கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி மணிவிழா மலர் 1948-2008

Page 1
த்
N u#
- جنگ تصاص . . . * * *
·*。*。 ”س حصےے
囊
妻
藝
 
 
 
 
 
 

参看 = 圭。 ä sä. 1 s s 출 ၂၀၀၅ 三之 " . 茅
Wዩኳ 8醬 - y 三ジ الله W
三> 奎 틀

Page 2


Page 3
ID6h fid
வி. கந்த
சிவ முத்து 6ldr. GafsII
ஆத்மஜோதி திய இந்து சமய 19-O7.
-(1
 

வனம்
லிங்கம் )சுந்தரம்
பான நிலையம் ப் பேரவை
2008

Page 4


Page 5
سے تحتجسمی تصیح ترویۓ سم سمجحتے تھے
emi
乡 多 参
இல்லறஞ பெரியார் க. இரா
 
 

حتي الرسمي مصر حتي
ானி
ந்திரா
ாமசசந

Page 6


Page 7

كممه z>Sz --zz

Page 8


Page 9
1.
19.
"ஆத்மஜோதிக்கு அகவை அறுபது 2. வாழ்த்துக்கள்
- சந்நிதியான் ஆச்சிரமம் - அருள்மிகு நல்லூர் முருகன் ஆலயம் - சைவ சித்தாந்த மன்றம், கனடா
- நா. நடேசன், நாவலப்பிட்டி - ஒமேகா ரேடேஸ், கொழும்பு - சிவமயச்செல்வி பரமேஸ்வரி சரவணமுத்து, க - தீவகன்-சதாசிவம் சேவியர், கனடா ஆன்மீகத் தொடர்பு இல்லறஞானியும் துறவற ஞானியும் ஆத்மஜோதி சஞ்சிகையின் குறிக்கோளும் செயற்ப பலே ஆத்மசோதி! இரைதேடுவது போல் இறைவனையும் தேடு ஆத்மஜோதியும் அதன் ஆசிரியரும் ஆத்மஜோதியாரின் வாழ்க்கையில். நடமாடும் கோயில் ஆத்மஜோதி எனது அறிமுகம் நாவலப்பிட்டியின் நாவலர் நயினை நல்லூர் பாதயாத்திரையின் பிதாமகர் முத்தையா மாஸ்டருக்கு 90 வயதா? ஆத்மஜோதி தமிழர் இணையம், மொன்றியல் சைவமும் தமிழும் மங்காது நீடு வாழும் அமைப்புக்கள் மூன்று - ஆணிவேர் ஒன்று! கனடா வாசகர் அனுபவங்கள்
- திருமதி கமலாதேவி மகாலிங்கம் - திருமதி நாகேஸ்வரி கணேஸ் - திருமதி தர்மதேவி சிறிசுப்பிரமணியம் - திருமதி செல்வராணி நடராசா - திருமதி செல்லமுத்து சின்னத்துரை - இணுவையூர் தேவி கணேசலிங்கம் - திருமதி தங்கமுத்து தம்பித்துரை - திருமதி இராசலட்சுமி சண்முகலிங்கம் - திருமதி இராஜமலர் சின்னராசா சிறப்புக் கட்டுரைகள்
- கலாநிதி நா. சுப்பிரமணியன் - திருமதி லீலா சிவானந்தன் - திருமதி கெளசல்யா சுப்பிரமணியன் - வித்துவான், கலாநிதி க. ந. வேலன் - வாகீச கலாநிதி க. நாகேஸ்வரன், M.A. - சைவப்புலவர் ஏ. அனுசாந்தன் - பேராசிரியர் நா. ஞானகுமாரன்
=C3
 

50TLT
ாடும்
பக்கம்
04
08 - 12
13
16
18
19
20
22
28
32
34
35
36
38
39
43
44
47-57
59-76

Page 10
ஆத்மஜோதி 4 'ஆத்மஜோதிக்கு
சைவதுரந்து
பிரதம ஆசிரி ஆத்மஜோதி இதழ் தொடங்கப்பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆன்மிக இதழ் அமரர் திரு. நா முத்தையா அவர்களால் இலங்கை நாவலப்பிட்டியில் 1948ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிடப் பட்டது வெளியிடப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் பெரியா க.இராமச்சந்திரா அவர்கள். ஆத்மஜோதி அவரத சித்தத்து முத்து.
பெரியார் இராமச்சந்திரா அவர்கள் நயினாதீவைச் சேர்ந்தவர்; இலங்கைப் புகையிரத இலாகாவில் பணி புரிந்தவர்; பழுத்த ஆன்மிகச் செல்வர். இரமண மகரிசியைக் குருவாகப் பூசித்தவர். அரவிந்தருக்குப் பூசைகள் நடத்திவந்தவர். இந்தியாவிலிருந்து பல பெரியார்களை இலங்கைக்கு அழைத்துச் சிறப்பித்த பெருமை இவருக்கு உண்டு. 1927ல் மகாத்மா காந்தி
அடிகள் இலங்கைக்கு வந்தபோது இராமச்சந்திரா அவர்களின் வீட்டிலேயே தங்கினார் என்பதை வைத்துக்கொண்டே பெரியாரின் இந்திய உறவை எண்ணிப் பார்க்கலாம்.
திரு. நா. முத்தையா அவர்கள் 1939ஆம் ஆண்டு முதல் நாவலப்பிட்டியில் படிப்பித்து வந்தார். இராமச்சந்திரா அவர்களின் ஆன்மிகப் பணிகளை முத்தையா அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் நெருக்கமான பழக்கம் ஆசிரியரான பின்புதான் ஏற்பட்டது. 1948ல் பெரியார் இராமச்சந்திரா அவர்கள் கொழும்பில் வேலை பார்த்த காலத்தில் கொள்ளுப்பிட்டியில் வாழ்ந்து வந்தார். அவ்வாண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் தமது இல்லத்தில் அரவிந்தர் குருபூசையை வழக்கம்போல நடத்தினார். அதிற் கலந்து கொள்ளுமாறு திரு. முத்தையா அவர்களையும் அழைத்திருந்தார். அழைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது.
பூசை முடிந்ததும் தனது உள்ளக்கிடக்கையைப் பெரியார் வெளிப்படுத்தினார். அந்த மாதம் இந்து சாதனம் பத்திரிகையில் முத்தையா அவர்கள் ஆறுமுக நாவலர் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று வந்திருந்தது. அதில் நாவலர் பெருமான் கருதிய சமயப் பத்திரிகைகளை இக்காலத்தில் எவரும் நடத்த முன்வரவில்லை என்று கவலை தெரிவித்திருந்தார். இராமச்சந்திரா அவர்கள் தான் அக் கட்டுரையைப் படித்ததாகவும் நாவலர் பெருமான் நினைத்ததைப் போன்று நாமும் இக் காலத்துக்கு ஏற்ற முறையிற் சமயப் பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
அவர் அத்துடன் நின்றுவிடவில்லை. பத்திரிகையின் பெயர் ஆத்மஜோதி. அதற்கு நீரே நிருவாக ஆசிரியர்

ணிவிழா மலர் அகவை அறுபது ர் வி. கந்தவனம் பர் - ஆத்மஜோதி
என்றும் தனது திட்டத்தை வெளிப்படுத்த முத்தையா அசந்துபோனார். அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. இராமச்சந்திரா அவர்கள் சமயத்துறையில் நன்கு அறியப்பட்டவர். முத்தையாவின் பெருமதிப்புக்குரியவர். அவர் சொல்லைத் தட்ட முடியுமா? வசதி படைத்தவர் யாராவது சமயப் பத்திரிகையை நடத்த வேண்டும் என்பதற்காகவே கட்டுரையில் அப்படி எழுதினார். அதனைத் தான் நடத்தும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை. ஒரு தமிழ் ஆசிரியரிடம் அறிவைத் தவிரப் பத்திரிகை நடத்த வேறு என்ன வசதி இருக்கிறது? முத்தையா பேசாமல் இருந்தார்.
பெரியாருக்கு மௌனத்தின் பொருள் விளங்கிவிட்டது. 'யோசிக்க வேண்டாம். நான் வேண்டிய உதவிகளைச் செய்வேன். நீர் பத்திரிகையைத் தொடங்கும்' என்று உற்சாகம் ஊட்டினார். அரவிந்தர் குருபூசையைத் தொடர்ந்து இராமச்சந்திரா அவர்கள் முன்வைத்த பணியைத் தெய்வ கட்டளையாகவே முத்தையா தலைமேற் கொண்டார்.
ஆத்மஜோதி 1948ஆம் ஆண்டு திருக்கார்த்திகை நாளில் வெளிவந்தது. அட்டையைச் சிவனொளிபாத மலையின் படம் அழகு செய்தது. ஆசிரியர் நா.முத்தையா. கௌரவ அசிரியர் திரு. இராமச்சந்திரா. வருடச் சந்தா 3 ரூபாய். ஆயுள் சந்தா 75 ரூபாய். இவை முதல் இதழில் வந்த விவரங்கள். பிற்காலத்தில் 1977ல் வருடச் சந்தா 10 ரூபாயாகவும் ஆயுள் சந்தா 250 ரூபாயாகவும் ஏற்றம் பெற்றன. 1980ஆம் ஆண்டு இதழ் ஒன்றில் வருடச் சந்தா ரூபாய் 20.00 என்றும் ஆயுள் சந்தா ரூபாய் 400.00 என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்விதம் ஆத்மஜோதி ஓர் ஆத்மீக மாத வெளியீடாக வந்துகொண்டிருந்தது. சுத்தானந்தரின்
”எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே”
என்ற அருள் மொழி பத்திரிகையின் தாரகை மந்திரமாயிற்று. பத்திரிகை இந்து சமயம்
என்ற பொதுக் குடையை விரித்தாலும் ஈழத்தவரின் சைவத்தையும் முதன்மைப்படுத்தி வளர்த்து வந்ததை அதனை ஒழுங்காக வாசித்து வந்தவர்கள் நன்கு அறிவர்.
சமயப் பத்திரிகை ஒன்று இல்லையே என்று கவலைப்பட்டுக் கட்டுரை எழுதியவரையே பத்திரிகை நடத்த வைத்துவிட்டார் இராமச்சந்திரா அவர்கள். அவரே நடத்தியிருக்கலாம். அதனை நடத்துவதற்கு வேண்டிய

Page 11
எல்லாத் தகைமைகளும் அவரிடத்தில் இருந்தன. ஆயினும் முத்தையா அவர்கள் தன்னிலும் இளைஞர் என்ற வகையில் பத்திரிகைத் தொழிலில் உள்ள சிரமங்களை அவர் சமாளிப்பார் என்பது அவரது தீர்மானமாக இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, முத்தையா அவர் களின் சமய அறிவையும் எழுத்தாற்றலையும் ஆன்மிகத் தளத்தையும் நன்கு அறிந்து அவர்தான் பத்திரிகையை நடத்த வல்லவர் என்பதையும் அவர் எடைபோட்டிருத்தல் வேண்டும்.
அந்தக் காலத்தில் இது ஒரு துணிச்சலான முயற்சி. பத்திரிகை ஒன்றைக் கொண்டு நடத்துவது எளிதான காரியமன் று. ஒரு படத்தை அச்சுக் கட்டை ஆக்குவதற்கே கொழும்புக்குத்தான் அனுப்ப வேண்டும். விநியோகம் மற்றுமொரு முக்கியமான பணி. கொழும்பில் இருந்து கொண்டு இராமச்சந்திரா அவர்கள் சந்தாதாரர்கள் பலரைச் சேர்த்துக் கொடுத்ததோடு ஆலோசனை உதவிகளையும் செய்து வந்தார்கள். அவரே ஆசிரியர் தலையங்கத்தையும் எழுதி வந்தார்.
முத்தையா அவர்கள் நாவலப்பிட்டியில் 1960ல் ஆத்மஜோதி அச்சுக் கூடத்தை ஆரம்பித்தார். அதனைச் சுவாமி சச்சிதானந்தர் திறந்து வைத்தார். திறப்பு விழாவை பெரியார் க. இராமச்சந்திரா உட்படப் பல பெரியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்த அச்சுக் கூடமே பிற்காலத்தில் ஆத்மஜோதி நிலையம் என்றும் வழங்கப்பட்டது. அச்சுக்கூட அலுவல்களுக்கு முத்தையா அவர்களின் தம்பியார் திரு. நா. அருமைநாயகம் பொறுப்பாக இருந்தார்.
திரு. அருமைநாயகம் தமையனாரின் சமயப் பணிகளுக்கெல்லாம் உறுதுணையாக இருந்தவர். அண்ணனுக்கு அருமையான நாயகமாகப் பணிசெய்தவர். அவருடைய ஊக்கத்தாலும் உழைப்பாலும் பத்திரிகைப் பணி தொடர்ந்தது. முட்டின்றித் தொடர்ந்தது என்று சொல்ல முடியாது. இடர்ப்பாடுகள், நிதிசார்ந்த சிக்கல்கள் இருக்கவே செய்தன. முத்தையா அவர்கள் கற்பித்தல் தொழிலாற் பெற்ற சம்பளத்தின் பெரும்பகுதியும் பத்திரிகைச் செலவுக்குப் பங்காளியானது. மாதா மாதம் வரும் பத்திரிகை சில சமயங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒன்றாகவும் வெளியிடப்பட்டதுண்டு. அதற்குப் பணநெருக்கடி காரணமா அல்லது முத்தையா அவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் காரணமா என்று திட்டமாகச் சொல்ல முடியவில்லை.
ஆத்மஜோதி யின் பத்தாவது ஆண்டிலும் பதினைந்தாவது ஆண்டிலும் சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டன. இவற்றையெல்லாம் கண்டு மகிழ்ச்சியடைந்த பெரியார் இராமச்சந்திரா அவர்கள் 1965ல் இறைபதம் அடைந்துவிட்டார்கள். இறக்கும்வரை அவரே ஆசிரியர்
L(
g
 

லையங்கங்களை எழுதிவந்தார். அவரைத்தான் அக்காலத்தில் ஆத்மஜோதி இராமச்சந்திரா என்று பலரும் அழைத்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
பரியார் இராமச்சந்திராவுக்குப்பின் பத்திரிகையை டத்தும் முழுப்பொறுப்பும் முத்தையா அவர்களுடை பதும் தம்பியார் அருமைநாயகம் அவர்களுடையது ாயிற்று. பத்திரிகையின் வெள்ளிவிழாவும் சிறப்பாகக் காண்டாடப்பட்டது. எனினும் 1983ஆம் ஆண்டு யூலாய் ாதம் நடந்த இனக் கலவரத்தின்போது ஆத்மஜோதி அச்சுக்கூடம் முற்றாக அழிக்கப் பட்டது. பத்திரிகை வெளியீடும் தடைப்பட்டது.
2துவரை மணிவிழாக் காணும் ஆத்மஜோதி தொடங்கப்பெற்ற வரலாற்றையும் அது வளர்ந்துவந்த பின்னணியையும் பார்த்தோம். இனி இது வாசகர் )த் தியில் எத்தகைய தாக்கத்தை, பயனை விளைவித்தது என்பது பற்றி நோக்குவோம்.
அக்காலத்தில் சமயப் பத்திரிகைகள் அதிகம் இல்லாத நிலையில் ஆத்மஜோதியின் பணி இன்றியமையாத தொன்றாகவே இருந்தது. கனதியான சமயக் 5ட்டுரைகளைப் பத்திரிகை தாங்கி வந்தது. தத்துவ விளக்கங்கள், புராணக் கதைகள், சமயச் செய்திகள், Dகான்களின் வரலாறுகள், பயணக் கட்டுரைகள் என்று பல வகையான விடயங்கள் பத் திரிகையின் உள்ளடக்கங்களாயின.
நமிழ்கூறும் நல்லுலகத்துப் பெரும் எழுத்தாளர்களும் யோகிகளும் ஆத்மஜோதியில் எழுதிவந்தார்கள். 977க்கும் 1982க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த சில இதழ்கள் ஈழத்தவர்களான க. இராமச்சந்திரா, திருகோணமலை செ. இராமச்சந்திரன், தம்பலகாமம் 5. வேலாயுதம், வேலுப்பிள்ளை பரமநாதன், பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை, மாத்தளை அருணேசர், சைவப்புலவர், சங்கீதபூசணம் அ.கி. எரம்பமூர்த்தி, மற்றும் நமிழ்நாட்டு கவியோகி சுத்தானந்தர், சிவானந்த மெளனகுரு சுவாமிகள், கி.வ. ஜகந்நாதன், தமிழ் வடிவம் D. சி. சிதம்பரப்பிள்ளை, தமிழ் வடிவம் ம. நமசிவாயம், )ாகர்கோயில் கே. ஆறுமுகநாவலர் போன்றவர்கள் ஒழுங்காக எழுதி வந்தமையைத் தெரிவிக்கின்றன.
2வர்களோடு முத்தையா அவர்களும் தொடர்ந்து ாழுதிவந்தார்கள் என்பது சொல்ல வேண்டியதில்லை. சொந்தப் பெயரிலும் புனைபெயர்களிலும் பல ஆக்கங்களை எழுதினார். அவரது எழுத்துக்கள் எளிமை பானவை. ஓரளவு படிப்பறிவு உடையவர்களும் விளங்கக் கூடிய வகையில் பெரிய தத்துவங்களை எல்லாம் தெளிவாக எழுதுவார். அவரது தெளிவான விளக்கத்துக்கு 1977 புரட்டாசி-ஐப்பசி இதழில் அவர்

Page 12
முத்து என்ற புனை பெயரில் எழுதிய பரஞ்சோத பயிலுமிடம் என்ற கட்டுரையின் முதற் பந்தியை உதாரணமாகக் காட்டலாம்:
'இறைவன் ஒளிமயமானவன். இறைவன் ஒளியாக இருக்கிறான் என்பதை எல்லா சமயத்தவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். உயி களுக்கு மூன்றுநிலை உண்டு. கேவலம், பெத்தப் முத்தம் என்று கூறப்படும். உயிர்கள் அறியாமை துன்பம், இருள் என்ற மூன்றும் மூடிச் செயலற்று இருப்பது கேவலநிலை எனப்படும். அறிவுட அறியாமையும், இன்பமும் துன்பமும், ஒளியுட இருளும் கூடி இந்த உடம்புடன் வாழும் நிலை
பெத்தநிலை எனப்படும். ஒளிமயமாக இன் மயமாக ஞானமயமாக வாழும் நிலை முத்தநிலை எனப்படும்.”
சின்னச் சின்ன வசனங்களும் தெளிவான விளக்கங்களுட முத்தையா அவர்களின் தனித்துவம். இத்தகைய எழுத்துக்கள் பலரைச் சென்றடைந்தன என்பதை மறுக்க முடியாது. வாசகர் தொகையும் அதிகரித்தது. மாதாமாதப் 2000 இதழ்கள் வெளியிடப் பட்டன. “2000 பிரதிகள் என்றால் 20,000 பேர் பத்திரிகைப் படிக்கிறார்கள் என்று அர்த்தம்” என்று ஒருமுறை முத்தையா அவர்களைட் பாராட்டி யிருக்கிறார் சுவாமி சிவானந்த சரசுவதி.
பத்திரிகையை அதிகமானோர் படித்தமைக்கு முத்தைய அவர்களது ஆளுமையும் ஒரு முக்கியமான காரணம் முத்தையா அவர்கள் ஊர்தோறும் திரியும் ஒரு தொண்டர் ஆன்மிகத் தொண்டர். பத்திரிகையின் பெயர் அவருக்கு ஆகுபெயராயிற்று. மக்கள் அவரை ஆத்மஜோதி என்றே அழைக்கலாயினர். அவர் வெறும் பத்திரிகை ஆசிரியர் மட்டுமல்லர். அவர் ஒரு சிறந்த பேச்சாளர், சமூக சேவையாளர். அவரது சேவைகளும் செல்வாக்கும் பத்திரிகையைத் தொடர்ந்து பலரைப் படிக்க வைத்தன காணுகின்ற வேளைகளில் பத்திரிகை படித்தீர்கள என்றும் கேட்பார். கேட்பாரே என்பதற்காகப் படிக்கத் தொடங்கிப் பின் பழக்கத்தால் வாசியாதிருக்கமாட்டாது பத்திரிகையைத் தேடிச் சென்று அல்லது சந்தாதாரராகி வாசிக்கும் நிலையை எய்துவார்கள்.
மற்றொரு சிறப்பு என்வென்றால் சிறுவர்களுக்கு ஏற்றவகையிலும் ஆத்மஜோதி நடத்தப்பட்டமை முத்தையா அவர்கள் ஓர் ஆசிரியர் என்றவகையில் மாணவர்களின் சமயத் தளத்தை நன்கு அறிந்திருந்தார் அதனால் அவர்களின் அறிவை வளர்த்தெடுக்க வேண்டுப் என்ற எண் ணத்தால் மாணவர்களுக்கு ஏற்ற ஆக்கங்களும் ஆத்மஜோதியில் எழுதப்பட்டன. அதனால் பாடசாலைகளிலும் ஆத்மஜோதியைப் படிப்பவர்கள் அதிகமாயினர்.

5
60
ஈழத்தின் எல்லாப் பகுதிகளையும் ஆத்மஜோதி சென்றடைந்தது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா என்று இந்துக்கள் வாழும் பிற நாடுகளுக்கும் பத்திரிகை அனுப்பப்பட்டது. 1981ஆம் ஆண்டு ஆடி மாதத்துக்கு முன்னதாக வெளிநாட்டுச் சந்தாதாரர்களுக்குத் தனித்தனியாகவே இதழ்கள் அனுப்பப்பட்டன. அதன்பிறகு இம் முறையில் ஏற்பட்ட மாற்றத்தை 1981 ஆடி இதழின் பின்பக்க அறிவித்தல் இவ்விதம் தெரிவிக்கின்றது:
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா சந்தாதாரர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
அன்புக்குரிய சந்தாதாரர்களே,
ஒவ்வொரு சந்தாதாரர்களுக்கும் ஆத்மஜோதி இங்கிருந்து அனுப்பப்படுமுன் இருமுறை விலாசம் சரிபிழை பார்க்கப்பட்டுத் தபாலில் சேர்க்கிறோம். அப்படி இருந்தும் ஒரு சிலர் தமக்கு ஒழுங்காகக் கிடைப்பதில்லை என்றும் முறையீடு செய்கின்றனர். அத்துடன் கடந்த தை மாதம் தொடக்கம் முத்திரைச் செலவையும் அரசாங்கத்தார் 1% மடங்காக அதிகரித் துள்ளனர். இவை இரண்டையும் ஈடுசெய்யுமுகமாக ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஏஜென்சியை நியமித்துள்ளோம். இனிமேல் அவர்களிடமிருந்தே உங்களுக்கு ஆத்மஜோதி கிடைக்கத்தக்கதான ஒழுங்கைச் செய்துள்ளோம். உங்கள் சந்தாவையும் அவர்களிடமே செலுத்தி அவர்களிடமிருந்தே ரசிதையும் பெற்றுக்கொள்க.
இந்திய விலாசம்:
S. Rajasekaran
“Visalakshi Illam”, 274, Royapettah High Road Royapettah — Madras — 600 014, Tamillnadu
மலேசியா விலாசம்:
S. Subramaniyam Sri Eswari Flour Mill
99-IL, Jalan Tandok, Kualalumpur, Malaysia
இந்துனேசியா விலாசம்:
Sri Mariyamman Koil Jalan Teuku Umar No. 18 Medan-Sumatra, Indonesia
சிங்கப்பூர் விலாசம்:
T. Sivasundaram Sri Senpaga Vinayagar Temple 19, Ceylon Road, Singapore - 15

Page 13
இந்த அறிவித்தல் பத்திரிகை விநியோகத்தில் மேற்கொண்ட மாற்றத்தை மட்டும் எமக்குக் கூறவில்லை, வெளிநாடுகளில் ஆத்மஜோதியை எந்த அளவுக்கு வாசகர் மத்தியில் எடுத்துச் செல்ல ஆத்மஜோதியார் திட்டமிட்டார் என்பதையும் அறிவிக்கின்றது. அந்தத் திட்டம் அமல் செய்யப்பட்டு, பத்திரிகை தனது சமய அறிவைப் புகட்டும் பணியை மேலும் விரிவுபடுத்திச் சிறப்புறச் செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 1983ல் ஆத்மஜோதி நிலையம் அழிக்கப்பட்டுவிட்டது. பல கலவரங்களைத் தாங்கிப் பிழைத்த நிலையம் 1983ல் நடந்த மிகக் கொடுமையான அட்டுழியத்திலிருந்து தப்பமுடியாது தவித்தது. முத்தையா அவர்களும் தம்பியாரும் புலம் பெயர்ந்தனர். 35 ஆண்டுகள் தொடர்ந்துவந்த நல்லதொரு சமய இதழ் வாடி வீழ்ந்தது.
கனடாவில் ஆத்மஜோதி
நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். இலங்கையில் நின்றுபோன ஆத்மஜோதி கனடாவில் வெளிவரத் தொடங்கியது. முத்தையா அவர்களுக்கு உல கெங்கும் சீடர்கள். அவர்களில் ஒருவர் கனடாவாழ் திரு. ஞானகாந்தன் அவர்கள். உற்சாகமான இளைஞர். சைவநெறியில் வளர்ந்தவர். அதனால் அடக்கமும் பண்பும் நிறைந்தவர். பெரியாரைப் பேணும் தகைமை சான்றவர். சிவநெறிச் செம்மல்" எனப் பட்டம் பெற்றவர். அவரது ஊக்கத்தாலும் சிவத்திரு பஞ்சாட்சரக் கிருஷ்ணராஜக் குருக்களின் ஆதரவாலும் ஆத்மஜோதி 1991ஆம் ஆண்டு ஆடி மாதம் கனடாவில் சுடர் விட்டது. கெளரவ ஆசிரியராக ஆத்மஜோதி நா. முத்தையா அவர்களும் நிர்வாக ஆசிரியராக வ. ஞானகாந்தன் அவர்களும் இருந்தனர். பத்தரிகை சாவகச்சேரி கண்டி வீதி குருபவனம்’ என்ற இல்லத்தில் இயங்கிய ஆத்மஜோதி நிலையத்துக்காக கனடா இறிப்லக்ஸ் அச்சகத்தில் சிவத்திரு பஞ்சாட்சரக் கிருஷ்ணராஜக் குருக்களால் பதிக்கப்பெற்று-ழரீ விஜய லட்சுமி வாசா அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர் யாவர்க்கும் இலவசமாக வழங்கப் பட்டது. பத்திரிகைப் பணி 1995 ஆனிவரை தொடர்ந்தது. ܥܡܼ܅
1994 யூலாயில் கனடாவில் நான்காவது அனைத்துலகச் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதிற் பங்குபற்றுவதற்கு ஆத்மஜோதி நா. முத்தையா அவர்களும் வருகை தந்திருந்தார். அப்பொழுது அவர் யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவைக்குத் தலைவராக இருந்தார். அதனைப் போன்ற ஓர் அமைப்பைக் கனடாவிலும் தோற்றுவித்தார். அது ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை எனப் பதிவு செய்யப்பட்டது. ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையின் அழைப்பில் ஆத்மஜோதி அவர்கள் 1995லும் கனடாவுக்கு வருகை தந்தார். பலவிதமான நிகழ்ச்சிகளிற் பங்குபற்றி சமயம் மற்றும் தமிழ்க் கல்வி வளர்ச்சியை வலுப்படுத்தினார். செப்டம்பர் 8ஆந் திகதி மொன்றியல் துர்க்கை அம்மன் ஆலயக்

கும்பாபிடேக விழாவிற் பங்குபற்றச் சென்றவிடத்தில் தொய்வுநோய் காரணமாக அன்று காலை இறைவனடி எய்தினார்.
அவரது பணிகளைக் கனடாவில் இந்து சமயப் பேரவை முழுமூச்சாகத் தொடரத் தொடங்கியது. அவற்றுள் அவரது பத்திரிகையை நடத்த வேண்டும் என்பதுவும் ஒன்று. வி. கந்தவனம் அவர்களைப் பிரதம ஆசிரியராகவும் சிவ முத்துலிங்கம், ச. திருநடராசா ஆகியோரை உதவி ஆசிரியர்களாகவும் கொண்டு ஆத்மஜோதியை நடத்த வேண்டும் என்று பேரவை 2000ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவுசெய்தது. அதன்படி 11.06.2000த்தில் அமரர் முத்தையா அவர்களின் பிறந்த நாளாகிய வைகாசி விசாகத்தில் ஆத்மஜோதி மறுபிறப் பெடுத்தது. வெளியீட்டு விழா கனடா கந்தசுவாமி கோயிலிலும் அறிமுகவிழா மொன்றியல் அருள்மிகு முருகன் கோயிலிலும் நடத்தப்பட்டன.
ஆத்மஜோதி காலாண்டு இதழாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 2000 பிரதிகள் அச்சிடப்பட்டு இலவசமாகவே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காலப் போக்கில் கெளரவ ஆசிரியர்களாகப் பேரறிஞர் முருகவே பரமநாதனும் டாக்டர் இ. இலம்போதரன் அவர்களும் போற்றப்பட்டனர். ஆசிரியர் குழுவில் பேரவையின் பொருளாளரும் ஆத்மஜோதி விநியோகத்துக்குப் பெரிதும் தொண்டாற்றிவருபவருமாகிய ஆசிரியர் செ. சோமசுந்தரம் அவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். தற்பொழுது 3000 பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன.
இவ்விதமாகப் பல சோதனைகளை வென்று இன்று மணிவிழாக்காணும் சாதனை படைத்து நிற்கும் ஆத்மஜோதியை வாசகப் பெருமக்களோடு சேர்ந்து அதன் தற்போதைய ஆசிரிய பீடமும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியிடைகின்றது. வானுறையுந் தெய்வமாகிய ஆத்மஜோதி முத்தையா அவர்களும் வான்பூக்கள் சொரிந்து வாழ்த்துவதை நான் உணர்கிறேன்.
ஆத்மஜோதி என்ற வடமொழியின் தமிழ் வடிவம் உயிரொளி என்பது. உயிர் ஒளி பெற்றால் உள்ளம் ஒளிபெறும். உள்ளம் ஒளிபெற்றால் உடல் ஒளி பெறும். உடல் ஒளி பெற்றால் உயிர் தன்னுடலுள் இறைவனைக் கண்டின்புறும். அந்த இன்ப வாழ்க்கைக்கு இணை ஏதுமில்லை. அந்த இணையற்ற இன்பத்துக்கு வழி வகுப்பதே ஆத்மஜோதி இதழின் நோக்கம். இந்த உயர்ந்த நோக்கத்துக்கு உதவி புரிந்துவரும் அன்பர்கள் அனைவர்க்கும் குறிப்பாக, விளம்பரங்கள் தந்துதவும் வர்த்தகப் பெருமக்களுக்கும் மணிவிழாக் கொண்டாடப் பெறும் இவ்வேளையில் ஆசிரியர் பீடத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லைக் கண்ணில் நல்லகுதுறு கழுமல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

Page 14
சி சந்நிதியான Sanithiyan A
- ஆசி ஆத்மஞானி தவத்திரு நா. முத்தையா அவர்கள் கனடாவில் நிகழ்த்தப்படுவதையிட்டு மனம் பூரிப்பை இறைவன் ஆவான். யாதொரு தெய்வங்கொண்டீ வருவர் என்ற அருணந்தி சிவாச்சாரியாரின் அருள்வா சைவ சித்தாந்த தத்துவங்கள் பதியப்பெற்ற ஆன்மா ! கண்டானந்திப்பதற்கு உபாயமான ஆன்மீகக் கருத் மலர் மேன்மேலும் பிரகாசமுற்று, மேன்மைகொள் ை ஆசியுரையினை ஞானகுருவின் துணைக்கொண் துணைக்கொண்டும் வழங்கி மகிழ்கின்றேன்.
குருபணியில், மோகனதாஸ் சுவாமிகள்
வாழத சிவழுீ க. சி அருள்மிகு நல்லூர் முருகன்
ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை அங்கத்தவர்களு மற்றும் அனைவருக்கும் என் ஆசிகள் பல. மேலும் ஆத்மஜோதி சஞ்சிகை மணி விழா மலராக எல் மகிழ்ச்சியடைகிறேன். அந்த மகானை மனதிலே என நாம் போற்ற வேண்டும். ஒரு முறை ஐயா அவர்கள் கும்பா அபிஷேகம் நடைபெற முன்பு யாகசாலை அை அப்போது சரியான மழை வெள்ளம் யாகசாலைய செல்லவில்லை. பூசை செய்ய வெள்ளம். எனவே செய்யலாம். உடனே வெள்ளம் வற்றி விட்டது. இப் பயந்து கிணற்றில் தவறி வீழ்ந்து விட்டான். வீழ்ந்த இல்லை. வீழ்ந்து விட்டால் விசமான பாம்புகள் கெ மோசம். இத்தருணத்தில் மேலே இருந்து தேன் அதன்ை அவன் சுவைத்துச் சாப்பிட்டான். அப்போது இறைவன் இடம் சமாதி ஆனான். இதுவே கொடியா நாங்கள் செய்கின்ற பாவங்கள். சில தேன் சொ சுவைத்து சாப்பிட்டால் துன்பங்களை மறந்து இறை6 உரையில் அவர் காட்டிய வழியில் சென்று அவரை இந்து சமயப் பேரவையினரின் இவ்விழா சிறப்புற வ மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்

ன் ஆச்சிரமம் Aachchiramam
Fயுரை
தொடக்கிவைத்த ஆத்மஜோதி மலருக்கான மணிவிழா டகின்றேன். தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் ர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார் தாம் க்கு இவ்வுண்மையையே தந்து நிற்கின்றது. இன்னின்ன ஆத்ம ஒளி கைவரப்பெறுவதாகின்றது. மெய்ப்பொருளைக் துக்களை வழங்கிக் கொண்டு வருகின்ற ஆத்மஜோதி சைவநிதி உலகமெல்லாம் விளங்கப் பெறுவதற்கு எமது டும் ஞானபண்டிதனான செல்வச்சந்நிதி முருகனின்
த்துரை
வபாலகுருக்கள்
ஆலய பிரதம சிவாச்சாரியார்
க்கும் திருமுறை மாநாடு நடத்தும் நிர்வாகிகளுக்கும் ஆத்மஜோதி முத்தையா அவர்களை நினைவுகூர்ந்து லோருடைய கரங்களிலும் தவழ இருப்பது குறித்து *றும் பிரார்த்தித்து அவர் சமயத்தில் காட்டிய வழியை ர் ஆலயம் ஒன்றுக்கு சமய சொற்பொழிவு வந்தபோது மத்து யாகம் செய்தார்கள். நானும் ஓர் சிவாச்சாரியார். பில் வந்துவிட்டது. ஐயா வந்தபோது குருமார்கள் ஐயா கூறினார் வெள்ளம் போய்விடும். நீங்கள் பூசை படி அவருடைய வாக்குத் தெய்வீக வாக்கு. ஒருவன் போது ஓர் கொடியை பற்றிவிட்டான். கொடி தைரியம் ாடிய புலிகள். கொடியோ அறுந்தால் அவன் நிலமை ஒரு சொட்டு அவன் வாயில் வீழ்ந்தது. அந்த நேரம் அவன் கடவுளை நினைத்தான். அதன் பலன் அவன் னது சமயம். கிணறு பூமியில் பிறப்பு. கொடிய புலிகள் ட்டு சமைய பெரியார்கள் தருகின்ற தேன். அதைச் பனை அடையலாம். இவை ஆத்மஜோதி ஐயா அறிவு மதிப்போம். அவர் காட்டிய வழியில் செல்லுகின்ற ாழ்த்தி ஆசி கூறுகின்றேன்.
6) Tib

Page 15
ઈી சைவ சித்தார் Saiva Sidhdha
தோற்றம்(Est 1008-50 Elm Drive East, M Email: saivamanram(a)gmail.c
“ஆத்மஜோதி” அகவை
கனடாவில் ஒன்ராரியோ இந்து சமயப் பேரவை ெ சஞ்சிகை 1948 முதல் சைவப்பெரியார் திரு நா. முத்தையா பெரியார் திரு க. இராமச்சந்திராவை கெளரவ ஆசிரியர வெளிவரத் தொடங்கியது. ஆத்மஜோதியின் உந்துசக்தியா 1965 இல் சிவபதம் அடைந்தார். அதன் பின்னர் சை முழுப்பொறுப்பையும் ஏற்று திறம்பட செயலாற்றி வந்தார். கலவரத்தால் ஆத்மஜோதி காரியாலயம், அச்சுக்கூடம் எ6 வருடங்களாக சைவத்தையும் தமிழையும் மக்களிடையே பர தடைப்பட்டது.
சைவப்பெரியார் ஆசிரியர் முத்தையா அவர்களின் எ சிறுவர்களையும் கவரும் எழுத்து நடையும், கதைகள் மூ வைக்கும் திறனும், தோத்திரங்களையும் சாத்திரங்களையு மற்றும் அவர் நடத்தி வந்த இல்ல வழிபாடுகளும், கூட்டு வழி பணிகள் மக்களிடையே அவரின் ஆளுமையை எடுத்துக் காட் நல்ல வரவேற்பு கிடைத்தது. காலப்போக்கில் ஆத்மஜோதி
பின்னர் 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் முதல் அவர்களின் சீடர்களில் ஒருவரான திரு. ஞானகாந்தன் வெளிவரத் தொடங்கி 1995 ஆனி வரைதொடர்ந்து வெளி
அதன் பின்னர் ஒன்ராரியோ இந்துசமயப் பேர6ை கந்தவனம் அவர்கள் பிரதம ஆசிரியராகவும், திருவாளர்கள் ஆகியோர் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், கெளரவ ஆசிரி வைத்திய கலாநிதி இ. இலம்போதரன் அவர்களும் அ6 சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இவ்விதழில் சைவசமயம், தமிழ், திருமுறைகள், சி சித்தர்கள், கலைகள், புராணங்கள், இதிகாசங்கள், கனடா குருபூசைகள் போன்ற பல விடயங்கள் சுவையாகவும், வகையில் வெளிவருகின்றன. சென்ற காலத்தின் பழுதிலாத் கடந்த அறுபது ஆண்டுகளாக பல இடர்களையும் தாண்டி தொடர்ந்து பல நூற்றாண்டுகள் சைவசமய உயிரொளி பரப் தளரா முயற்சியோடு தொண்டாற்ற, சிவகாமி உடனுறை நட அன்பே சிவம்.
 
 

9 3த மன்றம், கனடா htha Manram, Canada blished): 1-12-1995
ississauga, ON, Canada. L5A3X2 ΟIY). Fax/Tel: (905) 566-4822
அறுபது வாழ்த்து
வளியிட்டு வரும் "ஆத்மஜோதி” என்னும் சைவசமய அவர்களை ஆசிரியராகக் கொண்டும், சைவசித்தாந்தப் ாகவும் கொண்டும், இலங்கை நாவலப்பிட்டியிலிருந்து க விளங்கிய பெரியார் திரு இராமச்சந்திரா அவர்கள் வப்பெரியார் ஆசிரியர் நா. முத்தையா அவர்களே இலங்கையில் 1983 யூலை மாதத்தில் ஏற்பட்ட இனக் ன்பன அழித்தொழிக்கப்பட்டன. அதனால் முப்பத்தாறு ப்புவதற்கு அரும்பணி ஆற்றிவந்த சஞ்சிகை வெளியீடு
ளிய இனிய நடையும், பெரியோரையும், பாமரர்களையும் லம் தத்துவக் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய |ம் எடுத்து விளக்கும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும், பாடுகளும், பாதயாத்திரைகளும் போன்ற பன்முகப்பட்ட -டுவனவாகும். அதனால் மக்களிடையே ஆத்மஜோதிக்கு
அவருடைய பெயருடன் இணைந்து விட்டது.
மீண்டும் ஆத்மஜோதி ஆனது, ஆசிரியர் முத்தையா அவர்களை இதழாசிரியராகக் கொண்டு கனடாவில்
வந்தது.
வயினரின் முயற்சியால், கவிஞர் கலாநிதி திரு வி. ச. திருநடராசா, செ. சோமசுந்தரம், சிவ முத்துலிங்கம் யர்களாக பேரறிஞர் முருகவே பரமநாதன் அவர்களும், மையக்கொண்டு 11-06-2000 இல் இருந்து காலாண்டு
த்தாந்த சாத்திரங்கள், நாயன்மார்கள், அருளாளர்கள், விலும் உலகிலும் நிகழும் சைவகலாச்சார நிகழ்வுகள், எளிமையாகவும் எல்லோரும் வாசித்து உணரக்கூடிய திறம் பேணப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டு வருகிறது.
சைவசமய ஒளி பரப்பி வரும் ஆத்மஜோதி, மேலும் ப, ஆசிரியர் குழுவினரும், இந்துசமயப் பேரவையினரும் ாசப் பெருமான் திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறோம்.
தி. விசுவலிங்கம் தலைவர், சைவ சித்தாந்த மன்றம், கனடா நிர்வாக ஆசிரியர், அன்புநெறி.

Page 16
நா. நடேசன், இ நாவலப்பி
நமது சைவசமயம் மிகப் பழமையும் பெருமை காலதேச வர்த்தமானங்களால் மாறுபடாமல், என்றும் வருகின்றது. இத்தகைய பழம்பெரும் சமய உண ஆத்மஜோதி அரும்பாடுபட்டது. அப்பணியைக் கட ஆர்வத்துடன் தொடர்வதை யாம் அறிவோம்.
பிற சமயத்தவர்கள் தங்கள் தங்கள் சமய நிலையில், நாமும் நமது இந்து சமயத்தை வளி ஞானசுரபியால் கனடா நகரில் அங்குரார்ப்பணம் ெ செய்துவரும் பணிகள், மிகவும் பாராட்டத்தக்கன6 வழியில் ஒன்றுபட்டு உழைத்து வெற்றிகாண எல்ல மணி விழா காணும் அன்பர்கள் பாக்கிய ச “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற முத்தையா அவர்களின் எண்ணக்கருவைப் பாரெல் வாழ்க! என வாழ்த்துகிறேன்.
6
என்னை விட்ட
ஏ. முத்து
தலைவர் A அதிபர், ஒமேகா ரேடேர்ஸ், கொழும்பு, மற்
ஆத்மஜோதி என்றாலே என் நினைவுக்கு வருட இணைந்து தோட்டம் தோட்டமாகச் சென்று கூட்டுப்பிர என் நெஞ்சை விட்டகலவில்லை.
நாவலப்பிட்டியில் ஒவ்வொரு வருடமும் மார்க மூலகர்த்தா அவரே ஆவர். அத்தினங்களில் அதிகா6ை 4:30 மணிக்கு பஜனை ஆரம்பித்து ஒரு நாளைக்கு வந்தடையும். இப்படியாக ஏறக்குறைய முப்பதாண்டு ஆத்மஜோதியுடன் எனக்கு நெருங்கிய, பிரிக்க முடியா ஆத்மஜோதி சஞ்சிகை மாதம் தோறும் வெகு ஆண்டு இனக்கலவரம் உருவாகி ஆத்மஜோதியை ஒ மீண்டும் ஆத்மஜோதி ஆசிரியரின் அரும்பெரு எனினும் அப்பணியை கனடா வாழ் இந்து சமயப் பேர அவர் கருதினார் போலும்.
கனடா வாழ் இந்து மக்களின் இதயங்களில் ஏ கொழுந்து விட்டெரியச் செய்தார். அவர் பூத உடன் ஆத்மஜோதியின் சிந்தனைகள் ஆத்மஜோதி பத்திரிை தங்கள் பணி இறைபணியே. அதுமேன்மேலு வாழ்க் வையகம். வளர்க ஆத்மஜோதி!
 

சியுரை
|ளைப்பாறிய அதிபர் ட்டி, இலங்கை
யும் வாய்ந்தது. பரந்து விரிந்த கொள்கையை உடையது.
நிலைபெற்று சனாதன மதமாகச் சிறந்தோங்கி விளங்கி ாமைகள் மக்களிடையிற் பரவி நலம் விளைவிப்பதற்கு ந்த பத்தாண்டுகளாக கனடா இந்து சமயப் பேரவையும்
பத்தை வளர்ப்பதற்கு, பல்லாற்றாலும் பாடுபட்டு வரும் ார்க்க முயலுதல் இன்றியமையாததாகும். குறிப்பாக செய்யப்பட்ட ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையினர் பாக உள்ளன. ஒவ்வொரு அடியவரும் ஏதோ ஒரு Tம் வல்ல அகிலாண்டேஸ்வரி அருள்பாலிப்பாளாக! ாலிகள்.
அப்பர் வாசகத்தை அடியொற்றி வாழ்ந்த ஆத்மஜோதி லாம் பரப்பும் பேரன்புப் பெரியோர்கள் யாவரும் வாழ்க!
NILDUILb
கலா ஆத்மஜோதி
க் கிருஷ்ணன்
.V.S. நிறுவனம் றும் பூரீ சக்தி கிறைண்டிங் மில், நாவலப்பிட்டி
பவர் அமரர் நா. முத்தையா அவர்கள்தான். அவர்களோடு ார்த்தனை மூலம் மக்களுக்கு ஆற்றிய பணிகள் இன்றும்
ழி மாதத்தில் திருவெம்பாவை பஜனை நடைபெறுவதற்கு v 4:00 மணிக்கு எழும்பி குளித்து, மாரியம்மன் ஆலயத்தில் 5 ஒரு வீதியாக 5:30க்கு மீண்டும் அதே ஆலயத்தை }கள் இத்தொண்டில் ஈடுபட்டிருப்பார். அக்காலம் முதல் ாத ஒரு பாச உறவு இருந்து வந்தது. சிறப்பாக வந்து கொண்டிருந்த கால கட்டத்தில், 1983ஆம் ரு சொற்ப காலம் துயில வைத்தது. ம் முயற்சியால் ஆத்மஜோதி வெளிவரத் தொடங்கியது. வைத் தொண்டர்கள்தான் திறம்படத் தொடருவார்கள் என
ற்கெனவே இருந்த ஆன்மீக உணர்வுகளைத் தட்டி எழுப்பி )ல நீத்த போதும் ஒவ்வொருவர் இதயங்களிலும் புகுந்த க வாயிலாக வெளிவருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ம் தொடர வேண்டும் என்பதே எனது பேரவா.
1O

Page 17
ஆத்மஜோத மக
வாழ்த்துச் சிவமயச் செல்வி பரமேஸ்வரி
நமச்சிவாய வாழ்க! நா
கடவுள் காலங்கள் தோறும் மகான்களை இப்பூ நல்லருளையும் நல்லாசிகளையும் நன்மைகளையும் வழ சைவசமயமும் இரு கண்களாகும். இவ்விரண்டையும் வள் ஈழத்தமிழர் நாட்டில் பிறந்து வளர்ந்து ஆசிரியராகத் தொ இவர் சைவசமயத்தையும் தமிழையும் வளர்க்க அரும் இலங்கை நாவலப்பிட்டியில் நா. முத்தையா சுவாமிகளால் 1 வெளியிடப்படும் சமய, சமூக கலாச்சார கட்டுரைகள் |
முத்தையா என்ற நாமம் சூட்டப்பட்டது.
அடியேன் மாணவியாகப் படிக்கும் காலத்திலும் கொன்றை வேந்தன் ஆகிய ஒளவையாரின் நூல்களை அடுத்தபடியாக எனது உள்ளத்தை ஈர்த்த சஞ்சிகை ஆத் எப்போ வரும் என ஆவலாகி இருப்பேன். யாழ்ப்பாணக் கு நான் சந்திக்கவில்லை. ஆனால் மானசீகமான உத்த கொண்டேன். தெய்வாதீனமாக அடியேன் கனடா வந்தபெ சொற்பொழிவுகளைச் செவிமடுக்கவும் சந்தர்ப்பங்கள் ஏ வீட்டில் சொற்பொழிவாற்ற வந்தபொழுது ஒருவரை . தொண்டுகளைச்" செய்ய வேண்டுமென அறிவுறுத்தி 5 விளக்கினார். கனடாவில் இந்து சமய பேரவையை உரு அயராது உழைக்கும் சீடர்களை நிர்வாகத்தில் அமர்த்த
இலங்கையில் இனவாதப்போர் மூண்ட பொழுது நூற்றுக்கணக்கான ஆத்மீக நூல்களும் தீக்கிரையாக்கப் கனடாவிலுள்ள ஈழத்தமிழர்கள் கை கொடுத்து வரவே சஞ்சிகை புத்துயிர் பெற்றது. ஒரு கும்பாபிஷேக விழாவி சென்றபொழுது அவர்களின் ஆத்மா ஜோதியில் கலந்து அடைந்த அடியார்கள் சுவாமிகளின் அடியொற்றி ஆத்மா ஆத்மதிருப்தி அடைகிறார்கள். அதில் அடியேனும் ஒரு
சுவாமிகளின் ஆவி பிரிந்த மூன்றாம் நாள் : பிள்ளைகளுக்கு தமிழையும் சமயத்தையும் இலவசமா ஒளவையாரின் அறிவுரையை உள்ளத்தில் ஆழமாகப் ஆணை வீண் போகவில்லை. பிறந்த நாட்டிலோ அகதி முடியாத தொண்டினை, சிவப்பணிகளை தாய்நாடாகிய சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தியும், அமெரிக்காவி கருணாமூர்த்தியாகிய ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பு கொண்டிருக்கிறார்கள்.
அறுபதாம் அகவையை அடையும் "ஆத்மஜோதி” இறை அருளைப் போற்றுகிறேன்
வணக்க
9

fer Lovi
செய்தி
சரவணமுத்து - கனடா தன் தாள் வாழ்க!
வுலகுக்கு அனுப்பி அவர்கள் மூலம் உலகத்துக்கு ங்குகின்றார். தமிழ் மக்களாகிய எமக்குத் தமிழும் ர்க்கவென்றே ஆறுமுகநாவலர் அவதரித்த இலங்கை ண்டாற்றிய பெருமகனார் நா. முத்தையா சுவாமிகள் பாடுபட்டவர். "ஆத்மஜோதி” என்னும் சஞ்சிகை 948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சஞ்சிகையில் பலராலும் போற்றப்பட்டு ஆசிரியருக்கு ஆத்மஜோதி
ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலும் ஆத்திசூடி அலசி ஆராய்ந்து படித்தும் படிப்பித்தும் வந்தேன். நமஜோதியாகும். ஒரு நூலைப் படித்தபின் அடுத்தது குடாநாட்டில் பிறந்து வளர்ந்தும் இந்த நல்லாசிரியரை ம குருவாக உள்ளத்தில் உவகையுடன் ஏற்றுக் பாழுது இந்த மகானைச் சந்திக்கவும் அவர்களுடைய ற்பட்டன. ஒரு நாள் எனது சகோதரர் ஒருவரின் ஒருவர் அறிமுகப்டுத்திக் கொண்டு சுயநலமற்ற அவற்றை வளர்க்க வேண்டிய வழிமுறைகளையும் நவாக்கி தான் இட்ட பணிகளைச் சிரமேற் கொண்டு நினார்.
சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்ட அச்சுக்கூடமும் பட்டன. மனமுடைந்து கனடா வந்த பெரியாருக்கு பற்றனர். இவர்களின் உதவி மூலம் 'ஆத்மஜோதி” ல் கலந்து கொள்வதற்காக மொன்றியல் நகருக்குச் இறைபதம் அடைந்தது. ஆற்றொணாத் துயரத்தை ஜோதி சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியீடு செய்து நவர்.
அடியேனின் கனவில் தோன்றி "அம்மா இங்குள்ள கக் கற்பியுங்கள். அறம் செய்ய விரும்பு என்ற பதித்துக் கொள்ளுங்கள்” என்றார். அவர்களின் யொகத் தஞ்சம் புகுந்த கனடா நாட்டிலோ செய்ய ப இந்தியாவில் செய்வதற்கு எல்லாம் வல்ல ஸ்ரீ 7ல் குடிகொண்டு கோயில் கொண்டருளிய அவ்யாய மனும் அடியேனின் குருநாதரும் வழிவகுத்துக்
சஞ்சிகை வாழ்க! வளர்க! என் நெஞ்சார வாழ்த்தி
தம்

Page 18
ஆத்மஜோதிக்கு தீவகன் -
6b5ITU
முத்தையா ஆசிரியருக்கும், ஆத்மஜோதிக்கும் அவர் ஆசிரியராக மலைநாட்டிலே முழுக்காலமும் ப
அக்காலம் இலங்கையும் சுதந்திரம் பெற்றது. கண்ணையும் சைவம் என்னும் கண்ணையும் திறக்க
அதே காலம் நயினாதீவைச் சேர்ந்தவரும், இல்லறஞானியும், சுவாமி சித்தானந்தரின் மதிப்பு மிச்
இருவரும் ஒருமனப்பட்டே நாவலப்பிட்டியில் வெளிவிட்டனர். ஆசிரியர் முத்தையா தமிழையும், சை கீழ் நிலைமையை உயர்த்தி யதோடு அந்நாட்டு மக்
ஆசிரியரின் விடாமுயற்சியும் ஏழை, எளிய பதவி பேர் புகழ் தேடாமையால் 'ஆத்மஜோதியை க
எதிர்பாராத பல போராட்டங்களால் அச்சகப் மலரும் தன் மணம் பரப்ப இயலாமல் போனது. எலி நோகவில்லை. அவரிடம் அறியாமை இல்லை. அ இருந்து ஜோதி துலங்கிக் கொண்டே இருந்தது. பிரிந்தும் விட்டனர்.
இறைவன் கருணையும் மகான்கள், ஞானிகள் சேவைகளும், கைதடி அனாதைச் சிறுவர்களைப் பரா ஆணிவேராகிவிட்டது. கனடா நாட்டில் விழுதாகி வி
நாம் இறைவனிடம் கேட்பது. பொன்னும் டெ பூமாலை பொன்னாடை கேட்பார்கள். ஆனால் முத்தை கேட்டது அன்பும், அறமும், அருளும்தான். அதன்ப எல்லாம் இழந்து புலம் பெயர்ந்து வந்த நாம் வா அவருக்கும், ஆத்மஜோதி மலருக்கும் கிடைக்காது,
தான் பெற்ற ஆன்மீக செல்வத்தை "ஆத்மஜே கொள்ள வேண்டும் என்ற இறையருள் தூண்டியுள் ஆத்மஜோதியேதான்.
கனடா நாட்டில் அவர் பெயரில் ஓர் ஆத்மஜோ முன் அட்டையில் அவருடைய சிறுபடமும் இடம்பெறவு
பிரகாசிக்க வேண்டும் என்பதும் என் ஆவலும் பிரார்த்
இதை முன் நின்று நடாத்துவோருக்கு என் ப
 
 

அறுபதாம் ஆண்டு
தாசிவம் சேவியர் றோ, கனடா
ஏற்பட்டுள்ள உள்ள உறவு அதனையும் கடந்து நிற்கிறது. ணியாற்றினார்.
மலைநாடு சென்றவர் அந்நாட்டு மக்களின் கல்வி என்னும் ஆசை கொண்டார் அடிமையானார்.
இலங்கைப் புகையிரத சேவையில் கடமையாற்றியவரும் க சீடருமாகிய பூரீ இராமச்சந்திராவினால் கவரப்பட்டார்.
அச்சுயந்திரசாலை அமைத்து 'ஆத்மஜோதி சஞ்சிகையை Fவத்தையும் இருகண்களாக நேசித்து மலைநாட்டு மக்களின் களின் உள்ளத்தில் இடம்பிடித்துக் கொண்டார்.
மக்களில் பற்றும் பாசமும், பேராசை பெரும்பதவி பட்டம் ாதலித்துக் கொண்டார். அதைப் பரப்பினார்.
b சேதப்பட்டதாக அறிகிறேன். அதனால் ஆத்மஜோதி ஸ்லாம் இறைவன் செயல் எனத் திடம் கொண்டார். மனம் றிவு இருந்தது. இறைநம்பிக்கை எல்லாவற்றையும் மேவி
இல்லற ஞானியும், துறவற ஞானியும் காலமாற்றத்தால்
ܐ
ரின் தொடர்பும், நல் ஆசியும், சமய சமுதாய பொதுநலச் மரித்து ஆன்மீக போதனையின் சாதனையும் ஆசிரியருக்கு
l-gil.
ாருளும் போகமும்தான். சிலர் பட்டம் பதவி, பாமலை நயா ஆசிரியர் துறவறஞானி. தூய உள்ளம் கொண்டவர் டியே ஆத்தமஜோதி மணிவிழா கனடா நாட்டில், அதுவும் ழும் நாட்டில் கொண்டாடக் கிடைத்தது. இறைவனால் கிடைத்த பெரும்பாக்கியமே.
ஜாதியை’ தன் உடன் பிறந்து வாழும் சகலரும் பகிர்ந்து Iளது. இதுவே நாம் காணும் இறைவன் கருணை -
தி அச்சகமும், அதன் மூலம் ஆத்மஜோதி மலரும் மலரின் ம் வேண்டும் என்பதும் மாபெரும் கோபுர தீபமாக ஜோதிசுடர் தனையும்.
ாராட்டும் நன்றியும் முயற்சியே உயர்ச்சிதரும்.

Page 19
ஆண்மீகத் சித்தாந்தரத்தினம், சைவ க. கணேச6
இல்லறத்தில் ஈடுபடாமல் வாழ்நாள் முழுவதையும் இறைபணியில் கழித்தவர் ஆத்மஜோதி முத்தையா அவர்கள். இறையருளை வேண்டிய அவருக்கு பல ஞானிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனப் பலருடன் அவரின் ஆன்மீகத் தொடர்பு விரிந்தது. அவர் கொண்ட அனைத்துத் தொடர்புகளும் ஆன்மீகம் சார்ந்தவையாகவே இருந்தன.
முத் தையா அவர்கள் பிறந்த ஊர் யாழ்ப்பாணத்து ஏழாலை எனும் கிராமம். அக்கிராமமும் அதன் சூழலும் சிவம் பெருக்கும் சீலர்களைப் பயந்துள்ளன. சி.வை தாமோதரம்பிள்ளை, பண்டிதர் கலாநிதி கந்தையா போன்றோர் ஏழாலையில் பிறந்த வர்கள். காசிவாசி செந்திநாதையர் அயற்கிராமமான குப்பிளானில் தோன்றினவர். பிறந்து வளர்ந்த மண்ணும் சூழலும் ஆத்மஜோதியின் அருள்ஞானத் தேடலுக்கு அடித்தளம் அமைத்தன.
"ஆத்மஜோதி’ என்ற ஆன்மீக இதழை வெளியிட்டதன் மூலம் அவருக்கு 'ஆத்மஜோதி முத்தையா என்ற பெயர் நிலைத்தது. பெயருக்கேற்பவே இந்தப் பெரியவர் முகத்தில் ஆன்மீகஞானம் ஒளிர்ந்தது. நீறு பூத்த நெற்றி, பழகியவர் போல் அன்பு கெழுமிய பார்வையால் எவரையும் கவரும் பண்பு, அவரின் அகப்புறத்தூய்மையை வெளிப்படுத்துவதாக அமைந்த வெள்ளை நிறக் கதர் ஆடை, எதனையும் ஒளிவுமறைவின்றிப் பேசும் இயல்பு, - இவை அவரின் ஆளுமைக் கூறுகள்.
சிறுவயதில் இவரை நான் முதலில் கண்டது ஒரு கோயில் திருவிழாவில். செல்வச்சந்நிதி கோயிலின் முன், கூடிநின்று கும்பிட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இவரும் நின்று கும்பிட்டார். அரோகரா என்ற ஒலியும், பரந்தெரியும் கற்பூர வெளிச்சமும் பரவியிருந்தன. அந்த ஒளியில் தெரிந்த கம்பீரமான, திருநீறு பொலிந்த உருவம் எனது தந்தையை நெருங்கி உரையாடியது. இவர்தான் முத்தையா ஆசிரியர்,' என்று சொல்லக் கேட்டேன். சிறுவயதில் கண்ட இந்த ஆசிரியரே பின்னாளில் சிவம் பரப்பும் செம்மலாக மலர்ந்து ஆத்மஜோதியாக ஒளிவிட்டதை அறிந்தேன்.
ஆத்மஜோதியின் ஆன்மீகத் தேடலில் அருளாளர் பலரின் தொடர்புகள் அவருக்கு ஏற்பட்டன. ஈழத்திலும் இந்தியாவிலும் அவர் மேற்கொண்ட ஆன்மீகப் பயணம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகள் என்று பல நாடுகளில் தொடர்ந்தன. அவரின் ஆன்மீகப் பயணத்தில் பல ஞானிகளின் தொடர்பால் அவர் பயனடைந்தார். அவரின் தொடர்பால் பலர் பயனடைந்தனர். இத்தொடர்புகளின் பயனாகப் பல கட்டுரைகளையும் நூல்களையும் அவர் எழுதினார்.
-(13
G
(
(
 

தொடர்பு சித்தாந்த கலாநிதி பிங்கம்
ஆத்மஜோதி சஞ்சிகையை வெளியிட்டார். இவ்விதழ் ாங்கள் வீட்டுக்கும் வரும். சமய குரவர்கள், அருளாளர், நானியர் குறித்த கட்டுரைகளும் பிறவும் ஆத்மஜோதியில் இடம்பெற்றன. இளமைக்காலத்தில் அவற்றைப் படித்துப் பயனடையும் பேறு கிடைத்தது.
தமிழகத்தில் அவர் தரிசித்த ஞானிகளில் இரமண மகரிஷியும் ஒருவர். ஆன்மீக வளர்ச்சியில் அதிஉயர் நிலையில் இருந்து இறையருளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் இந்த மகான். நான் யார்? என்ற கேள்வியை எழுப்பி, நான் உடம்பல்ல, மனம் அல்ல, அதனுள் தோன்றும் எண்ணம் அல்ல' என்று, இது அல்ல, இது அல்ல' என்ற முறையில் ஒவ்வொன்றாகத் தவிர்த்து, தனது உண்மைச் சொரூபம் ஆன்மா எனக் கண்ட மகான் இரமணர். 'ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாய் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” என்ற திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்தது அவர் வாழ்வு. இவர் முன்னிலையில் இருப்பதாலேயே பலர் ஆன்மீக அனுபவம் பெற்றார்கள். நோய்பிணி தீர்த்தவர்களும் பலர்.
இரமணமகரிஷிபோல் ஈழத்திலும் அருளாட்சி செய்தவர் யோகசுவாமிகள். இரமணருடன் இவரையும் தரிசித்து ஆன்மீக வளர்ச்சி பெற்ற பெரியாராக முத்தையா அவர்கள் விளங்கினார். இரமணமகரிஷியில் அதிக ஈடுபாடு கொண்டு ܨܡܡܐ ஆன்மீகப் பணிசெய்தவர் கொழும்பு இராமச்சந்திரா என்றழைக்கப்படும் திரு. க. இராமச்சந்திரா அவர்கள். ஆத்மஜோதி முத்தையாவின் ஆன்மீகத் தேடலுக்கும் பணிகளுக்கும் துணைபுரிந்து வழிகாட்டியாக விளங்கிய இவர் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பணிபுரிந்தவர். சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் விளங்கினார். ஈழத்திலும் இந்தியாவிலும் பல obsT60sdb6061Tg5 g5sdgg5 Tri. Religious Digest (3LDuu மஞ்சரி) என்னும் ஆன்மீக சஞ்சிகையை அவர் வெளியிட்டு வந்தார். மேலை நாடுகளுக்குச் சென்று சமய உரைகள் ஆற்றினார். மேல்நாட்டு அன்பர்கள் பலர் அவரை நாடி ஆன்மீக விளக்கம் கேட்டனர். இப்பெரியாரை நான் சந்தித்தது ஒரு சுவையான நிகழ்வு. இலங்கை மின்சாரசபையில் நான் கடமை ஏற்றபோது என்னுடன் சிங்கள அன்பர் ஒருவர் பொறியியலாளராகப் பணிபுரிந்தார். அப்பொழுது நான் இளைஞன் அவர் முதியவர். அவருக்கு ஆன்மீகம் சோதிடம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ஒரு நாள் உரையாடும்போது, தான் வசிக்கும் இடத்தில் இராமச்சந்திரா என்று ஒரு பெரியவர் இருக்கிறார் ’ அவர் பல மகான்களைக் கண்டிருக்கிறார், சோதிடம் நன்கு தெரிந்தவர், அவரும் ஒரு மகான், என்று கூறி, அவரை நான் சந்திக்க வேண்டும் என வேண்டினார்.

Page 20
கொழும்புப் புறநகர்ப் பகுதியில் பத்தரமுல்ல என்ற இடத்தில் இவரின் வீடு இருந்தது.
ஒருநாள் இரவு அடைமழை பெய் து புயலடித்தது. இதனால் இப்பொறியியலாளரின் வீட்டுச் கூரையின் ஒரு பகுதி மேற்கிழம்ப வீட்டுக்குள்மழை கொட்டியது. இந்த நேரத்தில் அருகில் (தலங்கம என்ற இடத்தில்) வசித்த இராமச்சந்திரா, அவரின் வீட்டினுள் வெள்ளம் புகுந்ததாகவும் அவர்கள் மழையில் நனைவதாகவும் கனவு கண்டார். தனது வீட்டு வேலையாளை எழுப்பி அங்கு சென்று பார்க்கும்படி பணித்தார். ஆனால் அவரின் துணைவியார் கனவில் காண்பதெல்லாம் உண்மையல்ல எனக் கூறி அவர்களை அந்த நேரம் போய் எழுப்ப வேண்டாம் எனத் தடுத்து விட்டார். இராமச்சந்திரா கண்ட கனவு உண்மையில் நடந்தது என்பது மறுநாள் தெரியவந்தது. இந்தச் செய்தியை எனது சிங்கள நண்பரான பொறியியலாளர் கூறினார். பின்வரப் போவதை முன்னரே அறிவதும், தொலைவில் நடப்பதை உணர்வதும் ஆகிய ஆற்றல்கள் இராமச்சந்திரா அவர்களுக்கு உண்டு. இதனை அவரின் உரைகள் மூலமும் பிறர் சொல்லக்கேட்டும் தெரிந்து கொண்டேன்.
ஒருமுறை குறிப்பிட்ட பொறியியலாளர் தனது காரில் என்னை ஏற்றி இராமச்சந்திரா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பல விடயங்கள் பற்றி உரையாடினோம். தொழில், ஆன்மீகம், சோதிடம், ஞானிகள் என்று எமது உரையாடல் விரிந்தது. இடையிலே இராமச்சந்திரா அவர்கள் என்னைப் பார்த்து, சாதகத்தில் எனது இராசி என்ன என வினாவினார். நான் அதனைச் சொன்னேன். அப்படித்தான் இருக்க வேண்டுமெனத் தான் நினைத்ததாகவும், அதற்குரிய இலக்கணங்கள் என்னில் இருப்பதாகவும் கூறி விளக்கினார். அவரின் தோற்றம் வாட்டசாட்டமாக இருந்தது. அமைதியான புன்னகையுடனும் எடுப்பான தோற்றத் துடனும் முகம் காட்சியளித்தது. கிரேக் கஞானிகள் போன்ற 6J Lọ 61 LĎ . தனுராசிக்காரருக்குள்ள பொதுவான பண்புகள் இவை. இதனால், “உங்கள் இராசி தனுவா?” எனக் கேட்டேன். 'ஓம்' என்று பதிலளித்தவர் ஒரு கணம் என்னை உற்றுப்பார்த்து புன்னகைத்தார். இங்ங்ணம் தொடங்கிய எங்கள் தொடர்பு அவர் சிவபதமடையும் வரை நீடித்தது. நான் கொழும்பில் வேலை பார்த்த நாட்களில் இப்பெரியாரை அடிக்கடி சென்று பார்த்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தான் தரிசித்த மகான்கள் பற்றி எனக்குக் கூறுவார். ஆத்மஜோதி முத்தையா பற்றியும் இரண்டொரு முறை கூறினார். எனது திருமணத்தின் பின் அவர் தன் துணைவியாருடன் யாழ்ப்பாணம் வந்து எங்களை ஆசீர்வதித்தார். நான் யாழ்ப் பாணத் தி லும் வேறு இடங்களிலும் வேலைபார்த்தபோது, கொழும்பு செல்லும் வேளைகளில் அவரின் வீடு சென்று அவரைப் பார்ப்பதுண்டு. சென்ற வேளைகளில் ஏதாவதொரு ஆன்மீக நூலைத்தந்து

வழியனுப்புவார்.
ஒரு முறை நான் மனைவியுடன் தமிழகத்துத் தலங்களைத் தரிசிக்கப் புறப்பட்டேன். போகுமுன் 96) sail of Igb(55 Gay 651(&BTib. Day to Day with Baghavan’ என்ற நூலைத் தந்தார். அதன் அட்டையில் இரமண மகரிஷியின் முகப் படம் அழகுற அமைந் திருந்தது. இப்படம், பார்த்தவர் மனதைவிட்டகலாத ஒன்று. இந்நூலைப் படித்துக் கொண்டே எமது பயணத்தை மேற்கொண்டேன்.
பயணத்தின்போது காஞ்சிப் பெரியவர் என்று போற்றப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களைத் தரிசிக்கச் சென்றோம். அப்பொழுது அவர் சின்னக் காஞ்சிபுரம் என்ற இடத்தில் இருந்தார். நாம் சென்ற வேளை ஒரு சிறுகோயிலில் இருந்து பூசை செய்து கொண்டிருந்தார். அவர் அன்று மெளனவிரதம் என்றும், எவருடனும் பேசமாட்டார் என்றும் அங்குள்ளவர்கள் சொன்னார்கள். அங்கிருந்த வாளிக் கிணற்றில் தண்ணிர் எடுப்பதற்காக சுவாமியின் அணுக்கத் தொண்டர் (Uரீகண்டர் என்பவர்) வந்தார். அவரிடம், நாங்கள் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகவும், சுவாமியுடன் பேச விரும்புகிறோம் என்றும் கூறினேன். அவரும் சுவாமி மெளனவிரதமென்றும் மற்றையவர் போல் எங்களையும் வெளியில் நின்று வணங்கிச் செல்லுமாறு பதிலளித்தார். இந்த வேளை சுவாமி எழுந்து, தனது பாத்திரத்தில் தண்ணிர் எடுக்க அங்கு வந்து எங்களுக்கு முன்னே நின்றார். பூரீகண்டர் எங்களைப் பற்றி அவரிடம் சொன்னார். சுவாமி சில விநாடிகள் எங்களைப் பார்த்துவிட்டு, கண்மூடித் தியானித்தபின் தனது இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டார். அவரின் அருள் கனிந்த பார்வை, இராமச்சந்திரா எனக்குத் தந்த நூலின் அட் டையில் கணி ட இரமண மகரிஷியின் பார்வைபோலவே இருந்தது. அது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
மேற்குறிப்பிட்ட நூல் இரமணரின் ஆச்சிரமத்தின் நிகழ்வுகளின் நாட்குறிப்புக்களாக அமைந்தது. அதில் இடைக்கிடை, கொழும்பு இராமச்சந்திரா தனது சிறு பெண்குழந்தைகள் இருவருடன் வந்து தோத்திரம் பாடியதான குறிப்புக்கள் இருக்கின்றன. இராமச்சந்திரா தனது வீட்டிற்கு இரமணமந்திரம்’ என்று பெயர் வைத்திருந்தார். அங்கே அடிக்கடி கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும். பல அறிஞர்கள் பங்கு பற்றுவார்கள். கொழும்பில் நிற்கும் வேளைகளில் நானும் சென்று பங்குபற்றுவதுண்டு.
ஆத்மஜோதி சஞ்சிகையின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் முத் தையா அவர்களுக் குத் துணைநின்றவர் இராமச்சந்திரா அவர்கள். அவரின் ஆன்மீக அனுபவங்களைச் சேர்த்து இலங்கையில் ஒரு இல்லறஞானி’ என்ற நூலை முத்தையா அவர்கள் எழுதினார். இந்நூலைப் படித்த பின், ஆத்மஜோதி அவர்கள் இந்நூலை எழுதி நல்லதொரு பணியைச் செய்திருக்கிறார் என்று இராமச்சந்திராவிடம் கூறினேன்.
14

Page 21
ஆத்மஜோதி மணி 'அவருக்குச் சொன்னவைகள் எல்லாம் உங்களுக்கும் | சொல்லியிருக்கிறேன்' என்று அவர் பதிலளித்தார். எனது ஊழ்வினைப்பயன், அவர் சொன்ன செய்திகள் பல
பற் மனத்தில் தங்கவில்லை.
ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து யாழ்தேவியில்
கூ புறப்பட்டு இரவு கொழும்பை அடைந்தேன். காலையில் கண்விழிக்க முன் எனது மைத்துனியின் கணவர் என்னை எழுப்பி இராமச்சந்திரா காலமாகிவிட்டார் என்ற செய்தியைத் தெரிவித்தார். ஆன்மீக ஒளிவிளக்கொன்று அணைந்ததை அறிய மனம் கலங்கியது. அவரின் இல்லம் நோக்கிப் புறப்பட்டேன். 26-05-76 இல் 'இரமண
வே மந்திரம்' இல்லத்தில் அவரின் ஆத்ம சாந்திக் கிரியை
அ நடைபெற்றது. அன்றைய தினம் 'ஈழநாடு' இதழில்
செ எனது இரங்கல் கவிதையொன்று வெளிவந்தது. அதிலுள்ள ஒரு பாடல் கீழே தரப்படுகிறது. இது அவரின் ஆளுமையை ஓரளவு புலப்படுத்துவதாக
அ அமைந்துள்ளது.
ஆ அ!
உ.
இ
2
'தானறிந்த தவமுனிவர் தமையணுகித் தரிசித்து வளர்ந்த
ஞானி ஆனவரை அகிலத்தின் அமைதிக்கு உழைத்திட்ட அரிய தொண்டன் ஞானவரை ரமணமுனி உௗத்திருத்தி வழிநடந்த ஆத்மஞானி போனவரை அணைத்தான போதனைகள் அளித்திட்ட ஞானவள்ளல்'
6 6 : ெல மி 8
மு
தெ
டே
மு
அ
இராமச்சந்திராவின் வழியில் ஞானிகள், யோகிகள் என்று பலரை நாடி வாழ்ந்த முத்தையா அவர்களின் இறைபணி பல்வேறு நிலைகளில் பரந்தது. அவர் தனது போதனையாலும் சாதனையாலும் பலருக்கு வழிகாட்டினார். சமுதாய மேம்பாட்டுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர் அவர். தமிழீழத்தில் குண்டுகள் வீழ்ந்து உயிர்களும் உடைமைகளும் அழியும் வேளையில், அமைதியும் சமாதானமும் மலர வேண்டி அடியார்களைச் சேர்த்துப் பாத யாத்திரைகள் மேற்கொண்டார். நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழாத் தினத்தில் தான் பிறந்த கிராமத் திலும் அயற் கிராமங்களிலும் உள்ள அடியார்களைக் கூட்டிக் கூட்டுப்பிரார்த்தனை செய்து, நல்லூரை நோக்கி ஆண்டுதோறும் பாதயாத்திரை மேற்கொள்வதுண்டு. இவரின் தூண்டுதலினால் பிற இடங்களிலிருந்தும் இந்த யாத்திரைகள் தொடர்ந்தன.
பற்றற்ற துறவியாக வாழ்ந்த ஆத்மஜோதி அவர்களும் ஈழத்தில் எம் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களினால் மனம் கலங்கியதுண்டு. ஒரு முறை நல்லூர்த் தரிசனத்தின் பின், குப்பிளான் அன்பர் தர்மலிங்கம் என்பவருடன் யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்தார். அன்றைய எமது நிலைபற்றிக் கலந்துரையாடினார். மதிய உணவிற்குப் பின் எனது காரில், அவருக்குத் தெரிந்த அன்பர் ஒருவரைச்
சு6
ப6
அ
க!
15

21er prvi
திப்பதற்காக, ஊரெழுவிற்குக் கூட்டிச் சென்றேன். ரகும் பொழுது தமிழினத்திற்கு எதிரான வன்முறைகள் றிப் பேசிக்கொண்டு வந்தார். அகிம்சை வழியில் ன்று நாம் துன்பங்கள் தான் அனுபவிக்கிறோம் என்ற நினார். அவரின் உள்ளக் குமுறலை பளிப்படுத்துவதாக இது இருந்தது. பிற தமிழர்களைப் Tல் அவரும் பல துன்பங்களை அனுபவித்துள்ளார். ன்மீகப் பணி செய்வதற்குத் தகுந்த சாதனமாக இருந்த த மஜோதி நிலையமும் அச்சுக் கூடமும் ழிக்கப்பட்டன. அவரின் உள்ளம் எந்தளவுக்கு தனைப்பட்டிருக்கும்? ஆயினும் இறைபணியில் மைதி கண்டு தனது ஆன்மீகப்பணியை முன்னெடுத்துச் ன்ற இப்பெருமகனை உள்ளம் போற்றுகிறது. சைவ லகம் என்றென்றும் நினைவு கூரும்.
வயது முதிர்ந்த நிலையிலும் ஆத்மஜோதி வர்களின் ஆன்மீகப் பயணம் தொடர்ந்தது. அவர் ல்நாட்டுப் பயணத்தை மேற்கொண்டு பணிசெய்ய நப்பதைப் பாராட்டும் வகையில் ஏழாலையில் ஒரு ழா நடைபெற்றது. அதில் வழங்கப்பட்ட எனது ழ்த்துப்பாவில் ஒரு பாடல் வருமாறு:
ளர்வுற்று வயதேறா முதிர்ந்த மேனி
தளர்வறியா உளம்! வையம் நலங்கள் மேவ ளம்விழைந்து பணியாற்றும் கர்ம யோகி!
உயிர்குடிக்கும் குண்டுகளின் இடையில் ஈழம் ழைத்துவிட அமைதிபெற அழிவு நீங்க
தளராது தொடர்பாத யாத்திரைகள்! வளியுலகில் மேல்நாட்டுப் பயண மின்று!
விடையவனின் திருவருளால் என்றும் வாழ்க!"
மேல்நாடுகளில் ஆன்மீகப் பணி செய்த த்மஜோதியின் இறுதிப் பயணம் கனடா நாட்டில் டிவுற்றது. பயணம் முடிந்தாலும் அவரின் பணிகள் ல் அங்கு தொடர்வதைக் காணமுடிகிறது. அவரால் தாடக்கி வைக்கப்பட்ட ஒன்ராறியோ இந்து சமயப் பரவை கவிஞர் கந்தவனத்தைத் தலைவராகவும் சிவ. த்துலிங்கத்தைச் செயலாளராகவும் கொண்டு ளப்பரிய பணிகள் செய்கின்றது.
ஆத்மஜோதி முத்தையாவை முத்தையாச் வாமியாகக் கண்டு போற்றி அவரின் சீடராக இருந்து D பணிகள் செய்பவர் சிவ. முத்துலிங்கம் அவர்கள். வரின் வழிகாட்டலில் பல அன்பர்கள் கூடித் திருமுறை ற்றோதல், திருத்தலப் பயணம் முதலியவற்றை மற்கொள்கின்றனர். சமய மாநாடுகள் பிரசங்கங்கள் பிற பல நடைபெறுகின்றன. முத்தையா அவர்கள் மத்தில் வெளியிட்ட ஆதமஜோதி இதழ் இன்று னடாவில் காலாண்டு இதழாக வெளிவருகிறது. த்மஜோதி முத்தையா அவர்கள் மறைந்தும் மறையாத ன்மீக விளக்காக இன்றும் ஒளி செய்வதைக் எடாவில் காண்கிறோம்.
JUII;

Page 22
ஓம்
இல்லற ஞானியு
உடற்பசியைத் தீர்ப்பதற்காக மனிதன் வாழ்நா முழுவதும் போராடுகின்றான். உயிர்ப்பசியைத் தீர்த்து தன் ஆன்மாவைக் கடைத்தேற்ற வேண்டுமென் சிந்திக்கும் மனித குலம் அரிது. பல துன்பங்கள் துயரங்களினால் அல்லலுறும் மனித குலத்தை ஈடேற் வதற்கு மறைமுகச் சற்சங்கத்தை அளிக்கும் ஆன்மி சஞ்சிகை ஒன்று அவசியம் என்ற எண்ணக்கரு ஆன்மி தாகம் கொண்ட பெரியவர்களுக்கு மத்தியில் உதித்த உன்னதமான அந்த எண்ணக் கருவுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு முன்வந்தவர்கள் இருவ அவர்கள் இல்லறஞானியான சைவப்பெரியார் திரு. இராமச்சந்திராவும் துறவற ஞானியான ஆத்மீக வள்ள நா. முத்தையாவும் ஆவர். இருவரும் உலகம் போற்று மகாஞானியான இரமண பகவான் அவர்களா ஆட்கொள்ளப்பட்டவர்கள்.
தர்மம் குன்றி அதர்மம் தலைவிரித்தாடு வேளையில் சக்தி வாய்ந்த அவதாரங்கள், ஞானிகள் மகான்கள் பிறப்பிக்கப்பட்டுப் பூவுலகத்தை புனர்நிர்மாணம் செய்வது வழக்கம். அதேபோல ஆன்மீக புரட்சியைச் செய்வதற்கு பிறப்பெடுத்தவர்கள் தா கருவிலே திருவுடைய இப்பெரியவர்கள்.
ஞானிகளாகிய இவர்கள் இருவரும் 1948ஆ ஆண்டு ஆத்ம ஜோதி என்ற சஞ்சிகையை இலங்கையி மலையக நகரமாகிய நாவலப்பிட்டியில் ஆரம்பித்தார்கள் அந்நகரில் 1939ஆம் ஆண்டு தொடக்கம் ஆத்மீக வள்ள அவர்கள் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்தா ஆசிரியத் தொழிலுடன் அங்கே ஆன்மீகப் பணிகள் மக்கள் முன்னேற்றப் பணிகள் பலவற்றை அவர் செய் கொண்டிருந்ததால் மலையக மக்களின் அன்புக்கு பாத்திரமானார். மலையக மக்களும் கண்டி மாவட்ட கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்களும் அவருக்கு ஆதரவுக்கரம் கொடுத்தார்கள் மலையக மக்களில் ஏழைத் தொழிலாளிகே பெருந்தொகையினர். தங்கள் ஏழ்மையினாலும் பாமர தன்மையினாலும் துர்ப்பழக்கங்களுக்கு ஆளா யிருந்தனர். அவ்வேளையில் கிறிஸ்தவ மத போதகர்க ஆசை காட்டி மதமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள் அக்காலத்தில் தான் விடிவெள்ளிபோல, அகல்விளக்கு போன்று ஆத்மஜோதி சஞ்சிகை மலையகத்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1948-1983 வரை 3 ஆண்டுகள் ஆத்மஜோதி நிலையம் மலையகத்தி ஆற்றிய பணிகள் அளப்பரியன.
மலையகத்தைத் தளமாக வைத்து வெளியிட

நமசிவாய
O O ம் துறவற ஞானியும் முத்துலிங்கம் ரியர், ஆத்மஜோதி
ள் பட்ட ஆத்மஜோதி இலங்கை மற்றும் தமிழர்கள் வாழும் த் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, று இங்கிலாந்து, போன்ற நாடுகள் எங்கும் பவனி வந்தது. ர், 1948ஆம் ஆண்டு தொடக்கம் 2000 சஞ்சிகைகள் று வெளிவந்தன. பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆயுள் க சந்தாக்காரர்களாகவும், வருடச் சந்தாக்காரர்களாகவும் க சேர்ந்து ஆத்மஜோதி வாசகர்கள் ஆனார்கள். bl. ஆத்மஜோதி சஞ்சிகையின் கெளரவ ச் ஆசிரியரான திரு. இராமச்சந்திராவும் நிர்வாக ஆசிரியரான ர். ஆசிரியர் திரு. முத்தையா அவர்களும் அருள்ஞானம் க. பெற்ற எழுத்தாளர்கள். அவர்கள் இருவரினது கட்டுரை ல் களும் பத்திரிகையை மெருகூட்டின. இளைஞரான ம் நிர்வாக ஆசிரியருக்கு திரு. இராமச்சந்திரா அவர்கள் ல் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். இருவரும் ஆத்மஜோதியைச் சில கட்டுப்பாடுகளுடன் இலட்சியப் ம் பத்திரிகையாக வளர்த்தெடுத்தனர். Ť, மகான்கள், ஞானிகள், சித்தர்கள் போன்ற ப் அருளாளர்களை தேடிச் சென்று தரிசனம் செய்வதைத் ப்ெ தன் பெரும் பேறாகக் கருதியவர் முத்தையா அவர்கள். ன் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இலைமறை காய்போல வாழ்ந்த அருளாளர்களின் வாழ்க்கை ம் வரலாறுகளை ஆத்மஜோதி பத்திரிகை வாயிலாக ன் வெளிக்கொணர்ந்தனர். சைவ உணவு உண்பதால் வரும் ர். நன்மைகளைப் பற்றி பல கட்டுரைகளை தொடர்ந்து ல் பிரசுரித்தனர். ஒழுக்க நெறிகளைப் புகட்டியும் சுகாதார ர். வாழ்வைப் பேணியும் பல கட்டுரைகள் தொடர்ந்து ர், இடம்பெற்றன. Jil 36 வருடங்கள் தொடர்ந்து நல்லறிவுச் சுடரை ப் பரப்பும் சஞ்ச்கையாக ஆத்மஜோதி திகழ்ந்ததால், பல ம் ஒழுக்க சீலர்களையும், ஆன்மீகப் பற்றாளர்களையும் ப் ஆத்மஜோதி உருவாக்கியது. கனடாவில் 1994ஆம் ர். ஆண்டு சைவசித்தாந்த மகாநாட்டுக்கு வருகை தந்த ள ஆத்மீக வள்ளல் நா. முத்தையா அவர்கள், த் சைவப்பயிரை வளர்ப்பதற்காக ஒன்ராறியோ இந்து சமயப் கி பேரவையை அமைத்தார். அவரின் கொள்கையினால் ள் ஈர்க்கப்பட்ட தாபக உறுப்பினர்களாகிய நாம் பேரவையின் 1. கிளை அமைப்பாகிய ஆத்மஜோதி தியான நிலையத்தின் ப் ஊடாக கடந்த பத்தாண்டுகளாக ஆத்மஜோதி ல் பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டு வருகின்றோம். 6 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு வரை ல் பேரவையின் தாபக உறுப்பினர்களில் ஒருவரான
16ܖ
வடிவேலு ஞானகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ஐந்து வருடங்கள் இச் சஞ்சிகை வெளிவந்தன. நாம்

Page 23
இலவசமாக 3000 ஆத்மஜோதி சஞ்சிகையை வெளியிடுகின்றோம். கனடாவிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஆத்மஜோதிக்கு பல வாசகர்கள், இருக்கின்றனர். ஆத்மஜோதி பல ஆத்மீக எழுத்தாளர் களை உருவாக்கியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களுக்கு மத்தியில் சைவ சமய உணர்வை வளர்ப்பதற்கு ஒரு சாதனமாகச் செயல்படுகின்றது.
ஈழத்து ஆத்மஜோதி வாசகர்களாகத் தங்கள் சிறு வயது தொடக்கம் இருந்ததால் நாங்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்தோம் என எங்கள் பத்திரிகையின் கெளரவ ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் இலம்போதரனும், சட்டத்தரணி யசோ சின்னத்துரையும் கூறுவதையும் அடியேன் கேட்டுள்ளேன். ஆத்மஜோதி பத்திரிகை வெளிவரப் பிந்தினால் எப்பொழுது அடுத்த ஆத்மஜோதி வரும் எனக் கேட்கும் தொலைபேசி அழைப்புக்களில் இருந்து ஆத்மஜோதி பத்திரிகையின் வாசகர்களின் ஆர்வத்தை நாம் அறியக் கூடியதாக உள்ளது.
எமது சஞ்சிகைக்கு மகான்களின் ஆசீர்வாதம் நிறையவே உண்டு. நாவலப்பிட்டி ஆதம்ஜோதி நிலையத்தில் பல ஞானிகள் தங்கியிருந்து ஞானாக்கினி வளர்த்தனர். அந்த ஞானாக்கினியில் புடம் போட்டு
நயினை இல்லற ஞானி க. இர ஒரு ஞாபக
இவரின் ஷஷ்டி பூர்த்திவிழா நாகபூஷணி டாக்டர் பரராசசிங்கம் அவர்களின் முயற் நடத்தப்பட்டது. நான் கண் குளிரப் ட பார்க்க வில்லை; வயோதிபநிலை. அவ நான் அவரின் அருகில் சென்றிருந்தேன். “இந்தப் பொடியன் என்னை ஏன் இங் நீர்போய் நான் சொன்னது என்று களஞ் இந்தத் தோடம்பழத்தில் கொஞ்சம் விட் நல்லது என்றார். அவர் மனைவியார் பிள்ளை இவரை! நாங்கள் வந்த இடத்தி அவர் அதைச் செய்யவில்லை. இது
திருமதி ப. க. கண்க

272Ý27 Z2Zvž வளர்க்கப்பட்டு ஞானசுரபியானவர் இந்நூல் நிறுவன ஆசிரியர் ஆத்மஜோதியார். அவர் தன் சேவையின் மகத்துவத்தால் ஆத்மஜோதி சஞ்சிகையின் பெயரையே தனதாக்கிக் கொண்டவர். கனடாவில் ஆத்மஜோதியை தொடர்ந்து வெளியிடுங்கள் என எங்களுக்கு அன்பக் கட்டளையிட்டார். கனடாவில் குடியேறிய தமிழர்களின் முற்சந்ததியினராகிய உங்களுக்குச் சைவ சமய, பண்பாட்டு, கலாச்சாரத்தை நிலைநிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது என உணர்த்தினார். எங்களைச் சிந்தித்து செயல்பட வைத்தார். பற்றற்ற துறவற ஞானியான ஆத்மஜோதியார் சூக்கும நிலையில் இருந்து பேரவையையும், ஆத்மஜோதி பத்திரிகையையும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்.
மகான்கள், ஞானிகளின் ஆசிகளும், தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானின் பெருங்கருணையும் பரம்பொருளாகிய சிவபெருமானின் திருவருட் பார்வையும், பேரவையையும் ஆத்மஜோதி சஞ்சிகையையும் எங்களையும் வழிநடத்தும் என்பது அடியேனின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம். சைவம் வாழ்ந்தால் தமிழ் மொழி வளரும். தமிழ் மொழி வளர்ந்தால் சைவம் வாழும்.
ராமச்சந்திரா அவர்களைப்பற்றி கச் செய்தி
அம்மன் நவக்கிரகக் கோயிலில் மகன் சியினால் ஐ. கைலாசநாதக்குருக்களால் ார்த்தேன். தாத்தா இவ்வைபவத்தைப் ரின் துணைவியாரும் உடன் இருந்தார்.
அவரின் கூற்று என்னைக் கண்டவுடன் கே கூட்டி வந்தான். இங்கே பாரும். சிய அறையில் தேன் இருக்கும் வாங்கி டுக் குழைத்துத்தாருமி. ஞாபக சக்திக்கு
என்னைப் பார்த்துச் சொன்னார். பார் ல் அங்கே போய் இப்படிக் கேட்கலாமா? எனது ஞாபகம்.
ாபதி கோகிலாம்பாள்.

Page 24
ஆத்மஜோதி சஞ்சிகையின்
நா. இளைப்பாறிய அதிபர்
இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டு.
அன்னியரின் ஆட்சியிலிருந்து விடுபட்ட போதும் மக்களிடமிருந்து அடிமை மனப்பாங்கு விட்டுப் போகவில்லை. ஆன்ம ஈடேற்றம் குன்றிய காலம். அன்னிய மதத்தவர் அதிகாரம், கல்வி, தொழில் என்பவற்றின் மூலம் ஆசை காட்டிச் சைவ மக்களை மதமாற்றம் செய்த காலம். திருக்கேதீஸ்வர ஆலய நிலப்பரப்பு எச்சமயத்தவருக்குரியது என்ற வழக்கு பலவருடங்களாக நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மலையகத்திலோ தேயிலைத் தோட்ட முகாமையாளராக இருந்த ஆங்கிலேயரின் உதவியுடன் சைவமக்களை அதிவேகமாக மதமாற்றம் செய்து கொண்டிருந்த காலம். இன்றும் அதன் வேகம் குன்றவில்லை.
அப்படிப்பட்ட வேளையில் "ஆத்மஜோதி” சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது. கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. மானிட மேம்பாடு என்றால் என்ன? ஒவ்வொரு ஆத்மாவும் தூய்மையும், நன்மை பயக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வதேயாகும். ஆத்மஜோதி "யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற உயரிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. சுவாமி சுத்தானந்தரின் பொன்மொழிகளில் ஒன்றான
“எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவனே
எல்லா உடலும் இறைவன் ஆலயமே” என்ற தாரக மந்திரத்தைத் தனது குறிக்கோளாக இரண்டாம் பக்கத்தில் இறுதிவரை தாங்கி வந்தது. இது சைவசமயத்தின் மாபெரும் தத்துவக் கருத்தான “அனைத்தும் இறைவன் சொரூபம்; அனைத்திலும் இறைவனைப்பார்’ என்பதை வெளிப்படையாக இயம்புகிறது.
ஆத்மஜோதி முதல் பன்னிரு சுடர்களையும் சூரிய உதயத்துடனான சிவனொளி பாதமலைப்படமே அலங்கரித்தது எனலாம். இரண்டாம் ஆண்டில் இலங்கைப்புறவரி உருவப்படத்தில் சைவவூலயம், பெளத்த ஆலயம், கிறிஸ்தவ ஆலயம், இஸ்லாமிய ஆலயம் என்பவற்றைத் தாங்கி வந்தது. இவை யாவும் சைவசமய சமரசத் தன்மையையும் தனித்துவத்தையும்,

Sez>g-P« L>27
குறிக்கோளும் செயற்பாடும்
நடேசன்
நாவலப்பிட்டி, இலங்கை
ஒற்றுமை மனப்பான்மையையும் வெளிப்படுத்தின.
தடாகத்தில் தாமரை மலர்கள் மலர்ந்தும் அரும்புமாகச் சூரிய உதயத்துடன் கூடிய படங்கள் ஆத்மஜோதியின் முகப்பு அட்டையை அலங்கரித்தன. சகதியில் தாமரைக்கொடி வளர்ந்தாலும் நீர்மட்டம் அதிகரிக்க அதிகரிக்க தாமரை மலரும் உயர்ந்தே வரும். அத்துடன் தாமரை இலையில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் உருண்டோடி விடும்.
ஒவ்வொரு ஆத்மாவும் எப்படிப்பட்ட சூழலிலும் உடல் எடுத்தாலும் தாமரை மலர்போல் சகதியாகிய லெளகீக இன்பங்களில் சூழ்ந்து போகாமல், தாமரை இலையில் ஒட்டாத நீர்போல் ஆசாபாசங்களால் கட்டுப்படாமல் சூரியனாகிய இறைவனை நோக்கியே ஆன்மா பயணிக்க வேண்டும் என்ற தத்துவத்தை அம்முகப்புச் சித்திரங்கள் வெளிப்படுத்தின.
மூன்றாம் பிராயத்திலிருந்து மாதா மாதம் ஒவ்வொரு மகான்களுடைய படத்தையோ அன்றித் திருத்தலங்களின் படங்களையோ முகப்பில் தாங்கி வெளிவந்தது. அது பற்றிய ஆசிரியர் கட்டுரையும் விசேட கட்டுரையும் தாங்கி வந்தது. இப்பாணியைக் கையாண்டதன் பலனாகப் பலரின் பாராட்டைப் பெற்றது. ஆத்மஜோதியை மும்மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டது. அதன் முன்னோடியாக ஆத்மீக சம்பந்தமான சில சிங்களத் துண்டுப் பிரசுரங்களையும், சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள், நாவலரின் சைவவினாவிடை முதலாம் புத்தகம் ஆகிய இருநூல்களையும் சிங்களத்தில் ஆத்மஜோதி நிலையம் வெளியிட்டது. பாணந்துறையில் வாழ்ந்த திரு. நாணயக்கார எனப்படும் சிங்கள அன்பர் திருக்குறளின் முதற்பகுதியை சிங்களத்தில் ஆத்மஜோதி நிலையத்தின் மூலம் அச்சேற்றுவித்தார்.
ஈழத்தலும் பாரத நாட்டிலும் பல மகான்களுடைய செயல்களும் வாழ்வும் குடத்துள் விளக்காகவே இருந்து வந்தன. அவர்களை மலைமேல் விளக்காக வைத்துப் பெரும் பணியை ஆத்மஜோதி செய்து வந்தது. இன்று அதேபணியை ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை செய்துவரும் பாக்கியத்தை சொற்களால் வடிக்க முடியாது. அவர்களின் பணி தொடர இறைவன் அருள்பாலிப்பானாக!

Page 25
பலே ஆத் பேரறிஞர் முருகே
இலங்கையில் சைவ உதய பானுவை வெளியிட்டவர் ஊரெழு சரவணமுத்துப் புலவர். இவர் சைவ சமயப் பத்திரிகையின் பிதாமகர். யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் சரவணமுத்து. இது நடந்தது நாவலர் மறைவையண்டிய காலகட்டம். தொடர்ந்து வெளியான இந்துசாதனம் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. நல்லசாதனையாம் சமய சஞ்சிகைக்குக் கை கொடுக்க எவரும் முன் வருவதில்லை. நாமறிய யோகர் சிந்தனையில் உருவான சிவ தொண்டன் தொடர்கிறது. முன்னைய எடுபிடியில்லை. கொழும்பில் வெளியான சைவநிதி தரமான பத்திரிகை. சுமார் ஒன்பது ஆண்டுகளை எட்டாமலே நின்று விட்டமை குறிப்பிடத்தக்கதே. சந்நிதியான் ஆச்சிரமச் சைவக்கலை பண்பாட்டுப் பேரவை ஞானச்சுடரென்னும் மாசிகையை 120 மலர்வரை வெளியிட்டமை போற்றத்தக்கது. ஆறு திருமுருகனை ஆசிரியராகக் கொண்டு பூர் துர்க்கா தேவஸ்தானம் அமைதியான தன் பணியில் அருள் ஒளியென்ற சஞ்சிகையின் அறுபத்து இரண்டு மலர்களை வெளியீடு செய்துள்ளது.
இவற்றை ஒரு ஒப்பீட்டாய்வாக நோக்கின் இலங்கையின் தலையகமான நுழைவாயிலில் அமைந்த நாவல் நகரில் வலம் வந்த ஆத்மஜோதி ஆண்டறுபதை எட்டிப் பிடித்து மணிவிழாக் கொண்டாடுகிறதென்றால் எல்லாப்புகழும் அந்த இரட்டையர்களையே சாரும். ஒருவர் ஆத்மிக நெறியிற் புகழ்பூத்த இல்லறஞானி இராமச்சந்திரா அவர்கள். மற்றவர் மனத்துறவுடைய காவிகட்டா வெண்ணாடை வேந்தன் அமரர் முத்தையா அவர்கள். பத்திரிகைத் துறையில் ஆழ்ந்த அனுபவமுள்ள ஏழாலைகிழார் நாவன்னா முத்தையா அவர்கள் ஆத்மஜோதி முத்தையா ஆனார். நல்ல இலச்சனையது. உலகெங்கும் சைவசமயிகளின் கரங்களை திங்கள் தவறாது சென்றடைந்த ஆத்மசோதி ஒரு மூத்த திங்கள் வெளியீடு. சிறுவர் துவக்கம் முதியவர் வரை ஆணும் பெண்ணும் ஆவலோடு வாசித்து, பைண்ட்பண்ணிப் பேணிய இம்மாசிகை 1983ஆம் ஆண்டு வன் செயலில் "ஆத்மசோதி அலுவலகம், அச்சகம் அழிக்கப்பட்டதோடு நின்றுவிட்டமை பலருமறிந்த இரகசியம். வெகுகால இடைவெளியின் பின் கனடாவில்

மசோதி! 6) ULnBT560
கவிஞர் கந்தவனமவர்களை ஆசிரியராய்க் கொண்டு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆத்மசோதி தியான நிலையமே இதன் பிரசுர மூலத்தானம். கொம்பியூட்டர் யுக வெளியீடு இன்றைய ஆத்மசோதி. அன்றைய ஆத்மசோதி ஊடகத் தொடர்புடையது இரண்டின் பாணிகளும் வித்தியாசம். இலக்கு ஒன்றுதான். பழைய ஆத்மசோதியில் இடையிடையே சிறப்பு மலர்கள் வெளியாகும். முத்தையரின் அறுபதாண்டு விழாமலர் சிறப்பான அம்சங்கள் கொண்டது முத்தையாவை நடமாடும் வாசகசாலை, நடமாடும் பல்கலைக்கழகமென அவரை வர்ணித்தனர். தமிழக மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்கள் 1983 இல் ஆத்மசோதி நிலையம் வெளியிட்ட உலக இந்து மகாநாட்டு மலர் கண்கவர் நிறங்களுடன் வெளிவந்தது. கல்கி தீபாவளி மலர், கலைகதிர் பொங்கல்மலர், ஆனந்தவிகடன் தீபாவளி மலரை வென்றுவிட்டது அம்மலர்.
ஆத்மசோதி முத்தையா அவர்கள் முத்து என்ற பெயரில் எழுதிய பல தொடர்கட்டுரைகள் பின்நூலாக்கம் செய்யப்பட்டன. பன்னிரு மாதச் சிறப்பு அவற்றில் ஒன்று இனிய தமிழ், இலகுநடை, எளியவசனம், அக்காலச் சைவஞானிகளான சித்பவானந்தர், சிவானந்தர், சச்சிதானந்தர், இராமதாசர், அரவிந்தர் ரமணர், பித்துக்குளிமுருகதாஸ், சுத்தானந்தர், ஹரிதாஸ், போன்றவர்களைப் பற்றியறிய நல்ல வாய்ப்பளித்தது ஆத்மசோதி. பல இளம் எழுத்தாளர்களையும், வாசகள் வட்டத்தையும், ஆத்மீகச் செல்வர்களையும் உருவாக்கிய பெருமை ஆத்மசோதிக்கேயுரிய தனித்துவமாம். கனடாவில் வெளியாகும் ஆத்மசோதியில் ஹவாயின் உருத்திராட்சச் சோலை சலசலக்கும் உலகச் சைவ மாநாடுகள் காலந்தோறும் சொல்லோவியமாக்கப்படும். இன்னோர் புதுமை காலத்தின் தேவை கருதிப் பல வியாசங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. ஏசியாவில் ஒரு பேப்பர் ஈசியாய் வாசிக்க என அழகாய் சிரிப்பாய்ச் சொல்லலாம். ஆண்டறுபது காணும் திவ்வியச் சைவமஞ்சரியை நாம் வளர்ப்போம். வாழ்த்துவோம். அடியேனும் ஆதிமுதல் இத்தேதிவரையும் ஆத்ம சோதிவாசகனென்று எழுதுவதிற் பூரியப்படைகிறேன்.
பலே ஆத்மசோதி வளர்க! வாழ்க நின் தொண்டு!

Page 26
இரைதேடுவது போல் திரு. செ பொருளாளர், (
'தன் கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற அப்பர் வாக்குக்கு இணங்க வாழ்ந்த ஆத்மஜோதி ஐயா அவர்கள் நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாசாலையில் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அடியேன் கம்பளையில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அதனால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் அதிகமாயின. அவரைப் பற்றி எழுதத் தொடங்கும் போதே ஏதோ இனம் புரியாத ஓர் மகிழ்வுணர்ச்சி என்னுள் ஏற்படுகிறது.
அதிபர் பதவியுடன் தமிழ் ஆசிரிய சங்கத்தில் உபதலைவர் உபசெயலாளர் போன்ற பதவிகளை வகித்து ஆசிரிய சமூகத்தின் முன்னடைவுகளுக்கு அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தார். என் கண்களுக்கு அவர் ஒரு தெய்வீக வாழ்க்கை வாழ்பவராகக் காட்சியளித்தார். அன்பும் அறிவும் தொண்டும் தான் இவரின் வாழக்கை என எண்ணினேன். துTய தொண்டுள்ளம் கொண்டவர் என்று பல பெரியோர்கள் பாராட்டுவதையும் கேட்டேன். இவரின் தெய்வீக வாழக்கையைப் பார்த்து இவருடன் பழகித் தம்மையே திருத்தித் கொண்டவர்கள் அனேகர். 1976ஆம் ஆண்டு அவர் ஓய்வுபெறும்வரை மிக அன்யோன்னியமாகப் பழகினோம். இதயத்தின் மலர்ச்சி தான் மனிதனின் முழுமையான மலர்ச்சி என்பதை இவரின் வாழ்வு வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. என்னுடன் அன்பாகப் பழகும் சமயங்களில் "இரைதேடுவது போல் இறைவனையும் தேடு” என்பார். தன் சீரிய ஒழுக்கத்தாலும், சாந்த சுபாவத்தாலும் கவர்ச்சியான பேச்சாலும், விறுவிறுப்பான எழுத்தாலும், தூய வெண்ணிற ஆடை அணிந்து மலைநாட்டு மக்களின் இதயங்களில் இடம்பிடித்து, அவர்களின் வாழ்வை மேன்மையாக்கிக் கொண்டிருந்தார். இவரின் சீரிய பண்பமைந்த ஒழுக்கத்தால் இவருள் ஆன்மீக ஒளி வீசுவதைக் காணக்கூடியதாய் இருந்தது.
ஒருவர் 12 ஆண்டுகள் மனத் தாலும் உடலாலும் பிரமச்சரியம் அனுட்டித்தால் உடலுள் ஒரு புதிய நாடி தோன்றுகிறதாம். அதன் பெயர் பேதநாடி. இந்த நாடி தோன்றினால் எதையும் சாதிக்கும் ஆற்றலும் ஞாபகசக்தியும் ஏற்படுமாம். நைட்டிக பிரமச்சாரியான இவரிடம் அந்த ஆற்றல் பரிபூரணமாக இருப்பதை உணர்ந்தேன். பெறுதற்கரிய பிறவியைப் பெற்றுச் சாதிக்க முடியாத பெரும்
 

27272542 ar Z212 už
) இறைவனையும் தேடு . சோமசுந்தரம் இந்துசமயப் பேரவை
செயல்களை எல்லாம் சாதித்துக் கொண்டிருந்தார். தான் ஒரு இயந்திரம்; இறைவன் தன்னை இயக்கிக் கொண்டு இருக்கிறான் என்பதே அவரின் திடமான நம்பிக்கை.
தூய்மையான உள்ளத்தில், தோன்றும் எண்ணங் களும் தூய்மையே என்னும் முதுமொழிக்கேற்ப 1948ஆம் ஆண்டு முதல் ஆத்மஜோதி என்ற பெயரில் மாதாந்த சஞ்சிகை ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருந் தார். இத்தகைய ஞான ஒளி வீசும் ஆன்மீக சஞ்சிகைக்கு இப்பெயர் இட்டவர் இவரின் ஆன்மீக வழிகாட்டியும் இல்லற ஞானியுமான இராமச்சந்திரா என்று அறிந்தேன். இரமண பக்தராகிய இராமச்சந்திரா புகையிரத இலாகாவில் நாவலப் பிட்டியில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். இராமச்சந்திராவின் அன்பினாலும் கருணையினாலும், ஆத்மஜோதி நிலையம், ஆத்மஜோதி அச்சுக்கூடம், ஆத்மஜோதி சஞ்சிகை, என நாவலப்பிட்டி ஞான ஒளி கொண்டிருந்தது.
இராமருக்கு ஒரு இலக்குவன் போல் முத்தையா அவர்களுக்கு அருமைநாயகம் என்னும் ஒரு தம்பியார். அவரின் நிருவாகத்தில் சகலதும் சிறப்புற்று விளங்கின. சுருங்கிய சொற்களால் பரந்த விடயங்களை எல்லாம் விளக்கும் பேராற்றல் இருந்தமையால் ஆத்மஜோதி சஞ்சிகை இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா மலேசியா இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் பிரபல்யமாயிற்று. ஆத்மஜோதியை தாபித்த ஆசிரியருக்கு ஆத்மஜோதி பட்டப் பெயராயிற்று. மக்களின் அரவணைப்பிலும் புகழிலும் நாவலப்பிட்டி மலை உச்சியில் வாழ்ந்து கொண்டிருந்தவரின் வாழ்வு 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால் படுகுழியில் தள்ளப்பட்டது. அச்சு இயந்திர சாலைமுதல் கட்டிய துணிவரை எல்லாம் எரிந்து சாம்பலாகியன. என்னைக் கண்டவுடன் கண்ணிர் சொரிய, சென்ற நாடுகளில் எல்லாம் அரும்பாடுபட்டுத் தேடிய அரிய ஆன்மீக நூல்கள் எல்லாம் சாம்பலாய்ப் போச்சே என்று தாரையாகக் கண்ணிர் சொரிந்தார். என் கண்களும் கலங்கின. பின் இரண்டொரு முறை கீதை உபநிடதம் போன்ற நூல்களை படிப்பதைக் கண்டேன். மன அமைதியை நாடி நாவலப்பிட்டியை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்தை நாடி வந்தார்.
சிறுமைக்கும் பெருமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்னும் வாய்மொழிக்கேற்ப, நாட்டின
20

Page 27
போர்ச் சூழலால் கைதடி அநாதை இல்லத்தில் பிள்ளைகள் பசியிலும் பிணியிலும் கவனிப்பாரற்ற நிலையில் கிடந்து வதங்குவதைக் கண்டார். உள்ளம் உருக அவர்கள் பின் சென்றார். இவரின் அரவணைப் பால் அச்சிறுவர் இவரை அப்பா என்றும் ஐயா என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். நைட்டிக பிரமச்சாரிக்கு அறுபது பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை கடவுள் தந்திருக்கிறார் என்றார். அநாதைப் பிள்ளைகளின் வாழ்வு வளம் பெறத் தன் வாழ் வை அவர்களுக்கே அர்ப் பணித் துக் கொண்டிருந்தார். ஆத்மீக வள்ளல் என்ற பெரும் பட்டத்தை பண்டிதமணி அளித்தார் என்றால் என்னோ அவரின் மகிமை. சுவாமி சுத்தானந்தர் அன்பு மணி என்ற பட்டத்தை அளித்தார்.
1994ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற அனைத்துலக சித்தாந்த மகாநாட்டிற்கு வருகை தந்த கல்விமான்களுடன், ஐயாவும் சமூகமளித்தார். நாட்டின் தேவைக்கேற்ப சிறந்த சொற்பொழிவுகளை ஆற்றி நம்மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். அவர் யாழ்ப்பாணத்தில் தமிழையும் சைவத்தையும் வளர்க்க
ஏழாலை ஞானவை ஆத்மஜே
ஏழு ஆலயங்கள் ஓரிடத்தில் அமைந்ததனால் 6 உச்சரிக்கும்போதே எமக்கொரு இன்பம் உள்ளத்திலே 2 இத்தகைய ஊரிலே இலந்தைகட்டி என்ற குறிச் தனித்துவமானது. இவ்வைரவப் பெருமான் எமது குை காப்பாற்றிவருகின்றதென்பது அன்றுதொடக்கம் இன்றுவ நம்பிக்கை. இந்த நம்பிக்கையினால்தான் இன்றும் ட இலட்சார்ச்சனையும், விழாக்களும், பொங்கல்களும் குை
இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாய் அமைந்த மன்றத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது. பொது கருத்துமாக உள்ளனர். பிடியரிசி மூலம் கோயிலுக்கு எல்லோரும் ஈடுபாடுள்ளவராய் இருக்கின்றனர். கோயிலி இராஜகோபுரமும் அமைத்துப் பார்க்க வேண்டும் என்பது எவ்விதத்திலும் தீமை இல்லாத நல்ல எண்ணங்கள் இ6 எமது முன்னோர்கள் கண்ட முடிபாகும்.
நலமே நினைந்து நலமே பேசி நலமே செய்க. இ

அமைத்த இந்து சமய பேரவையைப் போல் கனடாவிலும் 1994ஆம் ஆண்டு கனடா வந்த சமயம் நம்மிடமும் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒன்ராறியோ இந்து சமயப் பேரவை என்ற பெயருடன் ஒரு பேரவையை தாபித்தார். அவர் தாபித்த பேரவையில் இருந்த எங்களிடம் அந்த அநாதைச் சிறுபிள்ளைகளுக்காக உங்களைத் தேடி வந்துள்ளேன் என்றார். அவரின் உள்ளம் குளிர அன்பர்கள் எல்லோரும் வாரி வழங்கினார்கள்.
1995ஆம் ஆண்டு சிவப்பணி செய்வதற்காக கனடா வருகை தந்து ஐந்து மாத காலம் தங்கி அரும் தொண்டாற்றி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். ஆன்மீக வள்ளலின் இறுதிக் கிரிகைகளும் இங்கேயே நடைபெற்றன. தன் கடமைப்பாட்டை இறுதி மூச்சுவரை கைவிடாத ஆத்மஜோதி ஐயா இன்று தான் பிறந்த மண்ணில் ஏழாலையில் சிலையாகி இருக்கிறார்.
அவர் தொடக்கி வைத்த ஆத்மஜோதி பத்திரிகை கனடாவில் தொடர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. அதன் மணிவிழா சிறப்புற வாழ்த்துகிறேன்.
ரவர் ஆலயம் பற்றி ஜாதியார்
ரழாலை எனப் பெயர் பெற்ற எமது ஊரின் பெயரை ஊற்றெடுக்கின்றது. சியைச் சேர்ந்த பாதாள ஞானவைரவர் ஆலயம் ஒரு Uதெய்வம். இக்குலதெய்வம்தான் எம்மையெல்லாம் ரை உள்ள மெய்யடியார்களின் அசைக்க முடியாத ல அசம்பாவிதங்களின் மத்தியிலும் ஆண்டுதோறும் றவின்றி நடைபெற்று வருகின்றன.
ஆலய பரிபாலன சபையையும், இந்து இளைஞர் மக்கள் எல்லோருமே ஆலய வளர்ச்சியில் கண்ணுங் தம் அதன் திருப்பணிகளுக்கும் உதவும் அளவுக்கு ன் நாற்புறமும் நல்ல முறையில் மதில் எழுப்புவதோடு பல பக்தர்களுடைய வேண்டுதலாகும். பிறருக்கு றைவன் திருவருளை முன்னிட்டு நிறைவேறும் என்பது
ன்பமே சூழ்ந்து எல்லோரும் வாழப் பிரார்த்திப்போமாக.

Page 28
ஆத்மஜோதியும் , முதுபெரும் புலவர், சைவநெறிக் கல
தனக்குவமை இல்லாதான் தாழ் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. யாழ்குடா நகரில் வலிகாமம் வடக்கில் ஏழ்குவி ஏந்த ஏழாலைப் பதியில் ஏழுலகும் வாழ்த்த உதய சூரியனாய் ஏழ்பவம் தாண்டி மலர்ந்த முத்தையா நல்லதோர் ஆசிரிய அதிபராய் மலையகத்தில் பல்லோரும் ஆத்மீகம் அடைய நினைந்து நல்லதோர் ஆத்ம ஜோதி படைத்து ஏழை முதலாய் பல்லோரும் ஞானம்பெற வாழையடி வாழையாய் ஜோதி சுடர்விட கனடாவில் ஜோதி ஏற்றி பலர்புகழ் குணசீலர் சிவமுத்து லிங்கம் பாரில் படைத்தார் காணிரோ
ஆன்மா ஆத்மாவாகி ஞானம் பெற்றிடவே வான்மழைபோல் விண்ணவர் மண்ணவர் பூமழை சொரிய மேன்மைகொள் சைவம்தமிழ் பரவிடவே உலகெங்கும் நான்மறைபோல் ஆத்மஜோதி விழாக்கொள்வது காணிரோ!
1948 ஆம் ஆண்டு ஓர் இருண்டகாலம். இலங்கை மட்டுமல்ல கீழைத்தேய நாடுகள் எல்லாம், அந்நியர் ஆட்சிக்குட்படுத்தப்பட்டுச் சுதந்திரம் அடைந்தபோதிலும் “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றளவில் மொழிமதம் இனம் இருந்தது. மக்களின் வாழ்க்கை பச்சோந்தி வாழ்க்கையாகக் காணப்பட்டது. மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையுமாகப் பயந்து வாழ்ந்த காலம். நாவலர் பெருமானின் விடாமுயற்சியால் சைவமும் தமிழும் இருந்த போதிலும், ஆங்காங்கே புறச்சமயம் தலைவிரித்துத் தாண்டவ மாடியது. இந்த நேரத்திலேதான் உதயசூரியனாக மலையகத்தில் நாவலப்பிட்டியில் ஆத்மஜோதி சஞ்சிகை உதயமானது.
இச் சஞ்சிகை உதயமாகப் பலரும் கைகொடுத்தாலும் நயினாதீவைச் சேர்ந்த சைவத்திரு இராமச்சந்திரா ஐயா அவர்கள் தோன்றாத் துணையாக இருந்ததனால், ஆத்மஜோதி ஆசியஜோதியாக மிளிர்ந்தது.
சுவாமி முத்தையா அவர்கள் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஏழாலையென்றால் ஏழு தலங்கள் ஒரே இடத்தில் அமைந்தவையாகும். இதைவிடப் பல்வேறு சிறப்புக்களும் உண்டு. ஏழாலை மிகவும் பெரிய கிராமமாகையால் பல்வேறு
G

2272.27 227
அதன் ஆசிரியரும் ாநிதி விசுவாம்பாவிசாலாட்சி மாதாஜி
தொழிலகங்களும் உண்டு.
திரு. நாகமணி தம்பதிகட்கு ஏழாலை கிழக்கில் ஞானவைரவர் கோவிலுக்குமிக அண்மையில் அவதாரம் செய்தார். ஞானவைரவர் முத்துவின் குலதெய்வமாகும். அதன் அருகில் இலந்தைகட்டி வைரவர் கோயில் இருந்தது. வைரவர் ஒன்றுதான். வழிபடுவோர் ஏழாலை கிழக்கைச் சேர்ந்த ஞானவைரவர். ஏழாலை வடக்கைச் சேர்ந்தது இலந்தைகட்டி வைரவர்.
முத்து அவர்கள் தமது கல்வியை மயிலனி பாடசாலையில் கற்றபின் நல்லூர் ஆசிரியர் கலாசாலை ஆசிரியப் பயிற்சி பெறும் காலத்தில் சகமாணவர்களுடன் நல்லூர்க் கந்தப் பெருமானை வலம்வந்து பஜனை செய்து முக்கரணசுத்தியுடன் வணங்குவார். நல்லூர் ஆசிரியர் கலாசாலை ஓர் கிறிஸ்தவ கலாசாலையென்பது குறிப்பிடத்தக்கது.
முத்துவிற்கு ஆசிரியர் தொழில் முதல்முதலாக மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியில் கதிரேசன் கனிஷ்ட பாடசாலையிற்கிடைத்தது
நல்லாசிரியருக்குள்ள அத்தனை பண்புகளும் முத்துவிடம் இருந்தன. கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் ரெனின் என்றாங்கு முத்துவிடம் வள்ளுவர் அருளிய பண்பு ஊறிக் காணப்பட்டது. 'கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத்தக’. இப்பண்பும் முழுமையாக முத்துவிடம் இருந்தது.
ஆசு + இரியன் = ஆசிரியன். ஆசு என்பது குற்றம். இரியன் என்பது களைபவன். ஆக ஆசிரியன் என்பவன் மாணவரின் குற்றங்களைக் களைபவன். முதலிலே தன்னைத் திருத்த வேண்டும் பின்னர் பிறரைத்திருத்த வேண்டும். முத்து தன்னிடம் எதுவித துரும்பளவு குற்றமும் இல்லாமல் வெண்மையான பண்புடன் ஆசிரியத் தொழிலைச் செய்தார்.
இப்போது மலையகம் பலதுறைகளிலும் முன்னேறி வருகின்றது. முத்துவின் காலத்தில் அதாவது 1948க்கு முன் மலையகம் என்றால் பயங்கரம். இந்திய வம்சாவழியினரை ஆங்கிலேயர் மலைநாடுகட்குத் தேயிலைத் தோட்டம் செய்யக் கூலியாட்களாக அமர்த்தினர். ஆனால் முறையான கல்வி கலை கலாசாரம் புகட்டவில்லை. இதனால் அவர்கள் அறிவற்ற வர்களாகவும், குடிபோதைகளில் மூழ்கியவர்களாகவும்,
2

Page 29
பண்பாடு முதலியன அறியாதவர்களாகவும் குடும்பச் சண்டைகளில் ஈடுபட்டவர்களாகவும் காணப்பட்டனர். முத்து அவர்கள் மலையகத்தில் காலடி வைத்த நாள் தொடக்கம், மலையக மக்கட்குக் கல்வியறிவு முதல் கடவுள் ஆத்மீக வழிபாடு வரை அறிவுறுத்தி அவர்களைச் சாதனையில் நடைமுறைப்படுத்தினார்.
அவற்றை வழிப் படுத்தும் சாதனமாக ஆத்மஜோதிப் பத்திரிகையையும் வெளியிட்டார். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றாங்கு சுவாமிகளின் செயற்பாடு காணப்பட்டது. ஆத்மஜோதியென்றால் முத்தையா மாஸ்டரைக் குறிக்கும். நாவலப்பிட்டி யென்றால் ஆத்மஜோதியையும் முத்தையா மாஸ்டரையும் பின்னிப்பிணைந்து மயங்கிய நிலையைக் காட்டும்.
சுவாமி விவேகானந்தர் காலத்தில் இந்திய மக்கள் வறுமைக்கோட்டில் தவழ்ந்தாலும் ஆன்மீகத்திலும் பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றிலும் உச்சநிலையில் நின்றகாலம் அது. வெளிநாட்டவர் குறிப்பாக சிவப்புநிறம் கொண்ட மேலைநாட்டவர்கள் ஆன்மீக விளக்கம் அறியாது பொருளைத் தேடி தமக்குப் பொல்லாங்கு செய்யும் வகையில் போகத்தால் மயங்கிய காலம் அது. சுவாமி விவேகானந்தர் இந்திய மக்களின் அஞ்ஞான இருளை நீக்கி ஞானதீபம் ஏற்றினார். அப்போதுதான் சுவாமிகட்கு, அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ நகரில் நிகழ்ந்த சர்வமத மாநாட்டில் கலந்து இந்து சமயம் பற்றிப் பிரசங்கம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
இந்து மத உண்மைகளை உணர்ந்த வெள்ளையர்கள் பெரும்பொருள் வாரிவழங்கி ஆன்மீக ஞானத்தைப் பெற்றனர். சுவாமிகள் ஊடாகப் பொருளைக் கொடுத்து இந்திய மக்களின் ஞானத்தைப் பெற்றனர். சுவாமிகள் பொருளைக் கொண்டு இந்திய மக்களின் வறுமைப்பிணியை நீக்கியதுடன் நில்லாது, அகில இந்திய நாடெங்கும் பாத யாத்திரை செய்தார். பல இந்து தாபனங்கள் நிறுவ மூலகாரணமாக நின்றார். இராமக் கிருஷ்ணர் விசயம் என்ற ஆன்மீக பத்திரிகையையும் பிரசுரித்து இந்துதர்மத்தை நிலைநாட்டினார். இதே போல நாவலப்பிட்டி ஆத்மஜோதி முத்தையா சுவாமிகளும் மலையக மக்களை அன்பினால் பிணித்தார். '
சிவசிவ என்கிலர் தீவனை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்னச் சிவகதி தாமே.
அன்பும் சிவமும்இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
-(2:
 

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந் திருந் தாரே
என்ற திருமூலரின் மந்திரமயமாகி மலையக மக்களையும் அவ்வாறு செய்ய ஆத்மஜோதி சஞ்சிகை கைகொடுத்தது எனலாம்.
2. றரீ இராமக்கிருஷ்ண விசயம், சிவதொண்டன் பல நாடுகளையும் வலம்வருவது போன்று ஆத்மஜோதி பிரசுரிக்கப்பட்ட 1948 ஆம் ஆண்டு தொடக்கம் அகில இலங்கை மட்டுமல்ல சைவத்தமிழர் வாழுகின்ற இடமெல்லாம் சென்று அவர்களின் அஞ்ஞானம் அறிவினம் முதலிய இருளை நீக்கி அவர்களின் ஆன்மீகம் சுடர்விட்டு ஜோதியாகப் பிரகாசிக்கச் செய்தது. அப்போது எமது வயது பதினேழு இருக்கும். எங்கள் ஊர் திரு கோவிந்தர் சுப்பிரமணிய உபாத்தியாயர் ஆத்ம ஜோதி சமயச் சஞ்சிகை எடுத்து வாசிப்பது வழக்கம். இதனையும் நாமும் வாசிக்க வேண்டுமென்பதால் அவர்களின் வீடு சென்று வாசிப்பது வழக்கமும் பழக்கமுமாகும்.
அக்காலத்தில் ஆத்மஜோதி வருடச் சந்தா மிகவும் குறைவாக இருந்தது. ஆசிரியரின் உள்ளம் தூய்மையானது. ஏழையோ பணக்காரரோ என்று பேதம் பார்க்காது சந்தாப்பணத்தையும் எதிர்பார்க்காது சஞ்சிகையை அனுப்பிவிடுவார். சந்தாப்பணம் மூன்று ரூபா என நினைக்கின்றேன். ஆனால் ஆத்மஜோதியின் பயன்பாடுகள் சாகரம் போன்றது தொடுமணற்கேணி போன்றது. அறிவையும் ஞானத்தையும் பிரகாசிக்கச் செய்வது போன்ற தன்மையில் காணப்பட்டது.
அன்புமணி என்று போற்றப்படுகின்ற ஆத்மஜோதி ஆசிரியர் அவர்கள் பேச்சு மூச்சு செயல் ஆகிய மூன்றும் ஆத்மஜோதிமயமாக்கினார் ஆகினார். எதற்கும் ஓர் பக்குவ நிலை வேண்டும். அன்புமணியவர்கள் மலரும் போதே தமது சிந்தையிலும் செயலிலும் ஆத்மஜோதியாக அவதரித்தார்.
எமது உடம்பு ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் ஐம்பொறிகள் ஐம்புலன்களுடையதாகும். ஒவ்வொரு பொறியின் புலனுக்கும் சிறப்பான செயலும் உண்டு. இழிவான செயலுமுண்டு. எல்லாம் பொறிகளின் புலன்களையும் ஒரு சில நேரம் அல்லது ஆயுள் முடியுமட்டும் வென்றவர் வெகுசிலர் அல்லது இலைமறைகாய் போன்றவரேயாவர். சமூகத்திற் புகுந்து தன்னலமற்ற சிவதொண்டு செய்தாலும் குறைகேட்க நேரிடும். குறைவிடவும் நேரிடும். பலாப்பழம் இருக்கின்றது மிகவும் சுவையும் நறுமணமும் உள்ளது. ஆவலால் முன்பின் யோசிக்காது கத்தியை எடுத்து
B

Page 30
பலாப்பழத்தை வெட்டிப் பழச்சுளைகளைப் பிடுங்கிச் சாப்பிட முன்பே பலாப்பாலின் ஒட்டும் உபத்திரவம் போதும் போதும் என்றாகிவிடுகின்றது. பலாப்பாலை முற்றாகக் கத்தி கை வாய் முதலியவற்றிலிருந்து போக்கப் பலயக்திகளைக் கையாள வேண்டும். ஆனால் பூரீ இராமக்கிருஷ்ண பகவான் பலாப்பாலின் உபத்திரவம் இல்லாதிருக்க வேண்டுமெனின், பலாப்பாழத்தை வெட்டுமுன் கத்தியிலும் கைகளிலும் எண்ணெய்யைப் பூசி விட்டால் பலாப்பாலின் உபத்திரவம் இருக்காது என்கிறார் அதுபோல பக்தன் சமூகத்தில் தெர்ணடு செய்யுமுன் பக்தியாகிய எண்ணெய்யைப் பூசவேண்டும். பெரியோர்களின் அருள்வாக்கை அமுதவாக்காக எடுத்துப் பொன்போல்போற்றும் ஆத்மஜோதி ஆசிரியர் மிகமிக இளம் வயதில் இறைவன் மீது மீளாப் பக்தியன்பு பூண் டமையால் , அந்த இளவயதிற் கேற்ற களியாட்டங்களில் மனதை நாட்டம் கொள்ளச் செய்யாது செல்லத்துரைச் சுவாமிகளுடன் இந்தியத்தல யாத்திரை செய்த பலன் பற்பல மகான்களையும் முனிவர்களையும் ஆலயங்களையும் தரிசனம் செய்தார்.
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றாங்கு, தான் யாத்திரை செய்த செய்திகளை ஆத்மஜோதியில் பிரசுரித்தார். அதனை வாசிக்கும் நேயர்கள் தாமும் யாத்திரை செய்த பலனை வாசிக்கும் நேரத்தில் மட்டும் அல்ல அந்த உணர்வுகள் அவர்களில் உடல்களில் ஒட்டி என்றும் பேரின்பம் பயத்தவண்ணம் காணப்படடனர். இந்தியாவின் மூலை முடக்குகளிலுள்ள இருவழிகள் ஞானிகள் ஆச்சிரமங்கள் மடாலயங்கள் இவ்வாறு பல பல தாபனங்களைத் தரிசித்ததோடு நிற்கவில்லை. கட்டுரைகளாக காவியங்களாக ஆத்மஜோதியில் விளம்பரம் செய்தார். அந்தந்த முனிவர்கள் ரிஷிகள் போன்றோரின் அருள்வாக்காம் அமுதவாக்கை அவர்களின் கைப்பட எழுதுவித்து ஆத்மஜோதியில் பிரசுரித்தார். அவர்களை ஆத்மஜோதி நிலையம் அழைத்து உபசரித்துமலையகமக்கள் முதலாக யாவரும் பயனடையச் செய்தார்.
சிறப்பாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் எழுதினால் ஆத்மஜோதி மாபெரும் சாகரமாகும். ஆதமஜோதிச் சாகரர் பாற் கடலைக் கடைந்தால் அதாவது ஆத்மஜோதியை வாசித்தலென்னும் மத்தால் கடைந்தால் முத்து கவளம் போன்ற மணிமணியான பொருட்கள் காணப்படும். 1948ஆம் ஆண்டு தொடக்கம் ஆத்மஜோதித் திருப்பாற் கடலில் தோன்றிய தேவாமிர்தமான விடயங்கள் எண்ணற்றவை எந்த மாபெரும் பண்டிதர், ஞானிகள் முதலாகப் பாமரமக்கள் சிறுவர் முதியோர்வரை படித்துச் சுவைத்த வண்ணம் இருக்கும் படியான விடயங்கள் தன்னகத்துள் கொண்டிருந்தது.
G2
 

3. ஆத்மஜோதி என்பதன் பொருளை எல்லாராலும் அறிய முடியாது. அறிந்து கொள்ளவும் மாட்டார்கள். பதி, பசு, பாசம் என்ற முப்பொருளில் பதி என்பது கடவுள் அல்லது இறைவன். இறைவன் முற்றுணர்வு உடையவர். ஆகையால் யாரும் இறைவனுக்கு எதுவும் அறிவிக்க வேண்டியதில்லை எல்லாம் அறிந்தவர். பசு என்பது ஆன்மா அல்லது உயிர், அறிவித்தால் மட்டும் தன்னையும் தலைவனையும் உணர்ந்து கொள்ளும். பாசம் என்பது ஆணவம். ஆணவம் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் எதுவும் அறியாத சடப்பொருளாய் இருந்து உயிரைப் பிறவிக் கடலுள் தள்ளும் இழிதொழிலைச் செய்து கொண்டே இருக்கும். என்றும் அழியாத முப்பொருள் பற்றிக் கூறுகின்ற சித்தாந்தம் ஆணவத்தை இருளினும் கொடியது என்று சுட்டிக் காட்டுகின்றது. இருள் தன்னைக் காட்டும் பிறபொருளைக் காட்டாது. ஆணவம் தன்னையும் காட்டாது பிறபொருளையும் காட்டாது. ஆகையால் ஆணவம் இருளினும் கொடியது.
என்றும் அழியாத நிலையான முப்பொருளில் இரண்டாம் இடத்தில் நிற்கின்ற ஆன்மாவானது பாசமாகிய ஆணவத்துடன் கூடாது இறைவனுடன் கூடும் நிலை ஆத்மீகம் என்றழைக்கப்படும் தாமரம், இராசதம், சாத்வீகம் ஆகிய முக்குணங்களை உடைய ஆன்மாவானது தாமசம் இராசதம் ஆகிய இரு குணங்களையும் நீக்கிச் சாத்வீக குணத்துடன் சீவன்முத்தராக விளங்கும்போது ஆன்மா ஆத்மீக நிலையை அடைந்து ஜோதியாக அதாவது பூரண ஞான சொரூபியாக விளங்கும்.
ஞானம் என்பது எல்லாரிடமும் உண்டு. ஆனால் ஞானம் இல்லாதவர் போல் பலர் இழிவுபடுகின்றனர். நெருப்பை புகை மறைக்கின்றது. கண்ணாடியைத் தூசி மறைக்கிறது. சிசுவைக் கரு மறைக்கின்றது. அதுபோல மனிதனது அல்லது ஆன்மாவின் ஞானத்தை அஞ்ஞானம் மறைக்கின்றது.
புகையை நீக்கிவிட்டால் நெருப்புத் தெரியும். கண்ணாடியின் தூசியை நீக்கினால் கண்ணாடியில் பிம்பம் தெரியும். கருப்பையை நீங்கினால் சிசு வெளியே வந்துவிடும். அதுபோல ஆன்மாவைப் பீடித்த பீடையான அஞ்ஞானம் பக்தியென்னும் நீரினால் கழுவித் துடைத்துவிட்டால் ஞானம் பிரகாசிக்கும் என்பது போன்ற விளக்கங்களை ஆத்மஜோதியில் விளக்கத் தந்திரோபாயமாக திருமுறைக் காட்சிகள், ஈழத்துச் சித்தர்கள். முப்பெரும் சித்தர்கள். இதிகாசங்கள் புராணங்கள் போன்ற பலதுறைகள் ஆத்மஜோதியில் பொதிந்து காணப்பட்டது.
40

Page 31
ஆத்மஜோதி மண
புக
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
எப்
டே
ஆ
அ
எனச் சேக்கிழார் பெருமான் இறைவனைக் கும்பிடும் தொண்டர்கள் தம் பெருமையைப் பெரியபுராணத்தில் போதித்தார். இந்த நிலையில் காணப்பட்ட ஆத்மஜோதி ஆசிரியர் இன்பம் துன்பம் சிறுமை பெருமை என்பன நோக்காது வாசகர் முதல் எழுத்தாளர் வரையும், பண்டிதர் முதல் பாமரமக்கள் வரையும் ஒரே மாதிரிக் காணப்பட்டார். ஆத்மஜோதி மூலம் மலைநாட்டு மக்களின் வாழ்வு ஒளிமயமான வாழ்வாக மாறும் யுக்திகளைக் கையாண்டார். இருளில் அழுந்திய மக்கட்கு ஞானஒளியாக ஆத்மஜோதியை மலையுச்சியில் ஏற்றினார்.
மா
பச
இ
ஆத்மஜோதி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம்
பா அது சுமந்து வந்த மணிகளின் பெருமைகள் | அளப்பரியன. அதனை அளக்கவென்றால், 'நரி நில் தன்வாலால் மகாபெரும் சமுத்திரத்தை அளந்தது போலவும், பாற்கடலைப் பூனைநக்கி முழுமையாகக் குடிப்பேன் என் பது போலவும் காணப் படும். காலக்கெடுதியாலோ இனப்பிரச்சனைகளாலோ கைவசம்
இ இருந்த ஆதம்ஜோதி மலர்கள் எல்லாம் அழிந்தாலும்
எல் அவைகளை வாசித்து வாசித்து அடைந்த பயன்பாடுகள்
வ பலவாகும். அவற்றின் ஒரு சிலவற்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அவை எப்போதும் நெஞ்சில் பசுமையாகவே இருக்கின்றன.
நீர்
வேதங்கள் சிவாகமங்கள் இறைவனால் பேசாமொழியாக அருளப்பட்டவையாகும். வியாசர் அவற்றை வடமொழியில் யாத்தார். வடமொழியில் இருந்த வேதம் இலகுவில் விளங்கக் கூடியதன்று. அதனை இருடிகள் உபநிடதமாக தெளிவாக விளங்கிக் கொள்ளும்படி சுவடிகளில் எழுதினார்கள். இதனை எல்லா மக்களும் விளங்கத் தமிழில் மொழிபெயர்த்து திவ்விய ஜீவன சங்கத்தைச் சேர்ந்த சுவாமிகள் கால் வழங்காதபோது ஆத்மஜோதியில் எழுதிவந்தார். பின்னர் அவை நூலாக்கப்பட்டன. நமக்குத் தற்சமயம் 77 வயது முதுமை மறந்தாலும் ஒருசில ஞாபகத்திலுண்டு. ஆத்மஜோதி ஆசிரியர் அவர்களும் உபநிடதக் கதைகள் என்றும் எழுதியுள்ளார்.
2 - G G E 2 2 2 2 2 இ 5 19 5 ஆ டு (2 29
ஒ
வ!
எ6
ஒரு நரிக்கு வெகுநாளாகத் திராட்சைப்பழம் சாப்பிட விருப்பம் இருந்தது. திராட்சைப்பழத் தோட்டக்காரன், ஒரு குச்சியும் உள்ளே நுழையாதவாறு வேலியடைத்திருந்தான். எங்கோரிடத்தில் சிறு இடைவெளியை இந்த நரி கண்டு விட்டது. உள்ளே
25

விழா மலர்
எத்தனித்தது. அதன் உடம்பு பருமன். அதனால் ) உள்ளே புக முடியாது கவலைப்பட்டது. படியாவது திராட்சைப்பழம் உண்ண வேண்டுமென்ற ராசையால் அந்த நரி பல நாள் பட்டினி இருந்து
றாக மெலிந்தபின், அந்த இடைவெளியால் உள்ளே தந்தது. பலநாளாகப் பழத்தை உண்டு உண்டு ஏறாகக் கொழுத்தும் விட்டது. பழம் உண்ணும் சையும் நீங்கிவிட்டது. ஆனால் அந்த நரியால் ந்த வேலியின் இடைவெளியால் வரமுடியவில்லை. காட்டக்காரன் வந்தால் கொன்றுவிடுவான். வெளியே வும் நரியால் முடியவில்லை. பாவம் எங்கோ ஒரு றைவில் கிடந்து பட்டினி இருந்து நன்றாக மெலிந்த ன்பே நரி வெளியே வந்தது. இன்னுமோர் இதுவக்கதை.
ஒரு குருவிடம் இளைஞன் ஒருவன் சென்றான். நவை வீழ்ந்து வணங்கித் தன்னைச் சீடனாக ஏற்கும்படி பபக்தியுடன் மன்றாடிக் கெஞ்சினான். குரு ளைஞனின் தோற்றத்தை நோக்கினார். என்ன னைத்தாரோ ஒரு பசு மாட்டைக் கொடுத்து இந்தப் வை வளர்த்து ஆயிரம் பசுவாக்கி வரவேண்டும். தன்பின் சீடனாக ஏற்கின்றேன்' என்று அருள் செய்தார். ளைஞனின் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் ல்லை. ஏக்கமும் இல்லை. ஒன்று ஆயிரமாக்குவது ன்று அச்சப்படவுமில்லை. முகமலர்ச்சியுடன் குருவை லம் வந்து வணங்கினான். பசுவை நல்ல புல்லும் நிலையும் உள்ள இடத்திற்கு கொண்டு சென்றான்.
பசுவை நல்ல முறையாகக் குளிப்பாட்டி, ஈரம் வட்டி மேயவிடுவான். மிக அன்புடன் பசுவைத் தய்வமாக வணங்கித் தடவிக் கொடுப்பான். பசு வனை விட்டு விலகிப் புல்மேய்ந்து தண்ணீர் டித்துவிட்டு அவனருகே அன்போடும் ஆசையோடும் உந்து இரை மீட்கும். இளைஞன் ஒரு பசு ஆயிரமாக மறும் நாளை எண்ணித் தியானம் இருப்பான். ளைஞன் முதுமை அடைந்து ஒரு பசு ஆயிரம் எக்களாகப் பெருகியது. இளைஞனின் தியானமும் ஐபமும் கண்ட வனவிலங்குகள் மரங்கள் இளைஞனை ணங்கின. முதுமை அடைந்த இளைஞன் தன்னிடம் ந பசு அளித்த குருவிற்கு ஆயிரம் பசுக்கள் கொண்டு ந்து கொடுத்தார். குரு, ஆயிரம் பசுக்களைக் கொண்டு ந்த முதியவரை வணங்கி நீயே எனக்குக் குரு. நீயே எக்குக் குரு செயற்கரிய செயல்களைச் செய்தாய். மர் இத்தனை காலம் பொறுமையாக இருந்து இளமை துமையாகும் வரை. தன்னைத் தியாகம் செய்து நவின் சொல்லுக்குப் பணிந்து ஒரு பசுவை ஆயிரம் சுவாக்க முடியமெனத் திணறி அவரைத்தழுவி
ணங்கினார்.

Page 32
இவ்வாறு பல துறைகளிலும் உபநிடதக் கதைக ஆத்மஜோதியில் பிரசுரிக்கப்பட்டு நூல் வடிவம் பெற்ற இன்னுமோர் சிறுகதை மனிதரால் கூடச் செய்ய முடிய அரிய செயலை ஒர் புறாச் செய்த கதை அது.
ஆண்புறாவும் பெண்புறாவும் ஒன்றை ஒன் பிரியாமல் சந்தோஷமாகவும் அன்பாகவும் இணைந் வாழ்ந்து வந்தன. ஒருநாள் வேடனிடம் ஆண்பு அகப்பட்டுவிட்டது. வேடன் அதனைக் கூண்டில் அடைத் வீடுகொண்டு போக முயன்றான். மழை சோனாவாரியா பெய்யவே அவன் ஒரு மரத்தின் கீழ் இருந்தா அந்த மரத்தில் அடைபட்ட புறாவின் பெண்புறா த துணைவனைக் காணாது புலம்பியது. அப்போ அடைபட்ட ஆண்புறா தனதுமொழியில் வருந்தா வீட்டிற்கு வந்த விருந்தாளியை நன்கு உபசரிப்ட இல்லறத்தாரின் கடமை. நான் அடைபட்டுவிட்டேன். விருந்தாளியின் மனம் நோகாது உபசரியெண் பணித்தது. அவ்வாறே அப்பெண்புறா காய்ந்த சுள் விறகுகளைப் பொறுக்கி வந்து நெருப்பு மூட்டிய நெருப்புச் சுவாலை விட்டு ஜோதி வடிவமாக எரிந்த அப் பெண் புறா வேடனைப் பார்த்து அன்பா விருந்தாளியே இந்த நேரத்தில் நல்ல மாத விருந்தளிக்க முடியவில்லை. நான் இந்த நெருப்ட் வீழ்ந்து இறக்கின்றேன். நீ என் இறைச்சியைச் சாப்பிட் பசியாறிச் செல்வாய்” என்று கூறி நெருப்பினுள் வீழ்ந்த வேடன் ஆச்சரியப்பட்டான். அடைத்த புறாலை கூட்டைத் திறந்து விட்டான். அப்போதுஅந்த ஆண்பு வெளியே வந்தது. வேட விருந்தாளியே நாம் செய புண் ணியம் மாபெரும் புண் ணியமாகும் என துணைவியின் இறைச்சி உன் குடும்பத்தாருக்கு போதாது. அதனால் நானும் வீழ்ந்து மடிகின்றே என் இறைச்சியையும் எடுத்துச் செல் என்று கூறி, அர நெருப்பினுள் வீழ்ந்தது. அப்போது வேடனின் அறில் கண் திறந்தது. ஆறறிவு படைத்த மனிதருக்கில்ல பேரறிவு இப்பறவைகளிடம் உண்டு. அதனா விருந்தாளியை உபசரிக்கத் தம்மைத்தாமே அழித்து கொண்டன என்று அழுது, புலம்பி எரிகின்ற தீயி அவனும் வீழ்ந்து இறந்தான்.
ஆத்ம ஜோதியில் பல எழுத்தாளர்கள் சமய கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மூலை முடுக்குகளி இருந்த ஆலய வரலாறுகள், பிரசித்தி பெற ஆலயங்களின் வரலாறுகள், சமாதி, மடாலயங்களி வரலாறுகள் விரல்விட்டு எண்ண முடியாத சம்பவங்க ஆத்மஜோதியில் அக்காலத்தில் காணப்பட்ட இப்போதும் சைவப் பெரியார்கள் ஆத்ம ஜோ முத்தையா சுவாமிகளின் அடியை ஒற்றி கனடாவி ஆத்மஜோதி வெளியிட்டு வருகிறார்கள்.
4. ஆத்ம ஜோதி ஆசிரியர் ஈழத்திலும், இந்தி என்று கூறப்படுகின்ற பாரத தேசம், சிங்கப்பூர் மலேசிய
 

ல்
T
LIT,
(26
இந்தோனேசியா, கனடா, சுவிஸ் இவ்வாறு பல ஐரோப்பிய நாடுகளிலும் ஆத்மஜோதி ஞானதீபம் பரவப் பிரசங்கம் செய்தார். தமது இளம்பராயத்தில் இருந்து மூர்த்தி தலதீர்த்த யாத்திரைகள் தனித்தும் கூட்டமாகவும் செய்தார்.
யாழ்ப்பாணத்தில் விசேட தலங்களாக நல்லூர், மாவிட்டபுரம், சந்நிதி, வல்லிபுராழ்வார் ஆலயம் போன்ற ஆலயங்களின் தேர்த்திருவிழாக் காலங்களில் பக்தர்களுடன் பாதயாத்திரையாகப் பஜனை செய்தார். நல்லூர் திருவிழாக்காலங்களில் சப்பரத்திருவிழாவிற்கு முதல்நாள் நயினாதீவில் பாதயாத்திரை பசனை ஆரம்பமாகி தீவகம் அதாவது நெடுந்தீவு, அனலைதீவு, வேலணை புங்குடுதீவு மண்டைதீவுகளில் தரிசனம் செய்து அதிகாலையில் நல்லூரை வந்தடைவர். தேரன்று முதல்இரவு இரண்டரை மணிக்கு ஏழாலை ஞானவைரவர் ஆலயத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்களுடன் பஜனை செய்து பாதயாதிரையாக தேரன்று அதிகாலை ஐந்துமணிக்கு நல்லூர்க் கோயில் வலம் வந்து தேரடியை அடைவர். இவ்வாறு பல ஆலயங்கட்கு நடைபஜனையில் சிறுவர் முதல் இளைஞர் முதியோர் பாமர மக்கள், படித்த மாமேதைகள் யாவரும் சாதி வியாதி வித்தியாசமின்றி ஆசிரியரின் படை பசனையில் பங்குபற்றிப் பயனடைந்தனர்.
ஆத்மஜோதி சுவாமிகளுடன் பல பக்தர்கள் தொடர்புடையவர்கள். அவர்களில் கிளிநொச்சிக் குருகுல பிதா சைவப்பெரியார் வேலுப்பிள்ளை கதிரவேல் அப்பு அவர்களும் ஒருவர். கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமம், தவத்திரு வடிவேல் சுவாமிகளிடம் ஆசிரியர் அடிக்கடி அங்கு வருவதுண்டு. அப்போது வன்னி மாவட்ட வீதிகளிலும் வீடுகளிலும் பசனை நிகழ்த்துவார். படிக்காத, அறிவே இல்லாத மக்களின் கல்லான நெஞ்சில் பக்தியான பசுமையான எண்ணெய் பூசி பசனை என்னும் ஏணி மூலம் அவர்களை ஏற்றிச் சென்று சிறைமயமாகும் யுக்திகளைக் காணி பிப் பார். குருகுலத்தில் 1982 இல் இந்துபோதகர் பயிற்சி ஐந்து வருடத் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முதல்வராக இருந்து மாணவர்கட்கு நற்போதனை பயிற்சி அளித்தார்.
1986இல் யாழ். நகரெங்கும் கெடுபிடி ஆரம்பித்தது. அக்காலத்தில் ஆசிரியர் சாவகச்சேரி குருபவனத்தில் இருந்தார். நாட்டுப் பிரச்சினைகளையோ வீட்டுப் பிரச்சனைகளையோ இலகுவில் நீக்க வேண்டுமானால் தெய்வ வழிபாடுதான் உகந்தது. இதனை இன்றுவரை எம்மவர்கள் உணரவில்லை. உலக மகா யுத் தம் நடந் தபோது இந் தியா வெள்ளையருக்கு அடிமைப்பட்ட காலத்தில் சோற்றுக்கு கடலில் சும்மா விளைந்த உப்பு பருக்கையளவும் இல்லாது துன்பப்பட்டனர். அடிமை வாழ்வு இந்தியரையும் இலங்கையரையும் அவல வாழ்வாக்கியது.

Page 33
ஆத்மஜாத மக
) வ ல
ல 6
9 ல் |
= 1. =
(
அந்த அடிமைத்தளையை அறுக்க தந்திரமானதும் மந்திரமானதுமான ஒரே ஒரு வழி பிரார்த்தனையாகும். இதனைக் கையாண்டு கத்தியின்றி இரத்தமின்றிச் சுதந்திரத்தைத் தேடித்தந்தவர் மகாத்மா காந்தியவர்கள்.
கந்தபுராணப்போர், இராமாயண காலத்தில் நிகழ்ந்த இராம இராவணப்போர் பாரதப் போர் போன்றவையும் தெய்வீகத்தால் நிகழப்பட்டு மக்களுக்கு நன்மை அளித்தன என்பதை நாம் வரலாற்று மூலம் அறிகின்றோமல்லவா. இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்த ஆசிரியர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டம் முழுதும் G.A, விதானை, மற்றும் பெரியவர்கள் மூலம் நடையாத்திரையில் ஆலயங்கள், மடாலயங்கள் தோறும் இரவுபகலாகக் கெடுபிடி நடுவே செய்தார். வடமராட்சிப் பிரதேசம், தென்மராட்சிப் பிரதேசங்களில் நடையாத்திரைப் பசனை, செய்கின்றோம். வானத்தில் கெலிகொப்டர் தன் கடமையைச் செய்கின்றது பயங்கரநிலை.
இவ்வாறு ஆசிரியர் தீவகம் முதலாக யாழ். குடாநாடெங்கும் உயிரைப் பணயம் வைத்து நடைபசனை பிரசங்கம் முதலியன செய் தார். அக்காலங் களில் அடியேனும் அவற்றுடன் பங்குகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
1964 ஆம் ஆண்டென நினைக்கின்றேன். மே மாதம் எமது புலவர் டிப்ளோமா கல்வியை முடித்துக் கொண்டு எமது காசிவாசி உதித்த மண் குப்பிளான் வந்தேன். வேலை கிடைப்பது அரிதான காலம். கல்வியில் தரம் குறைவாக இருந்து பொருளின் கனம் உடையவர்க்கு இலஞ்சம் வாங்காது பதவி கொடுத்த காலம். வயதுமோ 32. இக்கட்டான நேரம் ஆத்மஜோதி ஆசிரியர், எனது தந்தையின் நண்பரின் மகன். சிறிது காலம் மலைநாடுகள் வன்னிப்பகுதிகள் தென்மராட்சிப் பகுதிகட்கு ஆத்மஜோதி சமயப் பிரசாரத்திற்கு அழைத்துச் செல்வார். எமது குடும்ப நிலை கண்ட ஆசிரியர் தமது உற்ற நண் பரான ஊரெழு கிருஷ்ணபிள்ளையின் தேயிலைத் தோட்டத்தில் தற்காலிக ஆசிரியையாக 90 ரூபா சம்பளத்திற்கு நியமனம் செய்தார். சிறிது காலத்தின் பின் அயலில் உள்ள தோட்டத்தில் 300 ரூபா சம்பளத்திலிருந்து கடமைகளைச் சரிவரச் செய்தபோதும் ஆத்மஜோதி நிகழ்ச்சிகளில் தவறாது பங்குபற்றி வந்தேன்.
72 இல் மலைநாடு கொழும்பு முதலிய இடங்களில் இனக்கலவரம் பெருகத் தொடங்க கிளிநொச்சி குருகுலப் பெண்கள் விடுதியில் மேற்பார்வையாளராக சமய போதகராக இருந்தேன். தெய்வீக அருள் அயலில் இருந்த இந்துமகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் வன்னிமாவட்டம் முழுதும் விசேட தினங்களில் சமய போதகராகவும் இருந்தேன். 87இன் யாழ்ப்பாணமும் கெடுபிடிகளுக்குத் தப்பவில்லை. வன்னியுட்படக் கெடுபிடி . இதனால் குருகுலக் குடும்பம் அழிய நாம் அகதியாக கொழும்பில்
m
27

விழா மலர் இருந்தேன். 1991ஆம் ஆண்டு என நினைக்கிறேன். ஒரு கார்த்திகை விளக்கீட்டின்போது கொம்பனித் தெருவிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் பானொலி அஞ்சல் மூலம் பிரசங்கம் செய்தேன். இதன் யனாக மீண்டும் மலையகம், கொழும்பு, மட்டக்களப்புப் பிரதேசங்களில் சமயப் பிரசாரம் செய்தேன். அருள்மணி முத்தையா சுவாமிகள் மறைந்த செய்தியை வீரகேசரி மூலம் அறிந்து அவர்கள் பற்றிய கட்டுரை எழுதி வீரகேசரிக்கு அனுப்பினேன்.
முடிவுரை உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் நிலாவுலாவிய நிர்மலி வேணியன் அலகிற் சோதியன் அம்பலத்தாடுவான் Dலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் ..
பெரியபுராணம்)
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
கந்தபுராணம்)
மாம.
மேன்மை கொள் சைவநீதி உலகெலாம் பரந்து பதிந்து வாழ்ந்தது. அதனால், அரசு, குடி, நீர்வளம், நிலவளம் நான்கு மறைகளின் அறங்கள் நற்றவம் மலிந்து காணப்பட்டன. உலகம் முழுவதும் சைவமும் தமிழும் பரவியதால் உலகம் மிகவும் அமைதியாக இருந்தது. தெய்வவாக்காகும். சேக்கிழார் சுவாமிகள் சோழனின் அன்புப் பணிப்பின்படி பெரியபுராணம் எழுதத் தொடங்க, எம்பெருமானே "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தார். எந்தச் சமயத்திலும் பக்தர்களுக்கு அவர்கள் பாட அவர்களுடைய மதக்கடவுள் அவர்களின் மொழியிற் பாட அடியெடுத்ததாகச் சான்றுகள் எதுவுமே இல்லை. ஆகையால் சைவமும் தமிழும் அநாதியான
வையாகும்.
வையகத்தில் மக்கள் வாழ்வாங்கு வாழ அவர்களுக்கு நன்னெறி நல்லறம் நற்பண்பு என்பவற்றைப் புகட்ட எம்பெருமான் எழுதா மொழியில் வேதாகமங்களை அருளினார். அவை வடமொழி தென்மொழிகளில் பரவும் வகையும் அருளினார். சாதனை, அனுபவங்களில் பரந்து படர் அருளாளர்களைத் தமது பிரதிநிதிகளாக பூவுலகில் அவதாரம் செய்ய அருள் கூர்ந்தார். அவர்களில் ஒருவரே ஆத்மஜோதி ஆசிரியர் அவர்கள். ஆத்மஜோதி ஞானதீபத்தினால் உலகின் தமிழ் சைவம் வாழ் மக்களை விழிப்படையச் செய்தது தமிழ் சைவம் செய்த தவமேயாகும்.
ஓம் சாந்தி

Page 34
ஆத்மஜோதியாரின்
ச. முத்தையா, நா
ஆத்மஜோதியார் என்ற புனைப்பெயரைக் கொண்ட எனது அருமை நண்பரும், பேரனுமாகிய, (எனது பெயரை உடைய) நா. முத்தையா மாஸ்டர் என்னுடைய நினைவிற்கு எட்டிய மட்டிலும் அவர் வாழ்க்கையைப் பற்றிக் கூறியதை என் நினைவில் வைத்து ஒன்றாக இருந்து பழகியதை நினைவுபடுத்தி இந்த மலர் மூலமாக எழுதக் கிடைத்தமைக்கு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கைத்திருநாட்டின், வடமாகாணத்தின், யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏழாலை என்னும் ஊரில் 1918 மே மாதம் இருபத்தைந்தாம் நாள் நாகமணி - பொன்னுப்பிள்ளை தம்பதியினருக்கு நான்காவது பிள்ளையாக பிறந்தார். அவரோடு இரண்டு சகோதரிகளும், ஒரு மூத்த சகோதரரும், இவருக்குப் பிறகு இராமனுக்கு எப்படி இலட்சுமணனோ அதுபோல அருமைநாயகம் என்ற தம்பியும் பிறந்துள்ளார்.
ஆரம்பத்தில் தான் பிறந்த ஊரில் ஆரம்ப பாடசாலையில் ஆறாம் வகுப்பு வரை படித்து அதற்குப் பின் மேற்படிப்பை மயிலனி என்ற ஊரில் படித்தார். மேல் வகுப்பு முடிந்தவுடன் திருநெல்வேலியில் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து படித்தார். அப்போது பள்ளிப் படிப்பை விட அறநெறி பாடங்களையும் கற்றிருந்தார். ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் படிப்பு முடிந்தவுடன் பல நண்பருடைய பழக்கம் இருந்தபடியால் நாவலப்பிட்டிக்கு வந்து சேர்ந்தார். இங்கு புகையிரத நிலையத்திலிருந்த க. இராமச்சந்திரா, வைத்திய சாலையில் பணிபுரிந்த டாக்டர் சிவஞானசுந்தரம் (நந்தி) ஆகியோருடன் மிகநெருக்கமாகப் பழகி இன்னும் பல நண்பர்களை தனதாக்கிக் கொண்டு அவர்கள் மூலம் நல்லாதரவைப் பெற்றுக்கொண்டார்.
நாவலப்பிட்டியில் சென்.மேரிஸ் பாடசாலையில் முதன்முதலாக ஆசிரியராக சேர்ந்தார்.(நாம் அதிபரும், ஆசிரியருமாகிய திரு. முத்தையா அவர்களை இந்த மலருக்காக ஜோதியார் என்றே குறிப்பிடுவோம்.) பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்த பிறகு ஒவ்வொரு வருடாந்த விடுமுறைக்கும் இந்தியா சென்று பல மகான்களைத் தரிசித்து வந்துள்ளார். அந்தப் பாடசாலை ஒரு கிறிஸ்தவ பாடசாலையாக இருந்தாலும் முஸ்லிம் பிள்ளைகள் தான் அதிகம். ஆனாலும் இவரைப் போல் தமிழ் மொழி சொலலிக் கொடுக்க எவருக்கும் ஆாவமில்லாதபடியால் அங்கு படித்த மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஜோதியாரை நேசித்தனர்.
அதேநேரம் தமிழ் சைவப் பிள்ளைகளுக்கென்று கதிரேசன் பாடசாலை ஆரம்பித்து பிள்ளைகள் சேர்வதற்கு மிகக் குறைவானதாக இருந்தது. நகரத்தில்
 

ன் வாழ்க்கையில் .
வலப்பிட்டி, இலங்கை
28
பிள்ளைகள் சேர்வது குறைவாக இருந்ததால் தோட்டங்களில் உத்தியோகத்தினரது பிள்ளைகளையும் கதிரேசனுக்கு சேர்த்தார்கள். அதுவும் போதாமையால் தோட்டங்களில் வேலைசெய்த தொழிலாளர்களது பிள்ளைகளையும் பல உதவிகள் அளித்துக் கதிரேசனுக்கு சேர்க்க வேண்டியதாக இருந்தது. அதேநேரம் ஜோதியாரது ஆற்றலையும், முன்னறிவையும் கொண்டு கதிரேசன் பள்ளி முகாமையாளராக இருந்த கனகசபை சுப்பிரமணியம் தனது பாடசாலைக்கு வரவழைக்க மிகவும் ஆர்வமாக இருந்தார். கிறிஸ்தவப் பாடசாலையில் படிப்த்தாலும் தினசரி நெற்றியில் விபூதி இல்லாமல் பாடசாலைக்கு வரமாட்டார். அதனால் அங்கிருந்த இந்துப்பிள்ளைகளும் விபூதி பூசித்தான் வருவார்கள். பாதிரியார் ஆகிய அதிபரும் ஒன்றும் சொல்வதில்லை.
இவர் கதிரேசன் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த பின் நகரப் பிள்ளைகளும், தோட்டப்பிளளைகளும் அதிகமாக வரத் தொடங்கினர். பிள்ளைகள் வரவுப் பெருக்கத்தினால் இரு நேரப் பாடசாலையாக நடத்தினார். இவரிடத்தில் பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் பாடசாலை முன்னேற்றத்திற்கு ஆதரவு நல்கினர். மலைநாட்டில் எழுபது, எண்பது மைல் சுற்றளவிற்குள் தேயிலை தோட்டங்களுக்குச் சென்று பணம் திரட்டி கதிரேசன் பள்ளியை முன்னிலைக்கு கொணர்ந்தார். இந்தியாவிலிருந்து புகழ் பெற்ற நடிக, நடிகையர்களை நகர் பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் அழைத்து வந்து நாடகம் நடத்திப் பாடசாலை முன்னேற்றத்திற்கு பெரும் பாடுபட்டார். தோட்டப் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளிக்கூடம் முடிந்த உடன் தம்பி அருமைநாயகமும் ஜோதியாரும் தேவாரம், பசனை செய்து பழக்கப்படுத்தினார். அத்தோடு தோட்டப்புற மக்களும், பிள்ளைகளும் ஆன்மீகக் கதைகளை கேட்கும்படி சொன்னார். நாவலப்பிட்டியில் கதிர்வேலாயுதசுவாமி கோயில், முத்துமாரியம்மன் கோவில் என்ற இரு கோயில்களும் சிறியனவாக இருந்தமையால் இவரது ஆலோசனையின் பேரில், மாரியம்மன் கோயில் பெரியதாகக் கட்டி கஜலக்சுமி மண்டபம் தனியாக அமைக்கப்பட்டது. அதன் நிருவாக சபையில் நானும், ஜோதியாரும் அங்கத்தவராக இருந்தோம். அவரது ஆலோசனையால் கோயிலைவிட பெரியதாக மண்டபம் அமையப் பெற்றது. அதில் வெள்ளிக்கிழமை தோறும் கூட்டு வழிபாடும், ஆன்மீக கதைச் சொல்லலும் தவறாமல் நடத்தினார். கோயிலும் பெரியதாகக் காட்சி அளித்தது. இவருக்கு தம்பி அருமைநாயகமும் ஒத்துழைத்து சேவை செய்தார்.

Page 35
ஜோதியார் கூட்டு வழிபாட்டுக்குப் பிறகு ஆன்மீக கதைகளாலும், கண்ட காட்சிகளாலும் அடியார்களுக்கு விளக்கிச் சொல்லுவார். இராமாயணம் தொடர் பிரசங்கம் செய்தார். பக்தர்கள் சாமி தரிசனதிற்கு வருகிறார்களோ, என்னவோ இவரது சொற்பொழிவை கேட்க வருவதாக கூறுவார்கள்.
1948இல் ஆத்மஜோதி புத்தக வடிவில் ஆரம்பிக்கப்பட்டது. புத்தகம் வெளிவருவதற்கு உற்சாகப்படுத்துவதற்காகப் புகையிரத நிலையத்தில் சேவையாற்றிய ஆன்மீக வாதியான க. இராமச்சந்திரா அவர்களை கெளரவ ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார். ஆத்மஜோதி புத்தகங்களில் எந்த ஒரு வெளியீட்டிலும் விளம்பரமற்றதாக வெளிவந்தது. ஆன்மீக புத்தகங் களில் ஆத்மஜோதி மட்டுமே ஜோதியார் இருக்குமட்டும் விளம்பரம் இன்றி வெளிவந்தது என உறுதியாகச் சொல்ல முடியும். இதன் வெளியீடு ஒழுங்காக வெளிவர 1960 இல் ஆத்மஜோதி அச்சகத்தை நிறுவினார்கள்.
அச்சகத்திற்கு முகாமையாளராக, ஆங்கில ஆசிரியராகப் பதவி வகித்த தம்பி அருமைநாயகம் தன் தொழிலை ஒய்வு பெற்று விலகிக் கொண்டு அச்சகப் பணியை மேற்கொண்டார். பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற சிறிது காலத்தில் சூரியன் சந்திரர்களை கிரகணம் பிடிப்பது போல ஜோதியாரையும் அரசாங்கக் கிரகணம் பிடித்து விட்டது. என்ன! நாவலப்பிட்டி யிலிருந்து 27 மைல்களுக்கு அப்பால் அம்பிட்டி என்ற ஊருக்கு மாற்றிவிட்டார்கள். நாவலப்பிட்டியிலிருந்து
இரயில் மூலமோ, பஸ் மூலமோ இரு வாகனங்கள்
மாறிச் செல் ல வேணி டும் . ஜோதியார் சோர்வடையவிலை. அங்கும் ஒரு வருடம் சேவை செய்தார். காலை 6 மணிக்குச் சென்றால் மாலை நான்கு மணிக்கே வீடு வந்து சேர்வார். ஒரு வருடத்திற்கு பிறகு மறுபடி மாற்றலாகி வந்துவிட்டார்.
நான்கு மணிக்குப் பிறகு ஆன்மீகப் பணி வேலை. ஆத மஜோதி அச்சகத்திற்கு அச்சு வேலை கொடுப்பவர்கள் தாங்கள் வாசகங்களோ, எழுத்துக்களோ பிழை திருத்த தேவையில்லை என்று வாடிக்கை யாளர்களுக்கு நம்பிக்கை. அதே அச்சகத்தில் பல தேவாரம், திருவாசகம் போன்ற பக்திமயமான புத்தகங்களை அச்சிட்டு கோவில்களில் வெளியிடுவார். பணமுள்ளோர் கொடுக்கலாம் பணம் அற்றோர் இலவசமாக பெறலாம். ஆதம்ஜோதி அச்சகத்தை ஒட்டி ஆத்மஜோதி நிலையமும் அமைந்துள்ளது. அதில் தியானமும், யோகாசனப்பயிற்சியும் நடைபெறும். விடியற்காலை நாலரை மணிக்கு நானும், நகரப் பிரமுகர்களும் பயிற்சி பெறுவோம். அஞ்சரை மணிக்கு பக்கத்திலுள்ள மகாவலி கங்கையில் நீராடி தொழிலிற்கு சென்று விடுவார்கள். ஜோதியாரும், காலை உணவு முடித்து ஏழுமணிக்கு பாடசாலை போய்விடுவார்.
இந்தியா சென்று வந்ததில் பல மகான்களும்,
G29
 

இலங்கை வந்து ஆத்மஜோதி நிலையத்தில் தங்கிச் செல்வார்கள். உணவு அளிப்பதற்கு தம்பியார் குடும்பமும் இரத்த உறவுகளும் இருந்தனர். எத்தனை பேர் வந்தாலும் உணவு அளித்து உபசரிப்பர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலுக்கு யார் வராவிட்டாலும், ஆத்மஜோதி நிலையத்தினர் இருப்பார்கள். ஜோதியார் இந்தியாவிலிருந்து ஆன்மீகவாதிகளான கி.வா. ஜெகநாதன், பித்துக்குளி முருகதாஸ், சிவபால யோகி, குன்றக்குடியார், நல்லூர் ஆதீன பரமாச்சாரியார், ஹரிதாஸ் சுவாமிகள், கிருபானந்தவாரியார், இன்னும் பலபேர் முத்துமாரியம்மன் கோவிலில் கச்சேரியும் , சொற் பொழிவும் நிகழ்த்தியுள்ளார்கள், ஆத்மஜோதி நிலையத்தில்தான் தங்கினார்கள். மாரியம்மன் கோவிலில் ஜோதியாருக்கு சவர் டியப் தப் பூர்த்திவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுப் பலருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது அறிவுசார்ந்த அதிபர் ஜோதியாருக்கு ஆலோசனை சொல்லிய பேதை கிழவியார் ஒருவர் இருந்தார். அவர் நகரத்தில் பிச்சை எடுத்துப் பிழைப்பவர். மிகவும் அழுக்கடைந்த கிழிந்த உடையுடன் பலநாள் பார்த்திருக்கிறார். ஒரு நாள் பாடசாலை வேளை ஆளை அழைத்து கிழவியாரைக்கூப்பிட்டார். “நீர் இப்படி அழுக்கடைந்த கந்தல் உடையை உடுத்தியிருக்கிறாய். இந்த மாதிரி கோலத்தில் நீ வரக்கூடாது.” எனச் சொல்லி ஒரு புதிய சேலையை வாங்கிக் கொடுத்தார். ஜோதியாருக்கு வணக்கம் சொல்லி ஆசி கூறிச் சென்று விட்டார். அடுத்து ஒரு மாதம் வரை பாடசாலைப் பக்கம் வரவில்லை. சிறிது நாள் சென்று மீண்டும் பிச்சையெடுக்கும் வேலையைத் தொடரும்போது ஜோதியார் கண்களில் தென்பட்டார். கிழவியாரை அழைத்து நான் முன்பு கொடுத்த சேலை எங்கே எனக் கேட்டார். அது வீட்டில் பத்திரமாக இருக்கிது சாமி என்று கிழவி சொன்னார். அதற்கு ஜோதியார் ‘அதை உடுத்தாமல் ஏன் வந்தாய்? எனக் கிழவியைக் கேட்டார். கிழவியார் சொன்ன பதிலைக் கண்டு ஜோதியார் மலைத்தார். அவர் சொன்ன பதில் ‘சாமி நீங்கள் கொடுத்த சேலையை பத்திரமாக வைத்திருக்கிறேன். சாமி கொடுத்த சேலையை உடுத்தி வந்தால் யாரும் பிச்சைபோடமாட்டார்கள்” என்றார்.
ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தியாறு டிசம்பர் மாதம் ஒய்வு பெற்றவுடன் மலேசியாவில் நடைபெற்ற அகில உலக இந்து மாநாடு நடைபெற்றது. இலங்கையிலிருந்து இருபதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் ஜோதியாரும், முத்துமாரியம்மன் கோயில் செயலாளராக நானும் நாவலப்பிட்டியிலிருந்து சென்றோம். அந்தக் காலத்தில் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு கண்டிப்பான செலாவணிச் சட்டம். அந்த மாநாட்டுக்கு எங்களோடு ஒரு சுங்க அதிகாரியும் வருவதாகச் சொன்னார். எங்கள் செலவிற்கு ஐந்து

Page 36
டொலர் மட்டும் கொண்டு செல்கிறோம் என்றேன் கண்டிப்பாக கூடாது என்றார். 'தெரிந்தோ, தெரியாமலோ புலனாய்வு அதிகாரியிடம் (C.I.D.) பிடிப்பட்டால் எங்கள் கெளரவமே போய் விடும்’ என்று சொன்னார் உங்களுக்குத் தேவை எனின் மலேசியா சென்றவுடன் கொடுக்கும்படி சொல்கிறேன்’ என்றார்.
1977 இற்குப் பிறகுத் தாராளமயமானது விமானத்தில் எங்களுக்குப் புது அனுபவம். நாங்கள் சென்ற விமானம் எங்களை இறக்கிவிட்டு எங்களது உடை, பயணப்பொதிகளை இறக்காமல் சிங்கப்பூர் சென்றுவிட்டது. மார்ஸ் விமான நிலையத்தில் மறுநாள் திரும்பிவரும்போது விமானத்திலிருந்து இறக்கி வைத்திருந்தார்கள். நான் வருவது பற்றி எனது உறவினருக்கு தகவல் கொடுத்திருந்தேன். அவர் தனது நண்பரை அனுப்பி இருந்தார். நண்பருக்கோ எங்களைத் தெரியாது. மறுநாள் பொதிகளை கொண்டு போவதற்கு வருவோம் என்று நண்பரிடம் விமானநிலையத்தில் சொல்லி அனுப்பிவிட்டார்கள். மறுநாள் அவரும் வந்தார் நாங்களும் போயிருந்தோம். அவரும் நாங்களும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம் அந்த நண்பர் சுப்பிரமணியப்பிள்ளை எங்களைப்போல சோசலிசவாதியாக இருந்தார். அவர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிங்கப்பூர் போகும்வரையும் உணவும் உறைவிடமும் கொடுத்து உபசரித்தார். மாநாடு நடைபெற மூன்றுநாட்கள் முன்னதாக சென்றபடியால் பத்திரிகை நிலையங்களுக்குச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். இலங்கையில் விசா இல்லாமல் 15 நாட்கள் வரை மலேசியாவில் தங்க முடியும். மேற்கொண்டு தங்குவதற்கு மாநாட்டுத் தலைவரும், நீதிபதியுமான நடராஜா எங்களுக்கு மேலும் 2 மாதம் விசா வாங்கிக் கொடுத்தார். அந்த மாநாடு நடைபெற்ற மூன்று நாளும், மேலும் ஒரு வாரமும் பினாங்கு முதல் ஜெகர்பர் பார்வரை சுற்றுலா முடிந்தபிறகு மீண்டும் பினாங்கு வரை ஒவ்வொரு நகரத்திலும், தோட்டங்களிலும் பசனை, சொற்பொழிவு நடத்திச் சென்றோம். கோலாலம்பூரில் 10 நாள் இராமாயணம் தொடர் சொற்பொழிவு நடத்தினார். அது சமயம் தன்னுடன் தனது பேரனும் வந்துள்ளான் என அறிமுகப்படுத்தினார். அதற்கு விளக்கம் அளித்தார். அதில் இருந்து நான் அவருக்கு பேரன் ஆனேன்.
ஆத்மஜோதி சந்தாதாரர்களை திரு. சுப்பிரமணியம் அவர்கள் துணையுடன் சிலரை கண்டுபிடிக்க முடிந்தது பலரைக் காண முடியவில்லை. பிரதிகள் தபாலில் அனுப்பிக் கொண்டிருந்தார். பணம் கொடுக்காவிட்டாலும் பயன்பெறட்டும் என்று சொல்வார். மலேசியா சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு ஜேகூர்பார் வழியால் எங்களை அழைத்துக் கொண்டு திரு. சுப்ரமணியம் சிங்கப்பூர் நுழைவாயிலில் 15 நாள் விசா பெற்று வந்தோம். சிங்கப்பூரில் ஜோதியார் உறவினரை திரு. சுப்பரமணியம் மூலமாக தேடிக் கண்டு
 

30
பிடித்தோம். திரு. சுப்ரமணியம் அவர்களை நாங்கள் நன்றியுடன் வழியனுப்பி வைத்தோம். சிங்கப்பூர் ஒரு சிறிய தேசம். ஆனாலும் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும் 15 நாள் விசா நாட்களில் சில முக்கிய கோயில்கள் நகரங்களைப் பார்த்து கோவில்களில் தரிசனம் செய்து சொற்பொழிவு செய்தார். அங்கே பல தொடர்மாடிக் கட்டிடங்கள் கடலில் மண் நிறைத்து கட்டிடங்கள் எழுப்பி வீடு கட்டியிருக்கிறார்கள். காக்கையும் குருவிகளும் பறப்பதில்லை. விசாரித்ததில் மாடிவீடுகளில் மலம் கழித்தால் மரங்கள் முளைத்து வீட்டில் கட்டிடங்களில் வெடிப்பு விழும் என்றார்கள். அதற்காகப் பறவைகளை சுடுவதற்கென்றே ஆட்களை வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.
நான் அமாவாசை விரதம் இருப்பது வழக்கம். காகங்கள் இல்லாதபடியால் விரதம் இருக்க முடியவில்லை.
சிங்கப்பூர் 14 நாள் விசா முடிந்த உடன் இலங்கை திரும்பினோம். ஓய்வு பெற்றவுடன் ஜோதியாருக்கு அதிகமான வேலை எங்கு அழைத்தாலும் கோயில் சொற்பொழிவுக்கு சென்று வந்தார்.
1983 ஜூலை இனக்கலவரம் எல்லோரும் அறிவார்கள். எனது கடையும் அதேவரிசையில் எட்டு கடைகளும் முற்றாக எரிந்துவிட்டன. ஆத்மஜோதி அச்சகம் சில பகுதியும் நிலையத்தில் புத்தகசாலை பூராவும் எரிந்துவிட்டன. ஜோதியாருக்கு அச்சுப் பகுதியைவிட புத்தக நிலையமும் காசு கொடுத்து வாங்க முடியாத புத்தகங்களும் எரிந்தமையினால் மிகவும் சோர்வு அடைந்தார். 1984 பெப்ரவரியில் சிங்கப்பூர் இந்தோனேசியா சென்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் நடந்த சைவமகாநாட்டுக்கு அழைப்பு வந்திருந்தது. இவர் இந்தோனேசியா சிங்கப்பூர் செல்லவிருந்ததால் தம்பியார் அருமைநாயகத்தை கோயம்புத்துாருக்கு சென்றார்.
கோயம்புத்துார் மகாநாட்டுக்கு செல்லாமலே இடைவழியில் 22-02-1984 இறைவன் திருவடிக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவிட்டனர். ஜோதியாரும் இந்தோனேசியா செல்லாமல் சிங்கப்பூரோடு திரும்பி விட்டார். தம்பி உடல் வருமுன் அன்னார் வந்துவிட்டார். நானும் நாவலப்பிட்டியில் சில நண்பர்களும் சாவகச்சேரி வந்து விட்டோம். தம்பி அருமைநாயகம் மறைவினால் ஜோதியாருக்குத் தனது வலது கை இல்லாதது போன்று உணர்வு கவலை மேலோங்கிவிட்டது.
மீண்டும் இந்தோனேசியா சென்று அங்குள்ள தமிழர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சைவம் தமிழ் 2 வருடம் தங்கி படிப்பித்தார். அதையொட்டி இந்தோனேசியாவில் இரண்டு வருடம் என்ற நூலினை நாவலப்பிட்டி முத்துமாரியம்மன் கோயலில் வெளியிட்டார். அதன் பின்னர் சமய சமூக மாநாடு எங்கு

Page 37
நடைபெற்றாலும் சமூகம் அளித்துவிடுவார். மலேசியாவில் மலாக்கா என்ற ஊரில் வாழும் பழங்குடியினர் இப்பகுதியில் வாழும் மக்களை மலாக்கா செட்டிமார் என அழைக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் தெரியாது. பிள்ளைகளுக்கு மணிமேகலை, அபிராமி, அம்பிகாபதி, நீலகண்டன் எனக் கடவுள் பெயரைத்தான் வைத்துள்ளனர்.
ஆதரவாளரு
ஆத்மஜோதி சஞ்சிகை மன அமைதிக்கும் ஆன்மிக நன்கு உணர்ந்த வர்த்தகப் பெருமக்கள் சிலர் இந்த நோக்கத்துடன் ஆத்மஜோதிக்கு ஆதரவு தந்து வருகின்றா இந்த வரலாற்றுக் கட்டத்தில் தொடர்ந்து தங்கள் விளம்ட எழுத்தமைப்பிலும் பதிப்புப் பணிகளிலும் உதவிவருக பேரவை, மற்றுமுள்ள சைவச் சான்றோர் சார்பிலும் சி ஆசிரிய பீடம் பெருமைகொள்கின்றது. அவ்வகையில்,
திரு. க. மகேசன், முருகன் புத்தகசாலை திரு. செ. சிறிதரன், விவேகா அச்சகம் gß(b. B. 3566006), Applemore – Automotive Inc. g5(b. f6)ILITG)6 (366)Tugblf, S & S Engravers LITöLÜ 99). JF60öT(p856)JLQ (36)16ö, Rainbow Village Denta திரு. விஜயகுமார் மார்க்கண்டு (பாபு) Fashion Florist I சிவத்திரு விஸ்வநாத ரெங்கநாதக் குருக்கள், மீனாட்சி g5(b. JTg5T, R&S Auto Sales சட்டத்தரணி P. கைலாசநாதன் திரு. சிவா. கணபதிப்பிள்ளை, குழந்தைகள் கல்விக்கா g505. зв. д5 (БLIT, Vani Kirubaa Inc. திரு. பூரீதரன் துரைராஜா, காப்புறுதிச் சேவை திரு. மா. கனகசபாபதி, எழுத்தமைப்புச் சேவை
ஆகியோருக்கு எமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித் தொடர்ந்து சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வ
அன்புட
வி. கந்தவ சிவ. முத்து செ. சோம ஆத்மஜோதி அ
63
 

எந்தவிதமான முஸ்லிம் பெளத்த மதமானாலும் அரசியல் கூட்டங்களானாலும்சரி அந்த இடத்துக்கு ஏற்றபடி பேசும் வன்மை உள்ளவர். அதனால் பலரும் கூட்டங்களுக்கு விரும்பி அழைப்பாகள். கனடாவில் கூடுதல்நாள் தங்கி இருக்கலாம் என்று என்னிடம் சொல்லியது நினைவிருக்கிறது. அவர் நினைத்தபடி கடவுள் கனடாவிலேயே அணைத்துக் கொண்டார்.
க்கு மதிப்பு
ஈடேற்றத்துக்கும் ஒளிபரப்பி வருகின்றது. இதனை 5 மண்ணில் சமயம் வளரவேண்டும் என்ற நல்ல ர்கள். ஆத்மஜோதியின் மணிவிழாவைக் கொண்டாடும் ரங்களைத் தந்து வரும் வர்த்தகப் பெருமக்களையும் கின்றவர்களையும் வாசகர் சார்பிலும் இந்துசமயப் சிறப்புச் செய்து நன்றி தெரிவிப்பதில் ஆத்மஜோதி
Office
C. இந்துமத சேவை
ன நம்பிக்கை நிதியம் - கனடா
து அவர்கள் தங்கள முயற்சிகளிலும் தொண்டுகளிலும் ணங்கி வாழ்த்துகின்றோம்.
OTh
லிங்கம்
ஈந்தரம் ஆசிரிய பீடம்

Page 38
நடமாடும் சிவத்தமிழ் வித்த யாழ்ப்பாண
இலங்கையைச் சிவபூமி எனத் தவயோகி திருமூலநாயனார் திருமந்திரத்திலே குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிவபூமியில் யாழ்ப்பாணக் குடாநாடு ஞானபூமியாக மிளிர்கிறது. யாழ்ப்பாணத்தில் பல சித்தர்களும் ஞானிகளும், பக்தர்களும் யோகிகளும் காலம் காலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சிறந்த நீர்வளமும், செம்மண் வளமும், ஆத்மீக வளமும் நிறைந்த கிராமங்களில் ஒன்றாக ஏழாலைப் பதி மிளிர்கிறது. சைவமும் தமிழும் சிறப்புற்று விளங்கும் ஏழாலைப் பதியில் உயர்திரு ஆத்மஜோதி முத்தையா அவர்கள் திருஅவதாரம் செய்து, வாழ்க்கை முழுவதும் நைஷ்டிக பிரமச்சாரியாக இருந்து சிவப்பணிகள் பல புரிந்து வந்தார். இவர் ஏழாலை கிழக்கு இலந்தைகட்டி ஞான வைரவப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டு வணங்கி வந்தார். திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலையில் தவமுனிவர் கைலாசபதி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாலயத்தில் பல வருட காலம் ஆசிரியராக அதிபராக எல்லாம் பணிபுரிந்து மலையக மக்களுடைய பேரன்பிற்குப் பாத்திரமானார். திரு நாகமணி முத்தையாவை நாவலப்பிட்டி முத்தையா என்றே பலரும் அழைத்தார்கள்.
ஞான சீலர்களின் ஆசீர்வாதம் பெற்றமை
இறையருள் பெற்ற அருளாளர்களின் ஆசீர்வாதம் இவருக்கு நிறையவே கிடைத்தது. திருவண்ணாமலை ஞானதீபம் இரமண பகவான் இமயஜோதி சிவானந்தமகரிஷி, தவத்திரு யோகர் சுவாமிகள், பகவான் சத்யசாயிபாபா ஆகிய தவ சிரேஷ்டர்களின் அருள் வழிகாட்டல். இவர் அகில உலகத்திலும் ஞானதீபமாகப் பிரகாசிப்பதற்கு துணையாக இருந்தது. பாரத நாட்டின் திருத்தலங்கள் எல்லாம் தலயாத்திரை செய்து இறையருளை மாற்றிய ஞானச் செல்வராகத் திகழ்ந்தார். ஆதீன முதல்வர்கள் மடாதிபதிகளைச் சந்தித்து அவர்களின் அருளாசியையும் பெற்றிருந்தார். நமது சமயத்தையும் நாட்டையும் மக்களையும் பீடித்திருக்கும் துன்பங்கள் துயரங்கள் நீங்குவதற்கு தொண்டர்கள், பக்தர்கள் , யோகிகள் , சித் தர்கள் ஆகிய நால்வகையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற மாணிக்கவாசகப் பெருமானின் சிந்தனை ஆத்மஜோதி அவர்களிடமும் காணப்பட்டது. சீவனுக்குள்ளே சிவமணம் பூத்த பக்குவமானவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிவதே சமூகத்தின் விடிவிற்கு வழிவகுக்கும் என்பதில் உறுதியாக இருந்தார்.
 

ம் கோயில்
கர் சிவ. மகாலிங்கம்
ம் - இலங்கை
மணிவாசகப் பெருமான் அருளிய தெய்வவாசகமாகிய திருவாசகத்தில் இத்தகைய படையின் உருவாக்கமே துன்பங்கள் துயரங்கள் நீங்குவதற்கு வழி எனக் கூறப்பட்டுள்ளது. தொண்டர்கள் தூசி செல்லீர் பக்தர்காள் சூழப்போகீர் ஒன்திறல் யோகிகளே பேரவை உந்தீர்கள் திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லற்படை வாராமே
மலையக மாணவர்களின் உள்ளம் கவர்ந்த ஆசிரியர் கல்வியிலே மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். மாணவர்கள் அறிவைப் பெற்றால் மாத்திரம் போதாது. ஒழுக்கமும் பண்பும் உள்ளவர்களாக வளர வேண்டும் எண் பதில் அக்கறையுடன் செயற்பட்டார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற இந்துக்களின் ஞானக் களஞ்சியமாகிய, உபநிடதங்கள் கூறும் கருத்தினை மாணவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்தார். சேரி வாழ்க்கை வாழும் மலையக மக்களின் குடியிருப்புகளாகிய லயன்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு ஆத்மீகக் கல்வியைப் புகட்டினார். மதுபானம் போதைப் பொருள்களுக்கு அடிமைப்பட்டிருந்த பலரை அந்த அவல வாழ்விலிருந்தும் மீட்டு எடுத்தார். புயலும் சூறாவளியும் நிறைந்ததாக இருந்த மலையக மக்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதியும், தென்றலும் வீசச் செய்தார். மலையக மாணவர்களுக்கு மாத்திரம் ஆசிரியராக இல்லாமல் மலையக மக்களுக்கும் ஞானகுருவாக இருந்து வழிகாட்டினார்.
ஆத்மஜோதி பத்திரிகை வெளியீடு
நயினை, நாகபூசணி அம் பாளின் அருட் பார்வைக்கு உட்பட்ட இல் லற ஞானி இராமச்சந்திராவுடன் இணைந்து 1948ஆம் ஆண்டு ஆத்மஜோதி பத்திரிகையை ஆரம்பித்தார். மிகச் சிறந்த ஆன்மீகப் பத்திரிகையாக ஆத்மஜோதி முப்பத்தாறு வருடங்கள் நாவலப்பிட்டியில் இருந்து வெளிவந்தது. எமது சமய நூல்களில் கூறப்பட்டிருக்கும் ஆத்ம ஞானக் கருத்துக்களையெல்லாம் பிழிந்து ரசமாகத் தரும் பத்திரிகையாக, பாமர மக்களும் விளங்கக்கூடிய எளிய நடையில் வரும் நூலாக ஆத்மஜோதி மிளிர்ந்தது. தவசிரேஷ்டர்கள், ஞானிகளின் வரலாற்றினை எடுத்துக் கூறும் வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்ந்தது. உயர்தர வகுப்புகளில் இந்து நாகரிகத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு உசாத்துணை நூலாகவும் இருந்தது.
32

Page 39
1983ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது ஆத்மஜோதி பத்திரிகை நிறுவனமும் தீக்கிரையாக்கப்பட்டது. ஆதம்ஜோதி ஐயா அவர்கள் தேடிவைத்த அரும்பெரும் நூல்கள் பல அழிந்து சாம்பராகி விட்டன. இத்தகைய இழப்புக்களைச் சந்தித்த பொழுதும் சமநிலை தளம்பாத மனநிலையுடன் ஆத்மஜோதி அவர்கள் தனது பணிகளைத் தொடர்ந்தார். சமயப் பணிக்காக கனடாவிற்குச் சென்ற ஆத்மீக வள்ளல் அவர்கள் அங்கேயே சிவபதம் அடைந்தார். அவருடைய ஞானவாரிசுகள் ஆத்மஜோதிப் பத்திரிகையை கனடாவில் இருந்து மிகச் சிறப்பான அம்சங்களுடன் வெளியிட்டு வருகிறார்கள்.
பாத யாத்திரை
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் உள்ள சகல ஆலயங்களுக்கும் அடியார்கள் புடைசூழ திருமுறைப்பாடல்கள், பஜனைப் பாடல்களைப் பாடியபடியே திருவடி யாத்திரையாகிய பாதயாத்திரை செய்யும் பணியை ஆரம்பித்து வைத்தார். பிரதேச செயலாளர்கள் கிராம சேவையாளர்கள் ஊடாக ஆலய நிர்வாகிகளின் ஒத்துழைப்பினைப் பெற்றார்.
நாளாந்தம் இரவிலே அடியார்கள் தங்கும் ஆலயங்களில்
சத்சங்க வகுப்புகளை நடாத்தினார். வீதியெல்லாம் சிவ நாமம் ஒலிக்கச் செய்ததோடு அனைவரும் சிவநெறியில் வாழவும் வழிகாட்டினார். ஆத்மஜோதி ஐயா அவர்கள் பாதயாத்திரைக்குத் தலைமை தாங்கிச் செல்லும் காட்சி நடமாடும் கோயிலாகத் திகழ்நத நாவுக்கரசர் பெருமானின் கோலத்தை நமக்கு ஞாபகப்படுத்தியது.
சமயப் பிரசாரம்
இவர் ஈழமணித் திருநாட்டிலும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சமயப் பிரசாரகராகப் பணியாற்றினார். எமது சமயத்தில் புதைந்திருக்கும் சமய உண்மைகளையும் தத்துவக் கருத்களையும் சாமானிய மக்களும், உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறினார். ஆலயத்தில் செய்யப்படும் பணிகள் அனைத்தும் தொண்டாகவே இருத்தல் வேண்டும் என்ற
கொள்கையுடைய இவர் சமயப்பிரசாரத்தையும் ஞான
யாகமாகவே செய்து வந்தார். இந்தோனிசியாவில்
ଗୋ
 
 

ரண்டு வருடங்கள் தங்கி அங்கே வாழும் ந்துக்களுக்கு எமது சமய உண்மையினை போதித்து ந்தார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சுவீடன் பூகிய நாடுகளுக்கெல்லாம் சென்று சமயப் பிரசாரம் சய்த இவர் இறுதியாகக் கனடாவிலே தனது சமயப் ணியைத் தொடர்ந்தார்.
மயத் தலைமை
இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரையும் ன்றிணைக்கின்ற சமய நிறுவனம் ஒன்றின் அவசியத்தை உணர்நத ஐயா அவர்கள் இந்து சமயப் பேரவை ன்னும் அமைப்பினை உருவாக்கி சிவபதம் 1டையும் வரை அதன தலைவராக இருந்து ழிநடத்தினார். இதன் நிர்வாகத்தின் கீழ் கைதடிச் றுவர் இல்லம் சிறப்பாக இயங்கியது. சிறுவர் இல்லப் ள்கைளுக்கு ஆன்மீக வகுப்புகளை நடாத்தி அவர்கள் ற் பிரஜைகளாக வாழ்வதற்கு வழிகாட்டினார். வருடைய தலைமையில் இந்து சமயப் பேரவையினர் ல சமய மாநாடுகளை நடாத்தினார்கள். பேரவை ஒரு ரந்தரக் காணியையும், கட்டிடத்தையும் பெற்று இன்று யங்குவதற்கு மூல புருஷராக இருந்து செயற்பட்டார்.
முதாயப்பணி
கிராமங்கள் தோறும் சத்சங்கங்களை ஸ்தாபித்து க்கள் அனைவரும் ஆத்மீக நெறியில் வாழ்வதற்கு ழிகாட்டினார். கிராம மக்களிடம் ஏற்படும் சிறிய ணக்குகளைத் தீர்க்கக் கூடியவாறு பஞ்சாய சபையை றுவிச் செயற்பட வைத்தார். கிராமமக்கள் அனைவரும் ருவர்க்கொருவர் உதவியாக, ஒற்றுமையாக, வாழ்வதே ராமத்தின் உயர்வுக்கு வழிகாட்டும் என்பதை க்களுக்கு உணர்த்தினார். அகிம்சை வழியில் புறவிழுமியங்களை எடுத்துக் கூறி மதுபானம் , பாதைவஸ்து என்பவற்றுக்கு அடிமையாகி வாழ்ந்த லரை மீட்டெடுத்துத் தூய வாழ்வு வாழ வழிகாட்டினார். வர் நடமாடும் கோயிலாக, ஞானவிளக்காக பலரின் ல் வாழ்விற்கு வழி காட்டிய திசைகாட்டியாக உதாரணபுருஷராக வாழ்ந்து இறைவனடி எய்தினார். பூத்மீக வள்ளல் ஆத்மஜோதி ஐயா அவர்கள் காட்டிய ழியின் நாம் அனைவரும் பின்பற்றி உய்தி பறுவோமாக!
ട്.

Page 40
மருத்துவ கலாந
ஆத்மஜோதியுடன் எனது அறிமுகத்தைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்னொருவரைப்பற்றியு நான் சொல்லவேண்டும். அவர்தான் ஆத்மஜோதிை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். இவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் நான் இன்னும் தொண்ணுா ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.
அது மதமாற்றம் தீவிரமடைந்திருந்த காலட ஆசியாவிலேயே முதலாவதாகத் தொடங்கப்பட் பெண்கள் விடுதிப் பாடசாலையான உடுவில் மகளி கல்லூரியின் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் நுழைகின்றா மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த அமர் நீ த பின் ‘அஞ ஞானிகள் அனைவருட எழுந்திருங்கள்” என்று முழங்குகின்றார். வழக்கம்போ6 இன்னமும் சைவ சமயத்தில் இருக்கின்ற மாணவிகை அனைவரும் எழுந்து நிற்கின்றார்கள். ஒரு சைவ மாண6 மட்டும் தன் இருக்கையைவிட்டு அசையவில்லை ஆசிரியர் அவளை நெருங்கினார். “ஏன் நீ எழுந்து நிற்கவில்லை?” ஆசிரியர் அதட்டுகிறார்.
"நான் அஞ்ஞானி இல்லை.” மாணவி அமைத யாகக் கூறினாள். "அப்படியானால் நெருப்பு உன்னை சுடக்கூடாது. எங்கே விரலை நீட்டு. நெருப்புக்குச்சியை கொளுத்தி வைத்துப் பரிசோதித்துப் பார்ப்போம், ! அஞ்ஞானியா இல்லையா என்று.” இது ஆசிரியரின் பதில்.
“முதலில் உங்களைச் சோதித்துப் பாருங்கள் பின்னர் நான் செய்கிறேன்.” இது மாணவியின் நறு: கென்ற பதில். ஆசிரியர் மெல்ல விலகுகிறார் பாடத்துக்கு
சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னா6 இந்த மாணவி இப்பொழுது ஏழு பிள்ளைகளின் தாயா மக்கள் மருமக்களுடன் கூடிய ஒரு கூட்டுக் குடும்பத்தில் தலைவி. தனது வீட்டுக்கு மணமுடித்து வந்த மருமகளுக்கு "நான் உமக்குத் தாயாகவும் இருப்பேன் மாமியாகவும் இருப்பேன், தோழியாகவும் இருப்பேன் என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார். வந்த மருமகளுக்கு அவ்வாறே வாழ்ந்தும் காட்டி கணவன் மற்றும் பிள்ளைகளுக்கான உணவுக் கட்டுப்பாடுகள் பெண்களின் மாதவிடாய்ச்சக்கரம், கணவன் மனைவி உறவு, கருவிலக்கு போன்ற பல விடயங்கலை அறிவுறுத்துகிறார்.
இதே மருமகள் தனது வீட்டில் பொழுது போக்காக விதம் விதமான புறாக்கள் பலவற்றை வளர்த்து வந்தார். இவற்றால் வருமானம் ஏதுட இல்லாவிட்டாலும் அவருக்கு அதில் ஒரு மனமகிழ்ச்சி அப்பொழுது இவர் மருமகளுக்கு கூறிய வார்த்தைகள் “வீட்டில் பசு வளர்த்தால் பால் தர வேண்டும், ஆ(
 

எனது அறிமுகம் நிதி இ. இலம்போதரன்
556TLT
ழ் வளர்த்தால் குட்டிகள் பெருக வேண்டும். நாய் வளர்த் ம் தால் குரைத்து வீட்டைக் காக்க வேண்டும். இப்படி செய்வது எதிலும் ஒரு பிரயோசனம் இருக்க வேண்டும் து மனம்போன போக்கில் பிரயோசனம் இல்லாதவற்றில் Bl வீணாக எமது காலத்தையும் , காசையும்
5640
விரயமாக்கப்படாது" என்று அறிவுறுத்துகிறார்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் சமய ஆத்மீக விடயங்களைப் பற்றியும் நான் அவருடன் கலந்துரையாடத் தொடங்கியிருந்த காலம். இந்தக் கலந்துரையாடல்களின் விடயங்கள் பல இப்போது தெளிவாக ஞாபகம் இல்லாவிட்டாலும் அவரின் பின்னாலேயே திரிந்து மணிக்கணக்கில் அலுக்காமல் கலந்துரையாடியது ஞாபகம் இருக்கின்றது. நான் அவரைக் கேள்விகள் கேட்டது குறைவு. ஆனால் எனது மனதில் எழும் கேள்விகளுக்கான எனது விடைகளை அவருடன் கதைத்துக்கொண்டே இருப்பேன். அவர் அலுக்காமல் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பார். இடைக்கிடை நறுக்காக, சுருக்கமாக சில வார்த்தைகள் சொல்லுவார். அது எனது தேடலை வழிப்படுத்துவதாக இருக்கும். ஆனால் அவர் தனது கருத்துக்களையோ அல்லது கொள்கைகளையோ திணிக்க முயன்றதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு குறிப்பைச் சொல்லி எனது தேடலிலேயே என்னை விட்டுவிடுவார்.
இவர் தனது அறையில் வருடக் கணக்காகச் சேர்த்து வைத்திருந்த ஆத்மஜோதி பிரதிகளை எனக்கு வாசிக்கத் தருகிறார். சில வேளைகளில் நான் பத்து இருபது பிரதிகளைக்கூட அவரிடம் இருந்து ஒன்றாக இரவல் வாங்கி வாசிப்பேன். சில நேரங்களில் அவருடன் இருக்கும் நேரங்களிலேயே வாசிப்பேன். படித்தவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியதாகவும் ஞாபகம். ஆத்மஜோதி இதழில் வந்த “மாதா ஜெய ஒம் லிலிதாம்பிகையே” என்ற ஒவ்வொரு கிழமை நாளுக்கும் ஒன்றான பாடல்கள், திருவிளக்கு வழிபாட்டுப் பாடல்கள் போன்ற பலவற்றைப் பாராயணமாகப் பாடிப் பழகியிருக்கின்றேன். ஆத்மஜோதி இதழ்களில் வந்த அப்போது வாழ்ந்து கொண்டிருந்த பல ஞானிகளினதும், சித்தர்களினதும் வாழ்க்கை வரலாறுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஈழத்துச் சித்தர்களின் வரலாறு, சிவபால யோகி சுவாமிகளின் வரலாறு என்பன பற்றி வாசித்துக் கலந்துரையாடிய ஞாபகம் உண்டு. இவ்வாறான புதிய சமய விடயங்களும், நாளாந்த வழிபாட்டுக்குரிய குறிப்புகளும் வழிகாட்டல்களும் பாடல்களும் அன்றைய ஆத்மஜோதியின் சிறப்பு அம்சங்கள்.
இந்தப் பெண்மணி பொதுவாக இப்படிப் பணம் செலவழித்து பத்திரிகை, சஞ்சிகைகள், புத்தகங்களை

Page 41
வாங்கிப் படிப்பவரல்ல. பின்னாளில் பிள்ளைகள் வாங்கிக்கொடுத்த காஞ்சிப்பெரியவரின் தெய்வத்தின் குரல், சாண்டில்யனின் நாவல்கள் அவர் அறையில் இருந்தன. அவற்றையும் அவரிடம் இரவல் வாங்கிப் படித்திருக்கின்றேன். இரவல் தந்தால் ஞாபகமாக அது திரும்பி வரும்வரை நினைவூட்டிக் கொண்டு இருப்பார். இதிலிருந்து இவர் இந்தச் சஞ்சிகைகளை எவ்வளவு அருமையாகக் கருதினார், பாவித்தார் என்று நான் அறிந்து கொண்டேன்.
ஆனால் இவர் தான் பணம் செலுத்திப் பெற்று வாசித்து வந்த ஒரே ஒரு இதழ் ஆத்மஜோதி. இது பற்றி அவரிடம் கேட்டேன். அப்போது அவர் " முத்தையா என்று ஒரு மனுசன் நாவலப்பிட்டியில் இருக்கின்றார். இப்படி ஒரு சஞ்சிகையைக் கன காலமாக நடத்தி
நாவலப்பிட்டியி
த. தருமல செயலாளர் - ஆத்மஜோதி ஞாபக
ஏழாலை கிழக்கில் இருந்து ஞான ஆட்சி புரியும் வைரவப் பெருமானின் திருவருளினால் அவதாரம் செய்த ஆத்மீக வள்ளல் திரு. நா. முத்தையா அவர்கள் சைவத்தமிழ் உலகிற்கு ஒரு திசைகாட்டி யாகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்தார். நாவலப்பிட்டி நகரிலே தன்னுடைய ஆசிரியப் பணியை ஆற்றி வந்த ஐயா அவர்கள் 1948ஆம் ஆண்டு முதல் ஆத்மஜோதி என்னும் ஆதமிக சஞ்சிகையை நடத்தி வந்தார்.
ஆத்மீக வள்ளல் அவர்கள் எமது ஏழாலை இலந்தைகட்டி பூரீ பாதாள ஞான வைரவர் ஆலயத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். பல வருடங்களுக்கு முன்பு இவர் வழங்கிய ஆசியுரையில் கூறியிருந்த வார்த்தைகள் இன்று நிதர்சனமாகி ஞான வைரவப் பெருமானின் ஆலயம் இராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது.
இவர் வழங்கிய ஆசியுரையின் சில பகுதிகள்: "பொதுமக்கள் எல்லோருமே ஆலய வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாக உள்ளனர். பிடியரிசி மூலம் கோயிலுக்கும் அதன் திருப்பணிக்கும் உதவாதவர் எவரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லோரும் ஈடுபாடு உள்ளவராய் இருக்கின்றனர். கோயிலின் நாற்புறமும் நல்ல முறையில் மதில் எழுப்புவதோடு இராஜகோபுரமும் அமைத்துப் பார்க்க வேண்டும் என்பது பல பக்தர்களுடைய வேண்டுதலாகும்.”

வருகின்றார். அவர் சைவத்துக்கு நிறையச் செய்கின்றார். சனங்களைக்கூட்டி பாதயாத்திரைகள் எல்லாம் போகிறார். நானும் ஒருமுறை அவரைச் சந்தித்திருக் கின்றேன். அன்றில் இருந்து ஆத்மஜோதி சஞ்சிகைக்குச் சந்தாப் பணம் கட்டி ஒழுங்காகப் பல வருடங்களாக எடுத்து வாசித்து வருகின்றேன்” என்று கூறினார்.
இதுதான் ஆத்மஜோதி உடனான எனது அறிமுகம். அறிமுகம் செய்து வைத்தவர் எனது பாட்டியார் திருமதி கனகம்மா மயில் வாகனம். சித்தவைத்திய பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது கை நாடி பார்த்து “எனது பயணம் தொடங்கி விட்டது” என்று சொல்லிச் சில நாட்களில் விபத்துக் காரணமாக 1999 இல் யாழ்ப்பாணத்தில் நான் மருத்துவ மாணவனாக இருந்த காலத்தில் காலமாகிவிட்டார்.
பின் நாவலர் லிங்கம் ார்த்த சபை, சமாதான நீதவான்
ஆத்மீக வள்ளலின் சிந்தனை செயல் வடிவம் பெற்றிருக்கின்ற சிறப்பினைக் கண்டு உள்ளம் பூரிப்படைகின்றேன்.
சித்தாந்த கலாநிதி மகான் காசிவாசி செந்திநாதையரின் திருஉருவச் சிலையை அவர் பிறந்த கிராமமாகிய குப் பிழான் கிராமத்தில் நிறுவ உழைத்தவர்களில் திரு. சிவ. முத்துலிங்கம் அவர்களும் ஒருவராவார். திரு. சிவ. முத்துலிங்கத்தின் மீது ஆத்மஜோதி அவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. தன்னடைய ஞான வாரிசுகளில் அவரை ஒருவராக இவர் கணித்திருந்தார். அவருடைய மதிப்பீடு சரியாகவே அமைந்து விட்டது. இன்று கனடாவில் இருந்து வெளிவரும் ஆத்மஜோதிப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும், இந்து சமயப் பேரவையின் செயலாளராகவும் திரு. சிவ. முத்துலிங்கம் அவர்கள் செயற்பட்டு வருகின்றார். ஆத்மஜோதி அவர்கள் 0808-1994 இல் அடியேனுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “சிவ மகாலிங்கத்தின் தம்பியார் சிவ முத்துலிங்கம் அடியேனுக்கு ஒரு சீடராகவே மாறிவிட்டார். இப்பணிகளில் நல்ல ஈடுபாடு.”
1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தினால் ஆத்மஜோதி நிலையம் அழிக்கப்பட்டாலும் கனடாவில் இருந்து அப்பத்திரிகையை தவறாது வெளியிட்டு வரும் இந்து சமயப் பேரவையினரை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.

Page 42
நயினை - நல்லூர் பாது வடிவேலு (
தீவேழு கோயிற்பற்று முழுமைக்கும் சங்கம வழிபாட்டை உணர்த்தி மக்களின் உள்ளங்களைச் சாதுக்களின் பால் ஈடுபட வைத்த பெருமை ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகளையே சாரும். கதராடை தரித்து வீரத் துறவியாய் தீவுப்பகுதியெங்கும் நாமசங்கீர்த்தனத்தைப் பரப்பி வரும் காட்சி இன்றும் எம்மவரால் நினைந்து போற்றப்படுகிறது.
“கூடித் தொழுகின்றிலீர்” என்ற அப்பரடிகளின் உன்னத நோக்கோடு அவர் கூட்டுவழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல கூட்டுப்பிரார்த்தனைச் சபைகளை உருவாக்கினார். அவற்றில் இன்றும் இறைபுகழை மங்கவிடாமல் காத்து வரும் நயினைநல்லூர் பாதயாத்திரையின் பெருமை அளவிடற்கரியது. கொழும்பு திவ்விய ஜீவன சங்கம் கொழும்பு கொச்சிக்கடை தம்பையா முதலியார் சத்திரத்தில் 1963ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இயங்கி வந்தது. அதன் தலைவராய் புங்குடுதீவைச் சேர்ந்த இளைஞர் சிவபூஜா துரந்தரர் மருத. நமசிவாய தேசிகர் பீ.ஏ. (இலண்டன்) அவர்கள் திகழ்ந்து வந்தார். இவர் ஆத்மீக வள்ளல் அவர்களைத் தனது ஞானகுருவாகக் கொண்டவர். இதனால் சுவாமி சிவானந்தரின் லிகித ஜெபம், பிரார்த்தனை, யோகாசனம், தியானம் என்பவற்றைப் போதிப்பதற்காக ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகளை அச் சத்திரத்திற்கு அழைப்பது வழமை. அங்கு தீவுப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் பலர் ஆத்மீகத்தில் மிக்க ஈடுபாடோடு இருப்பது கண்டு அவர்களிடம் ஒரு வேண்டுகோளை ஆத்மஜோதியவர்கள் முன்வைத்தார். அவ்வேண்டுகோள் என்னவென்றால் நயினாதீவு நாகபூசணி அம்மன் சந்நிதியில் இருந்து நல்லூர் கந்தசாமி கோயில் தேர்த்திருவிழாவிற்குத் தீவுப் பகுதி மக்கள் அனைவரையும் பாதயாத்திரையாக அழைத்து செல்வது என்பதாகும்.
அவ்வேண்டுகோளை இளைஞர் எல்லோரும் மிக மகிழ்வோடு ஏற்று விழாவிற்கான பிரசுரங்கள்ை அச்சிட்டு 1964ஆம் ஆண்டு நல்லூர் முருகன் தேர்த்திருவிழாவிற்கு இரு நாட்களின் முன்னதாக நயினாதீவு நாகபூஷணியம்மன் ஆலயத்தில் இருந்து ஐம்பொன்னில் வடிவமைக்கப்பட்ட மூன்று அடி வேல் ஒன்றினை ஆத்மீக வள்ளல் அவர்கள் காப்புக்கட்டி எடுத்துக்கொண்டு முன்னாக நடக்க அவரின் தலைமையில் பசனை பாதயாத்திரை நல்லூர் கந்தன் ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டது. நயினாதீவில் இருந்து மோட்டார் படகு மூலம் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையை அடைந்து அங்கு இருந்து வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டதிவு, யாழ்ப்பாணம் கொட்டடி
-(

தயாத்திரையின் பிதாமகர்
ஞானகாந்தன்
வில்லூன்றி விநாயகர் ஆலயங்களைத் தரிசித்து, நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா அன்று அதிகாலை நல்லூரை பசனைக் கோஷ்டி சென்றடைந்தது.
இப்பசனைப் பாதயாத்திரையைத் தொடர்ச்சியாக வருடாவருடம் நடத்த ஏதுவாக தீவுப்பகுதி மக்கள் அனைவரும் கலந்து பங்கு கொள்ளும் வண்ணம் சப்ததீவு திவ்விய ஜீவன சங்கம் (தீவேழு தெய்வ நெறிக்கழகம்) என்ற அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கான அங்குரார்ப்பணக்கூட்டம் 1965ஆம் ஆண்டு நயினை நாகபூசணியம்பாள் ஆலயத்தேர் திருவிழா அன்று நடைபெற வேண்டும் என்றும் ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 1965ஆம் ஆண்டு நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா அன்று ஆலயமுன்றலில் சப்த தீவு திவ்விய ஜீவன சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அப்போதைய நீர்பாசன அமைச்சின் செயலாளரும் யாழ். அரசாங்க அதிபரும் நயினாதீவு நாகபூசணியம்மன் ஆலய அறங்காவல் சபை தலைவருமாகிய திரு. ம. பூரீகாந்தா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். மேற்படி கூட்டத்தில் நயினை பிரதிட்டாபூசணம் ஐ. கைலாசநாதக்குருக்கள், கே.பி. கரன் (ஈழநாடு ஆசிரியர்) ஆத்மஜோதி நா. முத்தையா ஆகியோர் சங்கம் ஏன் தோற்றம் பெறுகின்றது என்பது பற்றி உரையாற்றினர்.
நயினை க. இராமச்சந்திரா, புங்குடுதீவுச் சாமியார் பூரீலழரீ சதானந்தஜி ஆகியோர் ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகளை வாழ்த்திப் பேசினர். பின் சங்கக் காப்பாளர்களாக நயினை க. இராமச்சந்திரா, புங்குடுதீவுச் சாமியார் பூரீலழரீ சதானந்தஜி, ஆத்மஜோதி நா. முத் தையா ஆகியோரும் தலைவராக செ. விசாகப்பெருமாள், செயலாளராக மருத. நமசிவாயம், பொருளாளராக நா. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஏழு தீவுகளில் இருந்தும் நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். கொழும்பு ஐந்தாம் குறுக்குத் தெருவில் பிரபல வணிகராக விளங்கிய சிவரஞ்சினி ஸ்ரோர் உரிமையாளர் இராமசாமிப்பிள்ளை என்பார் ஆத்மஜோதி நிலைய வெளியீடாய் அழகிய கூட்டுப் பிரார்த்தனை நூல் ஒன்றினைப் பாரிய செலவில் அச்சிட்டு தீவுப்பகுதி எங்கும் விநியோகித்தனர்.
ஆண்டுதோறும் இப்பசனைப் பாதயாத்திரை பத்திபரவசத்துடன் நடைபெறும். ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து சிறப்பிப்பர். பித்துக்குளி முருகதாஸ், பெங்களுர் இரமணி அம்மாள், சுவாமி சச்சிதானந்தர், இறைபுகழ் பாடுவதில் இணையற்ற
36

Page 43
மேதை காரைக்கால் வை. தியாகர் சுவாமிகள், ஈசன்புகழ் அன்றி வேறு எதையும் கனவிலும் கருதாத செட்டிநாடு பனங்குடிப்பெரியார் கறுப்பையாபிள்ளை, வல்லநாடு கல்லல்.சோம் இராஜாராம் சுவாமிகள், உள்ளூர் வித்துவான்கள் சி. ஆறுமுகம், பொன். அ. கனகசபை, வில்லுப்பாட்டு - திருப்பூங்கூர் ஆறுமுகம், கொழும்பு வணிகச் செம்மல் த.கு. சபாரத்தினம், மருது. நமசிவாய தேசிகர், நா. கோபலகிருஷ னண் , 函· செல்லத்துரைச்சாமியார், மருத முருகேசன், த. வடிவேலு விதானையார், இறுப்பிட்டி செல்லத்துரை ஆசிரியர், இன்னும் பல உள்ளுர் வெளியூர் தொண்டர்கள், ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என்று பலர் கலந்து சிறப்பிப்பர். புங்குடுதீவு முடிந்தவுடன் வேலணை வங்காவடி சந்தி முருகன் கோயிலில் அன்னதானமும் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெறும். அந்த உபயத்தினை “முருகா” என்று அழைக்கப்படும் வணிகச் சைவசீலரும் மற்றும் வேலணை சரஸ்வதி வித்தியாலய அதிபர் சீவிரத்தினமும் முன்னின்று நடத்துவர்.
இந்தப் பாதயாத்திரை 1964ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது. இருந்தும் 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரை தீவுப்பகுதிக்கும் யாழ். குடாநாட்டிற்கும்
{്
கண்ணனுக்குச் சூட்டினாள் என்பது சரித்திரம். அல்ல; இருவரும் ஒருவரே.
செய்துவிடுவான்.
எடுக்காமலே திரும்பிவிட்டார்.
ஆத்மஜோதி ஆசிரியர் நா. முத்தையா
வீமனுக்குப் பொறுத்திருந்து சிவபூஜை கணப்பொழுதிலே காடுகளிலே உள்ள மலர்க
130ஆவது அ ஆத்மஜோதி 30ஆவது ஆண்டு மலருக்கு ஆசி
மலர் என்று ஒன்றிருந்தால் அதனை ஆண்ட மனிதகுலம். ஆண்டாள் மலரை மாலையாகத்
L
(
தாயுமானவர் பூஜை செய்வதற்காக மலர் எடுக்கச் சென்ற பூக்களில் எல்லாம் ஆண்டவன் எடுத்து எந்த ஆண்டவனுக்குப் பூஜை செய்வது எ
இவை எல்லாம் வாடும் மலர்கள். நாம் சமர் அருளாளர்களுடைய முயற்சியினால் சமைந்தமலர் மகிழ்விப்பதற்காகவாவது தவறாது ஏற்றுக் கொள்6
இதற்கு முன்புள்ள மலர்களைச் சமர்ப்பிக்கு யாரும் இருந்ததாக நினைவு இல்லை. ஆனால் மகிழ திரு. க. இராமச்சந்திரா அவர்கள் இருக்கிறார்க அம்மகிழ்வோடு இறைவன் திருவடியில் சமர்ப்பண
 

ரயாணத்தொடர்பு துண்டிக்கப்பட்ட காரணத்தால் அராலி ஆவரம்பிட்டி பூரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்குப் பசனை ாதயாத்திரை நடத்தி வந்துள்ளனர். பின் 1999-09-09 அன்று நயினாதீவில் இருந்து நல்லூருக்குப் பசனை ாதயாத்திரை மீண்டும் பெரும் எடுப்பில் நடந்து பருகின்றது. இதில் நயினாதீவைச் சேர்ந்த நாகமணி காபாலகிருஷ்ணன், ஜே.பி., அவர்கள் முன்னின்று உழைப்பது போற்றுதற்குரியது.
ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள் ஆரம்பித்து வைத்த இன்னும் ஒரு பாதயாத்திரையான ஏழாலை }லந்தைகட்டி வைரவர் கோயிலில் இருந்து ல்லூருக்குச் செல்லும் பாதயாத்திரையும் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் நடைபெற்று வருகிறது. அதேபோல் யினை நல்லூர் பாதயாத்திரையும் ஐம்பது ஆண்டு 5டந்தும் நடைபெற்று வருவதையிட்டு எல்லாம் வல்ல யினை நாகபூசணியையும் நல்லைக் கந்தனையும் பிரார்த்திப்போம்.
ஆத்மஜோதி நா. முத்தையனார் நாமம் வாழ்க! ஆத்மஜோதி பத்திரிகையின் பணி தொடர்க! ஒன்ராறியோ இந்து சமயப்பேரவை வெல்க!
பூண்டுமலர் ரியர் நா. முத்தையா எழுதிய சமர்ப்பணம்
டவனிடம் சமர்ப்பணம் செய்து இன்பங்கண்டது தொடுத்து அணிந்து தானே அழகுபார்த்து க்தருலகில் ஆண்டவன் வேறு அடிமை வேறு
செய்ய நேரமில்லை. பழக்கமும் இல்லை. ளை எல்லாம் கண்ணனுக்கு அர்ப்பணஞ்
எடுப்பதற்கு நந்தவனம் நண்ணினார். அவர் இருப்பதைக் கண்டார். எந்த ஆண்டவனை னச் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் மலர்
ப்பிக்கும் மலரோ வாடாமலர். ஆண்டவனுடைய . இம்மலரை ஆண்டவன் தனது பக்தர்களை வான் என்பது எமது நம்பிக்கை. கும்போது எமது பிரதிநிதியாகத் தேவருலகில் இப்பொழுதோ தேவர்கள் மகிழ்வதைக் கண்டு ள் என்பதை நினைந்து நாமும் மகிழுகின்றோம்.
D.

Page 44
முத்தையா மாஸ்
பெ. இராமானுஜம், ஜே.பி. ( ஈழத்தில் மறைந்து கிடந்த ஆன்மீகட் பெரியார்களைத் தேடிச்சென்று அவர்களின் சிறப்புக்களை - ஆன்மீகத் திருப் பணிகளை இவ்வுலகிற்கு வெளிக்கொண்டு வந்த அருள்வள்ளல் எமது ஆத்மஜோதி நா. முத்தையா ஆசிரியராவார்.
ஏழாலையில் உதித்து மலையகத்தின் கலைச்சிறப்புமிக்க நாவலப்பிட்டி நகரில் தரித்து ஆத்மஜோதி எனும் ஆன்மீக சஞ்சிகையையும் அந்தச் சஞ்சிகைக்காகத் தமது அரும் உழைப்பை ஈந்து உருவாக்கிய ஆத்மஜோதி அச்சகமும் தமிழ் பேசும் மக்கள் உள்ள எல்லா இடங்களிலும் பிரசித்தமானவை இந்துக்கள் வாழும் இல்லம் தோறும் ஒரு சமய வெளியீட்டுப் புத்தகம் இல்லாமல் இருக்காது என்ற வகையில் பல்வேறு சமய புத்தகங்களை மலிவாக மக்கள் பெறுவதற்கு வித்திட்ட மகான்.
கல்விப் பணியை மேற்கொண்டு மலையகம் வந்த நா. முத்தையா ஆசிரியப் பணியை மட்டுமல்ல - மலையக பாமரமக்களிடையே மறைந்து கொண்டு இருந்த ஆன்மீக உணர்வுகளுக்கு ஊட்டச் சத்துக் கொடுத்து முழு மலையகத்திற்கும் இந்து சமய உணர்வை ஊட்டினார்.
அவர் கால் படாத ஒரு தோட்டக்கோயில் இருக்காது என்று சொல்லும் வகையில், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை மலைநாட்டில் தமிழும் சைவமும் தழைக்கப் பாடுபட்ட பெருஞ் சேவையில் இருந்து அறியலாம்.
கவியோகி சுத்தானந்த பாரதியாரை, சுவாமி சச்சிதானந்த யோகியை, பித்துக்குளி முருகதாசரை, சுவாமி கிருபானந்தவாரியாரை என்று பல ஆன்மீக வள்ளல்களை மலையகத்தில் உலவவிட்டு அப்பிரதேச மக்களின் ஆத்மஞான ஈடேற்றத்திற்கு வழிவகுத்தவர். முத்தையா மாஸ்டரின் சொற்பொழிவு என்று நோட்டீஸ் ஒன்றைக் கண்டவர்கள் அவரின் அருளுரை களைக் கேட்கத் தவறமாட்டார்கள.
பல தேயிலைத் தோட்டங்களின்
 

டருக்கு 90 வயதா?
பத்திரிகையாளர் - நாவலப்பிட்டி)
உரிமையாளர்கள் இந்துக்களாயிருந்ததால் அவர்களின் கோரிக்கைக்கமைய அந்த தோட்டங்களில் ஆலயம் அமையவும், அதன் மூலம் ஆத்மீகம் வளரவும் ஒரு அரிய சந்தர்ப்பம் முத்தையா மாஸ்டரை வந்தடைந்தது. நீண்ட உருவம், வெள்ளைக்கதர் ஆடை, சந்தனப்பொட்டு, தோளிலே துண்டு, பரந்தமுகம், அருளான பார்வை, மணியான சிரிப்பு, உடையவர் எங்கள் முத்தையா மாஸ்டர். காவி உடை தரித்துத்தான் சமயப்பணி ஆற்ற வேண்டும் என்றில்லாமல், பகவான் ) mj இராமகிருஷ்ணர், யோகர் சுவாமிகள் போன்று வெள்ளை உடை தரித்தவராய், மக்களில் இருந்து தனித்துப் பிரிந்து நிற்காமல், அவர்களில் ஒருவராய் நின்று தனது ஆத்மபோதனைகளை- அருள்சொட்டும் தேவார திருவாசகங்களைப் பாடி எம்மை எல்லாம் இறைவன்பால் இட்டுச் சென்றவர். ) 1960 களில் தமிழ் ஆசிரியர் சங்கத்தலைவராய் - செயலாளராய் இருந்து ஆசிரிய மக்களுக்கு அவர் ஆற்றியபணி அச்சங்கத்தின் மூலம் வட்டார மாவட்ட பாடசாலை மாணவரிடையே திருக்குறள் மனனப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என வைத்து மாணவர் களைச் சிறந்த பேச்சாளர்களாய், எழுத்தாளர்களாய் மாற்றிய பெருமையும் அவரையே சார்ந்தது.
அகில இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கனடா, சுவிஸ் என்று தமது சமயப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர். ஐம்பதுக்கும் மேலான புத்தகங்களை எழுதிய அவரது படைப்புகளில் ஈழத்துச் சித்தர்கள், இந்தியாவில் இருந்து வந்த நவநாத சித்தரைப் பற்றிய முப்பெரும் சித்தர்கள் என்ற நூல்கள் மிகச் சிறப்பு பெற்றவை.
அவரது அச்சகத்தில் முகாமையாளரான அவருடைய சகோதரர் அமரர் நா. அருமைநாயகம் அவர்களுடன் பத்திரிகை நிருபராக இருந்து ஆற்றிய எனது சேவைக் காலம் மனதைவிட்டு நீங்காத மனச்சாந்தியை இன்றும் தந்து கொண்டிருக்கிறது.

Page 45
ஆத்மஜோதி தமிழ்
முத்தையா சுவாமிகள் மொன சிவ உதயகு
நெருக்கடியான காலகட்டத்தில் மகான்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். தொண்ணுாறுகளில்(19902000) புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, எமது சமயத்தைப் பழித்து, ஒரு சில குழுவினர் எமது மக்களை மதமாற்றம் செய்து கொண்டிருந்த காலம். இதில், மதம் மாறிய எமது மக்களே ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் என்பது வேடிக் கையான விடயம். இச்சம்பவம் சைவ அன்பர்களுக்கு மிகவும் மனவருத்தம் தருவதாய் அமைந்தது. இந்த நேரத்தில் தான் (1995 இல்) முத்தையா சுவாமிகள் மொன்றியலுக்கு வந்திருந்தார். அவர் வருகையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அன்பர்கள் அவரது ஆலோசனையைப் பெற்றனர். எமது மக்களுக்கு எமது சமயத்தைப் பற்றி போதிய அறிவு இன்மையே இவற்றுக்குக் காரணம் என்பதும் மாற்று சமயத்தவர்களே தங்களுடைய வேதநூல்களை மட்டும் நம் பியரி ராது இந்து மத வேதங்களையும் தர்மங்களையும் அறிந்து தமக்குச் சாதக பாதகமான வற்றை கடைப்பிடிக்கவும் பிரசாரம் செய்யவும் முனைந்து நிற்கையில், எமது சமயத்தின் பாரம்பரியம், தொன்மை, நுண்ணிய தர்மங்கள், காரணகாரியங்கள் என்பவற்றை எமது மக்கள் தெரிந்து கொள்ளாத தன்மையும் தான் தடுமாற்றங்களுக்குக் காரணமா கின்றன என்பதை முத்தையா சுவாமிகள் நன்கு அறிந்து கொண்டார். அதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தினார். அன்பர்களின் வேண்டுகோளிற்கிணங்க இங்கு சற் சங்கங்களை நடத்தினார். அந்தர்யோகம் என்ற வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். அதன் பலனை அன்பர்கள் உணரத்தொடங்கினர். அந்த அந்தர்யோக வழிபாட்டில் இணைந்த அன்பர்கள் செயற்படத் தொடங்கினர். அதுவே ஆத்மஜோதி அந்தர்யோக சபை என்ற பெயரில் தொடங்கிப், பின்னர் எமது பிள்ளைகளுக்கு சமயக் கல்வியை புகட்டத் தொடங்கியதால் ஆத்மஜோதி அந்தர் யோகக் கல்வி நிலையம் என்று அழைக்கப்பட்டு, இறுதியாக ஆத்மஜோதி தமிழர் இணையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு இன்று வரை செவ்வனே இயங்கி வருகின்றது.
5F
g
த

ழர் இணையம் *றியலில் பதித்த முத்து
தமார்
இந்த ஆத்மஜோதி தமிழர் இணையம் பூன்மீகம், கலையகம், கல்வியகம் என்ற மூன்று |றைகளின் கீழ் முறையே ஆன்மீகச் செயற்பாடு ளையும், கலை கலாச்சார விழாக்களை நடத்தியும், ாணவர்களுக்கு கல்வியை வழங்கியும் பணிசெய்து ருகின்றது. இவை யாவும் திறம்பட இயங்க இறைவன் புருளால் தற்போது, தியான நிலையம், பாடசாலை, னசமூக நிலையம் என்ற மூன்று அலகுகளாக |யங்குகின்றது. முத்தையா சுவாமிகளின் கனவை னவாக்க பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் மது செயற்பாடுகளைத் திட்டமிட்டு செவ்வனே செய்து மலும் செய்ய முயன்று வருகின்றோம்.
ஆன்மீக சமுதாயம் ஆத்மஜோதி தமிழர் இணையம் ஆனது அந்தர்யோகம் ன்ற இலக்கின் ஊடாக அதாவது, உள்ளுணர்வு பற்ற ஆத்மீக (யோகம்)இணைப்புடன் ஆன்மீக முதாயத்தைக் கட்டியெழுப்புதல்.
மயக்கல்வி முதாயத்தின் நிறைவு கருதியும், ஆத்மீக விடுதலை நாக்கிய தேவை கருதியும், சமயக் கல்வியையும், மிழ்மொழியையும் கற்பித்தல்.
ல்லிணக்க சூழல் மற்படி கல் விகள் ஊடாகவும், சேவைகள், விளையாட்டுகள் ஊடாகவும், சமூக கலாச்சார ழுக்கங்களை நிலைநிறுத்தி ஒரு நல்லிணக்க பூழலை உருவாக்குதல்.
லைமைத்துவம் மற்படி நடவடிக்கைகள் மூலம் ஒரு சிறந்த லைமைத்துவத்தை உருவாக்குதல்.
லை, கலாச்சாரம், பண்பாடு
லை கலாச்சாரப் பண்பாடுகளைப் பாது காக்க யாயமான வழிகளில் செயற்படுதலுடன் கனேடிய சேடமாக குயூபெக் மாநில பல்லின கலாச்சார
டவடிக்கைகளுக்கு மதிப்பளித்து நடத்தல்.

Page 46
அனுபவக் கை
சிவ : ஆத்மஜோதி
"ஆத்மஜோதி’ இதழ் அன்பர்களுக்கு அடியார்களுக்கும் ஒரு அனுபவக் களமாக அமைவே இதன் சிறப்பாகும். உள்நின்று உணர்த்தும் பொரு6ை உலகுக்கு அறிவிக்க, மற்றவர்களும் அதை அறிந்து தெரிந்து உய்ய, இந்த ஆத்மஜோதி இதழ் அன்று இன்றும் ஒரு தொடர்பயண ஊர்தியாக இருப்பதையிட்( பெருமைப்படுகின்றோம். 1948ம் ஆண்டு எந் நோக் கதி தறி காக முதி தையா சுவாமிகள தொடங்கினார்களோ அந்த நோக்கம் இந்த இதழ் மூலம், இன்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக் களை அடையும் ஒரு சீரிய சின்னமா திகழ்கின்றது என்றால் மிகையல்ல.
அடியேன் 15 வயது மாணவனாக இருந்த போதே தமிழீழத்தில் தெல்லிப்பழை நூல்நிலையத்தில் இந்த ஆத்மஜோதி இதழினுTடாக முத்தைய சுவாமிகளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது அதன்பின்னர் வித்துசிரோமணி கணேசையர் வாழ்ந் கிராமமாகிய எனது வறுத்தலைவிளான் வாலிப சங்கத்தின் சனசமூக நிலையப் பொறுப்பாளரா இருந்த அடியேன் முத்தையா சுவாமிஞடன் தொடர் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அதன் மூல
 

ளம் 'ஆத்மஜோதி”
உதயகுமார்,
தமிழர் இணையம்
T
எமது வாசிகசாலைக்கு ஆத்மஜோதி இதழ் தரிசனம் கண்டது.
தமிழீழத்திலும் தமிழர் வாழும் ஏனைய பிரதேசங்களிலிலும் ஒரு சஞ்சிகை நீண்ட காலத்திற்கு வலம் வருவதென்பது அரிதான ஒன்றுதான். அந்த வகையில் அறுபது ஆண்டுகள் கடந்தும், கடல்கடந்து தமிழன் வாழும் கனடா நாட்டில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்ற இந்த ஆத்மஜோதி இதழ் வருங்கால சந்ததிக்கு ஒரு வரப்பிரசாதமாகும். பேரறிஞர் முருகவே பரமநாதன், டாக்டர் இ. லம்போதரன், சைவ துரந்தரர் கந்தவனம், ஆசான் திரு சோமசுந்தரம் போன்ற நல்லறிஞர் பெருமக்களின் கைங்கரியமாகவும் அணி ணன் சிவ முத்துலிங் கத்தின் அயராத உழைப்பினாலும் முத்தையா சுவாமிகளின் தரிசனம் இந்த ஆத்மஜோதி இதழினுடாக எமக்கு கிடைத்துக் கொண்டிருப்பது நாம் செய்த நல்ல முன்வினைப் Uuj(36OT.
எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் பேரருளும் முத்தையா சுவாமிகளின் குருவருளும் கூடி இந்த வெளியீடு தொடர்ந்து வெற்றி நடைபோட வேண்டும் என வேண்டுகின்றோம்.

Page 47
<&ޗ,ދހo ހ72/<-68 بހ3ްo ޗީ2ށ
L' Associatio
ஆத்மஜே Athmajot
loa-\/// 7125 RUEWAVERLY, Rift K CANADA, Tel: (514)
சேவை
ஆன்மீகம்:
பிரதி வெள்ளி மாலை 6:30 மணியிலிருந்து ஆத்மஜோதி தி தியானம், புராணபடனம். (பிரார்த்தனைப் பெட்டிக்குள் தமது பிரார்த்திக்கப்படும்)
அந்தர்யோக வழிபாடு: 1995 இல் எமது இணையத்தின் முத்தையா சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, அவ் நடைபெற்று வருகின்றது. அத்துடன் வேண்டும் அன்பர் சுபீட்சத்திட்காகவும், சிலரது பிறந்த தின வழிபாடாகவும், குறிப்பிடத்தக்கது.
பிரதி ஞாயிறு மாலை 7:00 மணியிலிருந்து கிருஷ்ண வழ
குருபூசைகள், விசேட பிரார்த்தனைகள்(ஆத்மசாந்தி, பிறந்த நாம பசனை) என்பன மேற்கொள்ளல். விசேடதின வழிப ஜெயந்தி).
தொலைபேசிச் செய்திச்சேவையூடாக ஆன்மீக, அறிவியல் என்ற தொலைபேசி இலக்கத்தில் கேட்கலாம்.)
சமய அறிவியல் சம்பந்தமான நுால் வெளியீடுகள், கருத்
கல்வி:
பிரதி ஞாயிறு காலை 9 மணிமுதல் மாணவர்களுக்கான உ வழிபாடு, தியானம் (மன ஒருநிலைப்பாட்டுப் பயிற்சி), அறி
தொடர்ந்து சனாதன நெறி(இந்து சமயம்), தாய்மொழி(தமிழ் காலையும், பிற்பகலும் இரு நேர வகுப்புக்கள் நடைபெறுக ஏழு வரை இதுவரை நடைபெறுகின்றது.
பிரதி சனி மாலையில் மொழிவிருத்தி, இதிகாச அறிவியல்
விரைவில் சிறுவர்களுக்கான பிரஞ்சு மொழி செயல் வகுப்பு கணிணி)த் திட்டம் என்பன ஆரம்பிக்கப் படவுள்ளன.
யோகக் கலைப் பயிற்சி சிறியோர், பெரியோர் என இரு
C)
 
 

്ണൂര് ലത്
n des Athmajothi Tamoule ாதி தமிழர் இணையம்
hi Tamils ASSociation
SUITE #101, MONTREAL, QC H2S 3J1 271 9731. e-mail: aathmajothicagmail.com
கள்
யொன நிலையத்தில் அந்தர்யோக (சற்சங்க) வழிபாடு, வேண்டுதல்களை எழுதிப் போடுபவர்களுக்காகவும்
தாபகர் அமுதசுரபி, ஆன்மீக வள்ளல், ஆத்மஜோதி வழிபாடு இன்றுவரை பிரதி வெள்ளிக்கிழமை தோறும் களின் வீடுகளுக்குச் சென்று அக்குடும்பத்தினரின் சில ஆத்மசாந்தி வழிபாடகவும் நடைபெற்று வருவது
Sபாடு.
தநாள், பூரண நலம் வேண்டிய பிரார்த்தனை, அகண்ட
ாடு( சிவராத்திரி, நவராத்திரி, ராதாஷடமி, கிருஷ்ண
சிந்தனைகளைப் பரப்புதல்(பிரதி வாரம் 514-271 9731
தரங்குகளை நடத்துதல்.
உடற்பயிற்சி, பிராணாயாமப் பயிற்சி, தேவாரம், மந்திர
வுரை ஆன்மீக சிந்தனை( மனன வெளிப்பாடு).
) கற்பித்தல். (தற்போது இடப்பற்றாக்குறை காரணமாக கின்றன.) வகுப்புப் பிரிவுகள்: இளமழலை முதல் தரம்
ல், தலைமைத்துவ வகுப்புகள்.
பும், வீட்டுவேலை உதவிப் பயிற்சி (கணித, விஞ்ஞான,
பிரிவுகளாக ஆரம்பிக்கப் படவுள்ளது.

Page 48
7/<-68ދށ26 ޗީށ
சமுக கலாச்சாரச் செயற்பாடுகள்:
பிரதி வருடம் தொழிளாளர் தின நீண்ட விடுமுறையை முத்தமிழ்க் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதுடன், அத சமய அறிவுப்போட்டி என்பவற்றில் வெற்றி பெற்ற தேர்வுகள் மூலம் பரிசுபெறும் மாணவர்களுக்கும் பரி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக நடாத்தப்படு கெளரவிக்கப்படுவார்.
கலைத்துறை வளர்ச்சி சம்பந்தமான ஆய்வுகளை ഥേ
தமிழரின் பண்பாட்டு விழாவான தைப்பொங்கலை ஒட்
கலைத் தாயின் நினைவாக 'வாணிவிழா' வை நடத்து
கியுபெக் குடியரசு தினவிழாவைக் கொண்டாடுதல்.
கனடாச் சுதந்திர நாளைக் கொண்டாடுதல்.
பொது:
ஆத்மஜோதி சனசமூக நிலையம் விரைவில் திற தேவைகளுக்காகவும், மக்களின் தேவைகளுக்-காகவு
எமது அன்பர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடையே த வளர்க்கும் முகமாகவும் கடந்த 2007 புரட்டாதி(ெ இதழ் ஒன்று பிரதி மாதம் தோறும் வெளியிடப்பட்டு 6
வருங்காலத்தில் ஆத்மஜோதிக்கென நிரந்தரமான வச தமிழ் மக்களுக்கு மேலும் பல விரிவான சேவைகளு முன்நின்று பாடுபடும்.
“தன்னலமற்ற சேவை செய்பவனுக்கு இறைவனது உண்டு.”
- ஆத்மஜோதி முத்தையா சுவ
 

z2727 v2/27
ஒட்டிய சனிக்கிழமை மாலையில் முத்தமிழாரம் ’ என்ற }கென நடாத்தப்படும் நாவன்மைப் போட்டி, மனனப்போட்டி, மாணவர்களுக்கும், நடப்பு கல்வியாண்டின் ஆண்டிறுதித் சில்கள் வழங்கிக் கெளரவித்தல். அத்துடன்
ம் தங்கப்பதக்கப் போட்டி' யில் வெற்றி பெற்றவரும்
ற்கொள்ளல்.
-
டி 'பொங்கலாரம்' என்ற கலைநிகழ்வை நடத்துதல்.
நுதல். -_
ܓܒܠ¬
ந்து வைக்கப்படவுள்ளது.ஆத்மஜோதி மாணவர்களின் ம் இது பயன்படும்.
கவல் பரிமாற்றம்கருதியும், மாணவர்களின் எழுத்தாற்றலை சப்ரெம்பர்)யிலிருந்து முத்தாரம் ’ என்றசெய்தித் தகவல் வருகின்றது.
தியான கட்டடம் அமையும் பட்சத்தில் மொன்றியால் வாழ் நம், பயன்களும் கிட்ட ஆத்மஜோதி தமிழர் இணையம்
கருணை எப்பொழுதும்
ாமிகள்.

Page 49
&ޗ,ދށo <68-3/72ދށ36 ޗީށ
சைவமும் தமிழும் ம மறவன்புலவு க. ச
மென்மையான பேச்சு, கனிவான பார்வை, வாழ்வியலில் ஈடுபாடு, அரசுப் பணி. ஆனாலும், இடைவிடாத தேடல். ( உண்மைப் பொருளை நோக்கிய தேடல். இல்லற வாழ்வு. த எனினும் துறவிபோலத் தத்துவங்களை உசாவிக் கொண்டிருந்தார். ( தேடியவர் இராமச்சந்திரர். யாழ்ப்பாணத்து 6 நயினாதீவில் பிறந்தவர். கொழும்புக்கு வந்து அரசுப் பூ பணி புரிந்தவர். திருமணமாகி, மனைவி மக்களுடன் ( வாழ்ந்தவர். அவருடைய தேடல், அதைத் தொடர்ந்த நண்பர்களுடன் கலந்துரையாடல், தத்துவ உசாவல், ஆன்ம ஈடேற்ற நெறி காணல், யாவும் அவர் பால் பலரை ஈர்த்தன. அவரைச் சுற்றி ஒரு கூட்டமே திரண்டது. அவர் சொல்வதைக் கேட்டது. அவருடன் அக்கூட்டத்தினர் மனம் ததும்பி இசைந்திருந்தனர்.
ஏழாலையைச் சேர்ந்த ஓர் இளைஞர் நாவலப்பிட்டியில் ஆசிரியப் பணி புரிந்து கொண்டிருந்தார். நெட்டையான உருவம், சிவந்த மேனி, நேர் கொண்ட பார்வை, எதையம் ஏன்? எதற்காக? எப்படி? என வினவும் கண்ணோட்டம், விடைகளைத் தேடி நூலகங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் சென்று வருதல் என காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். இராமகிருஷ்ண பரமஹம்சர், இரமணர், அரவிந்தர், சிவயோக சுவாமிகள் போன்ற சித்தர்கள் எழுதியவற்றைப் படித்து வந்தார். தேவாரம், திருவாசகம் முதலாய தமிழ்ப் பனுவல்களை நறவ மாந்தி, நயந்து உருகி, தோய்ந்து, பழகிப் பயின்று கொண்டிருந்தார். அவர் பெயர் நா. முத்தையா. கொழும்பில் இராமச்சந்திரர் அந்த இளைஞருக்கு அறிமுகமாகிறார். இராமச்சந்திரரைத் தன் ஆத்மார்த்த குருவாக நா. முத்தையா ஏற்றுக் கொள்கிறார். நா. முத்தையாவின் தேடலுக்கு விடையாக இராமச்சந்திரரின் பேச்சும் எழுத்தும் நடை உடை பாவனைகளும் அமைகின்றன.
வார இறுதியில் கொழும் பு வருவார் இராமச்சந்திரரின் அருள் வெள்ளத்திற்கு ஆட்படுவார். ஆசிரியப் பணிக்காக வார நாள்களில் நாவலப்பிட்டியில் தங்குவார். ஆத்ம ஜோதி நிலையம் ஒன்றை நாவலப்பிட்டியில் முத்தையா அமைத்தார். ஆத்ம ஜோதி என்ற இதழை 60 ஆண்டுகளுக்கு முன்பு முத்தையா தொடங்கினார். தெளிவுக்கும் தெளிந்ததை எடுத்துக் கூறுவதற்கும் தெளிவை நோக்கிய மானுட வட்டத்தை உருவாக்குவதற்கும் ஆத்ம ஜோதி இதழ் வழி சமைத்தது. இராமச்சந்திரரைச் சுற்றி இருந்த கூட்டத்தைப் போல், மலையகத்தில் முத்தையாவைச் சுற்றியும் அடியவர் கூட்டம், தொண்டர் கூட்டம் உருவானது. பற்றுகளைக் குறைத்தார். உறவுகளை ஒதுக்கினார். திருமண பந்தத்திற்கு உடன்பட 6 மறுத்தார்; தொண்டும் தொழுகையும் வாழ்வாகின. இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களின் குச்சு வீடுகளுள், குளிருள் நடுங்கி, கம்பளிப் போர்வைக்குள்
(43
(
(
ܢ

725.27 مراسمی تحریری
*smee
ங்காது நீடு வாழும் ச்சிதானந்தன்
மறைந்து, வாழும் இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளிகளுக்கு நா. முத்தையா அருட் கண் திறக்க உதவினார்.
மலையகத்தின் நகரங்களிலும் ஊர்களிலும் ஆத்ம ஜோதி நிலையப் பணிகள் விரிவடைந்தன. தொண்டர்களின் ாண்ணிக்கை பெருகியது. அறிவையும் ஞானத்தையும் ஆன்ம ஈடேற்றத்தையும் தேடுவோருக்கு அடைக்கலம் கொடுத்தார் நா. முத்தையா.
இனக் கலவரங்கள் அடிக்கடி நிகழ்ந்த காலம். அக்காலங்களில் அன்பையும் அறத்தையும் கருணையையும் சிவநெறியையும் இடைவிடாது முத்தையா பரப்பி வந்தார். தோட்டத் தொழிலாளர்கள் சலுகைகளுக் காக, வசதிகளுக்காக, பணத்திற்காக, சைவ சமயத்திலிருந்து பிறமதங்களுக்கு மாற முனைந்த பொழுதெல்லாம், முத்தையாவும் தொணி டர்களும் மலையகத்தில் முனைப்புடன் பணியாற்றினர். மத மாற்றங்களைக் தறைத்தனர். ஆன்மீக ஒளியை, ஆத்ம ஜோதியை, சிவ நெறியைப் பரப்பினர்.
இலங்கையைவிட்டுப் புறப்பட்ட முத்தையா, இந்தோனேசியா சென்றார். சுமாத்திராத் தீவின் வடக்கே, மேடான் நகரில் சில மாதங்கள் தங்கினார். அங்கு லுக்காலத்தில் வாழ்ந்த ஓர் இலட்சம் சைவத் தமிழ் மக்களிடையே சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இசை வகுப்புகளை ஏற்பாடு செய்தார். மேடான் நகரத் தமிழர் அடையாளங்களைப் பேண ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார்.
தமிழ் நாட்டிற்கும் வடஇந்தியாவிலுள்ள திருத் தலங்களுக்கும் அடிக் கடி பயணித் தார். இருளாளர்களைச் சந்தித்தார். இலங்கையிலும் பல பகுதிகளுக்குப் பயணித்தார், தொண்டாற்றினார். நெக்கு நெக்கு உருக, நெஞ்சம் கனிய, அன்பு பெருக, சிவத்தோடு சம்பந்தமுடையவராக வாழுங்கள் என அறிவூட்டினார்.
1980களில் தென்மராட்சியில் மதமாற்ற அலை வேகமாக அடித்தது. பணத்திற்காகவும் சலுகைகளுக்காக வும் பலர் கிறித்தவர்களாக மாற முயன்றனர். அக்காலத்தில் நா. முத்தையா தனி ஒருவராக உழைத்தார். கிராமம் கிராமமாகப் பயணித்தார். சைவ சமயப் பரப்புரைக் கூட்டங்களை நடத்தினார். தேவார திருவாசகங்களை ஒதுவித்தார். தென்மராட்சியில் மதமாற்ற அலையை முற்றாக முறியடித்தார். இதை நான் நேரடியாகப் பார்த்தேன். இத்தகைய பெருஞ் சாதனையாளர், அருளாளர் நா. முத்தையா, ஆத்ம ஜோதி இதழை வெளியிடத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்னார் எம்முடன் இன்று இல்லை. ஆனாலும் அவர் ஏற்றிய ஆன்ம ஒளிச் சுடர் அணையாது. சைவமும் தமிழும் மங்காது நீடு வாழும். அவர் பணியை அதே வேகத்தில் அவர் காட்டிய உற்சாகத்துடன் தொடர்ந்து செய்வதே

Page 50
அமைப்புக்கள் மூன்
திரு. K. திருநாவுக்க
முன்ன
மலையகம் எண் று சொல் லும் போது எமக்கெல்லாம் ஞாகபத்திற்கு வருவது கண்டி மாநகரும் கண்டியை கடைசியாகக் ஆட்சி புரிந்த ழரீவிக்கிரம இராஜசிங்க அரசனின் பெயருமே.
கண்டிக்கு அடுத்தபடியாக மலையகத்தின் சிகரமென விளங்குவது நாவலப்பிட்டி நன்நகரமே நாவலப்பிட்டி நகர மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள். மனதில் நிலைத்து நிற்பதற்கு காரணங்கள் பல உள்ளன. சிறப்பாக இங்கு வியாபித்திருக்கின்ற பாடசாலைகள், புகையிரத நிலையம், பிறவுண் அன்ட் கோ (Brown & Co) நகள் காவல் நிலையம், அஞ்சலகம், தமிழர்களினால் நடத்தப்படும் வியாபார நிலையங்கள், வைத்தியசாலை போன்றவை நிறுவனங்களுடன் சைவசமயத்தைப் பரப்பிக் கொண்டு இருக்கின்ற ஆத்மஜோதி நிலையமும், இந்து வாலிப சங்கமுமே. குறிப்பிட்ட தாபனங்களில் தமிழர்களின் ஆட்சியே தலைதுாக்கி நிற்பதைக் காணலாம்.
அஞ்சலகத்திற்குச் சென்றால் அதற்குப் பொறுப்பான தலைவர் ஒரு தமிழராகவே காணப்படுவார். பாடசாலைகளின் முகவர்களும் அப்படியே. காவல் நிலையம், புகையிரத நிலையங்களும் அப்படியே. இச் சூழ்நிலையில் சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்புண்டு என்று கண்ட இந்நாளில் பிறவுண் அண்ட் கோ கம்பனியில் கடமையாற்றிய திரு. வேலாயுதபிள்ளை, திரு. திருஞானசம்பந்தர் போன்றோர் ஒரு வாலிப சங்கத்தை நிறுவினர். இவ்விடாமுயற்சியின் பயனாக கதிரேசன் கல்லூரி போன்ற கல்விக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியின் முகாமையாளராக றம்புக் பிட்ட என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த சுன்னாகத்தைச் சேர்ந்த திரு. கனகசபை என்பவரை முகாமையாளராக நியமித்தனர். ஆரம்ப காலத்தில் இக் கல்லூரி uTup'UT600TLb (9.bgil (8LIT 965 (Hindu Board of Education) கீழ் இயங்கி வந்து பின்னர் கனகசபையின் மகன். க. சுப்பிரமணியம் தலைமையில் இயங்கி வரத்தொடங்கியது.
இப்பாடசாலையைச் செவ்வனே நடத்துவதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள சிறந்த கல்விமான்களைக் கொணர்ந்து தலைமை ஆசிரியர்களாக நியமித்தனர்.
 

று - ஆணிவேர் ஒன்று
"G M.A., DIP. ED. (CEYLON) ாள் அதிபர்
இப்படியாக நியமனம் பெற்ற ஆசிரியர்களில் ஒருவரே
திருவாளர். நா. முத்தையா ஆவார். இவர் கல்லூரியில்
எடுத்த முயற்சியின் பயனாக திரு. K. S. ஆனந்தர் B.A., B.O.L போன்ற பட்டதாரி ஆசிரியர்களும் இங்கு நியமனம் பெற்றிருந்தனர்.
கதிரேசன் கல்லூரியும், இந்து வாலிப சங்கமும், ஆத்மஜோதி நிலையமும் வேறு வேறு என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. கல்லூரி முதலில் நகரின் நடுநாயகமாக பட்டணத்தில் நடுமத்தியில் விளங்கி வந்தது. பின்னர் பவுகமா (BOWgama) சென்ற இடத்தில் பல பரப்புக்கொண்ட காணியை விலைக்கு வாங்கி அங்கே முதன்முதலில் கீழ்ப்பிரிவுப் பாடசாலை திரு. நா. முத்தையா தலைமையில் இயங்கி வந்தது, பின்னர் 6ம் வகுப்பிலிருந்து Advance Level வரையுமுள்ள வகுப்புகளும் இயங்கத் தொடங்கின. பவகமா (Bowgama) வில் இயங்கி வந்த வகுப்புகளுக்கு முழுப்பொறுப்பாக திரு. நா. முத்தையா அவர்களே முகவராக இருந்து வந்தார்.
இப்படியாகப் பாடசாலையின் அபிவிருத்தியில் கண்ணும் கருத்துமாக இருந்துவந்த அதிபர். மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குள்ள சமயத்தைப் பரப்பும் ஆற்றலுள்ள ஒரு ஆசிரியராக விளங்கிய காலத்தில், நாவலப்பிட்டிக்கு அருகாமையிலுள்ள கினிகந்தனை (Giniganthana) 616ip 3) jg56b Overseer 9,53bbL60)LD புரிந்த வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை என்ற பெரியாரின் நட்பு ஆத்மஜோதி நிலையத்தார் மேல் பட்டதன் காரணமாக மிகவும் சிறிதாக இயங்கி வந்த சமயத்தாபனம், வளர்ச்சி பெற்று ஒரு பெரிய கட்டிடமாகக் காட்சியளிக்கத் தொடங்கியது.
இதுவே நாவலப்பிட்டியிலுள்ள சொயிஸாகலே வீதி (Soysakelle Rd) தொங்கலில் அமைந்துள்ள ஆத்மஜோதி நிலையம் எனப் பெயர் பெற்றது. உலகெல்லாம் பரவியிருந்த தமிழ், சைவ நிலையங்கள் யாவும் இந்நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு இருந்தன. சமயப் பிரசாரங்கள் , சொற் பொழிவுகள் , கூட்டுப்பிரார்த்தனைகள், புத்தக வெளியீடுகள், ஆத்மஜோதி போன்றவை ஆத்மஜோதி நிலையத்தின் சேவைகள் பற்றி எடுத்துரைத்தன. ஆத்மஜோதி நிலையமும், இந்து வாலிப சங்கமும் சமயத்தையும், தமிழையும் தோளோடு தோள் நின்று வளர்த்து வந்தன.
420

Page 51
பாடசாலை முடிந்தவுடன் ஆசிரியர் தோட்டங்களுக்குப் பிரச்சாரம் செய்யும் நோக்குடன் ஒரு Gurful 535p3 fids 356)60öTLT (Calendar of Events) தயாரித்து வைத்திருப்பார். அதன்படி எங்கள் இ. வா. ச. உறுப்பினர்களும் ஆத்மஜோதி நிலையத்தாரும் ஒன்றாகப் பெரிய வண்டிகள் மூலம் கினிகத்தனைத் (85 TILLb AMBLIDL jä5îọu JIT Green Wood Girulapanai போன்ற மலையக மக்கள் செறிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று சமயப்பிரசங்கம் செய்வோம். ஆசிரியர்களுக்கு இருந்த வரவேற்பும், மதிப்பும், செல்வாக்கும் இத்தகையது என்று எடுத்துரைக்க முடியாது. இதற்கெல்லாம் பக்கபலமாக மலையகத்தின் அரசியற் தலைவர்கள் என்று வாழ்ந்து மறைந்த திரு. செள. தொண்டமான், திரு. சுப்பையா, தோட்ட முகாமையாளர் திரு. செல்லையா டாக்டர், இலட்சுமணன், திரு. கிருஷ்ணபிள்ளை போன்றோர் என் கண்முன் தோன்றுகிறார்கள்.
உயர்ந்த உருவம், பரந்த நெற்றி, சந்தணப் பொட்டு, கதர் ஆடை, செருப்பு, குடை, ஒரு கை நிறைய புத்தகங்கள், சிரித்தமுகம் இவையாவும் நாவலப்பிட்டி நன்னகரையும் தோட்டங்களையும் அலங்கரித்தது. ‘மளித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்துவிடேல்' என்ற வாக்கில் அமைந்தது அன்னாரின் வாழ்க்கை.
1958ம் ஆண்டு நாட்டுக் கலவரம் கூட ஆத்மஜோதியை அணைக்கவில்லை ஆனால் வந்ததே 1983 பெரிய கலவரம் நிறுவனத்தை உருக்குலைத்தது. நான் 1956ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஆத்மஜோதி நிலையத்தாருடன் பழக ஆரம்பித்தேன்.
இங்குதான் சுத்தானந்த பாரதியாரையும், சச் சிதானந்த சுவாமிகளையும் , குன்றக் குடி அடிகளாரையும் கண்டேன். ஆன்மீக வாழ்வில் ஈடுபட முனைந்தேன். கதிர்காமத்திற்கு கால்நடையாக யாத்திரை செய்தல், கண்டியிலுள்ள தபோவனத்திற்கும் சச்சிதானந்த சுவாமிகளுக்கு பிறந்தநாள் விழா எடுத்தல், கதிரேசன் கோவிலில் சமயப்பிரசங்கம், சிவராத்திரி, நவராத்திரி விழாக்களுக்கும் செல்வேன். அதிபர் தலைமை வகிப்பார். சிறுசிறு ஆன்மீகக்கதைகள் அவருக்கும் அவர் விரும்பிய குழந்தைகளுக்கும் பிடிக்கக்கூடிய சிறுசிறு உப கதைகள், கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் போதெல்லாம் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், தபால் அதிபர்கள், டாக்டர்கள், பொலிஸ் அதிபர்கள், பொலிஸ் மாஅதிபராக விளங்கிய திரு. சுந்தரலிங்கம், திரு. க. இராமச்சந்திரனின் புதல்வர் (புகையிரதநிலைய அதிபர்) போன்றோர் இன்னமும் என்கண் முன்னே காட்சியளிக்கிறார்கள். திரு. க.
C

27 (22/
இராமச்சந்திரா தான், பலகாலம் ஆத்மஜோதி இதழின் கெளரவ ஆசிரியராகவும் விளங்கினார். சுத்தானந்த பாரதியார் எந்நேரத் தி ல பாட் டிசைப் பார் இவற்றையெல் லாம் உடனுக் குடன் எழுத்துருவப்படுத்துவதற்கு யான் மிகவும் பிரயோசனமாக இருந்து வந்தேன். சுத்தானந்தர் நிலையத்தை விட்டுச் சென்ற பின்னும் மிகுதியாக இருக்கும் தேன், பாகு, கசுக்கொட்டையெல்லாம் எனக்கே வந்து சேரும்.
அன்னாரோடு சேர்ந்து இயங்கியபடியால் எனது சிறுபராயத்திலேயே பெரிய பெரிய சமயப்பெரியார்களை கீ. வா. ஜெகநாதன் (கல்கி )போன்றோர்களையும் எம்நாட்டு விவேகானந்த சபை நிர்வாகிகளாகிய கேணல். சபாநாயகம் இரங்கநாதன் Q, C, நீதிபதி பூரீஸ்கந்தராஜா போன்றோர்களுடன் பழகும் வாய்ப்புகளும் கிடைத்தது.
எமது இரு அமைப்புகளும் ஒன்றாக இணைந்து நாயன்மார்களுக்கும், நாவலருக்கும் நாவலப்பிட்டியில் விழாவும், திருமுறை மகாநாடும் அதிபரின் முயற்சியால் நடத்தி சைவத்திற்கும், தமிழிற்கும் பெருமையைத் தேடும் வாய்ப்பு கிடைத்தது. கண்டி இந்துமாசபையுடன் இணைந்து சைவப்பேருரைகளை நடத்தி அகமகிழ்ந்தோம். இமயமலைச் சாரலில் இருந்து டாக்டர், சுவாமி பிரேமானந்தாவிடம் இருந்து வரவழைக்கப்படும் ஜீவனப்பிரகாஷ் லேகியம் இன்றும் எனது வாயை ஊறச் செய்கிறது. இத்தகைய பெரிய சமயப் பிரச்சார இயந்திரங்களுடன் பழகும் வாய்ப்பு வேறு யாருக்குத்தான் கிடைக்கும்? ஒரு காலத்தில் முத்தையா ஆசிரியரையும் இவரது சகோதரர் அருமைநாயகத்தையும் இரட்டையர்கள் என்று எனது இ.வா.சங்க பிரச்சார இதழில் கூறியது ஞாபகம் வருகிறது.
கண்டி தபோவனத்திற்குச் செல்லும் போது கல்லூரி முகாமையாளர் க. சுப்பிரமணியத்துடன் சென்றும் இருக்கின்றேன. ஒருவித பாகுபாடுமின்றி மிகவும் அன்னியோன்னியமாகப் பழகிக்கொண்டே சென்றோம். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு கூட்டுப்பிரார்த்தனைக்காகச் செல்வார். 'எட திரு. ஆகஸ்டில் உன்னை ஓய்வாக (free) ஆக வைத்திரு' என்று முன்கூட்டியே கூறிவிடுவார்.
1969 திசம்பரில் நான் இடமாற்றமாக யாழ்ப்பாணம் வந்தபோதிலும் எனது இருப்பிடம் காங்கேசன்துறையில் இருந்தபடியாலும் நாட்டுக்கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்தபடியாலும் அதிபரை அடிக்கடி சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.
ஆனால் 1995ம் ஆண்டு எனது மகனின் திருமணத்திற்கு ஜேர்மனியிலிருந்து வந்தபோது ஆசிரியர் இங்கு நிற்பதாகவும் அவரை இரு முறை அழைத்து
5r

Page 52
விருந்துபசாரம் செய்ததாகவும் எனது பாரியார் மூலம் அறிந்து தொடர்பு கொள்ள முயன்றபோது 8ம் திகதி இரவு 11 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘நான் முத்தையா கதைக் கின்றேன் திருநாவுக்கரசுவிடம் பேசவேண்டுமென்று.” 2மணி 30 நிமிடமாக டாக்டர் ஆதிகணபதி வீட்டிலிருந்து பேசினோம். தான் மொன்றியல் முருகன் கோவிலுக்குப் போவதாகவும் மகனின் திருமணத்திற்குத் தான் வந்து விடுவேன், தானே கொடி எடுத்துக் கொடுப்பதாகவும் கூறி விடை பெற்றவர் 9ம் திகதி பிணமாக இங்கு காட்சி அளித்தார். மறுநாள் மகனின் திருமணமாக இருந்தபோதிலும் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செய்வதுடன் எமது உறவு பற்றியும் எடுத்து இயம்பி எனது அஞ்சலியைச் செலுத்தினேன். அன்னார் இறந்தும் இறவாமல் எங்கள் மத்தியில் வாழ்கின்றார். ஒரு சமயம் பிரசங்கி சாமான்ய மனிதன் இல்லறவாழ்வில் ஈடுபடாமல் தன்னை தமிழிற்கும், சைவத்திற்கும் அர்ப்பணித்த ஒரு மகாமேருமலை.
கனடா இந்துசமயப் பேரவை ஆண்டுகள் பலபோயினும் அன்னாரை மறக்காமல் நெஞ்சில் இருத்தி அன்னாருக்கு மணிவிழா எடுக்கின்றனர் என்று அறியும்போது

அவருடன் வாழ்ந்த சிலர் மத்தியில் அடியேனும் வாழ்கின்றேன் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்வுறுகின்றேன். என்னையும் இதை எழுதும்படி பணித்த நண்பர் முத்துலிங்கத்திற்கும் எனது பெயரை முன்மொழிந்த எனது மாணவன் சேவியர் செல்லையாவிற்கும் யான் நன்றியுணர்வையும், தோத்திரத்தையும் கூறுகின்றேன். சைவப்பேரவை என்றென்றென்றும் தன் பணியைத் தொடரவேண்டும். மங்கையர்க்கரசியாம் சிவத்தமிழ் செல்வி அப்பாக்குட்டி தங்கம்மாவிற்கு ஒரு தெல்லிப்பழை துர்க்காதேவி தாபனம் கைகொடுத்தது போல ஆசிரியர் முத்தையாவிற்கு ஆத்மஜோதி நிலையம் கைகொடுத்து, சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதற்கு உதவியது என்று கூறி, இவர்களது சைவப்பணியும் என்றென்றும் மேலோங்கி நிற்க இறைவனைப் பிரார்த்தித்து இந்த வாழ்த்துரையை நிறைவு செய்கின்றேன்.
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
வணக்கம்.

Page 53
ஆத்ம சாந்திக்கு ஆ திருமதி கமலாதே
நிர்வாகசபை உறுப்பினர்,
"அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந் நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு”
என்னும் தெய்வீகக் குறளுக்கிணங்க தம் ஆன்மீக வாழ்வியலில் வாழ்ந்து காட்டி வரைவிலக்கணம் படைத்தவர் ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள். இவர் ஆசிரியராகவும், தலைசிறந்த ஆன்மீக பேச்சா ளராகவும் சமயநெறிச் சான்றோராகவும், பெருஞ்சிந்தனை யாளராகவும் விளங்கியவர். இவரின் இந்த சிந்தனைதான் சைவப் பெரியார் திரு க. இராமச்சந்திராவுடன் சேர்த்து 1948 ஆம் ஆண்டு நாவலப்பிட்டியில் ஆத்மஜோதி என்னும் ஒப்பற்ற ஆன்மிக சஞ்சிகை வெளியிட உந்துசக்தியாக உயிர் பெய்தியது.
சுவாமிகள் இறைபதம் எய்தியதனைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் கூடுதலாக வாழும் நாடான கனடாவில் அவரால் தாபிக்கப்பட்ட இந்துசமய பேரவையினரால் தொடர்ந்து காலாண்டு சஞ்சிகையாக வெளியிடப்பட்டு 2008 ஆம் ஆண்டுடன் அறுபதாம் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ளது. எனவே ஆத்மஜோதி சஞ்சிகையின் மணிவிழாவினை 2008 ஆம் ஆண்டு ஆடிமாதம் பத்தொன்பதாம் திகதி இறைஉணர்வுடன் கூடிய ஆன்மீக வைபவமாக கொண்டாடப் பேரவை முடிவு செய்திருப்பது பிறைசூடிப் பெருமானது திருவருளும் சுவாமிகளின் குருவருளுமாகும்.
சுவாமிகளின் சேவையை அவருடைய சொந்த ஊரான ஏழாலைவாழ் மக்கள் வருந்திக் கேட்டும் இவர் மறுத்து, மலையக வாழ் மக்களின் நல்வாழ் வியலைக் கருத்திற்கொண்டு தம்மாலியன்ற தமிழ் சமய சமூகப் பணிகள் மூலம் அவர்களின் அறியாமையை அகற்றி விழிப்புணர்விற்கு வளங்கட்டுவதே தம் தலையாய கடமையாகக் கொண்டு, தனக்கெனவாழாது தனது வருமானம் முழுவதையும் இந்நற்பணிகளுக்கே செலவழித்து, அல்லும்பகலும் அயராது செயற்பட்டார். இதனை அவரால் வெளியிடப்பட்ட ஆத்மஜோதி வாயிலாக அறிய முடிகிறது. சுருக்கமாகக் கூறின் மலையக மக்களின் தமிழ் சமய சமூக மற்றும் இன்னோரன்ன சிந்தனைகளுக்கும் புரிந்துணர்வுகளுக்கும் இவரின் பிரசார உந்துதலும் ஆத்மஜோதியில் இடம்பெற்ற ஆன்மீக விழுமியங்களுமே காரணம் என்று கூடச் சொல்லலாம்.
சுவாமிகள் இந்தியா, இலங்கை இந்தோனிசியா மற்றும் நாடுகளிலிந்த அருளாளர்கள் எல்லோரையும் தரிசித்த இறையனுபவங்களையும் அவர்களின் தெய்வீக வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் ஆற்றிய அற்புதங்களையும், தான் மேற்கொண்ட தெய்வீக
C

த்மஜோதி சஞ்சிகை
வி மகாலிங்கம்
இந்து சமயப் பேரவை
யாத் திரை அனுபவங்களையும் பக்தி சுவை சொட்டச்சொட்ட உண்மை உணர்வுடன் பசுமரத்தாணி பதிந்தால் போல் ஆத்மஜோதி சஞ்சிகை மூலம் மக்கள் மனதில் பதியக் கூடியவகையில் எழுதியுள்ளார். மற்றும் பல ஆன்மீக அறிஞர்களின் கட்டுரைகள் கவிதைகள், ஆலயங்களின் பெருமைகள், அந்தந்த மாதங்களில் வரும் ஆன்மீக விடயங்கள் இன்னும் இன்னோரன்ன சமய விளக்கங்கள், இச்சஞ்சிகை மூலம் மக்கள் மனதை தொட்டு நிற்கின்றது. இதனால் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனிசியா உட்பட பல உலக நாடுகளிலிருந்து சந்தா கட்டி ஓர் வாசகர் வட்டத்தையே ஆத்மஜோதி சஞ்சிகை உருவாக்கியுள்ளதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது. அன்றைய நிலையில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் சஞ்சிகைகள் வெளியாகி உள்ளன என்றால் இதன் பயன் பற்றி கூறவும் வேண்டுமா?
இன்னும் அதே சிறப்பாம்சங்களுடன் மலையக மக்களின் விழிப்புணர்ச்சிக்கு எப்படி வித்திட்டதோ அ.". தே போன்று புலம்பெயர் கனடாவில் மாத்திரம் அன்றி சைவ தமிழ் மக்கள் புலம்பெர்ந்து எந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த நாட்டு நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படாமல் எம் பாரம்பரிய பரிமாணங்களுக்கேற்ப செயற்படுவதற்கு ஆத்மஜோதியில் வெளியிடப்படும் ஆன்மீக கட்டுரைகளும், செய்திகளும், ஆன்மீக வாழ்வியல் உண்மைகளும், தத்துவங்களும்மனதில் சிந்தனைகளைத் துளிர்க்கச் செய்து மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கும் என்பது பிரதிஸ்டமான உண்மை. கடுகு சிறிதெனினும் அதன் காரம் பெரிது. பல வியப்பூட்டும் ஆன்மீக விடயங்களை தன்னகத்தே கொண்டு ஒவ்வொரு முறையும் புதுப்புதுப் பொலிவுடன் மக்கள் கரங்களில் தவழ்வது கண்கூடு. இதன் முகப்பை அலங்கரிக்கும் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் சரித்திர நிகழ்வு. அவற்றின் உள்ளே செய்திகளுடன் காணப்படும் நிழற்படங்கள் அனைத்தும் வருங்கால சந்ததியினருக்கு ஆவணப்படுத்தப்படும் அரும்பெரும் பொக்கிசங்கள். சிறியோர் முதல் பெரியோர் வரை இலகுவில் வாசித்து விளங்கக்கூடிய சுவை மிகு தேனுக்குச் சமமாக உள்ளது.
இன்றைய ஆத்மஜோதியின் சிறப்பாம்சங்களை எடுத்துக் கொண்டால் ஆசிரிய தலையங்கமே பரபரப்புடன் பக்கங்களைப் புரட்டத்தோன்றும். உதாரணம் ஐப்பசி மார்கழி 2007இல் வந்த சஞ்சிகையில் ஆசிரிய தலையங்கம் இந்து சமயப் பேரவையின் ஆக்கபூர்வ திட்டங்களின் முதன்மையான 'ஆத்மஜோதி ஆதீனம்” அமைக்கும் திட்டம் பற்றி சுருங்கக் கூறி விளங்க வைக்கப்பட்டுள்ளது. உண்மை இது காலத்தின்
-

Page 54
ஆத்மஜோதி ம கட்டாயம். இல்லை, கட்டளை என்று கூடச் சொல்லலாம்.
மேலும் மனித ஆன்மா தூய்மைபெற மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுப்பாதிருக்க அம்மனிதன் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்வகைகளையும், வாழ்வியல் நெறிகளையும் இச்சஞ்சிகையில் ஆதமஜோதி சுவாமிகளிடம் கேட் டவை என்ற பகுதியில் திருமுறைச்செல்வர் சிவமுத்துலிங்கம் அவர்கள் எழுதி வருகிறார். இவர் எழுதுவதுடன் நின்றுவிடாமல் அவர் தம் குருநாதர் பொன்மொழிகளை போதனைகளாகக் கொண் டு சுவாமியின் இலட்சியங் களையும் , விருப்பங்களையும், சுயநலம் சிறிதுமின்றி மக்களை ஈடேற்றும் ஆன்மீக விழிப்புணர்விற்கு மிகமிக விசுவாசமாக செயற் படுவது தான் இன்றைய ஆத்மஜோதியின் மணிவிழா என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. அன்றைய செல்லப்பா சுவாமிக்கு யோகர் சுவாமி போல் இன்றைய முத்தையா சுவாமிக்கு சிவமுத்துலிங்கம் என்று கூறினாலும் மிகையொன்றும் இல்லை.
2006-2007 திருமுறை மகாநாடு சிறப்பு மலரில் பேரவையின் திருக்கூட்டத்தினர் தாம் பேரவையால் அடைந்த இறையனுபவங்களை இச்சஞ்சிகை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் ஆத்மஜோதி உலகில் பல பாகங்களிலும் தனக்கென தனி இடம் பிடித்துப் பல வாசகர்களைக் கொண்டுள்ளது. இதனால் பயனடைந்து அனுப்பிய செய்திகள் அவ்வப்போது இச்சஞ்சிகை மூலம் இடம்பெறுவது கவனிக்கற்பாலது. இப்படி எழுதிக் கொண்டே போனால் பெருமைகள் பெருகும்.
சுருங்கக் கூறின் சிறந்த வளம் நிறைந்த சொற்சுவையோடு படிப்பவர் தம் சிந்தை குளிரும்

ணிவிழா மலர்
வண்ணம் ஆதமஜோதியில் வெளியாகும் அனைத்து ஆன்மீக விடயங்கள் இறைப்பற்றை உண்டாக்கி வாழ்வாங்கு வாழ்வதற்கும், உய்யும் நெறிக்கும் வழிகாட்டியாக உள்ளது என்பது வெள்ளிடை மலை. மனித நேயம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்துசமய பேரவையினர் பக்தியுடன் சேர்த்து மக்கள் மனதில் விதைத்து வருகின்றனர்.
தமிழ் சமய சமூக வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு வணிக நோக்கத்திற்காக தரத்தைத் தாழ்த்திக் கொள்ளாத வைராக்கியத்தினால், இச்சஞ்சிகை இலவசமாகவே விநியோகிக்கப்படுகின்றது.
ஆசிரிய குழுவை எத்தனை பாராட்டினாலும் தகும். கட்டுரைகள் நுட்பமான கவனிப்புடனும் உயர்ந்த பட்ச கௌரவத்துடனும் சிந்திக்க வைக்கும் உணர்வுடனும் வந்து கொண்டிருக்கின்றன. வெயிலில் சுற்றியலைந்து வரும்போது மரத்தின் நிழல் ஓர் தெய்வ நிலையை அடைய வைக்கின்றது. தாகத்தோடு வரும்போது குளிர்ந்த நீர் மனதிற்கு இதம் தருகின்றது. அதுபோல் ஆத்மஜோதியுடனான உறவு அன்பு, நேசம், பக்தி, சாந்தி மனிதநேயம் நிம்மதி ஒன்று கலந்து அடர்த்தியாகி இறையனுபவங்கள் நிறைந்த தெய்வீக நிலையை உணரக் கூடியதாய் உள்ளது.
ஆகவே ஆன்மீக வாழ்விற்கும், ஆத்மசாந்திக்கும் ஆதாரபாலமாகவும் ஆணிவேராகவும் ஆத்மஜோதி சஞ்சிகை விளங்குகின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எனவே இந்து சமயப் பேரவை ஆற்றிய அரிய செயற்பாடுகளில் இச்சஞ்சிகையின் மணிவிழா வயிரம் பொறித்த மகுடமாகும்.
"ஓம் நமசிவாய''

Page 55
என்னை ஆட்
திருமதி நாகேஸ் உபதலைவர் - இந்து
இவர் வாழ்வே ஒரு தெய்வீக வாழ்வு. தான் கற்றவற்றை நன்குணர்ந்து தமிழ்மக்களின் வாழ்வை மேம்படுத்த இறைவனால் அனுப்பப்பட்டவர்.
ஆன்மீக வாழ்வே மனிதனை மேன்மைப்படுத்தும் தன் போதனைகளாலும் பேச்சாலும் எழுத்தாலும் மக் களை வழிப் படுத் தியவர். பணி டிதமணி கணபதிப்பிள்ளையிடம் இருந்து ஆத்மீகவள்ளல் என்னும் பட்டத்தை பெற்றவர். சுத்தானந்தரிடமும் இருந்து அன்பு மணி என்னும் பட்டத்தைப் பெற்றவர்.
எங்கள் அனைவரையும் தனது அருளால் இறைவன் மீது அன்பு பூசை செய்வித்தவர். நான் வவுனியாவில் உள்ள பிள்ளையார் கோயிலில் பஜனை செய்துகொண்டு இருந்தபோது அவர் கால் நடையாகவே பல இடங்களுக்குச் சென்று கோயிலுக்கு வந்தபொழுது என்னுடைய தலையில் தடவி இதைத்தான் அம்மா நான் பரப்புவதற்கு ஊர் எல்லாம் கால் நடையாகவே சென்று கொண்டிருக்கிறேன். இதை விடாமல் நீர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று என்னை ஆசீர் வதித்தார். என் உடம்பெல்லாம் புல் அரித்து விட்டது. அதன் பின் பல வருடங்களுக்குப்பின் நான் கனடா வந்தபோது அவருடைய புகழையும் சிறப்பையும் கேட்டு மிகவும் ஆனந்தமடைந்தேன். அவரிடம் தீட்சை கேட்கும் பலனும் எனக்குக் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அவர் இறப்பதற்கு ஒரு கிழமைக்கு முன் மொன்றி யலுக்கு போக வெளிக்கிட்டுக் கொண்டிருந்த சமயம் அவரை சந்திக்கும் பலன் எனக்குக் கிடைத்தது. அவருடன் கதைத்துப் பலவிதமான சமய விளக்கங் களைக் கேட்டு அறிந்தேன். அதுவும் நான் செய்த தவப்பயன் தான் என்று எண்ணினேன். பின்பு அவர் மொன்றியலில் இறந்ததைக் கேள்விப்பட்டு "பாம்பின் வாய் சிக்கிய தேரைபோல மிகவும் துடித்துப் போனேன்" இறுதி ஊர்வலத்திலும் மலர் தூவி அவரைச் சொர்க் கத்துக்கு அனுப்பும் பலனும் எனக்கு மட்டுமில்லை. அவருடைய அன்புப் பக்தர்கள் அனைவர்க்கும் கிடைத்தது.
ஏழைக் குழந்தைகளுக்காகவே தன் வாழ்வை அர்ப் பணித் தவர். பிரம் மச் சரிய வாழ் வைக் கைக்கொண்டவர், தூய வெள்ளை உள்ளம் படைத்த வெள்ளை உடை உடுத்தவர். வள்ளுவர் வாக்குக்கிணங்க, மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்ற மொட்டை அடித்தலும் சடைவளர்த்தலும் காவி யுடுத்தலும் வேண்டாதவர். மக்களை நல்வழிப்படுத்தி நன்னெறியில் வாழவைக்கும் ஆத்மஜோதி மாத இதழை
-(49
 

72/7 22/7
கொண்டவர்
வரி கணேஸ் சமயப் பேரவை
மாதம் தவறாமல் வாசித்து நல்ல அறிவைப் பெறவேண்டுமென்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஆத்மஜோதி முத்தையா அவர்களது ஆத்மா ஈசன் திருவருளாலே ஜோதியாக விளங்குகின்றது. அவர் இறக்கவில்லை. அவர் நினைவலைகள் எங்கள் நெஞ்சக் கடலில் அலையாக எழுந்த வண்ணமாகவே இருக்கும். அவர் தொகுத்த அர்ச்சனை மாலையிலுள்ள மாதவாரப் பதிகத்திலுள்ள கடைசிப்பாட்டை நான் என் நேரமும் சொல்லிக் கொண்டே இருப்பேன். அப்பாடலின் வரிகள், திங்கள் ஈராறும் தினங்கள் ஒரேழும் உன்திருப்பெயரை எங்கிருந்தாலும் புகல் வேண் நான் செல்லும் இடங்களெல்லாம் மங்கலம் பொங்கி மரபோங்கிவாழ வரம்தருவாய் நங்கை சிவகாமி அம்மா அகிலாண்ட நாயகியே.
அவருடைய ஒவ்வொரு வாசகமும் ஆன்மீகத் தத்துவங்களை உள்ளிடாகக் கொண்ட கருவூலங் களாகும். பிறநாடுகளில் புலம்பெயாந்து வாழ்கின்ற எம்மக்கள் எமது சமயக் கருவூலங்களைக் கற்று மேன்மை அடைய வேண்டும். அவர்களது சந்ததியினரும் இவற்றை தெரிந்து பயன்பெறவேண்டும். எமதுசமயத்தின் ஆதமிக தத்துவ விளக்கங்களோடு ஒன்றி வாழ வேண்டுமென்பதே அவரது ஆசை. அதையும் கனடா நாட்டில் நிறைவேற்றியுள்ளார். முத்தையா என்ற பெயரே நீரில் தோன்றும் முத்தைப்போல இயற்கை ஒளியை உடையது. பெயருக்கேற்றபடி அவரின் வாழ்வும் மலர்ந்தது. மற்றும் எங்கள் திருக்கூட்டத்து அடியார்கள் ஆத்மஜோதியை வாங்கி வாசித்து பாடி வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் செல்வமும் நோயற்ற துன்பமில்லா வாழ்வும் நற்கல்வி ஞானமும் எய்தி மறுமையிலும் முத்தி நலம் பெறுவது திண்ணம். முத்தையா சுவாமி எங்கள் மனத்திரையில் எந்நாளும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார். அதைத்தான் எங்கள் சிவமயச் செல்வி தெய்வத்திருமகள் பரமேஸ்வரி அம்மா எந்நாளும் கூறுவார். அவரையும் நான் ஒரு தெய்வமாகவே போற்றுகிறேன். மனித மனத்தைப் பக்குவப்படுத்தி நெறியில்லா நெறியில் செல்லும் மனத்தை தடுத்து நிறுத்தி முத்திநெறி காட்டுவன ஆலயங்கள். அதேபோல ஆத்மஜோதி அவர்களுடைய அருச்சனை மாலை நித்தமும் கற்று முத்தி அடைய எல்லாம் வல்ல பொன்னம்பலக் கூத்தன் திருவருள் எல்லோருக்கும் கிடைக்க அன்பான வணக்கத்தைத் தெரிவித்து எனது கட்டுரையை முடிக் கிறேன். ஒருமையுடன் திருமலரடியினை நினைக் கின்ற திருக்கூட்டத்து அடியார் உத்தமர் தம் உறவு வேண்டும்.

Page 56
சைவப்பெரியார் ஆ
திருமதி தர்மதே ஒன்ராறியோ இ
இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ள சில உண்மைகளை நோக்கும்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம்முன்னோர்கள் ஆன்மீக உணர்வால் அவற்றை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி மகிழாமல் இருக்க முடியாது.
ஈழநாட்டில் அற்புத செயல்களைப் புரிந்த சித்தர்கள் மகான்கள் சமயப்பெரியார்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாகள். அவ்வழியில் வாழ்ந்து சிவபதம் அடைந்தவர் - எங்களால் இன்றும் போற்றப்படும் பெரியார் ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள்.
சுன்னாகம் மயிலனிச் சைவ வித்தியா சாலையில் ஆரம்பக் கல்வியைப்பயின்று திருநெல்வேலி ஆசிரிய பயிறகிக் கலாசாலையில் சேர்ந்தார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, இவரிடம் கட்டுப்பாடு கண்ணியம், பெரியோர்களைப் பேணி நடத்தல் போன்ற நற்பண்புகளைக் கண்டு, மேலும் அவர் பால் அன்புள்ளம் கொண்டார். அவரது நற்மதிப்பைப் பெற்றுச் சிறந்த நல்லாசிரியராக வெளியேறினார். நாவலப்பிட்டி கிதிரேசன் வித்தியா சாலையில் உதவி ஆசிரியராகவும், அதிபராகவும் கடமைபுரிந்தார்.
சைவசமயத்தால் மலையக மக்களிடம் விழிப்புணர்ச்சியைத் தூண்டினார். "ஜீவ சேவையே சிவசேவை” என மனதில் கொண்டு தோட்டங்களுக்குச் சென்று சைவசமய கல்வியைக் கற்பித்தார். இறைவனிடம் அன்பு செலுத்தி அன்பால் அருளைப் பெற்று, அருளால் அவரை அடையலாம் என்று போதித்த ஆத்மஜோதி அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். வழிபாட்டு முறைகளை செம்மைப்படுத்துவது தான் தனது கடமையென நாவலப்பிட்டியில் ஆத்மஜோதி நிலையம் ஒன்றை நிறுவினார். ஆறுமுகநாவலர் பெருமான் ஆற்றிய தொண்டைத் தானும் செயற்படுத்தி, தான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெற வேண்டுமென்ற பெருவிருப்புக் கொண்டு. "ஆத்மஜோதி” என்ற பெயர் கொண்ட மாத சஞ்சிகையை வெளியிட்டார். காலத்துக்குக் காலம் பாரத தேசம் சென்று தமிழின மக்களுக்குச் சமய உணர்வைப் பரப்பினார். சுத்தானந்தர், சிவானந்த சுவாமிகள், இராமதாசர் ரமணமகரிஷி, சத்யசாயிபாபா, அன்னை கிருஷ்ணாபாய், ஈழத்து யோகசுவாமிகள், செல்லப்பாசுவாமிகள் மற்றும்
 

த்மஜோதி முத்தையா
வி சிறிசுப்பிரமணியம் Nந்துசமயப் பேரவை
ஆங்காங்கே வாழ்ந்த சமயப் பெரியர்களைத் தரிசித்து, அவர்களின் பூரண ஆசியையும் பெற்றார். இரண்டு ஆண்டுகள் இந்தனோசியாவில் தங்கியிருந்து அங்குள்ளவருக்குத் தமிழையும் சைவ சமயத்தையும் புகட்டினார்.
. ܥ ܢܝ குழந்தைகட்கு அவர்க்குரிய கதைகளை தமிழில் வெளியிட்டார். கடவுள் வழிபாட்டுக்கும் நம்மை வழிப்படுத்த இறைவன் அருளிய திருமுறைகளை உணரவைத்தார். தியானமுறை தான் சிறந்த வழிபாடு என்று மக்கள் பயன்பெறக்கூடிய தியான வழிபாட்டை உறுதிப்படுத்தினார். சுற்றம் சுற்றாடல் மகிழ்வுடன் வாழ கூட்டுப்பிரார்த்தனை, வீட்டு வழிபாட்டு முறைகளை வலியுறுத்தினார்.
சமயம் வளர வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்த இம்மகான், இளைஞர்களின் சமயவழிபாட்டிலும் வளர்ச்சியிலும், பெரியோர்கள் முக்கிய பங்கு மேற்கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்தி வந்தார். கைதடி சைவச் சிறுவர் இல்லத்தில் பொறுப்பாளராக இருந்து, முதிர்ந்த காலத்திலும் தனது உடல்நிலையை சிறிதும் கவனிக்காமல் வெளி நாடுகள் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களிடம் நிதிசேர்த்து கைதடி சைவச் சிறுவர் இல்லத்தைச் சிறப்பாக நடத்தினார். அந்த வகையில் கனடா வந்த பெரியார் பலருடைய உதவியோடு ஒன்ராறியோ இந்து சயப்பேரவை அமைய வழிகாட்டினார். அப்பேரவை மூலம் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் சைவநெறிகளை, திருமுறைப் பாடல்களைப் பின்பற்றும் வழிகள் ஏற்படுத்த அறிவுரை வழங்கினார்.
இரண்டாம் முறை கனடா வந்த பெரியார் திடீரென மார்பு வலி ஏற்பட்டு 08-09-1995 ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார். "நிலையில்லா இச்சரீரம் எமக்கு கிடைத்தது கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும்பொருட்டே” என்று ஆறுமுகநாவலப்பெருமான் கூறிய அருள்மொழியை மக்களிடையே உணரச் செய்த ஆத்மஜோதி சுவாமிகளின் நினைவு என்றும் எம்மைவிட்டு அகலாது. பெரியாரின் அறிவுரைகளை கேட்டும் அறிந்தும், படித்து உணர்ந்தும் வாழ்ந்து, சிறப்பு மிக்க சைவத் தமிழர்களாக நாங்கள், இன்புற்று வாழ எல்லாம் வல்ல சிவபெருமான் திருவருள் புரிவாராக!

Page 57
ஆத்மஜோதி ம. ஆத்மஜோதி ஓர்
திருமதி செல்ல
இந்துசமய
ஆத்மஜோதி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் ஓர் சிறந்த இதழாகும். இவ்விதழ் எமக்கெல்லாம் நல்லறிவைப் புகட்டும் பேராசான். இப் பத்திரிகையை வாசித்துப் பயன்பெறும் ஒவ்வொருவரும் இக்கருத்தை ஒப்புக்கொள்வர் என்பதில் ஐயமில்லை. இவ்விதழ் ஓர் இலவச வெளியீடு, இதனால் வருமானம் இல்லாதோரும் வாசித்துப் பயன்பெறுகின்றனர். இது எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதமாய் அமைகிறது.
இச்சிறந்த இதழ் இலங்கையில் நாவலப்பிட்டி என்னும் மலைசார்ந்த பிரதேசத்தில் 1948ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டு, அதாவது 2008ஆம் ஆண்டில் தனது 60ஆவது ஆண்டைப்பூர்த்தி செய்து, மணிவிழாக் கொண் டாடுகிறது. இச் செயல் எம்மையெல்லாம் எல்லையில்லா ஆனந்தத்தில்
ஆழ்த்துகிறது.
இச் சஞ்சிகையைத் தொடக்கிய ஆசிரியர் யாழ்ப்பாணத்தில் ஏழாலை என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நா. முத்தையா அவர்கள். இவர் அறிவிற் சிறந்த ஆசிரியர்; சிவனடியார்; பிரமச்சாரியுங்கூட. இவரை ஆத்மஜோதி முத்தையா என்று அனைவரும் அன்பாக அழைப்பர். இப்பெரியார் 1995ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவரின் உத்தம சீடருள் ஒருவர் திருமுறைச் செல்வர் சிவமுத்துலிங்கம் ஐயா ஆவார். இவர் ஒரு சிவதொண்டர், கனடா இந்து சமயப்பேரவையின் செயலர். இவ்விதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகத் திகழ்ந்து இவ்விதழை வெளியிட்டு வருகிறார். இத்தொண்டு அமரர் ஆத்மஜோதி சுவாமிகளுக்கு நிறைவான ஆத்மசாந்தியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்விதழின் பக்கங்களைப் புரட்டுவோமாகில் முதலில் எங்குமுள்ள பிள்ளையார் என்ற தலைப்பில், பல ஊர்களிலும் அமர்ந்துள்ள பிள்ளையார் கோயில்கள் பற்றிய பாடல்களைக் காணலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எல்லோரும் அறிந்ததே. கனடா ஒன்ராறியோ இந்து சமயப் பேரவையாகிய எமது. சங்கத்தின் தலைவர் சைவதுரந்தரர், கவிநாயகர். வி.

ணிவிழா மலர் அறிவுக்களஞ்சியம் ராணி நடராசா ப் பேரவை
கந்தவனம் ஐயா அவர்களின் அறிவுசால் கட்டுரைகள் கவிதைகளை சுவைத்துப் படித்துப் பயன் பெறலாம். கெளரவ ஆசிரியராகக் கணிக்கப்படும் ஆழ்கடலான் முருகவே பரமநாதன் ஆசிரியர் அவர்களின் ஆழமான பொருள் தரவல்ல கட்டுரைகள் எம் அறிவை வளர்க்க வல்லன. எமது பேரவையின் ஆசிரியரும் பொருளாள ருமாகிய ஆசிரியர் செ.சோமசுந்தரம் ஐயாவின் இந்திய யாத்திரைக் கட்டுரையை வாசிக்கும்பொழுது நாம் இந்தியா சென்று அங்கு அனுபவித்த இன்பத்தை நுகர முடிகிறது. சைவசித்தாந்த கலாநிதி சித்தாந்த ரத்தினம் கணேசலிங்கம் ஐயா அவர்களின் இறையருள் பொதிந்த கட்டுரைகள் இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்த வல்லது, அமரர் ஞானசுரபி முத்தையா சுவாமிகளின் கட்டுரைகள் எம் வாழ்வைப் பூரணப்படுத்துவன. எமது பேரவையின் ஆயுள் அங்கத்தவர் பலர் பயன்தரும் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.
இச்சஞ்சிகை அரிய சமயக் கட்டுரைகள், கவிதைகள், சைவசித்தாந்தம், தத்துவம், ஞானிகளின் வரலாறு அற்புதங்கள், இலக்கியம், புவியியல் அறிவு, துர்க்கா துரந்தரி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி போன்ற பெரியார்களின் பிறந்த தின வாழ்த்துக்கள், பட்டமளிப்பு விழாக்கள், அமரத்துவம் அடைந்த பெரியார்களின் விபரங்கள், நாயன்மாரின் குருபூசைத் தினங்கள் என்பனவற்றை எமக்கு அறியத்தருகிறது.
எமது பேரவையினால் நடத்தப்படும் அத்தனை நிகழ்வுகளையும் வர்ணப்படத்துடன் கண்டு களிக்கலாம். ஆத்மஜோதி நிலையம் வெளியிடும் இச்சஞ்சிகைக்கு மகுடம் சூட்டினாற்போல் திருமுறைச்செல்வர் சிவ முத்துலிங்கம் ஐயா அவர்கள், ஆத்மஜோதி சுவாமிகளின் அரிய பெரிய உட்கருத்துக்களைத் தொகுத்து எழுதி வருகிறார். இவை எமது அறிவுக் கண்களைத் திறப்பதற்கு உதவும்.
இலவசமாகக் கிடைக்கும் இச்சஞ்சிகையைத் தேடிப் பெறுவோம். கற்றுப் பயன் பெறுவோம். உலகம் உள்ளவரை இச் சஞ்சிகை இடையூறின்றி வெளிவர இறையருள் வேண்டி நிற்போம்!

Page 58
(F60)60)
திருமதி செல்லமு g)sbg| GLOu
இவர் அருள்மிகு ஏழாலை என்னும் கிராமத்தில் பண்பும் பயனும் மிக்க நாகமணி தம்பதியருக்கு மைந்தனாகப் பிறந்தார். பெயர் முத்தையா என்பதே. கருவிலே திருவுருவாய்ப் பிறந்தார். இளம் பராயத்திலே தெய்வபக்தி உள்ளவராய்க் காணப்பட்டார்.
பக்கத்தில் உள்ள இலந்தைகட்டியில் உள்ள வைரவர் கோயிலில் என்றும் தொண்டுகள் செய்வார். காலையில் எழுந்தவுடன் கோயிலுக்குச் சென்று கூட்டி, கழுவி துப்பரவு செய்வார். பின் பாடசாலைக்குச் செல்வார். பள்ளிக்கூடம் முடிந்து வந்து ஆறுமணி யளவில் தன்னுடன் படிக்கும் சகமாணவர்களையும் கூட்டிப் பசனை செய்வார். தனக்குத் தெரிந்த பாடல் களைப் படிப்பார். ஒவ்வொரு நாளும் விளக்கேற்றி வைப்பார். பசனை முடிந்தவுடன் பிராமண ஐயா வந்து பூசை செய்து விபூதிப் பிரசாதம் கொடுப்பார்.
பின், வீட்டில் பள்ளிக்கூட வேலைகளைச் செய்வார். இப்படி நாளாந்தம் செய்து வருவார். படிப்பிலும் திறமைசாலியாய் இருந்தார். ஆளும் வளர்ந்து விட்டார். ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று வெளியேறினார். நாவலப்பிட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்ச் சேர்ந்தார். பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்து வந்தார். அச்சுக்கூடம் வைத்து ஆத்ம ஜோதியையும், சைவசமயப் புத்தகங்களையும் வெளியிட்டார்.
தேயிலைத் தோட்டத்து மக்களுடன் பிரார்த்தனைகள் செய்வார். அவர்களும் இவருடன் பாடுவார்கள். அன்பாய்ப் பழகுவார்கள். அவர் திருமணம் செய்யவில்லை. பிரமச்சாரியாய் இருந்தார். லீவு காலங்களில் இந்திய யாத்திரை போய்வருவார். சில காலங்களில் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள சிவன் கோவில்களுக்குப் போய் தரிசிப்பார். இரண்டு வருடங்கள் நின்று அவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்.
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேர்த் திருவிழாவின்போது ஏழாலைக்கு வந்து வைரவர் கோயிலில் இருந்து பக்தர்களை சேர்த்து பசனை செய்து நடையாகப் போவார். நானும் எனது சிநேகிதிமார் இரண்டு பேரும் அவர்களுடன் சேர்ந்து போவோம். இரவு 2 மணியளவில் கோயிலில் இருந்து பசனை செய்து போவோம். பலாலி வீதிக்குப் போய் அந்த வழியே போவோம். ஊரெழுவில் றோட்டுப்பக்கமாய் அவரின் சொந்தக்காரர் பசனை வைத்து எல்லாருக்கும் தேநீர் கொடுத்தும் சிற்றுண்டியும் கொடுப்பார்கள்.
நாங்கள் ஒவ்வொரு சந்தியிலும் நின்று கூட்டமாய்ப் பாடுவோம். அவர் பாடுவார். அவன் பின்னால் எல்லாரும் பாடுவார்கள். சில இடங்களில் துள்ளுவார். முருகன் பாடல்களைப் பாடுவார். முருகன் தான் வந்தாரோ எனும்படியாய் தோன்றும். அந்தக்
-5

த்து சின்னத்துரை பப் பேரவை
காலத்தில் அவரின் தோற்றமும் அழகும் அப்படி, செருப்பு, சட்டை போடமாட்டார்.
நாங்கள் போய் வடக்கு வாசலுக்குப் போய்ச் சேரவும் சுவாமியையும் படி கடந்து 7 மணியளவில் தேருக்குக் கொண்டு வருவார்கள். நானும் 6 - 7 முறை போனேன். எங்கள் எல்லோருக்கும் அளவிலா ஆனந்தம். தேரைச் சுற்றி வந்து பிரார்த்தனை பண்ணி ஓர் இடத்தில் அமர்ந்து படிப்போம். தேங்காய் அடிப்பார்கள். பஞ்ச ஆரார்த்தி காட்டி தேரை இழுப்பார்கள். நாங்களும் சுற்றி வருவோம்.
தேரில் முருகன் வரும் காட்சி கண்கொள்ளாக்காட்சி ஆகும். 9 மணியளவில் தேர்முட்டிக்கு தேர்வந்து விடும். கொஞ்சநேரததில் பச்சை சாத்தி சுவாமியை தேரினின்றும் இறக்கி கூத்துடன் உள்ளே போய் எழுந்தருளி வைத்து விடுவார்கள். பாலும் குடம் குடமாய் நெய் அபிஷேகம் செய்வார்கள். பின் பூசை செய்வார்கள். சனங்கள் உள்ளும்புறமும் வந்து குவிந்து விடும். நாங்களும் சுற்றிக் கும்பிட்டு வெளியில் வருவோம். இப்படி நானும் 6-7 வருஷமளவு போனேன். பின்பு நாட்டிற் பிரச்சினை கூடிவிட்டது. போறதில்லை. பின் அவர் கைதடியில் அநாதைப் பிள்ளைகள் கொஞ்சப்பேரை வைத்து ஆதரித்து வருகிறார் என்று சொன்னார்கள். நாட்டில் கலவரமும் பஞ்சமும் வந்து விட்டன. பிறகு அவர் கனடா வந்துவிட்டார். நானும் கனடா வந்து விட்டேன்.
ஒரு நாள் சற்சங்கம் வைக்கிறார் என்று கூப்பிட்டார்கள். நானும் போனேன். அவர் பாட நாங்களும் பாடினோம். இடையில் இனி ஒரு முறை இலங்கைக்குப் போய் வருவேன் என்று சொன்னார். சொன்னபடி திரும்பவும் வந்தார். அவர் தான் இந்துசமயப் பேரவையைத் தொடக்கி வைத்தார் என்று சொன்னார்கள். இங்கு வந்து எல்லாக் கோயில்களிலும் பிரார்த்தனை சொற்பொழிவுகள் நடத்தினார். ஒருநாள் மொன்றியலில் உள்ள கோயலுக்குப் போனார். அங்கு திருவிழாக்காலம். பிரசங்கம் செய்ய இருந்தவர். திடீரென்று ஆஸ்பத் திரிக்குக் கொண்டு போனார்கள். அங்கே அவர் நிரந்தரமாய் இறைவன் அடி நிழலில் அணைந்து விட்டார். சொல்லொணாத் துயரம். பின் இந்து சமயப் பேரவையினர் ரொறன்ரோவுக்கு கொண்டு வந்து ஈமக்கிரியைகளைச் செய்தார்கள்.
இப்போ அவர் தொடக்கிவிட்ட வழி இந்து சமயப் பேரவையினர் இந்த அடியார்களை பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் போன்ற பாடல்களைப் படிக்க வைக்கிறார்கள். எப்போ சனிக்கிழமை விடியும் என்று பார்த்திருப்போம். எங்களுக்கும் சிவபெருமான் தான் நல்வழி விடவேண்டும் என வேண்டுகிறேன்.
2

Page 59
மனித வாழ்க்கை இணுவையூர் தேவி
வாழ்க்கையின் அர்த்தமே மன அமைதிதான். மனத்திலே சஞ்சலமில்லாமல், குழப்பமில்லாமல் மிகத் தெளிவான மனத்துடன் எவன் தனது அன்றாட பொழுதைக் கழிக்கிறானோ அவன் நடத்துவது தான் வாழ்க்கை.
எந்த நேரத்தில் யார் பழிதூற்றுவார்களோ, நமக்கு என்ன கடுமையான தண்டனை வந்து சேருமோ, எந்தச் சமயத்தில் நமது உடல் பாதிப்புக்கு உள்ளாகுமோ, உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற மன உளைச்சலுக்கு மத்தியில் பங்களா வாசம், கார் g 6 ITIf, அறுசு  ைவ உணவு, செல் வம் ஆகியவற்றையெல்லாம் பெற்றுத் திளைப்பதை எவ்வாறு வாழ்க்கை என்று கூறமுடியும்?
எவன் ஒருவன் மனத்தில் மாசற்ற இயல்பும், அறிவும் , தெயப் வசிந்தனையும் , தெளிவும் பொருந்தியிருக்கின்றனவோ அவன் மட்டுமே நிம்மதியுடன் வாழ்க்கை நடத்த முடியும்.
மனித வாழ்க்கை நிலையில்லாதது என்ற உண்மையினைத் தெளிவாக உணராதவர் தங்கள் அன்புக்குரியவர்களை மரணம் தழுவும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இதனை பட்டினத்தடிகள் மிகவும் சிறப்பாக விளக்கி உள்ளார்.
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டு பாடி யாடிமுடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாகும் பிணங்கள் கத்துங் கணக்கென்ன கான் கயிலாயபுரிக் காளத்தியே!
செத்துக்கிடக்கும் பிணத்தருகே நின்று இனி சாகப்போகும் பிணங்கள் கதறி அழுகின்றார்கள் எனக் கூறுகின்றார்.
 

யின் அர்த்தம் கணேசலிங்கம்
நிச்சயமில்லாத வாழ்க்கையின் கதாபாத்திரங்களைப் போல விளங்குகின்றனர். மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்போர் நாடக மேடையில் வேடம் போட்டு நடிப்பதுபோலச் சிலகாலம் உலகத்தில் உலாவும் மக்கள் மீது கொண்ட விடாப்பிடியான பந்தபாசங்கள் காரணமாக எல்லோருக்கும் செல்வம் சேர்க்க வேண்டும். வாழ்க்கையில் ஆடம்பரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேராசை ஏற்படுகிறது. வீணான பேராசை காரணமாக செல்வம் குவிப்பதே வாழ்க்கையின் இலட்சியம் என எல்லோரும் அலைந்து திரிகின்றனர். நாம் எல்லோரும் யோசிக்க வேண்டும்.
நாம் பிறக்கும்போது எந்தவித செல்வத்தையும் கொண்டு வரவில்லை. இதே போன்று நாம் இறக்கும்போது நாம் சம்பாதித்த எந்தப் பொருளையும் கொண்டு போக முடிவதில்லை. இடைக்கால வாழ்வின்போது நமக்கு ஏதாவது செல்வம் கிடைத்தால் அதனை இறைவன் கொடுத்ததாக எண்ணி அறவழியில் செலவிட்டுத் தான தர்மம் செய்து எமது மனித வாழ்க் கையை அர்த்தமுள்ளதாக ஆக்கலாம்.
நம்பினால் நடக்கும் நம்பும் போது நடக்கும் நம்பிக்கை நடத்தி வைக்கும் உங்களால் முடியும்! நீங்கள் நம்புங்கள்!! நம்பிக்கை தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பதே நம்பிக்கை தான். நான் ஆத்மஜோதி சஞ்சிகையின் வாசகர்களில் ஒருவர்; தினமும் தவறாது படிப்பேன். இதனால் எனக்கு நிறைய சமய அறிவைப் புகுத்தி இன்று என்னை இக்கட்டுரையை எழுத வைத்தது எங்கள் ஆத்மஜோதி சஞ்சிகை என்றால் மிகையாகாது. அதற்கு எனது நன்றி.

Page 60
இந்துமாகடலின் இலங்கும் முத்தெனத் திகழு ஈழத்திருநாட்டின் வடபால் செந்தமிழ் பேசும் சுந்தரபூ ஏழாலை. செம்மண்ணும் வயல் மண்ணும் கொண் பூமி. குளந் தொட்டு வளம் பெருக்கும் சிறந் கிராமம். ஏழு ஆலயங்கள் ஒருங்கே அழகுற கொண்டு ஏழாலை எனப் புகழ் பெற்ற கிராமL அண்ணாந்து நிற்கும் அரச மரங்களும் பற்றிப் படர்ந்து பறவைகளின் இருப்பிடமாக விளங்கும் ஆலமரங்களும் விண்ணை முட்டும் பனை தென்னை மரங்களு வில்வமும் கொன்றையும் மாங்கிளியும் மரங்கொத்தியு கொஞ்சிப் பேசும் மருத மரங்களும், கனி தழு மரங்களாம். மா, பலா, வாழைகளும் நிறைந்த வனப்புறு மண் ஏழாலை, ஊதிச் சுவைக்கும் புகையிலையு பாசிப்பயறும் பூசினியும் வெங்காயமும் அபரிதமாu விளையும் செம்மண் பூமி. உலகின் இருள் கிழித்து ஒளி கொடுக்கக் கீழ்த்திசையில் எழுகிறான் கதிரவன் அந்தக் கதிரவன் கதிர்க்கரம் நீட்டி ஒளி கொடுக்குட வேளையிலே அஞ்ஞான இருள் துரத்தி ஆன்மீக ஒளி பரப்ப ஏழாலை கிழக்கிலே நாகமணி பொன்னுட 'பிள்ளை தம்பதிகளுக்கு புத்திரராகப் பிறந்தா ஞானசுரபி முத்தையா அவர்கள். கருவிலே திருவானவர் அவர்.
அன்று கிராமத்தின் குட்டிப்பிள்ளைகள் கிட்டிட் புள்ளடித்து விளையாட, சுட்டிப் பிள்ளை முத்தைய இலந்தை கட்டி வயிரவர் ஆலயத்திலே எண்ணெய்த் தீபம் ஏற்றி, குடை பிடித்து, ஆலவட்டம் தூக்கி இறை பணி செய்தார். மனை மாண்பு மிக்க பெற்றோரின் அரவணைப்பிலே நன்கு கற்றுத் தேறினார் தாரமும் குருவும் தலைவிதிப்படியேயென்றவாறு பார்க்கும் இடம் எங்கும் நீக்க மற நிறைகின்ற பரம் பொருளின் கருணையினால் பல அறிஞர்களிடம் சமய தத் துவங்களையும் அறநெறிநூல் களையும் வேதாந்தஞானத்தையும் பயின்று தேறினார்.
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”
என்ற வள்ளுவப் பெருந்தகை வாக்குப்படி சடை வரதரின் வாக்குப் பலித்தது. பயிற்றப்பட்ட ஆசிரியர் ஆனார். 1939ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் பதினைந்தார் திகதி நாவலப்பிட்டியிலே ஆசிரியராகக் கால் பதித்தார் அன்றே அங்கு பொன்னாள் ஆனது. கதிரேசன் மகா வித்தியாசாலையில் ஆசிரியராகவும் பாடசாலை முதல்வராகவும் பணியாற்றினார். மலையக மக்களின் பிள்ளைகளின் வாழ்வு ஒளிமயமானது. மலையக
 

மீக ஒளி முத்து தம்பித்துரை
மயப் பேரவை
D
5
5
༡
D6
540
மண்ணில் அன்பும், அறனும் அறிவும் பண்பும் வளர்ந்தது.
வெற்றுக் கூட்டுக்குள் உயிரைக் கொடுத்து உலகத்துக்கனுப்பித் திருவிளையாடல் புரியும் இறைவன் அங்கேயே உறைந்து விடுகிறான். காற்றுப் புயல் வெள்ளத்ால் அள்ளுண்டு செல்லும் சிறு துரும்புபோல் உயிர்கள் உலக மாயையில் மயக்குண்டு தம்முள் இருக்கும் திருவருளைப் புரியாது கலங்குகின்றன. உன் குருவார் உள்ளத்தில் உறைவான்’ என்கிறார் மணிவாசகர். இன்னும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்கிறார்.
அவன் திருவருள் கிடைக்கப் பெற்ற ஞானசுரபி அவர்கள் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமந்திரத்தைச் சிரமேற் கொண்டு இறை பணியே எமக்கு வழிகாட்டி எமக்கு வாழ்வளிக்கும் என்ற பல பணிகள் புரிந்தார். அறிவை வளர்க்கும் ஆசிரியப் பணிபுரிந்தவர் சமயப் பணி மேற்கொண்டார். திருநாமம் ஐந்தெழுத்தும் நெஞ்சிற் கொண்டார். தீவண்ணார் திறங்களை தீந்தமிழில் போகும் தேசம் எங்கும் பேசினார்; எழுதினார்; உள்கி உள்கி இறும்பூதெய்தினார். பிறர்க்கு இன் சொலால் இதயங்களில் பதிய வைத்தார். "நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றியின் பட மாடக் கோயில் பகவர்க்குதாமே” என்ற திருமூலர் வாக்குப்படி அறம் வளர்க்கத் தூண்டினார். அநாதைச் சிறுவர்களை அரவணைத்து வளர்த்தார். “நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைத்தலுமே தலைவா நிந்நிலையைப் பணித்தாய் சலமொழிந்தேன்’ என்கிறார் சுந்தரமூர்த்திநாயனார். அதாவது ஒரே மனத்துடன் தங்களின் திருவடிகளையே நினைந்தேன். நினைத்த அளவில் தங்களை மறவாமல் இருக்க வழி செய்தீர் என்கிறார்.
நிலையாயப் நினைந் துருகி வழிபட்ட ஆத்மஜோதி ஐயாவின் நிலை விளங்க ஒளி விளங்க நயினை நகர் தந்த நற்சீலர் க. இராமச்சந்திராவின் தூண்டுதலாலும் அவரின் உதவியாலும் 1948ஆம் ஆண்டு திருக்கார்த்திகை நாளன்று ஆத்மஜோதி எனும் இதழ் வெளியிடப்பட்டது. அன்றே சைவத்தமிழ் உலகின் அஞ்ஞான இருள் அகன்றது. ஆன்ம ஒளி பிறந்தது. இருள் அகற்றி ஒளி கொடுக்கும் அற்புத மலர். சைவத் தமிழ் உலகம் எங்கும் பறந்தது. உள்ளங்களில் உறைந்தது.

Page 61
"நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித்திரிந்து சிவபெருமானென்று பாடுங்கள் பாடிப்பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வரே” என்கிறார் திருமூலர். அதாவது நாடு நகரம் எங்கும் சிவன் எங்குளானோ அங்கெலாம் பாடிப் பரவினால் அவர் எங்கள் உள்ளக் கோயிலே குடியிருப்பார் என்கிறார். இறை குடிகொண்ட இறை அருளாளர் ஈழத்திருநாட்டின் திக்கெல்லாம் தொண்டர்களைக் கூட்டிப் பாத யாத்திரை செய்து பாடிப் பணிந்தார். "பத்தரோடு பலரும் பொலியும்மலர்
அங்கைப் புனல் தூவி ஒத்த சொல்லி உலகத்தவர்தாம் தொழுது
ஏத்த உயர் சென்னி மத்தம் வைத்த பெருமான் பிரியாது
உறைகின்ற வலிதாம் சித்தம் வைத்த அடியார் அவர்மேல்
அடையா மற்றிடர் நோயே’
என்கிறார் சம்பந்தப் பெருமான். அதாவது அடியார்கள் பலர் ஒன்று சேர்ந்து கைகளில் மலரும் நீருங் கொண்டு ஒன்றாகவே பாடித் துதித்து திருவலிதாயத்தில் ஒன்றாகக் கூடிக் கூட்டு வழிபாடு செய்தலாகும். இப்படிக் கூட்டு வழிபாடு செய்யும் அடியவர்களுக்கு இயற்கையாகவே வரும் துன்பங்கள் வாரா. பிறவித் துன்பமும் இல்லையாகி விடும் என்கிறார். திருமுறைகளைக் கற்றுணர்ந்த ஐயா அவர்கள் மக்கள் துன்பம் நீங்கி இறை அருள் பெற்று இன்புடன் வாழ சற்சங்கம் அமைத்து வீடுகள் தோறும் கூட்டுப் பிரார்த்தனை செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். ஆலயங்களிலும் கூட்டுப் பிரார்த்தனை செய்யத் தூண்டி மக்களைப் புனிதர்கள் ஆக்கினார். உள்ளப் புலம் உழுது தெள்ளு தமிழ் வளர்த்த புலவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர் திருமுறை தந்த செல்வர்கள் என்பதைத் திருமுறைக் கதைகள் மூலம் தன் தமிழ்ப் புலமையை புலப்படுத்துகின்றார் ஆத்மஜோதி ஐயா. கபாலம் சிரித்தது என்ற கதையிலே இறைவன் திருமேனியில் இருந்த பாம்பு அசைகிறது. அதைப் பார்க்கிறார் உமாதேவியார். உமாதேவியாரைப் பார்த்த பாம்பு மயிலோ என்று ஐயுறுகின்றது. காரணம் மயில் பாம்பைக் கொன்று விடும். பாம்புக்கும் மயிலுக்கும் பகை. திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது தேவர்களுக்கே அமிர்தம் கிடைக்க வேண்டுமென மோகினி வடிவெடுத்தார் கிருஷ்ண பரமாத்மா. உலக இன்பம் வேண்டிய அசுரர்கள் மோகினியை விரும்பி ஒருவர்க்கொருவர் சண்டையிட்டு அழிந்து போயினர். உயிர் தப்பிய இரு அசுரர்களும்
-(5
 

தேவர் கூட்டத்துள் சேர்ந்து அமிர்தம் உண்ண இருந்தனர். அமிர்தம் படைக் கப்பட்டபோது இறைவனுக்குச் சொல்லும் மந்திரத்தை தேவர்கள் சொன்னாகள். அசுரர்கள் விழித்தனர். சூரியனும் சந்திரனும் கண்டு கொண்டனர். கிருஷ்ணனுக்குக் கண்ணைக் காட்டினர். கண்ணன் அமிர்தம் பங்கீடு செய்த சட்டுவத்தால் இருவரின் தலையையும் கொய்து விட்டார். அவர்கள் சாப்பிட்ட அமிர்தம் தொண்டை அளவில்தான் சென்றது. அமிர்தம் சாப்பிட்ட தலைகள் இரண்டும் மேலெழுந்து ராகுவும் கேதுவுமாக மாறி அடிக்கடி சூரியனையும சந்திரனையும் மறைக்கின்றன. பிறைச் சந்திரனுக்கு பழைய ஞாபகம் வரவே பாம்பைக் கண்டதும் பயந்து விட்டது. இவை எல்லோரும் தாம் இருக்கும் இடத்தை மறந்து பயப்படுகிறார் களேயென்று வெண்டலை சிரித்தது. வெண்டலை எப்போதும் பல்லைக் காட்டிக் கொண்டே தான் இருக்கிறது. அது சிரிப்பது போல் இருக்கிறது. இயற்கையாக இருக்கும் ஒன்றை நாயனார் தன் குறிப்பை ஏற்றி அழகாகச் சொல்லும் பாடலை ஐயா இறைவன் சன்னிதியில் எல்லோரும் இருக்கிறோம் என்பதை மறந்து விடுகின்றனர். நாம் இறைவன் சன்னிதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை மறக்கும் போதுதான் அச்சம் உண்டாகிறது. காமம், கோபம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்கள் எல்லாம் தலையெடுத்து விடுகின்றன என்று தான் நன்குணர்ந்து படித்துச் சுவைத்த தித்திக்கும் தீந்தமிழில் நாயன்மார்கள் தந்த பாடல்களை நாமும் படித்து உணர்ந்து ஒழுக வேண்டும் எனும் நன்நோக்கோடு பல கதைகளைத் தந்தார். அவற்றுள் என்னுள்ளம் தொட்ட கதையைச் சொல்லிப் பெருந்தகையை உளமார மகிழ்ந்துருகி எழுது கின்றேன். அப்பர் சுவாமிகளின் திருமுறைப்பாடல் கிடந்தபாம் பருகுகண்ட ரிவை பேதுறக் கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.
(ஆத்மஜோதி 2002ஆம் ஆண்டு சித்திரை ஆனி இதழ்)
சைவத் தமிழ் உலகம் போற்றும் ஐயா அவர்கள் சைவத்தமிழர் வாழும் தேசங்கள் எங்கும் சென்று ஆன்மீக ஒளிபரப்பினார். பலசித்தர்கள், ஞானிகளைத் தரிசித்தார். நல்லாசிகள் பெற்றார். திருமுறைச் செல்வத்தை அள்ளிப் பருக, அனுபவிக்க இந்து சமயப் பேரவையைக் கனடா நாட்டிலே ஆரம்பிததார். தென்னகம் வரை சென்று சிதம்பரத்திலே ஆயிரங்கால் மண்டபத்திலே மகான்களின் ஆசிகள் போற்றுதல் செய்ய வைத்த இந்த ஆன்மீக ஒளியை வாழ்த்தி வணங்குகிறேன்.

Page 62
ஆத்மஜோதம்
பயன்தரு திருமதி இராசல
இந்துசப் ஆத்மஜோதி சஞ்சிகைக்கு மணி விழா. இந்த சமயப் பேரவையும், பேரவையின் அடியார் கூட்டமும் சேர்ந்து எடுக்கும் விழா. மணிவிழா நடப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆத்மஜோதி சஞ்சிகை 1948ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் திரு முத்தையா சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டது. நாவலப்பிட்டியில் முத்தையா சுவாமிகள் ஆசிரியத் தொழில் பார்க்கும்பொழுது மலையக மக்களின் வாழ்க்கை முறையைக் கண்டு அவர்களுக்கு சமயத்தையும் தமிழையும் புகட்டி அவர்கள் வாழ்க்கையை எழுச்சி அடைய வைப்பதற்கு ஆத்மஜோதி சஞ்சிகையை வெளியிடத் தொடங்கினார். திரு. க. இராமச்சந்திரா கெளரவ ஆசிரியராகவும் திரு முத்தையா சுவாமிகள் நிர்வாக ஆசிரியராகவும் இருந்தார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் சஞ்சிகையை வெளியிட்டார்கள். ஒரு அச்சுயந்திரசாலையையும் நிறுவினார். ஆத்மஜோதி சஞ்சிகை இலங்கையில் மட்டுமல்லாமல், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் சென்றடைந்தது. அநேகம் பேர் சந்தாகாரர்களானார்கள். ஆயுள் சந்தா, வருடச்சந்தா, என்று யாவரும் சேர்ந்தார்கள். சஞ்சிகையில் சுவாமிகள் சென்ற இடங்களின் தரிசித்த மகான்கள், முனிவர்களின் படங்களை அட்டையில் பிரசுரித்து அவர்களின் வாழ்க்கை வரலாறு, தான் அவர்களிடம் கேட்ட உபதேசங்கள், உரைகளையும் அச்சிட்டு வெளியிட்டார். ஆத்மஜோதி சுடர்விட்டு பிரகாசிக்கத் தொடங்கியது. ஆத்மஜோதி சஞ் சிகை சந் தாகாரர்களுக் கு தபாலிலும்
அனுப்பிவைக்கப்பட்டது.
எனது கணவர் சங்கீத ஆசிரியர் திரு. நா. சண்முகலிங்கம் அவர்களும் ஆத்மஜோதி வாசகர். அவரும் பல பாடல்கள், கீர்த்தனைகள் இயற்றி சஞ்சிகைக்கு அனுப்பினார். அவைகளும் அதில் வந்தன. ஆத்மஜோதியில் பல தரப்பட்ட பெரியோகர்களினால் எழுதப்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள், சமயம், விஞ்ஞானம், பொன்மொழிகள், மருத்துவம் ஆகியவைகள் இடம்பெற்று வந்தன. சுவாமிகள் சைவ உணவு முறைக்கு மிகமுக் கியம் கொடுத்து மாமிசம் உண்பவர்களைத் திருத்திச் சைவ உணவு உண்ணும்படி மிகவும் வலியுறுத்திப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இதனால் பலர் திருந்தி முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். மக்களை மக்களாக வாழ வேண்டும் என்றும் எமது வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மக்களின் கைகளிலே சஞ்சிகை சென்றடைந்து எத்தனையோ மக்கள் திருந்தி நடந்திருக்கிறார்கள்.
அவரின் சீடர்கள் பலர் இன்றும் அவரின் பணியை ஏற்று நடக்கிறார்கள். 1983ஆம் ஆண்டு நடந்த தீய

ணவிழா மலர் ம் சஞ்சிகை ட்சுமி சண்முகலிங்கம் மயப் பேரவை
சக்திகளின் கலவரத்தினால் சுவாமிகளின் அச்சுயந்திர சாலையும், அவரின் அரிய பல நூல்களுடன் ஆத்மஜோதி சஞ்சிகைகளும் எரிந்து போய்விட்டன. அதனால் அவர் மனம் வருந்தி பின் சாவகச்சேரி சென்று தனது பணியைத் தொடங்கினார்.
எடை 1994ஆம் ஆண்டு முத்தையா சுவாமிகள் கனடா நாட்டிற்கு சைவசித்தாந்த மகாநாட்டிற்கு வருகை தந்தபொழுது அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அவரின் பக்தரும் சீடர்களில் ஒருவருமாகிய திரு வடிவேலு ஞானகாந்தனால் 96ஆம் ஆண்டு வரை சஞ்சிகை வெளிவந்தது. அவர் இந்து இந்துசமயப் பேரவையின் ஆரம்பகால உதவிச் செயலாளரும் ஆவர். அதன் பின்பு 2000ஆம் ஆண்டு தொடங்கி ஆத்மஜோதி இந்து சமயப்பேரவையும் ஆத்மஜோதி தியான நிலையமும் அதை முன்னெடுத்து செய்கிறார்கள். கிட்டத்தட்ட மூவாயிரம் சஞ்சிகைகள் பிரசுரமாகி மக்கள் கைகளிலே தவழ்கின்றன. ஆத்மஜோதி சஞ்சிகையை படித்து பல ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்திருக்கிறார்கள். மகான்களின் உபதேசம், பொன்மொழிகள், சமயம், விஞ்ஞானம், வாழ்க்கை வரலாறு சுவாமிகளிடம் கேட்ட பொன்மொழிகள் உள்ளடக்கப் பெற்று வருகின்றன. இவைகளை வாசித்தறிந்தால் மனிதன் திருந்தி வாழ்வான். இச்சஞ்சிகை இப்பொழுதும் பிற இடங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படுகின்றது. ஆத்மஜோதி எப்பொழுது வரும் என்ற எதிர்பார்த்திருப்போரில் நானும் ஒருத்தி. ஆத்மஜோதியை வாசிபப்தின் மூலம் எம் இதயங்கள் எல்லாம் ஆன்மீக ஒளிபெறுகிறது.
ஆத்மஜோதியைப் படித்து முன்னெறியவருள் நானும் ஒருத்தி. இந்து சமயப் பேரவையும் ஆத்மஜோதி தியான நிலையமும் எடுக்கும் முயற்சி மிகவும் உன்னதமானது. ஆத்மஜோதி ஐயா விட்டுச் சென்ற பணியை மிகவும் சிறந்த முறையில் முன் எடுத்து செல்கிறார்கள். ஆத்மஜோதி நோய் தீர்க்கும் மருந்து போல் எம்மிடம் உள்ள ஆணவத்தை அகற்றி எம்மை ஆன்மீக வழிக்கு இட்டு செல்கிறது. கடவுள் பத்தி, குருபக்தி, அன்புடைமை, இவை பற்றி எமக்கு நல்ல அறிவை ஊட்டி அதன்படி ஒழுகச் செய்கிறது. இரண் டாயிரமாம் ஆண்டு தொடங் கி நானும் ஆத்மஜோதியைப் படித்து முத்தையா சுவாமிகளால் தொடங்கிய இந்துசமயப் பேரவையிலும் திருக்கூட்ட அடியார்களில் ஒருவராயும் அங்கம் வகிக்கிறேன். பல மகான்கள், அடியார்களின் ஆசியும் பெற்றுள்ளேன். இவைகள் நாம் செய்த பூர்வபுண்ணிய பலன்கள் தான் போலும். ஆத்மஜோதி மணிவிழா இனிது நடைபெற எல்லாம் வல்ல ஆடவல்லான் நடராஜனை வேண்டு கிறேன்.
56

Page 63
Zć252Sa72 ZYa
ஆத்மஜோதியு
திருமதி இராஜம6 இந்து சமயப் பேரவை அ
ஈழவளநாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏழு ஆலயங்கள் நிறைந்த ஏழாலை என்னும் ஊரில் நாகமணி, பொன் னுப்பிள்ளை என்பவர்களுக்கு அரும் தவப்புதல்வராகப் பிறந்த முத்தையா அவர்களே எங்கள் ஆத்மஜோதி சுவாமிகள். கல்வி, கேள்வி ஞானம், யோகம், யாவும் சிறந்து விளங்கும் ஓர் ஆசிரியராவார். அவர் நாவலப்பிட்டி கதிரேசன் மகாவித்தியாலயத்தில் பணியாற்றிய காலத்தில் மாணவர்களின் நலனில் கவனம் செலுத்தி அனைவரின் அன்புக்கும் பாத்திரமானார்.
“தனக்கு அணி தான் செல் உலகத்து அறம்” என்பதற்கிணங்க நாவலப்பிட்டி தோட்டப்பகுதி மக்களை முத்தையா ஆசிரியர் FLDu LITLIB1856i நடத்தியும் பஜனைகள் செய்தும் நற்பண்புள்ளவர்களாக உருவாக்கினார்.
நாவலப்பிட்டி மலைப்பிரதேசம் முழுவதும் சைவசமய உணர்வு, ஒற்றுமை, யோகப்பயிற்சியில் ஆர்வம், தமிழ்மொழிப்பற்று, ஆலயங்களில் ஒழுங்கான தமிழால் அர்ச்சனைகள், இப்படி இன்னோரன்ன வளர்ச்சிகள் பரந்து காணப்பட்டன.
மலைநாட்டில் மட்டுமல்லாது ஈழநாடு முழுவதும் அவருடைய தொண்டுகள் வளர்ந்து சிறப்படைந்தன. பாதயாத்திரைகள் பல நிகழ்த்தினார். அமைதியான பஜனைகளுடன் நாகபூஷணி அம்மன் ஆலயத்திலிருந்து நல்லூர் முருகன் வரை நிகழ்ந்த பஜனையை நாங்களும் கண்டு தரிசித்தோம்.
இந்தியாவில் பல தலங்களைத் தரிசித்து, சித்திபெற்ற மகான்களுடன் உரையாடி ஆசிகளும் பெற்றார். நயினாதீவைச் சேர்ந்த க. இராமச்சந்திரா அவர்களைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அவர் ஒரு ஆத்மீக வாதி. தெய்வசித்தம் முத்தையா அவர்கள் ஒரு முறை அவரைச் சந்திக்க நேர்ந்தது. இருவர் சந்திப்பும் திருவிளையாடலில் ஒன்றாக அமைந்தது. முத்தையா ஆசிரியர் அவர்கள். ஆத்மஜோதி இதழைத் தொடங்கினார். கிட்டத்தட்ட (35) முப்பத்தைந்து வருடம் ஆத்மீகப் பத்திரிகையாக ஆத்மஜோதி வெளிவந்தது. சைவசமய அறிவு குறைந்த மக்களுக்கு அது மருந்தாக வெளியானது.
ஆத்மஜோதி அச்சுக்கூடமாகிய ஆத்மஜோதி
 

ம் தாபகரும்
of doi6OTU Taft ஆயுட்கால உறுப்பினர்
நிலையம் 1983 க் கலவரத்தில் அழிக்கப்ப்டமையால் மனதில் எந்தக் கலக்கமுமின்றி இறைவன் செயலில் இதுவும் ஒன்றே என்ற மனநிலையில் உலகளாவிய சமயப்பணிகளில் ஈடுபட்டார். "அன்பின் உள்ளான புறத்தான் உடலாய் உள்ளான் முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரானவன் அன்பின் உள்ளாகி அமரும் அரும் பொருள் அன்பின் உள்ளார்க்கே அணை துணையாமே.”
இதற்கு இணங்க, ஆத்மஜோதி சுவாமி அவர்களுக்கும் வெளிநாடுகள் சென்று தொண்டுகள் செய்ய வழிபிறந்தது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற இடங்களில் தமது உளமார்ந்த சமூகத் தொண்டுகளைப் புரிந்தார்.
கனடாவுக்கு வந்தபோது சிவ முத்துலிங்கம் அவர்களைத் தமது சிடனாக ஏற்றுக்கொண்டு பணிகளை அவரிடம் ஒப்படைத்தார். சிவ முத்துலிங்கம் தனது வாழ்க்கையைத் தமது குருவுக்காக அர்ப்பணித்தார். ஆத்மஜோதிப் பத்திரிகையையும் வருடத்துக்கு நான்கு முறை வெளியிட்டு மக்களுக்குச் சமயப் பற்று வளரவும், சைவசமயத் தொண்டுகளில் ஈடுபடுத்தவும் தம்மால் இயன்ற பணிகளைச் செய்து, ரொறன்ரோ இந்து சமயப் பேரவை மூலமாக அதனை வளர்த்து வருகிறார். ஆத்மஜோதிப் பத்திரிகையைப் படிக்கும் பல அடியார்கள் தமிழ்த்திரு முறைகள் முற்றோதும் இடம் எங்கே இருக்கிறது என்று ஆர்வமுடன் கேட்கிறார்கள். திருமுறைகளை முற்றோதுவதால் ஆத்மஜோதி புத்துயிர் பெற்றதுபோல் மிளிர்கிறது.
அனேக தமிழ் மக்களுக்கும் இடம் கொடுத்த இந்தப் புண்ணிய பூமி ஆகிய கனடா நாட்டில் அவருடைய ஆத்மா நீங்கினதும் முத்துலிங்கம் அவருடைய சீடனானதும் தெய்வ சித்தமே.
ஊன் உடம்பு நீங்கினாலும் அவரின் புகழ் உடம்பு என்றும் ஆத்மஜோதிப் பத்திரிகை மூலம் மலர்ந்து கொண்டே இருக்கும். அனைவரும் ஆத்மஜோதிப் பத்திரிகையை வாசித்து ஆத்ம பலம் தேடிக் கொள்ளலாம். ஆத்மஜோதி மேன்மேலும் வளர வேண்டும் என்ற இறைவனை வேண்டுதல் பண்ணுவோம்.

Page 64
ஆத்மஜோத4
சிறப்புக் க

1981@947
பூபா பசி 2.

Page 65
நாவலர் முதல் சிவத் (நாவலர் காலச் சைவ இயக்கத்தி தொடர்நிலை என்பன தொ
கலாநிதி நா
தோற்றுவாய்
ஈழத்துச் சைவ மரபுக்கு நீண்டதொரு வரலாறு உளது. தொல்பழங்காலம் முதலே தொடரும் அந்த மரபில் கி.பி. 19ஆம் நுர்ற்றாண்டுக் காலப்பகுதி ஒரு முக்கிய வரலாற்றுக் கட்டமாகும். அதுவரை மக்களின் வாழ்வியலில் ஒரு முக்கிய பண்பாட்டுக்கூறாகமட்டும் இயங்கிநின்ற சைவநெறியானது அக்காலகட்டத்தில், சமூகம் தழுவிய மக்களியக்கம்' என்ற ஒரு புதிய பரிமாணத்தை எய்தியது. அந்நிய மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராக, ‘சுயபண்பாட்டுப் பாதுகாப்பு என்ற நோக்கில் பேரெழுச்சியாக உருப்பெற்ற சைவ சமூக இயக்கம் அது. இவ் வியக் கத்துக் கான உணர்வுநிலைகளை ஒருங்கிணைத்து வடிவமைத்து வழிநடத்திய தானைத்தலைவர் என்ற கணிப்புக்குரியவர் நாவலர்’ என்ற சிறப்புப் பெயரால் சுட்டப்படும் ழரீலழரீ ஆறுமுக நாவலர் அவர்கள் (1822-79)ஆவர். அவருடைய சமயப் பேருரைகள், பலவகை எழுத்தாக்கங்கள், நூற்பதிப்புமுயற்சிகள் மற்றும் கல்விக்கூட உருவாக்க முயற்சிகள் ஆகியன அக்காலச் சைவத்துக்கு ஒரு மக்களியக்கப் பரிமாணத்தை நல்கின என்பது வரலாறு.
அவ்வாறு, நாவலரால் வடிவமைக்கப்பட்ட சைவ இயக்கத்தின் வரலாற்றியக்கத்தில் நமது சமகாலத்தின் முக்கிய செயற்பாட்டாளராகத் திகழ்ந்து நிறைவு பெற்றவர் 'சிவத்தமிழ்ச் செல்வி’ என்ற சிறப்புப் பெயர் தாங்கிய பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்(1925 - 2008).'சைவ உலகின் அன்னை' என்ற சிறப்புக் கணிப்புக்குரியவராகத் திகழ்ந்த அவர் தமது சொல்வன்மை மற்றும் ஆலய அறங்காவல் திறன் முதலியவற்றால் சைவநெறியை ‘மக்கள் மயப்படுத்தியவர். - ܢܓܘ ܢܓܟܠ
மேலே நோக்கியவாறு,நாவலர் காலத்தில் உருப்பெறத் தொடங்கிய சைவ இயக்கமானது சிவத்தமிழ்ச் செல்வியின் நிறைவு நிலை வரையான காலகட்டத்தில் நடந்துவந்த பாதை பற்றிய எனது மனப்பதிவுகள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றன.
அ. நாவலர் காலச் சைவ இயக்கம் - நோக்கும் செயல்வடிவமும்
19ஆம் நூற்றாண்டில் நாவலரால் வடிவமைத்து வழிநடத்தப்பட்ட சைவ இயக்கத்தின் முன்னிருந்த முக்கிய பிரச்சினை சமகாலக் கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளினின்று சைவ சமூகத்தைப் பாதுகாப்பது ஆகும். இப் பாதுகாப்பு முயற்சியானது வெற்றிபெற
 

தமிழ்ச் செல்வி வரை
இயல்பு மற்றும் அதன் வரலாற்றுத் டர்பான சில மனப்பதிவுகள்.)
சுப்பிரமணியன்
வேண்டுமானால் அக்காலப் பகுதியில் சைவ சமூகத்தில் நிலவிய அறியாமைகள் மற்றும் ஒழுக்கநிலை சார்ந்த குறைபாடுகள் என்பவை துடைத்தெறியப்படவேண்டியது அவசியம் என்பது அக்காலச் சூழலில் உணரப்பட்டது. இதற்கு ஏற்றவகையில், சைவம் சார்ந்த அறிவுவளத்தைப் பொதுமக்கள்மத்தியில் முன்வைத்து, அவர்களைச் சிந்திக்கத் தூண்டுதல்’ மற்றும் ‘எதிர்நிலைக் கருத்துக்களைக் கண்டனம் செய்தல்' ஆகிய செயல் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான செயல்திட்டம்சார் நடவடிக்கைகளாகவே நாவலரின் மேற் சுட்டியவாறான - பேருரைகள் முதல் கல்விக்கூட உருவாக்கங்கள் வரையிலான - பல்வகைச் செயற்பாடுகளும் அமைந்தன.
நாவலர் வழிநடத்திய சைவத் தின் அறிவுத்தளமானது இருக்கு முதலிய நால்வேதங்கள், சிவாகமங்கள், சைவம்சார்ந்த புராணங்கள், திருமுறைகள் மற்றும் மெய்கண்ட சாஸ்திரங்கள் ஆகியவற்றை நம்பகமான மூலாதாரங்களாகக் கொண்டதாகும். கோட்பாட்டு நிலையில் இது சைவ சித்தாந்தம் என்ற தத் துவ மரபு சார்ந்ததாகும் . நாவலருடைய சைவநிலைப்பட்ட இயங்குநிலையானது இத்தத்துவம் பேசும் உண்மைப் பொருள்களான 'இறை - உயிர் - மலம்' என்பன பற்றிய சிந்தனைகள் மீதான பற்றுறுதியுடன் அமைந்ததாகும். சமூகத்துக்கு இவை பற்றிய சிந்தனைத் தெளிவை ஏற்படுத்துவதும், இவற்றோடு தொடர்புடைய வழிபாட்டு முறைமைகள் மற்றும் வாழ்வியல் ‘அற - ஒழுக்க நிலைகள் என்பவற்றை விளக்கியுரைப்பதும் அவருடைய முக்கிய
நோக்குநிலைகளாக அமைந்தன.
அவருடைய மொழியில் சுட்டுவதாயின் சமூகத்திற்கு நல்லறிவுச் சுடர்கொளுத்தும் நோக்குகள் இவை. அவருடைய பேருரைகள் மற்றும் சிவாலய தரிசனவிதி, சைவ வினாவிடை 1-2, பாலபாடம் 12- 4, திருவிளையாடற் புராண வசனம் , திருத்தொண்டர் பெரியபுராண வசனம், சுப்பிர போதம் முதலிய எழுத்தாக்கங்கள் மற்றும் அவர் உரையெழுதியும் பதிப்பித்தும் வெளியிட்ட பண்டைய ஆக்கங்கள் என்பன அவருடைய மேற்படிநோக்கின் செயல்வடிவங்களாகும். சமூகத்தின் பல நிலையினரதும் அறிவுத்தரங்களை மனங்கொண்டு அவ்வவர்க்கு ஏற்றவகையில் எடுத்துரைக்கும் ஒரு நல்லாசிரியனாக அவர் செயற்பட்டு நின்றார். சைவ வினாவிடைகள் மாணவநிலையினரை முன்நிறுத்தி எழுதப்பட்டவையாகும்.
59

Page 66
t
2226s.72 a திருத்தொண்டர் பெரியபுராண வசனம் முதலிய பல ஆக்கங்கள் கற்றறிந்தவர்களை முன்னிறுத்திய செயற்பாடுகளாகும். எதிர்க் கருத்தாளர்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் கண்டனக்காரராகவும் வடிவெடுத்தவர், நாவலர்.
நாவலர் அவர்கள் தம்முடைய 57 ஆண்டுக்கால வாழ் வில் 32 ஆண்டுக் காலத்தை (1848 முதல் 1879 வரை) இவ்வாறான செயற்பாடுகளுக்காக முழுநிலையில் அர்ப்பணித்தவர். அவர் வழிநடத்திய மேற்படி மக்களியக்கமானது அக்காலகட்டத்தில் ஈழத்தில் நலிவுற்றிருந்த சித்தாந்த சார்பான சைவ மரபுக்குப் புதிய இரத்தம் பாய்ச்சியது. இதன்மூலம் அவ்வியக்கம் சமகாலத்தின் கிறிஸ்தவமதமாற்றச் செயற்பாடுகளின் முன்னால் ஈழத்துச் சைவச் சமூகம் முழுநிலையிற் பணிந்துவிடாவண்ணம் நிமிர்ந்துநிற்க வகைசெய்தது.
இவ்வாறாகப் பயன்பட்டுநின்ற இந்த இயக்கமானது ஒருவகையில் 'ஈழத் தமிழரின் பணி பாட் டு மீட் பு முன் முயற் சி’ u IT 356)|LĎ இன்னொருவகையில் 'ஈழத்தின் தேசிய உணர்வின் முதல் முகிழ்ப்பு ஆகவும் அமைந்தது என்பது நமது காலகட்ட ஆய்வுலகின் கணிப்பாகும்.
மேற்படி சைவ இயக்கத்திற்கான எண்ணக்கரு நாவலருக்கு முன்பே ஈழத்துத் தமிழ்ச் சூழலில் கால்கொண்டுவிட்டது. அவருடைய காலத்துக்கு முன்பிருந்தே, சைவ சமூகத்தினரின் உள்ளத்தில், கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளுக்கு எதிரான உணர்வெழுச்சியாக உருவாகி வளர்ந்துவந்துள்ளது. இவ்வாறு உருவாகிவளர்ந்த ஒரு கருத்தியலுக்கே அவர் தமது காலச்சூழலையொட்டி ஒரு மக்களியக்க வடிவம் தந்து வழி நடத்தினார். இதுவே இங்கு நாம் மனங்கொள்ள வேண்டிய வரலாற்றுண்மையாகும். இவ்வாறு நாவலருக்கு முன்னரேயே இந்தக் கருத்தியல் உருப்பெற்றுவிட்டமைக்கான முக்கிய சான்றுகளாகக் கொள்ளத்தக்கன, சுன்னாகம் அ.முத்துக்குமார கவிராசர் அவர்கள் (1780 - 1851) இயற்றிய யேசுமத பரிகாரம், ஞானக்கும்மி ஆகிய நூல்கள். இவை கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகள் மீதான எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகளாகும்.
நாவலரின் சம காலத் தில் மேற் படி எதிர்ப்புணர்வை வலுவாக வெளிப்படுத்தியவர்களுள் ஒருவர் நீர்வேலி சிவ.சங்கர பண்டிதர் அவர்கள். (18291870). இவர் 1864 இல் பரமத கண்டன சுயமத ஸ்தாபன சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியவர். கிறிஸ்துமத கண்டனம் , சைவப்பிரகாசனம் முதலிய தலைப்புகளிலான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். நாவலரோடு இவர் நேரடித் தொடர்புகொண்டு செயற்பட்டாரா என்பதை அறியச் சான்றுகள் இல. ஆயினும் நாவலர் வழிநடத்திய மக்களியக்கச் செயற்பாட்டிற்கு இவரும் உரிய பங்களிப்புச்
(

செய்துள்ளார் என்பது மேற்சுட்டிய இவருடைய முயற்சிகள் மூலம் தெளிவாகின்றது. எனவே நாவலர் வழிநடத்திய இயக்கம் நாவலர் என்ற தனிமனிதரின் செயற்பாடாக மட்டும் அமைந்த ஒன்றல்ல என்பது மனங்கொள்ளப்படவேண்டிய வரலாற்றுண்மையாகும்.
நாவலர் வழிநடத்திய மேற்படி இயக்கத்துக்கு அவருடைய சமகாலத்தில் பங்களிப்புச் செய்ததோடு அமையாமல் அவருக்குப் பின்னரும் அவ்வியக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள் பலர். இவ்வகையில் சி.வை. தாமோதரம்பிள்ளை ( 1832 - 1901), காசிவாசி சி.செந்திநாதையர்(1848 - 1924) சு.சபாபதி நாவலர்(1848 1903), த.கைலாசபிள்ளை (1855 - 1939) 6T60T இவர்களின் பெயர்ப் பட்டியல் தொடரும். இவர்களின் சிந்தனைகள் செயன்முறைகள் என்பன பற்றிய தகவல்கள் ஏற்கெனவே பலராலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரலாற்றிற் பதிவாகியுள்ள செய்திகளாகும். (எனவே அவற்றின் விவரங்கள் இங்கு தவிர்க்கப்படு கின்றன.) மேற்சுட்டியவர்களால் நாவலருக்குப் பின்னரும் தொடரப்பட்ட சைவ இயக்கத்தின் அண்மைக்காலம் வரையான முக்கிய செல்நெறிகள் எத்தகையன? என்பதே இங்கு நம் சிந்தனைக்குரிய முக்கிய 6LuILDT(5lb.
ஆ. நாவலருக்குப் பிற்பட்ட சைவ இயக்கநிலை
- முனைப்பாகப் புலப்படும் அம்சங்கள் நாவலருக்குப் பிற்பட்டகால ஈழத்துச் சைவ இயக்க வரலாற்றுச் செல்நெறி பற்றிய பார்வையிலே முனைப்பாகப் புலப்பட்டு நிற்கும் முக்கிய அம்சங்களிலொன்று, சைவசித்தாந்த தத்துவம் எய்திய ஆய்வுநிலைப் பரிமாணம் ஆகும். மற்றொரு அம்சமாகச் சுட்டக்கூடியது '603 Gig LDL உணர்வு சமூகமட்டத்தை நோக்கிப் பரவலாக்கப்பட்ட முறைமையில் ஏற்பட்ட வளர்ச்சி'ஆகும்.
நாவலர் காலத்தின் சைவ இயக்கமானது சைவச் சமூகத்துக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தும் நோக்கிலான செயற்பாடாக வடிவம் கொண்டது என்பது மேலே நோக் கப்பட்டது. மேற்படி இயக் கச் செயற்பாடுகளில் சைவ சித்தாந்த உண்மைகள் பொது மனிதரை நோக்கி எடுத்துரைக்கப்பட்டன. நாவலரின் எழுத்தாக்க முயற்சிகள் பலவும் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் பல்வேறுநிலையினரின் வாசிப்புத் தரங்களையும் கவனத்திற் கொண்டனவாகவே அமைந்தன என்பதை முன்னரே நோக்கியுள்ளோம். நாவலரின் கல்விக்கூட உருவாக்க முயற்சிகள் அவருடைய சமூகநோக்கை வெளிப்படையாகவே உணர்த்திநிற்பன. எனவே சமூக மட்டத்தை நோக்கிய பயணம் நாவலர் காலச் செயற்பாடுகளிலேயே தொடங்கி விட்டன என்பது வெளிப்படை நாவலர்கால இயக்கத்தில்
o

Page 67
நிலவிய இவ்வாறான செயற்பாட்டுநிலைகள் நாவலருக்குப் பிற்பட்ட வரலாற்றிலே வெவ்வேறு தளபரிமாணங்களை எய்தின என்பதே இங்கு நமது பார்வையிற் புலப்படும் வரலாற்றுக் காட்சியாகும்.
நாவலர் சித்தாந்தம் சார்ந்த சைவமரபை முற்றுமுழுதாக நம்பிநின்றவர். அது சார்ந்த செய்திகளைத் தரும் மூலநூால் களைப் பதிவு (பதிப்பு)செய்து பேணுதலும் அம் மூலநூல்களிலிருந்து பெறப்படும் முக்கிய கருத்துக்களை மக்களை நோக்கி எடுத்துரைப்பதுமே அவருடைய முக்கிய நோக்காகவும் செயற்பாங்காகவும் அமைந்தன.
நாவலருக்குப் பிற்பட்ட சூழலானது மேற்படி நிலைகளுக்கு மேலாக மற்றொரு நிலையை ஈழத்துச் சைவ இயக்கத்திடம் எதிர்பார்த்து நின்றது. அந்த நிலைதான் சைவசித்தாந்த தத்துவத்தை ஆய்வு நிலையில் விளக்கியுரைக்கும் நிலையாகும். இவ்வாறான சூழலின் எதிர்பார்ப்புக்கான பின்புலத்தை இங்கு சுருக்கமாகவேனும் சுட்டுவது அவசியமாகிறது.
தத்துவவிவாதப் பின்புலமும் சித்தாந்த ஆய்வியலும்
இங்கு பின்புலம் எனச் சுட்டப்படுவது தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய தத்துவ விவாதச் சூழலாகும். வேதாந்தச் சிந்தனைகள் மற்றும் மேலைத்தேய தத்துவங்கள் என்பவற்றுடன் சைவசித்தாந்தம் தன்னை ஒப்புநோக்கித் தன் சிறப்பியல்புகளை வெளிக்காட்டவேண்டிய தேவையை இச்சூழல் ஏற்படுத்தியது. மேலும் வைணவ சமயத்துக்கு எதிரான விவாதங்களிலும் சைவம் ஈடுபடவேண்டி யிருந்தது. இவ்வாறான தமிழக விவாதச் சூழலுடன் ஈழத்தவர்களும் தொடர்பு கொண்டிருந்தனர். இவ்வாறு தொடர்பு கொண்டோரில் முக்கியமானவராக வரலாற் றரங்கில் கால்பதித்தவர் காசிவாசி சி.செந்திநாதையர் அவர்கள். யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தைச்சார்ந்த இவர் நாவலருடன் இணைந்து அவருடைய சைவ இயக்கத்தில் பணியாற்றி நின்றவர். பின்னாளில் இந்தியா சென்று காசிவரை தன் வாழ்க்கைத் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டவர். இவ்வாறான வாழ்வியல் தளவிரிவானது அவரை மேற்படி தமிழகத் தத்துவ விவாதச் சூழலில் இணைத்தது. அதன் தேவையை ஒட்டிச் சித்தாந்த தத்துவத்தின் ஆழ அகலங்களை
நோக்கி அவர் நடைபயின்றார். .-
இவர் சைவத்தின் சித்தாந்த தத்துவ மரபுக்கும் வடமொழியின் நால் வேத மரபுக்கும் உள்ள
உறவுநிலை பற்றியதும், வேதாந்தச் சிந்தனை மரபுடன் சித்தாந்தச் சிந்தனைமரபானது முரண்பட்டு நிற்கும் முறைமை பற்றியதுமான முக்கிய அம்சங்களை நுனித்து நோக்கி, விரிவாக எடுத்துப்பேச முற்பட்டார். தேவாரம் வேதசாரம் , சிவஞானபோத வசனாலங்கார தீபம், பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்
G
 

முதலிய இவருடைய ஆக்கங்கள் இவருடைய ஆய்வுப்பார்வையின் ஆழத்தையும் அகலத்தையும் உணர்த்துவன. நாவலர் வழிநடத்திய சைவ இயக்கமானது அவருக்குப்பின் செந்திநாதையருடைய மேற்சுட்டியவாறான ஆக்கங்களில் ஒரு ஆய்வியல் பரிமாணத்தை எய்தியது. இவ்வாறான ஆக்கங்களின் உள்ளடக்கங்களை நுனித்து நோக்க முற்படின் கலாநிதிப்பட்ட ஆய்வேடுகள் பலவற்றை நாம் உருவாக்கமுடியும்.
இவ்வாறு இவர் தொடக்கிய சித்தாந்தம் தொடர்பான ஆயப் வியல் அணுகுமுறையைச் சமகாலத்திலும் பின்னாளிலும் தொடர்ந்தோர் பலர். நமது காலப்பகுதியில் இந்த ஆய்வியலை முன்னெடுத்த வர்களுள் முக்கிய கணிப்புக்குரியவர் இலக்கிய கலாநிதி, பண்டிதமணி ஏழாலையூர் மு.கந்தையா அவர்கள்.(1917 - 2002). மெய்கண்ட சாஸ்திரங்களிற் புலப்பட்டுநிற்கும் சித்தாந்த உண்மைகளைச் சிவாகமங்கள் மற்றும், திருமுறைகள் முதலியவற்றுடன் ஒப்புநோக்கி விளக்கியுரைக்கும் பாங்கில் தமது சித்தாந்த ஆய்வியலை முன்னெடுத்தவர் இவர். சித்தாந்தச் செழும்புதையல்கள், சிவஞான சித்தித் திறவுகோல் முதலான இவருடைய ஆக்கங்கள் சித்தாந்த ஆய்வியலுக்குப் புதிய வளம் சேர்த்தவையாகும். இவையும் பல ஆய்வேடுகளுக்கான பொருட் பரப்புடையவையாகும்.
சைவத்தின் சமூக மட்டத்தை நோக்கிய பயணம் கல்வித் திட்டத்தில் சைவசமயம்
நாவலரால் சமூக மட்டத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் அடுத்தகட்ட வளர்ச்சிநிலை என்றவகையில் முதற் கவனத்துக்கு வருவது ஈழத்தில் சமயம் ஒரு கல்வித்திட்டமாகவும் பாடத்திட்டமாகவும் வடிவம் கொண்ட நிலையாகும். சைவம், பெளத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய நான்கு சமயங்களும் ஈழத்திலே ஆரம்ப வகுப்பு முதல் க.பொ.த. (சாதாரண தரம்) வரை முறைப்படியான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன என்பதறிவோம். ஆரம்பவகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் கற்கும் மாணவர்களின் உளவளர்ச்சி நிலைகளுக்கேற்ப பாடநூல்கள் எழுதப்பட்டுள்ளன. இதனால் அவ்வச் சமயங்கள் சேர்ந்த மாணவர்கள் தத்தம் சமய அடிப்படைகள் பற்றிய அறிவை முறையாகப் பெற்று விடமுடிகிறது. இவ்வாறான சமயக் கல்வியானது க.பொ.த.(உயர்தரம்) முதல் பண்பாட்டுக் கல்வியாக - இந்து நாகரிகம், கிறிஸ்தவ நாகரிகம் முதலியனவாக - வடிவங் கொள்கிறது.
இவ்வாறான கல்வித்திட்டச் செயற்பாடானது சமய அறிவை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் அமைந்தது என்பது வெளிப்படை. சைவசமயத்தைப்

Page 68
பொறுத்தவரை இவ்வாறான சமயக்கல்வித்திட்டமு பாடநூலாக்கமும் பூரீலழரீ நாவலர் அவர்களில் சைவவினாவிடைகள் மற்றும் பாலபாடங்கள திருத்தொண்டர் பெரியபுராண வசனம் முதலியவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக அமைந்தனவாகும். எனே நாவலர் வழிநடத்திய இயக்கச் செயற்பாடானது கல் விநிலையில் சமூக மட்டத்தை நோக்கித திட்டப்பாங்குடன் விரிந்து சென்றமை வெளிப்படை
சைவ மாணவர்கள் தமது சமயநெறியை பேணிக்கொண்டே உலகியல் சார்ந்த கல்வியைப் பெ வாய்ப்புக்கிடைக்கவேண்டுமென்பது நாவலரின் முக்கிய குறிக்கோள்களிலொன்றாகும். அவர் மேற்கொண் கல்விக்கூட உருவாக்க முயற்சிகளின் பிற்கால வியத்தகு வளர்ச்சிநிலைகளின் கட்புலச் சான்றுகளாக ஈழத்தின் பலபாகங்களிலுமுள்ள சைவப்பாடசாலைகளும் இந்து கல்லூரிகளும் திகழ்கின்றன.
இவ்வாறு சைவசமயம் கல்விசார்ந்த நிலையில் மக்கள்மயப்பட்டுவந்த வரலாற்றின் சமயப் பாடத்திட்ட கல்வியின் ஊடாக உருவான ஒருசமய அறிஞ பரம்பரையே நாவலர்காலச் சைவ இயக்கத்தை இன்றுவரை முன்னெடுத்து வந்துளது என்பது இங்கு சுட்டத்தக்கது. நமது காலகட்டத்தில் வாழ்ந்து நிறைவுபெற்ற சைவப்பெரியார்களான 'ஆத்மஜோதி நா.முத்தையா மற்றும் 'சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்ம அப்பாக்குட்டி முதலியவர்கள் மேற்படி அறிஞர் மரபிலி நடுநாயகமாகத் திகழ்ந்தோராவர் என்பது இங்கு நினைவிற் கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுக் செய்தியாகும்.
இவ்விருவரும் நாவலர் மரபைப் பேணிநின்ற பேருரையாளர்கள் என்பதும் ஈழத்திலும் ஏனைய நாடுகளிலும் சைவப் பேருரைகள் நிகழ்த் திட புகழ்நாட்டியவர்கள் என்பதும் பொதுவாக அறியப்பட்ட செய்திகளாகும். (நா.முத்தையா அவர்கள் இதழியல் துறைசார்ந்து - ஆத்மஜோதி என்ற இதழைப் பலகாலம் தொடர்ந்து வெளியிட்டு ஆற்றிய ஆன்மிகப்பணி இம்மலரில் பிறருடைய எழுத்துக்களிற் பதிவாகியுள்ளன.
ஆலயம் அறநிலையமாக, நாவலருக்கு பிற்பட்ட சைவஇயக்க வரலாற்றில், சமூகமட்டத்தை நோக்கிய செயற்பாடுகளில் அடுத்த கட்ட வளர்ச்சிநிலை என்றவகையில் சுட்டப்பபடவேண்டிய முக்கிய நிகழ்வு 'ஆலயம் என்பது ஓர் அறநிலையம் ஏன்றவகையில் நிகழ்ந்துள்ள கருத்தியல் வளர்ச்சியாகும். இதற்குத் தக்கதொரு சான்றாகத் திகழ்வது தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயம் - துர்க்காதேவி தேவஸ்தானப் - ஆகும்.

5
மேற்படி ஆலயத்தின் வருவாயானது அதன் வழிபாடுசார் செலவுகள், பெளதிகக் கட்டமைப்புகள் மற்றும் பணிபுரிவோருக்கான ஊதியம் ஆகியவற்றுக்குச் செலவிடப்படுவதற்கு அப்பால், சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலங்காக்கவும் மருத்துவத் துறைசார் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மற்றும் பல சமூகநலச் செயற்பாடுகளுக்கும் திட்டப்பாங்கான முறையில் செலவிடப்படுகின்றது. ஆலயமே சிறார்களுக்கான காப்பகம், மகளிர் இல்லம் நூலகம் முதலிய சமூகநல நிறுவனங்களை நடத்தி வருகின்றது என்பதும் இங்கு சுட்டப்படவேண்டிய முக்கிய விடயமாகும். ஈழத்திலுள்ள பிற சைவாலயங்களும் புலம்பெயர் நாடுகளிலுள்ள சைவாலயங்களும் கவனத்திற்கொள்ளவும் பின்பற்றவும் வேண்டிய முக்கிய செயற்பாங்கு இது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இவ்வாறான சமூக நோக்குள்ளதாக அவ்வாலயம் எய்திய வளர்ச்சியின் இயக்குவிசையாக அமைந்து நெறிப்படுத்தி நின்றவர் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களாவர். சமயப் பேருரையாளர் என்ற வகையில் சைவச் சமூகமத்தியில் எழுச்சிபெற்ற அவர் ஆலய நிர்வாகி என்ற வகையில் மேற்படி ஆலயத்தின் அறங்காவற் சபை பொறுப் பேற்றபின் நிகழ்த்திய பெருஞ்சாதனை இது.
ஆலயமானது ஆகமவிதிமுறைப்படியான
கிரியைகள் நிகழும் இடமாகவும் பக்தியுணர்வுக்கான சூழலாகவும் இருக்கவேண்டும் என்பது நாவலருடைய பெருவிருப்பமாகும். இதனை அவருடைய எழுத்துகள் பலவற்றில் நோக்கலாம். அவர் வழிநடத்திய இயக்கத்தின் இன்றைய வரலாறானது, மேற்படி அம்சங்களுக்கு மேலாக, ‘ஆலயம் ஓர் அறநிலையம்’ என்ற கருத்தியலையும் நோக்கி இட்டுச் சென்றுளது. இது சைவத்தின் சமூகம் நோக்கிய பார்வையின் விரிநிலை என்பது வெளிப்படை.
நிறைவாக இவ்வாறாக நாவலருக்குப் பின்னர் ஈழத்துச் சைவமானது இயக்கநிலையில் அடைந்துள்ள வளர்ச்சியின் முழுப் பரிமாணங்களையும் அவற்றின் பின்புல அம்சங்களுடன் எடுத்துப்பேசும் ஆர்வம் உளது. விரிவாக எழுதப்படவேண்டிய வரலாறொன்றின் சுருக்கமான அறிமுகக் குறிப்பாக மட்டுமே எனது மேற்படி மனப்பதிவுகளைக் கருத்துட் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Page 69
தன்னை அ திருமதி லீலா சிவ
தன்னை அறிதல் என்பது தனக்குள்ளே -
நிறைந்திருக்கும் மகத்தான சக்தியை, தன்னுள்ளே
உறைந்திருக்கும் ஆன்மாவை ஞானஒளி கொண்டு
உணர்தலாகும். தன்னை அறியத் தனக்கு ஒரு கேடில்லை என்பார்திருமூலர். நம்முள்ளே ஜோதிவடிவாக இறைவன் குடியிருக்கும்போது அதை உள்ளே தேடாமல்
அறிவீனர்கள் வெளியே தேடிக்கொண்டிருக்கின்றார்கள்
என்றும் இந்த ஞானத்தை நூல்களைப் படிப்பதன் மூலமோ, தர்க்கவாதம் செய்வதன் மூலமோ வேள்விகள் யாகங்கள் செய்வதன் மூலமோ யாத்திரை செய்வதன் மூலமோ அறிந்து கொள்ள முடியாது என்று ஞானநூல்கள் கூறும்.
நம்முள்ளே உறையும் இந்த ஆன்மா மனம் வாக்கு, முதலான இந்திரியங்களுக்குப் புலப்படாதது. அது எங்கும் எல்லாமுமாயுள்ளது. அது அறிந்தவர்க்கு வெகு சமீபம். அறியாதார்க்கு வெகு தொலைவு எனறு ஈஸாவாஸ்ய உபநிடதம் கூறுகின்றது.
மனிதன் உலகில் பிறப்பது இவ்வாறுதனக்குள் உறையும் இறைவனை உணர்ந்து சீவன் சிவன் என அறிந்து முக்தி அடைவதற்கே எனனும் கருத்தைச் சமயக் கொள்கையாக உடையவர்கள் இந்துக்கள் என்பது இங்கே கருத்தில் கொள்ளத்தக்கது. அதே சமயம் முக்தி அடைவது என்பது எல்லா உயிர்களுக்கும் இலகுவான ஒன்றல்ல என்பதையும் உணர்ந்திருந்தார்கள் கோடானு கோடிப் பேரில் ஓரிருவரே இந்த நிலையை அடைகின்றார்கள் என்று கடோபநிடதம் கூறும். ஆகவே பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கி உழலாமல் ஞான அறிவைப் பெற்று இப்பிறப்பிலேயே முக்தி அடைய வழிதேடினர்.
படைப்பு முதன்முதலில் தோன்றிய போது ஆகாயத்திலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் படிப்படியாக உண்டாகி அதையே உணர்த்தும். இந்தப் பஞ்சபூதங்களில் இருந்தே மனிதன் உருவானான். இதை உணர்ந்த ஞானிகள் அண்டசராசரங்களையும் அதை அறிய இறைவனையும் பிண்டமாகிய மனிதனையும் வேறு வேறாகக் கருதவில்லை. அண்டத்தில் உள்ளதே பிணடத்திலும் உள்ளது என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். அண்டத்தில் உள்தே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்து தான் பார்க்கும் போதே என்பது சட்டமுனியின் வாக்கு.
ஆகவே எவ்வாறு ஆரம்பத்தில் ஆகாயமும் பின்னர் காற்றும் பின்னர் தீயும் அதன் பின்னர் நீரும்
le
6
6
:
6
6
G3
 

அறிதல்
பானந்தன்
ன்னர் மண்ணும் எப்படிப்படிப்படியாக உருவாகினவோ தேபோன்று மீண்டும் ஒடுக்கநிலைக்குே செல்ல வண்டுமெனில் மண்ணிலிருந்து நீரும் நீரிலிருந்து நருப்பும் நெருப்பிலிருந்து காற்றும் காற்றிலிருந்து காயமுமாக ஒடுங்க வேண்டும். இதையே சித்தர்கள் வட்டவெளி என்றும் இதாகாசம் என்றும் பரவெளி ன்றும் கூறுவர். இதுவே ஒடுக்கநிலை, இதுவே முக்தி
506).
நாளாந்தம் நடைபெறுகின்ற இறைவழிபாட்டிலேயே ந்த பஞ்சபூததத்துவம் அடங்கியுள்ளமையைக் ாணலாம். நீர் என்ற பூதத்தின் அடையாளமாக சுவை .ணர்வைக் குறிக்கும் உணவுப்பொருட்களை றைவனுக்குப் படைக்கிறோம். நிலம் வாசனையை .ணரும் புலனோடு சம்பந்தப்பட்டது. அதற்கு டையாளமாக, சந்தனம், சாம்பிராணி போன்றவற்றை றைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். காற்று என்ற தத்தின் அடையாளமாக மலர் சாத்துதல் சாமரம் சுதல் போன்ற வழிபாடுகள் செய்யப்படுகின்றன. காயம் ஒலியோடு தொடர்புடையது. இதற்கென ணியடித்தல், சங்கு முழக்குதல் ஆகியன செய்யப்படு ன்றன. தீ என்ற தத்துவம் கண்பார்வையுடன் ம்பந்தப்பட்டது. இதைக் குறிக்கும் முகமாக கற்பூரம், பம் ஆகியவற்றை ஏற்றி ஆராதனை செய்யப்படுகின்றது. வ்வாறு இதன் உள்ளார்ந்த தத்துவம் இந்த றைவழிபாட்டில் மறைபொருளாக உணர்ததப்படு ன்றது.
எனவே இந்த உடம்பே இறைவன் உறையும் பூலயம் என தெட்டத் தெளிவாக உணர்ந்த ஞானிகள், பாகியர் உயர்ந்த நிலையை அதாவது முக்தி லையை மனிதப்பிறவியில் தான் அடைய முடியும் ன உணர்ந்து அதற்கான வழிகளை நாடினர்.
உடம்பினை முன்னம் இழக்கு என்றிருந்தேன் உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன் டம்புளே உத்தமன் கோயில் கொண்டான்என்று டம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
ன்றும்
டம்பார் அழியின் உயிரார் அழிவார் டம்பட மெய்ஞானம் சேரவும் Iாட்டார் டம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே டம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்
ன்றும் கூறுவார் திருமூலநாயனார்.
இறைவன் உறையும் கோயிலாகிய இந்த டம்பைப் பேண வேண்டும் என்ற பல இடங்களில்

Page 70
திருமூலர் குறிப்பிடுவார். உடம்பு இறைவன் உறை கோயில் ஆகையால்'உடம்பையும் காத்து அதன் மூ உயிரையும் காத்தேன்” என்று கூறுவதன் மூலம் உ உடம்பில் உள்ள போதே உடல் எடுத்ததன் பயன அடைய வேண்டும் என்று வலியுறுத்துவார். ஒவ்வெ உயிரும் தன்னை அறிந்து கொள்வதற்கே உடல் எடு இவ்வுலகுக்கு வந்தது என்பது இவரது கருத்தாகுப் அவனைத் தேடித்தேடியே புறத்திலே அலைந்தனன் நானிருக்குமிடத்திலே அவனை நானும் கண்டனன்
அவனேதான் இப்போது நானாக நின்றனன் அவனையா முன்னர் நானும் வேறொருவன் என்றன என்று நானும் அவனும் ஒன்றே என்பதை மிக அழகா கூறுவார் கபீர் என்னும் ஞானி. இதே கருத்ை திருமந்திரம்
“சீவன் எனச் சிவன் என்ன வேறில்லை சீவனார் சிவனாரை அறிகிலார் சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவனாரையிட்டிருப்பாரே
என்று கூறும்.
மிகப் பெரிதாக வளர்ந்து கிளைபரப்பும் ஆலம மிகவும் சிறிய ஆலவிதைக்குள் ஒடுங்கியிருப்பது போ சீவருக்குள் சிவன் ஒடுங்கியுள்ளது என்று பரப்பிரம்மமாகிய இறைவன் உம்முள்ளே உள்ளா அறிவில்லாத மாந்தரே இதை உணருவீரே என்று கருத்தில் சிவவாக்கியர் பின்வருமாறு கூறுவார்.
ஆலவித்தில் ஆல் ஒடுங்கி ஆலமானவாறு போல் வேறுவித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீ ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே பாரும் இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே.
சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள ஒருமைப்ப அறியப்படாமல் போவதற்குக் காரணம் என்6 தன்னுள்ளே ஒளிரும் ஆன்மாவை உணரமுடியாமல் ஏ உயிர்கள் பிறப்பிறப்பு என்றும் சம்சாரச் சூழலில் சிக்கி தவிக்கின்றன. இந்தத் துன்பச் சூழலில் தத்தளிக்காம தன்னை உணர்ந்து வீடு பேறடைய வழி என்ன?
தன்னை அறியும் அறிவை அறிந்தபி தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தாரே என்ப திருமந்திரம். இந்த அறிவை அடைவது எவ்வா இந்தத் தன்னை அறிதல் எப்போது நிகழும்? ஞானிக இதற்கான பதிலையும் சொல் கிறார்கள் ஆணவத்திலிருந்து விடுபட்டு ஆன்மாவின் ஆழத்ை அறியும் போது தன்னை அறிதல் நிகழ்கிற

பும் l) D
Lîs
கக் தத்
JLD
T6)
|LĎ
றும்
அகங்காரத்தை அழிப்பதே தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதற்கான வழி என்கிறார்கள். ஒருமனிதனின் செயல்கள் அனைத்தும் நான் என்ற உணர்வின் வெளிப்பாடேயாகும். நான் அழியும்போது அங்கே தான் தோன்றும்.
நானென்றும் தானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்னுள் தானென்றிரண்டில்லை யென்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந்தேனே
என்று திருமூலரும்
காராளும் ஆணவக் காட்டைக் களைந்து அறக் கண்டு அகங்காரம் என்னும் கல்லைப் பிளந்து நெஞ்சகமான பூமிவெளி காணத் திருத்தி மென்மேலே பாராதி அறியாத மோனமாம்
என்று பட்டினத் தடிகளும் ஆணவத் தை அகற்றினால் ஆண்டவனைக் காணலாம் என்று கூறுவார். குருவைத் தேடி ஒரு சீடன் சென்றான். குருவின் குடிலின் கதவு மூடி இருந்தது. சீடன் கதவைத் தட்டினான். குரு யார் என்று கேட்டார். சீடன், நான் வந்திருக்கிறேன் என்று பதில் சொன்னான். உள்ளேயிருந்து எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் தட்டினான். மீண்டும் குரு கேட்டார் யார் என்று. மீண்டும் சீடன் நான் வந்திருக்கிறேன் என்று கூறினான். உள்ளிருந்து எந்தப பதிலும் இல்லை. கதவும் திறக்கப்படவில்லை. சீடன் மூன்றாம் தடவையும் குடிலின் கதவைத் தட்டினான். குரு மீண்டும் கேட்டார் “யார்” என்று. சீடன் பதில் சொன்னான் 'அடியவன்' என்று. உடனடியாகக் குடிலின் கதவு திறந்தது. குரு தோன்றினார். நான் எங்கே அழிகின்றதோ அங்கே தான் தோன்றுகிறது. தானாகிய ஆன்மாவின் ஒளி வீசுகின்றது. நான் அகலும் போது தான் வெளிப்படுகின்றது. இந்த ஆத்மஜோதியைத் தரிசித்தவன் பேரின்பம் அடைகின்றான். எல் லையில் லா இன் பத் தில் திளைக் கிறான். “ஆராருமறியாத ஆதான வெளியில் வெளியாகின்ற சூரிய மயமே, அண்டப்பிரண்டமும், அடங்க குரு நிறைவான ஆனந்தமான நிலையை அடைகின்றான். இப்பிறவியிலேயே முக்தியை அடைகின்றான். எல்லா உயிரையும் இறைவன் சொரூபமே என உணர்கிறான்.
"அப்பரும் அம்மையும் சிவமே அரிய சகோதரரும் சிவமே ஒப்பில் மனைவியும் சிவமே ஒதரும் மைந்தரும் சிவமே செப்பில் அரசரும் சிவமே தேவாதிதேவரும் சிவமே இப்புவி எல்லாம் சிவமே என்னை ஆண்டதும் சிவமே, - யோகர் சுவாமிகள்

Page 71
ஆகமகாத மான தமிழில் பக்தியிசை மரபும் |
திருமதி கெளசல்
உ
(முனைவர்ப்ப
8 9 (9 (
தமிழருக்குச் சிறப்பானதொரு பக்தியிசைமரபு
வெ உளது. இது நீண்ட வரலாறு கொண்டது. இந்த வரலாற்றுக்கு நாயன்மார்களும் ஆழ்வார்களும் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளனர். இவர்கள் நிகழ்த்திய பக்தி இயக்கத்தில் தமிழரின் இசைமரபு செழிப்பானதொரு வளர்ச்சியைக்கண்டதென்பது வரலாறு.
இவ்வகையில் பக்திப்பாடல்கள் பாடிய நாயன்மார்களுள் மூத்தவர் அல்லது முன்னோடி எனக் கணிக்கப்படும் காரைக்காலம்மையார் இப்பக்தியிசை
மரபிற்கு ஆற்றியுள்ள பங்களிப்பு எத்தகையது (பு என்பது பற்றிய ஒரு பார்வையாக இச்சிறுகட்டுரை அமைகிறது.
45.
அம்மையாரின் ஆக்கங்களும் அவற்றின் வரலாற்று முக்கியத்துவமும்
அம்மையார் நாவுக்கரசர், சம்பந்தர் ஆகிய நாயன்மார்களுக்கு மூத்தவர் என்பதுவும் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்காலப்பகுதியில் வாழ்ந்தவர் என்பதுவும் பொதுவாக வரலாற்றாய்வாளர் களால் ஒத்துக் கொள்ளப்பட்ட கருத்தாகும். இவர் அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, இரு திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்கள் போன்ற நான்கு பிரபந்தங்களைப் பாடியவர்.
இவற்றில் அற்புதத்திருவந்தாதி இயற்பா | என்றவகைமையிலமைந்த வெண்பா யாப்பில் பாடப்பட்டதாகும். திருவிரட்டைமணிமாலையிலே அவர் வெண்பாவோடு இசைப்பாடல்வகை சார்ந்த கட்டளைக் த கலித்துறை யென்ற யாப்பையும் பயன்படுத்தியுள்ளார். ஏனைய இரண்டு பிரபந்தங்களான பதிகங்களும் இசைப்பாடல் வகையான விருத்தத்தில் பாடப்பட்ட வையாகும். இவர் பாடிய இந்த விருத்தப்பா வடிவிலமைந்த பதிகங்களே நாவுக்கரசர் சம்பந்தர் போன்றோரின் பதிக மரபிற்கு அடியெடுத்துக் கொடுத்த முன்னோடிச் செயற்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வகையில் தமிழ் பதிகமரபிற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை அம்மையார் ஆற்றியுள்ளார் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தியாகும்.
இவ்வாறு அம்மையார் கட்டளைக்கலிப்பா மற்றும் விருத்தம் ஆகிய இசைப்பாடல் வகைகளைப் பயன்படுத்தியமைக்கும் பதிகமரபிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை ஆற்றியமைக்கும் பின் புலமாக அமைந்திருந்தது அவர் காலத்து இசைச் சூழலாகும். தமது காலப் பகுதியில்
6 - 9 9 2 (1)
659

Fen Lovi
காரைக்காலம்மையாரும்
யா சுப்பிரமணியன் ட்ட ஆய்வாளர்)
ழக்கிலிருந்த இசைப்பாடல் மரபை அறிந்த ஒருவராக அம்மையார் விளங்கினார் என்பதை அவருடைய ரபந்தங்கள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வகையில் அம்மையார் காலத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த சைப்பாடல் மரபு எத்தகையது என்பது நமது வனத்திற்குரியதாகிறது.
தமிழரின் இசைப்பாடல் மரபும் கலிப்பாவும்
தமிழரின் இசைப்பாடல் மரபின் தொல்நிலைக்கு முக்கிய சான்றுகளாகக் கொள்ளப்படுவன கலிப்பா, ரிபாட்டு ஆகிய பாடல்வடிவங்களாகும். கலிப்பாவானது பள்ளலோசையினடியாக உருவானதாகும். பரிபாட்டு ன்பது எல்லாப் பாவகையிலும் பயிலும் ஒரு இசைப்பாடல் வடிவமாகும். இவை பண்டைய கூத்து ரபுகளுடாக உருவாகி இலக்கிய ஆக்கங்களுக்குப் யன் படுத் தப் பட் டவையாகும். இப் பாடல் படிவங்களுக்கான தொன்மையான இலக்கியச் ான்றுகளாக எமக்குக் கிடைப்பன எட்டுத்தொகை என்ற தாகுப்பில் இடம்பெற்றுள்ள கலித்தொகை மற்றும் ரிபாடல் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களாகும். இவ்வாறான பண்டைய இசைப்பாடல்களின் மரபிலே -லிப்பாவின் ஒரு வகையான ஒத்தாழிசைக்கலிப்பாவின் அமைப்பிலிருந்தே கலித்துறை, விருத்தம் முதலிய இசைப்பாடல்வகைகள் பின்னாளில் உருவாகின என்பது பாப்பியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
ஒத்தாழிசைக்கலி என்ற அமைப்பானது தரவு, எழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டதாகும். இவற்றில் தரவானது பாடற் பாருளின் சந்தர்ப்பம், இடம், காலம் என்பவற்றைத் ந்துநிற்கும் தொடக்கப்பகுதியாகும். தாழிசையானது உறவந்த பொருளை உணர்வுபூர்வமாக விரித்துரைக்கும் குதியாகும். ஒரே அமைப்பையுடைய மூன்று தனித்தனிப் பாடல்களை (தாழிசைகளை)க்கொண்டதாக இது அமையும். தனிச்சொல்லானது தொகுத்துச்சுட்டும் ரு நிறுத்தற்குறியாக அமைவது. சுரிதகம் என்பது அப்பாடலின் முடிவுரையாக அல்லது பயன்கூறும்
குதியாக அமைவதாகும்.
இவ்வாறமையும் ஒத்தாழிசைக்கலி என்ற பொது அமைப்பிலே தேவர்பராஅய முன்னிலை என்ற பெயரில் -ரு தனிவகைமை பண்டைக் காலத் தில் பழங்கிவந்துள்ளது என்பது தொல்காப்பியம் தரும் சய்தியாகும். இது அக்காலப்பகுதியில் தெய்வங்களை முன்னிலைப்படுத்திப் பாடுவதற்குப் பயன்பட்ட ஒருவகைக் லிப்பா அமைப்பு என்பதை நாம் உணர்ந்து

Page 72
கொள்ளுகின்றோம். இந்த வகைமையா ஒத்தாழிசைக் கலிப்பாவுக்குரிய தரவு, தாழி தனிச்சொல், சுரிதகம் முதலிய உறுப்புகளோடு மே பல உறுப்புகள் (எண், அராகம், முடுகியல்) கொ தாகவும் அமைவதுண்டு. மேற்சுட்டிய உறுப்புக்க பல குறைந்து அமைவதுமுண்டு. அவ்வாறு குறை அமைவன கொச்சக ஒருபோகு என்ற பெய சுட்டப்படுவன. இவ்வாறான தகவல்கள் தொல்காப்பி தினூடாக எமக்குக் கிடைப்பவை.
இவ்வாறு பண்டைக்காலத்தில் தமிழகத் வழக்கிலிருந்த தெய்வத்தை முன்னிலைப்படுத்திப் ப கலிப்பா வகைசார்ந்த இசைப்பாடல் மரபா அம்மையாருடைய பக்திப்பாடல் முயற்சிக் ( தக்கதொரு பின்புலமாக இருந்திருக்கக் கூடும் என்ப நாம் உய்த்துணர முடியும். இம்மரபுசார் அம்சங் லிருந்தே அம்மையார் தமது பிரபந்தங்களுக்கு இசைப்பாடல்வடிவங்களைத் தேர்ந்து அமைத் கொண்டிருக்கலாம் என்பதுவும் ஊகித்தற்குரிய இவ்வாறு ஊகிப்பதற்கு ஏற்றவகையில் உள்ள பொதுமைகள் இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கை
கலிப்பாவும் பதிகமும் - சில பொதுமைக மேலே நாம் நோக்கிய ஒத்தாழிை கலிப்பாவின் அமைப்பிலே தாழிசை என்ற பகுதிய ஒரே பொருளில் மூன்று பாடல்கள் அடுக்கி வருள் போல அம்மையாரின் பதிகங்களில் ஒரேபொருள பத்துப் பாடல்கள் அடுக்கி வருகின்றன.
கலிப்பாக்களில் வரும் 'சுரிதகம்' என்ற உறுப்பான பாடுபொருளின் பயன் கூறுவதாக அமைந்திருத்த போன்றே அம்மையாரினி பதிகங்களிலு பத்துப்பாடல்களும் முடிவடைந்தபின்னர் பதினோரால் பாடலில் பாடுபொருளின் பயன்பாடு கூறப்படுகிறது. கலிப்பாத் தாழிசைகளில் பாடல் களி இறுதியடிகளில் ஒரே சொற்கள் மீண்டும் மீண் வருவனவாயும் ஒத்திசைவுத் தன்மை பெற்றனவா அமைவன. இது இசைப்பாடலுக்குரிய சிறப் பண்பாகும். கலித்தொகையின் 9ஆம் பாடலி தாழிசைப்பகுதியின் மூன்று பாடல்களினதும் இறு அடிகள் பின்வருமாறு அமைகின்றன.
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங்கனையே 'நேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கணையே 'சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கணையே இவ்வாறான கலிப்பாத் தாழிசைகளின் பண் 6 அம்மையார் பதிகங்களிலும் காணமுடிகிறது. அவருை மூத்த திருப்பதிகங்களிலுள்ள பத்துப்பாடல்களின் இறு அடிகளிலும் இவ்விதமான இசைப்பாடலுக்குரியத இறதியடிகளில் ஒரே சொற்கள் மீண்டும் மீண்( வருவதும் ஒத்திசைவு கொண்டதுமான பண்ை காண்கிறோம்.

ாது சான்றாகச் சில அடிகள் வருமாறு: சை, அங்கங் குளிர்ந்தன லாடுமெங்கள் அப்பனிடந்திரு
லும் ஆலங்காடே. ண்ட ‘அள்ளி யவிக்கநின் றாடுமெங்கள் அப்பனிடந்திரு ரிற் ஆலங்காடே. ந்து ‘ஆகங் குளிர்ந்தனல் ஆடுமெங்கள் அப்பனிடந்திரு ால் ஆலங்காடே யத் 'அண்ட முறநிமிர்ந் தாடுமெங்கள் அப்பனிடந்திரு
ஆலங்காடே நில் ܠܢ (பதிகம் :1)
டும் 'கொட்ட முழவங் கூளிபாடக் குழகன் ஆடுமே. ாது அணங்கு காட்டில் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.
குத் (பதிகம் 2) 05 Б6ї இவ்வாறான பொதுப் பண்புகளை நோக்கும்
ரிய பொழுது கலிப்பாவின் தாழிசையுறுப்பே அம்மையா துக் ருடைய பதிகமரபுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருக் து. கலாம் என்ற எமது ஊகம் உறுதியாகிறது. சில . அம்மையார் கையாணி ட பணி களும்
அவற்றின் பயன்பாட்டுச்சிறப்பும் ள் அம்மையாரின் இருபதிகங்களும் முறையே சக் நட்டபாடைப் பண்ணிலும் இந்தளப் பண்ணிலும் பில் பாடப்பட்டுள்ளன என்பது அவற்றின் பதிப்புக்கள் தரும் வது செய்தியாகும். தமிழரின் இசைமரபில் இவ்விரு பண்களும் ரில் முக்கியத்துவமுடையனவாகத் திகழ்கின்றன.
இவற்றில் முதலாவது பதிகத்திற்பயிலும் து, நட்டபாடைப்பண்ணானது மங்களத்துக்குரிய கம்பீரமான நல் இராகமாகும். கர்நாடக இசைமரபில் இதனைக் |ம் 'கம்பீரநாட்டை' என்பர். மேடைக்கச்சேரி, நாட்டியகச்சேரி, பது கதாகாலட்சேபம் என்பன களைகட்ட இம்மங்களகரமான இராகத்தில் பாடஆரம்பிப்பார்கள். கோயில்களில் ன் உற்சவத்தின்போது சுவாமிபுறப்பாட்டில் நாகசுரத்தில் டும் 'மல்லாரி' இசைப்பது வழக்கம். இதுவும் கம்பீரநாட்டை பும் இராகத்திலேயே இசைக் கப்படுகிறது. அடுத்து புப் அமைந்துள்ள திருப்பதிகத்தின் பண்ணான இந்தளம் ன் என்பது கர்நாடகஇசைமரபில் முக்கியமானதொரு தி இராகமான 'மாயாமாளவகெளளை’யைக் குறித்து நிற்கிறது. சங்கீத பிதாமகர் புரந்தரதாஸர் அவர்கள் கர்நாடக சங்கீதம் பயில் வோருக்கு ஆரம்ப அப்பியாசப்பயிற்சிகளை இந்த இராகத்திலேயே பயிற்றுவித்தல் சிறந்ததெனத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அம்மையார் இவ்விருபண்களையும் தமது பதிகத்திற்குப் பயன்படுத்தியுள்ளமையை நோக்கும் பொழுது அவர் காலத்திலேயே இவை பயன்பாட்டுச் சிறப்புடையனவாகத் திகழ்ந்திருக்கவேண்டும் என்பதை உய்த்துணர முடிகிறது. மேலும், அவற்றின் தகுதி கண்டே அம்மையார் அவற்றைத் தேர்ந்துகொண்டார் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம். இவ்வாறு தேர்ந்து
-Geo
t

Page 73
கொள்வதற்குத் தேவையான இசைபற்றிய அறிவு அவரிடம் இருந்திருக்க வேண்டும்.
துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம்
ஊழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதம் துந்துபி தாளம் வீணை மத்தளங் கரடிகை வன்கைமென்றோல்
தமருகங் குடமுழா மொந்தை வாசித் அத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே.
பதி.1:10) என்ற அவரது பாடலில் சமகால இசைச்சூழல் பற்றிய அவரது அவதானிப்பு தெளிவாகவே தெரியவருகிறது. திருவாலங்காட்டிலே ஆடல்பயிலும் இறைவனுக்குப் பின்புலமாயமைந்துள்ள குரலிசை மற்றும் கருவியிசை களாகியவற்றை இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது.
g
 

நிறைவாக
மேற்குறித்த அம்சங்களைத் தொகுத்து நாக்கும் பொழுது அம்மையாரவர்கள் தமக்கு முற்பட்ட கால இசைமரபுகளை உள்வாங்கி அடுத்துவரும் காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் கட்டமைத்து வழங்கிய ஒரு இசைத்திறன் வாய்ந்த பக்திக் கவிஞர் என்ற கணிப்புக்குரியவராகிறார். இவர் பதிகமரபின் முன்னோடி ானக் கணிக்கப்படுகிறார் என மேலே நோக்கினோம். இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் பதிகமரபுக்கு >ட்டுமல்லாமல் பதிகங்களைப் பண்ணோடு பாடுகின்ற ]ரபுக்கும் இவரே தோற்றுவாய் செய்தவராகிறார் ான்பதையும் உணரமுடியும். இவர் தொடக்கிவைத்த 1ண்ணோடு இறைபுகழ் பாடும் மரபே நாவுக்கரசர், சம்பந்தர் முதலியவர்களாலே மிகவிரிந்த தளத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதென்பதை வரலாறு உணர்த்தி திற்கின்றது.

Page 74
இந்துக்கள் ஏன் கல் வித்துவான், ச
உலகிலுள்ள சமயங்களெல்லாம் கடவுள் ஒருவ இருக்கிறார் என்பதில் ஒத்த கொள்கையுடையன. ஆனா அந்தக் கடவுளின் உருவம், குணம், இயக்கம் இவற்றிே கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றன. கடவுளுக் உருவம் உண்டு என்றும் இல்லை என்றும் சமயங்க சொல்கின்றன. இந்து சமயம் உருவம் உண்டு என்னு கொள்கையுடையது.
உருவம் உண்டு என்று கூறும் இந்து சமய கடவுளுக்கு உருவம் இல்லை என்றும் கூறுகிறது. இந் சமயம் அருவம், உருவம் என்னும் இருநிலையோ அருவுருவம் என்னும் மூன்றாவது நிலையையு கூறுகின்றது.
இவ்வுலகம், இவ்வுலகிலுள்ள பொருள்க எல்லாமும் உருவமுடையன, உருவமற்றன, அருவு வுடையன என்னும் மூன்று பிரிவுக்குள் அடங்கிவிடு இப்பொருள்கள் எல்லாமாகவும் இவற்றோடு உடனாகவ இவற்றின் வேறாகவும் இருக்கும் இறைவன் உருவ அருவம், அருவுருவமாக இருக்கும் எல்லாப் பொரு களோடும் அவையாகவும் அவற்றோடு உடனாகவ அவற்றினின்று வேறாகவும் இருக்கிறான். இந்நிலையி இறைவன் உருவமுடையவனாகிறான்; அருவமுடைய னாகின்றான்; அருவுருவமுடையவனாகின்றான்.
இந்த உண்மையைச் சைவசித்தாந்தம் நன் தெளிவு படுத்தியுள்ளது. திருமூலர், மெய்கண்டார் போன் சீவன் முத்தர்கள் ஐயம் திரிபற இதனை விளக்கிவி டார்கள். அத்துவிதம் என்னும் ஒரு தொடர் உபநிடத தில் இருக்கிறது. இத்தொடருக்கு ஒவ்வொருவரும் “த தம் அறிவு அறிவகை” பொருள் கொண்டதினா உலகில் இறைவனைத் தவிரவேறு ஒரு பொருளு மில்லை. நம் கண்ணுக்குப் புலப்படும் இப் பொரு களெல்லாம் ஒரு மாயை என அத்தொடருக்குப் பொரு கொண்டார்கள் சிலர்.
இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்6ை எல்லாம் இறைமயமே என்பதையும் சைவசித்தாந்த ஏற்றுக் கொள்கிறது. இறைவனும் உலகு உயிராகி இருபொருள் தவிர வேறு பொருள் இல்லை எனப்பொரு கொண்டார்கள வேறு சிலர். இறைவன் உலகமா இருக்கின்றான். ஒன்றாக இருக்கிறான் என்னும் வேதாந் அத்துவைதத்தை ஏற்றுக் கொண்ட சைவ சித்தாந்த இறைவன் வேறாக இருக்கிறான் என்னும் துவை மார்க்கத்தையும் ஏற்றுக்கொண்டது.
இறைவனின் விவழிஸ்டமே இவ்வுலகும் உயிரு என அத் தொடருக்கும் பொருள் கொண்டார்கள் மற்று சிலர். இந் நிலை இறைவன் ஒன்றாகவுமின் வேறாகவுமின்றி உடனாகநிற்கும் நிலையாகும். இந் உடனாகிய நிலையையும் சைவசித்தாந்தம் ஏற்று
 

]லைக் கும்பிடுகிறார்கள்? கலாநிதி க. ந. வேலன்
) T
"ல்
ல
@
6
|ம்
ள்
ம்
GB
கொண்டுவிட்டது. சம்பந்தப் பெருமானின் “ஈறாய் முதல்
ஒன்றாய்” என்று தொடங்கும் திருவீழிமிழலைப்பதிகமும்
மெய்கண்டாரின் ”அவையேதானே” எனத் தொடங்கும் சிவஞானபோத இரண்டாம் நூற்பாவும் இந்தக் கருத்தினைத் தெளிவுபடுத்தியுள்ளன.
இந்துமதம் பல தத்துவ உட்பிரிவுகளைக் கொண்டபோதும் உலகிலுள்ள எல்லா மதங்களையுமே தழுவிக் கொண்ட தாயுள்ளம் படைத்த ஒரு மதமாகும். இங்ங்ணம் தழுவிக் கொண்டதைத் தோத்திரத்தாலும் சாத்திரத்தாலும் சொல்லிக் கொண்டிருக்கும் சமயம் சைவ 3FLDuULDIT(35b.
அத்துவிதம் என்னும் தொடர் இந்திய தத்துவத்தில் பல உட்பிரிவுகளை ஏற்படுத்திய போதும் மேலே காட்டிய விளக்கங்களைக் கொண்ட உண்மைப் பொருளை அளவை மூலம் தெளிவு படுத்தியவர் மெய்கண்டார் என்னும் சீவன் முத்தராவார். அதனைத் தாயுமானவர் அத்துவிதம் என்னும் தொடருக்கு எல்லோரும் பொய்ப் பொருளே கண்டனர். உண்மைப் பொருளைக் கண்டதினால் இவரே மெய்கண்டார் என்னும் பொருள் தோன்ற,
“பொய் கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
மெய் கண்ட நாதனருள் மேவுநாள் எந்நாளோ” எனப்பாடுகிறார்.
இறைவன் உருவம் உடைய உலகமாக இருக்கும் போது உருவமுடையவனாகின்றான். “பாரொடுவிண்ணாய்ப் பரந்த எம்பரன்’
பாரிடை ஐந்தாய்ப்பரந்து நின்ற போது பார் உருவமுடைய தெய்வமாகின்றது. தரையாக நின்று தாங்கும் தாய்த்தெய்வம் பூமியாகின்றது. தரையே தாரகம், அதுவே பூமாதேவி. அதுவே தாய்நாடு. அதுவே தஞ்சம். திருவுஞ்சல் தத்துவமும் இதுவே. அதனாலேயே உயிரற்ற பூமியை இறைவனாக வணங்குகின்றோம்.
நிலத்திற்கு உயிரில்லை. ஆனால் குணம் இருக்கின்றது. அதன்கண் ஒசை, ஊறு (உற்று, தொட்டு அறியும் அறிவு) ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்து குணங்களும் உள்ளன.
இந்தப் பூதத்தாலா நம்மிடமும் இந்த ஐவகை இயல்புகளும் உள்ளன. ஒசையில் இருந்து சத்தத் தையும், ஊற்றிலிருந்து பரிசத்தையும், ஒளியிலிருந்து ரூபத்தையும், சுவையிலிருந்து இரசத்தையும், நாற்றத்திலிருந்து சுந்தத்தையும் நாம் உணருகின்றோம். இந்த ஐவகை இயல்புகளையும் நமக்குத்தருவது பூமியே. பூமியில் ஐவகையாக இருப்பவன் இறைவன். இதனாலேயே இந்துக் கள் பூமியை விழுந்து

Page 75
வணங்குகின்றார்கள். பெண்கள் அடி அழிக்கின்றார்கள். ஆண்கள் மண்ணாக இருக்கும் இறைவனை உடல் பொருந்த உருண்டு உருண்டு திருக்கோயிலைச் சுற்றிச் சுற்றி வணங்குகிறார்கள்.
இறைவன் நீரிலே நான்காய் நிமிர்கின்றான். நாற்றம் தவிர்ந்த ஏனைய நான்கு தன்மைகளும் நீரிலுண்டு. இந்த நால்வகைத் தெய்வ இயல்பினை நீராகக் கண்ட இறைபக்தர்கள், நீரினை வெறும் நீராக அல்ல, தெய்வமாகவே வணங்குகிறார்கள். “தாயைப் பழித்தாலும் தண்ணிரைப் பழிக்காதே’ என்பார்கள். தண்ணிரை வருணபகவான் என வணங்குகின்றார்கள்.
“எங்கள் பிராட்டியும் எங்கேனும் போன்றிசைந்த பொங்கும்மடு” என நீர் நிறைந்த குளத்தைக் கண்டார்கள். “முன்னி அவன் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே’ மழை என மழை நீரைப் போற்றினார்கள். இறைவன் தீயிலே மூன்றாய்த் திகழ் கின்றான். தீயின்கண் சுவையும் நாற்றமும் தவிர்ந்த ஏனைய மூன்று தன்மைகளும் உள்ளன. அந்த மூவகைத் தெய்விகமாக இருக்கும் தெய்வத்தைத் தீயிலே கண்ட இந்துக்கள், தீயைத் தெய்வமாகத் தொழுகின்றார்கள்.
தீயானது தான் தூய்மைகெடாது தன்னிடம் அணைந்த எப்பொருளின் அசுத்தத்தையும் பொசுக்கித் தூய்மை செய்கின்றது. இந்த இறை இயல்பை உணர்ந்ததினால்தான் முத்தீ வளர்த்துக் கற்றாங்கு
 

எரிஓம்பி கலியை வராராமற் செற்றுத் தீயை வலம் வந்து வணங்குகின்றார்கள்.
இறைவன், வளியிடை இரண்டாக மகிழ்கின்றான். காற்றின் கண் ஓசை, ஊறு, என்னும் இரண்டு தன்மைகளும் உள்ளன. இத்தெய்வத் தன்மையுடைய இறைவன் “என்னுள்ளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கு நிற்கிறான்” என்பார் நாவுக்கரசர். இறைவனை மூச்சோடு மூச்சாகத் தம்முளே புகச்செய்து வாழ்பவர்கள் ஞானிகள்.
இங்ங்னமே ஒசை என்னும் ஒரு தன்மையோடு ஆகாயம் விளங்குகின்றது. ஐம்பூதங்களாகவும் அவற்றின் உடனாகவும் அவற்றின் பிறிதாகவும் நிற்கும் இறை நிலையை உணர்ந்து கண்ட இந்துக்கள், ஐம்பூதங் களையும், ஐந்து லிங்கங்களாக - ஐந்து அருஉருவத் திருமேனிகளாக அமைத்து வழிபடுகிறார்கள்.
அவற்றிற்கு இவை தலங்களென ஐந்து திருத்தலங்கள், திருக் கோயில்கள் அமைத்துள்ளார்கள். இறைவனையும் உயிர்களையும் தவிர உடம்பு உட்பட இவ்வுலகெல் லாம் ஐம்பூதங்களாகிய தத்துவங்களின் விரிவாகிய தாத்துவிகங்களே. பூத தத்துவமாயுள்ள இறைவன், தாத்துவங்களிலும் ஒன்றாய் உடனாய் வேறாய் இருப்பன். இதனாலேயே நாமும் கல்லைக் கும்பிடுகிறோம்.

Page 76
நவநாே வாகீசகலாநிதி கனகசட முதுநிலை விரிவுை சப்ரகமுவ பல்கலைக்க பரம்பரை அறங்காவலர், பூரீ நா
மத்தியமலையகத்திலே குயின்ஸ்பரியில் அமையும் சித்தாலயம் பூரீ பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் இணைந்த திருத்தலம் நவநாதேஸ்வரம் ஆகும். சித்தர்கள், பக்தர்களை ஈர்க்கும் வழிபாட்டிட மாகவும், தியான நிலையமாகவும் அமைவது இந் நவநாதேஸ்வரம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களுள் நவநாதச் சித்தரும் ஒருவர். சித்தத்தைத் சிவன் பால் வைத்தவர்கள் சித்தர்களாவார்.
நவநாதேஸ்வரத்தின் அற்புதம் என்னவெனில் சுயம்புலிங்கத் தோற்றப்பாடாகும். ஈஸ்வரங்கள் ஈழமணித் திருநாட்டிலேயும் உள. திருக்கேதீஸ்வரமும் திருக் கோணேஸ்வரமும் முன்னேஸ்வரமும் நகுலேஸ்வரமும் தான்தோன்றி ஈஸ்வரமும் பிரசித்தி பெற்ற சிவாலயங் களாகும். பஞ்சபூதத்தலங்களும் தாமே தோற்றம் பெற்ற ஈஸ்வரத் திருத்தலங்களாகும். பஞ்சமுகத் தலங்களுக்கும் அப்பால் விசேடமான தொரு பிரத்தியேக வரலாற்றோடு அமைவது குயின்ஸ் பரி நவநாதேஸ் வரமாகும். கருவறையில் அமைந்துள்ள லிங்கங்களின் வரலாறே இவ் வேறுபாட்டைக் கிளர்த்தி உணர்த்தி நிற்கின்றன. “மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது’ என்ற வாசகமொன்றுண்டு. இம் மகாவாக்கியம் சிவலிங்கத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றது. பரிபூரணப் பொருளான சிவனது திருவருளாடலை உலகினர் உணர்வது அரிதே. சூக்குமமான பரம்பொருளின் தத்துவங்களைக் கற்றும், அனுபவித்தும், எண்ணியும் மகிழ்வோர் தொகை மிகவும் சொற்பமே. காரணம் உணர்வனுபவம் என்பது நம்முள் தோன்றி வளர “உலகியலின்பம்’ என்னும் தடை ("உணர்வனு பவத்தை”) அனுபவிக்கவிடாது தடுத்து விடுகிறது. எனவே "உள்ளத்தில் ஆனந்தம்" ஏற்பட இடர் உண்டாகி விடுகிறது. ஆனால் “உலகினர்” வாழ்வுக்காக இறைவன் எப்பொழுதும் தோன்றியவாறே இருப்பான். அன்பர் பின் புறம் புறம் திரிந்து ஊன் உணர்வு நீக்கிப் பேரின்பநிலையினை அருள்வான். இவ்வுண் மையையே காலத்துக்குக் காலம் உற்பத்தியாகும் ஆலயங்க ளினுடாகவும், உருவ வெளிப்பாடுகளினாலும் உணர முடிகிறது.
எனவே மலையகத்தில் தோன்றிவரும் நவநாதேஸ்வரம் புதுமையானதாகவே கருதப்படுகிறது. நவநாதச் சித்தரினது சித்தத்திலுறைந்த சிவன் இன்றுபக்தர்க்கு வெளிபட்டுத் திருவருளைப் பரப்பி
-

தஸவரம பாபதி நாகேஸ்வரன், M.A. ரயாளர், மொழித்துறை, ழகம், பெலிஹஹ9ல்லோயா கபூஷணி அம்மன் தேவஸ்தானம்
நிற்கின்றான். இவ்வாலய வரலாறு அற்புதமானது. சச்சிதானந்த சுழுமுனைச் சூத்திரம் என்னும் நூல் “அடுத்துப்பார் அதன் மேலே யானைநாதம் அதன் மேலே வளை என்ற சங்கநாதம் தொடுத்துப்பார் அதன் மேலே வேய்ங் குழலின் நாதம்
... தொகுத்தன்மேல் துடிப்புடைய இடடையின் நாதம்
கொடுத்துப்பார் செவியதனைப் பாம்பு நாதம் குமரனே மணி வயிரத் தும்பி நாதம் எடுத்துப்பார் யாழுடன் பேரிகையின் நாதம் இத்துடனே தொகையதுதான் பத்துமாச்சு”
என்று நாதத்தின் தன்மைகளை வரிசைப்படுத்திக் கூறுகிறது.
கொல்லி மலையில் கதிபாலியலிருந்து நாவலப்பிட்டி, கட்டபுலா, குயின்ஸ்பரியில் நிர்விகற்ப நிலை அடைந்து, இன்று சுயம்பு லிங்கமாகத் தோன்றும் நவநாதச் சித் தர் மகானது சிவாலயமே ழரீ நவநாதேஸ்வரம் என்னும், பூரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் என்று அழைக்கப்படும் தேவஸ்தானமாகும்.
மத்தியமலையகத்திலே நாவலப்பிட்டியை அடுத்து கொத்மலை வீதியில் தலவாக்கலை நோக்கிச் செல்லும் நெடும் பாதையில் அமைந்துதள்ளது குயின்ஸ்பரி. இன்று மலையகத்தில் எழுச்சிபெற்றுவரும் ஆலயம் நவநாதேஸ்வரமாகும்.
சித்தர்கள் எப்போதும் சிவனையே எண்ணு பவர்கள். உலகப்பற்று நீங்கியவர்கள். சித்தானைக்குட்டிச் சுவாமிகள், பெரியானைக்குட்டிச் சுவாமிகள், நவநாதச் சித்தர் மூவரும் சமகாலத்தினர். மட்டக்களப்பிலே சித்தியெய்திய பூரீ சித்தானைக்குட்டி சுவாமிகள் பூரீ நவநாதச் சித்தரது சீடராவார். யாழ்ப்பாணம் கொழும்புத் துறை சிவயோகசுவாமிகள் எனப்படும் யோகள் சுவாமிகள் பூரீ நவநாதச் சித்தர் சிவாலயத்திற்கு வந்து தரிசித்து அதன் மகிமையையும் சிறப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ழரீ நவநாதேஸ்வரம் “சர்வமத சந்நிதி’ எனப் பரிணமிக்கவுள்ள பீடமாகும். குறிப்பாகச் சைவமதத்தினர் இதயத்திலிருந்து வழிபடும் சிவாலயம் இதுவாகும். “உயர்தியானபீடம்’ நவநாதேஸ்வரம். குயின்ஸ்பரியும் கொல்லிமலையும் நவநாதச் சித்தரது உணர்விலே ஒரே இடமாகவே கருதப்பட்டது என்பது
70

Page 77
இத்தலவரலாற்றிலேயிருந்து அறியமுடிகிறது. "சூழல்” அல்லது அமைவிடம் தான் “தலம்’ என்ற கருத்தில் பயன்படுகிறது. ஆலயத்தின் விசேடணத்திலே முதன்மை பெறுவனவே மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமாகும்.
நவநாதேஸ்வரம் இற்றைக்கு ஏறக்குறைய நூற்றாண்டுகள் “சமாதி” நிலைநின்ற ஆலயமாகவுள்ளது. அறுபதாண்டுகள் சமாதி நிறைவு அடையுமானால் “சமாதி” ஆலயம் என்று அழைக்காது 'சிவாலயம்” என்று அழைப்பது மரபு என்று விளக்குகிறார் நயினைச் சிவாச்சாரியார் 'ஆகமப்ரவீண’ கைலை. வாமதேவக் குருக்கள்.
சமுதாயம் கூடுமிடம் ஆலயங்களே. விழாக்களே மாக்களையும் மக்களாக்குகின்றன. நவநாதேஸ்வரத் திலே தைப்பொங்கல் தினத்தில் காட்டிலேயமைந்துள்ள குகைக்கு அருகிலே 'வனபோஜனம்” என்னும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதுண்டு. இன ஒற்றுமையின் சின்னமாக இவ்விழா இவ்வாலயத்திலே நடைபெறுவ துண்டு. வருடாவருடம் பங்குனி உத்தரத்தினத்தன்று நவநாதேஸ்வரத்தில் அபிஷேகமும் விசேட பூசைகளும், அன்னதானமும் இடம்பெறுகின்றன.
பூரீ நவநாதேஸ்வரம் கீர்த்தி வாய்ந்த சிவத்தல மாகும். சிவன் மைந்தன் முருகன் பாலசுப்பிரமணியனாக அருகிலே கோயில் கொண்டுள்ளான். நடைமுறைச் சமயாசாரங்களுடன் இவ்வாலயம் பிணைப்புக் கொண்டுள்ளது! திருவருளிர்ப்புமிக்கது.
இலங்கையின் முதல் கவர்னர் சோல்பரிப் பிரபுவின் மகனான சாந்த சுவாமிகள் சந்நியாசம் பெற்றது அவ் ஆலயத்திலேயாகும். அமெரிக்காவில் வேர்ஜினியா நகரில் ஆச்சிரமம் நடத்தும் கண்டியில் வாழ்ந்த யோகி சச்சிதானந்த சுவாமிகள் இலங்கை வரும்போதெல்லாம் தமது அமெரிக்க சீடர்களுடன் இத்தலத்தை தரிசித்தே செல்வார் என்று அறியமுடிகிறது. கவியோகி சுத்தானந்தர், சுவாமி ரெங்கானந்தாஜி, லேடி இராமநாதன், முன்னாள் அமைச்சர் மகாதேவா, முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் துரைச்சுவாமி போன்றவர்களையும் ஈர்ந்த சிவத்தலம் குயின்ஸ்பரி பூரீ நவநாதேஸ்வரமாகும்.
கொழும்பு மாநகரிலே பூரீ சம்மாங் கோட்டார் கோயிலைக் கட்டிய சிற்பிகளே 1928ஆம் ஆண்டு குயின்ஸ்பரி பூரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தையும் அழகுற அமைத்தனர் என்பது இத்திருத்தலத்தின் பூர்வீகவரலாறு. இதற்கான கற்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
திருமதி நாகன் பெருமாள் அம்மையாரும் அவரின் வழித்தோன்றல்களும் இவ்வாலயத்தைப் பரிபாலித்து வந்தனர். இன்று இவ்வாலயத்தின் பரம்பரைத் தர்மகர்த்தா திரு. இரா. இராஜகோபால் அவர்கள். நவநாதேஸ்வரத் தேவஸ்தானத்தில் “மகாகும்பாபிஷேகத் திருப்பணிச் சபை' என்ற பெயரில் பொதுமக்களால் சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது. “நவநாதச்சித்தள்
-(7.
 

வாழ்வும் வரலாறும்” இன்று உயர் கல்வித் திட்டத்து இந்துநாகரிக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை அவரை மகான்கள் வரிசையில் முதனிலையில் அறிய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. ஈழ மணித்திரு நாட்டின் சமயப் பெருமையை எடுத்தியம்பும் தேவஸ் தானமாக இது பரிணமித்துவருகிறது.
நவநாதச்சித்தர் வரலாறுகளிலே பின்வரும் கதையும் உண்டு. இக்கதை சித்தரின் ஒருமுகப்பாட்டை உணர்த்தும்.
திருச்சி ஜில்லா பச்சைப் பெருமாள்பட்டி என்ற கிராமத்தில் சமீபமுள்ள கரிகாலி என்ற கிராமத்தில் பிரபல கங்காணியாக இருந்தவர் நாகன் கங்காணியாவார். அவரது பத்தினியாராகிய பெருமாளம்மாள் என்ற அம்மையாரும், கொல்லி மலைச்சித்தர் குழாத்துள் ஒருவராகிய நவநாதச்சித்தர் என்ற - மானம்பாக்கிச் சுவாமிகளை அன்போடு ஆதரித்து உபசரித்து வந்தனர். பச்சைப் பெருமாள் பட்டியில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிவகாமசுந்தரி என்ற பெண் குழந்தையை எடுத்து அணைத்து உச்சி மோந்து ஸ்பரிச, வாசக, நயன தீட்ஷைகளால் அருள்புரிந்தார் பூரீ நவநாதசித்தர். ஏட்டுக்காவடி, தச்சிட்டசதகம் முதலிய நூல்களைத் தானாகவே சிவகாமசுந்தரி மனனஞ் செய்தாள். ஐந்தாமாண்டின்பின் பேரூர் சந்நிதிமுறை, அடங்கன்முறை, பன்னிருதிருமுறை முதலிய அரிய நூல்களை வாசிக்கவும், வாசித்தவற்றை உடனே பாராமற் சொல்லும் ஆற்றலும் கண்டனர். இவை நவநாதச் சித்தர் கொடுத்த “வித்யா” தானங்கள்.
பூரீ நவநாதச்சித்தர் சஞ்சரித்த கொல்லிமலை இந்தியாவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்திலே “நெஞ்சவுத்தொழில்’ பிரசித்தி வாய்ந்தது. நூல் ஆடையையே சித் தர்களும் உடம்புமுழுவதும் மூடியவாறு அணிந்துள்ளனர்.
நவநாதச் சித்தர் விசேடமாக அறுசுவை உண்டியிலே விருப்பமிலாதவர். வீரம், பூரம், பாஷாணம் முதலியவற்றை பலக்கணக்கில் (ஓரளவு) கொண்டுவரச் செய்து அவற்றை உணவாக அருந்துவார். நவநாதச் சித்தரிடம் சாமானிய மனிதர்களைப் போல நித்திய நியமங்கள் எவற்றையும் காணமுடியவில்லை. நவநாதச்சித்தர் பரிசுத்தமான பூதபெளதிக உடலாகத் தோற்றினும் என்றும் பெருமணங்கமழும் தேஜசோடு கூடியவடிவமாகவே காணப்படுவார். சித்திபெற்ற உடல் வடிவினராகையால் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற எண்வகைச் சித்துக்களும் அவரிடம் காணப்பட்டன.
பாலர், பேயர், பித்தரைப்போல் நடித்து மழலைச் சொற்களால் வசனிப்பார். நவநாதச்சித்தர் காமக் குரோதத்தினாற் பீடிக்கப்படாமல் அநவரதமும் பரவெளியே நாட்டமாகக் கருவி கரணங்களை அடக்கி இமையா நாட்டத்தோடு சாம்பவி முத்திரை தாங்கி

Page 78
சச்சநிட்டையில் வீற்றிருப்பார். இவ்வாறு ஆறு மாதங்க சென்று ஒரு தினம் அன்பர்கள் அனைவருங்கூடி சித்தருக்கு விசேடமான அபிஷேகம் செய்யக் கரு நூற்றெட்டுக் குடம் காவேரித் தீர்த்தம் கொண்டுவந் அபிஷேகத் திரவியங்கள் அனைத்தும் சேகரித்து சித்தருக்கு அபிஷேகித்துப் பல ஏழைகளுக் அன்னமிட்டு வாத்திய கோஷத்துடன் ஆராதனைக செய்யும் போது அதனைத் தரிசிக்க வந்த சேலம் வா ஒருவர் இந்த நவநாதசித்தரை ஆறுமாதத்திற் முன்தாங்கள் சேலப்பக்கத்தில் சமாதி செய்ததா தெரிவித்தார். அதனை சித்தரிடம் விசாரித்ததில் சித்த புன்சிரிப்புடன் "இருக்குமப்பா” என்றனர்.
நவநாதசித்தர் உலக விவகாரங்களில் ஈடுபட் பெத்தான்மாக்களிடம் வீண்வார்த்தை இடுவதில்6ை இவரது இமையா நாட்டத்தைக் கண்ணுற்ற மக்களு விசேஷமாக இவர்பால் அணுகுவதில்லை. அநுபூதி செல்வர்களும் உண்மைப்பற்றுடை யோருமே இ சித்தரைப் போற்றிப் பாதுகாத்து அருள் பெற்றானந்தித் வந்தனர். நவநாதச்சித்தர் ஏககாலத்தில் குளித்தை யிலும், கரிகாலி முதலிய அன்பர்கள் நிறைந் இடங்களிலும் அவரவர்க்குத் தரிசனம் தந்துகொண் வீற்றிருக்கும் இயல்புடையவர். ஆலத்துடையான் பட்டியி ஊற்றில்லாத கிணற்றுக்கு சக்கரமொன்றைத் தகட்டி வரைந்து கிணற்றிலிட்டு நீர் வற்றாது ஊறச் செய்தா பச்சைப்பெருமாள்பட்டியில் ரெட்டியார் ஒருவ நவநாதச் சித்தரைப் பரிகசித்த போதும். "அவர் மிகவு நல்லவர்” என்று புகழ்வது போற் பழித்தார். சிறிதுகால திலேயே அக்குடும்பம் நாசமானதை யாவரும் அறிவ என்றும் கூறப்படுகின்றது. நவநாதச்சித்தர் வான பாகிச்சுவாமி என்றும், எட்டிக்கொட்டைச் சுவாமி என்று அழைக்கப்பட்டார் என்று கூறுவர் பச்சைப்பெருமாள்பட் ம. பெரியசாமிப்பிள்ளை. பச்சிலையாற் பிணி தீர்ப்பதி நிகரற்றவர் நவநாதச்சித்தள். எப்போதும் யோகநிஷ்டையி இருப்பது நவநாதச்சித்தரின் இயல்பு, சுமார் மூன் தினங்கள் கூட நிஷடையிலே இருக்கும் பேராற்ற இருவருக்குண்டு. எட்டிக் கொட்டையை நவநாதச்சித்த அடிக்கடிசாப்பிடுவதுண்டு. எங்கள் வீட்டிலும் அவ சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டொ கவளத்துக்குமேல் சாப்பிடுவதில்லை. சில தடவைகளி கிருஷ்ணா, கிருஷ்ணா என்று பக்தியுடன் சொல்லுவா மாடுகள் மீது நவநாதச்சித்தருக்கு மிகுந் வாத்சல்லயமான அன்புண்டு. "சொக்குமந்திரம்” என்ப அவர் ஆடுமாடுகளுக்கு செய்த மருந்து மந்திரமாகு தின்னக்கூடாத இலைகுழைகளைத் தின்று சோர்ந்: போனால் "சொக்கு மந்திரம்” மூலம் வருத்தந் தீர்ப்பா சிவன் வைத்தியநாதன் என்பதுமுண்மை. "ஜெய் சீதாராப் என்று அடிக்கடி கூறுவார்.
சிவசிங்கர ரெட்டியாரும், வைத்திலிங் பண்டாரமும் 'எட்டிக் கொட்டை சுவாமிகள்’ என்று
 

5i
நர்
:
-(72F
"வானம்பாக்கிச் சுவாமிகள்’ என்றும் ஜனங்கள் சொல்லு வார்கள். சுவாமிகளின் அனுபவ நிலை சதாயோக நிஷடையோடு ஆகாய நோக்கத்தோடும், பிரணவ உச்சரிப்போடும் இருப்பதைத் தரிசித்துள்ளோம் என்று எழுதியுள்ளனர்.
நவநாதச்சித்தர் சிறுபிள்ளைகளைக் கண்ட போதெல்லாம் மண்ணினால் கற்கண்டு, கடலைப்பருப்பு, என்பன வரும்படி செய்து கொடுப்பதுண்டு. சங்கிலிச் சுவாமிகளின் சீடர் நவநாதசித்தர் என்ற வழக்கமுண்டு. நவநாதசித்தர் உலகத் தோற்றத்தைப் பிரம்மமாகப் பார்ப்பதால் அவரிடத்தில் ஜீவபேதம் கிடையாது. நவநாதச் சித்தருக்குப் பிரியமான ஆகாரமான எட்டிக் கொட்டை. எருக்கம்பால், எருக்கம்பூ, மணல், என்பவற்றுடன் குப்பை மேனித் தழையையும் உண்பார். நவநாதச்சித்தர் அகமுக நாட்டத்தில் இருப்பார். இவர் பரம ஏழைகளிடமும், தனவந்தர்களிடமும் சமநோக்கே தவிர வேறில்லை.
நவநாதச்சித்தர் ஒரு சர்வசமய சமரசஞானி. பணிவு என்ற பண்பையும், உயர் குணமென்ற பெருமையையும் தன் வாழ்விலேயே விளங்கச் செய்தார். உயர் குணங்களின் ஒளிபரவச் செய்தவர் நவநாதச் சித்தர். ஆன்மிகத் திருச்சுடர் கொழுந்துவிட்டெரியச் செய்பவர் நவநாதச்சித்தர்.
எளியவாழ்வு, உயர்ந்த நினைப்பு, பரந்த உள்ளம், ஆழ்ந்த அன்பு ஆகிய நான்குமே ஒரு மனிதனுக்கு இம் மண்ணுலகத்திலேயே விண்ணுலக வாழ்வளிக்கவல்லன.
“முப்பெருஞ்சித்தர்கள்’ என்ற நூலிலே என்பேராசான், ஞானகுரு "ஆத்மஜோதி” நா.முத்தையா அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்.
“நவநாதச் சித்தர் அடியார் பெருமையைப் பேணிப்பாதுகாக்கும் முறையைத் தாம் இருந்த இல்லத்தின் மூலமாகத் தம்மை நாடி வந்தோர்க்கெல்லாம் விளங்கவைத்தார். ஒருவருக்குச் சமைத்த உணவை ஒன்பதின்மருக்குக் கொடுக்கமுடியும் என்பதைக் செயலிற் காட்டியவர்கள். உள்ளன்போடு கொடுக்கும் போது எவ்விதக் குறையும் ஏற்படுவதில்லை என்பதை விளக்கியவர்கள். ஈத்துவக்கும் இன்பத்தை மக்கள் மத்தியில் காட்டிவைத்தவர்கள்’.
“முருகனைப் போற்றும் பெருமை நாதசித்தர் களைச் சார்ந்ததாகும்” என்று எழுதியுள்ளார் நயினை, இல்லறஞானி க.இராமச்சந்திரா அவர்கள். தூற்றுதலையும் போற்றுதலையும் ஒன்றாக மதித்தவர் நவநாதச்சித்தர். பேராசிரியர், கலாநிதி, சு.வித்தியானந்தன் அவர்கள் 'முப்பெருஞ்சித்தர்கள்’ என்ற நூலுக்கு வழங்கிய ஆய்வுரையில்.
“சித் என்று அறிவது சித்தை உடையவர்கள் சித்தர்கள். எனவே அறிவுபடைத்தவர்கள் சித்தர்கள். அவர்கள் அறிஞர்கள், மேதைகள், நுண்ணறிவு

Page 79
படைத்தவர்கள், மெய்ஞ்ஞானிகள், சித்தர்கள் சாதாரண மக்களாற் செய்யமுடியாத பல அரிய செயல்களைச் செய்பவர்கள். அவற்றை அற்புதங்ளெனப் பொதுமக்கள் போற்றுவர். நாம் எவற்றையெல்லாம் அற்புத காரியங்களெனக் கொள்கிறோமோ அவற்றைச் செய்யும் ஆற்றல் சித்தர்களுக்குண்டு. இதனாலேயே சித்தர்கள் இயற்கைக்கு மாறான பல அற்புதங்களைச் செய்தன ரெனக் கதைகள் வழங்குகின்றன” என்று எழுதியுள்ளமை மனதில் கொள்ளத்தக்கதாகும். அருணகிரிநாதசுவாமிகள் பாடிய மயில்வகுப்பில்,
இவ்விழா மலருக்கு நிதி உதவியோர் விபரம்
திரு. செல்லத்தம்பி மார்க்கண்டு S250.00 (தந்தையார் செல்லத்தம்பி நினைவாக)
திரு மருதையினார் சிவசாமி S100.00 திருமதி லீலா சிவானந்தன் S100.00 திருமதி பரமேஸ்வரி பரமநாதன் S100.00 திருமதி இராசமலர் சின்னராசா S50.00 திருமதி நாகேஸ்வரி கணேஸ் S50.00
திருமதி கமலாதேவி மகாலிங்கம் S50.00
 

“பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர் பூரண கணங்களொடு வந்துதொழவே”
என்று தேவலோக அடியார்களே நவநாதர்கள் என்று கருதியுரைக் கின்றார். இங்கு ஓர் பேருண்மை பெயர்களிலே பொதிந்துகிடப்பதையும் நாம் கூர்ந்து நோக்குதல் வேணடும். அருணகிரிநாதர் என்பதிலும் நாத(ம்) வருகிறது. “நவநாதர்” என்பதிலும் நாத(ம்) வருகிறது. கலைஞானம், கல்விஞானம், நாதஞானம், தருபவர் நவநாதசித்தசிவன். வழிபடுவோமாக!
திருமதி புனிதவதி சிவசுப்பிரமணியம் $50.00 திருமதி வில்வராஜா கனகாம்பிகை $50.00 திருமதி பஞ்சலிங்கம் சற்குணதேவி $50.00 திருமதி இராசலட்சுமி சண்முகலிங்கம் $50.00 திருமதி அன்னபூரணம் ஞானசம்பந்தர் $50.00 திரு. செ. சோமசுந்தரம் S50.00 திரு. இ. லோகோஸ்வரன் S50.00
திருமதி தங்கமுத்து தம்பித்துரை S50.00

Page 80
பழந்தமிழ் இலக்கியங்களி
சைவப்புலவர் 6 ஆசிரியர், யாழ் / யூ
"தமிழனென்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு”
என்றாங்கு தமிழர் வாழ்வியலிற் கண்டுணர்ந்து முடிந்த முடிபாகக் கூறிய சைவசித்தாந்தம் என்று வழங்குகின்றன. பழந்தமி கியங்களான அகநாநூறு, புறநாநூறு, ஒல்காப் பெரும்ட தொல் காப்பியம், திருக்குறள் முதலிய நூல சைவசித்தாந்த தத்துவ அடிப்படைகள் பலவற்றைத் த நிற்கும் மூலங்களாய் மிளிர்கின்றன. இவற்றிலாங்கா காணும் சித் தாந்த மூலங்களை நோக்குத இக்கட்டுரையின் நோக்காகும்.
அகநாநூறு 1.356 இல் “சிறுகாரோடன் பயிெ சேர்த்தியகல்’ என்றொரு தொடர் காணப்படுகி இத்தொடர் காதலன் காதலியர்கட்கிடையில் நிக அத்துவிதச் செறிவான அன்பியல்பை விளக்குவத எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது. உலகியலிலு காதலன் காதலியர் அன்புறவு, ஆத்மீக ரீதியில் சி சீவன் அண் புறவினை உணர்த் துவதாகுமெ கூறவேண்டியதில்லை.
சைவசித்தாந்தக் கோபுரத்தின் திருமுடிய திகழும் சிவஞானபோதத்து இரண்டாஞ் சூத்திரத்திற் கா “அவையே தானேயாய்” எனும் அதிகரணப் பொரு விளக்கும் மேற்கோட்பாடல், “அரக்கொடு சேர்த்தியணைத்த அக்கற்போல் உருக்கி உடங்கியைந்து நின்று - பிரிப்பின்றித் தானே உலகாம் தமியேன் உளம்புகுதல் யானே உலகென்பன் இன்று” என்றுள்ளது. இப்பாடலிற் காணும் "அரக்கொடு சேர்த்தியணைத்த வக் என்பது அகநாநூற்றிற்காணும் சிறுநாரோடன் பயி6ெ “சேர்த்தியகல்” என்பதை ஒத்திருக்கக் காண்டல் ந6 "அரக்கையுருக்கி அதனோடு சேர்த்தணைத்த கற்ெ அவ்வரக்கினோடு ஒன்றாய் ஒருங்கியைந்து நீக்க நின்றாற்போல, முதல்வன் உயிர்களின் ஒருங்குகூடி நி நீக்கமின்றி உடனாகலால் தானேயாம் ' உலகேயா தானே உலகேயாம்’ எனும் சித்தாந்தவுண் அகநாநூற்றுப் பாடலடியிற் பொதிந்துள்ளவாறு க நயக்கத்தக்கதாம்.
பழந் தமிழிலக் கிங் களில் இன்னொன்ற புறநாநூற்றிலே “யாதும் ஊரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலுமிலமே மின்னொடு

Žor ozvás
ற் கானும் சித்தாந்த மூலங்கள் , 960)JēFITb56ŐT B.A. Hons. னியன கல்லூரி, தெல்லிப்பளை
தம்
லக் கழ்த்
கள்
ங்கே லே
னாடு
T60T
-(74)
வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொருதிரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப்படுஉம் புணைபோலாருவிக் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியிற் றெளிந்தனம் ஆகலின் பெரியோரை வியத்தலுமிலமே சிறியோரை யிகழ்த லதனினுமிலமே”
எனும் பாடல் மிகப் பிரபல்யமானதொன்று. இப்பாடலிலே வினையுண்மை, இறையுண்மை, இருவினையொப்பு, மறுபிறப்புண்மை முதலிய சித் தாந்தக் கருத்துக் கள் தலைகாட்டுதலைக் காணமுடிகின்றது. "தீதும் நன்றும் பிறர்தரவாரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன” என்பதில் தாம் தாம் செய்த வினை தாமேயனுபவிப்பர்’ என்ற சித்தாந்தப் பொறுதி அழுத்தந்திருத்தமாயெடுத்துக் காட்டப் பட்டுள்ளது. வினைகளின் தன்மைக்கேற்ப மறுபிறவி வாய்க்கும் என்பதை “நீர் வழிப்படுஉம் புணைபோலாருயிர் முறைவழிப்படுஉம்” எனும் பாடலடி விளக்குகிறது.
"ஒவ்வொருவரும் செய்த வினைகளைக் கணக்கிட்டு அவற்றுக்குரிய பலாபலன்களை ஊட்டுபவனொருவன் இருந்தாக வேண்டும். அவனே சிவன்’ என்ற சித்தாந்தவுண்மை “தீதும் நன்றும் பிறர்தரவாரா" எனும் பாடலடியிற் குறிப்புணவிருத்தலும் நயமாம்.
பிறர் என்னுஞ் சொல் பன்மை குறித்தது. ஆயின் ஆன்மவர்க்கத்தாரைக் குறிப்பது. ஆதலின் பிரம்மா, விஷ்ணு முதலிய ஆன்மவர்க்கத்தாரை நிராகரணம் - பண்ணி, ஒருவனென்னும் ஒருவனாகிய - தருபவன் ஒருவன்’ என்று சிவஞானசித்தியார் காட்டும் சிவனுண்மையை நாசூக்காக நிறுவுமாறு இப்பாடலடியிற் காணும் சிறப்பம்சமாகிறது. மேலும்; “ பெரியோரை வியத்தலுமிலமே.
சிறியோரை யிகழ்தலதனினுமிலமே” எனும் பாடலடிகளில் இருவினையொப்பின் இணையிலா நிலையைக் காணமுடிகிறது.
இனி: ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்திற் காணும் சித்தாந்தக் கருத்துக்களைக் காண்போம். தொல்காப்பியத்திலே எழுத்துக்களின் பெயர் வகுப்பிலே காணும் உயிர், மெய், உயிர்மெய் என்ற பாகுபாடு சித்தாந்தவுண்மையொன்றைச் சொல்லாமே சொல்லிதாம். உடலைக் கூடி இயக்கும் உயிர் என்பது, அதற்கு வேறாக உண்டு. ஆதலின், தேகமே ஆத்மா எனுங் கொள்கை பொருந்தாது எனும் சைவசித்தாந்த பரபக்க மறுப்புண்மை உயிர் மெய் என்ற பெயர்ப் பொருளில் அடங்கி நிற்கும் நயம் அறியத்தகும். புணியியலிலுள்ள "மெய்யுயிர் நீங்கிற் றன்னுருவாகும்” என்ற சூத்திரம் மேற்படி

Page 81
ஆத்மஜோதி மக
தேகாத்மவாத நிராகரண சைவசித்தாந்தக் கருத்துக்கு ஆதாரமாதலுங் காணலாம். அத்தோடு "உடற்பற்றுக் கொள்ளும் பந்த நிலையிலிருந்து உயிர்விடுபடுமாயின் தன்னிறைவான அறிவுருவாகும்'' என்ற பொருளமைதியும் இதிலடங்கியுளது. உயிரறிவும் சிவனறிவுபோல வியாபகமானதேயாயினும் மலசம்பந்தத்தாற் கண்டுண்டு மட்டுப்பட்டிருக்கிறது. மலசம்பந்தம் நீங்கில் வியாபக அறிவு வாய்க்கும் என்ற சித்தாந்தவுண்மை இதிற் பொதிந்திருக்கிறது. மேலும்:
"வினை யெனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காளைக் காலமொடு தோன்றும்”
வினையியற் சூத்திரம் பற்றியும் கூறியாக வேண்டும். என்ற வினைச் சொல்லிலக்கணங் கூறும் இச்சூத்திரம் குறிப்புப் பொருளாக சைவசித்தாந்த வினையுண்மையை விளக்குகிறது.
" வினை தன் பயன் கொடுத்தலில் வேறுபடாது. அதன் விளைவான புண்ணிய, பாவங்கள் புத்திதத்துவம் பற்றுக் கோடாகக் கிடந்து, இறைவனாணைப்படி அநுபவத்துக்குரிய காலத்தில் இன்பாநுபவமாகவோ துன்பாநுபவமாகவோ தோன்றும்” என்ற சைவசித்தாந்த உண்மை இச்சூத்திரத்தின் குறிப்புப் பொருளாகிறது.
இனி சைவசித்தாந்த தத்துவம் தனக்கு முதல் நூலாக கொள்கின்றவை வேதசிவாகமங்களாகும். "ஆரணமாக மங்களருளினாலுருவுகொண்டு காரணானருளானாகிற் கதிப் பவரில்லையாகும்”
என்கிறது சிவஞானசித்தியார். வேதமும், சிவாகமங்களும் முழுமுதற் சிவனால் அருளப்பட்டவை. "வேதமோடாகமம் மெய்யாமிறைவனூல்" என்கிறது திருமந்திரம். தொல்காப்பியரும் ''வினையினீங்கி விளங்கிய அறிவின்
முனைவின் கண்டது முதனூலாகும்” என்று மரபியலிற் குறிப்பிடுகிறார். இங்கு 'முனைவன்' என்றது தங்குருவாய அகத்தியரையே என்பார் சிலர். அ. தொவ்வாது. ஏனெனில் "விளங்கயி அறிவின் முனைவன்” என்று உள்ளதனாலாம். அதாவது "விளக்கிய அறிவின் முனைவன்” என்று காணின் அஃதொக்கும். இங்கு "தன்னிலே தானாம் மிகமிக விளக்கமாகிய அறிவுடைய தலைவன்” எனப்படுதலால் சிவனையே அது குறிக்கிறது. எனல் கூறுமேயமையும். ஆகவே திருமூலர் பின்னர்க் கூறுவதையே தொல்காப்பியர் முற்கிளர்ந்துரைத்தார் எனல் அமையும். இனி திருக்குறளிற் காணும் சித்தாந்தவுண்மைகளிற் சிலவற்றைக் காணலாம்.
சைவசித்தாந்தம் சிவனுக்கு எண்குணங்களைச் செப்பும். திருக்குறள் “கோளிற் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்றுரைக்கும்.
75

f2er prvi பிறவித் துன்பமே ஆன்மாவின் தீர்க்கொணா நோய்த்துன்பம். இதனின் நீங்கிப் பிழைத்தற்கு வழி சிவனடித் தலைப்படுதலே என்பது சித்தாந்தக் கோட்பாடு. திருவடிப்பேற்றிலேதான் ஆன்மா துயர்நீக்கம் பெறுமென்பது. "தனக்குவமையில்லாதான் தாள்சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றலரிது" என்ற குறள் இக்கருத்தை
அடித்துரைக்கிறது.
''தொழு தகுந் திறனுடையன் சிவனே! யாவனொருவன் கருவாய்ப்பட்டுப் பிறந்திறந்துழலும் ஆத் மவர்க்கத் தவரை வணங்கியுழல் வதினீங் கி அத்தலைவனாய சிவனை நினைந்தும், வாழ்த்தியும், வழுத்தியும் ஒழுகுகின்றானோ? அவன் வழிப்பட்டு இயற்கையும், தேவர்களும் தொழிற்படுவர்' என்பது சித்தாந்த முடிபு. “தெய்வந் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" எனும் குறட்பாவும் இக்கருத்தையே குறிப்பாற் புலப்படுத்துகிறது.
மேலும், திருக்குறளிலே மும்மலங்கள் பற்றிய கருத்துக்களும் அழுத்தமாக அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கதாம்.
ஆணவமுனைப்பே ஆத்மா வின்னகளைப் புரியக் காரணமாகிறது. வினைகளைப் புரியவே பிறவி வாய்க்கிறது, பின்னுந் தொடர்கிறது. "அவா வென்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப் பிறப்பீனும் வித்து" எனுங் குறட்பா இதனைத் தெரிவிக்கிறது. வினைகள் தப்பாமே புரிந்தவரைச் சாரும் என்ற வினை பற்றிய உண்மை, "நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நொய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்"
''ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான் முந்துறும்”
எனும் குறட்பாக்களில் வெளியாகின்றன.
மாயை சிவனுக்குப் பரிக்கிரக சக்தி (வைப்பு ) எனப்படும். இஃது தூமாயை, துவாமாயை எனப் பேசப்படினும் ஒன்றேயாம். மாயை இருவேறு வகையாக இருப்பதற்கு ஒப்புப் பெரும்பாகம் செம்மையாகவும் சிறுபாகம் கருமையாகவும் விளங்குங் கன்றிமணி ஆகும். "புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியோ ருடைத்து”
என்ற திருக்குறளில் தூமாயை, துவாமாயை பற்றிய விளக்கம் துல்லியமாகப் பேசப்படுதலைக் காணமுடிகிறது.
இவைகளால் சைவசித்தாந்த இலக்கியங்களான தேவாராதித் திருமுறைகளும், இலக்கணங்களாய பதினான்கு மெய்கண்ட சாஸ்திரங்களும் தோன்ற முன் தமிழர் தம் தத்துவநிலை யாது? என்ற ஆசங்கை ஒருவாறு தீரும் நிலையுண்டு. இவ்வாய்வு இன்னும் பரந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுமுண்டு.

Page 82
ஆத்மஜோத் தேவாரம் காட்டு
பேராசிரியர் மெய்யியல் துறை
சைவத் திருமுறைகள் பன்னிரண் டா வகுக்கப்பட்ட போதிலும் முதல் ஏழு திருமுறைகை உள்ளடக்கிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு சுந்தரமூர்த்தி ஆகிய நாயன்மார் மூவராலும் பாடப்பெற திருப்பாடல்களே தேவாரங்கள் எனச் சிறப்பித்த கூறப்படுவது காணலாம். பதினெண்ணாயிரத்திற் அதிகமான திருமுறைப் பாடல்களுள் தேவாரங்க எண்ணாயிரத்திற்கு மேற்பட்டவையாக உள்ள பெரும்பாலான திருமுறைப் பாடல்கள் இறைவனி பெருமை, சிறப் புகளினை எடுத்துரைக் கு தோத்திரப்பாடல்களாகவே அமைந்துள்ளன. பத்த திருமுறையான திருமூலரின் திருமந்திரம் தோத்தி பாடலுக்குரியன் என்கின்ற போதிலும் சாத்திர நின சார்ந்ததாகவும் அமைந்துள்ளது. திருமந்திரம் போன்றன சாத்திரமரபிற்குரியதெனினும் ''தேவாரம்” எனு எல்லைக்குள் நிற்கும் நிலையில் இவ்வாய்வி விலகியமைகின்றன. இறையியலின் இயல்பு தன்ன போன்றவை உள்ளடங்கிய இறுக்கமான விளக்கங்க சமய சாத்திர நூல்களில் தெளிவுற அமைந்தம் மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படும் சை சித்தாந்த நூல்கள் இத்தன்மையினை ஒழுங்குமுறையி எடுத்துரைப்பது காணலாம். இச்சாத்திர நூல்களுக் முற்பட எழுந்த தேவாரங்களில் இறை தத்துவம் சார்ந் எண்ணக்கருத்துக்களே அழுத்தம் பெற்றிருந்த
என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இறைவனது நிலைப்பாடானது தேவா முதலிகளால் பலவகையில் எடுத்துரைக்கப்படுகின்ற இறைவன் எவ்வகையில் அறியப்படத்தக்கவன் என்ப முதற்கண் எமது சிந்தைக்குரியதொன்றாகும். இன தத்துவமானது ஆன்மதத்துவம் போல் பெளதிக அதீத தத்துவமாக எடுத்துரைக்கப்படுவதொன்றாகும். பெளதி அதீத தத்துவத்திற்குரிய இறைவன் பெளதிகம் சார்ந் உலகியல் வாழ்வியல் எவ்வகையில் எடுத்துரைக்கப்ப வல்லவன் என்பதும் அதனை எவ்வகையில் நாய மார்கள், குறிப்பாகத் தேவார முதலிகள் பயன்படுத்தி என்பதும் அறிதற்கரியதாகும்.
இறைவன் காட்சிக்குரியவனோ அல்ல அறிதற்குரியவனோ? அல்லது உணர்த்தற்குரியவனே எனும் கேள்விகள் இறைவிசாரத்தில் எழுவதொன்றாகு நாயன்மார்களின் கூற்றுக்கள் பலவும் இவ்விறை விச வினாக்களை எழுப்பி நின்றமை காணலாம். காணொன வண்ணத்தின், அளக்க ஒண்ணா வண்ணத்தடிகள் அளந் து காண் கிலா, அளவிடல் அரியவல அளப்பரியதாய் நின்று, அறிகிலா அரியவர் , அறியா சீலத்தவன், அயனுமால் அறிவரியீர், அறியா நெ

மணிவிழா மலர்
நம் இறைதத்துவம்
நா. ஞானகுமாரன் D, யாழ். பல்கலைக்கழகம்
ள
பிற பக்
க்கு
மவ
ஓம்
2.
பி.
2 2 G 2.
க
அறிவரிய சோதியானே, இருவர் அறியா இறை, அறியாமை எரியாகி, அடிமுடி காணார், அளப்பரிய அறியா வண்ணம், தோற்றமும் அறியாதவர், மாலும் பிரமனும் அறியா மாட்சியான், எனும் கூற்றுக்கள் இறைவனானவன் அறிதற்கரியவன் எனும் மாண்பினைப் புலப்படுத்தி நிற்பதாகும்.
மேலும் காட்சியால் அறியான், காண்கிலா ன.
அண்ணல், காண்கிலா செல்வன், காண்டல் அறிதற்கரியவன், காண்பதற்கரிய அண்ணல், காண்பதற்கரிய பரிசினன், காண்பதற்கரிய பரஞ்சுடர், காண்பதற்கரிய பெரியர், காண்பாதற்கரிய பெருமான், காணா வொண்ணாத் தெரியவன், காணாப் புண்ணியனே, காணாப் பெருமையனே, காணா இறையானே, காணா எந்தை, காணா ஆதியினான் 'தேடியுங் காண்கிலா மலரடியினை, தொழுது காண்கிலார், நோக்கரியான் எனும் சொல்லாட்சிகள் இறைவனானவன் புலக்காட்சிக்கு அரியனாய் விளங்குகின்றவன் என்பதனைத் தெளிவுறுத்தி நிற்கின்றன.
அதேபோல உணர்வரியான், உணர்கிலாப்பெம்மான் எய்த ஒண்ணா இறைவன் சொல்லிப் பரவித் தொடர் ஒண்ணாச் சோதி' என எடுத்தாழும் சொல்லாட்சிகள் இறைவன் உணர்தற்கும் அரியவன் எனும் தகைமையைப் புலப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறு இறைவன் அறிவினால், காட்சியினால், அறியப்படாதவனாகியும் எடுத்தாளப்படுந் தன்மையை நோக்குகின்றபோது சிவன் சொரூப நிலைக்குரியவன் எனும் தன்மையை அழகுற எளிய நிலையில் எடுத்தாள்வது போல அமைகின்றது. குணங்குறிகளுக்கு அப்பாலாய், காலம் வெளிக்கு அதீதனாய் அமைகின்ற சொரூப சிவனின் இலக்கண மானது நாயன்மார்களின் மேற்கூட்டிய அடிகளினால் தெளிவுறுத்தப்படுவது நுணுகிப் பார்க்குமிடத்துத் தெளிவாகின்றது.
அதே வேளை இறைவனை விளித்து அழைக்கும் நாயன்மார்கள் இறைவனைக் காட்சிக்குரியவனாய், பேரொளியனாய், திருவுரு படைத்தவனாய், அறிதற்கும் உணர்தற் கும் உகந் தவனாய் எடுத்தாளுதல் காணுகின்றோம். இவ்வகையில் அர்த்த நாரீசுர கோலனாய் , உமாமகேஸ்வர கோலனாய் , அரவணி கோலனாய் , மயானத்துறை திருகோலனாய், விடைமேற் கோலனாய் இறைவன் பல்வகையில் அறியத்தக்க வனாகின்றான்.
மேலும் இறைவனை உருவுடையான் எனும் வகையில் 'அடியோடு முடியறியாசுழலுரு', 'சுழல் த போலுருவன்', 'அனலுருவினன்'. 'எழிலுருவினன்',
'எரிதரும் உருவினர்', 'செந்தழலுருவின் ', 'சோதி
கி தி தி தி தி.
து
76

Page 83
ஆத்மஜோதி மன வடிவிவானவன்', 'சுடர் சோதியன் 'ஒளிவெள்ளியள்' எனத் தீப்பிழம்பின் வடிவினனாகவும் எடுத்தாளப்படுகின்றான்.
இறைவனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்த வர்களாகத் தேவார முதலிகளைக் காணுகின்றோம். அவர்களின் பாடலனுபவங்கள் இவ்வுண்மைக்குச் சான்று பகர்வனவாகும்.
"தோடுடைய செவியன் விடையேறியோர்
தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசியென் உள்ளங்கவர் கள்வன்" எனும் சம்பந்தரின் கூற்றும்
“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்
சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியிற்
பால்வெண்ணீறும் இனித்த முடைய யெடுத்த பொற்பாதமும்...'' எனும் அப்பர் பெருமான் வாக்கும்
"பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளர் கொன்றை யணிந்தவனே”
என்னும் சுந்தரரின் காட்சியனுபவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. மேலும் அருளாளர்கள் தாங்கள் கண்டுணர்ந்த அனுபவத்தில் இறைவனின் திருவுருவத்தினை வர்ணிப்பதோடமையாது ஒவ்வோர் அங்கங்களையும் விபரித்து நிற்பதும் காணுதற்குரிய தாகும். கண், காது, கண்டம், கழல், கரம், தோள், சென்னி, தாள், நடை, நுதல், மார்பு, வாய், விரல், மேனி, போன்ற அங்கங்கள் விபரிப்பிற்குரியதாக அமைந்துள்ளன. மேலும் இறைவனின் உடைமைப் பொருட்களுமாக சுழல், கங்கணம், கொடுகொட்டி, உடுக்கை, கபாலம், பரசு, பாறை, பாம்பு, மாகணம், மழு, மான், சூழம், அக்குமாலை, போன்றனவும் எடுத்தாளப்பட்டுள்ளமை காணலாம். இறைவன் அணியும் அணிகலன்களும் உடன் இயைந்த பொருட்களும் சிவனின் - இயல் பினை" எடுத் துரைப் பனவாக அமைந்துள்ளன. இச்சொற்றொடர்கள் சிவனுடன் இணைந்த பல கதைகளுக்கும் உருக்கொடுக்கும் கருவாயிற்றெனலாம்.
சுந்தரகாசுரனைச் சங்கரித்தது, காமனை எரித்து. காலனை உதைத்தது, சலந்தரனைக் கடிந்தது தக்கன் வேள்வி தகர்த்தது, திரிபுரம் எரித்தது பிரமன் தலை கொய்தது, யானை உரித்தது
போன்ற நிகழ்வுகள் தேவார காலத்திற்கு முன்னரே மக்களிடம் வழக்கிலிருந்த செய்திகளை எடுத்துரைப்பது போல அமைந்திருந்தன. இறைவன் பற்றிய பல்வேறுபட்ட புராண உபநிடத வேதச் செய்திகள் அக்கால மக்களிடம் அமைந்திருந்ததென்பது
77

விழா மலர் தெளிவாகின்றது. இவை பலவும் சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆகியோரது பாடல்களில் பெரிதும் பரவியிருக்கின்றன. இறைவன் பிறையணிந்தமை, - மாதொருபாகனாய் உள்ளமை, பைந்தலை நாகம் வைத்தமை, நஞ்சுண்ட கண்டனான்மை, இமையா முக்கண் கொண்டமை போன்றனவும் பல தடவைகள் எடுத்தாளப்படுதல் காணலாம்.
அனந்த பண்புகளையும் அற்புத உண்மை களையும் கொண்டமைந்த இறைவன் எங்கிருக்கின்றான் என்றால் பல நூற்றுக்கணக்கான தலங்களில் தங்குபவனாக எடுத்தாளும் தன்மையைத் தேவாரங்களில் காண்கின்றோம். தலங்கள் தோறும் சென்று இசையோடு திருப்பதிகங்கள் பாடி இறைவனை நாடிச் சென்றமை காணலாம். காட்சிக் கெளியனாய், தோடுடைய செவியனாகச் சம்பந்தருக்குத் தோன்றிய இறைவன் 'காளத்தியான் கயிலாயத்து உச்சியுள்ளான் அவன் என் கண்ணுள்ளானே' என அப்பரால் சுட்டப்படும் வகையில் காட்சிக்கு எளியனாக எடுத்தாளப்படுகின்றான். இங்குதான் குணங்குறிகளுடன் இணைந்ததான தடத்தநிலைச் சிவனைக் கைவரப்பெறுகின்றோம். 'மாலயனும் தேடி' இன்னங்காணாதார் நேரடியாகக் காட்சி கொடுத்தருள் வல்லவன் எனச் சுட்டும் தரத்துக்குரியனாக இறைவன் விளங்குவது தெளிவிற்குரியதாகின்றது.
காட்சிக் கெளியனாய் விளங்கும் இறைவன் அன்பர்களின் மனத்தில் உள்ளான் என்பதும் வெளிப்படை. இறைவன் 'தேனுமாய் அமுதுமாய் நின்றான் தெளி சிந்தையுள்' எனச் சுட்டும் அனுபவம் தெளிந்த சிந்தையுடையோருள் இறைவன் இருப்புக்குரியவனா கின்றான் என்பதனை எடுத்துக்காட்டும். 'கருவார் மனத்துள்ளான்' என்றும் 'தாயினும் நல்ல தலைவ ரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள் வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர்..' என்றும் வரும் சொல்லாட்சிகள் சிந்தையில் கொள்வான் சிந்தையில் உறைபவனாக இறைவன் அமைகின்றான் என்பதனை உணர்த்தி நிற்கின்றன. இக்கருத்தின் சாயலையே 'எம்பெருமான்' என எடுத்துரைப்பதும் நோக்கலாம்.
காட்சிக்குரியனவாயும் அறிதற்குரியனாயும் உள்ளத்தில் - உணர்தற்குரியனாயும் எடுத்தாளப்படும் போது அறிவாராய்ச்சியியல் அளவையில் நிலையில் எத்துணைதூரம் எடுத்தாளலாம் என்பது அறிதற் குரியதாகும். பெளதிக நிலைசார்ந்த பொருட்களின் உண்மைத்துவத்தை ஏற்பது போல பெளதிக அதீத நிலைசார்ந்த இறைவனை அளப்பது பொருத்தமில்லை யென்பதும் ஒருபுறம் எடுத்தாளப்படுவது காணலாம். காட்சி அனுமானம், ஆப்தம் எனும் பிரமாணங்களை அறிதற்குரியவையாகக் கொண்டமையை அருணந்தி சிவாசாரியார் அருளினா லாகமத்தே யறியலா மளவினாலும் தெருளிலாச் சிவனை ஞானச் செய்தியாற் சிந்தையுள்ளே மருளெலா நீங்கக் கண்டு வாழலாம்' எனத் தெளிவாக இறைவனை மயக்கமற அறிதல்

Page 84
தகைமையைச் சுட்டுகின்றார். அருமறை எடுத்துணர்த்தி நிற்கின்ற இறைவனை நாவுக்க சுட்டுகையில்:
'அருமறையினகத்தானை யணுவை யார்க் தெரியாத தத்துவனை. என அழகுற எடுத்தாளு காணுகின்றோம். இவ்விறைவனை அறிதலில் உ இடர்பாட்டினை உணர்த்த திருஞானசம்பந்தர்,
“ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக் சோதிக்க வேண்டா சுடர் விட்டுள்ளான் எங்கள் சோ என எடுத்துரைப்பதும் இங்கு நோக்கத்தக்கதா இறைவனை வெறும் அளவைப் பிரமாணங்களின மாத்திரம் சோதித்தறிய முற்படுவது எத்துணைது பொருத்தமானதென்பது இவ்வடிகளினால் கேள்விக்கு தாகின்றது. அதேவேளை அபரஞானச் செய்திகை பரஞானச் செய்தியினின்று வேறுபடுத்தி மயக்கப வகையில் அறிவைப் பெற்றுக் கொள்ளுதல் சாத் மென்பதும் தெளிவானதாகும். தென்குடித்திட்ை திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் ஆறில் பொய்யகத்து ஐயுணர் வெய்தி மெய் தேறினார்’ எடுத்தாளும் சொல்லாட்சியானது பொய்ப்பொ( மேலுள்ள அளவை அறுத்து மெய்ப் பொருை தெளிதற்பொருட்டு ஐயமுற்று மயக்கம் நீ! மெய்யுணர்வைத் தேர்ந்து தேறுதல் அவசியமா என்பதற்கு அழுத்தம் கொடுத்து நிற்கின்றது.
காட்சிக் கெளியனாய், சிந்தைக்கரியன மனத்திலுள்ளான் என்றெல்லாம் கண்ட நாம் இறைவ6 வியாபத் தன்மையையும் பல்வகையில் தே6 முதலிகளால் எடுத்தாளப்படுதல் காண்கின்றே உலகாயப் விளங்குகின்றான் என இறை6 எடுத்தாளப்படுகினற்ான். 'அண்டமும் ஆகி நி அழகன்', 'உலகவன்', 'உலகத்துள் ஊன் உயிரா ‘உலகுக்குயிராய் நின்றான்', 'உலகெல்லாம் சோதிய நின்றான்', 'எங்கும் ஆகி நின்றான்', 'எங்குமாயிருப்பா ‘உலகெல்லாம் சோதியாய் நின்றான்', 'எங்கும் நின்றான் ‘எங்குமாயிருப்பானி யாவையுமாய ஈச எனவாகப் பல்வகையில் இறைவனை எடுத்தாளுகி சொற்றொடர்களைக் காணுகின்றோம். இவ்வகை இயற்கையோடு இயைந்து இயற்கையில் கரந்துறை கடவுளாகப் போற்றப்படும் வகையில் எங் வியாபித்துள்ளமை தெளிவாகின்றது. மேலும் இறை வியாபமும் பூரணம் முழுமையும் கொண்டதெ எண்ணக்கருவும் எடுத்துரைக்கப்படுவது நோக்கத் கதாகும். முழுவதுமாய் மூர்த்தி, மூலமதாகி நின்ற மூலமாய முதல்வன் எல்லாமாய எம்பெருமான்', 'எல மாயவன்', 'உயிருக்குயிராய் ஆங்காங்கே நின்ற கருவினாலன்றியே கருவெலாமாயவன்', 'புறத்தி அகத்துளர் எனும் சொற்பிரயோகங்கள் இறைவன் எங் வியாபித்து முழுமைக்கும் மூலநிலைக்கும் உரியத மெய்பொருள் எனவாகின்றது. சிவன் முழுமைய நிறைவான உண்மைப்பொருளாக எடுத்தாளப்படுவது
 

ால் ாரம் ரிய
)6 TIL Dற்ற
)Ljö ÖITss
ருள் ளத் க் கி
Tեւն, னின்
5) I ITUJ ாம்.
}யும் கும் வன் னும் 3தக் ான்', b6)IT
ான். னெர் கும்
5ᎱᎢ60I
JT60T
டன்
-(78
வழிபாட்டிற்குரிய தன்னிகரில்லாக் கடவுளாகவும் போற்றப்படுகின்றான். இவ்வகையில் இறைபற்றிய எண்ணக்கருத்தானது தத்துவநிலைக்கும் சமயநி லைக்கும் பொருந்தும் வகையில் எடுத்தாளப்படுவது காணலாம்.
இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வழிபட்டு முத்திப்பேறு பெறும் பொருட்டே யாகும் என்பார் ஆறுமுக நாவலர். இப்பிறவியானது கிடைத்தற் கரிய பேறு என மூதவைப்பாட்டியும் எடுத்துரைப்பது காணலாம். அரிதான இப்பிறவியினுடாக இவ் வாழ் வில் கிடைத் தற் கரிய இலக் கினை அடைதற்பொருட்டு வாழ்தலே சிறந்ததென்பதனை சைவசமயம் காட்டி நிற்பது காண்கின்றோம். 'வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’ எனச் சுட்டும் அப்பர் அடிகள் பிறப்பின் முக்கியத்துவத்தினை எடுத்தாள்வது அவதானிக்கத் தக்கதாகும். இப்பிறவி யானது ஒவ்வொரு சீவராசிகளையும் உயர்வடையச் செய்யவல்லதொரு கருவியாகும். அதனால்தான் சம்பந்தர் வாழ்வியல் போக்கை நோக்கி,
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
என எடுத்துரைப்பது காண்கின்றோம். 6 TIL Dg5 சுயசித்தத்திற்கமைய வாழ்வை வளம்படுத்துவதையும் வாழ் வின் வளத்தை அறியாது வீணடித்த அனுபவங்களையும் நாயன்மார் வாக்குகள் வழி கண்டுணரலாம்.
“பாலனாய் கழித்த நாளும் பனிமலர் கோதைமார்தம் மேலனாய் கழித்த நாளும் மெலிவோடு மூப்புவந்து கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இல்லாது கேட்டேன்’
என எடுத்துரைக்கும் பாங்கு வாழ்வில் குறிதவறிய போக்கினைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகின்றது. அதேவேளை இறைவன்பால் மிகுந்த அன்பு கொண்ட சம்பந்தர்,
திருந்தடி மறக்குமாறில்லாத என்னை மையல் செய்திம் மண்ணில் மேல் பிறக்குமாறு காட்டினாய்
என இறைவனையே காரணம் காட்டி விளக்கி நிற்கும் சந்தர்ப்பங்களும் அறிதற்குரியதாகும். பிறப்பானது வாழ்வாங்கு வாழ்வதற்குரிய ஒரு கருவியாக அமைகின்ற அதேவேளை, கர்மத்தின் விளைச்சலாகவும் விரும்பிட முடியாச் சுமையாகவும் அமைதல் கண்கூடு.
பிறவாமை வேண்டும்' என இரந்து கேட்கின்ற சந்தர்ப்பங்களும் தேவார முதலிகளது வாழ்வியலில்

Page 85
காணக்கூடிய தொன்றாகும். வாழ்வியலில் காணப்பெறும்
யதார்த்தத்தை உரைக்கும் அனுபவங்களும் குறிப்பிடத் தக்கனவாகும்.
தோற்ற முண்டேல் மரணமுண்டு துயரமான வாழ்க்கை மாற்றமுண்டேல் வஞ்சமுண்டு நெஞ்ச மனத்திரே எனவும்
‘மணமென மகிழ்வர் முன்னே மக்கள்தாய் தந்தை சுற்றம் பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன்’ எனவும்
'பொய் தன்மைத்தாய் மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும் வித்தகத் தாய வாழ்வு வேண்டி நான் விரும்புகில்லேன்' எனவும்
சுந்தரமூர்த்தி நாயனார் செப்பும் கூற்றுக்கள் நோக்கத் தக்கவையாகும். குறிப்பதாக, திருவெதிர் கொள்பாடி பதிகத்திலும் திருவாரூர் திருப்பதிகத்திலும் இத்தன்மை சான்ற பாடல்களை மிகுதியாகக் காணலாம். பிறவியை மதித்திடுமின்’ எனும் அப்பர் கூற்றுக்கும் ‘மண்ணில் நல்ல வணிணம் வாழலாம் எனும் சம்பந்தர் கூற்றுக்குமிடையில் ‘வாழ்வாவது மாயம் இதுமண்ணாவது திண்ணம். பாழ்போவது பிறவிக்கடல்' எனவும்
நரம்பினோ டெஞம்பு கட்டி
நசையினேடிசைவொன்றில்லாக் குரம்பை வாய்க் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன்
எனவும் கூறும் அனுபவங்கள் வாழ்வில் கண்டுணரும் இடர்பாடுகளைக் கோடி காட்டி நிற்கின்றன. அதே வேளை,
‘மண்ணின் மேல் மயங்கிக்கிடப்போனை வலியவந்து எனை ஆண்டு கொண்டானே.’ எனச் சுந்தரர் வியந்துரைப்பது இறைவன் துயர் களையும் காரணியாக விளங்குவதனை உணர்த்துவதாகின்றது. ܢܓܥ
"ஞானத்திரளாய் நின்றுபெருமான் நல்ல அடியார் மேல் ஊனத்திறனை நீக்க மதுவும் உண்மைப்பொருள் போலும். a.
என திருவண்ணாமலைப் பதிகத்தில் உரைப்பது அவதானிக்கத்தக்கது. இங்கு அடியவர்கள் துன்பம், இடர் களைந்து அருள் பரிபாலிக்கும் அருளாளராக இறை அமைவது அருளாளர் அனுபவத்தினின்று வெளிப்போதல் காணலாம். அல்லல் அறுத்து ஆக்கியதே' எனவும் தனதடிவழிபடும் அவரிடர் கடி. எனவும் நம்மை உய்யும் வகை புரிந்தான் எனவும் திகழ் சேவடி சிந்தை செய்து பரவினார் பாவமெல்லாம்
●E
 

பறையப்படர் பேரொளியே டொருவனாய் நின்ற பெருமானே’ எனவும் 'பொய்கள் புறம்போக்கி சுத்தி தரித்துறையும் சோதி’ எனவும் எடுத்தாளப்படும் சொல் லடிகள் இறைவன் தன்னடிய வர்கள் இடர்களையும் பணியைக் கொண்டமைகிறான் என்பதனை உணர்த்தி நிற்கும். அருளாய செல்வன்', 'அருளார்ந்த அண்ணல்’, ‘அருள் மேனி நின்ற அரன், நற்றவம் அருள் புரிநம்பனை', 'பக்தர்களுக்கு அருள் செய்தான் எனும் சொல்லாட்சிகள் இறைவனின் அருளாட்சிக்கும் சான்றான பதங்களாகின்றன. இத்தன்மை கருதியே வழிபடும் அடியார் குறைவிலா பதம் அணை தர அருள் குணமுடை யிறை எனச் சுட்டி நிற்றலைக் காண் கின்றோம்.
இறைவன் துயர் களைந்து இன்பம் அளிக்கும் தன்மை கருதி 'தீ வினைக்கோர் மருந்தாவன்', 'தீவினை யாயின் தீர்க்க நின்றான்', 'செடிபடுவினைகள் தீர்ந்தருள் செய்யும் தீவணர், 'அடையும் வல்வினை அகல அருள்பவர்', 'தொல்லை வல்வினை தீர்ப்பவர்' எனும் தேவார முதலிகளின் அனுபவச் சொல்லடைகள் பொருள் பொதிந்ததாகின்றன. நினையவல்லார் தந்நெடுந்துயர் தவிர்ந்த எந் நிமலன்’ எனும் உண்மை பொருந்திய மூலமலப்பிணி தவிர்க்கும் பொருள் அருளனுபவத்தில் அடங்கும் என்பதனைத் தெளிவுறுத்தி நிற்கின்றது. இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் என்றும் தன்னைப் படைத்தார்க்கு இன்பங்கள் தருவானை’ என்றும் இறைவனை இன்பத்தை அருளுகின்ற மலையாக கண்டுய்த்தார்கள். இறைவனது அருட்கருணைக்கு ஏதுவாக நாம் உரிய வகையில் நடக்க வேண்டியவர்களாவோம் ஒவ்வொரு மனித உள்ளத்தின் புனிதப் பயணத்திற்கும் ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்கும் பொன்னடிகளைச் சரணடைதலே சிறந்த உபாயமாக எடுத்தாளப்பட்டமை காண்கின்றோம். தம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற வகையில் அவனையன்றி வேறு எதனையும் பாராத, கேளாத நிலையில் திருத்தொண்டில் அழுந்தி நின்றமையைக் காணுதல் சாத்தியம். 'பிழைப்பனாகிலும் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்ற நான் அறியேன்”, எனச் சுந்தரரும் புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தரவேண்டும்' என அப்பரும் கொண்ட வைராக்கியம் இறைவன் மேல் கொண்ட மாறா நிலையைப் பறைசாற்றி நிற்கின்றது.
சிவனைத் தொழுதுலகில் இழுக்குமலம் அழியும் வகையில் வாழ்வியல் அனுபவத்தையும் தத்துவம் சார் எண் ணக் கருத்துக் களையும் பொழிவனவாகத் திருமுறைகள் விளங்குகின்றன. அல்லல் பிறவி அறுப்பவனாகவும் நேச அருள் புரிந்து அன்பர்களின் வஞ்சம் கெடுப்பனவனாகவும் அன்பர்கள் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காதவனாகவும் எடுத்துரைப்பதைக் காண்கின்றோம். இறைவன் நாமம் கேட்பதும் சொல்வதும்

Page 86
கூட மகிழ்விற்குரிய செயல்களாகின்றன. இறை6 நாமத்தைக் கூறுமாறு 'சிறையாகும் மடக்கிளின அழைத்து தேனோடு பால் அளித்துப் பிறையால் திருநாமத்தைக் கேட்க விரும்பும் விழைவு இறைவ6 கொண்ட தீரா அன்பின் இறுக்கத்தைப் புலப்படு வல்லனவாகின்றது. ‘செவிகாள் கேள்மின்களோ சில எம்பிறை செம்பவள எரிபோல் மேனிப் பிரா திறமெய்போதும் செவிகாள் கேள்மின்களோ' எனு வேட்கையும் அவன் அழகுக் கோலத்தைக் கண்ணா காணி பதும் அவன் பாதங்களைத் தலைய வணங்குவதும் புனிதத்திற்குரிய இடங்களில் பா பதிவதும் அவனுக்குரிய பணிகளை ஆற்றுவதும் உட உள்ளத்திற்கு உவகைக்குரிய பணிகளாகின்ற இவ்வாறான செயல்களுக்கு வழிகாட்டும் வகைய தேவார முதலிகள் காட்டி நிற்கும் மூர்த்தி, தல, தீர்; மகிமைகளும் மனித வாழ்வின் ஆன்மீக வளப்பத்திற் வழிகாட்டும் மார்க்கங்களாக மாறி நிற்பது காணல இத்தன்மையின் சாயலில் 'செம்மையுள் நிற்பாராகி சிவகதி விளையும் தானே’ எனும் அப்பரின் அடிக பொருள் பொதிந்தவையாக அமைவது கண்கூடு.
உயர்வுடைப்பரம் பொருளாய் விளங்கும் சிவனி தன்மை, இயல்பினை எடுத்தாண்ட தேவார முதலிக ஆண் மாக்கள் இறைவனை அன் போடணைத் உயர்வெய்தற்குரிய மார்க்கங்களையும் எடுத்தாண்டன காணுதற்குரியதாகும். இவ்வான்மாக்கள் அழியா தன்மை கொண்டவை என்பதையம் ஊழிக்காலத்தி ஒடுங்கியவாறு இறைவனால் தோற்றுவிக்கும் எனு உண்மையும் திருவானைக்காத் திருப்பதிகத்தி எடுத்துரைக்கப்படுவது காணலாம்.
"ஊழியபூமி வையகத்து உயிர்கள் தோற் வானொடும் ஆழியானுங் காணி கிலர்’ என சுட்டப்படுகின்றது. இவ்வாறு ஆன்மாக்கள் தோற்ற பெற்ற போதிலும் ஆன்மா கொண்ட உடலில் கருவிக எத்தன்மையதென்பதும் திருநாவுக்கரசு நாயனாரா அழகுற எடுத்துரைக்கப்படுவது நயக்கத்தக்க தாகு
“பொத்தல் மண் சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்தல் என்று வியந்திடல் ஏழைகாள் சித்தர் பக்தர்கள் சேர்திருக் கானுாரில் அத்தன் பாதம் அடைதல் கருமமே”
எனக் குறிப்பிடுதல் வழி பொத்தல் மண்சுவர்ப் பொல்ல குரம் பையாக எடுத் தாள் வதுடன் அதை மெய்யென்றிடுதல் தவறு என்பதனை 'ஏழைகாள்’ எ விழித்து அழுத்தம் திருத்தமாகச் சுட்டிநிற்பது காணலா ஐம்புலக் கருவிகளும் பயனற்ற தென்பதை வலியுறுத்தும் வகையில் ’அத்தன்பாதம் அடைத கருமமே என இறைவனை அடைதலே உயிர்களி முக்கிய இலக்கு என்பதனை விளக்குவதாகின்ற இங்கு ஆன்மாவின் நிலையும் ஆன்மா கொண்
 

ல்ெ
-80
கூட்டுறவின் நிலைப்பாட்டைத் தெளிவாக்குவதுடன் ஆன்மாவின் அடைதற்குரிய அடிப்படையையும் எடுத்தாள்வதாக மேற்கூட்டிய திருப்பாடல் அமைகின்றது.
மேலும் திருநாவுக்கரசுநாயனார் ஆன்மாவின் உண்மை நிலையைத் தக்க உதாரணங்களுன் எளிமையாக விளக்கி நிற்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.
வளைத்து நின்ற ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கஞ்
செய்யத் தளைத்து வைத்து உலையை ஏந்தித் தழல் எரிமடுத்த
நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமைபோல் தெளிவு
இலாதேன் இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான்
தோன்றினேனே'
என ஆன்மாவின் நிலையை அழகுறப்படம் பிடித்துக் காட்டுகின்றார். வஞ்சப் புலன்களும் ஐந்து கள்வர்களாக எனை பயமுறுத்தும் வகையில் சுற்றி வளைத்து அடிமைப்படுத்தி நிற்கின்ற தகைமையில் உலை நீரில் விடப்பட்ட ஆமையானது சூடு தெரியுமட்டும் தனக்கு நடக்கவிருக்கும் நிலை புரியாது திளைத்து ஆடுகின்ற ஆமைபோல் தெளிவில்லாத வகையில் ஆன்மாவாகிய நாம் துன்புறுகின்ற வகையில் வழி தெரியாது செயற்படுகின்றேனே" என்பதனை விளக்கி எனக்கு அடிமையாக நின்று செயற்பட வேண்டிய புலன்கள் என்னை அடிமையாக்கி என் செயற்பாட்டினைத் தெளிவற்ற நிலைக்குட்படுத்தி நிற்கின்றமையை மேற்படி பாடலில் அப்பர் அழகுற எடுத்தாளுகின்றார்.
ஐம்புலன்களின் வஞ்சவலைக்குள் அகப்பட்டு உழலுகின்ற தன்மையில் சிவனின் சிறப்பினையும் தன்மையினையும் உணர வொட் டாத தன்மை யமைகின்றது. இதனாலேயே இறைவனை உணர்ந்து அறிதலென்பது அரிதற்குரிய ஒன்றாக அமைந்து விடுகின்றது.
'பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருள் பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மையான்' எனும் வகையில் தனக்குவமையில்லாதவனாய் இறைவன் விளங்குகின்றான் “இப்படியான இந்நிறத்தின் இவ் வணத் தின் இவன் இறைவன் எண் றெழுதிக் காட்டொணாதே என எவராலும் காட்ட வொண்ணாதவாறு கருவி கரணங்களுக்கு அப்பாற்பட்டு இறைவன் நிற்கின்றான். இவ்வாறான இறைவனைத் தேடும் ஆன்மாக்கள் பற்றி,
கூவல் ஆமை குரை கடல் ஆமையைக் கூவலோடு ஒக்குமோ கடல் என்றால் போல்

Page 87
பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே எனத் திருநாவுக்கரசு நாயனார் எடுத்தாளுதல் காணலாம். கிணற்றில் வாழும் ஆமையானது கடலில் வாழும் ஆமையைக் கண்டு கடல் கிணற்றைப் போலிருக்குமோ எனக் கேள்வி கேட்டது போல ஆன்மாக்களானது தம்தம் இயல்பும் தன்மைகளும் பெரியதென்று மயங்கித்தாமே பெரிதென எண்ணும் சிறுமைத் தன்மை கொண்டவை என எடுத்தாள்வதாகின்றது. இங்கு சிவனே பெருந்தன் மைக்குரியவ னென்பதும் விளக்கத்திற்குரியதாகின்றது.
அத்தன் பாதம் அடைதல் கருமமே என அப்பர் எடுத்தாண்ட போதிலும் அருளே வடிவாய் அன்பர்க் கன்பராயிருக்கும் சிவனை ஆன்மாக்கள் நாடித் தேடுகின்ற வேளை படும் நிலையையும் எடுத்துரைப்பது நயத்தற்குரியதாகும்.
‘உறுகயிறு ஊசல்போல ஒன்றுவிட்டு ஒன்று பற்றி மறுகயிறு ஊசல் போல வந்து வந்து உலாவும் நெஞ்சம் பெறுகயிறு ஊசல் போலப்பிறை புல்கு சடையாய் பார்த்து அறுகயிறு ஊசலானேன் அதிகை வீரட்டனாரே'
என்ற பாடல் வழி நெஞ்சத்துக்கு ஊஞ்சலை நல்லதொரு உவமையாக்கி எளிமையாக விளக்க முனைகின்றார். ஊஞ்சலானது ஓரிடத்திலென நில்லாது இங்கும் அங்குமாக மாறி மாறிச் சென்று கொண்டிருக்கும் இயல்புடையது. அதுபோல நெஞ்சமும் ஓரிடத்தில் நிலைத்து நில்லாது அங்குமிங்குமாய் அலைந்து திரிந்திடும் இயல்புக்குரியதாய் அமைகின்றதென்கிறார். இவ்வாறு மாறி மாறிச் சென்றிடும் ஊஞ்சல் அறுகின்றவிடத்து நிலமே அதற்குச் சொந்தமாகின்றது. அதுபோல ஆடித்திரிந் தலை பாயும் நெஞ்சிற்கு இறைவன் திருவடியே முடிவில் சொந்தமென்பதனைத் தெளிவுறக் காட்டி நிற்கின்றார். இறைவன்மேல் மாறா அன்பு கொண்ட அடியவர்கள் அயரா அன்பின அரன்கழல்செலுமே எனும் சிவஞானபோதக் கூற்றுக்குச்
உசாத்துணை நூல்கள்:
திருஞானசம்பந்தசுவாமிகள் தேவாரத்திருப்பதிகங்கள் (முதல் திருமுறை) ஞானசம்பந்தர் பிரஸ், தருமபுரம் 1953. Lids 626 2 திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப்பதிகங்கள்
(இரண்டாம் திருமுறை - தருமபுர யாதீனம் 1954. L. 596 3. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப்பதிகங்கள் (மூன்றாம் திருமுறை) தருமபுரம் 1955. ப. 668 4. திருநாவுக்கரசுநாயனார் தேவாரப்பதிகங்கள்
(நான்காம் திருமுறை) தருமபுரம் 1957 ப. 848 5. திருநாவுக்கரசு சுந்தரர் தேவாரப்பதிகங்கள்
(திருமுறை 4, 5, 6, 7 திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 1974
-8
 

சான்று கூறுவதுபோல இறைவனடி அணைவர் என வலியுறுத்தப்படுதல் காணலாம்.
ஒருமைத்துவம், இருமைத்துவம், பன்மைத்துவம் என வெவ்வேறுபட்ட நிலைகளில் உண்மைத்துவத்தை விளக்குகின்ற சிந்தனைப் பாங்கிடையில் பதி, பசு, பாசம் எனும் முப்பொருளின் உண்மையை எடுத்தோதி நிற்கின்ற தேவாரங்கள் இறைவன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கும் நிலையில் அத்துவித உறவுகொண்டதேனும் விளக்கத்திற்குரிய கருவினை எடுத்தாள்வது நோக்குதற்குரியது.
'ஒன்றாகாம லிரண்டாகாமல் ஒன்றுமிரண்டு மின்றாகாமல்’ என அருணந்தி சிவா சாரியார் எடுத்தாளும் கருத்தானது திருஞானசம் பந்தரினால்
“ஈறாய் முதன் ஒன்றாய் இருபெண் ஆண் குணம் மூன்றாய் மாறா மறை நான்காய் வருபூதம் அவை ஐந்தாய் ஆறாய் சுவை ஏழோசையோடு எட்டுத்திசை தானாய் வேறாய் உடனானன் இடம் விழி மிழலையே
என எடுத்தாளப்படும் திருப்பாடலில் பொதிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு தானாய் வேறாய், உடனானன் எனும் மூன்று நிலைகளும் ஒன்றாய் வேறாய் உடனாய் அமையும் இறைவனின் அத்துவித உண்மையை எடுத்துரைப்பதாகின்றது. மேலும் ‘ஒருவனாய் நின்ற பெம்மான்', 'ஒருவனே பலவாகி நின்றதொரு வண்ணமே’, ‘ஒன்றும் பலவுமாய வேடத்தொருவர்’, ‘மறைகள் முற்றுமாகி வேறுமானான், 'மூவராயு மிருவராயு முதல்வன் அவனேயாம்', என்ற சுந்தரர் சொல்லடைகள் இறைவனின் ஒன்றாய், வேறாய் உடனாய் நின்ற தன்மைகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. இறைவனுடன் ஆன்மா இரண்டற்று அத்துவிதமாய் இணைதலே முத்தி எனும் பேரின்பப் பெருவாழ்வாகின்றது.
மகாதேவன், கே. (பதிப்பு) 6. மூவர் தேவாரம், தலமுறை, சென்னை 1988
செங்கல்வராயபிள்ளை, வ. 7. தேவார ஒளிநெறி (சம்பந்தர்), திருநெல்வேலி
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1963 8. ராவ்பகதூர், செங்கல்வராயபிள்ளை, வ. க. தேவார
ஒளி நெறிக்கட்டுரை (அப்பர்) திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1955

Page 88


Page 89
இந்து சமயப் பேற
தரிசனம்
அர்ச்சனை மாலை
என்னை எனக்கறிவித்த எங்கள் குருநாதர்
திருமுறைக் கதைகள்
முத்தான தொண்டர்
புதிய சைவ வினாவிடை(முதலாம் புத்தகம்)
தங்கம்மா நான்மணிமாலை
சிவயோக சுவாமிகளின் அருள்மொழிகள்
பன்னிருமாத நினைவுகள்
கனடாவிற் சைவ சமயம்
ஈழத்துச் சித்தர் குடைச்சுவாமி
சைவத் திருமுறைகளின் விழுமியம்
புதிய சைவ வினவிடை (இரண்டாம் புத்தகம்
நல்லூர் நாற்பது
யோகி ராம் சுரத்குமார்
திருமுறைச்செல்வம்
தேவைக்கேற்ற திருமுறைத்திரட்டு
விதியை வெல்வது எப்படி திரு கு
கந்தன் கதை
குரு வழிபாடு

"வை வெளியீடுகள்.
ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள்
ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள்
ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள்
ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள்
கவிஞர். வி. கந்தவனம்
கவிஞர். வி. கந்தவனம்
கவிஞர். வி. கந்தவனம்
மார்க்கண்டு சுவாமிகள்
ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள்
கவிஞர் வி கந்தவனம்
பேரறிஞர் முருகவே பரமநாதன்
பேரறிஞர் முருகவே பரமநாதன்
) கவிஞர் வி கந்தவனம்
கவிஞர் வி கந்தவனம்
ஆத்மஜோதி முத்தையா சுவாமிகள்
சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்
(தொகுத்தவர்) கவிஞர் வி கந்தவனம்
வைத்தியநாதன்சைவசித்தாந்த சாகரம்)
கவிஞர் வி கந்தவனம்
கவிஞர் வி கந்தவனம்

Page 90
அகத்தியரும் விநாயகரும்
முருகப்பெருமானும் அவ்வையாரும்
சிந்தனைத் தேன் துளிகள்
ஞானவிளக்கு ബ
விநாயக வெண்பா
விநாயக விருத்தம்
சுவாமி சதானந்தர் நற்போதனை
கந்தனே கலியுகத்தில் கண்கண்ட தெ
தெய்வீக வாழ்க்கை
முப்பெரும் சித்தர்கள்
திருமுறைக்காட்சி
கேதார பத்திரி யாத்திரை
கந்தக் கதம்பம்
மூண்றாவது கண்
பயன்தரவல்ல திருமுறைப்பாக்கள்
மகான் காசிவாசி செந்திநாத ஐயர்
ஞானவிளக்கம்
நாவலர் வழியில் தமிழ் அறிஞர்
ஈழத்துச் சித்தர்கள்
நிழலின் பின்னே மனிதன்
புதிய சைவவினாவிடை பாகம் 1-2
இந்து சமயப் பேரவை
தொடர்பு கொள்ளவே
41

கவிஞர் வி கந்தவனம்
கவிஞர் வி கந்தவனம்
மாதாஜி புலவர் சி விசாலாட்சி
சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் கவிஞர் வி கந்தவனம்
கவிஞர் வி கந்தவனம்
-പ്ര தொகுப்பு சபா சிவானந்தன்
ய்வம் ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள்
ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள்
ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள்
ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள்
ஆத்மஜோதி நா. முத்தையா சுவாமிகள் தொகுத்தவர் ஆத்மஜோதி நா முத்தையா சுவாமிகள்
இரசிகமணி கனக செந்திநாதன்
தொகுத்தவர் சைவதுரந்தரர் வி கந்தவனம்
மூதறிஞர் க. சி குலரத்தினம்
ஆத்மாஜோதி நா. முத்தையா சுவாமிகள்
யோகேஸ்வரி கணேசலிங்கம்
ஆத்மாஜோதி நா. முத்தையா சுவாமிகள்
ஆத்மாஜோதி நா. முத்தையா சுவாமிகள்
2 கவிஞர் வி. கந்தவனம்
யின் வெளியீடுகள் தேவையானோர்
பண்டிய தொலைபேசி இலக்கம்
6-724-6240

Page 91


Page 92
இந்து சமயப் பேரை
புதிய கட்டிடத்தி செயல்படுத்த
1. தமிழ், சைவப் பாடசா
2. தமிழில் இறைவழிபாடு
శస్ట్రేష్ట శ్లేష్టిక్ష్మి
3. சைவ அறிவைப் பரப்
இதழைத் தொடர்ந்து
ܨ ܕ ܕ ܨ1
8. தி
ш
書
9. மின்னம்பல வாயிலாக
- 襄 :8
 
 
 
 
 
 
 

-
3;༈ ༈ ། °°ܨܝܓ݂ܬܬܪ
ܕ ܨ ܐ ܐ ܐ ܐ ܝܬ݂ *
*తకోశ 曇。 . ܢ ', 鹭:' ? 17 ܢ ܐ
வ கட்டிட நிதிக்கு உதவுங்கள்
கில் இந்து சமயப் பேரவை நப் போகும் திட்டங்கள்
、。 ܘܐ ܢ܂ களைச் செய்தல்
3 ܐܝܟ ܡܐ:
வெளியிடுதல்
萎
இலக்கிய நூல்களை வெளியிடுதல்
பற்றத்துக்கு உதவுதல்
இல்லங்களுக்கு உதவுதல்
碧 *、 இ
ఫ్ర
பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல்
:1 11 : 3 ܠܣܛܪܣܛܝܵܢܹܐ కేక్లో జే
* 喜
է Ելք