கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆய்வுப் பயணங்கள்

Page 1


Page 2


Page 3
அறிவு விரிவு மல
ஆய்வுப் ப
கல்வி வெளியீட்டுத்

1hamilini
ர் வரிசை - 2
யணங்கள்
திணைக்களம்

Page 4
பு |
ஆக்கியோர்:
ஏ. தாசிசியஸ்
பதிப்பாசிரியர் :
வே. வல்லிபுரம்
ஆலோசகர்கள்:
சி. குமாரகுலசிங்கம்
மு. சண்முகம்
இ. குணநாதன்
படம் வரைந்தோர்:
ஆர். பீ. மாவில்மட
ஒழுங்கமைப்பு:
ஆர். பீ. மாவில்மட
உறைப் படம்:
சோமசிறி ஹேரத்
எல்லா உரிமையும் அரசினர்க்கே முதற் பதிப்பு 1979
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தாலே தய கூட்டுத்தாபனத்தில் அச்சிட்டு வெளியிடப்ப
இ(5,000)

எரிக்கப்பட்டு, அரசாங்க அச்சகக் ட்டது .

Page 5
முன்னு
தாய்மொழி மூல மாணவரின் தேவை யிற் பாடநூல்களையு மாணவர்களுக்கான நூல்களையும் வெளி கல்வி வெளியீட்டுத் பட்டுள்ளது. ஆயின் பல்வேறு துறைகளி முன்னேற்றங்களை 6 குப் பாட அறிவு ம போதாது.
எனவே, மாண அறிவை ஊட்டும் ஆரும் வகுப்பிலிரு வகுப்பு வரை உள்ள குச் சிறப்பாகப் பய இத்திணைக்களம் என்ற பெயரில் ஒ சில நூல்களை வெளி டுளது. இத்தொட 'ஆய்வுப் பயணங் நூல், ஆதி மனித மிருந்த சொற்ப வழ தனக்குள்ள அற்ப செய்தலிலே தொட கடலிலும் விண்வெ பெற்றுள்ள வியத்த கள் வரை உள்ள ட களைக் கதை உருவ கின்றது.
கல்வி
மாளிகாவத்தை செயலகம், கொழும்பு 10.
7979, 0.7. 2 7 །

இர
ங் கல்வி பயிலும் க்கு உதவும் வகை ம் பல்கலைக் கழக மொழிபெயர்ப்பு யிடும் பணியிற் திணைக்களம் ஈடு 1, நவீன உலகிற் ல் இடம்பெறும் விளங்கி நயத்தற் ட்டும் இருந்தாற்
வருக்குப் பரந்த
நோக்கத்தோடு, ந்து ஒன்பதாம் ா மாணவர்களுக் பன்படுவதற்காக, 'அறிவு விரிவு ரு தொடராகச் யிடத் திட்டமிட் டரைச் சேர்ந்த கள்' என்னும் ன் தன் கைவச மிகளைக் கொண்டு வளங்களை ஆய்வு ங்கி, தரையிலுங் 1ளியிலும் இடம் கு முன்னேற்றங் பல்வேறு நிகழ்ச்சி பிலே தர முயல்
பீ. ஜீ. டீ. பர்ணுந்து வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர்
iii

Page 6
1. மனிதன் வாழும் இடம் தேடி . பிரச்சினையும் மார்க்கமும் மனிதனும் மிருகமும்
குழுக்களும் இனங்களும் மொங்கொலொயிட் மக்களும் சீனுவும் மொங்கொலொயிட் மக்களும் அமெரிக்காவும் ஆரியரும் இந்தியாவும் புவியியல் நிலைமையும் மக்கள் பெயர்ச்சியும் நாடோடி மக்களும் தாவர உணவும் விவசாயமும் நாகரிகமும்
கடலும் மீனவரும் நிரந்தர வாழ்க்கையும் மக்கள் தொழில்களும் தீவுகளுங் குடியேற்றங்களும் ஆரியரும் இலங்கையும் 10 திராவிடரும் இலங்கையும் IO வேடரும் இலங்கையும் 10
9
2. ஆய்வுப் பயணங்கள் . I I ஆய்வுப் பயணங்களும் நோக்கங்களும் 11 ஆய்வுப் பயணிகளும் அவர்கள் பணிகளும் II முதற் பயணங்களும் வரலாற்று ஆதாரங்களும் 11 ஆதி வரலாறும் அதன் ஆசிரியர்களும் 12
மத்தியதரைப் பிரதேசமும் அதன்
முக்கியத்துவமும் 12
3. வடக்கு நோக்கி . 1 4 காதஜீனியரின் ஆதிக்கம் - 14 கிரேக்கரின் வர்த்தகம் 14 பைதியஸின் பயணம் 15
4. தெற்கு நோக்கி . II 7 எகித்தியரின் பயணம் I 7 நெக்கோவின் ஆற்றல் I 7 காதஜினியரின் பயணம் I 8 ஹனேவின் சாதனை I 8 புதிய குடியேற்றங்களும் வர்த்தகமும் 19 இருண்ட காலம் 19 மக்கள் மறதிக்குக் காரணம் 19 அராபியரும் வர்த்தகமும் 20 ஹென்றி இளவரசர் 20
5. கிழக்கு நோக்கி . 22 மகா அலெக்சாந்தர் 22 அராபியப் பயணிகள் 22 புத்த சமயப் போதகர்கள் 22 LD/Tsjai, G34, T. GLITGGDIT 22
ஐரோப்பியரும் இலங்கையும் 26
7
ତା
G
1.
C
L/

க்கம்
பக்கம்
லங்கையும் பிறநாட்டுத் தொடர்புகளும் 27 ா-ஹறியென் 27 ருபேட் நொக்ஸ் 27
மேற்கு நோக்கி . 29 வைக்கிங் மக்களுங் கடற் பயணங்களும் 29 லயில் எறிக்சனும் அமெரிக்காவும் 30 காலம்பஸும் அமெரிக்காவும் 31 கெலனும் அவர் சாதனையும் 33 தார் ஹயடால் 34
முனைவுகளை நோக்கி 35
ட முனைவுப் பயணம் 35 தன் முனைவுப் பயணம் 35
கடல் அடியை நோக்கி . 37 டல்படு செல்வம் 38 டலில் இழந்த செல்வம் 39 டற்றளத்திலிருந்து எண்ணெய் 39 டற்கீழ் ஆய்வு 40
. இமய உச்சியை நோக்கி . 4 சர் யோன் ஹன்றின் குழு 4 I மய உச்சியை அடைதல் 42 வரெஸ்ட் உச்சியிற் கடவுளுக்குச் சமர்ப்பணம் 43
விண்வெளியை நோக்கி . 44 ந்திரப் பயணம் 44 சவ்வாய் ஆய்வு 46 வள்ளி ஆய்வு 47 |ண்வெளியில் மனிதர் நடமாட்டம் 47 "ண்வெளியில் நடந்த இரசியர் 48 "ண்வெளியில் நடந்த அமெரிக்கர் 48 ண்வெளிவீரர் கலம் மாறுதல் 48 ண்வெளியில் ஆய்கூடம் 48 ண்வெளியில் சோயுஸ்-அப்போலோ இணைதல் 49 ண்வெளி ஆய்வின் டயன் 50 சய்தித் தொடர்புச் செய்ம்மதிகள் 50 மெரிக்கச் செய்ம்மதிச் செய்தித் தொடர்புச் சேவை 50 ரசியப் செய்ம்மதிச் செய்தித் தொடர்புச் சேவை 51 வி ஆய்வுச் செய்ம்மதிகள் 51 மோடற் செய்ம்மதிகள் 5 I ண்வெளி ஆய்வால் இலங்கை பெறும் நன்மை 51 ருங்கால ஆய்வு 52

Page 7
1. மனிதன்: வாழும் இடம் (
ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்ந்த வாறு சுழன்றது சூரியன். சுழன்று சுழன்று அழகாகச் சூரியனை வலம் வந்தது புவி. பருவ காலங்களும் வந்து போயின. இந்நிலை இன்றுந் தொடர் ந்து நிலவி வருகிறது. மனிதன் தோன் றினான். மனித வரலாறுந் தொடங் கியது. மனிதன் குரங்கு போன்ற தோர் இனத்திலிருந்து பிறந்ததாக உயிரியல் அறிஞர் பலர் கருதுகின் றனர். ஆரம்பத்திலே குரங்குபோல இருந்து பல படிமுறை வளர்ச்சிகளின் பின்னர் மனிதன் பரிணமித்துள்ளான் என்று கூறப்படுகிறது.
ஆதி

தேடி
பிரச்சினையும் மார்க்கமும்
முதல் மனிதனை எதிர்நோக்கிய பிரச்சினை, அவனுக்கு உண்டான வயிற்றுப் பசியே. பசியைத் தீர்க்க ஒரு மார்க்கம் தேவை. எனவே, ஆதி மனிதன் ஈடுபட்ட முதல் முயற்சி உணவு தேடுதலே. இம்முயற்சியில் ஈடு பட்ட மனிதன் அதனை நிறைவேற்று தற்காகப் பல உபாயங்களைக் கையாண் டான். இவற்றின் விளைவாகக் கல்லும் மரமும் எலும்பும் அவனுடைய ஆயு தங்களாயின. அவற்றின் உதவியோடு உணவுக்குத் தேவையான விலங்கு
களைக் கொன்றான்.
மனிதன்

Page 8
மனிதனும் மிருகமும்
காட்டு மிருகங்கள் ஒரே இடத்திலே வாழ்பவையல்ல. அவை எப்பொழு தும் இடம்பெயர்வன. எனவே, உணவை எளிதாகப் பெறும் எண்ணத் தோடு விலங்குகள் செல்லுந் திசை யில் மனிதனும் சென்றான். அவனோடு அவனைச் சேர்ந்த குழுவுங் கூடிச்சென் றது. இத்தகைய சிறிய குழுக்கள் உல கின் பல பாகங்களுக்கும் பரந்தன. நிரந்தரமாக ஓரிடத்திலே தங்கியிரா மல் உணவு தேடி இடம்பெயரும் நாடோடிக் குழுக்களாகவே அவை விளங்கின. இந்த நாடோடி வாழ்க்கை மனித சமுதாயத்திற் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவியது.
எஸ்கிமோ இனத்தவன்
குழுக்கழும் இனங்களும்
தனித்தனியே அலைந்த குழுக்கள் ஒன்றோடொன்று கலக்கவும் நேரிட் டது. உலகின் பல்வேறு பாகங்களிலுங் காணப்பட்ட குழுக்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களின் காலநிலைகளுக்கு ஏற்ப

மொங்கொ லொயிட் இனத்தவன் வாழக் கற்றுக்கொண்டன. குழுக்கள் இனங்களாக உருவாயின. வெவ்வேறு இனங்களும் பௌதிக, காலநிலைகளுக் கேற்பத் தோற்றம், நிறம் முதலிய வற்றிலே வேறுபட்டன. நீகிரொயிட், மொங் கொலொயிட், கோக்கொ சொயிட் ஆகியவை வடக்கிலும் புஷ்ம னொயிட், ஒஸ்ட்ரலொயிட், பொலி சியன் ஆகியவை தெற்கிலுங் குடி யேறின. மொங்கொலொயிட் மக்களும் சீனாவும்
பீக்கிங் மனிதன் கி. மு. 400 ஆண்டளவிற் சீனாவிலே காணப்பட் டான். அதே சமயம் மொங்கொலொ யிட் இனமுஞ் சீனாவிற் காணப்பட்டது. கி. மு. 1500 அளவிற் சீனாவில் மஞ்சள் நதிக் கரை நாகரிகம் வேரூன்றியது. மொங் கெர் லொயிட் இனத்தினர் தென்கிழக்கு ஆசியாவிலே பல்வேறு பகுதிகளுக்கும் பரவி, மற்றைய இன மக்களுடன் கலந்து வாழ்ந்தனர்.

Page 9
மொங்கொலொயிட் மக்களும் அமெரிக்காவும்
மொங்கொலொயிட் இனத்தினரும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர். வேட்டையாடலில் ஈடுபட்ட இவ் வினத்தினர் விலங்குகளைத் தேடி அலைந்து பேரிங் தொடுகடலைக் கடந்து நடந்து சென்று வட அமெரிக்காவை யும், பின்னர் தென்னமெரிக்காவை யும் அடைந்தனர். பனி படர்ந்த வட அமெரிக்கப் பகுதிகளிலே வதியும் எஸ்கிமோவரினுடைய மூதாதையரும் மொங்கொலொயிட் இனத்தினரே என்று வரலாற்றாசிரியர் கூறுவர். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த ஆதிக் குடிகள் புஷ்மனொயிட் இனத்தினரா வர். ஆரியரும் இந்தியாவும்
மத்திய ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியுங் கிழக்கு நோக்கியும் இந்தோ ஆரிய இனம் பரவியது. இது கைபர்க் கணவாயைக் கடந்து இந்தி தியாவுக்குள்ளும் வந்தது. ஆரியர் முத லிற் பஞ்சாப் பிரதேசத்தை அடைந் தனர். பின்னர் வட இந்தியா முழு வதும் பரவினர்.

புவியியல் நிலைமையும் மக்கள்
பெயர்ச்சியும்
நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்ப மக்கள் தம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வது இயல்பு. வட பிரதேசங் களிற் குளிர் மிகுதியாக இருந்ததால் அங்கு வாழ்ந்த மக்கள் தெற்கே இடம் பெயரத் தொடங்கினர். கொதிக் இனத்தினரும் வண்டல் இனத்தின ரும் வடக்கு ஐரோப்பாவிலிருந்து வர, ஹன், மொங்கோலியர், தாத்தார் கள் ஆகியோர் வட ஆசியாவிலிருந்து தெற்கே வந்தனர். நாடோடி மக்களும் தாவர உணவும்
ஆரம்பத்திலே வேடர்களாகத் திரிந்த மக்கள் தாவர உணவைச் சுவைக்கப் பழகினர். தாவர உணவு கிடைக்கும் இடங்களிற் சில நாட்கள். தொடர்ந்து தங்கியிருக்கும் வழக்க மும் ஏற்பட்டது. இவ்வாறு ஓர் இடத் திலே தங்குதல் வசதியாக இருப்பதை மக்கள் கண்டனர். நெடுங்காலந் தரித் திருக்க வேண்டுமாயின், உணவைப் பெறுதற்குத் தாவரங்களைப் பயிரிட
புராதன கட்டுமரம்

Page 10
வேண்டும் என்பதை உணர்ந்தனர். எனவே, விவசாயத்துக்கு உவந்த நிலங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு தங்கி வாழத் தலைப்பட்டனர். இற் றைக்கு ஏறத்தாழப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத் தொழிலில் மக்கள் முதன்முதலாக ஈடு படத் தொடங்கினர்.
ஆதி மனிதன் பயன்படுத்திய சில ஆயுதங்கள்
8
 

விவசாயமும் நாகரிகமும்
ஆண்டு தோறும் ஒரே இடத்தில்
உணவைப் பயிரிடலாமெனக் கண்ட தும் மக்கள் நிரந்தரமான இல்லங்களை அமைந்தனர். ஊர்கள் தோன்றின. அவை மேலும் ஒருபடி வளர்ந்து பட்டி னங்களாயின. நீர்வளமும் நிலவளமும் நிறைந்த இடங்களையே மக்கள் தேர்ந் தெடுத்து வாழத் தொடங்கினர். ஆதி கால மக்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி களை நோக்கின், ஆபிரிக்காவிலே நைல் நதிப் பிரதேசமும் ஐரோப்பாவிலே டான்யூப் நதிப் பிரதேசமும், அண் மைக் கிழக்கிலே யூபிரற்றீஸ் தைகிரிஸ் நதிப் பிரதேசங்களும், இந்தியாவிலே சிந்து நதிப் பிரதேசமும், சீனுவிலே மஞ்சள் (ஹ"வாங் ஹோ) நதிப் பிர தேசமும், இலங்கியிலே மல்வத்துஒயா, களனி கங்கை, மகாவலி கங்கை, வளவை கங்கைப் பிரதேசங்களும் நீர் வளமும் நிலவளமும் பொலிந்து விளங் கின என்பது புலனுகும்.

Page 11
கடலும் மீனவரும்
சமுத்திரக் கரையை அடைந்த மக் கள் மீனை உண்டனர். நீரிலே மரக் கட்டைகள் மிதப்பதைக் கண்டனர். அம்மரக்கட்டைகளை இணைத்துக் கட்டு மரங்கள் கட்டினர். மரக்குற்றிகளைக் குடைந்து, தோணிகள் செய்து, மீன் பிடிதொழிலில் ஈடுபட்டனர். ஈட்டி களும் வலைகளும் மீன்பிடி கருவிகளா யின. தொடக்கத்திலே இடம் பெயர்ந்து வாழ்ந்த இம்மக்கள் காலப் போக்கில் மீன்வளம் நிறைந்த பகுதி களுக்கு அயலில் நிரந்தரமாகக் குடி யேறவுந் தலைப்பட்டனர்.
நிரந்தர வாழ்க்கையும் மக்கள் தொழில்களும்
நாடோடி வாழ்க்கை அருகி, மக் கள் நிரந்தரமாகக் குடியேறத் துவங் கியதும் மக்களுடைய தேவைகளும் வசதிகளும் முயற்சிகளும் அதிகரித் தன. சிலர் உணவைப் பயிரிட்டு விளைச் சலை மற்றவர்களோடு பகிர்ந்துண்ட னர். இன்னுஞ் சிலர் மந்தைகளை வளர்த்துப் பயன்பெற்றனர். சிலர் வேட்டையாடி இறைச்சியைப் பகிர்ந் தனர். வேறு சிலர் பிடித்த மீனைப் பிறருக்குங் கொடுத்தனர். உணவுப் பண்டங்களைப் பகிர்ந்தளிப்போர் தம் மிடையே இருப்பதைக் கண்ட இன் னும் சிலர் , வெவ்வேறு கருவிகளையும் ஆயுதங்களையும் தளபாடங்களையுந் தேவையானவர்களுக்குச் செய்து கொடுத்து அப்பொருள்களுக்கு மாற் முகத் தமக்குத் தேவையான உணவுப் பண்டங்களையும் பிற பொருள்களையும் பெற்றனர். இவ்வாறு, மக்கள் வெவ் வேறு சேவைகளுக்காகவும் பொருள் களுக்காகவும் ஒருவரில் ஒருவர் தங்கி
-

மேய்ச்சல் நிலந் தேடல்
வாழ்வாராயினர். தொடக்கத்திலே பண்டமாற்று இடம்பெற்றது. பின் னர் பணம் புழக்கத்துக்கு வரலாயிற்று.
தீவுகளும் குடியேற்றங்களும்
மீன்பிடி படகுகள் சீர்திருத்த மடைந்தன; உருவிலும் பருத்தன. பாய்விரித்தோடும் படகுகளும் புழக் கத்துக்கு வந்தன; இவை காரணமாக ஆழக் கடலுக்கு மீன்பிடிக்கப் பலர் சென்றனர். சூறைக் காற்றிற் சிக்கி னேர் அலைக்கப்பட்டுத் தூர நாடுகளி லும் தீவுகளிலுஞ் சென்று ஒதுங்கினர். இதனுல் அவர்கள் ஆங்காங்கு குடி யேற நேர்ந்தது. சிலர் அங்கிருந்து தம் சொந்தக் கிராமங்களுக்கு மீண்டனர். சிலர் நிரந்தரமாகப் புதிய இடங் களிலே தங்கினர். பெருஞ் சமுத்திரங் களிலுள்ள பல தீவுகளில் இவ்வாறே மக்கள் முதலிற் குடியேறியிருத்தல் வேண்டும். ஐரோப்பியப் பெருநிலப் பரப்பிலிருந்து தோணிகளில் ஆங்கிலக் கால்வாயிலும் வடகடலிலுஞ்சென்று தாடிக்காரப் பித்து இனத்தினரும் செல்ற் இனத்தினருமே பிரித்தானி யத் தீவுகளிற் குடியேறியிருத்தல் வேண்டும்.

Page 12
ஆரியரும் இலங்கையும்
வட இந்தியாவிலே நிலைபெற்ற ஆரி யர் மேற்கிலும் கிழக்கிலும் இருந்து இலங்கைக்கு வந்தனர். அவர்களுள் முதலில் வந்தோர் விஜயனும் அவனு டைய தோழர்களுமே. இலங்கைக் கரையிலே இவர்கள் வந்து இறங்கினர். இதே காலப் பகுதியில் வெவ்வேறு இடங்களிலும் ஆரியர் வந்திறங்கினர். மாதோட்டத் துறையில் வந்திறங்கி னுேர் மல்வத்து ஒயாக் கரையோரத் திற் குடியேறி அனுராதபுரப் பகுதி களில் நிலையாக வாழ்ந்தனர். களனி கங்கை, கிரிந்தி ஒயா, வளவை கங்கை
ஐம்புகோளபடுண
இலங்கையில் ஆரியரின் ஆதிக் குடியேற்றம்
10
 

ஆகிய நதிகளின் கரைகளிலும் அவர் கள் குடியேறினர். திருக்கோணமலை யிலே மகாவலி கங்கைத் தொடுவாயி லும் ஆரியர் வந்திறங்கினர். காடு களை அழித்துக் களனிகளாக்கினர். நாட்டை வளம்படுத்தினர். இன்றைய இலங்கையின் பெரும்பான்மை மக்க ளான சிங்களவர் ஆரியரே. விஜயனு டையவும் அவன் தோழர்களுடைய வும் வழித்தோன்றல்களாக இவர்கள் கருதப்படுகின்ருர்கள். திராவிடரும் இலங்கையும்
இந்திய உபகண்டத்துக்கு மிக அண் மையில் இருப்பது இலங்கை வரலாற் றின் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழர் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருப்பர் என நம்பப்படுகின்றது. மீனவராகவுங் குடியேற்றக்காரர்ாக வும் வர்த்தகராகவும் படையினராக வுந் தமிழர் அடிக்கடி இங்கு வந்தனர். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இவர்கள் பழங்காலந் தொட்டே பெரும்பான்மையினராக வசித்து வரு கின்றனர். வரண்ட இப்பகுதிகளைத் தமிழர் தம் அயரா உழைப்பினுற் பயன் மிகுந்த பிரதேசமாக்கியுள்ள GOTT. வேடரும் இலங்கையும்
விஜயன் இலங்கையை அடைந்த காலை இங்கே வாழ்ந்தோர் இயக்கரும் நாகருமாவர். அவ்வேளை இந்நாட்டு அரசியாக விளங்கிய குவேனியை விஜ யன் மணந்தான். ஆயினும், விரை விலே அவளையும் அவளுடைய பிள்ளை களையுங் கைவிட்டான். அவர்கள் வனத்திடை மலைகளில் வாழ்ந்தனர். அவர்களின் வழித்தோன்றல்களான வேடர்கள் இன்றும் மகியங்கனைப் பகு தியில் வாழ்கின்றனர்.

Page 13
2. ஆய்வுப் பயணங்கள் ஆய்வுப் பயணங்களும் நோக்கங்களும்
உணவு தேடும் முயற்சியில் ஈடு பட்டதாலேயே மனிதர் உலகம் முழு வதும் பரவிவாழ நேரிட்டது; புதிய இடங்களைக் கண்டுபிடித்தனர். உல கெங்கணுங் குடியேறினர். இத்தகைய குடியேற்றங்கள் ஆய்வுப் பயணங் களின் விளைவெனக் கொள்ளலாமா? இல்லை, இவை தற்செயலாக நிகழ்ந்த வையே. ஆய்வுப்பயணமானது நோக் கம் எதையேனும் அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். திர வியந் தேடுதலோ, பெருகுஞ் சனத் தொகைக்கு வேண்டிய இடந் தேடு தலோ, ஒரு குறிப்பிட்ட சமயத்தை அல்லது அரசியற் கொள்கையைப் பரப்புதலோ நோக்கமாக இருக்கும். மனித சமுதாயத்தின் வசிப்பிடமான இவ்வுலகின் வெவ்வேறு கோடிகளி லுள்ள பிரதேசங்களைக் கண்டுபிடித்து, . புதிய விபரங்களைப் பெற்று, மனித சமுதாயத்துக்குச் சேவை புரிய முயற்சி செய்வதோ, இத்தகைய வேறொரு காரணமோ ஆய்வுப் பயணத்தின் நோக்கமாக அமையும். எனவே, ஆதி கால நிலக் கண்டுபிடிப்புக்கள் தற் செயலான நிகழ்ச்சிகள் எனவும் பின் னைய ஆய்வுப் பயணங்கள், குறித்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன எனவும் துணிந்து
கூறலாம்.

ஆய்வுப்பயணிகளும் அவர்கள் பணிகளும்
உலகின் பெரும்பாலான பாகங் களில் மக்கள் நிலையாகக் குடியேறிய பின்னர் ஆய்வுப் பயணிகளே வர்த்த கப் பாதைகளைக் கண்டுபிடித்து, வெவ் வேறு பிரதேசங்களில் வாழ்ந்த மக்களி டையே வணிகப் பரிமாற்ற முறையை நிறுவினர். உலகின் ஒவ்வொரு பகுதி யும் மற்றைய பகுதிகளைக் காட்டிலும் ஏதோவொரு துறையிலே வளம் பெற்றிருந்தது. சில இடங்களில் மூலப் பொருள்கள் மண்டிக் கிடந்தன. வேறு சில இடங்களில் ஆயுதங்கள், கருவி கள், மட்பாண்டங்கள், அணிகலன் கள் போன்ற உற்பத்திப் பொருள்கள் மிகுந்து கிடந்தன. சில இடங்களில் அளவுக்கு விஞ்சியிருந்த சில பொருள் கள் மற்றைய இடங்களில் அரிதாகக் காணப்பட்டன. தம் வசமிருந்த பொருள்களின் பெறுமதியையும் தம் மிடமில்லாப் பொருள்களின் பெறு மதியையும் மக்கள் உணர்ந்தனர். இதன் விளைவாக விற்பனைக்கும் வர்த்த கத்துக்கும் ஏற்பாடு செய்ய முனைந் தனர். இப்பரிமாற்றத்துக்கு ஆய்வுப் பயணிகளே வழிகோலினர். முதற் பயணங்களும் வரலாற்று ஆதாரங்களும்
முதல் ஆய்வுப் பயணத்தை மேற் கொண்டவர் யார்? எவருக்கும் அது
தெரியாது. ஏனெனில், இது பற்றிய

Page 14
பதிவேடு எதுவும் இன்று கிடைத்திலது. முதல் ஆய்வுப் பயணந் தொடர்பான பதிவேடுகள் எவையேனும் இருந்தா லும், அவையெல்லாம் இப்போது அழிந்தொழிந்திருக்கும். எனினும், நாகரிகந் தொடங்கிய காலத்திலேயே புதிய பயணப் பாதைகளைக் கடலிலுந் தரையிலும் மக்கள் மேற்கொண்டிருத் தல் வேண்டும்.
ஆதி வரலாறும் அதன் ஆசிரியர்களும்
கிறிஸ்துவுக்கு முந்திய ஈராயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுக் கால உலக வரலாறு தொடர்பாக நாம் அறிந்துள்ள விபரம் அனைத்தையும் உலகிற்கு வழங்கியோர் மூவராவர். இவர்கள் மூவரும் கிரேக்கரே.
இவர்களிலே முக்கியமானவர் ஹெரோடொற்றஸ் ஆவார். கி. மு. 484 இற்கும் கி. மு. 425 இற்கு மிடையே வாழ்ந்த இவர் 'வரலாற் றின் தந்தை' எனக் கூறப்படு வதுண்டு. இவரே முதலாவது வர லாற்ருசிரியராக இருக்கலாம். மனித சாதனைகளை வரலாருக இவர் எழுதத் தொடங்கினர். நிகழ்ச்சிகளைக் குறிப்ப தோடு மட்டும் நிறுத்திவிடாது, அவற் றுக்கான காரணங்கள், அவற்றின் விமரிசனம் ஆகியவற்றையும் எழுதி னர்.
அடுத்து முக்கியத்துவம் பெற்றவர் பொலீபியஸ் ஆவார். கி. மு. 210 இற்கும் கி. மு. 120 இற்குமிடையே இவர் வாழ்ந்தார். இவரும் ஹெரோ டொற்றஸைப் போன்று, நிகழ்ச்சி களுக்கரின் சுரணங்களையே பெரிதும் ஆராய்ந்திரி ஆய்வுப் பயனங்களின் விபரங்களிலும் அக்கறை காட்டினர்.
12

ஸ்திருபோ என்பவர் இவர்களுக் குப் பிந்தியவர், கி. மு. 63 இலே இவர் பிறந்து கி. பி. 36 இல் மறைந் தார். பொலீபியஸ் எழுதிய வரலாற் றைத் தொடர்ந்து எழுதுவதைத் தமது வாழ்க்கைப் பணியாக மேற் கொள்ள இவர் முனைந்தார். தாம் எழுதிய வரலாறு நீங்கலாக, தம் அறி வுக்கெட்டிய அளவுக்கு உலகின் புவியி யல் பற்றியும் இவர் எழுதியுள்ளார்.
கடந்த காலத்தில் மக்கள் எங் கெங்கு சென்ருர்கள் என்பது பற்றி நாம் அறியும் விபரம் அனைத்திற்காக வும் நாம் இம்மூவருக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். இக்கிரேக்க அறிஞர்களின் உதவியாலே தற்கால மாணவர்கள் வெண்கலக் காலத்துப் பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகளையும் ஆரம்ப கால ஆய்வுப் பயணிகள் சென்ற பாதைகளையும் அறிதல் சாத் தியமாகின்றது. மத்தியதரைப் பிரதேசமும் அதன் முக்கியத்துவமும்
ஆதிகால ஆய்வுப் பயணங்களையும் வர்த்தகப் பயணங்களையும் கூர்ந்து நோக்கினல், அவற்றுட் பெரும் பாலானவற்றின் ஆரம்பக் களமாக மத்தியதரைப் பிரதேசம் விளங் கியதை நாம் அவதானிக்கலாம் பண் டைக் காலத்திற் பிற நாடுகள் மீது போர்தொடுத்து அவற்றை அடிப் படுத்திய நாடுகளும் அப்பிரதேசத்தி லேயே அமைந்தன. மேற்கு உலகிலி ருந்து ஆசிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட பொருள்களும் ஆசியா விலிருந்து கொண்டு வரப்பட்டு, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் விற்கப்பட்ட பொருள்களும் மத்திய தரைக் கடலின் துறைமுகங்களை முத

Page 15
லில் அடைந்தன. மத்தியதரைப் பிர தேசம் அல்லாத பகுதிகளிலிருந்தும் சில பயணங்கள் தொடங்கின. அவை பற்றியும் அவ்வப்போது ஆராய் வோம். ஆயினும், பெரும்பாலான பயணங்களுக்கு மத்தியதரைப் பிரதே சமே ஆரம்பக் களமாக அமைந்தது .

எனவே, மத்தியதரைக் கடலையே பொதுக் களமாகக் கொண்டு அங்கி ருந்து நான்கு திசைகளையும் நோக்கி மேற்கொள்ளப்பட்ட
பயணங்கள் எத்தகைய விளைவுகளையுந் தாக்கங் களையும் ஏற்படுத்தின என்தைப் பார்ப் போம்.
13

Page 16
3. வடக்கு நோக்கி
பயணங்கள் யாவும் கடல் மார்க்க மாகவே நிகழ்ந்தவையல்ல; தரை மார்க்கமாகவும் நடைபெற்றன. வட ஐரோப்பாவையும் மத்தியதரைக் கட லையடுத்த தென் ஐரோப்பாவையுந் தரைப் பாதைகள் இணைத்தன. டான் யூப் நதியோரமாக அமைந்து அல்ப்ஸ் மலைகளினூடாகச் சென்ற பாதையும் இவற்றுள் ஒன்றாகும். தந்தங்களுங் கண்ணாடிப் பொருள்களுந் தெற்கிலி ருந்து சென்றன. உப்பு, அம்பர், தோல், உரோமம் ஆகியன வடக்கிலி ருந்து தருவிக்கப்பட்டன: ஆதி நாகரிக காலத்திலே மரக்கலங்களை ஓட்டு வதிலே மினோவா மக்களும் கிறீற் மக்களும் பீனிசிய மக்களும் வல்லவர் களாக விளங்கினர். இவர்கள் மத்திய தரைப் பிரதேசத்தவர்களாவர்.
உலோகங்கள் முக்கியத்துவம் பெற் றன. பொன்னும் வெள்ளியும் ஆபரண அணிகலன் களாயின ; பணமாகவும் புழங்கின. வெண்கலத்தைக் கண்டு பிடித்த நாடுகள் இரும்பு கண்டுபிடிக் கப்படும் வரை உலகினை ஆட்டிப் படைத்தன. வெண்கலத்திலே வெள் ளீயமுங் கலந்துள்ளது. வெள்ளீயம் பேரளவிலே பிரித்தானியாவிற் காணப் பட்டது. கிறீற் மக்களுங் காதேச்சு மக்களுங் கடல் மார்க்கமாகவுந் தரை மார்க்கமாகவும் வெள்ளீயத்தைக் கொண்டுவர, வடக்கு நோக்கிப் பிரித் தானியாவுக்குச் சென்றனர்.
14

காதஜீனியரின் ஆதிக்கம்
கி. மு. 630 அளவிலே காதஜீனி யர் வலிமை ஐரோப்பாவிலே பரந் திருந்தது. ஸ்பானியாவையும் வட ஆபிரிக்காவையுங் காதஜீனியர் தம் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தினர் ; ஜிப்ரோல்ற்றர் நீரிணைப் பிரதேசத் திலே தம் ஆட்சியைப் பலமாக நிறு வினர். இதனால் மத்தியதரைக் கட லுக்கு உள்ளேயும் வெளியேயும் செல் லுங் கப்பல்களிடம் ஆயம் அறவிடவுந் தொடங்கினர். பெரியதொரு காத ஜீனியக் கடற்படைக்குத் தலைமை தாங்கிப் பிரித்தானியாவுக்குச் சென்ற ஹமில்கோ பரிமாற்ற முறை ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டார். கடலாட்சி யையுங் காதஜீனியர் நிறுவியிருந்தன ராதலின் வெள்ளீயம் முழுவதையும் அவர்களே பெற்றனர் கிரேக்கரின் வர்த்தகம்
காதஜீனியரைப் போன்றே கிரேக் கரும் வர்த்தகத்திலே மும்முரமாக ஈடு பட்டிருந்தனர். ஆயின், கடல் ஆதிக் கத்தைக் காதஜீனியர் பெற்றிருந்த னர். எனவே, மத்தியதரைக் கடல் மார்க்கமாக வியாபாரம் நடத்தமுடி யாத நிலையிலே கிரேக்கர் இருந்தனர். தரை மார்க்கமாகவே அவர்கள் வியா பாரஞ் செய்யவேண்டி நேர்ந்தது. ஆயின், வடக்கு ஐரோப்பாவிற்குச் செல்லுந் தரைப் பாதைகளோ சீரான

Page 17
வையாக இருக்கவில்லை; அதே சமயம் ஆபத்து நிறைந்தும் விளங்கின. வியா பாரமும் மந்தகதியிலேயே நடைபெற் றது. இவ்வியாபாரத் தடைகளை ஒழித் துத் துரித கதியிலே வியாபாரஞ் செய் தற்காகக் கடற்பாதை ஒன்றைத் திறப்பதிலே கிரேக்கர் பேரார்வம் காட்டினர்.
பைதியஸின் பயணம்
இந்த நோக்கத்தோடு கி. மு. 3 25 இலே பைதியஸ் என்பாரைக் கிரேக்கர் தேர்ந்தெடுத்தனர். பைதியஸ் வானி யல் அறிவும் புவியியல் அறிவும் உடை யவர். பிரான்சிலுள்ள மஸ்ஸிலியா எனும் நகரிலே இவர் வாழ்ந்தார். இந்நகர் இன்று மாசெயில்ஸ் என அழைக்கப்படுகிறது. பைதியஸைத் தேர்ந்தெடுத்த கிரேக்கர், ஆபத்தும்

எதிர்ப்பும் நிறைந்த கடற்பயணம் ஒன்றை வடக்கு நோக்கி மேற் கொள்ளுமாறு அவரைத் தூண்டினர். ஜிப்ரோல்ற்றர் நீரிணையிற் பலமான காவலைக் காதஜீனியர் ஏற்படுத்தியி ருந்தபோதிலும் அத்தடைகளை மீறிப் பிரெஞ்சுக் கரையோரமாகப் பைதி யஸ் பயணமானார்.
- கப்பலில் இங்கிலாந்தை ஒரு தடவை சுற்றினார். பின்னர் அயலந்துக் கும் ஷெற்லந்துக் தீவுகளுக்குஞ் சென் றார். பின்னர் கொந்தளிக்கும் வட கடலிற் பிரமிப்பூடும் வகையிலே ஆறு நாட் பயணஞ் செய்து நோர்வேயை அடைந்தார். பண்டைக் கிரேக்கர், உலகில் மக்கள் வாழும் பகுதியில் நோர்வேயே மிகத் தொலைவில் இருப்ப தாகக் கருதிவந்தனர். கிரேக்க இதி காசங்களிலும் இதே கருத்தில் “ 'அல்ற்
கிரேக்கரின் தோணி
15

Page 18
றிமா தூலே'' என நோர்வே கூறட் பட்டிருந்தது. பனிக்கட்டி நிறைந்த ஆட்டிக் சமுத்திரத்தையும் நள்ளிர வுச் சூரியனின் விந்தையையுந் தெற் கிலிருந்து சென்றோரில் இவரே முத லிற் கண்டவர்.
நோர்வேயிலிருந்து கப்பலிற் புறப் பட்ட பைதியஸ் ஒல்லாந்தை அடைந் தார். அங்கிருந்து ஜேர்மனிக்குச் சென் றார். நீர் வழியாக ஜேர்மனியைச் சென்றடைந்த முதல் தென்னாட்டார் இவரே. அங்கிருந்து, அக்கால வர்த்த கத்திற்காகப் புழங்கி வந்த தரை மார்க்கமாக, பைதியஸ் தமது சொந்த நகரான மஸ்ஸிலியாவுக்கு மீண்டார்.
பைதியஸ் எவ்வித இலக்குமின்றிப் பயணஞ் செய்தவரல்லர். அவர் ஒரு விஞ்ஞானி. நட்சத்திரங்களின் இயக் கத்தினை அவர் அவதானித்து வைத் திருந்தார். நிலையான நட்சத்திரத் தைப் பின்பற்றிச் சென்றால், இலக்குப் பிழையாது என அவர் உறுதியாக நம்பினார். எனவே, வட திசையி லுள்ள இவ்வகையான சில நட்சத் திரங்களைத் தேர்ந்தெடுத்து அவற் றைப் பின்பற்றிப் பயணஞ் செய்தார். திசையறிகருவி கண்டு பிடிக்கப்படு தற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே பைதியஸ் இத்தகைய வான் கணிப்பினை வகுத்திருந்தார்.
கடல் நீரோட்டம், வற்றுப் பெருக்கு ஆகியன பற்றிப் பைதியஸ் நன்கு தெரிந்திருந்தார். சந்திரனின் நிலை சமுத்திரத்தைப் பாதிக்கும் என்ப தையும் அவர் அறிந்திருந்தார். வெவ் வேறு புவியியல் நிலையங்களிலே நாளின் நீள அளவைக் கணித்து, மத் தியகோட்டுக்கு வடக்கேயுள்ள அகலக் கோடுகளை அறிவதற்கான முறை யொன்றை அவர் வகுத்திருந்தார். கட
16

லோடிகளுள் அவரே முதலிடம் பெறுந் தகைமை உடையவர்.
வெண்கலக் காலத்திற் பைதியஸ் நிலை நாட்டிய சாதனைகள் மகத்தான வையாகும். உலகம் மிகப் பரந்தது என்ற கருத்து மக்களிடையே பரவி யது. விஞ்ஞான அடிப்படையிலே அகலக்கோடுகளைத் தீர்மானிக்கும் முறையை அவர் நிலை நாட்டிய பின்னர், மக்கள் உலகிலே தாம் வதி யும் பகுதிகள் பற்றிய ஒப்பியல் நிலை களை உணர்ந்து கொண்டனர். பரந்த உலகினைப் பற்றி மக்கள் அதிகமாக அறிந்துகொள்ளவும் அவர் வழிகோலி னார். தாம் சென்ற புதிய இடங்களிலி ருந்து புதிய விபரங்களைச் சேகரித்து வந்தார். அம்பர் தயாரிக்கப்படும் முறையையுந் தகரம் சுரங்கத்திலி ருந்து அகழப்படும் முறையையுங் கற்று வந்தார். வலிமையுந் திண்மையும் மிக்க வட பகுதி மக்களின் வாழ்க்கை யையும் பழக்க வழக்கங்களையும் அறிந்து வந்தார். பெரிய பிரித்தானி யாவிலிருந்து புதிய குடிவகைகள் இரண்டையும் அவர் கொண்டு வந்திருந்தார். ஒன்று ஒரு வகை பீர். மற்றையது நெடு நாள் ஊறிய தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகை மது.
வடக்கு ஐரோப்பாவுக்கு மேற் கொள்ளப்பட்ட பயணங்கள் ஐரோப் பிய நாடுகள் பலவற்றையும் இணைத் தன. ஒரு நாட்டிலே தேவைக்கு அதிக மாக இருந்த பொருள், அப்பொருள் அரிதாக இருந்த வேறொரு நாட்டுக் குப் பயன்பட்டது. இதனால், நாடு களிடையே ஏற்பட்ட தொடர்பு ஒன் றிற்கு ஒன்று உதவி செய்ய வழிகோ லியது என்பதை மக்கள் உணர்ந்த
னர்.

Page 19
4. தெற்கு நோக்கி
வரலாற்று அறிஞர் மூவர் பற்றி முன்பு கூறினுேம், ஹெரோடொற் றஸ் என்பார் இவர்களில் முதன்மை யானவர். இவர் குறிப்பிட்டுள்ள முக் கிய பயணங்களில் ஒன்று கி. மு. 600 அளவிலே இடம்பெற்றது. அதனை மேற்கொண்டவர் ஒர் எகிப்தியத் தள கர்த்தர்.
எகிப்தியரின் பயணம்
பொன்னை ஆபரணமாகப் பயன் படுத்தும் வழக்கம் மிகப் பழையது. எகிப்திய நாகரிகஞ் சிறப்புற்று விள்ங் கிய காலத்திலிருந்தே பொன்னே எகிப் திய உயர்குடி மக்கள் உபயோகித்தன ரென அறியக்கிடக்கிறது. விலையு யர்ந்த இவ்வுலோகத்தைப் பெறுதற் பொருட்டு வணிகர்கள் எகிப்தியரின் பாய்க் கப்பல்களிலும் பீனிசியரின் பாய்க் கப்பல்களிலும் மொசாம்பிக் கால்வாயைக் கடந்து சென்றனர். மொசாம்பிக் கால்வாயானது மட காஸ்கர் தீவுக்கும் ஆபிரிக்கக் கரைக்கு மிடையே உள்ளது. இக்கால்வாயிற் கடுமையான நீரோட்டம் ஒன்று உள் ளது. அது தெற்கு நோக்கி இழுக்கும் வலிமை கொண்டது; இதனை எதிர்த் துத் துடுப்பு வலிக்கவோ, பாயோட் டிச் செல்லவோ இயலாது; இதன் விளைவாகப் பல கப்பல்கள் எகிப்துக்கு மீள முடியாமற் போயிற்று. பொன்ன
சையால் உயிர்கள் பல பலியாயின.

எனவே, பொன்னேடு எகிப்திற்கு மீளக்கூடிய புதிய பாதை ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விருப்பு மக்களிடையே உண்டாயிற்று. இத் துறையிலே வெற்றி காணவேண்டு மென எகிப்தியப் பெயரோவான இரண்டாவது நெக்கோ உறுதி பூண்
LITri.
நெக்கோவின் ஆற்றல் நெக்கோ வலிமை மிக்க ஆட்சியாள ராவார். ஆர்வமும் இலட்சியத் திட் டங்களுங் கொண்டு விளங்கியவர். ஒரு கட்டத்திலே இன்றைய சுயஸ் கால் வாய் எங்கிருக்கிறதோ அதே இடத் தில் மத்தியதரைக் கடலையுஞ் செங் கடலையும் இணைக்கவல்ல கால்வாய் ஒன்றை வெட்டவும் அவர் முனைந் தார். சாம்பெசிப் பொன்னை எகிப் திற்கு இலகுவாகத் தருவிக்கும் மார்க் கம் ஒன்றைக் காணவும் அவர் விழைந் தார். எனவே, பீனிசியக் கப்பற் கூட் டம் ஒன்று திரட்டப்பட்டது. எகிப் தியர் ஒருவர் அதற்குத் தளகர்த்தராக நியமிக்கப்பட்டார். ஜிப்ரோல்ற்றரை அடையும் வரையும் ஆபிரிக்கக் கரை யோரமாகக் கப்பல்களை ஒட்டவேண்டு மென நெக்கோ தளகர்த்தரைப் பணித்துப் பயணமனுப்பினர். ஆபி ரிக்கா நீராற் சூழப்பட்டது என்பதை நெக்கோ எவ்வாருே அறிந்திருந்தார். அந்தக் காலத்தில் அத்தகையதொரு
17

Page 20
கடற்பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் நிலவியது வியப்புக்குரியதாகும்.
கப்பல்கள் புறப்பட்டன; ஆண்டு கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கழிந்தன; கப்பல்கள் மீளவில்லை. எனவே, பல மாதங்களாகத் தளர்ந்திருந்த நம்பிக் கை முற்றாக ஒழிந்துபோயிற்று. ஆயி னும், ஆண்டுகள் மூன்று சென்றதும் கப்பல்கள் மீண்டும் திரும்பிவந்தன. நாடெங்கும் பரபரப்பு; கிழக்கிலி ருந்து புறப்பட்ட கப்பல்கள் மேற் கிலிருந்து திரும்பி வந்தன. நாடு முழுவதும் வியப்பில் ஆழ்ந்தது. மூன்றாண்டு கழிந்து, ஒன்பதாயி ரம் மைலுக்கும் அதிகமான தூரத் தைக் கடந்து, ஆபிரிக்கக் கண்டம் முழுவதையுஞ் சுற்றிவிட்டுப் புதிய பாதையைக் கண்டுபிடித்துக்கொண் டும், உலகம் தொடர்பான பல புதிய கருத்துக்களையும் அனுபவங்களையும் பெற்றுக் கொண்டுங் கப்பல்கள் திரும்பி வந்தன. நெக்கோவின் ஊகம், அவருடைய தளகர்த்தனாற் சாதனை மூலம் நிலைநாட்டப்பட்டது.
அத்தளகர்த்தனின் தலைமையிலே செங்கடலிலிருந்து புறப்பட்டு இந்து சமுத்திரத்தை அடைந்த கப்பல்கள், கரையோரமாகப் பயணஞ் செய்து ஆபிரிக்காவின் தெற்குக் கோடியை அடைந்தன. அங்கிருந்து மேற்கே திரும்பி, நன்னம்பிக்கை முனையைத் தாண்டி வடக்கே சென்றன. மேற் குப் புறத்தே அத்திலாந்திக்குச் சமுத் திரம் விரிந்து பரந்திருந்தது. கப்பல் கள் இயன்ற வரை கரையை அண்டியே சென்றன; புதிய இடங்களையும் புதிய மக்களையுங் கடந்து சென்றன; நெடும் பயணம் புரிந்த பின்னர் ஜிப்ரோல்ற் றர் நீரிணையைக் கடந்தன. மத்திய
18

தரைக் கடலானது அக்கப்பல்களை ஓட்டியோருக்கு முன்பே பழக்கமான கடலாக இருந்தது. அதனாற் பெற்ற புதிய தெம்போடும் பெருஞ் சாத னையை நிலை நாட்டிய திருத்தியோடும் வெற்றிப் புகழோடும் அவர்கள் தாய் நாட்டை அடைந்தார்கள். இப்பய ணத்துக்குரிய திட்டம் நெக்கோவினு டையதே. அதற்கு நிதியளித்தவரும் அவரே. ஆனால், ஆபத்து நிறைந்த இப்பயணத்தை மேற்கொண்ட தள கர்த்தர் பெயர் இன்னதென்பதை இன்று எவருமே அறியார். காதஜீனியரின் பயணம் | காதஜீனியரின் ஆதிக்கம் மத்திய தரைப் பிரதேசத்திலே நிலைபெற்றி ருந்ததையும் வடக்கு நோக்கி அவர் கள் புரிந்த பயணங்களையும் பற்றி ஏலவே கூறியுள்ளோம். தெற்கு நோக் கியும் ஒரு பயணம் மேற்கொள்ளப் பட்டது. கி. மு. 500 இலே இடம் பெற்ற இப்பயணத்துக்கு ஹனோ என் பார் தலைமை தாங்கினார்
ஹனோவின் சாதனை - ஹனோவின் தலைமையில் அறுபது கப்பல்கள் புறப்பட்டன. மூவாயிரம் மக்கள் அவற்றிலே சென்றார்கள். குடி யேற்ற நாடுகளில் இம்மக்கள் குடி யேற்றப்பட்டார்கள். ஆபிரிக்காவின் நீண்ட வடக்குக் கரை இவ்வாறு நன்கு பலப்படுத்தப்பட்டுக் காதஜீனியரின் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வரப் பட்டது. புதிய இடங்களைக் கைப் பற்றி அவற்றிலே குடியேற்றங்களை நிறுவுவதிலே முன்னோடியாக விளங்கிய வர்கள் காதஜீனியர்களாவர். இக்குடி யேற்றங்கள் அளித்த பாதுகாப்போடு தடையற்ற வியாபாரமும் ஒழுங்காக நடைபெற்றது.
ன
[ாக

Page 21
புதிய குடியேற்றங்களும் வர்த்தகமும்
இக்குடியேற்றங்கள் தைரியன் ஊதா நிறச்சாய வியாபாரம் தங்குத டையின்றி நடைபெறுதற்குப் பெரும் பாதுகாப்பு அரணாகவும் விளங்கின. தைரியன் ஊதா எனும் விலையுயர்ந்த சாயம் கனேரித் தீவுகளிலும் மாதீ ராத் தீவிலுங் கிடைத்தது. இச்சாயம் கிளிஞ்சற் சிப்பிகளிலிருந்து எடுக்கப் பட்டது. இத்தீவுகள் ஆபிரிக்காவின் வடமேற்குக் கரைக்கு அப்பால், அத் திலாந்திக்குச் சமுத்திரத்திலே உள் ளவை. மீன்பிடிக்கச் சென்றோர் முன் னரே இத்தீவுகளைக் கண்டுபிடித்திருந் தனர். இத்தீவுகளுக்குச் செல்லும் பாதைக்குப் பாதுகாப்பாக ஆபிரிக்க வடமேற்குக் கரையோரமாகக் குடி யேற்றங்களை நிறுவிய பின்னர் ஹனோ, ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பெரு வளைவைச் சுற்றித் தெற்கே பயணமானார். கமறூனைச் சென்ற டைந்த அவர் கமறூன் சிகரத்தைக் கண்டுபிடித்தார். மேற்கு ஆபிரிக்கா வின் உயிர்ப்பு எரிமலை இதுவேயாம்.
அப்பிரதேசத்திலே கொரில்லாக் குரங்கையுங் கண்டார். நாகரிக உல கில் வாழும் மனிதர் எவரும் அதனை இதற்கு முன்பு பார்த்திருக்கவில்லை. சில கொரில்லாக்களைச் சிறைப்படுத் திக்கொண்டு சியராலியோனிலிருந்து தாயகம் மீண்டார். கப்பலிலே உண வுப் பண்டங்கள் குறையத் தொடங் கியதால் ஹனோ பயணத்தை மேலுந் தொடராது திரும்பிச் செல்ல வேண் டியதாயிற்று. நெக்கோவின் தளகர்த் தர் கிழக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று ஆபிரிக்காவைச் சுற்றிவர, ஹனோ கிழக்கிலிருந்து புறப்பட்டு மத்

தியதரைக் கடலின் மேற்கு முனையிலி ருந்து தெற்கு நோக்கிச் சென்று, சென்ற வழியே மீண்டார். இருண்ட காலம்
உலகிலே பரபரப்பு உண்டாக்கிய ஆய்வுப் பயணங்கள், உரோமப் பேர ரசு உலக ஆதிக்கம் பெறத் தொடங் கியதும் இல்லாதொழிந்தன. உரோமர் இவற்றுக்கு ஊக்கமளிக்கவில்லை. புதிய தொடர்புகளை நிறுவுவதைக் காட் டிலும் பழைய தொடர்புகளைப் பலப் படுத்தி, வர்த்தகத்தை வளர்க்கவே அவர்கள் விரும்பினர். உரோமப் பேர ரசு வீழ்ச்சியடைந்த பின்னர் மனித சமுதாயத்திலே இருண்ட காலந் தொடங்கியது. மக்கள் மறதிக்குக் காரணம் - கி. மு. 600 அளவிலே நெக்கோ வின் தளகர்த்தர் தமது சாதனையை நிலை நாட்டியிருந்தார். இவ்வாறே சிறிது பிந்திய காலத்தில் ஹனோவும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த பயணம் புரிந்திருந்தார். இவர்கள் சாதனைகளை நாம் முன்பு குறிப்பிட்ட வரலாற்றா சிரியர்கள், தம் நூல்களிலே எழுதி வைத்தனர், எனினும், உலகம் இவற்றை விரைவிலே மறந்துவிட்டது. ஆபிரிக்காவும் ஆசியாவும் இணைந் திருப்பதாகவே மக்கள் கருதினர். இந்து சமுத்திரந் தரையினாற் சூழப் பட்ட ஒரு பெருங்கடலே எனவும் எண்ணினர். இதே கருத்து 14 87 வரைக்கும் நிலவியது. இதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவ தாக, பண்டைக் காலக் கல்வியறிவு பொதுவாகப் பின் தங்கிய நிலையிலி ருந்தமையால் ஹெரோடொற்றஸின் நூலைப் படிக்க வல்லோர் அநேகர்
19

Page 22
இருக்கவில்லை; இரண்டாவதாக, வர்த் தகத்துக்கான தரைப் பாதைகள் புழக் கத்தில் இருந்தன; மூன்ருவதாக, மத் தியதரைக் கடலுக்கு அருகிலே பொன் கிடைத்தது.
இவை காரணமாகக் கடற்பயண வழிகளை மக்கள் மறந்துவிட்டனர். முன்னைய அனுபவம் Saitotu காலத்தே வழிகாட்டியாக அமைய வில்லை. எனவே, புதிய முயற்சிகள் இடையிலிருந்து தொடரும் முயற்சி களாக அமையாமல் முற்றும் புதிய ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்தன.
அராபியரும் வர்த்தகமும்
இத்தகைய நிலையிலே ஆசியாவுக் கும் ஐரோப்பாவுக்கும் இடையே வர்த் தகப் பாலம் அமைத்தோர் அராபிய ராவர். ஆசியாவிலே தாம் திரட்டிய
போர்த்துக்கேயக் கப்பல்
20
 

விற்பனைப் பொருள்களை மத்திய தரைக் கடலின் துறைமுகங்களிலே அராபியர் குவித்தனர். அங்கிருந்து அப்பொருள்கள் ஐரோப்பாவெங்குஞ் சென்றன. அவற்றை அராபியர் உயர்ந்த விலைக்கு விற்றனர். எனவே, தாமே நேரிற் கிழக்கே சென்று கறிச் சரக்கு வகைகளையும் வாசனைத் திர வியங்களையும் பட்டுத் துணி வகைகளை யும் பெறவேண்டும் என்ற ஆர்வம் ஐரோப்பியரிடையே தோன்றியது. எனவே, மத்தியதரைப் பிரதேச வணி கர் பலர் புறப்பட்டனர். இவர்களுள் மார்க்கோபோலோ குறப்பிடத்தக்க வர். நீண்ட காலம் சீனுவிலே வாழ்ந்து பின் தாயகம் மீண்ட இவர் எழுதிய பயணக் கட்டுரை ஆய்வுப்பயணிகள் பலரைத் தூண்டியது.
ஹென்றி இளவரசர்
ஆய்வுப் பயணங்களை ஊக்குவித்
தோரில் ஹென்றி இளவரசர் முக்கிய மானவர். இவர் போர்த்துக்கல் நாட் டைச் சேர்ந்தவர். போர்த்துக்கல் மத் தியதரைக் கடலோர நாடன்று. ஆனல் மத்தியதரைக் கடல் அத்தி

Page 23
ஹென்றி இளவரசர்
ஹென்றி இளவரசர் எப்பொழுதா யினுங் கடற்பிரயாணஞ் செய்தவரல் லர். எனினும், கடற்பயணங்கள் வெற்றிபெற அவர் புரிந்த தொண்டு அளப்பரியது. கப்பல் கட்டுதலையுங் கடலோடல் பற்றிய அறிவையும் புகட்டுதற்குக் கல்லூரி ஒன்றை நிறுவி, தூரப் பயணங்களுக்கு வேண்டிய அறி வையும் ஆற்றலையும் பயிற்சியையும் மாலுமிகளுக்கு அளித்தார். அவரு டைய கல்லூரியிலே பயின்ற தளகர்த் தர் பலர் பயணங்கள் மேற்கொண்ட னர் சாதனைகள் புரிந்தனர்.
பார்தலோமியோ டயஸ் என்பார் 1488 இலே நன்னம்பிக்கை முனை யைக் கடந்து மொசெல் விரிகுடாவை அடைந்தார். மாலுமிகளிடையே உண்டான குழப்பத்தால், பயணத் தைத் தொடராது போர்த்துக்கலுக்கு மீண்டார். 1497 இலே புறப்பட்ட
 
 

வாஸ்கொடகாமா ஆபிரிக்கக் கண் டத்தின் தென்முனையைக் கடந்து இந் தியாவின் மலையாளக் கரையை 1498 இலே சென்றடைந்தார்.
தெற்கு நோக்கி மேற்கொள்ளப் Lul i பயணங்களில், தெற்கின் வளத்தை அறியப் புறப்பட்டோர் இருவரே. ஒருவர் நெக்கோவின் தள கர்த்தர்; மற்றவர் ஹனுே என்ற காத ஜீனியர். கி. பி. பதினைந்தாம் நூற் ருண்டிலே இடம்பெற்ற பயணம் அனைத்துங் கிழக்கு நோக்கிச் சென்ற பயணங்களே. தெற்கில் இருந்த இருண்ட கண்டம் கிழக்குக்கு வழி காட்டியாகவும் வழியிலுள்ள தங்கு மிடமாகவுமே இருந்தது.
GJIT Gň)(335 TL 5 TIL DIT
21

Page 24
5. கிழக்கு நோக்கி மகா அலெக்சாந்தர்
கிழக்கு நோக்கி மேற்கொள்ளப் பட்ட பயணங்களுள் நாம் அறிந்த வரையில் முதற் பயணம் எனக் குறிப் பிடக்கூடியது மகா அலெக்சாந்தர் மேற்கொண்ட பயணமே யாம். அறிந்த உலகை அடிப்படுத்தும் நோக் கத்தோடு கிரேக்க நாட்டிலிருந்து கி. மு. 356-323 காலப் பகுதியிலே பெரும்படையோடு இவர் புறப்பட் டார். வழியிலே உள்ள பகுதிகள் அனைத்தையும் அடிப்படுத்தினர். இந் தியா வரையும் வந்து திரும்பிச் சென் ருர் . இவரை ஓர் ஆக்கிரமிப்பாளராக மட்டுங் கருதுவது தவறு. இவர் ஓர் ஆய்வுப்பயணியும் ஆவார். ஏனெனில், இவர் தம்மோடு நில அளவையாள ரையும் அழைந்துச் சென்ருர் என்பத ணுலாகும். இந்தியாவிலிருந்து திரும் பும்போது வேருெரு வழியாக மீண்டு நில அளவை ஆய்வுக்கு வழிவகுத் தார். அராபியப் பயணிகள்
கிழக்கையும் மேற்கையும் வர்த்த கத்தினுல் ஆதி காலந் தொட்டு இணைத்து வந்தவர்கள் அராபியரே. சிறந்த கடலோடிகளாக இவர்கள் விளங்கினர்கள்; கடலாதிக்கத்தை யும் பெற்றிருந்தார்கள். நாகரிகத்தில் மேம்பட்டு விளங்கிய கிழக்கிலிருந்து பல்வகைக் கறிச் சரக்குக்களையும் வாக
22

னைத் திரவியங்களையும் பட்டுத் துணி களையும் அராபியர் மத்தியதரைக் கடற்றுறைகளுக்கு எடுத்துச் சென்று, மேற்கு உலகுக்கு அவற்றை அறிமுகப் படுத்தினர். யாத்திரிகரான இபுன் பட்டுட்டா கிழக்கிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் நகரையுந் தரிசித்தார். 30 ஆண்டுகளை இவர் இத்தகைய பயணத் திலே கழித்தார். இலங்கைக் கறுவா வுக்கு இருந்த மதிப்புப்பற்றி இவர் விதந்து கூறியுள்ளார். சிவனெளிபாத மலையின் மகிமை பற்றியும் இலங்கை யிற் சிறப்பாக ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்தி பற்றியும் இவர் கூறி யுள்ளார். புத்தசமயப் போதகர்கள்
இந்தியாவுக் குஞ் சீனுவுக்கும் இடையே இப்போதகர்கள் பலர் வந்து போயினர். மரகத மணிக்கல் வியா பாரப் பாதைகளை இவர்கள் பயன் படுத்தினர்கள். இப்பாதைகள் இமா லயப் பிரதேசத்தையும் சீனவையும் தொடுத்தன. இமாலயத்திலிருந்து சீனுவுக்கு மரகத மணிக்கல்லையுஞ் சீன விலிருந்து இமாலயத்துக்குப் பட்டுத் துணியையுங் கொண்டுசெல்ல இப் பாதைகளை அக்கால வணிகர் பயன் படுத்தினர். மார்க்கோபோலோ
கிழக்கு நாடுகளின் திரவியங் களுக்கு, மேற்கிலே நல்ல மதிப்பு ஏற்

Page 25
மார்க்கோபோலோ
படத் தொடங்கியது. கிழக்கு நாடு களுடன் நேரடி வியாபாரஞ் செய்ய ஐரோப்பிய மக்கள் விரும்பினர். இந்த நிலையில் மார்க்கோபோலோ தம் பய
ணத்தை மேற்கொண்டார். - வெனிஸ் நகரம் அக்காலத்தே எவர் கட்டுப்பாட்டுக்கும் அடங்காது சுதந் திரமாக இருந்தது. இந்நகரத்துக் கப்பல்கள் கிரமமாக அண்மைக் கிழக் கிற்குச் சென்று மீண்டன. அவை மத்தியதரைக் கடலிலே ஆதிக்கம் பெற்றிருந்தன. வெனிஸ் நகர வணி கர்கள் சீனா வரையுமுள்ள பல நாடு களிலே வர்த்தக நிலையங்களை நிறு வினர். இதனால் உலக மக்களிடையே புதிய ஒரு விழிப்புணர்ச்சி உண்டா யிற்று.
நிக்கோலோ போலோவும் மாவீயா போலோவுஞ் சகோதரர்கள், வர்த்த கத்தில் வளங் கண்டவர்கள். வெனி ஸிலிருந்து கீழைத் தேசங்களுக்கு வியா பாரஞ் செய்தற் பொருட்டு அடிக்கடி பயணஞ் செய்த அனுபவமுடையவர்

கள். 1260 இலே சீனாவில் இவர்கள் குப்பிளாய் கானைச் சந்தித்தார்கள். குப்பிளாய் கான் மொங்கோலியப் பேரரசின் எதேச்சாதிகாரி. பலமிக்க ஆட்சியாளர். தமது நாட்டுச் சமய. குரவர்களின் பலத்தை ஒடுக்க விரும் பினார். எனவே கிறிஸ்து சமயத்துக்கு ஆதரவளிக்க முன் வந்தார். இவரு டைய வேண்டுகோளின் பேரிலே கிறிஸ்து மதத் துறவிகள் நூறு பேரைத் திரட்டுவதற்காகப் போலோ சகோதரர்கள் தரை மார்க்கமாக ஐரோப்பா திரும்பினர். ஆயின், இவர் களோடு மீண்டும் சீனாவுக்குச் செல்ல நூறு துறவிகள் கிடைக்கவில்லை. இரு வர் மட்டுமே கிடைத்தனர். அவ்விரு வரும் ஆமீனியா வரை வந்ததும் நின்றுவிட்டார்கள். போலோ சகோ தரர்களும் நிக்கோலோ போலோவின் மைந்தரான மார்க்கோ போலோவும் தொடர்ந்து பயணஞ் செய்தனர். பய ண த்தைத் தொடங்கியபோது மார்கோ போலோவின் வயது பதினே ழாகும். பயணம் முடித்துத் தாய கம் மீண்டபோது வயது நாற்பத் தொன்றாகும். இளைஞனாகப் புறப்பட் டுச் சென்றவர் அனுபவ முதிர்ச்சி பெற்ற மனிதனாகத் திரும்பினார். இப் பயணத்தினால் இவர் பல அனுபவங் களைப் பெற்றார். அரிய காட்சிகளையும் புதிய நகரங்களையுங் கண்டார். பல் வேறு மொழி பேசும் மக்களோடு பழ கினார். வெவ்வேறு கலாசார வழி முறைகளை எல்லாம் அவதானித்தார். அவருடைய அனுபவங்களை விவரிக் கும் அவரது கட்டுரை உலகத்தின் எதிர் காலத்தையே மாற்றியமைப் பதாயிற்று.
போலோ குடும்பத்தினர் 1 2 71 இலே வெனிசிலிருந்து மத்திய கிழக்
23

Page 26
னெ
கில் இஸ்ரேலில் உள்ள ஆக்கிரே என் னும் இடத்திற்குச் சென்றனர். இவர் களுடைய ஆரம்பத் திட்டம் செங்கட லைக் கடந்து இந்து சமுத்திரத்தினூ டாக நீர் மார்க்கமாகச் சீனாவைச் சென்று அடைவதாகும். எனினும், யாதோ காரணத்தினாற் போலோ கூட் டத்தினர் கடற் பயணத்தைக் கைவிட் டனர். அவர்கள் பாரசீகத்தின் ஊடாக நடந்து கிழக்கே சீருஞ் சிறப் பும் பெற்று விளங்கிய மொங்கோலி யப் பேரரசினுள் நுழைந்தனர். தரை மார்க்கமாகவே பயணம் தொடர்ந் தது.
குளிர் மிகுந்த பமீர்ப் பீடபூமி போலோவிற்கு ஒரு புதிய அனுபவம். அங்கு நெருப்பு மிக மெதுவாக எரிந் தது. வழக்கமான வெப்பநிலையை விடக் குறைந்த வெப்பநிலையில் நீர் கொதித்தது. இவற்றைக் கொண்டு அங்கு ஒட்சிசன் மிகக் குறைவாக இருப்பதை அவர் அவதானித்தார். அப்பகுதி கழிந்தது. கோபிப் பாலை நிலந் தொடங்கியது. பரந்த அம் மணல்வெளியிற் பயங்கர ஆவிகள் உலாவித் திரிவதாக அக்காலத்திற் குருட்டு நம்பிக்கை நிலவியது. எனி னும், வெனிசியர்கள் மனம் தளராது பயணம் செய்தனர். மொங்கோலி யாவை அடைந்தனர். அங்கே தார்த் தார்களைக் கண்டனர். தார்த்தார்கள் நாடோடிகளாக வாழ்க்கை நடத் தினர். கற்கால வாழ்க்கைச் சூழலிலே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந் தனர். இவர்களைப் பற்றி முதலில் எழுதியவர் மார்க்கோபோலோவே.
உலக அதிசயங்களிலே சீனப் பெருஞ் சுவரும் ஒன்று. இதனை மார்க்கோ போலோ கண்டார். 2 2.00 ஆண்டுகளுக்கு முன்பு இது கட்டப் 24

பட்டது. 1400 மைல்கள் நீளமானது . பண்டைக் காலச் சீனப் பேரரசர் மொங்கோலியரின் தாக்குதல்களிலி ருந்து தம்மைக் காத்தற் பொருட்டு இந்த அரணைக் கட்டியிருந்தனர். மேற் பரப்பிலே வீதி அமைக்கக்கூடிய அள விற்கு இச்சுவர் விசாலமானது . இடை யிடையே பாதுகாப்பு எயில்களையுங் கொண்டது. மனித ஆற்றலின் திற னுக்கு எடுத்துக்காட்டாக இம்மா பெருஞ் சுவர் மொங்கோலியாவில் இன்றும் நிலவுகின்றது.
12 75 இலே போலோ குழுவினர் பீக்கிங்கை அடைந்தனர். இவர்களு டைய நீண்ட நடைப் பயணம் முற்றுப் பெற நாலு ஆண்டுகள் சென்றன. நாகரிகந் தொடங்கிய ஆரம்பக் கட் டத்திலும் பீக்கிங்கின் புகழ் பாரெங் கும் பரவியிருந்தது. சீனாவின் மிகப் புராதன நகரங்களிலே பீக்கிங் ஒன்றா கும். கி. மு. 12 ஆம் நூற்றாண்டிலே பீக்கிங் கட்டியெழுப்பப்பட்டது. அது விந்தை நிறைந்த நகராக விளங்கியது. நகரைச் சூழ்ந்து 50 அடி உயரமும் 15 அடி அகலமும் கொண்ட சுவர்; நகருக்கு நடுவே மேலும் ஒரு சுற்றுச் சுவர்; அதனுள்ளே அரசனும் பரிவா ரங்களும் வதிவதற்கான அரண்மனை கள். நகருக்குள் ஆங்காங்கே பீங்கான் தட்டுக்களால் அழமாக வேயப்பட்டி ருந்த பல்லடுக்குப் பகோடாக்கள் சூரிய ஒளியிலே பிரகாசித்தன. நகரின் நடுவிலே வரிவரியாக நீண்டகன்ற வீதி கள் காணப்பட்டன.
குப்பிளாய் கானின் உயர் பண்பும் சீரிய நிருவாகத் திறனும் மார்க்கோ போலோவைக் கவர்ந்தன. மார்க்கோ போலோவின் அறிவாற்றலை அவ்வர சன் கண்டு, அவரைத் தன் சேவையில் அமர்த்தினான். மார்க்கோ போலோ

Page 27
சீனாவின் மூலை முடுக்கெல்லாஞ் சென் றார். திபெத்தும் பர்மாவும் அவர் தரிசித்த இடங்களில் அடங்கும். சீன இசை நுணுக்கங்களை அறிந்தார். சீன வானியலைக் கற்றார். துப்பாக்கி மருந்து பயன்படுத்தப்படுவதை நேரிலே கண்டார். மான்சி மாகாண ஆள்பதியாக நியமிக்கப்பட்ட மார் க்கோ போலோ அம்மாகாணத் தலை நகரிலே வதியலானார். போலோ குடும் பத்தினருக்குச் , செல்வாக்குப் பெரு கியது. செல்வமும் திரண்டது. எனி னும், கான் இறந்தால் தம் உயி ருக்கே ஆபத்து நேரலாம் என அவர் கள் அஞ்சினர். எனவே, தாய்நாடு திரும்பிச் செல்லத் திட்டந் தீட்டினர். பாரசீக நாட்டு மன்னரான கான் மொங்கோலியப் பெண் ஒருத்தியை மணஞ்செய்ய விரும்பினார். அதன் பொருட்டுச் சீனாவுக்குத் தூதும் அனுப் பினார். அம்மணப் பெண்ணைப் பார சீகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும் பொறுப்பினைப் போலோ குடும்பத் தினர் ஏற்றுக் கொண்டனர். சீனா வுக்கு வரும்போது தரை மார்க்கமாக வந்தனர். 1 29 2 இல் திரும்பிச் செல் லும்போது கடல் மார்க்கமாகச் சென் றனர். மலாயாவைச் சுற்றிச் சென்ற கப்பல் இலங்கையிலும் இந்திய நகரங் கள் பலவற்றிலுந் தங்கிச் சென்று, இறுதியில் ஓர்முஸ் என்னும் இடத்தை அடைந்தது. அங்கிருந்து தரை மார்க்க மாகப் பயணந் தொடர்ந்தது. பார சீகத்திலுள்ள தாபிரிசிலே புதுமணப் பெண்ணை ஒப்படைத்த பின்னர். போலோ குடும்பத்தினர் தரைப் பாதை மூலம் கருங்கடலுக்குச் சென்று
அங்கிருந்து தாய்நாடாகிய வெனிசை அடைந்தனர்.

தம்முடைய அனுபவம் அனைத்தை யும் மார்க்கோ போலோ விபரமாக எழுதிவைத்தார். அவருடைய நூல் வெளிவந்ததும் அதனைப் படித்த ஐரோப்பியர் மலைத்தனர். அவர் கூற் றுக்களில் ஐயங் கொண்டனர். அவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்று கருதினர். போலோவை நையாண்டி செய்தனர். ஆனால், போலோவின் கூற் றுக்கள் உண்மையானவை என்பதை நாம் இன்று அறிவோம். எனினும், போலோவின் நூல் அன்றே ஐரோப் பியரின் ஆர்வத்தைத் தூண்டத் தவற வில்லை. கீழைத்தேசப் பகுதியின் சுவை மிக்க உணவை அருந்தவும் பட்டுத் துணிகளை அணியவும் நவீன போர்க் கருவிகளைப் பயன்படுத்தவும் ஐரோப் பியர் விரும்பினர். இவற்றின் விளை வாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல தரைப் பயணங்கள் மேற்கொள்ளப் பட்டன. கடலோடிகள் கடற்பாதை களைத் திறக்கவுந் திட்டமிட்டனர். மேற்கு உலகின் கவனங் கிழக்கு நோக் கித் திசை திரும்பியது.
மக்கள் அறிந்திராத புதிய நிலப் பகுதியை மார்க்கோ போலோ கண்டு பிடிக்கவில்லை. குடியேற்றங்களையும் நிறுவவில்லை. எனவே, இந்த வகையில் அவரை ஆய்வுப் பயணி எனக் கூறுதல் சாலாது. ஆனால், புதிய கலாசாரக் கருத்துக்களைப் புகுத்தி, வெவ்வேறு நாடுகளிடையே புதிய தொடர்புகளை ஏற்படுத்தி, மக்களின் அறிவை வளர்த் தார் என்ற வகையில் அவரை ஓர் ஆய்வுப்பயணியாக நாம் மதித்தல் வேண்டும்.
மார்க்கோ போலோவின் பயணம் விளைவித்த பேரார்வம் பல பயணங் களுக்கு வழிகோலியது. பார்தலோ
25

Page 28
ஆதி ஆய்வுப் பயணிகளின் பாதைகள்
மியோ டயஸ், கொலம்பஸ் , வாஸ் கோடகாமா ஆகியோர் இத்தகைய பயணங்களை மேற்கொண்டனர். டயஸ் ஆபிரிக்கத் தென்முனை வரை யுஞ் சென்ருர், கொலம்பஸ் கிழக்கே சென்றடையும் நோக்கத்தோடு மேற்கு நோக்கிப் பயணமானுர், வாஸ் கோடகாமா 1497 யூலையிற் போர்த் துக்கலை விட்டுப் புறப்பட்டு 1498 மேயில் இந்திய நாட்டில் மலையாளக் கரையிற் காலடி வைத்தார். இந்தியா வுக்குச் செல்வதற்குப் புதிய பாதை ஒன்றினைக் கண்டுபிடித்து அராபியரின் கடல் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டு மென்பது ஐரோப்பியரின் கனவு: அவர்கள் கனவு வாஸ்கோடகாமா வின் சாதனையால் நனவாயிற்று. ஐரோப்பியர் புத்துணர்ச்சி பெற்ற னர். போர்த்துக்கேயரும் ஸ்பானிய ரும் பிரெஞ்சியரும் ஒல்லாந்தரும் ஆங்
26
 

வைக்கிங் ہے۔۔م۔ص۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ கொலம்பஸ் Lusiv - மகெலன் வாஸ்கோடகாமா ட. குக்
கிலேயரும் கிழக்கே வரத் தொடங் கினர். வர்த்தகம் செய்யவென்றும் சமயம் பரப்பவென்றும் முதலிலே வந் தவர்கள் பின்னர் ஆதிக்க வெறி பிடித் துக் கிழக்கு நாடுகளை அடிப்படுத்தினர். இக்கிழக்கு நாடுகளின் செல்வங்களைச் சுரண்டிச் சென்றனர். ஏறத்தாழ ஐந்து நூற்ருண்டுகளுக்குக் கிழக்கு நாடுகள் பலவற்றை அடிப்படுத்தி ஆண்டனர். ஐரோப்பியரும் இலங்கையும்
கிழக்கே வந்த ஐரோப்பியர்களிற் போர்த்துக்கேயரே முதலில் இலங் கைக்கு வந்தனர். வாசனை மிக்க கறு வாவும் ஏலமும் கராம்பும் அவர்களை இங்கே பிணித்துவைத்தன. 153 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒல்லாந்த ரின் கையிற் சிக்கிய இலங்கை மேலும் 138 ஆண்டுகள் சென்ற பின்னர் பிரித்

Page 29
தானியர் கைக்கு மாறியது. இது 152 ஆண்டுகளுக்கு அவர்களின் ஆட்சியில் இருந்தது. இவ்வாறு 1505 முதல் 1948 வரை இலங்கை ஐரோப்பியரின் சுரண்டற் களமாக விளங்கியது. இலங்கையும் பிறநாட்டுத் தொடர்புகளும்
நாம் வாழுந் தீவாகிய இலங்கைக் குத் தொடக்கத்தில் ஆரியருந் திரா விடரும் இந்தியாவிலிருந்து வந்தனர். இவர்களே இன்று இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ் மக்களுடைய மூதாதையராவர். பின்னர் பெளத்த மதம் பரப்புவதற்கென மகிந்தனும் சங்கமித்தையும் வந்தனர். அடுத்துக் கிரேக்க, உரோம, அராபிய வணிகர் இலங்கைக்கு வந்தனர். மகா அலெக் சாந்தரின் தளகர்த்தர் இலங்கை பற்றி அறிந்திருந்தார். மார்க்கோ போலோ சீனுவிலிருந்து ஐரோப்பா மீண்ட போது வழியிலே இலங்கையையுந் தரி சித்துச் சென்ருர், உலகிலே காணப் படும் மிகப் பெரிய மாணிக்கக்கல் இலங்கை மன்னரிடமே பரம்பரை பரம்பரையாக இருந்து வருவதாகவும் அதன் புகழ் சீனம் வரை பரவியிருந்த தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பா-ஹியென்
இவர் சீன தேசத்தைச் சேர்ந்த பெளத்தர் சிறந்த கல்விமான். புத் தர் பிறந்த புண்ணிய தலத்தினைத் தரிசிக்க இந்தியாவுக்கு வந்தவர். பெளத்தம் தழைத்தோங்கிய நாடா கிய இலங்கையையும் பார்க்க அவர் இங்கு வந்தார். அவர் ஈராண்டுக் காலம் இலங்கையில் அனுராதபுரத் திலே தங்கியிருந்து பல சமயச் சுவடி களை மொழிபெயர்த்தார். அனுராத
 

புர நகரின் வனப்பு, புனித தந்தம் காட்சிக்கு வைக்கப்படும் முறை புனித அரச மரத்தின் வரலாறு, அபயகிரி விகாரையின் சிறப்பு, இலங்கைக் கல்வி முறை ஆகிய பல விடயங்கள் அவரின் நூலில் இடம்பெற்றுள்ளன. கி. பி. 399 இற்கும் 414 இற்கும் இடைப் பட்ட காலத்தில் இவர் இலங்கையிலே தங்கினர். மார்க்கோ போலோ வரு வதற்கு ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இலங்கைக்கு வந்தார்.
ருெபேட் நொக்ஸ்
கிழக்கு நோக்கி ஐரோப்பியர் வரத் தொடங்கிய பின்னர் இலங்கை ஐரோப்பியரின் ஆதிக்கத்துக்கு உட் பட்டது. ஒல்லாந்தரின் ஆட்சி இலங் கையில் நிலவியகாலை, 1659 இலே ருெபேட் நொக்ஸ் இலங்கைக்கு வந் தார். இவர் கண்டி அரசனின் கைதி யாகி ஏறத்தாழ இருபது ஆண்டுகளை இலங்கையிற் கழித்தார். கண்டி மக்க ளின் பழக்க வழக்கங்களையும் இந்நாட் டின் வளம், வனப்பு ஆகியவற்றையுங் கூர்ந்து நோக்கினர். கண்டியிலிருந்து தப்பியோடித் தாயகஞ் சேர்ந்த பின் னர் இவ்விபரம் அனைத்தையும் 'இலங் கையின் வரலாற்றுத் தொடர்பு' என் னும் நூலிலே விளக்கமாக எழுதியுள்
GTI Tsj.
நெருக்ஸ் தம் தந்தை தலைமை தாங் கிய ஒரு வணிகர் குழுவுடன் "ஆன்" எனுங் கப்பலில் இந்தியாவுக்கு வந் தார். இக்கப்பல் தென் இந்தியக் கரைக்கு அயலிற் புயலிற் சிக்கவே பாய்மரம் முறிந்தது. எனவே, பாய் மரத்துக்கேற்ற நெடுமரங்களிருந்த இலங்கையின் கொட்டியாரக் கரைக் குக் கப்பல் கொண்டு வரப்பட்டது. ஒற்றர் மூலம் இதையறிந்த கண்டி
27

Page 30
ருெபேட் நொக்ஸ் அரசனுன இரண்டாம் இராசசிங்கன் இவர்களைக் கைதிகளாக்கினன். இக் கைதிகளுக்கு இராசசிங்கன் கடுங்கா வல் விதிக்கவில்லை. நாட்டினுள் சுதந் திரமாகத் திரிவதற்கு அனுமதி அளிக் கப்பட்டது. தந்தையும் மகனும் வதி வதற்குக் கொஸ்வத்தையில் ஓர் இருப் பிடம் வழங்கப்பட்டது. பதினெட்டு மாதங்களின் பின் தந்தை மலேரியாக் காய்ச்சலுக்குப் பலியானுர்,
சில காலத்துக்குப் பின் நொக்ஸ் உடநுவரையில் வசித்து வந்தார். சிங் கள மக்களைப் போலவே அவர் உடை யணிந்து, நாட்டின் பல பாகங்களி லும் வணிகத்தொழில் புரிந்து வந் தார். இவ்வாறு சென்று வருங்கால், தப்பியோடுவதற்கு வாய்ப்பான வழி களை அவர் கவனிக்கத் தவறவில்லை. இறுதியில் இவர் தம் தோழனன தத்து லநதுடன அனுராதபுரம வநது மல
28
 

வத்து ஒயா வழியே அரிப்பில் இருந்த ஒல்லாந்தர் கோட்டையை அடைந் தார். ஒல்லாந்தர் அவரைப் பற்றே வியாவுக்கு அனுப்பவே அங்கிருந்து தாயகந் திரும்பினர். தம் அனுபவங் களை விபரித்து அவர் எழுதிய நூல் இந்நாட்டு வரலாற்று நூல்களுள் ஒர் அரிய இலக்கியமாயிற்று.
N
R N
NNİN İNİN
N NIN
A. NN IN N
NNN NIINI W
N
N
இரண்டாம் இராசசிங்கன்

Page 31
6. மேற்குநோக்கி
மேற்கு நோக்கி ஐரோப்பியர் புரிந்த பயணங்களில் ஆதி காலப் பய ணங்களை மத்தியதரைப் பிரதேச மக் களன்றி, வட ஐரோப்பாவில் வாழ்ந்த வைக்கிங் மக்களே புரிந்தனர்.
வைக்கிங் மக்களின்
 

வைக்கிங் மக்களுங் கடற்
பயணங்களும்
வைக்கிங் மக்கள் மனவுறுதி
வலிமை,
உடல்
சா நெஞ்சம் எனும்
அஞ் பண்புகளைக் கொண்டவர்கள். போர்
கப்பல்
29

Page 32
செவ்விந்தியர்
ஆர்வமுங் கடலோடற்றிறமையும் மிக் வர்கள். அவர்களைக் கட்டுப்பாட்டி னுள் அடக்கியாள எவரும் இருக்க வில்லை. அவர்கள் மந்தை மேய்த்தும் பயிர் செய்தும் மீன்பிடித்தும் வாழ்ந்த வராவர். தாம் வாழும் பிரதேசத்தை விசாலிக்க விரும்பி, ஐரோப்பாவுக்கு மேற்கே உள்ள தீவுகள் அனைத்தையும் அடிப்படுத்தினர். ஐஸ்லாந்துங் கிறீன் லாந்தும் அவற்றுள் அடங்கும். லெயில் எறிக்சனும்
அமெரிக்காவும்
லெயில் எறிக்சன் எனும் வைக்கிங் வீரன் கி. பி. 1000 ஆண்டளவிலே
30
 

கிறீன்லாந்திலிருந்து வட அமெரிக்கா சென்றன். ஒராண்டு கழித்து இவன் கிறீன்லாந்துக்குத் திரும்பிய பின்னர், பல வைக்கிங் வீரர் அமெரிக்காவுக்குச் சென்றனர். ஆனல், தொகையால் மிகுந்த அமெரிக்கப் பழங்குடிகளான செவ்விந்தியரின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது கிறீன்லாந்துக்கு மீண்டனர். இதன் பின்னர் மத்திய காலம் வரை, அமெரிக்காவை வைக் கிங் மக்களோ, ஐரோப்பியரோ நாட வில்லை. மத்திய காலத்தே ஆய்வுப் பயணம் மேற்கொண்ட கொலம்பஸ்ே அமெரிக்காவை மீளக் கண்டுபிடித்
தார்.

Page 33
கொலம்பஸாம் அமெரிக்க்ாவும்
கொலம்பஸின் பயணமும் மத்திய தரைப் பிரதேசத்திலிருந்தே ஆரம்ப மானது. கொலம்பஸ் மேற்கே பயணம் செய்து புதிய உலகு ஒன்றினைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு சென்றவரல்லர். தாம் கிழக்கே சென்றடையும் இலக்கினை முன் வைத்தே மேற்குப் புறமாகப் பயணத் தைத் தொடங்கினர்.
அத்திலாந்திக்குச் சமுத்திரத்தைக் கடந்து கிழக்கிந்தியத் தீவுகளை அடைய வேண்டும் என்பதையே கொலம்பஸ் தமது இலட்சியமாகக் கொண்டிருந்தார். இதற்காக, வானி யல், புவியியற் படம்வரைகலை, கப்ப லோட்டுங்கலை ஆகியவற்றைக் கற்ருர், இங்கிலாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகளுககு நேரிலே சென்று வைக் கிங் மக்களின் பெரும்பயணங்கள் பற்றி அறிந்து கொண்டார்.
கொலம்பஸ் முதலிற் போர்த்துக் கலின் மன்னரான இரண்டாம் ஜோனுடைய உதவியை நாடினர். ஆயினும், கொலம்பஸின் திட்டம் வெற்றியளிக்குமா என்ற ஐயப்பாட்டி ணுல் அவருக்கு மன்னரின் ஆதரவு கிடைக்கவில்லை.
ஏமாற்றம் அடைந்த கொலம்பஸ் 1484 இல் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லாவின் உதவியை நாடினர். அவளுடைய அரசவையிலும் கொலம் பஸின் திட்டம் ஆதரவு பெறவில்லை. கொலம்பஸ் தம் சகோதரர் பார் தலோமியூ என்பாரை இங்கிலாந்துக்கு அனுப்பி ஏழாம் ஹென்றி மன்னனின் உதவியை நாடினர். காலங்கழிந்தது. பொறுமையிழந்த கொலம்பஸ் 1492 இலே பிரான்சை நோக்கிப் புறப்பட்

டார். ஆணுல், அதே சமயம் ஸ்பெயின் அரசியின் ஆலோசகர்கள் கொலம் பஸின் வெற்றி நாட்டுக்குப் பெருஞ் செல்வத்துக்கு வழிகோலுமென எடுத் துக்காட்டவே, அரசியும் கொலம் பஸ்ை ஆதரிக்க முன்வந்தாள்.
1492 ஒகஸ்ட் 3 இல் கொலம்பஸ் சாந்தா மறியா எனுங் கப்பலில் புறப் பட்டார், துணைக் கப்பல்களான நீணு வும் பின்னராவும் உடன் சென்றன. நாட்கள் கழிய, நாற்றிசையும் பரவியி ருந்த சமுத்திர நீர்ப்பரப்பைக் கண்டு, மாலுமிகளின் உள்ளங்களில் அச்சம் படர்ந்தது. அவர்களுக்கு உற்சாக மூட்டித் தொடர்ந்து முன்னேறத் தூண்டினர்.
கப்பல்கள் முதலிற் கனேரித் தீவு களை அடைந்து அங்கே தரித்தன. இது வரையும் பழக்கமான பாதையால் அவர்கள் பயணஞ் செய்தார்கள். இத்
கொலம்பஸ்
31

Page 34
தீவுகளிலிருந்து புறப்பட்ட பின்னர் யாருமே சென்றிராத கடலிலே பய ணஞ் செய்தல் அவசியமாயிற்று. கப் பல் மேற்கு நோக்கியே செல்வதாகத் திசைகாட்டி முள் உணர்த்தி நின்றது. ஒக்ருேபர் வரையும் எப்பக்கம் பார்த் தாலும் அத்திலாந்திக்குச் சமுத்திர நீரே பரவிக்கிடந்தது.
ஒக்ருேபர் மாதத்தில் இரண்டா வது வாரம் தொடங்க, மாலுமிகள் கலங்கினர். கப்பல்களிலே குழப்பமும் தொடங்கியது. சாந்தா மறியாவிற் கொலம்பஸைக் காண மற்றிரு கப்பல் களின் தலைவர்களும் வந்தனர். தாய கந் திரும்பிச் செல்லுமாறு கொலம் பஸை வேண்டினர். அவர்கள் தம் உயிருக்கு அஞ்சவில்லை. அவ்வாறு விரும்பியதற்குக் காரணம், கையிலி ருந்த உணவு முடியுந் தறுவாயில் இருந் தமையாகும்.
எனினும், கொலம்பஸ் மனந் தளர வில்லை. வாழ்நாள் முழுவதும் இப் பயணத்தின் வெற்றிக்காகத் தாம் செய்த முயற்சி வீண்போவதை அவர் விரும்பவில்லை. புலம் பெயர் பறவை கள் வானத்திலே பறந்த காட்சி அவர் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத் தியது. எனவே, மேலும் மூன்று நாட் கள் பொறுத்திருக்குமாறு அவர் மற் றைக் கப்பல்களின் தலைவர்களை வேண் டினர். இரு நாட்களின் பின் மரக்கிளை களும் மனிதராற் செதுக்கப்பட்ட சில மரக்கட்டைகளும் நீர்மேற்பரப்பில் மிதப்பதை மாலுமிகள் கண்டனர். அண்மையில் நிலம் உண்டு என்ற நம் பிக்கை மாலுமிகளின் உள்ளங்களில் மலர்ந்தது. அன்றிரவு 10 மணியள வில் வெகுதொலைவில் வெளிச்சந் தெரி வதைக் கொலம்பஸ் அவதானித்தார்.
32

மறுநாட் பொழுது புலர்ந்தபோது கரையிலிருந்து நங்கூரமிடக்கூடிய ୯୬, ୩t q] தூரத்தைக் கப்பல்கள் அடைந்துவிட்டன.
அந்நிலப் பகுதி ஒரு தீவாக இருந் தது. கொலம்பஸ் புதிய உலகிலே காலடி எடுத்து வைத்தார். வட அமெ ரிக்கக் கரைகளை ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் லெயில் எறிக் சன் தரிசித்துச் சென்ற பின்னர், கொலம்பஸ் அதனை மீளக் கண்டுபிடித் தார். ஆயின், அது புதிய கண்டம் என்பதை யாரும் உணரவில்லை. ஆசி யா வை அடைந்துவிட்டதாகவே மாலுமிகள் கருதினர்.
கொலம்பஸ் அத்தீவிற்குச் சான் சல்வடோர் எனப் பெயரிட்டார். அது இன்று வாட்லிங்ஸ் தீவு எனப்படு கின்றது. பஹாமாத் தீவுகளிலே அது வும் ஒன்ருகும்.கொலம்பஸ் இத்தீவினை ஸ்பெயினின் சொத்தாக்கினர். கிழக் கிந்தியத் தீவுகளிலே தாம் இருப்ப தாகக் கருதிக்கொண்டு சுதேசிகளை இந் தியரென அழைத்தார். இத்தவறு இன்றும் குழப்பத்தையே விளைப்பதை நாம் அறிவோம். கொலம்பஸ் கரி பியன் பிரதேசத்திலே, பஹாமாத் தீவுகளையும் பின்னர் கியூபாவையும் ஹயிற்றியையும் ஆராய்ந்தார்.
1493 மார்ச்சு 15 இல் கொலம்பஸ் வெற்றி வீரராக ஸ்பெயினுக்கு மீண் டார். புதிய கண்டத்திலிருந்து தாம் கொணர்ந்த செவ்விந்தியர் சிலரை யும் பொன், விசித்திரப் பறவைகள், விந்தையான மிருகங்கள், பருத்திப் பஞ்சு, மரச்சிலைகள் ஆதியாம் அரும் பொருள்களையும் அரசிக்குக் காட்டி னர். இவற்றுள் அவர் கொணர்ந்த பொன் அரசியைக் கவர்ந்தது.

Page 35
எனவே, கொலம்பஸுக்கு மேலும் மூன்று பயணங்களை மேற்கொள்ள ஆட்சியாளர் ஒழுங்கு செய்தனர். இதன் விளைவாக, மத்திய அமெரிக்கா வையுந் தென் அமெரிக்காவையுங் கொலம்பஸ் கண்டுபிடித்தார்.
ஸ்பெயின், பின் பல பயணங்களை ஏற்பாடு செய்தது. அவற்றுள் ஒன் றிற்கு அமெரிக்கோ வெஸ்புச்சி தலைமை தாங்கினார். அமெரிக்காவின் மேற்குக் கரையை இவர் தரிசித்திருத் தல் வேண்டும். மேற்கே கிடந்த சமுத் திரத்தைக் கொண்டு, அமெரிக்கா வானது ஆசியாவின் பகுதியாக இருக்க முடியாதென இவர் துணிந்தார் . அமெரிக்காவை முதலிலே கண்டுபிடித் தவர் இவரல்லர். எனினும், இவருக் குக் கிடைத்த புகழ் காரணமாக இவர் முதற் பெயரே புதிய உலகிற்குச் சூட் டப்பட்டது.
ஸ்பானியர் அமெரிக்காவுக்குச் சென்ற காலத்தில் மெக்சிக்கோவில் அஸ்ரெக்ஸ் நாகரிகமும் பூக்கற்றானில் மாயன் நாகரிகமும் பேருவில் இன்கா நாகரிகமும் செழிப்புற்றிருந்தன. அஸ் ரெக்ஸ் மக்கள் அழகான கூம்பகங்கள் கட்டி, அவற்றின் உச்சியிலே தம் கட வுளர்க்குக் கோவில்கள் அமைத்தனர். மகெலனும் அவர் சாதனையும்
மேற்கு நோக்கிச் சென்று அமெரிக் காவைக் கண்டதும் பயணத்தை நிறுத் திக் கொண்டோரே நாம் முன்பு கூறி யோர். ஆயின், தென்னமெரிக்க முனை யைத்தொட்ட பின்னர் தொடர்ந்து பயணஞ் செய்து கிழக்கினை அடைந் தோரும் உளர். இவர்களிலே குறிப் பிடத்தக்கவர் பேர்டினன்டு மகெலன் ஆவர். உலகம் உருண்டை என்பதை ஐயந்திரிபற உலக மக்களுக்குச் செயல்

மூலம் உணர்த்திய பெருமை இவ ரையே சாரும்.
பேர்டினன்டு மகெலன் போர்த்துக் கேய நாட்டவர். உலகினை நீர்வழி யாற் சுற்றிவர இவர் வகுத்த திட்டத் திற்குப் போர்த்துக்கல் ஆதரவு நல்க மறுக்கவே, ஸ்பெயின் மன்னன் சாள்ஸ் முன்வந்தான். திரினிடாட், சான் அந்தோனியோ, கொன்செப் ஷன், விக்ரோறியா, சந்தியாகோ என்ற சிறிய கப்பல்கள் ஐந்து மகெல னிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆயி னும், அவை அனைத்தும் மிகப் பழை யன. சந்தியாகோ எனுங் கப்பல் இடையில் காற்றாலும் நீரோட்டத் தாலும் இழுத்துச் செல்லப்பட்டது. சான் அந்தோனியோ எனுங் கப்பல், மாலுமிகள் ஒத்துழையாமையால் பிரிந்து சென்றது.
லிஸ்பனிலிருந்து புறப்பட்டு வட மேல் ஆபிரிக்கக் கரையோரம் வழியே மகெலன் தலைமையிற் சென்ற கப்பல் கள் பின் மேற்கு நோக்கித் திரும்பித் தென் அமெரிக்கக் கரையை அடைந் தன. தென்னமெரிக்கக் கரையோடு சென்று தென்கோடி முனையைக் கடந் தன. பரந்த பசிபிக்குச் சமுத்திரத்திற் பல நாட்பயணம் செய்து பிலிப்பியன் தீவுகளை அடைந்தன. பிலிப்பியன் தீவு ஒன்றிற் சுதேசிகளுடன் நடைபெற்ற சமர் ஒன்றிலே மகெலன் இறந்த பின் னரும் பயணம் மேற்கு நோக்கியே தொடர்ந்தது. பயணத்தின் இறுதிக் கட்டத்தில் விக்ரோறியா என்னுங் கப் பல் மட்டுமே கடற் பயணத்திற்கு ஏற்றதாய் இருந்தது. இந்து சமுத் திரத்தைக் கடந்து, நன்னம்பிக்கை முனையையுங் கடந்து, விக்ரோறியா 152 2 செத்தெம்பர் 8 ஆந் தேதி

Page 36
ஸ்பெயினை அடைந்தது. புறப்பட்ட 230 மாலுமிகளில் 18 பேர் மட்டுமே தாய்நாடு திரும்பினர். எனவே, முதலாவதாக உலகைச் சுற்றி வந்த கப்பல் விக்ரோறியா என்பதாகும்.
மகெலனின் பயணமானது 'உல கம் உருண்டை: அமெரிக்காவுக்கு அப் பாலுங் கடற்பாதை ஆசியாவுக்கு இட்டுச் செல்லும்; பல புதிய ஆய்வுப் பயணங்களுக்குப் பசிபிக்குச் சமுத் திரத்திலே இடமுண்டு' என்பவற்றை உறுதிப்படுத்தியது.
தோர் ஹயடால்
இருபதாம் நூற்ருண்டிலே தோர் ஹயடாலும் அவருடைய நண்பர்கள் ஐவரும் மிகவும் அரிய சாதனை ஒன் றைப் புரிந்து, ஆதி மக்களின் தீரத்தை உணர்த்தினர். அவர்கள் இயந்திர யுகத்திலே இயந்திரம் எதனையும் பயன்
34

படுத்தாது, ஒன்பது பால்சா மரக் கட்டைகளை மரக்கொடிகளால் மட் டும் பிணைத்துக் கட்டுமரம் ஒன்றைச் செய்தனர். அறுவரும் தென்னமெரிக் காவிலுள்ள பேரு நாட்டிலிருந்து பசி பிக்குச் சமுத்திரத்தில் மேற்கு நோக் கிப் பயணமாயினர்.
கட்டுமரம் புறப்பட்டு ஏறத்தாழ நூறு நாட்கள் கழிந்தன. இறுதியாக அவர்கள் தென்கடல் தீவுகளை அடைந் தனர். அவர்கள், பல நூற்ருண்டு களுக்கு முன்னர் பேரு நாட்டிலிருந்து சாதாரண கட்டுமரங்களிலே இன்கா மக்கள் தென்கடல் தீவுகளைச் சென்ற டைந்து அங்கு குடியேறினர் என்ற வரலாற்று உண்மையை, தம் சாதனை மூலம் நிலைநாட்டினர். மக்களின் பய ணங்கள், முற்கால மக்கள் கிணற்றுத் தவளைகளாக வாழவில்லை என்பதை யும் உணர்த்துகின்றன.

Page 37
7. முனைவுகளை நோக்கி
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத் தில் மனிதன் வாழிடத்தைச் சூழ்ந் திருக்கும் பகுதிகளிற் பெரும்பாலான வற்றைத் தரை வழியாகவுங் கடல் வழியாகவுஞ் சென்று அடைந்துவிட் டான். நாற்றிசையும் ஆய்வுகளை மேற் கொண்ட பின்னர் முனைவுகளை நோக் கிச் செல்லும் அவாவினால் உந்தப் பட்டான். வட, தென் முனைவுகளைச் சூழ்ந்து பரந்த கண்டங்களுண்டு என்ற நம்பிக்கை, அங்கு விஞ்ஞான ஆய்வு களை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆவல், முனைவுகளை முதன்முதற் கண் டறிவதாற் கிட்டும் பெருமை ஆகிய னவே ஆய்வுப் பயணிகளுக்குத் தூண் டுதல்களாக இருந்தன.
வட முனைவுப் பயணம்
14 9 7 இல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட ஜோன் கபற் என்பார் ஆட்டிக்கு வட்டப் பகுதியை மட்டுமே அணுகினார். அவ்வாறே 177 2 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட ஜேம்ஸ் குக் என்பார் அந்தாட்டிக்கு வட்டம் வரையுஞ் சென்றார். வட முனைவை முதலிலே சென்றடைந்தவர் றொபட் பியறி ஆவார். இறுதி வெற்றி கிட்டு முன்பு, அவர் வட முனையை நோக்கிப் பல தடவை பனிக்கட்டியிற் கால் நடையாகச் செல்ல வேண்டியி ருந்தது. பியறியின் உயிருக்கே ஆபத்து நேரக்கூடிய இடர்ப்பாடுகள் பல குறுக்

கிட்டன. எனினும், பியறி தமது இலட்சியத்தை அடைவதற்காக உயி ரைப், பணயம் வைக்கவுந் தயங்க வில்லை. இறுதியில் 1909 இல் பியறி யும் ஹென்சனும் எஸ்கிமோவர் நால் வரும் வட உலகின் அந்தலையை அடைந்தனர். இவர்களுக்குப் பின், 1958 இல், அணுச்சக்தியால் இயங் கிய நோட்டிலஸ் எனும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் வடமுனைவுப் பனிக் கட்டிக்குக் கீழால் நெடுந்தூரஞ் சென்று கிறீன்லந்துக் கடலிலே மிதந் தது. இதை அடுத்து ஸ்கேற் எனும் அணுச்சக்தி நீர் மூழ்கிக் கப்பல் வட
முனைவிலே வந்து மிதந்தது. தென் முனைவுப்பயணம்
தென் முனைவையும் இவ்வாறு ஆராய்வதற்கு மனிதனுக்கு வேட்கை உண்டாயிற்று. ஆங்குத் திமிங்கிலங் களுஞ் சீல்களும் பெருந்தொகையாக இருப்பதாக அறிந்ததும் மீன்பிடி கப் பல்கள் தெற்கே செல்லத் தொடங்
கின.
- அந்தாட்டிக்குக் கண்டத்தை முத லிலே கண்டவர் வில்லியம் சிமித் என்பாராவர். இவர் ஒரு கப்பலில் 1819 இல் அங்கு சென்றிருந்தார். இதன் பின்னர் பலர் அக்கண்டத்துக் குச் சென்றனர். அவ்வாறு சென்று தென் முனைவை அடைந்தோருள் றொவல்ட் அமுண்சனும் றொபட் பல்
35

Page 38
கன் ஸ்கொற்றும் குறிப்பிடத்தக்கவர் கள். அமுண்சன் 1911 டிசம்பரிலும் ஸ்கொற் 1912 சனவரியிலும் தென் முனைவை அடைந்தனர். ஆயினும், ஸ்கொற்றும் அவர் குழுவினருங் கடுங் குளிரில் மடிந்தனர். ஸ்கொற்றின் நாட்குறிப்பேடு அச்சோகக் கதைக்குச் சான்ருகக் கிடைத்தது.
1929 இல் தென் முனைவின் மேலே கடற்றளபதி பேட் என்பார் விமானத் திற் பறந்து சென்ருர் . இதன் பின்னர் விஞ்ஞான களங்கள் பல அங்கு நிறுவப் பட்டு ஆய்வுகள் நடைபெறுகின்றன. அண்மையில் சேர் விவியன் புக், சேர் எட்மன்ட் ஹிலேரி என்போர் தலைமை யில் ஒரு குழு நவம்பர் 1957 முதல் மார்ச்சு 1958 வரை தென்முனைவுப் பிரதேசத்தில் ஆய்வை நடாத்தியது. இதன் விளைவாக இயற்கை அன்னை பனிப்படலத்தின் கீழ் மறைத்து வைத் திருக்கும் இரகசியங்கள் பலவற்றை மனிதன் அறிய வரலாம்.
36

ருெவல்ட் அமுண்சன்

Page 39
8. கடல் அடியை நோக்கி
மனிதன் தரையை ஆராய்ந்த தோடு அமையாது கடலையும் ஆராய்ந் தான். இவ்வாருக, முத்து முதலான பொருள்களைப் பெற்ருன் நீர்முழ்கி முத்துக் குளித்தல் இலங்கையிற் சாதா
சமுத்திர நீர்மூழ்கியின் சிறப்பான உடை
 

மிகை ஒலிக் கருவியினுற் கடல் தளத்தை ஆராய்தல் ரணமாக நடைபெறுகின்ற தொழிலா கும். இதற்குத் தற்கால முறைகள் கையாளப்படுவதில்லை. இன்று கடல் அடிக்குச் செல்வதற்குச் சிறப்பான உடைகளைப் பயன்படுத்தலாம். இவை விண்வெளிக்குச் செல்வோரின் உடை களைப் போன்றவை.
தற்காலத்திற் சமுத்திரங்களையுங் கடல்களையும் ஆராய்வதற்குச் சிறப் பாக அமைக்கப்பட்ட கப்பல்கள் உள் ளன. அவை மிகை ஒலி (சோனுர்) அலைகளை அனுப்புங் கருவிகளைப் பயன்
37

Page 40
தொலைபேசி பூட்டிய கூடுகளிற் கடற்றளத்துக்குச் செல்லல்
படுத்தி ஆய்வு செய்கின்றன. மனிதர் கடல் அடித்தளத்துக்கு இறங்கிச் செல் லும் அடைப்புக்களிலே தொலைபேசித் தொடர்புகளும் அமைக்கப்பட்டிருக் கும். கடல்படு செல்வம்
சமுத்திரம் மிக ஆழமானது. சில. இடங்களில் அஃது ஏழு மைல் வரை ஆழமுடையது. உலகிலே மிக உயர மான மலையைச் சமுத்திரத்தில் மிக ஆழமான இடத்திற் பெயர்த்து வைக்க முடியுமானால், அது முற்றாக நீருள் அமிழ்ந்திவிடும். இத்தகைய சமுத்திரத்திலிருந்து மனிதன் தனக் குத் தேவையான உணவுப்பொருள்
38

களையும், எண்ணெய் உலோகம், ஆதிய ஏனைய மூலவளங்களையும் பெறு கின்றான். கடலிலிருந்து பெறப்படு கின்ற கடற்றாழை என்பது உரம், விலங்குணவு, மருந்து முதலியவற்றுக்
குப் பயன்படுகின்றது.
கடலிற் காணப்படும் சிப்பிகள், சங்குகள் முதலியன உண்மையில் அங்கு வாழும் உயிரினங்களின் 'மனை கள்' ஆகும். சிலவற்றில் ஓர் ஓடு மட்டுமே இருக்கும். ஏனையவற்றில் ஈரோடுகள் இணைந்திருக்கும். மன்னார், புத்தளம் போன்ற கடற்கரைப் பகுதி களில் முத்துச்சிப்பிகள் காணப்படும். இவற்றை 'முத்துக்குளித்து' எடுத்தல் ஒரு விசேட தொழிலாகும். அதற்கு விசேட திறனும் ஆற்றலும் வேண் டும். இலங்கையில் நவீன கருவிகளின் துணையின்றியே முத்துக்குளிப்புத் தொழில் நடைபெறுகின்றது.
தரைமீது தாவர வகை இருத்தல் போலவே, கடலின் கீழும் பல்வகைத் தாவர வகை உள் . பல கோடி நுண்ணு யிர்கள் இவற்றை உண்டு வாழ்கின் றன. இவை இறந்த பின்,' இவற்றின் பல்வண்ண என்புக்கூடுகள், பல நிற மலர்களைக் கொண்ட கொடி செடி போற் காட்சி அளிக்கின்றன. முரு கைக் கற்களுங் கற்பார்களுந் தாவரங் களைப் போற் கிளைவிட்டு வளர்கின் றன. இலங்கையின் தென்பகுதியில் ஹிக்கடுவைக் கடற்கரையில் இவ்வா றான அழகிய முருகைக் கற்பார்கள் உள். இவற்றைக் கண்டு களிப்பதற் காக மேலை நாட்டிலிருந்து உல்லாசப் பயணிகள் பலர் வருவதுண்டு.
நீரின் மேற்பரப்பிற் கப்பல்கள் செல்வது போன்று, நீரின் கீழுஞ் செல்லவல்ல நீர்மூழ்கிக் கப்பல்கள் உள். இவை முக்கியமாகப் போர்க்

Page 41
காலங்களில் எதிரிகளின் கடற்படை களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. கடல் ஆழத்திலே தங்கி யிருந்து ஆய்வுகளை நடாத்தக் கலம் ஒன்றினை இகோர்டனிலோன், ஒகலக் கன்சொன் ஆகிய இரசியர் இருவர் அண்மையில் ஆக்கியுள்ளனர். அதன் பெயர் கிவீடன் ஆகும். ஆய்வாளர் இருவர் அல்லது மூவர் அதிலே மூன்று நாட்கள் வரை தங்கியிருந்து ஆய்வு களை நடாத்தல் சாலும், இரசிய விஞ் ஞானிகள் கருங்கடலில் ஆய்வுகளை நடாத்துவதற்கு இதனையே பயன் படுத்துகின்றனர்.
கடலில் இழந்த செல்வம்
முற்காலத்திலே திரைகடல் ஒடித் திரவியம் தேடித் தாயகம் மீண்டோர் சிலர் நடுக்கடலிற் கடற்கொள்ளைக் காரராலே தாக்கப்பட்டனர். இதனுற் பல கப்பல்கள் கடலிலே திரவியங் களோடு அமிழ்ந்ததுண்டு. அவற்றுட் பல இன்னும் மீட்கப் படாதிருக்கின் றன. போர்களிலும் பல கப்பல்கள் கடலிலே மூழ்கடிக்கப்பட்டுள்ளன; புயல்களிலும் பல சிக்கி அமிழ்ந்துள் ளன. இவற்றுட் சிலவற்றை ஆய்ந்த பொழுது புதிய வரலாற்று உண்மை கள் புலப்பட்டன. கடல் அடித்தளத் தில் உள்ள பொருள்களை மேற்பரப்புக் குக் கொண்டுவருதற்கு வாய்க்கூண்டு (பலூன்) போன்ற கருவிகள் பயன் படுத்தப்படுகின்றன.
இலங்கையிலே திருக்கோணமலை யில் அத்தகைய கப்பல் ஒன்று அமிழ்ந் துள்ளதாக அறியக்கிடக்கிறது. முத லாம் பராக்கிரமபாகு மன்னன் இலங் கையின் வட பகுதியை ஆட்சி செய்து வந்த காலத்தில், ஊர்காவற்றுறை யில் அமிழ்ந்திய வணிகக் கப்பல்கள்

வாயுக்கூண்டு பொருத்திக் கடற்றளப் பொருள்களை மேற்கொணர்தல்
தொடர்பாக விதித்த கட்டளைகள் பற் றிச் சான்றுகள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் முதற் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தமிழ்க் கல்வெட்டு இது பற்றியதாகும்; இக் கல்வெட்டு நயினுதீவு நாகபூஷணி அம் மன் கோவிலின் வாயிலில் இன்று முளது. கடற்றளத்திலிருந்து எண்ணெய்
தரையிலிருந்து எண்ணெய் எடுக் கப்படுவதை நாம் அறிவோம். அவ் வாறே கடலிலிருந்தும் எண்ணெய் பெறப்படுகின்றது. இலங்கையிலும் மன்னருக்கு அப்பால் இந்து சமுத்
39

Page 42
திரத்திலே எண்ணெய் பெறும் வாய்ப் புள்ளதாக அறியக்கிடக்கின்றது. இந் தியாவும் இந்து சமுத்திரத்தில் எண் ணெய் பெறுவதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகின்றது. இவ்வாறு மனித குலத்திற்குப் பயன் தரக்கூடி யவை அனைத்தையும் பெறும் முயற்சி யில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின் ருர்கள். கடற்கீழ் ஆய்வு
இப்பொழுது கடற்கீழ் ஆய்வு ஒரு தனிக் கலையாக விருத்தியடைந்துளது. பசிபிக்கு, அத்திலாந்திக்கு, ஆட்டிக்கு. அந்தாட்டிக்குச் சமுத்திரங்களில் சில காலமாக ஆய்வுகள் நடாத்தப்பட்டு வந்தன. உலகின் மூன்ருவது பெரிய சமுத்திரமான இந்து சமுத்திர ஆய்வை யுனெஸ்கோ எனுந் தாபனத் தின் ஆதரவில், 1960-65 இல் சருவ தேச இந்திய சமுத்திர ஆய்வுக்குழு பொறுப்பேற்றுள்ளது. இதன் விளை வாக இதுவரை அறியாத பல பெறு மதி மிக்க தரவுகள் சேகரிக்கப்பட்டன.
40

இந்தியக் கரையோரமாக உள்ள மூல வளங்களைப் பெறுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
பிரான்சும் அமெரிக்காவுஞ் சேர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடல் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆய்வுத்திட்டத்தின் பெயர் பேமஸ் ஆகும். இத்திட்டத்தின் முழு ஆங் 6) GOL GOLJULJUTIT GuLu French American o Mid Ocean Under Sea Study என்பதிலிருந்து FAMOUS எனும் சொற்குறுக்கம் பெறப் பட்டுள்ளது. ஆட்டிக்குச் சமுத்திரத் திலிருந்து ஏறத்தாழ அந்தாட்டிக்குச் சமுத்திரம் வரையுள்ள அத்திலாந்திக் குச் சமுத்திரத்தின் படுக்கையை ஆய் தலே இத்திட்டத்தின் நோக்கமாகும். நடுக்கடலில் இருக்கும் மாபெருங் கடற்கீழ் மலைத்தொடர், அதனைப் பிரித்து இருக்கும் பிளவு. புவியின் மேலோடு தோன்றிய வரலாறு, உலோகக் கனியங்கள் தோன்ற வழி செய்த நிலைமைகள், நடுக்கடற் புவி நடுக்கங்களின் இயல்புகள் என்பன இப் பொழுது ஆயப்பட்டு வருகின்றன.

Page 43
9. இமய உச்சியை நோக்கி
தரையிலும் தரையை அகழ்ந்து அதன் கீழும் ஆய்வுகளை நடாத்திய மனிதர் அதன் மீதுள்ள மலைகளின் மிக உயர்ந்த உச்சியையும் அடைய வேண்டும் என்ற வேட்கையால் உந் தப்பட்டனர். இப்புவியிலுள்ள மலை களுள் மிக உயர்ந்தது நம் அயல் நாடாகிய இந்தியாவின் வட எல்லைப் புறத்திலுள்ள இமயமலை ஆகும். பனி படர்ந்த மலை உச்சிகள் ஆங்குப் பல வுள. அவற்றுள் மிகவுயர்ந்ததான எவ ரெஸ்ட் உச்சியின் உயரம் 29, 141 அடியாகும். இவ்விடம் எவ்வாறிருக் கும் என்பதை அறிவதே இவர்களின் ஆவலாயிருந்தது.
19 20-52 ஆண்டுக் காலத்திலே இவ்வுச்சியை அடைவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1949-50 இல் எரிக் சிப்ரன் தலைமை யில் தென் புறத்திலிருந்து சென்ற பிரித்தானிய ஆய்வுக்குழு 28,000 அடி வரை ஏறக்கூடியதாக இருத்தது. 1952 இல் சுவீடனிலிருந்து வந்த ஆய்வுக் குழுக்கள் வட புறத்திலி ருந்து திபெத்துக் கூடாக ஏற முயன் றும், ஏறத்தாழ அவ்வளவு உயரத் துக்கே செல்வது சாத்தியமாயிற்று. சேர் யோன் ஹன்றின் குழு
இறுதியில் சேர் யோன் ஹன்ற் என்பார் தலைமையில் ஒரு பிரித்தா னிய குழு 1953 மார்ச்சு 10 ஆம் திகதி இம்முயற்சியை மேற்கொண்

-து. இவர் வயது 42 ஆகும். முன் இமயமலை ஏறும் ஆய்வுக்குழுக்களுடன் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருந்தது. அடுத்து எட்மன்டு ஹிலேரி என்பாரே இக்குழுவினருட் குறிப்பி டத்தக்கவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றிக் கொடியை நாட்டிய பெருமையும் இவரையே சாரும். நியூ சீலாந்தைச் சேர்ந்த இவரது தொழில் தேனி வளர்ப்பாகும். நியூசீலாந்தில் மலையேறும் அனுபவம் இவருக்கு நிறைய இருந்தது. இவர் வயது 33. மூன்றாவதாகக் குறிப்பிடத்தக்கவர், நேபாள அரசைச் சேர்ந்த தென்சிங் என்பவராவர். இறுதிக் கட்டத்தில் எவரெஸ்ட் உச்சிமீது ஏறியவர்கள் ஹிலேரியும் தென்சிங்குமாவர். 39 வயதுள்ள இவர் ஆறாவது முறையாக இவ்வுச்சி மீதேறும் பணியை மேற் கொண்டார். இக்குழுவில் இருந்த ஏனையோர் பலரினதுங் கூட்டு முயற்சி யினாலே இப்பெருஞ் சாதனை நிறை வேறக்கூடியதாக இருந்தது.
நேபாள அரசின் தலைநகராகிய காத்மான்டு என்பதிலிருந்து இக்குழு வின் பயணந் தொடங்கியது. வழி வழியே பல்வேறு உயரங்களில் தங்கிச் செல்வதற்காகப் பயணத்தின்போது எட்டுப் பாசறைகள் அமைக்கப்பட் உன. வழிநெடுக ஏற்பட்ட இடர்கள் பலவற்றைச் சமாளிக்க வேண்டியிருந் தது. பனியோடைகளால் மூடப்பட்
4)

Page 44
டுக் கிடந்த மலையுச்சிகளில் உறை பனியிற் காலத்தைக் கழித்தனர். பனிக்கோடரியினாற் படிகளை வெட்டி மெல்ல மெல்ல ஏறினர். கொடிய விலங்குகளால் தாக்கப்பட்டனர். இமய உச்சியை அடைத்ல்
மே மாதம் 29 ஆம் திகதி இமய உச்சியை நோக்கிக் ஹிலேரியும் தென் சிங்கும் புறப்பட்டனர். இறுதிப் பய ணமே இதுகாறுமில்லாத இடர் நிறைந்ததாக இருந்தது. இஞ்ஞாலத் தின் மாந்தருள் நால்வரே இதுவரை வந்து இவ்வுச்சியைக் கண்ணாற் கண் டனர். எனினும், அதிற் காலடிவைக் கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்ட
எவரெஸ்ட்
42

வில்லை. இருவரும் பனிக் கோடரியி னால் படிகளை மாறி மாறி வெட்டிக் கொண்டு ஏறிச்சென்றனர். இவ்வாறு செல்லுங்கால் ஒரு நாற்பது அடிப் பாறை வழிமறித்து நின்றது. பிடித் தேறுவதற்கு எவ்வித இயற்கை அமைப்பும் அதில் இருக்கவில்லை. வெற்றிக்கும் தோல்விக்கும் இதுவே காரணமாகும் என்பதை இருவரும் உணர்ந்தனர். இறுதியில் நாற்பது அடிவரையும் ஓர் ஒடுங்கிய வெடிப்பு, பாறையின் உச்சிவரை செல்வதைக் கண்டனர். இளமை தொட்டே துணிந்து செயலாற்றும் மனப்பாங் கைக் கொண்ட ஹிலேரி, அதன் வழியே ஏறிப் பாறைமுகட்டில் மூச்
உச்சியில் ஏறுதல்

Page 45
செறியும் நிலையிற் கிடந்தார். பின்னே தொடர்ந்து சென்ற தென்சிங்கு முகட்டை அடைந்ததும் மயங்கிக் கிடந்தார். உச்சி மீது காலடி வைப் பதற்கு இன்னும் சில அடிகளே ஏற வேண்டியிருந்தது. சற்றுக் களைப்பு ஆறியபின் விரைவில் மலை உச்சி மீது ஏறி ஓர் அரிய சாதனையை நிறை வேற்றினர். எவரெஸ்ட் உச்சியிற் கடவுளுக்குச் சமர்ப்பணம்
இருவரும் உலகின் உயர்ந்த உச்சி யில் நின்று கண்கொள்ளாக் காட்சி யைக் கண்டனர். தென்சிங் பனிக் கட்டியில் ஒரு குழியைத் தோண்டித் தம்மிடமிருந்த உணவு வகைகளைக் க * வுளுக்கு நன்றிசெலுத்தும் வகையிற் பிரசாதமாகச் சமர்ப்பித் தார். ஹிலேரி, சேர் • யோன் ஹன்ற் கொடுத்த சிலுவையை நாட்டினார். பதினைந்து நிமிடமே அங்கு நின்று சுற்றுப்புறங்களின் படங்களை எடுத் தனர். சுவாசிப்பதற்காகத் தத்தம் 'மிடமிருந்த ஒட்சிசன் வாயு குறைந்து வந்தமையால், விரைவிற் பாசறைக்

குத் திரும்பினர்.
யூன் மாதம் 2 ஆம் தேதி குழு அங்கத்தவர் யாவரும் மலையடிவாரப் பாசறையை அடைந்தனர். இராப் போசனத்தை முடித்துக்கொண்டு , இங்கிலாந்தில் நடந்து கொண்டிருந்த முடிசூட்டு விழாச் செய்தி பற்றி அறி வதற்காக வானொலியைத் திருப்பினர் என்னே! 'நேற்றிரவு பிரித்தானிய குழு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டது. மகா இராணியாரும் பிரதம ரும் அக்குழுவிற்கு வாழ்த்துச் செய்தி கள் அனுப்பிவைத்துள்ளனர்' என்று செய்தி ஒலிபரப்பியதைக் கேட்டு வியப்புற்றனர்.- முடிசூட்டு விழா முடிந்து மகா இராணியார் பவனி செல்லவிருந்த வழிகள் தோறுங் குழு மியிருந்த மக்கட் கூட்டத்தினருக்கு இச்செய்தி ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சி மேலீட்டினால் ஆரவாரஞ் செய்தனர்.
மனிதன் உலகின் இன்னோர் அந் தத்தை அடைந்து விட்டான். அவன் ஈட்டிய சாதனைகளுக்கு இவ்வெற்றி இன்னொரு கட்டளைக் கல்லாக அமைந் தது.
43

Page 46
s.
10. விண்வெளியை நோக்கி
அறியாதவற்றை அறிய அவ்வாவு கின்ற இயல்பு படைத்த மனிதன் தரை யிலுங் கடலிலும் மலையிலும் ஆய்வு களை மேற்கொண்டு வெற்றி ஈட்டிய தோடு, விண்வெளியை ஆராயவேண் டும் என்னும் வேட்கையாலும் உந்தப் பட்டான். அவனுடைய விஞ்ஞான முன்னேற்றம் அதற்கு ஏற்ற ஓர் ஊர் தியை ஆக்குதற்கு உறுதுணையாய் இருந்தது. முதலிலே, வலவர் இல் லாச் செய்ம்மதிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன . முதன் முதலிற் செய்ம்மதியை விண்வெளிக்கு அனுப் பிய நாடு இரசியாவாகும். இதனை அடுத்து அமெரிக்கா தன் செய்ம் மதியை அனுப்பியது. இதன் பின்னர் பிரான்சு, யப்பான், சீனா, ஜேர்மனி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய பல நாடுகள் செய்ம்மதிகளை அனுப்பியுள் ளன.
சந்திரப் பயணம்
1957 ஒக்டோபர் 4 ஆந் தேதி இரசியா உலகின் முதலாவது செய்ம் மதியை விண்வெளிக்கு அனுப்பி, புவியை வலம்வரச் செய்து, வரலாற் றுப் புகழ்பெற்றது. இச்செய்ம்மதியின் பெயர் ' 'ஸ்புற்னிக் 1' ' இதனைக் கண்டு திகைத்த அமெரிக்கர் தீவிரமாகச் செயலில் ஈடுபட்டனர். இவ்வாறாக, ' 'எக்ஸ்புளோரர் 1'' என்னும் பெய ரிய அமெரிக்கச் செய்ம்மதி 1958
44

மார்ச்சு 17 ஆந் தேதி புவியை வலம் வந்தது. விண்வெளி ஆய்வுப் பயணங் களை மேற்கொள்வதில் இந்நாடுகளின் போட்டி இத்துடன் நின்றுவிடவில்லை. ஆயின், இந்தப் போட்டி உலகிற்கு நன்மை தருவதாய் அமைந்தமை குறிப்பிடற்பாலது. - 1959 செப்டெம்பர் 12 ஆந் தேதி இரசியா சந்திரனை நோக்கி “ 'லூனா 2' என்னும் விண்கலத்தை அனுப்பியது. இது இலக்குத் தவறாது சந்திரனிற் சென்று மோதியது. இதுவே சந்திரனை அடைந்த முதலாவது விண்கலமாகும். அமெரிக்கரின் ' 'றேஞ்சர் 7' ' என்பது 19 64 யூலை 28 ஆந் தேதி சந்திர மேற்பரப்பில் மோதியது.
செய்ம்மதி

Page 47
அடுத்து, விண்வெளியில் உயிரினங் களின் உடற்ருெழிற்பாட்டில், உண் டாகக் கூடிய மாற்றங்கள் பற்றி ஆய்வு நிகழ்ந்தது. இதற்காக இரசியர் முத லில் 'லயிக்கா' என்னும் நாயை விண்கலத்தில் அனுப்பினர். அமெரிக் கர் குரங்குகளை அனுப்பினர். அதன் பின்னர் 1961 ஏப்பிரல் 12 ஆந் தேதி இரசியா யூரி ககாரின் என் பவரை விண்வெளிக்கு அனுப்பியது. இவரே முதன்முதலாக விண்வெளியில் மிகக் குறுகிய நேரத்திற் புவியைச் சுற்றி வந்த மனிதராவர். இவர் கடல் மட்டத்திலிருந்து 110 மைல் முதல் 205 மைல் வரை வேறுபட்ட உயரத் திற் புவியை ஒருமுறை வலம் வந்தார். இந்த விண்கலம் மணிக்கு 17,000 மைல் வேகத்திற் புவியைச் சுற்றிவர எடுத்த நேரம் 1 மணி 48 நிமிடங்கள். இந்த விண்கலத்தின் பெயர் 'வொஸ் டொக் 1 . இதன் பின்னர் 1961 மே 5 ஆந் தேதி அமெரிக்கர் 'பிரீடம் 7' என்னும் விண்கலத்தில் அலன் செப் பேட் என்பவரை விண்வெளிக்கு அனுப்பினர். இவர் புவியை வலம் வரவில்லை. கடல் மட்டத்திலிருந்து 115 மைல்களுக்கு நேரே மேலெழும்பி 15 நிமிடம் 22 செக்கன் கழிந்தபின் அத்திலாந்திக்குச் சமுத்திரத்தில் வீழ்ந் தார். அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த ஹெலிகொப்டர் ஒன்று அவரை மீட்டது. மனிதர் விண் வெளிக்குச் சென்ற இந்த ஆய்வுப் பயணங்கள் சந்திரனை நோக்கிய பய ணத்தின் முதற் கட்டமாகும்.
1966 சனவரி 31 ஆந் தேதி இரசியாவின் "லூனு 9' என்னும் விண்கலஞ் சந்திர மேற்பரப்பில் மெல்ல இறங்கியது. அதே ஆண்டு மே மாதம் 30 ஆந் தேதி 'சேவேயர்

1' என்னும் அமெரிக்க விண்கலமுஞ் சந்திரனில் மெல்ல இறங்கியது. இது காறும் சந்திர ஆய்வுப் பயணங்களில் முதலிடம் வகித்து வந்த இரசியா மனிதனைச் சந்திர மேற்பரப்பில் இறக் கும் முயற்சியிற் பின்னடைந்தது.
நீல் ஆம்ஸ்ரோங், எட்வின் அல் டிரின், மைக்கல் கொலின்ஸ் என்ற விண்வெளி வீரர் மூவரைக் கொண்ட அப்போலோ 11 என்னும் அமெரிக்க விண்கலம் 1969 யூலை 16 ஆந் தேதி சந்திரனை நோக்கிப் புறப் பட்டது. அது 20 ஆந் தேதி சந்திர மேற் பரப்பில் இறங்கியது. ஆம்ஸ்ரோங் சந்திர மேற்பரப்பில் முதன்முதலாகக் காலடி வைத்து வரலாற்று முக்கியத்து வம் பெற்ற பெரியதொரு சாதனையை நிறைவேற்றினர். அப்பொழுது அவர் கூறியதாவது: "இது மனிதன் ஒரு வனுக்குச் சிறியதொரு காலடி, ஆயின் மனித குலத்துக்கு அளப்பரியதொரு சாதனை சந்திரக் கலம் யூலை 21 ஆந் தேதி சந்திரனிலிருந்து புறப்பட்டு, மேலே சுற்றிக்கொண்டு இருந்த தாய்க் கலத்தில் இணைந்து, விண்வெளி வீரர் கலம் மாறிய பின்னர் புவி நோக்கிய பயணந் தொடங்கியது. இவர்கள் யூலை 24 ஆந் தேதி பசிபிக்குச் சமுத் திரத்தில் வந்து இறங்கினர். இவர்கள் சந்திர மேற்பரப்பிலிருந்து மண்ணும் பாறைகளும் எடுத்துக்கொண்டு வந்த GÕTri .
இரசியருஞ் சந்திர மேற்பரப்பிலி ருந்து மண் எடுப்பதற்காக 1970 செப்டெம்பர் 12 ஆந் தேதி "லூனு 16' என்னும் விண்கலத்தை வல வரின்றி அனுப்பினர். இது சந்திரனில் இறங்கி, புவியிலிருந்து செய்த கட்டுப் பாட்டின்படி, சந்திர மேற்பரப்பைத் துளைத்து 101 கிராம் நிறையுள்ள
45

Page 48
சந்திரனில் முதற் கால் வைத்தல் மண்ணை எடுத்து, பொதியாகக் கட் டிக்கொண்டு, சந்திரனிலிருந்து புறப் பட்டுப் புவியை வந்து சேர்ந்தது. செவ்வாய் ஆய்வு
இரசியா 1962 நவம்பர் 1 ஆந் தேதி ''மார்ஸ் 1'' என்னும் விண் கலத்தைச் செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அனுப்பியது. இது அக்கிரகத் திற்கு அண்மையாற் சென்று, அக் கிரகம் பற்றிய விவரங்களை அனுப் பியது. அமெரிக்கா 1964 நவம்பர் 28 ஆந் தேதி செவ்வாயை நோக்கி அனுப்பிய ' 'மரினர் 4' ' என்பது அக் கிரகத்தின் மேற்பரப்பைப் படம் பிடித்தது. அதன் வளிமண்டலத்தை யும் ஆராய்ந்தது.
46

1971 மே 19 ஆந் தேதி இரசியா அனுப்பிய ''மார்ஸ் 2 ' ' என்பது நவம் பர் 22 ஆந் தேதி செவ்வாயின் மேற் பரப்பில் இரசிய இலச்சினை தாங்கிய கலம் ஒன்றை இறக்கியது. முதன் முதலாகச் செவ்வாய்த் தரையில் இறங்கிய மனிதனால் ஆக்கப்பட்ட பொருள் இதுவேயாம். அதன்பின் னர் சென்ற ' 'மார்ஸ் 3' ' என்பது அக்கிரகத்தில் மெல்ல இறங்கி, 20 செக்கன்களுக்குத் தொலைக்காட்சிப் படங்களையும் பிற தகவல்களையும் அனுப்பிய பின்னர் செயலற்றுப் போனது. 19 73 யூலை-ஒகஸ்ட் மாதங் களில் ''மார்ஸ் 4'', ''மார்ஸ் 5'', ' 'மார்ஸ் 6' ', ' 'மார்ஸ் 7' ' என்பன அனுப்பப்பட்டன.
செவ்வாயின் ஆகக்கூடிய வெப்ப நிலை 75° ப. என்றும் ஆகக் குறைந்த வெப்பநிலை-100 • ப. என்றும் “ 'மரினர் 6'', ''மரினர் 7 ' ' என்ற விண்கலங் கள் அறிவித்தன. 1877 இல் இத்தா லிய வானியலறிஞரான ஸியாப் ரெல்லி என்பவர் தொலைநோக்கி மூலம் ஆராய்ந்து, செவ்வாய் மேற் பரப்பிற் கால்வாய்கள் இருப்பதாகக் கூறினார். 1890, 1905 ஆண்டுகளில் தொலைநோக்கி மூலம் அவதானித்த ஆங்கில விஞ்ஞானியான லொவல் என்பவர் ஸியாபரெல்லியின் கூற்றை உறுதிப்படுத்தினார்.
ஆயிரமாயிரம் மைல் நீளமுள்ள இக்கால்வாய்கள் அக்கிரக முனைவு களில் உள்ள பனிக்கட்டி உருகிய பொழுது கிடைக்கும் நீரை முழுக் கிரகத்துக்கும் பாய்ச்சுதற்காக அமைக் கப்பட்டவை என்று லொவல் கூறி னார். எனவே, அங்குள்ள மக்கள் பொறியியலிற் சிறந்த அறிஞர்களாக . இருக்க வேண்டும் என்று அவர் கருத்

Page 49
துத் தெரிவித்தார்.
இதற்கு மாறான தகவல்களைத் தந் தவை " 'மரினர் 6' ', ' 'மரினர் 7 ' ' என்ற விண்கலங்கள். அக்கிரகத்தின் முனைவுகளில் உள்ளவை காபனீரொட் சைட்டுக் கட்டிகள் என்றும் அதி லுள்ள கால்வாய்கள் சந்திரனில் உள்ள பள்ளங்கள் போன்றவை என் றும் அக்கலங்கள் அறிவித்தன. ஒட் சிசன், நீர் ஆகியன அங்கு இல்லை. எனவே, அங்கு உயிரினங்கள் இல்லை என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறு கின்றனர். பங்கசு, பற்றீரியா என்பன இருப்பது பற்றி முடிவு செய்யப்பட வில்லை. ஆயினும், மனிதர் போன்ற உயர்ந்த உயிரினங்கள் அங்கு இல்லை என்பது தெளிவு. வெள்ளி ஆய்வு
அமெரிக்கா 1962 ஓகஸ்ட் 27 ஆந் தேதி ' 'மரினர் 2'' என்னும் விண் கலத்தை வெள்ளிக் கிரகத்தை நோக்கி அனுப்பியது. இது அக்கிரகத்துக்கு அண்மையாற் சென்று, அதன் வளி மண்டல வெப்பநிலை, மேற்பரப்பு வெப்பநிலை, காந்தப்புலம் முதலிய தரவுகளைப் பெற்றது.
இதன் பின்னர் 1965 நவம்பர் 16 ஆந் தேதி இரசியர் அனுப்பிய ''வெனரா 3' ' என்பது வெள்ளிக் கிரகத்திற் சென்று மோதியது. இதுவே, முதன்முதலாக வேறொரு கிர கத்தைச் சென்றடைந்த விண்கலமா கும். 1970 இல் அனுப்பிய ' 'வெனரா 7'' என்பது முதன்முதலாக வெள்ளிக் கிரகத்தின் மேற்பரப்பில் மெல்ல இறங்கியது. பின்னர் 1972 இல் 'வெனரா 8" அனுப்பப்பட்டது. 1975 யூன் 8 ஆந் தேதி அனுப்பிய ''வெனரா 9' ' என்பது 136 நாட்கள்

பயணஞ்செய்து 1975 ஒக்டோபர் 22 ஆந் தேதி வெள்ளியில் இறங்கியது. இதன் வானொலித் தொடர்புக் கரு விகள் 53 நிமிட நேரந் தொழிற் பட்டன. 1975 ஒக்டோபர் 25 ஆந் தேதி இறங்கிய ' 'வெனரா 10'' என் பதன் வானொலித் தொடர்புக் கரு விகள் மிகக் கூடிய நேரம், அஃதாவது 65 நிமிட நேரந் தொழிற்பட்டன.
இக்கிரகத்தின் மேற்பரப்பு வெப்ப நிலை 500' ச. (900' ப.). வளி அமுக் கம் புவியில் உள்ளதிலும் 90 மடங்கு அதிகம். எனவே, அங்கும் உயிரினங் கள் இருத்தல் இயலாது. அங்கு இறங் கிய விண்கலங்களும் இத்தகைய வெப் பம், அமுக்கம் ஆகியவற்றாற் பாதிக் கப்பட்டே செயலிழந்தன எனக் கரு தப்படுகின்றது. இக்கிரகத்துக்கு அண் மையால் அமெரிக்கரின் 3 கலங்கள் பறந்து சென்றன. மூன்றாவது விண் கலம் 1973 ஆம் ஆண்டு அனுப்பப் பட்டது. - இவ்வாறாக, இக்கிரகத்தை அணுகி ஆராய்வதில் இரசியர் முதலிடம் பெற் றுள்ளனர் என்பது புலப்படும். அண் மையிற் சென்ற ' 'வெனரா 9'', ''வெனரா 10' ' என்பவற்றின் தாய்க் கலங்கள் 850 மைல் அகலத்துக்கு அங்கு பரவியுள்ள முகிற் கூட்டத்தைப் படம்பிடித்துப் புவிக்கு அனுப்பியுள் ளன. விண்வெளியில் மனிதர் நடமாட்டம்
விண் வெளிக்குச் சென்றவர்களை மீண்டும் புவியில் இறக்குவதில் வெற்றி பெற்ற இரசியரும் அமெரிக்கரும் விண் வெளியில் நடமாடுதல் பற்றி ஆராயத் தொடங்கினர்.
சாதாரண மாக விண்வெளிக்குச்
47

Page 50
செல்வோர் அமுக்கக் கவசங்கள் அணிந்திருப்பர். 1964 இல் வொ கொட் விண்கலங்களிற் சென்றவர்கள் சாதாரண உடைகளை அணிந்திருந்
னர்.
|
விண்வெளியில் நடந்த இரசியர்
- 1965 மார்ச்சு 18 ஆந் தே ' 'வொஸ்கொட் 2 ' ' என்பது வில வெளியில் 108-309 மைல் உயர தில், மணிக்கு 17,500 வேகத்தி புவியை வலம் வந்தது. அது இரவு டாம் முறை வலம் வரும்பொழுது விண்வெளிக் கவசங்களோடு அலெக்சே லியோனோவ் என்பவ கலத்திலிருந்து வெளியேறி, 10 நிமிட நேரம் விண்வெளியில் நடந்தார். வின் கலத்தில் இணைத்திருந்த கயிறு ஒன்றை அவர் பிடித்திருந்தார். இ வாறாக விண்வெளியில் நடந்த முத மனிதர் என்ற சாதனையை இவர் நிரை வேற்றினார். விண்வெளியில் நடந்த
அமெரிக்கர்
1965 யூன் 3 ஆந் தேதி “ 'ஜெமின 4' ' என்பது 99-184 மைல் உயர திற் புவியை வலம் வந்தது. இது மணிக்கு 18,000 மைல் வேகத்தி பறக்கும்பொழுது எட்வேட் உவை என்பவர் கலத்துக்கு வெளியே சென்ற 21 நிமிட நேரம் விண்வெளியில் நட தார். இவர் 25 அடி நீளமான குழா! ஒன்றினால் விண்கலத்துடன் இணை. கப்பட்டிருந்தார். ஒட்சிசன் வாயு துப்பாக்கி ஒன்றிணைச் சுடுவதன் மூலம் அவர் தம் இயக்கங்களைக் கட்டுப்படு தினார்.

- 3• 2. .'
L
விண்வெளி வீரர் கலம்
மாறுதல்
1969 இல் இரசியா அனுப்பிய * 'சோயுஸ் 4' ', ' 'சோயுஸ் 5'' என் பன விண்வெளியில் வைத்து, ஒன்று டனொன்று இணைக்கப்பட்டன. பின் னர் ''சோயுஸ் 5'' இற் சென்ற விண் வெளி வீரர் கலத்திற்கு வெளியே வந்து விண்வெளியில் நடந்து, * 'சோயுஸ் 4' ' என்பதனுட் புகுந்த பின் இரு கலங்களும் பிரிந்து சென் றன. விண்வெளிப் பயணிகள் இவ் வாறு கலம் மாறியது வரலாற்றில் முதல் முறை இதுவேயாகும்.
இ . •6 •9 .5 --
S 2.
CH• D" அ• 9. (• • ஓ G• S. HT ப• 5
விண்வெளியில் ஆய்கூடம்
அமெரிக்கா அனுப்பிய விண்கலங் களுள் மிகப்பெரியது ' 'ஸ்கைலாப்'' என்பதாகும். இந்த ஆங்கிலப் பெயர் ஆகாய ஆய்கூடம் எனப் பொருள் படும். இதன் நிறை 80 தொன். இது ஒரு வீடு அளவு பருமன் உடையது. இது இரு மாடிகளையும் மூன்று அறை களையுங் கொண்டது. விண்வெளி வீரர் மூவர் நவீன வசதிகளோடு சாதாரண உடைகள் அணிந்து கொண்டு வாழக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன் றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து விட்டு ஓய்வு எடுக்க இங்கு வசதிகள் உண்டு. சூரிய ஒளியை மின்வலுவாக மாற்றி, அவ்வலுவால் இது இயங்கு கின்றது.
இக்கலம் வலவர் எவருமின்றி, 1973 மே 14 ஆந் தேதி வட அமெரிக் காவிற் கெனடி முனையிலிருந்து அனுப் பப்பட்டது. மே 15 ஆந் தேதி சாள்ஸ் கொன்ராட், ஜே. பி. ஹேர்லின், பி. ஜே. வெயிற்ஸ் என்போர் அப்

Page 51
போலோக் கலம் ஒன்றிற் சென்று, ஸ்கைலாப்புடன் தம் கலத்தை இணைத்து, அதற்குட் புகுந்தனர். இக் குழு விண்வெளியில் 28 நாட்கள் இருந்து ஆய்வுகளை நடாத்திவிட்டு 1973 யூன் 22 ஆந் தேதி மீண்டும் அப் போலோவினுட் புகுந்து புவிக்குத் திரும்பினர்.
"ஸ்கைலாப்' எட்டு வாரங்களுக்கு மனிதரின்றிப் புவியைச் சற்றிக் கொண்டு சென்றது. 1973 யூலை 28 ஆந் தேதி மூவரைக் கொண்ட இன் ணுெரு குழு அப்போலோ கலம் ஒன் றிற் சென்று 59 நாட்கள் ஆய்வுகளை நடாத்திய பின்னர் செப்டெம்பர் 25 ஆந் தேதி புவிக்குத் திரும்பியது மேலும் 5 வாரங்கள் கழிந்த பின்னர், ஜெராட் பீ. கார், எட்வேட் ஜி. கிப்சன், உவில்லியம் ஆர். போக் என் னும் மூவர் 1973 நவம்பர் மாதத்தில் ஸ்கைலாப்புக்குச் சென்று, 84 நாட் கள் அதிலே தங்கியிருந்து ஆய்வுகள் நடாத்திவிட்டு, 1974 பெப்புருவரி 8 ஆந் தேதி புவிக்குத் திரும்பினர்.
விண்வெளியிற் சோயுஸ்
 

விண்வெளியில் மிகக் கூடிய காலம் வாழ்ந்தவர்கள் இவர்களாவர். புவி யொழுக்கில் இவர்கள் சென்ற தூரம் 3, 45,00,000 மைல்கள். புவி மேற் பரப்பில் எந்த வகையான போக்கு வரத்துச் சாதனத்தாலும் ஒருவரும் இவ்வளவு தூரத்தைத் தம் வாழ்நா ளிற் கடந்திருத்தல் இயலாது. இப் பொழுது இக்கலம் 270 மைல் உயரத் தில் 93 நிமிடத்துக்கு ஒருமுறை புவியை வலம் வருகின்றது.
விண்வெளியில் சோயுஸ்அப்போலோ இணைதல்
சோயுஸ் விண்கலத்தில் அலெக்செய் லியனெவ் தலைமையில் வலேரி குப செவ் என்பவர் சென்றார். அப்போ லோவில் தோமஸ் ஸ்ராவ்வோட் தலை மையில் வான்ஸ் பிரான்ட், டொன ல்ட் சிளேடன் ஆகியோர் சென்றனர். இரு கலங்களும் விண்வெளியில் 2 நாட்களாக ஒன்றனை ஒன்று கலைத்துச் சென்றன. இறுதியில் 1975 யூலை 17 ஆந் தேதி அத்திலாந்திக்குச் சமுத்
அப்போலோ இணைதல்
皇9

Page 52
திரத்துக்கு மேல் 140 மைல் உயரத் தில் இரு கலங்களும் இணைந்தன ஸ்ராவ்வோட் இணைப்புக் குழாயினு டாகச் சென்று “சோயுஸ் 19' என் னும் கலத்தினுட் புகுந்தார். விண் வெளி ஆய்வு யுகத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுப் போட்டியின் விளைவு சமா தானம் என்பதை உலகிற்கு அறிவுறுத் தும் வகையில், ஸ்ராவ்வோட் லிய ணுெவுடன் விண்வெளிக் கலத்தினுள் முதன்முதலாகக் கை குலுக்கினர். பின்னர் சிளேடனுஞ் சோயுஸ் கலத் தினுட் புகுந்தார். அக்கலத்தினுள் நால்வரும் உணவு அருந்தினர். விஞ் ஞான முன்னேற்றம் மிருந்த இக்கா லத்தில் உலகப் போர் மூண்டால் மனித குலமே முற்றுக அழிந்துவிடும் என்று அஞ்சிக் கொண்டு இருந்த உலக சமுதாயத்தைச் சாந்திப்படுத்திய இந் நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் உடையதென்று கூறவேண்டியதில்லை. விண்வெளி ஆய்வின் பயன்
இப்பொழுது பல செய்ம்மதிகள் மனித்னுக்கு நேரடிப் பொருளாதாரப் பயன் உடையனவாகப் புவியை வலம் வருகின்றன. இவை பிரயோகச் செய்ம்மதிகள் எனப்படும். இவை செய்தித் தொடர்புச் செய்ம்மதிகள், புவி ஆய்வுச் செய்ம் மதிகள், கலமோ டற் செய்ம்மதிகள் என மூன்று வகைப் படும். செய்தித் தொடர்புச் செய்ம்மதிகள்
செய்தித் தொடர்பு நோக்கத்திற் காகப் பல செய்ம்மதிகள் அனுப்பப் பட்டன. ஆரம்பத்தில் அனுப்பப்பட் டவை மந்த ஆற்றல் உடையன. அமெரிக்கரின் ''எக்கோ 11 *எக்கோ 2' என்பவை அவ்வகையைச் சேர்ந்
50

தவை. இவை வானெலிச் சைகை களைத் தெறிப்படையச் செய்யும் ஆற் றல் மட்டும் உடையன.
பிற்காலத்தில் அமெரிக்கா, இர சியா ஆகிய நாடுகளால் அனுப்பப் பட்ட செய்ம்மதிகள் துரித ஆற்றல் உடையன. இவை வானுெலிச் சைகை களை உள்வாங்கி, உருப்பெருக்கி, புவி யிலுள்ள நிலையங்களுக்கு அனுப்பும் ஆற்றல் உடையன. இவை புவியின் மேல் 22, 000-23,000 மைல் உயரத் திற் புவியை வலம் வருகின்றன. இவற் றைப் பயன்படுத்திச் சர்வதேசத் தொலைபன்னி, தெலட்சு, தொலைக் காட்சித் தொடர்புகளை ஏற்படுத்தல் இயலும். முழு உலகையுந் தொடர்பு படுத்தப் பசிப்பிக்குச் சமுத்திரம். அத் திலாந்திக்குச் சமுத்திரம், இந்து சமுத் திரம் ஆகியவற்றுக்கு மேலே இத்த கைய மூன்று செய்ம்மதிகளை அனுப்பி ணுற் போதும். مح۔ அமெரிக்கச் செய்ம்மதிச் செய்தித் தொடர்புச் சேவை
இது ஆங்கிலத்தில் 'இன்டெல்சற்’ எனப் பெயர்பெறும். இது அமெரிக்க "கொம்சற்ஸ்' நிறுவகத்துக்கு உரி யது. இதில் அங்கம் வகிக்கும் நாடு களின் தொகை 90க்கும் அதிகமாகும். இலங்கையும் இதில் அங்கத்துவம் பெற் றுள்ளது.
இதற்காக அனுப்பப்படுஞ் செய்ம் மதிகளின் பெயரும் 'இன்டெல்சற் எனப்படும். உதாரணமாக, 1971 சன வரியில் அனுப்பப்பட்ட 'இன்டெல் சற் 4 என்பது 3000-9000 தொலைபன்னிச் சுற்றேட்டங்களை அல் லது 12 நிறத் தொலைக்காட்சித் தொடர்புகளை ஏற்று, உருப்பெருக்கிப் புவிக்கு அனுப்பும் ஆற்றலுடையது. இவ்வகைச் செய்ம்மதிகளாற் செய்

Page 53
தித் தொடர்புகள் துரிதமாக நடை பெறுதல் சாலும். இரசிய செய்ம்மதிச் செய்தித் தொடர்புச் சேவை
இது ''இன்டர்ஸ்புற்னிக்'' எனப் படும். இதற்காக அனுப்பப்படுஞ் செய்ம்மதிகள் * 'மொல்னியா'' எனப் படும். பொதுவுடமை நாடுகள் இச் சேவையிற் பங்கு பெறுகின்றன.
புவி ஆய்வுச் செய்ம்மதிகள்
இவை புவியின் அமைப்பு, அதன் வானிலை, வளங்கள், இராணுவக் கண் காணிப்பு ஆகிய பல தேவைகளுக்கான
ஒளிப்படங்களை அனுப்புகின்றன.
1961 இல் ''ரைறோஸ்'' என்னும் செய்ம்மதி சூறாவளி ஒன்று வருவ தாக முன் எச்சரிக்கை செய்தது. இத னால் 3,50, 000 பேர் அதன் பாதை யிலிருந்து விலகி, சேதத்தைக் குறைத் தனர். 1969 இல் வட அமெரிக்கா வின் தென் பகுதியைத் தாக்கிய ''கமிலி' ' என்னும் அரிக்கன் புயல் பற்றியுஞ் செய்ம்மதித் தகவல் கிடைத் தமையால் 50,000 பேர் உயிர் தப்பி
னர்.
புவியின் உருவம் பற்றியும் புதிய செய்தி கிடைத்துள்ளது. அஃதாவது, புவியின் மையத்திலிருந்து வட முனை வுக்கு உள்ள தூரம் அம்மையத்திலி ருந்து தென் முனைவுக்கு உள்ள தூரத் திலும் அதிகம் என்பதாகும். மேலும் புவியின் முகில் அமைப்புக் கோளப் பருமனில் ஆயிரக்கணக்கான மைல் களுக்குப் பரந்துள்ளது என்றும் இத னைக் கொண்டு வானிலையை நுட்ப மாக எதிர்வு கூற முடியும் என்றுந் தெரிய வந்துள்ளது.

கலமோடற் செய்ம்மதிகள்
இவை முதலில் நீர்மூழ்கிக் கப்பல் களின் நிலைகளை அறிவதற்காகப் பயன் படுத்தப்பட்டன. இதுவரை காலமும் கலங்கரை விளக்கங்கள் கப்பல்களுக்கு வழிகாட்டின. தரையில் உள்ள நிலை யங்கள் விமானங்களுக்கு உதவின. இவை மந்தாரம், மழை, மூடுபனி முதலியன உள்ள போது பயனற்றன வாகின்றன. இன்றோவெனின், கல மோடற் செய்ம்மதிகள், வானிலைத் தன்மை எவ்வாறு இருந்தபோதிலும், கலங்களின் நிலையைக் கண்டுபிடிக்கின் றன. விண்வெளி ஆய்வால் இலங்கை பெறும் நன்மை
'இன்டெல்சற் ' ' சேவையைப் பெறுதற்கு இலங்கையும் அங்கத்துவம் பெற்றுள்ளது என்பதை ஏலவே கூறி னோம். இதற்கு முதற்படியாகப் பாது க்கை என்னும் இடத்திலே தரை நிலை யம் ஒன்று அமைக்க 1975 ஆம் ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டது . இங்கே கோப்பை வடிவான, 95-105 அடி விட்டமுள்ள (ஏரியல்) மின்னலைக் கருவி நிறுவப்பட்டுள்ளது. இது நிறு வப்பட்ட பின் பிறநாட்டுத் தந்தித் தொடர்புகள் இதன் வழியாக நடை பெறுகின்றன.
இலங்கையில் வாழ்கின்ற பிரித்தா னிய விஞ்ஞானியும் எழுத்தாளரு மான ஆதர் கிளார்க் என்பவர் கொழும்பில் வசிக்கும் இல்லத்திற் செய்ம்மதித் தொடர்புத் தொலைக் காட்சிக் கருவி 1975 ஓகஸ்ட் 11 ஆந் தேதி நிறுவப்பட்டுள்ளது. இது இந் திய அரசாங்கத்தால் அவருக்கு இல வசமாக வழங்கப்பட்டது. இதுவே
51

Page 54
உலகில் முதன்முதலாகத் தனியார் வீடொன்றில் அமைக்கப்பட்டுள்ள நேரடிச் செய்ம்மதித் தொடர்புடைய தொலைக்காட்சிக் கருவியாகும். இது 15 அடி விட்டமுடைய உணர் கொம் புக் கோப்பை ஒன்றினை உடையது. இது அமெரிக்கரின் பிரயோகத் தொழில்நுட்பச் செய்ம்மதியான ஏ. டீ. எஸ். 6 என்பதைப் பயன்படுத்து கின்றது.
இந்தச் செய்ம்மதியைப் பயன் படுத்தி இந்திய அரசாங்கம் பல கிரா மிய மக்களுக்கு உடல் நலமும் பயிர்ச் செய்கையும் பற்றி அறிவு புகட்டு கின்றது. 'செய்ம்மதி வழிக் கல்வி புகட்டலுக்கான தொலைக்காட்சிப் பரிசோதனை' (ஆங்கிலத்தில் SITE) எனப் பெயர் பெறும் இத்திட்டம் 1975 ஒகஸ்ட் 1 ஆந் தேதி இந்திய அரசாங்கத்தாலே தொடக்கி வைக் கப்பட்டது.
வருங்கால ஆய்வு
இனி, புதன் கிரக ஆய்வு முக்கிய இடம்பெறும் வருங்காலத்தில் ஒரே விண்கலம் வியாழன்-சனி-புளூற்றே அல்லது வியாழன்-யூரேனஸ்-நெப் ரியூன் ஆகிய 3 கிரகங்களுக்கு அய லாற் செல்லும் வகையில் அனுப்ப
52
 

அமெரிக்கர் திட்டம் வகுத்துள்ளனர்.
இப்பொழுது விண்கலத்தைத் தூக் கிச் செல்லும் 'ருெக்கற்’ எனப்படு கின்ற யந்திரம் புவியில் மீளப் பெறப் படுவதில்லை. எதிர்காலத்தில் இவை ஆகாய விமானம் போலப் புவிக்கு மீண்டு வரும். இதனுல் இத்தகைய ஆய்வுகளுக்கான செலவு மிகவும் குறைவாகும்.
சந்திரனில் நிரந்தரமாக விண்கல நிலையம் அமைக்கப்படும். சந்திரனின் ஈர்ப்புப் புவியின் ஈர்ப்பிலும் மிகக் குறைவாகையால், விண்கலங்கள் குறைந்த அளவு வலுவுடன் மேலே எழு தல் இயலும். எனவே, இந்த நிலையம் பிற கிரகங்களுக்குச் செல்வதற்கு ஏற்ற தளமாகப் பயன்படும். இனி, 2 ஆண்டுகள் நீடிக்கின்ற ஆய்வுப் பய ணத்தை மேற்கொண்டு மனிதன் செவ் வாய்க் கிரகத்தை அடைதல் சாலும். ஞாயிற்றுத் தொகுதி தவிர்ந்த ஏனைய உடுத்தொகுதிகளுக்குச் செல் வதற்கு இப்பொழுது வசதிகள் இல்லை.
விண்வெளி ஆய்வுகளின் பயனுக, 1980 ஆம் ஆண்டளவில் விண்வெளி வீரர்கள் அல்லாத பிறருஞ் செய்ம்மதி களிற் பயணஞ் செய்யும் வகையில், விண்வெளிப் போக்குவரத்து முறை முன்னேறும் என எதிர்பார்க்கப்படு கின்றது.

Page 55


Page 56