கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக பூமிசாஸ்திர விளக்கம் 1

Page 1


Page 2

2107 10"-gny
Form DIT
Gicgraphy .
AL 14
Ruryk

Page 3

உலக பூமிசாஸ்திர விளக்கம்
முதலாம் பாகம்
உலகம் - பொது
ஜே. எஸ். ஸி., ஜி. ஸி. ஈ. வகுப்புகட்கு
ஆக்கியோன்: திரு. வே. சிவக்கொழுந்து அவர்கள்
AUTHOR OF; ALGF.BRA, GEOMETRY,
ARITHMETIC ETC, IN TAMIL.
முதலாம் பதிப்பு
பிரசுரம்: வடலங்கா புத்தகசாலை - பருத்தித்துறை ஜனவரி 1955.7,
(விலை ரூபா 4-(0)

Page 4
முதலாம் பதிப்பு - 1955'
All Rights Strictly Reserved.
அச்சுப்பதிவு: கலாபவன் அச்சகம் -பருத்தித்துறை.

مجسمه هجدهم و شهر به هم
.فاة و 600 lه
ممممنهجمجمجمه سمت استحسنه نه سره
کره جنجمن هنا نحنحه جده حفصي محن کهنه

Page 5

வணக்கம்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன் றனுக் கொன்று நின் றெழில் பகரின்
நூற்றொரு கோ டி யின் மேற்பட விரிந்தன உலகம் பரந்துள்ளது. ஆகாய விரிவு அளவுக்கு எட்டாத்து. எனவே இவற்றின் இயல்புகளை விளக்கும் நூ லும் பரந்து விரி ந்து செல்லுந் தன்மையது. எத்தனை எத்தனையோ ஆங்கில நூல் கள் இத்துறையில் வெளிவந்தன; வெளிவந்து கொண்டுமிருத் கின்றன. இந்நூல்களின் விஷயச்செறிவுகளை ஒன்றுசேர்த்துத் தொகுக்கினும் பொருட்செறிவு பூரணமாகமாட்டாது.
உலகின் சிறு அம்சம் இலங்கை. இன்றைய இயல்பினும் நாளை இலங்கையின் பாகங்கள் மாற்றம் பெறுகின்றன. மக்களி னம் மாறுகின்றது. மக்களியல்பு மாறுகின்றது. காலவியல்பு மாறுகின்றது. எனவே இலங்கையைப்பற்றிப் பக்கம் பக்கமாக விரித்தெழுதினும் இலங்கைப் பூமிசாஸ்திரம் முற்றுப்பெறாது. இஃது இவ்வாறெனின் பரந்த பூவுலகை விபரிப்பது எவ்வளவு அசாத்தியம், பல ஆங்கில நூல்களை ஆராய்ந்தோம். எத்தனையோ ஜாமங்கள் கண் விழித்தோம். ஆராய்ச்சி நூல்களிலுள்ள சிறந்த அம்சங்களைத்தொகுத்தோம். எனினும் முன்னர்க்கூறிய வாறு பூமிசாஸ்திர விரிவின் எல்லையை எட்டிப்பிடிக்க இயல வில்லை. ஆயினும் தமிழ் அன்னைக்கு ஓர் அணியாக சுய்பாஷை யில் ஓர் பாடப்புத்தகமாக இந்நூலை எமது சக்திக்கேற்ப எழுதி வெளியிடுகின்றோம். உரிய காலத்தில் நூல் வெளிவரவேண்டிப் பாகங்களாக வகுத்து முதற்பாகத்தை இன்று தருகின்றோம்.
எத்தனை எத்தனையோ இரவுகளில் நடு ஜாமங்கடந்தும் கண்விழித்து எமது வாசகங்களை வரைந்து தவும் உதவி எழுத் தாளர் திரு. க. சிவப்பிரகாசம் அவர்கள். 'எம்பொருட் டெழுதும் . சகோதரி க ள் - அச்சுவழுத் திருத்தியு தவும் திரு.சி. பால சுந்தரம் ஆசிரியர் போன்ற அன்பர்கள் - இந்நூலிற் பொருந்த இயற்கை வலயங்கள் என்னும் குறிப்புத் தொகுதியை ஒருகாலத் து தவிய கல்லாறு திரு. வே. சாமித்தம்பி ஆசிரியர் அ வ ர் க ள் - ஊணையும் ஓய்வையும் மறந்து நூல்களை உரியகாலத்தில் வெளி வரச்செய்வதற்குச் சலியாதுழைக்கும் எமது கலாபவன அச்சக ஊழியர்கள் - எ ம து நூ ல் க ளு க் கு ஓர் தனிமதிப்புத் தந்து
அவற்றை அன்புடன் ஏற்றுவரும் தமிழ் ஆசிரியர், தமிழ்ப்பெரு மக்கள், தமிழ் மாணவர் இன்னோரனைவாக்கும் எமது நன்றி! எமது வணக்கம்!
தேசம் ஆசிரியர்கள் என்னும் மித்தம்பி ஆகியகாலத்தி
'கலாபவனம்' பரு த் தி த் து  ைற.
1-1- 55.,
வே சிவ க் கொடுத்து

Page 6
படங்களின் வரிசை
1. ஜெனிவா நகரம் (அட்டைப்படம்) 2. பரீஸ் நகரம் (Photo.) 3. சூரியன் - பூமி - சந்திரன் 4. கிரகங்கள் 5. பூமி - விமானம் சுற்றல் 6. பூமியின் வளைவுமேடு
பூமி - நீர்க்கோளம் நிலக்கோளம் 8. பூமியும் சந்திரனும் 9. சூரிய சந்திர கிரகணங்கள் 10. உயர்வரையும் பனிமலையும் (Photo) 11. நீர்வீழ்ச்சி 12. எரிமலை 18. கண்டங்களும் சமுத்திரங்களும் 14. கப்பற் கூட்டங்கள் (Photo) 15. நில அமைவுப் பாகங்கள் 16. கண்டங்களின் இயற்கைத்தோற்றம் 17. அவுஸ்திரேலியாவில் வசந் தருது (Photo.) 18. வலயங்கள் '19 சூரிய சஞ்சாரம்
20. அட்ச தேசாந்தர ரேகைகள் 21. தேசாந்தரமும் நேரமும் . 22.. திகதிமா றும் ரேகை 23. கனடா - நேரமண்டலம் 24. வற்றுப் பெருக்கு 25. நீர்ச்சுழற்சி 26. நீரோட்டங்கள் 27. பாரமானி 28. பவனமண்டலம்

29. பனிக்கட்டித் தம்ளர் 30. காற்று மண்டலம் 33. காற்றும் மழைவீழ்ச்சியும் - 32. கடல் தரைக் காற்றுகள் 33. சுழல்காற்றுகள் 34. சமசீதோஷ்ண ரேகைகள் 35. சூரிய சந்திர கிரணங்கள் 36. உலக மழைவீழ்ச்சி 37. மழைமானி 38. குன்றுங் கொண்டலும் 39. இலங்கை மழைவீழ்ச்சி 40. மத்திமவலயக் கிராமக்காட்சி (Photo) 41. மந்தியும் களிறும்
மக்களினம் 43. உலகின் குடிசனச்செறிவு 44. எஸ்கிமோவர் 45. இந்துக்கள் 46. உலகின் இயற்கைவலயம் 47. யாக் - கம்பளி ஆடு 48. கலிபோர்ணியா (Photo) 49. மத்திய தரைக்கடற் சுவாத்திய நாடுகள் 50. உலகப் புல்வெளிகள் 51. ஐரோப்பாவின் இயற்கைக் காட்சிகள் 52. உலகக் கப்பற்பாதைகள் 53. ஜேர்மனி (Photo)
LOIIIUEO (0)

Page 7
பொருளடக்கம்
-eco
15
க!
35
42
பக்கம் 1. பூமியும் பிறவும் 2. நில அமைவு
11 3. நிலம் அரிக்கப்படுதலும் தேய்தலும் .... 4. நில அமைவின் பாகங்களும் பெயர்களும்
20 5. நிலப்பாகம் நீர்ப்பாகத்தின் பெரும் பிரிவுகள்
23 6. கண்டங்களின் இயற்கைத் தோற்றம் 7. பூமியின் அசைவுகள் 8. அட்சம் தேசாந்தரம் 9. வற்றுப்பெருக்கு 10. அலைகளும் நீரோட்டங்களும் 11. பவன மும் நீராவிச் செறிவும்
65 12. உலகத்து வீசுங் காற்றுகள் 13. சீதோஷ்ணம் 14. உலக மழைவீழ்ச்சி
95 15. சுவாத்தியம்
104 16. பூமியும் ஜீவராசிகளும் .. 17. உலகின் இயற்கைவலயங்கள்
121 18. உலகின் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் 155
53
85
107

ஆசிரியர்க்காய குறிப்புகள்.
1. இயற்கை அமைவு மழை வீ ழ் ச்சி முதலிய ஏ துக்களால் ஏற்படும் தாவரவேறுபாடு, செறிவு என்பவற்றை அறிவதற்கு உதவியாக விளக்கமான தேசப்படப் புத்தகம் ஒன்றை மாண
வர் அவ்வப் பாடங்களுடன் உபயோகித்துவரல் நலம்.
2. பாடசாலையிலுள்ள சுவர்ப்படங்களின் உபயோகமும் மாண வர்க்கு அவ்வப்போது ஏற்றது.
3. பிறநாடுகளிலிருந்து இலங்கைக்குவரும் பொருட்களிலுள்ள லேபல்களைச் சேகரித்து அவற்றை அனுப்பும் நாடுகளை அறி தல், அட்டவணை தயாரித்தல், சஞ்சிகைகளிலுள்ள படங்களைப் பார்வையிடல் என்பனவும் பூமிசாஸ்திர அறிவை வளர்ப்பன வாகும்.
4. மாணவர்க்கு அவ்வப்போது படம் வரையவும், வினாக்களுக் கேற்ற குறிப்புகளெழுதவும் பயிற்றல் நலம்.
5. ஆங்காங்கு ஏதும் சிறுவழுக்கள் காணப்படின் அவற்றைத் - திருத்தி மாணவர்க்குப்பயிற்றுக. பெரும்வழுக்கள் உளவேல் தயவு செய்து எமக் கெழுதி அனுப்புக, மறு பதிப்பில் அநுசரிப்போம்.

Page 8
'1 09 827 fue 7
கம்பம் :
இதைத்தது

14:43 ப்ரகதாஸ்
|
ச*%4:3r:*
கைபேக்கர்ட்ப்: இம்?
~சகலப் டபப்ட்மவதைவிட
கடங்காத க க
அனை:
க.
«ாப்
444)
-)
*******
|
ஆகாய வெளியிற் சூரியன், பூமி, சந்திரன்
1. பூமியும் பிறவும்
எமது சிந்தனைக்கெட்டாத பரந்த ஆகாய வெளியின்கண் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த எண்ணற்ற கோளங்கள் நிலைப்பனவும் சஞ்சரிப்பனவுமாய் அமைந்துள்ளன. முகிற்கூட்ட மின்றித் தெளிவான இராக்காலத்தில் எத்தனை எத்தனையோ வியப்புக்கள், தரும் சிறியனவும் பெரியனவுமாகிய கணக்கிட முடி யாத் ஒளிக்கோளங்களை நாம் ஆகாயவெளியிற் கண்டு அதிசயிக் கிறோம். இவ்வாறமைந்த கோளங்களில் நாம் வசிக்கும் பூமியும் பூமியை ஒளிரச் செய்யும் சூரியனும் சந்திரனும் எமக்கு மிகவும் அறிமுகமானவை.
ஆகாய வெளியிற் காணப்படும் ஒளிக்கோளங்கள் இரு வகையின. ஒரு பகுப்பு சுய ஒளி படைத்தவை, ஒளிர்ந்து ஒளிர்ந்து பிரகாசிப்பவை. இவைகள் நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படு கின்ற்ன. எஞ்சியவை சுய ஒளி அற்றவை. சூரியனிலிருந்து ஒளி , யைப்பெற்றுப் பிரகாசிப்பவை. இவைகள் கிரகங்கள் (Planets)

Page 9
2 பாபக ம பரயபாமா பா ,
பயான்
இ1ை00 )
பொலிaேd கசக்கன்கிரி Restாண்டிப்
: யூரன்ஸ்
101)
சுக்கான் - செல்வா புதன்
:58:14
தின் ஒர் பகுதி
அகிலாண்ட்சிப்பி
peps:WMRR29299.10 AM:93
கிரகங்களும் பரிமாண விதமும்.'

பூமியும் பிறகிரகங்களும். )
என்று அழைக்கப்படுகின்றன. கிரகம் என்பது ' ஈர்ப்புடையது' என்னும் பொருள் கொண்டது.
- சூரிய கணம் சூரியன் ஒரு பெரிய அக்கினிக்கோளம்; உஷணத்தையும் ஒளியையும் வீசிக்கொண்டு எல்லையற்ற பரந்த ஆகாய வெளியில் வெள்ளி, செவ்வாய், வியாழன் முதலிய தனது கணத்தோடு (Solar Systemn) இயங்கிக்கொண்டிருக்கின்றது. சூரிய கணத்தைச் சேர்ந்த கோளங்களே முன்னர் கூறிய கிரகங்களாகும். இக்கிரகங் களில் பூமியும் ஒன்றாகும்.
கிரகங்கள் ஒன்பது. அவையாவன - புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூரானஸ், நெப்தியூன், ப்ளூட்டோ (Pluta) என்பனவாகும். இக்கிரகங்களோடு சேர்ந்த உபகிரகங் களும் சூரிய கணத்திற்குரியன.
இந்து வழக்கப்படிகிரகங்கள் சூரியன் (ரவி அல்லது ஞாயிறு) சந்திரன் (திங்கள்), செவ்வாய் (குஷன்), புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு, கேது என்னும் பெயர்களுடன் இவ்வொன்பதும் நவக்கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இக்கிரகங்களின் ஆதிக்கம் மக்கட்குப் பலாபலன்களை விளைவிக் கின்றன எனவும் நம்பப்பட்டு வருகின்றது.
கிரகங்களின் அசைவுகள் கிரகங்கள் வெவ்வேறு கதியுடன் தம் அச்சுகளில் உருண்டும் சூரியனைச் சுற்றியும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. உதாரண் மாகப் புதன் 24 மணித்தியாலத்திற்கொருமுறை தன் அச்சில் உருளுவதோடு 88 நாட்களுக்கொருமுறை சூரியனைச் சுற்றியும் வலம் வருகின்றது. இவ்வாறு சுக்கிரன் 23; மணித்தியாலம் -225 நாட்களும், பூமி 24 மணித்தியாலம் - 3651 நாட்களும், *செவ்வாய் 24 மணி 38 நிமிஷம் -688 நாட்களும், வியாழன் 6 மணி 55 நிமி ஷம் -12 வருடமும், சனி 10 மணி 15 நிமிஷம் -293 வருடமும் இன் னும் யூரானஸ், நெப்தியூன், ப்ளுட்டோ என்பன வெவ்வேறு கதி
*வரும் வியாழக்கிழமை (ஜூன் 24. 1954ல்) பூமி கடந்த 13 வருட காலத்தில் செவ்வாய்க்கு மிக அண்மையில் வருகின்றது. இவ்விரு கிரகங் களும் பொதுவாக இரண்டு வருடத்திற்குச் சிறிது மேற்பட்ட காலத்தில் தமது பாதைகளில் ஒன்றை யொன்று சமீபிக்கின்றன, அதிவிரைவாகச் சூரியனைச் சுற்றியோடும் பூமி தாமதமாகப் பூமியைச் சுற்றிவரும் செவ்வாயை
இக்"(ன்பு ''), சக

Page 10
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
யுடன் தம் அச்சுகளில் உருளுவதோடு சூரியனைச் சுற்றியும் வந்து கொண்டிருக்கின்றன.
உப கிரகங்கள் கிரகங்களைச் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பவை உப கிரகங்கள் எனப்படும், உதாரணமாகப் பூமியைச் சுற்றிச் சந்திரன் வலம் வருகின்றது. எனவே' சந்திரன் ஒரு உபகிரகமாகும். இவ வாறு சனியோடு கூடிய ஒன்பது உபகிரகங்களும், யூரானஸோடு கூடிய நாலு உபகிரகங்களும், நெப் தியூனோடு கூடிய ஒரு உபகிர கமும் உள்ளன.
"பூமியின் அளவுகளும் பிறவும் வட தென் துருவங்களுக்கிடைப்பட்ட பூமியினது விட்டம் 7900 மைலும், பூமத்திய ரேகைக்கிடைப்பட்ட விட்டம் 7926 மை லுமாகும். மேலும் பூமியினது சுற்றளவு 24800 மைலும், விஸ்தீரணம், 19 கோடியே 70 இலட்சம் (197000000) சதுரமைல் வரையிலுமாகும்.
பூமியோடு ஒப்பிடுகையில் சூரியன் எவ்வளவோ பெரியது. இதனது விட்டம் பூமியின திலும் 108 மடங்கும், கனம் 1200000 மடங்குமாகும். சூரியன் இவ்வளவு பெரி தாயிருந்தும் பூமியிலி ருந்து 9 கோடியே 30 இலட்சம் (93000000) மைல் தூரத்திலிருப் பதால் அது பூமியிலுள்ளார்க்குச் சிறியதாகக் காணப்படுகின்றது • சூரியனோடு ஒப்பிடுகையில் சந்திரன் பூமிக்கு வெகு அண்மையி லுள து. பூமிக்கும் சந்திரனுக்கும் இடைத்தூரம் 240000 மைல் வரையிலாகும்.
பூமியின் உருவம் பூமி தட்டையானதென அநேகம் ஆண்டுகளாக மக்கள் கருதி வந்தனர். ஆனால் நாகரீகத்திலும் புத்தியிலும் மேம்பாடுற்று விளங்கிய கிரேக்கர் பூமி இவ்வாறில்லையென்பதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே அறிந்திருந்தனர். பூமி பந்து போல் உருண்டை வடிவின தாயினும், அதன் விரிந்த பரப்பில் மிகச் முர் தும் போது இந் நிகழ்ச்சி ஏற்படுகின்றது இந்த வருடம் இவ்விரு கிரகங் களும் ஒன்றை ஒன்று கடக்கும் போது 4 கோடி மைல் இடைவெளித் தூர மாகும். 1950ல் 33 சோடி மைல் இடைவெளியிருக்கும். 1970ம் ஆண்டில். இன் னும் அண் மைற் காணப்படும். ஆகாய வெளியில் இக்கி ரகத்தை இரவில் துலாம்பரமாய்ப் பார்த்தறி க.
உTimes of Ceylon, 23-6-54.

பூமியும் பிறகிரகங்களும்.
சிறிய பகுதியை மாத்திரம் நாம் ஒரே நேரத்திற் காண இயலுகின்ற
மையால், அது நமக்குத் தட்டையாகத் தோன்றுகின்றது.
பூமி உருண்டையென்பதற்கு ஆதாரங்கள் 1, இந்நாட்களில் றங்கூன், கல்கத்தா, கொழும்பு முதலிய துறை
களைத் தரிசித்துக்கொண்டு உலகஞ் சுற்றிச் செல் லும் உல் லாசக் கப்பல்களை நாம் சாதாரணமாகக் காண்கின்றோம். இக்கப்பல்கள் எல்லாம் ஓரிடத்திலிருந்து புறப்பட்டு ஒரே திசையாகச் சென்று மீட்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேருகின்றன. ஆகாயவிமானமும் இவ்வாறே சுற்றுவதாகும். கடற்கரையில் நின்றுகொண்டு தூரத்தே கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு கப்பலைத், தூர தரிசினியினூடு
பார்ப்போமாயின் நாம் முதலில் கப்பலின் பாய்மரம் அல் லது புகைக்குழாயின் நுனியையும் பின்னர் படிப்படியாக

Page 11
)))
6 | உலக பூமிசாஸ்திர விளக்கம்.
மறுபாகங்களையும் ஈற்றில் அடித்தளத்தையுங் காண்கிறோம். பூமியின் உருட்சியோடு சமுத்திர நீர்ப்பரப்பின் நீர்மட்டமும் வளைகின்றமையால் இந்த வளைவு மேடு (Curvaturd) கப்பலின் அடித்தளத்தை நாம் முதலிற் காண்பதற்குத் தடைசெய் கின்றது. பூமி தட்டையாயிருப்பின் கப்பலின் முழுப் பாகத்தையும் நாம் ஒரே முறையிற் காணுதல் சாத்தியமாகும். பூமி உருண்டையாயிருப்பது காரணமாகச் சமுத்திரத்தில் அல்லது பரந்த வெளியில் பூமியும் ஆகாயமுஞ் சந்திப்பது போல் நாம் காணும் அடிவானத் தோற்றம் (Horizon) வட்ட மாகக் காட்சியளிக்கின்றது.
சூரியன் கிழக்குத் தேசங்களில் முதலிலும் பின்னர் படிப்படி யாக மேற்குத் தேசங்களிலும் தோற்றந் தருகின்றது. பூமி தட்டையாயிருப்பின் சூரியோதயம் எவ்விடத்தும் ஒரே நேரத் தில் 'நிகழ் தல்வேண்டும். சந்திரகிரகண காலத்தில் சூரியனுக்குஞ் சந் தி ர னுக்கு மிடையே பூமி வரும்போது சந்திரனிற் படியும் பூமியின து சாயை (நிழல்) வட்டவடிவின தாயிருக்கக் காண்கின்றோம். உருண்டைப் பொருட்களின் சாயை வட்டமல்லவா?
சூரியன் சந்திரன் மற்றுங் கிரகங்கள் கோள (Globoal) வடி வானவை. கிரகங்களிற் பூமியுமொன்றானமையின் இதுவுங் கோள வடிவின தாகவே இருத்தல் வேண்டும்.
நீர்ப்பாகம், நிலப்பாகம். பூமியின் மேற்பரப்பு மூன்றுபங்கு நீர்ப்பகுதியாகவும் ஒரு பங்கு நிலப்பகுதியாகவும் அமைந்துள்ளது. நீர்ப்பகுதி அத்திலாந் திக்சமுத்திரம், பஸிபிக் சமுத்திரம், இந்து சமுத்திரம், வட சமுத் திரம், தென்சமுத்திரம் எனஐந்து மகா சமுத்திரங்களாகவும், நிலப் பகுதி ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, அமெரிக்கா, அவுஸ்திரே லியா எனஐந்து பெருங் கண்டங்களாகவும் வகுக்கப் பெற்றுள் ளன. தென் துருவத்தைச் சூழ்ந்து தென் திசைக் கண்டம்என் னும் பரந்த நிலப்பரப்புமுள து.. பூகோள உருண்டையை அல்லது தேசப்படத்தை உதவியாகக் கொண்டு இவற்றை விளங்கிக் கொள்வதோடு நிரட்சத்துக்கு வடக்கே வடகோளார்த்தத்தில் நிலத்தொகுதி கூடு தலாய் அதாவது நாலில் மூன்று பாகத்திற்கு மேற்பட்ட அமைந்திருப்பதையும் தெற்கே தென்கோளார்த்தத்தில் நீர்த்தொகுதி கூடு தலாயமைந்திருப்பதையும் ஆராய்ந்தறிக.

குடிசனம்
மிகநெருக்கம்.
நெருக்கம்.
- நொயது.
நிலக் கோனம்
நீர்க்கோளம்

Page 12
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
சந்திரன். சந்திரன் பூமியைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு உப கிரகமென முன்னர் வாசித்துள்ளோம். இது பூமியைச் சுற்றி ஒரு முறை வலம்வர 291 நாட்கள் வரையிற் செல்லும். சந்திரன் நிலை யின்றி இவ்வாறு இயங்கிக்கொண்டிருப்பதாலும், சுய ஒளியின்றிச் "சூரிய ஒளியைப்பெற்று உலகிற்குப் பிரதிபலிப்பதாலும் அது கலைத்தேய்வு கலைவளர்ச்சி ஆகிய அபரபட்ச பூர்வபட்ச நிலை களைப் பெறுகின்றது.
சந்திரன் பூமியைச் சுற்றி வலம் வருகையில் சந்திரன்-பூமி -சூரியன் ஆகிய மூன்றும் ஒரு நேர்கோட்டின் வரிசையிலமை. யும்போது எமக்குச் சந்திரன் பூரணசந்திரனாகக் காணப்படுகின்
சந்திர
கல்கள்
--- -',7,8+ - வ! !*த
- -:டாப்'-பி
றது. இத்தினம் பெளர்ணிமை என அழைக்கப்படும்.
சந்திரன் பூமியின் மறுபக்கத்திற்குச் செல்லும்போது சந்திர னது உதயமும் ஒளியும் தினக்கிரமமாய்க் குறைந்து கொண்டு போய்ப் பூமி - >சந்திரன் - சூரியன் என்றவரிசையில் அமைகின்றது. இப்போது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நேர்ப்படுவ தால் இராக்காலத்தில் சந்திரன் பூமியை நோக்கும்பாகத்தில் சூரிய ஒளி யைப்பெறுதலும் பிரதிபலித்தலுமின்றி நாம் சந்திரனைக்காண் வி ய ல ா ம ற் போகின்றது. சந் திரன் தோற்றா த இத்தினம் அமாவாசை என அழைக்கப்படும்.

பூமிய
கிரகங்களும். )
கிரகணங்கள்.
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம் , .
'பூமியின் நிழல்
சந்திர நிழல்
சந்திரன்,
சந்திர கிரகணம் :- பூமி சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் வ ரும் சில பெ ளர் ணி ைம நாட்களில் பூமியினது சாயை சந்திரனிற் படிந்து அதனை மறைக்கும். இந்நிகழ்ச்சி சந்திர கிர கணம் எனப்படும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் பாதை பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையிலும் 50 சாய்விலிருப்ப தால் பிரதி மாதமும் சந்திரகிரகணம் ஏற்படாமல் பூரணசந்திரன் பூமியின து பாதையில் நேர்வரும் நாட்களிலேயே சந்திரகிரகணம்' ஏற்படு கின்றது.
சூரிய கிரகணம்:- சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் வரும் அமாவாசையின்போது சந்திரன் பூமியைச் சுற்றிவரும் பாதையும், பூமிசூரியனைச் சுற்றிவரும் பாதையும் ஒன்று சேரும் '

Page 13
10
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
தினத்தில் சூரியனது ஒளி சந்திரனது சாயையால் தடைப்படு
வ தால் சூரியகிரகணம் ஏற்படுகின்றது.
பூமியோடு சம்பந்தப்பட்ட வரையில் சூரியனும் சந்திரனும் உலகை ஒளிர்வித்து உயிரூட்டும் இரு அரிய சாதனங்களாகும். எனவே பழந் தமிழ் இலக்கியங்களும் பழமையான நாகரீகம் படைத்த சாதியினர் மதத்தினரும் சூரிய சந்திரர்களைத் தெய்
வங்களாகக் கருதி வணங்கி வந்ததில் வியப்பில்லை.
வினாக்கள். (1) ஆகாய வெளியிற் காணப்படுஞ் சிலகோளங்கள் கூறுக. (2) சூரிய கணத்தோடு சேர்ந்த கோளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? (3) நட் சத் திரங்களுக்கும் கிரகங்களுக்கும் வித்தியாசம் என்ன? (4) கிரகங்கள் எத்தனை? அவை யாவை? (5) நமது முன்னோர் வகுத்த முறைப்படி நவக் கிரகங்கள் யாவை? (5) பூமி சுக்கிரன் சனி என்னுங் கிரகங்களின் அசை வைப்பற்றி நீர் அறிந்தவற்றைக் கூறு க. (7) உப கிரகம் என்பதென்ன? ஓர் உதாரணங் கூறு க. (8) பூமியின் வடிவமென்ன? அது நமக்கு எவ்வாறு தோற்றுகின்றது? ஏன்? (9) பூமி உருண்டை வடி வின தென்பதற்கு ஆதா ரங்களெ வை? (10) பூமி உருண்டை வடிவினதென்பதற்குக் கூறப்பட்ட ஆதாரங்களில் உமது எண்ணப்படி கூடிய திருப்தியைத் தருவதெது? காரணங்கூறுக (11) பூமியின் து சுற்றளவு, விட்டம், பாப்ப, என்பவற் றின் அள வுகளை க் கூ றுக, (2) ஐந்து கண்டங்கள், ஐந்து சமுத்திரங்கள் எவை? (13) பூமியின் து நீர்ப்பகு தி நிலப்பகுதி அமைவுகளைப்பற்றி நீர் அறிந்தவற்றைக் கூறுக. (14) சந் திரனைப்பற்றியும் அதன் அசைவைப்பற்றி யும் ஐந்து வாக்கியங்கள் எழுதுக. (15) சந்திர கிரகணம் சூரிய கிரகணம் என் பன எவ்வாறு ஏற்படுகின் றன என்பதை விளக்கப் படங்களினுதவியோடு விபரிக்குக (16) நீர் பார்த்த ஓர் சந்திர கிரகண அல்லது சூரிய கிரகண நிகழ்ச்சியைப்பற்றிச் சில வாக்கியங்கள் எழுதுக. (17) சூரியன், அடிவானம் பூமியின் வளை வுமேடு, அமாவாசை, பெளர்ணிமை ஒவ்வொன்றையும் பற்றிச் சிறு குறிப்பெழுக. (15) சூரிய சந்திரர் தெய்வங் களாக மக்களால் வழிபட்டு வரப்படுவதேன்? (19) ஒரு மாத காலத்திற்குப் பூமிக்குச் சூரியனே இல்லையெனில் பூவுலகில் என்ன நிகழுமெனக் கற்பனை செய்து ஒரு கப் டுரை வரைக. (20) சூரியோ தயம் மாலைக்காலம் வெண்ணிலவு ஒன்வொன் றையும் சித் திரிக்கும் ஒவ்வோர் தமிழ்ப்பாடல் எழுதி அவற்றின் பொருள் களையும் உரைநடையிற் தருக•
அறிந்த பூமியின . ஐந்து கண்டனம்,


Page 14

2. நி ல அ மை வு
பூமியின் மேற்பரப்பு ஒரு ஒழுங்குபற்றி அமைந்திராது பல வகையான தோற்றங்களைக் கொண்டுள்ளது. மலைகள், பீடபூமி கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், கடல்கள், சமுத்திரங்கள், ஆறுகள், ஏரிகள் பலவும் ஆங்காங்கு பூமியின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. இத்தகைய அமைவுகளுக்குரிய காரணங்களை
ஆராய்வாம்.
ஒரு கற்பூரக்கட்டியை அல்லது நெப்தலீன் (பூச்சிக்காய்) உருண்டையை வெளியான ஓரிடத்தில் வைத்துவிட்டுச் சில தினங்கள் சென்று இவற்றைப் பார்ப்போமாயின் குறித்த பொருட் கள் உருவத்திற் படிப்படியாகச் சிறுத்துப் பின்னர் மறைந்துவிட வுங் காண்போம். ஒரு மெழுகுவர்த்தியைப் பற்றவைத்தால் அது எரியும்போது நெகிழ்ச்சியடைந்து ஆவியாக மாறிவிடுகின்றது. நீராவியைக் குளிரச்செய்து நீரைப் பெறலாம். நீர் இன்னுங் குளிர்ச்சியடையும்போது பனிக்கட்டியாக மாறுகின்றது. இத் தகைய நிகழ்ச்சிகளிலிருந்து திண்மப் பொருள் கள் திரவப் பொருள்களாகவும், திரவப்பொருள்கள் வாயுப்பொருள்களாகவும் இன்னும் முறைமாறியும் மாற்றங்களடைவதைக் காண்கின்றோம்.
பூமியின் சரித்திரம் பூமி ஒருகாலத்தில், கணக்கிடமுடியாத பல்லாயிரம் ஆண்டு, களுக்கு முன்னர், இன்றிருக்கும் நிலையிலிராது பன்மடங்கு விரிந்து பரவிய வாயுப்பதார்த்தமாயிருந்ததென்றும், இன்று பூமியின் சேர்க்கையிலுள்ள கல், மண், நீர், மற்றுங் கனிஜப் பொருள் களெல்லாம் அக்காலத்தில் அவ்வாயுப் பொருளின் சேர்க் கையாயிருந்ததென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவ் வாயுப் பொருள்கள் காலக்கிரமத்தில் ஓர் உ ஷ் ண ப் பிழம்பாய் மாறத்தொடங்கியது. இவ்வுஷ்ணப் பிழம்பின் மேற்பாகம் படிப் 3. படியாகக் குளிர்ந்து இறுகி ஓர் பிரிவு நீரமாக மாற, இன்னோர் பிரிவு மேடுபள்ளங்களமைந்த தரையாக மாறியது. தரையின் தாழ்வுகளில் நீர் நிரம்பிச் சமுத்திரங்களாயின. மேடுகள் கண்டங் களாயமைந்தன.
பூமியை அகழ்ந்து ஆழ்ந்து செல்லச் செல்லப் பூமியினுட் புறம் இன்றும் உஷ்ணமாயிருப்பதையும், எரிமலை மு தலியன பூமியினுட்பாகத்திலிருந்து உஷ்ணப் பிழம்பைக் கக்குவதையுங்

Page 15
12
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
கொண்டு ஆராய்ச்சியாளரின் கூற்றுச் சரியென்பதையும், பூமியின் நடுப்பாகம் இன் று ங் குளிர்ச்சியடையாத அனற்பிழம்பாயிருக் கின்றதென்பதையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கிறது.
தோடம்பழம், அப்பிள் காய் முதலியன உலர்ந் து சுருங்கும் போது இவற்றின் மேற்பாகத்தில் மடிப்புகள் உண்டாகின்றன. இதுபோன்று நெகிழ்ச்சியுள்ள உஷ்ணப்பிழம்பாயிருந்த பூமியின் மேற்பாகமும் குளிர்ந்து சுருக்கமடைந்தபோது மடிப்புகளேற் பட்டு மேடுபள்ளங்கள் உண்டாயின, இந்த மேடுபள்ளங்கள் மலை களாகவும், பள்ளத்தாக்குகளாகவும், பீடபூமிகளாகவும், சமவெளி களாகவும், கடல்களாகவும், சமுத்திரங்களாவும், பிறவாகவும்
அமைவுற் ற ன.
நில அமைவுப் பாகங்கள் "கடல்மட்டத்திலும் அதிகமுயராத பரந்த பிரதேசம் சமவெளி எனப்படும், இதிலும் உயர்ந்த பாகம் பீடபூமி என்றழைக்கப் படும். பூமியின் மேற்பரப்பில் நனி உயர்ந்த பகுதி மலை என
வும், பூமியின் மேல்மட்டத்தில் மலைகளுக்கிடையே காணப்படும் தாழ்வு பள்ளத்தாக்கு எனவும், இரு மலைகளுக்கிடையேயமைந்த பரந்த உயர்பிரதேசம் மேட்டுப்பரப்பு எனவும் வழங்கப்படும்.
• பூமியில் ஏற்பட்ட பரந்த பள்ளங்களில் நீர் தேங்கி நிற் கும்

நில அ யைவு
13
பாகங்கள் கடல்கள், சமுத்திரங்கள் எனவும், மலையுச்சியிலுள்ள பனிப்படலங்கள் உருகுவதாலும், மலைச்சாரல்களிற்படியும் மழைநீர் வடிந்தோடுவ தனாலும் ஏற்படும் நீர்ப்பாய்ச்சல்கள் அருவிகள் எனவும், அருவிகள் ஒன்றுசேர்ந்து பிரவாகித்துச் செல்லும் வெள்ளப் பெருக்கு ஆறுகள் எனவும் அழைக்கப்படும். பூமியின் மேற்பரப்பிற் காணப்படும் இயற்கையமைவுகளும், இவ்வியற்கை யமைவுகளின் பயன்களும் ஒன்றுகூடி எங்கணும் விதம் விதமான காட்சிகளையும் தனி அழகுகளையும் விளைக்கின்றன.
பழந் தமிழிலக்கியங்களில் நிலம் ஐந்து வகையாக வகுக்கப் பட்டிருக்கின்றது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என வும், காடும் காடுசார்ந்த இடமும் முல்லை எனவும், வயலும் வயல்சார்ந்த இடமும் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனவும், இவற்றிற்குப் புறம்பே மாரியின்றி மரமின்றி வரண்ட மணற்பரப்பு பாலை எ னவும் அழைக்கப் படுகின்ற ன.
பூமியின் உயர்வும் தாழ்வும் பூமியின் மேற்பரப்பு ஒரே சமனாயிராது உயர்ந்தும், தாழ்ந் தும், ஆழ்கடல் கொண்டும் அமைந்திருக்கிறதென நாம் வாசித் தோம். பூமியின் மேற்பரப்பில் அளந்தறியப்பட்ட அதியுயரம் 29002 அடி--- அதாவது 5 மைல்வரை செங்குத்தான உயர முடைய எவரெஸ்ற் சிகரமாகும், அளந்தறியப்பட்ட சமுத்திரத் தின் ஆழமும் சற்றேறக்குறைய இவ்வளவினதேயாகும். எனினும் தரைப்பாகத்துச் சராசரி உயரத்திலும் நீர்ப்பாகத்தின் சராசரி ஆழம் கூடியது. முந்தியது 1440 அடி. பிந்தியது 11300 அடி. தரையின் உயரமும் கடலின் ஆழமும் ஒரே மட்டத்திற்குக் கொணரப்பட்டுச் சமன்பெற்றால் அப்போது பூமியின் மேற்பரப்பு முழுமையையும் சூழ் ந் து 13 மைல் ஆழமுள்ள சமுத்திரம் காணப்படும்.
பூமியின் மேற்பரப்பிற் பரந்துள்ள நீர்த்தொகுதியைப் பூமி யினது ஓர் நீர்ப்போர்வையெனக் கூறலாம். பூமிக்கு இன்னோர் போர்வையுமுளது. இதுவே பவன மண்டலமாகும், ஜீவராசி களின் வாழ்வுக்கும் தாவரங்களின் விருத்திக்கும் நீரும் பவன மும் இன்றியமையாதன. இவையின்றேல் பூமியின் மேற்பரப்பு வரண்டு' பாலையிலுங் கொடிய பாலையாய் மாறிவிடும்.

Page 16
14
உலக பூமிசாஸ்திர விளக்கம்
வினாக்கள். (1) பூமியின் மேற்பகப்பிற் காணப்படும் சில நில அமைவுகள் கூடி க. (2) இலகுவில் நிலமாற்றமடையும் இரு பொருட்கள் கூறி அவை அடையும் மாற்றங்களையும் விபரிக்கு 5. (3) பூமியினது சரித்திரத்தைச் சுருக்கிக் கூறுக, (4) மல்கள், கண்டங்கள், சமுத் கிரங்கள் ஒவ்வொன்றும் எவ் வாறு ஏற் படலாயின ? (5) மலை, பள்ளத் தாக்கு. மேட்டுப்பாப்பு, ஆறு, சமவெளி ஒவ்வொன்றையும் விளக்கி ஒவ்வோர் வாக்கியமெழுதுக. (6) பழந் சமிழிலக்கியங்களில் நிலம் எவ்வாறு வகுக்கப்பெற்றுளது? ஒவ் வொன்றையும் விளக்கி ஒவ்வோர் வாக்கியம் எழுது க. (7) பூமியின் மேற்பரப்பில் அளந்தறியப்பட்ட அதியுயாம் எ வ் வ ள வு? அ து எது? (8) பூமியின் மேற்பரப்பில் தரைப்பகுதியின் சராசரி உயாம் நீர்ப் பகு தியின் சராசரி ஆழம் ஒவ்வொன்றும் எவ்வளவு? (9) கிலமட்டம் தாழ்ந்து கடல்மட்டம் உயர்ந்து பூமியின் மேற்பரப்பில் தரை ஒரே சமனாயமையின் என்ன நிகழும்? (10) ஜீவராசிகளின் வாழ வு க் கு ம் தாவர விருத் திக்கும் இன்றியமையாதன எவை?
வா.)

எரிமலை குமுறல் 3. நிலம் அரிக்கப்படுதல் தேய்தல்
பூமியின் மேற்பரப்பில் காலாந் தரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன, நாம் சிலவேளைகளில் நிரந் தரமான மலைகளெனக் குறிப்பிடுகிறோம், ஆனால் பூமியின் மேற் பரப்பில் ஒன்றும் நிரந்தரமான தல்ல. நிலம் கடலாதலும், கடல் நிலமாதலும், மேடுகள் பள்ளங்களாதலும், பள்ளங்கள் மேடு களாதலும் இன்ன பி ற வும் உண்டா தலை நாம் காண்கிறோம். பல இயற்கை நிகழ்ச்சிகளே இம்மாற்றங்களை உண்டாக்குகின்றன பொதுப்படக் கூறுமிடத்து இவ்வாறு நிகழும் மாற்றங்கள் மூன்று வகையினவெனக் கூறலாம். அவையாவன1. ஒரே தொடர்பாய் ஆனால் மிகத் தாமதமாய் நிகழ்ந்து கொண்
டிருக்கும் மாற்றங்கள் ஒரு வகைத்து. உதாரணமாக ஓடும். நீரினால் ஓரிடத்து மணற்குன்று கரைந்து இன்னோரிடத் தில் திடர் ஏற்படல். பூகம்பம், எரிமலைக்குமுறல் பான்பனபோன்ற ஏதுக்களால்
ஏற்படும் சடுதியான நிலைமாற்றம் இன்  ேனார் வகைத்து. 3 பூமியின் உட்புறத்தாக்கங்களினால் ஓரிடத்தில் நிலம் படிப்
படியாக உயர்ந்துவர இன்னோரிடத்தில் நிலம் படிப்படியாகத்
தாழ்ந்து வருதல் மற்றோர் வகைத்து.
2

Page 17
16
உலக பூமிசாஸ்திர விளக்கம்
உட்புறச் சக்திகள்
ஒரு காலத்தில் மலைகளையுயர்த்தித் தரையை அமையுச் செய்து ஆழ்கடலையும் உண்டாக்கிய பூமியின் உட்புறச்சக்திகள் இன்றுந் தொழில் புரிந்துகொண்டே இருக்கின்றன. இவை காரணமாக இப்போதும் உலகின் சில பாகங்களில் தரையின் மேல்மட்டம் சிறிது சிறிதாய் உயர்ந்துவரச் 'சில இடங்களில் மேல்மட்டம் சிறிது சிறி தாய்த் தாழ்ந்து வரு தலைக் காணலாம். முன்னர் கடலினிடமாக இருந்த பாகம் இப்போது தரையாகச் சில இடங்களில் அமைவுற்றிருக்கின்றது. இதற்கு அத்தாட்சி யாகக் கடற்கரையிலிருந்து அதிதொலைவிலும் பூமியை அகழ்ந்து செல்லும் போது கடலிடைப்பொருள்களான இப்பி, ஊரி, சுண் ணாம்புக்கல் என் பு: 15 பெறப்படு தல்கொண்டு அவ்விடங்கள் ஒரு காலத்தில் கடலால் மூடுண்டிருந்தனவென அறியலாம்.
எரிமலை:- பூமியின் பெரும் பாகம் இன்றுங் குளிர்ச்சியடை யாத அனற்பிழம்பாய் இருக்கிறதென முன்னர் வாசித்துள் ளோம். எரிமலையென்பது பூமியினாழத்துள்ள அனற்பிழம் பைக் கக்கும் வாய் பொருந்திய மலையாகும், இந்த எரிமலைவாயினூடு உஷ்ணம் பொருந்திய நீராவி தூசி இன்னும் ல ா வ ா (Land) எனப்படும் கற்பிழம்பு ஆதியன இடையிடை கக்கப்படும். சில வேளைகளில் அனற்பிழம்பு பல்  ைம ல் தூரம் வழிந்தோடிச் சூழ்ந்துள்ள கிராமங்களை மூடி மறைத்து அழித்தும்விடும்.
பூகம்பம்:- பூகம்பம் அல்லது பூமி அதிர்ச்சி என்பது பூமி யின் ஓர்பாகத்தில் உட்புறத்து நிகழும் சடுதியான தாக்கங்களி னால் மேற்பாகத்திலேற்படும் பயங்கர நடுக்கமாகும். பூமியைக் கிடுகிடுக்கவைக்கும் இவ்வதிர்ச்சியின் காரணமாகப் பல கட்டிடங் கள் தகர்ந்து தரைமட்டமாதலும், பெரிய பொருட்சே தம் உயிர்ச் சேதம் நிகழ் தலும், சிலவிடங்களில் பூமி பிளத்தலும், தரை ஆழ் தலும், ஆழ்கடல் உட்பிரவேசித்தலும் நிகழ்கின்றன. * இவ்வாறாய பூமியதிர்ச்சி உலகின் வெவ்வேறு பாகங்களில் இடையிடை ஏற்படு வதைப் பத்திரிகைவாயிலாக அறிகிறோம்.
* அதென்ஸ் மே 3. கிரேக்க நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம் பத் தினால் 3800 க்கு மேற்பட்ட வீடுகள், 19 தேவாலயங்கள், 4 பாடசாலை கள் சிதைவுற்றன. இன்னும் தே சாலிப் பிரிவில் 27 மக்கள் கொல்லப்பட்ட தாக இன்று செய்தி கிடைத்துள் ளது.
--Times of Ceylon 3-5-54.

நிலம் அரிக்கப்படுதல் தேய்தலும் காரணங்களும், 17
"டல் என் ' 8ஓடும்நீர்.கய தலை உசவுகள் -
மேற்புறத் தாக்கங்கள் பூமியின் மேற்பரப்பிலுள்ள சில் தாக்கங்களும் இ த ன் மட்டத்தை மாறுபடுத்துகின்றன. உதாரணமாக உஷணமும் குளிரும், காற்றும் நீரும், மிருகங்களும் தாவரங்களும் மெதுமெது வாக நிலமட்டத்தைத் தாழச் செய்கின்றன. இவ்வேதுக்களால் "மலைகள் உயரங்களிற் குறைந்துவரத் தாழ்வுகள் நிரம்புகின்றன. (நிலம் அரித்தல் அல்லது தேய் தலை விளைக்கும் முக்கிய பிற ஏதுக் களான மழை, ஓடும்நீர், பனியும் பனிப்படலமும், காற்று, சூரியன், கடல் என்பன ஒவ்வொன்றும் விளைக்கும் மாற்றங்களை ஆராய்வாம். (1) மழை:- காய்ந்து இறுகிய மேடுகளிலும் மலைச் சாரல்களிலும் மழை விழும்போது நிலம் நெகிழ்ந்து மண்சரிவுகள் ஏற்படு கின்றன. பெரிய றப்பர் தேயிலைத் தோட்டங்களில் இவ்வாறு மண் சரிவுகள் ஏற்பட்டு நிலம் அமைவுகெடலைத் தடைசெய்வதற்காகப் புல் வளர்த்தலும் வேறுஞ் சிலமுறைகள் அனுஷ்டிக்கப் படலுங் காணலாம்.
பவனத்தில் ஓரளவு கரியிருதீயதை என்னும் வாயு உண்டு. இவ் வாயு நீரோடு கலக்கும் போது அமிலமாக (Acid) மாறிச் சுண்ணாம்புக் கல்லைக் கரைக்குஞ் சக்தி பெறுகின்றது. எனவே மழைநீரோடு கரைந்துவரும் பவனத்திலுள்ள கரியிரு, தீயதை நிலத்திலுள்ள சுண்ணாம்புக் கற்பாறைகளைச் சிறிது சிறிதாக
அரித்துக் குடைகின்றது. (2) ஓடும் நீர்:- மழைத்துளிகள் ஒன்றுசேர்ந்து அரு வி க ளாகி அருவிகள் கூடி ஆறுகளாய் நிலத்தின்கண் ஓடுகின்றன. இவை பெருக்கெடுத்து ஓடும்போது திடர்களை உடைத்துக் கரைகளை
அரித்துச் சேறு, மணல், சிறுகற்கள் என்பவற்றைச் சேர்த்துக் கொண்டு பாய்கின்றன. ஆற்றின் பிரவாகத்தினால் பள்ளங்கள் நிரம்பியுஞ் சிலவற்றின் முகத்துவாரத்தில் டெல்றா எனப்படும்
ஆற்றிடைமேடு அமைந்துங் காணப்படுகின்றது. (3) மூடுபனியும் பனிக்கட்டியும்:- நீர் பனிக்கட்டியாக மாறும் பொழுது மு ந் தி ய பரிமாணத்திலும் பெருக்கமடைகின்றது எனவே சீ தளவலய நாடுகளின் மலையிடுக்குகளிற் புகுந்த ம.மைநீர் மூடுபனியின் கடுங்குளிரினால் பனிக்கட்டியாகமாற, இப்பனிக்கட்டி யின் பரிமாணப் பருமன் அம்மலையிடுக்குகளைப்' 'பிளக்கின்றது, இவ்வாறு படிப்படியாக நிகழ மலைகளிற் பிளந்த கற்பாறைகளும் சிறுகற்களும் கீழேயுள்ள பள்ளத்தாக்குகளையடைந்து அவைகளை உயர்வுபெறச் செய்கின்றன,

Page 18
18
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
சில குளிர்ப் பிரதேசங்களில் மலையுச்சிகளிலிருந்து • வழிந் தோடும் பனிக்கட்டி ஆறுகள் (Glaciers) தாம் பாயும்பாகத்து மலை களை த் தேய்த்துக் கரைகளை அரித்துக் கற்களைச்சேர்த்துச் செல் கின் றன. பின்னர் இப்பனிக்கட்டி ஆறு கள் உருகிச் செல்லும் பிரதேசத்தில் தாம் கொணர்ந்த கற்களை உருட்டவியலாது அவ் வவ்விடங்களிற் படியச்செய்து திடர்களை உண்டாக்கி வருகின்றன.
(4) காற்று:- பூமியின் மேற்பரப்பில் மாற்றத்தை வி ளை க் கு ம் இன்னோர் ஏது காற்றாகும். பெருங்காற்றுப் பிரதேசங்களில் காற் றுடன் பருமணல்களும் கலந்து வீசப்படுவதனால் கற்பாறைகள் உருக்குலைகின்றன. எகிப்திலுள்ள ''பெரிய ஸ்பிங்ஸ்" என்னுங் கல்லறை இன்று உருக்குலைந்து காணப்படுவதற்கு இதுவே காரணமாகும். (5) சூரியன்:- உஷ்ணப் பிரதேசங்களில் சூரி ய ன் மிகக் காய்வோடு தனது கிரணங்களை வீசுகின்றது. இராக்காலத்தில் சூரியனது மறைவின்போது பூமி சடுதியாகக் குளிர்ச்சியடைகின் றது. கற்பாறைகளின் சேர்க்கையான எல்லாக் கனிஜப் பொருட் களும் உஷ்ணத்தினால் ஒரே விதமான விரிவையும், குளிர்ச்சியினால் ஒரே விதமான சுருக்கத்தையும் பெறுவதில்லை. இவை காரண மாகப் பாறைகள் பிளக்கின்றன. (6) கடல்:- நம்மில் அநேகருக்குக் க ட  ேல ா ர மும் ஆங்கு சுருண்டெழும் பேரலைகளின் தாக்கமுந் தெரியும். இவ்வலைகளின் நீர்த் தாக்கம் மாத்திரமன்றி இன்னும் இவ்வலைகள் உருட்டிக் கொணரும் சிறுகற்கூட்டங்களும் கற்பாறைகளை த் தேய்க்கின்றன. *பேரலைகள் கரைகளை உடைத்துக் கரையோரங்களை அரிக்கின் றன. அலைகளோடு உ ருண் டெ ழு ங் கற்கூட்டங்கள் ஒன்றோ டொன்று உரோஞ்சி மணலாக்கிக் கரையோரங்களிற் படிகின்றது. சிலவிடங்களில் கடலின் தாக்கத்தினால் கரையோரங்கள் அரிக்கப் பட்டுத் தரை சேதமுறுவதைத் தடை செய்வதற்கு அரசாங்கம் அணைகள் கட்டியும் பெரும் பாறாங்கற்களைக் கரையோரங்களிற் * அம்பலாங்கொடை ஞாயிறு.
 ேதா த கமூவாப் பிரிவில் பெரிய அலைகள் புரண்டெழுந்து கரையில் மோது வதால் பெளத்த மாண வர் கலாசாலைவிளை யாட்டுநிலம் கடலாற் கொள்ளப் பட்டுவிட்டது. இரண்டுமாதங்களுக்கு முன்னர் இப்பாடசாலைக்கு அருகாமை யிலுள்ள மூன்று வீடுகளும் இவ்வாறு அழிவுற்றன. ஐந்து அடி வரை உயா மான கல்லணையை உடைத்துக் கடல் பாடசாலையையங் கொண்டுபோய் விடுமென நம்பப்படுகிறது.
-Ceylo00, Daily Neaps 11-10-54.

நிலம் அரிக்கப்படுதல் தேய்தலும் காரணங்களும். 19
கொட்டியும் இன்னும் பிற பாதுகாப்புகள் செய்தும் வருவதை ' நாம் காணலாம்.
கடற்கரையோரங்களிலுள்ள தென்னை முதலிய மரங்களின் வேர்ப்பாகம் நீரின் 'தாக்கத்தினால் அரிக்கப்பட அவை சாயும் போதும் கரைகள் ஒடிகின்றன, ''நெட்டிருப்புப் பாணைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும்” என்றபடி மலையோரங்களில் வளரும் மரங்களின் வேர்களும் பாறைகளைப் பிளக்கச் செய்து அவற்றை உடைக்கின்றன.
மேற்கூறியவைகளெல்லாம் பூமியின் மேற்பரப்பில் மெது வாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களாகும். பூகம்பம் எரி மலை போல்வன பூமியின் மேற்பரப்பிற் சடுதியான நிலமாற்றங் களை உண்டாக்குகின்றனவென்பதை மீட்டும் நினைவிற் கொள்க. இன்னும் மனிதன் வாகனப்போக்குவரவு வீடுகட்டல் போன் ற தனது தேவைகளை நோக்கி மலைகளை உடைத்தும், மேடுகளைச் சமன்படுத்தியும், பள்ளங்களை நிரப்பியும் வருவதினாலும் நில அமைவுகள் சேதமுறுகின்றன.
வினாக்கள். (1) பூமியின் மேற்பரப்பில் ஏற் ப டு ஞ் சில மாற்றங்கள் கூறுக. (2) பூமியின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்கள் எக்கனை வகையின் ? அவை யாவை? (3) பூமியின் உட்புறச் சக்திகள் இன்றுந் தொழில்புரிகின்றன என்பதை விளக்குக. (4) எரிமலை, பூகம்பம் ஒவ்வொன்றையும் பற்றிச் சிறு குறிப்பெழுதுக. (5) பூமியின் மேற்புற அமைவைச் சிதைக்குஞ் சிலசக்தி கள் கூறுக. இவற்றுள் எவையேனும் இரண் டு எவ்வாறு தாக்குதல் செய்கின்றன என்பதை விபரிக்குக. (6) நிலம் அரிக்கப்படுதல் அல்லது தேய்தல் என்பது என்ன? (7) ஓடும் நீர், காற்று, பனி, கடல், பூகம்பம் ஒவ்வொன்றும் எவ்வாறு நில அமைவுக்குச் சேதம் விளை விக்கின்றதென்பதை விபரிக்குக." (8) பனிக்கட்டியாறு என்பது என்ன? (9) பனிக்கட்டி மலைகளைப் பிளப்பதெவ்வாறு? (10) நிலம் அரிக்கப்படுதல் அல்லது தேய் தல் பற்றி நீர் நேர்முகமாகக் கண்டறிந்தவற்றை இடங்களுங் குறிப்பிட்டு விபரிக்குக.

Page 19
4. நில அமைவின் பாகங்களும் பெயர்களும்
முந்திய பாடங்களின் தொடர்பாகவும் இனி அடுத்துவரும் பாடங்க ளுக்கு ஆதாரமாகவும் பின்வரும், பூமிசாஸ்திரப் பதங் களையும் விபரங்களையும் அறிந்து கொள்ளுதல் ஏற்றதாகும்.
இடது
'சம் வெளி
1-1 F =
குடா
கால வாய
குடாக் கடல்
கடல்
டெல்ற்ர்.
துறை முகம்
சமுத்திரம்
மு 7ே.
1. மிகப்பரந்த நிலப்பிரதேசம் கண்டம் எனப்படும். 2. எப்பாகமுங் கடலால் அல்லது நீராற் சூழப்பட்ட ஓர் பெரிய
நிலப்பாகம் தீவு அல்லது தீபம் எனப்படும். 3. ஒரு சிறுபகுதி தவிர்ந்த எஞ்சிய பெரும்பகுதி நீராற் சூழப்
பட்ட நிலப்பாகம் தீபகற்பம் அல்லது குடாநாடு (Peninsula)
எனப்படும். 4. கடலினிடத்தில் நீண்டிருக்கும் நிலப்பகுதி முனை எனப்படும். 5. சூழ்ந்துள்ள தரைப்பாகத்திலும் நனியுயர்ந்து ஓங்கிக் காணப்
படும் நிலப்பாகம் மலை அல்லது பர்வதம் எனப்படும். 6. அதியுயாமற்ற சிறிய மலை குன்று (Hill) எனப்படும். மலையின்
அதியுயர்ந் தபாகம் மலையுச்சி ( Summi ) எனவும், மிகப்பதிந்த பாகம் மலையடிவாரம் (Base or Foot) எனவும், மலையின் கூரிய துனி மலைச் சிகரம் (Peal) எனவும், மலையினூடு 1மக்கள் செல்வதற்கு தவும் அகழ்பாதை கனாவாய் (Pass) எனவும்,

நில அமைவின் பாகங்களும் பெயர்களும்.
21
மலையின் பக்கல் மலைச்சாரல் (Slope) எ ன வும், மலைகள் அல்லது குன்றுகளுக்கிடையே அமைந்துள்ள தாழ்வு நிலம் பள்ளத்தாக்கு(Valley) எனவும், ஒன்றோடொன்று தொடர்ந்து
ஓங்கிக் காணும் மலைத்தொடர் அடுக்குமலை (Range 07 Chain) எனவும் வழங்கப்படும்.
7. அக்கினிச்சுவாலை, நீராவி, உருகிய கற்பிழம்பு என்பவற்றைக்
கக்கும் கூம்புவடிவமலை அக்கினிக் குன்றம் அல்லது எரிமலை எனப்படும். எரிமலை கக்கும் உருகிய கற்பிழம்பு ''லாவா" எனப்படும்:
8, பூமியின் உட்புறத்து நிகழும் சடுதிமாற்றங்களினால் ஏற்படும்
நிலவதிர்ச்சி பூகம்பம் அல்லது பூமி நடுக்கம் எனப்படும். 9. அதிகந் திடரில்லாத பரந்த சமபூமிப் பிரதேசம் சமவெளி (Plain) எனப்படும். மரங்களற்ற றஷ்ய சமவெளிப் பிரதேசம் ஸ்ரெப்பீஸ் (Steppes) எனவும், வட அமெரிக்காவின் புல் வெளிப்பிரதேசம் பிறெயறீஸ் (Prairies) எனவும், தென் அமெரிக்காவின் காட்டுச் சமவெளிப் பிரதேசம் செல்வாஸ் (Selvas) எனவும், மற்றும் தென் அமெரிக்காவின் புல்வெளி கள் பம்பாஸ், லானோஸ் எனவும், ஆபிரிக்காவின் புல்வெளிப் பிரதேசங்கள் சவானாஸ் (Savannas), வெல்ட் (Veld) எனவும், அவுஸ்திரேலியாவின் புல்வெளிப் பிரதேசம் டவுன்ஸ் (Downns) எனவும் பெயர்கள் பெறுகின்றன. பிந்திய இருகண்டங்களிலு முள்ள புல்வெளிப் பிரதேசங்கள் பரந்த சமநிலப் பிரதேசங் களல்ல.
10. நீரின்றி நிழலின்றி வரண்ட மணல்வெளி பாலை அல்லது
வ னா ந் தரம் எனப்படும். பாலை நிலத்தின் இடையிடையே காணப்படும் பேரீந்து வளருவதும் நீரூற்றுப் பொருந்தியது
மான பசுந்தரை ஓயெஸிஸ் எனப்படும். 11. மிகப்பரந் த உப்புநீர்த் தேக்கம் சமுத்திரம் எனப்படும், 12. சமுத்திரத்திலுஞ் சிறிய உப்புநீர்ப் பரப்பு கடல் எனப்படும். 13. முழுமையும் நிலத்தாற் சூழப்பட்ட நீர்த்தொகுதி வாவி
(Lake) எனப்படும். 14. பெரும் பகுதி நிலத்தால் சூழப்பட்ட நீர்ப்பாகம் குடா (Gulf )
எனப்படும்,

Page 20
22
உலக பூமிசாஸ்திர விளக்கம்
15. இரு கடல்களைத் தொடுக்கும் ஒடுங்கிய நீர்ப்பாதை நீரிணை
அல்லது தொடுவாய் (Strait) எனப்படும். 16. இரு கடல்களுக்கிடையே நீ ண் டு அகலித்துச் செல்லும்
பாதை கால்வாய் (Channel) எனப்படும்.
17.
இரு பெரிய நிலப்பாகங்களை ஒன்றுசேர்க்கும் ஒடுங்கிய நிலம்
பூசந்தி (Isthmus) எனப்படும். 18. பரந்த நன்னீர்ப்போக்கு நதி எனப்படும். நதி ஊற்றெடுக்கு
மிடம் உற்பத்தி ஸ்தானம் எனவும், அது வடிந்து கடலோடு சேருமிடம் முகத்துவாரம், கழிமுகம் அல்லது சங்கமம் என வும், ஓடிச்செல்லும் பெரிய வாய்க்காற்பாதை நதிப்படுக்கை எனவும், இருமருங்கின் எல்லை நிலம் நதிக்கரை (Bank) எனவும், ஆழமாய் அகழ்ந்து செல்லும் நீரோடும் பாதை நதியிடுக்கு (Gorge) எனவும், நீரூட்டும் சிற்றாறு கிளைநதி (Tributary) எனவும், இருமருங்கும் அமைந்து ந தி ய ால் போஷிக்கப்டுங் கிராமங்கள் வடிநிலம் Busin) எனவும், முகத்துவாரத்தில் வண்டல்களின் சேர்க்கையால் அமையுந் திடர் ஆற்றிடைமேடு அல்லது டெ ல் றா (Delta) எனவும் 'பெயர்கள் பெறுவனவாகும்.
வினாக்கள் (1) நில அமைவின் பா க ங் க ள் ஐந்து கூறி ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வோர் வாக்கியம் எழுது க, (2) முனை, ஓயஸிஸ், நீரிணை, வடிநிலம், லாவா, டெல்றா, பள்ளத்தாக்கு, அக்கினிக்குன் றம் ஒவ்வொன்றும் என்ன வென்பதை விபரிக்குக. (3) பாந்த சமவெளிப் பிரதேசங்கள் ஐந்து கூறி ஒவ்வொன்றும் எவ்விடத் துள்ளதென்றும் அதன் தன் தன்மைகளை யுன் கூறுக. (4) மலையோடு சம்பந்தப்பட்ட அதன் பாகங்கள் ஐந் துகூறி விளக்குக. (5) ந தியோடு சம்பந்தப்பட்ட அதன் பா கங்கள் ஐந்து கூறுக. (6) விளக்கப் படங்களினுதவியோடு மலையடிவாரம், குடா, நீரிணை, தீவு, கிளை ந தி ஒவ் வொன்றும் இன்னதென்பதை விளக்கி ஒவ்வோர் வாக்கியம் எழுதுக.

5. நிலப்பாகம் நீர்ப்பாகத்தின் பெரும்பிரிவுகள்
பூமி நிரட்சத்தினூடு வட தென் கோளார்த்தங்களாக வகுக் கப்படும்போது வட கோளார்த்தத்தில் நிலத்தொகுதி கூடு தலாய் அமைந்திருப்பதையும், தென் கோளார்த்தத்தில் நீர்த்தொகுதி கூடு தலாய் அமைந்திருப்பதையும் முதற் பாடத்தின் இறுதியிற் படித்தோம். ஆனால் கண்டங்களின் அமைவைக் காட்டும்போது பூமி இவ் வ ா று வடகோளார்த்தம் தென்கோளார்த்தம் என வகுக்கப்படாது பூகோள உருண்டையின் மேற்பரப்பு கிழக்குக் கோளார்த்தம், மேற்குக் கோளார்த்தம் (Easter10. and 1Vester70 Hemisphers) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஒரு பூகோள உருண்டையைப் பார்க்கும்போது ஒரே முறையில் அதன் அரைப்பாகத்தை மாத்திரங் காணுதல் கூடும். எனவே உலகப்படம் வரையப் படும்போது ஒவ்வோர்
(ப க ?ரம்
7 - -
ராபயா
ஆ ச யா C).
சியா
அமெரிக்கா
'
முததிரம்
- ----|
ஆ பிரிக்கா
- 'கட்'-S-: -
சமுத்திரம் -----
தென்
சமுத்திரம் )
அமெரிக்கா
அவுல ஒரே
சத்திரம்
அரைப்பாகத்தையுங் காட்டும் இரு வட்டங்களாக வரையப்பட்டுப் பூமியின் மேற்பரப்பு முழுமையையுங் காட்டப்படுகின்றது. இவ் விரு கோளார்த்தங்களையும் நாம் ஒப்புநோக்கும் போது கிழக்குக் கோளார்த்தம் மேற்குக் கோளார்த்தத்திலும் இரு மடங்கான நிலப்பரப்பைக் கொண்டிருக்கக் காணலாம்.
பூமியின் அ  ைம வ ா ன நிலப்பாகம் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என ஆறு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா இரண்டுஞ் சேர்ந்து அமெரிக் காக் கண்டம் என்னும் பெயர் பெற மேற்கூறிய ஆறு பெரும் நிலப்பிரிவுகளும் ஐந்து கண்டங்களாக வகுக்கப் பெற்றுள்ளன.

Page 21
24
உலக பூமிசாஸ்திர விளக்கம் .
ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா என்பன ஒன்றோடொன்று பிணைவுற்றுக் கிழக்குக் கோளார்த்தத்தில் அமைந் து ள் ள ன. அவுஸ்திரேலியாக் கண்டம் இவற்றிற்குத் தூரத்தே இக்கோளர்த் தத்தில் 'அமைந்துள்ளது. மேற்குக் கோளார்த்தத்தில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்னும் பிரிவுகளைக் கொண்ட பெரிய அமெரிக்காக் கண்டம் அமைந்துள்ள து.
பூமியின் மேற்பரப்பில் 5 கோடியே 20 இலட்சம் (52 Million) சதுரமைல் விஸ்தீரணமான நிலப்பாகமுண்டு. கிட்டத்தட்ட ஒரு கோடியே 60 இலட்சம் சதுர மைல் ஆசியா, 40 இலட்சம் சதுரமைல் ஐரோப்பா . ஒரு கோடியே 20 இலட்சம் சதுரமைல் ஆப்பிரிக்கா, 90 இலட்சம் சதுரமைல் வட அமெரிக்கா, 70 இலட் சம் சதுர மைல் தென் அமெரிக்கா, 40 இலட்சம் சதுரமைல் அவுஸ்திரேலியா என நிலப்பரப்புகள் அமைந்துள்ளன. தென் சமுத்திரத்தில் தென் துருவத்தைச் சூழ்ந்து அணுகி நுணுக்கமாய் ஆராய்ச்சி செய்யப்படாததும் எந்நேரமும் பனிக்கட்டி உறைந் துள்ளதுமான பரந்த தரைப்பாகமுளது. இது 55 இலட்சம் சதுர மைல் வரை விஸ்தீரணமுடையது; தென் துருவக் கண்டம் என அழைக்கப்படுவது.
கண்டங்களில் ஆசியா மிகப்பெரியது. அவுஸ்திரேலியா மிகச்சிறியது. ஐரோப்பாவைப்போல் ஆபிரிக்கா மூன்று மடங்கு விஸ்தீரணமுடையது. அமெரிக்கா நான்கு மடங்கு விஸ்தீரண முடையது.
கிழக்குக் கோளார்த்தத்தில் மலைத்தொடர்கள் கிழக்கு மேற்காய்ச் செல்கின் றன. மேற்குக் கோளார்த்தத்தில் வடக்குத் தெற்காய்ச் செல்கின்றன. இக்கண்டங்கள் வடபாகத்தில் அகன்று விசாலித்தும் தென்பாகத்தில் ஒடுங்கியுங் காணப்படுகின்றன.
நீர்ப்பாகம். பூமியின் மேற்பரப்பைச் சூழ்ந்துள்ள நீர்ப்பாகம் அத்தி லாந்திக் சமுத்திரம், பஸிபிக் சமுத்திரம், இந்து சமுத்திரம், வட சமுத்திரம், தென் சமுத்திரம் என ஐந்து பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. சமுத்திரங்களின் மொத் த விஸ்தீரணம் 14 கோடியே 50 இலட்சம் (145 Mbllion) சதுரமைலாகும். தரைப் பாகத்தின் மொத்த விஸ்தீரணம் 3 கோடியே 20 இலட்சம் சதுர மைல் என முன்னர் பயின்றுள்ளோம். எனவே பூமியின் மொத்த


Page 22
Οδού

நிலப்பாகம் நீர்ப்பாகத்தின் பெரும்பிரிவுகள் 25
விஸ்தீரணத்தில் ' மூன்று பங்கு நீர்ப்பகுதியாகவும் ஒரு பங்கு நிலப்பகுதியாகவும் அமைந்திருக்கின்றன.. >
பஸிபிக் சமுத்திரம் பஸிபிக் சமுத்திரம் ஆசியா அமெரிக்காக் கண்டங்களுக் கிடையே அமைந்துள்ளது. இந்துசமுத்திரம் ஆசியாவுக்குத் தென்புறத்தில் அமைந் துள்ளது. அத்திலாந்திக் சமுத்திரம் ஒரு புறம் ஐரோப்பா ஆபிரிக்கா பொருந்தவும், மறுபுறம் அமெரிக்கா பொருந்தவும் அமைந்துள்ளது. வட சமுத்திரம் வட துருவத்தைச் சூழ்ந்தும் தென் சமுத்திரம் தென் துருவத்தின் நிலப்பாகத்தைச் சூழ்ந்தும் அமைந்துள்ளன.
சமுத்திரங்களில் ப ஸி பி க் சமுத்திரம் மிகவும் பெரியது. - முட்டை வடிவமானது. பூமியி னது மு டிப்பரப்பில் மூன்றில் ஒரு பாகத்தை அடக்கியுள்ள து, மறு சமுத்திரங்கள் நான்கும் ஒன்று சேர்ந்த பரப்பளவிற்குச் சமமானது. இன்னும் இது
அ நேகந் தீவுகள் பொருந்தியுள்ளது.
சில இடங்களில் பஸிபிக் சமுத்திரம் மிக ஆழமானது. இமாலயந் தானும் இதன் ஆழமான பகுதியில் அமிழ்த்தப்பட்டால் மலையினுச்சி நீரின் மேல்மட்டத்திலும் 3000 அடி தாழ்ந்தே நிற்கும், பஸிபிக் சமுத்திரத்தின் தென்மேற்பாகத்தில், பூகம்பச் சால்புடைய அநேக தீவுகளுண்டு. இச்சமுத்திரத்தில் பிரசித்த நதிகளின் வீழ்ச்சி அதிகமில்லை.
ஜப்பான், பிலிப்பைன், போர்ணியோ, புதியகயானா, நியூசீ லாந்து முதலியன இச்சமுத்திரத்தின் குறிப்பிடத்தக்க தீவுகளா கும். டோக்கியோ, ஷங்காய், கொங்கொங், சிங்கப்பூர், சிட்னி, மெல்போண், வெலிங்டன், வான்கூவர், சான்பிரான்சிஸ்கோ, வல் பரைசோ முதலிய ன ப ஸி பி க் சமுத்திரத்தின் இரு பக்கங்களு ளமைந்த பிரதான துறைமுகங்களாகும்.
அத்திலாந்திக் சமுத்திரம் அத்திலாந்திக் சமுத்திரம் 3 கோடியே 50 இலட்சம் சதுர மைல் விஸ்தீரணமுடைய து - S வடிவமானது - கிழக்கு மேற் குக் கரைகள் பருமட்டாய்ச் சமாந்தரமானவை, பூமியின் மேற்பரப்பில் இச் சமுத்திரம் ஐந்திலொரு பாகத்தை அடக்கியுள்ள து. 1442-ம் ஆண்டில் அமெரிக்கா கண்டுபிடிக்கப் பட்டபின் னர் அத்திலாந் திக் சமுத்திரம் தன்னிரு கரைகளிலுமமைந்த நாகரீக வளர்ச். சியும் வியாபார மேம்பாடு முடைய மேல் நாடுகளுக்கிடையே எந்

Page 23
26
உலக பூமிசாஸ்திர விளக்கம்
நேரமுங் கப்பற் போக்குவரத்துடையது. இன்னும் இச்சமுத்திரம் க  ைர க ளி ல் உள்ளொடுக்கங்கள் பொருந்தியிருப்பதாலும், பல இயற்கைத் துறைமுகங்கள் அமைந்திருப்பதாலும், சிறு கடல் களையுங் குடாக்களையுங் கொண்டிருப்பதாலும், உலகத்தின் பிர தான ஆறுகள் சங்கமிப்பதாலும் உயரிய ஸ்தானத்தைப் பெற் றுள்ளது. இச்சமுத்திரத்தினூடு எந்நேரமும் "I தக்கும் வீடுகள்" எனக் குறிப்பிடப்படும் பாரிய கப்பல்கள் போக்கு வரவு செய்து கொண்டேயிருக்கும்.
பால் திக்கடல், மத்தித் தரைக்கடல், மெச்சிக்கோக்குடா, பன மாக் கால்வாய் என்பன அத்திலாந்திக் சமுத்திரத்தைச் சேர்ந் தவை. லண்டன், ஜிபிறோல் றர், கேப்டவுண், நியூபவுண்லாந்து, நியூ யோக், மெக்சிக்கோ, றையோடிஜெனறே என்பன அத்தி லாந்திக் சமுத்திரத்தின் இரு பக்கங்களுமமைந்த பிரதான துறை முகங்களாகும்.
இந்து சமுத்திரம் இந்து சமுத்திரம் மேற்கில் ஆபிரிக்காக் கண்டமும், வடக்கில் இந்தியா, மலாயா, இந்துசீனா என்னுந் தேசங்களும், கிழக்கில் அவுஸ்திரேலியா கிழக்கிந்திய தீவுக் கூட்டம் மு த லி ய ன வும் பொருந்த அமைந் துள்ள து. செங்கடல், அரேபியாக்கடல், வங்கா' ளக் குடாக்கடல் என்பன இந்து சமுத்திரத்தின் சேர்க்கைகளா கும். சுவெஸ் கால்வாய் திறக்கப்பட்டபின்னர் செங்கடலும் இந்து சமுத்திரமும் மத்தித் தரைக்கடலோடும் அத்திலாந்திக் சமுத் திரத்தோடும் இணைப்பு றுகின்ற ன. கீழைத்தேயத்திற்கும் மேலைத் தேய்த்திற்கும் இடையே கப் ப ற் போக்குவரவு தற்பொழுது செங்கடலினூடு நடைபெறுகின்றது. இலங்கை, மடகாஸ்கார் என்பன சமுத்திரத்திலுள்ள கண்டச் சால்புடைத் தீவுகளாகும்.
கொழும்பு, சென்னை, கல்கத்தா, றங்கூன், பினாங், பற்றே வியா, பேர்த், டேர்பன், சான்சிபார், ஏடன் முதலியன இந்து சமுத்திரத்தைச் சார்ந்த விசேஷ தீவுகளாகும்.
வட சமுத்திரம் - வடசமுத்திரம் வடதுருவத்தைச் சூழ்ந்து அமைந்திருக்கின் றது. இது எந்தநேரமும் பனி உறைந்திருக்கும். அத்திலாந்திக் சமுத்திரத்தினோடு கிழக்கும் மேற்கும் கிறீன்லாந்துக் கால்வா யாலும் பல பிக் சமுத்திரத்தினோடு பெரிங் தொடுவாயாலும் இது

நிலப்பாகம் நீர்ப்பாகத்தின் பெரும்பிரிவுகள் 27 இணைக்கப்படுகின்றது, வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாக் கண்டங்களின் வடபாகங்கள் இதன் தெற்கு எல்லையுங், கரையு மாய் அமைந்துள்ளன.
தென் சமுத்திரம் தென்சமுத்திரம் தென் துருவத்தைச் சூழ்ந்து அமைந்திருக் கின்றது. எந் நேரமும் பனிக்கட்டியால் மூடப்பெற்ற சனசஞ் சாரமற்ற தென்துருவக்கண்டம் என்னும் நிலப்பாகம் இ தி ல் அமைந்துள்ளது. ஆராய்ச்சியாளர் இப்பாகத்தைக் கடந்து தென் துருவத்தை ஆராயப் பெருமுயற்சி செய்து வருகின்றனர்.
சமுத்திரங்களின் நிலையத்தையும், அமைவையும், துறைகள் தீவுக் கூட்டங்களின் பெயர்களையும், கண்டங்களையும் தேசங்களையும் இணைக்குங் கப்பற்பாதைகளையுந் தேசப்படப்புத்தகத்தில் பார்த்து ஆராய்ந்தறிக.
சமுத்திரங்களின் அடிப்பாகமுந் தரையைப்போல் மேடு பள்ளங்கள், உயர்ந்த கற்பாறைகள் சமநிலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சமுத்திரங்களின் ஆழம் கூடக்கூட நீரின து தாபநிலையும் (உஷ்ணமும்) குறைந்து செல்லும். பரன்ஹீட் 36 பாகையையடைந்ததும் மெதுவாகத் தாபநிலை குறையும். ஆக வும் அடிப்பாகத்தில் பனிக்கட்டி போன்றவையிருக்கும்,
வினாக்கள்.
(1) பூமியின் வட தென் கோளார்த்தங்களில் எக்கோளார்த்தத் தில் நீர்ப்பகுதிகூட?(2) அத்திலாந்திக் சமுத்திரம் அலைவீசுங் கண்டங்களெவை? (3) அத்திலாந்திக் சமுத்திரத்தைப்பற்றி ஐந்து வாக்கியங்கள் எழுதுக. (4) அத்திலாந்திக் சமுத்திரம் ஏன் அதிவிசேடம் பெற்றது? (5) உலகப்புற உருவப்படத்தில் சமுத்திரங்களுக்கு மெல்லிய நீலவர்ணம் தீட்டிப் பெயர் களையும் எழுதுக . (6) பஸிபிக் சமுத்திரம்பற்றிச் சில வாக்கியம் எழுதுக. (7) பஸிபிக் சமுத்திரத்தைச் சேர் த தீவுகளைப் படத்திற் காட்டிப் பெய ரையுங் கூறு க. (8) பஸிபிக் சமுத்திரம் எவ்வெக் கண்டங்களுக்கிடையில் அமைந்துள்ள து? (9) உலகப் படத்தைப் பார்த்துப் பஸிபிக் சமுத்திரத் தி லுள்ள சில பிரதான துறைமுகங் களைக் கூறுக. (10) இந்து சமுத்திரத் தைச் சூழ்ந்த கண்டங்கள் எவை? (11) இந்துசமுத்திரத்தில் சங்சமிக்கும் சில ஆறு கள் கூறுக. (12) இந்துசமுத்திரத்தின் சேர்க்கையான் சில கடல் கள் கூறுக. (13) சுவெஸ் கால்வாய் எங்குளது? எவ்வாறு விசேடம் பெற்ற து?(14) இந்துசமுத்திரத்திலுள்ள சில துறைமுகங்கள் கூறுக. (15) வடசமுத்திரம் தென் சமுத்திரம் ஒவ்வொன்றையும் பற்றி நீர் அறிந்த வற்றைக் கூறு க.
ள்ள சில கண்ட 12) இந்.

Page 24
7 (
623
'
பாடி,
- ஜிரா, 1 ல்
ை
"டு
டி."
"-
சும்
உயர் மல்கள் மலை கள பீட பூமிகள் சம வெளிகள்
ஃ)
ܕ

6. கண்டங்களின் இயற்கைத் தோற்றம்
கண்டங்களின் இயற்கைத் தோற்றம் பற்றித் தெளி வாக விளங்கிக் கொள்வதற்குத் தேசப்படப் புத்தகத்தி லுள்ள இயற்கையமைவுப் படங்களி னு தவி மி க வும் வேண்டியது. அவ்வக் கண்டங்களைச் சார்ந்த பின் வரும் விஷயங்களைப் படங்களினுதவியோடு பயின்று கொள்க.
ஆசியா ஆசியாவை நில அமைவு கருதி நான்கு இயற்கைப் பிரிவு களாகப் பிரிக்கலாம். அவையாவன--
1. வடபாகச் சமவெளிப் பிரதேசம்:- மிகப் பரந்த இச் சமவெளிப் பிரதேசம் பருமட்டான முக்கோண வடிவின தாய், வடசமுத் திரத்தில் ஆரம்பித்து ஆசியாவின் மத்திய மலைநாடுகள் வரை பரவியுள்ளது. இடையில் பதிந்த தடையான யூறல் மலைகளால் மாத்திரம் பிரிக்கப்பட்டுப் பரந்த ஐரோப்பிய சமவெளிப் பிரதேசத்தோடு இணைந்திருக்கின்றது. 2. மத்திய மலைநாடுகள் :- ஆசியாவின் ம த் தி ய பகுதி மலைத்
தொடர்களையும், மலையடுக்குகளையும், பல மேட்டுப் பிரதேசங் களையுங் கொண்ட மலைப்பிரதேசமாகக் காணப்படுகின்றது. ''உலகத்தின் முகடு ") என அழைக்கப்படும் பமீர் பீட பூமி யில் இம்மலையடுக்குகள் ஆரம்பிக்கின்ற ன. இ வ ற் று ள் இமாலயத் தொடர் உலகத்தில் மிக உயர்ந்தது. இதனைச் சார்ந்து ஆசியாவின் மத்திய பகுதியில் ஹரக்கோரம், இந்து கூஸ், சுலைமான், குவென்லம் முதலிய பல மலைகள் அமைந் திருக்கின்றன. அப்ஹானிஸ் தான், பேர்சியா, துருக்கி என் பனவும், திபேத் மொங்கோலியா என்பனவும் மத்தியபாகத்து மேட்டுநில நாடுகளாகும். திபேத்துக்கு வடகிழக்கே கிழக்கு > அந் தம் ஹிங்ஆன் மலைகளாலமைந்த மொங்கோலிய பீட பூமி சைபீரியா தென்சீனா முதலிய பீடபூமிகளோடு சேர்ந்து காலாந்தரத்தில் தேய் வு பெ ற் ற பழம் மடிப்பு மலைகளின் சின்னங்களாகும். 3, தென்பாகப் பழைய மேட்டுப் பரப்புகள் :- இம்மேட்டுப்பரப்பு கள் கண்டத்தின் தென்பாகத்தில் அமைந்திருக்கின்றன. அரேபியாவின் அமைவான மேட்டுப் பரப்பு கிழக்குப்பககமாக
பு

Page 25
30
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
சரிந்து செல் கின்றது. இதனது தென்மேற் பாகத்தின் உயர்ந்த ஓரம் குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்தியாவின் மேற்குப் பாகத்திலுள்ள டெக்கா, கண்டத்தின் தென் கீழ்த் திசையில் ஒழுங்கின்றி அமைந்த இந்து சீனா , யூனான் மேட்டுப் பரப்புகளும் இங்கு குறிப்பிடத் தக்கவை. பெரிய நதிப் பள்ளத்தாக்குகள் :- இப்பள்ளத்தாக்குகள் முந் திய நில அமைவுகள் போல் பரந்திராவிடினும் மண்செழுமை யும், பயிர்வளர்ச்சியும், இவைகாரணமாக ஏற்பட்ட குடிசன நெருக்கமும் பொருந்தியிருத்தல் குறிப்பிடத்தக்கது. (1) இறாக் அல்லது மொசப்பொத்தேமியாவை அமைக்கும் தைகிறீஸ் யூபிறத்தீஸ் நதி வடிநிலங்களும், பரந்த இந்து நதி வடி நில மும் (10) கங்கை பிரமபுத்திரா நதிகளின் வடிநிலமும் (111) பர் மாவிலுள்ள ஐராவதி நதிப் பள்ளத்தாக்கும் (30) இந்துசீனா விலுள்ள மேகொங் முதலிய நதிகளின் பள்ளத்தாக்குகளும் (0) சீனாவிலுள்ள யாங்க் சிக்கியாங், குவாங்கோ முதலிய நதிகளின் பள்ளத்தாக்குகளும் வடிநிலங்களும் இங்கு குறிப் பிடத்தக்கவை.
ஐரோப்பா நில அமைவு கருதி ஐரோப்பாவை நான்கு இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன
1. மத்திய மலைநாடுகள் .- இம் மலைநாடுகள் அத்திலாந்திக் சமுத்திரந் தொடக்கம் கஸ்பியன் கடல்வரை பரவியிருக்கின் றன. ஆசிய மலைகளின் தொடர்ச்சியாக இம்மலைகள் இருக் கின்றன. ஸ்பானிய குன்றுகள், பிறினீஸ், அல்ப்ஸ், கார்பேதி யன், கொக்கேஷியன் போன்ற பெரியமலைகள் இப்பாகத்தில்
குறிப்பிடத்தக்கவை. 2. மத்தித்தரைக்கடல் நாடுகள் :- முன் கூறிய மலைநாடுகளுக்
கும் மத்தித்தரைக் கடலுக்குமிடையிற் பழச்செய்கை மிகுதி யாகவுடைய இச் சமவெளிப்பாகம் அமைந்திருக்கின்றது.
3. மத்திய பதிந்த சமவெளிகள்:- ஆசிய பதிந்த சம வெ ளி
களின் தொடர்ச்சியாய் ஐரோப்பாவின் மத்திய பாகத்தில், கண்டத்தின் கிழக்கு மேற்காய் அத்திலாந்திக் சமுத்திரம் ஒரை இச் சமவெளிப் பிரதேசம், பரவியிருக்கின்றது. இவ் வெளியின் பெரும்பாகம் பல நதிகளின் போஷிப்பினால் வளம்

கண்டங்களின் இயற்கைத் தோற்றம்.
பெற்று வண்டல்களின் செழுமையால் விவசாயத்துக்கேற்ற தாய் விளங்குகின்ற்து. இன்னும், இப் ப ா க த் தி ல் கைத் தொழில், விய பாரம் முதலியன வும் மிகுதியாக நடைபெறு கின்றது.
4.
வடமேல் மேட்டுப் பிரதேசம் - ஐரோப்பிய சமவெளிப் பிரதே சத்தின் வடமேற்கெல்லையில் ஸ் காந்திநேவியா, ஸ் ெகா த் திலாந்து என்பன கொண்ட வடமேல் மேட்டுப்பிரதேசம் அமைந்திருக்கின்றது. இங்குள்ள மலைகள் பழம்பாறைகளா லானவை. ஸ்காந்திநேவியாவின் ஓர் பாகமான நோர்வே நாட்டின் மலையுச்சிகளில் எப்போதும் பனி உறைந்திருக்கும்.
ஆபிரிக்கா ஆபிரிக்காவை நில அமைவுகருதி ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன--
1. கடற்கரைச் சமவெளி:- ஆபிரிக்காவின் கரையோரங்களை
யடுத்து மலைகளிருப்பதால் கடற்கரைச் சமவெளிப்பாகம் மிக ஒடுக்கமான து. இங்கு மிகக்கூடிய அகலம் 300 மைலுக்கு மேற்படாதெனச் சொல்லலாம். வடபாக மேட்டுநிலம்.:- உவர்நீர் ஏரிகள் நிறைந்த மேட்டுப் பரப்பு, டெல்திடல் முதலியன பொருந்தும் பிரதேசம் இதில் அடங்கும். இப்பிரதேசத்தின் சராசரி உயரம் 1500 அடி வரையிலாகும். பெரிய அற்லஸ் எனப்படும் உயர்ந்த மலைத் தொடர் 10,000 அடிக்கு மேற்பட்ட உயரமுடையது. மேற்கு மலைப்பாகம்:- ஆபிரிக்காக் கண்டத்தின் மே ற் குப் பாகம் உயர்ந்த மலைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. இம் மலைகள் எரிமலைச் சால்புடையவை. கொங்கோ நதிக்கு மேற் குப்புறம் கினிக்கரையோரம.க 13,000 அடி உயரமுடைய கமறூன தொடர் இருக்கின்றது. இதுவும் எரிமலையாகும். கிழக்குக் கரையோர மேட்டுநிலம்:- இத் திடற்பூமி செங்கட லின் தெற்கில் ஆரம்பித்து சான் டி சி நதிவரையிலுமுள்ள திடற் பூமியையும், உன்ன த மலைகளையும் அடக்கியிருக் கின்றது. இப்பாகத்தில் அபிசீனிய மலைகள் குறிப்பிடத் தக்கவை. இவற்றின் சராசரி உயரம் 7000 அடியாயிருந்த போதி லும் 14,000 அடிக்கு மேற்பட்ட பல சிகரங்களை அபிசீனியத்தொடர் கொண்டுள்ளது. 19,700 அடி உயரம் வரை பொருந்திய கிளிமான்சோறோ, 18,300 அடி உயர
2"

Page 26
உலக பூமிசாஸ்திர' விளக்கம்
முடைய கெனியாய்மலை, 16,800 அடிவரை உயர்முடைய றூ வன்சோ றி என்பனவும், அபிசீனிய மலைகளுக்குத்தெற்கே இருக் கின் ற ன. இப் பிரதேசத்தின் பள்ளத்தாக்குகளில்
அநேக ஏரிகள் காணப்படுகின்றன.' 5. தெற்குப்பீடபீமி:- இப் பீ ட பூ மி கடற்கரையை நோக்கிச்
செங்குத்தாய்ச் செல்லுகின்றது. சாம்யெசி நதி தொடக்கம் கண்டத்தின் தெற்கந்தம்வரையும் இது பரவியிருக்கின்றது. இப்பிரதேசத்தின் கிழக்குப் பாகத்தில் ட்றாக்கென்ஸ்பேக் (Trahennsburg) செல்லும்பாகம் கறூ பீடபூமி என்றழைக்கப் படும். இப் பீடபூமியின் ஓரத்தில் கலகாரி வனாந்தரம் இருக் கின் ற து. 6. சஹாரா பாலைவனம்:. உலகில் மிகப்பெரியதும் ஆங்கங்கே
மலைகளும் குன்றுகளும் மணல்மேடுகளுமமைந்த இப்பரந்த உஷ்ணப் பாலைவனம் மேற்கே அத்திலாந்திக் சமுத்திரக் தொடக்கம் கிழக்கே செங்கடல் வரையுஞ் செல்கின்றது.
வட அமெரிக்கா வட அமெரிக்காவை நில அமைவு கருதி மூன்று இயற் கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவையாவன.- 1. மேற்கு மலைத்தொடர் அல்லது றொக்கிஸ் பிரதேசம்:- இப் பாகம் கண்டத்தின் மேற்குக் கரையோரமாக வடக்கில் அலாஸ்கா பிரதேசத்தில் ஆரம்பித்துத் தெற்கில் பனாமாக் கால்வாய் வரை பரந்திருக்கிறது. கஸ்கேட், சி றா நி வாடா மலைத்தொடர்கள் கரையோரத்தையடுத்தும், றொக்கிமலைத் தொடர் முந்தியவற்றிற்குக் கிழக்கே உள்நாட்டிற் பொருந்த வும், இவற்றிற்கிடையே பல மேட்டுப் பரப்புகள் பொருந்த இம்
மலைப்பிரதேசம் அகன்றும் விசாலித்தும் அமைந்திருக்கிறது. 2, கிழக்குப் பீடபூமி:- இது வட அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருக்கின்றது, இடையில் சென்லோறன்ஸ் நதியால் இப்பீடபூமி பிரிக்கப்படுகின்றது. அப்பலேஷியன் பீடபூமி லா'பிரடோர் பீடபூமி என்பன கிழக்குப்பாகப் பீடபூமிப் பிர தேசத்திலடங்கும், அப்பலேஷியன் பீடபூமிக்கும் சமுத்திரத்
திற்குமிடையில் சமவெளிப்பாகம் இருக்கின்றது. 3 மத்திய சமவெளி:- கிழக்குப்பாக மேற்குப்பாக மேட்டு நிலங் / க ளுக்கிடையே வட அமெரிக்காவின் மத்திய சமவெளிப்


Page 27
அவுஸ்திரேலியாவில் வசந்த ருது
குருசாள174ாபம்.

கண்டங்களின் இயற்கைத் தோற்றம். '
33
பிரதேசம் வடசமுத்திரந் தொடக்கம் மெக்சிக்கோ .குடா வரை நீண்டு பரவியிருக்கின்றது. இச் சமவெளிப் பாகம், மேற்கு நோக்கிப் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. பிறெயறீஸ் எனப்படும் செழித்த புல்வெளிப் பிரதேசம்
இங்கு அமைந்திருக்கின்றது.
தென் அமெரிக்கா தென் அமெரிக்காவை நில அமைவு கருதிப் பின் வரும் இயற்கைப் பிரதேசங்களாகப் பிரிக்கலாம்.
1. மேற்கே பஸிபிக் சமுத்திரத்திற்கும் அந்தீஸ் மலைக்குமிடைப்
பட்ட ஒடுங்கிய நீண்ட கரையோரச் சமவெளி, 2. வடக்கே அகன்று விசாலித்தும் தெற்கில் ஒடுங்கிச் செல் வதுமான அந் தீஸ் மலைத்தொடர்களாலும் அதன் சாரல்
களாலுமமைந்த மேற்கு மேட்டு நிலம், 3. அமேசன் நதி, ஒறினகோ நதிகளின் வடிநிலங்களாலமைந்த
பரந்த காட்டுப் பிரதேசச் சமவெளிகள், 4. முறையே கிழக்கில் பிறேசில் பீடபூமி, வடக்கில் கயானா பீடபூமி என்பன கொண்ட மேட்டுநிலங்கள் ஆதியன தென் அமெரிக் காவின் குறிப்பிடத்தக்க நில அமைவுகளாகும்.
அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவை நில அமைவுகருதிக்கிழக்குமலைப் பிரதேசம், மேற்குப் பீடபூமிகள், மத்திய தாழ்ந்த சம நிலங்கள் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. கிழக்கு மலைப்பிரதேசம்:- இப்பிரதேசம் வடக்கே யோக்முனை
தொடங்கித் தெற்கே பால் சலசந்திவரைக்கும் 2000 மைல் நீளத்திற் குப் பரவி ச செல்கின்றது. பெரிய டி  ைவ டிங் மலைத்தொடர் இப்பாகத்தில் வடக்குத் தெற்காய்ச் செல் கின்றது. இத்தொடர் தென் உவேல்ஸின் வடபாகத்தில் புதிய இங்கிலாந்து மலைத்தொட ரெனவும், தென் பாகத்தில் நீ ல ம லை யெனவும், விக்ரோறியாவில் அவுஸ்திரேலியன் அல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றது.
2. மேற்குப் பீடபூமி:- இப்பீடபூமி அவுஸ்திரேலியாவின் அரைப்
பாகத்துக்குமேல் வியாபித்திருக்கின்றது. பொதுவாக இ

Page 28
34
உலக பூமிசாஸ்திர விளக்கம்,
பிரதேசம் 1500 அடிவரை உயரமுடையது. இதன் மத்திய . பகுதியில் மக்டனால்ட் போன்ற மலைகள் இருக்கின்றன.
கடற்கரையை நோக்கி இப்பீடபூமி சரிந்து செல்கின்றது. 3. மத்திய தாழ்ந்த சமநிலங்கள் :- இ ப் பு ர க ம் கிழக்கேயுள்ள
மலைப் பிரதேசத்திற்கும் மேற்கமைந்த திடர்பூமிகளுக்கு மிடையில் வடக் கே கார்ப்பன்ரே றியாக் குடா தொடங்கித் தெற்கே ஸ்பென்ஸா குடாவரை பரவியிருக்கின்றது. இப் பாகத்தில் 600 அடிக்கு மேற்பட்ட உயரமில்லை, சிலபாகங்கள் கடல் மட்டத்திலுந் தாழ்ந்தவை. இவ் வெளியின் தென்பாகத் தில் ஈறி (Eyre) ஏரியும் வேறு பல ஏரிகளுமுள.
பெரிய நில அமைவுப் படங்களினு தவியுடன் மேற்கூறிய கண்டங்களின் ஒவ்வோர் இயற்கைத் தோற்றப் பாகத்தையும் நன்கு ஆராய்ந்து விளங்கிக்கொள்க.
வினாக்கள். (1) ஆசியாவை நில அமைவு சருதி எத் தனை இயற்கைப் பிரிவு களாகப் பிரிக்கலாம்? ஒன்றை விபரிக்குக. (2) ஆசியாவின் மத்திய மலை நாடுகள், பெரிய நதிப்பாய்ச்சல் நிலங்கள் எவையேனும் ஒன்றைப்பற்றி விளக்கப் படங்களின் உதவியோடு நீர் அறிந்தவற்றை எழுதுக. (3) ஐரோப் பாவை எத்தனை இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? எவையேனும் இரண்டைப் படத்திற் காட்டி விபரிக்குக. (4) ஆபிரிக்காவின் இயற்கைப் பிரிவுகள் எவை? (5) ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோர மேட்டுநிலம் பற்றி நீர் அறிந்தவற்றைக் கூறு க. (6) வட அமெரிக்காவை நில அமைவு கருதி எத்தனை இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? றொக்கி மலைப் பிரதே ச த் ைசப் பட த் திற் காட்டி விபரிக்குக (7) தென் அமெரிக்காவின் இயற்கைப் பிரிவுகள் எவை? (8) தென் அமெரிக்காவில் அமைந்த இரு பரந்த காட்டுப் பிரதேசங்கள் எவை? (9) அவுஸ் திரேலியா வின் இயற்கைப் பிரிவுகள் எவை? ஒன்றைப்பற்றி விபரிக்கு க. (10) ஒவ்வோர் கண்டத் தின பூம் இயற்கையமைவைப் புறஉருவப் படங்களில் தெளிவாக வரைந்து ஏதேனும் ஒருகண்டத்தின் இயற்கையமைவுகளை விபரிக்குக. (11) உலகப் புறஉருவப்படத்தில் பரந்த இரு சமவெளிப் பிரதேசங்களை வரைந்து காட்டி ஒன்றை விபரிக்குக. (12)' உலகப் புறஉருவப் படத்தில் இமாலயம், கங்கை, யாங் சிக்கியாங், அல்ப்ஸ், கமறூன், அபிஸீனியாமலைகள், றொக்கி மலை., அமேசன் நதி என்பவற்றுள் எவையேனும் ஐந்தைக் குறித்துக் காட்டி/ ஒவ்வொன்றைடம் பற்றி ஒவ்வோர் வாக்கியம் எழுதுக.

7. பூமியின் அசைவுகள்
பரந்த் ஆகாயவெளியில் பூமி சூரியனோடும் பிற சூரிய கணத் தோடும் (Solar Systerit) அவற்றின து கவர்ச்சியால் நிலைபெற்று அசைந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த அசைவு ஒரு மாற்றமும் விளைப்பதில்லை. பூமிக்குச் சுயமாக இரு அசைவுகள் உள. இவ்வசைவுகளே பிரதானமானவை.
(1) பூமி பம்பரம் போன்று அதன் மத்தியினூடு செல்வதாகக் கற்பனை பண்ணப்படும் ஒரு ரேகையில் உருண்டு சுழல்கின் றது. இக் கற்பனாரேகை பூமியின் அச்சு (Anis) எ ன வு ம், இவ்வி ரேகையின் அந்தங்கள் துருவங்கள் (Poles) எனவும் அழைக்கப் படும். பூமியினது அச்சின் வடநுனி வடதுருவம் எனவும், தென் நுனி தென் துருவம் எனவும் பெயர் பெறுகின்றன. பூமியினது அச்சு எப்போதும் ஒரே திசையையே காட்டிநிற்கின்றது. அதன் ஒரு அந்தமாகிய வடதுருவம் நிலையாகவுள்ள துருவ நட்சத் திரத்தைக் காட்டி நிற்கும். நாங்கள் வடதுருவத்தை நோக்கிப் பார்க்கும்போது வலக்கைப்புறம் கிழக்குத் திசையெனவும், இடக் கைப்புறம் மே ற் கு த் தி சை எனவும் அழைக்கப்படுகின்றன, நிரட்சம் அல்லது பூமத்திய ரேகை (Equator) என்பது வடதென் துருவங்களுக்கு மத் தியாகப் பூமியைச்சுற்றி வரையப்படுவதாகக் கற்பனை செய்யப்படும் ஓர் ரேகையாகும். இது தீர்க்க ரேகை என அழைக்கப்படுதலுமுண்டு.
பூமி தன் அச்சில் ஒருமுறை சுழன்றுவர 24 மணித்தியாலங் கள் செல்லும். இதனால் பகல் இரவு என்பன உண்டாகின்றன. எப்பொழுதும் பூமியின் அரைப்பாகத்தில் சூரியன் ஒளிவீசி நிற்க மற்றைய அரைப்பாகத்தில் இருள் பொருந்தியிருக்கும். பூமி சூரியனை நோக்கிச் சுழன்றுகொண்டிருப்ப தால் ஒவ்வொரு கண மும் பூமியினது மேற்பரப்பின் ஓர் பாகம் சூரிய பிரவையினூடு செல்ல அதன் நேர் எதிர்ப்பாகம் விலகிச் சென்று கொண் டிருக்கும்.
பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கின் றது. எனவே சூரியனும் விண்மீன் பலவும் கிழக்கில் தோற்றி மேற்கில் மறை வனபோற் காணப்படுகின்றன,

Page 29
36
உலக பூமிசாஸ்திர விளக்கம்
பூமிக்குரிய இன்னோர் அசைவு அது சூரியனைச் சுற்றி வலம் வருவதாகும். பூமி முழுமையாய் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர' 3652 நாட்கள் செல்லும். இதனால் ஆண்டு பிறக்கின்றது.
பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை (Orbit) முழு வட்டமா யிராது ஓரளவு முட்டை வடிவின தாயிருக்கும். இப் பாதையில் பூமி சூரியனுக்கு அதிதூரத்தில் நிற்கும்போது பூமிக்குஞ் சூரிய னுக்கும் இடைத் தூரம் 9,29,50000 மைலும், கிட்டிநிற்கும்போது 30,00000 மைல் குறைவுடைய தூரமும் பொருந்தியிருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வலம்வரும்போது அது தன்னச்சில் ஒருபுறம் சாய்ந்து - அதாவது 23பாகை சரிவில்- அசைவதால் ஒரு காலத்தில் வடதுருவமும் இன்னொரு காலத்தில் தென் துருவ மும் சூரியன்பக்கஞ்சாய்ந்து காணப்படும். இந்நிகழ்ச்சி காரணமாகக் கோடை, இலையுதிர், மாரி, இலை தளிர் (வசந்தம்) என்னும் பருவ காலங்களும் ஒவ்வோர் இடத்திலும் காணப்படும் நீடித்த பகல் இரவு பேதங்களும் ஏற்படுகின்றன.
க ரேகை
பு ம த தி பய ரேகை
பேர
கேது உஷ் ண வலயம்
வலயங்கள்
பூமத்திய ரேகையைப்பற்றி மு ன் ன ர் வாசித்துள்ளோம். பூமத்தியரேகைக்கு வடக்கே 233 பாகையில் கற்கடக ரேகையும், தெற்கே 23; பாகையில் மகரரேகையும் அமைந்துள்ளன. கற் கடகம், மகரம் என்பனவும் கற்பன ரேகைகளாகும். இவற்றிற்கு

> பூமியின் அசைவுகள்.
இடைப்பட்ட பகுதி உஷ்ணவலயம் (Torrid Zone) எனப்படும். சூரியனே து நேரர்ன கிரணங்கள் படியும் பிரதேசம் இதுவாகும். கற்கடக ரேகைக்கு வடக்கேயும் மகரரேகைக்குத் தெற்கேயும்
2,452 27
மாசி ம வ ல யம்
* கடக ரேகை
ரே கை
த ம த் தி "
உஷ்ண நவ ல ய ம
ம க ர சே  ைக
மத்திம வலயம்
தென் துருவம்
23) பாகை தொடக்கம் 86 பாகைவரை வடக்கும் தெற்கும் அமைந்துள்ள மண்டலங்கள் மத்திமவலயம் (Temperate Zone) எனப்படும், இங்கு சூரிய ன து சாய்ந்த கிரணங்களே படிவன. துருவங்களைச் சூழ்ந்து வடக்கேயும் தெற்கேயும் மத்திமவலயம் வரை பரவியுள்ள மண்டலங்கள் சீதளவலயம் (Frigid Zone) எனப்படும். சூரியனது அதிசாய்ந்த கிரணங்கள் படியும் பிரதேசம் இதுவாகும். சீதள வலயத்தில் மழை குறைவு; பனி அதிகம்; குளிரும் அதிகம். வருடத்தின் பெரும்பகுதி காலம் தரை பனிக் கட்டியினால் மூடப்பட்டிருக்கும்.
சூரிய சஞ்சாரம் பரந்த ஆகாயவிரிவில் பூமிப்பிழம்பு மி தந்து உருள் உருளக் காலாந் தரத்தில் அதனிரு அந்தங்களும் * ஒரளவு தட்டையாகி விட்டன. இவ்வாறு தட்டையான பகுதிகளே துருவங்கள் (Poles) எனப்படுவன. துருவங்கள் தட்டையானமையினாலேயே பூமி சூரி பனை நோக்கி 23; பாகை சரிவில் வலம் வருகின்றது. இவ்வாறு சூரியனைச் சுற்றி வலம் வருவதால் கற்கடக மகர ரேகைகள் வரு டத்தில் ஒவ்வோர் முறை சூரியனுக்கு நேராகவரும், இதனால் சூரியன் சிலகாலம் வடக்காகவும் (உத்தராயணம்) சிலகாலந்
* பூமியினது நிரட்சவிட்டத்தி லும் துருவவிட்டம் 27 மைல் குறைவாயிருப் பதற்கு இதுவே காரண மாகும்.

Page 30
38
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
தெற்காகவும் (தக்ஷிணாயனம்) சென்று கொண்டிருப்பதாகக் காணப்படுகின்றது.
நிரட்சத்தில் எப்போதும் பகலும் இரவும் சமமாயிருக்கும். ஆனால் மறுபாகங்களில் இவை வித்தியாசப்படும். சூ ரி ய ன் நிரட்சத்துக்கு வடக்கே வடகோளார்த்தத்தில் சஞ்சரிக்கும்போது அப்பாகத்தில் நீடித்த இரவம் குறுகிய பகலும் ஏற்படும். தென் கோளார்த்தத்தில் சஞ்சரிக்கும் போது அங் கும் இவ்வண்ணமே நிகழும்.
மார்ச் மாதம் 21ம் திகதி நிரட்சத்தில் சூரியன் காலை 6மணிக்கு நேர்கிழக்கில் தோற்றி நடுப்பகலில் நேர்உச்சந் தந்து பின்னர் மாலை 6 மணிக்கு நேர் மேற்கில் மறையும். இவ்வாறு செப்டெம்பர் மாதம் 23-ம் திகதியும் சூரியன் நிரட்சத்தில் உச்சந் தரக் காணப் படும். எப்போதும் நிரட்சத்தில் பகலும் இரவும் சமமாயிருந் தாலும் உலகம் முழுமையும் இவ்விரு தினங்களிலும் பகலும்
இரவும் சமமாயிருக்கக் காணப்படும்.
சூரியன் மார்ச் மாதம் 21-ம் திகதி நிரட்சத்துக்கு நேராகத் தோன்றி, வரவர வடக்கே சென்று ஜூன் 21-ல் க ற் கட் க ரேகைக்கு நேராக வரும். பின் தெற்கே செல்லத் தொடங்கி, செப்டெம்பர் மாதம் 23-ல் நிரட்சத்துக்கு நேராகி, டிசெம்பர் 22-ல் மகரரேகைக்கு நேராகும். மீண்டும் வடக்கேபோக ஆரம்பித்து மார்ச் 21-ல் நிரட்சத்துக்கு நேராகும். எனவே கற்கடக மகர ரேகைகளில் உள்ளார்க்கு வருடத்தில் ஒவ்  ேவ ார் முறையும், இடைப்பட்டார்க்கு இவ்விரண்டு முறையும் சூரியன் உச்சந் தரும்.

'பூமியின் அசைவுகள். கற்கடக மகர ரேகைகளுக்கு அப்பாலுள்ளார்க்கு ஒருகாலமுஞ்
சூரியன் உச்சந் தருவதில்லை.
மூன்று மாதங்களிற் சூ ரி யன் 23, பாகையைக் கடப்பது போலத் தோற்றுகின்றது. எனவே ஒரு பாகையைக் கடப்ப தற்கு ஏறக்குறைய நான்கு நாட்கள் செல்லும். இந்த அளவைக் கொண்டு மிக நுட்பமாகக் கணித்து அறிந்த உண்மைமையின் படி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் ஏப்ரல் மாதம் 8-ம் திகதியும், செப்டெம்பர் மாதம் 5-ம் 6-ம் திகதிகளும் சூரியன் உச்சங் கொடுக்குந் தினங்களாகும். மேலும் கொழும்பில் சூரியன் காலை 6 மணிக்கு உதயமாகுந் தினங்கள் ஏப்ரல் மாதம் 21-ம் திகதி, செப்டெம்பர் மாதம் 22-ம் திகதி என்பனவும், மாலை 6 மணிக்கு அஸ்தமிக்குந் தினம் செப்டெம்பர் மாதம் 20-ம் திகதி யும் ஆகும்.
கற்கடக ரேகையிலுள்ளாரும் அதற்குத் தெற்கேயுள்ளாரும். டிசெம்பர் மாதம் 22-ந் திகதியில் கூடிய உஷ்ணத்தைப் பெறுவர். கற்கடகரேகைக்கும் நிரட்சரேகைக்கும் இடையிலுள்ளார் ஜூன் மாதம் 21-ந் திகதிக்கும் செப்டெம்பர் மாதம் 23-ந் திகதிக்கும் இடைப்பட்ட காலத்திலும், மகரரேகைக்கும் நிரட்சரேகைக்கும் இடையிலுள்ளார் டிசெம்பர் மாதம் 22-ந் திகதிக்கும் மார்ச்மாதம் 21-ந் திகதிக்கும் இடைப்பட்ட காலத்திலும் தாமிருக்கும் அட்சத் திற்கேற்பக் கூடிய உஷ்ணத்தைப் பெறுவர்.
பருவ காலங்கள்
எங்கு எக்காலத்து அதிக உஷணமுண்டோ அங்கு அக் காலத்தைக் கோடை என்கிறோம். எக்காலத்து அ தி க குளி ருண்டோ அக்காலத்தை மாரி என்கிறோம். கோடையில் வெப்பம் அதிகரித்துவர மரங்கள் இலையுதிர்க்கத் தொடங்கும். இலையுதிர் காலத்தின்பின் மாரிகாலம் ஆரம்பமாகும். மாரி யின் முடிவில் மரங்கள் தளிர்க்கத் தொடங்கும். எனவே கோடை, இலையுதிர், மாரி, இலை தளிர் என்னுங் க ா ல ங் க ள் ஒன்றின்பினொன்றாக மாறி வருகின்றனவென்பது புலனாகும். பொதுப்பட நோக்கு மிடத்து ஜூன் 21 தொடக்கம் செப்டெம்பர் 23 வ ரை யும் வட கோளார்த்தத்திலுள்ளார்க்குக் கோடையும் தென்கோளார்த் தத்திலுள்ளார்க்கு ம ா if யு ம் - செப்ரெம்பர் 23 தொடக்கம்

Page 31
40
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
டிசெம்பர் 22 வரையும் வட கோளார்த்தத்திலுள்ளார்க்கும் இலை யுதிரும் தென் கோளார்த்தத்திலுள்ளார்க்கு இலை தளிரும் - டிசெம்பர் 22 தொடக்கம் " மார்ச் 21 வரையும் வட கோளார்த் தத்திலுள்ளார்க்கு மாரியும் தென் கோளார்த்தத்திலுள்ளார்க்குக் கோடையும் - மார்ச் 21 தொடக்கம் ஜூன் 21 வரையும் வட கோளார்த்தத்திலுள்ளார்க்கு இலை தளிரும் தென் கோளார்த் தத்தி லுள்ளார்க்கு இலையுதிரும் உண்டென அறி தல்வேண்டும்.
உஷ்ணவலயத்தைத் தனித்தெடுக்குமிடத்துக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனப் பருவகாலங் கள் ஆகின்றன. இவை ஆ வ ணி  ைய முதலாகக்கொண்டு முறையே இவ்விரண்டு மாதங்களுக்கொவ்வொன்றாக மாறி மாறி வரும். வடகீழ் தென்மேல் என்னும் இரு காற்றுகளே இலங் கைக்கு |மழையையும் வரட்சியையும் மாறிமாறிக் கொடுக்கின் றன. ஆகையினால் இலங்கைக்கு முக்கியமாய்க் கோடை, மாரி என் னும் இரு பருவகாலங்களே உள். முன்னர் கூறப்பட்ட கோடை, இலையுதிர், மாரி, இலை தளிர் (வசந்தம்) என்னும் நான்கு பருவ காலங்களும் பிரதானமாக மத்திம வலயத்திலுள்ள இங்கிலாந்து முதலிய தேசங்களிலேயே பிரத்தியட்சமாகக் காணக்கூடியன.
சூரியன் தக்ஷிண கோளத்தில் சஞ்சரிக்கும்போது உத்தர கோளத்தில் துருவப்பகுதியை யடுத்துச் சூரியன் ஆறுமாத காலம் தோற்றுவதில்லை. சூரியன் உத்தர கோளத்தில் சஞ்சரிக் கும் போது அதாவது மார்ச் 21 தொடக்கம் செப்டெம்பர் 23 வரை-சூரியனது அதிசாய்ந்த தோற்றம் வட து ரு வ ப் பிர தேசத்தில் ஆறுமாதகாலத்திற்கு எந்தநேரமுங் காணப்படும். நோர்வே க் கு வடபாகத்தேயமைந்துள்ள இப்பிரதேசத்தில் சூரியன் நடு இரவிலும் காணப்படுவதால் இங்கு அமைந்துள்ள நாடுகள்" "'நடுநிசிச் சூரியப் பிரதேச நாடுகள்'' (Lands of the Mi{lnight Sum) என அழைக்கப்படுகின்றன.
தூந்தரப் பிரதேசத்தில் ஆறுமாதகாலம் பகலும் ஆறு மாதகாலம் இரவுமாயிருக்கும் என நாமறிந்துள்ளோம். சூரியன் தோற்றாத நீடித்த இராக் காலத்தில் இப் பிரதேசவாசிகட்குத் துருவ நட்சத்திரம் முதலிய ஜோதிகள், வெளிச்சத்தைக் கொடுக் கின்றன.

பூமியின் அசைவுகள்.
41
வினாக்கள். (1) பூமி அந்தாத் தில் நிலைபெற்றியங்குவது எவ்வாறு? (2) பூமியின் இரு அசைவுகளுமெவை? ஒவ்வொன்றா லும் ஏற்படுவதென்ன? (3) பூமி யின் அச்சு, துருவங்கள், நிரட்சரேகை, கற்கடக மகா ரேகைகள் ஒவ்வொன் றையும் பற்றிச் சிறுகுறிப்பெழுதுக. (4) வலயங்கள் எத்தனை? ஒவ்வொன் றையும் பற்றி நீர் அறிந்தவற்றைக் கூறு க. (5) சூரியன து சஞ்சாரம்பற்றி விளக்கப்படம் வரைந்து விபரிக் குக. (6) கற்கடக ரே ைகயிலும் மகர ரேகையிலும் சூரியன் உச்சங் கொடுக்கும் தினங்களெ வை? (7) உலகம் முழுமையும் பகலும் இரவும் சமமாயிருக்கும் தினங்க ளெவை? (8) உஷ்ண வலய வாசிகட்குரிய பருவ காலங்களெவை? குறித்த பருவ காலங்கள் எந்தெந்த மாதங்களில் ஏற்படுகின்றன ? (9) மத்திம வல ப வாசிகள் காணும் பருவ காலங்களெவை? (10) மாரி, கோடை என்பன எவ்வாறு ஏற்படு கின்றன? (11) உத்தராயனம் தக்ஷிணா பனம் ஒவ்வொன்றைபம்' விபரிக்குக. (12) இலங்கையிலுள்ளார்க்குச் சூரியன் உச்சங் கொடுக் குந் தினங்க ளெவை? துருவப் பகு திகளில் சூரியன் எவ்வாறு சோற்றுகின்றது. (13) * நாடு நிசிச் சூரியப்பிரதேச நாடுகள்'' என்பதை விளக்குக. (14) பூமி தன் அச் சல் 232 ° சரிவின்றியிருந் தால் என்ன நிகழுமென்பதை ஆராய்க.

Page 32
8. அட்சம் தேசாந்தரம் பூமியோடு சம்பந்தப்பட்ட துருவங்களைப் பற்றியும் நிரட்சம், கற்கடகம், மகரம் என்னுங் கற்பனா ரேகைகளைப் பற்றியும் முன் னர் விளக்கம் தரப்பெற்றுளது. இவற்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு கண்டம் அல்லது தேசம் வட கோளார்த்தத்தி லுள்ளதோ அல்லது தென் கோளார்த்தத்திலுள்ளதோவெனக் கூறு தல் கூடும். ஆனால் ஒரு பட்டினத்தின் 'அல்லது நாட்டின் அல்லது ஒரு சிறு தீவின் நிலையத்தைத் திட்டமாகக் கூறுவதற்கு மேலே கூறிய கற்பனாரேகைகள் போதியனவல்ல. பரந்த பூமியின் மேற்பரப்பில் ஓரிடத்தின் நிலையத்தைத் திட்டமாய் அறிவதற்கு அட்சம், தேசாந்தரம் என்னுங் கற்பனாரேகைகள் மிகவும் உதவு கின் றன.
அ ட் ச ம் பூமத்திய ரேகையிலிருந்து வடதுருவம் அல்லது தென் துரு வம்வரை நாம் செல்ல நேரின் பூ மி யி ன து சுற்றுவட்டத்தில் காற்பங்கைக் கடக்கிறோம். ஒரு வட்டம் 360 பாகை அளவினது. ஆகவே நாம் கடந்த தூரம் 90 பாகை அளவின தாகும். பூமத்திய ரேகையை ஆதாரமாகக்கொண்டு - அதாவது 0 பாகை யாகக் கொண்டு -- வடதுருவம்வரை 90 சுற்றுவட்டங்கள் சம தூரத்துக் கொன்றாய் வரையின் பூமத்தியரேகையையடுத்துள்ள மு தலாது வட்டம் வட அட்சம் 1° எனவும், இரண்டாவது வட்டம் வட அட்சம் 2 எனவும் இவ்வாறே பிறவும் அழைக்கப்படும். தென் கோளார்த்தத்தில் வ ரை ய ப் பட்ட வட்டங்களும் தென் அட்சம் 1 தென் அட்சம் 2' என வரும். அட்சரேகைகள் பூமத்திய ரேகைக்குச் சமாந்தரமானவை; பூ ம த் தி ய ரேகையிலிருந்து துருவம்வரை படிப்படியாகச் சுற்றளவிற் குறைந்து செல்பவை. பாடசாலையிலுள்ள பூகோள உருண்டையில் அட்சரேகைகள் பெரும்பான்மையும் 10 அல்லது 20 தூரத்துக்கொன்றாய்க் குறிக்கப்பட்டிருத்தலை அவதானியுங்கள்.
தேசாந்தரம் அட்ச ரேகைகளை ஆதாரமாகக் கொண்டு இலங்கைத் தீவு 5 க்கும் 10 க்குமிடையில் அமைந்துள்ளதெனக் கூறலாம். ஆனால் இவ் விரேகைகளுக்கு இடைப்பட்ட வேறும் பலநாடுகள் பூமியின் மேற்பரப்பிலுள்ளன. அட்சத்தை மாத்திரங் கொண்டு

-60வ அடகம் )
17991
079.08
15 மே
0-கி-
10ாகி
Tr- கே.
_3ட்டவ ட
ற கடகம்
15' வட
இலங்கை
(தசாரதரம்
- மகரம்
15 தெ
10 4ெ
|
அட்ச தேசாந்தா ரேகைகளும் பிறவும்

Page 33
44
' உலக பூமிசாஸ்திர விளக்கம்
இலங்கைத் தீவின் நிலையத்தை நாம் திட்டமாய்க் கூறமுடியாது. தேசாந்தர ரேகைகள் அட்சரேகைகளோடு கூடி ஓரிடத்தின் நிலையத்தைத் திட்டமாக வரையறை செய்கின்ற ன.
பூமத்திய ரேகையினூடு அல்லது பிறிதோர் அட்ச ரேகை யினூடு ஒரு முறை சுற்றிவரின் நாம் ஒரு முழுவட்டம் வருகின் றோம். இவ் வாறு சுற்றிவரும் பாதையை 360 சமபங்குளாகப் பிரித்து ஒவ்வொன்றினூடும் பூமத்தியரேகைக்கு நேர்கோணமாக வும் வட தென் துரு வ ங் க ளை இணைப்பனவாகவும் ரேகைகள் வரைவதாகக் கற்பனை செய்வோம். இந்த ரேகைகள் தேசாந்தர ரேகைகள் அல்லது தீர்க்க ரேகைகள் எனப்படும். ஆராய்ச்சி வச தியை உத்தேசித்து லண்டனுக்கு அண்மையிலுள்ள கிறீன் விச் நாட்டினூடாகச்செல்லும் ரேகை தேசாந்தர ரேகைகளின் ஆரம்ப மாக 0 எனக் குறிக்கப்பட்டுப் பிரதம தேசாந்தரரேகை அல்லது பிர தம் தீர்க்கரேகை (Pri 202 Mariadlin) என அழைக்கப்படுகின் றது. இவ்விரேகைக்குக் கிழக்கே பூகோளத்தினரைவாசிப் பாகத் தில் அடங்கிய ரேகைகள் கிழச் குத் தேசாந்தர ரேகைகள் எனவும், மேற்கே அரைவாசிப் பாகத்தில் அடங்கிய ரேகைகள் மேற்குத் தேசாந்தர ரேகைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
அட்சரேகைகள் பூமத்திய ரேகைக்குச் சமாந்தரமானவை என முன்னர் பயின்றுள்ளோம். ஆனால் தேசாந் தர ரேகைகள் பூமத்திய ரேகையை ஊடறுப்பனவாய், அவ்விடத்திற் கூடிய இடைவெளி கொண்டும், பின்னர் படிப்படியாக ஒன்றையொன்று ச மீ பி த் து த் துருவங்களில் ஒன்று கூடியும் இருப்பனவாகும். தேசாந்தர ரேகைகளி னமைவையும் பாடசாலைகளிலுள்ள பூகோள உருண்டையிற் பார்த்துப் பயின்றுகொள்வதோடு, ஒரு பெரிய வெள்ளை றப்பர்ப் பந்தையெடுத்து அதனைப் பூமியெனக் கற்பனை செய்து (1) வடதென் துருவங்கள், (2) பூமத்தியரேகை, (3) கற் கடக மகர ரேகைகள், (4) 302 தூரத்துக் கொன்றாய் அட்ச தேசாந்தர ரேகைகள் என்பவற்றைக் குறித்து விளங்கிக்கொள்க.
ஓர் இடத்தின் நிலையத்தைத் திட்டமாய்க் கூறுவதற்கு அட்ச தேசாந்தர ரேகைகள் உதவுவதோடு பரந்த கடலில் அல் லது சமவெளியில் அல்லது காட்டுப் பிரதேசத்தில் அபாயத்திற் சிக்குண்ட வாகனங்களின் நிலையத்தையறிவதற்கும் இக்கற்பனா ரேகைகள் மிகவும் உதவுவனவாகும். உதாரணமாகக் கொழும்பி லிருந்து லண்டனுக்குப் பு ற ப் பட்ட ஒரு நீராவிக்கப்பல்

அட்சம் தேசாந்தரம்.
- 45
அரேபியாக் கடலில் அபாயத்திற் சிக்குண்ட தாயின் கப்புற்றளபதி " கப்பலின் நிலையத்தை
''வட அட்சம் 13 - கிழக்குத் தேசாந்தரம் 60
ராணிரஞ்சித் - தீப்பற்றி அபாயம்'
' ,
- கட்ரின் சிமித் என ஆகாயவசனி மூலம் அபாய அறிவிப்பு (50. S.) விடுகின் (றான். இச்செய்தியையறிந்து குறித்த நிலையத்துக்குக் கொழும்பு, 'பம்பாய், ஏடன் துறைமுகங்களிலிருந்து உதவிக் கப்பல்களும்,
ஆகாய விமானங்களும் உடனே விரைந்து செல்கின்றன.
நேரமும் தேசாந்தரமும் பூமி தன்னச்சில் ஒருமுறை சுழல் - அதாவது 360 பாகை தூரத்தைக் கடக்க -- 24 மணித்தியாலங்கள் செல்லும். எனவே
வட துருவம்
மேற்கு
கிழக்கு
பிரதம தே சாரு தரம்
மத்தியானம்
1சி 9
1 பி.ப .
7yK 6
ரி--
ேேமு.ப
7 ??
THork.
"ஈ-ரி-5
7590)
நிர |
தேசாந்துமம்
தேசாந்தரம்
திரீன விச்
தென் துருவம்
15 பாகை, தேசாந் தரத்தை ஒரு மணியிற் கடக்கும். ஒரு பாகை தேசாந் தர தூரத்தை 4 நிமிஷங்களிற் கடக்கும். பூமி சூரியனை நோக்கி மேற்கிலிருந்து கிழக்காய்ச் சுழல்வதால் மேற்கு நாடு களிலும் பார்க்கக் கிழக்கு நாடுகளில் சூரியோதயம் படிப்படியாக

Page 34
'46
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
முன்னர் நிகழ்ந்துகொண்டிருக்கும். இது காரணமாகவே வெவ் வேறு தேசங்களில் வெவ்வேறா ன நேரபேதங் காணப்படுகின்றது. கிழக்குத் தேசாந் தரம் 80 பாகையிலமைந்த கொழும்பில் காலை 6 மணியாயிருக்கும்போது லண்டனில் 80 X 4 = 320 நிமிஷம் அதாவது 5 மணி 20 நிமிஷம் பிந்திக் காணப்படும். எ ன ேவ அப்போது லண்டனில் நேரம் இரவு 12 மணி 40 நிமிஷமாகும். கொழும்பில் சூரியோதயத்தின்போது கிழக்குத் தேசாந்தரம் 140 பாகையிலமைந்த ஜப்பான், ம த் தி ய அவுஸ்திரேலியா என்னும் நாடுகளில் சூரியோதயம் (140-80 X4 நிமிஷம் = 240 நிமிஷம் - அதாவது 4 மணித்தியாலம் முன்னர் நிகழ்ந்திருக்கும். எனவே இத்தேசங்களில் காலை 10 மணியாயிருக்கும். ஓரிடத்தின் நேரத்தைக் காணும் முறை வருமாறு.-
(1) கிறீன்விச்சுக்குக் கிழக்கேயுள்ள நாடு க ளு க் கு கிறீன்விச்
நேரத்தோடு ஒவ்வோர் பாகை தேசாந் தரத்துக்கும் நாலு நிமிஷவீதம் கூட்டிக் கொள்க. (2) கிறீன்விச்சுக்கு மேற்கேயுள்ள நாடுகளுக்குக் கிறீன்விச்
நேரத்தோடு ஒவ்வோர் பாகை தேசாந்தரத்துக்கும் நாலு
நிமிஷவீதம் கழித்து கொள்க. மேலே தரப்பட்ட விதியின்படி கிறீன்விச்சில் மத்தியான மாயி ருக்கும்போது (அ) கி. தே. 740 யிலுள்ள லாகூரில் 74X4 = 296 நிமிஷம் அல்லது
4 மணி 56 நிமிஷம் வித்தியாசமாகும்.
எனவே லாகூர் நேரம் பி. L.. 4-56 ஆகும். (ஆ) மே. தே. 125° யிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் 125X4 = 500
நிமிஷம் அல்லது 8 மணி 20 நிமிஷம் வித்தியாசமாகும். எனவே சான் பின் சிள் கோவில் பகல் 12 மணி - 8 மணி 20 நிமி. =
இரவு 3 மணி 40 நிமிஷமாகும். (இ) மே. தே. 740 யிலுள்ள நியூயோக்கில் இரவு 11 மணியாயிருக்கும்
போ த கி. தே. 80°யிலுள்ள கொழும்பில் வித்தியாசம் (74X80) X4 =616 நிமிஷம் அல்லது 10 மணி 16 நிமிஷமாகும். கொழும்பு நியூக்யோக்குக்குக் கிழக்கேயிருப்பதால் கொழும்பில் அப்போது நேரம் நியூ யோக் நேரத்துடன் 10 மணி 16 நிமிஷம் கூட்டல் வேண்டும். எனவே 23 மணித்தியாலம் + 10 மணி 16 நிமிஷம் அதாவது மறுதினம் காலை 9 மணி 16 நிமிஷமாகும்.
தோ சாந்தர ரேகை அறிவித்தல்: - நேரத்துக்கும் தேசாந் தரத்துக்குமுள்ள தொடர்பை அறிந்து கொண்டோம். இதனை

அட்சம் தேசாந்தரம்.
4»
ஆதாரமாகக் கொண்டு கிறீன்விச் நேரத்தோடு ஒரு நாட்டின் சுயநேரத்தை ஒப்பிட்டு அந்நாட்டின் தேசாந்தரத்தை அறியலாம். உதாரணமாக ஓரிடத்தின் நேரம் மத்தியானமும் கிறீன்விச் நேரம் பி. ப. 3-20 மாயின் இரண்டுக்கும் 200 நிமிஷம் வித்தியாசமாகும். எனவே அந்த இடம் கிறீன்விச்சிலிருந்து 200 அ தாவது 50° யிலிருக்கும். கிறீன்விச் நேரம் முந்தியிருப்பதால் அந்த இடம் கிறீன்விச்சுக்கு மேற்கே 502 தேசாந்தரத்திலமையும்.
நேர மாற்றம் பூமியைச் சுற்றி ஒருவன் கிழக்கு முகமாகப் பிரயாணஞ் செய்ய நேர்ந்தால் ஒவ்வோர் பாகை தேசாந்தர ரேகையைக் கடக்கும் போதும் அவ்வவ்விடத்தில் சூரியோதயம் 4 நிமிஷவீ தம் முன்னர் நிகழ்ந்துள்ளமையால் தனது கடிகாரத்தின் நேரத்தையும் ஒவ் வோர் பாகைக்கும் 4 நிமிஷம், அதாவது 15 பாகைக்கு ஒரு மணித் தியாலம் முன்கூட்டி வைக்கவேண்டியவனாகிறான். உதாரணமாகக் கிறீன்விச்சிலிருந்து ஒருவன் புறப்பட்டுக் கிழக்கு நோக்கிச் செல் கின்றானெனக் கொள்வோம். புறப்படும்போது அவனது கைக் கடிகாரம் ம த் தி யா ன ம் 12 மணியைக் காட்டுகின்ற தென்க. அவன் பம்பாய் நகரை 5 மணித்தியாலங்களில் அடையக் கூடு மாயின் அவனுடைய கடிகாரம் பிற்பகல் 5 மணியைக் காட்டும். ஆனால் அங்கு பிற்பகலின்றிச் சூரியன் அஸ்தமித்து இருள் கவிந்து பம்பாய் நகரிலுள்ள கடிகாரங்களெல்லாம் இரவு 11 மணி யைக் காட்டக் காண்பான். எனவே அவன் தன்னுடைய கடி காரத்தையும் 53 மணித்தியாலம் முன் கூட்டி 11 மணியில் விட வேண்டியவனாகிறான்.
சூரியன் பம்பாய்நகரில் கிறீன்விச்சிலும் 53 1 மணித்தியாலங்கள் முந்தி உதயஞ் செய்வதால் இவ்வாறு நிகழ்கின்றது. இதேமுறை யில் 360 பாகை பிரயாணஞ் செய்தபின்னர் அவன் தனது கடி கார த் ைத 24 மணித்தியாலம் முன்கூட்டி வைத்துத் தான் 24 மணித்தியாலங்கள் - அதாவது ஒரு நாள் கடந்ததாகப் பிரயாணத்தின் இறு தியில் நினைக்கிறான். ஆனால் உண்மை இவ்வாறில்லை. இதேமுறையில் மேற்கு நோக்கிப் பிரயாணஞ் செய்பவன் ஒவ்வோர் பாகை தேசாந்தரத்திற்கும் தனது கடி கார்த்தின் நேரத்தை 4 நிமிஷம் பின் தள்ளி - அதாவது 360 பாகை தேசாந்தரத்தைக் கடக்கும் போது 24 மணித்தியாலம் பின் தள்ளிப் பிரயாணத்தில் ஒரு முழுநாள் இழந்துவிட்டதாகக் கருது

Page 35
பி
5 கிங் பிய 78-58', ஓ -4 ஞா.பி.ப 121
திங். முய, 3
{} (5
கிதே.1797"மே.தே
FEய :
நடு நிசி
ஒ|
'S
திங்கள் ஞாயிறு
ம - 3
நியூஸிலாந்.9:
தேதி மா றும் ரேல 60° 90° 120 °150'
160 * 135° 120 ° 180' 150' 135 120' 80" 60 °
13]

அட்சம் தேசாந்தரம்.
49.
கிறான், உலகம் சுற்றிவந்த சேர். பிரான்சிஸ் டிறேக் இங்கிலாந்தை அடைந்தபோது தான், அங்கு சேர்ந்த தி எம் சனிக்கிழமையென எண்ணினான். ஆனால் அத்தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந் தது. இதற்குரிய காரணம் மேற்கு நோக்கி 360 பாகை பிரயா ணஞ் செய்தபோது ஒரு முழு நாள் இழந்தமையைக் கணக் கிடாமல் விட்டமையாகும்.
திகதி மாறும் ரேகை மேற்கு நோக்கிப் பிரயாணஞ்செய்து 360 பாகை தூரத்தைக் கடக்கும்போது ஒரு நாள் இழக்க நேருகின்றதென்பதையும் கிழக்கு நோக்கிப் பிரயாணஞ் செய்து 360 பாகை தூரம் கடக்கும் போது ஒரு நாள் கூட்ட வேண்டியிருக்கிற தென்பதையும் அறிந் தோம். கிழக்கு அல்லது மேற்கு நோக்கிப் பிரயாணஞ் செய்யுங் கப்பல்கள் இந்த மாற்றத்தை ஏதோ ஓர் இடத்தில் அனுசரிக்க வேண்டும். சர்வதேசமும் கிழக்குத் தேசாந் தரம் 180-ம் பாகையில் இம் மாற்றத்தைக் கொள்ள ஒப்புக்கொண்டமையால் இத்தேசாத் தரத்தினூடு செல்லுங் கற்பனாரேகை திகதி மாறும் ரே  ைக (International Date Line) எனக் குறிப்பிடப் படுகின்றது. இந்த ரேகையைக் கடக்கும்போது கிழக்கு நோக்கிச் சென்றுகொண் டிருக்கும் கப்பல் திகதிக் கூட்டில் ஒரு நாளைக் கூட்ட வேண்டி யிருக்கின்றது - அதாவது அதே தினத்தை மீட்டுங் கொள்ள வேண்டியிருக்கின்றது. மேற்கு நோக்கிப் பிரயாணஞ் செய்யுங் கப்பல் அவ்விரேகையைக் கடக்கும் போது ஒரு நாளை விடவேண் டியிருக்கின்றது.
இன்னும் இதனை த் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு எதிர்ப்பக்கத்திலுள்ள படத்தை நன்கு அவதானியுங்கள். கிரீன் விச்சில் (தே. 0) திங்கள் மு. ப. 9 மணியாயிருக்கும் போது கி. தே. 15 இல் மு. ப. 10 மணி; 309 இல் மு. ப. 11 மணி; 45 ல் மத்தியானம் 12 மணி. இம்முறைப்படி கிறீன்விச்சுக்குக் கிழக்கே 179 இல் திங்கள் பி. ப. 8-56. இவ்வாறு கிறீன்விச்சுக்கு மேற்கே 1799 இல் ஞாயிறு பி. ப. 9-04. கவனமாகக் கணக்கிட்டு இந்த உண்மைகளை அறிக. எனவே 180° ஐ அடையும் போது கிறீன்விச்சிலிருந்து மேற்கு நோக்கிக் கணித்தால் ஞாயிறு இரவு 9 மணியும், கிழக்கு நோக்கிக் கணித்தால் திங்கள் இரவு 9 மணி யுமாகும். சர்வதேசமும் குறித்த 180 -ம் பாகையினூடு செல் லுந்

Page 36
50
உலக பூமிசாஸ்திர விளக்கம்
தேசாந்தர ரேகையைத் திகதி மாறும் ரேகை என ஒப்புக்கொண்டு அதன்படிக்குக் குறித்த ரேகையைக் கடக்கும்போது ஒரு பக்கம் ஞாயிறு ஆயின் மறுபக்கம் திங்கள் எனவும், எதிர்ப்புறம் கடக் கும்போது ஒரு பக்கம் திங்களாயின் மறுபக்கம் ஞாயிறு எனவுங் கொள்கின்றது. கப்பல்கள் இவ்விரேகையைக் கடக்கும் போது குறித்தபடிக்குத் திகதி மாற்றஞ் செய்கின்ற ன. சில தீவுக்கூட்டங் களினூடு செல்லும்போது அ த் தீ வு க் கூட்டங்களின் ஒரே திகதியை மாற்றஞ் செய்யாதிருப்பதற்காகத் திகதிமாறும் ரேகை கிழக்கே அல்லது மேற்கே ஏற்றவாறு தீவுக் கூட்டங்களில் விலகிச் செல்வதையும் படத்தில் அவதானிக்குக. அ ட் சம் தேசாந்தரம் போன்று திகதிமாறும் ரேகையும் ஓர் கற்பனா ரேகையாகும் என்பதையும் அறிந்து கொள்க.
பொது நேரம் தேசாந்தரரேகையின் இருபாகைகளுக்கிடையில் நாலு நிமி ஷம் வித்தியாசம் என்பதற்கிணங்க நாங்கள் ஒரு பரந்த பிர தேசத்தினூடு கிழக்கு அல்லது மேற்கு நோக்கிச் செல்லநேரின் எங்கள் கடிகாரங்களையும் ஒ வ் வே ார் இடத்தும் நேரமாற்றஞ் செய்யவேண்டும். இக்கஷ்டத்தைத் தவிர்ப்பதற்கு ஒவ்வோர் நாட்டிலும் அந்நாட்டினது ஓர் குறிப்பிட்ட இடத்தின் சுயநேரம் நேர வித்தியாசத்தைப் பொருட்படுத்தாது அந்நாடு முழுமைக் கும் பொது நேரமாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வொழுங்கின் படி கிறீன்விச்நேரமே இங்கிலாந்து முழுமையின் பொது நேர மாகும். டப்ளின் (Dublin) நகரின் சுய ேநர  ேம அயர்லாந்தின் பொதுநேரமாகும். கி. தே. 82-ம் பாகையின் நேரமே இந்தியா முழுமையின் பொதுநேரமாகும். இலங்கைக்கும் 820-ப் பாகையின் நேரமே பொது நேரமாகும். இது கிறின்விச் நேர த் தி லும் 5 மணித்தியாலம் முந்திய தாகும்.
இந்தியாவின் பொதுநேரம் பம்பாயின் சுயநேரத்திலும் 39 நிமிஷம் பிந்தியது; கல்கத்தாவின் சுயநேரத்திலும் 21 நிமிஷம் முந்தியது. ஆயினும் கி. தே. 82-ப் பாகையின் சுயநேரமே பம் பாய், சென்னை, கல்கத்தா முதலிய இந்தியாவிலுள்ள எல்லா மாகாணங்களினதும் பொதுநேரமாகக் கொள்ளப்படுகின்றது. சென்னையின் பொதுநேரமே இலங்கையின் பொதுநேரமாகும். திருச்சி வானொலியின் நேரப்படி நாங் க ளு ம் எங்கள் மணிக் கூட்டின் நேரத்தைச் சரிபிழை பார்த்துக் கொள்ளுதல் ஏன்? இந் 'தியாவின் பொது நேரத்தை நாமும் கைக்கொள்ளுவதனாலன்றோ.

"அட்சம் தேசாந்தரம்.
51
இன்று பூமி, பல நேர மண்டலங்களாகப் (Time Belts) பகுப்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வோர் பகுப்புக்குமிடையே ஒவ்
வோர் மணித்தியால வித்தியாசமுண்டு. பரந்த கனடா மாகாணம் ஐந்து நேரமண்டலங்களைக் கொண்டுள்ளது. இவ்வைந் து நேர மண்டலங்களில் ஒவ்வோர் பகுப்பிலும் ஒவ்வோர் பொது நேரம் கொள்ளப்படுகின்றது. எனவே கனடாப் பிரதேசம் ஐந்து பொது நேரப் பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. ஓர் பி ரி வி லி ருந் து அடுத்த பிரிவுக்குச் செல்லும்போது கடிகாரத்தின் நேரத்தை ஒரு மணித்தியாலம் முன் கூட்டியோ அல்லது பின் தள்ளியோ வைத்தல் வேண்டும்.
வினாக்கள், (1) நீர் முந்திய பாடங்களில் வாசித்தறிந்த மூன்று கற்பனாரேகை களுமெவை? (2) அட்சம், தேசாந்தாம் என் னும் ரேகைகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுக. இவற்றின் உபயோகமென்ன? (3) பிரதம தேசாந்தா (தீர்க்க) ரேகை என்பதென்ன? இது எத்தேசத்தினூடாகச் செல்கிறது? (4) தேசப்படத்தின் உதவியோடு இலங்கையின் நிலையத்தை அட்ச தேசாந் தா ரேகைகளுக்கமையக் கூறு க (5) தேசப்படத்தின் உதவியோடு பின் வரும் இடங்களின் நிலையத்தைக் கண்டறிக- சென்னை, கல்கத்தா, சிங்கப் பூர், விளாடி வெஸ்ரொக், மெல்போண், வான்கூவர், கேப்டவுண், றையோ டிஜெனறோ, நியூயோக் , ஏடன். (6) நேரத்துக்கும் தேசாந்தாரத்துக்குமுள்ள தொடர்பென்ன? (7) கி தே. 80° யிலுள்ள கொழும்பில் காலை 6 மணியா யிருக்கும்போது 140° யிலுள்ள மெல்போண், கி. தே. 190° யிலுள்ள ஹொங்கொங், மே தே. 20 °யிலுள்ள கேப்டவுண், மே. தே. 80°யிலுள்ள சிக்காக்கோ, 0° யி லு ள் ள லண்டன் என் னுமிடங்களில் நேரமென்ன ? (8) இலங்கையில் பகல் 12 மணியாயிருக்கும்போது இரவு 12 மணியாயிருக் கும் இரு தேசங்கள் கூற க. லண்டனில் அப்போது நேரமென்ன? (9) ஓரி

Page 37
52
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
டத் தின் தேசாந்தரத்தை எவ்வாறு அறியலாம்? (10) கிறீன்விச்சில் பகல் 12 மணியாயிருக்கும்போது பிற்பகல் 5 மணி, பிற்பகல் 8 மணி, முற்பகல் 8 மணி, முற்பகல் 4 மணி என் னும் நேரங்களைக் காட்டும் தேசாந்தா நாடுகளெ வை? தேசப்படம் பார்த்து இவ்வா றன மந்த ஒவ்வோர் நாடு அல் லது பட்டினங் கூ று க . (11) சுயநோம், பொதுநேரம் என்னும் பதங்களை உதாரணத்தோடு விளக்குக. (2) கிறீன்விச் நேரத்திற்கும் இலங்கை நேரத்திற்குமுள்ள வித்தியாசம் என்ன? (13) லண்டனிலிருந்து பகல் 12 மணிக்கு அனுப்பப்பட்ட ஒரு ஆகாயவசனிச் செய்தி இலங்கையில் 10 நிமிஷங்களிற் கிடைத்தால் அப்போது இலங்கை நேரமென்ன? (14) இலங்கையிலிருந்து காலை 7 மணிக்கு அனுப்பப்பட்ட ஒரு தந்திச் செய்தி லண்டனில் 3 மணித்தியாலங்களிற் கிடைக்கப்பெற்றால் அப்போது லண்டன் நேரமென்ன? (15) ரத்மலானை யிலிருந்து வெள்ளிக்கிழமை பிற் பகல் 5 மணிக்குப் புறப்பட்ட ஒரு கொமெற் விமானம் (1) கி, தே. 45 பாகையிலுள்ள பாக்டாட்டை ஐந்து மணித்தியாலங்களிலும், (10) ரத் மலானை யிலிருந்து லண்டனிலுள்ள குறாய்டனைப் பதின் மூன்று மணித் தியாலங்களிலுஞ் சென் றடைந்தால் அப்போது ஒவ்வோர் நிலையங்களிலும் நோமென்ன? (16) இலங்கைப் பிரதமர் கி. தே. 80° யிலுள்ள கொழும்பி லிருந்து வியாழன் காலை 9 மணிக்குப் புறப்பட்டு மே. தே. 70° யிலுள்ள நியூயோக்கை மூன்று தினங்களிற் சென்றடைந்தால் அவர் நியூயோக்கை அடைந்த தினம் என்ன? நேரம் என்ன? (17) ஒரு பாந்த பிரதேச நாட்டின் நோபேதம் பாதிக்கப் படாமலிருப்பதற்கு என்ன முறை கையாளப்படுகின்றத? ஒர் நாட்டை உதாரண மாசக்கொண்டு வி ள க் கு க. (18) கொழும்பில் சரியாகக் காலை 6 மணிக்கு சூரிய உதயம் நிகழும்போது மட்டகளப்பிற் சூரிய உதயம் எத்தனை நிமிஷம் முந்தி நிகழ்ந்திருக்கும்? தேசாந் தா ரேகை குறிக்கப்பட்ட பெரிய இலங்கைப்படம் பார்த்து ஓரளவு திட்டமான விடைசருக. (19) திகதி மாறம்ரேகை என்பதென்ன? விளக்கப்படம் வரைந்து விபரிக்குக. (20) 1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாந் திகதி யொக்கஹாமாவிலிருந்து (கி. தே. 140°) புறப்பட்ட ஒரு கப்பல் ஹொனொலுலு தீவை (மே. தே. 153°) ஏழு தினங்களிற் சென் றடைந்தால் அப்போது அங்கு திக தியென்ன?

9. வற்றுப் பெருக்கு இரும்பைக் காந்தம் தன்பக்கலில் ஈர்க்கின்ற து. இதனைக் காந்தசக்தி என்கிறோம், மேலே எறியப்பட்ட பொருட்கள் மீட் டும் பூமியை வந்தடைகின்றன. மேசையின் மீது நகர்ந்துகொண் டிருக்கும் ஒரு பொருள் மேசையோரம் வந்ததும் நிலத்தில் வீழ் கின்றது. காந்தத்துக்கு இரும்பைத் த ன் னி ட ம் இழுக்குஞ் சக்தியிருப்பது போலப் பூமிக்கும் பொருட்களைத் தன்னிடம் இழுக்குஞ் சக்தி இருக்கின்றது. இச்சக்தியை ஆகர்ஷ்ண சக்தி, புவிக்கவர்ச்சி, நில ஈர்ப்பு எ னப் பலபட அ ழைக்கின் றோ ம். பூமிக்கு அமைந்துள்ள இச் சக்தி காரணமாக மேலே எறியப் பட்ட பொருட்கள் மீட்டும் பூமியை வந்தடைவதோடு, பூமியின் மீதுள்ள பொருட்களும் ஜீவராசிகள் பிற வும் அ தனது சுழற்சி வேகத்தின் போதும் நிலைபெயராதிருக்கின்றன.
சூரியனும் கிரகங்களும் ஒன்றையொன்று தம்மிடத்து ஈர்க் குஞ் சக்தி பொருந்தியுள்ளன. பூமி அந்தரத்தில் நிலைபெற்றியங் குவதற்கும் இதுவே காரணமாகும். இந்நியதியின்படி சூரியனுஞ் சந்திரனும் பூமியைத் தம்பக்கம் ஈர்க்கின் ற ன. ஆனால் சந்திரன் சூரியனிலும் பூமிக்கு அண்மையிலிருப்ப தால் பூமி யி ன் மேற் பரப்பு சூரிய ன து ஈர்ப்பிலுஞ் சந் திரன து ஈர்ப்பைக் கூடுதலாகப் பெறுகின்றது.
பூமியின் மேற்பரப்பு திண்மையுள்ள தரைப்பகுதியையும் நெகிழ்ச்சியுள்ள நீர்ப்பரப்பையுங் கொண்டுள்ள து. சந்திரன து ஈர்ப்புக்கு நெகிழ்ச்சியுள்ள நீர்ப்பரப்பே அ தியிலக்காகி இடங்
- மதுரை -மாத கா ய ரகம் - 5
கொடுக்கின்றது. சந்திரன் பூமியைச் சுற்றி வலம்வரும்போது சந் திரனது நி லை க் கு த் தக்கதாக அங்கங்கு சமுத்திரம், கடல், பேராறு என்பவற்றின் நீர்த்தொகுதி சந்திரனது ஈர்ப்பின் கார

Page 38
54
உலகபூமிசாஸ்திர விளக்கம்.
ணத்தால் கெம்பி மேலெழும். இதனை நாங்கள் பெருக்கு என் கின்றோம்.
இன்னுஞ் சந்திரனது கவர்ச்சியால் பூ ம த் தி யு ம் ஒரளவு பாதிகப்பட்டு அதன து ஆகர்ஷ்ணமுஞ் சிறிது குறைவடை கின்றது. எனவே சந்திரன் நிற்குந் தி  ைசக் கு எதிர்புறத்தே யுள்ள 'நீர்த்தொகுதி இப்போது பூமியினது ஈர்ப்பைச் சிறிது குறைவாகப் பெறுகின்றமையால் ஆங்குங் கெம்புகின்றது. இப் போது பூமியின் மேற்பரப்பில் சந்திரன் நிற்குந் திசையிலும் அதன் எதிர்த்திசையிலும் பெருக்கங்கள் ஏற்படுகின்றன. இவ் வ ா று இரு திசைகளில் பெருக்கம் ஏற்படும்போது இயற்கையாகவே மற்றிரு திசைகளில் வற்று ஏற்படும்.
நாம் கடற்கரைக்குச் சென்று அவதானித்துவரின் வற்றுப் பெருக்கம் என்பன ஓரொழுங்குபற்றி ஏ ற் ப ட க் காண்போம். வற்றுப் பெருக்கம் ஒரு நாளைக்கு இரு முறைகளில்-இன்னுங் கூடிய திட்டமாய் 24 மணி 50 நிமிஷங்களுக்கு இருமுறைஏற்படுகின்றன. சந்திரன் நிலையாக நிற்ப தாயின் வற்றுப் பெருக் கம் 24 மணித்தியாலங்களில் இருமுறை நிகழும். ஆனால் சந் திரன் நிலையின்றிப் பூமியைச்சுற்றி வலம் வருவதால் முன் கூறிய வாறு 24 மணி 50 நிமிஷங்களுக்கிருமுறை வற்றுப் பெருக்கம் நிகழ்கின்றன.
சூரிய சந்திரக் கவர்ச்சி
இன்னுஞ் சூரியன் சந்திரன் பூமி எ ன் ப ன ஒரே நேராக நிற்கும் அமாவாசை, பௌர்ணிமை நாட்களில் சந்திரனது ஈர்ப் போடு சூரியனது ஈர்ப்புஞ் சேர்வதால் இத்தினங்களிலேற்படும் வற்றுப் பெருக்கம் மற்றைய நாட்களிலுங் கூடுதலாயிருக்கும்.

வற்றுப் பெருக்கு.
55
இதுபற்றியே இவ்விரு தினங்களிலும் கடலின் கொந்தளிப்பும்
அதிகமாயிருக்கின்றது.
வற் றுப் பெருக்கின் உபயோகங்கள்.- (1) ஆறுகளின் முகத் துவாரங்களில் வண்டல்கள் சேர்ந்து கழிமுகந் தடைப்படுவதை வற்றுப் பெருக்கு நீக்குகின்றது. எனவே வற்றுப் பெருக்கமைந்த ஆறுகள் (Tidal Rivers) போக்கு வரத்துக்கு உதவுகின்றன. (2) இன்னும் வற்றுப் பெருக்கு ஓரிடத்துப் பொருளை இன் னோரிடத்திற்குக் கொண்டு சென்று படிய வைப்பதால் நில அமைவை உண்டாக்குகின்றது. (3) வற்றுப் பெருக்கு கடற்கரை யோரங்களிலுள்ள கழிவுப் பொருட்களை அ க ற் ற வு ம் உதவு கின்றது. (4) துறை முகங்களில் நீர்மட்டத்தை உயரச்செய்து கப்பல் மூலம் வர்த்தகம் நடைபெற உதவுகிறது.
வினாக்கள். (1) காந்த சக்தி, ஆகர்ஷ்ண சக்தி (நில ஈர்ப்பு) என்பவற்றை விளக் குக. (2) ஆகர்ஷ்ண சக்தி என்பதென்ன? இதனிரு பயன் கள் கூறுக. (3) பூமி அந்தரத்தில் நிலைபெற்றியங்குவது எவ்வாறு? (4) வற்றுப்பெருக்கு என்பதென்ன? இவை ஏற்படுமாற்றை விளக்கப்படத்தினுதவியோடு விபரிக் குக. (5) வற்றுப்பெருக்கு ஏற்படும் நியதி (கால எல்லை) என்ன? ஏன்? (6) எத் தினங்களில் வற்றுப் பெருக்கு மிகக் கூடுதலாகக் காணப்படு கின்றது? ஏன்? (7) வற்றுப் பெருக்கின் உபயோகங்களெவை?

Page 39
10. அலைகளும் நீரோட்டங்களும்
1. அலைகள்
நீர்த் தொகுதியின் மேற்பரப்பில் குழப்பமேற்படும் போது. அலைக ளுண்டாகின்றன. ஒரு கல்லை நீரிலிட்டால் அவ்விடத்தி லிருந்து வட்டம் வட்டமாய், அ லை கள் புரண்டெழக் காண் போம். அ லை க ள் கரையை நோக்கிச் செல்வனவேயன்றி நீர் இடம்பெயர்ந்து அலைகளுடன் செல்வதில்லை. சமுத்திரக் கரைக் குச் சிறிது தூரத்துக்கப்பால் வாயடைக்கப்பெற்ற ஒரு வெற் றுப் போத்தலை அல்லது மரக்கட்டையை நீரில் மிதக்கவிட்டு இவ்வுண்மையை அறிந்து கொள்ளலாம். மிதக்க விடப்பட்ட பொருள் ஆடியாடி அவ்விடத்திலேயே பெரும்பான்மையும் நின்று கொண்டிருக்கும். கரையோரங்களில் மாத்திரமே அப்பாகத் து நீர் அலையோடு சேர்ந்து இடம்பெயர்ந்து கரையில் மோதுகின்றது. ஆழமான கடலிடத்தில் அலை யெ ழும்போது மேற்பரப்பிலிருந்து 20 அல்லது 30 அடி ஆழத்தின்கீழ் நீர்த்தொகுதி அசைவின்றி யிருக்கின்றதென்றே கூ ற ல ாம், மேற்பாகத்து நீர்த்தொகுதி மாத்திரமே அசைவுற் றுக் கெம்பி அலையலையாகக் கொந்தளிக் கின்றது.
2. நீரோட்டங்கள்
நாங்கள் இது வரை படித்துக்கொண்ட வற் றுப்பெருக்கு அலைகள் என்பன நீரின் மேற் பரப்பில் நிகழ்வனவென்றும், இவை காரணமாக நீர்த்தொகுதி இடம் பெயர்ந்து செல்வதில்லை யென்றும் அறிந்துகொண்டோம். இவ்வாறின்றிச் சமுத்திரம் அல்லது கடலிடத்தில் நீர்தொகுதி இடம் பெயர்ந்து ஒரிடத்தி லிருந்து வெகு தூரத்திற்கு இன்னோரிடத்திற்குச் செல்லுதலு முண்டு. இவ்வாறு நீர்த்தொகுதி இடம்பெயர்ந்து செல்லு தலை நீரோட்டம் என்கிறோம்.
நீரோட்டத்தின் கார ணங்கள்.- (1) சீதோஷ்ண வேறுபாடு, (2) இவ்வேறுபாட்டால் பூ ம த் தி ய ரேகைக்கு அண்மையில் ஓரிடத்து நிக ழுங் கடு மை யா ன நீராவி மாற்றம். (3) நிலையாக வீசுங் காற்றின் தாக்கம் என்பன பிர தானமானவை.
சீதோஷ்ண வேறுபாடு நீரோட்டத்தை உண்டாக்குகின்ற தென்பதைப் பின்வரும் பரிசோதனையிலிருந் தறிந்து கொள்க.-
) ம ( IT அசT
அலெயாக

அலைகளும் நீரோட்டங்களும்.
பரிசோதனை: ஒரு கண்ணாடித் தொட்டியை எடுத்து அதன் பெரும்பாகத்தை நீரால் நிரப்பிக்கொள்க. தொட்டியின து ஓர் ஓரத்தில் நீருள் ஒரு பனிக்கட்டித் துண்டைக் கட்டிவைக்குக. மறு ஓரத்தில் ஓர் இரும்புக்கம்பியின் நுனியை நீரிற் பொருந்த விட்டுக் கம் பி யின் அடிப்பாகத்திற் சூடு காட்டுக. இப்போது இரும்புக் கம்பியின் நுனி படியும் பாகத்து நீர் சூட்டின் காரண மாக இலேசாகி விரிந்து மேலெழப் பனிக்கட்டிப் பாகத்து நீர் கூடிய செறிவுங் குளிர்ச்சியுமுடைமையால் கீழிறங்கி மறு ஓரஞ் செல்லக் காண்போம். கரையுந் தன்மையுள்ள நிறக் கட்டியொன் றைப் பாத்திரத்திலிட்டு நீரின் சு ழ ற் சி யை இன்னுந் தெளி வாகக் காண்க.
நிரட்சத்தையடுத்துள்ள உ ஷ்ண ம ா ன நீர் துருவங்களை நோக்கிச் சென் று குளிர்ச்சிபெற்றுக் கீழிறங்கிப் பின்னர் ஆழ்ந்த கீழ் நீரோட்டமாக (Deep Under-current) மீட்டும் நிரட் சத்தை நாடி வருகின்றது.
நீரோட்டங்கள் வடக்குத்தெற்காய் ஓட ா ம ல் பூமியினது சுழற்சியினாலும், அவ்வப்பாகங்களில் வீசுங் காற்றின் தாக்குதலி னாலுந் திசை மாறுகின்றன. உஷ்ண வலயத்தில் வியாபாரக் காற்றுகள் வடகிழக்கிலிருந்தும் தென்கிழக்கிலிருந்தும் நிலையாக வீசுகின்றன, எனவே இங் கு நிரட்ச நீரோட்டங்கள் மேற்கு நோக்கிச் செல்கின்றன. மத்திம வலயத்தில் நிலையான காற்று கள் மேல்காற்றுகளாகும். எனவே இப்பாகத்தில் குடாநீரோட்டம், குறோ சிவோ நீரோட்டம் என்பன மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்கின்றன. .

Page 40
மு.
- 7 பிம -
கொ
கிசியா
தி
வட நிரட்ச
நிரோட்டம்
இr" - ம்
தென் கிர்க
"எபி 41 UN'S
பிறேசிவு
பெங்கு
--7 சமுத்திர
* நீல்
தென்

அலைகளும் நீரோட்டங்களும்
59.
சமுத்திரத்தின் வெவ்வேறு பாகங்களில் அவ்வப் பாகங் களில் நி க ழு ங் கடுமையான நீராவிமாற்றம் நீரோட்டத்தை யுண்டாக்குமென முன்னர் வாசித்தோம். உதாரணமாக அத் திலாந்திக் சமுத்திரம் கருங்கடல் என்பவற்றிலிருந்து - மத்தித் தரைக் கடலுக்கும், அரேபியாக் கடலிலிருந்து செங்கடலுக்கும் நீரோட்டங்கள் செல்வதன் முக்கிய காரணம் மத்தித்தரைக் கட லிலும் செங்கடலிலும் ஆறுகள் , கொணரும் நீரிலும்பார்க்க நீராவிமாற்றம் கூடுதலாக நிகழ்வதனாலாகும்.
உஷ்ண - குளிர் நீரோட்டங்கள்.- உ ஷ் ணப் பிரதேசத்தி லிருந்து குளிர்ப் பிரதேசத்திற்கு ஒரு நீரோட்டஞ் செல்லும்போது
அந் நீ ரோட்டம் இயற்கையாக உஷ்ணமுடையதாயிருக்கும். குளிர்ப் பிரதேசத்திலிருந்து உஷ்ணப் பிரதேசத்திற்கு ஒரு நீரோட் டஞ் செல்லும்போது அது குளிருடைய தாயிருக்கும். ஒரு உஷ்ண நீரோட்டம் குளிர்ப் பிரதேசத்திற்குச் சென்று சுழன்று வரும் போது அது குளிர் நீரோட்டமாக மாறுமென்பதையுங் கவனத்திற் கொள்க.
ஒவ்வோர் சமுத்திரத்திலுமமைந்த நீரோட்டங்களின் பெய ரூம் விபரமும் பின்வருமாறு. படத்தின் உதவியோடு ஒவ்வோர் நீரோட்டத்தையும், அந் நீரோட்டத்தின் தன்மைகளையும் நன்கு
விளங்கிக் கொள்க.
அத்திலாந்திக் சமுத்திர நீரோட்டங்கள் 1, தென் சமுத்திர நீரோட்டம்.- இது ஒரு குளிர் நீரோட்ட
மாகும்; தென்சீ தள வலயத்தின் வடபாகத்தே பூமியைச் சுற்றி மேற்குக் கிழக்காய்ச் செல்கின்றது. இதன் கிளை கள் தென்னமெரிக்கா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா என்னும் நாடுகளின் கரையோரங்கட்குச் செல்கின்றன.
2. பெங்குவாலா நீரோட்டம்.- இ க் குளிர் நீரோட்டம் தென்
சமுத்திர நீரோட்டத்தின் ஓர் கிளையாகத் தென்னாபிரிக்கா
வின் மேற்குக் கரையோரஞ் செல்கின்றது. 3. தென்நிரட்ச நீரோட்டம்.- இவ்வுஷ்ண நீரோட்டம் தென்
கீழ் வியாபாரக் காற்றின் தாக்கத்தினால் மேற்குநோக்கிச் செல்கின்றது. றோக் முனையையடைந்ததும் இரு கிளைகளாகி ஒரு கிளை பிறே சி ல் நீரோட்டம் என் னும் பெயரோடு

Page 41
60
உலகபூமிசாஸ்திர விளக்கம்.
தெற்கு நோக்கிச்செல்ல மறு கிளை மெக்சிக்கோக் குடாவை
யடைகின்றது. 4, பிறேசில் நீரோட்டம்.- இவ்வுஷ்ண நீ ரோட் டம் தெற்கு
நோக்கிப் பிறேசில் பிரதேசத்தின் " கிழக்குக் கரையோரஞ் செல்கின்றது. ல ாப் பிளாத் தே நதி, முகத்துவாரத்துக் கண்மையில் கிழக்கு நோக்கித் திரும்பித் தென் சமுத்திர நீரோட்டக் கிளை யோடு கலக்கின்றது.
குடா நீரோட்டம்.- இவ்வுஷ்ண நீரோட்டம் மெக்சிக்கோ குடாவினின்றும் வெளிப்போந்து புளோறிடாத் தொடுவா யினூடு செல்கின்றது. 36 - 40 மைல்வரை அகலமும் 809 F உஷ்ணமும் பொருந்திய இந் நீரோட்டம் மணிக்கு 5 மைல் வேகத்திற் செல்கின்றது. இது பின்னர் வட நிரட்ச நீரோட்டத்தோடு கலந்து முதலில் அமெரிக்காக் கரையோரத்திற்குச் சமாந்தரமாகச் சென்று வடகிழக்குப் பக்கந் திரும்புகின்றது. நியூபவுண்லாந்துக் கண்மையில் 3000 மைல்வரை அகலமும் 70 F உஷ்ணமும் பொருந்திய இந்நீரோட்டம் மேன்மேலும் மேல் காற்றின் தாக்கத்தி னால் வடகிழக்குத் திசையாய் உந் தப் பெற் று ப் பிரித் தா னிய தீவுகள் நோர்வே என்பவற்றின் கரையோரஞ் செலுத்தப்படுகின்றது.
இக்குடா நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்குக்கரைநாடு களுக்கு மிகுந்த பயன் விளைக்கின்றது. இங்கிலாந்து அனல் பொருந்தி 50°F வரை உஷ்ணமுடைய தாயிருப்பதற்கும், கோதுமை, ஓற்ஸ், பார்லி என்னுந் தானியங்கள் விளைவதற் கேற்ற சாதகம் பொருந்தியிருப்பதற்கும், துறைகள் உறை யாமலிருப்பதற்கும் குடா நீரோட்டமே காரணமாகும். இன் னும் நோர்வே நாட்டின் துறைகளும் இதன் பயனால் உறை யாதிருக்கின்றன. இதே அட்சத்திலுள்ள லபிறடோர் நீரோ ட்டம் குளிர்ந்த நீரோட்டமாகையால் இதன் கரைத் துறை களும், விசேடமாகக் கிறீன்லாந்துப் பாகமும் வருடத்தின் பெரும்பகுதி காலம் உறைந்திருக்கின்றன. இப்பாகங்களின் உஷ்ணம் 32° F வரையிலாகும்.
வடநிரட்ச நீரோட்டம் : - இவ்வுஷ்ண நீரோட்டம் அத்திலாந் திக் சமுத்திரத்தில் நிரட்சத்தையடுத்துக் கிழக்கு மேற்காய்ச் செல்கின்றது.

அலைகளும் நீரோட்டங்களும்
61
ல!பிறடோர் நீரோட்டம் - இக்குளிர் நீரோட்டம் வடஅமெரிக் காவின் கிழக்குக்கரையோரம் தெற்கு நோக்கிச் செல்கின் றது. பனிக்கட்டிக் குவியல்களையும், பனிக்கட்டிப் பாறைகளை யும் இந்நீரோட்டம் கொண்டுசெல்வதால் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே செல்லுங் கப்பல்கள் சிலவேளை களில் உடைந்துவிடுகின்றன. இவ்வபாயத்தை நீக்குவதற் காகக் கோடைகால ஆரம்பத்தில் கப்பல்கள் தெற்குப்புறஞ் சார்ந்து செல்கின்றன.
1912-ம் ஆ ண் டி ல் லண்டனிலிருந்து நியூயோக் - துறைக்கு முதன்முதலாகச் சென்றுகொண்டிருந் த ரிற்றா னிக் (Titannic) என்னும் அழகிய கப்பல் இவ்விடத்தில் பனிக் கட்டிப் பாறைகளில் மோதி ஆழ்ந்ததுமன்றி, அதிற் பிரயா ணஞ்செய் த பல் பிரபுக்களும் உயிர் துறந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பஸிபிக் சமுத்திர நீரோட்டங்கள்
2.
தென் சமுத்திர நீரோட்டம்.- குளிர்ந்த தென்சமுத்திர நீரோட் டத்தின் ஓர் கிளை தென்னமெரிக்காவின் தெற்குக்கரை யோரஞ் செல்கின்றது. இன்னோர் கிளை மேற்குக்கரையோரம் வடக்குநோக்கிப் பெருவியன் நீரோட்டம் என்னும் பெயரோடு செல்கின்றது. இது காரணமாக இப்பாகம் தென் ன மெரிக் காவின் கிழக்குக் கரையோரத்திலும் பார்க்கக் குளிர்ச்சி பொருந்தியது. தென்நிரட்ச நீரோட்டம்.- இவ்வுஷ்ண நீரோட்டம் பஸிபிக் சமுத்திரத்தினூடு தென்னமெரிக்காவின் மேற்குக் கரையி லிருந்து அவுஸ்திரேலியா வரையுஞ் செல்கின்றது. புதிய தென் உவேல்ஸ் நீரோட்டம் - தென் நிரட்ச நீரோட்டத் தின் தொடர்பாய் இது அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினூடு சென்று தென்புறந் திரும்புகின்றது.
வடநிரட்ச நீரோட்டம்.- இவ்வுஷ்ண நீரோட்டம் மெக்சிக் கோவிலிருந்து பஸிபிக் சமுத்திரத்தினூடு கிழக்கிந்திய தீவு களை நோக்கிச் செல்கின்றது.
குறோசிவோ அல்லது ஜப்பான் நீரோட்டம்.- இவ்வுஷ்ண நீரோட்டம் ஜப்பானை நோக்கி வடக்கே சென்று, பின்னர்

Page 42
62
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
கிழக்கு நோக்கி வட அமெரிக்காவின் மேற்குக் கரையான பிரித் தானிய கொலம்பியாப் பக்கஞ் செல்கின்றது. இதனது போக்கும் பலன்களும் குடா நீரோட்டத்தை ஒத்தவை. கலிபோர்ணியா நீரோட்டம்.- இத் குளிர் நீரோட்டம் தெற்குநோக்கிக் கலிபோர்ணியா, மெக்சிக்கோ என்பவற் றின் கரையோரஞ் செல்கின்றது. குறிலி நீரோட்டம் - இக்குளிர் நீரோட்டம் பெரிங் தொடு வாயிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கின்றது.
இந்துசமுத்திர நீரோட்டங்கள் . தென் சமுத்திர நீரோட்டம்.- இக் குளிர் நீரோட்டத்தின் ஓர் கிளை வடக்கு நோக்கி அவுஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரஞ் செல்கின்றது. இது 'மேற்கவுஸ்திரேலிய நீரோட்டம்" எனவும் பெயர்பெறும். தென் நிரட்ச நீரோட்டம்.- இவ்வுஷ்ண நீரோட்டம் கிழக்கு மேற்காய் நிரட்சத்தினூடு சென்று மடகாஸ்கார் தீவுக்கண்
மையில் பிரிந்து மொசாம்பிக் நீரோட்டமாக மாறுகின்றது. 3. மொசாம்பிக் நீரோட்டம்.- இவ்வுஷ்ண நீரோட்டம் மொசாம் பிக் , கால்வாயினூடு ஆபிரிக்காவின் தென்புறஞ் சென்று அகுல்யாஸ் என்னும் பெயரோடு தெற்கு நோக்கித் திரும்பு கின்றது. 4, பிற நீரோட்டங்கள் - இந்து சமுத்திரத்திலுள்ள வேறுஞ்
சில நீரோட்டங்கள் அங்கங்கு வீசுங் காற்றின் திசையைப் பொறுத்துள்ளன.
நீரோட்டத்தின் பயன்கள் சுவாத்திய மாறுபாட்டை உண்டாக்குதல்.- இதற்கு தாரண மாகக் குடா நீரோட்டமும் லபிறடோர் நீரோட்டமும் முன் னர் எடுத்துக் காட்டப்பட்டன. ஒரு தேசத்தின் கரையோ ரம் பாயும் உஷ்ண நீரோட்டம் அத்தேசத்தின் உஷ்ணத் தைக் கூட்டுமெனவும் இதற்கெதிராய்க் குளிர் நீரோட்டம் உஷ்ணத்தைக் குறைக்குமெனவும் அறியலாம். உதாரண மாக முன்னர் கூறப்பெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சமசீதோஷ்ணப் படுத்தும் குடா நீரோட்டம், கிறீன்லாந்துக் கரைப்பாகங்களை உறையவைக்கும் லபிறடோர் நீரோட்டம்

அலைகளும் நீரோட்டங்களும்.
63
என்பவற்றோடு இன்னும் பெருவியன் நீரோட்டம், குறோ சிவோ நீரோட்டம் என்பவற்றையும் எடுத்துக்கொள்வோம். உஷ்ண வலயத்தில் பெரும் பிரதேசம் அமைந்திருப்பினும் இதன் கரையோரம் பாயும் குளிர் நீரோட்டத்தின் பயனால் சூ டு குறைவடைகின்றது. குறோசிவோ நீரோட்டம் வ ட அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்தைக் கிழக்குக் கரை யோரத்திலும் பார்க்க உஷ்ணமுடைய தாய் வைத்திருக் கின்றது.
நீரோட்டமும் மழைவீழ்ச்சியும்.- உஷ்ண நீரோட்டங்களின் மீது படிந்து செல்கின்ற காற்றுக்கள் நிரம்பிய நீரணுவைக் கொண்டுள்ளன. இக்காற்றுகள் வீசுந் திசைப்பக்கத்தமைந்த உஷ்ண நீரோட்ட நாடுகள் நல்ல மழைவீழ்ச்சியைப் பெறு கின் றன. உதாரணமாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் குடா நீரோட்டத்தின் பயனாய் நல்ல மழை வீழ்ச்சியைப் பெறக் குளிர்ந்த பெங்குவாலா நீரோட்டம் பொருந்திய தென்மேற்கு ஆபிரிக்கா சொற்ப மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. படத் தில் இதனைப் பார்த்தறிக.
மூடுபனியும் புயற்காற்றும்.- குளிர் நீரோட்டமும் உஷ்ண நீரோட்டமும் வந்து சந்திக்கும் பகுதிகளில் மூடுபனி புயற் காற்று என்பன அதிகமாக ஏற்படுகின்றன. உதாரணமாகக் குடாநீரோட்டமும் லபிறடோர் நீரோட்டமுஞ் சந்திக்கும் நியூ
பவுண்லாந்துக் கரையோரத்தில் இவ்வாறு நிகழக் காணலாம். 4. நீரோட்டமுஞ் சமுத்திர நீரும்.- நீரோட்டங்கள் இடைவிடாது
சுழன்றோடிக்கொண்டிருக்குங் காரணமாகச் சமுத்திரநீர் சுத்தமாயிருக்கின்றது. நீரோட்டமும் வியாபார முன்னேற்றமும்.- நீரோட்டங்கள் வியாபார முயற்சிக்கும் பல வழிகளில் துணைபுரிகின்றன. உஷ்ண நீரோட்டங்கள் வியாபாரத் துறைகளை உறையாமலி ருக்கச் செய்கின்றன. இன்னும் பாய்க்கப்பல் முதலியன நீரோட்டத்தின் உதவிகொண்டு தமது பிரயாணங்களை விரைவாய்ச் செய்கின்றன. மீன்கள் குளிர்ந்த - ஜலத்தில் வாழுகின்றன. "நீரோட்டமின்றேல் இவை வேறிடங்களிற் காணப்படமாட்டா. ச மு த் தி ர நீரோட்டங்களே மீன்களை
எல்லா இடங்களுக்குங் கொண்டுசென்று கோடிக்கணக் கான மக்கள் உணவாக்கிக்கொள்ள உதவுகின்றன.

Page 43
64
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
வினா க் க ள். (1) அலை என்பதென்ன? அலை செல்லும்போது நீர்ப்பரப்பில் நிகழ் வதென்ன? (2) நீரோட்டமென்பதென்ன? ஏற்படுங் காரணங்களெவை? (3) சீதோஷ்ணவேறுபாடு நீரோட்டத்தை உண்டாக்குகின்றதென்பதை விளக்கும் ஓர் பரிசோதனை கூறுக. (4) நீரோட்டங்கள் வடக்குத் தெற் காயோடாது திசைமாறுங் காரணங்களெவை? (5) அத்திலாந்திக் சமுத் திர நீரோட்டங்களெவை? இரண்டை விளக்கப்படத்தோடு விபரித்துக் குடாநீரோட்டத்தின் பயன்களை யுங் கூறுக. (6) குடாநீரோட்டம் லபிற டோர் நீரோட்டம் இரண்டையும் புற உருவப்படத்தில் வரைந்து காட்டுக. (7) பஸிபிக் சமுத்திர நீரோட்டங்கள் ஐந்து கூறு க. இவற்றுள் இரண்டை விபரித்துப் புறவுருவப் படத்தில் வரைந்து காட்டுக. (8) இந்துசமுத்திர நீரோட்டங்கள் இரண்டு கூறி விபரிக்குக. (9) நீரோட்டத்தின் பயன்க ளென்ன? உதாரணங்காட்டி விபரிக்குக. (10) உலகப் புறவுருவப் படத் தில் பிர தான் சமுத்திர நீரோட்டங்களை வரைந்து காட்டி இவற்றுள் ஐந்தை விபரிக்குக.

11. பவனமும் நீராவிச்செறிவும்
முகில், பனி, மழை முதலியன பூமியைச் சூழ்ந்து பவனமண்டலம் வியாபித்திருக்கின்றது. காலகம் (உப்புவாயு), தீயகம் (பிராணவாயு) என்பன பவ னத்தின் சேர்க்கையான இரு முக்கிய வாயுக்களாகும். நாலு பங்கு காலகத் திற்கு ஒருபங்கு தீயகம் பவனத்திலுண்டு. இன்னும் நீராவி கரியிரு தீயதை (கரிவாயு) முதலியனவும் பவனத்திற் கலந்துள்ளன. இடத் திற்கேற்ப இன்னும் பவனத்தில் தூசியும் செறிந்திருக்கும்.
பவனத்தில் நீராவிச்செறிவு எவ்விடத்தும் ஒரே அளவா யிராது இடம் காலவியல்பு என்பவற்றிற்கேற்பக் கூடியுங் குறைந்துங் காணப்படும்.
பவனத்தின் அமுக்கம். அழுத்தமான மேற்பரப்புள்ள பத்துத் தலையணைகளை ஒன் றின்மேலொன்றாய் அடுக்கினால் அடிப்பாகத்திலுள்ள பத்தாந் தலையணைக்கு அதன் மேற்பாகத்திலுள்ள ஒன்பது தலையணைக ளின் பாரத்தினது அமுக்கமுண்டு. அடிப்பாகத்து இரண்டாந் தலையணைக்கு எட்டுத் தலையணைகளின் பாரத்தினமுக்கமுண்டு. இவ்வாறு அடுத்தடுத்து மேற்புறத் தலையணைகளுக்குப் பாரக் குறைவும் அது காரணமாக அமுக்கக்குறைவும் ஏற்படுகின்றது.
பவ னம் நொய்மையான பொருளாயினும் அதற்கும் ஒருஎடை (பாரம்) உண்டு. பெற்றோல் குதங்களில் மோட்டார்வண்டிகளின் சக்கர றப்பர் வளையங்கட்குக் காற்றடிக்கும்போது காற்றடி கருவி யின் அளவுவட்டத்தில் 5-10-20-30- என்னும் அளவுகளைக்காட்டி அக்கருவியின் முள் சுற்றுகின்றது. 30 என்னுமிடத்தில் முப் பது இறாத்தல் நிறையானபவனம் றப்பர்வளையத்துள் புகுத்தப்பட் டதென்பது அர்த்தமாகும். முன்னரிலும் பார்க்கக் காற்றடிக்கப் பட்ட்பின் மோட்டார்ச்சக்கரம் பளு கூடியிருக்கக் காண்போம். வண்டியில் மாட்டாத வெற்றுச்சக்கரத்தில் இந்த உண்மையை உணரலாம்.
பூமியின் மேற்பரப்பைச் சூழ்ந்து பவ னமண்டலம் 200 மைல் உயரத்திற்கு வியாபித்திருக்கின்றது. ஒரு சதுர அங்குலத்தில் 200 அடி உயரத்திற் பொருந்தும் இப்பவனத்தினது நி  ைற 15 இறாத்தலாகும். எனவே கடல் மட்டமான இடங்களில் ஒரு சதுர

Page 44
66
* உலக பூமிசாஸ்திர விளக்கம்.
தமுமுண், "நாக்கிய, "யமையானது அமுக் கா.
அங்குலத்தில் பவ ம் 15 இறாத்தல் பாரத்தோடு அமுக்குகின் றது. இன்னும் பவனம் ஒரு நொய்மையான பொருளானமையால் அதற்குக் கீழ் நோக்கிய அமுக்கமன்றிப் பக்கம் நோக்கிய அமுக் கமு முண்டு. இந்த அமுக்கங்கள் காரணமாக எமது உடம்பு ஒவ்வோர் சதுர அங்குலத்திலும் 15 இறாத்தல் வீ தம் பவ னத்தின் அமுக்கத் தாக்கத்தைப் பெறுகின்றது. ஆனால் உடம்பின் உட் புறத்துள்ள வெளித் தாக்கத்தோடு இப்பவ 17 அமுக்கத் தாக்க மும் சமன்படுவ தால் நாம் பவ 7 அமுக்கத் தாக்கத்தை உணரு வதில்லை. உயர்ந்த மலை முதலியவற்றில் ஏறும்போது ஆங்கு பவ ன அமுக்கம் குறைவுடைமையினால் நாம் கஷ்டப்படுகிறோம்; மூச்சுவிடத் திண று கிறோம். உயர்வான இடங்களில் பவ எ அமுக் கம் குறைவுபடு தலால் இவ்வாறு ஏற்படுகின்றது.
பவன அமுக்கத்தை அளவிடுதல் பவ ன அ முக்க அளவை அறிவதற்குப் பாரமானி (வாயுமானி) என்னுங் கருவி உதவுகின்றது. ஒரு அங்குலம்வரை சுற்றளவுடைய துர், மூன்று அடிவரை உயரமுடைய தும், ஒரு புறம் வாயடைக் கப்பட்டதுமான ஒரு கண்ணாடிக் குழாயை எடுத்து அதனைப் பாத ரசத்தால் நிரப்புக. பின் னர் வாய்ப் புறத்தைப் பெருவிரலினால் மூடிக் கொண்டு பாதரசம் கொண்டுள்ள இன்னோர் பாத்திரத்தினுள் கண் ணாடிக் குழாயைக் கவிழ்த்து விரலை எடுத்து விடுக. இப்போது கண்ணா டிக் குழாயிலுள்ள பாதரசம் 10 அங் குலம்வரை கீழிறங்கி 30 அங்குல் உயரத்திற்கு நிற்கக் காண்போம்! இவ்வாறு கண்ணாடிக் குழாயுள் பாத ரசத்தை உயர்த்தி நிற்பது பவனத்தின து அமுக்கச் சக்தியாகும்.
கடல் மட்டமான இடங்களில் கண்ணாடிக் குழாயுள் நிரம்பிய பாதரசம் பவன அமுக்க அளவை 30 அங்குல உயரத்திற்குக் காட்டும் என்னும் உண்மையை ஆதாரமாகக் கொண்டு திருந்திய முறையில் "பாரமானி என்னுங் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் தரையினுயர்வு, ஓரிடத்தில் சடுதியாயேற்படும் அமுக்கக். குறைவு,புயற்காற்றின் அறிகுறி போன்ற வியல்புகளை அறிவதற் கும் பாரமானி துணை புரிகின்றது.

பவனமும் நீராவிச் செறிவும்.
57.
பூமியின் மேற்பரப்பைச் சூழ்ந்துள்ள பவ னம் படை படை யாயிருப்ப தாகக் கொள்க. அப்போது கீழ்ப்படை கூடிய அமுக்கத்
விரிந்த குளிர் பவனம்
அடர்த்தியான
தையும் சுருக்கத்தையும் பெறும், மேலுக்குச் செல்லச் செல்ல அமுக்கக் குறைவும் விரிவுங் குளிருங் காணப்படும். உயரங்கூடக் கூட அமுக்கம் குறைதல்பற்றியே பாதரசம் கீழிறங்குகின்றது, மலையுச்சி மலைநாடு போன்ற இடங்களில் பவன் அமுக்கம் குறைவு படு தலால் 1000 அடிக்கு ஒரு அங்குல வீ தம் பாதரசம் கீழிறங் கிக்காட்டும், உதாரணமாக 12000 அடி உயரமுள்ள ஓரிடத்தில் பாதரசம் 30 - 12 = 18 அங்குல உயரத்தில் நிற்கும்,
ஆவிமாற்றமும் தெவிட்டல் நிலையும் ஒரு கண்ணடித் தம்ளரில் உப்பைத் சிறிதுசிறிதாக இட்டுக் கரைத்துவரின் உப்பு இனிமேற் கரைந்துசேராது என்கின்ற ஓர் நிலையை இக்கர்ைவு அடையும். இந்நிலை ''தெவிட்டல் நிலை" என்று கூறப்படும். தெவிட்டல் நிலை யெய்திய இவ்வுப்புக் கரை வுக்குச் சூடுகாட்டின் இன்னும் மேலதிக உப்பு அக்கரைவிற் கரைந்து சேரும், பின் இக்கரைவு குளிர்ச்சி பெறும்போது அதிற்கரைந்த மேலதிக உப்பு சிறுசிறு படிகங்களாகக் கரைவில், உறைந்து காணப்படும்,

Page 45
68
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
டிருக்கும் நிய' முழு அள காபநிலைக்கேற்ப
ஒரு ஈரச்சேலையை வெளியான ஓரிடத்திற் கட்டித் தொங்க விடின் அது உலருகின்றது. ஈரலிப்பாயிருந்த சேலையிலுள்ள நீர் எங்கு செல்கின்றது? இந் நீர் ஆவியாகிப் ப வ ன த் துடன் கலந்து விடுகின்றது. இந்நிகழ்ச்சி ''ஆவிமாற்றம்" எனப்படும். பூமி யின் மேற்பரப்பிற் கிணறு, குளம், வாவி, ஆறு, கடல், சமுத் திரம் என்பனவற்றின் மேல் மட்டங்களிலெல்லாம் சூரியன து காய்வு காரணமாக அ விமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின் றது. இந்நீராவி கண்ணுக்குத் தோற்றா து பவனத்திற் கலந்து விடுகின்றது. குளிர்ச்சியான பவன த்திலும் சூடான பவ னம் கூடுதலான நீராவியைத் தன்னிடத்துக் கொள்ளும் இயல்புடை யது. ஒவ்வோர் தாபநிலையிலும் பவ னம் ஓரளவுக்கு மேற்பட்ட நீராவிபைக் கொள்ளமாட்டாது. தன து தாபநிலைக்கேற்பப் பவ னம் தான்கொள்ளக் கூடிய முழு அளவு நீராவி அ ணுவைக் கொண் டிருக்கும் நிலை 'தெவிட்டல் நிலை”' (Sauraied Point) எனக் கூறப்படும். முன் உப்புக்கரைவுப் பரிசோதனையில் விளக்கியவாறு இத் தெவிட்டல் நிலை அடைந்துள்ள பவனம் சூடுபெற்றுத் தாபநிலை கூடும்போது இன்னும் மேலதிக நீராவி அணுவைக் கொள்ளும். குளிர்ச்சியடைந்து தாபநிலை குறையும்போது மேல திக நீராவியணுக்களை த் துளிகளாக மாற்றிக் கொட்டிவிடும்.
பவனத்தில் நீரணுவுண்டென்பதைக் காட்டும் பரிசோதனை
படத்திற் காட்டியவாறு ஒரு கண்ணாடித் தம்ளரில் பனிக்கட்டித் துண்டுகள் சிலவற்றை இட்டு ஓரிடத்தில் வைக்குக. சிறிது நேர த்தின்பின் தம் ள ரின் வெ ளிப் புறத்தை அவதானித்துப் பார்க் குக. அவ் வெளிப்புறத்தில் நீரணுக் கள் சிறுசிறு துளிகளாகப் படிந்தி
ருக்கக் காணப்படும். கண்ணாடித் தம்ளரைச் சூழ்ந்துள்ள பவ்னம் குளிரும் போது தான் கொண்டுள்ள நீராவியைக் நீராக மாற்றித் தம் ளரின் வெளிப்புறத்திற் ப டி யச் செய்கின்றது.
நீராவி கண்ணுக்குத் தோன்றாதென் முன்னர் கூறப் பெற்றது. ஆனால் இது நிலைமாற்றமடைந்து நீராக மாறும்போது

பவனமும் நீராவிச்செறிவும்.
69
கண்ணுக்குத் தோற்றுகின்றது. முகில், பனி, மூடுபனி, உறை பனி, பனிக்கட்டி, மழை என்பன பலவும் கட்புலனுக்குத் தோற்
றும் நீராவியின் நிலைமாற்றங்களாகும்.)
முகில், பனி, மூடுபனி முதலியன. பவனம் குளிர்ச்சி பெறும்போது அதிற் கலந்துள்ள நீராவி நீர்த்துளிகளாக மாறுமென் முன்னர் விளக்கியுள்ளோம். கண்ணுக்குத் தோற்றும் இந்நீர்த்துளி மிக நுண்மை தொடக்கம் பல பேதங்களிற் காணப்படும். இப்பே தங்கள் முன்னர்க்கூறிய
முகில், பனி, மூடுபனி, மழைத்துளி முதலியனவாகும்.)
கடல் அல்லது தரையிலிருந்து நீரணுக்கொண்ட பவனம் மேலெழும்போது குளிர்ச்சிபெற அப்போது அதிற் செறிந்த நீராவி முகிலாக மாற்றம் பெறுகின்றது. முகிலென்பது காற் றில் மிதந்து செல்லக்கூடிய நுண்ணிய நீர்த்திவலைச் சேர்க்கையே யன்றி நீராவியன்று. பனி மூடுபனியென்பனவும் முகி லுக் கு ஒப்பானவையே. ஆனால் இவை தரையின் மேற்பாகத்திலும் மலைச் சாரல்களிலும் படிந்து காணப்படுகின்றன. நீரணுக்கொண்ட சூடான பவனம் குளிர்ந்த தரையையடையும் போது, அல்லது மலைச்சாரலிற் படிந்து குளிரும் போது அதிற் செறிந்துள்ள நீராவி பனி, உறைபனி என்பனவாக மாறுகின்றது.
மத்திம வலயத்துக் கடற்கரையோரங்களில் மூடுபனி அதிக மாகக் காணப்படும். உஷ்ணவலயப் பிரிவுகளிற் தரைக்கும் பவனத்திற்கும் உஷ்ணபே தம் அதிகமின்மையாலும் மூடுபனி யேற்படல் அதிகங் காணப்படுவதில்லை. ஆங்காங்கு மலைச்சாரல் களில் மாத்திரம் மூடுபனி காணப்படும். மத்தி:மவலயத்தில், பவனத்தில் கரியும் தூசியும் நிரம்பிய கைத்தொழில் நகரங்க ளில், இத்தாசி முதலியவற்றோடு ஒட்டித்திரளும் மூடுபனி (Fog) கூடிய பருமனுடைய தாய்ப் பகலைத் தானும் சில வேளைகளில் இரவுபோலாக்கும் இயல்புடையது.
பனியென்பது பவ னத்திலுள்ள நீ)ணு பூமியிற் படிவதினா லேற்படுவது. ஆகாயத்தில் முகில்படியாத தெளிவான இராக் காலத்தில் பூமி உஷ்ணத்தை விரைவாக வெளிக்கக்கிக் குளிர்ச்சி யடைய, இக் குளிர்ந்த பூமியிற் படிகின்ற பவனமும் விரைவிற் குளிர்ச்சி பெற்று நீரணுவைச் சிறுச் சிறு திவலைகளாக மரங் களின் இலைகளிலும், புற்களிலும், கற்களிலும், வீட்டுக்கூரை முத லியவற்றிலும் படியச் செய்கின்றது. பனிக்கட்டி கொண்ட தம்

Page 46
70
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
ளரின் வெளிப்பாகத்திற் படியும் நீர்த்திவலைக்கு இந்நிகழ்ச்சி ஒப் பான து.
எமது 2 பிரிவுகளில் மாரிகாலங் கழிந்ததும் சூரிய வெப்பங் காரணமாகப் பகற்காலத்தில் கூடுதலான நீராவி பவனத்திற் சேருகின்றது. இராக்காலத்தில் தரையின் குளிர்ச்சி முதலிய ஏதுக்களால் பவனமும் குளிர்ச்சிபெறப் பனி ஏற்படுகின்றது.
மழை ஆறு, குளம், ஏரி, கடல் என்பவற்றின் மேற்பரப்பிலேற் படும் நிரம்பிய ஆவிமாற்றத்தினாலமைந்த முகிலிலுள்ள மிக நுண் ணிய நீர்த்திவலைகள் ஆகாயத்திற் சஞ்சரிக்கும்போது ஒன்றை யொன்று ஈர்த்து ஒன்று கூடுகின் ற ன. இவ்வாறும் இன்னும் பிற ஏ துக்களாலும் இத் திவலைகள் பரு D னடையும் போது பவ னம் இவற்றைத் தாங்கி வைத்திருக்கவியலாது மழைத்துளிகளாகக் கொட்டிவிடுகின்றது. பவ னத்திலுள்ள நீராவி பூமியை மீட்டும் வந் தடையும் முறைகளில் மழை மிகமுக்கியமானது.
ஆலங்கட்டி மழையென்பது பவாம் மிகவும் குளிர்ச்சியடை யும்போது அதிற் செறிந்துள்ள நீராவி நுண்ணிய பனிக்கட்டித் திவலைகளாக மாறிப் பவ ன த்திலுள்ள தூசி முதலியவற்றில் திரட்சியுற்றுச் சிறுசிறு குண்டுகள்போல் வீழ் தலாகும். எனவே உறைந்த மழைத்துளிகளென ஆலங்கட்டி மழையைக் கொள்ளல்
கூடாது.
உறைபனி (Snow) பூமியின் மேற்பரப்பில் ஒவ்வோரிடத்தும் அவ்வவ்விடத்துத் தாபநிலைக்கேற்ப முகில் பவனத்தின் ஓரெல்லைக்கப்பால் உறைந்து காணப்படும். இந்த உயரவெல்லை பனிவரை அல்லது பனிக்கோடு (Snow Line) என்றழைக்கப்படும். மலைகளில் கோடைகால உஷ் ணத்தின்போதும் இப்பனிவரைக்கு மேற்படப் பனிஉருகுதலின்றி எப்போதும் படிந்திருக்கும். துருவங்களையடுத்து இப்பனிவரை கடல்மட்டத்தோடு பொருந் தக் காணப்படும். அன லான காற்று பனிவரைக்கு மேற்படக் காணப்படும் உறைந்த முகில்களிற் றாக் கும்போது அது உருகிப் பின்னரும் குளிர்ப்பவனத்தினூடு வருவதால் உறைந்து உறைபனியாகப் பூமியை வந்தடைகின் றது. மத்திமவலயங்களில் மாரிகாலத்தில் கட்டித் தயிர் போன்ற வெண் உறைபனித் திரட்சிகள் வீட்டுக்கூரைகளிலும், இலையு திர் மரங்களிலும், தரைகளிலும் படிந்து காணப்படல் அழகிய

பவனமும் நீராவிச்செறிவும்.
71
காட்சியாகும். களிமண்ணால் நம் சிறார்கள் பந்து முதலிய வடிவங் கள்செய்து விளையாடல்போல் வெள்ளையர் குழந்தைகள் உறை பனியினால் வீடுகள் கட்டியும் பொம்மைகள் செய்தும் பந்துகள் உருட்டியும் ஆடல்புரிவர்.
வினாக்கள். (1) பூமியின் மேற்பரப் பில் பவன மண்டலம் எவ் வளவு உயரத்துக்கு வியாபித்துள்ள து. (2) பவனத்தின் சேர்க்கை பா ன இரு முக்கிய வாயுக்க ளெவை? பிறி தெவை? (3) பவனத் தில் நீராவிச்செறிவு கூடியுங் குறைந் துங் காணப்படுவதேன்? (4) கடல்மட்டத்தில் ஒரு சதுர அங்குல மேற்பரப்பிற் பவனத் தின் கிறையாது? (5) பவன அமுக்கத்தை நாமேன் உணருவதில்லை? (6) மலை முதலியவற்றிலேறும்போது நாம் மூச்சுவிடக் கஷ்டப்படுவதேன்? (7) பாரமா-னி என்பதென்ன? இதன் உபயோகமென்ன ? (8) 9000 அடி உய ரத்தில் பா சமானியிலுள்ள பாதரசம் எவ்வளவு கீழிறங்கிக் காட்டும்? ஏன்? (9) தெவிட்டல் நிலை என்பதென்ன? இதனை எப்பரிசோதனை மூலம் விளக்கு வீர் ? (10) ஆவி மாற்றம் என்பதென்ன? எவ்வாறு ஏ ற் ப டு கின் ற து? (1) பவனத் தில் 'நீராவின் செவிட்டல் நிலை'' என்பதென்ன? (12) பவனத் தில் நீரணு உண்டென்பதைக் காட்டும் ஓர் பரிசோதனை கூறுக. (13) நீரா வியினது கண் ணுக்கு த்தோற்றும் சில நிலைமாற்றங்கள் கூறுக. (14) முகில், பனி, மூடுபனி, மழை ஒவ்வொன்றையும் விளக்கி எழுதுக. (14) மூடுபனி ஏற்படுவதெவ்வாறு? லண்டனிலும், நியூ பவுண்லாந்திலும் மூடுபனி அதி கம் காணப்படுவதேன் ? (15) ஆலங்கட்டி, உறைபனி, பனிவரை என்பன ஒவ்வொன்றையும் விளக்கிச் சிறு குறிப்பெழுதுக.
தல -

Page 47
12. உலகத்து வீசுங் காற்றுகள்
பூமியினது போர்வையாய் அதனது மேற்பரப்பைச் குழ்ந்து பவனம் வியாபித்திருக்கிறதென நாம் அறிந்தோம். இப்பவனம் பூமிக்கு இயல்பாயுள்ள ஆகர்ஷண த்தின் வயப்பட்டுப் பூமியோடு சுழன்று கொண்டிருக்கின்றது. பூமியின் மேற்பரப்பில் வசிக்கும் நாம் பூமியின் து சுழற்சி வேகத்தை எவ்வாறு உணராமலிருக் கிறோமோ அவ்வாறே பூமியினது சுழற்சியோடு இயங்கிக்கொண் டிருக்கும் பவனத்தின் வேகத்தையும் உணராமலிருக்கின்றோம்.
புகையிரதத்திலேறி நாம் பிரயாணஞ் செய்யும்போது அதன் வேகத்தோடு நாமும் பிரயாணஞ் செய் கி றோ ம். புகையிரதப் பெட்டிக்குள்ளிருக்கும் பவனமும் ஓடும் வண்டியின் வேகத்தோடு இயங்கிக்கொண்டிருக்கின்றது. புகையிரதப் பெட்டிக்குள் நாமும் பவனமும் ஒரே வேகத்திற் செல்வதால் அதற்குள்ளிருக்கும் பவனத்தின் வேகத்தை உணராமலிருப்பதுபோலப் பூமியினது சுழற்சியோடு இயங்குகின்ற நாம் பவனத்தையும் உணராமலிருக் கிறோம்.
சூட்டின் தாக்கம், அதனாலேற்ப்படும் அமுக்கமாற்றம், அமுக் கக் குறைவு, இன்னும் இவை போன்ற பிற ஏதுக்களால் பவ னத்தில் வெவ்வேறான அசைவுகள் தோற்றுகின்றன. பவனத் திலேற்படும் இந்த அசைவுகளை நாம் காற்று என்கிறோம். பவ னத்தை நாம் உணராமலிருந்தாலும் பவனத்தினசைவான காற்றை உடம்பின் ஸ்பரிஸத்தினாலும், மரஞ்செடி முதலியன ஆடி
அசைவதினாலும், இன்ன பிறவற்றாலும் அறிகிறோம். உலகத்தில் வீசும் காற்றுக்கள் பலவகைப்படும். அவற்றுள்
1. சில வருட முழுமையும் ஒரு ஒழுங்குக்கமைய நிலையாய் வீசிக்
கொண்டிருப்பனவாகும். 2. சில பருவ காலங்களுக்கேற்ப அப் பருவகாலங்களோடு
பெயர்ந்து வீசுவனவாகும். 3. சில ஓர் குறித்த இடத்தில் மாத்திரம் அவ்விடத்தின் தன்
மையோடொன் றி மட்டான பாகத்தில் வீசுவனவாகும். 4. சில கடலினதும் தரையின தும் சீதோஷ்ண மாறுபாடுகளுக்
கமைய இயங்குவனவாகும். 5. சில பூமியின் மேற்பரப்பில் சடுதியாயேற்படும் அமுக்கக் குறைவு, சீதோஷ்ண மாறுபாடு என்பவற்றின் வயப்பட் டும் பெரிய பயங்கரத்தோடு புரண்டெழுந்து வீசுவனவாகும்,

உலகத்து வீசும் காற்றுகள்.
73
எந்த இடத்தில் உஷ்ணம் அதிகமாகவிருக்கின்றதோ, அந்த இடத்திலுள்ள பவனம் விரிந்து இலேசாகி மேலெழும். இவ் வெற் Pடத்தை நிரப்ப, இருபக்கங்களிலுமிருந்து பவனம் வரும். இவ் வாறு பவனம் வந்த இடங்களை நிரப்ப முன் மேலெழுந்த பவனம் குளிர்ச்சியுற்றுக் கீழிறங்கும்.
சூரியன் வருடம் முழுவதும் உஷ்ணவலயத்துக்கே அதி உஷ் ணத்தைக் கொடுக்கின்றது. இதனால் நிரட்சத்தையடுத்த பகுதி களிலிருந்து எப்பொழுதும் பவனம் மேலெழுந்துகொண்டிருக்கும்.
-(தெ.ta./- நொபாரக்!
எ .மு வியாபாரக் ' காற்றுகள்
கம் க
அமே மண்டலம்
வம்
ஓவியாபாரக் காற்று
\\//
IT/ITINI |
16 ரட்சி அமை தி மா
1 தெ கீ வியாபாரக் காற்று
மகர அமை தி ம டலம்
வ.மே. எ.மு.வியாபாரக் |
காற்றுகள்
இவ்விடத்தை நிரப்ப மத்திம வலயங்களிலிருந்து பவனம் நிரட் சத்தை நோக்கிவரும்.நீர்நிலைகளில் அலைக ளுண்டாவது போல் ஆகாய விரிவிலும் காற்றுகள் உண்டாகின்றன. நிரட்சப்பகுதி யிலுள்ள பவனம் அசைவதற்குச் சூரிய உஷ்ணமே முக்கிய கார ணமாகும். நிரட்சத்தைச் சூழ்ந்து அதி உஷ்ண மும் அமுக்கக் குறைவுமுள்ள ஒரு மண்டலம் அமைகின்றது. பூமத்திய ரேகைக்கு வட அட்சம் 5° தென் அட்சம் 5 ° க ளுக் கிடையிலமைந்த இம் மண்டலம் நிரட்ச அமைதி மண்டலம் அல்லது 'டோல்ட்றம்ஸ்? (Doldru/12s) என அழைக்கப்படும்.
நாம் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றிக் கையினால், சுழற்று வோமானால் அந்நீரிற் சுழற்சிவேகம் அதிகப்படுமிடத்தில் நீர் குறைந்திருப்பதைக் காணலாம். இதனாலே சுழலக்கூடிய நொய் மையான பொருளின் எப்பகுதியில் சுழற்சிவேகம் அதிகமோ அப்பகுதி தட்டையாகுமென்னும் உண்மை பெறப்படுகிறது. பூமியின் 200 மைல் உயரத்துக்குப் பவனம் நிரம்பியிருக்கின்றது
10

Page 48
74
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
பூமி சுழல்கின்றது. நாடோறுஞ் சுழல்கின்றது; பூமி சுழலும் போது நொய்மையான பவனமும் பூமியோடு சேர்ந்து சுழல்கின் றது. பூமியினது ஏனைய பாகங்களிலும் பார்க்கத் துருவப்பகு தியே அளவிற் குறுகியது. ஆகையினால் துருவப்பகுதிகளில் சுழற்சி வேகமும் அதிகமாயிருக்கும். இது காரணமாகத் துருவப் பக்கங்களிலுள்ள பவனம் • விலக்கப்பட்டு மத்திம வலயங்களை நோக்கி வரத்தொடங்கும், சூரியனது உஷ்ணத்தினால் நிரட்சப் பகுதியிலுள்ள பவனம் விரிந்து மேலெழுந்து மத்திமவலயங்களை நோக்கிச் செல்கின்றதென முன்னர் அறிந்தோம். எனவே துருவப் பகுதிகளிலிருந்தும் நிரட்சத்திலிருந்தும் மத்திம வலயங்கள் இரண்டிலும் பவனம் வந்து கீழிறங்குங் காரணத்தால் அப்பகுதி களில் பவன அமுக்கம் மிக அதிகமாயிருக்குமென்பது வெளிப் படை. அப்படி அமுக்கங்கூடிய இடங்கள் வடஅட்சம் 30°, தென்
அட்சம் 30° என்பனவாகும்.
மத்திம வலயங்களில் மேற்குறித்த இரு இடங்களிலும் பவனம் கீழிறங்க உஷ்ணவலயத்திலும் சீதளவலயங்களிலுமுள்ள பவனம் மேலெழும். மேலெழுந்த இடங்களை நிரப்பப் பவன அமுக் கங்கூடிய இடங்களான வட தென் அட்சம் 30-ம் பாகைகளி லிருந்து நிரட்சத்தை நோக்கியும் துருவங்களை நோக்கியும் பவனம் செல்கின்றது. எனவே நிரட்சத்தை நோக்கி இரு காற்றுக்களும், வடதுருவத்தை நோக்கி ஒரு காற்றும், தென் துருவத்தை நோக்கி ஒரு காற்றுமாக உலகில் நான்கு பிரதான காற்றுகள் வீசுகின் றன், இன்னும் பிற காற்றுகளுமுள. உலகில் வீசும் காற்றுக்கள் அவைகளின் தன்மைக்கேற்ப
(1) முறைமைக்காற்றுகள், (2) எதிர் முறைமைக்காற்றுகள் அல்லது மேல்காற்றுகள், (3) பருவப்பெயர்ச்சிக் காற்றுகள், (4) தரைக்காற்று, கடற்காற்று, (5) சுழல்காற்று, எதிர்ச் சுழல்காற்று, (6) புயற்காற்று (7) சூறாவளி,
(8) மணற்காற்று, என வெவ்வேறு பெயர் கொண்டழைக்கப்படுகின்றன.
முறைமைக் காற்றுகள் நிரட்சப் பகுதியிற் சூரியனது வெப்பங் காரணமாகப் பவனம் இலேசாகி, மேலெழுமெனவும், இவ்வாறு மேலெழுந்த வெற்

உலகத்து வீசுங்காற்றுகள்.
75
றிடத்தை நிரப்ப மத்திம வலயங்களிலிருந்து இரு காற்றுகள் வீசுமெனவும் முன் னர் வாசித்தோம். இக்காற்றுகள் வருட் முழுமையும் ஓர் ஒழுங்குபற்றி வீசுகின்றமையால் முறைமைக் காற்றுகள் எனவும், முன்னை நாட்களில் வியாபாரிகளின் கட ற் பிரயாணத்திற்கு மிகுதுணை புரிந்தமை காரணமாக வியாபாரக் காற்றுகள் எனவும் அழைக்கப்படுகின் ற ன.
* வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் நிரட்சத்தை நோக்கி வீசுங் காற்றுகள் பூமியி னது சுழற்சி காரணமாக நேராக வீசாது வடகீழ்த் திசையிலிருந்தும் தென்கீழ்த் திசையிலிருந்தும் வரு வனபோற் சாய்வுறுகின்ற ன. வடகோளார்த்தத்தில் நிரட்சத்தை நோக்கி வீசும் இக்காற்று வடகீழ் முறைமைக் காற்று அல்ல து வட கீழ் வியாபாரக் காற்று எனவும், தென் கோளார்த்தத்தில் நிரட்சத்தை நோக்கி வீசும் இக்காற்று தென் கீழ் முறைமைக் காற்று அல்லது தென் கீழ் வியாபாரக் காற்று எனவும் பெயர்கள் பெறுகின்றன.
வியாபாரக் காற்றுகள் பொதுவாக வட அட்சம் 35-ம்-9-ம் பாகைகளுக்கிடையிலும் தென் அட்சம் 30-ம்-1 -ம் பாகைகளுக் கிடையிலும் வீசுகின்றன. ஆனால் சூரியன் மகர ரேகையில் உச் சங் கொடுக்கும்போது இக் காற்றுமண்டலம் இன்னும் கூடுத லாகத் தெற்கே கீழிறங்கி வீசுகிறது.
மேல் காற்றுகள் மத்திம வலயங்களிருந்து வடதுருவத்தை நோக்கி ஒரு காற் றும், தென் துருவத்தை நோக்கி ஒரு காற்றுமாக இரு காற்றுகள் வீசுமென முன் னர் கூறப்பெற்றது. இவை மேல் காற்றுகள் (Westerlies) எனப் பெயர்பெறுவதோடு வடதுருவத்தை நோக்கி வீசுங்காற்று தென்மேல் எதிர்முறைமைக் காற்று அல்லது தென் மேல் எதிர் வியாபாரக் காற்று எ ன வு ம், தென் துருவத்தை நோக்கி வீசுங்காற்று வடமேல் எதிர்முறைமைக் காற்று அல்லது வடமேல் எதிர் வியாபாரக் காற்று எனவும் தாம் வருகின்ற திசை களோடொன்றியும், முறைமைக் காற்றுகளுக்கு எதிர்ப்புறம் வீசும் தன்மையோடொன் றியும் பெயர்கள் பெறுகின்றன.
* பால் (Ferrel) என்பவர் கண்டுபிடித்த உன்மையின்படி அசையும் பொருட்களான காற்று, சமுத்திரநீரோட்டம், ஆறு கள் என்பன வட கோளார்த்தத்தில் தாம் செல்லுந் திசைக்கு வலப்புறஞ் சாயுமென்றும் தென் கோளார்த்தத்தில் இடப்புறஞ் சாயுமென்றும் அறியலாகும்.

Page 49
10" க்குக் கீழ் 10" - 40ா வரை
40"க்கு மேல் --- திலை யான காற்று - பருவப் பெயர்ச்சி:கரத்து
மா ரின் காற்று!
4: கே.4ாட்
உதவிக்காற்றும் உலக மழைவீழ்ச்சியும்.

உலகத்து வீசும் காற்றுகள்.
77
தென்கோளார்த்தத்தில் 40-ம் 50 -ம் பாகைகளுக்கிடையில் நிலப்பாகம் அதிகமின்மையால் இம் மேல் காற்று மிகவும் உக்கிர மாக வீசிக் கர்ச்சிக்கும் நாற்பது (Roce?ing Fords) அ ல் ல து "வலுக்கூடிய மேல் காற்று கள்” Br 20e //rst I/ vids) என்னும் பெயர் கள் கொண்டழைக்கப்படுகின்றது.
காற்றும் மழைவீழ்ச்சியும்.- வியாபாரக் காற்றுகள் குளிர்ந்த பிரதேசங்களிலிருந்து உஷ்ணப் பிரதேசங்களுக்கு வருவன கார் ண மாக அதிக நீரணுச் செறிவுடையன் வல்ல. எனினும் அவை வடகிழக்கிலிருந்து வீசுவதால் தம்மிடம் பொருந்தியுள்ள மட் டான நீரணுவையேனும் மழையாக மாற்றிக் கிழக்கு நாடுகளுக்கு உதவுகின்றன, எனவே உஷ்ண மண்டலத்தில் வியாபாரக் காற் றுப் பிரதேசங்களிற் கிழக்குப் பாகங்கள் மழையுடையனவாகவும் மேற்குப் பாகங்கள் வரட்சியுடைய வனாந்தரங்களாகவும் காணப் படுகின்றன. இந்தியாவின் மேற்கில் ரஜபுத்தானா, ஆசியாவின் மேற்கில் அரேபியா, பேர்சியா, இன்னும் ஆசியாவின் மேற்குத் திசையில் ஆபிரிக்காவிலுள்ள சகாரா என்பன வனாந்தரங்களா யிருப்பதற்கு இதுவே காரணமாகும்.
மேல்காற்றுகள் 35-ம்-65 -ம் பாகைகளுக்குட்பட்ட இடங் களில் வீசுகின்றன, இவை முதலில் மேற்குக்கரை நாடுகளிற் படிகின்றன. எனவே உஷ்ண மண்டலத்துக்கப்பால், நாடுகளின் மேற்குக் கரைகள் மழைவீழ்ச்சியுடையனவாகவும், கிழக்கு ப் பாகங்கள் வரட்சியுடையனவாகவுங் காணப்படுகின்றன. ஐரோப் பா, தென்சிலி, நியூசிலாந் து என்பவற்றின் மேற்குக் கரை கள் நிரம்பிய மழைவீழ்ச்சி பொருந்தவும் கிழக்குக் கரைகள் வரட்சி பொருந்தவும் இருப்பதற்கு இதுவே காரணமாகும்,
அமைதி மண்டலங்கள்.- உலகில் மூன்று அமைதி மண்ட லங்களுள. நிரட்சத்துக்கு வட அட்சம் 5-ம் பாகை, தென் அட் சம் 5-ம் பாகை என்பவற்றுக்கிடையே அமைந்த நிரட்ச அமைதி மண்டலம் (டோல்ட்றம்ஸ்) பற்றி முன்னருங் கூறப்பட்டது. இம் மண்டலத்தில் பவனம் பக்கஞ்சாய்ந்து அசைதலின்றி அதிஉஷ் ணம் காரணமாகப் நேரே மேலெழுந்துகொண்டிருப்பதால் காற்று வீசுதலில்லாததுபோன்ற ஓர் அமைதி ஏற்படுகின்றது. மேலே ழுந்துகொண்டிருக்கும் ப வ ன ம் குளிர்ச்சியுற்று இவ்வமைதி மண்டலத்தில் எக்காலமும் நிரம்பிய மழை வீழ்ச்சியைக் கொடுக் கின்றது. நிரட்சத்தைச் சூழ்ந்துள்ள உ ஷ் ண ம் பருவகாலங்க ளோடு வடக்கும் தெற்கும் அசைவுற இவ்வமைதி மண்டலமும் மேலுங் கீழும் இடம்பெயர்கின்றது. 73-ம் பக்கப் படம் பார்க்குக.

Page 50
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
- கற்கடக மகர ரேகைகளுக்கிடையில் முறைமைக்காற்று மேல் காற்றுகளிக்கிடைப்பட்ட பாகங்களிலும் இரு அமைதி மண்டலங் கள் ஏற்படுகின்றன. இம் மண்டலங்களில் குளிர்ந்த பவனம் எப் பொழுதும் கீழிறங்குவதால் அமைதி ஏற்படுகின்றது. இவை முறையே கற்கடக மகர அமைதி மண்டலங்கள் அல்ல து ''குதிரை அட்சங்கள்" (Horse Latitudes) என அழைக்கப்படும். இம்மண்டலங்களில் பவனம் எந்நேரமும் கீழிறங்குகின்றமையால் அதாவது குளிர்மண்டலத்திலிருந்து உஷ்ண மண்டலத்திற்கு வருகின்றமையால், சூடு அதிகரிக்கப்பெற்று நீர்த்துளி மாற்றம் நிகழ்வதில்லை. உ ல கி ல் அ நே க வனாந் தரங்களெல்லாம் இவ் வமைதி மண்டலங்களிற் காணப்படுகின்றன. ரஜபுத்தானா, பேர் ஸியா, அரேபியா, சகாரா, கலிபோர்ணியா பாலைவனங்கள் கற் கடக அ  ைம தி மண்டலத்திலும், அவுஸ்திரேலியா, கலகாரி, அற்றகாமா பாலை வ ன ங் க ள் மகர அமைதிமண்டலத்திலும் அமைவுற்றிருக்கின்றன.
கடல் தரைக் காற்றுகள்
த (பைர்
கடற்காற்று - பகல்.
தரைக்காற்று -இரா. ஒரு பாத்திரத்தில் மணலையும் வேறோர் பாத்திரத்தில் நீரை யும் வைத்து ஒரே முறையிற் சூடாக்கின் மணல் நீரிலும் பார்க்க விரைவிற் சூடாகிவிடும், இதனாலே தரை சலத்திலும் பார்க்க விரைவிலே சூட்டைப் பெறுமென நாம் அறிந்துகொள்ளலாம். எப்பொருள் விரைவாக உஷ்ணத்தைப் பெறுகின்றதோ அப் பொருள் விரைவிலே குளிர்ந்து விடும். எப்பொருள் உஷ்ணத் தைப் பெற அதிக நேரஞ் செல்கின்றதோ அப்பொருள் குளிரவும் அ தி க நேரஞ் செல்லும். தரை விரைவிலே உஷ்ணத்தைப் பெற்று விரைவிலே குளிர்ந்து விடும். சலம் இதற்கு மாறாக இருக்கும்.

உலகத்து வீசுங்காற்றுகள்.
79
கடற்காற்று என்பது பகற் காலத்திற் கடலிலிருந்து கரை யோர நாடுகளுக்கு வீசுங் காற்றாகும்.
தரை கடலிலும் பார்க்க விரைவில் உஷ்ணத்தைப் பெறு வதனாலே பகலில் தரையின் மேலுள்ள பவனம் விரிந்து மேலெ ழும். அவ்விடத்தை நிரப்பக் கடலிலிருந்து பவனம் தரையை நோக்கி வரும். கடலிலிருந்து வருவதினாலே கடற் காற்று எனப் பெயர் பெறுகின்றது. காலை 9 மணி தொடக்கம் மாலை 9 மணி வரையும் இக் காற்று வீசும். பிற்பகல் 2 மணியளவிலே தான் மும்முரமாக வீசும்.
தரைக் காற்று என்பது இராக்காலத்தில் தரையிலிருந்து கடலை நோக்கி வீசுங் காற்றாகும்.
நீர் தரையிலும் பார்க்க நெடுநேரஞ் சென்றே உஷ்ணமாகு மென் றும், நீர் குளிரவும் நெடு நேரஞ் செல்லுமென் றும் முன்னர் அறிந்தோம். கடலானது இராக்காலத்தில் தன்னிடத்துள்ள உஷ்ணத்தை வெளியேவிட அ ப்  ேப ா து பவனம் மேலெழும். அந்த இடத்தை நிரப்புவதற்குத் தரையிலிருந்து காற்றுவரும். இது தரையிலிருந்து வீசு தலின் தரைக்காற்றெனப் பெயர்பெறு கின்றது. இரவு 9 மணி தொடக்கம் காலை 9 மணி வரையும் இக் காற்று வீசும்.
கடற்கரைகளில் வசிப்போர் இவ்விரு காற்றுக்களையும் நன்கு கவனிக்கலாம், கடற்கரை நாடுகளுக்கே இவை உரியன.
பருவப்பெயர்ச்சிக் காற்றுகள் கடற்காற்று தரைக்காற்றுகளின் நிகழ்ச்சி போன்றதே பரு வப் பெயர்ச்சிக் காற்றுகளுமாகும். முந்தியவை பகல் இரா போன்ற குறுகிய காலவெல்லைகளில் வீ சு வ ன. ஆனால் பிந் தியவை மாரி கோடை என்கின்ற காலங்களோடு தொடர்புற் று ஒவ்வொன்றும் ஆறுமாத காலம்வரை நீடித்து வீசுபவை.
ஆசியாக் கண்டத்திலே நிரட்சரேகை இந்து சமுத்திரத்தி னூடாகச் செல்கின்றது. நிரட்சத்துக்குத் தெற்கே இந்து சமுத் திரத்தில் மிகச் சில தீவுகளேயன்றித் தரைப்பாகங் கிடையாது. தென்பாகம் பரந்த சமுத்திரமாக இருப்பதுபோல் வடபாகம் பரந்த நிலமாக விருக்கின்றது. சூரியன் கற்கடக ரேகையில் நிற் கும்போது ஆசியாவின் தரையின் மேலுள்ள டவனம் விரிந்து மேலெமும், இந்த இடத்தை நிரப்புவதற்கு நிரட்சத்துக்குத் தெற்கே இந்து சமுத்திரத்திலிருந்து நீராவியையடக்கிய காற்று வீசுசின்றது. சூரியன் கற்கடக ரேகையில் நிற்பதனாலேயே இக்

Page 51
80
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
காற்று நிரட்சத்தைக் கடந்து பரல் பிரமாணப்புடி வலப்புறமாகத் திரும்பி வீசும், இவ்வாறு வீசும்போது தென்மேல் பருவப்பெயர்ச் சிக் காற்று எனும் பெயர்பெறும்.
தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றானது இந்து சமுத்திரத் திலிருந்து நீராவியை அதிகமாக அடக்கிச்சென்று இந்தியாவை யடைந்து இரு பிரிவாகின்றது. ஒன்று அரபிக்கடல் வழியாக மேல்காற்றாடி மலைகளின் மேற்குப் புறத்திலே மழையைப் பெய்து அவ்வழிச் சென்று தபதி - நருமதை நதிகளின் வழியாக இந்தி யாவினுள்ளே செல்கின்றது. அங்கே சாத்பூரா - இந்திய மலைகளை யடைந்து அவ்விடங்களிலும் மத்திய மாகாணத்திலும் நல்ல மழையை வருஷித்து ரஜபுத்தானத்தை அடைகின்றது.
நற்றைய பிரிவு வங்காள விரிகுடாவின் வழியாகச் சென்று பர்மாவையடைந்து யோமா மலையில் நல்ல மழையைப் பெய்து பிரமபுத்ரா வெளியையடைகின்றது. இமயமலை அப்பாற் செல்ல விடாது தடுக்கக் கங்கைச் சமவெளிகளில் நல்ல மழையைக்கொடுக் கின்றது. இக்காற்று வீசுந் திசைக்கெதிரே காசிக் குன்று இருத் தலின் விசேடித்த மழை அங்கேயுண்டு. உலகில் அதிக மழை பெறுமிடம் காசிக்குன்றேயாகும்: ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங் களிலே தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று நன்றாக வீசும் இக்காற்றும், மிக வேகமானது. இதைவிடப் பிறிதோர் பருவப் பெயர்ச்சிக் காற்றுமுண்டு. அதுவே வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்று எனப்படுவது.
சூரியன் மகரரேகைப் பகுதியில் உச்சங் கொடுக்கும்போது நிரட்சத்துக்குத் தெற்கே இந்து சமுத்திரத்தின் மேலுள்ள பவ னம் இலேசாகி மேலெ ழும். அவ்விடத்தை நிரப்பும்படி ஆசியாக் கண்டத்தின் மத்திய பாகத்திலிருந்து பவனம் வடகிழக்காய் வரும். இதனையே வடகீழ்ப்பருவப்பெயர்ச்சிக்காற்று என்கிறோம். இக்காற்று தரையிலிருந்து வருவதனாலே மிக வரண்ட தாயிருக் கும். ஆயினும் வங்காள விரிகுடாவின் வழியாய் வரும்போது நீரா வியை அடக்கிவந்து கீழ்காற்றாடி மலையினாலே தடையுண்டு அங்கு மழையைக் கொடுக்கின்றது. இக்காற்றின் ஒரு பகுதி இலங்கை யின் வட, கீழ் பாகங்களிலும் வீசுவதினாலே அப்பகுதிகளும் நல்ல மழையைப் பெறுகின்றன. ஒக்ரோபர், நவம்பர், டிசெம்பர் மாதங் களிலே இக்காற்று நன்றாக வீசும், இதுதென்மேல் பருவப்பெயர்ச் சிக் காற்றைப்போல் அவ்வளவு வேகமான தன்று. பெய்விக்கும் மழையும் குறைவானதே.

உலகத்து வீசுங் காற்றுகள்.
இலங்கையில் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக்காற்று வாடை என்றும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று சோழகம் என்றும் பெயர்பெறும்.
சுழல்காற்றுகள்.
8)
29-9
சுழல்காற்று
எதிர்ச் சுழல்காற்று
படத்திற் காட்டியபடி ஆகாய விரிவில் ஓரிடத்தின் நடுப் பாகத்தில் பவன அமுக்கம் கு ைற ந் தும் , சுற்றுப்புறங்களில் போகப் போக அமுக்கம் கூடியுமிருக்குமானால் சுற்றுப்புறங்க ளிலிருந்து நடுப்பகுதியை நோக்கிக் க ா ற் று வீசும். இப்படி வீசும்போது பூமி சுழல்வதனால் இக்காற்றும் சுழன்று வீசும். இதனையே சுழல் காற்று என்பர். சில பாகங்களில் ஓரிடத்திற் பவன அமுக்கங் குறைந்தும் சுற்றுப் புறங்களில் அமுக்கங் கூடி யும் இருக்கும்போது சுற்றுப்புறம் நோக்கி இக்காற்று வீசும்.
இதனை எதிர்ச் சுழல் காற்று என்பர்.
சுழல்காற்றில் இருவகையுண்டு. அவையாவன -
1. உஷ்ணமண்டலச் சுழல்காற்று. 2. மத்திமமண்டலச் சுழல்காற் று.
உஷ்ணமண்டலச் சுழல்காற்று சில நூறு மைல்வரை அகல முடைய தாய், மிகப் பலத்தோடு கூடி நடுவிற் சுழலுந் தன்மை யுடைய தாய்க் கப்பல் முதலியவற்றிற்கு அபாயம் விளைப்ப தாய்க் காணப்படும். முகில், மழை என்பவற்றோடு கூடி, ய இச் சுழல்
11

Page 52
82
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
காற் று பருவப்பெயர்ச்சிக் க ா ற று க ளி ன் இடை மாதங்களில் அ தாவ து மார்ச் - ஏபரல், ஒக்டோபர் - நவம்பர் மாதங்களில் அதிகமாக வங்காளக்குடாக்கடலில் தோற்றக்காணப்படும். சீனக் கடல்களில் இக்காற்று 'தைபூன்ஸ்' என்னும் பெயர் கொண் டும், மேற்கிந்தியக் கடல்களில் 'ஹரிக்கேன்ஸ்' என்னும் பெயர் கொண்டும் அழைக்கப்படும். அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தென்கீழ்ப் பாகத்தில் இக்காற்று மிகவுங் குறுகிய அகலமும் அ தி உயரமும் பொருந்திய தாய் 'தொறான்டோஸ்' என்னும் பெய ரோடு சிறிதுநேரம்வரை நீடித்து வீசும். ஆனால் இக் குறுகிய நேரத்தில் இது செய்யும் அழிவுக்கு எல்லையில்லை. நடுவில் வெற் றிடமாய் விரைந்து செல்லும் இக்காற்று தன்பாதையிலெ திர்ப் படும் மரங்கள் வீடுகள் அனைத்தையும் புரட்டிச் செல்லுமியல் புடைய து. சூறாவளி என நாம் அழைப்பதும் நம் நாட்டில் வீசும் இத் தகைய இயல்புடைய ஓர்வகைக் காற்றேயாகும். இக்காற்று களால் இடையிடை ஏற்படும் பெருஞ் சேதங்களைப் பத்திரிகைகள் வாயிலாக அறிகிறோம்.
மேல் காற்றுப் பிரதேசங்களில் மத்திமவலயச் சுழல் காற்று பொதுவாகக் காணப்படும். இக்காற்று ஆயிரம் மைல்வரை அகல் முடைய தாய் மேல்காற்றோடு கூடிக் கிழக்கு நோக்கி இயங்கும் இயல்பின து. உஷ்ண வலயச் சுழல்காற்றைப் போல் இது அதி கம் பலமுடையதல்ல.
வடகோளார்த்தத்தில் சுழல்காற்று இடப்பக்கமாகவும் தென் கோளார்த்தத்தில் வலப்பக்கமாகவும் சுழன்று வீசும்.
சுயதேசக் காற்றுகள் (Local winds) மேற்கூறிய காற்றுகளைவிட உலகின் சிற்சில பகுதிகளில் அவ்வப்பகுதிகளின் சில ஏதுக்களை முன்னிட்டு எழுந்து வீசும் ஊருக்குரிய காற்றுகளுமுண்டு. இக்காற்றுகள் அவ்வப்பகுதி களின் சுவாத் தி ய நிலையை, விசேடமாகச் சீதோஷ்ண த் ைத மாற்றஞ் செய்வதற்குத் துணைபுரிகின்றன. அல்ப்ஸ் பிரதேசத் தில் வீசும் போன் (Foh.0) என் னும் உஷ்ணக்காற்றும், றொக்கீஸ் பிரதேசத்தில் சும் ஷினூக் (CPhonook) என்னும் உஷ்ணக்காற்றும் அவ்வப்பாகங்களில் பனியை விலகச்செய்து புல்வெளிகளைக் கால் நடைகளின் மேய்ச்சலுக்கு வசதியாக்கித் தானியங்களைப் பழுக்கச் செய்யவும், இன்னும் இவை போன்ற பிற நன்மைகட்கும் உதவு இன் றன. சகாராப் பாலைவனத்தில் சிறக்கூ என்னும் மணற்காற்று புரண்டெழுந்து வீசும். இவைபோல் இன்னும் பல "சுயதேசக்

உலகத்து வீசுங் காற்றுகள்.
83
காற்றுகளுள. கச்சான், கொண்டல் எ ன் னு ங் காற்றுகள் எம் மூரிற் குறிப்பிடத்தக்கவை.
- வினாக்கள். (1) காற்று என்பதென்ன? அது வீசு தலை எவ்வாறு அறிகிறோம்? (2) காற்று வீசும் சில காரணங்கள் கூறுக (3) உஷ்ண வலயம். மத்திம வலயங்களிற் காற்றுகள் வீசுமாற்றை விளக் கப் படத்தோடு விபரிக்கு க. (4) காற்று, நீரோட்டம் என்பவற்றின் திசைபற்றிப் பால் என்பவர் கண்டு பிடித்த உண்மையென் ன? (5) உலகில் வீசும் 3 காற்று களின் பெயரும் அவை ஒவ்வொன்றும் வீசும் ஒவ்வோர் நாடுங் கூறுக? (6) முறைமைக் காற்று, மேல்காற்று ஒவ்வொன்றையும்பற்றி நீர் அறிந்தவற்றைக் கூறுக. (7) கடற்காற்று, தரைக்காற்று, பருவப்பெயர்ச்சிக் காற்று ஒவ்வொன்றை யும் பற்றி விபரித்தெழுதுக. பருவப்பெயர்ச்சிக் காற்றின் பயன்களை விளக்கி அவை வீசும் மூன்று நாடுகள் கூறுக (8) இப்போது இலங்கையில் வீசுங் காற்றெது? இது இவ்வாறு வீசுவதற்குக் காரணமென்ன? (9) சுழல் காற்று, எதிர்ச் சுழல் காற்று என்பன என் ன? விளக்கப் படத்துடன் விபரிக்குக. (10) அமை திமண்ட லம். டோல்ட் றம்ஸ் , கர்சிக்கும் நாற்பது, குதிரை அட்சங்சள், சைபூன்ஸ். ஹறிக்கேன்ஸ், தொறான்டோல், சூறாவளி, போன், ஷினூக் ஒவ்வொன்றையும்பற்றிச் சிறு குறிப் பெழுத க.

Page 53
உலகின் ஜனவரி சமசீதோஷ்ண ரேகைகள்.
7 13 இ
இ
60
கற் கடகம்
80'
முசி நீல்
நிரட்சம்,
மகரம்
60
60°
400
ஜே
40
3

13. சீதோஷ்ணம்
வருடத்தின் எக்காலமும் நாம் ஒரே தன்மையான சீதோ ஷ்ண ஸ்திதியைப் பெறுகிறோமில்லை. ஒரு தினம் இன்று வெயில் தாங்கமுடியவில்லை என்கிறோம். இன்னொரு தினம் இன்று குளிர் தாங்கமுடியவில்லை, என்கிறோம். ஒருதினம் பனியால் நடுங்கு கிறோம். இன்னொரு தினம் மழைக்குளிரினால் விறைக்கின்றோம். இவ்வாறு சீதோஷ்ண நிலை தினமும் மாறி க் கொண்டிருக்கக் காண்கிறோம்.
கொதி
நிமெ
: பம்பாயபாமா
பூமியின் மேற்பரப்பைச் சூழ்ந்து ப வ ன மண்டலம் வியா பித்திருக்கிறதென முன்னர் வாசித்துள்ளோம். சூரிய னது கிணங் கள் பூமியை வந்தடையும்போது இப்பவன ம ண் ட ல த்  ைத ஊடுருவி வருகின்றது. ஆனால் இது காரணமாகப் பவனம் அதி கம் உஷ்ணம் பெறுவதில்லை. ஆனால் சூரியகிரணம் பூமியிற் படிந்து தரையைச் சூடாக்க, இத் தரையிற் படிகின்ற பவனம் பூமி வீசும் சூட்டினால் உஷ்ணமடைகின்றது. உ ய ர ங் கூடக்கூடப் பவனத்தில் அமுக்கக் குறைவும் குளிர்ச்சியுங் காணப்படுகின்றது. 67-ம் பக்கப் படம் பார்க்குக.
ஓரிடத்தின் சீதோஷ்ண த்தை அறிவதற் குத் தாபமானி என்னுங் கருவி உபயோகப்படு கின்றது. பரன் கீட் தா ப ம ா னி அளவின்படி குளிர்ந்த பனிக்கட்டி 32°F எனவும், கொதிக்கும் நீரிலிருந்தெழும் நீராவி 212 Fஎனவும் கொள்ளப் படும். இவற்றிற்கிடைப்பட்ட பகுதி 180 பாகங் ளாகப் பகுக்கப்பட்டு 33 F' 349 F என அளவுகள் குறிக்கப் படுகின்றன. இன்னோர் வகைத் தாப் மானியுமுண்டு. இது 'சென்றிகிறேற்' தாபமானி என்றழைக்கப்படும். இத் தாபமானியில் உறையும் பனிக்கட்டி 0° அளவையும், கொதிக்கும்நீர் 100
அளவையும் காட்டும்.
53 : 8 ஐ ஐ 8 88 8 8 88 இது 2 GB 2 3 டி பிள்யப்பார்ப்பார்ப்பார்பராமாரார்ரார்ராம்பபபாபாபாபாபறுமா
உடா சூC)
பயாப்பாய் யாrintETாாபப்ளாப்பாம்பாப்பாப்பு
உவரி நி.
பிரபல தினசரிப் பத்திரிகைகளில் ஒரு நாட்டினது பிரதான பிரிவுகளின் அவ்வத்தினச் சீதோஷ்ண நிலை அட்டவணை வெளி வரக் காண்போம்.

Page 54
உலகின் ஜூலை சமசீதோஷ்ண ரேகைகள்.
- 20*
చెలి
40
கற் கடகம்
உ ள
நிரட்சம்
மகரம்
60°
(60)
3
400

சீதோஷ்ணம்.
* 1954-ம் ஆ நவம்பர் 23-ம் திகதி இலங்கையின் பிரதான பட் டினங்களின் சீதோஷ்ண நிலையும் மழைவீழ்ச்சியும் வருமாறு -
88
70
64
72 70
72 71 76
அனுர தபுரி பதுளை
மட்டக்களப்பு கொழும்பு தியத்தலாவை காலி
அம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் கண்டி குருநாகல் மன்னார்
நுவரெலியா புத்தளம் - றத்மலானை இரத்தினபுரி தலவாக்கொல்லை திரிகோணமலை
66
0 - 53 0 - 28
0 .00 '0 - 01 0 - 53 ) • 00 0 - 00 0 - 02 1 - 07 0.68. 0 • 00 0 - 31 (0) - 38 0 - 00 (0 - 63 1. 92 0 - 35
72
71
62
81
73
இத்தினத்தில் யாழ்ப்பாணத்தின் கூ டி ய உஷ்ணம் 84° குறைந்த உஷ்ணம் 76° எனக் குறிக்கப்பட்டால் யாழ்ப்பாணத் தில் அத்தினம் பகல் ஒரு நேரத்தில் அதி கூடிய உஷ்ணத்தின் போது தாபமானி காட்டிய அளவு 84° F எனவும், இரவு நேரத் தில் மிகக் குளிர்ந்திருக்கும்போது தா ப மானி காட்டிய அளவு 76° F எனவுங் கருதப்படும்.
பூமியின் மேற்பரப்பில் சூ ரி ய ன து நேரான கிரணங்கள் படியும் நிரட்சத்தையடுத்த பாகங்களில் உஷ்ணம் எப்போதும் கூடு தலாகக் காணப்படும், கற்கடக மகர ரேகைக ளுக்கிடைப்பட்ட இப்பிரதேசம் (உஷ்ணமண்டலம்" என அழைக்கப்படுவது இது பற்றியேயாகும்., உஷ்ண மண்டலத்திற்கு இரு பக்கங்களிலும் ''மத்திமவலயம்" அமைகின்றது. இம்மண்டலங்களில் சூரியனது சாய்ந்த கிரணங்கள் படிவது காரணமாக உஷ்ணமோ குளிரோ அதிகமிராது மத்திமமாய்க் காணப்படும். மத்திமவலயங்களுக் கப்பால் வடக்கேயும் தெற்கேயும் சூரியானது அதிசாய்ந்த கிரணங் கள் வருடத்திற் சிலகாலத்தில் மாத்திரம் படிவது காரணமாக

Page 55
88
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
அப்பாகங்கள் குளிர் மிகக் கூடியனவாய்ச் சீதளவலயம்' என்னும் பெயரைப் பெறுகின்றன. சீதளவலயத்தில் வருடத்தின் பெரும் பகுதிகாலம் தரை பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும்.
ஓரிடத்தின் சீதோஷ்ண நிலையை மாறுபடுத்தும் ஏதுக்கள்.- (1) அட்சம். - சூரியனது நேரான கிரணங்கள் படிவதும் கூடிய
பகல் கொண்டதுமான" உஷ்ணவலயம் உஷ்ணம் கூடியும், சூரியன து சாய்ந்த கிரணங்கள் படிவதும் குறுகிய பகல்
சூரிய கிரணங்கள்
சூரிய கிரணங்க
கொண்டதுமான சீதளவலயம் குளிர்கூடியும் காணப்படு கின்றன. உஷ்ண வலயத்திற்கும் சீதள் வலயத்திற்கும் இடைப்பட்ட மத்திய வலயம் உஷ்ணமும் குளிரும் மட்டாக வுடையது. எனவே நிரட்சத்திலிருந்து வடக்கு நோக்கி அல்லது தெற்கு நோக்கிச் செல்லும்போது படிப்படியாக உஷ்ணம் குறைந்து குளிர் கூ டி வரக் காணப்படும். அதி வடக்கிலும் அதிதெற்கிலும் துருவத்தைச் > சூழ்ந்துள்ள பாகங்கள் ம னி தன் வாழ முடியாத குளிர்பொருந்திய தா யிருக்கும்.
உஷ்ண வலயத்தில் சூரி ய ன து நேரான கிரணங்கள் பவனத்தில் குறைந்த பாதையினூடு செல்வதையும் மட்ட மான பூமியின் மேற்பரப்பில் படிவதையும், மத்திமவலயத்தில் சாய்ந்த கிரணங்கள் பவனத்தில் அகலப் பாதையினூடு செல்வதையும் பூமியின் கூடிய மேற்பரப்பில் படிவதையும் படங் காட்டுகின்றது. காலையிலும் மாலையிலும் உஷ்ணம் குறைவாயிருப்பதற்கும் இதுவே காரணமாகும்.

சீதோஷ்ணம்.
89
(3)
(2) உயரம்.- கடல் மட் ட த் தி லு ங் கூடிய உயரத்திலமைந்த
இடங்கள் கடல் மட்டமான இடங்களிலும் குளிர் கூடியவை. கடல்மட்டத்திலிருந்து ஒவ்வொரு 300 அடி உயர்வுக்கும் பவனம் ஒரு பா ைக F வீ தம் உஷ்ணம் குறைந்துவரக் காணப்படும். இலங்கையின் கரையோரங்களிலும் பார்க்க நுவரெலியா போன்ற மலைநாடுகள் குளிர் பொருந்தியிருப்ப தற்கு இதுவே காரணமாகும். கடலின் அண்மை சேய்மை - கடலுக்கு அண்மையிலமைந்த கரைநாடுகள் உள்நாடுகளைப்போல் அதி உஷ்ணமும் மிகு குளிரும் பொருந்தியிருப்பனவல்ல. உதாரணமாகப் பம்பாய் பூனா என்னுமிரு இடங்களின் சீதோஷ்ண நிலையை ஒப்பு
நோக்குக. (4)
காற்றுகள்.- வரட்சியான காற்று வீசும் பிரதேசங்கள் வர
ண்டு உஷ்ணம் கூடியும், கடலிலிருந்து நீரணுக்கொண்ட குளிர்காற்று வீசும் பிரதேசங்கள் மழைபெற்றுக் குளிர்மை
பொருந்தியுங் காணப்படுகின்றன. (5) நீரோட்டங்கள்.- உஷ்ணமான கடல் நீரோட்டங்கள் படிந்து
செல்கின்ற சமுத்திரக் கரைநாடுகள் உஷ்ணமுடையனவா கவும் குளிர் நீரோட்டங்கள் பொருந்திய சமுத்திரக் கரைநாடு கள் குளிர்ச்சியுடையனவாகவும் காணப்படுகின்றன. உதா ரணமாகக் குடா நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்குக் கரை நாடுகளை 50° E வரை உஷ்ணமாக வைத்திருப்பதற்கும் இதே அட்சத்திலமைந்த வடஅமெரிக்காவின் கிழக்குக்கரை நாடுகளை லபிறடோர் என்னும் குளிர் நீரோட்டம் 32 F இல் வருட த் தி ன் பெரும்பாகம் உறைய வைத்திருப்பதற்கும்
இதுவே காரணமாகும். (6) தாவரம்.- நிரம்பிய தாவர விருத்தியுடைய பாகங்கள் தாவர
மற்ற வரண்டபாகங்களிலும் குளிர்மை கூடியவை. வ னங்கள் வனாந்தரங்களிலும் பகலிற் குளிர்ச்சியுடையனவாய்க் காணப்
படுவற்கு இதுவே காரணமாகும்.) (7) மண்ணினம்.- கருமண் பொருந்திய தரைப்பாகங்கள் வெண் தரைகளிலும் கூடிய உஷ்ணமடையுந் தன்மையின.
சம சீதோஷ்ண ரேகைகள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் ஒரு தேசத்தின் படத்தில் சம் ச ேதாஷ்ணமான பாகங்களைக் காட்டுவதற்காக அவற்றை இணைத்

Page 56
90
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
ஆதி 4 இல் "தே"
துக் கீறப்படும் ரேகைகள் சம சீதோஷ்ணரேகைகள் என்று அழைக்கப்படும். சூரியன் கிராட்சத்துக்கு வடக்கே சஞ்சரிக்கும் போது வடகோளார்த்தத்தில் ஆடி மாதத்தில் கூடிய உஷ்ண மும் தைமாதத்தில் கூடிய குளிருங் காணப்படுவதாலும், தென் கோளார்த்தத்தில் சஞ்சரிக்கும்போது தைமாதத்தில் கூடிய உஷ்ணமும் ஆடி மாதத்தில் கூடிய குளிரும் காணப்படுவதாலும் ஒவ்வோர் தேசத்தினதும் சமசீதோஷண ரேகைகள் தை (ஜனவரி) ஆடி (ஜூலை) என்னும் இரு மாதங்களிலும் அமைய வெவ்வேறு படங்களிற் காட்டப்படும். பெரிய தேசப்படப் புத்தகங்களோடு 84ம் 86ம் பக்கங்களிலுள்ள இச் சமசீதோஷ்ண ரேகைப்படங்களை
ஆராய்ந்து அவ்வத் ேதசச் சீதோஷ்ண நிலைகளை நன்கு விளங்கிக் கொள்க.
சீதோஷ்ண மண்டலங்கள் சீதோஷ்ண நிலையின் மாறுபாட்டிற் கேற்பப் பூமியில் பலி சீதோஷ்ண மண்டலங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் மண்டலத் திலும் வெவ்வேறு வகையான தாவரம், மிருகம், பிராணிவர்க்கம் முதலிய பேதங்களைக் காணலாம். குறிப்பிடத்தக்க சீதோஷ்ண மண்டலங்கள் வருமாறு.-
(1) நிரட்சத்தைச் சார்ந்த அதி உஷ்ண அதிக மழைப்பிர
தேசம். (2) கோடை மழைபெறும் உஷ்ணப்பிரதேசம். (3) பருவக்காற்றுப் பிரதேசம். (4) மாரி மழைபெறும் மத்தித் தரைக்கடற் சுவாத்திய வல
யங்கள். (5) மழையற்ற உஷ்ணப் பாலைவனங்கள். (5) மட்டான சீதோஷ்ண மண்டலப் பிரதேசங்கள். (7) குளிர் மண்டலங்கள். (1) நிரட்சத்தைச் சார்ந்த அதி உஷ்ண அதிக மழைப்பிரதேசம்.- இப்பிரதேசம் பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் தெற்கிலும் 5° அட் சங்கள்வரை வியாபித்திருக்கின்றது. இவ்விடத்தில் பவன அமுக் கங் குறைவு, சூரியனது நேரான கிரணம் படிவதனால் எப்பொழு தும் ஈரலிப்பான பவ னம் மேலெழுந்து குளிர்ந்து வருடத்தின் எக்காலமும் நல்ல மழையைக் கொடுக்கின்றது. கோடைக்கும் மாரிக்கும் அதிக வித்தியாசமில்லை. தென் அமெரிக்காவில் அமே . சன் நதிப்பிரதேசம், ஆபிரிக்காவில் கொங்கோ நதிப்பிரதேசம்,

சீதோஷ்ணம்.
31
கிழக்கிந்திய மேற்கிந்திய தீவுக்கூட்டங்கள் என்பன இப்பிரிவில்
அடங்கும்.
(2) கோடை மழைபெறும் உஷ்ணப்பிரதேசம்.- முன்னர் கூறப் பட்ட மண்டலத்திற்கு வடக்கிலுந் தெற்கிலும் கற்கடக மகர விருத்தங்கள் வரை இப்பிரதேசம் அமைந்திருக்கின்றது. சூரியன் வடகோளார்த்தத்தில் சஞ்சரிக்கும் போது அங்கே காற்றின் அமுக்கங் குறைவடைகின்றது. அப்பொழுது சமுத்திரத்திலி ருந்து ஈரலிப்பான பவனம் அவ்விடத்திற்கு வீசுவதால் மழை பெய்கின்றது. மழைகாலம் மழையற்றகாலமெ ன இப்பிரிவுகளின் சுவாத்திய நிலையைப் பகுத்துக் கூறலாம். இந்தியாவில் தக்கண பீட பூமி, அஸாம், பர்மா, தென் சீனா, வட அவுஸ்திரேலியா, பிறே சிலின் தென்பாகம் போன்ற பிரிவுகள் இப்பிரி விலடங்கும்.
(3) பருவக்காற்றுப் பிரதேசம். - இப் பிரதேசத்தில் உஷ்ணம் அதிகம். கோடைகாலத்தில் சமுத்திரத்திலிருந்து' கரையை நோக்கி வீசுங் காற்றுகள் நீராவியைய திகம் தாங்கியிருப்பதால் நல்ல மழையைக் கொடுக்கின்றன, மாரிகாலம் குளிராக அல்லது கடுங்குளிராகக் காணப்படும். இந்தியா, இந்து சீனா , சீனா, ஜப்பான் தே சத் தி ன் தென்பாகம் என்பன இப் பிரிவிலடங்கும். வட அமெரிக்காவில் அத்திலாந்திக் கரையையடுத்த மிசிசிப்பி நதிப்பாகமும் இதைப் போன்ற சுவாத்திய நிலையையுடையது. தென்கோளார்த்தத்தில் நேத் தால், கேப்கொலனி, வடமேல் அவுஸ்திரேலியா போன்ற பாகங்களம் இப்பிரிவிலடங்கும்.
(4) மாரிமழைபெறும் மத்தித்தரைக்கடற்சுவாத்தியவலயங்கள் .- பாலைவனங்களுக்கப்பால் இரு கோளார்த்த எகளிலும் மத்திய வலய அனலான பிரதேசங்கள் காணப்படுகின்றன. இப்பிரதே சங்களில் நிரம்பிய ம ா ரி ம  ைழ யு ம் கோடை வரட்சியுமுண்டு. மத்தித்தரைக்கடலைச் சூழ்ந்த கரை நாடுகளும் அக்கடற் தீவுக ளும் ஆபிரிக்காவில் கேப் கொ ல னி, தென் அவுஸ்திரேலியா, வட அமெரிக்காவில் மேற்குக் கலிபோர்ணியா, தென் அமெரிக் காவில் மத்திய சிலிப்பிரதேசம் என்பன இப்பகுப்பிலடங்கும்.
(5) மழையற்ற உஷ் ண பாலைவனங்கள்.- இப் பாலைவனங்கள் கற்கடக மகர அமைதிமண்டலங்களில் வியாபாரக்காற்றுகள் வீசும் மழையற்ற பாகங்களிற் காணப்படுகின்றன. அவுஸ்திரே லியா, தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தென் மேல்பாகம் என்பவற்றினது பகுதிகள் இபபாலைவனப் பகுப்பிலடங்கும். ஆனால் ஆசியாவிலும் வட

Page 57
92
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
ஆபிரிக்காவிலுமமைந்த சகாரா, அரே பியா, பேர்சியா, சிந்து, ரஜபுத்தானா போன்ற பெரிய பாலைவனங்கள் இங்கு விசேட மாய்க் குறிப்பிடத்தக்கன்..
(6) மட்டான சீதோஷ்ண மண்டலப் பிரதேசங்கள்.- இப்பிர தேசங்கள் வடக்கிலும் தெற்கிலும் 40° அட்சங்களுக்கப்பாலுள் ளவை. நிலையான காற்றுகள் வருடம் முழுமையும் இப்பாகங்க ளில் வீசும். வடகோளார்த்தத்தில் யூறேஷியாவிலும் வட அமெ ரிக்காவிலும் இவ்வித சீதோஷ்ணத்தை அடையும் நிலங்கள திகம். தென் கோளார்த்தத்தில் இவ்வித நிலங்கள் குறைவு.
(7) குளிர் மண்டலங்கள்.- வடகடலைச் சார்ந்த பரந்த தூந்தா பூமிப்பிரதேசமும் அதற்கப்பாலுள்ள பனிக்கட்டிப் பிரதேசங் களும் இப்பிரிவிலடங்கும். இங்கு குளிர் எப்போதும் மிக அதிக மாயிருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாக் கண்டங்களின் அதிவடபாகங்கள் கிறீன்லாந்து தென் துருவக்கண்டம் என்பன இப்பிரிவிலடங்கும்.
வினாக்கள். (1) நீர்வசிக்கும் பிரிவைக் குறிப்பிட்டு அப்பிரிவில் (அ) உஷ்ணம் கூடிய, உஷ்ணம் கு றைந் த பகலையடைய ஒவ்வோர் மாதம் (ஆ) குளிர் கூடிய குளிர்குறைந்த இரவுடைய ஒவ்வோர் மாதம் கூறுக. (2) பவனம் எவ்வாறு உஷ்ணமடைகின்றது? (3) ஓரிடத் தின் சீதோஷ்ணத்தை எக்கரு வி மூலம் அறிகிறோம்? குளிர்ந்த பனிக்கட்டியின் உருகுநிலை, கொதிக்கும் நீரின் ஆவி நிலை என்பவற்றை இக்கருவி என்ன அளவுகளிற்காட்டும்? (4) பான் கீட் தாபமானி சென்றிகிறேட் தாபமானி இரண்டினதும் அளவு களின் பேதமென்ன? (5) டெயிலி நியூஸ் பத்திரிகை அல்லது வேறு தின சரிப் பத்திரிகையில் வாசித்துப் பின்வரும் பட்டினங்களின் கடந்த ஐந்து தினங்களின் கூடிய குறைந்த சீதோஷ்ண அளவுகளைக் காட்டும் ஒரு அட்ட வணை தயாரிக்குக, கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம், மன்னார், அம் பாந்தோட்டை, அனுரதபரி, நுவரெலியா. (6) ஒர் பட்டினத்தின் கூடிய உஷ்ணம் 85 குறைந்த உஷ்ணம் 76° என்பதன் கருத்தென்ன? (7) ஷ் ண வலயம், மத் திமவலயம், சீதள வலயம் ஒவ்வொன்றையும் விளக்கிச் சிறு குறிப்பெழுதுக . (5) ஓரிடத்தின் சீதோஷ்ண நிலையை மாறுபடுத்தும் முக் கிய ஏதுக்களென்ன? (9) நுவரெலியா குளிர் கூடியிருப்பதற்கும் மன்னார் உஷ்ணம் கூடியிருப்பதற்குமுரிய காரணங்களை ஆராய்க. (10) சமசீதோஷ் ணரேகைப் படங்களை ஆராய்ந்து நாடுகளின் பெயர் குறிக்கப்பட்ட தேசப் படப் புத்தகத்தினு தவியோடு (6) ஜனவரி மாதத்தில் 700-80° உஷ்ண
முடைய 5 நாடுகள், 32-45° உஷ்ணமுடைய 5 நாடுகள் (5) ஜூலை

சீதோஷ்ணம்.
93.
மாதத் தில் 70-80° உஷ்ணமுடைய 5 நாடுகள், 30° - 45° உஷ் ணமுடைய 5 நாடுகள் கூறுக. (11) சசாராப்பாலைவனம் வரண்டு அனல் கக்குவதற்கும், தூந்தாபூமிப் பிரதேசம் குளிர்ந்து உறைந்திருப்பதற்கும், ஐரோப்பாவின் மேற்குக்கரை நாடுகள் சமசீதோஷ்ணம் பொருந்தியிருப் பதற்குமுரிய காரணங்களை ஆராய்க. (12) உலகின் பிரதான சீதோஷ்ண மண்டலங் களெவை? இவற்றுள் மூன்றைப்பற்றிச் சிறு குறிப்பெழுதுக.

Page 58
0-03
பிபர்
இணு
80க்கு மேல்
-- +'. 80'
- '.டி'
- 10" உ8
10க்கு கீழ்
உலகின் வருடச் சராசரி மழை வீழ்ச்சி

14. உலக மழைவீழ்ச்சி
பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் சூரிய உஷ்ணங் காரணமாக ஆவியாக மாறிப் பவனத்தோடு கலக்கின்றது. ஓர் குளிர்ந்த காற் றோட்டம் நீராவி கொண்ட உஷ்ணக்காற்றோடு கலக்கும் போது முகில் ஏற்படுகின்றது. காற்றில் மிதந்து செல் லுமியல்புடைய நுண்ணிய நீர்த்திவலைச் சேர்க்கையான இம் மு கி ல் க ள் ஒரு குளிர்ந்த தளத்தில் தாக்கமுறும்போது அல்லது குளிர்ந்த காற் றோடு கலக்கும்போது அவற்றின் சிறு நீர்த்திவலைகள் பெருந்துளி களாகமாறிப் பூமியின் து ஆகர்ஷ்ண த் தால் அத்துளிகள் மீட்டும் நிலத்தில் வீழ்கின்றன. இவ்வாறு மழை ஏற்படுகின்றது.
மழைமானி ஓரிடத்தின து மழையினளவை அளப் பதற்கு மழைமானி (Rain Gauge) என்னுங் கருவி உபயோகப் படுகின்றது. இக்கருவி ஒரு நீண்டகண்ணாடி உருட்டில் (Cyindler') நீர் வெளியே சேதமுற வண்ணம் சேர்த்துக்கொள்ளும் ஓர் புனலை யும், அவ்வுருட்டினுள் புனலினடிப்பாகத்திற் பொருந்தும் ஒரு அளவுசாடியையுங் கொண் டிருக்கும். இவ்வளவுசாடி 10 அங்குலம் வரை மழையினளவைத் திட்டமாக அறிவிக் கும் வரைகள் கொண்டிருக்கும்.
மழைமானியின் து புனலின் வாய்ப்புறம் அளவுசாடியின து வாய்ப்புறத்தின் ஓர் குறித்த விகுதத்திலமைந்திருக்கும். உதார ணமாகப் புனலின் வாய்ப்புறம் 100 சதுர அங்குலமும் அளவு சாடியின் வாய்ப்புறம் 10 சதுர அங்குலமும் உடையனவாயிருப் பின் 10 அங்குல உயரத்திற்கு உருட்டினுட் சேர்ந்தநீர் அளவு சாடியை அடையும்போது அல்லது அளவுசாடியில் ஊற்றப்படும் போது ஒரு அங்குல உயர்வைத் தெளிவாய்க் காட்டும்.
ஓர் இடத்தில் ஓர் பாட்டம் மழை பெய் தால் அம்மழையி னளவு ஒரு அங்குலமெனும் போது வழிதல் ஊறு தல் அல்லது ஆவியாதல் முதலிய சேதங்கள் நிகழாவிடத்து அவ்விடத்திற் பெய் த முழைவீழ்ச்சி தரையில் ஓரங்குல உயரத்தில் நிற்கும் என்
னுங் கருத்தைக் கொள் ளும்.

Page 59
96
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
மழையினளவை மாறுபடுத்தும் ஏதுக்கள் உலகின் பல பாகங்களிலும் மழைவீழ்ச்சி ஒரேயளவாயிராது கூடியுங் குறைந்துங் காணப்படுகின்றது. சில பிரதேசங்களில் எக்காலமும் நிரம்பிய மழைவீழ்ச்சியுண்டு. சில பாகங்களில் வரு டத்தின் ஓர் பகுதியில் மாத்திரம் போதிய மழைவீழ்ச்சியுண்டு. வேறு சில பாகங்கள் மழையே பெய்யாத அல்லது மிக அற்ப மழைவீழ்ச்சியுடைய வரண்ட வனாந்தரங்களாகக் காணப்படுகின் றன. இவ்வாறு மழைவீழ்ச்சியினளவை மாறுபடுத்தும் ஏதுக்கள் பலவுள. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.-
(1) பவனத்தில் நீராவிச் செறிவு, (2) நிரட்சமும் இடங்களின் தூரமும், '(3) கடலின் அண்மை சேய்மை,
(4) காற்று வீசுந் திசையும் மலைகளின் அமைவும், (5) நீரோட்டத்தின் தன்மைகள்.
மேற்குறித்த காரணங்களால் மழைவீழ்ச்சியினளவு மாறு படும் தன்மையை ஆராய்வாம்.
பவனத்தில் நீராவிச் செறிவு.-- பவனத்தில் நீராவிச்செறிவு மழையை வருவிக்கும் முக்கிய காரணமாகும். நிரட்சப்பகுதியில் எப்போதும் பவனம் நீரணு நிரம்பிக்கொண்டிருப்பதனால் உஷ்ண வலயப் பிரிவு நல்ல மழை வீழ்ச்சியைப்பெறுகின்றது. பாலைவனப் பாகத்து வரண்ட பவனமும் நீராவிச்செறிவில்லாத துருவப்பகு தியின் குளிர் பவனமும் மழை வீழ்ச்சிக்குப் பயனுதவாமலிருத் தல் நோக்கற்பாலது.
நிரட்சத்தின் தூரம்.- எ ங் கு நீராவிமாற்றம் அதிகமாக வுண்டோ அங்கு பவனத்தில் நீராவிச் செறிவுங் கூடு தலாகி மழை வீழ்ச்சியும் நிரம்பியதாயிருக்கும். உஷ்ணவலயத்தில் எப்பொழு தும் உஷ்ணம் மிகக் கூடுதலாயிருப்பதனால் அங்கு பவனத்தில் நீராவியுங் கூடுதலாகச் செறிந்து மழைவீழ்ச்சியும் அதிகமாயிருக் கின் றது. உலக மழைவீழ்ச்சிப் படத்தில் இவ்வுண்மையை
ஆராய்ந்தறிக.
கடலின் அண்மை சேய்மை.- எப்பொழுதும் பரந்த கடலிற் படிந்து வருகின்ற காற்றுகள் நீரணு நிரம்பக் கொண்டுள்ளனவாய் உள்நாடுகளிலும் பார்க்கக் கரைநாடுகளுக்கு நல்ல மழையைக் கொடுக்கின்றன. அலகபாத்திலும் பார்க்கக் கல்கத்தா கூடிய மழையைப் பெறுவதற்கு இதுவே காரணமாகும்.

உலக மழைவீழ்ச்சி.
97
மலைச்சாரலின் அமைவு.- நீரணுக்கொண்ட காற்றுக்களின் தாக்கம் பெறும் மலைச்சாரல்கள் எதிர்ப்புறச் சாரல்களிலும் பார்க் கக்கூடிய மழையைப் பெறுகின்றன. இந்த இடத்தில் பவனத் தினது ஓர் இயல்பை நாம் அறிதல் வேண்டும்,
அமுக்கத்தினால் சுருங்கும்போது சூட்டையும் அமுக்கக் குறைவினால் விரியும்போது குளிரையும் பவனம் பெறுகின்றது. உதைபந்தின் றப்பர் உருண்டையினுள் நாம் பவனத்தை அடக்கி அடைக்கும்போது உணர்ந்து பார்த்தால் இவ்வுஷ்ணமடையுந் தன்மை புலப்படும். றப்பர் உருண்டையின் வாய்ப்புறத்தை அவிழ்த்து அடைத்தபவனத்தை வெளிப்போகவிடும்போது அது
காறறுத் திசைச் சாரல்
விரிந்து வெளிவருவதனால் குளிர்ச்சியடையுந் தன்மையும் புலப் படும். இவ்வாறு சூடான நீரணுநிறைந்த காற்று மலைச்சரிவிற் தாக்கும்போது அது உயரவேண்டியதாயிருக்கிறது. உயரும்போது அமுக்கக்குறைவினால் விரிந்து குளிர்ச்சியடைகின்றது. எனவே காற்றுவீசுந் திசைப்பக்கமமைந்த மலைச்சாரல்கள் நிரம்பிய மழை வீழ்ச்சியையும், எதிர்ப்புறச் சாரல்கள் வரட்சியையும் உடையன வாயிருக்கின்றன. மழைவரண்ட எதிர்ப்புற மலைச்சாரற்பக்கம் 'மழைநிழல்' (Rain Shadow) என்றழைக்கப்படும்.
தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றால் பம்பாய்ப் பக்கத்து மேற்குக் காற்றாடி மலைச்சாரல்கள் நிரம்பிய மழைவீழ்ச்சியைப் பெறுவதற்கும், தக்கண, பீடப்பூமிப்பாகம் வரட்சியுற்றிருப்பதற் கும் இதுவே காரணமாகும், இதே காரணத்தால் இமயமலையின்
13

Page 60
98
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
தென் சாரல்கள் நிரம்பிய மழையோடு கூடிய ஈரலிப்புடையனவா யும், வடசாரல்கள் வரட்சியுற்றிருத்தலும் இங்கு குறிப்பிடத்தக் கது.
காற்றின் திசை - 76-ம் பக்கப் படம் பார்க்குக. மழைவீழ்ச் சியை விளைக்கும் உதவிக்காற் றுகளை இப்படம் தெளிவாய்க்காட் கி ன்ற து. நீரணுக்கொண்ட உஷ்ணமான காற் றும் மழையைக் கொண்டுவரும். ஆனாற் குளிர்ந்த பிரதேச நீரணு வரட்சிக் காற்று மழையைத் தரமாட்டாது. உதாரணமாகத் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று உஷ்ணமான இந்துசமுத்திரத்தில் படிந்து வருவது காரணமாக இக்காற்றுக் காலத்தில் இந்தியா நல்ல மழையைப் பெறுகின்றது. ஆனால் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று குளிர்ந்த பிரதேசங்களிலிருந்து வீசுவதன் காரணமாக இக்காற்றுக் காலத்தில் இந்தியா சொற்ப மழையைப் பெறு கின்றது. குளிர்ந்த பிரதேசங்களிலிருந்து வரட்சியான பிரதேசங் களுக்குக் காற்று வீசுந் தன்மை காரணமாக உஷ்ணம் அதிகரிக்கப் பெற்று மழைத்துளிமாற்றம் நிகழாமையால் பார்சியா, அரேபியா, சகாரா போன்ற வியாபாரக் காற்று மண்டலங்கள் வரட்சியா யிருக்கின்றன. உஷ்ணமான கடல்களிற் படிந்து வரும் மேல் காற்றுகளின் பயனால் மேற்கு ஐரோப்பா, நியூசிலாந்து, தென் சிலி முதலிய பாகங்கள் நல்ல மழையைப் பெறுகின்றன.
நீரோட்டம்.- நீரோட்டத்தின் பயனாலும் நாடுகள் மழையைப் பெறுகின்றன. உதாரணமாகக் குடாநீரோட்டத்தினது உஷ்ணங் காரணமாக அத்திலாந்திக் ச மு த் தி ர நீர்ப்பரப்பு உஷ்ண மடைய இதிற் படிந்துவரும் மேல் காற்றுகள் நீரணுக் கொண்டன. வாய் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நல்ல மழையைக் கொடுக் கின்றன. 58-ம் பக்கப் படம் பார்க்குக.
மடை
மழை கூடிய இடங்கள் (1) நிரட்சத்தையடுத்த அமுக்கக் குறைவான பாகத்தில் எப் போதும் நிரம்பிய மழைவீழ்ச்சியுண்டு. இந் த , மண்டலத்தில் கூடிய உஷ்ணங் காரணமாக எப்போதும் நீராவிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதால் பவனத்தில் நீராவிச்செறிவும் நிரம்பவுண்டு. இன்னும் இப்பவனம் எப்போதும் மேலெழுந்து கொண்டிருப் பதன் காரணமாகக் குளிர்ச்சியுற்று இதிற்செறிந்துள்ள நீராவியும் குளிர்ந்து மழையாகப் பெய்கின்றது. அமேசன் நதிச் சூழல், கொங் கோநதிப் பள்ளத்தாக்கு, மலாயாத் தீவுகள் என்பன நிரட்சத்தி

உலக மழைவீழ்ச்சி.
99
னது அமைதி மண்டலங்களிலமைந்த அதிக மழை பெறுமிடங்க ளாகும்.
(2) நீரணு நிறைந்த பவனத்தாக்கம் பொருந்திய மலைச்சாரல் கள் அதிக மழையைப் பெறுமென முன்னர் கூறப்பட்டது. மேற் குக் காற்றாடிமலைகள், காசிக்குன் றுகள், இமயமலையின் தென் சா ரல் ஆதிய ன இங்கு குறிப்பிடத்தக்கன. தென்மேல் பருவப் பெயர்ச்சிக்காற்று இப்பாகங்களை நேரடியாகத் தாக்குகின்றது. காசிக்குன்றுகளைச் சேர்ந்த '' சிறாப்பூஞ்சி'' என்னுமிடம் உலகில் மழைவீழ்ச்சி கூடிய இடங்களில் முதன்மையுடைத்தாய் வருடத் தில் 500 அங்குலத்திற்கு மேற்பட்ட மழையைப் பெறுகின்றது. தென்மேல், மேல்காற்றுகள் பிரித்தானியா, நோர்வே நாடுகளின் மேற்கு மலைப்பிரதேசங்களுக்கு நல்ல மழையைக் கொடுக்கின்றன. தென்சிலி, நியூசிலாந்து என்னுமிடங்களின் மலைச்சாரல்களில் மேல்காற்றுத் தடைப்படுவதால் நல்ல மழையைப் பெறுகின்றன. அவுஸ்திரேலியாவில் குவீன்லாந்தின் கிழக்குப்பாகம், தென் ஆபி ரிக்காவில் நெத்தால் பிரதேசம், தென் அமெரிக்காவில் பிறேசில் பிரதேசம் என்பன வியாபாரக்காற்று மண்டலத்தில் கண்டங் களின் கிழக்குப்பாகத் தமைந்த அதிகமழையைப் பெறுமிடங்களா கும்.
(3) கனடாவின் வட கீழ்ப்பாகம், அமெரிக்க ஐக்கிய மாகாணங் கள் ஆதியன கூடிய அளவிற்குச் சுழல்காற்றால் நல்ல மழை
யைப் பெறுகின்றன.
(4) பிரான்ஸ், பிரித்தானிய தீவுகள், பர்மா, ஜப்பான், சீனா என் பவற்றின் பாகங்கள் உஷ்ண நீரோட்டங்களின் பயனாலும் சுழல் காற்றா லும் போதிய மழைவீழ்ச்சி யுடையனவாயிருக்கின்றன.
மழை குறைந்த பிரதேசங்கள். (1) கற்கடக மகர அமைதிமண்டலங்கள் மழைமிகக் குறைவு டையனவாய் அல்லது மழையற்றனவாய்க் காணப்படுகின்றன. இம்மண்டலங்களில் ஆறுமாத காலத்திற்குப் பக்கஞ் சாய்ந்த இயக்கமின்றிப் பவனம் மேலிருந்து கீழிறங்குகின்றது. அதா வது கு ளி ர ா ன மேல் மண்டலத்திலிருந்து உஷ்ண்மான கீழ் மண்டலத்தை யடைவதால் மழைத்துளி மாற்றம் நிகழ்வதில்லை. அடுத்த ஆறுமாத காலம் வியாபாரக்காற்றுகள் குளிரான அட் சப் பிரதேசங்களிலிருந்து சூடான அட்சங்களுக்கு வருவதால்

Page 61
100
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
மழையைக் கொண்டுவருவதில்லை. எனவே கற்கடக அமைதிமண் டலத்திலமைந்த சகாரா, அரேபியா, பார்சியா, ரஜபுத்தானா, கலி போர்ணியா வனாந் தரங்களும், மகர அமைதி மண்டலத்தில மைந் த அவுஸ்திரேலியா, கலகாரி, அற்ற காமா வனாந்தரங்களும் இங்கு குறிப்பிடத்தக்கன.
(2) நீரணுக்காற்றின் எதிர்புறத்தமைந்த மலைச்சாரல்கள் வரட்சி யுடைய வென முன்னர் கூறப்பெற்றது. இமாலயம் இந்துக்கூஷ் முதலிய மலைகளால் தென் ஈரலிப்புக்காற்றுத் தடைப்படுவதன் காரணமாகவும் வடகாற்று குளிர்ந்த தரைப்பிரதேசத்திலிருந்து வீசுவதன் காரணமாகவும் கோபி, துருக்கிஸ்தான் என்பன வரண்டு வனாந்தரங்களாகக் காணப்படுகின்றன. தெற்கிலிருந்து வரும் உஷ்ணமா ன ஈரலிப்புக்காற்றை இமாலயம் தடுப்பதனால் திபேத் பிரதேசம் வரட்சியுற்றிருக்கின்றது. மேற்கிலிருந்துவரும் நீரணுக்காற்றைக் கரையிலுள்ள மலைகள் தடுப்பதனால் அமெரிக்க ஐக்கிய மாகாணத்தின் பெரிய உப்பேரிப் பாகம் (The Great Salt Lake Regione) வரட்சி யுற்றிருக்கின்றது.
(3) துருவப்பகுதியை யடுத்துள்ள கிரீன்லாந்து, தண்டறாஸ் போன்ற இடங்களில் மிதமிஞ்சிய குளிர்காரணமாக நீர் ஆவியாத லும் பவனத்தில் நீரணுச் செறி தலும் நிகழ்வதில்லை. ஆகவே இவ் விடங்களில் மழைவீழ்ச்சியுமில்லை.
(4) மேற்கு அவுஸ்திரேலியா, தென் மேல் ஆபிரிக்கா, அமெரிக் காவின் மேற்குக்கரையோரம் என்பன குளிர் நீரோட்டம் அருகா மையிற்படிந்து செல்வதன் காரணமாக மிகக்குறைந்த மழையைப் பெறுகின்றன.
உலகின் மழைவீழ்ச்சிப் படத்தைத் தேசங்களின் பெயர்கள் குறிக்கப்பட்ட பிறிதோர்படத்தோடும் கண்டங்களின் நிலஅமைவு காற்றமைவுப் படங்களோடும் ஆராய்ந்து ஒவ்வோரிடத்தின தும் மழைவீழ்ச்சியினளவு கூடிக் குறைந்திருக்குங் காரணங்களை இன்
னுந் தெளிவாக விளங்கிக்கொள்க.
இலங்கைக் காற்றும் மழைவீழ்ச்சியும். இலங்கை, பருவப்பெயர்ச்சிக்காற்று வலயத்தைச் சேர்ந் தது. சித்திரை மாதம் தொடக்கம் ஆவணி, புரட்டாதி மாதம் வரைக் கும் இங்கு தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசுகின்றது. இது 'தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று' அல்லது சோழ கம்

உலக மழைவீழ்ச்சி.
101
பாட்
பருச தே கசன்
> hெ கார)
பாக எ
தேர்வு
Uபி4, 11டுபிiயா
ள விரிகுடா
56'அங். மானார்
இஅநுராதபுரம்
50.75 அங்ட
12
திப்பு
! | ! ! *1.{T/பு!
திரு காகம்
இட 100' /
20' * ( க/
வதுரை.
தொழிப்து
2ாக்கனபரி -----
50: 200
5ம் அது.
அம்பாந்தோட்டை
மாதச றை
சமுத்திரம்
80
820
எனப்படும், ஐப்பசி மாதத்தில் ஆரம் பி த் து, மாசி பங்குனி மாதங்களில் முடிகின்ற இலங்கையின் இன்னோர் காற்து வட கிழக்குத் திசையிலிருந்து வீசுவதால் "'வட கீழ்ப்பருவப்பெயர்ச்சிக் காற்று' ' அல்லது வாடை எனப்படும்.
தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றால் அதிக மழையைப் பெறுமிடங்கள் - கொழும்பு, கண்டி, காலி, மாத்தளை, நுவரெலியா, எட்டியாந்தோட்டை, அவிசாவலை, தொப்பிதோட்டம், இரத்தின புரி முதலியன.

Page 62
102
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றால் அதிக மழையைப் பெறுமிடங்கள் - திரிகோணமலை, மட்டக்களப்பு, வதுளை, யாழ்ப் பாணம், தீயத்தலாவை ஆதியன.
வருடச் சராசரியில் இலங்கையில் அதிக மழைபெறும் ஐந்து இடங் களும் குறைந்த மழைபெறும் ஐந்து இடங்களும்
இடங்கள்
மழையளவு
இடங்கள்
மழையளவு பட்டிப்பளை
218//
மன்னார் ,
391 எட்டியாந்தோட்டை 179.5"
அம்பாந்தோட்டை
39!! அவிசாவலை
174-5!!
புத்தளம்
45•5! இரத்தினபுரி
151.5"
யாழ்ப்பாணம்
49/1 மாத்தளை
101'
அனுரதபுரம்
55! இலங்கையின் வடமேற்கிலுள்ள மன்னார்ப் பிரிவும், தென் கிழக்கிலுள்ள அம்பாந்தோட்டைப் பிரிவும் காற்றுவீசுந் திசைப் பக்கமில்லாமையினால் மிகக் குறைந்த அளவுக்கே மழைபெறும் வரட்சிப் பிரதேசங்களாய் இருக்கின்றன.
வினாக்கள். 1. முகில், மழை என்பன என்ன? மழை எவ்வாறு அளக்கப்படுகின் றது? இக்கருவியைப் படம்வரைந்து விபரிக்குக. (2) ஓர் இடத்தின து மழை யின் அளவை மாறுபடுத்தும் ஏதுக்களெவை? ம ன் னார் 39 அங். யாழ்ப்பாணம் 49 அங், மாத்தளை 101 அங். இரத்தினபுரி 151 அங். இவற்றுள் மழை கூடிய மழை குறைந்த ஒவ்வோரிடத்தைத் தெரிவு செய்து அவ்வவ்விடங்களில் இவ்வாறு மழைவீழ்ச்சியிருப்பதற்குரிய கார ணங்களை ஆராய்க. (3) நிரட்சத்தில் மழை கூடியிருப்ப தற்கும் துருவப் பகு தியில் மழ்ைகுறைவாயிருப்பதற்குமுரிய காரணத்தைக்கூறுக. (4) மழை நிழல் (Rain Shado20) என்பதென்ன? விளக்கப்படத்தோடு விபரிக்குக. (5) நீரணுக்கொண்ட காற்று, வரட்சியான காற்று என் னு ம் பதங்களை விளக்குக. இக்காற்றுகளில் முந்தியதின் பய னா ல் ஓர் இடத் தில் மழை வீழ்ச்சி கூடியும் பிந்திய தின் பயனால் மழை வீழ்ச்சி குறைந் துங் காணப்படு வதை உதாரணத்தோடு ஆராய்க. (6) உலகில் மழை வீழ்ச்சி அதிகங் கூடிய ஐந்து இடங்கள் கூறி அவ்வவ்விடங்களில் மழை வீழ்ச்சி கூடி யிருப்பதற்கும், மழை வீழ்ச்சி மிகக்குறைந்த ஐந்து இடங் க ள் கூறி அவ்வவ்விடங்களில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதற்குமுரிய காரணங்களை ஆராய்க, (7) உதவிக்காற்றும் உலக மழை வீழ்ச்சியும் என் னும் 75-ம் பக்கப் படத்தை ஆராய்ந்து காற்றின் பயனால் மழைபெறும் 5 இடங்களும்

உலக மழைவீழ்ச்சி.
103
அங்கங்கு வீசுங் காற்றுகளின் பெயரும் கூறுக, (8) உலகப்புற உருவப் படத்தில் 80 அங்குலத் திற்கு மேற்பட மழைபெறுமிடங்களை க் கறுப்பு வர்ணங்கொண்டும், 40 முதல் 80 அங்குலம்வரை மழைபெறுமிடங்களை நீள் கோடுகள் கொண்டும், 10 முதல் 40 அங்குலம்வரை மழைபெறுமிடங்களைப் புள்ளிகள் கொண்டும் குறித்துக்காட்டி ஒவ்வோர் கண்டத்திலும் இவ் வாறு மழைவீழ்ச்சி பொருந்திய ஒவ்வோர் பாட்டின் பெயருங் குறிப்பிடுக. (9) (a) நியூசிலாந்து கூடிய மழைவீழ்ச்சியைப் பெறுவதற்கும் மத்திய ஆசியா வாண்டிருப்பதற்கும் (6) இங்கிலாந்தின் மேற்குப்பாகம் ஈரலிப்பாயிருப்பதற் கும் (C) சகாராப்பிரதேசம் அற்ப மழைவீழ்ச்சி அல்லது மழைவீழ்ச்சியற்றிருப் பதற்குமுரிய காரணங்களை ஆராய்க. (10) பின்வரும் இடங்களை மழை வீழ்ச்சி கூடிய இடம் முதலாயிருப்ப ஒழுங்குபடுத்துக, மலாயா, கலகாரி, சிறாப்பூஞ்சி, அமேசன் நதிப் பள்ளத்தாக்கு, கியூயோக், இங்கிலாந்து, அரேபியா, கிறீன்லாந்து. மேற்கூறிய இடங்கள் ஒவ்வொன்றிலும் மழை வீழ்ச்சி கூடி அல்லது குறைந் திருப்பதற்குரிய காரணங்களை ஆராய்க. (11) இலங்கையில் வீசும் காற்று களெவை? யாழ்ப்பாணப் பகுதி எக் காற்றினால் மழையைப் பெறுகின்றது? கொழும்பு நகர் எக் காற்றினால் அதிக மழையைப் பெறுகின்றது? (12) மன்னாரிலும் அம்பாந்தோட்டைப் பிரிவிலும் மழைக் குறைவுக்குக் காரணமென்ன? (13) இலங்கையில் மழை வீழ்ச்சி கூடிய மூன்றிடங்களும், மழைவீழ்ச்சி குறைந்த மூன்றிடங்களுங் கூறி ஒவ்வோரிடத் தின து மழைவீழ்சியினளவைப் பருமட்டாய்க் கூறுக. (14) படத்தைப் பார்த்து இலங்கையில் பின்வரும் பட்டினங்களை மழை வீழ்ச்சி கூடியது முதலாக ஒழுங்கு செய்க -- யாழ்ப்பாணம், கொழும்பு, அம்பாந்தோட்டை, இர த் தின பரி. (15) இலங்கையில் மழைவீழ்ச்சிப் படங்கீறிக் காலி, அம்பாந்தோட்டை, தி ரி கே ா ண ம லை, அநுரதபுரி, குருநாகல், மன்னார், யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு, மட்டக்களப்பு என்னுமிடங்களைப் படத்திற் குறித்துக்காட்டி இவ்விடங்களை மழைவீழ்ச்சி கூடியது முதலாயிருப்ப ஒழுங்கு படுத்து க.

Page 63
15. சுவாத்தியம் நாங்கள் ஓரிடத்தைக் குறித்து இது நற்சுவாத்திய நாடு என் கிறோம். இன்னோரிடத்தில் சுவாத்தியம் நன்கில்லை என்கிறோம். சீதோஷ்ண நிலைகளாலும், மழைவீழ்ச்சி முதலிய பிற ஏதுக்களா லும், தரையமைவாலும் மனிதன் சுகமாய் வாழ்வதற்கும், தனது திறன்களை வளர்த்தற்கும், தேவைக்கேற்ற தாவரங்கள் கால் நடைகள் பிறவற்றை இலகுவில் விருத்தி செய்வதற்கும் ஏற்ற பாகங்கள் நற்சுவாத்திய நாடுகள் என்றழைக்கப்படுகின் றன. ஓரிடத்தின் சுவாத்திய நிலையை நிர்ணயிக்கும் ஏ துக்கள் பின் வருவனவாகும் - (1), அட்சம் - பொதுவாக நோக்குமிடத்து நிரட்சத்தையடுத் துள்ள நாடுகள் உஷ்ணம் கூடியனவாகவும், துருவத்தை அடுத்துள்ள நாடுகள் குளிர் கூடியனவாகவும் இருக்கக் காண்கிறோம். ஆனால் அவ்விடங்களிற் பொருந்தும் பிற ஏதுக்கள் சுவாத்திய நிலையை மட்டுப்படுத்தலுமுண்டு. (2) தரையினுயர்வு.- உயரங் கூடக்கூடப் பவனம் இலேசாகவும் குளிர்ச்சியுடைய தாகவுமிருக்கும், சில ஆயி ர ம டி தரையி னுயர்வு ஓரிடத்தின் உஷ்ண த்தை எவ்வளவோ குறையக் காட்டும். எனவே உஷ்ண மண்டலத்தில் உயரிய சுகஸ் தானங்கள் மேட்டுப் பரப்புகளிலமைந்திருக்கின்றன. உதா ரணமாக ஆங்கிலேயர் வசிப்பதற்கு இந்தியாவிற் கோடைக்
கானல் இலங்கையில் நுவரெலியா போல்வன.
(3) நீரினண்மை.- கடல்போன்ற பரந்த நீர்ப்பரப்புகள் ஓரிடத் தினது கோடைகாலத்தின் அதிஉஷ்ணத்தைக் குறைத்தும், மாரிகாலத்தின் கடுங்குளிரை மட்டுப்படுத்தியும் வருதலை நாம் காண்கின்றோம். (1) மலைச்சாரல்கள்.- மலைத்தொடர்கள் எதிர் வீசுங் கு ளி ர் ந்த
காற்றைத் தடைசெய்வது காரணமாகவும், மழைவீழ்ச்சிக்குச் சIT த க ம் பொருந்தியிருப்பன காரணமாகவும், சிற்சில பிரதேசங்களின் சுவாத் தியநிலை நன்மையடைகின்றன. உதா ரணமாக வட கோளார்த்தத்திலுள்ள ம லை க ளின் தென் சாரல்கள் வடசாரல்களிலும் பார்க்க எத்தனையோ பாகை குறைந்த உஷ்ணத்தை அனுபவிக்கின்றன. சூரிய னது வெப்பத்தின் முழுவன்மையையும் இவை பெறுவதோடு வடக்கிலிருந்து வீசுங் குளிர் காற்றிலிருந்தும் மத்திமவலய

சுவாத்தியம்.
105
நாடுகளைப் பாதுகாக்கின்றன. தென் கோளார்த்தத்திலும் மலைச்சாரல்களின் வடபாகங்கள், இதே நன்மையைப் பெறு கின்றன." (5) வீசுங்காற்றுகள்.- கடலினிடத்திலிருந்து தரையை நோக்கி
வீசுங் காற்றுகள் கடலுக்கு அண்மையான நாடுகளின் சுவாத்தியத்தை நன்மைப்படுத்துகின்றன. நீடித்த தரைப் பாகத்திலிருந்து வீசுங் காற்றுகள் வரட்சியுடையனவாய்க் கோடையிற் கூடிய உஷ்ணமும், மாரியிற் கடுங்குளிரும்பொருந் தியிருக்கக் காண்கிறோம். தென்னிந்தியா இதற்கொரு சிறந்த உ தாரணமாகும். கோடை மாதங்களில் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசுகின்றது. இக்காற்று பரந்த கடலிற் படிந்து வருவது காரணமாக மேற்கு மலைத்தொடர்களில் (TWestern Ghats) நிரம்பிய மழை பொழிந்து கிழக்குக் கரைகளை
அடையும்போது வரண்ட தரைக்காற்றாய் அமைகின்றது.
(6) மழை வீழ்ச்சி.- மக்கள் சுகமாய் வாழ்வதற்கும், நன் னீர் பெறுவதற்கும், ப யி ர் வ  ைக க ளை விருத்திசெய்வதற்கும் போதிய மழைவீழ்ச்சி இன்றியமையாதது. கல்கத்தாவுக்கு வடக்கே காசிக்குன் றுப் பிரதேசமும், பர்மா, கயானா, தென் னமெரிக்காவின் வடபாகம் என்பனவும் நிரம்பிய மழை வீழ்ச்சி கொண்டுள்ளன. சகாரா தொடக்கம் கோபி வரை நீண் டுள்ள பிரதேசமும், வட தென் அமெரிக்காக்களின் சிலபாகங் களும் மழை மிகக்குறைவானவை. இப்பாகங்களின் மழை
வீழ்ச்சிக்குறைவு சுவாத்தியத்தைப் பாதிக்கின்றது. (7) சமுத்திர நீரோட்டங்கள்.- கடுங்குளிர் பொருந்திய அட்சத்தி லமைந்த சில நாடுகளின் சுவாத்திய நிலையை நன்மைப்படுத் துவதற்குச் சமுத்திர நீரோட்டங்கள் மிகவும் உதவி புரிகின் றன. உதாரணமாக இங்கிலாந்தின் அட்சத்திலமைந்த பல நாடுகள் கடுங்குளிரையும், அல்லது அதிஉஷ்ண த்தையும் அநுபவிக்கக் குடா நீரோட்டத்தின் து பயன் காரணமாக இங்கிலாந்து இத்தன்மையை அறியாமலிருக்கிறது. குறோ சிவோ நீரோட்டமும் இந்த வகையில் ஒரு சிறு அளவுக்கு ஐ ப் ப ா னி ன் கரையோரங்களையும், பஸிபிக் சமுத்திரக் தின் வடபகுதியையும் சூடாக வைத்திருக்கின்றது.
பிரதான சுவாத்திய (இயற்கை) வலயங்களையும் இவைபற் றிய விரிவான விளக்கங்களையும் பதினேழாம் பாடத்தில் வாசித்
தறிக.'
14

Page 64
106
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
ச
வினாக்கள். -வாத் தியம் என்பதனால் நீர் விளங்கிக் கொள்வதென்ன? நற் -வாக இய நாடு என்னும் பசத்தைச் சில வாக்கியங்களில் விளக்குக. (2) ஓர் இடத் தின் ஈவாத்திய நிலையை நிர்ணயிக்கும் ஏ" துக்களெவை? (3) வெள்ள வத்தை, கண்டி, மன்னார், நுவரெலியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்னும் இடங்களில் மூன்றைத் தெரிவுசெய் து ஒவ்வோரிடத்தினதும் சுவாத்திய நிலையை ஆராய்க. (4) இலங்கை, கோபி, இங்கிலாந்து, தூந்தா பூமி என்னுமிடங்களில் இரண்டின் சுவாத்திய நிலைகளை விபரிக்குக. (5) நீர் வசிக்கும் பிரிவு எது? உமதுபிரிவின் சுவாத்தியத்தை விபரிக்குக, (6) இலங்கைப் புறவுருவப்படத்தில் ஐந்து நற்சுவாத்திய இடங்களும், உலகப் புறவுருவப் படத்தில் ஐந்து நற்சுவாத்திய இடங்களும் குறித்துக் காட்டி அவ்விடங்களின் பெயர் களையும் எழுதுக. இலங்கையில் ஒன்றும் உலகில் ஒன்று மாக நீர் குறித்துள்ள இரு இடங்களின் சுவாத் திய நிலையை நிர்ணயிக்கும் ஏதுக்களை ஆராய்க . (7) ஆறாம் வகுப்பில் நீர் படித்த அறி வைக்கொண்டு அல்லது மீட்டும் ஒருமுறை வாசித்து ஆசியா, அவுஸ் திரே லியா, ஆபிரிக்காக் கண்டங்கள் ஒவ்வொன்றின து சுவாத்தியத்தைப்பற்றிச் சிறு குறிப்புகள் எழுத க. (8) ஏழாம் வகுப்பில் நீர் படித்த அறிவைக்கொண்டு அல்லது மீட்டும் ஒருமுறைவாசித்து ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்ன மெரிக்கா என்னுங் சண்டங்கள் ஒவ்வொன்றின தும் சுவாத்தியம்பற்றிச் சிறு குறிப்புகள் எழுதுக (9) மத்தித்தரைக்கடற் சுவாத்தியம் என்ப தென்ன? இச்சுவாத்திய நாடுகள் ஐந்தும் இந்நாடுகளில் விருத்தியாகும்
நம் ஈமக. (10) உஷ்ணப்பாலைவனம், ப னி க் க ட் டி வனாந்தரம் (தண்டறாஸ்), நொங்கோந திப் பள்ளத்தாக்கு, ஊசியிலைக்காடு கள், வடஆசியசமவெளி இவைகளில் எவையேனும் இரண்டைத் தெரிவு
கேளில் படித்த அறிவைக்கொண்டு குறித்த இடங்க
2. சாவாம் மாந்தர் தொழில் என்பனபற்றிப் பத்துப் பத்து வாக்கியங்கள் எழுதுக.
டி
), தாவரம்,

16. பூமியும் ஜீவராசிகளும் எமது முன்னோர் பூமியின் மேற்பரப்பிற் காணப்படும் ஜீவ வர்க்கத்தைக் கருவிற் பிறப்பன, முட்டையிற் பிறப்பன, வேரிற் பிறப்பன எனப் பலவகையாகப் பாகுபடுத்தி- எழுவகைப் பிறவி களாக வகுத்து - எண்பத்தினான்கு நூறாயிர யோனிபேதங்க ளாய்த் தோற்றங்காட்டித் திறம்படக் கூறியிருக்கின்றனர். இந்த ஜீவவர்க்கங்களில் தாவரம் முதற்படியி ன தாகும்.
தாவர வர்க்கம் தாவர விருத்திக்கு முதற்கண் உ ஷ் ண மு ம் ஈரலிப்பும் இன்றியமையாதது. போதிய அ ன லு ம் நிரம்பிய நீர்ச்செறிவு முள்ள இடங்களில் நல்ல தாவரச்செறிவைக் காண்கிறோம். மேற் குறித்த சாதனங்களில் ஒன்று கூடி இன்னொன்று குறையும் போது தாவரவிருத்தி நொய் தமையவும், வளர்ச்சி தடைப்படவுங் காண்கிறோம். பொது ப் பட நோக்குமிடத்துச் சீதள் மத்திம வலயங்களிலும் பார்க்க உஷ்ணவலயத்தில் நிரட்சத்தை நாடிச் செல்லச் செல்லப் பலவகைப்பட்ட தாவரவர்க்கங்கள் நிரம்பிச் செழித்து ஓங்கி வளரக் காண்கிறோம். தாவரவிருத்திக்கு ஒளியும் ஒரு சாதன மாகும். இஃது உஷ்ணம் ஈரலிப்பு என்பவற்றிலும் பார்க்க எங்கும் ஓரளவுக்குக் கூடியபங்கு பரவியிருக்கக் காண் கின்றோம்.
பூமியின் மேற்பரப்பிற் சில பாகங்கள் தாவரமற்றுக் காணப் படுகின்றன. உஷ்ணம் அ ல் ல து ஈரலிப்பில் ஏதுமொன்று குறையும் பாகங்களிலேயே பாலைவனங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாகத் தூந் தரபூமிப் பிரதேசத்தில் நீருண்டு அனலில்லை. சகாராப்பிரிவில் அனலுண்டு நீரில்லை. எனவே இப்பாகங்கள் தாவரமற்ற வரண்ட நிலங்களாய்க் குளிர் வனாந்தரம், உஷ்ணப் பாலைவனம் என்னும் பெயர்களை முறையே பெறுகின்றன.
தாவரவிருத்தி. தாவரங்கள் பல்வகைப்பட்ட வெவ்வேறான நிலை பரங்களில் விருத்தியாகின்றன. சில தாவரங்கள் கூடிய அனலை வேண்டிநிற் பன. சில கூடிய ஈரலிப்பை வேண்டுவ ன. சில ஒரே நிலையான அனலையும் ஈரலிப்பையும் வேண்டுவனவாய்க் கூடிய குறைந்த மாறுபாடுகள் இவற்றினது அழிவிற்குக் காரணமாய்க் காணப்படு கின்றன. சில அனலான கோடையைத் தொடர்ந்துவரும் ஈரலிப் பான மாரியில் நன்கு வளரும் தன்மையன. சில தாவரங்கள் பவ

Page 65
108
உலக பூமிசாஸ்திரம்.
னத்திற் செறிந்த நீரணுவினுதவியோடு வளர்வன. சில நிலத்தில் ஈரலிப்பை வேண்டுவன. இக்காரணங்கள் கொண்டு நாடுகளின் பல பாகங்களிலுங் காணப்படும் தாவரவர்க்கங்கள் பலவகைப் பேதமுடையனவாய் அவ்வவ்விடங்களின், சுவாத்திய நிலைக்கேற் பக் கூடியுங் குறைந்தும் விருத்தி பெறுவனவாய்க் காணப்படு கின்றன.
தாவர பேதம் பூமியின் மேற்பரப்பிலுள்ள தாவரவர்க்கத்தை
(1) உஷ்ணவலயத் தாவரம், (2) மத்திம உஷ்ணவலயத் தாவரம், (3) மத்திமவலயத் தாவரம், (4) மத்திம சீதளவலயத் தாவரம்,
(5) சீ தளவலயத் தாவரம் என அவை வளரும் பிரதேசத்திற்கேற்பப் பாகுபடுத்தலாம். ஆயினும் பல தாவரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தாவரமண்டலங் களிலும் காணப்படுதல் கூடும். சில சீதளவலயந் தவிர்ந்த மற் றெல்லா வலயங்களிலும் விருத்தியாகின்றன, றோசாச்செடியைப் பிந்திய வகைக்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
உஷ்ணவலயத் தாவரங்கள்.-- இத் தாவரங்கள் வடக்கிலும் தெற்கிலும் 22 வரை பரவியுள்ளன. இந்த எல்லைக்குட்பட்ட அதிக மழை பெறுமிடங்களில் அடர்த்தியான காடுகள் காணப் படுகின்றன. திருவாங்கூர், யாவா, கொங்கோ, அமேசன் நதிப் பள் ளத்தாக்குகள் என்னும் பாகங்களிலுள்ள காடுகள் இவ்வகையில்
அடங்கும்.
பலவகையான தால் விருட்சங்களும், வைரித்த வெட்டுமரம் உதவும் தேக்கு, முதிரை, கருங்காலி, வேம்பு போன்ற மரங்களும்மா, பலா, வாழை, மங்குஸ்தான், அன்ன தாழை போன்ற பழமரங் களும் - தினை, சாமி, குரக்கன், நெல், சோளம் போன்ற தானிய வர்க்கங்களும் - இன்னும் பருத்தி, நீலம், புகையிலை, கொக்கோ, "றப் பர்மரம் போல்வனவும் உஷ்ணவலயத் தாவரத்தைச் சேர்ந்தவை.
மத்திம உஷ்ணவலயத் தாவரங்கள்.- இம்மண்டலம் வடக் கிலும் தெற்கிலும் 22° முதல் 35 ° வரை பரவியுள்ளது. இங்கு காணப்படும் தாவரங்கள் எத்தனை எத்தனையோ வகையினவாய் அமைந்துள்ளன. நெல், நீலம், பருத்தி, கரும் பு, சோளம், கோதுமை இன்னும் பிற தானிய வகைகளும் – தேயிலை கோப்பி


Page 66
மத்திமவலயக் கிராமக்காட்சி

பூமியும் ஜீவராசிகளும்.
109.
" போல்வனவும் - இப்பாகத்தில் பாலைவனப் பகுதியில் விசேடம் பெற்றுவளரும் பேரீந்து போல்வனவும் உபயோகமான ம த்திம் உஷ்ணவலயத் தாவரங்களாகும்.
மத்திமவலயத் தாவரங்கள். - இம்மண்டலம் வட தென் அட்சம் 35" முதல் 58° வரை வியாபித்துள்ளது. பல விதமான சுவாத்திய பேதமுடையது. அ னலான பாகங்களில் வளரும் மரங் கள் உஷ்ணவலய், மத்திமஉஷ்ணவலயத் தாவரங்கள் போல் எக் காலமும் இலை பொருந்தியன வாயிருக்கும். குளிரான பாகங்களில் சில தாவரங்கள் மாரியில் இலையுதிர்த்தும். இன்னும் இப்பாகத் துக் காடுகளில் ஓக், பீச், ஈக்கிளிபரஸ் போன்ற மரங்களும் காணப்படும். கோதுமை, பார்லி, றை, ஓற்ஸ் போன்ற தானிய வகைகளும் தோடை, கிச்சிலி, திராட்சை, அப்பிள், பிளம் போன்ற பழவர்க்கங்களும், உருளைக்கிழங்கு, கீரைவகை போல்வனவும்
இப்பாகத்தில் விருத்தியாகின்றன.
மத்திம சீதளவலயத் தாவரம்.-- இத் தாவர மண்டலத்தில் பேர், பைன் போன்ற ஊசியிலை மரங்களும் பார்லி, ஓற்ஸ் போன்ற தானிய வகைகளும் விருத்தியாகின்றன,
சீதளவலயத் தாவரம்.- இப்பாகத்தில் கடுங்குளிர் காரண மாகக் காளான் பாசி போல்வன காணப்படுவதேயன்றி வேறு தாவரங்கள் விருத்தியாவதில்லை.
உயர்மலைத் தாவரபேதம். நிரட்சத்திலிருந்து வடக்கு அல்லது தெற்கு நோக்கிச் செல் லும்போது தென்படும் தாவரபேதம் ஒரு உயர்மலையின் அடிப் பாகத்திலிருந்து நுனி வரை படிப்படியாகக் காணப்படும். உதாரண மாக உஷ்ணவலயத்திலுள்ள ஓர் உயரிய மலைச்சாரலின் அடிப் பாகத்தில் உஷ்ணவலயத் தாவரமும் இதற்கு மேற்புறம் மத் திம உஷ்ணவலயத் தாவரமும் அப்பால் மத்திமவலயத் தாவரம், மத்திம சீதளவலயத் தாவரம், சீதளவலயத் தாவரம் என்பனவும் , மலையுச்சியில் பனி நிலையான பனிப்படலம் என்னும் தூந் தர பூமிப் பிரதேசத் தோற்றமும் அடிப்பாகத்திலிருந்து உச்சிவரை படிப்படியாகக் காணப்படும்.
பல உபயோகமான தாவரங்கள், கவன மான செய்கை, பாது காப்பு என்பவற்றால் எவ்வளவோ மாற்றமும் கூடிய உபயோகமும் தரத்தக்க வகையில் விருத்தியாக்கப் பெறுகின்றன. ஒட்டுச் செடி கள் உண்டாக்கல் ஒரு உதாரணமாகும்.

Page 67
110
உலக பூமிசாஸ்திரம்.
பிராணி வர்க்கம். நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன எனப் பலவகைப் பட்ட ஜீவராசிகளை நாம் இம்மண்ணுலகிற் காண்கிறோம். உணவு, நீர், போதிய உஷ்ணம் என்பன இவற்றின் வாழ்வுக்கும் விருத்திக் கும் அத்தியாவசியமானவை. தாவரங்கள் போலன்றிப் பிராணி வர்க்கம் கூடித் திரிந்து நடமாடுஞ் சக்தி வாய்ந்தவை, பிராணி களும் தாவர வேறுபாடுபோற் சுவாத்திய நிலைக்கேற்ப மாறு படக் காணப்படுகின்றன. உதாரணமாக உஷ்ணவலயக் காடு
களிற் காணப்படும் யானை சிங்கம் போன்ற மிருகங்கள் மத்திய சீதள வலயங்களிற் காணப்படமாட்டா. பொதுப்படக் கூறு மிடத்து உஷ்ண மண்டலத்திலுள்ள பிராணிகள் நிரம்பிய பலமும் பெரிய உருவமுங் கொண்டுள்ளவை.
அடர்த்தியான உஷணவலயக்காடுகளில் போதிய பாது காப்பும், நீர்வசதியும், நிரம்பிய உணவுங் கிடைக்கின்றன. சிங்கம், புலி, யானை, நீர்யானை, முதலை போன்ற மிகுபலம் பொருந்திய பெரிய பி ர ம ணி க ள் இக்காடுகளுக்கே சொந்தம். "ஆனால்

பூமியும் ஜீவராசிகளும்.
111 இந்நிய தி நீர்வாழ் ஜெ ந் து க்க ளை ப் பொறுத்தமட்டில் ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல. துருவத்திலிருந்து நிரட்சம் நோக்கிச் செல்லச்செல்ல நீர்வாழ்வன ப ரு ப் ப த் தி லும் பலத்திலும் குறைந்து வரக் காணப்படுகின்றன, திமிங்கிலம், கடற்பசு, சீல் போல்வன வட தென் பாகங்களிலுள்ள குளிர்நீரிற் காணப்படு வனவாய் மிக அருமையாக இடம்பெயர்ந்து உஷ்ண அட்சங்களிற் தோற்றுவனவாய் " இருக்கின்றன.
றன் . தளிர்நீரிற "டங்களிற
சிறிய பிராணிகளை நோக்குமிடத்து எத்தனை எத்தனையோ கணக்கற்ற ஊர்வனவும் பிறவும் உஷ்ண வ ல யத் தில் நிரம்பக் காணப்படுகின்றன. அழகிய இறக்கைகளையுடைய வன்னப்பட்சி களும் இனியகீதம் இசைப்பனவும், உஷ்ண மத்திமஉஷ்ண பாகங்களிற் பெருகிக் காணப்படுகின்ற ன. " மனிதனுக்கு மிகவும் உபயோகம் பயக்கும் குதிரை, கழுதை, நாய், எரு து, ஆடு, ஒட்டகம் போல்வன மத்திம வலயங்களிலேயே மிகவும் விருத்தி யாகின்றன. ஆயினும் இவை வளர்ப்பில் எவ்வளவோ மாற்றம் பெற்றும் பலவித சுவாத்திய மண்டலங்களிற் பழக்கம் பெற்றும் பயனுதவுகின்றன. இவற்றுட்சில் உலகின் எல்லாப் பாகங்களி லும் வாழத் தக்க இயல்புடையன. உ த ா ர ண ம ா க குதிரை காணப்படாத பிரதேசம் மிகக்குறைவேயாகும். நாய் துருவம் தொடக்கம் நிரட்சம்வரை எங்குங் காணப்படுகின்றது.
இன்னும் அவ்வக் கண்டங்களுக்கே சொந்தமான மிருகங்க ளுமுள. ஒரு குடலுக்கு மேற்பட்ட குடல்கள் பொருந்தியனவும் விரிகுளம்புடையனவும் இரைமீட்கும் இயல்புடையனவுமான மிரு கங்கள் பழைய உ ல்  ைக ச் சேர் ந் த  ைவ. ஆடு, மாடு, மான், ஒட்டகம் என்பன இப்பகுப்பைச் சேரும். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இப்பகுப்பில் 160 க்கு மேற்பட்ட இனங்களுண்டு. அவுஸ்திரேலியாவிற் காணப்படும் ஆடு, மாடு, முதலிய கால் நடைகள் வெள்ளையர் அங்கு குடியேறியதன்பின் இறக்குமதி செய்யப்பட்டு விருத்தியடைந்தனவாகும். குட்டிகளைத் தம்மடியிற் கொண்டுசெல்லும் கங்காரு போன்ற பிராணிகளும் இன்னும் எத்தனையோ விநோதமான மிருகங்கள் எமு போன்ற பட்சிசாலங் களும் அவுஸ்திரேலியாவில் விசேடம் பெற்றவை.
உலகின் ஒரு பாகத்திற் காணப்படும் சில பிராணிகள் மறுபாகத்திற் க ா ண ப் ப டு ம் சில பிராணிகளின் நெருங்கிய தோற்றமும் இயல்பும் பெற்றிருப்பது அவையலை. ஒரே மூ தா

Page 68
112
உலக பூமிசாஸ்திர விளக்கம்,
தையர் வழித்தோன்றல் என்பதைக் காட்டுகின்றது. எருமை ஒட்டகம், யானை, சிங்கம், புலி, தீக்கோழி போன்ற பழைய உலகப் பிராணிகள் புதியஉலகத்துப் பிராணிகளான பிஷன் (Bison), லாமா, தபீர், பூமா, ஜாக்குர், றியா போன்றவையோடு முறையே ஒன் றற்கொன் று ஓரளவிற்கு ஒற்றுமைபடக் காணலாம்.
ம னித ன் அறிவு, செயல், குணம் போன்ற இயல்புகள் மனி தவர்க்கம் ஒரே மூ தாதையரைக் கொண்டதென்பதை அறிவுறுத்துகின் றன. உலகிற் பரந்துள்ள மனிதவர்க்கம் மூன்று பிரதான வம் சத்தையும் இன்னுஞ் சில பகுப்பையுஞ் சேர்ந்தவை.
(1) கோக்கேஷியன்' அல்லது இந்தோ ஐரோப்பியன்.- உலகில் இவ்வம்சமே தொகையிற் கூடியது. இது வெள்ளையர் சாதி யெனவும் அழைக்கப்படு தலுண்டு. வெள்ளைத்தோல் அல்லது உஷ்ணப்பிரதேசங்களில் மங்கலான வெள்ளை, முட்டை வடிவ மான முகம், படி ந் து செல் லுங் கேசம், நேரான கண்கள், உயர்ந்த நெற்றி என்பனகொண்டு இச்சாதியினரை நாம் அறி யலாம். ஐரோப்பாவிலுள்ள பல வர்க்கத் தி ன ரும் இந்தியா அமெரிக்கா, அவுஸ்திரேலியாவிலுள்ள பெரும் பான்மையினரும் இவர்களாவர். சீர் திருத்தத்தில் உலகில் விசேடம் பெற்றவர் களும் இவர்களே. உலகின் பலபாகங்களிலும் இச்சாதியினர் பரவி வருகின்றனர்.
(61) மங்கோலியர் அல்லது மஞ்சள் சாதியினர்.- உலகின் தொகையில் இச் சாதியினர் இரண்டாவதுஸ் தானத்தைப் பெறுகின்றனர். உ யர்ந்த கன்ன எலும்பு, மஞ்சள், அல் லது மங்கல் நிறம், நீ ண் டு கறுத்த கேசம், தாடியற்ற முகம், சிறியகண், வட்டமுகம் என்பன கொண்டு இப்பகுப்
பினரை நாம் அறியலாம். மங்கோலிய வம்சம் (சீனர்)
இவர்கள் ஆசியாவுக்குக் கிழக்

பூமியும் ஜீவராசிகளும்.
113
கிலும் வட கிழக் கிலும் விசேடமாய்க் காணப் படுவதோடு ஐரோப்பாவி லுள்ள துருக்கியர், பின் ஸ் (Fons) சா தி யி னர் லாப்பியர் முதலியோ ரும் இப்பகுப்பைச்
சேர்ந்து கரண ப மங்கோலிய வம்சம் (ஜப்பானியர்)
படுகின் ற னர்.
(000) நீக்கிரோவர்.- இவர்கள் உலகின து மக்கட் தொகையில் மூன்றாவது ஸ்தானம் வகிக்கின்றனர். கறுத் தமேனி, பரட்டைத் தலை, தட்டையான மூக்கு, தடித்த உதடு என்பன கொண்டு இவர்களை இலகுவில் அறியலாம். இவர் க
(நீக்கிரோவர்) ளின் இருப்பிடம் ஆபிரிக்காவாயினும், முன்னாட்களில் அமெரிக் காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் இவர்கள் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டுத் தற்போது இவ்விடங்களிற் பெருகிவரக் காணப்படுகின்றனர்.
இன்னும் மலாயர், செவ்விந்தியர், அராபியர் போன்ற இன் னும்பல சாதியினர் உலகில் ஆங்காங்கு காணப்படுகின் றனர்.
மக்கட் செறிவு (Population) பரந்த பூவுலகின் மேற்பரப்பில் மக்கள் செறிவு எவ்விடத்தும் ஒரே வகையாயிராது கூடியுங் குறைந்துங் காணப்படுகின்றது.
நல்ல சுவாத்தியம், போதிய தாவரச்செறிவு, கனிசப்பொருட் தேக்கம், கைத்தொழிலபிவிருத்தி, இலகுவான போக்குவரவுவசதி, பாதுகாப்பான அரசாங்கம் என்பன போன்ற ஏதுக்கள் ஓரிடத் தின் குடிசனச்செறிவைக் கூட் டு கின் ற ன. மழைக்குறைவு. மலேரியா முதலிய தொற்று நோய்கள் பரவுதல், அடர்த்தியான்
15

Page 69
பி.
சதுரமைலுக்கு டம சனங்களுக்கு மேல்
200-00 சனங்கள் 500 -308
> 70 - 100
1 சனங்களுக்கு கீழ் குடி சீனமற்ற பகுதி
லகின் கு டி சனம்
V...
உலகின் குடி சனத் செறிவு.

பூமியும் ஜீவராசிகளும்
115
காடுகள், போக்குவரவுச் சாதனக்குறைவு, உண வுப் பொருட்பஞ்சம் என்பன மக்கள் நெருங்கி வசிப்பதற்குப் பாதகம் விளைப்பன.
மட்டான அனலும் சீதளமும் பொருந்திய சுவாத்தியம் மக் கள் வாழ்க்கைக்கு ஏற்றது. துருவப் பகுதியையடுத்துள்ள பனிக் கட்டிவனாந்தரங்கள் கடுங்குளிராயிருப்பது காரணமாகவும் அங்கு உணவுப் பொருள் பெற இயலாமை காரணமாகவும் ஒருவரும் அவ்விடத்தில் வசிப்பதில்லை. இதனை அடுத்துள்ள 'தண்டாஸ்' எனப்படும் தாந்திரபூமிப் பிரதேசங்கள் வருடத்தில் 9 மாதம் பனிக்கட்டியினால் மூடப்பட்டும் 3 மாதம் சிறு அனலாகவும் இருக்
கும். இங்கு எஸ்கிமோவர் என்னுஞ் சாதியினர் ஐ தாக வசிக்கின் றனர். இவ்வாறு உஷ்ணவலயத்தை அடுத்துள்ள பாலைவனங்க ளும் மிக உஷ்ணம் பொருந்தியிருப்பது காரணமாகவும், தாவரச் செறிவின்மை காரணமாகவும் குடிசனம் மிகக் கு ைற வ ா க க் கொண்டுள்ளன.
நல்ல சுவாத்தியம் பொருந்தியிருப்பது காரணமாகவும் கமத் தொழிலபிவிருத்திக்கு ஏற்றசா தலங்கள் நிரம்பியிருப்பது காரண மாகவும் இந்தியா, சீனா, அவுஸ்திரேலியாவின் தென்கீழ்ப்பாகம், ஆபிரிக்காவின் நைல்நதி கொங்கோ நதிபாயும் பிரதேசங்கள், கேப் கொலனியை அடுத்துள்ளபாகம், வட தென் அமெரிக்கா வின் கிழக்குப் பாகங்கள், ஐரோப்பாக் கண்டத்தின் பெரும்பகுதி என் னும் இடங்களிற் குடிசனச் செறிவு கூடுதலாகக் காணப்படு கின்றது. மேலும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள், பெரிய பிரித் தானியா, ஜேர்மனி, ஜப்பான் போன்ற இடங்களில் சுரங் கப் பொருட்கள் அதிகங் கிடைப்பது காரணமாகவும், கைத்தொழில் முன்னேற்றம் பெற்றிருப்பது காரணமாகவும் மக்கள் நெருங்கி வசிக்கின்றனர்.

Page 70
116
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எடுத்த கணக்கின் படி ஆசியா 80 கோடி, ஐரோப்பா 38 கோடி, ஆபிரிக்கா 16 கோடி, அமெரிக்கா 14 கோடி மக்கட் தொகை கொண் டிருந்தன. அப்போதெடுத்த கணக்கின்படி இலங்கை 36 இலட் சம் மக்களைக் கொண்டிருந்தது. தற்போதைய குடிசன மதிப்பின் படி இலங்கையில் 81 இலட்சம் மக்கள்வரை உளர். இது போலவே மேற்குறிப்பிட்ட கண்டங்களிலும் இன்று மக்கட்தொகை எத்த னையோ மடங்கு பெருகியிருக்குமென எண்ணவேண்டும்.
சீர்திருந்தாத மக்கள் வசிக்கும் பாகங்களில் குடிசனத் தொகை கணக்கிடப்படுவதில்லை. உலகில் வ தி யும் மக்களில் அரைப்பாகத்திற்கு மேற்பட்டோர் ஆசியர்; நாலிலொரு பங்கினர் ஐரோப்பியர்; ஒன்பதிலொரு பங்கினர் ஆபிரிக்கர்; பதினொன் றி லொரு பங் கி ன ர் அமெரிக்கர். தற்போதைய கணக்கின்படி உலகில் சதுர மைலுக்குச் சராசரி 28 மக்கள்வீ தம் வசிக்கின்ற னர், மிக நெருங்கிய குடிசனச் செறிவுடைய து ஐரோப்பாக் கண்டம். இங்கு சதுரமைலுக்குச் சராசரி 95 மக்கள் வீதம் வசிக் கின்றனர். அடுத்த படியாக ஆசியாவில் 46, ஆபிரிக்காவில் 12, அவுஸ்திரேலியாவில் 10, அமெரிக்காவில் 9 மக்கள் வீதம் வசிக் கின்றனர்.
நாகரீகம்.. ஆதிகாலத்தில் -- ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய காலங்களில் -- மனிதன் நாகரீக வளமின்றி வாழ்ந்தா னெனச் சரித்திரங்கள் கூறுகின்றன. ஆனாற் படிப்படியாக மக்கட் தொகுதியினரின் ஒவ்வோர் சாரார் நாகரீக வளர்ச்சியடைந்து வந் திருக்கின்றனரென்பது அறியத்தக்கது. இன்று மக்கள் அடைந் துள்ள நாகரீகத்தகு தியை நோக்கி அவர்களை ஐந்து பகுப்பின ராகப் பிரிக்கலாம். அப்பகுப்புகளாவன காட்டுமிராண்டிகள், இடையர், சீர்திருந்தியோர், நாகரீகம் படைத்தோர், அறிவாளி கள் என்பனவாகும்.
காட்டுமிராண்டிகள் வேட்டையாடியும் மீன்பிடித்தும் கந்த மூலங்களைச் சேகரித்தும் வாழ்வர். இடையர் கால் நடைகளை வளர்த்து அவற்றினது உணவின் பொருட்டு மேய்ச்சற்றரைகளை நாடி அலைந்து திரிவோராவர். சீர்திருத்தியோர் ஓரிடத்தில் நிலை யாக வதிவுகொண்டு பூமி திருத்தி வாழ்வோராவர். நாகரீக மக் கள் இத்துடன் கலைவளர்ச்சியும் அறிவும் பெற்றோராவர். நாகரீ கத்தின் உச்சநிலையை அடைந்தோர் அறிவாளிகள் எனப்படுவர்.

பூமியும் ஜீவராசிகளும்.
117
அரசாங்கம்.- உலகில் பல்பிரிவான அரசியல் ஒழுங்குகளை நாம் காண்கிறோம். இப்பிரிவுகளில் ஒன்று குடியரசு, இன்னொன்று முடியரசு, சீர் திருந்தாத மக்கட்பகுப்பினர் தத்தம் நாட்டிலுள்ள தலைவனுக்கடங்கி நடப்போராவர்.
சமயம்.- உலகில் மக்களது சமயக்கொள்கைகளை நோக்கு
மிடத்து ஐரோப்பா அமெரிக்கா முத லிய நாடுகளில் வசிப்போர் கிறிஸ் தவ சமயத்தைக் கைக்கொள்கின்றனர். இ ன் று இ ச் ச ம ய ம் உலகின் பல பாகங்களிலும் பரவியுள்ளது. மேற்காசியாவிலும் வட ஆபிரிக்கா விலும் வசிப்போர் மு க ம் ம து சம் யத்தைக் கொண்டொழுகுகின்றனர். இந்து சமயம் இந் தி ய ா வு க்குச் சொந்தமானது. புத்த சமயம் கிழக் காசிய நாடுகளுக்குரியது. நாகரீக
வளர்ச்சி பெறாத மக்களிடை பல (இந்துக்கள்)
வகைப்பட்ட சமயக்கொள்கைகளுள்.
பாஷை:- உலகில் மக்கள் பேசும் பாஷை நாலாயிரத்துக்கு மேற்பட்டதென அறியக்கிடக்கின்றது. ஆனால் இதிற் பெரும் பகுதி ஒ வ் வோர் சிறுதொகையினராற் பேசப்படுவதாகும். ஆதிபாஷைகளெனக் கொள்ளத் தக்கவை தமிழ், சமஸ்கிருதம், லத்தீன், ஹீபுறு, கிறீக் என்பனவாகும். இன்று வழங்கப்படும் முக்கியம் பெற்ற பாஷைகள் சீனப்பாஷை, ஆங்கிலம், றஷயா பாஷை, ஹிந்தி, ஜேர்மன்பாஷை. ஸ்பானிய பாஷை, பிரான்சிய பாஷை, தமிழ் என்பனவாகும். இன்று உல கின் பொதுப் பாஷையாக ஆங்கிலம் விசேடம்பெற்று விளங்குகின்றது. ஆதி பாஷைகளில் இன்றும் பேச்சிலும் எழுத்திலும் நிலைத்து நிற் பது தமிழாகும்.
வினாக்கள்.' (1) எமது முன்னோர் ஜீவவர்க்கத்தை எவ்வாறு பாகுபடுத்தி வகுத் துள் ளனர்? (2) தாவா விருத்திக்கு இன்றியமையாத சாதனங்கள் எவை? (3) குளிர்வனாந்தரம் உஷ்ணப்பாலைவனம் என்னும் பதங்களை விளக்குக. (4) பூமியின் மேற்பரப்பிலுள்ள தாவர வர்க்கத்தை அவை வளரும் பிர தேசத்திற்கேற்ப எ வ் வ ா று பாகுபடுத்தலாம்?(5) பிரதான தாவர மண்டலங்கள், ஒவ்வோர் மண்டலத்திற்கும் உதாரண மாக இவ்விரண்டு

Page 71
118
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
ஊர்கள், அவ்வவ்மண்டலங்களில் விருத்தியாகும் ஐந்து இனத் தாவரங்கள் என்பன கூறுக. (6) நிரட்சத்திலிருந்து துருவம் நோக்கிச் செல்லும் போது காண்ப்படும் தாவரபேதங்கள் எவை? இக் தாவரபேதம் உலகின் ஓரிடத்திற்காணப்படுதல் எவ்வாறு? (7) பிராணிவர்க்கத்தின் சில பகுப்பு கள் கூறுக. ஒவ்வோர் பகுப்புக்கும் மும்மூன்று உதாரணங்கள் கூறுக. (8) யானை தொடக்கம் சுண்டெலி ஈறாக பத்துத் தாவா பக்ஷணிகளும் சிங்கம் முதல் கீரி ஈறாக பத்து மாமிசபக்ஷணிகளும் கூறுக. (9) தாவா பக்ஷணிகளில் ஐந்து பறவையும், மாமிசபக்ஷணி களில் ஐந்து பறவையு ம் கூ றுக. (10) சில விநோதமான மிருகங்கள் ஐந்து, பறவைகள் ஐந்து கூறி அவை எவ்வெப்பிரிவிற்குச் சொந்தமெனக் கூறுக. (11) பழைய உலகப்பிராணிகள் ஐந்து கூறி அவை ஒவ்வொன்றும் எவ்வெப்புதிய உலகப் பிராணிகளோடு ஒற்றுமைப்படுகின் றன எனக்கூறுக. (12) மனிதவர்க்கம் ஒரே மூதாதயரைக்கொண்டது என்பதை எவ்வாறு அ றி ய ல ாம்? (13) உலகிற் பரந்துள்ள மூன்று பிரதான மனித வம்சங்கள் எவை? ஒவ்வோர் வம்சத்தினரதும் தோற்றத்தை விபரிக்குக. (14) நாகரீக மக்கள், சீர்திருந்தாத சாதியினர் ஒவ்வோர்க்கும் மும்மூன்று உதாரணங்கள் தருக. (15) சீனர், ஜப்பானியர், எஸ்கிமோவர், ஐரோப்பியர், எகிப்தியர், அராபியர், இந்தியர், பிக்மீஸ், செவ்விந்தியர், கேர்கீஸ்சாதியினர் இவர் களுள் உமது எண்ணப்படி நாகரீகத்தில் முன்னேற்றமடைந்த மூன்று சாதியினரும் நாகரீகத்திற் குறைந்த மூன்று சாதியினரும் கூ றுக. எவை யேனும் ஐந்து சாதியினரைப்பற்றிச் சிறு குறிப்பு எழுதுக. (16) இலங் கையில் குடிசனம் நெருக்கமான ஐந்து இடங்களும் குடி சனம் குறைவாக வள்ள ஐந்து இடங்களும் கூறு க. அவ்வவ்விடங்களில் இவ்வாறு குடி சனம் கூடியுங்குறைந்து மிருப்பதற்குரிய காரணங்களை ஆராய்க (17) பூமி யின் மேற்பரப்பில் குடிசனச்செறிவுக்கு எவ்வேதுக்கள் சாதகமாயிருக்கிற தென்ப ைசயம் எவ்வே துக்கள் பாதகமா யிருக்கிற தென்பதையும் கூ று க. (18) உலகில் குடிசனம் நெருக்கமாசவுள்ள ஐந்து இடங்களும் குடிசனம் நொய்தாகவுள்ள ஐந்து இடங்களும் கூறுக. இவற்றை உலகப்பறவருவப் படத்திற் குறித்துக்காட்டி அவ்வவ்விடங்களில் குடிசனம் கூடியுங் குறைந்து மிருப்பதற்குரிய காரணங்களை ஆராய்க (19) தற்போதையகணக் கின்படி ஒவ்வோர் கண்டத்திலும் சதுரமைலுக்கு எத்தனை மக்கள் வீதம் வசிக்கின்றனர் எனக்கூறு 5. (20) ழனி தவர்க்கம் என் னும் தலையங்கத்தின் கீழ் உலகில் வசிக்கும் பல்வேறு மக்கள், அவர்களுடைய அரசாங்கம், சமயம். பாஷை. நாகரீகம் என்பன பொருந்த ஒரு விரிவான ஆராச்சிக் கட்டுரை வரைக.
கை ஐந்து ச" கத்திற் குலகரீகத்தில் "பார்.


Page 72
தேந்தரபிரதேசம் &: உபனிப்பூம். 5 ஊn சியிரேக்காடு நலத்திம வவய அகன்ற இலக்காம். டித் திம வலையப் புல்வெளிகள். மத்திம வலயப் பாலைவனங்கள். 2ஸ்னவலைப் பாலை வனங் கள்.து உஸ் எணவயைப் புல் வெளிகள் : உஸ் ண வ இயக் காடு, பருவக்காற்றுப் பிரதே சங்கள்.
நான*அடையாள
உலகின் விசேட இயற்கை வலயங்கள்.

17. உலகின் இயற்கை வலயங்கள்
சுவாத்தியம், தாவரச்செறிவு, பிராணிவர்க்கம், ம க் க ளி ன் வாழ்க்கைமுறை என்பவற்றோடு ஒன்றியும், வேற்றுமைப்பட்டும் உலகின் பாகங்கள் பலவகையான இயற்கைவலயங்கள் பொருந்தி யிருக்கின்றன. 'இயற்கைவலயம்' எ ன் று கூறும்போது ஒரே தன்மையான இயற்கையமைவு, சீதோஷ்ணஸ்திதி, இயற்கைத் தாவரம், பிராணிவர்க்கம், மக்கள்வாழ்க்கை என்பன பொருந்து தலைக் குறிக்கும்.
உலகின் பிரதான இயற்கை வலயங்கள்
1. ஈரலிப்பான உஷ்ணவலயக் காடுகள், 2. கோடைமழைபெறும் உஷ்ணவலயப்புல்வெளிப்பகுதிகள், 3. பெரிய உஷ்ணப் பாலைவனங்கள், 4. சிறிய பாலைவனங்களும் வரண்ட பீடபூமிகளும், 5. மத்தித்தரைக்கடற் சுவாத்திய வலயம், 6. வடகண்டங்களின் கிழக்குப்டாகச் சூடான மத்திமவலயம், 7. மத்திய புல்வெளி வலயம், 8. தென்கண்டங்களின் கிழக்குப்பாகச் சூடான மத்திய
வலயம், 9. மத்திம சுவாத்திய மேற்குக் கிழக்குக் கரைப்பகுதிகள், 10. குளிர்ந்த மத்திமசுவாத்திய வலயம் அல்லது ஊசியிலைக்
காட்டுப் பிரதேசம், 11. வடக்கேயுள்ள அகன்ற இலைக்காடுகள், 12. மத்திய ஐரோப்பிய நாடுகள், 13. மலை வலயங்கள், 14. தூந்திரபூமிகள், 15. பனிக்கட்டி வனாந்தரம் என்பனவாகும். இவ்வலயங்களின் பல்வேறு தன்மைகள், தாவர்ச் செறிவு, மக்களின் வாழ்க்கைமுறை ஆதியவற்றை ஆராய்வாம்.
1. ஈரலிப்பான உஷ்ணவலயக் காடுகள் )
(The hot,wet Forests) இப்பகுதி கற் க ட க மகர ரேகைகளுக்கிடையேயுள்ளது. எப்பொழுதும் சூடும் ஈரலிப்புமுள்ளதாக இருக்கும். ஆகை யினால் இக்காடுகள் பருத்து ஓங்கிச் செழித்து வைரித்த மரங்
16

Page 73
122
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
மன7, எமதல்ல - 07, .
களால் மூடப்பட்டிருக்கும். இவ்வலயக் காடுகளில் மலைவேம்பு, கருங்காலி, பாலை, முதிரை, தென்னை, றப்பர் என்னும் மரங்களே அதிகமாகவுண்டு, எண்ணெய் விதைகளைக் கொடுக்கும் மரங் களும் இங்குண்டு. நெல், கரும்பு, மரவள்ளி, வாழை என்பன செய்கை பண்ணப்படுகின்றன. மலைநாடுகளிற் கோப்பி, கொக்கோ உண்டாக்கப்படுகின்றன, இவ்வலயச் சுவாத்தியம் ஐரோப்பிய ருக்கு ஏற்றதல்ல. அவ்வவ்விடச் சுதேசிகளே வசித்தற்கேற் றன. அச்சுதேசிகள் திருத்தமற்ற கமச்செய்கையைச் செய்தும் வேட்டையாடியும், பழவகைகளைச் சேகரித்தும் தமது சீவியத்தை நடாத்துவர்.
1-A. இப்பகுதியில் கயனா, அமேசன் நதிப் பள்ளத்தாக்கு, அன் தீஸ்மலையின் கீழ்சரிவு என்பன அடங்கும். கயனாவில் ஒல்லாந்த சாலும், ஆங்கிலேயராலும் கரும்புச்செய்கை நடைபெறுகின்றது. அமேசன்நதிப் படுக்கையிற் செவ்விந்தியர் உளர். இவர் க ள் திருத்தமற்றவர்கள். ஐரோப்பியரின் கூலிகளாய் றப்பர்த் தோட் டங்களில் வேலைசெய்வர். இவ்விந்தியர் சேகரிக்கும் றப்பர் அமே சன் நதிவழியாகப் பாறா என்னும் துறைமுகத்திற்குக் கொண்டு போகப்படும்.
1-B. இன்னும் இப்பகுதியில் கினியின் கடற்கரையையடுத்த பாகமும், பதிந் தபீடபூமியாகிய கொங்கோ நதிப் படுக்கையும் அடங் கும், இப்பாகங்களில் எண்ணெய் எடுக்கக்கூடிய விதைகளை யுடைய ஒருவகை விருட்சங்கள் (நெய்ப்பனை - தாலவிருட்சம்) அதிக மாகக் காணப்படும். கொங்கோந்தியின் கழிமுகத்தை அடுத்துக் காட்டுறப்பர் மிகுதியாயுண்டு. காடுகளிற் பருத்த யானைகள் வசிக் கும். யானைத் தந்தங்கள் சேகரிக்கப்பட்டுப் பெரிய ஆற்றின்வழி யாகத் துறைமுகங்களுக்குக் கொண்டுபோகப்படுகின்றன, கொங் கோ நதியிலுள்ள லிவிங்ஸ்ரன் நீர்வீழ்ச்சியை அடுத்துச் சிறிது தூரத்திற்குப் புகையிரதப் பாதைகள் திறக்கப்பட்டிருக்கின்றன,
காட்டினுள்ளே பிக்மிஸ் என்னுஞ் சாதியினர் வசிக்கின்றனர், இவர்கள் உருவத்திற் கு ள் ள ர், வேட்டையாடியும், மீன்பிடித் தும், காட்டுப் பொருட்களைச் சேர்த்தும் சீவியத்தைக் கழிப்பர். பிக்மிஸ் சாதியினரேயன்றி இப்பகுதியில் நீக்கிரோ சாதியினரும் வசிக்கின் றனர். இவர்கள் காடுகளை இடையிடையே வெட்டி நிலத்தை வெளியாக்கிக் கிழங்குவகைகளை யும், பன்னா வாழை களையும் பயிராக்குவர். இவ்வலயக் காடுகளில் செற்சி (T'sutse) என்னும் ஒருவகை ஈக்களுண்டு, இவைகள் ஆடு மாடுகளையும்

உலகின் இயற்கை வலயங்கள்
123 குதிரைகளையுங் குத்திக் கொன்றுவிடுகின்றன. ஆகையினாலே சனங்கள் தாமாகவே பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றிடங் களுக்குக் கொண்டுசெல்வர். கொங்கோ நதிப் படுக்கையின் தென்பால் செப்புச் சுரங்கங்களுள்ள ஓர் பகுதியுமுண்டு. அதற் கூடாக ஒரு புகையிரதப் பாதையுஞ் செல்கின்றது. பெருந்தொ கையான செம்பு பிற இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
1-C. இன்னும் இப்பகுதியில் தென் அமெரிக்காவின் வட மேற் குக் கடற்கரைப் பகுதியும், மத்திய அமெரிக்காவின் ஈரலிப்பான பகுதியும், மேற்கிந்திய தீவுகளும் அடங்கும். கடற்காற்று இப் பகு தியின் உஷ்ணத்தை மட்டுப்படுத்துகின்றது. ஆகையினால் ஐரோப்பியர் இங்கு வந்து தோட்டங்களை உண்டாக்கிச் சீவிக் கின்றனர். சுதேசிகளே இத்தோட்டங்களில் வேலை செய்வர். தோட்டச் செய்கை நடைபெறுவதினாலேயே பனனா, தேங்காய் கொப்பற, தோடம்பழம், கோப்பி, சீனி, கொக்கோ, புகையிலை என்பன ஏற்றுமதியாகின்றன, மலைவேம்பு, கருங்காலி மரங்களும் ஏற்றப்படுகின்றன. பனமாக் கால்வாய் திறக்கப்பட்டபின் இவ் வலய வர்த்தகம் விருத்தியாகி வருகின் றது. கியூபாவின் தலைப் பட்டினமாகிய ஹவனா மிகவும் பிரதானமான துறைமுகமாகும். உஷ்ண வலயத்தையடுத்த மெக்சிக்கோ, றினிடாட் தீவு, வெனிசி யூலா என்னுமிடங்களில் நில எண்ணெய் அதிகமாக எடுக்கப் படும்.
1-D. இன்னும் இப்பகுதியில் கிழக்கிந்திய தீவுக் கூட்டங்கள் அடங்கும். இலங்கையிலும் மற்றைய கிழக்கிந்திய தீவுகளிலு முள்ள மலைப்பிரதேசங்களின் கீழ் சரிவுகளில் காடுகள் அடர்ந்தி ருக்கின்றன. பெரிய தீவுகளாகிய போர்ணியோ, நியூகினி என்பன இன்னும் நன்கு ஆராய்ச்சி செய்யப்படாமையினாலே அவற்றைப் பற்றிச் சொல்வதற்கில்லை. அத்தீவுகளில் வசிக்கும் சனங்கள் காட்டு மனிதராய் வேட்டையாடியும், மீன்பிடி த்தும், உணவுக் கேற்ற காட்டுப் பொருட்களைச் சேகரித்தும் தமது சீவியத்தை நடாத்துகின்றனர். காட்டாந்த இடங்களில் ஐரோப்பியரின் தோட் டங்களில் இந்தியர், சிங்களவர், சீனர், மலாயர் கூலி வேலை செய் கின் றனர். இலங்கையிலுள் ள ஐரோப்பியரின் தோட்டக் களிலே தேயிலை அதிகமாகச் செய்கை பண்ணப்பட்டுக் கொழும்பு மார்க்க மாகப் பெரிய பிரித்தானியா, எகிப்து, இந்தியா, அவுஸ்திரேலியா, அ. ஐ. நாடுகள், நியூசிலாந்து முதலிய தேசங்களுக்கு ஏற்றுமதி யாகின்றது. ஜாவாத் தீவிலே ஒல்லாந்தர் கரும்பு, கோப்பி, கொக் கோ முதலியவற்றைச் செய்கைபண்ணி வற்றேவியா மூ ல ம்

Page 74
124)
உலக பூமிசாஸ்திர விளக்கம்,
ஏற்றுமதி செய்கின்றனர், நெல் எல்லா இடங்களிலும் செய்கை பண்ணப்பட்டுச் சுதேசிகளால் உண்ணப்படுகின்றது. தேங்கா யும், சவ்வரிசியும் ஒருவகையில் உணவாகின்றன. மலாயாக குடா நாட்டிலும், வங்கா (Bamka) தீவிலும், பிலிப்பைன் தீவுகளிலும் உலகில் விசேடம்பெற்ற தகரச் சுரங்கங்களுண்டு. போர்ணியோ, சுமாத்திரா தீவுகளில் சுரங்க (Mineral) எண்ணெய் எடுக்கப்படு கின் றது.
2. கோடை மழைபெறும் உஷ்ணவலயப் புல்வெளிப் பகுதிகள்
(The hot Regions with Summer Rains) இவ்வலயப் பகுதிகளில் உஷ்ணமும், கோடைகால மழையும் உண்டு. பெரும்பாலும் இங்குள்ள தாவரம் புல்லேயாகும். ஈரலிப் பான இடங்களிலும், ஆற்றின் பக்கங்களிலும், உயரமான நிலங் களிலும் சில சிறுகாடுகளுண்டு. முதலாம் பிரிவிற் கூறப்பட்ட ஈரலிப்பான உஷ்ணவலயக் காடுகளில் நடைபெறும் தொழில் களே இங்கும் நடைபெறுகின்றன. காட்டுப்பொருட்களைச் சேகரித் தல், மீன் பிடித்தல், வேட்டையாடல் போன்ற தொழில்களும் நடைபெறும். புல்வெளிகளில் ஆடு மாடுகள் வளர்க்கப்படும். சிறி தளவு கமச்செய்கையும் நடைபெறும். நெல், பருத்தி, உஷ்ணவல் யத்திற்குரிய பழவகைகள், சிறு தானியம் என்பனவே இப்பகுதி களில் உண்டாகும். சிறு தானியங்களில் சோளம் விசேடமாக உண்டாகும். இவ்வலயத்திலுள்ள உயரமான பாகங்கள் ஐரோப்பி
யர் வசிப்பதற்கேற்றன.
2-A. தென்னமெரிக்காவிலுள்ள ஒறினகோ நதி பாயும் பகுதியி லுள்ள லானோஸ் (Llanos) என்னும் புல்வெளி இப்பகுதியிலடங் கும். இங்கே ஆடு மாடுகள் வளர்க்கப்படும். கயனாவிலுள்ள பீட பூமியில் பொன்னும் அலுமினியமும் காணப்படுகின்றன.
2-B. பிறேசில் பீடபூமியும், பரகுவே நதி பாயுமிடத்திலுள்ள வெளியும் இப் பகுதியிலடங்கும். பிறேசிலின் கிழக்கேயுள்ள. "கம் போஸ் எனும் புல்வெளியில் ஆடு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கிழக்குக் கரையிலுள்ள சிறுச்சிறு மலைகளால் இப்பகுதிகளில் நல்ல மழையுண்டு. ஆதலின் இப்பகுதி மிகவும் செழிப்பாயிருக் கின்றது. இங்கே பருத்திச் செய்கையும், தோட்டச் செய்கையும் நடைபெறுகின்றன. உலகம் முழுவதும் உண்டாக்கப்படும் கோப் பியில் அரைவாசிக்குமேல் பிறேசில் குன்றுகளின் ஈரமான சரிவு களில் உண்டாக்கப்படும். இக்கோப்பி சன்ரோஸ் (Santos) என்னுந்

உலகின் இயற்கை வலயங்கள்.
125
துறைமுகத்தின் வ ழி ய ா க ஏற்றுமதியாகும். இப்பகுதியில் றையோடி ஜனறே மிகப்பெரிய துறைமுகப் பட்டினமாக அமைந் திருக்கின்றது.
2-C. ஆபிரிக்காவிலுள்ள சாம் பெசி நதிப்படுக்கை, விக்ரோறியாதங்கனிக்கா - நயசா வாவிகளுள்ள உயர்ந்த பூமியாகிய வாவிப் பிரதேசம், நைல்நதியின் கிளைகள் உற்பத்தியாகும் வெளி, நைஜர் நதியின் உற்பத்தி ஸ்தானம், ஜாறி (Share) நதி பாயுமிடம் என்ப னவும் இப்பகுதியிலடங்கும்.
நைஜர்நதி வி ழுமிடத்தை அண்டியும், ஜாட் வாவியை அடுத் தும் ஆங்கிலேயருக்குக் கீழ்ப்பட்ட சுதேச இராச்சியங்களிருக்கின் றன. இவ்விடங்களிலுள்ள சனங்கள் கமத்தொழில், ஆடு மாடு வளர்த்தல், கைவேலை, வியாபாரம் என்னும் தொழில்களைச் செய் கின் ற னர். மற்றைய இடங்களிலே ஆடு மாடு வளர்த்தலே பிர தான தொழிலாகும். ஆடு மாடுகளைக் கொல்லும் செற்சி என் னும் ஈ இங்குமுண்டு. கமத்தொழில் வி ரு த் தி குறைவாகவே யிருக்கின்றது. ஆங்கிலேயர் ஆதீனத்திற்குள் இருக்கும் இப்பகு தியின் அதிக இடம் பருத்திச் செய்கைக்கு மிக வாய்ப்பான தென்று எண்ணப்படுகின்றது. நைஜீரியா மிக விசேடமானது கிழக்கே உள்ள உயர்ந்த குளிரான பீடபூமி ஐரோப்பியர் வசிப்ப தற் கேற்றது. இப்பீடபூமிப் பகுதியில் றொடேசியா விசேடமா ன து. இங்கே பொன் உண்டு. விக்ரோறியா நீர் வீழ்ச்சியும் இங்கே தானுள து. றொடேசியாவின் மேற்குக்கரையும் கிழக்குக் கரையும் புகையிரதப் பாதைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன,
2-D. மடகாஸ்கர் தீவும் இப்பகுதியில் அடங்கும். இங்கே காட டர்ந்த ஈரலிப்பான பகுதிகளிற் சில இடங்களிலே தோட்டச் செய்கை நடைபெறுகின்றது. கோவஸ் (Honas) என்றழைக்கப்படும் இங்குள்ள புல்வெளிகளில் ஆடு மாடுகள் வளர்க்கப்படுகின்றன,
2-E. ஆசியாக் கண்டத்திலுள்ள பருவப்பெயர்ச்சிக் காற்று வல யமும் இப்பகுதிலடங்கும், மேற்குக்காற்றாடி மலையி லும், அசாமி லும், பர்மாவிலுள்ள ஈரலிப்பான பாகங்களிலும் அடர்ந்த காடு கள் உண்டு. பர்மாவிலுள்ள காடுகளிலே தேக்கமரங்கள் வெட்டப் பட்டு றங்கூன் வழியாக ஏற்றுமதியாகின்றன. அசாமிலும், சீனா வின் தென் பாகங்களிலும் விசேடமான தேயிலைத் தோட்டங்க ளுண்டு. தக்கண பூமியின் வடமேற்குப் பாகத்திலே பருத்திச் செய்கை, நடைபெறு கின்றது. இங்குண்டாகும் பருத்தியின் ஓர் பாகம் பம்பாயில் தொழிற்படுத்தப்படுகின்றது. பருத்தி விளை

Page 75
126
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
யும் எல்லையான து பஞ்சாப் மாகாணத்தின் வட அட சம் 30° க்கு மேலுஞ் செல்கின்றது. இங்கே குளிர்காலத்தில் கோதுமை செய்கை பண்ணப்படும்." இக்கோதுமை இந்து நதியின் கழி முகத்திலுள்ள கராச்சித் துறை வழியாக ஏற்றுமதியாகின்றது. கங்கைநதிப் பள்ளத்தாக்கிலும், மற்றைய நதிகளின் கழிமுகங் களிலும் நீர்ப்பாய்ச்சல் இலகுவானதாகையினாலே ஏராளமான நெற்செய்கை நடைபெறுகின்றது. றங்கூன், சைகொங் என்னுந் துறைமுகங்களின் வழியாகப் பெருந்தொகையான அரிசி ஏற்று மதியாகின்றது. கங்கைநதியின் கழிமுகத்திலே கல்கத்தாவும், கன்ரன் நீதியின் கழிமுகத்திலே கன்ரனும் (Canton) விசேட துறை முகங்களாக அமைந்துள்ளன. இப்பிரிவில் இலட்சக் கணக்கான சனங்கள் பெரும்பாலும் கமத்தொழிலினாலேயே சீவிக்கின்றனர். ஆபிரிக்காவிலும் பார்க்கக் கமத்தொழில் இங்கே விருத்திய டைந்து வருகின்றது. ஆடு மாடுகளும், எருமைகளும், யானைக ளும் இப்பிரிவிலுண்டு. யானைகள் பெரும் பாரங்களைக் கொண்டு போக உதவுகின்றன.
2-F, வட அவுஸ்திரேலியாவும், குஸ்வின்ஸ்லாந்தும் இப்பிரிவில டங்கும். இப் பிரிவிலே சனங்களும் மிகக்குறைவு; அவர்களின் முன்னேற்றமுங் குறைவு, சனங்களின் முயற்சிக் குறைவினால் இப்பிரிவு பயன்படுத்தப்படாது போயிற்று. வட அவுஸ்திரேலி யாவின் கிழக்குக் கரையோரமாகக் கரும்பு, அன் ன தாழை என் பன செய்கைபண்ணப்படுகின்றன. புற்றரைகள் பொருந்திய உள் வெளியிலே ஆடு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இப்பிரிவி லுள்ள உயர்ந்த நிலப்பாகங்கள் ஐரோப்பியருக்கேற்ற சுவாத்திய முடைய ன. இந்த உயர்ந்த நிலப்பாகங்களிலே பொன்னும் தகர மும் எடுக்கப்படுகின்றன. இப்பிரிவிலுள்ள பொருள்கள் பிறிஸ் பேண் என்னும் பட்டினத்தின் வழியாக வெளிநாடுகளுக் கனுப்பப்படுகின்றன.
3. பெரிய உஷ்ணப் பாலைவனங்கள்
(Great Deserts) இப்பகுதிகள் அதிக உஷ்ணமும், வரட்சியு முடையன. இடையிலே உள்ள ஓயெஸிஸ் (Oasis) என்றழைக்கப்படும் பாலை வனப் பசுந் தரைகளில் மாத்திரம் கமத்தொழில் சிறிது நடை பெறுகின்றது. மற்றைய இடங்களிலே உள்ள ச ன ங் க ள் வேட்டை ஆடுபவர்களாயும், இடையர்களாயும், வியாபாரிகளா யும், சஞ்சாரிகளாகயும், கொள்ளைக்காரர்களாயுந் திரிவர்.

உலகின் இயற்கை வலயங்கள்.
127
1க்கு கீழ்
வருடம ழை வீழ்ச்சி 25-0 58" க்கு மேல்
- உலகின் சராசரி மழைவீழ்ச்சி ?-A. ஆபிரிக்காவிலுள்ள பெரிய சகாரா (Sahana) பாலைவன மும், ஆசியாவிலுள்ள அரேபியா பாலைவ Srமும் இப்பிரிவிலடங் கும். பேரீந்தும் ஒட்டகமும் இப்பிரிவிற் பிரதானமானவை. ஒட்ட கத்தின் உதவியாற் போக்கு வரத்து நடைபெறுகின்றது. ஒட்ட கம் 'பாலைவனக்கப்பல்' என் றழைக்கப்படுகின்றது. ஒட்டகத்தாற் பயணம் நடைபெறும் பாதைக்குக் கரவன்பாதை என்று பெயர். அரேபியாவில் முஸ்லீம்களுக்குரிய விசேஷ ஆலயமொன்று மெக் காவில் உண்டு. இந்த ஆலயத்திற்குப் போவ தன்பொருட்டுப் பல கரவன் பாதைகள் மெக்காவுக்குச் செல்கின் றன. மொசப்பத் ேதா மியாவின் தலைநகராகிய பக்தாத் என்னுமிடத்திலிருந்து பாலை வனத் துறைமுகமாகிய டமஸ்கஸ் என்னும் பட்டினத்திற்கு ஒரு கரவன் பாதை செல்கின்ற து. லெபனொன்ஸ் (Lebantons) மலைகளி லிருந்து வரும் நதியினால் டமஸ்கஸ் பட்டணத்திலுள்ள தோட் டங்கள் நீர்ப்பாய்ச்சப் படுகின்றன.
• சகாராப் பாலைவனத்திலே கர வ ன் பாதைகள் வடக்குத் தெற்காய்ச் செல்கின்றன. மத்தித் தரைக் கடலையடுத்த நாடுகளி லும் சூடானிலும் காணப்படும் தாவரம் முதலியன: வே சகாராவி லும் இடையிடையே காணப்படுகின் றன, சகாராவின் கிழக்குப் பாகத்தில் நைல் நதி ஊடறுத்துச் செல்கின்றது. இதனால் நைல் நதியை அடுத்துள்ள சகாராவின் நிலப்பாகம் செய்கைபண்ணப் படுகின்றது. நைல்நதியில் கைறே (Cairo) என்னும் பட்டணம் அமைந்துள்ளது. அலெக்சாந்திரியா விசேஷித்த துறைமுகமா

Page 76
128
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
கும். இதன் மூலம் பருத்தியும் கோதுமையும் அதிகமாக ஏற்றுமதி யாகின்றன,
மொசப்பத்தோமியாமில் யூப்பிரத்தீஸ், தைகிறீஸ் என்னும் இரு நதிகள் உள்ளன. இவை முன்னொரு காலத்தில் பாபிலோ னியா, நினெவே என்னும் பட்டினங்களை 'அடுத்துள்ள வயல் களுக்கு நீர்ப்பாய்ச்சலுக்கு வாய்ப்புடையன வாயிருந்தன. இப் போது பழைய கால்வாய்களெல்லாம் திருத்தப்படாமையினாலே அவ்வளவு வாய்ப்புடையனவாயில்லை. நிலையான இடமின்றிச் சஞ் சாரிகளாகத் திரியும் இடையர்கள் வட ஆபிரிக்காவிலும், அரேபி யாவிலும் பற்றைகள் பொருந்திய புல்வெளிகளில் ஆடுமாடு களை மேய்த்துக்கொண்டு திரிவர்.
3-B. அவுஸ்திரேலிய பாலை வனங்களும் இப் பிரிவில் அடங்கும் ஐரோப்பியர் வந்து குடியேறுமுன் ஆடு, மாடு, ஒட்டகம் என்பன இப்பிரிவிற் கிடையாது. பேரீந்து இங்கு உண்டாவதில்லை. இப் பாலை வனங்களின் சுற்றுப்புறங்களிலே சனங்கள் அதிகமாகச் சீவிப்பதுமில்லை. நீர்ப்பாய்ச்சலுக்கு வசதியான ஆறுகளும் இங்கில்லை. வியாபாரமும் நடைபெறுவதில்லை. சஞ்சரிகளாய் மிகக் குறைந்த தொகையினரே இங்கு வசிப்பர். இவர்கள் கங்காரு போன்ற மிருகங்களை வேட்டையாடியும், காட்டிலுள்ள கிழங்கு களைச் சேர்த்தும் தமது சீவியத்தை நடாத்துவர். பாலைவனங் களின் மேற்குப் பாகத்திற் பொன் எடுக்கப்படும். கல்கூளி, கூல் காடி என்னுமிரு இடங்களும் பொன்னுக்கு விசேடம் பெற்றவை. பொற்சுரங்கங்கள் இருப்பதினாலேயே ஐரோப்பியர் இப்பாகங் களிற் குடியேறினர். இப்பிரிவிலுள்ள பொருட்கள் அடலெயிற், பேர்த் என்னுமிரு துறைமுகங்களாலும் ஏற்றுமதியாகின்றன. அடலெயிற்றிலிருந்து பேர்த் துறைமுகத்திற்கு ஒரு புகையிர தப்பாதை செல்கின்றது.
4, சிறிய பாலைவனங்களும் வரண்ட பீடபூமிகளும்
(The smaller deserts and dry plateaus.) இப்பகுதிகள் பெரும்பாலும் உஷ்ண வலயத்துக்கப்பால் உயரமான இடங்களில் அமைந்துள்ளன. இவை பெரிய பாலை வனங்களிலும் பார்க்க உஷ்ணத்திலும் வரட்சியிலும் குறைவுடை யன. புல்லும், முட்பற்றைகளும் இடையிடையே உண்டு. பெரும் பாலும் இடையர்களே இப்பாகங்களில் வசிப்பர். சிலர் ஆற்றே? ரங்களிலும், அருவிகளுள்ள மலையோரங்களிலும் கூட்டங் கூட்ட
மாகச் சீவித்துக் கமத்தொழில் செய்கின்றனர்.

உலகின் இயற்கை வலயங்கள்.
129
4-A ஐக்கிய மாகாணங்களின் மேற்குப்பாகத் ேதயு ள்ள வரண்ட பீடபூமிகளும், மெக்சிக்கோவின் உயர்ந்த நடுப்பாகமும் இப்பிரி வில் அடங்கும். இப்பாகங்களிலே செம்மறி ஆடுகள் வளர்க்கப்படு கின் றன. பொன், வெள்ளி, செம்பு என்னும் உலோகங்கள் காணப்படுகின் றன. சோல்ற் லேக் நகர் (Sult Lake City) மெக்சிக்கோ என்னும் பட்டினங்களை அடுத்த இத்தன்மையான பாகங்களிலே நீர்ப்பாய்ச்சல் இலகுவாயிருப்பதினால் சோளம், கோதுமை, மத்திமவலயத்திற்குரிய பழங்கள் என்பன செய்கை பண்ணப்படு கின்றன.
4-B. கடல் மட்டத்தின் மேல் 1200 அடி உயரமான பெரு, பொலி வியா பீடபூமிகளும், பெருவின் கடற்கரையை அடுத்த வெளியும் இவ்வலயத்தில் அட ங் கும். பெரு வின் கடற்கரையையடுத்த வெளியிலே நீர்ப்பாய்ச்சலின் உதவியால் பருத்தி, கரும்பு என்பன செய்கை பண்ணப்படுகின்ற ன. சில்லியில் (Chile) இவ்வலயம் அற் றகாமாப் பாலை வனம் எனப் பெயர் பெறும். இங்கே 'நைற்றேற்ஸ்? (Nitrates) என்னும் ஒருவகை உப்பு எடுக்கப்படுகின்றது. பீட பூமிகளிலுள்ள குறைந்த புல்வெளிகளில் லாமா, அல்பகா என் னும் மிருகங்கள் வளர்க்கப்படுகின்றன. இவ்வலயத்தில் வெள்ளி, தகரம், செம்பு என்னும் உலோகங்கள் எடுக்கப்படுகின்றன.
4-C. சின்னாசியா, பார்சியா என்னும் தேசங்களிலுள்ள பீடபூமி களும் இப்பிரிவில் அடங்கும். இங்கே செம்மறியாடும் வெள்ளா டும் வளர்க்கப்படுகின் ற ன. ஆட்டுமயிரிலிருந்து கம்பளமும், தளத்திற்கு விரிப்ப தற்கேற்ற பாய்களும் (Carpets) செய்யப்படு கின்றன. தெகிரன் (Tehram) போன்ற பட்டினங்கள் நீர்ப்பாய்ச்ர லுக்கேற்ற வசதியான இடங்களின்மத்தியில் அமைந்திருப்பதி னாலே அவ்விடங்களிலே அப்றிக்கொற், பிக்ஸ், திராட்சை என் னும் பழவகைத் தோட்டங்கள் அதிகமாக வுண்டு. பார்சியாவின் தென்மேற்கில் நில எண்ணெய் எடுக்கப்படுகின்றது.
4-D. திபேத், மங்கோலியா பீடபூமிகளும், கோபி பாலைவனமும் இப்பிரிவில் அடங்கும். சஞ் சார சீவியஞ் செய்வோராய்த் திரி கின் ற மங்கோலிய குதிரைக்காரரைப் போன்ற இடையரே இப் பிரிவில் அதிகமாக உளர். இவர்கள் பெரும்பாலும் ஆடு மாடுகளை வளர்ப்பர். குதிரைகளை வளர்ப்பதுமுண்டு. இவ்விடையர்களின் முன்னோர் இவ்விடங்களை அடுத்துள்ள செல்வம் மிக்க நாடுக

Page 77
130
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
ளைக் கொள்ளையடித்த, கொள்ளைக்காரராவர். மலைகளுக்கிடை யேயுள்ள பள்ளத்தாக்குகளில் ஆடுமாடுகளும், குதிரைகளும் வளர்க்கப்படுகின்ற ன. குளி ரான உயர்ந்த திபேத் பீட பூமியில் யாக் (Yak) என் னும் மிருகம் உண்டு. இங். குள்ளார் இம் மிருகத்தின் பாலையும், இறைச்சியையும் உணவாகக் கொள்வர். சுமை களைக் கொண்டு போகவும் இம்மிருகமே உதவுகின்றது. சீனாவிலிருந்து துருக்கிஸ் தானத்திலுள்ள நீர்ப்பாய்ச்சலினால் செய்கை பண்ணப்படும் தோட்டங்களுள்ள பட்டினங்களுக்குச் செல் லுஞ்ச னங்கள் உஷ்ணமான கோபி பாலைவனத்தைக் கடந்து செல்வர். கோபி பாலைவனத்திற்கூடாக ஒட்டகப் பாதைகள் செல்கின்றன,
-{{{ 'r\ »
mr N,
ܔܢ ܓܥܝܢܝܟ ܘܥ
|
\\\\\\\
4-E. தென்னாபிரிக்காவிலுள்ள கலகாரி பாலைவனம் இப்பிரி விலடங்கும். இங்கே புஷ்மன் என்னுஞ்சாதியினர் சஞ்சாரிகளாகத் திரிவர். தென்கலகாரிப் பிரிவில் டிசெம்பர் முதல் மார்ச் வரை
கோடையில் வருடம் 9 அங்குலம்வரை மாத்தி ரம் மழை பெய்யும். மழை யின் பின் புல் முளைத்து 2 அடிவரைவளரும். இப் பாகத்தில் சிறுச் சிறு பற்றைகளும் பொருந்தி யிருக்கும். க றூ (Karo0)
என்னும் பாகங்களிலே செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் மேய்க்கப்படுகின்றன. ஆடு களிலிருந்து உரோமம் எடுக்கப்படுகின்றது. கலகாரியின் கிழக்கே யுள்ள கிம்பளி என்னுங் கிராமத்தில் இரத்தினக்கற்கள் எடுக்கப் படுகின்றன. இரத்தினக் கற்களின் பொருட்டே ஆங்கிலேயர் இங்கு வசிக்கின் றனர். கலகாரியின் மேற்குப்பாகம் முழுவதும் கொடிய பாலைவனமாகவே இருக்கின்றது. குளிர்ந்த பெங்குவாலா என்னும் நீரோட்டம் இதன் கரையோரமாகச் சென்று உஷ்
ணத்தை ஒருவாறு குறைக்கின்றது.


Page 78
கலிபோர்ணியாக் கடலோரம்

உலகின் இயற்கை லெயங்கள்.
5. மத்தியதரைக் கடற் சுவாத்திய வலயம்
(The Mediterranean Regions) மத்திய தரைக் கடலைச் சூ ழ் ந் து " இவ் வ.ல யம் அதிகமாகக் காணப்படு தலின் இப்பெயர் பெற்ற து. இவ்வலயத்தில் நீண்ட கோடையும், வரட்சியான மாரிமழையுமுண்டு. இங்குள்ள தாவரங் கள் எப்பொழுதும் பச்சை நிறமுடையனவாயிருக்கும். சிறிய மரங்களுங் காணப்படும். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியரும் ஐரோப்பிய வம்சத்தினருமாவர். இவ்வலயம் கமச் செய்கைக்கு மிக வாய்ப்பான து. கோதுமை, திராட்சை, அப்பிள், தோடை, அத்தி, ஒலிவ், பட்டுப்பூச்சி என்பன அதிக மாகவுண்டு, கோடை மிக வரட்சியாகையினாலே அக்காலத்தில் தாவரங்களுக்கு நீர்ப்பாய்ச்சல் அவசியமாகின்றது.
சகிக்கா
மகாகா
- யா
- 25-ம் ரா5ே4
உI 1 |
Cாயில்
அபிராக்கா
தெ ண் - அவுஸ் திரேலியா
(மத்திய தரைக் கடற் சுவாத்திய நாடுகள்) 5-A, வட அமெரிக்காவிலுள்ள கலிபோர்ணியா இப்பிரிவிலடங் கும். கலிபோர்ணியாவின் வடபாகக் கரையிலுள்ள ஈரலிப்பான பாகங்களில் மரக்காடுகளுண்டு. பள்ளத் தாக்குகளில் தோடை, திராட்சை என்பன நீர்ப்பாய்ச்சலால் உண்டாக்கப்படுகின்றன. லொஸ் ஏன்ஜெல்ஸ் (Los Angeles) என் னும் பட்டினத்திலே தோடைமரத் தோட்டங்கள் அதிகமாகவுண்டு. இப்பிரிவின் பிர யோசனம் பெரும்பாலும் சான் பிரான்சிஸ்கோ என்னுந் துறை முகத்தின் வழியாக ஏற்றுமதியாகும். இத்துறைமுகம் கலிபோர் ணியாவின் கரையோரத்துள்ள மலையின் கணவாயொன்றில் அமைந்திருக்கின்றது. 'லொஸ் ஏன்ஜெல்ஸ்' என்னும் பட்டினத் தில் எண்ணெய்க் கிணறுகளுமுண்டு.
5-B. தென்னமெரிக்காவிலுள்ள சில்லியின் மத்தியபாகம் இப் பிரிவிலடங்கும், கோதுமை, பழவகை, வெண்காயம், திராட்சை,

Page 79
132
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
புகையிலை என்பன இங்கு செய்கை பண்ணப்படும். அந்தீஸ்மலை யிற் பல செப்புச் சுரங்கங்களுண்டு. இப்பிரிவிலே சன்ரியாகோ (Santiago) பெரிய பட்டினமாகவும், வால்பறைசோ (Valparaiso) பிர தான துறைமுகமாகவும் அமைந் துள்ளன.
5-C. மலைசெறிந்த வடமேல் வடக்குப்பாகங்கள் தவிர்ந்த ஸ் பெ யின், போர்த்துக்கல், தென் பிரான்ஸ், இத்தாலி, வோல்க்கன் குடாநாடு, சின்னாசியாவின் கரைப்பாகம், சீரியா, பாபெறி நாடுகள் (அல்ஜீரியா, மொறோக்கோ, ரியூனிஸ்) என்பன அடங்கியுள்ள மத் தியதரைக்கடலையடுத்த நாடுகள் இப்பிரிவிலடங்கும். மத்திய த ரைக்கடற் சுவாத்திய நாடுகளில் இப்பிரிவே மிக விசேடமானது. இப்பிரிவில் கோதுமை, பழவகை, பட்டு, எண்ணெய் என்பன பிர தர்ன பிரயோசனங்களாகும், போர்த்துக்கலிலும் ஸ்பெயி னிலுமிருந்துவரும் ஷெ. றி உவையினும், போட் உவையினும் றோன் நதியிலுள்ள ல ய ன் ஸ் (Lyons) நகரத்திலிருந்துவரும் பட்டும் இத்தாலியிலிருந்துவரும் பட்டும் பட்டுநூலும், சில்லியிலி ருந்துவரும் எலுமிச்சம்பழங்களும், கிறீஸிலிருந்துவரும் கறன்ற் (Currant) பழங்களும், சிமெர்ஜாவில் இருந்துவரும் அத்திப்பழங்க
ளும், ஜாவாவில் (Jef fu) இருந்துவரும் தோடம்பழங்களும் மிக * விசேடமுடையன, ஸ்பெயினில் செம்பு, இரும்பு, ஈயச்சுரங்கங்க ளும், சில்லியில் எரிமலையைச்சுற்றிக் கந்தகமும் உண்டு.
உரோமராச்சியத்தின் விசேடித்த பாகம் மத்தியதரைக்கடற் சுவாத்திய வலயத்திலேயே அமைந்துள்ளது. உரோமாபுரி இவ் வலயத்தின் மத்தியிலுள்ள து. நேப்பிள்ஸ் நகரமும் இச்சுவாத் திய வலயத்திற் தானுள்ளது. இந்நகரம் எரிமலை மண்ணாலும் ஆறுகள் கொண்டுவரும் வண்டல் மண்ணாலும் அமைந்துள்ள வெளியொன்றிலிருக்கின்றது. இங்கே திராட்சை ஒலிவ் தோட் டங்களும்  ேவ று சோலைகளுமுண்டு. கொன்ஸ் தான் ரிநோபிள் ஆசியாவும் ஐரோப்பாவும் சந்திக்கின்ற இடத்திலுள்ளது. ஆயி னும் சிறிய பொஸ்போ றஸ் (Bosporus) நீரிணையாற் பிரிக்கப்பட்டி ருக்கின்றது. ஆபிரிக்காவிலும் ஸ்பெயினின் தென்பாகத்திலுள்ள மலைகளினிடையேயுமுள்ள ஜிபிறோல்ற்ரர்சலசந்தி மத்திய தரைக்கட லுக்கோர் திறவு கோலைப்போல இருக்கின்றது. மத்தியதரைக். கடல் கீழைத்தேசத்திற்குப் போகும் பா ைதகளுள் மிக விசேட மான து. கீழைத்தேயப்பொருட்களினு தவி கொண்டே இப்பகு திவி யாபாரம் நடைபெறுகின்றது, மார்செயில்ஸ், ஜெனோவா, வெனிஸ்,

உலகின் இயற்கை வலயங்கள்.
133
lறெஸ்ற் என்பன மத்திய தரைக் கடலின் விசேட துறைமுகங் களாகும். லிஸ்பன், கடிஸ் (Cadia) என்னும் பட்டினங்கள் போர்த் துக்கீச ஸ்பானிய சனங்கள் குடியேறியுள்ள மத்திய, தென் அமெ ரிக்காவுடன் வியாபாரஞ் செய்துவருகின்றன, மட்றிட் (Madrid) என் னும் ஸ்பானிய தலைநகரம் குடாநாட்டின் மத்தியிலிருக்கின் றது. இத்தாலியிலுள்ள போ நதிப்படுக்கை மிக்க செழிப்பான வெளியாக இருப்பதினாலே கமத்தொழிலின் பொருட்டு அநேக ச னங்கள் அங்கு வசிக்கின்றனர். மிலன், குறின் (Taurin) என்னுமிவ் விருபிரதான பட்டினங்களும் அல்ப்ஸ் மலையின் மேற்குப் பாகத்தி லும் மத்திய பாகத்திலுமிருக்கின்ற மொன்செனிஸ், சிம்பிளன், சென்கோதாட் கணவாய்களின் வழியாக வருகிற பாதைகளின் சந்தியில் இருக்கின்றன.
5-D. தென்னாபிரிக்காவிலே கேப்கொலனியை அடுத்த பாகமும் கேப் கொலனியும் இப்பிரிவிலடங்கும். கேப்ரவுண் இப்பிரிவிலே பிர தான துறைமுகமும் பட்டினமுமாக அமைந்துள்ள து. இது நல்ல சுவாத்தியமுடையது. இப்பிரிவிலே திராட்சையும் வேறு பழவகைகளும் அதிகமாகவுண்டு. வெள்ளாடும், செம்மறியாடும் வளர்க்கப்படும். தீப்பறவைகளும் உண்டு.
5-E. மேற்கு அவுஸ்திரேலியாவின் தென்மேல் பகுதியும், தென் அவுஸ்திரேலியாவின் தென்கீழ்பகுதியும், விக்ரோறியாவின் ஒரு பகுதியும் இப்பிரிவிலடங்கும். திராட்சையும் வேறு பழவகை யுமே இப்பிரிவில் விசேட தாவரமாகும். தென் அவுஸ்திரேலியா வின் தென்பாகத்திலே அதிகமான கோதுமை விளைவிக்கப்படு கின்றது. அடலெயிட் துறைமுகத்தையடுத்துள்ள மலைநாடு களில் செப்புச் சுரங்கங்களுண்டு, பீடபூமியின் பக்கங்களிலுள்ள ஜறா (Janrah) மரமும், மேற்கு வனாந் தரவலயத்திலுள்ள பொன்னும் பேர்த் என்னுந் துறைமுகத்தின் வழியாகப் பிற இடங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. இவ்வலயத்தின் கிழக்குக்கரைக்கணித்தா யுள்ள மெல்போண் என்னும் நகரமே விக்ரோறியா மாகாணத் தின் தலைப்பட்டினமாக அமைந்துள்ள து.
6. வடகண்டங்களின் கிழக்குப்பாகச் சூடான மத்திமவலயம்
(The Warm Temperate Eastern Margins
of Northern Continents) இவ்வலயம் வடகண்டங்களின் கிழக்குக் கரைகளிற் காணப் படும். சூடான கோடையில் நல்ல மழை பெய்வதினாலே இவ்வல

Page 80
134
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
யம் நல்ல பசளையுள்ளதாக இருக்கின்றது. இப்போது காடுகள் , வெட்டப்பட்டுக் கமச்செய்கைக்கு வாய்ப்பான தாக்கப் பட்டிருக் கின் றது.'
6-A. ஐக்கிய மாகாணங்களின் கிழக்குப்பாகத்திலே அத்திலாந் திக் சமுத்திரத்தின் கரைப்பகுதியும், அப்புலாச்சியன் மலையின் தென்பாகழும், மிசிசிப்பி நதியின் கீழ்ப்படுக்கையும் இப்பிரிவிலடங் கும். இங்குள்ள மலைகளில் நல்ல காடுகளுண்டு. மலைகள் ஒன்றற் கொன்று சமாந்தரமாக அமைந்திருப்பதினால் கிழக்கிலிருந்து மேற்கே பயணஞ்செய் தல் மிக எளிதாயிருக்கின்றது. மலைகளுக் கிடையேயுள்ள வெளிகளில் பருத்தி, புகையிலை, சோளம் என்பன அதிகமாகச் செய்கைபண்ணப்படுகின் றன. சூடான சுவாத்தி யமும் பதிந்த தரையுமுள்ள பாகங்களில் நெல்லும், கரும்பும் செய்கைபண்ணப் படுகின்ற 31, மிசிசிப்பிநதி இப்பிரிவை நன்றாக நீர்ப்பாய்ச்சுகின்றது. போக்கு வரவுக்கும் இந்நதி உதவியாகின் றது. இப்பிரிவிலுள்ள பொருள்கள் யாவும் மிசிசிப்பி நதியின் கழி முகத்துள்ள நியூ ஓளியன்ஸ் என்னும் துறைமுகத்தின் வழியாக ஏற்றுமதியாகும்.
அப்பலாச்சியன் மலையில் இரும்பும், கரியும் அதிகமாக வுண்டு. இவற்றால் இம் மலையையடுத்துள்ள தென் கரோலினா ஜோஷியா என்னும் மாகாணங்களில் பருத்திக்கைத்தொழிலும், அல்பாமா மாகாணத்திலிருக்கும் பேர்மிங்காமில் இரும்புக்கைத் தொழிலும் அதிகமாக நடைபெறுகின்றன. ரெக்சாஸ், ஒக்ல காமா மாகாணங்களின் கரைகளில் எண்ணெய் வயல்களுண்டு. பெரும்பாலும் இப்பிரிவிலுள்ள எல்லாப் பட்டினங்களும் புகை யிரதப் பா ைதகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அத்திலாந்திக் சமுத்திரக் கரையிலே றிச்மன்ட் போன்ற பல துறைமுகங்க
ளுண்டு.
6-B. மத்திய சீனாவும், அதன் கீழ்கரையும், ஜப்பான் தீவின் தென்பாகமும் இப்பிரிவிலடங்கும். முன்னர் கூறப்பட்ட பிரிவில் மிசிசிப்பி நதி எவ்வளவு செழிப்பைக் கொடுக்கிறதோ அது போலவே யாங்சிக்யாங் நதி இப்பிரிவுக்குச் செழிப்பைக் கொடுக் கிறது. இந்தி பாய்வதனாலே மத்தியசீனா கமச்செய்கைக்கு மிக வாய்ப்பான தாயிருக்கிறது. இங்கு பல இலட்சக்கணக்கான சனங் கள் கமச்செய்கையில் சீவித்து வரு கின் ற னர். இப்பிரிவில் பருத்தி, நெல், கரும்பு, முசுக்கொட்டைச்செடி என்பன உண்டாக் கப்படுகின்றன. மலைநாடுகளிலே தே யி லை உண்டாக்கப்படு

உலகின் இயற்கை வலயங்கள்.
135
கின்றது. நியூ ஓளியன்ஸ் போன்று பருத்தி வியாபாரத்தில் முதன்மை பெற்ற ஷங்காய் என்னுந் துறைமுகம் யாங்சிக்யாங் நதியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. ஷ ங் க ா யிலி ருந் து காங்கெள இந்நதியின் உள்நாட்டுத் துறைமுகமாக அமைந் துள்ள து. ஷங்காயிலிருந்து காங்கெளவரையும் கப்பல்கள் உள்ளே செல் லும். காங்கெள் துறைமுகத்திலிருந்து பீக்கிங் வரைக்கும் ஒரு புகையிரதப் பாதையுஞ் செல்லுகிறது.
ஜப்பான் தேசத்தில் இவ்வலயத்திலுள்ள சனங்களும் பெரும் பாலும் கமக்காரராகவே இருக்கின்றனர். மத்திய சீனாவிலுள்ள பொருட்களே இங்குமுண்டு. இரும்பும் கரியும் எடுக்கப்படுவத னாலே கைத்தொழிலும் இங்கு நடைபெறுகின்றது. உருக்குச் சாமான்களும், பருத்திப் புடவைகளும், ப ட் டு த் துணிகளும் இங்குள்ள பிரதான கைத்தொழிற் பொருட்களாகும். கமத்தொ ழில் கைத்தொழில்களால் மேன்மைபெற்று விளங்குகின்ற இப் பிரிவிலேயே ஜப்பானின் பெரிய நகரங்களாய் ரொக்கியோ (Tocio), ஒசாக்கா என்பன அமைந்துள்ளன. 7. தென்கண்டங்களின் கிழக்குப்பாகச் சூடான மத்திமவலயம் ( The Warm Temperate Eastern Margins of the
- Southern Continents) இவ்வலயம் தென்கண்டங்களின் கிழக்குக் கரைகளிற்காணப் படும். சிலவகையில் ஆறாம் பிரிவிற் சொன்னவற்றைப்போலும் சி ல வ  ைக யி ல் எட்டாம் பிரிவிற் சொல்வதைப் போலும் இருக்கும். நிலையம், சீதோஷ்ண ஸ் தி தி என்பவற்றை நோக்கி னால் ஆறாம்பிரிவிலடங்கும். புல்வெளி, ஆடு மாடு வளர்த்தல் கமச்செய்கை என்பவற்றை நோக்கினால் எட்டாம் பிரிவிலடங்கும். வடகோளார்த்தத்தில் நிலப்பாகங் கூடியும் தென்கோளார்த்தத் திற் கு றைந் தும் இருப்பதனாலே வடகோளார்த்தத்திலுள்ள இவ்வலயங்களிற் காணப்படும் அதிக சூடும் அதிக குளிரும் பொருந்திய நடுக்கண்டச் சுவாத்தியத்தை (Continental Climate) தென்கோளார்த்தத்திலுள்ள இவ்வலயத்திற் காணமுடியாது.
7-A வட ஆர்ஜென்ரைனா, உ று கு வே, பிறேசிலின் தென் பாகம் என்பவற்றையடக்கிய பம்பாஸ் புல்வெளிக்கு வடகிழக்கிலி ருக்கும் பாகம் இப்பிரிவிலடங்கும். இப்பிரிவின் கரைப்பாகங்களிலே சுழல்காற்றினால் வருடம் முழுவதும் மழையுண்டு. நிலம் செப்பமாக இல்லாமையினாலே இப்பாகங்களிற் பெரிய காடுகளில்லை. இதன்

Page 81
136
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
தென்பாகமும், உட்டாகமும் போகப்போக வரண்ட சுவாத்தியத் தையுடையன. கோடைமழையே இப்பாகங்களிற் பெய்யும். முன் னொருகால்ம் ஆடு மாடு வளர்ப்பதில் இப்பிரிவு முதன்மை பெற் றிருந்தது. இக்காலம் சிறிது குறைவடைந்துவிட்டது. இப்போது வடபாகத்தில் ஆடு மாடுகளும், தென்பாகத்தில் ஆடுகளும் வளர்க்கப்படுகின்றன. நீர்ப்பாய்ச்சப்படுமிடங்கள் கமச்செய்கைக்கு வாய்ப்புடையன. கோதுமையும், சோளமும் அதிகமாகச்செய்கை பண்ணப்படும். சண லும் உண்டாக்கக்கப்படுகின்றது. பனிக்கட்டி யிலிட்ட இறைச்சி, தகரத்தடைத்த இறைச்சி என்பன இப்பிரிவி லிருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பிரதான பொருட்களா கும். இவை மொன்ரிவிடியோ, புவனஸ் ஐரஸ் என்னுந் துறைமு கங்களால் ஏற்றும் தியாகின்றன.
7-B. தென்னாபிரிக்காவிலுள்ள 3000 அடிக்கு மேற்பட்ட பீட பூமிப்பாகம் இப்பிரிவிலடங்கும், செங்குத் தான படிகளாய் அமைந். துள்ள கிழக்குப் பீடபூமி தென்கீழ் முறைமைக்காற்றினால் மழை யைப்பெற உட்பாகம் ஓரளவு வ்ரண்டதாயிருக்கின்றது. உட் பாகம் கரைப்பாகத்திலும் பார்க்க மாரியிற் கடுங்குளிருடைய தா யிருக்கின்றது. பீடபூமியின் உட்பாகம் 'வெல்ட்' என்று அழைக் கப்படும். இதுமரங்களற்ற ஸ்ரெப்பீஸ் புல்வெளிகளைப்போன்றது . கரைப்பாகம் சாவெனாசைப் போன்றது. (சாவெனாஸ்- காட்டர்ந்த புல்வெளி) இங்கு பாம் (தால்) ம ர ங் க ளு ண் டு. திறன் ஸ்வாலை யும், ஒறேன்ச்நதிக் கொலனியையும் அடக்கியுள்ள வெல்ட் என்னும் பாகத்தில் ஆடுகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. கரைப்பகுதியிலுள்ள நற்றால் மாகாணத்திலும் ஆடு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. தேயிலையும், கரும்பும் பிரதானமாக உண் டாக்கப்படுகின்றன. சோளமும் விளைவிக்கப்படும். நற்றால் சுவாத் தியத்தில் சீனாவை ஒத்தது.
தியத்தில் ச: சோளமும் விதம் பிரதானமா
ஆடு மாடுகளால் வரும் பிரயோசனத்தைப் பார்க்கிலும் உலோக வகைகளால் வரும் பிரயோசனமே இங்கு அதிகம். உல கத்தில் அதிக பொன் எடுக்கப்படுமிடங்களில் ஒன்றாகிய ஜோகா னெஸ்பேர்க் இப்பிரிவில் தானுள்ளது. பொன் எடுக்கப்படுமிட மாகிய உவிட் உவாட்டஸ்ரான்ட் (Wit-120cuterstand) என்னுமிடத்தி லுள்ள பாறையொன்றில் இந்நகரம் அமைந்துள்ள து வைரக்கற் களும் இங்குண்டு. ஜோகானெஸ்பேர்க்கிலும், நற்றாலிலும் கரியு மெடுக்கப்படுகின்றது. இதனாலேயே நற்றாலின் துறைமுகமாகிய டேர்பனில் கப்பல்கள் கரியெடுத்துச் செல்கின்றன,

உலகின் இயற்கை வலயங்கள்.
137
7-C. அவுஸ்திரேலியாவின் கிழக்குக்கரைப் பாகமும், டாளிங் நதியினால் நீர்ப்பாய்ச்சப்படும் Pவெறினா வெளியும் இப்பிரிவில டங்கும். அரசியற் பிரிவுகளை நோக்கும்போது குயின்ஸ்லாந்தின் தென்பாகமும், நியூசவுத் உவேல்சின் பெரும்பாகமும், கிழக்கு விக்ரோறியாவும் இப்பிரிவைச் சேரும். இங் கு கிழக்கேயுள்ள மலைச்சரிவுகளிலும் மழை நன்றாகப் பெய்கின்றது. இதனால் கிழக் குப்பாகங்களில் அடர்த்தியான காடுகளுண்டு. மலையின் மேற்குப் பாகம் (காற்றுக் கீழுறங்குவதால்) மழைகுறைந்து வரண்டு பெரிய புல்வெளியாய் இருக்கின்றது. இந்த மேற்குப்பாகத்தி லுள்ள டவுன்ஸ் என்னும் புல்வெளிகளில் ஆடுகள் அதிகமாக வளர்க்கப்படுகின் ற ன. இங்கு ஆடுகள் வளர்க்கப்படுவதினாலே பெருந்தொகையான உரோமமும், இறைச்சியும் சிட்னி என்னுந் துறைமுகத்தின் வழியாக ஏற்றுமதியாகின்றன. நீர்ப்பாய்ச்சப் படுமிடங்களிற் கோதுமை அதிகமாக விளைவிக்கப்படுகின்றது. ஆடு மாடு வளர்த்தலும் கோதுமை விளைவித்தலுமே இங்குள் ளாரின் முக்கிய தொழில்களாகும். இப்பிரிவின் வடபாகத்தில் பிறிஸ்பேண் பிரதான துறைமுகமாகும். சிட்னியைப் போலவே இங்கும் உரோமம், இறைச்சி, வெண்ணெய் என்பன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பிரிவில் நிலப்பொருட்களாகப் பொன் னும், கரியும் அதிகமாக எடுக்கப்படுகின்றன. நியூக்காசில் துறை முகத்திற்றான் கரி அதிகமாக ஏற்றப்படுகின்றது.
8. மத்திமவலயப்புல்வெளி வலயம்
(The Steppe Lands ) இவ்வலயத்தில் மட்டான அல்லது குறைந்த அளவான ம  ைழ பி ர தா ன ம ாகக் கோடை காலத்திற் பெய்யும். மழைக்கேற்கச் சிலவிடங்களிற் காடுடன் சேர்ந்த புல்வெளிகளும் சிலவிடங்களில் உயர்ந்து வளர்ந்த புல்வெளிகளுங் காணப்படும். இவ்வலயம் ஆடு மாடு வளர்ப்பதற்கு மிக வாய்ப்பான து. நீர்ப் பாய்ச்சல் உள்ள இடங்களில் கோதுமை, பார்லி, ஓற்ஸ் தானியங் கள் அதிகமாகச் செய்கைபண்ணப்படும். இதனால் நீர்ப்பாய்ச்சப் படும் பகுதிகள் கமச்செய்கையில் விசேடம்பெற்றனவாகக் காணப் படுகின்றன.
8-A. கனடாவின் தென்மத்திய பகுதியும், ஐக்கிய மாகாணங் களின் நடுப்பகுதியும் இப்பிரிவிலடங்கும். இப்பிரிவின் கிழக்குப் பாகம் பிறையறி எனப்படும், மேற்குவெளி காற் றுக் கீழிறங்கும் பாகமாகிய ஹொக்கி மலையின் மழைநிழலில் இருப்பதால் வரண்ட்
18

Page 82
138
உலக பூமிசாஸ்திர விளக்கம்,
பிறப்பில்
- இவர்ட்
டபுள்ஸ்
பும் பாஸ்
நிய ய லயப் புல் வெளி டி எஜ பெ லய3 புல் சவளி
உலகப் புல்வெளிகள் தாயிருக்கின்றது. இதனால் இப்பகுதியிற் பெரும்பாலும் ஆடு மாடுகளே வளர்க்கப்படுகின்றன. பிறையறிவெளி கமச்செய்கை யில் முதன்மை பெற்றது. கோதுமை விளைவில் முதன்மை பெற்றதும் உவின்னிபெக் வாவியை மத்தியஸ் தானமாகக் கொண் ட துமாகிய மனிற்றோபா மாகாணமும் அண்மையிலுள்ள சாஸ் கச்சிவான் மாகாணமும் பி ைற ய றி வெளியிலேயே இருக்கின் றன. இவ்விரு மாகாண ங் க ளி ன் அண்மையிலுள்ள ஐக்கிய மாகாணத்தின் ஒரு பிரிவாகிய டாக்கொற்ற (Dakota) வில் விளை விக்கப்படுங் கோதுமை மி னி ய ாப் பொலிஸ் பிரிவிலுள்ள கோதுமை அரைக்கும் எந்திரங்களுக்கு அனுப்பப்படுகின்றது.
இப்பிரிவில் வாவிகளுக்குத் தெற்கேயுள்ள நீண்ட சூடான சுவாத்தியத்தையுடைய நிலப்பாகங்களிற் சோளம் விளைவிக்கப் படுகின்றது. சோளம் பெரும்பாலும் பன்றிகளுக்கு உணவா கின்றது. ஆதலின் சோளம் விளையுமிடங்களிலே பன்றிகளை உரித்துத் தகரத்தில் அடைத்தற்கேற்ற தொழிற்சாலைகள் பல வுண்டு. மிச்சிக்கன் வாவியின் தென் அ ந் த த் தி லு ள் ள சிக்காக்கோ நகரம் வர்த்தகத்தில் மேலோங்கி முதன்மையுற்றிருக் கின்றது. பிறையறிப்பிரிவில் அடுக்குப் பாறைகளாலமைந்துள்ள வெளிகள் காணப்படும். இவ்வெளிகளிற் கரி அதிகமாகவுண்டு. ஆதலின் இவ் வ ல ய ம் கைத்தொழிலிலும் முதன்மை பெற்று விளங்குகின்றது. இப்பிரிவின் கைத்தொழிலுக்குத் தேவையான பதனிடப்பெறாத பொருட்கள் யாவும் பெரிய வாவிகளின் வழி யாகக் கொண்டுவரப்படுகின்றன. ஒகியோ நதியிலுள்ள பிற்ஸ் பேக் இரும்பு உருக்குப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற இடமாகும்.

உலகின் இயற்கை வலயங்கள்.
139
மிசூறி -மிசிசிப்பி நதிகள் கலக்குமிடத்தில் வர்த்தகத்திற்கு மத்தி யஸ் தானமாகிய சென்ற்லூயி என்னும் பட்டினமுண்டு இப்பிரி வின் கிழக்கு ப் பாகம் பல புகையிரதப் பா ைதகளால் தொடுக் கப்பட்ட பல நகரங்களை அடக்கியிருக்கின்றது.
8-B. தென் அமெரிக்காவின் தென் பாகத்திலுள்ள பற்றக் கோனியா இப்பிரிவிலடங்கும். அந் தீஸ்மலையின் மழை நிழலில் இருக்கிறபடியால் (காற்றுக் கீழிறங்கும் பாகம்) பற்றக்கோனியா விலுள்ள புல்வெளிகள் பயனற்ற வரண்ட புல்நிலங்களா பிருக்கான் றன, பற்றக்கோனிய இந்தியர் முள்பொருந்திய சிறிய பூண்டுக ளுள்ள இடங்களிலும் சிறிய புல் உள்ள இடங்களிலும் வசிக்கின்ற காட்டு லாமா மிருகங்களையும், றீயா (Rhea) பறவை களையும் வேட்டையாடி உண்ணுகின்றனர். இங் கு குடியேறி யிருக்கும் ஐரோப்பியர் செம்மறி ஆடுகளை வளர்க்கின்றனர்.
:-(. சைபீரியா வரையுஞ் செல்லுகிற றஷ்ய வெளியும், ஏரல் கஸ்பியன் கடல்களைச் சூழ்ந் து ள் ள சிறு புற்களையுடைய வரண்ட பகுதியும் இப்பிரிவிலடங்கும். இப்பிரிவின் வடக்கிலும் மேற்கி லும் தானியம் விளை வித்தற்கேற்ற பசளை யுள்ள கரியமண் பொருந்திய நிலப்பாகங்கள் பலவுண்டு. இந்த நிலப்பாகங்களில் றஷ்ய கமக்காரர்கள் ஆடுமாடுகளை வளர்க்கின்றனர். கு திரை களிலிருந்து ஆடு மாடுகளை மேய்த்து அலைந்து திரிகின்ற கேக்கிஷ் (Kirghi) சாதியினர் தென்கீழ்ப்பாகத்துள்ள வரண்ட நிலப்பாகத்தில் வசிக்கின் ற னர். றஷ்ய புல் வெளிகளிலே கோதுமை, பார்லி, சோளம் என்பன அதிகமாக விளைவிக்கப் படுகின் ற ன7. கோது  ைம யே மிக முக்கியமானது. கருங்கடற் கரையிலுள்ள ஒடேசா என்னும் துறைமுகத்தின் வழியாகத் தானியங்கள் ஏற்றுமதியாகின்றன. இப்பிரிவிலே டெனிபர் (Dnjewer) ஆற்றிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்களினாலும் பால்த்திக் கடலில் விழும் ஆறுகளினாலும் நீர்ப்பாச்சப்படுகின்ற பாகத்தில் விளையுங் கோதும்ை பால்த்திக்கடல் வழியாக ஏற்று மதியாகின்றது. திருன் சைபீரிய புகையிரத வீதியால் ஊடறுக் கப்படுகின்ற சைபீரியாவிலுள்ள இப்பிரிவிலடங்கிய பாகம் கோதுமை அதிகமாக விளை வதனால் இன்னும் சிறிது காலத் தின்பின் கனடாவிலுள்ள கோதுமை விளை நிலமாகிய பிறை யறியை நிகர்க்கும். ஓம்ஸ்க், ரொம்ஸ்க் எ ன் ப-ன இப்பகுதி யிலுள்ள பிரதான பட்டினங்களாகும்.

Page 83
140
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
இப்பிரிவின் தெ ன் கீழ் ப் பாகத்திலுள்ள மிகச் சூடான நிலப்பகுதியில் சீர், அமூர் என்னும் நதிகள் பாய்வதனால் இந்ந திக் கரையோரங்கள் மிக்க செழிப்புடன் பல பட்டினங்களைக் கொண் டிருக்கின்றன. இங்குள்ள ராஷ் கென்ட் எ ன் னு ம் பட்டி ன த ைதயடுத்துப் பருத்தி, நெல், பழவகை என்பன உண்டாக்கப் படுகின்றன.
9. மத்திம சுவாத்திய மேற்குக்கரைப் பகுதிகள்
(Western Temperate Marginal Lands) நீராவியையடக்கிய சூடான எதிர்முறைமைக் காற்றுகள் வருடம் முழுவதும் இவ்வலயத்தில் வீசும். இவ் வ ல ய த் தில் அகன்ற இலைக்காடுகளும் ஊசியிலைக்காடுகளுமுண்டு. எங்கெங்கு காடுகள் வெட்டப்படுமோ அங்கங்கு ஆடுமாடுகளோடு கூடிய கமம் (Mel Farming) நடைபெறும். கமக்காரர் மத்திம சுவாத்தி யத்திற்கேற்ற கோதுமை போன்ற தானியங்களையும் பழவகைகளை யும், கிழங்குகளையும், ஆடு மாடுகளின் உணவுக்கு வேண்டிய பயிர் களையும் செய்கைபண்ணுவர். ஆடுகள் இறைச்சிக்கும் உரோமத் திற்கும், மாடுகள் இறைச்சிக்கும் பாலுக்குமாக வளர்க்கப்படுகின் றன. கரைப்பகுதிகளில் மீன் பிடிக்கப்படுமிடங்களுண்டு.
9-A. மேற்குக் கொலம்பியாவின் மலைசெறிந்த கரைப்பகுதியும், ஐக்கியமாகாணங்களின் வடபகுதியும் இப்பிரிவிலடங்கும். இப் பாகங்களில் இப்பொழுதும் நல்ல காடுகளுண்டு, கொலம்பியா நதியும் பிறேசர் (Fraser) நதியும் விழுமிடங்களில் சால்மன் மீன்
அதிகமாகவுண்டு. மரங்கள் வெட்டுதலும் மீன் பிடித்தலுமே இப் பிரிவிலுள்ளாரின் பிரதான தொழில்களாகும். மீன்களைத் தகரத்தி லடைத்துப் பிற இடங்களுக்கனுப்புவர். உள் வளைந்த கரைப் பாகங்களில் பல துறைமுகங்களுண்டு. இவை மாரிகாலத்திற் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். இக்காலத்திற் சில துறை முகங்களே பிர தான் முற்றிருக்கும். கனடிய பசிபிக் புகையிரத வீதியின் அந்தத்திலுள்ள வன்கூவர் (Vancouver) துறைமுகமும் பசிபிக் சமுத்திரத்தால் வருங் கப்பல்கள் முதலிற் சந்திக்கும் சீற்றில் (Seattle) து றைமுகமுமே பிரதானமானவை.
6-B. சில்லீயின் (Chile) தென்பாகம் இப்பிரிவிலடங்கும். சில்லி யின் மலைச்சரிவுகளிலே ஒருக்காலும் பச்சைநிறங் குறையாத பீச் (Beech) மரக்காடுகள் அடர்ந்திருக்கின்றன. வட அமெரிக்காவி லுள்ள இச்சுவாத் திய வலயத்தைப் போலவே இங் கும் மரம்

உலகின் இயற்கை வலயங்கள்.
141
வெட்டலும் மீன் பிடி த் த லு மே பிரதான தொழில்களாகும். றொக்கிமலையின் வடபாகத்தைப் போலவே அந் தீஸ் மலையின் தென்பாகமும் பனியால் மூடப்பட்டிருக்கும், இப்பிரிவில் அடங்கி யுள்ள அந் தீஸ் மலைப்பாகத்தில் செப்புச்சுரங்கங்கள் உள்.
9-C. ஐரோப்பாவில் எதிர் முறைமைக் காற்றினால் சம் மான சுவாத்தியத்தைப் பெறுந்தேசங்கள் இப்பிரிவிலடங்கும். அவை பிரித்தானிய தீவுகள், நோர்வேயிற் ச ன ங் க ள் அதிக மாக வசிக்கின்ற கரைப்பகுதி, வட ஜேர்ம னிச் சமவெளியின் மேற் குப்பாகம், ஒல்லாந்து (Holland), பெல்ஜியம், றோன் நதிப் படுக்கையைத் தவிர்ந்த பிரான்ஸ் தேசத்தின் ப ள் ள நிலங்கள், வட ஸ்பெயினின் மலைப் பிரதேச வலயம் என்பனவாகும்.
வடஸ்பெயினின் மலை சார்ந்த பாகம் இருப்புப் பாளங்களுக் குப் பெயர் பெற்றது. இங்கு எடுக்கப்படும் இரும்பு பில்பபோ (Bilb0) துறைமுகத்தின் வழியாக ஏற்றுமதியாகும். நோர்வே பலவகையிலும் பிரிட்டி ஷ் கொலம்பியாவை ஒத்திருக்கின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவைப்போல இங்கும் உள் நாட்டுக் கடல் களும், மர மு ம், உலோகப் பிரயோசன முமுண்டு, கொட் (Cod), ஹெறிங் (Henring) என் னும் மீன்களும் பிடிக்கப்படுகின்றன. அயர்லாந்தின் ஈரலிப்பான சமவெளிகளிலும், பிரான்சிலுள்ள பிறிற்றானி (Brittany) யிலும், டென்மார்க்கிலும், ஒல்லாந்திலே திருத்தப்பட்ட சதுப்பு நிலங்களிலும் ஆடு மாடுகள் வளர்க்கப் படும். பரீஸ் நகரத்தைச் சூழ்ந்துள்ளதும், கிழக்கு இங்கிலாந்தி லுள்ள துமான அனலான பாகங்களிற் கோதுமை செய்கைபண் ணப்படும். ஸ்பெயினிலுள்ள சூரிய வெளிச்சம் படுங் குன்றுகளில் திராட்சை உண்டாக்கப்படுகின்றது. இதனால் இப்பகுதி சம்பெ யின் (Champ gme) உவைனுக்கும், கிலாறெற்ஸ் (Clarets) உவை னு க்கும் பெயர்பெற்றது. கிளாறற்ஸ் உவையின் கறன் (Juront ne) நதிப்படுக்கையிலுள்ள போடோ( Bordeauல) வில் வடிக்கப்படுகிறது.
இம் மூன்றாம் பிரிவிற்கூறப்பட்ட பாகமே கைத்தொழிலிலும் முதன்மை பெற்று விளங்குகின்றது. உலகில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்ற லண்டன், பரீஸ் என்னும் டெரிய நகரங்க ளும், லண்டன், அன்ற்வேப், ஹம்பேக் என்னும் பெரிய துறை களும் இப்பிரிவிற்றான் இருக்கின்றன. அன்றியும் ஐரோப்பாவிற் பிரசித்திபெற்று விளங்கு கின் ற நீர்ப்பாதைகளாகிய றைன் (Rhine) 'எல்ப் (Elbe) நதிகளின் கழிமுகங்களும் அமைந்துள்ளன.

Page 84
ஐரோப்பாவில் ஓர் இயற்கைக் காட்சி

உலகின் இயற்கை வலயங்கள்.
143
ஐரோப்பா பிரித்தானியாவுடனும், இங்கிலாந்து நியூயோக்குட னும், கீழைத்தேசங்களுடனும் அதிகமாகச் செய்து வரு கின் ற வர்த்தகப்பெருமையும் இவ் வலயத்துக்கேயுரியது. ர்ேப்பெருக் குள்ள, ஆற்றுக்கால்களில் நல்ல நிலைமை வகித்து அழகுடன் விளங்குகின்ற கிளாஸ்கோ, லிவர்ப்பூல், நியூக்காசில், ஹல், பிறி மன் (Bremen0), அமெஸ் றர்டாம், றெற்றர்டாம், ஹெவர் "(Haure) என்னுந் துறைமுகங்களும் இங்கு தானுண்டு.
இப்பிரிவின் கைத்தொழில் விருத்தி மற்றைய தேசங்களி லிருந்து வந்து இலகுவில் இறக்குமதியாகும் பொருள்களிலும், இப்பிரிவிலிருந்து தொழிலாகி ஏற்றுமதியாகும் பொருள்களிலும் மாத்திரமேயன்றிக் கரைப்பகுதிகளிலுள்ள அடுக்குப்பாறைகளிற் காணப்படும் கரியி லுந் தங்கியுள்ளது. பெரிய பிரித்தானியாவி லுள்ள கரிவயல்கள் கிளைட் (Clyde), ரைன் (1gne), ரீஸ் (Tees) நதி களின் பக்கங்களிலுள்ள பட்டினங்களில் நடைபெறும் உருக்கு வேலைக்கும், பேர்மிங்காமிலும் பேர்மிங்காமைச் சுற்றியுள்ள பாகங் களிலும் நடைபெறும் இரும்பு உருக்கு வேலைக்கும் நீராவிச் சக்தியைக் கொடுக்கின் ற ன. மான்செஸ்றரிலும் மான்செஸ் றரைச் சுற் றி யு ள் ள பாகங்களிலும் பஞ்சுக் கைத்தொழிலும், லீட்ஸ் 'பிறாட்போட் (Bradford) பட்டினங்களிலும் இவற்றைச் சூழ்ந் துள்ள பாகங்களிலும் உரோமக் கைத்தொழிலும், தென் உவேல் சிலும் அதனையடுத்த பாகங்களிலும் உலோகக் கைத்தொழி
லும் நடைபெறுகின்றன. பிரித்தானியாவின் து கைத்தொழிலின் பொருட்டு ஸ்பெயினிலிருந்து தென்உவேல்சிற்கும், ஸ்காந்தி நேவியாவிலிருந்து பிரித்தானியாவின் கீழ்ப்பகுதிக்கும் இரும்பு இறக்குமதியாகின்றது. பிரித்தானியாவில் நடைபெறுங் கைத் தொழிலுக்கு வேண்டிய கரிபோக எஞ்சியபகுதி காடிவ், நியூக் காசில் என்னுந் து றை மு க ங் க ள் வழியாகப் பிறதேசங்களுக்கு ஏற்றப்படுகின்றது. காடிவிலிருந்து நீராவியை உண்டாக்குங் கரியும், நியூக்காசிலிலிருந்து வீட்டுவேலைக்கேற்ற கரியும் அனுப் பப்படுகின்றது.
ஐரோப்பாக் கண்டத்திலே தென் பிரான்சிலிருந்து பெல்ஜி யம் ஜேர்மனி என்னுந் தேசங்களுக்கூடாக ஒரு கரி வயல் செல் கின்றது. இக் கரிவயல் பிரான்ஸ் தேசத்திலே லில்லி (Lille) நகரத் தைச் சுற்றியுள்ள நெசவுத் தொழிற்சாலைகளுக்கும், பெல்ஜியத் தில் லீஜ்ஸ் (Liegs) நகரத்தைச் சுற்றியுள்ள இரும்பு உருக்கு எந் திர சாலைகளுக்கும், ஜேர்மனியில் நூர் நதிப்படுக்கையிலுள்ள

Page 85
144
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
நெசவு, இரும்பு, உருக்குத் தொழிற்சாலைகளுக்கும் க ரி யைக் கொடுக்கின்றது. இப்பகுதியில் பார்மன் (Burmen), எசென் (Essen), எல்பர்பீல்ட் (Elber" field) என்னும் பட்டினங்கள் ஒன் றற்கொன்று அண்மையாக அமைந்துள்ளன. இப்பிரிவின் உயரமான பகுதியை விட ஏனைய பாகங்களெல்லாம் பெரிய நகரங்களாலும், பல பட் டினங்களாலும் நிறைந்திருக்கின்றன. வலைப்பின்னல் போன்ற தெருக்கள், புகையிரத வீதிகள், வெட்டு வாய்க்கால்கள், கப்பல் கள் உள்ளே செல்லக்கூடிய நதிகள் என்னும், இவற்றின் மூலம் போக்கு வரவு நடைபெறுகின்றது.
9.D. தஸ்மானியா, நியூசிலாந்து, விக்ரோறியாவின் தென்பாக மாகிய ஜிப்ஸ்லாந்து (Gippsland) என்பன இப்பிரிவிலடங்கும். தஸ் மானியாவின் உயர்ந்த நிலப்பாகங்களில் எடுக்கப்படும் தகரமும், பள்ள நிலப்பாகங்களிலுள்ள அப்பிள் சோலைகளும் விசேடமுடை யன. நியூசிலாந்தின் தென் தீவில் அல்ப்ஸ் மலை எதிர் முறைமைக் காற்றினால் வரும் மிக்க மழையைப் பெறுவதினால் இம்மலைக்குக் கிழக்கேயுள்ள கன்ரர்பெரி (Canterbury) சமவெளி சிறிது வரண் டதாயும், ஆடு மாடுகள் வளர்ப்பதற்கு மிகவும் வாய்ப்பான தாயு மிருக்கின்றது. வட தீவிலும் ஆடுகள் அதிகமாக வளர்க்கப்படு கின் ற ன. ஆதலின் உரோமம், இறைச்சி, வெண்ணெய் முதலியன நியூசிலாந்தின் பிர தான் ஏற்றுமதிப் பொருட்களாகும். இங்கு இப்பொழுதும் பல பா க ங் க ளி ல் அ க ன் ற இ லை க்க ாடு கள் காணப்படுகின்றன. சனங்களின் தொகை அதிகரிக்க இக்காடு கள் வெட்டப்பட்டுக் கோதுமை, ஓற்ஸ் விளைவித்தற்கேற்ற கம் நிலங்களாயின. குக் நீரிணையிலுள்ள வெலிங்ரன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். ஆயினும் வட தீவிலே கூரான முனையொன்றில் அமைந்துள்ள ஒக்லாந்து என்னும் பட்டினமே மிகப்பெரியது. அவுஸ்திரேலியாவின் தென்பாகத்திலுள்ள விக்ரோறியாவின் ஒரு பாகமாகிய ஜிப்ஸ்லாந்தில் ஆடு மாடுகள் வளர்க்கப்படும்.
10. குளிர்ந்த மத்திமசுவாத்திய வலயம் (The Cool Temperate Eastern Margins
of the Northern Continents) இவ்வலயத்தில் குளிர்ந்த தரைக்காற்றே வீசும். மாரியில் பனிய திகம். ஊசியிலைக் காடுகளே இங்கு காணப்படும். ஏழாம் பிரிவிற் சொல்லப்பட்டது போல் இங்கு ஆடு மாடுவளர்த்தலும், ஆடு மாடுகளுடன் கூடிய கமமும் (Mined Farnning) நடைபெறு

உலகின் இயற்கை' வலயங்கள்.
145
கின் றன. துறைமுகங்கள், ஆறுகள், மற்றும் நீர் நிலையங்கள் யாவும் மாரியில் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். இவ்வலயத் தில் அதிக விலைக்கு விற்கக்கூடிய ஏராளமான மீன்கள் பிடிக்கப் படுகின்றன.
10-A. நியூபவுண்லாந்து, கனடாவிற் கடலடுத்த சுவாத்தியத் தையுடைய மாகாணங்கள், ஐக்கிய மாகாணங்களி லொன்றாகிய நியூ இங்லாந்து என்பன இப்பிரிவிலடங்கும்.
நியூ பவுண்லாந்திலுள்ளவர்களுக்கு மரமரி தலும், மீன்பிடித் தலுமே விசேட வருவாய்க்குரியன. இத்தீவின் மத்தியபகுதியில் ஆடு மாடு வளர்த்தலும், கமச்செய்கையும் நடைபெறுகின் றன. இப்பிரிவிலடங்கும் கனடா மாகாணங்களில் முதன்மையான அப் பிள்சோலைகள் உண்டு. நியூ இங்கிலாந்தில் நீர்வீழ்ச்சிச்சக்தி 2அ தி கம். இதுவே இதன் வளர்ச்சிக்கு முக்கிய ஏதுவாகும். கைத் தொழில் வ ல ய த் தி ல் முதன்மைபெற்று விளங்குவதற்கும் இதுவே காரணமாகும். இங்கு பஞ்சுக் கைத்தொழில் விசேடமாக நடைபெறுகின்றது. இக் கைத்தொழிலுக்கு வேண்டிய பதனிடப் படா தபொருட்கள் ஐக்கியமாகாணங்களின் தென்பாகத்திலிருந்து வருவிக்கப்படுகின்றன. நியூ இங்கிலாந்தில் மத்தியநிலைமை வகித் திருக்கின்ற பொஸ்ரன் (B0s 01) என்னும் நகரமே இப்பிரிவின் விசேடநகரமாகும். இப்பிரிவின் தென்பாகத்திலுள்ளதும் லண்ட னைத் தவிர ஏனையபட்டினங்களில் முதன்மைபெற்று விளங்குவது மாய நியூயோக் என்னும்நகரமே ஐக்கியமாகாணத்தின்வர்த்தகத் தலைநகரமாகும். மொகோக்கட்சன் (Mchowk Hudson) நதிப் படுக் கையிலும், அப்பலாச்சியன் மலைக்கூடாகப் பெரியசமவெளிகட்கும் பெரிய வாவிகளிருக்கும் வலயத்திற்கும் போக்குவரவு செய்யத் தக்க மிக்கவசதியான இடத்திலும் இருத்தலினால் நியூயோக் விசேடம் பெற்ற தாயிருக்கின்றது. பெரிய வாவிகள் ஈரி (Eri) கால்வாயினால் ஹட்சன் நதியோடு தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஹட்சன் நதிப்படுக்கைக்கூடாகப் பல பெரிய புகையிரதப்பாதை கள், செல்கின்றன. சென்லோறன்ஸ் நதிக் கழிமுகத்தின்வழி யாகக் கனடாவுக்குச் செல்லலாம். மாரியிலே இதன்வழியாகச் செல்லுதல் அரி து. நோவாஸ்கோஷியாவிலுள்ள ஹலிபாக்ஸ் என்னுந் துறைமுகத்தின் வழியாக எக்காலமும் கனடா இராச் சியத்தையடையலாம்.
அப்பலாச்சியன்மலைக்குத் தெற்கேயுள்ள பிலடெல்வியாவின் (Philadelphia) புறப்பாகத்திலும், தென் அ ந் த த் தி லும் கமத்
19

Page 86
146
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
தொழில் நடைபெறும். அகன்ற பள்ளத்தாக்குகளில் கரியும் இரும்பும் எடுக்கப்படுகின்றன. பருத்திக் கைத்தொழில் வரவர வளர்ந்துவருகின்றது.
10 B. சைபீரியாவிலுள்ள அமூர் மாகாணமும், மஞ்சூரியாவும், ஜப்பானின் வடபாகமும், கொறியாவும், வடசீனாவும், பரு வ ப் பெயர்ச்சிக் காற்றுவலயத்தின் ஓர் சிறுபாகமும் இப்பிரிவிலடங் கும். மாரிகாலத்தில் மிகவுங்குளிரான எதிர்முறைமைக் காற்றை யும், கோடைகாலத்திற் குறைந்தஉஷ்ணமும் ஈரலிப்புமான முறை மைக் காற்றையும் இப்பிரிவு பெறும். இவ்வலயத்திலுள்ள மலைப் பாகமும், அமூர், சகேலியன் பாகங்களும் இப்போதும் காட்டாந் தனவாயிருக்கின்றன. காடற்ற பாகங்களில் ஆடு மாடுகள் வளர்க் கப்படுகின்றன. கமச் செய்கைக்கேற்ற பாகங்களில் கோதுமை, பார்லி, சோயா அவரை (Soya beans) என்பன செய்கைபண்ணப் படும். இப்பிரிவில் சீனாவிலுள்ள கொயாங்கோ நதிப்படுக்கை கமச்செய்கைக்கேற்ற தாயும், சன நெருக்கமுடைய தாயும் இருகின் ற து. இப்பிரிவின் தென் அந்தத்தில் கோடையில் உஷ்ணம் அதிகமாயிருக்கின்றபடியால் நெல் விளைவிக்கப்படுகின்றது. குளி ரான மாரி இப்பயிருக்கு ஒரு வித கெடுதியுஞ் செய்யாதிருக் கின் றது, சீனாவிலும் மஞ்சூரியாவிலும் கரி அதிகமாகவுண்டு. ஆயினும் கைத்தொழில் இப்பாகங்களில் நடைபெறுவதில்லை. சீனாவின் தலைநகராகிய பீக்கினிலிருந்து வடபாகமும் தென்பாக
மும் ஒடும் புகையிரதங்களுக்கு வேண்டும் கரியை இப்பாகம் உத வுகின்றது. விளாடிவெஸ்ரொக்கை அந்தமாகவுடைய  ைச பீ ரி ய புகையிரதப் பாதையுடன் மஞ்சூரிய புகையிரதப் பாதைகளெல்
லாந் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
11. வடக்கேயுள்ள அகன்ற இலைக்காடுகள். ஊசியிலைக் காடுகளின் தென் பாகத்தே இக்காடுகள் அமைந் துள்ளன. இக்காடுகளில் உரோமத்தையுடைய மிருகங்கள் அதிக மாகவுண்டு . உரோமத்திற்காக இவைகள் வேட்டையாடப்படும். காடுகளில் மரம் வெட்டப்படும். இவ்வலயத்தில் தென் அந்தம் திருத்தப்பட்டுக் கமச்செய்கைக்கு ஏற்றதாயிருக்கிறது. வடபாகத் தைப் பார்க்கிலும் இங்கே நீண்ட கோடை காலமாகையினால் குறைந்த மாரிகாலத்தில் விளைவிக்கக்கூடிய றை, ஓற்ஸ் என்னும் தானியங்களே செய்கைபண்ணப்படுகின்றன. ஆடு மாடுகளும் வளர்க்கப்படுகின்றன.

உலகின் இயற்கை வலங்கள்.
147
11 A. சென்லோறன்ஸ் நதியைத் தென்பாகத்திற் கொண்டு சுப்பீரியர், ஹியூரன், ஈரி, மிச்சிக்கன், ஒன்ராறியோ என்னும் வாவிகளையும் அடக்கி, அவற்றின் மேலாகப் பரந்து செல் லு கின்ற கனடாவின் காட்டுப்பகுதி இப்பிரிவிலடங்கும். இப்பிரி வின் தென்பாகம் சனநெருக்கமுடையது. காட்டின் நடுப்பாகத்தே வேட்டையாடுவதில் திறமை வாய்ந்த செவ்விந்தியரும், உரோம வியாபாரிகளுமே வசிப்பர். சென்லோறன்ஸ் நதியிலிருந்து மரம் அரியும் எந்திரசாலைகளுக்கு நீர்ச்சக்தி எடுக்கப்படுவதனாலே இப் பிரிவில் மரம் வெட்டுந்தொழில் அதிகமாக நடைபெறுகிறது. திருத்தப்பட்ட தென்பாகத்தில் கமத்தொழிலும், ஆடு, மாடு வளர்த்தலும் நடைபெறும், ஓற்ஸ் என்னுந் தானியமும், பாற் கட்டியும் பிர தானமானவை. மொன் றீல் என்னும் பட்டினம் சென் லோறன்ஸ் கழிமுகத்திலிருப்பதனாலே சிறப்புடையதாகின் றது. இங்கிருந்து மேற்குத்திசையாக ஒற்றாவுக்கும், தென்மேற்காக வாவிப்பிரதேசத்திற்கும், தென்பாகமாக நியூயோக்குக்கும் பாதை கள் செல்கின்றன. மாரிகாலத்தில் இவ்வலயத்திலுள்ள துறை முகங்கள், நீர்ப்பாதைகள் பெரும்பாலும் உறைந்துபோகின் றன. இதுகாரணமாகத் தலைநகரமாகிய ஒற்றாவா சிறிய நகரமாகின்றது.
இவ்வலயத்தில் உ  ேல ா க ங் க ள் அதிகமாகக்கிடைக்கும். பெரியவாவிகளையடுத்துள்ள கனடாவிலும், ஐக்கியமாகாணங்களி லும் இரும்புப்பாளங்கள் உண்டு. இரும்புப்பாளங்கள் சுப்பீரியர், ஹியூறன் வாவிகளுக்கிடையேயுள்ள சூ என்னும் வெட்டுவாய்க் கால் வழியாய் நிலக்கரிகள் உள்ள இடங்களுக்குக் கொண்டு போகப்படுகின் றன. ஹியூறன் ஏரிக்கு வடபாகத்தே மு தன்மை யான வெள்ளியும், நிக்கலும் ஏராளமாகவுண்டு. இன்னும் வட பாகத்தில் போக்குபைன் என்னும் பொற்சுரங்கமும், புதிய செப்புச் சுரங்கமும் உண்டு.
11. B. சைபீரியவெளியின் மத்தியபாகம் முழுவதும் இப்பிரிவில டங்கும். இப்பிரிவுக்குக் கிழக்கேயும் வடக்கேயுமுள்ள பிரதேசங் களின் மாரியிலும்பார்க்க இங்குள்ளமாரிகாலம் குளிர் குறைவுடை யது. கோடைகாலத்தில் நல்ல மழைபெய்வதினால் க ா டு க ள் பெரும்பாலும் அ க ன் ற இ லை க் காடுகளாக அமைந்துள்ளன. இக்காடுகள் அதிமாகத் திருத்தப்பட்டுக் கமச்செய்கைக்கு ஏற்ற னவாயிருக்கின்றன. பிளாக்ஸ் (Flaல), கெம்ப் என்னும் இரு வகைச் சண லும், பீற்கிழங்கும், ஓற்ஸ், றை என்னுந் தானியங் களும் அதிகமாகச் செய்கைபண்ணப்படுகின்றன. இப்பிரிவிலே

Page 87
148
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
மொஸ்கோ நகரம் உண்டு. வடகிழக்கு ரஷ்யாவிலுள்ள ஊசி யிலைக் காடுகளிலிருந்து மரங்கள் வெட்டப்பட்டு டிவைனா நதிக்கு மேலாக மிதக்கவிட்டு ஆர்க்கேஞ்சல் என்னும் பட்டினத்திற்கு கொண்டுவரப்படும். யூரல்மலையை அடுத்து ஆசியாவிலிருக்கும் இக்காட்டிலே வேடுவரும், மீன்பிடிப்போரும் ஆங்காங்கு குறைவா கக் காணப்படுவர். திறான் -சைபீரிய புகையிரதவீதியின் பக்கப் புல்வெளிகளிற் செய்யப்படும் கமம் போலக் ' காடுகளை வெட்டிக் குறைவாகக் கமச்செய்கை நடைபெறுகின்றது. யூரல் மலையில் விலையுயர்ந்த கிடைத்தற்கரிய உலோகமாகிய பிளாற்றினமும், தங்கமும் எடுக்கப்படுகின்றன. இவற்றை எடுக்கும் பொருட்டு யூரல் மலையையடுத்தும், பெயிக்கல் வாவிக்குக் கீழ்ப்பக்கத்தேயும், லீலை நதியின் மேற்பாகத்தும், பொன் கிடைக்கக்கூடிய உயரமான பகுதிகளிலும் சுரங்கவேலைசெய்வோர் வசிக்கின்றனர்.
12. மத்திய ஐரோப்பிய நாடுகள் முன்சொல்லப்பட்ட வலயத்திலும்பார்க்க இவ்வலயம் ஈரலிப் பான தாகையால் சுவாத்தியம் அதனிலும் நல்லது. இது ஒரு காலத்தில் அகன்ற இலைக்காடுகளாலும், 60° அட்சத்திற்கு வடக் குப்பாகத்தில் பசளையற்ற மண்ணுள்ள இடத்தில் ஊசியிலைக் காடுகளாலும் மூடப்பட்டிருந்தது. கார்பேதியன் மலையைப்போல உயரமான இடத்திலும் சுவீடன், பின்லாந்து என்னுமிடங்களி லிருக்கும் சமநிலங்களிலும் இக்காலமும் பரந் த கா டு க ளே காணப்படுகின்றன. இக்காடுகளிலிருந்து மரம் எடுக்கப்படும். காடுகள் திருத்தப்பட்ட இடங்களிலும், மேற்குக் கரைப்பகுதிகளி லும் ஆடுமாடுவளர்ப்பதும் கமச்செய்கை செய்வதுமுண்டு. இங்கே யுள்ள தாவரங்களில் பால்த்திக் கடலுக்குத் தெற்கேயுள்ள சம வெளிகளில் வளர்க்கப்படும் பிளாக்ஸ், கெம்ப் என்ற இருவகைச் சணல்களும், பீற், உருளைக் கிழங்குகளும், ஓற்ஸ் என்பனவுமே மிகப் பிரதானமானவை. தென்சுவீடனிலும், டென்மார்க்கிலும் ஆடுமாடுகளால் வரும் பிரயோசனத்தைக்கொண்டு செய்யப்படும் தொழில்கள் நடைபெறுகின் றன. கங்கேரிச் சமவெளி மலைகளி னாலே தடுக்கப்படுகின்றபடியாலும், தெற்கேயமைந்திருக்கின்ற படியாலும் தரை மிகவுங் காய்ந்ததாயும் சூடான கோடையை யுடைய தாயுமிருக்கின்றது. எனவே இங்கு கோதுமை, சோளம் போன்ற தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. மா அரைக்கும் எந்திரசாலைகளுக்கு மத்தியஸ் தானம் வகித்துள்ள ஓர் பெரிய பட் டினமாக புடாபெஸ்ற் இரு க் கி ன் ற து. குறைந்தசூடும், சூரிய வெளிச்சமும் உள்ள பகுதிகளில் உவைன் வடிக்கப்படுகின்றது.


Page 88
ஜேர்மனி

உலகின் இயற்கை வலயங்கள்.
149
இவ்வலயத்தில் மேற்கு ஐரோப்பாவைப்போலவும், கிழக்கு ஐக்கியமாகாணத்தைப்போலவும் கைத்தொழில் பிர தானமாகும் இதனாற் கரிச்சுரங்கங்களின் பக்கத்தில் திரளான மக்கள் வசிக் கின்றனர். சாக்சனிலிருக்கும் கரிச்சுரங்கமானது கெம்னிற்ஸ் என் னும் பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் இரும்பு உருக்குக் கைத்தொழில்களுக்குக் கரியைக் கொடுக்கின்றது. சிலீசியன் கரிச்சுரங்கமானது ஜேர்மனி, அவுஸ்திரேலியா, றஷ்யா என்னும் மூன்று தேசங்களாலும் பங்கிடப்பட்டுள்ளது. இது வஸ்திரநெசவு, உலோக வேலைகளுக்குக் கரியைக் கொடுக்கின் றது. போலந்திலுள்ள லொட்ஸ் என்னுந் தலைநகரம் பருத்திக்கைத் தொழிலுக்குப் பெயர்பெற்றது. பொகிமியாவிலிருக்கும் கரிச்சுரங் கங்கள் செக்கோசிலவாக்கியாவிலிருக்கும் பிறேக், புறூன் என்னும் பட்டினங்களைக் கைத்தொழிலுக்கு மத்திய் " ஸ் தானமாக்கி விட் டன. ஜேர்மன் தலைநகரமாகிய பேர்ளின் பால்த்திக் சமவெளியின் மத்தியாயிருக்கின்றது. அன்றியும் விஸ் தியுலா, ஓடர், எல்ப் என்னும் மூன்று நதிகளாலும் தொடுக்கப்பட்ட சங்கிலிபோன் ற நீர்ப்பாகங்களின் மத்தியில் அமைந்துள்ளது. அவுஸ்திரேலியா வின் தலைநகரமாகிய வீயன்னா பல பாதைகள் வந்து சந்திக்கும் டன்யூப் நதியில் இருக்கின்றது. ரஷ்யாவின் பழைய தலைநகர மாகிய பீற்றோகிறாட் என்னும் பட்டினம் மேற்குநோக்கி இருக்கின் றமையினால் மொஸ்கோவைக் காட்டிலும் மற்றைய தேசங்களி லிருந்து வந்துசேரக்கூடிய மத்திய நிலைமையை வகித்துக்கொண் டிருக்கிறது.
இவ்வலயத்திலுள்ள பெரும்பான்மையான வர்த்தகம் றைன் நதிக்கும் டன்யூப் நதிக்குமூடாக நடைபெறுகின்றது. ஸ்றாஸ்பேக் என்னும் பட்டினம் றைன் நதியின் மத்தியில் அகலமான பள்ளத் தாக்கில் இருக்கின்றது. நதி ஒடுங்கிச் சமவெளியை அடைகின்ற இடத்தில் கொலோன் என்னும் பட்டினமிருக்கின்றது.
இவ்வலயத்திலிருந்து பால்த்திக் கடலும் பிரயோசனத்தை பல இடங்கட்கும் அனுப்புவதனால் அதனைச்சுற்றிவரப் பல துறை முகங்களிருக்கின்றன. ஆ ற் றி ன் முகத்துவாரத்திலிருக்கின்ற றிக்கா, டான்சிக், ஸ்ரெற்றின் கொப்பநேஜன், கொற்றேபேக், ஸ்ரொக்கோம் என்னும் பட்டினங்கள் மாரிகாலத்திற் பனிக்கட்டி யால் மூடப்பட்டிருக்கும். ஹீல் வெட்டுவாய்க்கால் பால்த்திக் கடலுக்கூடாக நடைபெறும் வர்த்தகத்திற்கு முக்கிய சாதனமா யிருக்கின்றது.

Page 89
150
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
றைன், றோன், ஜீன் என்னும் ஒவ்வொரு நதிகளும் தம்முள் இவ்விரு ந தி க ளு ட ன் தொடுக்கப்பட்டிருக்கின்றன. லயன்ஸ் என்னும் பட்டினம் பட்டுச்சாமான் வர்த்தகத்தாலும், கைத் தொழிலாலும் பிரசித்தி பெற்றுளது.
13. மலை வலயங்கள் * இப்பாகத்தில் சீதோஷ்ணஸ்திதி, தாவரப்பிரயோசனம் என் பன மலையின் அடிவாரத்திலிருந்து சிகரத்தைநோக்கிச் செல்லச் செல்ல மாறுபட்டுக்கொண்டிருக்கிறது. உயரமான பள்ளத்தாக் குகளில் மரங்கள் காணப்படும். வலயத்துக்குமேல் இருக் கு ம் மை தானப் புற்றரைகள் ஆடுமாடுகளுக்கு உணவாகப் பிரயோ சனப்படும், ஆனால் கீழேயிருக்கும் பள்ளத்தாக்குகள் ப ச ளை உள்ளனவாக இருப்பதனால் கமத்தொழிலே இப்பகுதிகளிற் பிர தானம். ஈரலிப்பான மலைச்சரிவுகளிற் காடுகள் இருப்பதனால் மரங்களும் வெட்டப்படுகின்றன. சுரங்கவேலையும் இங்கு ஒரு தொழிலாகும். உயரமான மலை க ளி லு ள் ள பனி உறைவதினா லும், கீழ்மலைச் சரிவுகளில் மழை பெய்வதனாலும் அவ்விடங்களி லிருந்து ஊற்றெடுக்கும் ஆறுகள் நீர் குறைந்தனவாயிருக்கின் றன. இவ்வாறுகள் நீர்ப்பாய்ச்சுதற்கு அன்றேல் நீர்ச்சக்திக்கு உதவுகின்றன.
இம்மலை வலயங்களிற் போக்குவரவு மிகவும் கஷ்டமானது. இங்கே சில கணவாய்களே பிரதானமானவை. ஒரு பள்ளத்தாக் கிலுள்ளவர்கள் மற்றப் பள்ளத்தாக்கில் உள்ளவர்களிலிருந்து மலைகளாற் பிரிக்கப்படுவதனாலும், கீழ்ப்பாகங்களிலிருந்து மலை களாற் பிரிக்கப்படுவதனாலும் இவர்கள் சுயராச்சியத் தன்மை யுடையவர்களாயும், பி ர ம ா ண ங் க ளு க் கு அமையாதவர்களாயு மிருக்கின்றனர்.
13 A. வட அமெரிக்காவிலிருக்கும் கோடிலினாவின் வடபகுதி யில் உயரமான மலைத்தொடர்கள் பனி ய ா ல் மூடப்பட்டிருக் கின் றன. இங்கிருந்து பெரிய பனிக்கட்டிகள் கீழிறங்குவதன்ல் அவை மிக ஆழமான பள்ளத்தாக்குகளையுண்டாக்கிவிடுகின்றன. இப்பள்ளத்தாக்குகளில் மிக்கவிரைவுடன் ஓடும் ஆறுகளும் ஆழ மான வாவிகளுமிருக்கின்றன. இங்கு உலோகங்களே பிரதான மானவை. துருவ சக்கரத்துக்குக் கிட்டயிருக்கும் கொலன்டை (Klondlyhe) பொற்சுரங்கத்தையும் இவ்வலயம் அடக்கியிருக்கின் றது.

உலகின் இயற்கை வலயங்கள்
151
13 B. வடக்கு அந்தீஸ்', கொலம்பியா, ஈக்குவடோர், பீரு என் பன மலைவலயங்களை அடக்கியிருக்கின்றன. இவ்வலயத்தில் காய்ந்த தரையிலுள்ள சமவெளிகளை நோக்கிக்கொண்டிருக்கிற பகுதிகள் தவிர ஏனைய மலைகளின் கி ழ க் கு மேற்குச் சரிவுகள் மிக்க ஈரலிப்புடைய னவாக இருப்பதால் தாவரங்களால் நன்றாகச் சூழப்பட்டிருக்கின்றன. சூடான கீழ்ச்சரிவுகளில் அகவளர் விருட் சங்களும் மூங்கில்களும் காணப்படுகின்றன. சனங்களாற் செய்கை பண்ணப்படும் பிரயோசனங்களும் அதிகமாகவுண்டு. இதற்கு மேலே குளிரான வலயமுண்டு. இங்கு சிறுபூண்டுகளும் மைதா னங்களுமுண்டு. இதன்மேலிருக்கும் மிகக் குளிரான வலயம் பனி யால் மூடப்பட்டு மலட்டுத்தன்மை அடைந்திருக்கும். பீடபூமி யிலே குயிற்றே என்னும் நகரம் இருக்கின் றது. இவ்வலயம் நிரட்ச ரேகையிலிருக்கின்றபடியால் சூரியகிரணம் .வருடமுழுவதும்நேராக விழுகின்றது. இது உயரமானபடியால் குறைந்த குளிராயிருக் கின்றது. ஆகையினால் இங்குள்ள சீதோஷ்ண ஸ் தி தி ஒரு வசந்தகாலமாகவே இருக்கின்றது.
13 C. அல்ப்ஸ்மலை வலயமானது சுவிச்செலாந்து, அவுஸ்திரே லியா, பிரான்ஸ், இத்தாலி என்னும் இடங்களின் ஒருபகுதியைச் சேருகின்றது. இவ்விடங்கள் மிக்க இயற்கையழகுடன் விளங்கு வதினால் வருடந்தோறும் பெருந்தொகையான பிரயாணிகள் இங்கே வந்துபோய்க் கொண்டிருக்கின்றனர். அல்ப்ஸ்மலைக்கும், யூரல் மலைக்கும், லூசேன் மலைக்கும் நடுவில் அமைந்துள்ளதும் சென்கோ தாட் கணவாய்க்குப் போகும்வழியில் இருப்பதுமாகிய ஜெனிவா நகரம் காட்சிக்காக வரும் பிரயாணிகளுக்குப் பிரதான சந்தையாக இருக்கின்றது. அதிகமான ஆடுகள் கோடையில் மைதானங்களில் மேய்க்கப்பட்டு மாரிவரப் பள்ளத்தாக்குகளுக் குக் கொண்டுவரப்படும். இதனால் ஆடுமாட்டுப் பிரயோசனமும் ஓர் தொழிலாகும். சுவிச்செலாந்து கரியில்லாதிருந்தும் நீர்வீழ்ச் சியிலிருந்து பெறப்படும் மின்சாரசக்தியினால் கைத்தொழிற் தேச மாக இருக்கின்றது.
18 சரித்திரத்தில் மிக்க பிரசித்திபெற்ற கைபர் கண வாய்க்கு ஊடாகவரும்பொழுது அபுகானிஸ்தானிற் காணப்படும் மலைகளும், பள்ளத்தாக்குகளும் இவ்வலயத்திற் சேரும். இந்தியா வைத் திபெத்திலிருந்து பிரிக்கும் இமயமலையின் சமாந்தரமான பள்ளத்தாக்குகளும், மலைகளும் இவ்வலயத்திற் சேரும். பெரும் பான்மையும் ஆராய்ச்சி செய்யப்படாத மலைகளும், பள்ளத்தாக்கு

Page 90
152
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
களும் இவ்வலயத்திலுள்ளன. பருவப்பெயர்ச்சிக்காற்று இமய மலையினாற் தடுக்கப்பட்டு மேற்குத் திபெத்திற்கு மழையில்லாமற் செய்கின்றது. கிழக்கேயி ருக்கும் பள்ளத்தாக்குகளுக்கு அற்ப மழையைக் கொடுக்கின்றது. இதனால் இங்கு ஓரளவிற்குப் பயிர்ச் செய்கை நடைபெறுகின்றது.
பள்ளத்தாக்கின்கண் புண்ணிய ஸ்தலமும் திபெத்தின் தலை நகருமாகிய லாசா என்னும் பட்டினம் இருக்கின்றது.
14. தூந்திர பூமிகள் உபயோகம் குறைந்த இந்தச்சமநிலங்கள் வடசமுத்திரத்தின் கரையில் அமைந்துள்ளன. இவ்விடங்களில் வசிப்போர் வேட்டை யாடுபவர்களாயும் துருவமான்களுக்குக் கறளைப்பூண்டுகள் தேடு பவர்களாயும் அலைந்து திரிகின்றனர். அமெரிக்காவில் இருக்கும் தூந்திரபூமிகள் மலட்டுத் தரை எனப்படும். இவ்விடமானது. கஸ்தூரி எருதுகளுக்கும், அமெரிக்க துருவமானுக்கும், வடக்கே தங்களுடைய குஞ்சுகளைப் பொரிப்பதற்காக மறைந்து செல்லும் பறவைகளுக்கும் வீடாக இருக்கின்றது. வளைந்துள்ள வடபாகக் கரையின் சு ற் று ப் புறங்களிலும், தீவுகளிலும், சீல்மீனையும், துருவமானையும் வேட்டையாடும் எஸ்கிமோவர் வசிக்கின்றனர். உட் பாகத்தே ஆறுகளில் மீன்பிடிப்பவர்களும் துருவமானை வேட் டையாடுபவர்களுமாகிய செவ்விந்தியச் சாதியார் வசிக்கின்றனர். இவர்கள் இருண்ட மாரிக்காக உலர்ந்த உணவுகளை ஏராளமாகச் சேகரித்து வைக்கவேண்டியவர்களாயிருக்கின்றனர்.
ஐரோப்பா, ஆசியாவிலுள்ள தூந்திர பூமிகளிற் துரு வ மான்கள் வீட்டுமிருகங்களாக வளர்க்கப்படுகின்றன. அங்குள்ள லாப் சாதியினர் தங்களுடைய துருவமான்களைக் கறளைப்பூண்டு இருக்கும் ஓர் இடத்திலிருந்து கறளைப்பூண்டுள்ள வேறோரிடத் திற்குக் கொண்டுசென்று அவற்றின் பாலிலும், இறைச்சியிலும் சீவியத்தைக் கழிக்கின் றனர். கிழக்கு ஆசியாவில் எஸ்கிமோ வரைப்போல் மீன்பிடித்து வேட்டையாடிச் சீவனம்பண்ணும் சாதியாரிருகின்றனர். நோர்வேக்கும் சுவீடனுக்குமிடையிலிருக் கும் பிஜெல்ட்,(Field) என்னும் பகுதியான து தூந்திர பூமிக்குரிய தன்மைகளையுடையது. இங்கே லாப் சாதியார் குடியேறியிருக்கின் றனர். சுவீடிய லாப்லாந்து தேசமான து இரும்புச் சுரங்கங்களுள் ள தாயிருக்கின்றது.

உலகின் இயற்கை வலயங்கள்.
153
15. பனிக்கட்டி வனாந்தரம் இப்பிரதேசங்கள் பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும். இங்கு மீன்பிடிக்குந் தொழில் நடைபெறுகின்றது.
இவ்வலயத்தைச் சுற்றியிருக்கும் கடல்களிற் துருவக்க்ரடி, சீல், சேபிள், சில்வர், பொக்ஸ் போன்ற மிருகங்கள் வசிக்கின்றன.
கிறீன்லாந்தின் உட்பாகத்திற் பனிக்கட்டிகள் அ தி கம் இருப்பதனால் அடியிலுள்ள பனிப்பாளங்களைக் கரைக்குத் தள்ளி விடுகின்றன. இவைகள் மிகவும் ஆழமான உள் நாட்டுக்கடல் களை ஆக்கிவிடுகின்றன. இவ்வுள் நாட்டுக் கடல்களைச்சுற்றி எஸ்கி மோவர் இருக்கின்றனர். இத்தேசம் டென்மார்க்குக்குச் சேர்ந்த தாகையால் அத்தேசத்தவர்களும் சிலர் அங்கு வசிக்கின்றனர்.
தென் துருவக்கண்டம் பெரும்பான்மையாக ஆராய்ச்சிசெய் யப்படாமலிருக்கின்றது. இக்கண்டமானது மற்றைய கண்டங்களி லிருந்து அகன்ற தென்சமுத்திரத்தினாற் பிரிக்கப்பட்டிருக்கின் றது. இங்கு பென்குவின் என்னும் பட்சி, சீல்மீன், திமிங்கிலம் முதலியன காணப்படுகின்றன.
வினாக்கள், (1) உலகின் பாகங்கள் பலவும் எவ்வெவற்றில் ஒன்றியும் வேற்றுமைப் பட்டுங் காணப்படுகின் றன? ஒற்றுமைக்கும் வேற்றுமைக்கும் உதாரணமாக இலங்கையில் இவ்விரண்டு இடங்கள் கூறுக. (2) இயற்கைவலயம் என்பத னால் நீர் விளங்கிக்கொள்வதென்ன? இலங்கையில் இரண்டு கடற்கரைநாடு கள், இரண்டு மலைநாடுகள், இரண்டு காட்டுப்பிரதேசங்கள் கூறித் தாவரம், பிராணிவர்க்கம், மக்களின் வாழ்க்கைமுறை என்பவற்றில் ஒவ்வோர் பகுப் பும் வேறுபட்டிருப்பதை இடங்களுங் குறிப்பிட்டு விபரிக்குக. (3) உலகின் பிரதான இயற்கை வலயங்களுள் குறிப்பிடத்தக்க எவையேனும் ஐந்துகூறி ஒவ்வோர் பகுப்புக்கும் இவ்விரண்டு நாடுகள் கூறுக. ஒரு இயற்கை வலயத் தைப்பற்றிச் சுவாத்தியம், தாவரம், விளை பொருட்கள், பிராணிவர்க்கம், மக்களின் வாழ்க்கைமுறை என்பன பொருந்தப் பூமிசாஸ்திர சம்பந்தமாக விபரிக்குக. (4) உஷ்ண வலயப்புல்வெளிகள், மத்தியதரைக்கடற் சுவாத்திய நாடுகள், பெரிய உஷ்ணப்பாலைவனங்கள் என்பவற்றிற்கு உதாரணமாக ஒவ்வோர் பிரிவு கூறி ஒன்றைப்பற்றிப் பூமிசாஸ்திர சம்பந்தமாக விபரிக்குக. (5) ஆசியாக்கண்டத்தின் பருவப் பெயர்ச்சிக் காற்றுப்பிரதேசம், மேற்கு அவுஸ்திரேலியாவின் தென்மேல் பகுதி, சைபீரியாவரையுஞ் செல்கின்ற றஷ்யலெளி, தென் ஆபிரிக்காவின் கலகாரிப்பிரதேசம், நியூ பவுண்லாந்து ஒவ்வொன்றும் எவ்வியற்கைவல்யத்தைச் சேர்ந்ததெனக் குறிப்பிட்டு ஒன்
20

Page 91
154
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
றைப்பற்றி விபரிக்குக (6) நாடுகளில் எத்தனை வகையுண்டு? ஒவ்வோர் வகைக்கும் இவ்விரண்டு நாடுக' [ கூறி எவையேனும் ஒரு காட்டுப்பாகத் தி லுள்ள மக்களின் வாழ்க்கைமுறையைப் பூமிசாஸ்திர ஏ து க் க ளே ா டு ஆராய்க. (7) சீர் திருந்தாத மக்கட்சாதியினரில் மூன்று பகுதியினர் கூறி அவர்கள் எவ்வெப்பாகங்களிற் காணப்படுகின் றனர் என வங் கூறுக. ஒரு சாதியினரின் சீவியத்தை விபரிக்குக. (8) உலகில் குறிப்பிடத்தக்க பத்து இயற்கை வலயங்களைப் புறஉருவப் படத் தில் வர்ணந்தீட்டிக்காட்டுக. எவையேனும் இரண்டு பிரிவைச்சேர்ந்த நாடுகளைக் கூறி ஒரு நாட்டினது மக்களின் வாழ்க்கை முறை, இயற்கைத் தாவரம், விளை பொருட்கள் இன்ன பிறவற்றை விபரிக்குக. (9) உஷ்ணவலயக்காடுகள், உஷ்ண வலயப்புல் வெளிகள், மத்திய தரைக்கடற் சுவாத்திய நாடுகள், மத்திமசுவாத்திய மேற் குக்கரைப் பகுதிகள், மத் தியவலயப் புல்வெளிகள், பருவப்பெயர்ச்சிக்காற்று நாடுகள் என்பவற்றுள் எவையேனும் ஐந்தில் நடைபெறும் தொழில்களும் கிடைக்கும் பிரயோசனங்களுங் கூறுக (10) உலகில் பொன், இரும்பு, நிலக்கரி, பழவகை, கோதுமை, நில எண்ணெய், உரோமம், மீன், வெட்டு மாம், நெல் என்பன கிடைக்கும் இவ்விரண்டு நாடுகள் கூறுக. (11) இவற் றைப் படத்திற் குறித்துக்காட்டுக. இப்பொருட்கள் ஒவ்வொன்றும் ஏற்று மதி யாகும் பிரதான துறைமுகங் கள் ஒவ்வொன்று கூறி உலகப் புறஉருவப் படத்தில் இத்துறைமுகங்களைக் குறித்துக்காட்டுக. (13) பிறையறி, வன் கூவர், சிக்காக்கோ நியூக்காசில், டவுன்ஸ், புஸ்மன், சிட்னி. நற்றால், லாமா, வால்பாசோ, அற்றகாமா, றையோடி ஜனறோ, பிக்மீஸ், செற்சி, மிக்சிக்கன் என்பவற்றுள் எவையேனும் பத்தை விளக்கி ஒவ்வோர் வாக் கியம் எழுதுக. இங்கு கூறப்பட்டவற்றுள் ஐந்து பட்டினங்களை அல்லது துறைமுகங்களைப் புறஉருவப்படத்திற் குறித்துக் காட்டுக.


Page 92
ofe
லிவர்ப்ழக
வன்டூவிலர்
யொக்ககோமா ..
சொக்காமா
|
சியோனியன்
எப்யோம்
1பேட்சத சுசிய ல்
வா டாடி தி
அன்பை')
பிராங்காது
ஈரே கா மா
சன் மண்ழ் ணிக்கோவுக்க,
நா4)
அwார்:டொன்,
அண கஜக?-
- உயிலிருந்து .
சசையோலிசாரோ
2,4ால.: A 9 vா..
லா.
- யா
அம்பறையிஜா)
உவெலிக்டர்
/5 --- வெலி
என்டிலி3யேதும்
அடசிய-!
ஒழம் 5
ஃஉஒத்-ரிலிருந்து..
உல&: ஓ (£:பாபா த 4

18. பிரதான நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள்
(1) இந்தியா ஏற்றுமதி- கோதுமை, தேயிலை, சணல், புடவைவகை, பருத்தி, எண்ணெய்விதை, அபின். இவை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யக்கூடியவகையில் நிரம்பக் கிடைக்கின்றன. இறக்குமதி- பருத்தி நூல், பருத்திப்புடவை, உலோகவகை, எந் திரவகை, சீனி, கம்பளிப்பொருட்கள். இந்தியா விவசாய நாடா யிருப்ப தால் தொழில் முயற்சிகளில் முன்னேற்றமடைய வேண்டி யிருக்கின்றது. சுதந்திரமடைந்த பின்பு கைத்தொழில் முறை களில் அபிவிருத்தியடைந்து வருகின்றது.
(2) பெரிய பிரித்தானியா ஏற்றுமதி- பருத்தி, கம் பளி, செய்கைப் பட்டுப் பொருட்கள், இரும்பு, உருக்கு, செம்பு, பத்தளைப்பொருட்கள், எந்திரவகை, நிலக்கரி என்பனவாகும். பிரித்தானியாவில் நிலக்கரியும், இரும் பும் ஏராளமாய்க் கிடைப்பதனால் கைத்தொழில் முன்னேற்றம் பெற்றுச் செய்கைப்பொருட்களைப் பிறநாடுகளுக்கு அனுப்பு கின்றது.
இறக்குமதி- பிரித்தானியாவில் உணவுப் பொருட்கள், கைத் தொழில் மூலப்பொருட்கள் விருத்தி குறைவு. எனவே உணவுக் கும் கைத்தொழிலுக்கும் வேண்டிய கோதுமை, சினி , இறைச்சி, தேயிலை, சணல், கம்பளி, உரோமம், பருத்தி, தோல், வெட்டுமரம் என்பவற்றை இறக்குமதி செய்கின்றது.
(3) பிரான்ஸ் ஏற்றுமதி - பட்டுடைகள், கம்பளிப் பொருட்கள், உவைன், பாற் கட்டி, வெண்ணெய், தோற்பொருட்கள் என்பன வாகும். விசேட மாய் விவசாய நாடாயிருப்பதனால் விருத்தியாகின்ற விவசாயப் பொருட்கள் செய்கைப்பொருட்களாக மாற்றம் பெற்றுப் பிறநாடு கட்கு ஏற்றுமதியாகின்றன. இறக்குமதி - கம்பளி, உரோமம், எண்ணெய்விதை, நிலக்கரி கிடேச்சை என்பன கைத்தொழிற் தேவைகளின்பொருட்டு இறக்
குமதி செய்யப்படுகின்றன.
(4) ஜேர்மனி ஏற்றுமதி- சீனி, பருத்திப்புடவை, கம்பளிப் பொருட்கள், நிலக் கரி, எந்திரவகை, ஆயுதவகை, இரசாயனப் பொருட்கள் என்பன

Page 93
* 6030 06
156
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
வாகும். பீற்கிழங்கிலிருந்து சீனி தயாரிக்கப்படுகின்றது. சிறந்த உரோமமு தவும் கம்பளியாடு வளர்த்தலும் மக்களின் முக்கிய தொழிலாகும். இறக்குமதி- தானியவகை, ம ா, கம் ப ளி உரோமம், பரு த் தி, வெட்டுமரம், புகையிலை, பெற்றோல் என்பனவாகும். இவற்றுட் சில உள்நாட்டிற் கிடைப்பினும் தேவைக்குப் போதாமையினால் இறக்குமதி செய்யப்படுகின்றன,
(5) இத்தாலி ஏற்றுமதி- இத்தாலியின் விளைபொருட்கள் கோதுமை, நெல், அத்தி, தோடை, ஒலிவ், பட்டு, கம்பளி உரோமம் என்பனவாகும். எனவே பட்டுநூல், பட்டுடை, வெண்ணெய், பாற்கட்டி, உவைன், ஒலிவ் எண்ணெய் என்பன பிரதான ஏற்றுமதிப் பொருட் களாகும்.
இறக்குமதி - தானியம், உலோகம், பருத்தி, நிலக்கரி இவை இந் நாட்டின் கைத்தொழிற் தேவைகட்கு உதவுவன.
(6) றஷ்யா ஏற்றுமதி- ரஷ்யா விசேடித்த விவசாய நாடாகும். எ ன வே கோதுமை, ஓற்ஸ், றை, பட்டுநார், எண்ணெய்விதை (Inseed) வெட்டுமரம் என்பன ஏற்றுமதியாகின்றன. இப்பொழுது கைத் தொழிலிலும் றஷ்யா அபிவிருத்தியடைந்து வருகின்றது. இறக்குமதி - கம்பளிப் பொருட்கள், பருத்தி நூற் பொருட்கள், எந்திரவகை, தேயிலை, உலோகப் பாத்திரங்கள், நிலக்கரி, றப்பர் என்பனவாகும்.
(7) சுவீடன் - நோர்வே ஏற்றுமதி- ஊசியிலைக்காடுகள் பொருந்திய இந்நாடுகள் வெட்டு மரம் இன்னும் வெட்டுமரப்பிரயோசனங்களான காகிதம், காகிதக் குழம்பு, தீப்பெட்டி என்பவற்றையும், ஹெறில், கொட்மீன்களை யும், இரும்பையும் பிறநாடுகளுக்கு அனுப்புகின்றது. இறக்குமதி- உணவுப்பொருட்கள், நிலக்கரி, எந்திரவகை என்பன வாகும்.
(8) பெல்ஜியம் ஏற்றுமதி- இது விசேடித்த கைத்தொழில் நாடாயிருப்பதனால் இரும்பு உருக்குப் பொருட்கள், கண்ணாடி, கண்ணாடிப்பாத்திரங் கள், செய்கைப்பட்டு, எந் திரவகை, நிலக்கரி என்பனவாகும். இறக்குமதி- தானியவகை, கம்பளி, உரோமம், வெட்டுமரம், நில எண்ணெய் (பெற்றோல்), பதனிடப்படாத தோல் என்பனவாகும்.
(9) ஒல்லாந்து ஏற்றுமதி- இந்நாட்டுமக்கள் விசேடமாய் மந்தை வளர்ப்பிலீடு பட்டிருப்பதனால் பாற்கட்டி, வெண்ணெய், மற்றும் மந்தைப்பிர யோசனங்கள் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.

பிரதான நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி. 157
இறக்குமதி- உணவுப் பொருட்கள், பருத்தி, கம்பளி உடைகள் என்பனவாகும்.
(10) கனடா ஏற்றுமதி- இந்நாடு விவசாயத்திலும் மந்தை வளர்ப்பிலும் முக் கியம் பெற்று விளங்குகின்றது. கோதுமை, கோதுமைமா, கால் நடை, இறைச்சி, மீன் என்பனவும், பாதரசம், செம்பு, பொன், வெள்ளி என்னும் உலோகங்களும், எந்திரக்கலப்பை பி ற வும் விசேடித்த ஏற்றுமதிப் பொருட்களாகும். இறக்குமதி- இரும்பு உருக்குப் பொருட்கள், பருத்தி, கம்பளிப் பொருட்கள், நிலக்கரி, சீனி, தேயிலை என்பனவாகும்.
அமதி- இப்பற்றம்பெற். ஆயு தவ
(11) அமெரிக்க ஐக்கிய மாகாணம். ஏற்றுமதி- இப்பிறதேச நாடுகள் விவசாயத்திலும் கைத்தொழி லிலும் முன்னேற்றம்பெற்று விளங்குகின்றமையால் பருத்தி, கோதுமை, நிலஎண்ணெய், ஆயு தவகை, எந்திரவகை, மின்சாரக் கருவிகள், செம்பு, செப்புப்பொருட்கள் என் ப ன குறிப்பிடத்
தக்கவை. இறக்குமதி- சீனி, தேயிலை, றப்பர், பட்டு, கம்பளிப் பொருட்கள், இரசாயனப்பொருட்கள் என்பனவாகும்.
(12) தென் அமெரிக்க நாடுகள் ஏற்றுமதி-கோப்பி, சீனி, புகையிலை, றப்பர், காட்டுப்பிரயோசனம், கோதுமை, தோல், கம்பளி உரோமம், இறைச்சி, செம் பு, வெள்ளி என்னும் மூலப்பொருட்களும் பிறவுமாகும். இறக்குமதி - கைத்தொழிற்பொருட்களான பருத்தி, கம்பளிஉடை கள், எந்திரவகை, ஆயு தவகை முதலியனவும், நிலக்கரி, இரும்பு என்பனவுமாகும்.
(13) நியூசிலாந்து ஏற்றுமதி- விசேடித்த மந்தைவளர்ப்பு நாடாயிருப்பதால் கம்பளி, உரோமம், வெண்ணெய், கோதுமை என்பவற்றையும் நிலக்கரி, பொன் என்னும் கனிஜப்பொருட்களையும் ஏற்றுமதிசெய்கின்றது, இறக்குமதி- விசேடமாய் எல்லாவகைக் கைத்தொழிற் பொருட் களாகும்.
(14) அவுஸ்திரேலியா ஏற்றுமதி- விசேடித் த மந்தைவளர்ப்பு நா ட ா க வும் கனிஜப் பொருட் பிரதேசமாகவுமிருப்ப தால் கம்பளி உரோமம், இறைச்சி, கோதுமை, உவைன், வெட்டுமரம், பொன், வெ ள் ளி என்ப வற்றை ஏற்றுமதி செய்கின்றது.

Page 94
06 356
158
உலக பூமிசாஸ்திர விளக்கம்.
இறக்குமதி - சீனி, தேயிலை என்பனவும் ஐரோப்பியநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வகைக் கைத்தொழிற் பொருட்களு மாகும்.
(15) ஜப்பான் | ஏற்றுமதி - பட்டு, தேயிலை, பருத்திப்புடவை, தீப்பெட்டி, விளை யாட்டுச் சாமன்கள், கைத்தொழிற் பொருட்கள், காகிதம், செம்பு என்பன. இறக்குமதி- பருத்தி, இரும்பு, கோதுமை, அரிசி என்பன.
(16) சீனா ஏற்றுமதி- தேயிலை, பட்டு, அரிசி முதலியன. இறக்குமதி- பருத்திப்புடவை, அபின், சீனி, உலோகவகை, றப் பர், மற்றும் கைத்தொழிற் பொருட்கள்.
(17) தென்னாபிரிக்கா ஏற்றுமதி-' கம்பளி உரோமம், தீப்பறவை இறகு, பொன், வைரம், செம்பு, சீனி என்பன. இறக்குமதி- ஐரோப்பாவில் உற்பத்தியாகும் பலவகைக் கைத் தொழிற் பொருட்கள்.
(18) எகிப்து ஏற்றுமதி- விசேடமாய்ப் பருத்தி. இறக்குமதி- பருத்திப்புடவை, கம்பளிஉடை, மற்றும் பலவகைக் கைத்தொழிற் பொருட்கள்.
(19) மலாயா ஏற்றுமதி- தகரம், றப்பர் என்பன குறிப்பிடத்தக்கவை. இறக்குமதி- பலவகைக் கைத்தொழிற் பொருட்கள்.
"(20) இலங்கை ஏற்றுமதி- தேயிலை, றப்பர், தென்னைப்பிரயோசனம், கொக்கோ, கறுவா, காரீயம், புல்லெண்ணெய், புகையிலை என்பன.
இறக்குமதி- அரிசி, கறிச்சரக்கு, புடவைவகை, நிலஎண்ணெய், சீனி, கோதுமை மற்றும் பல கைத்தொழிற் பொருட்கள்.
Ronnnaamu
svm ய

பபூன்
கொ

Page 95
و نه مه 2 با ۱۰ م. وية
نے اس مسابسار
سے کہہ کر
وتے


Page 96