கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மரவேலை 1

Page 1
ผ014

மு தற் 11 5 ஆம். உம்; - வ5 களுக்கு
ஆக்கி ஏன்
எச்சு. எம். சோமரத்தினா
தமிழாக்கம்
சோ. க. தம்பிப்பிள்ளை
தமிழாக்க உரிமை அரசினருக்கே.
அரச மொழித் திணைக்கள வெட்டுப் பகுதியினரால் பிர - சரிக : வெற்று -
-- 5ை அரசாங்க அச்சத்தில் - ச்கப்பெற்றது

Page 2

Miss-L. Thar malingam Chand; kul; girl's college.
JA F N A CHUNDIKULI SIRLS' COLLEGE
IAEENる。
M. D. GUNASENA & CO. LTD. BOOK SEILERS & STATIONERS
20, STANLEY ROAD, . JAFFNA. Tel. No. 7029,

Page 3
مجله
ایران
او در ابتدا و انتها

YAG AF
CHY
Ap' ALAI WAT irlNNAKA A
SI B. R A R

Page 4

ம ர', வேலை
முதற் பாகம் 6 ஆம், 7ஆம், 8 ஆம் வகுப்புக்களுக்குரியது
ஆக்கியோன் எச்சு. எம். சோமரத்தினா
தமிழாக்கம் சோ. க. தம்பிப்பிள்ளை
எnnம
மக்ன
>CEYLON)
அரசகரும மொழித் திணைக்கள வெளியீட்டுப் பகு தி யினரால் பிரசுரிக்கப்பெற்று
இலங்கை அரசாங்க அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது

Page 5

முகவுரை
ஆக்குந் தொழில் சம்பந்தமான பாட புத்தகங்களிரண்டு தன் மொழியலு வலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. மரவேலை, அரக்குவேலை, நெசவு வேலை, வனைதல் வேலை, தும்புவேலை, உலோகவேலை, தோல் பதனிடு வேலை, பிரம்புவேலை முதலிய வேலைகளுக்குரிய பாட புத்தகங்களையும் வெளியிட இவ்வலுவலகம் எண்ணியுள்ளது.
கல்வி நிபுணர்களினதும் நாட்டு மக்களினதும் கவனம் தொழிற் கல்வி மீது செலுத்தப்படும் இச்சந்தர்ப்பத்தில் மரவேலையைப் பற்றிய பாட புத்தகம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படுமென எதிர்பார்க் கின்றோம்.
iii
2--- J. N. R 21997-1,526 (1160)

Page 6

நூன்முகம் மரவேலை, அரக்குவேலை' போன்ற கைத்தொழில்களைப் பரப்புதற்கேற்ற சூழ் நிலை எங்கள் நாட்டில் தோன்றி இருக்கின்றது. கனிட்ட வகுப்புக்களில் கைத்தொழில் கட்டாய் பாடமாக்கப்பட்டதும், பொதுக் கல்வித் தகுதித் தேர்வுக்குக் கைத்தொழிலை ஒரு பாடமாக்கியதும், தொழிற்கல்விக்கு வேண்டிய கட்டடங்கள், கருவிகள், உபகரணங்கள் முதலியவைகளை வினி யோகித்ததும் இக்கல்வியின் வளர்ச்சிக்கு எடுத்துக்கொண்ட அறிகுறிகளாகக் காணப்படுகின்றன.
சமீப காலம் வரை, பகிரங்க பரீட்சைகளுக்கு மாணவர்களைப் பயிற்றுவிப் பதே எங்கள் நாட்டுக் கல்வி நிலையங்களின் நோக்கமாயிருந்து வந்தது. இதனால் மாணவர்கள் வெறும் எட்டுக் கல்வியையே பெற்று வந்தனர். இதனால் எழுதுவினையர்களை உற்பத்தி செய்யும் எந்திரங்களென எங்கள் கல்வி நிலையங்களை ஏளனமாகக்கூற நேர்ந்தது. ஏட்டுக் கல்வியோடு தொழிற் கல்வியும் சேர்ந்த விடத்துத் தான், கல்வி பூரணமடையுமென்பது அதனையறிந்த நிபுணர்களின் கொள்கையாகும். இக் கல்வியின் மூலமே நாட்டிற்குப் பொருத்தமான, சூழலுக்கேற்ற சிறந்த குடிமக்களாவதற்குப் பிள்ளைகளை வழிகாட்ட முடியும். ஆகையால், தொழிலுக்கு உரியவிடங் கொடுத்ததைக் குறித்து எங்கள் கல்விப் பகுதியையும் கல்விச் சபையையும் பாராட்ட வேண்டும்.
பாடசாலை விடயமாவதற்கு எவ்விதத்திலும் தொழில் சிறந்தது. தொழிலானது கல்வியின் சிறந்த நடுநாயகமாகும். அறிவு வளர்ச்சிக் கும் அது முதன்மையான வழியாகும். எங்கள் பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளில் நூற்றுக்கு ஐம்பது வீதத்திற்கு அதிகமான வர்கள், ஆசிரியர் வாய்மூலம் கற்பிப்பதிலும் இலகுவாகச் செய்முறையினாற் கற்க முடியுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். நன்கு ஒழுங்கு செய்து முறையாகக் கற்பிக்கும் கைத்தொழிற் பாடமானது படிப்பித்தலைச் சிறப்பாகக் கையாளச் செய்யும்.
இம்மாதிரியான பாடங்களின் மூலம் மாணவர்களுக்கு, பரிசீலனை செய் தல், அவதானித்தல், ஒப்பிடுதல், விமரிசனஞ் செய்தல், ஒற்றுமையை அறி தல், இவை சம்பந்தமானவற்றை உபயோகித்துப் புதிய அறிவைப் பெறுதல் ஆகியவைகளுக்குக் கிடைக்குஞ் சந்தர்ப்பம் மிக அதிகமாகும். தொழிற் கல்வியின் சிறப்பு மேலே கூறப்பட்ட போதிலும், அது பூரண கல்வியாவதற்கு ''அழகு'' என்னும் பொருள் மீதும் கவனஞ் செலுத்துதல் வேண்டும். தமது பண்பாட்டிற்கும் சூழலுக்கும் ஏற்ற தேசீய முறைகளையுடைய பல வகையான காட்டுருக்களையும் பொருட்களையும் ஆக்குதல் வேண்டும். பொழுதுபோக்குக்காய கருமங்களை ஆற்றுதற்கும் எண்ணங்களை வெளி யிடுவதற்கும் தொழிற்கல்வி முக்கியமானது.

Page 7
திறமையுள்ள மரவேலையாளரை, அல்லது தொழிலாளரைத் தோற்று விப்பதோ, விற்பனையாகக்கூடிய பொருள்களை உற்பத்தி செய்வதோ பாடசாலை களிற் கற்கும் தொழிற்கல்வியின் நோக்கமன்று. இவைகளுக்கெனச் சிறப் பான நிலையங்களுண்டு. ஆனால், மாணவர்களுக்கிடையே திறமையையும் சுய முயற்சியையும் பாடசாலைத் தொழிற்கல்வி மூலம் வெளிப்படுத்துவதே நோக்கமாக எதிர்பார்க்கப்படுகின்றது. மாணவருற்பத்தி செய்யும் பொருள் முக்கியமற்றதாக இருந்தபோதிலும் அதனை ஆக்குதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் பரிசீலனையோடுகூடிய சிந்தனையுமே மிக முக்கியமாகும். ஆனால், அனேக தொழிலாசிரியர்கள் பலனைப்பற்றி, அதாவது பொருள்களைப் பற்றிக் கவனித்து, செய்கை முறையைக் கவனி யாது விடுவதனால் மாணவரின் ஊக்கத்தைச் சிதைக்கின்றார்கள். ஆயினும், செய்கைமுறைக்கு முதலிடம் கொடுக்கும் எல்லா வேலைகளிலும் மாணவர் சிறந்த பொருள்களை ஆக்குகிறார்களென்பது பரிசீலனையினால் அறியப்பட் டுள்ளது.
கைத்தொழிலை எனைப் பாடங்களுடன் தொடர்பு படுத்துவதும் முக்கிய மாகும். வரைதற் பாடத்தில் தட்டொன்றிற்குப் பொருத்தமான காட் டுருவை ஆக்கும் மாணவன் அதனை மரத்திலமைப்பதனாற் சிறந்த பயிற்சியைப் பெறுகின்றான். அதனை அமைப்பதற்கு வேண்டிய மரத்தின் பரப்பளவையும் கனவளவையும் காண்பதனால் கணிதத்துடன் தொடர்புண் டாக்கப்படுகின்றது. கைகளுக்குப் பயிற்சி கொடுப்பதற்கு மட்டுமன்றிப் பலவிதமான கலைகளுக்கும் மையமாகக் கைத் தொழில் அமைந்துள்ள தென்பது கவனித்தற்குரியது.
தொழிலைப் புத்தக மூலம் கற்கவியலாது ; ஆயின், ஏதாவதொரு தொழிலைப் பற்றிய அடிப்படை விடயங்கள், முறைகள் முதலியவைகளை அதன்மூலம் கற்றுக்கொள்ளலாம். அவைகளைப் பின்பற்றுவதனால் தொழி லிற் சிறந்த திறமையைப் பெறலாம். ஆகையால், செய்கைமுறையினாற் படித்தலென்பது தொழிற்கல்வியில் முதலிடத்தைப் பெறுகிறது.
கைத்தொழில் சம்பந்தமான, திருத்திய பாடத்திட்டத்தைத் தழுவியே இப்புத்தகம் எழுதப் பட்டுள்ளது. ஆகையால் ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்புக்களிற் கற்கும் மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய எல்லா விடயங்களும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சிக்கும் இடமளிக்கப்பட் டுள்ளது. இதனால் சிந்திப்பதற்கும் உசாவுதற்கும் முன்னேறுதற்கும்
வழி திறக்கப்பட்டுள்ளது.
எச்சு. எம். சோமரத்தினா. பயிற்சிப் பாடசாலை,
இடமேகமம்,
வேரளகமம். 1957 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 1 ஆந் தேதி.

பொருளடக்கம்
பக்கம்
முதலாம் வருடம் 1. கருவிகள்.-
வாள்கள், சீவுளிகள், உளிகள், வரைகம்பு, பொது மூலை மட்டம், துறப் பணம், துளையலகுகள், வில்வாள், சாயுமோர் மூலை மட்டம், திருகாணி முடுக்கி, சாணைக்கல்லும் எண்ணெய்க்கல்லும், ஆணியமுக்கி, அரம், முள்ள ரம், மூட்டிடுக்கிமானி, துறப்பணம், இடுக்கி, வரையூசி, சுத்தியல், அடி.
மட்ட.ம், துளையூசி எய்பலகை, சேர்மன் பொதுச்சீவுளி |
2. மரங்கள்.--
(அ) இயற்கைத்தன்மை (ஆ) மரத்தின் வளர்ச்சியும் பராரையின் பகுதிகளும். (இ) வன்மரமும் மென் மரமும், (ஈ) மர இனங்கள்
""
3. வச்சிரம்.-
"ஆக்குதல், உபயோகித்தல்
4. அரத்தாள்
ள்
5. ஆணிகளும் திருகாணிகளும்.-
(அ) ஆணிவகைகள், ஆணிகளினுபயோகம், ஆணியடித்தல்
(ஆ) திருகாணி 6. ஒட்டுப் பலகை
ல் 3 - 5 : ல
7. மூட்டு வகைகள்.- 9 ...
உதைகான் மூட்டு, மைற்றர்மூட்டு, அரைமூட்டு, செருகன் மூட்டு, தவாளிப்பு நாக்கு மூட்டு, கடிவாளமூட்டு தலையில்லாணிமூட்டு
8. கவனிக்க வேண்டியன)
53
9. இலகுவான கருவிகளை உபயோகிப்பது பற்றிய அடிப்படை விடயங்கள்
அரிதலும் வெட்டுதலும், துளைத்தல், வரைகம்பை யுபயோகித்தல், சீவுதல் 10. அழகு செய்தலும் வேலை முடித்தலும் 11. பொருட்களைச் செய்தல் ... 12. சிறந்த கலைஞனின் குணங்கள் | 13. கேத்திரகணித உபகரணங்களும் நிருமாண அமைப்பைப் பற்றிய விவரங்களும் 14. கேத்திரகணிதவுருவ விளக்கம் 15. கிடைப்படத்தை விளங்குதல் 16. கோடுகளுங் கோணங்களும்
- * 2 3 - 8 : 5 5 5 2
55
57
60
17. கோணங்களும் முக்கோணங்களும்
18. பயிற்சி
vi

Page 8
viii
இரண்டாம் வருடம்
1. கருவிகள்.-
கான்சீவுஞ்சீ வுளி, தட்டுத்தவாளிப்புச் சீவுளி, தட்டைச் சீவுளி, ஆரைக்காற் சீவி, தட்டுச்சீவுளி, பொளியளவு கோல், மைற்றாக்கட்டை, வாள்சீராக்கி,
இடுக்கி, தச்சு வளிதகடு
2. கருவிகளைக் கூராக்குதல்
3. மரங்கள்'
80
88
4. மரம்பதனிடல்
(அ) காற்றில், (ஆ) போறணையில், (இ) காற்றிலும் போறணையிலும் ... 5. மரங்களை யழிக்கும் கவகம் போன்ற சிறு பிராணி 6. மரங்களிற் காணப்படும் குறைகள் 7. வச்சிரம் (பசை)
தோல் வச்சிரம், மீன் வச்சிரம், மெழுகு வச்சிரம், செயற்கை வச்சிரம் 8. நிறமூட்டலும் மினுக்குதலும் 9 ஆணியும் புரியாணியும்.-
ஆணியைப் பூட்டும் போது கவனிக்க வேண்டியவை 10. தேசீய முறைகளும் காட்டுருக்களும் -
செதுக்குதல், உட்பதித்தல் 11. கருவிகளைப்பாதுகாத்தல் 12. அழகுசெய்தல்
காட்டுருக்கள் வெட்டுதல்
? E க க க க க க 3 3 3 =
92
100
103
109
111
113
115
13. மூட்டுக்கள்
பொளிமூட்டு 14. பொருட்களைச் செய்தல் 15. கிடைப்படத்தை விளக்குதல் 16. சமவள வெறியம் பற்றிய அடிப்படைவிடயங்களும், சமவளவெறியங்களின்
வகைகளும்நிலைக்குத்துச்சமவள வெறியம், தூரப்பார்வைச் சமவள வெறியம், சம்பகுதிச்சமவள வெறியம், குறுக்குச் சமவளவெறியம்
121
124
17. கோடுகள், இலக்கங்கள், எழுத்துக்கள்
129
18. வட்டமும் அதன் பகுதிகளும்
132
19. கோடுகளைப் பிரித்தல்
134
20. நாற்கோணங்கள்
135
21. பயிற்சி
139

ix
141
மூன்றாம் வருடம்
1. தச்சுப்பட்ட்டைக்கு வேண்டிய கருவிகள் 2. அடையாளமிடுதல், செப்பம் பார்த்தல் என்பவைகளுக்கான கருவிகள் 3. புறவளர் விருட்சமும் அகவளர் விருட்சமும் 4. மரவினங்கள்
144
146
148
5. மரங்களைக் கணக்கிடுதல் ...
150
154
157
6. ஆணி, புரியாணி, சுரை முதலியன.--
அலைநெளிவுமூட்டுவகை 7. அரத்தாள் 8. குறிப்பும் மரங்களின் அட்டவணையும் 9. பொருட்கள் செய்தல் 10. விளையாட்டுப் பொருட்கள் செய்தல்.-
(அ) வள்ளம், நாவாய், கப்பல் முதலியன ; (ஆ) ஆடும் பிராணிகள் ;
(இ) வண்டி வகைகள் ; (ஈ) எந்திர விளையாட்டுப் பொருட்கள் 11. காட்டுருக்களைப்பற்றிய அடிப்படை விடயங்கள்
"" = = = 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2
158
161
169
176
12. கிடைப்படம் வரைதல்
178
13. பல கோணவடிவங்கள் வரைதல்
180
185
14. கேத்திர கணித கனவளவுப் பொருட்கள் 15. திண்மக் கேத்திர கணிதம் -
கிடைப்படமும் ஏறுதன்மையும் 16. அளவுத் திட்டப்படி வரைதல் 17. பயிற்சி ...'
187
181
193

Page 9

மர் வேலை
முதலாம் வருடம்
I கருவிகள்
வாள் :-
மரங்களையும் பலகைகளையும் அரிவதற்கும் வெட்டுவதற்கும் வாள் உப் யோகிக்கப்படுகின்றது. வாட்கள் பலவகைப்படும். இவற்றுள் அரைக்கீறல் வாள், கைவாள், அடைசுபலகைவாள், கழுந்துவாள் என்பன பிரதான மானவை.
இனம்
வெட்டுதல்
நீளம்
ஒர் அங்குலத்திற்கு வாட்பற்களின் தொகை
28”
அரைக்கீறல் வாள்
மரச்சிராயமைப்பு (நீளத்திற்கு) கைவாள்
-மரச்சிராயமைப்பின் குறுக்கே அடைசுபலகைவாள் கழுந்துவாள்
--.3-44
5-8 9-11 12-14
26 15”-24'' 10''_15”
15:
இவைகளைவிடக் குழிவாள், குறுக்கரிவாள், இரட்டைப் பிடிவாள், மென்ற கடரிவாள், ஒடுங்கியவாள், திறப்புவெளிவாள், வில்வாள், புறாவால் வாள் முதலிய வாட்களுமுண்டு. ஒவ்வொன்றினதும் முக்கிய உபயோகங்கள் பின்வருமாறு.. '
அரைக்கீறல்வாள் , கைவாள் : பலகைகளை அரிவதற்கும் வெட்டுவதற்கும். அடைசுபலகைவாள், கழுந்துவாள் : மூட்டுவேலைப்பாடுகளைப் பொருந்த வைப்பது போன்ற நுண்ணிய வேலைகட்கு மரத்தை வெட்டுவதற்கும், கனங்குறைந்த பலகைகளை வெட்டுவதற்கும்.
குழிவாள் : மரத்தைக் காரியப்படுத்த அரிவதற்கு. குறுக்கரிவாள் : மரத்தைக் காரியப்படுத்தக் குறுக்கே அரிவதற்கு. இரட்டைப்பிடிவாள் : (பெரிய) மரங்களையும், பலகைகளையுமரிவதற்கு மென்றகடரிவாள், ஒடுங்கியவாள் :
பூப்பலகைபோன்ற நுண்ணிய வேலைகளுக்கு திறப்பு வெளிவாள் : திறப்புத்துவாரம் வெட்டுவதற்கு. வில்வாள் : பலவிதமான அமைப்புக்களையுருவாக்க மரங்களையும் பலகைகளை யும் வெட்டுவதற்கு. புறாவால்வாள் : புறாவால் மூட்டு வெட்டுவதற்கு இது சிறந்தது.

Page 10
3
ரு
4)
--
1 ஆவது படம். வாள்கள்.
1. கழுந்துவாள். 2. கைவாள். 3. ஒடுங்கியவாள். 4. திறப்புவெளிவாள். 5. மென்றகடரி வாள்.
• சீவுளி :
மரங்களையும், பலகைகளையும் வேண்டியவளவிற்குச் சீவி நேராக்கி அழுத் தஞ் செய்வதற்கு உபயோகிக்கும் சீவுளி மூன்று வகைப்படும். அவை : பொதுச் சீவுளி, அழுத்தமாக்குஞ் சீவுளி, படிமானச்சீவுளி என்பன.
பொதுச் சீவுளி :
இது 12 அங்குலந்தொடக்கம் 17 அங்குலம்வரை நீளமுடையது. இதற்கு 23 அங்குல அகலமுள்ள இரட்டையலகு உபயோகிக்கப்படும். சிலவேளைகளில் தனியலகுமுபயோகிக்கப்படும். இதன் வெட்டுங்கூர் சிறிது வளைவானது. மரங்களினதும் பலகைகளினதும் தடிப்பான மேற்பகுதியை வேண்டியவள விற்குச் சீவிக்கொள்ள இது பயன்படும். பொதுச் சீவுளிக்கும் படிமானச்

சீவுளிக்குமிடையில் நீளத்திலும் கைப்பிடியிலும் வித்தியாசமுண்டு. கைப் யினமைப்பைக் கொண்டு படிமானச் சீவுளியை இலகுவாக அறிந்து கொள்ள
லாம்.
2 ஆவது படம்.
1. பொதுச் சீவுளி. 2. சீவுளியலகு. 3. படிமானச்சீவுளியின் கைப்பிடி.
அழுத்தமாக்குஞ் சீவுளி :
இதன் நீளம் 7 அங்குலம். இதற்கு இரண்டங்குல அகலமுள்ள இரட்டையல்கு உபயோகிக்கப்படும். பொதுச் சீவுளியினால் சீவப்பட்ட மரங் களும். பலகைகளும் இதனால் அழுத்தமாக்கப்படும்.
3 ஆவது படம். பொதுச்சீவுளி.

Page 11
வரை
படிமானச் சீவுளி :
இது 18 அங்குலங்தொடக்கம் 24 அங்குலம் வரை நீளமுடையது. இதற்கு 2 அங்குல அகலமுடைய இரட்டையலகு உபயோகிக்கப்படும். இதனால் மேற்பரப்பின் பெரும் பகுதியை நன்றாக அழுத்தமாக்கலாம். இதைவிடத் தட்டுச் சீவுளி, தட்டுத்தவாளிப்புச்சீவுளி, சித்திரவுருச் சீவுஞ் சீவுளி முதலிய சீவுளிகளுமுண்டு. யாதாவதொரு பகுதியைச் சீவுவதற்குத் தட்டுச் சீவுளியும், தவாளித்தலுக்குத் தட்டுத்தவாளிப்புச் சீவுளியும், அலுமாரி போன்றவைகளிலமைக்கப்படும் அலங்காரமேற்றளக் கட்டை சீவுவதற்குச் சித்திரவுருச்சீவுளியும் உபயோகிக்கப்படும். இப்பொழுது கட்டைச்சீவுளியு }
முபயோகத்திலுள்ளது.
கL
சீவுளிக்கூட்டுப்பகுதிகள் :
சீவுளிக்கூட்டின் பிரதான பகுதிகள் கீழேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்
ளன.
-4 ஆவது படம். சீவுளிக்கூட்டின் பகுதிகள்.
1. சீவுளிக்கைப்பிடி. 2. முகம். 3. வாய். 4. தாக்குவழங்கி. 5. படுக்கை. 6. கைப்பிடி. 7. ஆப்பு. 8. தெறி. 9. முகம். 10. தலை. 11. குதி.

உளி :
பிரதான உளிகளும் நகவுளிகளும் கீழே காட்டப்பட்டுள்ளன.
/0 )1) 1 2
3 - 5 ஆவது படம். உளியினங்கள்.
1. வெட்டுளி. 2. தரங்குளி. 3. பொளியடியுளி. 4. வெளிப்பக்கஞ்சீர்ப்படுத்தும் பட்ட நகவுளி. 5. உட்பக்கஞ்சீர்ப்படுத்தும் பட்டநகவுளி.
உளியின் பகுதிகள் :
உளியின் பகுதிகளைக் கீழேயுள்ள படத்திற் காணலாம்.
6 ஆவது படம். உளியின் பகுதிகள்.
1. உளியலகு. 2. உளிக்காம்பு. 3. உளித்தண்டு. 4. உளிவட்டு. 5. தரங்குச்சாணை. 6. உளித்தாங்கு. 7. உளிப்பூண். 8. உளிப்பிடி.

Page 12
வரைகம்பு :
அரிதல், வெட்டுதல், சீவுதல் முதலியவைகளுக்கு மரங்களையும் பலகைகளை யும் குறித்தவளவிற்கு வரைந்து கொள்ள இக்கருவியுபயோகிக்கப்படுகிறது.
7 ஆவது படம். வரைகம்பு.
1. கைப்பிடி. 2. தண்டு. 3. வரைகம்புமுள்ளு. 4. பெருவிரற்றிருகாணி.
பொது மூலைமட்டம் :
இதுவும் மரவேலைக்கு அவசியமானது. மரங்கள் பலகைகளை வெட்டும் போது சமகோணமாக வரைந்துகொள்வதற்கு இது "உபயோகிக்கப்படுகிறது. மரங்கள் பலகைகள் என்பவைகளைச் சீவும்போதும் இது பயன்படும்.
2
8 ஆவது படம். பொதுமூலைமட்டம்.
1. கைப்பிடி. 2. மட்டப்பலகையலகு. 3. பித்தளை, அல்லது உருக்குத்தகடு. 4. தறையாணி.

துறப்பணம் :
துளை துளைப்பதற்கும் துறப்பணம் அவசியம். இதற்குப் பலவிதமான துறப்பணங்கள் உபயோகிக்கப்படுகின்றன.
9 ஆவது படம். துறப்பணம்.
1. தலை. 2. திருப்பி (வழங்கி). 3. தமர்ப்பூட்டு. 4. கைப்பிடி. 5. அலகுகெள்வி.
பெயIைUமம்
rrdாரIII
பய|
Imாய,
- 5
- 3 4 5 6 7 8
10 ஆவது படம். துணையலகுகள்
1. மையவலகு. 2. மூக்குத் துறப்பணத்தமர். 3. ஓட்டுத் துறப்பணத்தமர். 4. கரண்டித் துறப்பணத்தமர். 5. திருகாணி திருப்பலகு. 6. உரோசுமெலியலகு. 7. முறுக்கலகு. 8. கூம்புத் துறப்பணத்தமர். 9. அகலஞ்செய்யலகு. 10. துறப்பணவலகு.

Page 13
வில்வாள் :
பொருட்களைச் செய்யும் பொழுது மரங்களையும் பலகைகளையும் வளைவாக வெட்டிக் கொள்வதற்கு வில்வாள் அவசியம். வாளலகைப் பொருத்தி அதை விரும்பிய பகுதிக்குத் திருப்பிய பின்பு வில்வாள்நாணை, அதன் மத்தியிலமைந்துள்ள இறுக்கு நெம்புகோலினால் இறுக்கல் வேண்டும். வாளலகு நேராகவும் இறுக்கமாகவும் இருக்கும்படி இறுக்கு நெம்பு கோலை இறுக்குதல் நல்லது. அலகு போதியவளவு இறுகாவிடின் அமுக்க பட்டு முறியக்கூடும். வில்வாளையுபயோகிக்கும்போது ஆட்காட்டிவிரல் அலப் குப்பக்கமாகத் திரும்பியிருக்கும்படி விற்கைப்பிடியை வலது கையாற் பிடிக்க. அதன்பின்பு, வலது கைவிரல்களின்மேல் இடதுகைவிரல்கள் இருக்கும்படி விற் கைப்பிடியைப்போல் வில்வாட்சட்டத்தை இடதுகையினாற் பிடித்துக் கொள்க. இப்படிப் பிடிப்பதினால் வில்வாளை விரும்பியபடி உபயோகிக்கமுடியும்.
விலைமனை
கைது
11 ஆவது படம்.
வில்வாள்.
1. வில்வாட்சட்டம். 2. வில்நாண். 3. இறுக்கு
நெம்புகோல். 4. சுரை (அலகைத் திருப்பு வதற்கு விற்கைப் பிடியைப்போல்
சுரையையுந் திருப்பல் வேண் டும்).
5. விற்கைப்பிடி
சாயுமோரமூலைமட்டம் :
பொருட்களைச் செய்யும்போது மரங்களை வேண்டிய உருவத்திற்கு வரைந்து வெட்டுவதற்குச் சாயுமோர் மூலைமட்டம் துணைசெய்கிறது. இதை வேண்டிய பக்கத்திற்குத் திருப்பி வைத்துக்கொள்ளலாம். சிறப்பாக, புறாவால்
வரைந்து கொள்வதற்கு இது பயன்படும்.
வரைந்து விருப்பி வைத்தாட்டம துணைசெய்கிற?
12 ஆவது படம்.
சாயுமோர மூலைமட்டம்.

திருகாணிமுடுக்கி :
இது, திருகாணியைப் பொருத்துவதற்கும் கழற்றுவதற்கும் உபயோகிக் கப்படுகிறது.
ஐAMinAIRCOM
2IIIIIIIIாமல
2
13 ஆவது படம்.
1, கைத்தமர் (அலிசுக்கூர்). 2. திருகாணி முடுக்கி. சில்லுச்சாணைக்கல், சாணைக்கல், எண் ணெய்க்கல், எண்ணெய்ப் பாத்திரம் முதலியன.
உளி, சீவுளியலகுபோன்ற கருவிகளைக் கூராக்குவதற்கு இவையவசியம். சில்லுச்சாணைக்கல்லுக்கும், சாணைக் கல்லுக்கும் தண்ணீரும், எண்ணெய்க் கல்லுக்கு எண்ணெயும் உபயோகிக்கப்படும். இதற்கு, "நீட்சுப்பூட்டு" யந்திர எண்ணெய், தேங்காய் நெய் என்பன சிறந்தனவாகும். நகவுளி
யைக் கூராக்குவதற்குச் சாணைக்கல் அவசியம்.
பாராமபு)
14 ஆவது படம்.
1. சில்லு தண்ணீர்க்கல், 2. எண்ணெய்க்கல். 3. எண்ணெய்ப் பாத்திரம், 4. சாணைக்கல்.

Page 14
10
ஆணியடிக்கி :
ஆணியை மரத்தில் உட்பதித்தற்கு இது உபயோகிக்கப்படுகிறது. இதனிற் பல்வகைகளுண்டு.
அரம் :
வாள், துணையலகுகள் போன்ற கருவிகளைக் கூராக்குவதற்கு உபயோகிக்கப் படுகிறது. கனங்குறைந்த பலகைகளின் ஓரங்களைத் தேய்ப்பதற்கும் சில வேளைகளில் உபயோகிக்கப்படுகிறது. நுனிகளைக் குறித்தே அரங்கள் பல வகையாகப் பிரிக்கப்படும். உருவத்தைக் கொண்டும் அரங்கள் பலதிறப் படுத்தப்படும். அரங்களுள், பாட்டரம், பிரப்பம்பா தியரம், முட்டையுருவரம், உருண்டையரம், சதுரவரம், மூலையரம், குறுக்குச் சாய்வுக்கோட்டரம், இரண் டாம் கொத்தரம், நுண்கொத்தரம் எனப்பல பெயருடையன உண்டு.
முள்ளரம் :
இது, மரங்களைப் பலவித உருவங்களுக்குத் தேய்த்தெடுக்க உபயோகிக்கப் படுகிறது. வெளிநாட்டு முள்ளரங்களில் இரண்டுபக்கங்களிலும் முள் ளுண்டு. ஆனால், இந்நாட்டு முள்ளரங்களில் ஒரு பக்கத்தில் மட்டும் முள்ளுண்டு.
மூட்டிடுக்கிமானி :
மரத்தின் நீள, அகலச்சுற்றளவுகளை அளவுகோலால் அளக்கக்கடினமேற் படுமிடத்தில் இது துணை புரியும்.
துறப்பணம் :
இது துளைதுளைப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது.
இடுக்கி:-
சட்ட இடுக்கி, (நாயிரும்பு) மூட்டிடுக்கி, தரையிடுக்கி எனப்பலவகையுண்டு. மூட்டு வேலைப்பாடுகளுக்கு அதிகமாக மூட்டிடுக்கியுபயோகிக்கப்படும். இது வச்சிரத்தைப் பூசி மரங்களைப் பொருத்துவதற்கு நல்லது. வேலை செய்யும் போது மரங்களை நிலையாகப்பிடித்துக்கொள்ள இடுக்கி உதவுகிறது.
அரத்துடைப்பம் :
இதனால் அரங்களைச் சுத்தஞ் செய்யலாம்.

வரையூசி :
அரிதல், வெட்டுதல், சீவுதல் முதலியவைகளுக்கு மரங்களை வரைந்து கொள்ள வரையூசி உபயோகிக்கப்படும். இதற்குப் பென்சில் உபயோகிக்கப் பட்டபோதிலும் புறாவால், கழுந்து முதலிய மூட்டுக்களுக்கும் நுண்ணிய வேலைகளுக்கும் மரங்களை வரைந்து கொள்ள வரையூசியைப்போற் பென் சில் சிறந்ததன்று.
வரையும் பலகை, ('T) தி-வரைகோல், மூலைமட்டம் பொருட்களின் இடைப்படம் வரைவதற்கு இவ்வுபகரணங்கள் உதவுகின்றன.
கவராயம் :
வட்டம், வில் ஆகியவைகளை வரைந்து கொள்வதற்கு உதவுகின்றது.
தட்டுப்பொல்லு :
உளியால் துளைப்பதற்கு உதவும்.
அளவைமானி :
மர அளவைமானி, பித்தளையளவைமானி எனப் பல அளவை மானிக ளுண்டு. இவ்வளவைமானிகளால் அங்குலத்தையும் அதன் பகுதிகளை யும் அளந்து கொள்ளலாம்.
சுத்தியல் :
ஆணியைப் பொருத்துதலும், கழற்றுதலும் சுத்தியலினாற் செய்யப்படும் பிர தான வேலைகளாகும். எட்சுற்றர், வாறிந்தன், கவர்ச்சுத்தியல் முதலான பல பெயர்களையுடைய சுத்தியல் களுண்டு. கவர்சுத்தியல் மரவேலைக்கு அதிக மாக உபயோகிக்கப்படுகிறது. சுத்தியலில் உள்ளகவரைக் கொண்டு ஆணிகளைக் கழற்றலாம். ஆணிகளைக் கழற்றும்போது, சுத்தியலின் கீழே மரத்துண் டொன்றை வைத்தால் கழற்றுவது இலகுவாயிருக்கும். பொருள் சேத மடையாது. தலை, முகம், குண்டு, ஆப்பு, கைப்பிடி என்பன சுத்தியலின் பகுதிகள். பிடியையிறுக்க ஆப்பு உதவுகிறது.
உளியினால் வேலை செய்யும்போது தட்டுப் பொல்லு பயன் படுகிறது. அதற் குச் சுத்தியலையும் உபயோகிக்கலாம். அதனால் உளிப்பிடி வெடிக்கவுங் கூடும். உருண்டையான, சதுரமான தட்டுப்பொல்லுகளுமுண்டு. எங்கள் நாட்டில் அதிகமாக உருண்டையான தட்டுப்பொல்லையே உபயோகிக்கின் றனர். ஆணியைக் கழற்றுவதற்குக் குற்டும் உபயோகிக்கப்படுகிறது. குறட் டின் கீழே ஒரு மரத்துண்டைவைத்துக்கொண்டு கழற்றினால் பொருள் சேதமடையாது.

Page 15
12
15 ஆவது படம். 1. டெசுற்றர்ச்சுத்தியல். 2. கவர்ச்சுத்தியல். 3. '' வாறிந்தன் '' சுத்தியல். 4-5. தட்டுப் பொல்லு. 6. குறடு. சுத்தியற்பகுதிகள் : 1. குண்டு. 2. முகம். 3. ஆப்பு. 4. கண். 5. தலை. 6. கைப்பிடி. கைத்தமர் (அலிசுக்கூர்)
இது, ஆணிகளைப் பொருத்துவதற்காக மரங்களைத் துளைக்க உதவுகின்றது. இதனால் சிறியதுளைகளைத் துளைக்கலாம். எய் பலகை :
இது, செங்கோணமான மூலையோ விளிம்போ உண்டாகும்படி மரங்களைச் சீவ உதவி செய்கிறது. வேலைசெய்யும்போது முகப்பக்கத்தைத் தடைக் கட்டையில் வைத்தல் வேண்டும்.
16 ஆவது படம்.
"எய்பலகை

பிடிக்குங்கருவிகள் :
மரவேலைக்கு அவசியமான, பிடிக்குங்கருவிகள் நான்கு வகைப்படும். அவை, தரையிடுக்கி, மூட்டி-டுக்கி கையிடுக்கி, மேசை நிலையிடுக்கி என்பன.
Aliiiiii)
2
வDைDAIAா
(யாது
10
யா
ப\ைnmv
»)4ை)
4 )
17 ஆவது படம். 1. தரையிடுக்கி. 2. தரையிடுக்கியையுபயோகிக்கும் மாதிரி. A என்பதினால் பொருள் சேதமடையாதிருக்க வைக்கப்பட்டுள்ள மரக்கட்டை காட்டப்பட்டுள்ளது. 3. கையிடுக்கி. 4. மூட் டியிடுக்கி. 5. (மேசை நிலையிடுக்கி. A என்பதின்மூலம் மேசைத்துவாரம் காட்டப்பட்டுள்ளது.
ஆணியமுக்கி :
இதனால் ஆணியுட்பதிக்கப்படுகிறது. அழகிற்கும் இறுக்கத்திற்குமாக ஆணி யுட்பதிக்கப்படுகிறது.
18 ஆவது படம். ஆணியமுக்கிகள்.

Page 16
14
சேமன் பொதுச்சீவுளி :
இது நாம் வழங்கும் பொதுச் சீவுவியைப் போன்றது. சீவப்படாத முரடான மரங்களின் அதிகமான பகுதிகளை உடனே சீவி, வேண்டியவளவிற்குக் கொண்டுவர உதவுகின்றது.
Tா
19 ஆவது படம். சேமன் பொதுச் சீவுளி .
பொதுச்சீவுளி :
சீவுளிக்கூடுகளினால் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் இதனாற் செய்யலாம். இதைக்கொண்டு வேலை செய்வது இலகு. வேலை பழகுபவர் களுக்கு இச்சீவுளியே சிறந்தது.

15
2 மரங்கள்
மரவேலைக்கு வேண்டிய அவசியமான மூலப் பொருள் மரம். இம்மரங் களின் இயற்கையமைப்பைக் கவனிப்போம்.
உறுதி :
பாரத்தைக் கணித்துப் பார்க்குமிடத்து, மற்றெந்தப் பொருட்களைக் காட்டி லும் மரம் உறுதியுள்ளது.
இழுபடுதன்மை :
தாக்கமடைந்த விடத்தும் பாரமேற்றிய விடத்தும் வளைந்து, திரும்பவும் பழைய நிலைக்கு வருவதை இழுபடு தன்மையெனக் கூறுவர். மரத்தில் இத்தன்மை காணப்படுவதினால் அது அனேகவேலைகளுக்குப் பொருத்த மானது.
நீடித்த உழைப்பு :
மரத்தை நல்ல முறையில் உபயோகித்தால் அது காலவரையறையின்றி நிலைத்திருக்கும். சில மரங்கள் அதிக குளிரையும் அதிக சூட்டையும் தாங்கக் கூடியனவாயிருக்கின்றன.
பல்வேறுவகை : .
ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொருவகையான மரமுண்டு. " பிளாத்திக் கும் '' மரமும் சேர்க்கப்பட்டு, நவீன முறையில் பொருட்கள் உற்பத்தி செய்ய உதவுகின்றன. இதுவுமன்றி இயந்திரங்களிலுள்ள சில உறுப்புக்க ளுக்கும் உலோக உறுப்புக்களுக்கும் இச்சேர்வை உபயோகிக்கப்படுகிறது. இக்காலத்தில் ரவுளித்தூளிலிருந்து ஒருவகை ஒட்டுப்பலகை செய்யப்படுகிறது. மரத்தை இயந்திரத்தினால் மெல்லிய பலகைகளாக அரிந்து, அவைகளை யொன்றோடொன்று ஒட்டியுண்டாக்கும் ஒட்டுப் பலகைகளைக் கொண்டு, அலுமாரி, மேசை, பெட்டி முதலிய வீட்டுத்தளவாடங்கள் செய்யப்படு கின்றன. எதிர்காலத்தில் மரமன்றி அதன் பக்கவிளைவுகளுமே தளவாடங் களுக்குப் பயன்படக்கூடும்.
அலங்காரம் :
மரம் அலங்காரத்திலுயர்ந்தது. புளி, பூமுதிரை, தேக்கு சந்தனவேம்பு முதலிய மரங்களைக்கவனித்துப் பார்த்தால், இவ்வுண்மை நன்கு புலனாகும். மரத்தாற் செய்யும் வேலைகளில் சிறந்த பயனைப் பெறுவதற்கு, அதன் அமைப்பு, சிறப்பியல்பு முதலியவைகளைப்பற்றி ஆராய்ந்தறிதல் நல்லது.

Page 17
16
சுருங்கல் :
சிலவேளைகளில் அரிவதற்கு வெட்டப்பட்ட மரக்குற்றிகள் வெடித்திருப் பதைக் காணலாம். இதற்குக் காரணம் மரக்குற்றிகளின் அந்தந்தப் பகுதிகள் ஒரேயளவிற்குச் சுருங்காமையேயாகும். சாதாரணமாக மாத் தைச்சுற்றிச் சுருங்குதல், வெளியிலிருந்து மத்திக்குச் சுருங்குதலைப்போல் இருமடங்காகும். இது மரக்குற்றியிலரியப்படும் பலகைகளையும் மரங் களையும் தாக்கும். ஆகையால், இப்படிச் சுருங்கும் பலகைகளையும் மரங் களையும் உபயோகிக்கும் போது சுருங்குதல் பற்றிக் கவனித்தல் அவசியம்.
இங்கு, முதலாவது படத்தில் மரக்குற்றியொன்று சுருங்கும்போது வெடிக்கும் மாதிரி காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது படத்தில், மரக்குற்றி யொன்றிலிருந்து பலகையரியும்போது சுருங்குதல் தாக்கும் படி மாதிரி காட்டப்பட்டுள்ளது. இதனால் மரக்குற்றியொன்றை அரியவேண்டிய மாதிரி மூன்றாவது படத்திற் காட்டப்பட்டுள்ளது.
படம் 20. சுருங்குவதனால் மரக்குற்றி வெடிக்கும் மாதிரி.
TZ.
ஈ7777
படம் 21. அரியுந்துண்டுகளைச் சுருங்குதல் தாக்கும் மாதிரி.

படம் 22. மரக்குற்றியில் பலகையரியவேண்டிய மாதிரி. மரத்தை அரியவேண்டிய விடயங்கள் பின் விவரிக்கப்படும்.
ஈரத்தன்மை :
மரத்தைவெட்டியபுதிதில், மரத்திலுள்ள நீரினளவு சிலவேளைகளில் மரத்தின் பாரத்திலும் அதிகமாயிருக்கும். ஆனால், மரத்தைப் பதனிடும் போது நீரினளவு நூற்றுக்குப் பன்னிரண்டுவரை குறையும். இதனிலும் குறையும்படி காயவைத்தால் பின்பும் தண்ணீரை மரம் உறிஞ்சுமாதலால் இடைஞ்சல்களேற்படக்கூடும்.
பதனிடல் :
மரங்களையும் பலகைகளையும் பொருட்களாகச் செய்வதற்கு எடுக்கு முன் பதனிடல் மிகவும் அவசியம். பதனிடும் முறை மூன்றுவகைப்படும்.
அவையாவன :
(அ) முறையாக அடுக்கிக்காற்றிற் காயவிடுதல். (ஆ) காற்றிற் காயவைத்துப் பின் போறணையிற் காயவைத்தல். (இ) முழுவதையுமே போறணையிற் காயவைத்தல்.
இவைகளைப்பற்றிப்பிறிதோரிடத்தில் விவரிக்கலாம்.
(ஆ) மரத்தின் வளர்ச்சியும் குற்றியின் பகுதிகளும் :
மரவேலைக்கு வேண்டிய மரம், பலகை என்பன இருவித்திலையுள்ள னவாக வளரும் மரங்களிலிருந்து கிடைக்கின்றன. ஆகையால், மரக்குற்றி யினமைப்பு, மரத்தின்வளர்ச்சி என்பவைகளைப்பற்றிக் கவனிப்போம்.

Page 18
4
ஆ
அ
படம் 23. மரக்குற்றியொன்றின் பகுதிகள். (அ) (1) பட்டை. (2) மரப்பட்டையின் உட்பட்டை. (3) சோற்றிமரம். (4) குடன் மரம் (மரவைரம்). (5) சோற்றி. (ஆ) மரக்குற்றியின் குறுக்குவெட்டு முகம். 1. மேற்பட்டை.. 2. பட்டை. 3. மரப்பட்டையின் உட்பட்டை. 4. சோற்றிமரம். 5. குடன் மரம் (மரவைரம்). 6. சோற்றி. 7. வளர்ச்சி வளையம். 8. நரம்பு.
மரத்தின் ஒவ்வொரு பகுதிகளினதும் தொழில்கள்.
பட்டை : மரத்தைப் பாதுகாக்கிறது. சிலமரங்களில் பட்டையின்மேல், மேற்
பட்டையென்றொரு பகுதியுமுண்டு. இது பட்டையைப் பாதுகாக்கும்.
மரப்பட்டையினுட்பட்டை :
இதனால், மரக்குற்றிபடிப்படியாகப் பெரிதாகும். இலைகளிலுண்டாகு முணவு இதன் மூலம் வேருக்குச் செல்லுகின்றது. சோற்றிமரம் :
முற்றாத மரம் சோற்றிமரமெனப்படும். இது வெள்ளை நிறமுடையது; முற்றி வைரமடையக்கூடியது. முள்வறையன், புழு முதலியவைகள் சோற்றிமரத்தை இலகுவிற் சேதப்படுத்துமாகையால் இது வேலைக்குத்தகுந் ததன்று. ஆனால், சில சந்தர்ப்பங்களில் மரத்தைப் பாதுகாக்கக்கூடிய இரசாயனப் பொருட்களையுபயோகித்துச் சோற்றி மரத்தையும் வேலை செய் வதற்கெடுக்கலாம்.

19
குடன்மரம். (மரவைரம்)
முற்றியமரத்தைக்குடன் மரம், அல்லது மரவைரமென்கிறார்கள். இது வேலை செய்வதற்கேற்றது. மரத்தின் குறுக்கு வெட்டுமுகத்தை நன்கு கவனித்துப்பார்த்தால் அதன்மத்தியிலிருந்து படிப்படியாக
மரம் வைரமடைந்திருப்பதைக்காணலாம்.
சோற்றி. மரக்குற்றியின் நடுவே சோற்றி காணப்ப்டும். இது வேலைக் கேற்றதல்ல. மரம், ஆரம்பத்தில் இதன்மூலமே உணவைப் பெறுகின்றது.
வளர்ச்சி வளையம் .-வருடந்தோறும் படிப்படியாக வளரும் பகுதிகளை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மரக்குற்றியொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தைக்கவனித்துப் பார்த்தால், அதனைச் சுற்றிச் சமாந்தர மாயமைந்துள்ள வெவ்வேறு வளர்ச்சி வளையங்களைக் காணலாம். உட்டண வலயத்தைச் சேர்ந்த நாடுகளில் வசந்தகாலம், வேனிற்காலம் முதலிய பருவகாலங்களின்மையால் வளர்ச்சிவளையங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஆனால், சீதளசமசீதோட்டண வலயங்களில் வளரும் மரங் களில் சிறப்பாக இலையுதிர்க்கும் மரங்களில் இது தெளிவாகக் காணப்படும். வளர்ச்சிவளையம் மரத்தின் வைரமெனவுமழைக்கப்படும்.
நரம்பு.- சோற்றியிலிருந்து மரப்பட்டை உட்பட்டைகளை நோக்கியுள்ள நரம்புகள் வளர்ச்சிவளையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஓக்கு "பீச்சு'' மரங்களில் தெளிவாகக் காணலாம். நரம்பின் மூலமே மரத் தின் அவ்வப்பகுதிகட்கு உணவு செல்கிறது.
டெயன.
2
வேர்களிலிருந்து பெறுமுணவை இலைகளுக்கும், இலைகளிலிருந்து பெறு முணவை வேர்களுக்கும் அனுப்புவதில் அடிமரம் தொழிலாற்றுகிறது. அடிமரத்தின் மூலம் சுவாசமும் நிகழுகின்றது. இதற்காக, மிக நுண்ணிய . துவாரங்கள் அடிமரத்திலுண்டு. சிலமரங்கள் - பாற்றன்மையுடையன. பால் நரம்பு பட்டையிலமைந்துள்ளது. வேர்களினால் உறிஞ்சப்படும் நீரும் உணவும் இலைகளை நோக்கி அடிமரத்தின் மூலம் கொண்டு செல்லப்படு கின்றன. ஆனால், இலைகளிலுண்டாகுமுணவு மரப்பட்டையின் உட்பட்டை
மூலம் கீழே கொண்டு செல்லப்படுகிறது.
3--- J.N.R 21997 (1/60)

Page 19
20
(இ) வன்மரமும், மென்மரமும். அமைப்பையொட்டி, மரத்தை, வன்மரம் மென்மரமென இரண்டாகப் பிரிக்கலாம்.
வன்மரம் :
இம்மரத்தின் குறுக்கு வெட்டுமுகத்தை நுணுக்குக்காட்டியினூடாகப் பார்த் தால் அது துவாரங்களுடைய சிராய்களினாலும் நார்த்தம்பங்களினாலும் அமைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். துவாரமுள்ள இப்பகுதி குழாயைப் போன்றிருக்கும். இதனால் உறிஞ்சப்படுமுணவு இலையைநோக்கி அனுப்பப் படுகிறது. நூல் போன்ற பகுதிகள் மரத்திற்குச்சத்தியைக் கொடுக்கின்றன.
|III
மென்மரம் :
இம்மரவகை, மரத்திற்குச் சத்தியைக் கொடுப்பதும் வேரினால் உறிஞ் சியெடுக்கப்படுமுணவை இலைகளுக்கனுப்புவதுமான ஒரேயினக் குழா யினால் அமைக்கப்பட்டுள்ளது.
படம் 24. வன்மரமும், >
மென்மரமும் (அ) வன்மரத்தின் குறுக்கு வெட்டுமுகம். (1) தம்பவுருக்குழாய். (2) மரச்சிராய். (3) நரம்பு (4) முற்றாத மரம். (5) முற்றியமரம். (ஆ) மென்மரத்தின் குறுக்கு வெட்டுமுகம்.
(1) நரம்பு. 1 1
(2) குழாய்.
(3) முற்றாத மரம் அ
ஆ
(4) முற்றியமரம்.
- ப
மரம் வெட்டுதல் -சமசீதோட்டண, சீதளவலய நாடுகளில் வளரும் மரங்களின் இலைகள் வருடத்தின் குளிர்காலத்தில் உதிரும். இக்காலத்தில் மரங்கள் வளர்ச்சி யடைவதில்லை. ஆகையாற்றான் மரவேலைக்கான மரங்களை இக்காலத்தில் வெட்டுவார்கள். ஆனால், எமது நாட்டிலோ இவ்வித வித்தியாசமில்லை. மரவேலைக்குரிய மரங்களை வெட்டச் சிறப்பான காலமெதுவுமில்லை. எனி னும், மரவேலைக்கு நன்றாக முற்றிய மரங்களையே வெட்டியெடுத்தல் நன்று. பட்ட மரங்களிற் சில, நாட்படுவதனால் உழுத்து மென்மையாக மாறு கின்றன. ஆகையால், மரங்களைப் பட்டுப்போன சில நாட்களுள் வெட்டி
யெடுத்தல் வேண்டும்.

21
(ஈ) மர இனங்கள் இவ்வருடத்தில், பொருட்கள் செய்வதற்குகந்த சில மர இனங்களைப் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
செஞ்சண்பகம் : இதன் சோற்றி வெண்மையானது. வைரம் பழுப்பு நிறமானது. இதில் வேலை செய்வது இலகு ; ஆனால் பெறுமதியில் குறைந்தது. இது அநேகமாக வளையும், முறுகும், காயும்போது வெடிப்பு உண்டாகும். ஆகையால், நன்றாக் காய்ந்தபின்பே உபயோகித்தல் வேண் டும். முள்வறையன் போன்ற பிராணிகளினால் சேதமுறும். பெறுமதி குறைந்த பொருட்களைச் செய்வதற்கே இம்மரம் உபயோகிக்கப்படுகிறது. ஏந் தானம், பெட்டி, விளையாட்டுப் பொருட்கள், தேநீர் மேசை, வாங்கு, புத்த கந்தாங்கி முதலிய பொருட்கள் செய்வதற்குச் சிறந்தது. இதன் மரச் சிராயமைப்பும் நிறமும் சிறந்தனவன்றாதலினால் சாயமூட்டி மினுக்குதல் வேண்டும்.
செஞ்சமண்டலை: வெண்மையோடொட்டிய மஞ்சட் பழுப்பு நிறத்தை டையது. வேலை செய்வது ஓரளவு கடினமாகும். ஆயினும் நீண்டகால முழைக்கும் ; தண்ணீருக்கு நின்று பிடிக்கும் ; முள்வறையன் போன்ற பிராணிகளின் சேதமுங்குறைவு.
உயர்சமண்டலை : இது வெண்சிவப்பு நிறமுடையது. ஓரளவு பாரமுடை யது. இதன் மரச்சிராயமைப்பும் அழகானது. நன்றாக மினுங்கும். இதில் வேலை செய்வது இலகு. நீண்டகால உழைக்கும். ஆகையால் சிறந்த மரமாகக் கணிக்கப்படுகிறது. இம்மரம் பெறுமதியான பொருட்களைச் செய்ய உபயோகிக்கப்படுகிறது. சிறிய பெட்டி, தேநீர்மேசை, மரத்தாம பாளம் விளையாட்டுப்பொருள், ஏந்தானம், துவாய்தாங்கி, உடுப்புத்தூக்கி
தட்டு, புத்தகந்தாங்கி முதலியவற்றிற்குது சிறந்தது.
முதிரை :- இது வெண்மஞ்சள் நிறமுடையது.
வெண்மையான இடங்களும் இதற்குண்டு; பாரமானது. இதன் சிராயமைப்பு அழகானது. பூமுதிரை மிகவழகான சிராயமைப்பையுடையது. ஆனால், வேலை செவ்வது கடினமாகும். இது நன்றாக மினுங்கும் ; பிரகாசிக்கும் ; நீண்டகாலத்திற்கு உழைக்கும். அதனால் இது சிறந்த மரவினமாகும். மேசை, கதிரை, அலுமாரி முதலிய வீட்டுத் தளவாடங்களைச் செய்ய இது உபயோகிக்கப்படுகின்றது. வேறெவ்விதமான பொருட்களையும் இதனாற் செய்யலாம்.

Page 20
பால் பாலு/தோ !
22
மலைவேம்பு : இது வெள்ளை கலந்த மஞ்சள் நிறமும், வெண் சிவப்பு நிறமுமுடையது. பாரங்குறைந்தது ; வலுக்குறைந்தது ; வளையுந்தன்மையது முறுகும் ; வெடிக்கும் ; நீண்டகாலமுழைக்காது. வண்டு போன்ற பிராணிகளினாற் சேதமுறும். ஆகையால் இம்மரத்தின் செய்யும் பொருட் களுக்கு '' சொலிட்டினம்" எனப்படும் ஒரு வகைப் பூச்சுப் பூசுதல் நல்லது. இதனைப் பெரும்பாலும் பலகைக் கெடுக்கிறார்கள்
இதில் வேலை செய்தலிலகுவானதால், இதுவேலை பழகுவோர்க்குகந்தது. பெறுமதி குறைந்த பொருட்களை மட்டும் இம் மரத்தால் செய்தல் வேண்டும்.
கொறை : இது பாரமானது ;கடினமானது ;பெலமானது ;வேலை செய்வது கடினம். இது பழுப்பு நிறமாயிருந்த போதிலும், குடன்மரம் தேன் 'நிறமானது. இது வீட்டு வேலைகளுக்கு அதிகமாக உபயோகிக்கப்படுகின்றது. ஆனால் பொருட்களைச் செய்வதற்கும் நல்லது. இம்மரத்திலுள்ள கணு அதிக கடினமும், வைரமும் பொருந்தியதாகையால் கணுப்பகுதிகள் வேலைக் கேற்றனவன்று.

23
3 வச்சிரம் பிராணிகளின் தோல்களையும், எலும்புகளையும் அவித்துப்பெறும் பசை களாலும், செலிலோசு முதலிய மாப்பொருள்களாலும் நிணப்பொருள் களாலும் வச்சிரம் செய்யப்படுகிறது. ஆனால், பிராணிகளின் பசையிலிருந்து செய்யப்படும் வச்சிரமே அதிகமாக உபயோகப்படுகிறது. வச்சிரத்தைத் துண்டு களாகவும் தூளாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆக்குதல் : வச்சிரத்துண்டைச் சுத்தமான சீலைத்துண்டிலோ கடதாசியிலோ பூசிச் சிறுசிறு துண்டுகளாக்க இச்சிறு துண்டுகளை வச்சிரப் பாத்திரத்தினுட் போட்டும் துண்டுகள் மூடப்படுமளவிற்கும் தண்ணீரை ஊற்றுக. துண்டுகளின் நிறையின் அளவிற்குத் தண்ணீரூற்றுதல் சரியான அளவாகும். இத் துண்டுகள் நன்றாக ஊறிய பின்பு, வெளிப்பாத்திரத்திலும் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடாக்க; தண்ணீர் கொதித்தபின் படிப்படி யாக அடுப்பிலுள்ள நெருப்பைக் குறைக்க ; ''பரனைற்று ''140 பாகைக்குக் கூடிய வெப்பத்தினால் வச்சிரத்தின் சக்தி குறையும். ஆகையால், வெளிப் பாத்திரத்திலுள்ள நீர் ஒருமுறை - கொதித்தபின் சூட்டைக் குறைத்தல் நல்லது. வச்சிரம். பற்றீரியாவினால் இலகுவிற் சேதமடையும். ஆகையால் போதியவளவு வச்சிரம் செய்துகொள்ளுதல் நல்லது.
அ
24, A ஆவது படம். 1. வச்சிரப்பாத்திரம். 2. வச்சிரம் உள்ளே பதியும் மாதிரி.

Page 21
24
உபயோகித்தல்.
அளவுக்கு மிஞ்சி வச்சிரம் செய்தலும் அதிக தடிப்புள்ள வச்சிரத்தை உபயோகித்தலும் அனுபவமற்றவர்கள் செய்யும் பிழைகளாகும். எண் ணெயைப்போல் தூரிகையினால் பொசியக்கூடிய வச்சிரம் உபயோகத்திற்கு நல்லது. வச்சிரத்தின் தடிப்பு அதிகமாயின், வெந்நீர் சேர்க்க. தடிப்புக் குறைவாமின் இன்னும் காய்ச்சுக. மூட்டிற்பொருந்தவேண்டிய இரண்டு மரத்துண்டுகளிலும் பலமுறை சூடான வச்சிரத்தைப் பூசுக. அதன் பின்பு அவ்விரு மரத்துண்டுகளையும் சரியான முறையில் வைத்து இறுக்குக. இவ்வாறு பலமணி நேரம் இறுக்கி வைத்தல் நல்லது. இதற்காக ஓரிடுக்கி யையுபயோகிக்கலாம். வச்சிரம் வெளியிற் சிந்தியிருந்தால் துடை துண்டால் துடைக்க.
நிணப்பொருளினாற் செய்யப்படும் வச்சிரம் போன்ற திரவ வச்சிரத் திற்கு நீரைச் சேர்த்துக் கலந்துகொள்ளல் வேண்டும். சூடான வச்சிரத்தைப்போலவே இதனுபயோகமுமிருக்கும். இவ்வச்சிரத்தினால் மூட்டைப் பொருத்திய பின்பு மரத்தில் நீரையூற்றினாலும் அம்மரம் நீரை யுறிஞ்சிக்கொள்ளாது. திரவ வச்சிரம் ஆக்கிப் பலமணி நேரம் வரை உபயோகிக்கலாம். வச்சிரமிடப்பட்ட மூட்டை, இடுக்கியினால் இடுக்கிப் பலமணி நேரம் வைத்திருக்கவேண்டியது மிகமுக்கியமானதாகும்.

25
4.--அரத்தாள் மரத்திற் செய்த பொருட்களின் வேலைகளை அழகுற முடிப்பதற்கு முதற் அரத்தாளினால் அழுத்தஞ் செய்தல் வேண்டும். அரத்தாளைச் செய்ய உபயோகிக்கும் பொருளையொட்டி, அரத்தாள், நுண்ணிய, இடை முரடானது முரடானது எனப் பல வகைகளாகப் பிரிக்கப்படும்.
தடிப்பான தாளில் வச்சிரமெனப்படும் ஒரு வகைப் பசையைப் பூசி அதன்மீது தீத்தட்டிக்கல், பருக்கை முதலியவைகளின் தூளைப் பரவி அரத் தாள் செய்யப்படுகிறது. அரத்தாளிற் பூசப்பட்ட வச்சிரம் வெடிப்பதனால் கற்றுள்கள் கொட்டுண்ணும். ஆகையால் உபயோகத்திற்கு முன் அரத்தாளின் மடிப்புக்களைக் குறைத்து நீண்டகால முபயோகிக்கலாம். இதற்கு அரத் தாளின் எதிர்ப்பக்க மூலைகளிரண்டைப் பிடித்து அது படும்படியாக மேசையிலோ தச்சுப் பட்டடை சயிலோ அதன் புறப் பக்கத்தை வைத்துப் பலமுறை மேலுங்கீழும் இழுத்தல் வேண்டும். இதன்பின்பு அடுத்த எதிர்ப்ப க்க மூலைகளிரண்டையும் பிடித்து மேலே கூறப்பட்டபடி இழுத்தல் வேண்டும்.
அரத்தாள் 10 அங்குலம், அல்லது 11 அங்குல நீளமுடையது. 83 அங்குலம், அல்லது 9 அங்குல அகலமுடையது. ஆகையால் தாளின் நீளப்பக்கத்திற்கு மூன்று முறையும், அகலப்பக்கத்திற்கு மூன்று முறையும் கிழித்து உபயோகத்திற்குத் தகுந்த அளவுள்ள துண்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதிக வெப்பத்தினாலோ குளிரினாலோ தாள் பழுதடையும். ஆகையால் அது கவனமாகப் பாதுகாத்து வைக்கப் படல் வேண்டும்.
அரத்தாளினால் அழுத்தஞ் செய்யும்போது அச்சையுபயோகிக்க வேண்டும். சமதளமுடைய பொருட்களை யழுத்தஞ் செய்யும்போது மொத்தமான மரத்துண்டொன்றை அச்சாக உபயோகிக்கலாம். இதனைச் சுற்றி அரத்தாள் துண்டொன்றை வளைத்துப் பிடித்துக் கொள்வது நல்லது. ஆனால், விளிம்பு கூரைக்கட்டு போன்றவைகளுக்கு அவைகளைப்போலமைப்புள்ள அச்சைச் செய்து கொள்ளல் வேண்டும்.
24 B ஆவது படம். அரத்தாளினால் அழுத்தஞ் செய்யும் போது உப யோகிக்கும் அச்சு
1. அச்சு. 2. அரத்தாள். 3. உரோமச் சீலைத்துண்டு.

Page 22
26
அரத்தாளினால் அழுத்தஞ் செய்யும்போது கவனிக்க வேண்டியவை.
1. பொருத்தமான அச்சை உபயோகித்தல்.
2. வேலைக்குத் தகுந்த அரத்தாள் (நுண்ணிய, இடைப்பட்ட முரடான, முரடான • முதலிய) இனங்களைத் தெரிந்து உபயோகித்தல்.
3. அரத்தாள் துண்டை அரக்கி , அரக்கி முழுத்துண்டையுமுபயோகிக் கலாம்.
அந்தலை
4. மரவமைப்பின் நீளத்திற்கு அரத்தாளாலழுத்துக. யழுத்தத்தாளை மூலைக்கு மூலை பிடிக்க.
5. அடிக்கடி அச்சைத் தச்சுப் பட்டடை மேசையின் மேல் அடித்து அரத்தாளிலுள்ள மரத்தூளை வெளியேற்றலாம்.
6. பொருளின் விளிம்பு, கூரைக்கட்டு, ஓரம் முதலியவைகளை அர்த் தாளினாலழுத்தும் போது அவற்றை நிலையிடுக்கியினால் பிடித்துக் கொள்க.
7. மிக இறுக்கமாக அழுத்தக் கூடாது. இறுக்கமாக அழுத்தினால் அரத்தாள் கிழிந்து போகும்.

5. ஆணிகளும் திருகாணிகளும். (I) ஆணிகள் - விரைவில் செய்து முடிக்கக்கூடிய பொருட்களின் மூட்டுக்
களைப் பொருத்துவதற்கு ஆணி உபயோகிக்கப்படுகிறது. பல விதமான ஆணிகள் உபயோகத்திலுள்ளன.
-------
--N'
+ 6
0 =>)
- 2 3 4
25 ஆவது படம். ஆணிவகைகளும் துளையூசியும் 1. உருண்டைக் கம்பியாணி. 2. நாராசவாணி. 3. மென்றகட்டாணி. 4. ஈயவாணி. 5. சிறு தமராணி. 6. துளையூசி.
ஆணிகளையுபயோகித்தல் :
(அ) உருண்டைக்கம்பியாணி.--அழகான வேலைப்பாடுகளற்றவைகட்குப்
பொருத்தமானது. இவ்வாணியை வனமரங்களிலடிக்கும்போது
மரம் வெடிக்கும். (ஆ) நாராசவாணி. -அழகானது, இது இலகுவாக உட்பதிக்கக்கூடியது. இலகு
வில் வளையக்கூடியது. ஆகையால் சிறியதவ்வைத்துளையூசியினால் துளைத்து இவ்வாணியையுட்பதித்தல் நன்று. இவ்வின ஆணியை யுட்பதிக்கும்போது மரங்களில் வெடிப்புண்டாவதுகுறைவா
யிருக்கும். (இ) மென்ற கட்டூசியாணி :- அழகான பொருட்களுக்கேற்றது. இலகுவாக
வளையும். ஆகையால் அலிசுக்கூரினால் தவ்வைத் துளைத்து இவ்வாணியை உபயோகித்தல் நல்லது. இவ்வாணிசித்திரவுரு
வேலைகட்கு அதிகமாக உபயோகப்படுகிறது. (ஈ) ஈய ஆணி. - வீட்டுத்தளவாடங்களமைப்பதற்குத் தகுந்தது. (உ) சிறுதமராணி. - இதுவும் வீட்டுத்தளவாடங்களமைப்பதற்குத் தகுந்
தது. ஆணியின்தலை அழகானது.

Page 23
28
ஆணியடித்தல் :
ஆணியடிப்பதற்குத் தவ்வைத்துளைத்துக் கொண்டால் மரம் வெடிக்காது துளையூசிக் கூரையுபயோகித்துத் தவ்வைத் துளைக்கலாம். அளவுக்குமிஞ்சி. பெரியவாணிகளையுபயோகித்தலும் தேவைக்கதிகமான ஆணிகளையுபயோகித் தலும், பயிற்சி குறைந்தவர்களின் செய்கைகளாகும். மரச்சிராயமைப்பின் ஒரேபக்கமாகப் பல ஆணிகளையடித்தால் மரம் வெடிக்கும்.
ஆணிய முக்கியினால், ஆணியின் தலையை மரத்தின் மட்டத்திற்குச் சிறிது கீழே உட்பதித்து அழகாக்கலாம். ஆணியும் இறுக்கமாகவுப்பதிக்கப்படும். உட்பதிக்கப்பட்ட பின் தவ்வை மக்கு, அல்லது தேன் மெழுகைக்கொண்டு மூடிவிடுவது நன்று. ஆணித்தலையையுட்பதிக்கு முறை படத்தின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஒடுங்கிய உளியினால் மரச்சிராயைக் கவனமாகப் பெயர்த்து ஆணியையுட்பதித்தபின் மரச்சிராயில் வச்சிரத்தைப் பூசினால் ஆணியின் தலை முழுவதும் மறைந்து போகும்.
26 ஆவது படம். ஆணித்தலையை மறைக்கும் மாதிரி
ஆணியின் காம்பில் நிலக்கரிநெய்யைப்பூசி, அன்றேல் ஆணியின் காம்பை மெழுகுதிரியில் தேய்த்து ஆணியையுட்பதித்தல் நல்லது. இதனால் ஆணி யுட்பதித்தல் இலகுவாக நிகழும். மரத்தில் வெடிப்பும் ஏற்பட இடமிராது,
(II) திருகாணி.-
உலகம்
பாரட
தொனை
27 ஆவது படம். திருகாணியின் பகுதிகள்.. 1. ஆணித்தலை. 2. ஆணி இறக்கம். 3. ஆணிக்காம்பு. 4. ஆணிப்புரி. 5. புரியிடைத் தூரம்.

29
பொருத்துக்களையுறுதியாகவும், விரைவாகவும் பொருத்துவதற்குத் திரு காணியுபயோகிக்கப்படுகிறது. இரண்டு மரங்களைப் பொருத்தும் போது, மரத்தின் மேற்பகுதியிலுள்ள துளை திருகாணிக்காம்பிலும் ஓரளவு பெரிதா யிருக்க வேண்டும். மேலேயுள்ள மரம் மற்றைமரத்தோடு ஆணிக்காம்பி
னாலன்றி அதன்தலையினால் பொருத்தப்படுகிறது.
மேலேயுள்ள மரத்தின் தவ்வு சிறிதாயிருந்தால் திருகாணியிறுக்கிப் பொருத்து ஒருபோதும் உறுதியாயிருக்கமாட்டாது. தவ்வைத்துளைப்பதற்குத் துறப்பணத்தையுபயோகித்தல் வேண்டும். சிறிய தவ்வைத் துளைப்பதற்குத் துளையூசிக்கூர் போதியதாகும். சிறியதுறப்பணவலகு விரைவில் முறிந்து போகுமாகையால் தலை வெட்டப்பட்ட கம்பியாணியையுமுபயோகிக்கலாம். இரண்டு மரங்களைத் திருகாணி மூலம் பொருத்தும்போது தவ்வைத் துளைத்து அதன் வாயைப் பெரிதாக்க வேண்டும். இப்படிச் செய்வதினால் திருகாணியின் தலை மரத்தின் மேல் மட்டத்திற்குக் கீழேயிருக்கும்.
28 ஆவது படம் '1. திருகாணிபூட்டல். 2. ஆணியின் தலையை மறைக்கும் மாதிரி.
2. ஆணியின் தலையை மறைக்கும்மாதிரி. திருகாணியில் வசிலினைப் பூசிப் பூட்டினால் ஆணிபழுதடைய மாட்டாது. பின்பு ஆணியைக் கழற்றும் போதும் இலகுவாயிருக்கும் சிலர் சவர்க்காரத்தையுபயோகித்து இதைச் செய்கிறார்கள். பொருட்களினழகை முன்னிட்டுத் திருகாணியின் தலையை யுட்பதிக்க நேர்ந்தால், ஆணியின் தலையையுட்பதித்து அதன் மேல், மரவாப் பையடித்தல் நல்லது. திருகாணி முடுக்கியினால் திருகாணியைப் பூட்டல் வேண்டும்.

Page 24
30
6 ஒட்டுப் பலகை
'' பிளைவூட்டு ”' என்றழைக்கப்படும் தோல் போன்றமிக மெல்லிய பலகைகள் பலவற்றையொன்றாக வொட்டி ஒட்டுப் பலகை செய்யப்படுகிறது. அலுமாரி, மேசை, கதிரை, தட்டம் முதலிய வீட்டுத் தளவாடங்களின் சில பகுதிகளைச் செய்வதற்கு ஒட்டுப்பலகை இப்போது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது. ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை யொன்று கிந்தோட்டையில மைக்கப்பட்டு ஒட்டுப் பலகையுற்பத்தி எங்கள் நாட்டிலும் நடைபெற்றுவருகிறது. ஒட்டுப் பலகை யை உற்பத்தி செய்வதற்கு; பெரும்பாலும் நம் நாட்டில் போலித்தாமரை, நெட்டை, மா, கக்குணை, பாலம்பிலி, பூ முதிரை, கோங்கு, சவுக்கு முதலியவற்றின் பலகைகள் உபயோகிக்கப்படுகின்றன.
ஒட்டுப்பலகையைச் செய்வதற்கு, முதலாவதாக மரக்குற்றிகள் இயந்தி ரத்தின் மூலம் நீண்ட மெல்லிய பலகைகளாக அரியப்படுகின்றன. மரக்குற்றி யின் நீளத்திற்கு வட்டமாகப் படிப்படியாக உட்புறமாக அரிந்து, பல யார் நீளமுள்ளதும், பல அடி நீளமுள்ளதுமான தோல் போன்ற பல்கைச் சுருளைப் பெறலாம். அரியப்பட்ட மெல்லிய பலகைகளின் தடிப்பு சில வேளைகளில் இருபத்து நாலிலோரங்குல முடையதாயிருக்கும். அரிந்த மெல்லிய பலகைகள் மூன்றையோ அதிகமானவைகளையோ ஒன்றாக வெட்டிப் பிளைவூட்டெனப்படும் ஒட்டுப்பலகையைப் பெறலாம். பலகைகளின் . மரச்சிராயமைப்பு குறுக்கும் மறுக்குமாயிருக்கும்படி மாறி மாறி வைத்து ஒட்டினால் ஒட்டுப்பலகை உறுதியுடையதாயிருக்கும். கோலவும் மாட்டாது.
ஒட்டுப் பலகைகளிரண்டுக் கிடையே மூன்று தொடக்கம் நாலு மில்லி மீற்றர் தடிப்புள்ள பலகைத்தகடுகளைவைத்தொட்டி ஒட்டுப்பலகைத் தகடு (Laminated Board) செய்யப்படுகிறது. இதனைவிட ஒட்டுப்பலகைளி ரண்டிற்கிடையே எட்டிலோரங்குலந்தொடக்கம் ஒரங்குலத் தடிப்புள்ள . பலகைத் தகடுகளை வைத்தொட்டும் தகட்டுப் பலகை (Block board) களுமுண்டு. இவை மட்டுமன்றி ஒட்டுப்பலகையானது, ஒட்டுப்பலகைத் தகடு, தகட்டுப் பலகை ஆகியவகைகளினிருபக்கங்களிலும் தோல்போன்ற மிக மெல்லிய, அழகான பலகைத்தகடுகளையொட்டிமிகவும் திறமையாகச் செய்யப் படுகிறது.பலகைகளையொட்டுவதற்கு வச்சிர மெனப்படும் பசையே பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது.
ஒட்டுப் பலகைகளுக் கேற்ற மரங்கள் வளரும் பிரதேசங்களிலேயே ஒட்டுப்பலகைத் தொழிற் சாலையமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோரின மரத் திலும் ஒட்டுப் பலகைகள் செய்யுந் தொழிற்சாலைகளமைக்கப்பட்டுள்ள பகுதிகள் பின்வருமாறு :
- வெண்பேட்சு (White Birch) ஐரோப்பாவில் பாற்றிக்குச் சமுத்திரத் . திலிருந்து மத்திய இரசியாவரை.

ஆலிடர் (Alder) போலந்து, இலிதுவானியா, தென் இரசியா. தக்கிள சுப்பேர் (Douglas Fir) கனடா, ஐக்கிய அமெரிக்கா. பெரிய பிரித் தானியாவிற் செய்யப்படும் ஒட்டுமரங்களுக்கான மரங்கள் வெளிநாடுகளி லிருந்து தருவிக்கப்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்ட படங்களைப் பரிசீலனை செய்து ஒட்டுப் பலகைகளைச் செய்யும் மாதிரியும், பொருட்களைச் செய்யும் போது ஒட்டுப் பலகைகளையும் யோகிக்கும் மாதிரியும் தெளிதல்.
1N1NINL)
29 ஆவது படம் 1. தோல் போன்ற மூன்று மெல்லிய பலகைகளை யொட்டிய ஒட்டுப் பலகை. 2. அதன் குறுக்கு வெட்டு முகம். 3. ஒட்டுப்பலகைத் தகடு. 4. அதன் குறுக்கு வெட்டு முகம். 5. தகட்டுப் பலகை. 6. அதன் குறுக்கு வெட்டுமுகம். 7. தோல் போன்ற ஒன்பது பலகைக ளொட்டப்பட்ட ஒட்டுப் பலகை. 8. ஒட்டுப்பலகைகளை அழகுபடுத்த இருபக்கங்களிலும் மெல்லிய தகட்டுப் பலகைகளை யொட்டுதல் 10, 11, 12 மூட்டுக்களைப் பொருத்தும் மாதிரி.

Page 25
32
7 மூட்டு வகைகள் மரத்துண்டுகளைப் பொருத்திப் பொருட்கள் செய்யப்படுகின்றன. ஒரு பொருளைத்துண்டு துண்டாகக் கழற்றிப் பார்த்தால் அது பலவித அமைப்புக்களையுடைய மரத்துண்டுகளினாலாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பொருட்களைச் செய்யும் போது மரத்துண்டுகளைப் பொருத்துவதற்குப் பல முறைகளுண்டு. பொருத்துக்களை மூட்டுக்களென்றும் சொல்லுகிறோம். பொருத்தும் முறைகளை யொட்டி அவ்வம் மூட்டுக்களுக்குச் சிறப்பான பெயர் கள்உபயோகிக்கப்படுகின்றன.
உதைகான் மூட்டு :
மிகவும் இலகுவான மூட்டு இது களிளிப் பெட்டி போன்ற பெரும்படியான பொருட்களைச் செய்யும் போது உதைகான் மூட்டுபயோகிக்கப்படுகிறது. ஆணி யினாலோ, அல்லது திருகாணியினாலோ உதைகான் மூட்டை உறுதிப்படுத்த லாம். செங்கோணமுடைய மரக்குற்றியினுதவியோடு உதைகான் மூட்டைப் பொருத்துதல் நல்லது. இதனால் பொருத்து சரியான உருவத்தைப் பெறும்
30 ஆவது படம். உதைகான் மூட்டுக்களுடைய பெட்டி 1. உதைகான் மூட்டின் மரத்துண்டுகள். 2. உதைகான் மூட்டுக்களுடைய பெட்டி.
மைற்றர் மூட்டு :
படங்களுக்குச் சட்டங்கள் செய்யும் போதும் பூச்சட்டம் பொருத்தும்போதும் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. மைற்றர் மூட்டுக்குரிய படச்சட்டங்களையும். பூச்சட்டங்களையும் 45 பாகைக் கோணமுடையனவாக வெட்டிக் கொள்ளல் வேண்டும், இதற்கு மைற்றர்க் கட்டையின் உதவியைக் கொள்வது நல்லது. மைற்றர் மூட்டு முறையை உபயோகித்துப்பட்டிபோன்ற பொருட்களையும் செய்து கொள்ளலாம்.

33
அரைமூட்டு :
மூட்டவேண்டிய இரண்டு மரத்துண்டுகளை அரைப்பங்காக வெட்டிப் பொருத்துவது அரை மூட்டெனப்படும். அரை மூட்டில் பல வகைகளுண்டு. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் பல வகையான அரை மூட்டுக்கள் காட்டப்பட்டுள்ளன.

Page 26
34
KIN
T,
LTTP
31 ஆவது படம் 1. அரைமூட்டு மடிமூட்டு. 2. குறுக்குமடி மூட்டு. 3. புறாவாலரை மூட்டு. 4. அரைமூட்டுப் பொருந்துமிடம்.

35
செருகல் மூட்டு :
இதற்குத் திறப்பு மூட்டு, பின்னமூட்டு என்னும் பெயர்களும் வழங்கப் படுகின்றன. இதிற் பலவகைகளுண்டு. கீழே கொடுக்கப்பட்டபடங்களைப் பரிசீலனை செய்து செருகல் மூட்டு பற்றிய அடிப்படை விடயங்களை இலகு
வாகத்தெரிந்து கொள்ளலாம்.
32 ஆவது படம். திறந்த செருகல் மூட்டு (சிறுசந்தி என்றும் பெயர்)
33 ஆவது படம். பாதிச் செருகல் மூட்டு

Page 27
36
XIIIIIIIII
TIP
34 ஆவது படம். திறப்புச் செருகல் மூட்டு (கீனச்சந்தி என்றும் பெயர்)
35 ஆவது படம். புறாவாற் செருகல் மூட்டு

தவாளிப்பு நாக்கு மூட்டு :
இது பெட்டி போன்ற பொருட்களைச் செய்வதற்கு உபயோகிக்கப்படுகிறது. இதற்குப் பல பெயர்களுண்டு :- முதலைத்தலை மூட்டு, புழுக்கு மூட்டு. பல்லுருமூட்டு என்பனசில.
36 ஆவது படம். தவாளிப்பு நாக்கு மூட்டு
கடிவாளமூட்டு :
இதற்குத் திறந்த பொளி மூட்டென்றும் பெயருண்டு.
Nt | L (LK f>
\ :(((
37 ஆவது படம். கடிவாளமூட்டு

Page 28
38
தலையில்லாணிமூட்டு :
இதனைச் சமமான கனமுள்ள பலகைகளை மூட்டு வதற்கும், படந்தாங்கி, படச் சட்டம் முதலிய பொருட்களைச் செய்வதற்குமுபயோகித்துக் கொள்ளலாம்.
38 ஆவது படம்
1. தலையில்லாணி மூட்டின் மரத் துண்டுகள். 2. குறுக்கு வெட்டு முகத் தோற்றம். 3. ஆணி
இப்படத்தில் தலையில்லாணி மூட்டின் அடிப்படைமுறைகள் தெளிவாக்கப் பட்டுள்ளன. பொருத்த வேண்டிய இரண்டு மரங்களில் ஒரேவரிசையில் தவ்வைத் துளைத்து, மரவாணியுட் பதிக்கப்படுகிறது. தவ்வை ஒரே நிரையில் துளைப்பது மிக முக்கியம். தவ்வுகளிலுள்ள காற்று வெளியேறும் பொருட்டு மரவாணியின் நீளத்திற்கு வாள் வெட்டுப்போன்ற பீலியிருக்க வேண்டும் இன்றேல், மரவாணியைத் தவ்வில் உட்பதிக்கும் போது மரம் வெடிக்கக்கூடும்.
தவ்வுகளையும், மரவாணிகளையும் ஒழுங்கு செய்த பின்பு பொருத்த » வேண்டிய மரங்களின் நுனியில் வச்சிரத்தைப் பூசி இறுக்க வேண்டும். மரவாணிகளில் வச்சிரம் பூச வேண்டியதில்லை. அதன்பின்பு இடுக்கியினால் இறுக்கிப் பொருத்தை உறுதியாக்கலாம்.

39
8 கவனிக்க வேண்டியன
மரவேலை, உலோகவேலை போன்ற கலை சம்பந்தமான தொழில்களைச் செய்யும்போது அவதானமாயிருத்தல்வசியம். காத்திராத நிகழ்ச்சிகளைத் தடுக்கும் மாதிரியைத் தொடக்கத்திலேயே கற்றுக்கொண்டால் அது, பழக்க மாகி விடும். அவதானமுள்ள தொழிலாளி, சிறந்த தொழிலாளி யென் பதை எப்பொழுதும் நினை விருத்திக் கொள்க.
கவனம் பற்றிய பொது நீதிகள்.
1. வேலை செய்வதற்கு முன் ஆயத்தமாக மேற்சட்டையைக் கழற்றி வைக்க. உட்சட்டைக்கைகளை நன்றாக மடித்துக்கொண்டு வேலையைத் தொடங்க.
2. உரிய மேலங்கி (Apron) இருப்பின் அணிந்து கொள்க. இதைப்போன்ற அங்கி பொருட்களை மினுக்கும்போதும், சாயமூட்டும்போதும் அணிந்துகொள் வது அவசியம்.
3. தொழிற்சாலை விளையாட்டிடமன்று. தொழிற் சாலையில் வெட்டு மாயுதங்களுண்டு. ஆகையால் தேவையற்ற விளையாட்டுக்களினால் ஆபத் தேற்படக்கூடும்.
4. ஒழுங்கு முக்கியம்; கருவிகள், உபகரணங்கள், மூலப் பொருட்கள் முதலியவைகளை உரிய விடத்தில் சரியாக வைக்க.
5. கருவியைப் பிறருக்குக் கொடுக்கும் போது எப்போதும் கைப்பிடி முன்னாகக் கொடுக்க.
6. கருவிகளைக் கொண்டு போகும் போது ஒரு முறையில் சிலவற்றைக் கொண்டு போக. கையிலோ, வாயிலோ ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போவது தவிர்க்கப்படவேண்டும்.
7. உளி, வாள், திருகாணி திருப்பலகு, துறப்பணம் முதலியவைகளை அதிகதூரம் கொண்டுபோக நேரிட்டால் உறையிற் கொண்டு போக.
8. கருவிகளைத் தச்சுப் பட்டடைக்கிடையில் வைக்கலாகாது.
9. சீவுளியைக் குறுக்குப் பாடாக வைப்பது நல்லது. 10. துண்டுகளை அங்கிங்கு ஏறியக் கூடாது.

Page 29
9. இலகுவான கருவிகளை உபயோகித்தல்
அரிதலும் வெட்டுதலும்.
அரிவதற்குமுன் அரிவுரேகையை வரைந்து கொள்க. பின்பு பலகையை அரிவுப்பீடத்தின் மேல்வைத்து வலது முழங்காலினாலிறுக்குக. வாளைப் பலமுறை கீழேயிருந்து மேலேயிழுத்து அரியத் தொடங்குக. அதன் பின்பு கூடியவளவு வாளின் பெரும் பகுதியையுபயோகித்து அரிக. வாட் பற்களுக்கு வேண்டியவளவு அரிய இடங்கொடுப்பதை விடுத்துக் கீழ் நோக்கி அமுக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் வாட்பற்கள் நெருக்கப்பட்டு அரிவது கடினமாகும். மொட்டைவாளையுபயோகித்தால் நேரம் வீணாகச் செலவாகும். வாட்பற்களின்மேல் நிலக்கரிநெய் பூசினால், அரிவது இலகு வாயிருக்கும். அரியும் போது அரிந்து நீக்கும் துண்டை இடதுகையினாற் பிடித்தால் சிம்பாதல் தடுக்கப்படும். அரிந்து, துண்டை நீக்கும் வரையும் அதை இறுக்கமாகவும் நேராகவும் பிடிக்கவேண்டும். சிறியமரத்துண் டையோ பலகையையோ அரியும்போது நிலையிடுக்கியையுபயோகிக்க வேண் டும். பெரிய மரங்களையோ பலகைகளையோ அரியும்போது அரிவுப்பீடத்தை யுபயோகிப்பது நல்லது.
39 ஆவது படம். வாளைப்பிடிக்கவேண்டிய மாதிரி 1. கைவாளைப் பிடித்தல். 2. கழுந்துவாளைப் பிடித்தல்.

- - - - - - - -- -- --


Page 30
42
வரைகம்பை உபயோகித்தல் :
வரை கம்பை வேண்டிய நீளத்திற்கு அமைப்பதற்காகப் பித்தளையடி மட்டத்தையுபயோகிக்க வேண்டும். இறுக்கும் புரியாணியை இடது பக்கமாகத் திருப்பி, இளக்கிக்கொண்டு வேண்டிய வளவிற்குக் காலைவைத்துப் புரியாணியை இறுக்குக.
42 ஆவது படம்
1. வரைகம்பை வைத்தல். 2. வரைகம்பை மரத்தின்மேல் வைக்கும் மாதிரி. 3. வேண்டிய பக்கத்திற்குச் சிறிது திருப்பி ஆணியினால் வரையும்படி தள்ள. வரை கம்பை மரத்தோடு இறுகப் பிடிக்க.
சீவுதல் :
சீவுவதின் முக்கிய நோக்கம் மரத்தைச் சரியானவளவிற்குச் செப்பஞ் செய்வதாகும். முதலாவதாகப் பொதுச் சீவுளியுபயோகிக்கப்படுகிறது. மரத் திலோ பலகையிலோ சீவவேண்டிய விசாலமான மேற் பகுதியைத் தெரிவு செய்துகொண்டு சீவத் தொடங்க. இது முகப்பக்கமெனப் பெயர் பெறும். பொதுச் சீவுளியினால் சீவியொழுங்கு செய்தபின் அழுத்தமாக்குவதற்கு அழுத்தமாக்குஞ் சீவுளி படிமானச் சீவுளியென இரண்டையும் வழங்குக. சில வேளையில் அழுத்தமாக்குஞ் சீவுளி மட்டும் உபயோகிக்கப்படும். )

43
(அ) சீவத் தொடங்கும் போது சீவுளிப் பிடியை வலது கையினால் பிடித்துக் கொண்டு சீவுளிக் கூட்டின் தலையை (முற்பக்கம்) கீழே யழுத்திக் கொண்டு இடது கையினால் அமுக்குக. இடது காலை முன்னுக்கு வைப்ப தனால் சீவுளியைத் தள்ளுவதற்குரிய சத்தி உண்டாகும்.
(ஆ) தச்சு மேசையின் தடைக்கட்டையில் பொருந்தும்படியாக வைக்கப் பட்ட மரத்தின் மேல், சீவுளியை வைத்து முன்னே தள்ளுக. தள்ளும் போது, சீவுளிக் கூட்டின் முற்பக்கத்தில் அமுக்கிய பாரத்தைப் படிப்படியாகப் பின்னுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் மரத்தின் நடுப்பகுதி சீவப் படுவதோடு சீவுளிக் கூட்டினுதவியுடன் மரத்தின் நீளமும் சீவப்படும். சீவுளிக்கூட்டைச் சரியாக உபயோகித்தால், அதன் வாயிலிருந்து சீவு ளித் தூள் நீண்ட நாடாப்போல் வெளியாகும்.
(இ) மரத்தின் முகப்பக்கத்தைச் சீவிய பின்பு, அது சரியாகச் சீவப்பட் டுள்ளதாவென்று பரிசீலனை செய்து பார்க்க. பொது மூலைமட்டத்தின் தகட்டை மரத்தின் மேல் வைத்துப் படிப்படியாக அதை நகர்த்திப் பார்க்கும் போது இடையில் வெளி தெரியாதிருந்தால் சரியாகச் சீவப்பட்டுள்ளதெனக் கருதலாம்.
\\\\\XI/
43 ஆவது படம். பொதுமூலை மட்டத்தை வைத்துப் பார்த்தல்
- பொது மூலை மட்டத்தகட்டின் நீளம் போதாவிடத்து மட்டப்பலகையை யுபயோகிக்க இது கிடைக்காவிடின் நேரான மரச் சட்டமொன்றைச் சீவிய மரத்தின் மேல் கோண விட்டத்தில் வைத்துப் பார்த்து, மரத்தில் திருகல், கோணலென்பன உண்டோவெனக் கண்டுகொள்ளலாம். சிறிய மரத் துண்டொன்று சரியாகச் சீவப்பட்டுள்ளதா வென்பதை அறிய, சீவப்பட் டுள்ள முகப் பக்கத்தினிரு விளிம்புகளும் சமாந்தரமாயிருக்கின்றனவா வெனப் பார்க்க வேண்டும்.

Page 31
44
(உ) முகப் பக்கத்தைச் சரியாகச் சீவி முடித்ததும் அப்பக்கத்தில் ஓர் அடையாள மிடுக.
(ஊ) அதன் பின்பு பலகையின் , அல்லது மரத்தி னொடுங்கிய பக்கத்தை முன் போல் சீவுக. பலகை, அல்லது மரம் சிறியதாயிருந்தால் தச்சு மேசையின் நிலையிடுக்கியால் அதனைப் பிடிப்பது நல்லது.
(ஏ) அடுத்ததாக, பொது மூலை மட்டத்தின் சட்டத்தைச் சீவி அடையாள மிட்ட முகப் பக்கத்திலிறுகப் பிடித்துக்கொண்டு, அதன் தகட்டை இரண் டாவதாகச் சீவிய ” ஒடுங்கிய பக்கத்தில் வைத்து, அப்பக்கம் சரியாகச் சீவப்பட்டுள்ளதா வெனப் பார்க்க. பொது மூலைமட்டத்தைமரத்தின் மேல் நகர்த்துவதினால் இதனைச் செய்யலாம். பொது மூலைமட்டத்திற்கும் மரத் திற்கு மிடையில் வெளி தெரியாதிருந்தால் நன்றாகச் சீவப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். அப்பக்கமும் நன்றாகச் சீவப்பட்டிருந்தால் வேறோர் அடை யாளமிடுக.
ப (0)
44 ஆவது படம். ஒரு பக்கம் சீவப்பட்டுள்ளதாவெனப் பார்த்தல்
இடப்பட்ட அடையாளமும் தெரிகிறது. (ஏ) இதன் பின்பு வரைகம்பை உபயோகித்து விரும்பிய அளவை மரத்திற் குறிக்க இங்கு வேண்டிய அளவிலும் 1/32 அங்குலம் கூடுதலாக எடுப்பது வழக்கம். கூடிய பகுதியைப் படிமானச் சீவுளியினால் சீவிக்கொள்ளலாம். மேலே கூறியபடி பொது மூலைமட்டத்தையுபயோகித்து மூன்றாவது பக்கமும் சரியாகச் சீவப்பட்டுள்ளதாவெனப் பார்க்க.
(ஐ) அடுத்து மிகுதியான பகுதியையும் வரைகம்பினாலடையாளமிட்டுச் சீவுக. இப்போது சீவுதல் முடிவடையும்.

45 ஆவது படம் : சீவும் முறை.
1. முகப்பக்கம். 2. இரண்டாவதாகச் சீவும் பக்கம். 3. மூன்றாவது பக்கம். 4. கடைசியாகச் சீவும் பக்கம்.
(வரைகம்பானது V அடையாளத்தினாற் காட்டப்பட்டுள்ளது)
கவனிக்க வேண்டியன :
சீவுவதற்கு முன், மரச்சிராயமைப்பைக் கவனித்துச் சிம்பு உண்டாகாத - வாறு சீவுதல் நன்று. பழுது, கணு முதலியவை யிருப்பின், குறுக்காகவோ மூலைக்கு மூலையோ சீவுதல் நல்லது. நெற்றிக்கட்டை சீவுதல் :
மரத்தின், அல்லது பலகையின் நெற்றிக் கட்டையைச் சீவும்போது சிம்புண்டாகும்; வளர்ச்சி மையம் சேதமடையும். ஆகையால் நெற்றிக் கட்டை சீவுவதற்குத் தச்சு மேசை யோரத்தில் பலகையொன்று பொருத்திக் கொள்க. சீவ வேண்டிய மரத்தின் நெற்றியை இதற்குள் வைத்து, சீவுளியின் வாயில் பிடித்துக் கொண்டு சீவுக. நெற்றியின் ஒரு பகுதியைச் சீவி அடுத்த பக்கத்தைத் திருப்பி மிகுதிப் பகுதியைச் சீவுதல் இன்னொரு முறையாகும்.
விளிம்பு சீவுதல் :
இரண்டு பக்கங்களொன்று சேருமிடம் விளிம்பு எனப்படும். இது, கூரா னது ; ஆகையால் ஆபத்தானது. விரைவில் ஓடியக்கூடியது ; ஆகையால் பொருட்களைச் செய்யும்போது விளிம்பைச் சீவுதல் நல்லது. இதற்கு, விளிம்புடைத்தல் என்றும் சொல்லப்படும். சீவ வேண்டிய பகுதியை வரைகம்பினால் வரைந்து அடையாளமிடுக. பின்பு ஒரு பக்கத்திலிருந்து விளிம்பினொரு பகுதியைச் சீவி, அடுத்த பக்கத்திலிருந்து மிகுதிப் பகுதியைச் சீவுக. சாதாரணமாக 45 பாகைக் கோணமிருக்கும்படியாக விளிம்பைச் சீவுவது வழக்கம். விளிம்பைச் சீவுவதால் அழுத்தமான ஓரம் உண்டாகும்.
வரை கம்பினால் வரைந்து அடையாளமிட்ட பின் ஓரம் சீவும் உளியினாலும் விளிம்பை வெட்டியெடுக்கலாம். கருவிகளினுபயோகம் பொருட்களினமைப்
பைப் பொறுத்ததாகும்.

Page 32
46
10.- அழகு செய்தலும் வேலை நிறைவேற்றலும் பொருட்களை அழகு செய்வதிற் பல முறைகளுண்டு. இவற்றுள் விளிம்பு சீவுதல், ஒட்டுப் பலகைத் தகடொட்டுதல், செதுக்கும் தகட்டில் அலங்காரக் காட்டுருக்கள் வெட்டுதல், அரத் தாளாலுரோஞ்சுதல், மினுக்குதல் என் பன சில. சில விவரங்களைக் கீழே காண்க. விளிம்பு சீவுதல் :
மிகக் குறைவான சந்தர்ப்பங்களிலேயே பொருட்களில் கூரிய விளிம்புகள் விடப்படுகின்றன. கூரிய விளிம்பு விரைவிலொடியும் ; சிம்புண்டாகத் தொடங்கும் ; ஆபத்துடையது. விளிம்பு சீவுவதனால் பொருட்கள் மேலும் அழகுறும். ஆகையால் விளிம்பு சீவுதல் முக்கியமானது. இதற்கு ஓரஞ் சீவும்படிமானச் சீவுளி, ஆரைக்காற் சீவுளி என்பன உபயோகிக்கப்படு கின்றன. அழகுபடுத்துவதற்காக விளிம்பைச் சீவும் மாதிரி கீழே காட்டப் பட்டுள்ள படங்களில் தெளிவாகத் தோன்றும்.
46 ஆவது படம் : விளிம்பு சீவுதல்

11. பொருட்களைச் செய்தல் சிறிய பெட்டி, ஏந்தானம், பூந்தாழி, தாங்கி என்பவைகளை மென்மரங் களிற் செய்து ஆணியடித்து வேலையை முடித்துக் கைப்பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம். இங்கு குறிப்பிட்டுள்ள பொருட்களை மட்டுமன்றி, சுய அறி வைக்கொண்டும்வேறு பொருட்களை யுற்பத்தி செய்வது உசிதமாகும்.
பொருட்களுக்கான மரங்களை வெட்டி யெடுக்கும்போது அரிதல், வெட்டு தல், சீவுதல் முதலியவைகளுக்காக நீளத்தில் 2 அங்குலமும், அகலத்தில் 4 அங்குலமும் கனத்தில் அங்குலமும் அதிகமாக விடுதல் வழக்கமாகும். ஒரு பொருளைச் செய்யத் தொடங்குமுன் கிடைப்படத்தை நன்கு பரிசீலனை செய்து முதலிய பலகை போன்ற மூலப் பொருட்களை ஆயத்தஞ் செய்தல், மிகமுக்கியம்.
தீப்பெட்டி தாங்கி. செய்கைமுறை :
(அ) மூலப் பொருட்களின் அட்டவணை ஆக்கல். (ஆ) பலகைத் துண்டைச் சரியான வளவிற்குக் குறித்தல்.; (அடிமட்டம்
பொது மூலை மட்டம், பிரிக்குங் கருவி). (இ) பலகைத் துண்டை வெட்டிக்கொள்ளுதல் (கழுந்துவாள்). (ஈ) சீவுதல் (பொதுச் சீவுளி, அழுத்தமாக்குஞ் சீவுளி, பொது மூலை
மட்டம், வரைகம்பு), (உ) இரண்டு பலகைத் துண்டுகளையும் சரியாகவைத்துத் தவ்வுவைக்க
வேண்டிய இடத்தைக் குறித்தல் (பொது மூலைமட்டம், பிரிக்குங்
கருவி, பென்சில்), (ஊ) தவ்வுவைத்தல் (துளையூசி கூர்.) (எ) ஆணியடித்தல் (ஆணி, சுத்தியல்).
47 ஆவது படம்.
தீப்பெட்டி தாங்கியின் கிடைப்படம்
- -- -- ---

Page 33
48
புத்தகங்தாங்கி செய்கைமுறை :
மேசை போன்ற விடத்தில் புத்தகங்களை நேராக நிமிர்த்தி வைப்பதற்குத் தாங்கிகளிரண்டு அவசியம். ஆகையால் ஒரு சோடி புத்தகந் தாங்கி செய்வது நல்லது.
(அ) வேண்டிய மூலப் பொருட்களின் அட்டவணை ஆக்கல். (ஆ) வேண்டிய மரத்தை வெட்டி யெடுப்பதற்கடையாளமிடல் (ஒரு.
தாங்கியைச் செய்வதற்கு 8"x 6", 7!"6", 51"x43" அளவு:
"களையுடைய மூன்று மரத்துண்டுகள் வேண்டும்). (இ) பலகை யரிதல், (ஈ) சீவுதல். (உ) 8" x6", 7;"x6 அளவுகளையுடைய பலகைத் துண்டுகளை மூடுவ
தற்கு 8" x6" அளவுடைய துண்டிலொரு பகுதியை வெட்டி
யெடுத்தல் (கழுந்துவாள், அல்லது வெட்டு), (ஊ) 54" x4" பலகைத் துண்டை வேண்டியவுருவிற்கு வரைந்துகொள்
ளுதலும் வெட்டியெடுத்தலும், (ஏ) ஆணியடிப்பதற்குப் பெரிய மரத்துண்டிரண்டிலும் தவ்வுதுளைத்தல். (ஏ) ஆணியடித்துப் பெரிய மரத்துண்டுகளிரண்டையும் பொருத்துதல். (ஐ) சிறிய பலகை பொருத்தவேண்டிய விடத்தைக் குறித்தல். (ஓ) சிறிய பலகையைப் பொருத்துவதற்குத் தவ்வுவைத்தல். (ஓ) ஆணி யடித்தல்.
5% />
3
48 ஆவது படம். புத்தகந்தாங்கியின் கிடைப்படம்

49
பூந்தாழி, செய்கைமுறை :
(அ) மூலப் பொருட்களின் அட்டவணை ஆக்கல். (ஆ) வேண்டிய பலகைகளில் அடையாளமிடல் (இதற்கு வேண்டிய
பலகைத் துண்டுகளைத் தீர்மானித்துக்கொள்க). (இ) பலகையை வெட்டுதல்.. (ஈ) சீவுதல். (ஒ) துண்டுகள் பொருத்துமிடத்தை அடையாளமிடல். (ஊ) தவ்வு துளைக்குமானியால் மரவடிகளைப் பொருத்துதல். (எ) நீண்ட பலகைத் துண்டைப் பொருத்துவதற்குத் தவ்வுதுளைத்தல். (ஏ) நீண்ட பலகைத் துண்டுகள் நான்கையும் ஆணியடித்துப் பொருத்
துதல். (ஐ) அடியை ஆணியாற் பொருத்துதல்.
Eாாாாாா13
பபபபபபபபபnin
பாப்0ாரா
பாகி
50 ஆவது படம் : பூந்தாழியின் சிடைப்படம்

Page 34
50
வாங்கு செய்கைமுறை :
(அ) கிடைப்படத்தைப் பரிசீலனை செய்து வேண்டிய பொருட்களின் அட்ட
வணை ஆக்கல்.
(ஆ) வேண்டிய பலகைகளை அடையாளமிடல்.
(இ) பலகையை யரிதல்.
(ஈ) சீவுதல்
(உ) இரு கால்களிலும் குறுக்குச் சட்டங்களிலும் வெட்டி நீக்கவேண்டிய
பகுதிகளை யடையாளமிடுதலும் வெட்டுதலும்.
(ஊ) தவ்வுதுளைத்து ஆணியடித்தல்.
- 10
51 ஆவது படம் : வாங்கின் கிடைப்படம் (ஏனைக் கிடைப்படங்களையும் நன்கு பரிசீலனை செய்து அதன்படி பொருட்களைச் செய்தல் நன்று).

51
51 (அ) ஆவது படம் :
புத்தக ஏந்தானத் தின் கிடைப்படம்
52 ஆவது
படம்.
சட்டை கொளு வியின் கிடைப் படம். (முள் ளரம் உபயோ கித்துக் கொளு க்கியின் வட்ட மான பகுதி யைச் செய்து கொள்ளலாம்.
14" >
4-- J. N. R 21997 (1160)

Page 35
52
T1)
ITT
II TIIIg 2.
53 ஆவது படம் : கடித எந்தானத்தின் கிடைப்படம்

53
12. சிறந்த கலைஞனின் குணங்கள் மர வேலை போன்ற வேலைகளைக் கற்பதற்குச் செய்கைமூலம்கற்பது மிகச் சிறந்த முறையாகும். ஆகையால் ஏதாவதொரு கருமத்தைப் பொறுமை யோடு திரும்பத் திரும்பப் பல முறை செய்தால் அதைப்பற்றிய சரியான விளக்கமும், கைப் பயிற்சியும் கைகூடும். பின்னிற்காது முன்னேற முயற்சிப் பது அவசிய மென்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்க.
நேர காலத்திற்குக் கருமமாற்றுவது கலைஞனின் சிறந்த குணமாகும். வேலையைப் பின்போடுவது நேரத்தைத் திருடுவதாகும். ஆகையால் குறித்த நேரத்தில் வேலை செய்க. சுத்தங் கவனித்தலுமவசியம். தச்சுப் பட்டடை யையும், கருவிகளையுஞ் சுத்தமாக வைத்திருத்தல் நல்லது. சீவல், தூள் போன்ற கழிவுப் பொருட்களை அங்கங்கிருக்க விடுதல் நன்றன்று. கழிவுப் பொருட்களைப் போடுவதற்கெனத் தொட்டியொன்றை யுபயோகிக்க. நிரம் பியதும் கழிவுப்பொருட்களை யெரித்தோ, புதைத்தோ விடுவது நல்லது. வேலையை நிறுத்தியவுடனே கருவிகளை உரிய இடத்தில் வைத்தல் வேண் டும். பட்டடையையும் சுத்தமாக்கல் வேண்டும்.
சீவுளி, வாள், சுத்தியல் முதலிய பல கருவிகளைத் தச்சுப்பட்டடை மேசை யின் மேலோ வேறிடத்திலோ ஒரே குவியலாகப் போட்டுவைத்தால் அக்கருவி கள் பழுதடையும். அதுமட்டுமன்றி வேலை செய்வதும் கடினமாகும். ஆகையால் அவசியம் வேண்டிய கருவிகளை மட்டுமே எடுக்கவேண்டும். மிகுதியாயுதங்களை உரிய இடத்தில் சரியாக வைக்க . அப்போது வேண்டிய கருவிகளை யெடுப்பது இலகுவாயிருக்கும். கருவிகளைத் தச்சுப்பட்டடை மேசை மீதோ, அதுபோன்ற வேறிடங்களிலோ கவனமின்றி வைத்தால், கருவி கள் பழுதடைவது மட்டுமின்றி வேலை செய்பவருக்கும் ஆபத்தேற்படும். தனக்கும் பிறருக்கும் ஆபத்தேற்படாவண்ணம் வேலை செய்வது மிக முக்கிய மென்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளல் வேண்டும். கருவிகளை மிகக் கவனமாயுபயோகிக்க வேண்டும்.
தச்சுப் பட்டடை போன்ற உபகரணங்களும் வாள், உளி முதலிய கருவி களும் பழுதடைவதற்கான காரணங்களிற் பல கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (அ) கருவிகளின் வெட்டுங் கூர், இரும்பாணி போன்ற கடினமான
விடங்களில் முட்டுதல், (ஆ) கீழே மரத்துண்டொன்றையாவது தச்சுப் பட்டடைமேல் வைத்து
வெட்டுதல், தவ்வுவைத்தல் முதலியன செய்தல் ; (இ) தச்சுப்பட்டடை மேசை யோரத்திற் கருவிகளை வைத்தல். முட் டுத
லால் கருவிகள் கீழே விழுந்து ஆபத்துண்டாகும். (ஈ) கருவிகளைச் சரியான முறையாக உபயோகிக்காமை ; இங்கு கூறப்பட்ட விடயங்களிலிருந்து விலகிக்கொள்ள எப்பொழுதும் முயற்சிக்க.
"அவசிய" இடதன் கக்கும். "

Page 36
54
- தொழிலில் ஈடுபடும்போது சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பெரும் நன்மையைப் பெறலாம். மரம், பல்கை, ஆணி முதலிய மூலப் பொருட் களையுபயோகிக்கும் போது, வீணாகப் போவதைத் தடுப்பதற்குக் கூடியவளவு முயற்சிக்க வேண்டும். ஏதாவதொரு பொருளைச் செய்வதற்குமுன் அதைப் பற்றி நன்கு சிந்தித்துப் புறவுருவப் படமொன்றை வரைந்து அதன்படி வேலை செய்தால் வீணாகப் போவதைத் தடைசெய்யலாம். " எண்ணித் துணிக கருமம்'' என்னும் பழமொழியை ஒவ்வொரு கலைஞனும் நினைவி லிருத்தல் வேண்டும். - ஒழுங்கு மிக அவசியம். அரிதல், வெட்டுதல், சீவுதல், மூட்டுதல் முதலிய வேலைகளின்போது ஓழுங்கைக் கடைப்பிடித்தால் சிறந்த பலனைப் பெறுவது மட்டுமன்றி வேலை செய்வதும் மகிழ்ச்சியைத்தரும். சீவும் முறை பின்வருமாறு :
(அ) முதலாவதாகச் சீவவேண்டிய பக்கத்தை (முகப்பக்கத்தை) தெரிவு
செய்தல். (ஆ) மரத்தைத் தச்சுப்பட்டடைக் கட்டையோடு பொருத்துதல். (இ) சீவுளியைத் தெரிவுசெய்து முகப்பக்கத்தைச் சீவுதல். (ஈ) அது நன்றாகச் சீவப்பட்டுள்ளதா வென்பதைப் பொது மூலைமட்டத்
11 தையும் மட்டப் பலகையையும் கொண்டு அறிதல். (உ) இரண்டாவதாகச் சீவவேண்டிய பக்கத்தைத் தெரிவுசெய்தல். (ஊ) தச்சுமேசைக் கட்டையிலோ தச்சு நிலையிடுக்கியிலோ இறுக்கி வைத்தல். (எ) இரண்டாவது பக்கத்தைச் சீவுதல். (ஏ) அப்பக்கம் நன்றாகச் சீவப்பட்டுள்ளதா வென்றறிதல். (ஐ) மூன்றாவதாகச் சீவவேண்டிய பக்கத்தைத் தெரிவுசெய்தல். (ஓ) வரைகம்பினாலடையாளமிடல். (ஓ) மரத்தைத் தச்சு மேசைக் கட்டையிலோ, தச்சு நிலையிடுக்கியிலோ
இறுக்கவைத்து மூன்றாவது பக்கத்தைச் சீவுதல். (ஒள) அப்பக்கம் சீவப்பட்டுள்ளதாவென்று மேலே காட்டியவாறு பார்த்தல். (க) மிகுதிப் பக்கத்தை வரைகம்பினாலடையாளமிடல் (இங்கு இருபக்கங்
களை அடையாளமிட வேண்டும்). (கா) அப்பக்கத்தைச் சீவுதல். (க) நன்றாகச் சீவப்பட்டுள்ளதாவெனப் பார்த்தல். இப்படி அரிதல், வெட்டுதல், முதலிய வேலைகளிலும் ஒழுங்கைப்பின் பற்றினால் சிறந்த பலனைப் பெறலாம். ஒத்துழைப்பு : - மற்றையவர்களின் ஒத்துழைப்போடு கருமங்களை ஆற்றுவது தொழி லாளியின் சிறந்த குணமாகும். மற்றையவர்களைப் போல், தொழிலாளியும் சமூகத்தில் சீவிப்பதால், " நீர் வாழ்க ; மற்றையவர்களையும் வாழவிடுக "' என்னுங் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றல் வேண்டும் அப்போது தமது கருமத்தை இலகுவாகவும், இன்பமாகவும் நிறைவேற்றலாம்.

55
13. கேத்திர கணித உபகரணங்களும் அவற்றின் அமைப்பைப்பற்றிய
விவரங்களும்
சித்திரப் பலகை : இது சமதளமாயும் அழுத்தமாயுமிருக்க வேண்டும். 16 அங்குல நீளமும் 12 அங்குல அகலமும், 2 அங்குலக் கனடுமுடைய தாயிருக்க வேண்டும். இவ்வளவுகளிற் குறைந்தால் உபயோகத்திற்கு உத வாது. கோடுகள் வரைதல், வெட்டுதல் போன்றவைகளினாற் சித்திரப் பலகை உபயோகிக்க இயலாதபடி சேதமுறுமாகையால் மிகக் கவனமா யிருத்தல் வேண்டும்.
''T '' தி மூலை மட்டம் : வாய்க்காலுருவை யொத்த விளிம்பையுடைய இதன் தகடு 23 அங்குல நீளமுடையதாயிருத்தல் நல்லது. இதைச் சித்திரப் பலகையின் இடது பக்கத்திலிருந்தே உபயோகிக்க வேண்டும். பலகையின் மேல் கீழ்ப்பக்கங்களிலிருந்து உபயோகிக்கக் கூடாது. வாய்க்காலுருவை யொத்த விளிம்பு வரையும் கடதாசியின் மேல்விளிம்புக்குச் சமாந்தரமா யிருத்தல் வேண்டும். இதனை உபயோகித்துக் கிடைக்கோடு வரைதலே வழக்கமானது.
பென்சில், இறப்பர்த்துண்டு, வரைதலூசிகள் : நல்ல பென்சிலையுப் யோகித்தாற் சிறந்த பலன் கிடைக்கும். அமைப்புக் கோடுகளை வரைவதற்கு 2H அல்லது 3H பென்சிலும் முக்கிய கோடுகளுக்கும், எல்லைக் கோடு களுக்கும் 2B பென்சிலும், புறவுருவப்படம் வரைவதற்கு HB, அல்லது F பென்சிலும் உபயோகித்தல் நல்லது. பென்சிலைக் கூராக்கும்போது கார் யத்தின் பங்கு தெரியக்கூடியதாயிருக்க வேண்டும். புறவுருவப்படம் வரைதல். எழுத்துக்களைக் குறித்தல். அம்புக்குறியிடல் முதலிய சுயாதீன வேலைகளுக்குப் பென்சில், வேலைப் போன்று கூராயிருத்தல் நன்று. கோடு களை வரைவதற்கு உளிக் கூர் நல்லது (படத்தைப் பார்க்க).
மென்மையான இறப்பர்த் துண்டு அவசியம். இதனை மிகக் குறைவாகவே உபயோகிக்கவேண்டும்.
சித்திரப் பலகையைச் சேதப்படுத்தாத மூன்று கூருள்ள வரைதலூசிகள் உபயோகத்திற்கு நன்று. இவற்றைக் கடதாசியினோரத்திலிருந்து அங்குல் வளவு உள்ளே உபயோகித்தல் வேண்டும்.
மூலைமட்டம் : மறுபக்கந் தெரியும் உலோயிட்டு மூலைமட்டம் கிடைப்படம் வரைவதற்குச் சிறந்தது. நிலைக்குத்துக் கோடு வரைவதற்கு "T '' தி. மூலைமட்டத்தின் மேல் மூலைமட்டத்தை வைக்கவேண்டும். குறுக்குச் சமாந் தரக் கோடுகளை வரைவதற்கு இரண்டு மூலை மட்டங்களை உபயோகிக்க வேண்டும்.
பாகைமானி : இது கோணங்களையளக்க உதவுகிறது. இடைப்படம் வரைவதற்குக் கவராயம், பிரி கருவி ஆகிய இரு உபகர ணங்களும் அவசியம்.

Page 37
09܂
ܜ ܩܜ
ܚ
FILE
66

57
55 ஆம் பக்கத் தொடர்ச்சி திருத்தமாவெனக் காண்பதற்கு "T" தி மூலைமட்டம், மூலைமட்டம் என்ப வைகளைப் பரிசீலனை செய்தல் "T '' தி மூலைமட்டத்தின் வாய்க்காலுருவி லமைந்த விளிம்பானது வரைதற் பலகையின் மேலோரத்திற்குச் சமாந்தர மாயின், அந்த 'T'' தி மூலைமட்டம் சரியானதாகும். "T" தி மூலை மட்டத்தின் மேல் மூலைமட்டத்தை வைத்து நிலைக்குத்துக் கோடொன்று வரைக. பின்பு, மூலைமட்டத்தை மறுபக்கத்திற்குப் புரட்டி நிலைக்குத்துக் கோடொன்று வரைக. இவ்விருகோடுகளும் சமாந்தரமாயின், அல்லது ஒன்றின் மேல் ஒன்றிருக்குமாயின் மூலைமட்டம் சரியானதாகும். ஏதாவதொரு வழியில் அவ்வாறிருக்காவிடின் அதன் மூலம் மூலைமட்டம் பிழையானதென இருமடங்காக்கிக் காட்டப்படும். பொது மூலைமட்டத்தையும் இவ்வாறு பரிசீலனை செய்யலாம்.
54 ஆவது படக்குறிப்பு 54 ஆவது படம் : 1. சித்திரப் பலகையையும் " T '' தி மூலை மட்டத்தையும் உபயோகிக்க வேண்டிய மாதிரி ; A சித்திரப்பலகை B "T" தி மூலைமட்டம் ; C : கடதாசி ; 2. வேல் போற் கூராக்கப்பட்ட பென்சில் ; 3. பென்சிற்கூர். 4. வரைதலூசியை உபயோகிக்க வேண்டிய மாதிரி. 5. மூன்று கூருள்ள வரைதலூசிகள். 6. மூலை மட்டம். 7. பென்சிலைக் கூராக்கும் பல முறைகள். 8. பாகைமானி. 9. மூலை மட்டம் சரியானதாவெனப் பரிசீலனை செய்ய. வேண்டிய மாதிரி. A மூலை மட்டம். B மறுபக்கத்திற்குப் புரட்டிய மூலை மட்டம் C பிழையைக் காட்டும் கோடு. 10. பென்சிற்கவராயம் (சிறிய வட்டம் வரைதற்கு நல்லது

Page 38
58
14. கேத்திரகணிதவுருவ விளக்கம்
புள்ளி : இடத்தைக் குறிப்பிடப் புள்ளியிடப்படுகிறது. இதற்கு அளவில்லை.
கோடு : கோட்டிற்கு அகலம் இல்லை. வரையும் போது தடிப்புள்ள பல கோடுகள் தேவைப்படுகின்றன.
நேர் கோடு : இரு புள்ளிகளுக்கிடையேயுள்ள மிகக் குறைந்த தூரம் நேர் கோடெனப்படும். எழுத்துக்களைக் கொண்டு கோடுகளுக்குப் பெயரிடுதல் வழக்கமாகும்.
அசைவற்ற நீர்ப்பரப்பைப் போல் சமதளக் கோடு கிடைக் கோடெனப்படும். நிலைக்குத்தாக மேலிருந்து கீழே செல்லும் கோடு நிலைக்குத்துக் கோடெனப் படும்.
குறுக்குக் கோடு, கிடைக்கோடென்றோ நிலைக்குத்துக் கோடென்றோ பெயர் பெறாது.
படக் கோடு : வளைவுக் கோடு ஒருபோதும் நேராயிருக்கமாட்டாது. வில் போன்ற கோடுகளும் வளைவுக் கோடுகளே.
சமாந்தரக் கோடுகள் : இரு பக்கங்களையும் எவ்வளவு நீட்டினாலும் சந்தியாதிருக்குங் கோடுகள் சமாந்தரக் கோடுகளெனப்படும்.
கோணம் : நேர் கோடுகளிரண்டு, புள்ளியொன்றிற் சந்திக்கும் போது கோணமுண்டாகும்.
.95

6 " டு ) ம (19 .
55 ஆவது படம் : 1. புள்ளி. 2. நேர் கோடு. 3. கிடைக்கோடு. 4. நிலைக் குத்துக்கோடு. 5. குறுக்குக் கோடு. 6. வளைவுக் கோடு.
7. சமாந்தரக் கோடுகள். 8. கோணம்.

Page 39
60
15. கிடைப்படத்தை விளக்குதல்
சமவள வெறியம் : இதன் முறையைப் பின்பற்றி வரையப்பட்ட எல்லாக் கிடைக் கோடுகளும் கிடைத்தளத்திற்கு 30° கோணமுடையனவாகவே செல்லும். ஆனால், அக்கோடுகள் குறித்த நீளமுடையவை. ஆகையால் அவற்றை அளந்து சரியான அளவை அறிந்து கொள்ளலாம்.
பாடு
குறுக்குச் சமவள வெறியம் : இதன் முறையைப் பின்பற்றி வரையும் போது முற்பக்கத் தோற்றம் (எதனையும் முன்னுக்கிருந்து பார்க்கும்போது தெரியும் மாதிரி) செங்கோண வமைப்பாகச் சரியான நீள அகலத்தை யுடையதாக வரையப்படுகிறது. ஆகையால், முற்பக்கத் தோற்றத்தை யளக் கும்போது அதன் சரியான அளவை அறிந்துகொள்ளலாம். ஆனால், முற் பக்கத் தோற்றத்தின் இடது, அல்லது வலது பக்கமாயுள்ள குறுக்குத் தோற்றங்களில் குறித்த அளவின் சரியரைவாசியளவுள்ள கோடுகளே வரையப்படுகின்றன. ஆகையால் இவற்றை யளந்து இரு மடங்காக்கினால் சரியான நீளங்கிடைக்கும்.

61
16 கோடுகளும் கோணங்களைச் சமமாகப் பிரித்தலும்
கோடுகளைப் பிரித்தலும் கோட்டை இருசமபகுதிகளாகப் பிரித்தல் :
ஒரு கோட்டை வரைந்து AB என்று பெயரிடுக. இவ்விரேகையின் அரைப் பங்குக்கு மேற்பட்ட. நீளங்கொண்ட ஆரையுள்ள பிறை வடிவொன்றை A ஐ மையமாகக் கொண்டு வரைக. பின்பு இவ்வாரையே பயன்படுத்தி B ஐ மையமாகக் கொண்டு இன்னொரு பிறைவடிவு முன்வரைந்த பிறை வடிவை CD என்னுமிடங்களில் வெட்டும் படிவரைக. CDஐ இணைக்க. AB கோட்டை E என்னுமிடம் இரண்டாகப் பிரிக்கிறது.
E
56 ஆவது படம். ஒரு கோட்டையிரண்டாகப் பிரித்தல்
பிறைவடிவை இருசம பகுதிகளாகப் பிரித்தல்.
பிறைவடிவினீரந்தங்களை நேர்கோட்டினாலிணைக்க. இது நாணெனப் படும். பின்பு, மேலே காட்டியவாறு இக் கோட்டைப் பிரிக்கும்போது பிறைவடிவும் இரண்டாகப் பிரிக்கப்படும்.
57 ஆவது படம். பிறைவடிவை இரண்டாகவும், நாலாகவும் பிரிக்கும் மாதிரி

Page 40
கோணங்கள் : ஒரு கோணத்தை இருசம் கூறாக்கல். நேர் கோடுகளிரண்டு யாதாவதோரிடத்திற் சந்தித்தால் கோணமுண்டா கும், சந்திக்குமிடம் உச்சி எனப்படும்.
கோணம் மூன்று வகைப்படும் :
செங்கோணம். ஒரு கோட்டில், நிலைக்குத்துக் கோடொன்று சந்திக்கும் போது செங்கோண முண்டாகிறது. செங்கோணம் 90 பாகையுடையது. அதனை 90° என எழுதலாம்.
கூர்ங்கோணம் : 90° இலும் குறைந்தது. விரிகோணம் : 90° இலும் கூடியது.
கோணத்தை இருசம பகுதிகளாகப் பிரித்தல். கோணத்திற்கு PQR எனப் பெயரிடுக. Q ஐ மையமாகக் கொண்டு PQ QR, என்னும் கோடுகளை 1, 2, என்னுமிடங்களில் வெட்டும்படியாகப் பிறை வடிவொன்று வரைக. 1, 2 என்னும் பிறை வடிவை 3 ஆவதை வரைந்து பிரிக்க . Q ஐ 3 உடன் இணைக்க . இக்கோட்டினால் PQR கோணம் இரு சம்பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. நாலாகப் பிரிப்பதும் இம்
மாதிரியென்பதை நினைவிலிருத்துக.
90"
58 ஆவது படம். 1. செங்கோணம். 2. கூர்ங்கோணம். 3. விரிகோணம் ; (Q) உச்சி . 4. PQR கோணத்தை இருசம் பகுதிகளாகப் பிரிதல்.

63.
கொடுக்கப்பட்ட கோடுகளின் நீளத்திற் சமமான செங்கோணம் வரைதல் : 90° கோணம் வரையும் முறையைப் பின்பற்றிக் கொடுக்கப்பட்ட கோடுகளின் நீளத்திற்குச் சமமான செங்கோணம் வரைக. இங்கு PQ உம் QR உம் கொடுக்கப்பட்ட பாதங்களுக்கு நீளத்திற் சமமாயிருத்தல் வேண்டும். சமாந்தரக்கோடு வரைதல்.
AB கொடுக்கப்பட்ட கோடு. இதில் C D என்னும் புள்ளிகளைக் குறிக்க . பின்பு C ஐயும் D ஐயும் மையமாகக் கொண்டு ஒரே ஆரை யுள்ள இரு பிறை வடிவங்களை வரைக. இரு பிறை வடிவங்களையும் தொடும்படி EF கோட்டை வரைக. EF கோடு AB உக்குச் சமாந்தர மாகும். (இம்முறைப்படி விரும்பிய தூரத்திலமைந்துள்ள சமாந்தரக் கோடுகளை வரையலாம்.)
உ Q.
59 ஆவது படம் : 1. செங்கோணம் வரைதல். 2. சமாந்தரக் கோடுவரைதல்.

Page 41
64
17.
கோணங்களும், முக்கோணங்களும்
கோணங்கள்
கொடுக்கப்பட்ட கோணத்திற்குச் சமமான கோணம் வரைதல். கொடுக்கப் பட்ட கோணம் ABC என்று வைத்துக் கொள்வோம்.
YZ என ஏதாவதொரு கோடு வரைக. B ஐ மையமாகக் கொண்டு B1 ஆரையுடன் BC, AB என்னும் கோடுகளை 1, 2 என்னுமிடங்களில் வெட்டும்படி பிறைவடிவம் வரைக. Y ஐ மையமாகக் கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள (B1) ஆரையுடன் 3, 4 என்னும் பிறை வடிவங்களை வரைக. 1, 2 என்னும் நாண்களை ஆரையாக 3 ஐ மையமாகக் கொண்டு 3, 4 என்னும் பிறைவடிவை 5 இல் வெட்டும்படி பிறைவடிவு வரைக. 5 உடன் Y ஐ இணைத்து நீட்டுக. XYZ கோணம் ABC கோணத்திற்குச் சமமானது.
(1 ஆவது படம்). 60° கோணம் வரைதல் : 0 ஐ மையமாகக் கொண்டு 01 என்னும் விரும்பிய ஆரையுள்ள 1, 2 என்னும் பிறைவடிவத்தை வரைக. I ஐ மையமாக, இவ்வாரையையே கொண்டு மேற்கூறிய பிறை வடிவை 3 இல் வெட்டுக. 3 ஐ 0 உடனிணைக்க. BOA கோணம் 60° கோணமாகும். (2 ஆவது படம்) ஒரு வட்டத்தின்பரிதி அதன் விட்டஞ்செய்யும் வில்லைப் போல் 6 மடங்குடையது (360 =6=60).
பட்டத்தில் மே, "கூறிய கதை வல்
30° கோணம் வரைதல்.- மேலே குறிப்பிட்ட படி 60° கோணத்தை வரைந்து அதை இருசம்பிரிவுகளாகப் பிரிக்க . DEF வேண்டிய 30° கோணமாகும். (3 ஆவது படம்)
15° கோணம் வரைதல் மேலே காட்டப்பட்ட வாறு 30° கோணத்தை வரைந்து இதை இரண்டு சம்பகுதிகளாகப் பிரிக்க. PQR 15° கோண மாகும். (4 ஆவது படம்)
90° கோணம் வரைதல் 60° கோணத்தை வரைந்து கொண்டே பிறைவடி வைத் திரும்பவும் வெட்டி 120° கோணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 3, 2 என்னும் பிறைவடிவத்தை இவ்விரண்டாகப் பிரிக்க . 4 ஐ Q உடன் இணைக்க. PQR 90° கோணமாகும். (5 ஆவது படம்). 75° கோணமும் 674° கோணமும் அமைக்கும் மாதிரியைப் படத்தைப் பரிசீலனை செய்து விளங்கிக் கொள்ளல்வேண்டும். (6, 7 ஆவது படங்கள்).
கொடுக்கப்பட்ட கோட்டிற்கு இலம்பம் வரைதல். AB கொடுக்கப்பட்ட கோடு. C இலிருந்து இலம்பம் வரைய வேண்டும். C ஐ மையமாகக் கொண்டு A B கோடு 1, 2, என்னுமிடத்தில் வெட்டும்படி பிறைவடிவ மொன்று வரைக. 1, 2 பிறைவடிவத்தை 3 இல் சமமாகப் பிரிக்க . C ஐ யும் 3 ஐயும் இணைக்க. CD இலம்பம் ஆகும். (8 ஆவது படம்).

65
கவராயத்தினுதவியுடன் கோணங்களை வரைவதன் தொடர்பில், பல பகுதி களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கீழே காணலாம்.
i ஆம் கணக்கு : வட்டப் பரிதியை அவ்வட்ட ஆரையினால் வெட்டு
வதன் மூலம்- 60°, 120°, 180°, 240°-எனபன பெறலாம்.
ii ஆம் கணக்கு : 60°ஐ இருசம் பகுதிகளாகப் பிரிப்பதன் மூலம்
30°, 90°, 150°, 210°, 270° என்பன பெறலாம். iii ஆம் கணக்கு : 60° கோணத்தை நாலாகப் பிரிப்பதனால்-15°, 45°,
- 75°, 105, 135°, 165° என்பன பெறலாம். iv ஆம் கணக்கு : 60° கோணத்தை எட்டாகப் பிரிப்பதனால்-73°, 22/்.
3740, 52;', 67;', 82°; என்பன பெறலாம்.
|
سلز
C
60 ஆவது படம் : கோணங்கள்-மேலே குறிப்பிட்ட கோணங்களைப் பற்றி இப்படத்திலறிக.

Page 42
66
முக்கோணங்கள் முக்கோணம் : மூன்று நேர் கோடுகளினாலாக்கப்பட்டது முக்கோண மெனப்படும். இதன் கோணங்களின் கூட்டுத்தொகை இரு செங்கோணங் களுக்குச் (180°) சமமாகும். பாதம் : முக்கோணம் பாதத்தின் மேலமைக்
கப்படுகிறது. (BC).
உச்சிக்கோணம் : பாதத்திற் கெதிரேயுள்ள கோணம் உச்சிக் கோணம் எனப்படும் (A).
உயரம் : உச்சிக் கோணத்திலிருந்து பாதத்தை நோக்கிச் செல்லும் இலம்பம் உயரமாகும். சிலவேளைகளில் இலம்பத்திற்காகப் பாதத்தை நீட்ட நேரிடும். (AD).
பரிதி : மூன்று பக்கங்களின் நீளமும் பரிதி (சுற்றளவு) எனப்படும். பாதங் களையும் கோணங்களையுமொட்டியே முக்கோணங்களுக்குப் பெயரிடப்படும்.
பாதங்களை யொட்டி :
(அ) சமபக்க முக்கோணம் : மூன்று பக்கங்களுக்குஞ் சமமானவை ;
மூன்று கோணங்களுக்குஞ் சமமானவை (1 ஆம் படம்). (ஆ) இருசம் பக்க முக்கோணம். இருபக்கங்கள் சமமானவை ஆகையால்
இரு கோணங்களுஞ் சமமானவை. (2 ஆவது படம்), (இ) சமனில் பக்கமுக்கோணம் பக்கங்கள் சமமற்றவை (3 ஆவது படம்)
உ -
1 B
61 ஆவது படம் : 1. சம்பக்கங்கள். 2. இருசமபக்கங்கள். 3. சமனில்பக்கங்கள். 4. செங் கோணம். 5. கூர்ங்கோணம். 6. விரிகோணமெனப்படும்.

கோணங்களை யொட்டி :-
(அ) செங்கோண முக்கோணம். இதனொருகோணம் செங்கோணமானது
செங்கோணத்திற் கெதிர்ப்பக்கத்திலமைந்துள்ள பக்கம் செம்பக் 'கம் எனப்படும் (4 ஆவது படம்). (ஆ) கூர்ங்கோண முக்கோணம் : இதன் கோணங்களொவ்வொன்றும்
செங்கோணத்திலும் சிறியவை (5 ஆவது படம்). (இ) விரிகோண முக்கோணம் : இதனொரு கோணம் செங்கோணத்திலும்
பெரியது (6 ஆவது படம்).
முக்கோணம் : BC பாதம் : A உச்சிக்கோணம் ; AD உயரம். பாகத் தைக் கொடுத்த போது சமபக்க முக்கோணத்தை வரைதல் : [XY கொடுக் கப்பட்ட பாதம்) - X மையமாகக் கொண்டு XY ஆரையுள்ள பிறைவடிவ மொன்று வரைக. Yஐ மையமாகக் கொண்டு அதே ஆரமுள்ள வேறொரு பிறை வடிவம் முன் வரையப்பட்ட பிறை வடிவத்தை 7 இல் வெட்டும்படி வரைக. Zx ஐயும். ZY ஐயும் இணைக்க ZXY வேண்டிய சம் யாதமுக்கோணம் (1)
உயரங் கொடுக்கப்பட்டபோது சம்பாத முக்கோணம் வரைதல் : [AB கொடுக்கப்பட்ட உயரம்) B இல் 90° கோணம் வரைக. A ஐ மையமாகக் கொண்டு விரும்பிய ஆரையுள்ளதாகப் பிறைவடிவமொன்று வரைக. AB என்னுங் கோட்டின் இருபக்கங்களிலும் 30° கோணங்களிரண்டு வரைக. A.,A, உம் CD இல் பாதத்தைச் சந்திக்கும்படி நீட்டுக ACD வேண்டிய சம்பக்கமுக்கோணம் (2)
பாதமும் சம புயமும் கொடுக்கப்பட்டபோது இரு சமபுய முக்கோணம் வரைதல்.
[YZ கொடுக்கப்பட்ட பாதம். ( கொடுக்கப்பட்ட சம்புயம்] Y ஐ மையமாகக் கொண்டு C ஆரையுள்ள பிறை வடிவொன்ைைற வரைக Z மையமாகக் கொண்டு அதே ஆரையுள்ள பிறைவடிவொன்று முதல் வரையப்பட்ட பிறை வடிவை X இல் வெட்டும்படி வரைக. YX ஐயும் XZ ஐயும் இணைக்க XYZ வேண்டிய இருசம்புய முக்கோணம் (3)
பாதமும் உயரமும் கொடுக்கப்பட்டபோது இரு சம்புய முக்கோணம் வரை தல் : (AB கொடுக்கப்பட்ட பாதம். X கொடுக்கப்பட்ட உயரம்). AB என்னும் பாதத்தை 1, 2 என்னும் இலம்பத்தினால் D இல் சம்மாகப் பிரிக்க . Dஐ மையமாகக் கொண்டு X ஆரமுள்ள பிறைவடிவொன்று 1 2 இலம்பத்தை 0 இல் வெட்டும்படி வரைக. AC ஐயும் BC ஐயும் இணைக்க ABC வேண்டிய இருசம்புய முக்கோணம் (4)

Page 43
68
உயரமும் சம புயமும் கொடுத்தவிடத்து இரு சமபுய முக்கோணம் வரைதல். [DG கொடுக்கப்பட்ட உயரம். Z கொடுக்கப்பட்ட சமமான புயம்] G இல் 90° கோணமொன்று வரைக. D ஐ மையமாகக் கொண்டு Z ஆரையுள்ள விரும்பிய பிறைவடிவங்கள் DG கோட்டின் இலம்பம் E இலும் F இலும் வெட்டும்படி வரைக. DEF வேண்டிய இருசம்புயமுக்கோணம். (5)
பாதமும் எதிர்க்கோணமும் கொடுக்கப்பட்டவிடத்து இரு சம்புய முக்கோ ணம் வரைதல்.
[AB கொடுக்கப்பட்ட பாதம். (0 கொடுக்கப்பட்ட எதிர்க்கோணம்.] C ஐ மையமாகக் கொண்டு விரும்பிய விட்டமுள்ள பிறைவடிவொன்றை வரை ந்து கொடுக்கப்பட்ட எதிர்க்கோணத்தின் பாதத்தில் 2, 1 என்னுமிடங் களில் வெட்டுக. AB ஐ நீட்டி A ஐ மையமாகக் கொண்டு C, ஆரை யுள்ள அரை வட்டமொன்று வரைக. IC 2 என்னுங் கோணத்திற்குச் சமமான 3 A4 கோணத்தை வரைக. 4 AB கோணம் 5 இல் இரண்டர் கப் பிரிக்குக. 5 AB கோணத்திற்குச் சமமான கோணமொன்றை B இல் அடையாளமிட்டு அது A5 கோட்டை C இல் சந்திக்கும்படி நீட்டுக. ABC வேண்டிய இருசம்புய முக்கோணமாகும் (6)
மூன்று பாதங்கள் கொடுத்தவிடத்து முக்கோணம் வரைதல். YZ, ZX, XY என்பன கொடுக்கப்பட்ட மூன்று பாதங்கள்.) X ஐ மையமாகக் கொண்டு ZX ஆரையுள்ள பிறைவடிவொன்றுவரைக. Y ஐ மையமாகக் கொண்டு YZ ஆரையுள்ள பிறைவடிவு மேற்கூறிய பிறை வடிவை Z இல் வெட்டும்படிவரைக. XZ ஐயும் YZ ஐயும் இணைக்க. XYZ வேண்டிய முக்கோணமாகும் (7).
பாதமும் அதன் கோணங்களும் கொடுக்கப்பட்டவிடத்து முக்கோணம் வரைதல். கொடுக்கப்பட்ட கோணங்கள்) A இல் கொடுக்கப்பட்ட P கோணத்திற்குச் சமமான கோணமும் B இல் Q கோணத்திற்குச் சமமான கோணமு மமைக்க. இப்பாதம் C இல் சந்திக்கும்படி நீட்டுக. ABC வேண்டிய
முக்கோணம் (8).
பாதமும் எதிர்க்கோணமும் பாதத்தின் ஒரு கோணமும் கொடுத்த விடத்து முக்கோணம் வரைதல்,
[AB கொடுக்கப்பட்ட பாதம். X எதிர்க்கோணம் Z பாதத்திலுள்ள . கோணம்) BA ஐ நீட்டுக. XZ என்பவைகளை மையமாகக் கொண்டு விரும்பிய ஆரையுள்ள மூன்று பிறைவடிவுவரைக. A இல் கொடுக்கப் பட்ட கோணத்திற்குச் சமமான கோணம் வரைக. அப்படியே A இல் 2A3 என்னும் கோணம் எதிர்க்கோணத்திற்குச் சமமாயமையுமாறு வைகர. B இல் 3 A 4 உக்குச் சமமான கோணம் வரைக. இப்பாதம் C இல் சந்திக்கும்படி நீட்டுக. ABC வேண்டிய முக்கோணமாகும். (9)

'38 30°
1
'90°
90°
*X
ய
* .
> 42,
10
62 ஆவது படம் : முக்கோணங்களினமைப்பு. (மேலே குறிப்பிட்ட ஒன்பது முக்கோணங்கள் )

Page 44
70
கொடுக்கப்பட்ட முக்கோணத்திற்குச் சமமான வடிவுள்ள முக்கோணம் வரைதல் [ABC கொடுக்கப்பட்ட முக்கோணம்.] x என்னும் கோட்டை வரைந்து BC இல் அடையாளமிடுக. X ஐ மையமாகக்கொண்டு AB ஆரையுள்ள பிறைவடிவொன்று வரைக. Y ஐ மையமாகக்கொண்டு AC ஆரையுள்ள பிறைவடிவொன்று மேலே குறிப்பிட்ட பிறைவடிவை வெட்டும்படி வரைக. XYZ முக்கோணம் ABC முக்கோணத்திற்குச் சமமானது.(1).
ாைக
கொடுக்கப்பட்ட முக்கோணத்திற்குச் சமவடிவான முக்கோணமொன்றைக் கொடுக்கப்பட்ட பாதத்தில் வரைதல். (PQR கொடுக்கப்பட்ட முக்கோணம். XY கொடுக்கப்பட்ட பாதம்.] Y இல் RPQ கோணத்திற்குச் சமமான கோணமொன்று வரைக. இப்பாதம் Z இல் சந்திக்குமாறு நீட்டுக. XYZ முக்கோணம் PQR முக்கோணத்திற் குச் சமவடிவுடையது (2).
செம்பக்கமும் பாதமும் கொடுத்தவிடத்துச் செங்கோண முக்கோணம் வரைதல். [AC கொடுக்கப்பட்ட செம்பக்கம். AB பாதம்] செம்பக்கத்தை இரு. சமபாகமாகப் பிரித்து அதன்மேல் அரை வட்டம் வரைக. C ஐ மைய மாகக்கொண்டு AB ஆரையுள்ள பிறைவடிவினால் அரைவட்டத்தை B இல் வெட்டுக. AB ஐயும் BC ஐயும் இணைக்க BAC செங்கோண முக்கோணமாகும். (3)
செம்பக்கமும் குறுங்கோணமும் கொடுத்தவிடத்து செங்கோண முக்கோணம் வரைதல். [AB கொடுக்கப்பட்ட செம்பக்கம். CAB கோணம்] செம்பக்கத்தை யிரண் டாகப்பிரித்து அதன்மேல் அரைவட்டம் வரைக. A இல் கொடுக்கப்பட்ட கோணத்திற்குச் சமமான கோணமொன்று வரைக. அப்பாதத்தை C இல் அரைவட்டம் வெட்டும்படியாக நீட்டுக. CB ஐ இணைக்க. ABC வேண்டிய திரிகோணமாகும். (4).
00ான்.
வரைக்,

90
63 ஆவது படம் : முக்கோணங்களின் அமைப்பு. (மேற்கூறப்பட்ட நான்கு முக்கோணங்கள் )
18 பயிற்சி. 1. மரக்குற்றியைப் பரிசீலனை செய்து குற்றியின் பகுதிகளை வேறாக அறிந்துகொள்ளுதல் ; படம் வரைந்து பகுதிகளின் பெயர்களைக் குறிப் பிடுதல்.
2. மரக்காலைக்குச் சென்று மரங்களையும் பலகைகளையும் பரிசீலனை செய்தல் மென்மரங்களையும் பலகைகளையும் பரிசீலனை கெய்தல் ; மென்மரங்களையும் வன்மரங்களையுமறிந்து அவைகளுக்கிடையேயுள்ள வேற்றுமைகளைப் பரி சீலனை செய்தல் (இதற்கு நுணுக்குக்காட்டி உபயோகித்தல் நல்லது.) 3. எங்கள் நாட்டில் வளரும் வன்மரங்களினதும், மென்மரங்களினதும் அட்டவணை ஆக்குதல். ஒவ்வொரு மரமும் எவ்வெவ் வேலைகளுக்கு கந்தவைகளெனக் குறிப்பு வைத்தல்.
4. சுண்டி, தச்சுப்பட்டடை குறுக்கணைபலகை ஆகிய உபகரணங்களின் மாதிரி செய்தல்.

Page 45
72
5. சீவுளி, உளி, பொதுமூலைமட்டம், துறப்பணம், வரைகம்பு முதலிய கருவிகளை வரைந்து அவற்றின் பகுதிகளைக் குறித்தல் ; சீவுளியலகு வரைதல்.
6. வாள்களுக்கிடையிலுள்ள வேற்றுமைகளைப் பரிசீலனை செய்தல். வாள் களினது நீளத்தையும், ஓர் அங்குலத்திற்குள் இருக்கும் பற்களின் தொகையையும் பற்களினமைப்பையும் 13வனித்து அவற்றின் அமைப்பைக் காட்டும் படங்களை வரைதல்.
7. வாள், உளி, துறப்பணம், வரைகம்பு, பொதுமூலைமட்டம் முதலிய கருவிகளைச் சரியாக உபயோகிப்பதுபற்றிய விளக்கத்தைப் பெறும் பொருட்டு உபயோகமற்ற மரத் துண்டுகளினால் வேலைசெய்தல்.
8. செய்த பொருட்களில் பொதுமூலைமட்டத்தை வைத்துப்பார்ப்பது பற்றிய சரியான முறையை விளக்கிக்கொள்ளுதல்.
9. இங்கு குறிப்பிட்டுள்ள பொருட்களைச் செய்தல். 10. தாம் செய்த பொருட்களினதும், மற்றையவர் செய்த பொருட்களின தும் குறை நிறைகளைச் சீர்தூக்கிப்பார்த்துக் குறைகளை நிவிர்த்தி செய்யும் முறைகளைப்பற்றி உரையாடல். 11. செய்யப்பட்ட பொருட்களைச் சுயாதீனமாக வரைதல். 12. இங்கு குறிப்பிடாத இலகுவான பொருட்களைச் செய்வதற்குரிய படம் வரைதல் ; மூலப் பொருட்களினட்டவணை ஆக்குதல் ; அப்பொருட்களைச் செய்தல். 13. வெட்டுதல், அரிதல், சீவுதல், ஆணியடித்தல், திருகாணி பூட்டல், தவ்வுவைத்தல் முதலியவைகளைச் செய்வது பற்றிய சரியான முறையைக் காட்டும் படங்களை வரைதல். 14. கருவிகள் பழுதடையும் வழிகள், சிறப்பாக வெட்டும் கூர்மொட்டை யாகும் வழிகளையறிதல். 15. ஒவ்வொன்றிற்கு முபயோகப்படும் வெவ்வேறு சீவுளிகளின் வேற்றுமை களைப் பரிசீலனை செய்தல் ; வேற்றுமைகளுக்குரிய காரணங்களையறிதல் 16. ஒவ்வொரு துறப்பணத்தினதும் வேற்றுமைகளை அறிதல் ; துறப்பண
வலகுகளின் படங்களை வரைதல். 17. பச்சை மரத்திற்கும், காய்ந்தமரத்திற்கு மிடையிலுள்ள வேற்று மைகளை ஆராய்தல். பச்சை மரம் காயும் போதுண்டாகும் மாற்றத்தை அறிதல் ; இதற்குப் பரிசோதனை நடத்துதல். 18. ஆணியடிப்பதற்குத் தவ்வுவைத்தல், ஆணியின் தலையை மறைத்தல் முதலியவைகள் பற்றிய செப்பமான செய்கைமுறைகளையறிந்து கொள்வ தற்கு மரத்துண்டுகளில் வேலைசெய்தல்.

மர வேலை இரண்டாம் வருடம்
Tண்டா
கருவிகள்.
மரவேலைக்கு அவசியமான கருவிகளைப்பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. இதற்கு வேண்டிய வேறு கருவிகளுமுண்டு. ஒவ்வொன்றின் உபயோகமும் பின்வருமாறு :-
கான்சீவுஞ் சீவுளி.
இதன் அடிப்பாகம் வில்வளைவானது. சீவுளியலகும் வில்வளைவானது. ஆகையினாலிதனை உபயோகிக்கும்போது மரத்தினொரு பகுதியினுட்பக்கத் தைக் கோதி வில்வளைவாயிருக்கும்படி சீவிக்கொள்க.
சித்திரவுருச் சீவுஞ் சீவுளி.
இதுவும் கான்சீபுளியைப்போன்றது. ஆனால் இதனடிப்பாகத்திலுள்ள வில்போல் வளைந்திருக்கும்பகுதி கான்சீவுஞ் சீவுளிக்குப் போலன்றி எதிர்ப் பக்கமாயமைந்துள்ளது. இது கூரைக்கட்டுச் சீவுவதற்கு உபயோகப்படுகிறது.
- |
64 ஆவது படம் : 1. சித்திரவுருச்சீவுஞ் சீவுளியினாற் சீவிய பின்பு. 2. கான்சீவுஞ் சீவுளி வினாற் சீவிய பின்பு. 3. கூரைக் கட்டினங்கள்.

Page 46
74,
தட்டுத்தவாளிப்புச் சீவுளி.
இது பலகைகளில் தவாளித்தற்கு (அதாவது ஓரத்தின் நடுப்பகுதியினுட் பக்கம் குழிவிழச் சீவுவதற்கு) உதவுகிறது. இருபலகைகளின் தவாளிப்பை முடித்து, மரச்சட்டமொன்றை (தவாளிப்புப்பட்டி ) அவையிரண்டிற்குமிடை யமைத்து இரண்டு பலகைகளின் ஓரங்களை ஒன்றாகப் பொருத்தி இடை வெளியில்லாது செய்க. இம்முறை மாடிவீடுகளில் பலகைகளைப் பொருத் துவதற்கு உபயோகிக்கப்படுகிறது, இதனைப்பின்பற்றியே அலுமாரியின் பிற்பக்கத்துப் பலகைகள் பொருத்தப்படுகின்றன.
கட்டைச் சீவுளி. பலவிதமான கட்டைச் சீவுளிகளுள. இவைகளிற் சிலவற்றைக்கொண்டு பொதுச் சீவுளி, அழுத்தமாக்குஞ்சீவுளி, படிமானச் சீவுளி முதலிய சீவுளிகளினாற் செய்யும் வேலைகளைச் செய்யலாம்.
ஆரைக்காற் சீவுளி.
வட்டமான விளிம்பை அழுத்தம் செய்வதற்குபயோகிக்கப்படுகிறது. ஓரங்களைச் சீவுவதற்கு முபயோகிக்கலாம். இக்கருவியை இருகைகளின் பெரு விரல்களினாலும் ஆட்காட்டி விரல்களினாலும் பிடித்துக்கொண்டு தள்ளி, உபயோகிக்கவேண்டும்.
பாஷாணMIN பப்பட
65 ஆவது படம் : 1. ஆரைக்காற் சீவுளி. 2. ஆரைக்காற் சீவுளியினால் வேலை செய்தல்.

தட்டுச் சீவுளி.
மரங்களிலேதாவதொரு பகுதியைச் சீவுவதற்குத் தட்டுச் சீவுளி உப் யோகிக்கப்படுகிறது. இது தட்டையான சீவுளி. மரச்சட்டமொன்றையடித்து சீவவேண்டிய பகுதியைப் பிரித்தபின் தட்டுச் சீவுளியாற் சீவுவது நல்லது.
66 ஆவது படம். தட்டுச் சீவுளி. 1. மரச்சட்டம்.
பொளியளவுகோல்
இது கழுந்தையும் தவ்வையும் வரைவதற்கு உபயோகிக்கப்படுகிறது. இதனைக் கொண்டு விரும்பியபடி கழுந்தையும், தவ்வையும் வரைந்து கொள்ளலாம்.
ப்பம்
2
67 ஆவது படம். பொளியளவு கோல். 1. குற்றி.. 2. கால். 3. நிலையான ஊசி. 4. அசையும் ஊசி. 5. திருகாணி (இதன் மூலம் அசையுஞ் சட்டத்தை இறுக்கலாம்). 6. அசையுஞ் சட்டம். 7. நீண்ட திருகாணி (இதனை முறுக்கிப் பொளியளவு கோலை வேண்டிய வளவிற்கு நீட்டியோ குறுக்கியோ கொள்ளலாம்.).

Page 47
76
மைற்றர்க்கட்டை.
இது படச்சட்டங்களை வெட்டுவதற்கு உபயோகப்படுகிறது. இதற்கு மைற்றாப் பெட்டி யச்சுப்போன்ற பல கருவிகளுண்டு.
68 ஆவது படம். மைற்றர்க் கட்டை யச்சு.
வாள்சீராக்கி.
வாட்பற்களைச் சீராக்க உபயோகிக்கப்படுகிறது.
இடுக்கி.
ஆணிகளைக்கழற்ற உதவுகிறது. சில இடுக்கிகளைக் கொண்டு ஆணிகளை வேண்டியவளவிற்கு வெட்டிக்கொள்ளலாம்.
தச்சுவளித்தகடு.
மேசைபோன்றவைகளின் மேற்பகுதியை அழுத்திமினுக்க உபயோகப் படுகிறது. இது, சீவுளித்தளும்புகளை மறைத்து அழுத்தஞ் செய்கிறது.
சிறுதமராணிக்கூர்.
ஆணியடிப்பதற்குத் துளைதுளைக்க உதவுகிறது.

2. கருவிகளைக் கூராக்குதல்
சீவுளியலகுகளும் உளிகளும்.
சீவுளியலகுகளையும், உளிகளையும் கூராக்குவது பயிற்சியில் வரவேண்டும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்திமதிகளைப் பின்பற்றினால் அதனைப் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். சீவுளியலகைச் சீவுளிக் கூட்டிலிருந்து கழற்றுதல், கூராக்குதல், திரும்பவும் பொருத்துதல் முதலிய வைகளைக் கவனமாகச் செய்தல் வேண்டும்.'
(அ) இடது கையின் பெருவிரலைச் சீவுளிக்கூட்டின் வாயிற் செலுத்தி ஆப்பையும், சீவுளியலகையும் இறுக்கிக் கொண்டு மற்றை விரல்களினால் சீவுளிக்கூட்டைப்பிடித்துக்கொண்டு அதன் தலையில் சுத்திய லினாலடிக்க. இதனால் ஆப்பும், சீவுளியலகும் இளகும். அழுத்தமாக்குஞ் சீவுளியின் பிற்பக்கத்திற்கே சுத்தியலாலடிக்கவேண்டும்.
(ஆ) அதன் பின்பு இடதுகையினாற் சீவுளிக் கூட்டை யெடுக்கும் போதே வலது கையினால் ஆப்பையும் சீவுளியலகையும் கழற்றி வெளியே யெடுக்க.
(இ) சீவுளிக் கூட்டை யொருபக்கத்தில் வைக்க. இதனை எப்பொழுதும் சரித்தே வைக்கவேண்டும்.பின்பு சீவுளியலகு உருண்டையும் (சீவுளியலகையும் , கவிப்பு அலகையும்) ஒன்றாகப் பொருத்தும் புரியா ணியை இளக்குக. இதற்குப் பெரிய திருகாணி முடுக்கியையுபயோகிப்பது நல்லது. இடதுபக்கம் திருப் பினால் புரியாணி இளகும். இப்போது கவிப்பு அணையலகை மேலேயிழுத்தால் சீவுளியலகுவேறாகும்.
--19
42 A
----
பப் 69 ஆவது படம் : 1. சீவுளியலகு. 2. கவிப்பு அணையலகு
(ஈ) இதன்பின்பு சீவுளியலகை மணற் கல்லில் தீட்டுக. இதற்குச் சீவுளியலகின் வெட்டும்பகுதியின் கோண வடிவாயமைந்துள்ள முழுப் பகுதியும் மணற்கல்லிற்படும்படி வைத்து முன்னுக்கும்பின்னுக்குந் தீட் டுக. மணற் கல்லில் தீட்டுமுன் சிறிதளவு நீர் ஊற்றல் வேண்டும். மணற்கல்லில் தீட்டும்போது 20° - 25°களுக்கு இடையேயுள்ள கோணத்திற் சீவுளியலகைப் பிடித்துக் கொள்ளல் வேண்டும். இந்நிலைமாறாதிருப்பது முக்கியம். உடம்பை அசைக்காது கைகளை மட்டுமசைத்து இதனைச் செய்யலாம். வலது கையினால் சீவுளியலகை எடுத்து, இடதுகையினால் அதனை மணற்கல்லிலிறுகப் பிடித்துத் தீட்டுதல் வேண்டும். மணற் கல்லின் நீளப்பாட்டிற்குத் தீட்டுதல் முக்கியம்.

Page 48
78
(உ) அடுத்ததாக எண்ணெய்க் கல்லில் தீட்டிக் கூராக்க வேண்டும் சீலைத்துண்டொன்றின் மேல் எண்ணெய்க் கல்லைவைத்து அதன்மேல் மென்மையான யந்திரநெய், அல்லது தேங்கா யெண்ணெயைச் சிறிதள் வூற்றி மணற் கல்லில் தீட்டியது போலவே எண்ணெய்க்கல்லிலும் தீட்டுக. ஆனால், இங்கு சீவுளியலகு 30-35 பாகைக் கிடைப்பட்ட கோணத்திலிருக்க வேண்டும் (மணற் கல்லில் தீட்டி எண்ணெய்க் கல்லில் தீட்டுவதற்குப்பயிற்சி அவசியம். ஆகையால் பழைய இரும்புத்தகட்டை எடுத்துத்தீட்டப் பழகுவது நல்லது). வெட்டும் கூரின் நுனி (மிகவும் மென்மையானதும் ஒடிந்து போகக்கூடியதுமான பகுதி) உண்டாகும் வரை தீட்டுதுல் வேண்டும்.
35°
70 ஆவது படம் : 1. மணற்கல். 2. எண்ணெய்க்கல்
(ஊ) இதன்பின்பு சீவுளியலகின் வெட்டுங்கோணம் மேலேயிருக்கும்படி அதனை மறுபக்கத்திற்குத் திருப்பி எண்ணெய்க் கல்லின் மேல் சமாந் தரமாகவைத்து இரண்டு மூன்றுதரம் தீட்டுக. இங்கு சீவுளியலகை எண் ணெய்க் கல்லுக்குச் செங் கோணமாகவைப்பது பொருத்தமானதாகும். இங்கு சீவுளியலகு எண்ணெய்க் கல்லின் மேல் சமாந்தரமாயமைந் திருப்பது மிகவும் முக்கியமானது.
(எ) இதன் பின்பு வெட்டுங்கூர் ஒடிந்து போகாது மிகுந்திருந்தால் சீவுளியலகினிரு பக்கங்களையும் மாறிமாறி எண்ணெய்க் கல்லில் மெதுவா கத் தடவினால் அது ஒடிந்து போகும். சீவுளியலகை எண்ணெய்க் கல்லில் செங்கோணமாக வைப்பதன் மூலம் இதனை இலகுவாகச் செய்யலாம்.
சீவுளியலகினிரு பக்கங்களையும் மாறி, மாறி இடதுகையினால் மெல்லத் தேய்த்தாலும் வெட்டுங்கூரின் நுண்ணிய பகுதி ஒடியும். இதற்கு மென் மையான தோலையுபயோகிக்கலாம்.
(ஏ) இப்போது கூராக்குதல் முடிவடைந்துள்ளது. சீவுளியலகுடன் கவிப்பு அணையலகைப் பொருத்திப் புரியாணியை இறுக்குக. சீவுளியலகுக் கவிப்பு அணையலகிலும் '6 அங்குலம் முன்னே தள்ளியிருத்தல் நல்லது. இவ் அளவு வன்மரங்களுக்குப் பொருத்தமாயிருந்த போதிலும் மென்மரங் களுக்கு 5 அங்குல அளவே தகுந்தது.

79
(ஒ) கவிப்பு அணையலகு மேலேயிருக்கும்படி - இரட்டையலகைச் சீவுளிக்கூட்டின் வாயினுள்வைத்து ஆப்பை யிறுக்க. சீவுளிக் கூட்டை மறுபக்கத்திற்குத் திருப்பிச் சீவுளிக் கூட்டினடிப் பாகத்தின் நீளத்திற்குக் கண்ணை அமைத்துப் பார்ப்பதன் மூலம் வெட்டுங்கூரினெவ்வளவு பகுதி வெளியேயிருக்கிற தென்பதைத் தீர்மானிக்கலாம். அது மயிரளவிற்கே வெளியே வந்திருக்க வேண்டும். வேண்டுமாயின் திரும்பச்சீவுளி யலகைப் பொருத்திக் கொள்க. சீவுளியலகைச் சீவுளிக் கூட்டினடிப் யாகத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு ) அல்கின் நுனியில் சுத்தியலால் தட்டுக. அது அதிகம் வெளியே வந்திருந்தால் சீவுளியலகைக் கழற்றும் முறையைப் பின்பற்றுக. அலகு சமாந்தரமாயிருக்காவிடின் ஒரு பக்கத்திற் சுத்தியலால் தட்டுக. அலகு சரியானவளவிற்கு வந்த பின் ஆப்பை மேலுமிறுக்கிச்சீ வுளியை வேலைக் குபயோகிக்க.
71 ஆவது
படம் : கண்ணாற் பார்த்தல்
வேலைகளுக்கானதும் சிறிது காவு சீவுளியலாது
இம்முறையையே உளிகளைக் கூராக்கும் போதும் பின்பற்ற வேண்டும் இங்கு குறிப்பிட்டுள்ள பாகையளவு சீவுளியலகிற்குரியது. உளிகளைத் தீட்டும் போது இதனிலும் சிறிது கூடியும் குறைந்துமிருக்கலாம். கடினமான வேலைகளுக்காயின் பாகையளவு கூடல்வேண்டும். மென்மையான வேலைகளுக்காயின் குறைதல் வேண்டும். சீவுளியலகு, உளி முதலிய கருவிகளைத் தீட்டும் போது மெல்லிய யந்திர நெய், நீட் சுபூட்டுநெய், அல்லது தேங்காயெண்ணெயையே உபயோகிக்க வேண்டும். மென்மையான எஞ்சி னெண்ணெயும் நல்லது. உட்பட்டஞ் சீர்ப்படுத்தப்பட்ட நகவுளி.
இதனையும் சீவுளியலகைத் தீட்டுவது போலவே தீட்டல் வேண்டும் ஆனால், எண்ணெய்க் கல்லில் முன்னும் பின்னுந் தீட்டும் போது அலகினெல்லாப்பகுதிகளும் படும்படி புரட்டல் வேண்டும். இவ்வாயுதத் தை இவ்வாறு தீட்டும் போது வெட்டும்பகுதியில் நுண்ணிய கூருண்டாகும். சாணைக் கல்லில் அதனை இரண்டு மூன்றுமுறை தேய்த்தால் நுண்ணிய பகுதி கழன்று போகும். வெளிப்பக்கஞ் சீர்ப்படுத்தும் பட்டநகவுளி.
சாணைக்கல்லில், உளியினல்கிகமைப்பைப் போல், அதாவது 35 பாகையளவு அலகைத் தேய்ப்பதுபோல் வெளிப்பக்கஞ் சீர்ப்படுத்தும் பட்ட நகவு ளியைக் கூராக்கலாம். இதிலுண்டாகும் நுண்ணிய பகுதியைக் கழற் றுவத்ற்கு எண்ணெய்க் கல்லில் தேய்த்தல் அவசியம்.

Page 49
80
3. மரங்கள்
கொன்றை. வீட்டுத்தளவாடங்கள் செய்வதற்குப் பரும்பாலும் உப யோகிக்கப்படுமிம்மரம் பழுப்பு நிறமுடையது ; கடினமானது ; வெடிக்குந் தன்மையது ; வைரமானது ; இதில் வேலை செய்வது ஓரளவிற்குக் கடினம். கொன்றை மரம் நன்றாக மினுங்கும். கதிரைகள் செய்வதற்குச் சிறப்பாக உபயோகிக்கப்படுகிறது.
பலா : வீட்டுத் தளவாடங்கள் செய்வதற்கும், வீடுகட்டுவதற்கும் அதிகமாக உபயோகிக்கப்படு மிம்மரம், எங்கள் நாட்டில் பிரசித்தமானது. முற்றாதமரம் மஞ்சளாயிருந்த போதிலும் முற்றியமரம் சிவப்புக் கலந்த பழுப்பு நிறமாகமாறும்.இதன் மரத்துண்டுகளை நெகிழக் காய்ச்சி வடித்தால் மேற்கூறிய நிறத்தைப் பெறலாம். இதில் வேலை செய்வது ஓரளவிற் கிலகுவாயிருக்கும். நன்கு மினுங்கும். வண்டினால் இம்மரத்திற்கு மிகக் குறைவாகவேயழிவு ஏற்படும்.
பாலை : இது படலைபோன்ற வெளிவேலைகளுக்கேற்றது. சிறிது பழுப்பு நிறமுடைய இம்மரத்தில் வேலைசெய்வது கடினம். நீண்டகாலம் பாவிக் கும் ; பாரமானது.
கலோட்டி : இது வீட்டுத்தளவாடங்களுக்கும், மாடிவீடுகளுக்கும் உபயோ கிக்கப்படுகிறது. மஞ்சள் சேர்பழுப்பு நிறமுடையது. இதன் மரச்சிராயமைப்பு அழகானது. இதில் வேலை செய்வது கடினம். நன்றாகமினுங்கும்.
பூவரசு : இது கட்டில், கதிரை முதலிய பொருட்களைச் செய்யவும் கடைச்சல் வேலைகளுக்குமுபயோகிக்கப்படுகிறது. சிவப்புக்கலந்த பழுப்பு நிறமுடையது. இதில், வேலை செய்வது இலகு. ஆனால் வெடிக்கும். இது அரக்கு வேலைக்கு - அதாவது அரக்குப் பூசு வதற்குரிய பொருட்களைச் செய்வதற்கு பெரும்பாலும் எடுக்கப்படுகிறது.

81
4. மரம் பதனிடல்.
மரக் குற்றிகளிலிருந்து அரிந்தெடுக்கப்படும் பலகை, கைமரம், தொற்று, வளை முதலிய மரங்களில் நீர் அதிகமடங்கியிருப்பதை நாம் அறிவோம். இந்நீரின் பெரும் பகுதியை ஆவியாக வெளியேற்றி, மேற்கூறிய மரப் பொருட்களைச் செய்வதற்கேற்றவாறு மரத்தை ஆயத்தஞ் செய்தல் மரம் பதனிடலெனப்படும்.
உழுத்தும் என்பவற்றில் சேதமுறுத்த
மழையினாலும், வெயிலினாலும் மரம் சேதமடையும். மழை நீரிலுள்ள அமிலமாக்கியில் மரத்தைச் சேதமுறுத்துந் தன்மையுண்டு. எப்பொழுதும் மழை, பனி என்பவற்றிலகப்படும் மரம் இக்காரணத்தாலேயே விரைவில் உழுத்துப் போகிறது. மரத்திலுள்ள நுண்டுளை நீரையுறிஞ்சி யெடுக்கிறது. ஆகையால் மழை, பனி என்பனவற்றிலகப்படும் மரம் நீரையுறுஞ்சி யெடுப்பதால் பருமனடைகிறது. மருது காட்டாமணக்கு, இலுப்பை, முதிரை, சமண்டலை முதலிய மரங்கள் நீரில் நின்று நிலைக்கக் கூடியவை. இதனா லேயே இம்மரங்கள் பாலம் அமைக்க உபயோகிக்கப்படுகின்றன, இவற்றுள் மருது சிறந்தது.
மரத்தினுட்பக்கத்திலும் வெளிப்பக்கம் விரைவிற் காயும். வெயிலினால் வெளிப்பக்கம் மிகவிரைவாகக் காயும். ஆகையால் வளைதல், கோலல், திருகல், பிளத்தல், வெடித்தல் என்பவைகளால் மரஞ் சேதமடையும். வளைதலினாற் சேதமடைந்த மரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வரும் வேலை சில நாடுகளில் நடைபெறுகிறது. இம்மாதிரியான மரங்களை நன்றாக மூடப்பட்ட அறைக்குள் வைத்து நீராவி செலுத்தப்படுகிறது. மரங்களிலுள்ள காய்ந்த நுண்டுளைகள் நீராவியை உறிஞ்சி எடுப்பதால் பழைய நிலையை அடைகின்றன. இங்கு மிகக் குறைவாகவே நீராவி உறிஞ்சி யெடுக்கப் படுகிறது. இம்மாதிரியான மரங்கள், மென்மையானவை, இவற்றில் வேலை செய்வது இலகு.
72 ஆவது படம். வளைந்த மரத்தை நன்னிலைக்குக் கொண்டுவருதல். நீராவியுறிஞ்சியெடுக்கப்பட்டபின் இம் மரம் புள்ளிக்கோடுகளினாற் காட்டப் பட்டதுபோலாகும்.
மரம் பதனிடப்படும் முறை. (அ) காற்றில் காயவைத்துப் பதனிடல். (ஆ) போறணையில் பதனிடல். (இ) காற்றிலும் போறணையிலும் பதனிடல். (கலப்புப் பதனிடல்) என மரம் பதனிடுதலிற் பிரதான மூன்று முறைகளுண்டு.

Page 50
82
(அ) காற்றில் பதனிடுதல் : மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் பாது காப்பதற்கு மரத்தையடுக்கிக் காற்றில் காயவிடுவது காற்றில் பதனிடு' தலெனப்படும். நல்ல காற்றோட்ட முள்ளதும் மழை வெயில் படாதது மான அறையில் மரத்தையடுக்கிக் காயவிடல் வேண்டும். முதல் மரவடுக்கு நிலத்திலிருந்து பதினெட்டு அங்குல உயரத்திலமைய வேண்டும். முதலாவது தட்டைப் பின்பற்றி ஏனைய தட்டுக்களும் அடுக்கப்படுவதால் முதலடுக்குச் சிறிதளவும் வளைவின்றி நேராக விருத்தல் அவசியம்.படத்தைக் கவனித்தால் முதலாவது மரத்தட்டை யமைக்க வேண்டிய மாதிரி. விளங்கும். ஒவ்வொரு மரத்தட்டும் கீழே யமைக்கப்பட்டுள்ள தட்டின் மேல் இரண்டரையடி தொடக்கம் மூன்றடிவரை இடைவெளியுண்டாகும் படியாக வைக்கப்பட்டுள்ள மரச்சட்டத்தின் மேலேயே யமைக்கப்படல் வேண்டும். இம்மரச்சட்டம் 13 அங்குலமாயிருத்தல் நல்லது. ஒவ்வொரு மர்த்தட்டுக் கிடையேயும்" ஒவ்வொரு மரங்களுக்கிடையேயும் காற்றோட்டத்திற்காக இடைவெளியிருத் தல்வசியம். மரத்தைக் காற்றிற் பதனிடப் பலவருடங்கள் செல்லும்: சம் சீதோட்டண வலயங்களிலுள்ள தேசங்களில் இதற்கு ஏழு வருடங்கள் வரை செல்லும். ஆனால், உட்டண வலய நாடுகளில் இதனிலுங் குறைந்த காலஞ் செல்லக்கூடும்.
|நாளNTS
AWW
AWWE AW ப44 - 14
TET 223NH48
AVM-At-ட
4% கெட்
NN
ZAM 1 - 2ா- 2. --
20-3-2ா-
2ாட்<ாட்டயெடன.
ZDLAர் - AI
RSIP
NISSSSANIA% SSTALININNECTIANSST)
ANVYDAYITIZAM NN72ISSASSINVANICTIS TNSVTIAI(SII
AINASSSSSSSSSS) ZTIாயI(SK)ாப்பா 2 @a NPTJIIIyம் NSNINITIAYIIIKGININSS- து
ப:LJItாப்
SOAll
Sாயட பாட
S42பாட்
ARSSNIVIRAISS ராIPI(அIIIIII((((SIA.
NISSSSSSSS KIL NINSTINIV/
-N7Kill rSHMாட.
Sண-கார் பட = ஜை II 77 7
73 ஆவது படம் : காற்றிற் பதனிடல். 1. மரச்சட்டம் 2. மரத்தட்டொன்றில் ஒவ்வொரு மரத்திற்கிடையிலுமுள்ள இடைவெளி.

83)
(ஆ) பேகறணையிற் பதனிடல் : போறைேண மூலம் மரத்தைப் பதனிடும் வேலை இன்னும் எங்கள் நாட்டில் நடைமுறையில்லை. ஆனால், இம் முறை அவுத்திரேலியா, அமெரிக்கா முதலிய நாடுகளில் அதிகமாகவுண்டு டிரப்போறணை யென்பது மரம்- செங்கல், கொங்கிறீற்று என்பவைகளினாற் செய்யப்பட்ட நீண்ட கொட்டகையாகும்.. சூடு குறைந்து போகாதிருக்கும் - படி இக்கொட்டகை நன்றாகப் பாதுகாக்கப்படுகிறது. மரப் போறணை யொன்றின் முன்தோற்றம் இங்கு தெரிகிறது. இங்கு, கூரையிலிருந்து மரங்களடுக்கியிருக்கும் பகுதிவரை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மர வடுக்குக்களின் மேல் தங்கும் இரட்டுச் சீலையினாற் பிரிவு பூரணமடைதுள்ளது. இங்கு கூரையில் ஆறடிக் கொவ்வொன்றாகக் காற்றாடிகளுண்டு. கொதி நீராவிச் சுருளியினாற் சூடாக்குங் காற்று இக்காற்றாடிகளினால் மரவடுக்குக் 'களினூடே தள்ளப்படும். காற்றாடிகள் பிரயாணஞ் செய்யும் பக்கத்தை அடிக்கடி மாற்றுவதினால் உலர்ச்சி மேலும் நன்றாக நிகழ்கிறது. தொடங் கும் போது இவ்வாறு சூட்டை உபயோகிப்பது மரத்தை உலர்த்துவதற் கன்றி ஒவ்வொரு மரவடுக்கிலிருந்தும் மேலேயுள்ள தட்டுக்களுக்கு ஈரலிப்புத் தன்மையையனுப்புவதற்காகும். தொடக்கத்தில் இம்மாதிரி யான போறணையிற் தங்கியுள்ள ஈரலிப்புத் தன்மை மிக்வதிகமாகும். ஆனால், மரம், படிப்படியாக உலரும்போது, வெப்பம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஈரலிப்புத் தன்மை படிப்படியாகக் குறைக்கப்படுகிறது இம் மாதிரியான போறணையின் வெப்பம் பரனைற்று 105 பாகையிலிருந்து 180 பாகை வரைக்கும், ஈரலிப்பு நூற்றுக்கு 30 வீதத்திலிருந்து 90 வீதம் வரைக்கும், மரங்களின் பதத்தை யொட்டிப் படிப்படியாக மாற்றப் படும். இவ்வாறு வெப்பமும் ஈரலிப்புத் தன்மையும் மாற்றமடையும் 'மாதிரியைச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரம் மூலம் போறணைக்கு வெளியே இருந்தே அறியலாம். முறைக்கு முறை பதனிடப்படும் மரங் களைப் பரிசீலனை செய்து, தகுந்தபடி வெப்பமும் ஈரலிப்புத் தன்மையும் கூட்டியும் குறைத்துங் கொள்ளப்படுகின்றன. ஏதாவதொரு முறை யினால், மரங்களில் வெடிப்பேற்படுமடையாளந் தெரிந்தால் ஈரலிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். கடைசியாக நீராவியை உபயோகித்துப் போறணையிற் பதனிடுவது நிறைவேற்றப்படும்.
இவ்வாறு, போறணையில் பதனிடுவது காற்றை வலுவிற் செலுத்து வதன் மூலம் நடைபெறுகிற தென்பது தெளிவாகும். அவ்வச் சந்தர்ப் பங்களில் வேண்டிய வெப்பம், கொதி நீராவிச் சுருளிகளின் மூலமும், ஈரலிப்புத் தன்மையானது நீராவி மூலமும் போறணைக்குக் கிடைப்பதால் மரத்தின் உள்ளும் புறமும் ஒரேயளவாக உலர்த்தப்படுகின்றன. இவ்வாறு மரத்தைப் பதனிடும்போது முதலாவதாக அவ்வம் மரங்களுக் கேற்ற வாறும், பருமனுக் கேற்றவாறும் அவ்வச் சந்தர்ப்பங்களுக்கு வேண்டிய வெப்பத்தினதும் ஈரலிப்பினதுமளவு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளல் வேண்டும். 50. N. R 21997 (1/60)

Page 51
IIIIIIம்
====
(4MB)
53.
ooo ue
05 6 0 (
0 0
0 0 0 0
24/2
NAIN///
SS
74 ஆவது படம் : போறணையின் குறுக்கு வெட்டுமுகம் கொதிநீராவிச்சுருளி. 2. ஈரலிப்புத் தன்மையையுண்டாக்குங்குழாய். 3. இரட்டுத்துணி. (போறணையை இரண்டாகப் பிரிக்கிறது) 4. காற்றாடிகள்.
(இ) காற்றிலும் போறணையிலும் பதனிடல் (கலப்புப் பதனிடல்) காற்றில் பதனிடும்போது மரம் முதலில் திடீரென ஓரளவு காய்ந்து, பின் மிகவும் மெதுவாகக் காயத் தொடங்கும். போறணையிற் பதனிடும்போது மரத் திலுள்ள நீர்த்தன்மையை முதலில் அகற்றுவது மிகவும் கடினமாயிருக் கும். ஆகையால் மூன்று நான்கு மாதங்களாகக் காற்றிற் பதனிடப்பட்ட மரங்களைப் போறணையிலிட்டால் ஒரு வாரத்திற் பதனிடுதலைப் பூரணப் படுத்தலாம். ஆகவே, கலப்புப் பதனிடுதலினாற் சிறந்த பலனைப் பெறுவது மட்டுமன்றி நேரமும் பணமும் இலாபமடையும்.
கலப்புப் பதனிடுதலுக்காக மரங்களையடுக்கும் போது, அவ்வடுக்குக்களையே போறணைக்குட் கொண்டு செல்லக் கூடியதாகத் தாங்கியின்மேல் அடுக்குவது நல்லது. இதனால் நேரம் மிஞ்சும், செலவும் குறையும்.

85
தேசீய முறையில் மரம் பதனிடுதல் :
மரத்தையடுக்கிக் காற்றில் காயவிட்டுப் பதனிடும் சாதாரண முறை இப்போது நம் நாட்டில் நடைமுறையிலிருக்கிறது. சிலர் மரத்தை சிறப் பாக வட்டமான மரத்தை-உப்புக் கலந்த நீருள்ள சேற்றுட் சிறிது காலம் புதைத்து வைத்துத் தொழிற்படுத்த எடுக்கிறார்கள். இதனால் முள்வாயன் போன்ற பிராணிகளினாலேற்படும்அழிவு ஓரளவிற்குக்குறையும். வேறு சிலர் பொருட்களைச் செய்வதற் கெடுக்கும் மரத்துண்டுகளை ஐந்து நிமிடங்கள் வரை வெந்நீரிற் போட்டு வைத்துப் பின் மெல்லிய காற்றி லுலரவிட்டு வேலைக் கெடுக்கிறார்கள்.
மரங்களை யடுக்குதல் :
அரிந்த மரங்களை, மரத்தைப் பதனிடுவதற்கு அடுக்குவது போலவே அடுக்கல் வேண்டும். இதனால் மழை, வெயில், பனி என்பவைகளினால் மரங்களுக் கேற்படுந் தீங்கு தவிர்க்கப்படும். இது மாத்திரமன்றி கறை யான் முள்வாயன் முதலிய பிராணிகளினாலேற்படும் தீங்குகளைக் கவனித்து வேண்டிய சிகிச்சை செய்யவும் சந்தர்ப்பங் கிடைக்கும்.
பிழையாக மரங்களைக் குவித்துவைப்பதாலும், அங்கங்கு போட்டுவைப்ப தாலும், வளைதல், கோலல், திருகல் என்பன ஏற்பட இடமுண்டாகும்.

Page 52
86
5. மரங்களையழிக்கும் கவகம் போன்ற சிறு பிராணிகள்
கவகம்
கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய கிருமிகளினால் அழுக்குப் பரவுகிறது. இக்கிருமிகளெல்லாவிடங்களிலுமுண்டு. ஆனால், அவைகளின் வளர்ச்சிக்கேற்ற சந்தர்ப்பங் கிடைத்தால்மட்டும் விருத்தியடையும். இக் கிருமிகளின் வளர்ச்சிக்குக் காற்றும், ஈரமும் அவசியம். ஆகையால் ஈரலிப் புள்ள இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரங்களும் பொருட்களும் கவகத் தால் பாதிக்கப்படும். காற்றோட்டமில்லாதவிடத்து வளருவதும், மரங்களை யழிப்பதுமான துயிரோது எனப்படும் கவகமும் உண்டு. இது, சில வேளை களில் கல், செங்கற் சுவர்களின் மூலமாகவுஞ் சென்று காய்ந்த மரங்களை யும் பாதிக்கும். இந்தக் கவகமுடைய எல்லா மரங்களையுமெரித்து அவற்றைச் சுற்றியுள்ள கல், செங்கற் சுவர்களில் சூடாக்கிய கிறீசோத்து, அல்லது கவகத்தை அழிக்கும் வேறு கலவை மருந்துகளைப் பூசுதல் நன்று.
அந்து
இந்தச் சிறு பிராணி மரத்திலுள்ள சோற்றியை மட்டுமே அழிக்கும். அந்து சோற்றியிற் சிறிய துவாரங்களையுண்டாக்கி அதனுள் முட்டைகளை யிடும். முட்டைகளிலிருந்து வரும் புழுக்கள் மரத்தைச் சாப்பிட்டுப் பூரண வளர்ச்சியடைந்தபின் வெளியே வரும். அந்துப் பூச்சிகளால் வன்மரங்களி லுள்ள சோற்றியும் மென்மரங்களும் பூரணமாகப் பாதிக்கப்படும். இவ் வந்துக்களை அழிப்பதற்குச் சிறு பிராணிகளை அழிக்கும் கலவை மருந்தை யுபயோகிக்க வேண்டும். திறிசோத்தும் மண்ணெண்ணெயும் தெரப்பன் தைலமும் ஒரேயளவிற்குக் கலந்த கலவை இதற்குச் சிறந்தது. இக் கலவையைப் பலமுறை பூசினால் அந்தினை அழிக்கலாம்.
கருவண்டு
கருவண்டு மரக்கறையானிலும் அழிவை விளைவிக்கக் கூடியது. அது மென்மரங்களை மட்டுமன்றி வன்மரங்களையும் அழிக்கும். ஆனால், அது சிறப் பாக, குறிப்பிட்ட சில மரங்களையே விரும்பும். கருவண்டால் துளைக்கப்பட்ட துவாரங்களை மூடிச் சந்துகளை அழிப்பதற்குக் கையாண்ட முறைகளைப் பின்பற்றுதல் நன்று.

87
கறையான்
இருட்டை விரும்பும் இப்பிராணி மரத்தினுட் பகுதிகளையுண்டு பட்டைகளை மட்டும் மிகுதியாக வைக்கும் இவை மண்ணினாற் சிறிய புற்றுக்களை யமைத்துக்கொண்டு மரங்களை நோக்கி வரும். ஆகையால் இம்மண் ணையழித்து எப்பொழுதும் சுத்தஞ் செய்தல்வசியம். நல்ல காற்றோட்டமு மிருக்க வேண்டும். உலோகத்தினாற் செய்யப்பட்ட, கறையான்கவிப்பு எனப்படும் பாதுகாப்பையுபயோகித்தால் கறையான்கள் வருவதைத் தடுக்கலாம்.
ட
75 ஆவது படம் : (அ) 1: மரம். 2. கறையான் மண். 3. செங்கற்சுவர். 4. நிலம். (ஆ) 1. மரம். 2. கறையான் கலிப்பின்படி. 3. கறையான் கலிப்பு. 4. கறையான் தின்னமுடியாத மரம். 5. நிலம்.

Page 53
6. மரங்களிற் காணப்படும் குறைகள்
சிம்பு, பழுது, உழுத்தல், மாசு, கணு, கோலல், முறுக்கல், சோற்றி, சூரியப் பிளவு எனப்பல குறைகள் மரங்களிற் காணப்படும். இக்குறைகளை யுடைய மரங்கள் பொருட்கள் செய்வதற்குகந்தவையன்று.
சிம்பு
மரங்களில் சிராய் ஒரே பக்கமாயிராது பல பக்கங்களிலமைந்திருத்தல் சிம்பு எனப்படும். இது, கணுவும் மரமும் சிறிய காலத்தில் முறுகுவதால் உண்டாகிறது. இம்மாதிரியான மரங்மளைச் சீவுளியாற் சீவும்போது சிம்புண் டாகும்.
பழுது :
மரங்களிற் காணப்படும் வெடிப்பு இப்பெயரைப் பெறும். சில மரங்களை மர உபயோகத்திற்கு வெட்டினால் நடுவேயிருந்து சூழவர வெடிக்கும். இது குடலளறல் எனப்படும். சுற்றவிருந்து உட்பக்கமாக வெடித்தல் சுளை யளறல் எனப்படும். சில மரங்களில் நட்சத்திர வடிவாகப் பழுது காணப் படும். இது நட்சத்திரவளறலெனப்படும். வேறு சில மரங்களில் வளர்ச்சி மையத்திற்குச் சமாந்தரமாகப் பழுது காணப்படும். இது அரைவட்டப்பழுது எனப்படும். இம்மாதிரியான மரக்குற்றிகளை அரிந்தெடுக்கும் மரங்களிலும் பழுது காணப்படும்.
இடும் ?
76 ஆவது படம் : 1. சுளையளறல். 2. குடலளறல். 3. நட்சத்திரவளறல். 4. அரைவட் டப்பழுது

89
உழுத்தல் :
கவகத்தால் சில மரங்களுழுக்கும். நீர், காற்று என்பவைகளினாலுழுக் கும். சில மரங்களில் உழுப்பு ஒரே பக்கமாகச் செல்வதைக் காணலாம். அப்பகுதி உழுத்தற்காயம் எனப்படும். மரங்களின் கிளைகளை வெட்டுவதி னாலும், காயமேற்படுவதினாலும் உழுத்தல் தொடங்குகிறது. கிளைகளை வெட்டுதல் போன்ற காயங்களில் தாரை, அல்லது புற்றுமண்ணையும் பச்சைச் சாணியையும் ஒரேயளவினவாயெடுத்துக் குழைத்துப் பூசி உழுத் தலைத் தடுக்கலாம். இதற்கென ஆயத்தஞ் செய்யப்பட்ட மருந்து வகை - களுமுண்டு.
அழுக்குப் படரல்
இது மரங்களின் மத்தியிலிருந்து தொடங்கும் ஒரு வகை உழுப்பாகும்.
கணு :
பட்ட கணு, முடிச்சுக் கணு எனக் கணு, இரண்டு வகைப்படும். முளை இறந்து போவதினால் பட்டகணு உண்டாகிறது. அது மரத்தினுட் பரந்து செல்லமாட்டாது. கிளையினால் முடிச்சுக் கணு உண்டாகிறது. இது மரத் தினுட் பரந்து செல்லும். கணுக்கள் பொருந்திய மரங்களில் சிம்பு உண்டு. இம்மாதிரியான மரங்களில் வேலை செய்வது கடினம்.
வெளிறல்
முற்றாத மரம் வெளிறல் எனப்படும். இது வெண்மையானது. வேலைக் கேற்றதன்று. அந்து, கறையான் முதலிய பிராணிகள் வெளிறிய மரத் திற்கு விரும்பி வருகின்றன.
சோற்றி |
மரத்தின் நடுப்பகுதி சோற்றி எனப்படும். கிடேச்சு போன்று இது வேலைக்கேற்றதன்று.
கோலலும், முறுகலும் :
அரிந்த மரங்களைச் சரியாக அடுக்கி வைக்காமையினாலும், உலர்த்தாமை யினாலும் அங்கங்கு பரப்பி வைப்பதினாலும் கோல்லும் முறுகலும் உண்டா கின்றன.இம்மாதிரி மரங்களை நீரிலூறவிட்டுப் பின்பு பாரமேற்றி வைத்தால் நன்னிலைக்குக் கொண்டுவரலாம்.

Page 54
90
7. வச்சிரம் (பசை)
தோல் வச்சிரம் : பிராணிகளின் தோல்களை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பத னாற் கிடைக்கும் மெழுகைப் கவனமாக உலரவைத்து இவ்வச்சிரஞ் செய்யப் படுகிறது. இவ்வச்சிரத்தைத் தகடுகளாகவும் துண்டுகளாகவும் தூளாக வும் பெற்றுக்கொள்ளலாம்.
வச்சிரத் தகட்டைச் சிறிய துண்டுகளாக்கி நீரிலூறவைத்துத் துண்டுகள் மூழ்குமளவிற்கு நீரையூற்றிச் சூடாக்கி உபயோகத்திற்கு ஆயத்தஞ் செய்ய வேண்டும். துண்டுகளின் நிறையினளவிற்கு நீர் சேர்த்தல்வசியம். இதன் பின்பு இரட்டைப் பாத்திரத்தில் நீரையூற்றி 140 பாகை பரனைற்றளவிற்கு நீரைச் சூடாக்கல் வேண்டும். 140 பாகைக்கதிகமாக நீரைச் சூடாக்கினால் வச்சிரத்திலுள்ள ஒட்டுந்தன்மை குறைந்துபோகும். நச்சுக் கிருமிகளினால் வச்சிரம் மிக விரைவில் பழுதடையுமாகையால் வேலைக்கு வேண்டியவளவே அவ்வப்போது ஆயத்தஞ் செய்தல் வேண்டும். இவ்வச்சிரம் சூடாயிருக்கும் போதே பூசி ஒட்டுக. மீன் வச்சிரம் : இது சிறப்பாக மீன்களின் தோல்களிலிருந்தும் செதில் களிலிருந்தும் செய்யப்படுகிறது. இதனைச் சிறிய துண்டுகளாகவும், நீராகவும் பெற்றுக் கொள்ளலாம். தயிர்ப்பசை : (தயிர்த் திவலைகளாலாவது) இவ்வச்சிரம் அதிகமாக ஆடை நீக்கப்பட்ட பாலையுலர்த்திச் செய்யப்படுகிறது. இது தூளாகக் கிடைக்கிறது. தூளோடு தண்ணீரைச் சேர்த்தால் உபயோகத்திற்குத் தகுந்ததாயிருக்கும் இது உறுதிகொண்ட வச்சிரமாகும். ஆனால் இதனை ஒவ்வொரு வேலைக்கும் அவ்வப்போது ஆக்கிக்கொள்ளல் வேண்டும். இவ்வினத்தைச் சேர்ந்த சில வச்சிரங்களினால் மரத்தின் நிறம் பாதிக்கப்படுகிறது. ஆகையால், இவ் வினத்தைச் சேர்ந்த வச்சிரத்தை வாங்கும்போது மரத்தின் நிறத்தைப் பாதிக்காத இனத்தையே வாங்குதல் நன்று. மெழுகு வச்சிரம் : குங்கிலியம் போன்ற மெழுகுப் பொருட்களிற் செய்யப் படும் வச்சிரங்களுமுண்டு. இவை நீராகக் கிடைக்கும். உபயோகத்திற்குத் தகுந்தவாறு ஆயத்தஞ் செய்யப்பட்டுள்ள வச்சிரம் பாடசாலைத் தொழிற் சாலைகளுக்குச் சிறந்தது. செயற்கை வச்சிரம் : செலிலோசு, மாப்பொருள் , சிலிக்கேற்று முதலிய பல பொருட்களைச் சேர்த்துச் செய்யப்படும் செயற்கை வச்சிரத்தில் பல இனங்க ளுண்டு. இவையொவ்வொன்றும் உபயோகத்திற்கு ஆயத்தஞ் செய்யும் மாதிரியும், உபயோகிக்கும் மாதிரியும், இவ்வச்சிரங்கள்டைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி அந்தந்த வச்சிரத்தை
உபயோகஞ் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

91
சில வச்சிரங்கள் நீரில் நின்று பிடிக்கும். அதாவது இவ்வச்சிரத்தினால் மூட்டுக்களைப் பொருத்தினால் திரும்ப நீரினாற் கழரமாட்டா.
வச்சிரத்தை உபயோகிக்கும்போது கவனிக்கவேண்டியவை:- 1. வச்சிரத்தைக் கொண்டு பொருத்துவதற்கெண்ணியுள்ள துண்டுகள் நன்றாகப் பொருந்துகின்றனவாவென்று பரிசீலனை செய்க.
2. வச்சிரமும் பொருத்தவிருக்கும் மரத்துண்டுகளும் அவ்வறையின் சூட்டையுடையனவாயிருக்க வேண்டும்.
3. வச்சிரத்தை ஆக்குபவர்கள் கொடுக்கும் முறைகளைப் பின்பற்றி வச்சிரத்தைச் செய்க.
4. வச்சிரத்தைப் பூசுவதற்கு முன் அவ்வத் துண்டுகளை இடுக்கியினால் இறுக்கிப் பார்க்க.
5. வச்சிரத் தூரிகையை, அல்லது தடியை நீர்ப்பாத்திரத்தினுள் தொங் கிக் கொண்டிருக்கும்படி செய்க. நீரில் வச்சிரம் கழுவப்பட்டுச் செல்வதால் இலகுவாகத் தூரிகையை உபயோகிக்கலாம்.
6. இடுக்கிக்கும் பொருத்துகின்ற பொருளுக்குமிடையே மரத்துண்டுகளை வைத்தால் பொருளுக்குத் தீங்கேற்படாது.
7. பொருத்தவேண்டிய மரத்துண்டிகளிரண்டிலும் வச்சிரத்தைப் பூசுக.
8. இடுக்கியினாற் போதியவளவு இறுக்கி அதிகமாகவுள்ள வச்சிரத்தை வெளியேற்றுக.
9. பொது மூலைமட்டத்தையுபயோகித்து மூட்டுச் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதாவெனப் பரிசீலனை செய்க.
10. மேலதிகமான வச்சிரத்தை ஈரமான சீலைத்துணியினாற் துடைக்க. இச்சீலைத்துண்டு நன்றாகப் பிழியப்பட் டிருக்க வேண்டும். இன்றேல் அதனி லுள்ள ஈரம் பொருத்திலூறக் கூடும்.
11. வச்சிரம் நன்கு காய்ந்த பின்பே இடுக்கியை எடுக்க வேண்டும்.

Page 55
92
8. நிறமூட்டலும், மினுக்குதலும்
பல நிறங்களையுபயோகித்து மரங்களினியற்கை நிறங்களை மாற்றுதல் நிறமூட்டலெனப்படும். இது இரண்டு காரணங்களுக்காகச் செய்யப்படுகின் றது. ஒன்று, ஏதாவதொரு பொருளின் நிறம் வேறு பொருட்களின் நிறத்துடன் பொருந்துவதற்கு ; மற்றையது, மரத்தினியற்கைச் சிராயமைப் புப் பாதிக்கப்படாமல் அதன் நிறத்தை மேலுமதிகரிப்பதற்காக என்க. மலைவேம்பு போன்ற மலிவான மரங்களைக் கருங்காலிபோற் காட்டுவதற்கு நிறமூட்டக்கூடாது. இவ்வித ஏமாற்று வேலைகளினாற் பயனில்லை. மலி வான மரங்களுக்கு '' பெயின்று '' என்னும் பூச்சு வகையைப் பூசுதல் நன்று.
சில சந்தர்ப்பங்களில் மலிவான மரங்களை விலையுள்ள மரங்ளாகக் காட்டுவதற்கு நிறமூட்டப்படுகின்றது. அவசியம் நேரிட்டால் மட்டுமே இவ் வாறு செய்ய வேண்டும். மரங்களின் இயற்கைச் சிராயமைப்பையும், நிறத் தையும் பாதுகாக்கும் நவீன நோக்கமே பொருட்களின் வேலைகளைச் செய்து முடிக்கும்போதிருக்க வேண்டும்.
வேலை முடித்தலைத் தெரிவு செய்தல் :
அநேக மென்மரங்களிலுள்ள மரச்சிராயமைப்பைப்போல் நிறத்தையும் காட்சிக்குரியதாக்கல் கூடியவளவு பெறுமதிதருவதன்று. ஆகையால், இம் மாதிரியான மரங்களின்மேல் , எனமல், அல்லது சலப்புளோசு நிறத்தைப் பூசுதல் நன்று. சில வன் மரங்களிலுள்ள மரச்சிராயமைப்பும் நிறமும் கவர்ச்சியைத் தரமாட்டா. இம்மாதிரியான மரங்களையும் மென்மரங்களைப் போற் கணித்து வேலை செய்தல் நல்லது.
புளி, வேம்பு, அசோகு, கருமுதிரை , முதிரை, தேக்கு முதலிய மரங்களி லுள்ள சிராயமைப்பைப்போல் அவற்றின் நிறமும் அழகானது. இம்மாதிரி யான மரங்களின் நிறமும் மரச்சிராயமைப்பும் அழிந்து போகாவண்ணம் மினுக்குதல் மிகமுக்கியம்.
போற் கணித் தோட்டா. இம்மாதிரியான கேராய்மைப்பும் நிறம்
நிறங்கள் :
நிறங்களைப் பிரதானமாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. எண்ணைச்சாயம் ஆளி விதை (இலின்சீட்டு) எண்ணெய் , அல்லது தெரப்பன்தைலம். இச்சாயத்தைக் கரைக்கலாம்.
ii. நீர்ச்சாயம்- கரைப்பதற்கு நீர் உபயோகிக்கப்படுகிறது. ii. மதுசாரச்சாயம்- மெதனோல் சேர்மதுசாரத்தில் கரைக்கப்படுகிறது. iv. நத்தாச்ாயம்- நத்தா, அல்லது நத்தலீன் கரைக்கப்படுகிறது.

93
ஆக்கி டூல நோ®
எண்ணெய்ச்சாயம் ; இதனுடன் தெரப்பன் தைலத்தைச் சேர்த்து வேண்டியவளவிற்கு ஆக்கிக் கொள்ளலாம். தட்டையான தூரிகை யினாற் பூசிய பின் சுத்தமான சீலைத் துண்டினாற் துடைக்க வேண்டும். எண்ணெய்ச் சாயம் காய்வதற்கு அதிக நேரமெடுக்கும். ஆனால் திரவ மாக்கிப் பூசிச் சீலைத் துண்டினால் நன்கு துடைத்தால் ஒரே நிறத்தைப் பெறலாம். இதனால் மரங்களிலுள்ள துவாரங்கள் நன்கு மூடப்படும். ஆகையால், மரம் மினுக்குவதற்கேற்ற நிலையையடையும். எண்ணெய்ச் சாயத்தைப் பூசி நன்கு காய்ந்த பின் மெழுகினாலோ பிரஞ்சுப் பொலிசி
னாலோ மினுக்கவேண்டும்.
நீர்ச்சாயம் :
விரும்பிய நிறமுடைய சாயத்தூளை வெந்நீரிற் கரைத்துப் போதியவளவு . சூடிருக்கும் போதே பூசுவது வழக்கம். இதனால் மரங்களினுட் சிராயமைப் பின் நார் புறப்படும். ஆகையால், முதலில் பொருளை நன்கு நனைத்துக் காய்ந்த பின் அரத்தாளிட்டு, அதன் பின்பே நீர்ச் சாயம் பூசுதல் நன்று. இதற்குத் தட்டையான தூரிகையை உபயோகிக்க வேண்டும். பொற்றா சியம் இருகுறோமேற்றைக் கரைத்தும் நல்ல நீர்ச் சாயத்தை ஆக்கலாம்.
77 ஆவது படம் : தூரிகை. 1. தூரிகையின் தும்புகளைப் பாது காப்பாக வைக்கும் முறை A 4 அங் குலக் கம்பி. 2. மதுசாரச் சாயத் தூரிகை .

Page 56
94
மதுசாரச் சாயம்
சாயத் தூளையும் துண்டுகளையும் மெதனோல் சேர்மதுசாரத்திற் கரைத்து இச்சாயம் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இது விரைவில் காய்ந்து போகு மாகையால் பூசுதல் கடினமாகும். பள்ளம் விழும்; ஆகையால் மதுசாரச் சாயத்தைச் சிறிய பொருட்களுக்கும் மேற்பரப்பில் மட்டும் பூசவேண்டும். இச்சாயத்தூளை மெதனோல் சேர்மதுசாரத்திற் கரைப்பதற்குப் பதிலாகத் திரவமாக்கிய பிரெஞ்சு மினுக்கியில் கரைத்தால் பூசுவது இலகுவாயிருக் கும். இச்சாயத்தைத் தட்டையான தூரிகையினாற் பூசக்கூடாது. இதற் குபயோகிக்க வேண்டிய தூரிகையின் படம் மேலே காட்டப்பட்டுள்ளது. நத்தாச்சாயம்
இச்சாயம் உபயோகத்திற் கேற்றவாறு செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால், இதற்கெனச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ள கலவையைச் சேர்ப் பதனால் விரும்பிய நிறத்தையும் திரவமான தன்மையையும் பெற்றுக் கொள்ளலாம். சாயமூட்டிய பின் சுத்தமான சீலைத்துண்டினால் நன்கு துடைத்து ஒரு நாளுக்குக் காயவிடல் வேண்டும்.
பயோகிக்க கத தட்டையாக கரைத்தால்
78 ஆவது
படம் : A. சாயம் பூச வேண்டிய சரி யான முறை. B. பிழையான முறை. 0. சாயம் பூசி நிறுத்திய .. இடம். இத னாற் - புள்ளி யுண்டாகும்.
XXXXN

சுவரொட்டி நிறம் (சிவப்பு)
எண்ணெயும் அழுக்குமுடைய மென்மையான மேற் பரப்பையுடைய பொருட்களில் சிவப்பு நிறத்தைப் பூசுவதனால் நீண்ட காலம் நிலைத் திருக்கக் கூடிய பிரகாசத்தைப் பெறலாம். நிறம் நீண்டகாலம் நிலைத் திருப்பதற்கும் நீருறிஞ்சியெடுப்பதைத் தடுப்பதற்கும் இந்நிறமூட்டப் பட்ட பொருட்களுக்குக் கோபல் வாணிசு இரண்டு முறை பூசுவது நல்லது.
சாயமூட்டும் மாதிரி - பொருட்களைச் சாயமூட்டும் போது மரச்சிராயமைப்பின் பக்கத்திற்கே பூசுதல் நன்று. ஒவ்வொரு முறையும் பூசும்போது தூரிகையின் டையாளம் வெவ் வேறாயிருக்கக் கூடாது. ஆகையால், முதற் பூசிய தூரிகையடையாளத் தினோரம் ஈரமாயிருக்கும் போதே அதிலிருந்து தொடர்ந்து பூசல்வேண்டும். இதனைச் சிறப்பாக, விரைவிற் காய்ந்து போகும் நீர்ச்சாயம், மதுசாரச் சாயம் என்பவைகளைப் பூசும்போது கவனிக்க வேண்டும்.)
நிறம் பூசும் போது கீழேயுள்ள விடயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்க. (அ) தூரிகையின் பூச்சடையாளங்கள் வெவ்வேறாகத் தெரிய இடமளிக்கக் கூடாது. (ஆ) நிறத்தை ஒரு முறை பூசி அதன் மேல் இன்னுமொரு முறையோ பலமுறையோ பூசினால் தடிப்பான நிறமுண்டாகும். (இ) பாதி நிறமுள்ள சாயத்தையே மரங்களின் குறுக்கு வெட்டு முகங்களுக்கு உயோகிக்க வேண்டும்.
தூரிகையைப் பாதுகாத்தல் :
எண்ணெய்ச் சாயத்திற்குபயோகிக்கும் தட்டைத் தூரிகையை வேலை முடி வடைந்ததும் தெரப்பந்தைலத்திலிட்டு வைக்கவேண்டும். எப்பொழுதும் வேலைக்கெடுக்காவிடின் சவர்க்கார நீரினாற் கழுவிக் காயவைக்க வேண்டும். எப்பொழுதும் உபயோகத்திற்கெடுப்பதாயின், படத்திற் காட்டப்பட்டுள்ள மாதிரி நீர்ப் பாத்திரத்தினுள் வைத்தல் நல்லது.
நீர்ச்சாயத்திற் குபயோகிக்குந் தூரிகையைச் சவர்க்கார நீரிற் கழுவிக் காய வைத்தல் வேண்டும். மதுசாரத்திற்குபயோகிக்கும் ஒட்டகமயிரிற் செய்யப்பட்ட தூரிகை பெறுமதியுடையதாகையால் நன்றாகப் பாதுகாக்கப் படும். பிரெஞ்சுப் பூச்சிற்காகவும் உபயோகப்படுமித் தூரிகையை, வேலை முடிந்ததும் மெதனோல்சேர்மதுசாரத்தில் கழுவுதல் நன்று.
சுவரொட்டிக்குப் பூசுஞ் சாயத்திற்குபயோகிக்குந் தூரிகையின் வேலை முடிந்ததும் நீரிலோ செலுலோசுப் பூச்சிலோ (சாயம்) தூரிகையை அதற் குரிய கல்வையிலோ சுத்தஞ் செய்ய வேண்டும். (ஆ) மினுக்குதல் - ஆளிவிதை எண்ணெய். ஆளிவிதை எண்ணெயுடன் தெரப்பந்தைலம் சிறிதளவு சேர்த்து உறுதியான தூரிகையினால், அல்லது துணியைச் சிறுதலையணைபோற் செய்யப்பட்ட சும்மாட்டினால் அழுதிப்பூசுக. இப்படிப் பலமுறை பூசித்

Page 57
96
சணலினாற் செய்யப்பட்ட சிறுதலையணை போன்ற உபகரணத்தினால் தேய்த்து மினுக்கினால் அழகானதும் நீண்டகாலம் நிலைக்கக் கூடியதுமான மினுக்க முண்டாகும். இம்முறை, தாமதமானதும் கடினமானது. எனினும் சிறந்த பலனைத்தரக் கூடியதாகும்.
மெழுகு :
இதற்குக் கடையில் விற்கும் மெழுகுக் கலவையை உபயோகிக்கலாம். ஆனால், மிகவுஞ்சிறந்த மெழுகுக் கலவையைக் கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி ஆயத்தஞ் செய்யலாம்.
தேன் மெழுகைச் சிறிய துண்டுகளாக்கி உலோகப்பாத்திரத்திலிட்டுத் தெரப்பந் தைலத்தைச் சேர்க்க. பின், இப்பாத்திரத்தை வெந்நீர்ப் பாத்திரத்தினுள் வைத்து நன்றாகக் கலக்க. கலவை ஆறிய பின் உபயோ கத்திற் கேற்றதாகும். இம் மெழுகுக் கலவையை மெல்லிய துணியினாற் பூசி இரட்டுத் துணியினால் விரைவில் தேய்த்தால் பொருட்கள் மினுக்க மடையும். தென்னந்தும்பிற் சிறிய தலையணைபோற் செய்யப்பட்ட உபகர ணத்தையோ இரப்பர்ப்பாசியுருவையோ, தேய்ப்பதற்கு உபயோகிக்கலாம். தேய்க்குமளவிற்கு மினுக்க முண்டாவதால் நன்கு தேய்த்தல் முக்கியம். மரச்சிராயினமைப்பை நோக்கித் தேய்த்தல் நல்லது. பொருளில் வெள்ளைப் பிரஞ்சுப் பொலிசை இரண்டு முறை பூசி, 0 இலக்கமுடைய அரத்தாளை யிட்டு, அதன் மேல் மெழுகுப் பூச்சைப் பூசி மினுக்குதல் இலகுவான முறையாகும். மெழுகு மினுக்கத்தினால் இயற்கை நிறமும் மரச்சிரா யமைப்பும் பாதிக்கப் படமாட்டா. முட்டைக் கோதினுட்புறம் போன்ற ' அழகான மினுக்கமுண்டாகும் நிறம் பூசப்பட்ட பொருட்களையும் இம் முறைப்படிமினுக்கலாம்.
பிரஞ்சுப் பூச்சு :
இதனைக் கொண்டு பொருட்களை மினுக்குவதற்குத் திறமையும் பயிற் சியும் அவசியம். இப்படி மினுக்கப்பட்ட பொருட்களுக்குப் பல சிறப்புக் களுண்டு. (அ) மேற்பகுதி இறுக்கமாயிருக்கும், நீண்டகாலம் நிலைத் திருக்கும். (ஆ) சுத்தஞ் செய்தல் இலகுவாயிருக்கும். (இ) மரத்தினியற் கையழகு கதிகரிக்கும். ஆனால், ஈரத்தினாலும் சூட்டினாலும் விகாரமடையும். - வெள்ளையான, அல்லது தெளிவான பிரெஞ்சுத்துலக்கி, பழுப்பு நிற மான பிரெஞ்சுத்துலக்கி, யென இரண்டு வகையுண்டு. வெள்ளைப்பிரெஞ் சுப்பூச்சினால் மரச்சிராயமைப்பும் நிறமும் மிகத் தெளிவும் அழகும் பெறும்.
பிரெஞ்சுப்பூச்சினால் மினுக்கும் போது மிகச்சிறந்த பலனைப் பெறுவதற்குக் கீழ்க்கண்ட முறைகளைக் கையாளுதல் நன்று.
(1) நிரப்புதல்.
(iv) அரத்தாளிடல். (ii) தூரிகையினால் பூச்சு வளையம் பூசுதல். | (v) பூச்சுப் பூசுதல். (iii) குறித்த நிறத்தைப் பெறுதல்.
(vi) முடித்தல்.

97
(1) நிரப்புதல்.
மரங்களிலுள்ள துவாரங்களை நிரப்புவதற்கு, மரச்சிராயமைப்பினூடே சாந்தையுட்பதித்தல், நிரப்புதல் எனப்படும். ஆயத்தஞ் செய்யப்பட்ட சாந்தைக் கடையிற் பெற்றுக் கொள்ளலாம். அல்லது மிக மென்மையா யரைக்கப்பட்ட பரிசுச்சாந்தையும் சாயத் தூளையுங்கலந்து தாம் விரும் பிய நிறமுள்ள சாந்தைச் செய்துகொள்ளல் வேண்டும். இத்தூள்களுடன் தெரப்பந்தைலத்தைச் சேர்த்துச் சாந்தை ஆக்குக. சிறிதளவு பசையைச் சேர்த்தால் சாந்து நன்றாக ஒட்டுந் தன்மையைப் பெறும். இதன்பின்பு, சாந்தை மென்மையான துணியினால் மரச்சிராயமைப்பின் பக்கத்திற்குப் பூசுக. பின் சுத்தமான சாக்குத் துண்டினால் மரச்சிராயமைப்பின் பக்கத் திற்கே துடைத்து, மேலதிகமான சாந்தை நீக்க.
(ii) தூரிகையினால் பூச்சு வளையம் பூசுதல்.
பூசியசாந்து காய்ந்த பின் தூரிகையினால் பூச்சு வளையத்தைப் பூசிக்காய விடுக.
(iii) குறித்த நிறத்தைப் பெறுதல்.
பூச்சுப் பூசியதும் பொருளிலுண்டாகும் நிறம் காணப்படும். இதன்மேல் இன்னொருபூச்சுப்பூசினால் நிறம் போதியவளவு மாற்றமடையாது. ஆகையால் குறித்த நிறத்தைப் பெறுவதற்கு மதுசாரச் சாயம் சிறிதளவு பிரஞ்சுப் பூச்சுடன் கலந்து கொள்க. இதனைப்பூசினால் குறித்த நிறத்தைப் பெறலாம். (iv) தேய்த்தல்.
இதன் பின்பு பொருட்களைக் காயவிட்டு , 0 இலக்கமுள்ள அரத்தாளிடுக.
(22
79 ஆவது படம் : 1. தலையணை போன்ற உபகர ணம்.
2. உபகரணத்தினால் - பூச வேண்டிய மாதிரி.

Page 58
98
(v) பூச்சுப் பூசுதல்.
இதற்குச் சுத்தமான சீலைத்துண்டுகளை , அல்லது பருத்திப்பஞ்சைக் கொண்டு செய்த சிறிய தலையணை போன்ற உபகரணத்தைச் செய்து கொள்க. உபகரணத்தைச் செய்யும் போது முதலாவதாகப் பருத் திப்பஞ்சைப் பிரெஞ்சுத் துலக்கியில் நன்கு ஊறவைத்துப் பிழிந்தெடுத்து லி, அதனை மெல்லிய துணியிலிட்டுச் சுற்றிக் கொள்வது நல்லது.
-இவ்வுபகரணத்திற்கு இரண்டொரு ஆளிவிதை எண்ணெய்த் துளியிட்டால் பூசுவது இலகுவாயிருக்கும். அதன்பின் வேண்டிய போது உபகரணத்தைப் பூச்சில் தோய்த்துப் பொருளிற் பூசுக. இங்கு ஒரு அந்தத்திலிருந்து மற்றை அந்தத்திற்கு எட்டின் வடிவினதாகப் பூசுதல் நல்லது. பூசியவிடத்தில் திரும்பவும் பூசக்கூடாது. அடிக்கடி உபகரணத்தின் மீது, இரண்டொரு ஆளிவிதை எண்ணெய்த் துளிகளை விட்டாற் பூசுவதிலகென்பதை அறிக. ஒரத்திற்கும் ஒடுங்கிய பகுதிக்கும் ஒரே பக்கமாக நீளத்திற்குப் பூசுதல் நல்லது. இப்படி ஒரு முறை பூசிக்காய்ந்த பின் அதன் மேல் ஒன்று, அல்லது பலமுறை முன்கூறிய மாதிரிப் பூசல்வேண்டும்.
80 ஆவது படம் : பூச்சுப் பூச வேண்டிய மாதிரி. முடிக்கும் மாதிரி.
பூச்சு நன்றாகப் பிடிப்பதற்கு இரண்டொரு நாட்களின்பின் பொருளை 0 இலக்கமிட்ட அரத்தாளினாற் தேய்க்க. அதன்பின் பிரஞ்சுப் பூச்சைத் தலையணை போன்ற உபகரணத்தினால் அழுத்துக. முழுப்பகுதியையும் பூசிய ' பின்பே உபகரணத்தைப் பொருளிலிருந்து எடுக்க வேண்டும். இவ்வாறு முடிப்பதற்குப் பூச்சுப்பூசும் போது பூச்சுடன் படிப்படியாக மெதனோல்சேர் மதுசாரத்தைச் சேர்த்து மேலே கூறிய படிபூசுக. இவ்வாறு, மெதனோல் சேர்மதுசாரத்தையதிகம் பூசியபின், கடைசியாக அம்மதுசாரத்தால் மட்டுமே பொருட்களைத் தடவ வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் ஆளிவிதை எண் ணெயை உபயோகிக்கக்கூடாது. ஒரேயிடத்தில் தடிப்பாகப் பூசாமலும் உபகரணம் பொருளிலொட்டிக் கொள்ளாமலும் பார்த்துக் கொள்ளுதல் மிகமுக்கியம். உபகரணம் ஒட்டிக்கொண்டால் சிலவேளை பூச்சுக் கழன்று போகும் ; தழும்பு உண்டாகும். உபகரணத்தை நிறுத்தாது நீளத்திற்குப் பூசுக.

99
உபக
இதன் பின்பு உபகரணத்திற்குப் யோகிக்கும் மதுசாரத்தைப் படிப்படி யாகக்குறைக்க . இப்படிப்பலமுறை தேய்ப்பதால் சிறந்தமினுக்கமுண்டாகும்)
பூசுவதற்குக் கடினமாயிருக்கும் செதுக்கு வேலைப்பாடுள்ள இடங்களிலும் ஒடுங்கிய விடங்களிலும் பென்சோயின் பூச்சை ஒட்டகமயிராற் செய்த தூரிகையினாற் பூசுக.
பிரஞ்சுத்துலக்கியால், பொருட்களை மினுக்குவதற்கு உபயோகிக்கும் அறை, தூசியற்ற தாய்ச் சுத்தமாயி ருப்பது முக்கியம். காய்வதற்குத் தகுந்த சூடுடையதாயுமிருத்தல் வேண்டும். ஈரலிப்பினால் மினுக்கம் விகாரமடையும்.
மாக
பூச்சும், சாந்தும் செய்தல். ஆக்கஞ் செய்த பூச்சும் சாந்தும் விற்பனைக் குண்டு. இருந்தும் பூச்சை ந மாக ஆக்குவது மலிவாயிருக்கும்
வெள்ளைப்பிரெஞ்சுத்துலக்கி.
ஆறு அவுன்சு வெள்ளைச் செலாக்கை ஒருபைந்து மெதனோல் சேர்மதுசாரத்திற் கரைத்து வடித்தெடுக்க.
பழுப்புநிறப் பிரெஞ்சுத்துலக்கி . பழுப்பான, அல்லது தோடம்பழ நிறமுள்ள ஐந்து அவுன்சு அரக்குச்சீவல் ஒரு பைந்து மெதனோல் சேர்மது திற் கரைத்து வடித்தெடுக்க.
பென்சோயின் சாந்து.--தூளாக்கப்பட்ட பென்சோயினை (Gum benzoine மெதனோல்சேர்மதுசாரத்திற் 'கரைக்க.
பன்சோயின் பசை மூடுமளவிற்கு மதுசாரத்தை விடல்வேண்டும். இரண் டொரு நாட்களின் பின் நீர்ப்பகுதியைக் கவனமாகவடித்து நீக்க.
- மேன் 6
கவனிக்க வேண்டியவை :
(அ) பொருளை நிறமூட்டுவதற்கும் மினுக்குவதற்கும் முன் அதன்,
மேற்பகுதி அழுத்தமாகவும் சுத்தமாகவுமிருத்தல் மிக முக்கியம் (ஆ) பொருட் களின் மேற்பகுதியை அழுத்தமாக்குவதற்கு அரத்தாளிடுக (இ) பென்சோயின் சிறிதளவையிட்டுத் தேய்த்தால் எண்ணெய்த்
தன்மையை நீக்கலாம். (ஈ) வெந்நீரில் நனைத்த சீலைத் துண்டினால் துடைத்தால் வச்சிரம்
பாதிக்கப்படும்.

Page 59
100
9. ஆணியும், புரியாணியும்
மரப்புரியாணியையுபயோகித்தால் துருப்பிடித்தலும் உக்கிப்போதலும் தடை படும், பொருத்து உறுதியாயிருக்கும். நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும். இவை மட்டுமன்றிப் பொருத்துக்களையுடைய மரத்துண்டுகளுக்குச் சிறிதும் தீங்கின்றித் துண்டுகளைக் கழற்றலாம்.
சாதாரணமாக உபயோகிக்கப்படும் மரவாணிகளின் தலைகள் நான்கு வகைப்படும். அவை வட்டமானமுட்டையுருவமான தட்டையான, பிலிப்பிசு என்பவைகளாகும். ஏழாம் பத்தாம் இலக்கமுடைய மரப்புரியாணிகளே பெரும்பாலும் உபயோகப்படுகின்றன. ஏழாவது இலக்கமுடைய புரியாணி யினது காம்பின் விட்டம் 2 அங்குலமாகும். இம்மரப்புரியாணியை , 4, 1,13,14 அங்குல நீளங்களிற் பெற்றுக்கொள்ளலாம்.
10 வது இலக்கமுடைய மரப் புரியாணியினது காம்பின் விட்டம் -- அங்குல் முடையதாயிருக்கும். இப்புரியாணியை 4,1,14, 13, 2, 23, 3, 34, அங்குல நீளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
தட்டையான தலைகளையுடைய புரியாணிகளை ஆணியின் தலைநுனியிலிருந்து கூர்வரைக்குமளந்தே நீளத்தை அறிய வேண்டும். வட்டமான, பிலிப்பிசு மரப்புரியாணிகளை ஆணியின் தலைகளின் கீழேயிருந்தளக்கவேண்டும். முட்டை வடிவமான பகுதியும் தட்டையான பகுதியும் பொருந்துமிடத்திலிருந்து கூர்வரையுமளக்கவேண்டும்.
உருக்கு, செம்பு, வெண்கலம் முதலிய உலோகப்பொருட்களில் புரி யாணிகள் செய்யப்படுகின்றன. இப்புரியாணிகளை மினுக்கமுடையவைகளாக வும், நீல நிறமுடையவைகளாகவும், நிக்கல் நிறமினுக்கமுடையவைகளாகவும், மினுக்கமுடையவைகளாகவும், செம்பு, வெண்கலமினுக்கங்கடை யழுவை களாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஈரலிப்பைத் தாங்கக்கூடிய பொருட் களைச் செய்வதற்கு செம்பு, வெண்கல் ஆணிகளுபயோகிக்கப்படுகின்றன. வள்ளம், பாதை போன்றவைகளுக்கிவ்வாணி சிறந்தது.
81 ஆவது படம் :
1. வட்டவடிவான ஆணி. 2. முட்டைவடிவான ஆணி. 3. தட்டையான பிலிப்பிசு ஆணி.
+
2 - 3

101
புரியாணித்துளை : புரியாணியையுட் பதித்தற்கு இரண்டு துளைகள் அவசியம். முதலாவது, வெளித்துளை. இது ஆணியின் காம்பிற்கு ; மற்றைய துளை ஆணியிலுள்ள புரிகளடங்கிய பகுதிக்கு. இவற்றிற்கு ஏற்ற கூரிய துளை யாணியால் தவ்வைத் துளைக்க தொடங்க வேண்டும். ஆணியின் காம்பிற்குரிய துளை ஆணியின் காம்பினளவாகவோ, சிறிது பெரிதாகவோ இருக்க வேண்டும். புரிகளுக்குரிய துளை, ஆணியின் காம்பிற்குரிய துளையிலும்
அங்குலம் சிறிதாயிருத்தல் நல்லது.
தட்டையான தலையையுடைய புரியாணியை யுட்பதிக்கும் போது ஆணியின் தலை , பொருளோடு மட் டமாயிருக்கும்படியாக உட்பதித்தல் வேண்டும். இதற்கு மெலிதமரலகினால் துளை இடுதல் வேண்டும். ஆணியின்புரிகளுக்குச் சவர்க்காரம், அல்லது மெழுகு சேர்த்தால் புரியாணியுட்பதித்தற்கு இலகுவாயிருக்கும்.
திருகாணி பூட்டல் : இதற்கு, ஆணியினிறக்கத்திற்கு நன்கு பொருந்தக் கூடிய திருகாணி முடுக்கியை உபயோகித்தல் வேண்டும். அது ஆணியிறக் கத்திலும் பெரிதாயிருக்கக் கூடாது. இதனால் சறுக்குவது தடைப்படு மாதலால் ஆணியிறுக்கத்திற்குத் தீங்கேற்படாது. ஆணியடிக்கும்போது கவனிக்க வேண்டியவை :-
1. அளவுக்கு மிஞ்சி நீண்டதும் மொத்தமுடையதுமான ஆணியை உபயோகிக்கக்கூடாது.
2. போதியவளவு சரிந்திருக்கும் படியாக ஆணியடித்தால், பொருத்து நன்கு பெலமடையும். இப்படி ஆணியடிக்க வேண்டிய மாதிரி, படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. - 3. மரம் வெடிக்குமடையாளந் தெரிந்தால், வெடிக்கும் மரங்களில் தவ்வைத் துளைத்துக் கொள்ளல் வேண்டும். துளை, ஆணியின் காம்பிலும் ஓரளவு சிறிதாயிருக்க வேண்டும். ஆணியின் கூரில் சிறிதளவு சவர்க்காரம், அல்லது மெழுகைத் தடவினால் வெடிப்பைப் பெருமளவிற்குத் தடை செய்யலாம்.
82 ஆவது படம் : ஆணியடிக்க வேண்டிய மாதிரி.

Page 60
102
4. ஆணி வளைந்தால் அதை நிமிர்த்தி இடுக்கியினால் பிடித்துக்கொள்ள வேண்டும்.
5. ஆணியைக் கழற்ற நேர்ந்தால் சுத்தியலின் கீழ் ஏதாவதொன்றை வைத்துச் சுத்தியலினிடுக்கியினால் கழற்றுக.
6. ஒரே நீளத்திற்கு ஆணியடித்தால் வெடிப்புண்டாக இடமுண்டு. சில வற்றை இடது பக்கத்திலும் சிலவற்றை வலது பக்கத்திலும் அடிக்க.
7. ஆணியின் தலையிலும் ஓரளவு சிறிய ஆணியமுக்கியினால் அவ்வாணி யின் தலையைப் போதியவளவு உட்பதித்து, அத்துவாரத்தை மக்கு, அல்லது மென்) பிளாத்திக்கு மரத்தூள் கொண்டு நிரப்பி மட்டமாக்குக.
8. பழகுபவர்கள் சில வேளைகளில் சுத்தியலால் ஆணியின் தலையி லடிப்பதற்குப் பதிலாக பொருளில் அடிப்பார்கள். இதனால் பொருள் தாக்கமடையும். சில துளி நீரைத் தாக்கமடைந்த விடத்திலிட்டு அரக் கடதாசியினால் தேய்த்தால் தாக்கமடைந்த இடம் சீரடையும். ஆணியடிக்கும் போது மத்தியில் துவாரமுள்ள தோற்றுண்டொன்றையுபயோகித்தால் நல்லது.
------
83 ஆவது படம் : ஆணிகளை இடது வலது பக்கங்களி லடித்தல்.
கடி 2

103
10- தேசீய முறைகளும் காட்டுருக்களும்
செதுக்குதல், உட்பதித்தல், கடைச்சலெந்திரத்திலுறுப்பாக்கல் ஆகிய வைகளைப் பண்டைக்காலத்தில் பொருட்களைச் செய்வதற்க்குப் பெரும்பாலும், உபயோகித்ததாகத் தெரிகிறது. துட்டகைமுனு அரசனாற் செய்விக்கப்பட்ட, ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள ஒன்பதடுக்குக்களில் எட்டடுக்குக்கள் மரத்தி னாற் செய்யப்பட்டன வென்றும், இம்மாளிகை மரவேலைப்பாடுகளினாலும், கொடி வேலைப்பாடுகளினாலும் அழகு செய்யப்பட்ட தென்றும் புத்தகங்களிற் காணப்படுகிறது. பொல்லனறுவையின் உச்ச காலத்தில் மரவேலைக்குச் சிறந்த இடமளிக்கப்பட்டிருந்ததைப் புராதன சிதைவுப் பொருட்களிலிருந்து அறியக்கூடியதாயிருக்கிறது. அம்பக்கை தேவாலயம், கண்டி மங்களமண்ட பம் முதலியவைகளிலிருந்து, கண்டியின் உச்சகாலத்தில் செதுக்குதல் சிறப்புற்றிருந்ததாகத் தெரிகிறது. பண்டைக் கால மக்கள் பொருட்களை அலங்கரிப்பதற்குச் செதுக்குதலை உபயோகித்ததாகப் பழைய வீட்டுத் தளவாடங்களின் மூலம் அறியக்கிடக்கிறது.
பண்டைய மக்கள் உட்பதித்தலுக்கும் நன்கு மதிப்புக் கொடுத்தனர். பெட்டகம், கட்டிற் சட்டம், தேய்மேசை போன்ற பெரிய பொருட்களையும், நகைப்பெட்டி போன்ற சிறிய பொருட்களையும் யானைத்தந்தம், கருங்காலி மரம் என்பவைகளை யுட்பதித்து அழகு செய்தனர்.
செதுக்குதல் : சில பொருட்கள் செதுக்குதலினால் நன்கு அழகுறும் இதனால் எல்லாப் பொருட்களுக்கும் செதுக்குதல் அவசியமென்றெண்ணக் கூடாது. ஆனால், ஏதாவதொரு பகுதி செதுக்குதலினால் அழகுறுமாயின் அதற்கு அம்முறையை உபயோகிக்கலாம்.
84 ஆவது படம் : இலகுவான கேத்திரகணிதக் காட்டுருவைச் செதுக்க வேண்டிய மாதிரி AB, AC, AD, கோடுகளின் நீளத்திற்கு 4 அங்குலமளவிற்கு ஆழமுண்டாகும்படி வெட்டுக.
அடுத்ததாக BC, BD, CD இலிருந்து மையம்வரை கோணவடிவமாக வெட்டுக.
உபயோகிக்கும் மேற் பகுதியிலேயே பொருளின் பெறுமதி தங்கியுள்ளது. எனவே, செதுக்குதலினாற் பொருளினுபயோகத்திற்குத் தடையேற்படக் கூடாது. செதுக்குதலினால் மேசையின் மேற்பரப்பு அழகாயிருந்தபோதிலும் உபயோகத்திற் கேற்றதன்று.

Page 61
104
|2 ||=ா |
Eਮਪਪਪਰ .
NIDil])
டி
3
STITUTINITITII
- 85 ஆவது படம் : செதுக்கிய சித்திரக் காட்டுருக்கள். உளி, நகவுளி, செதுக்கும் ஊசி, பிரிக்குங் கருவி, கத்திபோன்ற கருவிகளை உபயோகித்துச் சிகரட்டுப் பெட்டி, நகைப்பெட்டி, புத்தகம் தாங்கி போன்ற சிறிய பொருட்களைச் செதுக்கி அலங்காரச் சித்திரங்களை யமைக்கலாம்.
இவற்றுட் சில, செதுக்கிய காட்டுருச் சித்திரங்கள் ; பெரிய பொருட்க ளுக்கும் பொருத்தமானவை. இவற்றிற்கும் மேலே கூறிய கருவிகளையுப் யோகிக்க வேண்டும். தேய்மேசைக் கால்கள், புத்தக ஏந்தானம், கட்டிற் சட்டம் முதலியவைகளுக்கு இக் காட்டுருக்களையுபயோகித்தல் நன்று.

105
உட்பதித்தல் : பலவிதமான நிறங்களையுடைய மரம், உலோகம், சிப்பி, யானைத்தந்தம் முதலியவைகளைப் பொருளின் மேற்பரப்பில் மட்டமா யிருக்கும்படி அழகான காட்டுருக்களை அமைத்தலே உட்பதித்தல் எனப் படும். பொருளின் மேற்பரப்பு நிறத்திற்குப் பொருந்தக் கூடிய பொருளை மேலே கூறிய பொருட்களில் தெரிந்து பதித்தால் நிறத்தினழகு சிறப்புறும். ஆகையால் பொருத்தமான நிறத்தைத் தெரிவுசெய்தல் முக்கியம். கூரான அந்தத்தினையுடைய காட்டுருக்கள் முறிந்துபோகுமாகையால் மரத்தினுட் பதிக்கவியலாது. ஆகையால், அவ்வப் பொருட்களுக்கேற்ற காட்டுருக்களை யமைத்தல் நன்று. படத்திலே இலையில் கீழே காட்டியவாறு உட்பதித்தற் காட்டுருவை யமைக்கலாம்.
N 70
86 ஆவது படம் : 1. உண்மையான இலை. 2. காட்டுரு.
முதலாவதாக உட்பதிக்கப்படும் பகுதியை ஆயத்தஞ் செய்யவேண்டும். இதனை 5 அங்குலந் தொடக்கம் 8 அங்குலம் வரையுள்ள தடிப்பான மரச்சட்டத்திலோ, வேறு பொருளிலோ வெட்டிக்கொள்ளல் வேண் டும். இதற்கு ஒடுங்கிய வாளையுபயோகிக்க வேண்டும். இதன்பின்பு வெட்டியெடுத்த காட்டுருவை மேற்பரப்பில் வைத்துக் கூரிய முனையொன்

Page 62
106
றினால் வரைந்து கொள்க. அடுத்ததாக வரைந்த கோட்டிற்குட்பட்ட மரப் பகுதியைத் தகுந்தவளவு ஆழத்திற்கு வெட்டியெடுக்க வேண்டும். இதற்கு, முதலில் வட்டமான கோட்டின் நீளத்திற்குச் செங்குத்தாக வெட்டுக. அதன் பின்பு வட்டமான கோட்டைச் சீவுக. அடுத்ததாக நடுப்பகுதியை மட்டமாக்குக.
87 ஆவது படம் : 1. வட்டமான கோட்டின் நீளத்திற்குச் செங்குத்தாக வெட்டுதல். 2. இரண்டாவது படி. 3. நடுப்பகுதியை நீக்குதல்.
இதன்பின்பு வெட்டப்பட்ட காட்டுருக்களில் வச்சிரம் பூசி உட்பதிக்க வேண்டும். வெப்பமாக்கிய சுத்தியலை யுபயோகிக்க வேண்டும். இதற்குச் சாதாரண சுத்துயலை வெந்நீரிலிட்டெடுத்தாற் போதியதாகும்.

107
தக
88 ஆவது படம் : இலகுவான உட்பதித்தற் காட்டுருக்கள்.
ஒடுங்கிய சட்டங்களை யுட்பதித்தும் பொருட்களை அழகு செய்யலாம். ஃ அங்குலந் தொடக்கம் 2 அங்குலம் வரை அகலமானதும் 2 அங்குலந் தொடக்கம் 5 அங்குலம் வரை தடிப்புள்ளதுமான சட்டத்தை உபயோகித் தல் சாதாரண வழக்கமாகும். இச் சட்டங்களை யுட்பதித்தற்குப் பழைய வாளினலகில் இந்த அலகை அமைத்துக்கொண்டு, அழகு செய்தல், வேலை முடித்தல், என்னும் பகுதிகளிற் கூறப்பட்ட மாதிரி, அலகையுப் யோகிக்கும் கருவியைப் கொண்டு உட்பதிக்கும் பகுதியை வெட்டிவிடலாம்.

Page 63
108
89 . ஆவது படம் : 9 உட் பதித்து அழகு செய்யப்பட்ட பல பொருட்கள். A பெட்டியின்
மூடிக்குப் பொருத்தமான உட்பதித்தற்காட்டுரு.

109
11. கருவிகளைப் பாதுகாத்தல்
வேலைக்கெடுக்கும் கருவிகளையும் உபகரணங்களையும் தச்சுப் பட்டடை மேசைமேல் பரப்பிவைத்திருப்பது சாதாரண வழக்கமாகும். இவ்வாறு கருவிகளும் உபகரணங்களும் தச்சுப்பட்டடை மேசைமேல் நிரம்பியிருந் தால் வேலை செய்வது கடினமாவதோடு ஆபத்தாயுமிருக்கும். ஆகையால் தேவையற்ற கருவிகளெல்லாவற்றையும் கருவியலுமாரியில் அந்தந்தக் கருவிகளுக்குரிய இடங்களில் வைக்க வேண்டும். வேலைக் கவசியமாகும் போது உரிய ஆயுதங்களை யெடுத்தல் நல்லது.
மொட்டையான கருவிகளினால் வேலை செய்வதால் களைப்புண்டாவதோடு ஆபத்துமுண்டாகும். ஆகையால், ஒருபோதும் சிதைவடைந்த, அல்லது மொட்டையான கருவிகளினால் வேலை செய்யக்கூடாது. கருவிகளைக் கூராக் குவதற்கு நேரத்தைச் செலவிடுவதால், அது வேலைசெய்யும் நேரத்தைச் சுருக்க உதவுகிறது என்க.
கூராக்கப்பட்ட வாள், உளி, சீவுளியலகு, கத்தி முதலிய கருவிகளின் வெட்டுங்கூர் மிகவும் நுண்ணியது ; பெலமற்றது: ஆகையால் விரைவில் ஒடியுந் தன்மையுடையது. வெட்டுங்கூரை இரும்பாணி போன்ற உலோகப் பொருட்களோடு உரோஞ்சினால் சிதைவடையும். ஆகையால் இம்மாதிரியான கருவிகளை வைக்குமிடத்திலும், வைக்கும் மாதிரியிலும் கவனமாயிருத்தல் வேண்டும். பல கருவிகளைக் கொண்டு போகும்போது ஒன்றோடொன்று உரோஞ்சுப்படா வண்ணம் கொண்டுபோதல் முக்கியம். இம்மாதிரியான விடத்து வாட்களை வெவ்வேறு உறைகளிலிட்டுக்கொண்டு போதல் நல்லது.
கூர் நிலத்திலோ வேறிடத்திலோ உரோஞ்சும் படியாகச் சீவுளி யலகு, உளி என்பவைகளை வைத்தல் கூடாது. இவ்வாறு வைத்தால் மணல் போன்றவைகளோடு உரோஞ்சுப்பட்டுக் கூரொடிந்து போகும்.
கருவிகளைத் தச்சுப்பட்டடை மேசைமேல் வைக்கும்போது ஏதாவதொன் றுடனோ ஏதாவதொன்றிலோ முட்டுப்பட்டுக் கீழே விழுவதைத் தடுப்ப தானால் மேசையினோரங்களில் வைக்கக்கூடாது.
வேலைக் கெடுத்தபின், கருவிகளிலுள்ள உலோகப் பகுதிகளை நன்றாகச் சுத்தஞ் செய்து (சீலைத் துண்டினால் துடைத்து) நிலக்கரிநெய் பூசி வைக்கவேண்டும். நிலக்கரிநெய் இல்லாவிடின் - தேங்காயெண்ணெய் பூசுதல் நல்லது. ஆனால், கூரிலும், அரம், முள்ளரம் போன்ற கருவி களிலும் நிலக்கரிநெய் பூசக்கூடாது. சீவுளிபோன்ற வற்றை எப்போ தாவது ஆளிவிதை எண்ணெயைப் பூசித் துடைத்தால் பாதுகாப்பாகவும் மினுக்கமாகவுமிருக்கும்.

Page 64
110
(அ) கருவிகளிலுள்ள உலோகப்பகுதிகளை நிலக்கரிநெய், அல்லது தேங்
காய் எண்ணெய் பூசிய சீலைத் துண்டினால் துடைத்தல் நல்லது. இதனால் துருப்பிடித்தல் தடைபடும். வெட்டுங் கூரில்
நிலக்கரிநெய் போன்றவற்றைப் பூசக்கூடாது. (ஆ) கறளைக் கண்டால் உடனே மெல்லிய எமரித்துண்டினால் கறளைச்
சுரண்டித் துடைத்து நிலக்கரிநெய், அல்லது தேங்காயெண்ணெய்
பூசவேண்டும். (இ) கருவிகளிலுள்ள மரப்பகுதிகளை இடையிடையே ஆளிவிதைநெய்
பூயெ சீலைத்துண்டினால் துடைத்தால் சிதைவுதடுக்கப்படும்.
(ஈ) கருவிகளை ஈரமானவிடங்களில் வைத்தால் துருப்பிடிக்கும்.
(உ) கருவிகளிலுள்ள வெட்டுங்கூர் மிகவும் நுண்ணியதாகையால் கடின
மான பொருட்களிலுரோஞ்சினால் சிதைவடையும். இரும்பாணி போன்ற வற்றில் உரோஞ்சுப்பட்டால் கருவிகள் பெரும்பாலும்
சிதைவுறும். (ஊ) வேலை செய்தபின் சீவுளியலகைக் கழற்றிச் சீவுளிக்கூட்டை
சுத்தஞ்செய்தல் வேண்டும். எல்லாக் கருவிகளையும் மேலே கூறிய வாறு கவனமாக வைக்கவேண்டும்.
எண்ணெய்க்கல் :
முழு மேற்பரப்பையுமுபயோகிக்க ; இதனால் நடுவே குழியேற்படாது. குழி விழுந்தால் சிறிதளவு தண்ணீரை விட்டு மணற் கல்லில் தேய்த்தால் மட்டமாகும். இதன் பின்பு யந்திரநெய் பூசப்பட்ட சீலைத்துண்டினால் துடைக்க. உபயோகத்தின் பின் எண்ணெய்க்கல்லை நன்கு சுத்தஞ்செய்க. இவ்வாறு செய்யாவிடின் எண்ணெய்க் கல்லிலுள்ள துவாரங்கள் உருக்கி னாலும் அழுக்கான எண்ணெயினாலும் நிரம்பும். எண்ணெய்க் கல்லை உபயோகிக்காதபோது அதனை மூடிவைக்க . திருத்தமாக உபயோகிக்காத எண்ணெய்க் கல்லைப் பரபின் எண்ணெய் தோய்த்த சீலைத் துண்டினால் நன்றாகத் துடைக்க . அதன் பின்பு பரபின் எண்ணெயைத் துடைத்து விட்டு மென்மையான யந்திர நெய்யைச் சிறிதளவு பூசுக.
இது

111
12. அழகு செய்தல் பொருட்களை அழகு செய்ய, அழகான ஒட்டுப் பலகைத் தகடுகளை ஒட்டும் முறை இன்னும் இந்நாட்டிற்குப் பழக்கத்தில் வரவில்லை. இது சம்பந்த மான விவரத்தை ஒட்டுப்பலகைபற்றிய அத்தியாயத்தின் கீழ்க் காணலாம்.
காட்டுருக்கள் வெட்டுதல் :
பொருட்களை அழகு செய்வதற்குத் தொடரலை போன்ற காட்டுருக்களை வெட்டுதலுஞ் சிறந்த முறையாகும். இதற்கு வேண்டிய அலகை, பழைய தச்சுவளி தகட்டையோ அடைசு பலகை வாளின் துண்டையோ வேண்டிய உருவிற்கு அரத்தினால் தேய்து ஆயத்தஞ் செய்துகொள்ளலாம். இவ் வலகை உபயோகிப்பதற்குப் பொது மூலைமட்டம் போன்ற கருவியைச் செய்துகொள்வது நல்லது. காட்டுரு அலகை இங்கு வேண்டியபடி வைத் துத் திருகாணியையிறுக்கினால் அதனை விரும்பியபடி உபயோகிக்கலாம்.
90 ஆவது படம் : 1. அலகையுபயோகிக்கும் கருவி. 2. பலவகையான அலகுகள். 3. காட்டுரு வெட்டப்பட்ட பொருள்.

Page 65
112
அழுத்தஞ் செய்தலும் அரத்தாளிடுதலும் :
பொருள்களின் வேலைமுடித்தல் : (1) அழுத்தமாக்கல் (2) அரத்தா ளிடல் (3) நிறமூட்டலும் மினுக்கலும் என மூன்று வகையிலடங் கும். பொருளினது எல்லாப் பகுதிகளிலும் மென்மையான மேற்பரப்பை யுண்டாக்குதல் அழுத்தமாக்குதலெனப்படும். பொருள்களின் மரத்துண்டு களெல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பொருத்தியபின் சில பகுதிகளை அழுத்தஞ் செய்வது கடினமாகும். ஆகையால் பொருளைப் பொருத்து வதற்குமுன் அவற்றைப்படிமானச் சீவுளியினாற்சீவி அழுத்தமாக்க வேண்டும். படிமானச் சீவுளியின் பின், தச்சுவளிதகடு உபயோகிக்கப்படு கிறது. இது கூராயிருக்க வேண்டும். பொருளின் முழு மேற்பரப்பையும் தச்சுவளி தகட்டினால் அழுத்தஞ் செய்வது நல்லது. தச்சுவளித்கட்டைக் கோணவிட்டப்பக்கமாயுபயோகித்து, அதன்பின் மரச் சிராயமைப்பை நோக்கி யுபயோகிக்க வேண்டும்.
91 ஆவது படம் : தச்சு வளிதகட்டையுபயோகிக்க வேண்டிய மாதிரி. 2. தச்சுவளி தகட்டினாற் சுரண் 'டும் முறை.
அரத்தாளிடல் : - இதன் பின்பு அரத்தாளிடல் வேண்டும். அரத்தாளில் பல பிரிவுக ளுண்டு. இப் பிரிவுகளையொட்டி அவற்றின் தன்மைகள் வித்தியாசப் படும். 0, 1, 10, 2 (2 ஆம் பிரிவில் மூன்று வகையுண்டு.- மென்மை யான், மத்திமமான, கடினமான) 2) என்னுமிலக்கங்களையுடைய அரத் தாள்கள் உபயோகித்தற்குச் சிறந்தவை, வன்மரத்திற் செய்த பொருளுக்கு முதலில் 2 ஆம் இலக்க அல்லது 14 என்னும் இலக்கமுடைய அரத்தாளை . யும், பின் 0 ஆம் இலக்கமுடைய அரத்தாளையும், உபயோகித்தல் நல்லது. மென்மரங்களுக்கு மத்திமமான 2 ஆம் இலக்க 1ஆம் இலக்க அரத்தாள் கள் ஏற்றவை. பொருளின் சரியானவமைப்பு அழிந்து போகாவிருக்க அரத்தாளிடும்போது அவ்வவ்வுருவத்திற்கேற்ற அச்சை உபயோகித்தல் நன்று. சில வேளை காப்புவிளிம்பு, தொடரலை விளிம்பு என்பவைகளில் உரிய அரத்தாளிடாவிடின் விகாரமடையும். பொருட்களை அழுத்தமாக்குவதற்கு மட்டுமே அரத்தாளிடல் வேண்டும். இதனால் உருவத்தை மாற்றக்கூடாது.

113
13. மூட்டுக்கள் பொளிமூட்டு :
பொருத்த வேண்டிய இரண்டு மரத்துண்டுகளுள். ஒன்றில் துளையைத் துளைத்து மற்றையதில் இதற்குப் பொருத்தமான பொளியை (புறாவாலை) வெட்டிப் பொருத்துதல் பொளி மூட்டெனப்படும். இது சிறந்த மூட்டு முறையாகும்.
(அ) பொளியளவு கோலையுபயோகித்துத் துளையினதும், பொளியினதும்
தடிப்பைக் குறித்துக்கொள்க. (ஆ) பொது மூலைமட்டத்தை யுபயோகித்துத் துளையினகலத்தையும் பொளி
யின் நீளத்தையும் குறித்துக்கொள்க. (இ) பொளியடியுளியை யுபயோகித்துத் தவ்வைத் துளைக்க. இதனை .
நேராகத் துளைப்பது முக்கியம். (ஈ) தட்டுச் சீவுளியினாலரிந்து பொளியை யொழுங்கு செய்க. (உ) பொளியையும் தவ்வையும் துப்புரவாக்கிப் பொருத்துக.
92 ஆவது படம் : பொளி மூட்டு (பொளி தவ்வைத் துளைத்துக் கொண்டு போகும்).

Page 66
114
93 ஆவது படம் : அடங்கு குடுமி மூட்டு.
ப®
94 ஆவது படம் : சந்துப் பொளிக்கழுந்து மூட்டு.

14. பொருட்களைச் செய்தல்
புத்தகந்தாங்கி, பூந்தாழி தாங்கி, கடித ஏந்தானம், தட்டம், மெழுகு வர்த்தி தாங்கி முதலிய பொருட்களைச் செய்தல் இப்பருவ மாணவர்க்குப் பொருத்தமாயிருக்கும். கருவிகளைத் திருத்தமாக உபயோகிப்பது பற்றிய பயிற்சியையும், இணங்கவைத்தல், சட்ட மூட்டு, அரையாக்குமூட்டு, செருகன் மூட்டு, தவாளிப்புநாக்கு மூட்டு, மூக்குக் குடுமி மூட்டுக்கள், தலையில்லாணி மூட்டு, பொளி மூட்டு முதலியவைகளைப்பற்றிய பயிற்சியையும் பெறுவதே இப்பொருட்களைச் செய்வதின் நோக்கமாகும். இங்கு குறிப்பிட்ட பொருட் களை மட்டுமன்றி வேறு பொருட்களையும் தமது புத்தியைக் கொண்டு செய்வது முக்கியமாகும். பிறரைப் பின்பற்றுதல் நன்மையெனினும் அமைப்புச் சத்தியை நடைமுறைக்குக் கொண்டுவருதல் மிகச் சிறந்ததாகும். ஆகையால் அமைப்புச் சக்தியை வளர்க்கவும் கைகளுக்குப் பயிற்சி யளிக்கவும் பொருட்களைச் செய்தல் நன்று.
முட்டை யேந்தானம் - செய்கைமுறை
(அ) வேண்டிய பொருட்களின் அட்டவணை ஆக்குதல் (பலகைகளின்
நீளம், அகலம், கனம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும்.) (ஆ) வேண்டிய பலகைகளை வெட்டி யெடுப்பதற்கடையாளமிடல் (அடி
மட்டம், பொதுமூலைமட்டம், கத்தி, அல்லது பென்சில்). (இ) பலகைகளையரிதல். ('கழுந்துவாள்). (ஈ) சீவுதல் (பொதுச் சீவுளி, அழுத்தமாக்குஞ் சீவுளி, படிமானச்
சீவுளி).
.. (உ) பொருத்துக்களை வரைந்துகொள்ளுதலும் (வரைகம்பு) ஆயத்தஞ் செய்
தலும். (திறந்த வீட்டுமூட்டு - கழுந்துவாள், உளி). (ஊ) இரண்டடியமைப்பு வரைதலும் ; உருவம் வெட்டலும் (உளி,
வில்வாள், அல்லது முள்ளரம், வரைகம்பு). (எ) நடுப்பலகையில் துவாரங்களடையாளமிடுதல் (அடி மட்டம் இடுக்கி
மானி). (ஏ) துவாரங்கள்மைத்தல். (துறப்பணம், மென்றகடரிவாள், அல்லது
ஒடுங்கியவாள்). 'ஐ) ஆணியடிப்பதற்குத் துளை துளைத்தல் (துளையூசிச் கூர்). . (ஒ) ஆணியடித்தலும் வேலை முடித்தலும் (அரத்தாள்)
வாரா) - !
' :) ) 6-J.N. R 21997 (1/60)

Page 67
116
' |
||
| |
| 0 0 0 0
---
95 ஆவது படம் : முட்டை யேந்தானம்.
கடித ஏந்தானம்; செய்கைமுறை - (அ) பொருட்களினட்டவணைஆக்குதல். (ஆ) பலகைகளை அரிவதற்கடையாளமிடல். (இ) பலகைகளையரிதல். (ஈ) பலகைகளைச் சீவுதல். (உ) நடுப்பலகையுருவத்தை வரைதல். (இடுக்குமானி). (ஊ) உருவத்தை வெட்டுதல். (வில்வாள்). (எ) தாங்கியுடன் நடுப்பலகையைப் பொருத்தும் மூட்டை (திறந்த செரு
கன்மூட்டு) வரைதலும், ஆக்கலும். (வரைகம்பு, கழுந்துவாள்,
உளி). (ஏ) துளை துளைத்தல் (துளையூசிக் கூர்). (ஐ) ஆணியடித்தல். (ஓ) வேலையை முடித்தல் (அரத்தாள்).

117
(Hாம்
3
- 5!
96 ஆவது படம் : கடித ஏந்தானம்.
பூந்தாழிதாங்கி (இதனைத் தேய்மேசையாகவும் உபயோகிக்கலாம்). செய்கைமுறை :
(அ) பொருட்களின் அட்டவணை ஆக்குதல். (ஆ) வேண்டிய பலகைகளையும் மரங்களையுமரிதற்கு அடையாளமிடுதல். (இ) பலகைகளையரிதல். (ஈ) சீவுதல். (உ) நான்கு கால்களும் பட்டிகளோடு பொருந்தும் மூட்டுக்களைக் குறித்
தல். (பொளிமூட்டும் குறுக்குமடிமூட்டும்). (ஊ) இம்மூட்டுக்களை ஆக்குதல் (குறுக்குமடி மூட்டுக்குக் கழுந்து வாள்,
கழுந்து மூட்டுக்குப் பொளியடியுளி)... (எ) தவ்வைச் சுத்தஞ் செய்தலும் மூட்டுக்களைப் பொருத்துதலும். (ஏ) பட்டிகளைப் பொருத்துவதற்கு மரவாணிகளை ஆக்குதல். இதற்குக்
க கமுகு, அல்லது வேறு மரம் நல்லது (தரங்குளி). (ஐ) மரவாணிகளையுட்பதித்தற்குத் துளை துளைத்தல் (துறப்பணமும் முறுக்
கலகும்). (ஒ) மாவாணிகளையுட்பதித்தல்.

Page 68
118
(ஓ) மேலேயுள்ள பலகையை வரைதலும் அரிதலும். (ஒள) மேலேயுள்ள பலகையின் விளிம்பையும் தரங்கையும் ஆக்குவதற்கு
அடையாளமிடல். (வரைகம்பு). (க) விளிம்பைச் சீவுதல் (படிமானச் சீவுளி, அல்லது பொதுச் சீவுளி,
அல்லது தட்டுச்சீவுளி). (கா) மேலேயுள்ள பலகையைப் புரியாணியினால் பொருத்துவதற்கு
ஆணிவைக்க வேண்டிய விடத்தைக் குறித்தல். (கி) துளைதுளைத்தல் (துறப்பணம், சுருட்டுறப்பணவலகு, அல்லது முறுக்
கலகு, மெலிதமர்). (கீ) திருகாணி பூட்டல். (கு) வேலையை முடித்தல். (அரத்தாள்).
3
ME
97 ஆவது படம் : பூந்தாழிதாங்கி.
| /.. 1 ||
1. : '- ..

119
புத்தகந்தாங்கி : செய்கைமுறை -
(அ) பொருட்களினட்டவணை ஆக்குதல். (ஆ) மரங்களையும் பலகைகளையுமரிதற்கு அடையாளமிடுதல். (இ) மரங்களையும் பலகைகளையுமரிதல். (ஈ) பிரதானமான இரண்டு மரத்துண்டுகளைப் பொருத்தும் மூட்டை
அவரைதல் (தவாளிப்பு நாக்கு மூட்டு). (உ) மூட்டைஆக்குதல். (ஊ) மூட்டைப் பொருத்தித் துளையைத் துளைத்துத் திருகாணி பூட்டல். (எ) முதலாவது தாங்கிப்பலகைத் துண்டைப் பொருத்துவதற்குத்
துளைதுளைத்தலும் திருகாணி பூட்டுதலும். (ஏ) இரண்டாவது தாங்கிப் பலகைத் துண்டைப் பொருத்துவதற்குத்
துளைதுளைத்தலும் திருகாணி பூட்டலும். (ஐ) வேலையை முடித்தல்.
- -I'----%--%-
4
98 ஆவது படம் புத்தகம் தாங்கி.
கீழே கொடுக்கப்பட்ட கிடைப்படங்களைக் கவனமாகப் பரிசீலனை செய்து அதன்படி பொருட்களைச் செய்க. ஒவ்வொரு பொருட்களையுஞ் செய்வதற் குரிய பொருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பலவகையான பொருத்துக்கள் கொடுக்கப்பட்ட விடத்து விரும்பிய மூட்டையுபயோகிக்க.

Page 69
120
18"-
-பு
ல)
ماس)
99 ஆவது படம் : தட்டு சட்ட மூட்டு.
====
100 ஆவது படம் : மெழுகுவர்த்தி தாங்கி ; குறுக்கு மடி மூட்டு ; பொளி மூட்டு ; சட்ட மூட்டு.

121
15. கிடைப்படத்தை விளங்குதல்
நேரான சமவளவெறியம் : (Orthographic Projection) : கீழே கொடுக்கப்பட்ட படத்தில் சிறிய சுவர் ஏந்தானமொன்றின் படமும், நேரான சமவளவெறியமுறைப்படி வரையப்பட்ட எந்தானத்தின் முற்பக்கத் தோற்றமும், குறுக்கு வெட்டு முகத்தோற்றமும், இடைப்படமும் காட்டப் பட்டுள்ளன. முற்பக்கத் தோற்றமென்பது எந்தானத்தைக் கண்மட்டத்தில் வைத்து முற்பக்கத்திலிருக்கும் போது தெரியும் மாதிரியாகும். ஏந்தானத் தைக் கண் மட்டத்தில் வைத்துக்கொண்டு அதன் குறுக்குப் பக்கமாக நின்று பார்க்கும்போது தெரியும் தோற்றம் குறுக்கு வெட்டு முகத் தோற்ற மெனப்படும். மேலேயிருந்து பார்க்கும்போது தெரியுந் தோற்றம் கிடைப்படமெனப்படும்.
| | !
- -
9 -24'---%"-
101 ஆவது படம் : 1. ஏந்தானத்தின் படம். 2: முற்பக்கத் தோற்றம். 3. குறுக்கு வெட்டு முகத்தோற்றம். 4. கிடைப்படம்.

Page 70
122
இப்படத்தில், முற்பக்கத் தோற்றத்தைப் பற்றிக் கவனிப்போம். ஏந் தானத்தினுயரம் அதன் வலது பக்கத்திற் காட்டப்பட்டுள்ளது. இங்கு உயரம் அவ்வப்பகுதிகளாகப் பிரிந்திருப்பதைப்பற்றி" வலது பக்கத்திலுள்ள கோடு உங்களுக்குக் கூறுகிறது.
உயரம் : 4" +2!"+1" + 2;"+1"= 54".
முன்னே நிற்கும்போது ஏந்தானத்தின் தோற்றம் கீழே காட்டப்பட் டுள்ளது. இது 4" +53"+44" = 6" எனப் பிரிக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெளிவாகும். 4" எனக் காட்டப்பட்டிருப்பது ஏந்தானத்தினிரு பக்கங் களிலுமுள்ள இரண்டு பலகைகளினதும் தடிப்பினளவென்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.
ான
குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தின் கீழேயுள்ள அளவு இரேகையில் ஏந்தானத்தின் மிக அதிகமான அகலம் காட்டப்பட்டுள்ளது. இங்கு' புள்ளிக் கோட்டினால் இரு பக்கங்களிலுள்ள பலகைத் துண்டுகளில் மறைந் துள்ள தட்டும், கவரில் முட்டும் பலகைத் துண்டும் காட்டப்பட்டுள்ளன. அதன் தடிப்பும் குறுகிய அளவுக்கோட்டினாற் காட்டப்பட்டுள்ளது. ஆணி யடிக்க வேண்டிய இடங்களையும் இங்கு காணலாம்.
இப்பொருளைச் செய்வதற்கு முற்பக்கத் தோற்றமும் குறுக்கு வெட்டு முகத் தோற்றமும் போதியனவாகும். ஆனால், இங்கு இடைப்படமும் காட்டப்பட்டுள்ளது. மேலும், நாங்கள் சுவரில் முட்டும் பலகையின் தடிப்பி னளவை மட்டும் தெரிந்துகொள்ளல் வேண்டும்.
சமவள வெறியத்தையும், குறுக்குச் சம்வளவெறியத்தையும் பின்பற்றி வரையப்பட்ட இப்பொருளின் கிடைப்படங்களிரண்டு கீழே காட்டப்பட்டுள்ளன. இவற்றை மேலே காட்டியுள்ள கிடைப்படங்களுடன் ஒப்பிடுக்.
ன

123
102 ஆவது படம் :
1. சமவளவெறியத்தின்படி ஏந்தானத்தின் கிடைப்படம். 2. குறுக்குச்சமவளவெறியதின்படி ஏந்தானத்தின் கிடைப்படம்.

Page 71
124
16. சமவள வெறியம் பற்றிய அடிப்படை விடயங்களும் சமவள
வெறியங்களின் வகைகளும்
வேலை செய்யும் கிடைப்படத்தினது (Working Drawing) அல்லது குறிப்புப் படத்தினது முக்கிய நோக்கம், பொருளின் முழு விவரங்களையும் தெரியப்படுத்துவதாகும். ஆகையால், இம்மாதிரியான படத்தில், பொரு ளின் உருவம், நீளம், அகலம் ஆகியவைகளைப்பற்றிய அளவைகள், அவை அமைந்ததைப் பற்றிய சுருக்கமான குறிப்புக்கள் என்பன அடங்கியிருக்க வேண்டும்.
எழுத்துக்கள் :
நல்ல அமைப்பையுடைய எழுத்துக்களைச் சுயாதீனமாக எழுதலாமென்பது கிடைப்படத்தை வரையும் போது கவனித்தல் முக்கியமானது. கிடைப்படத்தி னழகு பெரும்பாலும் எழுத்தின்மீது தங்கியிருப்பதால் எழுத்துக்களை எழுதுவது பற்றி நல்ல பயிற்சியிருத்தல் வேண்டும். இதற்குக் குறுக்கு ஆதாரக் கோடுகளை வரைந்துகொள்வது எப்போதும் நன்மையைத் தரும். முதலில், சாய்வு, நிலைக்குத்துக் கோடுகளை வரைந்துகொள்வது நல்லது. அப்போது எழுத்துக்களை எழுதுவது இலகுவாயிருக்கும்.
அளவுகள் :
தெளிவானவையும் இலகுவாக வாசிக்கக்கூடியவையுமான அளவைகளை உபயோகிப்பது கிடைப்படம் சம்பந்தமான முக்கிய பிரிவாகும். இத்தொடர் பில் பின்வரும் விடயங்களைக் கவனிக்க வேண்டும் :-
(அ) எல்லா இலக்கங்களும் அளவிரேகைக்குச் செங்கோணமாயிருத்தல் வேண்டும் கிடைப்படத்தினடியிலிருந்தோ வலது பக்கத்திலிருந்தோ
பார்க்கும் போது வாசிக்கக்கூடியனவாக அமைக்க வேண்டும். (ஆ) ஒரே அளவையைத் திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. (இ) அளவுக்கோடும் மையக்கோடும் ஒன்றாயமையும்படி வரையக்கூடாது. (ஈ) ஒரே யினத்திலேயே அளவைக் குறிக்க வேண்டும். அங்குலத்தையும்
அடியையும் ஒன்றாக உபயோகிக்கக்கூடாது. 2 அடி 9 அங்குலம்,
16 அங்குலம் என ஒரே கிடைப்படத்தில் உபயோகிக்கக்கூடாது. (ஒ) ஓர் அம்படையாளம் மட்டும் விட்டத்திற்குபயோகிக்க வேண்டும்.

125
எறியங்களின் வகைகள் :
நேரான செங்குத்தெறியம் (Orthographic Projection) சித்திர வெறியம். (Pictorial Projection) எனப் பிரதான வகை இரண்டுண்டு.
செங்குத்தெறியம் (Orthographic Projecion). இவ்வெறியத்தின்படி, வரையப்படும் கோணங்கள், கோடுகளெல்லாம் திருத்தமானவையாகும். திட்டமான அளவைகளையுமுடைய வைகளாயிருக் கும். சித்திர வெறியத்தைப்போல் இதன் காட்சி விபரீதமடையாது. இவ்வெறி யத்தில் மூன்று பிரதான பிரிவுகளுண்டு. அவையாவன கிடைப்படம் (ஆகாயத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் தோற்றம்) முற்பக்கத் தோற் றம் ; குறுக்குத் தோற்றம் என்பன. கிடைப்படத்தில் நீளமும் அகலமும் காட்டப்படும். முற்பக்கத் தோற்றத்தில் நீளமும் உயரமும், குறுக்குத் தோற்றத்தில் அகலமும் உயரமும் காட்டப்படும். இது சுயாதீனமாகவோ கருவிகளை யுபயோகித்தோ வரையப்படும். இம்முறையில் பொருளின் உருவத்தைப்பற்றிய சரியான விவரங்கள் தெளிவாகும். இதன்படி, நீளம் அகலம், உயரம் ஆகிய மூன்றளவைகளையுடைய பொருளின் சரியான உருவம் மூன்று படங்களின் மூலம் காட்டப்படும்.
ஓரு தளத்தில் நீளம் அகலம் உயரம் என்னும் மூன்றளவைகளில் இரண்டைமட்டுமே காட்டமுடியும். ஆகையால், இம்மூன்றளவைகளையும் காட்டுவதற்கு ஒன்று ஒன்றிற்குச் செங்கோணமாயமைந்த மூன்று தளங் களில் வரையப்பட்ட மூன்று காட்சிகள் காட்டப்படல் வேண்டும். இம்மூன்று தளங்களில் ஒன்று குறுக்குத் தன்மையுடையது. மற்றையிரண்டும் இதற் குச் செங்கோணமாயமைந்துள்ள குத்துத்தளங்கள் ஆகும். இந்தத் தளங் கள் சந்திக்கும் கோடுகள் XY, YZ எனப்படும்.
மேல் தோற்றம் (கிடைப்படம்) என்பது பொருளினெல்லாப் புள்ளிகளி லிருந்தும் குறுக்குத் தளத்திற்கு நிலைக்குத்துக் கோடுகள் செல்வதாலுண் டாகும் காட்சியாகும். இது குறுக்குத் தளத்திற்குச் செங்கோணமாயிருக்கும் இதன்மூலம் நீளமும் அகலமும் காட்டப்படும். உயரம் காட்டப்படமாட்டாது. மரக்குற்றிபோன்ற யாதாவதொன்று குறுக்குத் தளத்திற்கு மேலே தூக்கப் பட்டுள்ளதென வைத்துக்கொள்க. இங்கு ஒவ்வொன்றினதும் நுனியின் மேல் கண்ணைவைத்துப் பார்த்தால் குறுக்குத் தளத்திற்கு நிலைக்குத்தாகச் செல்லும் புள்ளிகளை இணைத்தலாலுண்டாகுந் தோற்றம் மேல் தோற்றம் (இடைப்படம்) எனப்படும்.

Page 72
126
மேலே குறிப்பிட்ட பொருளின் முன் குத்துத்தளம் முன்னால் தூக்கப் பட்டுள்ள தென்று வைத்துக்கொள்க. இங்கு ஒவ்வொன்றினதும் நுனியில் முன்னே கண்ணைவைக்கும்போது முற் குறுக்குத் தளத்திற்கு நிலைக்குத் தாகச் செல்லும் புள்ளிகளை இணைப்பதன் மூலம், முற்பக்கத் தோற்ற முண்டாகும். இதன் மூலம் உயரமும் நீளமும் காட்டப்படும்.
இம்மாதிரி (பக்கக் குத்துத் தளத்திற்கு) நிலைக் குத்தாகச் செல்லும் புள்ளிகளை இணைப்பதினால் பக்கத்தோற்றமுண்டாகும். இதனால் உயரமும், அகலமும் காட்டப்படும். குறுக்குத் தளமும் பக்கக் குத்துத்தளமும், முன் குத்துத் தளமும் சமதளமான ஒரேதளமாக இருக்கும்படி நீட்டப் படுமென வைத்துக்கொண்டால், ஒரே படத்திலேயே இம்மூன்று தளங்களும் காட்டப்படலாம்.
...-
103 ஆவது படம் : மரக் குற்றி, செங்குத்தெறியத்தின்படி.

12
சித்திர வெறியம் ஒரு பொருளின் ஒரே தோற்றத்தில் நீளம், அகலம், உயரம் என்னும் மூன்று பக்கங்களையுமுடைய உருவத்தை ஒரே முறையிற் காட்டினால் அது சித்திர வெறியமென்றழைக்கப்படும். அதில் தூரத் தோற்றவெறியம், சமகோண வெறியம், குறுக்குத்தோற்றவெறியம் என மூன்று பிரதான வகைகளுண்டு.
பார்வை யெறியம் (Perspective Projection).
ஏதாவதொரு காட்சியையோ பொருளையோ ஓரிடத்திலிருந்து பார்க்கும் போது, தெரியும் மாதிரியைக் காட்டுவது பார்வை யெறிய மென்று சொல்லப் படுகிறது. கட்டடங்கள் போன்றவைகளை அமைத்த பின் தெரியும் மாதிரியைக் காட்டுவதற்கு வீடுகட்டும் சிற்பிகள் இம்முறையை உபயோகிக்கிறார்கள். இம் முறையில் சமாந்தரக் கோடுகள் படிப்படியாகக் கிட்டிச்சென்று கண்மட்டக் கோடான மறைவுப் புள்ளியிடத்தே தெரியாது போகும். இம்முறை பாட சாலைகளில் பொருள்களைப் பார்த்து வரைவதற்கு உபயோகிக்கப்படுகிறது.
104 ஆவது படம் : பார்வை எறியத்தின்படி பெட்டி யொன்று.
சமவள வெறியம் (Isometric Projection).
இங்கு எல்லாக் கோடுகளும் 30° கோணங்களையுண்டாக்கிக்கொண்டு செல்லும். இம் முறைப்படி வரையப்பட்ட படம் சில வேளைகளில் விபரீத மாகக் காட்டும். ஆனால், இம்முறைப்படி கிடைப்படம், முற்பக்கத் தோற்றம் குறுக்குத் தோற்றம் என்னும் மூன்றையும் ஒரே படத்திலே பார்த்துக் கொள்ளலாம். இம்முறை 120° வீதப்படி மூன்று அச்சுக்களில் தங்கி யுள்ளது.

Page 73
128
ச.
120
105 ஆவது படம் : சமவள வெறியத்தின்படி பெட்டி யொன்று.
சரிவெறியம் (Oblique Projection)
இம்முறைப்படி தளமொன்று இன்னொரு தளத்திற்கு முன் இருக்கும் போது தெரியும்படி செங்கோணமாக வரையப்படுகிறது. அடுத்த தளத்தை (பக்கத்தை) காட்டுவதற்காக 45° கோணத்தை ,யுண்டாக்கிக்கொண்டு கோடு செல்கிறது. படத்திலுள்ள விபரீதத் தன்மையை நீக்குவதற்காக மிகுதி யான பகுதிகளைக் காட்டும் கோடுகள் திருந்திய அளவிற்கு வரையப்படுவ தில்லை. இதற்குக் குறிக்கப்பட்ட நீளத்தின் அரைப்பங்கிற்கே வரையப்படுகிறது.
106 ஆவது படம் : சரி வெறியத்தின்படி பெட்டி யொன்று.
செங்குத் தெறிய முறையே அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. இம்முறைப் படி எல்லாப் பக்கங்களும் திட்டமான அளவைக் காட்டும். மரப் பொருட் களுக்குச் சமவள வெறியமும் உபயோகிக்கப்படுகிறது.

129
17. கோடுகள், இலக்கங்கள், எழுத்துக்கள்
கிடைப்படங்களை வரையும்போது பலவகையான கோடுகளும், எழுத்துக் களும் உபயோகிக்கப்படும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கருத் துக்களை வெளியிடுவதனால் இவற்றைப்பற்றிய அறிவைப் பெற்றுக்கொள் வது நல்லது.
கோடுகள் :
தடிப்புக் கோடு மற்றைக் கோடுகளிலும் தடிப்பானது. இக்கோட்டினால் கிடைப்படத்தின் பிரதான கோடுகள் காட்டப்படும் A.
அமைப்புக் கோடு : கிடைப்படத்தை யமைப்பதற்கவசியமான விக்கோடு நன்றாக விளங்கிக்கொள்வதற்குச் சில வேளைகளில் மீதிப்படுத்தப்படு கின்றது. B.
புள்ளிக்கோடுகள் : மறைந்த விவரங்களைக் காட்டுவதற்கு உபயோ கிக்கப்படுகின்றது. குறுகிய கீறுகளினால் புள்ளிக் கோடுகளமைக்கப்படு கின்றன. C.
அளவுக் கோடுகள் : (அம்புக் கோடு) அம்பைப் போன்ற நுனிகளை யுடைய இக்கோடுகளின் நடுவே இலக்கங்களிடப்படுகின்றன D.
நடுக்கோடுகள் : இது நீண்ட சங்கிலிக் கோட்டைச் சேர்ந்தது. அமைப்பின் போதுபயோகிக்கப்படுகிறது. E.
சங்கிலிக் கோடு : சிறிய சங்கிலிக் கோட்டினத்தைச்சேர்ந்தது F.
தளக்கோடு: (குறுக்குக் கோடு) நீண்ட இரட்டைச் சங்கிலிக் கோட்டைச் சேர்ந்தது G.
எல்லைக் கோடு : ஒழுங்கில்லாத அலைகளைப் போன்ற இக் கோடுகளினால் ஒடிந்துபோன பகுதிகள் காட்டப்படுகின்றன H.

Page 74
130
(இக்கோடுகள்மையுமிடங்களைப் படத்திற் பார்த்து விளங்கிக்கொள்க).
-~-2'
34
11: * 1 - 1 : '1 : ', 11 ) :
F -::-
11 ..
1234567890 (234567890
5ம் 7
----- : 11 -
107 ஆவது படம் : கோடுகளும் இலக்கங்களும்.
இலக்கங்கள் : நேரான, அல்லது சரிந்த இலக்கங்கள் கிடைப்படங்களி னளவைகளைக் குறிக்க உபயோகப்படுகின்றன. இவற்றை அளவுக் கோட் டிற்குச் செங்கோணமாயுபயோகிப்பது வழக்கம். மேலும், கிடைப்படத்தின் கீழேயிருந்தோ வலதுபக்கத்திலிருந்தோ வாசிக்கக் கூடியதாக இவற்றை இடல் வேண்டும்.

131'
எழுத்துக்கள் : கிடைப் படத்தில் எழுத்துக்களை யுபயோகிப்பது ஒரு கலை யாகும். தமிழ் எழுத்துக்களை யுபயோகிப்பது பற்றி ஏற்றுக்கொண்ட முறை யொன்றுமில்லை. இதுவரை ஆங்கில எழுத்துக்களை உபயோகித்ததே இதற்
குக்காரணமாகும்.
தலையங்கத்திற்கு 5 அங்குலமளவுள்ள நேரான (பெரிய) எழுத்துக்களை . யும், உபதலையங்கத்திற்கு ஃ, 2 அங்குல அளவுள்ள சரிந்த எழுத்துக் களையும் உபயோகிப்பது ஆங்கில எழுத்துச் சம்பந்தமாக ஏற்றுக்கொண்ட முறையாகும். விரிவான குறிப்புக்களைக் காட்டுவதற்குச் சரிந்த சிறிய எழுத்துக்கள் (Simple letters) உபயோகிக்கப்படுகின்றன. ஆனால், தமிழ் எழுத்துக்களில் இரண்டு வகைகளின்மையால் இம் முறையைப் பின்பற்றவியலாது.
ஆகையால் தமிழ் எழுத்துக்களை யுபயோகிக்கும் போது 15 அங்குல அளவுள்ள நேரான எழுத்துக்களைத் தலையங்கத்திற்கும், 1, 2, அங்குல அளவுள்ள சரிந்த எழுத்துக்களை உபதலையங்கத்திற்கும், இவற் றிலும் சிறிய சரிந்த எழுத்துக்களை விவரமான குறிப்புக்களுக்கும் உபயோகிப்பது நல்லதென்பது எங்கள் அபிப்பிராயமாகும்.
ஆ ஈ ஊ ஏ ஓ கே சூ கூ ண ச
ஆ ஈ ஊள ஏ ஓ கே சூ கூ ண ச ஆ ஈ ஊ ஏ ஓ கே சூ கூ ண ச
108 ஆவது படம் : எழுத்துக்கள்.

Page 75
132
18. வட்டமும் அதன் பகுதிகளும்
வட்டம் : பரிதி என்று பெயர் பெற்ற வளைந்த கோட்டினாலமைக்கப்பட்ட உருவம் வட்ட மெனப்படும். பரிதியிலுள்ள எல்லாப் புள்ளிகளும் வட்டத் தின் மையப் புள்ளியிலிருந்து சமமான தூரத்திலமைந்துள்ளன.
ஆரை : மையத்திலிருந்து சுற்றை நோக்கிச் செல்லும் கோடுகள் ஆரை எனப்படும்.
விட்டம் : மையத்தினூடே பரிதியை இணைக்கும் கோடு விட்டம். வில் : பரிதியின் ஏதாவதொரு பகுதி வில் எனப்படும். நாண் : ஏதாவதொரு வில்லின் ஈரந்தங்களையு மிணைக்கும் கோடு நாணெனப்படும்.
ஆரைச் சிறை : வில்லினாலும், நாணினாலும் இணைக்கப்பட்ட வட்டத்தி னொரு பகுதி இப்பெயரைப் பெறும்.
மையத்துண்டு : இரண்டு ஆரைகளுக்கும் வில்லிற்குமிடைப்பட்ட வட்டத்தி னொரு பகுதி மையத்துண்டெனப்படும்.
பாதிவட்டம்: வட்டத்தின் விட்டத்தினாலும் வில்லினாலும் உண்டாக்கப்பட்ட பகுதி இப்பெயரைப் பெறும்.
வட்ட அடி : 90° உடைய வட்டத்தினொருபகுதி அதாவது வட்டத்தின் நாலிலொரு பங்கு, வட்டவடி யெனப்படும்.
சட்டிமம், வட்டத்தின் ஆறிலொரு பங்கு இப்பெயரைப் பெறும். இதன் ஈராரைகளுக் கிடையே 60° உண்டு.
ஒருமைய வட்டங்கள் : ஒரு மையத்தையும் வித்தியாசமான ஆரைகளையு முடையனவாய் வரையப்படும் வட்டங்கள் இப்பெயரைப் பெறும்.
பன்மைய வட்டம் : வெவ்வேறு மையங்களையுடையதாகப் பெரிய வட்டத்தி னுள்ளே வரையப்படும் வட்டங்கள் பன்மையவட்டங்களெனப்படும்.
பாகை : வட்டத்தின் 360 இல் ஒரு பகுதி பாகை யெனப்படும்.

133
98/0
109 ஆவது படம் : 1. ACBEFD வட்டம். 00 ஆரை ; AOB விட்டம் ; DFE லில் ; DEF ஆரைச்சிறை; AOC மையத்துண்டு ; ACB பாதி வட்டம் ; 2 A வட்ட அடி. B சட்டிமம் 3. ஒரு மைய வட்டம். 4. பன் மைய வட்டம்.

Page 76
134
19 கோடுகளைப் பிரித்தல்
ஒரு கோட்டைப் பல பகுதிகளாகப் பிரித்தல் : கொடுக்கப்பட்ட கோடு xy என்று வைத்துக்கொள்வோம். x இலிருந்து xz ஐ வரைந்து பிரிக்கவேண்டிய சம்பகுதிகளை அங்கு அடையாள மிடுக. (பகுதிகள் ஏழென வைத்துக்கொள்வோம்) 7 ஐயும் y ஐயும் இணைக்க. அடுத்ததாக, 7y கோட்டிற்குச் சமாந்தரமாக அவ்வப் பகுதிகளை xy இல் வெட்டும்படியாகச் சமாந்தரங்கள் வரைக.
சமாந்தர சமாற்கு ' ஐயும் ?
110 ஆவது படம் : கோட்டைச் சம்பகுதிகளாகப் பிரித்தல்.
கோட்டைச் சம விகிதத்திற்குப் பிரித்தல் : AB என்னும் கோடு 3, 4, 5, என்னுமளவுத் திட்டத்திற்குப் பிரிக்கப்படுகிறதென வைத்துக்கொள்வோம்.
AC என்னும் குறுக்குக் கோட்டை வரைக 3, 4, 5 என்னும் அளவுத் திட்டத்திற்கு அதாவது சமமான 12 பகுதிகளைக் குறிக்க. 12 ஐயும் B ஐயும் இணைக்க. 3, 7, என்னும் பகுதிகள் வெட்டும்படியாக இக்கோட்டிற்கு (12 B என்னும் கோட் டிற்கு) சமாந்தரமாகக் கோட்டை வரைக; இப்போது AC கோடு 3, 4, 5 என்னும் அள்வுத் திட்டத்தின்படி பிரிக்கப்படுகிறது.
5
0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
111 ஆவது படம் : சம விகிதத்திற்குப்பிரித்தல்.

135
20. நாற்கோணங்கள்
பெ
நான்கு நேர் கோடுகளினாலமைக்கப்பட்ட உருவம் நாற்கோணமெனப்படும் நாற்கோணத்தின் நான்கு கோணங்களின் கூட்டுத் தொகை நான்கு செங்கோணங்களுக்குச் சமமாகும். (90°x4 = 360°) இரண்டு எதிர் முகங் களையிணைக்கும் நேர் கோடு, கோணவிட்டமெனப்படும் (1)
சதுரம்: இதற்கு நான்கு செங்கோணங்களுண்டு. நான்கு பக்கங்களும் சமமானவை (2)
செவ்வகம் : நான்கு செங்கோணங்களையுடையதும், சமமான எதிர்ப்பக் கங்கள் உடையதுமான நாற்கோணம் செவ்வகமெனப்படும் (3).
சாய்சதுரம் : நான்கு பக்கங்களும் சமமானதும் எதிர்முகக் கோணங்கள் சமமானதுமான சதுரம் சாய்சதுரமெனப்படும். கோணவிட்டத்தை வெட்டி
னால் 90° கோணமுண்டாகும் (4).
இணைகரம் : எதிர்முகப் பக்கங்களும் எதிர்முகக் கோணங்களும் சம மான நாற்கோணம் இப்பெயரைப் பெறும் (5).
கொடியுருவான சதுரம் : இருசம்புய முக்கோணங்களிரண்டையுடைய நாற் கோணம் இப் பெயரைப் பெறும். கோண விட்டத்தை வெட்டினால் 90° கோணமுண்டாகும் (6).
சரிவகம் : இரு சமாந்தர பாதங்களையுடைய நாற்கோணம் சரிவக மெனப்படும் (7)
2SEK
112 ஆவது படம் : நாற்கோணங்களின் வகைகள்.

Page 77
136
கொடுக்கப்பட்ட பாதத்தின் மீது நாற்கோணம் வரைதல் : ( AB கொடுக் கப்பட்ட பாதம்)
A இல் AB கோட்டிற்குச் செங்குத்து வரைக. AD செங்குத்து AB உக்குச் சமமாயிருத்தல் வேண்டும். D ஐயும் மையமாகக் கொண்டு AB ஆரையுள்ள வட்டத்தின் இரண்டு விற்கள் C இல் வெட்டும் படிவரைக. DC ஐயும் BC ஐயும் இணைக்க. ABCD வேண்டிய சதுர மாகும் (1)
சமமற்ற பாதங்கள் கொடுக்கப்பட்ட விடத்துச் செங்கோண நாற்கோணம் வரைதல் ( AB உம் CD உம் கொடுக்கப்பட்ட சம் மற்ற பக்கங்கள் )
A இல் செங்குத்தாக வரைக. AD செங்குத்து CD கோட்டிற்குச் சமமாயிருத்தல் வேண்டும். Dஐ மையமாகக் கொண்டு CD ஆரையுடைய வட்டத்தின் வில்லொன்று வரைக. Bஐ மையமாகக் கொண்டு Bஐ. ஆரையாகவுடைய வேறொரு வில்லினால் மேலே கூறிய வில்லை C இல் வெட் டுக. DC ஐயும் CB ஐயும் இணைக்க ABCD வேண்டிய செங் கோண நாற்கோணமாகும் (2)
வரை
மையம்
பாதமும் கோணமும் கொடுக்கப்பட்ட விடத்துச் சாய் சதுரம் வரைதல். [AB கொடுக்கப்பட்ட பாதம். கோணம் 60°] A இல் 60° கோண மமைக்க. AD பாதத்தை AB உக்குச் சமமாக்க. Dஐ மையமாகக்கொண்டு AB ஆரையுமுள்ள வில்லும் B ஐ மையமாகக் கொண்டு அதே ஆரையுள்ள வில்லும் C இல் வெட்டும்படி வரைக. DC ஐயும் BC ஐயும் இணைக்க. ABCD வேண்டிய சாய் சதுரமாகும் (3)
தொடர்பான பாதங்களும் கோணமும் கொடுத்தவிடத்துச் செவ்வகம் வரைதல் (AB உம், FG உம் கொடுக்கப்பட்ட பாதங்கள்) E கொடுக்கப் பட்ட கோணம். A இல் E கோணத்திற்குச் சமமான கோணம் வரைக. AD பாதத்தை FG உக்குச் சமமாக்குக. Dஐ மையமாகக் கொண்டு AB ஆரையுள்ள வில் கீறுக. Bஐ மையமாகக் கொண்டு FG ஆரை யுள்ளவில் மேற்கூறிய வில்லைச் C இல் வெட்டும்படி வரைக. DC ஐயும் CB ஐயும் இணைக்க. ABCD வேண்டிய சமாந்தரச் சதுரமாகும் (4).

137
கோண விட்டம் கொடுத்தவிடத்து இணைகரம் வரைதல் [US கொடுக் கப்பட்ட இணைகரம்) US கோணவிட்டத்தை 0 இல் செங்கோணமாகப் பிரிக்க. 0ஐ மையமாகக் கொண்டு UO ஆரையுள்ள வட்ட மொன்று வரைக. RU UT, TS, SR, என்பவைகளை இணைக்க. RSTU வேண்டிய இணைகரமாகும் (5).
மையப
னரக
AC என்னும் மூலை விட்டமும் AD பாதமும் கொடுத்தவிடத்துச் செவ் வகம் வரைதல். : AC' மூலை விட்டத்தை 0 இல் ”சமமாகப் பிரிக்க. OA ஆரையுள்ள வட்டமொன்றை 0 ஐ மையமாகக் கொண்டு வரைக. A ஐ மையமாகக் கொண்டு AD ஆரையுள்ள வில் வட்டத்தை வெட்டும்படி வரைக. Cஐ மையமாகக் கொண்டு AD ஆரையுள்ள வில்லை C இன் கீழே வட்டத்தை வெட்டும்படி வரைக. பாதங்களை யிணைக்க. ABCD வேண்டிய செவ்வகம் (6)
மையமாகக்
மூலைவிட்டமும் பாதமும் கொடுத்தவிடத்துச் சாய்சதுரம் வரைதல் : [AC கொடுக்கப்பட்ட மூலைவிட்டம் XY பாதம்.] A ஐயும் C ஐயும் மைய மாகக்கொண்டு XY ஆரையுள்ள வில் B யிலும் D இலும் வெட்டும்படி வரைக. ABCD வேண்டிய சாய்சதுரம் (7).
மூலை விட்டமும் சமமற்ற பாதங்களும் கொடுத்தவிடத்து கொடியுருவச் சதுரம் வரைதல் : [AC கோணவிட்டம். LN உம் NO உம் பாதங்கள்) Oஐ மையமாகக் கொண்டு 'NO விட்டார்த்த முள்ள வில்வரைக. C ஐ மையமாகக் கொண்டு LN விட்டார்த்தமுள்ளவில் மேலே கூறிய வில்லை வெட்டும்படி வரைக. பாதங்களை இணைக்க. ABCD வேண்டிய சதுரம்.
(8) கொடுக்கப்பட்ட நாற்கோணத்திற்குச் சமமானதும் சமவடிவானதும் எனவொரு நாற்கோணம் வரைதல் : [ABCD கொடுக்கப்பட்ட நாற் கோணம்) கொடுக்கப்பட்ட நாற்கோணம் AC மூலைவிட்டம் வரைந்து இரண்டாகப் பிரிக்க. TR இன் மேல் ADC முக்கோணத்திற்கும் ABC முக்கோணத்திற்கும் சமமானதும் சமவடிவமானதுமான முக்கோணம் வரைக. RSTU வேண்டிய சதுரம்(9).
கொடுக்கப்பட்ட நாற்கோணத்திற்குச் சமவடிவமான நாற்கோணம் வரை தல் : படத்தைப் பரிசீலனை செய்து இதனை வரையும் மாதிரியை விளங்கிக் கொள்க (10). '

Page 78
138
90°
13 - |
60'
10 AZ.
10AZ
113 ஆவது படம் : நாற்கோணங்கள் (மேற்கூறிய நாற்கோணங்களையமைக்கும் மாதிரி).

139
21. பயிற்சி
1. உலர்வதினாலோ பிழையாக அடுக்கிவைப்பதினாலோ கோணலடைந்த, திருகிய, மரங்களையும் பலகைகளையும் நன்னிலைக்குக் கொண்டுவருவது பற்றிய பரிசோதனை நடத்துதல். இதற்கு உள்நாட்டுத் தொழிலாளிகள் உபயோகிக்கும் முறைகளைப் பரீட்சித்துப் பார்த்தல் நல்லது.
ன
2. மரங்களை யடுக்குவது பற்றிச் சரியான விளக்கத்தைப் பெறும் பொருட்டு அவற்றை யடுக்குதல். காற்றில் பதனிடுவதற்காக மரங்களை யடுக்கும் முறையைப் பின்பற்றுதல் நன்று.
3. மரக்காலை யொன்றிற்குச் சென்று மரங்களைப் பிழையாக அடுக்கி வைப்பதனாலும் அங்கங்கு பரப்பி வைப்பதினாலும் ஏற்படும் தீங்கைப் பற்றிப் பரீட்சித்தல்.
4. மரங்களுக்குத் தீங்கை விளைவிக்கும் செந்து, கருவண்டு, கறையான் முதலிய பிராணிகளைப் பற்றிப் பரீட்சித்தல் ; அவைகளின் வாழ்க்கை வரலாறுகளையறிதல்.
5. மரங்களை யளந்து கணக்கிடல். மரக்குற்றிகளை யளந்து கனத்தை யறிதல்.
6. பாடசாலையிலுள்ள இலகுவான மரச்சாமான்களின் படம் வரை தலும் மரங்களைப்பற்றிய அட்டவணை ஆக்கலும். இதனை மாதிரி யுருப் பொருட்களுக்கும் பின்பற்றுதல் நன்று.
7. கருவிப் பெட்டியில் (அலுமாரியில்) கருவிகளை வைத்தல். வைக்கும் போது கருவிகளைக் கவனமாக வைப்பது பற்றிய நீதிகளைப் பின்பற்றுதல்.
8. வில்வாள், வழக்குதரங்கு, தட்டுச் சீவுளி, பொளியளவு கோல் முத லிய கருவிகளின் படங்களை வரைந்து பகுதிகளைக் குறித்தல். ஒவ்வொரு பகுதியினதும் பிரயோசனத்தைப் பரீட்சித்தல்.

Page 79
140
9. ஒவ்வொரு மூட்டுக்களையும் வரைதல். வேலைக்குதவாத மரத்துண்டு களில் இம்மூட்டுக்களை ஆக்குதல், மூட்டுக்களைப்பற்றிய மாதிரியுருக்களை யமைத்துக்காட்சிக்கு வைத்தல்.
10. இலகுவான மாதிரியுருப் பொருட்களின் படங்களை அளவுத் திட்டப் படி வரைதல். பொருத்துக்களை அளவுத் திட்டப்படி வரைதல். அளவுத் திட்டப்படி வரையப்பட்ட கிடைப்படங்களைப் பரிசீலனை செய்து திருத்தமான நீளம் அகலம் முதலிய விவரங்களைக் குறித்தல்.
11. கோண விட்ட அளவுத் திட்டத்தை யமைத்து அங்கு அநேக நீள அளவுகளைக் குறித்தல்.
12. இங்கு குறிப்பிட்டுள்ள கிடைப்படங்களை வேறு அளவுத் திட்டப்படி வரைதல். கிடைப்படங்களின் விவரங்களைப் பரிசீலனை செய்தல்.
13. இங்கு, குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கு வேண்டிய மூட்டுக்களை வேலைக் கெடுக்க முடியாத மரத்துண்டுகளில் ஆக்குதல்.
14. இங்கு குறிப்பிட்டுள்ள பொருட்களைச் செய்தல். பொருட்களைச் செய் யும் போது கொடுக்கப்பட்ட அளவைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய தில்லை.
15. வேறு பொருட்களைச் செய்தல்.

மர வேலை
மூன்றாம் வருடம்
1. தச்சுப் பட்டடைக்கு வேண்டிய கருவிகள்
தச்சு மேசை :
இது மிக அவசியமானது பாரமான பலமுள்ள மரத்தில் தச்சு மேசை யைச் செய்துகொள்ள வேண்டும். சிறந்த பலனைப் பெறுவதற்கும், வேலை செய்வதை இன்பமாக்குவதற்கும் தச்சு மேசை அசைவற்றதாயமைய வேண்டும். சதாரண தச்சு மேசை 5 அடி நீளமும் 18 அங்குல அகலமும் இரண்டரையடி உயரமுமுடையதாயிருக்கும். ஆனால் பழகுபவர்களுக்கான மேசை 26, அல்லது 28 அங்குல உயரமுடையதாயிருத்தல் நன்று. வேலை செய்பவரின் உயரத்தில் பாதி யளவுக்குச் சிறிது குறைந்த உயரமுடைய தச்சு மேசை மிகச் சிறந்ததாகும்.
தச்சு மேசையில் மர நிலையிடுக்கியைப் பொருத்திக் கொண்டால் வேலை செய்வது இலகுவாயிருக்கும்.
114 ஆவது படம் : 1. தச்சுமேசை தச்சு நிலையிடுக்கி. 2. தடைக்கட்டை. 3. பட்டடைக் கொளுவி
141

Page 80
142
இணைராண் \
115 ஆவது படம் : மர நிலையிடுக்கி - தச்சு மேசையில் பொருத்த வேண்டிய மாதிரி.
பட்டடைக் கொளுவி
அரிதல், வெட்டுதல் முதலியவைகளைச் செய்யும்போது பட்டடைக் கொளுக்கி தச்சு மேசையைப் பாதுகாக்கின்றது மரம், பலகை முதலிய மூலப் பொருட் களை நிலையாக வைத்துக்கொள்ளலாம். மூலப் பொருட்களைச் சமகோணமாக வைத்திருப்பதற்கும் இது உதவுகிறது.
தடைக் கட்டை
மரம், பலகை முதலிய மூலப் பொருட்களைச் சீவும்போது தச்சு மேசை யின் மேல் நிலையாக வைத்துக்கொள்வதற்கு இக்கருவி அவசியமானது.
\\\III
116 ஆவது படம் : தடைக்கட்டையையுபயோகிக்கும் மாதிரி.

143
தச்சு நிலையிடுக்கி
பலகைகளையும் மரங்களையும் துண்டுகளாக அரிவதற்கும், வெட்டுவதற்கும் சீவுவதற்கும் விளிம்புகளைச் சீவுவதற்கும் மூலப் பொருட்களை நிலையாகப் பிடித்துக்கொள்ளத் தச்சு நிலையிடுக்கி பயன்படுகிறது. அரிவுப்பீடம்
நீண்ட பலகைகளையும், மரங்களையும் அரிவதற்கு இது அவசியம். அரிவுப் பீடத்தின் சாதாரண உயரம் பதினெட்டங்குலம். இரண்டு அரிவுப் பீடங் களின் மேல் நீண்ட பலகையையோ மரத்தையோ வைத்து அரியலாம்.
26
Fா
Le 24"
N,
117 ஆவது
படம் : அரிவுப் பீடம்.
<>
அரிவுக் குதிரை
மரங்களையும் பலகைகளையும் அரிவதற்கும் வெட்டுவதற்கும் அரிவுக் குதிரை உபயோகிக்கப்படுகிறது. இதனை நிலத்தில் நிலையாகப் பொருத்திக் கொள்வது நல்லது. மூலப் பொருள்கள் இதனோடு ஆப்பைக் கொண்டு பொருத்தப்படுகின்றன. இதனைக் கிராமங்களிலுள்ள தச்சர் பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள்.
118 ஆவது படம் : அரிவுக் குதிரை.

Page 81
144
2. அடையாளமிடுதல், செம்மை பார்த்தல் என்பவைகளுக்கான
கருவிகள்.
இவ்வகையைச் சேர்ந்த பொது மூலைமட்டம், சாய்வு மூலைமட்டம் வரை கம்பு முதலிய முக்கிய கருவிகளைப் பற்றிய விவரம் மேலே காட்டப் பட்டுள்ளது. தெய்வத் தச்சனின் மகன், மனிதர்களுக்குத் தச்சு வேலை யைக் கற்பிப்பதற்குப் பொது மூலைமட்டத்தையும் வரைகம்பையும் முதலில் கொண்டுவந்ததாகக் கன்ன பரம்பரையான கதை யொன்றுண்டு. இதன் மூலம் இக்கருவிகளின் பெறுமதி தெளிவாகிறது. மிகுதியான கருவிகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
உட்பக்கவுறுதி மூட்டிடுக்கி.
வட்டம், நீள்வளையம் முதலியவைகளினளவைச் செம்மையாகக் கவனிக் கவும் அளக்கவும் இது அவசியம்.
வெளிப்பக்கவுறுதி மூட்டிடுக்கி.
கோடுகளுக்கிடையேயுள்ள தூரங்களையும் பொருத்துக்களின் நீள அகலங் களையும் செம்மையாக அளப்பதற்கு இது பயன்படும்.
மூடிய கவராயம்.
வரைகம்பைப்போல்க் கோடுகள் வரையவும் அளக்கவும் இது உபயோகப் படுகிறது.
சிறைக் கவராயம்.
தச்சு வேலைக்குபயோகிக்கப்படும் சிறைக் கவராயம் பல் வகைப்படும். அதிகமாக தடுத்த சிறைக் கவராயம் உபயோகிக்கப்படுகிறது.
பிரிக்குங் கருவி.
பொருத்துப் போன்ற நுண்ணிய வேலைகளைக் குறித்துக் கொள்வதற்கு பென்சில் உபயோகிக்கப்பட்ட போதிலும் இதனாற் கிடைக்கும் பலன் அவ் வளவு திருத்தியாகவில்லை. ஏனெனில் பென்சிலினால் மிகவும் நுண்ணிய கோடுகளை வரைந்து கொள்வது கடினமாகும். பிரிக்குங் கருவி உருக்கில் செய்யப்படுகிறது.

145
(5)
O/L -
119 ஆவது படம் : 1. உட்பக்கவுறுதிமூட்டிடுக்கி. 2. வெளிப்பக்கவுறுதி மூட்டிடுக்கி. 3. மூடிய கவராயம். 4. மூடியகவராயத்தினால் அடையாளமிடல். 5. சிறைக்கவராயம். 6. பிரிக்குங் கருவி. 7. பிரிக்கும் (வில்) கருவி.

Page 82
146
3. புறவளர் விருட்சமும் அகவளர் விருட்சமும்
புறவளர் விருட்சம் இருபருப்புள்ள விதையில் முளைப்பதும் மூல வேருள்ளதுமான பலா, ஈரப்பலா, மா முதலிய மரங்களின் அடிமரம் படிப்படியாகப் பருக்கும். ஆகையால் இவை புறவளர் விருட்சமெனப் பெயர் பெறும். இவ்வினத் தைச் சேர்ந்த மரங்களின் அடிகளமைந்திருக்கும் மாதிரி 23 ஆவது படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. காலஞ் செல்லச் செல்ல இம் மாதிரி அடிகள் படிப்படியாகப் பருமனடையும். வெளிவைரப் பகுதியும் பட்டையின் பகுதியும் படிப்படியாக வளர்வதால் இவ்வாறு நிகழ்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பருவ காலத்திலும் வளர்ச்சியடைந்து அடிமரத்திற் சேரும்பகுதி வளர்ச்சி வளையம், அல்லது ஆண்டு வளையம் என்றழைக்கப் படும். ஆகையால் வளர்ச்சி வளையத்தைக் கொண்டு மரத்தின் வயதைத் தீர்மானிக்கலாம் வருடத்திற் கொருமுறை இலைகளையுதிர்க்கும் மரங்களில் வளர்ச்சி வளையம், அல்லது ஆண்டு வளையம் தெளிவாகக் காணப்படும் இம்மாதிரி மரங்களில் வருட. மொன்றிற்கு ஒரு வளர்ச்சி வளையமாகப் புறத்திற் சேரும். வருடத்திற்கு இரண்டு மழைக் காலமும், இரண்டு வறட்சிக் காலமுமுள்ள நாடுகளிலுள்ள மரங்களில் வருட மொன்றிற்கு இரண்டு வளர்ச்சி வளையங்களுண்டாகும். இவ்வினத்தைச் சேர்ந்த மரங் கள் இவ்வாறு வருடா வருடம் பருமனடைவதோடு அவற்றின் உள்ளே யுள்ள பகுதியும் படிப்படியாக முற்றும். முற்றிய அடிமரம் குடன் மரமென்றழைக்கப்படும். குடன் மரத்தின் நிறம் காலத்தையொட்டி மாற்ற மடையும்.
அகவளர் விருட்சம்
தனிப் பருப்பு விதையில் முளைக்கும் தென்னை, பனை, கித்துல் முதலிய தால் வருக்கத்தைச் சேர்ந்த மரங்களும் மூங்கில், நாணல், போன்ற புல்லினத்தைச் சேர்ந்த மரங்களும் உட்புறமிருந்து வளர்வதால் அகவளர் விருட்சமெனப் பெயர் பெறுகின்றன. இவ்வினத்தைச் சேர்ந்த மரங்களின் அடிமரம் வெளிநோக்கி வளராது; ஒரே பருமனையுடைய தாயிருக்கும். தால் வருக்கத்தைச் சேர்ந்த மரங்களின் அடிகளில், அவைகளுக்குச் சத்தியைக் கொடுக்கும் வைரப் பகுதி அடிமரத்தைச் சுற்றியிருக்கும். உள்ளே சோற்றி யமைந்துள்ளது. காலஞ் செல்ல, அடிமரத்திலுள்ள வைரப் பகுதி படிப் படியாக வளர்ந்து சோற்றியை நோக்கிச் செல்லும். ஆகையால் அதிக வயசுடைய தென்னை, கித்துல் முதலிய மரங்களின் பராரைகளினது குறுக்கு வெட்டு முகங்களைப் பரிசீலனை செய்தால், பெரும் பகுதி வைரத் தையுடைய தாயிருப்பதைக் காணலாம். வைரப் பகுதி சோற்றியுள்ள பலம் பொருந்திய சிம்புகளினாலாக்கப் பட்டுள்ளது.

147
TIIIUIL/
யயார்
0 ?
• 0 ?'3 - |
0 0 0 0
5 3 0 0 0 0
8 0 0 0 0 0 0
1 3 4 )
9 0 3)
0 0 • -
31 0 0 1 3 - 5
:::., : 0 3 : '
பார்ப்பீர்)
0 0 • 0
120 ஆவது படம் : உட்பக்கம் வளர்ச்சியடையும் அடிமரத்தின் குறுக்கு வெட்டுமுகம்.
வைரப் பகுதி. B. சோற்றிப் பகுதி.
தென்னை : சிவப்பைச் சார்ந்த பழுப்பு நிறமான இம்மரம் அதிகமாகத் தொற்று மரங்களுக்குபயோகிக்கப்படுகிறது. ஆனால், கதிரை, தேமேசை, சுருக்கும் சாய்மனைக் கதிரை முதலிய வீட்டுப் பொருட்களையுஞ் செய்யலாம். நன்றாக முற்றிய தென்னைமரம் பலமுடையது. பாரமானது. நன்றாக இதில் வேலை செய்வது கடினம். ஊசிபோன்ற சிம்பு இருப்பதால் வேலை செய்யும்போது கவனமாயிருத்தல் வேண்டும். தாலவருக்கத்தைச் சேர்ந்த எல்லா மரங்களுக்கும் இது பொதுவானது. இது மினுங்கும் ; நீண்டகாலம் நிலைக்கும் ; காலஞ் செல்ல நிறம் மாறும்.
கித்துல் : கறுப்பு நிறமானது ; பாரமானது ; பலமுடையது. வீட்டுப் பொருட்கள் செய்ய மிகக் குறைவாகவே உபயோகிக்கப்படும். இம்மரம் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.
பனை : இது தென்னை மரத்தைப் போன்றது. எங்கள் நாட்டில் பனை அதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வளருகிறது.
மூங்கில் : இது புல்லினத்தைச் சேர்ந்த மரமாகும். இதன் அடி, பூந்தாழி போன்றவை செய்வதற்காக உபயோகிக்கப்படுகிறது.
7-J. N. R 21997 (1/80)

Page 83
148
வேம்பு
4. மரவினங்கள் இனங்கள்
பயன்
சிறப்பான இலட்சணங்கள் முதிரை
வீட்டுப் பொருட்கள், மேசை வெண்மைசார் மஞ்சள் நிறம் ; மாச்சிரா
கதிரை, அலுமாரிவகை
யமைப்பு அழகானது ; பாரமானது ; வேலை கடினமானது ; அழுத்தமானது பிரகாசிக்கும். நீண்ட காலம் நிலைத்
திருக்கும். சிறந்த வீட்டுப் பொருட்கள், வெண்மைசார் மஞ்சள் நிறம். மரச்சிரா
அலுமாரி, பெட்டி
யமைப்புண்டு. அழுத்தமானது, பூச்சி
கள் தீங்கு விளைக்கா; பெறுமதியானது. புளி (குடன் மரத் சிறந்த வீட்டுப் பொருட்கள் சிறிது கறுப்பு நிறமானது, மரச்சிராய
தைத் தேடுதல் அலுமாரி, கண்ணாடி
மைப்பு அழகானது. அழகான வெள் கடினம்)
மேசை - வகைகள்.
ளைப்புள்ளிகளையுடையது. பாரமானது ; வேலை செய்வது கடினமானது ;அழுத் தமானது; பிரகாசிக்கும், மிகவும் பெறு மதியுடையது. நீண்ட காலம் நிலைத்
திருக்கும். அசலை
... சிறந்த வீட்டுப் பொருட்கள். மஞ்சள் நிறமுடையது. மரச்சிராயமைப்
பையுடையது. அழகான புள்ளிகளுண்டு; வேலை செய்வது கடினமானது; பெறு
மதியுடையது. கருமருது
சிறந்த வீட்டுப் பொருட்கள். கறுப்பு நிறமானது. மரச்சிராயமைப்பை
யுடையது, யானைத்தந்த நிறமுடைய அழகான புள்ளிகளையுடையது. வேலை செய்வது கடினம். பெறுமதியுடையது. அழுத்தமானது ; நீண்டகாலம் நிலைத்
திருக்கும். கருங்காலி
... சிறந்த வீட்டுப் பொருட்கள் கறுப்பு நிறமானது. வேலை செய்வது
சட்டம் உட்பதித்தல், கடினம், பாரமானது. அழுத்தமானது. உலக்கை.
நீண்ட காலம் நிலைத்திருக்கும். பலா
வீட்டுப் பொருட்கள் கதவு, மஞ்சளிலிருந்து பழுப்பு நிறமானது. சிறி பலகணி, கூரை,மர.. தளவு மரச்சிராயமைப்பையுடையது. வேலை
வேலை செய்வதோரளவிற்கிலகு. அதிக
மாகப் பயன்படுவது., கொன்றை
... வீட்டுப் பொருட்கள் ... தடித்த பழுப்பு நிறம். மரச்சிராயமைப்பை
யுடையது, கடினமானது. வெடிக்கும், வேலை செய்வது கடினம். அழுத்த
மானது. வாவரணை
வீட்டுப் பொருட்கள் கதிரை மஞ்சள் நிறம் ; வேலை செய்வது இலகு;
வகைகள்.: 1 - வெடிக்காது.- சமண்டலை
கட்டில்கள், சில்லுச் சட்டம், வெண் - சிவப்பு நிறம். மரச்சிராயமைப்பு
வேறு பொருட்கள்"
அழகானது, வேலை செய்வதிலகு, மினுங்
கும், நீண்டகாலம் நிலைத்திருக்கும். சண்பகம்
பெட்டி போன்ற சில்லறைப் சோற்றி மரம் வெண்ணிறமானது, குடன்
பொருட்கள், கூரை,
மரம் பழுப்பு நிறமானது. வேலைசெய்வ கதவு, பலகணி அரக்குப்
திலகு, பெறுமதி குறைந்தது. வண்டு பொருட்கள்.
களினால் தீங்குண்டாகும்.

149
| ! ! ! ! ! 1..
இனங்கள்
பயன்
சிறப்பான இலட்சணங்கள் பூவரசு
கடைச்சல் வேலை, அரக்குப் சிவப்புக் கலந்த பழுப்பு நிறமானது,
பொருட்கள்
வேலை செய்வதிலகு, வெடிக்கும். தேக்கு (பேமா)
வீட்டுப் பொருட்கள், மாடி தடிப்பான பழுப்பு நிற முடையது. நீண்ட
வீட்டுத் தட்டுக்கள்
மரச்சிராயமைப்பையுடையது, வேலை
செய்வ திலகு, மினுங்கும். தேக்கு (இலங்கை) ... வீட்டுப்பொருட்கள், கதவு, தடிப்பான பழுப்பு நிற முடையது. வேலை
பலகணி, மேல்மாடி
செய்வது கடினம். சந்தன வேம்பு ... பெட்டி, அலுமாரி.
சிவப்பு நிறமுடையது. மரச்சிராயமைப்
பையுடையது, வேலை செய்வதிலகு.
வெடிக்கும், மினுங்கும். மலைவேம்பு ... பெறுமதியிற் குறைந்த வெண்-சிவப்பு நிறமுடையது, பாரமற்
பெட்டி போன்றவை,
ப றது, வெடிக்கும், நீண்ட காலம் நிலைத் மாடிவீட்டுத்தட்டு
திருக்காது, வேலை செய்வதிலகு, பெறு
மதி குறைந்தது. மென்தொம்பை
... கதிரைகள், கட்டில்கள் ... வெள்ளை நிறமுடையது, வேலை செய்வ
திலகு, வண்டுகளினால் தீங்குண்டாகும். தொம்பை
வண்டிகள்.
பழுப்பு நிறமுடையது, வேலை செய்வதிலகு. கீனை
வண்டிகள், பாய்மரங்கள், பழுப்பு நிறமுடையது, சிறிதளவு மரச்சிரா
படகுகள், கதிரைகள்.
யமைப்புடையது, வேலை செய்வதிலகு. இலுப்பை
கூரை மரம்
... பழுப்பு நிறமுடையது, பாரமானது, நீண்ட,
காலம் நிலைத்திருக்கும், வேலை மிகவும்
கடினமானது, பால் உடையது. மருது
பாலங்கள் கடப்பு மரம் மஞ்சட்-சேற்று நிறமுடையது, பாரமா விகாரைகளின் கூரை னது ; வேலை செய்வது கடினம், தண் மரம்.
ணீரில் நீடித்துபயோகப்படும். மில்லை
... படலை, கம்பித்தூண், வெண்மை சார்ந்த மஞ்சள் நிறமுடையது,
வேலிக்கம்பு
வேலை செய்வதோரளவிற்குக் கடினம், நீண்டகாலம் நிலைத்திருக்கும், தண் ணீரில் நீடித்துபயோகப்படும், வண்டு
களினாலேற் படுந்தீங்கு மிகக் குறைவு. கடகலை
... கதவு, பலகணி, கூரை. . பழுப்பு நிறமுடையது, வேலை செய்வ
திலகு, ஆனால் கடினமானது. சவுக்கு
வீட்டுப் பொருட்கள், மாடி. மஞ்சள் -பழுப்பு நிறமுடையது, மரச்சிர,
மைப்பு நன்று, வேலை செய்வது கடி
னம், மினுங்கும். தவட்டை
சிவப்பு நிறத்தைச் சார்ந்த பழுப்பு நிற
முடையது, வேலை செய்வதிலகு. ... படகு, வள்ளம் வீட்டுப் மஞ்சள் சார்ந்த பழுப்பு நிறமுடையது,
பொருட்கள், கதவுகள்,
சிறிதளவு மரச்சிராயமைப்பையுடையது, பலகணிகள்.
வேலை செய்வதிலகு, இழுபடுந்தன்மை
கூரை
காட்டீரப்பலா
யது.
பாலை
கூரை, இருப்புப்பாதைக் சிறிதளவு பழுப்பு நிறமுடையது, வேலை |
கட்டைகள், படலை
செய்வது கடினம், நீண்ட காலம் நிலைத்,
திருக்கும். வீரை
., கூரை, மரம், நிலை, பட்லை பழுப்பு நிறமுடையது, வேலை செய்வது
கடினம், நீண்ட காலம் நிலைத்திருக்கும்.' 7*-- J. N. R 21997 (1/60)

Page 84
150
5. மரங்களைக் கணக்கிடுதல்
மரவேலையில் பொருட்களைச் செய்வதற்கு வேண்டிய மூலப்பொருள் மரம். மரக்குற்றிகளிலிருந்து பலகைகள், சலாகைகள், தொற்றுக்கள் முதலியவைகளை அரியும் போதும், மரங்களை விற்கும்போதும் வாங்கும் போதும் மரங்களைக் கணக்கிடுவதற்கென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முறை யொன்று நம் நாட்டிலுண்டு.
ஓர் அங்குலம், அல்லது அதனினும் குறைந்த கனமுடைய பலகை போன்ற மரங்களைக் கணக்கிடும் போது நீளத்தையும், அகலத்தையும் அளந்து நீளத்தினது அடிக்கணக்கை அகலத்தின் அங்குலக்கணக்கால் பெருக்கிப் பன்னிரண்டால் பிரித்தால் மரத்தின் அடிக்கணக்கானது விடை யாகக் கிடைக்கும்.
(அ) உதாரணம். - 9 அங்குல அகலமும் 16 அடி நீளமுமுடைய அரை அங்குலப் பலகை எத்தனை அடி விசாலமுடையது ? (இங்கு அரை அங்குலத்தைப் பற்றிக் கவனியாதிருக்கவேண்டும்.)
அகலம்
9 அங்குலம். நீளம்
= 16 அடி. பலகையின் அடிக்கணக்கு = 9x16
12
12 அடி. (ஆ) உதாரணம்.
8 அடி 3 அங்குல நீளமும் 5 அங்குல அகலமுமுடைய ஒரு அங்குலப் பலகையின் விசாலத்தைக் காண்க.
நீளம்
= 84 அடி. அகலம்
5 அங்குலம்.
33x5 165 பலகையின் விசாலம்
--- அடி 4x12 84
= 31 அடி. காலடிக்குக்குறைந்த மரத்தினளவைக் கணக்கிடுவது வழக்கமில்லை. ஆகை யால் இதன் விடை மிகக்கிட்டியவளவில் 32 அடி.
ஓர் அங்குலக் கனத்திலுமதிகமான பலகைகள், தொற்றுக்கள், சுவர் வளைகள், வளைகள் போன்ற மரங்களைக் கணக்கிடும் போது கனத்தையும் அகலத்தையும் கூட்டிவரும் விடையை நீளத்தாற் பெருக்கி அதனைப் பன்னிரண்டாற் பிரித்தால் மரத்தினடிக்கணக்கு வரும். இங்கு கனத்தையும் அகலத்தையும் அங்குலத்திலும், நீளத்தை அடியிலும் எடுக்க வேண்டும்.

151
(அ) உதாரணம்.
9 அங்குல அகலமும் 1 அங்குலத் தடிப்பும் 16 அடி நீளமுமுடைய பலகையொன்றின் அடிக்கணக்கைக் காண்க.
அகலம் தடிப்பு நீளம் பலகையின்
அடிக்கணக்கு
= 9 அங்குலம். = 1 அங்குலம். = 16 அடி.
(9+14) 16 _ 103x16
12 21x16 2x21
12
12.
= 14 அடி. (ஆ) உதாரணம் நீளம், அகலம் தடிப்பு என்பன முறையே 11 அடி, 8 அங்குலம் 3 அங்குலம் அளவுகளையுடைய மரத்தில் எத்தனை அடிமரமுண்டு ?
(8 +3) 1111x 11 மரத்தினடிக்கணக்கு
12
= 10 அடி, 1 அங்குலம். (இ) உதாரணம்.
8 அடி 8 அங்குல நீளமும், 8 அங்குல அகலமும் 5 அங்குலத்தடிப்பு முள்ள மரத்தின் விசாலத்தைக் காண்க.
(8 + 5) 82 _ 13 x 82 மரத்தினடிக்கணக்கு
12 = 9 அடி (9 அடி 4 அங்குலம்)
8
12
சலாகைகள் (நீண்ட) அடியாகக் கணக்கிடப்படும். சலாகைகளைக் கணக் கிடும்போது சலாகைகளின் தடிப்பையும் அகலத்தையும் கவனிக்காது, நீளத்தை மட்டுமளந்து (நீள) அடியாகக் கணக்கிடப்படும். தென்னஞ் சலாகைகளும் உருண்டையான சலாகைகளும் (சலாகைகளாக உபயோகிக்கும் முற்றாத கிளைகள்) முடிக்கணக்கில், அதாவது பத்து முழங் கொண்ட, எட்டு முழங்கொண்ட ஆறுமுழங்கொண்ட சலாகைகளாகக் கணக்கிடப்படும்.
எங்கள் நாட்டில் மரங்களைக் கணக்கிடும் முறை மேலே காட்டப்பட்ட போதிலும், சிலவேளைகளில், பலகைகள் சதுர அடியிலுங் கணக்கிடப் படும். அரை அங்குலப்பலகைகள் 100, 60, 30 சதுர அடிகளாக வும் ஒரு சதுரப்பலகை 100, 70, 50 சதுர அடிகளாகவும் கணக்கிடப்படும்.

Page 85
152
இவ்வாறு பரப்பளவையைக் கணக்கிடும் போது தடிப்பைக் கவனியாது நீளத்தை அகலத்தாற் பெருக்கிப் பரப்பளவைக் காணலாம். இவ்விதம் 6 அடி நீளமும் 8 அங்குல அகலமும் உள்ள பலகையின் பரப்பளவு
72x8 _ 4 சதுரஅடி (6x = 4, '
= 4) பலகைகளைக் கணக்கிடும் போது
144 எங்கள் நாட்டில் நடைமுறையிலிருக்கும் வழக்கப்படியும் பரப்பளவை முறைப்படியும் கிடைக்கும் விடை சமமானவையே.
கனவளவு
நீளம், அகலம், தடிப்பு (உயரம்) என்பவைகளைப் பெருக்கினால் கனவளவு வரும். 8 அடி நீளமும் 6 அங்குல அகலமும் 3 அங்குலத் தடிப்பும் உள்ள மரத்தின் கனவளவு 1 கன அடி. (8XX4= 1) ஆனால் கனவள் வைக்காணும்போது நீளம், அகலம், தடிப்பு என்பவைகளின் அளவுகள் ஒரே இனமாக (அடியாகவோ அங்குலமாகவோ) இருத்தல் வசியம். (அ) உதாரணம்.
9 அடி நீளமும் 8 அங்குல அகலமும் 6 அங்குலத் தடிப்புமுள்ள மரத்தின் கன அளவைக் காண்க.
மரத்தின் நீளம்
= 9 அடி . மரத்தின் அகலம்
= 2 அடி. மரத்தின் தடிப்பு
12 அடி. மரத்தின் கனவளவு
= 9xx - 3
= 3 கன அடி. வட்டமான மரக்குற்றிகளின் கன அளவைக் காணும்போது, மரத்தினடி யும் நுனியும் ஒரேயளவு பருமனாயின் அடியின், அல்லது நுனியின் பரப்பைக் கண்டு அதனை நீளத்தாற் பெருக்கிக் கனவளவைக் காணலாம். (ஆ) உதாரணம்.
வட்டமான மரக்குற்றியொன்றின் சுற்றளவு 88 அங்குலம். நீளம் 18 அடி இம்மரக்குற்றியின் கன அவளவைக் காண்க . -
மரக்குற்றியின் சுற்றளவு = 88 அங்குலம். மரக்குற்றியின் விட்டம் = 8837 அங்குலம்.
28 அங்குலம். மரக்குற்றியின் ஆரை = 14 அங்குலம் 15 அடி.
14X14322 மரக்குற்றியின் பரப்பளவு =
12x12x7
14X14X22x8 மரக்குற்றியின் கனவளவு =
12x12x7 , விடை
= 77 கன அடி.

153
சூத்திரங்கள் : விட்டம் = சுற்றளவு : 3.
வட்டத்தின் பரப்பளவு
= ஆரை2 X 31
ஏதாவதொரு மரத்தின் அடி, நுனி என்பவைகளின் சுற்றளவில் வித்தியாசமிருப்பின், அவைகளின் விட்டச் சராசரியை (அவ்விருவட் டங் களின் கூட்டுத்தொகையின் அரைவாசி) எடுத்து மேலே காட்டியவாறு பரப்பளவைக் கண்டு, பின் கனவளவைக் காண வேண்டும்.
(இ) உதாரணம்.
24 அடி நீளமுடைய வட்டமான மரக்குற்றியொன்றின் அடி 66 அங்குலச் சுற்றளவையுடையது. நுனியின் சுற்றளவு 44 அங்குலம். இம்மரக்குற்றியில் எத்தனை கன அடி மரமுண்டு.
அடிப்பகுதியின் விட்டம் = 66x = 21 அங்குலம்.
நுனிப்பகுதியின் விட்டம் = 44x, = 14 அங்குலம்.
சராசரி விட்டம்
= (21+14)+2 = 17 அங்குலம்.
ஆரை
= 25 : 2 = = = 84.
வட்டத்தின் பரப்பு
35x35x22 4x4x7
கனவளவு
35x35x22x24x12
4x4x7
= 693000.
விடை : 40 கன அடி, 140 கன அங்குலம். 100 கன அடி மரம்
ஒரு கனவளவு மரம்.

Page 86
154
6. ஆணி, புரியாணி, சுரை முதலியன
S
பல வகையான ஆணிகளும் புரியாணிகளும் மர வேலைக்குபயோகிக்கப் படுகின்றன. இவையொவ்வொன்றினையும் அந்தந்த வேலைகளுக்குப் யோகப்படுத்தினாற் சிறந்த பலன் கிடைக்கும்.
உருண்டைக் கம்பியாணி : அதிகமாக உபயோகிக்கப்படுமிவ்வாணி வகையை 4 அங்குலந் தொடக்கம் 6 அங்குல நீளம்மறை பெற்றுக் கொள்ளலாம்.
சிற்றாணி : நுண்ணிய வேலைகளுக்குச் சிறந்தது, 2 அங்குலந் தொடக்கம் 14 அங்குல நீளத்திற் பெற்றுக் கொள்ளலாம்.
செம்பாணி : (பித்தளை) நுண்ணிய அலங்கார வேலைகளுக்குரியது.
சிற்றாணி. - (இரும்பும் பித்தளையும்) வீட்டுக்குத் தளவாட மமைப்பத ற்குச் சிறந்தது. அங்குலந் தொடக்கம் ஒரு அங்குலம் வரை நீளமுடையது.
கப்பல் ஆணி : (பித்தளை) வள்ளம், கப்பல் முதலியவைகளின் வேலை களுக்கேற்றது. 4 அங்குலந் தொடக்கம் 34 அங்குலம் வரை நீளமுடைய ஆணிகளுண்டு.
கூரையாணி : துத்தநாகமும் தகரமும் பூசப்பட்டுள்ள இவ்வாணி சிறப்பாகக் கூரை வேலைகளுக் கேற்றதாகும்.
Tளமொனவை
புரியாணி : ஆணியின் தலையை யொட்டி பலவகையான புரியாணி களுண்டு. அவற்றுள் பிரதானமானவை பின்வருமாறு: மெலிதம் ராணித்தலை ; வட்டமான ஆணித்தலை ; ஆறுசதுர ஆணித்தலை ; தூணுரு ஆணித்தலை புரியாணியும் சுண்டும் நாற்சதுர ஆணித்தலை என்பன.
(அ) அறுசதுரத் தலைப்புரியாணியும் சுரையும். (ஆ) இரதவாகனங்களுக்குபயோகிக்கும் புரியாணியும் சுரையும். (இ) மெலிதமர் புரியாணியும் சுரையும். (ஈ) எந்திரத்தற்குபயோகிக்கும் புரியாணி.

155
இதற்குபயோகிக்கும் சுரைகளில் அதிகமானவை சதுரவடிவானவையாகும். ஆறுசதுரச்சுரை, அறுசதுர ஆணித்தலையுள்ள ஆணிகள் உபயோகிக்கப்படும். படத்தில் சுரைகளினமைப்பைக் காணலாம்.
ந-தியா (Enாற ..) ஓதிற இxற . EE )
121 ஆவது படம் : 1. உருண்டைக்கம்பியாணி ; 2. உருக்காணி. 3. சிற்றாணி. 4. தமர் ஆணி ; 5. சிற்றாணி ; 6. கப்பல் ஆணி ; 7. கூரையாணி ; 8-12. பலவகையான புரியாணிகளும், சுரைகளும்.
அலைநெளிவு மூட்டிறுக்கிகள்
மெல்லிய உருக்குப்பட்டியை அலைநெளிவு வடிவாக வளைத்து, பெட்டி, படச்சட்டம் முதலிய வைகளைப் பொருத்து வதற்கான பட்டி செய்யப்படு கிறது. அலைநெளிவு வடிவாக வளைப்பது சில சந்தர்ப்பங்களில் சமாந்தர மாயிருக்கும். வேறு சந்தர்ப்பங்களில் மையத்தை நோக்கிப் படிப்படியாகக் குறுகிச் செல்லும். இப்பட்டி மூட்டைப் பொருத்த வேண்டிய இருமரத் துண்டுகளை யுப்பதித்த விடத்து துண்டுகளிறுகி உறுதியான மூட்டையுடைய னவாயிருக்கும். பீலியில் கூரிருப்பதால் இதனை மரத்துண்டுடன் பொருத்து தல் இலேசும் உறுதியுமானது. ஆனால், இதனைக் கள்ளிப் பெட்டி போன்ற முரட்டுப் பொருட்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

Page 87
156
ة كية
محم مم)
1
منامہ
ملہ
,الممالها
.امع مانالاناما 60 فاميانا .2 .فانا ونامج Opsono م%g .1 : فالا وهي 22

157
'. அரத்தாள்
- பொருட்களை மினுக்குவதற் கெடுக்கும் ஒரு வகைத் தாள் அரத்தா ளென்றழைக்கப்படும். மினுக்குவதற்கு அரத்தாளைப் போன்ற துணியு முபயோகிக்கப்படுகிறது. இவை தீத்தட்டிக்கல், திரபக்கல், அலுமினிய "மொட்சைட்டு, சிலிக்கன்காபைட்டு, குருந்தக்கல் என்னும் பொருட்களின் தூள்களைக் கடதாசியிலோ துணியிலோ பசையினால் ஒட்டிச் செய்யப்படுகின்றன.
தீத்தட்டிக்கல் திரபக்கல் என்பன இயற்கையாகவே கிடைக்கின்றன. மின்சாரப் போறணையில் போட்சைற்று எனப்படு மொருவகை மண்ணைச் சூடாக்கி அலுமினிய மொட்சைட்டுஉண்டாக்கப்படுகிறது. கற்கரியையும் மணலை யும் சேர்த்துச் சூடாக்கிச் சிலிக்கன் காபைட்டைப் பெற்றுக் கொள்ளலாம். குருந்தக்கல் கருமையான உலோக வகையைச் சேர்ந்தது.
திரபக்கல் தீத்தட்டிக்கல்லிலும் கடினமானது. ஆகையால் திரபக்கல் கரடுமுரடானது ; கூரியது. இதனை, உபயோகித்துச் செய்யப்பட்ட அரத்தாள், தீத்தட்டிக்கல் உபயோகித்துச் செய்த அரத்தாளிலும் பெறுமதியுடையது ; நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடியது. அலுமினிய மொட்சைட்டுச் சிவப்பைச் சார்ந்த பழுப்பு நிறமுடையது. கரடுமுரடானது ; நீண்டகாலம் நிலைத் திருக்கக்கூடியது. உலோசவேலைகளுக்கதிகமாகச் சிலிக்கன் காபைட்டு உபயோகிக்கப்படுகிறது. குருந்தக்கற்றாளும் அதிகமாக உலோக வேலைகளுக் கே உபயோகிக்கப்படுகிறது. கருவிகளிலுள்ள கறையை நீக்குவதற்கும் குருந்தத் தாள் உபயோகப்படுகிறது.
சாதாரண மரவேலைகளுக்கு முரடான, அல்லது சிறிது முரடான அரத் தாள்கள் போதியவையாகும்.
மரவேலைக்குத்தகுந்த - அரத்தாளின் வகைகள் பின்வருமாறு:
தீத்தட்டிக்கல்
திரபக்கல்
அலுமினியம் ஒட்சைட்டு
அழுத்தமான
2/0 10
6/0 4/0
6/0 4/0
சிறிது முரடான
2/0
2/0
முரடான

Page 88
158
8. குறிப்பும் மரங்களின் அட்டவணையும்
ஏதாவதொரு பொருளைச் செய்வதற்கு முன் அதன் நீளம், அகலம் முதலிய விபரங்களைக் காட்டும் குறிப்புப்படமொன்று வரைந்து கொள்வது மிகவும் பயனுடையதாயிருக்கும். இதனைக் கருவிகளையுபயோகியாது சுயமாக வரைதல் நல்லது. செய்யும் பொருளைப்பற்றிய எல்லா விவரங்களும் குறிப் புப்படத்தில் காட்டல் வேண்டும். ஆகையால், பொருளினமைப்பு, நீளம் அகலம் முதலிய அளவைகளும் பொருளைச் செய்வதற்கான வேறு விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடல்வேண்டும்.
குறிப்புப்படம் வரைவதற்குத் திறமையவசியம். சில்பி யொருவர் தமது எண்ணத்தை இன்னொருவருக்கு எடுத்துக் கூறுவதற்குரிய சிறந்தவழி குறிப்புப்படமாகும். குறிப்புப்படத்தைத் திட்டப்படி வரைதல் அவசிய மன்று. ஆனால், பொருளினெல்லாப்பகுதிகளும் காட்டப்படல்வேண்டும். இம்மா திரியான குறிப்புப்படத்தைக் கொண்டு திட்டப்படி கிடைப்படத்தை வரைந்து அதன்படி பொருளைச் செய்யலாம். இதன் செய்கை முறை பின்வருமாறு :-
123 ஆவது படம் : செய்கை முறை-1. எண்ணம். 2. குறிப்புப்படம். 3. கிடை ப்படம். 4. பொருள்.
குறிப்புப்படம் மிகக் கவனமாக வரையப்பட்டதாயின் இங்கு மூன்றாவதாகக் காட்டப்பட்டுள்ள திட்டப்படி வரைந்த கிடைப்படம் அவசியமில்லை. அப்போது செய்கைமுறை பின்வருமாறு :
_124 ஆவது படம் : செய்கை முறை -1. எண்ணம். 2. குறிப்புப்படம். 3. பொருள் ...

159
சிறிய அலுமாரி யொன்றின் குறிப்புப்படம் கீழே காட்டப்பட்டுள்ளது. வேறு பொருட்களின் குறிப்புப்படங்களையும் இதனைப்பின்பற்றி வரைந்து கொள்க.
Sr
ய_
لي
- -பு"
14
125 ஆவது படம் : சிறிய அலுமாரி யொன்றின் குறிப்புப்படம். இக் குறிப்புப்படத்தில் பொருளைப்பற்றிய எல்லா விவரங்களும் அடங்கியுள்ளன. இங்கு குறிப்பிடப் பட்டுள்ள அளவை கள் வேலை முடிவடைந்த பொருளுக்குப் பொருந்தும்.
மர அட்டவணை :
மரங்களுக்குரிய அட்டவணையை ஆக்கும்போது அரிதல், வெட்டுதல், சீவுதல் முதலியவைகளுக்காகக் குறித்தவளவிலும் சிறிது அதிகமாகக் கணக் கிட வேண்டும். இதற்கு நீளத்தில் 4 அங்குலமும் அகலத்தில் 4 அங்குல மும் தடிப்பில் அங்குலமும் அதிகமாக எடுப்பது வழக்கம்.

Page 89
160
சிறிய அலுமாரி செய்வதற்கு வேண்டிய அட்டவணை பின்வருமாறு :
வேண்டிய மரம்
துண்டு களின் தொகை
நீளம்
அகலம்
தடிப்பு
154"
ல் N
54"
104"
54*
GM DA
பக்கப் பட்டிகள் மேல், கீழ்ப் பட்டிகள் கதவிலுள்ள அசையும்
பட்டிகள் கதவிலுள்ள சட்டம் அடைசு பலகை (ஒட்டுப்
பலகை) பிற்பக்கம் (ஒட்டுப் பலகை) தாங்கி
:ை et: -2 #
15!"
N S
91
13"
*'
S - -
11!"
15" 108"
74" 10"
*"
1!"
14"

161
9. பொருட்கள் செய்தல்
சுவரில் தூக்கக்கூடிய முதலுதவிப் பெட்டியொன்றின் படமும் முன் தோற்றமும், குறுக்குத் தோற்றமும் கீழே காட்டப்பட் டுள்ளன. அங்கு மருந்துகளுக்குரிய எந்தானங்களும், பட்டிகளுக்குரிய இலாச்சியும் உண்டு. கீழ்த்தட்டின் மத்தியில் இலாச்சியுண்டு. இதற்கு அரை அங்குலப் பலகை யையுபயோகிக்கலாம். ஆனால், கதவின் நடுப்பகுதி ஒட்டுப்பலகைகளினால் செய்யப்பட வேண்டும்.
126 ஆவது படம் : முதலுதவிப்பெட்டி.

Page 90
162
E
ம்'
127 ஆவது படம் : 1. முதலுதவிப் பெட்டியின் முன் தோற்றம். 2. குறுக்குத் தோற்றம்.
செய்யும் முறை :
(அ) கிடைப்படத்தைப் பரிசீலனை செய்து அதன்படி வேண்டிய பொருட்
களின் அட்டவணை ஆக்குதல். (ஆ) வேண்டிய பலகைகளை வெட்டுவதற்கு அடையாளமிடுதல்.) (இ) பலகைகளை வெட்டுதல். (ஈ) பலகைகளைச் சீவி ஒழுங்கு செய்தல். (உ) பொருத்துக்களை ஒழுங்கு செய்தல் (மேல், கீழ்ப் பலகைகளுக்கும்
ஏந்தானத்திற்கும் வீட்டு மூட்டு, கதவிற்கு - பொளி மூட்டு, அல்லது
சந்துப் பொளி கழுந்து மூட்டு) (ஊ) பலகைகளைப் பொருத்துதல். கதவின் உட்பக்கத்தில் தவ்வைத்
துளைத்துப்புரி ஆணியைப் பூட்டுதல் நல்லது. மிகுதிப் பகுதிகளையும்
புரியாணியைக் கொண்டே பொருத்துதல் வேண்டும். (எ) கதவினதும் இலாச்சியினதும் கைப்பிடிக்குமிழிகளைச் செய்தல். (ஏ) கதவு, இலாச்சி என்பவைகளின் கைப்பிடிக் குமிழிகளைப் புரியாணியி
அ னாற் பொருத்துதல். (ஐ) கதவிற்குப் பிணையல்களைப் பொருத்துதல். (ஒ) அரத்தாளிடல். (ஓ) தூங்கும் இரும்புத்தகடொன்றை ஆயத்தஞ் செய்து பொருத்துதல்.
இதற்குத் தகரத்துண்டொன்றில் தகட்டை வெட்டி யெடுக்கலாம்.

163
சிறிய அலுமாரி :
இதுவும் சுவரில் தூக்கக்கூடியது. அழகுசெய்வதற்கு வேண்டிய சுண் ணச்சாந்து (பவுடர்), சவர்க்காரம், சவரக்கத்தி, தூரிகை முதலியவை களுக்கான சந்தானம் இதிலுண்டு. முற்பக்கத்தில் கண்ணாடியுண்டு.
முதலுதவிப் பெட்டியைச் செய்வது போலவே இதனையுஞ் செய்யலாம். ஆனால் கீழேயுள்ள விடயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் :-
(அ) மேல், கீழ்ப் பலகைகளுக்கும் ஏந்தானத்திற்கும் வீட்டு மூட்டு. (ஆ) பிற்பக்கத்திலுள்ள இரண்டு பலகைகளையும் மடி மூட்டினாற் பொருத்
துதல் வேண்டும். (இ) கண்ணாடியின் பின்புறத்தில் ஒட்டுப்பலகையைப் பொருத்துதல்
நல்லது. கண்ணாடிச் சட்டங்களைச் சீவிப் பொளி மூட்டினாலோ சந்துப்பொளி கழுந்து மூட்டினாலோ பொருத்திப் பின்புறத்திற்கு நாலு அலங்காரச் சட்டமிடல் வேண்டும்.
128 ஆவது படம் : சிறிய அலுமாரி.

Page 91
164
ட்ட்ட்டி
129 ஆவது படம் : 1. சிறிய அலுமாரியின் முற்பக்கத் தோற்றம். 2. குறுக்குத் தோற்றம்

165
புதினத்தாள் தாங்கி :
இங்கு பொளிமூட்டைப் பொருத்துவதற்கு ஆணியை உபயோகிக்காது மத்தியில் மரஆப்பையுபயோகித்திருக்கும் மாதிரியைப் பரிசீலனை செய்க.
அட.
- ----...- - -- - - - - - - -
--.. > > >
''4'
130 ஆவது படம்: 1. புதினத்தாள் தாங்கியின் முற்பக்கத் தோற்றம். 2. குறுக்குத் தோற்றம்.

Page 92
166
தேய்மேசை :
மேற்பக்கத்துப் பலகையைக் கீழ்ப்பக்கத்திலுள்ள புரியாணியைக் கொண்டு பொருத்தலாம். மேற்பட்டிகளும் கால்களும் சந்துப் பொளிகழுந்து மூட் டினால் பொருத்தப்படும்.
-----
- -- - - --4!" 131 ஆவது படம்: 1. தேய்மேசையின் முற்பக்கத் தோற்றம். 2. கிடைப்படம் (பலகையை நீக்கி). 3. சந்துப் பொளிகழுந்து மூட்டு.

167
கருவிப் பெட்டி:
இதலுள்ளே இலாச்சிப் பெட்டியொன்றுண்டு. இது அசையும் மரப்பெட் டி, புரியாணிகளினாற் பெட்டியோடு பொருத்தப்படும். மேல் கீழ்ப் பலகைகளும் புரியாணியினாற் பொருத்தப்படும். புறாவான் மூட்டையுபயோகிக்கும் மாதிரி
யைக் கவனிக்க.
==
1 1
- -- - - - ஏ - - -
--- --SS
2 2 2 2 q_2
மாம்
உட்கிட4448 |
132 ஆவது படம் : கருவிப் பெட்டியின் முற்பக்கத் தோற்றம். 2. கிடைப்படம். 8 J. N. R 21997 (1/60)

Page 93
168
புத்தக சந்தானம் :
இதுவும் சுவரில் தூக்குவதற் கேற்றது.
''( 1: 1 - 13: ( 1 !... :
(3
கட2)
ERTா
E-' - டி-சி"
133 ஆவது படம் : 1. புத்தக சந்தானத்தின் முற்பக்கத் தோற்றம். 2. குறுக்குத் தோற்றம்.
41. ! 1. --- .

169
10.
விளையாட்டுப் பொருட்களைச் செய்தல்
பிள்ளைகள் விளையாட்டுப் பொருட்களை விரும்புவார்கள். விளையாட்டுப் பொருட்களைச் செய்வதன் மூலம் பொறுமை, அவதானம், வழுவின் நீங்கல் முதலியவைகளும் கைப்பயிற்சியும் தாமாகவே வந்தடையும். இவை மட்டு மன்றி விளையாட்டுப் பொருட்களைச் செய்வது பிள்ளைகளுக்குப் பொழுது போக்காகவுமிருக்கும். இதன்மூலம் அவர்கள் நிருமாண சக்தியைப் பெறு வார்கள். தகுந்தவைகளைத் தகுந்த சந்தர்ப்பத்தில் செய்யுமாற்றலு முண்டாகும். மொழி, கணிதம் முதலிய பாடசாலைப் பாடங்களில் சிறி தளவு ஊக்கமேனுங் கொள்ளாத அநேக பிள்ளைகள் விளையாட்டுப் பொருட் களைச் செய்வதில் பெருமூக்கங் காட்டுகிறார்கள். இதன் மூலம் இவர்கள் பெறும் அறிவும் மகிழ்ச்சியும் மிகவதிகம்.
விளையாட்டுப் பொருட்களைச் செய்வதற்கு வெறும் நெருப்புப் பெட்டி, தடித்த கடதாசிப் பெட்டி, கிடைச்சி, மரம், சீலைத்துண்டு, கம்பித் துண்டுபோன்ற இலவசமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய பொருட்களையும் யோகிப்பது நல்லது. இம்மாதிரியான பொருட்களைக் கொண்டு மாணவர் களின் அமைப்புச் சத்தியை யுபயோகித்துப் பல விதமான பொருட்களைச் செய்யத் தூண்டுதல் அவசியம். மாணவர்களுக்குத் தகுந்த விளையாட்டுப் பொருட்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. எல்லா விளையாட்டுப் பொருட்களை யுஞ் செய்தபின்பு பன்னிறப் பூச்சு முதலிய நிறங்களையுப யோகித்துப் பொருத்தமான நிறமூட்டுதல் நன்று. இதன் மூலம் தகுந்த நிறமூட்டும் ஆற்றலுமுண்டாகும்.)
கீழே குறிப்பிட்ட விளையாட்டுப் பொருட்கள் மட்டுமன்றித் தமது கற்பனை யையு முபயோகித்துப் பொருட்களைச் செய்வது மிகவும் முக்கியமாகும்.
(அ) வள்ளங்கள், நாவாய் (பாதை), கப்பல்கள் முதலியன. வேண்டிய பொருட்கள் : கிடைச்சி, அல்லது மென்மரவகை, ஈர்க்குக்கள், பனையீர்க்கில், மரச்சட்டம், கம்பி, நூல், சீலைத் துண்டுகள், ஈயத்தகடுகள்.
வள்ளங்கள், நாவாய் (பாதை) முதலியவைகளினடியில் ஈயத்தகடு களைப் பொருத்தினால், இவை பாரம் சமப்படுத்துவனவாயிருக்கும், செலுத்துவதும் இலகுவாயிருக்கும்.

Page 94
/ II
Eதிபதி
பி
TLIm
TIIIt 0 0 0 0 0 0 0 0 0
134 ஆவது படம் : நீரிற் செல்வன.

171
(ஆ) ஆடும்பிராணிகள்
வேண்டிய பொருட்கள் : "வனிட்டா '' வெனப்படும் ஒட்டுப் பலகை, அல்லது தடித்த தாள் ஈயத் தெறி, அல்லது ஈயத்துண்டுகள்.
135 ஆவது படத்திற் காணப்படும் பிராணிகளின் படங்களைப் பெரிதாக வரைந்து ஒட்டுப்பலகைகளில், அல்லது தடித்த தாள்களில் வெட்டியெடுக்க. B அடையாளமுள்ள விடத்தில் ஈயத் தெறியை, அல்லது ஈயத்துண்டை வச்சிரத்தாற் பொருத்துக . இதன்பின்பு பிராணிகளின் படங்களுக்கு நிற மூட்டுக. இவ்வுருவத்தைப் படத்திற் காட்டப்படும் மாதிரிச் செய்யப்பட்ட தாங்கியில் A அடையாளமுள்ள விடத்தில் தங்க வைக்க . அப்போது, இவ்வுருவம் உயிருள்ளதாக ஆடும். மேலும் பல உருவங்களையமைக்க.
(இ) வண்டிகள்
வேண்டிய பொருட்கள் : நூற்கட்டைகள், ஒட்டுப் பலகைகள், கம்பியாணி. மென்றகட்டூசியாணி, மரத்துண்டுகள், வண்டிகளுக்கு நூற்கட்டைகள் போன்றவைகளைச் சில்லுகளாயமைக்கும் முறை படத்தின் முதலாவது இலக்கமூலம் காட்டப்பட்டுள்ளது. சில்லுகளை ஒட்டுப் பலகைகளிலும் வெட்டி யெடுக்கலாம்.
(ஈ) எந்திரப் பொருட்கள் ..
எந்திரங்களினாலியங்கும் விளையாட்டுப் பொருட்களினாலுண்டாகும் மகிழ்ச்சி மிக அதிகமாகும். அம்மாதிரியான சில சில விளையாட்டுப் பொருட் களைச் செய்யும் மாதிரி கீழே விபரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுப்பலகைகளில் வெட்டி யெடுத்த பல உருவத் துண்டுகளைத் தறையாணியினாற் பொருத்துவதன் மூலம் அந்தந்த உருவத்துண்டுகள் உயிருள்ள வைகளாக வியங்கும்.
134 ஆவது படத்தைப்பற்றிய விவரங்கள் 1. வள்ளம் : கிடைச்சி, பனையீர்க்கில், அல்லது மரப்பெட்டி, கம்பி, நூல், சீலைத் துண்டுகள், ஈயத்தகடு என்பன வேண்டும். கிடைச்சி, கம்பித்துண்டுடன் பொருத்தப்படும். புறோப்புக்களினமைப்பும் ஈயத்தகட் டைப் பொருத்த வேண்டிய மாதிரியும் படத்தில் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளன. . 2. புகைக்கப்பல் ; 3. எகித்து வள்ளம் ; 4. நாவாய் (பாதை) ; 5. மரத்தினாற் செய்யப்பட்ட வள்ளத்தட்டு ; 6. வள்ளம் ; 7. நீர்மூழ்கி (புறோப்பைப் பொருத்திக் கட்டியமைக்கப்பட்டுள்ளது. மேலேயுள்ளவேலி போன்ற பகுதிக்கு ஈர்க்குக்களையும் கம்பிகளையுமுபயோகிக்கலாம்) ; 8. மீன்பிடிக்கும் கட்டுமரம், 9. பழைய பினீசிய சண்டைக் கப்பல், 10. புகைக்கப்பல். (மேலேயுள்ள வேலி போன்ற பகுதிக்கு கம்பியாணியும்
கம்பியுமுபயோகிக்கலாம்).

Page 95
57
2)
} 14
K: 18
இ-ஏ.
135 ஆவது படம் : ஆடும் பிராணிகள். (இயங்கும் பொருட்கள்)

alth 。
이 AS
는 」
136 원uy ULö: 1609 1605m,

Page 96
174
தறை ஆணிகளைக் கொண்டு உருவத்துண்டுகளைப் பொருத்தும் மாதிரி 137 ஆவது படத்தில் முதலாவது பகுதியில் காட்டப்பட்டுள்ளது. ஒட்டுப் பலகைகளில் வெட்டியெடுத்த உருவத்துண்டுகளில் பொருத்தமானவிடங் களில் தவ்வைத் துளைத்துத் தறை ஆணியைப் பூட்டலாம். இவ்வாறு பொருத்தப்பட்ட முயலினுருவமொன்று இரண்டாவது பகுதியில் காட்டப் பட்டுள்ளது.)
3, 4, 5 ஆகிய பகுதிகளில் கோமாளியும் அதன் பகுதியும், 6 என்னும் பகுதியிலொன்று சேர்க்கப்பட்ட கோமாளி உருவமும் கோமாளி உருவத்தை மரச் சட்டத் தூணொண்றிற் பொருத்திப், படத்திற் காட்டப்பட் டுள்ள மாதிரி கம்பியை யமைத்துக் கொள்வதன் மூல இயங்கச் செய்ய லாம். 6 ஆவது பகுதியில் பிற்பக்கம் காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவங் களுக்குப் பொருத்தமான நிறங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டும்.
7 ஆவது பகுதியில் கரணமடிக்குங் குரங்கினுருவம் காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவத்தின் கைகள் ஒரு மரச் சட்டத்திலும் கால்கள் வேறொரு மரச் சட்டத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மரச் சட்டத்தை உயர்த்த வும், தாழ்த்தவும் குரங்குருவம் பல கரணங்களடித்தாடும். மரச் சட்டங் களிரண்டினதும் கீழ்த் தொங்கலைப் பொருத்தும் மாதிரி 8 ஆவது பகுதியில் காட்டப்பட்டுள்ளது.
9 ஆவது பகுதியில் கயிற்றின் நீளத்திற்கு ஏறுங் குரங்கின் படமொன்று தெரிகிறது. கைகளையும், கால்களையும் படத்திற் காட்டியவாறு மீள்கத்தி வாரினால், அல்லது இறப்பர் பட்டியினால் பொருத்த வேண்டும். கயிற்றுக் குப் பதிலாக உபயோகிக்கும் நூலின் கீழ் நுனியை அடித்திழுத்தால் குரங்கினுருவம் மேலுக்குப் போகும்.
136 ஆவது படம் பற்றிய விவரங்கள் - 1. நூற்கட்டைகளை வண்டிகளிற் பொருத்த வேண்டிய முறை. (வண்டி யின் தட்டு மேலே யமைந்துள்ளது). 2. உலொறி (இதன் முற் பகுதி மரம் கனமானது). 3. கல் நெரிக்கும் உருளை. (வட்டிவடிவான மரத் துண்டை உருளையாக உபயோகிக்கலாம்). 4. பெட்டி வண்டி . (இங்கு 1 போன்றே சில்லுகள் பொருத்தப்பட்டுள்ளன). 5. கைவண்டி. 6. கார். 7. புகை வண்டி எந்திரமும் பொருட் வெட்டியும்.
137 ஆவது படம் பற்றிய விவரங்கள் 1. தறை ஆணியையுபயோகித்து உருவங்களின் துண்டுகளை யொன்று சேர்க்கும் மாதிரி. 2. துண்டுகளையுபயோகித்து செய்யப்பட்ட முதலினுருவம் 3, 4, 5 கோமாளி உருவத்தின் பகுதிகள். 6. கோமாளி உருவத்தை இயக்கும் மாதிரி' (பிற்பக்கம்). 7. கரணமடிக்கும் குரங்கினுருவம். 8. குரங்கினுருவத்திற்கு மரப் பட்டியை யமைக்கும் மாதிரி. 9. ஏறும் குரங்கினுருவம்.

137 I S LILIÒ :
O
. O 0 0 0
0 0 0 0 0 0
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 9 c
| 0 0 0 0 0 0
0 0 0 0
O O
O og
jo o 0 00 |o o Od
E
oo
CATEGORI
O III
INSIE
O. O
TIGA

Page 97
176
11. காட்டுருக்கள் பற்றிய அடிப்படை விடயங்கள்
SC
138 ஆவது படம் : காட்டுருக்களைப் பாகுபடுத்தல்.

177
இப்படத்தை நன்கு கவனமாகப் பரிசீலனை செய்க.. இங்கு முதலாவது பகுதியில் சமமற்ற நீளமுடைய இரண்டு பகுதிகளையுடைய இரண்டு பொருட் கள் (பெட்டி மேசை) காணப்படுகின்றன. அவற்றின் காட்டுருக்கள் வலது பக்க ஓரத்துக்கிடைப் படத்தைப் பின்பற்றியிருப்பதாகத் தெரியவில்லையா?
இரண்டாவது பகுதியில் பொருள் (தைலப் பெட்டி, மேசை) சமமற்ற நீளமுடைய மூன்று பகுதிகளையுடையது. இப்பொருட்களை இவற்றின் வலது பக்க வோரத்திலுள்ள உருவத்துடன் ஒப்பிடுக.
சமமான நிலைக்குத்துப் பகுதி இரண்டையுடைய பொருட்கள் (மேசை , அலுமாரி, ஏந்தானம், வானொலி எந்திரம்) மேற்படி படத்தின் மூன்றா வது பகுதியில் காட்டப்பட்டுள்ளன.
சமமான இரண்டு வெளிப் பகுதிகளையுடைய பொருட்கள் (மேசை, அலுமாரி, ஏந்தானம்) நாலாவது பகுதியில் காட்டப்பட்டுள்ளன. இவ் வாறு பொருட்களின் காட்டுருக்களைப் பாகுபடுத்தும் போது கீழ்க் காணப் படும் முடிவிற்கு வரக் கூடியதாயிருக்கும் :-
(1) சம் மற்ற நீளமுடைய இரண்டு பகுதிகள். (2) சமமற்ற நீளமுடைய மூன்று பகுதிகள். (3) சமமான நிலைக்குத்துப் பகுதிகள் இரண்டு. (4) சமமான நிலைக்குத்து வெளிப் பகுதிகளிரண்டு.
படத்தின் ஐந்தாவது ஆறாவது பகுதிகளைப் பாகுபடுத்துக. காட்டுருக்கள் பற்றிய மேற்படி அடிப்படை விடயங்கள் பல சேர்ந்து அவையமைக்கப் பட்டுள்ளன வென்பது உங்களுக்குத் தெரியவரும்.
அடிப்படையான பல விடயங்கள் பலவற்றைச் சேர்த்துக் காட்டுருக்களை யமைக்கும்போது தொடர்பழியா வண்ணம் அவ்வப் பகுதிகளை உபயோ கித்தலும் பொருத்துதலும் மிக முக்கியமாகும். இவ்வாறமையாவிடின் கலையின் பெறுமதி அழிந்துவிடும். காட்டுருக்களையமைப்பது ஒரு கலை. இதனால், இத்தாலி, பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா முதலிய சில நாடு களில் பொருட்களின் காட்டுருக்களை யமைப்பவன் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பெறுகிறான். காட்டுருக்களையமைக்கும் போது தேசீய பண் டைப் பொருட்களைப் பாகுபடுத்தி அவற்றிலுள்ள முக்கிய பகுதிகளுக்கு முதலிடங் கொடுப்பதன் மூலம் எங்கள் நாட்டிற்கே சிறப்பாயுள்ளதும் கலையுடையதும், உபயோகத்திற்கிலகுவானதும், பயனுள்ளதுமான பொருட் களைச் செய்யலாம். இதன் மூலம் எங்கள் பண்பாட்டிற்கும், நாகரிகத் திற்கும் புத்துயிர் அளிக்கலாம்.

Page 98
178
12. கிடைப்படம் வரைதல்
1 அந்தந்தச் சமவள வெறியம் பற்றிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தச் சமவுளவெறியப்படி கிடைப்படங்கள் வரைவது பற்றிய விவரம் மேலே கூறப்பட்டுள்ளது. ஒரு பொருளின் கிடைப்படத்தை வரைவதற்கு இரண்டு நோக்கங்களுண்டு. ஒன்று, பொருளைச் செய்வது பற்றிய சரியான விளக்கத்தைப் பெறுதல். மற்றையது அப்பொருளைப் பற்றிய முழு உணர்ச்சியையும் மற்றையவர்களிடம் சேர்த்தல். ஆகையால் பொருளைச் செய்வதற்குக்கிடைப்படம் பயனுடையதெனக் கூறவேண்டிய தில்லை.
நிலைக்குத்துச் சம் வளவெறிய முறையே அதிகமாக உபயோகிக்கப்படு கிறது. இது, மேல் தோற்றம் (கிடைப்படம்) முன்தோற்றம், குறுக்குத் தோற்றம் என்னும் மூன்று பக்கங்களையும் காட்டும் சரியான அளவைக் காட்டும் இம்மூன்று பக்கங்களையும் எப்பொழுதும் வரைந்து காட்டவேண்டு மென்றெண்ண வேண்டியதில்லை. தமது வேலைக் கேற்ற பயனுடைய பக்கம் ஒன்று, அல்லது இரண்டு, அல்லது மூன்றையும் வரைவது போதியதாகும்.
முதலில், எத்தோற்றத்தை வரைய வேண்டும்?- பொருளைப்பற்றிச் சரியான விளக்கத்தைக் கொடுக்கும் தோற்றத்தை (தளத்தை) முதலில் வரைவது வழக்கம். இங்கு நாங்கள் 139 ஆவது படத்தின்மீது கவனத் தைச் செலுத்துவோம். இப்படத்தின் முதலாவது பகுதியில் நிலைக்குத்துச் சமவள வெறியப்படி வரையப்பட்ட புத்தகந்தாங்கியின் கிடைப்படங்கள் காட்டப்பட்டுள்ளன. இங்கு A எழுத்து குறுக்குத் தோற்றத்தைக் காட்டு கிறது. இதன் மூலம் புத்தகம் தாங்கியைச் செய்வதற்கு வேண்டிய பலகை களின் அகலமும் தடிப்பும் புத்தகந் தாங்கியினுருவமும் தெளிவா கின்றன. ஆகையால் இங்கு குறுக்குத் தோற்றம் முதலிடத்தைப் பெறு கிறது. எனவே, இதனை முதலில் வரைந்து மிகுதியான இரண்டு தளத்தை (தோற்றம்) அதன்மீது அமைத்தல் நன்று.
மேற்படி படத்தின் இரண்டாவது பகுதியில் மணிக்கூட்டின் கிடைப் படங்கள் காணப்படுகின்றன. இங்கு A எழுத்தினாற் குறிக்கப்பட்டுள்ள முற்பக்கத்தோற்றம் மிகவும் முக்கியமானது. ஆகையால் இதனை முதலில் வரைந்து மிகுதியான இரண்டு தளங்களையும் வரைக.
படத்தின் மூன்றாவது பகுதியில் துவாய் தாங்கி காணப்படுகிறது. இங்கு ஒவ்வொரு பக்கத்தினளவையும் மேல் தோற்றம் தெளிவாகக்காட்டு கிறது. ஆகையால், அதனை முதலில் வரைந்து முன் தோற்றத்தையும் குறுக்குத் தோற்றத்தையும் அதற்குப் பொருத்தமான விடத்தில் வைத்து வரைதலே உவப்பாகும். இவ்வாறு பொருளின் சரியான உருவத்தையும் அளவைகளையும், காட்டும் தோற்றத்தை (தளத்தை) முதலில் வரைந்து, அதன்படி மிகுதியான பக்கங்களை வரைதல் முக்கியமென்பதைக் கவனிக்க.
போல், அத்தவையும் போய் தாங்கி க

IL,
139 ஆவது படம் : 1. புத்தகந்தாங்கி . 2. மணிக்கூடு. 3. துவாய் தாங்கி .

Page 99
180
13. பல கோணவடிவங்கள் வரைதல்
நிலைக் கோடுகளினாலிணைக்கப்பட்டதும் நான்கு பாதங்களுக்கு மேற் பட்டதுமான உருவம் பல்கோண வடிவமெனப்படும். இது சம் பல் கோண வடிவம், சமமில் பல்கோணவடிவம் என இரண்டு வகைப்படும். சம்பல்கோண வடிவத்தின் பாதங்களுங் கோணங்களும் சமமானவை. சம்மில் பல்கோணவடிவத்தில் சமமற்ற பாதங்களுங் கோணங்களும் ஒன்றோ, அதிகமானவையோ உண்டு.
பாதங்கள் :-
1)
பாதங்களின் தொகைகளின்படி பல்கோண வடிவங்களின் பெயர்கள் :
ஐங்கோண வடிவம்
ஐந்து பாதங்கள் (பக்கங்கள் ) ஆறு கோண்வடிவம்
ஆறு பாதங்கள் ஏழுகோண வடிவம்
ஏழு பாதங்கள் எண்கோண வடிவம்
எட்டுப் பாதங்கள் ஒன்பது கோண வடிவம்
ஒன்பது பாதங்கள் பத்துக் கோண வடிவம்
பத்துப் பாதங்கள் பதினொரு கோண வடிவம்
பதினொரு பாதங்கள் : பன்னிரு கோண வடிவம்
பன்னிரண்டு பாதங்கள் ,,
மூலை விட்டம்
பல்கோண வடிவத்திற்குப் பக்கத்திலமைந்திருக்கும் கோணங்களைத் தவிர, மிகுதியிரண்டு கோணங்களையோ அதன் வேறு கோணங்களையோ இணைக்கும் மூலை விட்டமெனப்படும். இக்கோட்டினால் முக்கோணமுண்டாகுமாயின் இதற்கு குறுமூலை விட்ட மென்ற பெயர் உபயோகிக்கப்படும் இரட்டைப் பாதங்கள் உள்ள சம்பல்கோண வடிவத்தின் மையத்தை வெட்டிக் கொண்டு கோணத்திலிருந்து வேறோர் கோணத்தை நோக்கிச் செல்லுங் கோடு, விட்டமெனப்படும்.
9:4/1" இர- 75; 2 ..பா" - அ -------- 25

181
உயரம் :
ஒற்றைப் பாதங்கள் உள்ள சம்பலகோண வடிவத்தின் மையத்தை வெட்டிக் கொண்டு போகும் பாதத்தின் மத்தியிலிருந்து கோணத்தை நோக்கிச் செல்லும் செங்குத்துக் கோடு உயரமெனப்படும்.
மையம் :
சம்பல்கோண வடிவத்தின் விருப்பமான இரண்டு பாதங்களை இரண்டா கப் பிரித்தால் மையமுண்டாகும். பாதங்களைப் பிரிக்கும் கோடுகள் ஒன்று சேரும் புள்ளி மையமெனப்படும்.
உட்கோணம் :
பல்கோண வடிவத்தின் இரண்டு பாதங்கள் ஒன்று சேர்வதாலுண்டாகும் கோணத்தைக் காணும் சூத்திரம் பின்வருமாறு :-
180° 3600 17 ச
ச = பாதங்களின் தொகை.
360 பாகையைப் பாதங்களின் தொகையினாற் பிரித்து வரும் ஈவை 180 பாகையிலிருந்து கழித்தால் உட்கோணங்கிடைக்கும். -
உதாரணம்:
360
எண்கோண வடிவத்தின் உட்கோணம் = 180 -
': !
= 180 - 45
= 1350
இவ்வாறு உட்கோணத்தைக் கண்டு கோணமானியின் உதவியுடன் விரும் பிய பல்கோண வடிவத்தை வரைந்து கொள்ளலாம்.
வெளிக்கோணம் :
பாதத்தை நீட்டுவதாற் பெறும் கோணம் இப்பெயரைப் பெறும்... :

Page 100
ஒNT
1182
140 ஆவது படம். 1. சமமில் கோண வடிவம்-A. மூலை விட்டம். B. உட்கோணம். C. வெளிக்கோணம். 2. ஐங்கோண வடிவம்-A. உயரம். 3. அறுகோண வடிவம் - A. (குருங்) கோண விட் டம். 4. எழுகோண வடிவம். 5. எண்கோண வடிவம். 6. ஒன்பது கோண வடிவம்.
1. வட்டத்தினுள், சம அறுகோண வடிவம் வரைதல் : AB விட்டம் வரைக. வட்டத்தின் பிரதியை ஆறு சம் பகுதிகளாகப் பிரிக்க . (விட்டார்த்தம் = பாதத்தின் நீளம்) A B C D E F வேண்டிய அறு கோண வடிவமாகும். (141) ஆவது படத்தில் (1)
2. வட்டத்தினுள் சமமான எண்கோண வடிவம் வரைதல் : AB விட்டத்தை C இலும் G இலும் இரண்டாகப் பிரிப்பதன் மூலம் வட்டத்தை நான்காகப் பிரிக்க. இப்பகுதிகளை (வட்டத்தின் நாலிலொரு பகுதிகள்) B. D. F. H என்னுமிடங்களில் பிரிக்க. புள்ளிகளை இணைக்க. ABCDEFGH வேண்டிய எண்கோண வடிவம் ஆகும். (141 ஆவது படத்தில் 2).
3. வட்டத்தினுள் சமஐங்கோண வடிவங் கீறுதல் 1, 2, 3, 4 என்னும் வட்டங்களில் விட்டங்களிரண்டு ஒன்றிற்கொன்று செங்கோணமாக, சம பிரிவாகும்படி வரைக. 0, 2 என்னும் ஆரையை 5 இல் சமமாகப் பிரிக்க . ஐ மையமாகக் கொண்டு 45° ஆரமுள்ள வில்லை 0, 1 கோட்டை 6 இல் வெட்டும்படி வரைக. 4ஐ மையமாகக் கொண்டு 4 6 ஆரையுள்ள வில் வட்டத்தை E இல் வெட்டும்படி வரைக. AE என்பது ஐங்கோண வடிவத்தின் ஒரு பாதமாகும். அதன்படி மிகுதிப் பாதங்கள் B. C. D அடையாளமிடுக. ABCDE வேண்டிய
ஐங்கோண வடிவம் (141 ஆவது படத்தில் 3).

183
4. பாதங் கொடுத்தவிடத்துச் சம அறு கோண வடிவம் வரைதல் : AB கொடுக்கப்பட்ட பாதம். A ஐயும் B ஐயும் மையமாகக்கொண்டு AB ஆரையுள்ள இரண்டு நாண்கள் 0 இல் வெட்டும்படி வரைக. 0ஐ மையமாகக் கொண்டு OA ஆரையுள்ள வட்டம் வரைக. CF இல் நாண் வெட்டப்படும். மிகுதியான பாதங்களைக் குறிக்க . ABCDEF வேண்டிய அறுகோண வடிவம் ஆகும். (141 ஆவது படம் 4).
5. ஒரு பாதங் கொடுத்த விடத்துச் சம பல்கோண வடிவம் வரைதல் : இங்கு ஐங்கோண வடிவத்தை வரைவோம். AB கொடுக்கப்பட்ட பாதம் AB ஐ நீட்டுக. B ஐ மையமாகக் கொண்டு AB ஆரையுள்ள பாதிவட்டம் வரைக. பிரிக்குங் கருவியையுபயோகித்து இப்பாதி வட் டத்தின் பல்கோண வடிவத்தின் பாதங்களைப் பல பகுதிகளாகப் பிரிக்க (இங்கு ஐந்து) 3 ஐ , B உடன் இணைக்க . AB, உட்கோணம் (இங்கு 108°) AB 3 B என்னும் பாதங்களைச் சமமாகப் பிரித்துச் சம் பிரிவுகள் 0 இல் சேரும்படி நீட்டுக. 0ஐ மையமாகக் கொண்டு OA ஆரையுள்ள வட்ட மொன்று வரைக. CD, DE, EA என்னும் பாதங்களை வரைக. ABCDE வேண்டிய ஐங்கோண வடிவம். (141 ஆவது படம் 5).
6. பாதமும் உட்கோணமும் கொடுத்தவிடத்துப் பல்கோண வடிவம் வரைதல்.
இங்கு கொடுக்கப்பட்ட பாதம் AB என்றும் உட்கோணம் 135° என்றும் வைத்துக்கொள்வோம்.
AB பாதத்தில் 135° உடைய உட் கோணம் வரைக. AB ஐயும் BC ஐயும் சமமாகப் பிரித்து சம்பிரிவுகள் 0 இல் சந்திக்கும்படி நீட்டுக. 0ஐ மையமாகக் கொண்டு OA ஆரையுள்ள வட்டத்மொன்று வரைக. AB பாதத்தின் நீளத்திற்குச் சமமான பாதத்தை வட்டத்தில் குறிக்க. பாதத்தை வரைக. (உட்கோணங் கொடுத்தவிடத்துப் பாதத்தின் தொகை களைக் காணலாம்.) அச் சூத்திரத்தைக் கவனிக்க . (141 ஆவது படம் 6).
7. கொடுக்கப்பட்ட பல்கோணச் சம வடிவமோ பல்கோண வடிவமோ வரைதல்.
eெ - கம்பம் ABCTDR
என்று வைத்துக்
கொடுக்கப்பட்ட
பல்கோண வடிவம் கொள்வோம்.
கொடுக்கப்பட்ட பலகோண வடிவத்தில் AC, AD என்னும் கோண விட்டங்களை வரைந்து சமமான முக்கோணம் வரையும் சூத்திரத்தின்படி வரைக. (141 ஆவது படம் 7).

Page 101
184
1 ) 4
141 ஆவது படம்.

185
14. - - கேத்திர கணிதக் கனவளவுப் பொருட்கள்
கேத்திரகணிதக் கனவளவுப் பொருட்கள்
தொழிற் படங்கள் , தொழிற் கேத்திர கணிதக் கனவளவுப் பொருட்கள் வெவ்வேறாகவோ முறையாகவோ ஒழுங்கு செய்வதால், பொருட்கள்மைக் கப்படுவதாகக் கணிக்கப்படுகிறது. ஆகையால், தொழிலுக்கு வேண்டிய படங்களை வரைவதற்கு, கேத்திர கணிதக் கனவளவுப் பொருட்களைப்பற்றிப் படித்தல் அவசியம்.
அச்சு : கனவளவுப் பொருளின் நுனியிலோ மத்தியிலிருந்து அடியிலோ அமைந்திருப்பதாகக் கணிக்கப்படுங் கோடு, அச்சு எனப்படும். அச்சு, அடிக் குச் செங்கோணமாயமைந்தவிடத்து, செங்கோணக் கனவளவுப் பொரு ளெனப்படும். கனப்பொருளின் அடியிலோ முனையிலோ அச்சுச் சரிவா யமைந்திருந்தால், அது கூம்பகமெனப்படும். அடியின் விளிம்பு , அல்லது பக்கங்கள் சமமான கனவளவுப் பொருட்கள் என்னும் பெயரைப் பெறும்.
கனவளவு : சமமான ஆறு சதுரங்களினாலமைக்கப்பட்ட கனவளவுப் பொருள் கனம் எனப்படும். எதிர்ப் பக்கங்களின் சரிமையத்தை இணைக்கும் குறிப்பிட்ட கோடு இதன் அச்சு ஆகையால், கனவளவிற்கு மூன்று அச்சுக் களுண்டு.
செங்கோண சம்பட்டயம் : இது சமமான நீளச துரப் பக்கங் களையும் சமமான உச்சியையும் அடியையுமுடையதாயிருக்கும். இது பக்கங் களின் எண்ணிக்கையையொட்டிச் சம் சதுர அரியம், ஐங்கோண அரியம், அறுகோண அரியம் முதலிய பெயர்களைப் பெறும்.
141 ஆவது படத்தைப்பற்றிய விவரங்கள் 1. வட்டத்தினுள் சமமான அறுகோண வடிவம் வரைதல். 2. வட்டத்தினுள் சமமான எண்கோண வடிவம் வரைதல். 3. வட்டத்தினுள் சமமான ஐங்கோண வடிவம் வரைதல். 4. பாதங் கொடுத்த விடத்துச் சமமான அறுகோண வடிவம் வரைதல். 5. பாதங் கொடுத்தவிடத்து சமமான பல்கோண வடிவம் வரைதல். 6. பாதமும் உட்கோணமும் தந்தவிடத்துப் பல்கோண வடிவம் வரைதல்.
7. கொடுக்கப்பட்ட பல்கோண வடிவத்திற்குச் சமமான பல்கோண. வடிவம் வரைதல்.

Page 102
186
செங்கோண சபைக்கக் கூம்பகம் : சிகரமெனப்படும் புள்ளியில் சந்திக்கும் சமமான சமவிரட்டைப் பாத முக்கோணமான பக்கங்களையுடைய திண்மப் பொருள். செங்கோண கூம்பெனப்படும். பாதத்தினமைப்பை யொட்டி சமகோண கூம்பு ஐங்கோண , அறுகோணக் கூம்பு எனப் பல பெயர்கள் ளுண்டு. சிகரத்தினதும் சரி நடுவை இணைக்கும் கோடு இதன் அச்சாகும்.
10
சு
கூம்பு : செங்கோண முக்கோணத்தை அதன் நிலைக்குத்தைச் சுற்றித் திருப்பினால் கூம்பு உண்டாகும். இந்நிலைக்குத்து கூம்பின் அச்சாகும். அச்சிலிருந்து நுனியும் அடியின் சரிமையமுமிணைக்கப்படும்.
உருளை : நீள் சதுரத்தை அதன் நிலையான பக்கத்தை சுற்றித் திருப் பினால், உருளை உண்டாகும். அப்போது நிலையான பக்கம் அச்சாகும். இவ் வச்சு மூலம் இரண்டு பக்கங்களின் சரிமையம் இணைக்கப்படும்.
| 1A
--- -
142 ஆவது படம் : 1. கனம் ; A. அச்சு. 2. செவ்வகவரியம். 3. அறு கோண அரியம். 4. சதுரக்கூம்பகம். 5. முக்கோணக்கூம்பகம். 6. அறுகோணக்கூம்பகம். ா 7. கூம்பு. 8. அ.ருளை.

187
15. - திண்மக் கேத்திரகணிதம் கிடைப்படமும் ஏறுதன்மையும்
கனம், சமசதுர உருளை அறுகோண உருளை முதலியவைகளின் கிடைப் படத்தையும் ஏறுதன்மையையும் வரைதல். இக்கனப் பொருளின் பக்க உச்சி, தளத்திற்குச், சமாந்தரமாகவும் 2 அங்குலம் கூடுதலாகவும் குறுக்குத் தளத்திலமைந்துள்ள தென்று வைத்துக்கொள்க. ..
T மட்டத்தைக் கொண்டு XY கோட்டை வரைக. T மட்டத்தையும் மூலை மட்டத்தையும் உபயோகித்து XY கோட்டிற்கு 2 அங்குலத்திற்குக் கீழே கிடைப்படங்களை வரைக. கிடைப்படங்களின் மையங்களைக் கண்டு 0 அடை யாளமிடுக. இடைப்படங்களின் பக்கங்களுக்கு எழுத்துக்களையுபயோகித்துப் பெயரிடுக. அமைப்புக் கோடுகளின் மூலம் கிடைப்படங்களின் புள்ளிகளை நீட்டுக. உயரத்திற் கேற்றவாறு ஏறுதன்மையைப் பூரணப்படுத்துக. மையக் கோட்டைக் கொண்டு அச்சுக்களைக் காட்டுக. ஏறுந்தன்மைகளிலுள்ள புள்ளி களுக்கு எழுத்துக்களைக் கொண்டு பெயரிடுக. அளவைகளைக் காட்டுக.
(கனம் : 1 ஆவது படம் ; முக்கோண அரியம் 2 ஆவது படம் ; அறுகோண உருளை, 3 ஆவது படம் ; இதற்காக உபயோகிக்கப்பட்டுள்ள கனப் பொருட்களின் பருமனை யளவுகளிற் காணலாம்).
கீழே குறிப்பிடப்பட்டுள்ள கனப் பொருட்களின் கிடைப்படங்களையும் ஏறுந் தன்மையையும் வரைதல். சமசதுரக் கூம்பு , முக்கோணக் கூம்பு, அறு கோணக் கூம்பு , இக்கனப் பொருட்களின் அச்சு இரண்டங்குல் முடையது. பாதங்கள் முறையே 12 அங்குலம், 12 அங்குலம் ; 1 அங்குலம்.
இக்கனப் பொருட்களின் பக்க உச்சி, தளத்திற்குச் சமாந்தரமாக இதற்கு 2 அங்குலம் முன்னதாகக் குறுக்குத் தளத்திலமைந்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினையிற் போலக்கிடைப்படங்களை வரைக. கிடைப்படங்களின் மையங்களைத் தேடிப் பட்டைக்கூம்புகளின் விளிம்புகளைக் காட்டுவதற்காகப் பிரதான கோட்டை வரைக. கிடைப்படங்களின் புள்ளி களுக்கு எழுத்துக்களையுபயோகித்துப் பெரியடுக. அமைப்புக் கோடுகளின் மூலம் கிடைப்படங்களின் புள்ளிகளை நீட்டி ஏறுதன்மையை வரைக. எறு தன்மைக்கு எழுத்துக்களை உபயோகித்துப் பெயரிட்டு அளவைக் குறிப்பிடுக. (4, 5, 6 என்னும் படங்கள்)
கூம்பினதும் உருளையினதும் கிடைப்படங்களையும் ஏறுதன்மையையும் வரைதல் :
இக்கனப் பொருட்கள் உச்சித் தளத்திற்கு 2 அங்குலம் மேலதிகமா யமைந்துளவெனக்கொள்க.
XY கோட்டிற்கு 15 அங்குலத்திற்குக் கீழே அச்சைக் குறித்து கிடைப்படங்களை வரைந்து நீட்டி ஏறு தன்மையை வரைக. (7, 8 என்னும் படங்கள்) .

Page 103
188
中止 可见,》
区。
ifz*+|\
13 到 ULb。

189
16. -அளவுத் திட்டப்படி வரைதல்
பொருளைச் செய்வதற்கு முன் அதன் படத்தை வரைந்து கொண்டால் அதனைச் செய்வது இலகுவாகும். மூலப் பொருள் (மரம்) வீணாகப் போவதும் தடுக்கப்படும். செய்வதற்கு முன் பொருளின் மீது எண்ணம் படிவதால் குறைகளை நீக்கிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
பொருளினுண்மையான பருமனைக் காட்டும் படத்தை வரைந்து கொள்ள முடியுமாயின் நல்லது. ஆனால் இது சிலவேளைகளில் கடினமாகும். ஏழடி நீளமும் மூன்றரையடியகலமும் இரண்டடி உயரமுமுடைய கட்டிலைக் கவனிப்போம். உண்மையான அளவுகளைக் காட்டும் படத்தை வரைவதற்கு ஏழடி நீளமுடைய தாள் வேண்டும். இம்மாதிரியான கடதாசியைப் பெறு வதும், இம்மாதிரி தாளில் வரைந்த படத்தை உபயோகிப்பதும் கடினம். இருபதடி நீளமுடைய பொருளைப் பற்றிக் கவனித்தால் இது ஒருபோதும் செய்யக்கூடியதன்று என அறியலாம்.
ஆகையால், படத்தை வரையும் போது பொருளின் குறித்த அளவை ஏதாவதொரு அளவுத் திட்டப்படி - யார், அடி போன்ற பகுதிகளாக - காட்டுவதற்கு இதனிலும் சிறியவளவை யுபயோகிக்க நேரிடும். ஒரு யாரை ஓர் அங்குலமாகவும், ஓர் அடியை ஓர் , அங்குலமாகவும் கொள்ளலாம். யானைத் தந்தச் சிற்பம் போன்ற சிறிய பொருட்கள், பொருத்துப்போன்ற சிறிய வேலைகளுக்கு இதனிலும் நேரெதிரான முறையையே பின்பற்றல் வேண்டும். அதாவது, பொருளின் அளவுத் திட்டத்திலும் அதிக அளவுகளை யுபயோகித்தலாகும். குறித்த பருமனின் அளவுத் திட்டத்திலும் கூட்டியோ குறைத்தோ பொருளை வரைவது அளவுத்திட்டப்படி வரைதலெனப்படும்.
அளவுத் திட்டப்படி கிடைப்படத்தை வரையும்போது உபயோகித்த அள வையும் வரைந்து காட்டுதல் வழக்கம். கிடைப்படத்தின் கோடுகளை வரைந்து அதிற் காட்டப்பட்டுள்ள பொருளின் உண்மையான அளவைக் காணலாம்.
அளவுத் திட்டத்தைப் பிழையின்றியமைக்க வேண்டும். கிடைப்படத்தின் பிரதான கோடு அளக்கக்கூடிய அளவிற்கு நீளமுடையதாயிருக்க வேண்டும். பூச்சியத்தை (0) எப்பொழுதும் அளவுத்திட்டத்திற்கும் அதன் பகுதிக ளுக்குமிடையே உபயோகிக்க வேண்டும். அளவுத்திட்டத்தையும், அவற்றின் பகுதிகளையும் இலக்கங்களை உபயோகித்துத் தெளிவாகக் காட்டவேண்டும்.
143 ஆவது படத்தைப்பற்றிய விவரங்கள் 143 ஆவது படம் : 1. கனம். 2. முக்கோண அரியம். 3. அறு கோண அரியம் ; 4. சம சதுரக்கூம்பு. 5. முக்கோணக்கூம்பு.- 6. அறு கோணக்கூம்பு. 7. உருளை. 8. கூம்பு
முதலிய கனப் பொருட்களின் கிடைப்பாடங்களும் ஏறுதன்மையும்.

Page 104
190.
அடி.
அங்.
12 ம் 86
144 ஆவது படம் : ஓர் அங்குலத்தில் ஓர் அடியைக் காட்டும் அளவுத் திட்டம்.
இங்கு பூச்சியத்தின் இடப்பக்கத்திலுள்ள ஒரு அங்குலம் பன்னிரண் டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதனொரு பகுதியில் காட்டப்படும் சரியான நீளம் ஒரு அங்குலம். இதன்படி கிடைப்படக் கோட்டை அளந்து நீளத்தைக் காணலாம்.
145 ஆவது படம் : ஒரு அடியில் ஒரு யாரைக் காட்டும் அளவுத்திட்டம். - கோணவிட்ட அளவுத்திட்டம்.
இவ்வினத்தைச் சேர்ந்த அளவுத் திட்டங்கள், சிறிய தூர அளவுகள் உடையன், சரியாக அளப்பது கடினமாகும்போது வரையப்படுகின்றன...

191
கோணவிட்ட அளவுத்திட்டங்களின் அடிப்படை விடயங்கள் பின்வருமாறு :
ABCD என்பது செங்கோணச் சதுரம். BD அதன் கோணவிட்டம் AD ஐச் சமமான பல பகுதிகளாகப் பிரித்து (5 என்று வைத்துக்கொள் வோம்) AB கோட்டிற்குச் சமாந்தரக் கோடொன்று வரைந்தால் அங்கு அக்கோண விட்டத்தின் சமாந்தரக் கோடு படத்திற் காட்டியபடி பிரிக்கப் படும்.
45
>7
3/5
146 ஆவது படம் : பிரிக்கும் மாதிரி.
கீழே காணப்படும் பிரச்சினையைப் பற்றிக் கவனித்தால் இம்மாதிரியான அளவுத்திட்டத்தை வரைந்து உபயோகிக்கும் முறை தெளிவாகும்.
அங்குலமும் அதன் நூறிலொரு பங்கைக் காட்டும் கோணவிட்ட அளவுத் திட்டத்தையும் வரை ந்து (1) 2 அங்குலம் என்றும் 12 அங்குல மென்றும் குறிக்குக. 4 அங்குல நீளமுடைய குறுக்குக் கோடொன்று வரைக. அதில், 0, 1, 2, 3, என்னுமிடங்களைக் குறிக்க . முதலாவது பகுதியைப் பத்தாகப் பிரிக்க. A இலிருந்து செங்குத்துக் கோடொன்று வரைக. அங்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்துப் பகுதிகளுக்குச் சமமான பத்துப் பகுதிகளைக் குறிக்க. இவ்விடத்தை வெட்டும்படி குறுக்குக்கோட்டை வரைக. 0, 1, 2, 3 என்னும் மூன்றுஞ் சந்திக்கும்படி நிலைக்குத்துக் கோட்டை வரைக. OA கோட்டில் 9 ஆவதோடு 10 ஐ இணைக்க , சதுரத்தி னுதவியோடு இதற்குச் சமாந்தரமான கோட்டை வரைக. இப்போது அளவுத் திட்டம் வரைந்து முடிவடைந்துள்ளது.

Page 105
192
அளவுத் திட்டத்திற் கொடுக்கப்பட்ட நீள அளவைக் குறித்தல் : A0 கோட்டின் பகுதியில் ஒரு அங்குலத்தின் பத்திலொரு பகுதி காட்டப்படு கிறது. ஆகையால் 2 இலிருந்து 5 வரையுள்ள பகுதிகள் 2ஃ உக்குச் சமமானவை. நிலைக்குத்துக் கோட்டின் 7 வரை போவதால் நூறிலொரு பகுதிகளுண்டாகின்றன.
ஆகையால் XY = 2.57 அங்குலம், அல்லது 2 அங்குலம்.
DB = 1.32 அங்குலம், அல்லது 13 அங்குலம்.
3-ைமறN -?
147 ஆவது படம் : மூலைவிட்ட அளவுத்திட்டம்:

193
17- பயிற்சி 1. மரங்களரியும் ஆலை, மரவேலை நிலையம் முதலியவைகளுக்குப் போய் மரங்களைப் பரிசீலனை செய்து அவை ஒவ்வொன்றினதும் நிறம், மரச் சிராயமைப்பு, பாரம், உழைப்பு, பயன், வேலை செய்வதிலுள்ள இலகு - கடினம், சீவுளித் தூள் முதலியவைகளை ஆராய்தலும் குறித்தலும்.
2. பொருட்களைச் செய்வதற்கு - இந்நாட்டிலதிகமாயுபயோகிக்கப்படும் மரங்களின் துண்டுகளைச் சேர்த்து அட்டவணை ஆக்குதல்?
3. அந்தந்தச் சிறப்பான வேலைகளுக்குபயோகிக்கும் மரவகைகள் அந்தந்த வேலைகளுக் கெவ்விதத்தில் பொருத்தமென்பதை ஆராய்தல்.
4. (அ) மரங்களில் காணப்படும் அகச்சீராய், பழுது, உக்கல், கணு முதலிய குறைகளைக் காட்டும் படங்களை வரைதல்.
(ஆ) மேற் கூறிய குறைகளைக் காட்டும் மரத்துண்டுகளைச் சேர்த்து அட்ட வணை ஆக்குதல்.
5. இரும்புச் சட்டத்தையோ மரச் சட்டத்தையோ உபயோகித்துச் சீவுளி யலகை, அல்லது உளியலகைக் கூராக்கும்போது அமைக்க வேண்டிய (அ) பாகையளவு.(ஆ) சீவும் முறை முதலியவைகளைப் பற்றிய பயிற்சியைப் பெறுதல்.
6. மணற் கல்லையும், எண்ணெய்க்கல்லையும் சுத்தஞ் செய்தல், பாது காத்தல், பேணிவைத்தல் முதலியவைகளைப் பற்றிய பயிற்சியைப் பெற்றுக் கொள்ளுதல்.
7. சீவுளியலகு, உளி, உட்பட்டஞ் சீர்ப்படுத்தப்பட்ட நகவுளி, வெளிப் பக்கஞ் சீர்ப்படுத்தப்பட்ட நகவுளி முதலியவைகளைக் கூராக்குவது பற்றிச் சரியான முறைகளைக் காட்டும் படங்கள் வரைதல்.
8. வாளைக் கூராக்குவதுபற்றிய படிமுறைகளைக் காட்டும் படங்களை வரை தலும் வாளைக் கூராக்கும் பயிற்சியைப் பெறுதலும்.
9. மரவேலைக் அவசியமான கருவிகளின் படங்களையும் அந்தந்தக் கருவி களின் பலன்களைக் காட்டும் படங்களையும் ஆக்குதல்.
10. பொருட்களை அழகு செய்யக் கூடிய காட்டுருக்களை ஆக்குதலும் அவைகளையுபயோகித்து வேலைக்குப் பயன்படாத மரத்துண்டுகளில் காட் டுருக்களை வெட்டுதல்.
11. பொருளின் அவ்வவ் விடங்களில் அரத்தாளிடுவதற்குப் பொருத்த மான மரவச்சுக்களைச் செய்தல்.
12. புறாவால், புறாவாலாப்பு முதலியவைகளுக்காக மரங்களை வரைய உபயோகிக்கக்கூடிய அச்சுக்களைத் தடித்த தாளில் வெட்டியொழுங்கு செய்தல்.
13. புறாவாலச்சுக்களை மரத்தில் வெட்டுதல்.

Page 106
194
14. மரத்துண்டுகளில் புறாவால், புறாவாலாப்பு என்பவைகளை வரைந்து வெட்டிப் பயிற்சி பெறுதல்.
15. அரைப் புறாவாற் பொருத்து, சட்டம் மறைந்த புறாவாற் பொருத்து, இரட்டை மடிப்புப் புறாவால் மறைபொருத்து என்பவைகளினது ஒவ்வோர் சந்தர்ப்பத்தையும் விளக்கும் படங்கள் வரைதல்.
16. ஒட்டுப் பலகையைப் பெற்று ஒவ்வொரு தகட்டையும் பற்றிப் பரிசீலனை செய்தல்.
17. * ஒட்டுப் பலகைகளிற் செய்யப்படும் பொருட்களினட்டவணை ஆக்குதலும் ஒட்டுப் பலகைகளை யுபயோகிக்கக்கூடிய முறைகளைப் பற்றி உரையாடுதலும்.
18. வச்சிரத்தைத் துண்டுகளாக்குதல், உறைவைத்தல், சூடாக்குதல், வச்சிரம் ஆக்கி மரத்துண்டுகளை யொட்டுதல் முதலியவைகளைப்பற்றிப் பரி சோதனை செய்தல்.
19. கோணம், முக்கோணம், சதுரம் என்பவைகளை வரைதல் பற்றிய பயிற்சியைப் பெறுதலும், அப்பயிற்சியைக் கிடைப் படங்களை வரையும்போது பயன்படுத்தலும்.
20. கோடுகள், இலக் கங்கள், எழுத்துக்கள் என்பவைகளையுபயோகிப்பது பற்றிய பயிற்சி வேலைகள்.
21. நிலைக்குத்துச் சமவள வெறியத்தின் அடிப்படை விடயங்களைக் காட்டும் படத்தை ஆக்குதல். (இங்கு திட்டப்படி வரைதல் உபயோகத்தி லிருக்கவேண்டும்).
22. இலகுவான மாதிரிப் பொருட்களை நிலைக்குத்துச் சமவள வெறியம், தூரப் பார்வைச் சமவள வெறியம், சமமான பகுதிச் சமவள வெறியும், குறுக்குச் சமவள வெறியம், என்பவைகளின்படி வரைந்து அவற்றை யொன்றோடொன்று ஒப்பிடுதல்.
23. (அ) இங்கு குறிப்பிட்டுள்ள விளையாட்டுப் பொருட்களை பலவிதமான மூலப்பொருட்களையுபயோகித்துச் செய்தல்.
(ஆ) வேறு விளையாட்டுப் பொருட்களைச் சுய புத்தி கொண்டு செய்தல். 24. விளையாட்டுப் பொருட்கள் செய்வது பற்றிப் புதினப் பத்திரிகைகளில் வெளியாகும் படங்களையும், விவரங்களையும் சேர்த்துப் புத்தகமாகக் கட்டுதல்.
25. புத்தகங்கள், சஞ்சிகைகள் முதலிய பலவகையான பொருட்களின் படங்களைச் சேர்த்துப் புத்தகம் ஆக்கல்.
26. அமைப்பு அலங்காரம், முடிப்பு, பயன் முதலிய தலையங்கங்களின் கீழ் பொருட்களை விமரிசனஞ் செய்தல்.
27. (அ) இங்கு குறிப்பிட்டுள்ள பொருட்களைச் செய்தல். (ஆ) வேறு பொருட்களுக்குரிய குறிப்புப் படங்கள் ஆக்குதலும் அப் பொருட்களைச் செய்தலும்.
"ரு பாதகம்


Page 107


Page 108
ରର பாஞரடுதலு ஆகாகை
- h7மாடி?


Page 109