கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2014.01

Page 1
பிரதம ஆசிரிய
கலை இலக்கிய மாத்து
தை - 2ாழு

இச
பர் 8 க.பரணீதரன்
85 413
நா க ட
UIIIIIIII 0EIIIIIIII
ஐரோப்பியத் திரைப்பட விழா! - 2013
- அ. யேசுராசா
கவியரசு கண்ணதாசன்
- மா. செல்வதாஸ் இலங்கையில் உருவகக் கதைத் துறையில் படைப்பாளி முத்துமீரானின் பங்களிப்பு
' - நந்தர்சா 1950 வரையான காலகட்டத்து - நவீன தமிழ்க் கவிதை - அம்மன்கிளி முருகதாஸ்
நீதிகை
80/=

Page 2


Page 3
கட்டுரை
1950 வரையான காலகட்டத்து நவீன கவிதை பேராசிரியை கலாநிதி அம்மன்கிளி முருகதா
தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்கள் - கவியரசு க மா.செல்வதாஸ்
ஐரோப்பியத் திரைப்பட விழா - 2013
அ.யேசுராசா
இலங்கையில் உருவகக் கதைத் துறையில் படைப்பாளி முத்து மீரானின் பங்களிப்பு பேராசிரியர் ஹ.மு.நந்தர்சா
சொல்ல வேண்டிய கதைகள் - 11 முருகபூபதி
குறுங்கதை வேல் அமுதன்
நூல் விமர்சனம் இ.சு.முரளிதரன் அர்ச்சுனன்
உள் ஓவியங்கள்
கருணாகரன், நன்றி இணையம்
பேசும் இதயங்கள்

நதியினுள்ளே...
சிறுகதை
ரஸ்
முருகேசு ரவீந்திரன்
இ.சு.முரளிதரன் முதூர் மொகமட் ராபி
ச.முருகானந்தன்
பன்ணதாசன்
கவிதை
த.அஜந்தகுமார் கவிஞர் ஏ.இக்பால்
கு.றஜீபன் கெகிராவ ஸுலைஹா வல்வை ச.கமலகாந்தன் வேரற்கேணியன்
ஆனந்தி செல்லக்குட்டி கணேசன்
வனஜா நடராஜா பாலமுனை பாறூக் இப்னு அஸ்மத்
க.முரளிதரன் எஸ்.முத்துமீரான்
0 JAN 2014
L, ய 1 1
விவாத மேடை
கி.நடராஜா
அட்டைப்படம்
தேவராஜா பவிராஜ்

Page 4
| (ஜீவநதி)
2014 தை இதழ் - 64 பிரதம ஆசிரியர்
கலாமணி பரணீதரன்
துணை ஆசிரியர்கள்
வெற்றிவேல் துஷ்யந்தன் ப.விஷ்ணுவர்த்தினி
20.
பதிப்பாசிரியர்
கலாநிதி த.கலாமணி
தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு அல்வாய் இலங்கை.
நI 1101
யின் 64 ஆ போது சங் உண்மையில் நிகழ்வுகளை பேறாக இன நடந்து கெ கொள்ளும்;
அ நூல் வெளி பகிர்ந்து கெ
குறித்த நேர விழாக்களு தண்டனை நேரத்திற்கு விழாக்கள் கொள்ளாம் புரை, வாழ் பத்தையும்” பீற்றிக் கொ நிமிடம் என உரைகளும் பெற்று வி எண்ணிக்ை நிலையில். < யையோ, அ துர்ப்பாக்கிய
ஆலோசகர் குழு:
திரு.தெணியான் திரு.கி.நடராஜா
தொலைபேசி : 0775991949
- 0212262225
E-mail : jeevanathy@yahoo.com
அ
வங்கித் தொடர்புகள்
K.Bharaneetharan Commercial Bank Nelliady A/C - 8108021808 CCEYLKLY
மாலையில் நேரமாக 6.1 குறித்த கா துள்ளேன். ! களாக விள இலக்கியகா உற்பத்தித், வெளிப்படுத் கால வரைப் புதுவருட சா!
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள்.
- ஆசிரியர் -
2/ லீவநதி - இத!

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி... புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
புதுவருட சங்கற்பம்
4 ஆங்கில வருடத்தின் முதற் திகதியில் ஜீவநதி பது இதழ் வெளிவருகின்றது. புதுவருடம் பிறக்கும் கற்பம் மேற்கொள்வது சிலரது வழமையாகும்.
• கடந்த வருடத்தில் எமது நடவடிக்கைகளையும் ரயும் குறித்துச் சிந்தனைத் தெறிப்புச் செய்து அதன் 7 வரும் காலத்தில் எவற்றைத் தவிர்ப்பது, எவ்வாறு காள்ள வேண்டும் என ஒருவர் சுயமாக மேற்
தீர்மானமே சங்கற்பம் என்பதன் பொருளாகும்.
ண்மைக்காலங்களில் இலக்கிய விழாக்களிலும் பீட்டு விழாக்களிலும் அவதானித்த ஒரு விடயத்தை ாள்வது பொருத்தமானது. இவ்விழாக்கள் எவையும் த்திற்கு ஆரம்பிக்காமை, உரிய நேரத்திற்கு அவ் க்கு சமூகம் அளிப் போருக்கு வழங்கப்படும் பாக உள்ளது. அழைப்பிதழ்களில் குறிப்பிட்ட ஒரு மணித்தியாலத்திற்கு பிந்தி ஆரம்பிக்கும் அவையினரின் நேர வசதிகளை கருத்திற் ல் இழுபட்டுக் கொண்டே செல்கின்றன. வரவேற் மத்துரைகளை நிகழ்த்த வருவோர் "பலதையும் சொல்லி அரை மணித்தியாலத்திற்கும் மேலாக ள்கின்றனர். இதே போலவே ஐந்து நிமிடம், பத்து | நேர வரையறை நிகழ்ச்சி நிரலில் வழங்கப்பட்ட கூட அரை மணித்தியாலத்திற்கும் அதிகமாக இடம் நிகின்றன. இறுதியில், அவையினரில் பெரிய கயானோர் சலிப்புற்று, சோர்ந்து வெளியேறிவிட்ட எஞ்சியிருக்கும் ஒரு சிலருக்கே நூலின் ஆய்வுரை அல்லது முக்கிய நிகழ்வையோ நிகழ்த்த வேண்டிய
" நிலை ஏற்பட்டு விடுகின்றது. வுஸ்திரேலியாவில் ஓர் இலக்கிய அமைப்பு இடம்பெறும் கலை நிகழ்வுகளை ஆரம்பிக்கும் 21பி.ப என குறித்த உரியநேரத்திற்கே ஆரம்பித்து லவரையில் நிறைவு செய்வதையும் அவதானித் இன்று ஒவ்வொருவரும் உற்பத்தித்திறன் உள்ளவர் ங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். கலை ரர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் கூட , திறனில் நாட்டம் கொண்டவர்கள் என்பதை துவதற்கு “நேரத்திற்கு முதன்மையளித்து, உரிய பறைக்குள் நிகழ்வுகளை நடத்தி முடிப்போம்” என பகற்பம்செய்து கொள்வோமா?
- க.பரணீதரன்
64 தை 2014

Page 5
1950 வரையா நவீன தமிழ்க் கா
பேர
நவீன கவிதை - அறிமுகம்
எமக்குக்கிடைத்துள்ள தமிழிலக்க பழைமைவாய்ந்தது. இந்த நீண்ட காலப்பி வீதமானவை கவிதைகளே. இக்கவிதைக யும் கடவுளரையும் பொருளாகக் கொ பட்டவையாகும். தமிழ்நாட்டில் பதினேழு அரசியற் பின்னடைவு அதைச் சந்தர் மேனாட்டதிகாரம் போன்றன தமிழ்ந பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த ( ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களினால் நிகழ் கைத்தொழில் மயவாக்கம், நகர மயமாக் நிலவுடைமை வாழ்க்கை முறையில் மாற் ஏற்பட்டது. புதிய முறையில் இலக்கியம் மறுமலர்ச்சியாகும். ஆங்கிலேயராட்சியில் இளந்திரையன் கூறுமிடத்து :
அடிமைவாழ்விலும் சமய மடமைய ஆங்கிலேயர் கொணர்ந்த புதும் தோன்றுகிறது. தமிழர்கள் அரசிய சமுதாய உணர்ச்சியை ஆங்கிலக்க (சாலை இளந்திரையன் 1966:16) என்று குறிப்பு
எழுதா எழுத்து எனக்கூறப்பட்ட - கல்வியும், உபயோகமும் மெத்தப்படித்தல் பட்டவர்களிடத்தும், செல்வந்தர், அரசர், கிடந்தன. அச்சியந்திரம் அறிமுகம் செய் மிஷனரிமாரின் பிடியில் இருந்தமையால் ஏற்படவில்லை. கிறிஸ்துமத விடயங்களே அச்சு முறை பொது மக்களுக்குப் பரம் சஞ்சிகைகள் வெளிவருவதற்கான சூழல் ஏ நடை அதாவது மக்களுக்கு விளங்குவத ஏற்படுத்தியது. இக்காலத்தில் தோன்றிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றத்தொடங்கி
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியப் பொருளிலும் மாற்றத்தை ஏ பயிற்சி, பிரித்தானியாவிலிருந்து அறிமுக
3/ ஜீவநதி - இ
-- தமிழ் ஆங்கரிப்பு

- -
ன காலகட்டத்து
விதை
சிரியை கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
யெம் ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு வருடப் ரிவில் தோன்றிய இலக்கியங்களுள் தொண்ணூறு ளிற் பெரும்பாலானவை அரசரையும் பிரபுக்களை ண்டு அரசவைகளிலும் கோயில்களிலும் பாடப் ) பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக ப்பமாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய எட்டு வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தின. மேனாட்டினரின் அதிகாரத்தினால் இந்தியாவில் ந்த கல்வி முறைமை மாற்றம், சமூக மாற்றம், கம் போன்றவை காரணமாக அன்றைய இந்திய மறம் ஏற்பட்டது. மக்கள் சிந்தனையிலும் மாற்றம் எழுந்தது. இது ஆங்கிலேயராட்சி ஏற்படுத்திய ல் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றி சாலை
பிலும் மூழ்கிச் செயலிழந்து கிடந்த தமிழகம் மைகளால் புதுத்தெம்பு பெற்றதென்றே ல் சுதந்திரத்தோடு சேர்த்து இழந்து விட்ட கல்வியே அவர்களுக்கு மீண்டும் ஊட்டியது பிட்டுள்ளார். அச்சுமுறைமை தமிழில் ஏற்படும் வரை இலக்கியக் வர்களிடமும் அல்லது படிப்பதற்கு அனுமதிக்கப் பிரபுக்களிடத்தும், சமயவாதிகளிடமும் முடங்கிக் யப்பட்ட காலத்தில் அச்சியந்திரங்கள் கிறிஸ்தவ - உள்ளூர்வாசிகளுக்கு அதனால் எப்பலனும் முதலில் அச்சடித்து வெளியிடப்பட்டன. 1835 இல் வலாக்கப்பட்ட பின்னர் தமிழில் முதன்முதலாக ற்பட்டது. சஞ்சிகைகளின் தோற்றம் நவீன உரை ற்கான உரைநடை தோன்றுவதற்கான சூழலை 1 பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இலக்கிய
ன.
- தமிழுக்கு அறிமுகமான அச்சு முறைமை ற்படுத்தியது. சாதாரண மக்களிடையே எழுத்துப் மான நிறுவன வழிவந்த அறிவுப்பயிற்சி, பள்ளிக் தழ் 64 தை 2014

Page 6
கூடங்கள்) புத்தகங்களை அச்சிடுதல், (பாடப் புத்தகங்கள்) செய்திப்பரிமாற்றம், அச்சு வளர்ச்சியினால் சஞ்சிகைகள் தோன்றுதல், சமயம் பரப்பல், வாசிப்பு விரிவடைதல், மற்றும் புதிய புலமைத்துறைகள் போன்றன தோன்றின. பிரித்தானியராட்சி காரணமாக சுதேச மொழி அடையாளம், இன அடையாளங்களின் இருப்புக்கான கேள்வி எழுந்தபோது மொழி அடையாளம், இன அடையாள உணர்வுகளின் தோற்றம், சாதியம் குறித்த கேள்விகள் போன்றனவும் எழத் தொடங்கின.
பாடுபொருள் மாற்றம்
கடவுளரையும் அரசர் களையும் பிரபுக்களையும் பாடி வந்த தமிழிலக்கியம் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியி லிருந்து சாதாரண மக்களைப் பாடத் தொடங் கிற்று. தமிழில் மரபில் இதுவரை இல்லாத முறையில் சாதாரண மக்களைப் பற்றிப் பேசும் இலக்கிய வடிவங்களான நாவல் சிறுகதை நவீன கவிதை என்பன தோன்றின. இவற்றின் கதாநாயகர்களாக சாதாரண மனிதரும் பாடு பொருள் களாக அவர் களின் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினைகளும் அமைந்தன. முதலில் நாவல்களை எழுதிய அனைவருமே தாம் புதிய வடிவமொன்றைக் கையாள்வதாகக் கூறினர். தமிழ்க் கவிதையும் நவீன கவிதை யாகத் தோற்றம் பெற்றது. முதன் முதலில் நவீன கவிதைகளை எழுதத் தொடங்கிய பாரதி தான் புதிய விடயங்களைப் புதிய முறையில் எழுதுவதாகக் குறிப்பிட்டார்.
கம்பன் சான்றோர் கவியை கோதாவரி நதியின் தெளிந்த நீருக்கு ஒப்பிடுவான் (சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி) கவிதை என்பது மனித அனுபவம் உணர்வுத் தாக்கம் தொடர்பான ஒன்றாகும்.
உள்ளத்துள்ளது கவிதை-இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத்தெளிந்த தமிழில்-உண்மை
தெரிந்துரைப்பது கவிதை என்றார், தேசிக விநாயகம்பிள்ளை.
நவீன கவிதை உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்கிறது. தேசிக விநாயகம்பிள்ளை தமிழை முதன்மைப் படுத்தினார். ஆனால் எம்மொழியிலும் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுத்தது கவிதையாகும்.
கவிதை என்பது உளநிலைப்பட்ட
4/ ஜீவநதி - இதழ்

-க்
ஒன்று (A matter of mind and Heart) அது கற்பனைக்கு இடம் தருவதாக இருத்தல் வேண்டும். அந்தக் கற்பனைகளும் பிரதான மாக உணர்வுகள் (feelings) உணர்ச்சிகள் சம்பந்தப் பட்டவை. கவிதை என் பது இவற்றோடு பின்னிப் பிணைந்து கிடப்பது என்ற ஒரு நிலையான கருத்து உண்டு. இந்த எடுகோள் காரணமாக மனித உணர்வுகள் நிலைப்பட்டனவே கவிதைக்குப் பொருளாக அமையும் என்ற ஒரு கருத்து உண்டு. (கா.சிவத்தம்பி:31:2011)
நவீன கவிதை மக்களுக்கு விளங்கக் கூடிய மொழி நடையைக் கொண்டுள்ளதுடன் மட்டுமல்லாது முற்கூறப்பட்டது போல் சாதாரணமக்களின் வாழ்க்கைப் பிரச்சினை களைக் கூறும் புதிய பொருள் மரபைக் கொண்டதாகவும் அமைந்தது. சுருக்கமாகச் சொன்னால் நவீன கவிதையானது தன் னேரில்லாத் தலைவர்களின் செயல்களான பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல், பொன்முடி கவித்தல், புலவியிற் புலத்தல், கலவியிற் களித்தல் போன்ற விடயங்களைப் பாடுவதை விடுத்து அரசனையும் ஆண்டியை யும் ஒன்றாக வைத்துப் பாடியது. பாரதி சொல்வது போல் சொல் புதிது பொருள் புதிது சுவை புதிதாய் எளிய நடை எளிய சந்தம் யாவரும் விரும்பும் மெட்டு உடையதாய் ஓரிரண்டு வருஷத்து நுாற்பழக்கமுடை யோரும் விளங்கிக் கொள்ளக்கூடியதாய் ஆனது. எல்லா விதத்திலும் அடக்கப் பட்டோரைப் பற்றிப் பாடத்தொடங்கிற்று.
பாரதியின் பாடல்கள்: (1882-12-11-1921-09-12)
பாரதிபாடல்கள் பற்றிக்கூற விழைந்த சாலை இளந்திரையன் பின் வருமாறு
குறிப்பிடுவார்.
“கவிஞனின் உள்ளத்தில் மூன்று பக்கங்கள் உண்டு. ஒருபக்கம் அவன் வாழ்ந்த காலத்தை எதிரொலிக்கிறது. மறுபக்கம் அவன் பிறந்து வளர்ந்து மொழி பயின்று வந்த சமூகத்தை எதிரொலிக்கிறது. மூன்றாவது பக்கம் உலகப் பொது மனிதப் பண' பை எதிரொலிக்கிறது சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மூன்றில் ஒருபக்கம் "ஒலி” மிகுந்தும் பிற பக்கங்கள்ஒலி குன்றியும் நிற் கும் ஆயினும் எந்தக் கவிதை உ ள் ள த் திலு ம் இ ந த மூன் று
64 தை 2014

Page 7
பக்கங்களும் இருந்தே தீரும் பாரதியின் நெஞ்சம் காலத்தைச் சிறப்பாகவும் மற்ற இரண்டையும் பொதுவாகவும் எதி ரொலிக்கிறது. (சாலை இளந்திரையன் 1966:28)
பாரதி முழுத்தமிழிலக்கியப் பாய்ச் ச ல லு ம ; கு ற ப பா க ந வ ன இலக்கியத்தின் வருகையிலும் முக்கிய இடத்தைப் பெறுகிறான் . பாரதி முக்கியப் படுத்தப் படு வதற்கான காரணம் அவன் தமிழின் நவீன இலக்கிய மேற்கிளம்பலில் வகிக்கும் இடமாகும். (சிவத்தம்பி.கா. கி. பார்த்திபராஜாவின் நூலுக்கான முன்னுரை :2001) |
பாரதியார் வாழ் நீ த கால ம் ஆங்கிலேயராட்சிக் காலம். அதாவது இந்திய தேசம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த காலம். ஆங்கிலக்கல்விக்கு முக்கியம் கொடுக் கப்பட்டிருந்த காலம். பாரதியார் இளமையிலே தந்தையின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஆங்கிலக் கல் வியைக் கற்றவர். இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்வதை அடியோடு வெறுத்தவர். தன்னாட்டுச் செல்வங்களை வெள்ளையர் கொண்டு செல்வதைப் பார்த்து உள்ளம் கொதித்தவர். அன்றைய இந்திய விடுதலைப் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். கப்பலோட்டிய தமிழன் எனப் பேசப்பட்ட வ.உ.சி சுப்பிரமணிய சிவா போன் றோர் அவரது நெருங்கிய நண்பர்களாவர். பாரதியின் கவிதைகள் தன் கால சமூகத்தின் மீதுள்ள கோபம்
ஆத்திரம் அன்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. எந்த நேரத்திலும் தன் நாட்டின் கீர்த்தி பற்றியே அவர் சிந்தித்தார். காளிதேவியிடம் வரம் வேண்டும் போது கூட நாட்டைப் பற்றியே சிந்தித்தார். அதற்காகத் தான் உழைக்க வேண்டும் எனக்கருதினார்.
ஆங்கில இலக்கியமும் பாரதியும் )
பாரதியார் ஆங்கிலக் கல்வியை வெறுத்தாலும் ஆங்கில இலக்கியங்களை அவர் படிக்கத்தவறவில்லை. 2
ஷெல் லி கீட்ஸ் பைரன் முதலிய ஆங்கிலக் கவிஞர்கள் பாரதியாரின் இளமைக்கால இலட்சியக் கவிஞர்கள்.
து/ ஜீவநதி - 6

ஷெல்லிதாசன் என்று ஒரு காலத்தில் புனைபெயர்கூடப் பூண்டிருந்தார். எட்டய புரத்திலே இருந்த காலத்தில் ஷெல்லி கழகம் ஒன்றும் கூட்டினார் ஷெல்லி பைரன் முதலிய புரட்சிக்கவிஞர்களைப் படித்து தன் இலட்சிய தர் மாவேச தாகத்தைத் தீர்க்க முயன்றார். (கைலாசபதி.க 1962:7)
என அவரின் ஆங்கில இலக்கியப் புலமை பற்றி கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். அவரது காலத்திலேதான் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் புலவர் களும் வாழ்ந்தனர்.
அவரது பாடல்கள் தேசிய கீதங்கள், பக்திப்பாடல்கள், ஞானப்பாடல்கள், பல் வகைப்பாடல்கள், தனிப்பாடல்கள் என வகுக் கப்படுகின்றன. அத்துடன் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு ஆகியனவும் பாஞ்சாலி சபதம் என்ற குறுங்காவியமும் அவரால் இயற்றப் பட்டன. வசன கவிதையின் முன்னோடி யாகவும் அவர் விளங்கினார்.
பாரதியின் பத்திரிகைப்பணிகள்
பாரதி பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றியமை அவர் தன் விருப்பங்களை மக்களிடையே வெளியிடுவதற்கும் பரவச் செய் வதற்கும் உதவியாக அமைந்தது. சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, (பெண்களுக்கான இதழ்) விஜயா ஆகிய பத்திரிகைகளில் அவர் ஆசிரியராகக் கடமையாற்றினார். அவற்றைவிட அக்காலப் பத்திரிகைகளான ஞானபானு, கர்மயோகி, தர்மம், சூரியோதயம், விவேகபானு, சர்வஜன மித்திரன', பெண்கல்வி, கலைமகள், தேச பக்தன், கதாரத்னாகரம் ஆகிய தமிழ் இதழ் களிலும் The Hindu, Common weal, Arya, Madras Standard போன்ற ஆங்கில இதழ்களிலும் எழுதினார். கட்டுரைகள் பலவற்றை புதிய உரைநடையில் மக்களுக்கு விளங்கத்தக்க முறையில் இப்பத்திரிகைகளில் எழுதினார். பத்திரிகை ஆசிரியராக இருந்த காரணத்தி னால் ஆசிரியத்தலையங்கங்களிலும் தனது அரசியல் சமூக சீர்திருத்தக்கருத்துகளை
எழுதினார். கதழ் 64 தை 2014

Page 8
நவீன கவிதையும் பாரதியும்
தமிழின் கவிதை மொழியும் அதன் பொருளும் கடின நடையிலிருந்தும் விளங்கா நடையிலிருந்தும் விடுபட வேணடும் என பாரதி எணர்ணினார்.காலத்துக்குக்காலம் ஏற்படும் அரசியல் சமூக மாற்றங்களுக்கேற்பவும் சிந்தனைகளுக்கேற்பவும் புதிய பணி பாடு களுக்கேற்பவும் எந்தமொழியும் மாற்றமடை யும். அந்த வகையில் காலந்தோறும் தமிழ் மொழியும் மாற்றமடையும்- மாற்றமடைந்தது என்பதில் பாரதி நம்பிக்கை கொணர்டிருந்தார். அதனால் அவ்வக்காலத்து வழங்கும் மொழி யிலே கவிதைகள் எழுதப்படவேண்டும் எனக் கருதினார். பாரதியார் கட்டுரைகள் தொகுதி யில் உள்ள புனர்ஜென்மம் என்ற கட்டுரையிலே தனது காலக் கவிதைகள் பற்றிக் குறிப்பிட்டு தமிழி க கவிதை யடைய வேண டிய மாற்றங்களைப் பற்றிப்பின்வருமாறு கூறினார் கரடு முரடான கல்லும் முள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதை யாகத் தோன்றியது. நெடுங்காலத்துக்கு மு ன னே எழுதப் பட்ட நுT ல கள அக்காலத்து பாஷையைத் தழுவியவை. காலம்மாற மாற பாஷைமாறிக்கொணர்டு போகிறது. பழைய பதங்கள் மாறிப்புதிய பதங்களும் உணர்டாகின்றன. புலவர் அந்தக் காலத்து ஜனங்களுக்கு தெரியக் கூடிய உள்ளக் காட்சியினை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை,
இதை நோக்கும்போது கவிதைகள் பொதுஜனங்களை நோக கரியனவாக அவர்களுக்கு விளங்கிக் கொள்ளத்தக்க நடையிலே அந்தந்தக் காலத்துக்குரிய நடை யிலே பாடப்படவேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்ததை அறிய முடிகிறது. பல இடங்களிலே சாமானிய ஜனங்களுக்காகவே கவிதைகள் எழுதப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்போது உலக முழுவதிலும் ராஜாக் களையும் பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய் விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும ஜன ங் களிடமிருநது கிடைக்கும். அவர்களுக்கு உணர்மை
6/ஜீவநதி - இத

யான அபிருசி உணர்டாக்கிக்கொடுப்பது வித்வான்களுடைய கடமை.
அவர் சொன ன படியே தன கவிதைகளை இயற்றத் தொடங்கினார். அதனால அவர் நவீன கவிதையினர் முன்னோடியானார்.
பாரதி தனிபாடல்களை பிரக்ஞை பூர்வமாகவே நவகவிதை எனக் குறிப்பிட்டார். பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலே எளிய பதங்கள், எளிய நட்ை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் விளங்கும் படி எழுதுவதுடனர் காவியங் களுக்குரிய நயங்கள் குறைவு படாமலும் நடத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவர்காலத்திலே எழுத்தறிவு பெற்ற மக்கள் மிகக்குறைவாகவே இருந்தனர். அதனாலேதான ஓரிரணர்டு வருஷத்து நுாற்பழக்க முள்ளோரும் படிக்கத் தகுந்த தாக கவிதைகள் இயற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அடிக்கடி புதுமையைப் பற்றிப் பேசினார். அவர் கணர்ட புதுமைகள் எல்லா வற் றையும் தனது கவிதைகளிலும் காவியங்களிலும் கையாணர் டார். தனது கவிதை சிறந்த கவிதை என்பதையும் தான் தமிழினி கவிதை மரபினர் திருப்புமுனை என்பதையும் பாரதிதானே ஒரு கவிதையில் எழுதியிருக்கிறார்
புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர்தமிழ்நாட்டுக் கில்லையென்னும் வசையென்னாற் கழிந்ததன்றே சுவை புதிது பொருள் புதிது வளம்புதிது சொல் புதிது சோதிமிக்கநவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை என தன்னால் இயற்றப்பட்ட கவிதைகளால் தமிழுக்குப் புதிய வளம் சேர்ந்ததென கூறியுள்ளார். அது மட்டுமல்லாது சரஸ்வதி தேவி கள்ளையும் கடலமுதையும் நிகர்த்த தமிழ்க் கவி சொல்வதற்கு தனி பிள்ளைப் பருவத்திலே தனக்கு அருள் புரிந்தாள் எனக் கூறியுள்ளார். (தொடரும்)
64 /தை 2O4

Page 9
னிபஸ் நிறுத்தப்பட்டதும் பயணிகள் முண டியடித்துக் கொண் டு இறங் கினர் எல்லோரது முகங்களிலும் பசியின் கதை தெரிந்தது. வீடு போய்ச் சேரவேண்டும் என் அவசரத்தில் வந்ததால் அவர்கள் சாப்பாட்டை பற்றி அதிகம் அக்கறை கொண்டிருக்கவில்லை மூன்று நாட்களுக்கு முன்பே கொழும்பிலிருந் புறப்பட்டவனுக்கு இன்று தான் வருவதற்காக வாய்ப்புக் கிடைத்தது.
- ஓமந்தை சோதனை சாவடி கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தது. தொண்ணூறு களின் நடுப்பகுதியில் இலங்கை இராணுவ துக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த ஆரம்பித்தபின் பாதை மூடப்படுவதும் பின்ன திறக்கப்படுவதும் வழமையாகி விட்டது.
சத்தியன் கடந்த மூன்று நாட்களா. வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞ மண் டபத்தில் தங்கியிருந்தான். இன் 2 சோதனைச்சாவடி திறக்கப்படலாம் எனப் ப த தா ைக க ள ல' செய த வெளியாகியிருந்தது.
“நான் நாளைக்கு யாழ்ப் பாணம் போறன்” சத்தியன் அறையில் தன் னோடு ஒன்றாக இருக்கும் காந்தனிடம் கூறியபோது அவன் இ வ  ைன ஆ ச சா ய த தோ டு பார்த்தான்.
| " ஏ தும் முக் கிய மான அலுவலோ”
“இல்லை” “அப்படியென்றால்”
“வருச தொடக்கம் லீவுகளும் இருக்கு அதுதான் போகலாம் என்று முடிவெடுத்தன்.”
“பயணத்திலேயே உன்ரை அரைவாசி லீவுகள் போயிடும்.”
“இரண்டொரு நாள் என்றாலும் அம்மா அப்பா, தங்கச்சி அவையோட இருந்திட்டு வந்தால் மனசுக்கு ஆறதலாய் இருக்கும்”
- "எனக்கும் ஊருக்குப் போக ஆசைதான் கலண்டர் ஓடர்கள் இன்னும் முடிச்சுக் கொடு கேல்லை. விட்டுப்போட்டுப் போனால் முதலாம் வேலையை விட்டே விலத்திப் போடுவார்.”
“வீட்டுக்கு ஏதாவது குடுக்கிறதென்றா6 தந்துவிடு. நான் கொண்டு போய்க் குடுக்கிறன்.”
"அங்க காசு இல்லை. வங்கிகளிலையும் எடுக்கேலாதாம்”
சத்தியனுக்கும் அது தெரிந்திருந்தது அதனால் பலர் கடிதங்களுக்குள் பணத்தை
7l லீவநதி - 6

முருகேசு ரவீந்திரன்
3 HTC. Sg சாரா 4.
தொண்ணூறுகளின் தொடக்கம்
- 3. D. பி. 9 (
5
வைத்து அனுப்பினர். அது தெரிந்து கடிதங்கள் உடைக்கப் பட்டு பணம் எடுக்கப் பட்டது. கடிதங்களும் போய்ச் சேரவில்லை. அம்மா கடிதங்களுக்காக "குமண” கப்பலை எதிர் பார்த்திருப்பது இவனுக்குத்தெரியும்.
காந்தன் மட்டுமல்ல இன்னும் பலர் பணத்தையும் கடிதங்களையும் தந்திருந்தனர். அதிக பண ம் கொண' டு சென்றால் சந்தேகிப்பார்கள் என எண்ணினான்.
சத்தியன் காசுத்தாள்களை துணித் துண்டில் சுற்றி அரணாக்கொடியில் கோவணம் போன்று கட்டியிருந்தான். இப்படிக் கொண்டு செல்வது பாதுகாப்பானதாக இருந்தாலும் சிறுநீர் கழிப்பது சிரமமாக இருந்தது. பஸ்ஸை விட்டு எல்லோரும் அவசரமாக இறங்கினாலும் இவன் நிதானமாக இறங்கினான். பூநகரி வாடி யடிப்பக்கம் இருந்த வெளியை நோக்கி ஆண் கள் சிறுநீர் கழிக்கச் சென்றனர். பெண்களும் மறைவான இடங்களாகப் பார்த்து ஒதுங்கினர்.
சத்தியன் "டவுசரின் சிப்பை” இறங்கி
இதழ் 64 தை 2014

Page 10
சிறுநீர் கழித்தான். பணமுடிப்பு அவிழ்ந்து கீழே விழுந்து விடலாம் என்பதால் எச்சரிக்கையோடு செயற்பட்டான்.
பின்பு சாப்பாட்டுக்கடையை நோக்கிப் போனான். அவனது நடை துடுப்பாட்ட வீரனை நினைவுபடுத்துவதாக இருந்தது.
அந்த நள்ளிரவு வேளையிலும் பூநகரி வாடியடியில் உண வகங்கள் உயிர் புடன் இயங்கின. கொத்து ரொட்டி போடும் சத்தத்தை யும் மீறி “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா” என்ற ஆபாவாணனின் “ ஊமையின் விழிகள் ” திரைப்படப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்திய இராணுவம் போனபின் சிலமாதங்கள் நிம்மதியாய் இருந்த எங்கட சனங்கள் மீண்டும் துயரம் சுமப்பவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றனர். இந்தப் பயணம் எங் கொண்டு போய்ச் சேர்க்குமோ என எண்ணிக் கலங்கினான்.
உணவகங்களில் பன்றிக்கொத்து வைத்திருந்தார்கள். சத்தியனுக்கும் பன்றிக் கொத்து சாப்பிட ஆசையாக இருந்தது. ஆனால் பயணத்தின் போது இவ்வாறான உணவுகளை தவிர்ப்பது நல்லது என நினைத்தான்.
இ வ ன சாப் பாட் டு கடையின மூலையோரமாக இருந்த மேசையருகே போய் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தபோது பரிமாறுபவன் அருகே வந்து நின்றான்.
"என்ன இருக்கு”
“கொத்து ரொட்டி, பரோட்டா, புட்டு” என அவன் சொல்லிக் கொண்டு போக,
"புட்டுக் கொண் டாங்கோ”. எனச் சத்தியன் கூறினான்.
“தம்பி, புட்டுக்கு என்ன கறி கொண்டு வர”
"என்ன கறிவைச்சிருக்கிறியள்”
“பருப்பு, மீன், கணவாய், நண்டு, இறால்” என கறி வகைகளின் பெயர்களை அடுக்கியவனிடம்.
“கணவாய் கறிதாருங்கோ” என்றான்.
அரிசிமாப்புட்டும் கணவாய் கறிக் குழம்பும் அருமையாய் இருந்தது. பாசையூர் கடற் கரைக்குப் போய் கணவாய் வாங்கியிருக்கிறான். அதைவிட பூநகரி கணவாய் சுவையாய் இருந்தது. அன்று காலையிலிருந்து அவன் சரியாகச் சாப்பிடவில்லை. ஊர்போய் சோந்தால் போதும் என்ற எண்ணத்தில் உணவை மறந்திருந்தான். ஆனால் இப்போது பசி இவனை வாட்டியது.
8/ கீவநதி - இதழ்

சாப்பிடும் போது சத்தியனுக்கு தனது வீட்டாரின் ஞாபகம் வந்தது. ஊரில் ஆசிரியராக வேலை பார்க்கும் அப்பாவுக்கு சம்பளம் கிடைத் திருக்குமா. இல்லாட்டில் என்ன செய்வினம் ஆரிட்டக் கடன் வாங்குவினம். அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியமாக காசோலைகளே வழங்கப்பட்டன. அவற்றை மாற்றுவதற்காக பெரிய முதலாளிகளை நாடவேண்டியிருந்தது. அவர்கள் கூடுதல் "கமிஷன் ” பெற்றுக் கொண்டே அவற்றை மாற்றிக் கொடுத்தனர். அதுவும் நீண்ட இழுத்தடிப்புக்கு பின்பே பணத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.
சத்தியனுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்கள் கூட காசையும் கடிதங்களை யும் அவன் தங்கியிருக்கும் அறைக்கு கொண்டு வந்து தந்தனர்.
சத்தியன் வெள்ளவத்தையில் இராம கிருஷ்ண வீதியிலுள்ள டொக்டர் சுப்பிரமணியம் வீட்டில் தங்கியிருந்தான். டொக்டர் இறந்து விட்டார். அவரது மனைவியும் மகனும் அந்த வீட்டில் வசித்தனர். சுப்பிரமணியம் எனப் பெயர் இருந்தாலும் அவர்கள் கிறிஸ்தவர்களாகவே அறியப்பட்டனர். ஆனால் பெயர் மட்டும் அவரின் பிறப்பை உணர்த்தும் வகையில் நிலைத்து விட்டது.
இவனுக்கு கொழும்பு வந்தபோது இவையெல்லாம் புதுமையாகத் தெரிந்தன. டொக்டரின் இல்லம் பழைய காலத்து மெத்தை வீடாகக் காணப்பட்டது. கடற்கரையோரமாக இருந்த அந்த வீடு பல அறைகளைக் கொண்டி ருந்தது. டொக்டரின் மனைவியும் மகன் டேவிட்டும் பிரதான பகுதியில் வசித்தனர். ஏனைய அறைகளை வாடகைக்கு விட்டிருந் தனர். அது ஒரு ஆண்களின் விடுதிபோன்று இருந்தது.
| அந்த இல்லத்தில் வாடகைக்கு குடி யிருப்போர் பல ஒழுங்குவிதிகளை அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டனர். சிகரட், மதுபானம் என் பவற்றை எடுத்துவர முடியாது. மது அருந்திவிட்டு வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
அத சத்தியன் இவற்றை பாவிப் பது இல்லை. என் பதால் அது அவனுக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை.
- அங்கு பெண்கள் வருவதற்கு அனுமதி யில்லை. தங்கியிருப்பவர்களின் மனைவியாக இருந்தாலும் சகோதரிகளாக இருந்தாலும் அங்கு வரமுடியாது. அப்படியொரு இறுக்கமான
64 தை 2014

Page 11
கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
ஆண் கள் வசிக்கும் அறைகளின சுவர்களில் பெண்களின் கவர்ச்சியான படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அவை அநேகமாக சினிமா நடிகைகளின் படங்களாகவே இருக்கும் ஆனால் இங்கு எந்த அறைகளிலும் அவ்வாறான படங்கள் இல்லை.
ஆண் கள் வசிக்கும் அறைகளில் காணப்படும் ஒரு வித நெடி இங்கேயும் காண பட்டது. அது அவர்களின் வியர்வையாகவோ அணியும் ஆடைகளில் இருந்து வெளிப்படுப நாற்றமாகவோ இருக்கலாம். இவனுக்கு ஆரம்பத்தில் மணம் அருவருப்பை ஊட்டுவதாக இருந்தது. நாளடைவில் அந்த மணத்தை சகிக்க பழகிக்கொண்டான்.
சத்தியனோடு வேலை பார்க்கும் குமார் கொட்டாஞ்சேனையில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தான். இவன் அவனது அறைக்கு சில தடவைகள் போய் வந்திருக் கிறான். குமார் தனது அறையில் நடிகை ராதாவின் படத்தை மாட்டியிருந்தான். இவன் ஒருமுறை போனபோது படத்துக்கு முன்னால் ஊதுபத்தி புகைத்து கொண்டிருந்தது.
“ என்னடா ஊ துபத்தியெல் லாம் கொழுத்தி இருக்கிறாய்” எனக் கேட்டதற்கு
" எனக்கு ராதா என்றால் அப்படியொரு விருப்பம்” எனக்குமார் கூறினான்.
“அதுக்காக இப்படியா” “முதல் மரியாதை படம்பார்த்தியா” “பார்த்தன்”
"அந்தப்படத்தைப் பார்த்த பிறகு தான் ராதாவுக்கு மேலை ஆசை வந்தது”
“அப்படியென்றால் நடிகை ராதாரவப் போன்ற பெட்டையைத்தான் கலியாணம் கட்டுவாயாக்கும்”
"அப்படியொருத்தி கிடைக்க வேணும் என்றுதான் ஊதுபத்தி கொழுத்தி வாறன்”
குமாரின் அறையில் இருந்த மேசையில் திரைச் சஞ்சிகைகள் காணப்பட்டன. இவனது அறையிலுள்ள மேசையில் கணையாழி, சுப் மங்களா, மல்லிகை, அலை போன்ற சஞ்சிகை களை அடுக்கி வைத்திருந்தான். அவனது அறைக்கு வரும் பலர் அவற்றைத் தொட்டுக் கூடம் பார்ப்பதில்லை. சிலர் பக்கங்களைப் புரட்டிப் பார் த து விட்டு இதையல் லாம் எப் படி
வாசிக்கிறியோ எனக் கேட்பார்கள்.
சத்தியனுக்கு அந்த திரைச் சித்திரா சஞ்சிகைகளில் சிலவற்றை எடுத்துப்போக
9/ கீவநதி - 6

வேண்டும் போல் ஆசையாக இருந்தது. வீட்டுக் காரனான டேவிட்டின் கண் களில் இந்த சஞ்சிகைகள் தென் படுமானால் வீட்டை விட்டே கலைத்து விடுவான். கலைத்தாலும் பரவாயில்லை அறைகளில் உள்ளவர்களை யெல்லாம் கூப்பிட்டு மானத்தை வாங்கி விடுவான். இப்படி நினைத்தவன் அந்த சஞ்சிகைகளை எடுத்து வரும் எண்ணத்தைக் கைவிட்டான்.
இவன் கொழும்புக்கு வருவதற்கு முன்பே காந்தன் வந்துவிட்டான். எண்பத்து ஏழின் இறுதியில் அவன் யாழ்ப்பாணத்தை விட்டு வந்ததாக சத்தியனிடம் கூறியிருந்தான். இந்திய அமைதிப்படை இங்கு வந்தபோது சமாதான ம் வ ந் து விட் ட தாகத் தான எல்லோரும் நினைத்தனர்.
காந்தன் வேலை பார்த்த அச்சகம் இந்திய அமைதிப் படையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அச்சு இயந்திரப் பகுதியில் வேலை பார்த்த காந்தன் அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அங்கே இருக்க விரும்பவில்லை. கொழும்பு வந்து ஆட்டுப் பட்டித் தெருவிலுள்ள அச்சகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான்.
சத்தியன் கிராண்ட் பாஸிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றில் லிகிதராக வேலை பார்த்தான். இவனும் யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற சுற்றிவளைப்புக்கள் குண்டுத் தாக்குதல் கள் என்பவற்றுக்கு பயந்தே கொழும்புக்கு
வந்தான்.
உயர்தரம் சித்தியடைந்த சத்தியனுக்கு ஊரில் வேலை கிடைக்கவில்லை. அடிக்கடி ஊரடங்குச்சட்டமும் சற்றிவளைப்பும் இருந்த பிரதேசத்தில் எந்த நிறுவனங்களும் சீராக இயங்கக் கூடிய சூழல் காணப்படவில்லை. பெற்றோருக்கு இவனை வீட்டில் வைத்திருப்பது நெருப்பைக் கட்டிமடியில் வைத்திருப்பது போல் இருந்திருக்க வேண்டும்.
கொழும்பு வந்தவன் பம்பலப்பிட்டியி லுள்ள உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தான். பத்திரிகையில் வெளியான விளம்பரங்களை பார்த்து வேலைக்கு விண்ணப் பித்தான். அப்படி விண்ணப்பித்துதான் இந்த வேலை கிடைத்தது.
சத்தியன் வேலை செய்த நிறுவனம் வெளிநாடுகளுக்கு இறப் பர் தகடுகளை ஏற்றுமதி செய்தது. ஆரம்பத்தில் இவனுக்கு அங்கே வேலை செய்யப் பிடிக்கவில்லை.
இதழ் 64 இதை 2014

Page 12
சரிவர காயாத இறப்பர் தகடுகளின் மணம் வயிற்றைக் குமட்டுவதாக இருந்தது. ஆனால் கொஞ்சக் காலத்தில் எல்லாம் பழகிப்போய் விட்டது.
சத்தியன் ஆயிரத்து தொள்ளாயிரத்து எணர் பத்தொனி பதாம் ஆணர்டு மே மாதம் கொழும்பு வந்தான். இப்போ ஒருவருடமும் ஆறு மாதங்களும் முடிந்திருந்தன. இவன் ஒரு போதும் இவ்வளவு நாட்கள் வீட்டாரை விட்டுப் பிரிந் திருக்கவில்லை. அம்மா எழுதும் கடிதங்களில் "சாப்பாட்டைக் கவனித்துச் சாப்பிடு” என்ற வாசகங்களைக் காணமுடியும்.
தங்கச்சி சியாமளா இந்த ஆணர்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கப்போகிறாள். அவளுக்கு “மஸ்கட்” என்றால் மிகவும் பிடிக்கும். வெள்ள வத்தையிலுள்ள இனிப்புக்கடையில் “மஸ்கட்", "தொதல்" என்பவற்றை வாங்கியிருந்தான். எல்லோருக்கும் உடுப்புக்களும் இன்னும் பல பொருட்களும் வாங்கியிருந்தானர். பயணப் பைகள் கனமாக இருந்தபோதும் அவனர் கைகளுக்கு அவற்றின் கனம் தெரியவில்லை.
சங்குபிட்டி பாலத்தை கடக்கும் போது கவனத் தேவை. கடல் நீரில் பொருட்கள் நனையாமல் பார்க்க வேணர்டும். இடுப்புக்கு மேலே பயணப்பைகளை தூக்கிவைத்திருந்தால் நல்லது என நினைத்தான்.
சாப்பிடப்போனவர்கள் மீணர்டும் வந்த பஸ்ஸில ஏறி விட்டார்கள். ந ட த துனா பயணரிகளின எணர்ணிக்கையை சரிபார்த்த பினர் அந்த மினிபஸ் சங்குபிட்டி நோக்கிப் புறப்பட்டது. ஆணை யிறவு இராணுவ முகாம் LJ 4535 LDIT 35 G) 6) 67f7g 3.157 9567 தெரிந்தன.
"ஆமிக காரங் களி “பராலைற்” அடிக்கிறாங்கள்" எனப் பயணிகளில் ஒருவர் கூறினார். அந்த வார்த்தை களைக் கேட்ட எல்லோரது மனங்களிலும் பயம் ஊடுருவியது. அமைதியான அந்த இராப்பொழுதும் முகத்தில் வந்து மோதிய கடற் காற்றும் அச ச த தை இன னும் அதிகப்படுத்துவதாக இருந்தது.
முற்றுப்பெறாத சங்குப்பிட்டி பாலத்தின் முடிவிலி மினிபஸ் நினர்றதும் பயணிகள் எல்லோரும் முணர்டியடித்துக் கொணர்டு இறங் கினர். வேறுசில பஸ்களும் அங்கு பயணிகளை
o/ ஜீவநதி - இத
 
 
 

கொணர்டு வந்து இறக்கிக் கொணர்டிருந்தன. இதனால் துறையடியில் சன நடமாட்டம் அதிகமாக இருந்தது.
படகில ஏறுவதற்கான பயணச் சீட்டைப் பெற சனங்கள் நெருக்குப்பட்டனர். எல்லோருக்கும் அவசரம், வீடுபொய்ச் சேர வேண்டும் என்ற ஆவல். அவன் நினைத்தை விடவும் பயணம் இன்னும் கஷ்டமானதாக இருந்தது.
சத்தியனர் கொழும்பு வரும்போது ஆனையிறவு பாதை ஊடாக போக்குவரத்து இடம் பெற்றது. இந்திய அமைதிப்படை யாழ்.குடா நாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் இடம்பெற்றாலும் சேவை நடைபெற்றது. இவற்றை செய்வதன் மூலம் சிவில் நிர்வாகம் தமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை இந்திய அமைதிப்படை வெளியுலகிற்கு காட்ட முனைந்திருக்கலாம் என இவன் எணர்ணினான்.
படகு கேரதீவு கரை நோக்கி நகர்ந்து கொணர்டிருந்தது. படகை கரையோடு அணைப் பதற்கு முனர்பாகவே பலர் பாய்ந்தோடினர். இவனர் அவசரப்படாமல இறங்கினானர். சத்தியனின் முழுக்கவனமும் பயணப்பைகள் மீதேயிருந்தது. அவை கடல்நீரில் நனைந்து போக க கூடாது என பதறி காக தலையிலும் தோளிலும் அவற்றை
சுமந்து கொணர்டு இறங்கினான்.
மீணர்டும் கேரதீவிலிருந்து பஸ் பணத தை தொடர்ந்தது. நேரம் இப்போ பின்னிரவைத் தொட்டது. பனி மூட்டம் மெல லிய ஆடை போல L GOD GOT LO U El 35 60) at Ll போர்த்தியிருக்க, வானத்து நிலவின் மங்கலான ஒளியில் அந்தப் பிரதேசம் கணர்ணயர்ந் திருந்தது.
பன ந தோப புக களு ம வெறுமை மிஞ சிய வயலி வெளிகளும் பினர் னோக்கி நகர, வீதியில விரைந்து கொணர்டிருந்த பஸ் வேகத்தைக் குறைத்து மெதுவாகச் சென்றது.
தேவாலயத்தைக் கடந்து முத்திரைச் சந்தியை அடைந்தபோது பயணிகள் முணர்டி யடித்துக் கொணர்டு இறங்க ஆரம்பித்து விட்டார்கள். மெய்மறந்த நிலையில் சிலர்
64/தை 204

Page 13
அயர்ந்து பஸ் ஆசனங்களில் தூங்கி வழிந்தன! ஆபத்தான கட்டங்களை இடைநடுவில் தாண். பிறந்த மண்ணை முத்தமிட்ட மகிழ்ச்சி அவர்க வதனங்களில் காணப்பட்டது. நான்கு தின களுக்கு முன்பு கோட்டை ரயில் நிலையத், லிருந்து தொடங்கப்பட்ட பயணம் இப்போது ஒருவாறு முற்றுப் பெறுகிறது.
பயணிகளில் ஒருவனாக சத்தியனு இறங்குகிறான். பஸ்ஸின் கூரையிலிருந்து பயணப்பொதிகளை எடுப்பதற்குள்ளாகவே,
“ அண் ணை, இங்க வாங் கோ” "அண்ணை, எங்க போறியள்”.
“இஞ்ச என்னட்ட பாக்கை தாங்கோ இப்படிப் பல குரல்கள் ஒருசேர ஒலித்தன எல்லோரும் சைக்கிள்காரர்கள். வாடகைக்கா.
ஆட்களை ஏற்றிச்செல்பவர்கள்.
தொண ணுாறின் நடுப் பகுதியில் பிரச்சினைகள் தொடங்கியபின் இவர்களில வாழ்க்கையே முற்றிலும் மாறிப்போய் விட்டது யாழ்.குடா நாட்டில் வாழும் எல்லோரது நிலையும் இப்படியே.
“திருநெல்வேலிக்குப் போக வேணும் எவ்வளவு எடுப்பியள்”
"இருபத்தைஞ்சு ரூபா தாங் கே அண்ணை.”
சத்தியன் சம்மதித்து தலையசைத் தான். அந்தப் பின்னிரவு வேளையிலும் முத்திரைச் சந்தியில் பலகாரக் கடைகள் திறந்தேயிருந்தன. அவை கொழும்பு பயண களை கருத்தில் கொண்டு இயங்கின.
" அணணை, தேத்தண்ணி ஏதுப் குடிக்கிற தென்றால் குடிச்சிட்டு வாங்கோ” சைக்கிள்காரப் பெடியன்தான் சொன்னான்.
சத்தியன் பூநகரியல் வடிவாச் சாப்பிட்ட ருந்தான். உடனே வீடுபோய்ச்சேர வேண்டும் என எண்ணியவன், பொடியனைப் பார்க்கிறான் முகத்திலே உழைப்பின் களைப்பு. உறக்கத்தை மறந்த விழிகள். இன்று இரவு எங்கெல்லாப் பயணிகளை ஏற்றி இறக்கியிருப்பானோ ஏராள் மான சைக்கிள்காரர்கள் நிற்பதால் யாரும் இவனை அணுகாமலும் இருந்திருக்கலாம் அப்படியென்றால் இந்தப்பொடியன் நித்திரையே கொள் ளாமல் பயணிகளை எதிர் பார்த திருப்பானோ.
சத்தியனுக்கு அவனைப் பார்க்கட பாவமாக இருந்தது. மிஞ்சிப் போனால் பதினெட்டு வயது தான் இருக்கும். படித்துக் கொண்டிருப்பானோ அல்லது இடைநடுவில
w/ கீவநதி - 6

ரூ 2, 3.4கா.77
உடம்
ப.
j
குடும்பக் கஷ்டம் காரணமாக படிப்பை கைவிட்டி ருப்பானோ. கல்வியில் சிறந்தோங்கியிருந்த எங்கட சனங்களை இன்றைக்கு கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டுதுகள்.
- இந்தப் பொடியனைப்போல் இன்னும் எத்தனையோ பேர். இவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள். பிரச்சினைகள் மனிதர் களின் வாழ்நிலையை எந்தளவுக்கு மாற்றி விட்டது. என் பதை இங்கே அவனால் அவதானிக்க முடிந்தது. பெற்றோல் இல்லை. டீசல் கிடையாது. மண்ணெண்ணையிலேயே வாக்னங்கள் ஓடுகின்றன. மண்ணெண்ணையும் இங்கு அரிதானதுதான். இந்தப் பொடியன் கூட ஒழுங்காக சாப்பிட்டு எத்தனை நாட்கள்
ஆகின்றதோ. இப்படி நினைத்தவன்.
- " தம் பி வாரும் , தேத் தண ண குடிச்சிட்டுப் போவோம்”
“இல்லை அண்ணை நீங்க குடிச்சிட்டு வாங்கோ”
“பரவாயில்லை நீரும் வாரும்”
தட்டிலே கொண்டு வந்து வைத்த வடைகளையும் வாய்ப்பன்களையும் சாப்பிட்டு தேநீரும் குடித்தார்கள்.
கருக் கொண் டிருந்த முகில் கள் வானத்தில் திரண்டிருந்தாலும் மழையை இன்னும் பிரசவிக்கவில்லை. ஜனவரி மாதத்து பின்னிரவில் சத்தியனையும் ஏற்றிக் கொண்டு அந்தச் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. பனிப்புகாரை ஊடறுத்து சைக்கிள் செல்கையில் உடலெல்லாம் சில்லிட்டது.)
- “யாழ்ப்பாணப் பிரயாணம் சரியான கஷ்டமாம். யோசித்து முடிவு செய்யும்”.
இவன் வேலை பார்க்கும் அலுவலக முகாமையாளர் சொன்ன போது புன்முறுவல் ஒன்றையே பதிலாகப் பகன்றான். தற்போதைய நிலையில் ஊருக்குப் போவது சிரமமான காரியந்தான். ஆனால் தொடர்ந்து சொந்தங் களை விட்டு இருப்பது சத்தியனைப் பொறுத்த வரை முடியாத காரியம். எப்படியும் பொங்கலுக்கு ஊருக்குப் போவது என்று முடிவெடுத்து வந்து
விட்டான்.
முன்பெல்லாம் பெங்கல் என்றால் இரண்டு கிழமைக்கு முன்னரே பண்டிகையைக் கொண்டாட ஊரோ தயாராகி விடும். பட்டாசு சத்தங்கள் வானைப் பிளக்கும். இப்போ பய பீதியை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கும் குண்டுச் சத்தங்கள் தான் கேட்கின்றன.
முன்பு சந்தியில் கடை வைத்திருந்த
இதழ் 64 தை 2014

Page 14
நடராசா பொங்கல் காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பார். பச்சை அரிசியில் இருந்து பட்டாசு, மட்பானை, அகப்பை ஈறாக எல்லாமே அவர் கடையில் வாங்க முடியும், அம்மா பொங்கலுக்கு முதல் நாள் பிற்பகலே முற்றத்தைக் கூட்டி ஒப்புரவாக்கி வைத்து விடுவா. ஒப்புரவாக்கிய நிலத்தில் சாணியால் மெழுகி கோலம் இடுவதும் அவவின் வேலைதானர். சத்தியனர் தங்கச்சி சியாமளாவுடன் சேர்ந்து தென்னங் குருத்து எடுத்து வந்து தோரணம் செய்வானர் பொங்கல் பானை வைக கும் இடத தை ச சுற்றி தோரணங்களால் சோடனை செய்வது அவன் வேலையாக இருக்கும்.
பணி டிகைக் காலத்தில் திருநெல வேலிச் சந்தை சனக் கூட்டத்தால் நிரம்பி வழியும். வாழைக்குலைகளும் செவ்விளநீர்க் கு ைலகளும் கரும் புக கட்டு க களும் நிறைந்திருக்கும்.
இந்து வாலிபர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்படும் மரதன் ஒட்டப் போட்டிகளும் சைக்கிள் ஓட்டப் போட்டிகளும் பொங்கல பணர்டிகைகளுக்கு மெருகூட்டும்.
அந்தத் தெருவிலி யாரெலி லாம் பொங்கவிலலை எனறு பார்த்து வந்து அம்மாவிடம் செல்வானர். அவர்களுக்கெல்லாம் பொங்கலும் பலகாரங்களும் கொடுத்துவிட்டு வருவான்.
பழைய சம்பவங் கள எல லாம் சததியனுக்கு மனத் திரையில விரிந்து மறைகிறது. வீடு நெருங்கி விட்டது. சைக்கிளை விட்டு இறங்குகிறான நுாறு ரூபாவை சைக்கிள்காரப்பையனிடம்நீட்டுகிறான்.
"நீங்கள் கூடத்தாறியள்" "பரவாயில்லை வைச்சுக் கொள்ளும்” "அணிணை தேத்தணினி, வடை எலி லாம் வாங்கித் தந்தியள் இப்ப இது G36.J6007LTLö.”
சத தரியன ஆதரவாக அநீதப் பொடியனினர் கையைப் பற்றினான். காய்த்து சொரசொரப்பாகிப் போயிருந்த அவனினர் உள்ளங்கை இவனி இதயத்தை கனக்க வைத்தது.
"அணர்ணை தாறன் வேணர்டாம் என்று சொல்லாதையும்"
எனக் கூறிய சதிதரியன , நுாறு ரூபாத்தாளை அவனர் உள்ளங்கைக்குள் வைத்தான். O
டீ வீவநதி - இதழ்
 

நீ உலர்த்திய பின்னும் மீதமிருக்கிறேன்
எனது சிறகுகளில் ஒளிந்திருக்கும் கைகளில் o
உனக்கான புன்னகையை
影
இன்னும்நீ காணவில்லை
உனது கூரான சொணர்டில் துடித்துக் கொணர்டிருக்கும் கோபத்திற்கு எனது சிறகுகளைத் தருகிறேன் கொத்திக் கொள்
உனது சிறகுகளில் முகம் தொலைத்து எண் முன்னால் நீயிருப்பதை வெறுக்கிறேன்
துளிக்கால்கள் என்று பாரதி சொன்ன கால்கள் இப்போது நீண்டுவிட்டன
உனது கால்களில் மிதிக்கப்பட்டுக் கொணர்டிருக்கும் இறகுகள் யாருடையவை? பூனை உன்னைப் பார்த்து மீசையால் சிரிப்பதைக் கண்டு அஞ்சுகின்றேன் எனது இறகுகளும் உன் காலடியில் இருக்குமோ என்று.
- த.அஜந்தகுமார்
64/தை 204

Page 15
மிழ்த்திரைப்பட பாடலாசிரியர்களி 1927 இல் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வகுப்புவரைதான் கற்றார். எனினும் தமிழிலக் படித்து "கணர்ணதாசனி” என்ற புனைபெயரில் க என்ற படத்திற்கு "கலங்காதிருமணமே என்ற பா காலத்தால் அழியாத சொல்லோவியங்களாகட் கொணர்டிருக்கிறார்.
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று கவித்துவ கர்வத்தோடு அறிவு பாடல்களே கணர்ணதாசனின் தனிப்பெரும் காணப்படுகின்றன. திரைப்படப்பாடல் களில் தத்துவ முத்துக்களைக் கொட்டியவர் எவருமில்
"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை இதயத்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்
தமிழ் திரைப்படப் பாடலாசிரி
என்று பாமர மக்களும் புரிந்து கொ: வாழ்வின் தத்துவத்தை அழகாக வெளிப்படுத்தி
தமிழிலக்கியங்களை இலகுபடுத்தி களில் புகுத்தி வெற்றிகணர்டார். தன் சொந்தக் எடுத்தாணர்டு "கவியரசு" பட்டத்தினை தட்டிச்செ "அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் 6 மெத்திய மாதரும் வீதிமட்டேவிம்மி விம்மிஇ கைத்தல மேல் வைத்தழும் மைந்தரும் சுடுக பற்றித் தொடருமிருவினைப் புண்ணிய பாவ என்று பட்டினத்தடிகள் பாடிய பாடலை சேர்ப்பித்தார்.
"வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ" (ப தமிழிலக்கியங்களில் புதைந்த காத6 யுள்ளார். வெண்பாவில் காதலை புகழேந்திப் பு திரைப்படப்பாடலிலே எடுத்தாணர்டார்.
மங்கை ஒருத்திமலர் கொய்வாள் வாள்முகத் பங்கயமென்று எண்ணிப்படிவண்டை செங் காத்தாள் அக்கைம்மலரைக் காந்தளெனப்பா வேர்தாளைக் காண் என்றான் வேந்து என்ற செய்யுளை
"பொன்வண்டொன்று மலரென்றுமுகத்தோடு நான் வளை கொஞ்சும் கையாலே மெதுவாக என் கருங்கூந்தல் விரைந்தோடிமேகங்களா நான் விரைந்தோடி வந்தேன் உன்னிடம்
3/ வீவநதி -
 

மா.செல்வதாஸ் =
ல் கணர்ணதாசன் “லெஜணர்ட்"டாக அமைந்துள்ளார். சிறுகூடற்பட்டியில் பிறந்த “முத்தையா” எட்டாம் கியங்கள் மேல் கொணர்ட் காதலால் அவற்றினைப் விதைகளை எழுதினார். 1948 இல் “கணினியின் காதலி" டலை எழுதி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பல பாடல்களைத் தந்து மக்கள் மனங்களில் வாழ்ந்து
பித்த மகத்தான கவிஞனாக விளங்குகிறார். தத்துவப்
) 9/60)L(LJITGITLDIT35 இவர் அளவிற்கு
6ᏡᎠᎶu) .
வந்ததடா
ததடா"
ள்ளும் வகையிலே گر பிருக்கிறார். திரைப்படப்பாடல் கற்பனை போலவே ஈன்றார்.
பொழுக ܓ-ܓܡܝܬ ருே ாடு மட்டே
3LD"
அனைத்துத் தமிழ் மக்களின் சிந்தனைக்கும் சென்று
டம்-பாத காணிக்கை) ல் காட்சிகளை இலகுபடுத்தி திரைப்படப்பாடலாக்கி லவன் அழகுறப் பதிவு செய்திருப்பதைக் கற்று வாயூறி
ങ്ങg)
505ung) ய்தலுமே
மோத
இதழ் 64 'தை 204

Page 16
உண்மைகூற" என்று அழகான காதல் காட்சியாக பாடலிலே விரித்துச் செல்கிறார்.
உருதுக்கவிஞர் மிர்ஸா அலிஃகாலி அவர்களின் கவிதையொன்றை கணர்ணதாசன் திரையிசைப்பாடலுாடாகத் தமிழுக்கு கொணர்டு வந்துள்ளார்.
"அவளை நான் திருடிக் கொண்டேன் முதல் திருட்டு என்பதால் முழுதாய் திருடவில்லை” எனினும் அக் கவிதையினை "ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி பாடலில்
"அவன்தான் திருடன் என நினைத்தேன் அவனை நானே திருடிக் கொண்டேன் முதல்முறை திருடும் காரணத்தால் முழுதாய் திருட மறந்துவிட்டேன்." என்று திரைப்படப்பாடலிலே கையாணர்டுள்ளார். திருட்டை பற்றிய உருதுக் கவிதையினை "உணர்னுடனர்" திரைப்படத்தில் வைரமுத்து, "கணர்டுபிடி அவனைக் கணர்டுபிடி" பாடலில்
"முதல் முதல் திருடியதால் என்னை முழுதாய் திருடவில்லை" என்றும்
"சாமி” திரைப்படத்தில் நா.முத்துக் குமார் "அய்யய்யோபுடிச்சிருக்கு" பாடலில்,
"புதிதாய்திருடும்திருடி எனக்கு முழுதாயப் திருடத்தானி தெரியல” என்றும் திருடியிருப்பது (அல்லது பாமர மக்களுக் காக இலகுபடுத்தியிருப்பது) குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்திற்கான சூழ்நிலைப் பாடல் களில் சில கணர்ணதாசனின் சொந்த வாழ் வோடும் பொருந்திப் போகினர்றன. "ஒரு கோப்பையிலே எண் குடியிருப்பு", "ஐம்பதிலும் ஆசை வரும்” போன்ற சில பாடல்கள் உதாரணங் களாகும். தனது பாடலின் முதல் வரியிலேயே இரசிகனினி மனதைச் சுணர்டியிழுப்பதில வல்லவர்.
"பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஒருயிரே"
(படம்-ஆலயமணி) நலந்தானா?நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?
(LILLb-தில்லானா மோகனாம்பாள்) “பாசமலர்" திரைப்படத்தில் அணர்ணன் தங்கை பாசத்தை மிக அற்புதமான பாடல் வரிகளுடாகப் பதிவுசெய்துள்ளார்.
"மலர்ந்தும் மலராத பாதிமலர் போல வளரும் விழிவண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக
4/ஜீவநதி - இதழ்

விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே" தாய் தந்தை உறவு என்பது கிடைத்தற் கரிய மாபெரும் சொத்தாயினும் பிள்ளைகள் பலர் அதனை மறந்து வாழ்கிறார்கள். அவ்வாறு பெற்றோரை மறந்து வாழும் பிள்ளைகளுக்கு 1 ܝ சமர்ப்பணமாக "வியட்நாம் வீடு” திரைப்படத்தில் கலமனதையும் கரையச் செய்யும் தன்மை கொணர்ட பாடலொன்றைப் புனைந்துள்ளார். பாரதியாரினர் வரிகளோடு ஆரம்பிக்கும் அப்பாடலில், தொடரும் வரிகளில் பாரதியாரின் கவித்துவத்தை சற்று நெருங்கும் வகையிலான ஆளுமையை கணிணதாசன் வெளிப்படுத்தி யுள்ளமை பாராட்டுக்கு உரியது.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி. ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன வேரென நீயிருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன் பேருக்கு பிள்ளையுண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு என் தேவையை யாரறிவார்-உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும். கல்லூரி வாழ்வினர் பிரிவுநிலையை என்றெனர்றும் நெஞ்சிலிருக்கும் வணர்ணம் பசுமை நிறைந்த நினைவுகளாகத் தனது பாடலில் பதிவுசெய்துள்ளார்.
"பசுமை நிறைந்தநினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே பழகிக்களித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்"
(படம்-இரத்ததிலகம்) காதல் தோல்வி பாடல்களில் கணிண தாசன் தனிமுத்திரை பதித்துள்ளார். உணர்வு களின் தானத்திற்கு மிருதங்கம் வாசிக்கும் வகையிலான பல பாடல்களை எழுதியுள்ளார். அப்பாடல்கள் அவரை புகழினி உச்சிக்கு நகர்த்தியுள்ளன.
"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாத?"
(படம்-ஆனந்தஜோதி) "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை.
(படம்-குலமகள் ராதை) வாலி எழுதிய பாடல்கள் எம்.ஜி.ஆரின் அரசியற்தளத்தை உறுதிப்படுத்தியதைப்போல,
64 soa5 2014

Page 17
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் சிவா கணேசனின் அகன்ற வீச்சு நடிப்பிற்கு துை செய்தன. சிலேடை, பின்வருநிலை, மட போன்ற சொல்லணிகளை கண்ண தாச நுட்பமாகக் கையாள்வதில் வல்லமை பெ ருந்தார். "என்ன பார்வை உந்தன் பார்வை இல் மெலிந்தால்(ள்) இந்தப் பாவை” என்ற பாடல் இடை மெலிந்தால் என பதை "பார்ை என்பதிலுள்ள “ர்” இல்லாது போனால் பால் என்றும் பொருள் கொள்ளும் வகையில் கையாண் டுள்ளார். அந்தாதிப் பாங்கிப் திரையிசைப் பாடலை எழுதிய பெரும் கண்ணதாசன் ஒருவருக்கே உண்டு!
“வசந்த கால நதிகளிலேவைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின்
தகவல்
ஆரம்ப முந்நத அமைப்பினுகுள்ளாகி அணுகி அறிவை வளர்த்துமே நின்றன! நேரம் தவறாத செயற்பாடு யாவும் நெறிமுறை பேணியுயர்ந்தது பாரீர்! காலம் கழிய அவ்வமைப்புகளெல்லாம் கணக்கில் பல வழி பிரிந்துமே நின்றன
ஆழம் குறைந்த போதிலுமவைகள் அகன்று விரிந்து பரந்து நிறைந்தன! வேகமதிகம் விளைவுகள் குறைவு வேட்கை புதிது விடிவுதானில்லை! யூகமேயில்லாத உணர்வு செறிந்து உலவுதல்தான் உண்மை நிலைமை! கண்டு பிடிப்புகள் கணக்கிலதிகம் கண்டகருவிகள் தொகையிலதிகம் நின்று கணக்கிடும் அமைப்புகள் நோக்கின் நிலைத்து அறிவினை வளர்த்திடவில்லை!
வாழ்ந்திடும் காலத்து வல்லமை யாவும் வரலாறு கூறிடும் அழிந்திடவியலா சூழ்ந்து கணக்கிட முனைகிற போது சூழ்ச்சியில் வீழ்ச்சிதான் துணை எது கூறு? அன்று நின்ற நிலை சிறிதாகினும் அறிவை வளர்க்கும் அணுவெனப்பட்டது! இன்று விரிவாய் நிலை பெரிதாகினும் இனிமையே யில்லா வெட்டவெளிதான்!
- கவிஞர்.ஏ.இக்பால்
15/ கீவநதி -

ஜி ண
க்கு
ன்
ற்றி டை
ல்
வ” வெ லே
நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள் கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்”
(படம் - மூன்று முடிச்சு) இவ் வாறான இனிமை மிகுந்த எளிமை கொண்ட காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்கள் பல தந்த கவியரசர் கண்ணதாசன் 1981 ஒக்ரோபர் 17ம் திகதி இவ்வுலக வாழ்வினை நீத்தார். இன்றுள்ள பாடலாசிரியர்களின் அளவு கோலாக அவரின் பாடல்களே அமைந் துள்ளன. தமிழுலகம் உள்ளவரை அவரின் புகழ்தரணியில் நிலைத்திருக்கும்.
ல மெ
4
பறவைகளால் ஆன உலகு
புதிய பதுங்குகுழிகளுக்குள் ஒளிந்திருக்கிறது காலம் ஒற்றைத்துவாரத்தின் ஊடாக பல பறவைகள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன புதியவானம் பல புதிய பறவைகளால் நிறைந்திருக்கிறது. நிலத்தில் பரவிக்கிடக்கும் இறகுகள் கூட்டப்படுகிறது, கொளுத்தப்படுகிறது. பறவைகளின் எச்சங்களால் ஆனது உலகு கிளைகள் தறிக்கப்பட்டு
கூடுகள் அகற்றப்பட்டது தெரியாமல் பறவைகள் இன்னும் பறந்தபடியே இருக்கின்றன
- கு.றஜீபன்
இதழ் 64 தை 2014

Page 18
Charles Bukowski சார்ல்ஸ் புகோவ்ஸ்கி
Charles Bukowski சார்ல்ஸ் புகோவ்ஸ்கி ஆகஸ்ட் 16, 1920 இல் ஜேர்மனியில் பிறந்த அமெரிக்கக் கவிஞராவார். மட்டுமன்றி, ஒரு சிறந்த நாவலாசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். பெற்றோர் ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவர்கள். ஆயிரக்கணக்கான கவிதைகள், பலநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள் என அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவரது சொந்த நகரமாகிய லொஸ் ஏன்ஜல்ஸின் சமூக, கலாசார, பொருளாதாரச் சூழ்நிலைகளே பெரும்பாலான அவரது எழுத்துகளுக்குக் கரு தந்தன. சாதாரண அடிமட்ட ஏழை அமெரிக்க மக்களின் வாழ்வுநிலை பற்றிக் குரலெழுப்பியதில் 'laurate of American lowlife' “கீழ்மட்ட அமெரிக்க மக்களின் ஆஸ்தான கவி" என அவரை டைம் சஞ்சிகை வர்ணித்தது. 'Hum on Rye' அவரது சுயசரிதையாகும். தாயாரின் பிடிவாத குணம், தந்தையின் பழி சொல்லித் தூற்றும் இயல்பு இரண்டுமே சிறு வயது புகோவ்ஸ் கியை நிறைய பாதித்தன. மட்டுமன்றி, பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் அவரை அவரது ஜேர்மன் பரம்பரையைச் சொல்லியும், தாயார் அவருக்கு அணிவித்து விட்டிருந்த ஒழுங்கற்ற ஆடைகள் குறித்தும் தூற்றத் தொடங்கிய தில் வெட்க சுபாவமும், சமூகத்தை விட்டு ஒதுங்கி யிருக்கும் தன்மையும் வந்து ஒட்டிக் கொண்டன அவரை. 6-11 வயதுகளில் தந்தையால் வாரத்துக்கு கிட்டத்தட்ட மூன்று, நான்கு தடவைகளேனும் வார்பட்டியால் தாக்கப்பட்டதை நினைவு கூறும் புகோவ்ஸ்கி “இவ்வாறு மன ஆழத்தே புதைத்து வைத்த வேதனைகளைப் புரிந்து கொண்டமையே பின்னாளில் தன் எழுத்துக்கு அதிகம் உதவிற்று" எனக் குறிப்பிடுகிறார். நண்பர் ஒருவர் குடியைப் பழக்கினார். ஆதலினால் சிறுவயதிலிருந்தே அந்தப் பழக்கமும் சேர்ந்து கொண்டது. "அல்கஹோல் மிக நீண்ட காலத்துக்கு எனக்கு உதவ முடியும் என நம்ப ஆரம்பித்தேன்" என்கிறார் புகோவ்ஸ்கி, லொஸ் ஏன்ஜல்ஸ் உயர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, பின் கலை, இலக்கியம் மற்றும் பத்திரிகைத் துறை
16 கீவநதி - இத

என்பவற்றையும் கற்றுத் தேர்ந்தார். நியுயோர்க் சென்று எழுத்தையே தொழிலாகவும் கொண்டார். இரண் டாம் உலகப் போர் நடை பெற்றுக் கொண்டிருக்கையில், 1944 ஜூலை 22ம் திகதி ஏதோ ஒரு சந்தேகத்தின் பெயரில் எஃப்.பீ.ஐ. கைது செய்ய, சிறையடைக்கப்பட்டு பதினேழு நாட்களின் பின்னர் விடுதலையாகி வந்து இருபத்தி நான்காம் வயதில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். ஒரு ஊறுகாய்த் தொழிற்சாலையில் சிறிதுகாலம் வேலை செய்தார். லொஸ் ஏன்ஜல்ஸ் நகர வீதிகளில் வெறுமனே அலைந்து திரிந்தார். மலிவான பொருத்தமற்ற அறைகளில் அவர் தங்கினார். பின் தபால் திணைக்களத்தில் சேர்ந்தார். 1957இல் அல்சர் நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டார். கவிதையும் எழுத ஆரம்பித்தார். டெக்காஸ் பிரதேச பார்வையற்ற கவிஞையான பார்பராவைக் கரம் பிடித்து, இரண்டு ஆண்டுகளில் விவாகரத்தும் செய்து கொண்டார். மறுபடியும் குடிக்கத் தொடங்கினார். எழுத்தும் தொடர்ந்தது. 1963இல் 'It catches my heart in its hand' ஐ எழுதினார். 'Crucifix' 1965 இல் எழுதப்பட்டது. 49ம் வயதில் தபால் திணைக்கள வேலையை விட்டு நீங்கி வந்து முதல் நாவலான 'Post Office' ஐ எழுதினார்.
பல காதல் தொடர்புகள். கவிஞையும் சிற்பியுமான லிண்டா அதில் ஒருவர். வானொலி ஒலிப்ரப்புச் சேவையில் பணியாற்றிய 23 வயதான ஒரு பெண் தோழிக்காக அவரது 'Scarlet' (1976) சமர்ப் பிக்கப்பட்டது. டானியா என்கிற தோழிக்காக எழுதப் பட்டது 'Blowing My Hero', 'Woman' மற்றும் 'Holly Wood' நாவல்களில் வருகின்ற சாரா பாத்திரம் லிண்டா h என்கிற ஒரு உணவகத் தொழிலதிபர், நடிகையும் கூட என்பவரைப் பற்றியதாக அமைவதாம். இறுதி நாவல் 'Pulp', இரத்தப் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டதில் தன் 73ம் வயதில் இறந்தார்.
64 தை 204

Page 19
நம்மிடம் இருந்தன தங்க மீன்கள். சித்திரம் தீட்டிய யன்னலை மூடிய அந்தப் பாரமான திரைச்சீலையை ஒட்டிப் போடப்பட்டிருந்தவோர் மேசை மீதிருந்த ஒரு தொட்டியில் அவை சுற்றிச் சுற்றி வந்தன வட்டமிட்டு வட்டமிட்டு. என் அம்மா எப்போதும் புன்னகைத்தபடி, போலவே நாமும் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென விரும்பியவளாய் எனைப் பார்த்துச் சொன்னாள், “சந்தோஷமாய் இரு ஹென்றி!" அவள் சரிதான் ஒருவகையில். உன்னால் முடிந்தால் நீ சந்தோஷமாயிருத்தல் நல்லதுதான்.
ஆயினும், தொடர்ச்சியாய் ஒரு வாரத்தில்
பல தடவைகள் என் தந்தை என்னையும் என் அம்மாவையும் ஆறடியும் இரு விளிம்புமாய் நீண்டிருந்த அவரது பழஞ்சட்டையினதருகே இழுத்தெடுத்து அடித்தார், அவருக்குள் இருந்து கொண்டே அவரைத் தாக்குவது எது எனப் புரிந்து கொள்ள முடியா இயலாமையின் காரணமாக.
ஞாபகமுட்டத்தக்கதோர் புன்னகை
என் அம்மா, பரிதாப் மீன் வாரத்துக்கு இரு முறையோ மூன்றோ அவரிடத்தில் அடிவாங்கியதால் தகர்ந்தவள், ஆயினும், நாம் மகிழ்ந்திருப்பதை விரும்பியவள் சொல்லிக் கொண்டேயிருந்தாள் சந்தோஷமாய் இருக்குமாறு, “புன்னகைத்தபடி இரு ஹென்றி ஏன் நீ புன்னகைப்பதாய் இல்லை?”
பின்,
அவள் புன்னகைத்தாள் எப்படிப் புன்னகைப்பதென
ml கீவநதி.

எனக்குக் காட்டுவதற்காய். நான் என்றுமே கண்டிராத துயரப் புன்னகையாய் இருந்து அது.
ஒருநாள், இறந்து போயின அந்தத் தங்க மீன்கள் அவை ஐந்துமே. தண்ணீரில் கண்கள் திறந்தபடியே
ஒருபக்கமாய்ச் ஒருக்களித்துச் சாய்ந்தபடி மிதந்தன. இல்லம் திரும்பிய என் தந்தை அவற்றை வீசி எறிந்தார் சமையலறைத் தரை மீதில் பூனை உண்ண. நாம்
அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம் என் அம்மா புன்னகைத்தது போலவே...!!!
ஆங்கிலத்தில்: சார்ல்ஸ் புகோவ்ஸ்கி தமிழில்: கெகிராவ ஸுலைஹா
- இதழ் 64 தை 2014

Page 20
அவருக்கு எப்பயிருந்து அந்தப் பேர் வந்தது? ஆர்வைச்சது? அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்? எணர்டதெல்லாம் எனக்குத் தெரியாது. எல்லாரையும் போல நானும் அவரை டுள்ளா எணர்டுதான் கூப்பிடுறனான். அவரும்தன்னைப்பற்றி ஏதும் சொல்லேக்கை "டுள்ளா” எணர்டு குறிப்பிட்டுத்தான் கதைப்பார். விசுவலிங்கம் எணர்ட பேர் விதானையாரின்ர பதிவிலயும் ஐடென்ரிக் காட்டிலயுந்தான் இருக்கு விசுவலிங்கம் எணர்டது தானர் அவரின்ர ஒரிஜினல் பேர் எண்ட விவரங்கூட ஊர்லநிறையச் சனத்துக்குத் தெரியாது.
டுள்ளாக்கு எணர்டு எந்தத் தனிப்பட்ட
தொழிலும் கிடையாது. எங்கட ஊர்
ஆக்களுக்கு வேலியடைக்கிறது. விறகு காத்திறது, களை பிடுங்கிறது, அரிசி இடிக்கிறது மாதிரியான வேலையள் செய்து குடுப்பர் ஒரு காலத்தில மணர்டான் சுருட்டுக் = கொட்டிலில சுருட்டுகளுக்கு லேபிள் , ஒட்டினவர். மணி டானி சுருட்டுக்கு நாடு முழுக்க நல்ல "டிமாணர்ட்" கொக்கோக் கோலாச் சோடாவினர்ரை ரகசியம் போல மணர்டான் சுருட்டின்ர கோடாக்கும் ரகசியம் இருந்திச்சு இப்ப "டுப்ளிக்கேற்” சுருட்டுகள் வந்திடுத்து கொழும்பில கூட மணர்டான் சுருட்டு எணர்ட பேரில போலியளச் செய்யு றாங்கள்! டுள்ளானர்ர மேள் காணாமற் போனதிலயிருந்து மனங் குழம்பி அவர் சுருட்டுக் கொட்டிலுக்குப் போறதை விட்டுட்டார். எல்லா அப்பாமாரையும் போல மேள் எணர்டால் டுள்ளாக்கும் உயிர் தான். இனந்தெரியாத நோய்க்கு மனிசியைப் பறி கொடுத்தாப்பிறகு எத்தனையோ கனவு களோடை கீர்த்தனாவை வளர்த்தவர். மற்றவையினரை கணிணுக்கு தெரியாத அடர் காடாய் இருக்கிறடுள்ளான்ரமனசுக்குள்ளயும் எத்தனையோ வகையான ஆசை மிருகங்கள் அலைஞ்சு திரிஞ்சது. எந்தவொரு டிஸ்கவரிச்
18 வீவநதி - இதழ்
 
 

இ.சு.முரளிதரன்
சனலும் படம் பிடிக்காத விசித்திர விலங்கு களினர்ர பாய்ச்சலாகத்தானி அவரினர்ர வாழ்க்கையும் நகர்ந்தது. ஒவ்வொரு மிருகத்தின்ர பசியும் அடங்கேக்க அவரின்ர காட்டில அடைமழை பெய்யும். கீர்த்தனா தானி அந்த காட்டினர்ர தேவதை யாய் திரிஞ்சாள். கடைசியில காட்டு மிராணர்டிக் கூட்டமொனர் டு டுள்ளானர் ர மன சில உலாவின விலங்குகளை வேட்டை யாடித் திணர்டு மலங்கழிச்சிட்டுப் போட்டுது. சில சம்பவங்கள் ஏன் வாழ்க்கையில நடந்த தெணர்டு நினைச்சு ஒவ்வொரு மனி சனும் ஆயுசு முழுக்கக் கவலைப்படுறான். காலத் தின ர வீரியமோ கடைசி வரைக்கும் கற்பனைக்கு எட்டாமலே போயிடுது.
டுள்ளா சிரிக்கேக்க கன்னத்தில குழி விழும். எணர்ணை, தணிணி படாத பரட்டைத் தலையின்ர மயிருகள் காத்தோட மோதும். வெள்ளைச் சரமும் கட்டைக் கை வைத்த
64/தை 204

Page 21
பெனியனும் தானர் அநேக நேரங்களி அவரின்ர யூனிபோம்! அகண்ட நெத்திக்குக இருக்கிற வலப்பக்க புருவம் முடியிற இடத்தி அந்த மாதிரியொரு மச்சம் இளம் பொடி னாய் இருக்கேக்க சில பெண்களின் மனசி யாவது சலனத்தை ஏற்படுத்தியிருப்பர் எண சத்தியம்பணர்ணிச் சொல்லலாம்.
கரணவாய்க்கும் கப்பூதூக்கும் இன யில இருக்கிற பகுதியில உப்பு விளைய காலத்தில டுள்ளாவும் உரப்பை, ஒலை பெட்டி, விளக்குமாறு சகிதம் உப்பள்ள போடுவர். வத்தின உவர் நீரில வெள்ை வெளிரெண்டு உப்புப் படர்ந்திருக்கும். சூர் ஒளிபட ஜெலிக்கும். டுள்ளா பலமா தடியொனர்டால் மெதுவாகத் தட்டி படையா கிளப்பி எடுப்பர். பேந்து கைவிளக்கு மாத்தா கூட்டி எடுத்து உப்புத் தணர்ணியில சாதுவா அலசிக் குவிப்பர். உப்பை வாரேக்கை கூரா குட்டிக் குட்டி முனைகள் கையைப் பத பார்க்கும். சிராய்ப்புகளில் உப்புத் தணர்ணிபட சுள்ளெணர்டு எரியும். அதைப்பற்றிக் கவலை படாமல் அடுத்தநாள் உறைய "ரெடியாய இருக்கிற தணர்ணிக்கை சின்னக் கும்பியளா குவிப்பர். பிறகு, ஒலைப்பெட்டியில அள்ளி கொணர்டு போய்க் கரையில கொட்டி தணர்ணி வடிய விடுவர் கரையில எல்லாக் குவியலு ஒரே மாதிரியிருக்கிறதால குழப்பம் வரா லிருக்க சின்னத் தடியொணர்டில துணியை சுத்திதன்ர உப்புக்கும்பிக்கு மேலநட்டு விடுவ வெயில் ஏறஏற உப்புத்தணர்ணி சூடேறு மத்தியான நேரத்தில கால் வைக்கேலாது பெளர்ணமியிலயும் அத அணர்டின நாட்கள் யும் இரவில உப்புஅள்ளுறதும் உணர்டு.
குவிச்சு வைச்ச உப்பை உரப்பையி போட்டு தலையில சுமந்து கொணர்டு வீட்ை போகேக்க மூட்டையிலயிருந்து தலையி கசியிற தணர்னி நெத்தியால வடிஞ கணர்ணிலபட பயங்கரமாய் எரியும். சுமையு அளவோடை இருக்கோணும். கொஞ்ச கூடிச்சோ கழுத்தை வாங்கிப் போடும். உட புளைஞ்ச கழுதை உப்பளத்துக்கு போச்சுதா எணர்ட பழமொழியின்ர பொருள் தலையி சுமக்கேக்கதான் சரியாய் விளங்கும்.
டுள்ளா விளக்கு மாத்தால விராணி எடுக்கிறது மாதிரி சிலர் தகடுகளால வெட் எடுப்பினம். உழ வாரத்தால செதுக்கிற கேசு இருக்குது! அப்பிடி அள்ளேக்க சிலநேர
9/ ஜீவநதி -

6)
|ம்
ܣܛ̄.
சேறும் சுரியும் வந்திடும், பேந்து விக்கேலாது. என்னதான் கஷ்ரப்பட்டு அள்ளிக்கொணர்டு போனாலும் லொறியில வாற வியாபாரிகள் அயடீன் கலக்காத உப்பெண்டு சொல்லி அறா விலைக்குத்தானி கேட்பானிகள். எங்கட ஊர்ச் சனத்துக்கு அயடீன் கலக்காததைப் பற்றிப் பிரச்சினையிலலை. அதுகள் அப்பிடியேதான் கறிக்குப் போடுங்கள்.
அரசாங் கதி தின ர அதிகாரம் முனைப்புப்பெற்ற காலத்தில அதுக்குரிய ஆக்களே உப்பை அள்ளி பெரிய “மால்" போட்டுக் கிடுகால மேய்ஞ்சி பாதுகாப்பினம். சண்டைக்காலமெல்லாம் சனங்களினர்ர வேட்டைதான்!
சிலர் சைக் களர் லயும் உப்பு மூட்டையை ஏத்திக் கொணர்டு போவினம். சைக்கிள் கரள் பிடிச்சுப் போகுமெணர்டு "டுள்ளா” உப்புக்கடல் பக்கமே கொண்டு போக மாட்டார். டுள்ளான்ர சைக்கிளுக்கு பிரேக் இல்லை. அது அவருக்குத் தேவையுமில்லை. பின் சில்லில பிரேக் கட்டை பூட்டுற இடத்தில குதிக்கால் ரணர்டையும் அழுத்திப் பிடிச்சு பிரேக் அடிப்பர். அதைப் பாத்திட்டு ஆரெணர் டாலும் “ரை" பண்ணினால் வால்க்கட்டை கழணர்டு காத்துப் போய் இளிச்சுக் கொணர்டு நிக்க வேண்டியதுதான். டுள்ளா ரெக்னிக் காத்தான் பிரேக் அடிப்பர். குதிக்காலின்ரபாதி றிம்மிலயும் பாதி ரயரிலயும் படற மாதிரித் தானி வைச்சிருப்பர். றிம்மிலசுட அழுத்தி னால் வால்க்கட்டை கழணர்டுபோம். ரயரில கூட அழுத்தினால் குதிக்காலை அள்ளிப் போடும். இந்த வயசிலயும் "கால்பிரேக்" அடிச்சு சொன்ன இடத்தில் சைக் கிள நிப்பாட்டுறதால டுள்ளாவை எல்லாப் பொடி யளுக்கும் பிடிக்கும்.
அணிஞ்சிற்பழம், இலந்தைப்பழம், அணர்ணாமுன்னாப்பழம் எணர்டு ஏதாவது ஆய்ஞ்சு கொண்டு வந்த கோயிலடியிலே விளையாடுற பொடியளுக்கு குடுத்து தானும் திண்னுவர். அணில் அரிச்சு கீழ விழுகிற ாெங்கை எடுத்து பனுவில பிய்ச்சு எறிஞ்சு போட்டு மிஞ்சியிருக்கி பக்கத்தை பல்லால் காந்து குடிப்பர். நாகதாளிப் பழத்தைப் புடுங்கி அதுக்கையிருக்கிற "திருவலகைப்பல்லை” எடுத்து எறிஞ்சு போட்டு பழத்தைச் சாப் பிடுவர். அப்பேக்கை டுள்ளான்ர வாயெல் லாம் ரத்தச்சிவப்பாக இருக்கும். கீர்த்தனா
இதழ் 64 /தை 2O4.

Page 22
காணாமற் போன தோட அவரின்ர கலகலப் பெல்லாம் எங்கேயோ துலைஞ்சு போச்சு!
வெற்றியாட்டுப் பிள்ளையார் கோயில் திருவிழாவில் வெடிமருந்து போட்டு சுடுகிற , விளையாட்டுத் துவங் கு வித்தவங்கள். ஒண டிரண் டு பொடியள் வாங்கி சுட்டு விளையாடிச்சுதுகள். கஸ்ரப்பட்டதுகளின்ர பிள்ளையள் பார்த்து ஏங்கிச்சுதுகள். கீர்த்தனா வும் ஆசை ஆசையாய் அந்தத் துவக்கைப் பற்றி டுள்ளாட்ட சொல்லி தனக்கும் வேணும் எண்டு அடம் பிடிச்சாள். டுள் ளா மைமுடிஞ் ச "ஓரெக்ஸ்” பேனை ஒண்டை எடுத்து ரண்டு பக்கமும் வெட்டினார். பேனைக் குழாய்க் குள்ள போகக் கூடிய கொய்யாக் கம் பொண்டைச் சீவி எடுத்து குலை குலையாய் காய்ச்சுத் தொங்கின பாவட்டங் காய்களைப் பிடுங்கி, ஒரு காயை கொய்யாக் கம்பால பேனைக்குழாய்குள்ள தள்ளினார். பிறகு இன்னொரு காயை வைச்சு தள்ள “படீர்” எண் ட சத்தத்தோட முதல் வைச்சகாய் வெளியில் பறந்திச்சு. கீர்த்தனாவினர சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவள் "ஒரெக்ஸ்” பேனைத் துவக்கும் பாவட்டங்காய் தோட்டாக்களுமாகத் திரிய எல்லாப் பொடி யளும் வாங்கி சுட்டுப் பார்த்தாங்கள். "ஒரெக்ஸ் பேனையள தேடி எடுத்துக் கொண்டு போய் டுள்ளாட்ட குடுத்து தங்களுக்கும் துவக்குச் செய்து தரச் சொன்னாங்கள். எல்லாப் பொடியளுக்கும் செய்து குடுத்து, அவங் களுக்கு ஒரு ஹீரோ ஆயிட்டார். அவரின்ர வாழ்க்கையின்ர அர்த்தமாக இருந்த கீர்த்தனா கடைசி வரைக்கும் அவரோட இருந்திருந்தா எவ்வளவு மகிழ்ச்சியோட வாழ்ந்திருப்பர்?
ஐ.பி.கே.எஃப் எங்கட பிரதேசத்தில இருந்த காலத்தில அவங்கள் செய்த அட்டூழியங்களுக்கு எந்த விதத்திலயும் குறைவில்லாமல் ஐ.பி.கே.எஃப் காம்ப்புக்கு பக்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்ததுகளும் செயற்பட்டுதுகள். மக்களுக்காக ஆயுத மேந்தின காவாலிக் கூட்டங்களின்ர சுய ரூபத்தை எண்பதுகளின்ர இறுதியில எங்கட சனம் முழுசாகப் புரிஞ்சு கொண் டிச்சு. சென்ரிக்கு நிக்கிற மாதிரிக் காட்டிக் கொண்ட போற வார பெட்டையளுக்கு சொறிக்கதை சொல்லுறவையளின்ர கை யோங்கியிருந்த நேரம் அது! டுள்ளான்ர மேள் நெல்லியடி ரியூசனுக்கு போகேக்கையும் வரேக்கையும்
20/ ஜீவநதி - இத

அவங்கள் ஊத்தைப் பகிடியள் விடுவங்கள். ஊருக்கையிருந்து நிறையப் பிள்ளையள் நெல்லியடி ரியூசனுக்கு போறதால தான் நள்ளா பயப்பிடாமல் போக விட்டவர். ஒரு நாள் ஆரோ ஒருத்தன் கீர்த்தனாட்ட ஏதோ அசிங்கமாய்க் கேட்டுப் போட்டான்.
“கொம்மாட்ட போய்க் கேளடா! தரங்கா” எண்டு கீர்த்தனா கோபமாய் திருப்பிக் குடுத்திட்டு வந்திட்டாள். கீர்த்தன வோட சேர்ந்து ரியூசனுக்கு போற திவேந்தினி நடந்ததை எல்லாம் டுள் ளாட்ட வந்து சொல்லிப் போட்டாள்.
“ஐயோ... என்ர தேகமெல்லாம் பதறுது. அவங்களோட ஏன் பிள்ளை வாய் காட்டினி? வேண்டாம் குஞ்சு.. நீ இனி நெல்லியடிப் பக்கமே போகாத.. வீட்டில் இருந்து படி”
- கீர்த்தனா ஒரு மாதிரிக் கெஞ்சிக் கூத்தாடி சமாளிச்சு அடுத்த கிழமை ரியூசனுக்குப் போயிற்றாள். ஆனால் அந்தி நேரம் திவேந்தினி மட்டுந்தான் திரும்பி வந்தாள். கீர்த்தனா காணாமற் போன செய்தி ஊரெல்லாம் பரபரப்பாய் பரவிச்சு. திவேந்தினி சொன்ன தகவல்களின்ர அடிப்படையில “டுள்ளா” நெல்லியடிக் காம்புக்கு போய் விசாரிச்சார். தெரிஞ்ச ஆக்கள் மூலமாய் ஏதோ எழுதிக் குடுத்தார். கடைசிவரைக்கும் கீர்த்தனாவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியேல்ல. மனிசன் விசர் பிடிச்ச மாதிரித் திரிஞ்சது தான் மிச்சம்.
அமைதிப் படை போன தோட துணைப்படைகளும் நெல்லியடியை விட்டுப் போட்டுதுகள். அதுகளிருந்த வீட்டின்ரை பின் பக்கத்தில் பாழடைஞ்ச கிணத்திலயிருந்து மூண்டு எலும்புக்கூடு கிடைச்சது. மூண்டுமே ஆம்பிளையளின்ரை தான்! ஆரேனும் ஒருத்தர் கதவைத்தட்டி கீர்த்தனா பற்றிய "நியூஸ்” ஒண்டை என்றாலும் சொல்ல மாட்டினமோ எண்டு டுள்ளா கடைசி வரை காத்திருந்தார். காத்திருப்பின் பயனாக ஏமாற்றமே மிஞ்சுற நாட்டுல டுள்ளா மட்டும் விதிவிலக்கே. எத்தனையோ கேள்வி மனசை அரிச்சபடியிருக்க டுள்ளா காத்திருந்தார். நிள்ளான்ர கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இண்டைக்கு யாருக்குமே இல்லை. டுள்ளாசெத்து ஆறு வருஷமாச்சு! .
- 64 /தை 2014

Page 23
பட்ட மரம் கோப்பெ
அது ஒரு காலம் அழகிய காலம்
அக்காலம் மீண்டும் வருமா என் வாழ்வில்?
கார் தாவர தழு
ஆம், பச்சையாய் பசுமையாய் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் என் அழகும்
ஆதவனால் அவதிப்படுவோரை அரவணைக்கும் என் குடை நிழலும்
இரவைப்
தேர்வ காற்றில் |
சே கல்நெஞ்ல அன்னைய
கன் நின் தந்தைய அப்பா .
பாலக் அண்ணா
அழுது ந எழுந்துவா விம்மிய உயர் சிட தனிப் . கோயில்க கோப்ெ - வேரர்
இனியும் வருமா என எங்குகிறேன் ஏனெனில்
இன்று எல்லோரும்
என்னைப் பட்டமரம் எனப் பேசிக்கொள்கிறார்கள். - வல்வை ச.கமலகாந்தன்
ஆழம் !
குறும்பா
சிரிப்பு உண. இதய பார்வை
தெள் இதயம்
1)
பேச்
வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு
முன்பதாகவே கற்றுக் கொடுக்கிறார்கள் -
நடிப்பதற்கு "படப்பிடிப்பாளர்கள்”
2) திரை மறைத்து ஊட்டல் திரையதனில் காட்சி “மணமேடைப் போலி”. --செல்லக்குட்டி கணேசன் -
உண. இதய கன உண
செய ஆர்ப்பரிப்
உண மௌ - வன
2ll கீவநதி -

நங்கோயில் தடம்புரள்தல்
இருளில்
ஊனம் சுமக்கும் ரங்களைத்
ஒற்றையடிப் பாதை வி வரும்
உயிரை வழி மறிக்கும் தன்றல்
கருந்திட்டுத்தடங்கள் ப் பகலாக்கும்
ஞானம் பிழைக்கவில்லை ரினுத்தீபம்.
நல்ல மனம் வாழவில்லை மிதந்து வரும்
நாதியற்றுப் போன Tககீதம். செயும் உருக்கும்
கதி நெஞ்சறுக்கும் பரின் கண்ணீர்.
ஆதியிலே முளைத்த கரு ன்கலங்க
அன்பறியாக் கடும் போக்கு றிருக்கும்
ஆளைக் கருவறுக்கும் பரின் துயரம்.
சாதி சனம் பார்த்துச் அப்பா எனும்
சடங்கு முடித்தகதை ரின் கதறல்.
தடம் புரண்டு மண்ணாகும் அண்ணா என திற்கும் தம்பி,
ஒருபேதையின் அழுகுரல் ச அண்ணா என
இருள் கனக்கும் "ளும் தங்கை.
கரிய பொழுதுகள் மிழில் எரியும்
இதயம் உறைந்த பெரும் தீபம்.
வெறுமை நினைவுகள் களுக்கெல்லாம் பருங்கோயில்
இரத்தக் களரியாய் 5கேணியன்
நடந்து வந்த பாதை இரு மன மிணையா
துருவத்து நிழல்கள் கண்ட போது திருமண மேடை பலிபீடம்
தீப்பிழம்பாயெரிக்கும் பின் சிரிப்பை
அவன் கரங்களில் ர்ந்த போது
விழுந்து கருகியது ம் சிரித்தது.
அவளுயிர். பயின் பார்வை சிந்த போது
- ஆனந்திம் பார்த்தது.
இலஞ்சம் =சின் பேச்சு
கந்தோரில் ர்ந்த போது ம் பேசியது.
கையூட்டுப் பெற்றான்
கடமைகளில் தவறியவன் வின் கனவு சர்ந்த போது
- கெட்டான்
"ல் பிறந்தது
வந்தவனைப் பொலிஸாரே பின் ஆர்ப்பரிப்பு
வலைவீசிப் பிடித்ததனால் ர்ந்த போது
இன்றவனோ னம் பிறந்தது.
கூண்டிலகப்பட்டான்! ஜா நடராஜா
-பாலமுனை பாறூக் -
இதழ் 64 தை 2014

Page 24
இதழ் 61, 62 இல் இடம் பெற்ற
விவாத மேடைப் பகுதியின் தெ
(ஜீவநதியில் தற்போது விவாத கருத்துப் பரிமாற்றத்திற்கு களம் அமைத்துக்
வினா 1: எழுவாய்க்கு சொல்லுருபு உண்டா?
பெயர்ச்சொல உருபு எதனையும் பெற்றுக் கொள்ளாமல் பயனிலை கொணர்டு முடியும் அமைப்பே எழுவாய் வேற்றுமை எனப்படும். இதனை தொல்காப்பியம்,
"எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே” எனக் கூறுகின்றது.
"எழுவாயுருபுதிரிபில் பெயரே வினை பெயர் வினாக் கொளலதனர் பயனிலையே? என்று நன்னுரல் கூறும், மற்ற வேற்றுமை களுக்கும் எழுவாய் வேற்றுமைக்கும் உள்ள வேறுபாடு இது தான். இலக்கண நூல்களே எழுவாய் வேற்றுமைக்கு உருபுகள் எதுவும் இல்லை என்று கூறும் போது, ஆனவன், ஆகின்ற வனர், ஆனவன், என்பவனி போன்றவற்றை எவ்வாறு முதலாம் வேற்றுமைக்கு சொல்லுருபு களாக கொள்ள முடியும்?
ஆனவன், ஆகின்றவன் போன்றன எழுவாயின் சொல்லுருபுகள் அல்ல. இவையும் பெயர்ச் சொற்கள் தானி என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேணர்டும். வாக்கியத்தின் தலைமைப் பெயரை இவை அறிமுகப்படுத்தும் சொல்லாகவே அமைகின்றது என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கூறுவது எற்புடையதாகின்றது. அண மையில அமரத துவம் அடைந்த பேராசிரியர் அகத்தியலிங்கமும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
கணர்ணன் என்பவர் வந்து தேடினார் - என்ற வாக்கியத்தினை எடுத்துக் கொள்வோம்.
இதில் கணர்ணண் எழுவாய். என்பவர் என பது கணிணனை அறிமுகப்படுத்தும் சொல்லாகவே அமைகின்றது.
எழுவாய் தொடர் ஒரு வேற்றுமையாக கொள்ளப்பட்டதால் ஏனைய வேற்றுமைகளுக்கு உருபு உள்ளது போல எழுவாய் வேற்றுமைக்கும்
22 கிரீவநதி - இதழ்
 

யொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.)
வேணர்டும் என்ற காரணத்தால், உரையா சிரியர்கள் செய்த தவறினால அவை சொல்லுருபுகளாக்கப்பட்டதேயன்றி முதனூல் ஆசிரியர் எவரும் இவற்றை சொல்லுருபுகளாக கொள்ளவில்லை.
அறிமுகப்படுத்தும் சொற்களாக மட்டு மன்றி பொருளுக்கு வரைவிலக்கணம் கூறப் படும் வாக்கியங்களில் இச்சொற்கள் அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன. உதாரணம்:
மனிதன் என்பவன் தெய்வமாகலாம். இறுதியாக இன்னுமொரு கருத்தைக் கூறலாம். இன்று பேச்சு வழக்கிலோ எழுத்து வழக்கிலோ பயன்படுத்தப்படாமல் உள்ள இச் சொல்லுருபுகளை சொல்லுருபுகளாக ஏற்க வேணர்டுமா? தேவையில்லை.
வினா 2 அட்டும் என்ற வியங்கோள் வினைவிகுதி தொடர்பான பிரச்சினை
தரம்11 இலவசப்பாடநூலில் அட்டும் என்ற வினை விகுதியினர் பயனர்பாடு பற்றி நூலாசிரியர் கூறுவனவற்றை முதலில் அறிந்து கொள்வோம். 1. பாவிகள் ஒழியட்டும்-வெறுப்பு 2. அவர்கள் நீடுழிவாழட்டும்-வாழ்த்து 3. வையம் செழிக்கட்டும்-விருப்பு 4. மழைபொழியட்டும்-விருப்பு
அட்டும் வேணர்டுதல பொருளில வருவதில்லை. வாழ்த்து, விருப்பு, வெறுப்பு ஆகிய பொருள்களிலேயே வருகின்றது.
இவ்வாறு பாடநூலில் இடம் பெற்று உள்ளது. சென்ற இதழில் முரணர்பாட்டினை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கு திரு.அ.பெள நந்தி கூறியவை சரியான வழியாயினும் நூலாசிரியர் குழுவிற்கு இலக்கண விளக்கத் துடன் சுட்டிக்காட்ட வேணர்டியது ஆசிரியர் களது கடமையாகும்.
64 'தை 204

Page 25
தெளிவு படுத்தப்பட வேண்டியவை:
வியங்கோள் என்ற சொல்லில் விய என்பது ஏவலையும் கோள் என்பது கொள்க தலையும் குறிக்கின்றது. ஆகவே வியங்கோ வினையும் ஏவற் பொருளை உணர்த்துவே என்பதை அறிந்திருந்தால் இத்தவறு ஏற்பட் ருக்காது. அட்டும் வேண்டுதற் பொருளில் வருவதில்லை என்ற கூற்றை ஏற்க முடியாது எனெனில் ஏவல்வினை கட்டளைப் பொருளிலும் (Order) வியங்கோள் வினை வேண்டுதல் (Request பொருளிலும் வரும் என்பதே இலக்கணவித உதாரணமாக நீண்ட வரட்சி காரணமாக நாட் மக்கள் வானத்தை நோக்கி, அம்மா தாமே மழைபொழியட்டும் எனக் கேட்கின்ற வேளையில் மழையை வேண் டித் தான் கோரிக்கை விடுக்கின்றனர்.
கலைஞர் மு.க.வின் வசனநடையில் கணவனையிழந்த கண்ணகியின் குமுறலை ஒ கணம் சிந்திப்போம்.
அழியட்டும்; ஒழியட்டும்; பூமிபிளக்கட்டும், புழுதி பறக்கட்டும் நெருப்பு பரவட்டும், நியாயத்தின் பிழம்பு தெரியட்டும்.
இதில் வரும் வியங்கோள் வினைவிகுத அத்தனையும் தெய்வத்தை நோக்கிய கண்ணம் யின் வேண்டுதலாகவே அமைகின்றது. விருப்பு வெறுப்பு என்பன உணர்வின் அடிப்படையில் தோன்றுவன. இவ்வாறாக பல விளக்கங்களை எடுத்துக் காட்டி எழுத வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.
வினா 3 : மொழி நெகிழ்ச்சிப் போக்கு பற்றிய கருத்து
தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அறிஞர்கள் அவர்கள் காலத்திற்கு முன பலநூற்றாண்டுகளாக மக்கள் பேசியும் எழுதியுப் வந்த மொழியமைப்பை நன்கு ஆராய்ந்த இலக்கண விதிகளை வகுத்துள்ளனர். மொழி வளர்ச்சி காலத்திற்கேற்ப மாறும் இயல்புடையது என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் தமிழ்மொழியும் இதற்கு விதிவிலக்கன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் மொழி வளர்ச்சியும் இலக்கணமும் பற்றிய ஒரு கருத்து இங்கு மனங்கொளத்தக்கது! மொழி குழந்தை போன்றது. அம் மொழியின் இலக்கணம் குழந்தை அணியும் ஆடை போன்றது. குழந்தை வளரும்போது குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப ஆடையும் மாறித்தான் ஆக வேண் டும் இக்கூற்று எற்றுக்கொள்ளப்பட வேண்டியதே மொழி வளர்ச்சி தமிழ்மொழியைப் பொறுத்த
23/ ஜீவநதி -

2. அ.
த 3
வரையில் அடிப்படைக் கூறுகளில் மாற்றங் களை எற்படுத்தவில்லை. பிறமொழிச்சொற்கள் வந்து சேரும்போது, எமது இலக்கண விதிகளைப் பயன்படுத்தும் போதே பிரச்சினைகள் உருவா கின்றன. ஆகவே வடசொற்களையோ பிற மொழிச் சொற்களையோ அவற்றின் ஒலி வடிவத்திற்கேற்ப அமைத்துக் கொள்வதில் தவறில்லை.
ச . - 5
வினா 4 : யாப்பிலக்கணம் பற்றியது
கவிதைக்கு உயிர்நாடி ஒலி நயம். ஒலிகள் அளவாலும் தன்மையாலும் முயற்சியா லும் வேறுபட்டு ஒழுங்காக அமைந்து வந்த அமைப்பே திரும்பத்திரும்ப வந்து செவிக்கு இனிமை பயப்பதே ஒலிநயம் எனப்படும். இந்த ஒலிநயம் செயற்கை முறையன்று. அது தேவையின் பொருட்டு இயல்பாக வளர்ந்த ஒரு முறையாகும். கவிதையில் பயிலும் இந்த ஒலிநயத்தை வளர்த்து வாய்ப்பாடுகளாக்கி ஒரு வகை செயற்கை அமைப்பை தந்தனர் நம் முன்னோர்கள். இந்த வாய்ப்பாடுகள் அமையும் முறையே யாப்பு என்று பெயரிட்டனர். உணர்ச்சிக்கு வடிவமாக ஒலிநயமும் ஒலி நயத்திற்கு வடிவமாக உணர்ச்சியும் விளங்குவது தான் கவிதை. நூறுவீதமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என வாதிடாது புறநடையும் உண்டு என அமைதிகாண்பது பொருத்தமானது என நினைக்கின்றேன்.
பு) 4)
வினா 5 : காரண இடுகுறிப் பெயர் பற்றியது.
மனிதன் பேசத் தொடங்கிய காலத்தில் நம் கண்முன்னே கண்ட பொருள்களுக்குப் பெயர் வைக்கும் போது காரணமில்லாமல் பெயர் வைத்திருக்க முடியுமா? இதனை முதலில் நாம் சிந்திக்க வேண்டும். பெயர்களை இடுகுறியாகவோ, காரணப் பெயராகவோ கொள்ளும் போது பொதுப்பெயர், சிறப்புப்பெயர் என்ற பாகுபாடும் அமைந்துவிடுவதால், காரண இடுகுறிப் பெயர்களை காரண சிறப்புப் பெயராக கொள்வதில் தவறில்லை. நாற்காலி என்பது நான்கு கால்களையுடையனவற்றுள் கதிரையை சிறப்பாக உணர்த்துவதால் அது காரணச் சிறப்புப் பெயர் எனக் கொள்ளலாம். மண்வெட்டி என்ற சொல் மண்ணை வெட்டுகின்ற எல்லாப் பொருட்களையும் குறித்தாலும் தனியே மண் வெட்டியை குறிப்பதால் காரண சிறப்புப் பெயராக கொள்ளலாம். காரண இடுகுறியில் வரும் இடுகுறி என்ற கருத்தியல் பொருந்தாது என்பது எனது நிலைப்பாடு.
இதழ் 64 தை 2014

Page 26
ஒரே தடவையிலான அந்த
ஐந்து குழந்தைகளின் பிரசவத்தால் கொந்தளித்தது முழு நாடும்!
பிறந்த போதே
ஒன்று சிங்களம்
இரண்டு தமிழ் ஏனைய இரண்டும் முஸ்லிம் எனப் பிறந்தன! ஆச்சரியத்தில் மூழ்கிய இச்செய்தி நாட்டின் அனைத்து மூலை முடுக்கெங்கும் பரவியது!
"எல்லோரும் எமது பிள்ளைகள்" ஜனாதிபதியின் நெகிழும் வார்த்தைகள் அவர் பிள்ளைகளை முத்தமிடும் பாசத்துடனான காட்சியுடன் அனைத்துப் பத்திரிகைகளிலும் பெரிதாக - பிரசுரிக்கப்பட்டிருந்தது!
"யுத்தம் முடிவுற்றதன் பின்னர் ஒரு தாயின் வயிற்றில் சமாதானத்தின் பிறப்பின் அடையாளம்" பிரதமரின் கருத்து/
பிள்ளைகளின் பிரசவ அமைப்பு விதிகள் தவறானவை என்றும் அது தேசத்துரோக சதி என்றும் "தேசத்தைக் காக்கும் தேசிய அமைப்பு" இது தொடர்பில் வெறுப்பை வெளியிட்டது.
リ
ஏனைய மூவரும் முஸ்லிம்களாகவே இருக்க வேண்டுமென அடிப்படைவாதக் குழுவொன்று பிள்ளைப் பேறு மருத்துவமனை முன் வன்முறையில் ஈடுபட்டது.
இந்த - - ஐந்து பிள்ளைகளின் பிரசவ கதையை அடிப்படையாக்கி - சிங்களவர்கள் அழிந்து செல்லும் இனத்தவர் என்றும் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தர்ம உரை நிகழ்த்தினார் தேரர் ஒருவர்/
24 ஜீவநதி - இது
 
 
 
 
 

இறுதி யுத்த காலத்தில் எல்லைக் கிராமமொன்றில் ஒரு சிங்களவர்
இரு தமிழர்கள்
இரு முஸ்லிம்கள் ஒரே இடத்தில் இறந்திருந்தனர்) பூர்வ ஜன்மத்தைப் பொருத்தி உத்தியோகப் பற்றற்ற மறு பிறவி கதையொன்று அடி மட்டத்தில் பரவ ஆரம்பித்தது.
நவக்கிரக ஆதிக்கத்தின் படி இந்த அபூர்வமான கலியுகப் பிறப்பு நாட்டுக்கு நல்லதல்ல - ஆபத்தைக் கொண்டு வரக் கூடியது
6T60T ஜோதிடர்கள் கூறி இருந்தனர்.
மாயமான முறையில் இந்த ஐந்து குழந்தைகளும் இனந் தெரியாதோரின் வாள் வெட்டுக்கு இரையாகியிருந்தனர் நேற்றைக்கு முன் தினம்!
தாயின் கதறல் - அழுகையின் ஒலம் புலம்பல் என்பன நீண்ட நேரம் காட்டப்பட்டன இரவு நேரச் செய்திகளில்,
மீண்டும் ஒரு போதும் பிறக்காத வகையில் ஐந்து குழந்தைகளும் புதைந்தன மண்ணுள்/
சிங்களத்தில் - தம்மிக்க பிரசாத் தேனுவர தமிழில் - இப்னு அஸ்மேத்
ழ 64 'தை 204

Page 27
விற்ப uர்வம்
அவளால் எப்படி அதுவும் ஒரு பேடியால் இவ்வளவு அசுரத்தனமாக. அந்தகார இரினுள்ளும் அசுவங்களின் தடங்கள் இடிஇடிக்க விரைந்தது ரதம்.
அவள் இன்று முற்றிலும் மாறித்தான் போயிருந்தாள். சுடுகாட்டின் நிசப்தமும் தொங்கும் உடலமு அவனுள் ஒர் அமானுஷ்ய உணர்வை உள் வாங்கிக் கொண்டிருந்தது. அந்தரத்தில் தொங்கும் அவ்வாயுதங்களை எடுத்து வா என்றான். அது அழுகிய பிணம் என அருவருத்தொதுங்கினான் இவன் இல்லையில்லை அவை அவர்களின் ஆயுதங்கள் என்றாள். அப்படியானால் அவர்கள் இறந்து விடவில்லையா? அவர்கள் கூண்டோடு ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என உலகமே வினவுகிறதே?
வியப்பால் அவளை நோக்கியவனுக்குப் புரிந்திருந்தது இப்போது, அவன் அவளே அல்ல. அவர்களில் ஒருவன் அவர்கள் இறந்து விடவில்லை. உயிரோடு தான் இருக்கிறார்கள். எம்முடனே மக்களோடு மக்களாக. இது அவர்களுக்கு அஞ்ஞாத வாசம்.
துண்டாடப்பட்ட நிலங்கள் சூறையாடப்பட்ட தெருக்கள் அபகரிக்கப்பட்ட உரிமைகள் உடைமைகள் யாவும் மீட்கப்பட்டு விடும் அவர்கள் தான் வந்து விட்டார்களே!
சிம்மக்கொடி தாழ "அவர்களின்" கொடி 2 CUs) தேவதத்தின் எலி விண்ணைக் கிழித்துக் கொண்டிருந்தது.
- க.முரளிதரன்
25/ஜீவநதி
 
 

உலகம் அழுகிறது!
ஒழுக்கத்தை தொலைத்து விட்டு உலகம் அழுகிறது வேதங்கள் சொன்னவைகள் வீணடிக்கப் பட்டதினால் பாவங்கள் மேலோங்கி பாரெல்லாம் குருதிவெள்ளம். ஒழித்துவிட்ட மானிடத்தை அழித்துவிட்ட துவேசிகளும் அரசியல் சாக்கடையில் அழுக்குண்ணும் குக்கல்களும் படைத்தவனை ஏமாற்றப் பகல் வேசம் போடுவதால் தத்துவங்கள் செத்து தரணியெல்லாம் ஒரே நாற்றம். வல்லுறவில் இன்பமுறும் வழிகெட்ட சாமிகளும் பெண்மையை வன்புணரும் பெருச்சாளி நக்கல்களும் வேதத்தை விலைபேசி விற்றுண்ணும் போலிகளும் கடவுளின் முன்னாலே கசிந்துருகி நிற்பதினால் ஒன்றும் புரியாமல் உயர்பண்பு கொதிக்கிறது! நிஷ்டையில் அமர்ந்திருந்த நித்தியன் விழித்தெழுந்து பாவத்தை அழிப்பதற்கு பரலோக மேடையிலே, ஆடுகிறான் கோபத்தால்
அண்டம் அழிவதற்கு
- எஸ். முத்துமீரான்
- இதழ் 64 'தை 204

Page 28
ஐரோப்பியத் திரைப்பட 6
ரப்பியத் திரைப்பட விழா மூன்றாவது ஆண்டாக யாழ்ப் பாணத்தில் மார்கழி 14-15 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இம்முறை யாழ். பொது நுாலகத்தில் அது ஒழுங்குசெய்யப் பட்டிருந்தது. முந்திய ஆண் டுகளில் திருமறைக் கலா மன்றத்தில் நடைபெற்ற விழாக்களுக் குப் பார்வையாளர் குறைவாகவே வந்தனர்; இத்தனைக்கும் விழாவில் திரைப்படங்கள் இலவசமாகவே காட்டப் படுகின்றன. ஆனால், இம்முறை ஒப் பீட்டளவில் கூடுதலான பேர் வந்தனர்; அதிலும், முதல் குறையாய் ! நாளின் முதலிரண்டு காட்சிகளுக்கு யிருப்பர். கெ மண் டபம் நிறைந் திருந்தமை
தனது மகன் ஆறுதலைத் தந்தது!
அடைகிறது; நாளொன்றுக்கு மூன்று
உயிருடன் ; என்றவாறாக இரண்டு நாள்களிலும்
மாமடோவுக் ஆறு திரைப்படங்கள் காட்டப்பட்டன.
சுற்றுப்பயணி நான்கு படங்கள் சிறுவர் திரைப்
லிருந்து தன் படங் கள் ; மற்றைய இரண் டும்
நடந்துகொள் வளர்ந்தோருக்குரியவை. எல்லாப்
ஜோசே கடி படங்களுக்கும் ஆங்கிலத் துணைத் பிறக்கும் கு தலைப்புக்கள் இருந்தன.
பவர்கள் :
கொங்கோ 1. சமுத்திரத்தின் நிறம்
கொடுக்கப் (Colorofthe Ocean), 88G. யேர்மனி.
அவர்களது! சுபிட்சமான வாழ்வைத் தேடி
பிடிவாதமாக ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து வரும்
சேர்ந்தவர்க அகதிகள், ஆபத்தான கடற்பயணத்
அனுப்புகிற தின பின கன்றி தீவை அடை
கின்றனர். பி கின்றனர். அங்கிருந்து ஸ்பெயினின்
செல்லப் ப பிரதான நிலப்பகுதிக்குச் சென்று,
பணம் கொடு பின்னர் ஐரோப்பாவின் பிற பகுதி
கூறிய இன களுக்குச் செல்ல முயல்வர். பலர் தகப்பனையு கடலில் காணாமற்போகின்றனர்;' தாக்கியதில் கரைசேரும் படகுகளில் சிலர் அரை மனையில்
26 கீவநதி - இதழ்

- 5 • 8 5 5 5
ழா! - 2013
EUROPEAN
- 2013
FESTIVALS
உயிர்பிழைத்திருக்கப் பலர் சடலங்களாகி ரங்கோவைச் சேர்ந்த ஸோலா சிறுவனான மாமடோவுடன் வந்த படகு, கன்றி தீவை 18 பேர் இறந்துவிட 10 பேரே அரைகுறை தப்புகின்றனர். தண்ணீருக்குத் தவிக்கும் கு, கடற்குளிப்பிலிருந்து வரும் யேர்மன் யான நத்தாலி தனது தண்ணீர்ப் போத்தலி ன்ணீர் கொடுக்கிறாள்; பிறகும் ஆதரவாக ர்கிறாள். எல்லைக் காவற்றுறை அதிகாரி னமாக நடந்துகொள்பவன்; ஸ்பெயினில் ழந்தைகளிற்குரிய வளத்தைச் சுரண்டு அகதிகளென் பது, அவனின் கருத்து. வைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் படுகிறது; செனிகலைச் சேர்ந்தவர்கள் காட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். ஜோசே ஸோலாவையும் மகனையும் செனிகலைச் ளெனவே சாதித்து, அகதி முகாமுக்கு என்; இருவரும் அங்கிருந்து தப்பி ஓடு தான நிலப்பகுதிக்குக் கள்ளமாய்ப் படகில் எம் தேவைப்படுகிறது; நத்தாலி 500 யூறோ க்கிறாள். பயணத்துக்கு உதவி செய்வதாகக் னொரு ஆபிரிக்கன், பணத்திற்காகத் ம் மகனையும் இன்னொருவனுடன் சேர்ந்து - ஸோலா படுகாயமடைந்து மருத்துவ இறக்கிறான். அநாதை என்றால் அகதி
ந4 கை 2014

Page 29
'அந்தஸ்து கொடுக்கவேண்டும்; ஏற்கெனவே தான கொடு த் த ப ண த தால் தான் இவ்வாறெல்லாம் நடந்ததென்ற குற் உணர்வில் அவதிப் படும் நத்தாலிய சிறுவனுக்கு அகதி அந்தஸ்து கிடைப்பதி கவனமாயிருக்கிறாள்; அதன்மூலம் அவன, எதிர்காலம் ஸ்திரமாகும் என்பது அவள் நம்பிக்கை!
சிறந்த வாழ்வுக்கான நம்பிக்கையில் ஆபத்தான வழிகளில் ஐரோப்பாவுக்கு நுழைய முயலும் அகதி மனிதர்களின் கை அவலமானது; அது எம்மவரின் கதை போது முள்ளது! இந்தத் துயரங்களையும், இறுகி மனப்போக்குள்ள அதிகாரிகளையும், ம தாபிமானங்கொண்ட சில மனிதர்களையு படம் சித்திரிக்கிறது. இதன் மூலம் இ பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு பார்வை யாளரிடம் நன் கு உருவாக்கப்படுகிறது
இப்படத்தின் நெறியாளர் : மகி பெரென என்னும் பெண்.
2. அமைதியான சிறுவர் அழுவதில்லை (CoolKids Don't Cry), 96G. நெதர்லாந்து.
'அக்கி' என்னும் எட்டாம் வகுப் மாணவியின் பால் சமத்துவ உணர்வும், புற்று நோய் எனத் தெரிந்தபின்பும் பேணும் தன்னம் பிக்கையும், அவள்மீதான ஏனையோரின பரிவும், முரட்டுத்தனமும் வெறுப்பும் கொண்ட சக மாணவன் 'ஜோஎப்' பின் மனநிலை மாற்றமும், பெரியவர்களின் உணர் நிலையும் படத்தில் நன்கு சித்திரிக்கப்ப கின்றன. ஜாக் விரியென் எழுதிப் பிரபலமால் நாவலைத் தழுவியே, இப்படம் உருவாக்க பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பில் படிக்கும் அக்க துடிப்பானவள்; காற்பந்தாட்டத்தில் ஆர்வமும் திறமையும் கொண்டவள்; பெண்களும் கார் பந்தாட்டத்தில் விளையாடவேண்டும் என்ற
27 கீவந்தி -

வ,
விரும்புபவள். ஆனால், சகமாணவனான. ஜோஎப், காற்பந்தாட்ட அணிக்குப் பெண்கள் தேவையில்லை எனச் சொல்பவன். வாக்கு வாதத்தின் போது ஏற்பட்ட சண்டையில் அக்கியின் முகத்தில் குத்துகிறான்; அக்கியின் |
- 2 E. 6. 4 E 2 S1 2. '' தி 9
மூக்கிலிருந்து இரத்தம் வடிகிறது. மருத்துவப் பரிசோதனையில் அவளுக்குப் புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். நோயின் தன்மை பற்றி மருத்துவரிடம் பல கேள்விகளைக் கேட்கிறாள்; அவர் சாதுரிய மாக விளக்குகிறார். அவள் உறுதியுடனே இருக்கிறாள். தான் அவளது நோயுடன் போராடி வெற்றி அடையப்போவதாகவும், தோல்வியடைந்தால் தனது மீசையை எடுத்துவிடப் போவதாகவும் (தனது பெயர் 'மீசை மருத்துவர்' என்று முன்னரே கேலியாக அவளிடம் சொல்லியுள்ளார்!) அவர் கூறுகிறார். வகுப்பின் மாணவர்களும் ஆசிரியை 'இனா'வும் அக்கியின்மீது கூடிய அக்கறை காட்டுகின்றனர்; ஜோஎப் மட்டும் ஒதுங்கிநிற்கிறான். அக்கி தொடர்ந்து வகுப்பின் காற்பந்தாட்ட அணி மீது கவனம் காட்டுகிறாள்; தனது நெருங்கிய தோழியான 'எலிசே'யை முன்னணியில் தாக்கும் வீராங் கனையாக விளையாட ஊக்குவிக்கிறாள்.
பு
ஒருநாள் மருத்துவர் மீசையின்றித் தோன்று கிறார்; நிலைமை குறியீடாகச் சொல்லப் படுகிறது. மெல்ல மெல்ல மாற்றங்கொள்ளும் ஜோஎப் ஆச்சரியமான முடிவொன்றைச் சக மாணவர்களிடம் சொல்கிறான். அக்கியின்
S.
இதழ் 64 தை 2014

Page 30
'படுக்கை அருகே – வெளியிலுள்ள சிறு மைதானத்தில், பாடசாலை அணியுடன் மருத்துவமனை அணி காற்பந்தாட்டம் விளையாட ஒழுங்குசெய்கிறான். ஆட்டத்தை மகிழ்வுடன் அக்கி பார்த்து இரசிக்கிறாள்; பின்னர் இறந்துவிடுகிறாள். அக்கியின் பெயரி லான அணி காற்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கிறது; அவளது விருப்பப்படியே எலிசே முன்னணியில் சாதிக்கிறாள்! மனதை வருடும் துயரமும் சக மனிதரின் பரிவும் இணைந்து வெளிப்படும் நல்லதொரு திரைப்படம்.
ரொறொன்ரோவிலும் வியன்னாவிலும் நடைபெற்ற சிறுவர் திரைப்பட விழாக்களில் இப்படம் விருதுகளை வென்றுள்ளது. இதன் நெறியாளர் டென்னிஸ் ஃபொட்ஸ் ஆவார்.
3. நாளை நல்லதாக இருக்கும் (Tomorrow will be better), 118G. போலந்து.
இப்படத்தின் பெண் நெறியாளரான டொ றொற்றா கெட் ஸியர் ஸ வஸ் கா,
கோகம்4y கலகலக சேலபுர ழ கம் 4
4. மன ::
சகல்சுரல்
Dorota Kedzierzawska
R 6 )
|N V
"வாழ்க்கை சிறப்பானதாயும், வித்தியாசமான தாயும், மேலும் அழகானதாயும் எங்காவது இருக்குமென்று நம்மில் பலர் நம்புவதை நான் அறிவேன்.” எனக் கூறியுள்ளார். இத்திரைப் படத்தின் மையமும் அந்த நம்பிக்கையில்தான்!
வீடற்ற, அழுக்கு நிறைந்த மூன்று சிறுவர்கள் - இருவர் பதின்ம வயதினர்; மற்றவன் ஆறு வயதுச் சிறுவன் - நாட்டுப்புற ரயில் நிலையத்தில் வசிக்கின் றனர். வாஸ்யாவும் பெத்யாவும் சகோதரர்; லப்யா நண்பன். "மற்றப் பக்கத்தில் எல்லாம் வளமாக இருக்கும்” என்ற எண்ணம் தோன்றியதில், எல்லை கடந்து செல்ல ஒருநாள் முடிவெடுக் கின்றனர். ரஷ்ய - போலந்து எல்லையைக் கடக்க வேண்டும். ரயிலில் களவாகச் சென்று இடையில் இறங்கி, கிராமங்கள் ஊடாகச் செல்கின்றனர். பலரிடம் இரந்தும், ஏமாற்றியும் உணவைப் பெறுகின்றனர். பல் வேறு
28/ கீவநதி - இதழ்

மனிதர்கள், அனுபவங்கள், பல்வேறு நிலக் காட்சிகள்... இறுதியில் போலந்து எல்லையை அடைகின்றனர். எல்லையிலுள்ள பொலிஸ் 5ாரன இ வர் கள் மீது அனுதாப ங் கொண்டுள்ளபோதும், அவர்கள் திருப்பி அனுப் பப் படுகின்றனர்! சிறுவர்களின் எதிர்க்குரல் பொருட்படுத்தப்படுவதில்லை!
- குறைந்த உரையாடல்களுள்ள படம் இது; காட்சிப்படுத்தல்களே அதிகம். “சிறு பராயத்தினதும் நம்பிக்கையினதும் அழகிய காட்சிக் கவிதையான இது, சினிமாவை ஏழாவது கலை'யென அநேகர் ஏன் கருது கின்றனர் என்பதை, மீண்டும் ஒருமுறை எனக்கு நினைவூட்டியது” என ஒருவர் குறிப் ரிட்டுள் ளார்! மூன்று சிறுவர் களதும் அநாதரவுத்தன்மையும், குறும்புகளும், சுதந்திரத்தன்மையும் அவர்களின் நடிப்பில் நன்கு வெளிப்படுத்தப்படுகின்றன; அதிலும் முன்பற்கள் இல்லாத - அழுக்கு முகம் கொண்ட - தம்பியின் சிரிப்பும் குறும்புகளும் மனதில் நன்கு பதிவன. - 61 ஆவது பெர்லின் திரைப்பட விழாவில், சமாதானத்துக்கான திரைப்பட விருதை இப் படம் பெற் றுள் ளமையும் குறிப்பிடத்தக்கது!
-- கிளாராவும் கரடிகளின் இரகசியமும்
Clara and the secretof the bears), 93G. சுவிற்சர்லாந்து.
யதார்த்தமும் மாய யதார்த்தமும் கலந்துள்ள படம் இது. பதின்மூன்று வயதான
64 தை 2014

Page 31
கிளாரா, தாயுடனும் மாற்றாந்தகப்பனுடனும் மலைப் பண்ணையொன்றில் வசிக்கிறாள் அவளது உணர்திறனும் பார்வையும் வித்த யாசமானவை; இயற்கையுடன் ஒன்ற யிருக்கும் பண்புகொண்டவள். ஒருநாள் பு வெளியில் கரடிக் குட்டியொன்றைக் காண்கிறாள். இருநூறு வருடப் பழைமையான சப் பாத்தொன்றின் மூலம் - இருநூறு ஆண்டுகளின் முன் வாழ்ந்த - சுசான்ன! என்னும் இளம்பெண்ணின் தொடர்பு கிடைச் கிறது. பின்னர் அவள் கொள்ளும் மனநிலை யில், கரடிகளினால் ஏற்பட்ட சாபம் தன குடும்பத்தின் மீதும் மலைப் பண்ணை மீதும் படிந்திருப்பதை அறிகிறாள். முன்னர் அங்கு ஒரு பெண்ணுடன் உடல் உறவுகொண்டு வாழ்ந்த கரடியொன்றின் கதையும் சொல்லப் படுகிறது; பழைய நூலொன்றின் மூலம் கிளாரா இதை அறிகிறாள். பெற்றோர் இவற்றை நம்பப்போவதில்லை என்பதால் சுசான்னாவின் மூலமும் 12 வயதான தோமஸ் என்ற நண்பன் மூலமும், மனிதனுக்கும் இயற்கைக்குமான நெருக்கத்தையும் சப் நிலையையும் பேண முயல்கிறாள். காயம் பட்டு இறந்துவிட்டதெனக் கிராமத்தவர் களால் நம்பப்பட்ட பழைய தாய்க்கரடி தோன்றுகிறது; அது கொல்லப்படுவதைத் தடுத்து, குட்டிக்கரடி தாயுடன் இணைய கிளாராவழி செய்கிறாள்.
மலைசார்ந்த நிலக்காட்சிகள், புல் வெளிகளின் தோற்றங்கள் என்பன அருமை யாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; பின்னணி யில் இசைக்கப்படும் ஒலிக்கூறுகளும் ஒத்தி சைவுடன் அருமையாகவுள்ளன. தொபியாஸ் இனீச்சென் நெறியாள்கைசெய்த இத்திரைப் படம், 2013 மொன்றியேல் சர்வதேச சிறுவர் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.
5. இரவுக் கதைகள் (Tales of the Night), 84நி. பிரான்ஸ்.
இது ஒரு கார்ட்டூன் திரைப்படம்; அழகானவையும் பொருத்தமானவையுமான ஓவியங்கள் பயன் படுத்தப் பட்டுள் ளன; பொருத்தமான இசையும் பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ளது.)
கைவிடப்பட்ட திரையரங்கொன்றில் - ஓர் இளம் பெண், ஒரு பையன், வயது போன தொழில்நுட்பவியலாளன் ஆகிய மூவரும்,
29/ ஜீவநதி -

ஒவ் வொரு இரவும் சந்திக்கின்றனர். வெவ்வேறு காலங்களிலும் நாடுகளிலும்
UI U Uா 01 • 4, 01 L. ) C D• -. 4 ச• - ப 4 U4. 2. 2 * '' 5'
நடைபெறும் ஆறு கதைகளைத் தேர்ந் தெடுத்து, முதியவரின் சம்மதத்துடன் பொருத்தமான உடைகளையும் களங் களையும் தீர்மானித்து, இளம் பெண்ணும் பையனும் உரிய பாத்திரங்களாக மாறு கின்றனர். ஓநாய்மனிதன், திpனும் அழகியும், தேர்ந்தெடுக்கப்பட்டவனும் தங்க நகரமும், டம் டம் பையன், ஒருபோதும் பொய்
சொல்லாத பையன், இளம் பெண்ணும் கட்டடக் கலைஞனின் மகனும் ஆகிய ஆறு கதைகளும் காட்சிகளாகத் தோன்றுகின்றன. இவை முறையே மத்தியகால ஐரோப்பா, மேற்கிந்தியத் தீவு, அஸ்ரெக் காலம், மேற்காபிரிக்கா, திபெத், மத்தியகால ஐரோப்பா ஆகியவற்றில் நடைபெறுகின்றன.
மைக்கல் ஒஸ்லொட் நெறியாள்கை செய் த இப்படம், 2011 இல், பெர்லின்
இதழ் 64 தை 2014

Page 32
சர்வதேசத் திரைப்பட விழாவில், தங்கக் கரடி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதுமாகும்!
6. அழகியும் வம்பனும் (The Beauty and the Bastard),102 G. பின்லாந்து.
இத்திரைப்படத்தின் நெறியாளர், டொம் கறுகோஸ்கி ஆவார்.
"... அழகியும் வம்பனும், வயதுக்கு வரும் பருவத்தை அண்மிக்கும் பின்லாந்து இளைஞர்களைப் பற்றிய நவீனத் திரைப்படம். அது, காதலையும் கனவுகளையும் கொள்கை கோட்பாடுகளையும் - அவையெல்லாம் நீங்கள் எதிர் பார்ப்பதற்கு மறுவளமாக எவ்வாறு அடிக்கடி மாறிவிடுகின்றன என்பதை யும், சொல்கிறது” என, ஒருவர் தனது மதிப் பீட்டில் குறிப்பிடுகிறார். இளமையின் துடிப்பும், ஏமாற்றத் தன சலிப் பும், ஆட்டங்களும் பாட்டுகளும் படத்தில் விரவி இருக்கின்றன!
'நெல்லி' வசதியான குடும்பதைச் சேர்ந்த அழகிய இளம் பெண . மருத் து வப் படிப்பை அவள் மேற்கொள்ள வேண்டு மென்பது பெற்றோரின் விருப்பம்; ஆனால், அவளோ பாடகியாக வர வேண்டுமென விரும்புகிறாள். ஓர் இசைத்தட்டு நிறுவனத்தை அணுகி பாடிக் காட்டுகிறாள்; இசை சேர்த்த இறுவட்டைக் கொண்டு வரும் படி நிறுவனம் கேட்கிறது. பின் தங் கிய இடப் பின்னணியி லிரு ந் து வ ந த 'சூ ன'', இசையைச் சேர்த்துப் பதிவு செய்வதில் திறமைசாலி; ஆனால் ஏமாற்றத்தில்
PAMELA TOLA
30/ ஜீவநதி - இதழ்

கா.
ஒது ங்கியிருப் ப வன ; பெண' களுடன பழகுவதிலும் தயக்கங்கொள்பவன். நெல்லி தன் பாடலைப் பதிவு செய் ய சூனை அணுகுகிறாள். பெண்களைக் கண்டு பயப் படுபவனென நண்பர்கள் அவனைக் கேலி செய்ய, நெல்லியை அடைந்து காட்டுவதாகச் சவால் விடுகிறான். பாடலைப் பதிய முதலில் மறுப்பவன் பின்னர் அவளுக்கு உதவுகிறான். இசை நிறுவனம் அப் பதிவை ஏற்றுக் கொள்கிறது; நெல்லி கவனத்துக்குரிய பாடகி பாகிறாள். ஒருகட்டத்தில், நெல்லியும் சூனும் தங்களிடை யேயான பரஸ பர ஈர்ப்பை உணர்ந்துகொள்கின்றனர். தனது காதலனை நீங்கி சூனிடம் வந்துவிடுகிறாள் நெல்லி!
'இலங்கைக்கும் ஐரோப்பாவுக்கு மிடையிலான கலாசார ஒத்துழைப்பினைப் பலப்படுத்தி மேம்படுத்துவதற்காக' ஒழுங்கு செய்யப்படும் ஐரோப்பியத் திரைப்பட விழா, கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டுமே நடைபெறுகிறது. கொழும்பில் 17 திரைப்படங் களும் யாழ்ப்பாணத்தில் 6 திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. போதிய அளவிலான பார்வையாளர் யாழ்ப்பாணத்தில் பங்கெடுக்க வில்லையென்றே சொல்ல வேண்டும். முதல் இரண்டு காட்சிகளைத் தவிர ஏனைய
வற்றுக்கு, சுமார் இருபது பேர் வரையே வந்தனர். விழா அ  ைம ப பா ள ா க ள' கொழும்பை அடுத்து யாழ்ப் பாண த் துக்கு முக்கியம் தரும்போது, பார்வையாளரின் வருகை குறைவடைவது எதிர் வ ைள  ைவ -  ேவ று
இடத்துக்கு விழா மாற்றப்படும் நிலைமையை - உருவாக்கி விட லாம். அவ் வாறான நிலைமை ஏற்பட்டு விடாத வாறு, இங் குள் ள கலை இலக்கியத் துறைசார்ந்தோர் பொறுப்புணர்வுடன் செயற் பட வேண் டும் ; அடுத்த
ஆண்டில் திரைப்படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி, நாம் வற்புறுத்தவும் வேண்டும்!
64 தை 204

Page 33
திருகோணமலை மக்கைசர் பொதுமைதானம் முழுவதும் மனிதத் தலைகளாலும் அலங்கார வெளிச்சத் தோரண ங் களாலும் நிரம்பி வழிந்து கொண் டிருந் தது. மாபெரும் சனக் கூட்டத்தை சிரமத்துடன் விலக்கியபடி பிரமாண்டமான அந்தக் கண்காட்சிக்குள் நானும் எனது இரு பிள்ளைகளும் வெகு உற்சாகமாக நுழைந்தோம். ஆனால் சில நிமிடங்களிலேயே என்னுடைய உற்சாக மெல்லாம் வடிந் தோடி ஏன் அங் கு வந்தோமென்று ஆகிப்போனது.
- “திருமலை வாழ் இரசிகப் பெரு மக்களே! இன்று நடைபெறும் இந்த இராணுவத் தளபாடக் கண் காட்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்... இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் அபிமான இன்னின நட்சத்திரங்கள் பங்குபற்றும்...”
இடைவிடாமல் காதுக் குள் கத்தி கொண்டிருந்தது ஒலிபெருக்கி.
எந்தச் சனியன்களையெல்லாம் எ வாழ்க்கையில் இனி நான் காணவே கூடாது என் நினைத்திருந்தேனோ அவை என் பார்வையில்
தாதலெனும் தேர்வெழுதி...
பட்டுவிட்டது. கண் காட்சி என்றதும் சரியா
விசாரிக்காமல் நான் வந்து சேர்ந்ததை விதி என்ற சொல்வதா அல்லது தற்செயல் என்பதா?
- "அப்பா! அப்பா! அங்க பாருங்க.. அந்த நிக்குது! பெரீசு ஓன்டு...ஹைய்யா! அந்தா ஏன் வச்சு எல்லாரையும் ஏறியெல்லாம் நின்டு பாக் விடுறாங்கப்பா... வாங்கப்பா நாங்களும் அதி ஏறுவோம்” என்று கையைப்பற்றி இழுத்தான் என் இளைய மகன் தினேஸ். அவன் விழிகளில் பளீரிட் பிரகாசத்தில் மைதானம் முழுவதுமிருந்த நியோம்
குழல் விளக்குகள் தோற்றுப் போயின.
“இல்லடா, அதுகளைப் பிறகு... திரும்பி போகக்குள்ள பார்க்கலாம்... இப்ப வேற்பக்க! போய்... ஆ! அந்தா உனக்குப் பிடிச்ச சொக்ல ஐஸ்கிரீம் இருக்கு.. வாங்கலாம் வா!”
"இல்லப்பா... அதைப் பார்த்திட்( வாங்குவோமே!” என்று அடம்பிடித்தவரை ஏறக்குறைய தரதரவென இழுத்தவாறு ஐஸ்கிரீம் வாகனத்தினருகே கொண்டு சென்றேன்.
".. இதுவரையில் நீங்கள் திரை படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டுமே கண்டு பிரமித்திருக்கும் அசுர சக்திவாய்ந்த...”
மைதானத்தின் மத்தியிலிருந்து ஒலித் இரைச்சல் இசையிலே காதுகள் கிழியும் போலிருந்தன.
அ/ கீவநதி -

சி. *
5).
2.
| “டேய்! ஓட்டை மூக்கா! ஐஸ்கிரீமை வழிய விடாமல் ஒழுங்காப்பிடிடா” என்று தன் தம்பியை அதட்டினாள் மகள் நர்மதா. இந்த அக்டோபர் மாதம் வந்தால் அவளுக்கு 13 வயது முடிகிறது. எட்டாம் வகுப்புத்தான் படிக்கிறாள் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். வயதை மீறிய உயரம், அவள்தாய்மாமன்களின்ஜீன்களின் உபயம்.
- “போடி நெட்டைக் கொக்கு. உன்ட வாயைத் துடைச்சிக்க நீ முதல்ல!” என்று பெப்பே காட்டினான். அவளும் நம்பி தனது வாயில் கைவைத்துப் பார்க்க அவன் பொய் கூறிக் கலாய்த்திருப்பது புரிந்தது.
| "வீட்டுக்கு வாடா! உனக்கு செய்யுறன் வேலை.”
- “சரி, சண்டையை விட்டுட்டு வாங்க அங்க போவம்” என்று பூச்செடிகள் விற்கும் பகுதியைப் நோக்கி தினேசை இழுக்க, "அப்பா, அதில ஏறுவம் வாங்க!” என்று மறுபடியும் பிடித்துக் கொண்டான் அவன்.
".. வானத்தில் மட்டுமே இது வரை நீங்கள் பார்த்திருந்தவற்றை அருகில் நின்றும் ஏறியும் பார்க்க வாருங்கள். விரைந்து வாருங்கள்... அவற்றை நீங்கள் தொட்டுக்கூடப் பார்க்கலாம்... அவற்றுடன் நீங்கள் புகைப்படம் மற்றும் வீடியோ படங்கள் எடுத்துக்கொள்ள முடியும். திருமலை வாழ் மக்களுக்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம்...”
"சே! பரசுவையும் துணைக்குக் கூட்டி வந்திருக்கலாம். அவன் வந்திருந் தால் தினேஸை மட்டுமாவது அவனுடன் அனுப்பி அந்தச் சனியனிலே ஏறி இறங்கிவர விட்டிருக்கலாம். “பரசு” என்கிற பரமேஸ்வரன் என் மனைவி கோகிலாவின் கடைசித் தம்பி. இங்கே கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் கணனி உதவியாளராக வேலை செய் கின் றான . கோகிலாவின் அகால
மூதூர் மொகமட் ராபி
இ) |.
5.
இதழ் 64 தை 2014

Page 34
மறைவுக்குப் பிறகு அவன் ஒருவன்தான் இந்த ஊரில் எனக்கும் பிள்ளைகளுக்கும் என்று இருக்கும் ஒரே உறவு.
"அத்தான், ரெண்டு பிள்ளைகளையும் எக்ஸிபிஷனுக்குக் கொண்டு போறீங்க... நிறைய சனமாயிருக்கும். வேணுமெண்டா நானும் வாறன்” என்று லேப்டொப்பை லொக் ஓப்ஃ செய்து விட்டு எழுந்தவனை, “இல்ல பரசு, பரவாயில்லை நான் சமாளிப்பன். நீ உன்ட ஓபிஸ் வேலைகளைப் பாரு” என்று அவன் தோளைத் தொட்டு அமர்த்திவிட்டு இவர்கள் இருவரையும் நானே கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.
"சே! தானாக வலிந்து கேட்டானே.. இப்போது கூப்பிட்டால் கூட ஓடி வருவான். ஆனால் என் செல்போனை வீட்டில் அல்லவா வைத்து தொலைத்து விட்டேன். இப் போ என்ன செய்யலாம்?”
"டேய்! தினாக்குட்டி! என்ட செல்லம்... அப்பாவுக்கு தூசு ஒத்து வராதுடா... வீஸிங் வந்து ரும்டா கண்ணா. அங்க பார்! அந்த மஞ்சள் லைட்போஸ்ட்டுக்குக் கிட்ட... எப்படி தூசு கிளம்பு தெண்டு. அங்க போக வேண்டாமடா. இங்கிருந்தே அதைப் பாரேன் நல்லாத் தெரியுதுதானே”
“விடுங்கப்பா முதுகில ரெண்டு பளீ ரெண்டு! இந்தக் குட்டிச் சாத்தானுக்கிட்டப் போய் கெஞ்சிகிட்டு. டேய்! பிசாசு அப்பா சொன்னாக் கேளேன்டா!”
“நீ கொக்கு போடி அங்கால..! அந்தா எல்லாரும் ஏறி நிக்கிறாங்கதானே.... ம்ம்..போவோம் வாங்க! அப்பா வாங்க!” அவன் விடுவதாக இல்லை. வேறுவழியின்றி இருவரும் அவனுடன் இழுபட்டு மைதானத்தின் மத்தியிலே ஒரு பிரமாண்டமான டைனோசர்போல எழுந்து நிற்கும் அதை நோக்கி நடக்கலானோம்.
என் கோகிலா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவளைப் போன்ற தோற்றத்துடனும் தைரியத்துடனும் வளர்ந்து நிற்கும் மகளுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருந்திருப்பாளே... என்று நினைக்கும் போது நெஞ்சு விம்மியது எனக்கு. இந்த கபடம் நிறைந்த உலகில் எனக்குள்ள ஒரேபிடிப்பு என் குழந்தைகள் நர்மதாவும் தினே சும்தான். அவர்களிருவரும் இல்லையென்றால் நானும் என்றோ அவளிடம் போய்ச் சேர்ந்திருப்பேன். என்னுடைய வேதனை களை கடவுளுக்கு அடுத்ததாக பரசு ஒருவன்தான் நன்கறிவான்.
எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் என் கோகிலாவின் இழப்பை மறக்கத்தான் முடியுமா?
***
கோகிலாவை முதன் முதலாக நான் பார்த்தது பேராதனைப் பல்கலைக் கழகத்தின் ஆர்ட் கலரி லைப்ரரியில் வைத்துத்தான். அதற்கு முதலும் பல்கலைக்கழகத்திலே கூட்டத்தோடு
32/ லீவநதி - இத

கூட்டமாக கண்டிருக்கக்கூடும் ஆயினும் அந்த அமைதியான சூழலில் அவளைப் பார்த்ததுதான் இன்னும்ஞாபகமிருக்கின்றது.
-சஞ்சிகை ஒன்றை வாசித்துக் கொண்டி ருந்த எனக்கு எதிரே ஒரு புத்தக அலுமாரியின் பின் புறமிருந்த விசாலமான கண்ணாடிச் சாரளத் தினருகே தலையை ஒருபுறமாய்ச் சரித்து சுவரில் சாய்ந்தபடி ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தை வாசித்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள். பாரதிராஜாவின் கதாநாயகி பாலுமகேந்திராவின் படத்திலே வந்ததுபோல கூந்தல் அலைமோத வெண்ணிற சுடிதாரில் பனிப்புகாரை ஊடறுத்து வரும் காலைச் சூரியனின் கிரணங்களை அடிக்கடி இடையூறு செய்தபடி ஒரு சிறகுகள் இல்லாத தேவதைபோலத் தோன்றினாள் அவள் எனக்கு.
அவளது அமைதியான தோற்றமும் அதிலிருந்த மெல்லிய நளினமும் படித்துக் கொண் டிருந்த புத்தகத்திலிருந்த என து
கவனத்தை அடிக்கடி பிசகச்செய்து கொண்டி ருந்தது. அவளது விழிகளிலிருந்த துறுதுறுப்பும் அவற்றின் அசைவுகளில் தெரிந்த பாசாங்கில் லாத தேடலும் என்னை இனிமையான தொந்தர வுக்குள்ளாக்கின. அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததிலே எனது பார்வை அவள் மீது உறைந்து போயிருந்ததை சில கணங்கள் மறந்து போய் விட்டேன். அதை நானே உணர்ந்து சுதாரிப்பதற்குள் அவள் முந்திக் கொண்டு விட்டாள். ஆம், ஒரு மெல்லிய சந்தேகத்தில் தன் கையிலிருந்த புத்தகத்தை சட்டென விலக்கி “ஹலோ, என்ன?” என்பது போல என்னை அவள் பார்த்த போது தப்பிக்க வழியின்றி மாட்டிக் கொண்டேன்.
மீண்டும் நான் பார்க்கிறேனா என்பதை வேவு பார்ப்பதற்காகவே இந்தத் தடவை படிப்பது போல நடித்தாள். அதனை எதிர்பார்த்து அந்தப் பக்கமே பார்க்காமல் சில நிமிடம் கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களை வெறுமனே புரட்டிக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அடக்கமுடியாமல் அதிகரித்து என்னுடைய இயலாமை அவள் முன்பு வெட்ட வெளிச்சமாகிப் போனது. அன்று அவளிட மிருந்து எனக்குக் கிடைத்தது ஒரு காட்டமான முறைப்பு ஒன்றுடன்தான் அந்தக் காட்சி அன்று நிறைவுக்கு வந்தது. அன்று என்னை அவள் முறைத் தாலும் முறைப்பின் இறுதி மில்லி செக்கனில் எனது தவிப்பை அவள் லேசாக ரசித்துச் சிரித்ததுபோல சிறு சந்தேகம் இருந்தது எனக்கு.
- இது போன்ற காட்சிகளை எத்தனை தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கின்றேன். பெரிய அறிவு ஜூவிபோல தென்னிந்திய தமிழ் சினிமாக்களின் போலித்தனங்களை நண்பர்கள் மத்தியில் நையாண்டி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த எனக்கு அன்று நடந்ததை
ழ் 64 தை 2014

Page 35
நினைத்து வேடிக்கையாக இருந்தது. அதன் பிற நாங்கள் இருவரும் தவறாது லைப்ரரிக்கு சென்றது... தினமும் ஒருவரையொருவர் திருட்டு தனமாய் பார்த்துக் கொண்டது. எங்கள் ஒவ்வொ பார்வையிலும் மில்லியன் ட்ரில்லியன் வண்ணத்து பூச்சிகள் பறந்தது, ஊரிலிருக்கும் உறவுகளுக் கடிதம் கூட எழுதாச்சோம்பேறியான நான்,
"நமது சந்தோசச் சந்திப்புக்கனை
அரங்கேற்றும் அழகான அந்திமாலைப்பொழுதுகள்! உன் ஓரவிழிகளின் ஓவியப்பார்வைகளில் உல்லாச உலாவரும் சின்னச்சின்ன சிரிப்பலைகள்..!
இருவர் விரலிடைகளிலும் தலைப்புகள் கூடப் புரிந்திடாத புத்தகங்களின் திறந்த பக்கங்கள்.. அவையும் தலைகீழாய்..!”
வகையறா கவிதைகளெல்லாம் எழு வதற்கு ஆரம்பித்த விபரீதங்களையெல்லா முழுமையாகச் சொல்லப் போனால் இந்த கதையை அடுத்த இதழிலும் தொடர வேண யிருக்கும் என்பதால் இந்த அளவிலே விட்டுவி கின்றேன்.
மீதியிருந்த ஒன் றரை வருடத்தி பார்வைப் பரிமாறல்கள், புன்னகைகள் மற்று விநோதமான நடத்தைகள் என்ற சிற்றோன களெல்லாம் ஒன்று திரண்டு காதல்நதி எனு முழுவடிவத்தைப் பெறுவதற்கிடையில் எங்க இருவருக்கும் இறுதியாண்டுப் பரீட்சை ஆரம்பித் விட்டது. அந்தப் பரீட்சை கல்விக்கு மட்டுமல்லா எங்கள் ஊமைக் காதலுக்குமாக இருந்தது காதலின் வலி எத்தனை கொடுமையான என்பதை நாங்கள் இருவரும் பரீட்சைகள் நிறை பெற்று ஊருக்குத் திரும்புவதற்காக பஸ் தரிப் களிலே காத்திருந்த ஒரு ஆகஸ்ட் மாதத்தின் மன நாளில்தான் உச்சபட்சமாக உணர்ந்தோட உண்மையைச் சொன்னால் திரைப்படவிழாக்களி காண்பிக்கப்படும் உரையாடல்கள் குறைவா விருதுபெற்ற திரைப்படமொன்றின் ஆரம்ப காட்சியைப் போல சோகையாய் இருந்து வந்த எங்கள் பல்கலைக்கழக காதல்உறவு.
ஆனால் அதன்பிறகு இருவர் வாழ்விலு நடந்ததெல்லாம் அதிரடிக் காட்சிகள்தான்.
ஆம், ஊருக்குப் போனபின்பு கோகில தன்னைப் பெண்பார்க்க வந்தவர்களிடம் எங்க காதலைச் சொல்லிக் கோபமாய் பேசியது.. அவை அவளது அண்ணன்கள் அடித்து அறைக்கு அடைத்து வைத்தது... அந்த விடயத்தை அவள் ஊரிலிருக்கும் எனது நண்பன் ஒருவன் மூலமா உடனே அறிந்தது... அடுத்த பஸ்ஸைப் பிடித் நண்பர்கள் சகிதம் அவள் வீட்டிற்கே போ
இறங்கியது... கோகிலாவின் வீட்டு வாசலிே
33/ கீவநதி

G E. G 65. 11. டு
ச்
55 89. 5. 1941
அவளது உறவுகளுடன் பேச்சுவார்த்தையில் ஆரம்பித்து அடிதடியில் முடிவடைந்த இழுபறிச் சண்டையிலே தற்காப்புக்காக நாங்கள் அவள் அண்ணன் களுக்கு அடித்தது... அவர்கள் எங்களைத் திருப்பித் தாக்கியது... என் சட்டை கிழிந்தது... எல்லாமே நான் கேலிசெய்து மகிழும் தமிழ் சினிமாவில் போலத்தான் நடந்தேறியது. வேறுபாடுகள் என்று ஏதும் இருந்ததென்றால் மச்சான்களின் கைகளிலே நீண்ட கூரிய அரிவாள் களும் சண்டைக் காட்சிகளின்போது வழக்கமாகப் பொழியும்மழையும் இல்லாமலிருந்ததுதான்.
முதலிலே மூர்க்கமாக எதிர்த்துப்பார்த்த கோகிலாவின் குடும்பம் எங்கள் காதலின் வலிமையை உணர்ந்து மிரண் டு பணிந்து போனது. ஆனாலும் யாழ்ப்பாண மேட்டுக்குடிச் சாதித்திமிரில் ஊறியிருந்த அவர்கள் என் பேரைத் தெரிந்து கொள்ளுவதற்கு முன் பே எனது சாதியைத் தெரிந்து கொள்வதில்தான் அக்கறை காட்டியிருந்தார் கள். அவர்களது வரட்டுப் பிடிவாதங்களையெல்லாம் மீறி இருபக்க உறவு களும் சமாதானமாகி ஊருக்கு வெளியேயிருந்த ஒரு கோயிலில் எங்கள் திருமணம் நடந்தபோது பிரமிப்பாகத்தான் இருந்தது. இதோ இப்போது எங்களோடு தங்கியிருக்கும் பரசு அப்போது காற்சட்டை போட்டுத்திரியும் விடலைச் சிறுவன். அன்றைய சண்டையின் முடிவில் கோகிலாவை அழைத்துக் கொண்டு நான் ஊருக்குப் புறப்பட்ட போது கிழிந்துபோன எனது சட்டைக்குப் பதிலாக தனது கோபக்கார அண்ணனின் சட்டை ஒன்றைக் கொண்டு வந்து தந்தவன். அதற்காக அண்ணன்களிடம் பின்னர் அடியும் வாங்கி யிருந்தான். சண்டை சமாதானமாகி திருமணம் கோயிலிலே நடந்தபோது அடிவாங்கிய தழும்பு களை என்னிடம் காட்டி பரசு அழுத காட்சிகளை யெல்லாம் இப்போது நினைத்தாலும் குதிகாலில் குத்தியிருக்கும் சிறுமுள் ஒன்றை வருடி வருடி யெடுப்பது போன்றதொரு சுகமான வலிதரும்.
கோகிலாவின் அண்ணன்கள் யாருமே எங்கள் திருமணத்திற்கு வரவில்லை. அவளது அப்பாவும் அம்மாவும் வேறுவழியின்றி மகளுக் காக வந்து அரைமனதோடு நின்றிருந்தார்கள். தவிர சில உறவினர்களும் வந்திருந்தனர். உறவினர்களை விட அதிகமாய் நிறைந்து நின்ற தெல்லாம் எங்கள் பல்கலைக்கழக நண்பர்கள் தான். திருமணத்தின் பின்பு சில வருடங்கள் வரை யாழ்ப்பாணத்திலுள்ள கோகிலாவின் வீட்டில் தான் இருந்தோம். வேலையும் கிடைத்திராத அந்த காலங்களிலே கோகிலாவின் குடும்பத்தவர் கள் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் என்னைப் பற்றியும் எனது சாதியைப் பற்றியும் குத்தூசிப் பேச்சுக்களால் நோண்டிக் கொண்டேயிருந்தார் கள். அவை எல்லாவற்றையும் கோகிலாவின் காதலுக்காகவும் பரசு என்மீது வைத்திருந்த
ள்
2.
89. 2 2.
5 5 5
- இ
E. 9
ல்.
- இதழ் 64 தை 2014

Page 36
பாசத்திற்காகவும் பொறுத்துக் கொணர்டிருந்தேன். அவ்வாறு பொறுத்துக் கொணர்டிருப்பதைக்கூட கோகிலாவுக்கு நான் காட்டிக் கொள்ளவில்லை. அவ்வப்போது தன்மான உணர்ச்சி பொங்கினாலும் பின்விளைவுகளை எணர்ணிச் சாந்தமாக இருப்பதை ஒரு புதிய கலையாகவே பழகி வைத்துக் கொனர்டேனர்.
கோகிலாவுக்கும் எனக்கும் ஒன்றாகத் தான் பட்டதாரி ஆசிரியர்நியமனங்கள் கிடைத்தன. அவளுக்கு கிளிநொச்சியிலும் எனக்கு எண் ஊரான தரிருகோணமலையிலும் பாடசாலை கள கிடைத்தன. இருந்த போதிலும் கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலையை இணைப்பில் கடமை யாற்ற அனுமதிகோரி பெற்றுக்கொண்டேன். இரு வருமாக கிளிநொச்சியில் ஒருவீடு எடுத்து தங்கி யிருந்தோம். அங்குதான் நர்மதா பிறந்தாள். நர்மதா பிறந்த காரணத்தால் மீண்டும் யாழ்ப்பாணத்தி லிருக்கும் கோகிலாவின் வீட்டில் வந்து சில மாதங்கள் தங்கினோம். நான் மட்டும் தினசரி பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தேனர். மீண்டும் கோகிலாவுக்குத் தெரியாமல் எனக்கு குத்தல் பேச்சுக்கள் ஆரம்பமாகின. அப்போதும் இளையவன் பரசு மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தான். நான் எனது மனக்காயங்களை மறைத் தாலும் தனது குடும்பத்தவர்களின் குணத்தை அறிந்ததாலோ எண்னவோ கோகிலா எனது ஊரான திருகோணமலைக்கே வந்துவிடத்தான் ஆசைப் பட்டாள். ஆனால் பாவி நான்தான் கெடுத்தேன். ஆம், ஒரு பெண் தனது குடும்பத்தைப் பிரிந்திருக்க வேண்டாமென்று நினைத்து வற்புறுத்தி அவளது ஊரிலேயே இருக்கச் செய்துவிட்டேன். அப்படி மட்டும் நான் செய்யாதிருந்தால் இன்று எண் மகனைப் பிடித்துக் கொணர்டிருக்கும் எனது இடது கைச்சுட்டு விரலினை அவளது கைககள்தானே பிடித்துக்கொண்டிருந்திருக்கும்.
நினைக்கும் போதே கணிகளில் நீர் துளிர்த்தது.
"அப்பா என னப்பா? அம்மாவைத் தானேப்பா..? அழாதீங்க நீங்க!" என்று என்னை மார்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள் நர்மதா, எனது ஒவ்வொரு அசைவையும் சட்டெனப் புரிந்து கொணர்டு விடுவதிலே கோகிலாவைப் போலவே தானி இவளும் இருந்தாள்.
"இல்லடா.அழேல்லடா. சும்மா அவளை நினைச்சுப் பார்த். சரி, நீ விடு” என்று கணிணைத் துடைத்துக் கொணர்டு அவள் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு, "தினேஸ்!” என்றேன்.
பதிலில்லை. எங்கே அவன்? "அங்க பாருங்கப்பா அந்தா அங்க போயிட்டானப்பா" கூப்பாடு போட்டாள் நர்மதா, சோடியம் வேபர் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் தினேஸ் கூட்டததை ஊடறுத்து ஓடி கி கொணர்டிருந்தான்.
34/ஜீவநதி - இத

“டேய். தினேஸ். தினேஸ்." என்று எவ்வளவு கூப்பிட்டும் கேளாமல அவனர் ஜனசமுத்திரத்தினுள் கலந்துவிட்டான். எனக்கு பயத்தில் மார்பு வலித்தது. இத்தனை மனிதர் களுக்குள் அவன் தொலைந்து போனால் நர்மதா, வையும் இழுத்துக் கொண்டு எப்படி அவனை எப்படிக் கண்டுபிடிப்பது.?
"அப்பா, நங்க டென சனா காம சும்மாருங்கப்பா. அவன் அந்தா ஆக்களோட வரிசையாய் போய் ஏறுறான் அப்பா, இஞ்சருந்து பார்க்கத் தெரியுதப்பா. அவன் போய் பாத்திட்டு வரட்டும். நாம இங்கேயே இருந்தாத்தான் அவன் தேடி வருவான். அவனும் அலைய நாங்களும் அலைந்தால் காணக் கஷ்டம்,
அவள் சமாதானஞ் சொன்னாலும் என் மனம் பதறிக்கொண்டேயிருந்தது.
"இல லமி மா, இதே போல ஒரு கூட்டத்திலதானம்மா உங்க அம்மாவும் என்னை விட்டு காணாமல் போனவ. அதாலதான் நான் பதறுறன்." என்றுவிட்டேன் வாய்தவறி.
“என்னப்பா சொல்றீங்க..?" "இலல காணாமல் போய். பிறகு. அப்படியா சொன்னேன்?"
"ஒம், அப்படித்தான் சொனர்னிங்க. அம்மா காணாமல் போனவவோ..? வருத்தம் வந்து செத்துட்டா எனர் டல்லவா எனக்குச் சொனர்னனிங்க? அம்மா எங்கப்பா? நீங்க எதையோ எண்கிட்ட சொல்லாம வச்சிருக்கீங்க." என்று அழஆரம்பித்துவிட்டாள்.
"இல்லடா.நர்மதா,. ஏதோ குழப்பத்தில. சொல்லிட்டன் நீ வா இப்ப தம்பியைத் தேடுற வழியைப் பாப்பம்"
நான் எவ்வளவு சமாளித்தாலும் நர்மதா சமாதானமாகவில்லை என்பது அவளது பார்வை யிலேயே தெரிந்தது. இத்தனை காலம் பிள்ளை களுக்கு தெரியப்படுத்தப்படாமல் இருந்த உணர்மை களை என்னுடைய வாயாலேயே சொல்லும் கஸ்டத்தை எனக்குத் தந்து விடாதே கோணேசப் பெருமானே என்று அந்த திசை பார்த்து மனதால் வேணர்டிக் கொணர்டேன்.
கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்த நாளில்தானி தினேஸ் பிறந்தான்.
அப்போது நாங்கள் இடம்பெயர்ந்து வட்டக்கச்சியிலிருந்ததற்காலிக முகாம் ஒன்றிலே தங்கியிருந்தோம். எங்களைப்போலவே மக்க ளோடு மக்களாக கூடவே வந்து கொண்டிருந்த டென்மார்க் நாட்டின் சேர்ந்த இரு பெண் ஊடக வியலாளர்களும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று தன்னார்வ சுகாதாரத் தொணர்டர்களு மாகச் சேர்ந்துதான் தங்களிடமிருந்த குறைந்த பட்ச மருத்துவ வசதிகளை மட்டும் வைத்துக் கொண்டு கோகிலாவுக்குபிரசவம்பார்த்தார்கள்.
இராணுவம் கிளிநொச்சியில் தங்கி
64 'தை 204

Page 37
யிருந்து தென்கிழக்கு நோக்கி துருப்புக ை நகர்த்தப்போவதாக கதை பரவிக்கொண்டிருந்த, ஆகவே எல்லோரும் முல்லைத்தீவை நோக்க செல்வதுதான் பாதுகாப்பானது என்று பேசி கொண்டார்கள். சிலர் முகாமிலிருந்து மெல் நழுவிக் கொண் டிருப் பதையும் கண் டேல் முகாமை விட்டுச் செல்வது பாதுகாப்பானதல் என்று கூறிச் சிலர் தடுக்க முனைந்தபோதிலு முன்னைய அனுபவங்களால் உந்தப் பட் பரிதவித்த மக்கள் கூட்டம் எதையும் கேட்காம் காடுகளை ஊடறுத்து போகத்தொடங்கிவிட்டது.
பிறந்து மூன்று நாட்கள் கூட ஆகா பச்சைப் பாலகனையும் ஆறுவயதுச் சிறுமியா நர்மதாவையும் இழுத்துக்கொண்டு எப்படி கா களுக்குள் நடப்பது என்று நான் கவலைப்பட்டேன் இதுபற்றி அந்த வெள்ளைக்காரர்களிடம் கூறி போது அவர்கள் யோசனையிலாழ்ந்தன தங் களுக்குள் கூடிப் பேசிக் கொண் டனர ஆனாலும் இப்போதைக்கு போகவேண்டா என்றனர். எங்களைப் போலவே இன்னும் சி பிறந்த சிசுக்களையும் கர்ப்பிணித் தாய்மார்கை யும் தங்கள் கூடாரங்களிலே அவர்கள் வைத்து பராமரித்துக் கொண்டிருந்தனர். வானிலிருந் பார்த்தால் தெளிவாகத் தெரியும் வண்ண தங்களது கூடாரத்தின் மீது சுகாதார தொண நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதா வான்தாக்குதல் நடாத்தப்படாது என்றும் அதனா அங்கேயே தங்கியிருக்குமாறும் கூறினர இராணுவம் தரைவழியாக வந்தால்கூட தங்களா அவர்களுடன் பேசி குழந்தைப்பேறுள்ள தா மார்களையும் குழந்தைகளையும் காப்பாற் முடியும் என்றனர். எனக்கும் அதுதான் சரியென் பட்டது. ஆனால் மக்கள் கூட்டம் கரைய தொடங்கியதும் மனம் ஏனோ சலனப்பட்டது கர்ப்பிணித் தாய்கள், காயமடைந்த இயலா வர்கள், வயோதிபர்கள் தவிர ஏனையோர் முகாை விட்டு வெளியேறியிருந்தனர். இன்னும் சில ஒன்றாகச் சேர்ந்து செல்லும் இறுதிக் குழுவு
குரிய ஆட்களைத்திரட்டிக் கொண்டு நின்றனர்.
"சனமெல்லாம் அடிச்சுப் பிடிச்சி போகுது.. என்னப்பா செய்வம்?” என்று கேட்டால் கோகிலா.
"முல்லைத்தீவுக்கு இங்கிருந்து ஞா மான தூரம் காட்டுக்குள்ளால நடக் கோணும் நாங்க வந்ததைவிட வலுத்த காடு அது. பச்ை உடம்புக்காரி உன்னால ஏலுமே.. கோகிலா அதோட வெள்ளைக்காரங்கள் சொல்றதையு கேட்கத்தானே வேணும்..”
“அங் கிருந்து கொலைவெறியோ வாறதுகள் வெள்ளைக்காரங்கள் சொல்ற நியாய களைக் கேட்குமே... சரி, நாங்கள் பொம்பிளைக பிள்ளைகள் என்டு பாத்து இரங்கி எங்களை ஒண் டும் செய்யாமல் விட்டாலும் நீங்க
35/ ஜீவநதி

2. 9 5. 2 - 2 5. 6. : 2
5. . • E =• 9 4 5)
லெ.
1
புது E.
2. 2.
ஆம்பிளைகள்..? உங்களைப் பிடிச்சுக்கொண்டு போயிடுவாங்கள். விசாரிக்கிறதுக்கெண்டு கொண்டு போய்ச்சுட்டுப்போடுவாங்கள்.”
- "அதுக்காக அவ்வளவு தூரம் கைப் பிள்ளையோட நீ நடப்பியே கோகிலா? இடையில பிள்ளைக்கு ஏதும் சுகம் இல்லண்டா என்ன செய்யிறது? அதால நான் மட்டும் போறன். நீயும் பிள்ளைகளும் இங்கேயே முகாமில் இருங்கோ.. வெள்ளைக்காரங்க பத்திரமா உங்களை ஊர் சேர்ப்பாங்கள்... பிறகு ஊருக்குப் போனபிறகு சந்திப்பம்...”
“ஐயோ..வேணாம், எங்களை விட்டுட்டு உங்களால தனிய இருக்க முடியுமா? இந்தா இவ்வளவு ஆக்களும் பிள்ளை குட்டிகளோடு போகுதுகள்தானே... பிள்ளைக்குத் தேவையான மருந்து சாமானெல்லாம் அந்த பிரான்ஸ்காரங்க தந்திருக்கிறாங்க.. உடுப்புகளையும் பைல்களையும் மட்டும் எடுப்பம். மற்ற சாமானெல்லாம் வேணாம். கோணேசர் புண்ணியத்தில் உயிர் பிழைச்சு திருகோணமலைக்குப் போய்ச் சேந்திட்டால் சம்பளத்துல எல்லாம் திரும்ப வேண்டிரலாம்..”
- " அட இதென்னது...? முந்தியெல்லாம் “நல்லூரான் புண்ணியத்தால” என்றுதான் உன்ட வாயில வரும் இப்ப புண்ணியத்தை கோணே சருக்குட்ரான்ஸ்பர் பண்ணிட்டியே...கோகிலா?”
"சீ! உங்களுக்கு இந்த வேளையிலும் நையாண்டிதான் என்ன?”
- "அப் ப என்ன போவம் என் றியா கோகிலா..?”
“ஓம் அத்தான், யோசிக்காதீங்க.. உடுப்பு பேக்கை தோள்ல போட்டுட்டு நீங்க நர்மதாவைத் தூக்குங்க..!”
“கொஹிலா வெய்ட்.. வெய்ட்..! வொய் ஆர்யூ ஓல் லீவிங்..? யூ ஷூட் நொட் கோ இன் திஸ் கண்டிஷன்..” என்று மன்றாடிய அந்த வெள்ளைக் காரிகளிடம் வெகுநேரம் வாதிட்டுவிட்டு நாங்கள் புறப்படும்போது வானத்திலே ஆளில்லா விமானம் ஒன்றுஉயரப்பறந்து கொண்டிருந்தது.
இரவுகளில் கிடைத்த மரங்களுக்கு அடியில் கூட்டமாகச் சேர்ந்திருந்தவாறு ஆண் களெல்லாம் சுள்ளிகளை ஒன்று சேர்த்து நெருப்பு மூட்டிக் காட்டு மிருகங்களிடமிருந்து பெண்களை யும் குழந்தைகளையும் காத்திருந்தோம். பின்னிரவில் சிறிதுநேரம் ஓய்வெடுப்பதும் பின்பு அதிகாலையில் பொழுது புலர ஆரம்பித்ததும் இயன்றளவு விரைவாக நடப்பதுமாக ஏறத்தாழ நான்கு தினங்கள் கழிந்து காடுகடந்து ஊர்ப் பகுதியை அடைந்தோம். எல்லா ஊர்களும் ஏறத் தாழ வெறிச்சோடியிருந்தன. நம்பிக்கையில்லாத விழிகளோடு சில வயோதிபர்கள் மட்டும் ஊடாடிக் கொண் டிருந்தனர். ஓய் வும் நடையுமாக கிடைக்கும் இடத்திலெல்லாம் அகப்படும் கிழங்குகள், இளநீர் போன்ற உணவைத் தின்று
பட் '6
E.
8.
பி. சி. S. 5 " 2' |
3 .
38 3. உ. |
- இதழ் 64 இதை 2014

Page 38
குடித்தபடி மக்கள் கூட்டம் சாரிசாரியாக நடந்து கொண்டேயிருந்தனர். சில இடங்களிலே பெண் களும் பிள்ளைகளும் நடக்க முடியாமல் அவதிப் பட்ட போது சிறு உழவு இயந்திரம் போன்ற வாகனங்களில் இடம் கிடைத்தது. ஆனால் காட்டுப் பகுதிகளினுாடு வெறும்நடைதானர். ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டும் நம்பிக்கை பூட்டிக்கொண்டும் உயிரைக் கையில் பிடித்தபடி நகர்ந்தோம்.
ஒருநாள் மாலை 4 மணியளவில் நாங்கள் எல்லோரும் புதுக்குடியிருப்பு அகதிகள் முகாமைப் போய் ச் சேர்ந்தோம். அங்கு ஏற்கனவே எங்களோடு வடக்கச்சி முகாமிலிருந்த அகதிகள் பலரும் தங்கியிருந்தார்கள். எங்கள் துரதிஸ்டம் எங்கள் பின்னாலேயே வந்திருக்கவேணடும். நாங்கள் அங்குபோய்ச் சேர்வதற்கும் தலைக்கு மேலாக கிர் கிர்ரென்ற காதைப்பிளக்கும் பயங்கர விசிறிகளின் ஒலியோடு அந்தச் சனியன்கள் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. வானிலிருந்தது சரமாரியான தாக்குதலால் அந்த இடமே புகை மணி டலமானது. ஏற்கனவே முகாமிலிருந்த அகதிச் சனங்களும் எங்களோடு சேர்ந்துவந்த சனங்களும் சுதாரிப்பதற்குள் நடந்த தாக்குதல் களில் எங்கள் கண்ணெதிரே பலர் உடல் சிதறிச் செத்து மடிந்தார்கள். எஞ்சியவர்கள் எங்கே ஒடித் தப்புவது என்பது அறியாமல் குறுக்கும் நெடுக்கு மாக ஓடியதிலே மனித நெரிசல் உணர்டானது. நர்மதா பயந்து வீறிட்டு அழுதபடி எண் தோளைக் கட்டிக்கொள்ள கைக்குழந்தை தினேசை சுமந்த படி என்னருகிலே நடந்து வந்து கொண்டிருந்த கோகிலா ஒருகையிலே பிள்ளையைப் பிடித்தபடி மறுகையால் எண் இடது கையை இறுகப்பிடித்துக் கொண்டதுமட்டும்தான் எனக்கு ஞாபகமிருந்தது.
அதனர் பிறகு எனக்கு சுயநினைவு திரும்பியபோது என் தலைக்கு மேலே மின்விசிறி யொன்று சுழன்று கொண்டிருந்தது. அது எனக்கு புதுக்குடியிருப்பில் எங்கள் மீது தாக்குதல் நடத்திய சனியனர்களை ஞாபகப் படுத்தியதால் நான் பயந்துபோய் வாய்விட்டு அலறினேன். உடனே எனக்கு அருகில் நின்றிருந்த சீருடையணிந் திருந்தவர்கள் என னை ஆசுவாசப்படுத்த முயற்சிக்க வெள்ளை மேலங்கி அணிந்திருந்தவர் கள் ஒரு ஊசியேற்றினார்கள். படபடப்பு சிறிது குறைந்த பினர் புதான நானர் இருப்பது ஒரு வைத்தியசாலை என்பது தெரிந்தது. தலையை சரித்துப் பார்த்தபோது எனக்கடுத்த கட்டிலில் கைகளிலும் தலையிலும் கட்டுகளுடன் நர்மதா படுத்திருப்பதையும் பார்த்தேனர். எழுவதற்கு முயற்சித்த என னை அருகே நினர் றிருந்த வைத்தியர்கள் தடுத்தார்கள். கோகிலாவையும் என் கைக்குழந்தையையும் காணவில்லை. அவர்கள் இருக்கின்றார்களா என்று தேடின எனது விழிகள்.
"நான். எங்க. இது எந்த இடம்.?”
36/ வீவநதி - இது
 
 

"ஆங். கொஞ்சம் அமைதியாயிருங்க. மயக்கம் முழுசா தெளியட்டும்"
சிலமணி நேரத்திற்குப்பிறகு முற்றாக மயக்கம் தெளிந்ததும் சாப்பிட பிஸ்கட் டீ தந்தார்கள். சில வெள்ளைக்காரர்கள் உட்பட பெரிய வைத்தியர்கள் குழு ஒன்று வந்து என்னைப் பரிசோதித்து தங்களுக்குள் நிறையப் பேசியும் எழுதியும் கொண்டது.
“எங்க எண்ட கோகிலா எங்க எண்ட பிள்ளை ?”
"இருங்க சொல்றம். இப்படி வாங்க" என்று எண்னை சக்கர நாற்காலியில் வைத்து சற்றுத் தளர் ளரியிருந்த ஒரு விசாலமான அறைக்குள் தள்ளிக்கொணர்டு சென்றார்கள் தாதிகள். அங்கு சீருடையணிந்திருந்தவர்களும் சில வைத்திய உதவியாளர்களும் சுற்றி நின்றிருந்தனர். அவர்கள் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டனர். எனது பதில் களை யெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டனர். அதன் பின்பு சீருடையணிந்தவர்கள் ஏனையோருடன் கைகுலுக்கி வெளியேறிச் சென்று விட்டனர். அதன் பிறகுதான் அங்கிருந்த செஞ்சிலுவைத் தொண்டர்கள் புதுக்குடியிருப்பில் நடந்தவற்றை யெல்லாம் மிகவும் பக்குவமாகக் கூறிமுடித் தார்கள். அதைக் கேட்டதும் எனர் நெஞ சு வெடித்துவிடும் போலிருந்தது.
புதுக்குடியிருப்பு அகதிகள் முகாமில் நடந்த வான்தாக்குதலில் நுாற்றுக்கு மேற்பட்ட வர்கள் இறந்து விட்டார்கள். பலரது உடல் அடை யாளங் காணமுடியாதபடி சிதறிவிட்டது. பலர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. உயிர் தப்பியவர்களையும் காயப்பட்டவர்களை செஞ் சிலுவைச் சங்கத்தினர் தமது வாகனங்களிலே வவுனியாவுக்கு கொண்டு வந்து சேர்த்தபின்பு காயங்களின் தன்மையைப் பொறுத்து சிலரைக் கொழும்புக்கும் சிலரை அனுராதபுரம் மற்றும் கணர்டிக்கும் என்று மாற்றிச் சிகிச்சை பெற உதவியிருக்கின்றார்கள். எனக்கு தலையிலும் கழுத்திலும் பலத்த காயம்பட்டிருந்ததால் மயக்கம் ஏற்பட்டிருந்தது. மூன்று சத்திர சிகிச்சைக்குட் படுத்தப்பட்டிருக்கின்றேன். நர்மதாவுக்கு கையில் எலும்பு முறிவுடன் தலையிலும் சிறுகாயம் பட்டிருந்தது என்பதால் சுயநினைவோடு இருந் திருக்கின்றாள். அதனால்தான் மீட்புக்குழுவின ரால் என்னை அடையாளங் காண முடிந்திருக் கின்றது. ஆனால் நர்மதாவின் உதவியுடன் கோகிலாவை எவ்வளவு தேடியும் அவளுக்கு என்ன நடந்தது என்று யாருக்குமே தெரிய வில்லையாம். அவளது பெயர் இன்னமும் இறந்தவர்களின் பட்டியலில் அன்றி காணாமற் போனோரின் பட்டியலிலே சேர்க்கப்பட்டு தேடுதல் நடப்பதாகவும் அவர்கள் கூறினர்.
தாக்குதல் முடிந்தபின்பு இறந்தவர்களை
@@4 /தை 204

Page 39
அடக்கம் செய்வதற்கு முன்பு சிதறிக்கிடந் உடல்களுக்குள் நர்மதாவினி உதவியோ கோகிலாவை அடையாளங் காணர் பதறி முயற்சித்தும் அது முடியாமல் போய் விட்டதா ஆனால எங்கள் கைக் குழந்தை தினே6 தெய்வாதீனமாக எதுவித காயமுமின்றி ஒரிடத்தி துணிசுற்றியவாறு தப்பிப்பிழைத்துக் கிடந்திரு கின்றான். அவனையும் நர்மதாதான் அடையாள காணர்பித்திருக்கின்றாள். நான் படுகாயமுற் மயக்கமுற்றிருந்ததால் எங்கள் மூவரையும் முதg தவிக்குப் பின்பு நேரே கொழும்புக்கு அம்புல6 ஸில் கொணர்டு வந்திருக்கின்றார்கள். நா6 தொடர்ந்து நினைவின்றி இருந்து வந்திரு கின்றேனர். மூன்று சத்திர சிகிச்சைகளையு தாண்டி ஐந்து நாட்களுக்குப் பின்புதான் நான் கன விழித்ததால் அதுவரை நர்மதாவையும் பிஞ்சு பாலகன் தினேசையும் செஞ்சிலுவைச் சங்க தாதிகள்தான் பராமரித்து வந்திருக்கின்றார்கள் அங்கிருந்த செஞ்சிலுவைச்சங்கத் தொணர்ட் களும் ஆற்றுப்படுத்துபவர்களும் எனக்கு தெரிவித்த தகவல்கள் அவ்வளவுதான். இவற்ை யெல்லாம் வெளியில் வேறுயாரிடமும் முக்கி மாக ஊடகங்களுக்குச் சொல்ல வேணர் ட மென்றும் கேட்டுக்கொணர்டார்கள்.
அதன் பின்பு நான் அழுது அரற்! எவ்வளவோ மன்றாடியும் கோகிலா பற்றி தகவல்கள் எனக்குக் கிடைக்கவேயில்லை கோகிலா காணாமல்போன இடத்தில் அப்போது யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததா? அங்கு போகவோ விபரங்களை அறியவே முடியாமலே போய்விட்டது. அதன் பிறகு நான நர்மதா, தினேஸ் மூவரும் ஒரளவு தேறியது தரிரு கோணமலை வைத தரிய சாலை கி ( மாற்றப்பட்டோம். இங்கு பலவாரங்கள் சிகிச்ை பெற்றோம். எண்ணையும் பிள்ளைகளையும் யாரு தேடிவராத காரணத்தால் சுகாதாரத் தொணர் நிறுவனங்களினி பராமரிப்பிலேயே நாங்கள் சிகிச்சை முடியும் வரை இருந்து வந்தோம்.
அதற்கிடையில் மிகப்பெரும் உயிரிழப் களோடு யுத்தமும் நிறைவு பெற்று விட்டிருந்தது ஏ-9 பாதை திறக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பின்புதான கோகிலாவின் குடும்பம் விடயத்தை அறிந்து கொணர்டது குடும்பத்தோடு திருகோணமலைக்கு வந்து நின்று
அழுதார் கள கோகிலா வினி பெற்றோ,
என்னுடைய இரு குழந்தைகளையும் தாம் யாழ் பாணத்திற்குக் கொணர்டுபோய் வளர்ப்பதா கெஞ்சிக் கேட்டார்கள். எனது பிள்ளைகளு என்னுடைய அதே சாதிதானே என்று கூறி காட் மாக மறுத்துவிட்டேன் நான். எனினுடைய இயலா நிலையிலும் கோகிலாவின் அணிணண் கள் தங்கள் தங்கையை நானர் அநியாயப் பலிகொடுத்து விட்டதாக ஏசிவிட்டுப் போனார்கள். அவர்கள்
37/ஜீவநதி ,
 
 
 
 
 

I
ஊர்திரும்பும் நாள் வந்தபோது பரசு திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை தான் யாழ்ப்பாணம் திரும்ப மறுத்து என்னு டனேயே இருக்கப்போவதாக பிடிவாதமாகச் சொல்லி விட்டான். இங்கேயே வேலையும் தேடிக்கொணர்டு எங்களோடு இருந்து விட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அவன் எங்களைப் பிரியவேயில்லை.
நர்மதாவுக்கு புதுக்குடியிருப்பு வான் தாக்குதல் சம்பவத்தினால் மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சி அவளது சில நினைவுகள் மறக்கச் செய்திருந்தது என்பதை பினர்புதான் நானும் பரசுவும் அறிந்து கொண்டோம். மருத்துவர்களும் அதை உறுதிப்படுத்தினார்கள். அவளுக்கு எவ்வளவோ சிகிச்சையளித்தும் கூட அவளால் தனது தாய் பற்றிய பழைய ஞாபகங்களைக் கூட மீட்க முடியாமல போய்விட்டது. அதனால் அவளுக்கு கோகிலாவின் இழப்புப் பற்றிய உணர்மையைக் கூறாமல் கோகிலாவின் படத்தை மட்டுமே காண்பித்து அவள் சுகயினம் காரணமாக இறந்ததாகத்தானி நானும் பரசுவும் சொல்லி வைத்திருக்கின்றோம். அதனால்தான் இப்போது நான கூறியது அவளை அதர ச சரிக குள்ளாக்கியிருக்கின்றது.
来来米
"அப்பா. தினேஸ் எங்கப்பா?” என்று கத்தினாள் நர்மதா,
அதுவரை எங் கள பார்வையில இருந்தவன் எங்கே போயிருப்பாண் என்று பதறியது எண் மனம், அதற்காக கோகிலாவை பலியெடுத்த காரணத்தால் அதைப்பார்த்தாலே எரிச்சல் தருகின்ற அந்த இயந்திரச் சனியனை நெருங்கி அவனைத்தேடவும் விரும்பவில்லைநான்.
"எங்க போயிருப்பானி அப்பா? ஒரு வேளை அந்த ஆமி ஹெலிகொப்டருக்கு உள்ளே போய்பைலட் சீட்ல இருந்திட்டிருக்கிறான் போல." அவன் இந்தக் கூட்டத்தில் எங்காவது தவறிப்போய் நெரிசலில் மாட்டி கீழே விழுந்து விட்டானென்றால். ஆ1 ஐயோ அந்தநினைப்பே வேணர் டாம். எனக்குத் தலையைச் சுற்றுவது போலிருந்தது. ஒருவாறு என்னைச் சமாளித்துக் கொணர்டு நர்மதாவைப் பார்த்தேனர். அவள் திடீரென எண் பினர்னால் கணிகள் திடீரென ஆச்சரியத்தில் விரிந்தன.
"அப்பா அப்பா அங்க பாருங்கப்பா யாரு வாறதென்று பாருங்கப்பா" என்று சந்தோசத்தில் கத்தினாள் நர்மதா, அவள் காட்டிய திசையில் நாண் பார்த்தபோது சற்றுத் தூரத்தில் இருந்த போகஸ்லைட் வெளிச்சத்தில் எங்களைத் தேடிய வாறு சனக்கூட்டத்திடையே நெருக்கியடித்தபடி சந்தோசத்துடன் பரபரப்பாக வந்து கொண்டிருந் தானி பரசு அவனருகிலே அவனது கையைப் பிடித்தபடி ஆவல் ததும்பும் ஈரவிழிகளுடன் வந்து கொண்டிருந்தாள் ஒரு பெண்.
ஆஅது. அதுவந்து. எண் கோகிலா! e
இதழ் 64/தை 204

Page 40
இலங்கையில் உருவகக் 8 படைப்பாளி முத்துமீரானின்
இலங்கை இலக்கிய வானத்தில் உருவகக்கதைத்துறையில் ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளில் திரு. முத்துமீரான் அவர்கள் பெயர் சுட்டி சொல்லக் கூடிய புகழ் பெற்ற படைப்பாளியாவார். வாழ்க்கை வெளிப்படுத்துகின்ற உண்மைகளை யும் இயற்கையின் தன்மைகளையும் எடுத்துக்கூறி மக்களின் உள்ளங்களில் பதியவைப்பதற்கும் அவர்களை சிந்திக்க வைப்பதற்கும் உருவகக் கதைகள் இலக்கிய உலகில் பெரும் பங்களிப் பினைச் செய்கின்றன. ஞானிகளும், அறவோரும் தங்கள் அறிவுரைகளையும், சமய ஒழுக்கங்களை யும் மக்களுக்கு உணர்த்துவதற்கு உருவகக் கதைகளை சிறப்பாக கையாண்டுள்ளனர். கிரேக்க ஞானியான ஈசாப் கதைகள், ஏசுபிரான் சொன்ன உபதேசக் கதைகள், இராமகிருஷ்ண பரமஹம் சரின் நீதிக் கதைகள் யாவுமே உருவகக் கதைகளே யாகும்.
உருவகக் கதைகள் என்பது | குறுகிய காலக் கண்டுபிடிப்பல்ல, இது மிகவும் பழமையானவை. சிறு கதைகள், நெடுங்கதைகள் உருவா வதற்கு முன்னரே வேத காலத்து வடிவங்களாகவே உருவகக் கதைகள் தோன்றின. நெடுங்கதைகள் மூலம் நிலைநிறுத்த முடியாத நீதிகளை, ஒழுக்க நெறிகளை சின்னஞ்சிறிய உருவகக் கதைகள் மூலம் மக்கள் மனதில் நிலை நிறுத்த முடியும் என்னும் உண்மையை சான்றோர் ஆய்ந்து கூறியுள்ளனர்.
இன்று, இலக்கிய உலகில் உருவகக் கதைகள் தனி இடம் பெற்றுத் திகழ்வது அதன் சிறப்பும் தனித்துவமும் எனக்கூறலாம். வாழ்க்கை யின் உண்மைகளை தத்துவ நோக்கில் எடுத்துக்
38/ ஜீவநதி - இத

தைத் துறையில் ' பங்களிப்பு
பேராசிரியர் ஹ. மு. நந்தர்சா
கூறுகின்ற போது கற்பனை நயத்தையும் கவிதைத் தன்மையையும் சொல்நடையழகை பும் ஒன்று சேர்த்து வளம் சேர்த்திருக் கின்றார்கள் இலக்கியவாதிகள்.
உலகில் ஆங்கில எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட், ரஸ்ய எழுத்தாளர் ஐவான் துர்கனேவ், பாரசீக படைப்பாளி கலீல் ஜிப்ரான், மராட்டிய படைப்பாளி வி. ஸ். காண்டேகர் போன்றவர் களைத் தொடர்ந்து இந்தியாவில் தமிழில் பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன், கலை மகள் பத்திரிகை ஆசிரியர் கி. வ. ஜெகநாதனின் மகன் ஐ. சாமிநாதன் போன்றவர்கள் நல்ல உருவகக் கதைகளைப் படைத்தனர். இதைத் தொடர்ந்து இலங்கையில் சு. வே., எஸ். போ., செம்பியன் செல்வன, செங்கையாழியான், எஸ். முத்துமீரான் போன்றவர்களும் இவர்களோடு இன்னும் சில எழுத்தாளர்களும் உருவகக் கதைகளைப் படைக்கத் தொடங்கினர்.
இந்தியாவிலும், இலங்கை யிலும் தமிழ் மொழியில் சிறுகதை, கவிதை, நாவல் வளர்ந்த அளவிற்கு உருவகக் கதை வளர்க்கப்படவில்லை. என்றபோதிலும் படைப்பாளி எஸ். முத் து மீரான் சோர்வடையாது இன்றும் இம்முயற்சியில் தொடர்ந்து ஆர்வம் காட்டி நல்ல உருவகக் கதை களை படைத்து வருவது மகிழ்ச்சியைத்
தருகிறது. படைப்புக்களிலெல்லாம் பகுத்தறிவு பெற்ற மேலான படைப்பாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மனித சமுதாயத்தின் அறிவீனத்தையும் பலவீனத்தை பும் அகங்காரத்தையும் அழித்தொழிக்க, பகுத்தறிவற்றவைகளின் மூலம் நல்ல பல படி ப் பினை களை திரு . முத் து மீரான்
- 64 தை 2014

Page 41
தன்னுடைய உருவகக் கதைகளின் வாயில சின்னஞ்சிறு குழந்தைகளும் அறிவுபெறும் நில யில் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உருவகக் கதைகளைப் படைப்பா தான் சொல்ல விரும்புவதைச் சொல்லாம் கதையை முடித்துவிடுவார். படைப்பாளி என சொல்ல நினைத்தாரோ அதைப் படித் முடித்தவர் சொல்லி விடுவார். அப்படி சொல்லத்தூண்டுவதுதான் உருவகக் கதைகள் சிறப்பம்சமாகும்.
முத்துமீரான் நூற்றுக்கு மேற்பட் உருவகக்கதைகளை படைத்திருக்கிறார். என்ப வியப்பைத் தருகிறது. தற்பொழுது இக்கதை ளின் தொகுப்பாக இவரின் இரு நூல்க வெளிவந்துள்ளன. இவருடைய முதற் தொகு யான “உருவகக் கதைகள்” என்னும் பெயரி தென் இந்தியாகூத்தா நல்லூர் தென்ற மன்றத்தினால் 25.02.1982ம் ஆண்டு கவி திலகம் சாரணபாஸ்கரன் அவர் களா வெளியிடப்பட்டது.
தீந்தமிழ் காப்பியம் “யூஸுப் சுலைஹ வின் சிருஷ்டிகர்த்தா கவிஞர் திலகம் சாரல் பாஸ்கரன் திரு. முத்துமீரானைப் பற்றியு அவருடைய உருவகக் கதைகள் பற்றியு எழுதியுள்ள கவிதையை இங்கு குறிப்பிடுவ சிறப்பெனக் கருதுகிறேன்.
“மனத்திலெழும் உணர்வினுக்கு வடிவம் செய்ய
வானுலவும் கதிர்மதியைப் பேசவைத்து வனத்துலவும் விலங்கினத்தின் உயர்வைச் சொல்லி
மானிடர்தம் இழிசெயலை இடித்துக் காட்டி குணத்தினிலும் செயலினிலும் மாற்றம் காணக்
கூவுகின்ற கலைக்குயிலாய் கொள்கைக் குன்றாய் எனைக்கவர்ந்த அருங்குணத்தான் முத்துமீரான்
இயற்றுகின்ற உருவகத்தைப் போற்றுவோமே.”
முத்துமீரான் அவர்கள் தன் ஆற்றன யும் ஆர்வத்தையும் தனது உருவகக் கதைகளி மூலம் என்றும் அழியாத இறைவனி இயற்கையையும், இறைத்தன்மையின் சக் களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் அத உண்மைகளையும் பல்வேறுபட்ட மிருகங்க ஜீவராசிகள், இயற்கை சக்திகள் வழியாக காண்பிப்பது சிறப்பாக இருக்கிறது.
கடந்த ஐம்பத்தைந்து வருடங்களுக் மேலாக இடைவிடாது இலக்கியப்பணி ஆற் வரும் முத்துமீரான் நூற்றுக்கு மேற்பட் வானொலி நாடகங்களையும், சிறுகதைகன யும், கவிதைகளையும், நாட்டார் இலக்கிய கட்டுரைகளையும், உருவகக் கதைகளையு
39/ ஜீவநதி

56 6
3. 2. 2. 3 2. 5 (9)
ண
99 5. 5. 3
க
எழுதியுள்ளதோடு இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளையும், மூன்று கவிதைத் தொகுதி களையும், ஒரு நாடகத் தொகுதியையும், ஏழு
நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களையும் ல
படைத்தளித்து ஈழத்து இலக்கியத் துறைக்கு நச்
பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரையில் முஸ்லிம் களின் நாட்டார் இலக்கியத்தில் பல சிரமங்களுக் கிடையே கள ஆய்வு மேற்கொண்டு, வியக்கத் தக்க முறையில் தேடுதல் செய்து ஏழு நாட்டார் இலக்கிய ஆய்வு நூல்களைத் தந்துள்ள திரு. முத்துமீரான் கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் தென் இந்தியக் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கில் பங்கு கொண்டு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் வழங்கிவரும் தாலாட்டுப் பாடல்கள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படித்து பாராட்டை பெற்றமை நாட்டுப்புறவியலில் இவருக்குள்ள தனித்துவத்தை காட்டுகிறது.
- முத்துமீரானால் படைக்கப்பட்ட உருவகக்கதைகள் யாவும் ஈசனின் மெய்மைடி யையும், அவன் தத்துவத்தையும் பற்றியதாக இருப்பது சிறப்பம்சமெனலாம். ஐய்யறிவு படைத்த இறைவனின் படைப்புக்களைக் கொண்டு ஆறறிவுள்ள மனித குலத்திற்கு படிப்பினைகளை அளிக்கும் இவரின் உருவகக் கதைகள் தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் கலைமகள், மலேசியாவிலிருந்து வெளிவரும் நம் பிக்கை போன்ற பத்திரிகைகளோடு இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, சாரதா, தினக்குரல் ஆகிய வற்றிலும் மல்லிகை, ஞானம், ஜீவநதி, வானவில் ஆகிய மாதாந்த வெளியீடுகளிலும் இடம்
பெற்று இவருக்கு நல்ல புகழை ஏற்படுத்திக் ல
கொடுத்தன. சிறந்த நாட்டாரியல் ஆய்வாள ரான முத்துமீரான் இலங்கையில் இத்துறைக்கு கிடைத்த பெருமைக்குரியவராவார்.
திரு. முத்துமீரான் தனது இரண்டாவது உருவகக் கதைத் தொகுதியான “இயற்கை”யை 1999ம் ஆண்டு இலங்கையிலுள்ள மீரா உம்மா நூல் வெளியீட்டகம் மூலம் வெளியிட்டார். இத்தொகுதியில் சுமார் ஐம்பது கதைகளுக்கு மேல் உள்ளன. இக்கதைகள் யாவும் இறை வனைப் பற்றியும் அவனுடைய தத்துவங்களைப் பற்றியும் சிறப்பாகச் சொல்லிக் கொண்டிருக் கின்றன. இத்தொகுதிக்கு அணிந்துரை அளித்
துள்ள பிரபல தென் இந்திய இலக்கிய ம் விமர்சகர்களும் சிறந்த படைப்பாளியுமான திரு.
ன்
5. =• 2. ஆ
- இதழ் 64 தை 2014

Page 42
வல்லிக்கண்ணன் "வாழ்க்கை கற்றுத் தருகின்ற உண்மைகளையும் பல்வேறு மிருகங்கள், சீவராசிகள், இயற்கையின் சக்திகள் மூலம் கதாபாத்திரங்களாக்கி அழகிய முறையில் இத்தொகுதியிலுள்ள உருவகக்கதைகளை உருவாக்கி முத்து மீரான் தன் ஆற்றலையும் ஆளுமையை யும் நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கதே" என்று குறிப் பிட்டிருப்பது நல்ல சான்றெனக் கருதலாம்.
மேலும் முத்துமீரானின் உருவ கக்கதைத் தொகுதிகள் இரண்டும் தென் இந்தியாவில் வெளியிடப்பட்டிருப்பது இத் துறையில் இவருக்கு கிடைத்த வெற்றியென்றே கூறலாம். அதுவும் புகழ் பெற்ற இரு கவிஞர்களான சாரண பாஸ்கரன் அவர்களுடைய தென்றல் மன்றத்தினாலும், கவிஞர் மீராவினுடைய நோவேண் அச்சக கம்பனியின் மூல மாகவும் வெளி வந்திருப்பது இவரின் ஆளுமைக்கு கிடைத்த நல்ல சிறப்பாகும்.
இத் தொகுதிகளிலுள்ள திரு. முத்துமீரானின் இரு உருவகக்கதைத் தொகுதிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட கதைகள் உள்ளன. இக்கதைகளில் வேடம், துறவி, ஞானகுரு, மனமே இறைவன், ஞானம் , அழிவு, படைத் தவனும் படைப்பும், நெறியாளன், ஊனம், ஊழ் போன்ற கதைகள் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. முத்துமீரானின் உருவகங் களையும் படிமங்களையும் தொகுத்துப் பொருள் கொள்ளும் போது இவருடைய உருவகக் கதைகள் மிக உயர்ந்த படைப்பு வெளிப் பாடாய்க் காட்சி தருகின்றன. ஒன்றை மட்டும் நிச்சயமாய்ச் சொல் கிறேன் உருவகக் கதைகள் மேலோட்ட மான, மிக அந்தரங்கமான, ஆழமான செய்திகளைக் கொண்டன.
இவைகளை நாம் சிந்தித்து ஆராயும் முறையில் தக்க தரவுகளும், ரசனையும் நமக்கு கிடைத்து விட்டால் கதாசிரியனுக்கு அதுவே வெற்றியாகும். ஈழத்து தமிழ் இலக்கியத்தில் துணிவோடு நின்று தரமான உருவகக்கதைகளைத் தொடராகத் தந்து கொண்டிருக்கும் முத்துமீரானுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கொடி இன்று
நடத்து
மீள்கு தாட்கூ
தில்6ை
Ц95Tab
ஊர்களு மேற்கு பட்டது
மாற்றி,
ஒருவர் கேட்ட
எடுக்க தானே
உங்களு
தரயில்
GLITL L.
(UPOLQULI
மன்னி
வைத்து
இருக்கு
40/ஜீவநதி - இத
 

தொணர்ணுாறுகளில் காலிறோட்டோரம் கட்டிப் பறந்த கடை முதலாளிகந்தையா ஐயா திவாலான நிலையில்.
குறுக்கு ஒழுங்கை ஒன்றில் அவர் இன்று வது குட்டிக்கடை
வீழ்ச்சிக்குக் காரணம் இரணர்டு. ஒன்று டியேற்றம்; மற்றது ஐயா வினி தயவு 1ணர்யம்.
ஐயா கடன் கேட்டவர்களுக்கு மறுத்த 0. வாடிக்கையாளர் மாதமுடிவில் கடனடைப் வாக்களித்து, விடுவது டிமிக்கி சொந்த நக்கு போய் மறைந்தவர் தொகை அனேகம். நாடுகளுக்கு தஞ்சம் புகுந்ததால் ஏமாற்றப் அதிகம் மாதம் ஒரு கடை வீதம் கடைகளை மாற்றிதலைமறைவானவர் பெருவாரி
ஐயாபாடு அதோ கதிதான்! அன்று வெள்ளிக்கிழமை ஐயா கடைக்கு வந்தார். " என்னைத் தெரியுதா ஐயா?” எனக் Ti. -
ஐயாவால மட்டுக்கட்ட அதிக நேரம்
வில்லை. "நீங்கள். பொன்னம். பலம்
ti
", என்றார்.
"என்னை மன்னிக்க வேணும் ஐயா. நான் நக்கு துரோகம் செய்திட்டன், கடன் ஐயாயிரம்
' - “உங்களுக்கும் என்ன கஷ்டமோ!" "நானர் அவசர அவசரமாகக் கனடா னி ஐயா"
“வேணுமெணர்டு செய்யாமல், தவிர்க்க மல் செய்திட்டியளாக்கும்"
"ஐயா அப்ப தரத் தவறியதை இப்பதாரன். ந்து இதனை ஏற்றுக் கொள்ளுங்கோ"
பொனர்னம்பலம் ஒட்டிய என பலப்புள் க் கொடுத்த தொகை கேட்க ஆச்சரியமாக ம்; ஆனால் உணர்மை! அது ஐம்பதினாயிரம்"
- வேல் அமுதன்
64 /தை 2OH4:
کچے بہت۔

Page 43
படித்தவற்றை
6TGOTOT6he
னினர் அணிந்த உடைகை
என்ன செய்வோம்? என்பதற்கு அவரவு தரப்பில் பதில்கள் இருக்கின்றன. பொதுவா இல்லாதவர்களுக்கு கொடுப்பார்கள். இலங்ை யில் ஒரு காலத்தில் பழைய ஆடைகை கொடுத்து விட்டு புதிய பாத்திரங்கள் வாங் வதை சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.
தற்பொழுதும் இந்த வழக்க இலங்கையிலிருக்கிறதா? என்பது தெரியாது.
சுனாமி கடற்கோள் பாதிப்புக்கு உத மாறு அவுஸ்திரேலியா மெல்பனில் அண்ட களிடம் வேணர்டுகோள் விடுத்தபொழுது பெட்டி பெட்டியாக பாவித்த உடைகள்தா வந்து குவிந்தன. இரண்டு கொள்கலன்களி அவற்றைநிரப்பி கப்பல் மார்க்கமாக இலங்கைக் கொணர்டு சேர்த்ததும் - பின்னர் அவற்ை கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளிே எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக் பட்ட கஷ்டங்களும் நீணர்டதொரு கதை.
வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிட நூல்கள், பத்திரிகைகள், வார- மாத இதழ்க குவிந்துவிடும். இவற்றில் பத்திரிகைக இதழ்கள் இலங்கையில் எடைபார்த்து கிலே வுக்கு இன்னவிலை என்ற நிர்ணயம் இருக்கிறது பழைய பேப்பர்கள் வாங்கும்கடைகள் இலங்ை யில் இருக்கின்றன.
அவுஸ்திரேலியாவில வfடுகளி Recycling Bin இருக்கிறது. மாநகர சபை அவற்ை நிலவரி செலுத்தும் ஒவ்வொரு வீடுகளுக்கு வழங்கும். வாரத்திற்கு ஒரு தடவை நகரசுத் தொழிலாளர்கள் வீட்டுக்கழிவு குப்பைகை எடுத்துச்செல்லும்பொழுது குறிப்பிட்ட Recycli Binகளில் கொட்டப்பட்டிருக்கும் பழைய பேப்ட் கள் இதழ்கள் காகிதாதிகள் மற்றும் பிளாஸ்ரி
ஈ/ ஜீவநதி
 
 

ய்வது?"
@
Լb
T
ர்
போத்தல்கள் பொருட்களையும் எடுத்துச் செல்வார்கள். அவை மீள் உற்பத்திக்குப்பயனர் படுகின்றன.
பொது நூலகங்களில் பெரும்பாலான வாசகர்களினால் படித்து முடிக்கப்பட்ட பழைய நூல்கள் ஒரு டொலர் அல்லது ஐம்பது சதத்திற்கு விற்கப்படுகிறது. கனடாவில் எழுத் தாளர் முத்துலிங்கம் தெருவோரத்தில் ஐம்பது சதத்திற்கு கிடைத்த ஷேக்ஸ்பியரின் நாடக நூல் ஒன்றை வாங்கிவந்ததாக ஒரு பத்தியில் சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அவுஸ்திரேலியாவிலும் பழைய நூல்கள் இதழ் கள் விற்பனை செய்யப்படும் கடைகளை பார்த் திருக்கின்றேன். முன்னர் படித்திராத நூல்கள் பலருக்கு இங்கு கிடைத்திருக்கலாம். அவ்வாறு கிடைப்பது அபூர்வமான தருணங்கள்தான்.
ஜெர்மனியில் ஒரு வீதியில் ஒரு வீட்டினர் முனர்னால் ஏராளமான நூலகள் வரிசையாக அடுக்கிவைத்திருப்பதை பார்த்து விட்டு - எனது உறவினரிடம் அவை பற்றிக் கேட்டேன். அந்த வீட்டுக்காரர்கள் படித்து முடித்த பழைய நூல்கள். தெருவில் செல் வோருக்கு இலவசமாக கொடுக்கிறார்கள் என்ற பதில் கிடைத்தது.
முன்னர் பஸ், ரயில், விமானம், ட்ராம் முதலானவற்றில் நூல்கள் இதழ்கள் வாசிப் பவர்களைத்தானி அதிகமாகப்பார்த்திருக் கினிறேனர். ஆனால் கைத் தொலைபேசி ஐபேர்ட், லெப்டொப் ஆகியனவற்றின் அறிமுக மும் பாவனையும் அதிகரித்தபின்னர் பெரும் பாலானவர்களின் கைகளில் நூல்கள் இதழ் களுக்குப்பதிலாக மேற்குறித்த நவீன சாதனங் கள்தானி தவழுகின்றன. பயணங்களில்
இதழ 64 /தை 204

Page 44
எந்தப்பக்கம் திரும்பினாலும் யாராவதுஒருவர்கைத்தொலை பேசியில் தகவல் அனுப்பிக் கொண்டோ அல்லது தக வலைப் படித்துக் கொண்டோ தான் இருக்கிறார்கள்.
இலக்கியப்பிரவேசம் செய்தகாலம்முதல் என்னிடமும் ஏராளமான நுால்கள் இதழ்கள் பத்திரிகைகள் சேர்ந்து விட்டன. இலங்கையில் 1983 வன்செயல் இடப் பெய்வின் பொழுது பல பெட்டி களில் சேகரமாக இருந்த நூல்களை அரியாலைக்கு எடுத்துச் சென்று ஒரு வீட்டில் பத்திரமாக வைத்திருந்தேன்.
ஒருநாள் நண்பர் புதுவை ரத்தினதுரை அவற்றை தங்கள் இயக்கத்தின் நூலகத்திற்கு தருமாறு கேட்டார். கொடுக்க சம்மதித்தேன். ஒரு ஹைஏஸ் வாகனத்தில் அவற்றை ஏற்றி எடுத்துச்சென்றார். யாம் பெற்ற இன்பம் பெறுக அவ்வியக்கம் என்ற பெருமிதத்துடன் ஊர் திரும்பி பின்னர் புலம்பெயர்ந்தும் வந்து
விட்டேன்.
- தற்பொழுது அந்த நூல்களும் நண்பர் புதுவையும் எங்கே? என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
இலங்கை வரும்பொழுதும் எனக்கு நூல்கள் சேர்ந்துவிடும். முடிந்தவரையில் புறப் படும் முன்னர் படித்துவிடுவேன். படிக்காத வற்றை எடுத்துவருவேன். படித்தவை அக்கா - தங்கை வீடுகளில் பெட்டிகளில் சேகரமாகி விடும்.மறுபயணத்தில் மேலும் நூல்கள் சேர்ந்து விடும். மீண்டும் படிப்பு. படிக்காதவற்றை எடுத்துவருவது. படித்தவற்றை விட்டு வருவது.
ஒரு பயணத்தின்போது --- படித்த வற்றை எமது ஊரில் நான் முன்னர் கல்வி பயின்ற இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நூல் நிலையத்திற்கும் கிளி நொச்சி மகா வித்தியாலயம் மற்றும் முள்ளியா வளை வித்தியானந்தா கல்லூரி ஆகியன வற்றுக்கும் கொடுத்துவிட்டேன்.
அவுஸ்திரேலியாவிலும் நூற்றுக் கணக்கான படித்த நூல்களை இதழ்களை இங்குள்ள இலக்கிய நண்பர்களுக்கு பெட்டி பெட்டியாகக்கொடுத்துவிட்டேன். ஒரு தமிழ் அமைப்பு நூலகம் ஒன்றை அமைப்பதற்கு முன் வந்தவுடன் அந்த அமைப்பிற்கும் கொடுத்தேன்.
என்சைக்கிளோபீடியா தொகுப்புகள் பல இருந்தன. தற்பொழுது கூகுளில் தேடினால்
42/ கீவநதி - இத

எல்லாம் கிடைக்குமே... ஏன் இவற் றை வைத் தருக கிறீர்கள் என்று பிள்ளைகள் கேட்டார்கள்.
சரி அவற்றுக்கும் விடுதலை கொடுத்து விட்டேன். அவை தற்பொழுது முல்லைத்
தீவில் முள்ளியவளை வித்தி யானந்தா கல்லூரி நூலகத்தில் வாசம் செய்கின்றன.
படித்தவற்றை என்னதான் செய்வது?
இந்தக்கேள்வி - என்னைப்போன்று பல எழுத்தாளர்களின் மனதையும் ஓயாமல் குடைந்துகொண்டுதானிருக்கும். இதிலே மற்றுமொரு சங்கடமும் இருக்கிறது. சக எழுத்தாளர்கள் தமது வாழ்த்துக்குறிப்புடன் ஒப் பமிட்டுத்தரும் அவர் தம் நுால்களை வெளியே கொடுப்பதற்கு மனம் இடம்தராது. ஆனாலும் பலருக்கு அந்த மனத்தடையும் இல்லை.
அவுஸ்திரேலியா சிட்னியில் இயங்கும் ஒரு தமிழ் நூலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த எனது நூல்களைப்பார்த்துவிட்டு அதிசயித்து எடுத்துப்பார்த்தேன். ஒருவருக்கு நான் எனது ஒப்பமும் திகதியும் இட்டு அன்பளிப்பாக வழங்கிய நூல்கள் அவை. அந்த அன்பர் படித்தாரா? படிக்காமலேயே நூலகத்திற்கு வழங்கினாரா? என்பதற்கான பதில் தெரியாமலிருப்பது நல்லதுதான்.
இங்கு நான் அடிக்கடி பயணிக்கும் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில் ஒரு வழக்கத்தை கடைப் பிடிக்கிறார்கள்.
ரயில் நிலையங்களில் ஒரு வாசகம் தென்படுகிறது.
நீங்கள் படித்து முடித்த பழைய நூல்களைத் தாருங்கள். மற்றவர்களுக்கு பயன்படட்டும்.
- என்னவென்று விசாரித்துப் பார்த்தேன். ரயில் வரும்வரையில் காத்திருப்பவர்கள் படிப்ப தற்கு வழங்குவதற்காக அந்த சேகரிப்பு கள் பயன்படுகின்றன என்று ரயில் நிலைய ஊழியர் சொன்னார். அவ்வாறு வாங்கிப் படித்து விட்டு மீண்டும் திருப்பிக்கொடுத்து விட்டுச் செல்லும் பயணிகளையும் பார்த்திருக் கின்றேன். அவர் கள் முதியவர்கள். இளம் தலைமுறையினர் கைத்தொலைபேசியிலும் ஐபேர்டிலும் தமது பயணத்தை கரைத்துக்கொள்கிறார்கள்.
ழ் 64 தை 2014

Page 45
இலங்கையில் ரயில் நிலையங்கள் இந்த நடைமுறையை பின்பற்றலாம். கா கேசன்துறை வரையில் அடுத்த ஆண்டு ரயி ஓடப்போகிறதாம்.
ரயில் வராத அல்லது தாமதிக்கு நேரங்களில் ரயில்நிலையங்கள் பெரும்பாலு வெறிச்சோடித்தான் இருக்கின்றன. பழை நூல்கள் பத்திரிகைகளுக்காக - எவராவு கடைவிரித்துப்பார்க்கலாம். -
இலங்கையில் நண் பர் மாத்தன கார்த்திகேசு எனக்குச் சொன்ன சம்பவம் வெ சுவாரஸ்யமானது.
அவர் கொழும்பு பம்பலப்பிட்டியி ஒரு காலத்தில் சைவஹோட்டல் நடத்தியிரு கிறார். அப்பொழுது அங்கு சாப்பிடவரு வாடிக்கையாளர்கள் கைதுடைப்பதற்கா பழையபேப்பர்களை வாங்கிவருமாறு ஹோட்ட ஊழியரை அனுப்பியிருக்கிறார். அந்த ஊழிய கொண்டு வந்த பழைய பேப்பர்களுடன் ஒ முக்கியமான எழத்தாளரின் முதலாவது சி கதைத்தொகுப்பின் பிரதிகளும் இருந்தனவா உடனே மாத்தளை கார்த்திகேசு அந்த பழை பேப்பர்கள் விற்பனை செய்யும் கடைக் விரைந்துசென்று பார்த்திருக்கிறார். அங்0 குறிப்பிட்ட முக்கியமான எழுத்தாளரின் குற் பிட்ட முதல் கதைத்தொகுப்பின் பல பிர களையும் அவருடைய ஒரு பழைய நா குறிப்பையும் கண்டெடுத்திருக்கிறார்.
அந்த நாட்குறிப்பில் ஒரு முக்கியமா விமர்சகர் (பேராசிரியர்) குறித்துகடும் விமர்சன களும் பதிவுசெய்யப்பட்டிருந்ததாம். பின்னாளி
அந்தப் பெறுமதியான நாட்குறிப்பு எங்கே தவறிவிட்டது என்று மாத்தளை கார்த்திகே
இலக்கியத்திற்கான தமிழ்ச் சங்க விருது
கிளிநொச்சித் தமிழ்சங்கம் இவ்வருடத்திற்காக இலக்கியவிருதினை மூத்த சிறுகதை எழுத்தால்
டாக்டர் ச.முருகானந்தனுக்கு வழங்கிக் கெளரவித்துள்ளது. நாடறிந்த பல்துறை எழுத்தாளனான இவர் இலங்கை சாகித்திய மண்டல விருது, கனக செந்திநாதன் கதாவிருது தகவம் விருது, இலங்கை இலக்கிய பேரவை
விருது உட்பட பல விருதுகளையும் பரிசில்களையும் பெற்றவர்.கிளிநொச்சித்
தமிழ்ச்சங்கம் அண்மையில் நடாத்திய திருவள்ளுவர் விழாவில் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் குருகுலரா - இவருக்கான விருதினை வழங்கிச் சிறப்பித்தார்
43/ ஜீவநதி

நு
ம்
ஒய து
ள்
பட '6 12
8' டு £ 5• 13 G S. 2. 8 E.
கவலை தெரிவித்தார்.
- இந்தச்செய்தி எனக்குள் சிறைப்பட்டு நீண்ட நாட்களாக யோசிக்கவைத்தபடி இருந்தது.
அதற்கு விடுதலை கொடுக்க விரும்பினேன்.
கதைத் தொகுப்பின் கதை என்ற கதையை எழுதினேன். அந்தக்கதை கடந்த ஆண்டு (2012) வெளியான ஜூவந்தியில் வெளியாகியிருக்கிறது.
யார் அந்த முக்கியமான எழுத்தாளர்?
அமரர் செ. கதிர்காமநாதன். நூல் "கொட்டும்பனி”.
யாரோ படித்த - யாரோ ஒரு பிரபலம் - எழுதிய பெறுமதியான நூல்கள் வெளிநாடு களில் ஐம்பது சதத்திற்கும் தெருவோரத்தில் கிடைக்கிறது. பழைய பேப்பர் கடைகளிலும் கிடைக்கிறது.
எழுத்தாளர்களே கவனம். நீங்கள் இல்லாத காலத்தில் நீங்கள் படித்த நூல் களை என்ன செய்யவேண்டும் என்று முற் கூட்டியே குடும்பத்தினருக்கு சொல்லிவைத்து விடுங்கள்,
- இல்லையேல் நீங்கள் படித்த நூல்கள் மாத்திரமின்றி - விற்பனையாகாமல் தேங்கியிருக்கும் உங்கள் நூல்களும் பழைய பேப்பர்கடைகளுக்குச்சென்றாலும் ஆச்சரிய மில்லை. படித்த நூல்களை மட்டுமன்றி எழுதி வைத்திருக்கும் நாட்குறிப்புகளுக்கும் ஒரு வழியை கண்டு பிடித்துவிடுங்கள்.
அவை ஏலம் போனால்... அந்தப் பொற் காலத்தை தரிசிக்காத அபாக்கியவாதிகள் தான் என்று ஆறுதல்பட்டுக் கொள்ளுங்கள்.
படித்தவற்றை என்ன செய்வது? இன்னும் யோசிப்போம்.
- 5
4 4 2. H. 2.
தே
அட்டைப்பட ஓவியர்
தேவராசா பவிராஜ் யா/ இணுவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவன். இவர் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் art and design முதலாம் வருட மாணவனாக கல்வி பயிலுகின்றார். இவரது ஒவியத்தை ஜூவந்தி அட் டைப் பட ஓவியமாக பிரசுரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.
- இதழ் 64 தை 2014

Page 46
- இ.சு.முரளிதரன்
நூல் விம வெளிப்பண்னை அத்தாளபின் 'பூவும் கனியம்”
ஈழத்து இலக்கியத் தடத் தில் சிறுவர் சார்ந்த நூல்களின் வருகை அருகியே காணப்படுகிறது. கவிதைத் தொழிற் சாலையிலிருந்து மோசமான கவிதைகளைப் புனை வோர் புற்றிசல் போலப் புறப்பட்டுக் கொணர்டிருக்கிறார்கள். எனினும் குழந்தைப் பாடல களை எழுதுவோரினர் தொகையோ குவலயத்தில் குடிநீராய் குறைந்து செல்கிறது. இந்த வகையில் “பூவும் கனியும்" என்ற சிறுவர் பாடல்கள் தொகுப்பினைத் தந்த வெலிப் பண்னை பாடல்கள் தொகுப்பினைத் தந்த வெலிப் பண்னை அத்தாஸ் முக்கியத்துவம் பெறுகிறார். கடவுளின் நிழற் பிரதிகளாய்க் குழந்தைகளை உணரும் உள்ளம் படைத்தவர்களால் மாத்திரமே அலாதியான பாடல்களை உருவாக்க முடியுமென மெய்ப்பித் திருக்கிறார். இத்தொகுப்பில் இறைவன், குடும்ப உறுப்பினர்கள், பிராணிகள், வாகனங்கள், இயற்கைச் சூழல் என்பன பாடுபொருளாக அமைந் துள்ளன. அதீத உணர்வைத் தொற்ற வைக்கும் சிறுவர் பாடல்களின் பிதாமகர்களினல் ஒருவரான "கேணிப் பித்தன்” அணிந்துரை நல்கியுள்ளார். “ஒட்டோகிராஃப்” காகிதத்தை நினைவு படுத்தும் அழகிய தாளில் முப்பது பாடல்கள் அச்சிடப் பட்டுள்ளன.
"தென்றல் வீசும் பாங்கிலே தேன் உறிஞ்சும் வண்டினம் தன்னை மறந்து மலரிலே தாலாட்டுப்பாடுது" என்று காற்றினர் மகிமையை வெளிப் படுத்தும் வரிகளில் எளிமையைக் கடந்து கவித்து வம் இழையோடுகிறது. பவ்வியம், காத்திரம், சங்கமம், புவனம், என்றவாறாக குழந்தைத் தனத்தோடு முரண்படும் சொற்கள் ஆங்காங்கே தலைகாட்டுகின்றன. இத்தகைய தடைகளை கடந்தால் வெலிப்பன்னை அத்தாஸ் ஈழத்தின் குழந்தைக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க இடத் தினை பெற்றுவிட முடியுமென நம்புகின்றேன்.
"61600rgOOT 6).j600réOOT &60DL
வகை வகையாச் சூட்டி
அழகு பார்க்கும் அம்மா
Lig560)LDUITFrágilb (9|LDLDIT"
என்ற வரிகள் தமிழிலக்கியத்திற்கு அற்புத மானதொரு சிறுவர் பாடலாசிரியர் கிடைத்து விட்டார் என்பதற்குகட்டியங்கூறுவதாகவேஉள்ளன.
艇
ஜீவநதி - இத
 
 
 
 
 

©fidd06 ÍöF6OJió
உநிசாரின் "பச்சை அணிதனன்"
கவிதை, சிறுவர்பாடல், சிறுவர்கதை என பல்வேறு வகை பான இலக்கிய வகைமைகளில் தன் ஆளுமையை நிரூபித்து வரும் உ.நிசாரினர் 2வது சிறுகதைத் தொகுதியாக "பச்சை மனிதன்” சிறு கதைத்தொகுதி வெளிவந்துள்ளது. நூலிற்குரிய அணிந்துரையை கலாநிதி றமிஸ் அப்துல்லா, வழங்கியிருக்கின்றார். மதிப்புரையை பேராசிரியர் சபா.ஜெயராசா வழங்கியுள்ளார். இத் தொகுப்பில் 9 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன.
"ஒப்புரவு" என்ற சிறுகதை கொம்பன் யானையை மையமாக வைத்து புனையப்பட்ட கதை நூலின் தலைப்பாகவும் இத்தொகுப்பிற்கு மகுடம் சூட்டும் கதையாகவும் உள்ள "பச்சை மனிதனர்" விஞ்ஞான ரீதியான அறிவியற் சிந்தனையோடு நூலாசிரியரின் கற்பனா சக்தியின் வெளிப்பாட்டோடு வெளிவந்துள்ள சிறந்த கதை, "உதை” என்னும் சிறுகதை அஸ்மினா என்ற பெண்ணின் பிரசவமும், பிரவசத்திற்கு பின்னரான சம்பவங்களையும் முன்னிறுத்தி பெனி அடையும் இடர்பாடுகளை முனர்வைத்து புனையப்பட்டு உள்ளது. "பறந்து செல்லும் பறவைகள்" பெற்றோர்களின் இன்றைய நிலையை வெளிப் படுத்துவதாயும் “பெரிய மீன்கள்" சமூகம் ஒன்று பற்றிய விளக்கத்தினையும் குடும்ப உறவுகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை விபரிக்கும் சிறுகதையாகவும் அமைந்துள்ளது. “ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும்" முஸ்லிம் சமூகத்தின் தலாக் விவகாரத்தை முன்னிறுத்தி ஆக்கப்பட்ட கதை யாகும், தமிழ் சமுதாயத்தில் மாமியார் மருமகள் பிரச்சினைகள் அதிகம்; அந்த வகையில் அடங் காப்பிடாரியாக இருக்கும் மாமியாரை அடக்கும் மருமகள் பற்றிய கதையாக "ஆங்காரம் அடங்கியது" சிறுகதை காணப்படுகின்றது. பாசப் பினைப்பினர் வீரியத்தை கூறும் கதையாக "இரத்தபாசம்” சிறுகதை காணப்படுகிறது.
தொகுதி து நோக்குகின ற போது உநிசாரின் மொழி, மணர்வளச்சொற்கள், முஸ்லிம் மக்களது பணர்பாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சமய வாழ்வு முறைகள் ஆகிய விடயங்களை மிக சிறப்பாக வெளிப்படுத்திநிற்கும் சிறந்ததொரு சிறுகதைத் தொகுப்பாக இத் தொகுப்பு காணப்படுகின்றது.
64 'தை 204

Page 47
ச.முருகானந்தன்
சோகங்களும்
சுமைகளு
அ வ  ைள அ லு ங க ம ல நலுங்காமல் வீட்டுவேலைகளோடு மட்டுப்படுத்தி எல்லா வெளி வேலை களையும் அவன் தான் செய்து வந்தான். அவளும் வேலைக்குச் செல்வதாலும், சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்வதாலும் அவன் எல்லா வெளி வே  ைல க ளை யு ம் பார்த' து க கொள்வான். கடைக்கும் சந்தைக்கும் போதல். வங்கி வேலைகள். தண்ணீர் மின்சார வேலைகள், தொலைபேசி வேலைகள் எதுவாயினும் அவன் செய்வான், அதோடு மட்டுமன்றி வீட்டில் நிற்கும்போது அவளது சில வேலை களிலும் உதவி செய்வான்.
“நீங்கள் சும்மா இருங்கோ... சமையல் வேலையெல்லாம் நான் செய்வன்” அவள் தடுப்பாள். அவன் சிரித்துக் கொண் டே, “ இல்லை சாந்தி... நீயும் ஓய்வு ஒளிச்சல் இன்றி வேலை செய்யுறாய்... நான் ஏதாவது சின்ன உதவி தானே செய்யுறன்... அதோட உதவி செய்யுற போது உன்னோட கதைச்சுக் கொண்டிருக் கலாம்... ஆசையாகக் கதைச்சுப்பேச எங்கே நேரம் கிடைக்குது? பிள்ளைகளின்ர அலு வல்கள், அடுப்படி வேலை, உடுப்புத் தோயல் என எல்லாத்தையும் முடிச்சுக் களைச்சுப்போய் படுக்கைக்கு வரவே பத்துமணி தாண்டியிடும். பிறகு விடியவும் நேரத்தோட எழும்பியிடுவாய் களைப்பு படுத்த உடன் நித்திரை வருகிறது என்பாய்...” என்று கண்களைச் சிமிட்டுவான் கணேசன்.
“நீங்கள் பக்கத்தில் வந்தால் என்னால் வேலை செய்யேலாது. வேலை செய்யவும் விடாமல் அதையிதைத் தொடுவியள் .
45/ கீவநதி -

வேண் டாம் போங் கோ” செல்லமாகச் சொல்லுவாள்.
“ ம் ... எ ப ப த ா ன' உ ந' த ஆசையெல்லாம் உங்களுக்கு அடங்கப் போகுதோ?” சாந்தினி சிரிப்பாள்.
நினைவுகளில் மனது கனத்தது.
எல் லையில் லா மகிழ்ச்சியோடு அவளை வாழவைத்தவன் இன்றில்லை! என்ன நடந்ததென்றே தெரியாது...! காலையில் வழக்கம் போல் வேலைக்குப் போனவன் மாலை யில் திரும்பவில்லை. நினைக்கும்போதே கண் களில் நீர் சொறிகிறது.. ம் ... வருடக்கணக்கில் அவன் வருவான் வருவான்
ம்
என எதிர்பார்த்துக் காத்திருந்து இன்று வரை காணாமல் போனோர் பட்டியலில் ஒருவனாகி விட்டான். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்திருக்குமென்று அவளுக்குத் தெரியும். அவள் ஒரு ஆசிரியை. ஒன்று சய ஒன்று சமன் சைபர் என ப து முதலாம் ஆண' டுக குழந்தைக்கும் தெரியும். ஆனாலும் ஒரு நப்பாசை... “கடவுளேயெண்டு தப்பி இருந்தார் எண்டால்...”
அவன் காணாமற் போன தினத்தன்று சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் தடுத்து வைத்து அழைத்துச் சென்றதாக சிலர் கூறினார்கள். அவளும் அவனைப்பற்றி அறிய எவ்வளவோ முயன்றாள். இராணுவமோ அவனைத் தாங்கள் கைது செய்யவில்லை என்று கூறியது. சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கம் அவன் எந்த சிறையிலும் இல்லை என்று இதழ் 64 தை 2014

Page 48
கூறிவிட்டது. அவள் நொடிந்து போனாள்.
காணாமற் போனோர் பற்றிய விபரம் திரட்டிய போது அவளும் அவனது பேரைப் பதிவு செய்தாள். அவ்வப்போது காணாமற் போனோரை விடுதலை செய்யும் படி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொணர்டாள்.
அரசிடமிருந்து பதில் இல்லை. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் சிறையில் உள்ளவர்களும் விடுதலை செய்யப்படவில்லை. சந்தேகத்தினர் பேரிலும் போராளிகளுக்கு உதவியவர்களும் எனக் கைதானவர்கள் விளக்கம் விசாரணை எதுவுமின்றி சிறையில் வாடுகிறார்கள். அயுதம் ஏந்திப் போராடியவர் களில் சிலர் அமைச்சர் பதவிகளில் அரியாசனம் ஏறியுள்ளனர். விசித்திரமான இந்த நிலையை எணர் ணரி அவள் சலிப் புடன சிரித்துக கொள்வாள். "இதுவா எங்கள் தேசம்?"
அவளது ஒரு தம்பி கெட்டித்தனமாக படித்தே சாதாரண தரத்தில் விசேட சித்திகள் பெற்று ஒரு பொறியியலாளனாக வர வேண்டும் என்று படித்துக் கொணர்டிருந்தவன் போராளி யாக இணைந்தான். ஒரு வருடத்திற்குள்ளாகவே சமரில் இறந்தும் விட்டானர். ஏனைய இரு தம்பிகளை இராணுவத்தினரிடமிருந்தும், போராளியாவதிலிருந்தும் காப்பாற்ற வெளி நாட்டுக்கு அனுப்ப நினைத்தபோது கணேசன் தான் எதுவித மறுப்புமின்றி அவளது நகைகளை அடைவு வைத்து உதவினான். முதலில் மூத்த தம்பியை அனுப்புவதற்காக ஒருமுகவரிடம் பணத்தைக் கொடுத்த போது ஏமாற்றி விட்டான். முகவர். அவனைப் போன்ற சிலரை அனுப்பவு மில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுக்கவு மில்லை. முகவருக்கு நெருக்குதல் கொடுத்த போது இவனையும் இவனோடு மற்றவர் களையும் போராளிகள் எணர்டு பொலிசில பொய்த்தகவல் கொடுத்தான். கைது செய்யப் பட்ட தம்பிக்கு என்ன நடந்தது என்று இன்று வரை அறிய முடியவில்லை. அடுத்த தம்பி தான் நணர்பன் ஒருவனின் உதவியுடன் அவனின் நாட்டிற்குச் சென்றான். கணேசனும் காணாமற் போன பினர்னர் அவனர் தானி குளிரிலும் பனியிலும் வேலை செய்து உதவி செய்து வருகிறான். சாந்தினிக்கு ஆசிரிய தொழில் இருந்ததால் ஓரளவு வருமானம் கிடைத்தது. எனினும் பொருளாதாரத் தடையினால பொருட்களின் விலைகள் எல்லாம் உச்சமாகப் போன பின்னர் தனிச்சம்பளத்துடன் சமாளிக்க முடியாமலிருந்தது. கடன் சுமையும் இன்னொரு புறம் அழுத்திக் கொண்டிருந்தது. சாந்தினியின்
G
46/ ஜீவநதி - இதழ்

திட்டமிட்ட சாதுரியமான செயற்பாட்டினால் அவளும் பிள்ளைகளும் மாத்திரமன்றி அப்பா, அம்மா, சகோதரிகள் என எல்லோரையும் காப்பாற்றினாள். கணேசனின் தம்பி ஒருவனும் புலம் பெயர்ந்து கனடாவில் இருந்து அவ்வப் போது உதவிகள் செய்வான். "அணர்ணி” என்று பாசமாக, தனது வீட்டு தேவை களுக்கான பணத்தையும் இவளிடம் அனுப்பு வதுடனர், தனது தங்கைகளின் திருமணம் உட்பட பிற அவளுடாகவே செய்து வைத்தான். கணவன் காணாமல் போன பின் அவள் தான் எல்லாவற்றையும் செய் கிறாள். வேலைகளாலும் கடமைகளாலும் சாந்தினி தனர் துயரை ஒரளவு மறந்தாலும் இடை பிடையே கணேசனின் நினைவுகள் அவளை அரித்தெடுக்கும். அவனது அருகாமையும் அணைப்பும் தேவையென மனது சிலவேளை களில் ஏங்கும்.
ம். கொடிய யுத்தம் எத்தனை எத்தனை பேரினது வாழ்வைச் சூறையாடி விட்டது. தனது நாட்டு மக்களையே ஈவிரக்க மின்றி மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கொன்று குவித்து பேரினவாத அரசுகளை நினைக்க மனம் வெதும்பும்.!
எத்தனை பேர் மாண டு போய் விட்டார்கள் எத்தனை பேர் அங்கவீனர்களாகி விட்டார்கள் எத்தனை பேர் உறவுகளை இழந்து நிர்க்கதியாகி வறுமையிலும் பசி பட்டினியிலும் வாடுகின்றார்கள்!
காலம் காலமாக அயராது உழைப்பி லும் சிக்கன வாழ்விலும் சேமித்தவை, கடும் முயற்சியால் கட்டிய வீடுகள், தளபாட உப கரணங்கள். அப்பப்பா. எல்லாவற்றையும் இழந்து இடம் பெயர்ந்தார்கள். இப்போது சுடுகாட்டுக்கு மீணர்டு வந்தது போல் சொல்ல முடியாத சோகத்துடன் சுமைகளைத் தாங்க முடியாமல் இன்னும் ஏதோ ஒரு நம்பிக்கை புடன் ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நம்பிக்கை ஊட்டியவனும் இன்று இல்லாமல் போய் விட்டானர். அணர்டை நாடுகளும் அனைத்து நாடுகளும் கைவிட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் முற்றும் இழந்த பின்னும், 5ணர்களை மூடி பார்க்காதிருந்த கடவுளை மட்டும் இன்னும் நம்பிக்கை கொணர்டிருக் கிறார்கள்.
ஈழத்து தமிழர் மீதும் இயமதர்ம ாஜனுக்கு ஏதாவது கோபமோ? ஏன் இப்படி வகை தொகையின்றி கொன்று குவித்தார்? இத்தனை பேரின் கணிணிர் கூட இயமனைக்
64 soa5 2014.

Page 49
கரைக்கவில்லையா? கடவுளுக்குக் கூ கருணையில்லையா?
பத்து நூறாகி... நூறு ஆயிரமாகி. ஆயிரம் பதினாயிரமாகி... பதினாயிரம் இலட் மாகி... அதையும் தாண்டி.... ஓ... எவ்வள பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட் விட்டார்கள் அதுமட்டுமா? அடக்கி ஒடுக்க பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு அலதியுற் தமிழினத்தின் மீது திணிக்கப்பட்ட ஆயு வன்முறையை எதிர்த்துக் கிளம்பிய போராளிக கூட வகை தொகையின்றி கொல்லப்பட்ட களே!... கேட்டதற்கிணங்க சரணடைந் போராளிகளில் கூட ஒரு பகுதியினர் அவள கணவனைப் போலவே காணாமல் போ விட்டார்கள்.
- சாந்தினி மனது கனத்தது. இன் அவளுக்கு கையும் இயங்கவில்லை. காலு அசையவில்லை. மனதெங்கும் கனதியாய். ஓ... இன்றுடன் கணேசன் காணாமற் போ ஆறு வருடங்களாகிவிட்டனவே!
அவனது நினைவு வந்ததும் கோ என் கதறி அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு எத்தனை எதிர் பார்ப்புகள்! எத்தனை ஊகங்கள் எல்லாம் வெறும் கானலாய்...
அவள் கவலையில் ஆழ்ந்திருந் போதே அடுத்த வீட்டு தர்சினி அவளிட வந்தாள். தர்சினி தனது கணவழன இறு இடப்பெயர்வின் போது பறிகொடுத்த இள விதவை தான். அவளது கணவன் பிரசாந்தன் சாந்தினியோடு ஒரே பாடசாலையில் படி பித்தவன். எவ்வளவு திறமையான ஆசிரியன் அவனிடம் படித்து எத்தனையோ பேர் பல்கலை கழகம் போனார்கள். போரின் கொடுமைகளுக் மத்தியிலும் கல்வியைக் கைவிடாத மாணவ களுக்கு கல்வியூட்டிய நல்லாசான் இன்றில்லை
- “சாந்தியக்கா கேள்விப்பட்டனியளே கச்சேரியிலை போரிலை இறந்தவைக் இண்டைக்கு மரணச் சான்றிதழ் வழங்கிறா களாம். அதையெடுத்தால் விதவைக
அநாதைகள் பெஞ்சனுக்கு விண் ணப் பி. கலாம்... வாங்கோவன் போய் வருவம்”
"சாந்தினியின் மனதில் நெருடல் தர்சினியின் கணவன் இடம் பெயரேக்க ஷெ பட்டு இறந்தவர். ஆனால் கணவனுக்கு என் நடந்ததெண்டு தெரியாது; இந்த நிலையி இறந்து விட்டான் என்று மரண சான்றித எடுப்பது முறையா? அவள் தயங்கினாள்.
“ஏன் யோசிக்கிறியள் அக்கா காணாமல் போனவைக்கும் கொடுக்கினமாம்.
47l கீவநதி .

-- E. SH G S. 4. G 8 E. ஓ 2 டி :
E. : 5.
2;
பி. '3
இனியும் அவர் வருவாரென்று நினைக் கிறியளே..?”
அவளது கேள்வியில் நியாயம் இருந்தாலும் சாந்தினிக்கு குழப்பமாக இருந்தது. எனினும் சாந்தினி தர்சினியின் வற்புறுத்தலால் சம்மதித்தாள்.
அவர்கள் கச்சேரியை அடைந்த போது அங்கு நிறையப்பேர் வந்து இருந்தார்கள். இராணுவத்தினர் சிலர் பணியில் ஈடுபட்டிருந் தனர். மரணத்திற்கான காரணம். போரின் இடையே சிக்கி இறந்தார் என்றே எல்லோருக் கும் பதியப் பட்டது. இதைக் கேள்வியுற்ற சாந்தினிக்கு சீற்றமாக இருந்தது. பாதுகாப்பாக ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அறிவித்து விட்டு, வகை தொகையின்றி ஷெல் வீசி பல்லாயிரக் கணக்கானோரை கொன்ற கொடுமையை எவ்வாறு மறக்கமுடியும்.
கூடவே அவள் கண்கள் கலங்கின.
எனினும் பலர் எப்படியாயினும் மரணச் சான்றிதழைப் பெற்று விட்டால் போதுமென்று நின்றிருந்தனர். சாந்தினியும் அவர்களுள் ஒருத்தியாய் காத்திருந்தாள். அவளது முறை வந்தபோது அதிகாரி முன் னே சென்று அமர்ந்தாள். "என்னுடைய கணவரை ஆமி தான் கைது செய்து கொண்டு போனது... பிறகு அவர் வரேல்லை” என்றதும் அதிகாரி இடைமறித்தார்.
"மெல்லக்கதையுங்கோ உங்களுக்கு பென்சன் அலுவலுக்கு மரணச் சான்றிதழ் தேவையெண்டால் போரில் சிக்கி இறந்ததாக பதியுங்கோ அதைவிட வேறை வழியில்லை.”
அவள் மெளனமாக இருந்தாள்.
“என்ன ரீச்சர் எழுதட்டே? மினைக் கடுத் தாதையுங்கோ... கனபேர் காத்திருக்கினம்...”
" வேண்டாம்... சேர்... அவள் எழுந்தாள்.”
“பிழைக்கத் தெரியாத பிள்ளை" என அதிகாரி நினைத்துக்கொண்டார்.
- ஏதோ ஒரு ஆவேசம் சாந்தினியை ஆட்கொண்டிருந்தது. சான்றிதழுடன் வந்த தர்சினி “என்னக்கா எடுக்கேல்லையே”
"இல்லை...” "ஏன்..”
" அ வர் இருக் கிறார் ... அவர் வருவார்... அது வரை நான் காத்திருப்பன்...”
“உங்களுக்கென்ன விசரே அக்கா...?”
“விசர் வராமலிருக்கிறதே புதுமைதான்...” சித்த சுவாதீனம் அற்றவன் போல் வேகமாக ?, நடந்து செல்லும் சாந்தினியை வியப்போடு
பார்த்தபடி பின் தொடர்ந்தாள் தர்சினி. இதழ் 64 இதை 2014
3. பி சி. - L. 4. 5. இ
TD.

Page 50
பேசும் இ
1)
சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்ப்பட்ட “பாலம்” சிறுகதைத்தொகுப்பு பற்றிய மேமன்கவி அவர்களின் விமர்சனக் கட்டுரையைக் கடந்த இதழில் வாசித்தபின் என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை வாசகர் களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
- முதலாவது விடயம் கலப்பு திருமணம் பற்றியது. கலப்புத் திருமணங்கள் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதுவது ஒரு தவறான அணுகுமுறையாகும். ஏனென்றால் இல ங் கையில் கலப் புத் திருமண ங் கள் தாராளமாக நடக்கின்ற போதிலும் அதன் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்பட்டு விடவில்லை. தமிழர்கள் சிங்களவர்கள் ஆக மாறியது தான் கண்ட மிச்சம். மற்றது ஒருவர் மொழியை மற்றவர் கற்பது என்பது வேறு. ஆனால் தாய் மொழியைக் கைவிட்டு வேறு மொழியைப் போதனா மொழியாக ஏற்பது என்பது வேறு. சிலாபம், புத்தளம், நீர் கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்த தமிழ்ப் பாடசாலைகளில் போதனா மொழியை மாற்றிய தன் மூலம் தமிழர்கள் சிங்களவர்களாக மாறினார்கள். இதே பிரதேசங்களில் தான் ஆகக் கூடிய அளவில் கலப்புத் திருமணங்களும் நடைபெற்றன.
குடியேற்றங்களின் மூலமும் தமிழ்ப் பிரதேசங் கள் சிங களமயமாக மாறிக் கொண் டிருக்கின்றன. இவ்வாறான எதிர் மறையான செயற்பாடுகளைக் கைவிட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை தத்தம் மொழி, மதம், கலாசார விழுமியங்கள் என்பனவற்றைப் பேணிப் பாதுகாத்து வளர்க்க விட்டு விட்டு, இம்மக்களை இணைக்கும் ஒரு பாலமாக அல்லது மத்திய நிறுவனமாக அரசாங்கம் செயற்பட்டால் பிரச்சினைகள் தன் பாட்டில் தீரும் என்பது எனது கருத்தாகும்
- கா.தவபாலன் (பேராதனை)
2)
2013 கார்த்திகை ஜீவநதி வாசித்தேன். புதுப்பொலிவுடன் முகம்காட்டிய ஜீவநதியின் முகப்போவியம் எனது கவிதைக் குளத்திலே கல்லெறிந்து விட்டது. தொடர்ந்து இப்படியான உயிர் ஓவியங்களையும், எமது ஓவியர்களையும் அறிமுகம் செய்வது ஓர் ஆவணப் பதிவாக அமையும், என் பது எனது கருத்தாகும்.
48/ ஜீவநதி - இத

தயங்கள்
அட்டைப்பட ஓவியம் தந்த கவிதையொன்றை இத்துடன் இணைக்கின்றேன்.
தூரிகை தீட்டிய கவிதை!
ஓட்டைக் குடிசை வாழ்வுதான் ஆனாலும் ஒப்பரிய ஒரு உன்னதம் அது.
வட்ட நிலாக்காட்டி வகைவகையாய் கதைசொல்லி வட்டிற் சோறூட்டிய பாட்டியை எண்ணுந்தோறுமோர் ஏக்கம்
இதயத்தில் முள்ளாக.
நவீனத்துள் நுழைந்துவிட்ட உலகில் நிலவை ரசிக்க
நேரமெங்கே பாட்டிகளுக்கும் பேரர்களுக்கும்
தூரத்துப் பச்சைகளில் தொலைந்து கொண்டிருக்கின்றன எமது இதயம் தொட்ட பாரம்பரியங்கள்.
இயந்திரப் பல்லுக்குள் சிக்குண்ட பட்டுச்சேலையாய் சிதைந்து கிடக்கிறது வாழ்வு.
முற்றத்து மணலில் பாய் விரித்து இனிய நிலவை ரசித்தபடி சில்லென வருடும்தென்றலின் சுகத்தில் கண்ணயர்ந்து தூங்கிய பொழுதுகள்
அவை ஒரு கனாக் காலங்களாய்.
இயற்கையோடு ஒன்றித்து இன்பச் சுணையாய் பாய்ந்த காலங்கள் துன்பச் சுமைதாங்கிகளாய் தூக்க முடியாத வேதனைகளாய் ஓடிக்கரைந்த உள்மனது ஏக்கங்களை ஒவியமாகவாவது இப்போ தரிசிக்கக் கிடைத்ததும் ஒரு தவமான தவந்தான்.
முகப்பிலே முகம் பார்த்தேன் அந்த மோகனங்கள் மீளுமா இனி?
- வெடில்லிதாசன் (திருகோணமலை)
64 /தை 2014

Page 51


Page 52
கேம்பிறி: நவ
6
/ தரம் 01 முதல் தரம் 11வரையான மாணவர்கடு ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆண்-பெண் எனத் த அலகு வினாக்களை அழப்படையாகக் கொண்ட
விஞ்ஞான ஆய்வுகூடம், கணித அறை, நூலக மேந்தலைஎறியி (OHP) உட்பட நவீன கற்றல் விசேட ஆங்கில வகுப்புகள், உயர்தர கலை வர் 2 கையேடுகள், செயலட்டைகள், தொடர் மதிப்பீடு
பிரத்தியேக சீருடை மற்றும் போக்குவரத்து வச
5 EDGEU
ஒன்றுகுவிந்த காத்தி
 

ஆகலாசாலை
ருக்குதற்புதுமையான கற்பித்தல்
தனிப்பிரிவு
மாதாந்தப் பரீட்சை
ம், கணினிக் கற்கை கூடம் போன்ற வசதிகள்
சாதனங்கள்
த்தகப் பிரிவுகள்