கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரதிபாடல்கள்: உரை விளக்கம்

Page 1
சண்முகநாத்
யாழ்.

Tாடல்கள் பிளக்கம்
ன் புத்தகசரம் பபாணம்

Page 2

பாரதி பாடல்கள்
[கல்விப் பொதுத் தராதர (சாதாரண) பரீட்சை
1962-1964.]
பட
உரை விளக்கம்
18
அனீ' ~V3y - 2»2..? லிஏ ல/ கடி,-
2ாவைக்
19சி எழுதியவர் : யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு. வை. ஏ. மூர்த்தி அவர்கள், B. A.
- * - - -
காம்
3 ~ ALAI II 757 பUNN AKA MA
பிரசுரம் : சண்முகநாதன் புத்தகசாலை,
யாழ்ப்பாணம்."

Page 3
முதற் பதிப்பு :
சார்வரி மாசி.
சமர்ப்பணம்
ஏகலைவனுக்குத் துரோணர் போல எனக்கு மறைமுகமாய் நின்று என் எழுத்தை வளம் செய்த பண்டிதமணிக்கு இதனைச் சமர்ப்பிக் கிறேன்.
- வை. ஏ. மூர்த்தி.
பதிப்பு உரி9ை]
விலை சதம் 90.
அச்சுப் பதிவு: ஸ்ரீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்.

அரபு //
FETழ் ஜாணக்1 பி.
பரமபதி துணை - ',AIL RV
முகவுரை
- - பாரதியார் பாடல்களுக்கு முகவுரை எழுதப் புறப் பட்டால் விளக்கொளியைப் பிடித்துச் சூரியனைக் காட்ட முற்பட்டது போலத்தான் இருக்கும். அதனால் இந்த முகவுரை எனது உரை விளக்கத்திற்குத்தான் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.
பாரதியார் வாழ்ந்த காலம், அப்பொழுது வாழ்ந்த மக்களிடம் குடி கொண்டிருந்த அடிமைத்தனம், ஏழ்மை நிலை என்பவற்றையும் பாரதியாருடைய சொந்த வாழ்விலமைந்த சூழ்நிலைகளையும் அதனால் அவர்க்குண் டான இன்னல்களையும் நாம் நன்கு உணரவேண்டும். அப்படியானால் தான் பாடல்களை மிக நன்றாக அநுப் விக்க முடியும். இப்பாடல் தொகுதி G. C. E. 1962 --1964 ஆண்டு பரீக்ஷைகளுக்குத் தமிழிலக்கிய பாடத்தில் - இன்று சேர்த்திருக்கிறார்கள்... ஆனால் அன்று பாரதி பாடலில் ஓர் அடியை உச்சரித்தாலும் அப்பொழுதிருந்த அந்நிய அரசாங்கம் நம்மைப் பிடித் துச் சிறையில் அடைத்துவிடும் நிலை இருந்தது. அந்த நாட்களில் நம் பாரதத்தின் நிலை எப்படி இருந்த என் பதை எனது உரை விளக்கங்களில் ஆங்காங்கு விளக்க முயன்றிருக்கிறேன். நான் விளக்குவதை விட, பாரதி யார் பாடல் ஒன்றில் ஒரு பகுதியைப் படித்தாலே அது நன்றாக விளங்கும் :
"'....... இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதா மோர் பாரததேசம்...'' என்று மகாத்மா பஞ்சகத்தில் பாரதியார் கூறி இருக்
பாரத தேசத்தில் அந்நியருடைய அடக்கு

Page 4
முறைகளுக்கும் அடங்காமல் பொங்கியெழுந்த வீரப் பெரு நெருப்புத்தான் பாரதி! அந்த நெருப்பில் எரிந்து சாம்பலான மடமைகள் எத்தனையோ! ஆங்காங்கு மறைந்திருந்த வீரம் எல்லாம் அதே நெருப்பினால்தான் ஒளி பெற்றுப் பிரகாசித்து இன்றுள்ள நிலையடைந் துள்ளன.
மனிதன் மனிதத் தன்மையுடனும் சுதந்திரமாக வும் வாழ வழிவகுத்தவை பாரதி பாடல்கள் என்பது முக்காலும் பொருந்தும். பழைய இலக்கிய மரபுகளுக் கும் புதிய உணர்ச்சிப் பிரவாகத்துக்கும் இடையிலே உறுதியானதோர் பாலமாக அமைந்திருப்பன இப் பாடல்கள். 'இப்பாடல்களுக்கு உரை வேண்டுவதில்லை, வெளிப்படையான வெள்ளைக் கவிகள்' என்று பலவித மாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் என்னவோ கவி யுடன் சேர்ந்து பார்த்தேன்; கவியுடன் கற்பனை செய்ய முயன்றேன். அதனால் இவ்வளவும் எழுதிவிட்டேன். தவறிருந்தால் பெரியோர் எடுத்துணர்த்துங்கள்; நன்றி யுடன் ஏற்றுக்கொள்கிறேன். உணர்த்தவும் வேண்டா தவையானால் உதவாதன என்று தள்ளுங்கள். பயன் தருமானால் பள்ளிப்பிள்ளைகளே உவந்தேற்றுக் கொள்
ளுங்கள் !
1)
' எழுதுங்கள்' என்று தூண்டிய நண்பர், சண்முக நாதன் புத்தகசாலை அதிபர், திரு. சி. ச. குமாரசுவாமி அவர்களுக்கு என் நன்றி.
வை. ஏ. மூர்த்தி.
167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
6-3-61.

பதிப்புரை
1962-1964 G. C. E. பரீக்ஷைகளுக்குத் தமிழ் இலக் கிய பாடத்துக்கெனப் பாரதியார் பாடல்களில் தெரிவு செய்யப்பட்டனவற்றை ஒரு தனிநூலாகப் பதிப்பிக்கலாமா என்ற சிந்தனையில் ஆரம்பித்த முயற்சி, இவ்வளவு சிறந்த முறையில் உருவாகும் என்று நான் எண்ணியிருக்கவில்லை. மாணவர்கள் முழு நூலையும் வைத்துக்கொண்டு இடர்ப் படாமல் தேவையான பாடல்களை மட்டும் எடுத்து வேண் டிய ஒழுங்கின்படி கோத்துத்தந்தால் பரீக்ஷைக்குப் படிக் கும் மாணவர்க்கு உபயோகமாயிருக்கும் என்றுதான் ஆரம் *பித்தோம். இறைவன் அருளால் அது அருமையான
உரை விளக்கத்துடன் பிரசுரமாகிவிட்டது.
பாரதியார் பாடல்களின் பதிப்புரிமையைத் தமிழ் நாட்டு (சென்னை) அரசாங்கம் வைத்திருந்தாலும் அவற்றை யாரும் பதிப்பிக்க அநுமதியளித்தமைக்கு என்போன்ற" பிரசுர கர்த்தர்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.
இந்நூல் விரைவில் வெளிவரவேண்டு மென்பதற்காக நான் இந்த உரை விளக்கம் எழுதிய ஆசிரியரைச் சிறிது அவசரப் படுத்திவிட்டேன். நண்பர் என்ற உரிமை இருந் தமையால் அப்படிச் செய்ய முடிந்தது. " எ ழுத எழுத இழுத்துக் கொண்டுபோய் அச்சுக் கோத்தாலும் இவ்வளவு விரைவில் வெளிவருமா?'' என்று, சில 'அவசர கால்களைப் பார்த்துச் சொல்வது வழக்கம். உண்மையிம் இந்நூல்
அப்படித்தான் பிரசுரமாகி இருக்கிறது.
ஆயினும் உரை விளக்கம் மிக நன்றாயமைந்திருக்கிற ) தென்பதே எனது அபிப்பிராயம். பாரதியாருடன் கூட நின்று சிந்தித்தவர்போல இந்நூலாசிரியர் உரை எழுதி யிருக்கிறார். நம்மை நாமே புகழ்வது அழகில்லை. உலகம்

Page 5
இந்நூலை உவந்தேற்குமானால், பள்ளி மாணவர்க்குப் பாடல்களை இந்நூல் நன்கு விளங்கச் செய்யுமானால், அது.ே' எமக்குத் திருப்தி.
மேலே கூறியதுபோல இது ஓர் 'அவசர நூல்'. எங் காவது தவறுதலாக ஒன்றிரண்டு பிழைகள் நம் கவனத் தையும் தாண்டி நிற்கலாம். அவற்றை அறிஞர் பொறுத் துக் கொள்க.
சி. ச. குமார சுவாமி
சண்முகநாதன் புத்தகசாலை,
யாழ்ப்பாணம்.
8

பொருள் அடக்கம்
பக்கம்
12
15
16
19 21
24
27
33
பாரத தேசம் பாடல்கள் 5 / ...
- ஷை உரை விளக்கம் fr~' ..... "நடிப்புச் சுதேசிகள் பாடல்கள்
ஷை உரை விளக்கம் சுதந்திரப் பெருமை பாடல்கள்
ஷை உரை விளக்கம் சுதந்திர தேவியின் துதி பாடல்கள் ....
ஷை உரை விளக்கம் புதுமைப் பெண் பாடல்கள்
ஷ உரை விளக்கம் தொழில் பாடல்கள் *
ஷை உரை விளக்கம் தமிழ்த் தாய் பாடல்கள்
ஷை உரை விளக்கம் தமிழ் பாடல்கள்
- ஷை உரை விளக்கம் மூன்று காதல் பாடல்கள்
ஷை உரை விளக்கம் வெண்ணிலாவே பாடல்கள் 3)
: ஷை உரை விளக்கம் முரசு பாடல்கள் (3)
ஷை உரை விளக்கம்
34 36
38
42 43 46 49 55 b8)
61
66

Page 6
که هو

பாரத தேசம்
ராகம்-புன்னாகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; அடி - மேலைக் கடல்முழுதும் கப்பல்விடுவோம்; பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டு வோம். (பாரத)
2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்; வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்.
(பாரத)
3. வெட்டுக் கனிகள் செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்; எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம்.
(பாரத)
4. முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே;
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே. நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந் து. 2. நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே.. (பாரத)

Page 7
பாரதி பாடல்கள்
5, சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன் னாட்டிளம் பெண்களுட னே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோ ணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
5. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்; சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்.
(பாரதி)
7. காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்; ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம். (பாரத)
8. பட்டினில் ஆடையும் பஞ்சில்உடை யும்
பண்ணி மலைகளென வீதிகுவிப் போம்; கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார் * காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். (பாரத)
9. ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள் வைப் போம்; ஓயுதல்செய் யோம் தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள்செய்
வோம். (பாரத)
10. குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;
கோணி ள்செய்வோம் இரும் பாணிசள்செய் வோம்; நடையும் பறப்புமுணர் வண்டி ள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். (பாரத)
11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம் சற் போம்;
வானையளப் போம் கடல் மீனைபளப் போம்; சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்:
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்.ற் போம். (பாரத)

பாரத தேசம்
3
12. காவியம் செய்வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளாப் போம்; ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய் வோம். (பாரத)
13. 'சாதி இரண்டொழிய வேறில்லை'யென் றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென் போம்; நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர்.
(பாரத)
அடி- மேலைக்கடல் : தென் பாலுள்ளதும் மேற்கே கிழக்கே உள்ள துமான கடல்கள். பள்ளித்தலம் : சமணப்பள்ளி, புத்த | பள்ளி, முகமதியர் பள்ளி முதலாகிய பல கோயில்கள். சேது : மன்னாருக்கு எதிரிலுள்ள இந்திய நாட்டின் தரைப்பகுதி. வீதி சமைத்தல் : தெரு அமைத்தல். மையத்து நாடுகள் : இந் திய உபகண்டத்தின் நடுவில் உள்ள நாடுகள் . கனி : சுரங்கம். நத்தி : விரும்பி. மாறு கொள்ளல் : பண்டமாற்றுச் செய் தல். ராசபுதனம் : ராஜபுத்திரம். வட இந்திய நாடுகளுள் ஒன்று. கன்னடம் : மைசூர் ராச்சியம் தலை சாயுதல் : சோம்பி இருத்தல். வண்மை : வேண்டியார்க்கு வேண்டியன் கொடுத்தல். நடையும் பறப்பும் : தரையில் இயங்குவன.. ஆகாயத்தில் சஞ்சரிப்பன. மந்திரம் : அரசியலமைப்பு முறை, தந்திரம் : படை வலிமை- ராணுவப் பயிற்சி, என்று பொருள் கொண்டு அரசியலறிவையும் ராணுவ அமைப்பு முறைகள் செயல் முறைகளையும் நாம் கற்றுத் தேறுவோம் என்று பொருள் கொள்ளலும் உண்டு. அமிழ்தம்: தேவாமிருதம், தேவர்கள் உண் ணும் ச வா மருந் து.

Page 8
பாரத தேசம்
பாரத தேசம் பழம்பெருமை வாய்ந்தது. தெய்வ பக்தியால் கல்வியால் தொழிலால் பண பாட்டினால் உயர்ந்தது இப்படியான தேசம் அந்நியர்க்கடி மையாகிச் சீர்கேடுற்ற காலத்திலேதான் பாரதி வாழ்ந் தார். பண்டிருந்த பாரதத்தைத் தம் புலமைக் கண் களால் கண்டார். அதனை மீண்டும் காணவேண்டும் என்று விழைந்தார். தாம் மட்டும் விழைந்ததோடு நின்றுவிடாமல் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அந்தத் துடிப்பைத் தூண்டிவிட்டார்,
வறுமைப் பேயினால் ஏற்படும் பயத்தையும் மனி தன் தனக்குள்ளேயே வளர்த்து வரும் துயர மாகிய பகையையும் வெல்லவேண்டுமானால் பாரத தேசத் தின் புகழையும் பெருமையையும் நினைத்துக் கொள்ளவேண்டும். பாரத தேசமென்று பெயர் சொனனாலே வறுமையும் போய்த் துயரமும் மறைந்து விடும் என்பது கவிஞரின் கருத்து. இக்கருத்தை அமைத்துப் பல்லவியாக எடுக்கிறார்,
நாட்டிலே வடக்குத் தெற்கு என்ற பாகுபாட்டுக் குக் கவியின் உள்ளத்தில் இடமில்லை வெள்ளி போலப் பள பளக்கும் பனி மூடிய வட இமயச் சிகர ங் களும் மேல்திசை தென் திசைக் கடலு - நமக்குச் சொந்தம். அங்கே உலாவி அவ்விடத்து எழில் கண்டு இன்புறுவோம். இங்கே கப்பல்களை விட்டுப் பல நாடுகளுடனும் தொடர்பு கொள்வோம். நாட் டில் பலவித சமயங்கள் உண்டு. எல்லாமே பாரத தேசத்தின் தெய்வ நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு.

பாரத தேசம்'
பலசமயப் பள்ளிகள் எல்லாம் பாரத தேசத்துக் கோவில்கள். இ வ ற்  ைற எண்ணும்போதே எம் தோள்கள் பூரித்துப் போகின்றன.
(1)
சிங்களத் தீவாகிய ஈழத் திரு நாட்டையும் தாய் நாட்டுடன் சேர்த்தே கவிஞர் எண்ணுகிறார். - தாய் வேறு சேய் வேறு என்ற மனோபாவம் புலவனுக் கில்லை. இடையில் உள்ள சிறு கடலை மேடாக்கிப் பாலம் அமைத்து இணைத்துப் பாடுகிறது கவியுள்ளம். வங்க நாட்டில் பாய்ந்துவரும் கங்கை யாற்று நீர் வீணே கடலில் பாய்வதைப் பாரதியார் விரும்ப வில்லை. அதனைத் திருப்பி மத்தியிலுள்ள நாடுகளில். பாயவிட்டுப் பயிர் செய்யவேண்டுமென்று விரும்பு கிறார் இக்காலத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் ஆற்றுப் பாய்ச்சலைப் பொறியியலறிவு கொண்டு திருப்பி வளமற்ற பிரதேசங்களை யும் வளம்படுத்த வேண்டுமென்ற கருத்தை இற்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கவி வெளியிட்டுள்ளார். (2)
நமது நாடு மேல் நாட்டுக்கு ஒன்றும் குறைந்த தில்லை. இயற்கையன்னை பொருளை வைத்திருக் கிறாள். நாம் முயற்சி செய்வோம் என்று ஊக்குவிக் கிறார் பாரதியார். பூமியிலே ஆங்காங்கு சுரங்கங்களை வெட்டுவோம். தங்கம், பொன், வெள்ளி, இரும்பு, கரி, நில நெய் போன்றவற்றையெல்லாம் பூமித் தாயின் மடியிலிருத்து உரிமையோடு எடுத்துக்கொள் வோம். அவற்றையெல்லாம் உலகெங்கும் விற்று நமக்கு வேண்டிய பல்வேறு பொருளைப் பெற்றுவரு வோம். இன்று வட நாட்டில் இரும்பு முதலிய உலோகப் பொருள் களையும் தென் நாட்டில் பழுப்பு

Page 9
- > பாரதி பாடல்கள் நிலக்கரி, நிலநெய் போன்ற எரி பொருள்களை யும் கண்டெடுப்பதற்கு வேண்டிய முயற்சிகள் நடைபெறு வதை நாம் உணரவேண்டும்.
(3) நமது நாட்டு முத்துக்காக நம் தென் கடலை நோக்கி வருபவர் பல்வேறு நாட்டின் வணிகர். அவர்கள் ந பக்கு வேண்டியவற்றைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நம்மிடத்துள்ளவற்றை வாங்கிச் செல்ல மேல்கரைத் துறைகளுக்கு ஆசையோடு வருவார்கள்.
(4)
சிந்து நதி நம்முடையது.
அதில் வீசும் நில வொளி நமக்கின்பம் தருவது. சேர நாடு நம்முடை யது. அந் நாட்டு அழகுக் கன்னியர் நம்மவர். இனிய தெலுங்கு நமது மொழி. அதில் ஒலிக்கும் தீஞ்சுவைப் பாடல் நமது இசை பாரத நாடு முழு வதும் நமது நாடு. ஆங்காங்கு காணும் சிறப்புக்க ளெல்லாம் அவ்வப் பகுதிக்கு மட்டும் உரியனவல்ல. அவையெல்லாம் எல்லார்க்கும் உரியன பார தியா ரின் பரந்த மனப்பான்மை இப்பாடற் பகுதி முழுவ திலும் வியாபித்திருப்பதை நாம் நன்கு உணரவேண் டும். . குறுகிய மனப்பான்மை உடையவர்களுக்கு நாட்டில் இடமில்லை யென்பதைப் பாரதி சொல்லா மல் சொல்கிறார்.
(5) கங்கைக் கரையிலே கோ துமையானால் காவிரிக் 'கரையிலே வெற்றிலை. இதற்கு அது பண்டமாற்று. வீரமுள்ள மாராட்டியருடைய மொழியில் யாத்த கவிதைகளுக்குப் பரிசு சேர நாட்டு ஆனைத் தந்தம். இப்படியாக நாடு முழுவதையும் ஒன்றாக நோக்கு கிறது புலமை உள் ளம்.

பாரத தேசம் ' ' , 7
இன்னும் விஞ்ஞானத்துறையில் நம் நாடு முன் னேற வேண்டுமென்ற அவா பாரதியின் உள்ளத்தில் தேங்கி வழிந்ததைப் பின் வரும் பாடல்கள் நன்கு தெரிவிக்கும் காசியிலே அறிஞர்கள் பேசும் விரி வுரைகளை தெற்கேயுள்ள காஞ்சியிலிருந்தபடியே கேட்கும் கருவியை நாம் செய்வோம் என்கிறார். ராஜ புத்திர வீரர்களுக்கு கன்னட தேசத்துத் தங்கத்தைப் பரிசளிக்கிறார் புலவர்.
பட்டாடை பருத்தி உடை எல்லாம் செய்து மலை மலையாகக் குவித்துப் பல தேசத்திலிருந்தும் பணம் கொண்டு வருபவர்களுக்கு விற்று நம் நாட்டுப் பொரு ளாதாரத்தை விருத்திபண்ணுவோம் என்பதை விளக் கக் ''கட்டித் திரவியங்கள் கொண்டு வரும் காசினி வணிகர்" என்கிறார்.
(8)
- ஆயுதங்களும் கா கி த ங் க ளு ம் நாமே செய்ய வேண்டும். இதற்காக ஆலைகளும், தொழில் வளர் வதற்கேற்ற கல்விச்சாலை களும் நம் நாட்டிலேயே உண்டாக்கவேண்டும். அவற்றிலே ஓயாது உழைத் தல்வேண்டும். நமக்குச் சோம்பல் ஆகாது . நாம் சத்தியத்தையே உயிராகக் கொண்டு நடக்கவேண் டும். இல்லாதவர்க்கு உள்ளவர் கொடுத்து இல்லை என்ற சொல் இல்லையாகும்படி வாழ்வோம்.,
(9)
குடைகள் செய்வோம் என்றவர் உழுபடைகள் செய்வோம் என்கிறார். கோணிச்சாக்குகள் செய் வதும் இரும் பாணிகள் செய்வதும் பாரதியாருடைய கண்களில் மதிப்புக்குரிய தொழில்களேயாம். விண் ணிலும் மண்ணிலும் உலாவும் கடுகதி வாகனங்

Page 10
பாரதி பாடல்கள்
களெல்லாம் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப் படவேண்டும். கப்பல்கள் ஒன்றிரண்டல்ல, பலப் பலவாகச் செய்து கடல்களில் மிதக்கவிடுவதால் கடல் நீரே பொங்கித்துறைகளை நெருக்கி ஞாலத்தை நடுங்கவைக்க வேண்டும் என்றல்லவா கவியுள்ளம் கனவு காண்கிறது ?
(10)
9)
நாம் மந்திரங்களைக் கற்பதுபோலக் கைவினைத் தந்திரங்களையும் கற்போம். ஆகாயத்தை அளப் போம், கடலை அளப்போம் என்று சொல்வதோடு அவர் நின்றுவிடவில்லை. நாட்டிலே சாலைகளும் வீதி களும் சந்திளும் பெருக்குவதோடு அமையாது சந்திர மண்டலத்துக்கும் போய் அதன் இய ல் பு க ளை த் தெரிந்து மீள்வோம் என்று பாரதியார் இற்றைக்கு அறுபது வருஷங்களுக்கு முன்பே சொல்லிவிட்டார் என்றால் அவருடைய தீர்க்கதரிசனத்தை நாம் என் னென்போம் !
(11)
11
T
காவியங்கள், கலைகள், ஓவியங்கள் மட்டும்தான் பாரத நாட்டின் கைவண்ணமல்ல. காடு வளர்த்து நாட்டின் செல்வம் பெருக்க நம்மால் முடியும். கொல் லர் உலைகளை வளர்த்து ஊசிகள் செய்வதுடன் நின்றுவிடாமல் அந்த உலைகளை அணு உலைகளாக்கி உலகத் தொழிலனைத்தும் நம் மால் செய்யவும் முடி யும் என்று பார்த நாட்டின் பெருமையை எண்ணி இறும் பூதெய்துகிறார் கவி.
(12) இப்படியெல்லாம் செய்தாலும் தமிழ் மூதாட்டி யான ஒளவை சொன்னதை நாம் அமிழ்தென மதிப்போம். அதன்படியே நடப்போம். சாதிகள்

நடிப்புச் சுதேசிகள் ' , இரண்டேதாம் ! வேறில்லை. நீதி • நெறியின்படி யொழுகிப் பிறர்க்குதவும் நேரிய வாழ்வுடையவர் மேலவர். மற்றவர் கீழ் வகுப்பார். இதுவே நம் பாரதப் பண்பு. ஆதலால், பாரத தேசமென்று பெயர் சொல்பவர் வறுமைப் பயத்தைக் கொல்பவ ராவர். அவர் துயரமென்னும் உட்பகையை வெல்ப
வராவர் என்று கூறுகிறார் பாரதியார்.
(13)
நடிப்புச் சுதேசிகள் |--
பழி த் கறி வு றுத்தல் கிளிக் கண்ணிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திரமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ!- கிளியே ! வாய்ச் சொல்லில் வீரரடி!
2
கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்திற் கொள்ளா ரடி !- கிளியே !
நாளில் மறப்பா ரடீ! சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகுமோ!- கிளியே!
அலிகளுக் கின்ப முண்டோ? கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்ட மடி !- கிளியே ! பேசிப் பயனென் னடீ !
13
யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர்
மந்திரத் தாலே யெங்கும் -- கிளியே! மாங்கனி வீழ்வதுண்டோ?

Page 11
10 )
> பாரதி' பாடல்கள்
உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ!- கிளியே ! செய்வ தறியா ரடீ!
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
. நாவினாற் சொல்வ தல்லால்!- கிளியே!
நம்புத லற்றா ரடீ!
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயி ரைக் - கிளியே! பேணி யிருந்தா ரடீ!
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் !- கிளியே ! அஞ்சிக் கிடந்தா ரடீ!
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீ!- கிளியே ! ஊமைச் சனங்க ளடீ !
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே ! வாழத் தகுதி யுண்டோ!
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்!- கிளியே! இருக்க நிலைமையுண்டோ!
12
சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ வென்பது போல்,
வந்தே மாதர மென்பார்!- கிளியே ! மனதி லதனைக் கொள்ளார்
13
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!- கிளியே! பாமர ரேதறி வார்!
14

நடிப்புச் சுதேசிகள் )
- 11
15
18
நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே!- கிளியே !
சிறுமை யடைவா ரடீ! சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,
சிந்தை இரங்கா ரடீ!- கிளியே !
செம்மை மறந்தா ரடி ! பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!- கிளியே !
சோம்பிக் கிடப்பா ரடீ! தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா !-- கிளியே! வந்தே மாதர மென்பார் !
17
18
நெஞ்சில் உரம் : மனத்திண்மை நேர்மைத்திரம் : நெறிப் பட வாழ்தலால் உண்டாகும் ஸ்திரபுத்தி. நாட்டம்: செயல் முறையில் ஊக்கம். நாளில் மறப்பர் : அன் றே மறப்பர். அந்தகர் : குருடர். அலி : ஆண் தன்மையுமில்ல மல் பெண் தன்மையுமில்லாமல் இருக்கும் ஒன்று. செப்புதல் : சொல்லு தல். வன் கண்மை : கொடுமை, பிறர் : அந்நியர். ஆவி : உயிர். பேடிமை : பேடித்தனம். - சிறுமதி: அற்ப புத்தி. உச்சத்தில் : உயர்வாக உள்வலி : மனோதிடம். மாக்கள்: மிருகங்களுக்குச் சமானமானவர். ஈனர் : இழிந்தவர். வந்தே மாதரம் : தாயை வணங்குகிறேன். (இன்னல் பல' உற்று உயிர் பிரிந்த நேரத்திலும் உண்மை வீரர்கள் தம் தாய் நாட்டை வணங்கியே உயிர் துறந்தனர். விடுதலைப் போராட்டத்தில் மெய்த்தொண்டர்கள் "வந்தேமாதரம்'' என்பதையே தாரக நாமமாகக் கொண்டு தம் உயிரைக்கூடக் கொடுத்தனர்.) பாவனை : மற்றவர் பேசுவது போலத் தாமும் பேசுதல். பாமரர் : அறிவிலிகள். நாண் + இன்று + இழி + செல்வத் + தேட்டில் + விரும்பும் : நாணம் இல்லாமல் இழிவாகிய வழி களில் செல்வத்தைத் தேடுதலில் விருப்பமும். சிறுமை: இகழ்ச்சி. செம்மை : ஒழுக்கம், பாரதர் : பாரத நாட்டு மக்கள். துஞ்ச : இறக்க,

Page 12
12
பாரதி பாடல்கள் "நடிப்புச் சுதேசிகள் காலத்துக்கேற்ப வேஷம் போட்டு மாலை மரி யாதைகளைப் பெற்று உள்ளத்தால் கள்ளராய் புறத் தில் பெரியவராய் திரிபவர்கள் பலர் பாரதியார் காலத் திலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உள் ளமே தம் கள்ளத்தை உணர்ந்து தமது நிலைக்கிரங்கி வெட்கித் தலை குனியும்படி பழித்து அறிவுறுத்துவன வாக அமைந்த பாடல்களைக் கிளிக் கண்ணிகளாகப் பாடித் தந்திருக்கிறார் பாரதியார்.
சோலையில் திரியும் பசுங்கிளியை நோக்கித் தாளத்துடனும் இ ைச யு ட னு ம் பாடுவதுபோல அமைந்த மூன்றடிப் பாடல்கள் கிளிக் கண்ணிகள் எனப்படும். அடி தோறும் கிளியே கிளியே என்று விளிப்பது இப்பாடல்களின் தனிச் சிறப்பு.
நம் நாட்டிலே சொல்லில் வீரராகவும் செயலில் வஞ்சகராகவும் பலர் இருக்கிறார்கள். இவர்களுடைய உள்ளத்தில் வீரமும் இல்லை, நேர்மை ஒழுக்கம் என்ற பண்புகளும் இல்லை கூட்டத்திலே சபை களிலே கூடி நின்று கொள்கைகளையும் திட்டங்களை யும் வாசாலகமாகப் பேசுவதுடன் இவர்கள் நின்று விடுவார்கள், அப்படிப் பேசியதை அன்றே மறந்து விடும் இந்த வஞ்சகர் செயலில் ஒருபோதும் ஈடுபட மாட்டாாகள். தமக்கே தாம் குருடராக வாழுபவர் களுக்குச் சொந்த அரசாட்சியும் அதனால் கிடைக்கும் சுகங்களும் எப்படி உண்டாகும் ? ஆணுமல்லாத பெண்ணுமல்லாத பேடிகள் எங்கேனும் இன்பம் காண்பதுண்டா? இரண்டு கண்களிருந்தும் அவற் றில் பார்வையை இழந்த பெண்கள் கூட்டம் போல இவர்கள் ஏதாவது கருத்தின்றிப் பிதற்றுவார்கள்.
ச

15டிப்புச் சுதேசிகள் >
13
|செ
இத்தன்மையான நடிப்புச் சுதேசிகளைப்பற்றிப் பேசு வதனால் ஏதும் பயனுண்டாமோ?
தேசீய இயக்கம் தீவிரமாகப் பரவிய அக்காலத் தில் பாரத நாட்டிலே உள் ள தேச பக்தர்கள் பிற நாட்டுத் துணிகளையும் அந்நியருடைய 'மில்' துணி களையும் பகிஷ்கரித்து உள் நாட்டுக் கைத்தறித் துணி களை ஆதரித்து வந்தனர். மகாத்மா போன்ற பெரி யார்கள் உப்புச் சத்தியாக்கிரகம் செய்து சிறை புகுந்த காலம் அது
- 'ஆலைத் துணி - கதர் - நம் நாட்டுத் துணி, உப்பு, சீனி' என்று பலவற்றைக் கூறிக்கொண்டு தாமும் உண்மையான சுதந்திர வீரர் போல பேசித் திரிகிறார்கள். மந்திரத்தால் மாங்கனி வீழ்த் தியதுபோல இருக்கிறது இந்த நெஞ்சுரம் அற்றவர் செயல்.
பெண்களின் மானம் தெய்வ பக்தி என்றெல்லாம் இந்த வஞ்சகர் பேசுகிறார்களே! உண்மையில் இவர் கள் அவற்றில் நம்பிக்கையுடையவர்களா? அப்படி யானால் அந்நியர் நம் பாரதப் பெண்களின் கற்பை. அழித்துக் கொடுமைகள் செய்யப் பார்த்துக் கொண்டு பேதையர் போல் வாளா இருப்பரா - தேவியின் கோயிலிலே சொல்லொணாத கொடுமைகளை எல்லாம் அந்த அந்நியர் செய்யும்போது தங்கள் உயிரே பெரி தென் று அஞ்சியோ டி ஒளித்தார்களே ! இவர்களாசுதந்திரப் பற்றுக்கொண்ட உண்மைச் சுதேசிகள் ? )
- அச்சம் பேடித்தனம் அடிமைப் புத்தி என்பவற் றையே உயர்ந்த பண்புகளாகக் கொண்ட, இவர்கள் ஊமைச் சன ங்களன்றி வேறு எப்படி இருக்க முடியும். இவர்களிடம் ஊக்கமோ மனத்திண்மையோ சத்தியத்

Page 13
பாரதி பாடல்கள் தில் உறுதியான நம்பிக்கையோ கிடையாது. இவர் கள் மனித வேடந் தாங்கிய விலங்குகள். ஒரு கண நேரங்கூட இந்தப் பூமியில் வாழும் தகுதி இவர்களுக் கில்லை. மானம் போனால் போகட்டும், நாம் எப்படி யாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்றெண்ணும் பாவிகளுக்கு மனிதர் வாழவேண்டிய இந்த உலகத் திலே இருக்கத் தகுதி உண்டா ?
- உள்ளத்தில் கள்ளாசை; உரையில் சிவ நாமம் என்பதுபோல சொல்லளவில் மாத் தி ர ம் தான் "வந்தேமாதரம்'' என்பரேயன்றி மனத்தில் அதனைக் கொள்ளார். நமது நாட்டின் பழம் பெருமையைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் நமது பாரத நாடு பண்டு எத்துணைப் பெருமையோடிருந்தது என்பதை
அறிவிலிகளான இவர்கள் எப்படி அறிவர் ?
- எப்படி இழிந்த வழியானாலும் நாணாது பொருள் சேர்ப்பதிலேயே கண்ணாயிருக்கும் இந்தக் கயவர்கள் பொது மக்களின் அவமதிப்புக்குப் பாத்திரராகி நாட் டில் சிறுமைப்பட்டொழிவர் உடன்பிறந்தவர்கள் துன்பப்பட்டுச் செத்தாலும் இந்த வஞ்சகரின் நெஞ் சினிலே இரக்கம் உண்டாகாது. செம்மை நெறி மறந்த பாவிகள் இவர்கள் !
பஞ்சத்தினாலும் நோயினாலும் பாரத நாட்டு மக் கள் புழுக்களைப்போல் துடித்துச் சாவதைக் கண்ணால் பார்த்து க்கொண்டு இருக்கிறார்களே ! தாயினும் மேலாக மதிக்கத் தகுந்த தாய் நாடு பஞ்சத்திலுழல் வதைத் தடுக்க ஒரு துரும்பினைக்கூட எடுத்துப்போட மனமிசையாத இந்தப் பாவிகள் அந்தோ! "வந்தே மாதரம்'' என்று வாய் கூசாது சொல்கிறார்களே! என்றுதான் இவர்கள் திருந்துவரோ !

சுதந்திரப் பெருமை
« தில்லை வெளியிலே கலந்துவிட் டால வர்
திரும்பியும் வருவாரோ?'' என்னும் வர்ணமெட்டு
1. 'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?- என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?
(வீர)
2. புகழு நல் லறமுமே யன்றியெல் லாம் வெறும்
பொய்யென்று கண்டாரேல் - அவர் இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பாரோ?
(வீர)
3. பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாரேல் - மானம் துறந்தறம் மறந்தும் பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ?
(வீர)
4. மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உணர்ந்தாரேல் - அவர் ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுளதோ?
(வீர)
5. விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
(வீர)
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ? -
(வீர)

Page 14
- பாரதி பாடல்கள்
7. வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவரோ? வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?
(வீர)
N)
ஆரமுது : தெவிட்டாத தே வா மி ரு த ம். பொய் : பொய்மை, நிர் குமிழிபோல் நிலையற்ற அற்ப சுகங்கள். ஈனத் தொண்டு : இகழ்ச்சிக்குரிய அந்நியர்க்கடிமை செய்தல். இச்சை : விருப்பம். பெற்றி : தன்மை. மானம் துறந்து : மானமிழந்து. அறம் மறந்து : நெறி முறை தவறி. வாய்மை : உண்மை. ஊ னுடல் : உன் பொதிந்த உடம்பு. இரவி : சூரியன். கைகட்டிப் பிழைத்தல் : அடிமையாகிச் சேவகஞ் செய்தல், மாண்பு : பெருமை மாயத்தை : மயக்க நிலையில் அந் வியர்க்கடிமை செய்தலால் வ ரும் அற்ப சுகங்களை. தாரகம் : வழி காட்டியாயுள்ள நக்ஷத்திரம்.
சுதந்திரப் பெருமை
பாரத நாடு அந்நியர்க்கு அடிமையாகி பலவித இன்னல்களுக்குள்ளானபோது வட நாடு தென் நாடு என்றில்லாமல் பல வீரர்கள் தோன்றி விடு தலைப் 'போரில் இறங்கினார்கள். உடல் பொருள் ஆவி மூன்
றினையும் தாய் நாட்டுக்காக இவர்கள் அர்ப்பணித்துக் காந்தி மகான் காட்டிய சத்தியாக்கிரக நெறியில் நின்று தியாகச் செயல்கள் புரிந்ததைக் கண்ட பாரதி யார் மனம் விமமித மெய்திப் பாடிய பாடற் பகுதிகள் இவை. பழைய காலத்தில் நந்தன் சரித்திரக் கீர்த் தனை களில், இறைவனுடைய திருவடி நீழலின் சுகத்தை நந்தன் பாடுவது போல அமைந்த ஆனந் தக், களிப்புப் பாடல்களின் எண்ணம் பாரதிக்குண்

• 17.
சுதந்திரப் பெருமை டாகிவிடுகிறது. தேச விடுதலையும் தெய்வத்தின் பாத நீழலில் காணும் ஆத்ம விடுதலையும் பாரதிக்கு ஒன்றாகவே தோன்றுகின்றன, அந்த வர்ணமெட்டி லேயே இந்தச் "சுதந்திரப் பெருமை"யையும் பாடு கிறார்.
தேவாமிர்தத்தை உண்ணவேண்டுமென்று கங் கணங்கட்டி நிற்பவர் அறிவை மயக்கும் கள்ளின் மேல் ஆசைகொள்ள மாட்டார்கள். அதுபோல வீர சுதந்திரம் வேண்டி நிற்கும் தியாகிகள் அந்நிய ஆட்சி யில் கிடைக்கும் அற்ப சுகங் களைப் பொருளாக மதி
யார்கள்.
(1)
சுக!
க
மெய்ப் புகழும் அறநெறிக்கமைந்த வாழ்வுமே உண்மைப் பொருள். மற்றவையெல்லாம் வெறும் பொய்மை என்று கண்டவர் சுதந்திர வீரர். இகழத் தகும் அற்ப சேவகங்களை அந்நியர்க் காகச் செய்து வாழ்வதற்கு இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார் கள்.
(2)
பூமியிற் பிறந்தவர் யா வ ரு ம் இறப்பது உறுதி என்ற இயற்கை நியதியை நன்குணர்ந்தவர் கள், மானம் போய் அறம்மறந்து உயிரைப். பெரி தெனக் கொண்டு வாழ்வதிலே சுகம் உண்டு என ' ஒருபோதும் மதிக்கமாட்டார்கள்.
(3)
சத்தியம் மானம் என்ற பண்புகள் உடை மையால் மானிட ஜென்மம் உயர்ந்தது. ஆதலால் அது பெறுதற்கரியது. இப்படியான உண்மைகளை .

Page 15
18
பாரதி பாடல்கள் உணர்ந்தவர்கள் தம் ஊன் பொதிந்த உடல் தீய்ந்து சாம்பலாகியக்காலும் தமது உண்மையான நிலையி
னின்றும் தவற உடன்படுவார்களா?
(4)
2.லகத்து உயிர்களுக் கெல்லாம் ஆதாரமாக ஒளிவீசிக் கொண்டு ஆகாயத்தில் உலாவி வரும் சூரி யன் போன்றது நம் தேசவிடுதலை. கண்ணிலும் சிறந்த இந்தச் சுதந்திரத்தை அந்நியர்க்கு விற்று விட்டு மின்மினிகளைப் போன்ற அற்பசுகங்களைப் பெற்றுக் கொண்டு கைகட்டிச் சேவகம் செய்ய எவர் தாம் ஒருப்படுவர் ?
(5)
கண்களிரண்டையும் விற்றுவிட்டுச் சித்தி ரத்தை விலை கொடுத்துவாங்கினால் நம்மைப் பார்த் துக் கைகொட்டிச் சிரியாரா ? பூமியில் அநுபவிக்கக் கூடிய அற்பசுகங்களுக்காகக் கண்மணி போன்ற நம் தேசத்தின் சுதந்திரத்தை இழக்க யாராவது மனம் விரும்புவரா?
(6)
வந்தேமாதரம் என் று வணங்கிய பிறகு வெறும் மாயையை வணங்குபவர்களும் உண்டா? 'வந்தேமாதரம்' என்பது தான் நமக்குத் தாரக மந்திரம் என்பதை மறக்கவும் முடியுமா?
(7)

சுதந்திர தேவியின் துதி /
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும், பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும், சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே.
நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலாச் செல்வ ரேனும், பன்னருங் கல்வி கேள்வி
படைத்துயர்ந் திட்டா ரேனும், பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும் அன்னவர் வாழ்க்கை பாழாம்,
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்.
தேவி! நின் னொளிபெறாத
தேயமோர் தேய மாமோ? ஆவியங் குண்டோ? செம்மை
- அறிவுண்டோ? ஆக்க முண்டோ? காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ? பாவிய ரன்றோ நின்றன்
பாலனம் படைத்தி லாதார்?
ஒழிவறு நோயிற் சாவார்,
ஊக்கமொன் றறிய மாட்டார்; கழிவுறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திடக் கடையில் நிற்பார்;

Page 16
20
பாரதி பாடல்கள்
இழிவறு வாழ்க்கை தேரார்,
கனவினும் இன்பங் காணார்; அழிவறு பெருமை நல்கும்
அன்னை! நின் அருள்பெ றாதார்.
வேறு
தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து ஆவி யும்தம் தன்பும் அளிப்பவர் மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் தாவில் வானுல கென்னத் தகுவதே.
அம்மை உன்றன் அருமை யறிகிலார்; செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார்; இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே.
மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால் போற்றி நின்னைப் புது நிலை யெய்தினர்; கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின் பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர்.
அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன் என்ன கூறி இசைத்திட வல்லனே ? பின்ன முற்றுப் பெருமை யிழந்து நின் சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்.
பேர றத்தினைப் பேணு நல் வேலியே ! சோர வாழ்க்கை, துயர், மிடி யாதிய கார றுக்கக் கதித்திடு சோதியே! வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன்.
இதம் : சுகங்கள். இடர் : துன்பம். பதம் : உயர் பதவி. திரு: செல்வநிலை விதந்தருகோடி: பல கோடி. இன் னல் : துன் பம். பன்னருங்கல்வி : சொல்லற்கரிய கல்வி. அணிகள் வேய் பிணம்: ஆபரணங்களால் அலங்

சுதந்திர தேவியின் துதி
கரிக்கப்பட்ட பிணம். பாலனம்: பாதுகாவல் மேவி நிற்பது : பொருந்தி இருப்பது. தாவில்; குற்றமற்ற. தருவது: தகுதி உடையது. இழி தொண்டு: அடிமைத் தொண்டு. வெம்மை ஆர் : கொடுமை நிறைந்த . புன் சிறை : இழிந்த சிறை. கூற்றினுக்கு : எமனுக்கு.
- பெறுவேம் எனல் பேணினர் : பெறுவேம் என்பதை மேற்கொண்டனர். சின்னம்: அடை யாளம். அழிதேயம் : அழிந்த தேசம். வேலி : காவல். சோர வாழ்க்கை : கள்ள வாழ்வு. மிடி : வறுமை. கார் : இருள். (தீமைகள் எல்லாவற்றையும் இருளாகச் சொல்கிறார்) கதித்திடு சோதி: மிகுதியாகும் ஒளி.
சுதந்திர தேவியின் துதி
இறைவனுடைய சக்தியைப் பெண் தெய்வமாக்கி வழிபடுதல் நமது ஆன்றோர் வழக்கம். அருள்மிகுந் தவள் தாய். தெய்வத் திருவருளையும் தாயாகக் கண் டது நம் முன்னோர் மரபு. கலைமகள், திருமகள், மலை மகள் எனக் கண்டது போலப் பாரதியார் 'சுதந்திரத்'' தையும் தேவியாக்கி வழிபடுகிறார். மக்களுக்குக் கிடைக்கத் தகுந்த பேறுகள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தபேறு சுதந்திரம் என்பதைப் பாரதியார் இப் பகுதியில் நன்கு வலியுறுத்துகிறார்.
மனைவி மக்கள் உற்றார் உறவினர் முதலியவர் களால் எல்லாவிதமான சுகங்களையும் பெறத் தகுந்த வீட்டிலிருந்து பிரிந்து, நான் துன்பம் நிறைந்த சிறை யில் வருந்தக்கூடும். உயர்ந்த பதவியிலிருந்து அனுப். வித்த சுகங்களெல்லாம் போய் செல்வ நிலையும் மாறி பழியும் இழிவும் எனக்கு வந்தெய்தக் காலம் வேண்டுவ தில்லை. உலகிலே பலகோடி இன்னல்கள் என்னைச் சூழ்ந்து அழிவை ஏற்படுத்தலாம். இப்படியான துன்பங்கள் எத்தனை அடுக்கி வந்தா லும் சுதந்திர

Page 17
22
(2)
- பாரதி பாடல்கள்
தேவியே, ' உன்னை வணங்குதலை மட்டும் ஒரு பொழுதும் மறக்கேன்.
மக்களிற் பலர் நிகரில்லாத செல்வம் படைத்தவ ராயிருப்பர். சொல்லற்கரிய கல்வி கேள்விகளில் உயர்ந்தவரும் பலர் உண்டு. இன்னும் எண்ணிலாத பல பெருமைகள் படைத்தவரை இம்மா நிலத்தில் காணலாம். ஆனால் தேவீ! உன் அருள் பெறாதார் என்னவிதமான பெருமைகள் பெற்றிருந்தாலும் அன் னாருடைய வாழ்வு பாழ்! அவருக்குண்டான இந்தச் சிறப்பெல்லாம் பிணத்தை அலங்கரித்த ஆபரணங் களேயன்றி வேறல்ல.
சுதந்திர தேவியே நின் ஒளி பெறாத தேசம் ஒரு தேசம் ஆகுமோ ? அது உயிர் வாழ்க்கையற்ற ஒரே பாழ் வெளியன்றோ ? நெறியும் அறிவும் அங்கே உண் டாகுமோ?, செல்வம் உண்டா? காவியங்கள், ஞானக் கலைகள், வேதங்கள் உண்டா ? உன் பரிபா லனம் பெறாதவர் பாவியரல்லரோ?
(3) அழிவற்ற பெருமை தரும் சுதந்திர தேவியே, உன் அருளைப் பெறாதவர் ஒழியாத நோய்களால் மடி வர். அவர்களிடத்தே ஊக்கமிருக்காது. இழிந்த வாழ்க்கையிலே கிடந்துழலும் அவர்கள் கனவில் தானும் இன்பம் காணமாட்டார். இழிந்த மிருகங்க ளாலும் இகழ்ந்து ஒதுக்கப்பட்டு கடைகெட்ட நிலையி லன்றோ நிற்பர்.
சுதந்திரத் தாயே, உன் அருளை நாடி உள்ளத் தில் தீராத ஆசைகொண்டு தய உயிரையும் அன்பை யும் தியாகம் செய்யும் சீலர்கள் கொடிய சிறையில் வருந்த நேரினும் அதனையன்றோ வானுலக இன்ப மெனக் கருதுவர்.
(5)

சுதந்திர தேவியின்' துதி
அம்மா, இந்தப் பூமியில் பெறக்கூடிய இன்பங் களையெல்லாம் அநுபவிக்கத் தகுந்த பொன் மண்ட பமாயினும் உன் அருள் அங்கில்லையென்றால், அது வன்றோ கொடுஞ் சிறைக் கூடமாகும். அந்நியர்க்கு அடிமை செய்தலாகிய இழிந்த தொண்டினை மேலான செந்நெறியெனக் கொள்ளும் குருடர் நின் அருமை அறியாதவ ரன்றி வேறு யார் ?
கூற்றுவனுக்குக் கோடி கோடியாய்ப் பலியானா லும் நின் அருளான பெறற்கரும் பேற்றினைப் பெறு. வேமென்று துணிந்தனர் மேல் நாட்டவர். அவர் தம் வீரத்தால் நின்னைப் போற்றி உயர்ந்த நிலையெய் தி யிருக்கின்றனர். (நாம் மட்டும் வாளா இருக்கின்
றோமே!)
இப்படிச் சிறந்த தன்மைகளைக் கொண்ட உன்னை வாழ்த்தும் தகுதி எனக்குண்டா? : நான் என்ன சொல்லி எப்படி வாழ்த்துவேன் ? பலவாகப் பிரிந்து சின்னபின்னப் பட்டுப் பழம் பெருமை எல் லாம் இழந்து உன் அடையாளம் தானும் அற்று அழிந்துபோன தேசத்திலன்றோ நான் பிறந்துவிட் டேன். என் செய்வேன்!
(8). நெறிப்பட்ட வாழ்வைக் காக்கும் காவல் தெய் வமே! கள்ளவாழ்வு, துயரம், வறுமை முதலான தீமை களை அறுப்பதற்காகக் கிளர்ந்தெழும் சோதிம்யமான வளே, வீரர்களின் அமுதானவளே, சுதந்திர தேவியே உன்னை வேன் டிப் பணிகின் றேன். (நம் பாரத நாட் டையும் நின் கடைக்கண் பார்வையினால் காத்தருள் அம்மா !)

Page 18
2 , புதுமைப் பெண்
போற்றி போற்றி ! ஓர் ஆயிரம் போற்றி! நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்! சேற்றிலேபுதி தாக முளைத்த தோர் - செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை, மாதரசே! எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ!
மாதர்க் குண்டு சுதந்திரம் என்று நின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்த சொல் நாதந் தான து நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ? சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே, சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்; நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்; பூணு நல்லறத் தோடிங்குப் பெண்னுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

புதுமைப் பெண்' ,
25
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ! 4 நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்;
. நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதோர் செய்தியாம்; குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதும் றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்; மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே

Page 19
26 )
- • பாரதி பாடல்கள்
திலக வாணுத லார் நங்கள் பாரத
- தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்; விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்; மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ!- 9. '
போற்றி, போற்றி ! ஜயஜய போற்றி! இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே! மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை, நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.
10
செய்யதாமரை : செந்தாமரை, சிறந்த தாமரை எனினு மாம். தேமலர் : தேன் பொதிந்த மலர். பேரிகை சாற்றி : பேரிகையை முழக்கி - அதாவது வீரமுழக்கம் செய்து. எங்கள் சாதி : நம் பாரத நாட்டவர்.
வண்மலர்த் திருவாய்: வளமார்ந்த மலர்போலும் அழ கிய வாய். வேதம் பொன் னுருக் கன்னிகையாகிய மேன்மை செய்து : வேதங்கள் பொன் பே லும் பொலிந்த உருவங் கொண்டு கன்னிகையாகிய ஓர் உயர்வினைச் செய்து - அதாவது வேதங்களே சக்தியின் வடிவைப் பெற்று உயர்ச்சியைத் தந்து என்பதாம். சாதல் மூத்தல் : மூப்பு இறப்பு என் றின்ன வற்றை.

புதுமை புதுமைப் பெண் -
> 27
சிறிய தொண்டுகள் : சிற்றடிமை. அடிமைச் சுருள் : சுருள் சுருளாக விரிந்து நம்மை மீள விடாது சிக்கச் செய்யும் அடிமைத் தளை. நவீனம் : புதுமை.
பெண் ணுருப் போந்து நிற்பது : பெண் ணுருவில் வந்து நிற்பது. பே ணு நற்குடி என்பதனை நற்குடி பேணும் என மாற்றுக : ஒழுக்கம் நிறைந்த குடியில் பிறந்தவள் என் ற, சொல் லைப் பாதுகாத்தல். (' இற்பிறப்பென்ப தொன் றும்' என்று கம்பர் கூறியதும் ஈண்டு நோக்கற்பாலது ]
நீசத்தொண்டு : இழிவான அடிமைத் தொண்டு. தலம்: ஸ்தலம் என்ற வடசொல்லின் திரிவு; பூமி என்பது பொருள்.
பொய்மை கொண்ட கலி : பொய் நிறைந்த கலியுகம். முதுமைக் காலம் : பண்டைக்காலம்.
- திமிர்ந்த : நிறைவினால் உண்டாகும் பூரிப்புப் பெற்ற. செருக்கு : பெருமை. - திறம்புதல் : நெ றி த வ று தல். உமிழ்ந்து தள்ளுதல் : வெறுத்து ஒதுக்குதல்.
இலகுசீர் : விளங்கும் பெருமை.
சவுரியம் : செளகரியம் என்ற வட சொல்லின் திரிபுவாழ்க்கைச் சுகங்கள், வசதிகள். மூத்த பொய்மை : வளர்ந்து விட்ட பொய்யான கட்டுப்பாடுகள். சமைப்பர் : செய்து தரு வர்.
அமரர் : மரண பயத்தைத் துறந்தவர், (அ + மரர்). எய்தி னோம்: பெற்றோம்.
புதுமைப் பெண்
சுதந்திர பாரதத்தைப் பாரதியார் பல கோணங் களில் நின்று பார்த்தவர். அவற்றையெல்லாம் விரிக் கிற் பெருகும். இந்தப் பாடல் தொகுதியினுள்ளேயே பலவற்றைக் காணலாம். அவற்றுள் ஒன்று பெண் கள் சுதந்திரம். 'புதுமைப் பெண்' என்று நாட்டிலே

Page 20
பாரதி பாடல்கள்
நாம் சர் த ா ர ண மாகக் காணும் பெண்ணை வைத்துக் கொண்டு அவர் பாடவில்லை. பெண் தன்மை பண்டு எப்படி இருந்தது; இடையிலேற் பட்ட மூடப் பழக்க வழக்கங்களால் எப்படிச் சீரழிந் தது; இனி எப்படிப் பரிணமித்தால் நாட்டுக்கு விமோ சனம் கிடைக்கும் என்றெல்லாம் சிந்தித்தார் அந்தச் சிந்தனையின் பெறுபேறுதான் இந்தப் பத்துப் பாடல் களும். பாரதியார் அமரராகி இற்றைக்கு நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் கற்பனை யில் கண்ட ''புதுமைப் பெண்'' இனிமேல்தான் தோன்றவேண்டும் "கன்னிப் பெண் ஒருத்தி நடுச் சாமத்திலும் வீதியிலே அச்சமின்றிப் போகக்கூடிய காலம் என்று வருமோ அன்றுதான் நாடு சுதந்திரம் அடைந்ததாகக் கருதமுடியும்'' என்று மகாத்மா சொன்னதை நாம் இங்கு அவதானிக்கவேண்டும்
மகா சத்தியே உன் பொன் போன்ற பாதங்களைப் பல்லாயிரம் முறை வணங்குகிறேன். விடுதலை தவ றிக்கெட்டு நெறி தவறிப் போய்ச் சேறாகிவிட்ட நம் பாரத தேசத்திலே புதிதாகத் தோன்றிய தாமரை போன்று ஒளி வீசி நிற்கின்றாய். நம் அடிமைத் துன் பத்தை அகற்றும் சுதந்திர பேரிகையை முழக்கி வந் திருக்கின்றாய். பெண்கள் திலகமே, எங்கள் பாரத நாட்டவர் செய்த தவத்தின் பயனாக உதித்தவளே நீ நீடு வாழ்க !
(1)
1) !
பெண்களுக்கும் விடுதலை உண்டு என்று உன் திருவாயில் மலர்ந்த சொல்லின் நாதம் நாரதருடைய வீணா கானமோ ? நம் பெருமானான கண்ணபிரா னுடைய வேய்ங்குழல் பொழியும் இன்னிசையோ :

புதுமைப் பெண்
), 29
வேதங்களே 'பொன்போலப் பொலிந்த உருவம் கொண்டு கன்னிப் பெண்ணாகிய உயர்வினைச் செய்து எமைக் காப்பதற்காகச் சொல்லும் அறிவுரையோ ? மூப்பு இறப்பு என்ற தன்மைகளைக் கெடுத்து நம்மை என்றும் அமரராக்கும் அமிழ்தமோ ? இவற்றுள் எது என்று அறியாது மயங்குகிறேன். பெண்ணே ! பல் லாண்டு பல்லாண்டாக நீ நம்மிடையே வாழ்வாயாக.
'ஆறறிவு படைத்த மானிடவர்க்கத்தை ஒருவர்க் கொருவர் அடிமையாக்க முயல்பவர் பித்தர். மனிதர் நெறிப்பட வாழ்ந்து மேம்பாடுற்று நேர்மையினா லுயர்ந்து தேவர்களாக வேண்டுமானால் அவர்களைக் கட்டி வைத்திருக்கும் இழிவான அடிமைத் தளையி னின்றும் நீக்கி, அந்தச் சிக்கலை அப்படியே தீயிலிட் டுச் சாம்பராக்கவேண்டும். இவ்வாறாகத் தன் மலர் போலும் சிறு வாயால் பெண்ணினல்லாள் கூறும் புதுமைகளைக் கேட்டீர்களா ?
ஆணும் பெண்ணும் ஒருவர்க் கொருவர் நிறைவு தருதலால் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இன்றியமையாதவர்கள். எனவே இவர்கள் சமானமாவர் எனக் கொள்ளல் வேண்டும். அப்படிக் கொள்ளுவதனால் தான் மக்கள் அறிவினால் மேம் பாடுற்று இவ்வையகம் சிறப்படைய வழி பிறக்கும். நல்லறத்தையே பூணாகக் கொண்டு பெண்ணுருவில் தோன்றியிருப்பது உலக மாதாவாகிய சக்தியே!-- அந்தச் சக்தி தெய்வத்துக்கு அச்சமும் நாணமும் அமைந்திருக்கவேண் டும் என்று சொல்வது பேதை மையாகும் நாய்களுக்கன்றோ அந்தக் குணங்கள் அமையவேண்டும் ? ஞான மும் நல்ல அறநெறியும், வீர சுதந்திரமும், நற்குடியில் பிறந்தவள் என்ற பெய
(3)

Page 21
30 ..
- பாரதி பாடல்கள் ரைப் பேணத் தகுந்த ஒழுக்கமும் அன்றோ பெண் ணுக்கு வேண்டிய குணங்கள். பெண்மையின் தெய்வ சக்தி இப்படி யெல்லாம் பேசுவதைக் கேளுங்கள்! (4)
'நிலத்தின் தன்மை அதில் விளையும் பயிர்களுக் கும் உண்டாகும். அதுபோல இழிவான அடிமை வாழ்வும் அறியாமையும் கொண்ட ஒரு தாய், மாண்பு மிக்க அறிஞர்களான மக்களைப் பெற்றெடுத்தல் அரி தினும் அரிது. நல்ல குலத்துப் பெண்களென்றால் அவர்களின் இயல்பு கற்பு ஒன்று தான். அந்த நலந் தரும் கற்பினைக் காப்பதற்காகத்தான் வீட்டில் பூட்டி வைத்துக் கொடுமை செய்கிறோம்; அவர்களுக்குக் கல்வியும் அறிவும் மறுக்கப்படுகிறது என்று சொல் வது பொருந்தாது. பொருந்தாதது மட்டுமன்றித் தீமையையும் வளர்க்கும். - இப்படியாகப் புதுமைப் பெண் கூறும் வியப்புக்களைக் கேளுங்கள். (பாரதி யாருடைய காலத்தில் பெண்களை வீட்டிலே பூட்டி வைத்து அடிமைகளிலும் கொடுமையாக நடத்தி, வாழ் வில் ஒரு சுதந்திரமும் இல்லாமல் செய்து வைத்திருந் தார்கள். அப்படி வைத்திருந்தவர்களுக்குப் பாரதி யாரின் புதுமைக் கருத்துக்கள் வியப்பாகத்தானே இருந்திருக்கும். அடுத்த பாடல்களில் அவரே சமா தானமும் கூறுவதை உற்று நோக்குக.]
புதுமைப் பெண்ணான இவள் சொல்வதும் செய் வதும் பொய் மலிந்த கலியுகத்துக்குப் புதியவைதாம். நான்கு வேதங்களிலும் கூறிய ஒழுக்கமுறைப்படி வாழ்ந்த பண்டைக் காலத்தில் இவையெல்லாம் பொதுவான வழக்கமாகவேயிருந்தன. உண்மைப் பொருளை ஆராய்ந்த தவத்தான் மிக்க பெரியோர் களுடன் சமானமாக வீற்றிருந்து, இந்த மதுரமொழி

புதுமைப் பெண்
, 31
பேசும் மங்கையரும் முன்னாளில் வேதங்களின் உட் பொருளை ஆராய்ந்திருக்கிறார்கள். அந்த வழக்கமும் ஒழுக்கமும் மாறிப்போனதாலன்றோ இப்படியான கேடு நம் காலத்தில் விளைந்திருக்கின்றது.
(6) "நெஞ்சிலே வஞ்சனை இல்லையாதலால் நிமிர்ந்ந நன்னடையும், நேரான பார்வையும், யார்க்கும் அஞ் சாத ஒழுக்கமும், நிறைந்த ஞானத்தினால் உண்டான பூரிப்புமாகிய இவையெல்லாம் இருப்பதனாலே செந் நெறியுள்ள பெண்கள் ஒழுக்கத் தவறமாட்டார்கள். ('கண் எனும் பூசல் அம்பு நெறியின் புறம் செலா' என்று கம்பன் கூறியதையும் ஈண்டு நோக்குக.] பெரிய இருளாகிய அறியாமையில் அமிழ்ந்தி அவலப் பட்டுக் கல்வியின்றி ஞானமின்றி வாழும் இருண்ட வாழ்வை இகழ்ந்து, தூவெனத் தள்ளிவிடுதலே. பெண்ணினுக்கு அறம்.'' உதய கன்னியாக ஒளிரும் புதுமைப் பெண் கூறுவதைக் கேட்டீரோ ? (7)
உலக வியவகாரங்களில் ஈடுபடுதலின்றிப் புற்றி னுள் பதுங்கி வாழ்வதுபோல் இருளில் மயங்கிக் கிடக் காமல் பெண்களும் வீரராய்த் திகழலாம் வாழ்க்கை யிலே இன்று புதுப்புது விதமாக அமைந்துள்ள வசதி களின் நுட்பங்களை அவர்களால் ஆராய்ந்தறிய முடி யும். விஞ்ஞானங்கள் கலைகள் என் றின்ன பலவாகப் பல தேசங்களிலும் காணப்படும் நூல்களை யெல்லாம் கற்றுத் தேற நம் பாரதப் பெண் தயங்கமாட்டாள். அறிவுத் துறைகளால் உயர்ந்தன எனப் போற்றப் படும் நானா திசையிலுள்ள தேயங்களுக்கும் நம் * திலகவாணுதலார்' சென்று ஆங்காங்கு காணப்படும் புதுமைகளைக் கற்றுக்கொண்டு வந்து நம் பாரத நாடு சீர்பெற்றோங்க உழைப்பார்கள். (பிற நாடுகளுக்குச்

Page 22
பாரதி பாடல்கள்
செல்வதால் அந்நாடுகளில் காணும் தேவையற்ற நாகரிகங்களைக் கற்றுக் கொள்ளாமல் நம் பாரதப் பண்புக்கு ஏற்றவற்றை மட்டுமே கொண்டு வருவார் கள் என்பதைத் திலக் வாள் நுதல்' என்ற சொல் விளங்க வைக்கிறது.)
இந்தப் புதுமைப் பெண் பல்விதமான சாத்திரங் களைக் கற்பாள்; வாழ்க்கை வசதிகள் பலவற்றை நூதனமான முறையில் செய்வாள்; பழைய மூடக் கட்டுப்பாடுகளை யெல்லாம் அ ழி ப் பா ள்; மனிதர் செயல்களைக் காத்து அறத்தின் வழியிலே ஒழுகச் செய்து தேவர்களும் மகிழும்படி செய்வாள்; ஆண் மக்கள் எல்லாம் தம்மைக் கெளரவமாக நடத்திப் பெருமை கொள்ளும்படி உலகிலே பெருமையுடன் வாழ்வாள். உலகத்தீரே புதுமைப் பெண்ணின் உயர்ந்த லக்ஷியங்களைக் கேட்டீரோ ?
பெண்ணா இவள் ? இந்த உலகினையே மாற்றிப் புதுமை பெறச் செய்து மனித வர்க்கத்தையே தேவர் களாக்க ஆற்றலுடன் தோன்றியுள்ள அன்னை பரா சக்தியன்றோ இப்புதுமைப் பெண்! உலக மாதாவே தான் கொண்ட கருணையின் மிகுதியால் நம் பாரத தேசம் உய்யவேண்டும், விடுதலை கெட்டு மயங்கிய நம் பாரத மக்களைத் தேற்றி. உண்மைகளைத் தெருட்டவேண்டும் என்று இப்படிப் பு தி ய கன் னிகையாகத் தோன்றியுள்ளாள். இவளை வணங் குவோம்! ஜய ஜய போற்றி! இப்புதுமைப் பெண் ணின் அறிவொளி பல்லாண்டு பல்லாண்டாக நம் நாட்டில் வாழவேண்டும் !
(10)
(9)
க

தொழில் . ) இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே ! கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கி நன் முத்தெடுப் பீரே
• அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடு வீரே! பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே! மண்ணெடுத்துக் குடங்கள் செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே! உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே! எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடு வீரே !
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே! விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!.
பரத நாட்டியக் கூத்திடு வீரே! காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே! நாட்டி லேய றம் கூட்டி வைப்பீரே !
நாடும் இன்பங்கள் ஊட்டிவைப் பீரே! தேட்ட மின்றி வழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே! வகுத்தல் : இயற்றுதல். பிரமதேவன் கலை : 'படைப் புத் தொழில்.
இழை : நூல் இழை. விண் நின் று : ஆகாயத்திலிருந்த படியே. பார்மிசை: பூமியிலே.
சாத்திரம் சேர்த்திடுவீர் : சாத்திரங்களை உண்டாக்குவீர். தேட்டம் : தேடுதல். விழி எதிர்: கண் முன் வே.

Page 23
தொழில்
பாரதியார் தொழிலையும் தொழில் செய்பவரை யுமே என்றும் உயர்த்திக் கூறுவார். எங்கெல்லாம் தொழிலைப் பற்றிச் சொல்லமுடியுமோ அங்கெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார். சிறு தொழிலாயினுமென் பெருந் தொழிலாயினுமென் ? பாரதியார்க்கு எல் லாம் பெருமையான தொழில்களே. அதைத் தாழ்த்தியும் இதை உயர்த்தியும் பேசமாட்டார். இரண்டையுப் சரிசமானமாகவே மதித்துப் போற்று வார். இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமை யாதன. முன்னர்ப் பாரத தேசம் என்ற பகுதியில் 8 முதல் 12 வரையுள்ள செய்யுள்களில் பாரதியார் தொழில்களைம் பற்றிச் சொன்னவற்றை உற்று நோக்குக, நமது பாரத நாட்டிலே வேண்டிய மூலப் பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கும். அவற்றை யெல்லாம் நாம் பயன்படுத்தி உற்பத்திப் பொரு ளாக்கி உலக நாடுகளுடன் நமது நாடும் முன்னணி யில் திகழவேண்டுமென்ற தணியாத ஆவல் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த அன்று வாழ்ந்த பாரதியா ரிடம் காணப்பட்டதை உற்று நோக்கும்போது நம் உள்ளத்திலேற்படும் எழுச்சி சொல்லத் தரமில்லை. அவர் தெய்வ வாக்குப்போலச் சொன்னதெல்லாம் இன்று நம் பாரதத்தில் உருவங் கொண்டு நம் கண் முன்னே தோன்றி நிற்கின்றன!
பெரும்பெரும் உருக்கு ஆலைகளை உண்டாக்கி வேண்டிய யந்திரங்களைச் செய்யுங்கள் கரும்பைச் சாறு பிழிந்து சீனி சர்க்கரை செய்யும் பெரிய ஆலை

35
IIFE
பாரதி களை உண்டாக்குங்கள். (நாற்பது கோடி மக்களுக்கும் சீனி வேண்டுமல்லவா?) தரையைக் குடைந்து சுரங் கப் பொருட்களை மட்டும் பெறுவதோடமையாது கட லிலும் மூழ்கி முத்துக்களை யெடுத்து நாட்டின் பொரு ளாதாரத்தைப் பெருக்குங்கள். வியர்வை சிந்தப் பாடுபட்டு ஆயிரம் தொழிலைச் செய்யுங்கள். > இப் படிச் செய்யும் உங்களைப் பிரமதேவனுடைய பிரதி நிதிகள் என்றுதான் நான் புகழுவேன் !
(1)
மண்ணை வெட்டி வெறும் பானை சட்டி வனைவ தோடு நின்றுவிடாதீர். பிற நாடுகளில் மண்ணினால் கண்ணாடி பீங்கான் கோப்பை' முதலிய கலங்கள் செய்கிறார்கள். அதுபோல நம் நாட்டிலும் செய்யுங் கள். மரத்தை வெட்டுங்கள். பலபல உபகரணங் களைச் செய்யுங்கள். (மரம் வெட்டுதல் பெருந் தொழி லாக உலக நாடுகளில் நடைபெறுவதை அறியுங்கள்.) நம் நாட்டு மக்களுக்கு வேண்டிய காய் கனிகளையும் . நெல் கோதுமை முதலியவற்றையும் பெருமளவில் பயிர் செய்து கொடுத்து உதவுங்கள். பசுக்களை வளர்த்துப் பாலும் நெய்யும் பெருக்குங்கள். (அந்நிய நாடுகளிலிருந்து வரும் 'புட்டிப்' பாலை மட்டும் நம்பி யிருக்காதீர்கள்.) ஆலைகளை நிறுவுங்கள்; அவற்றில் | பல சீலைகளை நெசவு செய்யுங்கள். (அமெரிக்கா போன்ற பிற நாட்டவரும் பாரத நாட்டுத் துணிகளை விரும்பி வாங்கும் அளவுக்கு நமது ஆடைகளின் தரம் . உயரவேண்டும்) மனம் வைத்து நாம் பாடுபட்டால் நம்மைத் தேவர்களும் காப்பார். பூமியிலே மனித வர்க்கத்தைக் காக்கும் தேவர்கள் தொழிலாளரான நீவிரன்றோ !
(2)

Page 24
33
பாரதி பாடல்கள்
பாட்டும் கூத்தும் பரத நாட்டிய மும் நம் பண் டைப் பெரும் செல்வக் கலை களன் றோ இவைபோல உலகில் காணும் இயற்கைப் பொருளின் தன் மை களை நும் நுண் மாணுழை புலத்தாற் கண்டு புதிய புதிய சாத்திரங்களை இயற்று நிகள் (கணித மேதை ராமா னுஜம், சர் சி வி ராமன், ச க தீச சந்திர போஸ் முத லிய பெரியார்கள் உலகினு களித்த சாத்திர ங்கள் பல ) நாட்டிலே பஞ்சததை விரட்டி அறம் ஓங்கச் செய்யுங்கள் மக்கள் வாழ்விலே தேடும் இன்பங் களை ஊட்டி வையுங்கள் தேடாமலே வந்து அருள் செய்யும் தெய்வமாக நீர் மதிக்கப்படுவீர்!
(3)
தமிழ்த் தாய்
தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண் டுகல் (தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந் கம்)
ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
- ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்; ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

தமிழ்த் தாய்
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன். நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.
நன்றென்றுந் தீதென்றும் பாரான் • முன்பு
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையுங் கொன்று நடப்பான்.
கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் என்னென்ன வோபெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!
தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும் இந்தக் க ண மட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க் .வும் அஞ்சி யிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன் ? என தாருயிர் மக்காள்! கொன் றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
''புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

Page 25
38 )
பாரதி பாடல்கள்
10
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்'' என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ? சென்றிடு வீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 11 தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும், இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
12
ஆரிய மைந்தன் : ஆரிய வழித் தோன் றல்; மக்களுள் சிறந்தவன் எனினும் ஆம். மூன்று குலத் தமிழ் மன்னர் : சேர சோழ பாண்டியர் என்ற முப்பெரும் வேந்தர் குடிகள். ஆன்ற மொழிகள்: நிறைந்த மொழிகள். ஆரியம் : வட மொழியாகிய சமஸ்கிருதம். கள் : தேன். தெள்ளுதமிழ் : ஆராய்ந்து சொல்லும் தமிழ். நேத்திரம் : கண். வையச் சேர்க்கை : பூமியில் காணும் செல்வம். கன்னிப்பருவம் : பொலிவுடன் இருந்த காலம். திசை மொழி : அயல் நாட்டு மொழிகள். தந்தை : சிவன். சான்ற புலவர் : உயர் குணங் கள் நிறைந்த புலவர்கள். பேதை: அறிவிலி. வசை : இழிவு. எய்திடல் : சேருதல்.
தமிழ்த் தாய்
புதிய விஞ்ஞான சாத்திரங்களையும் மேல் நாட்டுக் கலைகளையும் தமிழில் சொல்லமுடியாது எழுதமுடியாது என்று இப்பொழுதும் பலர் சொல்லி வருகிறார்கள். அவர்களைக் கண்டுதான் பாரதியார் 'தமிழ்த் தாய்'

தமிழ்த் தாய்
) 39
என்ற இப்பாடலை அமைத்திருக்கிறார். ஆதி மொழியா யிருந்த தமிழ் இன்றும் இளமை குன்றாதிருக்கின்றது. எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்து விட்டன. நந்தமிழோ தன்மணம் குன்றாது இன்றும் வாழ்கின்றது. ஆகையினால் உலகில் உள்ள எல்லா? விதமான சாத்திரங்களும் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டும். அவற்றைத் தமிழில் சொல்லமுடியா தென்ற இழிவினைத் துடைக்கத் தமிழ் மக்கள் முன் வரவேண்டும் என்று உணர்ச்சியூட்டுகிறார் பாரதியார். தமிழ் மகளே தன் மக்களைப் பார்த்துப் பேசுவது போல அமைந்துள்ளது பாடல்.
ஆதிசிவன் என்னைப் பெற்று இத்தரணி மீது விட்டிருந்தான். அகத்தியன் என்ற தவமுனிவன் என் அழகைக் கண்டு மகிழ்ந்து எனக்கு நிறைவு தரும் இலக்கணத்தைச் செய்து தந்தான்.
- (1)
சேர சோழ பாண்டியர் என்ற முடிமன்னர் மூவ ¥) ரும் என்னை ஏந்தி வளர்த்தனர். அவர்கள் என் மீது கொண்ட தணியாத அன்பினால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நான் வளர்ந் தேன். அந்த ஆதி நாளில் ஆரியம் என்ற வட மொழிக்கு நிகராக நான் தென் நாட்டில் வளர்ந் தேன்.
மதுவோ தீயோ காற்றோ வானவெளியோ என்று உள்ளத்தை அள்ளும் தீஞ்சுவைக் காவியங் களைச் செய்து என்னை மேலும் மேலும் அழகு செய் தார்கள் தமிழ்ப் புலவர்கள்.

Page 26
பாரதி பாடல்கள் இலக்கியங்கள் மாத்திரமா ? பலவிதமான சாத் திரங்களைக்கூட இயற்றி என்னை உயர்வாக வைத் திருந்தார்கள். அதனால் இப்பூவுலகம் முழுவதும் என்னைப் போற்றிப் புகழ்ந்தது. நானும் பெருமை யோடு வாழ்ந்தேன் ஆனால் அந்தோ! அந்தக் காலன் தான் கண் கெட்டவனன்றோ ? தன்முன்னே எது வாழ்கிறதோ அதை துடைத்து ஒழிப்பதுதானே
அவன் வேலை.
(4)
இது நல்லது, இது தீயது என்று பார்கும் வழக் கந்தான் அவனிடமில்லையே. பாய்ந்து வரும் காட் டாற்று வெள்ளம் போலத் தன் வழியில் எது எதிர்ப் பட்டாலும் அதனை வாரிச் சுருட்டி அள்ளிக்கொண்டு, பூமியின் செல்வமனைத்தையும் கொன்று குவித்துவிட் டுப் போய்விடுகிறான்.
(5)
பண்டு, என் கன்னிப் பருவத்திலே, நான் கேள்விப்பட்ட திசை மொழிகள் பலப்பல. அந்த அயல் நாட்டு மொழிகளுக்கு என் னென்னவோ பெயர் கள் சொன்னார்கள். அவை யாவும், (எனக்கு நிகராக வாழ்ந்த ஆரியம் தானும்), அழிந்தொழிந்து மாண்டு போயின.
(6)
வ
என் தந்தை அருளின் திறத்தாலும் முன்னைக் காலத்திலிருந்த அறிவுத்துறை போகிய புலவர்கள் செய்த தவ வலியாலும் இந்தக் கணம் வரையில் அந்தக் கூற்றுவன் என்னை ஏறிட்டுப் பார்க்கத் தானும் அஞ்சி இருந்தான். நானும் சிறப்புடனே வாழ்ந்தேன்.
(7)

தமிழ்த் தாய்
- 41 ;
ஆனால் இன்று ஒரு சொல் என் காதில் விழுந் தது. அது கேட்ட நேர மே என் உயிர் பிரிந்துவிடும் போல் இருக்கிறது. என் ஆருயிர் மக்களே! இனி நான் ஏது செய்வேன். சொல்லத் தகா தவன் ஒரு வன் அன்றோ அவ்வார்த்தையைக் கூறிவிட்டான்; பாவி!
(8)
''புதியதாகத் தோன்றியுள்ள கலைகள் பல பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்களைக் கூறுகின்றன. (பௌதிகம், விஞ்ஞானம், ரசாயனம்) முதலிய அந்தக் கலைகள் மேல் நாடுகளிலே பல்கிப் பெருகி வளரு கின்றன. இந்த மேன்மையான கலைகள் தமிழ் மொழியில் இல்லை.
(9)
"தமிழில் அப்படியான கலைஞானங்களைச் சொல் லவும் முடிவதில்லை; சொல்லும் திறமைதானும் தமிழ் மொழிக்குக் கிடையாது. (மேல் நாட்டு மொழி களைப் போல - முக்கியமாக ஆங்கிலத்தைப் போல - திறமை, அமைதி, சொற் சிக்கனம் முதலியன தமிழ் மொழியில் இல்லை.) அந்தக் கலைகளை உடைய மேல் நாட்டு மொழிகள் தாம் இனி உலகில் ஓங்கி வள ரும். தமிழ் மெல்ல மெல்ல இனிச் சாகவேண்டியது
- (10)
தான்.''
ஆ! இப்படியல்லவா அந்த அறிவில்லாத பதி தன் கூறினான். இந்த வசை எனக்கு ஏற் படலாமா? மக்களே, எட்டுத் திக்கும் செல்லுங்கள். ஆங்காங்கு காணப்படும் செல்வங்கள் எல்லாவற்றையும் இங்கே கொண்டு வந்து குவியுங்கள்!
(11),

Page 27
பாரதி பாடல்கள்
என் தந்தையின் அருள்வலிமை இன்றும் குன்றா திருக்கின்றது புதியன என்று சொல்லப்படும் விஞ்ஞானம் முதலிய கலைகளில் உங்களிற் பலர் வல்லுநராக இருக்கிறீர்கள். உங்கள் தவ வலியும் எனக்கு உண்டு. நீங்கள் முயற்சி செய்தால் இந்தப் பெரும்பழி தீரும். நானும் (என் மக்களாகிய உங்கள் தளராத முயற்சியின் பயனாய்) புகழ்பெற்று மீண்டும் பூமியில் தலை நிமிர்ந்து வாழ்வேன்.
(12)
தமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்; பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
- வாழ்ந்திடுதல் நன்றோ ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
- உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
- தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

தமிழ்
) 43
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் - தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் , சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின், . பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்; தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
பாமரர் : கல்வியறிவு குறைந்தவர். விலங்குகளாய் : பகுத்தறிவிருந்தும் அதனை உபயோகியாமல் மிருகங்களாய். பான்மை : (மனிதத்) தன்மை. தேமதுரம் : தேன் போல இனிமையான . யாங்கணும் : எவ்விடத்தும். சேமம் : க்ஷேமம் என்ற வடசொல்லின் திரிபு. தெள்ளுற்ற தமிழ்: ஆராய்ந்து தெரிந்து சொல்லப்படும் தமிழ். இங்கு அமரர் சிறப்பு ; பூமியிலேயே தேவர்களாய்ப் புகழப்படும் பெருஞ் சிறப்பு.
தமிழ்
நம் தமிழ் மொழி முன்பு பெருமையுடன் இருந் தது. இலக்கியங்களும் கலைகளும் நம் மொழியில் மிகுதியாயிருந்தன. அந்தப் பழம் பெருமையை மட் டும் நமக்குள்ளே கூறிக்கொண்டு வாளாவிருப்பது,

Page 28
' 44
பாரதி பாடல்கள்
தமிழ் மகனுக் கழகில்லை. அவன் புதுப்புதுக் கலைகளை இயற்றவேண்டும். உலகம் நம்மை மதித்துப் புகழ வேண்டும் என்று பாரதியார் இப்பாடல்களில் நமக் கறிவுறுத்துகிறார்.
- உலகிற் பல பாஷைகளை நாம் அறிந்திருக்கின் றோம். ஆனால் அவை எல்லாவற்றிலும் தமிழ் மொழி போல இனிமையானதை எங்கும் கண்டதில்லை இவ் வாறு சிறந்த மொழியை நாம் பேசுபவராயிருந்தும் இன்றைக்கு நம் நிலை என்ன" மற்ற நாட்டவரோடு நம்மை ஒப்பிடும்போது நாம் கல்வியறிவில் குறைந்த வர்களேயன்றோ? நாகரிகத்தில் மற்ற நாடுகள் மேம்பாடுற்று வளர்ச்சியடைய நாம் மட்டும் மிரு கங்கள் போல இகழ்ச்சியடைகிறோம் உயர்ந்த பண்பு கள் தாமும் எம்மிடம் அருகிவிட்டன. பெயரளவில் மாத்திரம் தமிழர் என்று வாழ்ந்தால் போதுமா ? நம் தேன் போலும் மதுரமான தமிழின் ஓசை உலகெல் லாம் பரவும்படியாக நாம் முயற்சி செய்யவேண் டாமா?
(1) உலகில் எத்தனையோ புல வர்களைப் பற்றி அறி வோம் ஆயினும் நமது கம்பன், வள்ளுவன், இளங்கோ என்பவர்களைப் போல உள்ளொளியால் சிறந்து. மனிதகுலத்தை உயர் விக்கும் நூல்களை இயற்றியளித்த புலவர்களை இந்தப் பூமியில் எங்கும் கண்டதில்லை இது உண்மை. வெறும் புகழ்ச்சிக் காகச் சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல. நம் மிடையே இருந்த புலவர்களைப் பற்றியும் அவர் கள் இயற்றி உலகினுக்கே அளித்த நூல்களைப் பற்றி யும் நமது மொழியின் பெருமையைப் பற்றியும் நாம் அறிந்தும் பேசாமல் ஊமையராய் இருக்கிறோம்;

தமிழ்
அவற்றைக் கேட்டும் கேளாதவர்களாயிருக்கிறோம்; கண்டும் காணாதவர்களாய் வாழ்கிறோம். இதுவும் ஒரு வாழ்வா ? நான் கூறுவேன் கேளுங்கள்! நமது நாடும் நாமும் இன்பமுற வேண்டில் - - பெருமையடைய வேண்டினால் - தெருவெல்லாம் தமி ழின் ஒலி பெருகச் செய்யுங்கள்!
(2) பிற நாட்டிலே உள்ள நல்லறிஞர்களின் சாத் திரங்களைத் தமிழில் மொழி பெயர்க்கவேண்டும். அழி வில்லாத புகழுடைய பல புது நூல்களை நாம் தமிழ் மொ ழியில் இயற்றல் வேண்டும். இதனைச் செய்யா மல்விட்டு ந பக்குள்ளே மட்டும் மற்றவர் அறியாத வாறு நம் பழம் பெருமையைப் பேசிக் கொண்டிருப்ப தில் ஒரு சிறப்பும் இல்லை. உண்மையான புலமை யென்றால் வெளி நாட்டவர்களும் அதனை வணங்குவ ரன்றோ ?
(3) நம் உள்ளத்தில் உண்மையான ஒளி ஏற்படு மானால் நம் வாக்கும் ஒளிபெறும். (உண்மை ஞானம் நம் உள்ளத்தில் தோனறினால் அதனைச் சொவதற் குரிய மொழியும் தானாகவே வாக்கில் உதிக்கும்.) ஆற் றிலே புது வெள் ளம பரவுவதுபோல நம் நாட்டில் கலைகளும் கவிகளும் ஞான நூல்களும் பெருகுமானால் பதவி இழந்த நாம் மீண்டும் தமிழரென்று தலை நிமிர்ந்து வாழலாமன்றோ " படுகுழியில் வீழ்ந்திருக் கும் குருடர் போன்ற நமக்கு விழிப்பு உண்டாகிச் சிறப்புற்றோங்குவோ மன்றோ ? தமிழிழை நன் கு ஆராய்ந்து அதன் இயல்பினையும் சிறப்பினையும் கண் டவர் இப்பூமியிலேயே தேவர்களாகிச் மேன்மை பெறுதல் திண்ணம்.
(4)

Page 29
- மூன்று காதல்
முதலாவது - சரஸ்வதி காதல்
ராகம் - சரஸ்வதி மனோஹரி)
(தாளம் - திஸ்ர ஏகம்
பிள்ளைப் பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு பள்ளிப் படிப்பினிலே - மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட வெள்ளை மலரணைமேல்- அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதும்-கண்டேன்.
வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா!
ஆடி வருகையிலே-அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில் ஏடு தரித்திருப்பாள்-அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை நாடி யருகணைந்தால் - பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள்; ''இன்று கூடி மகிழ்வ"' மென்றால்-விழிக்
" கோணத்தி லே நகை காட்டிச்செல்வாள், அம்மா! 2
ஆற்றங் கரைதனிலே- தனி
யானதோர் மண்டப் மீதினிலே, தென்றற் காற்றை நுகர்ந்திருந்தேன்- அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை ஏற்று மனமகிழ்ந்தே-"அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று போற்றிய போதினிலே- இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா!

மூன்று காதல்
சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
- தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்ததுபோல் - பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவை யல்லால் - பிற
வாஞ்சையுண்டோ? வய தங்ஙன மேயிரு பத்திரண் டாமௗவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றி நின்றேன், அம்மா!
இரண்டாவது லஷ்மி காதல் , ராகம்-ஸ்ரீராகம்)
(தாளம் - திஸ்ர ஏகம்
தாள்
1 க!
இந்த நிலையினிலே-அங்கோர்
இன்பப் பொழிலினிடையினில் வேறொரு சுந்தரி வந்து நின்றாள்-அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன் சிந்தை திறைகொடுத்தேன் - அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்; மற்றும் அந்தத் தின முதலா-நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேன், அம்மா!
5
புன்னகை செய்திடுவாள்-அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சற்றென் முன்னின்று பார்த்திடுவாள்- அந்த
- மோகத்தி லே தலை சுற்றிடுங் காண்; பின்னர் என்ன பிழைகள் கண்டோ-- அவள்
- என்னைப் புறக்கணித் தேகிடுவாள்; அங்கு சின்னமும் பின்னமுமா- மனஞ்
சிந்தியுளமிக நொந்திடு வேன், அம்மா!
காட்டு வழிகளிலே-மலைக்
காட்சி யிலே, புனல் வீழ்ச்சியிலே, பல நாட்டுப் புறங்களிலே, நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே, சில

Page 30
48
பாரதி, பாடல்கள்
வேட்டுவர் சார்பினிலே--சில
வீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும், "மீட்டு மவள்வருவாள் -- கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம், அம்மா ! 7
மூன்றாவது - காளி காதல் , ராகம் - புன்னாகவராளி)
(தாளம் - திஸ்ர ஏகம்
பின்னோர் இராவினிலே-கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு ; கன்னி வடிவமென்றே - களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில் அன்னை வடிவமடா!-இவள்
ஆதி பராசக்தி தேவி யடா! - இவள் இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!
செல்வங்கள் பொங்கிவரும்;-- நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும் ; அல்லும் பகலுமிங்கே- இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று வில்லை யசைப்பவளை - இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத் தொல்லை தவிர்ப்பவளை-- நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!
பெண்மை : அழகாம் தன்மை. மதி பற்றிடவில்லை : புத்தி செல்லவில்லை. விள்ளும் : சொல்லாமற் சொல்லி விளங்க வைக்கும். வெள்ளை மனது : களங்கமில்லாத பிஞ்சு உள்ளம்.
இங்கிதமாக: இசைவாக. (மனம் விரும்பும் வகையில்) விழிக்கோணம் : கடைக்கண் பார்வை.
நுகர்ந்து : அநுபவித்து, கன்னிக்கவிதை : புதுப்பாடல். இணங்கி : மனம் பொருந்தி, போற்றிய : வேண்டிக்கொண்ட!

மூன்று காதல்
சித்தம் தளர்ந்தது : மனம் கலங்கியது. வாஞ்சை: ஆசை. வெள்ளைப் பண்மகள் : பரிசுத்தமான இசைமயமாகிய கலைமகள் :
சுந்தரி : அழகுமிகுந்தவள். 'சோதி : ஜோதி என்னும் வட சொல் திரிபு, ஒளி. திறை கொடுத்தேன் : காணிக்கை யாகக் கொடுத்தேன். செந்திரு : செம்மையான செல்வி.
ஆர : அன்பு மிகுதியாக.
அற்றைப் பொழுது : அன்று பகல் பொழுது. ஏகிடு வாள் : போய்விடுவாள். நைந்திடுவேன் : அழுங்கிப்போ வேன்.
நகர் நண் ணு சில சுடர் மாடத்திலே : நகரத்தைச் சேர்ந்த சில பிரகாசமான மாடிகளிலே. வேட்டுவர் சார்பு: வேடர் இருப்பிடங்கள்.
யாவும் உலகில் வசப்பட்டுப் போம் : உலகில் உள்ள எல்லாம் எமக்குரியன ஆகிவிடும்.
தெள்ளறிவு: தெளிந்த ஞானம். வில்லையசைப்பவள்: தன் கைவில்லை அசைப்பவள் (ஒவ்வொரு பொருளையும் இயங் கச் செய்யும் மகாசக்தி) வினைச்சி : வினைக்குரியவள் (சக்தி) தொல்லை : பிணி மூப்பு சாக்காடு என்ற பயங்கள்.
மூன்று காதல்
பழந்தமிழிலக்கியங்களிலே இறைவனை நாயக னாகவும் ஆன்மாவை நாயகியாகவும் பாவித்துக் கவிதைகள் செய்திருக்கிறார்கள். பாசத்தின் மிகுதிக். கும் அன்பின் உறுதிக்குமாக இவ்வாறு காதலன் காதலி முறையில் உருவகப்படுத்திச் சொல்லுதல் வழக்கம். இதனாலே இறைவனுக்கு ஆன்ம நாயகன் என்ற பெயரும் உண்டு. இதிலிருந்து முளைத்த கற்பனைகள் எத்தனை எத்தனை யோ. இது பின்பு

Page 31
50
பாரதி பாடல்கள்
நீண்டு ஆண்டானும் அடிமையும், தந்தையும் மக னும், தாயும் சேயும் என்ற முறையிலும் கற்பனை செய்யப்பட்டது. நமது நாயன்மார்கள் ஆழ்வார்க ளுடைய தெய்வத் தீந்தமிழ்ப் பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும். ஆனால் பாரதியார் இன்னும் ஒருபடி மேலே போய் விடுகிறார். தெய் வத்தை நண்பனாகவும், நமக்கு வேலைசெய்யும் சேவ கனாகவும், நம் நன்மையை விரும்பும் காதலியாக வுமே கற்பனை செய்கின்றார். இவர் செய்த இந்தக் கற்பனைப்புதுமை தமிழிலக்கியத்துக்கே புதிய தொரு பூஷணமாக மிளிருகிறது. அவற்றுள் இந்த மூன்று கா த ல் நமது பாடப்பகுதிக் கமைந்திருக்கிறது. திருவாசகம் பாடியருளிய மணிவாசகர் செய்த திருக் கோவையாரை வேத நூல் என்றும், வேதத்தின் உப் அங்க நூல் என்றும் காம நூல் என்றும் ஒவ்வொரு வரும் தத்தம் அறிவுக்கேற்பக் கூறுவர் எனப்பெரி யோர் சொல்வர். அதுபோல இந்தக் காதல் பாட் டுக்களையும் பலர் பலவிதமாகச் சொல்வதுண்டு. காதல் என்பது ஒருவனும் ஒருத்தியும் கொள்ளும் ஈடுபாடுமட்டுமில்லை. தாய் சேய் தந்தை மைந்தன் இவர்களுக்கிடையேயும் உள்ளது அதுவேதான். பாரதியாரும் முதலில் பெண்மையென்றும், கன்னி யென்றும் ஆரம்பித்துக் கடைசியில் '' அன்னை வடிவ மடா '' என்று விம்மித மெய்துவதை நன்குணர வேண்டும். இப்பாடல்களை மேற்போக்காகப் பாரா மல் ஆழ்ந்து பொதிந்துள்ள தத்துவக் கருத்தை
அறிதலே பொருத்தமுடையதாகும்.
ம1
ஒருவனுடைய வாழ்வை மூன்றாகப் பிரிக்கிறார் சவி. கல்வி அறிவு ஞா ன ம் என் பனவற்றைப்

மூன்று காதல் - மூன்,
51,
பெறும் பருவம், பொருளும் இன்பமும் தேடும்பரு வம், வினையும் தொழிலும் செய்து கர்மவீரனாகும் பருவம் ஆகிய மூன்று பருவங்களுமே மனிதனை மனிதனாக்குகின்றன. ஒவ்வொரு பருவத்திலும் அவ் வப் பருவத்திற்கேற்ப அவன் நடந்து கொள்ளு தலையே இந்த மூன்றுகாதல் என்ற பாடல் பகுதி விளக்குகிறது.
கலையைக் கலைமகளாக்கி அவள்மேற் காதல் கொள்வது போலவும், பொருளைத் திருமகளாக்கி அவள் மேல் காதல் கொள்வது போலவும், தொழிலை மலைமகளாக்கி அவள்மேற் காதல் கொள்வது போல வும் பாரதியார் பாடியிருக்கிறார். இவ்விதமான காதல்களைச் சிறிது ஊன்றி ஆராய்ந்துதான் விளங் கிக் கொள்ளல் வேண்டும். மேலாகத் தோன்றும் 'காதல்' என்ற சிருங்கார ரசனையை ஊடுருவி ஆழத் தில் ஒளிரும் பொருளையே நாம் அறிய முற்பட வேண்டும்.
இப்பாடங்களுக்கு நேர் பொருளாகத் தராமல் அவற்றில் காணும் உட்பொருளையே பின்னால் தரு. கின்றோம். வெளிப்படையாகத் தெரியும் பொருள்
இங்குத் தரப்படவில்லை.
சரஸ்வதி அறிவு, அன்பு. புகழ் முதலிய அருளாந் தன்மை களாகிய பெண் மையைக் + 5.3டு தான் என் மனம் கல்வியில் நாட்ட ட (3) 3ா... து த... டனைக்கு கட் டுப்பாட்டுக்கும் அடங்கிய பள்ளிப் படிப்பில் ஈடுபாடு

Page 32
52
பாரதி பாடல்கள் ஏற்படவில்லை. ஆனால் இயற்கைப் பொருட்களிலும் அவற்றில் காணும் கடவுள் தன்மையான இசையிலும் நான் அறிந்தன பல. வெண்டாமரையிலே வீணையும் கையுமாக அருள்நோக்கம் செய்யும் திருவதனத்துடன் வீற்றிருக்கும் கலைமகளைக் கண்டு என் பிள்ளை உள் ளத்தை அப்பொழுது நான் பறி கொடுத்துவிட்டேன்.
-என் இளமைக் காலத்தில் ஓடி ஆடித் திரியும் பொழுது தெரு வீதியிலும் சந்தியிலும் நான் ஏடுகள் சொல்லாத கல்வியை எல்லாம் கற்றேன்; அவற்றின் உண்மைப் பொருளை நாடியறிய வேண்டும் என்று
முற்பட்ட போதெல்லம் பலவகைப்பட்ட அறிவை அடைந்தேன். ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்த லாமென்றாலோ அது அப்பொழுது முடியாத செயலா யிருந்தது. தெளிந்த மதி அப்பொழுது உண்டான தில்லை.
(2)
ஆற்றங்கரை, தனியான மண்டபம், தென்றல் முதலிய தனிமைகள் என் சிந்தனையைத் தூண்டப் பேருதவியாயிருந்தன. சிந்தனை முதிர முதிர அறி 'வுத் தெளிவும் உண்டாயிற்று. என்றுமே இப்படி இருந்துவிடலாம் போல இருந்தது. ஆனால் அந்தச் சிந்தனைச் செறிவு நிலைத்திருந்தால்தானே!
(3)
இப்படி இருந்தாலும் என் மனத்தில் உண்டான ஊக்கம் தளர்ந்ததில்லை. கலைகளைக் கற்கவேண்டும், அறிவினைத் தேடவேண்டும் என்று ஒரே பித்துப் பிடித்தவன் போலலைந்தேன். பகலெல்லாம் கலை பற்றிய பேச்சு. இரவெல்லாம் அதுபற்றிய கனவு. இவை தவிர உலகத்து ஆசைகள் ஒன்றுமே இன்றி

53
மூன்று காதல்' . இருபத்திரண்டு வயது முடியும் வரை யு ம் கலை மகளையே ஆராதித்துக் கொண்டிருந்தேன்.
(4)
இலக்குமி
• அதன் பிறகு செந்திருவென்ற சுந்தர்மேல் ஆசை உண்டாயிற்று. அதாவது உலக வாழ்க் கைக்கு இன்றியமையாத செல்வத்தில் நாட்டமுண்டா யிற்று. அது உண்டான நாள் முதலாக எனக்கு இவ்வுலகத்துச் செல்வப் பொருளனைத்திலும் தணி யாத காதல் பிறந்துவிட்டது.
ஒரு நாளைக்குச் சிறிது பொருள் கிடைக்கும். அதனால் அன்று முழுதும் நான் மகிழ்ந்திருப்பேன். தொடர்ந்து சிறிது நாட்களுக்கு நான் பொருள் முட் டுப்பாடின்றி வாழும் சந்தர்ப்பங்களும் உண்டாகும். அப்பொழுதெல்லாம் நான் தலைகால் தெரியாது மயங்கித் திரிவேன். பின்பு என்ன தவறு செய் வேனோ அறியேன்; அந்தத் திருமகள் என்னைப் புறக் கணித்துவிட்டுப் போய்விடுவாள். பொருளின்றித் தவிக்கும் அவ்வேளையில் என் வாழ்வு சின்ன பின்ன மாகி, மனம் அழுங்கி, நான் படும் வேதனையைச் சொல்லமுடியாது.
'இந்தத் திருமகளின் எழிற் கோலத்தைப் பின். னர் எங்கெல்லாம் கண்டின்புறுவேன் தெரியுமா ? காட்டு வழியிலே, மலைக் காட்சியிலே, நீர் வீழ்ச்சி களிலே, பல நாட்டுப் புறங்களிலே, நகரத்து உயர்ந்த மாடங்களிலே, வேட்டுவருடைய குடிசைகளிலே, வீர ரிடத்திலே, வேந்தரிடத்திலே எல்லாம் செல்வம் நட

Page 33
54
• பாரதி பாடல்கள் மி டு வ  ைத க் கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போவேன்.
(7)
காளி
"இப்படி மகிழ்ந்தும், வருந்தியும், ஆச்சரியமடைந் தும் இருந்த என் உள்ளத்தில் உணர்வு பிறந்தது. உழைக்கவேண்டும்! அதுதான் எல்லாவற்றிலும் சிறந்தது. இறைவனின் படைப்புக்கள் எல்லாமே இயங்க வேண்டியவை; செயல்பட வேண்டியவை. உழைப்பே சக்தி. உழைப்பே பராசக்தியின் வடி வம். மனிதனுக்கு உழைப்பு இருந்தால் உலகில் எல் லாம் வசமாகும்.
(8)
உலகில் மனிதன் உழைத்தால் செல்வங்கள் பெருகும். தெளிந்த ஞானம் உண்டாகும். இரவு பகல் - என் றில் லாமல் இயற்கைப் பொருள் களிலே சூட்சுமமாய் - உணர்வு மத்திரையாய் - நின்று செயல்படுபவளை, (வில்லையசைப்பவள்) பிர பஞ்சத்தை இயக்கும் தொழிலுக் கதிகாரியான ஆதி சக்தியை, நம்மிடத்தில் தோன்றும் பிணி மூப்பு சாக்
காடு என்ற பயங்களைத் தொலைக்கும் அன்னையைத் 5ம் தோத்திரம் பாடி நாமெல்லாம் தொழுவோமாக. (9)

வெண்ணிலாவே! எல்லை யில்லாததோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே! - விழிக் கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே! சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே! - நின்றன் சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே! நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே! - (இந்த) நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே! கொல்லும் அமிழ்தை நிகர்த் திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே ! - வந்து கூடி யிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே!
மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே! - அஃது வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
வெண்ணிலாவே! காத லொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே! - அந்தக் காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே ! மீதெழும் அன்பின் விளைபுன்னகையினள்
வெண்ணிலாவே! - முத்தம் வேண்டிமுன் காட்டு முகத்தி னெழிலிங்கு
வெண்ணிலாவே ! சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
வெண்ணிலாவே! - நின் தண்முகந் தன்னில் விளங்குவ தென்னை கொல்?
வெண்ணிலாவே!

Page 34
56
பாரதி பாடல்கள்
நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே! - நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே ! மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே! - அந்த மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே! துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே! - இங்கு, தோன்றும் உலகவளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே ! பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே - நல்ல பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே!
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே! - நினைக் காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே ! சீத மணி ெநடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே! - நீ தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
வெண்ணிலாவே ! மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே! - நீ முத்தி னொளிதந் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே! தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே! - நலஞ் செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே !

வெண்ணிலாவே”
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் ?
வெண்ணிலாவே! - உன்றன் மேனி யழகு மிகைபடக் காணுது
வெண்ணிலாவே ! நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே! - மூடு
• நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
வெண்ணிலாவே ! சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
வெண்ணிலாவே! - நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே! புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே! - இருள் போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
வெண்ணிலாவே!
நின் தன் சோதி மயக்கும் வகை : உன் ஒளி மயக்கும் தன்மை. நல்ல ஒளி : நல்லறிவு. நனவு : விழிப்பு நிலையில் காண்பவை. கொல்லும் அமிழ்து : 'நான்' என்ற தன்மையை
அழிக்கும் அமிழ்தம்.
வயதில், கவலையில், நோவில் : வயது மூத்தலாலும், கவலையாலும், மன நோய் உடல் நோய் என் றிவற்றாலும். அன் பின் விளை புன்னகையின் நன் : அன்பினால் விளைந்த புன்ன கையினைப் போன்ற நல்ல. நிரந்தரம் : எப்பொழுதும்.
மன்னு பொருள் : நிறைந்த பொருள்கள். துன்னிய; நெருங்கிய. பெட்பு உற : பெருமை அடைய.
வெதுப்புவை : வாடச் செய்வாய். சீதம் : குளிர். தேசு : தேஜஸ் என்ற வடசொல்லின் திரிபு; ஒளி. மேலவர் : சான் றாண்மை உடையவர்.
மிகைபட : அதிகமாக. நல்லியலார் : நல்ல இயல்பு களை உடையவர். யவனத்தியர் : யவன தேசத்துப் பெண்

Page 35
58
பாரதி பாடல்கள்
> > ))
கள். (யவன தேசம் என்பது பழைய கிரேக்க உரோம அரபு நாடுகள்.) நற்றிரை : நல்ல திரை (மெல்லிய பாலாவியன்ன முக்காட்டுத் துணி). நாணுற்றனை : வெட்கினாய். புல்லி யன் : கீழ்மையான தன்மையுடைய நான். எழில் : அழகு.
வெண்ணிலாவே! எல்லையற்ற வானவெளி பெருங்கடல் போன் றது. வெண்ணிலாவே, நீ அக்கடலில் கண்ணுக் கினிய காட்சி நல்கும் தீவாக விளங்குகின்றாய். உன் சோதி நம் வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட தோர் உணர்வாய் நம்மை மதுவுண்டார் போல மயங் கச் செய்கிறது. நனவிற் கண்டவற்றையெல்லாம் மறக்கச் செய்வதற்கு உன்னொளி தவிர வேறு ஒளி வடிவங்களை நான் கண்டிலேன். 'நான்' என்ற தன் மையை அழித்துவிடும் அமிழ்தத்தை ஒத்த ஒரு மது உன் ஒளியோடு சேர்ந்து இவ்வையத்தை மூழ்கச் செய்திருக்கிறது.
(1) - வெண்ணிலாவே! பெண்களின் மு க த்  ைத உனக்கு இணையாகச் சொல்வது பொருந்தாது. அது மூப்பினாலும், கவலையினாலும், நோயினாலும் வாடும் தன்மையுடையதன்றோ ? அப்படிப் பெண்ணின் முகத்துக்கு இணையாகச் சொல்லத்தான் வேண்டு மென்றால், காதல் நிறைந்தவளாயும் இளையவளாயும் கா மன் வில் போன்ற அழகிய புருவங்களை உடையவ ளாயும் உள்ள ஒருத்தி அன்பினால் மலர்ந்த புன் முறுவலுடன் தன் காதலனிடம் முத்தம் பெறுவதற் குக் காட்டும் முகத்தின் எழிலை ஒருகால் கூறலாம். என்றும் குறைதலும் கெடுதலுமின்றி, நிரந்தரமாக வும் ஒரே தன்மைத்தாகவும் உன்னிடத்து விளங்கு வது எதுவோ ?

) 59
வெண்ணிலாவே' திருப்பாற் கடலிலே நீ அமுதத்தோடு சேர்ந்து பிறந்தாய் என்று புராணம் கூறும். ஆனால் நின் ஒளி வெள்ளமாகிய கடல் இந்தப் பிரபஞ்சத்தைப் பாலாபிஷேகம் செய்யும்போது நீயும் அமுதும் ஒன்றா கத் தோன்றுவதைக் கண்டிருக்கிறேன். உலகில், நிறைந்த எல்லாப் பொருளிலும் மறைந்து நிற்கும் மாயவனும் உன் ஒளியாகிய பாற்கடலில் துயில் கொள்வதைக் கண்டேன். இங்கு தோன்றும் உல கெல்லாம் பராசக்தியின் தோற்றம் என்பர் பெரி யோர். அவளுடைய கரிய திருமேனி யழகையும் உன் - ஒளியிலே கண்டேன். வெண்ணிலாவே! நெருங்கியடர்ந்த கருமேகம் போன்ற இறைவ னுடைய சடாமுடியிலே கங்கா தேவியுடன் நீயும் விளங்குதலைக் கண்டேன்.
(3
கருத்தொருமித்த காதலர் பிரிந்திருக்குங்கால் அவர் நெஞ்சத்தை வாடச் செய்வதும் நீ. உன்னை அன்பு செய்து உன் ஒளியாகிய அருள் வெள்ளத்தில் திளைப்பவர்க்கு நீ அமுதமுமாவாய்.. குளிர் மிகுந்த நவமணிகள் போலத் தாரகைகள் இலங்கும் வான மாகிய குளத்தில் ஒளி பொருந்திய தாமரை போன் றிருக்கின்றாய். உன் னை மோதித்தள்ளவென்று பாய்ந்துவரும் கருமேகக் கூட்டங்களை நீ முத்துப் போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்படி செய்கிறாய். தீமை செய்யவரும் கொடியவர்க்கும் நல்லருள் செய் வர் சான்றாண்மையுள்ளவர் என்பது உண்மை யன்றோ !
(4)
மெல்லிய மேகத் திரைக்குள் நீ மறைந்தாலும், வெண்ணிலாவே, உன் மேனியழகு மிகுதியாகக் காண்

Page 36
60
'பாரதி பாடல்கள் கிறது. நல்ல சாயலையுடைய யவனத்துப் பெண்கள் - பாலாவியன்ன மென் துகிலால் முக் கா டி ட் டுக் கொண்டபோதும் அவர் மேனியழகு பன் மடங்காகத் தெரிவதில்லையா ? (முழுமதி எழில் கோலங்காட்டி வானத்தில் பவனிவரும் காட்சியையும், பிரகிருதி முழு வதும் பாலாபிஷேகம் செய்யப்பட்டு மோகனத் துயில் கொள்வதையும் தனிமையிலிருந்து அநுபவித்துக் கொண்டே பாடி வருகிறார். அச்சமயம் கருமேகங் களுக்கிடையில் நிலா முழுதும் மறைந்து ஒரு கணம் இருள் சூழுகிறது. அதனால் கற்பனையில் ஒரு புதிய திருப்பமும் உ ண் டா கி ற து.) நான் சொன்ன வார்த்தைகளினால் உனக்கு நாணம் உண்டாகிவிட் டதா வெண்ணிலாவே? உன் சோதி முழுவதை யும் ஏன் மறைத்துவிட்டாய் ? கீழ்த்தரமாக நான் ஏதாவது சொல்லிவிட்டேனானால் என் பிழையைப் பொறுத்துக் கொள்வாய். இந்தக் கொடிய இருளை என்னால் சகிக்க முடியவில்லையே! நிலவே விரை வாக உன் சோதியைக் காட்டுவாயாக.
(5)

முரசு
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!
1. ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன் ; சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணை செய்ய வேண்டும்.
2. வேத மறிந்தவன் பார்ப்பான், - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான், நீதி நிலைதவ றாமல்- தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
3.
பண்டங்கள் விற்பவன் செட்டி--பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்
சோம்பலைப் போல் இழி வில்லை.
4.)
நாலு வகுப்பும் இங் கொன்றே;-- இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால், வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
5. ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை ; மற்றைக் கருமங்கள் செய்தே- மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை ;

Page 37
* பாரதி பாடல்கள்
ஏவல்கள் செய்பவர் மக்கள் ;- இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ? மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.
'': சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார், நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம் ; ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன் ; மண்ணுக் குள்ளே சில மூடர்- நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.
10. கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி
காட்சி கெடுத்திடலாமோ? பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.
11. தெய்வம் பலபல சொல்லிப் - பதைத்
தீயை வளர்ப்பவர் மூடர் ; உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.
12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-- நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர் கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்;

முரசு
63
13. யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்.
யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;- இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.
14. வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்; பிள்ளைகள் பெற்றதப் பூனை;- அவை
பேருக் கொரு நிற மாகும்.
15. சாம்பல் நிறமொரு குட்டி,- கருஞ்
சாந்து நிறமொரு குட்டி, பாம்பு நிறமொரு குட்டி,--வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
16. எந்த நிறமிருந் தாலும் - அவை
யாவும் ஓரேதர மன்றோ ? இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை ; எண்ணங்கள் செய்கைக ளெல்லாம்- இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.
18. நிகரென்று கொட்டு முரசே!- இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம் ; தகரென்று கொட்டு முரசே! -பொய்யைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.
19. அன்பென்று கொட்டு முரசே! - அதில் .
ஆக்கமுண் டாமென்று கொட்டு; துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

Page 38
64 ---
பாரதி பாடல்கள்
20. அன்பென்று கொட்டு முரசே!- மக்கள்
அத்தனை பேரும் நிகராம் ; இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.
21. உடன்பிறந் தார்களைப் போல-இவ்
வுலகில் மனிதரெல் லாரும் ; இடம்பெரி துண்டுவை யத்தில்- இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர் ?
22. மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு
வார்த்தே ஓங்கிடச் செய்வான்; சிரத்தை யுடையது தெய்வம்,- இங்கு
சேர்ந்த உணவெல்லை யில்லை.
23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! – இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும் ; பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.
24. உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லோரும் ; திடங்கொண் டவர்மெலிந் தோரை- இங்கு
தின்று பிழைத்திட லாமோ?
25. வலிமை யுடையது தெய்வம்,- நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம் ; மெலிவுகண் டாலும் குழந்தை- தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ?
26. தம்பிசற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி- மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

முரக்!
65
27. அன்பென்று கொட்டு முரசே!- அதில்
யார்க்கும் விடுதலை உண்டு ; பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார். 28. அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய் ; சிறியாரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும். 29. பாருக் குள்ளே சமத்தன்மை தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்கும் தீமை செய் யாது-புவி
யெங்கும் விடுதலை செய்யும்.
30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம் ; பயிற்றிப் பலகல்வி தந்து- இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
31.
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! - இந்த நானில மாந்தருக் கெல்லாம்.
நெற்றி ஒற்றைக் கண்ணன் : நெற்றியில் அக்கினியா கிய ஒற்றைக் கண்ணை உடைய சிவன். நிர்த்தனம் : ந: - னம். நித்த்சக்தி : நித்தியமான சக்தி தெய்வம், பராசக்தி. சீருக்கு: அற முதலாகிய மனித குல நற்பண்புகளுக்கு. வேதம் : திரு மறைகள். வித்தை : கலைகள்.. தண்ட நேமம் : கெட்ட வரை அழித்தலும், நல்லவரைக் கா த்தலும். நாய்க்கன்: அரசாட்சி செய்பவன். தொண்டர் : அடிமைகள். வேலை : உலக நடைமுறை. மனை : இல் (வீடி). வையம் : உலகம். ஆதரவு : அன்பு. துருக்கர் : துருக்கி தேசத்தவர், ('இஸ் லாம் சமயத்தவர்.) வண்ணங்கள் : நிறம்; சாதிப் பிரிவு என்

Page 39
66
பாரதி பாடல்கள்
பதுமாம். நீணிலம் : (நீள் + நிலம்) இடமகன்ற பூமி. தகர்: தகர்த்துவிடு. ஆக்கம் : செல்வம், சூதுப் பிரிவுகள் : வஞ் சனை சூழ்ச்சிகளால் உண்டான பிரிவுகள். இடம் பெரிது : விசாலமான இடம், ஏ துக்கு : எதற்காக. சிரத்தை: முயற்சி (கவனம்.) திடம் கொண்டவர் : வலிமையுடையவர். மெலிந் தோர் : ஏழைகள். செம்புக்கும் கொம்புக்கும் : சிறு காசு களுக்கும் அடக்கு முறைக்கும். சிற்றடிமை : அற்பத்தனமான அடிமைத் தன் மை. பதம்: உயர்வு. ெதாடர் பற்றும் : தொடர்புகளை உண்டாக்கும். நானிலம் : நால்வகையான. நிலம். (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்).
முரசு
சக்தி உள்ளன எல்லாம் பாரதியார் போற்றுத லுக்குரியவை. அவருடைய வாழ்விலே உழைப்பும், விடுதலை வெறியும் தலைதூக்கி நின்றன. அடிமைப் பட்ட நாட்டைக் கண்டு எப்பொழுதும் குமுறியபடியே வாழ்ந்தார். அவருடைய உணர்ச்சி எரிமலை போன் றது. பேரிகையின் முழக்கம் அவர் உள்ளத்துக்கு உற்சாக மூட்டியது. அதன் ஓசை கேட்கக் கேட்க அவருடைய உள்ளமும் துடித்தது நாட்டின் விடு தலைக்கு எவையெல்லாம் தேவையோ அவற்றையெல் லாம் பேரிகையின் முழக்கம் அவருக்கு உணர்த்தியது. இப்படிப் பேரிகை முழக்கத்தினால் உந்தப்பட்ட உணர்ச்சிப் பிரவாகம்தான் "முரசு'' என்று முப்பத் தொரு பாடல்களாக உருவெடுத்தது. பேரிகையின் ஒலிக்கேற்ப அவர் எதுகை அமைத்திருப்பதை இசை யோடு படித்தால் தான் அறியலாம்
பொருள் சொல்வதற்கு வசதியாக இப்பாடல் 'கரைச். சிறு பிரிவுகளாக வகுத்துக் கொள்வது நல்லது.

முரசு
500
மேல்வரும் உரை விளக்கங்களில், ஒவ்வொரு பந்தியும் இன்னின்ன பாடல்களுக்குரியன் என்று ஈ ற் றி ல் காட்டப்பட்டிருக்கின்றன. " "எட்டுத் திக்கிலும் நம் நாடு பெற்ற சுதந்திர வெற்றி எட்டுக. வேதம் வாழ்க. இறைவனும் அவ னுடைய அநந்த சக்தியும் வாழ்க.'' இப்படியெல்லாம் சொல்லி முரசே, நீ கொட்டி முழக்கு!
மனித வாழ்வுக்கு இன்றியமையாதது ஒழுக்கம். அதற்கு முதற்கண் வேண்டப்படுவது தெய்வ சிந் தனை. அதுவே நமக்குத் துணை செய்ய வேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் உண்மை இதுதான். அதனால் ஊருக்கும் உலகத்துக்கும் நல்லதைச் சொல் கிறேன். வேதங்கள் கலைகள் என்பவற்றைத் தான் படிப்பதையும் மற்றவர்க்குச் சொல்லிக் கொடுப்பதை யும் தொழிலாகக் கொண்டவன் எவனோ அவன் அந்தணன். உலகில் நீதியை நிலை நாட்டி அநீதியை வேரறுத்துச் செங்கோல் செலுத்தும் பணியில் ஈடு பட்டவன் அரசன். பொருள்களைக் கொண்டு - கொடுத்து நாட்டின் பசிப் பிணியைப் போக்குபவன்' வணிகன். தொழிலில் சோம்பலின்றி நாட்டுக்கும் சமு தாயத்துக்கும் உழைப்பையே தன் பங்காகக் கொடுப். பவன் வேளாளன். அடிமை, தொண்டுசெய்பவன் - .. என்று ஒரு பிரிவுமே கிடையாது. எத்தொழிலா யினும் அதில் சோம்பல் தலைகாட்டுமானால் அதைப் போல இழிவு வேறில்லை. மேலே சொல்லப்பட்ட நாலு வகுப்பும் ஒன்றேயாகும். இந்த நான்கினில் ஒன்றுக்குக் குறைவேற்பட்டாலும் உலக நடைமுறை

Page 40
68
> பாரதி பாடல்கள் கெட்டுவிடும். அதனால் அழிவது அந்த ஒன்றன்று; மானிடச் சாதி முழுவதுக்குமே அழிவுதான். (1-4)
ஒரு குடும்பத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அதிலே பொருளைச் சம்பாதிப்பது தந்தையின் கடன். வீட்டிலே உள்ள மற்ற வேலை களைக் கவனித்து இல்லத்தைச் சீரும் சிறப்புமாகத் தாய் பாதுகாக்கிறாள். சிறுச்சிறு பணிகளை அன்னை தந்தையர் ஏவிய வழியிலே குழந்தைகள் செய்வத னால் இல்லம் நிறைவு பெறுகிறது. இவ்வாறாக எல் லோரும் ஒன்றாக இன்பமாக ஒரு குடும்பம் நடத்து வதை நாம் காண்கிறோம். இதுவன்றிச் சாதிப் பிரிவு களையும் இது கீழானது அது மேலானது என்ற தரா தரத்தையும் சொல்லி மானிட வர்க்கத்திலே நீதி நெறி யைப் பிரிப்பவர் வீண் சண்டைக்காரரேயன்றி வேறல் வர். ஆகையால் மாந்தர்களே, நமக்குச் சாதிக் கொடுமைகள் வேண்டா. அன்பினால்தான் உலகம் செழிக்கும். அவ்வன்பையே பற்றி, நம் வாழ்வை அமைத்துக் கொண்டு, அவரவர் தகுதிக்கேற்ப ஆயி ரம் தொழிலைச் செய்து பெருமையடைவோமாக.
(5- 8)
உலகினைப் பேணிப் பாதுகாக்கும் இறைவன் • பெண்ணுக்கு நல்ல அறிவைக் கொடுத்திருக்கிறான். ஆனால் பூமியிலே தோன்றிய சில மூடர் பெண்களை அடிமைகளாக்கி அவர்கள் அறிவைக் கெடுத்தார்கள். கண்கள் இரண்டு நமக்கு உண்டு அதில் ஒன்றைக் குத்தி அருமந்த காட்சி இன்பத்தை இழப்பவர் யாரும் உள ரோ. ஆண், பெண் என்பன உலகின் இரண்டு கண்கள். பெண்கள் அறிவை வளர்க்கவேண்டும்.

முரசு
69
ஆண் மட்டும் புத்திசாலியாக இருந்தால் போதாது. பெண்ணும் நல்லறிவுள்ளவளாக இருந்தாலன்றோ உலகில் அறியாமை மறையும் ?
(9-10)
உலகெங்கும் வியாபித்துத் தானே அதுவாகி விளங்கும் பரம்பொருள் ஒன்றேயாகும். ஆனால் அத னைப் பலவாகச் சொல்லிப் பகைத் தீயையன்றோ வளர்க்கின்றனர், மூடர்? அக்கினியை வணங்குகிறார் கள் பிராமணர். முஸ்லீம்கள் நியமந் தவறாமல் திக்கு நோக்கி வணக்கம் செலுத்துகிறார்கள். கோயிலிலே தியாகத் தின் சின்னமான சிலுவைக்கு முன் வீழ்ந்து வணங்குகின்றனர் ஏசுபிரானைப் பின்பற்றுபவர்கள். இப்படிப் பலரும் வணங்குவது அந்தப் பரம்பொருள் ஒன்றையே யன்றோ? உலகிலே தெய்வம் என்பது ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவர் ஒவ்வொரு வித மான சமய அநுஷ்டானத்தைக் கைக்கொள்கின் றனர். இதற்காக வீண் சண்டைகள் வேண்டிய தில்லையே!
(11-13)
வேடிக்கை ஒன்று கேட்கிறீர்களா ? வெள்ளை நிறமுள்ள பூனையொன்று எங்கள் வீட்டிலே வளரு கிறது. அது நாலு குட்டிகள் போட்டது. ஒன்று சாம்பல் நிறம், மற்றது கருஞ்சாந்து போன்ற நிறம், இன்னொன்று பாம்பு நிறம், நாலாவதோ பால்போல ஒரே வெள்ளை, இவற்றில் எதைத் தாய் விரும்பும் ? எந்த நிறமாக இருந்தாலும் தாய்ப் பூனைக்குத் தன் குட்டி பொன் குட்டியே யன்றோ! எல்லாவற்றையும் ஒன்றாகவே அது கருதும்; பாலூட்டும்; நக்கும்; நாவி னால் நீவிவிடும். இது கறுப்பு, அது வெள்ளை என்று பூனைகூடப் பார்ப்பதில்லை. மானிடன் தான் இந்த

Page 41
10 -->
பாரத தேசம்
"ன்
வித்தியாசத்தைப் பார்க்கிறான். தொழில் காரணமா கப் பிரிவு ஏற்படுவதால் ம னி தர் கீழ் என்றும் மேலென்றும் வேறுபட்டுவிடுவார்களா ? மன எண் ணம், செய்கை, இவையெல்லாம் மனிதர்க்கு ஒன்றே. 'நாமெல்லாம் ஒரே தன்மையானவர்; சரிநிகர் சமான மானவர். பொய்யான சாதி வழக்கத்தைத் தகர்த் | தெறி' என்று முரசே! நீ முழங்கு. - (14-18)
வஞ்சனையும் சூழ்ச்சியும் நம்மிடையே இருந்து அகலவேண்டும். இவ ற் றா ல் நம்மவர்க்கிடையே உண்டாகும் பிரிவுகளும் பகைமைகளும் மறைந்தால் தான் நன்மை உண்டு. நம்மையெல்லாம் ஒன்றாகக் கட்டிக் காப்பது அன்பு ஒன்றே. அன் பினா லே நமக்குச் செல்வமும் பிற தேட்டங்களும் சேரும். மக்களெல்லாம் ஓரினம்; அத்தனை பேரும் ஒருவருக் கொருவர் நிகரானவர். நம் நாட்டார் வேற்று நாட் டார் என்று பிரிவு காட்டாமல் ஆண்டவன் படைப் பில் மக்கள் எல்லாம் ஓரினம் என்று அன்பு கொண்டு நடந்தால் உலகில் எல்லா வகையான இன்பங்களும் பெருகும். இடமகன்றது இந்தப் பூமி. இதில் நாம் சண்டையிடாமல் உடன் பிறந்த சகோதரர் போல் வாழலாமே! மரத்தை நட்டவன் அதற்குத் தண் ணீர் வளர்ப்பான். அதுபோல நம்மையெல்லாம் படைத்த தெய்வம் நமக்கு வேண்டிய உணவையும் எல்லையில்லாமல் இவ்வுலகில் சேர்த்து வைத்திருக் கிறது. அதனால் இங்கு வாழும் எல்லோர்க்கும் 'வயிற் றுக்குச் சோறுண்டு. பூமியை நன்கு உழுது உண்டு வழமுடியும். பிறருடைய பங்கைத் திருடவேண்டிய தில்லை. ஒருவர் வீட்டில் புகுந்து திருடுவதும் பிற

முரசு )
ருக்குச் நேர வேண்டியதை அவர் அடையாதவாறு தடுத்துத் தான் பதுக்கிக் கொள்வதும் ஒன்றுதான்.
க (19-23, 11 மனித குலத்தில் பிறந்தவரனை வரும் இறைவ னின் மக்கள். இவரெல்லாம் உடன் பிறந்தவர்களைப் போல்வர். இப்படி இருக்க வலிமை மிக்கவர் மெலிந் தோரை வருத்தி, அவரிடம் உள்ளதைத் தட்டிப் பறித்துத் தாம் அநுபவிப்பது நீ தியாமோ ? நம் எல்லோரிலும் வலிமை மிகுந்தது தெய்வம். அதுவே நம்மை வாழச் செய்கிறது. இவ்வுண்மையை அறி யாமல் 'மற்றவருடைய வாழ்வும் தாழ்வும் நமது கையில் இருக்கின்றன' என்று சிலர் தம் பதவிப் பெரு மையால் எண்ணிவிடுகிறார்கள். நம் குழந்தைக்கு நோய் வந்துவிட்டது. மெலிந்துவிட்ட அதனை வீழ்த் திக் காலால் உதைத்துத் தள்ளவேண்டும் என்று நம் மில் யாராவது எண்ணுவதுண்டா ? ஆனால் மமதை கொண்ட சிலர் மனிதாபிமானம் அற்று நடந்து கொள்கிறார்களே! தம்பி  ெம லி ந் து போனால், நொந்து போனால், அவனை நான் அடிமையாக்குதல் முறையாகுமா? பணத்துக்கும் அடக்கு முறைக்கும் பயந்து நாம் அடிமை வாழ்வு நடத்துதல் இழிவே யன்றோ!
-(24-26)
மனித குலத்தில் அடிப்படைக் கொள் கை அன்பு செய்தல் அதனால் எல்லோர்க்கும் விடுதலை உண்டு. அன்பினாலமைந்த இன்ப வாழ்வு கண்டோமானால் கல்வியறிவு வளரும் உலகில் நாமும் மற்றவர்களைப் போலத் தலை நிமிர்ந்து வாழ்வோம். நாம் நமது அறிவை வளர்ப்பதோடு நம்மவரிடையேயும் அறிவு

Page 42
106)
பாரதி பாடல்கள்
வளரச் செய்யவேண்டும். நம்மில் அறிவு' குறைந்த வரை அறிவு பெறச் செய்தோமானால் நமது சமுதா வத்தைத் தெவ்வம் ாெழ்த்தும். பூமியிலே மக்களாகப் பிறந்தவர் ஒருவர்க்கொருதர் உயர்வு தாழ்வு கற்பியா மல் உடன்பிறந்தார் போல யாருக்கும் தீமையின்றி வாழ்ந்தோமானால் நமது பிறப்புரிமையான சுதந்திரம் நமக்குக் கிட்டும். அகில உலகத்து மக்களுக்கும் விடு தலை உண்டு.
- (27- 29)
உள்ளவர் இல்லாதவர்க்குக் கொடுத்து உலகிலே பொருளாதார சம நிலையை உண்டாக்கவேண்டும். எல்லார்க்கும் உணவு கிடைக்க வழி செய்யவேண்டும். மனிதரெல்லாம் பலவகையான கல்விகளைக் கற்று
அறிவு பெறவேண்டும். அதனால் இந்தப் பூமியில் வாழும் மக்கள் உயரவேண்டும். எல்லோரும் ஓரினம். அன்பினால் இந்த இனம் ஓங்குக. எங்கும் நன்மையே சூழ்க! இந்த நானில மாந்தர் நலம் பெற்று வாழ்க! என்று முரசே! நீ முழக்கம் செய் ! - (30-31)
முதலும்

:..
* v s
- - - " · 1 & ਗਏ
... 1.. ਨ ਆ ਨੇ , 1 2 3 , , ,
ਆ, 2 ਨੂੰ
ਆ ਰਾ

Page 43
4 )