கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.01

Page 1
ஐனவரி 2014
ஞா
கலைஇலக்
5 பேர் ).
இனிற புத்தாண்டு - வாழ்த்துக்கள் ! )
www.gnanaminto www.gnanamik
கவலைப்பாராவா காம்பியா
இலக்கி
மலாட்டம்
கோசங்பரிசாகடிப்பு: ..
உதாராம்:-சம்:-

கியச்ஞ்சிகை
விலை:
மவித்தகர் டிணம் கர்த துரைசிங்கம்

Page 2
/ r తిరిగిన) తిగిJ2 గిరాజ2ంగ్రిడ(e.
Nüg|୩ JଔX) Designers and Manufact 22 kt Sovereign Gold a Ouality) ewellery
101, Colombo Street, Kandy. Te: O81 - 2232545
- ܢܠ
7ー
Suppliers to
DEALERS IN ALL KINDS FOOD COLOURS, F CAKE INGREI
76B, Kings St Tel: 081 - 2224187, 081 -
 
 
 

N
SÜ22) (203:S
Confectioners & Bakers
OF FOOD ESSENCES, OOD CHEMICALS, DIENTS ETC.
reet, Kandy. 2204480,081 - 4471563

Page 3
ஒளி:14 岳L音:●8
164
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர், ஸ்தாப்கிளி தி ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு
தொ.பேசி. 0 0094-11-2586013
0094-77-7306506 -- தொ.நகல் 0 0094-11-2362862 666COTUrb c WWW.gnanam.info
WWW.gnanam.lk தளம்.ஞானம்,இலங்கை ólstöřGUTEGšEFGð er editor@gnanam.info
editor(agnanam.lk 91s5666 c 3B-46th Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம் ( T Gnanasekaran
ACC. NO. — 00901034463 Hatton National Bank, Wella Watha BranCh. SWift Code: HBLILKLX (மணியோடர்மூலம் சந்தா அனுப்பு பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக அனுப்புதல் வேண்டும்) sFfŠS5T Gíslugub C -- Sri Lanka
ஒரு வருடம் ரூ 1,000/= ஆறு வருடம் ரூ 5,000/= ஆயுள் சந்தா:ரூ 20,000/=
ஒரு வருடம்| Australia (AUS) 50 Europe (e) 40 India (Indian R.S.) 1250 Malaysia (RM) OO Canada (S) 50 UK (f) 40 Singapore (Sin. S) 50 Other (USS) 50
)ேஞானம் சஞ்சிகையின் பிரசுரமாகும் படைப்பு கனின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள். )ே புனைபெயரின் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி, ஆகியவற்றை வேறாக இணைத் தன்வேண்கும். )ே பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்பகுத்த ஆசிரியருக்கு உரிமை யுண்கு. )ே படைப்புகள் கணினியின் தட்டச்சு செய்யப்பட்டு | மின்னஞ்சலின் அனுப்பப்படவேண்கும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)
 
 

ஷெல்லிதாசன் 05
பதியத்தளாவ பாறுக் 19 இ. ஜீவகாருண்யன் 28 கல்வயல் வே. குமாரசாமி 36 பாலமுனை பாறுாக் 27 ஏ. பாரிஸ் 54 த. ஜெயசீலன் 61 பேரா. கோபன் மகாதேவா 64
)ே கட்டுரைகள்
அந்தனி ஜீவா கந்தையா சண்முகலிங்கம் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் ச.ஜெயப்பிரகாஸ் வே. தில்லைநாதன்
சிறுகதைகள்
நவஜோதி ஜோகரட்னம் O6
நடேசன் II.
நெடுந்தீவு மகேஷ் 26
)ே பத்தி
கே. ஜி. மகாதேவா பேரா. துரை மனோகரன் கே. விஜயன்
இரசனைக் குறிப்பு வசந்தி தயாபரன் 40
சமகால இலக்கிய நிகழ்வுகள் கே. பொன்னுத்துரை 58
வாசகர் பேசுகிறார் 62
பயண இலக்கியக் கட்டுரை தி. ஞானசேகரன் 20
03
29
37
43
46
49
51
55

Page 4
ܡܫܬܠܒܒ= ܬ¬¬7 ܘ خلک ددوی خو لاl6lco, Cزه را2ي
மாமுனிதன் முனி அரசியல்வாதிகள் கற்றுக்கொள் 20ஆம் நூற்றாண்டின் மாமனிதரும் ம மண்டேலாவின் பேராற்றல் மிக்க பெரும் ப முடிவுக்கு வந்தது.
வெள்ளையரின் இன ஒடுக்கல் ஆட்சிமுை மக்களை விடுதலை செய்த மாபெரும் மனிதர், மண்டேலா, ஆபிரிக்க தேசிய இளைஞ ஒடுக்கலுக்கான சட்டமறுப்புப் போராட்டம் அவரை நகரை விட்டு வெளியேறக்கூடாது; க
தடைவிதித்தது. இந்நிலையில் மண்டேலா : கெரில்லாப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
ஆவணங்கள் அரசாங்கத்தின் பிடியில் அகப் பிரகடனப்படுத்தி மண்டேலாவுக்கும் அவரது விதித்தனர். சிறையில் இருந்தவண்ணமே மன யிருந்த சகாக்களின் உதவியோடு நடத்திக்
ஒடுக்கல் ஆட்சி அடிபணிந்தது. 27 வருடங்கள்
| மண்டேலா 1990 பெப்ரவரி 11ஆம் திகதி விடு
அடுத்த வருடம் தென்னாபிரிக்காவில் நை
மண்டேலா அமோகமான ஆதரவுடன் ஜ
தென்னாபிரிக்காவின் கடைசி வெள்ளையின
மண்டேலாவை 20ஆம் நூற்றாண்டின் மகத் குறிப்பிட்டார்.
மண்டேலாவின் தலைமைத்துவப் பண்பி
ஜனாதிபதியாகி ஐந்து வருடகாலம் பதவி வகித்
அதிகாரத்தில் இருந்து இறங்குவதற்கு அவர் 6
அவரது ஆயுட்காலம்வரை அவரே ஜனாதிபதி
தனது நாட்டின் ஜனநாயக மரபு ஆரோக்கியமா புகழை மையமாகக்கொண்ட செயற்பாடு ஆகி விரும்பினார்.
குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம், ம
விலகாமலே அரசியல் சூழ்நிலைக்கேற்ப தன்
| அவரது இந்த ஆற்றலே இன ஒதுக்கலை முடிவு | விளங்கியது.
அடுத்ததாக, நல்லிணக்கத்தைக் காண்பத
கடந்த காலத்தை மறந்து புதிய சிந்தனையுடன்( |திடசங்கற்பமும் விதந்து பாராட்டத்தக்கவை
வர்ணிக்கப்படுகிறது.
தனது முன்னாள் ஒடுக்கு முறையாளர்கை
செயற்பட்டார். மண்டேலா தன்னைச் சி
விருந்துண்டு மகிழ்ந்தார். தனது ஜனாதிப் ப கீதம் பாடும் வைபவத்திற்கு முக்கிய அதிதியா
தன்னைச் சிறையில் அடைத்த வெள்ளை இ
விருந்தளிக்க நூறுமைல்கள் பயணம் செய்தார் இதயத்திலிருந்து வெறுப்புணர்வை நீக்கிவிட்டால்
ன உலகத்துக்கு நிரூபித்துக்காட்டிய பெருமகனார், அ
இன்று நல்லிணக்கத்தை வேண்டிநிற்கின் கெல்லாம் வழிகாட்டும் முன்னுதாரண புரு
கொள்கைகளும் அணுகுமுறைகளும் உல.
ம் வழிகாட்டியாக அமையும்.
 
 
 
 
 
 
 
 
 

கத்தான அரசியல் வாதியுமான நெல்சன் யணம் 2013 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி
றைக்கு எதிராகப் போராடி தென்னாபிரிக்க
அவர். 5ர் அணியை 1944 இல் உருவாக்கி இன ) ஆரம்பித்தபோது அந்நாட்டு அரசாங்கம் | டிட்டங்களில் பங்கு கொள்ளக்கூடாது என்று I தனது சகாக்களுடன் சேர்ந்து காங்கிரஸின் அதுதெடர்பான திட்டங்களை விபரிக்கும் பட்டபோது அவரைப் பயங்கரவாதி எனப் து ஏழு தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை ன்டேலா தனது போராட்டத்தை வெளியே கொண்டிருந்தார். ஈற்றில் வெள்ளையரின் சிறையில் இருந்த 45564 இலக்கக் கைதியான தலையாகி வெளியே வந்தார். டபெற்ற சகல இனங்களுக்குமான தேர்தலில் னாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதி டபிள்யூ டி கிளார்க் அவர்கள் தான தலைவர்களில் ஒருவர் என விதந்து
பின் சிறப்பம்சமாகக் கருதப்படுவது அவர் ந்தபின் மீண்டும் பதிவிவகிக்க ஆசைப்படாது ாடுத்த முடிவாகும் அவர் விரும்பியிருந்தால் தியாக இருக்க மக்களின் ஆதரவு இருந்தது. | ான வழியில் செல்வதற்கு தனிமனித ஆளுமை, யவை தடையாக இருக்கக் கூடாதென அவர்
|ண்டேலா, தனது கொள்கையில் இருந்து | னது செயற்பாடுகளை மாற்றிக்கொண்டார். க்குக் கொண்டுவருவதில் முக்கிய காரணியாக
ற்கு அவர் கையாண்ட அணுகுமுறைகளும் முன்னோக்கிநகர்வதற்கு அவர் மேற்கொண்ட . இவை நவீன யுகத்தின ஒர் அதிசயம் என |
ளை மன்னிப்பதில் அவர் பெருந்தன்யுைடன் றைக்கனுப்பிய சட்டத்தரணியுடன் மதிய
க தனது சிறைக்காவலரை அழைத்திருந்தார். னப் பிரதமரின் விதவை மனைவிக்கு தேநீர்
நல்லிணக்கத்தையும் அமைதியையும் காணமுழயும் வர்.
நிலவுகின்ற நாடுகளுக் ார் மண்டேலா. அவரது மட்டுமல்ல இலங்கை

Page 5
இலக்கி
இன்று நம் மத்தியில், ஆர்ப்பாட்ட மில்லாமல் அமைதியாக இலக்கியப்பணி ஆற்றி வருகின்ற ஆளுமைமிக்கவர் கவிஞர் த. துரைசிங்கம். இவர் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக பத்திரிகை, கல்வி, இலக்கியம், குழந்தைக் கவிதைகள் என்று பல்வேறு துறைகளில் தனது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி வருபவர்.)
"அருள்நெறி இயக்கம் ஈழத்திருநாட்டில் உருவாகி, பெருகிவருகின்றது என்றால்அதற்கு மூலகாரணம் ஈழத்து இளைஞர்கள்தாம். முதியோர்கள் மூதுரை வழங்கி வழிகாட்ட, முன்னோக்கிப் பீடுநடை போட்டுச் செல்கின் றனர்இலங்கை இளைஞர்கள். அந்த இளைஞர் கள் வரிசையிலே யாழ்ப்பாணம், புங்குடுதீவு திரு. த. துரைசிங்கம் அவர்களுக்குத் தனி இடம் உண்டு.
ஈழத்துப் பல்வேறு நாளிதழ்களுக்கும், நமது “மணிமொழி”க்கும் நிருபராக அமைந்து பெருமை தேடிக்கொண்டுள்ளார். அருள்நெறி இயக்கத்திற்கு அயராது தொண்டாற்றுபவர். திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளாரின் அபிமானத்தைப் பெற்றவர். அண்மையில் கொழும்பு விவேகானந்த சபையாரால் நடாத்தப்பெற்ற மகாவித்துவான் ஆறுமுக நாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியிலும் அகில இலங்கையிலும் முதற் பரிசு பெற்றவர்.”
இவ்வாறு தமிழ்நாடு அருள்நெறி மன்றத்தின் மாத சஞ்சிகையான "மணி மொழி”யில் (1956, மார்கழி மாத இதழில்) அறிமுகம் செய்யப்பட்ட இளைஞர்தான் நம்மவரான கவிஞர் த. துரைசிங்கம். இன்று நம்மிடையே நடமாடும் கலைக்களஞ்சிய மாக வாழும் கவிஞர் 04.09.1937இல் புங்குடுதீவில் பிறந்தார். -
இவருடைய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

கிய ஆளுமைமிக்க இலக்கிய வித்தகர், கலாபூஷணம்,
கல்) 4. அரைசங்கம்
தந்தையார் வீ. தம்பிராசா புகழ்பூத்த சித்த ஆயுர்வேத வைத்தியராவார். ஏழு தலைமுறைகளாக வைத்தியத்துறையில் இடையறாத ஈடுபாடு கொண்ட குடும்பம் ஒன்றில் தோன்றிய இவர் வைத்தியம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். இவரது தாயார் பெயர் சிவபாக்கியம். சிறந்த குடும்பத் தலைவியாக, பிள்ளைகளுக்கு வழி காட்டியாக விளங்கியவர்.
நாடறிந்த பேச்சாளரும், எழுத்தாளரும், யாழ் மாநகரசபையின் பிரதிமேயராகவும் விளங்கிய நாவேந்தன் இவரது மூத்த சகோதரராவார். யாழ் நகரில் வைத்தியத் துறையில் ஈடுபட்டுள்ள டாக்டர் த. சிவானந் தன், பாரிஸ் நகரில் வாழும் எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன், கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறைப் பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன்
ஆகியோர் இவரது தம்பிமாராவர். - கல்வித் துறையில் ஆர்வம்மிக்க கவிஞர் துரைசிங்கம் யா/நல்லூர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1957-1958 ஆம் ஆண்டுகளில் ஆசிரிய பயிற்சியை மேற்கொண்டார். பயிற்சி பெறும் காலத்தில் கலாசாலை வெளியீடான "கலா விருட்சம்” என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். பேரா தனைப் பல்கலைக்கழகக் கலைமாணி சிறப்புப் பட்டத்தையும் யாழ்-பல்கலைக்கழக கல்வி டிப்ளோமா சிறப்புச் சித்தியையும் பெற்றுக்கொண்ட இவர் ஆசிரியராக, அதிபராக, கோட்டக்கல்விப் பணிப்பாளராக, மாவட்டக்கல்விப் பணிப்பாளராக 38 ஆண்டுகாலம் கல்விப் புலத்தில் பணியாற்றி யுள்ளார். யுத்தப் பிரதேசமாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விப் பணிப்பாளராக (1995-1997, செப்டம்பர்
அந்தனி , ஜீவா 2

Page 6
வரை) இவராற்றிய பணிகள் என்றும் நினைவுகூரத் தக்கனவாகும்.
கல்வித்துறையில் மட்டுமன்றிக் கலைத் துறையிலும் மிக்க ஆர்வம் கொண்டவர் கவிஞர் துரைசிங்கம். இவருடைய இளமைக் காலத்தில் 1953இல் புங்குடுதீவில் “பாரதி கழகம்” என்ற அமைப்பினை நிறுவி பாரதி விழாக்களையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சிகளில் அன்றைய காலகட்டத்தில் பிரபல பேச்சாளர்களாக விளங்கிய வி. பொன்னம்பலம், تیجہ[• அமிர்தலிங்கம், நாவேந்தன், தேவன் - யாழ்ப் பாணம் போன்றவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளனர்.
III
இவரது ஆக்கங்களில் குறிப்பிடத்தக்கவை 1. அபிராமி அந்தாதி (பதவுரை, பொழிப்புரை,
விளக்கவுரை) 2. குழந்தைப் பாடல்கள் (1989) -
சாகித்தியமண்டல விருது பெற்றது. 3. பாலர்பாட்டு (1984) - யாழ் - இலக்கிய வட்ட விருது பெற்றது. 4. பாட்டுப்பாடுவோம் (1997) சாகித்தியமண்டல
விருதும் வ.கி. மாகாண சாகித்திய விருதும்பெற்றது. 5. பாருமாப்பா (1998) -
சாகித்தியமண்டல விருது பெற்றது. 6. பாப்பாப் பாட்டு (2000) - சாகித்திய
மண்டல விருது பெற்றது. 7. தமிழ் இலக்கியக் களஞ்சியம் 8. ஈழத்து இலக்கிய வரலாறு 9. இமய ஜோதி சுவாமி சிவானந்தர் 10. பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள் 11. இனிக்கும் பாடல்கள் படைத்த இருபது
கவிஞர்கள் 12. பாடம் புகட்டும் பழமொழிகள் (1, 2, 3
தொகுதிகள்) 13. வீரத்தின் வெற்றி (நாடகம்) 14. சிறுவர் பாடல்கள் (தேசிய நூலக
சபையின் நிதி உதவி பெற்றது.) 15. ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் 16. சிரிக்கும் பூக்கள் (சிறுவர் பாடல்கள்)

கவிஞர் த. துரைசிங்கம் யாழ்
புத்துயிர் பெறவும் நாட்டார் கலைகள் மறுமலர்ச்சி பெறவும் பல்வேறு இசை நடன, நாடகப் போட்டிகளையும் மாட்டுவண்டி, மரதன், நீச்சல் போட்டிகளையும் நடாத்து வதில் முன்னின்றுழைத்துள்ளார். யாழ்மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம், வட இலங்கை கிராமியக் கலைக்கழகம் என்பனவற்றின் செயலாளராக விளங்கி, இக்கலைகளின் மேம்பாட்டிற்காக உழைத் துள்ளார். யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தின் வெளியீடான
ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். நேபாளம், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, இந்தியா முதலான நாடுகளுக்கு இருமுறை பயணம் மேற்கொண்ட கவிஞர் துரைசிங்கம் அந்நாடுகளில் சிறுவர் இலக்கியம் தொடர்பான பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
சிறுவர் இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் இதுவரை 44 சிறுவர் நூல் களையும் பதினைந்து கட்டுரை நூல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட பாடநூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
31.3.1991இல் கண்டி கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவில் முன்னாள் பிரதமர் டி.பி. விஜய துங்கா அவர்களால் இவருக்கு இலக்கிய வித்தகர்" என்னும் பட்டமும் சாகித்திய விருதும் வழங்கப்பட்டது. 1997 1998 2000 ஆண்டுகளுக்கான சிறுவர் இலக்கியத் துறைக்கான சாகித்திய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 1984இல் யாழ்-இலக்கிய வட்டம் நடத்திய சிறுவர் நூற் பரிசுத் தேர்வில் இவரது “பாலர்பாட்டு" என்னும் நூல் முதற்பரிசினைப் பெற்றது. இலங்கை இலக்கியப் பேரவை நடத்திய மதுரகவி இ. நாகராசன் நினைவுச் சிறுவர் கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெற்றார். இவர் எழுதி வெளியிட்ட இனிக்கும் பாடல்கள் படைத்த இருபது கவிஞர்கள் என்னும் நூல் இலங்கை இலக்கியப் பேரவையின் விருதினைப் பெற்றது. 17.10.1999இல் திருகோணமலையில் நிகழ்ந்த வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் சாகித்திய விழாவில் சிறுவர் இலக்கியத்துறைக்கான சாகித்திய விருது இவரது “பாட்டுப் பாடுவோம்” என்னும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 7
நூலுக்கு வழங்கப் பட்டது. இவர் எழுதிய “வீரத்தின் வெற்றி” என்னும் நாடகநூல் தமிழகத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள பதிப்பகம் ஒன்றினால் வெளியிடப்பட்டது. அந்நூலின் 800 பிரதிகளைத் தமிழக அரசு கொள்வனவு செய்து தமிழ் நாட்டில் உள்ள நூலகங்களுக்கு விநியோகித்தமையும் குறிப் பிடத்தக்க செய்தியாகும்.
கவிஞர் துரைசிங்கம் எழுதிய சிறுவர் பாடல்கள் சில பாரிஸ் நகரில் இறுவட்டுக் களாகத் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப் பட்டுள்ளன. 1961-1965 காலப் பகுதியில் இலங்கை வானொலியில் கிராம சஞ்சிகை நிகழ்ச்சியில் இவரது நாடகங்கள், உரைச் சித்திரங்கள் பல - ஒலிபரப்பாகியுள்ளன. இவர் எழுதியுள்ள நூல்களில் மிகமுக்கிய மானவை: "பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்”, "தமிழ் இலக்கியக் களஞ்சியம்”, “ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு”, “பாடம் புகட்டும் பழமொழிகள்”, "விந்தைகள் புரிந்த விஞ்ஞானிகள்”, “ஈழத்துத் தமிழ் அறிஞர்கள்” என்பனவாகும்.
ஆனந்தன், பூங்குன்றன், புங்கையூரன், இளங்கோ ஆதியாம் புனைபெயர்களில் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் துரைசிங்கம் தமிழகத்திலிருந்து வெளிவந்த கரும்பு, உமா, கலைமன்றம், ரத்னபாலா, மணிமொழி ஆதியாம் சஞ்சிகைகளுக்கும் எழுதியுள்ளார்.
- இவரது நூல்கள் இன்றைய இளஞ் சந்ததியினருக்கு ஈழத்து இலக்கியம் பற்றிய பல தகவல்களைத் தருகின்றன. இவரது தமிழ் இலக்கியப்பணிகளைக் கௌரவிக்கும் வகையில் கலாசார அலுவல்கள் அமைச்சும் இந்துசமய பண்பாட்டலுவல்கள் திணைக் களமும் இணைந்து 17.12.2011 இல் கலாபூஷ ணம்; விருதினை வழங்கிக் கௌரவித்தது. மட்டக்களப்பு எழுத்தாளர் - ஊக்குவிப்பு மையம் 20.10.2013 இல் மீன்பாடும் மட்டுநகரில் தமிழியல் விருது வழங்கிப் பாராட்டியது.
கவிஞர் துரைசிங்கம் எண்பதை எட்டிப் பிடிக்க நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இளைஞரைப் போல எழுதுவதிலும் நூல கங்களில் பல தகவல்களைத் தேடித்தெரிந்து கொள்வதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இவரை ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம் என்றே கருதிடவேண்டும்; மதிக்கவேண்டும்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

குறும்(புக்) கவிதைகள்
ஷெல்லிதாசன்
இலட்சணம்! விவசாய விஸ்தரிப்பு உத்தியோகத்தரது விடுதியின் வாசற்படியோடு “பஜிரோ” வந்து நின்றது சப்பாத்து காலில் மண் ஒட்டாது களத்துக்கு அவரை ஏற்றிச் செல்ல!
அலட்சியம்!
'வானம் தெளிவாக இருக்கும்' வானிலை அறிக்கை சொன்னது எடுத்த குடையை அலட்சியமாய் எறிந்துவிட்டுப் போனேன் தொப்பையாய் திரும்பி வந்து தும்பிக் கொண்டு இருக்கிறேன்!
இலட்சியம்! கம்பலி முகாமைdாராக
வந்அவிட கண்ணெடுத்த பார்க்கும்படி கடவுளை வேண்டிக் கொண்டான்
வந்ததும்,
பாரைபும் கண்ணெடுத்துப் பாராமலிருப்பதில்
அவல் கவனமாக இருக்கின்றான்!)

Page 8
பெரர் எல்
“எடுக்கிற நேரமெல்லாம் 'போன்' ஒரே என்கேஜ்ட்தான். நாள் முத்தும் யாரோட கதைச்சுக்கொண்டிருக்கிறவளோ - தெரிய வில்லை?” 'படபட'த்துக் கொண்டு கதவைத் திறந்தவண்ணம் கேட்ட கணவனின் குரல் உச்சஸ்தாயியில் இருந்தது.
"நாள்முத்தும் கதைக்க வில்லையே! சிறிது நேரம் ரோகினியோடதான் கதைத்த னான்” நெஞ்சம் கேவி மனதுள் பதற்றம் நெளிவதுபோல் அவளின் குரல்.
'முசுறு மாதிரி மூஞ்சியை வைச்சுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்திட்டுது. இனி பிள்ளைகளும் நானும் பகிடிவிட்டுக்
சிறிது நேரடஞ்சம் கேட்ட குரல்.
கவிஞரும், சிறுகதை எழுத்தால் ஜோகரட்னம் ஈழத்தின் முற்போக்கு 8 எஸ். அகஸ்தியரின் மூத்த புதல்வியா
சூரியன்' என்ற கவிதைத் தொகுப்பு ஏற்கனவே பல சிறுகதைப் போட்டிகளி தொலைக்காட்சிகளிலும், வானொலி தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த அனு தற்போது பாமுகம் FA TV யில் அறிவி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குபவரா நடன நிகழ்வுகளில் மேடைத் தொகு லண்டனில் 'தமிழ் பெண் எழுத்தாளர்க ஆய்வுக் கட்டுரை பெரும் பாராட்டைப் பெ

நவஜோதி ஜோகரட்னம்
லண்டன்
Tற்பாயின,
லாம்..
கதைக்கேலாது. சிரிக்கேலாது. அறைகளுக்க முடங்கவேண்டியதுதான். வாய் திறந்து ஒரு வார்த்தையும் கதைக்க ஏலாது. உடனேயே அடியே பிடியேயெண்டு சண்டையில தொடங்கிவிடும். வேறு ஏதோ வருத்தம் போல' என்று தனக்குள் எண்ணியவளுக்கு கோபமும் அழுகையும் வந்தது.
“பொய் சொல்லாதையடி சனியனே! நாள் முழுதும் வீட்டில இருந்துகொண்டு போனில அளந்து கொண்டிருக்கிறதுதான் தொழில் இவளுக்கு” என்று அவன் கொதித்தான்.
"நாள் பூராகவும் வீட்டிலை எப்படி என்னால் சும்மா இருக்கமுடியும்? எனது
மரும், கட்டுரையாளருமான நவஜோதி இலக்கியவாதியான பிரபல எழுத்தாளர் Tவார். இவரது எனக்கு மட்டும் உதிக்கும் 2005 ஆம் ஆண்டில் வெளியாகியது. ல் வெற்றியீட்டியுள்ளார். லண்டன் தமிழ் களிலும் அறிவிப்பாளராகவும், நிகழ்சித் பவம் கொண்ட நவஜோதி ஜோகரட்னம் ப்பாளராகவும் 'மகரந்தச் சிதறல்' என்ற கவும் பணிபுரிகிறார். லண்டனில் இசை, நப்பாளராக நன்கு அறியப்பட்டவராவார், கள்' என்ற தலைப்பில் இவர் எழுதிய கள பற்றுள்ளது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (184)

Page 9
மூன்று பிள்ளைகளின் வேலைகள். வீட்டு வேலைகள் யார் செய்கிறது? நான்தானே செய்கிறேன்.”
"தேவடியாள். பொத்தடி வாய். இனிமேல் ஒண்டும் கதைக்காதையடி என்னோட. எந் நேரமும் கண்டவை எல்லாரோடையும் கதைக்கிற பரதேசி நாய்.”
வழுவழுத்த உறுதியோடு தனக்குள்ளேயே ஒரு உலகை அவள் உருவாக்கிக்கொண் டிருந்தாள். வாக்குவாதங்கள் உருவெடுத்தது. எதிர்பாராதவிதமாக எங்கெங்கோவெல்லாம் அறைகள் விழுந்தன. தலை, தோள், முதுகு, முகம் என்று மூர்க்கத்தனமான உதைகள். அவளின் கண்களில் நீர் கோத்துக் கொண்டேயிருந்தது. துக்கங்கள் அவளைக்
குறுக வைத்துக்கொண்டிருந்தன.
புலம்பெயர்ந்து மேல்நாடுகளுக்கு வந்தும் கூட ஆண்கள் சிலர் தம் கோரமுனைகளில் வாழ்வை நகர்த்துகிறார்கள். யாரோடும் போன்செய்து கதைக்கக் கூடாது, வாசிக்கக் கூடாது, தொலைக்காட்சி பார்க்கக் கூடாது, இன்டனெற் பார்க்கக் கூடாது என்று தடைகளைக் குவித்தால் ஒரு பெண் என்ன செய்வது? தினமும் வேலையிலிருந்து திரும்பும் கணவனின் கடுகடுப்பும், படபடப் பும் பதற்றத்தையும் பரிதவிப்பையும் அவ ளுள் குமைப்பது இயல்பாகிவிட்டது. இன்றும் குளிர்மையில் நகர்ந்து இனிமையில் விரிந்துகொண்டிருந்த அழகான மாலை நேரத்தை அவன் நச்சிலே நெய்து வீசிய சொற்களும் செயல்களும் நொறுக்கிச் சிதைத்துவிட்டன.
வலிந்து இளமைப் பருவத்தின் இனி மையான நினைவுகளைத் தன் விழித்திரையில் நிறுத்திப் பார்க்கிறாள். பிள்ளைப்பருவத்தில் அவளை நேசித்தவர்களின் கொஞ்சல்கள். சிறுமியாக இருந்தபோது அவளை அயல வர்கள் அன்பால் நெகிழ வைத்த நிகழ்வுகள். பாடசாலைக்கு ஆயத்தமாகும் வேளைகளில் குழந்தைப்பிள்ளைபோல் எண்ணி அவசர அவசரமாகப் பாசத்தின் அதட்டலோடு அம்மா தீத்திவிட்ட அன்பான காலை உணவு. வயற்பரப்பில் நடந்துபோகையில் மலர்களை நுகர்ந்து பார்த்த அழகிய கணங்கள், பாடசாலை, கலாசாலை என்று அவள் பணியாற்றும் காலங்களில் அவளின் மெலிந்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

அமரர் செம்பியன் செல்வன்
ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற சிறுகதை
உடலை நோகவிடாது அவளின் பொதிகளைச் சுமந்த தந்தையின் ஆசைக் கரங்கள். அவரின் அன்பான வார்த்தைகள்... அவள் பாதங்களை மோதி மோதி சிலிர்ப்பூட்டி கூச்சலிடவைத்து நடனமாடிய கடல் அலைகள்...
பொங்கிவரும் பெருநிலவில் ஹிக்கடுவ கடற்கரை மணலில் கால்புதைய நடந்து, கைகோத்து காதல்மொழி பேசியவனா இவன்?
கண்டியின் விரிந்தகன்ற வாவிக்கரையில் அமர்ந்து, தென்றல் வருடிச்செல்லும் சுகத்தில் திளைத்து, அவள் கூந்தலைக் கோதி எதிர் காலச் சொப்பன உலகை அவள் மனதில் கட்டி எழுப்பியவனா இவன்?
ஆசிரியை பயிற்சிக் கலாசாலையில் எந்தக் காதலனின் பாசம் பொங்கும் கடிதங் களுக்காகக் காத்துக் கிடந்தாளோ அந்தக் கடிதங்களை எழுதியவனா இவன்?
மனிதர்கள் - இப்படியும் உருமாறிப் போவார்களா?
காஃப்காவின் 'உருமாற்றம்' கதையில்வரும் ஒரு விற்பனைப் பிரதிநிதி திடீரென்று பெரும் கரப்பான் பூச்சியாய் மாறியது மாதிரி இவனும்
அசுத்த மிருகமாய் மாறிவிட்டானோ?
அவனின் மிருகத்தனமான நடத்தைகளை அவளால் அப்போது கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கமுடியாது.
இரத்தப் பிசுபிசுப்போடு அவளின் முதல் குழந்தையின் பிஞ்சு உடலை உச்சிமோர்ந்து சுகித்து மகிழ்ந்த கணங்கள் இன்று நினைவில் கரைந்தே போய்விட்டன. இன்று மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி, மனங்கள்

Page 10
பசுமை இழந்து, வெம்மையில் தகிப்பதாய் உணர்கிறாள்.
அவள் முகம் வீங்கிச் சிவந்து கொப்பளித்துக் கொண்டிருந்தது.
சிறு சிறு விடயங்களையெல்லாம் பெரிது படுத்தி பிரச்சனையாக்கிக் கொண்டால் வாழ்வு என்னாவது? வாய்திறந்து அவனிடம் ஒரு சொல்லோ கருத்தோ கதைக்க இயலாது.
"குளியலறைக்குச் சென்றால் சற்றுத் துப்புரவாக்கிவிட்டு வந்தால் எல்லோ ருக்கும் நல்லது. பிறகு நான்தான் படிந்து போன ஊத்தைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருக்க வேண்டும். எல்லோரும் ஒத் துழைத்தால் வீடு ஒழுங்காகத் துப்புரவாக இருக்கும்தானே!”
தான் பௌவியமாகச் சொன்னதாகத்தான் அவளின் நினைப்பு.
“தொடங்கிட்டாள்; பரத்தைக்கு எந்த நேரமும் பைத்தியக் கதைதான். என்னைக் கண்டால் எதிரியைக்கண்டதுமாதிரி ஏதாவது தொடங்கிவிடுவாள்.. மற்ற எல்லோருடனும் நடிச்சுக் கதைப்பாள். அவளுக்கு வாய் சும்மா கிடவாது. வெட்கம் கெட்ட நாய். பிள்ளைகளோடு எங்காவது போய் செத்துத் தொலைகிறாளில்லை.”
அன்று தலையில் பட்ட அடி சற்று வித்தியாசமான வலியை ஏற்படுத்தியது அவளுக்கு. மிரள்கின்ற தனது குழந்தைகளின் விழிகளை நோக்கினாள். கரகரத்தது கண்ணீர். அடுத்தடுத்து சுழலும் யோசனைகளால் கணங்கள் பிய்ந்துகொண்டிருந்தன.
லண்டனில் பெட்டிகளை அடுக்கியது போன்ற அப்பாட்மென்ட் வீடுகளின் செயற் கைத் தன்மையும், கல்லறைத் தன்மை கொண்ட அமைதியான சூழலும் சேர்ந்து அவளை அச்சுறுத்துவது போல் இருந்தது. அழுகையும், விசும்பல்ளோடு விம்மல்களும், விறைத்த விழிகளிலிருந்து மடை பாயும் வெள்ளி ரேகைகளும் இரவின் அமைதியை இரக்கமற்று நொறுக்கிக் கொண்டிருந்தன.
கதவின் மணியோசை இசையோடு ஒலித்துக்கொண்டது.
அவசரமாகச் சென்று கதவைத் திறந்தான் அவன்.
“வாங்கோ வாங்கோ.. வந்து இருங்கோ” அவன் யாரையோ அமோகமாக வரவேற்பது

இவளின் காதில் கேட்கிறது.
“உங்க எங்க நிற்கிறீர்? இங்க வந்து பாரும் யார் வந்து நிற்கிறது என்று”
நடிப்புத்துறையில் கைதேர்ந்த காவிய நாயகன் இவன். அவனது குரல் அவளுள் அருவருப்பைப் பரப்பியது. செய்வதெல்லாம் செய்து போட்டு ஒன்றும் அறியாத பாவி போல் எல்லோரும் நம்பும்படி நடிப்பதில் மிகக் கைதேர்ந்தவன் என்பது அவளுக்கு மட்டுமல்ல, அவளோடு மிக நெருங்கிப் பழகியவர்களுக்கும் தெரியும்.
“அவள் ஒரு பைத்தியக்காரி. அவள் இலங்கையிலிருந்து இந்த நாட்டுக்கு வந்தபோது அவனின் நண்பர்களே அவனின் நடத்தை பற்றிக் கூறும்போது அவள் நம்பவேயில்லை. வெறும் முட்டாள் அவள்!”
- ஜூலியோ இக்ளிசியாஸ் என்ற ஸ்பெயின் நாட்டு இசைப்பாடகனின் பாடலை அவள் ரசிக்கத் தொடங்கியிருந்த நாட்கள்.
| TWant to know whatlove is' என்ற அவனின் கந்தர்வ இசைக்குரலில் மயங்காதவர்கள் யார்?
அவன் இசையரங்கில் தோன்றிப் பாடு கிறான் என்று அறிந்து, அந்த நிகழ்ச்சிக்குப் போகவேண்டும் என்று கேட்டபோது, 'உனக்கென்னடி இக்ளிசியாஸ்' - என்று ஏளனமாய் சொன்னவன், ஒரு பூக்கடையில் வேலை செய்யும் போத்துக்காரியோடு, இக்ளிசியாஸின் பாட்டுக் கச்சேரிக்குப் போய் இரவிரவாய் 'அமர்க்களமாய்' பொழுதைக் கழித்துவிட்டுத் திரும்பியதை எப்படிச் சொல்வது?
அதைப்பற்றிக் கேட்டபோது, அடி போட்டு அவள் வாயை அடக்கியதை எப்படி
அவள் நெஞ்சை விட்டு அகற்ற முடியும்?
சுவரில் மாட்டியிருந்த திருமணப் படத்தைக்கூட ஒருநாள் எடுத்து நொறுக் கினான்.
- “இப்போது என் மூன்று சின்னஞ்சிறு குஞ்சுகளின் உயிர்களும் குரல்களும் இன்று என்னுள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எனது குழந்தைச் செல்வங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”
எண்ணச் சுவரில் எதிரொலிக்கும் குரல்கள்!
எதிர்பாராத
- அந்த நேரத்தில் வந் நாணாயி - கண இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 11
திருந்தவள் ரஞ்சனிதான்! இனியவள். ஒத்தாசையோடு பழகுபவள். ரஞ்சனியின் வீட்டிலிருந்து பதினைந்து நிமிடங்களில் அவளின் வீட்டிற்கு வந்துவிடலாம். அடிக்கடி நண்பிகள் இருவரும் சந்திப்பதுண்டு. பரதநாட்டியம் பழகும்போது ஏற்பட்ட நட்பு. பரதக் கலையோடு பல்கலைக்கழகத்தில் வைத்தியத் துறையில் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்கிறாள். இப்போது. பாய்ந்து பரவும் குதூகலங்களைவிட மாய்ந்து மடியும் மனக் குமுறல்களைத்தான் பகிர்ந்து கொள்வார்கள்.
அவள் வெளியே வருவதின் தயக்கத்தின் காரணத்தை ஊகிப்பதில் ரஞ்சனிக்குச் சிரமம் இருக்கவில்லை. தன் துக்கங்கள் என்முன் திறக்கப்படுவதை அவமானமாகக் கருதும்
அவளின் குறுகலை உணர்ந்துகொண்டாள்.
'நானே சென்று பார்க்கிறேன்' என்று கூறிக்கொண்டே மேல்மாடி - அறைக்கு வந்தாள்.
"வாக்குத் தத்தங்கள், பொன்னாலான மாங்கல்யம், மஞ்சள் குங்குமம் என்று அவன் சேர்த்துத் தந்த பரிசுகள் எல்லாம் போலியானவை. இவைதான் தொடரும் பரிசுகள்” என்று நண்பியைக் கட்டியணைத்த படி நீவி நீவி நனைந்துகொண்டிருந்தாள்.
“ஓய்வு எடுத்துக்கொள்... ஒன்றும் யோசிக் காதை. நாளை காலை வந்து பார்க்கிறேன்.”
மரங்களில் குளிர் காற்று விசும்பித் தணிவதுபோல் உணர்ந்தாள் அவள்.
ரஞ்சனி ஆதரவாகத் தேற்றினாள். பெண்களைத் தூசியாகக் கருதும் ஆண் களின் ஆதிக்க மனோபாவத்திற்கு அவள் மசிந்துபோகும் பெண் அல்ல.
ஆண்களின் வெறியாட்டத்தை
அமை தியாகச் சகித்துக் கொள்வதில் உள்ள
அபாயத்தை அவள் விளக்கினாள்.
கார் வீட்டிற்கு முன் வந்து நின்ற வேகத்தில் அவன் கணவனின் விறைப்பு தெரிந்தது.
அவன் ஒரு பட்டயக் கணக்காளன்.
ஒரு தனியார் நிறுவனத்தின் பிரதம கணக்காளன் அவன். அந்த நிறுவனத்தின் இயக்குநர் - ஒரு தமிழர்.
ஏதோ ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

பணமோசடியில் சிக்கி நீதிமன்றமும், வழக் கறிஞர் அலுவலகமுமாக அழைத்துக் கொண்டிருக்கிறார்.
சும்மாவே சுடுதண்ணியாகத் திரியும் பட்டயக் கணக்காளருக்கு சொல்லவா வேண்டும்?
'இன்று அலுவலகத்தில் எதுவும் பிரச்சினையோ?' என்று இவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள். | வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாதது மாய், 'எங்கேயடி நான் மேசையில் வைத்த சிவப்பு பைல்? என்றான்.
“ எந்த சிவப்பு பைல்?”
அப்படி ஒரு பைலை அவள் அன்று எங்குமே பார்க்கவில்லை.
'நான் பார்க்கவில்லை' 'என்னடி பார்க்வில்லையோ?' என்று தொடங்கியவன் பெண்ணினத்தின் மீதான சகல வசைகளையும் வாரிக்கொட்ட ஆரம் பித்தான்.
இது தினசரி பூசைதான். அவள் பேசாமல் இருந்தாள். 'என்னடி நான் கேட்கிறேன். நீ பேசாமல் இருக்கிறாய்? அவ்வளவு கொழுப்போடி உனக்கு?' என்றவன் முகத்தைப் பார்த்தாள்.
அவன் விகாரமாகிக் கொண்டிருந்தான். 'பட்டயக் கணக்காளன்' என்ற பட்டம் தாங்கிய அவன் ஒரு அற்ப ஜந்துவைப்போல் அவளுக்குத் தெரிந்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 'அசிங்கமாய்ப் பேசுவதை நிறுத்து' என்றாள்.
'என்னடி தேவடியாள், நான் பேசுறதையே நிப்பாட்டச் சொல்றாய்?' என்றவன், மேசையில் குடித்துக் கொஞ்சம் மீதியிருந்த விஸ்கி போத்தலைத் தூக்கி அவளை நோக்கி
எறிந்தாள்.
அவள் சடாரென்று விலகிக்கொண்டாள். சுவரில் மோதிச் சிதறிய போத்தலிலிருந்து தெறித்த விஸ்கியின் மணம் அறையில் பரவியது.
அவள் அமைதியாகத் தனது அறைக்குள் சென்று, தொலைபேசியில் 999 பொலிஸ் எண்ணை அழுத்தினாள்.
- 0 0 0

Page 12
POOBALASIN
IMPORTERS, EXPORTERS,
STATIONERS
பூபாலசிங்கம் ட
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி இறக்கு
560D6D6C
இல, 202 செட்டியார் தெரு, கொழும்பு-1, இலங்கை தொ. பே. 242
கிளைகள்: 340, செட்டியார் தெரு, கொழும்பு 1 தொ.மே. :2395885
இல,309A2/3 காலி வீதி
25T, ÉLI.: 4-515775, 25
த்தகங்களின்பெயர்
பதிப்பாசிரியர்
கல்விச் சமூகம் எதிர்பார்ப்பும்
வகிபங்கும்
காலத்தை வென்று நிற்கும்
கந்தரோடை
குடிமைகள்
நுனிப்புல் மேய்தல்
6LDfa. TT
காற்றை அழைத்துச் சென்றவர்கள்
மானுடமும் சோதிடமும்
பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரையும் கந்தசுவாமிக் கடவுளின் புனித பூமியும்
ஏ. எல். நெளபீர்
Dr. சே சிவசண்முக
தெணியான்
சுவிஸ் மூர்த்தி மாஸ்
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
ஜமீல்
திருச்செல்வம் தவரத்
என்.கே.எஸ்.திருச்செ
10

HAMBOOKDEPOT
SELLERS & PUBLISHERS OF BOOKS,
AND NEWSAGENTS.
புத்தகசாலை
நமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
一 DLD 2321, 65T asso. 2337313 L56,606360.pbdhoGstnet. Ik
l, இல, 4A, ஆஸ்பதிரி வீதி,
பஸ் நிலையம், O4266 யாழ்ப்பாணம்.
பதிப்பகம் விலை
கல்வி உயர்த்தெழு மன்றம் 4OOOO
JT82/T - 45O.OO
ஜீவநதி வெளியீடு 35O.OO
LT காந்தளகம் 375. OO
இருவாட்சி 78O.OO
புதுப்புனைவு இலக்கிய வட்டம் 250.00
தினம் 33O.OO
F66)|LD அகில இலங்கை
இந்து கலாசார பேரவை 45O.OO
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 13
2தி குவான்ரஸ் விமானத் தின் எக்கனமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்தி விட்டு அடுத்த இருக்கை եւն)aՆ உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உ உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படு: போதைபோல் மேலும்மேலும் அவனுக்கு தே6 மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகா இரத்த நாடிகளில் வேகமாக ஒடும் குருதி பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் து உள்ளே இருந்து வெளிவரத் துடிக்கும் சிறுவ அதிர்ந்தது. சேரா குளிருக்காக போர்த்தியிருந் அவளது கைகளின் மணிக்கட்டுப் பகுதியை பி என்பது போல் சிரித்தாள்.
இந்தப் போர்வையாக நான் மாறக்கூடாதா இது கொஞ்சம் அதிகமில்லையா?" என் கோத்துப் பிடித்தபோது உடல் வெப்பம் அவனு உமிழ்நீர் வற்றிவிட்டது போல் இருந்தது. தண் அவளது கழுத்தில் மெதுவாக சரிந்து முத்தப வாயில் சிக்கி பற்களிடையே சென்றன. கழுத்த விமானத்தில் அவளை நெருங்கமுடியாது.
ஐம்பது வயதில் இப்படியான காதலும் கத் கேட்பார்கள். அவர்களுக்கு அவனது வர6 இருபத்தைந்து வயதிற்கு கீழ்த்தான் காதல் ஏற்ட பார்த்திருக்கிறது. காதல் என்பது அந்த வயதி லோலாத்தனம் என வரையறுத்துள்ளது. ஆனா? சகோதரிகள், சீதனம் என பல விலங்குகளைப் ( காதல் உணர்வுகள், பச்சைப்பயறை மணல்ே வாட்டி கருக்கி எடுத்துவிடுகிறது. இளவயதுக் பனித் திணை மிருகங்கள் உயிர்களுடன் உறை உணர்வுகள் மரத்துவி
அவனது 5T சென்றால் அவர்களை விடுவதற்கு அக்கா பிடித்து குருடாக்கி சமூகம் இருந்தது எ அல்ல.
இலங்கையில் வந்தபோது, இந்த போல் தேக்கமடைந்: வேண்டும். ஆனால் சமூகத்திற்கு துணிவு நடேசன் ஆனந்தன், தனது ந6
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (14ே)
 
 
 

டலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி த்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் வையாக இருந்தது. அவனது போதை கொண்ட ாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது.
பின் ஒட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து நுடிப்பு பல மடங்கு அதிகமானதால் அவசரத்தில் பன் கதவைத் தட்டுவது போல் நெஞ்சாங்கூடு ந்த மண்ணிற கம்பளிப் போர்வையின் ஊடாக டித்தபோது கழுத்தை திருப்பி மெதுவாக என்ன
I?’
றபடி தனது விரல்களால் அவன் விரல்களை லுக்கு கொதிநிலையை அடைந்தது. வாயிலிருந்த ணிர் குடித்தால்தான் சரி வரும் என நினைத்தபடி மிட்டபோது அவளது கலைந்த பல கேசங்கள் தில் முகம் புதைத்தான். இதற்கு மேல் அவனால்
தரிக்காயும் தேவையா என யாராவது பார்த்தால் லாறு தெரியுமா? சொன்னால்தான் புரியுமா? படுவதை எமது சமூகம் தமிழ் திரைப்படங்களில் ற்கு மேல் ஏற்பட்டால் அது கயமை அல்லது ல் இளவயதில் காதல், சாதி,மதம், குடும்பச்சுமை, போட்டு சிறையடைக்கப்படுகிறது. பாடாமல் சூடான சட்டியில் வறுப்பது போன்று க் காதல் குளிர்கால நெடும் தூக்கம் கொண்டு ந்து விடுவது போல் எத்தனை இளம் உள்ளத்து விடுகின்றன. லத்தில் ஆண்கள் படித்து பல்கலைக்கழகம் ா சந்தைக்கு வந்த காளை மாட்டைப்போல் ஏலம் ல சமூகம் தயாராக இருந்தது. பிள்ளைகளைப் பிச்சையெடுக்க வைக்கும் பாதகனைப் போல் ன்ற கூற்று சில சந்தர்ப்பங்களில் மிகையானது
பல்கலைக்கழக பிரவேசத்தில் தரப்படுத்தல் ஏல வியாபாரம், பங்குச் சந்தை சரிவடைவது தது. அதனாலும் ஆயுதப்போராட்டம் வந்திருக்க அதை ஒரு காரணமாகச் சொல்ல யாழ்ப்பாண இல்லை. ண்பன் ஒருவன் பள்ளிக்காலத்தில் காதலிப்பதைப்
11

Page 14
பார்த்து கான்வென்டில் படித்த ரெஜீனா என்ற பெண்ணிடம் பழக முயன்றான். பாடசாலை முடிந்து அவள் போகும் வழியில் சைக்கிளில் வந்து மறித்து சுகம் விசாரிக்க முற்பட்டபோது காறித் துப்பிவிட்டு சென்றுவிட்டாள். அவளது துப்பல் உலர்ந்து போனாலும் அதன் தாக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்தது.
ஏன் அவள் தன்னை உதாசீனம் செய்தாள்? குறைந்த பட்சம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கலாம். அவ்வாறு அவமானம் செய்வதற்கு காரணம் என்ன?
ஐந்தடி எட்டங்குல உயரத்தில் தான் கருப்பு நிறமாக இருந்ததுதான் காரணம் என ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனந்தனிலும் பார்க்க அவலட்சணமானவர்கள் காதலிகளை வைத்திருந்தபோது தனது இயலாமைக்கு காரணம் வேறாக இருக்கவேண்டும் என நினைத்தான். ஆண்களே படித்த யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் தொடர்ந்து படித்ததால் பெண்களிடம் பழகும் நாகரீகம் தெரிய வில்லையோ? அல்லது பெண்களை அணுகும் முறையில் தவறா?
மவுனமாக கேள்விகளை மட்டும்தான் அவனால் கேட்க முடிந்தது. நண்பர்களிடம் முதல் காதலின் தோல்வியை பகிர்ந்து கொள்ள அவமானமாக இருந்தது. அவளில் ஆத்திரப்படவும் முடியவில்லை. எச்சிலை துடைத்து விட்டு அந்த காதலை மறந்து விட்டான். அந்தத் துப்பலுடன் காதலிக்கும் எண்ணம் அவனை விட்டு போய்விட்டது.
அவன் பேராதனைப் பல்கலைகழகம் சென்ற முதலாவது வருடத்தில் தகப்பனார் ஏலத்துக்கான ஏற்பாட்டைத் தொடங்கி விட்டார். இரண்டு தங்கைகளையும் சீதனம் கொடுத்து மாப்பிள்ளை எடுக்கவேண்டும் எனக் காரணம் காட்டியதால் வேறுவழி இல்லாமல்சகோதர பாசத்தின்பிளக்மெயிலில் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
பட்டம் பெற்று, மகாவலிகங்கை மறித்து கட்டும் திட்டத்தில் கொத்மலையில் சிவில் எஞ்ஜினியராக வேலை தொடங்கியபோது ஏலம் உச்ச நிலையடைந்து திருமணவிவகாரம் சூடு பிடித்தது.
ஆனந்தனின் தந்தை கணக்கு வாத்தியார். அவர் - கணக்குப் போட்டு சீதனமாக கேட்ட பணம், இரண்டு எஞ்னியரை வளைச்சுப் போடக்காணும். இரண்டு தங்கை களுக்கும் சேர்த்து - சீதனமாக சேர்த்து
சூடு பிடித்தனின் த டே
12

கேட்ட தொகையாக இருக்கவேண்டும். அக்காலத்தில் யாழ்ப்பாணக் குடும்பங்கள் வீடு வளவுகளை எல்லாம் அடைவு வைத்து இளம் பொடியங்களைஏரோபுளட்டில் பெர்லினுக்கு அனுப்பியதால் பலரிடம் காசு சேமிப்பில் இல்லை. அனுப்பிய பொடியள் பெர்லின் எல்லை கடந்து பிரான்ஸ், சுவிற்சலன்ட் என்று அலைந்து வேலை செய்து எப்ப காசு அனுப்புவார்கள் என தபால்காரனை வழிமேல் விழி வைத்து பெற்றோர் காத்திருந்த காலம்.
ஆனந்தனின் தந்தை பலரது வயிற் றெரிச்சலையும் - கொட்டிக்கொண்டார். பலர் உள்ளுக்குள் திட்டினார்கள். வாத்திக்கு பேராசை என்றார்கள். சிலர் முகத்துக்கே நேரடியாகச் சொன்னார்கள்.
'உங்கடை மகனுக்கு இவ்வளவு இலச்சம் கொடுத்து கலியாணம் செய்யிறதிலும் பார்க்க, பிரான்சில் கோப்பை கழுவிறவனுக்கு என்ர பிள்ளையைக் கொடுப்பன். குறைந்த பட்சம் நிம்மதியாக உயிர்ப்பயம் இல்லாமல் என்ர மகள் படுத்தெழும்புவாள்'.
மற்றொருவர் 'என்ன உங்கட மகனுக்கு தங்கத்தில குஞ்சாமணி - இருக்கெண்டா இவ்வளவு காசு கேட்கிறீர்கள். சரி அப்படி இருந்தாலும் - அதை வைத்து என்ன செய்யமுடியும்?' எனச் சிரித்தபடி கேட்டதாக தங்கச்சி ஒட்டுக் கேட்டுச் சொன்னாள். " அம்மாவும் தன் பங்குங்கு 'என்ர மகன், உங்களாலே கிழவனாகிவிடுவான்' என புறுபுறுக்கத் தொடங்கிவிட்டாள். விடு முறைக்கு வந்த ஆனந்தனுக்கு இவற்றைக் கேட்டு வெறுப்பு வந்து இனி யாழ்ப்பாணம் வருவதில்லை என தீர்மானித்தான்.
இறுதியாக - கொழும்பு பலசரக்கு கடையின் முதலாளி ஒருவர் ஏலத்தில் வென்று இருபத்திரண்டு லச்சம் டொனே சன், கொக்குவிலில் வீடு, கார் என வியா பாரத்தை முடித்தார். - யாழ்ப்பணத்தில் இரண்டு தங்கைகளுக்கு திருமணம் முடித்து வைப்பதற்காக இருபத்தியிரண்டுலச்சம்வாங்கி தந்தையின் சொற்படி கேட்டு டொனேசன் காசை அப்படியே கொடுத்துவிட்டு நல்ல பிள்ளையாக திருமணம் செய்தான் ஆனந்தன்.
முப்பத்திரெண்டு வயதுவரை காய்ந்து பருத்தி விதைபோல வெடித்து பறக்கும் நிலையில் இருந்த ஆனந்தனுக்கு வாழ்க் கைப்பட்ட மேனகா வானத்து மேனகா போல் இல்லாமல், பலசரக்குக்கடைத் தானியத்தின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 15
''... நா 'உங்களுக் இருந்தால் பொறுத்தல் வித்தியாச மனதில் ப உடலுறவி
போசிப்பில் அமோகமாக விளைந்து இருந்தாள். அவளது அங்கலா வண்யங்கள் ஆனந்தனுக்குகவர்ச்சியாக இருந்தன. இரண்டு வருடங்கள் மகியங்கணையில் எஞ்ஜினியராக இருந்தபோது முதலாவது மகள் பிறந்தாள். மகள் உமா பிறந்த சில மாதங்களில் வந்த 83 கலவரத்தில் இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் போனபின்பு மெல்பேனுக்குக்கு வந்தனர்.
இலங்கையில் வசதியாக வாழ்ந்தவர் களுக்கு வேலை கிடைக்காமல் அவுஸ் திரேலிய வாழ்க்கை கசந்தது. அரசாங்க உதவிப்பணத்தில் வாழவேண்டி இருந்தது. வாழ்க்கையின் சக்கரங்களில் மேல்பக்கத்தில் இருந்து சவாரி செய்தவன், இப்பொழுது அடிப்பக்கத்தில் நசிபடுவது புரிந்தது. உதவிப்பணத்தில் வாழ்க்கை ஓட்டுவது கடினம் என்பதால் எஞ்ஜினியர் வேலை கிடைக்கும் நேரத்தில் கிடைக்கட்டும் எனத் தீர்மானித்து மெல்பனில் டாக்சி சாரதியாக வேலைசெய்தான். வருமானம் அதிகம் கிடைப்பதால் இரவு சிப்ட் ஓடினான். டாக்சியில் இருந்து வீடு வந்தவுடன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

ன் சொல்லுவது க்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். அம் சொல்கின்றேன். பெண்களைப் வரையில் அவர்கள் ஆண்களிலும் பார்க்க -மானவர்கள். மகிழ்வோடு இருந்தால் மட்டுமே 6 நாட்டம்கொள்வார்கள்.”
களைப்பில் சாப்பிட்டு நித்திரை கொண்டு மீண்டும் எழுந்து போகும் இயந்திர மனிதனாக நடந்து கொண்டான்.
- அவுஸ்திரேலிய நாட்டு சுதந்திரமான சூழலில் மேனகாவின் கனவுகளும் அவனது கனவுகளும் வேறுதிசைகளில் சென்றன. அவன் பகலிலும் அவள் இரவிலும் கண்டனர்.
இருவரது இல்லற வாழ்வு புயலில் சிக்கிய கப்பல்போல் தத்தளிக்கத் தொடங்கியது. காதல் உணர்வுகளைக் கொண்ட இரண்டு ஆத்மாக்கள் மீட்டும் இராகம் என்றில்லாமல் உடல் அரிப்பில் வேலியில் உராயும் வெள்ளாடு போல் சுகித்துவிட்டு பகலில் நித்திரைக்கு செல்வான். ஆரம்பத்தில் பல்லைக் கடித்தபடி பொறுத்துக்கொண்ட மேனகா பத்தினிப் பெண்ணாக நடந்தாள். பின்பு - வெறுப்பை உடல் மொழியில் வெளிப்படுத்தினாள். சிலதடவைகள் அவள் நீ மென்மையான உணர்வுகள் இல்லாத மனிதன்' என்று சொல்லிவிட்டு அழுது கொண்டு வேகமாக குளியலறை சென்றிருக்கிறாள். அவள் குளியலறையில் இருந்து வருவதற்குள்
13

Page 16
ஆனந்தன் நித்திரையாகி விடுவான். மேனகா வாய்விட்டுத் திட்டியபடியே வீட்டில் வலம் வருவாள். காலையில் இறக்கிய கருப்பணிச்சாறு மாலையில் வாயில் வைக்க முடியாத புளித்த கள்ளாகிவிடுவதுபோன்று அவள் வாழ்வும் புளித்துப்போனது. புணர்வில் எப்படி மென்னுணர்வைக் காட்ட முடியும் என்பது ஆனந்தனுக்குப் புரியவில்லை.
உடல் உறவுக்கு மென்னுணர்வுகள் தேவையில்லை என்பதை நிரூபித்தபடியே உள்ளத்தில் காதல் இல்லாமல் கலவி செய்யலாம் என்பதற்கு அடையாளமாக ஒரு மகள் பிறந்தாள். ரேணுகா பிறந்ததும் மேனகா அத்துடன் தாம்பத்தியவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். கர்ப்பிணியாக இருந்தபோது தற்காலிகமாகத்தான் இருக் கும் நினைத்த ஆனந்தனுக்கு ஏமாற்றம் தொடர்ந்தது.
ஆரம்பத்தில் குழந்தை அழும்போது
ஐம்பது வயதில் இப்படியான காதலும் க பார்த்தால் o್: இர்களு தெரின்னால்தான் புரியுமா? இருபத் ஏற்படுவதை எமதுமூகம் தமிg திரை என்பது அந்த வயதி9ಅ மேல் ஏற்பட்டா என வரையறுத்துள்ளது.
குழந்தையின் அறையில் படுக்க ஆரம்பித்தவள் பின்பு சிட்னியில் இருந்து வரும் இன்பத்தமிழ் என்ற வானொலியை கேட்கவென்று கடந்த பத்துவருடங்களாக வேறு அறையில் படுத்தாள். டாக்சியோடும் வேலை போய் எஞ்ஜினியரிங் வேலை கிடைத்த பின்பும் நிலைமை மாறவில்லை. வெளியாருக்கு கணவன் மனைவியாக, பிள்ளைக்கு தாய் தந்தையாக வாழ்ந்தார்கள்.
இப்படியாக தொலைத்த இரவுகள் அவனுக்கு நாற்பது வயதில் இருந்து நலமடிக்கப்பட்டுவிட்டதாக உணரப் பண் ணியது. சாப்பாட்டை மேசையில் வைத்து விட்டு தொலைக்காட்சி பார்ப்பாள். இல்லையென்றால் உடம்பு நோகிறது என படுத்துவிடுவாள். என்றாவது ஒருநாள் தட்டுத் தடுமாறி கால் கைபட்டால் விரோதியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு விலத்திக் கொண்டு போய்விடுவாள். பெரிய மகள் பெரிதாகியதால் இந்த விடயங்கள் அவளைப்
龚
YLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLmLLLLLLLmKKmmmLLmLLLmKLLLLKYLLLSYYLLL LLLYYYSLLL SL LL LLCLCCCL
爵
14
 
 
 
 
 
 
 

பொறுத்தவரை தடை செய்யப்பட்ட விவகாரங்களாகிவிட்டன.
அவனிடம் கிரகாச்சாரம் முடிந்து பிரமச் சரியம் எதிர்பார்த்தாள். வாழ்கை என்பது சக்கரம் தானே?
இளைஞனாக இருந்தபோது தகப்பனை தனது எதிரியாக நினைத்த ஆனந்தனுக்கு இப்பொழுது மேனகா அந்த இடத்தை எடுத்து விட்டாளே என்று எரிச்சல் அதிகமாகியது.
எனக்கு நெருங்கியவர்களாலேயே நான் தொடர்ந்து சபிக்கப்படுகிறேனே. இதற்கு மற்றவர்கள் மட்டும் பொறுப்பா? இல்லை நானும் பொறுப்பேற்கவேண்டுமா?
அவனுக்கு மனம் அலைபாய்ந்தது. இக்காலத்தில் ஆனந்தனின் தந்தையார் இறந்த செய்தி வந்தபோது ஆனந்தனுக்கு எந்தக் கவலையுமிருக்கவில்லை. எனக்கு செய்த கொடுமைக்கு கொஞ்சம் சீக்கிரமாக போய்விட்டார் என நினைத்துக்கொண்டான்.
墨彗- UBUH!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதந்து வயதிற்கு கீழ்த்தான் காதல்
ö eessbuelo Sessió aos ல்ோலாத்தனம்
கொழும்பில் குண்டு வெடித்ததை காரணம் காட்டி யாழ்ப்பாணம் போவதையும் தவிர்த்துக்கொண்டான்.
கொழும்பில் குண்டு வைத்தவர்களை மனதில் மெச்சிக் கொண்டான். அம்மா அதன் பின்பு கனடாவில் வதியும் தங்கைகளிடம் சென்றுவிட்டாள்.
மேனகாவோடு ஒன்றாக இருந்து பிரயோசனம் இல்லை. கோடைவெயில் உறிஞ்சிய தண்ணிர் மாதிரி அவளது காம உணர்வுகள் ஆவியாகிவிட்டால் அவளை தவறு சொல்லி எதுவும் நடக்கப்போவ தில்லை. அந்தக்காலத்திலே யாழ்ப்பாண கத்தரிக்காயும் பருப்பு சோறுமென உண்டே செழிப்பாக இருந்தவள் இப்பொழுது அவுஸ்திரேலிய இறைச்சி, மீன், சுத்தமான மரக்கறி என்று இரண்டு மடங்காக வீங்கி விட்டாள். முப்பத்தியேழு வயதில் அவள் கன்னியாஸ்திரியாகிவிட்டாள்.
அவளை விட்டு விலகுவதுதான் நல்லது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 17
இப்படி இருவரும் இரண்டு அறைகளில் வாழ்க்கையை விரயமாக்கவியலாது என அவனது உள்ளுணர்வு சொல்லியது.
பிரிவது இலேசாகத் தெரியவில்லை. பிரிந்தால் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. ஆனந்தன் அதே போல் உள்ளத்தில் பல கேள்விகள் எழுந்தன. இந்த வயதில் என்ன செய்வது? குடும்பத்தை பிரியும் போது சொத்துக்கள் பிரிக்கப்படுவதுடன் பிள்ளைகள் வாழ்வில் குழப்பமும் ஏற்படும்.
இவற்றை சமாளிப்பது என்ற தீர்மானத் துக்கு வந்தபோது பத்துவருடமாக பாவனை யில் இல்லாத ஆண்மையை நம்பி எப்படி வேறு ஒரு பெண்ணைத் தேடுவது என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த வயதில் ஆண்மையை பரிசோதிக்க ஒரே வழியாக பணம் கொடுத்து பெண் ணொருத்தியை பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தபோது கால்நூற்றாண்டுக்கு முன்பு தந்தையின் செயல் நினைவுக்கு வந்தது.
இருபத்தைந்து வயதில் அப்பு எனது ஆண்மைக்கு லட்சக்கணக்கில் விலை பேசினார். நான் இப்பொழுது பணத்தைக் கொடுத்து தேடவேண்டியுள்ளது.
பத்திரிகையில் பார்த்து ஒரு மணிக்கு விலை பேசியபின் அவளைச் சந்தித்தான். டாக்சி ஒட்டிய காலத்தில் வாடிக்கையாள ரிடம் பேசிய அனுபவம் இப்பொழுது கைகொடுத்தது.
முகவரியையும் நேரத்தையும் கேட்டு அவளது வீட்டிற்கு சென்றபோது கதவை திறந்ததும் சிரித்தபடி வரவேற்று தன்னை ரோஸ் என அறிமுகப்படுத்தினாள்.
இதுதான் முதல் தடவையா? என்றாள் நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். அதிக மேக்கப்புகள் இல்லாமல் சாதாரணமாக இருந்தாள். கொஞ்சம் அரைகுறையாகத்தான் உடை அணிந்திருந்தாள். தொடையின் பெரும்பகுதி வெளித்தெரிந்தது. மார்புப் பகுதியிலும் மேற்சட்டையை கத்தரிக்கோல் விளையாடியிருந்தது.
அவளது தொழிலுக்கான யூனிபோம் ஆக இருக்கலாம். விளம்பரமில்லாமல் வியாபாரம் நடக்குமா?
அந்த ஹோலில் உள்ள சோபாவில் உட் காரும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று சில நிமிடத்தில் வைன்கிளாசுடன் வந்தாள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

இப்படியான உபசாரத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தயக்கத்துடன் கையை நீட்டி வாங்கியதும் மீண்டும் உள்ளே சென்று தனது கையிலும் ஒரு வைன் கிளாசை கொண்டு வந்தாள்.
வீட்டில்கூட இப்படி உபசாரம் நடக்காது. பொக்கற்றில் கையை விட்டு அவளிடம் பேசிய தொகையை கொடுத்தபோது, நன்றி சொல்லி விட்டு மீண்டும் உள்ளே சென்று திரும்பிவந்து, பக்கத்தில் உடலோடு நெருங்கி இருந்தபடி 'உங்கள் கதையைச் சொல்லுங்கள்' என்றாள்.
ஆரம்பத்தில் தனது அந்தரங்க விடயங் களை அவளுக்குச் சொல்லத் தயக்கமாக இருந்தாலும் மெதுவாக சொல்ல ஆரம் பித்தான்.
பலவருடங்களாக மனைவியுடன் உற வில்லை. மீண்டும் திருமணம் செய்யவிருக் கிறேன். என்னை கொஞ்சம் பரிசோதிக்க எண்ணி இங்கே வந்தேன்."
எவ்வளவு காலமாக காய்ந்திருந்தீர்கள்? கிட்டத்தட்ட பத்துவருடங்கள்' அப்பாடி. இது எப்படி முடிந்தது. கத்தோலிக்க பாதிரிமார்களே பிரமச்சாரியம் பேணாத இந்த நாட்டில் இது பெரிய சாதனை எனச்சொல்லி கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விட்டு மீண்டும் உள்ளே சென்று இரண்டாவது வைன் கிளாசை கொண்டு வந்து முன்னால் வைத்தாள்
இது யாருக்கு? உங்களுக்குத்தான்' வைனைத்தந்து அனுப்பிவிடநோக்கமா? என நகைச்சுவையாக அவன் கேட்டான்.
குடித்த வைன் பேச்சைக்கூட்டி இலகுவாக் கியது.
பத்துவருடம் காய்ந்த மனிதரை கொஞ்சம் ரிலக்ஸ் பண்ணவேண்டும். மனமும் உடலும் இறுகியபடி இருந்தால் உடலுறவு இன்ப அனுபவமாக இராது. ஏதோ ஒரு காரியத்தை முடித்து விட்டது போன்ற திருப்திதான் ஏற்படும்’ என்று சொன்னவாறு கட்டி அணைத்தாள்.
அவளது அணைப்பில் இரண்டாவது வைன் விரைவாக உட்சென்றது.
அவளே கையைப் பிடித்து மங்கலான அறையொன்றுக்கு அழைத்துச் சென்றாள்.
அவள் தனது மேலாடையை களைந் ததும் அதிசயத்தை பார்ப்பது போல்
15

Page 18
அவுஸ்திரேலிய நாட்டு இேந்திருமான ஆழலி aൈ♔ 6ഖൈിൽ ിങ്ങ്ൗഞ്ഞും இண்டனம் இடுவ08 இல்லற வாழ்வு பு தொடங்கில இnதல் உணத்வலைக் ெ இறுவனம் என்றில்லாமல் உடல் ஒழிப்பில் ே
அகித்விெட்டு Uலிைல் நித்திருைக்கு செல்வா
III III III III பார்த்துக்கொண்டிருந்தான். பத்து வருடங் களின் பின்பாக ஒரு பெண்ணுடலை அன்றுதான் பார்க்கிறான். அவனைப் பொறுத்தவரை எங்கிருந்தோ புத்துயிர் கொடுக்கப்பட்டு உயிர்த்தெழுவது போன்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவியது. ஆரம்பத் தில் சிறிய எறும்பு ஊருவது போன்ற உணர்வு மெதுமெதுவாக அலையாகி அவனை பல இடங்களுக்கு வான்வெளியில் கொண்டு சென்று இறுதியில் உடலெங்கும் ஒரு சுனாமி போல் வெடித்தெழும்பி மீண்டும் புவியில் கொண்டு வந்து போட்டபின்பாக அடங்கியது.
ஆனந்தனுக்கு அவளது வைனும், அம்மணமான உடலும் எங்கோ பறந்திருந்த பறவையை மீண்டும் மரப்பொந்துக்குள் பாதுகாப்பாக வைத்துவிட்ட தேவதையின் செயலாக்கியது.
அவளது கட்டிலில் இருந்து எழும்ப முயற்சித்தபோது கையை பிடித்து இழுத்தாள். இன்னமும் உங்களது பணத்திற்கான வேலை மிச்சம் இருக்கிறது. அவசரப்படவேண்டாம்" என்றாள்.
மருத்துவர் புண்ணுக்கு மருந்து கட்டி விட்டு வார்த்தைகளால் ஆறுதலளிப்பது போலிருந்தது அவளது பேச்சு
மீண்டும் அவளை அணைத்தவாறு படுத்தபோது என்ன வேலை செய்கிறீர்கள்?
எஞ்ஜினியர் "எப்பொழுது இறுதியாக மனைவியை விடுமுறையில் அழைத்துச் சென்றீர்கள்?
இன்னமும் இல்லை. வீட்டில் முகம் பார்த்து பேசுவதற்கே சிரமமாக இருக்கும்போது விடுமுறைக்கு கூட்டிப்போய் என்னதான் செய்வது?
எத்தனை பிள்ளைகள்?
பதினைந்து, பன்னிரெண்டு வயதுகளில் இரண்டு’
உங்கள் மனைவி வீட்டில் இருந்து
16

ல் மேனவிைன் இனவளுைம் ஆவன அவன் பகலிலும் அவள் இறுவிலும்
லில் சிக்கிய இப்பல்பேரில் இத்தவிக்கத் இnண்ட இறுண்டு ஆத்மக்கள் மிட்டும் வலியில் உறுப்பும் வெள்வnடு பேரில்
ši.
000000000 பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளும்போது நீங்களும் அந்த வேலைகளில் பங்கேற்பது உண்டா?
நான் இருளோடு வேலைக்குப்போய் வேலை முடித்து இருளோடு திரும்பி வரும்போது வேறு எதுவும் செய்ய முடியாது. சிலமணிநேரதொலைக்காட்சியுடன்சாப்பாடு என்று எனது ஒரு நாள் முடிந்துவிடும். சனி ஞாயிறு குழந்தைகளின் விளையாட்டு, படிப்பு என நாட்கள் கரைந்து விடுகின்றன.
உங்கள் மனைவிக்கு காசு கொடுப் பீர்களா?
இல்லை. அவளது பெயரிலும் இணைந்த வங்கிக் கணக்கு என்பதனால் அவளால் எடுத்துக் கொள்ளமுடியும்.'
அதுவல்ல. நீங்கள் கொடுப்பதற்கும் அவளTக எடுக்கும் உரிமைக்கும் பெரிய வித்தியாசம் உளளது. நான் சொல்லுவது உங் களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். இருந்தாலும் சொல்கின்றேன். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆண்களிலும் பார்க்க வித்தியாசமானவர்கள். மனதில் மகிழ் வோடு இருந்தால் மட்டுமே உடலுறவில் நாட்டம் கொள்வார்கள். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? உடலுறவுக்கான சமிக்ஞையை தொடக்குபவர்களே பெண்கள் தான். உங்களது மனைவிக்கு வயதென்ன?
முப்பத்தேழு’ 'எனக்கு வயது நாற்பத்தைந்து. உங்கள் மனைவியை வித்தியாசமான முறையில் கையாளவேண்டும் என நான் நினைக் கிறேன்."
எனக்கு சைக்கோலஜி கவுன்சில்லிங் தந்ததற்கு நன்றிகள். எனச்சொல்லிவிட்டு வெளியே வந்த ஆனந்தனுக்கு ரோஸ் ஞானோ பதேசம் செய்த குருவாகத் தோன்றினாள்.
எப்படி எனது மனைவியோடு வித்தியச மாக நடப்பது? ஆனந்தன் ஆழ்ந்து யோசித்தான்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 19
இலகுவானதாக இராது. குறைந்தது குடும்பத்தோடு ஹொலிடேக்குச்செல்வோம் எனத் தீர்மானித்து மேனகாவிடம், இந்த விடுமுறையில் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு நாம் மலேசியாபோவோமா?’ என்று கேட்டதும் அவள் பட்டாசாக வெடித்தாள்.
"ஏன். இப்பொழுதுதான் பிள்ளைகளின் ஞாபகம் வந்ததா?
இப்பொழுதுதான் சந்தர்ப்பம் வந்தது.' நான் ஹொலிடே காலத்தில் பிள்ளை களுக்கு ரியூஷன் ஒழுங்கு செய்து வைத்திருக் கிறேன். அதனால் இயலாது.
திருத்தி மீண்டும் ஒட முடியாத வாகனமாகி விட்டதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு புதிதாக ஒன்றை வாங்குவது என்ற டாக்சி சாரதி தொழில் அனுபவம் ஆனந்தனை மாற்றி யோசிக்கவைத்தது.
மிஞ்சிப்போனால் மேலும் பத்தோ பதினைந்து வருடங்கள்தான் வாழப் போகின்றோம். எஞ்சியிருக்கும் காலத்தை வீணாக்குவதில்லை என முடிவு செய்தான். ரோசியின் தொடர்பால் இன்னமும் ஆண்மை துளிர்க்கையில் தனது உணர்வுகள் ஊற்றெடுக்கும் கிணறாக இருப்பது அவனுக் குப் புரிந்ததும், மிகுதியுள்ள வாழ்க்கைக் காலத்தை விரும்பும் பெண்ணொருத்தியுடன் கழிப்பதென்று ஆனந்தன் முடிவு எடுத்தான்.
முடிவு எடுத்தாலும் அதை எப்படிச் சொல்லுவது? செய்வது?
வேறு வழியில்லாமல் விவாகரத்து செய்வதாக அவன் கூறியபோது அவள் அதற்குச் சம்மதித்தாள். சொந்த வீடும் அவனது சுப்பரெனுவேசனில் பாதியும் சேர்ந்தால் மில்லியன் டொலருக்கு மேல் வரும். பொருளாதாரத்தில் பிள்ளைகளுக்கும் மேனகாவிற்கும் குறை வராமல் சொத்து பிரிக்கப்பட்டதோடு பிள்ளைகளின்தொடர்பு கள் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டது.
ஒருவிதத்தில் மேனகா தனக்கான சுதந்திரத்தை பெற்றதாக உணர்ந்தாள். இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து பொன் விலங்கு வாங்கி தன்னை பிணைத்ததாக ஆரம்பத்திலே நினைத்தவளுக்கு குழந்தைகள் அவளது மனதில் நிறைவையும் ஆறுதலையும் கொடுத்தார்கள். விவாகரத்து இதுவரைகாலம் சுமந்த சுமையை இறக்கியதாக மேனகா உணர்ந்தாள்.
ஆனந்தனது பிரச்சினை தொடர்ந்தது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

எப்படி பெண்தேடுவது? இன்ரநெற்றில் உள்ள விளம்பரங்கள் மூலம் முயற்சித்தபோது தாராளமாக தரவுகள் வந்தன. கடைகள், ஹொட்டேல் என்று சீனப்பெண்கள், பிலிப்பைன்ஸ் பெண்களாகப் பார்த்து டேற்றிங் செய்தான். ஒவ்வொரு பெண்ணும் பல வருடங்கள் வயதில் குறைவாக இருந்தது மட்டுமல்ல, பலரது நோக்கம் அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதேயாகும். இறுதியில் அவுஸ்திரேலிய - ஐரிஸ் வெள்ளை இனப் பெண்தான் அவனது பழைய வாழ்க்கையைக் கேட்டாள். நாற்பத்தைந்து வயதான அவளுடைய இரண்டு பிள்ளைகளும் இங்கிலாந்தில் தங்களது வாழ்க்கைத் துணைகளோடு இருந்தார்கள். இவளும் பிள்ளைகள் வீட்டைவிட்டு போனபின்புதான் புதிதாக துணைஒன்றைத்தேடும் எண்ணத்தில் இருந்தாள். அவளை அவனுக்கும் பிடித்தது. சாப்பாட்டு கடைகளில் சாப்பிட்டால் தனது தரப்புக்குத்தானே பணம் கொடுக்க வேண்டும் என்ற அவளது கொள்கை அவனுக்குப் பிடித்திருந்தது. மற்றவர்கள் அவனது சொத்துவிவரத்தை மட்டுமே கேட்டனர்.
அவளுடனான ஒருவருட காதல் விவ காரங்களுடன் அவனுக்கும் மேனகாவுக்கும் விவாகரத்தும் கிடைத்தது. அதன்பிறகு ஆனந்தன் சேராவை பதிவுத்திருமணம் செய்தான்.
அன்று இரவு சிட்னியில் உள்ள பெரிய ஹோட்டலில் தேன்நிலவை கழிப்பதற்காக சேராவும் ஆனந்தனும் போய்க்கொண் டிருந்தார்கள். போயிங் விமானத்தின் வேகம் அவனுக்கு குறைந்திருப்பதாகத் தெரிந்தது.
அவனது அவசரத்தை சேரா புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அவனது தொடைகளில் தனது கையைப் போட்டாள்.
அவளது கைகளில் முழங்கைகளுக்கு கீழ் இருந்த சில குண்டுமணி கரிய புள்ளிகளை தடவினான்.
நாற்பத்தைந்து வயதில் ஐரிஸ் பெண்ணை மணம் செய்தால் இப்படியான புள்ளிகளை தவிர்க்க முடியாது’ என்றாள் மின்னலான சிரிப்புடன்.
எப்பொழுதும் நேரடியாக பேசுவது அவளது சுபாவம். அப்படியான அவளது உரையாடல் வந்து விழும் வார்த்தைகள், மற்றவர்ளை வார்த்தைகளைத் தேடும் நிலைக் குத்தள்ளி விடும்.
17

Page 20
இந்தப் புள்ளிகள் உனக்கு அழகை கூட்டுகின்றன என்றான்.
"சட்டப். நான் ரீன் ஏஜ் பெண்ணாக இருந்தால் இதை ஏற்றுக் கொண்டு சந்தோசப் படுவேன்.'
'எனக்காக அப்படி மாறுவாயா?" ரீன் ஏஜ் பெண்ணாக மாறினால் எனது அனுபவம் என்னை விட்டுப் போய்விடுமே?
சிரித்தவாறு அவனது தலையைத் தட்டியபடி கூறினாலும் அவளது இதயத்தின் சிறு மூலையில் இந்த வயதில் திருமணம் செய்யாமல் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனந்தனை நேசித்தாலும் கல்யாணம் என்ற பந்தம் இருட்டில் உள்ளே நுழைந்த திருடனைப்போல் ஆகிவிட்டது அவளுக்கு. ஆனந்தன் அவசரப்படுத்தினாலும் மேலும் சில வருடங்கள் தான் பொறுத்து பார்த்து இருக்கவேண்டும் என மனதிற்குள் அவள் யோசிக்கத்தொடங்கினாள்.
சிட்னி கிங்ஸ்போட் விமான நிலையத்தில் இறங்கி பதிவு செய்திருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றபோது இரவு எட்டு மணியாகிவிட்டது. ஹோட்டல் அறை ஹனிமூன் சூட் எனப்படும் இரண்டு அறைகளைக்கொண்ட ஆடம்பரமான வீடு போல் இருந்தது. வரவேற்பு அறை, அதைவிட இரண்டு அறைகள் கொண்டது அந்த சூட்
வரவேற்பு அறையில் பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பெரிய அறையில் அழகாக விரிக்கப்பட்டிருந்த கிங் சைஸ் கட்டில் அவனது மனதில் கிளர்ச்சியை உருவாக்கியது.
'எனக்கு பசிக்கிறது என்றாள் சேரா. அறைக்கு வரவழைப்போமா? ஹோட்டலுக்கு அருகாமையில் சைனீஸ் ரெஸ்ரோரண்டைப் பார்த்தேன். நாங்கள் அங்கு போய் சாப்பிடுவோம்.
ஆனந்தன் மனதுக்குள் இன்று இரவு எட்டு மணியில் இருந்து காலை எட்டு மணிவரையும் அவளுடன் கட்டிலில் இருப்பது என்ற திட்டத்திற்கு மாறாக வெளியே போக இருந்தது ஏமாற்றத்தைக் கொடுத்தது.
வெளியே சென்றபோது சிட்னியின் கடல்காற்று மெதுவாக முகத்தை தடவி நாக்கில் உப்பு கரித்தது. அலையோசை கேட்காத போதிலும் கடல் அதிக தூரத்தில் இல்லை என்பதை உணர்த்தியது.
ஹோட்டலின் கீழ்பகுதியை அண்டிய பகுதியில் வரிசையாக இருந்த பல்வேறு உணவுக் கடைகளில் ஒன்றான சீனா
18

உணவுக் கடையொன்றின் உள்ளே அவள் புகுந்தாள். சுத்தமாக துடைக்கப்பட்டிருந்த தால் மூடிய கண்ணாடிக் கதவு அவளது முன்தலையில் இடித்தது. சற்று நிலையிழந்து LਹੀਫਪT
நெற்றியைத் தடவியபோது சேரா, நீ ஒகேயா எனக்கேட்டான் ஆனந்தன்.
சிலகணங்களில் பிரச்சினை இல்லை’ என்ற அவள் உள்ளே பிரவேசித்தபோது ஆனந்தன் அவளைப் பின்தொடர்ந்தான்.
அவள் வெஜிரேரியனாக இருந்ததால் அவளிடமே உணவைத் தெரிவு செய்யச் சொன்னபோது அவள் தெரிவு செய்தாள்.
உணவின்போது வைன் தேவையா? என்றபோது தலையாட்டி மறுத்தாள்.
"ஏன் மவுனமாகிவிட்டாய்? ஒன்றுமில்லை எனத் தலையை ஆட்டி னாள்.
ஆனந்தனுக்கு மனதில் அமைதியில்லை. எப்பொழுதும் இந்த ஒரு வருடத்தில் சேரா இப்படி மவுனமாக இருந்தது கிடையாது. அவனுக்கு முற்றிலும் புது அனுபவமாக அந்தத் தேன்நிலவு கரைகிறது.
"உனது முகத்தில் குழப்பமாக இருக் கிறதே?
அவளிடம் இருந்து பதில் வரவில்லை விரைவாக உணவுமுடிந்ததும்அமைதியாக சேரா ஆனந்தனைப் பின்தொடர்ந்தபடி ஹோட்டலுக்குள் சென்றாள்.
அறைக்குள் சென்றதும் என்னை மன்னிக்க வேண்டும். என்றாள்.
நாம் ஹனி மூனுக்கல்லவா வந்தோம்’ ஆனந்தன் மன்னிக்கவேண்டும். எனக்கு அப்போது தலையில் அடிபட்டபோது உங்களை மெல்லிய உணர்வுள்ள கணவனாக என்னால் பார்க்க முடியவில்லை. தற்போ தைய மனநிலையில் தனிமையில் படுக்க விரும்புகிறேன்' என அந்தக் கதவை மூடிக் கொண்டு பெரிய அறையினுள்ளே சென்றாள் சேரா.
மெல்லுணர்வு. அது என்ன மெல் லுணர்வு? என யோசித்தபடியே அந்தச் சிறிய அறையில் இருந்த தொலைகாட்சியில் எதா வது ரொமான்ஸ் காட்சிகள் கொண்ட படம் வராதா எனப் பல சனல்களை மாற்றியபடி இருந்தான் ஆனந்தன்.
O O. O.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 21
ஆறடி
கெகிடங்காகக்ங்கள்/
வடிவத்தை வழிமொழிந்து வாழ்வியல் தளம் வர்ணத்துக்குரியதென வாதாடுகின்ற வழக்கு சொந்தமென்பதை சொகுசுகளில் எழுதி தெருச்சாலைகளில்
ஒட்டப்படும் தணிக்கையற்ற
ஒரு திரைப்படம்! சமத்துவ இருப்பை சமகால விண்ணப்பத்தில் ஒருதலை உறவுக்கு உயிலெழுத முயல்வது உளநோயின் உள் வடிவம்! இனவாதக் கச்சையை இறுகக் கட்டிய கோமாளிக்கூத்தில்
குடியேறிய கூட்டு! மந்திரங்களுக்குள் மறைக்கப்பட்ட தந்திரக்கத்தியால் தாக்கப்படுகின்ற தனித்துவத் தலைகள்
எரிகின்ற நெருப்பில் இனவாத எண்ணெய்யூற்றி நடத்தப்படுகின்ற வேள்விகள் ஒன்றே குலம் ஒருவனே தேவனென்ற தத்துவம் புரியாத தலைக் கொழுப்பு அன்பை அடையாளமாக்கி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

பதியத்தளாவ பாங்கி
நிலம்
அறம் சொன்ன போதனைப் புனைவில் கலந்த அதுவுமொரு அத்து மீறிய அழக்கு
இப்படியாக்கியம்
அதிகாரம் அரியாசனம் ஏறும்போது அறியாமை இப்படித்தான் உருவாகிக் கொள்ளுமென்பது அறையப்பட்ட ஒரு சிலுவைச் செய்தி
மண்ணுக்கு கண்ணுனண்டு
மாயவித்தைகளை மன்னிக்காதென்பது மறைக்க முடியாது ஒரு வெள்ளைப் பக்கம்
ஒற்றுமை நிலத்தை ஊடறுத்து உழுது வேற்றுமை விதையை விதைத்து வினையாக்கும் நீசங்களால் நிர்வாணமாக்கப் படுகின்ற இந்த மண்
சதி காரனுக்கும் சண்டாளனுக்கும்
அதிகாரத் தலைகளுக்கும்
உனக்கும் எனக்கும் இறுதியில் சொந்த மாகும் ஆறடி நிலம்!

Page 22
எழுதும் ,
I 哆行
I \ , -L 靂 விமானத்திலிருந்து சாவதானமாக இறங்கி குடிவரவு - குடியகல்வு கரும பீடத்தை நோக்கி நடந்தோம். அப்போதுதான், விமானத்திலிருந்து பயணிகள் ஏன் முண்டியடித்துக்கொண்டு அவசர அவசர மாக இறங்கினார்கள் என்பது எமக்குப் புரிந்தது. அங்கே ஒரு நீண்ட கியூவைக் காண முடிந்தது. பிரித்தானிய பாஸ்போட் உள்ளவர்களுக்குத் தனியான கருமபீடமும் வெளிநாட்டவர்களுக்குத் தனியான கரும பீடங்களும் இருந்தன. வெளிநாட்ட வர்களுக்கான கியூவில் நாங்கள் இணைந்து கொண்டோம். நீண்டு வளைந்து சென்ற அந்தக் கியூ வரிசையில் ஆங்காங்கே அறிவிப்புகள் காணப்பட்டன. நாம் நின்றிருந்த இடத்தில் இன்னும் 45 நிமிடங்கள் வரை கருமபீடத்தை அடையக்காத்திருக்கவேண்டிஇருக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. கியூவில் முன்னேறிச் சென்றால், இன்னுமோர் இடத்தில் 30 நிமிடம் வரை காத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு இருந்தது. அதனின்றும் முன்னேறி நடந்தால் 15 நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. நேரத்தைப் பொன்னாக மதிப்பவர்களுக்கு அத்தகைய அறிவிப்புகள்
2O
 
 
 
 
 
 
 
 
 
 

தேவைதான்.
வரிசையில் நின்றிருந்த LJ Gol) வெளிநாட்டு இளந் தலைமுறையினர் தமக்குக் கிடைத்த அந்தப் பொன்னான நேரத்தைப் பிரயோசனப்படுத்திக்கொண் டிருந்தார்கள். ஆம், கையில் புத்தகத்தை வைத்து வாசித்தபடி நின்றிருந்தார்கள். இத்தகைய நேர அறிவுப்புகள் பல இடங்களில் பிரயாணிகளுக்குக் கொடுக் கப்படுவதை பின்னர் இலண்டனில் இருந்த காலகட்டத்தில் நான் பலதடவை அவதானித்திருந்தேன். பஸ்தரிப்பில் நிற்கும் போது குறித்த பஸ் எவ்வளவு நேரத்தில் வரும், புகையிரத நிலையத்தில் நிற்கும்போது குறித்த றெயில் எவ்வளவு நேரத்தில் வரும், என்றெல்லாம் காத்து நிற்கவேண்டிய காலப்பொழுதைத் துல்லிய மாக நிமிடங்களில் அறிவித்தல் தருகிறார்கள். புத்தகங்களைக் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது எனது இளமைப்பருவம் ஞாபகத்தில் வந்தது.
நானும் ஒரு காலத்தில் இப்படிப் புத்தகங்களை வைத்து வாசித்துக்கொண் டிருந்த காலம் ஒன்றிருந்தது. அது அச்சு ஊடகம் முதன்மை பெற்றிருந்த காலம். அந்தக் காலத்தில் பலருக்கு இரசனையைத் தரக்கூடிய முக்கிய ஊடகமாக நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் விளங்கின. அக் காலத்தில் அடுப்பூதும் மங்கையர்களாக இருந்தவர்கள்கூட 'கல்கி'யின் தொடர் வரலாற்று நாவல்களை வாசித்ததால் சிறந்த வாசகர்களாக மாறினார்களாம்.
அன்று அச்சு ஊடகம் தந்த இரசனையை இன்று ஒலி, ஒளி ஊடகங்களும் இலத்திரனி யல் ஊடகங்களும் தரத் தொடங்கிவிட்டன. வாசிப்புப் பழக்கம் அருகிவருவதற்கு இதுவும் ஒரு காரணமாகிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தினமும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்அமர்ந்து இந்தியக் குப்பை நாடகங்களை குடும்ப சமே தரராய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 23
03
ஒருகாலத்தில் நிலா வைக் காட்டி குழந்தை களுக்கு சோறூட்டிய பாட்டிமார் குழந்தை களின் கைகளில் IPad ஐக் கொடுத்து விட்டு நாடகம் பார்த்தபடி சோறு ஊட்டுகிறார்கள். இதுதான் பலவீடுகளில் இன்றைய நடைமுறை. இவையெல்லாம் காலத் தின் கோலம்!
பக்கத்தில் நின் றிருந்த மனைவி யிடம் நூல்களை வாசித் து க் கொண
டிருக்கும் அந்த இளசு களைக்காட்டி, 'இப்படியான நிலைமை எமது நாட்டில் இல்லையே' என ஏக்கத்துடன் கூறினேன். அதற்கு மனைவி கூறினாள், "எமது நாட்டின் கல்வித் திட்டத்திலேதான் குறைபாடு இருக்கிறது. - எமது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பரீட்சையை மையமாகக் கொண்டவை. மாணவர்களின் அறிவை விருத்தி செய்யக்கூடிய நிலையில் கல்வித்திட்டம் - அமையவில்லை. மாணவர்களின் தேடல் முயற்சிகளுக்கு எங்கள் கல்வித்திட்டத்தில் இடம் மிகக் குறைவாகவே உள்ளது. அவர்கள் எதையும் தேடி வாசித்து அறிவைப் பெருக்கும் பயிற்சி எமது கல்வித்திட்டத்தில் இல்லை. மேலை நாடுகளில் வாசிப்புப்பழக்கம் சிறுவயதிலேயே ஏற்படுவதற்கு அவர்களது கல்வித்திட்டமே காரணமாக இருக்கிறது” என்றாள். அரச கல்விச்சேவையில் நீண்டகாலம் பணியாற்றிய அவளது அனுபவக் கூற்று இது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்போல் எனக்குத் தோன்றியது. ஏனெனில் மேலைநாடுகளில் எத்தனையோ விதமான கவனக் குழப்பான்கள் இளைஞர்களுக்கு இருந்தபோதும் அவர்கள் வாசிப்புப் பழக்கத்தைக் கைவிடுவதில்லை.
அப்படியானால் எனது இளமைக் காலத்தில் சரியான கல்வித்திட்டம் இலங் கையில் இருந்ததா? அல்லது வேறு ஊடகங்கள் முக்கியம் பெறாத நிலையில் நாங்கள் புத் தகங்களில் மூழ்கினோமா? எது எப்படியோ, இது சர்ச்சைக்குரிய விடயம்தான்.
நாங்கள் குடிவரவு குடியகல்வு கரும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

பீடத்தில் எமது பாஸ்போட்டைக் கொடுத்த பொழுது, அங்கே இருந்த உத்தியோகத்தர், ஏன் இலண்டனுக்கு வருகிறீர்கள்? எனக் கேட்டார். 'நாங்கள் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகிறோம்' எனக்கூறி, உலகத் தமிழியல் மாநாட்டு அமைப்பாளர் எமக்கனுப்பிய கடிதத்தை அவரிடம் காட்டினோம். வேண்டிய பதிவுகளை மேற் கொண்ட பின் எம்மை நாட்டின் உள்ளே செல்ல அனுமதித்தார்கள். எவ்விதப் பிரச்ச
னையும் எமக்கு அங்கு இருக்கவில்லை. - உலகத் தமிழியல் மாநாட்டு அமைப் பாளர்கள் எம்மைவிமானநிலையத்துக்குவந்து அழைத்துச் செல்வதற்கும் மாநாடு நடக்கும் நாட்களில் நாங்கள் தங்கி இருப்பதற்குமான இடவசதி, உணவுவசதி யாவற்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும் எனது மைத்துனர் சுதாகரன் தனது விருந்தாளியாகவே எம்மை வைத்திருக்க விரும்பினார். மைத்துனரின் தந்தை எஸ். பி. ஐயர் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியல் நீண்டகாலம் ஆசிரியராகக் கடமை புரிந்தவர். 'ஐயர் மாஸ்ரர்' என்ற பெயரில் புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியராக விளங்கியவர். அவர் எனது தாயாரது சகோதரராவார். எனது மைத்துனர் 20 வருடங்களுக்கு மேலாக இலண்டனில் குடும்பமாக வாழ்பவர். தனது வீட்டிலிருந்து மாநாட்டுக்குத் தினமும் சென்று வரலாம், அதற்கான சகல ஏற்பாடுகளையும் தான் செய்து விட்டதாகவும் தொலைபேசி மூலமும் மின் அஞ்சல் மூலமும் தெரிவித்திருந்தார். எமக்கும் அது வசதியாகவே இருந்தது.
நாங்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, எனது மைத்துனரின் மனைவி சோபனாவும், அவரது மூத்த மகன் சரணும் எங்களை அழைத்துப்போகக் காரில் வந்திருந்தனர்.
கார் விமான நிலையத்திலிருந்து புறப் பட்டு அவர்களது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் இலங்கைப் புதினங்கள் பற்றி அறிய ஆவலாக பலதும் பத்தும் பேசிக்கொண்டே வந்தார்கள். ஆனாலும் எனது கவனமெல்லாம் தெரு வின் இருமருங்கிலும் காணப்பட்ட வீடுகளிலும், மாடிக்கட்டிடங்களிலும் கடைத் தெருக்களிலுமே பதிந்திருந்தது.
எங்கு பார்த்தாலும் பழமை பேணும்
21

Page 24
கட்டிடங்கள்! உயரமான கட்டிடங்களை அதிகம் காண மு டி ய வில் லை. செங்கற்களால் அமைந்த கட் டி ட ங் க ளு க் கு ச் சாந்துகூடப் - பூசப் பட் டிரு க் க வில் லை. வர்ணங்கள் பூசப்படவு மில்லை. பலநூறு வரு டங்கள் பழமைவாய்ந்த ஒரு நகருக்குள் சென்று கொண்டிருப்பதான ஓர் உணர்வுதான் ஏற்பட்டது. உலகின் பெருமைமிக்க வளர்ச்சியுற்ற நாடாக விளங்குகின்ற இலண்டனா இது! வீடுகளின் முன்புறத்தை மாற்றி அமைத்து புது மெருகூட்ட அங்குள்ள நகரசபை அனுமதிப்பதில்லையாம். ஒரு வீடு கட்டும்போது அந்த வீட்டின் செங்கல்லின் நிறத்தைக்கூட அந்தப்பகுதி நகரசபைதான் தீர்மானிக்கும். இதனால் ஒரு வீட்டின் வெளிப்புறத் தோற்றத்திலிருந்து அருகே உள்ள வீடுகளின் வெளிப்புறத் தோற்றங்கள் மாறுபடுவதில்லை. சில வீடுகளின் முன்னால் 1600, 1700, 1800 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வீடு என்று பெருமையாகக் குறிப்பிட்டிருப்பார்கள். இங்கு நகரசபை அலுவலங்களில்ஒருவர்குடியிருக்கும்வீட்டில் இதுவரை யார் யார் குடியிருந்தார்கள் என்ற தகவல்களையும் அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுகிறார்கள். தாங்கள் பழம்பெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர் என்பதை நிலை நாட்டுவதில் அங்குள்ள மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அரசாங்கமும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. தெருக்களின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென பசுமையாக இருந்தது.
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் அகலமான பல 'லேன்'களைக் கொண்ட தெருக்களைக் காணமுடிகிறது. எங்களது நாட்டின் நகர்ப்புறங்களில் இப்போது
அகலமான தெருக்கள் வந்து விட்டன. ஆனால் இலண்டனில் உள்ள தெருக்கள் பெரும்பாலும் இரண்டு 'லேன்'கள் கொண்டவையாகவே இருக்கின்றன. இந்தத் தெருக்களில் இரண்டு பஸ்கள் எதிரும் புதிருமாக வரும்போது மிக நெருக்கமாகச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
22

இங்கு அனேகமான வீடுகளில் கார்களை நிறுத்திவைக்க 'கராஜ்' இருப்பதில்லை. வீட்டுச் சொந்தக்காரர்கள் தத்தம் வீடு களின் முன்னால் வெளிப்புறத்தில் கார் களை நிறுத்தி வைக்கிறார்கள். அந்த இடம் அவர்களுக்கென அரசாங்கத்தால் ஒதுக் கப்பட்ட இடம் என்கிறார்கள். தெருவின் இருமருங்கிலும் வீடுகளின் முன்னால் கார்கள் நிறுத்தப்படுவதால் தெருவும் ஒடுக்கமானதாகிவிடுகிறது.
இன்று உலகில் உள்ள தொண்ணூறு வீதமான நாடுகளில் முடியாட்சி ஒழிந்து மக்களாட்சியே நடைபெறுகிறது. ஆனால் பழமை பேணும் பிரித்தானியாவில் இன் னும் அரசிதான் நாட்டின் தலைவராக இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இங்கு ஒரு பாராளுமன்றமும் இருக்கிறது. பிரதமராக டேவிட் கமரூன் விளங்குகிறார். -- 646 அங்கத்தவர்களைக்கொண்ட கீழ்ச்சபையும் 670 பேர்களுடனான பிரபுக்கள் சபை என்னும் மேல் சபையும் இருக்கிறது. ஆனாலும் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்துவரும் மன்னர் அல்லது மகாராணியே ஆட்சியைத் தொடர்ந்து வைத்துள்ளார். இதற்குக் காரணம் பாரம்பரியத்தைப்பேண விரும்பும் ஆங்கிலேயர்கள் இன்னும் அந்தப் பாரம்பரியத்தில் இருக்க வெண்டும் என விரும்புவதுதான்.
- பழமை நிறைந்த கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டு வந்த எனக்கு, இதே பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த ஆங்கி லேயரால் ஆக்கப்பட்ட அவுஸ்திரேலிய நாட்டின் தெருக்களும் வீடுகளும் அவற்றின் தோற்றமும் ஞாபகத்தில் வந்தன. இன்றைய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 25
அவுஸ்திரேலியாவின் வரலாறு ஏறத்தாழ 200 வருடங்களினைக்கொண்டது. ஆங்கி லேயர்கள் தமது நாட்டில் குற்றாவாளிகளாகக் காணும் கைதிகளை சிறைப்படுத்தவே இக்கண்டத்தைப் பயன்படுத்தினார்கள். தமது நாட்டில் பாரிய குற்றங்களைப்புரிந்தவர்களை கப்பல் மூலம் தூரத்தே இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிவந்து அங்கு கைதிகளாக்கினர். சிறைக்கைதிகளாலான வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டதே இன்றைய அவுஸ்திரேலியா, ஆனால் அவுஸ் திரேலியாவில் உள்ள வீடுகள் தெருக்கள் யாவும் நவீன பாணியில் அமைந்துள்ளன. அங்கு பல லேன்களைக்கொண்ட அகலமான தெருக்களையும்காணமுடியும்.தமதுநாட்டில் பழமைபேணும் வெள்ளையர்கள் தாம் உருவாக்கிய நாடான அவுஸ்திரேலியாவில் அந்தப் பழமைபேணும் பாரம்பரியத்தை, கலாசாரத்தை ஏனோ கைக்கொள்ளவில்லை.
19ஆம் நூற்றாண்டில் மாபெரும் சாம் ராஜ்யமாக இருந்த பிரித்தானியா 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து படிப் படியாகத் தனது ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கியது. பிரித்தானிய ஆட்சியின்கீழ் இருந்த நாடுகளில் ஏற்பட்ட சுதந்திரதாகம், சுதந்திர விடுதலைப்போராட்மாக மாறிய போது பிரித்தானியாவுக்கு அந்நாடுகளுக்கு சுதந்திரம் அளிப்பதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.
பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையை உலகத்துக்கு வழங்கிய பெருமை பிரித் தானியாவுக்குத்தான் உண்டு. பிரிட்டிஷ்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (14ே)
 
 

பாராளுமன்றத்தை உலக நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாய்-Mother of Parliament என்று கூறுவார்கள்.
பிரித்தானியாவின் மொத்த சனத் தொகையில் 90 வீதமானோர் ஆங்கிலேயர்கள். மிகுதி பத்து வீதமானோரில் ஆபிரிக்க நாட்டு வம்சாவளியினரே அதிகம். அடுத்த படியாக இந்திய நாட்டவர்கள் இருக்கிறார்கள். அடுத்ததாகப் பாகிஸ்தான் - பங்களதேஷ் இனத்தவர்களும் மிகுதியாக இதர கலப்பு இனத்தவர்களும் இருக்கிறார்கள்.
பிரித்தானியா இரண்டு உலக மகா யுத்தங்களைச் சந்தித்த நாடு. இந்த உலக யுத்தங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையை பிரித்தானியாவால் FFG செய்ய முடியவில்லை. ஆனாலும் காலப் போக்கில் தன்னைப் புனரமைப்புச் செய்து சாதனை படைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் இன்று முன்னணியில் திகழும் நாடாகவும் சகல செல்வங்களும் கொண்ட நாடாகவும் தன்னை மீள் கட்ட மைப்புச் செய்து கொண்டது.
பிரித்தானியா இன்று ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பலம் பொருந்திய அதிகார வலுப்பெற்ற "ஸ"ப்பர் பவர் கொண்ட நாடாக அங்கத்துவம் பெற்றுள்ளது. இந்த வகையில் ஏனைய பலம்பொருந்திய நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் விளங்குகின்றன. "கொம்மன் வெல்த், நேற்றோ அமைப்புகளை உருவாக்கிய பெருமையும் பிரித்தானியாவுக்கே உரியது.
ஆசிய நாட்டவர்களைப் பொறுத்தவரை இலண்டன் மிக நெருங்கிய அறிமுகத்தைக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், உலக முக்கியதரம் வாய்ந்த மாநாடுகள் இங்கு நடைபெறுகின்றன. உலகமுக்கியதலைவர்கள் இங்குகூடுகிறார்கள். உலகத்தலைநகர்களுடன் போட்டிபோட்டு பல துறைகளிலும் இலண் டன் முன்னணி வகிக்கிறது. அதனால் இலண்டனை ஒரு தனிநாடாகவே பலர் கருதுகிறார்கள். பலர் பிரித்தானியா என்ற பெயரைச் சொல்வதில்லை. இலண்டன் என்றே கூறுகிறார்கள்.
இன்று உலகில் தொலைத் தொடர்பு சேவைகள் பெரிதும் விரிவடைந்து விட்டன. அனேகமானோர் இன்று கையடக் கத் தொலைபேசிகளைப் பாவிக்கத் தொடங்கிவிட்டனர். எந்த நேரத்திலும்
23

Page 26
C K K (
୍
எந்த இடத்திலிருந்தும் உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுடனும் தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் வந்து விட்டன. இன்று கைத்தொலைபேசி பாவிக்காதவர்கள் இல்லை என்று எண்ணுமளவுக்கு சிறுவர்களின் கைகளிலேகூடக் கைத் தொலைபேசிகள் இருக்கின்றன. இலண்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள குடும்பங்களில் குடும்ப அங்கத்த வர்கள் அத்தனை பேரின் கைகளிலும் கைத் தொலைபேசிகள் இருக்கின்றன. sg,60TIT லும் இலண்டன் தெருக்களின் முக்கிய இடங்களில் பழைய பாணியில் அமைந்த மரப்பலகையினால் செய்யப்பட்ட தொலை GLJá5 FITGILq.(5606Ti" (Telephone Booths) பார்த்தபோது நான் பெரிதும் ஆச்சரிய மடைந்தேன். இந்தச் சாவடிகளை அவர்கள் இன்னும் தெருக்களின் ஒரங்களில் விட்டு வைத்திருப்பது தமது பழமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினாலேதான். இந்தச் சாவடிகள் சிகப்பு வர்ணம் பூசப்பட்டு காண்போரின் காட்சிப்பொருளாகின்றன.
பிரித்தானியாவில்நிலவும்முடியாட்சியை அதாவது பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வரும் மன்னர் அல்லது மகாராணி ஆட்சியைத் தொடர்ந்தும் வைத்திருப்பதா என்ற சர்ச்சை பிரித்தானிய வரலாற்றில் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாகும். திடீரென இப்பிரச்சனை எரியும் பிச்சனையாக மாறும். ஆனால் சில நாட்களில் அது தணிந்து விடும். பிரித்தானியாவில் இருக்கும்
24
 

இரு பெரும் அரசியல் கட்சிகளான தொழிற் கட்சியும் (Labour) கன்சர்வேற்றிவ் Conservative) கட்சியும் பாரம்பரியத்தை விரும்பும் பிரித்தானிய மக்களுக்கு மாறாக முடியாட்சியில் கைவைக்கத் தயங்கு கின்றன. - அதாவது நாட்டுக்குப் பெருமை ரும் கிரீடத்தைத் தொடத் தயங்கு கிறார்கள். இதுவரையில் 52 பிரதமர்கள் பிரித்தானியாவில் பதவி வகித்துள்ளார்கள். இன்றைய பிரதமராக இருப்பவர் டேவிட் மரூன். இவர்கள் எவருமே முடியாட்சியில் கைவைக்கவில்லை.
பிரித்தானிய அரசியல் வரலாற்றில் ஒரே யொரு பெண் பிரதமராக இருந்திருக்கிறார் மார்க்கிரட் தாச்சர். இவர் ஃபோக்லான்ட் alkland L1555605 BL 55ug5 Tai Iorn Lady என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
உலகில் முதன்முதலாக தபால் சேவையை அறிமுகம் செய்தவர்கள் பிரித்தானியர்கள்தான். இங்கிலாந்தில்
1712ஆம் ஆண்டில் சான்குகார் என்ற இடத்தில் முதலாவது தபால்நிலையம் அமைக்கப்பட்டது. 300 ஆண்டுகளுக்கு மேற் பட்ட பழமை வாய்ந்த இந்தத் தபால் நிலை யத்தில் இருந்து ஆரம்ப காலத்தில் நடந்து சென்றுதான் தபாற்காரர்கள் தபால்களை விநியோகித்தார்களாம். பின்னர் பார்சல்களை அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து குதிரைகளில் சென்று விநியோக முறை ஆரம்பிக்கப்பட்டதாம். இதற்காகத் தபால் முத்திரைகளை அறி முகப்படுத்தியவர்களும் பிரித்தானியர்கள் தான். இந்தத் தபால் முத்திரைகளில் நாட்டின் பெயர் இருப்பதில்லை. பிரித்தானிய மன்னர், அல்லது மகாராணியின் தலைச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 1840இல் முதன் முதலில் ஜோர்ஜ் மன்னரின் தலைச்சின்னத்துடன் முத்திரை வெளியிடப் பட்டதாம். இன்றும் இலங்கை உட்பட அநேக நாடுகளில் உள்ள காணிகளின் தாய் உறுதிகளில் ஜோர்ஜ் மன்னரின் தலைச்சின்னம் பொறிக்கப்பட்டமுத்திரைகள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தப் பாரம்பரியத்தை பிரித்தானியாவின் போக்கு வரத்துக்குப் பொறுப்பான "றோயல் மெயில்’ ஸ்தாபனம் நீக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். பழமை விரும்பிகள் இந்தத் தலைச்சின்னம் நீக்கப்பட்டதற்கு இப்போது எதிர்ப்புத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 27
தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் உள்ளவர்கள் எந்த அளவிற்குப் பழமைபேணுகிறார்கள் என் பதற்கு, அங்கிருந்த காலத்தில் என்னால் அவதானிக்கப்பட்ட இன்னுமொரு விட யத்தையும் இங்கு பதிவு செய்யலாம். இங்குள்ள தெருக்களில் ஓடும்பஸ்களில் அநேகமானவை இரட்டைத்தட்டு சிவப்புநிற பஸ்கள். பழைய காலத்தில் பஸ்ஸில்பிரயாணம் செய்யும்போது ஒரு இடத்தில் இறங்கவேண்டும் என்றால் அந்த பஸ்ஸில்கட்டியிருக்கும்ஒருமணியைப்பிடித்து இழுப்பார்கள்; சாரதி பஸ்ஸை நிறுத்துவார். அதே போன்று, இப்பொழுதும் பஸ்ஸை நிறுத்த அழுத்தும் 'சுவிட்'சில் இருந்து அதே பழைய மணியோசை வருகிறது. இப்படியாக ஒவ்வொருவிடயத்திலும் மிகவும் நுணுக்கமாக பழமையைப் பேணிக் கொண்டிருக்கிறார்கள். - நாங்கள் பயணஞ் செய்த தெருவின் எதிர்ப்புறமாக பழைய மொடல் “ஃபியற்' கார் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்த மொடல்கார்களை நான் எனது இளமைப் பருவத்தில் 65 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கிறேன்; இங்கு மீண்டும் பார்க்கிறேன். இந்தக் கார்களின் வடிவமைப்பிலும் பெரிய மாற்றம் எதுவும் நடந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 'ராக்ஸி'- வாடகைக்கார் என்ற வாசகம் அந்தக்காரில் பொறிக்கப்பட்டிருந்தது. இத்த கைய கறுப்பு நிறத்தில் அமைந்த பழைய மொடல் 'ஃபியற்' வாடகைக் கார்கள் பல இலண்டன் - தெருக்களில் ஓடிக்கொண் டிருக்கின்றன. உல்லாசப் பயணிகள் அநேகமாக இந்தக் கார்களைத்தான் வாட கைக்கு அமர்த்துகிறார்கள்.
நாங்கள் மைத்துனரின் இல்லத்திற்குச் சென்றபோது, மைத்துனரும் அவரது பிள்ளை களும் எம்மைக் குதூகலமாக வரவேற்றார்கள். பாரம்பரியம் பேணும் மோஸ்தரில் அமைந்த அவர்களது இல்லத்தில் களைப்பாற வெந்நீரில் குளித்தோம். மைத்துனரும் பிள்ளைகளும் எமக்குத் தமது வீட்டின் சகல பகுதிகளையும் மகிழ்ச்சியுடன் சுற்றிக் காண்பித்தார்கள். அவர்களது பூசை அறைக்குள் நுழைந்த போது அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிசயித்தேன். என் வாழ்நாளில் அங்கேதான் அப்படியொரு
அதிசயத்தைக் கண்டேன்.
(வளரும்)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

இrs,
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 7 72ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில்
தெரிவு செய்யப்பட்ட
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைவர்:
திரு. ஆனந்தர் இரகுபதி பாலஸ்ரீதரன்
துணைத்தலைவர்கள்:
திரு .மு கதிர்காமநாதன் அகமது ஜின்னாஹ் ஷரிபுத்தீன் செல்வி சற்சொரூபவதி நாதன் திருமதி பத்மா சோமகாந்தன்
- திரு. தி. ஞானசேகரன்
திரு. உடப்பூர் வீரசொக்கன் பொதுச் செயலாளர்:
திரு. தம்பு சிவசுப்பிரமணியம் துணைச்செயலாளர் :
திரு. க. க. உதயகுமார் நிதிச் செயலாளர்:
திரு.சி. சிவலோகநாதன் துணை நிதிச் செயலாளர்:
திரு. செ. திருச்செல்வன் இலக்கியக்குழுச் செயலாளர்:
- திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நூலகப்பணிச் செயலாளர்:
திரு. க. இரகுபரன் கல்விப்பணிச் செயலாளர்:
திரு. மு. மனோகரன் நிலையமைப்புச் செயலாளர்:
திரு. மா. தேவராஜா உறுப்பாண்மைச் செயலாளர்:
திரு. ஆறுமுகம் குகமூர்த்தி ஆட்சிக்குழு உறுப்பினர்கள்:
திருமதி வசந்தி தயாபரன் வைத்திய கலாநிதி சி. அனுஷ்யந்தன் திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா திரு . ஜி. இராஜகுலேந்திரா திருமதி பவானி முகுந்தன் திரு. எஸ். எழில்வேந்தன் பேராசிரியர் வ. மகேஸ்வரன்
திரு. அந்தனி ஜீவா திரு ஏ. சி. ஷண்முகலிங்கம் திரு. நடராஜா காண்டீபன் திரு. எம். ஆர். கலைச்செல்வன் திருமதி ரஜனி சந்திரலிங்கம் திரு. கதிரவேலு மகாதேவா
திரு. மா. சடாச்சரம் திருமதி வளர்மதி சுமாதரன் திரு. இராமசாமி ஸ்ரீஸ்கந்தராஜா
திரு வ. கமலேஸ்வரன் திரு. கந்தையா சுந்தரமூர்த்தி வைத்திய கலாநிதி ச. முருகானந்தன் திரு. தம்பையா அரியரத்தினம்
25

Page 28
- கோங்க' 'நாங்க'' ""
இலவசக் கல்வியின் தந்தை சீ.டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களின் பாத்திர மேற்று அவராகத்தோன்றஉடைமாற்றியிருந்த நிஷா, உற்சாகம் குன்றி உட்கார்ந்திருந்தாள்.
அவளது எண்ணங்கள் - ஆசைகள் எல்லாமே சிதறிய நிலையில் அவளைக்கவலை சூழ்ந்து கொண்டது. கண்களில் நீர் முட்டத் தனது கைகளால் அவற்றைத் துடைத்தபடி அவள் சிணுங்கினாள்.
கன்னங்கரா அவர்களின் இலவசக் கல்விக் கொள்கையின் மகத்துவத்தை விளக்கும் உன்னத அரங்கச் சித்திரத்தின் கதா பாத்திரம் நிஷா.
அந்தக் கதா பாத்திரத்தைச் சிறப்பாக அரங்கேற்ற அவள் எடுத்துக் கொண்டிருந்த முயற்சிகள் யாவுமே வீணாகிப் போனதாக எண்ண அவளால் இயலவில்லை. -
அந்தநாள் தோன்றிய
கல்விச் சீர்திருத்தவாதியின் பாத்திரச் சிறப்பை வெளிக்கொண்டு வருவதற்காக விருப்புடன் முன்நின்ற நிஷாவின் குணசித்திர நடிப்பை மேம்படுத்தக் காந்திமதி ரீச்சர் எடுத்த
முயற்சிகளோ அநேகம்.-
நிஷா ஓர் அழகிய சிறுமி. அவள் கற்றுக்கொண்டிருந்த பள்ளியில் அவளது விவேகமும் கற்றலில் அவள் காட்டும் ஆர்வ மும் பாடசாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அழகும் ஆரோக்கியமும் அவ ளின் உற்சாகமான கற்றல் செயற்பாட்டுக்கு உதவின. துள்ளித் திரிந்தவள் உற்சாகமாகத் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாக அரங்கேற்ற வேண்டுமென்ற ஆவ லோடு சுறுசுறுப்பானவள். இப்பொழுது அவளைச் சூழ்ந்து வருத்திய துயரம் பெருக அழுதுகொண்டிருக்கிறாள்.
அந்தப் பெண்கள் பாடசாலையில் என்றோ ஒருநாள் அத்திவாரமிடப்பட்ட விஞ்ஞான கூடம் இன்று திறந்து வைக்கப் பட்டது. அந்தத் திறப்பு விழாவைக் கோலாகலமானதோர் கொண்டாட்டமாகக்
நெடுந்தீவு
ஓமழான்

கொண்டாடிக் குதூகலித்து மகிழப் பாட சாலைச் சமூகம் ஒழுங்கமைத்திருந்தது.
பிரதம விருந்தினராக விஞ்ஞான கூடத் தைத் திறந்து வைப்பதற்கென நாட்டின் கல்வி அமைச்சரை பெரு விருப்புடன் பாடசாலைக் கல்விச் சமூகத்தினர் அழைத்திருந்தார்கள். அவரின் வருகையை ஆவலோடு காத்திருந்த அக்கிராம மக்கள் மாணவர் சூழப் பாடசாலை வாசலிலிருந்தே மேள தாளத்துடன் பாண்ட் வாத்தியம் இசைக்க அமைச்சரைத் தொடர்ந்து பின் நடந்தனர். ஊர்ப் பெருமக்கள் கூடிவர உற்சாகம் மேலிட ஊர்வலத்தின் முதல்வராகி விஞ்ஞான கூடத்தைத் திறந்துவைத்தார்
அமைச்சர்.
டிஜே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 29
இதற்கான ஆயத்தங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந் தேறியிருந்தன. தூக்கம் தொலைத்துப் பல தினங்கள் இதற்கெனத் திட்டமிட்ட அதிபருடன் பாட சாலைச் சமூகம் நிகழ்ச்சிகள் அனைத்துமே வெற்றிகரமாக நிறைவேறுவதைப் பார்த்து இன்று உற்சாக மேலீட்டால் குதூகலித்தது.
மாலை மரியாதைகளுடன் அமைச்சரைச் சூழ்ந்து நடந்து அவர்கள் பெருமைப் படுத்திக் கொண்டிருந்தனர். சூழ்ந்து நின்ற பலரும் ஆரவாரித்தனர். அமைச்சருடன் வந்த பரிவாரங்களும் மக்களும் மாணவரும் ஒன்று திரண்டு முன்னேறிய காட்சிகள் படப்பிடிப்பாளர்களின்- கமறாக்களில் பதிவாகின. சிரித்த முகத்தோடும் கூப்பிய கரங்களோடும் அமைச்சர் தம்மைச் சூழ்ந் திருந்த கூட்டத்தினரைப் பார்த்துப் பர
வசித்தார். விஞ்ஞான கூடம் திறந்தாயிற்று.
பாடசாலையின் மண்டப அரங்கை நோக்கி மக்களும் மாணவரும் கூடினர். அமைச்சரும் அதிபரும் பாடசாலை அபி விருத்திச் சங்கச் செயலரும் பிரமுகர்களும் மேடையிலே போடப்பட்டிருந்த ஆச னங்களில் கரகோசங்களுக்கிடையே வந்த மர்ந்தனர்.
மாலை - தாங்கி மரியாதையோடு அமர்ந்திருந்த அமைச்சரை தேசிய உடை பூண்டு தோன்றிய அதிபர் வாழ்த்தி வரவேற்றுப் பேசினார். கரகோஷம் அந்த அவையை நிறைத்தது.
முன்னாள் கல்வி அமைச்சர் அன்றொரு நாள் அத்திவாரமிட்டு ஆரம்பித்து வைத்த கட்டிடம் அது.
இன்று அதன் வேலைகள் நிறை வாகிய நிலையில் உருவமைந்த வெள்ளை யடிக்கப்பட்ட விஞ்ஞானகூடத்தைக் கெளரவ அமைச்சர் திறந்து வைத்து விட்டார். அவரை வாழ்த்தியும் அவரது அரசியல் அனுபவத்தைப் புகழ்ந்தும் செய்யாத சேவைகளைச் செய்துதர வேண்டியும் பாராட்டியும் பேசிய பாடசாலை அபிவிருத்திச் சபைச் செயலாளரின் பேச்சைத் தொடர்ந்து கரகோசங்கள் ஒலித்தன. |
கெளரவ அமைச்சர் இப்பொழுது பேசினார். மாலைகள் பல அவரது கழுத்தை நிறைத்தன. மக்களுக்காக அரசு செய்யும் மகத்தான செயற்பாடுகளை வழமைபோல் பட்டியலிட்டார். இன்னமும் கல்வியின் முன்னேற்றத்துக்காக முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தீர்மானங்கள் பற்றியெல்லாம் சொல்லுக்குச்சொல்சுருதிமாற்றிசுவைகூட்டிக் கூறிவைத்தார். அவை பத்திரிகையாளர்களின் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

பதிவுகளாயின. கூடியிருந்தோர் மனங்களில் உன்னதமானவராக எண்ணமிடப்பட்டிருந்த அமைச்சரின் கருத்துக்கள் உயர்ந்தவையாக ஒளிர்ந்தன. வாழ்த்துரைகளும்சிறப்புரைகளும் நிறைவடைந்தன.
நாட்கள் பலவாகத் திட்டமிடப்பட்டுப் பயிற்றப்பட்டு ஆயத்தமாகவிருந்த மாண வர்களின் கலைநிகழ்ச்சிகள் மேடை யேற ஆரம்பித்தன. இன்னிசை - பெருக மாணவிகளால் ஆடப்பட்ட வரவேற்பு நடனம் அமைச்சரை மாத்திரமல்ல அனை வரையுமே மகிழ்வித்தது. அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தயாரித்தோர் சுறுசுறுப்பாயினர். தம்மையும் தமது நேரத்தையும் இவற்றுக்காய்ச் செலவு செய்த ஆசிரியர்களும் அவற்றின் மூலம் தமது திறமையை வெளிக்கொணரத் துடிக்கும் மாணவர்களும் தமது நிகழ்ச்சிகளை விரை
வாகவே மேடையேற்ற அவசரப் பட்டனர். - அமைச்சர் வேறொரு நிகழ்வில் பங்கு கொள்ளச் செல்லவுள்ளதாகச் செய்திகள் பரவின. அவரது - பிரசன்னத்திலேயே அவருக்கென அவரை மகிழ்விப்பதற்கெனத் திட்டமிட்டு நாட்கள் பலவாகப் பயிற்றிய நிகழ்ச்சிகளை முன்வைக்க ஒவ்வொருவரும் விரும்பினர்.
அமைச்சரின் பார்வையில் நிகழ்ச்சிகள் தமக்குப் பாராட்டைப் பெற்றுத் தரவேண்டும் என்ற வகையிலே அவசரப்பட்டனர்.
- உடையலங்காரங்களாலும் பயிற்சிகளா லும் சிறப்பெனக்கருதிய அரங்கச் செயற் பாடுகளை மேடையில் முன் வைக்க ஒவ்வொருவரும் - முந்தினர்.- அதிபரோ சங்கடப்பட்டார். தமக்குப் பிடித்தமான ஆசிரியரின் தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுத்து சிவகாமி ரீச்சரின் முயற்சியால் விளைந்த குறத்தியர் கும்மியை மேடையேற்ற அனுமதித்தார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளி யேறிய கௌரவ அமைச்சரின் பிரசன்னம் இல்லாமையால் அடுத்தடுத்து மேடையேறக் காத்திருந்தவை அனைத்துமே களையிழந்தன.
காந்திமதி ரீச்சருக்குக்கோபம் மேலிட்டது. வார்த்தைகள் தடுமாறின. தனது ஆக்கமும் அதன் சிறப்பும் அமைச்சரால் பாராட்டப்பட வேண்டும் எனக்காத்திருந்தவருக்கு ஏமாற்றமே எஞ்சியது.
அமைச்சருக்காகவே -- தனது
மாண வர்களை வடிவமைத்தவரின் செயற் பாடுகள் தோல்வியடைந்ததாகவே தெரிந் _தது. அவர் தனது அரங்க நிகழ்வை மேடை
27

Page 30
சிலை பின்கையே.
யேற்றுவதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
அப்போது, அவரது கலைப்படைப்பான இலவசக் கல்வியின் தந்தை சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களின் பாத்திரத்தை ஏற்றுத் தன் திறமையை வெளிக்காட்ட ஆவல் கொண்ட நிஷாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவளு டைய எண்ணத்தில் அமைச்சரை அவள் காணவில்லை; அவள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் அந்தப் பாத்திரத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் ஆர்வமுமே பரந்திருந்தன.
- கெளரவ அமைச்சர் வெளியேறிய சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கு குழுமியிருந்த கூட்டம் - கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருசில பெற்றோருமே அங்கு கூடியிருந்தனர். அதிபர் கல்வி அமைச்சரின் பின்னே சென்றிருந்தார்.
காந்திமதி ரீச்சர் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். தனது ஆக்கம் அமைச்சரின் பாராட்டைப் பெறும் என்ற நம்பிக்கையோடு இருந்தவர், அது அமைச்சரின் பார்வைக்குத் தூரமாகிவிட்ட நிலையில் தனது மாணவர்களால் நடிக் கப்படவிருந்த நிகழ்வை இந்த மேடையில் அரங்கேற்றுவதில்லை என்ற ரீச்சரின் முடிவில் மாற்றத்தைக் காணவில்லை. - நிஷா அழுதாள். அவளது திறமையும் முயற்சியும் இத்தனை விரைவாக மழுங் கடிக்கப்பட்டு விடும் என அவள் எதிர்பார்க்க வில்லை.
கௌரவ அமைச்சருக்காகவோ அல்லது தனது மதிப்புக்குரிய ஆசிரியருக்காகவோ தன்னை இழக்க அவள் தூண்டப்பட்ட தாகவே எண் ணமிடும் பார்வைகள் அவள் மீது விழுந்தன.
- அவள் பெற்ற பயிற்சியும் ஒத்திகைகளும் வீண்போக நியாயமில்லை. -
- மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை விரை விலேயே ஏற்படுத்திக் கொண்டு வேறொரு புதிய கல்வி அமைச்சரின் அல்லது ஒரு கல்வி அதிகாரியின் வருகையின்போது தனது மாணவர்களின் ஆக்கத்தை அரங்கேற்றலாம் என எதிர்பார்த்தபடி காந்திமதி ரீச்சர்.
நிஷா தனது திறமையைப் பாராட்டும் வகை தேர்ந்த ஒரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டு விட்டதே எனக் கவலையுற்றாள். ஒரு மகிழ்ச்சிகரமான கல்விச் சூழலைத் தேடிய வாறு அவள் அழுகிறாள்.
0 0 0
28

பேர் ஆளுமைகள்
பிரக்ஞையாய் இருப்பது படைப்யூக்க சக்தி. தன் கருவில் தானே உருவாகி தன்னையே தானாக்கி படைத்துக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தை.
இறுகிவிட்ட பிரக்ஞை சடம். வளர்ந்து வரும் பிரக்ஞை உயிர், மனம் எல்லாவற்றையும் தழுவி தன்னைத் தானாக உணரும் பிரக்ஞை பேர் மனம்.
“நான்” உள்குறுகும் சக்தி. பெரும் பாலும் சட் எல்லைக்குள்.
பேர் உணர்வில் பெரும் சக்தி பிரவாகமாகி பெரு வாழ்வைப் படைக்கமுடியும்.
முன் உதாரணங்கள் பேர் ஆளுமைகள்
(இது கவிதையல்ல)
இனிவரும் உதாரணங்களாக ஆக முடியுமா நாம்?
அரசியல், சமூகம், வாழ்வு அனைத்தையும் தழுவி எழும் அலைப் பெருக்காக.
- இ. ஜீவகாருண்யன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 31
வரலாறு குறித்த நூல்களில் மைக்கல் றொபர்ட்ஸ் எழுதிய சாதி
முரண்பாடும் மேலோர் குழாம் உருவாக்க மும், இலங்கையில் கராவ உயர் குழாத்தின் Garrispb. 1500 - 1931 (Caste, Conflict and Elite formation - The rise of a karava Elite in Srilanka 1500 — 1931) efpůų L6lėšas முன்னோடியான நூல். 1982 ஆம் ஆண்டில் இந்நூல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகப்
சுரமாக வெளிவந்தது. மைக்கல் றொபர்ட்ஸ் வ லாற்றுத் துறை விரிவுரையாளராக பேராதனை பல்கலைக்கழகத்தில் கடமையாற்றியவர். இலா யில் உயர் குழாம் எழுச்சி பற்றி, குறிப்பாக கராவ
கழகத்தின் மானிடவியல் துறையில் பேராசிரிய நியமனம் பெற்றார். வரலாறு, மானிடவியல், சமூ வியல் ஆகிய துறைகளில் புலமையுடைய ஆய்வா வும் பல நூல்களின் ஆசிரியராகவும் இவர் சிறப் பெற்றுள்ளார். சாதி முரண்பாடும் மேலோர் குழ உருவாக்கமும் பற்றிய நூல் மைக்கல் றொபர்ட் வரலாற்றுத் துறைப் புலமையை மட்டுமல்லாத மூகவியல், மானிடவியல் துறைகள் சார்
புலமையையும் வெளிப்படுத்தி நிற்கும் ஆக்க Aகும். இந்நூலின் முக்கிய கருத்துக்களை ஆசிரியர் முன்வைக்கும் சிந்தனையைத் ாண்டும் வாதங்களையும் இக்கட்டுை
யில் சுருக்கமாக எடுத்துக்
கூறவுள்ளோம்.
σαξίωμό φος σουΛόρό βαρί குழம் உருவாக்கமும் இலங்கையில் இறுவ
೭ಿ (ಶ್ವೇಶಿಣೆ Sáიტუძ2 15OO - 1221
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கராவ உயர் குழாத்தின் எழுச்சி
1500ஆம்ஆண்டு தொடக்கம் உள்ள நான்கு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தின் வரலாறு இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ள போதும், கராவ உயர் குழாமின் எழுச்சி பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1830 - 1931 வரையான ஒரு நூற்றாண்டு காலத்தில் விரைவான வளர்ச்சியாக அமைந்ததென்பதை நூலாசிரி யர் தெளிவுபடுத்துகிறார். தென் னிலங்கையின் கரையோர மாகா ணங்களில் வாழும் சிங்கள மக் களில் கராவ, துராவ, சலாகம என்னும் மூன்று சாதியினரும் 13 ஆம் நூற்றாண்டிற்கும் 18 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியேறியவர்கள். இவ் வாறு குடியேறிய இம்மக்கள் காலப்போக்கில் ஒன்றிக் கலந்து விடுதல் (ASSimilation) என்னும் செயல் முறையின் வழி சிங்கள பெளத்தர் எனவும் சிங்கள கத்தோலிக்கர், கிறிஸ்தவர் என வும் அடையாளம் பெற்றனர். றொபர்ட்ஸ் தமது நூலின் முதலாம் அத்தியாயத்தில் (அறிமுகம் பக்கம் 1) தொடக் கத்திலேயே இதனைச் சுருக்கமா கக் கூறியுள்ளார். இவ்வாறு இலங்கை வரலாற்றின் பிற்காலத் தில் குடியேறிய மக்கள் என்ற வகையில்இம்மூன்று சாதியினருக் கும் பொதுவான பாதகமான நிலைமைகளும்தடைகளும்இருந் தன. இம்மூன்று சாதியினரில் கராவ சாதியினரில் தோன்றிய பணக்கார வர்த்தகர்களின் எழுச்சி வியப்புக்குரியது. ஏனெனில் பிரித் தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் கராவக்களான முத லியார்களும் கிராமத் தலை மைக்காரர்களும் என்ற உயர் அந்தஸ்துடையோர் விரல்விட்டு எண்னக் கூடியவர்களாகவே
29

Page 32
இருந்தனர். கோட்டை இராச்சிய காலத்திலும் அதன் பின்னர் போத்துக்கீசர், டச்சுக்காரர் காலத்திலும் நில உடைமையாளர்களாகவும், அதிகாரமும் அந்தஸ்தும் உடையவர்களாகவும் கொய்கம சாதியினைச் சேர்ந்த முதலியார்களும், அத்துகோறளை, அத்துப்பத்து போன்ற பதவி நிலையினரும்விளங்கினர். அத்தோடு கொவிகம் நிறுவன மயப்பட்ட பௌத்த சங்க அமைப்பில் உயர் அந்தஸ்தையும் செல்வாக்கையும் உடை யவர்களாயும் விளங்கினர். கராவ உயர் குழா மின் 'எழுச்சி' என்னும் விடயம் அச்சமூகம் எதிர்நோக்கிய எதிர்மறையான பாதகமான நிலைமைகளின் பின்னணியிலும் புரிந்து
கொள்ளப்படவேண்டும்.
கரையோர மாகாணங்களின் முக்கிய மான சாதிகளாக கொவிகம், கராவ, சலாகம், துராவ என்றநான்குசாதிகளைக்குறிப்பிடலாம். நூலின் 303ஆம்பக்கத்தில்தரப்பட்டுள்ள அட்டவணை 5 இல் உள்ள புள்ளிவிபரங்களின் படி 1820 இல் மொத்த சிங்கள மக்கள் தொகையில் கராவ 8.5 வீதத்தினராகவும், சலாகம் 4 வீதத்தினராகவும், துராவ 3 வீதத்தினராகவும் இருந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டளவில் இலங்கையின் ஐந்து சாதிகளின் உத்தேச சனத்தொகை வீதாசாரம் பின்வருமாறு மதிப்பிடப்பட்டுள்ளது.
சாதி
வீதாசாரம்
கொவிகம
GO
கராவ
10
சலாகம்
வகும்புர
துராவ
19 ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய உயர் குழாம் பிரிவினரான பணக்கார வர்த்தகர்களிலும், பெருந்தோட்ட நில உடை மையாளர்களிலும் பெரும்பான்மையினர் மேற்குறிப்பிட்ட ஐந்து சாதிகளில் இருந்தே தோன்றினர். ஆதலால் மேற்குறித்த புள்ளி விபரங்கள் கராவ சாதியின் எழுச்சி என்ற விடயத்தை ஒப்பீட்டு முறையில் புரிந்து கொள்வதற்கு அவசியமானவை. பெருந்தோட்ட முதலாளிகள்
இந்தியாவின் சுதேசிய முதலாளித்துவத் தின் வளர்ச்சியில் பருத்தி நெசவாலைகள் 30

எந்தளவிற்கு முக்கியம் பெற்றிருந்தனவோ அதே போன்ற முக்கியத்துவத்தை இலங் கையின் முதலாளித்துவ வளர்ச்சியில் பெருந்தோட்டங்கள் பெற்றிருந்தன என்று றொபர்ட்ஸ் கூறுகிறார். 1917 ஆம் ஆண்டில் பெருந்தோட்ட உடைமையாளர்களின் விப ரங்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் கராவ உயர்குழாம்குடும்பங்களின் எழுச்சியை விளக்குதல் முடியும். 1917 ஆம் ஆண்டில் 166 பெருந்தோட்ட உடைமையாளர்கள் இருந்தனர். இவர்களுள் 125 பேர் சிங்கள இனத்தவர்களாக இருந்தனர். பெர்குசன் டைரக்டரி என்னும் தகவல் களஞ்சிய நூலில் உள்ள பெயர்களைக் கொண்டும், பிற தகவல்களைக் கொண்டும் இவர்களின் சாதியடையாளங்கள் பற்றிய தகவல்களை நுணுக்கமாக பரிசீலனை செய்த பின்னர் 62 பேர் கராவ சாதி நில உடைமையாளர்கள் (57.4 வீதம்) என்றும் 39 பேர் கொவிகம் நில உடைமையாளர்கள் (36 வீதம்) என்றும் றொபர்ட்ஸ் குறிப்பிடுகிறார். பெருந்தோட் டங்களின்முதலீடு என்ற விடயத்தில் நாட்டின் சனத்தொகையில் 10 வீதத்தினரான கராவ 57.4 வீதமான உடைமைகளைக் கொண்டிருந்தது. சனத்தொகையின் 60 வீதத்தினரும் மரபுவழி நில உடைமைச் சாதியுமான கொவிகம் 36 வீதம் ஆக இரண்டாம் நிலையில் இருந்ததையும் இப்புள்ளிவிபரங்கள் எடுத் துக் காட்டுகின்றன. றொபர்ட்ஸ் நூலி லுள்ள அட்டவணைகளை ஆதாரமாகக் கொண்டு விக்டர் ஐவன் 125 பெருந்தோட்ட உடைமையாளர்களில் 108 பேரின் சாதி அடையாளத்தை எடுத்துக்காட்டும் பட்டி யலைத் தருகிறார். (Revolt In The Temple என்னும் நூல் பக் 56-57) 17 பேரின் சாதி அடையாளங்களைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
பெருந்தோட்ட உடைமை
வீதாசாரம் யாளர் எண்ணிக்கை
சாதி
கராவ
G2
57.4
கொவிகம்
39
3G
சலாகம
05
4.G
நவண்டன
0.9
O1 01
0.9
துராவ
சாதி அடையாளம் காணப்பட்டோர்
108
100
சாதி அடையாளம் காணப்படதோர்
17
12.5
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 33
1927 ஆம் ஆண்டில் பெருந்தோட்ட உடைமைகள் பற்றிய தகவல்களைப் பகுப்பாய்வு செய்யும் போது, கொவிகம் உடைமையாளர்களின் பங்கு அவ்வாண்டில் முன்னரை விட உயர்ந்திருந்த போதும், கராவ சாதி உடைமையாளர்களே கூடிய வீதாசாரத்தினராயும், மிகப்பெரும் உடை மையாளர்களாகவும் இருந்தனர் என்று றொபர்ட்ஸ் குறிப்பிடுகிறார். அவ்வாண்டில் 3000 ஏக்கர் பரப்பளவிற்கு மேற்பட்ட பெருந்தோட்ட உடைமைகளாக 19 இருந்தன. சாதியடிப்படையிலான விபரம் வருமாறு.
சாதி
வீதாசாரம்
கராவ
12
சலாகம்
கொவிகம் கொழும்புச் செட்டி யுறாசியன்
19 பெருந்தோட்ட உடைமைகளிலும் முதல் நான்கு பெரிய உடைமைகள் கராவ சாதியினருக்குரியவனவாக இருந்தன.
ஆர்.ஈ.எஸ்.டி. சொய்சா |
9368 ஏக்கர் ஈ.சி.டி. பொன்சேக
8741 ஏக்கர் சேர் ஹென்றி எல்.டி.மெல்
7254 ஏக்கர் எல்.டபிள்யு.ஏ.டி. சொய்சா 6087 ஏக்கர்
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 நூற்றாண்டின் முற்பகுதியிலும் தேயிலை, ரப்பர், தெங்கு உற்பத்தி மிக முக்கிய துறையாக வளர்ச்சியுற்றபோது சுதேசிகளான பெருந்தோட்ட முதலாளிகளுள் கராவச் சாதியினரான பெரு முதலாளிகள் முக்கியம் பெற்றதற்குரிய காரணம் மொறட்டுவ, பாணந் துறையைச் சேர்ந்த கராவ வர்த்தகர்களிடம் சாராய வர்த்தகம் மூலம் முதலீட்டுக்கான பணம் திரட்சி பெற்றதாகும்.
சாராயக் குத்தகை வர்த்தகமும் ஆரம்ப மூலதனத் தேட்டமும்
இலங்கையில் - கைத்தொழில் முத லாளித்துவம் (Industrial - Capitalism)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

2.
6.
7.
வளர்ச்சி பெறவில்லை. இங்கு ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியை வர்த்தக முதலாளித்துவம் என்றே கூறலாம். அல்லது பெருந்தோட்ட முதலாளித்துவம் என்றும் கூறலாம். பிரித்தானியர் ஆட்சியில் சுதே சிய வர்த்தகர்களும் முதலாளிகளும் ஈடு பட்ட வர்த்தக தொழில் முயற்சிகளையும் முதலீடுகளையும் கீழ் குறிப்பட்டவாறு வகைப் படுத்தலாம்.
1.அரசாங்க ஒப்பந்த வேலைகளும் பல்வேறு
வர்த்தக நடவடிக்கைகளும்
சாராய உற்பத்தியும், சாராயக் குத்தகையும் 3.
காரீயச் சுரங்க அகழ்வு 4.
இரத்தினக்கல் வர்த்தகம் 5..
அரசு ஏலத்தில் விற்கும் காணிகளைக் கொள்வனவு செய்தல் நகரச் சொத்துக்களில் முதலீடு செய்தல் கோப்பித் தோட்டங்களையும், பின்னர் தேயிலை, ரப்பர் தோட்டங்களையும்
அமைத்தல். 8.
தாழ்நிலப் பகுதிகளில் தெங்குத் தோட்டங்களை ஆரம்பித்தல். தெங்கு உற்பத்தியோடு தொடர்புடைய தொழில்களை
நடத்துதல். 9.
உள்ளூர் வர்த்தகம் 10..
ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் மேலே குறிப்பிட்டவற்றுள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஐரோப்பியர்களும், போறா, பார்சி, சிந்தி இன வர்த்தகர்களும் ஆதிக்கம் செலுத்தினர். பெருந்தோட்ட முத லீடுகளிலும் ஐரோப்பியர் ஈடுபட்டனர். இருந்தபோதும் சுதேச முதலாளிகளும் பெருந்தோட்டத்துறையில் கணிசமான அளவு பங்கினைக் கொண்டிருந்தனர். ஏற்று மதி, இறக்குமதி தவிர்ந்த பிற எல்லாத் துறைகளிலும் சுதேசிய முதலாளிகள் ஈடு பட்டனர். இத்துறைகளில் சாராய வர்த்தகம் மூலமும், சாராயக் குத்தகை மூலமும் உள்ளூர் முதலாளிகள் பெரும் செல்வத்தை ஈட்டினர். சாராயக் குத்தகை மூலம் ஈட்டிய செல்வம் ஆரம்ப மூலதனத் தேட்டமாக (Capitalist Accumulation) அமைந்தது. சாராயக் குத் தகை வர்த்தகத்திற்கும் இலங்கையின் முத லாளித்துவத்தின் தோற்றத்திற்கும் உள்ள தொடர்பை மிக விரிவாகவும் நுட்பமாகவும் குமாரி ஜயவர்த்தன அவர்கள் No Bodies To Some Bodies (2000) என்னும் நூலில் பகுப்பாய்வு செய்துள்ளார். மொறட்டுவ,
31

Page 34
பாணந்துறைச் சேர்ந்த கராவ வர்த்தகர்கள் சாராயக்குத்தகைவர்த்தகத்தில்கொண்டிருந்த மேலாதிக்கம் குறித்து றொபர்ட்ஸ் நூலில் 109 ஆம் பக்கத்தில் கூறியிருக்கும் தகவல் களை இங்கு குறிப்பிடுவோம் பற்றிக் பீபிள்ஸ் என்ற ஆய்வாளரை மேற்கோள் காட்டி மேற்கு மாகாணத்தின் சாராயக் குத்தகை வியாபாரத்தில் கரTவ குத்தகையாளர் கொண்டிருந்த செல்வாக்கை அவர் எடுத்து கூறுகிறார். 1858-99 காலப்பகுதியில் மேற்கு மாகாணத்தில் 189சாராயக்குத்தகையாளர்கள் செயற்பட்டனர். இப்பட்டியலில் உள்ள பெயர்களைக் கொண்டும் வேறு தகவல் களைக் கொண்டும் சாதியடிப்படையில் குத்தகையாளர் விபரத்தை றொபர்ட்ஸ் வகைப்படுத்தினார். அதன்படி
கராவ குத்தகையாளர் 158
கொவிகம 11
வகும்புர
அடையாளம் காணப்படாதவர்கள் 1G
189
மேற்கு மாகாணத்தின் குத்தகையாளர் களில் 84 வீதத்தினர் கராவ முதலாளிகள் என்பதைஇப்புள்ளிவிபரங்கள்காட்டுகின்றன. 189 வர்த்தகர்களில் 30 பேர் மிகப்பெரும் குத்தகையாளர்களாகவும், இக்காலப் பகுதி யில் தொடர்ச்சியாக குத்தகைகளை எடுத்து நடத்தியவர்களாயும் இருந்தனர். 30 பேரில் ஏறக்குறைய 20 குத்தகைக்காரர்கள் கராவ முதலாளிகளாக இருந்தனர்.
நகரச் சொத்துக்களில் முதலீடு
19 ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற சிங்கள முதலாளி வகுப்பினர் கொழும்பு நகரில் சொத்துக்களைக் கொள்வனவு செய்து மாளிகை வீடுகளையும் அமைத் துக் கொண்டனர். போறா, பார்சி, சிந்தி வர்த்தகர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும், பறங்கியரும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. நகரச் சொத்துக்களில் முதலீடு செய்துள்ள சிங்கள வர்த்தகர்கள், முதலாளிகளின் விபரங்களை மைக்கல் றொபர்ட்ஸ் தொகுத்துத் தந்துள்ளார். 1915 ஆம் ஆண்டில் சிங்கள முஸ்லிம் கலவரம்
32

ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சொத்து அழிவுக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக அரசாங்கம் கொழும்பு நகரில் சொத்துக்களை வைத்திருந்த சிங்களப் பணக்காரர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அவர்களின் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கிட்டது. இப்பட்டியலில் 452 நபர்களின் பெயர்கள் காணப்பட்டன. இந்நபர்களில் 90 பேர் ரூபா 40,000 ற்கு மேற்பட்ட சொத்துடையவர்கள் என அடையாளம் காணப்பட்டது. 90 நபர்களில் 73 நபர்களுடைய சாதி அடை யாளம் தெரிந்து கொள்ள முடிந்தது. விபரம்
6) ICULDTU)
1915 ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் (முனிசிப்பல் சபை எல்லை) சொத் துடைமையாளர்களாக இருந்த 90 நபர்கள் (ரூ 40,000 மேற்பட்ட மதிப்பு)
சாதி எண்ணிக்கை
கராவ 名3
கொவிகம 24.
வகும்புர 5
SFS).15LD 8
gig Tea G
கலப்பு 1
ரஜக்க
நவண்டன
சாதி அடையாளம் கானப்படாத 17
நபர்கள்
9 O
மேற்காட்டிய பட்டியலில் உள்ள 90 நபர்களின் சொத்து மதிப்பையும் கணக்கில் கொள்ளும் போது 23 கராவ பணக்காரர்கள் 44.8 வீத மதிப்புடைய சொத்துக்களை வைத்திருந்தனர் என்பதையும் 24 கொவிகம நபர்கள் பெறுமதியடிப்படையில் 25.7 வீத சொத்துக்களின் உடைமையாளர்களாக இருந் தமையும் தெரிய வருகிறது.
1915 ஆம் ஆண்டில் 90 நபர்களின் சொத்து விபரம் கொழும்பு முனிசிப்பல் சபை எல்லை (அருத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 35
சாதி 260LaDIQL
எண்ணித்
85TTGNJ 之3
கொவிகம 24
பிற சாதி நபர்கள் 2G
சாதி அடையாளம் காணப்படாதோர் 17
9 O
பெருந் தோட்டங்களின் உடைமை, சாராயக் குத்தகை வியாபாரம், நகரச் சொத் துக்களில்முதலீடு என்ற மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்டி கராவ முதலாளிகள் எங்ங்ணம் முன்னணியில் திகழ்ந்தனர் என்பதை இங்கே றொபர்ட்ஸ் தரும் தகவல்களின் உதவியுடன் விளக்கினோம். காரீயச் சுரங்க அகழ்வுத் தொழிலும் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சுதேச முதலாளித்துவத்தின் வளரச்சிக்கு உதவிய ஒரு தொழில் துறையாகும். இத்துறையில் என்.டி.பி. சில்வா (கொவிகம) 'காரியத் தொழிலில் ராஜா' என்ற புகழைப் பெற்றிருந்தார். வேறு பல கொவிகம குடும்பங்களும் இத் துறையில் ஆதிக்கம் செலுத்தின. இருந்த போதும் கராவ முதலாளிகள் காரீயத்தின் வர்த்தகத்தில் முதன்மையிடத்தைப் பெற்றனர் என்பதை ஆர்னல்ட்றைட்என்பவர்எழுதிய இலங்கையில் இருபதாம் நூற்றாண்டு அனுபவப் பதிவுகள் என்ற நூலை ஆதாரம் காட்டி விளக்குகிறார். இந் நூலில் 30 காரீய வர்த்தகர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் கராவ (15) கொவிகம (8) சலாகம (5) என றொபர்ட்ஸ் குறிப்பிடுகிறார். 1920க்களில் காரீய உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்ட போது மூன்று முதலாளிகள் சுரங்க அகழ்வில் நிலைத்து நின்றனர்.
போகல குரூப் -
அர்னோலிஸ் பெர்னாண்டோ (கராவ) கொலன்ஹக சுரங்கம் -
விதானலாகே ழ மெல் (கராவ) > கஹட்டஹக சுரங்கம் - கொத்தலாவல குரும்பம்
(கொவிகம) என்ற மூன்று சுரங்கங்களில் இரண்டின் உரிமையாளர்கள் கராவ முதலாளிகளாவர்.
வர்த்தக முயற்சிகளில் துணிச்சலுடன் முன்னேறி பெரும் பணக்காரர்களாக உயர்ச்சி பெற்ற கராவ முதலாளிகள் தங்கள் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

ாளர் | சொத்தின் மதிப்பதிLiபட்ட | மொத்த மதிiயின் கை | பெறுமதி ருயா மில்லியன் வீதாசாரமாக
383 44。8
2。雷9 25。ア
2。53 1G.2
131 13.3
9.8G 1OO
பிள்ளைகளை உயர் கல்வியில் ஈடுபடச் செய்து சட்டம், மருத்துவம், சிவில்சேவை உத்தியோகம் ஆகிய உயர் தொழில்களில் பிரகாசிக்கச் செய்தனர். தனியார் துறைக் கம்பனிகளின் இயக்குநர்களாகவும், உயர் நிர்வாகிகளாகவும் கராவ முதலாளிகளின் பிற் சந்ததியினர் உயர்ச்சி பெற்றனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து கல்வியால் உயர்ச்சி பெற்ற கராவ இளைஞர்கள் கொழுத்த சீதனத்துடன் முதலாளிக் குடும்பங்களின் மருமக்களாயினர். பலர் இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் சென்று உயர் கல்வியைப் பெற்று நாடு திரும்பினர். இவ்வாறு கல்வியால் உயர்ச்சி பெற்ற யேம்ஸ் பீரிஸ், டாக்டர் மார்க்கஸ் பெர்னாண்டோ என்போர் கல்வித் துறையில் மட்டுமன்றி அரசியல் துறையிலும் தேசியத் தலைவர்களாகப் பிரகாசித்தனர்.
互9罩五 ஆம் ஆண்டில் "படித்த இலங்கையருக்கு சட்ட சபையில் ஒரு ஆசனம் வழங்கப்பட்டது. இதற்கு உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் முதன் முறையாக நடைபெற்றது. வாக்குரிமை பெற்றவர்களின் பட்டியலில் உள்ள தகவல்கள் கராவ சமூகத்தினர் கல்வியில் பெற்றிருந்த முன்னேற்றத்திற்கு தகுந்த ஆதாரமாக அமையக் கூடியன. ஆயினும் இப்பட்டியலை சாதியடிப்படையில் பகுப்பாய்வு செய்தல் இயலாத காரியம். இன அடிப்படையில் பார்க்கும் போது படித்த இலங்கையர் தேர்தலுக்கான வாக்காளர்களில் 36.4 வீதம் இலங்கைத் தமிழர்களாகவும், 56.4 வீதம் சிங்களவர்களாகவும் இருந்தனர். சிங்களவர்களில் கணிசமான தொகையினராக கராவ சமூகத்தவர் இருந்தபடியால் அவர்கள் தம் வேட்பாளராக டாக்டர் மார்க்ஸ் பெர்னாண்டோவை நிறுத்தினர். மார்க்ஸ் பெர்னாண்டோவை எதிர்க்கக்
33

Page 36
கூடிய வாக்குப் பலம் தம்மிடம் இல்லை என்பதை உணர்ந்த கொவிகம அரசியல் தலைமைக் குழாம் போட்டியில் இறங்காமல் தமிழரான பொன்னம்பலம் இராமநாதனை வேட்பாளராக நிறுத்தி அவருக்கு தமது வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்தனர் என்று றொபர்ட்ஸ் குறிப்பிடுகிறார். இங்கு அவர் அழுத்தும் கருத்து யாதெனில் கொவிகம அரசியல் வாதிகள் ஒப்பீட்டளவில் கராவாவைவிடவாக்குப்பலம்குறைந்தவர்கள் என்பதையே கொழும்பு முனிசிபல் சபைத் தேர்தலிலும் கொட்டஹேன பகுதியில் சப்மன் டயஸ் என்பவர் (கொவிகம - டயஸ் பண்டாரநாயக்க குடும்ப உறவுக்காரர்) டாக்டர் சொலமன் பெர்னாண்டோவுடன் போட்டியில் வெற்றி பெற முடியாததைக் கண்டு விலகிக் கொண்டதையும் உதாரணம் காட்டுகிறார்.
சிங்கள சமூகத்தின் சாதிக் கட்டமைப்பும் அதன் அமைப்பியல் இயல்புகளும்
மைக்கல் றொபர்ட்ஸின் நூலில் இரு சிறப் புக்கள் உள்ளன. முதலாவதாக அவர் கராவ உயர்குழாமின்பொருளாதாரமுன்னேற்றத்தை விளக்குவதற்காகத் தொகுத்தும், பகுத்தும் வழங்கும் புள்ளி விபரங்கள் வியப்பைத் தருவன. கணினித் துறை வளர்ச்சி பெற்றிராத 1960 க்கள் முதலான 20-25 ஆண்டுகளில் அவர் இந்நூலிற்கான தரவுகளையும், புள்ளி விபரங்களையும் தொகுப்பதற்கு எவ்வளவு உழைப்பைச் செலவிட்டிருப்பார் என்பதும் வியப்பைத் தருவது. கராவவின் எழுச்சியின் சமூகவியல் பின்னணியை அவர் விளக்கி யிருக்கும் புலமைத் திறனும் மாட்சியும் வியந்து பாராட்டுவதற்குரியது.
'கராவ உயர் குழாத்தின் எழுச்சி ஒரு குறிப்பிட்ட சமூக சாதிக் கட்டமைப்பு என்ற பின்புலத்தில் ஏற்பட்டது. ஆகையால் (1) சிங்கள சமூகத்தின் சாதிக் கட்டமைப்பு (2) அக்கட்டமைப்பில் கராவ சாதியின் அமைப்பியல் நிலை (Structural Position) என்ற இரு விடயங்களை முக்கியமானவை' என்று றொபர்ட்ஸ் கூறுகிறார். அவரின் வாதங்கள் தர்க்க பூர்வமானவை. அவரது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துபவை. றொபர்ட்ஸ் கூறும் கருத்துக்களைச் சுருக்க மாக கூறுவோம்.
34

(1) சிங்கள சாதியழையின் முக்கிய இயல்புகள்
(அ)கொவிகம ஒரு பெருமான்மைச் சாதி சிங்கள மக்களில் கொவிகம பெரும் பான்மைச் சாதியாகும். இவர்கள் தெற்கு, தென்மேற்கு கடற்கரை ஓரத்தினை அண்டிய குறுகிய நீண்ட பகுதியைத் (நீர் கொழும் பு முதல் தெற்கே மாத்தறை வரை) தவிர பிற இடங்கள் யாவற்றிலும் செறிவாகப் பரந்துள்ளனர். அருகருகேயுள்ளவனவான 2030 கிராமங்களை ஒரே தொகுப்பாக நாட்டின் எந்தப் பகுதியில் எடுத்துப் பார்த்தாலும் அங்கு கொவிகம பெருபான்மையாக வாழ்வதைக் 5ITGOOTGUTL b.
(ஆ) அது மேலாண்மைச் சாதியும் ஆகும் மரபுச் சமூகத்தில் கொவிகம மேலாண் 60LD3 g Tg5ulb (Dominant Caste) g(gilb. சிங்கள அரசர்கள் காலத்தில் கொவிகம நில உடைமையாளர்களே உள்ளூர் தலைமை அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். போத்துக் கீசர், டச்சுக்காரர் ஆட்சியில் முதலியார்கள், அத்துக் கோறளை, கிராமத் தலைமைக்காரன், வேல்விதான போன்ற பதவிகளைப் பெரும் பான்மையாக கொவிகம சாதியினரே வகித்து வந்தனர்.
(இ) ஒரு சாதிக் கிராமங்கள் இந்தியாவில் ஒரு கிராமத்தின் எல்லைக் குள் ஒரு மேலாதிக்கச் சாதியும், அச்சாதிக்குச் சேவைக் கடமைகளை ஆற்றும் பல சாதி களும் ஒருங்கே வாழும் நிலை உள்ளது. அங்கு பல்சாதிக் கிராமங்கள் உள்ளன. சிங்களக் கிராமங்கள் பெரும்பாலும் ஒரு சாதிக்கிராமங்களாகும். சலவைத் தொழில் சேவையைச் செய்யும் ரஜக்க ஒரு கிராமத்தில் வாழ்ந்தால், அருகில் இருக்கும் பல கொவிகம கிராமங்களிற்கு அச்சாதியினர் தமது சேவைக் கடமையை ஆற்றுவர். ஒரு கிராமம் - ஒரு சாதி என்ற நியமத்திற்கு விதிவிலக்கான சில கிராமங்களும் இருக்கலாம்.
(ஈ) சாதியும் தொழிலும் கொவிகம சாதி கமக்காரர் சாதியும் (Cultivator Caste) g(5Lb. guiggllb 6Tabart கொவிகமவும் கமக்காரர்கள் என்றோ, கொவிகம அல்லாத அனைவரும் கமத் தொழிலே செய்யாதவர்கள் என்றோ அர்த் தப்படுத்தல் தவறு. நவண்டன (உலோகங் களோடு தொடர்புடைய தொழில்) பத்தல (குயவர்) ரஜக்க (சலவைத்தொழில்) பெறவ மேளமடிப்போர்) ஆகிய சேவைச் சாதியினரும் கமத்தொழில் செய்வோராகவும் உள்ளனர். தேவாலயம் (கோவில் நிலங்கள்)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 37
நிந்தகம் (பிரபுவின் நிலம்) காணிகளில் குத்தகைப் பயிர் செய்வோராக சேவைச் சாதிகள் இருந்து வந்தனர். கமத்தொழிலோடு தமது சேவைத் தொழிலை பகுதி நேரத் தொழிலாக செய்வோராகவும் சேவைச் சாதியினர் விளங்கினர். (யாழ்ப்பாணத்திற்கும் தென்னிலங்கைக் கிராமங்களின் சாதி முறைக்கும் உள்ள மிகமுக்கிய வேறுபாடுகளில் இதுவும் ஒன்றாகும்.)
(உ) சாதியால் ஒழுங்கமைக்கப்பட்ட பரிவர்த்தனை சமூகத்தில் உற்பத்தியாகும் பண்டங் களும் சேவைகளும் பரிவர்த்தனை செய்யும் முறை சாதியின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. (Caste regulated exchange). சேவைத் தொழில்களில் சில தரக்குறைவானவை. குறித்த தொழிலைச் சேவைக் கடமையாக ஆற்றும் பரிவாரச் குழுக்கள் (Clients) தாழ் நிலையிலும் அதனை ஏற்று அதற்குப் பதில் பண்டமாகவோ பொருளாகவோ பதிலீடு செய்வோர் புரவலர் களாகவும் (Patrons) இருப்பர்.
(ஊ) அகமணம் ஒரு சாதியினைச் சேர்ந்தோர் தமது சாதிக் குள்ளேயே திருமணம் செய்து கொள்வார்.
(எ) ”குடும்பம்" என்ற சமூக அலகின் முக்கியத் துவம் ஜாதி என்ற சொல் பிறப்பு என்ற அர்த்தத்தை உடைய ஜாதிக' என்ற சொல் லோடு நெருங்கிய தொடர்புடையது. ஒருவர் பிறப்பது குடும்பத்தில் ஹெதர, வாசகம, வம்ச முதலிய சொற்களும் பிறப்பு' 'குடும்பம் என்பவற்றோடு தொடர்புடையன. சாதி அடையாளத்தை குடும்பத்தின் ஊடாக வெளிப்படுத்தும் முறையில் ஆட்களின் பெயர்கள் அமைவதுண்டு.
றொபர்ட்ஸ் நூலின் பக் 46-48 இல் உள்ள விபரிப்பைப் பிரதான ஆதாரமாகக் கொண்டு சிங்கள சமூகத்தின் சாதிக் கட்டமைப்பின் முக்கிய இயல்புகளை எமது வார்த்தைகளில் தொகுத்துக் கூறியுள்ளோம்.
மேற்குறிப்பிட்டசாதிக்கட்டமைப்புக்குள் தான் கராவ, சலாகம, துராவ ஆகிய சாதிகள் வெளியில் இருந்து வந்து சேர்ந்தன ஒன்றிணைந்தன என்பதைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். றொபர்ட்ஸ் கராவவின் உயர்ச்சியை சாதிக் கட்டமைப்பில் அதன் நிலை என்னும் அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்குகிறார். இந்த விடயம் பற்றி அடுத்துச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

(ii) சாதிகளின் கட்டமைப்பு நிலை
(Structural Position) கரையோர மாகாணங்களில் இருந்து வந்த சாதி முறைக்குள் கராவ. சலாகம, துராவு என்ற மூன்று சாதிகளும் புகுத்தப்பட்டன என்று குறிப்பிட்டோம். இம் மூன்று சாதிகளையும் சாதிப் பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்ட சுருக்கப் பெயரான ‘KSD என்ற சொல்லால் றொபர்ட்ஸ் குறிப்பிடுகிறார். இதனை தமிழில் கசது' என்று குறிப்பிடு வோம்) கசது' வின் நிலையை றொபர்டஸ் விளிம்பு நிலை (Marginality) என்ற கருத்தாக்கம் கொண்டு விளக்குகிறார். ரஜக்க', 'பெரவ, பத்தல முதலிய சாதிகளும் விளிம்பு நிலையில் உள்ளனவேனும் அவற்றின் விளிம்பு நிலையில் இருந்து 'கசது' வின் விளிம்பு நிலை வித்தியாசமானது என்றும் கூறுகிறார். கறுவாப்பட்டை உரித்தல் (சலாகம), மீன்பிடித்தல் (கராவ), மரமேறுதலும் கள் இறக்குதலும் (துராவ) என்ற தொழில்கள் மரபு வழிச்சாதிக்கட்டமைப்புக்குள்எவ்வகையிலும் பிணைக்கப்பட்டவையல்ல. அவை சுதந்திர மான தொழில்கள். துடக்கு (Polution) என்ற சாதியக் கருத்துடன் தொடர்புபட்டதால் இத் தொழில் செய்வோரின் அந்தஸ்து தாழ்ந்தது என்று கருதப்பட்டது. ரஜக்க வின் உறவு வித்தியாசமானது. ரஜக்க ஆள் ஒருவர் கொவிகம பிரபு ஒருவருடன் கொள்ளும் Յ-D6վ,
1) ஆளுக்காள் ஏற்படும் நேரடி உறவு i) புரவலர் (Patron) ஒருவருக்கும் சேவைக் கடமையை செய்யும் ஒருவருக்குமான உறவு (Patron Client relationship) ii) சமத்துவமற்ற உறவு iv) சடங்கியல் தன்மையுடைய சேவைகளை ரஜக்க வழங்குகிறார். இது ஒரு சடங்கியல் சார் உறவு V) கொவிகம - ரஜக்க உறவு பரஸ்பரம் அன்பை அழப்படையாகக் கொண்டது. இரு தரப்பிடையேயும் பாசப் பிணைப்பு உருவாகிறது. Wi) பரம்பரை பரம்பரையாகத் தொடர்வது.
சேவைச் சாதிகளுக்கும் கொவிகமவிற்கும் இடையிலான உறவுகள் சமூக மாற்றங்களின் மத்தியிலும் நீடித்துநிற்கும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. இந்த உறவுமுறையின்இயல்புகள் அவற்றிற்கு ஒரு கருத்தியல் நியாயத்தை (Legitimation) வழங்குகின்றன. அதனால் அந்த உறவின் சமத்துவமின்மை, நீதியின்மை, சுரண்டல் ஆகியன மூடிமறைக்கப்படுவதோடு சாதி முறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதற்கான உந்துதல் இல்லாமல் போய்
35

Page 38
விடுகிறது என்று கூறுகிறார்.
கொவிகம் - 'கசது' உறவுகள் பொருளா தார உறவுகள் மட்டுமே. அது தனிப்பட்ட உறவு அன்று. சந்தை ஊடான உறவு. இந்த உறவுகளில் 'பாசப் பிணைப்புக்கு' இடமில்லை. பொருளாதார ரீதியான உறவு களிலும் சில சந்தர்ப்பங்களில் நேரடியான தொடர்பு இருக்கலாம். உதாரணமாக கறுவாப்பட்டை உரிக்கும் தொழில் செய்யும் 'சலாகம்' கொவிகமவின் காணிகளுக்குள் சென்று தன் தொழிலைச் செய்யலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் 'முரண்பாடும் உரசலும்' கூட ஏற்படுவதுண்டு. இதனால் இவ்விருசாராருக்கும் இடையே போட்டி எழுவதற்கான சாத்தியம் இருந்தது. - மரபு வழிச் சமூகத்தில் குடியேறிகள் ஒன்றி ணைக்கப்படுவதால் எழும் அமைப்பியல் அம்சங்களை இவ்விதம்விளக்கும் றொபர்ட்ஸ் கராவ சாதியின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்த சமூக நிலைமைகளை விளக்குகிறார். அவ்வாறாயின் கராவ மட்டும் ஏன் துரித வளர்ச்சி பெற்றனர். சலாகம், துராவ சாதியி னர் ஏன் அந்த அளவிற்கு வளரவில்லை என்ற கேள்வி எழுதல் நியாயமானதே. இம் மூன்று சாதியினருள்ளும் கராவவின் உயர்ச்சிக்குக் காரணமாக இருந்த பொருளாதார சமூகக் காரணிகளை றொபர்ட்ஸ் நூலில் பக் 24-272 இல் விரிவாக ஆராய்கிறார்.
- இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நூல் இலங்கையின் பல சமூகக்குழுக்களில் ஒன்றான கராவ உயர்குழாம் பிரிவின் எழுச்சியைப் பற்றி விபரிப்பதாகும். இந்நூலாசிரியர் 1979 ஆம் ஆண்டில் பதிப்பித்து மாரிகா நிறுவனத்தின் வெளியீடாகப்பிரசுரிக்கப்பட்ட நூலில் உள்ள கட்டுரைகளில் பல இலங்கையின் பிற சமூக, இனக்குழுக்களுடனான ஒப்பீட்டு ஆய்வுக்கு வேண்டிய தகவல்களைக் கொண்டுள்ளது என்பதையும் இலங்கையின் சமூக வரலாற்றின் புரிதலுக்கு அத்தகைய ஒப்பீட்டாய்வுகளும் பயனுடையவை என்பதையும் இங்கு
குறிப்பிடுதல் தகும்.
நூல் பற்றிய விபரம் : Roberts michaal (ed) 1979. Collective Identities, Nationalism and
protest in Sri Lanka, Colombo marga Institute.
0 0 0
36

அல்லது உ
வயாக இ.லெ)
கல்வயல்
avevv?) • -
குரலின் அழைப்பில் குழைவு அதிலே எழுந்த கனிவு வெறும் புன்னகையால் கன்னி கழித்து ஊன் பொதிஞ்ச உடலின் அதிர்ச்சி உருவம் அற்ற உள்ளச் சிலிர்ப்பு இவற்றால் விளைஞ்ச உறவின் உறைப்பு விடலைப் பருவம் தூரத்து இசையில் நெஞ்சு
குழைகிறது புன்னகையால் கற்பு அழிக்கும் பொல்லாச் சிரிப்பு உடல் ஏன் பதறுகுது பயமோ திகைப்போ என்ன பரபரப்பு ஏதோ சுகமாக என்ன இனிக்கிறது தேகம் எங்கும் தேன் பொழிந்து சித்தம் சிலிர்க்க வைக்கும் ஊடுருவி உள் உருவி உணர்வு மீறிய அறிவு
உறுத்தும் தூரத்து இசைச் சுழலில்
ஈரம் கசியும் -தடு மாற்றம் நரம்பு முறுக் கேற்றி நாண் தொடுக்கும் தூரத்து அந்த இசை
இசைவில் கௌதமனின் அகலிகை சாபமாய்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 39
தமடி?
02
தனித் தமிழிலேயே நடை
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்' என்பார், 'தமிழுக்கும் அமுதென்று பெயர்.' என்பார். 'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே.' என பாரதியாரின் பாடலை வானுயரவே முழங்கிடுவர். ஆனால் நடை முறையில் கடைப்பிடிப்பதில்லை. - தமிழர் வீட்டு வாழ்க்கையில், வீதிகளில், காரியாலயங்களில், கூடும் இடங்களில் வானொலி, தொலைக்காட்சி, சினிமா நிகழ்ச்சி களில் தமிழைப் புறக்கணிக்கின்றனர், ஆங்கில மொழியை வரிந்து கொள்கின்றனர் என்ற கூற்றை எவரும் மறுத்திட முடியாது! தமிழர் தம் தாய் மொழி தமிழைப் புறக்கணித்து, ஆங்கிலத்தைத் தமது தாய் மொழி போலக் கருதி தமது நாளாந்த வாழ்வில் உபயோகிப்பதைப்போலவேறு எந்த சமூகமும் இருக்காதென்று துணிந்து கூறலாம். தமது பிள்ளை தவறி தமிழைப் பேசி விட்டாலும் சடுதியாகக் குறுக்கிட்டு ஆங்கிலத்துக்குத் திருப்பிவிடுவதையும் காணலாம்!
ஆங்கிலத்தை நாடவேண்டாம் என்று நாம் கூறவில்லை, ஆங்கிலம்தான் யாவும் என்ற நிலையிலிருந்து விடுபட்டு தாய்மொழி தமிழ் உங்களால் விடும் கண்ணீரைத் துடைத்திட வேண்டுகிறேன். அதன் ஏக்கத்தைக் களைந்திட வேண்டுகிறேன். இனிய தமிழை, செந்தமிழை, தமிழர் பேசாவிடில் வேறு யார் பேசுவது? இதனால் தான்போலும் பாரதியும்,
'.... மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்...' என்று தனது 'தமிழ்த்தாய்' பாடல் தொடரிலே குறிப்பிடுகிறார்.
-எம்.ஐ.எம். 8
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

லி
திகழ்ச்சிகள் பெறல் வேண்டும்
கனகசு
தமிழ் நாட்டுத் தொலைக் காட்சி களிலும், இலங்கைத் தொலைக்காட்சிச் சேவைகளிலும் ஒளி பரப்பாகும் பல்வேறு இசைப் போட் டி நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பல் வேறு பேட்டி நிகழ்ச் சிகள், முதலானவற்றில் பங்கு கொள்ளும் ஏற் பாட்டாளர்கள், மத்தியஸ்தர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், அறிவிப்பாளர்கள் என் போர் முற்று முழுதாகத் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே. எனி னும் இவர்களில் பெரும்பாலானோரின் வாய்களிலிருந்து வெளிப்படும் அறிவிப்புக்கள், கருத்துக்கள், முடிவுகளில் நூறு வீதத்தமிழுக்கு பதிலாக பல வீதங்களை ஆங்கிலத்துக்குக் கொடுத்துவிட்டு தமிழ் கலந்த ஆங்கிலமாக அல்லது ஆங்கிலம் கலந்த தமிழாக அவை உதிர்க்கப்படுவதைக் கவலையுடனும், எரிச் சலுடனும் அவதானிக்கும் பல மில்லியன் மக்களில் நானும் ஒருவன், அந்த நிலையில் அவர்கள் விட்டுவிட்டாலும் இதனை சர்வதேசத்துக்கும் அறிவிக்க வேண்டும் என்ற உயர் நோக்கில் சர்வதேசத் தமிழ் சஞ்சிகையான 'ஞானம்' இதழுக்கு இதனை எழுதுகிறேன். தனித் தமிழில் நிகழ்ச்சியை நடத்த முடியாதவர்கள் தயவு செய்து அதிலிருந்து ஒதுங்கி சரியானவர்களுக்கு வழிவிட வேண்டும், தங்களது ஆங்கில மோகத்தை வெளிப்படுத்த இத்தகைய அப்துல் லத்தீப்

Page 40
ஊடகங்களை நாடாதிருப்பது அவர்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டாகும்!
தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் பல்லாயிரக் கணக்கான தமிழ், முஸ்லிப் ரசிகர்கள் தமிழ் நிகழ்ச்சிகளை அவதானிக் கின்றனர், இவர்களில் ஆங்கிலம் புரிய தவர்களும் உள்ளனர். அவர்களுக்கும் பூரண மாகப் புரியக்கூடியதாக தமிழ் நிகழ்ச்சிகள் தனித் தமிழ் மொழிப் பிரயோகத்தில் அமைவதுவே சிறப்பாகும்.
கர்நாடக சங்கீதம், பரத நாட்டியப் என்பன இந்து மக்களின் சமய கலாசாரப் என்பவற்றோடு இரண்டறக் கலந்தவை தமிழகம், இலங்கை, மலேஷியா ஆகிய நாடுகளில் தமிழ் மக்கள் மிகவும் வியந்து ரசிப்பர். இவை சம்பந்தமான கலந்து ரையாடல்களிலும், கருத்துரைப்புக்களிலும் கூட தமிழுடன் ஆங்கிலம் பலாத்காரமாகப் புகுந்து நர்த்தனமாடுவதைக் காணலாம் முழுக்க தமிழ் மொழிக்கேயுரிய இப்போட்டி நிகழ்ச்சிகளுக்கு மத்தியஸ்தம் வகிக்க வருகை தரும் துறைசார்ந்த விற்பன்னர்களான ஆண்களும் பெண்களும் தமது மதிப்பீட்டு உரைகளின் போது போட்டியாளர்களிடம் தமிழுடன் ஆங்கில மொழியையும் சரளமாகக் கலந்து மதிப்புரைகள், ஆலோ சனைகள் வழங்குவது சிலவேளை அட் போட்டியாளர்களுக்கும் LITÜ60)6JuJT6T களாக வருகைதரும் உறவினர்களுக்கும் விளங்காமலே இருக்கலாம். இப்படி வீண் சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக பெருமைக்கு மாவிடித்தல் போக்கை கைவிட்டு தனித்தமிழ் மொழியில் கருத்துக்களை முன்வைப்பது தமிழ் மொழிக்கு வழங்கும் கெளரவமாகும். அதுவே உண்மையான பெருமையும்கூட!
அம்மா அம்மா என்று சொன்ன நாவுகளின்று மம்மி மம்மி என்றழைக் கின்றன,
அப்பா அப்பா என்று சொன்ன நாவுகளின்று டடா டடா என்றழைக் கின்றன.
இந்த வயிற்றெரிச்சலை ஏற்படுத்திய வர்கள் நமது தமிழ் பெற்றார்களே! எனவே
1. மெல்லத் தமிழினிச் சாகும். எனக் கூறலாமல்லவா? நமது கைவிரல்களாலேயே நமது கண்களைக் குத்திக்கொள்வதற்குச் சமமே! தமிழ் சினிமாக்காரர்களும் சுயநல மிகுதியால் ஆங்கிலப் படங்களுக்குச்
38

சமதையாகத் தமது தமிழ் படங்களும் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ் கலாசாரத்தை ஒருபுறம் தள்ளிவிட்டு மேற்கத்திய கலாசாரத்தை அளவுக்கதிகம் புகுத்தி தமிழ் இளஞ் சந்ததியினரைக் கெடுப்பதில் மிகுந்த கவனஞ் செலுத்து கின்றனர். இவை உடை நடை உறவாடல்கள், பாடல்களில் நிறைவாகவே காணமுடிகின்றது. ஆங்கிலச் சொற்கள் கலவாத தமிழ் சினிமாப் பாடல்களைக் கேட்பதற்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
நீதி மன்றங்களில், மகாநாடுகளில் பங்கு கொள்ளும் தமிழ் சட்டத்தரணிகள், தமிழறிஞர்கள் அங்கெல்லாம் தமிழ் கலந்த ஆங்கிலத்தில், அல்லது ஆங்கிலம் கலந்த தமிழில் வாதிடுவதில்லை, கருத்துக்கள் உரைப்பதில்லை. இவர்கள் சுய வாழ்க்கைக்கு வந்தபின் ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடுவர், அதுபோல கடமை சார்ந்த தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளும் பொறுப்புள்ளவர்களும் தனித் தமிழ் மொழியில் கருத்துக்களை முன்வைப்பது சிறப்பு. அதுபோல தமிழ் சினிமாத்துறையினரும் தமிழ் மொழியின் கெளரவத்தைப் பேண தம்மை அர்ப்பணிக்க வேண்டும். தமிழ் பாடல்களில் ஆங்கிலச் சொற்கள் கலப்பதைத் தவிர்த்தல் வேண்டும். மேற்கத்திய கலாசாரப் புகுத்தலைத் தவிர்க்க வேண்டும்.
எந்த ஒரு தமிழரும் ஆங்கிலேயருடன் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் உரையாடு வதில்லை! ஆனால் இரண்டு தமிழர்களின் சந்திப்புக்களிலேயே இந்த நோய் பீடித் துக்கொள்கின்றது. ஏன் இவர்கள் ஆங் கிலேயருடன் தனி ஆங்கிலத்தில் உரை யாடுவது போன்று தங்களுக்குள் தனித் தமிழில் உரையாடக் கூடாது? இல்லை எனில் '. மெல்லத் தமிழினிச் சாகும்.'
ஆங்கிலேயர் தமது பாடல்களில், இசையமைப்புக்களில், உரையாடல்களில், ஆங்கிலத்துடன் பிற மொழிகளை இணைத்து நடைமுறைப்படுத்தவில்லை. அது போல பிற மொழிகளுக்கு உரித்தானவர்களும் தத்தம் மொழிகளுடன் ஆங்கிலத்தை இணைத்துச் செயல்படுத்தவில்லை. அவ்விதமிருக்க நம் தமிழர்களுக்கு மாத்திரம் ஆங்கிலத்தின் மீது ஏன் இந்தளவு மோகம்? தம் பிள்ளையை பக்கத்தில் இருத்தாட்டிவிட்டு அந்நிய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 41
பிள்ளையை வாரி இடுப்பிலிருத்தாட்டிக் கொள்வதேன்? போர்த்துகீசர் இந்த நாட்டை 150 வருடம் ஆட்சி புரிந்த காலத்தில் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதில் அதி தீவிரம் காட்டினார்கள். அதனைப் பின்பற்றிய பெளத்தர்கள் சிங்கள கத்தோலிக்கர்களாகவும், இந்துக்கள் தமிழ் கத்தோலிக்கர்களாகவும் மாறினார்கள், அதுபோல ஆங்கிலேயர் தமது 150 வருட ஆட்சி காலத்தில் ஆங்கில மொழியை பரப்புவதில் அதி தீவிரம் செலுத்தினர். இது தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், உயர் அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கு உதவியாக இருக்க சுதேசிகளைத் தயார்படுத்தி இலகு படுத்துவதற்காக ஆங்கில போதனைக்கு அதி -- முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதனால் கறுப்பு துரைமார்கள் உருவாகினர். ஆங்கிலம் கற்ற கறுப்பு துரைமார்கள் தாமும் ஆங்கிலேயர்கள் போல நடையுடை பாவனைகளை - மாற்றிக்கொண்டனர். தமக்கு சமூகத்தில் உயர் கௌரவத்தை எதிர்பார்த்தனர். விளைவு, தமிழ் மொழி, சிங்கள மொழிப் பாடசாலைகள் தரம் குன் றின. அவற்றில் கற்பது தொழில் ரீதியாக எவ்விதப்பயனுமற்றது என்ற நிலை தோன்றி யது. ஆங்கில மொழியும், கிருஸ்தவ சமயமும்
முதன்மை பெற்றன.
இதனை நன்குணர்ந்த அநகாரிகதர்மபால, ஆறுமுகநாவலர்போன்ற அறிஞர்கள்முறையே சிங்களமொழியையும், பௌத்தசமயத்தையும், தமிழ் மொழியையும், சைவ சமயத்தையும் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்ததை வரலாற்று ரீதியாக நாமறிவோம். என்றபோதி லும் 1956ம் ஆண்டு காலம்வரையும் ஆங்கிலமே அரச மொழியாக விளங்கியது. - ஆங்கிலேயரின் வருகைதொடக்கம் நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடபகுதித் தமிழ் மக்கள் ஆங்கில மொழியைக் கற்பதில் மிகவும் கரிசனை செலுத்தினர். வட பகுதி யானது நாட்டின் ஏனைய பகுதிகளை விட இயற்கை வளம் குன்றிய பகுதி, நீர்ப்பாசனம் செய்யக்கூடிய ஆறு, குளம் எவையும் இல்லை, இத்தகைய சூழலிலேயே வடபகுதி தமிழ் மக்கள் தம் சீவனோபாயத்துக்காக விவசாயத்தை மிகுந்த சிரமத்துடன் துலா கிணறுகள் மூலம் நீர்ப்பாய்ச்சி விளைச்சலைப் பெற்றுக்கொண்டனர். - யாழ்ப்பாணத் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

தமிழரசர்களின் அரசவை வழங்கும் சில உத்தியோகங்களைத் தவிர வேறு அரச உத்தியோகங்கள் இல்லை.
- தமிழர்களின் அறிவாற்றல், திறமை, முயற்சி இவைகளை நன்கு புரிந்துகொண்ட ஆங்கிலேயர்கள் தமது நிர்வாகத் தேவை களுக்கான ஊழியர்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஏனைய பகுதிகளை விட வடபகுதியில் அதிகமான ஆங்கிலம் போதிக்கும் பாடசாலைகளை நிறுவுவதில் அதிக அக்கறை செலுத்தினர். பெற்றோர்களும் தாம் நிலத்தில் அநுபவிக்கும் கஷ்டத்தைத் தம் பிள்ளைகளும் அநுபவிக்கத் தேவையில்லை என்ற எண்ணத்தில் தம்பிள்ளைகள் ஆங்கிலம் கற்றால் அரச உத்தியோகம் நிச்சயம் உண்டு, மகன் காற்சட்டை, டை, கோட் அணிந்து வெள்ளையன் போல் உலா வரும் காட்சியை மனதிலிருத்திப் பிள்ளைகளைப் பெருமையுடன் ஆங்கிலப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர். - காலக்கிரமத்தில் அப்பெற்றோர்களின் கனவுகளும் நிறை வேறின. ஆனால் தமிழ் சிதைவுக்குள்ளாகி விட்டது!
போக்குவரத்து வசதிகள் குன்றியிருந்த அக்காலத்தில் ஆசிரியர்களின் அறிவுறுத் தல் பேரில் அதிகமான மாணவர்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு கற்பிக்கப் பட்டனர். அங்கு ஆங்கிலத்தில் மாத்திரம் உரையாடுவது கட்டாயமாக்கப்பட்டது. மறந்தும் தமிழ் அல்லது சிங்களம் பேசினால் சிறு தொகை தெண்டமாகச் செலுத்த வேண்டும், இவ்வொழுங்கு விடுதிகளில் மாத்திரமன்றி வகுப்பறைகளிலும் - அமுல் படுத்தப்பட்டது. அதனால் ஆங்கிலம் பேச்சு எழுத்து வழக்குகளில் சீக்கிரமே பெரு வளர்ச்சி கண்டது. விடுமுறையில் வீடு வரும் மாணவர்களும், மாணவிகளும் பழக்கத்தின் தோசத்தாலும், ஆசிரியர்களின் அறிவுறுத்தல் பிரகாரமும் இல்லங்களிலும் ஆங்கிலத்திலேயே உரையாடினர். ஆனால் ஆங்கிலம் கற்காத பெற்றார்களும், உற்றார் உறவினர்களும் சிரமப்பட்டாலும், பெருமை பும் கொண்டனர். இந்நிலையிலேயே புறோக்கன் இங்கிலிஸ்' முறை வந்திருக்க வேண்டும்! பிள்ளைகளுடன் பெற்றார், உறவினர்கள் 'புறோக்கன் இங்கிலீஸ்'ஸில் பேசியிருப்பர். அதன்படியே தமிழ் கலந்த ஆங்கிலம் தோன்றி இருக்கலாம். ஒரு தலை
(தொடர்ச்சி 42ஆம் பக்கத்தில்)
39

Page 42
இசை என்பது ஏழு எழுத்துக்களை கொண்ட ஒரு மொழி என ஆய்வாளர்கள் கூறு வதுண்டு. அதிலும்தமிழரின்இசைமரபானது இசைமொழியின் இலக்கணங்களை எல்லாட தன்னகத்தே கொண்டது.
பழந்தமிழ் மக்கள் அந்நாள் பறவைகள் விலங்கு வண்டு தழை மூங்கில் இசைத்த தைத்தாம் தழுவியே இசைத்த தாலே எழும் இசைத் தமிழே என பாவேந்தர் பாரதிதாசன் இசைத் தமிழின் தொன்மை பற்றிய தன் மனப்பதிவை வடித்தார். வாழையடி வாழையாக வந்த இசைமரபிலே பக்தி இலக்கியங்கள் இசைத் தமிழின் கருவூலங்களாக இன்றுவரை வாழ் கின்றன. எனவே, தொன்மையும் வளமையும் மிக்க நம் இசை மரபினைப் பேணி வளர்க்குப் பொறுப்பு நமக்குமுண்டு என்பது தெளிவு.
நமது நாட்டில் இசைக்கென ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு சுவாமி விபுலாநந்தர், குழல், யாழ், முழவி என்பவற்றுடனான இரண்டாயிரம் ஆண்டு முதிர்ச்சி கொண்ட தமிழிசை குறித்த ஆய்வில் தன்னை அர்ப்பணித்து, அம்மரபின் பெருமையை நிறுவினார். கடல்கடந்து
பேராசியர் என்.சண்முகலிங்கன்
66.6sful L. 翼 "ஆத்மா” இறுவட்டு தொடர்பான ஓர் இரசனைக்குறிப்பு
-வசந்திதயாபரண்
氢 翡
40
 
 

5
5 5
D
D
சென்று தழிழகத்தில் குருகுலமுறைப்படி பயின்றோரும், பின்னர் இசைக்கல்லூரிகளில் பயின்றோரும் ஊன்றிய வித்துக்கள் இன்று விருட்சங்களாக கிளைபரப்பி செழித்துள்ளன. கூடவே, இசைத்தமிழ் பற்றிய அருட்டுணர்வும் அதை பயில்வதற்கான விருப்பும் நம் நாட்டில் எப்போதுமே தொய்ந்து போனதில்லை. இன்றுவரை ஏதோ ஒரு வடிவத்தில் அது தன்னைத் தக்கவைத்துக் கொண்டே தழைக்கிறது.
பேராசியர் என்.சண்முகலிங்கன் அண்மை யில் வெளியிட்டுள்ள "ஆத்மா” என்ற இறுவட்டு அந்த இசைத்தமிழ் மாலையில் இணைந்து கொண்ட புதிய பூங்கொத்து. உள - சமூக - ஆத்மீக வல்லமைக்கான இசைத்தமிழ் ஆரம்' என்கின்ற சிறியதோர் அறிமுகத்துடன் ஆத்மா' பேசுகிறது. இசைவழி மனவளம், இசைவழிச் சிகிச்சை என்பன அண்மைக்காலங்களில் அதிகமாகப் பயிலப்படும் கருப்பொருள்கள். இசையைப் பயின்றும், பயிற்றுவித்தும், ஆற்றுகை செய்தும் வரும் இசை வல்லுநர்கள் தொன்று தொட்டு தம்மையறியாமலே ஆற்றிவரும் பணிகளே இன்று கலைச் சொல்லுருப் பெற்றுள்ளன. ஆத்மா கொண்டுள்ள இலக்கு கள் கூட இவையே. ஆத்மாவை வல்லமை கொண்டதாக்கி அதனூடே பண்பாட்டு மறுமலர்ச்சியை எய்துகின்ற உயர்நோக்குடன் நகுலேஸ்வரி பண்பாட்டு மையம் வெளி யிடும் மூன்றாவது இறுவட்டு இது என்பது மகிழ்வுக்குரியது.
LDUTLI பிசகாதபடி, விநாயகரை முன்னிறுத்தி ஒளவையாரின் விநாயகர் அகவலுடன் தொடங்கி, மணிவாசகரின் தேனாம் சிவபுராணத்தை ஒதி, முத்தையனின் அம்பிகை அகவலை உச்சாடனம் பண்ணி,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 43
ஆத்ம |
அ அ
அல்ல வந் க தல பத்த ரி பி
பேராசிரியர் என் .சண் மு க 6
சிவயோக
சுவாமிகளின் நற்சிந்தனையை
எடுத்துரைத்து, முத்தாய்ப்பாக என். சண்முகலிங்கனின் ஒற் றைப்பாடலில் உள்ளத்தை உருக்கி 'ஆத்மா' மனதில் தொடர்ந்து ரீங்கரிக்கிறது. இனிமை, ஓதுதற்கு எளிமை, இசையுடன் இயையும் தன்மை என்ற அடிப்படையிலும் இப்பாடல் தேர்வினை நாம் நோக்கலாம். பூபாளம், மோகனம்என ஆரம்பித்து இராகமாலிகையாக விரிந்து பிருந்தாவன சாரங்காவிலே எம்மைச் சங்கமமாக்குவது 'ஆத்மாவின் இராகத்தேர்வு.
சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகையர், 'ஸ்வரராக சுதாரஸ' என்ற விளம்ப காலக் கீர்த்தனையில் 'மூலாதாரமு நாதமெருகுடே' என்று பாடுவார். அந்த நாதத்தை அனுபவ பூர்வமாக உணரும் வகையில், விநாயகர் அகவலில் பாடகரின் கனமும் கனிவும் இணைந்த குரல் 'மூலாதாரம் என்ற சொல்லை அடிவயிற்றிலிருந்து ஒலிக்கின்றமை போற்றுதற்குரியது. 'என்னை அறிவித்து' என்று பாடகர் குரலை உயர்த்திப் பாடுகையில் எல்லையிலாக் களிப்பிலே ஆன்மா இறையை விளிப்பது போன்ற பிரமையில் நாம் இன்புறுகின்றோம். சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி
என்ற வரிகள் எமக்கும் அவற்றைச் சிந்தையிலே காண்பிக்கின்றன. உருகி உருகிப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

ரம்
எங்க ள்
பாடும் பாடகரும் பாட்டுடன்
இழைந்து இழைந்து நடைபயில்கின்ற ம்
வயலின் கலைஞரும் விநாயகர் என
அகவலில் எம் நெஞ்சைப் பிழிந்து விடுகின்றனர்.
மணிவாசகரின் சிவபுராணம், - நெஞ்சக் கனகல்லை நெகிழ்வித்து ஆனந்தமயமாக்கும் - வல்லமை கொண்டது. இறுவட்டைக் கேட்போரும் கூடவே அதனை ஒதும் வகையில் எளிமையான - இசையுடன் சிவபுராணம் பாடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 'வெடிபல அண்டத்து இடிபல தாளம் போட களித்தாடும் தாய்'
என்று பாரதியின் நாவிலே ஊழிக் கூத்தாடும் சத்தியை உமையம்மையே போற்றி உலகெலாம் ஆனாய் போற்றி என சாந்தசொரூபியாக மென் மையான குரலில் வழிபாடியற்றுவது 'அம்பிகை அகவல்'. ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் 'நற்சிந்தனை'ப் பாடல்களான 'நல்லூரான் திருவடியை', 'என்னை எனக் கறிவித்தாய்' என்பன இறுவட்டிற்கு முழுமை தருவனவாக மிகப்பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. - இறுதிப்பாடலான 'அம்மா அம்மா எனத் தஞ்சமடைந்தேன்' என்பது பேராசிரியரின் ஆக்கம். அவருள் குடிகொண்டிருக்கும் அற்புதக் கவிஞனையும் குரல்வளமிக்க பாடகனையும் ஒருங்கே தரிசிக்கின்ற, கேட்டு இன்புறுகின்ற வாய்ப்பினை நாம் பெற முடிகிறது. எளிமையும், சந்தமும், கவித்து வமும், உணர்ச்சியும் நிறைந்த கவிதை ஊற்றெடுத்த அதே ஆத்மா, அக்கவிதையை கச்சிதமான கமகங்களுடனும் இராக பாவத்துடனும் உணர்ச்சிக் கனத்துடனும் பாடியிருக்கையில் இசையின்பம் அங்கு பூரணமாகப் பொலிகின்றது.
'காமாட்சி தாயே போற்றி' என்று உச்சாடனம் செய்கையில் குரலில் வழியும் கனிவாகட்டும், 'எல்லாம் மறப்பேனடி கிளியே' என்று விளிக்கையில் இனிக்கும் அன்புக் குழைவாகட்டும், அங்கெல்லாம் பிருகாக்கள் மூலம் எமது இதயங்களும் புரட்டப்படுகின்றன. நிச்சயமாக இந்த இறுவட்டைக் கேட்கும் அனைவரும் அந்த
41

Page 44
சுகானுபவத்தை உணர்வர். - பேராசிரியர் என். சண்முகலிங்கனி கவியாற்றலுக்குச் சான்றுகளாக இலங்ை வானொலியின் பொற்காலப் பாடல்கள் பலவற்றை இங்கு மீட்டிப் பார்க்கலாம் 'சந்தனமேடை என் இதயத்திலே' என்றும் 'குளிரும் நிலவினிலே ஒரு பறவை' என்றும் 'நீலக்கயல்விழி நீந்தியென்மீதினில்' எ6 றும் இன்னும் பலவாறும் அன்று எ கனவுகளுக்கு கவிதையுருக் கொடுத்தவ சண்முகலிங்கன் என்ற இதே கவிஞர். அலை வெறும் கவிதை வரிகளல்ல! அவை எமது ஆத்மாவின் உள்ளே புகுந்து துளாவும் உயிர் வரிகளாக நெஞ்சில் உறைந்து கிடக்கின்றன அதே கவிஞன், பாடகனாகத் தன்லை வெளிப்படுத்துகையில் புலப்படுகின்ற இரட டிப்பு அழகும் கிடைக்கின்ற மகிழ்ச்சியுப் இந்த இறுவட்டிலும் எமது ஆத்மாவிலுப் பதிவாகியுள்ளன. பாடகர் சண்முகலிங்கல் பொருளுணர்ந்து பொருத்தமாகச் சந்தி பிரித்த சந்தங்கெடாது பாடியதும்; பக்கவாத்தியம் கலைஞர்கள் இணைந்து பங்காற்றியதுப் இந்த இறுவட்டின் வெற்றிக்கான சில காரணிகளாகும். வெகுசன இரசனைக்கு ஏற்றப்படி இசையமைப்பு இருந்தால் மட்டுமே அது மக்களின் ஆத்மாவை அசைக்கும் என்ற அக்கறை கொண்ட இசையமைப்பாளர் 'அற்புதனின்' பங்களிப்பும் இன்னுமொரு வலுவான காரணியே.
கவிதை , இசைப்பாடல் என்பன எமது இருப்பினதும் - உணர்வினதும் - மன உளைவினதும் - ஆத்மாவின் முடிவற்ற தேடலினதும் ஆவணமே என்பதை 'ஆத்மா பதிவு செய்கிறது. ஒரு கவிஞனின் மனம் சுருதி கூட்டப்பட்ட வீணை போன்றது. அது கவிதைகளை இசையோடு பாடிப்பாடியே யாக்கும்; யாத்தவற்றை குரலெழுப்பிப்பாடும். ஒரு பேராசிரியராக, துணை வேந்தராக அறியப்பட்ட என்.சண்முகலிங்கனின் ஏனைய எல்லாப் பரிமாணங்களையும் விஞ்சியதாய் கவிஞராவும் இசைக்கலைஞராகவும் அவரது விகவிப்புக்கள் எம்மை அசைக்கின்றன.
"நிச்சயமாய் விடியும் நல்ல பொழுதிலே அத்தனையும் அழகாகும் எங்கள் ஊரிலே”
கவிஞன் என்.சண்முகலிங்கனின் இந்த கவிதை வரிகள் உண்மையாகட்டும்.
42

(39ஆம் பக்க தொடர்ச்சி.....)
முறை கடந்தபின் பெற்றார்கள் உறவினர்கள் ஆங்கில மொழி மூலம் கற்றுத் தேறிய பெற்றோராயிருந்தனர். எனினும் பேச்சுவழக்கு தமிழ்கலந்த ஆங்கிலம் பேசுவது தொடர் கதையாகிவிட்டது.. | 1956ம் ஆண்டுக்குப் பின் அரசகரும் மொழிப்பிரயோகத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆங்கில மொழிக்கு பதிலாக சிங்கள மொழிக் கொள்கை புகுத்தப்பட்டது. இதனால் தமிழ் உத்தியோகத்தர்களும், தமிழ் மக்களும் தம் எதிர்கால நிலைபற்றி சிந்தித்து முடிவெடுக்க ஆரம்பித்தனர். மொழிப்பிரச்சினைகளும், இனப்பிரச்சினைகளும் தலை
- தூக்க ஆரம்பித்தன. சிங்கள மொழியில் பணி யாற்ற முடியாத தமிழர் மெல்ல மெல்ல பதிவியிலிருந்து ஓய்வு பெற்று ஐரோப்பிய அமரிக்க நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அங்கு உயர் சம்பளத்தில் பதவிகள் பெற்றதுடன் தத்தமது குடும்பத்தினரையும் எடுக்க ஆரம்பித்தனர். இதனை ஏனைய தமிழ் வாலிபர்களும் தொடர்ந்தனர்.
கொடிய யுத்தம் ஆரம்பித்ததும் தீவிரவாத இயக்கங்களில் பல தமிழ் இளைஞர் யுவதியர் இணைந்தனர், இன்னும் பலர் இணைக்கப்பட்டனர், இதனை விரும்பாத பெற்றோர் பலர் தம் சொத்துக்களை விற்றும், வெளிநாடுகளில் வதியும் உறவி னர்களின் துணைபெற்றும் தம்பிள்ளைகளை சாரிசாரியாக அனுப்பிவைத்தனர்.
எனவே புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் கலந்த ஆங்கிலம் வேகமாகப் பரவியது. - இவ்விதமாக இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக வடபகுதித் தமிழர்களின் வாழ்வா தாரம் ஆங்கிலேயர்களின் வருகையின் பின்னர் அவர்களின் பெளதிக தொழில் நிலை மைகளைப் பொறுத்து ஆங்கிலத்தைக் கற் பது ஜீவாதாரத் தேர்வாகவே இருந்துள்ளது எனில் தவறிருக்காது எனலாம். அந்தத் தேர்வானது அவர்களுக்கு இன்று வரையும் இனியும் சர்வதேசத்திலும் கைகொடுக்கும்! இதேவேளை தமிழகத்துத் தமிழர்களுக்கு யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பௌதிகப்பிரச் சினைகள் போல அலட்டிக்கொள்ளும் அளவுக்கு இல்லாத போதிலும் தமிழ் வளர்ந்த தமிழகத்தில் இந்த அளவு ஆங்கில மோகம் வந்தது எப்படி?.
- தொலைக்காட்சி தமிழ் நிகழ்ச்சிகளில் தமிழ் நடிகைகளினதும், கலைஞர்களினதும் நாவுகளில் தமிழை எதிர்பார்த்துத் தவம் கிடக்க வேண்டியுள்ளது!!
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்......
0 0 0
"விசின் சுக அஇய
தமிழ் நல் தமிகைளது!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 45
ஹைப்பல்கலைக்கழ ö9ğiği ö5656)ğ16) ಙ್
பாண்டிச்சேரிட் யின் இருபத்தைந்தா ஏப்ரல் மாதம் 24,2 影 நடாத்தியிருந்தது. நாட்டின் முத்தாய்ப்பாய் ச்சேரிப் பல்கலைக்கழக நிகழ் திராபார்த்தசாரதியின் நாடக சரஸ்வதி சம்மான் விருது பெற்ற Sராமானுஜர் நெறியாள்கையில் ே வேட உடை ஒப்பனை, காட்சிஅமை வடிவமைத்தவர் பேரா.L.V.நாகபூஸன்
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அனைவரு நவீனநாடக எழுத்தாளரும் கூட இவ களில் மொழிபெயர்க்கப்பட்டும், புக யாள்கை செய்யப்பட்டதும் கூட
நெறியாளர் பேராசியார் S.ராமானுஜர் நவீனந பலநாடகங்களை எழுதியும் தமிழ், ெ நெறியாள்கை செய்தும் இருக்கின்றார். தமிழ் நாடகத்தை உயிரூட்டிக் கொன நாடகவியளாளருக்கு இவர் குரு.
மேடைஏற்றம் இப்பேர்ப்பட்ட மேதைகளின் 6 பேறாக சுமார் 22பேரின் கூட்டுமு பேராசிரியர்களின் ஒத்துழைப்பினாலும் பெரு வரவேற்பைப்பெற்றது. இதனை Dr.அனிதாரத்னம், நா.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் ஆற்றுகைசெய்து நான்கு அங்கங்களையும் 23 கா நிகழ்த்தக் கூடிய முழு நீள நாடக இந்திராபார்த்தசாரதியின் துணையுடன் தியாலங்களுக்குள் (1.40)வடிவமைத்தவ இந்நாடகத்தில் தமிழ் மொழிே கேரளத்தைச் சேர்ந்தவர்களுடன் இலங் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் இணைந் நாடகத்தில் 63 பாத்திரங்கள் மேடையி நடிகர்களால் சேர்ந்து நடிக்கப்பட்டிருந் முடிவடைந்து நாடகக்காட்சிகளை வட
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)
 
 
 
 
 

பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துகலைத்துறை ாண்டு காலப்பூர்த்தியை முன்னிட்டு இவ்வருடம் 25, 26 ஆம் திகதிகளில் சர்வதேசமகாநாட்டை
இருந்தவிடயம் ஏப்ரல் 26 ஆம் திகதி த்து கலைத்துறையின் தயாரிப்பில், பத்மபூரீ எழுத்துருவான, சங்கீதநாடக அகடமியின் ராமானுஜர்’ நாடகப்பிரதியை, பேராசிரியர் மடையேற்றியமையாகும். இந்நாடகத்திற்கு ப்பு நாடக கைப்பொருட்கள் என்பனவற்றை ராவ், இசையமைப்பு B.முகுந்தன்
ருக்கும் தெரிந்த நாவலாசிரியர் என்றாலும் ருடைய நாடகங்கள் இந்தியாவின் பலமொழி ழ் பெற்ற நாடகநெறியாளர்களாலும் நெறி
ாடக செயற்பாட்டில் முக்கியகர்த்தா. அவர் தலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இவருடைய மாணவர்கள்தான் இப்போதைய ண்டுசெல்பவர்கள். பொதுவாகவே இன்றைய
வழி நடத்தலில் ஒருமாதகால பயிற்சியின் யற்சியாலும் பல்கலைக்கழகநாடகத் துறை ம் இந்நாடகம் 26 ஏப்ரல் மேடையேற்றப்பட்டு னத் தொடர்ந்து இந்நாடகம் சென்னையில் உதவியுடனும் மேமதம் 18,19 ம் திகதிகளில்
பலரினதும் பாராட்டைப் பெற்றது. ட்சிகளையும் கொண்ட, மூன்றுமணிநேரம் பிரதியாக அமைந்திருந்த இந்நாடகத்தினை எழுத்துப் பிரதியை சுருக்கி இரண்டு மணித் பர் பேரா.S.ராமானுஜர், தெரியாத உத்திரபிரதேசத்தை, டில்லியை, ங்கையைச் சேர்ந்த மூவருமாக பாண்டிச்சேரி, து இவ்வாற்றுகை அரங்கில் பங்கேற்றிந்தனர். ல் உலவவேண்டும். 63 பாத்திரங்களையும் 22 ந்தது. நாடக வாசிப்பின் பின் பாத்திரத்தேர்வு டிவமைத்து முதல் நாடக ஓட்டத்தின் போது
43

Page 46
நாடகத்திற்கு எத்தனை பாத்திரங்க தேவையோ அத்தனை பிழைகள் (63)ஏற்பட டன. அத்தனைகளையும் திருத்தி நாடகம் உள்ளர்த்தத்துடன் முழுமையாக்கப்பட்டது.
ராமானுஜர்
வேதாந்த சிந்தனை மரபிலே குறிப்பிட தக்க இடத்தை தனதாக்கிக் கொண்ட வைன வப் பெரியார் சுவாமி ராமானுஜருடை வாழ்க்கை வரலாற்றையும், விஷ்ணு பரத்துக நிலையையும் உட்பொருளாகக் கொண்ட இ! நாடக வடிவம் ஒரு சமூகம் சார்ந்த படைப்பு வைஷ்ணவ சமூகத்தின் அரசியல் கலாசா சமய சமூக அம்சங்களை இப்படைப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது.
ராமானுஜர் என்கின்ற மதத்தலைவரில வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கின் கலைப்படைப்பே என்று இந்நாடகத்தை மட்டுப்படுத்தி சிந்திக்கமுடியாது. ராமான ஜர் வாழ்ந்த காலத்திலே அவருடைய சமய - நடவடிக்கைகள் சமூகத்தோடுப் சமூகப் பாரம்பரியங்களோடும் வைஷ்ணவு சம்பிரதாயங்களோடும் அக்கால அரசியல் அமைப்புக்களோடும் எவ்வாறு இசைவு படுகின்றது என்பவற்றையெல்லாம் இந்நாடக வடிவம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
ராமானுஜர் அர்ச்சகராக இருந்த வைணவத் தலைமை பெற்று வைணவ சம்பிரதாயங்களில் காணப்பட்ட மூட நம்பிச் கைகளைக் களைந்து சமுதாய மாற்றங்களைக் செய்த ஒருபுரட்சிகர சிந்தனையாளர்.
- வைணவ சம்பிரதாய பேச்சுமுறைகள் அவர்களுடைய நாளாந்த செயற்பாடுகள் என்பனவற்றை வெளிப்படுத்துவதாக இ நாடகம் அமைந்திருந்தது. கி.பி. 13, 14ப் நுற்றாண்டுகளில் வாழ்ந்து வைணவ சமய மரபுகளை பூரணப்படுத்திய ஆச்சாரியராக ஸ்ர ராமானுஜர் விளங்குகின்றார்.
- வைணவ சம்பிரதாயமரபில் ராமானுஜர் பெரும்பாலான வைணவ விண்ணகரங்களில் (கோயில்களில்) ஒரு சன்னிதானம் ராமானு ஜருக்காக அமைக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு மிகவும் முக்கியமானவர் மட்டு மல்ல சங்கரரின் அத்வைதம் என்னும் தத்துவக் கோட்பாட்டுக்கு அடுத்து முக்கிய கோட்பாடாகிய விசிட்டாத்வைதம் என்ற வேதாந்தக் கோட்பாட்டை உலகிற்கு விட்டுச் சென்றவர் என்ற பெருமைக்குரியவர்.
நோக்கம்
இந்நாடகத்தின் நோக்கம் ராமனுஜர் நமக்கு சமகாலத்தவர் என்று இதைப் படிச் கின்றவர்களும், மேடையேறும்போது பார்க் கின்றவர்களும் உணரவேண்டும் என்பதுதான். ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு சிந்திச் 44

0' !!
கின்றவர்கள் அனைவரையும் அவர்களைப் பின்பற்றும் பிற்காலத்தினர் ஸ்தாபனச் சிறை யில் பூட்டிவைத்துவிடுகின்றனர். ஆகவே அக்காலத்திய புரட்சியாளராக இருந்த ராமாநுஜரை அந்த ஸ்தாபனச் சிறையினின்று மீட்டு, நாம் இப்பொழுது புரிந்துகொள்ள வேண்டும் என்பது பத்மஸ்ரீ இந்திராபார்த்த சாரதியினுடைய கருத்து. அக்கருத்து நாடக நிகழ்த்துகையின்போது வெளிவரவேண்டும் என்னும் நோக்கில் நாடகம் வடிவமைக் கப்பட்டிருந்தது.
- பொய்கை, பூதம், பேய் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள். ஒருவருக்கு படுக்க இடமிருந்தால் அதில் இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் என்ற மனிதாபிமானக் கதையை உலகிற்கு உணர்த்தியவர்கள். நான்காவதாளாக அவர்கள் அங்கு இறை வனைக் கண்டார்கள். - வைணவத்தின் தொடக்ககதை இதுதான். பன்னிரண்டு ஆழ்வார்களுக்குப் பிறகு ஆச்சாரியார்கள். அவர்களில் முதல்வர் - நாதமுனி. அவருக்குப்பிறகு உய்யக்கொண்டார். பிறகு மணக்கால் நம்பி, அவரைத் தொடர்ந்தவர் ஆளவந்தார். ஆளவந்தாருக்குப் பிறகு ராமாநு ஜர். நாடகம் ஆளவந்தாரின் அந்திம காலத்தில் இருந்து தொடங்குகிறது.
ர்.
)
5
ம்
10 --

Page 47
ராமானுஜர் வைணவமதத்தின் ஸ்தாபகர் அல்லர். ரகசியார்த்தமாயிருந்த கோட் பாடுகளை சாதாரண மக்களிடையே வழங்குவதற்காக வழிவகுத்தவர். ஜாதிவேறு பாடு வைதிக மதத்தின் சாபக்கேடு என்று ஜாதி வேறுபாடுகளை அடியோடு அகற்றியவர். இதனால் வைணவம் அனை வருக்கும் உரித்தானது. சமூகவிழிம்பில் உள்ள பஞ்சமர்களையும் வைணவர்களாக்கி அவர் களைத் திருக்குலத்தார் என்றழைத்தார்.
நூற்றியிருபது வருடங்கள் வாழ்ந்த ராமாநுஜர் ஐந்து சோழ அரசர்களின் ஆட்சியைக் கண்டிருக்கவேண்டும். வைணவ பரம்பரைக் கதைகளில் சோழமன்னனின் பலத்த கண்டனம் இருந்திருக்கிறது. சோழன் சைவ மதவெறியனாக சித் தரிக்கப்பட்டுள்ளான். இவ்வாறான கருத் துக்களை முன்வைத்து ராமானுஜரை சம காலத்துக்குரியவர் என்று வடிவமைத்து தந்த வர் இந்திரா பார்த்தசாரதி. அதை அரங்கில் உயிரூட்டியிருந்தவர் பேரா.S.ராமாநுஜர்,
இந்நாடகத்திற்கு ஒரு உள்ளார்ந்த கருத்து இருக்கின்றது. ஒரு நாடகத்தில் இருக்கின்ற காட்சிக்கும், காட்சிகள் கொண்ட அங்கத்திற் கும் நாடக முழுமைக்கும் என அர்த்தப்படுத்தல் வெவ்வேறாகக் காணப்பட்டாலும், அவ்வர்த் தப்படுத்தல் நாடக முழுமைக்குமான ஒட்டத் துடன் தொடர்புடையதாகக் காணப்படும்.
பயிற்சி
இவ்வர்த்தப்படுத்தலை சரிவரக் கண்டு பிடித்து சொற்களை வெளிவிடுகின்ற முறைமை எவ்வாறமையவேண்டும், பாத் திரம் இன்னொரு பாத்திரத்துடன் உரை யாடும்போது எதிர்பாத்திரம் கொடுக்கும் பதிற்குறி, அதனைபெற்று அதற்கான செயல்வினை என்பவற்றை எவ்வாறு வெளி யிடவேண்டும் என்பவற்றை பேராசிரியர் அவர்கள் கற்றுக்கொடுத்து நடிகர்களைத் தயார்படுத்தியிருந்தார். இந்நாடகத் திற்காக நடிகருக்கான உடல், குரல், உளப்பயிற்சிகளை தனிப்பட்டமுறையில் வழங்கியிருந்தார். ராமானுஜரின் உளவியலையும் உடல் அமைப் பையும் வெளிக் கொண்ர்ந்து அப்பாத்திரத்தை மெரு கேற்றுவதற்காக ஏனைய பாத்திரங் களின் உளவியலையும் உடல் அசைவுகளையும் செவ்வைப் படுத்தியிருந்தனர்.
கடவுள் அருள்பெற்ற மகானின் வரலாற்றை மேடையில் காட்சிப்படுத்தும் போது அது பக்திதன்மையுடையதாகக் காட்டும் முறைமையைவிட்டு, அதை சமயப்புரட்சி செய்த ஒரு புரட்சியாளனாக ராமானுஜர் வெளியில் தெரியவேண்டும், என்பதை அடிப்படைக் கருதுகோளாகக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

கொண்டு, ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ் வொரு காட்சியிலும் ராமானுஜரின் உடல், குரல் என்பனவற்றை செதுக்கியவண்ணம் நாடகம் இயக்கப்பட்டது.
சம எடுப்பு: ஆகத எடுப்பு, அநாகத எடுப்பு என்னும் முறைமை இசைப்பாடல் பாடும் போது அறியமுடியும். இந்த முறைமை நாடகத்திலும், நடனத்திலும் எவ்வாறான முறையில் அமையும், உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் போது அதன் வீச்செல்லையும், மெய் எழுத்துக்களின் வீச்செல்லையும் எவ்வாறான அர்த்தப்படுத்தலையும், புரிதலையும் கொடுக்கும் என்பதுடன் மொழியை பயன்படுத்தும் போது உடலின் செயல்முறைமை எவ்வாறான தன்மையில் செயற்படும் என்பனவற்றை கற்றுக் கொடுத் திருந்தார்.
நாடகம் நிகழ்த்துகைக்கு தயாராக ஆரம்பித்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் புதியஅனுபவங்களும் புதியமுயற்சிகளும் பேராசிரியர் கற்றுத்தந்த LIITL Iš56TITJ5 இருந்நன.
காட்சி அமைப்பு
மேடையில் முதல் ஆழ்வார்களின் வருகை அதைத் தொடர்ந்து ஆளவந் தாரின் இறுதிக்காலத்தில் சந்திக்க ராமாநு ஜர் செல்வது, ராமாநுஜர்-திருக்கச்சி நம்பி சந்திப்பு, துறவறம், யாதவப்பிகாசா சந்திப்பு, திருக்கோஜ்டியூர் நம்பி சந்திப்பு, ரகசியார்த்தத்தை அனைவருக்கும் அறிவித் தல், பெரியநம்பியின் மகள் அத்துளாய் அரங்கனை மறித்து நியாயம் கேட்டல், ராமாநுஜரை கொல்ல திட்டமிட்டசதி, உறங்காவில்லியுடன் அரங்கனை ஆராதித் தல், ராமாநுஜர்-சிஸ்யர்களுக்கு பிரம்மத்தை உணரவைத்தல், பருத்திக் கொல்லையை ஆசிவழங்கல், நாடு கடத்தப்படல், மேல்கோட்டையில் வைணவதத்தலம் நிறுவுதல், வைணவ துருக்கிய சம்பந்தம், சோழமன்னன் கூரேசருக்கு தண்டனை வழங்குதல், ராமாநுஜர்-திருவரங்கத்திற்கு திரும்புதல், என்றவாறு நாடகம் காட்சிப் படுத்தப்பட்டது.
முழவாக
வைணவனக்கு ஏது மரணம், அவனுக்கு முதலேது முடிவேது. கடவுள் அருள் இருந்தால் கண்ணுக்துத் தெரிவன யாவும் வைகுண்டம். இறைவன் சாத்தியப்பாடுகளின் எல்லைநிலம், அவ் எல்லையை நோக்கியே பயணத்தைத் தொடர்வோம். L uuLu600TLib முடிவதில்லை.
O O O
45

Page 48
lorence Farr
உடுவில் இராமநாதன் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட 1913ம் ஆண்டிலிருந்து அதன் அதிபராக சில ஆண்டுகள் கடபை யாற்றிய ஆங்கிலேய மாது பற்றி Richard Boyl எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையிலிருந்து உருவி எடுக்கப்பட்ட சில சுவையான தகவல் கள் ஞானம் வாசகர்களுக்காக இங்கே தொகுக் கப்பட்டுள்ளன.
திருமதி ஃப்லோறென்ஸ் எமெறி என யாழ் மக்களால் அறியப்பட்டவரும் செல்வி ஃப்லோறென்ஸ் பியட்றிஸ் பார் என இங்கி லாந்தில் பிரபல்யம் பெற்றிருந்தவருமான அந்த ஆங்கிலேய மாது 1912ம் ஆண்டு இலங்கை வந்தார்.
ஃப்லோறென்ஸ் 1860ம் ஆண்டு வில்லியப் பார் என்ற மருத்துவருக்கும் எலிசபெத் விட்டல் என்ற பெண்ணுக்கும் எட்டாவது பிள்ளையாக லண்டன் மாநகரின் தென்கிழக்குப் பகுதியில் பிறந்தார். அவரது தந்தை தன்னுடன் பணி புரிந்த உலகப்பிரசித்தி பெற்ற ஃப்லோறென்ஸ் நைட்டிங்கேல் என்ற மருத்துவதாதியின் ஞாட கார்த்தமாக அத்தாதியின் பெயரை மகளுக்குச் சூட்டியிருந்தார்.
இலங்கை வருவதற்கு முன்னர் அவர்நாடக நடிகையாகவும், நாடக நெறியாளராகவுப் நாவலாசிரியராகவும் விளங்கியவர். அச் காலத்தில் ஆங்கில இலக்கிய உலகில் கோலோச்சிய சில படைப்பாளிகளுடன் நெருங்கிப்பழகியவர். குறிப்பாக உலகட்
46
 
 

புகழ்
பெற்ற ஆங்கிலக் கவிஞரான
WBயேட்சுடனும் உலகப் பிரசித்தி பெற்ற
நாடக ஆசிரியர் பேர்னாட் ஷோவுடனும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்ததோடு அவர்களது நாடகங்களில் நடித்தும் சில வற்றை நெறிப்படுத்தியுமிருக்கிறார். அது மட்டுமின்றி உணர்வு ததும்ப கவிதை வாசிப் பதில் ஈடிணையற்றவராகவும் இருந்தவர் அவர் பேர்னாட்ஷோ ஃப்லோறென்ஸின் ஆளை மயக்கும் அழகு பற்றியும், உணர்வு களைத்துல்லியமாக வெளிப்படுத்தும் அவரது அகன்ற விழிகள் பற்றியும் எழுதியிருக்கிறார். யேட்ஸ் அவரது அழகைப் பாராட்டியதோடு அவரது கவிதை வாசிக்கும் திறன் ஒப்பாரும் மிக்காரும் அற்றது என மனந்திறந்து கூறி யிருக்கிறார்.
அந்தக் காலத்திலேயே பெண்ணியம் (Feminism) பற்றிய சிந்தனைகள் அவரது மனதை ஆக்கிரமித்திருந்தன. முற்போக்குச் சிந்தனைகள் கொண்டிருந்த அவரது தந்தை யாரும் அவரது முயற்சிகளுக்கு ஆதரவு நல்கினார்.
நிறுவனமயப்படுத்தப்பட்ட கல்விக்கு ஃப்லோறென்ஸ் எதிராக இருந்திருப்பினும் தனது பட்டப்படிப்பின் பின்னர் சிறிது காலம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 49
அவர் ஆசிரியப் பணி புரிந்திருக்கிறார். அவர் கல்வி கற்ற லண்டன் Queen's College உலகிலேயே பெண்களுக்கு உயர் கல்வித்தகைமையை வழங்கிய முதலாவது கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் ஆசிரியத் தொழிலில் நிலைத் திருக்காது நாடகத்துறையில் காலூன்றிய ஃப்லோறென்ஸ் நடிகையானார். அவரது தந்தையாரோ ஒரு நடிகையின் பெயர் தனது குடும்பப் பெயருடன் சம்பந்தப்படுவதை விரும்பவில்லை. இதன் காரணமாக மேரி லெஸ்டர் என்ற பெயரில் அவர் நடித்தார். தகப்பனாரின் மறைவின் பின்னர் சொந்தப் பெயரையே மேடையிலும் பயன்படுத்தினார்.
நடிப்புத்துறையில் அவருக்கு ஓரளவு வெற்றியும் கிடைத்தது. எனினும் சக நடிகரான எட்வேட் எமெநியை 1884ம் ஆண்டில் அவர் திருமணம் செய்த பின்னர் கணவர் நடிப்புத் தொழிலை அவர் கைவிட வேண்டுமென வலியுறுத்த ஆரம்பித்தார். பெண்ணிய சிந்தனைகளில் ஊறிப்போயிருந்த ஃப்லோறென்ஸினால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. 1888ஆம் ஆண்டு கணவரைப் பிரிந்த அவர்1895ல்விவாகரத்தும்
பெற்றுக்கொண்டார்.
பேர்னார்ட் ஷோவும் ஃப்லோறென்சும் 1891ம் ஆண்டு காதல் வயப்பட்டிருந்தனர். Widower's House என்ற ஷோவின் முத லாவது நாடகத்தில் ஃப்லோறென்ஸ் நடித்தார். தான் கனவு கண்ட புதுமைப் பெண்ணாக ஷோ அவரை மாற்ற முயன்றார். இன்னொரு நாடகாசிரியரின் நாடகத்திலும் அடிமைத்தளை அறுத்த புதுமைப் பெண் ணான றிபெக்கா பெஸ்ட் என்ற பாத்திரத்தில் நடிக்க ஷோ அவருக்குப் பயிற்சி அளித்தார்.
ஆயினும் அவரது நடிப்பு சோபிக்காமை காரணமாக ஷோ தனது மிகச் சிறந்த நாடகங்களுள் ஒன்றான Arms and the man என்ற நாடகத்தில்கதாநாயகி அந்தஸ்திலிருந்து அவரை இறக்கி துணை நடிகையாக்கினார். அந்த நாடகம் இரசிகர்களிடையேயும், விமர் சகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
நாடகத் துறையில் தனது முன்னேற்றம் குன்றி வருவதை நன்குணர்ந்திருந்த ஃப்லோறென்ஸ் காலப்போக்கில் கீழைத் தேயச்சிந்தனைகளில் நாட்டம் கொண்டார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

- குமாரி ஜயவர்த்தன அவரைப் பற்றி எழுதிய ஒரு நூலில் ஃப்லோறென்ஸ் தனது நண்பர்கள், காதலர்கள் குறித்து நம்பிக்கையிழந்திருந்ததாகக் கூறுகிறார். அரைவேக்காடு அறிஞர்களான யேட்சும் பேர்னாட் ஷோவும் தன்மீது அளவற்ற செல்வாக்குச் செலுத்தியதாகவும் ஆயினும் அவர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் பூரணத்துவமற்ற அரைவேக்காடுத் தன்மை கொண்டவை எனவும் அவர் கருதினார். முழுமையான ஞானம் கீழைத்தேய நாடு களிலேயே கிடைக்கும் என்றுணர்ந்த அவர் இந்திய இலங்கையரது உறவைத் தேடினார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேர் பொன் இராமநாதன் உட்படப் பல ஆசிய சிந்தனையாளர்கள் லண்டனில் காணப் பட்டனர். 1902ம் ஆண்டில் கிழக்கத்திய தத்தவம் பற்றி சேர் பொன் இராமநாதன் நிகழ்த்திய உரை அவரை மிகவும் கவர்ந்தது. அதன் பயனாக யேசுபிரான் மீண்டெழுந்து இராமநாதனூடாக இயங்குவதாக அவர் உறுதிபட நம்பினார். ஃப்லோறென்ஸ் தியானத்தில் ஈடுபட்டதோடு இராமநாதன் வெளியிட்ட பிரசுரங்களையும் வாசித்தார். -- இருவருக்குமிடையே ஏற்பட்ட தொடர்பு காரணமாக சேர் பொன் இராம நாதன் யாழ்ப்பாணம் வருமாறு விடுத்த அழைப்பினை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டார். கொழும்பில் இராமநாதனின் இல்லத்தில் தங்கியிருந்து தமிழ் கற்றதுடன் கல்வியியலாளர்களுடனும் தொடர்பினை ஏற்படுத்தி ஒருசிறந்த பாடசாலை நிர்வாகியாக வருவதற்கான முன் முயற்சிகளிலும் அவர் இறங்கினார்.
- குமாரி ஜயவர்த்தனவின் கருத்துப்படி இந்துப் பெண்ணை இல்லத்தரசியாக, தாயாக, மனைவியாக மட்டுமே நோக்கிய இராமநாதனின் குறுகிய பார்வை காரண மாக - ஒரு புதுமைப்பெண்ணாகவும், பெண்களின் வாக்குரிமைக்காக உழைத்த சமூகவியலாளராகவும், நடிகையாகவும், படைப்பாளியாகவும்
ஃப்லோறென்ஸ் இங்கிலாந்தில் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு இராமநாதனின் இருட்டடிப்புக்குள்ளானது. இலங்கையில் ஒரு கௌரவமான கல்லூரி நிர்வாகியாக மட்டுமே அவர் தன்னைக் காட்டிக்கொண்டார். அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து அறிந்திருந்தாலும் கூட
"கியிருந் ல் இரா. ஏற்றுக்
47

Page 50
யாழ்ப்பாணத்து மக்கள் இந்து மகளிர் கல்வியில் அக்கறை செலுத்திய ஆங்கி லேயப் பெண்ணை மனதாரப் போற்றிட் புகழ்ந்திருப்பர் என்பதில் ஐயமில்லை.
யாழ் மண்ணின் பாரம்பரியங்களை மதித்த ஃப்லோறென்ஸ் ஆங்கிலேய நண்பர்களது தொடர்பை முற்றாக அறுத்துவிடவில்லை தமிழ்க் கவிதைகளில் ஆங்கில மொழி பெயர்ப்புகளையும் அவர் அவ்வப்போது யேட்சுக்கு அனுப்பியுள்ளார்.
இராமநாதன் மட்டுமன்றி அவருடன் பழகிய குறிப்பிடத்தகுந்த ஆங்கிலேயர் சிலரும் பெண்ணியம் தொடர்பான அவரது செயற்பாடுகளை அலட்சியம் செய்திருந்தனர் அவரின் யாழ் வருகை குறித்தெழுதிய கவிஞர் யேட்ஸ் அவர் தனது அழகு குன்றி வருவதை உணர்ந்து கறுப்பர் மத்தியில் வாழ விரும்பியதாகக் குறிப்பிடுகிறார்.
Who finding the first wrinkles on a face Admired and beautiful, And by the foreknowledge of the future vexed: Diminished beauty, multiplied commonplace; Preferred to teach a School Away dark skins, permit foul years to wear Hidden from eyesight to the unnoticed end.
எனினும் இன்னொரு பிரபல கவிஞரான EZra Pound அவரது யாழ் வருகைக்கான உண்மையான நோக்கங்குறித்து இவ்வாறு கூறுகிறார்.
She went to Jaffna And they wanted more from their women, Wanted em jacked up a little And sent over for teachers (Ceylon) So loka (Louka) went out and died there After her time in the post-Ibsen movement.
மூன்று வருடங்களிலேயே உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் பொறுப்பிலிருந்து வில கிய ஃப்லோறென்ஸ் யாழ் மண்ணை விட்டு நீங்க விரும்பாது அதே கல்லூரியிலேயே நிதிப்பொறுப்பாளர் பதவியை வகித்தார்.
ஃப்லோறென்ஸ் உடல் நலங்குன்றி மருத்துவ சிகிச்சைக்கென நாடகத் துறைக்குப் பெரும்பங்களிப்புச் செய்த மருத்துவரான லூசியன் டீ சில்வாவைக் கொழும்பில் சந்தித்த போதுதான் அவர் யாரென்ற உண்மை வெளியே தெரிய வந்தது. லூசியன் டீ சில்வா அவரைப் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.
வைத்திய பரிசோதனையின்போது ஃப்லோறென்ஸ் மார்பகப் புற்று நோய்க்கு 48

ஆளாகியிருப்பது தெரிய வந்தது. அறுவைச் சிகிச்சை நிபுணரான சாமுவேல் செல்லையா போல் அவரது இடது மார்பகத்தை அகற்றினார். அது குறித்து யேட்சுக்கு எழுதிய gyaljit Last December I became Amazon a TGOT வேடிக்கையாக எழுதியது அவரது மன உறுதிப்பாட்டைப் புலப்படுத்துகிறது. தென் அமெரிக்காவைச் சேர்ந்த அமேசன் என அறியப்பட்ட பெண் போர் வீராங்கனைகள் அம்பு செலுத்துவதற்கு இடையூறாக இருந்த தமதுவலதுமார்பகங்களை அறுத்தெறிந்ததாக ஒரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. கடிதத்தை வாசித்த யேட்ஸ் விம்மி விம்மி அழுதாராம்.
புற்று நோய் வெகுவாகப் பரவிவிட்டி ருந்தமையால் பிரசித்தி பெற்ற மருத்துவர் போலினால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாது போனது. 1917ம் ஆண்டு ஏப்ரல் 29ந் திகதி ஃப்லோறென்ஸ் உயிர் நீத்தார். அவரது இறுதிக்காலத்தில் அவரோடிருந்த அவரது ஆன்மீகத் தோழரான சேர் பொன் இராமநாதன் இறுதிக்கிரியைகளின் பின்னர் அவரது அஸ்தியை களனி கங்கையில் கரைத்தார்.
ஃப்லோறென்ஸ் மறைந்து முப்பது ஆண்டு களின் பின்னர் இலங்கைப் பத்திரிகையொன்றில் காணப்பட்ட அவரது வாழ்க்கை வரலாற்றை வாசித்த பேர்னாட்ஷோ தானும் யேட்சும் அவரைப் பற்றி நன்கு அறிந்திருந்ததாகவே தான் எண்ணியிருந்ததாகவும் எனினும் அவர் பற்றித் தாம் எதையுமே தெரிந்திருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொண்டார். பன்னம்பலம்சி இராமநாதன் அவரது மனதைத் திறந்து அவருள் மறைந்திருந்த உண்மையான பெண் மையை வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்பது ஷோவின் அபிப்பிராயமாக இருந்தது. ஃப்லோ றென்ஸின் ஆன்மீகப் போக்கினால் மனக் கசப்படைந்திருந்த ஷோவின் இந்த மனமாற்றம் அதிசயிக்கத்தக்கது.
1933ம் ஆண்டு பேர்னாட் ஷோ எழுதிய பதினெட்டாவதும் இறுதியானதுமானOn the Rocks என்ற இன்பியல் நாடகத்தில் வரும் Sir Jaffna Pandaranath என்ற பாத்திரம் ஒரளவு சேர் பொன் இராமநாதனைப் பிரதிபலிக்கிறது.
O O. O. சீபன்னம்பலம் என்றே ஷோ குறிப்பிட் டிருந்தார்.
குறிப்பு - குறித்த ஆங்கிலக் கட்டுரை 2010-2013 The Sunday Times Luigisfacuuheis வெளியாகியிருந்தது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 51
களிமண்ணில்கலைவண்ணம் கண்டபெண்ணுக் குக் கிடைத்த தேசிய விருது
ஒரு இசைக்கருவி அகில இந்திய ரீதியில் அதுவும் இந்திய (மத்திய) அரசின் சங்கீத நாடக அகடமியின் தேசிய விருதுக்கு பரிந் துரைக்கப்பட்டுத் தெரிவாகியிருக்கிற தென்றால் அந்த இசைக்கருவியைப் பயன் படுத்தியவர் கெளரவிக்கப்படுகின்றார் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். ஆனால் இச்செய்தி அப்படியல்ல. அந்த விருது பெறுபவர் இசைக்கருவியும் இல்லை, வாசித்தவரும் இல்லை. இசைக்கருவியைத் தயாரித்தவர் - ஒரு பெண் தேசிய விருது பெறு கிறார். அந்த இசைக்கருவி கடம் ஆகும்.
விரும்பும் ஒலி கிடைப்பதாக இசைக்கலைஞர்கள் GLOGOLD!.
தமிழ் நாட்டில் மண்பாண்டப் பொருள் கள் தயாரிப்புக்குப் பெயர் பெற்ற இடம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானா மதுரையாகும். இப்பகுதியில் பரந்து கிடக்கும் களிமண்ணுக்கு, அதன் உறுதித் தன்மைக்கு அப்படி ஒரு பெருமை. இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இந்த மண் எழுப்பும் இசை ஒலிக்கு தனி மதிப்பு உண்டு.
கடம் வாசிக்கும் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் மானா மதுரையில்தான் தங்களது கடத்தை வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கு இந்த இசைக்கலைஞர்கள் கூறும் காரணம் “மானா மதுரை மண்ணிலிருந்து தயாரிக்கப்படும் கடத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு தயாராகும் கடத்தில் மட்டுமே, கர்நாடக இசைக்கலைஞர்கள் விரும்பும் ஒலி கிடைக்கிறது” என்பதாகும்.
கடத்திற்குஅதுவும்கடம்தயாரித்தவருக்கு தேசிய விருது கிடைக்கப்பெற்றதை அறிந்து மானா மதுரைக்கு புறப்பட்ட செய்தி யாளர்கள்; இப்பகுதியில் இத்தொழில் மறைந்து போய்க் கொண்டிருக்கும் நிலையில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)
 

கடம் தயாரிப்பில் ஒரு குடும்பம் மட்டுமே பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது என்று அறிந்து, மானா மதுரை குவாலர் தெருவில் வசிக்கும் கேசவன் மனைவி மீனாட்சியை 60வயது) சந்தித்தனர். இவருக்குத்தான் மத்திய அரசின், சங்கீத நாடக அக்கடமி தேசிய விருது கிடைத்திருக்கிறது.
நல்லியில் நடக்கும் விழா: ஒரு லட்சம் ரூபாவும் ճՓgյն1
"பரம்பரைத் தொழிலாக நீடித்த கடம் தயாரிப்பு வேலையை எனது கணவர் தொடர்ந்தபோது அவருக்கு உதவியாக இருந் தேன். அவர்காலமான பின்னர் நானும் மகன் ரமேஷம் கடம் தயாரித்து வருகிறோம். கடம் தயாரிப்புக்கு தேசிய விருது கிடைப்பதை கனவிலும் எண்ணிப்பார்த்திருக்கமாட்டோம். டில்லியில் இம்மாதம் 11ஆம் திகதி நடை பெறும் விருது வழங்கும் விழாவுக்குச் செல்ல விருக்கிறேன்." என்று மீனாட்சி தெரி வித்தார். டில்லி விழாவில் இவருக்கு ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பணமும் விருதும் வழங்கப்படவிருக்கிறது.
கல்லிலே கலைவண்ணம் கண்டான் தமிழன். கடம் தயாரிப்பு மூலமாக கழி மண்ணிலே இசைக்கலை வண்ணம் கண்ட நற்கு ஒரு தமிழ்ப் பெண் மீனாட்சிக்கு இந்திய அரசின் தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமை அளிக்கிறது.
ாரதியார் தலைமறைவாக வாழ்ந்த இடத்தில்
பிறந்த நாள் விழா.
மகாகவி பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாள் விழா தமிழ் நாட்டின் பல பாகங்களில் கடந்த மாதம் பதினோராம் திகதி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாக் களில் பாரதியார்பற்றிய பல நூல்கள் வெளியிடப்பட்டும் மாணவர் மாணவிகளின் வித்தியாசமானநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பாரதிபிறந்த எட்டயபுரத்தில், "புதிய
49

Page 52
பார்வை' ஆசிரியர் ம. நடராசன் தலைடை யில் எழுத்தாளர்கள், பொது மக்கள் மாணவ மாணவிகள் பல வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, பாரதியார் மண மண்டப விழாவில் ராம. குருநாதன், எழுதிய 'ஒப்பியல் நோக்கில் பாரதி' என்னும் நூல் வெளியிடப்பட்டு; ராம். குருநாதன், இதய வாணன், பழனி ஆகியோருக்கு 'பாரத் இலக்கியச் செல்வர்' விருதைப் பேராசிரிய இரா.மோகனும், 23பேருக்கு 'பாரத் பணிச் செல்வர்' விருதுகளை பேராசிரியை நிர்மலா மோகனும் வழங்கினார்கள் பாரதியாரின் பிறந்த நாளைக்குறிக்குப் முகமாக 132 மாணவர் மாணவிகள் பாரதி வேடமணிந்து அணிவகுத்துச் சென்றனர் பல மாவட்டங்களிலும் பரவலாக பாரதி யார் பிறந்த நாள் விழா நடைபெற்ற நிலையில்; 1918 ஆம் ஆண்டில் மன்னார்குடி
அருகேயுள்ள மேல நாகை என்னும் சிற்றூரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி, இங்குள் வாசுதேவ சுவாமிகள் மடத்தில் தங்கியிருந்து "பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதி நாடு” என்னும் பாடலை எழுதிய மடத்தில் மேலநாகை கிராமமக்கள் அதிசிறப்பாக பாதியார் பிறந்த நாள் விழாவைக் கொண் டாடியது குறிப்பிடத்தக்கது. இந்த மடப் பலர் கண்ணில் தினம்பட்டாலும், பர
மரிப்பு இல்லாமல் பரிதாபமாகக் காட்சி கொடுக்கிறது.
மாணவிகள் பல ஊர்களிலும் நடத்திய பிறந்த நாள் நிகழ்ச்சிகளில், கும்பகோணம் கோவிந்த புரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான மாணவிகள் அங்குள்ள பஜனை மடத்தில் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 2' படிக்கட்டுகளில் அமர்ந்து பாரதியாருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். பாரதியாரின் நாட்டுப்பாடல்கள், இறை வணக்கப் பாடல் கள், சுதந்திரப்பாடல்களை இத்தனை மாணவிகளும் கோரஸ்ஸாகப் பாடியது உணர்ச்சியூற்றுச் சித்திரமாக கண்ணில் பட்டது; காதிலும் தேனூற்றியது. ) அண்ணா நூலகத்தை அதிரவைத்த பாரதி நூலகம்.
பாரதியார்பற்றி எழுதும்போது சட்டென திருச்சி “பாரதி' நூலகம் நினைவுக்கு வருகிறது. திருச்சியிலிருந்து சுமார் பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டூரில் இருக்கிறது இந்த நூலகம். இதன் சொந்தக்காரர் சீனிவாசன் ஆவார். இவரது இல்லத்தில் 50

மாடிப்பகுதியில் அமைந்திருக்கிறது முப்பதி னாயிரம் நூல்களைக்கொண்ட 'பாரதி நூலகம்'. இதில் சிறப்பு என்ன வென்றால், அரசு நூலகங்களிலோ பல கல்லூரிகள் நூலகங்களிலோ இல்லாத, கிடைக்காத பல அரிய விலையுயர்ந்த நூல்கள் சீனிவாசனின் பாரதி நூலகத்தில் கண்சிமிட்டுகிறது. இதன் காரணமாக ஆராய்ச்சியில் ஈடுபட் டிருக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாண வர்கள் இங்கு வந்து தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த வகையில் ஐம்பதுக்கும் அதிகமான 'எம்.பில்' ஆராய்ச் சிக் கட்டுரையாளர்களுக்கும் பத்து மாணவர் கள் பி. எச்டி முடிக்கவும் இந்த நூலகம் பய னுள்ளதாக இருந்திருக்கிறது.
துறை வாரியாக தனித்தனியாக அலுமாரி களில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பல அரிய நூல்களில், நூற்றுக்கும் அதிகமான வெளியீட்டாளர்களின் திருக்குறள் உரைகள், சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட பழங்கால ஒலைச்சுவடிகள், நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குமுன்னர் வெளிவந்த பலமொழி அகராதிகள் கண்திறந்து காணப்படுகின்றன.
தி. மு. க. அரசு காலத்தில் கட்டி எழுப்பப் பட்ட 'அண்ணா நூலகத்துக்கு அரிய நூல்கள் தேவைப்பட்டபோது திருச்சி சீனிவாசனின் பாரதி நூலகம் பொக்கிஷத்தைப்பற்றிக் கேள் விப்பட்டு, சீனிவாசனை அந்த நூலக உயர் அதிகாரி ஒருவர் தேடிவந்தார். நூலகத்தைப் பார்த்து அதிர்ச்சியும் பெருமையும் அடைந்த அவர், "இந்த நூலகத்தை - அப்படியே அரசுக்குக் கொடுத்துவிடுங்கள். அதற்குரிய விலையைக் கொடுத்து விடுகின்றோம்” என்று கேட்க, “இந்த நூலகம் எனது பிள்ளைகள் போன்றது. என் பிள்ளைகளையே விலை பேசுகின்றீர்களே....” என்று சீனிவாசன் பதிலளிக்க, அந்த அதிகாரி அதிர்ந்து போனா
ராம்.
தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்பத்துறையில் வேலைபார்த்து ஓய்வு பெற்ற 64 வயதுள்ள சீனிவாசன் கடந்த35 ஆண்டுகளாக நூல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நாணயம் சேகரிப்பு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறார்; வாசிப்பை சுவா விக்கும் இந்த சீனிவாசன்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 53
எழுதத் து)
ண்ெணா
மானுடம் பெற்ற மகாபுருஷன்.
உலகிலேயே மிகச் சிறந்தது மானுட வாழ்க்கை. அதை மதித்து நடப்பவர்களும் உண்டு. மதித்து நடப்பவர்கள் மக்கள் மனங்களில் நிரந்தரமாகக் குடிகொள்வர். மிதித்து நடப்பவர்கள் மனித மனங்களால் வெறுக்கப்படுவர். மானுட தர்மத்தை மதித்து மக்களால் நேசிக்கப்படும் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர், நெல்சன் மண்டேலா. நிறவெறிக்கு எதிராகப் போராடி, நிற வெறியர்களையே தலை குனிய வைத்தவர், அவர். இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் கழித்து, விடுதலைபெற்று வெளிவந்து, தமது போராட்டத்தில் வெற்றி பெற்று, தென்னாபிரிக்க ஜனாதிபதியாக பதவி யேற்ற போதிலும் தம்மைத் தண்டித்த நிறவெறியர்கள் மீது பழிவாங்காமல் மானுட தர்மத்தை நிலை நிறுத்தியவர், மண்டேலா. மகாத்மா காந்திக்குப் பின், மார்ட்டின் லூதர்கிங்குப்பின்னர் உலகமக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் அவர்..
நெல்சன் மண்டேலாவுக்கான அஞ்சலி
"ன்னாபிதாட்டத்து மறு .
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 204 (164)

தூண்டும்
ல்கள்
பேராசிரியர் துரை மனோகரன்
நிகழ்வின்போது, அவருக்கு அருகில் நிற்கக்கூட அருகதையில்லாத உலகத் தலைவர்கள் சிலர் கலந்து கொண்டமை வியப்பை அளிக்கிறது. தத்தமது நாடுகளில் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளைப் பயன்படுத்தும் - ஆட்சித்தலைவர்கள்கூட நெல்சன் மண்டேலாவுக்கு மரியாதை செலுத் தினார்கள்! அந்த நேரத்திலாவது தமது கொடுஞ் செயல்கள் குறித்து, அவர்களது மனச்சாட்சி உறுத்தியிருக்குமா என்பது தெரியவில்லை. மனிதத் தன்மையுள்ள ஆட் சித் தலைவர்களுக்குத்தான் மனச்சாட்சி உறுத்தும். மனச் சாட்சியே இல்லாத மனிதர் களுக்கு மன உறுத்தலுக்கு இடமில்லை. நிச்சயமாக இவர்களைப் பார்க்கும்போது நெல்சன் மண்டேலாவின் ஆத்மா ஒரு முறை புன்னகைத்திருக்கும். - மனிதாபிமானத்தை நேசிக்கும் அனை வருக்கும் மண்டேலா ஓர் ஆதர்ச புருசராக எப்போதும் விளங்குவார். மானுடம் தான் பெற்ற புருஷனையிட்டு நிச்சயம் பெருமை கொள்ளும்.
பேராதனையின் இரு பெரும் நிகழ்ச்சிகள்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அண் மையில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன. ஒன்று பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் கருத்தரங்கு. இன்னொன்று பேரா தனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் கலைவிழா. இரண்டுமே சிறப்பாக இடம் பெற்றன. -
தமிழ்த்துறையின் கருத்தரங்கு 'தமிழியல் ஆய்வுப்போக்குகள் - அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் இடம்பெற்றது. வரவேற் புரையைத் திருமதி சோதிமலர் ரவீந்திரன் திகழ்த்தினார். தலைமையுரையைப் பேராசிரி பர் வ. மகேஸ்வரனும் சிறப்பு அதிதிகள் உரைகளைப் பேராசிரியர் ஏ. எம். நவரத்ன பண்டாரவும், சாந்த ஹேனநாயக்கவும் நிகழ்த்
51

Page 54
தினர். பிரதம அதிதி உரையைப் பேராசிரி அத்துல சேனாரட்ன நிகழ்த்தினார். ஆத சுருதியுரையைப் பேராசிரியர் எஸ். தில்ை நாதன் வழங்கினார். நன்றியுரை திருமதி ஆ யாழினி சதீஸ்வரனால் நிகழ்த்தப்பட்டது.
காலையில் இடம்பெற்ற முதலாவ அரங்கின் கருப்பொருளாகத் தமிழ்மொழிய இலக்கியமும் - பன்முகப் பாடுகளை நோக் என்னும் விடயம் அமைந்தது. பேராசிரி எஸ். சிவலிங்கராஜா அரங்குக்குத் தலைை வகித்தார். தமிழில் மொழியியல் கல் - நிகழ்காலமும் எதிர்காலமும் என்னு தலைப்பில் பேராசிரியர் எம். ஏ. நுஃமானு 'சங்க இலக்கியப் பயில்வின் மடைமாற்றம் இலங்கைத் தமிழறிஞர் பெருமுயற்சிகள்' என் தலைப்பில் பேராசிரியர் கி. விசாகரூபனு தமிழ் வாழும் மொழி என்ற வகையி அதற்கான புதிய இலக்கண முறைக நோக்கிய முன் மொழிவு' என்னும் தலைப்பி க. இரகுபரனும் ஆய்வுரைகளை நிகழ்த்தின மதிப்பீட்டுரையை பேராசிரியை அம்மன்கி முருகதாஸ் வழங்கினார்.
மாலையில் இரு அரங்குகள் இட பெற்றன. இலங்கைப்பல்கலைக் கழகங்களு ஆய்வு முயற்சிகளும் என்ற கருப்பொருளி முதல் அரங்கு அமைந்தது. பேராசிரிய சி. தில்லைநாதன் அரங்குக்குத் தலைை வகித்தார். பேராசிரியர் துரை மனோகர இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றை கட்டமைப்பதில் இலங்கைப் பல்கலை கழகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பிலும் பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் இலங்கை தமிழ் கல்வெட்டியல் ஆய்வில் இலங்கை பல்கலைக் கழகங்களின் பங்களிப்பு’ என் தலைப்பிலும், எஸ். வை. பூரீதர் இலங்கை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆளுமைகள் என்னும் தலைப்பிலும், ஆர்.மகேஸ்வ இலங்கைப் பல்கலைக்கழக நூலகங்களு தமிழ்நூல் ஆவணமாக்கலும் என்ற தலை பிலும் பேராசிரியர்சி. மெளனகுரு இலங்கை பல்கலைக்கழகங்களும் கூத்து ஆய்வுகளும் என்னும் தலைப்பிலும் ஆய்வுரைகை வழங்கினர்.
மாலையின் இரண்டாவது அமர்வு இலங்கைத் தமிழர் பண்பாடு - மாற்றமுறு களங்கள்'- என்னும் கருப்பொருளில் அமை தது. பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தலைை வகித்தார். இஸ்லாமியப் பண்பாட்டி 52

அரபு இசை பற்றிப் பேராசிரியர் எம். எஸ். எம். அனலம் மாற்றமுறும் மலையகச் சமூகமும் இசைவாக்கம்பெறும் நாட்டாரியல் களங்களும் பற்றி வ. செல்வராஜாவும், கிழக்கிலங்கைப் பிராந்திய நாட்டாரியல் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கமும் நாட்டாரியலின் சிதைவு நோக்கிய பயணமும்’ பற்றிக் கலாநிதி ரமீஸ் அப்துல்லாவும், யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதிமுறைமையும் சமூகப்பண்பாட்டு மாற்றங்களும் பற்றி க. சண்முகலிங்கமும் ஆய்வுரைகள் நிகழ்த்தினர். பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு மதிப்பீட்டுரையை வழங்கினார். அஸ்கா நன்றியுரையை நிகழ்த்தினார்.
ஒரு நாள் முழுக்கருத்தரங்கிலும் பல பயனுள்ள கருத்துகள் பரிமாறப்பட்டன. ஆய்வாளர்கள் அனைவரும் தத்தம்பாணியில் சிறப்பாகச் செயற்பட்டனர். பல்கலைக்கழகக் கருத்தரங்கு என்ற முறையில் அதன் தரம் பேணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் நடைபெறும் பேராத னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் கலைவிழாவும் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் வ. மகேஸ்வர னின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழா வில் கெளரவ விருந்தினராகப் பேராசிரியர்
சாந்த ஹேனநாயக்கவும், கே. என். சண்முகதாசனும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேராசிரியர்கள் துரை மனோகரன், எம். எல். ஏ. காதர், வை. நந்த குமார் என். பி. எம். சைபுதீன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
பேராசிரியர் துரை மனோகரன் பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவராக விளங்கிய காலகட்டத்தில் ஆண்டுதோறும் தமிழ்ச்சங்கத்தின் கலை விழாவில் ஈழத்துத் தமிழ் இலக்கியவாதி களைக் கெளரவிக்கும் முயற்சியைத் தொடங்கிவைத்தார். அதனைத் தற் போதைய பெருந்தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரனும் தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் 2013இல் பிரபல எழுத்தாளர் திக்வல்லை கமாலும், சாரல்நாடனும் கெளர விக்கப்பட்டனர். சாரல் நாடன் விழாவுக்குச் சமுகமளித்திருக்கவில்லை.
இவ்விழாவில் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு மலரான இளங்கதிர் வெளியீடும் இடம்பெற்றது. விமர்சன உரையைப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 55
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பெ. சரவணகுமார் சிறப்பாக நிகழ்த்தினார். இவ்விழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், நாடகம், குறுந்திரைப்படம், என்பன சபையோரைக் கவர்ந்தன. குறுந்திரைப் படத்தின் ஒலியமைப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.
மொத்தத்தில் பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்ச்சங்கக் கலைவிழா கண்களுக்கும் செவிகளுக்கும் இனிய விருந்தாக அமைந்தது.
'
இரு வேறு ஆளுமைகள்
அண்மையில் வெளிவந்த இரு கவிதைத் தொகுதிகள் என் கவனத்தை ஈர்த்தன. இவற்றுள் ஒன்று பொத்துவில் அஸ்மினின் பாம்புகள் குளிக்கும் நதி. மற்றது, சமரபாகு சீனா உதயகுமாரின் என்பேனாவின் நிதர்சனம். இரண்டும் இரு வேறு ஆளுமைகளை இனங் காட்டுகின்றன.
பொத்துவில் அஸ்மினின் பாம்புகள் குளிக்கும் நதி வெளியீட்டு விழாவில் விமர்சன உரை நிகழ்த்துவதற்காக நான் கொழும்பு வந்திருந்தேன். ஆனால்விழாஏற்பாட்டாளரின் தவறினால் நான் அந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று.
பொத்துவில் அஸ்மினை நான் முதன் முதலாக 2011 ஆம் ஆண்டில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சந்தித்தேன். அந்த மாநாட்டில் இடம்பெற்ற கவியரங்கில் 'பொறுமை' என்ற தலைப்பில் கவிதை படித்தார். அந்தக்கவிதையும் அவர் கவிதை சொன்ன முறையும் என்னைக் கவர்ந்தன. இலங்கையின் சிறந்த கவிஞர்களில் ஒருவராகப் பொத்துவில் அஸ்மின் திகழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு அன்றே ஏற்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் பாம்புகள் குளிக்கும் நதி என்ற அவரது கவிதைத்தொகுதி என்கரங்களில் கிட்டியது.
வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர் என்ற பதவி நிலைகளோடு கவிஞர், திரைப்படப் பாட லாசிரியர் என்ற பக்கங்களும் அஸ்மினுக்கு உண்டு. ஏற்கனவே விடைதேடும் வினாக் கள் (2002), விடியலின் ராகங்கள் (2003). ஆகிய அவரது கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன. மரபும் நவீனமும் சங்கமிக்கும் ஓர் வானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

அற்புதக் களஞ்சியமாகக் கவிஞர் திகழ்கிறார். பாரதி வழிவந்த நவீன கவிதையும் பிச்ச மூர்த்தி வழிவந்த புதுக்கவிதையும் கவிஞருக்கு கைவந்தவை. ஆயினும் இயல்பாகவே கவிஞர் மரபிலே மிகுந்த நாட்டம் கொண்டவர்.
பொத்துவில் அஸ்மினின் கவிதைகள், தமிழ்ப்பற்று, நாடு, காதல், அறிவுரை, சமுதாய விமர்சனம், தன்னுணர்ச்சி எனப் பல திறத்தவை. அவரது கவிதைகளில் வார்த்தைகள் அவர் நினைத்த மாதிரியே வந்து வழுக்கி விழுகின்றன. தண்ணீரை வாசிப்போம், ஒன்று + ஒன்று = ஒன்று, எலி பொரிக்கும் கூட்டுத்தாபனத்தின் செய்திகள், உம்மா நான் சவூதிக்குப் போறேன், பொறுமை, முக நூல் முனகல்கள், என்பன இந்தக் கவிதைத் தொகுதிக்குக் கனதி சேர்க்கும் கவிதைகள். 'எலி பொரிக்கும் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்' என்ற கவிதை கிண்டலுக்குச் சிறந்த உதாரண மாக விளங்குகிறது. - 'உம்மா நான் சவூதிக்குப் போறேன்' என்ற கவிதை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 'அம்மா நான் விளையாடப் போறேன்'- கையில் அன்புடன் பட்சணம் தந்தனுப் பென்னை - சும்மா நான் உட்கார மாட்டேன்” என்ற பாடலை நினைவூட்டுகிறது. இக்கவிதையில் கவிஞர் பேச்சு வழக்கினூ பாக சமுதாய விமர்சனம் செய்கிறார். போலி அரசியல்வாதிகளின் முகத்திரையையும் தாசூக்காக இக்கவிதை மூலம் கிழித்து
விடுகிறார். 'முகநூல் முனகல்கள்' என்ற கவிதையில் இடம்பெற்றுள்ள தாலாட்டுப் பகுதி, கிண்டல்கலந்த சமுதாய விமர்சனமாக
அமைந்துள்ளது. - பொத்துவில் அஸ்மினின் கவிதைகளில் அவரது தனித்துவம் புலப்படுகிறது. எதையும் துணிச்சலோடும் கலைத்துவத் தோடும் சொல்லும் திறமை அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. மக்களின் உண்மையான பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் அல்லர், கலை இலக்கிய வாதிகளே என்பதைப் பொத்தவில்
அஸ்மின் கவிதைகள் உணர்த்துகின்றன.
இலங்கையில் எழுத்துத் துறையில் அதிக ஈடுபாட்டுடன் உழைத்து வருபவர்களில் ஒருவர் சமரபாகு சீனா உதயகுமார். கவிதை, சிறுகதை, குறுநாவல், விமர்சனம், கட்டுரை எனப் பலதுறை ஈடுபாடு கொண்டவர், அவர். இயல்பான மனிதாபிமானமும் சலிக்காத எழுத்து உழைப்பும், இலக்கிய உழைப்பாளர்
53
-தி) "ல் நல்

Page 56
மீதான நேசிப்பும் கணிப் புக்குரிய ஒருவராக அவரை ஆக்கி வைத்துள்ளன. அதிகமாக ஞானத்தில் அவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அவரது முகம் தெரியாது ஆனால் தொலைபேசியில் அவ்வப்போது அவரது குரலைக் கேட்டிருக்கிறேன்.
- உதயகுமாரின் என்பேனாவின் நிதர்சனம் என்ற கவிதைத் தொகுதியில் உண்மை யில் அவரது ஒளிப்பு மறைப்பில்லாத உள்ளத்தின் வெளிப்பாட்டைக் காண முடிகிறது. ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி. ஞானசேகரன் இக்கவிதைத் தொகுதிக்கான முன்னுரையை வழங்கியிருக்கிறார், எதையும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும், தார் மீகக் கோபத்துடனும் ஆழ்ந்த துயரத்துட னும், மிகுந்த நம்பிக்கையுணர்வுடனும் சொல்லும் திறன் உதயகுமாருக்கு வாய்த் திருக்கிறது.
இத்தொகுதியில் என்னைக் கவர்ந்த கவிதைகளாக எங்களால் மட்டுமே முடிகிறது, என்பேனாவின் நிதர்சனம், ஓர் இராணுவச் சிப்பாயின் ஏக்கம், என் பிஞ்சுப் பிரபஞ்சத் தம்பியும் நானும், ஒரு விதவைப் போராளி யின் ஏக்கம்!, என் கிராமத்தின் பச்சை அடையாளங்கள், குந்தியிருக்க ஒரு குடில் நிலம், நரபலி நாயகன், முதலியவை விளங்கு கின்றன. அவரின் பல கவிதைகளில் கவித்துவ
வீச்சைக் காணமுடிகிறது.
வளர்ந்துவரும் கவிஞரான உதயகுமார் தமது கவிதை வெளிப்பாட்டில் மேலும் கவனஞ் செலுத்துவது அவரது கவித்துவ வளர்சிக்கு உதவுவதாக அமையும். ஈழத்துக் கவிஞர் சிலரிடம் காணப்படுகின்ற படா டோபச் சொல்லடக்குகளை இவரின் கவிதைகளில் காண்பதற்கில்லை. எதையும் எளிமையாகவும் நேரடியாகவும் சொல்லி விடுகிற இயல்பு இவரிடம் காணப்படுகிறது. ஆயினும் சொற்செட்டும் கவிதைக்கு அழகை வழங்கும். உதயகுமார் எதிர்காலத்தில் இந்த அம்சத்தையும் கவனத்தில் கொள்வது நன்று. வளர்ந்து பேரெடுக்கப்போகும் ஓர் ஈழத்துக் கவிஞனின் எழுச்சிக்கான முன் அறிவித்தலை உணர்த்தும் ஒரு மணியோசையாக சமரபாகு சீனா உதயகுமாரின் 'என்பேனாவின் நிதர் சனம்' கவிதைத் தொகுதி விளங்குகிறது.
- 0 0 0
54

இந்த யுகத்தின் இளையோர் சீதனம் இலத்திரனியல் சாதனம்!
இதயம் கோலாகலம் கொண்டாடும்
இரத்த பாசத்தின் பிரமுகராய் தோன்றும்...
எதிர்காலம் அமர்த்தல் செய்யும் இரகசியக் கயவன் என்பது இளையோருக்கும் தெரியாது!
வளர்ந்தோருக்கும் புரியாது!!
மிகிந்தலை A.vாஸ்
பொழுது போக்கும் புதின சாதனம்தான் காலம் கொத்தித்தின்னும்
கழுகு என்பதை கண்டுகொள்வதில்லை எவரும்... தெர்)
தின்னும் போதுதான் வேதனை புரியும்!
லை
0 ஐனணி
சிறுசுகள்
கல்வித்தளிர் மேல் - களைகள் வளர்க்கிறார்கள்... விளையும் காலத்தில்தான்
விபரீதம் தெரியும்.
மனையாள் கடமை துறந்து மடமை யாகிறாள் பாலகர்களுக்கும் பருக்கி விடுகிறாள்!
முர்
எதிர் காலத்தில்
நம்மோர்விதி எதில் ஏறிக்கொள்ளப் போகிறது ? கண்ணீர் கதைஅல்லவா...?
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 57
என்று தனியும் இந்த "சி-த -மொழி உரிமை மாநாடுதமிழ்மொழி அமுலாக்கலை அர்த்த முள்ளதாக்குவோம்! என்ற சங்கநாதமுடன் மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம் மொழியுரிமை மாநாடொன்றினை 30.11. 2013 அன்று நடாத்தியது. மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமய சமூக நிலை யத்தில் இடம்பெற்ற மாநாட்டில் மக்கள் விஞ்ஞாபனம் ஒன்று வெளியிடப்பட்டது. தமிழர் ,இஸ்லாமியர், சிங்களவர் என மூவின மக்களும் கலந்து கொண்டதுடன் உரைகளும் ஆற்றினர்.
கல்வித்துறையில் தமிழ்மொழி அமுலாக்கம், பொது நிருவாகத் துறையில் தமிழ்மொழி அமுலாக்கம், நீதித்துறையில் தமிழ்மொழி அமுலாக்கம்.
ஆகிய தலைப்புகளில் விஞ்ஞாபனங்கள் சமர்ப்பிக்கப் பட்டன. முறையே ஒய்வு பெற்ற பாடசாலை அதிபரும், தொழிற் சங்கவாதியுமான எஸ். சரவணபவானந்தன், ஆர். நெல்சன் மோகன்ராஜ், சட்டத்தரணி ஈதம்பையா ஆகியோர் விஞ்ஞாபனங்களை சமர்ப்பித்ததுடன் விளக்கமும் அளித்தனர்.
தமிழர்களுக்கு இந்த நாட்டில் என்னப்பா பிரச்சனை? அய்யோ அம்மா என்று அலட்டிக் கொள்ளும் அளவிற்கு அப்படி ஒன்றும் பெருசாக இல்லையே!
என்று கிண்டலடிக்கும் தேசப்பற்று மிக்க சிங்களக் கனவான்கள் ஏராளமாக இருக் கிறார்கள். அவர்களுடன் அப்படிபோடு என்று முத்திரை குத்தும் தமிழ், இஸ்லாமிய வால்பிடி பிரமுகர்களும் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள்.
இந்தப் பெருமக்கள் எல்லாம் தலையில் கைவைத்துக் கொள்ளும் அளவிற்கு சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பதை விஞ்ஞாபனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன என்பதுடன் உரைஞர்களும் எடுத்துக்கூறினர். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)
 

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவரின் துணிகரமான உரைகள் இக்குறை பாடுகள் எத்தகைய பாரதூரமான விளைவு களுக்கு தமிழ் மக்களை இழுத்துச் சென்றன, செல்கின்றன என அவர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குவனவாக அமைந்தன.
அரசகரும மொழி என்ற வகையில் சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளுக்கு அரச நிருவாகச் செயற்பாடுகளில் சமவுரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்த அதிபர் எஸ். சரவணபவானந்தனின் நிலைமை அடப் பாவமே!’ என்று தலையை பிய்த்துக் கொள்ள வைக்கிறது.
1970ஆம் ஆண்டில் இவர் பாடசாலை அதிபரானார். நியமனக் கடிதத்தை சிங்கள மொழியில் பெற்றார். கடிதத்தில் என்ன கன்றாவி அச்சடிக்கப்பட்டிருந்தது என்பது அவருக்குத் தெரியாது. சிங்களம் தெரிந்தவர்களைத் தேடி ஒடித்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட நாலு தசாப்த காலம் சேவையாற்றி இப் பொழுது ஒய்வு பெற்றுவிட்டார். தமிழ் நியமனக் கடிதம் இன்னும் அவரை வந் தடையவில்லை. அதுவும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ!
ஆட்சிமொழிகளுக்கான தனியான அமைச்சும், கல்விசார் நிறுவனங்களும் இருக்கின்றபோதும் பாடசாலை அதிபருக் கான நியமனக் கடிதம் அனுப்புவதில் கூட இப்படி ஒர் அவலநிலை.
அமைச்சிற்கு எவ்வளவோ தலைபோகிற வேலை அப்படியிருக்க இந்தமாதிரி சுண் டைக்கா சமாச்சாரங்களை கவனிக்கவா முடியும்.
அமைச்சு 2012ஆம் ஆண்டு வெளியிட் 55

Page 58
டுள்ள அறிக்கையில் அரச பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விபர களை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அதிப
களின் மாகாணரீதியான, இனரீதியான விபரங்கள் அம்போவென கைவிடப்பட டிருக்கின்றன.
தொடர்பாடல், சுற்றறிக்கைகள், முதல் நியமனக் கடிதம் தயாரித்தல், சுயவிபர கோவை, படிவங்கள் பேணல், கருத்தரங்குகள் சந்திப்புகள், மேற்பார்வை, வழிகாட்டல் ஏனைய ஏற்பாடுகள், பரீட்சை வினாத்தாள்கள் தயாரித்தல் என சகல அம்சங்களிலும் தமிழ்மொழி அதற்குரிய இடத்தினை பெறுவதாக இல்லை. இவை குறித் சட்டங்கள் அரசியல் அமைப்பில் உள்ளன எனினும் நடைமுறையில் அனைத்து தமிழாவது கிமுழாவது அடப்போடா என் அலட்சிய மனோபாவமும் புறக்கணிப்புபே மெகா சீரியலாக தொடர்கிறது.
இலங்கை அரசியல் அமைப்பு அத்திய யம்-4 பிரிவு-32ற்கு அமைவாக கல்வி அமைச்சும், அத்துடன் தொடர்புடைய நிறு வனங்களும், அறிக்கைகள், ஆவணங்கள் கோவைகள் என்பனவற்றை இரு மொழி களிளும் வெளியிடுதல் வேண்டும். ஆனால் அவ்வாறு வெளிடப்படுவதில்லை. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் எங்கும் எதிலும் அடப்போடா அடாவடித்தனம்தான் அ சோச்சுகிறது. இதனால் தமிழ்மொழி ஆசிரி யர்கள், அலுவலர்கள் சுற்றறிக்கைள், ஆ6 ணங்கள், கோவைகள் என்பனவற்றை புரிந்து கொள்வதற்கு மொழி தெரிந்தவர்களிடம் சென்று 'சாமியே! சரணம் ஐய்யப்பா' என்று தோப்புக்கரணம் போடவேண்டியுள்ளது அங்கும் எடுபடாத பட்சத்தில் மொழ பெயர்ப்பாளர்களை நாடவேண்டியுள்ளது அங்கு மட்டும் என்ன வாழ்கிறது கோவிந்த தான். அரைகுறை மொழிப் புலடை கொண்டோரால் மொழிபெயர்ப்புகள் மே கொள்ளப்படுவதால் அப்பாடா என்று சந்தோஷமுடன் முடிவுபெறவேண்டிய சாத ரண விவகாரங்களும் ஐயோ அம்மா என்று சர்ப்பத்தை மிதித்தவர்களைப் போன்று தலையில் கைவைத்து அலறச் செய்துவிடும்
அனர்த்தங்களை ஏற்படுத்துவனவா அமைந்து விடுகின்றன.
என்ன காரணம்.? பொருத்தமற்ற
ஆளணி சேர்ப்பு முறைதான் அடிப்படை
56

T,
T3ਘT
கல்வித்துறையில்தான் இத்தகைய உட ரட்ட நெட்டும் என்றால் நீதி பரிபாலனத் துறையில் அதற்கும் மேலே "வெல்லம் வெலபெரஹராதான்."
அரசியல் அமைப்பின் 25-ஆவது உறுப்புரை பிரகாரம் மொழி உரிமைமையை உறுதி செய்வதற்கு போதிய வசதிகளை அரசு செய்து கொடுக்கவேண்டிய கடப்பாடு கொண்டது என்ற போதும் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல அரசியல் அமைப்பு மொழிவிதிகளுக்கு ஏற்ப ஆளணி சேர்ப்பிலும் கதை கந்தலாக இருப்பதுதான்.
நாட்டின் நீதிபரிபாலனத்துறையில் நிலவுகின்ற இத்தகைய துரதிஷ்டகரமான நிலையை பல உதாரணங்களுடன் சட்டத் தரணி தம்பையா எடுத்துக்காட்டினார். ஒருவரின பதிவு தொடர்பானதொரு வழக்கில் நீதிபதிக்கு தமிழ் தெரியாத காரணத்தினால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட விபரங்களை மொழிபெயர்புக்காக பக்கத்திற்கு ரூ.500 விகிதம் செலவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அந்த சாதாரண தமிழ்மகன் தள்ளப் LI LITÜ.
இவ்வளவிற்கும் வடகிழக்கில் நீதிமன்ற மொழிதமிழாகவே இருக்கிறது. என்றபோதும் அப்பிரதேசங்களில் எல்லாநீதிமன்றங்களிலும் பொலிசார்பதிவுசெய்யும்வழக்குஅறிக்கைகள் தமிழ்மொழியில் இருப்பதில்லை.
நாடெங்கிலுமுள்ள நீதிமன்றங்கள் அனைத்திலும் நீதிமன்ற முதலியாராகக் கடமை யாற்றுவதற்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர்களுக்கே நியமனம் வழங்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அப்படி இருந்ததாம். சுதந்திர காலத்தில் நிலைமை தலை கீழ்,
ஈஸ்வரா! எங்கே போய் முட்டிக்கிறது. நீதித்துறையில்பலமாற்றங்களைச்செய்யா விட்டால் இன்னும் பல தசாப்தங்களுக்கு டேய்! நீ சினாவா? இல்லை 'தனாவா? என்று கேட்டு கேட்டு ஆளை ஆள் போட்டு தள்ளிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
சட்டங்கள் இருக்கின்றன; ஆனால் சரியாக அமுல்படுத்த முடியவில்லை. என்ன காரணம் என்று பார்த்தால் அரச உத்தியோகத்தவர்களின் மனத்தடையே பெரிதும் காரணமாக இருப்பதாக, பொது நிரு வாகத்துறையில் தமிழ்மொழி அமுலாக்கம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 59
தொடர்பான விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்தியபோது ஆர் நெல்சன் மோகன்ராஜ் என்பவர் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு யாப்பில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகியன தேசிய மொழி களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் அடிப் படையில் தமிழும் அரசகரும மொழியாக அங்கீகாரம் பெற்றுக் கொண்டது. 16ஆவது திருத்தத்தினூடாக இலங்கை முழுவதற்குமான நிருவாக மொழிகளாக சிங்களமும், தமிழும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் அரசகரும மொழிகள் என்ற வகையில் அரச பணிகள் அனைத்தும் இருமொழிகளிலும் செயற்படுத்தப்படல் வேண்டும் என்பது அரசியல் அமைப்பின் ஏற்பாடு. ஆனால் இதனை செம்மையாக செயல்படுத்தக் கூடியவிதமாக அரச பணியாளர்கள் தேர்ந் தெடுக்கப்படுவதில்லை.
2002ஆம் ஆண்டு அரச அறிக்கையின்படி அரசசேவையிலுள்ள பணியாளர்களின் தொகை 8.40 விகிதமாகும். மாகாணரீதியாக 2006ஆம் ஆண்டு செய்யப்ப்பட்ட அறிக் கையின்படி கொழும்பு மாநகரசபையில் மொத்தப் பணியாளர்கள் 12000 என்ற போதும் தமிழ்மொழி பணியாளர்கள் வெறும் 100 பேர் மட்டுமே. பதுளை நகரசபையில் மொத்தப் பதவிகள் 450, ஒருவர் மட்டுமே தமிழர். கண்டி பதிவாளர் காரியாலயத்தில் மொத்தம் 80 அதில் ஆசைக்கு ஒரு தமிழர்கூட இல்லை.
2012ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்கள அறிக்கையின்படி 81735 பொலிஸ் உத்தி யோகத்தர்கள் இருக்கிறார்கள். மாவட்ட ரீதியாக பிரித்துப் பார்த்தால் கொழும்பில் 4721 பேர். அவர்களில் தமிழர்கள் 29பேர் மட்டுமே. காலியில் மொத்தம் 1202 பேரில் தமிழர் 2பேர் மட்டுமே, கண்டி 2622 பேரில் தமிழர் 12பேர். பல இடங்களில் ஒருவர்கூட இல்லை. சில இடங்களில் பாவம் இருக்கட்டும் என்று ஒரு தமிழ்பொலிஸ்காரரை விட்டு வைத்திருப்பார்கள். தப்பித்தவறி ஆகா ஒரு தமிழர் இருக்கிறாரே என்று ஆனந்தப் பூரிப்படன் சிங்களம் தெரியாத தமிழர் ஒருவர் தனது குறைபாடுகளை முறையிடுவதற்காக அவரிடம் சென்றால் மனுஷன் தொலைந் தான். அந்த அளவிற்கு பின்னி எடுத்துவிடு வார் அந்த தனிக்காட்டுராஜா.- அதன்
அானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

பிறகு முறையீடு இடச்சென்றவர் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டார். அந்த திசைக்கே கும்பிடுதான். இப்படி எங்கும் எதிலும் பிச்சல் பிடுங்கல்களே சர்வவியாபகமாகியுள்ளன என்பதை மூன்று விஞ்ஞாபனங்களும் தொகுத்து வழங்கின. -- என் பக்கத்து ஆசனத்தில் மிகவும் உற்சாக மான ஒருவர் இருந்தார். அளவு கடந்த ஒரு மொழிப்பற்றாளராக இருக்கக்கூடும். உரைஞர்கள் தமது உரையின்போது சிம்ம கர்ஜ்ஜனைகள் நிகழ்த்திய வேளைகளில் என் பக்கமாகத் திரும்பி நான்கு விரல்களை உட்பக்கமாக மடித்து கட்டை விரலை நீட்டி ஆட்டிக் காட்டுவார். அப்பொழுது அவர் முகத்தில் அசாதாரணமான கம்பீரமும் உதடுகளில் இறுக்கமும் புன்னகையும் காணப்பட்டது.
- கிறிஸ்தவ அடிகளார் ஒருவர் உரை நிகழ்த்த ஆரம்பித்தபோது அந்த உற்சாகமான தமிழர் திரும்பவும் என்னைப் பார்த்து அதே விதமாகத் தலையாட்டினார். - 'இன்று - அனைத்துமே அரசியலாகி விட்டது. மொழியுரிமை, மனிதவுரிமை, அரசியலமைப்பில் இருக்கிறது ஆனால் நடைமுறையில் இல்லை போன்ற எடுத்துக் காட்டல்களை தமிழர்களாகிய நாம் சுட்டிக் காண்பிக்கின்ற போது பயங்கரவாதிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டு கைது செய்யப் படலாம், இல்லை போட்டுத்தள்ளப்படலாம்,
இங்கே எத்தனை பேர் அதற்குத் தயார்...!” - இந்தக் கட்டத்தில் பக்கத்து ஆசனத்தி லிருந்த உற்சாகமான நபரின் கட்டைவிரல் என்னை நோக்கி நீண்டு தலையாடி
முகம் கம்பீரமாக புன்னகைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திரும்பினேன்.
- ஆசனம் காலியாக இருந்தது. எழுந்து எனக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். முகம் பேயறைந்தது போலிருந்தது. சட்டென தனிந்த அவர் என் காதில் 'தண்ணி குடித்து வருகிறேன்' என்று குசுகுசுத்துவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார். பாவம் கடுமையான தண்ணித் தாகமாக்கும் என்று நினைத்தேன். ஆனால் போனவர் போனவர் தான் சபைக்குத் திரும்பவே இல்லை.
0 0 0
57

Page 60
கலை |
நிக
வித்துவ சிரோமணி சி. கணேசையர் 55
புன்னாலைக்கட்டுவன் வித்துவ சிரோம அவர்களது 55ஆவது அமரத்துவ விழா ( மாலை புன்னாலைக்கட்டவன் கணேச முன்! கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் இட வழிபாட்டினைத் தொடர்ந்து கணேசையரில் விருந்தினர் மாலை அணிவித்து மரியாதை ( மண்டபத்தில் இறை வணக்கத்தை அடுத்து வைத்திய கலாநிதி ஆ. திருநாவுக்கரசு நிகழ்; யுரை, சிவஸ்ரீ தியாக கெங்காதரக்குரு. ஆசியுரையை என்பன தொடர்ந்து இடம் விருந்தினர்களான ஸ்ரீபிரசாந்தன், பேராசிரி ராஜா, கலாபூஷணம் வைத்திய கலாநிதி தி. ஆகியோர் வித்துவசிரோமணி கணேசை சிறப்புரைகள் ஆற்றினர். நன்றியுரையை திரு வழங்கினார். வரவேற்று நடனம், மாணவர் சானந்தன் ஆசிரியர் உரை என்பனவும் இடம்
- R விருது வழங்கும் விழாவும், 'தாயக ஒலி' 6
'இணுவில்ஒலி' சஞ்சிகை நடத்திய மா பரிசளிப்பும், விருது வழங்கும் விழாவும், 'தா. இலக்கிய நிறுவனத்தின் அனுசரணையுடன் கலாபூஷணம், சைவப்புலவர் சு. செல்லத் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (30.11.201. இலண்டன் வவுனியூர் இரா. உதயணன் கல் ஓய்வுநிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சக்க குழு உறுப்பினர் உடுவை எஸ். தில்லை ந இராசரத்தினம், கொழும்பு சைவ மகளிர் வைத்தியகலாநிதி தாஸிம் அகமது ஆகியோ பேராசிரியர் டாக்டர் சேர் என். விவேகானந்த ஆலோசகர் கா. வைத்தீஸ்வரன் நிகழ்த்த, வ நா. கருணை ஆனந்தன், அண்ணா தொழிலக "தாயக ஒலி” சஞ்சிகையின் ஆய்வுரையை திரு சஞ்சிகையின் வெளியீடும், மாணவர்களுக்குச் சான்றோர்களுக்கான விருது வழங்கலும், அது நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன.
Q? மலையகக் காந்தி அமரர் கே. இராஜலிங்
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமும் அப் நடத்திய மலையகக் காந்தி அமரர் கே. இரா
58

- கே. பொன்னுத்துரை
ா
இலக்கிய
கழ்வுகள்
ஆவது அமரத்துவ விழா
ணி சி. கணேசையர் * 29-11-2013 அன்று நம் பள்ளியில் திரு. செ. டம்பெற்றது. ஆலய : ன் உருவச் சிலைக்கு" செலுத்தினர். விழா | வரவேற்புரையை த்தினார். தலைமை க்கள் அவர்களின் பெற்றன. சிறப்பு யர் எஸ். சிவலிங்க - ஞானசேகர ஐயர் யர் தொடர்பான 5. ந. ஜெயகுமாரன் உரை, திரு. கணே ம்பெற்றன.
9 $ல வெளியீட்டு விழாவும்
னவர்களுக்குகான கட்டுரைப்போட்டி-2013க்கான (யக ஒலி' வெளியீட்டு விழாவும், இலங்கைத் தமிழ் ர் இணுவில் திருவூர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் துரை தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க 3)இல் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக பந்து சிறப்புச் செய்தார். சிறப்பு விருந்தினர்களாக ர் கே. அரசரத்தினம், பொதுச்சேவைகள் ஆணைக் டராஜா, கொழும்பு இந்துக் கல்லூரி அதிபர் ஐ. கல்லூரி அதிபர் திருமதி சசிதேவி சிவனேசன், ர் கலந்துகொள்ள கெளரவ அதிதியாக இலண்டன் தா கலந்துக் கொண்டார். வரவேற்புரையை உளவள் Tழ்த்துரைகளை நாவலர் நற்பணி மன்றத் தலைவர் 5 அதிபர் எஸ். பி. நடராசா ஆகியோர் வழங்கினர். நமதி பவானி முகுந்தன் நிகழ்த்தினார். "தாயக ஒலி” கான கட்டுரைப்போட்டி -2013க்கான பரிசளிப்பும், திபர்களுக்கான கௌரவமும், மாணவர்களின் கலை
| 0 0 கம் நினைவுப் பேருரை மரர்கே. இராஜலிங்கம் குடும்பத்தினரும் இணைந்து 'ஜலிங்கம் நினைவுப் பேருரை நிகழ்வு கண்டி சமூக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 61
அபிவிருத்தி நிறுவக இயக்குனர் பெ. முத்துலிங் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (03.12.2013) நை இராஜலிங்கத்தின் அறிமுகத்தை முன்னாள் இராஜ "சமத்துவ அபிவிருத்தியை நோக்கி மலையக மக்க வாகச் செயலாளர் எம். வாமதேவன் பேருரை நிகழ்
CR புரவலர் புத்தகப் பூங்காவின் 34ஆவது வெளியீ புரவலர் புத்தகப் பூங்காவின் 34ஆவது" வெளியீடாக வெளிவந்த திருமதி அனுராதா, பாக்கியராஜாவின் அனுராதா சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா வும், மூத்த தமிழ் ஊடகவிலாளர் திரும அன்னலெட்சுமி இராஜதுரை அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் கடந்த டிசம்பர் 15ஆந் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு இலக் கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் ஞானம் இணை ஆசிரியர் திருமதி ஞானம் ஞானசேகரன் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்த்தினார். தலைவரின் தலைமையுரையைத் ே தொகுதியை பிரபல தொழிலதிபர் திரு. திருமதி ே செய்தார்கள். சிறப்புப் பிரதிகளை "கார்த்திக் பவுன் திருமதி பிரியா கார்த்திக் உட்படப் பலர் பெற்று திருமதி அன்னலெட்சுமி இராஜதுரை அவர்களை
வழங்கினார்கள். நிகழ்வினை சமூகஜோதி எம் ஏ. ர
GOR முப்பெரும் விழா
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் மற்றும் முப்பெரும் விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத்தி சந்திரசேகரம் தலைமையில் நடந்தேறியது. இந்நி "தமிழ் நாடக அரங்கு” என்ற நூலின் அறிமுகழு இடம் பெற்றன. அத்துடன் அண்மையில் பேராசி அவர்களுக்குப் பராட்டும் மிகச் சிறப்பாக நடை நூல் அறிமுகத்தை வீரகேசரி வார வெளியீடுகளின் நிகழ்த்தினர். கொழுந்து சஞ்சிகை நடத்திய சிறுகை பரிசளிப்பும் நடைபெற்றது. வாழ்நாள் சாதன பூமி" கலையகத்தின் இயக்குனர் அநுர தஹநா இவ்வாண்டின் சிறந்த சினிமா நடிகைக்கான பரிசு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)
 

கம் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க டபெற்றது. மலையகக் காந்தி அமரர் கே. ாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் வழங்கினார், ள்” என்ற தலைப்பில் முன்னைநாள் அரச நிர் 2த்தினார்.
இந்நிகழ்வில் வரவேற்புரையை அந்தனிஜீவா தொடர்ந்து அனுராதா கதைகள் சிறுகதைத் வலணை வீரசிங்கம் தம்பதி பெற்றுச் சிறப்புச் டேஸன் இயக்குனரும் தொழிலதிபருமான ச் சிறப்பித்தனர்.மூத்த தமிழ் ஊடகவிலாளர் ாப் பற்றிய மிகச் சிறப்பானதொரு பாராட்டு ரயை திருமதி வசந்தி தயாபரன் வழங்கினார். மதி ஹாசிம் உமர், திருமதி அன்னலெட்சுமி 1ஜதுரைக்கு பொன்னாடை போர்த்தி ாரவம் செய்தார். நிகழ்விற்கு தலைமை த்த திருமதி ஞானம் ஞானசேகரன் அன்ன ட்சுமிக்குப் பூமாலை சூட இலக்கிய பலர் ஹாசிம் உமர் விருதினை வழங்கினார். றியுரையை மெளலவி முபாறக் ஏ. மஜீட் pத்த, ஏற்புரையை நூலாசிரியர் திருமதி வராதா பாக்கியராஜா, கெளரவம் பெற்ற மதி அன்னலெட்சுமி இராஜதுரை ஆகியோர் பீக் தொகுத்து வழங்கினார்.
தி)
கொழுந்து சஞ்சிகையும் இணைந்து நடத்திய ல் கடந்த (10.11.2013) பேராசிரியர் சோ. கழ்வில் அந்தனிஜிவா எழுதிய தலைநகரில் மம், "கொழுந்து சஞ்சிகையின் அறிமுகமும் ரியராகப் பதவி உயர்வுப் பெற்ற தை. தனராஜ் பெற்றது. தொடக்கவுரையை தம்புசிவாவும் பிரதம ஆசிரியர் ஆர். பிரபாஹன் அவர்களும் தைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கான னையாளர் கலைச்செல்வனுக்கு “சாஸ்திரா பக்க விருது வழங்கி கெளரவம் செய்தார்.
பெற்ற என்.எஸ்.நிரஞ்சனி, அரச குறுநாடக
59

Page 62
விழாவில் சிறந்த நடிகர் விருது பெற்ற எள கெளரவிக்கப்பட்டனர்.
GDR கிளிநொச்சித் தமிழ்ச்சங்கம் நடத்திய
கிளிநொச்சித் தமிழ்ச் சங்கத்தின் வருட
வழங்கப்பட்டது. கல்வித்துறைக்கான விருதி தமிழ் மொழியில் குறள்வழி தமது திருமண ஜெகதீஸ்வரன் புஸ்பவதி தம்பதியினரும், ச செல்வராஜா, சோதிநாதன், கனக மகேந் கொண்டனர். இவர்களுக்கான விருதினையு திரு. குருகுலராஜா வழங்கினார். படத்தில் விருது பெறுவதைக்காணலாம்.
GDR அமரர் தமிழவேள் இ.க. கந்தசுவாமி அவ கொழும்புத்தமிழ்ச்சங்கமுன்னாள் பொது அவர்களின்நினைவுப் பேருரைசங்கரப்பிள்ை தலைமையில் 13.11.2013 அன்று மாலை அமரரின் திருவுருவப் படத்திற்கு மலர்ம தொடர்ந்து நல்லூர் இராஜதானியும், யா தலைப்பில் நினைவுப் பேருரையை யாழ்ப்பா பேராசிரியர் ப. புஸ்பரத்தினம் நிகழ்த்தினார். செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நவின
தாயகம் தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளின் 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் நிகழவிருக்கிறது. அரசு அல்லது அரசியல் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆ வேண்டுமானாலும் இந்த நிகழ்வில் பேராவி பதிவுசெய்து கொள்ளக்கட்டணம் ஏதுமில்: பதிவு செய்துகொள்ள விரும்புவோர் தொட கிருஷ்ணமூர்த்தி, தமிழ்த்துறைத் தலைவர், ! புத்தூர் 641048. (அலைபேசி:9199769455 தகவல் - திரு. மாலன்
60
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ். மோகன்ராஜ் ஆகியோரும் விருதுகள் வழங்கிக்
Ge) so
திருவள்ளுவர் மாநாடு -ாந்தத் தமிழ்மாநாடு கிளிநொச்சி மாநகரில் திரு. றபிள்ளை தலைமையில் இடம்பெற்றது. காலை bவாகத் திருக்குறள் கருத்தரங்கும், மாலை நிகழ்வாக வள்ளுவர் விழாவும் இடம்பெற்றன. பிரமுகர்களான ரிமேகலை, பத்மநாதன், ரமேஸ், குகதரன் ஆகியோர் $துரைகள் வழங்கினர். திருமதி மதுரநாயகம் புரை ஆற்றினார். மாலைநிகழ்வில் விருது வழங்கல், "ட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசில்கள் ங்கல், கலை நிகழ்ச்சிகள், சிறப்புச் சொற்பொழிவுகள் பன இடம்பெற்றன. இலக்கியத் துறைக்கான விருது மருத்துவரும் த்தாளருமான சமுருகானந்தன் அவர்களுக்கு ர் சிறுகதைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக னை பளை வித்தியாலய அதிபர் பாலகிருஸ்ணனும், னத்தை நிகழ்த்திய தம்பதியினருக்கான விருதினை ங்கச் சான்றோர் விருதினை திருவாளர்கள் கருணா திரா ஆகிய மூத்த உறுப்பினர்களும் பெற்றுக் ம் நன்மதிப்பையும் வடமாகாண கல்வி அமைச்சர் மருத்துவரும் எழுத்தாளருமான ச. முருகானந்தன்
Dریچو (e)
ர்களின் நினைவுப் பேருரை. துச்செயலாளர் அமரர்தமிழவேள் இ. கு. கந்தசுவாமி ளமண்டபத்தில் சங்கத்தலைவர் மு.கதிர்காமநாதன் நடைபெற்றது. தமிழ்வாழ்த்தினைத் தொடர்ந்து ாலை அணிவிக்கப்பட்டது. தலைமையுரையைத் ாழ்ப்பாணக் கோட்டையும்- மீள்வாசிப்பு’ என்ற ாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச் ன்றார்.
கடந்த தமிழ் ல், ஒர் அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைப்புக்களைச் சாராத எழுத்தாளர்களால் இந்த
ர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் எவர் ார்களாகக் கலந்து கொள்ளலாம். பேராளர்களாகப் லை. ஆனால் முன்பதிவு அவசியம் பேராளர்களாகப் டர்புகொள்ளவேண்டிய முகவரி: திரு.மணிகண்டன் டாக்டர் எண்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம் 55 LÉlgörgoTG53-Gi) : krishnamni1982Ggmail.com)
ர் (தலைவர் - அமைப்புக்குழு)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

Page 63
கடுவும் , நிலம்
மலையாம் குறியில் வழியும் அருவி...விந்து!
காற்றின் கரங்கள்
உசுப்பி உணர்ச்சியேற்ற மலையெனும் குறீயில் வழியும் அருவி.. விந்து!
பாயுமிவ் விந்தருவி பயணிக்கும் இடமெல்லாம்
யோனிகளா? ஆங்கெல்லாம் உயிர்கள் ஜனிக்கிறது.
கருக்கட்டல் தானே கனவு.
ஒவ்வோர் விந்தணுக்கும்? பெருகி நகர்கின்ற பிரதேசம் எல்லாம் வயதுவேறு பாடுடைய மழலைகள்
கூடிநின்று உயிர்தந்த நன்றியை உரைக்க
ஆவலுடன் இன்னுமின்னும் “விந்துதானம்' ஏற்கத்
தயாரென்று காய்ந்து தரிசான யோனிநிலம் காத்திருக்க கடைசியிலே கடலெனும் மாபெரிய
கருப்பைக்குள் கலந்து எதுவாயோ மாறவுள்ள
விந்தணுக்கள் நகரக்... கரைகளிலே
தெறித்ததும் சிந்தியதுங் கூட.உயிர்ததும்பும் குழந்தைகளைப்
பெற்றெடுக்கும் விந்தைதனைக் கண்டேன்!
அருவி விந்தின் தனி வாசம் காற்றில் கமழ..நானும் கவிதையொன்றைக்
கருவுற்றேன்! நேற்றந்த அருவியோரம் நானுமொரு பெண்ணானேன்!
34.
த.ஜெயசி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

உய12
ப
உயர்வு கருந்தொன்றின் பார்வை பரவி எண் திசைகளையும் ஒருகுடைக்கீழ் கொண்டுவரும்.! ஒருவட்டம் அடித்துவந்தால் கீழே இருக்கும் அனைத்தும் தெரிந்துவிடும். ஆம்...உயரே உயரே அதுபறந்து மேலெழும்ப காணும் பரப்பின் கனம்அதிக மாகிவிடும். காமுயர உயர கம்பார்வைப் பரப்பதுவும் கூடிவிட வேண்டும்: கம்உயரம் என்பது உடளைவால் அல்ல...உளஅளவால் கூடவேண்டும்.
சடமாய்க் கிடந்து... ஓரறிவு ஈரறிவு ஐந்தாறு அறிவுபெற்று...அதைத்தாண்டி உள்ளத்தால் உயர உயர அறிவு ஞானமாய் விரிய ஒற்றைப் பரிமாணம் உடைந்து இரண்டு மூன்றாகி முற்றாய் ஒருஉயர வியாபகம் விண் அளவாகும். கல்பரிமாண நோக்கும் உலகம் முழவதுமே எல்லைகள் அற்ற ஒன்றென்ற சிந்தனையும் கூடிவரும் அப்போது! தந்தி நிலத்திற்தான் ேேய இருந்தாலும்...நின் உயரம் பூமியெனும் பந்தைவிட்டு வெகுதொலைவில் இருக்கும் விண்மீனாகும்! அந்த உயர்வில்... உலகும் இந்த மானுடமும் ஒன்று என்னும் படி..உலகப் பொதுமறையாய் யுேரைக்கும் உன்வார்த்தை ஒவ்வொன்றும் உச்சரிக்கப் பட்டுவிடம்!

Page 64
வாசகர்
நடந்து முடிந்த பொதுநலவாய மாநா ஒரு திருவிழா' பேராசிரியர் துரை மனோ தமிழ் உணர்வாளர்கள் நன்கு விளங்கிக் கெ
மேலும்கண்டிதமிழ்ச்சங்கத்தில் நடத்த இருந்தும் நான் தவிர்க்க முடியாத காரன அது சிறப்பாக நடந்தேறியது என்பதை ே மகிழ்ச்சியைத் தந்தது. தனிப்பட்டவர்களி சங்கக் கோட்பாடுகளுக்கு அமைவாக ச சங்கத்தின் எதிர்காலம் வளர்ச்சியடைய வே
திரு. ஞானசேகரனின் 'இலண்டன் பய இப்படி என்றால், தொடர்ந்து பகிரப்போகு முடிகிறது. பிரிட்டிஷ் மகாராணியுடனும், எடுத்த படங்கள் தொழிநுட்பத்தின் வெளி
வி. ஜீவகுமாரனின் 'இடைவெளி' மற்று அருமையான சிறுகதைகள்; ஞானம் சஞ்சி6
0 0 ஞானம் 163 இதழ் சிந்திக்கக் கூடிய கனமான கட்டுரைகளும் , தரமான பத்தி பக்கம் மும்முனைக்காய்நகர்த்தலை நன்ற துரை மனோகரனின் உருவகக் கதையின் உ சுற்றுவட்ட காட்டில் உள்ள சிங்கங்கள் சிங்கங்கள் வாலைச் சுருட்டுமா இல்லையே வெகுதூரத்தில் இல்லை; உருவகம் நன்று...
மானா மக்கீன் ஒரு பல்கலைக்கழக வாசி தனது பாணியில் உள்ளதை இரசிக்கக் க தமிழ் சினிமாவையும் பாடல்களையும், எப்படியிருக்கும்! அவர்பாணியில் அவரே (
கலாபூஷணம் டொக்டர் தாஸிம் அக ஹாஜி அவர்களை முச்சந்தி என கௌரவ. ஆழத்தைவிடவும் அறிவாழம் கொண்ட வாழ்த்துக்கூறி விழாவெடுத்த வைத்திய கல 'மோனத்திருக்குதடீ” சை. பீர் முகம்மது
கலாபூஷணம் டொக்டர் தி.ஞானசேக சிறப்பாக இருந்தது. தொடர்ந்து பார்ப்ே மாணவப்பருவ நினைவு, அதாவது மகா பள்ளிப்பருவமென்று கூறுகின்றார். அந்நாள் 86 வயது நிரம்பிய மகாராணியாருடன் கா வாழ்நாள் சாதனையாளர். வாழும்போதே எ
0 0 163ஆவது ஞானம் இதழில் கலாபூ இலங்கையின் முதுபெரும் கல்விமானாகிய அவர்களைப்பற்றிய முக்கிய தகவல்களைத் பட்டமேற்புப் படத்தை முன் அட்டையில் நன்றிகள். - ஞானம் ஆசிரியர் டாக்டர் திரு. தி ஞா கட்டுரை வாசகர்களை ஆரம்பத்திலேயே வா பயணமாகவில்லை. எங்களையும் அவருடன்
62

பேசுகிறார்
டு பற்றி ஆசிரியர் தலையங்கத்திற்கேற்ப, 'காட்டில் கரனின் அருமையான உருவகக் கதையை வாசித்த Tள்வார்கள். ப்பட்டதமிழ் விழாவில் நிர்வாக சபை உறுப்பினராக சத்தினால் கலந்து கொள்ள முடியாமல் போனதும் பராசிரியரின் எண்ணத்திலிருந்து அறிய முடிந்ததும் ன் விருப்பு வெறுப்பு முரண்பாடுகளைத் தவிர்த்து அனைத்து உறுப்பினர்களும் செயற்படுவதன்மூலம் "ண்டும் என்பது எனது அபிப்பிராயம். ாண அனுபவங்கள்' இலக்கியத் தொடர் ஆரம்பமே ம் அனுபவங்கள் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனுடனும் சேர்ந்து ப்பாடா என எண்ணத் தோன்றுகிறது.
ம் முதற்பரிசு பெற்ற 'கொள்ளிக்காசு' யதார்த்தமான கையை மேலும் தரம் உயர்த்துவன.
-P.D.பாலரட்ணம், கண்டி | 0 0 0 வர்களுக்கு நல்ல செய்திகளை உள்ளடக்கியுள்ளது. எழுத்துக்களும், வளமாக இருக்கின்றன. ஆசிரியர் Tகப் புரிய வைக்கிறது. அதேநேரம் பேராசிரியர் உவமான உவமேயங்கள் சபாஷ்போட வைக்கின்றன. தூங்குகின்றன. அவை உறுமும் பட்சத்தில் நாய் ல் காட்டைவிட்டு ஓடுமா... முடிவு தெரியும் காலம் இல்லை.... மிக நன்று. சிகசாலை. அவருக்கு நிகர் அவரேதான். கே. விஜயன் உடியதாக உள்ளது. அவர் செறியச்சன் இன்றைய நடனமென்ற கூத்துக்களையும் பார்த்திருந்தால் சொல்லட்டும். -
மது அவர்கள் கல்விமான் எஸ். எச். எம். ஜெமீல் ப்படுத்துவது சாலச் சிறந்தது. அமைதியான கடல் கல்விமானை வாழ்ந்து கொண்டிருக்கும்போதே ாநிதி தாஸிம் அகமதுவின் பணி சிறப்பானது. வின் கட்டுரை நன்றாக இருந்தது. - ரன் அவர்களின் பயணக் கட்டுரையின் ஆரம்பமே பாம். இலங்கை சுதந்திரமடைய முன்பு அவரது Tணி எலிசபெத் பிறந்த நாள் தனது பங்களிப்பு கொண்டாட்டங்களில் பங்கு பற்றியவர் இந்நாளில் ணப்படுகிறார். நினைத்துப்பார்க்க முடியவில்லை. பாழ்த்தப்பட வேண்டியவர்.... வாழ்த்துகிறேன்.
- பாணந்துறை எம். பி. எம். நிஸ்வான். 0 0 0 ஷணம் வைத்திய கலாநிதி தாஸிம் அகம்மது பன்முக ஆளுமை கொண்ட எஸ். எச். எம். ஜெமீல் தந்திருந்தார். அட்டைப்பட அதிதியாக அவரது பிரசுரித்து கெளரவம் செய்த ஞானத்துக்கு எனது
Tசேகரன் அவர்களின் இலண்டன் பயண அனுபவக் சிக்கத் தூண்டிவிடுகிறது. அவர்மட்டும் இலண்டன் T அழைத்துச் செல்கிறார். இப்பொழுதான் நாங்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஐனவரி 2014 (164)

Page 65
இலண்டன் ஹித்ரோ விமான நிலையத்தை அண்மி பார்ப்போம். இலண்டனில் நடைபெறவுள்ள உலக நிரம்பியதாக இருக்கப்போகிறது என்பதில் ஐ பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர் இலக்கியத் தகவல்களுக்கு பஞ்சமே இருக்காது.
161ஆவது ஞானம் இதழில் கலாநிதி அகளங்கை நாடு, நாட்டார், நாகரிகம், பண்பாடு என்ற த6ை தகவல்களைத் தெரிவித்திருந்தார்.
மானா மக்கீன் சும்மா இருப்பாரா? மலேசிய சம்பந்தமான விடயங்களைத் தந்திருந்தார். அந்: ஆகியோர்களது கட்டுரைகளும் முக்கியமான தக உருவகக் கதை எவரும் சொல்லாமலேயே ஊமை
கிறக.
ՈD5/ O
ஞானம் 163ஆவது இதழ் படித்து முடிந்தபோது தூண்டும் எண்ணங்கள்’ என்னும் தலைப்பில் பேர் எழுத்தினைத் தொடர்ந்து படித்து வருபவர்களில் திருவிழா என்ற உருவகக் கதை முறையானவர்களு சாட்டை அடி துரைமனோகரன் ஐயாவின் துணி இலண்டன் பயண அனுபவங்களை சுவராசியத்ே விமானத்தில் ஏறி பயணம் செய்வதுபோல இ பற்றிய பதிவு இடம்பெற்றிருக்கிறது; பாராட்ட சம்பவமும் உள்ளது. அதாவது எலிசபெத் மக் வெள்ளை நிறத்திலான கிளவுஸ் (கையுறை) அ6 சுந்தரலிங்கத்தோடு கைகுலுக்கும்போது மட்டும் அந்தளவுக்கு மகாராணி அவரிடத்தில் மதிப்பு வை இதனைத்தான் சொல்வார்களாக்கும் கொள்ளிக்க ஒரே வெளியில் நின்றாலும் அவை சொல்கிற வி இவ்வாறான யதார்த்த நிலைக்கதைகளை ஞானம் (
O ஞானம் சஞ்சிகையில் வெளிவந்த பயணக் வாசிக்கும்படி அப்பா சொன்னார். நான் வாசி பிரித்தானியா, இலங்கை, மஸ்கட் போன்ற நாடுகள் போது தொடர்ந்து வாசிக்கவேண்டும்போல் இரு காரணம் பிரித்தானியாதான் என அறிந்து கொண் பார்க்கிறேன்.
ஞானம் சஞ்சிகையின் 163ஆவது இதழைப் பட இலண்டன் பயண இலக்கியத் தொடர் மிகவும் பயணக்கட்டுரையை வாசித்தபோது நானும் அதே உணர்வினை ஏற்படுத்தியது.
பயணக்கட்டுரைகள் உண்மையில் பல நா விழுமியங்களையும் அரசியல் பொருளாதார சமூ நுட்பம் என்பவற்றின் வளர்ச்சியையும் வெளிப்படு: அம்சங்களையும் ஆசிரியர் ஞானசேகரனின் க மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்த ஒர் உல்லாச இலக்கிய முன்பு மணியனின் கட்டுரைகளைப் படித் பெற்றதுண்டு. ஆசிரியர் மணியன் இல்லாத குை பூர்த்தி செய்துள்ளார் என்று துணிந்து கூறலாம்.
டாக்டர்தி. ஞானசேகரன் அவர்கள் கட்டுரைை உத்திகள் மிக அற்புதமாக அமைந்துள்ளன. அவரு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜனவரி 2014 (164)

த்துக் கொண்டிருக்கிறோம். பொறுத்திருந்து இலக்கிய மாநாட்டுத் தகவல்கள் சுவாரஸ்யம் ஐயமில்லை. இம்மாநாட்டில் இலங்கைப் ர்கள் எனப் பலபேர் கலந்து கொள்வதால்
ர் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினை ஒன்றினை லப்பில் வாகரைவாணன் தந்து மேலும் பல
எழுத்தாளர் சங்கம் நடத்திய பொன் விழா தனி ஜீவா, பேராசிரியர் துரைமனோகரன் வல்களைத் தந்திருக்கின்றன. பேராசிரியரது யாய் நின்று உண்மைகளை மனதில் நிறுத்து
-எம். எம். மண்ஸர்ே, மாவனல்லை.
து மனதுக்கு வலு உற்சாகம் பிறந்தது. ‘எழுதத் ராசிரியர் துரை மனோகரன் ஐயாவின் பத்தி நானும் ஒருவன். இந்த இதழில் காட்டில் ஒரு க்கு முறை சார்ந்து கொடுக்கப்பட்ட தகுந்த வினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தோடு ஞானம் ஐயா தொடங்கியிருக்கிறார். ருந்தது. அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் ப் படவேண்டியது. அதிலே இன்னுமொரு காராணி எவருடனும் கைகுலுக்கும்போது னிந்திருப்பார். ஆனால் அடங்காத்தமிழன் கிளவுஸை கழற்றிவிட்டு கைகொடுத்தாராம். த்திருந்தாராம். குருபக்தி - மரியாதை என்று காசு', 'இடைவெளி ஆகிய இரு கதைகளும் தமும் சந்தர்ப்பங்களும் வேறு வேறானவை. தொடர்ந்தும் வெளிக்கொணரவேண்டும்.
-சமரபாகு சீனா உதயகுமார்
கட்டுரையை காரில்போகும்போது உரத்து த்த பொழுது மிகவும் நன்றாக இருந்தது. ரிலுள்ள பயனுள்ள சம்பவங்களைச் சொன்ன நந்தது. இலங்கையின் இனப்பிரச்சனைக்குக் டேன். அடுத்த இதழையும் ஆவலோடு எதிர் ச. துவாரகன்
டித்தேன். டாக்டர் தி. ஞானசேகரன் எழுதிய பயனுள்ள அனுபவமாக இருந்தது. அந்தப் 5 விமானத்தில் பறந்துகொண்டு சென்றதான
டுகளினதும் கலை கலாசாரப் பண்பாட்டு ழக வரலாறுகளையும் விஞ்ஞானம் தொழி த்துவனவாக அமைகின்றன. இந்த அனைத்து ட்டுரையில் காணக்கூடியதாக இருந்தமை பமாகவே அமைந்தது.
து ஆனந்தமான புதிய அனுபவங்களைப் றயை தற்போது டாக்டர் ஞானம் அவர்கள்
ய எழுதியும் நகர்த்தியும் விபரித்தும் செல்லும் க்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்
- வட அல்வை, க. சின்னராஜன்
O
63

Page 66
'இலண்டன் பயண அனுபவங்கள்' க. கவர்ந்தது. வரலாற்றுப் பின்னணியை உ வேண்டிய தகவல்களையும் தொட்டுக் காட் தென்படுகிறது. இக்கட்டுரைத் தொடர் திண்ணம். தங்கள் அருமையான முயற்சிக்கு
ஐரோநல்சன் - தொ
நானிலம் போற்றும் நெல்சன் மண்டேலா (1918-2013)
முன்இருந்த, மூத்த இன பின் சென்ற இந்தியத் தெ கைகட்டுச் சட்டங்கள், கா6 ஐரோப்பியர் தென்னாபிரி
நெல்சன் மன்டெல் நல்லதொரு தொடு வல்லரசின் போக்
சொல்லினால், 6 வெள்ளைத்தோல் நிறத்! கள்ளமுற்ற, இழி பிறப்புக் என்ற இன நிறத் துவேச அன்று, கடும் அமுல்செய் நெல்சன் எனும் அந்த உப
வில்லங்கப் படுத்தி இருபத்து ஏழு ஆக
பெரியதொரு சாத் இங்கிலாந்து நன்னாடும் இங்கிதமாம் போர்முறை பங்குகெடுத்துப் பல வகை தங்களது ஆதரவைத் தயா
இருபதாம் நூற்றால் கருப்பர், தென்னா கனவாகச் சுடர்வி
நனவாக்கிய நெல் இரண்டாயிரப் பதின்மூன் இருந்தாப் போல் மன்டெ6 பறந்துவந்து என்மனத்தை நிறைந்து வந்த நூற்றாண்
உலகத்தின் ஒப்பி6 நிலையான சமத்த இன்னா செய்தான
தென்னாபிரிக்கா இன்று மறைந்து விட்டார். நன்று நாமும் கற்றுணர்ந்தது அன்பினையே வளர்த்துத் மன்டெலா வழிச் சென்று,
64

ட்டுரை ஆரம்பத் தொடர் என்னை வெகுவாகக் உள்ளடக்கி எழுதியிருக்கிறீர்கள். யாவரும் அறிய டியுள்ளீர்கள். மாணவர்களுக்கும் பயன் உள்ளதாகத் ஞானம் இதழை மேலும் பிரகாசிக்கச் செய்வது எனது மனம் திறந்த வாழ்த்துக்கள்.
- வெலிப்பன்னை ஏ. எச். எம். அத்தாஸ் - 0 0 0
ஆபிரிக்க மக்களையும் ாழிலாளர் குடிகளையும்
விலங்கு விதிகளினால் பக்க தேசத்தை ஆளுகையில்...
லா எனும் நெடிய, கருவழக்கறிஞர், ன்குடியின் நாட்டாண்மை ஆபிரிக்கர், க்குகளை வன்மையுடன் எதிர்கொண்டு 1சயலினால், வலிமைநிலை அடைந்துவர தோரே நாகரிகம் நிறை குடிகள்,
கழிசறைகள், மற்றெல்லார்..
அப்பாதையிட் எண்ணத்தை த அடக்கு முறை ஐரோப்பியர்... பர் நல்லாரைச் சிறைப்பிடித்து 6. எஃகு விலங்கிட்டு வதைக்க, அவர் 2ன்டு இருட்டறையில் சிறை இருந்து வீகப் போர் அதனைப் பார் புக்கார். 5, எம் நல்லுலகும், நெல்சனது யை ஆதரித்து, அவர்களுமே பில் பிரச்சாரம் செய்துதவித் ங்காமல் அளித்ததனால்...
ண்டு முடிவடையும் ஆண்டுகளில் பிரிக்காவில் கனிவுடனே அரசமைத்துக் eெ ட்ட காந்தி வழிச் சுதந்திரத்தை சேனுக்குச் சிலை செய்து வணங்கி வர...
Tறு மார்கழி ஐந்தில், இன்று
மா இறந்துவிட்டார் எனும் செய்தி sப் பதைபதைக்கச் செய்கிறது.
டில் ஐந்தாண்டு குறை இருக்க ல்லாத் தலைவர் இன்று இறை அடைந்தார். துத்தை, நாட்டின் இனங்களைக் கூட்டி
ரை அன்னார் மன்னித்து ஒற்றுமைப் படுத்தித் வை உலகின் முன் வரியில் இருத்தி விட்டு - அன்னார்-இன் உதாரணத்தை து எங்களின் இலங்கைத் தீவில்
துன்பமெலாம் மன்னித்து மறந்து வென்று வாழ்வோமா, ஈழத்தீர்!”
பேராசிரியர் கோபன் மகாதேவா
ஞானம் - கலை இல.
ஜனவரி 2014 (164)

Page 67
缀
இருத்தெரு (2) த
முநீலழுநீ ஆறுமுக நாவலர் பெரு தந்தையார் கந்தப்பிள்ளை ஆவார் தாயார் உலகாந்தையாரும் ஆவார் இலக்கண இலக்கியங்க போர்த்துக்கீஸ் மொழிகளையும் ஆக பணிபுரிந்ததால் 'ஆராச்சி சு லிருந்து நீங்கியபின் கந்தபிள்ளை அ கழித்தார் என்று தெரியவ தோன்றிய கலையாகும்" என்பதே எமது இளங்கோவடிகள் “நாடகம் உருப்பசி நல் வடிவமே நாடகம் ஆகும். 属* ஆச்சரியப்படக்கூடிய விடயம் என்னெ மொத்தமாக 21 நாடகங்களை எழுதியுள்ளாராம் அவற்றின் சி விலாசம், நல்லை நகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், எரோது இற்றைக்கு ஏறத்தாள 300 ஆண்டுகளுக்கு முன்னே அளப்பரிய சேவை ஆற்றியுள்ளார். 1842 ல் உயிர் நீங்கும் நிறைவுபெறாமல் இருந்ததெனவும் இவரின் மகன் முநீல கூறப்படுகிறது. கந்தப்பிள்ளை அவர்கள் நாடகங்களுடன் இயற்றியுள்ளார் எண்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்ற
தமிழில் வழக்தெழு
தமிழ் மொழியானது தரிப்புக்குறிகளை தன்ன அரைக்காற் புள்ளி (,), ஆச்சரியக்குறி (!), கேள்விக் மொழிகளிலிருந்தே தமிழிற்குள் உட்புதந்தவை.
நாம் இன்று பயன்படுத்தும் தரிப்புக்குறிகள் பாவ6 குறிக்க தரிப்புக்குறி ஒன்றினை தமிழில் பயன்படுத் இடங்களில் கருத்தின் முழவி னைக் குறிக்கவும் சில இடங்களில் பந்தியின் முழவினைக் குறிக்கவும் இக்குறி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களிடையே அதிகம் பரிச் சயமில்லாத இந்தக் தரிப்புக்குறி 150-200 ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்துவிட்டதாகத் தெரி கிறது. (படத்தில் 1741இல் அச்சான நூல்
“யேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܔܢs¬
Aடதவிதலை எழுதிய ஈழத்து தமிழறிஞர்
pானை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். இவரின் , கந்தப்பிள்ளை அவர்களின் தந்தையார் பரமாநந்தரும் கள். 1766ஆம் ஆண்டு பிறந்த கந்தப்பிள்ளை அவர்கள் ளில் சிறந்து விளங்கியதோடு தமிழ், ஆங்கிலம், டச்சு, முறையாக கற்றவர். அரச உத்தியோகத்தில் 'ஆராச்சி" நந்தர்' எனும் பெயரும் இவருக்கு உண்டு. உத்தியோகத்தி வர்கள் தமது வாழ்நாளை நாடகங்கள் எழுதுவதிலேயே ருகிறது. நாடகம் என்றதும் "அது அண்மைக்காலத்தில் பொதுவான எண்ணம். ஆனால் சிலப்பதிகாரம் எழுதிய காளாகி” என்கிறார். கதையாக அமைக்கபட்ட கூத்தின்
வன்றால் கந்தப்பிள்ளை அவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, லவற்றின் பெயர்கள் வருமாறு: சந்திரகாச நாடகம், இராம நாடகம், சமநீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி விலாசம்,
ரே ஈழத்து நாடகத்தமிழுக்கு கந்தப்பிள்ளை அவர்கள் b தறுவாயில் இரத்தினவல்லி விலாசம் எனும் நாடகம் பரீ ஆறுமுக நாவலரே அதை எழுதிமுடித்தார் என்றும் சில வைத்திய நூல்களையும் சில தனிப்பாடல்களையும்
றன.
இந்த த
கத்தே கொண்டிராத மொழி. முற்றுப்புள்ளி (,), குறி (?) போன்ற தரிப்புக்குறிகள் அனைத்தும் பிற
னைக்கு வருமுண்னர், ஒரு கருத்தின் முழவினைக் தியுள்ளார்கள் என அறியமுடிகிறது. அநேகமான
அதிகாரம்
కమ్మెణ லும் உடையகு
மாளுகியது ආදී ක්‍රි.
--g G, ်အြ႔ခ်” ခေါ်ကဲ... အိ; _z::Jøကဲ လျှော်’_င့္အား J్యక్తికై கிஷிக்கினர் டொஸ்
š
அறியப்பனுெை

Page 68
GNANAM - Registered in the Department
(Luc
BIS MANUI
Luckyland
Le por
hatag
NATTARANPOTHA, I T: +94 081 2420574, 24.
E: luckyl

of Posts of Sri Lanka under No. QD/18/News/2014
lkyland) 5GUா FACTURERS
உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
பிஸ்கட்டிலும் தான் !
KUNDASALE, SRI LANKA. 20217. F: +94 081 2420740 and@sltnet.lk
Thatance Prinis - Tcl: 2804773