணோட்டத்தில் ஒருமையாகின்றன. கல்க் என்னும் சிருஷ்டிகள், ஹக் என்னும் இறைவனின் வியாபகமாகின்றன. கல்க் எனும் சிருஷ்டிகள் இறைவனின் ஆதாரத்திலேயே இயங்குகின்றன. தத்துவ ரீதியில் நோக்கினால் இறைவனே உண்மைப் பொருள், மற்றவைகளெல்லாம் உருவும் நிழலும் போல் மாயையாக இருக்கின்றன.”
சூஃபித்துவ தத்துவ ஞானத்தில் மகோன்னத நடுநிலை வகிப்பது" "வஹ"தத்துல் உஜூத் (Wahdat - a - Wujood) என்னும்
* மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதற் பூதமே. என்பது திருமந்திரத்திலுள்ள பாசுரமாகும். இஃது பரம் பொருள் வியாபகத்தை விளக்கும் செய்யுளாகும். ஹக் என்பதும் கல்க் என்பதும் பற்றிய விளக்கத்துக்கு இச்செய்யுட்பொருளும் உதாரணமாகும்.
0 வஹ்தத்துல்உஜூத் எனும் தத்துவக் கொள்கையைப் பற்றி மெளலானாஅபுல்கலாம்ஆசாத் பின்வரும் அபிப்பிராயத்தைக் கூறுகின்றார்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடல் இன்றியமையாததாகும். குர் ஆனுடைய பல்வேறு விளக்க முறைகளிலே, வஹ்தத்துல் உஜூத் (Wahdatul Wujood)

43
இறைவனின் ஒருமைப்பாடான ஏகாந்த நிலையாகும். பலதில் ஒன்றாகி, ஒன்றில் பலதாகி, சர்வ வியாபியாகிய இறைவனின் ஏகாந்த நிலையின் மர்மமே வஹ்தத்துல் உஜூத் எனும் தத்துவக் கருத்தாகும். இதை இறைவனின் ஒருமை என்றும் கருத்துக் கொள்ளலாம். இக்கருத்தை திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களின், பின்வரும் ஹதீஸ" குத்ளியில் விமர்சிக்கப்பட்டிருக்கின்றது.
முன்னுள்ள எல்லா வேதங்களிலும் வெளியான உண்மைகள் யாவும் திருக்குர்ஆனிலே அடங்கி இருக்கின்றன. திருக்குர்ஆனில் அடங்கியிருக்கும் எல்லா உண்மைகளும், சூறத்துல் பாத்திஹாவில் அடங்கியிருக்கின்றன. ஸஅறத்துல் பாத்திஹாவில் அடங்கியிருக்கும் உண்மைகள் யாவும் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்றஹீம்" என்னும் வசனத்தில் அடங்கியிருக்கிறது. பிஸ்மில்லாஹிர்றஹ்மா னிர்றஹlம் என்னும் வசனத்தில் அடங்கியிருக்கும் உண்மைகள் யாவும் பா (?) என்னும் எழுத்தில் அடங்கியிருக்கின்றன. பா (பூ) என்னும் எழுத்து அதன் கீழேயிருக்கும் நுக்தாவாகிய புள்ளியில் அடங்கியிருக்கின்றது.
நுக்தா, எனும் புள்ளி பரம் பொருளுக்கு குறியீடு என்று கூறுவர். *
மேற்கூறிய ஹதீஸின் கருத்தை இருபதாம் நூற்றாண்டில் சூஃபித்துவ ஞானத்தில் மிகச் செல்வாக்குப் பெற்றவரும், அல்ஜீரியாவில் பிறந்த ஷைகு அஹ்மத் அல்-அலவி (ரலி) எனப் பெயர் கொண்ட இறைஞானியார் பின்வரும் வசனங்களில் மிகத் தெளிவாக வியாக்கியானஞ் செய்கின்றார்.
அத்வைதக் கொள்கையின்பால் வெகுதூரம் செல்லக் கூடியனவும் உள்ளன. உதாரணமாக, "அவனே ஆதி, அவனே அந்தம், அவனே புறமும், அவனே உள்ளும்', "நீங்கள் எங்கு திரும்பினாலும் அல்லாஹ்வின் தோற்றத்தையே காண முடியும்" "அல்லாஹ் நமது உயிர் நரம்பைக் காட்டிலும் மிக அருகில் இருக்கின்றான்', 'ஒவ்வொரு விநாடியும் அவன் புத்தம் புதிய காட்சியளிக்கின்றான்' என்பனவற்றைக் கூறலாம். படைப்பினங்களெல்லாம் இறுதியில் அல்லாஹ்விடம் திரும்ப வேண்டும் என்று கூறப்படும் குர்ஆன் வசனங்களை, வஹ்தத்துல் உஜூத் (சிருஷ்டி எல்லாவற்றிலும் இறைவனே உள்ளான்) எனப்படும் சூஃபிகளின் கொள்கையை ஏற்றுக் கொள்வோர் தங்கள் கொள்கைக்கு அத்தாட்சிகளாக நிரூபிக்கின்றார்கள். ஷாஹ் வொலியுல்லாஹ் என்பவர் "நான் வஹ்தத்துல் உஜூத் கொள்கையை நிரூபிக்க விரும்பினால் இதற்குக் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் மேற்கோள்காட்ட முடியும்" என்று உறுதியாகச் சொல்லும் அளவில் இருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் தெளிவாகத் தெரிவதென்னவென்றால் இந்த விளக்கங்களை அவற்றின் தொடரிலிருந்து அவற்றின் இடம் பெயர்ந்து வெகுதூரம் கொண்டு போகலாகாது. மேலும் ஆரம்ப கால முஸ்லிம்கள் அறிந்து கொண்ட அளவுக்கு அப்பால் நாம் செல்லலாகாது.
ஆதாரம்: குர்ஆனின் சாரம் - மெளலானா அபுல்கலாம் ஆஸாத் (293 ம் பக்கம்) வளர்மதிப் பதிப்பகம் - தென்னூர் - திருச்சிராப்பள்ளி.

Page 32
44
நுக்தாவைக் கூறும் பொழுதெல்லாம் வஹதத்து ஷஹீத் (Wahdotash - shuhud) என்னும் இறை தனித்துவத்தைக் கூறும் உணர்வைக் குறிப்பிடுகின்றேன். அலிப் என்னும் முதல் அட்சரத்தைக் கூறும் பொழுது வாஹித் அல்-உஜூத் (Wahid Al - wujud) எனும் தனித்துவமாக இயங்கும் ஒரே ஒரு உண்மைப் பொருளான இறைவனைக் குறிப்பிடுகின்றேன். பா (அ) எனும் அட்சரத்தைக் குறிப்பிடும் பொழுது தனித்துவமான ஒருமை நிலையிலிருந்து பலதும் வியாபிக்கும் பன்மை நிலையைக் குறிப்பிடுகின்றேன். பா (சி)க்குப் பிறகு எத்தனையோ எழுத்துகள் தொடருகின்றன. அவைகளுக்குப் பிறகு வார்த்தைகள் உண்டாகின்றன. அதன் பிறகு பாஷை - பேச்சு உண்டாகின்றது. இவைகளெல்லாம் ஒரு வரிசையில் படிப்படியாக உண்டாகின்றன. ஆனால் முதல் வரும் அட்சரங்களிலேதான் இந்நூலில் கூறும் முக்கியமான அம்சம் தங்கியிருக்கின்றது. ஏனென்றால் முதல் வருவன முதன்மையாகும். அதனால் அதுவே மகோன்னத முக்கியத்துவமுமாகும். இதனால்தான் திருக்குர்ஆனில் "பிஸ்மில்லாஹ்” என்னும் திறப்பு' வாக்கியத்திற்கு என்ன முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ அதே முக்கியத்துவத்தை எழுத்து வரிசையில் அலிபுக்கும் (1) பா( )க்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் அலிபும் பாவும் இணைந்து இறைவன் திருநாமங்களில் ஒன்றான அப் (Ab) என்னுஞ் சொல் பிறக்கின்றது. நுக்தா அலிப் என்னும் அட்சரமாக வெளியாகுமுன், மறைந்த பொக்கிஷம் போன்ற தனித்துவமான நிலையில் இருந்தது. ஏனைய மற்ற அட்சரங்களும் உள்ரங்கமான நுக்தாவின் மகத்துவத்தை அவை வெவ்வேறு தோற்றங்களில் வெளிப்படுத்தும் வரை உயிரற்றவைகளாயிருந்தன. இம்மர்மத்தை ஆழ்ந்து கவனித்தால் எல்லா எழுத்துகளிலும் அதே மையை நோக்குவார்கள். அந்தமையின் அடிப்படையே நுக்தாவாகும்.
நுக்தா எல்லா எழுத்துகளையும் தன்னிலே அடக்கியிருக்கும் உண்மையை நீ அறிந்தாயானால், எழுத்து, வார்த்தையை உண்டாக்குவதையும், வார்த்தை வசனத்தை உண்டாக்குவதையும்; வசனம் எப்படி புத்தகங்களாகின்றன என்பதையும் நோக்குவாய். அதாவது: எழுத்தின்றி வார்த்தையில்லை. வார்த்தையின்றி வசனமில்லை. வசனமின்றி நூல் இல்லை. ஒருமை நிலையில் இருந்தே வெவ்வேறுபட்ட நிலைகள் பிறக்கின்றன. ஆனால்

45
வேறுபாடுகள் எல்லாம் ஒருமையுணர்வில் ஒற்றுமையாகின்றன. இதுவே நுக்தாவின் தத்துவக் கருத்தாகும். நுக்தாவே எல்லா நூலுக்கும் தாயாகும். இறைவனே உண்மைகளை உறுதிப்படுத்துகின்றான். அவனே சில கூற்றுக்களை, நம்பிக்கைகளை நிராகரிக்கின்றான். எல்லா
நூல்களுக்கும் தாயான திருக்குர்ஆன் அவன்
வசமேயிருக்கின்றது.
எழுத்திலிருந்து நுக்தா வேறுபட்டதாயிருக்கிறது.
இதைப்போன்றுதான் இறைவன் நிகரற்றவனா
யிருக்கின்றான். எதையும் பார்ப்பவனாகவும் கேட்பவ னாகவும் இறைவன் இருக்கின்றான். அவனைப் போல் ஒன்றுமே இல்லையென்று திருக்குர்ஆன் கூறுகின்றது. பரம்பொருளுக்குக் குறியீடாக விளங்கும் நுக்தாவும் இதே தன்மையை உடையது. மற்ற உருவங்களைப் போல் நுக்தாவை வரையறை செய்ய முடியாது. ஏனைய அட்சரங்களிலுள்ள நீளம், அகலம், கனதி என்னும் வரையறைகளை நுக்தாவில் புலன்களால் அவதானிக்க முடியாது. அட்சரங்களுக்கும் நுக்தாவுக்கும் இடையேயுள்ள வேற்றுமைகளை நம் அறிவினால்தான் உணரலாம். நுக்தாவின் மகத்துவம் இங்கு பேசப்படுகின்றது.
ஆனால் இன்னொரு ரீதியில் நோக்கும் போது, அட்சரங்களும் ஒப்பிட முடியாதவையாக இருக்கின்றன. ஏனெனில் அட்சரங்களை உருவாக்கும் மை, எல்லா அட்சரங்களிலும் ஒன்றாயிருப்பதனால் மேற்கூறிய தத்துவார்த்த உவமை, இறைவனின் அந்தரங்க மர்மத்தை வெளிப்படுத்துகின்றது. வெவ்வேறு வஸ்த்துக்களில் அவன் வியாபித்தாலும் அவன் வியாபிப்பின் மூலம் வெவ்வேறான வஸ்த்துக்கள் ஒருமையாகின்றன. பல அட்சரங்களை உருவாக்கும் 62) LD வெவ்வேறான உருவங்களில் தோன்றினாலும், மை என்ற ரீதியில் அது, அதுவாகவே வேறுபடாத நிலையில் இருக்கின்றது. விண்ணிலும் மண்ணிலும் இருந்து ஆட்சி செய்யும் இறைவன் ஒன்றாகவே இருக்கின்றான். அவன் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவன் அவனே. ஒப்பிடக் கூடிய வெவ்வேறான வஸ்துகளில் அவன் வியாபித்தாலும், அவனுடைய தூய தனித்துவ நிலையில் அவனை, நாமறியும் ஒரு வஸ்துவோடும் ஒப்பிடுதலோ இணை வைத்தலோ முடியாதென்பதை மறந்து விடாதே. ஏனெனில் எல்லா வஸ்துகளும் ஒப்பிடக்கூடியதும், ஒப்பிடக் கூடாததுமான இறைசக்தியின் அம்சங்களாயி ருக்கின்றன.

Page 33
46
நீங்கள் எங்கே திரும்பினாலும் அல்லாஹ்வின் திருமுகத்தையே காண முடியுமென்று திருக்குர்ஆன் கூறுகின்றது. இத்தெய்வீக மர்மமானது, நுக்தாவான புள்ளி எழுத்துகளில் வியாபிக்கும் நிகழ்ச்சி போன்றதாகும். மேலும் ஒரு தனிப்பட்ட எழுத்தாலோ, எழுத்துகளாலோ நுக்தாவின் மகத்துவத்தை அடக்க முடியாததையும் அவதானிக்கின்றோம். இறைவனின் தனித்துவமும் இவ்வாறானதே. இறைவன் வியாபிக்கும் ஒரு வஸ்துவாலும் அல்லது வஸ்துக்களாலும், அவன் ஏகத்துவத்தை சற்றும் வரையறை செய்யவோ நிர்ணயிக்கவோ முடியாதெனும் உண்மை மேற்கூறிய உவமையினால் தெளிவாகின்றது.
'அலிப்' என்னும் முதல் அட்சரம் அல்லாஹ்வின் தனித்துவத்தையும், அவனின் ஆதி அந்தமில்லாத மகத்துவத்தையும் குறிப்பிடுகின்றது. நுக்தா முதன்முதலாக 'அலிப்' என்னும் அட்சரத்தில் உருவெடுத்ததனால், அலிபே அதன் முதன்மையென்று கூறலாம். அது அலிபாய்
உருவெடுக்குமுன் அதை முதன்மையென்றோ, கடைசியென்றோ கூற முடியாத நிலையில் இருந்தது. இவ்வாறே இறைவனையும் முதன்மையென்றும்
கடைசியென்றும், வெளிரங்கமாக வியாபிப்பவனென்றும் உள்ரங்கமாக மறைந்திருப்பவனென்றும் கூறுகின்றோம்.
தத்துவ ரீதியில் 'அலிப்' என்னும் அட்சரத்தின் முதன்மையை ஏற்றுக் கொண்டால் அதனிலே கடைசியும் அடங்கியிருக்கின்ற தென்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கடைசி எனும் மட்டத்தில் உருவெடுக்கும் நுக்தாவே அலிபில் முதன்மையாகத் தோன்றுகின்றது. இந்நிலை, அலிபுக்குப் பின் வரும் அட்சரங்களுக்கு, "நீங்கள் எல்லாம் எனக்குள் திரும்பி விட வேண்டும்" என்று பிரகடனஞ் செய்வது போலாகும். இவ் உண்மையை திருக்குர்ஆன் நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம்; நிச்சயமாக அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாகவுமிருக்கிறோம்" என்று கூறுகின்றது.*
பிரபஞ்சத்தில் வியாபித்தும் தனித்துவமாயுமிருக்கும், இறை மர்மத்தின் வெளிப்பாட்டை மேற்கூறிய அட்சர உவமையினாலன்றி வசன ரூபமாகவோ, தருக்க ரீதியாகவோ திருப்திகரமான முறையில்
* மேற்கூறிய ஷைகு அவர்களின் வியாக்கியானம் மார்டின் லிங்ஸ் என்னும் புகழ்வாய்ந்த அறிஞர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததின் சாரமாகும்.

47
வெளிப்படுத்த முடியாதென்னும் உண்மையை அவதானிக்கின்றோம். ஒரு விடயத்தில் குறிப்பிட்ட அனுபவத்தை அடைவதும், அதைப்பாஷை நடையில் விமர்சிப்பதும் இருவேறு அம்சங்களாகும். ஏனென்றால் ஒப்பிடக் கூடிய வஸ்துக்களையே வார்த்தைகள் எடுத்துக் காட்டும். அத்தகைமை , வாய்ந்த வார்த்தைகளால் ஒப்பிட முடியாத ஓர் அனுபவத்தை எப்படிக் கூறலாம்? வார்த்தைகளால் முடியாத ஒரு காரியத்தை உவமைகளாலும், குறியீடுகளாலும், ஓரளவிற்கு விமர்சிக்கலாம். இதனால்தான் மனித சமுதாயத்தில் பிரபல்யமான பெரும் இறைஞானிகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட, தம்தம் இறையனுபவங்களை கவிமூலமாகவும், குறியீடுகள் மூலமாகவும், உவமை உருவகங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினர்.
நுக்தாவில் இருந்தே அட்சரங்கள் உருவமெடுக்கின்றன. அப்படியானால் நுக்தா இன்றி அட்சரங்கள் உண்மையாக முடியாது. இன்னொரு ரீதியில் நுக்தாவுக்கு, அட்சரமின்றி வசனங்களாகவோ, நூல்களாகவோ வெளிப்பட முடியாது. பிரபஞ்சக் கலப்பற்ற தனித்துவ நிலையான இறைவனின் தூய்மையை, நுக்தா உவமையாகக் குறிப்பிடுகின்றது. இந்நிலையில் பார்வைக்கு அப்பாற்பட்ட மறைந்த பொக்கிஷம் போல் இறைவன் தனித்துவமாக இருக்கின்றான். 'அலிப்' என்னும் அட்சரத்தில் முதலாக உருவமெடுக்கும் மகத்துவம் இறைவனின், பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஏகத்துவ தனித்துவத்தைக் குறிப்பிடுகின்றது. பா () என்னும் இரண்டாம் அட்சரம் தூய்மையான தனித்துவ நிலையில் இருக்கும் மூலப் பொருள், பரம்பொருளாக மாறுபடும் நிலையைக் குறிக்கின்றது. பின்வரும் அட்சரங்களெல்லாம் இறைவன் வெவ்வேறான படைப்புகளில் வியாபிக்கும் தன்மையையும் பன்மை நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன.
தனித்துவ ஏகாந்த நிலையில் இருந்து, இறைவன் பற்பல வரிசைகளிலும் தோன்றும் வெவ்வேறான சிருஷ்டிகளில் ஊடுருவி, வியாபிக்கும் தன்மை வாய்ந்தவனாக இருக்கின்றான். மேற்கூறிய சிருஷ்டி வரிசையில், மனிதன் ஓர் உன்னத நடுநிலையில் இருக்கின்றான். ஏனென்றால் மனிதனே ஒரு கண்ணாடி போல் சிருஷ்டி கர்த்தாவான இறைவனையும், சிருஷ்டியான பிரபஞ்சத்தையும் தன்னுள் பிரதிபலிக்கின்றான். இறைவனின் மகத்துவமும் பிரபஞ்சத்தின் குணாதிசயங்களும் அவனில் ஒன்று சேருகின்றன.
(பூமியாகிய) இதன் மீது இருக்கின்ற ஒவ்வொன்றும் அழிந்துவிடக் கூடியதுதான் - வல்லமையும், சங்கையும் உடையவனான உம்முடைய ரப்பின் திருமுகம் (மட்டுமே)

Page 34
48
நிலைத்திருக்கும் (55; 26, 27) என்னும் திருக்குர்ஆன் பொருளுரையை விரிவுரை செய்யும் மேற்படி கூற்று ஒரு கால வரையறையில் நிகழும் விஷயமல்ல. சர்வ வல்லமை படைத்த தனித்துவ நிலையில் திகழும் இறைவனே உண்மை. அவனில் தஞ்சமடையும் சிருஷ்டிகளெல்லாம் நிலையற்றவை. இந்த உண்மையே மேற்கூறிய திருவசனத்தின் முக்கிய கருத்தாகும். அபூ உபைதா என்னும் சூஃபிஞானி (Died A.D.639) பின்வருமாறு கூறுகின்றார்:
நான் ஒரு வஸ்த்துவைப் பார்க்கும் போது, அந்த வஸ்துவைவிட அதைப் படைத்த இறைவனே என் முன்னிலையில் இருப்பதைக் காண்கின்றேன். "
இவ்வுண்மையை நாமறிந்தால், தனித்துவமான ஒருமை நிலையில் இயங்கும் இறைவனே, பற்பல சிருஷ்டிகளில், பற்பலவிதமாக வியாபிக்கின்றான் என்னும் உண்மையையும் அறிவோம். இக்கூற்றை ஆதாரமாக வைத்து பிரபஞ்சந்தான் இறைவன் என்று சொல்வது தவறு. அதே போல் இறைவனுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவை ஒரு கொப்புக்கும் மரத்துக்குமுரிய உறவைப் போன்றது என்றும் கூற முடியாது. டைட்டஸ் பேக்ஹாட் (Titus Burckhardt) 6Tainggolb sigsi Gu (35ITaish:
இறைவன் சிருஷ்டிகளில் வியாபித்த போதும் சிருஷ்டிகள்தான் இறைவன் என்று கூற முடியாது. ஏனென்றால் இறைவனின் ஆதாரமின்றி சிருஷ்டிகளெல்லாம் நிழல்கள் போன்று வெறுமையாகின்றன. "
என்னும் கருத்தை முன்வைக்கின்றார். இதைப் போன்ற ஒரு கருத்தையே பேராசிரியர் ஆர்.ஏ.நிக்கல்சனும்:
இறைவனின் தனித்துவ ஏகாந்த நிலையை நாம் நன்குணர்ந்தால், எல்லாம் இறைவன்தான் என்று கூறுவது தவறு. எல்லாம் இறைவனுள்ளே இருக்கின்றன. ஆனால், இறைவன், அவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன் என்பதே உண்மையாகும்
எனச் சான்று பகர்கின்றார். சூஃபி ஞானிகள் எல்லோரும் மேற்கூறிய உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். சிருஷ்டிகளைப் படைத்து அவைகளில் வியாபித்தாலும் இறைவன் சிருஷ்டிகளெல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட தனித்துவமான ஏகாந்த நிலையில் இருக்கின்றான் என்பதே அதன் சாரமாகும்.
மேற்கூறிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த (மத்திய) கருத்தை, பற்பல தேசங்களில், பற்பல நூற்றாண்டுகளில், பற்பல சமூகச்

49
சூழ்நிலைகளில், தோன்றிய சூஃபிஞானிகள் எல்லோரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இக்கருத்தை வெவ்வேறு இறைஞான தத்துவங்களில் வெவ்வேறு ரீதியில் பிரகடனஞ் செய்திருக்கின்றார்கள். சிலர் இறைவனின் தனித்துவத்தை அழுத்தமாகச்சுட்டிக் காட்டுவர். மற்றுஞ் சிலர்அதே தனித்துவத்தைச் சுட்டிக்காட்டி அவன் பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் அம்சத்தையும் விபரமாக எடுத்துக் கூறுவர். அழுத்தம் வெவ்வேறாகினும் மத்திய கருத்து ஒன்றாகவே இருக்கின்றது.
குராசானில் பிறந்த (505/1111) மிகவும் பிரபல்யமான தத்துவஞானியும், சூஃபியுமான அறிவுக்கடல் அபூஹாமித் அல்-கஸ்ஸாலி (ரஹ்) என்பவர் 'மார்க்கத்துக்குப் புத்துயிரளித்தல்" என்னும் பொருள்படும், 'இஹ்யா உலூமுத்தீன் (hya Ulum ud-Din) என்னும் நூலில், இறைவனின் தனித்துவத்தையும், சிருஷ்டிகளில் வியாபிக்கும் இயல்பையும் குர்ஆன் ஹதீதுகளுடன் நெருங்கியவாறு பின்வருமாறு கூறுகின்றார்.
ஐம்புலன்களால் அவதானிக்கும் எல்லாச் சிருஷ்டிகளும், சர்வ வல்லமையுள்ள இறைவனையும், அவனுடைய வல்லமையையும் சுட்டிக் காட்டுகின்றன. அவனுடைய அறிவும் மட்டிலா இயல்புகளும், எல்லாச் சிருஷ்டிகளிலும் வெளியாகி அல்லது அந்தரங்கமாகி வியாபித்திருக்கின்றன.
கற்களிலும், மண்ணாலாம், பொருள்களிலும், தாவரங்களிலும், மரங்களிலும் மற்றும் எல்லா உயிரினங்களிலும், விண்ணிலும், மண்ணிலும், நட்சத்திரங்களிலும், நிலப்பரப்பிலும், சமுத்திரத்திலும், நெருப்பிலும், காற்றிலும், பொருளிலும் அதன்
தன்மைகளிலும், சுருங்கக் கூறின் மானிடராகிய எம்மிலும் அவனின் சர்வ வல்லமை ஐயமின்றி வியாபிக்கின்றது. ஆனால் வெளவால் எப்படி ஒளியில் பார்வையற்று இருளில் பார்க்கின்றதோ, எப்படி பூரண சூரிய வெளிச்சத்தில் பார்வை குன்றி இருளிலே சிறிதளவு பார்க்கும் தன்மை கொண்டிருக்கிறதோ அதேபோன்று மனிதனின் மனமும், இறைவனின் மகத்துவமான பரிபூரண ஒளியை நன்கு காண முடியாத நிலையில் இருக்கின்றது.
கால நேரங்களுக்கு அப்பாற்பட்ட, எல்லாவற்றுக்கும் முதன்மையான, என்றும் ஒன்றான பரம்பொருளே இறைவன். அவன் என்றும் நிலைத்திருப்பவன். ஆதியும் அந்தமும் அற்றவன். அவனே ஆதி, அவனே அந்தம், அவனே சிருஷ்டிகளுக்கு அப்பாற்பட்டு தனித்து இயங்குபவன்.

Page 35
2. (R | |
! —"
50
ni A அவனே சிருஷ்டிகளில் வியர்பித்துள்ளவன். அவனின் அறிவு எல்லாவற்றையும் அறியக் கூடியதாய் இருக்கின்றது. அவனை ஒரு வஸ்துவோடும் ஒப்பிட முடியாது. அவனைப் போல் ஒரு வஸ்துவும் கிடையாது. விண்ணுலகமும் மண்ணுலகமும் அவனை அடக்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பாற்பட்ட மேல்நிலையில் இருக்கின்றான். அவனின் இருப்பு மனிதனின் அறிவிற்கு எட்டினாலும், அவனின் உண்மையான மகத்துவம் இறைஞானம் பெற்ற சிலருக்கே தென்படும். அவ்விறை ஞானத்தை, இறைவன் நன்னடத்தையுடைய பக்தர்களுக்கே வெகுமதியாக அளிப்பான். அவர்களுக்கே என்றும் நிலைத்திருக்கும் சுவனபதியில், அவனின் திருமுகத்தைக் காணும் பாக்கியத்தையும் சன்மானமாகக் கொடுப்பான். இதனால் அவர்களின் அழகு சம்பூரணமாகின்றது.
一エ
அவன் சர்வ வல்லமையுடையவன். எல்லாவற்றுக்கும் மேலானவன். எல்லாம் அறிந்தவன். அவனுக்கு உறக்கமும் ஓய்வுமில்லை. மரணமும் துன்பமும் அவனை ஆளமுடியாது. அவனே சர்வ சக்தி. எல்லாம் அவனின் இராச்சியமே. அவனுடைய அரசாட்சி எல்லாச் சிருஷ்டிகளையும் தன்னுள் அடக்கி இருக்கிறது. அவனே எல்லாமறிந்தவன். அவனே உயிர் கொடுப்பவன். பூப்பரப்பின் ஆழத்திலும், வான்பரப்பின் எல்லையிலா உயரத்திலும் இருக்கும் அனைத்துப் படைப்புகளையும் அவன் அறிந்தவன். விண்ணிலும், மண்ணிலும் காணப்படும், சிறியதிலும் சிறிய அணுவையும் அவனறிந்தவன். காரிருளில் கற்பாறைக்கடியில் நெளிந்தோடும் சிறு எறும்பின் அசைவையும், ஆகாயத்தில் அசையும் தூசியையும் அவன் நன்கு அறிந்தவன். மனிதர் நினைக்கும் நினைவுகளையும், அவர்களின் ஆசைகளையும், அவர்களின் இருதயத்தில் பதிந்திருக்கும் இரகசியங்களையும் அவன் முன்னமேயே அறிந்தவன். மனிதனும், ஜின்னும், வானவரும், சாத்தானும், விண்ணும், மண்ணும், உயிருள்ள தாவரங்களும், பிராணிகளும், உயிரற்ற ஜடப் பொருள்களும், அவைகளின் உற்பத்திகளும், அறிவுக்கு எட்டக் கூடியதும், புலன்களால் உணரக் கூடியதுமான அனைத்துப் படைப்புகளும், அவனின் சர்வ வல்லமையால் சிருஷ்டிக்கப்பட்டன. வெறுமை நிலையில் இருந்து இருப்பு நிலைக்கு அவன் சிருஷ்டிகளை உண்டாக்கினான். அவன் சிருஷ்டிகளைப் படைக்குமுன் அவனன்றி ஒன்றுமே இருக்கவில்லை. *

:PA1702;
51 ετ
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ' நிர்யெச ə?!5ğ5” (Kimiya al-Sa'ada) எனும் நூலில், மனிதனி நிலையில் பலதரப்பட்ட பண்புகள் கலந்திருப்பணித: டுத்துக் ாேட்டுகிறார். இதனால் மனிதன் மிருகக் குணமும், ஆடிர்ர்களின் பரிசுத்தமான // குணமும், ஆத்மீகத் தன்மையும் ஷைத்தா ரீன்கெட்ட குணமும் ހރ" இணைந்த ஒரு கலப்புச்சிருஷ்டியாக உலகில்இடுங்குகின்றான் என விபரிக்கின்றார். இத்தகைய மனிதன் தொழுகை, தியானம், நன்னடத்தை மூலம் தன்னைத் தூய்மைப்படுத்தி இறைவனை அணுகவேண்டுமென்று கூறுகின்றார். அவர் மேலும் கூறுவதாவது:
மனிதனே, உன்னுடைய உண்மையான அந்தரங்கத்தை நீ அறிந்து கொள்வாயாக. அப்பொழுதுதான், நீஎன்ன இயல்பை உடையவனென்றும், எங்கிருந்து இவ்வுலகுக்கு வந்தாய், ஏன் நீ படைக்கப்பட்டாய், எதில் உன் ஈடேற்றம் தங்கியிருக்கிறது, எதில் நீ துன்புறுவாய் என்னும் உண்மைகளை அறிவாய். கானகத்தில் இருக்கும் மிருகங்களின் குணங்களும், விண்ணவர்களின் பரிசுத்த குணங்களும் உன்னுள் கலந்திருக்கின்றன. ஆனால் உன்னுடைய உண்மையான அம்சம் என்னவெனில் உன்னுடைய றுாஹான ஆத்மாவாகும். மற்றவைகளெல்லாம் உன்னுடைய தெய்வீக குணாதிசயங்களுக்குப் பொருந்தா அயலானவைகளாகும். அதனால் உன்னுடைய தொடக்கத்தை நீ அறிவாய், அப்பொழுதுதான் உன்னைச் சிருஷ்டித்த இறைவனின் மகத்துவத்தையும், அவனின் பரிபூரணமான அழகையும், எங்கும் நிறைந்திருக்கும் அவனின் தன்மையையும் நீ அறிவாய். அப்பொழுதுதான் காம குரோதம் எனும் சங்கிலிகளை நீ வெட்டியெறிந்து நிவாரணம் பெறுவாய். ஏனென்றால், இறைவன் காம குரோதங்களுக்கு அடிமையாக உன்னைப் படைக்கவில்லை. அவற்றின் ஆளுகைக்குள் நீ இல்லாமல், உனது ஆளுகைக்குள் அவை இருக்க வேண்டும். நீ போகும் ஆத்மீகப் பயணத்தில் அவைகளை உன் குதிரை போலும் போராயுதம் போலும் கட்டுப்படுத்திக் கொள்வாயாக. மேலும் உன் ஆத்மீகப் பிரயாணம் முடியும் போழ்து, அவைகளில் மேல்கொண்ட ஆசைகளை உன்னுடைய பாதங்களால் மிதித்தொழித்து தூர எறிந்து விடுவாயாக."
முஹ்யித்தீன் இப்னுல் அறபி(ரஹ்) (638/1240) என்னும் பிரபல்யமான சூஃபி ஞானியின் தத்துவக் கருத்துப்படி, ஆதி அந்தமற்ற அல்லாஹ்வும், அவன் வியாபித்துள்ள சிருஷ்டிகளும் தனித்துவமான பரம் பொருளின் இரண்டு அம்சங்களாகும். பிரபஞ்சத்தின் மூலாதாரம் எனும் ரீதியில் நோக்கினால் இறைவன்

Page 36
52
ஹக் ஆகத் திகழ்கிறான். பிரபஞ்சத்தில் வியாபிக்கும் பரம்பொருளாக அவதானித்தால் இறைவன் கல்க் அல்லது சிருஷ்டிகளாக இயங்குகின்றான். இதனால் ஹக்கும், கல்க்கும் முறையே மூலாதாரப் பொருளாகவும் அதனின் தோற்றமான சிருஷ்டியுமாக அமைவதை நோக்கலாம். இறைவனை, வெறும் காரணியாக மட்டும் கருத முடியாது. அவன் பன்மையான சிருஷ்டிகளில் வியாபிப்பது மட்டுமல்லாமல் அவைகளுக்கெல்லாம் ஆதாரமான மூலப்பொருளாகவும் இருக்கின்றான். சிருஷ்டிகளில் வியாபித்திருந்தாலும் அவைகளைத் தாண்டி அப்பாற்பட்ட தனித்துவ நிலையில் இருக்கும் மகத்துவமான உண்மையே இறைவன். இப்னு அறபி (ரஹ்) இவ்வுண்மையைத் தெளிவாகப் பின்வருமாறு விமர்சிக்கிறார்.
சிருஷ்டிகளுக்கு அப்பாற்பட்ட (இறைவனின்) தனித்துவ மகத்துவத்தை மட்டும் நீ கூறினாயானால், இறைவனுக்கு வரையறை சாற்றுகின்றாய். அவனின் வியாபித்தலை மட்டும் சொன்னால் இறைவனை நீ குறிப்பிடுகின்றாய். விவரிக் கின்றாய். ஆனால் இறைவனின் இரு அம்சங்களையும் கூறுவாயானால், சரியான பாதையில் போகின்றாய். அப்படிப் போகும் போது, நீ இறைஞானத்தின் நிபுணனாகவும், தலைவனாகவும் ஆவாய். இறைவன் இருதன்மையுடையவன் எனக் கூறினால் நீ இரு கடவுள்கள் எனக் கூறும் தவறுக்கு ஆளாவாய். இறைவனின் ஒருமையை மட்டும் கூறினாயானால் நீஅவனின் வியாபித்தலை மறந்தவனாவாய்.
இறைவனும் பிரபஞ்சமும் ஒன்று எனக் கூறும்போது, தஷ்பீஹின் சாரத்தை மறந்திடாதே. அவனின் ஒருமையை மட்டும் கூறும்போது, தன்ஸிஹின் தத்துவத்தை நினைவு கொள். நீ அவனல்ல, ஆனால் நீ அவனுள் இருக்கிறாய். அவனே, சிருஷ்டிகளுக்கு மூலாதாரமான ஜனாக (ayan) வும், வரையறையுற்றும் வரையறையற்றும் இருக்கின்றான். *
* 'தன்ஸிஹ்' எனும் அறபி வார்த்தைக்கு தூய்மைப்படுத்துவது என்பது பொருள். எந்தவிதமான கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட இறைவன் - உருவம், தோற்றம், சடலம் முதலிய அனைத்து எல்லைக்கோட்டுக்கும் உட்படாதவன். இத்தகைய வரையறைகளில் இருந்து உயர்ந்தவன்; தூயவன் - இந்தக் கொள்கைக்கு நம்பிக்கைக்கு தன்ஸிஹ்' என்று பெயர் கொடுக்கப்படுகிறது.
தஷ்பீஹ்' என்றால் ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிடுவது என்று அர்த்தம். தன்ஸிஹ் எனும் கொள்கைக்கு இது நேர் எதிரானது மட்டுமல்ல, பெருமானார் நமக்கு எடுத்துக் கூறிய கொள்கைக்கு கட்டோடு முரண்பட்டதுமாகும்.
இறைவனுக்கு உருவம் கிடையாது எனும் கொள்கைக்கு தன்ஸிஹ் என்று பெயர். இறைவன் உருவத்துக்குக் கட்டுப்பட்டவன், அல்லது தனக்கென்று ஒர் உருவத்தை ஏற்படுத்திக் கொண்டவன் எனும் கொள்கை தஷ்பீஹ் என்று குறிக்கப்படுகிறது.

53
ஹக் ஆனவன் அவனிலும் வேறுபாடான கல்க் என்னும் சிருஷ்டிகளைப் படைக்கிறான் எனக் கூறினால் இறைவன் (ஹக்) வேறு, சிருஷ்டி (கல்க்) வேறு எனும் இரட்டைக் கருத்துகள் வரும். ஹக் எனும் இறைவன், கல்க் என்னும் சிருஷ்டியாக மாறுகின்றான் எனும் கூற்றும் மிகத் தவறானது. ஹக் என்னும் பரம்பொருளின் ஓர் அம்சம், கல்க் என்னும் சிருஷ்டிகளாகத் தோற்றமளிப்பது என்பதே இப்னு அறபி (ரஹ்) அவர்களின் கருத்து. இக்கருத்து இறைவன் வேறு, பிரபஞ்சம் வேறு எனும் இரட்டைக் கருத்துகளை நிராகரிக்கின்றது. இறைவனே உண்மை, சிருஷ்டிகளெல்லாம் அவன் அம்சத்தின் ஒரு தோற்றம் என்பதே இதன் சாரம். இதுவே வஹ்தத்துல் உஜூத் எனும் கருத்தாகும். இப்னு அறபி (ரஹ்) அவர்கள் தனது கிதாபுல் அஜ்விபா (Kitab al-Ajwiba) கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகின்றார்.
'அரசன் அமைச்சருக்கு மேலே இருக்கிறான்' என்ற சொற்றொடர் உங்களுக்கு எப்படிப் பொருள் கொடுக்கிறதோ அப்படித்தான் "இறைவனின் கை அவர்களின் கைகளுக்கு மேலே இருக்கிறது" என்னும் சொற்றொடரும் அர்த்தம் தருகிறது.
இப்போது நீங்கள் இந்தச் சொற்றொடரில் இடம்பெற்றிருக்கிற "மேலே" எனும் சொல்லை எடுத்து வைத்து, அதற்கு உயர்வு எனப் பொருள் கொடுத்து ஆராய்கிறீர்கள்.
'இந்தப் பொருள் நிச்சயமாக இறைத்தன்மைக்குப் பொருத்தமானதுதான். ஏனெனில் இப்படிப் பொருள் கொடுக்கும் போது அந்தப் பொருள் தன்ஸிஹைத்தான் சுட்டிக் காட்டுகிறதே தவிர, 'தஷ்பீஹை அல்ல!"
'இறைவன் 'அர்ஷி"ல் நேராக அமர்ந்தான்." அர்ஷ்' என்ற வார்த்தைக்கு ஆசனம் என்று அர்த்தம் இருந்தாலும் இந்த அர்த்தத்தில் அர்ஷ் என்னும் வார்த்தை இங்கே உபயோகிக்கப்படவில்லை. இதற்கு இன்னும் ஆழமான பொருள் இருக்கிறது என்பது தெளிவான ஒன்று.
இந்த வசனத்தில் அர்ஷ் என்னும் வார்த்தை அண்ட சராசரம் முழுவதையும் அனைத்துப் படைப்புகளையும் எல்லா நிகழ்ச்சிகளையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. அர்ஷில் இல்லாத எதுவும் அகிலத்தில் தோன்ற முடியாது - ஒவியனின் உள்ளத்தில் இல்லாத எதுவும் காகிதத்தில் தோன்ற முடியாதது போல்
மூளையின் வழியாக மனித உறுப்புகள் அனைத்தும் உள்ளத்தினால் அடக்கியாளப்படுவதுபோல், அண்ட சராசரம் முழுவதும் அர்ஷின் வழியாக இறைவனால் அடக்கியாளப்படுகிறது.
எனவே இந்த வசனத்துக்கு, 'இறைவன் அர்ஷின் வழியாக அண்ட சராசரம் முழுவதையும் அடக்கியாள்கிறான்' என்பது தான் உட்கருத்தாக இருக்க வேண்டும்!
இமாம் கஸ்ஸாலியின் இல்ஜாமுல் அவாம். என்னும் நூலில் இருந்து மொழி பெயர்ப்பு:
மெளலவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் (பாகவி)

Page 37
54
'இறைவன் இருக்கின்றான். அவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு முன்னும் பின்னுமொன்றுமில்லை. மேலுங் கீழுமொன்றுமில்லை. அவனுக்கு அண்மையென்றும், தூரமென்றும் ஒன்றுமில்லை. அவனுடன் இணைந்தோ பிரிந்தோ ஒன்றுமில்லை. அவன் எங்கு இருக்கின்றான். அவன் இடம் எது, அவன் எப்படி என்று சொல்வதற்கில்லை. அவன் அன்றிருந்தது போலவே இன்றுமிருக்கின்றான். அவன் ஒருமையற்ற ஒன்றாக இருக்கின்றான். அவன் தனிமையற்ற தனித்துவனாயிருக்கின்றான். அவனே முதல் இருப்பாகவும், கடைசி இருப்பாகவும், வெளித்தோன்றும் மூலப் பொருளாகவும் எல்லாவற்றுக்கும் உட்பொருளாகவும் இருக்கின்றான். அவனையன்றில் முதலுமில்லை, கடைசியுமில்லை. வெளியாகும் வஸ்துவுமில்லை. உள்ளிருக்கும் மறைபொருளுமில்லை. அவனே அவைகளுக்கு (சிருஷ்டிகளுக்கு) ஆதாரமாகின்றான். இவை அவனாலேயே உண்மைப் பொருளாகின்றன. அவன் ஒன்றிலும் அடங்கவில்லை. ஒன்றும் அவனில் அடங்காமலில்லை. இவ்வாறு நீ அவனை அறிந்து கொள்வாயாக. இத்தகைய இறையறிவு, கல்வியாலோ, அறிவாலோ, காரண சக்தியாலோ, கற்பனையாலோ, புலனறிவாலோ, வெளிக் கண்ணாலோ, அகக் கண்ணாலோ, பார்வையாலோ உனக்குக் கிட்டாது. ஏனென்றால் அவனே அவனைக் காண்கின்றான். அவனாலே அவன் அவனை அறிகின்றான். பிரபஞ்சம் என்பது அவனின் தனித்துவத்தை மறைக்கும் ஒரு திரையாகும். அவனின்றி வேறொன்றுமில்லை. அவனின்றி வேறொன்றுக்கும் இடமில்லை... இறைவனின்றி வேறொருவன் இருக்கின்றான் என்று சொல்வாயானால், அத்தகைய வேறொருவனில்லை. நீ அவனை அறியாய். மேலும் நீ அவனையே நோக்குவதையும் நீ அறியாய். ஆட்சி செய்பவனும் அவனே. (ரஹ்மத் என்னும் கருணையினால்) ஆட்சி செய்யப்படுபவனும் அவனே. சிருஷ்டிப்பவனும் அவனே, சிருஷ்டியும் அவனே. அவன் முன்பிருந்தது போன்றே இன்றுமிருக்கின்றான். அவன் ஆதிக்கத்துக்கோ அவன் சிருஷ்டிக்கும் அதிகாரத்திற்கோ சிருஷ்டிகள் தேவையில்லை.... அவன் ஆகுக என்று சிருஷ்டிகளைப் படைத்தபோது, அச்சிருஷ்டிகளின் தன்மை அவனில் ஏற்கனவே அடங்கியிருந்தது. எனினும் சிருஷ்டிகளைப் படைக்க முன் எப்படி இருந்தானோ, அவைகளைப் படைத்த பின்னும் அப்படியே இருக்கின்றான். அவனுடைய தனித்துவத்தில் அண்மை வஸ்த்துக்கும், மூல வஸ்த்துக்கும் வேற்றுமையே இல்லை. அண்மை என்பது அவன்

55
சிருஷ்டிகளில் வியாபிப்பதே. மூலப் பொருள் என்பது அவன் அவனாகவே இருக்கும் தனித்துவமே. அவனன்றி வேறொன்றுமில்லை. திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் 'உலகை நீ திட்டாதே, ஏனெனில் உலகிலே இறைவன் இருக்கின்றான்' என்றார்கள். உலகத்தில் வியாபிக்கும் இறைவனுக்கு இணையாகவோ, சமத்துவமாகவோ, ஒரு சக்தியுமில்லை என்பது இதன் தாத்பரியமாகும். திருநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அருளியதாக ஹதீது குத்ஸியில் கூறப்பட்டுள்ளதாவது: இறைவன் மூஸா (அலை) அவர்களிடம் சொன்னான். என்னுடைய அடியானே, நான் நோயுற்றிருந்தேன். நீ என்னைப் பார்க்க வரவில்லை. நான் உதவி கோரினேன். நான் கேட்ட உதவியை நீ செய்யவில்லை.*
இதன் கருத்து யாதெனில், யாசிப்பவனும் அவனே, நோயுற்று வருந்துபவனும் அவனே என்பதாகும். இவ்வுண்மையை ஒப்புக் கொண்டால், சர்வ சிருஷ்டிகளிலும் இறைவன் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது. அவைகளின்
உற்பத்திகளிலும் அவன் வியாபித்திருக்கின்றான். மேலும் அணுவுக்குள்ளே இருக்கும், அணுவின் அந்தரங்கத்தை நீ அறிவாயானால், எல்லாச் சிருஷ்டிகளின் அந்தரங்கத்தையும் அறிவாய். அவைகளின் உள்ரங்கத்தையும், வெளிரங்கத்தையும் அறிவாய். அப்பொழுது இம்மையிலோ, மறுமையிலோ இறைவனன்றி ஒன்றுமேயில்லை, என்னும் உண்மையை நீ அறிவாய். ஏனெனில் இம்மையும், மறுமையும் அவைகளில் அடங்கியிருக்கும் பற்பல நாமங் கொண்ட வஸ்துகளும், வெவ்வேறு நாமங்களும் அவனே.
மேற்கூறிய ஹதீதுக் குத்ஸியின் வாக்கியம் முழுமையாக பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.
(கியாமத்) மறு உலக விசாரணை நாளில் ஒரு மனிதனிடம் இறைவன் இவ்வாறு கேட்பான்: ''ஆதமுடைய மகனே! நான் நோயுற்றிருந்தேன். ஆனால் நீ நோய்விசாரிக்க வரவில்லை' என்பான். அடியான் வியப்புற்று ''இறைவனே! இப்படி எவ்வாறு நிகழக் கூடும்? நீயோ சகல உலகங்களுக்கும் இரட்சகன்'' எனக் கூறுவான். உடனே இறைவன் ''உன் அண்டை வீட்டில் என்னுடைய இன்ன அடியான் நோயுற்று இருந்தான். ஆனால், நீ அவனை விசாரிக்கவில்லை. நோயைக் குறித்து விசாரிப்பதற்காக நீ அவனிடம் சென்றிருந்தால், என்னை நீ அவனிடம் கண்டிருப்பாய்!” என்பான். இதைப் போன்று ''ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவு கொடுக்கவில்லை!'' என்பான். 'அப்பொழுது அடியான்' 'இது எப்படி நிகழ முடியும்? உனக்கு எந்தப் பொருளின் தேவையுமில்லையே!' என வியப்புடன் வினவுவான். அதற்கு இறைவன், ''என்னுடைய இன்ன அடியான் பசியின் கொடுமையால் உன்னிடம் வந்து உணவு கேட்டது உனக்கு நினைவில்லையா? ஆனால் நீ கொடுக்கவில்லை. நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால், என்னை நீ அவனுடன் பார்த்திருப்பாய்” எனக் கூறுவான்.
குர்ஆன் சாரம் - மெளலானா அபுல்கலாம் ஆஸாத் எழுதியது.
வளர்மதி பதிப்பகம் - தென்னூர் - திருச்சிராப்பள்ளி.

Page 38
56
ஓர் இறை பக்தன் சிருஷ்டிகர்த்தாவான இறைவனுடன் ஒன்றாகும் நிலையை அடையும்போது, எல்லாம் அவன் செயலே என்னும் உண்மையையும் அவன் அறிவான். உன் செயலென்பது உண்மையிலே, அவன் செயலாகும். உன் குணம் என்பது உண்மையிலே அவன் குணமாகும். உன் ஆத்மீகமென்பது உண்மையிலே அவன் ஆத்மீகமாகும். ஆனால் இந்நிலையில் நீசற்றேனும் அவனாகி விட முடியாது. அவன் (இறைவன்) நீயாகி விட முடியாது. ஏனெனில் 'அவன் முகமன்றி, எல்லாம் நிலையற்றது' என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. இதனால்தான் 'நீங்கள் எங்கு திரும்பினாலும், அல்லாஹ்வின் தோற்றத்தையே காண முடியும்’ எனக் கூறுகின்றது.
ஒருவன் மரணிக்கும் போழ்து, எப்படி புகழக் கூடியதும் அல்லது இகழக் கூடியதுமான குணாதிசயங்களையுடைய வெற்றுடம்பை இழக்கிறானோ, அதேபோன்று அவன் ஆத்மாவும், புகழக் கூடியதும் அல்லது இகழக் கூடியதுமான தன்மைகளை இழக்கின்றது. அந்நிலையில் தன்னை அறிந்த ஆத்மாவான நூஹின் இடத்தில் இறைவனே புகுந்து விடுகின்றான். அவனின் குணாதிசயங்களெல்லாம், இறைவனின் குணாதிசயங்களாக மாறுகின்றன. தன்னையறிந்தவன், இறைவனின் ஏகாந்த நிலையில் சேர்ந்து விடுகிறான். தன்னையறிந்தவன் 'நான்’ எனும் நிலையை இழந்து விடுகின்றான். இறைவனிலேயே அவன் சங்கமமாகி விடுகின்றான். "
அப்படியானால், L 1ᎶᏍ சிருஷ்டிகள், எப்படி 6?([5 பரம்பொருளில் இருந்து உண்டாகின்றன? இதை இப்னுல் அறபி (ரஹ்) பின்வருமாறு கூறுகின்றார்; இயற்கை என்பது தஜல்லி (Tajali) என்னும் ஒரு திரை நீக்கமாகும். அதாவது இறைவனின் சிருஷ்டி சக்தியின் (Fayd) வெள்ளப்பெருக்காகும். எல்லா உயிர்களிலும் வஸ்துகளிலும் வியாபித்தலாகும். தகல்லுல் (Takhallul) அல்லது இறை சக்தியின் பிரதி (Lahir) பலனாகும். சுருங்கக் கூறின், ஆதி, அந்தம், காலம், நேரம், குணம், தன்மைகளற்ற ஏகாந்த நிலையில் இருக்கும் பரம்பொருள், பிரபஞ்சக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, காலம், நேரம், இடம், தன்மை என்னும் வரையறைகளில் உண்டாகும் சிருஷ்டியாக வியாபித்தலே என்பதாகும்.
சிருஷ்டி என்பது இறைவனின் சிந்தனையில் நினைவுமயமாக இருக்கும் வஸ்துகளை, சுவாசம் வெளியிடுவது போல் வெளியாக்கலாகும். மனிதனின்

57
மூச்சில் எப்படி வார்த்தைகளும், எழுத்துகளும் ஒன்றாயிருக்கின்றனவோ அதேபோல் இறைவனின் மூச்சில் வஸ்துக்களின் முரண்பட்ட தன்மைகள் ஒன்றாயிருக்கின்றன. சிருஷ்டிகள் சதா மாறும் தன்மையுடையன. அவைகள் புதுப்புது விதமாக உண்டாகின்றன. ஆனால் இறைவனோ ஒரு மாற்றமுமின்றி, அன்றும், இன்றும், என்றும் "அதே ஏகனாயிருக்கின்றான். எண்ணுக்கடங்கா வஸ்துக்களில் உதயமாகும் இறைசக்தி, தஜல்லி (Tajal), வஸ்துக்களில் என்றும் நிலைத்திருக்கும். அது மாறுபடாதது. "
இறைவன், காலம், நேரம், இடம் என்னும் வரையறைகளினால் கட்டுப்படும் பிரபஞ்சத்தில், இன்சான் எனப்படும் மனிதன் அதிமுக்கியமான பாத்திரத்தை ஏற்றுக் கொள்கிறான். இறைவனுக்குரிய ஆத்மீகமும், பற்பல விதமான பிரபஞ்ச சக்திகளும் அவனுள் அடங்கி இருக்கின்றன. இதனால் தன்னையே தான் பார்க்கும் கண்ணாடியைப் போன்று, மனிதனின் மூலம் இறைவன் தன்னையே நோக்குகின்றான். இதைப்பற்றி இப்னுல் அறபி (றஹ்) அவர்கள் மேலும் கூறுவதாவது:
எண்ணற்ற திருநாமங்களையுடைய இறைவன், தன் நாட்டத்தில் அடங்கிக் கிடக்கும் சிருஷ்டிகளை உண்டாக்கும் எண்ணங்கள் அஃயான் (Ayan) அல்லது ஐனுஹ" (Aynuhu) பிரபஞ்சமயமாக உண்டாக வேண்டுமென்று எண்ணியபோது, கெளன் ஜாமி (Kawnjami) இன்ஸானான மனிதனுக்குள் அவைகளைப் பிரதிபலிக்கச் செய்தான். ஏனெனில் அத்தகைய உன்னதமான இன்ஸான் மூலமே, மேற்கூறிய பிரதிபலிப்பு நிறைவேறக் கூடியதாக இருந்தது. அதாவது தன் மூலமாகவே தன்னைப் பார்ப்பது, கண்ணாடி போன்ற பிறபொருள் மூலம் தன்னைப் பார்ப்பதிலும் வித்தியாசமானது. இதனால்தான் இறைவன், முதலாவது அவனிலும் வேறான பிரபஞ்சத்தில் வியாபிக்கின்றான். ஆத்மா அற்ற ஒரு ஜடப்பொருளைப் போல் பிரபஞ்சத்தை இறைவன் உண்டாக்குகின்றான். அத்தகைய பிரபஞ்சம் தூசுபடிந்த ஒரு கண்ணாடிக்குச் சமமாகும். அத்தகைய ஆத்மீக உணர்வற்ற ஜடப்பொருளில், இறைவன் தன்முகத்தைத் தான் நோக்குவது சாத்தியமாகாது. எனவே ஃபாய்து (Fayd) என்னும் சிருஷ்டி வெள்ளப் பெருக்கு தஜல்லி (Tajali) என்னும் வியாபித்தல் மூலம் தன்னைத் தானறியும் வாய்ப்பை இன்ஸானான மனிதன் மூலம் பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும். அத்தன்மை வாய்ந்த இன்ஸான் சிருஷ்டிகளிலே ஆகவும் உயர்ந்த மகோன்னதமான, பரிசுத்தமான சிருஷ்டியாவான். அவன் இறைவனிலே தொடங்கி, இறைவனிலே சங்கமமாகி அவன் எனும் தனித்துவத்தை (மனிதன்) இழக்கின்றான்.

Page 39
58
இறைவன் தன்னுடைய தன்மைகளை வியாபிக்கச் செய்வதற்கு, பிரபஞ்சமெனும் கண்ணாடியை மறைக்கும் அழுக்குகளைத் தூய்மை செய்ய வேண்டியிருந்தது. ஆதம் எனும் இன்ஸானே, பிரபஞ்ச அழுக்குகள் நீக்கப்பட்டு, இறைவனின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக படைக்கப்பட்டார். விண்ணவராகிய மலாயிக்கத்து மார்களும் அத்தகைய சக்தி சிறிதளவு பெற்றவர்களெனக் கருதலாம். அதாவது மனிதனோடு ஒப்பிடும்போது, எமது உடலில் இருக்கும் அறிவு சக்திக்கும், உடற் சக்திக்கும் இருக்கும் வேறுபாடுகளைப் போன்றதாயிருக்கும். மேலான அறிவுச் சக்தியை அடைந்தவனே, இன்ஸான் எனும் மானிடன். அவனே உலகில் இறைவனின் பிரதிநிதி (கலீபா) ஆகப் படைக்கப்பட்டான். அவன் பிரபஞ்சத்தில் உதித்ததனால், அவனைப் பிரபஞ்ச சிருஷ்டி என்று கூறுவோம். ஆனால் கண்ணுக்குப் பார்வை தரும் கண்மணி எப்படியோ, அதே போன்று இறைவனுக்கு இன்ஸான் ஒரு மகத்துவமான சிருஷ்டியாகின்றான். சிருஷ்டிகளை இன்ஸான் மூலமாகவே இறைவன் நோக்குகின்றான். அவன் மூலமாகவே தன் சிருஷ்டிகளுக்கு அருள்புரிகின்றான். அவனுள்ளேயே அழிந்து போகும் உடம்பும், அழிவற்ற றுாஹ" எனும் ஆத்மாவும் ஒன்றிணைந்து இருக்கின்றன.
அவனுள்ளேதான் இறைவனின் வேறுபாடான பிரபஞ்சமும், இறைவனை இணைக்கும் ஆத்மாவும் ஐக்கியமாகின்றன. அத்தகைய அவனை (மனிதனை)ப் படைத்தபோதுதான் சிருஷ்டி எனும் காரியம் (தொழில்) நிறைவடைகிறது. முத்திரைக்குச் சின்னம் எப்படியோ அப்படிப் போன்று, பிரபஞ்சத்திற்கு மனிதன் ஆகின்றான். அத்தகைமையுடைய இன்ஸான் உலகில் இறைவனின் பிரதிநிதியாகின்றான். ஏனெனில் அரசன் தன்னுடைய பொக்கிஷங்களை எல்லாம் முத்திரை பதித்துக் காப்பது போல், மனிதன் இறைவனின் சிருஷ்டிகளைக் காப்பாற்றுகின்றான். ஏனெனில், அரசனின் முத்திரை ஒரு பொருளில் இருக்கும் போது, ஒருவராலும் அப்பொருளை அனுமதியின்றி அப்புறப்படுத்த முடியாது. இறைவன் பிரபஞ்சத்தைக் காக்கும் கடமையை, தன் பிரதிநிதியான மனிதனிடம் ஒப்படைத்தான். மனிதர்களில் இன்ஸானுல் காமில் என்னும் சம்பூரணமான மனிதனே அந்த மகத்தான காக்கும் காரியத்தைச் செய்து வருகின்றான். இத்தகைய சம்பூரணமான மனிதன், இவ்வுலகை விட்டுப் பிரிந்து மறுமையை அடையும்போது அவன் பெற்ற எல்லாத்

59
தத்துவங்களும் அவனோடு அங்குச் சென்று, அவன் முன்பிருந்த தூய நிலையை அடைந்து அவனுடன் செல்லும் மகத்துவங்களெல்லாம், விண்ணுலகில், பொக்கிஷங்களைப் பெருக்கி, அலங்காரஞ் செய்வதை நீ நோக்குவாயா?
இத்தகைய சம்பூரண மனிதனின் ஞானப் பெருக்க மெல்லாம், இறைவனிடமிருந்தே உண்டாகின்றது. அத்தகைய அருள் ஞானந்தான், சம்பூரணமடையாத மற்றவர்களின் ஞானத்தைப் பெருக்குகின்றது. சம்பூரண மடைந்த மனிதன், தன் உடலோடு இருக்கும் போது இவ்வுண்மையை அறியாமலிருக்கலாம். ஆனால் அவனுடைய ஆத்மா அதை அறிந்திருக்கும். மேலும் முரணான தன்மைகள் மகத்துவமாகவும், அழகாகவும், உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், முதலாகவும், கடைசியாகவும், எப்படி இறைவனின் மகத்துவத்தில் ஒன்றியிருக்கிறதோ, அதுபோல் சம்பூரணமான மனிதனிலும், முரணான குணாதிசயங்கள் ஒன்றுபட்டிருக்கின்றன. அதனாலேதான் அவன், சம்பூரணமான மனிதன் அறிந்தும், அறியாதவனாகவும், நோக்கியும் நோக்காதவனாகவும், கண்டும் காணாதவனாகவும் மர்மமான நிலையில் இருக்கின்றான். *
சிருஷ்டிகளிலே மிக உன்னதமானதும், சம்பூரண மடைந்ததுமான படைப்பு திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உரியதாகும். அவர்களின் ஆத்மாவானது இறைவனையும் சிருஷ்டிகளையும் தனக்குள் ஐக்கியப்படுத்தும் இயல்பு வாய்ந்ததாகும்.
இறைவன், மனிதன், பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய மேல் கூறிய இப்னு அறபி (ரஹ்) யின் தத்துவக் கருத்துகள் திருக்குர்ஆன் கூறும், பிரபஞ்சத்தில் மனிதனின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் பிரதிபலிப்பதாகும். இவற்றின் மூலம் அன்னார் திருக்குர்ஆன் கூறும் அடிப்படையிலேயே, அதன் தத்துவக் கருத்துகளை மேற்கூறிய பந்தியில் விமர்சனம் செய்துள்ளார்.

Page 40
6O
4. “இன்ஸானுல் காமில் என்னும் சம்பூரண மனிதன்
இன்ஸானுல் காமில் என்னும் சம்பூரண மனிதனை ஏகாந்த மனிதனென்றும் சொல்லலாம். மேலே கூறப்பட்ட இப்னு அறபியின் தத்துவக் கருத்துகளில் இருந்து, ஒருபடி மேலே சென்று, ஜிலி என்னும் இறைஞானியின் வியாக்கியானம் பலதரப்பட்ட சிறப்பு வாய்ந்ததோர் தத்துவக் கொள்கையாக உருவெடுக்கின்றது. அப்துல் கரீம் இப்னு இப்றாகீம் அல்-ஜிலி (ரஹ்) (பிறப்பு - கி.பி.1365-6) அவர்களின் 'அல் இன்ஸானுல் காமில் ஃபிமாரிஃபாதி "லவாஹிர்வலா ə99q6)unT9) Gü” (Al- Insanu'll - Kamil fima rifati'l awakhir walawai) எனும் நூல் 'சிருஷ்டிகளின் முதன்மைத் தன்மையையும், கடைசித் தன்மையையும், சம்பூரணமாக அறிந்த மனிதன்' என்னும் கருத்தை உள்ளடக்கியிருக்கிறது என்று கூறுவர். இவர் காதிரிய்யாத் தரீக்காவைச் சேர்ந்த சூஃபியாவார். இவர் பிறப்பதற்கு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன், மாபெருந் தவசீலர் முகியித்தீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்களால், காதிரிய்யாத் தரீக்கா நெறி ஸ்தாபிக்கப்பட்டது என இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. காதிரிய்யாத் தரீக்கா மரபில் வந்த அல்-ஜிலி (ரஹ்) அவர்கள் தம் இறைஞான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே தம் தத்துவக் கருத்துகளைப் படைத்ததாகக் கூறுகின்றார்.
முன்னர் கூறப்பட்ட, இப்னு அறபியின் ஒருமைவாதக் கொள்கைகள், ஜீலியின் தத்துவக் கருத்துகளில் இறை சிந்தனையின் வெளிப்பாடு எனும் கருத்தாக அமைந்திருக்கிறது. முன்கூறிய
* சம்பூரண மனிதன் ஒரு மூமினின் கரம், உண்மையில் அல்லாஹ்வின் கரமேயாகும். ஆதிக்க சக்தியும் சிருஷ்டி சக்தியும், தகுதியும், எதையும் சமாளிக்கும் திறனும் உடையவன் அவன் மானிடன்தான்; ஆயினும் தன்மையில் தேவதூதன் போன்றவன். அடிமைதான் எனினும் எஜமானனின் குணங்களை (ஸிபத்துகளை)க் கொண்டவன். அவன் சுதந்திர இதயம் எவ்வுலகைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவன் நம்பிக்கைகள் சிறியவை, அவன் லட்சியங்கள் மகத்தானவை. அவன் ஒழுக்கம் யாரையும் கவர்வது. அவன் கண்கள் அற்புதமானவை. மென்மையான இன்மொழியும் தீவிரமான செயல்முறையும் உடையான் அவன். போரிலும் சரி, நண்பர் குழாத்திடையிலும் சரி அவன் இதயம் பரிசுத்தமானதாகவும் அவன் போக்கு கண்ணியமானதாகவும் இருக்கும். (அல்லாமா இக்பால்) நூல்: மகாகவி இக்பால் - ஆர்.பி.எம்.கனி, பி.ஏ.பி.எல். எழுதியது

61
தத்துவம் இறைவனும் உலகமும் ஒரு பரம்பொருளின் இரு அம்சங்கள் என்ற கருத்தைக் கூறும். படைப்பு என்பது இறை சிந்தனையின் வெளிப்பாடு என்னும் ஜீலி (ரஹ்) அவர்களின் தத்துவக் கருத்துகள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய ஜெர்மன் தத்துவ ஞானி ஹேகல் (Hegal) என்பவரின், அப்ஸோலுட் கொள்கை (Absolute Idea) என்னும் தத்துவக் கருத்துக்கு முன்னோடியாகத் திகழ்கின்றது. ஹேகல் (Hegal) என்பவரின் தத்துவக் கருத்தின் சாரமாவது:
படைப்பின் வெளிப்பாடு என்பது, வேற்றுமைகளற்ற ஒருமைப்பாடுடைய தனித்துவமான பரமாத்தும சிந்தனை, வேற்றுமைகள் நிறைந்த பற்பல குணங்களுடைய பன்மையான பிரபஞ்சமெனும் இயற்கையாக உருவெடுத்து, அந்நிலையில் உண்டாகும் தான்' 'அது'நான் 'நீ எனும் தன்மை, குணம், காலம், நேரம் எனும் வேற்றுமைகளைக் காலி செய்து, வேற்றுமையில் ஒற்றுமை, பன்மையில் ஒருமை எனும் சம்பூரணநிலையை மீண்டும் அடைவதேயாகும். பிரபஞ்சம் என்பது இறைசிந்தனையில் உண்டாகும் இரட்டைப் பிரிவின் ஓர் அம்சமாகும். அதாவது ஒருமைப்பாடான வேற்றுமைகளற்ற தனித்துவமான நிலையில் இருந்து, பன்மைப்பாடான வேற்றுமைகளுற்று, "நான் 'நீ எனக் கூறும் தனித்துவமற்ற இரண்டாம் நிலைக்கு மாறுவதேயாகும். இந்நிலை மாறுதல் பரம்பொருள் பரிணாமவாதம் எனப்படும். பரம்பொருள் பிரபஞ்சத்தை உண்மையாகவே தன்னிடமிருந்து உற்பத்தி செய்கின்றது என்பதே இதன் கருத்து. படைப்பெனும் காரியம் என்பது, உள்ளடங்கியிருக்கும் சுவாசம் வெளியேறுவதைப் போலாகும். இதைக் கால நேரத்தில் உண்டாகும் ஒரு காரியம் எனக் கருத முடியாது. இது ஆதி, அந்தம், இன்று, நேற்று என்னும் கால
வரையறைகளுக்கு அப்பாற்பட்ட விடயமாகும். இறை சிந்தனையில் ஆதி, அந்தம் என்பது என்றும் நிலைத்திருக்கும் கால வரையறையற்ற 'சதா இப்பொழுதாகும்." உவமையாகச்
சொல்லப் போனால், பாம்பின் வால் பாம்பின் வாயுள் அடங்கி, பாம்பின் முதலெது முடிவெது எனக் கூற முடியாத அங்க வேறுபாடற்ற நிலைபோலாகும்.
'எல்லா வஸ்துக்களும் இறை சிந்தனையின் வெளிப்பாடாகும்’ என்பதே ஜிலியின் பின்வரும் தத்துவக் கருத்தாகும்:
இறை சிந்தனையே பிரபஞ்ச ஆத்மாவின் உயிராகும். அதுவே அவ்வுயிரியின் அத்திவாரமாகும். இறையருள் பெற்று இறைசிந்தனையை அறிந்தவன் எல்லாம் இறைமயமே என்பதை உணர்வான். புலனுணர்வால் காண்பதெல்லாம் உன்னுடைய நினைவேயாகும். மறைந்து

Page 41
62
விட்டால் அவையெல்லாம் ஒரு கனவேயாகும். நேரத்தில்
காண்பதெல்லாம் சிந்தனை அத்திவாரத்திலே நினைவுமயமாகின்றது.
ஆனால் புலனுணர்வால் ஏமாந்திடாதே - ஏனெனில்
அவ்வுணர்வும் நினைவாகும் (Mukhayyal) அதைப் போன்றே பிரபஞ்சமும், அதன் எல்லா வஸ்துகளும் நினைவுகளாகும்.
அதேபோல் உண்மை அறிந்தவனுக்கு எல்லா உலகங்களும், (மலக்கூத், ஜெபறுாத், லாஹூத், நாஸ"த்) (Malakut, Jabarut, Lahut, masut) நினைவு லோகங்களாகும். நினைவை நிந்தனை செய்யாதே. அதுவே இறைவனின்சாரமாகும். எல்லாம் இறை சிந்தனையின் படைப்பாகும்.
இறை சிந்தனையே எல்லாப் படைப்புகளுக்கும் மூலாதாரமாய் எல்லா வஸ்துக்களிலும் வியாபிக்கின்றது. நீ கொண்டிருக்கும் இறை விசுவாசத்தையும் அவனின் தன்மைகளையும், நன்கு யோசித்துப் பார். உன் இறை விசுவாசத்தின் அடிப்படையென்ன? அது ஒர் சிந்தனையே. அச்சிந்தனையாகவே அவன் உன்னில் வியாபிக்கின்றான். இதை நீ நன்கு உணர்ந்தாயாகில் இறை சிந்தனையில் இருந்து பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பதை நீ அறிவாய். இறைவனில் இருந்தே எல்லா வஸ்துகளும் தொடங்குகின்றன. எல்லாவற்றிலும் அவன் வியாபிக்கின்றான். ஆனால் சிந்தனையிலேதான் அவனின் வியாபித்தல் பூரணமாகின்றது. திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிரபஞ்சத்தை ஒரு கனவுக்கு ஒப்பிட்டனர். கனவென்றால் ஒரு நினைவுதானே. அவர்கள் மேலும் கூறிய:
மனித வர்க்கம் பிரபஞ்சத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் இறக்கும்போது அவர்கள் விழிக்கின்றனர்' என்பதன் கருத்தாவது: பிரபஞ்ச வாழ்க்கை உண்மையிலேயே ஒரு தூக்க நிலை என்பதை மாந்தர் இறந்த பின்தான் உணர்கின்றனர் என்பதாம். இஃது இவ்வாறிருப்பின், பிரபஞ்சம் சிந்தனையிலேதான் தொடங்குகின்றது. சிந்தனையே ஒவ்வொரு படைப்பையும் நிர்ணயிக்கின்றது. படைப்புகள் எவ்வாறு வேறுபட்டாலும் சிந்தனையே அவைகளின் காரணியாகும். உதாரணமாக உலக மக்களை, நீ அவதானிப்பாயாயின், அவர்களின் வெவ்வேறு வாழ்க்கை என்பது இம்மையைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் எண்ணும் அவரவர் எண்ணங்களிலேயே அடங்கியிருக்கின்றது. மேலும் இருமை பற்றிய எண்ணங்களிலும், அவர்கள் இறைவனின் பிரசன்னத்தை

63
மறந்து (AL-hudur Ma Allah) விடுகின்றனர். காரணம் அவர்களின் தூக்க நிலையே. எல்லா நிலையிலும் இறைவனின் பிரசன்னத்தை அறிபவர்கள் தூக்க நிலையில் இருந்து விழித்தவர்களாயிருக்கின்றனர். "
மேற்கூறிய கருத்தின்படி உலகம் எனப்படும் பிரபஞ்சம் எப்படி உண்டானது? படைத்தல் என்பது கால, நேர, குணங்கள் முதலிய வரையறைகளுக்கு அப்பாற்பட்ட ஏகாந்த ஒருமை நிலையில் இருக்கும் இறை சிந்தனை, அவ்வரையறைகளுக்கு உட்பட்ட, பற்பல வேறுபட்ட ஜீவித வட்டங்களில் வியாபித்து, பற்பல விதமான உணர்வுகளைக் கொண்டு, இன்ஸானான மனிதனில் தன்னுணர்வு எனும் மேலான நிலையை அடைந்து, இன்ஸானுல் காமில் எனும் சம்பூரண மனிதனில், தன்னைத் தானே அறியும், மகோன்னத நிலையை அடைவதேயாகும். இந்த மகோன்னத நிலையை அடைந்த மனிதன் இறைவனையும், இயற்கையையும் இணைக்கும் ஓர் உன்னத சிருஷ்டியாவான். அவனே பிரபஞ்ச வஸ்துக்களின் கடைசியாவான். அவனே தனக்குள் இறைவனையும், பிரபஞ்சத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாவான். பேராசிரியர் நிக்கல்ஸன் "Studies in Islamic Mysticism என்னும் நூலில் ஜீலி (ரஹ்) அவர்களின் தத்துவக் கருத்துகளை திறமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். அவ்விமர்சனத்திலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்து, கீழே சுருக்கமாகக் குறிப்பிடுகின்றேன்.
பிரபஞ்ச குணங்களுக்கும் வரையறைகளுக்கும் அப்பாற்பட்ட, தனித்துவமான பரம்பொருளுக்கு நாமமோ, குணமோ இல்லை. தன்னிலும் வேறுபட்ட பிரபஞ்ச நிலையில் வியாபிக்கும் பொழுதுதான், நாமங்களும் குணங்களும், தான் வியாபிக்கும் வஸ்துக்களிலும் உயிரினங்களிலும் சேருகின்றன. தான் வியாபிக்கும் வஸ்துகளும், ஜீவ ஜந்துகளும், ஒருங்கே சேர்ந்ததுதான் பிரபஞ்சம். அதுவே இறைமகத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாகும். இக்கண்ணோட்டத்தில் இறைவன் வேறு, பிரபஞ்சம் வேறு என்னும் வேற்றுமையை நாம் அவதானித்தாலும், நீரும், பனிக்கட்டியும் போல், இவை இரண்டும் ஒரு பொருளின் இரண்டு அம்சங்களென்பதையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். பிரபஞ்சமென்பது கனவு போன்ற ஒரு மாயை அல்ல. பரம்பொருளான இறைவன் வியாபிக்கும், அவனின் ஓர் அம்சமாக அது இயங்குகின்றது. இறை சிந்தனை வெளிப்பாடாகும், பற்பல குணங்கள் கொண்ட பிரபஞ்ச நிலைக்கும், இறை சிந்தனைக்கும் உண்மையிலேயே வேறுபாடில்லை. மாந்தராகிய நாமும்

Page 42
64
இறைசிந்தனையின் பகுதி என்ற முறையில், அவன் தன்மைகளை எம்முள் கொண்டிருக்கிறோம். எங்கள் வாழ்க்கை என்பது, அவன் சிந்தனையின் 32(U5 வெளிப்பாடாகும். எமது வாழ்க்கைக்கு எப்படி அவன் அருள் தேவையோ, அது போல் அவன் வியாபித்தலுக்கு நாம் ஒரு சாதனமாகத் தேவைப்படுகின்றோம். குணங்கள், சம்பந்தங்கள், பிணக்குகள் அற்ற தனித்துவ நிலையில் இருக்கும் பரம்பொருளை ஜிலி (ரஹ்) அவர்கள் 'அல்-அமா? 'இருள் நிறைந்த பனி"யென வருணிக்கிறார்.
தனித்துவமான பரம்பொருள் தன்னை வெளிப்படுத்தும், பிரபஞ்ச நிலையை அடைய மூன்று கட்டங்களில் தன்னை வேறுபடுத்திக் கொள்கின்றது. முதலாங் கட்டமாவது: தனித்துவமான பிரபஞ்சக் கலப்பற்ற, தூய நிலையான அஹதிய்யத் (Ahadiyyat) என்பதாகும். இரண்டாங்கட்டமாவது: ஹ"விய்யத் எனப்படும் 'அவன்' எனும் இரண்டாம் நிலையாகும். மூன்றாங் கட்டமாவது: 'அணிய்யா' எனப்படும் 'நான்’ என்னும் நிலையாகும். தன்னை வெளிப்படுத்தும் மேற்கூறிய மூன்று கட்டங்களிலும் இறைவன் வியாபக மாகுவதன் மூலம், அவனே சகல படைப்புகளையும் அறிபவனாகவும், அறியப்படும் படைப்புகளாகவும், பற்பல குணங்களும், தன்மைகளும் வாய்ந்த எல்லா வஸ்த்துக்களிலும், உயிரினங்களிலும் தன்னை வெளிப்படுத்துகின்றான். பிரபஞ்சமெனும் நிலையில் வெளிப்பாடாகியும், சிருஷ்டிகர்த்தா எனும் நிலையில் உள்ரங்கமாகியும் திகழ்கின்றான். குணங்கள், பிணக்குகள் சம்பந்தமற்ற, ஏகாந்த மகோன்னத நிலையில் இருந்து, படிப்படியாக பற்பல குணங்களும் பிணக்குகளும், தன்மைகளும், நாமங்களும் ரூபங்களும் நிறைந்த உலக சிருஷ்டிகளில் வியாபித்துத் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கின்றான். ஆனால் முரண்பாடுகள் நிறைந்த பிரபஞ்ச நிலையில் வியாபித்தாலும், அந்த முரண்பாடுகளை இணைக்கும், வேற்றுமையில் ஒற்றுமையெனும் உயர்நிலையில் எல்லா வெளிப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட ஒருமையான ஏகாந்த நிலையிலும் சதா இயங்குகின்றான். மேற்கூறிய இறைமகத்துவம், பனிக்கட்டி நீராகி, அந்நீர் திரும்பவும் பனிக்கட்டியாவது போலாகும். இன்னொரு விதத்தில் நோக்கும் போது தனித்துவமான இறைவன் பிரபஞ்சத்தில் வியாபிப்பது கீழிறங்குவது போலும், அந்த வெளிப்பாட்டு நிலையில் இருந்து, தனித்துவமான ஏகாந்த நிலைக்குத் திரும்புவது மேலேறுவது போலும் உவமை ரீதியாகக் கூறலாம்.

65
இன்ஸானாகிய மனிதனில், இயற்கையின்
குணாதிசயங்களும், அவ்வியற்கையைச் சிருஷ்டித்த இறைவனின் மகோன்னதமும் ஒன்றுபடுகின்றன. ஒவ்வொரு படைப்பும், இறைவனின் மகத்துவத்தை ஒவ்வொரு ரீதியில் வெளிப்படுத்தினாலும், மனிதன்தான் இறைவனின் மகோன்னதத்தை சம்பூரணமாக வெளிப்படுத்துகின்றான். இன்னொரு வகையில் கூறினால், இன்ஸானுல் காமில் எனும் சம்பூரண மனிதர்களாகிய நபிமார்களிலும், அவ்லியாக்களிலும், இறைஞானிகளிலும் இறைவன் சம்பூரணமாக தனது குத்ரத்தை வெளிப்படுத்துகின்றான். அத்தகைய சம்பூரண மனிதராகிய மகான்கள் மூலம், சிருஷ்டிப்பவன், சிருஷ்டி, ஏகாந்தமான பரம்பொருள், அப்பரம்பொருளின் தோற்றம் எனும் வேற்றுமைகள் காலியாகி, இறைவனின் மகத்துவங்கள் சம்பூரணமாக வெளிப்படுகின்றன. சுருங்கக் கூறின் இறைவன் பிரபஞ்சத்தில் வெளிப்படுவதும், அவ்வெளிப்பாடான நிலையில் இருந்து, பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஒருமைப்பாடான தூய நிலைக்கு, அவன் திரும்புவதையும் சம்பூரண மனிதனின் ஆத்மா முற்றிலும் பிரதிபலிக்கின்றது.
மேற்கூறிய இறைமர்மங்களை உணரும் இறை ஞானத்தை தஜல்லி (Tajali) அல்லது வெளிப்பாடு என்று ஜீலி (ரஹ்) கூறுகின்றார். இவ் இறைஞானத்தில் மூன்று நிலைகள் உண்டு. அவை முறையே:
இறைவனின் 'ஒருமை (one-ness) நிலையையும், அவனின் 'அவன் (He-ness) எனும் இரண்டாம் நிலையையும், "நான் (1 -ness) எனும் மூன்றாம் நிலையையும் அறிவதே ஆத்மீக ஞானமாகும்."
மேற்கூறப்பட்ட இறைவெளிப்டாடுகளை பின்வரும் வாய்ப்பாடுகள் மூலம் சுருங்கக் கூறலாம்.
1. பரம் பொருளின் முதன்மையான தூய சிந்தனை நிலை (அத் - தாத், அல் - வுஜூத், அல் -முத்லக்) (Al-Dhat, Al-Wujud, Al-mutlaq) அதன் பிரிவுகளாவன: (a) உள்ரங்கமான நிலை: அல்-அமா வெனும் இருள் நிறைந்த LIGof (The dark mist - Al-Ama) GLITairpg) T(5 lb. g.g. LairgoLD56ir மறைந்ததும், ஆனால் பன்மைகளை உண்டாக்கக் கூடியதுமான நிலையாகும்.

Page 43
66
(b) வெளிரங்கமானநிலை: அதாவது அஹ்திய்யத் என்னும் தூய ஒருமை (Ahadiyya) நிலை, இது இறைவனின் ஒருமையுணர்வாகும். 2. அஹதிய்யத் (Ahadiyya) என்னும் தூய ஒருமை நிலை. அதன் பிரிவுகளாவன: (a) உள்ரங்க நிலை: ஹ"விய்யா (Huwiyya) பன்மைகளைக் காலியாக்கும் இறையுணர்வு. (b) வெளிரங்க நிலை: நான்’ எனும் நிலை (Aniyya) பன்மை நிறைந்த சிருஷ்டிகளின் உண்மையை அறிந்த நிலை. 3. பன்மையில் ஒருமை நிலை - வாஹிதிய்யா (Wahidiyya) ஏகப் பொருளாயிருந்தும், பற்பல சிருஷ்டிகளில் பரிணமிக்கும் அல்லது வியாபிக்கும் பன்மை நிலை."
5. மெளலானா ரூமியின் இறைஞான தத்துவக் கருத்துகள்
(Evolution and involution in Rumi's mysticism)
ஜீலி (ரஹ்) அவர்களின் தத்துவக் கொள்கைகள், ஹேகலின் தத்துவ ஞானத்தைப் போன்று தருக்க ரீதியானது. ஜேர்மன் தத்துவ ஞானி ஹேகலை விட, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தியவர்ஜீலி. ரூமி என்னும் இறைஞானியோ பெரும்புகழ் வாய்ந்த 'கிதாபுல் மஸ்னவி என்னும் பாரசீகக் கிரந்தத்தை எழுதிய பெருங்கவிஞர். இவர் தம் தத்துவக் கருத்துகளை மகோன்னதமான இலக்கிய உருவங்களில் இயற்றினார். மெளலானா ரூமியின் தத்துவ நெறியையும், ஜீலியின் தத்துவ நெறியையும், சரித்திர வரிசைக்கு முரணான வகையில், தான் எழுதிய காரணம் இவ்விரு மகான்களின் வெவ்வேறான கண்ணோட்டங்களை ஒப்பிட்டு ஆராய்வதற்காகும்.
* உபநிடதங்களிலே பிரம்மத்துக்கு இரண்டு நிலைகள் கூறப்படுகின்றன. இதனை பிரம்மத்தைப் பற்றிய இருவித வருணனைகள் எனக் கூறலாம். ஒன்று பிரம்மம் உலகத்தோடு கூடி, உலகம் எங்கணும் வியாபித்திருக்கும் நிலை. இது சப்பிரபஞ்சநிலை எனப்படும். அதாவது சகபிரபஞ்சம் - பிரபஞ்சத்தோடு கூடியது என்பது இதன் கருத்து. இந்த உலகம் எதிலிருந்து தோன்றி, பின்னர் எதனால் நிலை பெற்று, ஈற்றில் எதனில் போய் ஒடுங்குகின்றதோ அதுவே பிரம்மம்.
பிரம்மம் தன்னிடமிருந்து இந்தப் பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கும், பின் அது தன்னுள்ளே ஒடுங்குவதற்கும் காரணமான நிலையே சப்பிரபஞ்ச நிலை. இப்பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு மூலகாரணமாயுள்ள பிரம்மம் தன்னிலிருந்து உண்மையாகவே இதனை உற்பத்தி செய்கின்றது எனக் கொள்ளுகின்றனர். அவர்களுடைய இக்கொள்கை பிரம்ம

67
மெளலானா ரூமி (ரஹ்) அவர்கள் கி.பி.1207ல் பிறந்தவர். இவ்விருவரும் பெரும்புகழ் வாய்ந்த இறை ஞானிகளாவர். ஆனால் அவர்களின் தத்துவக் கண்ணோட்டங்களில் வேறுபட்ட கருத்துச்சிறப்புகள் நிறைந்து கிடக்கின்றன. ஜீலி (ரஹ்) அவர்கள், பரம்பொருளை தர்க்க ரீதியாக ஆராய்ச்சி செய்தார்கள். மெளலானா ரூமியோ, புலவர் என்ற முறையில் உணர்ச்சிமிக்க, இலக்கியச்சுவை வாய்ந்த கவிக் களஞ்சியங்களின் மூலம் மெய்ப் பொருளைக் கருத்திற் கொண்டார்கள். மெளலானா ரூமியவர்கள் உலகப் பிரசித்தம் வாய்ந்த 'மஸ்னவி ஷரீபின் ஆசிரியர். 'மஸ்னவீ என்ற அந்தப் பெருநூல் ஆத்மீகத் துறைக்குக் கலைக்களஞ்சியம் எனப் பாராட்டப்படுகின்றது. மஸ்னவீ (Mathnawi) 25000 செய்யுள்களைக் கொண்டது. இன்னும் இவரால் ஆக்கப்பட்ட திவானி-ஷம்ஸி தப்ரீஸ் (Divani - Shamsi Tabriz) என்னும் நூல் 2,500 பாசுரங்களையும், ருபாயிய்யாத் (Rubaiyat) என்னும் நூல் 1,600க்கும் மேலான நான்கடி கொண்ட செய்யுள்களையும் உடைய இலக்கியப் படைப்பாகும்.
பாரசீக இலக்கியத்திலே இவருக்கு நிகரான இலக்கிய மேதையே இல்லை என்று சொல்லலாம். இவ் இலக்கிய ஆக்கங்களில் முக்கியமான கருத்து யாதெனில், எல்லாப் படைப்புகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கும் பரம் பொருளான இறைவன், பிரபஞ்சமெனும் பற்பல படைப்புகளில் வியாபித்து, சம்பூரண மனிதனெனும் உன்னத சிருஷ்டியில் தன்னைத்தானே அறிந்து கொள்கிறான் என்பதாகும். இம்மூலக் கொள்கையை ஜலாலுத்தீன் ரூமி அவர்களுக்கு முன், எத்தனையோ சூஃபி ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக இவருக்கு முன் வாழ்ந்த இப்னு அறபி (ரஹ்) தம் இறையனுபவ உண்மைகளை சர்வ விபரங்களையும் அடக்கும் ஒழுங்கான தத்துவ நெறியாக ஆக்கினார். ஆனாலும் தத்துவக் கண்ணோட்டத்தில் முன்வந்த இறைஞானிகளோடு கருத்தொற்றுமை இருந்தபோதும், ரூமி (ரஹ்)
பரிணாமவாதம் எனப்படும். பிரம்மம் உலகை உண்மையாகவே தன்னிடமிருந்து உற்பத்தி செய்கின்றது என்பதே இதன் கருத்து.
நிஷ்பிரபஞ்சம் என்பதற்குப் 'பிரபஞ்சம் அற்ற" என்பது அல்லது பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட என்பது கருத்து. சப்பிரபஞ்சம், நிஷ்பிரபஞ்சம் என்ற இரண்டையும் கூர்ந்து நோக்கும் போது, ஓர் உண்மை புலனாகின்றது. இந்த உலகம் பிரம்மத்துள் அடங்குமே தவிர பிரம்மம் உலகத்துள் அடங்காது. உலகம் பிரம்மத்துள் அடங்குவது போல, பிரம்மமும் உலகத்துள் அடங்குமெனக்கொண்டால், இயற்கையே இறைவன் என்ற நிலைதான்ஏற்படும். அங்ங்னமன்றி, இறைவன் இயற்கையுமாகி, அப்பாலுமானவன் என்ற உண்மையையே இந்த இருநிலைகளும் சேர்ந்து உணர்த்துகின்றன" என பேராசிரியர் கி.லசுஷ்மணன் அவர்கள், இந்திய தத்துவ ஞானத்தில் பரம்பொருள் பிரபஞ்சத்தில் வியாபிக்கும் விடயத்தைப் பற்றி இங்ங்னம் கூறுகின்றார்.
ஜீலி (ரஹ்) அவர்களின் தத்துவக் கருத்துகள் சில அம்சங்களில் இந்திய தத்துவ ஞானக்
கருத்துகளுக்கு ஒப்பிடக் கூடியதாயிருக்கின்றது.நூல்: இந்திய தத்துவ ஞானம். கி.லசுஷ்மணன் (M.A., Dip.Ed)

Page 44
68
அக்கருத்துகளை சொல் நயம், பொருள் நயம் வாய்ந்த அதியுன்னத இலக்கிய ஆக்கங்கள் மூலம், உலகத்துக்கு வெளியாக்கினார். இதனால்தான் பேராசிரியர் ஆர்.ஏ.நிக்கல்ஸன் இம்மகானின் ஆக்கங்களை உலகம் கண்ட அதியுன்னத ஒப்பிட முடியாத இறை சிந்தனையெனப் பாராட்டி இருக்கிறார். ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்களின், சில ஆக்கங்களை, பின்வரும் பக்கங்களில் எடுத்துக் காட்டியுள்ளேன்.
இவ் ஆக்கங்களின் மூலக்கருத்து யாதெனில், உலகம் என்பது ஒரு ஜீவித படைப்பு வட்டமாகும். இவ்வட்டத்தில் எல்லாச் சிருஷ்டிகளும் இறைவனிடமிருந்து உண்டாகி, பற்பல படைப்புகள் எனும் நிலையில், பற்பல விதமான அனுபவங்களைக் கண்டு, பிரபஞ்சமெனும் வரிசையில் ஜடப்பொருள் (matter) உயிரினம் (Life) உணர்ச்சியெனும் (consciousness) மூன்று நிலைகளை அடைந்த பின், அவைகளையும் தாண்டி, ஏகாந்த நிலையெனும் மேலான மூலப் பொருளில் தஞ்சமடைவதாகும். இறைவனிடமிருந்து உண்டாவதும், அவனிடமே போய்ச் சங்கமமாவதும் ஒர் அண்ட சராசரப் பிரயாணத்தைப் போன்றது. இப்பிரயாணத்தின் முதல் கட்டமாக, இறைசக்தி, பிரபஞ்சப் பன்மையில் வெளியாவதை இறங்குஞ் செயலாகவும், அப்பன்மை நிலையில் இருந்து சிருஷ்டிகள் இறைபால் அடையும் இரண்டாங் கட்டத்தை ஏறுஞ் செயலாகவும் இலக்கிய நயத்துடன் ரூமி (ரஹ்) எடுத்துக்காட்டுகின்றார்.
பின்வரும் கவிதைகளில் ரூமி (ரஹ்) அவர்களின் முக்கியமான தத்துவக் கருத்துகள் கவிநயத்துடன் வெளியாகின்றன.
நித்திரையும் மறதியும்
Sleep and Forgetting
ஒரு நகரில் பல வருடம் வாழ்ந்தான் ஒருவன். அவன் துயில் கொண்ட போது நன்மை தீமைகள் நிறைந்த பிறிதொரு நகரைக் கனவில் கண்டான். அவ்வேளையில், அவன் பழைய நகரத்தை மறந்து விட்டான். கனவில் வரும் நகரத்தை இது ஒரு புது நகரம் என்று சொல்வானா? இல்லவே இல்லை.
உண்மையிலே நினைக்க மாட்டான்.

69
இங்கேதான் பிறந்தேன், இங்கேதான் வளர்ந்தேன், இங்கேதான் வாழ்ந்தேன் என நினைப்பான். எம் ஆத்மாவும் அப்படியே. அதன் பூர்வீகப் பிறந்தகத்தையும் நிலையையும் மறந்தது ஒரு வியப்பா? ஏன் இவ்வுலக மாயையில் உறங்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆத்மா மேகங்களால் மூடப்பட்ட நட்சத்திரம் போலாகும் அந்த ஆத்மா."
ரூமி (ரஹ்) அவர்கள் மூன்று விதமான ஆத்மாக்களை அடையாளம் காண்கின்றார். அவையாவன: (a) ஐம்புல உணர்ச்சிகள் நிறைந்த மிருக ஆத்மா (b) பகுத்தறிவு, தர்க்க ஞானம் நிறைந்த அறிவாத்மா (c) ஏகாந்த நிலையடைந்த ஞான ஆத்மா. இது இறை தூதர் நபிமாருக்கும், இறை நேசர் அவ்லியாக்களுக்கும் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
விசுவாசிகளெல்லாம் ஓர் ஆத்மீக இனமே
The Faithful are one soul
விசுவாசிகளெல்லாம் ஒர் ஆத்மீக இனமே.
இறைநம்பிக்கையெனும் ஈமான் உடையவர்கள்
பலரானாலும் விசுவாசம் ஒன்றே.
அவர்களின் உடம்புகள் பலவானாலும் அவர்களின் ஆத்மா ஒன்றே.
ஆத்மாவும் புலனறிவும்; எருதிலும் கழுதையிலும் உண்டு.
மனிதனிலோ இன்னுமொரு
உயர்ந்த ஆத்மாவும் அறிவும் உண்டு.
மேலும் இறைஞானம் கிட்டிய மகான்களுக்கு
மானிட ஆத்மாவோடு மேலானதோர் ஆத்மாவும்
இருக்கின்றது.
மிருக ஆத்மாவில் ஒருமையுணர்வு கிடையாது.
அவ்வுணர்வை மிருக ஆத்மாவில் தேடாதே.
மிருக ஆத்ம உணர்வோடு
ஒருவன் உண்டு மகிழ்ந்தால்
அவன் அயலான் பசி தீராது.
அவன் சுமை தூக்கினால்
அவன் அயலான் பாரம் நீங்காது.

Page 45
7Ο
இது மட்டுமா? அயலான் மரணத்தால் அவன் இன்புறுகின்றான். அயலான் செல்வந்தனானால் பொறாமையால் மரணிக்கின்றான்.
ஒநாய்களின், நாய்களின் ஆத்மாக்கள் வேறுபட்டனவே. ஆனால் இறைஞானம் அடைந்த சிங்கங்களின் ஆத்மாக்களோ ஐக்கியமானவையே. சம்பூரண மடைந்தோரின் ஆத்மாவோ ஒருடம்பில் நூறு ஆத்மாக்களின் தன்மை கொண்டது. ஏனென்றால் இல்லங்களை ஒளிமயமாக்கும் பல நூறு ஒளிகளும் ஒரு சூரியனின் ஒர் ஒளியே சுவர்களை நீக்கினால் சிதைந்த ஒளிகள் யாவும் ஒரு ஒளியின் பாகங்களே. அதுபோல், உடம்புகளெனும் இல்லங்களை நீக்கினால் அடியார்களின் ஆத்மாக்கள் யாவும் ஒன்றே. 73
சம்பூரணமடைந்த மனிதன் இறைவனை ஞானக்கண்ணால்
அறிகிறான். அத்தகைய இறைஞானம் புலனறிவுக்கோ, நூலறிவுக்கோ அப்பாற்பட்ட ஞான அறிவாகும்.
ஞான அறிவு
immediate Knowledge
உன் அறிவும்; புலனுணர்வும் குழந்தைகள் பிரம்புகளால் செய்து விளையாடும் விளையாட்டுப் பொருள்கள் போலாகும். இறைஞானியின் அறிவோ, மேனிலைக்கு உந்தச் செய்யும். புலனறிவு ஒரு பாரமாகும். இறைவன் சொன்னான்: அவனால் அருளாத அறிவு, கழுதை சுமக்கும் பொதியைப் போலாகுமென்று.
சுயநலமற்ற இறையறிவை உன்னில் நீ சுமப்பாயானால் மேனிலை பெற்று இன்புறுவாய். இறைவனின் சகுணங்களை மட்டும் கண்டு திருப்தியடைந்த மனிதனே
இறைஞான மயக்கமின்றி எங்கே உன் விடுதலை? வெறும் நாமங்களையும் குணங்களையும் அறிவதால் என்ன LuuaõT?

71.
தோற்றங்களை மட்டும் அறிவாய். ஆனால் தோற்றங்கள் உண்மையின் பாதையை மட்டும் காட்டும். நாமத்தால் மட்டும் ஒரு பொருளை அறிவாயா? ரோ ஜா ம ல ர் எனும் எழுத்துக்களில் ரோஜா மலரை பெறுவாயா? நீ பெயரை மட்டும் கூறினாய். போ, பேர் கூறும் பொருளைத் தேடு. விண்ணில்தான் சந்திரன் இருக்கின்றான். நீரில் தோன்றுவதுபோல் அல்ல. நாமங்களுக்கும், அட்சரங்களுக்கும், மேலான தூய நிலையை அடைவாயாக. உன் அழுக்குகளை சுத்தி செய்வாயாக. நூலின்றி, படிப்பின்றி, குருவுமின்றி நபிமார்கள் பெற்ற ஞான அறிவை உன் இதயத்தில் தேடுவாயாக.
நேரில் காணாத ஒரு மணப் பெண்ணின் அழகை, திருமணஞ் செய்வதற்கு வரப் போகும் மணமகனுக்கு, வார்த்தைகளால் வனப்புறக் கூறுவது போன்று, சாதாரண அறிவு (புலனுணர்வோடு சேர்ந்த காரண அறிவு) எழுத்து மூலம் பெற்றாலும், வார்த்தை மூலம் பெற்றாலும் உண்மையை உணர்வதில் பூரணம் அற்றதாகும். உண்மையான அனுபவம் இல்லாததினால் வருணனைகளை அடிப்படையாகக் கொண்ட அறிவு, ஒரு குறைந்த அறிவாகும். இதுபோன்றே உண்மையான இறைஞானம், இறையனுபவத்திலே உண்டாகும் உள்ளுணர்விலே (Intuition) பெறக் கூடியதாய் இருக்கிறது. ஜலாலுத்தீன் ரூமி அவர்கள், மூன்று விதமான உண்மைகளை ஒரிடத்தில் ஒவ்வொன்றோடு ஒப்பிடுகின்றார். அவையாவன: இல்முல்யகீன் (Imui-yaqin) எனும் கேட்பதால் பெறக்கூடிய அறிவு. அதைவிட மேலானது ஐனுல்யகீன் (Aynui-yaqin) எனும் பார்வையால் பெறக்கூடிய அறிவு. இவை இரண்டிலும் மேலானது ஹக்குல் யகின் (Haqqul - yaqin) எனக் கூறப்படும் நேர் அனுபவத்தால் அறியக் கூடிய உண்மையாகும். இவற்றை அனுமான ஞானம், தரிசன ஞானம், அனுபவ ஞானம் என்றும் ஆய்வாளர் கூறுவர்.
74
பாரம்பரியமும் உள்ளுணர்வும் Tradition and intuition
காதலியைக் காணும் கண்ணுக்கு அவள் அழகு சொந்தமாகும். அவள் அழகைக் கேட்கும் காதுக்கோ

Page 46
72
வார்த்தைகள் மட்டும் சொந்தமாகும். கேள்விச் செல்வத்தில், குணங்கள் மட்டும் கிட்டும். கண்காணும் காட்சியிலே முழுசாரமும் தோன்றும். வார்த்தைகளால் மட்டும் தீயின் உண்மையை அறிந்தாயானால் தீயின் சூட்டில் எரிந்து போ. உள்ளுணர்வெனும் தீயின் சூட்டில் எரியும் வரை தீயின் தன்மையை நீ அறியாய். தீயின் உண்மை நிலையை வேண்டினால் தீயினுள்ளே இருந்து கொள். செவி கூர்மையானால் அது கண்ணாக மாறும், இல்லையெனில் வார்த்தைகளில் மட்டும் சிக்குண்டு அது இதயத்தைச் சென்றடையாது! "
'நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்கள். நிச்சயமாக அவனிடமே மீளவேண்டியவர்கள்’2:156 என்னும் திருக்குர்ஆன் வசனத்தை ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் 'உயரும் ஆத்மா (Ascending Soul) என்னும் கவிதையில் அழகாக வருணிக்கின்றார்.
உயரும் ஆத்மா The Ascending Soul
உலோகமாய் இறந்தேன், தாவரமாய்ப் பிறந்தேன் தாவரமாய் இறந்தேன், மிருகமாய்ப் பிறந்தேன் மிருகமாய் இறந்தேன், மனிதராய்ப் பிறந்தேன் பயமில்லை பயமில்லை, இறப்பினால் குறைவில்லை மனிதனாய் இறப்பேன், றுாஹானியாய் மிதப்பேன் அதனையும் கடப்பேன், கடந்து கொண்டே போவேன் - ஏன்? அவனன்றி எல்லாம் நிலையற்றதே. (அல்-குர்ஆன்: 28:88) ஆத்மீகப் பிறவியிலும் இறப்பேன் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஏகாந்த நிலையில் பிறப்பேன் - ஏன்? (திருக்குர்ஆன் கூறுவதுபோல்) நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்கள். நிச்சயமாக அவனிடமே, மீளவேண்டியவர்கள்; (அல் குர்ஆன் 2:156)"
இதன் பிரகாரம் ஏக இறைவனே பரம உண்மையாய் அண்ட சராசரங்களிலும் இயங்குகின்றான். அவன் படைத்த சிருஷ்டிகளெல்லாம், உண்மைப் பொருளானாலும், வரையறைகளுக்குட்பட்ட வஸ்துக்களெனவே கருதப்பட

வேண்டும். ஏனெனில் இறைவனின் அணுக்கிரகமின்றி, அவை யாவும் நிழலுக்குச் சமமாகின்றன. சிருஷ்டிக்கப்படுவதற்கு முன் படைப்புகள் யாவும் இறைவனின் சிந்தனையில், கருத்து மயமாக இருந்தன. இன்னும் படைக்கப்படாத அஃயானி தாபிதா (ayani
73
habitah) என்னும் நிலையில் இருந்த வஸ்துக்கள் வுஜூத் (Wujud)
என்னும் இருப்பு நிலையை அடைந்தது, ஒரு தெய்வீக அருளெனக்
கருதப்பட வேண்டும்.
பரம்பொருள் (The Absolute)
நாமும் எம் வாழ்க்கையும் ஒரு தோற்றமே: மரணிக்கும் சிருஷ்டியாய் தோன்றுவது பரம்பொருளின் வேடமே
அசைவதெல்லாம் உன் அருளே எல்லாவஸ்துகளும் உன் சிருஷ்டியே உன் இருப்பின் அழகை - இருப்பற்ற வெறுமைக்கு நீ காட்டினாய் அதன்பின் இருப்பற்ற வெறுமையை உன் வசீகரத்தால், உனைக் காதலிக்கச் செய்தாய், உன் அருளெனும் இன்பத்தை நீக்கிடாதே மது நிரம்பும் கிண்ணத்தையும் (பேரின்பத்தையும்) பழரசத்தையும் அகற்றிடாதே
அவைகளை நீ நீக்கிவிட்டால் உன்னைக் கேள்வி கேட்க யாரிருப்பார்? ஒவியத்துக்கு முடியுமா ஒவியனோடு போரிட? எம்மைப் பாராதே உன் அருளும் தயாளமும் நிறைந்த உன்னைப் பார் நாம் இருக்கவுமில்லை, நாம் (பிறக்கக்) கேட்கவுமில்லை எனினும் மெளனமான என் கோரிக்கையை உன் அருள் கேட்ட போது எம்மைப் பிறக்கச் செய்தாய். உன் தெய்வீகச் சந்நிதியில், ஊசிக்கு முன்னிருக்கும் அலங்காரச் சீலையின் நூலைப் போல் உருவமற்றிருந்தோம் நீ ஆதத்தின் உருவத்தை ஒருகணம் வரைந்தாய் இன்னொரு கணம் சைத்தானின் உருவத்தையும் வரைந்தாய் ஒரு கணம் இன்பத்தைச் சித்திரித்தாய் இன்னொரு கணம் துன்பத்தைச் சித்திரித்தாய் எவரால் உன் கரத்தைத் தடுக்க முடியும்? நன்மையோ, காயமோ, துன்பமோ
எவரால் உன் வல்லமைக்கு சவாலிட முடியும்? "

Page 47
74
யத்தில் ருக்குர், தாகும்
விளக்கம்: கஸ்ஸாலி (ரஹ்), மெளலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) இப்னு அரபி (ரஹ்) ஜீலி (ரஹ்) எனப்படும் மகோன்னத ஆத்மஞானிகளின் தத்துவஞான நெறிகளில் இறைவனைப் பற்றிக் கூறும் அடிப்படையான உண்மை யாதெனில் சர்வ வல்லமை பொருந்திய ஏகாந்த நிலையில் இருக்கும் இறைவன், எண்ணற்ற சிருஷ்டிகளைப் படைத்து அவற்றில் சர்வ வியாபியாகி, எல்லாப் படைப்புகளையும் ஒன்றிணைக்கும் மூலப்பொருளாக இயங்குகின்றான் என்பதாகும். இவ்வாறு கூறும் தத்துவக் கருத்துகளை திருக்குர்ஆனின் (ஸுரத்துல் ஹதீத்) என்னும் 57-ம்
அத்தியாயத்தில் மிகச்சுருக்கமாக:-
''அவனே முதல்வன். அவனே இறுதி; அவனே வெளிப்பட்டிருப்பவன். அவனே உள்ளீடாய் இருப்பவன். அவன் வஸ்துக்களடங்கலையும் நன்றாயறிகின்றவன்.'' எனவும், இரண்டாம் அத்தியாயத்தில்:- ''நிச்சயமாக நாம் அல்லாஹ் விற்காகவே இருக்கிறோம். நிச்சயமாக அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாகவு மிருக்கிறோம்.'' எனவும் கூறப்படுகிறது.
அல்லாமா இக்பால் அவர்கள், பாரஸிக தத்துவ ஞானத்தைப் பற்றி எழுதிய ஒரு நூலில், பலரின் கருத்தை மேற்கோளிட்டு சூஃபித்தத்துவஞானம் அல்லது சூஃபியாக்களின் தத்துவக் கருத்துகள், பரம்பொருளை மூன்று கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டியிருப்பதாகக் கூறுகின்றார். அவையாவன முறையே:-
(A) மூலப்பொருளான பரம்பொருள் ஓர் ஏகாந்தமான தன்னுணர்வு கொண்ட எண்ணமயம் (Reality as self conscious will) எனும் கோட்பாடு.
(B) அப்பரம் பொருள் ஏகாந்த அழகுமயம் எனும் (Reality as beauty) கோட்பாடு.
(C) அப்பரம் பொருள் ஏகாந்த ஜோதிமயமாகவும் சிந்தனைப் பிழம்பாகவும் (Reality as light or thought) இருக்கிறதெனும் கோட்பாடு."
பரம்பொருளைப் பற்றிய மேற்கூறிய மூன்று கண்ணோட்டங்கள் ஒன்றுடனொன்று முரணாயின்றி, ஒவ்வொன்றோடு, இணக்கங்கண்டு, ஒன்றுடனொன்று பூர்த்தியாகின்ற தென்பதையும் நாம் அவதானிக்கலாம். அப்துல் கரீம் ஜீலி (ரஹ்) வாழ்ந்த காலத்துக்கு முன்னரும், அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னரும், இயற்றப்பட்ட சூஃபித்துவ இலக்கியப் படைப்புகளை நன்கு அவதானித்தால் மேற்கூறிய உண்மைகள், ஐயமின்றிப் புலனாகும். சமுத்திரத்திலுண்டாகும் பல்லாயிரக் கணக்கான அலைகள் உருவத்தில் வேறுபட்டாலும், கடலின்
- நorகு அவதானித்தால் மேற் ம்

75
அலையே எனும் தன்மையில், ஒன்றுபட்டே இருக்கின்றன. அதுபோல ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மெய்ஞ்ஞான நூல்களில் எழுதப்பட்ட கருத்துகள் விமர்சனங்களில் வேறுபட்டாலும், தத்துவச் சாரத்தில் ஒற்றுமைப்பட்டே இருக்கின்றன. -
சுருங்கச் சொன்னால் என்றும் நிலையாயுள்ள மாறுபடாத பரம்பொருளின் தன்மையைப் பற்பலகோணங்களில் பற்பலவிதமாக கற்பனை செய்து, வெவ்வேறான இலக்கிய உருவங்களில் எடுத்துக் காட்டினாலும் அவைகளின் அடிப்படைக் கருத்துகள் ஒன்றேயாகும். அப்படியானால் மனிதன் இறைவனை அடையும் மார்க்கம் என்ன? அவன் எப்படி மோட்சம் எனும் நிலையை அடைவான்? பிரபஞ்சநிலையெனும் வரையரைகளில் இருந்து நிவாரணம் அடைவது எப்படி? எனும் வினாக்களுக்கு இஸ்லாமிய இறைஞானிகள் காட்டிய வழிகளையும், கிரியாமுறைகளையும் ஆராய்வோம்.
6.மனிதனின் ஆத்மீக முன்னேற்றம்
இறைவனே உண்மையான பரம்பொருள். காலம், நேரம், குணங்கள், இடங்கள், எனும் கட்டுப்பாடுகள் நிறைந்த பிரபஞ்சம், உண்மையில் இருந்த போதும், அதற்கு சுதந்திரமான தனித்துவமில்லை. எமது புலனனுபவத்தில் காண்பதெல்லாம் நிரந்தரமற்றவையே. இவ்வுண்மையை நாம் ஒப்புக்கொண்டால், மனிதனின் அதிமுக்கிய இலட்சியமென்ன? வாழ்க்கையின் பயன்
" இ.கா."*சம் - - என்ன? குறிக்கோள் என்ன? இவ்வுலகம், மனிதன் ஆத்மீக முன்னேற்றம் அடையப் படைக்கப்பட்ட
க ஒரு பரிசோதனைக்களமாகும். இவ்வுலகம் சதாவும் நிரந்தரமானது என்னும் தவறான கொள்கைகளில் மூழ்கி இருப்பவன் ஒரு பொழுதும் ஈடேறமாட்டான். இதைப் போன்றே, செல்வம், கெளரவம், ஆசாபாசங்கள் என்பவற்றுக்கு அடிமையாகி, உலகப்பற்றுதலைப் பெருக்கிக்கொள்கின்றவனும், ஆத்மீகப் பார்வையில் இருந்து வேறுபட்டவனாகி, கடைசியில் ஏமாற்றமடைவான். ஆகையால் உலகப் பிணக்குகளில், ஈடுபட்டிருக்கும் எங்களுடைய ஆத்மாவை அவைகளை விட்டும் திருப்பி, இறைவன் பால் வழிகாட்டுவதே மனிதனின் உத்தம் இலட்சியமாகும். இக்கருத்தின்படி இப்பிரபஞ்ச வாழ்க்கை ஒரு நிரந்தரமற்றதும், உண்மையற்றதுமான, ஆனால் ஆத்மீக முன்னேற்றத்திற்கு அவசியமான ஒரு வாழ்க்கைப் பகுதியாகும். இவ் ஆத்மீகப் பிரயாணத்தை, இறைஞானத்தில் கூறியிருக்கும், கோட்பாடுகளின்படி உறுதியுடன் நடாத்தினால், நமது நூஹான ஆத்மா, ஃபனா (Fana) வாகி (தனிமையெனும் நிலையில் இருந்து

Page 48
76
கரைந்து) பகா (Baqa) எனப்படும் இறைவன் சன்னிதியான ஏகாந்த உண்மை நிலையில் புதுப்பிறப்பை அனுபவிக்கும்.
இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இவ்வுலகமானது எல்லாமறிந்த சர்வ வல்லமையுடைய இறைவனின் குத்ரத் (அற்புதம்) எனப்படும் வல்லமையின் மர்மமாகும். எங்கும் சூழ்ந்திருக்கும் இந்த மர்மமே மனிதனை இறைவன்பால் வசப்படுத்துகின்றது. இறைவன் வியாபித்திருக்கும் இவ்வுலகத்தை பாவமும் தீமையும் நிறைந்த ஒர் அரங்கமென்று எங்களால் நிராகரிக்க முடியாது. அதனிலிருந்து நாம் தப்பியோடுவதும் தவறு. பிரபஞ்சமெனும் இயற்கையில் மூழ்கிக் கிடக்கும் சொல்லொணா சக்திகளையும், சவால்களையும் நன்குணர்ந்து, அவைகளைக் கட்டுப்பாடாக்கியும், சமாளித்தும் மனிதனுக்கு அருளப்பட்ட சகல சக்திகளையும் வெளிப்பாடாக்கும் ஒரு களமாக, உலகத்தைப் பாவித்தலே மனிதனின் கடமையாகும். இவ்விடயத்தை திருக்குர் ஆன் கீழ்க்காணும் திருவசனத்தில் (2:164) சுட்டிக்காட்டுகின்றது. நிச்சயமாக, வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும்; மனிதர்களுக்குப் பலன் தருவதை (நிரப்பி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து, அதன் மூலம் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிப்பதிலும்; அதில் எல்லா விதமான பிராணிகளையும் பரவச் செய்திருப்பதிலும்; காற்றுகளை (பல திசைகளிலுமாக)த் திருப்பி விடுவதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் மேகத்திலும் - சிந்தித்துணரும் கூட்டத்தினருக்கு (அல்லாஹ்வின் ஆற்றலையும் அருளையும் அறிவிக்கின்ற) திடமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 2:164)"
இவ்வுலகம் முக்கியமான 6?(05 நோக்கத்துடன் சிருஷ்டிக்கப்பட்டது.
வானத்தையும், பூமியையும் அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை.
LIGN) மகத்தான சக்திகள் நிறைந்த இயற்கையில், நிறைந்திருக்கும் இறை சக்திகளையும், இறை மார்க்கத்தையும் நாம் சதா தியானித்தல் வேண்டும்.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி மாறி

77
வருவதிலும், அறிவுடையோருக்கு உறுதியாக அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன - அவர்கள் எத்தகையோரென்றால் - நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களின் விலாப் புறங்களின் மீது (படுத்த நிலையிலு)ம் அல்லாஹ்வை திக்ரு செய்வார்கள்; இன்னும் அவர்கள் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பது பற்றியும் சிந்தனை செய்து, 'எங்கள் ரப்பே இதை (யெல்லாம்) வீணாக நீ படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; ஆகவே, (நரக) நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை நீ காத்தருள்வாயாக!” (என்றும்;)" (அல்குர்ஆன்: 3: 190-1)
பல தரப்பட்ட மர்மங்கள் நிறைந்த உலகம், மனித ஆன்மா, தன்னிறைவடையும் ஓர் அரங்கம் போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் வாழும் மனிதன், தன் விடாமுயற்சியால் தன்னைத் தானே அறியும் வல்லமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தாயிருக்கிறது. இவ் இலட்சியத்தை அடைய அவன், முதலாவது அறியாமை எனும் திரையை நீக்கி, உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும், இதனை எப்படிச் சாதிக்கலாம்?
முதன் முதலாக மனிதன், தன்னுடைய ஆன்மாவானது தெய்வீகத்தின் சுடர் என்றும், ஏகாந்தத்தின் பகுதி என்றும் அறிதல் வேண்டும். இறைஞானி கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
மனிதனே உன்னுடைய உண்மையான அந்தரங்கத்தை நீ அறிந்து கொள்வாயாக. அப்பொழுதுதான் நீ என்ன இயல்பை உடையவனென்றும், எங்கிருந்து இவ்வுலகுக்கு வந்தாய், ஏன் நீ படைக்கப்பட்டாய், எதில் உன் ஈடேற்றம் தங்கி இருக்கிறது. எதில் நீ துன்புறுவாய், என்னும் உண்மைகளை அறிவாய். கானகத்தில் இருக்கும் மிருகங்களின் குணங்களும், விண்ணவர்களின் பரிசுத்த குணங்களும் உன்னுள் கலந்திருக்கின்றன. ஆனால் உன்னுடைய உண்மையான அம்சம் என்னவெனில், உன்னுடையறுாஹான ஆத்மாவாகும். மற்றவையெல்லாம் உன்னுடைய தெய்வீக குணாதிசயங்களுக்குப் பொருந்தாத அயலானவைகளாகும்; அதனால் உன்னுடைய தொடக்கத்தை நீ அறிவாயாக!. அப்பொழுதுதான் உன்னை சிருஷ்டித்த இறைவனின் மகத்துவத்தையும், அவனின் பரிபூரணமான அழகையும்,

Page 49
78
எங்கும் நிறைந்திருக்கும் 'அவன் தன்மையையும் நீஅறிவாய். அப்பொழுதுதான் காம குரோதம் என்னும் சங்கிலிகளை நீ வெட்டியெறிந்து நிவாரணம் பெறுவாய். ஏனென்றால் இறைவன் காம குரோதங்களுக்கு அடிமையாக உன்னைப் படைக்கவில்லை. அவற்றின் ஆளுகைக்குள் நீ இல்லாமல், உனது, ஆளுகைக்குள் அவை இருக்க வேண்டும். நீ போகும் ஆத்மீகப்பயணத்தில், அவைகளை உன்குதிரைபோலும், போராயுதம் போலும் கட்டுப்படுத்திக் கொள்வாயாக. மேலும் உன் ஆத்மீகப் பிரயாணம் முடியும் போது, அவைகளில் மேற்கொண்ட ஆசைகளை உன்னுடைய பாதங்களால் மிதித்தொழித்து தூர எறிந்து விடுவாயாக! "
காம குரோதங்களெனும் சங்கிலிகளை விட்டெறிவது இலேசான காரியமல்ல. மிருகக் குணங்கள் நிறைந்திருக்கும் நப்சே அம்மாறா எனக் கூறப்படும், மிருக ஆத்மா உண்மையான ஆத்மாவின் முன்னேற்றத்தை ஒரு யுத்தமின்றி இலேசாக அனுமதிக்காது. இதனால் தான், திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் 'ஒரு மனிதன் தன்னுடைய மிருக ஆத்மாவோடு செய்யும் போர், ஜிஹாத் எனப்படும் புனிதப் போரைவிட மேலானது எனக் கூறினர். இதனாலேதான், இஸ்லாமிய இறைஞானிகள் நப்சே அம்மாராவின் மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி, இறைவன்பால் வழிகாட்டும் பலதரப்பட்ட முறைகளை அனுபவரீதியாக உணர்ந்து, தம்தம் போதனைகளாக தம்மைச்சார்ந்த சிஷ்யர்களுக்கு அருளினர்.
நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின், இறைஞானிகளின் போதனைகள் கொள்கையளவிலும், கிரியாமுறைகளிலும், இஸ்லாமிய உலகில் உன்னத தரீக்காநெறிகளாக நிலைபெற்றன. இதனால் அப்போதனைகளை ஏடுகளில் எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு எழுதப்பட்ட ஞானஉரைகள் வரிசையில் அல்-குஷைரி (Ugaĵp) (Al-Qushairi A.H.438- 1046 – A-D) 6 TaöTL16).JIJIITGü) 6T(upg5ouLuLoL றிஸாலா (Risala) 'சூஃபிகளின் கடிதம்' எனும் நூல் மிகப்பிரபலம் வாய்ந்திருந்தது.
இந்நூலில் மகாம் (maqam) ஹால் (Hal) எனும் இரு நிலைகளை வேறுபடுத்தி ஆன்மீக முன்னேற்றப்பாதையில் பயணஞ்செய்யும் ஒரு பக்தனின் அனுபவங்களை அவர் விமர்சிக்கின்றார். மகாம் என்பது மனித முயற்சியினால் பெறக்கூடிய முன்னேற்ற நிலையாகும். ஹால் என்பது அத்தகைய முன்னேற்றத்தில் பக்குவம் பெற்றவருக்கு இறைவனால் அருளப்படும் பரிசாகும். மேலும்

79
அவர் விவரித்த ஆன்மீக முன்னேற்ற அனுபவங்களைப் பற்றி
பேராசிரியர் ஆபரி (Arbery) என்னும் அறிஞர்கூறிய விபரங்களை
சுருக்கமாகப் பின்வரும் பந்தியில் எடுத்துக் காட்டுகின்றேன்.
சூஃபி மகான்களின் போதனைப்படி ஆன்மீகப் பயணத்தின்
முதலாம் கட்டம் தெளபா என்னும் பாபமன்னிப்புக் கோருவதாகும். இறைவனிடம் பாபமன்னிப்பு வேண்டி, உலகப்பற்றுகளில் இருந்து நிவாரணம் அடைந்து இறைவன்பால் தன்னை அர்ப்பணிப்பதாகும். சூஃபி ஞானப்பரம்பரையில் இறைஞானி அல்-கஸ்ஸாலி (ரஹ்) எனும் புகழ் வாய்ந்த சட்டக்கலை வல்லுனரும் பேராசிரியருமான அன்னார், எப்படி இந்த உலக வாழ்வையும் அதன் பெரும்பிணக்குகளையும் நிராகரித்ததுடன், பாரம்பரிய மதக்கல்வியில் சிரத்தை காட்டாது, இவ்வுலக வாழ்வைத் துறந்து, சூஃபியாகும் யாத்திரிகராக மனம் மாறினார் என்பதை நாமறிவோம். மேலும் பாபமன்னிப்புக் கேட்டபின் ஓர் அடியான் ஆத்மீகப்பாதையில் முன்னேறும் நிலைகளை அல்-குஷைரி (ரஹ்) பின்வருமாறு எடுத்துக் காட்டி இருக்கின்றார்: (2) முஜாஹதா (mujahada) இது ஜிஹாதைப்போன்று ஆத்மீகப் போராகும். இதன் கருத்து "இறைவனின் சந்நிதியை அல்லது இறைஞானத்தை வைராக்கியத்துடன் தேடுவது. இதைப் பற்றித் திருக்குர்ஆன் 'எமது சேவையில் விடாமுயற்சியுடன் ஈடுபடுபவர்களுக்கு உண்மையிலேயே நாம் நேர் வழிகாட்டுவோம்’ எனக் கூறுகின்றது. மேலும் ஒரு ஹதீஸில் திருநபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்-ஜிஹாதுல் அக்பர் (Al-jihad al-Akbar) 61g0lb Gusful ul:55 lb, 9, Gi-easong அல்-அஸ்கரை (குப்ரிய்யத்துக்கெதிராகப் போராடும் யுத்தத்தை) விட, மேலானதெனப் போதித்திருக்கின்றார்கள். மிருக ஆத்மா (mujahadat-A nats) வுக்கெதிராகப் போராடும் பெரிய போரே மேலான போரென இந்த ஹதீஸில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.
3. தனிமையும், துறவுநிலையும் (khalwa wauzla): ஒரு ஷைகிடம் ஞானதீட்சை பெறநாடும் முரீதீன் என்பவர் தன்னைச் சேர்ந்த உறவினர்களை விட்டுப் பிரிந்து, கெட்ட பழக்க வழக்கங்களில் இருந்தும் திருந்தி, தனிமையில் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
4. தக்வா இறையச்சம்: இறைவனின் கோபப் பார்வையில் இருந்து தன்னை மீட்டிக்கொள்ள முயற்சி செய்தல்.

Page 50
8O
5. தவிர்த்தல் (wara'): பாவச்செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுதல்.
6. துறத்தல் (Zuhd): அனுமதிக்கப்பட்ட இன்பங்களையும் கூட கைவிடுவதாகும்.
7. நிசப்தம் (samt): திருநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: மஹ்ஷர்நாளிலும், இறைவனிலும் முழு நம்பிக்கையுடைய முஃமின், நல்ல விஷயங்களையே பேசுவான். அல்லது நிசப்தமாக இருப்பான். நிசப்தமென்பது இவ் இருகருத்துக்களைக் கொண்டதாகும். அவையாவன: (a) மனிதன் தன் நாவை அடக்கவேண்டும். (b) இறைவன் எது செய்தாலும் நிசப்தமாகவும், பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். 8. அச்சம் (khaut): பாவச் செயல்களின் பிரதிபலன்களுக்கு அஞ்சுதல். 9. நம்பிக்கை (raja): எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய ஆத்மீக முன்னேற்றங்களில் நம்பிக்கை கொள்ளுதல். 10. துக்கம் (Huzn): முன்செய்த பாவங்களை நினைத்து வருந்துதல். 11. பசி அல்லது இச்சைகளை மறுத்தல் (Ju, tank al-Shahwa): இவ்விடயம் பற்றி திருக்குர் ஆன் 'உங்களைச் சிறிது பயத்தாலும், பசியாலும் சோதிப்போம்.' எனவும்,ஆனால் பொறுமையுடன் இருக்கும் விசுவாசிகளுக்கு நற் செய்தியையும் தெரிவிப்போம்" எனவும் கூறுகின்றது.
12. அச்சமும் பணிவு மனப்பான்மையும் (khushu tawadu): அகந்தையை எதிர்ப்பது.
13. மிருகக்குணங்களின் கொடுமையை உணர்ந்து ஆசாபாசங்களோடு போரிடுதல் (mukhalafat al-nafs wa-dhikruyubiha): இவ்விடயத்தில் பின்வரும் இரண்டு பாவங்கள் முக்கியமாக கண்டிக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன:
(அ) ஹஸது என்னும் பொறாமை (ஆ) கீபா (Ghiba) அபவாதம் பேசுதல் அல்லது பழிச்சொல் கூறுதல். 14. போதுமென்ற மனத்திருப்தி (qanah) திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் 'மனத்திருப்தியே அழியாத பொக்கிஷம்" என்று சொன்னார்கள்.

81
15. இறைவனில் நம்பிக்கை வைத்தல் (Tawakkul): 'இறைவன் GLDGiv நம்பிக்கை உள்ளவனுக்கு இறைவனே போதுமானவன்' என அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 65:3)
16. நன்றி கூறுதல் (shukr): ‘'நீ நன்றி செலுத்தினால் உனக்கு மேலும், மேலும் தருவேன்' என இறைவன் கூறுகின்றான். (அல்குர்ஆன் 14:7) 17. யதீன் (Yaqin): உண்மை விசுவாசங்கொள்ளுதல்.
18. GLITpj60LD (sabr).
19. சதா இறைசிந்தனை (muraqaba): ‘'நீ அல்லாஹ்வைக் காண்பதுபோல் தொழுவதே நேரான வழி, ஏனெனில் நீ அவனைக் காணா விட்டாலும், அவன் உன்னைக் கண்டு
கொண்டே இருக்கின்றான்." (ஹதீஸ்). 20. திருப்தி - ரிலா - (rida): திருப்தி என்பது பற்றி திருக்குர்ஆன்
'அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்." (98:8) எனக் கூறுகின்றது. அல்லாஹ் எப்போது மனிதனில் பொருத்தமாகிக் கொள்கின்றானோ அந்நிலையில் மனிதனும் அல்லாஹ் மேல் பொருத்தமாகிக் கொள்கின்றான். இந்நிலையை சூஃபியாக்கள் சிலர், ஆத்மீகப்பாதையின் கடைசி நிலையாகவும், ஹால் எனப்படும் வரிசையில் முதல் கட்டமாகவும் அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள். குறாஸானியா சூஃபியாக்கள், ரிலா எனும் நிலையை ஒரு மகாம் எனக்கூறுவார்கள். ஏனெனில், அது தவக்குல் எனும் நிலையின் ஒரு பிரதிபலனாகும். ஆனால் இராக்கு தேச சூஃபியாக்களோ அதை ஒரு ஹால் எனக்கூறுவார்கள் என எடுத்துக்காட்டி, அல் - குஷைரி (ரஹ்), இவ்விரு கூற்றுக்களையும் சிந்தித்துச் சீர்தூக்கி பின்வருமாறு தீர்ப்புக்கூறுகிறார். ரிலா என்னும் நிலையின் தொடக்கம் ஒரு மகாமாகும். அதன் பூர்த்தி ஒரு ஹாலாகும். மேற்கூறிய இறுதிக்கட்டத்தின் பின் ஏற்படும் ஆத்மீக முன்னேற்றங்களை அல்-குஷைரி (ரஹ்) விபரிக்கின்றார். 21. பணிப்பாளனின் மனப்பான்மை (ubudiya): றப் எனும் இறைவனின் சேவகன் என்ற உணர்ச்சி.
22. ஆசை (rada): தன் ஆசைகளைத் துறந்து இறைவன் ஆசைகளை மட்டும் நாடுவது.

Page 51
82
23. நேர்மை, இஸ்திகாமா (1stiqama): இந்நிலையில் இறைவன் அருள், பக்தனுக்கு நிரந்தரமாகக் கிடைக்கும். ஏனெனில் இறைவனின் பணிகளை அடியான் நேர்மை தறவாமல் செய்து கொண்டே இருப்பான். 24. உண்மையும் நேர்மையும் நிறைந்த இக்லாஸ் (Ikhlas): எனும் நிலை இறைவனுக்குப் பணிந்து, இறைவன் நாட்டப்படியே தன்காரியங்களைச் செய்வது. 25. உண்மை நிலை (sidq): எல்லாச் சிந்தனைகளிலும் காரியங்களிலும் மனச்சுத்தியோடும் நேர்மையோடும் நடந்து கொள்ளுதல்.
26. வெட்கம் (Haya): இதுபற்றி முஹம்மது (ஸல்) அவர்கள்
'ஈமானின் 69(U5 பகுதியாவது, நேர்மைக் குறைபாடுகளைப்பற்றி வெட்கப்படுவதாகும்’ எனக் கூறியுள்ளார்கள்.
27. தயாளகுணம் (Hurriya): உண்மையான பக்தன்,
எப்பொழுதும் தன் நலன்களைவிட இன்னொருவன் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். அதுமட்டுமன்றி, உலக ஆசைகளுக்கும் அடிமையாக மாட்டான்.
28. இறைவனை ஞாபகஞ்செய்தல், தியானித்தல், திக்ர் செய்தல் (Dhikr): எப்பொழுதும் இறைவனை, மனதிலும் இருதயத்திலும் ஞாபகம் வைத்தல் தியானித்தலாகும். 29. வீரியம் (futuwa): இறைவன் பாதையில் பராக்கிரமம் கொள்ளுதல்.
30. நுண்ணறிவு, பூரண அறிவு (Firasa): இதனைப் பற்றி திருநபி முஹம்மது (ஸல்) அவர்கள் "உண்மை விசுவாசியின் நுண்ணறிவைப்பற்றி எச்சரிக்கையாக இரு, ஏனெனில் அவன் அல்லாஹ்வின் வெளிச்சத்தில் உன்னை நோக்குகின்றான்’’. எனக் கூறியுள்ளார்கள். 31. நற்குணம் (khuiuq): திருநபி முஹம்மது (ஸல்) அவர்களைப்பற்றி இறைவன் "நபியே, உண்மையிலே நீர் நற்குணத்தின் மீது நிலை கொண்டிருக்கின்றீர்” எனக் கூறியுள்ளான். (அல்குர்ஆன் 68:4)
32. தயாளசிந்தனை (Fud, Sakha): நபிமணி (ஸல்) அவர்கள் 'கொடை கொடுப்பவன், உண்மையிலே, இறைவனுக்கருகே இருக்கின்றான். மானிடருக்கருகே இருக்கின்றான். சுவர்க்கத்துக்கருகே இருக்கின்றான். நரகை விட்டும் வெகுதூரத்தில் இருக்கின்றான்' எனப்பகர்ந்தார்கள்.

83
33. இனிய பொறாமை (Ghaira): இறைபணிகளைச் செய்யும் விஷயத்தில் வேறு சிந்தனைகள் குறுக்கிடக் கூடாது எனும் பொறாமைச் சிந்தனையாகும். இஃது இறைவனின் குணாதிசயங்களுள் ஒன்றாகும். தன்னை நாடிவரும் பக்தன் ஒருவனை, இறைவன் ஒரு விதமான பாவச் செயல்களையும் செய்யக்கூடாதென்று பொறாமைப் படும் குணமாகும்.
34. இறைவனின் பாதுகாப்பில் இருப்பது (wilaya) இஃது அவ்லியாக்களான ஒலிமார்களின் நிலையாகும். இதைப் பற்றித் திருக்குர் ஆன் 'உண்மையிலே இறை பக்தர்களுக்கு அச்சமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ எனக் கூறுகின்றது. (10:62)
35. பிரார்த்தனை (Dua): தினமும் இறைவனைப் பிரார்த்திப்பது. இறைவனும் 'என்னிடம் துஆச் செய்யுங்கள். உங்களுக்கு நான் பதிலளிக்கிறேன்’ எனக் கூறுகின்றான் (40:60)
36. வறுமை (Faqr): திருநபி முஹம்மது (ஸல்) அவர்கள் 'ஓர் ஏழை, பணக்காரனைவிட ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் சுவர்க்கத்தில் பிரவேசிப்பான்’ என்றார்கள்.
37. giftigoLD (Tasauwuf)
38. நல்லொழுக்கம் (Adab): 'இறைவன் எனக்கு நல்லொழுக்கங்களையும், பண்புகளையும் கற்றுக் கொடுத்தான்’ என திருநபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்-குஷைரி (ரஹ்) அவர்களின் அபிப்பிராயப்படி மேற்கூறிய 21 ல் இருந்து 38 வரையுமுள்ள நிலைகள், மகாம்களின் பிரிவுகளாகும். அதன்பின், அல்-குஷைரி (ரஹ்) அவர்கள், பிரயாணம் (Safar) தோழமை (suhba) ஏகத்துவ நம்பிக்கை (Tauhid) என்பதன் முக்கியத்துவத்தையும், மரணிப்பது (Noble Dying) என்னும் முன்னேற்றங்களைக் குறிப்பிட்டுவிட்டு பின்வரும் விடயங்களை விமர்சிக்கின்றார். 43. இறைஞானம் (Marita): இந்நிலை, மகாம் எனும் கட்டம் பூர்த்தியாகி ஹால் எனும் கட்டத்தை அடைவதாகும். இப்படித்தரத்தில் இறைவனிடமிருந்தே இறைஞானம் நேராக பக்தனின் இருதயத்தில் ஒளிமயமாய் உதிக்கின்றது. 44. இறையன்பு (Mahabba): இந்நிலையில் பக்தன் இறையன்புக்காளாகின்றான்.

Page 52
84
45. ஆவல் கொள்ளுதல் (shauq): இறைவனுடன் சதா இணங்கி இருப்பதற்கு ஆவல் கொள்ளுதல்.”
மேற்கூறிய இறைஞான நெறிகளும் வழிபாடுகளும் கொள்கையளவிலும் கிரியாமுறைகளிலும் சம்பூரணமடைந்து இருந்தபோதும், அவை பாரம்பரிய இஸ்லாத்துடன் முற்றாக இணங்காத நிலையில் இருந்தன. இக்கட்டத்தில் இஸ்லாமிய ஆத்மீக வரலாற்றில் சூஃபித்துவக் கொள்கைகளையும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளையும் ஐக்கியப்படுத்தி வைத்தவர் (451/1059) ஹ"ஜ்ஜத்துல்-இஸ்லாம் (இஸ்லாத்தின் நிரூபணம்) என அழைக்கப்பட்ட பெரும் ஆத்மீக ஞானி அல்-கஸ்ஸாலி (ரஹ்) எனும் தத்துவமேதை ஆவார்கள். இஸ்லாம் மார்க்கத்துக்குப் புத்துயிர் அளித்தல் (இஹ்யா உலூமுத்தீன் hya ulum Al-Din) எனும் நாமங்கொண்ட, மிகப்பிரசித்தி வாய்ந்த நூலின் மூலமாக இம்மேதை, சூஃபியாக்களின் தத்துவக் கொள்கைகளை, உலமாக்களினதும், சட்ட நிபுணர்களினதும், கருத்துகளுடன் ஒப்பாய்வு செய்து முரண்பாடுகளை நீக்கி, அவைகளின் கருத்தொற்றுமையை நிலை நிறுத்தினார்.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் 'அல்-முன்கிதுமினல் - ழலால் (Ai - Mungidh min a - Datal)எனும் சுய சரிதை நூலில், சூஃபித்துவத்தைத் தழுவிய காரணங்களைப் பின்வருமாறு விளக்கஞ் செய்கிறார்.
அப்பொழுது நான் சூஃபியாக்களின் நெறிமுறைகளை நன்கு அவதானித்தேன். அவர்களின் தத்துவக் கருத்துகளையும் வழிபாட்டு நெறிகளையும், பூரணமாகப் பின்பற்றாது போனால், அவர்கள் வாழ்க்கை முறை புலனாகாது என்ற உண்மையை அறிந்தேன். அவர்களின் தத்துவ ஞான நெறியின் சாரமாவது, ஒரு மனிதனின் மிருக உணர்ச்சிகளையும், தீயகிரியைகளையும், சம்பூரணமாக அகற்றாவிட்டால், ஆத்மீக முன்னேற்றம் ஒரு போதும் கிட்டாது என்பதாகும். தன் உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிக்கவும் முடியாது. உள்ளத்தை தூய்மைப்படுத்தும் ஒரே வழி, அல்லாஹ்வை 'திக்ர் செய்வதாகும். அஃதொன்றே இறைவனை சதா ஞாபகப்படுத்தும் இறைசிந்தனையாகும். அதாவது எல்லா நினைவுகளிலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவனையே தியானிப்பதாகும். மேற் கூறிய சூஃபியாக்களின் கொள்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்தபோது; எனக்கு ஒரு விடயம் புலனானது. அவைகளை கொள்கையளவில் ஏற்றுக்கொள்வது இலகு என்றாலும், செய்கைமுறையில் வாழ்க்கையில் அவைகளை அனுஷ்டிப்பது மிகவும் சிரமமானது.

85
இக்கட்டத்தில் நான் அவர்களின் தத்துவக் கருத்துகளை, நூல்களின் மூலம் படித்தும், ஷைகுமார்களின் போதனைகளைக் கேட்டும், அவர்களின் நெறிமுறைகளை கூடியளவு அறிந்து கொண்டேன்.
அப்பொழுது முக்கியமான இன்னுமோர் விடயம் எனக்குத் தெளிவானது. அதாவது அவர்களின் தத்துவ போதனைகளின் முக்கியமான அம்சத்தை நூல்களின் மூலம் அறியமுடியாதென்பதே.
தன்னை அறியும் அனுபவத்திலும், அதனுடன் செயற்படும் பேரின்பத்திலும், அதில் அடையும் தூய்மை நிலையில் மட்டுமே அவர்களின் உத்தம நிலையை அடைய முடியும். கொள்கையளவில் அவர்கள் போதித்த எல்லா விடயங்களையம் நூல்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். ஆனால் அந்நூல்களில் கூறப்பட்ட அனுபவங்களையடைய துறவு நிலையன்றி வேறொரு வழியுமில்லை என்பதையும் அறிந்தேன். அப்பொழுது என்னையே நான் அகக்கண்களால் பார்த்தேன். உலக ஆசாபாசங்கள் என்னைச் சுற்றிலும் சூழ்ந்திருந்தன. பேராசிரியர் என்ற முறையில் நான் செய்யும் தொழில் கூட மறுமை நிலையைச் சிந்திக்கும் பொழுது தேவையற்றதாய் இருந்தது. ஏனெனில் அகக் கண்களால் பார்க்கும்போது அத்தொழிலைக்கூட நான் இறைவனுக்காகச் செய்யவில்லை. புகழுக்காகவும், பெயருக்காகவும் நான் செய்வதாக எனக்குத் தெளிவானது. அந் நிலையில் நான் ஒரு மலையின் செங்குத்துக்கருகில் நிற்பதுபோல் தத்தளித்தேன். அதனில் இருந்து விழுந்தால் நரகநெருப்பில் தான் போய்ச் சேருவேன் என உணர்ந்தேன். இக்கட்டத்தில் என்னுடைய பரிதாப நிலையை அறிந்து, நான் இறைவனிடம் சம்பூரணமாகச் சரணடைந்தேன். இறைவன் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய பேர், புகழ், மனைவி, மக்கள், நண்பர்கள் எல்லாவற்றையும் அவன் பால் புறக்கணிக்கக்கூடிய தைரியத்தை அருள் செய்தான்."
பேராசிரியர் ஆபெர்ரி (Professor Arberry) அவர்கள், இஹ்யா உலூமுத்தீன் என்னும் நூலில், இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள், சூஃபியாக்களின் தத்துவக் கருத்துகளுக்கும் பாரம்பரிய ஷரீயத் கருத்துகளுக்கும் உள்ள கருத்தொற்றுமைகளைக் கீழ்க்காணும் ஒழுங்கில் அடைவு செய்துள்ளார்கள்.
(அ) வணக்கம்: 1. அறிவின் (இல்ம்) தன்மை 2. நம்பிக்கையின் (ஈமான்) அத்திவாரங்கள்
அறிவு ஆராய்ச்சி இயலும் இறை இயலும் (Epistemology and theology)

Page 53
8.
9.
86
தூய்மையின் உட்கருத்து தொழுகையின் உட்கருத்து ஸக்காத், ஸதக்கா என்பனவற்றின் உட்கருத்துகள் ஹஜ்ஜின் உட்கருத்து
அனுட்டானங்கள், கொள்கைகள் பற்றிய சட்ட g) uLu Giv Ritual and Canon Law
திருக்குர்ஆன் ஓதுவது திக்று செய்வதும், தொழுவதும் ஜங்காலத் தொழுகை
வணக்க, வழிபாட்டுக்குரிய செயல்கள்
Devotional Works
(இ) நன்னடத்தை
சாப்பிடுதல் சமயநெறிச் சட்டம்
அருந்துதல் Religious Law
சம்பாதித்தல்
ஆகுமானதும் விலக்கப்பட்டதும்
தோழமை
குணவியல்பு
தனிமை
யாத்திரை, பயணம்
செவி கொடுத்தல் (கவிதை, இசை,
பேரின்பம்)
இறைஞானப் பயிற்சி Mystical Training
. நல்லுபதேசம்
வாழ்க்கையும், நபித்துவமும்
(உ) கொடும்பாவங்கள் உள்ளத்தின் விந்தைகள் தன்னைக் கட்டுப்படுத்துதல் மீதுரண் விருப்பமும் காமமும் நாவின் விபரீதங்கள் உளவியலதும் கோபம், குரோதம், பொறாமை த்மீகத்தினதும் உலகப் பொருள்கள் நடைமுறைகள் செல்வ ஆசையும் பொருளிட்டலும் Psychology and உயர்ந்த அந்தஸ்தும், போலி Spiritual Discipline வேஷமும் கர்வம் (ஆணவம்) தற்பெருமை LDLD60g,
(எ) சொர்க்க நிலையடைதல் தெளபா எனும் பாவமன்னிப்பு ஸப்ரு எனும் பொறுமையும், ஷ"க்ரு எனும் நன்றியும் கவ்பு எனும் இறையச்சமும், ரஜா எனும் நம்பிக்கையுடன் இருத்தலும்
 
 

9. 10. மரணத்தை ஞாபகமூட்டல்
87
பக்ர் எனும் வறுமை நிலையும் ஸ"ஹது எனும சுயமறுததலும தெளஹித் எனும் ஏகத்துவ நம்பிக்கையும், தவக்குல் எனும் இறைநம்பிக்கையும் மஹப்பத் எனும் இறை நேசித்தலும், ஆத்மீக ஷெளக் எனும் ஆவலும் ‘உன்ஸ் பவம் எனும் நெருங்கிய தொடர்பும், ரிலா’ ඈ"| 6TG)/LD திருப்தியும் Experience. நியா (Niya) எனும் தீர்மானமும், ஸித்கு (Sidq) எனும் உண்மை நிலையும், இக்லாஸ் (Ikhlas) எனும் மனத்துய்மையும் முறாக்கபா எனும் தியானமும் முஹாஸபா எனும் அகப் பரிசோதித்தலும் தஃபக்குர் Talakkur எனும் தியானம்
இம்மை, மறுமைக் கோட்பாடு Eschatology
85
கஸ்ஸாலி இமாம் அவர்கள் திருக்குர்ஆனிலே கூறப்பட்ட திக்ர்" என்னும் இறைதியானத்தை முக்கியமானதென சிறப்பித்துக் கூறினார்கள். சூஃபி ஞானிகளும் இறை சிந்தனையை சதா மனதில் பதிவு செய்ய, திக்ருக்கே அதிகமுக்கியத்துவம் கொடுத்தனர்.
றைஞான மேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்
க்ரைப்பற்றிமேலும் கூறுவதாவது:
'முதலாவதாக பக்தன் அவனுடைய உள்ளத்தைப் பற்றற்ற நிலையில் பண்படுத்திக் கொள்ளட்டும். அந்நிலையில் ஒரு விடயம் நடந்தாலும், நடக்காவிட்டாலும், ஒரு பொருள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அவனுக்கு இரண்டும் சமமாகவே தோன்றும். அதன்பின் தனிமையான இடத்தைத் தேடி, கட்டாயமான - பர்லான - வணக்கங்களைச் செய்தபின். இறைவனையன்றி வேறு ஒரு நினைவும் அவனுள்ளத்தில் புகுதாத நிலையை கவனமாக அடைந்து கொள்ளட்டும். தனிமையாக இருந்து கொண்டு நாவினால் அல்லாஹ் என்னுந்திருநாமத்தை, தொடர்ச்சியாகக் கூறி அதன்மேல் தனது முழுநினைவையும் செலுத்துவானாக. அப்படித்தியானித்துக் ':೧? அவன் நாவின் அசைவுகள் நின்று, அல்லாஹ், அல்லாஹ் என்னும் வார்த்தை மட்டும் அதன் மூலமாக உண்டாவதை அவதானிப்பான். அவன் விடாமுயற்சியோடு இன்னும் 'திக்ரு செய்து கொண்டே போகட்டும், அப்பொழுது நாவின் எல்லா அசைவுகளும் நின்று, அவனின் உள்ளம் அல்லாஹ்வின் நினைவை தியானித்துக் கொண்டே போகும். இந்நிலையில் அவன் மேலும், விடாமுயற்சியுடன் இறை நாமத்தைத் தியானித்துக் கொண்டே போனால், அல்லாஹ், அல்லாஹ் என்னும் வார்த்தைகளும் அதன் அட்சரங்களும்,

Page 54
88
அதன் உருவமும் மனத்தை விட்டு நீங்கி, கருத்து மட்டும் உள்ளத்தை இணைபிரியாமல் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும்.
பக்தனின் விடாமுயற்சியினாலும், அவனுடைய வைராக்கியத்தினாலும் மேற்கூறிய நிலையை மட்டுமே அடையலாம். அதன்பின் ஏற்படக்கூடிய இறையருள் அல்லாஹ்வின் அணுக்கிரகத்தைச் சேர்ந்ததாகும். ஆனால் இந்நிலையில் ஒரு பக்தன் தன்னைச் சம்பூரணமாக
அர்ப்பணித்திருப்பதால் இறையருளின் கடாட்சம் தனக்குள்ளே பிரவேசிக்க, அவன் தன்னைத் தானே திறந்துவிட்டிருக்கின்றான். இந்நிலையில்தான்
நபிமார்களுக்கும், அவ்லியாக்களுக்கும் இறையருள் கிடைத்தது. மேற்கூறிய ஆத்மீகப்பாதையில் அவன் வழிதவறாமல் சென்றால் இறையருள் கிடைப்பது திண்ணம். அது ஆரம்பத்தில் மின்வெளிச்சத்தைப் போல் உடன் தோன்றி உடன் மறையலாம். மறைந்தபின் திரும்பவும் வரலாம். சில வேளைகளில் உடன் மறையாமல் சற்றே தொடர்ந்து நிற்கலாம். அப்படிச் சற்றே தொடர்ந்து நிற்பது நீண்ட நேரம் நிற்கலாம் அல்லது குறைவாக நிற்கலாம். *
சூஃபித்துவப் பாரம்பரியத்தில் ஆரம்பத்தில் இருந்து இருபதாம் நூற்றாண்டுவரை 'திக்ர் என்னும் தியானமே அதிமுக்கிய வணக்கமாகக் கையாளப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின், முஸ்லிம் இறைஞானி எனப் புகழ் வாய்ந்தவரும், அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவருமான ஷைகு அஹ்மது அல்-அலவி (ரஹ்) (Shaikh Ahamad Al-Alawi) எனும் மகான், அன்னாரின் ஷைகுவும் ஞானகுருவுமான சித்தி முகம்மது அல்பூஸிதி(ரஹ்) என்பவர், தம்மை 'திக்ர் என்னும் தியான அனுஷ்டானத்தில் சேர்த்த வரலாற்றைப் பின்வருமாறு கூறுகின்றார்.
முதன்மையாக அவர் முரீதீன்கள் சிலருக்கு, ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட விபரங்களைக் கூறுவார். மற்றுஞ் சிலருடன், தன்னைப் பண்படுத்தும் நற்குணங்களைப் பற்றிப் பேசுவார். வேறுசிலருடன் இறைவனின் செயல்களைப் பற்றிப் பேசுவார். இவ்வண்ணம் ஒவ்வொரு முரீதீன் தகைமைக்குப் பொருத்தமான விடயங்களைப் பேசிக்கொண்டே போவார்.
ஆனால் அவர் முக்கியமாகப் போதனை செய்வது (நானும் அவ்வாறே பின்னர் போதனை செய்தேன்) யாதெனில், அல்லாஹ்வின் நாமத்தை, அதைச் சேர்ந்த அட்சரங்களின் காட்சியை மனதில் வைத்துக் கொண்டு சதா

89
உச்சரிப்பதேயாகும். அதன்பின் அவ்அட்சரங்களைப் பெருப்பித்து (சிந்தனையில்) அடிவானம் முழுவதையும் நிரப்பக்கூடிய விதமாகப் பரப்பச் சொல்லுவார். 'திக்ர் என்னும் தியானம் தொடர்ந்து கொண்டே போகும். பின் மேற்கூறிய அட்சரங்கள் ஒளிமயமாக மாறிவிடும். அப்பொழுது ஷைகு அவர்கள் அதைத் தாண்டிய ஒரு நிலைக்கு எம்மையெல்லாம் கொண்டு போவார். அவர் கையாளும் முறையை வார்த்தைகளால் கூற முடியாது. ஷைகின் தூண்டுதலால், முரீதீன்கள், படைக்கப்பட்ட உலகத்தைத் தாண்டி அதற்கப்பாற்பட்ட ஒர் உயர்நிலையை உணருவர். இது மாணாக்கர் எல்லோருக்கும் உடனே கிட்டாது.
அவ்வாறு மேனிலை அடையாதவர்கள், முயற்சியிலும் தூய்மையிலும் குறைந்தவர்களாய் இருப்பதால், மீண்டும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஷைகினால் காட்டப்பட்ட உலகத்துக்கு அப்பாற்பட்ட உணர்ச்சியை அடைந்த முரீதீன்கள் உண்மை உலகத்துக்கும், பிரபஞ்ச உலகத்துக்குமுள்ள வேற்றுமையை அறிந்து கொள்வர். அதே சமயம் இப்பிரபஞ்ச உலகை ஆதியும் அந்தமுமில்லாத வெட்டவெளியில் தொங்கும் ஒரு பந்தைப் போல் அல்லது விளக்கைப்போல் அவதானிப்பர்.
தியானத்துடன் கலந்த திக்ரை, விடா முயற்சியாக இன்னும் செய்து கொண்டே போனால் பிரபஞ்ச உலகம் படிப்படியாக மங்கிக்கொண்டே போய், அதன் ஒர் அடையாளம் மட்டும் மிஞ்சும். அதன்பின் அந்த அடையாளமும் மறைந்துவிடும். இந்நிலையில் முரீதீன் உண்மையுலகில் மூழ்கி அதனின் தூய ஒளியின் மூலமாக, இறைவன், பிரபஞ்சம் என்பன பற்றிய உண்மைகளை ஐயமின்றி உணர்ந்துகொள்ளுவர். மேற்கூறிய ஒவ்வொரு கட்டத்திலும், ஷைகு என்பவர், தம் முரீதுகளை சதா கவனத்துடன் அவதானித்துக் கொண்டே போவார். அவர்களின்நிலைகளைப் பற்றியும் கேள்விகள் மூலம் அறிந்து கொண்டு, படிப்படியாக அவர்களை ஊக்குவித்து, தாம் காணும் உண்மைகளை முரீதீன்கள் அறியுமட்டும் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டே போவார். இவ்விடயத்தில் அல்குர்ஆன் கருத்தை, ஷைகு அடிக்கடி குறிப்பிடுவார். அதாவது 'இறைவனால் உண்மைகள் நிரூபிக்கப்பட்டும், அதன்பின் அதைப்பற்றிய தகுந்த ஆதாரங்களைத் திரும்பக் கொடுத்து மேன்மைப்படுத்தப்பட்ட உத்தமன்’ எனப்படும் அடியார்களைப்பற்றியதாகும்.

Page 55
90
மேற்கூறிய உண்மைகளை அறியும் கட்டம், ஒரு மாணவன் அடைந்ததன் பின், ஷைகானவர், வெளித்தோற்றமான பிரபஞ்ச உலகுக்கு அவரைத் திரும்பவும் கொண்டுவந்து சேர்ப்பார். அவ்வாறு திரும்பிய முரீத் மாணவர், இவ்வுலகைப் புதிய கண்ணோட்டத்தில் நோக்குவார். எது உண்மை என்று முன்னர் நினைத்திருந்தாரோ, அஃது உண்மையல்ல எனவும், உண்மையுலகம் வேறோர் நிலையில் இருப்பதையும் அறிவார். அவ்வுலகை ஒளியின்மேல் ஒளியாகக் காண்பார். மேலும், பூர்வீகத்திலே மாறுபாடின்றி அப்படியே இருந்ததையும் உணர்வார்."
அடிப்படைவாதிகள் சிலர், சூஃபித்துவக் கொள்கைகளும், மரபுகளும், திருக்குர்ஆன் ஹதீஸ் என்பனவற்றில் கூறப்பட்ட கருத்துகளில் இருந்து வேறுபட்டவை என அபிப்பிராயம் கூறுவர். இதற்குப் பிரதிவாதமாக, சூஃபியாக்கள், தம் தத்துவக் கொள்கைகளும், மரபுகளும் திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டினதும் அஸ்திவாரங்களிலேதான் நிலைகொண்டதாக எடுத்துக் காட்டுவர். இவ்விடயத்தில் ஒரு கேள்வி மூலம் தீர்ப்பைக் கூறலாம். அக்கேள்வியாவது, சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில், சூஃபித்துவத்தின் முக்கிய கொள்கைகள் நிலைகொண்டிருக்கின்றனவா என்பதாகும். இதில் பலதரப்பட்ட கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும், சூஃபியாக்களின் முக்கிய தத்துவஞானக் கருத்துகள், திருக்குர்ஆனிலே நிலைகொண்டிருப்பதாக சந்தேகமின்றிக் கூறலாம். அடிப்படைவாதிகளுக்கும், சூஃபியாக்களுக்குமுள்ள கருத்து வேறுபாடுகள், உண்மையில் ஒரு வியாக்கியானப் பிரச்சினையேயன்றி வேறில்லை. சூஃபியாக்கள் குறிப்பிடப்பட்ட, குர்ஆன் வசனங்கள் சிலவற்றிலும், ஹதீஸுகளிலும், இருவிதமான கருத்துகளைச் சுட்டிக்காட்டுவர். அவையாவன ளாஹிர்” எனும் வெளிக்கருத்தும், பாத்தின் எனும் உட்கருத்துமாகும். இவ்விரு கருத்துகளையும் தன்னுடைய அனுபவ ரீதியாக அறிந்த உண்மைகளோடு சம்பந்தப்படுத்தி போதனைகளாக சூஃபிமகான்கள் விசுவாசிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.
அத்தகைய இறைஞானிகள், அவர்கள் மரணிக்கு முன்பதாகவே அவ்லியாக்களெனக் கெளரவிக்கப்பட்டார்கள்.
* "மேகத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்குகிறான். அது பள்ளத்தாக்குகளில் அவற்றின் தராதரத்துக்குத் தக்கபடி பாய்கிறது" (அல்குர்ஆன்: 13:17) இந்த ஆயத்துப் பற்றிய விளக்கத்தில் தண்ணீர் என்பது ஞானத்தையும், பள்ளத்தாக்குகள் என்பது மானிடரின் இதயங்களையும் குறிப்பதாக விபரம் தரப்பட்டுள்ளது."
(இமாம் கஸ்ஸாலி (ரஹ்) மிஷ்காத்துல் அன்வார்) தமிழாக்கம் - பக்கம்:51 ஆர்.பி.எம். கணி.

91
மேலும், மேற்கூறிய விதந்துரைகள் ஒரு புறமிருக்க, காலக்கிரமத்தில், சூஃபித்துவக் கொள்கைகளும், மரபுகளும் இஸ்லாமிய உலகில் வேரூன்றி சூஃபித்துவம் ஓர் இஸ்லாமிய வாழ்க்கை முறையாக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒரு மனிதனின் இயற்கையான நிலை, நாஸுகுத் (Nasut) மானிடநிலை எனக்கருதப்பட்டது. இந்நிலையில், திருக்குர் ஆனிலும், ஹதீஸிலும் கட்டளை இடப்பட்ட ஐந்து நேரத் தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ்ஜ", என்னும் கடமைகளையும், வாழ்க்கையின் அறநெறிகளையும் கடைப்பிடித்து தத்தம் வாழ்க்கையை நடாத்த வேண்டும். இவையே ஷரீயத்தின் நியதிகளாகும்.
மேலும், மேற்கூறிய வழிமுறைகள் ஆத்மீகப் பாதையில் முதலாங்கட்டமே எனக் கருதப்பட்டது. இரண்டாங்கட்டமாவது, ஒரு முரீதீன் தரீக்கா எனும் ஒரு தூய வழியைப் பின்பற்றுவதாகும். இக்கட்டத்தில், ஷரீயத்தில் கூறியிருக்கும் கடமைகளைச் செயல்படுத்துவது மட்டுமல்லாமல், ஓர் உண்மையான பீர், அல்லது ஷைகின் மூலம், சில மறைமுகமான அடிப்படைப் போதனைகளைக் கற்றுணர்ந்தும் அவைகளைச் செயல்படுத்தியும் ஒரு முரீதீன், ஆத்மீகப்பாதையில் இன்னுமோர் உயர்நிலையை அடைகின்றார். அந்நிலையை அடைந்தால், மஃரிபத்’ எனும் இறைஞானத்தை அடையும், மூன்றாவது கட்டத்தைச் சேரலாம். இம் மூன்றாம் கட்டத்தின் கோட்பாடுகளை நன்கு செயல்படுத்தினால், ஹகீக்கத் எனும் ஆத்மீகப்பாதையின் கடைசி நிலையை அடையலாம். இந்நிலையே, இறையருள் கிட்டும் உத்தமமான கடைசி நிலையாகும். இதை "பனா பில்லாஹ்" (Fana-fillah) அல்லது 'அல்லாஹ் வின்பால் சேர்வதாகும்’ எனவும் கூறுவர். சூஃபியாக்கள், இம் மர்மத்தை, ஆறு, கடலில் சங்கமமாவதுபோலும், துளிநீர், சமுத்திரத்தில் சேர்வதுபோலும் எனும் உவமைகள் மூலம் விளக்குவர்.
சூஃபி ஞானிகள் ஆன்மீக அறிவை பின்வருமாறு மூன்று விதமாக வகுத்திருக்கிறார்கள். (அ) இல்முல்யகின்(Imui-yaqin) எனும் சாதாரணஅறிவு. இவ்வறிவை மனிதன்புலனறிவாலும் காரண சக்தியாலும் அடையலாம். (ஆ) அய்னுல்யகீன் (Ainui-yaqin) எனும் சாதாரண உயர்ந்த அறிவு, இவ் அறிவை நேர்முகமாகப் பெறக்கூடிய அனுபவமூலமாகவே அடையலாம். (இ) ஹக்குல் யகின் (Haqq-ul-yaqin) எனும் இறைஞான உயர் அறிவு. ஹக் எனும் இறைவனுடன் ஒன்றிய நிலையில் அவனால் அருளப்படும் ஏகாந்த அறிவு.

Page 56
92
மேற்கூறிய மூன்று அறிவுகளும், ஓர் உவமை மூலம் நன்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. நேரில் காணாத ஒரு கனியின் தன்மையை வருணனை மூலம் கேட்டறிதல் ஒன்று. அக்கனியை நேரில் காண்பதனால் வருணனையை விட அதைப்பற்றி நேரில் பார்த்தறிதல் இரண்டாவது. அக்கனியை உண்பதன் மூலம் சுவைத்து அதைப் பூரணமாக அறியலாம் என்பது மூன்றாவது.
சூஃபித்துவ மரபில் ஷைகு எனும் ஆன்மீக வழிகாட்டி, முரீதீன்களுக்கு உண்மைப் போதனைகளைப் புகுத்தியும், அத்தியாவசியமான செயல்முறைகளைக் கற்றுக் கொடுத்தும், முக்கியமான ஒரு பொறுப்பைச் செயல்படுத்துகின்றார். அவர் முரீதீன் ஒருவர் ஆரம்பத்திலிருந்து ஆத்மீக யாத்திரையில் புகுந்து, "பனா’ எனும் (நான்) நிலையற்று, பகா எனும் நிலையில் இறைவன் பால் சேரும் உண்மையான கடைசிநிலை கிடைக்குமட்டும், ஒவ்வாரு கட்டத்திலும், ஆத்மீக வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும். மேல் கூறிய "பனா' 'பகா' எனும் உண்மைகளை திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றது.
'(பூமியாகிய) இதன்மீது இருக்கின்ற ஒவ்வொன்றும் அழிந்துவிடக் கூடியதுதான்.' 'வல்லமையும், சங்கையும் உடையவனான உம்முடைய ரப்பின் திருமுகம் (மட்டுமே) நிலைத்திருக்கும்." (55:26, 27)"
இஸ்லாமிய பாரம்பரியத்தில் பிரபல்யம் வாய்ந்த ஷைகுமார்கள் தரீக்கா நெறிகளை ஆரம்பித்து, அதன் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். அவ்லியாக்கள் என்றும்,
குத்புமார்களென்றும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, அன்னவர்களின் மறைவிற்குப் பின்னரும் போற்றப்பட்டார்கள். மேலும் சூஃபிப் பாரம்பரியத்தில் பிரபஞ்சத்தின் அநித்ய நிலையையும் இறைமர்மத்தின் உண்மையான நிலையையும், ஒரு பக்தன் படிப்படியாக அறிவதையும், அவ் அறிவினால் தன் மிருக குணாதிசயங்களின் பற்றுகளை விட்டு அகலுவதையும் திரை நீக்கமெனக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு பக்தனைச் சூழ்ந்திருக்கும் மட்டிலாத் திரைகளை நீக்கி, எல்லாச் சிருஷ்டிகளுக்கும், காரண கர்த்தாவாயிருக்கும் இறைவன் பால் அவன், அடையும்வரை வழிகாட்டுவதே ஒரு ஷைகின் முக்கியமான பங்காகும். ரிபாஇய்யா தரீக்காவைச் சேர்ந்த, ஒரு பக்தர், ஒரு (ஃபகிர்) ஹக்கனாகிய இறைவன்பால், ஒரு முரீதீன் சேருவதை, பின்வருமாறு கவித்துவ நயத்தோடு வருணிக்கின்றார்.
ஐம்புலன்களால் அறியக்கூடிய ஜடப்பொருளாய் உற்பத்தியாய் இருக்கும் பிரபஞ்சத்திற்கும், பரம்பொருளாகிய
 

93
அல்லாஹ" தஆலாவுக்குமிடையில் எழுபதினாயிரம் திரைகள் இருக்கின்றன. ஒரு மனிதன் பிறக்குமுன்பே எழுபதினாயிரம் திரைகள் மூலமும் செல்ல வேண்டியிருக்கிறது. இத்திரைகளின் உட்பகுதியான அரைவாசி, ஒளி நிறைந்த திரைகளாகும். வெளிப்பகுதியான அரைவாசி, இருள்நிறைந்த திரைகளாகும். பிறவியெனும் பிரயாணத்தை நோக்கி ஒர் ஆன்மா, ஒளிமயமான ஒவ்வொரு திரைமூலம் ஊடுருவிச் செல்லும்பொழுது, ஒவ்வொரு தெய்வீகத் தன்மையை இழக்கின்றது. ஒவ்வொரு இருள்மயமான திரைமூலம் ஊடுருவிச் செல்லும் பொழுது, பூலோகத்தின் தன்மைகளான இருள் சூழ்ந்த குணங்களால் தன்னைப் போர்த்திக் கொள்கின்றது. இதனால் தான் சிசு பிரசவிக்கும் பொழுது அழுது கொண்டே பிறக்கிறது. ஏனெனில் அது அல்லாஹ்வைப் பிரிந்த உண்மையை அறிந்த துக்கத்தினாலாகும். அக்குழந்தை நித்திரையில் அழும்போது அது இழந்த ஒரு மேலான வஸ்தை ஞாபகத்தில் உணருகின்றது. இத்திரைகள் மூலம் போகும் பிரயாணம் நிஸ்யான் (Nisyan) என்னும் மறதி நிலையாகும். இதனால் தான் மனிதனை இன்ஸான் என வருணிக்கப்பட்டிருக்கிறது. அவன் இப்பொழுது அல்லாஹ்விடமிருந்து எத்தனையோ திரைகளால் மறைக்கப்பட்டு தன் உடல் எனும் கூட்டில் சிறைக்கைதியாக இருக்கின்றான்.
மேற்கூறிய சிறையிருந்து விடுதலை அடைவதும், தன்னைப் போர்த்தியிருக்கும், எழுபதினாயிரம் திரைகளை நீக்குவதும், இறைவனோடு முன்னர் சேர்த்திருந்த நிலையை, இவ்வுடலினுள் இருக்கும் பொழுதே அடைவதும், சூஃபி மரபைச் சேர்ந்த ஆத்மீக வழிகாட்டியின் (தர்வேஷின்) குறிக்கோளாகும். இக்குறிக்கோளின் நோக்கம் உடலை நிராகரிப்பதல்ல. அதனைப் பரிசுத்தப்படுத்தி, ஆத்மீகப் பாதையில் திருப்புவதேயாகும். அதனை ஒரு தடுக்கும் சாதனமாகக் கருதாமல் ஒர் உதவிச் சாதனமாகப் பயன்படுத்தலாகும். ஒர் உலோகப் பொருளை எப்படி தீயினால் சுட்டு, தூய்மைப்படுத்துகின்றோமோ, அதைப் போன்றே எமது உடலையும் தூய்மைப்படுத்த வேண்டும். இதனால் தான் தூய்மைப்படுத்தும் இரகசியத்தை அறிந்த ஒரு ஷைகு, முரீதானவருக்குப் பின்வருமாறு போதனை செய்வார். ஆன்மீகப்பாதை எனும் தீயில் உனைத் தள்ளுவோம். ஏனெனில் நீ அத்தீயில் இருந்து மீளும் பொழுது
பரிசுத்தமானவனாகி விடுவாய்.

Page 57
94
மேற்கூறிய நோக்கங்களின் அடிப்படையிலேதான் காலக்கிரமத்தில் பற்பல சூஃபித் தரீக்கா நெறிகள் நிறுவப்பட்டன. திருக்குர்ஆனும், ஹதீதுமாகிய மாறுபடாத அத்திவாரத்தின் மீது இணைக்கப்பட்டதால், இவைகளின் கொள்கைகளிலும், முக்கியமான கிரியா முறைகளிலும் அடிப்படையான ஒற்றுமை இருந்தது. ஆனால், உலகாயத சரித்திரச் சூழ்நிலைகளால், சிற்சில விடயங்கள் பாதிக்கப்பட்டதால், வெளிப்படையான கிரியாமுறைகளில் சில வேறுபாடுகளும் காணப்பட்டன. இஸ்லாமிய உலகில் காலக்கிரமத்தில் நூற்று எழுபத்தைந்து தரீக்கா நெறிகள் உண்டான போது, அவைகளில் பின்வருவன முக்கியமானவையாகக் கருதப்படலாயிற்று. சூஃபித்துவ தரீக்கா நெறிப் பிரிவுகளின் முக்கியமானவற்றின் வரிசைகள் வருமாறு:
1. காதிரிய்யா தரீக்கா நெறி: இப்பிரிவின் தலைவரும், ஸ்தாபகரும் கெளதுல் அஃலம் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களாகும். வடஈரானைச் சேர்ந்த அன்னாரின் (பிறப்பு. கி.பி.1078 - இறப்பு கி.பி.1166) தரீக்கா நெறியைப் பின்பற்றுவோர் உலகெங்கணும் உள்ளனர்.
2. நக்ஷபந்தியா, தரீக்காநெறி: இப்பிரிவின் ஸ்தாபகரும், தலைவரும் ஹாஜா பஹாஉத்தீன் முகம்மது (ரஹ்) (இறப்பு கி.பி.1388) அவர்களாகும். இத்தரீக்காநெறியைப் பின்பற்றுபவர்கள், இந்தியா, ஜாவா, சீனா, துருக்கி ஆகிய இடங்களில் பெரும்பாலானவர்கள் உள்ளனர்.
3. ஷாதுலியாத் தரீக்காநெறி: இப்பிரிவின் தலைவரும் ஸ்தாபகரும் அபூமத்யன் (ரஹ்) (பிறப்பு கி.பி. 1197) என்பவராகும். இத்தரீக்கா நெறியை விருத்தி பண்ணியவர், அலிஷாதுலி என்பவராகும். இத்தரீக்கா நெறியைப் பின்பற்றுபவர்களை வட ஆபிரிக்கா, துருக்கி, ரூமேனியா ஆகிய நாடுகளில் (வட ஆபிரிக்கா, துனிஷியா) காணலாம்.
4. நிஃமதுல்லானிய்யா தரீக்கா நெறி; இது காதிரிய்யாத் தரீக்கா நெறியின் உப பிரிவாகும். இத்தரீக்காவைப் பின்பற்றுபவர்கள் பிரதானமாக ஈரானில் உள்ளனர்.
5. ஷத்தாரிய்யா தரீக்காநெறி; இதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் ஷத்தார் (ரஹ்) (கி.பி.1415) என்பவராகும். இத்தரீக்காவைப் பின்பற்றுபவர்கள், சுமாத்ரா, இந்தியா, ஜாவா முதலான இடங்களில் உள்ளனர்.
6. ரிபாஇய்யா தரீக்காநெறி; இதன் தலைவரும் ஸ்தாபகரும் அஹ்மத் கபீர் ரிஃபாயி (ரஹ்) (1175.கி.பி)
என்பவராகும்.
 

95
7. மெளலவியா தரீக்கா நெறி; இதன் தலைவரும் ஸ்தாபகரும் ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்களாகும். இறப்பு - கி.பி. 1273. இத்தரீக்கா நெறியைத் தொடர்வோர் துருக்கியிலும் ஈராக்கிலும் இருக்கின்றனர்.
8. கூSஸ்தியா தரீக்கா நெறி; இதன் தலைவரும்
ஸ்தாபகரும் ஹாஜா முயீனுத்தீன் கூSஷ்தீ (ரஹ்)
அவர்களாகும். இதனைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவின்
பல பாகங்களிலும் உள்ளனர்.
இஸ்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவி 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 18-ஆம் நூற்றாண்டுக்கிடையே இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் வலுவடைந்திருந்த போழ்து, இஸ்லாமியப் போதனைகளும், சூஃபித்தத்துவஞானமும் இந்தியப் பண்பாட்டில் முக்கியமான ஓர் அம்சமாக விளங்கின. இந்தியாவில்
வடபகுதியிலும், தென்பகுதியிலும் செல்வாக்குப் பெற்றிருந்த பல
பாஷைகளில், பல்லாயிரக் கணக்கான சூஃபி இலக்கிய ஆக்கங்கள் தோன்றின. இந்திய கலாசாரத்தில், ஆத்மீக ஞானம் எப்பொழுதும் முதன்மையடைந்திருந்ததை சரித்திரம் கூறுகின்றது. மேற்காசியாவில் இருந்தும், மத்திய ஆசியாவில் இருந்தும், மிகப் பிரபல்யமான சூஃபித்துவ மகான்கள், இந்தியாவுக்கு, பற்பல காலங்களில் விஜயம் செய்தார்கள். இந்திய வரலாற்றின்படி, மன்ஸ அர் அல்-ஹல்லாஜ் (ரஹ்) எனும் புகழ்வாய்ந்த ஸஅபிமகானும், அதன்பின் ஜிலி (ரஹ்) எனும் சூஃபி ஞானியும் இந்தியாவுக்கு விஜயம் செய்தார்களெனக் கூறப்படுகிறது.
கஷ்புல் மஃஜுப் (Kasht-al-Mahjab) எனும் புகழ்வாய்ந்த சூஃபித்துவ பாரசீகக் கிரந்தத்தை எழுதிய அல்ஹ"ஜ்வீரி (ரஹ்) இந்திய உபகண்டத்தில் இருக்கும் லாஹஅரைத் தன் வாசஸ்தலமாகக் கொண்டார். இதனால் மத்திய ஆசியா, மேற்காசியா, வட ஆபிரிக்காவோடு இந்தியாவும், சூஃபித்துவ தத்துவஞானத்திற்கு முக்கியமான மத்தியத்தலமாக விளங்கின. மிகப் புகழ்வாய்ந்த காஜா முயீனுத்தீன் கூFஸ்தி (ரஹ்) எனும் ஆத்மஞானி கிழக்கு ஈரானிலிருந்து ஏறக்குறைய கி.பி. 1192 எனும் காலப்பகுதியில் அஜ்மீரில் வாழ்ந்து வந்தார். அவரின் மறைவுக்குப் பின், எத்தனையோ சூஃபி மகான்கள், இந்தியாவின் பற்பல பகுதிகளில் தம் போதனைகளால் மக்களை அணுகி சூஃபித்துவ நெறிகளை ஸ்தாபித்தார்கள். இவ்வரிசையில் அன்னாரின் வாரிசுகளான குத்புத்தீன் பக்தியார்காக்கி (ரஹ்) (இவர் டெல்லியில் 5TawLDTGOTTi.) 60agai Lufj86it agdisia56iej (Shaikh Farid-ud-din Shakar Gung) (இவர் பாக்பட்டனில் காலமானார்.) நிலாமுத்தீன் வலிய்யுல்லாஹ் அமீர் குஸ்ரூ (Amir Khusroe), அலாவுத்தீன் அலி அஹ்மத் ஸாபிர், ஷைக்சலீம் ஆகியோராவார். ஷைக்சலீம், அக்பர்

Page 58
96
காலத்தில் வாழ்ந்தவரும், அச்சக்ரவர்த்தியினால் மரியாதை செலுத்தப்பட்டவருமாவார். (இறப்பு:கி.பி.1572) சக்கரவர்த்தி ஜஹாங்கீருக்கு ஸலீம் என்று அவரது பெயரே இடப்பட்டது.
காஜா முயீனுத்தின் கூFஸ்தி (ரஹ்) அவர்களால், உருவாக்கப்பட்ட புகழ் வாய்ந்த கூFஸ்தி தரீக்கா நெறி மட்டுமல்லாமல், ஏனைய தரீக்கா நெறிகளான, காதிரிய்யா தரீக்காநெறி, சுஹ்ரவர்த்திய்யா தரீக்காநெறி, ஷத்தாரிய்யா தரீக்காநெறி, ஷாதுலிய்யா தரீக்காநெறி, நக்ஷபந்திய்யா தரீக்காநெறி என்பனவும், இந்திய நாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்களால் பின்பற்றப்படுகிறது.
ஆத்மீகப்பாதையில், இந்திய தத்துவஞானம் - தனக்கெனச் சிறந்த கொள்கைகளைக் கொண்டு விளங்கியது. இந்திய மண்ணில் நிலைகொண்டிருந்த வேதாந்த தத்துவஞானத்திற்கும், சூஃபித்துவ தத்துவஞானத்திற்கும், பரம்பொருளைப் பற்றிய கருத்தொற்றுமை இருந்த காரணத்தால், சூஃபித்துவ தத்துவஞானத்தையும், வேதாந்த தத்துவஞானத்தையும் கருத்து ரீதியில் ஒன்றிணைக்க அறிஞர்கள் சிலர் முயன்றனர். இம்முயற்சியில் ஈடுபட்டவர்களுள் ஷாஜஹான் சக்ரவர்த்தியின் மகன், இளவரசர் தாராஷிகோஹ் (1659ல் தூக்கிலிடப்பட்டார்) என்பவர் மிகவும் பிரதானமாகக் காணப்பட்டார். இவரால் இயற்றப்பட்ட மஜ்மஉல் பஹ்ரைன் (Majma-ul-Bahrain) "இரண்டு சமுத்திரங்களின் சந்திப்பு" என்னும்நூல் சூஃபித்துவத்தினதும், வேதாந்தத்தினதும், அடிப்படைக் கொள்கையிலுள்ள ஒற்றுமையை விளக்குவதாயுள்ளது.
மேற்காசியாவுக்கும் இந்தியாவுக்கு மிடையில் வணிகம் முன்னேற்றமடைந்திருந்த காலகட்டத்தில் முஸ்லிம் வணிகப் பெருமக்கள் தென்னிந்தியத் துறைமுகங்களை நோக்கி அடிக்கடி வரலாயினர். அன்னவர்களோடு இஸ்லாம் மார்க்கத்தையும், சூஃபித்துவ ஞானத்தையும் நன்கு கற்று அறிந்தவர்கள் வந்தனர். அவர்களின் வரவால், இந்திய நாட்டில், குறிப்பாக தமிழகத்தில், தரீக்காநெறி வளர்ச்சி பெற்றதை அறியக் கூடியதாயிருக்கிறது. காதிரிய்யாத்தரீக்கா நெறி, ஷாதுலிய்யாத்தரீக்கா நெறி, ரிபாஇய்யா தரீக்கா நெறி, என்பனவற்றைப் பின்பற்றும் பெருந்தொகையானோர், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இருப்பதை அவ்வக் காலத்தில் வாழ்ந்த தரீக்கா நெறியாளர்களின் மூலம் அறிகின்றோம்.
தென்னிந்திய மொழிகள் பலவற்றுள்ளும், சிறப்பாகக் தமிழ்மொழியில் வெளிவந்துள்ள சூஃபித்துவஞான இலக்கியங்களே, தமிழகத்தில், சூஃபித்துவ ஞானம் பரவியுள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.
 

97
இரண்டாம் அத்தியாயம் முதல் ஐந்தாம் அத்தியாயம் வரை தென்னிந்திய கலாசாரப் பின்னணியிலிருந்து, எவ்வாறு சூஃபி ஞான இலக்கியங்கள் வளர்ச்சியடைந்தன என்பது ஆராயப்படுகின்றது. இது மட்டுமன்றி, இலங்கை இந்திய கலாசாரப் பின்னணியின் மூலம் சூஃபி ஞான வளர்ச்சியில் இன்னொரு திருப்பத்தையும் காண்கின்றோம். பற்பல இடங்களிலும் சூஃபிஞானியர்களுக்கு ஸியாரங்கள் கட்டப்பட்டும் அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டும் வருவதை அறிகின்றோம். இவ்வரிசையில் மிகவும் கீர்த்தி பெற்று விளங்குவது மாணிக்கப்பூர் தந்த மகாமேதை நாகூர் மீரா சாஹிப் ஆண்டகை அவர்களுடைய இடமாகும். இந்து, கிறிஸ்த்துவ, இஸ்லாமிய சகோதரர்களனைவரும், அங்கு சென்று, அன்னாரை நினைவு கூர்வதைக் காண்கின்றோம். மஸ்தான் ஸாஹிப் எனக்கூறப்படும், சுல்தான் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள், பக்திமேலிட்டு நாகூர் மீராஸாஹிப் ஆண்டகை அவர்களைப் பற்றிப் பின்வரும்வண்ணம் பாடுகின்றார்கள்.
திக்குந் திகந்தமுங் கொண்டாடி யேவந்து
தீன்கூறி நிற்பர் கோடி
சிங்காசனாதிபர்க ளடியேந்தி யேவந்து ஜெயஜெயா வென்பர் கோடி
அக்கனருள் பெற்றபெரி யோர்களொலி மார்களனி
அணியாக நிற்பர் கோடி
அஞ்ஞான வேரறுத் திட்டமெய்ஞ்ஞானிகள்
அணைந்தருகு நிற்பர் கோடி மக்கநக ராளும் முகம்மது றசூல்தந்த மன்னரே யென்பர் கோடி வசனித்து நிற்கவே கொலுவீற் றிருக்குமும்
மகிமைசொல வாயு முண்டோ தக்கபெரி யோனருட் டங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மே ருவே
தயைவைத் தென்னையாள் சற்குணங் குடிகொண்ட
சாகுல்க மீத ரசரே.
நாகூர் தர்கா எனப்படும் புனிதஸ்தலத்திற்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடந்தோறும் யாத்திரை செய்கின்றனர். இவ்வாறு தென்இந்தியாவில் முத்துப் பேட்டையில் இருக்கும், ஷெய்குதாவுது ஒலியுல்லாஹ் அவர்களின் ஸியாரத்துக்கும், இலங்கையில்

Page 59
98
வேர்வலையிலும், கொழும்பு -7ல் உள்ள, தெமட்ட கஹ என்னும் இடத்திலும், கம்பளையில் இருக்கும் கஹட்டப் பிட்டியிலும், கண்டியிலுள்ள மீராமக்காம் பள்ளியிலும், இன்னும் உள்ள பிரபல்யமான அவ்லியாக்களின் ஸியாரங்களையும் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அடிக்கடி விஜயம் செய்கிறார்கள். ஆன்மீக ஆறுதலுக்காகவும், துன்பத்தின் மீட்சிக்காகவும், ஞானிகளின் தலையீடு, நோய்நிவாரணம் என்பவற்றுக்காகவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அடிக்கடி இப்புனித இடங்களுக்கு யாத்திரை செய்வது வழக்கமாகி விட்டது.
மேலும் இஸ்லாமிய சரித்திர வரலாற்றில் இறைஞானமெனும் ஆத்மீக ஒளியைப் பெற்றிருக்கும் ஒலிமார்கள், 'விலாயத் அல்லது 'கராமத்’ எனும் ஆத்மீக சித்திகளைப் பெற்றிருப்பதாக பக்தர்கள் பலர் நம்பிக்கை
வைத்துள்ளனர். உயர்தர சூஃபித்துவஞானத்தில் இவ்விதமான நம்பிக்கைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதபோதும், சூஃபி மகான்களின் வாழ்க்கை
வரலாறுகளில் மேற்கூறிய பல சித்திகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஆத்மீகப் பாதையில் அதிமுன்னேற்றம் அடைந்த இறைஞானிகளுக்கு, சாதாரண மனிதர்களுக்குக் கிட்டாத பற்பல அபூர்வ சக்திகள் இறைவனால் அருளப்பட்டிருப்பதாக பொதுமக்கள் நம்புகிறார்கள். உதாரணமாக ஆங்கிலத்தில் டெலிபதி (Telepathy) கிலயர்வோயன்ஸ் (clairvoyance) டெலிகினேஸிஸ் (Telekinesis) எனப்படும் அபூர்வசக்திகள் குறிப்பிட்ட இறைஞானிகள் சிலருக்கு இருந்ததென
அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கூறுகின்றன. டெலிபதியென்பது, ஐம்புலத்தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மனஆற்றலால்
இயக்குந்திறம். கிலயர் வோயன்ஸ் என்பது இயல்பு கடந்த நுண்ணோக் காற்றலாகும். டெலிகினேஸிஸ் என்பது தொடர்பின்றியே தொலைவிலுள்ள பொருளை இயக்கும் அருந்திறம் என்பதாகும். குறிப்பிட்ட இறைஞானிகள் சிலர் மேற்கூறிய சில அபூர்வ சக்திகளை மனித முன்னேற்றத்துக்கு பாவித்தார்களென நம்பப்படுகிறது.
பொதுவாகக் கூறப்போனால் நோய், துயரம், துன்பம் முதலான துர்ப்பாக்கியங்களினால், கஷ்டப்படுவோர் அவ்லியாக்களின் துஆப்பேறுகளினால் நலமடைவர் என்னும் நம்பிக்கை, பக்தர்களிடம் பரவலாகக் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். அவர்கள் தர்கா, ஸியாரம் முதலிய புனித
 

99
ஸ்தலங்களுக்குச் சென்று, அவர்களின் துன்பங்களினின்று நிவாரணம் தேடி இறைவனைப் பிரார்த்திப்பது முக்கியமானதோர் மரபாகி விட்டது.
தமிழ் இலக்கியத்தில் சூஃபித்துவ ஞானம்
முன்னர் கூறியது போன்று இந்தியாவில் சூஃபித்துவ ஞானமென்பது அராபிய, பாரசீக இந்தியர்களின் கூட்டுச் சிந்தனை மூலம் ஆத்மீகப்பாதை நெறியில் ஒருமித்த கொள்கையாகும். ஆறுகள் பல சமுத்திரத்தில் சங்கமமாவது போன்று தத்துவஞானநெறிகள் பலவும் ஏகத்துவக்கொள்கையில் ஒன்று சேர்கின்றன.
தென் இந்தியாவில் இஸ்லாம் பரவிய போழ்து திராவிடமொழிகள் பலவற்றில் எண்ணற்ற முஸ்லிம் இறைஞானிகள் ஞானப்பாடல்களைப்பாடி நூல்கள் பலவற்றை இயற்றினர்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் இறைஞானிகளின் தத்துவக்கொள்கைகளை உள்ளடக்கிய ஆக்கங்களைப் பற்றி இப்போழ்து ஆய்வுக்கு எடுத்துள்ளோம். நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், தென் இந்திய திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியைப் பிறப்பிடமாகக் கொண்ட பீர்முஹம்மத் அப்பா (ரலி) அவர்களே, ஞானப்பாடல் வரிசையில் முதலாமவராக விளங்குகின்றார் என அறியக்கிடக்கின்றது. அவர் பிறந்த திகதி தெரியாது. அவரால் இயற்றப்பட்ட ஒரு நூல் திருநெறிநீதம். இந்நூல் இஸ்லாமிய நல்லொழுக்கமுறைகளை வினாவிடைகள் மூலம் எடுத்துக்கூறுவதாகும். திருநெறிநீதம், ஹிஜ்ரி 102 ஆம் ஆண்டு ரபியுல் ஆகிர் மாதம் இயற்றப்பட்டதாக ஒரு விருத்தப்பா மூலம் அறிகின்றோம். இஃது கி.பி. 1594-ஆம் ஆண்டைக்குறிக்கும். அவருடைய முரீதுகள் ரஜப்மாதம் பிறை 14ல் அன்னார் மரணமடைந்தார் என்பதற்காக அத்தினத்தில் வருடாவருடம் நினைவுகூரும் வைபவம், வெகுவிமரிசையாக்கப்பட்டு, சிறப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலையில் அன்னாரின் அடக்கஸ்தலம் உண்டு.
அப்பா அவர்கள் அதிகமான ஞானப்பாடல்களையும், நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்கள். அவர் ஒரு பெரிய இறைஞானியாகவும் திகழ்ந்தார். அவருடைய பாடல்கள், பரிபாஷைச் சொற்களின் மூலம் மெய்ஞ்ஞான உண்மைகளை எடுத்து விளக்குவனவாக உள்ளன. உதாரணமாக, அவரால் எழுதப்பட்ட ஞானமணிமாலையில் இருபத்துநாலு எழுத்துகளையுடைய கோடரியினால், மனமாகிய நிலத்திலே

Page 60
1 OO
அடர்ந்து, இருண்டு வளர்ந்து நின்று தடை செய்யும் காட்டுமரங்களை வெட்டி, நிலத்தைப் பண்படுத்தி, கலிமா என்னும் வித்தை விதைக்க வேண்டும். அதன்பின் ஐம்புலன்களால் உண்டான களைகள் அகற்றப்பட வேண்டும். இருபத்து நான்கு எழுத்துகளாகக் கூறப்பட்டவை கலிமாவின் அட்சரங்களாகும். பீர்முஹம்மது (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட மற்றுமொரு நூல் 'பிஸ்மில் குறம்' என்பதாகும். குறம் என்னும் பிரபந்தம் ஒரு குறமாதுக்கும், அவளுடைய காதலனுக்குமிடையில் நடைபெறும் காதல் சம்பாஷனையைக் குறிக்கும். ஜலாலுத்தீன் ரூமி(ரஹ்) அவர்கள் எழுதிய மஸ்னவி ஷரீபில் அடங்கிய இறைஞானமே பிஸ்மில் குறத்திலும் புது இலக்கிய உருவங்களில் விளக்கப்பட்டிருக்கின்றது.
மஸ்னவி என்னும் நூல் காயல்பட்டினம் சதக்கத்துல்லா ஆலிம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. பீர்முஹம்மத் ஸாஹிப் (ரஹ்) அவர்களின் தத்துவக் கருத்தின்படி, பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் என்னும் திருவசனத்தின் பத்தொன்பது அறபு அட்சரங்களும், பத்தொன்பது வகையான ஞானத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. இப்பத்தொன்பது ஞான அறிவுகளும், பிஸ்மில் குறத்தில் கூறப்பட்டுள்ளது. ஞானரத்னக்குறவஞ்சி என்பது அவருடைய இன்னொரு ஞான இலக்கியப் படைப்பாகும். இப்பாடல் சிங்கன், சிங்கி என்பவர்களுக்கிடையே நடைபெறும் சம்பாஷணை போன்றது. சிங்கன், சிங்கியிடம் தன்னை மறப்பதற்காகப் பின்பற்றவேண்டிய பாதையைக் கேட்கின்றான். எல்லாப் பற்றுகளையும் மறந்து, இறைவனைத் தியானித்தலே சிறந்த பாதையாகும் என்று சிங்கி விடையளிக்கின்றாள். *
அப்பா அவர்களை அடுத்து சூஃபி ஞானப்பாதையில் பிரபல்யம் பெற்று விளங்குபவர் கோட்டாறு ஞானியாராவர். இவரின் இயற்பெயர் ஷைகுமுகியித்தின் மலுக் முதலியார். மக்கள் இவரைக் கோட்டாறு ஞானியார் (1167-1209AH) என அழைப்பர். இவரின் மெய்ஞ் ஞானத் திருப்பாடற் திரட்டு என்னும் நூல் ஹிஜ்ரி 1316ல் வெளியிடப்பட்டது. சுமார் 1800 கவிதைகளைக் கொண்டது. இந்நூலின் முகவுரையில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சி இங்கு குறிப்பிடத்தக்கது. கோட்டாறு ஞானியார் இளைஞராக இருக்கும்பொழுது, ஹல்லாஜ் (ரலி) என்னும் இறைஞானியின் தரீக்காவைத்
* "என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி - அது ஒன்றைப் பொருந்தி ஒடுங்கி இருப்பது சிங்கா' 'என்ன விதமாக வொன்றைப் பொருந்தலாம் சிங்கி'. 'அது எல்லாம் மறந்து இருளாயிருப்பது சிங்கா. (ஞானரத்னக்குறவஞ்சி)
 

1 Ο 1
தொடர்ந்த ஒருவரை பள்ளிவாசலில் சந்தித்து அவருடைய முரீதானார். ஹல்லாஜ் அவர்களுடைய 'அனல் ஹக்' கொள்கை, கோட்டாறு ஞானியார் பாடல்களில் தொனித்துக் கொண்டிருக்கிறது.
குணங்குடி மஸ்தான் ஸாஹிபுடைய ஞானப் பாடல்களும், தமிழ் இலக்கியத்தில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றன. அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைப் பற்றிய சம்பூரணத் தகவல்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. அவரின் துறவு நிலைமையைப் பற்றி, பலதரப்பட்ட கதைகளும், சம்பவங்களும் பேசப்படுகின்றன. வடிவேலு முதலியார் எழுதிய குணங்குடியார் பாடல் உரை என்னும் நூலிலிருந்து முக்கியமான விபரங்கள் சில கிடைத்துள்ளன. அவரின் கூற்றுப்படி மஸ்தான் ஸாஹிப் அவர்களின் இயற்பெயர் அலாநிய்யத்தி சுல்தான் அப்துல் காதிர் (ஆரிஃ பில்லா ஸாஹிப் வலியுல்லாஹ்) தகப்பனார் பெயர் நையினார்முகம்மத். இளம் பிராயத்தில் கீழக்கரை ஷைகு அப்துல் காதிர் லெப்பையிடம் மதக் கல்வி கற்றார். ஹிஜ்ரி1228 (கி.பி.1836) ஆம் ஆண்டு, மார்க்கக் கல்வியை முடித்துக் கொண்டு திரிசிரபுரம் சென்று ஹஜரத் ஷாம் ஸாஹிபு அவர்களின் முரீதாகச் சேர்ந்து ஞானப்பாதையில் சென்றார். அதன் பின் பல வருடங்கள் தியானத்தில் கழித்து, மதராஸ் மாவட்டத்திலுள்ள இராயபுரம் என்னும் ஊரில் பாவாலெப்பைக்குச் சொந்தமான காணியில் ஒர் ஆசிரமம் அமைத்து அதில் வாழ்ந்து வந்தார். இங்கே பதினைந்து வருடகாலம் தியானமும் நோன்பும் அனுஷ்டித்து வந்தார். சில அற்புதங்களும் செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அவர் 1863ல் (A.D) இறக்கும் போது வயது நாற்பத்து ஏழு ஆகும்.
தற்போது சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள ராயபுரம் என்னும் இடத்தில் அடங்கப்பட்டுள்ளார். அவ்விடம் 'மஸ்தான் ஸாஹிபு தர்கா? என்று வழங்கப்படுகிறது.தென் இந்தியாவில் இதுவும் ஒரு யாத்திரைத்தலமாக அமைந்துள்ளது. "குணங்குடி மஸ்தான் ஸாஹிப் பாடல்" என்னும் பெயருடன் பிரசுரமாகியிருக்கும் அன்னாரின் நூல் சூஃபிஞானத்தின் சுடரொளியாகும். தமிழ் இலக்கிய மரபில் படைக்கப்பட்ட சித்தர்பாடல் வரிசையில் ஞானப்பாடலுமாகும். மஸ்த் என்பது, பாரசீக மொழியில் இருந்து உண்டான ஒரு வார்த்தையாகும். “மஸ்த்’ என்றால் மயக்கமாகும். மஸ்தான் என்னும் பதம் முஸ்லிம் தமிழ் ஞானப்பரிபாஷையில் ஆத்மீக மயக்கமுடையவன் என்னும் பொருளைக் கொடுக்கின்றது. குணங்குடி என்னும் சொல் ஒரு கிராமத்தின் பெயராக இருக்கலாம். அல்லது சூஃபிகள்

Page 61
1 O2
அறிந்துள்ள ஒரு ஞானப்படித்தரமாக இருக்கலாம். குணங்குடியார் அவர்கள் இந்தச் சொல்லைப் பாவித்திருக்கும் சந்தர்ப்ப சூழலைக் கவனித்தால், நற்குணத்தின் இருப்பிடம், அல்லது உன்னதமான படித்தரம் என்னும் கருத்தே பொருத்தமானதாகத் தோன்றுகின்றது. மகாம் என்னும் படித்தரம், ஹால் என்னும் நிலை, ஆகியவற்றின் ஆத்மீக
வளர்ச்சியையும்; நிலையையும்; அல்லாஹ்வின் அருட்கொடையாகப் பெற்றுக் கொண்டதைச் சுட்டிக்காட்டும்.
மேலே கூறப்பட்ட பிரபல்யமான இறைஞானிகளைத் தவிர, இன்னும்பல சூஃபி ஞானிகள் தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. அவ்வரிசையில் உள்ள சில முக்கியமான சூஃபிஞானிகளை கீழே குறிப்பிட்டுள்ளேன். அவர்களின் ஞான நூல்களில் இருந்தும் சில குறிப்புகளை இந்நூலில் சேர்த்திருக்கின்றேன்.
கலீஃபத் ஷைகு ஷாஹ7ல் ஹமீத் அப்பாநாயகம். பரிமளம் முகம்மது காஸிம் றசூல் பீவி ஐயம்பேட்டை அப்துல் கரீம் பாவா குஞ்சலி ஸாஹிப் இளையான்குடி மஸ்தான் ஸாஹிப் கோட்டாறு சைகுத்தம்பிஞானியார். அப்துல் காதிர் வாலை மஸ்தான். 9. பெரியநூஹ"லெப்பை ஆலிம். 10. செய்யிது அப்துல்வாரித் ஆலிம்மெளலானா ஐதுரூஸ் (இவர் காலங்குடி மச்சரேகை சித்தன் எனவும் அழைக்கப்படுகின்றார்). 11. மேலைப்பாளையம் முகியித்தீன் பஸிர் 12. மோனகுரு மஸ்தான் ஸாஹிப் 13. முகம்மது ஹம்ஸாலெப்பை.
இந்நூலில் தெரிவு செய்யப்பட்டுள்ள கவிதைகள் தொண்ணுற்று இரண்டும், அவை குறிப்பிடும் விடயத்தின் அடைவை அல்லது முக்கியமான கருத்துகளை அடிப்படையாக வைத்துத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இறைஞான இலக்கியங்களில் காணப்படும் கவிதைகள் ஒரு குறிப்பிட்ட சில கருத்தை மட்டும் அடிப்படையாக வைத்து ஆக்கப்படவில்லை. ஒரே கவிதையில் உலகத்தைப் பற்றியும், மானிட ஆத்மீக முன்னேற்றத்தின் பல அம்சங்களைப் பற்றியும், கவிஞர் கையாளும் உவமை - உருவகங்களால் விமர்சிக்கப்படுவதை நாம் அவதானிக்க வேண்டியிருக்கின்றது.

அத்தியாயம் - I பலதரப்பட்ட இருப்புநிலைகளில் இறைவன் வியாபித்தல்
அத்தியாயம் இரண்டிலிருந்து ஐந்துவரை இந்நூலாய்வுக்கு உதவிய நூற் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சூஃபித்துவ இலக்கியங்களில் இருந்து, தொகுக்கப்பட்ட சில பாடல்களை தத்துவஞான ரீதியில் ஆராய்வோம்.
மேற்கூறிய தொகுப்புகள், முக்கியமாக எல்லா இருப்பு நிலைகளிலும் இறைவன் வியாபித்திருப்பதை கவிமூலம் எடுத்துக் காட்டுவதனால், முதலாம் அத்தியாயத்தில் விபரிக்கப்பட்ட முக்கிய சூஃபித்துவக் கருத்துகளை சுருக்கமாகக் கீழே எடுத்துக்காட்டி, அவைகளின் பற்பல அம்சங்களை அதன்பின்னால் ஆராய்வோம்.
l. எல்லாப் படைப்புகளையும் சிருஷ்டித்து அவைகளுக்கெல்லாம் மூலாதாரமான பரம்பொருளாய் விளங்குவது, ஆதியந்தம் இல்லாத அல்லாஹ"தஆலாவே. காலம், நேரம், இடம், குணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட பிரபஞ்சம், அல்லாஹ்வினால் சிருஷ்டிக்கப்பட்டு, அவன் வியாபித்தலின் மூலம் இயங்குகின்றது. இத்தகைய தெய்வீக வியாபித்தல் காலநேரங்களுக்கு அப்பால்பட்டது. எல்லா இருப்பு நிலைகளும் இறைவன் நாட்டத்தால் ஆனவையே. அதனால் இறைவனும், அவன் சிந்தனைகளும் காலவரையறையற்றவை.
2. இறைவன் எல்லா இருப்பு நிலைகளிலும் வியாபித்திருக்கின்றான். அவ்வாறு வியாபித்தபோதும், அவைகளில் அடங்காதபடி எல்லாவற்றுக்கும் அப்பால் பட்டு ஏகத்துவமாயிருக்கின்றான்.
3. தெய்வீகத்தின் உண்மைநிலை மனித அறிவிற்கு அப்பாற்பட்டது. ஆனால் திருக்குர்ஆனில் கூறப்பட்ட அவன் திருநாமங்கள் மூலமும், குணங்கள் மூலமும், செயற்பாடுகள் மூலமாகவும், இறைவன் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கின்றான். இத்தகைய தெய்வீகச் செயல்களும்,

Page 62
1 Ο4
தன்மைகளும் தோற்றத்தில் வேறுபட்டனவாக இருந்தபோதும், அடிப்படையில் ஒற்றுமையுடையதாகவே இருக்கின்றன. இதனால்தான் பிரபஞ்ச நிலையில் நிலவும் வேற்றுமைகள் அனைத்தும் மேலான தெய்வீகப் பரம்பொருள்நிலையில் உண்மையற்றதாகவே இருக்கின்றன.
4. மிகவும் பிரபல்யமான ஒரு ஹதீதில் இறைவன் பின்வருமாறு கூறுகின்றான். 'என்னை நான் வெளிப்படுத்தவே சிருஷ்டிகளைப் படைத்தேன்." நாமிருக்கும் பிரபஞ்சத்திலும் முக்கியமாக மனிதரிலும், முக்கியமாக சம்பூரண மனிதரிலும், அதற்கும் மேலாக நபிமார்களிலும் இறைவனின் எண்ணங்கள் உருவெடுத்திருக்கின்றன. முஹம்மத் (ஸல்) அவர்களில் பிரதிபலிக்கும் ஒளி, முன்பிருந்த நபிமார்களின் உள்ளங்களிலும், பின்வரப்போகும் அவ்லியாக்களெனக் கூறப்படும், சம்பூரண மனிதர்களிலும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சம்பூரணமடைந்த மனிதன், நபியென்ற முறையிலோ, அவ்லியாவென்ற முறையிலோ, இறைவனுடன் ஒன்று சேர்ந்து இறைவனின் தன்மைகளைப் பிரதிபலிப்பவனாகி விடுகின்றான். மேலும் இறைவன் தன்னுணர்வு கொள்ளும் கருவியாக அவன் (மனிதன்) மாறிவிடுகின்றான்.
மேற்கூறிய கொள்கைகளுக்கு சூஃபியாக்கள், திருக்குர் ஆனையும், ஹதீதுகளையுமே ஆதாரமாக எடுத்துக்காட்டினர். இதனால்தான் பல நூற்றாண்டுகளாக சூஃபித்துவக் கொள்கைகள், சர்வதேச இஸ்லாமிய சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை, முஸ்லிம் பெருமக்கள் வாழ்க்கையில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. சிற்சில சந்தர்ப்பங்களில் சூஃபித்துவத்தின் செல்வாக்கு பல சரித்திர காரணங்களால் குறைந்தபோதிலும், முஸ்லிம்களின் வாழ்க்கையை விட்டு அது ஒரு காலத்திலும் சம்பூரணமாக விலகிப் போகவில்லை.
கீழ்க்காணும் பகுதிகளில் தமிழ் இலக்கியத்தில் வெளியான சூஃபித்துவக் கருத்துகள் பின்வரும் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.
அத்தியாயம் - I பலதரப்பட்ட இருப்புநிலைகளில் இறைவன் வியாபித்தல் (செய்யுள் 1-13)
அத்தியாயம் II இறைவன் சிருஷ்டிகளில் வியாபிக்கும் நிலையும்
 

1 O5
அந்நிலைக்கு அப்பாற்பட்ட ஏகத்துவ நிலையும் (செய்யுள் 14-29) 9jgSuurTULub – IV பரம்பொருளைச் சிந்திக்கும் இலக்கிய உருவகங்களும் குறியீடுகளும். (செய்யுள் 30-41) அத்தியாயம் - V ஆத்மீக முன்னேற்றப்பாதையும், தன்னைத் தானறியும் மெய்ஞ்ஞானமும் (செய்யுள் 50-92)
(1) அவ்வல் அஹதாக நின்றமரம்
ஆகிர் அஹ"மதாய்ப் பூத்துப்பூத்து வவ்வல் கொடியாகப் படர்ந்து காய்த்து பகுது அஹதாகக் காலியாமே சொல்லத் தகுமல்ல இப்பொருளைச்
சுருட்டி மறைக்கிறேன் ஷறகுக்காக எல்லை யறிந்துன்னை வணங்க வல்லார்க்
கிரங்கி யிருப்போனே துணை செய்வாயே.
(பீர்முஹம்மது ஸாஹிபு)" அவ்வல் அஹதென்பது பிரபஞ்சக் கலப்பற்ற இறைவனின் தூய ஏகாந்த ஆதி நிலையாகும். அந்நிலையிலிருந்து பிரபஞ்ச வஸ்துகளைப் படைத்து, அவைகளில் இறைவன் வியாபிக்கும் நிலையை, ஒரு மரம் பூத்துக்காய்ப்பதற்கு கவிஞர் ஒப்பிடுகின்றார். அதாவது தனிமையாய் இருந்த மரம் தன்னுடைய தனிமையைக் காலி செய்து பல பூக்களையும் கனிகளையும் கொடுப்பதுபோல், இறைவன் பன்மைக் குணங்களை நிரம்பிய பிரபஞ்சத்தைப் படைத்து, தன் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றான். ஹதீது குத்ளியை ஆதாரமாக வைத்து சூஃபியாக்கள் ஹகீகத்து முஹம்மதிய்யாவே, அதாவது திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளியே இறைவனின் முதல்படைப்பெனக் கூறுவர். ஆனால் இறைமர்மமான இந்த விடயத்தை வெளிப்படையாக விபரிக்க முடியாத காரணத்தால் கவிஞர் சுருக்கமாகவும், மறைமுகமாகவும் இக்கருத்தை வெளியிடுவதாகக் கூறுகின்றார்.
இறைவனின் ஏகாந்த நிலையை திருக்குர்ஆன் பின்வருமாறு திட்டவட்டமாகக் கூறுகின்றது.
'(நபியே மனிதர்களை நோக்கி) நீர் கூறும், அல்லாஹ் ஒருவன்தான் (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. தவிர அவனுக்கு, ஒப்பாக எவருமிலர்." (112; 1-4)"

Page 63
1 O6
பரம்பொருள் தம் படைப்புகளை வெளிப்படுத்துமுன் குணங்குறியற்ற தூய சத்தாய், எவ்வகையிலும் விளக்கிக்கூற இயலாத அனாதியாய், மறைபொருளாய், ஒருமை நிலையில் இருந்தது. சூஃபித்துவஞானம், ஹகீகத்தே முஹம்மதிய்யா என்னும் றஸ9ல் (ஸல்) அவர்களின் ஒளியே இறைவனின் முதல்படைப்பு என்றியம்புகின்றது. ஹகீகத்துல் முஹம்மதிய்யா என்பது முஹம்மத் (ஸல்) அவர்களில் மட்டுமல்லாமல், இன்னும் ஆதம் (அலை) அவர்களில் இருந்து, மற்றும் எல்லா நபிமார்களிலும், திருத்தூதர்களிலும், தீர்க்கதரிசிகளிலும் சம்பூரண மனிதனெனக் கூறப்படும் ஒலிமார்களிலும் பிரகாசிக்கும். இது இறைவனால் அருளப்பட்ட ஞான ஒளியெனக் கருத்துக் கொள்ளல் வேண்டும். இஃது இறைமையின் ஏகாந்த ஒளியாகும்.
(2)
சமதெனு மூடவ் இருளாய்த் தானோர் அணு இயங்கா
அஹதென அவ்வலில் நூறஹ"மதாய் - அபதெனநீ
வித்தாய் மரமாய் ந்துபூத்துக்காய்த்து
கொத்தா யிரங்கனியே கூ"
சிருஷ்டிகளைப் படைக்குமுன், சிருஷ்டிகளெல்லாம் இறைவனின் கற்பனையில் இருந்தன. அந்த உள்ரங்க நிலையை சூஃபித்துவத்தில் 'இருள் அல்அமா 6T635T வருணிக்கப்பட்டிருக்கிறது. இருள் என்பது வியாபித்தலற்ற நிலை. இறைவனின் தனித்துவநிலை. அந்த நிலையில் எல்லாப் படைப்புகளும், இறைநாட்டத்தின் கருத்துகளாகவே இருக்கின்றன. இந்நிலையில் இருந்து சிருஷ்டிகளைப் படைத்தபின், அவைகளில் ஊடுருவி இயங்கும் நிலையை, பீர் அப்பாவாகிய இறைஞானி ஆதிநிலையில் விதையாய் இருந்து, அவ்விதை மரமாய் வளர்ந்து, அம்மரத்தில் இருந்து உண்டாகும் பூக்களையும் கனிகளையும் போல் என வளர்நிலைக்கு ஒப்பிடுகின்றார். இக்கவியிலும் முதலாங்கவியில் கூறிய ஹகீகத்துல் முஹம்மதிய்யா என்னும் கருத்தும் உள்ளடங்கப்பட்டிருக்கிறது. படைப்புகளின் முதன்மைபெற்ற படைப்பாக முஹம்மத் (ஸல்) அவர்களின் நூரே முஹம்மதிய்யா' என்னும் வெளிச்சத்துடன் இங்கு அடையாளங் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(3) ஆதி பெரியோனே றப்பில் ஆலமீனே ஆதி
அஹ துநிலை சமதாக ஆலம்நிறைந் தோனே
அஹ தியத் திலுஹ தியத் தும்வாஹிதத்து மாஹி அரூபவுரூ பத்துள்ளே தானல்லவோ தாத்து
 

1O7
தாத்தல்லவோ பாத்தினது லாஹிறு ஸிபாத்து
லாஹிருக்குள் பாத்தினானான ரகசியத்தின் பொருளே பாத்தில்லோ தோத்திரமாய் நேத்திரத்தின் கலிமா
ஆத்துமத்திற் கதுதானே ஐனென்ற கலிமா ஐனென்ற கலிமாவை அறிந்துளத்திற் பொதித்து ஆசை நடுயிருபுறமும் காபகல்சைனி காபக்கவ் சைனியத்தின் கருவை யறியாமல்
காலமெல்லாங் கருத்தறியாப் போகுதே அல்லாஹ" கருவுக்குள்ளே கருவான கருவையறி யாமல்
காலமெல்லாம் வீண்கால மாகுதே அல்லாஹ" உருவுக்குள்ளே உருவமில்லா உருவை அறியாமல்
உலகமெல்லாம் கருத்தறியாப் போகுதே அல்லாஹ" கருவோடு நினைவுமொன் றாயிருப்ப தறியாமல்
கனத்தவுள்ளங் கலக்கத்துக் குள்ளாகுதே அல்லாஹ" ஐனுக்குள்ளே பொருளான அஹ தினொளி துலங்கி ஆலமெல்லாம் உன்வாசம் வீசுதே அல்லாஹ"
(பீர்முஹம்மது ஸாஹிபு)" சிருஷ்டிகளுக்கு அப்பால்பட்ட அஹதிய்யத் என்னும் ஏகத்துவநிலையில் இருந்து சிருஷ்டிகளைப் படைத்து அவைகளில் வியாபிக்கும், வாஹிதிய்யத்து எனும் நிலைமாற்றமே கலிமாவின் உட்பொருளான கருத்தென்று கூறுகின்றார். "லாயிலாஹ இல்லல்லாஹ" முஹம்மதுர்ரசூலுல்லாஹ்” “வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர "முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதாகும். ஷஹாதத் என்னும் கலிமாவில் இறைவனின் இரு அம்சங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. அதாவது அவனின்றி ஒன்றுமில்லை - ஒன்றும் அவனை விட்டும் வேறுபட்டுமில்லை. இறைவன் வியாபித்தலின் இவ்விரு அம்சங்களும் கலிமாவில் அடங்கி இருக்கிறது என்பதாகும்.
மேற்கூறிய விடயத்தை டைடஸ் பேக்ஹாட் (TITUS BRUCKHARDT) என்னும் தத்துவஞானி பின்வருமாறு விளக்கந் தருகின்றார். ஷஹாதத்துக் கலிமாவின் முக்கிய கருத்து யாதெனில், இறைவன் சிருஷ்டிகளில் இருந்து வேறுபட்டு இருப்பதனால், ஒன்றையும் அவனோடொப்பிட முடியாது. ஒப்பிடக்கூடிய சிருஷ்டிகளை நாம் எடுத்துக் கொண்டாலும் அவைகளுக்குப் பொதுவான தன்மைகளும், வேறுபட்ட தன்மைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. ஒப்பனைக்கு அப்பால்பட்ட இறைவனோடு ஒரு சிருஷ்டியும் ஒப்பிட முடியாத நிலையைத்தான் மேற்கூறிய

Page 64
1O8
கலிமாவின் மூலமாகவும், அல்லாஹ்வைத் தவிர வேறொரு வஸ்துவுமில்லை என்று அறிகின்றோம். அதாவது இறைவனின் மகத்துவ நிலைக்கு முன் அனைத்துப்படைப்புகளும் வெறும் போலிநிலையை உற்றதாகும் என்னும் கருத்தையுடையது. கீழ்க்காணும் ஹதீதுக் குத்ஸியின் கருத்து இன்னும் இதனைத் தெளிவாக்குகின்றது. "இறைவன் அவனாகவே இருந்தான். அவனுடன் ஒன்றும் இருக்கவில்லை. இப்பொழுதும் முன்பு இருந்தவாறே அவன் இருக்கின்றான்."
மேற்கூறிய இறைமர்மத்தை இறைவன் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வெளிப்படுத்தினான் என சூஃபியாக்கள் கூறுவர். அதற்காதாரமாக கீழ்வரும் குர்ஆன் வசனத்தை அவர்கள் குறிப்பிடுவார்கள்:
'நெருங்கிப் பின்னர் அருகே வந்தார், வளைந்த வில்லின் இருமுனைகளைப் போல் (காபகல்ஸைனி) அல்லது அதைவிடச் சமீபமாக அந்த நெருக்கம் இருந்தது. பிறகு அவன் (அல்லாஹ்) தான் அறிவிக்க வேண்டியவற்றை தன் அடியாருக்கு அறிவித்தான். (53:8-10)
சூஃபியாக்கள் மேற்கூறிய வசனத்தை ஆதாரமாக வைத்து, திருநபி முஹம்மத் (ஸல்) அவர்கள், இவ்வஹி வெளியாகும் பொழுது இறைவனுடன் நேர் தொடர்பு நிலையில் இருந்தார் எனவும் அந்நிலையில் இறைவன் ஒரு தெய்வீக மர்மத்தை நபியவர்களுக்கு வெளிப்படுத்தினான் எனவும் சூபியாக்கள் கூறுவர். இந்திய நாட்டு சூஃபியாக்கள் சிலர் இவ்விதமான இறைஞானத்தை அடையும் ஓர் அங்கத்தையும் குறிப்பிடுகின்றனர். இது இரண்டு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் பகுதியில் (இடையில்) இயங்கும் ஒரு ஞான அங்கமாகும் என்றும், திருக்குர்ஆன், இவ்விரு புருவங்களையும் உவமை ரீதியாக இவ்வில்லுக்கு ஒப்பிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுவர்.
சூஃபித்துவ நெறியில் இறைவனை ஓர் ஏகாந்த சிந்தனையென்றும், ஒளியென்றும், ஆக்கும் சக்தியென்றும், வருணிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வருணனைகள் ஒன்றுடனொன்று வேறுபடாமல், ஒன்றையொன்று சம்பூரண மாக்குவதை நாங்கள் அவதானிக்கின்றோம். இதையே 'கருவோடு நினைவு மொன்றாயிருப்பதறியாமல், கனத்த உள்ளங் கலக்கத்துக்குள்ளாகுதே அல்லாஹ" எனஉட்கனிந்து கூறுகின்றார். மேற்கூறிய கவியில் கருவென்பது படைக்கும் வல்லமை கொண்ட இறை சித்தாகும். பிரபஞ்சமென்பது அதன் வெளிப்பாடாகும்.
 

1 Ο9
(4)
நன்றான ஆதி அநாதியை நித்தனை நாயகனை ஒன்றான ஞான விளக்கான உத்தமனை ஒரொளியாய் நின்றானை எங்கு நிரம்பிய ஹக்கனை நிச்சயமாய்க் கண்டா லொளியத் தெளியாது சிந்தைக் கலக்கங்களே’
(பீர்முஹம்மத் ஸாஹிப்)"
இறைவனைத் தேடும் ஒரு பக்தனுக்கு, இறைவனே தன்னை அறியும் ஞானஒளியை அருளாக வழங்குகின்றான். இதனை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
'அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றின் பிரகாசமாக இருக்கின்றான். அவனுடைய ஒளிக்கு உதாரணம், விளக்கு இருக்கும் ஒரு மாடத்தைப் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கோளத்தில் இருக்கிறது; அந்தக் கோளமோ முத்தாலாகிய, ஒரு நட்சத்திரத்தைப் போல் (பிரகாசித்துக் கொண்டு) இருக்கிறது. பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தின் எண்ணெயினால் எரிக்கப்படுகிறது; (அம்மரமானது) கிழக்கைச் சேர்ந்ததுமல்ல; மேற்கைச் சேர்ந்ததுமல்ல; நெருப்பு அதனைத் தொடாவிட்டாலும் அதனுடைய எண்ணெய் பிரகாசிக்கத் தொடங்குகிறது; அது ஒளியின் மீது ஒளியாகும்; தான் நாடுபவரை அல்லாஹ் தன்னுடைய ஒளியின் பக்கம் வழி நடத்துகிறான்; (இவ்வாறு) மனிதர்களுக்கு உதாரணங்களை அல்லாஹ் விவரிக்கிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் முற்றும் அறிந்தவன் (24:35) அல்-குர்ஆன்"
(5)
தத்துவரூ பத்தினருள் விளக்காய்த் தோன்றி
தற்சொரூ பஉட்சொரூ பந்தானே தானாய் தத்துவமதுற் றபரதத்து வமே தானாய்த்
தனையொளிந்து தானாகித் தானே தானாய் எத்திசையு மெல்வுலகு உயிரெல்லாந் தானாய்
எங்கணுமாய் என்னுளுமாய் எனையாள் நாதா அத்துவித முத்தினன்றன் தந்தைக் கீந்தே
அருட்போத ஜீவன்முத் தராக்குஞ் சோதி
(கோட்டாறு ஞானியார்)" 'நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன். என்னை அறிய விரும்பினேன். அதனால் உலகத்தைப் படைத்தேன்" என ஒரு 'ஹதீதுக்குத்ளி கூறுகின்றது. தற்சொரூப உட்சொரூபந் தானே தானாய் எனும் தனித்துவ நிலையில் இருக்கும் இறைவன்

Page 65
11 Ο
சிருஷ்டிகளைப் படைக்கும் மர்மத்தை தனையொளிந்து தானாகித் தானே தானாய்’ எனவும், வருணனை செய்திருப்பதையும் அறிகின்றோம். தனையொளித்ததென்பது தனித்துவ நிலையில் இருந்து பற்பல வஸ்துகளைப் படைத்து தனிமையை நீக்குவதாகும். மேற்கூறப்பட்ட கருத்தை சூஃபிஞானி அப்துர் றஹ்மான் ஜாமி (ரஹ்) (898/1492) என்பவர் பின்வருமாறு விளக்கந் தருகின்றார்.
ஆதியில் அளவற்ற அழகுமயமான இறைவன், தன்னுடைய
அழகை, மறைமுகமான உலகத்தில் நிலவும் தனிமையில் வெளிப்படுத்தினான். கண்ணுக்கெட்டாத ஒரு கண்ணாடியில் தன்னைத் தானே கண்டு களித்தான். தன்னுடைய அழகை தனக்குமட்டுமே காட்டினான். உண்மையில் அவனே நோக்குபவனாகவும், நோக்கப்பட்ட பொருளாகவும் இருந்தான். அவனன்றி இவ்வுலகை ஒருவருமே நோக்கவில்லை. எல்லாம் அவனாகவே இருந்தன. அவனன்றி இரண்டாவதாக ஒன்றுமே இருக்கவில்லை. எனதென்றும் உனதென்றும் ஒன்றுமே இருக்கவில்லை. இறைசிந்தனையில் அவனின் வேறுபட்ட அம்சங்கள் ஒன்றாகியும், பலவாகியும் இருந்ததை அவன் உணர்ந்தான். ஆனாலும் அவை மூலம் வெளிப்பாடாக்கி, தனக்குத் தென்படக்கூடிய, இன்னொரு கண்ணாடியை அவன் விரும்பினான். ஆதியும் அந்தமும் இல்லா அவன் வல்லமைகள் பற்பல கோலங்களில் அவனுக்குத் தென்படவேண்டி, உலகம் என்னும் அழகிய பூந்தோட்டத்தையும், ஜீவராசிகள் உண்டாக்கும் சாயலையும் படைத்தான். அப்படைப்பின் ஒவ்வொரு மலரும், தளிரும், பற்பல கோணங்களில் இருந்து தன் அழகைப்பற்றி பலவிதமாய் பிரதிபலிப்பதற்காகவேயாகும். '
(6)
பரம்பொருள் வியாபகக் கோட்பாட்டை ஆனந்தப்பத்தில், முதலிரண்டு பாடல்களிலும் குணங்குடியார் சுல்தான் அப்துல்காதிர் (மஸ்தான் ஸாஹிபு)ஆலிம் அவர்களைப்போல், இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை, தெளிவாக வேறொருவரும் பாடவில்லை. கீழ்வரும் இரண்டு பாசுரங்களிலும், பரம்பொருள் வியாபகக் கோட்பாடு அழகுறப்பாடப்பட்டுள்ளது. குணங்குடியார் அவர்கள் வஸ்துதயத்தினானந்தம், வஸ்துதயநிலத்தினானந்தமென பரம்பொருள் அவதரித்து (தன்ஸ் சலாத்) படைப்புகளாக வெளிப்பட்டதை 'வஜ்த்' என்னும் பேரின்பநிலையில் பாடுகின்றார்.
 

111
மகுலியத் தானதாத் துல்கிபுரி யாவில் மறைந்தகன் சுல்ம குபியாம் மஸ்கூத்து அன்குல்க தீமுல் அமாவான
மவுஜ" தெனுஞ்சி ருபுலே அகதியத் துகதாகி வாகிதிய் யத்தான
ஆலம்அறு வாகானதில் ஆலம்மி சாலாகி ஆலம்அசி சாமான
ஆலம்இன் சானா னபின் பகுதியுத் தில்லா ஜலாலொடு ஜமாலும்
பதீகுல்க மாலு மாகி பகுதுகடல் அற்றலா கூத்துஜபறுத்தில்
பகாவான குவியத் தினால் நகுசியத் தற்றுமுன் தாள்நிழல் பெற்றடிமை
நானினைவு மற்றுய் வனோ நற்குணம் குடிகொண்ட பாத்துவுா வானகுரு
நாதன் முகியித் தீனே.
(மஸ்தான் சாகிபு பாடல்)"
பதவுரை: மகுலியத்தான தாத்துல்கிபுரியாவில் - பிரபஞ்சக் கலப்பற்ற தூய்மையான பரம்பொருளானது, சத்துமயமான மகத்துவ நிலையில், மறைந்த கன்சுல் மஃபியாம் - எல்லையற்று, தன்னில் தானாய், மனம் வாக்குக்கு எட்டாத மறைபொருளாய் இருந்தது. மஸ்கூத்து அன்ஹ"ல் கதீமுல் அமாவான - சொல்லொணாததும், பூர்விகமானதும், ஏகாந்தமானதுமான பனிமூட்டம் போல் சிருஷ்டிகளையெல்லாம் தன்னுள் வெளிப்பாடின்றி மறைத்து வைத்திருக்கும், மவுஜ"தெனும் சிருபுலே - தூய்மையுமான அந்நிலையில், அகதியத்துகதாகி வாஹி திய்யத்தான - எவ்வகையிலும் விளக்கிக் கூற இயலாத குணங்களற்ற தூய சத்தாய் அனாதியாய், மறைபொருளாய் அஹதிய்யத் என்னும் ஒருமையாய் இருந்த பரம்பொருள், பன்மையான குணங்குறிகளை அறிவுமயமாக வைத்து அவைகளை வெளிப்படுத்தும் வாஹிதிய்யத் என்னும் நிலையாகி ஆலம் அறுவாகானதில் - ஆத்ம லோகமாகி, ஆலமிசாலாகி - மாதிரியுலகமாகி, ஆலம் அசிசாம் - சடவுலகமாகி, ஆலம் இன்சானானபின் - மானுடவுலகமாகி, அதன்பின், பகுதியத்தில்லா - அழிவில்லாத, ஜலாலொடு ஜமாலும் பதீஹ"ல் கமாலுமாகி - மாட்சிமையும் அழகும் வியப்புக்குரிய பரிபூரணமுமாகி, பகுது கபுல் அற்ற - லாகூத்து ஜபறுத்தில் - முன்பின் என்றில்லாத தெய்வீகமும் சர்வ வல்லமையும் வியாபிக்கும், பகாவான குவியத்தினால் - என்றும் நிலையான 'அவன் மை ஸ்தானத்திலும் இருப்புக் கொண்டிருக்கும் இறைவா! நகுஸியத் தற்று முன் தாள் நிழல் பெற்றடிமை நானினைவு

Page 66
112
மற்றுய்வனோ - துன்பம் நிறைந்த அடிமையாகிய நான் உனை மறந்தால் ஈடேறுவனோ (இல்லை) நற்குணங்குடி கொண்ட பாத்துவுாவான குருநாதன்முகியித்தீனே - முன்னிலைக் குருவாகிய நற்குணங்களுக்கு இருப்பிடமான தலைவராகிய குருநாதன் முகியித்தீனே."
மேற்கூறிய கவிதையில் அப்துல் கரீம் ஜீலி (ரஹ்) அவர்களால் (பிறப்பு கி.பி.1365-6) அல்-இன்ஸானுல் காமில் ஃபிமஃரி o%LungiS)Gi) egy6)JT6)i 6)JGi) egy6)JT6)ci) (Al-InSanu'lkamil fimarifati l-awakhir walawai) என்னும் நூலில் விரிவாக ஆராய்ந்திருக்கும் தத்துவக் கொள்கைகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
சூஃபி ஞானி ஜீலி(ரலி) அவர்கள், முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களுடைய காதிரிய்யாத் தரீக்கா நெறியைத் தொடர்ந்தவராவர். கெளதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள், ஜீலி (ரலி) அவர்கள் பிறப்பதற்கு, இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். மஸ்தான் ஸாஹிப் என வழங்கும், சுல்தான் அப்துல் காதிர் ஆலிம் அவர்களும், பைஅத் என்னும் தீட்சை பெற்ற, காதிரிய்யாத் தரீக்கா நெறியைத் தொடர்ந்த சூஃபி ஞானியாவார். குணங்குடியார் அவர்களின் பாடல்களில் முகியித்தீன் ஆண்டகை அவர்களையே தம் ஞானாசிரியராகக் கொண்டு பாடியுள்ளார்.
முதலாவது அத்தியாயத்தில் நாம் அவதானித்ததைப் போன்று, இன்ஸானுல் காமில் என்னும் நூலின் முக்கிய விடயம், சம்பூரண மனிதனின் இயல்புகளாகும். அம்மனிதன் இயற்கையின் சக்தியாக
* ஒரு முரீதீன் என்பவர், பீர் (வழிகாட்டி) என்பவரிடம் அந்நெறியின் முக்கியமானதத்துவப் போதனைகளையும் இறைஞானம் அடையும் படித்தரங்களையும், கிரியா முறைகளையும் அனுபவ ரீதியில் கற்றுணர்கிறார். இத்தகைய கோட்பாட்டின் அடிப்படையில்தான் தம் முன்னிலைக் குருவாகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களை நோக்கி 'சாட்சாதி ஈசுர சொருபமே என்றும், அருவாகி உருவாகி அருவுருவம் அற்ற அறிவாகாரமோனமாகி. அருள்தந்த குருவாகி. எனையாட் கொண்ட தேசிகன் தானுமாகி. அடியேனும் உமை நம்பினேன்.நீர்பின் தொடர வள்ளல் இறசூல் வருகவே (முகி சத.23) என்றும் மஸ்தான் ஸாகிபு பாடுகின்றார்.
இவ்வண்ணம் சதகங்கள், பதிகங்கள்எல்லாவற்றிலும் ரஸஅலுல்லாஹ் முன்னே வரவும், முகியித்தீன் ஆண்டகை அவர்கள் பின்னே வரவும் பாடுகின்றார். முகியித்தீன் ஆண்டகையாகிய குருநாதரைத் துதித்து எல்லா நற்பேறுகளும் தமக்குக் கிடைக்க முன்னிற்குமாறு வேண்டிக் கொள்ளும் பாவனையில் சதகச் செய்யுள்கள் அமைந்துள்ளன. 'குருபரனே எனது மனத்தினின்றும் மாயையின் விளையாட்டெல்லாம் மறைந்தொளியவும் உள்ளத்திலே உண்மைச் சுயவொளி பிரகாசிக்கவும் முன்னின்று அருள்புரிவீராக என்று தம் முன்னிலைக் குருவாகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களை நோக்கிப் பாடும் நடைப்பாங்கினை பாடல்கள் தோறும் பயின்றுணரலாம்.
 

113
மாத்திரமன்றி, ஒரு கண்ணாடி போல இவ்வண்டத்திலே வியாபிக்கும் இறைமகத்துவத்தையும் உயர்ந்த ஒருமைப்பாட்டையும் தன்னுள் பிரதிபலிக்கின்றான். பரம்பொருள் ஒன்றாக இருக்கின்றது (வஹ்தத்துல் வுஜூத்) பன்மையான சிருஷ்டிகளிலெல்லாம் இறைவனே வியாபிக்கின்றான். படைப்புகளாக உள்ள அனைத்தும், பரம்பொருள் ஒன்றிலிருந்தே உண்டாகின்றன. இறைவனின் ஆதி நிலையில் குணங்குறிகளோ, பெயர்களோ இல்லை. எல்லாம் இறைவனின் எண்ணம் மயமாக இருந்தன. இப்பிரபஞ்சம் பரம்பொருளின் எண்ணத்தின் வெளிப்பாடாகும். அதனுள் குணங்கள், காலம், இடம் எனும் வரையறைகள் படைக்கப்பட்டுள்ளன. பரம்பொருளுக்கும் உலகத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம் உறவு மாத்திரமே. ஐஸ் கட்டியையும் தண்ணீரையும் போன்றது. சாரத்தில் அல்லது சத்து ரீதியில் அவை இரண்டும் ஒன்றே. கூட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் அண்டத்தைப் பற்றிய இறைமையின் நினைவுகளே பற்பல சிருஷ்டிகளாக வெளிப்படுகின்றன.
இறைவன் மறைபொருளான புதையல் போல ஆரம்பத்தில் இருந்தான், இருக்கின்றான். இந்நிலைக்கு அறபு வார்த்தை 'கன்சுல் மகுபி’ என்பதாகும். பரம்பொருளின் சிந்தனைமயத்தை - நினைவு மயத்தின் தனித்துவத்தை இது குறியீடு செய்கின்றது. இந்நிலையை அஹதிய்யத்து என்னும் அறபுச் சொல் குறிப்பிடுகின்றது. இதுவே ஒருமை நிலை. பரம்பொருளின் நிர்க்குண துரியாதீதத் தன்மை. பரம்பொருள் படைப்புகளை வெளிப்படுத்து முன், குணங்குறியற்ற தூயசத்தாய் எவ்வகையிலும் விளக்கிக் கூற இயலாத அனாதியாய், மறைபொருளாய் ஒருமை நிலையில் இருந்தது. அல்லாஹ்வே இவ்வண்டத்தின் ஆரம்பமாகும்.
இந்நூலில் வரும் மஸ்தான் ஸாஹிபு (ரஹ்) அவர்களின் இருபத்தி மூன்று விருத்தப்பாக்களின் ஈற்றடிகள், முகியித்தீன் ஆண்டகை அவர்களின் பெயருடன் முடிவடைகின்றன.
"மாகோடி சீடர்கண முள்ளநீர் பின்தொடர
வள்ளல் இறசூல் வருகவே
வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே'
என விருத்தப்பாக்கள் எல்லாவற்றிலும் றஸஅலுல்லா முன்னே வரவும், முகியித்தீன் ஆண்டகை அவர்கள் பின்னே வரவும் பாடுகின்றார். ஈற்றடியின் இரண்டாம் வரிசை எல்லாப் பாடல்களிலும் ஒரேமாதிரியாக அமைந்துள்ளது. இருபத்து மூன்று பாடல்களிலும் பின்வரும் கருத்தை விளங்கிப் படிக்க வேண்டும்.
'வளருகின்ற திருவருளானது நிறைந்திருக்கின்ற குணங்குடியென்னும் மேன்மை பொருந்திய ஸ்தானத்தில் வாழும் இரண்டு கண்களின் மணியைப் போன்ற முகியித்தீன் ஆண்டகை அவர்களே' இதனைச் சுருக்கி குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே, என எழுதப்பட்டுள்ளது என்பதை வாசகர் அறிந்து கொள்க.

Page 67
114
அந்நிலையில் சர்வ சிருஷ்டிகளிலும் வியாபிக்கு முன் தனித்துவமான ஒருமை நிலையில் இருந்தான். அதைத்தான் அல்-அமா அல்லது இருள்நிலை என வருணிக்கப்பட்டது. அந்நிலையில் மேலும் சிருஷ்டிகள் வெளிப்படையான இருப்பின்றி மறைந்த புதையல் போல் இறைவன் சிந்தனையில் கருத்துமயமாக மட்டும் இருந்தன. இது இலைகுழைகள், வேர்கள், கொப்புகள் தொங்கும் அடிமரங்கள் இவைகளெல்லாம் ஒரு விதையில் அடங்கி இருந்தது போலாகும். இறைவன் அஹதிய்யத் என்னும் தூய ஒருமை நிலையில் இருந்து பலதரப்பட்ட சிருஷ்டிகளை தன்னிலிருந்தும் பிறப்பிக்கச் செய்கின்றான். அப்படிச் செய்த போழ்து பிரபஞ்சத்தில் இருக்கும் பல சிருஷ்டிகளும், வாஹிதிய்யத் எனும் பன்மை நிலையை அடைகின்றன. ஆனால் இறைவனோ வாஹிதிய்யத் என்னும் பன்மை நிலைக்கு அப்பால்பட்ட அஹதிய்யத் என்னும் ஒருமை நிலையில் இருக்கின்றான். தானே தானாயிருப்பவன் 'அது' 'அவையெனும் இரண்டாம் நிலையை அடைந்து, உட்புறமாகிய ஒருமை நிலையைக் காலிபண்ணி வெளிரங்கமான பிரபஞ்சத்தைப் படைத்து ஆளுகின்றான். குணங்களற்ற ஒருமை நிலையில் இருந்து, குணங்கள் நிரம்பிய பன்மை நிலையில், பலதரப்பட்ட உலகங்களை அவன் படைத்தான். அவையாவன:
ஆலமுல் - அர்வாஹ் - உயிருலகு ஆலமுல் - அஜ்சாம் - சடவுலகு ஆலமுல் - மிதால் - மூலமாதிரியுலகு சூக்குமவுலகு ஆலமுல் - இன்ஸான் - மானுடவுலகு
வேறுபட்ட இருப்பு நிலைகள் பரம் பொருளின் வேறுபட்ட படித்தரங்களாகி, ஆனால், இறைவனைத் தவிர உண்மைப் பொருள் எதுவும் இல்லாமையினால், எல்லா இருப்புகளும், எல்லா இருப்பின் மட்டங்களும், இறைவனில் கடைசியாக ஒருமையாகின்றன. எல்லா இருப்புகளிலும் உண்மைத்துவமான இறை சிந்தனைகளையே அண்டம் பிரதிபலிக்கின்றது. முக்கியமாக ஜலால் (மாட்சிமை) ஜமால் (அழகு) கமால் (பரிபூரணம்) எனும் இறை மகத்துவங்கள் சிருஷ்டிகளிலெல்லாம் வியாபிக்கின்றன. ஒரு அதியுயர் தனியனாக, லாஹூத்து - அறிவு, ஆற்றல், நோக்கம், கேட்டல், காணல், பேசல் எனும் இன்றியமையாத் தெய்வீகத் தன்மையையும், ஜபறுத்து எனும் சர்வ வல்லமையையும் அல்லாஹ"தஆலா நிரந்தரமாகக் கொண்டிருக்கின்றான்.
தாத் என்பது குணங்களற்ற இறைமை நிலை. இந்நிலையில் தூய்மையான இருப்பு, தெய்வீக சிந்தனையாக இருக்கின்றது. அது அத்-தாத், அல்-வுஜூத், அல்-முத்லக் எனும் தூய்மையான
 

115
சிருஷ்டிகள் கலப்பற்ற ஒருமையாக இருக்கின்றது. வாஹிதிய்யத் என்னும் பன்மை நிலையை மூடுபனி (அல்-அமா) போல் தன்னுள் அமிழ்த்தி மறைத்து வைத்திருக்கின்றது. அந்நிலையில் பன்மை நிறைந்த சிருஷ்டிகள், வெளிப்பாடின்றி இறை சிந்தனையில் சத்துமயமாக இருந்து வாஹிதிய்யத் என்னும் உலக இயல்புகள் அடங்கிய பன்மை நிலையில் வெளிப்பாடாகின்றன."
இக்கருத்துகளை ஜிலி (ரஹ்) மிகவும் விபரமாக தம் தத்துவக் கருத்துகளில் எடுத்துக் காட்டி இருக்கின்றார். (இந்நூலின் 60-ஆம் பக்கம் தொடங்கி 66 ஆம் பக்கம் வரை பார்க்கவும்)
மஸ்தான் ஸாஹிபு அவர்கள் பாடல்களில் வரும் ஈற்றடிகளில், காதிரிய்யாத் தரீக்காவின் தலைவராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களையும் முஹம்மத் (ஸல்) அவர்களையும் துதித்து தம் ஆத்மீக அறிவொளிக்காகப் பரிந்து பேசி பிரார்த்திக்கிறார்கள்.
(7) பறுதானியத்திலோ சுபுகானியத்தெனப்
பகர்பரா பரம தனிலோ பற்பல விதங்கொண்ட அஇயானியத்திலோ
பரிபூரணந்தன் னிலோ அரிதான தாத்திலோ அலிபெனுஞ் சுகவாரி
யாகும்நூக் தாவ தனிலோ அகுலல் உலாவான ஆலமலக் கூத்திலோ
ஆலம்அசு பல்தன் னிலோ குறிகுணா தீதஅட் டாங்கயோ கத்திலோ
கோடானு கோடி மறையாற் கூறரிய சிவராச யோகத்தி லோவருட்
குறையாப் பெருங் கடலிலோ நரலைநிக ரருளாளனேநீ யிருப்பதிந்
நாயினேற் கருள்செய் குவாய் நற்குணங் குடிகொண்ட பாத்துவுா வானகுரு
நாதன் முகியித் தீனே." இந்நூலின் 75 ஆம் இலக்கமிடப்பட்ட பாசுரத்திலும் அன்னார் பக்திகனிந்து ரஸூலுல்லாமேல் பாடுவதை நோக்குக. பதவுரை: பறுதானியத்திலோ - ஒருமையான தனிமை நிலையிலோ சுபுகானியத்து எனப்பகர் பரா பரமதனிலோ - புகழுக்குரிய பன்மையான பிரபஞ்ச நிலையிலோ, பற்பல விதங்கொண்ட அஇயானியத்திலோ-பலதரப்பட்ட படைப்புகளைஅறிந்திருக்கும் இறை சிந்தனை நிலையிலோ பரிபூரணந் தன்னிலோ - எல்லா வரையறைகளுக்கும் அப்பாற்பட்ட ஏகாந்த நிலையிலோ, அரிதான

Page 68
116
தாத்திலோ - சொல்லுக்கடங்கா சத்துமயமான நிலையிலோ, அலிபெனும் சுகவாரியாகும் நுக்தா அதனிலோ - முதன்மை நிலையைக் குறியீடு செய்யும் அலிபுக்கு முந்திய நுக்தாவிலோ (புள்ளியிலோ) அகுலல் உலாவான ஆலமலக் கூத்திலோ - மேன்மையான ஆலம் மலக்கூத் என்னும் ஆன்ம உலகிலோ, ஆலம் அசுபல் தன்னிலோ - தாழ்மையான கீழ் உலகிலோ, குறிகுணாதீத அட்டாங்க யோகத்திலோ - குறிகுணங்கடந்த யோக நிலையின் எட்டாவது ஸ்தானத்திலோ (எட்டுறுப்புகள் அடங்கியது யோக நிலை) கோடானு கோடி மறையாற் கூறரிய - கோடானு கோடி வேதங்களாலும் சொல்லுவதற்கரிய, சிவராச யோகத்திலோ - யோகவகை நான்கனுள் ஒன்றான சிவராச யோகத்திலோ, அருட்குறையாப் பெருங்கடலிலோ - உனது கருணைமாரி குறையாப் பெருங்கடலிலோ, நரலை நிகர் அருளாளனே - கடலை நிகர்த்த அளவற்ற அருளாளனே நீயிருப்பது இந்நாயினேற்கு அருள் செய்குவாய்-நீஇருப்பதை இந்த நாயாகிய அடியேனுக்கு தெரியச் செய்குவாயாக. நற்குண்ங்குடி கொண்ட பாத்துவுாவான குருநாகன் முகியித்தீனே - தலைவராகிய குருநாதன் முகியித்தீனே.
குறிகுணங்களுக்கு அப்பாற்பட்ட இறைவனின் தனித்துவ நிலைக்கும், குறிகுணங்கள் அடங்கிய பலதரப்பட்ட படைப்புகளில் பன்மையாக வியாபிக்கும் நிலைகளுக் கிடையேயுள்ள வேறுபாட்டை அவதானிக்க வேண்டியிருக்கிறது. சத்துமயமான தாத்” என்னும் இறைவனின் இருப்பு பிரபஞ்ச வஸ்துகளில் பரிணமிக்கும் இரண்டாம் நிலையில் இருந்தும், மேன்மைப்பட்டதாய் இருக்கின்றது. இறைவன் மேற்கூறியதின்படி, LIGN) உலகங்களில் பலதரப்பட்டு வியாபிக்கின்றான். அதாவது ஆலம் அஸ்பல் (Alam Asfal) எனக் கூறப்படும் ஆகக் கீழ் தரப்பட்ட உலகிலும், ஆலமுல் மலக்கூத் (Alamul - malakut) என்னும் மேன்மையான வானவர் உலகிலும், மேலும் படைப்புகள் அடங்கிய ஆலமுல் கல்க் (Alamul khalq) என்னும் உலகத்திலும், மறுமைக்குரிய ஆலமுல்பாக்கி (Alamul-Baqi) என்னும் உலகத்திலும், ஆலமுல் அஸ்மா (Alamul - Azmah) என்னும் அதியுயர்ந்த விண்ணுலகத்திலும், ஆலமுஷ்ஷஹாதா (Alanush Shahadah) என்னும் பார்வைக்கெட்டும் உலகத்திலும், ஆலமுல் கைப் (Alamul - Chaib) என்னும் பர்வைக்கெட்டாத மறைந்த உலகத்திலும்,
ஆலமுல் மாகுல் (Alamul – Maghu) என்னும் அறிவுமயமான உலகத்திலும் இறைவன் தன் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றான்.
இஸ்லாமிய இறைஞானிகள் இன்னும் நான்கு உலகங்களைக் குறிப்பிட்டிருக்கின்றனர். அவையாவன: ஆலமுல் நாஸஅத் (Alamul-Nasut) எனப்படும் மானிட உலகம், ஆலமுல் மலக்கூத் (Alamul
 
 
 
 
 

117
malakut) எனும் விண்ணவர்உலகம், ஆலமுல்ஜபறுாத் (Alamul-Jabarut) என்னும் இறைசக்திமயமான உலகம், ஆலமுல்லாஹ அத் (Alamul - Lahut) இறைவனுடன் இரண்டறக் கலந்து தஞ்சமடையும் உலகம் எனபனவாகும.
மேற்கூறிய உலகங்கள் ஓர் இறையடியான் ஆத்மீகப் பாதையில் படிப்படியாக முன்னேறும் நிலைகளைக் குறிப்பிடுவதாகும். இவ் ஆத்மீகப் பிரயாணத்தை ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'ஓர் அடியானின் இறைசேர்க்கையின் முதலாவதுபடி, "நான்’ எனும் வேறுபட்ட நிலையை காலி செய்வதாகும், (Taid) துறத்தலாகும்."
(8) ஆதிமுன் னிற்கவே யகது.உகது வாகிதிய்
யத்தெனது முன்னிற்கவே அத்துவித வஸ்துமுன் னிற்கவே யறிவ
டாகார முன்னிற் கவே போதமுன் னிற்கவே போதமனுகாத
பூரணம் முன்னிற் கவே பொங்குசிவ ஞானமுன் னிற்கவே வா
பூதலய முன்னிற்கவே
நாதமுன் னிற்கவே நாதனொளி பெற்றநபி
நாயகம் முன்னிற் கவே நானுமுன் னிற்க அடியேனுமுமை நம்பினேன்
நன்மைதந்தாளு தற்கே மாதா வினுங்கருணை யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழும் என்னிருகன்
மணியே முகியித் தீனே."
(மஸ்தான் ஸாஹிபு) பொழிப்புரை: குணங்குடி வாழும் என்குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! எல்லா வஸ்துகளுக்கும் முதன்மையான இறைவன் முன்னிற்க வேண்டுகிறேன். ஒருமையின் மும்மை நிலைப் பொருளான அஹது, உஹது, வாஹிது முன்னிற்க வேண்டுகிறேன். இரண்டற்ற அத்துவிதவஸ்துவான பரம்பொருள் முன்னிற்க வேண்டுகிறேன். அறிவுமயமான பரம்பொருள் என்முன்னிற்க வேண்டுகிறேன். ஞானமானது முன்னிற்க வேண்டுகிறேன். அந்த ஞானத்திற்கும் அப்பாற்பட்ட பரிபூரண வஸ்துவானது என்முன் நிற்க வேண்டுகிறேன். உயரிய இறைஞானமானது முன்னிற்க வேண்டுகிறேன். ஆகாய முதலாய

Page 69
118
பஞ்சபூதங்களொடுங்குமிடம் என் முன்னிற்க வேண்டுகிறேன். நாதமயமான இறைவன் முன்னிற்க வேண்டுகிறேன். அவன் ஒளிபெற்ற முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னிற்க வேண்டுகிறேன். ஆகையால் அடியேனாகிய நானும் எனக்கு நன்மைபுரிந்து அருள் செய்ய வேண்டுமென்று மிகுதியும் நம்பினேன். தாயைப் பார்க்கிலும் மிகுந்த கிருபையுள்ள முகியித்தீன் ஆண்டகை பின்தொடர வள்ளல் இறஸலில் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டும்.
ஒருமை நிலையில் இருக்கும் இறைவன் பற்பல படைக்கப்பட்ட வஸ்துகளில் வியாபித்து தன் இறை சக்தியை வெளிப்படுத்துகின்றான். விஞ்ஞானம் தன் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு இயற்கை மர்மமும், இறைவனின் சொல்லொணா மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
பத்தாம் நூற்றாண்டில் வெளியான இக்வானுஸ்ஸபா எனும் தத்துவக் கொள்கையின்படி, இறையருள் மானிட அறிவைத் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்கின்றது. இக்கொள்கையின் சாரம் பின்வருமாறு:
எல்லா நன்மைகளும், உன்னத குணங்களும், நன்மையான வஸ்த்துக்கள் யாவும் இறையருளிலிருந்தே பிறக்கின்றன. அம்மகத்தான இறையருள், சர்வ வல்லமையுடைய இறை சிந்தனை நிறைந்த, இறையாத்மா என்னும் நிலையில் இருந்து, எல்லா வஸ்துகள் மேலும் தன் ஒளிக்கதிர்களை வீசுகின்றது. மனிதப் பார்வைக்குக் கிட்டும், எல்லாச் சடப் பொருள்களும் இறைசிந்தனையின் ஆக்கங்களாகும் என்பதை நீ அறிந்து கொள்வாயாக. காரிருள் நிறைந்த ஒர் இரவில் புதிதாய் அவதரிக்கும் நிலவு, எப்படித் தன் ஒளியை வீசி, எத்திசையையும் ஒளிமயமாக்குகின்றதோ, அதைப் போன்றதே மேற்கூறிய இறை வல்லமையாகும். மேலும் நீ அறிந்து கொள்வாயாக, சந்திரனில் பிரதிபலிக்கும் ஒளி, சூரியனிலிருந்தே உண்டானது. சூரியனிலும் மற்றும் நட்சத்திரங்களிலும் உண்டாகும் ஒளி, இறையாத்மாவின் ஒளியில் இருந்தே பிறக்கின்றது. இறையாத்மாவில் உள்ள ஒளி, இறை சிந்தனையில் இருந்தே உண்டாகின்றது. இறை சிந்தனையில் உள்ள ஒளி, இறைவனின் மகத்துவமான இறையருளில் இருந்தே பிறக்கின்றது. "
மேற்கூறிய கொள்கையின் கருத்து என்னவென்றால், விஞ்ஞானத்தாலும் பகுத்தறிவாலும் மட்டும் படைப்புகளின் உண்மை நிலையை எங்களால் அறிய முடியாது என்பதாகும். அவ்வுண்மை நிலையை அறிய மஃரிபத் என்னும் இறைஞானம்

119
அத்தியாவசியமாகும். இத்தகைய இறைஞானம் இறையருளின் மூலமாகவே ஒரு பக்தனுக்குக் கிடைக்கும். இதனால்தான் மேற்கூறிய பாடலிலும் இன்னும் ஏனைய கவிதைகளிலும் தம்முடைய பீர் (குரு) ஷெய்குமுகியீத்தீன் அவர்களினதும், றசூல் (ஸல்) அவர்களினதும் உதவியை கவிஞர் நாடுகின்றார்.
(9) றப்பாய் இலங்கும் பிரகாசன் மெய்ப்பாய்த் துலங்கு நேசன் தன்னி லுறைபவன் என்னுள் மறைபவன்:
அவ்வ லஹதாக நின்றதும் - அதன் பின்னாகிர் அகுமதாக வந்த புதுமையும் எவ்வும் வாகிதாய் நிறைந்ததும் - எங்கெங்கும் முயிர்க்கு உயிரான மாய சூழ்ச்சமும் திவ்விய முன்னுகத் தலிபாய்த் திரண்ட மூன்றும் ஒன்றதாகி அவ்வலாகிறும் அஹதுவாகிதாய் அகண்ட மெய்ப் பொருளவனை மனநினை தந்தைக்கு முன்னி ருந்ததும் தாய்க்குள்ளே சித்துத் தணித்து வெண்டரள மானதும் பிந்தரூபமாய்ச் சமைந்ததும் பெரியோன் பக்கல் பிறந்தே யாதம் நாமே யானதும் சிந்தைஜெம் கூத்தான வெண்மை சிறக்குந் தம்கூத்ததனி லுண்மை அந்த அழகொளி சிந்து மொருதுளி எந்த மிருவிழி வந்தவுணைநினை படமில் லாத நாகமே ழானதும் - அது விரிந்து படமெடுத் தைந்து தலையாடினதும் உலகெல்லா முயிராய் நின்றதும் - உள்ளொளி யதாகி உவந்தே ஐனு மீமு மானதும் திடமுடன் ஜலால் ஜமாலாய்த் திரண்டிரண்டு மொன்ற தாகின தீர்க்கமே தரவாக்குங் கருவினிற் காக்கு மிறைவனை நோக்கி மனநினை ஹையுல் கையுமாகி நின்றதும் - கமலமீதில் ஹையுல் கையுமாகிநின்றதும் - கமலமீதில் ஹாவுடன் ஹீஹ"வாய்ப் பூத்ததும் தையிபில் முச்சுடருமானதும் - தனக்குட்டானாய்த் தனி நினைவதாயிருந்ததும் கையில் நின்ற மெய்நினைவாய்க்

Page 70
12O
கருணை மூலத்துட்பொருளாய்க் காட்டினாரதின் தேட்டம் யாவும் நீ சூட்டினேன்."
பொழிப்புரை: சர்வரட்சகனான இறைவா! நீ ஒளிமயமாகப் பிரகாசிக்கின்றாய். உன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்யும் நேசனாய் இருக்கின்றாய். ஆதி அந்தம் இன்றி தனித்து இயங்குகின்றாய். என்னுள் மறைந்து, எல்லாப் படைப்புகளுக்கும் முதன்மையாய் இருக்கின்றாய். அவனை சதா நினை மனமே.
ஆதியில் குணங்குறிகளற்ற தூய்மைப் பொருளாய் ஏகாந்தமாய் இருந்தாய். அதன்பின் அஹ்மத் எனும் ஒளியைப் படைத்தாய். அதிலிருந்து ஒருமை பன்மையாகி உன் படைப்புகளில் வியாபித்தாய். அப்படி வியாபித்து, உயிர்களுக்கு உயிராகி, அவைகளை உன் மகத்துவத்தால் இயங்கச் செய்தாய். நுக்தா அலிபாகி, ஆதியும் அந்தமுமாகி அஹது உஹது வாஹிதத்துமாகி எங்கும் நிறைந்த மெய்ப் பொருளாகினாய். அவனை சதா நினைந்து கொள் மனமே. தாயின் கருவில் ஆன்மாவைப் புகுத்தினாய். பிண்டத்தை மானிடமாக்கினாய். அதில் உன் ஒளியைப் புகுத்தி எம்மைப் படைத்தாய். அவனை சதாநினைந்துகொள் மனமே.
படமில்லாத நாகம் படமெடுத்து ஆடியதுபோல் வெறுமையான இருப்பில், பூர்வீகத்தில் உலகங்களையும், உயிர்களையும் உன் ஒளியால் படைத்தாய். ஐன் எனும் உன் சத்துமயம் முஹம்மதின் ஒளியாகி, அதன்பின் ஜலாலும் ஜமாலுமாகி, அழகும், மாட்சிமையும் பொருந்திய இருப்புகளாகி இரண்டில் ஒன்றாகி கருக்களையும், உயிர்களையும் இரட்சிக்கும் அன்புடையவனை சதா நினைந்துகொள் மனமே.
இந்நூலின் முன்பகுதியில் பரம்பொருளுக்குக் குறியீடாகத்
திகழும் நுக்தா விவரிக்கப்பட்டுள்ளது. இறைவனின் ஏகாந்த சிந்தனையை ஓர் ஒளிவெள்ளத்துக்கு ஒப்பிட்டு, அதிலிருந்து எல்லாப் படைப்புகளும் வெளியாவதை, இவ் இறைஞானி இலக்கிய ரசனையுடன் எடுத்துக் காட்டுகின்றார். ஐன் எனும் இறை சிந்தனை அழகும் மாட்சிமையும் பொருந்திய பல உலகங்களை உண்டாக்கும் பரம்பொருளாகின்றது. தூய சத்தான இறைவன் தன் ஒருமை நிலையில் இருந்து பன்மை நிறைந்த படைப்புகளில் வியாபிப்பதை மூன்று கோணங்களில் இருந்து கருத்துக் கொள்ளலாம். அவையாவன: அஹதிய்யத் என்னும் ஒருமை நிலை. ஹ"விய்யா எனும் 'அவன் 'அது' எனும் இரண்டாம் நிலை. மூன்றாவது அணிய்யா "நான்’ எனும் தனித்துவ நிலை.
 

121
(1O)
பழம்பொருளும் ஆத்துமா வுமொன்றாய் நின்றிலங்கும்
பஞ்சகிர்த்தி யவனாத்து மாவும் பூத மொன்றாகும் திறமறு மனாத்துமாவதினை வதனால் நினைந்து
சிருஷ்டித்த அண்டபகிரண்டசரா சரமும் இரவிமதி உடுக்குலமும் எழுவகையாய்த் தோற்றும்
எண்பத்து நான்கு நூறாயிரத் தோற்ற மதிலும் திறமிகு மெய்யாத்து மாவாமுகம்மது மஸ்தான் தன்னுட்
டிகழ்ந்து மகிழ்ந்தெங்கு நிறைந்திலங்குபரம் பொருளே. (முகம்மது மஸ்தான்)" பொழிப்புரை: நீ பழமைக்குப் பழமையான ஆத்துமாவாக இருக்கின்றாய். ஐம்பூதங்களடங்கிய அனாத்துமாவான பிரபஞ்சத்தில் வியாபிக்கின்றாய். அண்டசராசரங்களிலெல்லாம் பரந்து சூரிய சந்திர நட்சத்திரங்களனைத்திலும் வியாபித்து, ஏழுவிதமாக எண்பத்து நான்கு நூறாயிரத் தோற்றங்களெல்லா வற்றிலும், உட்புகுந்து உன்னுடைய மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றாய். அத்தகைய நீ, முகம்மது மஸ்தான் எனும் பெயர் கொண்ட என், உள்ளக் கமலத்திலுட்பட எங்கும் பரிணமிக்கும் பரம்பொருளாய் இருக்கின்றாய்.
மேற்கூறப்பட்ட தத்துவக் கவிதையில், பிரபஞ்சமும், அதில் அடங்கி இருக்கும் வஸ்துகளும், அவைகளின் குணாதிசயங்களும், ஒரு சிந்தனை மயமான பரம்பொருளிலிருந்தே உண்டாகின்றன என்றும் கூறுகின்றார். மேலும் அப்பரம்பொருள் எல்லாச் சிருஷ்டிகளிலும் வியாபித்திருப்பதையும் விமர்சிக்கின்றார்.
(11)
அகரெழுத்து முதலிசையும் அச்சரமும்
அடையு முங்குசிறு நுக்தினில் ஆகமெய்ப்பொருளும் ஆதி அந்தநடு
அளவிறந்து எவையு மகுலிலே உகந்தெழுந்து திருஜெம்கில் வந்தரசு உரியதன் புரிய உறவியாய் உலக மண்டலமும் அமைந்து பூதகண
உருவு கொண்டு பலவடிவதாய் அகமுள்ளாலு வெளிநிறைவி யோரிடமும்
அணுவுவாங் கவிடையாமலே அத்விதம் பெரிய தற்பரஞ்சகல
வன்னையே யெனுது ளன்பனே

Page 71
122
வகையு நன்முறையுமதியுமின் பனையும்
மதுர சின்மவுனம் அருள்கவே வாகு பொங்கு முனது அருளிணங் குநருள்
வாழுமிக்க ஒரு கடவுளே
(மெளனகுரு மஸ்தான்)" பொழிப்புரை: நுக்தா எனும் சிறு புள்ளியில் அகரமாகிய அலிபும், அதைத் தொடரும் அட்சரங்களும், நானாவிதமான சப்தங்களும் அடங்கியிருக்கின்றன. அதேபோல் பரம்பொருளான இறைவா,
ஆதியாகவும், அந்தமாகவும், பற்பல உலகங்களிலும், பஞ்சபூதங்களிலும் எண்ணிக்கையற்ற பலதரப்பட்ட படைப்புகளிலும், உருவங்களிலும் உள்ளங்களிலும்,
அணுக்களிலும், எங்கும் நிறைந்த எல்லாப் பொருள்களிலும், சர்வ வல்லமையுடன் வியாபிக்கின்றாய். அப்படி வியாபித்தும், ஏகாந்த மகத்துவத்தில் நீ ஒருமையாய் இருக்கின்றாய். அத்தகைய இறைவா! எனக்கு நல்வழி காட்டி உன்னை அறியும் இறை ஞானத்தைத் தந்து அருள் புரிவாயாக.
இஸ்லாமிய இறைஞானத்தில் நுக்தா ஆதியான பரம்பொருளைக் குறியீடு செய்வதை, நாம் ஏற்கனவே அவதானித்தோம். நுக்தாவில் இருந்து உண்டான அலிப் என்னும் அட்சரம், ஹக்காகிய இறைவன் கல்க்காகிய படைப்புகளில் வியாபிக்கும் கருத்துகளை 44 - 46-ஆம் பக்கங்களில் பார்க்கவும். மேலும் அஹதிய்யா, அனிய்யா, ஹ"விய்யா என்னும் கருத்துகளின் வியாக்கியானங்களை9ஆம் கவிதையின் பொழிப்புரையில் காண்க.
(12) கண்ணிற் கருவாயிலங்கும் கத்த னொளிவே - எங்கும் காரண பூரணமான கத்த னொளிவே உள்ளும் புறமுமாய் நிறைந்த கத்த னொளிவே - நிதம் உத்தம தவத்தி லங்குங் கத்த னொளிவே சாசுபத யோக மான கத்த னொளிவே - எங்கும் தாபரமதா யிலங்குங் கத்த னொளிவே ஹ"வதில் விளங்கி நின்ற கத்த னொளிவே - சர்வ கோள வண்ட பிண்ட நிறை கத்த னொளிவே ஹக்குல் எக்கீனுள் ளுறைந்த கத்த னொளிவே - திருக் காட்சி மயமாய் நிறைந்த கத்த னொளிவே தாத்து ஸிபத்தாய் நிறைந்த கத்த னொளிவே - மூலத் தானமதில் வீற்றி லங்கு கத்த னொளிவே முன்னு மமாவாய் நிறைந்த கத்த னொளிவே - எங்கும் முச்சுட ரினின்றி லங்குங் கத்த னொளிவே ஆலம் ஸ்கீரா யிருந்த கத்த னொளிவே - பின்பு
 

123
ஆலம் கபீறாய் நிறைந்த கத்த னொளிவே கோலம் பலவாய் விரிந்த கத்த னொளிவே - யாவுங் குன்னென நிறைந்தி லங்குங் கத்த னொளிவே வெட்ட வெளியாய் விளங்குங் கத்த னொளிவே - மறை வித்து முதலாய் விளங்குங் கத்த னொளிவே ஹை யுல் கையுமாய் நிறைந்த கத்த னொளிவே - எங்கும் காரணமாய் நின்ற கத்த னொளிவே அஹ தி யத்தாய் நிறைந்த கத்த னொளிவே - அறி வானந்த மயமாய் நின்ற கத்த னொளிவே லம்யலிது வலம்யூ லதென் கத்த னொளிவே - ஏக ராஜ யோகமாயி லங்குங் கத்தனொளிவே நேர்ஜமால் ஜலாலாய் நின்ற கத்த னொளிவே - உள்ள நேத்தி ரத்தில் வீற்றி லங்குங் கத்த னொளிவே வாழி வாழி வாழி வாழி கத்த னொளிவே - என்றன் மாமலர்ந்தவிசினிதாங்கத்த னொளிவே
(அப்துல் கனிபாவா)" திருக்குர்ஆனிலுள்ள நூர் என்னும் அத்தியாயத்தில் வெளிச்சம் பற்றிய ஆயத்தினதும், ஹதீஸில் வரும் திரை பற்றிய தாத்பரியத்தினதும் விளக்கத்தை உள்வாங்கி இக்கவிதை பாடப்பட்டிருக்கின்றது.
திருக்குர்ஆன் கூறுவதாவது:
அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக இருக்கின்றான். (அது)" ஒளியின் மீது ஒளியாகும். தான் நாடியவரை அல்லாஹ் தன்னுடைய ஒளியின் வழி நடத்துகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் முற்றும் உணர்ந்தவன்.
அவனது (குன்) என்னும் கட்டளையினால் உலகம் இயங்குகின்றது. அவன் ஒருவரையும் பெறவுமில்லை. ஒருவராலும் பெறப்படவுமில்லை. குர்ஆனும் பின்வருமாறு கூறுகின்றது:
நபியே நீர் கூறும்; அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. இன்னும் அவனுக்கு ஒப்பாக எவருமிலர் (112:1-4)"
அன்றி அவனே வானங்களையும், பூமியையும் (முன்மாதிரி இன்றியே) படைத்தவன். ஏதேனும் ஒரு கருமத்தை (ச் செய்ய) அவன் நாடினால், அவன் அதற்குக் கூறுவதெல்லாம் "குன்’ (ஆகிவிடு) என்பதுதான்; அது ஆகிவிடும். (2:117)"

Page 72
124
அவன் யாதொரு பொருளை(யும் படைக்க) நாடினால், அவன் கட்டளை இடுவதெல்லாம் 'ஆகுக' எனக் கூறுவதுதான். உடனே அது ஆகிவிடுகின்றது. (36:82)"
அவனே உயிரளிக்கின்றான், இறக்குமாறும் செய்கின்றான்; எனவே, ஏதேனும் ஒரு காரியத்தை(ச் செய்ய) அவன் நாடினால், அப்போது அவன் அதற்குக் கூறுவதெல்லாம் (ஆகுக) என்பதுதான் - உடனே அது ஆகிவிடும். (40:68)"
அப்துல்கனி பாவா கவிதையை நாம் நன்கு ஆராய்ந்தால், சூஃபித்துவம் இஸ்லாத்தின் உள்ளே வளர்ந்த ஒரு ஆத்மஞானம் எனும் உண்மை ஐயமின்றித் தெளிவாகின்றது. ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுவதுபோல், அது இஸ்லாத்திற்குப் புறம்பான கொள்கைகளில் இருந்து இஸ்லாமிய நெறிகளில் உட்புகுத்தவில்லை. அவைகளெல்லாம் திருக்குர்ஆனிலேயே அடங்கப்பட்ட உண்மைகளாகும். கீழ்க்காணும் றசூல்பீவி என்னும் சூஃபிப் பெண்ணின் ஞானப் பாடலும், இதற்கு ஓர் அத்தாட்சியாகும்.
(13)
தானேதானாய்த் தானிருந்து தானே கருக்குழி தனையமைத்து நீநானென இருவரிருக்க நினைந்தே நிராமய இருளறையில் தானென்ற இஷ்க் ஒளிதான் மீறித் தழுவியருள் நுகத்தா
- விழுங்கி தீனென்றுதிக்குத்திரிபுவனம் அமைத்த குதூசி முகையதினே.
(றசூல் பீவி)"
பொழிப்புரை: இறைவன்தன்பூர்வீகத்தில் பிரபஞ்சக் கலப்பற்ற தூய ஒருமை நிலையில் இருந்தான். மறைந்த பொக்கிஷம் போல நிராமய இருளறையில் இருந்த நிலை மாறி, தன்னை அறிவதற்காக இப்பிரபஞ்சத்தைப் படைத்தான். அதாவது நான்’ ஆக இருந்த இறைவன் 'நீ நான்’ எனச்சொல்லக்கூடியவிதமாக படைப்புகளை வெளியாக்கி தன்னுடைய ஒளியால் அவைகளில் வியாபித்தான். இது புள்ளியான நுக்தா, அலிப் என்னும் முதல் அட்சரத்தில் புகுந்த போதும், இரண்டும் ஒன்றாயிருப்பது போலாகும்.
நான் மறைந்த பொக்கிஷமாயிருந்தேன். என்னை அறியவே இவ்வுலகைப் படைத்தேன்’ என்னும் ஹதீதுக் குத்ஸியின் தத்துவ உண்மையை கவி மூலம் 'தானே தானாய்த் தானிருந்து தன்னை அறிய ஒரு கருக்குழி அமைத்து நீநானென இருவரிருக்க நினைத்தே' பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பது பொருளாகும்.
மேலும் இறைவனை ஒரு நினைவுமயமான அல்லது ஜோதிமயமான பரம்பொருளென கற்பனை செய்து, அவன் ஒளியிலிருந்தே எல்லா உலகங்களும், அவைகளில் இருக்கும் எல்லாப் படைப்புகளும் உண்டாகின்றன எனக் கூறுவர்.
 

125
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து மிகவும் பிரபல்யம் பெற்ற ஷெய்கு ஷிஹாபுத்தீன் ஸ"ஹ்ரவர்தீ என்னும் சூஃபிஞானியின் தத்துவ ஞானக் கொள்கையை, டாக்டர் முஹம்மது இக்பால் அவர்கள் பின்வருமாறு விளக்கஞ் செய்கின்றார். இவ்விளக்கத்தில், இறைவனை ஜோதிமயமான கண்ணோட்டத்தில் கற்பனை செய்யும், சூஃபித்துவக் கொள்கைகளை தத்துவ ரீதியில் மேலும் தெளிவாக விவரிக்கின்றார்:
எல்லாப் படைப்புகளுக்கும் காரணியான, ஆதி அந்தம் இல்லாத பரம்பொருள், நூறுல் கஹிர் எனும் மகத்துவ ஒளியாய்க் கருதப்படுகிறது. எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது ஒளியாகும். அதனால் ஒளியை வெளிப்படுத்த வேறோர் ஒளி தேவையில்லை. ஒளியின் குணாதிசயமாவது, வஸ்துகளை வெளிப்படுத்துவதாகும். வஸ்துகளை வெளிப்படுத்தும் தன்மை, ஒளிக்கு இல்லாவிட்டால், ஒளியைக் காண இன்னொரு சாதனை
தேவைப்படும். அச்சாதனைக்கும் ஒளியின் தன்மையில்லாவிட்டால் அதைக்கான இன்னொரு சாதனை தேவைப்படும். இத்தகைய விவாதம் பயனற்ற
மூடவிவாதமாக முடியும். பூர்வீக ஒளியான பரம்பொருளுக்கு இன்னுமொரு ஒளி தேவைப்படாது. அப்பூர்வீகப் பரம்பொருளல்லாத எல்லா வஸ்துகளும், அப்பரம் பொருளின்றி இயங்க முடியாது. ஒளிக்கு எதிர்மறையானது இருள். இருள் என்பது ஒளியின்மையாகும். அவ்விருளை ஒளிமயமாக்குவதே படைப்பாகும். எல்லா அசைவுகளுக்கும் காரணியாவதே பூர்வீக ஒளியாகும். மேற்கூறிய அசைவு ஒர் இடமாற்றமல்ல. அது ஒரு நாட்டமாகும். அதாவது தன்னொளியை வெளிப்படுத்தும் வஸ்துகளை ஆக்குவதாகும். அவ்வஸ்த்துகள் எண்ணிக்கையற்றவை. மேலும் மிகுந்த பிரகாசத்தைப் பெற்ற படைப்புகள், குறைந்த பிரகாசத்தைப் பெற்ற படைப்புகளைப் பிரகாசிக்கச் செய்கின்றன. இவ்வரிசையில் பூர்வீகப் பிரகாசம், கீழ்மட்டமான படைப்புகளில், குறைந்து கொண்டே சென்று சில படைப்புகளில் (அதாவது உணர்வற்ற அல்லது உணர்வு குன்றிய கீழ்த்தரப் படைப்புகளில்) மங்கி விடுகின்றன. இக்கண்ணோட்டத்தில் பார்க்கப் போனால் எல்லா வஸ்துகளும் பூர்வீக ஒளியின் பிரதிபலிப்பாகும். வேத ரீதியில் கற்பனை செய்தால் ஒவ்வொரு வஸ்துவும், ஒவ்வொரு வானவர் போன்று தனக்குக் குறிப்பிட்ட கடமையை (இறைவனின் பிரதிபலிப்பை) செய்கின்றது. 28

Page 73
126
அத்தியாயம் - I இறைவன் சிருஷ்டிகளில் வியாபிக்கும் நிலையும் அந்நிலைக்கு அப்பாற்பட்ட ஏகத்துவ நிலையும்
"நிச்சயமாகவே நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’ (அல்குர்ஆன்: 2:156) எல்லாப் படைப்புகளும் அல்லாஹ" தஆலாவாகிய இறைவனிடமிருந்தே உண்டாகின்றன. மீண்டும் அவனிடமே தஞ்சமடைகின்றன. மேற்கூறிய, இறைவனின் இரு நிலைகளும், அதாவது படைப்புகளில் வியாபித்து இருப்பதும், அப்பாற்பட்டிருப்பதும், அல்லது படைப்புகளுக்கு அப்பாற்பட்டிருந்தும் அவைகளில் வியாபித்து இருப்பதும், சுருங்கக் கூறின், கல்க்கில் (சிருஷ்டிகளில்) ஹக்காயிருப்பதும், ஹக்காகியும், கல்க்குகளில் வியாபித்திருப்பதுமான மர்ம நிலையை இறைஞானிகளான சூஃபியாக்கள் பலதரப்பட்டு சிந்தித்து, பல கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். இக்கருத்துகளின் முடிவு யாதெனில் ஹக் எனும் நிலையும், கல்க் எனும் நிலையும் அல்லாஹ" தஆலாவின் வஹ்தத்துல் வுஜூத் எனப்படும் ஏகாந்த ஒருமை நிலையின் இரு அம்சங்களாகும்.
மேற்கூறிய கருத்தின் விபரங்களை அத்தியாயம் - 1 மூன்றாம் பிரிவில் நோக்குக. பின்வரும் கவிதைகளில் மேற்கூறிய தத்துவக் கருத்துகள் பலதரப்பட்ட கவிதை உருவங்களில் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.
(14) அலைகடல் மன்புவியும் அழகு செறிவானும்
அனலமொடு கனலுடு அமைத்த வனுநீயே இலவுகுகலம் அறுசு குறுசு எரிநரகு சொர்க்கம்
இரவிகதிர் எழுமதி யமைத்த வனுநீயே மலைகளொடு நவமணியும் மற்றுள யாவும்
வகுத்தானே. (பீர் முஹம்மத் ஸாஹிபு) பொழிப்புரை: மனிதர் வாழும் கடல்சூழ் உலகையும், அழகிய வானையும், அனலையும், கனலையும், உடுக்குல மனைத்தையும், இலவுகுவையும், அதன் கலம் எனும் எழுதுகோலையும்,
 

127
அறுசையும், குறுசையும், சொர்க்கத்தையும், நரகத்தையும், சூரியனையும், சந்திரனையும், படைத்து, அவ்வவற்றுக்குரிய ஜீவித வட்டத்தையும் வகுத்தவன் அல்லாஹ்வே.
மேலே கூறப்படும், அறுசு, குறுசு எனும் இறைவனின் சிம்மாசனம் அல்லாஹ"த்த ஆலாவின் பலதரப்பட்ட மகத்துவங்களை உருவகமாக எடுத்துக் காட்டுகின்றது. முக்கியமாக 'ஆயத்துன்குர்ஸி” எனும் திருக்குர்ஆன் வசனத்தில் இறைவனின் மகத்துவங்கள் பின்வருமாறு விவரிக்கப்பட்டிருக்கிறது.
அல்லாஹ் (எத்தகையவனென்றால்) - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் (வேறு) இல்லை; (அவன் என்றும்) உயிருள்ளவன்; (என்றும்) நிலைத்திருப்பவன்; அரிதுயிலோ (சிறு தூக்கமோ), ஆழ்ந்த நித்திரையோ அவனைப் பீடிக்கா; வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியவை; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன்னால் உள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னால் உள்ளவற்றையும் அவன் அறிவான்; அவனுடைய இல்மில் (ஞானத்தில்) இருந்து, அவன் நாடியவற்றைத் தவிர (வேறு) எதனையும் அவர்கள் சூழ்ந்தறிந்து கொள்ள முடியாது; அவனுடைய குர்ஸிய்யு (என்னும் அரியாசனம்) வானங்களையும் பூமியையும் 960) LCLI வளைந்து கொண்டுள்ளது; அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது-அவன் மிக உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். (2:255) கையூம் என்றால் என்றும் நிலைத்திருப்பவன்.
வேட்ஸ்வேத் (WORDSWORTH) என்னும் ஆங்கிலேயப் பெரும் புலவர் மேற்கூறிய கருத்தைப் பின்வருமாறு ஒர் அழகான கவிதை மூலம் சிந்தனைக்கு விருந்து வைக்கின்றார்:
இறைவா! உன் இல்லம் எங்கே யெனில் ஒளி நிரம்பிய சூரியனிலும் வட்டங்களான அலைகடலிலும் உயிர்ப்பிக்கும் காற்றிலும் நீலநிற ஆகாயத்திலும் மானிடனின் இதயத்திலும் அசைவிலும், சிந்தனை செய்விக்கும் ஆவியிலும் நினைவுகளின் பொருள்களிலும்,

Page 74
128
மற்றும் எல்லாப் பொருள்களின் அசைவிலுமே இருக்கின்றாய் என்பேன். '
(15) அற்பஜல மக்கினியா லழியாமற் காவல் செய்து கெற்பமதில் வைத்துருவாய்க் கிளர்ந்ததற்பின்- மெய்ப்புடனே தாரணியி லாக்கியென்னைத் தான் வளர்த்துக் காத்தவொரு காரணனே நீயிதற்குக் காப்பு."
(பீர் முஹம்மது ஸாஹிபு) பொழிப்புரை: தாயின் கர்ப்பத்தில் கருவாய் இருக்கும் பொழுது, நீராலும், நெருப்பாலும் அழிவு வராமல் செய்து பூவுலகத்தில் பிறக்க வைத்து, வளர்த்துக் காத்த இறைவனே, நீயே எனது காவலன்.
அல்லாஹ" தஆலா சிருஷ்டிகளைப் படைப்பது மட்டுமல்லாமல் அவைகளின் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் தன் கருணா கடாட்சத்தினால் பாதுகாக்கின்றான். இதைத் திருக்குர்ஆன், பின்வருமாறு இயம்புகின்றது.
உயிர்ப் பிராணிகள் ஒவ்வொன்றையும் அல்லாஹ் தண்ணீரிலிருந்தே படைத்திருக்கின்றான். அவைகளில் சில தன் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன; அவைகளில் வேறுசில இருகால்களால் நடக்கின்றன; அவைகளில் (மற்றும்) சில, நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவற்றை (விரும்பியவாறு) படைக்கிறான் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுடையோன். (24: 41-45)
அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் மிக்க அழகாக அமைத்தவன். அவனே ஆரம்பத்தில் மனிதனைக் களிமண்ணைக் கொண்டே படைத்தான். பின் ஓர் அர்ப்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். பின்னர் அதனைச் செப்பனிட்டு தன்னுடைய 'ரூஹ்" இலிருந்து அதில் ஊதினான். உங்களுக்குக் காதுகள், கண்கள், இருதயங்களையும் அமைத்தான் - (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவது வெகு சொற்பம். (32; 7-9)"
(16) எங்கும் என்றும் உள்ளவன் எவர்க்குஞ் சீவனாகி நின்று அங்கமானது உட்கலந்து அநேக ரூபரூபமாய்த் தங்கும் நம் மனத்துளே தரித்த ஞானமாமணி முங்குமா யாறப்பல் ஆலமீன். (பீர்முஹம்மதுஸாஹிபு)"
 

129
பொழிப்புரை: திசைகள் எல்லாவற்றிலும் எல்லாக் காலத்திலும் நிலையானவன். யாவருடைய உடம்பினுள்ளும் ஜீவனாகி உட்கலந்து அனேக ரூபரூபமாய் நம் மனத்துள்ளே தரித்திருக்கும் ஞான மாமணியாகிய யாறப்பல் ஆலமீன்.
(17)
தோன்றுவ தெல்லா முனது சுடராய்த் தோன்றித்
தோன்றாமலிருந் திடநின் சொரூபமாகி பூண்டுயிர்கள் யாவுமொன் றாய்ப் பொருந்தும்போதப்
பொருட்டால் நல்லிதயமதிற் புரிந்து மேலாய்த் தாண்டவ மாயானந்த நடனங்க ளாகித்
தானாகிச் சுத்தமுமாய்த் தானே தானாய் ஆண்டபரப் பிரபை சுத்த ஒளியே யென்னை
அருள்பிதா வவ்ஒளிய தாக்குஞ் சோதி
(கோட்டாறு ஞானியார்)"
பொழிப்புரை: எல்லாப் படைப்புகளும் இறைவனின் ஒளியில் இருந்தே உண்டாகின. ஆனால் அவன் திருமுகமோ அவைகளில் மறைந்திருக்கின்றது. அவனின் மகத்துவம் பூண்டு, உயிர்கள் யாவற்றிலும் வியாபிக்கின்றது. படைத்தல் என்பது தனிமையாய் இருந்த இறைவன் தன் தனிமையைக் காலி செய்து பிரபஞ்சத்தை படைத்து, அவைகளின் உயிர்களில் பன்மையாக வியாபித்தலாகும். ஒளிமயமான இறைவா, நீயே, உன் ஒளியிலே நான் மூழ்கிவிடுகின்றேன்.
திருக்குர்ஆன் இறைவனின் சிருஷ்டிக்கும் வல்லமையை பின்வருமாறு கூறுகின்றது.
அவனே முதல்வன், அவனே கடைசியானவன் அவனே வெளிப்பட்டிருப்பவன்; அவனே உள்ளீடாய் இருப்பவன்; அவன் எல்லாப் பொருட்களையும் முற்றிலும் அறிந்தவன். (57:3)
உமர் இப்னுபரீத் (Umar ibn al-Farid) என்னும் குஃபித்துவஞானி சிருஷ்டி கர்த்தாவாகிய இறைவன் சிருஷ்டிகளைப் படைக்கும் மர்மத்தை பின்வருமாறு கூறுகின்றார்: 廢
இறைவன் சிருஷ்டிகளின் உருவங்களை திரைமறைவில் இருந்து ஒவ்வொரு கோணத்திலும் உனக்குக் காட்டுகின்றான். அவனுடைய விசாலமான அறிவினால் படைக்கப்பட்ட அவ்வுருவங்கள் உனக்குப் பலதரப்பட்டு விளங்குகின்றன. நிசப்தமாக இருக்கும் படைப்புகள் இப்போது பேசுகின்றன.

Page 75
13O
அசைவின்றி இருக்கும் வஸ்துகள் அசைகின்றன. ஒளியின்றி இருக்கும் வஸ்துகள் ஒளியை அள்ளி வீசுகின்றன.'
நீ நோக்கும் எல்லா வஸ்துக்களையும் நன்கு கவனி. அவையெல்லாம் வெகுகாலம் நீடிப்பதில்லை. ஏனெனில் காண்பதெல்லாம் ஒரு பரம்பொருளின் படைப்பாகும். அவனோ திரைக்குப் பின் மறைந்திருக்கின்றான். திரையை அகற்றுவாயானால் அவனின்றி எதையும் நீ காணமாட்டாய். உனை மயக்கின வஸ்துக்களெல்லாம் ஒருகணத்தில் அற்றுப் போகும். திரையை அகற்றினால் அவனின் ஒளியை மட்டுமே நீ காணுவாய். அவன் ஒளியே உன்னை நேர்பாதையில் அழைத்துச் செல்லுகிறது. அவ்வொளியாலேதான் அவனுடைய காரியங்களை நன்கு உணர்வாய்.
(18) அருபமாய்க் காணா தாய நின்சோதி
யாயது மப்படி யலது உருபமாய் ரூபமுட் புகுந்தொன்றாய்
ஒன்றோ டொன்றோய் விலா தோங்கிச் சொரூப மாயாய சோதி நீயென்றே
தொகுத்துரை சுருதியாம் போதந் தருபத சொரூப மாயெனைக் கலந்த சத்துறு தாமீமென் தாசீன்
(ஞானதோத்திரம்)" பொழிப்புரை: உருவமில்லா ஜோதிமயமான இறைவனே, உருவங்கள் பொருந்திய படைப்புகளில் நீ உட்புகுந்து, ஒன்றோடொன்று சேர்ந்து ஒளிமயமாக வியாபிக்கின்றாய். என்னில் என் உயிராகவும், ஆன்மாவாகவும் நீ இயங்குகின்றாய், தாமீம் என் தாசீனே.
மேற்கூறிய கவிதையில் சோதி அல்லது ஒளி என்னும் சொல்லுக்கு, இரண்டு கருத்துகள் இருப்பதை முன்னர் அவதானித்தோம். அவையாவன: (1) இறைவன் சோதி மயமான பரம்பொருளாய் இருக்கின்றான் என்பதும், (2) இறைவனே இறைஞானமெனும் ஒளியைத் தருபவன். அதாவது தோற்றங்களுக்குப் பின்னிருக்கும், உண்மைப் பரம்பொருளின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும், இறைஞானமெனும் ஒளியைத் தருபவன் என்பதுமாகும்.
இக்கருத்தின்படி ஒளியினாலே, இன்னொரு ஒளியைக் காணலாம் என்பதாகும். இப்னு அறபி எனும் சூஃபி ஞானி பின்வருமாறு கூறுகின்றார்:
 
 

131
இறைவனின் ஒளியில்லையேல், மனதாலோ, புலன்களாலோ, கற்பனையாலோ ஒன்றையும் அறிய முடியாது. எம்மால் அடையக் கூடிய பலதரப்பட்ட அறிவுகளுக்குப், பல நாமங்களை நாம் சூட்டுகிறோம். ஆனால் எல்லாம் அவ்வொளியின் வெவ்வேறுபட்ட பிரகாசங்களே. சாதாரணமான மக்கள், மனதால் பெறக் கூடிய அறிவுக்கு, ஒளியென்று சொல்லுகிறார்கள். இறைஞானிகளோ மெய்ஞ்ஞானத்திற்கு ஒளியென்று சொல்லுகிறார்கள். சிலர் செவியால் உணரும் அறிவுக்கு ஒளியென்பார்கள். ஒளியென்பது இருப்பவைகளை உணரும் அறிவாகும். அதாவது எப்பொருளை எவ்வாறு உணர்ந்தாலும் ஒவ்வொரு உணர்வும் இறையொளியின் வெளிப்பாடாகும். அவனே ஒளிமயமாக இருக்கின்றான். அவனே காண்பவனாகவும், காணப்பட்ட பொருளாகவும் இருக்கின்றான். (அல் ஃபுதுஹாத்துல் மக்கிய்யா - Al-Futuhat, Al-Makkiya)
(19)
வானவர் தேவரறி யொனாச் சொரூப
மானுடர் நான்மறை முதற்கானா ஊனுளே யிருந்து பலதொழில் விளைத்தும்
உனக்குள்ளே நானெனக்குள் நீயென்றும் தானதிலிருந்து பலவடி வாகித்
தரித்து நின்றாடிடு இறையே நானுனைத் தொடர்ந்தேன் என்னுள்நீ நிறைந்து
நல்கவந்தருளுமென் சோதி.
(கோட்டாறு ஞானியார்)"
பொழிப்புரை: வானவராலும், ஜின்களாலும் அறிய முடியாத
சொரூபமாகவும், மனிதர்களாலும், நான்கு வேதங்களால் சொல்லப்பட்ட நெறிகளாலும் காணாததாகவும், உடம்புக்குள்ளேயிருந்து பற்பல தொழிற்பாடுகளையும்
உண்டாக்கி, பரம்பொருளாகிய இறைவனாயிருக்கும் நீ, எனக்குள்ளே நீ இருந்தும், உனக்குள்ளே நானிருந்தும், பற்பல வடிவாய் விளங்கும் இறைவா, நான் உன்னைத் தொடர்ந்தேன். என் உள்ளத்துள்ளே இருந்து, நீ நிறைந்து, எனக்கு அருள் செய்யும் சோதியாய் இருக்கின்றாய்.
அல்லாஹ" தஆலாவை, அவனின் அப்பால்பட்ட ஏகத்துவ நிலையில் எம்மால் அறிய முடியாது. இதை 'கிதாபுல் அஜ்விபா’ என்னும் நூலில், இப்னு அறபி பின்வருமாறு கூறுகின்றார்:

Page 76
132
அவனாலே அவன், அவனைக் காண்கின்றான். அவனாலே அவன் அவனை அறிகின்றான். பிரபஞ்சம் என்பது, படைப்புகளற்ற அவனின் தனித் துவத்தையும், ஒருமை நிலைய்ையும் மறைக்கும் ஒரு திரையாகும். "
இறைவன் ஏகாந்த நிலையில் இருந்த போதும் எல்லாப் படைப்புகளிலும் சர்வ வியாபியாக இயங்குகின்றான். இதனால்தான் திருக்குர்ஆன் 'அல்லாஹ் நமது பிடரியின் நரம்பைக் காட்டிலும் மிக அருகில் இருக்கின்றான்’ எனக் கூறுகின்றது. (50:16)'
(20)
பிறப்பிறப்பும் பந்தமுத்தி பேரூராதிகளாய்ப்
பிரபஞ்ச மாயையதிற் பிரதிபலித் தெழுந்து
மறப்புநினைப் பாகவுமைங் கோசமு மூன்று டலாய்
வளங்கின்ற ஆத்துமதத்துவங்கள் முப்பத் தாறாய்
நிரப்பியமைந் திடுஉட லென்றபவாதத்தாய்ந்து
நிறைந்திடும் பேரறிவாகி யான்மாவே தானாய்
இறப்பிறப் பற்றிருப்பது தானென உட்டெளிந்து
இரும்பொரு டொனாவது நிஷ்காம தவமாமே.
(முகம்மது மஸ்தான் ஸாஹிபு)
பொழிப்புரை: பிறப்பு, இறப்பு, பாசம், வீடுபேறு, பேரூர் முதலியவை அடங்கிய பிரபஞ்சமாயையில் பிரதிபலித்தும், மறப்பு நினைப்புகளும், ஐந்து வகை கோசங்களும், ஆத்தும தத்துவங்கள் முப்பத்தாறும், நிரப்பி அமைந்திடும் உடலில் அறிவாகிய ஆன்மாவாகியும், ஏகாந்த ஒளியான அறிவுமயமாகியும், பிறப்பு இறப்பற்ற, எல்லாம் அதுவே எனப்படும் பரம்பொருளாகிய இறைவனைத் தியானிப்போமாக."
இந்திய தத்துவ நூல்களில் ஐந்து கோசங்களைப் பற்றிக் கூறப்படுகிறது. அவையாவன: அன்மைய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பனவே. இவ்வுடம்பு உணவினால் ஆயது என்ற காரணத்தால் அதற்கு அன்னமயகோசம் என்று பெயர். கோசம் என்ற சொல்லுக்கு உறை என்பது கருத்து. இதற்குள்ளே இதைவிட நுட்பமாகவுள்ளது பிராணமயகோசம். இதுவே சீவ சக்தி. இதற்குள்ளே உள்ளது மனோமயகோசம். இதற்குமுள்ளே உள்ள்து விஞ்ஞானத்தால், அதாவது அறிவால் ஆயது என்ற காரணத்தால் விஞ்ஞான மயகோசம் எனப்படும். இதற்குமுள்ளே உள்ளது ஆனந்தமயமானது என்ற காரணத்தால் ஆனந்தமய கோசம்
 

133
எனப்படும். ஒன்றுள் ஒன்றாக இத்தனை உறைகளாலும் மூடப்பட்டு, இவற்றுக்கு நடுவில் உள்ளதே ஆத்மா.
மேற்கூறிய கோசங்களைப் போன்று சூஃபித்துவக் கொள்கையில், பலதரப்பட்ட திரைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. அல்-ஹ"ஜ்வீரி (ரஹ்) என்னும் சூஃபி ஞானியார், பிரபஞ்சத்தின் வெவ்வேறு அம்சங்களில் எப்படி இறைவனின் மகத்துவங்கள், திரைக்குப் பின் மறைந்து இயங்குகின்றன என்பதைப் பின்வருமாறு கூறுகின்றார்:
இப்பிரபஞ்சத்தில் இறைவனின் மர்மங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. எல்லாச் சிருஷ்டிகளிலும், பொருள்களிலும், அவைகளின், குணங்களிலும், பஞ்ச பூதங்களிலும், உடல்களிலும், உருவங்களிலும், பொருள்களிலும், இறைவனின் மகத்துவங்கள் பல திரைகளுக்குப்பின் மறைந்து இயங்குகின்றன. தெளஹlதெனும் ஒருமை நிலையில் அவதானித்தால் பலதரப்பட்ட திரைகள் இருக்கின்றன என்று சொல்வது பிழையாகும். ஆனால் எல்லா வஸ்துகளும் இறைவனிடமிருந்து வேறுபட்டிருப்பதை அவதானிக்கிறோம். அதாவது பிரபஞ்ச வஸ்துகள் இறைமகத்துவத்தை பலவாறு மறைக்கின்றன. இதனால்தான் வெறும் அறிவால் மட்டும், இறை மர்மங்களை அறியாத நிலையில் இருக்கின்றோம். மனிதன் தன் சூழலில் அமிழ்ந்திருக்கின்றான். இந்நிலையில் இறையுண்மையை மறைக்கும் பிரபஞ்சத் திரையை அகற்ற முடியாத நிலையில் இருக்கின்றான். எல்லாம் அவனே எனும் ஒருமை நிலையை அறிய முடியாமல் உலக ஆசாபாசங்களில் தன் கவனத்தைச் செலுத்தி, திருக்குர்ஆனில் கூறப்படும் (12:53) மிருக குணாதிசயங்கள் நிறைந்த அம்மாரத்து(ன்) பிஸ் ஸஅயி எனும் நப்சின் அறியாமையில் மூழ்கி, இறைவனை மறந்து அவனிலும் இருந்து வேறுபட்டிருக்கின்றான். " மேற்கத்திய தத்துவக் கருத்துகளிலும் இறையுண்மையை மறைக்கும், திரைகளைப் பற்றி எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக எக்ஹாட் (Eckhart) எனும் மேற்கத்திய இறைஞானி மனித அறிவை மறைக்கும் பல தோல்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.
மனிதனின் இதயம் எத்தனையோ தோல்களால் மூடப்பட்டிருக்கின்றன. இதனால்தான் அவன் பலவிடயங்களை அறிந்தும், உணர்ந்தும், தன்னை மாத்திரம் அறியாத நிலையில் இருக்கின்றான். ஏன்? கரடியின் அல்லது செம்மறி ஆட்டின் தோல்களைப் போன்ற கனத்த முப்பதோ,

Page 77
134
நாற்பதோ தோல்கள் அவன் ஆத்மாவை மறைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் அவன், சிந்தனையைத் தன்னில் செலுத்தி, தன்னை அறியும் அறிவைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். "
(21)
இறைநேசர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுவதில் பக்திப் பரவசம் கொள்வார்கள். கண்ணின்றிப் பார்ப்பவன் இறைவன். அடியார்களுக்கு மறைபொருளானவன் இறைவன். விண்ணும் மண்ணும் வெளியும் நிறைந்திருக்கின்ற இறைவனின் மகத்துவத்தை வார்த்தைகளால் கூறி பக்தி பரவசம் கொள்கின்றார் குஞ்சலி சாஹிப் அவர்கள்.
கண்ணாகினாய் முகமாகினாய் காணாதகப்பொருளாகினாய் விண்ணாகினாய் வெளியாகினாய் விபரத்தவர்களுமாகினாய் ஒண்ணாகினாய் பலவாகினா யுறுப்பானதில் உயிராகினாய் மண்ணானதில் வரந்தருள் மவுஜூது யாமவுஜ"து நீ அகமானதி லழகாகுநீ அறிவானதில் ஒளிவாகுநீ தகுமான தெளஹிதாகுநீ தவறாமலா ரருளாகுநீ தொகையான நூறுடலானதிற் றொனிப்போடுமே உயிராகுநீ மகராஜனே குருவான நல்மவுஜூது யாமவுஜூது நீ.
(குஞ்சலிசாஹிப்)" பொழிப்புரை: எல்லாப் படைப்புகளுக்கும் நீ கண்ணாகினாய். முகமாகினாய். அதேசமயம், அவை காணாத மறைபொருளாகவும், விண்ணாகவும், வெளியாகவும் விபரிப்பவர் கருத்துகளுக்கு விளக்கமாகவும், ஒண்ணாகவும், பலவாகவும், உடம்புகளின் உயிராகியும் மண்ணானதில் பரந்து அருள்கின்ற மவுஜ"தாகவும், அகத்தின் அழகாகவும், அறிவின் ஒளியாகவும், பல்லாயிரக்கணக்கான உடல்களில் உயிராகவும், அரசர்களுக்கு அரசனாகவும், எல்லாப் படைப்புகளுக்கும் அறிவையூட்டும் குருவாகவும் இயங்குகிறாய் நீயே. (இறைவா)
சமுத்திரத்திலிருக்கும் மட்டிலாத் துளிகளைப் போல் இறைசிந்தனையில் எல்லா வஸ்துக்களினதும், வரையறையான தனிப்பட்ட உணர்ச்சிகள் ஒருங்கே சேர்ந்திருக்கின்றன. இதனால்தான் மேற்கூறிய கவியில் இறைவனை 'கண்ணாகினாய், முகமாகினாய்; காணாதகப் பொருளாகினாய்’ என இறைமகத்துவம் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்துள்ளதைப் பாடுகின்றார். மேற்கூறிய கருத்தை இன்னொரு நோக்கிலும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது இறைஞானம் அடைந்த ஒரு பக்தனின்
 

135
உள்ளம் இறைவனின் கருவியாக மாறிவிடுகின்றது. அக்கட்டத்தில் அவனுடைய எல்லா உணர்ச்சிகளும், புலனுணர்ச்சி, ஞானவுணர்ச்சிகள் யாவும் இறைவனால் இயக்கப்படுகின்றன. துந்நூன் (Dhu'l-Nun) என்னும் இறைஞானி இதைப்பற்றிக் கூறி, ஒரு ஹதீதை ஆதாரமாகக் காட்டுகின்றார்.
ஓர் உண்மையான இறைபக்தன், ஒவ்வொரு கணமும் (மணித்தியாலத்திலும்) மேலும், மேலும் தாழ்மையுடையவனாக மாறுகின்றான். ஏனெனில், அவன் அந்நிலையில் இறைவன் பால் முன்னேறுகின்றான். அத்தகைய இறைஞானி, அறிவின்றிக் காண்கின்றான். அவதானிப்பின்றிப் பார்க்கின்றான். வர்ணனையின்றி உணர்கின்றான். இவ்வுணர்ச்சிகளெல்லாம் திரையின்றியும், திரைமறைவின்றியும், அதாவது (பிரபஞ்சத்தின் மறைவின்றி) அவனுக்குக் கிட்டுகின்றன. அவனறிவெல்லாம் தெய்வீக அறிவாகிவிடுகின்றன. அவர்களின் அசைவுகளையும், வார்த்தைகளையும், அவர்களின் நாவால் கூறப்படும் சொற்களையும், கண்ணால் பார்க்கப்படும் பார்வைகளையும் இறைவனே இயக்க வைக்கின்றான். "
இது சம்பந்தமாக துந்-நூன் (Dhu1Nun) எனும் இறைஞானி பின்வரும் ஹதீஸ் குத்ளியியைக் குறிப்பிடுகின்றார்:
நபில் போன்ற இஷ்டபூர்வமான தொழுகைகள் மூலம் என் நல்லடியான், நான் அவனை என்நேசன் ஆக்கிக் கொள்ளும் வரை என் அருகிலாதலைக் கேட்கிறான். நான் அவனை என் நேசனாக்கியதுமோ, அவன் கேட்கும் காதுகளாகவும், அவன் பார்க்கும் கண்களாகவும், அவன் பற்றும் கரங்களாகவும், அவன் நடக்கும் கால்களாகவும், நான் ஆகிவிடுகிறேன். அதாவது அவன் என் மூலம் கேட்கிறான். என் மூலம் பார்க்கிறான். என் மூலம் பற்றுகிறான். என் மூலம் புரிந்து கொள்கிறான். "
(22) அண்டமுங் கடந்து பிண்டமுங் கடந்தே அறுஷ"மேலான நல்லருளே மண்டல மூன்றுங் கடந்தப் பாலிரவி மதியையுங் கடந்த நன்மறையே முண்டக விளக்கிற் சுடரையுங் கண்டு
முடுகின முழுமதிப் பொருளே என்றும் என்னுளத் திலேயெழுந் தருள்புரிந்தே
இரங்கிடும் யா மஹ"மூதே."
(ஷெய்குத் தம்பி ஞானியார்)

Page 78
136
பொழிப்புரை: எங்கள் மஹ்மூதாகிய றஸ9ல் (ஸல்) அவர்களே! மிஃறாஜ"டைய இரவில் அண்ட பிண்டம் கடந்து, மண்டலம் மூன்றும் கடந்து, சூரிய சந்திரனையும் கடந்து சென்ற வேதநாயகரே, முண்டக விளக்கில் இறையொளியைக் கண்டு முடுகின முழுமதிப் பொருளாகிய றஸ9ல் நாயகமே, என்றும் என் இதய கமலத்தில் எழுந்து, அருள் புரிந்து இரக்கம் காட்டுவீர்களாக!
அல்லாஹ்வின் அர்ஷ" பற்றி 14வது கவிதையின் கீழுள்ள விளக்கத்தையும், ஞான ஒளியாகிய இறையருள் பற்றி 3 ஆம் கவிதையின் கீழுள்ள விளக்கத்தையும் நோக்குக.
(23)
தானே அனாதியாய் சலமதாய்த்
தங்குவோர் தாரகக் கருவாய்த்
தானே கமதாய் நீண்ட பேரொலியாய்த்
தாழ்வுறாத் தயைதருங் கடலாய்த்
தானே தனதா யானந்த மயமாய்ச்
சாற்றரும் பெரும்புகழனைத்தும்
தானே பலவாய்த் தோற்றியே விளக்குந்
தனிமுதற் பொருள்தனைப் புகழ்வாம்.
(மெளனகுரு மஸ்தான்)"
பொழிப்புரை: இறைவன் அனாதியான பரம்பொருளாகவும், ஏகமாகவும், பேரொலியாகவும், கருணைக் கடலாகவும், ஆனந்தமயமான, கூறற்கரிய பெருஞ்சிறப்புகள் அனைத்தும் உடைய பிரபஞ்சத்தில் வியாபிக்கும் மகத்துவப் பொருளாகவும், பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டும் உள்ள தனித்துவமான ஏகாந்த நிலையை உடைய முதற் பொருளைப் புகழ்வோமாக. தாழ்வுறாத் தயைதரும் கடலாய்' எனக் கூறுவது திருக்குர்ஆனில் கூறப்படும். அர்றஹ்மானிர் றஹீம்" அதாவது அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் எனும் இறைமகத்துவத்தை விவரிக்கின்றது.
* 'அர்றஹ்மான், அர்றஹீம் இவ்விரண்டும் றஹ்மத் என்பதிலிருந்து பிறந்தனவாயினும் இவை றஹ்மத்தின் இரண்டு வகைகளைக் குறிக்கின்றன. அர்றஹ்மான் என்பது தன்னிடம் றஹ்மத்தையுடைய ஒன்றைக் குறிப்பிடுகின்றது. அர்றஹீம் என்பது றஹ்மத்தையுடையதாகவும், ஆனால் எப்பொழுதும் றஹ்மத்தை வெளியாக்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு வினாடியும் உலகப்படைப்புகள் யாவும் அதனிடமிருந்து நற்பேற்றைப் பெறுகின்ற ஒரு சக்தியைக் குறிப்பிடுகின்றது. அல்லாஹ்வின் ஈடு இணையில்லாத றஹ்மத் - நற்கருணையானது சிருஷ்டி கோடிகளில் சகல பொருள்களையும் சூழ்ந்துள்ளது. அவனுடைய கருணைக்குப் புறம்பான எந்தப் பொருளுமில்லை என்னும் உண்மையை மக்களுக்கு குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது.
தர்ஜுமானுல் குர்ஆன் - மெளலானா அபுல்கலாம் ஆசாத். பக்.76 (RPM கனி - மொழிபெயர்ப்பு)
 

பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! எல்லா இடங்களிலும் அருள்விரிவாகியும், அங்கிங்கு என்று கூற முடியாமல் எங்கும் வியாபகமாகியும்,
வஸ்துக்களின் உள்ளும் புறமுமாகி நின்று இம்மை மறுமைப்
உடம்புகள் தோறும் கலந்திருக்கின்ற பரிபூரணானந்த மாகியும், புனித மெய்ஞ்ஞானமாகிய ஆனந்த மழையைப் பொழிகின்ற கிருபாமேகமாகியும், இரவில் சந்திரனையும், பகலில் சூரியனையும், கரைகாணாத கருணைக் கடலாகியும்,
வைத்தாளுவாய் என்று நம்பினேன். ஆகையால் முகியித்தீன் ஆண்டகை பின்தொடர வள்ளல் இரசூல் என் முன்னே வரவேண்டும்.
சூஃபிஞானி ஓர் இறைபக்தனின் மனோ நிலையைப் பற்றிக் கூறுவதாவது:
137
(24)
எங்கும் அருள் விரிவாகி யங்கிங் கெனாதாகி
என்றன்பி ரானு மாகி எண்ணரிய அண்டபகி ரண்டங்க ளாகி நின்று
இகபர மிரண்டு மாகிப் பொங்கிவழி கொண்டுபல் கடமெலாம் பெருகுபரி
பூரணா னந்த மாகிப் புனிதமெய்ஞ் ஞானவா னந்தமழை மாரியைப்
பொழிகருணை முகிலு மாகிக் கங்குல்பக லில்லிரவி மதியாகி யெங்குமொரு
கங்கற்ற கங்கை யாகிக் கவியுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
கருணைவைத் தாளு தற்கே மங்காத திங்களொளி யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே. (மஸ்தான் ஸாஹிப்)"
என்னுடைய பெருமானாகியும், எண்ணரிய அண்டகோடி
பொருளாகியும், ததும்பி வழிதலைக் கொண்டு பலவகைப்பட்ட
தேஜோமயத்தைக் கொடுக்கின்ற இறைவா! நீ கருணை
நிஸாப்பூரைச் சேர்ந்த அலிஇப்னு அஸ்ஸை ரபி என்னும்
ஓர் இறைபக்தனைப் (சூஃபி) பொறுத்தவரை அவனுக்கு உள் என்றும், வெளியென்றும் ஒன்றுமேயில்லை. எல்லாம் இறைவனுக்குரியதே எனும் உணர்ச்சியில் அவன் இருக்கின்றான். *

Page 79
138
இதைப்போன்ற இன்னுமோர் கருத்தை ஹ"ஜ்வீரி (ரஹ்) விமர்சித்துக் கூறுவதாவது:
நீ வெளிப்புறம் நோக்கினால் எல்லாம் அவன் ஆதரவிலே இயங்குவதைக் காண்பாய். அவன் அனுமதி இல்லாக் காரியங்கள், ஓர் ஈயின் இறக்கையின் ஆதரவு கூட அற்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். நீ உட்புறம் நோக்கினால் இறைவனின் கருணை கடாட்சத்தை அவதானிப்பாய். அவனின்றி ஒரு சிறு தானியத்தைக் கூட உன்னால் அசைக்க முடியாததை நீ அறிவாய். உனக்கென்று ஒர் உட்புறமோ, வெளிப்புறமோ இல்லாததை நீ அறிவாய், இதனால் எல்லாம் அவனுடையதே. உனக்கன்றி யாவும் இல்லையென்பதை நீயறிவாய். *
பல வகையாக விரிந்து, பல பொருள்களிளெல்லாம் இயங்கும் இறைமையின் தகுதியைப் பற்றி மஸ்தான் ஸாஹிபு (ரஹ்) மேலும் பாடுவதாவது:
(25)
பாராகி யெப்பொருளு மாகியப் பார்தனிற்
பஞ்சவண் ணங்க ளாகிப் பற்பல விதங்கொண்ட விந்துநாதத்துட்
பதிந்துமுளை பருவ மாகி வேரோடி யோக பூமிக்குள் வளர்ந்தருள் விளைந்தொழுகு தருவு மாகி விண்ணாகி மண்ணாகி யெண்ணாகி வெகுவாகி
விரிவாகி மறைவு மாகி தூராதி தூரத்தி னுந்தூர மாகிஅதி
சூழ்ச்சிச் சமீபமாகித் தோற்றுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
துரிதமுட னாளுதற்கே வாராரும் அருள்மாரி யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே. (மஸ்தான் ஸாஹிப்)"
பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! பூவுலகம், பூவுலகத்திலுள்ள எல்லாப் படைப்புகள் அவைகளில் நிரம்பிக் கிடக்கும் பஞ்சவர்ணங்கள், பலதரப்பட்ட விந்துநாதம், யோகம் தியானங்களில் உண்டாகும் ஞான ஒளி, ஆகாயம், பூமி அவைகளில் நிரம்பிக் கிடக்கும் வெளிப்பொருள்கள், மறை பொருள்கள் அளவிட முடியாத
 

139
தூரத்தில் இருக்கும் உலகங்கள், மர்மமான உட்பொருள்கள், இவைகளையெல்லாம் படைத்தும், அவைகளில் வியாபித்து இயங்க வைக்கும் இறைவா! சீக்கிரம் என்னையாண்டு அடிமை கொள்வாயாக. ஆகையால் கிருபை மிகுந்த திருவருள் மழையை அன்பர்களுக்குப் பொழிகின்ற முகியித்தீன் ஆண்டகை பின் தொடர, வள்ளல் இறசூல் முன்னே வரவேண்டும்.
எல்லா வஸ்துகளும் இறைவனிலே இருக்கின்றன. இறைவன் எல்லா வஸ்துகளிலும் இருக்கின்றான். இவ்வுண்மையை நாம் ஏற்றுக் கொண்டால், உட்புறத்திற்கும், உட்புறத்திலிருக்கும் யாவும், வெட்ட வெளிக்கும் வெளியாயிருக்கும், எல்லா வஸ்துக்களோடும் ஒருமைப்படுகின்றன. இதைத்தான் மஸ்தான் ஸாஹிபு தூராதி தூரத்தினுந் தூரமாகி அதி சூழ்ச்சிச் சமீபமாகி’ எனக் குறிப்பிடுகின்றார். தத்துவ ரீதியில் இக்கருத்தை அவதானித்தால் இவ்விதமான சர்வ வியாபகம், இறை சிந்தனைக்கு மட்டுமேயுரியதாகும். ஒன்றுக் கொன்று முரணான நிலைகளில் காலம், இடம் என்னும் வரையறைகளுக்கு அப்பாற்பட்டு ஒருமை நிலையாக இயங்கக் கூடியது இறை சிந்தனை மட்டுமே. அவன் சிந்தனையிலே மட்டுந்தான் பெரியது; சிறியது; வெளியானது; உட்புறமானது; எனும் வரையறையின்றி எல்லா வஸ்துகளும் இறைவியாபகம் எனும் ஒருமை நிலையில் ஒன்றுபடுகின்றன. இறைவனைப் பொறுத்தவரை 'உள்ளே' 'வெளியே மேலே 'கீழே தூரத்திலே சமீபத்திலே 'அன்று 'இன்று நாளை “பெரிது" 'சிறிது’ எனும் காலநேரகுண வேறுபாடுகளின்றி இறைமயமெனும் ஒன்றான நிலையே பொருத்தமாகும்.
திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தில் வரும் 164 வது வசனத்தை அவதானிப்போம்.
நிச்சயமாக, அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும், பகலும், மாறி மாறி வருவதிலும் மனிதர்களுக்குப் பயன்தருவதை ஏற்றிக் கொண்டு சமுத்திரத்தில் செல்லும் கப்பலிலும் (வரண்டு) இறந்த பூமியை, உயிர்ப்பித்துச் செழிப்பாக்கி வைக்க வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைப்பதிலும் மழையிலும், எல்லாவிதமான கால்நடைகளையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளைப் பல கோணங்களிலும் திருப்பித் திருப்பி விடுவதிலும் வானத்திற்கும் பூமிக்குமிடையில் கட்டுப்படுத்தப் பெற்றிருக்கும் கருமேகத்திலும், ஆராய்ந்து சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும் ஆற்றலையும் அறிவிக்கக் கூடிய அநேக) சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன.” (2:164)"

Page 80
14Ο
இதன் கருத்து யாதெனில், சர்வ வியாபியாகிய இறைவனின் மகத்துவம், எல்லா சிருஷ்டிகளிலும், பெரிதிலும், சிறிதிலும், அசைவுகளிலும், உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் இயங்குகின்றன என்பதாகும்.
கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதனையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் மெய்யாகவே வெட்கப்பட மாட்டான். குர்ஆன் (2:26)"
இக்வானுஸ் ஸபா எனும் இறைஞான தத்துவத்தில் இறைஞானம் நிறைந்த பக்தனுக்கு, எல்லாம் இறைமயம் எனும் உண்மை புலப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. மேலும் இத்தத்துவம் கூறுவதாவது:
அவ்லியாக்களான இறைபக்தர்களும், மஃரிபத் நிலையில் முன்னேறியவர்களும், அறிவில் முதிர்ந்தவர்களும் அவர்களின் ஞான நிலைகளில், இரவும் பகலும் இறைவனையே தியானிக்கின்றார்கள். அவர்களில் இருந்து ஒரு கணமும் இறைவன் மறைவதில்லை. அதேபோன்று அவனைக் காணும் கண்களில் இருந்து, எல்லாச் சிருஷ்டிகளிலும் அவன் வியாபித்திருப்பதும் மறைவதில்லை. விண்ணுலகிலோ மண்ணுலகிலோ இருக்கும் ஓர் அணுவிலும் அல்லது அந்த அணுவை விடச் சிறியதிலும், அதைவிடப் பெரியதிலும் அவன் சதாவியாபகமாகி இருக்கிறான். அவனே இறை பக்தர்களின் இருதயத்தைத் தன்பால் திறந்து விடுகின்றான். அவனே மஃரிபத்தின் உண்மையை உறுதிப்படுத்தி பக்தர்களின் அகக் கண்களுக்கு ஒளியைப் புகுத்தி, அவனை மறைக்கும் திரையை அகற்றி விடுகின்றான். இதனால்தான் இறைபக்தர்கள், அவர்கள் இருதயத்தால் உணரும் உண்மைகளைக் கண்களினாலும் காண்கின்றார்கள்." (26)
பலவுமா யொன்றுமா யென்றுமாய் நின்றதற்
பரமெனது முன்னிற்கவே பரமான தெப்பொருளும் அதுவாய் முளைத்துவிளை
பயிரெனது முன்னிற் கவே நிலைசரமொ டிகபரமு முயிரினுக் குயிராகி
நின்றதென் முன்னிற் கவே நேரிட்ட ஞானசூரியனா யுதித்தநன்
னெறியெனது முன்னிற்கவே அலையுலகு கானலின் நீரெனத் தோன்றுமெய்
யறிவெனது முன்னிற்கவே
 

141
அய்யனே யஞ்சியடி யேனுமுமை நம்பினேன்
ஆதரித்தாளு தற்கே
மலையிலக் கானகுறி யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வரு கவே
வளருமருள் நிறைகுணங் குடிவாழும் என்னிருகண்
மணியே முகியித் தீனே (மஸ்தான் ஸாஹிபு)"
பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! பலவாகியும், ஒன்றாகியும், என்றைக்கும் அழியாததாகியும் இருக்கும் தற்பரமானது எனக்கு முன் நிற்க வேண்டுகிறேன். மேலான எந்தப் பொருளும், அதுவாய் முளைத்து விளைகின்ற பயிர் போன்ற பொருளானதும் எனக்கு முன் நிற்க வேண்டுகிறேன். நிலைத்திருக்கின்ற சரப் பொருள்களோடு, இம்மையிலும் மறுமையிலும் உயிர்க்குயிராகி நின்ற பொருளானது எனக்கு முன் நிற்க வேண்டுகிறேன். பொருந்தின ஞானசூரியனாயுண்டான நன்மையாகிய மார்க்கமானது எனக்கு முன் நிற்க வேண்டுகிறேன். கானல் நீரெனத் தோற்றும் நிலையற்ற இவ்வுலகில், உண்மை அறிவானது எனக்கு முன் நிற்க வேண்டுகிறேன். அடியேனாகிய என்னை ஆதரித்து ஆளுதற் பொருட்டு உம்மை நம்பினேன். ஆகவே முகியித்தீன் ஆண்டகை பின்தொடர வள்ளல் இறசூல் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டும்.
'அலையுலகு கானலின் நீரெனத் தோன்றுமெய்யறிவு எனது முன்னிற்கவே" எனக் கூறப்படும் உலகத்தின் அணித்திய நிலையைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:
பூமியிலுள்ள யாவும் அழிந்தே போகும். மிக்க கண்ணியமும்
பெருமையும் தங்கிய உம் இறைவன் மட்டும் நிலைத்திருப்பான். (55:26, 27)" (27)
கண்டபொரு ளத்தனையு மாகிநின்றவைகளுங்
காணாத காரணத்தைக்
கருதரிய சித்தாய் விசித்திரமாய் நின்றிலங்
காநின்ற காரணத்தை
அண்டகோ டிகளையுந் தன்னுள்வைத் தணுவினுக்
கணுவான காரணத்தை
அறியாம லென்றெய்வ முன்றெய்வ மென்பார்க்கும்
அவ்வகைக் காரணத்தை
யெண்டிசை விளைக்கின்ற வித்தா யிருந்துமோர்
இடமற்ற காரணத்தை

Page 81
142
எய்திக் களிக்கஅடி யேனுமுமை நம்பினேன்
எதிர்காட்டி யாளுதற்கே
மண்டலமும் விண்டலமு முள்ளநீர் பின்தொடர
வள்ளல் இறசூல் வருகவே
வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே (மஸ்தான் ஸாஹிபு)"
பொழிப்புரை: குணங்குடி வாழும் என்குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே உலகத்திலே இருக்கும் பல கோடிகளான படைப்புகளில் வியாபித்தும், அவை காணாத காரண வஸ்துவை, நினைத்தற்கருமையான சித்தாகவும், விசித்திரமாகவுமிருந்து விளங்குகின்ற காரண வஸ்துவை, உல்கங்களனைத்தையும், தனக்குள்ளே வைத்து, அணுவுக்குள் அணுவான காரண வஸ்துவை, உண்மைப் பொருளை உணராமல் இது என்னுடைய தெய்வம், இது உன்னுடைய தெய்வமென்று வாக்குவாதம் பண்ணுவோர்களுக்கு, அவ்வவ்விதமாகவே நிற்கும் காரண வஸ்துவை, எல்லாத் திசைகளையும், உண்டாக்குகின்ற விதையாயிருந்தும் ஒரு இடத்திலில்லாத காரண வஸ்துவை, இறைவனைச் சேர்ந்து சந்தோஷிக்கும்படி, அடியேனாகிய நானும் உன்னை நம்பினேன்.
எமக்கும் உன்னுடைய தரிசனத்தைத் தந்து அருள் செய்வாயாக.
மண்டலமும், விண்டலமும் உள்ள நீர் பின்தொடர, வள்ளல்
இறசூல் (ஸல்) அவர்கள் முன்னே வரவும் வேண்டுகின்றேன்.
வான்மறைக் குர்ஆன் - இறைமகத்துவத்தைப் பற்றி:
அவன் (தான் எல்லாவற்றிற்கும்) முந்தியவனும்,
பிந்தியவனும், பகிரங்கமானவனும், அந்தரங்கமானவனும் ஆவான்; அவன் எல்லாப் பொருட்களையும் முற்றிலும் அறிந்தவன். (573)"
எனக் கூறுகின்றது.
எல்லாச் சிருஷ்டிகளிலும், உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் வியாபகமாகியிருக்கும் இறை மர்மத்தை, மெய்ஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும், கலைஞர்களும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்து எடுத்துக் காட்டி இருக்கின்றார்கள். ஹான்ஸ்டென்க் (Hans Denk) என்னும், மேற்கத்திய தத்துவஞானி இவ் இறைமர்மத்தைப் பற்றிக் கூறுவதாவது:
இறைவா! இந்தச் சிறிய உலகத்தில் அதி மகத்தான பரம்பொருளாய் நீ இயங்குகிறாய். எனினும் யாரும் உனைக் காணவில்லையே! இறைவாநி அதிசத்தத்தோடு எல்லாரையும் அழைக்கின்றாய். ஆனால், உன் சத்தத்தை ஒருவரும் கேட்கவில்லையே. இறைவா! நீ மிகச்சமீபத்திலிருக்கின்றாய்.
 

143
ஆனால் ஒருவரும் உனை உணரவில்லையே. இறைவா! நீ எல்லார்க்கும் உனையே கொடுத்தருள்கின்றாய். ஆனால் அவர்களுக்கு உன் நாமம் தெரியவில்லையே. மானிடர் உன்னை விட்டு விலகி ஓடிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் நீ காணவில்லையே என்று குறைகாணுகின்றனர். அவர்கள் அவர்களின் பின்புறத்தை உன்பால் திருப்பி விட்டு, நீ அவர்களின் கண்பார்வைக் கெட்டவில்லையே என்று குறை கூறுகின்றனர். அவர்கள், அவர்களின் செவிகளை அடைத்து விட்டு, உன் சத்தம் கேட்கவில்லையே என்று குறை கூறுகின்றனர். *
முன்கூறிய கவிதையில் மஸ்தான் ஸாஹிப் (ரஹ்) அவர்கள் முக்கியமான மூன்று தத்துவக் கருத்துகளை சொன்னயம், பொருணயத்துடன் விவரிக்கின்றார். அவையாவன:
1. அண்டகோடிகளாகிய கற்பனைக் கெட்டாத ஆகப் பெரிய புவனங்களிலும், ஆகச் சிறிய அணுவிலும், அதாவது பெரிதிலும் சிறிதிலும் இறைசக்தியே இயங்குகின்றது. இதை அண்டகோடிகளையும் தன்னுள் வைத்து அணுவினுக்கு அணுவான காரணத்தை' என வர்ணிக்கின்றார்.
2. பிரபஞ்சத்தில் எல்லா வஸ்துக்களையும் சிருஷ்டிக்கும் சிருஷ்டி கர்த்தாவாக இங்கிருக்கின்றான், அங்கிருக்கின்றான் எனக் கூற முடியாத சர்வ வியாபியாயிருக்கும் விந்தையை "எண்டிசை விளைக்கின்ற வித்தாயிருந்துமோர் இடமற்ற காரணத்தை" என விளக்குகின்றார்.
3. இறைவனின் மகத்துவம் எல்லா வர்ணனைகளுக்கும், வேதங்களுக்கும், கொள்கைகளுக்கும், கருத்துகளுக்கும், தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டிருந்தும், உண்மையான விசுவாசிகளுக்கு அவரவர்களின் சிறிய அறிவிற்கு எட்டக் கூடிய விதமாக, கருணாகடாட்சமாகிய இறைவன் தன்னை வெளிப்படுத்துகின்றான். இதையே மஸ்தான் ஸாஹிப் அவர்கள் 'அறியாமல் என் தெய்வம் உன் தெய்வம் என்பார்க்கும் அவ்வகைக் காரணத்தை' எனவும் பாடுகின்ற சாதிமதபேதமற்ற சமரச நோக்கும் விளக்கமுறுகின்றது.
மேற்கூறிய தாராளமனப்பான்மை திருக்குர்ஆனிலும் அடங்கி யிருக்கின்றது.
முஃமின்களே! நீங்களும் கூறுங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பெற்ற இவ்வேதத்தையும், இப்றாஹீம் இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் முதலியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பெற்ற

Page 82
144
யாவற்றையும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டிருந்தவற்றையும், நாங்கள் விசுவாசிக்கிறோம்;
அவர்களில் இருந்து எவரையும் நாம் வேறுபாடு காட்ட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிபடுவோம். (2:136)"
இறைஞானியான முஹியித்தீனுல் இப்னுல் அறபி (ரஹ்) அவர்கள் ஆத்மஞானத்தில் உணர்ந்த ஓர் உண்மையும் இதற்குப் பொருத்தமானது; அவர் கூறுகின்றார்:
என் இருதயத்தில் எல்லா உருவங்களுக்கும் இடமிருக்கிறது. அதில் மானுக்குப் புல்வெளியும், கிறித்தவ சந்நியாசிகளுக்கு மடமும், சிலைகளுக்கு கோயிலும், ஹஜ்ஜாஜிக்கு கஃபாவும், தெளராத்தின் கொள்கைகளுக்கும், திருக்குர்ஆனுக்கும் அடங்க இடமிருக்கின்றது. நான் அன்பெனும் வேதத்தையே கடைப்பிடிக்கின்றேன். எத்திசையில் சவாரி செய்தாலும் கருணையெனும் வேதமே, என் வேதமாகும். அதுவே என் நம்பிக்கையாகும். *
இப்படிக் கூறும் இப்னுஅறபி, திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றார்.
நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வை முன்னோக்குதல் உண்டு. 2:115
இதே தாராள மனப்பான்மை இறைஞானியான ஜுனைத் பக்தாதி அவர்களின் தத்துவக் கருத்திலும் காணப்படுகிறது.
'ஒரு பாத்திரத்தின் நிறத்தையே அதிலிருக்கும் நீர் பிரதிபலிக்கும்” என அவர் கூறுகிறார்."
*மனிதவர்க்கத்தின் ஆத்மீக அனுபவங்கள் நதிகள் சமுத்திரத்தில் சங்கமமாவதைப் போன்றதென இராமலிங்க அடிகள் கூறுகின்றார்:
பொங்குபல சமயம் என்னும் நதிகள் எலாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப்பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடலே, எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர் தங்கநிழல் பரப்பிமயற் சோடையெல்லாம்
தணிக்கின்ற தருவே! பூந்தடமே ஞானச் செங்கமுதம் மலரவரும் மதியே! எல்லாம்
செய்யவல்ல கடவுளே! தேவ தேவே!
 

145
(28)
நோக்கு நோக் கொண்ணாத நோக்கு நோக்காநின்ற
நோக்கெனது முன்னிற்கவே நோக்கிப் புராதனப் பொருளான நுண்ணறிவின்
நுட்பமென் முன்னிற் கவே நீக்கமற அங்கிங் கெனா தெங்குமொரு நிறைவெனது முன்னிற்கவே நேசித்த நெஞ்சமே குடிகொண்ட வான்கருணை
நேயமென் முன்னிற் கவே போக்கொடு வரத்தொடு விகாரமிலதாய் நின்ற
புனிதமென் முன்னிற்கவே புல்லறிஞனானஅடி யேனுமுமை நம்பினேன்
போதுகென ஆளுதற்கே வாக்குமனம் ஒத்தமர புள்ளநீர் பின்தொடர
வள்ளல் இறசூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழும் என்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே சர்வ உயிர்களுக்கும் பார்வையாயிருக்கின்ற இறைவன் எனக்கு முன்நிற்க வேண்டுகிறேன். அநாதி காலந்தொடங்கி நுண்ணறிவுடையவர்களால் அறியப்படுகின்ற அறிவின் நுட்பமானது என்முன் நிற்க வேண்டுகிறேன். அவ்விடத்தில் இவ்விடத்தில் என்று சொல்லாதபடி எவ்விடத்தும் வியாபித்திருக்கின்ற இறைவன் என்முன் நிற்க வேண்டுகிறேன். இறைவனை விரும்புகின்ற பேர்களின் மனதில் குடி கொண்டிருக்கின்ற மிக்க வான்கருணை நேயம் என்முன் நிற்க வேண்டுகிறேன். போக்கும் வரவும் விகாரமும் இல்லாததாயிருக்கின்ற பரிசுத்த வஸ்துவானது எனக்கு முன் நிற்க வேண்டுகிறேன். அற்ப அறிவினனாகிய என்னை, நீ ஆளவேண்டுமென்று நம்பினேன், ஆகவே வாக்கும் மனமும் ஒத்த மரபினையுடைய முகியித்தீன் ஆண்டகை பின் தொடர வள்ளல் இறசூல் முன்னே வரவேண்டும்.
மேற்கூறிய கவியில் அறிவுமயமான இறைவன் அளவுற்ற அருளாளனுமாக இருப்பதால், உண்மையான விசுவாசிகளின் இருதயத்தில் அவன் சதாகுடி கொண்டிருக்கிறான் எனும் உண்மையை, மஸ்தான் ஸாஹிபு விளக்கஞ் செய்கின்றார். அளவற்ற அருளாளனாகிய இறைவனை, சதா நேசிப்பதே, இறைபக்தர்களின் குறிக்கோளாக வேண்டுமென்பது இறைதத்துவக் கொள்கையின்
10

Page 83
146
முக்கிய அம்சமாகும். வரலாற்றில் ஓர் ஏடு பின்வருமாறு இயம்புகின்றது:
ஈஸா (அலை) மூன்று பேரைக்கண்டனர். அவர்களின் உடல்கள் மெலிந்தும் முகங்கள் வெளுத்துப் போயுமிருந்தன. அவர்களைக்கண்டு ஈஸா (அலை) அவர்கள், அவர்களிடம், தாங்கள் மூவரும் இந்நிலை எய்தக் காரணம் என்ன என வினவினர். நரக நெருப்பின் பயத்தால் இக்கதி அடைந்தோம் என்று பதில் சொன்னார்கள். அதற்கு ஈஸா (அலை) பின்வருமாறு கூறினர். 'நீங்கள் படி இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பொருளுக்கு அஞ்சுகிறீர்கள். அஞ்சுபவர்களை அவன் மீட்டுவான். அவ்வாறு கூறியபின், இன்னும் மூன்று மனிதர்களை ஈஸா(அலை) அவர்கள் சந்தித்தார்கள்.
அ --- அவர்களின்
உடல்கள் முன்கண்டவர்களைவிட, - மெலிந்தும், முகங்கள் முன்னவர்களின் முகங்களைப் பார்க்கிலும், மிக வெளிறியும் இருந்தன. அவர்களிடமும் அதே கேள்வியை ஈஸா (அலை) கேட்டார்கள். அதற்கு அவர்கள் பின்வரும் பதிலைச் சொன்னார்கள். ''நாம் சுவனபதியை நாடிக் கொண்டிருக்கிறோம்.'' அதற்கு ஈஸா(அலை) ''நீங்கள் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு வஸ்துவை நாடுகிறீர்கள், அதை இறைவன் உங்களுக்குத் தருவான்.'' எனக்கூறிவிட்டு, பின்னும் மூன்று பேரைச் சந்தித்தனர். அவர்களின் உடல்கள், முன்னர் சந்தித்தவர்களைவிட மிகமிக மெலிந்தும் முகங்கள் வெளுத்தும் இருந்தன. அவர்களிடமும் ஈஸா (அலை) இக்கதிக்குள்ளாக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவர்கள், 'இறைநேசத்தால் இக்கதி அடைந்தோம்'' எனப்பதில் சொன்னார்கள். அதைச் செவியுற்ற ஈஸா (அலை), அவர்களைப் பார்த்து, ''நீங்கள் தாம் இறைவனுக்கு மிக நெருங்கி இருக்கின்றீர்கள்" என இரண்டுமுறை சொன்னார்கள். "
3ா (29)
ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் (1)
ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி
ஊருடன் பேருமா கிக் கானாகி மலையாகி வளைகடலு மாகியலை
கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி
கண்டபொரு ளெவையு மாகி

147
நானாகி நீயாகி அவனாகி அவளாகி
நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
நன்மைசெய் தாளு தற்கே வானோரும் அடிபணி தலுள்ள நீர் பின்தொடர
வள்ளல் இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.*
(மஸ்தான் ஸாஹிபு) பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! ஊனிலும், உயிரிலும், எல்லா உலகங்களிலும், உட்புறம் வெளிப்புறங்களிலும், ஒளியிலும், ஊர், பேர்களிலும், கானகங்களிலும், மலைகளிலும், சமுத்திரங்களிலும், கானகங்களிலே இருக்கும் விலங்குகளிலும், இரவிலும், பகலிலும், சந்திர சூரியனிலும், காணக்கூடிய எல்லாப் பொருள்களிலும், என்னிலும், உன்னிலும், அவனிலும், அவளிலும், நாதத்திலும், பூதத்திலும், சர்வவியாபியாகிய சிருஷ்டிகர்த்தாவான இறைவன் அடியேனுக்கு நன்மை செய்து ஆளுதற்கும் உம்மை நம்பினேன். ஆகையால் வானவர்களும் வந்து பணிகின்ற முகியித்தீன் ஆண்டகையாகிய தாங்கள் பின்தொடர வள்ளல் இறசூல் முன்னே
வரவேண்டும்.
'இயற்கையானது, இறைமகத்துவத்தின் வெளிப்பாடாகும்' எனும் உண்மையை, இஸ்லாமிய தத்துவ மேதாவியாகிய அபூஹாமித் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கீழ்க்கூறியவாறு விளக்கந்தருகிறார்.
* புகுந்துநின் றான் வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய் உயி ராகிப் புகுந்து நின் றான்புந்தி மன்னிநின் றானே தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே உடலாய் உயிராய் உலகமே தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந் தானாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே மேற்கூறிய திருமூலரின் பாடற்பொருளை மஸ்தான் ஸாஹிபு அவர்களின் பாடற்பொருளொடு ஒப்பு நோக்குக.

Page 84
148
ஐம்புலன்களால் அவதானிக்கும் எல்லாச் சிருஷ்டிகளும் சர்வ வல்லமையுள்ள இறைவனையும், அவனுடைய வல்லமையையும் சுட்டிக்காட்டுகின்றன. அவனுடைய அறிவும் மட்டிலா இயல்புகளும், எல்லாச் சிருஷ்டிகளிலும் வெளியாகி அல்லது அந்தரங்கமாகி வியாபித்திருக்கின்றன. கற்களிலும், மண்ணாலான பொருள்களிலும், தாவரங்களிலும், மரங்களிலும் மற்றும் எல்லா உயிரினங்களிலும், விண்ணிலும், மண்ணிலும், நட்சத்திரங்களிலும், நிலப்பரப்பிலும், சமுத்திரத்திலும், நெருப்பிலும், காற்றிலும், பொருளிலும், அதன் தன்மைகளிலும், சுருங்கக்கூறின் மானிடராகிய எம்மிலும் அவனின் சர்வவல்லமை ஐயமின்றிப் LI JG) / GDI T5 இருக்கின்றது.
ஆனால் வெளவால் எப்படி ஒளியில் பார்வையற்று இருளில் பார்க்கின்றதோ, எப்படி பூரண சூரிய வெளிச்சத்தில் பார்வை குன்றி இருளிலே சிறிதளவு பார்க்கும் தன்மை கொண்டிருக்கிறதோ, அதேபோன்று, மனிதனின் மனமும், இறைவனின் மகத்துவமான பரிபூரண ஒளியை நன்கு காண முடியாத நிலையில் இருக்கின்றது. 'கால நேரங்களுக்கு அப்பாற்பட்ட எல்லாவற்றுக்கும் முதன்மையான என்றும் ஒன்றான பரம்பொருளே இறைவன். அவன் என்றும் நிலைத்திருப்பவன், ஆதியும் அந்தமும் அற்றவன். அவனே ஆதி, அவனே அந்தம். அவனே சிருஷ்டிகளுக்கு அப்பாற்பட்டு தனித்து இயங்குபவன். அவனே சிருஷ்டிகளில் வியாபித்துள்ளவன். அவனின் அறிவு எல்லாவற்றையும் அறியக் கூடியதாய் இருக்கின்றது. அவனை ஒரு வஸ்துவோடும் ஒப்பிட முடியாது. அவனைப் போல் ஒரு வஸ்துவும் கிடையாது. விண்ணுலகமும் மண்ணுலகமும் அவனை அடக்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பாற்பட்ட மேல்நிலையில் இருக்கின்றான்.
அவனின் இருப்பு மனிதனின் அறிவிற்கு எட்டினாலும், அவனின் உண்மையான மகத்துவம் இறைஞானம் பெற்ற சிலருக்கே தென்படும். அவ்விறை ஞானத்தை இறைவன் நன்னடத்தையுடைய பக்தர்களுக்கே வெகுமதியாக அளிப்பான். அவர்களுக்கே என்றும் நிலைத்திருக்கும் சுவனபதியில் அவனின் திருமுகத்தைக் காணும் பாக்கியத்தையும் சன்மானமாகக் கொடுப்பான். இதனால், அவர்களின் அழகு சம்பூரணமாகின்றது.
 

அத்தியாயம் IV பரம்பொருளைச் சிந்திக்கும் இலக்கிய உருவகங்களும் குறியீடுகளும்
அல்லாஹ"தஆலாவான இறைவன் எல்லா வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளாயிருக்கின்றான். இதைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:-
இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்துக்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே யாவற்றின் சிருஷ்டிகர்த்தா. ஆகவே அவன் ஒருவனையே நீங்கள் யாவரும் வணங்குங்கள். சர்வ காரியங்களையும் கண்காணிப்பவன் அவனே, 'எவருடைய பார்வையும் அவனையடையாது. அவனோ யாவற்றையும் பார்க்கின்றான். அவன் எவரின் பார்வைக்கும் அகப்படாத நுட்பமும் தெளிவும் ஆனவன். யாவரையும் அறிந்தவன். '
(குர்ஆன் 6:102, 103)
வருணனைகளுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை அனுபவ
ரீதியாக அறிந்த ஓர் இறைஞானி, அவ் அனுபவத்தை எப்படி எடுத்துக் காட்டுவான்? இதனால்தான் இறைஞானிகள் தத்தம்
அனுபவங்களை, கவிமூலமாகவும், இசைமூலமாகவும், பலதரப்பட்ட இலக்கிய உருவகங்கள் மூலமாகவும், மனித சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டியிருப்பதை ஆத்மீக
ஞானவரலாற்றில் நாம் அவதானிக்கின்றோம். இறைஞான இலக்கியங்களில் இலக்கிய உருவகங்களும், ஒன்றோடொன்று முரணான கருத்துகளும், வர்ணனைகளும், பழமொழிகளும், குறியீடுகளும் நிறைய இருக்கின்றன. ஏனென்றால் வார்த்தைகளுக்கும், கற்பனைகளுக்கும், பாஷைகளுக்கும் எட்டாத மர்மமே பரம்பொருளாகும். அதை சாதாரண பேச்சு நடையால் கூற முடியாததனால் இறைஞானிகள், உருவகங்களாலும், உவமைகளாலும், அப்பொருள் "அது அன்று' 'இது அன்று ஆனால் அதுவும் அதுதான் "இதுவும் அதுதான்’ என்று வெளிப்படை ரீதியாக முரணாகவும், ஆனால் தத்துவரீதியில் ஒற்றுமையாகவும், உள்ள கருத்துகளை, எல்லாப் பாஷைகளிலுமுள்ள, இறைஞான இலக்கியங்களில் நிறையக் கையாண்டிருக்கின்றார்கள்.

Page 85
15O
இப்னு அறபி எனும் இறைஞானி தம்முடைய புகழ்வாய்ந்த 'புஸலிஸ" எனும் ஆக்கத்தில், மேற்கூறிய முரண்பாடான உருவகங்கள், நிறைந்த சொல்நயத்தோடு, இறைமர்மத்தை தத்துவ ரீதியாக எடுத்துக் காட்டி இருப்பதை ஏற்கனவே அவதானித்தோம். அவ் வருணனையை இலக்கியக் கண்ணோட்டத்தில், இன்னொருமுறை அவதானித்தால், மேற்கூறிய முரண்பாடான கற்பனைகளைச் சிந்திக்க முடிகின்றது. இதற்காக இப்னு அறபியின் வருணனையை இன்னொருமுறை கீழே குறிப்பிட்டிருக்கிறேன்:
இறைவன் இருக்கின்றான். அவனைப் பொறுத்தவரையில் அவனுக்கு முன்னும் பின்னும் ஒன்றுமில்லை. மேலுங் கீழுமொன்றுமில்லை. அவனுக்கு அண்மையென்றும் தூரமென்றும் ஒன்றுமில்லை. அவனுடன் இணைந்தோ, பிரிந்தோ ஒன்றுமில்லை. அவன் எங்கு இருக்கிறான். அவன் இடம் எது? அவன் எப்படி என்று சொல்வதற்கில்லை. அவன் அன்றிருந்தது போலவே இன்றுமிருக்கின்றான். அவன் ஒருமையற்ற ஒன்றாக இருக்கின்றான். அவன் தனிமையற்ற தனித்துவனாயிருக்கின்றான். அவனே முதல் இருப்பாகவும் கடைசி இருப்பாகவும், வெளித்தோன்றும் மூலப்பொருளாகவும் எல்லாவற்றுக்கும் உட்பொருளாகவும் இருக்கின்றான். அவனையன்றி முதலுமில்லை. கடைசியுமில்லை. வெளியாகும் வஸ்துவுமில்லை. உள்ளிருக்கும் மறைபொருளுமில்லை. அவனே அவைகளுக்கு (சிருஷ்டிகளுக்கு) ஆதாரமாகின்றான். இவை அவனாலேயே உண்மைப்பொருளாகின்றன. அவன் ஒன்றிலும் அடங்கவில்லை. ஒன்றும் அவனில் அடங்காமலில்லை. இவ்வாறு நீ அவனை அறிந்துகொள்வாயாக. இத்தகைய இறையறிவு கல்வியாலோ, அறிவாலோ, காரண சக்தியாலோ கற்பனையாலோ, புலனறிவாலோ, வெளிக்கண்ணாலோ, அகக்கண்ணாலோ, பார்வையாலோ உனக்குக்கிட்டாது. ஏனென்றால் அவனே அவனைக் காண்கின்றான். அவனாலே அவன், அவனை அறிகின்றான். பிரபஞ்சம் என்பது அவனின் தனித்துவத்தை மறைக்கும் ஒரு திரையாகும். அவனன்றி வேறொன்றுமில்லை. அவனன்றி வேறொன்றுக்குமிடமில்லை.
இறைவனன்றி வேறொருவன் இருக்கின்றான் என்று சொல்வாயானால் அத்தகைய வேறொருவனில்லை. நீ அவனையறியாய். மேலும் நீ அவனையே நோக்குவதையும், நீ அறியாய். ஆட்சி செய்பவனும் அவனே, ஆட்சி
செய்யப்படுபவனும் அவன் முன்பிருந்ததுபோன்றே இன்றுமிருக்கின்றான். அவன் ஆதிக்கத்துக்கோ, அவன் சிருஷ்டிக்கும் அதிகாரத்துக்கோ சிருஷ்டிகள்
தேவையில்லை.அவன் ஆகுக என்று சிருஷ்டிகளைப்

151
படைத்தபோது, அச்சிருஷ்டிகளின் தன்மை அவனில் ஏற்கனவே அடங்கியிருந்தது. எனினும், சிருஷ்டிகளைப் படைக்கு முன் எப்படி இருந்தானோ அவைகளைப் படைத்த பின்னும் அப்படியே இருக்கின்றான். அவனுடைய தனித்துவத்தில் அண்மை வஸ்துக்கும் மூலவஸ்துக்கும் வேற்றுமையேயில்லை. அண்மை என்பது அவன் சிருஷ்டிகளில் அவன் வியாபிப்பதே. ஆதி என்பது அவன் அவனாகவே இருக்கும் தனித்துவமே
இதைப்போன்ற உவமைகளும், முரணான கருத்துகளும் நிறைந்த வருணனைகளை பின்வரும் கவிதைகளில் நாம் அவதானிக்கலாம்.
(30)
தந்தையிலி தாரமிலி தானவனுநீயே
தண்மைகொ டெவர்க்குமொரு தாபரமு நீயே மைந்தரிலியன்னையிலி மன்னவனு நீயே
மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே சிந்தைதனி லிடறுதனைத் தீர்த்தருள்வை நீயே
தேட்டமறிந் தெனக்குதவி செய்பவனு நீயே அந்தமிலி நீயெனக்கோ ரிழிவுவ ராமலே
ஆதியே யான்உன் அடைக்கல மதானேன்
(பீர்முஹம்மது ஸாஹிபு)" பொழிப்புரை: இறைவா! நீ தந்தை தாரமற்றவனாய் இருக்கின்றாய். ஆனால் அளவற்ற அன்புடன் எல்லாஉயிர்களுக்கும் ஆதரவு அளிக்கின்றாய். மைந்தரோ அன்னையோ இல்லாத மன்னவனாக இருக்கின்றாய். ஆனால் மண்ணுலகில் எல்லா அடியார்களுக்கும் இரணம் வழங்குபவனாய் இருக்கின்றாய். மனத்துயர் போக்குபவனாகவும், என்றன் தேட்டம் அறிந்து உதவி செய்பவனாகவும் உள்ள , ஆதியந்தம் இல்லாத இறைவா, எனக்கோர் அழிவுவராமல் இருக்க நானுன் அடைக்கலமானேன்.
இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் ஒரு பெரியபாவமாகும். அவனுக்குத் தந்தையுமில்லை. தாரமுமில்லை, மைந்தனுமில்லை எனும் கருத்தை திருக்குர்ஆன்:
(நபியே) நீர் கூறும்; அல்லாஹ் ஒருவன்தான் (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன. அவன் எவரையம் பெறவுமில்லை. எவராலும் பெறப்படவுமில்லை. ஆகவே அவனுக்குத் தகப்பனுமில்லை, சந்ததியுமில்லை, தவிர அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை எனக்கூறுகின்றது.

Page 86
152
(31)
அருவமிலி உருவமிலி அண்டம் பொருந்துமிலி சுருபமிலி அருபமிலி தொந்தங் கடந்துமிலி அகரமிலி உகரமிலி அஞ்சுந்தெளிந்துமிலி
-அனல்சோதி அழகுமிலி பழகுமிலி கஞ்சம் புரிந்துமிலி
அயர்வதிலி துயர்வதிலி துஞ்சுங் குணங்களிலி யரையுமிலி நிறையுமிலி நெஞ்சங் குளிர்ந்துமிலி
--9|CU5eULI வரவுமிலி மருவுமிலி எங்கும் நிறைந்துமிலி
வளருமொளி கழறுமொழியன்புண் டழுந்துமொளி மகிழுமொளி புகழுமொளி சங்கில்
நிறைந்தவொளி-மணியாகி (செய்கு முகியித்தீன் மலுக்கு முதலியார்)" பொழிப்புரை: இறைவன் அருவமும் உருவமும் இல்லாதவன். அண்டசராசரங்களுக்கும் அப்பாற்ப்பட்டவன். சுருபம், அருபம், இல்லாதவன். பிணக்குகளற்றவன். அகரமான முதன்மையாய் இருந்தும், எல்லாப் படைப்புகளையும் தன்னுள் அடக்கியவன். ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவன். ஜோதிமயமாகி சொல்லொணா அழகுடையவன். அடியார்கள் பழகமுடியாதவன். அவன் அருள் இன்றித் தொடர்பு கொள்ள முடியாது. வெறுமையின்றி சதா உண்மைப் பொருளானவன். நித்திரைதூக்கம் மற்றும் குணங்களற்றவன். எல்லாப்படைப்புகளுக்கும் உட்பொருளாயும், அருளாயும், இருந்தும், தேவை, பற்று, இடம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டவன். எங்கும் நிறைந்து மகிழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்குமுரிய ஒளிமயமானவன். நாதமயமானவன்.
குணங்களுக்கும், பிணக்குகளுக்கும், காலம், நேரம், காரணம், பயன், என்னும் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனைப் பற்றி இப்னு அறபி கூறுவதாவது:
அவனே (இறைவனே) அவனைக் காண்கின்றான். அவனாலே, அவன் அவனை அறிகின்றான். பிரபஞ்சம் என்பது, அவனின் தனித்துவத்தை மறைக்கும் ஒரு திரையாகும். அவனின்றி வேறொன்றுமில்லை; அவனன்றி வேறொன்றுக்கு இடமுமில்லை."
(32)
நானல்ல நீயுமல்ல நடுவல்ல முடிவுமல்ல வானல்லப் புவியுமல்ல பதுறல்ல பொழுதுமல்ல
 

153
மீனல்ல மின்னுமல்ல விசைலெயிலாவுமல்ல ஊனல்ல உயிருமல்ல உறுமலர் தானுமல்ல
(பெரிய நூஹ"லெப்பை ஆலிம்)"
பொழிப்புரை: இறைவா! நீ வருணனைகளுக்கு அப்பாற்பட்டிருக்கிறாய். "நான்’ என்று சொல்வதற்கில்லை. நீ என்று சொல்வதற்குமில்லை. நடு, (UDig6), என்று சொல்வதற்குமில்லை. வான், புவனம், சந்திரன், நட்சத்திர ஒளி, உயிர், உடல், தாவரம், பூ என்று ஒரு பொருளாலும் வருணிக்க முடியாதவனாயிருக்கின்றாய்."
(33)
அருவில்லான், உருவில்லான் அணுவுமில்லான்
ஆணில்லான், பெண்ணில்லான், அலியுமில்லான் கருவில்லான் குருவில்லான், கலியுமில்லான் காசிதனில் எட்டாத கருணைநாயன் திருவில்லா நாவில்லான் ஈயுமில்லான் திசையெட்டொடு
பதினாறு கோணுமில்லான் மருவில்லான் ஒரெழுத்தாய் நின்றாடுஞ் சோதி
மணிநாதக் கடவுளை யான் போற்றினேன்.
(றசூல் பீவி)"
பொழிப்புரை: இறைவன் உருவமற்றவன். வடிவம் அற்றவன். ஓர் அணுவிலும் அடங்காதவன். ஆண், பெண், அலி எனச் சொல்லமுடியாதவன். கரு இல்லாதவன், குரு இல்லாதவன். வஞ்சகம் இல்லாதவன். கருணை மிகைத்தவன். பேச்சற்றவன், வண்மையில்லாதவன். எட்டுத்திசை, பதினாறு கோணங்களுக்கும் அப்பாற்பட்டவன். சமீபமில்லாதவனாகி ஒரெழுத்தின் விசுவரூபமாய் நிற்கும் பிரகாசந் தங்கிய இறைவனை நான் வணங்கினேன்."
(34)
சங்கந் தனிலும் படிப்பதிலைச்
சார்ந்தோ ரிடத்துங் கேட்பதில்லை முங்கித் தரளம் எடுப்பதற்கு
முத்த வெளியத னிற்சேர்ந்து கங்குல் பகலு மற்றிடத்திற்
கலந்தெந் நாளுமே யிருந்து தங்குந்துறையு மிதுவென்றே
தரித்துத் தானே தானாகே
(அப்துல் கனிபாவா)"

Page 87
154
பொழிப்புரை: இறைஞான மென்பது, தெய்வீக அருளால் மட்டுமே பெற்றுக் கொள்ளக் கூடியது. அதை கல்வி மூலமாகவோ, அறிவாளிகளின் உபதேசங்கள் மூலமாகவோ கற்றுக்கொள்ள முடியாது. எப்படியெனில் முத்துகளில் ஆசைப்படுபவன் கடலில் புகுந்து முத்துக்குளித்துத்தான் அவைகள்ைப் பெறமுடியும். அதைப்போன்று இறைஞானமெனும் முத்தை விரும்பும் ஒரு பக்தன் பகல், இருள் எனும் காலங்களுக்கு அப்பால்பட்ட தியானநிலையில் மூழ்கித்தான் நான்' ‘虎” யாகும் இறைஞானமெனும் முத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இறைவன், அறிவுக்கும், தர்க்க சாஸ்திரங்களுக்கும், மதசாஸ்திரங்களுக்கும், மற்றும் விஞ்ஞானங்களுக்கும், அப்பால்பட்ட பரம்பொருளானவன், அவனை அறியும் மார்க்கம் "நான் 'நீ எனச் சொல்லொணா இறையருளால் கிடைக்கும் இறைஞானமாகும். அதைச் சாதாரண அறிவினால் பெறமுடியாதென ரூமி(ரஹ்) பின்வருமாறு கூறுகின்றார்.
நாமத்தால் மட்டும் ஒரு பொருளை அறிவாயா? ரோஜா.ம.ல.ர் என்னும் எழுத்துகளால், ரோஜா மலரை அறிவாயா? நீ இறைவனின் பெயரை மட்டும் கூறினாய். போ. பேர் கூறும்பொருளைத்தேடு. விண்ணில்தான் சந்திரன் இருக்கின்றான். நீரில் தோன்றுவதுபோல் அல்ல. நாமங்களுக்கும் அட்சரங்களுக்கும் மேலான அந்நிலையை அடைய, உன் அழுக்குகளை சுத்தி செய்வாயாக. நூலின்றி, படிப்பின்றி, குருவுமின்றி முஹம்மத் (ஸல்) அவர்கள் அடைந்த ஞானஅறிவு, உன் இதயத்தில் உண்டாவதை நோக்குவாயாக. *
பகா எனும் பரிபூரண நிலையில், "நான் 'நீ என்னும் நிலை அற்றுப்போவதை ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். -
சுத்தமான நீரில் எப்படி திராட்சை ரசம் கலந்திருக்கிறதோ, அதேபோன்று, உன் ஆத்மா, என்ஆத்மாவில் கலந்திருக்கிறது. உன்னைத்தொடும் எல்லாம் என்னையும் தொடுகின்றது என்ன விந்தை? எல்லாவற்றிலும் நீயே நானாக" வியாபிக்கின்றாய். "
(35)
ஆதிநடு வந்தமுற்றுார் பேரற்று
அகம்புறமற் றேகமதா யுணர்வுமற்று
சாதிகுலம் பெண்ணா ணற்றலியு மற்று
தமர்கிளை யற்றுரு வமுடன் ரூபமற்று
 

155
ஆதியதா மும்மல முக்குணங்களற்று
மனநினைவோடாதி அந்தம் நடுவுமற்று நீதியுடனுயிர்க்கு யிராய்த் தொழில் மூன்றற்று
நிர்க்குணமாய் நிகழுமிறை யருள்காப்பாமே
(முகம்மத் மஸ்தான்)" பொழிப்புரை: இறைவா! நீ ஆதி அந்தம் என்னும் வரையறைகளற்றவன். நாமம், ரூபம், ஊர், என்பவையற்றவன். எங்கும் நிறைந்தும், உட்புறம், வெளிப்புறம் அற்றவன். இது, அது என்னுங் குணங்களற்றவன். ஆண், பெண், எனும் பாகுபாடு, பந்தங்கள் உருவங்கள் அற்றவன். நீயே மும்மலங்களுக்கும் அப்பாற்பட்ட ஆதிப்பரம்பொருளானவன், காலம் இடங்க ஊருக்கு அப்பாற்பட்டு படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் காரிய 'கள் செய்தும் அவைகளுக்கும் அப்பாற்பட்டு சதா இயங்குபவன். உன் அருளை நான் நாடுகின்றேன்.
ஆத்மீக முன்னேற்றத்திற்கு அகங்காரம், அஞ்ஞானம், ஆசாபாசங்கள்தான் பெரிய முட்டுக்கட்டைகளாக இருப்பவை. சூஃபித்துவக் கொள்கையில் (1) அன்-நப்ஸ், அல்-ஹைவானிய்யா என்னும் மிருகக் குணங்கள் நிறைந்த ஆத்மாவும் (2) அன்-நப்ஸ"ல்-அம்மாறா என்னும் காமக்குரோதங்களும், ஆசைகளும் நிறைந்த இன்னொரு ஆத்மாவைப்பற்றியும், குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இறைவனை ஒரு சிருஷ்டியோடும் ஒப்பிட முடியாது. அதனால்தான் இறைஞானிகள் அவனை 'உயிர்களுக்கெல்லாம் உயிராய்' என உயர்த்திப்பாடுகின்றார்கள். இறைவன் சாதி, குலம், பெண், ஆண் எனும் சார்பற்றவன். ஆனால் மனிதசமுதாயத்தில் பலதரப்பட்ட பாஷைகளும், கலாசாரங்களும் நிறைந்த இனங்களை அவன் படைத்து தன்மகத்துவத்தை வெளிப்படுத்தினான். இதைப்பற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களுடைய மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகளிருக்கின்றன. (30:22)"
(36)
அண்ட புவனம் கோடி யாகவே
அடங்கலு மமைத்த பெரியோனே இறைவா
ஆதியே சோதியே நீதபர நாதனே
அனாதி சமதான கோனே

Page 88
156
தொண்டர் முதலெவையும் ஆள்கின்ற வொன்றானவா
சோதி இறையே உனக்குத் துணையில்லை இணையில்லை துயிலில்லை உணவில்லை
சொரூப மில்லாத பொருளே என்றுமுள்ள வனுநீ நன்றுசெய்பவனுநீ
ஏகபரனான வனுநீ எப்பொழுது நற்பதவி தாவென் றியம்பினனே'
(அப்துல் காதிர் வாலைமஸ்தான்)"
பொழிப்புரை: அண்டத்தில் கணக்கற்ற கோடி உலகங்களைப் படைத்த இறைவா! வானம், பூமியாகியவற்றின் பிரகாசமாய் விளங்கும் சோதியே, நீதித் தீர்ப்பு நாளின் அதிபதியே, உன் அடியார்கள் முதல் அனைத்தையும் ஆட்சி செய்கின்றவனே, இணை, துணை, துயில், சொரூபம் இல்லாதவனே என்று மிருந்து நன்மை செய்யும் ஏகனே, எப்பொழுதும் நற்பதவி தாவென உன்னை வேண்டுகின்றேன்.
ஆதியேசோதியே என்னும் வருணனைக்குப் பின்னணியாக, திருக்குர்ஆனில் இறைவனை விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒளியானவனெனக் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பு: ஸஅரத்துன்நூர் (24.35)."
திருக்குர்ஆனின் சாரமாக விளங்கும் ஸ"ரத்துபாத்திஹாவில்: (அருளும் அன்பும் உடைய எங்கள் இறைவனே) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ, அவர்களுடைய வழியில்
(நடத்துவாயாக) (அவ்வழி உன்) கோபத்துக் குள்ளானவர்களுடையதுமல்ல. வழிதவறியவர் களுடையதுமல்ல "
எனக் கூறி மனிதவர்க்கத்தை நேரான பாதையில் செல்லுமாறு குர்ஆன் போதிக்கின்றது.
(37)
ஊரற்று நாமரூ பத்துடன் பற்றற்று உயர்ந்ததென் முன்னிற் கவே ஒன்றற் றிரண்டற்று வாக்கற்று மனமற்று
உதித்ததென் முன்னிற் கவே கூறுகுண மற்றுமொளி யுற்றும்வெளி தத்திக்
குதித்ததென் முன்னிற் கவே குறியற்றும் அறிவுற்று நிறைவுகுறை வற்றுங்
குலாவிய தென்முன் னிற்கவே
 

157
ஈறுமுதலற்றும்இன்றற்றுநாளையுமற்று
இருப்பதென் முன்னிற்கவே ஏதுமுன் னிற்க அடி யேனுமுமை நம்பினேன்
இன்பமுற் றாளு தற்கே மாறிலா நற்கருணை யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழும் என்னிருகண்
மணியே முகியித்தீனே.
(மஸ்தான் ஸாஹிப்)"
பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே ஊர், நாமம், ரூபம், பற்று இவைகளை அற்று இருக்கின்ற உயர்ந்த வஸ்துவானது, எனக்கு முன்னே நிற்கக்கடவது. ஒன்று, இரண்டு எனக் கூறுவதில்லாமல் வாக்கு, மனம் என்பதும் அற்று இயற்கையாய் உள்ள வஸ்துவானது எனக்கு முன்னே நிற்கக்கடவது. சொல்லப்படுகின்ற குணங்களும், செயற்கை ஒளியும் அற்று, இயற்கை ஒளியைப் பெற்று, தத்திக் குதித்த பொருளானது எனக்கு முன்னே நிற்கக் கடவது. குறிகுணங்களும், அறிவும், நிறைவும், குறைவும் நீங்கி விளங்குகின்ற பொருள் எனக்கு முன் நிற்கக்கடவது. அந்தமும் ஆதியும் அற்று, இன்றும் நாளையும் அற்றிருக்கும் வஸ்துவானது எனக்கு முன்பாக நிற்கக் கடவது. எது முன்னின்றாலும் நான் அடியவன் ஆகையால் நான் உன்னையே நம்பி இருக்கின்றேன். ஏனெனில் நீ மனமகிழ்ந்து ஆளுவாயென்று. ஆகையால் குணக்கேடில்லாத மிக்ககிருபையுள்ள நீர் பின்தொடர வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டும். (வடிவேலு முதலியார் உரையைத் தழுவி எழுதப்பட்டது.)
(38)
நீக்கமற வெங்கெங்கு நின்றுநிறை கின்றபொருள்
நேரிலென் முன்னிற் கவே
நிர்விஷய சுத்தமா சற்றபர வெளியான
நிர்க்குணமென் முன்னிற் கவே
தாக்கிமா கோடிமறை வாக்கியம் பறையுமா
தத்துவமென் முன்னிற் கவே

Page 89
158
தத்துவாதிகளற்ற முத்திக்கு வித்தான
* சற்குருவென் முன்னிற் கவே போக்குவர வற்றபரி பூரணா னந்தமெப்
போதுமென் முன்னிற் கவே புன்மைகுடி யானஅடி யேனுமுமை நம்பினேன்
பொய்மைதீர்த் தாளுதற்கே வாக்குமாறாதநர்க் குள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழும் என்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிப்)"
பொழிப்புரை: குணங்குடிவாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! எவ்விடத்தும் இடைவிடாமல் வியாபித்திருக்கின்ற பொருளானது நேராக என்கண்முன் நிற்க வேண்டுகிறேன். பரிசுத்தமான குற்றமற்ற நிர்க்குணமானது எனக்கு முன்னிற்க வேண்டுகிறேன். நான்மறைகளாலும் கூறப்படுகின்ற இறைதத்துவம் என்முன் நிற்க வேண்டுகிறேன். சுவர்க்கத்திற்கு முக்கிய ஆதாரமான ஞானாசிரியர் என் முன் நிற்க வேண்டுகிறேன். பிறப்பிறப்பற்ற பரிபூரணானந்தமானது எப்போதும் எனக்கு முன் நிற்க வேண்டுகிறேன். அற்பகுணமானது குடிகொண்டிருக்கின்ற அடியேனின் பொய்மைக் குணங்களை அறவே ஒளித்துக் கிருபை செய்வீரென்று உம்மை நம்பினேன். வாக்கு மாறாத ஒரே தன்மையுடைய முகியித்தீன் ஆண்டகை அவர்கள் பின்தொடர றசூல் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டும்.
* தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே எனுந் திருமந்திரப்பாடலின் தத்துவத்தையும் நோக்குக மஸ்தான் ஸாஹிபு (ரஹ்) அவர்களின் பாசுரங்கள் அனைத்திலும் கெளதுல் அஃலம் முகியித்தீன் ஆண்டகை அவர்களை ஞானகுருவாகக் கொண்டு குருவணக்கப்பாட்ல்கள் பல பாடியுள்ளார். பாடலின் ஈற்றடிகளில்
"குணங்குடிவாழும் முகியித்தீனாமென் குருபதம் சிரத்தின்மேற் கொள்வாம்" எனவும் ஆனந்தப்பத்துப் பாடல்களின் ஈற்றடிகளில்
நற்குணங் குடிகொண்ட பாத்துஷாவானகுரு நாதன் முகியித்தீனே' எனவும், சதகங்கள் தோறும் வரும் விருத்தப்பாடல்களிலும் தம் குருநாதருக்கு வழங்கும் கெளரவத்தையும் பயின்றுணரலாம். இப்பாடலில் குணங்குடியார் அவர்கள் தம் குருநாதரை 'முத்திக்கு வித்தான சற்குரு" எனப்பாடுகின்றார்.
 

1.59
(39)
தேடியே வந்தருள்தந் தடிமை கொண்டவென்
தேசிகன் முன்னிற் கவே சிற்பர வெளிக்கொளி கொழுக்குமா கர்ப்பூர
தீபமென் முன்னிற் கவே நாடரிய செஞ்சுடர் பரப்புகுரு நாதனெந்
நாளுமென் முன்னிற் கவே நானா விதங்கொண்ட வாசாம கோசரா
நந்தமென் முன்னிற்கவே ஈடுசோ டற்றசிற் சத்தியா மெம்பிரான் என்னெதிரின் முன்னிற் கவே ஏற்கைமுன் னிற்கஅடி யேனுமுமை நம்பினேன்
இங்குவந் தாளு தற்கே வாடாத சமநிலைய முள்ளநீர் பின்றொடர
வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழும் என்னிருகண்
மணியே முகியித்தீனே. (மஸ்தான் ஸாஹிப்)"
பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! நல்லடியாரைத் தேடிவந்து அருள்பாலித்து அடிமைப்படுத்திக் கொண்ட என்னுடைய ஞானாசிரியர் என்முன் நிற்க வேண்டுகிறேன். ஞானபரவெளிக்குப் பிரகாசத்தைக் கொடுக்கும் கர்ப்பூர தீபவொளிபோன்ற பொருள் என் முன்னிற்க வேண்டுகிறேன். எவராலும் நாடுதற்கரிய செஞ்சுடர் பரப்புகின்ற குருநாதனானவர் எந்நாளும் என் முன் நிற்க வேண்டுகிறேன். ஏகமாய், வாக்கிற் கெட்டாததுமான இறைவன் என் முன்னிற்க வேண்டுகிறேன். இணையற்ற ஞான சக்தியாகிய எம்பெருமான் எனக்கு முன்னிற்க வேண்டுகிறேன். என்னை ஒப்புக்கொள்ள முன்னிற்க வேண்டுமென்று அடியேன் நம்பிக்கை வைத்தேன். வாட்டமற்ற சமநிலைபேணும் முகியித்தீன் ஆண்டகை பின்தொடர, வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன் வந்து அருள வேண்டும். (வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது)
மேற்கூறிய மூன்று கவிதைகளிலும் நிரம்பிக்கிடக்கும் இலக்கிய உருவங்கள், இப்னு அறபி (ரஹ்) எழுதிய கிதாபுல் அஜ்விபா எனும் நூலில் கையாளப்பட்ட உவமைகளுடன் ஒப்பிடக்கூடியதாய் இருக்கின்றது."
அல்லாஹ"தஆலா சர்வ வல்லமையுடையவன் மட்டுமல்ல, அவன் சிருஷ்டிகளைப் பொறுத்தவரையில் அளவற்ற அருளாளனுமாவான். திருக்குர்ஆனும்

Page 90
16O
நிச்சயமாக அவன்தான் படைப்புகளை இல்லாமையில் நின்று தொடக்கமாக உண்டாக்கியவன். அவர்கள் மரித்த பின்னரும் அவர்களை அவனே மீளவைப்பான்.
அவன் மிக்க மன்னிப்போனும் நேசிப்போனுமாக இருக்கிறான். (அவன்தான்) அர்ஷ"டையவன். பெருந்தன்மையுடையவன். தான் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவன்’ எனக் கூறுகின்றது.
(அல்குர்ஆன்: 85; 13-16)" இறைஞானமென்பது இறையருளின் ஓர் அன்பளிப்பாகும். அது ஒளிமயமான இறைவனில் இருந்து உண்டாகும் ஓர் ஒளியாகும். இதைப் பற்றித் திருக்குர்ஆன்
எவர்கள் நம்முடைய வழியில் செல்ல முயல்கின்றார்களோ அவர்களை, நிச்சயமாக நாம் நம்முடைய நேரான வழியில் செலுத்துவோம்; நன்மை செய்வோர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான் என்று இயம்புகின்றது. (30:69)"
அபூயஸித் அல்-பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் இவ்விடயம் பற்றி கூறுவதாவது:
ஆரம்பத்தில் நான் இறைவனைப் பற்றி நான்கு தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தேன். அவனை நான்தான் சதா திக்ர் (தியானம்) செய்து கொண்டும், அவனை அறிய வேண்டி முயற்சித்தும் அவனை சதா நேசித்தும், அவனைத் தேடிக் கொண்டும் இருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் முடிவில் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்தேன். நான் அவனைத் தியானிக்க முன்பே, அவன் என்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான். நான் அவனை அறிய முன்பே அவன் என்னை அறிந்திருந்தான். நான் அவனை நேசிக்க முன்பே அவன் என்னை நேசித்துக்கொண்டிருந்தான். நான் அவனைத் தேட முன்பே அவன் என்னைத் தேடிக்கொண்டிருந்தான். நான் அவனுடைய சிம்மாசனத்தை அணுகினேனென்று நினைத்து, அந்த சிம்மாசனத்துக்கு நான் சொன்னேன். "சிம்மாசனமே இறைவன் உன்மேல்தான் அமர்கிறான், என்று சொல்கிறார்கள் அதற்கு சிம்மாசனம் பின்வருமாறு பதில் தந்தது:
எங்களுக்குக் கிடைத்த தகவல்படி அவன் உண்மையான பக்தனின் இருதயத்தில்தான் அமர்கிறான். சுமார் முப்பது வருடங்களாக எல்லாம் வல்ல இறைவனே
 

161
என்னுடைய கண்ணாடியாக இருந்தான். இப்போது நானே என் கண்ணாடியாக மாறிவிட்டேன். ஏனெனின் நான் நானாக இல்லை. நான்', 'அவன் (இறைவன்) என்று சொல்வது அவன் ஒருமையை நிராகரிக்கும் பெரியதோர் குற்றமாகும். 'நான் என்றொருவஸ்து அற்றுப்போனதால் சர்வ வல்லமை படைத்த இறைவனே என் கண்ணாடியாக இருக்கின்றான். 'நான்’ எனும் வஸ்து ஒழிந்து போனதினால் என் நாவினாலே அவன் பேசுகின்றான். '
(40)
தத்தியே கங்கறப் பெறுகிவரு மானந்த
சமரசப் பெருவாரியைச் சார்ந்தன்ப ரிதயங்களிக்கவே பொங்கிவரு
சந்ததச் சுகவா ரியைச் சுற்றிக் கவிந்துகொண் டெங்குமொரு மிக்கவே
சூழ்கருணை நிறைவாரியைச் சொற்பிரகாசந்தரு சுயஞ்சோதி யாய்நின்ற
சோமசுந்தரவாரியை எத்தனை விதங்கொண்டு சொல்லினும் சொல்லொணாத
இனிய பூரணவாரியை ஏப்பமிட வூட்டவடி யேனுமுமை நம்பினேன்
எட்டிவந்தாளு தற்கே மத்திபத் தீபநடு வுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே கங்கு கரையற்றுப் பெருகிவருகின்ற ஆனந்தமாகிய சமுத்திரத்தை, சேர்ந்துவரும் அடியார்கள் மனங்களிக்க பொங்கிவரும், என்றும் அழியாத சுகக்கடலை, எவ்விடத்திலும் ஒருமித்துச் சூழ்கின்ற கருணைக்கடலை, சொல்லப்படுகின்ற ஒளியைக் கொடுக்கின்ற சுந்தரக்கடலை எத்தனை விதங்கொண்டு சொன்னாலும் வார்த்தைக்கு அடங்காத இனிமையான பரிபூரணக்கடலை அடியேனுக்கு உண்பிக்கச் செய்வாய் என்று நம்பினேன். ஆகவே என்னை ஆண்டு அருள் செய்க. மத்திபமாகவுள்ள இருதய தீபத்தின் நடுவேயுள்ள நீர் பின்தொடர, வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன் வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத்தழுவியது.)
11

Page 91
162
இறைவன் கருணாகடாட்சமான பரம்பொருளாயும், சோதிமயமாயும், கருணைக்கடலாயும், பரிபூரணம் நிறைந்த அழகு மயமாகியும், சமரசம், சுகம் ஆகிய இன்பக் கடலாகவும் என்றும் இருக்கின்றான். அவனே அழகும் பேரானந்தமும் நிறைந்த உண்மைப் பொருளாக இருக்கின்றான். அவனின் ஒளியே இறைஞானமெனும் பக்தனின் இதயத்தில் உண்டாகும் ஒளிக்குக் காரணமாயிருக்கின்றது. எப்படியெனில், சூரியனின் ஒளியே தன்னைக் காணும் ஒளியைச் சிந்துகின்றது. இதைத்தான் சூஃபியாக்கள், நேர் அனுபவத்தில் உண்டான நம்பிக்கையெனும் ஒளி, அதாவது யதீன் என்று கூறுகின்றனர்.”
(41) அன்புப் பெருக்கைநல் லறிவுப் பெருக்கைமெய்ஞ்
ஞானாமிர்தப் பெருக்கை அணையற்ற பேராசை வெள்ளப் பெருக்கையறிவு
ஆகார வான்பெ ருக்கை இன்பப் பெருக்கையருள் பொங்கும்பெ ருக்கைவெளி
யெங்கெங்கு மொளிபெ ருக்கை ஏகப் பெருக்கையனு போகப் பெருக்கைநல்
இனியசெந் தேன்பெ ருக்கைத் தென்புப் பெருக்கைவெகு டம்பப் பெருக்கைமா
திவ்வியமது ரப் பெருக்கைச் சேரப் புகட்டஅடி யேனுமுமை நம்பினேன்
சித்தம்வைத் தாளு தற்கே வன்புப் பெருக்கை வடிவுள்ள நீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே. -
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! அன்பின் வெள்ளத்தை, அறிவாகிய வெள்ளத்தை, மெஞ்ஞான அமிர்த வெள்ளத்தை, அறிவுமயமாயிருக்கின்ற பெருவெள்ளத்தை, சுகமாகிய வெள்ளத்தை, திருவருளானது விளங்குகின்ற வெள்ளத்தை, சகல உலகங்களிலும் பிரகாசிக்கின்ற வெள்ளத்தை, ஒரே வஸ்துவாகிய வெள்ளத்தை, அனுபவமாகிய வெள்ளத்தை, இனிய செந்தேனின் வெள்ளத்தை, இஷ்டமான வெள்ளத்தை, மிகுந்த டம்பமான வெள்ளத்தை, திவ்யமான இன்ப வெள்ளத்தையெல்லாம்
 

163
அடியேனுக்குச் சேரும்படியாகச் செய்வாய் என்று சித்தம் வைத்து ஆளுதற்கு நானும் உன்னை நம்பினேன். அன்புவெள்ளத்தின் ரூபமுள்ள முகியித்தீன் ஆண்டகை பின்தொடர வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது.) இறையருளில் மூழ்கும் பேரின்பத்தையும், அப் பேரின்பத்தில் உணரும் ஒருமையுணர்ச்சியையும், சொல்லுக்கெட்டா வெள்ளப் பெருக்குக்கு கவிஞர் ஒப்பிடுகின்றார். இவ்விதமான பேரின்பநிலைகளை எடுத்துக் காட்டும் இலக்கிய உருவகங்கள் சூஃபி இலக்கியத்தில் எத்தனையோ ஆக்கங்களில் காணக்கூடியதாயுள்ளது. உதாரணமாக பரீதுத்தீன் அத்தார் (ரஹ்) என்னும் சூஃபிஞானமேதை பின்வருமாறு மொழிகின்றார்.
உலகமெலாம் இறையன்பின் சந்தையாகும் இறையன்புக் கெட்டாத வஸ்திலையே சிருஷ்டியெலாம் இறைஞானத்தில் பிறந்தவையே, அவனருளிலே தஞ்சமடைந்து அவனருளையே தேடுகின்றன. விண்ணும் மண்ணும் சூரியசந்திர தாரகைகளும் அவன் அருளைச் சுற்றியே சுழலுகின்றன. அவன் அன்பிலே எல்லாம் அதிர்ச்சித்து இறையன்பு எனும் மதுவிலே மயங்குகின்றன. ஒரு பக்தனின் நிசப்தத்தை நோக்கி இறையன்பு கேட்டது. ‘என்னதான் நீ தேடுகின்றாய்? அன்பையே தேடுகின்றேன்! என பதில் சொன்னது. அன்பே எல்லாச் சிந்தனைகளின் பொருளாகும் அன்பில் 'நானுமில்லை", "நீயுமில்லை’ ஏன் அன்பில் 'நான் அற்றுப்போய்,
அவனில் (இறைவனில்) மூழ்கிவிட்டேன் அன்பை மறைக்கும் திரையை நான் நீக்கிவிட்டேன். 'நான்’ எனும் ஆலயத்தின் அந்தரங்க ஆத்மாவில் ஒப்பற்ற அன்பை என்தோழனாகக் கண்டேன் இருலோகத்தின் இரகசியத்தை அறிந்தஞானி அன்பிலே அவ்விரகசியத்தின் முடிவைக் கண்டான். *
(42)
பெந்தமொடு முத்தியு மகிழ்ச்சியு மிகழ்ச்சியும்
பின்னுமுன்னுங்கெட் டதைப்

Page 92
164
பெரிதுசிறி தருவுருவொ டதுவிதென் பதுவும்
பிறப்பிறப் புங்கெட் டதை நிந்தித்த லோடுவந் தித்தலும் பொய்மையொடு
நிசமென்பதுங்கெட் டதை நீநானெ னலுமொன் றிரண்டெனலு நீதமொடுஅ
நீதமென லுங்கெட்டதை அந்தி பகல் போக்குடல் வரவுமன வாக்கொடிங்கு
அங்கென்பதுங்கெட் டதை அறியாம லறியவடி யேனுமுமை நம்பினே
னறிவுதந்தாளு தற்கே வந்தடிமை கொள்ளமன முள்ளநீர் பின்தொடர
வள்ளல் இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே ஆன்மாவின் பாசபந்தமும், முத்தியும், மகிழ்ச்சியும், இகழ்ச்சியும், பின்னும், முன்னும் ஆகிய இவைகளில்லாத வஸ்துவை, பெரிது, சிறிது, ரூபம், அரூபம் அது இது என்று சொல்லுபவைகளும், பிறப்பு, இறப்பு இவைகளெல்லாம் இல்லாத வஸ்துவை, நிந்தனை செய்தல் வந்தனை செய்தல் பொய்மை நிசம் எனும் இவைகளில்லாத பொருளை, நீ என்பதும், நான் என்பதும், ஒன்று, இரண்டு, நீதி, அநீதி என்பன இல்லாத பொருளை, இரவு, பகல், இறப்பு, பிறப்பு என்பதும், மனமும், வசனமும், இங்கு என்பதும், அங்கு என்பதும் இல்லாத வஸ்துவை, அறியாவண்ணமே அறிய அடியேனாகிய, நானும் எனக்கு நல்லறிவு புகட்டி ஆளுதற்பொருட்டு வணங்கினேன். அடியார்களே தாமேவந்து அடிமைகொள்ள , திருவுள்ளங்கொண்டிருக்கும் நீர் பின்தொடர, வள்ளல் இரசூல் (ஸல்) அவர்கள் எனக்கு முன்னர் வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது.) எல்லா வஸ்துகளையும் படைத்து, ஏகாந்த நிலையில் இருக்கும் இறைவன் எல்லாக் கருத்துகளுக்கும் அப்பால்பட்ட தனித்துவநிலையில் இயங்குகின்றான். இதைப் பற்றி ஜாமி (ரஹ்) கூறுவதாவது:
ஹக்கனான இறைவன், பிரபஞ்ச வரையறைகளுக்கும், பன்மை நிலைகளுக்கும் அப்பால்பட்டு, தனித்துவநிலையில் பரம்பொருளாகி இயங்குகின்றான். ஆனால் அவன் பிரபஞ்சம் எனும் பலதரப்பட்ட சிருஷ்டிகளில்
 

1.65
வியாபித்திருப்பதால், அவனிலேதான் அண்ட சராசரங்கள் யாவும் தங்கி இருக்கின்றன. உலகமென்பது அவன் வெளித்தோற்றமான சிருஷ்டியாகும். ஹக்கனென்பது உலகின் மறைந்த பரம்பொருளாகும். உலகம் சிருஷ்டிக்கப்படுமுன் அவனுடன் ஒருமைநிலையில் இருந்தது. சிருஷ்டிக்கப்பட்டபின் அவனே உலகத்தின் உண்மைப் பொருளாயிருக்கின்றான்'
(43)
அந்தமுதல் முன்பின்னொடு பக்கநடு வாகிநின்று
அவைக ளற்றது வுமாகி அருவாகி யுருவாகி யருவுருவ மற்றவறி
வாகார மோன மாகித் தந்தைதா யாகியருள் தந்தகுரு வாகியென்
தன்னுயிர்க் குயிரு மாகித் தாயிற் சிறந்தவந் நேயச் சிறப்பாய்ச்
சதானந்த ஞான மாகிச் சிந்தைசெய வந்ததிற மாகியெனை யாட்கொண்ட
தேசிகன் றானு மாகித் தெளியுமொளி புரிய அடி யேனுமுமை நம்பினேன்
சித்திதந் தாளு தற்கே வந்திருந் தருளுதயை யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)"
பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! அந்தம், முதல், முன், பின், பக்கம், நடு என்னும் இவைகளாகியும், இவைகளல்லாததாகியும், ரூபமற்றும், அருவுருவமாகியும் மற்ற அறிவாகார மோனமாகியும், தந்தையாகியும், தாயாகியும், கருணையில் குருவாகியும், உயிருக்கு உயிராகியும், தாயைப்பார்க்கினும், ஆனந்தம் விளைக்கின்ற ஞானமாகியும், சிந்தனை செய்தற்கு வல்லமையாகியும், என்னை அடிமைகொண்ட ஞானாசிரியனாகியும் தெளிகின்ற பிரகாசத் தையுடைய எனக்கு சித்தி கொடுத்து ஆளுதற்கு உம்மை நம்பினேன். ஆகையால் வந்திருந்தருளு தயையுள்ள நீர் பின் தொடர வள்ளல் இறசூல் முன்வந்தருளவேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத்தழுவியது.)

Page 93
166
(44)
பார்த்ததிக் கெங்குமொரு வெளியாகி யென்பரா
பரப்பிரம வெளியு மாகிப் பற்றுமன வெளியாகி மனவெளி கடந்தமுப்
பாழான வெளியு மாகிக் - கூர்த்தவறி வத்தனையு மேற்றபடி கொள்ளையே
கொண்டகடு வெளியு மாகிக் கோடானு கோடிபல வண்டபகி ரண்டமுங்
கொண்டபெரு வெளியு மாகிச் சேர்த்தநிலை குலையுண்டு போகாது நிலையுண்ட
சிற்சத்தி வெளியு மாகிச் செறியுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
தெளிவுதந்தாளு தற்கே வார்த்தைதப் பாதநா வுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே.
(மஸ்தான் ஸாஹிப்)" பொழிப்புரை: வளருகின்ற திருவருள்நிறைந்து குணங்குடிகொண்டு வாழ்கின்ற கண்களின் மணிபோன்ற முகியித்தீன் ஆண்டகை அவர்களே! பார்க்கின்ற திசையனைத்தும் பெருவெளியாகவும், என்பராபரப் பிரமவெளியாகியும், மனம்பற்றுகின்ற வெளியாகியும், மனவெளிக்கு அப்பாலாகிய வெளியாகியும், கூர்த்தமதி அனைத்துக்கும் தகுந்தபடியே கொள்ளை கொண்ட பரவெளியாகியும், அனேககோடி அண்டபகிரண்டங்களையும், தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவெளியாகியும், உண்மை நிலைத்திருக்கின்ற ஞானவெளியாகியும், நிறைந்திருக்கின்ற திருவருளின் ஒளியானது புரியவும், தெளிவைக் கொடுத்து ஆளுதற் பொருட்டும், இறைவனை அடியேன் நம்பினேன். ஆகையால் வார்த்தையானது தப்பாத நாவையுள்ள முகியித்தீன் ஆண்டகை பின்தொடர, வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது.) 'கோடானு கோடி பல அண்ட பகிரண்டமுங் கொண்ட பெருவெளியுமாகி’ எனக் கவிஞர் இறைவனின் சர்வ வல்லமையையும், அவன் எங்கும் நிறைந்து, எல்லாவற்றையம் அறிந்தும் இருக்கும், இறைமகத்துவத்தையும் வருணிக்கின்றார். இதைத் திருக்குர்ஆன் பின்வரும் வண்ணம் வழங்குகின்றது.
 

167
கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே (உரியன) ஆதலின் நீங்கள் (தொழும்போது) எத்திசையை நோக்கினும், அஃது அல்லாஹ்வின் திசையே, நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன். (அல்குர்ஆன் (2:15)”
பார்வைகள் அவனை அடைய முடியா;. அவனோ யாவற்றையும் பார்க்கின்றான். அவன் எவரின் பார்வைக்கும் அகப்படாத நுட்பமும் தெளிவும் ஆனவன்; யாவரையும் அறிந்தவன்."
(45) வேதவேதாந்தமேல் வீடாகி நட்டநடு
வீட்டின் விளக்கு மாகி வித்தக னிருக்குநவ ம.ை மாட மாகியொளி
விரிகதிர்ச் சுடருமாகி, நாதகி தம்பல முழக்கமிட் டோலமிடு
நாதநா தாந்த மாகி நற்குணங் குடியா னெனப்பே ரெனக்கருளும்
ஞானதிரு நாம மாகி
ஆதிமுத லந்தமுநீ தானாகி விரிவா
யகண்டிதா காரமாகி
அவிருமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
அறிவுதந்தாளு தற்கே மாதுரய பாதமல ருள்ளநீர் பின்தொடர
வள்ளல் இறசூல் வருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே வேதங்களும், வேதாந்தங்களும், மேல்வீடுகளாகியும், அப்படி நட்ட நடுவாயுள்ள வீட்டின் விளக்குமாகியும், பரிசுத்தமானவன் எழுந்தருளி இருக்கின்ற நவமணி மாடமாகியும், தேஜசைவிரிக்கின்ற சுடராகியும், நாதத்தையுடைய கீதங்களைப் பலவாகப் பாடி அதனால் முழக்கமிட்டு ஒலஞ் செய்கின்ற நாத நாதாந்தப் பொருளாகியும், நல்ல குணங்குடியா னென்கிற பேரை எனக்குத் திருவருள் செய்யும்
ஞானத் திருநாமமுடையதாகியும் ஆதிவஸ்துவும், இடைவஸ்துவும், அந்தமாய்க் காணப்படும் வஸ்துவும் தானேயாகியும், சர்வவிடயங்களிலும் விரிந்திருக்கின்ற
வஸ்துவாகியும், உண்மைஞானத்தைக் கொடுத்து ஆளுதற்காகவும் அடியேனும் உம்மை நம்பினேன்.ஆகையால் மகத்தான

Page 94
168
பரிசுத்தமுள்ள திருவடிமலர்களையுடைய நீர் பின் தொடர முஹம்மது (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது.)
திருக்குர்ஆனில் வரும் இருபத்து நாலாவது அத்தியாயம் முப்பத்து ஐந்தாம் திருவசனத்தையும், இந்நூலின் கவிகளான 12ஆம் 13 ஆம் பாடல்களையும் மேற்கூறிய கவியுடன் ஒப்புநோக்குக.
ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் பிரபஞ்சத்தில் நிரம்பிக் கிடக்கும் நானாவிதமான சப்தங்கள் இறைவனின் மகத்துவத்தை சதாவும் பலதரப்பட்ட நாதங்களில் புகழ்கின்றன, எனக் கூறுகிறார்:
தாரகைகள் சுழலும் இசையையே, மனிதன் சத்தத்தாலும், புல்லாங்குழலாலும், கீதமாகப் பாடுகின்றான். ஆதத்தின் பிள்ளைகளான நாம், இவ் ஒசைகளை சுவர்க்கத்தில் முன் கேட்டோம் மண்ணும், நீரும், திரைபோட்டு எங்களை மறைத்தாலும் சுவர்க்கத்தின் கீதங்களை மெதுவாகக் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். பிரபஞ்சத் திரைகள் எம்மை மறைப்பதால் தாரகைகள் நடனமாடும் இசைகளை எப்படித் தெளிவாகக் கேட்போம், *
(46)
கண்ணான கண்ணேயென் அன்னமே யென்றழுவர்
கண்டகண் காட்சி யாகிக் கவலைகுடி கொண்டுதட் டழியார்கள் நன்மனக்
கண்ணாட்டி தானு மாகிப் மண்ணான வஞ்சநெஞ்சத் தினர்க் கேறாது
மறைவுதரு புதைய லாகி மதபேத மோதிமதி கெட்டவர்க் கெட்டாத
வான்கருணை வெள்ள மாகி எண்ணாத எண்ணமெண் ணாரெடுத் துண்ணுபேர்
இன்பப் பெருக்கு மாகி எய்துமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன்
இன்புதந்தாளு தற்கே வண்ணத் திருக்கருணை யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)"
 

169
பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! என்னுடைய கண்ணே, அன்னமே என்று கண்ணினது காட்சியாக அழுவார்கள். கவலை மிகுதியால் தட்டழிந்து கெடாதவர்களுடைய உயர்ந்த மனத்தின் கண் கண்ணாட்டியாகியும், மண்ணாவதிற் கேதுவான வஞ்சகத்தையுடைய மனத்தினர்க்கு மறைவு கொடுக்கின்ற புதையலாகியும், சமயபேதம் சொல்லும் அறிவற்றவர்களுக்கு, எட்டாத வான்கருணை வெள்ளமாகி எண்ணத்தகாத எண்ணத்தை எண்ணாதவர்களெல்லாம் எடுத்தெடுத்து உண்ணுகின்ற பேரின்ப வெள்ளமாகியும், பொருந்தின பிரகாசம் மிகும் பேரின்பம் இறைவனால் அருளி ஆளவும், நான் உம்மை நம்பினேன். ஆகையால் வடிவுபொருந்திய கருணையுள்ளநீர் பின்தொடர, முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது.)
(47) எல்லைநிலை சொல்லரிய வல்லமையொ டெங்கனும்
இருந்தஞா னோத யத்தை எப்பொருளு மெப்பொழுது மெல்விடமு மவ்வடிவு
இலங்குஞானோத யத்தை அல்லினும் பகலினும் அன்பர்மன இல்லினில்
அடைந்தஞா னோத யத்தை அழியாப் பதிக்குவந் தாள்குணங் குடியார்
அணைந்தஞா னோதயத் தைத் தொல்லையறு நல்லறிஞர் சொல்லும்வழி செல்லின்வெளி
தோற்றுஞா னோதயத்தைத் தொழுதெழாப் பாவியடி யேனுமுமை நம்பினேன்
தொண்டுகொண் டாளு தற்கே வல்லபஞ் சொல்லவந்துள்ள நீர் பின்தொடர
வள்ளல்இற சூல் வருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! எல்லையினுடைய அளவைச் சொல்லுவதற்கரிய வல்லமையுடன் எவ்விடத்திலும் வியாபித்திருக்கும் ஞானோதயமாகும் வஸ்துவை, எந்தக் காலத்திலும் எந்தப் பொருளிலும் எவ்விடத்திலும் அவ் வடிவானது விளங்குகின்ற ஞானோதய வஸ்துவை, இரவிலும், பகலிலும் அடியார்களுடைய மனமாகிய வீட்டினில் எழுந்தருளியிருக்கின்ற

Page 95
17Ο
ஞானோதயப் பொருளை, அழிதல் இல்லாத பதியின்கண் வந்து, என்னை ஆண்டுகொள்கின்ற குணங்குடியார்அணைந்த ஞானோதய வஸ்துவை, துன்பங்கள் ஒழிந்த இறைஞானிகள் போகின்ற வழியில் சென்றால் தேஜோமயமாய் காணப்படுகின்ற ஞானோதய வஸ்துவை, "தொழுதெழாப் பாவியாகிய நானும் உம்மை அடைய நம்பினேன். ஆகையால் வல்லபமுள்ள நீர் பின்தொடர வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியார் உரையைத் தழுவியது.)
எல்லா மறிந்த இறைவன் தன் ஏகாந்த அறிவை சிருஷ்டிகளில் புகுத்தி, அவைகளில் வியாபித்தது மல்லாமல், தன்னை நாடும் பக்தர்களின் இருதயத்தை அவ் அறிவால் ஒளிமயமாக்குகின்றான். அதனால் அவன் அருளை நாடும் எவரும், தேவையற்ற வாக்குவாதங்களில் தன் காலத்தை வீணாக்காமல், இஸ்லாத்தின் மரபுகளைக் கடைப்பிடித்தால் இறையருள் தவறாமல் கிட்டும் எனும் உண்மையைத் 'தொல்லையறு நல்லறிஞர் சொல்லும்வழி செல்லின் வெளிதோற்று ஞானோதயத்தை' என கவிஞர் இங்கு எடுத்துக்காட்டுகின்றார். இதைப் பற்றி முஹம்மத் Lugiai)--9) gi-Lugios) (Muhammad Fadil-al-Balkhi) 6Tairgllb g)60)p(65ITGof சொன்னதை அல்-ஹ"ஜ்விரி (ரஹ்) பின்வரும் வரிசையில் அவர் எழுதிய ஒரு நூலில் குறிப்பிடுகின்றார்.
இறைஞானம் மூன்று வகைப்பட்டதாகும் அவையாவன முறையே, இறைவனிடமிருந்து வருமிறைஞானம், இறைவனுடன் சேர்ந்து பெற்றுக்கொள்ளும் இறைஞானம். மூன்றாவது
இறைவனைப் பற்றிய இறைஞானமாகும். இறைவனைப் பற்றிய இறைஞானம்தான் “இல்மி மஃரிபத் (im-i maritat) எனும் அறிவாகும். இவ்வறிவின் மூலம்தான், நபிமார்களும் ஒலிமார்களும், அவனைப் பற்றி அறிந்திருந்தார்கள். அதை சாதாரண விதத்தில் ஒருபக்தனுக்குப் பெற்றுக்கொள்ள முடியாது. அது இறைவனின் வழிகாட்டலிலிருந்தும் அவன் போதனை மூலமாகவும் உண்டாகும் அறிவாகும். இறைவனிடமிருந்து வரும் அறிவுதான் இல்மி ஷரீயத் (Imi Shariat)" எனக் கூறப்படும், மனித சமுதாயத்திற்கு அவன் பிறப்பித்த கட்டளைகளாகும். இறைவனுடன் பெறும் அறிவைத்தான், நிலைகள் (ஹால்) என்றும், தரீக்கத் என்றும் கூறப்படும். இவ் அறிவின் ஆழம், ஒரு ஒலியின் ஆத்மீக முன்னேற்றத்தில் தங்கி இருக்கின்றது. 'ஷரீயத் இன்றேல் மஃரிபத் பிழையாகும்.
 

171
ஆத்மீக முன்னேற்றத்தில் ஏற்படும் நிலைகள் அல்லது ஹால்கள் தென்படாவிட்டால், 'ஷரீயா தகுந்தமுறையில் கையாளப்படவில்லையென்பது அர்த்தமாகும். கப்லத் (GHAFLAT) எனும் கவலையீனத்தால், LDg அனுஷ்டானங்களிலும், நடத்தை நெறிகளிலும் தவறுகள் ஏற்படலாம். இவ்விடயத்தைப்பற்றி யஹ்யா பின் முஹத் gyii UJITGMó) (Yahya b-Muhad al-Razi) GTGØJub GO)6(g5 L 96ăTGJOU5b வண்ணம் உபதேசம் செய்தார்.
மூன்று வகையான மனிதக் கூட்டங்களில் இருந்து நீ விலகி நடப்பாயாக. அவர்கள் யாரென்றால் கவலையீனமான பக்தர்களும், கபடம் நிறைந்த மனதோடு திருக்குர்ஆன் ஒதுபவர்களும், சூஃபியாக்களைப் போல் வேஷம் போட்டு போலியாக நடிப்பவர்களுமாவார்.
கவலையீனமான பக்தர்கள் உலக ஆசைகளுக்கு
அடிமையாகி, அரசர்களையும் கொடுங்கோல் மன்னர்களையும் ஆளுநர்களையும் புகழ்ந்து வாக்குவாதங்களில் மூழ்கி, உண்மையான ஷைகுமார்களையும் வழிகாட்டிகளையும் நிந்தனை செய்வார்கள்.
கபடமனப்பான்மையோடு குர்ஆன் ஒதுபவர்கள்
அவர்களின் தன்னலங்கள் நிறைவேறினால் எந்தக் கெட்ட செயல்களையும் புகழ்வார்கள். அதேசமயம் அவர்கள், வெறுக்கும் நற்செயல்களையும் இகழ்வார்கள். கபடத்தையே கையாண்டு போலித்தனமாக நடந்துகொள்வார்கள்.
மூன்றாவது வர்க்கமான போலி சூஃபியாக்கள் உண்மையான ஷைகுமார்களின் உபதேசம் பெறுவதுமில்லை. அவர்கள் கூறும் நன்னெறிகளைக் கையாள்வதுமில்லை. ஆனால் ஒருவிதமான ஆத்மீக அனுபவமுமின்றி கபூதி எனப்படும் நீல ஆடைகளை அணிந்துகொண்டு தவறான பாதைகளில் செல்வார்கள்.
(48)
முத்தைநவ மணியையொளி பத்திபா யும்மணியை
மோனமணி ஞான மணியை
மொய்த்தகதிர் மாசிலாமணியைவா னாதியாம்
மூவுலகு மான மணியைச்
சித்திமணி யைச் சித்தி தருமுத்தி மணியையென்
சிந்தைகுடி கொண்ட மணியைத்

Page 96
172
திவ்யகுரு மணியா லிழைத்தசிங் காசனச்
சிகரத்தி னுச்சி மணியைப் பத்தர்கட் கெய்துசூ டாமணியை நிறைபார்த்த
பரமார்த்த மான மணியைப் பணிபூண்டு பார்க்கவடியேனுமுமை நம்பினேன்
பணிபூட்டி யாளுதற்கே வைத்ததீ பத்திணிக ருள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே முத்தும், ஒன்பது ரத்தினங்களும் ஆகிய இவை சேர்ந்து, சேர்ந்த ஒளியானது பாய்கின்ற மணியை, மெளனமெனும் சாதனத்தையுடைய ரத்தினத்தை, ஞானரத்தினத்தை, நிறைந்த கிரணங்களையுடைய மாசிலா மணியை, மூன்று உலகங்களும் பரவியிருக்கின்ற மணியை, எல்லாக்காரியங்களிலும் வல்லமையுள்ள ரத்தினத்தை, அப்படிப்பட்ட வல்லமையை மற்ற யாவருக்கும் கொடுக்கின்ற ரத்தினத்தை, அடியேனுடைய மனத்தின்கண் குடி கொண்டிருக்கின்ற எல்லாம்வல்ல ரத்தினத்தை, உயர்ந்த நிறம் பொருந்திய ரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனச் சிகரத்தில் வாழ்கின்ற ரத்தினத்தை, அன்பர்களுக்குப் பொருந்தின சூடாமணி என்னும் ரத்தினத்தை, அளந்து கண்டுகொண்ட உயர்வாகிய ரத்தினத்தைக் கொண்டு, பூண்டு பார்ப்பதற்கு, அடியேனாகிய நான் உம்மை நம்பினேன் என்னைப் பணிபூட்டியாள்வதற்கே, யாவரும் வைத்திருக்கின்ற தீபத்திற்கு ஒப்பாகிய நீர் பின்தொடர வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியார் உரையைத் தழுவியது.) மேற்கூறிய கவிதையில் இறைமகத்துவங்களை பலதரப்பட்ட மணிகளாக ஒப்பிடப்பட்டிருக்கின்றன. அவனின் ஒவ்வொரு வல்லமையும் ஒப்பிட முடியாத அழகு வாய்ந்ததென கற்பனை பண்ணப்பட்டிருக்கின்றது. மற்றும் ஏனைய இறைமகத்துவங்கள் முன்கொடுக்கப்பட்ட கவிகளில் நன்கு விமர்சிக்கப்பட்டிருந்ததை நாம் படித்தறிந்தோம்.
(49)
தொலையாத வான்கருணை குடிகொண்டிருந்ததே
சோமயா நந்த குருவைச்
 

173
சொந்தமுட னென்றனையும் வந்தடிமை கொண்டே
சுகந் தந்த மெளனகுருவை நிலையாத மாயைநிலை குலையநிலை குலையாத
நெறிதந்த ஞானகு ருவை நித்தியா நந்தசுக முற்றுமசூ மூதென்ற நிட்டைநேரிட்ட குருவைச் சலியா தணைத்துமுத் தந்தர வெனைப்பெற்ற
தந்தையாய் வந்த குருவைத் தழுவவறி யாதஅடி யேனுமுமை நம்பினேன்
தயைபுரிந் தாளுதற்கே மலைகள்பொடி படுநடையுமுள்ளநீர் பின்தொடர
வள்ளல் இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியேமுகியத் தீனே.
(மஸ்தான் ஸாஹிப்)"
பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! நீங்காத பெருங்கருணை குடிகொண்டிருக்கும் பிரகாசம் பொருந்திய ஆனந்த குருவை, சொந்தமுடன் என்னையும் வந்து அடிமையாக்கிக் கொண்டு சுகமளித்த மெளனகுருவை, நிலையற்ற மாயை நிலைகுலைய, நிலையான நெறியாகிய தீனுல் இஸ்லாத்தைத் தந்த ஞானாசிரியனை, அழியாத ஆநந்தத்தையுடைய இன்பத்தை அடைந்து, மகுமூது என்று சொல்லும் நிட்டையானது நேரிட்ட ஞானகுருவை, மனஞ்சலியாமல் அணைத்து முத்தம் கொடுக்க எனையீன்ற தந்தையாக வந்த ஞானாசிரியனை, தழுவுதற்கு அறியாத அடியேனாகிய நான் உம்மை நம்பினேன். நீ தயவாய் ஆளுவதற்கே, மலைகள் தூள்தூளாகும் நடையை உடைய நீர் பின் தொடர முஹம்மது (ஸல்) அவர்கள் முன் வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத்தழுவியது)"
இறைஞானத்தை ஒரு பக்தனின் உள்ளத்தில் உண்டு பண்ணுபவன் இறைவனாகையால் அவனை ஒரு குரு என்று கவிஞர் வருணிக்கின்றார். இதே கருத்தை எத்தனையோ சூஃபிஞானிகள் தம்தம் ஆக்கங்களில் எடுத்துக்காட்டி இருக்கின்றார்கள். உதாரணமாக
இறைவனை இறைவன் மூலமாகவே நான் அறிகின்றேன். இறைவன் அல்லாதவற்றையும் இறைவன் எனக்குத் தரும் இறைஞான ஒளிமூலமாகவே அறிகின்றேன் - அலீ (ரலி)" இறைவனை அறியும் பாதையை இறைவன் அல்லாமல் வேறு ஒருவராலும் காட்ட முடியாது. அதனால் அவனை வணங்கும்

Page 97
174
மார்க்கத்தைத் தேடுவதே அறிவின் குறிக் கோளாகும், (அபுல்ஹஸன் நூரி)"
மஅரிபா என்னும் இறைஞானம் எம் இதயத்தில் இறைவனால் புகுத்தப்படும் ஞான ஒளியாகும். (துந்-நூன்)" இறைவனை அறிந்த ஒரு பக்தன் தன்னைப் பற்றியும் வியப்படைகின்றான். ஏனெனில் இறைவனை அறிந்தால் அவனின் அளவற்ற வல்லமையினால், அவன் அடக்கப்படுவதை அவன் உணர்கின்றான். அதேசமயம் அவன் இருப்பு நிலையும், அவன் இருப்பற்ற நிலையும், அல்லாஹ்வின் மகத்துவத்திலே தங்கியிருக்கின்றது. அதேபோல் அவனின் அசைவும், அசைவற்ற நிலையும், அல்லாஹ்வின் அதிகாரத்தாலே உண்டாக்கப்படுகின்றது. இதையறிந்த பக்தன் வியப்படைந்து வினவுகிறான். 'நான் என்றால் யார்? நான் என்றால் என்ன? இந்த மர்மத்தைத் தான் திருநபி (ஸல்) அவர்கள் தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிபவனாகின்றான் என்று விமர்சித்தார்கள். அதாவது நான்' என்று ஒரு வஸ்து இல்லை. என்று உணர்பவன், இறைவனே, என்றும் நிரந்தரமானவன் என்னும் உண்மையையும் உணர்கின்றான். (ஷிப்லி)"
'கிதாபுல்லுமா? எனும் மிகப்பழமை வாய்ந்த சூஃபிக்கிரந்தம் ஒரு பக்தனின் பலதரப்பட்ட ஆத்மீக ஒழுக்கங்களின் நிலைகளை வெவ்வேறாக்கி எடுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக பாபமன்னிப்புத் தேடுதல், தீயவைகளை விட்டும் விலகுதல், துறவு நிலையை அடைதல் வறுமையைக் கையாளுதல், பொறுமையுடன் இறை நம்பிக்கை கொள்ளுதல் ஆத்மீகப் பாதையில் உண்டாகும் முன்னேற்றங்களை அனுபவித்தல் முதலியவைகளாகும். இதன் இன்னொரு கருத்தாவது மனித முயற்சியால் ஆத்மீகப் பாதையில் ஒவ்வொரு படித்தரத்தை அடைந்தாலும், ஹால் எனும் உணர்வுநிலைகள் இறைவனாலே கொடுக்கப்படும் ஓர் அன்பளிப்பாகும். s951 மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாகும்.
அவை பக்தனின் இதயத்தினுள் இறைவனிடமிருந்து
இறங்கும்பொழுது அவனால் அவைகளை விலக்க முடியாது. அதே சமயம் அவை அவன் உள்ளத்தை விட்டு அகலும் பொழுது அவைகளை வைத்துக்கொள்ளவும் முடியாது. *
 

அத்தியாயம் - V ஆத்மீக முன்னேற்றப் பாதையும் தன்னைத் தானறியும் மெய்ஞ்ஞானமும்,
இது (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய ச,தேகமும் இல்லை; பயபக்தியுடையோர்க்கு (இது) நேர்வழி காட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள் எத்தகையவர்கள் என்றால் (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றைக் கொண்டு நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் எத்தகையவர்கள் என்றால் உமக்கு அருளப் பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் (வந்த நபிமார்களுக்கு) அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள். (2:2-4) அல்குர்ஆன்.
இஸ்லாத்தில் கூறியிருக்கும் ஐந்து தூண்களெனப்படும் ஈமான், இஸ்லாம் ஆகிய இறை நம்பிக்கை, ஐவேளைத் தொழுகை, ஏழைவரி (ஸக்காத்) நோன்பு, ஹஜ் எனப்படும் கடமைகளோடு இறைவனுக்கும் மற்றும் மனிதவர்க்கத்திற்கும் ஏனைய சிருஷ்டிகளுக்கும் நாம் செய்யும் கடமைகளைக் கீழ்வரும் கவிதையில் சூஃபிஞானிகள் தத்துவ ரீதியாக நோக்கியுள்ளார்கள். மேற்கூறிய ஐந்து கடமைகளும், அவைகளைப் பற்றிய கொள்கைகளும் மனித சமுதாயத்திற்கு இன, நிற, வேற்றுமைகளின்றி கட்டாயப்படுத்தப் பட்டிருக்கின்றன. இவையே இஸ்லாத்தின் அத்திவாரங்களாகும்.
மேற்கூறிய அடிப்படைக் கொள்கைகளும், போதனைகளும் மேலும் இறைசிந்தனையும், இறைவன் சிருஷ்டிகளுக்கெல்லாம் நாம் செய்யும் கடமைகளும், சூஃபித்துவ மரபில் ஆணித்தரமாகக் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால்தான் ஐவேளைத் தொழுகையோடு, இறைதியானமான திக்றும், ஏழைவரியோடு உலகப்பற்றற்ற நிலையை அடைதலும், ஹஜ் யாத்திரை செய்வதோடு மட்டுமன்றி எமது முழு வாழ்க்கையையுமே, ஓர்

Page 98
176
இறையாத்திரைப் பயணமாக மாற்றிக்கொள்ளும் இலட்சியத் தையும், சூஃபியாக்கள் தத்துவ ரீதியாகப் போதிக்கிறார்கள்.
இந்த அத்தியாயத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கவிதைகளில் சூஃபித்துவப் பாரம்பரியத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும், 'ஷரீஆ (ஷரீயத் சட்டம்) ஹகீகத் என்னும் ஞான உண்மைகள், தரீக்கத் என்னும் ஞானவழிகள், மஃரிபத் என்னும் இறைஞானம் முதலிய விடயங்கள் இலக்கிய நயத்தோடு ஆராயப்பட்டிருக்கின்றன. இக்கவிதைகளை ஆக்கம் செய்த ஞானிகள், கருத்து ரீதியில் புதிதாக ஒன்றும் சொல்லாவிட்டாலும், சொல்லும் விதத்தில் இலக்கிய ரசனையுள்ள பல உருவகங்களைக் கையாண்டு, பாரம்பரியக் கருத்துகளை ஒரு புதுவிதமாக எடுத்துக் காட்டியிருக்கின்றனர். பலதரப்பட்ட மதங்களும், கலாசாரங்களும், நிறைந்த தென்னிந்திய சமுதாயத்திற்கு, சூஃபித்துவம் ஒரு புதுமையான ஞான மார்க்கமாகத் தென்பட்டது.
தென்னிந்திய ஆத்மீக வரலாற்றில் மிகப்பிரபல்யம் வாய்ந்த இறைஞானியான பீர்முஹம்மது (ரலி) அவர்கள், முன்கூறிய விடயத்தை பின்வரும் கவிதைகள் மூலம் இலக்கிய ரசனையுடன் எடுத்துக் காட்டுகின்றார்.
(5O)
அடல்செறி ஷரீஅத் என்னும் அஹ்மதர் வழியே யாகும் உடல்செறி தரீகத் என்னும் உண்மைகள் பலவுங் காட்டுங் கடல்பெறுங் ஹகீகத்தாலே கத்தனைக் காணலாகு மடல்செறி மஃரிபத்தால் வழியொன்றாய் வளருந் தானே வளர்ந்திடுஞ் ஷரீஅத்தாலே வல்லமை அறியொனாது தழும்பிலா தரீகத் தாலே தன்மையோர் வழியைக் காட்டும் களிம்பிலா ஹகீகத்தாலே கனல்செறி வழியைக் காட்டு மழும்பிலா மஃரிபத்தால் ஆதிதன் வழியொன்றாமே.
(பீர்முஹம்மது ஸாஹிப்)" விளக்கவுரை: நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கு காட்டிய வழியே ஷரீயத்தாகும். இது ஆத்மீகவளர்ச்சிக்கு அத்திவாரமாகும். தரீக்கா என்பது அதைத் தொடர்ந்து கையாளும் வழிமுறையாகும். இது பல உண்மைகளை எடுத்துக்காட்டும். அதைத் தொடர்ந்து ஹகீக்கா என்பது பொங்குஞ் சமுத்திரத்தைப் போன்றதாகும். அதில் ஒரு பக்தன் எல்லாப் படைப்புகளிலும் இறைவனின் திருமுகத்தைக் காணக்கூடியவாய்ப்புக் கிட்டும். மேலும் அந்நிலையில் இருந்து மஅரிபா, இறைஞானம், பூமொட்டுப்போல் மலர்ச்சி அடையும். இதில் இறைஞானத்தின் சொல்லொணா உண்மைகள் தெளிவாகும். சுருங்கச் சொன்னால் ஷரீயத் யென்னும் அத்திவாரத்தில் தரீக்காவின் அவசியத்தை நீ உணர்வாய். அப்பொழுது ஞானஒளி தரும் ஹகீக்காவானது

177
தூய்மையான ஒரு வழியாக உனக்கு தென்படும். இறைஞானத்தின் மகத்தான ஒளியையும் நீகாண்பாய். அடுத்ததாக 'மஅரிபத்' என்னும் கடைசி நிலையில் பரம்பொருளோடு சங்கமமாகுவாய். இந்நிலையில் நீ சொல்லொணா ஏகாந்த நிலையை அடைவாய்."
(51)
அவ்வல் ஷரீஅத் தையிபென்று
அரிய தரீக்கத்து ஷஹாதத் தென்றும் செவ்வை ஹக்கீக் கத்துத் தன்சீஹென்றும்
செல்லுந் தெளஹlது மஃரி பத்தாம் நவ்வி நாவிலே சொல்லானது லாஇலாஹ
இல்லல் லாஹ"வே குவ்வி ஜபறுத்து அத்தென்றுங் கோமான்
இரசூல் ஒதினார் அல்லா வென்னுஞ்சொல் தரீக்கத் தாகும்
அல்லாஹ" வென்றால் ஹக்கீக் கத்தாகும் வல்லான்ஹ" வென்ற சொல்லானது
மஃரிபத்தாமென் றிறசூல் சொன்னார் எல்லாருஞ் சொல்வார் சொல்லானதை
இல்மைத் தெரிந்தவர் இமாமத்திலே அல்லாஹ் அக்பர் என்றோத ஆன
முஹப்பத் தாகு மென்றார்
(பெரியநூஹ"லெப்பை ஆலிம்)" விளக்கவுரை: ஷரீயத் என்பது ஆத்மீகப்பாதையிலே முதன்முதலான அத்திவாரமென்றும், தரீக்கா என்பது ஷஹாதத் கலிமாவின் அடைவு என்றும், ஹகீகத் என்பது தன்ஸிஹ் எனப்படும்
அல்லாஹ்வை நாடும் படித்தரங்கள் 2. தாஅத் - கீழ்ப்படிதல் 3. ஷரீஅத் - சட்டம் 4. தரீக்கத்- வழி 5. மஃரிபத்-இறைஞானம் 6. ஹகீகத் - உண்மைஞானம் 1. அகீதத் - இறைவன்மீது அளவற்ற காதல் கொண்டு தன்னையே அவனுக்காகப் பலியிடும் இயல்பு.
இவ்வித ஆசைத்தீயால் அவர்கள் தங்களையே தங்கள் இறைவனளவில் அழித்துக்கொள்வதே ஃபனாநிலையாகும். இறைவனையே தியானித்து அவனுடைய நினைவில் மூழ்கித் தம்மை மறக்கும் நிலைக்கே இப்பெயர் கூறப்படுகிறது. இதன்பின் அவர்கள் தாங்கள் தங்களை இறைவனளவில் அழித்துக்கொண்டதையே அறிய இயலாத நிலையை எய்தப் பெறுகின்றனர். அதுவே ஃபனாவுல் ஃபனா நிலையாகும். இதன்பின் அவர்கள் இறைவனளவில் தம்மைத் தரிபடுத்திக்கொள்ளும் பகா நிலையை எய்தப் பெறுகின்றார்கள். (இஸ்லாமிய கலைக் களஞ்சியம் அப்துற் ரஹீம்)
12

Page 99
178
தூய்மைப்படுத்தும் ஞானமென்றும், மஅரிபத் என்பது இறைவனுடன் சங்கமமாகும் உன்னத வழியென்றும், இவைகளே லாஇலாஹ இல்லல்லாஹ" என்னும் கலிமாவின் சாரமென்றும் திருநபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள். அவர்கள் மேலும் இறைவனின் மகத்துவமான சர்வ வல்லமை அடங்கிய ஜபறுத் என்னும் நிலையைப் பற்றியும் போதித்து அல்லாஹ் என்பது தரீக்கத்தின் சொல் எனவும், அல்லாஹ" என்பது ஹகீக்கத்தின் சொல் எனவும், 'ஹ' என்பது மஅரிபத்தின் சொல் எனவும் போதித்தார்கள். இதைத் தொடர்ந்து ஞானவழிகண்ட எல்லா இமாம்களும் இவ்வாறே உபதேசம் செய்தார்கள். இதனால் நீ அல்லாஹ" அக்பர் என்று தினமுங் கூறுவாய். அப்படிச் செய்வாயானால் இறையருள் உனக்குச் சீக்கிரம் கிட்டும்.
தீனுல் இஸ்லாத்தை ஆதம் (அலை) அவர்களில் இருந்து திருநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை, உலகில் பிறந்த எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ் இறக்கிய புனிதமதம் என திருக்குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ்வையும், எங்களளவில் இறக்கப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவருடைய) சந்ததிகள் ஆகியோரின்பால் இறக்கப்பட்டவற்றையும், இன்னும் (மற்ற) நபிமார்களுக்கு, அவர்களுடைய ரப்பிடமிருந்து, கொடுக்கப்பட்டவற்றையும் நாங்கள் ஈமான் கொண்டோம்; அவர்களிலிருந்து எவருக்குமிடையில் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; நாங்கள் (அல்லாஹ்வாகிய) அவனுக்கே (முற்றிலும்) வழிபடுகிறவர்கள் என்று (முஃமின்களே!) நீங்கள் கூறுங்கள். (அல்குர்ஆன் 2:136)
ஷரியத் என்பது திருக்குர்ஆனில் அடங்கிய போதனைகளும், திருநபி(ஸல்) அவர்கள் சொன்னதும் செய்ததும் அனுமதித்தவைகளுமாகும். இவை ஆறு புகழ்வாய்ந்த இமாம்களால் ஹதீஸ் தொகுப்புகளாகப் பிற்காலத்தில் கோர்வை செய்யப்பட்டன. அவர்களே இமாம் புகாரி (ரஹ்) (Muhammed ibn Ismāil al-BuKhāri (A.H.256) g)LDITLib (yp6ivalólub (ugno) (Muslim ibnu'l Hajjaj, (A.H.261) g)LDITLübg3)ÜGDJLDITg1T (Uganho) (Abu Abdillah Muhammed ibn Majah, (A.H.273) இமாம் அபூதாவூத் (Ugo) (Abu Dawud al-sijistani (A.H.275) g)LDTibgildg (ughio) (Abu-Isal - Tirmidhi, (A.H.279) g)ld Tib song) (ggop) (Abu Abd al-Rahman al-nasaʼi (A.H.303) என்பவர்களாவர்.
 

179
ஷரீஅத்தில் கூறப்பட்டிருக்கும் விதிகளைக் கடைபிடிப்பதே தரீக்கா எனும் ஆத்மீகப் பாதையின் முதல்படியாகும். ஒரு சூஃபிபக்தன், தான், ஸாலிக்" எனப்படும் பிரயாணியாக தன்னைக் கருத வேண்டும். அந்த ஆத்மீகப் பாதையில் மெதுவாக அவன் முன்னேறி ஒரு ஷைகின் மாணாக்கனாக (முரீதாக) தீட்சை பெறவேண்டும். ஆத்மீகப் பாதையில் முதலாங் கட்டமாவது நாசூத் எனப்படும். இதில் ஷரீயத் விதிப்படி எல்லா விடயங்களிலும் நடந்துகொள்ள வேண்டும்.
இரண்டாம் கட்டம் மலக்கூத் எனக் கூறப்படும் தூய்மைப்படுத்தும் தரீக்காவாகும். மூன்றாங் கட்டம் ஜபறுாத் எனும் அதிகாரம் பெறும் இறைஞானமாகிய மஅரிபத்தாகும். நாலாம் கட்டமாவது "பனா (Fana) நான்’ எனும் நிலையற்று இறைவன்பால் சேரும் உண்மைநிலை அறியும் ஹகீகத்தாகும்."
இறைஞானியான துந்நூன் இருவகையான அறிவுகளைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவையாவன, இல்ம், எனும் சாதாரண அறிவும், மஅரிபத், எனும் இறைஞான அறிவுமாகும். அவர் மேலும் கூறுவதாவது:
உண்மையான இறை அறிவு இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று மட்டும் சொல்லுவதல்ல. ஏனெனில் இது எல்லா விசுவாசிகளும் நம்பி இருக்கும் ஓர் உண்மையாகும். மேலும் இது, தத்துவ ஞானிகளாலும், மதகுருக்களாலும், வாக்குவாதங்களாலும், தர்க்க சாஸ்திரங்களாலும், நிரூபிக்கப்படும் வெறும் உண்மையுமல்ல. அவ்லியாக்கள் எனப்படும் இறை பக்தர்கள் தம் இருதயத்தால் அனுபவித்து, இறைவனாலே வெளிப்படுத்திய இறையுண்மைகளை நன்குணர்ந்து அனுபவ ரீதியில் கூறும் விடயங்களே உண்மையான இறையறிவாகும். இது இறைவனாலே அருளப்பட்டு அவன் மர்மங்களை வெளிப்படுத்தும் இறையுணர்ச்சியாகும். இத்தகைய உண்மைகள், உண்மையான இறை பக்தர்களுக்கன்றி மற்றவர்களுக்கு அருளப்பட மாட்டா,
மஅரிபத் என்னும் இறைஞானம், ஆத்மீகப் பாதையில் கடைசி வெகுமதியாகும். இப் படித்தரத்தில் ஒரு பக்தன் நான்’ எனும் தனிமையை இழந்து (பனாவாகி) பகா எனும் இறைவனுடன் சங்கமமாகும் நிலையை அடைவான். இதைப் பற்றித் துந்நூன் கூறுவதாவது:
இறைஞானம் அடைந்தவர்கள், அவர்களின் தனிமை நிலைகளை இழந்து, இறைவனுக்கே சொந்தமாகி

Page 100
18O
விடுகின்றார்கள். இறைவன் அசைக்கும்பொழுதே அவர்கள் அசைவார்கள். அவர்கள் நாவில் உண்டாகும் வார்த்தைகள் இறைவார்த்தைகளே, அவர்களின் பார்வைகள் இறைபார்வைகளே. இதனால்தான் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வரும் வண்ணம் இறைவன் அவரிடம் கூறினதாகச் சொன்னார்கள்:
இஷ்ட பூர்வமான தொழுகைகள் (நபில்) மூலம் என் நல்லடியான், நான் அவனை என் நேசனாக்கிக்கொள்ளும் வரை, என் அருகிலாதலைக் கேட்கிறான். நான் அவனை என் நேசனாக்கியதுமோ, அவன் கேட்கும் காதுகளாகவும், அவன் பார்க்கும் கண்களாகவும், அவன் பற்றும் கரங்களாகவும், அவன் நடக்கும் கால்களாகவும், நான் ஆகிவிடுகிறேன். அதாவது அவன் என் மூலம் கேட்கிறான். என் மூலம் பார்க்கிறான்; என் மூலம் பற்றுகிறான்; என் மூலம் புரிந்து கொள்கிறான். "
முன்பு கூறப்பட்ட முதலாங்கவிதையிலிருந்து, நாற்பத்து ஒன்பதாம் கவிதை வரை (1-49) இறைவனின் எல்லா வஸ்துகளுக்கும் அப்பாற்பட்ட ஏகாந்த நிலையையும், சர்வ வியாபியாகி சிருஷ்டிகளில் வியாபிக்கும் நிலையையும், சூஃபித்துவக் கவிஞர்கள் இலக்கிய நயத்தோடு, பற்பல இலக்கிய உருவகங்களில் எடுத்துக்காட்டி இருப்பதை நாம் அவதானித்தோம். ஐம்பதாம், ஐம்பத்தொன்றாம் கவிதைகளில் திருக்குர்ஆன் ஹதீதுகளில் கூறப்பட்டிருக்கும் போதனைகளையும் ஆத்மீக மேதைகளான சூஃபி மெய்ஞ்ஞானிகள் கூறியிருக்கும் போதனைகளையும், இறைவன்பால் செல்லும் ஒரு பக்தனின் ஆத்மீகப் பாதையின் விபரங்களையும் படித்தறிந்தோம்.
கீழ்வரும் ஐம்பத்து இரண்டாம் கவிதையிலும், அதைத் தொடர்ந்து வரும் மற்றும் கவிதைகளிலும், ஆன்மீகப் பாதையில் செல்லும் ஒரு பக்தன் எதிர்நோக்கும் பலதரப்பட்ட போட்டிகளை,
அதாவது ஆத்மீக இலட்சியங்களுக்கும், அவைகளை விட்டுப்பிரிக்கும், காமகுரோத ஆசாபாசங்களாகிய இச்சைகளுக்கு மிடையில் நடக்கும் போராட்டத்தை கவிஞர்கள் விபரித்திருக்கிறார்கள்.
(52)
சதியா யிரஞ்செய்த வம்பனல் லிதமகித
சகசமறி யாத வம்பன்
தந்தைதாய் தம்மனதை நோவித்த வம்பன்
தராதரங் கெட்ட வம்பன்
 

181
பதினாயி ரந்தரஞ் சொல்லினுஞ் செவியுட்
படாத பிடிவாத வம்பன் பாரவான் முதலான பேருமென் பேரையும்
பகரப் பயந்த வம்பன் - நிதிதேடு'சீவச் சவங்கள் பட்சங்களே
நேசித்த தோஷி வம்பன் நெரடெலாம் வளருமடி யேனுமுனை நம்பினேன்
நேயம்வைத் தாளு தற்கே மதிதனிலு மதிகவொளி யுள்ளநீர் பின்தொடர
வள்ளல் இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! நான் சதியாயிரம் செய்த வம்பன், நன்மை தீமைகளை சகசமாக அறியாத வம்பன். தந்தை தாய் மனதை நோவப்பண்ணிய வம்பன், தராதரமறியாத வம்பன், பிடிவாதம் கூடாதென பதினாயிரம் முறை சொன்னாலும் கேளாதவம்பன், 'பிர்அவ்ன்' என்னும் எகிப்தியக் கொடுங்கோலரசன் பேரைச் சொல்லுகின்றவர்களையும் சொல்லும்படி தூண்டும் வம்பன். செல்வம் தேடுவோரின் பட்சங்களில் சிநேகஞ் செய்து வந்த தோஷியானவன். முரட்டு மார்க்கங்களெல்லாம் பயப்படவும் என்மீது கிருபைவைத்து ஆளுதற்கும் அடியேன் உம்மை நம்பினேன். ஆகையால் சந்திரனைப் பார்க்கிலும் மிகுந்த பிரகாச முள்ள நீர் பின் தொடர, முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டுகின்றேன்.
முப்பத்தைந்தாம் (35) கவிதையின் உரையில் அன்நப்ஸ"ல் ஹைவானியா (an-naisal haywaniyah) எனும் இச்சைகளுக்குக் காரணியான மிருக ஆத்மாவையும், அந்-நப்ஸ7ல் அம்மாறா (an-natsu ammarah) எனும் தற்பெருமை, குரோதம் நிறைந்த அகங்கார ஆத்மாவையும் பற்றிக் குறிப்பிட்டோம். இவையல்லாமல் அன்னப்ஸ"ல்-லவ்வாமா, (an-matsulawwamah) அதாவது குறைகூறும் மனச்சாட்சியான இன்னொரு ஆத்மாவையும், அன்-நப்ஸ"ல் முத்மயின்னா (an-matsu mutmainnah) எனப்படும் சாந்திக்கும் அமைதிக்கும் சின்னமான இறைவன்பால் சாரும் இறைஞான ஆத்மாவைப் பற்றியும், இறைஞானிகள் தத்தம் ஆக்கங்களில் கூறியிருக்கின்றனர்."
ஒரு பக்தன் ஆன்மீகப் பாதையில் செல்லும்போது, மிருகக் குணாதிசயங்கள் கொண்ட கீழான ஆன்மாக்கள், இறைவனை

Page 101
182
அணுகிப்போகும் உயர்தர ஆன்மாவோடும், "அக்ல்" எனும் அறிவுடனும் போராடுவது சகஜம். இது சம்பந்தமாக சூஃபிஞானிகள் திருநபி(ஸல்) அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய ஒரு ஹதீஸைப்பற்றி அடிக்கடி குறிப்பிடுவார்கள்.
இக்குறிப்பிட்ட ஹதீஸில் நபிபெருமான் அவர்கள், ஜிஹாதுல் அக்பர் எனும் பெரியஜிஹாத் (புனிதயுத்தம்) பற்றியும், ஜிஹாதுல் அஸ்கர் எனும் சிறிய புனித யுத்தத்தைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்பெரிய யுத்தம்தான் தனக்குள் இருக்கும் மிருக இச்சைகளுடன் போராடுவது. குப்ரியத்துடனும் தீமைகளுடனும் போராடுவதை சிறிய யுத்தம் (IHADUL ASGHAR) என அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஹவா எனும் ஆசைகள் நிறைந்த மிருக ஆத்மாவின் (NAFS) குணாதிசயங்களைப் பற்றி சூஃபித்துவ இலக்கியங்களில் பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. கஷ்புல் மஹ்ஜூப் எனும் சூஃபிக் கிரந்தத்தில், அல்-ஹ"ஜ்வீரி (ரஹ்) எனும் ஞானாசிரியர் இவ்விடயத்தைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் பலதரப்பட்ட அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டி, அவர்தம் சொந்தக் கருத்தையும் தெரிவிக்கின்றார்.
நப்ஸ் என்றால் ஒரு வஸ்துவின் சாரம் என்று கருத்தாகும். ஆனால் பொதுவாக இதைப்பற்றி பலதரப்பட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன. சிலர் அது ஒர் 'ஆத்மா' என்றும், 'முருவ்வத்' என்னும் பலம் என்றும், உடல் என்றும், இரத்தம் என்றும் அர்த்தம் கூறுவார்கள். 'ஸாலீஸ்' எனும் மெளனிகள் நப்ஸ்தான் தீமைகளுக்கெல்லாம் காரணி எனச் சொல்வார்கள். அவர்களிற் சிலர் "நப்ஸானது ரூஹைப் போன்று உடலிலே அமைந்திருக்கும் தனிப்பட்ட ஒரு வஸ்து என்றும், இன்னும் சிலர் அது உயிரைப் போல் உடலின் ஒரு அம்சம் என்றும் கூறுவார்கள். ஆனால் இருசாராரும் நப்ஸ் தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணியென ஒரு மனதாகக் கூறுவர். அதனால் விளைவிக்கப்படும் தீமைச் செயல்கள் இருவகையாக வகுக்கப்படலாம். அவையாவன: "மஆஸி (Maasi) எனும் பாவச் செயல்களும் 'அக்லாக் இதானி எனும் கீழ்த்தரப்பட்ட குணங்களுமாகும். உதாரணமாக பெருமை, பொறாமை, பண ஆசை, கோபம், வெறுப்பு என்பவை நன்னெறிகளுக்கும், நீதி விதிகளுக்கும் முரணானவைகளாகும். இத்தீய குணங்களை ரியாதத் (Riyada) என்னும் கட்டுப்பாடுகளால் விலக்க முடியும். இதைப், பாவங்கள், பாவமன்னிப்பால் நீங்குவதற்கு ஒப்பிடலாம். பாவங்கள் வெளிப்படையான குற்றங்களாகும்.

183
மேற்கூறிய தவறுகளோ அந்தரங்கக் குற்றங்களாகும். இதைப்போலவே கட்டுப்பாடு என்பது வெளிப்படையான கருமமாகும். பாவமன்னிப்புத் தேடுவதோ உள்ரங்கமான ஓர் மனமாற்றமாகும். உள்ளே உண்டாகும் ஒரு தீயகுணமானதை, வெளிக்காரியங்களால் வெளியாக்கலாம். அதேபோன்று, வெளியாகத் தோன்றும் ஒரு தீமையை மேலான உள்ளுணர்வுகளால் நீக்கப்படலாம். உயர்ந்த ரூஹ"ம், கீழ்தரப்பட்ட நப்சுகளும், லதாயிப் (Latait) உடல் உள்ளே இருக்கும் சூக்குமமான வஸ்துகளாகும். ஏனெனில் இவற்றை, வானவர்களும், பேய்களும், சுவர்க்கமும் நரகமும் உலகத்தில் இருப்பதற்கு ஒப்பிடலாம்.
ஆனால் ஒன்று நன்மையின் சிம்மாசனமாகும். மற்றது தீமையின் பிறப்பிடமாகும். இதனால்தான் மேற்கூறிய கீழ் ஆத்மாவை எதிர்ப்பதே ஆத்மீகப் பாதையின் குறிக்கோளாக வேண்டும். இறைவனை அணுகுவதற்கு ஒரே வழி இதுவாகும். கீழான ஆசைகளுக்கு அடிமையானால் ஒரு மனிதனின் ஆத்மீக ஈடேற்றம் குலைந்து போகும். "
ஐம்பத்து இரண்டாம் கவிதையில் கூறப்பட்டிருக்கும், பெருமை, குரோதம் அகங்காரம், பண ஆசை நப்ஸின் செயல்களாகும். திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீஸில் இறைவன் ஒரு பக்தனை நன்னெறியில் வழிகாட்டும்போது, அப்பக்தன் அவனுடைய தீய செயல்களைக் காணும் ஆற்றலை அவனுக்குக் கொடுக்கின்றான் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐம்பத்து இரண்டாம் கவிதையிலும், மற்றும் பல கவிதைகளிலும் மஸ்தான் ஸாஹிப் தம்மை ஒரு வம்பன் என வர்ணிக்கின்றார். அவ்வம்பனின் தீய குணங்களை நீக்க இறையருளைத் தேடுகின்றார். இது திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் பாவமன்னிப்பைத் தேடும் 6Q([5 மனப்பான்மையாகும்.
என்னுடைய நஃப்ஸை (மனதை) நான் தூய்மையாக்கி விடவுமில்லை. நிச்சயமாக மனதாகிறது தீமையை அதிகம் ஏவக்கூடியதாகவே இருக்கிறது - என்னுடைய ரப்பு அருள்புரிந்தவரைத் தவிர - நிச்சயமாக என்னுடைய ரப்பு மிக்க மன்னிக்கிறவன்; மிகக் கிருபையுடையவன் (என்றுங் கூறினார்)" (12:53)
(53)
கல்லாத வம்பனறி வில்லாத வம்பனொரு
காசும் பெறாத வம்பன்

Page 102
184
கடுவாயினுங்கொடிய வம்பன் வெருட்டிக்
கடிக்கு நாயான வம்பன் பொல்லாத வம்பனுற வில்லாத வம்பன்
பொறாமையே கொண்ட வம்பன் புன்மைகுடி கொண்டகெச போக்கிரிகள் சறுதாறு
போலுமுன்னேறு வம்பன் மல்லாடுவம்பன்நசை பல்லாடு வம்பனிரு மடையர்நடை யுடைய வம்பன் வம்பெலாம் அகலஅடி யேனுமுமை நம்பினேன்
மரபுதந்தாளு தற்கே வல்லாண்மை யில்லாமை யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! நான் கற்காத வம்பன், அறிவைத் தேடாத வம்பன், ஒரு காசுக்கும் பெறுமதியற்ற வம்பன். விஷவாயைப் பார்க்கினும் கொடிய வம்பன், பயங்காட்டிக் கடிக்கின்ற நாயாகிய வம்பன், கொடுமையான வம்பன், சுற்றத்தாரில்லாத வம்பன்.
எப்பொழுதும் பொறாமையே குடிகொண்ட வம்பன், அறிவீனமுள்ள கெசபோக்கிரிகள் தலைவனாக முன்னே செல்லுகின்ற வம்பன். மல்யுத்தஞ் செய்கின்ற வம்பன்.
மடையர்களின் நடையுடை பாவனைகளையுடைய வம்பன். ஆகையால் இத்தகைய வம்புகள் நீங்க உயர்ந்த மரபைக் கொடுத்தாளுதற் பொருட்டும் அடியேனாகிய நானும் உம்மை நம்பினேன். ஆகையால் மேற்கூறிய வல்லாண்மை இல்லாமையாகிய நீர் பின்தொடர றசூல் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டுகிறேன்.
மேற்கூறிய கவிதையின் முக்கிய கருத்தை அதற்கு முன் குறிப்பிடப்பட்ட கவிதையின் விடயத்திற்கு ஒப்பிடலாம். அறியாமை குடிகொண்டவன், ஆடம்பரம், தற்பெருமை, பொறாமை, குரோதம் முதலிய தீமைக் குணங்களுக்கு அடிமையாகி, ஒரு வம்பனாக மாறுவது மட்டுமல்லாமல் தன்னைத்தானே தூய்மைப்படுத்துவதற்கும் விரும்ப மாட்டான். அவனைத்தான், கடிவாயினும் கொடிய வம்பன், வெறுத்துக் கடிக்கும் நாயான வம்பன், என மஸ்தான் ஸாஹிபு அழைக்கின்றார். ஆன்மீகப் பாதையில் போகும் ஒரு பக்தன், அவனுள் ரூஹின் குணங்களும், மிருகக் குணங்களும் ஒன்று சேர்ந்திருப்பதை முதலில் அறிய வேண்டும். தன்னுடைய புனிதமான ரூஹ் எனும் ஆத்மா
 

185
இறைவனுடன் சேர வேண்டுமென்றால் அதற்கு முரணான நப்ஸ் எனும் மிருகம் கட்டாயமாகச் சாக வேண்டும். இதைத்தான் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கங் காட்டியிருக்கிறார்கள்.
உன்னுடைய உண்மையான அந்தரங்கத்தை நீ அறிந்து கொள்வாயாக. அப்பொழுதுதான், நீ என்ன இயல்பை உடையவனென்றும், எங்கிருந்து இவ்வுலகுக்கு வந்தாய், ஏன் நீ படைக்கப்பட்டாய், எதில் உன் ஈடேற்றம் தங்கி இருக்கிறது, எதில் நீ துன்புறுவாய் என்னும் உண்மைகளை அறிவாய். கானகத்தில் இருக்கும் மிருகங்களின் குணங்களும், விண்ணவர்களின் பரிசுத்த குணங்களும் உன்னுள் கலந்திருக்கின்றன. ஆனால் உன்னுடைய உண்மையான அம்சம் என்னவெனில் உன்னுடைய ரூஹான ஆத்மாவாகும். மற்றவையெல்லாம் உன்னுடைய தெய்வீகக் குணாதிசயங்களுக்குப் பொருந்தாத அயலானவையாகும். அதனால் உன்னுடைய தொடக்கத்தை நீ அறிவாய். அப்பொழுதுதான் உன்னைச் சிருஷ்டித்த இறைவனின் மகத்துவத்தையும் அவனின் பூரணமான அழகையும் எங்கும் நிறைந்திருக்கும் அவன் தன்மையையும் நீ அறிவாய். அப்பொழுதுதான் காமகுரோதமெனும் சங்கிலிகளை நீ வெட்டியெறிந்து நிவாரணம் பெறுவாய். ஏனென்றால் இறைவன் காம குரோதங்களுக்கு அடிமையாக உன்னைப் படைக்கவில்லை. அவற்றின் ஆளுகைக்குள் நீ இல்லாமல் உனது ஆளுகைக்குள் அவை இருக்க வேண்டும். நீ போகும் ஆத்மீகப் பயணத்தில் அவைகளை உன் குதிரை போலும் போராயுதம் போலும் கட்டுப்படுத்திக் கொள்வாயாக. மேலும் உன் ஆன்மீகப் பிரயாணம் முடியும் போழ்து அவைகளில் மேல்கொண்ட ஆசைகளை உன்னுடைய பாதங்களால் மிதித்தொழித்து தூர எறிந்து விடுவாயாக."
(54)
எண்சானுடம்புமொரு போதுமழி யாதென்ற
எண்ணமொழி யாத வம்பன் ஏதுவந்தாலுமோ ரணுவிற்கு நிகரென்று
இடும்பைகள் பேசு வம்பன் கண்சாடை கண்டுவில காதவம் பன்காசு
காசுகா சென்றவம்பன் கல்லுமொரு போதேனும் உருகும்உரு காக்கருங்
கல்நெஞ் சனான வம்பன்

Page 103
186
பெண்சாதி பெண்சாதி பெண்சாதி யென்றே
பிதற்றுபேய் கொண்ட வம்பன் பேயாட் டொழிக்கவடி யேனுமுமை நம்பினேன்
பிரியமுட னாளுதற்கே வண்சீரும் எண்சீரு முள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே* (மஸ்தான் ஸாஹிபு)' பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! இவ்வுடம்பானது என்றைக்கும் அழியாது என்று நினைத்துக் கொண்டிருந்த வம்பன், எதுவந்த போதிலும் ஓர் அணுவிற்கு ஒப்பாகின்ற இடும்பைகள் பேசும் வம்பன். கண்ணால் காட்டப்படுகின்ற கண்சாடையைக் கண்டு நீங்காத வம்பன். எப்பொழுதும் பணத்தைப் பற்றி நினைக்கின்ற வம்பன். கல்லானது ஒரு காலத்திலில்லாவிட்டாலும் பிறிதொரு காலத்தில் உருகும், அவ்வாறு கூட உருகாத மனம் உடைய வம்பன். பெண்சாதியென்று பிதற்றுகின்ற பேய் பிடித்த வம்பன். அப்படிப்பட்ட என்னுடைய பேயாட்டத்தை நீக்கவும், என்னை இன்பமுடன் ஆண்டருள் செய்யவும் வேண்டுமென்று உன்னை நம்பினேன். ஆகையால் வள்ளன்மைச் சிறப்பும் யாவராலும் எண்ணப்படுகின்ற கீர்த்தியும் உள்ள முகியித்தீன் ஆண்டகை பின்தொடர முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது) எல்லா ஆத்மீக நெறிகளிலும் மண்ணாசை பெண்ணாசை, பொன்னாசை முதலிய ஆசைகளை, இறைவன்பால் செல்லும் ஆத்மீக யாத்திரைகளுக்கு பெரிய தடைகளென எடுத்துக் காட்டிக் கூறப்பட்டிருக்கிறது. இதனால்தான் சில வேத மரபுகளில் பிரமச்சரியம் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இஸ்லாத்திலோ, இல்லற வாழ்க்கையைக் கையாண்டு பாவச் செயல்களில் இருந்து விலகித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்
* பெண்ணாசையிலும் பொருளாசையிலும் மயங்கிக் கிடக்கும் சிலரைப் பற்றி, பட்டினத்தார் பின்வருமாறு பாடுகின்றார்:
வாதுக்குச் சண்டைக்குப் போவார்;
வருவார்; வழக்குரைப்பார்; தீதுக்கு உதவியும் செய்திடுவார்;
தினம் தேடி ஒன்றும் மாதுக்கு அளித்து மயங்கிடுவார்
விதி மாளுமட்டும் ஏதுக்கு இவர் பிறந்தார்? இறைவா!
கச்சி ஏகம்பனே!

187
நெறியைக் கடைப்பிடிக்கும் வண்ணம் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும், இல்லற வாழ்க்கை தனக்கும் சமுதாயத்திற்கும் செய்யும் புனித கடமையென்று சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
(அவர்கள்) மனைவிமார் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள், அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் 2:187 என திருக்குர்ஆன் கூறுகின்றது."
ஆனால் விவாகம், குடும்பம் முதலிய கடமைகள் பலதரப்பட்ட பொறுப்புகளை, ஒரு பக்தன் மேல் சுமத்துவதால், சூஃபியாக்கள் சிலர், விவாகமின்றி தனி வாழ்க்கையை கடைப்பிடித்தனர். காலக்கிரமத்தில், ஒரு சூஃபி குடும்ப வாழ்க்கை நடாத்துவது மேலா அல்லது தனி வாழ்க்கை மேலா எனும் விடயம் பலதரப்பட்ட அபிப்பிராயங்களுடன் விவாதிக்கப்பட்டது. இதைப்பற்றி 'கஷ்புல் மஹ்ஜுப்' என்னும் கிரந்தத்தில் பின்வருமாறு அல்-ஹஜ்வீரி (ரஹ்) அவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள்.
சூஃபியாக்கள் சிலர் காமகுரோத இச்சைகளில் இருந்து நிவாரணம் பெற இல்லற வாழ்க்கை நலம் என்று கருதுகிறார்கள். மேலும் அவ்வாழ்க்கையில் கவலைகளற்ற நிலையையும் அடையலாம் என்றும் கருதுகிறார்கள். இது சம்பந்தமாக திருநபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். 'தனியாய் இருப்பவர்களுடன் சைத்தான் கூடி விடுவான். ஏனெனில் அவ்வாறு இருப்பவர்களின் உள்ளத்தில், சைத்தான் காம இச்சைகளைப் புகுத்தி விடுவான்...' பிரம்மச்சாரி நிலையில் இருகுறைகள் இருக்கின்றன. (1) நபி பெருமான் (ஸல்) கடைப்பிடித்த இல்லற வாழ்க்கையைத் தவிர்த்து நடப்பது. (2) காம் இச்சைகளை உள்ளத்தில் வளர விட்டு, தீங்கான பாதைகளில் வழிதவறிச் செல்வது. அதேபோன்று இல்லற வாழ்க்கையிலும் இருவிதமான குறைகள் இருக்கின்றன. (1) இறைவனல்லாத பல விடயங்களில் எம் மனதைச் செலுத்துவது. (2) காம இச்சைகளில் எம் உடலை அதிகம் ஈடுபடுத்துவது. முக்கிய பிரச்சினை என்ன வென்றால் இறைவனை எப்படித் தியானிப்பது, என்பதாகும். சமுதாயத்தில் இருந்து கொண்டு தம் கடமைகளைச் செய்ய விரும்புபவர் விவாகம் செய்ய வேண்டும். அதேபோல் சமூகத்தை விட்டு விலகி இறைவனையே தேடுபவர்களுக்கு பிரமச்சரியம் ஒரு ஆபரணமாகும்... ஆனால் கடுமுயற்சியால் அணைக்க

Page 104
188
முடியாத காமம் இல்லையென்றே சொல்லலாம். ஏனெனில் நீ அனுபவிக்கும் எல்லா இச்சைகளும் உன்னிலிருந்தே உண்டாகின்றன. அதை அணைக்கக் கூடிய கருவிகளும் உன்னிடமே இருக்கின்றன. காம இச்சைகளை நீக்க இரு மார்க்கங்கள் இருக்கின்றன. ஒன்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வதாகும். மற்றது, மனித செய்கைகளுக்கு அப்பாற்பட்டதாகும். கட்டுப்பாடு என்பது பசியை அனுபவிக்கும் விரதமாகும். மற்றது இறையச்சமும்
இறைநேசித்தலுமாகும். அக்காரியங்களில் மனம் ஈடுபடும்போது இச்சைகள் நிலைகுலைந்து போகும். இறைநாட்டம் தன் உடலெல்லாம் ஊடுருவி,
கருவிகரணங்களின் இச்சைகளை ஒளித்து விடும். இது சம்பந்தமாக இன்னொரு அபிப்பிராயமும் சிலரால் கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் இல்லற வாழ்க்கையையோ, பிரம்மச்சரியத்தையோ எவருக்கும் நாம் சிபார்சு செய்யக் கூடாது. எது எவருக்கு நன்மை செய்யுமென்பதை இறைவன் வழிகாட்டுவான் என்பது அவர்களின் கூற்று. பிரம்மச்சரியம் ஒருவனின் விதியென்றால், அவன் தூய்மையாக இருத்தல் வேண்டும். இல்லற வாழ்க்கையே ஒருவனின் முடிவென்றால், அவன் நபி பெருமான் (ஸல்) அவர்களின் முன்மாதிரிகளைக் கடைப்பிடித்து உலக இச்சைகளில் இருந்து விலக வேண்டும். ஒரு பிரம்மச்சாரி பின்வரும் நெறிகளை அனுஷ்டிக்க வேண்டும். அவன், இச்சையைத் தூண்டுபவைகளை நோக்கக் கூடாது. யோசிக்கவும் கூடாது. மேலும் காமம் என்னும் தீயை பசியால் அணைக்க வேண்டும். அவன் இருதயத்தை உலக ஆசைகளில் செலுத்தாமல் அவன் மிருக இச்சைகளை அறிவென்று கூறாமலும், சைத்தானின் தந்திரங்களால் பாவச் செயல்களில் ஈடுபடாமலும், இருத்தல் வேண்டும். இவ்விதமாக அவன் நடந்து கொண்டால் ஒரு சூஃபியின் பாதையில் அவன் செல்லலாம்.
ஆத்மீகப் பாதையில் போகும் ஒரு நபருக்கு பண இச்சையும் பெரியதோர் முட்டுக்கட்டையாகும். இதுசம்பந்தமாக திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நவில்வதாவது:
இறைவனே, என்னைத் தாழ்ந்தவர்கள், அல்லது ஏழைகள் மத்தியில் வாழச் செய்து, அவர்கள் மத்தியிலே மரணிக்கவுஞ் செய்து, அவர்களுடனே மஹ்ஷர் நாளில் எழும்பவும் செய்வாயாக. மேலும், மஹ"ஷர் நாளில் இறைவன், நான் நேசிப்பவர்களை இங்கு அழைத்துவா’ என்று சொல்வான். அப்போது மலக்குகள் 'நீ நேசிப்பவர்கள் யார்?' என்று வினவுவார்கள். அதற்கு இறைவன் 'அவர்கள்தாம் ஏழைகளும், ஆதரவற்றவர்களும் என பதில் கூறுவான். "
 

189
ஏழ்மை, அல்லது வறுமை, என்பது ஒருவன் மனமுவந்து தேர்ந்தெடுக்கும் பொறுமையாகும். அது கவலையினத்தாலோ அல்லது தவறுகளாலோ, ஏற்படக் கூடிய வறுமையல்ல. அல்-ஹ"ஜ்வீரி (ரஹ்) அவர்கள் முற்கூறிய வறுமையை விளக்கம் செய்கின்றார்கள்.
வறுமைக்கு ஒரு உருவமும் (Rasm) ஒரு சாரமும் ஹகீக்கத் (Haqqat) இருக்கின்றன. அதன் உருவந்தான் ஆதரவற்ற ஏழ்மை நிலையாகும். ஆனால் அதன் சாரமோ செல்வமிருந்தும், செல்வத்தை நிராகரிக்கும் மனப்பான்மையாகும். வறுமையின் வெளித் தோற்றத்தை நாடுபவன், வெறும் தோற்றத்திலே தங்கி விடுவான். மேலும் வறுமையின் சாரத்திலிருந்து விலகி விடுவான். வறுமையின் சாரத்தை அனுபவிப்பவனோ, பிரபஞ்ச வஸ்துகள் மேலிருக்கும் ஆசைகளையொழித்து, அவைகளின்மேல் தன்
நாட்டத்தைச் செலுத்தாமல், பரம்பொருளான (3)60)sp6)1680607GuU |5/TL4. 'LuIT L160TITu9)” (Ba-fana yi kull andar ru'yat-i kull babaqa-yi kull Shitast). 676ö169/ub s5)Js55JLDIT607 (BuffaöTL
வாழ்க்கையை நாடுவான். வறுமை குடிகொண்ட ஏழையான ஒரு பக்கீருக்கு நஷ்டம் என்பது இல்லை. ஏனெனில் அவனிடம் இழக்கக் கூடிய பொருள் ஒன்றுமில்லை. . 32CU) பக்கீருக்கு செல்வம் இருந்தாலும் ஒன்றுதான். அதை இழந்தாலும் ஒன்றுதான். உண்மையிலே பொருள் இல்லாத நிலை அவனின் இன்பமான நிலையாகும். ஷைகுமார்கள் சிலர் பின்வருமாறு கூறினார்கள். ஒரு பக்கீருக்கு அவரின் வறுமை நிலை எப்படிக் கூடியிருக்கின்றதோ, அதே அளவு அவர் இன்பமான ஆன்மிக நிலையை அடைந்தவராவார். ஏனெனில் செல்வமென்பது அவருக்கு உண்மையிலே
துர்அதிர்ஷ்டமாகும். எப்பொருளை அவர் தன்வசம் அடிமையாக்குகிறாரோ, அப்பொருளுக்கே தானும் அடிமையாகி விடுவார். இறைநேசர்கள் (அவ்லியாக்கள்) அவனால் அருள் செய்யப்படும் மறைமுகமான
பொக்கிஷத்தையே நம்பி இருக்கின்றார்கள். செல்வமானது அமைதிப் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாகும்."
(55) வேதாந்த சாரமே சாரமென் றறியாது வீணாள் தொலைத்த பாவி மேன்மேலு மெய்ஞ்ஞான இன்பம்அணுகாதபாழ்
மெய்யைமெய் யென்ற பாவி

Page 105
190
சோதிப் பிரகாசச் சுயஞ்சோதி யணுகத் தொழுந்துறைகளற்ற பாவி சுகநிட்டை பாராத விழியெனு முகத்திலிரு
தொள்ளையோடிருந்த பாவி கோதிலுமது அடிபணிகி லாதசிர சென்றகற்
குன்றைச் சுமந்த பாவி கொடியமா பாவியடி யேனுமுமை நம்பினேன்
குடியிருந் தாளு தற்கே மாதவ அபேத நிலை யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என்குரு நாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே வேதாந்தத்தின் சாரமே (இறைஞானமே), உண்மை யென்றுணராமல் வீணாக நாளைக் கழித்த பாவி, உண்மை ஞானம் உண்டாகாத பாழாகிய சரீரத்தை மெய்யென்ற பாவி, வணக்கத்தின் மூலம் இறைவன் பிரகாசத்தின்பால் செல்லும் மார்க்கங்களை விட்ட பாவி, சுகமான தியானத்தின் மூலம் பெறும் இன்பத்தைக் காணா இரண்டு கண்களாகிய பொத்தலோடிருந்த பாவி, ஸ"ஜூது செய்து தொழாத சிரசு என்கின்ற கன்மலையைச் சுமந்திருந்த பாவி, கொடுமைகளையுடைய பாவி, இத்தகைய பாவியாகிய யான், நீ குடியிருந்தாள வேண்டுமென்று உம்மை நம்பினேன். தவசிரேஷ்டராகிய முகியீத்தின் ஆண்டகையாகிய தாங்கள் பின் தொடர, முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னே வரவேண்டுகிறேன்.
இக்கவிதையில் மஸ்தான் ஸாஹிபு தம்மைப் பாவி பாவியென்று மனம் வருந்தி அவரின் குறைகளை நினைந்து துக்கப்படுகின்றார். மேலும் OG)35 ஆசாபாசங்களும் மாயலிலைகளும், எம்மை இறை சிந்தனையிலிருந்து பிரிக்கும் விந்தைகளைப்பற்றியும், அறியாமையினால் தெய்வ வழிபாடின்றி, நாம் வாழ்க்கையை வீணாக்குவதையும் நினைந்து வருந்துகின்றார் - இரக்கின்றார். இறைவனைத் தொழாத தலையை வெறும் கல்லுக்கு ஒப்பிடுகின்றார். 54ஆம் கவிதையையும் நோக்குக.
அல்-ஹ"ஜ்வீரி (ரஹ்) இறைவனை மறைக்கும் இரு திரைகளைக் குறிப்பிடுகின்றார். ஒன்று 'ஹிஜாபி - ரியானி என்னும் அகற்ற முடியாத திரையாகும். மற்றது 'ஹிஜாபி கயானி (hijab-i-ghayni) என்னும் அகற்றக் கூடிய திரையாகும்.
 

191
அவர் மேலும் கூறுவதாவது,
'ஒரு கல்லை எத்தனை பேர் செதுக்கினாலும் அது கண்ணாடியாக மாறாது. ஆனால் ஒரு கறைபிடித்த கண்ணாடியோ தகுந்த முறையில் துடைக்கப்பட்டால், அதன் இயற்கைப் பிரகாசத்தைப் பெற்றுவிடும். இருள், கல்லின் சுபாவமாகும். பிரகாசமோ கண்ணாடியின் சுபாவமாகும். ஒரு வஸ்துவின் சுபாவம் நிரந்தரமானது. அதனால் அதை அகற்ற முடியாது. ஒரு குறிப்பிட்ட வஸ்தின் நிரந்தரமற்ற தற்காலிக குறைகளை எம்மால் அகற்றலாம்."
(56) கைக்குள்வெண் ணெயை வைத்து நெய்க்கழுத பாவி, கலை
கற்றுமறி வற்ற பாவி கற்பக விருக்ஷத்தி னடியிலே காஞ்சிரங்
காய்தேடி நின்ற பாவி கொக்குப் பிடிக்கநாய்க் குத்தெரியு மோவென்ற
கொள்கைகுடி கொண்ட பாவி குருடர்கள் யானையைக் கண்டகதை போலசற்
குருவையறி யாத பாவி சர்க்கரை கரும்புகற் கண்டமு திருக்கக்
கசங்குடிக் கின்ற பாவி தலைகெட்ட பாவியடி யேனுமுமை நம்பினேன்
தயைவைத் தாளு தற்கே மக்கநக ருக்குமண முள்ள நீர் பின் தொடர
வள்ளல்இற சூல்வருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே கைக்குள் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கழுத பாவி, கலைஞானம் கற்றும் அறிவில்லாத பாவி, கற்பக விருட்சத்தின் அடியில் இருந்தும் எட்டிக்காயைத் தேடின பாவி, கொக்கைப் பிடிக்க நாய்க்குத் தெரியுமோ வென்ற கொள்கையானது குடிகொண்டிருக்கின்ற பாவி, குருடர்களெல்லாங் கூடி யானையைக் கண்ட கதையைப் போல் ஞானாசிரியனை அறிந்து கொள்ளாத பாவி, சர்க்கரை கரும்பு கற்கண்டு பால் இவைகளிருக்க கசங்குடிக்கின்ற பாவி, இப்படிப்பட்ட பாவியாகிய அடியேனும் தயவு வைத்து ஆள்வதற்

Page 106
192
பொருட்டு உம்மை நம்பினேன் (பாவியைக் காக்க வேண்டுமென்பது பொருள்) ஆகையால் மக்க நகருக்கு மணமுள்ள முகியீத்தீன் ஆண்டகை பின் தொடர, முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது)
எமது வாழ்க்கையில் இறைவனை அறியக் கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்களிருந்தும், அறியாமையில் சிக்கி திக்குத் தடுமாறி, கடைசியில் துயரத்தைத் தரும் தவறான இலட்சியங்களை நாம் நாடி காலத்தை வீணாக்குகிறோம். இதைத்தான் மஸ்தான் ஸாஹிபு 'கற்பக விருட்சத்தின் அடியிலே காஞ்சிரங்காய் தேடி நின்ற பாவி’ எனக் கூறுகின்றார். அதாவது எதையும் தரக்கூடிய விண்ணுலகத்தில் இருக்கும் கற்பக மரத்தின் அடியில் இருந்து நஞ்சுக் காயைக் கேட்டது போலாகுமென வருணிக்கின்றார். அதே மனப்பான்மையில் 'கையில் வெண்ணெயை வைத்து அதில் இருந்து நெய்யை எடுக்க முடியாத அறியாமைக்கு ஒப்பிடுகின்றார். இன்னுஞ் சிலர் தர்க்கத்திலும் வாக்குவாதங்களிலும் மூழ்கி, அனுபவத்தில் உணரக் கூடிய உண்மைகளைப் பெற முடியாமல் தம்காலத்தை வீணாக்குகின்றனர். இறைஞானமென்பது வாதங்களாலோ, வெறும் அறிவாலோ பெறமுடியாத ஒரு பொக்கிஷமாகும். அதை அடைய வேண்டுமானால், நிரந்தரமற்ற பிரபஞ்ச வாழ்க்கையை நிராகரித்து விட்டு, கட்டுப்பாடான ஆத்மீகப் பாதையைக் கையாள வேண்டும். இவற்றையே இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள், பின்வரும் வண்ணம் எடுத்தியம்புகின்றார்கள்:
(எம் ஐம்புலன்களுக்குப் புலப்படாத) விண்ணுலகத்தில் நிலவும் புதுமைகளை நாம் ஆராய்ந்தால், புலப்படும் உலகம் (ஒரு கானல் நீரைப் போன்று) நிரந்தரமற்ற உலகமாகும். அவ்வுலகத்தை அறியாத ஒருவன் ஒரு மிருகத்தைப் போன்றவனாவான். உண்மையிலே அவன் மிருகத்தை விட தவறு செய்பவனாவான். ஏனெனில் மிருகங்களுக்கு அவ்வுலகில் பிரவேசிக்கும் இறக்கைகள் இல்லை. தேங்காய்க்கு தேங்காய் மட்டை எப்படியோ, உயிருக்கு உடல் எப்படியோ, ஒளிக்கு இருள் எப்படியோ, உன்னதமான வஸ்துவுக்கு கீழ்த்தரமான வஸ்து எப்படியோ அதைப் போன்றதாகும் பூலோகத்திற்குப் புலப்படாத விண்ணுலகம். இதனால்தான் புலப்படாத விண்ணுலகை ஆத்மீக உலகமென்றும், ஒளிமயமான உலகமென்றும் வருணிக்கப்பட்டிருக்கிறது. விண்ணுலகில் இருக்கும் ஒருவன், இறைவனுடன் சேர்ந்திருப்பதால் புலப்படாத
 

193
உலகத்தின் திறப்புகளை தன்வசம் வைத்துக் கொண்டிருக்கின்றான்'
எம் சிருஷ்டி கர்த்தாவான இறைவனை தர்க்கங்களாலும் வாக்குவாதங்களாலும் எம் சிறிய அறிவால் உணர முடியாது. வாக்குவாதஞ் செய்பவர்களை, ஒரு யானையின் உடலைத் தடவி, அவ்யானை எப்படி இருக்குமென்று கற்பனை செய்த குருடர்களுக்கு ஒப்பிடுகின்றார்.
ஆத்மீக ஒளி எம்முன் வளரும்போது, நாம் முன் நினைத்ததை விட மோசமானவர்கள் என்ற உண்மையை உணர்கின்றோம். நாமும் முன் எவ்வளவு மோசமான குருடர்களாக இருந்தோம் என்பதை அறிந்து வியப்படைகின்றோம். ஏனெனில் மறைந்த புற்றிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் நிறைந்த பாம்புகளைப் போல், வெட்கப்படக் கூடிய எத்தனையோ உணர்ச்சிகள் எம் இதயத்தில் நிரம்புகின்றன. ஆனால் நாம் வியப்படையவோ அதிர்ச்சியடையவோ கூடாது. ஏனெனில் இவை நிகழும் பொழுது முன்னைவிட நாம் மோசமாகவில்லை. உண்மையில் நாம் மேலானவர்களாகின்றோம். ஏனெனில் எம் தீமைகள் குறையக் குறைய அத்தீமைகளைக் காட்டும் ஆத்மீக ஒளியின் பிரகாசம் கூடிக் கொண்டே போகின்றது. அவ்வேளையில் பயம் எம் உள்ளத்தை ஆட்கொள்கின்றது. ஒரு பரிகாரம் கிட்டும் வரை எம்மைத் தாக்கியிருக்கும் நோயின் கடுமையை உணரமாட்டோம். குருடர்களைப் போல அறியாமை என்னும் மயக்கத்தில் நாம் மூழ்கியிருக்கின்றோம். இது எப்படியானால் அருவி நீரோடு நாம் செல்லும்போது அதன் வேகத்தை அறிவோமா? ஆனால் எங்கேயோ கொஞ்சம் தாமதித்தால் அதன் வேகத்தை நன்கு அறிவோமல்லவா?
(பெனலன் - மேற்கத்திய தத்துவஞானி)"
(57)
மாயாத ஒயாவி காரத்தினா லெனது
மனது நொந் தேய முவனோ வஞ்சப்பிரபஞ்சத்தை நெஞ்சத் திருத்தியே
மதிகெட்டு நின்ற முவனோ தீயனிவ னென்றேகூ கின்றவர் நகைக்கின்ற
தீவினை தனக்க முவனோ சீநாயே ஓடென் றடித்துத் துரத்துஞ் சிரிப்பினைப் பட்ட முவனோ நாயினுங் கடைகெட்ட நாயினுங் கடைகெட்ட
நாய்போ லலைந்த ழுவனோ
13

Page 107
194
நானென்ன செய்வனடி யேனுமுமை நம்பினேன்
நன்மைகூர்ந்தாளுதற்கே
வாயாத மாயைசா வுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே
வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே! கெடாததும் இடைவிடாது
வருத்துவதுமான வேறுபாட்டினால் மனம்நொந்தழுவேனோ? வஞ்சகத்தையுடைய உலகமாயையை மனதில் வைத்து புத்தி கெட்டு அழுவேனோ? தீமையுடையவனென்று பழிக்கப்படுகின்ற நகைப்புக்கழுவனோ? சீ நாயே ஓடு என்று அடித்துத் துரத்துகின்ற சிரிப்படைந்து அழுவனோ? நாயினுங்கீழான நிலைக்குத் திரிந்து அழுவனோ? நான் என்ன செய்வேன்? சகல விஷயங்களிலும் நிலையில்லாமல் அழுகின்ற என்னை நன்மையால் ஆண்டருள் செய்வீரென்று உம்மை நம்பினேன். ஆகையால் வராதமாயையைக் கொண்டுள்ள நீர் பின்தொடர வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியார் உரையைத் தழுவியது) இவரைப் போன்றே, பரீதுத் தீன் - அத்தார் என்னும் சூஃபி ஞானி அவர்களும் தன்னிலிருக்கும் தீய குணங்களை நினைந்து நினைந்து பின்வருமாறு வருந்துகின்றார்:
ஒரு சூஃபி பக்தன் நடு இரவில் ஒலமிட்டு அழுதழுது புலம்புகின்றான். நான் உலகத்தை ஒரு மூடிய பெட்டி போல் காண்கின்றேன். அதனுள் நாம் சிக்கி அறியாமையில், மூழ்கி, எம்காலத்தை வீணாகக் கழிக்கின்றோம். மரணம் அப்பெட்டியின் மூடியைத் திறந்து விடும். அப்பொழுது தகுதி படைத்த (இறக்கைகள் உள்ள) ஒவ்வொருவனும் காலத்திற்கு அப்பாற்பட்ட உலகத்திற்கு பறந்து விடுகின்றான். ஆனால் தகுதியற்ற (இறக்கைகளற்ற) சிலரோ பெட்டிக்குள்ளே சிக்குண்டு பல்லாயிரக்கணக்கான பிணிகளுக்கும் துயரங்களுக்கும் அடிமையாகின்றனர். அப்படியானால் இறைஞான மெனும் சிறகை, உன் ஆத்மீக ஆசையான பட்சிக்குக் கொடு. உன் அறிவுக்கு உள்ளுணர்வு எனும் இதயத்தைக் கொடு. உன் ஆன்மாவிற்கு பேரின்பம் எனும் அனுபவத்தைக் கொடு. உலக வாழ்வெனும் பெட்டியின் மூடியைத் திறக்கு முன், இறைவனை அணுகும் பாதையில் பறக்கும் பறவையாக மாறி உன் சிறகுகளைப் பலப்படுத்திக்

195
கொள். பிறகு உன்னையும் உன் சிறகுகளையும்
இறைஞானமெனும் தீயிலிட்டு, மற்றவர்கள் அணுகுமுன்
இறைமயம் எனும் இலக்கை விரைவில் அடைந்துவிடு. *
(58)
குவலயக் கவலைதரும் இருமடையர் கைகளைக்
கோத்துத் திரிந்த வம்பன் கோட்டியுங் கேட்டையுஞ் சேட்டையுங் கூட்டியொரு
கோட்டையாய் கட்டு வம்பன் தவிராத காயகற் பங்கொள்கிறேனினிச்
சாவனோ வென்ற வம்பன் சந்யாச மென்றபொய் வேடந் தரித்தவர்கள்
தம்மைநிகர் சொன்ன வம்பன் செபமாலை கைக்கொண்டு வாய்முணுமுணுத்தும்உப
தேசிநா னென்ற வம்பன் தீதெலாந் தீரஅடி யேனுமுமை நம்பினேன்
தீரவந் தாளு தற்கே மவுனமெனு மோனவடி வுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே உலகத்தில் துன்பத்தைக் கொடுக்கின்ற மடையர்களுடைய கைகளைக் கோத்துத் திரிந்து கொண்டிருந்த வம்பன். கோஷ்டியையும், கேட்டையும், சேட்டையும் சேர்த்து ஒரு கோட்டையாய்க் கட்டி வைத்த வம்பன், நீங்காத சரீரத்தை நிறுத்த, கற்பகம் சாப்பிடுகின்றேன். ஆகையால் நான் இனிமேல் சாக மாட்டேன் என்று சொன்ன வம்பன், சந்நியாசம் என்கின்ற பொய் வேஷம் தாங்கி வந்தவர்களை ஒப்பானவன் என்று சொன்ன வம்பன், செபமாலையுடன் வாய் முணுமுணுத்து, உபதேசி நானே, என்று சொன்ன வம்பன். கொடுமைகளெல்லாந்தீர, அடியேனாகிய நானும் தீரத்துடன் வந்தாளுவீரென்று உம்மை நம்பினேன். ஆகையால் மெளனமெனும் மோன வடிவுள்ள முகியித்தீன் ஆண்டகை பின்தொடர, முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியார் உரையைத் தழுவியது) உலக வாழ்வில் மட்டுமல்லாமல், ஆத்மீக வாழ்க்கையிலுங் கூட போலிவேடம் போட்டு பாமர மக்களை ஏமாற்றும் எத்தனையோ வேடதாரிகள் இருக்கின்றனர். இத்தகையவர்கள்,

Page 108
196
உண்மையான ஆத்ம ஞானிகளுக்கு சமுதாயம் கொடுக்கும் மரியாதையையும், கெளரவத்தையும் பயன்படுத்தி, நயவஞ்சகராய் ஆத்ம ஞானிகளைப் போல் நடித்து தங்கள் சுயநலத்திற்காகப் பற்பல ஏமாற்று வித்தைகளைக் கையாள்வதை நாம் அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது. இத்தகைய வேடதாரிகள் எல்லாக் காலத்திலும் இருந்திருப்பதால் அவர்களைப் பற்றி ஹ"ஜ்வீரி (ரஹ்) அவர்கள் பின்வரும் வண்ணம் கருத்துரை வழங்குகின்றார்கள்:
சூஃபிகளெனக் கூறிக் கொண்டு போலி வேடம் போடும் வேடதாரிகளை மக்கள் அவதானிக்கின்றனர். மேலும் அவர்களின் நடனங்களையும் கீதங்களையும் மட்டுமின்றி சுல்தான்களின் மாளிகைகளில் பிரவேசித்து உணவுக்காகவும், பொருளுக்காகவும் போட்டியிடுவதையும் அவதானிக்கின்றனர். இதனால் சூஃபி பக்தர்கள் மேல் இருக்கும் மரியாதை குன்றி, இத்தகைய கொள்கையுடையவர்களா சூஃபியாக்கள்? என மக்கள் எண்ணத் தலைப்பட்டனர். எல்லாக் காலத்திலும் சூஃபியாக்கள் இவ்வாறுதான் நடந்திருப்பார்கள் என்னும் தப்பபிப்பிராயமுங் கொள்வார்கள். இது தீமைகளும் ஊழல்களும் நிறைந்த யுகம் என்பதை அப்பாமர மக்கள் உணர மாட்டார்கள். இவ்யுகத்தில் சுல்தான்கள் நீதியற்ற முறையில் நடப்பார்கள். ஞானிகள் காமத்திற்கு அடிமையாகி துர்ச் செயல்களில் ஈடுபடுவார்கள். சூஃபியாக்கள் ஆடம்பரத்திற்கும், புகழுக்கும், பொய்மைக்கும் அடிமையாகி தவறான வழிகளில் போவார்கள். ஆனால் இத்தகைய தீமைகளுக்குக் காரணம் புனிதமான சூஃபித்துவக் கொள்கைகளன்று. அவைகளைச் சரியாக உணராத மனிதர்களின் தவறுகளேயாகும். சிலர் போலி வேஷம் போட்டு மற்றவர்கள் ஏளனஞ் செய்யும் விதமாக நடந்து கொள்வதனால் உண்மையான இறைபக்தனின் இலட்சியம் ஒருநாளும் மாசுபடாது. *
அறியாமையில் மூழ்கி இருக்கும் மனிதன் தமக்கு ஒரு காலத்தில் மரணம் வரும் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டான். ஏனெனில் காயகல்பம் எனும் சாவா மருந்துண்டு. முதுமையின்றி எக்காலத்திலும் உலகில் இருக்கலாம் எனும் தவறான நம்பிக்கை கொண்டு, ஆத்மீக இருளை உண்டாக்கும் அகந்தைக்கு அடிமையாகி விடுவான்.
* மேலும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பவற்றைப் பெருக்கிக் கொண்டே போவான். பரம்பொருளை நிராகரிக்கும் ஒரு பேராசைக்காரனின் ஆசைக்கு எல்லையே இல்லை யென்று தாயுமான சுவாமிகள் பின்வருமாறு பாடுகின்றார்:
ஆசைக்கோர் அளவில்லை; அகிலம் எல்லாம் கட்டி
ஆளினும், கடல் மீதிலே ஆணைசெல வேநினைவர்; அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்த பேரும், நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்,
நெடுநாள் இருந்தபேரும்
 

197
(59)
குரைஷிக் குலக்கொழுந்தானமகு மூதுநபி
கொள்கையறி யாத பாவி கொறடாதனைக்கொண்டு மாட்டினு மறிஞர்பின்
கூடிநட வாத பாவி அரிசிவிலை யுலையறியு மோவென்ற கதைபோல
அகலிற் படைத்த பாவி ஆருக்கு வைத்தகூழாயினுஞ் சரிகானில்
அள்ளியடைகின்ற பாவி விரிதருந் தொப்பையை விருப்பொடு வளர்க்கமேன்
மேலுமலை கின்ற பாவி விதியற்ற பாவியடி யேனுமுமை நம்பினேன்
வேளையீ தாளு தற்கே வரிசைநபி வரிசைமிக வுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே குரைஷிக்குலக் கொழுந்தான முகம்மத் (ஸல்) அவர்களின் கொள்கை உணராத பாவி, கொறடாவைக் கொண்டு மாட்டினாலும் அறிவாளர்களுடன் கூடி நடக்காதபாவி, அரிசியின் விலையை உலை அறியுமோ வென்கின்ற கதையைப் போல் அகலிற்படைத்த பாவி, ஆருக்கு வைத்த கூழானாலும் அள்ளித் தின்கின்ற பாவி, விரிகின்ற தொப்பையை ஆசையுடன் வளர்த்தற்கு அலைகின்ற பாவி, விதியற்ற பாவியாகிய நான் இந்த வேளையில் என்னை ஆளுதற் பொருட்டு உம்மை நம்பினேன். ஆகவே நபிவரிசைகளைப் பெற்றுள்ள நீர் பின்தொடர, வள்ளல் இறசூல் (ஸல்) அவர்கள் முன் வந்தருள வேண்டுகிறேன்.
(வடிவேலு முதலியார் உரையைத் தழுவியது)
நிலையாகவே இனும் காயகற் பந்தேடி நெஞ்சுபுண் ஆவர்; எல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாக முடியும்; உள்ளதே போதும்; நான் நான் எனக்குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றி பாசக் கடற்குழே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்! பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற
பரிபூரணானந்தமே! (தாயுமானார்)

Page 109
198
உலக இன்பங்களில் மூழ்கி ஐம்புலன்களின் ஆசைகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை வீணாக்கியவர்களை கவிஞர் பாவி என இகழ்கின்றார். முஹம்மத் (ஸல்) அவர்களின் உயர்ந்த ஆத்மீக இலட்சியத்தை 15sTLIT5), அவர்களின் போதனைகளைப் புறக்கணித்த தன்னலவாதியை ஞானச் செல்வர் குணங்குடியார் கண்டிக்கிறார். அத்தகைய மனிதன் அகந்தை மிகுந்து மற்றவர்களின் நலன்களைக் கருதாது தன்னலவாதியாகின்றான். இது சூஃபித்துவக் கொள்கைக்கு நேர்மாறான தவறாகும்.
இவ்விடயம் பற்றி அபுல்ஹஸன் நூரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
மனித சமுதாயத்தின் ஆசைகளில் இருந்தும், காமக் குரோதங்களில் இருந்தும், உடல் இச்சைகளில் இருந்தும் சம்பூரண நிவாரணம் அடைந்து இறைவனளவில் தஞ்சமடைந்து இறைவனன்றி மற்றெல்லாச் சிருஷ்டிகளிலும்
இருந்து விடுதலையானவனே ஓர் உண்மையான சூஃபியாவான். அவன் வசம் ஓர் உடைமையும் இல்லை. அதைப்போல் அவன் வேறொரு வஸ்துவின் உடைமையாகவும் மாட்டான்.
(60)
பாசக் கயிற்றுவலை வீசிப் பிடிக்கின்ற பாவையர்க் கேய முவனோ பத்தியொடு தந்தைதாய் தந்துமோ சஞ்செய்த
பல்வினை தனக்க முவனோ ஆசைப் பெருக்கைப் பெருக்கப் பெருக்கழும்
பாளருக்கேய முவனோ அம்மம்ம என்சொல்லு கேன்அகில வாழ்வென்னும்
அக்கினிகள் சுட்ட முவனோ பீசேரு பீறல் துருத்திசத மென்றதைப்
பேணுதற் கேய முவனோ பேயெனன் செய்வனடி யேனுமுமை நம்பினேன்
பிழைபொறுத் தாளு தற்கே மாசிலுப தேசறிலை யுள்ளநீர் பின்தொடர
வள்ளல்இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித் தீனே.* (மஸ்தான் ஸாஹிபு)"
* மேற்கூறப்பட்ட மஸ்தான் ஸாஹிபு பாடலோடு கீழ்க்காணும் திருமூலர் பாடலையும் ஒப்பு நோக்குக.
விரும்புவர் முன்னென்னை மெல்லியன் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக் கரும்பொத்துக் காஞ்சிரங் காயு மொத்தேனே.
 

199
பொழிப்புரை: குணங்குடி வாழும் என் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே, பாசமாகிய வலையைக் கொண்டு வீசிப் பிடிக்கின்ற, பெண்களுக்காக அழுவனோ? பெற்றோரின் பல வகைப்பட்ட வினைப் பயன்களின் பொருட்டு அழுவனோ? ஆசைப் பெருக்கை அதிகமாக்க அழுகின்ற, அழும்புக்காரர்களின் பொருட்டே அழுவனோ? உலக வாழ்க்கையாகிய அக்கினிகள் சுட அழுவனோ? இரைப்பையே சதமென்று காப்பாற்றுதற்கு அழுவனோ? பேயனாகிய நான் என்ன செய்வேன்? எதற்காக வருந்துவதென்று அறியாதவனாகிய நான், உம்மை நம்பி இருப்பதால் என்னுடைய குற்றங்களைப் பொறுத்து கைவிடாமல் காப்பாற்ற வேண்டும். செஞ் சொற்களை உபதேசிக்கும் முகியித்தீன் ஆண்டகை பின்தொடர முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
(வடிவேலு முதலியார் உரையைத் தழுவியது) இறைவன்பால் செல்லும் மனித ஆத்மா எத்தனையோ இச்சைகளுடன் போராட வேண்டியிருக்கிறது. இப்போராட்டம் இலேசானதல்ல. அதில் எத்தனையோ குழிகளும், பொறிகளும், ஏமாற்றங்களும் நிறைந்திருக்கின்றன. 'நப்ஸ"ல் அம்மாறா என்னும் மிருக உணர்ச்சிகளைத் தூண்டும் மிருக ஆத்மா, மிகத் தந்திரமும், சாமர்த்தியமும் வாய்ந்ததாகும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, அதிகார ஆசைகளே அது பாவிக்கும் ஆயுதங்களாகும். இவ்வித ஆசைகளை வென்றெடுப்பது இலேசான காரியமல்ல. இவைகளின் அட்டகாசங்களை நினைத்தும், அவை இறைவன்பால் செல்லும் யாத்திரிகர்களுக்கு உண்டு பண்ணும் பற்பல தடங்கல்களை எண்ணி எண்ணியும் சூஃபிஞானி குணங்குடியார் அழுதழுது வருந்திக் குறையிரந்து வேண்டுகின்றார். இதற்கு முன்னுள்ள கவிதைகளில் குணங்குடியார் அவர்கள் மூன்று விதமான மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். முதலாவதாக உடலிச்சைகளுக்கு அடிமையாகும் மிருகக் குணங்கள் நிறைந்த மனிதர்கள். இரண்டாவதாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் பெருமை, அகந்தை கோபம் நிறைந்தவர்கள். மூன்றாவதாக விவாதங்களிலும் பேச்சுகளிலும் காலத்தை வீணாக்கும் பொய் அறிவு படைத்த வாயாடிகள். இம்மூன்று சாராரிலும் நப்ஸ் என்னும் மிருக ஆத்மாவின் பல்வேறு முகங்களைக் காணக் கூடியதாய் இருக்கின்றது. ஆன்மீக யாத்திரையில் மேற்கூறிய ஒவ்வொரு திரையையும் ஒவ்வொன்றாக நீக்க வேண்டும்.
இயற்கையின் சுபாவங்களைப் புறக்கணிக்காமல் தெளஹித் எனும் ஏகத்துவ நிலையை ஒரு பக்தனால் அடைய முடியாது என

Page 110
2OO
காஃபீஃப் (Khaft) எனும் இறைஞானி கூறியிருக்கிறார். இதைப்பற்றி ஹ"ஜ் வீரி (ரஹ்) மேலும் விமர்சிப்பதாவது:
ஒரு பக்தன் தன் இயற்கையான உலக ஆசாபாசங்களை நிராகரிக்காமல் இறைவனை அணுக முடியாது. ஏனெனில் தன்னில் இருக்கும் அழுக்குகளை சம்பூரணமாக நீக்காமல் இறைமையின் உண்மையை அவனால் அறிய முடியாது. *
(61) பூஞ்சோலை வாழும் ஒணானெனவும் வீணில் நான்
போகாம லருள்புரியவும் பொற்றா மரைக்குளத் தவளையா காதுனைப்
புணருதற் கருள்புரியவுந் தேஞ்சாறு பாஞ்சாறு பாயுநின் பொதிகைச்
செழுஞ்சார லருள்புரியவும் திவ்யமா மதுரந் திரண்டமதி யமிர்தந் தினந்தந்துனருள்புரியவும் நான்சாமு னான்செத்து நாடோறு முன்சமுகம்
நான்சார வருள்புரியவும் நாதமும் வேதமும் நாதநாதாந்தமும்
நானாக வருள்புரியவும் வாஞ்சித்த லோடுமெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டு மென்ற னருகே மாகுணங் குடிவாழு மென்னகத் தீசனே
மவுனதே சிகநாதனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: இறைவா! பூஞ்சோலையில் இருக்கும் ஒணானைப் போல், நான் வீணாகாதபடி அருள்புரியவும், தாமரைத் தடாகத்திலுள்ள, தவளை போலாகி விடாமல் உன்னைச் சேர்வதற்கு அருள்புரியவும், நல்ல இனிப்புள்ள சந்திர அமிர்தத்தை (பேரின்பத்தை) நாள்தோறும் கொடுத்து அருள்புரியவும், சரீரம் இறப்பதற்கு முன் நான் செத்து அனுதினமும் உன்னுடைய சமூகத்திலிருக்க அருள்புரியவும், நாதம், வேதம், நாதாந்தம் இவைகளே நானாகும் வண்ணம் அருள்புரியவும், தவராஜசிங்கமே விருப்பொடு எனக்குச் சமீபமாக எழுந்தருளி வரவேண்டும்.
(வடிவேலு முதலியாருடைய உரையைத் தழுவியது) முன் கூறிய "பனா’, 'பகா என்னும் நிலைகளையே "நான்சாமு னான்செத்து நாடோறு முன் சமுகம் நான்சார அருள்புரியவும் என கவிஞர் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு வேறுபடும் சந்தர்ப்பங்களுக்கு அடிமையாகி உலக ஆசைகளில் மாறிமாறி
 

2O1
கவனஞ் செலுத்துவதை விட்டுவிட வேண்டிய அவசியத்தை 'பூஞ்சோலை வாழும் ஒணான் எனவும், 'வீணில் நான் போகாமல் அருள்புரியவும் எனக் கூறுகின்றார். இறைவன்பால் செல்ல வேண்டுமென்றால் மிருக ஆத்மா மரணிக்க வேண்டும்.
(62)
மண்ணாதி பூதத்தின் பொய்வீடு - புழுக்குலங்கள் விண்ணாந்திருக்கு மலக்கூடு - மயிர் முளைத்த எண்சாண சுத்தக் குப்பைமேடு - மடவர் அல்குல் புண்ணாந் தடத்தில் விழுமாடு - மனத்தறிவை எண்ணாத பாவச் சுடுகாடு தவத்தருளின் கண்ணாளரைப் பழித்த பேடு - நிலைதெளிய ஒண்ணா திருக்கில் வருங்கேடு - அதினாலருள் தண்ணார்ந்த சோதி நிதங் கண்ணார்ந் திருக்க வின்று
(அப்துல் கனி பாவா)" பொழிப்புரை: மண்முதலான பஞ்ச பூதங்களாலான நிலையில்லாத இவ்வுடம்பை, மலக்கூடு, மயிர் முளைத்த குப்பைமேடு, மடவார் அல்குல் புண்ணாம் தடத்தில் விழும்மாடு என்றெல்லாம் இகழ்ந்தும்; இத்தகைய வாழ்வை நிலையென்று இருப்போரை எருது என்றும், மனவெளியில் தோற்றும் பரம்பொருளை எண்ணாதவர்களை, பாவச் சுடுகாடு என்றும், இறைபாதையில் செல்வோரை இகழ்ந்தவர் பேடு என்றும் கூறி, நேர்வழிக்காகும் நிலை தெளிய வில்லையென்றால், கேடு வரும் எனவும் கவிஞர் எச்சரிக்கின்றார்.
ஐயத்துக்கிடமின்றி காம இச்சை ஒரு பெரும் சக்தி என்பதை எல்லாவிதமான ஆத்மீக அனுஷ்டானங்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. உடலில் இருக்கும் அழுக்குகளைச் சிந்தனை செய்வதால், உடல் மேலுள்ள காம ஆசையை நிவர்த்தி செய்ய முடியுமென சில ஆத்மீக நெறிகளில் கூறப்பட்டிருக்கின்றது. உடல் ஆசைகளின் உண்மையான தன்மையைச் சிந்திப்பதாலும் இப்பயனை அடையலாம். பிலேட்டோ எனும் மேற்கத்திய தத்துவஞானி மனித உடலின் நானாவிதமான இச்சைகளைப் பற்றிக் கூறுவதாவது:
மனித உடல் பற்பல துன்பங்களை உண்டாக்கும் ஒரு கருவியாகும். s951 அடிக்கடி உணவு கேட்பது மட்டுமல்லாமல் பற்பல நோய்களையும் எமக்குத் தந்து உண்மைப் பொருளைத் தேடும் பாதையில் பல இன்னல்களை விளைவிக்கும். அது பலதரப்பட்ட ஆசைகளையும்

Page 111
2O2
இச்சைகளையும் பயன்களையும், மோகங்களையும் எம்முள் உண்டுபண்ணி எம்மை மடையர்களாக்கி எம் தெளிவான சிந்தனையைக் கூட நீக்கி விடுகின்றது. இதிலிருந்துதான் யுத்தங்களும், கட்சிப் பிரிவுகளும், தகராறுகளும் உண்டாகின்றன.
உடல் இச்சைகளே இவைகளுக்குக் காரணமாகும். பண ஆசையே சில யுத்தங்களுக்குக் காரணமாகும். ஏனெனில் உடலின் தேவைக்கும், அதன் சேவைக்கும் பணம் தேவையாகும். பண இச்சையில் கவனஞ் செலுத்தினால் தத்துவ அறிவைத் தேடும் நேரம் வீணாகிப் போய்விடும். மேலும் கொஞ்சம் ஒய்வு இருந்தால் கூட, எம்முடைய உடலானது அந்த ஓய்விலுண்டாகும் சாந்தியைக் குழப்பி, எம் சிந்தனைகளைக் குலைத்து உண்மையைக் காணும் தியானத்திலிருந்து எம்மைக் கலைத்து விடுகிறது. எம் ஆத்மாவானது, வஸ்துக்களின் உண்மையான நிலையைச் சிந்திக்க வேண்டுமானால், உடலின் ஆதிக்கத்திலிருந்து நாம் விலக வேண்டும். அப்போதுதான் ஒரு விடயத்தின் உண்மை நிலையை அறியலாம். அப்படிச் செய்வோமானால் நாம் தேடும் அறிவை எம்மால் அடையலாம். இந்நிலை மரணத்தின் பின்தான் எமக்குக் கிடைக்கும். ஏனெனில் உடலோடு சம்பந்தப்பட்டிருக்கும் பொழுது ஆத்மாவானது தூய்மையான உண்மையைக் காண முடியாது. அது மரணத்தின் பின்னேதான் சாத்தியமாகும்.”
மேற்கூறிய தீவிரக் கொள்கையை சூஃபித்துவம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நாம் உடல் இச்சைகளுக்கு அடிமையாகக் கூடாதென்பதை சூஃபித்துவம் கூறுகின்றது. அதே சமயம் உடல் என்பது இறைவன்பால் செல்லும் ரூஹின் ஒரு சாதனமாகும் என்னும் உண்மையையும் ஒப்புக் கொள்கின்றது.
(63) காலையிலிருந்த பேர்கள் காயமழிந்தோர் கோடி மாலையி லிருந்த பேர்கள் மண்ணினில் மறைந்தோர் கோடி சீலம் நற்சtர வாழ்க்கை சீக்கிரம் மறையும் நெஞ்சே
பிறப்பதும் அநேகம் பார்த்தோம் பிறந்த பின்னுலகந் தன்னில்
இறப்பதும் அநேகம் பார்த்தோம் இறந்தபின் ஏதோ ஹக்கை மறப்பவர் மண்ணில் தானும் மாண்டார்கள் கோடி நெஞ்சே
 

2O3
யாரா ரிருந்திடினும் யாரா ருவந்திடினும்
யாரா ருதவியுந்தான் ஆகிறத்துக்குதவியில்லை பாருலகு வாழ்வு எல்லாம் பறாக்கும் அலங்கரிப்பும்
தாருலகில் விளையாட்டும் தன்மையுள்ள பிள்ளைகளும் பணங்காசும் பொருளும் பாருலகில் பெரிதென்று
கனமாக வாழ்வார்கள் கண்மூடி விழிப்பதற்குள் மாறிவிடு மென்று மனதிலே யெண்ணார்கள்
வீறாகப் பேசி மெத்த மேதினியி லழிவார்கள்
(செய்குஷாஹுல் ஹமீத்)" இக்கவிதைகளில் உலக வாழ்க்கையின் அநித்தியத்தைப் பற்றி, 'காலையில் இருந்த பேர்கள் காயமழிந்தார்கள் கோடி, மாலையில் இருந்த பேர்கள் மண்ணில் மறைந்தோர் கோடி" எனக் கூறுகின்றார். உலக ஆசாபாசங்கள் அலங்காரங்கள் சிறுவரின் விளையாட்டைப் போல் நிரந்தரமற்ற தெனவும், அவை மறுமை நிலைக்கு உதவாதெனவும் கூறுகின்றார். பணம், காசு, பொருள்முதலிய உலக இன்பங்கள் கண்மூடி விழிப்பதற்குள் மறைந்து விடலாமென்றும் எச்சரிக்கின்றார். அநித்தியமான உலகத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:
"பூமியிலுள்ள யாவும் அழிந்தேபோகும்’ 'மிக்க கண்ணியமும் பெருமையுந் தங்கிய உம்முடைய ரப்பின் திருமுகம் (மட்டும்) நிலைத்திருக்கும்." (55: 26, 27) ஜோன் டொன் (JOHNDONNE) எனும் பிரபல்யமான மேற்கத்திய ஆங்கில எழுத்தாளர் மரணத்தைப் பற்றிக் கூறுவதாவது:
நாம் எம் தாயின் கருவறையிலே உருவாகும் பொழுது எம்மைச் சுற்றி ஓர் உறை உண்டாகின்றது. நாம் அக்கருவறையில் இருந்து வெளியுலகத்தில் பிரவேசிக்கும் பொழுது அவ்வுறையோடு வருகின்றோம். ஏனெனில் பூவுலகம் ஒரு கண்ணோட்டத்தில் அச்சிசுவுக்கு இரண்டாம் புதைகுழிபோல் அமைகின்றது. இதனால்தான் நாம் பிறக்கும் போதே அழுதுகொண்டு பிறக்கின்றோம். இவ்வுலகமென்பது உண்மையில் ஒரு பெரிய மயானமாகும். ஏனெனில் உலகில் வாழ்ந்த மிகப் பெரியோர் உட்பட எல்லோரும் போய்த் தஞ்சமடைவது இங்கேயாகும். இவ்வுலகத்தில் வாழும் எல்லோரின் வாழ்க்கையும் எவர்கள் எவ்வாறு பெரியவர்களானாலும் 86 L பூகம்பம் நேரும்பொழுது அசையும் புதைந்த பிணங்களுக்கு ஒப்பிடலாம்.

Page 112
2O4
மரணம் எல்லோரையும் சமப்படுத்தி விடும் என்னும் மறுக்க முடியாத உண்மையைப் பற்றி இவர் மேலும் கூறுவதாவது:
மரணம் எல்லோரையும் சமமாக்கி விடுகின்றது. புகைக் கூண்டில் அடைந்து கிடக்கும் ஒரு விருட்சத்தின் சாம்பல், அது எவ்வளவு பெரிய விருட்சமென்றோ அல்லது எவ்வளவு உயர்ந்த மரமென்றோ சான்று சொல்லாது. மேலும் அவ்விருட்சம் உயிரோடு இருந்த பொழுது எத்தனை உயிரினங்களுக்கு தஞ்சம் கொடுத்ததென்றோ, அது விழும்போது எத்தனை பேர்களைக் காயப்படுத்தின தென்றோ அச்சாம்பல் ஒரு பொழுதும் கூறாது. இதைப் போன்றுதான் பெரியோர் எனக் கருதப்படும் மக்களின் சாம்பல் நிசப்தமானதாயிருக்கும். அது ஒன்றையும் கூறாது. ஒன்றையும் வருணிக்காது. வேறுபடுத்தாது. மரணித்த எவனின் தூசியும் காற்றின் அசைவால் உன் கண்ணைத் தாக்கும் பொழுது இது இன்னாரின் தூசு என உனக்குக் கூறலாமா? வெளியே இருந்த தூசியை ஒரு சுழல்காற்று கோயிலுள்ளே சிதறிய போழ்து அதைக் கூட்டி வெளியாக்கும் சேவகன் அதைப் பார்த்து இது தலைவனின் தூசு, இது பணியாளனின் தூசு என வேறுபடுத்திக் கூறுவானா? *
மேற்கூறிய அறிஞர் கருத்து பூலோக வாழ்க்கையின் அநித்தியத்தை எடுத்துக் காட்டுவதுடன் மனிதனின் அகம்பாவத்தின் பொய்மையை நன்கு விளங்கப்படுத்துகின்றது. மரணத்தை ஒருபோதும் தவிர்க்க முடியாதென நன்குணர்ந்தவன் ஆத்மீகப் பாதையைத் தாமதமின்றிக் கடைப்பிடிப்பான் என்பதே இதன் கருத்தாகும்.
(64) இரக்கத் துணிந்து கொண்டேனே - எனக் கிருக்குங் குறைமுழுதும் நிகழ்த்திக்கொண்டேனே (இரக்கத்) பொழிப்புரை: இறைவனிடத்தில் எனது குறை முழுவதையும் சொல்லி இரக்கத் துணிந்து கொண்டேன்.
1. கொடிகட்டிக் கொண்டெழு கோடி - தனங் குவித்தந்த மகிழ்ச்சியாற் கூத்துக ளாடி கெடுபுத்தி யுடையோரைக் கூடி - யானுங்
கெட்டலையாமலே கெதிபெற நாடி (இரக்கத்)
பொழிப்புரை: கொடி கட்டிப் பறக்கும் கோடி செல்வம் உடையவர்களோடு மகிழ்ச்சிக் கூத்தாடாமலும், கெடு புத்தியுடையவர்களோடு சேராமலும் இருக்க வேண்டி இரக்கத் துணிந்து கொண்டேன்.
 

2O5
2. சொற்கடங் காச்சுக ஞானம் - தன்னிற்
சும்மாவிருக்குஞ் சுகமதே மோனம் எட்கிடை யாயினும் பானந் - தன்னை
எடுத்துண்டிருப்பதற்கிச்சித்தே யானும் (இரக்கத்) பொழிப்புரை: சொல்லுக்கு அடங்காத சுகத்தை விளைவிக்கின்ற ஞானத்தில் சும்மா இருப்பதே மெளனம். ஆகையால் எள்ளளவாவது அந்த ஞானமாகிய பானத்தை எடுத்து உண்டிருப்பதற்கே நான் விரும்பி இரக்கத் துணிந்து கொண்டேன்!
3. வஞ்சிய ராசையைத் தாண்டி - வீட்டு
வழிபெற்றுக் களிப்புற்று வாசியைப் பூட்டி துஞ்சாத வறிவினைச் சூட்டி - அற்பத்
தொல்லுல காசை துணித்துவிட் டோட்டி
(இரக்கத்) பொழிப்புரை: பெண்களுடைய ஆசையைத் தாண்டியும், நேர்வழி பெற்று மகிழ்ச்சியடையவும், மனக்குதிரையைக்
கட்டுப்படுத்தியும், கெடுதலில்லாத அறிவைப் பெற்றும், அற்ப உலக வாழ்வின் ஆசையை நீக்கவும் இரக்கத் துணிந்து கொண்டேன்
4. அஞ்சுதூணாட்டிய மாடி - அது
அஞ்சோடு நாலோட்டை யடையாம லோடி பிஞ்சழிந் திடுமென்று நாடி - யானும்
பேரின்ப வீட்டினைப் பிரியமாய்த் தேடி (இரக்கத்) பொழிப்புரை: அஞ்சு தூண்கள் நாட்டப்பட்ட மாடியானது அஞ்சுடன் நாலோட்டை அடையாமல் ஓடி பிஞ்சானது அழியும் என்று நாடி யானும் பேரின்ப மோட்ச வீட்டை ஆசையுடன் தேடி இரக்கத்துணிந்து கொண்டேன்
5. நற்பூச் சந்தன வத்தர் பூசி - மிக
நன்றாக வைத்தாலும் நாற்றமே வீசி எப்போதும் கொடுமைசெய் தோசி - என்றே
இவ்வுடல் வாழ்வுகள் யாவையும் வீசி (இரக்கத்) பொழிப்புரை: நல்லினப் புஷ்பங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட வாசனையுள்ள சந்தன அத்தரைப் பூசி நன்றாக வைத்திருந்தாலும், நாற்றம் வீசி எப்பொழுதும் கொடுமைகளைச் செய்யும் தோசியென்றே இச்சரீர வாழ்வை இகழ்ந்து இரக்கத் துணிந்து கொண்டேன்.
6. மாளிகை மேல் வீடு கட்டி - மனை
வாழ்வை நிலையென்று வாழ்கின்ற மட்டி

Page 113
2O6
நாளையெமன் வந்த தட்டிக் - கொண்டு
நடப்பானென்றறியானை யடுப்பதை வெட்டி
(இரக்கத்) பொழிப்புரை: மாளிகை, மேல்வீடு இவைகளைக் கட்டிக் கொண்டு வாழ்வதே நிலையானது என்று எண்ணுபவனும் நாளை எமனானவன் வந்து 6TLD5Ι உயிரை வாங்குவான் என்றறியாதவனையும் சேராமல் இருக்க இரக்கத் துணிந்து கொண்டேன்
7. பட்டுப் பணிகளும் பூண்டு - கொண்டு
பாழான வாழ்வினைப் பலனென வாண்டு கெட்டவர் களைக்கண்டு மீண்டு - கதி
கிடைக்கும் படிக்கு நடப்பதற் கீண்டு (இரக்கத்) பொழிப்புரை: பட்டுச்சாரி கட்டியும், ஆபரணங்களை அணிந்தும், பாழான வாழ்க்கையை பலனுடையதென்றெண்ணியும், மாண்டு கெட்டவர்களை விட்டு நீங்கி, வீடுபேறடைய இரக்கத் துணிந்து கொண்டேன் கதி- மோட்சம்
8. காமக் குரோதங்க ளற்று - சூழுங்
கருவி கரணஞ் சகலமு மற்று நேம நிட்டைகளையு மற்று - நின்ற
நிலையு மறந்து குருவடி பெற்று (இரக்கத்) பொழிப்புரை: காமக்குரோதங்கள் ஒழிந்து, இந்திரிய சுகங்களற்று தவத்திற்குரிய கடன்களையும் விட்டு நீங்கி, நின்ற, உண்மை நிலையையும் மறந்து, ஞானாசிரியனுடைய திருவடிகளைப் பெற்று வாழ இரக்கத் துணிந்து கொண்டேன்.
9. எத்தனை யெத்தனை காலம் - இந்த
என்பு தசையா லெடுக்கின்ற தூலம் மெத்தென வாழுமிஞ் ஞாலம் - அதை
மேவாது மேவாதெடுத்திந்தக் கோலம் (இரக்கத்)
பொழிப்புரை: எவ்வளவு காலத்துக்கு என்பு தசையாலான இவ்வுடம்பு இவ்வுலகத்தில் வாழப் போகிறது? இவ்வுடம்பைப் பெற்ற நோக்கத்தை அடையாமலிருப்பது என்ன கோலம் என்றெண்ணி இரக்கத் துணிந்து கொண்டேன்
10. என்னிலை தன்னை யறிந்தே - என்னுள்
இருந்தாடுஞ் சூத்திரம் பொருந்திட மறிந்தே அன்னிய நிலைகளைத் துறந்தே - குரு
அருளினா லநூதின மருளெலா மறிந்தே
(இரக்கத்)
 

2O7
பொழிப்புரை: என்னுடைய நிலையை உணர்ந்து எனக்குள்ளிருந்து ஆடுகின்ற சூத்திரம் பொருந்துகின்ற ஆட்டத்தையறிந்து, அன்னியருடைய நிலைமைகளை விட்டு ஞானாசிரியருடைய கிருபையினால் தினந்தோறும் அருள் எல்லாவற்றையும் அறிந்து இரக்கத்துணிந்து கொண்டேன்."
11. ஆழித் துரும்பென வெங்கும் - இங்கும்
அலைந்து திரிவதி லஞ்ஞானந் தங்கும் பாழிற் கெடாதருள் பொங்கும் - படி
பார்த்துத்துணிந்து பரதேசமெங்கும் (இரக்கத்)
பொழிப்புரை: (இறைவா) சமுத்திரத்திலகப்பட்ட துரும்பைப் போல அலைந்து, அஞ்ஞானம் குடிகொண்டு கெட்டுப் போகாதபடி திருவருள் பொங்கப் பார்த்திடுக என்று பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ள உன்னிடத்தில் இரக்கத் துணிந்து கொண்டேன்
12. காடுங்கரையுஞ்சுழன்று - ஒரு
காட்சியுங் காணோ மெனவேயுழன்று தேடும் பருவத்திற் சென்று - திக்குத்
திசையொன்றுந் தெரியாமற் றெளிதற்கு நின்று.
(இரக்கத்) பொழிப்புரை: காடு கரை முதலியவைகளில் சுற்றி ஒரு காட்சியும் காணப்படவில்லையே என்று உழன்று தேடுகின்ற காலத்தில் போய் எந்தத் திசையும் தெரியாமல் தெளிவதற்கு நின்று இரக்கத் துணிந்து கொண்டேன்
* இதைப் போன்ற ஒரு கருத்தை தாயுமான சுவாமிகளும் ஓசை நயம் பெற்ற தத்துவ வசனங்களில் பாடியுள்ளார்.
இனியேது எமக்குஉன் அருள்வருமோ எனக்கருதி
ஏங்குதே நெஞ்சம்; ஐயோ! இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று
எண்ணவோ திடம் இல்லையே; அநியாய மாய்இந்த உடலைநான் என்றுவரும்
அந்தகற்கு ஆளாகவோ; ஆடித்திரிந்து நான்கற்றதும் கேட்டதும்
அவலமாய்ப் போதல் நன்றோ கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு
கந்தமூலங்களேனும் கனல்வாதை வந்துஎய்தின் அள்ளிப் புசித்துநான்
கண்மூடி மெளனிஆகித் தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது
சாமிநீ அறியாததோ! சர்வபரிபூரண அகண்ட தத்துவமான
சச்சிதானந்த சிவமே (தாயுமான சுவாமிகள்)

Page 114
2O8
13. ஆடிய கூத்தினைப் போற்றி - அருள்
ஆனந்தஞ் சேர்க்கும் அருளினிற் றோற்றி ஒடிய காற்றினை யேற்றி - அதில்
உருகி யொழுகுமமிர்தத்தைத் தேற்றி (இரக்கத்) பொழிப்புரை: இறைவனின் வியாபகமான விந்தையைப் போற்றி, அவன் அருளை அடையும் நெறிகளைக் கடைப்பிடித்து, அதில் உண்டாகும் ஞானமிர்தமான நிலையை அடைய இரக்கத் துணிந்தேன்
14. மண்டப வுள்ளறை விண்டு - வரும்
மாமன மூறிய தேமது வுண்டு உண்டு களிப்போரைக் கண்டு - யானும்
உள்ளத்திருக்கினைத் தள்ளிக்கைக் கொண்டு
(இரக்கத்) பொழிப்புரை: மண்டபத்தில் இருக்கின்ற உள்ளறையை விட்டு வருகின்ற பெரிய மனமானது, முறியும் பொருட்டு தேனைக் குடித்து சந்தோஷிப்பார்களைக் கண்டு நானும் மனமயக்கத்தை நீக்கி நன்மையைக் கைக்கொண்டு இரக்கத் துணிந்தேன்
15. பொறிபுல னடங்கிய காலே - பரி
பூரணப் பொருள் வந்து வாய்க்குமப் பாலே அறிஞரு மறியாது போலே - காணும்
ஆனந்த வெள்ளத்தி னாடினதாலே (இரக்கத்) பொழிப்புரை: பொறிபுலன் இவை ஒடுங்கின காலத்தில் பரிபூரணப் பொருள் வந்து கைகூடும். அப்பால் அறிவுள்ளர்களும், அறியாமல் போதை ஆனந்த வெள்ளத்தை நாடினதினால் இரக்கத் துணிந்தேன்
16. நினைவுங் கனவு மறந்து - நின்ற
நிலையு மறந்தெழு கலையு மறந்து இனமு மனமும் மறந்து - பின்னர்
இதனிடை தோற்றிய விதங்களு மறந்து (இரக்கத்)
பொழிப்புரை: நினைவையும், கனவையும் மறந்து இருந்த நிலைமையையும் மறந்து, சாதியையும், மனத்தையும் மறந்து, பிறகு இதில் உண்டான சர்வ வகைகளையும் மறந்து இரக்கத் துணிந்து கொண்டேன்
17. கற்பட்டுப் பாய்கின்ற தோயம் - போலக்
காட்டி மறைக்கும் பிரபஞ்ச மாயம்
 

2O9
அற்பர்க்குத் தெரியாது பாயம் - என்று
ஆலோசனைசெய்தழியுமுன்காயம் (இரக்கத்) பொழிப்புரை: கல்லிடிந்து ஒடுகின்ற வெள்ளத்தைப்போலக் காட்டி பிரபஞ்ச மாயமானது மறைக்கும். இதைத் தடுக்கும் உபாயம் அற்பருக்குத் தெரியாது என்று காயம் அழிவதற்குமுன் ஆலோசனை செய்து இரக்கத் துணிந்து கொண்டேன்
18. எனையானென்றறியாத பாடு- என்னை
இக்கோல மாக்கிய தேயதன் கேடு தனையானு மெதிர்க்கையி னோடு -கொண்டு
சாபத்துடனடர்ந்து கோபத்தினோடு (இரக்கத்)
பொழிப்புரை: என்னை நானென்று அறியாத குணம் என்னை இந்தக் கெடுதி ஆக்கியதே, கேட்டையானும் எதிர்த்துக் கொண்டு சாபத்துடன் அடர்ந்து கோபத்துடன் இரக்கத் துணிந்து கொண்டேன்
19. விண்ணுக்குள் வெளியிருள் மாற்றி அதில்
வேதாந்த மூல விளக்கினை யேற்றிக்
கண்ணுக்குள் மணியாகத் தோற்றி - வருங்
காரணமான கடவுளைப் போற்றி (இரக்கத்)
பொழிப்புரை: என்னைச் சூழ்ந்திருக்கும் இருளை மாற்றி, அதில் இறை ஞானமெனும் பிரகாசத்தை விளங்கச் செய்து, கண்ணுக்குள் மணியாகக் காட்டி வருகின்ற காரண வஸ்துவான இறைவனை வணங்கி இரக்கத் துணிந்து கொண்டேன்.
20. எல்லாரு மானிடர் தாமோ - இந்த
இழிவான பிரமைக ளெல்லார்க்கும் போமோ கல்லெல்லா மாணிக்க மாமோ - என்று
கற்பித்த காரண குருவடி போற்றி (இரக்கத்) பொழிப்புரை: யாவரும் மானிடர்கள் தாமோ? இந்த இழிவு, தரும் அறியாமை எல்லாருக்கும் நீங்குமோ? எல்லாக்கற்களும் மாணிக்கக் கற்களாகுமோ? என்று கற்பித்த என் குருவின் பாத கமலங்களை புயங்களில் பற்றி இரக்கத் துணிந்தேன்"
0 குணங்குடியார் அவர்கள் கெளதுல் அஃலம் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காதிரிய்யாதரீக்காவைப் பின்பற்றியவர். ஆண்டகை அவர்களின் கஸிதத்துல் கெளதிய்யா எனும் உணர்ச்சி பொருந்திய கஸிதாவில் 'ஒலிமார்கள் தோள் மீது என்பாதம் இருக்கிறது" என்னும் பேரின்ப பரவச நிலையில் மொழிந்த பாடலை நோக்கி இவ்வுரை விளக்கப்பட்டது.
14

Page 115
21 Ο
21. நாதமும் கீதமுங் கேட்கும் - அந்த
நாயகன் சந்நிதி தன்னிடை சேர்க்கும் மாதவ நன்னிலை யாக்கும் - நல்ல
மாசறு தேசிகன் பொற்பதம் போற்றி (இரக்கத்)
பொழிப்புரை: நாத கீதங்கள் கேட்கின்ற அந்த நாயகனுடைய திருச் சந்நிதியில் சேர்க்கும் மகத்தாகிய தவநிலையை உண்டாக்குகின்ற உயர்ந்த குற்றமற்ற ஞானாசிரியனுடைய பாதங்களை புயங்களில் பற்றி இரக்கத் துணிந்தேன்
22. கட்டுப் படுங்கன் மக் குட்டை - வருங்
காலத்தச் சன்கையால் வெட்டிடுங் கட்டை துட்டத் தொழில்படைத்த மட்டை -இந்தத்
தூலமென் றெண்ணிக் குருவருள் போற்றி
(இரக்கத்) பொழிப்புரை: வினைப்பயன்களால் கட்டுப்படும் உடம்பான குட்டை. இது; காலமெனும் தச்சனால் வெட்டப்படும்
கட்டையாகும் துஷ்டச் செயல்களைச் செய்யும் மட்டையாகும் இந்நிலையை மாற்ற குருவருள் போற்றி வாழ்வு உயிரை வாங்கும் யமனால் உடம்பை விட்டுப் பிரிக்கின்றதுஷ்டச்செயலை நினைந்து ஞானாசிரியனுடைய பாதகமலங்களை புயங்களில் பற்றி இரக்கத் துணிந்து கொண்டேன்.
23. போக்கு வரவற்ற போதம் - பஞ்ச
பூதாதி யாலடங் காதெழு நாதம் வாக்கி லமையாத வேதம் - தன்னை
வடித்துப் புகட்டு மகத்துவைப் போற்றி
(இரக்கத்) பொழிப்புரை: போக்குவரவில்லாத ஞானம், பஞ்ச பூதங்களால் எழுகின்ற ஒசை, வசனங்களால் அடக்க முடியாத மறைபொருள் ஞானம் ஆகிய இவைகளை வடித்து ஊட்டுகின்ற ஞானாசிரியரின் பாத கமலங்களைப் புயங்களில் வைத்து இரக்கத் துணிந்து கொண்டேன்.
24. நரம்பு தசைதோ லெலும்பு - கொண்டு
நாட்டும் விளைகளுக் காட்டுந் துரும்பு நிரம்புந் துயர்கொளுடம்பு - என்று
நில்லாதென்றெண்ணியில் லல்லாவைப் போற்றி (இரக்கத்) பொழிப்புரை: நரம்பு, சதை, தோல், எலும்பு முதலியவற்றால் உண்டான, வினைப்பயன்களைக் காட்டும் என் உடம்பு சுழற்சியில் அகப்பட்ட துரும்பு போல் துயர்படும் என்றும், நிலையில்லாதது என்றெண்ணிய காரணத்தால் லாயிலாஹ இல்லல்லாஹ" என்று வணக்கம் புரிந்து இரக்கத் துணிந்து கொண்டேன்

211
25. ஆழித் திரளெனப் பொங்கும் - அருள்
ஆனந்தஞ் சேர்க்கு மறிவிற் கடங்கும் நாளுக்கு நாளங்கு மிங்குஞ் -சற்றும்
நாதாந்த வேதாந்தநாதனைப் போற்றி (இரக்கத்) பொழிப்புரை: சமுத்திரக் கூட்டத்தைப் போல் பொங்கும் திருவருள் ஆனந்தத்தைச் சேர்க்கும், உண்மை அறிவிற்கு அடங்கும் நாளுக்கு நாள் எங்கும் வியாபிக்கும் நாதாந்த வேதாந்த நாதனாகிய அல்லாஹ்வை வணங்கி இரக்கத் துணிந்தேன்
26. இன்றைக் கிருப்பதும் பொய்யே - இனி
என்றைக் கிருப்பதும் மெய்யென்ப தையே என்று மிருப்பது - மெய்யே - என
எண்ணியெண் ணியருளுண்மை யைப்போற்றி
(இரக்கத்)
பொழிப்புரை: இன்றைக்கு ஜீவித்திருப்பதும் பொய்யே இனி
என்றைக்குமிருக்கும் மறுமையே உண்மை என்று எண்ணியெண்ணி
இறையருளுண்மையை வணங்கி இரக்கத் துணிந்தேன்
27. பார்க்கப் பலவித மாயும் - ஆகப்
பல்லாயி ரங்கோடி யண்டம - தாயும் காக்கு நிலைக்குயி ராயும் - நின்ற
காரண பூரண நாதனைப் போற்றி (இரக்கத்) பொழிப்புரை: பார்ப்பதற்குப் பலவகையாகவும் அன்றி பலகோடி அண்டங்களாகவும், காவல் செய்கின்ற உயிர் நிலையாகவும் இருந்த காரண பூரண இறைவனை வணங்கி இரக்கத் துணிந்தேன்
28. கரும்புசர்க் கரைகற்கண் டாலே - பாகங்
காய்ச்சி எடுத்துத் திரட்டிய பாலே அரும்பாவிக் கருத்துங்கை யாலே - அணைத்
தாட்கொளு நாயகன் றாள்களைப் போற்றி
(இரக்கத்) பொழிப்புரை: கரும்பு, சர்க்கரை, கற்கண்டு இவைகளால் பாகமாகக் காய்ச்சி எடுத்துத் திரட்டின பாலை, (பேரின்பத்தை) உம்முடைய கையினால் அணைத்து ஊட்டிட வேண்டி ஆட்கொள்ளும் இறைவனை வணங்கி இரக்கத் துணிந்தேன்
29. கற்பங்களுண்கிறோ மென்றே - வெறி
கஞ்சாவுங் கள்ளும பிணியுந் தின்றே துப்புக்கெட் டலையாம ணின்றே - அருள்
தூயமெய்ஞ் ஞானச் சுடரினைப் போற்றி
(இரக்கத்)

Page 116
212
பொழிப்புரை: காயகற்பங்கள் செய்து கொள்ளுகிறோமென்று வெறியைக் கொடுக்கின்ற கஞ்சா, கள், அபினி இவைகளைத் தின்று கெட்டலையாமலிருந்து, திருவருளை யுடைய பரிசுத்தமான உண்மைஞானச் சுடரைப் போற்றி இரக்கத் துணிந்தேன்
30. கருவி வழிதனி லோடி - யானுங்
காலுக ளோய்ந்தும் விடாமலே தேடி அருவிக் கயர்ந்துளம் வாடி - அலை
யாம லெனக்கருள் வாமனைப் போற்றி
(இரக்கத்) பொழிப்புரை: கருவிகளாகிய வழியில் போய் என் கால்கள் ஓயாமல் தேடி, எல்லாம் பொய் என்று எண்ணி, சரீரமிளைத்து, மனம் வாடி அலையாமல் எனக்கு அருள் செய்கின்ற இறைவனை வணங்கி இரக்கத் துணிந்தேன்
31. தேடிய பொருள்புதைப் போரும் - தேசா
தேசங்கள் ராஜாங்க மாண்டிருப் போரும் ஈடெனக் கில்லையென் போரும் - செத்திங்
கிறப்போரென் றேமனந் திறப்படப் போற்றி
(இரக்கத்) பொழிப்புரை: சம்பாதித்த திரவியத்தை புதைத்து வைப்பவர்களும், சகல தேசங்களையும் அரசாள்பவரும் எனக்குச் சமமில்லை என்பவரும், கடைசியில் செத்துப் போவார் என்றே மனம் திறமடையப் போற்றி செய்து இரக்கத் துணிந்தேன்
32. ஆனை குதிரைக ளொட்டை - ரதம்
ஆசையோ டேறும் உடலொட லொட்டை ஞானமி லாதகண் பொட்டை - என்று
நாதன் குருவறி வித்ததைப் போற்றி (இரக்க) பொழிப்புரை: ஆனை, குதிரைகள், ஒட்டகம், ரதம் இவைகளில் ஆசையுடன் ஏறுகின்ற சரீரமானது லொட லொட்டையானது ஞானமில்லாக் கண்களும் பொட்டை என்று உபதேசம் செய்த ஆசிரியனை உணரும் விதத்தைப் போற்றி செய்து இரக்கத் துணிந்தேன்
* ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் ஒட்டித் துரந்திட்டதுவலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே மேற்காட்டிய 31 ஆம் கவிதைப் பொருளோடு திருமூலரின் செய்யுளையும் ஒப்பு நோக்குக.
 

213
33. அரச னரண்மனைக் கோட்டை - சூழ
அன்பர் நடனம் புரிகின்ற பாட்டை இரவும் பகன்மனக் கோட்டை - வைத்த
இன்பக் குணங்குடியானருள் போற்றி (இரக்கத்) (மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: ராஜாவின் அரண்மனையான கோட்டையைச் சூழ, அடியார்கள் நடிக்கின்ற பாட்டை, இரவும் பகலும் மனக்கோட்டை வைத்திருக்கின்ற இன்பத்துக்கும் மேலான குணங்குடியினுடைய திருவருளைப் போற்றி செய்து இரக்கத் துணிந்தேன்
உலக ஆசைகளை மறந்து, இறைவன் பாதையில் செல்லும் ஒரு பக்தனின் நானாவிதமான மனப்போராட்டங்களை மேற்கூறிய கவிதைகளில் கவிஞர் தெளிவுபடுத்துகின்றார்.
சூஃபியாக்கள் இறைவழியை நாடும் இறை நேசர்களின் படித்தரங்களை ஷரீயத், தரீக்கத் ஹகீகத், மஃரிபத் என நான்காக நிர்ணயித்திருக்கின்றார்கள். (51ம் கவிதை பார்க்க) மேலும் இறைபக்தர்கள் மண் ஆசை, உலக ஆசை என்பவற்றிலும், பெண் ஆசை என்னும் உடல் இச்சைகளில் மூழ்கிக் கிடக்கும், உலகப் பற்றுடையாரை விட்டு விலகி நடப்பதிலும், கவனஞ் செலுத்த வேண்டுமென்றும், கவிஞர் புத்தி கூறுகின்றார். ஐம்புலன்களும் ஒன்பது வாசல்களும் நிறைந்த உடல் இன்பத்தைத் தவிர்த்து, உலகப் பற்றுகளில் இருந்து நிவாரணம் அடைவது இறைவன் பாதையில் எடுக்கும் முதற்படியாகும் எனக் கூறுகின்றார்.
அல்-ஹ"ஜ்வீரி (ரஹ்) அவர்கள் உலகப் பற்றற்ற நிலையின் இரு அம்சங்களைப் பற்றிக் கூறுவதாவது:
பற்றற்ற நிலையென்பது இருவகையாகும். முதலாவது இஃராழ் அல் ஹல்க் (Tradaz Khalq) எனப்படும் மனித சமுதாயத்தைப் புறக்கணிக்கும் நிலையாகும். இரண்டாவது இன்கிதாஉல் இன்ஸான் (Inqitaul Insan) எனும் மனித சமுதாயப் பற்றை முற்றாகத் துண்டிப்பதாகும்.
மனித சமுதாயத்தைப் புறக்கணிப்பது என்றால் முதலாவதாக தனிமையான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்பதாகும். தேர்ந்தெடுத்து சமுதாயத்தின் தொடர்பை நிராகரிப்பதாகும். இந்நிலையில் ஒரு பக்தன் தன் குறைகளை அவதானித்து சமுதாயத் தொடர்பிலிருந்து விலகி தன் தீமைச் செயல்களிலிருந்து எல்லோரும் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புவான். இது துறவு நிலையின் வெளி அம்சமாகும். ஆனால் மனித சமுதாய உறவை முற்றாகத் துண்டிப்பது வெளிப்பாடற்ற ஒரு ஞானநிலையாகும். இது

Page 117
214
துறவு நிலையின் உள் அம்சமாகும். இந்நிலையில் மனித சமுதாயத்தைப் பற்றியோ, சிருஷ்டிக்கப்பட்ட வஸ்து பற்றியோ ஒரு நினைவும் அவன் மனதை அணுகாது. அவன் மனித சமுதாயத்தில் இருந்தபோதும் அவன் உள்ளம் அச்சமுதாயத்திலிருந்து விலகி இறைவன்பால் சென்று கொண்டே இருக்கும். இது ஒர் உயர்ந்த ஞானநிலையாகும்.
இதற்கு உதாரணமாக ஹ"ஜ்வீரி (ரஹ்) அவர்கள் கலிபா உமறுல் Lחוeשe% (ரலி) அவர்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றார். இப்பெரியார் ஊராளும் அரசராகவும், சேனாதிபதியாகவும் உலக விவகாரங்களில் ஈடுபட்ட பொழுதும் உண்மையிலேயே ஒரு பற்றற்ற சூஃபியைப் போல் நடந்து கொண்டார். சமுதாய வாழ்க்கையில் ஈடுபட்டபோதும் அவரின் வார்த்தைகளும் உள்ளமும் இறைதியானத்தில் மூழ்கிக் கிடந்தன.”
சூஃபித்துவப் பரம்பரையில் எல்லா இறைஞானிகளும் உலகப்பற்றற்ற நிலையில் இருந்தார்களென்பது அவர்களின் ஆக்கங்கள் மூலம் தெளிவாகின்றது. ஹஸனுல்-பஸரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
இவ்வுலகத்தை மறு உலகத்துக்காக விற்று விடு. அப்படிச் செய்தாயானால் இரு உலகங்களும் உனக்குக் கிடைக்கும். ஆனால் மறு உலகத்தை இவ்வுலகத்துக்காக விற்று விடாதே, அப்படிச் செய்தாயானால் இரு உலகத்தையும் நீ இழந்து விடுவாய். பூவுலகம் பொய் என்றும், மறு உலகமே உண்மையென்றும் நிரந்தரமானது என்றும் நடந்து கொள். மறு உலகை நாடு. மறு உலகமே உண்மையென்றும் இவ்வுலகம் பொய் என்றும் கருதுபவன் உண்மையிலே ஒரு ஞானியாவான். இறைஞானம் அடைந்தவன் இறைவனை ஒரு தோழன்போல் கருதுவான். ஆனால் பூவுலகப் பற்றுடையவனோ அவனை ஒரு பகைவனாகக் கருதுவான்."
இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்) என்னும் இறைஞானி இதே கருத்தை இன்னும் அழுத்தமாகக் கூறுகின்றார்:
நீ உண்மையான இறை பக்தனாக வேண்டுமென்றால் இவ்வுலகையோ, மறு உலகையோ நாடக் கூடாது. இறைவனை மட்டும் நாட வேண்டும். ஏனெனில் நீ இவ்வுலகை நாடினால் இறைவனிடமிருந்து விலகுகிறாய். நீ மறுமையை நாடினால் மறுமையின் ஆசையை உளத்திற் கொண்டு மறுமைக்கும் அப்பாற்பட்ட இறைவனை நீ மறந்து விடுவாய். நிரந்தரமற்ற பற்றுகள் அற்றுப் போவதினால்

215
என்றும் நித்தியமான பரம்பொருள் மேலுள்ள பற்று அற்றுப் போகாது. "
விஹாபுத்தின் அபூ ஹப்ஸ் - அஸ் - ஸ"ஹ் ரவர்த்தி (ரஹ்) என்னும் பெரியார் பற்றற்ற தனிமை நிலை மனித சுபாவத்திலுள்ள எல்லாத் தீமைகளையும் நீக்கி மனிதனைத் தூய்மைப்படுத்துகின்றதென்று பின்வரும் வரிசையில் பகர்கின்றார்.
பற்றற்ற தனிமை நிலை என்பது, ஒரு கொல்லனின் உலையைப் போன்றதாகும். அதில் எழும் தீ எல்லா ஆசைகளையும் எரித்து, ஒரு மனிதனின் சுபாவத்தைத் தூய்மைப்படுத்தி அவன் உள்ளத்தைக் கண்ணாடியைப் போல் பிரதிபிம்பிக்கச் செய்யும். அதனால் ஓர் இறைபக்தனின் உள்ளத்தில் மறைபொருளான இறைவன் பிரதிபலிப்பான். அந்நிலையில் இருக்கும் ஓர் இறைபக்தனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரை நீக்கப்படுவதால் அவன் இறைவன் பால் அணுகிக் கொண்டே இருப்பான். நாற்பது நாட்களில் நாற்பது திரைகள் நீங்கிவிடும். இம்முறையில் தூய்மைப்படுத்தப்பட்ட ஒர் இறைஞானி ஆதியந்தமில்லாத அல்லாஹ்வின் தரிசனத்தைக் காணும் அதிர்ஷ்ட நிலையை அடைந்து அவனின் வியாபகத்தையும் நன்கு அறிந்திடுவான். "
பற்றற்ற நிலையென்பது ஒர் ஆத்மீகப் பிரயாணத்தின் முடிவல்ல. உண்மையில் அஃது ஒர் உயர்ந்த இலட்சியத்தை அடைய பாவிக்கும் ஒரு சாதனமாகும். குணங்குடிமஸ்தான் ஸாஹிப் உலக வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிக் கூறியுள்ளதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
கட்டுப் படுங்கன்மக் குட்டை - வருங்
காலத்தச் சன்கையால் வெட்டிடுங் கட்டை துட்டத் தொழில்படைத்த மட்டை - இந்தத்
தூலமென் றெண்ணிக் குருவருள் போற்றி நரம்பு தசைதோ லெலும்பு - கொண்டு
நாட்டும் வினைகளுக் காட்டுந் துரும்பு நிரம்புந் துயர்கொளுடம்பு - என்று
நில்லாதென் றெண்ணியில் லல்லாவைப் போற்றி இன்பமும் துன்பமும் நிறைந்த மானிட வாழ்வில் ஒவ்வொரு மனிதச் செயலுக்கும் தகுந்த கூலி இறைவனால் இம்மையிலோ மறுமையிலோ கொடுக்கப்படும்

Page 118
216
எனும் உண்மை தெளிவாகின்றது. வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பதுபோல, இவ்விடயத்தில் கவிஞர், மனித உடலைக் 'கட்டுப்படுங் கன்மக்குட்டை' என்று வருணிக்கின்றார். இதன் கருத்து யாதெனில் மனிதன் செய்த ஒவ்வொரு வினைப் பயனையும் அவன் அனுபவித்தே தீர வேண்டுமென்பதாகும். கன்மம் எனும் தத்துவக் கருத்தின் சாரமும் இதுவேயாகும். மானிடப் பிறவி எடுத்த எவரும் தான் செய்த காரியங்களின் பிரதி பலன்களால் கட்டுப்படுத்தப்பட்டு அவற்றின் பயன்களை இம்மையிலோ, மறுமையிலோ அனுபவித்தேயாக வேண்டும். இவ்விடயத்தில் கீழ்வரும் திருக்குர்ஆன் வசனங்களை நோக்குவோம்.
எவ்வாறு அல்லாஹ்வை நீங்கள் நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றோராக நீங்கள் இருந்தீர்கள். பின்னர் உங்களை அவன் உயிர்ப்பித்தான்; பின்பு உங்களை அவன் மரிக்கச் செய்வான்; மீண்டும் உங்களை உயிர்பெறச் செய்வான், பிறகு அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (2:28)
(அல்லாஹ்வாகிய) அவன் எத்தகையவனென்றால் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காக அவன் படைத்தான்; பின் வானத்தின் பக்கம் அவன் கவனம் செலுத்தி, அவற்றை ஏழு வானங்களாக செவ்வையாக்கினான். மேலும் அவன் (அவற்றிலுள்ள) ஒவ்வொரு பொருளையும் முற்றும் அறிந்தவனாக இருக்கிறான். (2:29)
நபியே! உம்முடைய ரப்பு வானவர்களை நோக்கி, "நிச்சயமாக நான் பூமியிலே (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) உண்டாக்கப் போகிறேன்' என்று கூறியபோது, 'நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் உன் பரிசுத்தத்தைப் போற்றுகிறவர்களாகவும் இருக்கின்ற நிலையில், அதில் (பூமியில்) குழப்பஞ் செய்து, இரத்தங்களை ஒடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?" என்று அவர்கள் (வானவர்கள்) கூறினார்கள்; (அப்பொழுது) "நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்’ என்று அவன் கூறினான். (2:30) மேலும் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் ஆதமுக்கு அவன் கற்றுக் கொடுத்தான், பிறகு அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்’ என்று கூறினான். (2:31)

217
(அப்பொழுது) '(யா அல்லாஹ்!) நீ மகாத் தூயவன்! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக நீயே முற்றும் அறிந்தவனும், ஞானமுள்ளவனுமாய் இருக்கிறாய்' என்று அவர்கள் கூறினார்கள். (2:32)
(அப்போது) 'ஆதமே! அவற்றின் பெயர்களை இவர்களுக்கு அறிவிப்பீராக!' என்று கூறினான். (அவ்வாறே) அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அவர் அறிவித்த பொழுது, '(மலக்குகளை நோக்கி) நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பதை அறிவேன். இன்னும் நீங்கள் வெளிப்படுத்துகிறதையும், மறைத்துக் கொள்கிறதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையா?’ என்று அவன் கூறினான். (2:33)
மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களின்படி, பிரபஞ்ச வாழ்க்கையென்பது நன்மையும் தீமையும் மோதும் போர்க்களத்தைப் போன்றதாகும். அதில் மனிதனுக்கு இறைவன்பால் செல்லும் நல்வழியையோ நரக வேதனை கொடுக்கும் தீய வழியையோ கையாளும் சுதந்திரமிருக்கின்றது. அதே நேரத்தில் அவனுக்கு தன் இச்சைகளைக் கட்டுப்படுத்தும் மனச்சாட்சியும் இருக்கின்றது. இயற்கையில் அடங்கிக் கிடக்கும் பிரமாண்டமான சக்திகளை அடக்கியாளக் கூடிய நுண்ணறிவும் அவன் வசம் இருக்கின்றது. நோய், துன்பம், வறுமை நிரம்பிய உலகில் அவைகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் தொழில் நுட்பங்களும் விஞ்ஞான அறிவும் அவனிடம் இருக்கின்றது. இத்தகைய நானாவித சக்திகளையும் பெற்றிருக்கும் மனிதன் அவைகளைத் தீய வழியில் செலுத்தி மிருகங்களை விட மோசமான ஒரு நிலையை அடையலாம். அல்லது அவைகளை நல்ல வழியில் செலுத்தி இறைவனின் இலட்சியங்களை பூமியில் நிலை நாட்டலாம். சுருங்கச் சொன்னால் அவன் மிருகத்தை விட மோசமான மிருகமாகலாம் அல்லது விண்ணவருக்கும் மேலான புனித நிலையை அடையலாம்.
இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது. மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம்.
5. பிறகு அவனைக் கீழானவர்களிலும் மிகக்
கீழானவனாய் நாம் ஆக்கினோம். 6. ஈமான் கொண்டு, நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர, எனவே, அ(த்தகைய)வர்களுக்கு முடிவில்லாத நற்கூலியுண்டு.

Page 119
218
ஆகவே (மனிதனே!) இதற்குப் பிறகும் தீர்ப்பு நாளைப் பற்றி உன்னிடம் எது பொய்யாக்கி வைக்க முடியும்?
தீர்ப்பாளர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலான தீர்ப்பாளனாக இல்லையா? (95:4)
மேலும் அல்லாஹ"தஆலா தான் படைத்த எல்லாவற்றின் மர்ம நிலையையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். அவன் அணுவிலும் அணுவாயிருந்து ஆகச் சிறியதிலோ அல்லது ஆகப் பெரியதிலோ, நிலவும் ஒவ்வொரு விடயத்தையும் தன் சர்வ வல்லமையான சிந்தனையில் அறிந்திருப்பவனாக இருக்கின்றான். இதனால்தான் ஒவ்வொரு மனிதன் எண்ணும் எண்ணங்களையும், செய்யும் காரியங்களையும் அவன் நன்கு அறிந்து அவைகளுக்குக் கூலி கொடுக்கும் நீதிபதியாய் இருக்கின்றான்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனைத் தவிர (வேறு எவரும்) அறிய மாட்டார். இன்னும், கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலை கூட-அதனை அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களிலுள்ள எந்த விதையும், எந்தப் பசுமையானதும் எந்தக் காய்ந்ததும் (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை.
(6:59) இன்னும் அவன் எத்தகையோனென்றால் இரவில் உங்களை அவன் (நித்திரையில்) மவ்த்தா (னவர்களைப் போலா)க்குகிறான். பகலில் நீங்கள் சம்பாதிக்கின்ற
வற்றையும் அவன் அறிகிறான். பிறகு அதில் (பகலில்) குறிப்பிடப்பட்ட தவணை பூர்த்தி செய்யப்படுவதற்காக உங்களை அவன் எழுப்புகிறான். பின்னர் உங்களுடைய (இறுதி) மீளுதல் அவன் பக்கமே இருக்கிறது. அப்பால் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான். (6:60)
(65)
ஊற்றைக் குணங்கொண்ட காயம் - இதற்கு ஒன்பது வாசலும் ஒழுங்காக உண்டும் நாற்றமும் பொதிந்த திக்காயம் - இதை
நம்பாதே மனமே ஐவேடர்கள் வம்பாய்க் காற்றொன்றும் வாராமல் வைத்த - அந்தக் காயமல்லோ நீ நம்பாதே மனமே ஏற்றிய அலிபிரு லாமுங் கொண்டே
இறங்கும் சுவாசத்தைத் தெரிந்துகொள் மனமே.
(முகியித்தீன் செய்க் பளீர்)"
 

219
பொழிப்புரை: மனமே! ஒன்பது வாசல்களையுடைய அழுக்குள்ள நாற்றம் பொதிந்த இவ்வுடம்பை நம்ப வேண்டாம். மனமே ஐந்து வேடர்களாகிய புலன்கள் (இறந்தபின்) காற்று பிரவேசிக்காத இவ்வுடம்பை நம்ப வேண்டாம். 'அல்லாஹ" என்று சொல்லும்போது வெளிவரும் சுவாசத்தின் மர்மத்தை அறிந்து கொள்வாயாக.
அஸ்தஃபி ருல்லாஹில் அலீமென வேசொல்லி அனுதினமும் ஆதம்பாத மறிந்து தொழவேணும் அல்லா முஹம்மதிப் பேரை மனதுற்று ஆதத்துட பாதந்தன்னை அறிந்து தொழவேணும்
(பீர் முஹம்மத் ஸாஹிப்)" பொழிப்புரை: அஸ்தஃபிருல்லாஹில் அலீம் (பாபமன்னிப்புக் கோரல்) என்னும் வாக்கியத்தினால் ஆதம் (அலை) பாபமன்னிப்புப் பெற்றதுபோல் அல்லாஹ் முஹம்மத் என்னும் நாமத்தை மனதில் வைத்து ஆதம் (அலை) அவர்களைப் போல் பாவமன்னிப்புக் கோரி வணங்க வேண்டும்.
(67)
தொழுகையுடன் நோன்பின் ருசியுள்ளறிந்து தொழுவோர் தோற்று மிகுறாஜ் அறிவார் தோஷமது நீங்கும் அழுகையுள்ள தொழுகை தொழுதுன்னிலையைத்
தொழுதோர் ஆகிறிலும் பதவிகொடுத் தளிப்பதுவும் நீயே
(றசூல்பீவி)" பொழிப்புரை: ஐந்து வேளைத் தொழுகையையும் நோன்பையும் தவறாது கடைப்பிடிப்போர்திருநபி (ஸல்) அவர்களின் விண்ணுலக யாத்திரை (மிஃறாஜ்) யின் மர்மத்தை அறிந்து கொள்வார்கள். அவர்களின் தோஷமெல்லாம் நீங்கிவிடும். தினமும் அழுதழுது உனைத் தொழுவோருக்கு மறுமையில் சுவன பதியைக் கொடுப்பவனும் நீயே. (இறைவன்)
(68)
ஐந்தொகுத்தும் மெய்யென்று ஆலநபி யருளியதால் ஐந்தொகுத்தும் தொழாதவன் அறிவு கெட்டோன் ஐந்தொகுத்தாலறியென்ற ஆதி றகுமானை ஐந்தொகுத்தால் கண்டவரே ஆபித்.
(பரிமள முஹம்மது காஸிம்)" பொழிப்புரை: ஒரு நாளைக்கு ஐவேளை தொழ வேண்டும் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியவண்ணம் தொழாதவன் அறிவுகெட்டவன். இத்தொழுகையின் மூலம் இறைவனை அறிந்தவரே உண்மையான ஆபித் ஆகும்.

Page 120
22O
மேற்கூறிய இரண்டு கவிதைகளிலும் ஷரீஅத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சூஃபியாக்கள் கூறிய கருத்துகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. (இது சம்பந்தமாக ஐம்பதாம் கவிதையில் கூறப்பட்டிருக்கும் கருத்தையும் நோக்குக)
(69)
காரப்பா கண்விழியில் கல்பை நாட்டி
கலிமாவில் நீயென்ற நினைவை யோட்டி பாரப்பா பார்த்தாலோ பரனுந் தோற்றும்
பசியமரும் படைத்தோனைக் காண்பா யாகில் நேரப்பா யிதுவழியை நிசமென் றெண்ணு
நீநானென் றுண்டாகும் நினைவிற் குள்ளே ஏரப்பா எண்கோணி ரேழு லோகம்
இல்லென்ற லிகாவத னோடேகிக் கொள்ளே
(றசூல்பீவி)
பொழிப்புரை: உன் ஊனக் கண்ணால் பார்க்கும் எல்லா வஸ்துக்களையும் தன்னுணர்வெனும் இருதயக் கண்ணால் பார்ப்பாயாக. லாயிலாஹ இல்லல்லாஹ" என்னும் கலிமாவின் மூலம், நீ யாரென்பதை அறிந்து கொள்வாயாக. அப்பொழுது இறைவனின் திருமுகத்தை, எல்லாப் படைப்புகளிலும் அவதானிப்பாய். நீ உண்மையான வழியையும் கடைப்பிடிப்பாய். "நான் யார், 'நீ யார் எனும் உண்மையை அறிந்தாயானால், எல்லா உலகங்களிலும் இருக்கும் எல்லாப் படைப்புகளின் மர்மங்களையும் நீ அறிந்து கொள்வாய். அதை அறிந்து அந்தப் பரம்பொருளில் சங்கமமாகிவிடுவாய். இதுவே, இல்லல்லாஹ" என்னும் திருவசனத்தின் சாரமாகும் - இறைவனைத் தவிர வேறொன்றுமில்லை - இல்லல்லாஹ" என்பதாகும்.
இறையாத்திரையின் சம்பூரண நிலையாவது மனிதனுக்கும் இறைவனுக்குமிடையில் இருக்கும் 'நான் 'நீ எனும் இருநிலைகள் ஒழிந்து "ஹக் உடன் ஒருமை நிலையை அடைவதேயாகும். ஹலாபி அல் -மக்தூல் (Halabial - Maqul) எனும் இறைஞானி இவ்வனுபவத்தைப் பற்றிக் கூறுவதாவது:
ஒரு பக்தன் நான்’ எனும் நிலையிலிருந்து நான் இல்லை "நீயே இருக்கின்றாய் எனும் நிலைக்கு முதலாவது செல்கின்றான். அதன்பின் நான் இல்லை 'நீ இல்லை எனும் இரண்டாம் நிலையை அடைகின்றான். ஏனெனில் இந்நிலையில் இறைவனுடன் சங்கமமாகி 'பகா எனும் நிலையை அடைந்து விடுகின்றான். இறைதரிசனத்தை

221
இறைவனின் ஒளி அருளால் (இத்திஸால்) எனும் ஒன்றுபட்ட நிலையையும் (இத்திஹாத்) எனும் சங்கம நிலையையும் அவன் அடைந்து ஒளிகளுக்கெல்லாம் ஒளியான பரம்பொருளில் கலந்து விடுகிறான். *
(7O)
ஆன அலிபிரு லாமாய் - அஹ
திய்யத்தும் உஹதத்து வாஹி திய்யத்தாய்த் தானாக வெங்கும் அல்ஹம்தாய் - நின்றுந்
தாத்தாக மீண்டு ஸிபத்தாகி என்றும் ஊனந்த முடிவதி னோடே - இருந்
துள்ளறை யாசனம் போட்டுக் கொண்டேதான் பானிய மூவட்டத் தோடே - எட்டிப்
பார்த்த கண்ணாடியைத் தொழுதுகொள் மனமே.
(முகியீத்தின் செய்க் பஸிர்)" (3ம் 6ம் இலக்கமிடப்பட்ட செய்யுள்களின் கருத்துகளை நோக்குக) பொழிப்புரை: அட்சரங்களான அலிபும், இரண்டு லாம்களும் சேர்ந்து, அல்லாஹ"தஆலாவான இறைவனின் அஹதிய்யத் என்னும் குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலும், எல்லாப் படைப்புகளிலும் வியாபிக்கும் வாஹிதிய்யத் என்னும் நிலையிலும், அல்-ஹம்தெனும் புகழ்ச்சிக்குரிய உன்னத நிலையிலும், தாத்” என்னும் தூயபரம் பொருளாகியும், அதன் ஸிபத் என்னும் பண்புகளாகியும், உடல்களில் உயிராகவும் ஆத்மாவாகவும் வியாபித்தும், உள்ளறையில் உள்ள சிம்மாசனம் போல் ஜொலிக்கும் இறைவா! இந்தப் பிரபஞ்சம் கண்ணாடிபோல் உன் மகத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. உனக்கே எல்லாப் புகழும்.
(71)
வேதநூல் சாஸ்திரங்கள் மெய்யிதனை யன்றிவெகு
பாரநூல் கற்றும் பயனில்லை - ஏதொன்றும்
இல்லானைத் தேடிஇராப் பகலாய் ஒன்றுஞ்
சொல்லாமற் சும்மா இரு.
(பீர் முஹம்மத் ஸாஹிப்)"
பொழிப்புரை: வேத நூல்களையும், சாஸ்திரங்களையும் பாரம்பரிய நூல்களையும் கற்பதால் மட்டும் ஒரு பயனுமில்லை. எல்லா வஸ்துகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளை இரவும் பகலும் சதா தியானித்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் சும்மா இரு.

Page 121
222
* இவ்விடயத்தில் தாயுமான சுவாமிகள் பாடிய கீழ்க்காணும் பாடற் பொருளையும் ஒப்பாய்வு செய்க.
(72)
பல்லவி சூத்திரப் பாவைக் கயிறற்று விழுமுன் சூட்சக் கயிற்றினைப் பாரடா - அதி சூட்சக் கயிற்றினைப் பாரடா பொழிப்புரை: சூத்திரப் பதுமையாகிய இச்சரீரமானது இறந்துபடு முன்னரே சூட்சக்கயிறான இறைவனின் மகத்துவத்தை ஆராய்ந்து பாரடா.
அனுபல்லவி நேத்திரம் ரண்டினும் நேரே யிலங்கிய
நீடொளி போன்றது தேடரி தாகிய காத்திர முள்ளது யாவும் பொதிந்தது
கையிலுங் காலிலு மெட்டப் படாததோர் (சூத்தி) பொழிப்புரை: இரண்டு கண்களிலும் நேராக விளங்கின பெரிய தேஜோமயம் போன்றது. தேடுதற்கருமையான சரீரமுள்ளது. எல்லாம் நிறைந்தது. கைக்கும் காலுக்கும் எட்டாதது.
சரணங்கள் சாத்திர வேதஞ் சதகோடி கற்றாலும்
சமய நெறிகளி னாசாரம் பெற்றாலும்
மயான
* ''கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி, வெம்புலி வாயையும் கட்டலாம், ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்
கட்செவி எடுத்தாட்டலாம் வெம்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம் சந்ததமும் இளமையோடு இருக்கலாம், மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம் சலமேல் நடக்கலாம் கனல்மேல் இருக்கலாம்
தன்னிகர் இல் சித்தி பெறலாம் சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது; சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.''
(தாயுமான சுவாமி)

223
பாத்திர மேந்திப் புறத்தி லலைந்தாலும்
பாவனையாலுட லுள்ள முலைந்தாலு மாத்திரைப் போது மெமன்வரு மப்போது
மற்றொன்றுதவாதுதவாதுதவாது சூத்திர மாகிய தோணி கவிழுமுன்
சுக்கானை நேர்படுத் திக்கணமே சொன்னேன்
(சூத்தி) பொழிப்புரை: நூறு சாஸ்திரங்களையும் வேதங்களையும் கற்றுக் கொண்டாலும் சமயமார்க்கங்களின் ஒழுக்கத்தை யடைந்தாலும், பாத்திரம் தாங்கிப் புறத்தில் அலைந்தாலும், பாவனையில் சரீரமும் மனமும் உலைந்தாலும் ஒரு க்ஷணநேரத்திற்குள் எமன் வருவான். அச்சமயத்தில் எதுவும் உதவாது. ஆகையால் சூத்திரமான இந்தக் கப்பல் கவிழுமுன்னரே சுக்கானை இறைவன் பாதையை நேராகப் பிடித்துக்கொள் எனச் சொல்லி விட்டேன்.
(சூத்தி) உற்றுற வின்முறை யார்சூழ்ந் திருந்தென்ன
ஊருட் சனங்களெல்லாரும் பணிந்தென்ன பெற்றாரும் பெண்டீரும் பிள்ளை யிருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வ ஆணவத் தாலென்ன கத்தன் பிரிந்திடிற் செத்த சவமாச்சு .
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு எத்தனை பேர்நின்று கூக்குரலிட்டாலும்
எட்டாமற் போய்விடுங் கட்டையல் லோவிந்தச்*
(சூத்தி) பொழிப்புரை:
சுற்றத்தார்
சூழ்ந்திருந்தாலென்ன? ஊர்ச்சனங்களெல்லாம் பணிந்தாலென்ன? பெற்றவர்கள், பிள்ளைகள், மனைவியர் இருந்தாலென்ன? மிக்க செல்வம் படைத்ததினாலுண்டாகும் ஆணவத்தினாலென்ன? உயிர் பிரிந்து விட மனித வாழ்வு செத்த சவம் போலாச்சுது. கண்ட பொருள் யாவும் காணாமல் போய்விடும். எத்தனை பேர் சூழ்ந்து நின்று அழுதாலும் எட்டாமல் போகிற கட்டையல்லவா உன் வாழ்வு.
* கட்டி அணைத்திடும் பெண்டிரும், மக்களும்
காலத் தச்சன் வெட்டி முரிக்கும் மரம்போல் சரீரத்தை
வீழ்த்தி விட்டால் கொட்டி முழக்கி அழுவார், மயானம்
குறுகி, அப்பால் எட்டி அடி வைப்பரோ? இறைவா! கச்சி ஏகம்பனே! (பட்டினத்தார் பாடல்)

Page 122
224
மாயப் பிறவி வளையை யடைத்திட
மாறாத் தியான மனத்தி னினைத்திட காயா புரிக்கோட்டை கைக்கு ளகப்பட
காணுமணிச்சுடர் தானே விளங்கிட ஆயுமறி வுடன் யோகத்தி னாலெழும்
ஆனந்தத் தேனை யுண்டன் புடனே தொழும் தாயா யுலகத்தை யீன்ற குணங்குடித்
தற்பரனைக் கொண்டு வப்புடனே சென்று (சூத்தி) (மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: மாயமாகிய ஜென்ம வளையை அடைத்திடவும், ஒழியாத சிந்தனையை மனதில் நினைக்கவும், காயமென்னும் கோட்டையானது கையில் கிடைக்கவும், தோன்றுகிற தேஜசானது தானே விளங்கவும், ஆராய்கின்ற அறிவுடனே தவம் செய்வதினாலெழுகின்ற, ஆனந்தத்தேனையுண்டு, தொழுகின்ற தாய்போல், இவ்வுலகத்தைப் பெற்றெடுத்த குணங்குடித் தற்பரனோடு (இறைவனுடன்) தொடர்பு கொள்வாயாக.
மேற்கூறிய கவிதைகளில் சூஃபித்துவம் கூறும் உடல் ஐம்புலன்கள் முதலியவைகளின் அநித்திய நிலையையும், ஆத்மாவான ரூஹின் நித்திய நிலையையும் கவிஞர் அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறார். உலக வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடை போலும், அதில் பங்கு கொள்ளும் பெரியோர் சிறியோர் எல்லோரும் இறைவனால் இயக்கப்படும் பொம்மைகளுக்கு ஒப்பாவர். சூத்திரப் பாவையை இயக்கும் கயிறானது இறைவனையும் சிருஷ்டிகளையும் இணைக்கும் ஒரு சாதனமாகும். அது உண்மையில் இறை சக்தியாகும். மரணமென்பது உடலிலிருந்து ஆத்மாவான ரூஹ" (நீங்கும்) சம்பவமாகும். கவிஞர், வாழ்க்கையின் அநித்தியத்தை எடுத்துக்காட்டி, பரம்பொருளான இறைவனுக்கும் சிருஷ்டிகளுக்குமுள்ள தொடர்பை மரணிக்கு முன்னே உணர்ந்து அல்லாஹ்வின் பாதையில் வாழ்க்கையைத் திசை திருப்ப எண்ணி, மக்களுக்குப் புத்தி கூறுகின்றார்.
மேலும் அல்லாஹ"தஆலாவானவன் எல்லாச் சிருஷ்டிகளையும், அவனுள் அடக்கி என்றும் நிலைத்திருக்கும் பரஞ்சோதியாக விளங்குகின்றான். அவன் புலனுணர்வுகளுக்கும் மனித அறிவுக்கும் அப்பால்பட்ட முதற் பொருளாக இருக்கின்றான். இதைப் போன்ற ஒரு தத்துவக் கருத்தை ஷிஹாபுத்தீன் ஸ"ஹ்ரவர்தீ என்னும் இறைஞானி பின்வருமாறு கூறுவா.

225
முதற் பொருளாகவும் முதல் ஒளியாகவும் இயங்கும் இறைவன் எல்லாச் சிருஷ்டிகளையும் படைத்து அவைகளில் வியாபித்து தன் ஒளியின் சுடரால் அவைகளுக்கு உயிர் கொடுக்கின்றான். அவன் ஒளியில் இருந்தே உலகத்தில் உள்ள எல்லாச் சிருஷ்டிகளும் பிறக்கின்றன. உலகிலுள்ள எல்லாப் படைப்புகளின் அழகும் சம்பூரணமும் அவன் மகத்துவத்தின் அருட்கொடையாகும். அந்த இறை ஒளியை உணர்வதே மனித ஈடேற்றமும் இலட்சியமுமாகும்.
இறைவனுக்கும் சிருஷ்டிகளுக்கும் ஏற்கனவே உள்ள தொடர்பை உணர்வதே மோட்ச நிலையாகும். இந்நிலையைப் பொம்மைகள் போல் இயங்கும் நாம் மரணித்து உடல் விழுமுன் அறிந்து கொள்வதே வாழ்க்கையின் குறிக்கோளாக வேண்டும். கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
உலக வாழ்வு அநித்தியமானது. எம் உயிர்உண்மையிலே ஒரு கடனாகும். எங்கள் சுவாசங்களாவன வரையறுக்கப் பட்டிருக்கின்றன. எனினும் இவைகளை அறியாத எம் சோம்பலோ கவலைக்கிடமானது. *
சூட்சக் கயிறென வருணிக்கப்படும் ரூஹின் மகத்துவத்தைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:
நபியே 'ரூஹ"வைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு "அது என் இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப்பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை எனக் கூறுவீராக"
(73)
எட்டுநாலுமாக வந்த இன்பந் தருமூச்சில்*
எல்லையைக் கண்டறிய எனக்கிரங்கி அமுதீந்து
வெட்டவெளி பொட்டலிலே இலங்கும் நூரின் ஒளியை
ஏகாந்த வீட்டிற்குள்ளே இலங்கும் பரிமளமே
(ரசூல் பீவி)"
பொழிப்புரை: எட்டும் நாலுமாக வந்து மர்மமான மூச்சின் எல்லையைக் கண்டறிய அருள் செய்தும், ஏகாந்த வீடாகிய எல்லாப் படைப்புகளிலும் இயங்கும் நூர்’ எனச் சொல்லப்படும் இறையொளியையும் அறிய இறைவா எனக்கு அருள் செய்வாயாக.
* 'மனித சுவாசம் வெளியே 12 அங்குலம் ஒடி 4 அங்குலம் கழித்து 8 அங்குலம் தான் நின்ற இடத்தில் நோக்கும். இதை 4 அங்குலமாக்குவது சமாதி. உள்ளுருகும் நல்லமிர்தம் - சுழுமுனையின் மேல்பாகத்தின் நடுவில் இருந்து ஒழுகும் சோம அமிர்தம்" குணங்குடியார் பாடற் கோவை - குறிப்புரை - பேராசிரியர் அப்துல் ரகுமான்.
15

Page 123
226
இறைஞான மென்பது இறையருளின் கொடையாகும். இவ்வருள் வழங்கும் பரம்பொருளை கீழ்வரும் கவிதைகளில் மஸ்தான் ஸாஹிப் அவர்கள்:
‘வெற்றிதரு மெய்ப்பொருளை வேதாந்தத் துட்கருவைக் கற்றோர்க் கருள்புரியும் கண்ணே றகுமானே.”
எனப் பக்தி கனிந்து பாடுகின்றார்.
(74)
ஏகப் பெருவெளியில் இருட்கடலிற் கம்பமற்ற காகமது வானேன் கண்ணே றகுமானே
பொழிப்புரை: என்னுடைய கண்ணே! றகுமானே!
அகண்டாகாரமான ஏகப்பெருவெளியில், இருளாகிய கடலில்
அமர்வதற்கு கப்பற் கம்பமுமற்ற, காகத்தைப் போல ஆனேன். எல்லார்க் கமுதளிக்கும் இயல்புபோல் தேரைகட்குங் கல்லுள் அமுதளிக்கும் கண்ணே றகுமானே.
பொழிப்புரை: றகுமானே இறைவா! யாவருக்கும் அமுது கொடுக்கும் தன்மையைப் போல், தேரைகளுக்கும் அவைகளிருக்கின்ற கல்லுக்குள் அமுதம் அளிக்கின்றாய்.
யானை ரதம் ஏறும் அரசர்பெரு வாழ்வுமுதற் கானற் சலமன்றோ கண்ணே றகுமானே பொழிப்புரை: றகுமானே யானை, தேர் முதலியவைகளில் ஏறுகின்ற அரச வாழ்வு முதலிய யாவும் கானல் நீர் போலக் காணப்படுவன அல்லவோ?
எவருடைமையும் எடுத்திட் டென்னுடைமை
யென்பவர்க்கும் கபறில் வருந்துணையோ கண்ணே றகுமானே! பொழிப்புரை: பிறர் பொருளைக் கவர்ந்து என்னுடைமை என்போர்க்கு அவையெல்லாம் கபுறில் துணைவருமோ? கபறு (அ) - புதைகுழி
ஊனெடுத்த நாள்முதலா வுபயோக மற்றயான் கானில்நில வானேனென் கண்ணே றகுமானே.
பொழிப்புரை: றகுமானே! உடலெடுத்த நாள்முதலாக
உபயோகமில்லாத வனாக இருக்கின்ற நான், காட்டில் எறிக்கின்ற
நிலவு போலானேன்.
வீடோஎன் தேகம் விழுமிடந்தான் வீதிகளோ காடோ செடியோஎன் கண்ணே றகுமானே.
 

227
பொழிப்புரை: றகுமானே! என்னுடைய சரீரம் இறந்து படும் இடமானது வீடோ, தெருக்களோ, காடோ, செடியோ யானறியேன்
ஏங்காமல் அங்குமிங்கும் ஏகாந்த மாகவுனைக் காண்கவந்து பாங்கருள்செய் கண்ணே றகுமானே.
பொழிப்புரை: றகுமானே! அவ்விடத்தில் இவ்விடத்தில் என்று ஏங்காமல் ஏகாந்தமான உன்னைக் காண்பதற்கு எழுந்தருளி வந்து நற்குணமருள வேண்டும்.
வையம் பொய்யென்றே மறையோல மிட்டதெல்லாம் கையுமெய்யு மாச்சுதென்றன் கண்ணே றகுமானே"
பொழிப்புரை: றகுமானே திருக்குர்ஆன் இவ்வுலகம் பொய் என்று
உபதேசம் செய்தது உண்மையாகி விட்டது.
சொல்லறு மெய்ஞ் ஞானச் சுடரொளிகண்டாலென்மனக் கல்லுங் கரைந்திடுமென் கண்ணே றகுமானே!
பொழிப்புரை: என்னுடைய றகுமானே சொல்லுதலற்ற உண்மை ஞான சுடரொளியைக் கண்டால் என்னுடைய மனமாகிய கல்லானது கரைந்துவிடும்.
வெற்றிதரு மெய்ப்பொருளை வேதாந்தத் துட்கருவைக் கற்றோர்க் கருள்புரியுங் கண்ணே றகுமானே! பொழிப்புரை: றகுமானே! வெற்றி கொடுக்கின்ற உண்மைப் பொருளை வேதாந்தத்துட்பொருளை, கற்றவர்களுக்கு அருள் செய்யுங் கண்ணே!
பீற்றல் துருத்திதனைப் பீக்குழியைச் சாக்கடையைக் காத்தேன் வளர்த்தேனென் கண்ணே றகுமானே! பொழிப்புரை: றகுமானே! பீற்றல் துருத்தியும், பீக்குழியுமான சரீரத்தை நான் காத்துக் கொண்டிருது காலத்தை வீணாக்கினேன்.
சோற்றுப் பொதியைச் சுமந்தே யலைந்துசுழற் காற்றுத் துரும்பானேன் கண்ணே றகுமானே! பொழிப்புரை: றகுமானே சோற்றுப் பொதியான சரீரத்தைச் சுமந்து சுழல்காற்றை ஒப்பானேன்.
மாராய வெள்ள மருங்கமிழ்ந்தால் நின்கருணைக் காரார் மழைபொழியுங் கண்ணே றகுமானே! பொழிப்புரை: றகுமானே! நன்னெறி வெள்ளத்தின் சமீபத்திலIழ்ந்த உன்னுடைய திருக்கருணை மழைபொழியும். மாராயம் - நற்செய்தி, நன்னெறி

Page 124
228
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணா திருக்குமனக் கண்ணாடிக்குள் முகமாங் கண்ணேறகுமானே!
பொழிப்புரை: எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணாதிருக்கும் மனக் கண்ணாடிக்குள் சதா இருப்பது உன் முகமே. கண்ணே றகுமானே.*
அரும்பே மலரேயென் னாசைதரும் வாசனையே கரும்பே ரசமேயென் கண்ணே றகுமானே!
பொழிப்புரை: றகுமானே! அரும்போ மலரே எனக்கு ஆசையைக் கொடுக்கின்ற வாசனையே கரும்பே அதின் ரசமே!
ராசாங்கம் வேண்டி ரதகசங்க ளேறுதற்குக் காசெங்குங் கேளேனென் கண்ணே றகுமானே!
பொழிப்புரை: றகுமானே ராசாங்கத்தை விரும்பி ரதகஜங்களில் ஏறுவதற்கு நான் காசு எங்கும் கேட்கமாட்டேன். (இறைவன் சந்நிதியை அடைவதே என் இலட்சியமாகும்)
ஆணையிட்டே னாணையிட்டேன் ஐயனேயுன்னருளைக் காண வெனக்கருள்செய் கண்ணே றகுமானே! பொழிப்புரை: றகுமானே! நான் இரண்டு முறை ஆணை வைத்தேன். உன்னுடைய அருளைக் காண எனக்கு அருள் செய்வாயாக.
உழையோ அழுக்கோஎன் உள்ளங்கழுவக் கழுவ கழுவாத் தொடக்கோ வென் கண்ணே றகுமானே!
* மானிட வாழ்வில் எத்தனையோ ஆசைகளும் இச்சைகளும் இன்பங்களும், துன்பங்களும் எம்மை பல திக்குகளில் இழுத்துச் செல்கின்றன.எம்மனம் இவ்வாறான பலதரப்பட்ட சூழ்நிலைகளில் அதாவது சோல்லொணா இன்பங்கள் நிறைந்த சூழ்நிலையானாலும் சரி, துன்பங்கள் நிறைந்த சூழ்நிலையானாலும் சரி, எமது வாழ்க்கை நிச்சயமான பரம்பொருளான இறைவனிலே சதா நிலை கொள்ள வேண்டும். கடலில் மிதக்கும் கப்பல் ஒரு நங்கூரத்தில் இணைக்கப்பட்டிருப்பது போல் எம் வாழ்க்கையும் இன்பத்திலும், துன்பத்திலும் இறைவனையே குறிக்கோளாக வைத்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இவ்வுண்மையை தாயுமான சுவாமிகள் பின்வருமாறு பாடுகின்றார்:
கொந்து அவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினும்,
குளிர்தீம் புனல்கை அள்ளிக் கொள்ளுகினும், அந்நீர் இடைத்திளைத்து ஆடினும்,
குளிர்சந்த வாடை, மடவார்
வந்துஉலவுகின்றதுஎன முன்றில்இடை உலவவே
வசதிபெறு போதும், வெள்ளை வட்டமதி பட்டப்பகல் போல நிலவுதர மகிழ்போதும், வேலை அமுதம்
விந்தைபெற அறுசுவையில் வந்தது என அமுது உண்ணும்
வேளையிலும், மாலைகந்தம்
 

229
பொழிப்புரை: றகுமானே! என்னுடைய மனமானது உழையோ? (சேறோ) அழுக்கோ? கழுவக் கழுவக் கழுவாத் தொடக்கோ? (தீட்டோ)
தன்னையறிந்து தவம்புரியாத தன்மையினாற் கன்னெஞ்சன் ஆனேனென் கண்ணே றகுமானே
- (மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: றகுமானே தன்னைத்தான் உணர்ந்து தவஞ் செய்யாமையினான் கன்னெஞ்சமுடையவனானேன்.
ஸ"அறத்துல் பாத்திஹாவில் கூறப்படும் அர்றஹ்மான் அர்றஹீம் என்னும் இருவார்த்தைகளும் 'அளவற்ற அருளாளன்', 'நிகரற்ற அன்புடையோனென சாதாரணமாக மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. சூஃபித் தத்துவஞானிகளோ இவ்வார்த்தைகளுக்கு மறைபொருள் ஞானவியாக்கியானங்களைக் கொடுத்திருக்கின்றனர். இவ்விடயம் பற்றி பேராசிரியர் டைட்டஸ் பேக்ஹாட் (Titus Burckhardt) என்னும் மேற்கத்திய அறிஞர் பின்வரும் வண்ணம் எடுத்துரைக்கின்றார்.
வெள்இலை அடைக்காய் விரும்பி வேண்டியவண்ணம் விளையாடி விழிதுயிலினும்,
சந்ததமும் நின்அருளை மறவா வரம்தந்து
தமியேனை ரட்சை புரிவாய் சர்வபரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே!
விளக்கம்: பூங்கொத்துகள் நிறைந்த மலர்ச்சோலையிலே, குளிர்ந்த நல்ல நிழலிலே இன்பமுடன் வாழ்ந்தாலுஞ் சரி,
குளிர்ந்த இனிமையான நீரைத் தாகம் மிகுந்த நேரத்திலே, கை நிறைய அள்ளிப் பருகி ஆனந்தம் அடைந்தாலும் சரி;
களைப்புத் தீர அக்குளிர்ந்த நீரிலே மூழ்கி விளையாடினாலுஞ் சரி, குளிர்ச்சியான தென்றல் காற்று பெண்கள் உலவுவதுபோல, வாசலிலே வந்து வீசும்படி வசதியுள்ள வீட்டிலே சுகமாக வாழ்கின்ற காலமானாலும் சரி;
வெண்மையான வட்டமான முழுமதி பட்டப் பகல்போல நிலவொளி வீசும்போது மகிழ்ந்திருந்தாலுஞ் சரி, பாற்கடலிலே பிறந்த அமுதம் நாம் வியக்கும்படி நாம் அறியாமல், நாம் உண்ணும் உணவிலே வந்து கலந்திருக்கின்றது என்று நினைக்கும்படியான இனிய உணவை உண்ணும்போதும் சரி;
மாலையிலே வாசனைப் பொருள்களைப் பூசிக்கொண்டு, வெற்றிலை பாக்கை விருப்பத்துடன் போட்டுக் கொண்டு, விரும்பியபடியெல்லாம் விளையாடி மகிழ்ந்து பிறகு இரவிலே அமைதியுடன் தூங்குகின்ற காலமானாலும் சரி; எப்போதும் உனது அருளை மறக்காத வரத்தை அளிக்க வேண்டும். பரிபூரணமான அறிவும் அருளானந்தமும் ஆக இருக்கின்ற சிவமே என்னைப் பாதுகாத்தருள்வாயாக!

Page 125
23O
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்னும் திருவசனத்தில் இறைதிருநாமங்கள் மூன்று உள்ளன. குறிப்பிடக்கூடிய குணங்களற்ற அல்லாஹ் என்னுஞ்சொல், ஆதியந்தமற்ற இறைவனின் ஏகாந்த நிலையைக் குறிப்பிடுகின்றது. இந்நிலையில் இறைவன் எல்லாச் சிருஷ்டிகளும் தனக்குள் அடங்கிஇருந்தும் ஏகாந்த தனித்துவ நிலையில் இருக்கின்றான். அர்ரஹ்மான் என்னும் சொல் எல்லாச் சிருஷ்டிகளையும், தன்படைக்கும் சக்தியால் வெளியாக்கக்கூடிய அளவற்ற ஆற்றல் படைத்த ஏகாந்த தனித்துவத்தில் இருந்து வேறாகும், இரண்டாம் நிலையைக் குறிப்பிடுகின்றது. அர்றஹ்மானான அல்லாஹ" தஆலா அந்நிலையில் எல்லாச் சிருஷ்டிகளுக்கும் காரணியான முதற் பொருளாகின்றான். அந்நிலையில் பிரபஞ்சத்தையும், அதன் படைப்புகளையும் சிருஷ்டிப்பது ஒரு இறையருளெனவே கருத வேண்டும். ஏனெனில் காலம், நேரம், குணங்கள்,
அவைகளுக்கு அப்பாற்பட்ட இறைவன், இவ்வரையறைகளுக்கு கட்டுப்படும் பிரபஞ்ச வஸ்துக்களில் வியாபித்தல் உண்மையிலே ஓர் அருளாகும். வரையறைகளுக்கு அப்பாற்பட்ட பரம்பொருள்,
வரையறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட சிருஷ்டிகளில் வியாபித்தல் ஒரு திவ்விய அருளாகும். இதுவே அளவற்ற அருளாளன் எனக் கூறப்படும் றஹீம்" என்னும் சொல்லின் உட்கருத்தாகும்.
காலம், நேரம் குணங்களால் கட்டுப்பாடான பிரபஞ்ச வஸ்துக்களில், வியாபித்தலினால் இறைவனின் ஏகாந்த நிலை குறையவில்லை. ஏனெனில் கட்டுப்பாடான வஸ்துக்கள், கட்டுப்பாடுகளுக்கு அப்பால்பட்ட இறைவனின்றி இயங்க முடியாதநிலையில் இருக்கின்றன. அதாவது வரையறைகளுக்குட்பட்ட வஸ்துக்களில் வியாபிக்கும் இறைவன் அவ் வஸ்துக்களையெல்லாம் தன் ஏகாந்த நிலையில் திரும்பவும் உறிஞ்சி இணைத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தவனாக இருக்கின்றான். "*
* 'அர் ரஹ்மான் அர்றஹீம் என்னும் இரண்டு பதங்களும் ரஹ்ம என்னும் மூலச்சொல்லிலிருந்து பிறந்தவை. இன்னொருவருக்கு நன்மை செய்து அன்புசெலுத்தும் எண்ணம் பிறந்தால் அந்த அன்புத் தூண்டலுக்கு அரபிமொழியில் ரஹ்மத் எனப் பெயர். எனவே ரஹ்மத் என்றால் அன்பு, இரக்கம், கருணை, நலஞ்செய்தல், அருள் செய்தல் என்பன போன்ற பல்வேறு பண்புகளைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.
 

231
முன்னர் எடுத்துக்காட்டப்பட்ட ரஹ்மான் கண்ணியெனும் கவிதை இறைவன்பால் செல்லும் ஒரு பக்தன் உலகப் பற்றுதலில் சிக்குண்டு படும் வேதனையை எடுத்துக் காட்டுகின்றது. சுழல்காற்றில் அகப்பட்ட துரும்புபோல் அங்குமிங்கும் வீசப்பட்டு உலக இச்சைகளில் மயங்கி இறைவன்பால் செல்லாமல் தத்தளிக்கும் ஓர் அப்பாவியாக தம்மை எண்ணிக் கவிஞர் வருந்துவதைப் படிக்கின்றோம்.
அல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) என்னும் மேற்கத்திய அறிஞர் இக்காலத்தில் பலதரப்பட்ட உலகாசைகளில் சிக்குண்ட ஒருவனின் மனோநிலையைப் பின்வருமாறு சித்திரிக்கின்றார்.
நாம் சுதந்திரமான மனோநிலையில் இருக்கின்றோம். உலகாசைகளிலும் OG) 55 இச்சைகளிலும் மூழ்கி,பரம்பொருளான இறைவனையும் எம்முள் இருக்கும் ஆத்துமாவையும் மறந்து, உலகமே உண்மைப் பொருளென இருக்கலாம், அல்லது, எம்மையும் எமக்கு வெளிப்படையான உலகத்தையும் படைத்து இயங்க வைக்கும் இறைவனே உண்மையென்று அந்தக் குறிக்கோளில் எம் வாழ்க்கையைச் செலுத்தலாம். அல்லது, ஒரு சந்தர்ப்பத்தில் உலகாசைகளிலும், இன்னொரு சந்தர்ப்பத்தில் பரம்பொருளைப் பற்றியும் மாறி மாறி எம் சிந்தனைகளையும் ஆசைகளையும் செலுத்தலாம். இவ் இலட்சியங்கள் நிரம்பிய இந்நிலையில் நாம் இறைவனுக்காக OGN)6õ095 மறக்கவுமில்லை. இறைவனை உலகுக்காக மறக்கவுமில்லை. இறைஞானமின்றி உலக ஆசைகளை சம்பூரணமாக வெல்ல முடியாத நிலையில் நாம் பலதரப்பட்ட முரணான ஆசைகளில் எம் சிந்தனைகளைச் செலுத்தலாம். உதாரணமாக அறு சுவையான ஆகாரங்களை உண்டு இன்புறலாம். மதுபானம் அருந்தி காம இன்பங்களை அனுபவிக்கலாம். பணம், அதிகாரம், புகழ் முதலியவைகளைத் தேடலாம். எங்களின் அன்புக்குரிய குடும்பத்தின் நலன்களையும் உடைமைகளையும் நாடலாம். எம் வெற்றிகளையும், தோல்விகளையும், இலட்சியங்களையும், பயன்களையம் நினைந்து நினைந்து காலங்கழிக்கலாம். அல்லது எல்லாவற்றுக்கும் மூலகாரணமான ஆதியந்தமில்லாத
அர்றஹீம் என்பது ரஹ்மத்தையுடையதாகவும், ஆனால் எப்பொழுதும் ரஹ்மத்தை வெளியாக்கிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு வினாடியும் உலகப் படைப்புகள் யாவும் அதனிடம் இருந்து நற்பேற்றை பெறுகின்ற ஒரு சக்தியைக் குறிப்பிடுகின்றது. அல்லாஹ்வின் ஈடிணையில்லாத றஹ்மத் - நற்கருணையானது சிருஷ்டி கோடிகளில் சகலபொருள்களையும் சூழ்ந்துள்ளது. அவனுடைய கருணைக்குப்புறம்பான எந்தப் பொருளும் இல்லை என்னும் உண்மையை மக்களுக்குகுர்ஆன்எடுத்துக்காட்டுகின்றது."(மெளலானாஅபுல்கலாம் ஆசாத்)
தர்ஜுமானுல் குர்ஆன் - ஸூரதுல் பாத்திஹா தமிழாக்கம்: ஸையித் இப்ராஹிம் எம்.ஏ.எல்.டி.

Page 126
232
இறைவனைத் தியானிக்கலாம். பல சந்தர்ப்பங்களில் ஒன்றோடொன்று முரணான இலட்சியங்களையும் கையாளலாம். உதாரணமாக வார்த்தைகளை அள்ளி வீசும் தந்திரமான அரசியல்வாதியாகவும், பணம் மதுபானங்கள் விரும்பும் போகியாகவும், சிறு பெண்களையும் விரும்பும் ஸ்திரிலோலனாகவும், குதிரைப் பந்தயங்களையும் துப்பறியும் நாவல்களையும் கவிதைகளையும் விரும்பும் ரசிகனாகவும் இருந்து கொண்டு, நரக நெருப்புக்குப் பயந்து தவறாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏசு கிறிஸ்துவின் ஆலயத்தை தரிசனம் செய்பவனாகவும் இருக்கலாம். இவையெல்லாம் 6(U5 மனிதனின் குணாதிசயங்களைப் பொறுத்திருக்கிறது. ஒருவன் ஒருவகையான ஆசைகளையும் இலட்சியங்களையும் நாடுவான். இன்னொருவன் அவைகளுக்கு முரணான இலட்சியங்களையும் ஆசைகளையும் நாடுவான். ஆனால் எவ்வளவு தான் பலம் வாய்ந்த ஆசைகளானாலும் நாம் ஒன்றுக்கும் அடிமையாக வேண்டியதில்லை. அவற்றை வெல்லவோ கட்டுப்பாடாக்கவோ தேவையான சக்தி எம்முள் இருக்கின்றது. அப்படிச் செய்வதால் நாம் முன்னை விடத் தூய்மையாகி, மாறுபட்டு, உயர்ந்த மனிதராகி விடுகின்றோம். *
(75) மூலம் முகம்மது முப்பாழ் முகம்மது மோனமுள்ள பாலம் முகம்மது பக்தியுள்ளோர்களும் பாய்ந்தெடுக்கும் வேலும் முகம்மது வேதாந்த மூல விளக்குடைய கோலும் முகம்மது குன்றாக் குணங்குடி கொண்டவர்க்கே.
நாளைக் கிருந்திட லாமென வெண்ணி நடுநெஞ்சமே நாளைக் கிருப்பதை நம்புவ தோவில்லை நானிலத்தில் நாளைக்கும் பின்னைக்கும் நாமிருப்போ மென்னு
நாட்டமற்றெல் வேளைக்கு நல்ல குணங்குடி வாழ்ந்திரு வேளையிதே
(மஸ்தான் ஸாஹிபு)" ஏற்கனவே சூஃபியாக்களின் தத்துவஞானக் கொள்கையான இன்ஸானுல்காமில் எனப்படும் சம்பூரணமனிதனின் விபரங்களை ஆராய்ந்தோம்.
இது சம்பந்தமாக ஹகீகத்துல் முஹம்மதிய்யா எனப்படும் முஹம்மத் (ஸல்) அவர்களின் 'சம்பூரணமனிதனின் முன்மாதிரி' எனும் கருத்தை ஆராய்வோம். சூஃபித்துவ கொள்கையில் இறைவனுடன் சங்கமமான உத்தமரையே சம்பூரண மனிதன் என
 

233
அழைக்கப்படுகிறது. அத்தகைய சம்பூரண மனிதர் ஏகத்துவ உணர்வை அடைந்து அண்டசராசரங்களையும், அவைகளைப் படைத்த இறைவனையும் தன்னுள் கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் உத்தமராவர். இதனால் சம்பூரண மனிதர் வரிசையில் ஆதம் (அலை) அவர்கள் தொடக்கம் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையுள்ள நபிமார்களும் குஸஅஸ7ல்-குஸலிஸ் எனப்படும் அதி உத்தம இறைஞானிகளும் உட்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
அவ்லியா எனப்படும் ஆத்மீக ஞானிகள் மானிடத் துயர்களை இறைவனிடம் பிரார்த்தித்து நீக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர்களெனக் கருதப்படுகின்றனர். ஒளலியா வரிசையில் 'குதுப்' எனப்படும் அதியுன்னத இறைஞானியே தலைவராவார். கடைசி நபியான முஹம்மத் (ஸல்) அவர்கள் குத்பைவிட உயர்ந்த நிலை உடையவரெனக் கருதப்படுகின்றார்கள்.
பற்பல தரீக்காக்களை ஸ்தாபித்து, ஷைகுமார்கள் குத்பெனும் உன்னத ஸ்தானத்தை வகிக்கின்றனர். அவர்களின் ஆத்மீக அதிகாரம் பீர், ஷைகு (Peers, Shaikhs) எனும் பிரதிநிதிகளின் மூலம் பிற்காலச் சந்ததிக்குப் பரப்பப்படுகின்றது. சூஃபித் தரீக்காக்களில் ஷைகுமார்கள் தத்தம் முரீதீன்களுக்கு வணக்கநெறிமுறைகளைப் போதிப்பதுமல்லாமல் கிரியா முறையில் அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்தையும் வளர்ப்பார்கள். இதனால்தான் சூஃபியாக்கள் தத்தம் சேகுமார்களையும், குத்புகளையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் தம் ஆத்மீக முன்னேற்றத்திற்கு உதவி செய்யுமாறு வேண்டிக்கொள்வார்கள்.
மஸ்தான் ஸாஹிப் என்பவர் அதிபிரபல்யம் வாய்ந்த முகியித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (கி.பி.1160) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட காதிரிய்யாத் தரீக்கத்தைச் சேர்ந்த இறைஞானி ஆவார். இதனால்தான் அவர் கவிதைகளில் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களையும் திருநபி (ஸல்) அவர்களையும் அடிக்கடி அருள்புரியுமாறு வேண்டுகின்றார். அவ்வண்ணம் வேண்டுதல் சூஃபித்துவப் பரம்பரையில் ஒரு முக்கிய மரபாகும். உதாரணமாக அல் இன்ஸானுல்காமில் 'சம்பூரண மனிதனைப் பற்றி எழுதிய அப்துல் கரீம் ஜீலி அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்வரும் முறையில் போற்றுகின்றார்.
வட்டத்தின் (சிருஷ்டிகளின்) மையமே
உண்மையின் அத்திவாரமே அமைப்புகளின் அடிப்படையே தேவைகளின் அச்சாணியே சிருஷ்டிகளின் கண்ணே
புர்கான் - குர்ஆனின் நுக்தாவே

Page 127
234
சம்பூரண மனிதனை இன்னும்
சம்பூரண மாக்கும் உத்தமரே இறைமகத்துவத்தால் அழகாக்கப்பட்ட
உன்னதப் படைப்பே மகத்தான சிருஷ்டிகளின் கோலே
தனிமை தியானத்தின் சம்பூரண கனவே
உட்புறமாகியும் அப்பால்பட்டும் இயங்கும் மகத்துவமே
நித்திய மானதும் அநித்திய மானதும் உமதே."
சரித்திர காலத்தில் பிறந்த திருநபி (ஸல்) அவர்களையும், காலத்திற்கு அப்பாற்பட்ட நூறுல் முஹம்மதிய்யா எனும் இறை ஒளியையும் வேறுபடுத்தி பேராசிரியர் நிக்கல்ஸன் கூறுவதாவது:
60
நூறு முஹம்மத் என்னும் ஒளியின் ஹகீகத் (சாரம்) ஆனது சரித்திர காலகட்டத்தில் பிறந்த முஹம்மத் (ஸல்) அவர்களில் வேறுபட்டு, இறைவனால் முதலாவது படைக்கப்பட்ட எல்லாப் படைப்புகளையும் உண்டு பண்ணும் உயிர்ச்சக்தியாகும். இவ்வொளியே எல்லாச் சிருஷ்டிகளிலும் உயிருக்குயிராக இயங்குவது மட்டுமல்லாமல் இறைபக்தர்களுக்கு இறைவனால் அளிக்கப்படும் இறைஞானம், இறையருள் முதலிய கொடைகளின் சாதனமுமாகும். "
(76) நாரீ என்ற மணியதனை நானும் ஒதியிருக்கவே தாநீ என்ற சுடரெழுத்து தரித்த மணிமந்திரம் நீநீ எண்ணுமுத்தனும் நிறைந்த சோதி சுத்தனென் றானே ஒதி நின்று எண்ணந்தனை யறிந்த காட்சியே."
(பரிமள முகம்மத் காஸிம்). பொழிப்புரை: இறைவா, "நான் வேறு "நீ வேறு என்று நான் ஒதிக் கொண்டிருக்கவே, நீ என்னுள் இருக்கின்றாய் என்ற சுடரெழுத்தான மணிமந்திரம் எனக்குப் புலனானது. அவ்வேளையில் அனைத்தும் நீ என்றும் அவைகளெல்லாம் உன்சுடரின் பிரதிபலிப்பென்றும் என்னை நானே அறிந்து கொண்டேன்.
மேற்கூறிய கவிதைகளிலும் பின்னாலுள்ள இரண்டு கவிதைகளிலும் சூஃபியாக்கள் கூறும் "பனா பகா எனும் இரு நிலைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. "பனா என்பது, நான் எனும் தனித்துவ நிலை கரைந்து விடும் நிலையாகும். 'பகா
 

235
என்பது ஓர் இறைஞானி இறைவனுடன் சங்கமமாகும் நிலையாகும். சூஃபி இலக்கியங்களில் இவ் ஆத்மீக அனுபவத்தைப்பற்றி பல தரப்பட்ட வருணனைகள் இருக்கின்றன.
அலி (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்கள்.
நான் இறைவனாலே இறைவனை அறிகின்றேன். இறைவனல்லாதவற்றையும் இறையொளிமூலமாகவே அறிகின்றேன். *
அபுல்ஹஸன் நூரி (ரஹ்) என்னும் இன்னொரு சூஃபி அவ்வனுபவத்தைப் பற்றிக் கூறுவதாவது:
இறைவனன்றி வேறொருவராலுமோ இறைவனை அடையும் மார்க்கத்தை காட்ட முடியாது "
துன்நூன் (ஹிஸ்ரீ245; ஈஸ்வீ859) எனும் இறைஞானி மஅரிபத் எனக்கூறப்படும் இறைஞானம் இல்ம் எனப்படும் சாதாரண அறிவில் இருந்து வேறுபட்டதாகும் எனக் கூறுவர். ஏனெனில் 'மஅரிபத்’ எனும் இறைஞானத்தை அடைய 'மஹப்பத்’ எனும் இறையன்பு அத்தியாவசியமாகும். அவர் மேலும் இயம்புவதாவது:
உண்மையான இறையறிவு இறைவன் ஒருவன்இருக்கின்றான் என்றுமட்டும் சொல்வதல்ல. ஏனெனில் இது எல்லா விசுவாசிகளும் நம்பி இருக்கும் ஓர் உண்மையாகும். மேலும் தத்துவ ஞானிகளாலும் மதகுருக்களாலும் வாக்குவாதங்களாலும், தர்க்க சாத்திரங்களாலும் நிரூபிக்கப் படும் வெறும் உண்மையும் அல்ல. அவ்லியாக்கள் எனப்படும் இறை பக்தர்கள் தம் இதயத்தால் அனுபவித்து, இறைவனாலே வெளிப்படுத்திய இறையுண்மைகளை நன்குணர்ந்து அனுபவ ரீதியில் கூறும் விடயங்களே உண்மையான இறை அறிவாகும். இது இறைவனாலே அருளப்பட்டு அவன் மர்மங்களை வெளிப்படுத்தும் இறையுணர்வாகும். இத்தகைய உண்மைகள் உண்மையான இறைபக்தர்களுக்கன்றி ஏனைய மற்றவர்களுக்கு அருளப்படமாட்டா, இறைவனிடம் சங்கமமாகும் நிலையிலே மஅரிபத் என்னும் இறைஞானம் ஒரு பக்தனுக்கு உதிக்கும். நான், நீ, அறிபவன், அறியப்படுபவை என்னும் வேற்றுமைகளற்று எல்லாச் சிருஷ்டிகளும் தனக்குள் அடங்கும் இறைவனின் ஒருமையுணர்வில் கலந்துவிடுவதே மஅரிபத்தாகும்.

Page 128
236
(77)
நானோ உன்னில் பனாவாய் நீயே பகாவாக தானா யரசாளும் தான்தான் றகுமானே (தானே)
(றசூல் பீவி)"
பொழிப்புரை: நான் என்னும் தனித்துவநிலை கரைவது பனாவாகும். அந்நிலைக்குப் பின்னர் இறைவனுடன் சங்கமமாகும் நிலையே பகாவாகும். றகுமான் என்னும் அருளாளனாய் எல்லாவற்றையும் அரசாள்பவனும் அவனே.
(78)
நானென்றதும் பொய்யே நானா பேதம் பொழிந்து தானென்றதும் பொய்யேதான வனாய்ப் போனதனாற் சொல்லுஞ் சுகாசுகங்கள் தொல்லை பலபேதங்கள் இல்லாமல் சும்மா இரு. (மச்சரேகைச் சித்தன்)"
பொழிப்புரை: "நான் என்பதும், 'நீ என்பதும், தான்' என்னுடையது என்பதும் பொய்யே. நான் உன்னில் அடங்கிவிட்டதினால், சுகந்தம்பல சொல்லாமலும் பேதம்பல கூறாமலும் சும்மா இருப்பதே ஞானவழியாகும்.
'சொல்லுஞ் சுகாசுகங்கள் தொல்லை பலபேதங்கள், இல்லாமல் சும்மா இரு' என்னும் சாந்திநிலையைப்பற்றி, ஜூனைத் (ரஹ்) அவர்கள் சொன்னதை 'கஷ்ப் அல்-மஹ்ஜூபில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:-
இறைவனுடன் ஒன்றுபட வேண்டுமானால் அவனிடம், சம்பூரண சரணடைந்து, அவன், கட்டளைகளும், நாட்டங்களுமே நிறைவேறட்டும் என நாடி அவனின் ஒருமைநிலை எனும், சக்கரத்தில் மூழ்கி தன்னைமறந்து சமுதாயத்தின் பற்றுகளையும் அறுத்து இறைவனிலே தஞ்சமடைந்து அவன் ஏகாந்தத்தில் ஒன்றுபட்டுவிட வேண்டும். அவ்வாறு செயலற்று, கருமமற்று, பற்றற்றுக் கிடக்கும் நிலையில், ஒருபக்தன் இறைவனின் சாதனமாகி அவன்அனுபவிக்கும் கடைசிநிலை அவன் முன்பிருந்த முதன் நிலையாகிவிடுகின்றது. அதாவது அவன் பிறக்குமுன் எந்நிலையில் இருந்தானோ அந்நிலையையே திரும்பவும் அடைந்துவிடுவான். *
(79) நீயெனு முனைநான் நினைவினாற் றுதித்து நிலைபெற குருவருள் நிறைந்து நானெனு மிருந்த வுரையற்றுக் கருமம்
நாடிய கருவிகளற்று
 

237
நீயென அடியேன் நினைவை ஒன்றாக்கி
நிகழ்த்து வதற்குளா ளாக நானெனு மெழுந்த சோதியுள் நிறைவாய்
நலந்தர வழுந்துவை நீயே.
(கோட்டாறு ஞானியார்)" பொழிப்புரை: என் சிந்தனையில் உன்னை (இறைவனை) 'நீ என்று துதித்தேன். அப்பொழுது உன் அருளால், 'நான்’ என்னும் நிலை அற்றுப்போய்விட்டது. என் ஐம்புலன்களும் அற்றுப்போய் விட்டன. என் சிந்தனைகளெல்லாம் நீயாகிவிட்டன. அது மட்டுமல்லாமல் உன் ஏகாந்தச் சுடரொளியிலே நான் அமிழ்ந்து விட்டேன்.
(80) அஞ்சிலுருப்பட் டொன்றாகி
அகமும் புறமும் பதநடனம் ஆயுங் கலைகண் டடியாருள்
அழிந்தும் அழியாதயர்வற்று பிஞ்சு மறந்து பேர்திறந்து
பெருகுங் கடலுட் புரியாகிப் பிணைபோன் றிருந்த வொளி ஒளியின்
பெருமை யதினாலுயிர்யாவும் நஞ்சங் கெழுந்த நுதிநடுவில்
நஞ்சாய் நஞ்சுள் நடுவாகி நானு மிலைநீ தானுமில்லை
இரண்டு மிலையொன்றுருவாகிக் கஞ்ச மலரி னழகொளிர் நின்
கனிவா யிதழ்த்தே னமுதருளும் ஹாமீம் முஹம்மதென் பீர்நின்
கனிவா யிதழ்த்தே னமுதருளும்
(கோட்டாறு ஞானியார்)" பொழிப்புரை: பஞ்சபூதங்களில் வியாபிக்கும், ஒருமையான பரம்பொருளாகியும், உள்ளும் புறமும், இயங்கும் பிரபஞ்ச சக்தியாகியும், உன்னை நாடும் பக்தர்கள் சங்கமமாகும் உண்மை பொருளாகியும், "நான்’ எனும் தனிநிலையற்று ஏகாந்தமெனும் பெருங்கடலில் மூழ்கி இறை ஒளியில் இணைந்து நான் 'நீ எனும் நிலையற்று இரண்டும் ஒன்றாகும் தேவாமிர்தம் போன்ற அந்நிலையை அடைய ஹாமீம் முஹம்மத், என்பீரே, அருள் செய்வீர்களாக.
முன்னர் எடுத்தாளப்பட்ட இரண்டு கவிதைகளிலும் கூறியது போல லாஹஜூத் எனப்படும் இறைமைக்கும், 'நாஸஅக்' எனப்படும் மனிதத் தன்மைக்கும் ஏற்கனவேயுள்ள ஒருமைப்பாடு புலனாகின்றது. ஹல்லாஜ் (ரஹ்) அவர்கள் இவ்விடயத்தை பின்வரும் முறையில் கூறுகின்றார்:-

Page 129
238
நீருடன் மதுகலந்ததுபோல் நீ (இறைவா) என் ஆத்மாவுடன் கலந்து விட்டாய் உன்னை ஏதும் தொட்டால் அது என்னையும் தொட்டுவிடும் உண்மையிலே எக்கணத்திலும் நீ என்னுள் இருக்கின்றாய்."
இப்னு அறபி (ரஹ்) அவர்களும், ஜீலி (ரஹ்) அவர்களும் லாஹூத், நாஸஅத் என்பவை, இறைமையின் இரு அம்சங்களெனக் கூறுகின்றனர்.
(81)
நிலையமுட னெங்கணுங் கோத்தநிலை குலையாது
நின்றதே சோம யத்தை நெற்றிவிழி யூடுநிலை நின்றோ ருளந்தனில்
நெளிந்ததே சோம யத்தைத் தொலையா திலங்கு துரியாதீதமானவத்
துவிததேசோ மயத்தை தொந்தங் கடிந்தவர்களுந்திக்குள் வண்டாய்த்
துவண்ட தேசோ மயத்தைச் சலியாத வைராக்ய தீரனை யலுப்புறச்
சார்ந்ததே சோம யத்தைச் சாமுனெற் கருளஅடி யேனுமுமை நம்பினேன்
சலுதிவந்தா ளுதற்கே மலிகருணை மிக்கவலு வுள்ளநீர் பின்தொடர
வள்ளல் இற சூல்வ ருகவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண்
மணியே முகியித்தீனே.
(மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: குணங்குடி வாழும் குருநாதராகிய முகியித்தீன் ஆண்டகை அவர்களே, எல்லா உலகங்களிலும் நிலைகெடாமல், எழுந்த தேசோமயத்தை (தேசோமயம் - ஒளிமயம்) நெற்றிக்கண்ணினிடத்தில் (ஞானநிலையில்) நிலைத்து நின்றவர்களுடைய மனத்தின் கண் பதுங்கி வெளிப்பட்ட ஒளிமயத்தை, ஒளியாமல் பிரகாசிக்கின்ற * துரியாதீதமாகிய அத்துவித (இறைவனின் ஏகாந்த ஒருமைநிலையான) தேசோமயத்தை, பந்தங்களை அறவே ஒழித்திருப்பவர்களுடைய
* துரியாதீதம் - ஆன்மாவின்ஐந்துநிலைகளுள் அதுமிகத்தூய்மையுற்றுப்புருடத்துவத்தோடு மூலாதாரத்தில் நிற்கும் நிலை, சூஃபி ஞானி தன் ஆன்மாவின் பயணத்தில் முழு நிறைவு பெற்றுப் பரம்பொருளை நேருக்கு நேராகக் கண்டுணரும் 'வஸ்ல்" என்னும் ஏழாம் நிலை. அத்துவிதம் இரண்டற்றது. வஹ்தத்துல் வுஜூது; தொந்தம் - பந்தம். கடிந்தவர்- ஒழித்தவர். சலுதி - விரைந்து. (அப்துல் ரகுமான் - குணங்குடியார் பாடற் கோவை).
 

239
மூலாதாரமாகிய பூவில் வண்டைப்போல் துவண்டிருக்கின்ற தேஜோமயத்தை, மனஞ்சலியாதிருக்கின்ற வைராக்கியத் தையுடைய தீரனை, இளைப்பில்லாவண்ணம் பொருந்தி இருக்கின்ற தேஜோமயத்தை, சாகுமுன் அருள்வீர்களென்று அடியேனாகிய நானும் உம்மை நம்பினேன். ஆகையால் கருணைமலிந்த முகியித்தீன் ஆண்டகை பின்தொடர முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்வந்தருள வேண்டும்.
அல்லாஹ"தஆலா எல்லா வஸ்துக்களையும் படைக்கும் ஒளியென திருக்குர்ஆன் கூறுகின்றது. (அத்தியாயம் 24:35 நோக்குக.)
(82)
அல்லும் பகலுஞ்சிந்தை உலைமெழுகா கிஎன்
ஆசை யாலுற வாடினேன் சல்லாப மாயென்றன் மையற்கடல் போலாகித்
தயங்கியென்னுளம் வாடினேன் தொல்லை விதியாலுன்னை நினைந்து மதனன் பாணந்தொட மனம்மிக நாடினேன் எல்லையில் நினைவாகியிருந்ததுக்கு நீ செய்த
தித்திப்பை யாருட னுரைப்பேன். விழியிரண்டு மூடியோர் விழியைத் திறந்து நின்ற
வெளிகாண நினைவா கினேன் கழிவற் றனுபோகக் காட்சியிலுறவாகிக் கருணையால் மனமாகினேன் சுழியற்ற சுழியினுள் மருவிக் கலந்து வந்த
சுருதியால் நினைவாகினேன் ஒளிமுச் சுடரு மொன்றா யிருந்ததுக்கு நீசெய்த
உறைப்பை யாருடன் முறையிடுவேன். கண்ணாடி யிற்கண்ட முகம்போ லெதிர்நின்று
கவுனத் தொழில் பாராட்டு கிறாய் முன்னான் கிலொன்றாய் முடிந்தரி ரூபமான
முழியா லெனைமருட் டுறாய் எந்நாளும்உனக் காக இருந்த சிநேகிதத்துக்
கென்னையே மருட்டு கிறாய் பன்னாலும் ரட்சித்தாட் கொண்டபிர் ஹல்லாஜ"
பாதமிருக்க நீ செய்ததை யாருடன் சொல்லுவேன்
(கோட்டாறு ஞானியார்)"
பொழிப்புரை:(இறைவா) நான் அல்லும் பகலும் என் மனமானது உலை மெழுகென உருக ஆசையுடன் உறவாடினேன். உரையாடி உன்றன் மோகக் கடலாகிதயங்கி என்னுளம் வாடினேன். தொல்லை விதியால் உன்னை நினைந்து மையல்கொண்டு மிக நாடினேன். எல்லையற்ற நினைவாகி இருக்கும் உன்னில் எனைச் சேர்க்கும்

Page 130
24O
ஆசையை யாருடன் உரைப்பேன். (மோகம், மையல் என்பது பேரின்பமாகும்.)
இருவிழிமூடி ஞானவிழி திறந்து வெளிகானும் நினைவாகினேன். கருணைமிகு அனுபோகக் காட்சியில்
உறவாகினேன். சுழியற்ற சுழிபோல் ஏகாந்த ஒருமைநிலையில் கலந்த நினைவாகினேன். ஜோதிமயமான உன்னில் எல்லாப் படைப்புகளும் உன்றன் ஒளிமயமாக இருந்த மர்மத்தை யாருடன் சொல்லியுரைப்பேன்.
கண்ணாடியில் கண்ட பலதரப்பட்ட உருவங்களைப்போல் என்னை மருட்டுகிறாய். எந்நாளும் உன்மேல் வைத்த அன்பிருந்தும் என்னைப் புறக்கணிக்கின்றாய். இத் தொல்லைகளையெல்லாம் என் ஞானகுருவான ஹல்லாஜ" (ரஹ்) அவர்களிடமல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?
இறைவனுடன் சங்கமமாகும் அனுபவத்தையும், அதனால் ஏற்படும் பேரின்பத்தையும் வார்த்தைகளாலோ வசனங்களாலோ கூறமுடியாது. இவ் அனுபவத்தை இறைபக்தர்களான கவிஞர்கள் சாதாரண வாழ்வில், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் அனுபவத்தை வருணிக்கும் இலக்கிய உருவகங்கள் மூலம் எடுத்துக்காட்டுவது எல்லாப் பாஷைகளிலுமுள்ள இறைஞான இலக்கியங்களின் ஒரு மரபாகும். உதாரணமாக இப்னு அறபி (ரஹ்) அவர்களின் கவிதைச் சித்திரத்தை நோக்குவோம்.
அழகு நிறைந்த இளம்பெண்ணே இருளில் நடப்பவனுக்கு, வழிகாட்டும் விளக்கே! அழகின் ஒளியே! கருமையான கூந்தலால் மூடப்பட்ட முத்தே! முத்துக்குளித்துப் பொறுக்கும்; முத்தான இறைஞானமே முத்துமணியே முத்தைப் பொறுக்கியவன் சதாகாலம் இன்புறும் சமுத்திர ஆழமே."
இப்னு அறபி மேலும் கூறுவதாவது:
இறைஞானிகள், தம் அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட முடியாது என்பதனால், அதைப்போன்ற அனுபவங்களை மற்றவர்களுக்கு உவமை மூலமாகவே ஒருவாறு விளக்கலாம். '
இன்னும் பிரபல்யம்மிக்க ஒருவரான ஜாமி என்னும் சூஃபி மகான், காதலி தன் அழகை காதலனுக்கு திரைநீக்கம் செய்து காட்டும் இலக்கிய உருவகத்தைக் கையாண்டு, கவிதையாக்கி, இறைவனின் வெளித்தோற்றத்தைப் பாடுகின்றார். ஆதியந்தம் இல்லாத தனிநிலையில் காதலன் தன் அழகை வெளிக்காட்டினான். தன் கண்ணாடியில் தன் முகத்தையே கண்டான்.
 

16
241
அவன் அழகை அவனே ரசித்தான். அந்நிலையில் அவனே, பார்ப்பவனாகவும் பார்க்கப்படும் காட்சியாகவும் ஆகியிருந்தான். அவனன்றி ஒரு கண்ணும் அண்டசராசரங்களைக் காணவில்லை. எல்லாம் ஒன்றாகி, இரண்டெனும் நிலையற்றிருந்தது.
நான் 'நீ எனச் சொல்வதற்கில்லை. அண்ட சராசரங்கள் யாவும் ஒரு புள்ளியில் அடங்கியிருந்தது. (நுக்தா) கருவில் மறைக்கப்பட்ட சிசுப்போல் எல்லாச் சிருஷ்டிகளும் உள்ளடங்கியிருந்தன. காதலனின் கண்ணோ மறைந்தவற்றைக் கண்டது. இறை மகத்துவத்தின் அம்சங்களெல்லாம் அவனுக்குத் தென்பட்டது எனினும் இன்னொரு கண்ணாடியில் அவை தென்பட அவன் விரும்பினான். அவனின் ஒவ்வொரு இறை அம்சமும் பற்பல உருவங்களில் வெளிப்பட ஆவல் பட்டான். எனவே, காலம், நேரம் எனும் வயலில் உலகம் எனும் தோட்டத்தை உருவாக்கினான். அதில் வளரும் ஒவ்வொரு கொப்பிலும் இலையிலும் கனியிலும் தன் மகத்துவங்கள் பிரதிபலிக்க எண்ணினான். அதியுயர்ந்த சைப்பிரஸ் மரமோ அவன் மகத்துவத்துக்கோர் அறிகுறியாயிருந்தது. ரோஜா மலரோ அவன் வதன அழகின் பிம்பமாய் இருந்தது. அழகு முகம் காட்ட அன்பு பின்வந்தது. அழகு இதழில் ஜொலித்தது.
அன்பு ஒளி ஈந்தது. கூந்தலால் மறைந்த அழகை ரசிக்க அன்பு ஒரு இதயத்தை மாட்டியது. அழகும் அன்பும் உடலும் உயிரும்போல் ஒன்றியது. அழகே சுரங்கமாகும், அன்பே இரத்தினமாகும். ஆதி அனாதியாய் இவ்விரண்டும் ஒன்றுபட்டிருந்தது. ஒன்றை விட்டொன்று ஒருபோதும் பிரியவில்லை. பிரிந்து பிரயாணஞ் செய்யவுமில்லை'."

Page 131
242
ஆத்மீக இலக்கியங்களில், ஒருதனி ஆத்மா இறையாத்மா வோடு சங்கமமாவது சாதாரண வாழ்க்கையில் நடக்கும் திருமணக் குறியீடுகள் மூலம் வருணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் எல்லாம் பரம்பொருளில் இருந்து உண்டாகி அதனிலே மீண்டும் தஞ்சமடைவதை திருக்குர்ஆன்:
வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே, சகல காரி யங்களும் அந்த அல்லாஹ் விடமே மீட்டப்படும் "
எனக் கூறுகின்றது.
(83) என்னையறிந்தேனே - இனி ஏகாந்த மானேனே
அனுபல்லவி தன்னை மறந்து தலைகீழாய் நில்லாமல் என்னை மறந்தும் உனை நினைந்திட்டபோது (என்)
சரணங்கள் 1. பார்க்குந் தினந்தோறும் பரிபூரணங் கண்டேன்
நோக்குமிடந் தோறும்நல்ல நூறினிற் சென்றேனே ஏற்கையுடனே யிருள்வெளி யாயிட
வாக்குமனமறத் தாக்கிய போதினில் (என்) 2. உப்புக் குரித்தான உடலுக்கு விருந்தேனே
செப்ப முடனழகா யெற்கது சிங்காசனந்தானே சப்பரம் போலதைத் தப்பாமற் சோடித்தும்
இப்புற மப்புற மொப்புற வாக்கும்போது (என்) 3. காடுமலைகளெங்கும் பெருங்கானல் பிறந்ததுபோல்
ஆடிய சக்கரமா யகண்டா திசைந்ததனால் பாடிய நூலினைப் பார்த்தலை யாமலவ்
வேடிக்கை வீட்டில் விளையாடும் போதினில் (என்) 4. கன்னமிடுங் கருவி கரணங்களைச் சுட்டேனே
சின்னப்படுஞ் சடத்தைச் சிறைச்சாலையி லிட்டேனே நிண்ணயமான குணங்குடி நாதனை
உன்னியெல்லாம் புற மோட்டியபோதினில் (என்) (மஸ்தான் ஸாஹிபு)" பொழிப்புரை: நான் என்னை உணர்ந்துகொண்டேன், ஏக சொரூபியுமானேன். தன்னைத்தானறிவதை மறந்து தலைகீழாக நிற்காமல் என்னை மறந்தும் உன்னை நினைத்த காலத்தில் நான் என்னை உணர்ந்து கொண்டேன். ஏக சொரூபியுமானேன். தினமும்

243
நான் பார்க்கும் போதெல்லாம் பரிபூரனவஸ்துவைக் கண்டேன். நோக்குகின்ற இடங்களிலெல்லாம் நூர் (ஒளி) பிரகாசத்திற் சென்றேன். ஒப்புதலுடனே அஞ்ஞான இருள் வெளியாக வாக்கும் மனமும் ஒன்றித் தாக்கிய காலத்தில் நான் என்னை உணர்ந்து கொண்டேன். ஏக சொரூபியுமானேன்.
உப்புப் பிடித்து பூர்க்குந் தன்மையுடைய சரீரத்திற்குள் நான் இருந்தேன். செம்மையாக எனக்கு அது சிங்காசனந்தானோ? தேரைப்போல் சோடித்து எந்தப்பக்கத்திலும் பொருத்திவைக்கும் போது நான் என்னை உணர்ந்து கொண்டேன். ஏக சொரூபியுமானேன்.
காடுமலைகளெல்லாம் கானல் உண்டானதைப் போல், ஆடியசக்கரமாய் அகண்டமாகாமல் இசைந்ததனால் எல்லோரும் பாடிய நூற்பாக்களைக் கற்று அலையாமல் அந்த வினோதத்தை விளைவிக்கின்ற வீட்டில் விளையாடும் காலத்தில் நான் என்னை உணர்ந்து கொண்டேன். ஏக சொரூபியுமானேன். கன்னஞ் செய்கின்ற கருவிகளையும் கரணங்களையும் சுட்டேன். அழிகின்ற சரீரத்தைச் சிறைச்சாலையில் வைத்தேன் என்றும் உறுதிமிக்க குணங்குடிநாதனை நினைத்து எல்லாவற்றையும் புறத்தே ஒட்டின காலத்தில் நான் என்னை உணர்ந்து கொண்டேன். ஏகசொரூபியுமானேன்.
(வடிவேலு முதலியார் உரை) இக்கவிதையின்சாரமாவது: ஒரு பக்தன். அவன் உண்மையான நிலையை அறிந்த போது, இறைமயமெனும் ஏகாந்தத்தில் மூழ்கி, 'நான்’ எனும் நிலையை இழந்துவிடுவான் என்பதாகும். ஷிப்லி என்னும் இறைஞானி, இறையனுபவத்தின் சம்பூரண நிலையைப்பற்றி கூறுவதாவது:-
நான், "நான்’ எனும் நிலையை இழந்துவிட்டேன், 'நான்' எனும் அம்சங்கள் யாவும் ஒளிந்துவிட்டன. எல்லாச்சிருஷ்டிகளிலும் நான் மறைந்துவிட்டேன். நான் என்ற ஒன்றுமே இல்லை. நான் என்பது வெறுந்தோற்றமே. " இறையனுபவத்தில் மூழ்கிய ஒரு பக்தன் இறைமகத்துவத்தை எல்லாச்சிருஷ்டிகளிலும் காண்கின்றான். இவ்வனுபவத்தைப் பற்றி பாவாகுஹி என்னும் இறைஞானி பாடுவதாவது.
சந்தையிலும் மடத்திலும் இறைவனையே கண்டேன் வெளியிலும் மலையிலும் இறைவனையே கண்டேன் துன்பத்திலும் இன்பத்திலும் அதிர்ஷ்டத்திலும் துர்அதிர்ஷ்டத்திலும் இறைவனையே கண்டேன்

Page 132
244
தொழுகையிலும் நோன்பிலும் தியானத்திலும் ஸலவாத்திலும் நபிகாட்டிய வழியிலும் இறைவனையே கண்டேன். உடலிலும் உயிரிலும் பொருளிலும் அவற்றின் தன்மையிலும், குணங்களிலும் காரணிகளிலும் இறைவனையே கண்டேன் - என் கண்களைத் திறந்தேன் அவன் வதனத்தின் ஒளியைக் கண்டேன் அவ்வொளியால் கண்ட யாவற்றிலும் இறைவனையே கண்டேன். மெழுகு திரிபோல் அவன் தீயில் கரைந்தேன் அதில் உண்டாகும் தீபத்திலெல்லாம் இறைவனையே கண்டேன் நான் என்கண்களால் பலகாட்சிகளைக் கண்டேன் ஆனால், இறைவன் கண்களால் நான் பார்த்த போது நான் இறைவனையே கண்டேன் நான் "நான்’ எனும் நிலை குலைந்து அற்றுப்போனேன் ‘என்ன அதிசயம்! உயிர்களுக்கு உயிரான இறைவனில் மறைந்து இறைவனையே கண்டேன். **
இறை அனுபவத்தில் மூழ்கி, "நான்’ எனும்நிலை ஒழிந்த பரிபூரண அனுபவத்தைப் பற்றி துன்னூனுல்-மிஸ்ரி (ரஹ்) எனும் இறைஞானி கூறுவதாவது:
*குர்ஆனுடைய பல்வேறு விளக்க முறைகளிலே, வஹ்தத்துல் உஜூத் அத்வைதக் கொள்கையின்பால் வெகுதூரம் செல்லக்கூடியனவும் உள்ளன. உதாரணமாக, 'அவனே ஆதி, அவனே அந்தம், அவனே புறமும், அவனே உள்ளும்." "நீங்கள் எங்கு திரும்பினாலும் அல்லாஹ்வின் தோற்றத்தையே காணமுடியும்.'அல்லாஹ் நமது உயிர்நரம்பைக்காட்டிலும் மிக காட்சியளிக்கின்றான்' என்பனவற்றைக் கூறலாம். படைப்பினங்களெல்லாம் இறுதியில் அல்லாஹ்விடம் திரும்பவேண்டுமென்று கூறப்படும் குர்ஆன் வசனங்களை, வஹ்தத்துல் உஜூத் (சிருஷ்டி எல்லாவற்றிலும் இறைவனே உள்ளான்) எனப்படும் சூஃபிகளின் கொள்கையை ஏற்றுக் கொள்வோர் தங்கள் கொள்கைக்கு அத்தாட்சிகளாக நிரூபிக்கின்றார்கள். இந்த விளக்கங்களை அவற்றின் தொடரிலிருந்து அவற்றின் இடம்பெயர்ந்து வெகு தூரம் கொண்டு போகலாகாது. மேலும் ஆரம்ப கால முஸ்லிம்கள் அறிந்து கொண்ட அளவுக்கு அப்பால் நாம் செல்லலாகாது. இனி, ஞானோதயம் (கஷ்ஃப், இர்ஃபான் பெற்றவர்களுக்கு உண்டாகும் நிலை எந்தவகையிலும் குர்ஆனுடைய கடவுட் கொள்கைக்கு மாற்றமாக இல்லை. எவரெவர் இஹ்ஸான் என்னும் நிலை அடைகின்றார்களோ அவர்கள் உண்மைப்பொருளை ஞானோதயங்களில் (கஷ்ஃப்) ஜோதிமயமாக காண்கின்றார்கள்.
அருகில் இருக்கின்றான்.' 'ஒவ்வொரு வினாடியும் அவன் புத்தம் புதிய
தர்ஜுமானுல் குர்ஆன் - ஸஅரதுல் பாத்திஹா - பக்.293 மெளலானா அபுல்கலாம் ஆஸாத் தமிழாக்கம் R.P.M. கனி, B.A., B.L,
 

245
ஒரு இறைபக்தன் இறைவனை அணுகும் ஒவ்வொரு மணித்தியாலத்திலும், மேலும், மேலும் தாழ்மையாகின்றான்.
இறைஞானிகள் அறிவின்றியும், காட்சியின்றியும், செய்தியின்றியும், அவதானிப்பின்றியும், வர்ணனை யின்றியும், திரையின்றியும், திரைமறைவின்றியும்
விஷயங்களை உணர்வார்கள். அவர்கள் அவர்களாக இல்லை. அவர்களாக இருந்தாலும், அவர்கள் இறைவனிலே சங்கமமாகி இருக்கின்றார்கள். அவர்களின் அசைவுகள் இறைவனாலே உண்டாக்கப்படுகின்றன. அவர்களின் நாவுகளில் இருந்துவரும் வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகளாகும். அவர்கள் கண்களினால் பார்க்கும் காட்சிகளெல்லாம் இறைவனின் காட்சிகளாகும். "
இதற்கு ஆதாரமாக துன்னூன் பின்வரும் ஹதீசை எடுத்தாள்கின்றார்.
நான் ஒரு பக்தனை நேசிக்கும்பொழுது நானே அவனின் காதாகின்றேன் இதனால் என் மூலமே அவன் கேட்கின்றான். நானே அவனின் கண்ணாகின்றேன். என் மூலமாகவே அவன் பார்க்கின்றான். நானே அவனின் நாவாகின்றேன். என் மூலமாகவே அவன் பேசுகின்றான். நானே அவனின் கரமாகின்றேன். என் மூலமாகவே அவன் தொடுகின்றான்."
(84)
ஷரீஅத்து பாலாகும் தரீகத்து தயிராகும்
ஹகீகத்து வெண்ணெய் கண்டறிவாய் நல்வழியே மஅரிபத்து நெய்யாகும் வல்லோன் ஒளிதெரியும்
முஹப்பத்து வல்லோனிடம் முடுகுதலாகுவது முகுதிதாத் தானதுதான் முன்னோனைத் தானறிந்து
றுக்கூஉ சுசூது செய்து நூ ரொளிவிற் கலப்பதுவே.
(ஷெய்க் ஷாஹுல் ஹமீத்)" பொழிப்புரை: இஸ்லாமிய ஷரீயத்நெறி, பாலுக்கும், பாலை உறைய வைத்துப் பெறும் தயிரை, தரீகத்நெறிக்கும், ஹகீகத்து வெண்ணெய்க்கும் மஅரிபத்து நெய்க்குமாகக் கூறி பின் அல்லாஹ் முடுகுதலாவது மஹப்பத்து என்றும், நூர் என்னும் ஒளியில் கலப்பது முஹ்திதாத் என்றும் கூறப்படுகின்றது.
ஷரீயத் தரீக்கத், ஹகீகத் மஅரிபத் எனும் நாலு படித்தரங்களும் ஆத்மீகப் பாதையில் இன்றியமையாதவை என சூபிஞானிகள் கூறுவர். இதைக் கவிஞர், பாலின் நான்கு நிலைகளுக்கு ஒப்பிடுகின்றார். பாலை பதப் படுத்தப்படுத்த எப்படி முறையே

Page 133
246
தயிராகவும் வெண்ணெயாகவும் நெய்யாகவும் மாறுகின்றதோ அதைப் போன்றே ஆத்மீகப் பாதையின் ஒவ்வொரு படித்தரத்திலும் இறைஞானி புதுப்புது நிலைகளை அனுபவிக்கின்றான். இதன் காரணமாகவே சூஃபியாக்கள் இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு கட்டாயக் கடமைகளில், உட்கருத்து இது, வெளிக்கருத்து இது, என்று வெவ்வேறாக வியாக்கியானங்களை எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இதைப்பற்றி ஹ"ஜ்வீரி (ரஹ்) அவர்கள் தரும் விளக்கமாவது:
மஅரிபா (உண்மை) சார்பற்ற சட்டத்தை (ஷரீயா) மட்டும் பேணுவது வெறும் பகட்டாகும். அதேபோன்று ஷரீயத்துக்குக் கட்டுப்படாத வெறும் உண்மை (மஅரிபா) மட்டும் அனுஷ்டிப்பது போலி வேஷமாகும். இவ்விரண்டும் உடலும் உயிரும் ஒன்றியிருப்பது போலாகும். உயிரின்றி உடல் வெறும் பிணமாகும். உடலில்லாத உயிரோ காற்றைப் போல் மறைந்து விடும். ஒரு முஸ்லிமின் கலிமாவில் இரு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது லாயிலாஹ இல்லல்லாஹ் என்னும் மஅரிபத்தின் உண்மையாகும். இரண்டாவதாக முஹம்மதுர்றஸ"லுல்லாஹி எனத் தொடர்ந்துவரும் பாகமாகும். இதன் கருத்தாவது முஹம்மது காட்டிய வழி (ஷரீயத்) யாலேதான்மஅரிபத்தின் உண்மையை அறியலாம் என்பதாகும். மஅரிபத்தின் உண்மையை மறுப்பவன் காபிராவான். ஷரீயத்தை நிராகரிப்பவன் மார்க்கத்தை மறுப்பவனாவான். *
சூஃபியாக்கள் சிலர், ஒரு முஸ்லிமுக்குக் கடமையாக்கப்பட்ட நெறிகளின் உட்கருத்துக்கு, அவைகளின் வெளிக்கருத்தை விட, முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உதாரணமாக ஜுனைத் (ரஹ்) அவர்கள் ஒரு ஹாஜியுடன் பின்வருமாறு சம்பாஷனை செய்கின்றார்.
'ஹஜ் என்னும் யாத்திரைக்கு நீ முதலாவதாக வீட்டை விட்டு வெளியேறினபோது, உன் பாவங்களை யெல்லாம் விட்டு வெளியேறி விட்டாயா?
'இல்லை" என்றார் ஹஜ்ஜாஜி. 'அப்படியானால் நீஹஜ்ஜுக்குப் புறப்படவே இல்லை" என ஜுனைத் கூறினார்.
'நீ ஹஜ்ஜ" செய்யும் ஒவ்வொரு இரவிலும் இறைவனை அணுகும் ஒவ்வொரு நிலையை அடைந்தாயா?" என ஜூனைத் கேட்டார்.

247
'இல்லை என்றார் ஹஜ்ஜாஜி. அப்படியானால் இறைபாதையில், நீ சரியாக அடியெடுத்து வைக்கவில்லை என்றார் ஜுனைத்.
'நீ இஹ்றாம் அணிந்தபோது, உன்னுடைய சாதாரண உடைகளை அகற்றுவதுபோல, உன்னுடைய மனித சுபாவத்தின் அழுக்குகளை அகற்றினாயா?' 'இல்லை’ என்றார் ஹஜ்ஜாஜி.
அப்படியானால் நீ இஹ்றாமை அணியவில்லை என்றார் ஜூனைத். 'நீ அறபாத்தில் சென்றபோது ஒருகணமாவது இறைவனைத் தியானித்தாயா?" 'இல்லை" என்றார் ஹஜ்ஜாஜி. அப்படியானால், நீ அறபா செல்லவில்லை" என்றார் ஜூனைத். 'நீ முஜ்தலிபாவை அடைந்தபோது ஐம்புல ஆசைகள் எல்லாவற்றையும் நிராகரித்து விட்டாயா? 'இல்லை என்றார் ஹஜ்ஜாஜி.
"அப்படியானால் நீ முஜ்தலிபாவிற்குப் போகவில்லை." நீ கஃபாவைச் சுற்றி வந்தபோது அந்தத் தூய்மையின் சின்னத்தில் இறைவனின் அழகைக் கண்டாயா? 'இல்லை" என்றார் ஹஜ்ஜாஜி. 'அப்படியானால் நீ கஃபாவை வலம்வரவில்லை' என்றார் ஜ"னைத். 'நீ ஸபாவுக்கும் மர்வாவுக்குமிடையே தொங்கோட்டம் ஒடியபோது 'ஸபா எனும் தூய்மையையும் 'மருவத்’ எனும் உயர் நிலையையும் அடைந்தாயா?" 'இல்லை" என்றார் ஹஜ்ஜாஜி.
"அப்படியானால் நீ ஸபா மர்வா ஒடவில்லை என்றார் ஜ"னைத்.
'நீ மினா சென்றபோது உன்னுடைய இச்சைகளெல்லாம்
அற்றுப் போயினவா? 'இல்லை என்றார் ஹஜ்ஜாஜி.

Page 134
248
'அப்படியானால் நீ மினா செல்லவில்லை" என்றார்ஜ"னைத்.
'நீ குர்பான் செய்தபோது, உன்னுடைய உலக ஆசைகளையும் நீ குர்பான் செய்தாயா?"
'இல்லை" என்றார் ஹஜ்ஜாஜி.
"அப்படியானால் நீ குர்பான் செய்யவில்லை" என்றார் ஜூனைத்.
'நீ சைத்தான் மீது கற்களை எறிந்தபோது உன்னிலிருந்த புலனிச்சைகளையும் எறிந்து விட்டாயா?
'இல்லை என்றார் ஹஜ்ஜாஜி.
"அப்படியானால் நீகல்லெறியவில்லை. (அதுமட்டுமல்ல) நீ ஹஜ்ஜும் செய்யவில்லை என்றார் ஜுனைத்."
(85)
மனமேநல் நீயும் நானும் வல்லவ னருளிற் சேர்ந்து
கனமுடன் ஒன்றுபட்டால் ஹக்கனைத் தவிரப் பூவில்
இனஞ்சனம் எவர்க்கு மஞ்சேன் எரியும் பஞ்சதிலே தீபோல்
தினம்ஒளி காணப் பாவம் தீரும் நல்லருள் தாறப்பே
(ஷெய்கு ஷாஹுல்ஹமீத்)"
பொழிப்புரை: மனமே! நானும் நீயும் இறைவனின் அருளில் ஒன்றுபட்டால், ஹக்கனைத் தவிர உலகில் எவர்க்கும் அஞ்சமாட்டேன். தீயும் பஞ்சும் இணைந்ததுபோல் நானுன்றன் சோதியொளி காணப் பாவமகலும். இந்நிலை யெய்த இறைவா நல்லருள் தருவாயாக.
இதேபோன்று, அந்-நூரி எனும் இறைஞானி கூறுவதாவது:
ஓர் இறை பக்தன், இறைவனைத் துன்பத்திலும்
இன்பத்திலும் சதாதியானஞ் செய்யும் பொழுது, தன் இருதயத்தில் தீபம் போல் பேரின்ப நிலை உண்டாகும். இறையன்பு என்பது திரைநீக்கம் செய்த பொழுது சாதாரண மானிடரின் கண்களுக்கெட்டாத காட்சியைக் காண்பதேயாகும். நான் ஒருநாள் இறைவனின் ஒளியைக் கண்டேன். ஆனால் அக்காட்சியிலிருந்து என் கண்களை அகற்றவே முடியவில்லை. கடைசியில் அதே ஒளியில் நானும் கலந்துவிட்டேன். "
 

249
(86)
நிறைதவம் எதுவென்றாக்கால் நிரப்பமாய் வல்லோன் -
தன்னைக் குறைவின்றித் தெரிசித்தார்கள் கோமானின் ஒளிவிற்கூடி முறையாதி பதத்தில் வீழ்ந்து முத்திதன் சிரசைத் - தாழ்த்தி கரைகண்டோ ரிவரே யப்பா கரைகடந் தொளிசேர்ந்தாரே
(ஷெய்குஷாகுல் ஹமீத்)" பொழிப்புரை: நிறைதவம் என்பது ஆதியருள் கனிந்திலங்கும் காட்சியைத் தெரிசித்துப், பின் இறை சோதியில் சேர்தலாகும். ஆதியை சிரந்தாழ்த்தி ஸ"ஜூது செய்து இறைவனின் கரை கடந்த ஒளியிற் சேர்வதே நிறைதவமாகும்.
(84வது செய்யுளின் பொருளையும் ஒப்பு நோக்குக)
(87)
ஒருமை அறியும் உயிர்ஞானப் பாகு
உள்ளங் குளிர்ந்த பானம் அருமை விளங்காப் போதகமாய
அடிமைகட் கெட்டாப் போதம் சிறுமை பெருமை யொன்று மிலாது
சித்த நிரோத முத்தி இருமை கடந்த பரமுத்தி தானாம்
இரண்டற்ற அன்பினுருவே
(மச்சரேகைச் சித்தன்)" பொழிப்புரை: சர்வ வியாபியாகிய பரம்பொருளின் ஏகாந்த ஒருமையை உணரும் ஞானமே, அமிர்தம் போன்ற பானமாகும். அவ்விதமான ஞான அறிவு, சதா பேதம் பேசும் அறிவிலிகளுக்குக் கிட்டாது. அத்தகைய மகத்தான ஞான அறிவில், சிறுமை, பெருமை என்று சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. ஏனெனில் இறைவனில் சங்கமமாகிய நிலையில் ஒன்றென்றோ, இரண்டென்றோ சொல்வதற்கில்லை. அதாவது இறைவனன்றி வேறொன்றுமே நிலையானதல்ல.
மேற்கூறிய கவிதையிலும் அதைத் தொடர்ந்து வரும் கவிதைகளிலும் இறைஞானத்தில் ஏற்படும் "பனா பகா’ எனப்படும் இரு முக்கிய நிலைகளை கவிஞர்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள். 'பனா’ என்பது 'நான்’ எனும் தனித்துவ நிலை அற்றுப்போவதாகும். 'பகா என்பது ‘நான்’ எனும் நிலை அற்று, இறைவனுடன் ஒருமையாகி இறைவனால்

Page 135
25O
ஆட்கொள்ளப்பட்டு அவனே நித்தியப் பொருளென உணரும் நிலையாகும். இதைப்பற்றி திருக்குர்ஆன் கூறுவதாவது:
('பூமியில் உள்ள) யாவும் அழிந்தேபோகும்'. மிக்க
கண்ணியமும் பெருமையும் தங்கிய உம்முடைய ரப்பின்
திருமுகம் (மட்டுமே) நிலைத்திருக்கும்."
இப்படி இறைவனில் கடைசியாகத் தஞ்சமடைவதே ஆத்மீகப்
பாதையின் இறுதி இலட்சியமாகும். இந்நிலை இறைஞான இலக்கியங்களில் பலவாறு வருணிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, மெளலானா ரூமி (ரஹ்) அவர்கள், பரம்பொருளுடன் ஒரு இன்ஸான் சேருவதைப் பற்றி இவ்வண்ணம் கூறுகிறார்:
நீ (இறை அனுபவமான) சமுத்திரத்தில் பிரவேசி. அப்பொழுது "நீயாகிய துளி, எல்லையற்ற சமுத்திரமாகி விடும். " பரீதுத்தீன் அத்தார் எனும் மிகப்புகழ்வாய்ந்த ஆத்ம ஞானி மேற்கூறிய கடைசி நிலையை ஒரு கதை மூலம் விளக்கஞ் செய்கின்றார்.
* இஹ்ஸான் என்பது தனிநபரின் சொந்த அனுபவத்தால் பெறும் நிலையாகும். இந்த நிலைக்கு வந்து சேர்ந்தவன், தனது சொந்த அனுபவத்தாலும், கஷ்ஃப் (Kash) என்னும் ஆத்ம எழுச்சியாலும் இந்த நிலையைப் பெற்றுக் கொள்கின்றான். கல்வியோ, அடிப்படைக் கொள்கைகளோ, அறிவின் ஆற்றலோ இந்த நிலையின் வளர்ச்சியை மேலும் ஓங்கச் செய்ய முடியாது. தர்க்க வாதங்களுக்கு இங்கு இடமே இல்லை. இது செயலாற்றி அனுபவித்து அடைந்து கொள்வதற்கான ஆத்மீக முயற்சியின் விளைவேயாகும். பிறரால் காட்டப்படவும் சொல்லப்படவும் இதில் இடமில்லை. கற்பித்துக் கொடுக்கவோ, தானாகக் கற்றுக் கொள்ளவோ முடியாத ஒன்றாகும். இந்நிலையை அடைந்து விட்ட ஒருவன், இந்நிலையைப் பற்றி ஏதேனுமொன்றை எப்பொழுதாயினும் சொல்லக் கூடுமானால், அவன், 'நீ என்னைப் போலாகி விடு, பின்னர் எது காணப்படுகின்றதோ அதை நீ கண்டுகொள்' என்பதை மட்டும்
சொல்வான்.
ஞானோதயம் (கஷ்ஃப், இர்ஃபான்) பெற்றவர்களுக்கு உண்டாகும் நிலையை எடுத்துக் கொள்வோமாயின் அது எந்த வகையிலும் குர்ஆனுடைய கடவுட் கொள்கைக்கு மாற்றமாக இல்லை. குர்ஆனுடைய கடவுட் கொள்கை ஒரு கூட்டுக் கொள்கையாக இருக்கின்றது. ஒவ்வொரு விதழான ஏக தெய்வக் கொள்கைக்கும் இதில் இடமிருக்கிறது. எவரெவர் இஹ்ஸான் என்னும் நிலை அடைகின்றாரோ அவர் உண்மைப் பொருளை ஞானோதயங்களில் (கஷ்ஃப்) ஜோதிமயமாகக் காண்கின்றார். மேலும் மனித சிந்தனையின் மூலமாக அடைய வேண்டிய, ஞானப் பாதையின் இறுதி நிலை அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. (தர்ஜுமானுல் குர்ஆன் - ஸஅரத்துல் பாத்திஹா) - மெளலானா அபுல்கலாம் ஆஸாத்.
g5L6lypsTöksüb: R.P.M. 55 Gorf, B.A., B.L.,
 

251
ஒரு நள்ளிரவில் சில விட்டில்கள் ஒன்று சேர்ந்து தூரத்தில் இருக்கும் ஒரு மெழுகு திரியின் தீபத்தோடு ஒன்றுசேர ஆசைப்பட்டன. அவை, அவ்வாறு ஆசைப்படும் அத்தீபத்தின் உண்மையான தன்மை எவ்வாறு இருக்கலாம் என்று அறிவதற்கு, முதலாவது ஒரு விட்டிலை அனுப்புவோம் என்று தீர்மானித்தன. அப்பொழுது ஒரு விட்டில், தூர இருக்கும் ஒரு மாளிகையில் ஜொலிக்கும் ஒரு தீபத்தை அணுகி அதன் ஒளியை வெளியில் இருந்து பார்த்துவிட்டு வந்து அவ்வொளியின் தன்மையை விபரமாக மற்ற விட்டில்களுக்குக் கூறியது. இதைக் கேட்ட முதுமையடைந்த விட்டில் பின்வருமாறு கூறிற்று: 'முன்னைய விட்டில் தீபத்தைப் பற்றிச் சரியாக ஒன்றும் சொல்லவில்லை" என்றது. இதனைச் செவியுற்ற இன்னொரு விட்டில் அந்த மெழுகுவர்த்தியின் தீபத்தை அணுகி தன்னுடைய இறக்கைகளினால் அத்தீபத்தைத் தொட்டபொழுது அதன் உஷ்ணம் தாங்காமல் பின்வாங்கித் திரும்பி வந்து, தீபத்தைத் தொட்டபோது உண்டான அனுபவத்தை மற்ற விட்டில்களுக்கு விபரமாகச் சொன்னது. இதனைச் செவியுற்ற முதுமையடைந்த விட்டிலோ இந்த அறிக்கையையும் ஏளனம் செய்தது.
அப்பொழுது மூன்றாவது விட்டில் தீபத்தால் பரவசமடைந்து தன்னைத் தீபத்தினுள்ளே வேகமாகச் செலுத்தியது. தீபம் அதைச் சூழ்ந்தபோது அதன் உடலும் தீபத்தைப் போன்றே ஜொலித்தது. தீபத்துடன் ஒன்று சேர்ந்து தானும் தீபமாய் மாறிய விட்டிலை தூரத்திலிருந்து அவதானித்த முதிய விட்டில் பின்வருமாறு கூறிற்று: இவ்விட்டில்தான் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டது. அவ்விட்டிலுக்கு மட்டுந்தான் தீபத்தோடு ஒன்றுகலந்த நிலை நன்கு விளங்கும். (தீபத்துடன் இரண்டறக் கலக்கா) மற்ற விட்டில்களுக்கு தீபத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது’ என்றது."
(88)
தன்னை அறியப் பிறிதில்லைத் தானா யிருக்க நானில்லை உன்னை யொடுக்க வுலகமிலை
உலகை மறக்கத் திரையில்லை பின்னும் நினைப்பு மறப்புமிலை பிரதி பலன்றே டிச்சையிலை இன்ன லற்ற பரமார்த்தம்
இரண்டற்றைக்கிய மன்புருவே (மச்சரேகைச்சித்தன்)"

Page 136
252
பொழிப்புரை: தன்னைத் தானே அறிந்தவன் தன்னைச் சிருஷ்டித்த இறைவனன்றி வேறொன்றுமே மெய்யானதில்லை என்பதை அறிந்து விடுவான். அந்நிலையில் 'நான்' என்று சொல்வதற்கு ஒரு வஸ்துவும் இல்லை எனும் உண்மையையும் அறிந்து விடுவான். 'நான்', 'தான்’ என்பன யாவும் பனாவாகி விடுவதையும் அறிந்து விடுவான். மேலும் அண்ட சராசரங்கள் யாவும் இறைவனை வரையறை செய்ய முடியாத உண்மையையும் அறிந்து விடுவான். இறைவா! உன்னை அறிந்தால் உலகை மறக்கத் திரையில்லை. நீ அல்லால் நினைப்பதற்கோ, மறப்பதற்கோ ஒன்றுமேயில்லை. உன்னைத் தவிரப் பிரதிபலன் தேடுவதற்கு ஒன்றுமில்லை. துன்பம் அற்ற பரமார்த்தம் (உண்மைப் பொருள்) நீ. இரண்டற்ற ஐக்கியமும் நீயே. உனை அடையஅருள் புரிவாயாக.*
(87 ஆம் செய்யுளின் விளக்கவுரையையும் நோக்குக)
(89)
என்னாணை என்னாணை வேறில்லை
இரண்டில்லை யேக வைக்யந் தன்னாணை தன்னாணை யந்யமில்லை
பெயரில்லைத் தாந்தா னேதான் முன்னாணை பின்னாணை நடுவாணை யென்வழக்கு முடிந்தா னந்தம் அன்னாணை யன்பானை தனையன்றி
வேறுளதோ வகண்ட வாழ்வே
(மச்சரேகைச் சித்தன்)" பொழிப்புரை: ஏகாந்தப் பரம்பொருளான இறைவனன்றி வேறொரு வஸ்துவும் உண்மையானதில்லையென சத்தியம் செய்கின்றேன். நாமம், நேரம், முன், பின், நடு எனக் கூறும் வரையறைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனே - எல்லா வஸ்துகளிலும் வியாபித்திருக்கிறான் என்பதே என் கூற்றாகும். அவனைத் தவிர வேறில்லை. என்னுடன் அன்பு கொள்ளக் கூடியவர் அவனல்லால் வேறு யாரிருக்கின்றனர்? (87 ஆம் செய்யுளின் விளக்கவுரையையும் நோக்குக)
(90) என்னையானறிய விசாரணை தனிலே
யேகபூரணமனங் குவிய மன்னிய பூதப் பிரளய மொடுங்க
வான்வெளித் தெளிவதாய் மனதி
* 'எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நான் இருக்க மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே (பட்டினத்தார்)

253
னன்னிலை பழகி யுதிப்பதை வயக்கி நனிமத வாதனை யிழந்தே தன்னிலே தானா மெதார்த்த சொரூபந் தடையற்ற வானந்த மறிவே
(மச்சரேகைச் சித்தன்)" பொழிப்புரை: நான் யாரென தியானத்தில் விசாரித்தபோது, ஏகப்பரம் பொருளான இறைவனே என்னுள் குவிந்திருப்பதை யான் அறிந்தேன். பஞ்சபூதங்களாகிய வெள்ளப் பெருக்கு என்னை விட்டு அகன்று விட்டதை நான் தெளிவாகக் கண்டேன். என் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, என் பற்றுகளை நீக்கியபோது அடைந்த தூய்மையில், உன் சொரூபத்தையே எங்கும் கண்டேன். உன்னையே என் ஆத்மாவான ரூஹிலும் கண்டேன். இதுவே நான் பேரானந்தத்தில் அடைந்த உண்மையாகும்.
(91)
எல்லாமா யெல்லை யில்லா தெவ்வெ வைக்கு
மெங்கெங்கு மேகந் தானே கல்லாமை கருதாமை தெளியாமை யறிவில்லாக் களங்க மன்றோ சொல்லாமற் சொல்லிவைத்த குலிர்ரூஹ"
மினம்ரிறப்பி சுத்த விர்த்தி அல்லாஹ" அல்லாஹ" தனையன்றி
வேறுளதோ வகண்ட வாழ்வே எல்லையுண்டோ வுவமானச் சொல்லு முண்டோ
நாமரூப மிணக்க முண்டோ தொல்லை யன்றோ வழக்கமெல்லாந் தோடமன்றோ
பூர்வபட்சத் தொழும்பற் கேற்ற சொல்லவலத்துக்கமயஞ் செயல்முழுது
மாபாசச் சோகம் நீக்க அல்லாஹ" அல்லாஹ" தனையன்றி
வேறுளதோ வகண்ட வாழ்வே
(மச்சரேகைச் சித்தன்)" பொழிப்புரை: உண்மைப் பரம்பொருளான இறைவனுக்கு வரையறை செய்யும் இடங்களோ காலங்களோ இல்லை. எத்திசையிலும் உள்ள எல்லா வஸ்துக்களிலும் வியாபிக்கும் பரம்பொருள் அவனே. இவ்வுண்மையை உணராத எல்லா அறிவும்
* குலிர் ரூஹ"மின் அம்ரி ரப்பீ. (17:85), ("நபியே! நீர் கூறுவீராக) ரூஹ் என்பது என் இறைவனின் கட்டளையில் உள்ளதாகும்.

Page 137
254
பொய்யானதே. தூய்மையான பரம்பொருள் மட்டுமே உண்மைப் பொருளென அறிவதே இறைஞானமாகும். அவன் அருளையன்றி எம் வாழ்க்கையில் எதை நாடலாம்? அல்லாஹு, அல்லாஹு என்னும் திருநாமத்தை விட எதைக் கூறலாம்? நாமங்கள் உவமைகள், உருவங்கள், கற்பனைகள், எல்லைகள், வரையறைகள், சரியைகள், கிரியைகள் இவைகளெல்லாம் ஒரு விதத்தில் இறைஞானப் பாதையில் தடங்கலாகாதோ? அத்துயரம் நீங்க வாழ்நாளெல்லாம் 'அல்லாஹ்' 'அல்லாஹு' என்னும் திருநாமத்தை சதா கூறுவாயாக.
(87 ஆம் பாடலின் விளக்கத்தையும் நோக்குக)
(92) திரிபுடி நசித்துண்மை பரிபக்குவத் தீட்சை
திருவருள் விலாச மவுனந் திரையிலாப் பேரின்ப பிரக்ஞான பிரமமுந்
திகழ்ரூஹுல் குதுசி ஷக்கு அரிய அனல்லாஹு முஹீத் தென்றவாக்கிய
மஹம்பிர மாஸ்மி யன்றோ அஸ்ஸமது மினல்லாஹி அயமாத்மா பிர்மமே
அல்இல்முல துன்னியோ "தெரியுஞ் சுகச்சொரூப் மறிவாத்மா பிர்மமே
தெவிட்டாத வேத ரசமே தெளிவது இல்லல்லாஹ் வழிதத்து வமசி
தெருளுருவ கண்டா தீதம் பரிபக்குவத் தின்ப துறவியர்க் கன்புரு
பலதொழி லறமுத் தியே பரமார்த்த பரிசுத்த நிரதிச யானந்த
பரிபூர ணாநந் தமே
(மச்சரேகைச் சித்தன்)"" பொழிப்புரை: எல்லா ஞானத்தையும் பிழிந்து அதன் சாரத்தை எடுத்தால் " என்ன உண்மை வெளியாகின்றது? எல்லா அறிவுகளிலும், எல்லாக் கிரியைகளிலும், எம்முடைய ஆத்மா, எங்கும் வியாபிக்கும் பரம்பொருளையே காண்கின்றது. இந்தப் பழமையான ஒரு உண்மையே பலதரப்பட்ட வாக்கியங்களாகக் கூறப்படுகின்றது. 'றூஹ்' 'ஆத்மா' என்பது, 'றூஹுல் குத்ஸ்' - உண்மையில், இறை ஆத்மாவாகும். இவ்வுண்மையை 'அனல்லாஹு முஹீத்' என்றோ, 'அகம் பிரம்மம் அஸ்மி', என்றோ கூறலாம். 'அஸ்ஸமது மினல்லாஹி' என்றோ 'பரமாத்மா' என்றோ கூறினாலும் சரியே. இதுவே வேதங்களின் சாரமாகும். இதுவே

255
பரமானந்தத்தின் அமிர்தமாகும். இதுவே 'இல்லல்லாஹு' என்றும் 'தத்துவமசி' என்றும் சொல்லப்படும். இதுவே இறையருள் பக்தர்களுக்கு அளித்த ஞானத்தின் சாரமாகும்.
மேற்கூறிய கவிதைகள் சாற்றும் இறைஞானமெனும் பேரின்ப நிலையில் ஆத்மீகக் கொள்கைகளெல்லாம் ஒன்றுபடுவதை, கவிஞர் எடுத்துக் காட்டுகின்றார். இதை, வேறுபட்ட நதிகள் சமுத்திரத்தை அடைந்து சங்கமமாகி, சமுத்திரத்துடன் கலக்கும் கடைசி நிலைக்கு ஒப்பிடலாம். 'அஸ்ஸமது மினல்லாஹி' என்னும் கருத்து ஸுரத்துல் இக்லாஸில் கூறப்படுகிறது:
(நபியே!) நீர் கூறும் அவன் அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை. எவராலும் பெறப்படவுமில்லை. தவிர அவனுக்கு ஒப்பானவர் எவருமிலர்.
குர்ஆன் (112: 1-4) எல்லாம் இறைவனே. அவனின்றி ஒரு வஸ்துவுக்கும் நிரந்தர நிலையில்லை என்னும் உண்மையே புலனாகின்றது. மேலும் இக்கவிதைகளில் கூறப்படும் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவக் கொள்கைக்கும், வேதாந்த தத்துவத்தின் சில கொள்கைகளுக்கும் உள்ள ஒற்றுமையை கவிஞர் எடுத்துக் காட்டுகின்றார். உதாரணமாக இஸ்லாத்தில் கூறப்படும் 'அனல்லாஹு முஹீத்' என்பதை வேதாந்திகள் அகம் பிரஹ்மம் அஸ்மி எனக் கூறுவர். அகம் பிரஹ்மம் அஸ்மி என்பதன் பொருள், நான் பிரமம் என்பதாகும். இதன் உண்மையானகருத்து பிரம்மமும் ஜீவன்களும் ஒன்று என்பது அல்ல. ஜீவனின் ஜீவத்துவம் நீங்கிய நிலையிலே தான் அதுவும் பிரம்மமும் ஒன்று எனக் கருத்துக் கொள்ளல் வேண்டும். அதேபோல் இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு உண்மைப் பொருள் இல்லை) என்னும் இஸ்லாமிய தத்துவக் கொள்கைக்கு தத்துவமசி (அது நீயாயிருக்கின்றாய்) என்னும் பொருள் பொருத்தமாகும்."
இந்தியத் தத்துவக் கலாசாரத்தில் இஸ்லாமிய இறைஞானக் கொள்கைகளும், வேதாந்த தத்துவக் கொள்கைகளும் பலவிடயங்களில் கருத்தொற்றுமை கண்டிருந்தமையால், இஸ்லாமிய இறைஞான மரபுகள் இந்திய கலாசாரத்தில் மிகத் துரிதமாகப் பரவின. முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் குமாரரான தாராஜிகோ என்பவர், தாம் எழுதிய பிரபல்யமான ஒரு நூலில் கீழ்வரும் பிரதான கருத்தொற்றுமைகளைச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டினார்.

Page 138
256
முஸ்லிம்களும் இந்துக்களும், இருவிதமான அறிவுகளை ஒப்புக்கொண்டனர். அவையாவன: புலன் அனுபவத்தாலும் அறிவாலும் பெறக் கூடிய சாதாரண அறிவு (இல்ம் அல்லது '9||LuJ'5605ü Lubólu egygóloy (Knowledge of the hither, apara) LDöpg| தன்னுணர்வாலும் இறையனுபவத்தாலும் பெறக் கூடிய இறைஞானமாகிய உயர் அறிவு (மஅரிபத், பரமஞானம் Maritat or knowledge of the beyond) இரு சாராரும் பரம்பொருள் ஒன்று என்பதை ஏற்றுக் கொள்வர். (தெளஹித், அத்துவைதம் Touhid or advata). பரம்பொருளானது காலநேர குணங்களுக்கு அப்பாற்பட்டது. (முத்லக், பரம், mutag or param) பரம்பொருளானது உண்மைகளுக்கெல்லாம் உண்மையானது. (ஹகீகத் துல் ஹகாயிக் gjaivavg5 FgëULJITGvuLu IT &#ë Luib, Haqiqatul haqaiq, or Satyasya Satyam). S9.Jg5! ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது (நூருன் அலாநூரின் அல்லது ஜோதிஸம் ஜோதி). பரம் பொருளல்லாத எல்லா வஸ்துகளும் மாயையான நிரந்தரமற்றவை (மஉலுமி மஉதம், மெளஜ"தி மவ்ஹகும், அல்லது மித்யா, கல்பனா, மாயா, (Malum-i m'a dum, maujud-i mauhum, or mithya, kalpana, maya). இறைவன் உட்பொருளாகியும், (பாத்தின் அல்லது அயுக்தா Bain, or avyakta) வெளிப் பொருளாகியும் (லாஹிர், வியக்தா, Zahir, Vyakta) இயங்குகின்றான். அவன் எல்லாப் படைப்புகளுக்கும் அப்பால்பட்டும் எல்லாவற்றிலும் வியாபித்தும் இருக்கிறான். (முஹியித் அல்லது சர்வவியாபின் ஸாரி அல்லது அந்றயாமின்) பரம் பொருளுக்கு நாமமோ (இஸ்ம், அல்லது நாமம், Ism or namam) ரூபமோ (ஸிபத், அல்லது ரூபா, Stat, or rupa) கிடையாது. ஆனால் அவன் சர்வ வியாபி என்ற அம்சத்தில் நாம ரூபங்களையும் குணங்களையும் பெற்றுக் கொள்கின்றான்.
மேலும் வேதாந்தத்தில் பரம் பொருளைப் பற்றி நிர்க்குண பிரமம், சத்குண பிரம்மம் 6 TGOT இரு கருத்துகள் கூறப்பட்டிருக்கின்றன. காலம்நேரம் குணங்களுக்கு அப்பாற்பட்டு மகத்துவமான தனித்துவ நிலையில் இருக்கும் நிலையே நிர்க்குண பிரமம் என்றும், அக்குணங்களைப் படைத்து அதில் வியாபிக்கும் நிலையே சத்குண பிரம்மம் என்றும், வேதாந்தம் கூறுகின்றது. இக்கருத்துகள் இஸ்லாமிய தத்துவத்தில் கூறப்படும் முறையே 'அஹதிய்யத் சிருஷ்டிகளில் வியாபிக்காததுய ஒருமை நிலைக்கும் 'வாஹிதிய்யத் சிருஷ்டிகளில் வியாபிக்கும் (பன்மையான கால இடமெனும் வரையறைகளுக்குட்பட்ட) நிலைக்கும் பொருந்தும்.

அத்தியாயம் - V
இறை அனுபவமும் இறை ஞானமும்
மேற்கூறிய அத்தியாயங்களிலும் தமிழ் இலக்கியத்திலும், ஏனைய இலக்கியங்களிலும் முக்கிய சூஃபியாக்கள் என்னும் இறைஞானிகள் கூறிய தத்துவக் கொள்கைகளை நாம் ஆராய்ந்தோம். பல சமயங்களும் பல கலாசாரங்களும், கலந்து தாராள மனப்பான்மையுடைய தமிழ் கலாசாரத்தில் எப்படி இஸ்லாமிய தத்துவக் கொள்கைகள் வேரூன்றி பல நூற்றாண்டுகளாக வளர்ந்து, கடைசியில் உன்னதமான ஓர் இஸ்லாமியத் தத்துவ இலக்கியம் உருவானது என்பதை அவதானித்தோம்.
இவ் இலக்கியங்களில் உள்ள ஆக்கங்களில் பழையனவும் புதியனவும் கலந்திருக்கின்றன. அவைகளில் கூறப்படும் முக்கியமான தத்துவக் கருத்துகள், குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் பின்பற்றி பல்லாயிரக்கணக்கான தத்துவ இலக்கியங்களில்
கூறப்பட்ட அடிப்படை உண்மைகளாகும். ஆனால் ஓர் உண்மையை பலவாறு வேறுபட்ட இலக்கிய உருவங்களில் கூறலாம். அத்தகைய இலக்கிய உருவகங்கள் ஏனைய
கலாசாரங்களுக்குப் பொருத்தமானவையாக இருக்க வேண்டும். இதனால் தான் தத்துவக் கருத்துகளில் ஒற்றுமை இருந்த போதும் அவைகளில் விமர்சனங்களிலும் இலக்கிய வசன நடைகளிலும், கவிதைகளிலும் சில வேற்றுமைகளை அவதானிக்கிறோம்.
இறைஞானமென்பது ஆதியந்தமில்லா இறைவனை
அனுபவத்தில் தரிசிக்கும் உணர்வாகும். அது எத்தேசத்திலும் எக்காலத்திலும், எக்கலாசாரத்திலும் ஒன்றுபட்டதாயிருக்கும்.
ஆனால் அவ்வனுபவம் வார்த்தைகளால் முழுமையாக எடுத்துக்காட்ட முடியாத ஒப்பற்ற ஒன்றாகும். இதனால்தான் இறைஞானிகள் கண்ட அனுபவங்களை பலதரப்பட்ட
கலாசாரங்களிலும், பாஷைகளிலும் இலக்கிய உருவகங்களிலும் பலவிதமாகக் கற்பனை செய்து பல ஆக்கங்களை உண்டாக்கி பின்வரும் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றார்கள்.
17

Page 139
258
ஸையிது ஹஅஸைன் நஸ்ரு எனும் அறிஞர் சூஃபியாக்கள் அருளிய இறைஞான இலக்கியங்களை ஒரு சமுத்திரத்துக்கு ஒப்பிடுகின்றார். அச்சமுத்திரத்தில் பல்லாயிரக்கணக்கான அலைகள் அசைந்து அசைந்து பல திக்குகளில் போனாலும் கடைசியில் அச்சமுத்திரத்துக்கே திரும்பி வருகின்றன. இறைஞான தத்துவக் கொள்கைகள் காலம் நேரங்களுக்கு அப்பாற்பட்ட பழமையாக இருந்தாலும், ஒரு தனிப்பட்ட பக்தன் அடையும் அனுபவம் புதிதாகவே இருக்கின்றது. சூஃபி ஞானிகள் LIGA) நூற்றாண்டுகளாக ஒரே உண்மையைத்தான் போதித்தார்கள். ஆனால் அவர்களின்
வார்த்தைகளும், இலக்கிய ஆக்கங்களும் வேறுபட்டிருக்கின்றன. இறைஞானம் எப்பொழுதும் ஒன்றாயிருந்த போதும், இறையனுபவம்
வேறுபட்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் முன் சென்ற நாட்களைப் போலிருந்தாலும், அது ஒரு புதிய நாள்தானே! இறைஞானமும் இத்தகையதாகும். முன் சென்றவர்கள் கண்ட உண்மையைத் தான் இன்றிருக்கும் ஒரு பக்தன் அனுபவத்தில் காண்கின்றான். இக்கண்ணோட்டத்தில் பார்த்தால் இறைஞானம் புதிதோ, பழையதோ என்று எம்மால் கூற முடியாது. பழையதுதான் புதிதாகி விட்டது. புதியதுதான் பழையதாய் இருக்கின்றது.
இதனால்தான் சூஃபித் தரீக்காக்களைச் சேர்ந்த எல்லோரும் தொடக்கத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களையே அன்னவர்களுடைய ஞானாசிரியராக உரிமை கோருகின்றனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்களில் இருந்து உண்டாகிய பாரம்பரியம், பல ஞானாசிரியர்களானவுைகுமார்கள்மூலம், ஒரு சங்கிலித் தொடர்போல் இக்காலம் வரை தொடர்ந்து மனிதர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே வருகின்றது. இஸ்லாமிய இறைஞானப் பாரம்பரியத்தின் இலட்சியமாவது, இன்ஸானுல்காமில் எனும் சம்பூரண மனிதனை உண்டு பண்ணுவதேயாகும். அத்தகைய சம்பூரண மனிதனே, இயற்கையையும், இறைவனையும் இணைக்கும் 'இஸ்த்மஸ் அல்-பர்ஸக் எனப்படும் சங்கமம் அல்லது புவிச்சந்தியாகும்.
ஜலாலுத்தீன்ரூமி (ரஹ்) அவர்கள் மனிதனின் ஆத்மீக யாத்திரையைப் பின்வருமாறு இயம்புகின்றனர்:
ஜீவாத்மா, முதலாவதாக உயிரற்ற ஜடப் பொருளில் பிரவேசித்தது. அதிலிருந்து தாவரங்கள் நிறைந்த உலகிற்குப் படியேறியது. தாவரத்தில் புகுந்த அந்த ஆத்மா,
 

259
ஜடப்பொருளில் அனுபவித்த கஷ்டங்களை மறந்து விட்டது. அதேபோன்று, தாவர உலகில் இருந்து மூன்றாவதாக மிருக உலகில் பிரவேசித்தது. அந்த ஆத்மா தாவர உலகங்களின் கஷ்டங்களை மறந்து அவ்வுலகத்தோடு ஒரு பாசத்தை மட்டும் நிலைநிறுத்தி வைத்துக் கொண்டது. ஆனால் இப்பாசத்தின் காரணத்தை அது மறந்து விட்டது. தாயின் மார்பில் பாலருந்தும் குழந்தை, தாயிடம் இருக்கும் பாசத்தின் காரணத்தை அறியுமா?
சிருஷ்டி கர்த்தாவாகிய இறைவன், மிருக உலகில் இருக்கும் எல்லா ஜீவன்களையும், மானிட உலகத்துக்கு வசப்படுத்துகின்றான். ஆனால் அவை முன்பிருந்த நிலைகளையும் அந்நிலைகளில் வழிகாட்டிய உணர்வுகளையும் மறந்து விட்டன. அதேபோல் மானிட அறிவுக்கும் அப்பாற்பட்ட ஒர் அறிவை மனிதனும் சீக்கிரம் பெறுவான்.
நபிமார்களும் இறைஞானிகளும் இறைபக்தர்களும் புலனுணர்ச்சிகளுக்கும், காரண அறிவிற்கும் அப்பாற்பட்ட ஞான அறிவைப் பெற்றவர்களாவர். ஞான அறிவென்பது இறை அனுபவத்தாலுண்டாகும் மெய்ஞ்ஞானமெனும் உயர் அறிவாகும். அது புலனறிவுக்கும் காரண அறிவுக்கும் அப்பாற்பட்ட அடிப்படைத் தத்துவ உண்மைகளை, ஆத்ம ஞானமாக மானிட வர்க்கத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. இறைஞானம் கூறும் அடிப்படைக் கருத்துகள் யாவை? அவற்றைச் சுருக்கமாக பின்வரும் வண்ணம் கூறலாம்.
1. எம் ஐம்புலன்களாலும் காரண அறிவாலும் அறியக்கூடிய இப்பிரபஞ்சம், ஆதியந்தம் இல்லாக் குணங்களுக்கு அப்பாற்பட்ட சர்வ வல்லமையும் சர்வ அறிவும் 9-60LL பரம்பொருளான இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டது.
2. சிருஷ்டி கர்த்தாவான இறைவன் சிருஷ்டிகளில் வியாபிக்காமலும், வியாபித்தும் இருநிலைகளில் காலநேர எல்லைகளுக்கப்பாற்பட்டு சதா இயங்குகிறான்.
3. பரம்பொருளான இறைவனை புலனுணர்வுகளாலும், வெறும் காரண அறிவாலும் எம்மால் சம்பூரணமாக அறிய (UADL9- (LJITg5I. அப்பரம்பொருளை இறை அனுபவம் மூலமாகவே தான் சம்பூரணமாக அறியலாம்.
4. இறையனுபவத்தை நாடும் ஒருவன் நபிமார்களும் இறைஞானிகளும் காட்டிய வழியைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் போதித்தவாறு தொழுகை, தியானம்,

Page 140
26O
நோன்பு, தருமம், புனித யாத்திரைகளைக் கையாண்டு, புலனிச்சைகளையும் உலக பற்றுகளையும் கட்டுப்படுத்தி, பாவங்களைத் தவிர்த்து தூய்மைப்பட வேண்டும்.
5. சுருக்கமாகக் கூறின் ஷரீயத், தரீக்கத், ஹகீகத், மஅரிபத் என்னும் சன்மார்க்க மரபுகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
6. அப்படிச்செய்தால் கடைசியில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் இறைவனின் சொர்க்கத்தைச் சேரும் பரிபூரண நிலையை எவரும் அடையலாம்.
மானிட வாழ்வின் கடைசி இலட்சியமும் இதுவேயாகும். பிரபஞ்ச வாழ்க்கையென்பது மனிதனின் நீண்ட ஆத்மீகப் பிரயாணத்தில் ஒரு கட்டமாகும். இவ்விடயத்தை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பின்வரும் கவிதையில், பிரபஞ்ச சம்பந்தப்படும் மனித ஆத்மாவின் உண்மையான நிலையை நன்கு விமர்சிக்கின்றார். நோய் வாய்ப்பட்டு மரணத்தை எதிர்பார்க்கும் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் இக்கவிதையை எழுதி, தான் மரணித்த பின்புதான், அவர்களின் உறவினர்களும் தோழர்களும் வாசிக்க வேண்டுமெனக் கூறி, அவ்வாசகத்தை தம் தலைப்பக்கம் வைத்திருந்தார் என எழுதப்பட்டுள்ளது. அக்கவிதையின் சாராம்சம் கீழ்வருமாறு:
என்னைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் தோழர்களுக்கு நல்லாசி கூறுங்கள். நீங்கள் காணும் பிரேதம் நான் அல்ல என்று சொல்லுங்கள். அல்லாஹ்வின் திருநாமத்தால் நான் கூறுவேன். இப்பிரேதம் நான் அல்லேன். நீங்கள் காண்பதுவோ வெறும் உடல் மட்டுமே. நானோ ஒரு ரூஹ் (ஆத்மா) ஆவேன். நீங்கள் காணும் இவ்வுடல் என் ரூஹின் இல்லமாயும் ஆடையாயும் ஒருகால் இருந்தது. அதிலோர் பொக்கிஷம் (ஆத்மா) மறைந்திருந்தது. இம்மண்ணால் கட்டிய காயம் என் ரூஹின் கவசமே. இப்போது நான் சிப்பியைக் காலி செய்த முத்தானேன். முன் உடலெனும் சிறையில் வசித்தேன். அதில் பல துயரங்களை அனுபவித்தேன். இப்போது பறக்கும் பறவையானேன். என்னைச் சிறை செய்த உடலை விட்டுப் பிரிந்தேன். அவ்வுடல் இப்போது வெறுஞ் சின்னந்தானே? என்னை விடுவித்த இறைவனுக்கே எல்லாப் புகழும் ஆகுக.
 

261
மறுமையில் எனக்கு இடமளித்த இறைவனுக்கே எல்லா நன்றியும் ஆகுக. உங்கள் மத்தியில் வாழ்ந்த காலமெல்லாம் உண்மையில் நான் பிரேதமாயிருந்தேன்.
இப்பொழுது என் உண்மை நிலையில் மறுவாழ்வு எடுத்தேன். இப்போதுதான் என்னைச் சூழ்ந்த கபனை (பிரேத ஆடையை) வீதினேன்.
இன்று நான் விண்ணவருடன் பேசுகின்றேன்.
இன்றுதான் என்னை மறைத்த திரை நீங்கி இறைவனுடன் பேசுகின்றேன். இன்றுதான், லவ்ஹ"ல் மஹ்பூல் என்னும் பலகையைப் பார்க்கிறேன். அதில், நடந்தவை, நடப்பன நடக்கப் போவதெல்லாம் காண்கின்றேன். உடல் எனும் இல்லத்தை மண்ணுடன் சேருங்கள். கூடான அச்சின்னம் இப்போது தேவையா? ஆடையான இக்கட்டையை அப்புறப்படுத்துங்கள். கபுறில் அடக்கஞ் செய்து அதை மறந்து விடுங்கள். என் உண்மைப் பயணமோ தொடர்ந்து விட்டது. பின்தங்கிய உங்கள் இல்லம் இப்போது என் இல்லமல்ல. மரணம் என்று கூறுவது உண்மையில் மரணமல்ல. அதுவே அதிநித்திய வாழ்வாகும். அவ்வுயிருக்கு இவ்வுலகில், ஒன்றும் ஒப்பில்லை, இவ்வுலக வாழ்க்கை உண்மையில் ஒரு நித்திரையே. மரணத்திற்கஞ்சாதீர், ஏன்? மரணமும் ஒரு நித்திரையே! அது பேரின்ப வீட்டிற்குப் பயணமாகும். அதில் இறைவனின் அருளும் கருணையும் கிட்டும். அதனால் அவனைத் துதி செய்து பயமின்றி வாழுங்கள். இப்போதிருக்குமென் நிலைக்கு நீங்களும் வருவீர்கள். ஏன்? உங்களைப் போல் நானும் ஒரு காலம் இருந்தேன். ரூஹெல்லாம் அவனிலே (இறைவனிலே) உண்டானதை அறிவீர்.
உடலெல்லாம் அவன் படைப்பே நன்மை தீமை எம் செயலே

Page 141
262
இப்போது நான் நற்செய்தி கூறுவேன்
அல்லாஹ் அருளும் சாந்தியும்
உங்கள் எல்லோருக்கம் ஆகுக.
நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்கள். நிச்சயமாக
அவனிடமே மீள வேண்டியவர்கள்’ என்னும் திருக்குர்ஆன் கூற்றுப்படி எல்லாப் படைப்புகளும், ஜீவஜந்துக்களும் கடைசியில் இறைவனிடமே தஞ்சமடைய வேண்டியிருக்கின்றன. அந்தப் பரம்பொருளான இறைவனோ, அஸ்மாஉல் ஹ"ஸ்னா எனப்படும் தொண்ணுற்றொன்பது திருநாமங் கொண்ட அதிவல்லமை படைத்த அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகத் திகழ்கின்றான். அத்திருநாமங்களை தியானித்து நாமும் அவனைப் பிரார்திப்போமோக:
யா ரஹ்மானு - அளவற்ற அருளாளனே! யா ரஹீமு - நிகரற்ற அன்புடையோனே! யா மலிக்கு - மன்னன் ஆனவனே! யா குத்தூஸ் - பரிசுத்தமானவனே! யா ஸலாமு - சாந்தியளிப்பவனே! யா முஃமினு - அபயமளிப்பவனே! யா முஹைமினு - பாதுகாவலனே!
யா அஜீஸ் - யாவையும் மிகைத்தவனே! யா ஜப்பாரு - சமநிலையாக்குவோனே! யா முதகப்பிரு - பெருமையுள்ளவனே! யா காலிக்கு - சிருஷ்டியாளனே!
யா பாரிஉ - ஆத்துமாவை அமைப்போனே! யா முஸவ்விரு - உருவமமைப்பவனே! யா ஃகஃப்பாரு - பிழைபொறுப்பவனே! யா கஹ்ஹாரு - அடக்கியாள்பவனே! யா வஹ்ஹாபு - பெருங்கொடையாளனே! யா ரஜ்ஜாக் - ரிஜ்கு அளிப்பவனே! யா பத்தாஹ" - வெற்றியளிப்பவனே! யா அலீமு - யாவும் அறிந்தவனே! யா காபிழு - கைவசப்படுத்துபவனே யாபாஸித்து - தாராளமாகக் கொடுப்பவனே! யா ஹாபிளு - தாளச் செய்பவனே! யா ராஃபிஉ - உயர்த்துபவனே! யா முஇஸ்ஸ" - மேன்மையடையச் செய்பவனே! யா முதில்லு - இழிவடையச் செய்பவனே! யா ஸ்மீஉ - யாவையும் கேட்பவனே! யா பஸிரு - யாவையும் பார்ப்போனே!
யா ஹகமு
- தீர்ப்புச் செய்வோனே!
 

யா அத்லு யா லதீபு யா கபீரு யா ஹலீமு யா அழிமு யா ஃகபூரு யா ஷக்கூரு யா அலிய்யு யா கபீரு யா ஹபீழு யா முகீத்து யா ஹஸிபு யா ஜலீலு யா கரீமு யா ரகீபு யா முஜீபு யா வாஸிஉ யா ஹகீமு யா வதுது யா மஜீது யா பாஇது யா ஷஹிது யா ஹக்கு யா வகிலு யா கவிய்யு யா மதீனு யா வலிய்யு யா ஹமீது யா முஹ்ஸி யா முப்திஉ யா முஈது யா முஹ்யீ யா முமீத்து யா ஹய்யு யா கையூம் யா வாஜிது யா மாஜிது யா வாஹிது
ULIMT S9/JDg5/ யா ஸ்மது
263
நீதி செய்வோனே! பட்சமுள்ளவனே! உணர்ந்தவனே! அமைதியானவனே! மகத்துவமுள்ளவனே! பாவம் தீர்ப்பவனே! நன்றி பாராட்டுவோனே! உன்னதமானவனே! பெரியோனே! பேணிக் காப்பவனே! பழிப்போனே! கணக்குக் கேட்பவனே! மாண்புமிக்கவனே! கொடை கொடுப்பவனே! கண்காணிப்பவனே! முறையீட்டை ஏற்பவனே! எங்கும் நிலவுபவனே! நுண்ணறிவுடையவனே! உள்ளன்புமிக்கவனே! தலைமை தாங்குபவனே! தட்டி எழுப்புவோனே! காட்சியுடையோனே! சத்தியமானவனே! பொறுப்பு ஏற்பவனே! வல்லமை மிக்கவனே! உறுதியானவனே! கிருபை செய்பவனே! புகழுக்கு உரியவனே! தீர்க்கமாய்த் தெரிந்தவனே! ஆதியில் வெளிப்படுத்துபவனே! இறுதியில் மீட்டுக் கொள்வோனே! உயிர்ப்பிப்பவனே! மரணிக்கச் செய்வோனே! நித்திய ஜீவியானவனே! என்றும் நிலைத்தவனே! கண்டுபிடிப்பவனே! தலைமையாளனே! தனித்தவனே! ஒருமைக்குரியவனே! எவரிடத்தும் தேவையற்றவனே!

Page 142
264
யா காதிரு - ஆற்றல் உள்ளவனே! யா முக்ததிரு - ஆற்றல் பெறச் செய்பவனே! யா முகத்திமு - முன்னேறச் செய்பவனே! யா முஅக்கிறு - பின் தங்கச் செய்பவனே! யா அவ்வலு - ஆரம்பமானவனே! யா ஆகிறு - இறுதியானவனே! யாழாஹிரு - பகிரங்கமானவனே! யா பாத்தினு - அந்தரங்கமானவனே! யா வாலி - அதிகாரப் பொறுப்புள்ளவனே! யா முத்தஅபூலி - உயர் பதவியுள்ளவனே! யா பர்ரு - நன்றியளிப்பவனே! யா தவ்வாபு - பட்சாதாபிகளை மீட்பவனே! யா முன்தகிமு - பழிவாங்குபவனே! யா அஃபுவ்வு - சகிப்பவனே!
யா ரவூஃபு - இரக்க சிந்தனையுள்ளவனே!
யா மாலிக்கல் முல்கி - அரசாட்சிக்குரியவனே! யாதல்ஜலாலி வல் - கீர்த்தியும் சிறப்பும் உள்ளவனே!
இக்ராம்
யா முக்ஸிது - நியாயம் செய்வோனே! யா ஜாமிஉ - ஒன்று சேர்ப்பவனே! யா கனிய்யு - தேவை எதுவும் இல்லாதவனே! யா முக்ண் - தேவையற்றவனாக ஆக்குவோனே! யா மானிஉ - துன்பம் தடுப்பவனே! யா ளார்ரு - துன்பம் அடையச் செய்பவனே! யா நாஃபிஉ - பயனளிப்பவனே!
LITT UTIQOJ - ஒளிதருபவனே!
யா ஹாதீ - நேர்வழி செலுத்துவோனே! யா பதீஉ - புதுமை செய்வோனே! ust Lustä6) - நிலையாக இருப்பவனே! யா வாரிது - உரிமையாளனே!
யா ரஷீது - நேர்வழியிலிருப்பவனே! யா ஸ்பூரு - பொறுமையாளனே!
இத்தகைய மாட்சிமை தங்கிய இறைவனே காலநேர குணங்களுக்கு
அப்பாற்பட்ட, நித்தியமான பரம்பொருளென்பதை திருக்குர்ஆன்
(55:26,27) மிகச் சுருக்கமாக,
('பூமியாகிய) இதன் மீது இருக்கின்ற ஒவ்வொன்றும் அழிந்து விடக் கூடியதுதான். வல்லமையும் கண்ணியம் உடையவனான, உம்முடைய ரப்பின் திருமுகம் (மட்டுமே) நிலைத்திருக்கும்’ எனக் கூறுகின்றது.
 

10.
. Ibid - அத்:6, வ.99 12. 13. 14. 15. 16. 17. 18.
265
குறிப்பு விளக்கம்
தோற்றுவாய்
See Steven Katz's article "Language Epitemology & Mysticism' in Mysticism and Philosophical Analysis. (Oxford University Press) P-49/50.
I bid P-25.
T.O. Ling, Islam's Alternative to Fundamentalism, (Manchester) P-181.
அல்-குர்ஆன் அத்:2 வ.136 T.O. Ling, op. cit. p-188
அத்தியாயம் - 1 இஸ்லாத்தில் சூஃபித்துவ ஞானம் அல்-ஹ"ஜ்வீரி (ரஹ்) கஷ்ஃபுல் மஹ்ஜூல் மொழிபெயர்ப்பு: ஆர்.ஏ.நிக்கல்ஸன், லண்டன், ப.30/34/35.
Titus Burckhardt in Preface to An Introduction to Sufi Doctrine, Lahore. P-5
R.A. Nicholson in the Mystics of Islam, London. P-23/24. அல்-குர்ஆன் ஸஅறத்துல் பாத்திஹா அத்தியாயம் - 1, வசனம் 1-7 Ibid- golgië: 112, GJ.1-4
Ibid - pg5:2, 61.115-117
Ibid - pg5:2, 61.163,255
Ibid - plgi:3, 61.26-27
Ibid - pg5:6, 61.59-60
Ibid - 9:5;6, 61.95
Ibid - plgi:6, 61.102-103. Ibid - plgi:23, a 1.78-80 Ibid - 93:24, 6).J.35-42 Ibid - 915:24, 6.1.41-45 Ibid - pigs: 32, 61.6-9 Ibid - gigs: 30, 61.20-27 Ibid - அத்:36, வ.81-83

Page 143
19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53.
54.
266
Ibid - 95:40, a 1.67-68 Ibid - 93:57, 61.1-5 Ibid - 95:85, a 1.12-16 Ibid - 95.2, 6.1.136 Ibid - 915:53, a 1.4-18 Ibid - 9ë: 2, 6u.30-34 Ibid - 95: 20, 61.122
Ibid - pig Ibid - 93 Ibid - pig Ibid - jë Ibid - pig Ibid - 93 Ibid - pig Ibid - 93
Ibid - plgi: Ibid - 93: Ibid - pgs: Ibid - 9ë: Ibid - 93: Ibid - 93:
: 6, 6) 1.165 : 24, வ.35 : 3, வ.36 : Ꮞ, ᎧᎫ.17-18 : 9, 6).J.I.04 :42, வ.25 :2, 61.177 : 3, வ.31
76, 61.8-9 3, Ꭷ1.190-191 7 Qu.5 13, வ.28 33, 61.41-42 63, வ.9
Ibid - 95:87, OJ. 14-15
Ibid - pg. 2 al.43, 45
Ibid - plgi:2, 61.238
Ibid - pgs: 11, 61.114
Ibid - 91j: 17, Qu.78-79
Ibid - 915:20, Gj.130
Ibid - 9ë: 9 QJ.18
Ibid - sigs: 22, 61.41
Ibid - 95: 22, 61.78
Ibid - 9ğ: 2, Qu.183
Ibid - pg. 2, 61.185
Ibid - 93:2, 61.197-199
ஹதீஸ் குத்ளி Al-Hadith – see “Sufism” by Mir Vali-ud-Din Munshi Fazil in History of Philosophy, Eastern and Western. Ed. by S.Radhakrishnan, Volume Two, London. p-177. Quoted by Abd Al-Karim al-Jili - see A Moslem Saint of the Twentieth Century by Martin Lings, London. p-148.
 

55.
56. 57. 58. 59.
60. 61. 62. 63.
64. 65.
66. 67.
68. 69. 70. 71. 72. 73. 74. 75. 76. 77. 78.
79. 80. 81. 82. 83.
84. 85.
267
See 'Sufism' by Mir Vali-ud-Din Munshi Fazil, for a fuller discussion of this subject in History of Philosophy, Eastern & Western, ed.
by S.Radhakrishnan, Volume Two, p-170. See reference 53 above
See reference 54 above Shaikh, Ahmed Al-Alawi quoted by Martin lings op.cit. p-149/154
Ibid. p-128.
Titus Burckhardt, op. cit. p-24. R.A.Nicholson, Idea of Personality in Sufism, Lahore, p-37. Abu Hamid Al-Ghazali in Ihya, quoted by Margaret Smith in Readings from the Mystics of Islam, London, p-59/60. Ibid. p-62. Quoted by A.E. Affifi in Mystical Philosophy of Muhyid Din Ibnul Arabi, Lahore, p-21. Quoted by Margaret Smith, op.cit. p-98/101. R.A. Nicholson, Studies in Islamic Mysticism, Cambridge Univeristy Press. p-153/154.
Ibid. p-154/157
Ibid. p-91/92
Ibid. p-83/85
Ibid. p-97 R.A. Nicholson in Rumi, Poet & Mystic, London. p-36. Ibid. p-51
Ibid. p-98
Ibid. p-99
Ibid. p-103
Ibid. p-107 See The Development of Metaphysics in Persia, by Dr. Shaikh Muhammad Iqbal, London. p-111
Quran 2:164
Ibid. 44:38
Ibid. 3:118 Kimiya as-Sa'ada, quoted by Margaret Smith, op.cit. p-62 Al-Qushairi quoted by A.J. Arberry, in Sufism, London, p-75/79
Al-Ghazali quoted by A.J. Arberry, op.cit. p-80. Ibid. p-81/82

Page 144
86.
87. 88. 89.
16. 17.
18. 19. 20. 21. 22. 23. 24.
268
Al-Ghazali quoted by R.A.Nicholson in the Mystics of Islam.
p-46/48
Martin Lings, op cit. p-54/55
Quran, 55:26-27 From "The Way of the Mohammadan Mystic by W.H.T. Gardiner (Leipzig 1912), quoted by R.A.Nicholson in the Mystics of Islam, op.cit, p-15/16.
அத்தியாயம் - I பலதரப்பட்ட இருப்பு நிலைகளில் இறைவன் வியாபித்தல் R.A.Nicholson in Rumi, Poet & Mystic, (London) p-23/24 ஞானப்புகழ்ச்சி: 17 அல்-குர்ஆன், அத்: 112, வ.1-4 ஞானப்புகழ்ச்சி: 402 பிஸ்மில்குறம்: 1 ஞானமணிமாலை: 56 அல்-குர்ஆன் - அத்:24, வ.35 Ibid sigs: 24, 61.35 ஞானத்தோத்திரம், சோதிப்பதிகம் 9
ஹதீது குத்ளி . "Tuhfatul-Ahrar (London) 1848 quoted by Margaret Smith,
in the Readings from the Mystics of Islam, (London) p. 122.
வஸ்துதயத்தினா நந்தம் . Summarised from Chapter II, R.A. Nicholson, Studies in
Islamic Mysticism, (Cambridge University Press) p-97.
வஸ்துதய நிலத்தினா நந்தம் . R.A. Nicholson, Al-Hujwiri in Kashful-Mahjub (London)
p-281
முகியித்தீன் சதகம்: 1 Rasa“il (Cairo 1928) III quoted by Margaret Smith in the Readings from the Mystics of Islam. (London) p-40. மெய்ஞ்ஞான ரத்தின அலங்காரக் கீர்த்தனை: 49 பரம்பொருள் விளக்கம்:3
வாழுமிக்கவொரு கடவுள்: ஞான ஆனந்தரத்தினம்: ஒளிவனந்தம். ப:111, 112 அல்-குர்ஆன், அத்:24, வ.35-42
Ibid. Juigi:112, al. 1-4
Ibid. 95: 2, OJ. 117
 

25. 26. 27. 28.
:
8.
10.
III.
I2.
13.
14.
15.
16.
17.
I8.
19.
20.
:
269
Ibid. 915: 36, 6).J.82
Ibid pigs: 40, 61.68
ஞானாமிர்தசாகரம்: 2 Shaikh Muhammad Iqbal, The Development of Metaphysics in Persia (Lahore) p-127/129.
அத்தியாயம் - I இறைவன் சிருஷ்டிகளில் வியாபிக்கும் நிலையும் அந்நிலைக்கு அப்பாற்பட்ட ஏகத்துவ நிலையும் ஞானாநந்த ரத்தினம்: ஒளிவனந்தம்: ப-111, 112. அல்-குர்ஆன். அத்: 2, வ.255 Ibid - அத்: 2 வ.255 (298) - அடிக்குறிப்பு: அல்-குர்ஆன். மொழி பெயர்ப்பு ப. 103, அப்துல்லாஹ் யூசுப் அலி அவர்கள். ஞானப்புகழ்ச்சி: 3 ஞானமணிமாலை: 242 ஞானத்தோத்திரம்; சோதிப்பதிகம் 5 Ta'iyya' (Vienna 1854) quoted by Margaret Smith, Readings from the Mystics of Islam (London) p-95/96 தாமீம் தாசீம் பதிகம்: 7 Margaret Smith, op. cit, p.-98 ஞானத் தோத்திரம், வந்தருளுமென் சோதிப்பதிகம்: 8 Ibnul-Arabi in Kitab al-Ajwiba, quoted by Margaret Smith op.cit. p-99 அல்-குர்-ஆன், அத்:50, வ.16 நிஷ்காம நிரூபணம் (ஏட்டுப் பிரதி) Miron Winslow, Tamil- English Dictionary (West Germany), p-375. Kashful-Mahjub of Al-Hujwiri, translation by R.A.Nicholson, p-8/9 Aldous Huxley, The Perennial Philosophy (London) p-186. மெளஜூத் மாலை: 4 Margaret Smith, op. cit. p-23 Ibid p-23/24 மஹ்மூது பதிகம்: 5
. குருவணக்கம்: 7 . குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 1 . Kashful-Mahjub, op. cit. p-41 . Ibid. p-41 . குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 4 . அல்-குர்ஆன் அத்: 2, வ.164

Page 145
27.
. Margaret Smith, op. cit. p-41 29.
. அல்-குர்ஆன் அத்:55, வ. 26-27 31.
. அல்-குர்ஆன், அத்:57, வ.3 . Aldous Huxley, The Perennial Philosophy (London) p-19/20 . அல்-குர்ஆன், அத்:2 வ.136 ... William Stoddart, Sufism (London) p-82. . R.A. Nicholson in The Mystics of Islam (London) p-88
37.
. R.A.Nicholson, op. cit. p-10/11 39.
. Margaret Smith, op.cit. p-59/60
:
27O
அல்-குர்ஆன், அத்: 2, வ.26
முகியித்தீன் சதகம்: 9
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 7
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 4
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 3
அத்தியாயம் - IV
பரம்பொருளைச் சிந்திக்கும் இலக்கிய உருவகங்களும்
குறியீடுகளும் அல்-குர்ஆன். அத்: 6, வ.102-103 ஞானப்புகழ்ச்சி: 51 ஞானத் திருப்புகழ்: 10 Kitabul Ajwiba, quoted by Margaret Smith, in the Readings from the Mystics of Islam, (London) p/99 வேதபுராணம்: மூலாதாரப்படலம்: 20 ஞானாமிர்த சாகரம்: கடவுள் வாழ்த்து:1 ஞானானந்த ரத்தினம் அருட்பதிகம்: 3 ஆர்.ஏ.நிக்கல்ஸன், முஸ்லிம் ஞானிகள் (லண்டன்) ப.69-70 Ibid. p-151
. மெய்ஞ்ஞானத் தெளிவு (ஏட்டுப் பிரதி) . அல்-குர்ஆன், அத்: 30, வ.22 . ஞான வாக்கியம்: 6
- அல்-குர்ஆன் அத்: 24, வ.33 . Ibid. The Opening Sura . குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 6 . Ibid 2
Ibid 7 . Margaret Smith, op. cit. p-98 . அல்-குர்ஆன் அத்: 85, வ.12-16 . Ibid. j: 29 Gu.69

26.
27.
29.
1.
2.
4.
5.
271
. Margaret Smith op. cit. p-27
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 5 . ஆர்.ஏ.நிக்கல்ஸன் op. cit. p-50 . குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 6
. Margaret Smith, op.cit. p-85
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 2 ஆர்.ஏ.நிக்கல்ஸன் op. cit. p-81/82
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 3
Ibid. 5
. அல்-குர்ஆன், அத்: 2 வ.115
. Ibid. siji: 6, GAJI. 103
. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 9
ஆர்.ஏ.நிக்கல்ஸன் op. cit. p-64 குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 8
. Ibid. 9 . Al-Hujwiri in Kashful-Mahjub, Translated by R.A. Nicholson,
(London) p-16/17
. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 8 . Ibid. 9 . Al-Hujwiri in Kashf al-Mahjub, Translated by R.A.Nicholson,
(London) p-16/17
. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: 5
Ibid. 10
. Al Hijwiri, op.cit. p —269
. Ibid. p-269
. Ibid. p-275
. Ibid. p-275 . R.A. Nicholson op. cit. p-29.
9ś5urub – W ஆத்ம முன்னேற்றப் பாதையும் தன்னைத்தானறியும் மெய்ஞ்ஞானமும்
ஞானமணிமாலை: 9,10 வேதபுராணம்: ஸிபாத்துல் படலம் 12, 13
Quran, Chp. 2, v.136 Thomas Patrick Hughes, A Dictionary of Islam, London, 1895, p-609. R.A. Nicholson, The Idea of Personality in Sufism, Lahore, p-12. Ibid, p-13.

Page 146
7.
272
குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 55
Titus Burckhardt, An Introduction to Sufi Doctrine, Lahore p-151. Al-Hujwiri, Kashful-Mahjub, translated by R.A.Nicholson p-196/197.
Quran, Chp. 12, V.53. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 53 Margaret Smith. The Readings from the Mystics of Islam. London, p-62. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 56 Quran, Chp. 2, v.187.
Al-Hujwiri, op. cit. p-361 / 362/ 363/ 364/ 365/366. Hadith
Al-Hujwiri, op. cit. p-20. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 61 Al-Hujwiri, op. cit. p.4/5.
Margaret smith, op.cit. p-65. Margaret Smith, op. cit. p-65. Aldous Huxley, The Perennial Philosophy, London, p-188. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 73 Margaret Smith, op. cit. p-80/81. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 51 Al-Hujwiri, op. cit. p-45. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 70. Al-Hujwiri, op. cit. p-37. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 74. Al-Hujwiri, op. cit. p-158. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: அகாடிகன் சதகம் 100 மெய்ஞானக் கீர்த்தனை Betrand Russel, History of Western Philosophy, London, p-159.
சமரச சன்மார்க்கானந்த ஞான முப்பு Quran, Chp. 55. vs. 26-27. G.Bullet, The English Mystics, London, p-96/97. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: ஆனந்தக் களிப்பு 1-13. Quran, Chp. 2, v.156.
Al-Hujwiri, op. cit. p-72.
Margaret Smith, op. cit. p-8
Ibid. p-9
Ibid, p-92.
ஞான ஆனந்தக் களிப்பு

273
44. பிஸ்மில்குறம் 142, 152. 45. பொருள் வினாவிடைக் கண்ணி 65. 46. மார்க்க வழியைப் பற்றிய பயான் 106 47. பேரின்பத் திறவுகோல் படலம் 42 48. Margaret Smith, op. cit, p-80. 49. Ganana Anantak kalippu: 19 50. ஞானமணிமாலை 179 51. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு கீர்த்தனைகள் 6. 52. Margaret Smith, op. cit. p-79 53. Al Hujwiri, op. cit. p-70 54. Quran, Chp. 17, v.85 55. பொருள் வினா விடைக் கண்ணி 61 56. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: ரகுமான் கண்ணி 57. Titus Burckhardt, op. cit. p-49/50 58. Aldous Huxley, The Perennial Philosophy, p-49/50 59. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள். தவமே பெற
வேண்டுமானால் 11/12 60. R.A.Nicholson in Studies of Islamic Mysticism, Cambridge
University Press, p.86/87 61. R.A.Nicholson inTheIdea of Personality in Sufism, p-80/81. 62. ஞானாம்ருத போதினி - காட்சிப் படலம் 5 63. Al-Hujwiri, op. cit. p-269 64. Ibid, p-269 65. R.A.Nicholson op.cit. p-12 66. ஞானாமிர்த சாகரம் 7 67. ஷாம் பதிகம் 8 68. Al-Hujwiri, op. cit. p-282/283 69. ஞான தோத்திரம் 5 70. தேனமுதருளும் பதிகம் 5 71. R.A. Nicholson, op. cit. p-41. 72. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு பாடல்கள்: முகிய்யுத்தீன் சதகம் 18 73. ஞானகீர்த்தனா மிருதம் 37 74. R.A.Nicholson in The Mystics of Islam p-102/103 75. Ibid, p-103 76. Ibid, p-80/81 77. Quran, Chp. 57, v.5 78. குணங்குடி மஸ்தான் ஸாஹிபு கீர்த்தனைகள் 18 79. Al-Hujwiri, op. cit. p-195 80. R.A. Nicholson, op. cit. p-59 81. Margaret Smith, op. cit. p-23 82. Ibid, p-23/24
83. சமரசச் சின்மயானந்த.

Page 147
84. 85. 86. 87. 88. 89. 90. 91. 92. 93. 94. 95. 96. 97. 98.
99.
274
R.A.Nicholson. op. cit. p-92/93
Ibid, p-91/92
சமரசச் சின்மயானந்த
Margaret Smith, op. cit. p-32/33
சமரசச் சின்மயானந்த
மச்சரேகைச் சித்தன் திருப்பாடல் 10
Quran, Chp. 55, vs. 26/27 R.A. Nicholson, The Idea of Personality in Sufism, p-100. Margaret Smith, op. cit. p-82/83 மச்சரேகைச் சித்தன் திருப்பாடல்
மேற்படியார் தேவாம்ருதம்
மேற்படியார் பதிகம் 1
மேற்படியார் தேவம்ருதம்
மேற்படியார் பரமார்த்தப் பதிகம் 7 A Source Book in Indian Philosophy edited by S.Radhakrishnan & Charles A. Moore, Princeton University Press, U.S.A., P-38 Seyyed Hussein Nasr in Sufi Essays, London, p- 18.

275
அகர வரிசைத் தொகுப்பு அட்டவணை (INDEX)
அப்துல் கரீம் ஜீலி - 7, 60, 61, 63, 65, 66, 67, 74, 95 அப்துல் ஹஸன் நூரி - 174, 198 அப்துல் காதிர்ஜீலானி - 7, 60, 94, 233 அப்துல்கரீம் பாவா - 102 அப்துல்லாஹ் ஷத்தார் - 94 அபுஈசா அல்-திர்மிதி - 178 அபூஹாமித் அல்-கஸ்ஸாலி - 7, 49, 51, 74, 77, 185 அப்துல் ஹஸன் அல்-ஜுல்லாபி அல்-ஹ"ஜ்வீரி - 7, 14, 95 அபுல்காஸிம் அல்-குஷைரி - 7, 78 அபூயஸித் தைஃபூர் அல்-பிஸ்தாமி - 7, 160 அஹ்மத் ரிஃபாய் - 94 அஹதிய்யத் - 64, 66, 100, 105, 117, 119, 120, 123 அல்-ஜிஹாத் அல்-அக்பர் - 79, 182 அல்டஸ் ஹக்ஸ்லி - 231, 268, 269 அலிஃப் - 46, 47, 115, 120, 218, 221 அலிஷாதிலி - 94
அல்-அமா - 65, 114
அல்-ஹகீகத் - 106
அல்-தாத் - 65, 114
அல் - வுஜ த் - 65, 114
அல் - முத்லக் - 114, 65 அல் - இன்ஸானுல்காமில் பிமா - 60 அலாவுத்தீன் அலிஅஹ்மத் ஸாபர் - 95 அம்மாறத்துன் பில்சு - 133 அன்னப்ஸ் அல்-அம்மாறா - 155 அன்னப்ஸ் அல்-லெளவாமா - 181
அன்னப்ஸ் அல்-ஹைவானிய்யா - 155

Page 148
276
அணிய்யா - 66, 120, 12 அர்ஷகு - 128, 127, 135 அர்ரஹ்மான் - 230 அஸ்மா உல் ஹாஸ்னா - 286 அட்தஸவ்வுஃப் - 17 அவ்லியா - 233, 234, 235 அவ்வல் அஹத் - 105 அஉயான் தாபிதா - 37, 72
راتکے
ஆயத்துன் குர்ஸி - 127
இ
இப்னு அறபி - 7 இல்லல்லாஹ" - 20, 255 இல்முல் யெகின் - 71, 91 இஹ்யா உலுமுத்தீன் - 49, 85, 86 இக்லாஸ் - 82, 87 இஹ்வான் அஸ்ஸபா - 118, 140 இன்சானுல் காமில் - 60, 112, 233 இக்பால் - டாக்டர் முஹம்மத் - 74, 125, 269 இசுதுமஸ் - 258 இஸ்திம்பாத் - 16 இத்திஹாட் - 21 இத்திசால் - 21
6
எக்ஹாட் - 133
왕3 ஜன் - 107, 19 ஐனுல்யெகின் - 71, 91
கஸ்ஸாலி - 7
கலிமா - 99, 100, 107, 220
கமால் - 111
 

277
35iL DIT - Foreword
கன்சுல் மஃபி - 111
கஷ்புல் மஃஜ ப் - 14, 95, 182, 187, 236 கல்க் - 40, 42, 53, 54, 122, 126 காபகெளஸைனி - 107, 108 காதிரிய்யா - 94, 112, 233 கிதாபுல் அஜ்விபா - 54, 132, 159 கீமியாசஆதத் - 51 குஞ்சலிசாஹிப் - 102, 134 குணங்குடி மஸ்தான் சாஹிப் - 8 கோட்டாறு ஞானியார் - 8, 100, 102, 109, 131
ஹ
ஹதீது நபவி - 34 ஹதீது குத்வி - 34, 108 ஹல்லாஜ" - 7, 95, 154, 239 ஹலாபி அல்-மக்தூல் - 220 ஹாஜ் - 33, 38, 91, 248 ஹக் - 53, 40, 52, 122, 127 ஹகீகா - 177, 178, 179, 247 ஹக்குல்யெகின் - 71, 91, 12 ஹகீகத்துல் முஹம்மதிய்யா - 232 ஹஸன் அல்-பஸரி - 7, 214 ஹேகல் - 66 ஹ ரவிய்யா - 66, 112, 120, 122
5F
சத்தாரிய்யா - 94 சாதிலிய்யா - 94, 96
ஷஹாதா - 177 ஷரீயா - 35, 85, 177, 178, 221 ஷாஹ"ல்ஹமீத் வலியுல்லாஹ் - 96 ஷெய்க் அஹ்மத்அல் - அலவி - 8 ஷெய்க் தாவூத் வலியுல்லாஹ் - 97 ஷெய்க் ஷாஹ"ால்ஹமீத் - 202, 245, 248, 249 வெய்ேகுத்தம்பி ஞானியார் - 136
19

Page 149
278
L
டைட்டஸ் பேர்க் ஹாட் - 16, 48, 107, 265, 267 டோனிஜோன் - 203
5
தஜல்லி - 56, 57, 65
தாத் - 111, 112, 114
தாராஸிகோ - 96
துஆ - 83 துல்நூன் - 135, 136, 174, 179, 235, 243, 24
ந
நஃப்ஸ் - 155 நக்ஸ்பந்திய்யா - 94, 96 நாமதுல்லானிய்யா - 94 நாஸாத் - 62, 116, 179, 238 நிக்கல்ஸன் - 16, 48, 68, 265 நினியன்ஸ்மாட் - ForeWOrd நிர்வானா - 5 நிர்குணா - 256 நிசாமுத்தீன் அவ்லியா - 95 நுக்தா - 116, 121, 122, 124
Ll
பரீதுத்தீன் அத்தார் - 7, 163, 194, 250
பக்ர் - 83
பக்தியார் அல்-ஹக்கி - 95 பர்தானிய்யா - 115, 116 பகா - 5, 75,91, 179, 199, 233, 235
ஃபனா - 5, 75, 91, 179, 199, 233
பிஸ்மில்லா - 43, 100 பாத்திஹா - 17, 43 பரிமள முஹம்மத்காஸிம் - 102, 219, 234 பாயிட் - 56, 57
பிரஹ்மன் - 5, 254 9GaGLT - 20
 

279
பெனலன் - 193 பீர்முஹம்மத் சாஹிப் - 8, 99, 105, 107, 126 புடாக் அல்-ஸஹ்வா - 80
பெளத்தம் - 5 பெரிய நூஹாலெவ்வை ஆலிம் - 102, 153, 177
LO
மச்சரேகைச் சித்தன் - 8, 102, 236, 249, 253
மாகரெட் ஸிமித் - 267
LDs (Tlib - 78, 8.1
மஅரிபா, மஅரிபத் - 91, 177, 178, 179, 214, 235
மாட்டின்லிங்ஸ் - 264, 267
மஸ்தான் - பார்க்கவும்: அப்துல்காதிர் வாலை மஸ்தான், மெளன குருமஸ்தான், குணங்குடி மஸ்தான் சாஹிப், முஹம்மது மஸ்தான் சாஹிப்,
மாணிக்கவாசகர் - 10
மன்ஸ"ர் அல்-ஹல்லாஜ் - பார்க்கவும் ஹல்லாஜ்
மீர்வலியுத்தீன் முன்ஸிபாஸில் - 265, 267
முஹம்மட் ஹம்ஸாலெவ்வை - 102, 120
மெளனகுரு மஸ்தான் சாஹிப் - 102, 121
முஹம்மத் (ஸல்) - 14, 7, 59, 106, 107, 119, 188, 233, 246
முஹம்மத் மஸ்தான் சாஹிப் - 121, 132, 155
முஹியித்தீன் இப்னு அறபி - 7, 52, 53, 57, 67, 130, 131, 152
முக்கலாஃபத் அல்-நப்ஸ் - 79
மம்லூக் - 40
முரீத் - 101
மினா - 247
முறுவத் - 182, 247
முஜ்தலிபா - 247
J
ரப் - 40, 119
ரப்பில் ஆலமீன் - 36, 106, 130
ராபியா அல்-அதயிய்யா - 7
ராதாகிருஷ்ணன் - 266
ரஹ்மான் - 106, 136, 227

Page 150
28O
ரஹீம் - 106, 136 ரசூல்பீவி - 102, 124, 153, 220 ரிஃபாய் - 94, 96
rîNGMUITGvIT - 78
ரூமி - ஜலாலுத்தீன் ரூமி பார்க்கவும்
6)
லெளஹ"ல்கலம் - 126 Gvinīgspog; - 62, III, 112, 114, 239 GS)piii T.O - III, 12, 265
6)
வடிவேலு முதலியார் - 168, 100 வஹ்தத்துஸ்ஸ"ஹ"த் - 44 வஹ்தத்துல் வுஜ"த் - 42, 113
வாஹிதிய்யா - 66, 107, III, II4, 115, 114, 117, 119
원g
ஜபறுத் - 111, 112, 114, 117, 178, 179
ஜலால் – III, 114, 115, 120, 121, 123
ஜமால் – III, 114, 120, 12I, 123 ஜமாஇஸ்சுஃப் - 14 ஜலாலுத்தீன் ரூமி - 67, 66, 69, 95, 100, 168, 250, 258 ஜேஸஸ் - 26, 146
ஜ-ானைட் - 236, 246, 247
ஜிஸ்திமுயினுத்தீன் - 95
 

281
ஆய்வுக்குதவிய மூல நூல்கள்: LIST OF SOURCES
- ஞானப்புகழ்ச்சி - பீர் முஹம்மது சாஹிப் (ரலி), சிவானந்த நிலையம்
அச்சகம், தஞ்சை, பதிப்பு, ஹிஜ்ரி 1298 . பிஸ்மில்குறம் - பீர்முஹம்மத் ஸாஹிப் (ரலி) - ஷாஹ"ல் ஹமீதிய்யா பிரஸ், எண்.20, ஹைரோட், திருவல்லிக்கேணி, சென்னை-5, பதிப்பு, 1977.
மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு - கோட்டாறு ஞானியார் சாஹிப் எனும் ஷெய்கு முஹியித்தீன் மலுக்கு முதலியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை. பதிப்பு, ஹிஜ்ரி 1316. . குணங்குடி மஸ்தான் ஸாஹிப் திருப்பாடற்றிரட்டு - ஷாஹ"ல்
ஹமீதிய்யா அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு, 1931.
- ஞானத் திருப்பாடற்றிரட்டு (இரண்டாம் பாகம்) சமரசசின்மையானந்த ஞானமுப்பூ - கலீபத்து ஷெய்கு ஷாஹ"ல் ஹமீது அப்பாநாயகம் - பூரீமயில்வாகனன் பிரஸ், சூளை, சென்னை பதிப்பு, 1939.
. ஞானாமிர்த போதனை-பரிமளமுஹம்மது காசிம் - ஷண்முகவிலாச
அச்சகம், திருவனந்தபுரம், பதிப்பு, 1855. . ஞானாமிர்த சாகரம் - இறசூல் பீவி - பூரீராமானுஜம் அச்சுயந்திர
சாலை, தென்காசி, பதிப்பு, 1915. . ஞானாந்தரத்தினம் - அய்யம்பேட்டை அப்துல் கனிபாவா,
ஷாஹ"ல், ஹமீதிய்யா அச்சகம், சென்னை, பதிப்பு, 1927 . மோனகுரு மஸ்தான் சாஹிப் பாடல்கள் - தாளையான் அச்சகம்,
கொழும்பு, பதிப்பு, ஹிஜ்ரி 1353.
10. ஞானரத்தின சாகர மதாறிய்யா - ஷாஹ"ல் ஹமீதிய்யா அச்சகம்,
சென்னை, பதிப்பு, 1923.
11. நிஷ்கரம் நிரூபனம், பரம்பொருள்விளக்கம் - இளையான்குடி பூ.மு.
மஸ்தான் சாஹிப், பதிப்பிக்கப்படாதது.
12. தத்துவானந்த தீபம் - இளையான் குடி, பூ.மு. மஸ்தான் சாஹிப், 12. தத்துவானந்த தீபம் - இளையான்குடி பூ.மு.மஸ்தான் சாகிப்.
மெய்ஞ்ஞான விளக்கம் - கோட்டாறு ஷெய்குத் தம்பி ஞானியார், கலாரத்நாகரம் அச்சகம், சென்னை, பதிப்பு ஹிஜ்ரி 1316.

Page 151
l4.
15.
I6.
17.
18.
19.
282
ஞானமணிமாலை - பீர் முஹம்மது சாகிப் (ரலி), ஷாஹ"ல் ஹமீதிய்யா பிரஸ், சென்னை, பதிப்பு 1952.
மெய்ஞானக் கருவூலம் - ஐக்கிய முஸ்லிம் சங்கம், 202, திரான்ஸ்பார் ரோடு, பினாங்கு (மலேஷியா), பதிப்பித்த ஆண்டு இல்லை. ஞானவாக்கியம் - அப்துல் காதிர் வாலை மஸ்தான், பதிப்பு 1928. வேதபுராணம் - காயல்பட்டணம் பெரியநூஹலி லெப்பை ஆலிம், ஷாஹ7ல் ஹமீதிய்யா பிரஸ், சென்னை, பதிப்பு 1920, 1924. காலங்குடி மச்சரேகைச் சித்தன் திருப்பாடல் - செய்யது அப்துல் வாரிது ஆலீம் மெளலானா ஐதுரூஸ் - பி.ஆர்.ராமய்யர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 1928. மெய்ஞ்ஞான ஆனந்தக் களிப்பு - மேலப்பாளையம் முஹையத்தீன் செய்கு பஸிர் (ரலி), மீனாள் அச்சகம், மேலப்பாளையம், பதிப்பு, 1970.
 


Page 152
நூல் நோக்கு
இஸ்லாமிய தத்துவக் கொள்ை வினாவுக்கு இந்நூல் சிறந்த முை லாமிய தத்துவஞானம் இவ்வுலகிற்கு கும் மறுமைக்கும் பயன் நல்கும் எல்லா மதங்களையும் ஒன்றிணை தத்துவக் கருத்துகளுக்கு உண்டு எ பலரினதும் ஆக்கங்களை எடுத்த சஹாப்தீன் அவர்கள் இந்நூலில் ெ
மேலை நாட்டவரின் ஆங்கில நு தன்வயப் படுத்திக்கொண்டு, தன எளிமையாகவும், இனிமையாகவும் ளார்கள். இஸ்லாமிய தத்துவஞான அடிப்படையாகக் கொண்டு எழுத சாரங்களின் கருத்துகளை அடிப்பை ஒரு விசாரம் அல்ல என்பதை வரலா றார் ஆசிரியர்.
கலாநிதி முஹம்மத் சஹாப்தீன் தத்துவரீதியாக முன் பிரசுரிக்கப்பட் Literature என்னும் நூலில் ஆங்கில விளக்கங் கொடுத்திருப்பதும், ஞ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப் பாண்டித்தியத்தை எமக்கெடுத்துக்
இலங்கையில் இஸ்லாமிய தத் வந்த நூல்களில், இம்முயற்சி முத புதிய வரவுமாகும். டாக்டர் பட்ட நூலின் மூலம் இஸ்லாமிய தத் பெறுகிறது.
ஏ. எம். எம் சஹாப்தீன் டிரஸ் SAHABDEEN TRUST FOUNDA வேறு துறைகளில் தலைசிறந்து விள ஆண்டுதோறும் பரிசில் வழங்கி ெ வனம் 1991-இன் 3-ஆம் இலக்கப் ப ஸ்தாபிக்கப்பட்டு செயற்பட்டு வரு அமைப்பாளராக டாக்டர் ஏ. எம். ( திகழ்கிறார்கள்.
இலங்கை சிவில் சேவை எனப் யில் இருந்து ஓய்வுபெற்ற அவர்கள் களில் ஆணையாளராகவும், தலை வதும் சமூகசேவையில் வள்ளன்மை இலங்கை ஜனாதிபதியால் தேசமான தைப்பெற்ற கலாநிதி முஹம்மத் சஹ சேவையைப்பாராட்டி, தமிழ்நாட்டி முன்னாள் தலைமை நீதிபதி மு மு. ஜலாலியா சபை சார்பில் " " கலைஞ (04-06-1994) வழங்கி கெளரவித்
தாஜுல் அதீப் எஸ். ஏ. ஆர். எம்.
 

ககள் என்றால் என்ன? என்னும் றயில் விடையளிக்கின்றது. இஸ் ந வழங்கும் சன்மானம், இம்மைக் வாழ்க்கை வழி காட்டலாகும். க்கும் ஒருமைப்பாடு, இஸ்லாமிய ன்பதை ஆங்கில நாட்டு அறிஞர் துக்காட்டி, டாக்டர் முஹம்மத் தளிவுபடுத்துகின்றார்கள். ால்களைப் பயின்று, உள்வாங்கி, க்கே உரிய பாஷை நடையில், இவ்வாய்வேட்டை ஆக்கியுள் க் கருத்துகள், குர்ஆன் ஹதீசை ப்பட்டன. அவை ஏனைய கலாச் டயாக வைத்து உருவாக்கப்பட்ட
ற்றுச் சான்று காட்டி நிறுவுகின்
அவர்கள் ஞானப் பாடல்களுக்கு L., The Sufi Doctrine in Tamil 0த்திலும், இந்நூலில் தமிழிலும் ருானப்பாடல்களை கவிதையாக பதும், அன்னாரின் இருமொழிப் காட்டுகின்றது.
துவஞான அடிப்படையில் வெளி 5லாவது மட்டுமல்ல, தமிழிற்குப் - ஆய்வுக்கு எழுதப்பட்ட இந் துவஞானம் தமிழில் புத்துயிர்
ஸ்ட் பவுண்டேசன். (A. M. M. TION) தெற்காசியாவில் பல் ாங்கும், அறிஞர் பெருமக்களை, களரவித்து வருகிறது. இந்நிறு ாராளுமன்றச் சட்டத்தின் மூலம், கிறது. பவுண்டேசனின் பிரதம முஹம்மத் சஹாப்தீன் அவர்கள்
படும் உயர்தர நிருவாக சேவை ர், அரசின் பல்வேறு அமைப்புக் வராகவும் இருந்து சேவைசெய்
காட்டுவதும் குறிப்பிடத்தக்கது. ரிய எனும் அதியுயர் கெளரவத் றாப்தீன அவர்களை, அன்னாரின் லும் சென்னை உயர்நீதி மன்ற இஸ்மாயில் அவர்கள் ராத்திபத்து ான மாமணி' என்னும் விருது தார்கள்.
Slatiljilj bli). U 6. SlШSTOJICIJI