கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜேந்திரன் கவிதைகள் 1968

Page 1
விஜயே
க வி ை
FCC - 97 9ே

ந்திரன
த க ள்
13
N ..

Page 2

சி,கந்தசாமி.
விஜயேந்திரன் கவிதைகள்
4 ஃ, 3, 5)
PE/) EA PLALI VWE97
---11% Y E #
கவிஞர் விஜயேந்திரன்
வெளியீடு : யாழ். வள்ளுவர் தமிழ் மன்றம்
விலை ரூபா 1 - 00

Page 3
முதற்பதிப்பு 1968 தைத் திங்கள்.
அர்ப்பணம்
தெய்வீகப் பிரேமை வானில் கலந்து எம் நினைவில் நீங்காது நிலைத்துவிட்ட சகோதரி
விஜயலட்சுமிக்கு
தெல்லிப்பழை கு க ன் அச் ச க ம்

பதிப்புரை
நூற்றுக்கணக்கான பாடல்களை மிக இளம் வயதிலேயே எழுதிக் குவித்துவிட்ட நண்பர் விஜயேந்திரன், உண்மையாகவே கவி யுள்ளம் படைத்த நல்ல கவிஞராவார். அவரது ஆற்றலுக்கு ஈழத்தின் முன்னணிக் கவிஞர் 'மஹாகவி ஃயே சான்று கூறியபின்பு நான் என்ன கூற இருக்கிறது ? நண்பரின் கவிதை களில் நாற்பது கவிதைகளை மட்டும் முதற்கண்
தெரிந்து,
அவற்றை எங்கள் - யாழ். வள்ளுவர் தமிழ் மன்றத்தின் சார்பில் வெளி யிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இக் கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து இந்தக் கவிஞரின் ஏனைய கவிதைகளும் - நாவல்களும் - சிறு கதைகளும் நூல்வடிவில் வெளிவரும் என்பதை, கவிஞனை - எழுத்தாளனை மதிக்கத் தெரிந்த இரசிகர் வட்டத்திற்குத் தெரிவிப்பதிற் பெரு மிதப்படுகிறேன்.
இ. மகேந்திரன் பதிப்பாளர்

Page 4
நயவுரை
' பாட்டினில் ஈடு பட்டோர்
பழுதன்றோ புரிகின் றார்கள்; வீட்டுக்குக் கவி வா லாயம் விசனத்தைக் கொணரும்! ' ' என்று பாட்டிகள் கூற லாம். பாப் படிப்பது பழிப்பே என்று நாட்டிய காலம் ஒன்று நடந்து, இன்று வேறு நாளாம்.
பா என்றால் சுவைக்கத் தக்க பண்டமே!'' என்ற காண்பு நாம் இன்று வளர்ந்து விட்டோம் நன்னிலைக் கென்று காட்டும், ஆம்!... அன்று...!!.... மேலே கூட அன்பர்கள் செல்லல் வேண்டும்,
பா என்றால் எழுதத் தக்க பண்டம். இன் றெவர்க்கும் ஆக்கி!
''இவர்கள் பா எழுது வார்கள்;
இவர் அதைச் சுவைப்பார்!'' என்று சுவர்கட்டி, உயர்த்தித் தாழ்த்திச் சொல்கின்ற நிலை போய், ' 'மக்கள் எவரும் பா எழுது வார்கள்; எவரும் பா சுவைப்பார்!'' என்ற நவநிலை ஒன்றைக் காண நாங்கள் முன் னேறல் வேண்டும்.

வேண்டிய முன்னேற் றத்தை விளைத்திட விழைந்து நிற்கும் ஆண்டகை யாளர்க் குள் இவ் வாசிரி யரையும் சொல்வேன். காண்டகு பொருள்கள் யாவும் கண்டிவர் கவி செய் கின்றார். வேண்டுக நூலைத்; தந்த
விலைக்கது மலிவே ஆகும்.
காதலும் தமிழும் அந்தக் கடவுளும் பிறவும் வந்து காதிலே நோகா வாறு கவிதையாய் அமைதல் காண்போம்.
பா தரு கின்றார்; ஈது பண்பான பொழுது போக்கே! ஆதலால் அவரை வாழ்த்தி ஆக்கத்தை நயப்போ மாக!
நீழல், அளவெட்டி, 19 - 12 - 1967.
--11 மஹாகவி

Page 5
கவிஞனுரை
பன் நூற் றாண்டுகளாய் பாங்கோ
டொளிர்கின்ற அன்னை தமிழினிலே அடியேன் கவிசெய்ய எண்ணிய போதெல்லாம் எனக்கு நல்லாசி தன்னைத் தந்தின்று தரணிமிசை கவியாய் என்னை யாக்கிய எண்ணத் தூயர்க்கு நன்றிதனை உள்ளால் நயந்து சொல்லியிச் சின்னஞ் சிறுநூலின் வண்ணப் பாக்களையே வியந்து போற்றித்தன் வியனா ரறிவாலே நயந்து உரைதந்த ' ' மஹாகவி '' ஞர்க்கும் என்றன் பற்றுதலை எடுத்துக்காட்டி நிதந் தாயைவிட மேலாய்த் தயவோ
டெனைக்காக்கும் தூயனென் வாழ்வின் துணைவன் இந்திரனின் நேயமொன் றாலிந் நூலே ஆனதென விள்ளி நும் மிடத்தில் விடையைப்
பெறுகின்றேன் கொள்வீர் என்பாவைக் கோலம் இருந்தாலே !
“' விஜயேந்திரன் '' (இ. இராஜேஸ்வரன்)

டெ குகமயம்
முருகா அருள்வாய்!
அருள்கொண்டு உள்ளுருகும்
- அடியார்கள் நெஞ்சத்தின் இருள்போக்கும் ஒண்சுடரே!
இதயத்தின் பேரெழிலே விரிகடலின் அலைபோல
விம்மும்பல் லுணர்விடையும் செறிவுற்று மிளிர்கின்ற
செந்தமிழர் செவ்வேளே ! '
தந்தைக்கு உபதேசம்
- தனைச் செய்த தணிகைவாழ் கந்தாவுன் அருள்போலிக்
காசினியில் இன்புண்டோ ? சிந்தைக்குள் தித்தித்தே
அன்பென்றும் தமிழென்றும் விந்தைபல் லின்பத்தை
விளைப்போனே அருள்வாயே !

Page 6
தமிழே!
உனைமறவேன்!
விண்ணும் மண்ணும் எதிர்த்தாலும் விளங்கும் இறைவன் மறுத்தாலும் எண்ணில் லாத துன்பமெலாம் என்னை வாட்டி வதைத்தாலும் கன்னித் தமிழே என் கருத்தில் கலந்த உந்தன் நற்காதல் எண்ணம் மட்டும் எந்நாளும் என்னில் வாழும் அறிவாயே!
அலைகள் பொங்கும் கடலினிலே அடியேன் தன்னை உலகோர்கள் விலையில் லாத வீணனென வீசு கின்ற வேளையிலும் அழியா நினைவு என்கின்ற அற்புதத் தன்மை யாலென்றும் களிதான் சேர்க்குந் தமிழேயுன் காதல் மறவேன் நானம்மா!
ஏனிந்த இழிவு ?
அன்னை தமிழுக் காய் ஆன்ற தொண் டாற்றும் எண்ணம் மிகும் பேர்க்கு

என்றன் வணக் கத்தை
முன்னஞ் சொல்லி நான் முனைவன் என் பணியில்.
உதிரந் தனைப் பாலாய் ஊட்டி வளர்த் தவளும்
அதிரும் வாறு மகன் அறிவு இழந்தது போல் மதுர மிகுந் தமிழின் மாண்பை அறி யாது புதிராய் வாழ்கின் றார் புல்லார் சில்லார் கள்.
*
மேற்கின் நாட் டவரும் மேதினி வாழ் பிறரும் ஏற்றம் உடைத் தெங்கள் எழிலார் தமிழ் என்று போற்றி மெய்ம்மை யாய் புகழ்ந்த பின் கூடத் தூற்று கின்றார் இவர் தூய எம் மொழியை.
சங்கப் பஞ்சணை மீதினிலே சாய்ந்த புகழாந் தலைமகனைக் கொஞ்சிக் களித்த செந்தமிழே கோலமார்ந்த குல விளக்கே வஞ்ச மதியார் உறவாலே வாய்மை இழந்த உன் மக்கள் அஞ்சு கின்றார் உனைத்தாயாய் அகத்தில் போற்றிக் களித்திடவே!

Page 7
நேற்று வந்த வேற்றுமொழி நினைவால் உன்றன் சீர் நீங்கிச் சாற்றக் கூசும் வார்த்தைகளைச் சாற்று கின்றார் உனக்கம்மா ஏற்றம் இல்லா மூடரிவர் எழிலாந் தாயே உனைமறந்து தூற்றும் வாறே ஏனாமோ தூய்மை இன்றி வாழ்கின்றார்.
தமிழை மறவாதே! துப்பாக்கிக் குண்டுந்தன் நெஞ்சந்தன்னைத் துளைக்கின்ற வேளை தான் வந்தபோதுந் தப்பாது நீசற்றுந் தலைவணங்காது தமிழ்வாழி எனவீறாய் முழங்கல்வேண்டும்.
வெஞ்சிறையில் உணவின்றி வாடுகின்ற வேளை தான் உன்வாழ்வில் நேரும்போதும் அஞ்சாது நீசற்றும் அடிபணியாது அன்னை தமிழ் வாழியென முழங்கல் வேண்டும்.
இல்வாழ்வு பெரிதல்ல எந்தன் தமிழா இதயத்தில் கலந்தஎம் தமிழே பெரிது எவ்வளவு துயரங்கள் வந்தாலென்ன ? எழிலார்ந்த தமிழ்வாழ்த்தும் நெஞ்சம்
வேண்டும்.
ஆழ்கடலில் தூக்கியுனை எறிந்தபோதும் அன்னை தமிழ் வாழியென முழங்கல்வேண்டும்

ஏழ்புவியும் சேர்ந்துன்னை எதிர்க்கும்போதும் ஏற்றமிகுந் தமிழ்வாழ்த்த மறத்தல்
வேண்டாம். எழுக தமிழா! கெடுமதி யாளர் கேண்மை என்னும் படுகுழி வீழ்ந்து பண்பை இழந்து பொய்ம்மை தன்னை மெய்ம்மை யாகக் கண்டு நெஞ்சிற் கொண்டு வாழும் என்றன் தமிழா தமியேன் கருத்தைச் சிந்தை செய்க! சீர்மை உறுக! கல்லும் மண்ணுந் தோன்றும் முன்னால் ககன வெளியின் விரிவை நேர்த்தச் சொல்லற் கரிதாம் புகழைப் பெற்றுச் சோபை யுற்றுத் திகழுந் தமிழை
ஆசிய வெளியில் மந்தை மேய்த்த ஆரிய மூடர் அறியாத் தனத்தால் பழித்த லோடு நின்றா ராமோ? பாடை ஏற்றப் பார்க்கின் றாரே!
சேர சோழ பாண்டிய ரோடு நேரில் நல்ல புலவர் பல்லோர் போற்றிப் புகழ்ந்து காத்த தமிழை மந்தை மேய்த்த மந்தைக் கும்பல் சிந்தை யாலுஞ் செயலி னாலும் நிந்தனை செய்ய நீயோ அதனை வந்தனை செய்தல் ஒப்புஞ் செயலோ ! இத்தனை நாளாய் இதமே மிக்க முத்தனை தமிழின் முதன்மை அறியா மூர்க்க ருறவால் யாவும் இழந்த

Page 8
என்னருந் தமிழீர் ! எழுக! எங்கள் கன்னற் தமிழைப் பழிப்பார் ரத்தக் கடலில் மிதக்கும் வகையே செய்ய!
தமிழுக்காய் மாய்தல் நன்றே! கல்தோன்றி மண்தோன்றும் முன்னே தோன்றிக் கற்றோரும் மற்றோரும் போற்றும் வாறு சொல்லரிய புகழ்பெற்றுத் திகழ்ந்த என்றன் சோபைமிகு தமிழின்று சிறுமை மிக்கப் புல்லர்தம் சூழ்ச்சிக்கே இலக்கா யாகி புனிதந்தான் மிகக்குன்றி வாடி நிற்க உள்ளத்தை இரும்பாக மாற்றி நீயும் உலகத்தில் ஏன் தமிழா வாழ்கின் றாயோ ?
தாய்த்தமிழின் கற்பினைத் தான் சூறை யாடத் தணியாப்பெரு விருப்பினொடு காத்து நிற்கும் நாய்கட்கே சிற்றடிமை யாகி நீயும் நற்றமிழை விற்றிடுதல் நீதி யாமோ ஆய்ந்து நான் சொல்கின்றேன் இனியும் நீயே அடிமையென வாழ்ந்திடவே வேண்டாம்
- இன்றே மாய்ந்திடவே சேர்ந்தாலுங் கவலை நீக்கி மாண்தமிழின் திருவுக்காய் மாய்தல் நன்றே.
S/தமிழ்)
12 வாழ்கிS)

மெளனியாவார்!
தமிழ் என்று சொல்கின்ற -- போதினிலே நெஞ்சில் தடை கடந்த வெள்ளமதாய்
மேவுதடி இன்பம் அமிழ் தனைய செந்தமிழை
மறந்தாலோ கோடி அல்ல லவை என்றனையே
கொல்லுதடி தோழி !
அந் நாளில் என் தமிழாள்
அழிவில்லா மேன்மை அணி யெனவே கொண்டுலகில்
வாழ்ந்தாளே தோழி இந் நாளில் ஏனிந்த
இழிமையினை உற்றாள் இதயந் தான் இரும்பான
தன்புத்ர ராலோ ?
தாய் மொழியை மறந்துலகில்
வாழ்கின்ற தமிழர் தன் மொழியின் உயர்வினையே
உணர்ந்தாலே தோழி வாய் வந்தபடி எம்மைவை து
நிற்கும் நீசர் வாய் மூடி மெளனியராய்
ஆவாரே தோழி.

Page 9
ஏற்றுக காதல் தீபம்
புன்மை சூழிவ் வுலகத்தில் புனித காதல் விளக்கேற்றி இம்மை யோடு மறுமையும் இன்பஞ் சுகிப்போம் வாரீரே.
காதல் போலிவ் வுலகினிலே களிப்பைத் தருவது வேறென்ன போதும் போதும் எனும்மட்டும் போதை தருவது காதலடா.
காதல் இல்லா நெஞ்சமது கதிரோன் இல்லா வானன்றோ
ஆதல் அன்ன பண்பாலே ஆர்வம் உறுமின், காதலிலே.
என் செய்தாள் ?
முத்தில் மோகனப் பல்லெடுத்து முழுமதியன்ன முக மெடுத்துக் கத்துங் குயிலின் குரலெடுத்துக் கன்னல் வண்ண மொழியெடுத்துச் . சித்தந் தன்னைக் கொண்டதன்றிச் சித்திரப் பாவை என்செய்தாள்.

வேலி லிரண்டை விழியாக்கி வேதனை தன்னை என தாக்கிப் பாலின் வண்ண நகைசிந்திப் பார்வை தன்னால் எனையிந்த ஞாலம் மறப்பித் ததுவன்றி ஞானப் பாவை என் செய்தாள் ?
* நினைவில் நிலவு முகமிருத்தி நிறையும் கற்பனை மீதிருத்தி என துள் நெஞ்சின் அறையெல்லாம் ஏக்கம் தன்னைப் புகவிட்டுத் தனதோர் நினைவைச் செய்ததனால் தவிப்பை அன்றி என் செய்தாள்?
1 1 1
தவிப்பு
அலை புரண்டு வருகுதடி ஆழ் கடலின் மீதில் பெரும் ஆழ் கடலின் மீதில் நிலை கெட்டுப் போன தடி நீசன் என துள்ளம் - அந்த நீள் கடலைப் போலே !
புயல் அடித்து ஓங்கு தடி புது வேகத் தோடு - எங்கும் புது வேகத் தோடு மய லாலே என்மனமும் மதி கெட்டுப் போச்சே - புயலால் மதி கெட்டுப் போச்சே.

Page 10
10
இடி இடித்து மழை எங்கும் பொழி யு தடி தோழி - வீறாய்ப் பொழி யுதடி தோழி உடை வுற்ற என் நெஞ்சம் உத் வேகங் கொண்டு - பொங்கி உழல் வதைப் போலே !
வருக! செங்கதிரோன் மேற்கின் குகை மறைகின்ற
நேரம் சேர்ந்தபட்சி யாவையுமே கூடடையுங் காலம் வெங்கானற் பரப்பாக என்னிதயம் வேகம் வேல்விழியாள் என்னருகே வரவில்லை அம்மா!
ஆநிரைகள் மீழுகின்ற அந்தியான வேளை அழகு நிலா வானத்தே பவனிவரும் மாலை ஏனென்றன் சகியின்னும் வரவில்லை நெஞ்சம் எரிநெருப்பில் விழுந்தவொரு மெழுகாயிற்
றம்மா!
பூங்காற்றும் என்றனுக்கே புயலாயிற் றன்றோ ! புது நிலவும் தீகாக்கும் எரிமலையாயிற் றன்றோ ! ஏங்குமென துள்ளமெனிற் கனலாயிற் றன்றோ ! ஏக்கந்தான் எனை வாட்டும் எமனாயிற் றம்மா !
காமத்தீ என் உயிரைக் கொல்லுதடி பெண்ணே ! கண்டார்கள் நாவென்னை எள்ளுதடி கண்ணே ! ஏமத்தை விளைக்கின்ற என்ஜீவ வடிவே ! என் பிணமே உன்றனுக்கு வருகைசொல்லும்
--
வருக !

உணராளோ? உறுதுயரை!
கண்கள் என்னும் வேலாகக் கன்னி என்றன் நெஞ்சத்திற் புண்ணைத் தோற்றி விட்டாளே புழுவாய்த் துடித்து நான்சாக.
வட்ட மதிய முகத்தாலவ் வனிதை - என்றன் உள்ளுணர்வில் எட்டா மர்ம ரகஸ்யத்தை எரிய விட்டாள் நெருப்பாக.
விரிந்த பூவின் புன்னகையால் விள்ளற் கரிய விசனத்தை உரிதாய்ச் செய்தாள் அக்கன்னி உழல்விக் கின்ற மோகமென.
- * துடிக்கும் என்றன் நசைவுகளைத் துள்ளும் உள்ளப் பிரேமையினை வடிக்கும் தமியேன் கண்முத்தை வஞ்சி அவளே உணராளோ ?
காதல் விரோதிகள்!
அழிவிலா இன்பம் யாவும் அளித்திடுங் காதல் தன்னை விழியிலாக் குருட ரெல்லாம் வீணென்று சொல்லு கின்றார்

Page 11
12
தெளிவிலா மதியா ரன்னார் தெளிந்திடும் நாளே காதல் வழியிலே செல்வார் தம் மின் வாட்டங்கள் நீங்கும் நாளாம்.
சாதியை மதத்தைக் காட்டிச் சால்புடைக் காதல் தன்னை நீதிக்கு ஒவ்வா தென்றே நீசர்கள் இயம்பு கின்றார் பூதல மீதி லென்றும் புனிதமே யாகி நிற்குங் காதலை ஏனோ இந்தக் கயவர்கள் வெறுக்கின் றார்கள்?
ஏன் பிறந்தாய்?
விண்ணை நோக்கும் விழியெல்லாம் விரைந்து மண்ணை நோக்கிடவோ கன்னி நீயும் வெண்ணிலவைக் கனிந்த முகமாய்த் தான் பெற்றாய். முத்தைப் பெறவே ஆழ்கடலில் மூழ்கும் அந்தப் பேரெல்லாம் சித்தந் தெளிந்தார் என்தோழி.
சீரிய உந்தன் நகைகண்டார்.
*
மானைக் கண்டோம் என்போரும் மலரைக் கண்டோம் என்போரும்

13
வீணில் உந்தன் விழிகண்ட
விந்தை யாலே பகைத்தாரே.
உலகம் யாவும் உனைக்கண்டு உழலுங் கதையைக் கேளம்மா
அழகே மெய்யாய் நீஎம்மை அழிக்கத் தானோ உற்பவித்தாய்.
எங்கோ வாழ்கின்றாள்!
எங்கோ எந்தன் அன்பின் தேவி என்னை எண்ணி வாழு கின்றாள் இங்கோ நானும் இதய மிழந்த இன்ன லாலே மாழு கின்றேன்.
கண்ணி லடங்கா வான் வீட்டிற் கதிரோன் சிந்தும் ஒளிக் கீற்றில் எண்ணி லாத திரு வுற்ற. எந்தன் தமிழின் மது ரத்தில்.
எங்கோ எந்தன் பாசச் சுடரும் என்னை எண்ணி வாழு கின்றாள் இங்கோ நானும் இதய மிழந்த இன்ன லாலே மாழு கின்றேன்.
*
காற்றிற் கலந்தோ மோக கந்தங் கமழும் மலர்கள் தாமாய் மலர்ந்தோ அன்றிச்,

Page 12
14
சாற்றற் கரிதாஞ் சால்புக ளாலே சகமாள். சக்தி தன்னி லிணைந்தோ.
எங்கோ எந்தன் உயிரின் உயிராள் என்னை எண்ணி வாழு கின்றாள் இங்கோ நானும் இதய மிழந்த இன்ன லாலே மாழு கின்றேன்.
ஏன் ?
வெறுமை நிலையினிலே - நெஞ்சம் வெந்து போன துவே காதல் வறுமை யால் வாழ்வில் வாட்டம் விளைந் ததுவே.
களிப்புத் தனை வேண்டி - நானுங் காத்து இருந்தேனே என்றன் குழப்பம் யாவையுமே காதல் கூட்டி வைத்த தன்றோ?
கண்ணீர் கடலாக இதயங் கனலாய்த் தான் மாற என்னில் துயரத்தைக் காதல் ஏனோ விளைத்ததுவே ?
t.டியகாலம்
நினைவு.
மாறிடாத் துயர மெந்தன் மன தினைக் கொல்ல நீயோ பாரினை நீங்கி எங்கே பறந்தனை பாவி வெய்யில்

15
கூறிட வொண்ணா கோடி குமைவுகள் வந்து நெஞ்சில் ஊவா றிட நானோ இங்கே உழலுதல் காணா யாமோ?
விண்ணவர் தமக்கு விருந்தாய் விரைந்தனை நானோ இங்கே கண்ணினை இழந்தே னெந்தன் கருத் திலு மிருளே யன்றோ என்னுயிர் நேர்த்த அன்பின் எழிலமை வடிவச் செல்வி உன்னுரு தன்னை என்று உண்மையிற் காணு வேனோ?
பூவிழிப் பார்வை எங்கே? புன்னகை வதன மெங்கே? காமனுங் கண்டு ஏங்குங் கச்சித வடிவ மெங்கே? காவியத் தலைவி எங்கே ? கற்பனை நெஞ்சம் எங்கே? யாவுமே சாவில் நித்ய சாந்தியைக் கண்ட தாமோ?
அமைதி காண்பேன்
உன்னன்பு ஒன்றுக்காய் நானிந்த மண்ணில் உழல்கின்றேன் அலைவாயிற் பட்ட துரும்பாக என்னின்பப் பெண்பேடே காலத்தின் கதிரும் ஏக்கத்தின் பேரிருளை ஏனளித்துச் சென்றதடி ?

Page 13
16
புன்னகையின் மலர்சிந்தி நீயெந் தன் அருகில் புத்தின்பந் தந்திடவே வந்தினித்த நாட்கள் கண்விட்டுக் கதையாகச் சென்றதினால் நானும் கண்ணீரின் துணையாலே காலத்தைக்
கடக்கின்றேன்.
*
மண்ணோடு விண்சேர்த்து எதிர்க்கின்ற போதும் கண்ணான உன்காதல் எண்ணத்தை மறவேன் என்றெந்தன் கரந்தன்னில் வாக்களித்தா
யின்றோ ஏகாந்தப் பெருங்காட்டில் எனைவாட்டு
கின்றாய்.
* காலத்தின் ஓட்டத்தால் நீயறிவா யெந்தன் காதலின் மேன்மையை மெய்யாக நானும்
ஞாலத்தில் அவ்வேளை வருமட்டு முந்தன் ஞாபகத்தின் இன்பத்தால் அமைதி
காண்பேனே.
அழைப்பு நதி ஒன்றிக் கடலோடு சேரக்கண்டும் நற் தென்றல் வானுறவிற் கூடக்கண்டும் மதி ஒத்த வெண்முகமே மிக்காயென்றன் மனம் நோக நீ பிரிந்து செல்லல் நன்றோ?
ஆழ் கடலின் அலைபாராய் அவைகள் எல்லாம் அனைத் தின்பங் காதலிற் கண்டுவிம்மச் சூழ் துயரால் நானிங் கு உழல்கின்றேனே சுடர் பிரேமை ஜோதிநீ வருகிலாயோ ?

17
விண் தேவன் மண்மங்கை தன்னைக்கூட விரி மலர்கள் |
ஒன்றோடு ஒன்றுசேரக் கண் மணியே எனை நீயோ பிரிவின் கனலாற் களிப் பிழந்து வாடிடவே விடுதல் நன்றோ?
('' செல்லி ''யின் பாடலொன்றைத் தழுவியது)
பாலையில் விட்டுப் பறந்தாளே!
இன்பக் கடலில் மிதந்த நானும் இன்னற் காட்டில் வாடுவ தெல்லாம் அன்பின் தெய்வ மவளும் இந்த அகிலம் நீங்கிச் சென்ற தாலே!
சோலை மலர்கள் கமழ் நெடியிற் சொகுசு கண்ட என் நெஞ்சம் பாலை வெளியில் நின் றேங்கப் பாதை காட்டிப் பறந்தாளே!
*
விண்ணவ ரின்பந் துய் நாட்கள் விரைந்தன, மறைந்தன, மெய் யன்றோ கண்ணில் லாத குருடன் போல் கதறு கின்றேன் நான் அம்மா!
--
இனிமேல் வாழ்விற் சுவை யில்லை இனிமேல் நெஞ்சிற் சுக மில்லை இனிமேற் கண்ணீ ரொன் றன்றி இகத்தில் அணுவும் மகிழ் வில் லை !

Page 14
பாரதி பிறந்தான்
பழகு தமிழின் பெற்றியைப் பாரோ ரறியும் வண்ணமாய்
அழகின் கவிதை யாத்திடவே அவதரித் தனனே பாரதியார்.
*
எழிலார் தமிழின் ஏற்றமெலாம் எடுத்துக் கூறிக் கவியாலே அழிவில் லாத புகழுற்ற. அமர கவிஞன் செயல்வாழி!
அஞ்சா நெஞ்சங் கொண்டெங்கள் அன்னை தமிழி னுயர்வெல்லாஞ் செஞ்சொற் கவிதை யாய்த்தந்தான் செகத்தி லன்னோன் புகழ்வாழி.
*
விண்ணில் மேவும் வெண்மதியும் விரிகதி ரோனின் சுடர்தானும் மண்ணில் விளங்கு நாள் மட்டும்
மாகவி பாரதி திருவாழி !

விவேகானந்தா
நாதி யற்று மக்கள் நலிவு பட்டு வீணில் பூதல் மிசை வாழும் புன்மை தன்னைப் போக்கும் பாதை தன்னைக் காட்டப் பரத நாட்டில் வந்தாய் ! துன்ப மென்னும் உலகில் துடித்து மாண்ட மக்கள் அன்பின் வழி தன்னில் ஆக்கங் கோடி கண்டு இன்பம் என்றுங் காணும் இனிய வழி சொன்னாய் ! அண்ணல் ராம கிருஷ்ணன் அற்புதக் கொள்கை தன்னை மண்ணி லெங்கும் பரப்பி மாண்பு
கோடி செய்த மன்னர் மன்னா, உங்கள் மதியின் நுட்பந் தன்னை என்ன வென்று கவியில் எடுத்துக் காட்டு வேனோ?
அண்ணல் காந்தி
இத்தரையில் வாழ்கின்ற மனிதர் தங்கள்
இதயத்தில் நல்லெண்ணம் இல்லா ராகிச் சித்தத்திற் செயல் தன்னிற் சிறுமை கொண்டு சீரார்ந்த மனுபவத்தைப் புரியாப் போதில்

Page 15
20
சத்தியமாந் தெய்வநெறி தன்னைத் தாங்கிச்
சகமெங்குஞ் சாந்திதன் சுடரே வீச உத்தமனாய்க் காந்திஜி பிறந்தான் நல்லார்
உயிருக்குள் உயிராக வாழ்கின் றானே.
அன்பென்னுந் திருவறியாத் தன்மை யோடு
அகிலத்தே மனிதரென் றிருப்பா ரெல்லாம் துன்பங்கள் வருகின்ற புன்மை நெறியில்
தூய்மைதான் இழந்தாராய்த் தொடரும்
நாளில் இன்பத்தில் வழிகாட்டும் இனிய ராக
இதயத்தின் நல்லெண்ணத் துயர்வை ஏந்தி அன்புக்கு ஓருருவாய்ப் பரத நாட்டில்
அவதாரஞ் செய்தனனே அண்ணல் காந்தி.
வள்ளலார்
கள்ளங் கொண்டு நெஞ்சத்திற் கடவுளின் நாமந் தனைச்சொல்லி விள்ளருங் கோடி தீமைகளை விரைந்து செய்யும் வீணரிடை உள்ளம் எல்லாம் அன்பென்னும் உன்னத பிரபை தான்சுடர் வள்ள லாரே வந்து தித்தாய் வையஞ் செய்த தவத்தாலே.
இம்மதந் தானே உயர்வென்றும் இந்நெறி ஒன்றே சரியென்றும் இம்மா
நிலத்தில் வாழ்பேர்கள் இதயங் குறுகி நவில்கையில்

21
எம்மதம் எந்நெறி ஆயிடினும் ஏற்றம் இருப்பின் எல்லாமுஞ் சம்மதம் என்றே உரைத்துலகிற் சாந்தி செய்தாய் அருட்சோதி!
ஏழையாய்ப் பிறந்தால்.......!
உண்ண உணவு மில்லை
உடுக்க உடையு மில்லைக் கண்ணீர் ஒன்றை அன்றிக் காணுந் துணையு மில்லை என்ன செய்வம் மெய்யில் ஏழை யாக இந்த மண்ணிற் பிறந்த தாலே மார்க்கம் வாழ இல்லை !
பாலும் பழமு முண்டு பணத்திற் புரண்டு உலகில்
வாழுஞ் செல்வர் நீரே வந்து பாரும் எம்மை நாலு முழ வேட்டி நான்கு கிழிச்ச லதிலே பாழும் புவியில் நாமே
பரம ஏழைக ளன்றோ?
மாடி வீடு கட்டி மகிழ்ந்து , வாழ வில்லைக் கோடி செல்வந் தன்னைக் கொண்டு வாழ வில்லை

Page 16
22
ஓடி ஆடி நாளில் ஓய்த லின்றி உழைத்தும் வாடி நிற்கும் வயிற்றின் வாட்டங் கலைவ தில்லை ! .
யாரிடஞ் சொல்வம் மெய்யில் யாம்படு துன்ப மெல்லாம் பாரிலே ஏழை பவத்தாற் பாவமோ எந்த நாளும் ஏழையாய்ப் பிறந்தா லென்றும் ஏக்கமே சொர்க்க மாமோ? மாழுதல் ஒன்றை அன்றி மார்க்கம் வேறில்லை யன்றோ.
மயக்கம் மறைந்தது
பாங்காக இலக்கணத்தைக் கற்றேன் மற்றும்
பைந்தமிழில் உள்ளபல நூல்கள் கற்றேன் ஏங்குகின்றேன் ஏனென்று சொல்லு கின்றேன் என்நெஞ்சில் ஒருகவியும் பிறக்க வில்லை.
கவியென்றால் உணர்வென்னும் ஊஞ்ச
லாட்டம் கழறுகின்றார் நற்கல்வி கற்றார் யாரும் புவிமீதில் என்நெஞ்சில் மட்டும் ஏனோ பூத்திடவே இல்லையொரு கவிதை யம்மா!
*:
இப்படியே நாள் நீங்கிச் சென்ற காலை இணையில்லாக் கவிஞனெனப் பல்லோர்
போற்றும்

23
சுப்ரமண்ய பாரதியார் கனவிற் தோன்றிச் சுந்தர மாந் தமிழிற்கருத் துரைத்தா னம்மா!
' ' கட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கு மிளைஞ் காட்டாற்று வெள்ளத்தின் வேகங் கொண்டு இட்டம்போற் கவிபாட விளைவா யென்றால் இலக்கணத்தின் இருட்கதவம் உடைப்பா ' '
யென்றான் !
மாகவிஞன் சொற்கேட்டேன் மகிழ்வு மிகவே மடைதிறந்த வெள்ளம்போற் கவிதை செய்ய ஆவல் தான் நெஞ்சினிலே உற்றேன் அந்த அற்புதத்தால் என் மயக்கம் நீங்கிற் றம்மா!
கண்ணே கண்வளராய்! கண்ணே எந்தன் கற்பகமே கருத்தின் பொருளே கண்வளராய் ! விண்ணின் நிலவே என்னுயிரே . விரைந்தே நீயும் கண்வளராய் !
அன்பின் ஊற்றே கண்வளராய் ! அழகின் வடிவே கண்வளராய் ! இன்பின் ஜோதி கண்வளராய் ! இன்னல் தீர்ப்பாய் கண்வளராய்! குறளின் புகழே கண்வளராய்! குழலின் இசையே கண்வளராய் ! உறவின் திருவே கண்வளராய் ! உயிரின் நிலையே கண்வளராய் !

Page 17
எது வாழ்வு!
அன் பின் வழி நின்று துன்பம் . பழிவென்று இன்பம் அடைவது வாழ்வா! இல்லை அன்பின் வழிநீக்கி இன்பமது போக்கித் துன்பத் துழல்வது வாழ்வா?
வண்ணமா ரன்பை எண்ணத்துணை யாக்கி இதயம் மகிழ்வது வாழ்வா? இல்லை என்ன எனக்கில்லை என்னுந் திமிரிலே எரிந்து மாள்வது வாழ்வா?
11 )
வாழுஞ் சின்னாளில் மேலும் பல்கோடி மேன்மை செய்வது வாழ்வா? இல்லை காலம் பூராவுங் கயமை வேரோடக் கனலால் ஆவது வாழ்வா?
* யாவும் அவ னென்று சேவைபல செய்து தேவராவது வாழ்வா? இல்லை பாவம் பல செய்து மேவுந் துணையாலே மேன்மை இழப்பது வாழ்வா?
எண்ணம் வாழும்
தமிழாலே நானுற்ற இன்ப மெல்லாந் தாயுந்தன் அருளாலே கிடைத்த தன்றோ அமிழ்துக்கு மமிழ்தான அன்பின் மேன்மை அகிலத்தில் நிலையாக்கும் தெய்வம் நீயோ ?

25
உலகத்தில் நானெடுக்கும் பிறவி யெல்லாம் உன்புகழைப் பாடுகின்ற பேறு வேண்டும்
அழிவில்லா உன்னன்பைப் பெறுதல் வேண்டி அளவில்லாப் பிறவிகள் எடுக்க வேண்டும்.
அன்பென்னும் அமிழ்தத்தில் அன்னஞ் செய்தே அடியேனுக் களித்தின்பங் காணுந் தாயே மண்ணுக்குள் என்னுடலம் மறையும் போதும் மாதா உன் எண்ணமென் நெஞ்சில் வாழும் !
நண்பனுக்கு! அழிவந்த செய்தாலும் அன்பே செய்யும் ஆருயிரே என் நண்ப உனக்கு அன்பின் வழிவந்த வணக்கத்தைக் கூறிக் கொண்டே வரைகின்றேன் இம்மடலை ஏற்றுக் கொள்வாய் ! அன்பவுன் நலமென்ன அறிய ஆவல் ! அடியேனுனைப் பிரிந்திங்கு வாடு கின்றேன் ! துன்பந்தான் இப்பிரிவு எனினும் அன்பின் துணைகொண்ட நட்பிற்கு நலந்தா னன்றோ? உனைப்பிரிந்து நானிங்கு உழல்வ தாலே உறுபணியில் என் மனமே லயிக்க வில்லை. என துயிரே உனைக்காணா நாட்க ளெல்லாம் என்றனையே கொல்கின்ற வேல்கள் தானே! இடுக்கணினைக் களைகின்ற நண்ப வுந்தன் இல்லத்தார் சுகந்தானும் அறிய ஆவல் அடுத்தென்ன புதினங்கள் யாவுந் தெளிவாய் அறைவாயே நீதீட்டும் அன் பின் மடலில் !

Page 18
நோக்கு
என் தலையை நான்சாய்க்க
மடியொன்று வேண்டும்! என்துயரந் தனைத்தாங்க
நெஞ்சொன்று வேண்டும் ! என்கண்ணீர் தனைத் துடைக்கக்
கரமிரண்டு வேண்டும் ! என்வாழ்வு இவைகிடைத்தாற் சாந்தியுறும் . அன்றோ!
என் நசைவு தனை ஏற்கும்
நட்புள்ளம் இருப்பின் என் தீமை தனைச்சகிக்கும்
நல்லமனங் கிடைப்பின் மண்மீதில் நான்வாழும்
மாசுமிகும் வாழ்வு மறுகணமே விண்வாழ்வாய்
மாறுமடா தோழா!
ஜீவ சாந்தி
பொன்வேண்டாம் புகழ்வேண்டாம் எனக்குக்
காதல் போதைதரும் பெண் துணையும் வேண்டாம்
மெய்யில் கண்போதும் எனைக்காத்துப் பிரேமை செய்யக் கள்ளமிலா ஒரு நண்பன் வேண்டும் ! வேண்டும் !

27
கவிஞனெனக் கலைஞனெனக் கற்றோர் செய்யுங் கருத்துரையும் என் றனுக்கே தேவை யில்லைப் புவிமீதில் நல்லன்பை நாளுஞ் செய்யும் புண்ணியனே என் நண்பன் ஆதல் வேண்டும் !
*
அழிவந்த செய்தாலும் அன்பே செய்யும் அளப்பரும் நல்லெண்ணம் மிக்கா னென்றன் வழிதன்னில் வந்திடவே வேண்டும் நானே வாரியென அன்புதனை ஆற்றிக் களிக்க.
உடல்விட்டு உயிர் நீங்கிச் செல்லும் போதும் உடனிருந்து அன்புமழை விழியாற் சொரியுங் கடன் தவறா நட்புள்ளம் வேண்டும் அந்தக் களிப்பாலே என் ஜீவன் சாந்தி காணும் !
எண்ணக் களிப்பு
நெஞ்சந் துயரில் வெந்த போதும் நேசம் அழியாதே -- மெய்ப் பாசம் அழியாதே வஞ்சம் என்னை வாட்டும் போதும் உண்மை அழியாதே - அதன் தன்மை அழியாதே.
அன்பின் வானில் இன்ப மென்பது மின்னல் ஆகட்டும் - கணத்து மின்னல் ஆகட்டும் துன்பந் தந்த போதும் அன்பைத் துதித்து மகிழ்வேனே - நெஞ்சிற் பதித்து மகிழ்வேனே.

Page 19
28
எனது நலனைத் தனது நலனாய்க் கொண்ட தோழனின் - அன்பு கொண்ட தோழனின் தனது நலனை எனது நலனாய் எண்ணி வாழ்வேனே - அதில் எண்ணங் களிப்பேனே.
அன்பின் வழியில்...
அன்பாற் புத்துலகை - நாமும் ஆக்கி மகிழ்வமடா துன்பம் யாவையுமே அதனில் தூளாய் ஆகும்டா.
கோபம் மிகவுற்றே - நாமுங் கண்ட பலனென்ன ? தீபமா மன்பில் அதுவுந் தீய்ந்து போகுமடா.
ஆசை வெறிதனக்கே - நாங்கள் அன்பில் அணைகட்டி நேசத் தின்புலகில் என்றும் நித்ய சுகங்காண்போம் !

மீட்டும் உதிப்பாய்!
இருகைகள் தனைக்கொண்டு இரவியதன்
- ஒளியை இல்லாது செய்திடவே எண்ணிடுவார் போலச் சிறுமதியே மிக்க சில மூடர்கள் இயேசு சீரானைச் சிலுவையில் .அறைந்தார்கள் அம்மா !
கல்லொத்த வன்நெஞ்சங் கொண்டார்தம்
செயலைக் கண்டெங்கள் இயேசுமகான் கழறியதும் என்ன? ' ' எல்லாமாய் உள்ளவனே சர்வேசா, இவர்கள் எல்லாரும் உன்னவரே மன்னிப்பாய்''
என்றான். துயர் செய்யும் பகைவர்க்குந் துணையான
இயேசு தூயோனுன் உன்ன தத்தை உரைத்திடவே
போமோ? உயிர்க்கூட்டம் யாவினுக்கும் அருள்காட்ட
நீயும் உதித்திந்த உலகத்தைக் காத்திடுவாய் தேவா!
(ன்

Page 20
மனிதராவோம்!
தீண்டாமைப் பேயெம்மில் விலக வேண்டும் ! தீந்தமிழர் அன்பாலே ஒன்ற வேண்டும் யாண்டுந்தான் எமைக்கொல்லும் பேதம் நீங்கி
யாவருமே சமமென்று ஆதல் வேண்டும் !
இவன் பெரியன் இவன்சிறியன் என்ற பிரிவு இருக்கின்ற வரையிந்தத் தமிழர் கூட்டம் புவனத்தில் எந்நாளும் உய்யா நிலையிற் புனிதந்தான் ஒன்றின்பப் புன்மை காணும் !
மனம் ப
அன்பென்னும் ஆதவனின் ஒளியால் தமிழர் அனைவருமே ஒரு குலமாய் அமைய வேண்டும் ! துன்பத்தைத் தருமிந்த ஜாதி பேதந் தூளாகி நாம் மனித ராதல் வேண்டும் !
காமன் துணைவி
புன்னகையால் என் நினைவிற் போதை யூட்டிப் பூவிழியாள் என்றனையே கொல்லு கின்றாள் கண்ணியவள் கவின் தன்னைக் காணும் போதில் கடலன்ன காமமதே ஊறு தம்மா!
அன்னம்போல் அவள் தெருவில் நடந்து
செல்லும் அழகினையே கண்களினால் உன்னுங் காலை எண்ணரிய உணர்வென்னில் மேவி நெஞ்சை எரிமலையாய்க் குமுறிடவே செய்யு தம்மா!

3)
நிலவன்ன வதனத்தாள் நெஞ்சிற் காமம் நிலவிடவே செய்கின்ற வடிவம் மிக்காள் கலைநோக்கு ஒன்றில்லாப் பேர்கள் தாமுங் கலைஞரென மாறிடுவார் அவளைக் காணின்.
இவளழகி உள்ளத்தே ஏமஞ் செய்யும் இயல்பினையே கொண்டவளாய்ச் சுடரு கின்றாள் இவளென்றன் உயிர் வாட்டும்நோக்கங்கொண்டு இவ்வுலகில் உற்பவித்த காமன் துணைலி !
இந்தப் பெண்கள்!
கண்ணகி பிறந்த பெண் குலத்தின் கதையைக் கேளாய் என் தோழா! மண்ணிற் கற்பைப் புதைத் திவர்கள் மகிதல மீதினில் வாழ்கின் றார் !
கணவன் தன்னைத் தெய்வ மெனக் கழறிய முன்னோர் கருத் தெல்லாம் நினைவில் இருந்தால் எம் பெண்கள் நீச வாழ்வை வாழ் வாரோ ?
*
அன் பிற் காக அந் நாளில் அணங்கினர் உலகில் இருந் தார்கள் இன்ப வெறியில் தமிழ்ப் பெண்கள் இருக்கின் றாரே இந் நாளில் !
ஏனோ இந்த இழி வாழ்வு ? என்றே உய்வர் நம் பெண்கள் வானத் தாமரை தானா மோ ! வள்ளுவன் புகன்ற பெண் நீதி.

Page 21
அன்பின் தங்கைக்கு !
அன்புள்ள என் தங்கை உனக்குன் அண்ணா அறைகின்ற கருத்தினை நீ உன்ன வேண்டும் துன்பங்கள் பல்கோடி வந்த போதுந் தூயநல் அன்பை நீ போற்ற வேண்டும்.
வானுறையுந் தெய்வமக ளானாள் எங்கள் வண்டமிழாள் கண்ணகியும் இதனை நீயே ஏனென்று எண்ணிடவே வேண்டும் அவளும் எழிலார்ந்த கற்பாலே தெய்வ மானாள்!
*
வனவாசந் துய்த்திடவே சென்ற ராமன் வழியினிலே சென்றதனால் சீதா தேவி தன தன்பின் தன்மையைக் காட்டினள், மற்றும் தகைசார்ந்த கற்பினையே மெய்ப்பித் தாளே !
என்னோடு பிறந்தநல் லன்பின் வடிவே எந்நாளும் நீகற்பை, எழிலா ரன்பை உன்னுயிரில் அமைவுற்ற இனிய பண்பாய் உருவாக்கிப் பெண்குலத்துத் தெய்வ மாவாய்!

கவிஞர் கடன்
அன்பா மின்பப் பொய்கையினில் அமைந்த சாந்திப் பதுமத்தில் இன்பந் தருமோர் செயலுற்ற இனிய சக்தி வாழ்கின்றாள்.
உள்ளத் தாலே பொய்க்காது உன்ன த வாழ்வே வாழ்கின்ற நல்லியல் மாந்தர் நெஞ்சத்தும் நமது சக்தி வாழ்கின்றாள்.
மெய்மை நீதி அன்பினையே மெச்சும் வாறு கவியாகச் செய்யும் புலவ ருள்ளத்துஞ் செந்தமிழ்ச் செல்வி வாழ்கின்றாள்.
குழலின் யாழின் ஒலிதோற்கக் கூவி அம்மா என்கின்ற மழலைச் செல்வர் சிந்தையிலும் மங்கை சக்தி வாழ்கின்றாள்.
ஆய கலைகள் தொட்டிந்த அகிலம் யாவும் ஆள்கின்ற தூய சக்தி கலைமகளைத் துதித்தல் கவிஞர் கடனன்றோ !
கில்

Page 22
hoo

AY MAGAS
PE/2
WEST EARLAS
CHUNNAKAN

Page 23
xt><><><><><>