கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாஓ சே-துங்: ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள் என்பது பற்றி

Page 1
மாஓ ே
"ஏகாதிபத்தி எல்லாப் பிற்பே காகிதப் புலிகள்"

ச - துங்
- #III
த்தியமும் எக்காளர்களும்
என்பது பற்றி

Page 2

( "ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள்" என்பது பற்றித் தோழர் மாஓ சே-துங்
3 44
மக்கள் தினசரி ஆசிரியர் குழு -
(1958, அக்டோபர் 27)
K't |13
- 1 பி !!
பி3!.. 4.பாப்ப்பா போம்
பிரஜா பிரசுராலயம்,
கொழும்பு-10.

Page 3
முதற் பதிப்பு: 1967, நவம்பர்
கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தை இல. 19-ல் உள்ள பிரஜா பிரசுரா லயத்தில் கடமையாற்றும் மீகொட பத்திரனகே தயானந்த (..|ச்சு வேலையாளர்) என்பவரால் ஷெ அச்சகத்தில் அச்சிடப்பட்டு பிரஜா பிரசுராலயத்தினரால்
வெளியிடப்பட்டது.


Page 4
:

புரட்சியின் சக்திகளையும் பிற்போக்கின் சக்திகளையும்
4 எவ்வாறு கணிப்பீடு செய்வது என்பது இன்னும் சீனாவிலும் அத்துடன் உலகம் முழுவதிலும் ஒரு பிரதான பிரச்சினையாகவே உள்ளது. பலரால் இதை ஒருபோதும் சரியாகச் செய்ய முடியவில்லை. ஏகாதிபத்தியமும் எல்லா நாடுகளிலும் உள்ள அதன் அடிவருடிகளும் மேற்கு வானில் அஸ்தமிக்கும் சூரியனைப் போன்றவர்கள், சோஷலிஸமும் அதன் ஆதரவைப் பெற்றவையான தேசிய புரட்சிகர இயக்கங்களுமோவெனில் கிழக்கு வானில் உதித்தெழும் சூரியனைப் போன்றவை. இதுவே எமது காலத்தின் குணா திசயம், ஏகாதிபத்தியவாதிகள் எங்கு விரும்பினாலும் அட் டகாசஞ் செய்து திரியக்கூடியதாக இருந்த நாட்கள் என் றென்றைக்கும் போயே போய் விட்டன; அவர்கள் தங்கள் கடைசி மூச்சை வாங்குகின்றனர். பிற்போக்காளர்களே புரட்சிகர சக்திகளுக்குப் பயப்பட வேண்டும், மறுபுறமாக அல்ல. தற்போது இதைக் காண இன்னும் தவறுகின்ற வர்கள், இன்னும் குருட்டுத்தனமான நம்பிக்கையையும் பிரமைகளையும் பாராட்டுபவர்கள், இன்னும் ஏகாதிபத்தி யத்தை, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, கண்டு கிலிகொண்டு நிற்பவர்கள், கணிசமானோர் இருக்கின்றனர். இவர்கள் இந்தப் பிரச்சினையின் முன்னிலையில் இன்னும் செயலற்று இருக்கின்றனர். பரந்த வெகுஜனங்கள் புரட் சிகர நம்பிக்கையும் உறுதியும், புரட்சிகர முன்னறிவும் திட மும் பெறக்கூடியதாக எல்லா முற்போக்காளர்களும் எல்லா மாக்ஸிஸ்டுகளும் எல்லாப் புரட்சியாளர்களும் இந்த நபர் கள் மத்தியில் சிறிதளவு மனமாற்றும் பிரசாரம் செய்ய வேண்டும். இது புரட்சிகர இலட்சியத்தின் வெற்றிகரமான

Page 5
முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒரு ஆத்மீகத் தேவை.
3. ஒரு பிரச்சினையைச் சிந்தித்துப் பார்க்கையில் ஒருவர் அதன் சாராம்சங்களைத் தெளிந்து கொள்ள வேண்டும், மேலெழுந்தவாரியான அம்சங்களால் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனத் தோழர் மாஓ சே-துங் எமக்குப் பலமுறை கூறியுள்ளார். கடந்த முப்பது சொச்ச ஆண்டுகளாக எமது நாட்டிலான வர்க்கப் போராட்டத்தில் ஒவ்வொரு கேந்தி ரமான தருணத்திலும் தோழர் மாஓ சே துங் மாக்ஸிஸலெனினிஸ் விஞ்ஞானத்தின் அடிப்படையில் போராட்டத் தின் நிலைமை பற்றி ஆழ ஊடுருவும் ஆராய்வைச் செய் தும், பிற்போக்காளர்கள் நிச்சயம் விநாசமடைய வேண்டி யவர்கள், புரட்சிகர இலட்சியம் வென்றே தீரும் என்று காண்பித்தும் உள்ளார். அவர் சக்திமிக்கவையாகத் தென் படுகின்ற, ஆனால் உண்மையிற் பலவீனமானவையான ஏகாதிபத்தியத்தையும் பிற்போக்கு சக்திகளையும் வர்ணிக் கக் ''காகிதப் புலி" என்ற பதத்தை உபயோகிக்கிறார்; புதிதாக ஜனித்த சக்திகள் புரட்சியின் ஊடாக நாளுக்கு நாள் வளர்வதைக் குறிக்க "ஒரே ஒரு பொறி காட்டுத் தீயை உண்டுபண்ண முடியும்" என்ற முதுமொழியை உபயோ கித்து, இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தன் மூல- உபா யத் திட்டங்களைத் தீட்டுகிறார். புரட்சியின் சக்திகள் தோற் கடிக்க முடியாதவை, பிற்போக்கு சக்திகளோ தற்காலிக மாகச் சக்திமிக்கவையாக இருப்பினும் நாசத்தை அடைந்தே தீரும் என்ற தோழர் மாஓ சே-துங்கின் கருத்து சீன கம் யூனிஸ்டுகளை ஆயுதபாணிகளாக்கியும், சீன மக்களுக்குப் போதமூட்டியும் உணர்வூட்டியும், எம்மை எமது மகத்தான வெற்றிகளுக்கு இட்டுச் சென்றும் உள்ளது. ''ஏகாதிபத் தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள் என்ற தோழர் மாஓ சே-துங்கின் அறிவு பொதிந்த இத் தத்துவம் ஏற்கனவே சீனப் புரட்சியின் வெற்றியால் நிரூ பிக்கப்பட்டுவிட்டது, தொடர்ந்தும் சீனாவிலும் முழு உலகி

லும் புரட்சி இலட்சியத்தின் வெற்றிகரமான அபிவிருத்தி யால் நிரூபிக்கப்படும்.
ஷிஜீ ழிஷி (உலக கலாச்சாரம்) என்ற இருவார இத ழின் ஆசிரியர் குழு சமீபத்தில் தோழர் மாஓ சே-துங்கின் கட்டுரைகளிலும் உரைகளிலும் கூற்றுகளிலுமிருந்து ''ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகி தப் புலிகள்'' என்ற விஷயத்தைப் பற்றியவையான பகுதி களைத் தொகுத்துப் பிரசுரித்துள்ளது. இது அரசியல் முக் கியத்துவம் கொண்ட ஒரு காரியம். இது ஏகாதிபத்தியத் தின், விசேஷமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், ஆக்கி ரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் எதிரான மக்களின் போராட்டத்திற்கு மிக மதிப்பு வாய்ந்தது. தொகுக்கப் பட்ட விஷயங்களை, சம்பந்தப்பட்ட சில முக்கிய விஷயங் களையும் சேர்த்து, நடையில் சில மாற்றங்களோடும் பந்தி களைப் புனரொழுங்கு செய்தும், நாம் இங்கு பிரசுரிக்கிறோம்.
இந்த விஷயங்கள் மூன்று பகுதிகளாகப் பகுபடுகின் றன. முதலாவது பகுதி, உழுத்துப்போன சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏகாதிபத்தியத்திற்கும் எல்லாப் பிற்போக்காளர்களுக்கும் வருங்காலம் இல்லை, அவற்றின் கண நேர ஆவேசத்திற்கு அர்த்தம் அது அவற்றின் மரணத் தறுவாயிலான மூர்க்கத்தனமேயன்றி வேறல்ல என்பதே என்றகருத்துச் சம்பந்தமானது. இரண்டாவது பகுதி, ஏகா திபத்தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் வெளித் தோற் றத்திற் பலமானவர்கள் ஆனால் உள்ளூறப் பலவீனமான வர்கள், அவர்களை மக்கள் துச்சம் செய்வதற்கு எல்லாக் காரணங்களும் உள்ளன, இருந்தும் அதே நேரத்தில் மக் கள் ஒவ்வொரு குறிப்பான போராட்டத்திலும் அவர்க ளைப் பூரணமாகக் கணக்கில் எடுக்க வேண்டும் எனச் சுட் டிக் காட்டுகிறது. மூன்றாவது பகுதி, கீழைக் காற்று மேலைக்காற்றை மிஞ்சி வீசுகின்ற, அல்லது வேறு வார்த் தைகளிற் கூறினால், சோஷலிஸ சக்திகள் ஏகாதிபத்திய வாத சக்திகளை மிஞ்சிவிட்ட, தற்போதைய சர்வதேச

Page 6
நிலைமையின் சாராம்சமான தன்மைகளை வர்ணிக்கிறது. இந்தக் கட்டுரைகள், உரைகள், கூற்றுக்களில் அநேகமா னவை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுவிட்டன, இவற்றில் ஒரு சிறு பகுதியே முன்னர் வெளிவராதது என்ற போதி லும், இவை இருபது வருடங்களாக அங்கங்கு எழுத அல் லது பேசப்பட்டவை, இங்கு பகுதிகளின் தொகுப்பின் வடி விலேயே பிரசுரிக்கப்படுகின்றன என்ற போதிலும், இவை புதிய, ஒரே சீராக அமைந்த ஒரு அரசியல் வியாசம் போற் காண்கின்றன. இதற்குக் காரணங்கள் ஒரு புறம் ஏகாதி பத்தியத்திற்கும் அதன் அடிவருடிகளுக்கும் மறு புறம் எல்லா நாடுகளினதும் மக்களுக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு இன்னும் தீர்க்கப்படாததும், அமெரிக்க ஏகா திபத்தியம் தன் ஆக்கிரமிப்புத் தன்மை முழுவதையும் காட்டுகின்றமையாலும் உலக சமாதானத்தை அணு யுத் தத்தால் அச்சுறுத்துகின்றமையாலும் ஒடுக்கப்பட்ட, அச் சுறுத்தப்படுகின்ற மக்கள் - இந்த நெருக்கடியான நிலை மையால் முழுக் கவனமும் ஈர்க்கப்பட்டவர்களாய் - அந்த முரண்பாட்டின் தீர்வை அவசரமாகக் கோருவதுமாகும். ஆகவேதான் வாசகர்கள், இயற்கையாகவே, இந்த முரண் பாட்டின் தீர்வுக்குச் சம்பந்தமுடைய பல்வேறுபட்ட பிரச் சினைகளில் முதன்மையானதும் பிரதானமானதும் ஆகிய பிரச்சினையான, ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற்போக்கா ளர்களும் காகிதப் புலிகளா, இல்லையா என்ற, இந்தப் பிரச்சினை பற்றிய தோழர் மாஓ சே-துங்கின் விளக்கத்தில் அக்கறை கொண்டுள்ளனர்.

1940, ஜனவரியில் பிரசுரிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டுரையான புதிய ஜன நாயகம் பற்றி என்ற கட்டுரையிற் தோழர் மாஓ சே-துங் முதலாளித்துவம் அழுகுவதும் சாவதுமான கட்டத்தை அடைந்திருக்கையில் கம்யூனிஸமோ ' 'பெருவெள்ளத் தின் வேகத்தோடும் இடியேற்றின் வலியோடும் உலகை மேவிப் பெருகுகிறது'' எனச் சுட்டிக் காட்டினார்:
கம்யூனிஸம் ஒரே சமயத்தில் ஒரு சம்பூரணமான தொழிலாளி வர்க்கத் தத்துவார்த்த அமைப்பும் ஒரு புதிய சமூக அமைப்புமாகும். அது மற்றெந்தத் தத்துவார்த்தத் தையும் அல்லது சமூக அமைப்பையும் விட வேறுபட்டதும், மானுட வரலாற்றிலேயே மிகப் பூரணமானதும் முற் போக்கானதும் புரட்சிகரமானதும் பகுத்தறிவு ரீதியானது மான அமைப்புமாகும். நிலப்பிரபுத்துவத்தின் தத்து வார்த்த, சமூக அமைப்பிற்கு நூதனசாலையிற்தான் இட மிருக்கிறது. முதலாளித்துவத்தின் தத்துவார்த்த , சமூக அமைப்பும் உலகின் ஒரு பகுதியில் (சோவியத் யூனியனில்) ஒரு நூதனசாலைப் பொருளாக ஆகிவிட்டது; மற்ற நாடு களிலோ அது 'மேற்கில் அஸ்தமிக்கும் சூரியனைப் போல் விரைவாக அமிழ்கின்ற சாகும் மனிதனை ஒத்திருக்கிறது. விரைவில் நூதனசாலைக்கு ஒதுக்கப்பட்டுவிடும். கம்யூனிஸ தத்துவார்த்த, சமூக அமைப்பு ஒன்றே இளமையும் ஜீவ னும் நிரம்பி உள்ளது, பெருவெள்ளத்தின் வேகத்தோடும் இடியேற்றின் வலியோடும் உலகை மேவிப் பெருகுகிறது.
5

Page 7
புதிய ஜனநாயகம் பற்றி என்ற கட்டுரையிற் தோழர் மாஓ சே -- துங் மேலும், நலிவடையும் சக்திகளை பிரதி நிதித்துவம் செய்பவர்களான எல்லாப் பிற்போக்கா ளர்களினதும் கட்டுமட்டற்ற பலாத்காரத்தின் அர்த் தம் அது அவர்களின் மரணத் தறுவாயிலான மூர்க் கத்தனம் என்பதே என்றும் சுட்டிக் காட்டினார்:
உள் நாட்டவையாயினும் வெளிநாட்டவையாயினும் எல்லா இருண்ட சக்திகளினதும் கட்டுமட்டற்ற பலாத்கா ரம் எமது தேசத்திற்கு விநாசத்தைக் கொணர்ந்துள்ளது : ஆனால் இருண்ட சக்திகளுக்கு இன்னும் சிறிது பலம் எஞ்சி யிருப்பினும் அவை ஏற்கனவே தங்கள் மரண அவஸ்தை யில் உள்ளன என்றும் மக்கள் சிறிது சிறிதாக வெற்றியை நெருங்கி வருகின்றனர் என்றும் இந்தப் பலாத்காரமே காண்பிக்கிறது. இது சீனாவிற்கும், கீழைத் தேசங்கள் முழு
மைக்கும், முழு உலகிற்கும் பொருந்துவது.
1945, ஜூன் 17-ம் திகதி, சீனப் புரட்சியிற் தியா கிகளானவர்களை நினைவுகூரும், கூட்டமொன்றில் உரையாற்றுகையிற் தோழர் மாஓ சே-துங், பிற்போக் காளர்கள் எவ்வளவு அதிகம் பிற்போக்காக இருக்கின் றனரோ அவ்வளவுக்கு அவர்கள் தங்கள் விநாசத்தை நெருங்கியுமிருக்கின்றனர் எனப் பிரகடனம் செய்தார்:
எல்லாப் பிற்போக்காளர்களும் தங்கள் படுகொலைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றனவோ அவ்வளவுக்குப் புரட்சி பலவீனமடையுமென நினைத்துக்கொண்டு, பெரும் ரீதியிற் படுகொலைகள் நடத்துவதன் மூலம் புரட்சியை அழித்து விட முயல்கின்றனர். ஆனால், இந்தப் பிற்போக்கு மனப் பால் குடித்தலுக்கு நேர் முரணாக, உண்மை என்னவெனிற் பிற்போக்காளர்கள் எவ்வளவுக்கு அதிகமாகப் படுகொ லையை நாடுகின்றனரோ அவ்வளவுக்குப் புரட்சியின் பலமும் அதிகமாகிறது, பிற்போக்காளர்களும் தம் விநாசத்தை நெருங்குகின்றனர். இது ஒருபோதும் தவறாத ஒரு நியதி.

1957, நவம்பர் 6-ம் திகதி, அக்டோபர் புரட்சி யின் 40-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய சோ. சோ. கு. யூ. னின் சுப்ரீம் சோவியத் கூட்டத்திற் தோழர் மாஓ சே-துங் கூறினார்:
சோஷலிஸ அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை அகற்றி அதன் இடத்தை எடுக்கும். இது மனித விருப்பிற் தங்கியில்லாத புறநிலையான ஒரு நியதி. பிற்போக்காளர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்துப் பிடிக்க எவ்வளவுதான் முயன்றாலும், இன்றோ நாளையோ புரட்சி நிகழவே செய்யும், சந்தேகமின்றி வெற் றியீட்டவே செய்யும். ''பாறையைத் தூக்கித் தன் காலி லேயே போட்டுக் கொள்வது'' என்ற சீன முதுமொழி சில முட்டாள்களின் நடத்தையை வர்ணிக்கிறது. எல்லா நாடுகளிலும் உள்ள பிற்போக்காளர்கள் இந்த வகையான முட்டாள்களாவர். புரட்சிகர மக்களை அவர்கள் கொடு மைப்படுத்துவதெல்லாம் தவிர்க்க முடியாதபடி மக்களை மேலும் பரந்த, மேலும் உக்கிரமான புரட்சிக்குத் தூண் டுவதிற்தான் போய் முடியும். ருஷ்ய ஜாராலும் சியாங் கே- ஷேக்காலும் புரட்சிகர மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைப்படுத்தல்கள் மகத்தான ருஷ்யப் புரட்சியையும் மகத்தான சீனப் புரட்சியையும் தூண்டிவிட மட்டுமே பயன்படவில்லையா?
அரசியலமைப்புச் சட்ட ரீதியான அரசாட்சியை முன்னேற்றுவதற்கான யெனான் சங்கத்தில் 1940, பிப் ரவரி 20-ம் திகதி நிகழ்த்தப்பட்ட, புதிய - ஜனநாயக அரசியலமைப்புச் சட்ட ரீதியான அரசாட்சி எனத் தலைப் பிடப்பட்ட, ஓர் உரையிற் தோழர் மாஓ சே-துங், அரசியலமைப்புச் சட்ட ரீதியான அரசாங்கமொன்றைத் தான் அமைப்பார் என்ற சியாங் கே-ஷெக்கின் ஏமாற் றுப் பிரசாரத்தை அம்பலப்படுத்தி, இறுதியிற் பிற் போக்காளர்கள் ''எப்பொழுதும் தாம் விரும்புவதற்கு நேர்மாறானதையே பெறுவர்'' எனக் காண்பித்தார்:

Page 8
உலகத்திலுள்ள விடாக்கண்டர்கள் எல்லாம் இன்று விடாக்கண்டர்களாக இருக்கலாம், நாளையும் மறுநாளும் கூட அப்படியே இருக்கலாம், ஆனால் எப்போதைக்கும் அப்ப டியே இருந்துவிட முடியாது: இறுதியில் அவர்கள் மாறியே ஆக வேண்டும். உதாரணத்திற்கு, வாங் சிங் - வெய்! நீண்ட காலமாக ஒரு விடாக்கண்டனாக இருந்தார். ஆனாலும் அவரால் நெடுக ஜப்பானிய-விரோத அணிகளுக்குள் விடாக்கண்டனாக இருந்துவர முடியவில்லை, அவர் ஜப்பா னியரின் பக்கத்திற்குச் செல்ல வேண்டியவரானார். மற்று மொரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால், சாங் குவோராஓவும் நீண்ட காலமாக ஒரு விடாக்கண்டனாக இருந் தார், ஆனால் நாம் பல கூட்டங்களை நடத்தி அவருக் கெதிராகத் திரும்பத் திரும்பப் போராடிய பின்னர் அவ ரும் ஓட்டமெடுத்தார். உண்மையில், விடாக்கண்டர்கள் இறுக்கமானவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் சாகும் வரை இறுக்கமுள்ளவர்கள் அல்ல, இறுதியில் அவர்கள் மாறுகின்றனர் - நாய் மலத்தைப் போல் அழுக்கானதும் வெறுக்கத்தக்கதுமான ஏதேனுமாக மாறுகின்றனர். சிலர் நல்லபடியாக மாறுகின்றனர்; அதுவும் அவர்களுக்கு எதி ரான எமது போராட்டத்தின் விளைவாகவே நிகழ்கிறது -- இவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து நல்லபடியாக மாறு கின்றனர். சுருங்கக் கூறினால், விடாக்கண்டர்கள் இறுதி யில் மாறத்தான் செய்கின்றனர், அவர்கள் கைவசம் எப் போதும் பல சூழ்ச்சிகளை, பிறரின் நஷ்டத்தில் இலாபம் டைவதற்கான சூழ்ச்சிகள், இரட்டை வேடத்தில் காரியங் கள் செய்வதற்கான சூழ்ச்சிகள் இப்படியாக, வைத்திருக் கின்றனர். ஆனால் அவர்கள் எப்போதும் தாம் விரும்புவ தற்கு நேர் மாறானதையே பெறுகின்றனர். அவர்கள் தவ றாது எப்போதும் பிறருக்குத் தீங்கு செய்வதில் ஆரம்பித் துக் கடைசியிற் தம்மையே அழித்துக்கொள்வதில் போய் முடிகின்றனர். ஒருகால் நாம், சம்பெர்லின் "பாறை யைத் தூக்குகிறார், தன் காலிலேயே போட்டுக்கொள்ளப் போகிறார்,'' என்று கூறினோம், அது இப்போது நிகழ்ந்து

விட்டது. சம்பெர்லின் சோவியத் மக்களின் கால்களை நசுக் குவதற்கான பாறையாக ஹிட்லரை உபயோகிப்பதிற் தன் மனதைச் செலுத்தியிருந்தார், ஆனால் கடந்த செப்டம்பரில் ஒரு நாள் ஒரு புறம் ஜெர்மனிக்கும் மறுபுறம் பிரித்தானியா விற்கும் பிரான்ஸிற்கும் இடையில் யுத்தம் வெடித்ததோடு, அவரது கையிலிருந்த பாறை அவரது கால்களிலேயே விழுந்து விட்டது. இது நாள் வரை அவர் இன்னும் இந்தக் கொதிப் பிற்தான் இருக்கிறார். இது போன்ற உதாரணங்கள் சீனாவில் ஏராளமாக உள்ளன. யுவான் ஷிஹ் - காய்3 சாதாரண மக்களின் கால்களை நசுக்க விரும்பினார், ஆனால் கடைசியில் அவர் தன்னையே துன்பப்படுத்திக் கொண்டு, சக்கரவர்த் தியானதற்குச் சில மாதங்களே பின்னர் இறந்தார். ருவான் சி-ஜூய், ஹ்ஸ© ஷிஹ் - சாங், ட்ஸாஓ குன், வூ பெய்-ஃபூ இன்னும் மற்றையோர் எல்லோரும் மக்களை ஒடுக்க விரும் பினர், ஆனால் இறுதியில் இவர்கள் எல்லோரும் மக்களால் வீழ்த்தப்பட்டனர். பிறரின் நஷ்டத்தில் இலாபம் பெற முயலும் எவரும் நல்ல முடிவை அடையமாட்டார்.
ப 1945, ஏப்ரல் 24-ம் திகதி தோழர் மாஓ சே துங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது தேசிய மாநாட் டிற்கு கூட்டு அரசாங்கம் பற்றி என்ற தனது புகழ்பெற்ற அரசியல் அறிக்கையைச் சமர்ப்பித்தார். "எமது குறிப் பான வேலைத்திட்டம்' எனத் தலைப்பிடப்பட்ட பகுதி யில் அவர் ''தேசிய சபை ஒன்றைக் கூட்டுவதன் மூலம் மக்கள் விரோத சதிகார நடவடிக்கைகள் நடத் துவதற்கான கோமின்ராங் பிற்போக்காளர்களின் முயற்சிக்கு எதிராக எச்சரிக்கை செய்து, இந்தப் பிற் போக்குக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் ''அவர்கள் தாங்களே தங்கள் கழுத்துகளில் சுருக்குக் 1 கயிறுகளைப் போட்டுக்கொள்கின்றனர்'' என்றும், அழி வை நோக்கிச் செல்கின்றனர் என்றும் முன்னறிந்து கூறினார். தோழர் மாஓ சே-துங் கூறினார்:
எமது பிற்போக்குத் தீரர்கள் இந்தப் பிளவுபடுத்தும் கொள்கைக்கிணங்க எடுக்கத் தயாராகிவரும் நடவடிக்கை

Page 9
கள் அநேகமாக அவர்களை அழிவுக்கு இட்டுச் செல்லும். அவர்கள் தாங்களே தங்கள் கழுத்துகளிற் சுருக்குக் கயிறுக ளைப் போட்டு, அதைக் கழுத்தில் இறுக்கியும் கொள்கின்ற னர்; ''தேசிய சபை'யே இந்தச் சுருக்குக் கயிறாகும். அவர்க ளுடைய நோக்கம் ''தேசிய சபை' 'யை முதலில் கூட்டு அரசாங்கம் ஒன்று உருவாவதைத் தடுக்கவும், இரண்டா வதாகத் தங்கள் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள் ளவும், மூன்றாவதாக உள்நாட்டு யுத்தத்திற்கு ஒரு நியா யத்தைக் கற்பிக்கவும் ஒரு மந்திரக் கருவியாக உபயோ கிப்பது தான். இருப்பினும் வரலாற்றின் தர்க்கவியல் அவர் களின் விருப்புகளுக்கு மாறாகச் செல்கிறது; அவர்கள் ''பாறையைத் தூக்கித் தங்கள் கால்களிலேயே போட்டுக் கொள்ளப்போகின்றனர்.''
- "
ஹ்ஸின் ஹுஆ செய்தி ஸ்தாபனத்திற்காகத் தான் - 1945, ஜூலை 12-ந் திகதி எழுதிய ஹேர்லி கொள்கை யின் அபாயம் பற்றி என்ற விமர்சனத்திற் தோழர் மாஓ சே - துங், சீனாவைக் குறித்த அமெரிக்கக் கொள்கை சீனாவில் ஒரு உள் நாட்டு யுத்த நெருக்கடியைச் சிருஷ் டித்திருந்தது எனச் சுட்டிக்காட்டினார்; சீன மக்களை விரோதித்துக்கொள்வதான அமெரிக்க கொள்கை அமெ ரிக்க அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் 'முடிவற்ற தொல்லையிற் போய் முடியும் என அவர் எச்சரித்தார்:
....... இதே ஹேர்லியின் கருத்துப்படி, சியாங் கே-ஷெக் பிரதிநிதித்துவம் செய்யும் கோமின்ராங் அரசாங்கம் அழ . குத் தெய்வமாகவும் கம்யூனிஸ்ட் கட்சி குரூர மிருகமாக வும் மாறியுள்ளதாகக் காணப்படுகிறது: அத்துடன் இவர், அமெரிக்கா சியாங் கே- ஷெக்குடன் மட்டுமே ஒத்துழைக் கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைக்காது என் றும் பச்சையாகப் பிரகடனம் செய்துள்ளார். இது, இயல் பாகவே, ஆக ஹேர்லியின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள ஒரு முழுக் கோஷ்டியி னரின் கருத்துமாகும். இது ஒரு தவறான கருத்தும் அபா
10

யகரமான கருத்துமாகும்............ஹேர்லி கொள்கை தொட ருமானால் அமெரிக்க அரசாங்கம் சீனப் பிற்போக் காகிய நாற்றமெடுக்கும் ஆழ்ந்த சகதிக்குள் மீளமுடியா தபடி அமிழும்; அது விழிப்புற்றுள்ளவர்களும் விழிப் புற்று வருபவர்களுமான பல பத்துக் கோடி சீன மக்களை விரோதித்துக் கொள்ளும் நிலையிற் தன்னை இட்டுக்கொண்டு, தற்போதைக்குப் பதிற் தாக்குதல் யுத்தத்திற்கும் வருங் காலத்தில் உலக சமாதானத்திற்கும் ஒரு தடங்கலாக ஆகும்........... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சீனாவில் உள்ள பிற்போக்கு சக்திகளுக்கு உதவியும் உடந்தையும் செய்வ தும் அளப்பரும் எண்ணிக்கையினரான சீன மக்களை விரோ தித்துக் கொள்வதுமான ஹேர்லி கொள்கை மாற்றமின்றித் தொடருமானால், அது அமெரிக்க அரசாங்கத்தின் மீதும் மக்களின் மீதும் தாங்க முடியாத ஒரு பழுவைச் சுமத்தி, அவர்களை முடிவற்ற தொல்லையில் அமிழ்த்தும். இந்த அம் சம் அமெரிக்க மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
மலைகளை அகற்றிய மூடக் கிழவன் என்ற தலைப்பில் 1945, ஜூன் 11-ம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட தனது முடிவு ரையில் தோழர் மாஓ சே துங் கூறினார்:
கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகச் சியாங் கே-ஷெக்கை ஆதரிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கை அமெரிக்க பிற்போக்காளர்களின் அடாத்தான தன்மையைக் காட் டுகிறது. சீன மக்களை வெற்றி ஈட்டுவதிலிருந்து தடுப்பதற் கான சீன, அந்நிய பிற்போக்காளர்கள் எவரினதும் சூழ்ச் சிகள் எல்லாம் தோற்றே தீர வேண்டியவை. இன்று உல கில் ஜனநாயக சக்திகளே பிரதானமான நீரோட்டமாகும், பிற்போக்கு ஒரு எதிரோட்டம் மட்டுமே. பிற்போக்கு எதிரோட்டம் தேசிய சுதந்திரமும் மக்கள் ஜன நாயகமுமா கிய பிரதான நீரோட்டத்தை அடித்துச் செல்ல முயல்கி றது. ஆனால் அதனால் ஒருபோதும் பிரதான நீரோட்ட மாக' ஆக முடியாது.
11

Page 10
பிற்போக்காளர்கள் தகர்ந்து விழுந்தும், புரட்சி வெற்றியீட்டியுமே தீர வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட் சியின் ஏழாவது தேசிய மாநாட்டிலான தனது முடி வுரையில் தோழர் மாஓ சே-துங் மக்களைப் புரட்சியின் நிச்சயமான வெற்றியில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுமாறு அறைகூவினார். புரட்சிகர மக்கள் நம் பிக்கை கொண்டிருந்து, பிற்போக்காளர்களுக்கு அஞ் சாமல், இறுதிவரை போராட்டத்தில் விடாப்பிடியாக இருக்கத் திடமும் கொண்டிருக்கும் பட்சத்தில் புரட்சி நிச்சயமாக வெற்றியடையும் என்பதைக் காண்பிக்க அவர் 'மலைகளை அகற்றிய மூடக் கிழவன்' என்ற புராதன சீன குட்டிக் கதையை மேற்கோள் காட்டினார்:
மாநாட்டின் நெறியைப் பிரசாரப்படுத்துவதில் எமது நோக்கம் புரட்சியின் நிச்சயமான வெற்றியில் முழுக் கட் சியினதும் சகல மக்களினதும் நம்பிக்கையை வளர்ப்பதா கும். உறுதியுடனும், தியாகத்திற்கு அஞ்சாமலும், வெற் றியை ஈட்டுவதற்காகச் சகல கஷ்டங்களையும் கடக்கக் கூடி யதாக, நாம் முதலில் முன் அணியினரின் அரசியல் அறிவு ணர்வை உயர்த்த வேண்டும். ஆனால் இது போதாது; முழு மக்களும் வெற்றிக்காக எம்முடன் சேர்ந்து மனமு வந்தும் சந்தோஷமாகவும் போரிடும் வகையில் நாம் முழு மக்களதும் அரசியல் விழிப்புணர்வைத் தட்டியெழுப்பவும் வேண்டும். சீனா பிற்போக்காளர்களுக்கல்ல , சீன மக்க ளுக்கே சொந்தம் என்ற நம்பிக்கையை நாம் சகல மக்க ளிடத்தும் மூட்ட வேண்டும். 'மலைகளை அகற்றிய மூடக் கிழவன்'' என்றொரு புராதன சீன கர்ண பரம்பரைக் கதை உண்டு. அது மிக மிகப் பழங் காலத்தில் வட சீனா வில் வாழ்ந்த, வடக்கு மலையின் மூடக் கிழவன் என அழைக் கப்பட்ட ஒரு கிழவனைப் பற்றியது. அவனது வீடு தெற்கு முகமாக இருந்தது; அதன் வாயிலுக்கு அப்பால் வழியை அடைத்தபடி ராய் ஹாங், வாங்வூ என்ற இரு பெரும் மலைச் சிகரங்கள் இருந்தன. அவன் தன் மக்களைக் கூட்டிக் கொண்டு, அவர்களோடு மண்வெட்டிகள் சகிதம் மிகுந்த
12

மன உறுதியுடன் இந்த மலைகளை வெட்டத் தொடங்கினான், புத்திசாலிக் கிழவன் என்று அழைக்கப்பட்ட மற்றொரு நரைத்தாடி இவர்கள் செய்வதைக் கண்டுவிட்டு, ''நீங்கள் செய்வது எவ்வளவு முட்டாள் தனம்! நீங்கள் ஒரு சிலர் இந்த இரண்டு பிரமாண்டமான மலைகளையும் வெட்டியெடுப்பது முடியவே முடியாதது.'' எனக் கிண்டலாகக் கூறினான். அதற்கு மூடக் கிழவன், ''நான் சாக எனது மக்கள் தொடர்ந்து வெட்டுவார்கள்; அவர்கள் சாக என் பேரப் பிள்ளைகள் இருப்பார்கள்; பின்னர் அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளுமாக எல்லையின்றித் தொடர்ந்து வருவார்கள். எவ்வளவு உயரமாகத்தான் இருந்தாலும் இத்த மலைக ளால் இருப்பதை விட மேலே வளர முடியாது ; நாங்கள் ஒவ்வொரு முறையும் சிறிது வெட்டியெடுக்க அவை அவ் வளவுக்குக் குறையும். ஏன் எங்களால் அவற்றை வெட்டி அகற்றிவிட முடியாது?'' எனப் பதிலளித்தான். புத்தி சாலிக் கிழவனின் பிழையான கருத்தை மறுத்துவிட்டு அவன் தனது நம்பிக்கையில் சிறிதும் தளராமல் தினமும் வெட்டிக்கொண்டே இருந்தான். கடவுள் இதனால் மனமி ரங்கி இரு தேவதைகளை அனுப்ப, அவை அம்மலைகளைத் தம் முதுகுகளில் தூக்கி எடுத்துச் சென்றன. இன்று, சீன மக் கள் மீது அசையாத சுமையாக இரு பெரும் மலைகள் கிடக் கின்றன. ஒன்று ஏகாதிபத்தியம், மற்றையது நிலப்பிர புத்துவம். சீன கம்யூனிஸ்ட் கட்சி இவற்றை வெட்டி எடுத்துவிடுவதென்று நெடுங்காலத்துக்கு முன்பே தன் மன தில் திடங்கொண்டுவிட்டது. நாம் விடா முயற்சியுடன் இடையறாது வேலை செய்ய வேண்டும்; அப்போது நாமும் கடவுளின் நெஞ்சைத் தொடுவோம். எமது கடவுள் சீன வெகுஜனங்களேயன்றி வேறெவருமல்ல அவர்கள் எழுந்து. நின்று எம்மோடு சேர்ந்து வெட்டினால், இந்த இரு மலைக ளையும் ஏன் வெட்டி அகற்ற முடியாது?
1949, ஆகஸ்ட் 14-ம் திகதி, ஹ்ஸின் ஹுஆ செய்தி ஸ்தாபனத்திற்காகத் தான் எழுதிய பிரமைகளைக் களை வீர், போராட்டத்திற்குத் தயாராவீர் என்ற விமர்சனத்
13

Page 11
திற் தோழர் மாஓ சே-துங், பிற்போக்கு சக்திகளின் அபிவிருத்தியையும் மக்களின் சக்திகளின் அபிவிருத்தி யையும் ஆட்சி செய்யும் முற்றிலும் வேறுபட்ட இரு ரகமான தர்க்கவியல்களையும் பற்றி மிக ஆழ்ந்து துரு வும் ஆராய்ச்சியொன்றைச் செய்தார். முற்போக்கா ளர்கள் பிற்போக்காளர்களுக்கு எதிரான போராட் டத்தில் சக்திகளை அணி திரட்ட வேண்டும் என்றும், அவர்கள் பிற்போக்காளர்களை முற்றாகத் தனிமைப் படுத்தக் கூடியதாக இன்னும் ஊசலாடுபவர்களும் ஈடாடுபவர்களுமான சகலருக்கும் போதமூட்டவும் அவர்களை ஐக்கியப்படுத்தவும் வென்றெடுக்கவும் வேண் டும் என்றும் சுட்டிக் காட்டினார்:
ஏகாதிபத்தியவாதிகளின் தர்க்கவியல் மக்களுடையதி லிருந்து எவ்வளவு வேறுபட்டது! தொல்லை விளைவிப்பது. தோற்பது, மீண்டும் தொல்லை விளைவிப்பது, மீண்டும் தோற் பது............இப்படியே தங்கள் நாசம் வரை செய்வது; இதுவே மக்களின் இலட்சியத்தைக் கையாள்வதில் ஏகாதிபத்திய வாதிகளினதும் உலகெங்குமுள்ள எல்லாப் பிற்போக்காள ர்களினதும் தர்க்கவியல், அவர்கள் ஒரு போதும் இந்தத் தர்க்கவியலுக்கு எதிராகச் செல்லமாட்டார்கள். இது ஒரு மாக்ஸிஸ நியதியாகும். "ஏகாதிபத்தியம் மூர்க்கமானது'' என நாம் கூறும் போது நாம் கருதுவது அதன் இயல்பு ஒருபோதும் மாறாது. ஏகாதிபத்தியவாதிகள் ஒருபோதும் தமது கசாப்புக் கத்திகளைக் கீழே போடமாட்டார்கள், அவர்கள் ஒருபோதும், தங்கள் நாசம் வரை, புத்தர்கள் ஆகிவிட மாட்டார்கள் என்பதே.
போரிடுவது, தோற்பது, மீண்டும் போரிடுவது, மீண் டும் தோற்பது, மீண்டும் போரிடுவது ........... இப்படியே தங் கள் வெற்றிவரை செய்வது; இதுவே மக்களின் தர்க்கவி யல், அவர்களும் ஒருபோதும் இந்தத் தர்க்கவியலுக்கு எதி ராகச் செல்லமாட்டார்கள். இது மற்றுமொரு மாக்ஸிஸ் நியதி. ருஷ்ய மக்களின் புரட்சி இந்த நியதியைப் பின்
14

பற்றியது, சீன மக்களின் புரட்சியும் அவ்வாறே செய்து வந்துள்ளது. "
வர்க்கங்கள் போராடுகின்றன, சில, வர்க்கங்கள் வெற் றியடைகின்றன, மற்றவை இல்லாதொழிக்கப்படுகின்றன. வரலாறு இத்தகையதே, பல்லாயிரமாண்டுகளாக நாகரீ கத்தின் வரலாறு இத்தகையதே. வரலாற்றை இந்தக் கருத்து நிலையிலிருந்து அர்த்தப்படுத்துவது சரித்திரவியல் பொருள்முதல்வாதமாகும்; இந்தக் கருத்து நிலைக்கு எதி ராக நிற்பது சரித்திரவியல் கருத்துமுதல்வாதமாகும்.
சுய-விமர்சன முறை மக்களின் அணிகளுக்குள் மட் டுமே பிரயோகிக்கப்பட முடியும்; ஏகாதிபத்தியவாதிகளை யும் சீனப் பிற்போக்காளர்களையும் நெஞ்சில் இரக்கம் காட் டித் தங்கள் தீய வழிகளைக் கைவிடும்படி மனம் மாற்று வது அசாத்தியம் உள்ள ஒரே வழி, எமது மக்களின் விடு தலை யுத்தத்திலும் விவசாயிப் புரட்சியிலும் போல் சக்தி களை அணிதிரட்டி அவர்களுக்கு எதிராகப் போரிடுவதும், ஏகாதிபத்தியவாதிகளை அம்பலப்படுத்துவதும், அவர்க ளுக்கு 'எரிச்சலூட்டுவதும், அவர்களை வீழ்த்துவதும், சட்டத்திற்கெதிரான குற்றங்களுக்காக அவர்களைத் தண் டிப்பதும், 'அவர்களை ஒழுங்காக நடந்து கொள்ள மட் டுமே அனுமதிப்பதும் சொல்லிலோ செயலிலோ கட்டின் றியிருக்க அனுமதியாதிருப்பது ' ' மே. அப்போது மட்டுமே எகாதிபத்தியவாத அந்நிய நாடுகளுடன் சமத்துவத்தின தும் பரஸ்பர நன்மையினதும் அடிப்படையில் காரியம் பார்க்கும் நம்பிக்கை ஏதும் இருக்கும். அப்போது மட்டுமே தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைந்துள்ள வர்களான நிலப்பிரபுக்களும் அதிகாரித்துவ முதலாளிக ளும் பிற்போக்குக் கோமின்ராங் கும்பலின் அங்கத்தினர் களும் அவர்களின் உடந்தைகளும் தீயதை நல்லதாக மாற் றப் போதனை தரப்படுவதற்கும் சாத்தியமான அளவிற்கு நல்ல மனிதர்களாக மாற்றப்படவும் நம்பிக்கை ஏதும் இருக்கும். பல சீன சுயேச்சைவாதிகள் - பழைய ரக ஜன
15

Page 12
எாயகவாத நபர்கள், அதாவது, ட்ரூமன், மார்ஷல், அகி ஸன், லெய்டன், ஸ்டுவார்ட் இத்தியாதியினர் எவரில் நம் பிக்கை பாராட்டி வென்றெடுக்க முயன்று வந்துள்ளனரோ அந்த 'ஜன நாயக தனிநபர்வாதத்தின் ஆதரவாளர்கள் - பல சமயம் தாம் செயலற்ற நிலையில் இருக்கக் காண்ப தோடு, பல சமயம் அமெரிக்க ஆட்சியாளர்களையும் கோமின் ராங்கையும் சோவியத் யூனியனையும் சீன கம்யூனிஸ்ட் கட் சியையும் பற்றிய தமது மதிப்பீடுகளிற் தவறாகவும் இருக் கின்றனர். இதற்குக் காரணம் சரியாக அவர்கள் பிரச்சி னைகளைச் சரித்திரவியல் பொருள்முதல்வாத நிலையிலிருந்து பார்ப்பதில்லை, அல்லது அப்படிப் பார்க்க மறுக்கின்றனர் என்பதே.
இடைப்பட்ட படிவத்தினர், நடுப்-பாதைக்காரர்கள், பல்வேறு படிவங்களையும் சேர்ந்த பின்னடைந்த நபர்கள் ஆகியோருடன், மக்கள் சீனாவிலுள்ள, இன்னும் ஊசலாடு வோரும் தயங்குவோருமான எல்லோருடனும் (இவர்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு ஊசலாடுவார்கள். ஒருகால் நிலைக்கு வந்த பின்னருங்கூடக் கஷ்டங்களை எதிர்ப்பட்ட துதான் தாமதம், மீண்டும் ஊசலாடுவார்கள்), ஐக்கியமு றுவதும் அவர்களுக்கு விசுவாசமான உதவி தருவதும் அவர் களின் ஊசலாடும் தன்மையை விமர்சிப்பதும் அவர்களுக் குப் போதனை ஊட்டுவதும் அவர்களை வெகுஜனங்களின் பக்கம் வென்றெடுப்பதும் அவர்களை ஏகாதிபத்தியவாதிகள் தம் பக்கம் இழுத்துக்கொள்ள விடாது தடுப்பதும், அவர் களுக்குப் பிரமைகளைக் களைந்துவிட்டுப் போராட்டத்திற்குத் தயாராகும்படி கூறுவதும் முற்போக்காளர்களின் - கம்யூ னிஸ்டுகளினதும் ஜனநாயகக் கட்சிகளின் அங்கத்தினர்க ளினதும் அரசியல் ரீதியில் அறிவுணர்வு பெற்ற தொழிலாளர் களினதும் மாணவ வாலிபர்களினதும் முற்போக்கான புத் திஜீவிகளினதும் - கடமையாகும். இப்போது வெற்றி ஈட் டப்பட்டுவிட்டதால், இனிச் செய்வதற்கு வேலை எதுவும் இல்லை என எவரும் நினைத்துவிட வேண்டாம். இவர் களை உண்மையாக எம் பக்கம் வென்றெடுக்க முடிவதற்கு,
16

முதலில் நாம் இன்னும் வேலை செய்ய வேண்டும், பெருமளவு பொறுமையான வேலை செய்ய வேண்டும். இவர்கள் எம் பக் கம் வென்றெடுக்கப்படும் போது ஏகாதிபத்தியம் முற்றாகத் தனிமைப் படுத்தப்படும், அகிஸனால் அதன்மேலும் தன் தந்திரங்கள் எதையும் செய்ய இயலாதிருக்கும்.
II
1942, அக்டோபர் 12-ம் திகதி தான் யெனான் விடுதலைத் தினசரிக்காக எழுதிய 2-ம் உலக யுத்தத்திற் திருப்ப முனை என்ற தலையங்கத்திற் தோழர் மாஓ சே - துங், வெளிப்பார்வைக்குப் பலமானவையும், ஆனால் உள்ளூறப் பலவீனமானவையுமாகிய பிற்போக்கு சக்தி களின் சாராம்சமான இயல்பை ஆராய்ந்து, மேலெ ழுந்தவாரியான விளைவுகளைக் கண்டு பிரமை கொண்டு விட வேண்டாமெனப் புரட்சிகர மக்களுக்கு நினைவு படுத்தினார். அவர் எழுதினார்:
வரலாற்று ரீதியாக அழியும் தறுவாயில் இருக்கும் பிற்போக்கு சக்திகள் எல்லாம் விதிவிலக்கின்றிப் புரட்சிகர சக்திகளுக்கு எதிராக ஒரு மூர்க்கமான கடைசிப் போராட் டத்தை நடத்துகின்றன; சில புரட்சியாளர்கள் விரோதி அழிவை நெருங்கி விட்டிருக்கத் தாமோ வெற்றியை நெருங் கிக்கொண்டிருக்கின்றனர் என்ற சாராம்சமான உண்மை யைத் தெளிவாக உணரத் தவறி, வெளிப் பார்வைக்குப் பலமும், ஆனால் உள்ளூறப் பலவீனமுமான இந்த விளை வால் சில காலத்துக்கு ஏமாற்றப்படவும் செய்கின்றனர். பாஸிஸ சக்திகள் தோன்றியதும், அவை சில ஆண்டுக ளாக நடத்தி வருகின்ற ஆக்கிரமிப்பு யுத்தமும் சரியாக இத்தகைய ஒரு கடைசி மூச்சான போராட்டத்தின் வெளிப் பாடே; அத்துடன், தற்போதைய இந்த யுத்தத்தில் ஸ்டா லின்கிராட் மீதான தாக்குதலும் பாஸிஸத்தினதே கடைசி மூச்சான போராட்டத்தின் வெளிப்பாடாகும். வரலாற் றில் இத் திருப்ப முனையிலும் கூட. உலக பாஸிஸ் - விரோத முன்னணியில் உள்ள பலர் பாஸிஸத்தின் மூர்க்கமான
17

Page 13
தோற்றத்தைக் கண்டு பிரமை பீடித்தும் அதன் சாராம் சத்தைக் கண்டறியத் தவறியும் உள்ளனர்.
பிற்போக்காளர்கள் எப்போதும் சக்திமிக்கதாகத் தென்படும் தங்கள் ராணுவ பலத்தைப் பற்றிப் புழுகு கின்றனர். மக்கள் மத்தியிலேயே பிற்போக்காளர்க
ளின் ராணுவ பலத்திற்குப் பல்வேறு அளவுகளில் அச் . சமடைகின்றவர்கள் கணிசமான எண்ணிக்கையினர் இருக்கின்றனர். இதுவே ''ஆயுதங்களே அனைத்தையும் நிர்ணயிக்கின்றன'' என்ற கருத்து நிலையாகும். 1938, மேயில் எழுதப்பட்ட தனது நீண்ட கால யுத்தம் பற்றி என்ற மிகப் பிரபலமான வியாசத்தில் தோழர் மாஓ சே-துங் இந்தக் கருத்துநிலை பற்றி ஓர் ஆழ்ந்த விமர் சனத்தைச் செய்தார்:
யுத்தம் பற்றிய பிரச்சினைக்கு யாந்திரிகமான ஒரு அணுகுமுறையும் அகநிலைப்பட்டதும் ஒரு பக்கமானதுமான ஒரு கருத்துமாக அமைகின்ற, ''ஆயுதங்களே அனைத்தை யும் நிர்ணயிக்கின்றன'' என்ற தத்துவம் என அழைக் கப்படுவது இதுவே. எமது கருத்து இதற்கு எதிராக உள் ளது: நாம் ஆயுதங்களை மட்டுமன்றி மக்களையும் காண்கி றோம். ஆயுதங்கள் யுத்தத்தில் ஒரு முக்கியமான அம்சம், ஆனால் தீர்க்கமான அம்சம் அவையல்ல; தீர்க்கமானவர் கள் மக்களே, பொருட்களல்ல. பலப் பரீட்சை ராணுவ, பொருளாதார வல்லமையின் பரீட்சை மட்டுமல்ல, மனித வல்லமையினதும் தார்மீக வலியினதும் பரீட்சையுமாகும். ராணுவ, பொருளாதார வலிமை அவசியம் மனிதர்களாற்
தான் எடுத்தாளப்பட வேண்டும்.
1946, ஆகஸ்டில் தோழர் மாஓ சே-துங் அமெரிக்க நிருபர் அன்னா லூயி ஸ்ட்ரோங்குக்கு ஒரு பேட்டிய ளித்து, எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலி : கள் என்ற தனது புகழ்பெற்ற தத்துவத்தை முன் வைத்தார். பின்வருவது அப்பேச்சின் பூரண வாசகம்:
Tண வச
18

"ஸ்ட்ரோங் : சீனாவின் பிரச்சினைகளுக்கு அண்மிய எதிர் காலத்தில் ஓர் அரசியல் ரீதியான, சமாதானமான தீர் வுக்கு நம்பிக்கை இருக்கின்றதென நீங்கள் கருதுகின்றீர்களா?
மாஓ : அது அமெரிக்க அரசாங்கத்தின் கண்ணோட்டத் திற் தங்கியுள்ளது. உள்நாட்டு யுத்தத்தை நடத்தச் சியாங் கே - ஷெக்கிற்கு உதவி செய்துவரும் அமெரிக்க பிற்போக்காளர்களை அமெரிக்க மக்கள் தடுத்து நிறுத்து வார்களேயானால், சமாதானத்திற்கு நம்பிக்கை இருக்கிறது.
ஸ்ட்ரோங் : ஏற்கனவே கொடுக்கப்பட்டது போக, சியாங் கே-ஷெக்கிற்கு அமெரிக்கா இனி உதவி கொடுக் கவில்லை என்று வைத்துக்கொள்வோம்; அப்போது சியாங் கே- ஷெக்கினால் எவ்வளவு காலத்திற்குத் தொடர்ந்தும் போரிட முடியும் ?
மாஓ: ஒரு வருடத்துக்கு மேல்.
ஸ்ட்ரோங்: சியாங் கே- ஷெக்கினால் பொருளாதார ரீதி யில் அவ்வளவு காலத்திற்கு நின்று பிடிக்க முடியுமா?
மாஓ : முடியும்.
ஸ்ட்ரோங்: இப்போதிருந்து தான் சியாங் கே-ஷெக்கிற்கு மேலும் உதவி தரப்போவதில்லை என அமெரிக்கா தெளி வாக்கிவிட்டால் என்ன ஆகும் ?
மாஓ : அமெரிக்க அரசாங்கமும் சியாங் கே - ஷெக்கும் ஒரு குறுகிய காலத்திற்குள் யுத்தத்தை நிறுத்தும் ஆவல் எதையும் கொண்டுள்ளதாக இன்னும் எந்த அறிகுறியும் இல்லை.
ஸ்ட்ரோங் : கம்யூனிஸ்ட் கட்சியால் எவ்வளவு காலத் திற்கு நின்றுபிடிக்க முடியும் ?
மாஓ: எமது சொந்த ஆவலைப் பொறுத்த வரையில், நாம் தனியொரு நாளைக்குத்தானும் போரிட விரும்ப
19

Page 14
வில்லை. ஆனால் சூழ்நிலைகள் எம்மைப் போரிட நிர்ப்பந் தித்தால், எம்மால் இறுதி வரை போரிட்டு முடிக்க இயலும்.
ஸ்ட்ரோங்: கம்யூனிஸ்ட் கட்சி ஏன் போரிடுகிறது என அமெரிக்க மக்கள் கேட்டால் நான் என்ன பதில் கூற?
மாலு : சியாங் கே-ஷெக் மக்களைக் கொன்று குவிக்க முனைந்திருப்பதாலும், மக்கள் பிழைத்திருக்க விரும்பினால் அவர்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டுமாகையாலும் (எனக் கூறுங்கள்). இதை அமெரிக்க மக்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
ஸ்ட்ரோங்: அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு எதி ராக ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மாஓ: சோவியத் --விரோத யுத்தம் பற்றிய பிரசாரத் தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒரு புறம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உண்மையிலேயே சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு யுத்தத்திற்குத் தயாராகிறது; சோவியத்விரோத யுத்தத்தைப் பற்றிய தற்போதைய பிரசாரமும் மற்றும் சோவியத்- விரோத பிரசாரங்களும் இத்தகைய ஒரு யுத்தத்துக்கான அரசியற் தயாரிப்பாகும். மறுபுறம், இந்தப் பிரசாரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உடனடி யாக எதிர்நோக்கும் பல உண்மையான முரண்பாடுகளை மறைப்பதற்காக அமெரிக்க பிற்போக்காளர்களால் எழுப் பப்படும் ஒரு திரையாகும். அமெரிக்க பிற்போக்காளர்க ளுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இடையிலான முரண்பாடு களும், பிற முதலாளித்துவ நாடுகளுடனும் காலனியல், அரைக்- காலனியல் நாடுகளுடனுமான அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் முரண்பாடுகளுமே இவை. தற்போது, சோவியத் -விரோத யுத்தமொன்றை நடத்துவதென்ற அமெ ரிக்க கோஷத்தின் உண்மையான தாத்பரியம் அமெரிக்க மக்களை ஒடுக்குவதும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை எஞ்சிய முதலாளித்துவ உலகில் விஸ்தரிப்பதுந்தான்.
20

நீங்கள் அறிந்துள்ளவாறு, ஹிட்லரும் அவரது கூட்டாளி களான ஜப்பானிய யுத்தப் பிரபுக்களும் உள் நாட்டு மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பிற நாடுகளுக்கு எதிராக ஆக் கிரமிப்புச் செய்வதற்கும் ஒரு சாட்டாக சோவியத்-விரோத கோஷங்களை நீண்ட காலமாக உபயோகித்தனர். இப் போது அமெரிக்க பிற்போக்காளர்கள் சரியாக அதே வித மாகத்தான் செயல்படுகின்றனர்.:
ஒரு யுத்தத்தைத் தொடங்குவதற்கு அமெரிக்க பிற் போக்காளர்கள் முதலில் அமெரிக்க மக்களைத் தாக்க வேண் டும். அவர்கள் ஏற்கனவே அமெரிக்க மக்களைத் தாக்குகின் றனர் - அமெரிக்காவிலுள்ள தொழிலாளர்களையும் ஜனநா யக வட்டாரங்களையும் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்கியும் அங்கு பாஸிஸத்தைத் திணிக்கத் தயாராகியும் வருகின்றனர். அமெரிக்க மக்கள் எழுந்து நின்று அமெரிக்க பிற்போக்காளர்களின் தாக்குதல்களை எதிர்த்துப் போரிட வேண்டும். அவர்கள் அவ்வாறு செய் வர் என நான் நம்புகிறேன்.
அமெரிக்காவும் சோவியத் யூனியனும், ஐரோப்பாவி லும் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள பல முதலா ளித்துவ, காலனியல், அரைக்- காலனியல் நாடுகளை உள்ள டக்கும் ஒரு பாரிய பிராந்தியத்தால் பிரிக்கப்பட்டுள் ளன. அமெரிக்க பிற்போக்காளர்கள் இந்த நாடுகளை அடி மைப்படுத்திக் கொள்வதற்கு முன்பு சோவியத் யூனியனின் மீது தாக்குதல் என்ற பிரச்சினைக்கே இடமில்லை. பசிபிக் கில் அமெரிக்கா இப்போது, அப்பிரதேசத்திலுள்ள, முன் னர் பிரித்தானியாவின் செல்வாக்கிற்குட்பட்டிருந்த பிராந் தியங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்ததையும் விடப் பெரியதான பகுதிகளைக் கட்டுப்பாடு செய்கிறது: அது ஜப்பானையும், கோமின்ராங் ஆட்சியின் கீழுள்ள சீனாவின் பகுதியையும், கொரியாவிற் பாதியையும், தென் பசுபிக் கையும் கட்டுப்பாடு செய்கிறது. அது நீண்ட காலமாகவே மத்திய, தென் அமெரிக்காவைக் கட்டுப்பாடு செய்து வந் துள்ளது. அது பிரித்தானிய சாம்ராஜ்யம் முழுவதையும்
27

Page 15
மேற்கு ஐரோப்பாவையும் கட்டுப்பாடு செய்யவும் முயல் கிறது. பல்வேறு சாட்டுகளை உபயோகித்து அமெரிக்கா பெரும் ரீதியான ராணுவ ஏற்பாடுகளைச் செய்தும் பல நாடுகளில் ராணுவத் தளங்களை நிறுவியும் வருகிறது. தாங்கள் உலகெங்கணும் நிறுவியுள்ளவையும் நிறுவத் தயா ராகிவருபவையுமான ராணுவத் தளங்கள் சோவியத் யூனி யனுக்கு எதிராகவே குறிவைக்கப்படுவதாக அமெரிக்க பிற் போக்காளர்கள் கூறுகின்றனர். இந்த ராணுவ தளங்கள் சோவியத் யூனியனுக்கு எதிராகக் குறிவைக்கப்படுபவை, உண்மைதான். இருப்பினும் தற்போது அமெரிக்க ஆக்கி ரமிப்பிற்கு முதலில் ஆளாவது சோவியத் யூனியன் அல்ல, இந்த ராணுவ தளங்கள் இடம் பெறுகின்ற நாடுகள் தாம். இந்த நாடுகள் தம்மை உண்மையில் ஒடுக்குவது யார், சோவியத் யூனியனா அமெரிக்காவா என்பதை உணருவதற்கு அதிக காலம் பிடிக்காது என நான் நம்புகிறேன். அமெ ரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தாம் முழு உலகினதும் மக்க
ளால் எதிர்க்கப்படுவதைக் காணும் நாள் வரும்.
இயல்பாகவே, அமெரிக்க பிற்போக்காளர்கள் சோவி யத் யூனியனைத் தாக்கும் நோக்கத்தைக் கொண்டில்லை என்று நான் கூற வரவில்லை. சோவியத் யூனியன் உலக சமாதானத்தைப் பாதுகாப்பதும், உலகை அமெரிக்க ஏகா திபத்தியவாதிகள் ஆதிக்கம் செய்வதைத் தடுக்கின்ற ஒரு சக்திமிக்க அம்சமும் ஆகும். சோவியத் யூனியன் இருப்ப தன் காரணமாக, அமெரிக்காவிலும், உலகிலும் உள்ள பிற்போக்காளர்கள் தம் பேராசைகளை அடைவது அறவே அசாத்தியமாயுள்ளது. இதனாற்தான் அமெரிக்க பிற்போக் * காளர்கள் சோவியத் யூனியனை மூர்க்கமாக வெறுக்கின்ற னர், அந்த சோஷலிஸ அரசை அழித்து விட உண்மையில் கனவும் காண்கின்றனர். ஆனால் அமெரிக்க பிற்போக்கா ளர்கள் 2-ம் உலக யுத்தம் முடிவடைந்து இவ்வளவு சற் றைக்குள்ளாக இப்போது ஒரு அமெரிக்க - சோவியத் யுத் தத்தைப் பற்றி இவ்வளவு உரத்துப் புழுகியும் தீய சூழல் ஒன்றை உருவாக்கியும் வருகின்றனர் என்ற உண்மை எம்மை
22

அவர்களின் உண்மையான நோக்கங்களை ஒருகாற் கவனிக் கும்படி நிர்ப்பந்திக்கிறது. அப்போது, சோவியத்- விரோத கோஷங்களின் திரை மறைவில் அவர்கள் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களையும் ஜனநாயக வட்டாரங்களையும் மூர்க்கமாகத் தாக்கியும் அமெரிக்க விதேச விசாலிப்பின் இலக்குகளான நாடுகள் எல்லாவற்றையும் அமெரிக்க சார் நிலை நாடுகளாக மாற்றியும் வருகின்றனர் என்பது தெரி யவருகிறது. அமெரிக்க மக்களும் அமெரிக்க ஆக்கிரமிப் பால் ஆபத்திலிடப்படும் எல்லா நாடுகளினதும் மக்களும் ஐக்கியமுறவும், அமெரிக்க பிற்போக்காளர்களினதும் இந்த நாடுகளில் உள்ள அவர்களின் ஏவல் நாய்களினதும் தாக் குதல்களுக்கு எதிராகப் போரிடவும் வேண்டுமென நான் நினைக்கிறேன். இந்தப் போராட்டத்தில் வெற்றியின் மூலம் மட்டுமே மூன்றாவது உலக யுத்தம் ஒன்று தவிர்க்கப்பட முடியும், இன்றேல் அது தவிர்க்கப்பட முடியாது.
ஸ்ட்ரோங்: அது மிகத் தெளிவாக உள்ளது. ஆனால் அமெரிக்கா அணு குண்டை உபயோகித்தால் ? அமெரிக்கா ஐஸ்லாந்திலும் ஒகினாவாவிலும் சீனாவிலும் உள்ள அதன் தளங்களிலிருந்து சோவியத் யூனியன் மீது குண்டுவீசினால்?
மாஓ: அணு குண்டு அமெரிக்க பிற்போக்காளர்கள் மக் களை அச்சுறுத்த உபயோகிக்கும் ஒரு காகிதப் புலி. அது பார்க்கப் பயங்கரமாயிருக்கிறது, ஆனால் உண்மையில் அப் படியொன்றுமல்ல. அணு குண்டு பெரும் ரீதியான படு கொலை ஆயுதம், உண்மைதான்; ஆனால் ஒரு யுத்தத்தின் இறுதி முடிவு மக்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒன் றிரண்டு புது ரக ஆயுதங்களால் அல்ல.''
எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள். வெளித் தோற்றத்திற் பிற்போக்காளர்கள் பயங்கரமானவர்கள், ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வளவு சக்திமிக்கவர்கள் அல்லர். நீண்ட காலக் கண்ணோட்டத்திற் பார்த்தால் உண் மையிற் சக்திமிக்கவர்கள் பிற்போக்காளர்கள் அல்லர், மக் களே. ருஷ்யாவில், 1917-ம் ஆண்டில் நடந்த பிப்ரவரிப்
23

Page 16
புரட்சிக்கு முன்னர், உண்மையிற் பலமானதாக இருந்தது எந்தத் தரப்பு ? மேலோட்டமாக ஜார் பலமானவனாக இருந்தான், ஆனால் அவன் பிப்ரவரிப் புரட்சியில் ஒரு காற் றடிக்க அள்ளி வீசப்பட்டான். இறுதி ஆராய்வில் ருஷ்யா விற் பலம் தொழிலாளர், விவசாயிகள், படைவீரர்களின் சோவியத்துகளின் பக்கமே இருந்தது. ஜார் ஆக ஒரு காகி தப் புலியாகத்தான் இருந்தான். ஹிட்லர் ஒரு சமயம் மிகப் பலம் வாய்ந்தவராகக் கருதப்படவில்லையா? ஆனால் அவர் ஒரு காகிதப் புலி என வரலாறு நிரூபித்தது. முசோ லினியும் அப்படியே, ஜப்பானிய ஏகாதிபத்தியமும் அப்ப டியே. அதற்கு நேர்மாறாக, சோவியத் யூனியனினதும், ஜனநாயகத்தையும் விடுதலையையும் நேசித்தவர்களான சகல நாடுகளிலுமுள்ள மக்களினதும் பலம் எதிர்பார்க் கப்பட்டதை விட மிக அதிகம் என நிரூபணமாயிற்று.
சியாங் கே- ஷெக்கும் அவரை ஆதரிப்பவர்களான அமெ ரிக்க பிற்போக்காளர்களும் எல்லாம் காகிதப் புலிகளே. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிப் பேசுவதாயின் , பலரும் அதைப் பிரமாதமான பலமுள்ளதாக எண்ணுவ தாகத் தென்படுகின்றனர். சீனப் பிற்போக்காளர்கள் சீன மக்களை அச்சுறுத்த அமெரிக்காவின் 'பலத்தை'' உபயோ கிக்கின்றனர். ஆனால் வரலாற்றில் உள்ள எல்லாப் பிற் போக்காளர்களையும் போலவே அமெரிக்க பிற்போக்காளர் களும் அதிகம் பலமுடையவர்கள் அல்லர் என நிரூபணமா கும். அமெரிக்காவில் உண்மையிற் பலமுடையவர்கள் பிறர் - அமெரிக்க மக்கள் - இருக்கிறார்கள்.
சீனாவின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எம்மி டம் தங்கி நிற்பதற்குச் சிறு தானியமும் ரைபிள் துப்பாக் கிகளும் மட்டுமே உள்ளன, ஆனால் எமது சிறுதானியமும் ரைபிள் துப்பாக்கிகளும் சியாங் கே-ஷெக்கின் விமானங்க ளையும் டாங்கிகளையும் விட அதிக சக்தி வாய்ந்தவை என வரலாறு இறுதியில் நிரூபணமாக்கும். சீன மக்கள் இன்னும் பல கஷ்டங்களை எதிர்நோக்குகிறார்கள், அமெரிக்க ஏகாதி
24

பத்தியத்தினதும் சீனப் பிற்போக்காளர்களினதும் கூட் டுத் தாக்குதல்களால் நீண்ட காலத்திற்குக் கஷ்டங்களை உறுவார்கள் என்ற போதிலும், இந்தப் பிற்போக்காளர் கள் தோற்கடிக்கப்பட்டு நாம் வெற்றியீட்டும் நாள் வரவே செய்யும். இதற்குக் காரணம் வெறுமனே இதுதான்: பிற் போக்காளர்கள் பிற்போக்கைப் பிரதிநிதித்துவம் செய்கின் றனர், நாம் முற்போக்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம்.
1947, டிசம்பர் 25-ம் திகதி தோழர் மாஓ சே - துங் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கூட் டமொன்றில் தற்போதைய நிலைமையும் எமது பணி களும் என்ற அறிக்கையைச் சமர்ப்பித்தார். இந்த
அறிக்கையில் அவர் கூறினார்:
சீன கம்யூனிஸ்ட் கட்சி, சர்வதேச, உள்நாட்டு நிலைமை பற்றி மாக்ஸிஸ - லெனினிஸ் விஞ்ஞானத்தின் அடிப்படை யில் தெளிந்த சிந்தனையுடன் ஓர் மதிப்பீட்டைச் செய்து கொண்டு, உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பிற் போக்காளர்களின் தாக்குதல்கள் எல்லாம் முறியடிக் கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், முறியடிக்கப் பட முடியும் கூட என்பதை உணர்ந்தது. வானில் இருண்ட மேகங்கள் கவிந்த சமயத்தில் நாம் இது தற்காலிகமா னது மட்டுமே, இருள் விரைவில் கலையும், சூரியன் அதை ஊடுருவிப் பிரகாசிக்கும் எனச் சுட்டிக் காட்டினோம். சியாங் கே - ஷெக் கொள்ளைக் கூட்டம் 1946, ஜூலையில் தேசம் பரந்த எதிர்ப்-புரட்சிகர யுத்தத்தைத் தொடுத்த போது அவர்கள் மக்கள் விடுதலைச் சேனையைத் தோற் கடிக்க மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை மட்டுமே பிடிக் கும் என நினைத்தனர். தாம் இருபது லட்சம் வீரர்களைக் கொண்ட கிரமமான சேனையையும், பத்து லட்சத்திற்கு மேற் பட்ட கிரமமல்லாத படையினரையும், பின் பகுதியில் உள்ள ராணுவ நிறுவனங்களிலும் ஆயுதந் தரித்த கூறுகளிலும் மேலும் பத்து லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்க ளையும், ஆக மொத்தம் நாற்பது லட்சத்திற்கு மேற்பட்ட வீரர்களைக் கொண்ட ராணுவ பலத்தை, கொண்டிருந்த
25

Page 17
னர்; தாக்குதலுக்கான தங்கள் தயாரிப்புகளைப் பூர்த்தி செய்யத் தாம் காலம் எடுத்திருந்தனர்; தாம் பெரும் நகரங்களின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றிருந்தனர்; முப்பது கோடிக்கு மேற்பட்ட ஜனத்தொகையைக் கொண் டிருந்தனர்; பத்து லட்சத்துக்கு மேற்பட்ட ஜப்பானிய படையெடுப்புத் துருப்புகளின் சாதனங்கள் முழுவதையும் தாம் எடுத்திருந்தனர்; அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து தாம் பிரமாண்டமான ராணுவ, நிதி உதவி பெற்றிருந் தனர் என்பதையெல்லாம் அவர்கள் கணக்கிட்டனர். மக் கள் விடுதலைச் சேனை ஜப்பானுக்கு எதிரான பதிற்தாக்கு தல் யுத்தத்தில் எட்டு ஆண்டுகள் போரிட்டதன் பின்னர் களைப்புற்றிருந்தது, எண்ணிக்கையிலும் சாதன வசதியிலும் கோமின்ராங் சேனையை விட மிகத் தாழ்வாக இருந்தது; விடுதலையாக்கப்பட்ட பிரதேசங்களின் ஜனத்தொகை பத் துக் கோடிக்குச் சற்றே அதிகம் மட்டுமே; இந்தப் பகுதி களில் அநேகமானவற்றில் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சக்திகள் இன்னும் துடைத்து ஒழிக்கப்படாமலும் நிலச் சீர்திருத்தம் இன்னும் சர்வவியாபகமாகவும் முற்றாகவும் நிறைவேற்றப்படாமலும் இருந்தன, அதாவது, மக்கள் விடுதலைச் சேனையின் பின் பகுதி இன்னும் ஸ்திரப்படுத்தப் படாமல் இருந்தது, என்பவற்றையும் அவர்கள் கணக்கிட் டனர். இந்தக் கணிப்பீட்டைக் கொண்டு ஆரம்பித்துச் சியாங் கே - ஷெக் கொள்ளைக் கூட்டம் சமாதானத்துக்கான சீன மக்களின் அவாவைப் புறக்கணித்து, கோமின்ராங் கும் கம்யூனிஸ்ட் கட்சியும் 1946, ஜனவரியிற் கைச்சாத் திட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் சகல கட்சிக ளினதும் அரசியல் கலந்தாலோசனை மாநாட்டால் அங்கீ கரிக்கப்பட்ட தீர்மானங்களையும் முடிவாகக் கிழித்தெ றிந்து, ஒரு அசகாயவாத யுத்தத்தையும் தொடுத்தனர். ராணுவப் படைகளில் சியாங் கே-ஷெக்கின் உயர்ச்சி இருந்து மறைகின்ற ஒன்று, தற்காலிகமான ஒரு பங்கை மட்டுமே வகிக்கக் கூடிய ஒரு அம்சம்: அமெரிக்க ஏகாதிபத்தியவாத உதவியும் அதே போல ஒரு தற்காலிகமான பங்கை மட்
26

டுமே வகிக்கக் கூடிய ஒரு அம்சம்; ஆனால் சியாங் கே- ஷெக் கின் யுத்தத்தின் மக்கள்-விரோத இயல்பும் மக்களின் உணர்ச்சிகளுமோ நிரந்தரமான பங்கை வகிக்கப்போகும் அம்சங்கள் என்றும், இந்த வகையில் மக்கள் விடுதலைச் சேனை ஒரு உயர்வான ஸ்தானத்தில் உள்ளது என்றும் நாம் அப்போது கூறினோம். இயல்பில் தேசபக்தியானதும் நியா யமானதும் புரட்சிகரமானதுமாகையால் மக்கள் விடுதலைச் சேனையால் நடத்தப்பட்ட யுத்தம் முழு நாட்டினதும் மக்க ளின் ஆதரவை வென்றெடுத்தே தீருவதாக இருந்தது. அதுவே சியாங் கே-ஷெக் மீதான வெற்றிக்கு அரசியல் அஸ்திவாரம். பதினெட்டு ஆண்டு கால யுத்த அனுபவம் எமது மதிப்பீட்டைப் பூரணமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பிற்போக்குச் சியாங் கே-ஷெக் கும்பல் 1946-ல் மக்க ளுக்கு எதிராகத் தேசம் பரந்த உள்நாட்டு யுத்தத்தைத் தொடுத்த போது அவர்கள் அந்த அபாயத்திற் கால் வைக் கத் துணிந்தமைக்கான காரணம் அவர்கள் தங்கள் சொந்த உயர்வான ராணுவ பலத்தில் மட்டுமன்றிப் பிரதானமா கத் தாம் " மிக மிகச் சக்தி வாய்ந்தவர்க' 'ளும் ''உலகில் ஈடிணையே இல்லாதவர்களும் எனக் கருதிய, அணு குண் டுகளைக் கொண்டவர்களான, அமெரிக்க ஏகாதிபத்தியவா திகளிலும் தங்கி நின்றமையே. ஒருபுறம், அமெரிக்க ஏகா திபத்தியம் தங்கள் ராணுவ, நிதித் தேவைகளைத் தொடர்ச் சியான வினியோகத்தால் பூர்த்திசெய்ய முடியும் என அவர் கள் நினைத்தனர். மறு புறம், 'அமெரிக்காவுக்கும் சோவி யத் யூனியனுக்கும் இடையில் யுத்தம் தவிர்க்க முடியாதது'' என்றும், ''மூன்றாவது உலக யுத்தம் ஒன்று வெடிப்பது தவிர்க்க முடியாதது'' என்றும் அதீத கற்பனை செய்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இப்படித் தங்கிநிற்பது 2-ம் உலக யுத்தத்தின் பின்பிருந்து எல்லா நாடுகளிலும் உள்ள பிற்போக்கு சக்திகளின் பொதுக் குணாம்சமாகும். இது 2-ம் உலக யுத்தத்தில் உலக முதலாளித்துவம் பெற்ற அடிகளின் கடுமையைப் பிரதிபலிக்கிறது; இது எல்லா
27

Page 18
நாடுகளிலும் உள்ள பிற்போக்கு சக்திகளின் பலவீனத்தை யும், அவற்றின் பயப்பிராந்தியையும் தன் நம்பிக்கை இழப்பையும் பிரதிபலிக்கிறது; அத்துடன் இது உலக புரட் சிகர சக்திகளின் பெரும் வலிமையையும் பிரதிபலிக்கிறது - இவை எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியவாத ஆதரவிற் தங்கி நிற்பதைத் தவிரத் தமக்கு வேறு வழியே இல்லை என எல்லா நாடுகளினதும் பிற்போக்கு சக்திகளை எண்ணக் செய்கின்றன. ஆனால் உண்மையில் அமெரிக்க ஏகாதிபத் தியம் 2-ம் உலக யுத்தத்திற்குப் பின்னர், சியாங் கே - ஷெக்கும் பிற நாடுகளின் பிற்போக்காளர்களும் எண்ணிக் கொள்கின்ற அளவு சக்திமிக்கது தானா? அதனால் உண்மை யில் அவர்களுக்குத் தொடர்ச்சியாகப் பண்டங்களைக் கொணர்ந்து கொட்ட முடியுமா ? இல்லை, அப்படியில்லை. 2-ம் உலக யுத்தத்தின் போது வளர்ச்சியடைந்த அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வலிமை நிலையற்ற வையும் நாளுக்கு நாள் சுருங்கி வருபவையுமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளை எதிர்ப்படுகிறது. இந்தச் சந்தை கள் மேற்கொண்டும் சுருங்குவது பொருளாதார நெருக்க டியை வெடிக்கச் செய்யும். அமெரிக்காவில் ஏற்பட்ட யுத் தச் சுபீட்சம் தற்காலிகமானது மட்டுமே. அமெரிக்கா வின் பலம் மேலெழுந்தவாரியானதும் இருந்து மறைவதும் மட்டுமே. சமரசப்படுத்த முடியாத உள்நாட்டு, சர்வதேச முரண்பாடுகள் ஓர் எரிமலையைப் போல அமெரிக்க ஏகாதி பத்தியத்தைத் தினமும் அச்சுறுத்தி வருகின்றன. அமெ ரிக்க ஏகாதிபத்தியம் இந்த எரிமலை மேல் உட்கார்ந்திருக் கிறது. இந்த நிலைமை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை உலகை அடிமைப்படுத்துவதற்கான திட்டமொன்றைத் தீட்டவும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உலகின் பிற பாகங்களிலும் காட்டு மிருகத்தைப் போலத் தறிகெட் டலையவும், எல்லா நாடுகளிலும் உள்ள பிற்போக்கு சக்தி களை, அவற்றின் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட களி சடைகளை, சேர்த்துத் திரட்டி, சோவியத் யூனியனின் தலை மையிலான ஜனநாயக சக்திகள் அனைத்திற்கும் எதிராக ஓர் ஏகாதிபத்தியவாத, ஜனநாயக விரோத முகாமை உரு
28

வாக்கவும், எதிர்காலத்தில், நீண்ட காலத்தின் பின்னர், என்றோ ஒருநாள், தாம் ஜனநாயக சக்திகளைத் தோற்க டிக்க மூன்றாம் உலக யுத்தம் ஒன்றைத் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையில் யுத்தத்திற்குத் தயாராகவும் உந்தித் தள்ளியுள்ளது. இது மிக அனர்த்தமான ஒரு திட்டம். உலகின் ஜனநாயக சக்திகள் இந்தத் திட்டத்தைத் தோற் கடிக்க வேண்டும், நிச்சயமாகத் தோற்கடிக்க முடியும். உலக ஏகாதிபத்திய-விரோத முகாமின் பலம் ஏகாதிபத் திய முகாமினுடையதைக் கடந்துவிட்டது. உயர்வான ஸ்தானத்தில் உள்ளவர்கள் நாமே, விரோதியல்ல.
1948, நவம்பரில் நிலையான சமாதானத்திற்காக, மக் கள் ஜனநாயகத்திற்காக என்ற சஞ்சிகைக்குத் தான் எழுதிய உலகின் புரட்சிகர சக்திகளே, ஐக்கியமுறுக, ஏகா திபத்தியவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடுக! என்ற கட்டுரையில் தோழர் மாஓ சே-துங்: 'விரோ தியின் பலத்தை மிகையாக மதிப்பீடு செய்துகொள்வதும் புரட்சிகர சக்திகளின் பலத்தைக் குறைத்து மதிப்பீடு செய்துகொள்வதும் மிகப் பெரும் தவறாகும்,'' எனச் சுட்டிக் காட்டினார்.
2-ம் உலக யுத்தத்தின் வெற்றிக்குப் பின்பிருந்து அமெ ரிக்க ஏகாதிபத்தியமும் பல்வேறு நாடுகளிலும் உள்ள அதன் ஏவல் நாய்களும் பாஸிஸ ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவற்றின் இடத்தை எடுத்துக்கொண்டுள்ளன, ஒரு புதிய உலக யுத்தத்திற்கு அவசர அவசரமாகத் தயாராகி யும் உலகம் முழுவதையும் ஆபத்திற்குள்ளாக்கியும் வருகின் றன; இது முதலாளித்துவ உலகின் முற்றான நலிவையும் அது உடனடியாக அழிவிற்கு அஞ்சிக்கொண்டிருப்பதையும் பிரதிபலிக்கிறது. விரோதிக்கு இன்னும் பலம் எஞ்சியுள் ளது; ஆகவே ஒவ்வொரு நாட்டினதும் புரட்சிகர சக்திகள் அனைத்தும் ஐக்கியமுற வேண்டும், எல்லா நாடுகளின் புரட் சிகர சக்திகளும் அவ்வாறே ஐக்கியமுற வேண்டும், சோவி யத் யூனியனின் தலைமையிலான ஒரு ஏகாதிபத்திய-விரோத ஐக்கிய முன்னணியை உருவாக்கவும் சரியான கொள்கை
29

Page 19
களைப் பின்பற்றவும் வேண்டும்; அன்றேல் வெற்றி அசாத் தியமாயிருக்கும். இந்த விரோதி பலவீனமான, நொருங் கக் கூடிய அஸ்திவாரத்தைக் கொண்டிருக்கிறான், உள்ளுற நலிவடைகிறான், மக்களிடமிருந்து பிரிந்து மாறுபட்டு நிற் கிறான், விடுபட முடியாத பொருளாதார நெருக்கடியிற் சிக்கியிருக்கிறான்; ஆகவே அவன் தோற்கடிக்கப்பட முடியும். விரோதியின் பலத்தை மிகையாக மதிப்பீடு செய்து கொள் வதும் புரட்சிகர சக்திகளின் பலத்தைக் குறைத்து மதிப் பீடு செய்து கொள்வதும் மிகப் பெரும் தவறாகும்.''
1948, ஜனவரி 18-ம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட் சியின் மத்திய கமிட்டிக்காக, கட்சிக்குள் வினியோ கிக்கப்படுவதற்குத் தான் எழுதிய கட்சியின் தற்போ தைய கொள்கையின் சில முக்கிய பிரச்சினைகள் பற்றிய உத்தரவில் தோழர் மாஓ சே - துங், மூல - உபாய ரீதி யில், முழுமையும் சம்பந்தப்பட்ட வரையில், நாம் விரோதியை இலகுவாகக் கொள்ளவும், ஆனால் அதே நேரத்தில் போராட்டக் கலையைக் கவனமாகக் கற்றுச் சீர்படுத்தவும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குறிப் பிட்ட போராட்டமும் சம்பந்தப்பட்ட வரையில் விரோ தியைப் பாரதூரமாகக் கொள்ளவும் வேண்டும் என எமக்குக் கூறினார்:
விரோதியின் பலத்தை மிகையாக மதிப்பீடு செய் வதை எதிருங்கள். உதாரணமாக: அமெரிக்க ஏகாதிபத் தியத்திற்குப் பயப்படுவது; போரைக் கோமின்ராங் பகுதிக ளுக்குள் கொண்டு செல்லப் பயப்படுவது; விதேசப் - பிரேமி - நிலப்பிரபுத்துவ அமைப்பைத் துடைத்து ஒழிக்கவும் நிலப் பிரபுக்களின் நிலத்தைப் பங்கிட்டு வினியோகிக்கவும் அதி காரித்துவ-மூலதனத்தைப் பறிமுதல் செய்யவும் பயப்படு வது; நீண்ட நெடுங்கால யுத்தத்திற்குப் பயப்படுவது, இத் தியாதியின. இவை எல்லாம் தவறு. உலகெங்கணும் ஏகாதி பத்தியமும், சீனாவிற் பிற்போக்குச் சியாங் கே - ஷெக் கும்ப லின் ஆட்சியும் ஏற்கனவே அழுகிவிட்டன, அவற்றுக்கு எதிர்காலம் இல்லை. அவற்றை நாம் துச்சம் செய்யக் கார
31)

ணம் உள்ளது. சீன மக்களின் உள்நாட்டு, அந்நிய விரோ திகள் அனைவரையும் நாம் தோற்கடிப்போம் என்பதில் நாம்' திட நம்பிக்கையோடும் நிச்சயமாகவும் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு குறிப்பிட்ட (ராணுவ, அரசியல், பொருளாதார அல்லது தத்துவார்த்த ரீதியான) போராட்டத்தையும் பொறுத்த வரையில், நாம் ஒருபோதும் விரோதியை இலேசாகக் கொண்டுவிடக் கூடாது; அதற்கு மாறாக நாம் விரோதியைப் பாரதூர மாகக் கொள்ளவும், வெற்றியை ஈட்ட வேண்டிப் போருக்கு எமது பலம் முழுவதையும் திரட்டிச் செலுத்தவும் வேண் டும். மூல-உபாய ரீதியில், முழுமையும் சம்பந்தப்பட்ட வரையில், நாம் விரோதியை இலேசாகக் கொள்ள வேண் டும் என நாம் சரியாகச் சுட்டிக் காட்டுகையில், நாம் எந்தப் பகுதியிலும், எந்தக் குறிப்பிட்ட போராட்டத்தி லும் ஒருபோதும் விரோதியை இலேசாகக் கொண்டுவிடக் கூடாது. முழுமையும் சம்பந்தப்பட்ட வரையில் நாம் எமது விரோதியின் பலத்தை மிகையாக மதிப்பீடு செய்து, எனவே அவனை வீழ்த்தத் துணியாமலும் வெற்றியை ஈட்டத் துணி யாமலும் இருந்தோமானால் நாம் வலதுசாரி சந்தர்ப்பவா தத் தவறொன்றை இழைப்பவர்கள் ஆவோம். ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு குறிப்பிட்ட பிரச்சினையும் சம்பந்தப் பட்ட வரை நாம் கவனமாக இல்லாவிட்டால், போராட் டக் கலையைக் கவனமாகக் கற்றுச் சீர்படுத்தாவிட்டால், போருக்கு எமது பலம் முழுவதையும் திரட்டிச் செலுத்தா விட்டால், வென்றெடுக்கப்பட வேண்டிய சகாக்கள் எல்லோ ரையும் (நடுத்தர விவசாயிகள், சிறிய சுதந்திர கைப் பணிக்காரர்களும் வியாபாரிகளும், நடுத்தர முதலாளித் துவ வர்க்கம், மாணவர்கள், ஆசிரியர்களும் பேராசிரியர் களும் சாதாரண புத்திஜீவிகளும், சாதாரண அரசாங்க ஊழியர்களும் தொழிற் துறையினரும் நல்லறிவு பெற்ற பெருங்குடியினரும் ஆகியோரை) - வென்றெடுப்பதற்கும் கவனம் செலுத்தாவிட்டால், நாம் "இடதுசாரி சந்தர்ப் பவாதத் தவறொன்றை இழைப்பவர்கள் ஆவோம். - 4
31

Page 20
1957, நவம்பர் 18-ம் திகதி தோழர் மாஓ சேதுங் மாஸ்கோவில் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சி களின் பிரதிநிதிகளின் கூட்டத்திலான தனது உரை யிற் கூறினார்:
1946-ல் சியாங் கே- ஷெக் எம்மைத் தாக்கிய போது எமது தோழர்களிற் பலரும் நாடு முழுவதினதும் மக்களும் யுத்தம் வெல்லப்பட முடியுமா என்பது பற்றி ஆழ்ந்த கவலை கொண்டனர். நானும் இது பற்றிக் கவலை கொண்டேன். ஆனால் ஒரு விஷயத்தில் எமக்குத் திட நம்பிக்கை இருந் தது. அந்தச் சமயத்தில் அமெரிக்க நிருபர் அன்னா லூயி ஸ்ட்ரோங் யெனானுக்கு வந்தார். அவருடனான ஒரு பேட் டியில் நான் சியாங் கே- ஷெக், ஹிட்லர், ஜப்பான், அமெ ரிக்கா, அணு குண்டு ஆகியன உள்ளிட்ட பல பிரச்சினைகளை விவாதித்தேன். சக்திமிக்கவர்களாகப் பெயர் பெற்ற பிற் போக்காளர்கள் எல்லோரும் வெறும் காகிதப் புலிகளே என நான் கூறினேன். இதற்குக் காரணம் அவர்கள் மக் களிலிருந்து பிரிந்து நிற்பது தான். ஹிட்லர் காகிதப் புலியே அல்லவா? ஹிட்லர் வீழ்த்தப்படவில்லையா? ருஷ்ய ஜார், சீனச் சக்கரவர்த்தி, ஜப்பானிய ஏகாதிபத்தியம் எல்லோ ருமே காகிதப் புலிகள்தான் என்றும் நான் கூறினேன். அவர்கள் எல்லோரும் வீழ்த்தப்பட்டதை நாம் அறிவோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் வீழ்த்தப்படவில்லை, அதனிடம் அணு குண்டும் இருக்கிறது. அதுவும் வீழ்த்தப் படும் என்று நான் நம்புகிறேன். அதுவும் ஒரு காகிதப் புலிதான். சியாங் கே - ஷெக் மிகச் சக்திமிக்கவராக இருந் தார்; அவர் நாற்பது லட்சத்திற்கு மேற்பட்ட கிரமமான துருப்புகளை வைத்திருந்தார். அப்போது நாம் யெனானில் இருந்தோம். யெனானின் ஜனத்தொகை எவ்வளவு இருந் தது ? ஏழாயிரம். எம்மிடம் எத்தனை துருப்புகள் இருந்த னர்? எம்மிடம் 9,00,000 கொரில்லாக்கள், அதுவும் ஸ்கோர் : கணக்கான தளப் பகுதிகளில் ஒருவரிடமிருந்து ஒருவர் சியாங் கே-ஷெக்கினால் துண்டிக்கப்பட்டு, இருந்த னர். ஆனால், சியாங் கே - ஷெக் ஒரு காகிதப் புலி மட்டு
32

மேயென்றும், அவரை நாம் நிச்சயமாகத் தோற்கடிப்போம் என்றும் நாம் கூறினோம். விரோதிக்கெதிரான போராட் டத்திற்காக, மூல-உபாய ரீதியில் நாம் எமது விரோதிகளை எல்லாம் துச்சப்படுத்தவும், ஆனால் தந்திரோபாய ரீதியில் நாம் அவர்களை எல்லாம் பாரதூரமாகக் கொள்ளவும் வேண்டும் என்ற கருத்தை நாம் நீண்ட ஒரு காலகட்டத் தினூடாக விருத்தி செய்து கொண்டோம். முழுமையும் சம்பந்தப்பட்ட வரை நாம் விரோதியைத் துச்சப்படுத்த வேண்டும், ஆனால் திட்டவட்டமான ஒவ்வொரு பிரச்சினை யும் சம்பந்தப்பட்ட வரை நாம் அவர்களைப் பாரதூரமா கக் கொள்ள வேண்டும் என்றும் இதற்கு அர்த்தம். முழு மையும் சம்பந்தப்பட்ட வரை நாம் விரோதியைத் துச்சப்படுத்தாவிட்டால், நாம் சந்தர்ப்பவாதத் தவறை இழைப்பவர்களாவோம். மாக்ஸும் எங்கெல்ஸும் இரு மனிதர்கள் மட்டுமே. இருப்பினும் அந்த ஆரம்ப நாட் களிலேயே அவர்கள் முதலாளித்துவம் உலகெங்கும் வீழ்த் தப்படும் எனப் பிரகடனம் செய்தனர். ஆனால் திட்டவட் டமான பிரச்சினைகளையும் குறிப்பிட்ட விரோதிகளையும் கையாள்வதில் நாம் விரோதிகளைப் பாரதூரமாகக் கொண் டாலன்றி நாம் அசகாயவாதத் தவறை இழைப்பவர்கள் ஆவோம். யுத்தத்தில், சண்டைகள் ஒவ்வொன்றாகத்தான் நடத்தப்பட முடியும், விரோதிப் படைகளும் ஒவ்வொன் றாகத்தான் அழிக்கப்பட முடியும். தொழிற்சாலைகள் ஒவ் வொன்றாகத்தான் கட்டப்பட முடியும்.. விவசாயிகள் நிலத்தை ஒவ்வொரு தறையாகத்தான் உழ முடியும். ஒரு சாப்பாட்டைச் சாப்பிடுவதற்கும் இதுவே பொருந்தும். மூல - உபாய ரீதியில், ஒரு சாப்பாட்டைச் சாப்பிடுவதை நாம் இலேசாகக் கொள்கிறோம்: அதை எம்மால் முடித்து விட இயலும் என்று எமக்குத் தெரியும். ஆனால் உண்மை யாகச் சாப்பிடுகையில் நாம் கவளம் கவளமாகவே சாப்பிடு கிறோம். ஒரு முழு விருந்தை ஒரே வாயில் விழுங்கி விடுவது அசாத்தியம். இதற்குப் பகுதி பகுதியாகத் தீர்ப்பது என்று பெயர். ராணுவ பாரிபாஷையில் இது விரோதிப் படை களை ஒவ்வொன்றாகத் தகர்ப்பது என அழைக்கப்படுகிறது.
33,

Page 21
III
1957, நவம்பர் 18 - ம் திகதி, கம்யூனிஸ்ட், தொழி லாளர் கட்சிகளின் பிரதிநிதிகளின் மாஸ்கோ கூட்டத் தில் ஓர் உரையில் தோழர் மாஓ சே துங் தற்போது நிலவும் சர்வதேச நிலைமையை ஆராய்ந்து, சோஷலிஸ சக்திகள் ஏகாதிபத்தியவாத சக்திகளை மிஞ்சுகின்றன என்றும் கீழைக் காற்று மேலைக் காற்றை மிஞ்சி வீசு கிறது என்றும் சுட்டிக் காட்டினார்:
சர்வதேச நிலைமை இப்போது ஒரு புதிய திருப்ப முனையை அடைந்துள்ளது என்பது எனது அபிப்பிராயம். இன்று உலகில் இரு காற்றுகள், கீழைக் காற்றும் மேலைக் காற்றும், உள்ளன. ''ஒன்றில் கீழைக் காற்று மேலைக் காற்றை மிஞ்சி வீசும், அல்லது மேலைக் காற்று கீழைக் காற்றை மிஞ்சி வீசும்,'' என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. கீழைக் காற்று மேலைக் காற்றை மிஞ்சி வீசுகிறது என்பது இன்றைய நிலைமை யின் குணாதிசயம் என நான் நம்புகிறேன். அதாவது சோஷ லிஸ சக்திகள் ஏகாதிபத்தியவாத சக்திகளைக் காட்டிலும் மிக உயர்வானவையாக உள்ளன.
இதற்கு ஒரு நாள் முன்பதாக, நவம்பர் 15-ம் திகதி, தோழர் மாஓ சே-துங், சோவியத் யூனியனிற் கல்வி கற்றுக் கொண்டிருந்த சீன மாணவர்களுக்கு ஆற்றப்பட்ட ஓர் உரையிற் கூறினார்:
உலகிற் காற்று வீசும் திக்கு மாறிவிட்டது. சோஷ லிஸ, முதலாளித்துவ முகாம்களுக்கு இடையிலான போராட் டத்தில் ஒன்றில் மேலைக் காற்று கீழைக் காற்றை மிஞ்சி வீசும், அல்லது கீழைக் காற்று மேலைக் காற்றை மிஞ்சி வீசும். உலகம் இப்போது மொத்தம் 270 கோடி ஜனத் தொகை யைக் கொண்டுள்ளது; சோஷலிஸ நாடுகள் இதில் 100 கோடியைக் கொண்டுள்ளன, சுதந்திரமான, முன் நாளைய காலனியல் நாடுகள் 70 கோடியைக் கொண்டுள்ளன, இப் போது சுதந்திரத்திற்காக, அல்லது பூரண சுதந்திரத்திற்
34

காகப் போராடிக்கொண்டிருக்கும் நாடுகளும் நடுநிலை மையை நோக்கிய போக்குகளைக் கொண்ட முதலாளித்துவ நாடுகளும் 60 கோடியைக் கொண்டுள்ளன. ஏகாதிபத்திய முகாமின் ஜனத்தொகை சுமார் 40 கோடி மட்டுமே உள் ளதோடு, அது உள்ளுக்குள் பிளவுபட்டும் உள்ளது. அதற் குள் பூகம்பங்கள் நிகழும். இப்போது மேலைக் காற்று அல்ல கீழைக் காற்றை மிஞ்சி வீசுவது. கீழைக் காற்றே மேலைக் காற்றை மிஞ்சி வீசுகிறது.
1957, நவம்பர் 6-ம் திகதி, அக்டோபர் புரட்சி யின் நாற்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய சோ.சோ.கு.யூ. னின் சுப்ரீம் சோவியத் கூட்டத்தில் உரையாற்றுகையில் தோழர் மாஓ சே-துங் கூறினார்:
தங்கள் கதியை உள் நாட்டிலும் காலனியல், அரைக்காலனியல் நாடுகளிலும் உள்ள மக்களை ஒடுக்குவதிற் பண யம் வைப்பதோடு ஏகாதிபத்தியவாதிகள்" யுத்தத்திலும் தம் நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யுத்தத்திலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்? கடந்த அரை நூற்றாண்டில் நாம் இரு உலக யுத்தங்களின் அனுப வத்தைப் பெற்றுள்ளோம். 1 -ம் உலக யுத்தத்தின் பின் னர் ருஷ்யாவில் அக்டோபர் சோஷலிஸ மகா புரட்சி நடை பெற்றது. 2-ம் உலக யுத்தத்தின் பின்னரும் கிழக்கு ஐரோப்பாவிலும் கிழக்கிலும் புரட்சிகள் நடைபெற்றன. ஏகாதிபத்தியவாத தீரர்கள்' மூன்றாம் உலக யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதில் முனைப்பாக உள்ளனரானால், அதன் ஒரே விளைவு உலக முதலாளித்துவ அமைப்பின் முற்றான அழிவைத் துரிதப்படுத்துவதாகத்தான் இருக்கும்.
1957, பிப்ரவரி 27-ம் திகதி, தோழர் மாஓ சே - துங் உயர் அரசு மா நாட்டின் 11- வது (விரிவுபடுத் தப்பட்ட) கூட்டத் தொடரில், மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றிய தனது உரையை ஆற்றினார். அந்த உரையின் ''தீய காரி யங்கள் நல்ல காரியங்களாக மாற்றப்பட முடியுமா?"
35

Page 22
என்ற உப-தலைப்பிடப்பட்ட 10 - வது பகுதியில் அவர் கூறினார்:
மூன்றாவது உலக யுத்தமொன்று வெடிக்குமா இல்லையா என்று உலகெங்கணும் உள்ள மக்கள் இப்போது விவாதித் துக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினையிலும் நாம் மானசீக ரீதியிற் தயாராக இருக்கவும் சிறிது ஆராய்வு செய்யவும் வேண்டும். நாம் சமாதானத்திற்காகவும் யுத் தத்திற்கு எதிராகவும் உறுதியாக நிற்கிறோம். ஆனால் ஏகா திபத்தியவாதிகள் மற்றுமொரு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விடுவதில் பிடிவாதமாக இருந்தால், நாம் அதற்கு அஞ்சக் கூடாது. இந்தப் பிரச்சினையிலான எமது கண்ணோட்டம் 'எந்தக் குழப்பத்தையும் குறித்த எமது அதே கண்ணோட் டந்தான்: முதலாவதாக, நாம் அதற்கு எதிர்; இரண்டா வதாக நாம் அதற்குப் பயமில்லை. முதலாவது உலக யுத் தத்தைத் தொடர்ந்து 20 கோடி ஜனத் தொகையைக் கொண்ட சோவியத் யூனியன் ஜனித்தது. இரண்டாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து மொத்தமாகத் 90 கோடி ஜனத்தொகையைக் கொண்ட சோஷலிஸ முகாம் தோன் றியது. ஏகாதிபத்தியவாதிகள் மூன்றாம் உலக யுத்தம் ஒன்றைத் தொடுப்பதிற் பிடிவாதமாக இருப்பார்களேயா னால், மேலும் பல பத்துக் கோடி மக்கள் சோஷலிஸத்தை நாடுவர் என்பது நிச்சயம்; அப்போது ஏகாதிபத்தியவாதி களுக்கு உலகில் அதிக இடம் மிஞ்சியிராது: ஏகாதிபத்திய வாத அமைப்பு முழுவதும் முற்றாகத் தகர்வதும் மிகச் சாத் தியமே.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒரு முரண்பாட்டின் எதி ரெதிரான இரு அம்சங்களில் ஒவ்வொன்றும், அவற்றிடை யேயான போராட்டத்தின் ஒரு விளைவாகத் தவறாது எப் போதும் அதனதன் எதிர் அம்சத்தின் நிலைக்கு மாறுகிறது. இங்கு சூழ்நிலைகள் அத்தியாவசியமானவை. குறிப்பிட்ட சூழ்நிலைகள் இல்லாமல் முரண்பட்ட இரு அம்சங்களில் எதுவும் அதன் எதிர் அம்சத்தின் நிலைக்கு மாற முடி.
36

யாது. உலகில் உள்ள வர்க்கங்கள் எல்லாவற்றுள்ளும் தொழிலாளி வர்க்கமே தனது ஸ்தானத்தை மாற்றிக் கொள்ள மிக ஆர்வமுடையது, அடுத்ததாக அரைத்தொழிலாளி - வர்க்கம் வருகிறது, ஏனெனில் முன்னையதற்கு உடைமை எதுவுமே இல்லை, பின்னையதும் அதைவிட ஒன் றும் திறமாக இல்லை. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை யில் ஒரு பெரும்பான்மையைக் கட்டுப்பாடு செய்வதும் உலகின் பல பாகங்களை ஆதிக்கம் செய்வதுமான தற்போ தைய நிலைமை தற்காலிகமான ஒன்று: அது இறுதியில் மாற்றப்படும். சர்வதேச விவகாரங்களிற் தன் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் ஒரு வறிய நாடு என்ற சீனாவின் ஸ்தா னமும் மாற்றப்படும் - வறிய நாடு செல்வமிக்கதாக மாறும், உரிமைகள் மறுக்கப்பட்ட நாடு உரிமைகளை அனுபவிக்கும் ஒன்றாக மாறும் - இது காரியங்கள் அவற்றின் எதிரிடை களாக மாற்றமுறுவதாகும். இங்கு தீர்க்கமான சூழ்நிலை கள் சோஷலிஸ அமைப்பும் ஐக்கியமுற்ற மக்களின் ஒரு மித்த பிரயாசைகளும் ஆகும்.
1950, ஜூன் 28-ம் திகதி, அமெரிக்க ஏகாதிபத் தியம் கொரியாவிற் பட்டவர்த்தனமாக ஓர் ஆக்கிர மிப்பு யுத்தத்தைத் தொடுத்துச் சீனாவின் தைவான் பிரதேசத்தையும் ஆயுத பலாத்காரத்தாற் கைப்பற்றி யதன் பின்னர், மத்திய மக்கள் அரசாங்க சபையின் எட்டாவது கூட்டத் தொடரில் தோழர் மாஓ சே-துங் பின்வரும் அறிக்கையைச் சமர்ப்பித்தார்
உலகெங்கும் ஒவ்வொரு நாட்டினதும் விவகாரங்கள் அந்த நாட்டின் சொந்த மக்களால் நடத்தப்பட வேண்டு மென்றும் ஆசிய விவகாரங்கள் ஆசிய மக்களாலேயே நடத்தப்பட வேண்டும், அமெரிக்காவினால் அல்ல என் றும் சீன மக்கள் நெடுங் காலத்திற்கு முன்பிருந்தே பிரக டனம் செய்து வந்துள்ளனர். ஆசியாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆசிய மக்களிடமிருந்து பரந்த, உறுதியான எதிர்ப்பை மட்டுமே எழுப்பும். இந்த ஆண்டு ஜன
37

Page 23
வரி 5-ம் திகதியளவு அண்மையில் ட்ரூமன், அமெரிக்கா தைவா னிற் தலையிடாது என்று கூறினார். இப்போது அவர் தனது கூற்றையே பொய்யாக்கி, சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாமை பற்றிய சர்வதேச ஒப்பந்தங்களையும் எல்லாம் கிழித்தெறிந்துள் ளார். இவ்வாறாக அமெரிக்கா தனது உண்மையான ஏகா திபத்தியவாத சொரூபத்தை வெளிக்காட்டிக் கொண்டுள் ளது; இது சீனாவினதும் ஆசியா முழுவதினதும் மக்களுக்கு உபயோகமானது. கொரியாவினதும் பிலிப்பைன்ஸினதும் வியத்நாமினதும் பிற நாடுகளினதும் உள் விவகாரங்களில் அமெரிக்க தலையீட்டிற்கு எந்தவிதக் காரணமுமே இல்லை. சீனா எங்கணும் உள்ள மக்களினதும், அதே போல் உலகம் எங்கணும் உள்ள மக்களினதும் அனுதாபம் ஆக்கிரமிப் பிற்கு உள்ளானவர்களின் பக்கம் உள்ளது, நிச்சயமாக அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம் இல்லை. மக்கள் ஏகாதி பத்தியத்தினால் விலைக்கு வாங்கப்படவும் மாட்டார்கள் , அன்றி அதனால் மிரட்டப்படவும் மாட்டார்கள். ஏகாதி பத்தியம் வெளிப்பார்வைக்குப் பலமானது, ஆனால் உள் ரூறப் பலவீனமானது, ஏனெனில் அதற்கு மக்கள் மத்தி யில் எந்த ஆதரவும் இல்லை. சீனா எங்கணும், உலகம் எங்க ணும் உள்ள மக்களே, ஐக்கியமுற்று, அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் சீண்டுதல்கள் அனைத்தையும் முறியடிக்கப் பூர
ணமாகத் தயாராவீர்!
1955, பிப்ரவரி 14-ம் திகதி தோழர் மாஓ சே - துங், சீன - சோவியத் நட்பு, கூட்டணி, பரஸ்பர உதவி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடச் சீனாவில் உள்ள சோவியத் ஸ்தானிகராலயத்தால் அளிக்கப்பட்ட வரவேற்புபசர் ரம் ஒன்றிற் கூறினார்:
எமது இரு பெரும் நாடுகளுக்கும், சீனாவுக்கும் சோவி யத் யூனியனுக்கும், இடையிலான ஒத்துழைப்பு இருக்க, ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புகரத் திட்டங்கள் தகர்க் கப்படும் என நான் திட நம்பிக்கை கொண்டுள்ளேன்.
38

சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான மகத்தான ஒத்துழைப்பு இருக்க, தகர்க்கப்பட முடியாத ஏகாதிபத்தியவாத ஆக்கிரமிப்புகரத் திட்டங்கள் எதுவுமே இல்லை என்பது அனைவரும் காணக் கூடியதாகத் தெளிவாக உள்ளது. அவை யாவும் ஐயத்திற்கிடமின்றித் தகர்க்கப் படும். ஏகாதிபத்தியவாதிகள் ஆக்கிரமிப்பு யுத்தமொன் றைத் தொடங்குவார்களேயானால், முழு உலகினதும் மக் களுடன் சேர்ந்து நாம் நிச்சயமாக அவர்களை உலகிலி ருந்து முற்றாக அழித்தொழிப்போம்.
- 1958, செப்டம்பர் 8-ம் திகதி உயர் ) அரசு மாநாட்டில் தோழர் மாஓ சே-துங் கூறினார்:
தற்போதைய நிலைமை சமாதானத்திற்காகப் போரா டுகின்ற, உலகெங்கும் உள்ள மக்களுக்குச் சாதகமானது.
பொதுவான போக்கு கீழைக் காற்று மேலைக் காற்றை மிஞ்சி வீசுகிறது என்பதாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவின் தைவான் பிரதே சத்திற் படையெடுத்து, அதைக் கடந்த ஒன்பது ஆண்டு களாகக் கைப்பற்றி வைத்திருந்துள்ளது. சிறிது காலத் திற்கு முன்னர் அது தன் படைகளை லெபனானிற் படை யெடுக்கவும் அதைக் கைப்பற்றவும் அனுப்பியது. அமெ ரிக்கா உலகெங்கும் பல நூற்றுக் கணக்கான ராணுவ தளங்களை அமைத்துள்ளது. சீனாவின் தைவான் பிரதேச மும் லெபனானும் அந்நிய மண்ணில் உள்ள அமெரிக்காவின் மற்றெல்லாத் தளங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்தைச் சுற்றி உள்ள அத்தனை சுருக்குக் கயிறுகள் இந்தச் சுருக்குக் கயிறுகள். அமெரிக்கர்களாலேயே சிருஷ் டிக்கப்பட்டவை, வேறு எவராலுமல்ல; அவர்கள் தாமே தான் இந்தச் சுருக்குக் கயிறுகளைத் தங்கள் கழுத்துகளைச் சுற்றிப் போட்டுக் கொண்டு கயிறுகளின் மறுமுனைகளைச் சீன மக்களிடமும் அரபு நாடுகளின் மக்களிடமும் சமாதா னத்தை நேசிப்பவர்களும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களு மான உலக மக்களிடமும் கொடுத்திருக்கின்றனர்.
39

Page 24
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடங்களில் எவ் வளவு அதிக காலம் இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவர் களின் கழுத்துகளைச் சுற்றியுள்ள இந்தச் சுருக்குக் கயிறு கள் அதிகமாக இறுகும்.
ஆக்கிரமிப்பும் எல்லா நாடுகளினதும் மக்களை அடி மைப்படுத்துவதுமான தங்கள் நோக்கங்களை அடைவதற் காக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உலகின் சகல பாகங் களிலும் நெருக்கடியைச் சிருஷ்டித்து வந்துள்ளனர். அவர் கள் நெருக்கடியான நிலைமைகளாற் தாங்கள் எப்போதும் நன்மை அடைவர் எனக் கணக்கிடுகின்றனர், ஆனால் உண்மை என்னவெனில் அமெரிக்காவினால் சிருஷ்டிக்கப்பட் டுள்ள நெருக்கடி அவர்கள் விரும்புவதற்கு நேர் எதிரா னதற்கே இட்டுச் சென்றுள்ளது என்பதுதான். அது அமெ ரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உலக மக்களை அணி திரட்ட உதவுகிறது.
அமெரிக்க ஏகபோகக் கோஷ்டிகள் தங்கள் ஆக்கிர மிப்பு, யுத்தக் கொள்கைகளில் விடாப்பிடியாக இருப்பார் களேயானால், உலகம் முழுவதினதும் மக்கள் அவர்களைக் கழுத்திற் சுருக்கிட்டுத் தூக்கிலிடும் நாள் வந்தே தீரும். அமெரிக்காவின் உடந்தைகளுக்கும் இதே கதிதான் காத் திருக்கிறது.
1958, செப்டம்பர் 29-ம் திகதி தோழர் மாஓ சே-துங், யங்ற்ளி நதிப் பள்ளத்தாக்கில் உள்ள பல மாகாணங்களில் ஒரு பரீட்சார்த்த சுற்றுப் பிரயாணத் தின் பின்னர் பீகிங்கிற்குத் திரும்பினார். ஹ்ஸின் ஹுஆ செய்தி ஸ்தாபன நிருபர் ஒருவருடனான பேட்டியொன் றில் அவர் கூறினார்:
ஏகாதிபத்தியம் அதிக காலம் நிலைக்காது. ஏனெனில் அது இடையறாது எல்லா விதமான தீச் செயல்களையும் செய்கிறது. அது மக்களுக்கு எதிரானவர்களான, எல்லா நாடுகளிலும் உள்ள பிற்போக்காளர்களை ஊட்டி வளர்ப்
40

பதிலும் ஆதரிப்பதிலும் விடாப்பிடியாக நிற்கிறது. அது பல காலனிகளையும் அரைக்-காலனிகளையும் பலாத்காரமா கக் கைப்பற்றி வைத்தும், பல ராணுவ தளங்களை நிறுவி யும் இருக்கிறது. அது அணு யுத்தத்தாற் சமாதானத்தை அச்சுறுத்துகிறது. இவ்வாறாக ஏகாதிபத்தியம் உலகின் மக் களில் 90 சத விகிதத்திற்கு மேற்பட்டோரைத் தனக்கு எதிராக எழவோ அல்லது தனக்கு எதிராகப் போரிடத் தயாராகவோ நிர்ப்பந்தித்துள்ளது. ஆனால் ஏகாதிபத்தி யம் இன்னும் உயிரோடும் அட்டகாசஞ் செய்து கொண் டும் இருக்கிறது, இன்னும் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் தறிகெட்டு மிதித்துத் துவைத் துத் திரிகிறது. மேற்கில் ஏகாதிபத்தியவாதிகள் இன்னும் தங்கள் சொந்த நாடுகளின் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும். ஏகாதிபத்தியத்தால், விசேஷமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால், இழைக்கப்ப டும் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் ஒரு முடிவு கட் டுவது முழு உலகின தும் மக்களின் பணியாகும்.

Page 25
குறிப்புகள்
1. வாங் சிங்-வெய் அபகீர்த்திபெற்ற ஒரு கோமின்ராங் தலைவரும் ஜப்பா னிய-சார்பு தேசத்துரோகியுமாவார். அவர் 1938, டிசம்பரில் கோமின்ராங்கின் உப-தலைவராயும் அதன் மக்கள் அரசியற் சபையின் தலைவராயும் இருந்த சம் யத்தில் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் பகிரங்கமாகச் சரணடைந்தார். 1940, மார்ச்சில் அவர் நான்கிங்கில் உருவாக்கப்பட்ட கைப்பொம்மை மத்திய அரசாங் கத்தின் ஜனாதிபதியானார். அவர் 1944, நவம்பரில் ஜப்பானில் இறந்தார்.
2. சாங் குவோ - ராஓ சீனப் புரட்சிக்குத் துரோகம் செய்து சென்ற ஒருவர். தன் வாழ்வின் ஆரம்பத்தில் அவர் புரட்சியில் நன்மை பெற எண்ணிச் சீன கம்யூனிஸ்ட் கட்சியிற் சேர்ந்தார். கட்சியில் அவர் பாரதூரமான குற்றங்களிற் போய் முடிந்த தவறுகள் பலவற்றைச் செய்தார். இவற்றில் மிக அபகீர்த்தி பெற்றது, 1935-ல் அவர் செஞ் சேனையின் வட திசைப் படைநடப்பை எதிர்த்த திலும், செஞ் சேனை ஸ்ஸெசுவான் - ஸிகாங் எல்லைகளில் உள்ள சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களுக்கு வாபஸாக வேண்டுமென வாதிட்டதிலுமான அவ ரது தோல்விமனப்பான்மையும் நிர்மூலவாதமுமாகும் (ஸிகாங் ஆதியில் ஒரு மாகாணமாக இருந்தது, ஆனால் 1955-ல் அவ்வாறில்லாமல் ரத்துச் செய்யப் பட்டது, இப்போது அதன் ஒரு பகுதி ஸ்ஸெசுவான் மாகாணத்தின் வரைய றைக்குள்ளும் மற்றொரு பகுதி திபெத் சுயாட்சிப் பிரதேசத்தின் வரையறைக் குள்ளும் உள்ளன); மேலும் அவர் கட்சிக்கும் மத்திய கமிட்டிக்கும் எதிராகப் பகிரங்கமாகத் துரோக நடவடிக்கைகள் நடத்தி, தன் சொந்தப் போலி மத்திய கமிட்டியை நிறுவி, கட்சியினதும் செஞ் சேனையினதும் ஐக்கியத்தைச் சீர்குலைத்து, செஞ் சேனையின் நான்காவது முனைச் சேனைக்குப் பெரும் இழப்புகளை விளை வித்தார். ஆனால் தோழர் மாஓ சோ - துங்கும் மத்திய கமிட்டியும் நடத்திய பொறு மையான கற்பித்தலின் நற்பயனாக நான்காம் முனைச் சேனையும் அதன் எண் ணிறந்த இயங்குனர்களும் விரைவில் கட்சி மத்திய கமிட்டியின் சரியான தலை மையின் கீழ்த் திரும்பி வந்து, பிற்காலத்திய போராட்டங்களில் புகழ் செறிந்த ஒரு பங்கை வகித்தனர். இருப்பினும் சாங் குவோ-ராஓ திருத்த முடியாதவராகி, 1938, வசந்த காலத்தில் ஷென்ஸி- கான்ஸ- நிங்ஸியா எல்லைப் பிரதேசத்தை விட்டு ஒழித்தோடிக் கோமின்ராங் ரகசியப் பொலீஸிற் சேர்ந்தார்.
3. யுவான் ஷிஹ்-காய் சிங் ராஜவம்சத்தின் இறுதி ஆண்டுகளில் வடக்கத் திய யுத்தப் பிரபுக்களின் தலைவராயிருந்தவர். சிங் ராஜ வம்சம் 1911-ம் ஆண் டுப் புரட்சியால் வீழ்த்தப்பட்டதன் பின்னர் அவர் குடியரசின் ஜனாதிபதிப் பதவி யைக் கவர்ந்து கொண்டு, பெரும் நிலப்பிரபு, பெரும் விதேசப்பிரேமி வர்க்கங்க
42

ளைப் பிரதிநிதித்துவம் செய்த முதலாவது வடக்கத்திய யுத்தப் பிரபுக்களின் அரசாங்கத்தை ஏற்படுத்தினார். இதை அவர் எதிர்ப்-புரட்சிகர ஆயுத பலாத் காரத்திலும் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவிலும் தங்கி நின்றும், அப்போது புரட்சிக்குத் தலைமைதாங்கிய முதலாளித்துவ வர்க்கத்தின் சமரசவாதத் தன் மையைச் சாதகமாகக் கொண்டும் செய்தார், 1915-ல் அவர் தன்னைச் சக்கர வர்த்தியாக்கிக் கொள்ள விரும்பி, ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆதர வைப் பெறுவதற்காக, சீனா முழுவதினதும் பிரத்தியேக கட்டுப்பாட்டைப் பெறு வதற்கு ஜப்பான் கைக்கொண்ட இருபத்தொரு கோரிக்கைகளை ஏற்றுக்கொண் டார். அதே ஆண்டு டிசம்பரில், அவர் சிம்மாசனம் ஏறுவதற்கு எதிரான எழுச்சியொன்று யுனான் மாகாணத்தில் நடைபெற்று, உடனே தேசம் பரந்த துணை நடவடிக்கைகளையும் ஆதரவையும் பெற்றது. யுவான் ஷிஹ்-காய் 1916, ஜூனில் பீகிங்கில் இறந்தார். 1)
2 , 4:4 |
க க க ப 4 ''?
24 - -
த சதிகார்
43

Page 26
ܬ ܢ .

(OCT A SIL

Page 27