கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துப் பாரதியார் கவிதைகள் 1

Page 1
- ஈழத்துப் பாரதிய
முதற்
உட -
இதே
இபேப்தத்தகம்
மு.வ. புவம்

பார் கவிதைகள்,
பாகம்
இட
னேந்திரராசா

Page 2

ஈழத்துப் பாரதியார் கவிதைகள்
முதற் பாகம்
மு. வ. புவனேந்திரராசா
411 ++/y).
- VAYA.,
LC// EARL ALAI WEST CRUNNAKAM
விபுலாநந்தர் வெளியீடு
கல்லுமலைச் சந்தி சூசைப்பிள்ளை யார் குளம்
வவுனியா இலங்கை

Page 3
வெளியீடு :- 1
முதற்பதிப்பு :- 31-5-1970
உரிமை :- பதிவு செய்யப்பெற்றது
படிகள் ;- 1000
பிரதி : ரூபா 1 -90
காணிக்கை
என் வாழ்விலும் தாழ்விலும் நான் வணங்கும் ம னி த த் தெய்வங்களாகிய தமிழ்ப் பெருங்குடி மக்களின் ஒரு சிறு துளியாகிய ஈழத்துத் தமிழ் மக்களின் காலடிகளில் எனது இச்சிறுநூலை அர்ப் பணிக்கின்றேன்.
அச்சுப் பதிவு!! விவே கானந்த அச்ச கம், யாழ்ப்பாணம்,

பு - 3 - AL A1 1AE - -UNN 2 K - v
பதிப்புரை 6 - - -
அச்சகம் ஒன்று நிறுவி, அதில் ஒரு பதிப்பகம் தொடங்கி ஈழத்து எழுத்தாக்கங்களையெல்லாம் அச்சுரு விற் கொண்டுவர வேண்டுமென்ற என து பத்து வருடத் துக் கனவு இன்றுவரை கனவாக இருந்ததேயன்றி நன
வா கச் செயற்படவேயில்லை.
அக்கனவை எப்படி நனவாக்கலாம்; ஈழத்து எழுத் தாளர் களை எப்படிக் கெளரவிக்கலாம் என்றெல்லாம் சதா மூளையைப் போட்டுக் குழப்பியதின் காரணமே, இன்று அச் ச கத்துக் கனவை ஒரு மூலையில் தூக்கி எறிந்து விட்டுப், பதிப்பகத்துக் கனவையாவது செயலாக்குவோம் என்ற எண்ணத்துடன் இப்பதிப்பகத்தை ஆரம்பித்து அதற்கு; யாழ் நூலாம் பெரு நூலை இயற்றி உலகத் தமி ழையே வாழவைத்த ஈழத்துப் பெரியாராம் விபுலாநந்த அடிகளாரின் பெயரையும் மனமுவந்து சூட்டியுள்ளோம்.
எமது பதிப்பகத்தின் முதலாவது பதிப்பிற் கா கக் கவிதைகளைத் தந்துதவும் * ' ஈழத்துப் பாரதியார்'' என்ற புனை பெயருக்குள் ஒழிந்திருக்கும்; மு. வ. புவனேந்திர ராசா என்ற இருபத்தாறே வயதுடைய இவ்வாலிபர் ஓர் துடிப்புள்ள, முற்போக்கு எண்ணம் கொண்ட, சமு தாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடி, அதற் காகத் தனது வாழ்க்கையையே தியா கம் செய்த ஓர் வாவிப மேதை. அதற்கு இவர் இந்நூலின் முகப்பிலே எழுதியுள்ள சுயசரிதையே ஓர் ஆதாரமாகும்.
இவர் தனது ஒன்பதாம் வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி இவ்வளவு குறுகிய காலத்துக்குள் ளேயே கென்னடி வாழ்க்கையென்றும், பிற காப்பியங்க ளென்றும், கவிதைகளென்றும் இன்னோரன்ன நாலாயிரத்

Page 4
திற்கு மேற்பட்ட கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டது மாத்திரமன்றிக் கட்டுரைகள், கவிதை கள் போன்ற பல வற்றையும் எழுதிக் குவித்துச் சுமக்க முடியாமற் சுமந்து கொண்டு திரியும் ஒரு ஈழத்து மாவீரன்.
தமிழென்றால் உயிரைக்கூட விடக்கூடிய அளவிற்கு உயிர்த் துடிப்புள்ள இவர் குறிப்பாக ஈழத் தமிழர் களின் பாரம்பரியங் களென்ன ? அவர் களை எப்படி உய்விக்கலாம் என்பதைப் பற்றியெல்லாம் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பார்.
அதற்கு உதாரண மாக இவருடைய ''முகவுரை' யும்; ' ' ஈழத் தமிழகத்தின் பொருள்வளம் ' ' ' 'வடக் கையும் கிழக்கையும் இணைப்போம்' ' என்ற இரு கவிதை களும் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.
நல்ல எண்ணத்துடன் துவக்கப்பெறும் இப்பதி கத்தை நீடித்து நிமிர்ந்து நின்று உழைப்பதற்கு உங்கள் அன்பையும், பர கருணையையும் மனமுவந்து அளிப்பீர் க ளென்று திடமாக நம்புகின்றோம்.
சொற்ப முதலினோடேயே துவக்கப்பெறும் இப் பதிப்பகத்தின்; ஆக்கத்தை மாத்திரம் வாங்கிப் படித்து உதவி செய்வ து மாத்திரமன்றி மேலதிகமாகப் பண வுதவி சரி , பொருளுதவி சரி, வேறெந்த உதவி சரி செய்ய முன் வருவீர்களென்றாலும் அதையும் ஏற் கத் தயாராக இருக் கின்றோம்.
விபுலாநந்தர் பதிப்பகத்தார்
விபுலாநந்தர் பதிப்பகம்
31-5-70

மதிப்புரை
மட் இம்) அல.
கவிதை வானிலே தோற்றிய விடிவெள்ளி மகா கவி பாரதி. கவிதை தமிழர்க்குப் பழையது. பல்லாயிரம் கவிதைக் கனிகள் தொங்கும் பழமரம் தமிழ். உதிர்ந்த கனிகள் பல. சுவைத்த கனி கள் சில. எல்லாவற்றையும் சுவைக் க மனம் உண்டு. ஆனால் காலம் குறுக்கே நிற்கிறது.
உண்மை அனுபவங்களைக் கற்பனை கூட்டி - உணர் விற் றோய்த்து தென்றலாக - தேனருவியாக - சீறிவரும் புயலாக ஆக்கித் தருபவர் கவிஞர். கவிதை உலகிலே புதிய திருப்பத்தை ஏற்படுத்தி, கவிதை கோபுரவாசி கட்கு மட்டுமல்லக் கூடத்து மனிதருக்கும் வரும் - சுவை தரும் என்று காட்டியவர் பாரதி.
“உணர்வெழுந்து பாடப்படுவது பாடல்.. அறி வறிந்து செய்யப்படுவது செய்யுள்' என்பர். உள்ளத்தை இளக்கி உருக்கி உண்மையைப் பதியவைக்குந் திறன் பாடலுக்குண்டு. அதுவும் சிறப்பாக பாரதியார் பாடலுக் கும் அவர் தாசனார் பாடலுக்கும் உண்டு. இத்தகை மகா கவி பாரதியாரை, கொள்ளையின்பம் குலவு கவிதை நாய கனாம் பாரதியாரை தன து மானசீகக் குருவாக ஏற் றுக் கொண்டவர் ஈழத்துப் பாரதி எனப்படும் புவனன். பால வயதிலேயே பாடல் கள் பாடி பிஞ்சுக் கவிஞராக விளங்கியவர்.
பூம்பொழிலிற் றொங்கும் பூவனை த்தும் பாரிசாத மாக இருக்கமுடியுமா? பல்வகை வண்ணங்கள், பல்வேறு வடிவங்கள் காட்டி எழில் குலுங்கும் பூங்கா போல இவர் தந்த கவிதை மலர் கள் சுண்டிப் பார்த்தோ - தட்டிப் பார்த்தோ தர மானவை எவை என அறிதல் அரிதன்று.

Page 5
'உணர்ச்சி' என்ற தலைப்பிலே ஆசிரியர் குறிப்பது போல் உணர்வலைகள் அளவளவாய் எழும்புதலே சிறப்பு! இச்சிறப்பு அக் கவிதையிலே கண்கூடு.
'யாப்பறிந்து பாடினார் கவிஞர் அல்லர்
யாப்புடையப் பாடியரும் கவிஞர் அல்லர்.' என்ற கூறிதுப் பார தியோடடிபட்டுப் போனவொன்று.
உணர்வலை கள் ஒழுங்காக வருவதே தனியழகு, ஒலி அலையும் அது போல அமைந்துவிடல் யாப்பாகும்.
எனவே, யாப்பு என்ற அளவுகோலை வைத்துக் கொண்டு மதிப்பிடாது, உணர்வின் எழுச்சி, வீழ்ச்சி இவற்றை வைத்துச் சுவைத்திடப் பல் சுவை மிகும்.
புதுக் கவிதை, புது யாப்பு, புது மெருகு கவிதை யிலே காண்பீர்கள். படியுங்கள்!
இக்கவிதை மலர் - ஒரு செல்வ மலர். ஆசிரியர் அன்பு மலர். வாடா மலரா க என் ஆசி.
துணிவு - பணிவு - கனிவு இம்மூன்றும் வாய்க்கப் பெற்ற துடிப்புள்ள வாலிபராம் புவனேந்திரன் – ஈழத்துப் பாரதியார் ஓர் கால் என் மாணவன். இவர் தந்த கவிதை மலர் தமிழ்த் தாயின் சரடாக ஆகும் என்பேன். அனை வரும் ஆதரிக்க வேண்டும் என்பேன்.
வணக்கம்.
21-6 -70
சுகுணா

''எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு பயனேதும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாளெனக்குத்
திருனாளாகும்.''
- பாரதிதாசன் -

Page 6
முகவுரை
அஅோம் அS).
தமிழ் மொழியை வளம்பெற வளர்த்துக் காப்பாற் றியது தமிழகம், அத்தமிழகத்தின் த மி ழ் வளர்த்த காலத்தை முதற் சங்ககாலம், இடைச் சங்ககாலம், கடைச் சங்ககாலம் என்ற முப்பெரும் பிரிவுகளாகப் பிரித் திருக்கின்றார் கள் நம் முன்னோர் கள்.
இம்மூன்று காலங் களிலும் முதலிரு காலங் களாகிய முதல் - இடைச்சங்க காலத்துத் தமிழ்ப்பெரும் நிலப் . பரப்பு கடல் கொண்டுவிட்டதாய்ப் பழம்பெரும் காப்பிய மாகிய சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதையில் ஆசிரியர் இளங்கோவடிகள்
* * வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள ''
என்று கூறிச் சென்றுள்ளார்:
மேலும் பழைய தமிழகம் குமரி நாடு என்று பெய ருடையதாய்க் குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட பரந்த பிரதேசம் என்பதையும் அவரே வலியுறுத்துகின்றார்.
இப்படி யா கக் கடல் கொள்ளப்பட்ட தமிழ் நாடு எழுநூறு காவதம் பரந்தவொரு நாடாகும்.
இக் கால அளவின்படி ஒரு காவதம் என்பது பத்து மைல் களாக இருக்கும் பட்சத்தில் எழுநூறு காவதமும் ஏழாயிரம் மைல்கள் அளவுடையதாக இருக்கவேண்டும்.
இந்து சமுத்திரம் இருநூற்றைம்பது லட்சம் சதுர மைல் அளவுடையது. ஆகவே அது கிட்டத்தட்டப் பதினாறு லட்சம் மைல் நீள அகலத்தை உடையதாக இருக்கவேண்டும்.

( vii)
ஆகவே இந்தப் பதினாறு லட்சம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைல் கள் நிலமாக இருந்து கடலினுள் அமிழ்ந்த குமரி நாடாக இருக்கவேண்டும்.
ஆனால், குமரிமுனையிலிருந்து இந்து சமுத்திரத்தி னுள் இருக்கும் கெர்கியூலன் தீவு கிட்டத்தட்ட ஐயாயிரம் மைல் கள் நீளமுடையது.
இதேயளவு நீளமே; அகலமாகக் கொண்ட மட காசிகர் தீவுக்கும், இன்று இந்தோனேசியா என்று அழைக் கப்படும் சாந்தா தீவுக்கும் இடையில் இருக்கின்றது.
ஆகவே, கடல் கொள்ளப்பட்ட குமரி நாடு குமரி முனை தொடங்கி கெர்கியூலன் தீவுவரை நீளமாகவும் மட காசிகர் தீவு தொடங்கி சாந்தாத் தீவுகள்வரை அகல மாகவும் கொண்ட பெரும் நிலப்பரப்பு என்பது புலப்படு கின்றது.
இக்குமரி நாடுதான் கடல் கொள் ளப்பட்ட இலெ மூரியாக் கண்டம் என்ற அகன்ற நிலப்பரப்பு என்றும்; இந்நிலப்பரப்பு உலகம் முழுவதின் மத்தியிற் கிடந்த இடமா கையினால் இதிலிருந்து தான் மக்கள் பிரிந்து நாற் றிசையும் சென்று வேறுபட்ட இனமாகினர் என்றும், இந் நிலப் பகுதியில் வாழ்ந்த பழம் குடியினர் பேசியது தமிழ் மொழியென்றும் ஒரு மேலை நாட்டு விஞ்ஞானி ஒரு வர் பல காரணங் காட்டியும் நிரூபித்திருக்கின்றார்.
ஆனால், இக்குமரி நாடு, குமரியாற்றுக்கும் பஃறுளி யாற் றிற்கும் இடைப்பட்ட பிரதேசம் என்று ஆசிரியர் இளங்கோவடிகள் கூறிப்போந்த காரணத்தினால் அப் பஃறுளி ஆறும் குமரியாறும் எதுவாக இருக்கவேண்டும்.
இன்று பாரதத்தின் தென்முனைக்குக் குமரிமுனை என்ற பெயர் வழங்கி வருகின்றது. ஆகவே குமரியாறு கடலினுட் பாய்ந்த இடம் இம்முனையாகத்தான் இருக்க வேண்டும்.

Page 7
( viii )
அப்படியாயின் அக்குமரியாறு எங்கிருந்து உற்பத்தி யாகி எத்திசை மூலமாகப் பாய்ந்திருக்க வேண்டும்.
இன்றைய பர்மாவிலிருந்து பாய்ந்துவரும் : 'சல் வீன்'' நதியும், ' 'இராவடி '' நதியும் ஒன்றுசேர்ந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து, வழியிற் சந்தித்த கிழக்குப் பாகிஸ் தானைச் சேர்ந்த ''பிரமபுத்திரா' ' நதியையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு; இன்றைய பாரதத்தின் நதிகளாகிய ''கங்கை' ' ' ' கோதாவாரி '' ''கிருஷ்ணா' ' ' 'காவேரி ' ! முதலியவை களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு வந்து குமரிமுனையிற் துறந்திருக்கலாம்.
இன்றைய ஈழத்தையும், மாலதீவையும், சிசிலியை யும், மடகஸ் காரையும் கொண்ட நேர்கோட்டிற்கும் ஆபிரிக்கா, அரேபியா என்ற கோட்டிற்கும் இடைப்பட்ட பிரதேசம் ஒரு குடாக்கடலாயும் இருந்திருக்கலாம். ஏனெனில் இக்குடாப் பிரதேசத்திற்றான் தீவுகள் மிகக் குறைவாக இருக்கின்றன. (உ - ம் 3-6-69 வீரகேசரியில் வந்த படம்)
ஆனால் பஃறுளி ஆற்றைப்பற்றிய குறிப்புக்கள் பழம்பெரும் தமிழிலக்கியத்திற் பரக்கக் காணப்படுகின்ற காரணத்தினால் அது குமரிக்கண்டம் அதாவது இலெ மூரியாக் கண்டத்தினூடாகவே பாய்ந்திருக்க வேண்டும்.
உதாரணமாக ஏழ்தெங்கு நாட்டுமுத்தூர் அகத் தியன் பாடிய
'' செங்கோன்றரைச் செலவைச் சேர்ந்தன் றனியூரான் துங்கன் றமிழ்த்தாப் புலித்தொடரா- லங்கிசைத்தான் சக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவூழி
யக்கரக்கோ நாமஞ்சு வோம்' என்ற பாட்டினால் பஃறுளியாற்றின் தலைப்பாய்ச்சலைப் பற்றி நாம் அறிய முடிகின்றது .

( ix )
இதனாலே அழிந்துவிட்ட குமரி நாட்டின் பகுதிகளே இன்றைய ஈழம், மடகாஸ் கார் , சுமத்திரா, ஜாவா போன்றவை களும் பிறவும் இருக்கவேண்டும்.
உதாரணமாக இந்தோனேசியாவிலிருந்து ஈழத் திற்கு அண்மையிற் கொண்டுவரப்பட்ட எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கபாலி விநாயகர் சிலையை நீ ங் க ளு ம் பார்த் திருப்பீர் கள் என்று நம்பு கின்றேன்.
ஆகவே, அத்தனை ஆயிரம் வருடங் களுக்கு முன்பே அந்நாட்டில் இந்து சமயம் பரவியிருந்திருக்க வேண்டும். அச்சம யத்தைத் தங்கள் சமயமாகக் கொண்ட திராவி டர் அங்கெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும். தமிழர்கள் தான் அந்நாட்டின் ஆதிக்குடிகளாய் இருந்திருக்கவும் வேண்டும்.
இதையேதான் மேல் நாட்டு விஞ்ஞானியும் நிரூபித் துச் சென்றிருக்கின்றார்.
இப்படியாக அழியப்பட்ட பழம் பெரும் தமிழ் நாட் டின் அழியப்படாத பகுதிகளெல்லாம் சிறுசிறு தீவுகளாக வும், தீவுக் கூட்டங் களா கவும் மாறித் தனித்தனி நாடு களாக இன்று ஆகியிருத்தல் வேண்டும்.
அவற்றில் அழிந்தவரும் போக, எஞ்சியவர் அங் கங்கே தங்கிவிட்டவரும் போகத் தப்பிச் செல்லக்கூடிய வர் ஓடியும், நடந்தும், நீந்தியும் எவ்வெவ் வழிகளால் முடியுமோ அவ்வவ் வழிகளாலெல்லாம் மேற்கு நோக்கித் தப்பிப்போய்ச் சேர்ந்தார் கள்.
அவர் களில் ஒரு பகுதியினரே பாரதியார் கூறிப் போந்தபடி ' ' நீலத் திரைக் கடலோரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை , வடமாலவன் குன்றம் இவற்றி
டையே மன் றிக்கிடக்கும் தமிழ்நாடு'' என்ற தமிழ் நாட்டை யுண்டாக்கி, மூன்றாவது தமிழ்ச் சங்கமாகிய,

Page 8
(x)
கடைச் சங்கத்தை நிறுவி, புலவர் கள் சங் கம் வளர்த்த ஊராகிய பழைய மதுரையின் பெயரையே புதுக்கத் தாங்கள் சங்கம் வளர்க்கத் தொடங்கிய இடத்திற்கும் வைத்து அதைப் புதிய மதுரை என்றும் அழைக்கத் தலைப் பட்டார்கள்.
அப்பொழுது பழைய தமிழ் நாட்டின் ' அழிந்தது போக எஞ்சிய தீவுகளில் வாழ்ந்தவர்கள் பின்பும் தங்கள் கலாச்சாரம், மொழி, சமயம் முதலியவைகளைக் காத்து வாழத் தலைப்பட்டார்கள். ஆனால் வெவ்வேறு காரணங் களினால் அவைகள் நிலைத்து நிற்க முடியவில்லை. வேறுசில அன்னியர் களின் வருகையினால் மொழி, கலாச்சாரம், சமயம் முதலியன மாறுபடத் தொடங்கிவிட்டது.
- இருந்தும் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் இன்றும் சில பகுதியினர் தங்கள் மொழியை மாற்றிவிட்ட போதிலும், தங்கள் ஆதிச்சமய முறைகளை மாற்றாமல் இந்துசமய முறைப்படியே இன்றும் வாழ்ந்து வரு கின்றார் கள்.
ஆனால் ஈழத்தில் தங்கியவர் கள் மாத்திரம் தங்கள் மொழி, கலாச்சாரம், சமயம் முதலியவைகளைக் கடைசி வரை பேணிப் பாதுகாத்து, அரசனையும் நியமித்துப் பழைய முறைகளை ஒழுங்கா கக் கடைப்பிடித்து, அயலில் வந்து குடியேறிய புதிய தமிழ் நாட்டாரின் உதவியுடன் வாழ்ந்து வந்தார் கள்.
கடைச்சங்க காலத்தில் ஆக்கப்பட்ட காப்பியங் களுள் ஒன்றாகிய இராமாயணத்தில் இலங்கையில் இரா வணன் என்ற திராவிட அரசன் வாழ்ந்துவந்ததை ஆரிய வம்சத்தைச் சேர்ந்த வால்மீகி முனிவர் கூறுவதிலிருந்து இது தெள்ளெனத் புலப்படுகின்றது.
இதற்குப் பிற்பாடு வட இந்தியாவில் வாழ்ந்த இந்து ஆரியர் மெல்ல மெல்லத் திரா விடர்மீது போர் தொடுக் கத் தொடங்கி, தங்கள் மொழி, கலாச்சாரம் முதலிய லை

( xi)
களைத் திராவிடர் மீது புகுத்தத் தொடங்கிவிட்டார் கள். இதனால் தமிழ்நாடு என்று பெயரெடுத்த புதுத்தமிழ்நாடு ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது.
அத்தோடு, அக்கால கட்டத்தில் வட இந்தியாவி லுள்ள வங் காளத்திற்கு மேற்கிலுள்ள ஒரு நாட்டின் அர சனாகிய சிங்கபாகுவின் மகனாகிய விசயன் இராம இராவண யுத்தத்தில் அழிந்து சிதைந்து போயிருந்த ஈழத்தில் தனது தோழர் களாகிய எழுநூறு பேர் களுடன் வந்து சேர்ந்தான்.
வந்து இங்குள்ள அரசியாகிய குவேனியை மணம் முடித்து இராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்டு அவளை யும், தன் மூலம் அவளுக்குப் பிறந்த பிள்ளை களையும் துரத்தி விட்டுத் தென்னிந்தியாவிலுள்ள ஒரு இளவரசிய அழைப் பித்துத் தான் மணம் முடித்ததுடன், தனது தோழர் களுக்கும் பெண் களை அழைப்பித்து மணம்முடித்து
வைத்தான்.
அப்படியா கப் பாளி மொழியைத் தாய்மொழியா கக் கொண்ட இவர் கள் தமிழ்ப் பெண் களை மணம் முடித்து இரு மொழியையும் கலந்து சிங்களம் . என்ற ஒரு புது மொழியையே ஆக்கிப் படைத்துவிட்டார்கள்.
இராம இராவண யுத்தத்தால் அழிந்தது போக எஞ்சியிருந்த நூறோ இ ரு நூ றோ திராவிடர்களுக்கு மத்தியில்; எழுநூறும் எழுநூறுமாகச் சேர்ந்த ஆயிரத்து நானூறு பேர் களும் பெரியவோர் புது இராச்சியத்தை ஆக்கி அவர் களையும் தங்களுக்குள் கலந்துவிட முயற்சி செய்யத் தொடங்கி, அவர் களைக் கொடுமைப் படுத்தத் தொடங்க, அவர் கள் தப்பியது போதும் என்ற நினைப் புடன் வடக்கையும் கிழக்கையும் நோக்கிக் கூட்டம் கூட்ட மாகச் சென்று குடியேறினார் கள்.
குடியேறியவர் கள் திரும்பவும் தங்கள் மொழி, கலாச்சாரம், சமயம் முதலியவைகளைப் பாது காக்க அங் கங்கே புதுப்புது இராச்சியத்தை அமைத்தார் கள்.

Page 9
( xii)
அவர் கள் தான் இன்றுவரையும் ஈழத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பெருங்குடி மக்களாகும்.
ஆகவே ஈழமணித் திரு நாடுதான், உண்மையான பழம்பெரும் தமிழ் இராச்சியத்தின் ஒரு பகுதி. இன்றும் பண்டைத் தமிழ் நாட்டின் பண்பாடுகளைக் காப்பாற்றி வருகின்றது.
உதாரணமாக மேலை நாட்டிலிருந்து தமிழகம் வந்து தமிழ் மொழியையும் தமிழ் மக்களின் பண்பாடுகளையும் ஆராய்ந்து பல கட்டுரைகளை எழுதிய திரு. எக்ஸ் என் பவர் ' 'இந்தப் பண்பாடு பரம்பரை பரம்பரையா கத் தமிழ் நாட்டு மண்ணை விட்டு அகலாது, இன்றும் நிலவுவதை யான் நேரிற் கண்டேன் ; விசேடமாக ஈழத்தின் வடபகு தியிலுள்ள யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள் பண் டைத் தமிழ்நாட்டின் பண்பாடுகளை இம்மியளவும் வழுவ விடாது கடைப்பிடித்து வருகின்றார் கள்.''
- 'தமிழகத்தின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திற்றான் நான் பண்டைத் தமிழக ஆராய்ச்சி சம்பந்தமான மூலப்பொருட்களையும், சாதனங் களையும் அதிகமாகப் பெற்றேன். இன்றைய யாழ்ப்பாணத்தாரின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் முதலியன ஏறக்குறைய அன்றைய தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் பண்பாடு களைப்போலவே காணப்படுகின்றன.''
' 'இதுபோலவே யாழ்ப்பாணத்துப் பெண் களும் பலர் சிகையலங் காரத்தில் தேர்ச்சிபெற்று விழங்குகிறார் கள். அவர் களுடைய தலைக்கும் அலங்கரிக்கப்பெற்ற கொண்டைக்கும் வேறுபாடு காணவே முடியாது. இது இவ்வாறிருக்கப் பண்டைத் தமிழகத்து மகளிரும் முடி யலங் காரத்தை வெகு சிறப்பாகவும் கலை மிளிரும்படியும் செய்வார் களாம்.''
என்று பலவிதமாகக் கூறி ஈழமணித் திரு நாடு பண்டைத் தமிழக மண்ணில் ஒரு பகுதி என்பதை நிரூ பித்துச் சென்றிருக்கின்றார்.

(Xii1 )
ஆகையினாற்றான் கூறுகின்றேன்; என்னருமை ஈழத்தமிழர்களே உங்கள் மண் எந்தவொரு செய்கையிலும் இறக்கமுடையதல்ல.
தமிழ் வளர்ப்பதிலோ சரி, வளம்பெற்று வாழ் வதிலோ சரி, உலகத்திற் தலை நிமிர்ந்து நடப்பதிலோ சரி என்றும் சரி குறைந்தவிடம் வகுக்கவில்லை.
ஆனால், ஆர்வமுள்ள எழுத்தாள அன்பர் களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்கத்தான் பணம் படைத்த ஒருவரும் முன் வருகின்றார்களில்லை.
ஆகையினாற்றான் ம கா மகோபாத்தியாய சாமி நா தையரையும், பாரதியையும், அண்ணாவையும் ஈன்று தமிழ் காத்த தமிழகத்துக்கு ஈடாக; சி, வை. தாமோ தரம்பிள்ளையையும், நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவரை யும், விபுலாநந்த அடிகளையும் ஈன்று தமிழ்காத்த ஈழம் இன்று இந்த நிலைக்கு ஆளாகிவிட்டது.
என்ன செய்வேன் நானொருவன் தனித்து என்ன தான் செய்யமுடியும்.
ஆகையினாற்றான் என் எழுத்தாள நண்பர் களே, பணம் படைத்த பண்பாளர் களே உங்களுக்கு இறுதியான ஒரு எச்சரிக்கை விடுகின்றேன்,
நீங்களும், உங்கள் தமிழும், ஏன் உங்கள் நாடும் காப்பாற்ற விரும்புவீர்களானால், ஈழத்துத் தமிழ் நூல்கள் சிறிதும் பெரிதுமான பலவற்றை உல கத்தின் மூலை முடுக் கெல்லாம் பரவவிட வழி செய்யுங்கள்.
அப்படி நீங்கள் செய்தீர் களானால் உங் களுக்கும் எனக்கும் ஏன் தமிழுக்குமே உயிர் கொடுத்த தெய்வ மா க வருங்காலத்துத் தமிழ் மக்களால் மதிக்கப்படுவீர்களென்று உறுதியாகக் கூறுகின்றேன்.

Page 10
கவி மலர்கள்
1. சுயசரிதை
 ெ3 )
12
9 08
2. இறைவன்
3. சுதந்திரம்
23
உணர்ச்சி
32
5. தமிழ்
42
6. அன்பு
207
- 2 - 3 : 4 + 8 8 : 5 *
49
7. காதல்
60
8. சோகம்
ஏ 9 ?
69
9. பெண்மை
73
10. தொழில்
81
11. வாழ்வு
12. குடும்பம்

சுயசரிதை
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனது வே - பட்டணத்துப்பிள்ளை
முன்னுரை
1. என்னைப்போல் எத்தனையோ கவிஞர் வந்தார்
ஏழ்கடலும் தம்புகழைப் பரப்பி நின்றார் தன்னையும் தமரையும் அதற்கே யீந்தார்
த தரணியிலே தமக்கென்றோர் இடத்தை வகுத்தார் இன்னுமின்னும் எத்தனையோ ஈணு கின்றார்
என்றென்றும் இவர்கட்கு ஓய்வே யில்லை அண்ணாவொடு பாரதியொடு விபுலானந்த அடிகளொடு
நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவரும் சேர்ந்திட்டார்.
2. இல்லறத்தை நாடிநின்றார் சிலபேர் இங்கு
துறவறத்தை வேண்டிநின்றார் சிலபேர் இங்கு எல்லையில்லாப் பரம்பொருளைத் தேடினார் சிலபேர்
இருக்கின்ற இடத்தையே தோண்டினர் சிலபேர் இல்லையில்லை என்றெதற்கும் முடிவே யில்லை
- என்றெதற்கும் அழிவுமில்லைப் பிறப்பும் இல்லை வல்லபெரும் கோளசக்தி மகா சக்தி
வைத்தவிடம் எடுத்தவிடம் எங்கும் சக்தி.
3. ஆடியோடி அலைந்தபின்பு களைத்த பின்பு
அண்டத்தின் மானிடப் பூச்சி யெல்லாம் ஆவென்று வாய்திறந்து மூச்சை நீக்க
அடங்கிவிட்டார் மண்ணிற்குள் மண்ணி னோடு ஆகையினாற் கூறுகின்றேன் நண்பா கேளீர்
அகிலத்தில் முன்னோர்கள் வளியே யெமக்கும் போகையிலே எதுகூடக் கூட வரா
போகையிலே நல்லதையே விட்டுச் செல்லும்.

Page 11
பிறப்பு
4. வாழ்ந்தவொரு ஜீவனுக்கும் பிறப்பு உண்டு
வையகத்திற் பிறந்ததற்கு அழிவு முண்டு சூழ்ந்துவிட்ட உலகத்தின் உண்மை இஃதே
சொல்லுகின்றேன் கேளப்பா என்னைப் பார்த்து தாழ்ந்துவிட்ட சாதியென்று உலகில் இல்லைத்
தாமேதான் பெரியரென்று எவரும் இல்லைக் கீழானோர் மேலானோர் என்போர் எல்லாம்
கொண்டுவிட்ட செய்கையதின் ஒளிப் பிழம்பே. 5. உலகிலுள்ள நியதிகட் கேற்ப நானும்
ஓராணும் ஓர் பெண்ணும் குலவிப் பெற்ற இல்லறமாம் இன்பத்தின் வாரிசு ஆக
இங்குநான் பிறந்திட்டேன் இதுவே உண்மை அல்லவன்றிக் கடவுளென்னைத் தமிழைக் காக்க
- அன்றியிங்கு மக்களையே கரையிற் சேர்க்கத் தொல்லுலகிற் படைத்துஎனை அனுப்ப வில்லைத்
துணிந்துநான். அப்படியும் கூற வில்லை. 6. பிறந்துவிட்டேன் வாழுகின்றேன் பின்னும் ஏதோ
பிறரையோ என்னையோ வருத்தல் இன்றி அறம்காத்து வாழ்ந்துவிட ஆசை யுண்டு
அது எனது கையிலன்றி வேறெங் குண்டு? மறவாமற் கூறுவதைக் கேளும் தம்பி
மானிலத்தில் நீவேறு க நான்வே றில்லை மறந்துவிட்டால் உலகத்தில் உண்மை இல்லைக்
கல்வியில்லைக் கேள்வியில்லை இன்பமில்லைத் துன்பமில்லை 7. கல்வியில்லா மானிடர்கள் உலகில் ஏன்தான்
காசுபணம் சேர்த்துவிட்டால் மட்டும் போதா நில்லென்று மறித்துமே நீதியை ஒதிவிட
நிறைந்துவிட்ட காசுபணம் உதவி செய்யா கல்யானை போன்றுநாம் பெருத்து வீற்றுக்
கயமைத்தனம் செய்யமட்டும் உதவி செய்யும் நில்லிங்கு நின்றெனது சொல்லைக் கேளு
நிலமைதனை அறிந்துகொண்டு கல்வி கல்.

கல்வி
8. இழமையிற் கல்விகற்கக் குடும்ப வாழ்க்கை
இடையூறாய் உன்வாழ்வில் இருந்து விட்டால் அழுக்குமனம் பெற்றுநீ மாழ வேண்டாம்
ஆற்றலுடன் பல்நூல்கள் தேடிக் கல் வழுவில்லா அன்பருடன் சேர்ந்து வாழ்ந்து
வல்லவனாய் அவர்மூலம் கல்வி கல் தொழுதலுடன் வாழ்வதற்கும் தொழில் பெற்று வாழ்வ
குறிப்பான கல்விகற்று மாண்டுநீ போகாதே (தற்கும் 9. கல்லூரி சென்று பல கல்விகள் கற்றிட்டேன்
கண்டகல்வி நிண்டகல்வி அனைத்தையும் கற்றிட்டேன் விஞ்ஞானம் கற்றிட்டேன் அரசாங்க உதவியால்
வேறும்பல கற்றிட்டேன் விழிகுத்த விளிப்புடன் ஆங்கிலம் கற்றிட்டேன் அரியசெந் தமிழும் சேர்த்து
அ ஆசிரியர் போற்றிட அனைத்தையும் கற்றிட்டேன் தூங்கியே கிடவாமற் துடிப்புடன் முன்னேறித்
துள்ளலிற் பாய்தலில் வீரனும் ஆகினேன். 10. கிராமத்தின் முன்னேற்றச் சங்கத்தின் சார்பிலும்
கிரமமாய்ப் பயிற்சிகள் பலதையும் பெற்றிட்டேன் விவசாயம் கற்றிட்டேன் விதம்வித பரீட்சைகள்
தட்டச்சு சுருக்கெழுத்து அனைத்தையும் கற்றிட்டேன் கவனமாய்க் கற்றிட்டேன். சிங்களம் உடன் சேர்த்துக்
கண்டவர் வியந்திடக் கற்றிட்டேன் கற்றிட்டேன் இவைகளால் என் பயன் பெற்றிட்டேன் இதுவரை
இல்லையில்லை இல்லையில்லை இன்றுவரை ஒன்றுமில்லை
காதல் 11. காதலில்லா மானிடர்கள் மனிதர் அன்று
கல்லுமண் போன்றவொரு திடப் பொருளே ஆதலினாற் போலுமெங்கள் கடவுள் எல்லாம்
அந்தவொரு காதலையே தாமும் செய்தார்

Page 12
( 4 )
"கத்தி சித்திரு,
பூதலத்து மானிடர்க்குக் காதல் வேண்டும்
புகழுடம்பு எய்துதற்கும் அதுவே துணை ஆண்மையுள்ள ஆணிற்கும் பெண்மையுள்ள பெண்ணிற்
அதுவன்றோ அத்தன்மை என்றும் ஈணும் (கும் 12. ஆண்மையுடன் பிறந்துவிட்ட நானும் இங்கு
அக்காதல் கொண்டதினாற் தவறென் இங்கு? வீணான வார்த்தையிட்டு வீணே யஃதை
விரட்டி நான் மறைத்துவிட்டாற் பயன்தான் என்ன? காணாத பொருளை நான் காட்டவும் இல்லைக்
கண்டுவிட்ட பொருளை நான் மறைக்கவும் இல்லை உண்மையிது சத்தியமே உரைத்து வந்தேன்
உலகத்தில் உயர்வதற்கும் ஆணிவேர் அஃதே. 13. உடலுடன் உயிருடன் கலந்துபின் ஊறிவிட்ட
உன்னதமாம் பள்ளிதனிற் கல்விகற்கும் நாளதிற் படித்துவந்து பெண்மைமலர் பைங்கொடியாள் அவள்மீது
பார்வைதனில் நான்வீழ்ந்து இரண்டறக் கலந்திட்டேன் படிப்பறையின் தலைவனாய் நானங்கு வந்துவிட
- பைங்கொடியாள் பெண்களுக்குத்தலைவியாய் வந்திட்டா அடிக்கொருக்காக்கிலுகிலுப்பாள் அருகினில்வீற்றிருந்து (ள்
ஐயையோ நான்மாறி அவள்தாள் சரணடைந்தேன். 14. இருவரும் விடுதியில் வாழ்ந்துகல்வி கற்றுவந்தோம்[வோம்
எங்கள்தலைத் தொழிலினால் விரைவினில் வகுப்படை திரும்பிநாம் வகுப்பைவிட்டு விடுதிக்குச் செல்கையிலும்
ஒன்றாகப் புறப்பட்டு அவரவராய்ச் சென்றிடுவோம் வரும் வழியில் இடைக்கிடையே திரும்பியும் நோக்கிடுவோம்
வந்தபின் மறையும்வரை சிரித்துமே சென்றிடுவோம் இருவர் நாம் அவரவரை விரும்புவதாய் எண்ணினான்
இங்கெனது இலட்சியத்தாற் களிபூத்துச் சொரி
(சொரிந்தேன் 15. அவளெந்த ஊராளோ உரியகுலம் எதுதானோ
என்றும்நான் அறியவில்லை அறியவும் முயலவில்லை அவளுடை உள்ளநிலை காதல்நிலை ஒன்றுசரி
என்றுமே கேட்டதில்லை கேட்கவும் முயலவில்லைத்

( 5 )
தவறான பாதையெதோ சரியான பாதையெதோ
என்றுகூட எண்ணவில்லை எண்ணவும் தோன்றவில்லை முடிவாகக் கூறுகின்றேன் முழுமையில் நானவளை
உறுதியாய் நேசித்தேன் உளமாரக் காதலித்தேன். 16. உலகத்திற் சாதியில்லை உயர்வுமில்லைத் தாழ்வுமில்லை
ஒன்றுமே இயற்கையின் படைப்புமில்லைப் பகுப்புமில்லை சில கெட்ட சோம்பேறிப் பேர்வளிகள் ஒருசேர்ந்து
சீராகச் சிறப்பாகத் தாம்வாழ வேண்டுமென்று சீதணத்தைக் கொண்டுவந்து சிறப்பான பெண்களது
வாழ்க்கையே சிதறிவிட வழிகோலி வைத்துவிட்டார் இதனாலென் உள்ளத்தில் என்றென்றும் கொதிப்புண்டு
இதைநீக்க என்வாழ்வை அர்ப்பணிக்கத் தயாரானேன் 17. எனதிந்த இலட்சியத்தை நிறைவேற்றப் பொருந்திவிட்ட
எனதுள்ளம் களிசிந்த அவளை நான் காதலித்தேன் ஆனால்நான் என்செய்வேன் அவளதற்கு இணங்கவில்லை
அலறினேன் அலறினேன் காதலால் இலட்சியத்தால் என்னுள்ள வேதனையை இங்குநான் உங்களுக்கு
எழுத்தினால் எப்படி எடுத்து நான் உரைத்திடுவேன் ஆனாலும் வாழுகிறேன் அவள் போன பிற்பாடு
அழுவதா சிரிப்பதா அழுதழுது சிரிப்பதா 18. இலட்சிய நோக்குடனே அலைந்துவந்த எனக்கிங்கு (டாள்
இன்னுமொரு பெண்ணொருத்தி என்கண்ணிற் தென்பட் எண்ணினேன் மகிழ்ந்தேன் இருந்து நான் வியந்திட்டேன்
இவற்றைநான் எப்படி எழுத்தினில் வடித்திடுவேன் எண்ணியெண்ணி நானிங்கு இருந்துகொண்டு களிக்கையில்
எப்படியோ இவளுமெனை ஏமாற்றிச் சென்றிட்டாள் எண்ணியது நடக்கவில்லை இருந்து நான் புலம்பினேன்
எங்கெங்கோ என்பாட்டிற்சுழன்றடித்து வலம்வந்தேன்
மணம் 19. சுழன்றடித்து வலம்வந்து சுற்றிநான் ஓய்ந்தபின்பு
சோர்வுடன் போய்ச்சேர்ந்தேன் அங்கோர் மூலையில் வழமான வாழ்வினைப் பெற்றுவிட முடியவில்லை
வடித்துவிட்ட இலட்சியத்தைச் செயலாக்க முடியவில்லை

Page 13
( 6 )
கீழான செய்கையதோ மேலான செய்கையதோ
கிடைப்பதற்கு ஒன்றுமில்லை அன்றுமில்லை இன்று மேற்கொண்டு என்செய்ய என்றுநான் எண்ணியே (மில்லை
இடைக்காலம் சிறுதுளியைக் கழித்து நான் செல்கையில் 20. எங்குநான் இருந்தேனோ அந்தவூர்க் குடும்பத்தில்
உள்ளவொரு பெண்ணினை அவள் பெற்றோர் விருப்புட தங்குதடை ஏதுமின்றித் தடைசெய்யும் என்சுற்றம் என்
தன்பாட்டில் அங்கிருக்க என்பாட்டில் நானிங்கு .. தனியனாய் ஒருவனாய்த் தனித்துநான் மணம்செய்தேன்
சட்டத்தின் துணைகொண்டு சம்பிரதாயம் உடன்சேர்த்து பணம்தேடி அலைந்திட்ட பதர்களைப் போலன்றி
பணம்சுற்றம் இரண்டையும் பறக்கவே சாடிட்டேன். 21. அசைத்திடா உலகத்தை அசைத்திட்டேன் இருகையால்
அண்டங்கள் ஒன்றுமே அலறியே விழவில்லை திசைகொண்ட சீதணத்தைத் திசைமாற்றிச் செலுத்திட்டேன்
திருடர்கள் பேயர்கள் திகைத்திட்டே ஓடினார் அசைபோட்டுப் பார்த்திட்ட அன்பர்கள் பண்பர்கள்
ஆசிகள் கூறினர் அன்புமொழி கூறினர் தசைப்பலம் உடற்பலம் சலித்திடா மனப்பெலத்
தகமைகள் கொண்டவர் என்பாதை பற்றுங்கள். 22. புரட்சியிலா வாழ்க்கையிலே இனிமை இல்லைப்
புணர்ச்சியிலா ஆண்மையிலே ஆண்மை இல்லை மருட்சிகொண்டு வாழ்க்கையை மண்டியிட ஆக்காதீர் (தீர்
மனத்திலே கொள்கையிலா இருமனத்தைக் கொள்ளா அருட்செல்வம் கொண்டிடுதல் ஆண்மைக்கு அழகேதான்
அதையுங்கள் செயல்மூலம் காட்டிவிட முயல்கையில் கருதிவிடாத் துன்பங்கள் பலவந்து சேர்ந்திடும்
கடினமதைத் தாங்கியே மனத்திலே உறுதிகொள்
பொருட் செல்வம் 23. உயிர்கொண்டு நாம்வாளப் பணமே வேண்டும்
உலகத்தில் அதுவின்றி எதுதான் ஆடும் வயிறுபசி எடுத்துவிட்டாற் போதும் போதும்
வந்தஅன்பு காதற்பாசம் பற்றும் போகும்

(7)
கயிறுவிட்டு வாழுகின்ற கயவர் கூட்டம்
கற்றதிதை எதற்காகப் பணத்திற் கன்றோ உயிருடல் அனைத்திலும் பணமே மேன்மை
உண்மையிதை உலகத்தில் எங்கும் சொல்வேன். 24. கதிர்காமம் செல்லுதற்குக் காலைத் தேய்த்துக்
களைத்துமனம் சோரச்சோர நடந்து செல்லும் பக்தர்என்று கூறுமிந்த பதர்கட் கெல்லாம்
பதைத்துமனம் கூறுகின்றேன் பணத்தைச் சேர்க்க எதிர்காலம் என்றொன்று எவர்க்கும் உண்டு
இதில்நின்று தப்புதற்கு எவர்க்கும் முடியா அதற்காகக் கூறுகின்றேன் அன்பா நண்பா
அழியுமுடல் உள்ளவரை பணமே வேண்டும். 25. அறம்காக்க வேண்டுமென்று கூறிச் சென்ற
அறிஞோரை அனுதினமும் போற்று கின்றேன் மறம்போற்றி வாழுகின்ற மக்கள் கூட்டம்
மத்தியிலே நானுமொரு மடைஞன் அப்பா பிறவிரும்பி என்வாழ்விற் களித்து விட்ட
பீழைகளை இத்தேச இளைஞர் எல்லாம் ஒருபோதும் அறியமாட்டீர் அறமே துணை
அதுவெல்லாம் உலகத்தின் வினைப் பயனே.
கடமை 26. ஆக்கியோன் ஒருவனெனை ஆக்கிவிட்டுச் சென்றுவிட்டான்
நோக்கியே இருந்து அவர் நுண்செல்வம் நுகரவில்லைக் கேட்கரிய அவர்சொற்கள் கேட்டுநான் அறியவில்லை
ஆக்கியோன் போனபின் அன்றிருந்து இன்றுவரை. 27. தூக்கியெனைச் சீராட்டித் துயரத்திற் பங்கெடுத்துதி
தேக்கிவைத்த செல்வங்கள் தெவிட்டாத இன்பமதை நோக்கியென்றும் நுண்ணறிவை நுணுக்கமாய்ப்பெற்றிடவே ஆக்கிவிட்டாள் அன்னையவள் அன்றிருந்து இன்றுவரை என்றென்றும் என்னுயிர்தான் இங்கிருந்து நீங்கும்வரை துண்றுகண்ணீர் பாய்ந்து வரத் துயரவாழ்க்கை வாழ்ந்
(திடினும் நின்றுஎன்றும் தவம்புரிந்தும் நித்தம் நித்தம் போர்புரித்தும் என்றுமன்னை கமலடிகள் எடுத்துவைக்க உதவிடுவேன்
28.

Page 14
( 8 )
29. பணவுதவி பொருளுதவி பல்வகையாம் வேறுதவி
குணவுதவி குன்றுதவி கொடுவுதவி பெறுவுதவி கணவுதவி கனவுதவி கையுதவி காலுதவி மனவுதவி மலருதவி மங்காமற் செய்து எனை.
30. மருமகன் என்றுஎனை மனத்திலே பெற்றுவிட்டோ
பெருவாழ்வு பெற்றிடவே பெறற்கரிய வழிகளெல்லாம் கருமத்திற் கண்ணாக இழமையில் எனக்கோதி வருவதற்கு அறிஞனாய் வகுத்துவிட்டார் அவரென்னை
31.
தவக்கடமை செய்தாலும் தனித்திருந்து வாழ்ந்தாலும் பவக்கடமை செய்தாலும் பரிதவித்து வாழ்ந்தாலும், சவக்கொடுமை எனைச்சேர்த்து சார்ந்து கொண்டு உதைத்
(தாலும் மறற்கரிய கடமைகளைக் கணமேனும் மறவேன்நான்
32.
ஆண்டிரண்டோ இரண்டரையோ அவருடனே உறவாடி ஆண்டவனி படைப்பான அறிவொளியின் திருவுருவான காண்போரும் கேட்போரும் களிப்புடனே வரவேற்கும் கண்டதுண்ட மாக்குமந்த கல்விதனைக் கற்றிட்டேன்
33.
அரசாங்கம் எனையேற்று அறிவூட்டும் பணியேற்றுப் போவென்று எனையன்று போக்கிவிட நினைத்திடவே பிரசங்கம் பலசெய்தார் பிசகிநான் நடந்திட்டேன் பிரசங்கம் அவர்செய்யப் பின்னாலே சென்றிருந்தால்
34.
காலமெல்லாம் காத்திருந்து கால்களிலே வீழ்ந்திருந்து கோலமெல்லாம் போட்டுவைத்துக் கும்பிட்டுத் தொழுதி பாலமொன்று கட்டியதிற் பணிவுடனே அவரேற்றி இருந்து ஞாலமென்றும் என்வாழ்வில் நலிந்திருக்க வேண்டு
மன்றோ.
35. கவிஞனின் கவிவழங்கள் கருத்தோங்கி வந்துவிட்டாற்
புவியினில் அவரென்றும் புகழுடனே வாழ்ந்திடலாம் செவிசாய்த்து உதவிடவே செல்வமொன்றும் சேராது. தவிதவித்து வாழ்ந்தாலும் என்கடமை மறவேன்நான்

( 9 )
36. சேவித்து அன்றுஎனைச் சேமமாய் வளர்த்தோர்கள்
காவியும் கமண்டலமும் கைக்கொண்டு திரிவதுபோற் கூவிக்கொண்டு அழுது கொண்டு கூக்குரல்கள் போட்டுக்
கொண்டு சாவிற்கும் வாழ்விற்கும் சண்டையிட்டு அழும்பொழுது. 37.
பாவிநான் பரிதவித்துப் படுகுழியில் விழுந்தாலும் சாவின்முனை நோக்கிநான் சரிந்து கொண்டு சென்றாலும் புவியினது மூலையில் நான் புகலிடம் தேடிக்கொண்டு
ஓவென்று கதறியோ ருசொட்டு நீருகுப்பேன் 38. அன்றும்நான் சுதந்திரம்தான் இன்றும் நான் சுதந்திரம்
தான் என்றுமிந்த நிலையெனக்கு இருந்தாலும் கடமைசில குன்றுதனில் வீற்றிருக்கும் கூரொளிகள் விளக்கைப்போல் நின்றுமென்றும் நினைவூட்டி நித்தமெனைப் பிடித்
திடுதே 39. கடமையிலே பிசகிவிடேன் கருத்தினையே கலக்கிவிடேன் மடமைகொண்டு வாழ்ந்து விடேன் மண்ணிலென்றும்
ஒளிர்ந்திடுவேன் கடகடத்து அழியாமற் கருத்தொன்றி வாழ்ந்திடுவேன்
கிடுகிடுக்கும் பாதாளம் கிடைத்ததெல்லாம் சொர்க்கமே 40. இன்னுமொரு உறவினர் தன் சொந்தச் செலவுடன்
எண்ணெழுத்து இவையிரண்டும் கற்றுவிட உதவியிட்டார் கண்ணியமாய் என்றென்றும் களிப்புடனே நானவர்க்குக் கடமைகளைச் செய்துவிடக் கணமேனும் பின்னில்லேன் .
உரிமை 41 உலகத்தில் வாழுகின்ற உயிர்கட் கெல்லாம்
தம்மெண்ணம் போல்வாழ உரிமை யுண்டு கலகத்தைப் புரிகின்றார் சிலபே ரிங்கு
காடையராய் மாறுகின்றார் சிலபே ரிங்கு பலவித்தை பலவினைகள் புரிந்த போதும்
பதைத்து விட மற்றோரை ஆக்க வேண்டாம் எந்தவொரு உயிரேனும் பதைக்க வைத்து
உன்னுரிமை என்றுநிலை நாட்ட வேண்டாம்.

Page 15
( 10 )
42. உரிமையிலா வாழ்க்கையிங்கு அடிமை வாழ்வு
உலகத்தில் உரிமயென்றும் நிலைக்க வேண்டும் கருகிமனம் மாழாமற் கதறிமனம் வேகாமற்
காதலதும் இலட்சியமும் காக்க வேண்டும் உரிமையென்று ஊளையிட்டுக் கடமைதனை என்றுமே
உதறிநீ எறியாதே எறிந்துநீ ஏகாதே உரிமையென்று சொல்கையிற் கடமையும் கூடவுண்டு
உலகத்தில் இவ்விரண்டும் அண்ணன்தம்பி சோதரரே.
எழுத்தாளனாய் என்னைப் படைத்தவர்கள் 43. சின்னையா முருகுப்பிள்ளை சீர்மகன் வடிவேலு
சின்னத்தம்பி செல்லையா சீர்மகள் மாணிக்கம் அன்னையாய்த் தந்தையாய் அவரிங்கு ஆகியே
அவ்விரண்டாம் உலகமா யுத்தமுள்ள போதினிலே. 44. ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தி நாலினது
ஆண்டிலே சித்திரை பத்தாம் திகதியிலே சாய்ந்து தினகரன் சரிந்து மேல் நோக்கிவரச்
சனியென்னும் கிழமையில் அளித்துவிட்டார் உலகி
[லென்னை 45. பள்ளியிலே கல்விகற்கப் பலபேரை எதிர்த்துப்பின்
பாடசாலை மாறியே பறந்தோடிப் பாய்ந்துவந்து பள்ளியிலே என்கூடப் படித்துவந்த பலபெண்ணிற்
பைங்கொடியாள் பெண்மைமலர் பார்வைதனில் நான்
[வீழ்ந்தேன் 46. அறிவினால் மயங்கினனோ அழகினால் மயங்கினனோ
அடக்கத்தால் மயங்கினனோ அன்பினால் மயங்கினனோ குறும்பாகச் சிரிக்கும் குறும்சிரிப்பில் மயங்கினனோ
குறிப்பாக நானறியேன் அன்றுமின்றும் இன்று
[மென்றும் 47. நல்லதென்று நான்நினைத்து நாடியவள் அன்பு பெற
- நானிங்கு காத்திருக்க நயமாகக் கண்திறந்து செல்வமலர் அவளென்னைச் சீர்பெற்ற கலைஞனாய்ச்
சிறந்து நான் ஓங்கிவிடச் சிறப்பாக வாழ்வளித்தாள்.

( 11 )
58. ஆசிரியர் தொழிலேற்று அரியசெந் தமிழைப்பின்
- அறிவுடனே அன்புடனே அழகாக எமக்கோதிப் பேசரிய நற்பண்பு பேறுகள் பல கொண்ட
தென்னல்வைக் ''கணபதிப் பிள்ளை''யென்ற ஆசிரியர்
49 பல்கதைகள் பல்கவிதை பல்லுரைகள் பலவெல்லாம்
பஞ்சியின்றித் திருத்தியென் பல்லார்வம் தனைமூட்டிக் கல்வியொன்று அன்றியின்றிக் கருத்தமுதம் பலதந்து கன்னித்தமிழ் மொழியிலே கருத்தொன்ற மாற்றி
[விட்டார். 50. இவர் நான்கு பேரின்றி இன்னும்பல நண்பர்கள்
எழுத்திலே வல்லோர்கள் எழுதியதை இரசிப்போர்கள் அவரவராம் வல்லமையாம் அன்பாலே அறிவாலே
ஆக்கிவிட்டார் கலைஞனாய் அன்றிருந்து இன்றுவரை.
முடிவுரை 51. உலகம் பிறந்து ஆண்டுகள் எத்தனை?
உயிர்கள் தோன்றி ஆண்டுகள் எத்தனை? அலகும் கணக்கும் அவற்றிற் குண்டோ?
அவைகள் கொடுமைகள் எண்ணி லடங்குமா? கலகம் செய்தே வாழ்ந்திடும் மானிடர்
கண்டதை உண்டு உறங்கிக் களித்துக் கொடுமைகள் செய்து வாழ்ந்து களித்து
நாளை இறந்து மடிவது திண்ணம். 52. அறமும் தருமமும் இன்றி வாழ்பவர்
அனுதினம் அனுதினம் துயரம் காண்கிறார் மறத்தை நீக்கி மாசற வாழ்பவர்
வையகம் எங்கும் புகழைப் பரப்பிறர் கறைகள் இன்றி உலகம் வாழ்ந்திடக்
கருணை எங்கு எப்போ தோன்றும் அறிவிற் தெளிவு அகத்தில் அன்பு
அகன்று விரிந்த பண்புகள் வளர்க.

Page 16
இறைவன்
கலைப்போராட்டம்
1. தென்றல் வந்து மிதிக்கையில் நான்
தேனுண்ட வண்டாய் மாறிப்பின்பு சென்றேன் ஒருபூங்கா நோக்கிச்
செண்பகச் செடிகளின் மத்தியிலே தென்றலில் ஆடிடும் பூங்கொடிபோல்
நின்ற அழகிய பெண்ணொருத்தி சென்றனள் எனது ஓசைகேட்டுச்
செல்வதைக் கண்டு அவ்விடம் நோக்கி ஒன்றியே நானும் விரைகையிலே
ஓடிச் சென்று மறைந்திட்டாள் அன்றே அவ்விடம் அவள்பேர்நான்
அன்னை லக்ஸ்மி என்றறிந்தேள்.
பின்னையில் ஓர்நாள் நான்தனித்துப்
பித்தனைப் போல் மனம்மாறி முன்னையிரவின் நிலவு எறிக்கையில்
முன்றலில் வீற்றுக் களிக்கையிலே வெண்மை நுரையினைப் போலவொக்கும்
வெளுத்த உடற் பெண்ணொருத்தி கன்னற் கவிதை எடுத்துவந்து
கைகளிற்களிப்புடன் இட்டுச்சென்றாள் அன்னையின் முகத்தின் பொலிவு கொண்ட
- அவளிடம் விரைந்து கைகளைப்பற்றி என்னையடைந்து ஏனிதைத் தந்தாய்
என்றிடத் தன்பேர் சரஸ்வதி யென்
(றாள்.

(13)
3. அன்பினிற் தவமிருந்து பால்வார்த்து
அழகான பண்பாடி வலம்வந்து நோன்பினிற் பலசெய்து நோகநோக
நூலிலுள பலதானம் நுணுக்கமாகத் தண்மையாய் மென்மையாய்ச் செய்துபின்பு
தண்குழவி பெறாதோர் எத்தனைபேர் அன்னை பரா சக்தியெனக் கிவ்வுலகில்
அருள்தருவாள் தராளோ யாரறிவார் இன்னும்நின்று நானவளை வேண்டுவது
இன்குழவி யன்றிவே றொன்றுமில்லை
கலைச்செல்வி
மதியைப் பழித்துத் - தண் ஒளியைப் பதித்து - வேல் விழியைக் கொண்டு - செங் கறைகள் கொண்ட முகம்
மெல்ல எடுத்துப் - பின் தலையிற் தட்டிப் - பின் இடுப்பிற் பொருத்தி - மென் அசைவைக் கொடுக்கும் கை.
ஒளியைப் பதித்து - மென் உணர்வைக் கொடுத்துப் - பின் வளியச் செய்து - மென் அசைவைக் கொடுக்கும் துணி(வு).
4.
இடையைத் திருப்பி - மென் அடியைப் பெயர்த்துத் - தண் உடலை அசைத்துப் - பின் நடையைப் பயிலும் நடை.
மெல்ல வந்து - என் எண்ணம் பறித்து - உன் எண்ணம் போற்றிப் - பின் மெல்ல முயலும் அழகு.
பெண்மை உந்தன் - கனித் தன்மை யெந்தன் - முன் அண்மை வந்து - பின் மனதை மாற்றும் இன்பம்.
கலையே யுந்தன் - தனி மோகம் தன்னில் - இங்கு சாகும் என்னை - நீ காட்சி தந்து - பின் ஏற்றுக் கொண்டு - அருள் காட்டாயோ?

Page 17
கலைத்தேவி
1. வட்டநிலா மேலெழுந்து வானமதில் வலம்வந்து
சொட்டுச்சொட்டாம் நிலவதனைச் சொர்க்கமெங்கும்
சொரிந்துநிற்க கிட்டவந்து ஒட்டிநின்று எட்டியெட்டிப் பார்குமந்த
வட்டவட்ட விழியழகு வரிமுகிலில் மறைந்துநிற்கத் திட்டுத்திட்டாய் மேலெழுந்து திசையெங்கும் திரிந்துவரும்
- தேனருவி இதமளிக்கும் தென்றற்காற்று மேலிற்பட பொட்டுமிட்டுப் பூவுமிட்டுக் கிட்டவந்த கலைத்தேவி
கருத்தமுதம் பொழிந்து நின்றாள் கண்ணினிமை
காட்சிதந்தாள்
2. -
காட்சிதந்த கலைத்தேவி கருத்ததனில் நிலைத்து நின்று - கற்பனையாம் பெருவளத்தைக் கருத்தரித்து உருவாக்கிப் பற்பலவாம் கவிதைகளைப் பாரினிலே படைத்துவைத்துச் சொற்கரிய சொற்குற்றம் பொருட்குற்றம் இவையு
மின்றித் தற்பெருமை தனிப்பெருமை தண்ணினிமை இவற்றுடனே
பண்ணினிமை சொல்லினிமை பல்வகையாம் நயங்களு கற்பவரும் மற்றவரும் பார்த்தவுடன் மயங்கிநிற்கக் [டன்
காறிவிட்டாள் கலைத்தேவி காலமெல்லாம் போற்றிவிட.
3. கருத்தந்தாள் கலைத்தேவி கருத்தூன்றி வளர்த்திட்டேன்
கற்பனையாம் கற்பனையிற் கருக்கள்பல பெற்றிட்டேன் உருத்திராட்சம் அணியவில்லை உருவொன்றும் ஓதவில்லை
உலகத்தின் பொய்வேடம் ஒன்றுமே போடவில்லை அருட்பாக்கள் பாடவில்லை அரிய பெரும் நேர்த்திகள்
அவையொன்றும் செய்யவில்லை ஆனாலும் அவளிங்கு அருட்கண்ணைக் காட்டிட்டாள் அன்புமுத்தம் தந்திட்டாள்
அழியுமுடல் உள்ளவரை அவளையிங்கு மறவேன்நான்.
4. மெய்யிலே இடம் பெற்றேன் மேனியெல்லாம் உருப்பெற்றேன்
மென்னெண்ணம் பலவற்றை மேவியே அளித்திட்டாள் கற்பனையிற் சொல்வளங்கள் பல்நயங்கள் அளித்திட்டாள்
கையிலே கவிவளங்கள் கருத்தூன்றி அளித்திட்டாள்

( 15 )
பொய்யிலே திகழாத புகழுரைகள் அளித்திட்டாள்
பொல்லாத உலகத்தின் நல்லவையும் அளித்திட்டாள் மெய்யெனக்கு உள்ளவரை மேவுமுடல் அழியும்வரை
மென்மேலும் கலைவளங்க மென்மேலும் இறைஞ்சு
கிறேன்.
ஓ பராசக்தி எனது தாயும் தந்தையும் ஆகி
மக்களைப் படைத்த பராசக்தியே உனது உருவைக் காணாத் தன்மையில்
மக்கள் பிரிந்து வாழ்வது பாராய்
2.
மக்கள் தங்களைப் பிரித்து வைத்து
ஆசை கோபம் வேற்றுமை கொண்டு மாக்கள் போன்று மண்ணில் வாழ்ந்து
மனதில் வெறுப்பைப் பூண்டு மாழ்கிறார்
3. இதனால் மக்களுள் மக்களாய்த் தோன்றிய
நபிகள் நல்லதோர் பாதையைச் சொன்னார் புத்தரும் நல்லதோர் நெறியைக் காட்டினார்
வேதமும் தர்மத்தைப் பேணியே வளர்த்தன
4. நதிகள் அனைத்தும் கடலை நோக்கியும்
படிகள் அனைத்தும் குளத்தை நோக்கியும் விதியே என்று செல்வது போன்று
மதமும் மனிதனை கருணைக் கழைத்தன.
இவற்றை உணரத் தவறிய மனிதன்
பேதம் கொண்டு வேற்றுமை பூண்டான் உறவை முறித்துப் பிரிவை வளர்த்தான்
என்பதை எண்ணலும் உள்ளம் உருகுது. 6. ஆண்டவன் படைப்பில் நாங்கள் அனைவரும்
அண்ணன் தம்பி என்றிட நினைத்தாற் கொண்ட கோபம் மறைந்தே போயிடும்
அறமும் அன்புடன் கூடவே மலரும்.

Page 18
( 16 )
7. அனைவரும் மனிதர் என்ற எண்ணம்
மக்களுக் கிடையிற் காட்சி தந்தால் அனைவரும் மண்ணின் குழவிகள் போல
ஒற்றுமை மேலிட வாழ்வது திண்ணம். 8. உலகம் எங்கும் அன்பிலே இணைந்து
ஒன்றாய் மக்கள் சோதரர் போன்று உலவிட எந்தன் பணியும் உதவிடில்
நிலையில் வாழ்விற் பாக்கியம் பெறுவேன்.
- கடவுள் 1. சேய்களில் என்றும் அன்பே யின்றித்
- தெளிவு கொண்டு மனதைத் திறந்து தெய்வம் போலச் சிரிக்கும் போது
சேர்ந்து சிரிக்க மறந்து விட்டு மெய்யை வருத்தும் பயத்தைக் காட்டிச்
சிந்தை நோகச் செய்து விட்டு பொய்யாய்க் கல்லில் அன்பைக் காட்டிக்
கோவிலிற் சென்று வணங்கி னாற்போற் கடவுள் வந்து சேர்வாரோ ?
கனியும் அருளைச் சுரப்பாரோ ? 2. மனைவி மக்கள் வீட்டில் இருந்து
அன்பைப் பெற்றிட ஏங்கித் தவிக்க கனவிலும் அவர்களை நினையா திருந்து
நண்பர் கூடச் சேர்ந்து கொண்டு பனையின் பாலைக் குடித்து வெறித்துக்
- கூத்து ஆடித் திரிந்து விட்டு ஏனையோர் செய்வதைப் போலத் தானும்
2 மடிப்பிட்சை எடுத்து வந்தாற் கடவுள் வந்து சேர்வாரோ ?
கனியும் அருளைச் சுரப்பாரோ ? 3. குட்டித் திரத்தவும் குனிந்து கொண்டு
- நன்மையோ தின்மையோ சொன்னதைக் பெட்டியிற் பாம்பைப் போலப் புவியிற் [கேட்டுப்
பேயனாய்ப் பித்தனாய் வாழ்ந்து கொண்டு

( 17 )
பட்டப் பகலிற் சங்கரா சொல்லிச்
சாமி வேடம் போட்டுக் கொண்டு கெட்ட எண்ணமும் கூடவே கொண்டு
கோவிலிற் சென்று குடியிருந்தாற் கடவுள் வந்து சேர்வாரோ ?
கனியும் அருளைச் சுரப்பாரோ ?
கட்டின மனைவி ஒருவள் இருக்க (1)
மற்றவள் ஓடு கூடித் திரிந்து கட்டின தாலியை அறுத்து விட்டுக்
கணவனை ஏங்கித் தவிக்க விட்டுப் பட்டினம் வாழும் பரத்தையர் சிரிப்பிற்
பண்பையும் அன்பையும் கொடுத்து விட்டுக் கெட்ட வாழ்வினை வாழ்ந்து விட்டுக்
கடவுளை நினைத்துக் காவடி எடுத்தாற் கடவுள் வந்து சேர்வாரோ?
கனியும் அருளைச் சுரப்பாரோ?
அண்டை அயலிற் பசியாற் துடிக்கப்
பார்த்துக் கொண்டும் பாரா முகமாய்ப் பணத்தை அதிகம் விரயம் ஆக்கிப்
பாலும் பழமும் சேர்த்துக் கரைத்துத் தன்தன் பிள்ளையும் கேட்டுக் கதற
ஏசி அடித்துத் துரத்தி விட்டுக் கோவிலிற் சென்று குந்தி யிருக்கும்
கல்லின் உருவைக் குளிக்க வார்த்தாற் கடவுள் வந்து சேர்வாரோ? ,
கனியும் அருளைச் சுரப்பாரோ ?
பழியை அகற்ற எண்ணம் கொண்டு
|-கோவிலை நோக்கிச் செல்லும் பொழுது வழியில் இருப்போர் தருமம் கேட்க
அவர்கள் நிலையைச் சுட்டிக் காட்டிப் பழித்துக் கொண்டு கோவிலுட் சென்று
கல்லைப் பார்த்துக் கண்ணீர் வடித்து

Page 19
(18 )
விழுந்து விழுந்து வணங்கி எழுந்து
கற்பூரம் எரித்துக் கரியைப் பரப்பினாற் கடவுள் வந்து சேர்வாரோ?
கனியும் அருளைச் சுரப்பாரோ ? காலையில் எழுந்து முகத்தினைக் கழுவிக் - கடவுளைப் பின்பு' துதித்து வணங்கி மாலை வரையில் மனைவி மக்களை
மாட்டைப் போன்று ஏசிப் பேசி மாலை வந்ததும் மக்களை அழைத்து
மக்கா பேயா விளக்கை ஏற்று கோலம் போடு பத்திகள் கொழுத்து
கும்பிடு என்றே தானும் துதித்தாற் கடவுள் வந்து சேர்வாரோ?
கனியும் அருளைச் சுரப்பாரோ? உண்மை அன்பைக் கொண்ட யார்க்கும்
உள்ளம் நிறையக் கடவுள் உண்டு இன்பம் கேட்டு இரங்கும் மக்களை
இனிய அன்பால் ஆறுதல் அளிக்கும் பண்பை உடையவர் அன்றே இங்கு
பாரிற் கிடைக்கும் உண்மைக் கடவுள் மண்ணிற் பிறந்த மக்கள் அனைவரும்
மனிதர் என்பதை உணர்ந்து கொண்டு நம் பி வந்தார்க் காதர வளித்து
அன்பைச் சொரிவரே உண்மைக் கடவுள்
போலி அன்பினைக் காட்டாமல்
உண்மை அன்பைக் காட்டுவரே உலகில் வசிக்கும் உத்தமற்கு
உண்மைக் கடவுள் போலாவார் கல்லும் மண்ணும் கடவுள் இல்லைக்
காகித அட்டையும் கடவுள் இல்லைப் புல்லும் பூண்டும் கடவுள் இல்லைப்
புனித சிற்பமும் கடவுள் இல்லைக் கல்லும் கனியக் கனிவைக் காட்டும்
சொல்லைக் காப்போர் உண்மைக் கடவுள்

( 19 )
10.
கனியும் குழவி மனமும் கடவுள்
காத்திடும் அன்புக் கணவனும் கடவுள் பனியும் மழையும் பசுமைக் கடவுள்
பகலும் இரவும் கடவுள் கடவுள் இனிமை அன்பை உடையவர் கடவுள்
இரக்கம் மனதில் உடையவர் கடவுள் கனிந்த கண்ணின் பார்வை கடவுள்
காலம் போற்றும் பெண்மை கடவுள் பனித்த பண்புக் கண்கள் கடவுள்
பார்வை அன்பும் கடவுள் கடவுளே.
கோவில்
1.
ஆயிரம் ஆயிரம் வேள்விகள் எத்தனை
அண்டங்கள் வெடிக்கும் வேள்விகள் எத்தனை? கோவில்கள் கோவில்கள் தெய்வங்கள் எத்தனை?
கும்பிடும் கும்பிடும் வழிகளும் எத்தனை? 2. தந்திர மந்திரச் சாமிகள் எத்தனை?
தண்டல்கள் பிழைப்புக்கள் சுரண்டல்கள் எத்தனை? எந்திர வாழ்வினில் இன்பங்கள் எத்தனை?
இல்லறம் இன்றிய இல்லறம் எத்தனை? 3. ர்
பாற்செம்புக் காவடிப் பக்தர்கள் எத்தனை?
பகலிலும் இரவிலும் பித்தர்கள் எத்தனை? உற்சவ அபிசக உழைப்புக்கள் எத்தனை?
உண்மையிற் கடவுளால் ஊழல்கள் எத்தனை?
4.
கைகளில் அடித்திடும் சில்லங்கள் எத்தனை
கால்களில் ஆடிடும் சலங்கைகள் எத்தனை? மெய்யினில் ஆடிடும் எண்ணங்கள் எத்தனை?
மேவிடும் கண்களிற் சுழற்சிகள் எத்தனை?
நாவினில் ஊறிடும் நாதங்கள் எத்தனை?
நடுங்கிடும் உடலினில் ஊறல்கள் எத்தனை ? பாவினில் ஊறிடும் பண்புகள் எத்தனை?
பார்த்திடும் பார்வையிற் பாசங்கள் எத்தனை?

Page 20
( 20 ) 6. வாழ்ந்திட வாழ்ந்திட வழிகளும் எத்தனை?
வையத்தை ஆட்டிட வழிகளும் எத்தனை? சூழ்ந்திட்ட மக்களிற் சூழ்ச்சிகள் எத்தனை?
துன்பமாம் இன்பமாம் தொல்லைகள் எத்தனை?
7. உருட்டலில் மிரட்டலில் வழிகளும் எத்தனை
உண்மையை மறைத்திட வழிகளும் எத்தனை? இருட்டினிற் பகலினில் ஆட்டங்கள் எத்தனை?
இறைவனின் பெயரால் மோசங்கள் எத்தனை?
3.
ஆட்டங்கள் பாட்டங்கள் கோவில்கள் எத்தனை?
அந்தர எந்திரக் கோவில்கள் எத்தனை? கூட்டல்கள் கழித்தல்கள் பெருக்கல்கள் எத்தனை?
கோவில்கள் கொண்டிட்ட கோலங்கள் எத்தனை?

சுதந்திரம் - 3
சுதந்திரம்
அந்தரத்தில் நீந்துகின்ற ஆழகுநிலா அருகில் வந்து
மந்திரத்தை ஓதியெமை மயக்கிவிட்டுச் சென்றாலும் சுந்தரத்தின் ரூபமாம் சொற்பவின்பம் எமக்களித்து [லும்
எந்திரத்தின் வாழ்க்கைதனை எமக்களித்துச் சென்றா சுதந்திரத்தாற் கிடைக்குமந்தச் சுகந்தானும் கிடைக்குமா?
சொந்தம் கொண்டுநாங்களிங்குசுகம் பெறவும் முடியுமா அந்தநிலை மாறிப்பின் எந்தநிலை வந்தாலும்
சுதந்திரத்தின் தீபத்தைச் சுடரொளியாய் ஏற்றுவோம்
2. பறந்து திரியும் பசுங்கிளியைக் கூட்டிற் பிடித்தடைத்துப் (துப்
பால்பழங்கள் வைத்துப்பின் பாற்சோறும் தான்வைத் பாட்டுச்சொல்லிக் கொடுத்துப்பின் பாடவைத்து மகிழ்ந்
தாலும் பறந்து செல்ல மாட்டாதோ? சுதந்திரத்தை விரும்பா பால்பழங்கள் இன்றிநற் பாகற்பழம் கிடைத்தாலும் (தோ?
பரிவுகாட்டு என்றேயது பாய்புலியை நாடிடுமா ? நல்வழங்கள் இன்றியிங்கு நாதியற்றுத் திரிந்தாலும்
சுதந்திரமே விரும்பிவிடும் சோகமதை விரும்பாது.
அறம் காப்போர் - முரசம்
1. பத்துப்பேர் மத்தியிற் பருவமங்கை யகப்பட்டுப் படுந்துயரைச்
சாடு முரசே நின்று சாடுமுரசே [சகியோமென்று யுத்தவீர ரென்று சொல்லிக்கன்னியர் கற்புதனைச் சூறையாட
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே (மாட்டோமென்று வாயில் நுரை கக்கக்க வழியிற் செய்ய மாட்டோமென்று " கூவு முரசே நின்று கூவுமுரசே பெண்க ளெங்கள் தெய்வ மென்று பேருலகம் அறியு மட்டும்
சாடிச் சாடிக் கூவியென்றும் கொட்டுமுரசே.

Page 21
( 22 )
2. கன்னியரின் கொங்கைகளை வெட்டி வீழ்த்த மாட்டோமென்
முழங்கு முரசே நின்று முழங்குமுரசே [று ஒளிபாய்ச்சும் டோாச்சுகளை உட்செலுத்த மாட்டோமென்று
அலறு முரசே நின்று அலறுமுரசே மழலை பேசும் வாயினுள்ளே வழியும் மாறி வையோ மென்று
கொழுத்து முரசே நின்று கொழுத்து முரசே செழுமையெங்கள் தமிழ்க்கொழுந்தைச் சீரழியவிடோமென்
முழங்கி முழங்கி அலறி யென்றும் கொழுத்துமுரசே (று
உரலிற் குழவி தலைகளைப் போட்டிடிக்க மாட்டோ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே விரலின் நக இடையினிலே ஊசி யேத்த மாட்டோ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே! உருகும் தாரிற் குழந்தைகளின் தலைகள் தோய்க்க மாட்டோ
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே [மென்று கருகிச் சாம்ப ராகிலும் உயிர்க ளெங்கள் தெய்வ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே:
4.
ஆட்டு மந்தை போல நாங்கள் ஆடிவிட மாட்டோ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே காட்டாறு போல நாங்கள் கரையுடைத்துப் பாயோமென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே பூட்டுடைய வழமுடைய புனித வாழ்வை வருக வென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே மாட்டுக் கூட்டம் விரும்பு கின்ற மாட்டு வாழ்க்கை வாழோ
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே. [மென்று
கொட்டுமுரசே நின்று கொட்டுமுரசே
1. ஆதிக்குடி எங்கள்குடி அழியவிட மாட்டோ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டு முரசே இந்தியர்வாழ் சோதரர்கள் இரத்த மீந்த தேச மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே.

( 23 )
2.
சாதி யிங்கு இரண்டு அன்றி வேறு ஏதும் இல்லை யென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே சாதிவெறி தழைத்தோங்கும் தறுகண்ணர் ஒழிக வென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே.
ஐயாஐயா என்று சொல்லி இரண்ட கங்கள் செய்யோ மென் வ கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே
(று நாயினரின் காதிலே நாராசம் போல்ஒலிக்கக்
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே.
- பட்டிணியே கிடந்தாலும் பாடுபட்டு உழைப்போ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே கட்டிக் காப்போர் பொருளை யென்றும் களவாட மாட்டோ
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே. [மென்று
பட்டினியாய் வந்தவர்க்குப் பரிவுடனே படைத்தோ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே கடிது நெஞ்சம் படைத்த வர்கள் கையில் நாட்டை விடோ
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே. [மென்று
தனியாட்சி வந்தாலும் தமிழெங்கள் சொந்த மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே தேச மொன்று வேண்டு மெண்டு செல்வ மெங்கள் தூசி
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே. (யென்ற ம்
7. ஆசை காட்டி அழித்திடிலும் அழிந்துவிட மாட்டோ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே வேசை கொண்டு அலைபவள்போல் வந்துவிட மாட்டோமென்
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே. [று
8. இனியும் நாம் எவரையுமே இரந்துவிட மாட்டோ மென்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே கனியு மன்பு எங்களது கனிந்துவரும் ஊற்று என்று
கொட்டு முரசே நின்று கொட்டுமுரசே.

Page 22
பயமென்ன
1. வெற்றியின் உச்சியில் ஏறிநின்றோம் - இன்று
வீழ்ச்சியின் உச்சியை எட்டிவிட்டோம் நெற்றியின் வேர்வையைச் சிந்துகின்றோம் - இனி
நீசரைக் கண்டுநாம் அஞ்சிவிடோம்.
துன்பத்தில் அன்பினை வாங்கிவிட்டோம் - இனித்
துணிந்திங் கொன்றாகச் சேர்ந்திடுவோம் அன்பினால் அன்பாக ஆகிவிட்டோம் - துயர்
அற்றிட நாமிங்கு வாழ்ந்திடுவோம்
3. உழைப்பினிற் காதலைக் கொண்டுவிட்டோம் - இன்ப
உஸ்ணத்தில் ஒன்றாகச் சேர்ந்துவிட்டோம் கழைப்பினில் வெற்றியை வென்றுவிட்டோம் - அன்பின்
கட்டிளம் காதலர் ஆகிவிட்டோம்.
பாலுடன் தேனினைச் சேர்த்துவிட்டோம் - உள்ளப்
பாசத்திற் பண்பினைக் கொண்டுவிட்டோம் காலுடன் கையினை ஊக்கிவிட்டோம் - இனிக்
கடினத்தை நீக்கிடம் பயமென்ன.
வீரனாய் வாழ்வோம்
1. ஏழையாய்க் கோழையாய் எடுபிடி ஆட்களாய்
பாவியாய்ப் பயந்தோனாய்ப் பித்தனாய்ப் பேயனாய்க் குழைந்து குழைந்து கும்பிட்டுத் தொழுதெழுது
நூறுநாள் வாழ்வதைக் காட்டிலும் இங்குநீ வீரனாய்த் தீரனாய்த் தமிழனாய்த் தருமனாய்
அன்பனாய்ப் பண்பணாய் அறிவிலே முதிர்ந்தோனாய் நரிபோன்ற வாழ்வின்றி நானிலமும் புகழ்பரப்பும்
நன்மையுடை சிற்பமாய் நிலைத்து நின்று ஒளிர்ந்துவிடு.

( 25 )
2, காடுமேடு பாலைவனம் கடுந்தரைகள் கடல் நிலங்கள்
பாடுபட்டு உழைத்து விடப் பலவிடங்கள் பலவழிகள் கேடுகெட்டுச் சீரழியும் நம்மினம் தழைத்தோங்கப்
பாடுபட்டு உழைத்துப் பசிப்பிணியை அகற்றிடுவோம் கூடுவிட்டுக் கூடுபாயும் குலத்தொழிலை யுடையோர்கள்
நாட்டைவிட்டு ஓட்டி நடுக்கடலில் அமிழ்த்திடுவோம் எட்டுத்திக்கும் புகழ்பரப்பி வாழ்ந்ததெங்கள் தமிழினம்
காட்(டு) மிராண்டி வாழ்க்கையைக் கண்டறியா திதுவரை
"டு "டு, சமத்.
- குலத், பிணி, சித்தோம்
அயரோம்
1. காடுகள் வெட்டிடுவோம் - பல கண்களைக் காத்திடுவோம்
மாடுகள் மேய்த்திடுவோம் - பலமக்களைக் காத்திடுவோம் வீடுகள் கட்டிடுவோம் - பல வீரர்கள் ஆக்கிடுவோம். 2. கோடுகள் ஏறிவிடோம் - பல கொலைகளும் செய்துவிடோம்
நாடுகள் ஆக்கிடுவோம் - பல நலங்களும் ஆக்கிடுவோம் கோட்டைகள் கட்டிடுவோம் - பல கொடுமைகள் நீக்கிடுவோம் அன்புகள் பேணிடுவோம் - பல அல்லல்கள் தீர்த்திடுவோம் இன்புடன் வாழ்ந்திடுவோம் - பல இன்னல்கள் போக்கிடு
வோம் துன்பங்கள் போக்கிடுவோம் - பல துயரினை நீக்கிடுவோம்
இலங்கையைக் காத்திடுவோம்- பல இலங்கையர் ஆக்கிடுவோம் துலங்கிட வாழ்ந்திடுவோம் - ஆனாற் சுதந்திரம் விட்டு
விடோம் வலக்கையில் ஒந்றுமை கொண்டு - பல வளங்களும் பெற்றிடு
வோம்.
சுடித்தெறிந் தலைத்திடுவேன்
கல்வியாய்ப் பல்மொழிகள் கற்றுவிட்ட பிற்பாடு கல்லினில் நார் பெற்றுக் கழுத்தினில் அதுகட்டி வில்லினில் நஞ்சேற்றி விடக்கணை கொடுதாக்கிக் கொல்பார்வை வேங்கைமுன் கொண்டெனை விட்டாலும்

Page 23
( 26 )
எல்லையில்லா இன்பங்கள் எனக்கிங் களிப்பதாய்த் தொல்லைகள் பல தந்து துயரத்தை வளர்த்தாலும் புல்நுனிப் பனியன்ன போன்றவிவ் வாழ்வினை அல்லுமே ஆக்கிடேன் அடிமையாய் நாய்கட்கு. கல்மனம் கொண்டேணும் கடித்தெறிந் தலைத்தி(டு) வேன் பல்வழி விதங்களாற் பகைவரை வணங்கிடேன்
சொல்லொணாத் துன்பங்கள் துயருகள் வந்தாலும் தூவென்று காறியே தூக்கியே வீசுவேன்.
எல்லாம் எங்கும் தமிழே 1. வெற்றி அன்றேல் மரணம் வேகும் வாழ்வு வேண்டாம்
நெற்றிவேர்வை சிந்தியும் நீறு தன்னைப் போக்குவோம் 2.
உலகில் நாமும் ஏறுவோம் உலகம் காண வாழுவோம்
நிலவும் புகழ் பரப்புவோம் நீசர் அஞ்ச உயருவோம். 3. கனவு அல்ல நனவே காணும் காலம் இன்றே
மனதில் உறுதி உண்டு மடிதல் இனியும் இல்லை. 4. தமிழன் நாட்டைப் பிடிப்போம் தழைக்கும் வாழ்வை
அமைப்போம் அமிழ்தத் தமிழைக் காப்போம் அகிலம் எங்கும் வளர்ப்
போம்.
உலகின் மையம் தமிழே உன்னத மொழியும் தமிழே
இலங்கை உயிரும் தமிழே எல்லாம் எங்கும் தமிழே.
ஞானக்கண் திறக்கவில்லை கானம் அவளும் மீட்டவில்லைக்
கனவாய் மாறி மறைந்திட்டாள் ஊனக் கண்ணுடை பெண்ணிற்கு
உளத்தைத் திறந்து காட்டிட்டேள் ஞானக் கண்ணும் திறக்கவில்லை
ஞால வாழ்வைத் தந்திட்டாள் மானம் கொண்டு நிமிர்ந்திட்டேன்
மக்கள் துயரே என் த ப ம்.

( 27 )
நானும் காதலைக் கூறி நின்றேன்
நாளும் தினமும் ஓதி நின்றேன் மோனம் பலதைப் புரிந்து நின்றேன்
புதிய வாழ்வை வேண்டி நின்றேன் பானம் பலதைப் பருக்கி நின்றேன்
பலன்கள் ஏதும் இல்லா விடினும் நினைப்பு மில்லை அலுப்பு மில்லை
நீண்ட சுதந்திரம் பெற்று விட்டேன்.
வாழ்வின் அமைதி
பறந்து திரியும் கிளியைப் பிடித்துப்
பாலும் சோறும் தேனும் ஊட்டித் துறந்து மனதைத் தூய்மை யாகத்
தொல்லைகள் அற்றே வளர்த்தாலும்.
வானம் எங்கும் பறந்து களைத்து
வையம் எங்கும் ஓடி மயங்கி கானம் மீட்டா மிளகாய்ப் பழத்தைக்
கடித்துச் சுவைத்தல் பெற்றிடுமா ?
அன்பு அதற்கு வேண்டும்தான்
அடக் கா அன்பே வேண்டும் அங்கு துன்பு நிறைந்த சோகம் மலிந்த
சுவைக்கும் பாலும் தேவை யில்லை.
அன்புடன் அன்பு மலர வேண்டும்
ஆசைக் கனல்கள் பொழிய வேண்டும் துன்புகள் ஒன்றும் தேவை யில்லைச்
சுதந்திரம் ஒன்றே தேவை யிங்கு.
சுதந்திரம் ஒன்றே வாழ்வின் அமைதி
சோகம் நிறைந்தாற் பறுவா யில்லை நிதமிதை மக்கள் உணர்ந்து வாழ்ந்தால்
நீங்கிடும் நாட்டின் கலக மனைத்தும்.

Page 24
உணர்ச்சி - 4
உணர்ச்சி
1. உணர்ச்சிநிலை இல்லார்கள் மனிதர் அன்று
உதவிவிடாத் தெருவோரக் கல்லு மண்ணோ உணர்ச்சிநிலை முற்றியவர்கள் மனிதர் அன்று.
உருப்பட்டு வாழாத மிருக மேதான்.
உணர்ச்சியிலே பற்பலவாம் வகைகளுண்டு
உள்ளவற்றை எடுத்தியம்பும் உணர்ச்சியொன்று புணற்சியிலே விருப்புடைய உணர்ச்சி யொன்று
பொழுதெல்லாம் நினைந்துருகும் உணர்ச்சி யொன்று
3. தாய்நாடு பேணிவிடும் உணர்ச்சி ஒன்று
தன்னினத்தைக் காக்கவரும் உணர்ச்சி ஒன்று தாய்தந்தை பேணிவிடும் உணர்ச்சி யொன்று.
தன்சுற்றம் என்றியம்பும் உணர்ச்சி ஒன்று.
4. விருப்பமிலேல் வெறுப்புவரும் உணர்ச்சி யொன்று
வெறுத்து விட்டாற் கோபம்வரும் உணர்ச்சி யொன்று அரும்புமலர் கசக்கிவிடும் உணர்ச்சி யொன்று
அள்ளியதை நுகர்ந்துவிடும்" உணர்ச்சி' யொன்று.
5. குழவிகளை முத்தமிடும் உணர்ச்சி யொன்று
கொதித்ததையே திட்டிவிடும் உணர்ச்சி யொன்று மழலை மொழி நிதம் கேட்கும் உணர்ச்சி யொன்று
மங்கைமொழி நிதங்கேட்கும் உணர்ச்சி யொன்று.
6. மேடைதனில் முழங்கிவிடும் உணர்ச்சி யொன்று
மென்மையுளம் அன்பளிக்கும் உணர்ச்சி யொன்று ஆசையினால் ஆட்டிவிடும் உணர்ச்சி யொன்று
அதைக்கண்டு மயங்கிவிடும் உணர்ச்சி யொன்று.

( 29 )
7. அன்புமொழி நிதம் பேசும் உணர்ச்சி யொன்று
அன்பமுகம் நிதம்காட்டும் உணர்ச்சி யொன்று இன் பபுரிக் கேங்கிநிற்கும் உணர்ச்சி யொன்று
இடையிடையே கொதித்து விடும் உணர்ச்சி யொன்று.
8. கடவுளென்று நிதம்ஓதும் உணர்ச்சி யொன்று
கடவுளென்று உலகேய்க்கும் உணர்ச்சி யொன்று நடப்புகளை மாற்றிவிடும் உணர்ச்சி யொன்று ,
நம்பவைத்து ஏய்த்து விடும் உணர்ச்சி யொன்று.
9. காதலிலே காதலெனும் உணர்ச்சி யொன்று
காதலிலே காமமெனும் உணர்ச்சி யொன்று ஆதலினால் உலகிங்கு அழியும் வரை .
அழிந்துவிடா உணர்ச்சி வெள்ளம் உலகிலென்றும்.
10. உலகிலுள்ளோர் அனைவர்க்கும் உணர்ச்சி யுண்டு
உணாச்சிநிலை எப்பொழுதும் ஒன்றிஇரா பல்லோரும் தங்களது உணர்ச்சிகளைப்
பல்லோரும் போற்றிவிடக் காக்க வேண்டும்.
நிதம் வாழ்க
வேலைகள் நாடி அலைகின்றார்
வீடுகள் தோறும் அலைகின்றார் சாலைகள் எங்கும் திரிகின்றார்
தரித்திரம் பெற்று விழிக்கின்றார்.
இருப்பிடம் ஒன்று கேட்கின்றார்
இனிய வாழ்வைத் தொடக்கின்றார் உருப்படி யாக வாழ்கின்றார்
உழைப்பைத் தாமே பெறுகின்றார். சிறிய தொழிலைச் செய்தாலும்
சிறுமை வாழ்வைப் பெறவில்லை நெறிகள் பல கைக்கொண்டு
நிம்மதி பெற்று வாழ்கின்றார்.

Page 25
( 30 )
உரோசம் மானம் கொள்கின்றார்
உலகில் மனிதர் ஆகின்றார் உரோசம் விட்டு வாலைப்பிடித்து
உதவா வாழ்வைப் பெறவில்லை.
5. .
தவிக்கும் நிலைகள் வந்தாலும்
தன்கை தனக்கே துணையென்று புவியில் நின்று வாழ்கின்றார்.
புரட்சி வாழ்வே நிதம் வாழ்க"
வாழ்ந்திடலாம்
உங்
நெற்றியில் வேர்வை பாய்ந்துவர
நின்றிட்ட கால்கள் களைத்து வரப் பற்றையில் நின்று பதுங்காமற்
பகலிற் கொள்ளை அடிக்காமல்.
நின்று நிமிர்ந்து உழைக்கின்றார்
நிலையுள் வாழ்வைப் பெறுகின்றார் என்றும் இப்படி இவர்வாழ்ந்து
இறுகும் உளத்தை இவர்கொண்டு.
மண்ணின் மனிதன் போலாகி
மாறா வாழ்வு வாழ்ந்திட்டால் கண்ணின் மணியாய் ஒளிதந்து
கடமை பெற்று வாழ்ந்திடலாம்.
உள்ளம் நிறைய உணர்ச்சி கொண்டு
உலகில் எங்கள் மொழிவாழ்க கள்ளம் இன்றிக் கபடம் இன்றிக் .
கருத்தை ஊன்றி வாழ்ந்திட்டா.
ஞாலம் போற்ற வாழ்ந்திடலாம்
நான்தான் என்று திரிந்திடலாம் காலம் என்றும் ஒளிர்ந்திடலாம்
கவலை இன்றி வாழ்ந்திடலாம்.

வீர உணர்ச்சி
உணர்ச்சியே இன்றி வாழ்பவர்கள்
ஒருபோதும் மனிதராய் வாழமாட்டார் புணர்ச்சியில் விருப்புடைய மனிதர்கள்
பொழுதெல்லாம் அஃதையே நினைந்திடுவர்.
தாய்மையைப் போற்றி வாழ்வோர்கள்
தடுக்கியும் பெண்களை நாடிவிடார் காயங்கள் மனத்தினிற் கொண்டவர்கள்
கற்பனைக் காயமும் கொண்டிடுவர்.
உண்மையின் ஒளியினைக் கண்டவர்கள்
உலகினை மாற்றியே வாழ்ந்துவிடார் திண்மையில் என்றும் திழைத்திடுவர்
திடமுடன் என்றும் வாழ்ந்திடுவர்.
காலத்தின் போக்கினைக் கண்டோர்கள்
காலத்தை மாற்ற முனைந்து விடார் ஞாலத்தின் போக்கைப் புரிந்திடுவார்
நயமுடன் விலகிச் சென்றிடுவார்.
உருட்டலும் புரட்டலும் புரிவோர்கள்
உள்ளத்தை விட்டு மாறிவிடார் வெருட்டலும் இன்றி மிரட்டலுமின்றி
வீரமாய் உணர்ச்சியில் மிதந்திடுங்கள்.
29:@e

Page 26
தமிழ் - 5
அன்றைய ஈழத் தமிழகம்
1. கோணே சுவர மலையு மெங்கள் கோயி லெங்கள் கோயிலெடி
சிவனொளி பாத மெங்கள் சிறப்பே டுக்கும் தேசமெடி உணரேழு கன்னியா ஊற்று மெங்கள் சொந்தமெடி கதிர்காமத் தேச மெங்கள் கரைசேர்க்கும் தேசமெடி.
பாடுமீன் பவனிவரும் மட்டுநகர் எங்கள் சொந்தம் ஆடும்பல நாட்டியங்கள் அடக்கமெங்கள் சொந்தமெடி தேடரிய இலக்கியங்கள் தேடிவைத்த தெங்கள் சொந்தம் தேடிவைத்துப் போற்றிவந்த சிற்பமெங்கள் சொந்தமெடி,
அன்றைய ஈழத் தமிழகத்தின் சிறப்பு
செந்நெல் வயலுடனே செவ்விளநீர் மாமரமும் மின்னற் கொடியுடனே சோலைகளும் - நம்மண்ணில் அன்பூட்டும் மக்கள் இனிமையும் இருப்பது நாடதனிற் தோன்றுமோர் சிறப்பு.
2. சீர்பெற்ற கோவிலோ புல்பெற்ற வீதியோ
முடிபெற் றுயர்ந்த கோபுரமோ - ஊர்பெற்ற பெரும்புகழாய் இத்தனைக்கும் நம்நாட்டில் உள்ளவர் நல்லோராய் உள்ளதே காண்.
இரந்தவருக்கு எவ்வளவும் ஈந்தருளும் மக்களைப் பரந்த இப் பூமியிற் கண்ணுற்றற் - சுரக்கும்தம் கரத்தினோடு நம்நாட்டில் வாழ்கின்றோர் அனைவருக்கும் எம்மட்டில் இருப்பர். நிகர்.
4.
பொய்யும் புரட்டாகும் போக்கிரிப் பேச்செல்லாம் கையும் களவுமாகச் செய்யாமல் - மெய்யும் விரும்பும் படியாக நாட்டினில் வசிப்பவர்கள் நம்பதியில் இருப்பதோர் சிறப்பு.

(33)
அப்பமுடன் பிட்டும் அவலமுதும் பாற்சோறும் செப்பமுடன் உண்ணா விட்டாலும் - ஒப்பமுடன் திருடராய்ப் பலபேர்கள் மத்தியிலே நம்நாட்டில்
இதுவரையில் இராததோர் சிறப்பு.
தூரமென்றும் பாராமற் கற்பிக்கும் நோக்குடனே நேரமென்றும் பாராமல் உழைத்துப் - பாரினிலே சான்றோன் என்றபெயர் தம்மக்கள் கேட்பதற்கு ஈன்றோர்கள் அனுப்புவ ரே காண்.
அவ்விடத்தி னொன்றி னருகிருந்தார் ஏமாற மாண்பரிய துன்புடைய கொலையும் - மணக்கரிய நாற்றுடனே கள்ளும் காணாமற் குடிக்கும் மாணவர்கள் இல்லாததோர் சிறப்பு.
அன்பினிற் சிறந்தநம் * தலைவன்நல் அறிவுடனே பண்பிற்கும் செம்மதி பல்லறிவில் - எம்மிற்குப்
பார்ப்பதற்கு எல்லையில்லா அன்பனாய்த் தொல்லைகள் தீர்ப்பதற்கு வல்லவன்தான் காண்.
* இராவணன்
இன்றைய ஈழத் தமிழகத்தின் எல்லை
பாக்கு நீரிணை ஓரத்திலே நின்று
பரவச மூட்டும் சந்நிதி எல்லை ஆக்கிய நந்திக் கொடியுடன் ஆண்ட
அனுரதபுரம் கூடவே சேர்த்துப் போக்கை யிற்தமிழ் மன்னர்கள் ஆண்ட
பொலநறுவை கூடவே சேர்த்துக் கதிர்காமம் சென்று தெற்கையும் ஆக்கி
வங்காளக் கடலையும் எல்லையாய்க் கொண்டு வாழிய செந்தமிழ் நாடெங்கள் நாடே
வையகம் போற்ற வாழிய வாழிய.

Page 27
ஈழத்தமிழின் தரம்
1.
எங்கும்நிறை ஒளிவிளக்கு ஏற்றியது போற் பொங்குநிறை இயற்கையது இனிப்பது போற் தங்குதடை எதுவுமின்றித் தரணியெலாம் ஒளிவீசிப் பொங்குநுரைப் பாலான தமிழேயென் தமிழேநீ பாழியெனும் தாய்மொழியின் சேயாகித் தமிழையுடன் அணைத்துமே ஆகிவிட்ட சிங்களத்தைப்போல் வந்துவிட்ட மொழியில்லை எங்கெங்கு சென்றாலும் இயற்கையுள் வாழுகின்ற பொங்குநிலாப் போன்றவொரு செம்மைமொழி.
தமிழ் வாழ்க
1. தமிழனின் தமிழ்தந்த தமிழெங்கள் உயிர்வாழ்க
அமிழ்தென்று நான்போற்றும் அரியசெந்தமிழ்வாழ்க கவிழ்கின்ற நோக்குடன் கடுமின்னல் புரிந்து மே
கவிழாத கரையாத கரைகாணாத் தமிழ்வாழ்க. 2. என்நாவில் என்றென்றும் இருந்துவாழ் தமிழ்வாழ்க
நின்நாவில் அன்கோவில் நிறைந்திடும் தமிழ்வாழ்க சென்கானம் தீஞ்சுடர் செறிந்திடும் தமிழ்வாழ்க
அன்னையாய்த் தந்தையாய் அறிவுடன் நீவாழ்க .
3. பாரதி நாவிலே பாய்ந்தவென் தமிழ்வாழ்க
நாரதர் நடுங்கிய இராவணன் தமிழ்வாழ்க பாரத அன்னையிற் பாய்ந்திடும் தமிழ்வாழ்க
வீரரை யீண்டநம் தமிழெங்கள் தமிழ்வாழ்க.
தமிழ்நாடு நீ வாழ்க 1. அறிவிலே மேம்பட்டு அன்பிலே நிறைகொண்டு
தறியொன்றும் தாங்கிடாத் தமிழ்நாடு நீவாழ்க அறிவாகி அன்பாகி அலகிலாப் புகழோங்கி
முறிவிலா அன்புடைத் தமிழ்நாடு நீவாழ்க.

( 35 )
தரணியிற் தனித்தோங்கித் தழைத்தோங்கித் தண்பெற்ற
தீரனாய் வாழ்வாழ்ந்த தமிழ்நாடு நீவாழ்க பரணிலே பதுங்கிடும் படுபாவிப் பூனையாய்த்
தருணத்தை நோக்கிடாத் தமிழ்நாடு நீவாழ்க.
3. மறியலில் அகப்பட்டும் மனதிலே துயர்கொண்டும்
குறியிலே வழுவிடாத் தமிழ்நாடு நீவாழ்க செறிவாகும் அன்பினாற் சீரான பண்புடைக்
குறிபல கொண்டுவாழ் தமிழ்நாடு நீவாழ்க.
தமிழ் வளர்க்க வேண்டும்
1.
ஆதாயம் ஒன்றிங்கு தேவை யில்லை
அரியதமிழ் வளர்ப்பதுவே என்கடமை மாதாவாய் மக்களாய் மன்னனாய் என்றென்றும்
மனதிலே தமிழ்நிதம் அசைந்தாட வேண்டும் 2. தமிழர்கள் படைப்பெங்கும் தழைத்திட வேண்டித்
தங்கியுள்ள பல்நூற்கள் படைக்க வேண்டும் கவிளர்கள் கொண்டுள்ள கறைகளை நீக்கிடக்
கருத்திலும் தமிழார்வம் செழிக்க வேண்டும். 3. அன்னியன் மொழிகளைக் கற்க வேண்டாம்
அம்மொழியிற் பல்லார்வம் கொள்ள வேண்டாம் என்னுமிளி கொள்கைகளைக் கொள்ள வேண்டாம்
எம்மொழியும் கற்றுத்தமிழ் வளர்க்க வேண்டும். 4. காதலென்று தமிழையே அழிக்க வேண்டாம்
கடமையென்று தமிழையே கொல்ல வேண்டாம் மோதல் பல கொண்டாலும் முட்டல்பல கொண்டாலும்
மொக்குத்தனம் இன்றித்தமிழ் வளர்க்க வேண்டும். 5. தமிழர்கள் நிலைநிக்கத் தமிழதே வேண்டும்
தாய்மொழி என்றிடத் தமிழதே வேண்டும் அமிழ்தமே என்றிட்டு அயலரும் சுவைத்திட
அரியநன் செந்தமிழ்த் தமிழதே வேண்டும்.

Page 28
உயிர்
1. தமிழெங்கள் தாய் - அத் தாயெங்கள் உயிர்
அமிழ்தெங்கள் அன்பு - அவ் அன்பெங்கள் உயிர் 2. மொழியெங்கள் தெய்வம் - அத் தெய்வமே தெய்வம்
பழியெங்கள் விடம் - அவ் விடமெங்கள் பேய். 3. நாடெங்கள் தாய் - அந் நாடெங்கள் உயிர்
கோடெங்கள் பேய் - அப் பேயுங்கள் உயிர். 4. அன்பெங்கள் தாய் - அவ் அன்பெங்கள் உயிர்
துன்பெங்கள் பேய் - அப் பேயுங்கள் உயிர்.
5,
எழுத்தெங்கள் தாய் - அவ் வெழுத்தெங்கள் உயிர்
கொழுத்தல்கள் சீச்சீ - அக் கொழுத்தல்கள் சீச்சி.
தாய்மொழி காத்திட வேண்டும்
1. தரணியிலே என்றென்றும் வாழ்ந்திடும் மக்களின்
தாய்மொழி என்றுமே காத்திட வேண்டும் பரணிலே பதுங்கியே பாழ்பட்டுப் போகாமல்
பைங்கொடி தாய்மொழி காத்திட வேண்டும்.
2.
அங்கங்கே உயிருக்கே அஞ்சியே வாழ்ந்தாலும்
அவர்மொழி தாய்மொழி காத்திட வேண்டும் இங்கங்கு என்றென்றும் இழிவுடன் வாழ்ந்தாலும்
எல்லோரும் தாய்மொழி காத்திட வேண்டும்.
3,
ஆசைகள் வேடங்கள் ஆவல்கள் கொண்டாலும்
அன்புடைத் தாய் மொழி காத்திட வேண்டும் பூசைகள் தோத்திரம் பொங்கல்கள் வைத்தாலும்
பொன்போன்ற தாய்மொழி காத்திட வேண்டும்.
4.
அன்னியர் ஆட்சியின் அல்லலில் வாழ்ந்தாலும்
- அரியதம் தாய்மொழி காத்திட வேண்டும் பின்னையோர் பித்தல்கள் பேதங்கள் கொண்டாலும்
பேணியே தாய்மொழி காத்திட வேண்டும்.

(37)
5. என்னென்ன மொழிகளைக் கற்றுமே தேர்ந்தாலும்
என்றுமே தாய்மொழி காத்திட வேண்டும் தன்தந்தை தம்தமர் என்றிடக் கூறிடத்
தாய்மொழி தாய்மொழி காத்திட வேண்டும்.
குணமுடன் கண்டி லேன்
தமிழ்நாட்டின் கரையினில் நாமிருந்தோம் என்னிற்
தலைவைத்துத் துயின்றிட்டாள் தமிட்கன்னி அங்கு அமிழ்தேனை அருந்திச் சுவைத்திட்டோம் அங்கு
அடங்கிட்டாள் அவளென் கையுள்ளே வீழ்ந்து உமிழ்நீரில் வந்தும் உருண்டிட்டாள் பின்பு
உள்ளமும் தனது சொந்தமும் என்றாள் அவிழ்த்தந்த ஆடையைக் கையினிற் கொண்டு
அன்பதே என்று அருகினில் வந்தாள் தவழ்ந்திட்டேன் கன்னித் தமிழதிலங்கு பின்பும்
தாகமே தீர வழியதே கண்டிலேன்.
2.
ஓடினேன் கையினில் ஓட்டினைக் கொண்டு
ஓய்ச்சலும் ஒழிச்சலும் எதுவுமே யின்றி ஆடினேன் எங்கும் அம்பலம் எங்கும்
ஆராரோ சொல்லிட ஆருமே யின்றிப் பாடினேன் கண்களிற் தேன்சுவை சொட்டப்
பக்தனும் பரமனும் யாருமே யின்றித் தேடினேன் தாகம் தீந்திடத் தமிழைத்
தேடிடத் தேடிடத் தென்றலாய் வந்தாள் கூடுறேன் குலவுறேன் தமிழுடன் என்றும்
குணமுடன் கண்டிலேன் தமிழதாம் கன்னியை.

Page 29
தமிழ் வாழ........ தமிழிலே பிறந்து தமிழிலே வளர்ந்து
தழைத்தோங்கும் தமிழதை உலகினி லெங்கும் அமிழ்தமாய் அன்பதாய் ஆக்கியே படைத்திட
அறிவுகள் பல பெற்று உயர்ந்திட நானெண்ணிக் குமிழுடைப் புகழுடைக் குறிகளில் வழுவிய
கோலமாம் பிறமொழி கற்கிறேன் இன்றைக்கும் உலகெலாம் தமிழ்வாழ உன்னுடை என்னுடை
உதவிகள் தினம் வேண்டும் மறந்திட வேண்டாம்.
அழித்திட மாட்டோம்
உலகத்தின் மத்தியில் நாம் இருந் தாலும்
உயரத்தின் உச்சியில் நாம் இருந் தாலும் கலகத்தில் ஊறிய காடைய ரனைவரும்
கால்களைக் கைகளை உடைத்திட வந்து அழிவதன் மத்தியில் நாம்விழுந் தாலும்
அன்பினைப் பண்பினை நாம் வெறுத் தாலும் தமிழதை என்றென்றும் அழித்திட மாட்டோம்
தடியரை என்றுமே உயர்த்திட மாட்டோம்.
என் றுமே விட்டிடோம்
1.
உள்ளொன்று புறமொன்றாய் ஊரெங்கும் பேசுவார்
கள்ளமே தொழிலாகக் காணாமற் கொள்ளுவார் எள்ளனை நன்மைகள் இரங்கியும் செய்திடார்
பள்ளங்கள் பலதேடிப் பதுங்கியே செல்லுவார்.
2.
ஊரெங்கும் உலகெங்கும் உயர்ந்திட விரும்புவார்
சீர்கெட்ட தம்வாழ்வைத் தெரியாமல் மூடுவார் ஊராரும் உயர்ந்தாரும் உயர்தியே எ (ண்) ணவைத்து
கருவிலே அழித்திடத் தமிழதை எண்ணிறார்.

(39 )
3. தொடுக்கிறார் பல போர்கள் துணிவின்றிச் சோர்ந்திடோம்
எடுக்கின்றார் உரிமையை என்றுமே விட்டிடோம் கொடுக்கிலே கைபற்றிக் கும்மாளம் நிறுத்திப்பின்
குலைநடுங் கோட்டிட என்றுமே பின்னிடோம்.
தமிழ்
தமிழெங்கள் தாய்தந்த உயிருக்குநேர் - அதை
அமிழ்தென்று நான் சொல்லும் அலகுள்ளகூர் * இழிவென்று சொல்லுமப் புலையரை என்றும்
இழுத்திங்கு இழுத்தங்கு அலைத்திட மாட்டுதா ? பழியென்று பழித்தெங்கும் பறைசாற்றும் புலையரை- நான்
குழி தோன்றிக் குப்புறப் புதைத்திட மாட்டனோ? தமிழெங்கள் தமிழ்தந்த தமிழனின் சொத்து - அதை
அமிழ்தென்றே அனைவரும் அருந்திட மாட்டரோ?
2. தவழ் சென்று தழைத்தெங்கும் தமிழர்கள் நாவில் - இன்னு
கமழ்கின்ற தமிழதைத் தந்ததேபார்
[ம் கமழ்கின்ற அன்பென்னும் வாசமவ் மக்கள் - நாவின்
உமிழெங்கும் உருண்டிட மாட்டுதோ ஐயோ? தவழ்கின்ற குழவியும் தமிழ்சொல்லும் குரவரும் -நித்தம்
அமிழ்தென்று அருந்தியே சுவைத்திடும் அந்தப் புகழேணி புவியெங்கும் பரப்பிட எங்கள்
தமிழெங்கள் தழைத்தோங்கி நின்றதேபார்.
3. பாரதி நாவினால் வெருண்டிட்ட புலையர் - இன்று
பாய்ந்திட்டு அழித்திட்டு ஒளித்திட எண்ணிறார் கார்முகில் வேகத்திற் கலைகளை ஈந்து - நிதம்
காதகர் ஏங்கிட வைத்ததே பார் பாரது பாரதின் பண்பினைப் பார் - பின்
பார்த்திட்டுப் பார்த்திட்டுக் கலைகளைப் பார் ஊரது எங்கும் ஓங்கியே நிற்கும் - எம்.
ஓங்கிய தமிழதின் கலைகளைப் பார்.

Page 30
தமிழே தமிழே நீவா
1. கன்னியின் உருவில் ஒளிமிகு கொண்டு
காதலின் வடிவிற் கவிபல கொண்டு என்னிலும் உன்னிலும் ஏற்றங்கள் கொண்டு
இதயத்தில் எண்ணிடா இன்பங்கள் கொண்டு முன்னிலும் பின்னிலும் மூச்சுக்கள் சென்று
முடிவிலா இன்பங்கள் முத்தங்கள் தந்து அன்னையாய்த் தந்தையாய் அறிவினிற் சேர்ந்து
அன்புமாய்ப் பண்புமாய் ஆக்கமாய் வந்து மென்னியில் மென்மையாய் மேன்மையாய் வந்து
மேவியே தமிழனை உரமுற ஆக்கித் தண்மையிற் தகமையிற் தலையதாய் மாறித்
தழைத்திட்ட தமிழே தமிழே நீ வா !
2. காதலிற் சோலையிற் கடவுளில் நின்று
காண்கின்ற பொருட்கள் யாவிலும் நின்று கோதலில் வருடலிற் குணங்களில் நின்று
கொண்டிட்ட அன்பினிற் பண்பினில் நின்று கூதலிற் குளிரதிற் கொள்கையில் நின்று
கொண்டிட்ட மனைவியின் குழுமையில் நின்று ஈதலில் இரங்கலில் எண்ணத்தில் நின்று
எங்குமே உண்மையாய் ஒளியுமாய் நின்று சாதல்கள் மோதல்கள் அனைத்திலும் நின்று
சாந்தியாம் கொள்கைகள் அனைத்திலும் நின்று பாதங்கள் போற்றிட வணங்கிட வாழ்த்திடப்
பறந்தோடிப் பைந்தமிழ் செந்தமிழ் வாயேன்.
வாழ்வை அமைத்திடுவோம்
1. !
காதலின்ப நீர்சொரிந்து கனவுலக நிலவெறித்துக் கோதலுடன் கைதடவிக் கொடுமையிலா ஒளிசொரிந்து காதலிலும் கடமையிலும் கனிவுநிதம் சொரிந்து கொண்டு பூதலங்கள் போற்றுகிற புதுவாழ்வை அமைத்திடுவோம்.

ilit '11 11
( 41 ) அன்புமணம் அதில்வீச ஆசையலை ஆடிவரத் துன்பவொளி பறந்தோடத் துயரநிலை சரிந்தாட இன்பவலை நுரைசிந்த இதயமலர் மணம்பரப்ப என்புமிங்கும் ஒளிவீசும் இல்வாழ்வை அமைத்திடுவோம். சொல்லுநிதம் அன்பொளிரச் சொர்க்கநிலா உளம்வீசக் கல்லனைய உறுதிகொண்ட கன்னித்தமிழ் கமழ்ந்துவர அல்லுமிங்கு பகல்போல அன்பு எனும் ஒளிவீச இல்லம்போல் இருந்துவரும் இனியதமிழ் அமைத்திடுவோம் சொல்லு என்ற தூயதமிழ்ச் சொல்லினால் இதம்பாய்ச்ச நல்லவரும் நாவலரும் நல்லதமிழ் நிதம்பேச இல்லையென்று இருந்துவிடா இனியதமிழ் இதம்பாய்ச்சக் கல்லுமுள்ளு ஏதுமில்லாக் கனிவாழ்வை அமைத்திடுவோம் நிலவனைய ஒளிசெலுத்தும் நிலவனைய தமிழ்சொரிய குலவுகிற இல்வாழ்விற் குதித்தோடும் தமிழ்சொரிய அலகுகளால் அழற்கரிய அருந்தமிழாம் நிதம் சொரிய இலகினிய தமிழ்சொரியும் இல்வாழ்வை அமைத்திடுவோம்
அடிமையாய் ஆகிடேன் கல்வியாய்ப் பல்மொழிகள் கற்றுவிட்ட போதிலும் கல்லினில் நார்பெற்றுக் கழுத்தினில் அதுகட்டி வில்லினில் நஞ்சேற்றி விடக்கணை கொடுதாக்கிக் கொல்பார்வை வேங்கைமுன் கொண்டெனை விட்டாலும் எல்லையிலா இன்பங்கள் எனக்கிங் களிப்பதாய்த் தொல்லைகள் பலதந்து துயரத்தை வளர்த்தாலும் புல்நுனிப் பனியன்ன போன்றவிவ் வாழ்வினை அல்லுமே ஆக்கிடேன் அடிமையாய் நாய்கட்குக் கல்மனம் கொண்டேனும் கடித்தெறிந் தலைத்திடுவேன்.
செந்தமிழ் சிங்களம் கண்டேன் செந்தமிழ் கண்டேன் அங்கதில் ஆங்கிலம் அதனையும் கண்டேன் எங்குமே செந்தமிழ் இனிமையைக் கண்டிலேன் பொங்கினேன் தமிழதின் பூரிப்பில் மகிழ்ந்து .

Page 31
அன்பு - 6 கனியும் அன்பே தேவையிங்கு
பேசும் சொற்கள் பிழையா யன்றிப்
பின்னை வருவோர் பேண வேண்டும் மாசு மறுக்கள் உடைய மக்கள்
மாசு நீங்கி வாழ வேண்டும் தூசு போன்ற வாழ்வை நீக்கித்
துயர வாழ்வை நீக்க வேண்டும் காசு பணங்கள் தேவை யில்லைக்
கனியும் அன்பே தேவை யிங்கு.
அடிகள் உதைகள் சண்டை யின்றி
அன்பு மலர வேண்டு மிங்கு இடிகள் முறிகள் கொலைக ளின்றி
இன்னல் ஒளிய வேண்டு மிங்கு குடிகள் வெறிகள் குதித்தல் இன்றிக்
கொள்கை உயர வேண்டும் இங்கு தடிகள் தண்டுகள் ஆயுதம் இல்லாக்
கனியும் அன்பே தேவை யிங்கு.
கள்ளன் பொய்யன் கயவன் இன்றிக்
கல்வி கற்றோன் தேவை யிங்கு பள்ளன் பறையன் நளவன் இன்றிப்
பரிவும் அன்பும் வேண்டும் இங்கு உள்ளான் இல்லான் உடையான் இன்றி
உள்ளம் உள்ளோர் தேவை யிங்கு வெள்ளன் வெளுப்பன் கறுப்பன் என்றாக்
கனியும் அன்பே தேவை யிங்கு.

பெய்யும் நீர் பெருக்கேன்
1. பழையன வந்து மனத்தினுட் புகுந்தன
இழையன ஏதும் எனக்கினி யில்லை மழையதும் வெய்யிலும் மாற்றிடும் குளிரும் துழைத்திடும் காற்றும் தூற்றலும் இல்லை.
2. அடித்திடும் சாட்டையும் அருகினில் நாகமும்
கடித்திடும் நாயும் கலைத்திடும் நரியும் குடித்திடும் பேயும் கொல்லுபாய் புலியும் பிடித்திட நோக்கிலும் பெய்யும் நீர் பெருக்கேன்.
3. அடித்தொடை நடுங்கிலும் அறிவிழந் தேகிலும்
பிடித்தெனை மடக்கிலும் பித்தர்கள் அடிக்கிலும் குடித்திடக் கஞ்சி கூழெதும் இன்றியே பிடித்தெனை யாட்டிலும் பெய்யும் நீர் பெருக்கேன்.
4. துடித்திடும் மீசை துடித்தெனை எழுப்பிலும்
முடித்திடும் எண்ணம் முதுகினிற் தள்ளிலும் படித்திடும் எண்ணம் பார்வையை மறைக்கிலும் பிடித்தலைந் திங்குநான் பெய்யும் நீர் பெருக்கேன். அன்பினை அறிவினை அளித்திட மாட்டிலும் துன்பினைத் துயரினைத் தூக்கிடக் கூடிலும் இன்முகம் இன்றியே எனையிவர் வாட்டிலும் இன்முகம் நோக்கிப் பெய்யும் நீர் பெருக்கேன்.
* 1 1/11 11
பிடித்தெனை இழுத்துப் பிய்த்திட நோக்கிலும் அடித்தெனை உருட்டி அலைத்திட நோக்கிலும் குடித்தெனை மயக்கிக் கொன்றிட நோக்கிலும் பிடித்தவர் கால்களைப் பெய்யும் நீர் பெருக்கேன்.
7. கல்வியைக் கற்றிடக் கடுமின்னல் அளிக்கினும்
செல்வியை நோக்கிடச் சீறியே பாயிலும் நல்வினை இன்றிட நாக்கினை அறுக்கிலும் சொல்பல கொண்டும் பெய்யும் நீர் பெருக்கேன்.

Page 32
( 44 )
9. நோயினில் விழுந்து நோட்டமும் கேட்கிலும் பாயினிற் கிடந்து பசியுடன் பொருகிலும் தாயுடன் சேயைத் தந்திட மறுக்கிலும் பேயினைப் போலப் பெய்யும் நீர் பெருக்கேன்.
9. அறிவினில் அன்பினைத் தந்திட மறுக்கிலும்
முறிவினில் அன்பினைக் கொடுத்திட மறுக்கிலும் பிரிவினில் அன்பினுக் கேங்கித் தவிக்கிலும் கதறிக் கதறிப் பெய்யும் நீர் பெருக்கேன்.
10. காதலில் மோதலில் அன்பே வேண்டும்
கூடலில் ஊடலில் அன்பே வேண்டும் பாடலில் ஆடலில் அன்பே வேண்டும் ஓடலில் ஒளிதலில் அன்பே வேண்டும்.
1. நி.
வாழ் வாழ்ந்தாற்........
நினைத்தவெண்ணம் நடந்துவிட்டு நிறையுள்ள வாழ்வாழ்ந் கனைத்து இங்குநீர்பெருக்கும்கஷ்டங்கள் தோன்றிவிடா(தாற் துணைகொண்டு துயர்நீக்கித் தூயநல் வாழ்வாழ்ந்தாற் பனைகொண்ட பல்துயரம் பறந்துவிட வாழ்ந்திடலாம். காதல்கொண்ட மோதல் கொண்ட கஷ்டமில் வாழ்வாழ்ந் சாதலென்ற செய்கையே உள்ளத்தில் இனியில்லை (தாற் ஈதலென்ற இரக்கமென்ற இன்கொடை வாழ்வாழ்ந்தால் ஓதலென்ற ஒன்று இன்றி உயர்வாழ்வை வாழ்ந்திடலாம்.
பாசமென்ற பந்தமென்ற படையுள்ள வாழ்வாழ்ந்தாற் பூசல்பல நேர்ந்தாலும் புனுகுடனே வாழ்ந்திடலாம் நாசமற்ற வேடமற்ற நன்மையுடை வாழ்வாழ்ந்தாற் கூசுகின்ற பிழையின்றிக் குன்றாக வாழ்ந்திடலாம்.
குற்றமற்ற சுற்றமுள்ள குறிப்பான வாழ்வாழ்ந்தால் இற்றைவரை ஒருவரும் இறைவனையே தேடியிரார் கற்றகல்வி பயனடையும் கரும்பான வாழ்வாழ்ந்தாற் இற்றைவரை எல்லோரும் இனிதாக வாழ்ந்திடலாம்.

( 45 )
ஆவலென்ற ஆசையென்ற பேதமின்றி வாழ்வாழ்ந்தாற் காவலில்லா அன்பு பெற்றுக் களிப்புடனே வாழ்ந்திடலாம் பாவமென்ற பகமையென்ற பலதுமின்றி வாழ்வாழ்ந்தாற் கோபமில்லா அன்பு பெற்றுக் குளிர்மையுடன் வாழ்ந்
திடலாம்.
அன்பினை நானடைந்தேன்
வஞ்சியின் கன்னத்தில் முத்தமிட்டேன் மிஞ்சிடும் அன்பதின் காரணத்தால் கொஞ்சியே குழவியை அணைத்து நின்றேன் நெஞ்சதின் அன்பதின் காரணத்தால்.
உயர்ந்திடும் கதிரவன் நோக்கிநின்றேன் இயற்கையிற் கொண்டிட்ட காதலினால் அயர்கையிற் காதலிற் கண்விழித்தேன் உயர்த்திடும் காதலின் அன்பதினால்.
3.
கானங்கள் மோதையில் நிலைத்து நின்றேன் நானதிற் கொண்டிட்ட அன்பதினால் தேனினைப் பருகையிற் சுழன்றுவந்தேன் கானத்தை மீட்டிடும் வண்டதினால்.
சோலைகள் செல்கையிற் சொக்கிநின்றேன் பாலதின் வாசனை ஏறியதால்
ஞாலத்தின் போக்கினை நயந்துநின்றேன் காலத்தைக் கட்சியை வென்றதினால்.
உலகினை ஊனினை மறந்து நின்றேன் நிலவிடும் அன்பதின் காரணத்தால் குலவிடும் அன்பினை நானடைந்தேன் நிலவிடும் அன்பினை.
நானடைந்தேன்.

Page 33
முற்றாக நா னுணர்ந்தேன் மலையதின் உச்சியில் ஏறிநின்றேன்
மடுவினை உண்மையில் நான்உணர்ந்தேன் நிலைமையின் உச்சியைக் கைப்பிடித்தேன்
நிலமையை உண்மையில் நான்உணர்ந்தேன் அலைகடல் மத்தியில் நீந்திவந்தேன்
அலைத்தலை உண்மையில் நானுணர்ந்தேன் தலை மையில் மத்தியில் நான்இருந்தேன்
தலைவலி முற்றாக நான் உணர்ந்தேன். கண்களின் வீச்சினில் விழுந்திருந்தேன்
அழிவினை முற்றாக நான் உணர்ந்தேன் பெண்களின் மத்தியில் வாழுகின்றேன்
பெண்மையை முற்றாக நானுணர்ந்தேன் திண்மைகள் பலதினைக் கொண்டிருந்தேன்
திறமைகள் பலதினை நானுணர்ந்தேன் உண்மையர் மத்தியில் வாழ்ந்து விட்டேன்
உலகினை முற்றாக நானுணர்ந்தேன்.
நட்பினர் மத்தியில் வாழுகின்றேன்
நட்பினை உண்மையில் நானுணர்ந்தேன் ஆடல்கள் கூடல்கள் நாடுகின்றார்
அன்பினை அங்குமே நானுணர்ந்தேன் ஆட்டங்கள் ஓட்டங்கள் காட்டுகின்றார்
அன்பினை அங்குமே நானுணர்ந்தேன் ஆட்களை ஆபத்திற் கண்டுவிட்டேன்
அன்பினை முற்றாக நானுணர்ந்தேன்.
வரட்சியில்லை
கடவுளை எங்குமே தேடுகின்றேன்
கண்டது எங்கும் கடவுளல்ல நடையினை வெ று தே ஓடுகிறேன்
நாட்களும் கூடவே ஓடுறது.

(47 ) உற்றமும் சுற்றமும் தேடுகின்றேன்
உண்மையிற் கண்டது உருப்படா (தா) ர் கற்றது மற்றதை வீசுகின்றேன்
கண்டது கயவன் என்றபெயர்.
உலகினில் உலகினில் நீந்துகிறேன் .
ஒன்றுமே கையினிற் தட்டவில்லை நிலவுக நிலவுக அன்புஎன்றேன்
நிச்சயம் ஒன்று பட்டதங்கே.
அள்ளினேன் கையினில் அருந்துகின்றேன்
அண்ணாந்து தொண்டையில் ஊற்றிநின்றேன் மெள்ளவும் ஊற்ற முடியவில்லை.
மெல்லவும் எனக்குச் சக்தியில்லை.
அன்பினைக் கண்டேன் ஆசைகள் கொண்டேன்
அஃதினை முற்றாக அடையவே யில்லை என்புமே அன்பு இப்படியே
இருந்திடில் வையத்தில் வரட்சியில்லை.
அன்பை நாடிடுவோம்
சொல்லும் பொருளும் நிதம்தேடிச்
சோர்வும் களைப்பும் அறநீக்கி வெல்லும் எண்ணம் மனம் கொண்டு
வேடம் ஆட்டம் * அவையின்றிக் கல்லும் மண்ணும் கனிந்தோடக்
கபடம் வாழ்விற் சிறிதின்றி நல்ல பாடம் நாம்கற்று
நாடும் அன்பை நாடிடுவோம்.
ஞாலம் போற்றும் வாழ்வாழ்ந்து
நாமும் நீரும் ஒன்றாகிக் காலம் காலம் ஒளிவீசிக்
கடமை ஒன்றும் வழுவாமற்

Page 34
( 48 )
சாலம் மாயம் சறுக்கல் கொண்டு
சற்றும் பிசகல் ஏதும் இன்றி ஆலம் விருட்சின் விழுதைப்போல்
அருமை அன்பை நாடிடுவோம்.
காணும் உயிரில் அன்பு கொண்டு
கடவுள் தெய்வம் அன்பிற் கண்டு பேணும் வாழ்வில் அன்பு பற்றிப்
பேறுகள் எல்லாம் அன்பிற் பெற்று நாணும் செய்கை அன்பால் வென்று
நன்ம்ை உண்மை அன்பாற் கொண்டு ஊணும் உடலும் உயிரும் வாழும்
உண்மை அன்பை நாடிடுவோம்.
தாங்கிவிட அன்பில்லை
ஓடினேன் ஓடினேன் ஓடுமிட முடிவின்றித் தேடினேன் தேடினேன் தேடவினி இடமின்றி நாடினேன் நாடினேன் நல்லவொரு அன்பொன்றைப் பாடினேன் பாடினேன் பக்தியுடை அன்பொன்றை ஆடினேன் ஆடினேன் ஆட்டமில்லை என்னும்வரை கூடினேன் கூடினேன் குளிரன்பு நான் தேடிச் சாடினார் சாடினார் தறுதலை என்றென்னை
மூடினார் . மூடினார் முட்டாளாய் எனைமாற்றிச் சாடினேன் சாடினேன தலைகன்னம் கழுத்தெல்லாம் தக்கபலன் வேறில்லை தாங்கிவிட அன்பில்லை.

காதல் - 7 செல்வமலர்
3
செல்லமலர் பலகொண்டு செவ்வ தர வாய்கொண்டு செல்வமலர் வந்துநின்று சிந்தனையைக் கிளறிவிட்டு மல்லிகைப்பூ வாசமது மருவிமனம் கிளறிவிட அல்லும்பகல் இங்கிருந்து அறிவேற்றி ஒளிபாய்ச்சி.
கல்போன்ற தோள்பற்றிக் கல்லுமதிற் கரைந்துருக மல்லனென் திரள் கொண்ட மார்மீதும் தோள்மீதும் கொல்லென்று குதித்தாடிக் குதிபோட்டுக் கூத்தாடி மெல்லமெல்ல உணர்வேற்றி மேனியெலாம் வேர்வை சிந்த
சொல்லென்று வற்புறுத்திச் சோர்வடைய எனைமாற்றி நல்லவொரு இன்பமதை நயமுடனே எனக்களித்து இல்லையென்று கூறாமல் என்னுடனே அவள்சேர்ந்து பல்லோரும் பெற்றுவிடும் பல்லின்பம் சுவைத்திட்டாள்.
அவளின்பம் எனக்களித்தாள் அவட்கின்பம் நானளித்தேன் அவள்நானிங் கொன்றானோம் யாரெம்மைப் பிரித்திடுவார் தவழ்கின்ற குழவிபோற் தனியின்பம் நாம் பெற்றோம் கவிழ்கின்ற நோக்குடனே கருதிவிட முடியாது.
பாசமலர்
கொத்துமலர் கைக்கொண்டு குடிமதுரம் விழிகொண்டு தத்துநடை கால்கொண்டு தவழ்சேலை இடை கொண்டு கத்து மொலி வாய்கொண்டு காதல்நிலை உளம்கொண்டு பத்துநிறம் உடை கொண்டு பறந்துவந்தாள் பாசமலர்.
அன்புமனம் உளம்கொண்டு ஆவல்பல மனம்கொண்டு இன்பமலர் சொல்கொண்டு இதயமலர் நிதம் கொண்டு துன்பப்புயல் மனம்கொன்று துயரவெள்ளம் விழிகொன்று தின்னும்மலர் அழகெடுத்துச் சிரித்து வந்தாள் பாசமலர்

Page 35
(50 )
கைகள்நிறை வளைகொண்டு கால்கள்நிறை நடை கொண்டு உய்யும்வழி உளம்கொண்டு உதடுநிறை களிகொண்டு தெய்வவொளி முகம்கொண்டு தேன்மதுரம் நாக்கொண்டு பெய்யு மொழி கண்கொண்டு பிதற்றிவந்தாள் பாசமலர்.
மெய்யிற்பல நிறைகொண்டு மென்மைபல உளம் கொண்டு கையிற்பல கவிகொண்டு கண்கள்நிறை ஒளிகொண்டு தையலவள் தண்பெண்மைத் தனியரன்கள் பல கொண்டு எய்யும்வேல் விழிகொண்டு இங்குவந்தாள் பாசமலர்.
வேல் தர
நல்லமலர் நாக்கொண்டு நன்மைமலர் இடைகொண்டு வில்லுமலர் விழிகொண்டு விண்மலர்கள் உளம்கொண்டு செல்வமலர் கைக்கொண்டு சிறுமலர்கள் தலை கொண்டு சொல்லுமலர் நயம் கொண்டு சொரிந்துவிட்டாள் பாசமலர்.
ஓடி வா மலரொளியே
கண்ணிலே கனிசொரிந்து காதிலே இன்பரப்பி விண்ணிலே ஒலிபரப்பி வீரமே கொடுநின்று மண்ணிலே மணம் பரப்பி மலையிலே தவழ் சென்று விண்ணிலும் கண்ணிலும் ஓடிவா மலரொளியே.
2.
உன்னிலே உருவெடுத்து உருவிலே புகழெடுத்துத் தேனிலே சுவை யெடுத்துத் தென்றலிற் சுகமெடுத்து மானிலே நடைபயின்று மயிலிலே ஒலியெடுத்து ஊனிலும் உணவிலும் ஓடிவா மலரொளியே.
3 •
தாயிலே சேயெடுத்துத் தனிமையில் ஒளியெடுத்துச் சேயிலே உருவெடுத்துத் தென்றலில் மணமெடுத்துக் காயிலே கனியெடுத்துக் கனவிலே உருவெடுத்துத் தாயிலும் சேயிலும் ஓடிவா மலரொளியே.
கல்லிலே உருவெடுத்துக் கலையிலே ஒளியெடுத்துச் சொல்லிலே வடிவெடுத்துச் சொர்ணமுடைக் கவிகொடுத்து வில்லிலே விசையெடுத்து விசையிலே உயிரெடுத்துக் கல்லிலும் சொல்லிலும் ஓடிவா மலரொளியே.

(51)
5. காதலிற் தேன்வடித்துக் கனிவினிற் பொருள்வடித்துக்
கோதலில் அழகொடித்துக் குழுமையிற் பொலிவெடுத்து மோதலில் உயிரெடுத்து முட்டலில் உடலெடுத்துக் காதலிற் கோதலில் ஓடிவா மலரொளியே.
கண் மலரே
1. காதலின்பத் தொட்டில்கட்டிக் கடமைமண ஊஞ்சல் கட்டி
மோதலற்ற அன்பீந்து முகம்மலரத் தேனளித்துக் காதலென்ற பாதையிலே காதலினால் நாமிணைந்து சாதல்வரை வாழ்ந்திடுவோம் சரிமலரே கண்மலரே.
கண்ணில்நிதம் காந்தமிட்டுக் காதலன்பிற் தேன்சொரிந்து பெண்ணினந்தப்பேதமின்றிப் பேசும் மொழிதாய்மைசிந்தத் தண்மைகொண்ட தகமைகொண்ட தாய்மையன்பிற் தமி உண்மையன்பு உந்திப்பாய ஊர்ந்திடுவோம் கண்மலரே.
ழைக்கண்டு
நேர்மைசிந்ததாய்மைசொட்ட நெற்றிவேர்வை பாய்ந்துவரக் கருமையின்றிக்களவுமின்றிக்கடினமாக உழைத்துவாழ்ந்து உரிமைகொண்ட உள்ளம்சேர்ந்து உலகமெங்கும் கொடிபிடி அருமையாகவாழ்ந்திடுவோம்அழகொயிலேகண்மலரே(த்து
4. கனிவு சொட்டக் காதல்சொட்டக் கடமைசொட்டக் கண்(ணி) நுனிப்புற்பனிபோற் துயரம்ஓட நுணியடிபேதம்யாதுமின்றிக்
யம்சொட்ட கனிந்துவிட்ட காதல்மலர் காலம்காலம் பாடிவர இனிமையுடன் வாழ்ந்திடுவோம் என்மலரே கண்மலரே.
காதல்சிந்தக் காந்தம்பாயக் காலமெல்லாம் ஒளியுமாகிச் சாதல்வற்றச் சறுக்கல்வற்றச் சாதலின்றிக் காலமெல்லாம் பூதலத்தின் இருளகற்றிப் பூமியெல்லாம் புகழ்பரப்பிக் காதலினால் நாமிணைந்து கலந்திடுவோம் கண்மலரே.

Page 36
அழகு மலர்
அழகுமுகம் ஒளிசெலுத்த அதில்விழிகள் சுழன்றுவர மிளகிரண்டு மிதக்கையிலே மின்மினிக்கிண் மார்து டிக்கப் பழமான்ன நல்லமென் மாதுளங்காய்க் கன்னங்கள் அழகெங்கும் சொரிந்திறைக்க அவள்வந்தாள் நான்
கண்டேன்.
2,
கையிரண்டும் வளைகுலுங்கக் காலிரண்டும் பின்னலிட மெய்யரண்டு மேலெழும்பி மேனியெலாம் உணர்வூட்டத் தொய்மேனி சுழன்றுவரத் துடையிரண்டும் சதிராட ஐயையோ அழகுமலர் அவள்வந்தாள் நான்கண்டேன்.
மலரொளி என் காதலி
1,
ஆலையெடி நீயெனக்கு ( 21திமதுரம் நானுணக்குக் காலையெடி நீயெனக்குக் காதல்வலை நானுனக்குச் சோலையெடி நீயெனக்குச் சுழலும்வண்டு நானுனக்கு மாலைக்காலை மலருதடே மல்லிகையே மலரொளியே பால்பழங்கள் நீயெனக்குப் பசிவயிறு நானுனக்கு ஆல்விருட்சம் நீயெனக்கு அதன்விழுது நானுனக்கு கால்கள் ரெண்டு நீயெனக்குக் காலின்விரல் நானுனக்கு செல்வநல்லத் தேன்சுவையே தேனமுதே மலரொளியே.
2. பிஞ்சுமுகம் நீயெனக்குப் பேசும்முகம் நானுனக்கு
அஞ்சுகம்தான் நீயெனக்கு ஆற்றினொலி நானுனக்குப் பஞ்சமெடி நீயெனக்குப்' பசும்போர்வை நானுனக்குக் கொஞ்சிக்கெஞ்சும் அழகொயிலே கொள்ளழகே மலரொளி கொஞ்சுமுகம் நீயெனக்குக் கொஞ்சமெடி நானுனக்குக்(யே கஞ்சியெடி நீயெனக்குக் கலசமெடி நானுனக்குத் தஞ்சமெடி நீயெனக்கு தனியரண்கள் நானுனக்குக் கொஞ்சிக் கெஞ்சும்பசுங்கிளியே கொத்துமலரேமலரொளியே

( 53 )
3. கானமெடி நீயெனக்குக் காற்றினொலி நானுனக்குப்
பானமெடி நீயெனக்குப் பார்வையெடி நானுனக்கு மானமெடி நீயெனக்கு மதியின்முகம் நானுக்குக் கானமழை பொழிந்துவிடும் கட்டழகே மலரொளியே தேனமுதம் நீயெனக்குத் தென்றலெடி நானுனக்கு ஈனமில்லை நீயெனக்கு எழுந்தருள்வேன் நானுனக்குப் பேசும்கிளி நீயெனக்குப் பிள்ளையெடி நானுனக்கு மென்மைக்கனிக் கட்டழகே காதலியே மலரொளியே,
இன்பமெடி நீயெனக்கு இனிமையெடி நானுனக்கு அன்னமெடி நீயெனக்கு அழகுமயில் நானுனக்குக் கன்னமெடி நீயெனக்குக் காந்தமுதம் நானுக்கு அன்பிலசை அன்னமே அழகொயிலே மலரொளியே பெண்மையெடி நீயெனக்கு ஆண்மையெடி நானுனக்கு அண்மையெடி நீயெனக்கு ஆண்மயிலாம் நானுக்குத் தண்மையெடி நீயெனக்குத் தங்கமெடி நானுனக்குத் தண்மையிலும் பெண்மையிலும் தனியுருவே மலரொளியோ
பேதையெடி நீயெனக்குப் பேணழகன் நானுனக்கு நாதமெடி நீயெனக்கு நாவினிமை நானுனக்கு மெத்தையடி நீயெனக்கு மென்மலர்கள் நானுனக்கு எத்தனையோ பெண்களிலும் என்னுயிரே மலரொளியே புதுமலர்கள் நீயெனக்குப் பொங்குமணம் நானுனக்கு மதுமலர்கள் நீயெனக்கு மயங்கும்வ ண்டு நானுனக்கு ஓது மொலி நீயெனக்கு உட்பொருட்கள் நானுனக்கு எதுவரிலும் எவைவரிலும் என்னுருவே மலரொளியே.
6. கண்களெடி நீயெனக்குக் கண்ணினொளி நானுனக்குப்
பண்டமெடி நீயெனக்குப் பற்களடி நானுக்குக் கற்கண்டெடி நீயெனக்குக் கட்டெறும்பு நானுனக்கு அண்டையிலும் அருகினிலும் அறிவின்சுவை மலரொளியோ பாட்டினிமை நீயெனக்குப் பாடகனாம் நானுனக்குக் கோட்டையெடி நீயெனக்குக் கொத்தளங்கள் நானுனக்குச் சாடியெடி நீயெனக்கு மூடியெடி நானுனக்கு ஆடிப்பாடி ஆடி வரும் அழகுமயிலே மலரொளியே.

Page 37
இந்தி மலரே
கண்ணின் மணியே காதல் வலையே
கட்டிக் கரும்பே காந்தச் சிலையே பெண்ணின் உருவே பேசும் கிளியே
பேணும் மலரே பெய்யால் விழுதே மண்ணின் பரிசே மானின் விழியே
மயக்கும் வண்டே மானே தேனே எண்ணின் ஒலியே எழும்பும் அலையே
எறிக்கும் நிலவே எந்தன் உயிரே.
ஆடும் மயிலே அசையும் கொடியே
அழகின் ஒளியே அன்பின் உருவே சூடும் மலரே சொரியும் நிலவே
சொட்டும் தேனே சொர்க்க நிலவே பாடும் கிளியே பள்ளிப் பெண்ணே
பாயும் நதியே பண்ணே பழமே கூடும் முகிலே கூவும் குயிலே
கொத்தும் கிளியே கொஞ்சும் பெண்ணே.
பேசும் கிளியே பேணும் மணியே
பிள்ளைக் கனியே பிஞ்சின் முகமே வீசும் காற்றே விண்ணின் நிலவே
விலையில் முத்தே வீர மணியே மூசும் களிறும் மயங்கும் அழகே
முகத்தில் மின்னும் இழமை வடிவே காசும் மணியும் கதறித் துடிக்கும்
காறும் ஒளியே கட்டிக் கரும்பே.
அன்பின் உருவே ஆசைக் கனியே
ஆடும் கொடியே அலறும் குயிலே மின்மின் மணியே மினுங்கும் முகமே
மீட்டும் ஒலியே மீனின் அசைவே

( 55 )
முன்பின் அழகே முன்னைக் கலையே
மூத்த சுடரே முக்திப் பிறப்பே அன்பின் அன்பே எழுப்பும் சிலையே
எந்தன் உயிரே இந்தி மலரே.
கொஞ்சும் முகமே கொட்டும் ஒளியே
கோவைக் கனியே கொழுத்தும் மலரே பிஞ்சும் முகமே பேசும் முகமே
பெண்ணின் வடிவே பேணும் மலரே வஞ்சி வடிவே வனிதை மலரே
வாழ்வின் சுவையே வண்ண மலரே அஞ்சி மிஞ்சும் அழகு மலரே
ஆருயிர் மலரே இந்தி மலரே.
காலமெல்லாம் நீயேதான்
கன்னியுனைக் காத்திருப்பேன் காலமெல்லாம் நீயேதான் அன்புமணம் இனிக்குது அறிவுஒளி மயக்குது என்பும்மனம் சுவைக்குது எழுத்தெழுந்து துடிக்குது முன்படித்த உன்னடிகள் முழுதாக உறைக்கவில்லை இன்றிடித்த உன்கண்கள் இழுத்திழுத்து உறைக்குதையோ என்றும்தந்த ஏச்செல்லாம் இதயமதைத் தாக்கவில்லை இன்றுனது அன்பொலிகள் இதயமதைத் தூக்குதையோ.
அணைத்து முத்தம் தந்திடுவேன்
ஆகாய மென்னும் அழகான வான்வெளியில்
ஆடித் திரியும் இவ் வாதித்தனைப் போலவென் ஆழம்கண் டறியா இதயவான் வெளியினிலே
ஆடித் திரியுமென் அன்பான காதலியே அழியுமுட லுள்ளவரை அபிமானம் உள்ளவரை
இன்ப மெங்கே இன்பமெங்கே என்று என்று தேடி சுழிகொண்டு சுழன்றுவரும் இல்ல (ற) வாழ்விலே (யோடி இன்பத்தைப் பெற்றுவிட இயற்கைதனை இறைஞ்சு
கிறேன்

Page 38
(56 )
ஆழிகடல் சூழ்ந்து அதன்நடுவிற் சுழன்றாலும்
இ ஆற்றுவெள்ள ஓட்டமதில் அள்ளுப்பட்டுச் சென்றாலும் சுழிகாற்றுச் சுழன்று வந்து தூக்கியெனை அடித்தாலும்
வழிநெடுக வேங்கைப்புலி வழிமறித்துப் பாய்ந்தாலும் கழியிரண்டு கொண்டுஎனைக் காடையர்கள் தாக்கினாலும்
துளிதுளியாய்த் துன்பவெள்ளம் சோர்வடையச் செய் ஆகாய மார்க்கமாய் அந்தரத்திற் பறந்து வந்து (தாலும் அன்புடனே உன்னை நான் அணைத்து முத்தம் தந்திடு
வேன்.
3. கட்டியுனை முத்தமிட்டுக் கடுமின்பம் தந்திடுவேன்
காறுமுந்தன் அன்பினாற் கடுமின்பம் பெற்றிடுவேன் கட்டெறும்பு போலவுன் கன்னத்தில் முத்தமிட்டுக்
காதலென்னும் சுடரொளியைக் கருவாக்கி உருவாக்கித் தொட்டிலிலும் மெத்தையிலும் துயில்கொள்ளும் குழவி
போற் தொடரின்பம் பெற்றுவிடத் துணிவாக மனம்கொண்டு அட்டை போல் நீயென்னை அசையாமற் பிடித்து விட
அள்ளியள்ளி நானுன்னை அணைத்துமுத்தம் தந்திடு
வேன்.
4. அணைத்துமுத்தம் நானும்நல்க அறிவுடனே எனையேற்றி
ஆழிகடல் இன்பமதை அள்ளிநீ அளித்திடுவாய் பிணைத்து விட்ட எம்வாழ்வைப் பிறர்கண்டு வியந்துரைக்கப்
பெற்றுவிட்ட இன்பமதைப் பேணியே காத்திடுவேன் அணைத்தணைத்துக் கரம்பற்றி அன்புமலர் உடல்பற்றி
ஆருயிராம் அன்பிதழாம் அடக்கமாம் உளமென்மை பிணைத்தெனது உயிருடனே பிரிக்காமல் மாற்றிப்பின்
பித்தனாய் மாறும்வரை அணைத்துமுத்தம் தந்திடுவேன்
மலர்ப்பந்தல் அமைப்பேன்
மானிலத்தார் காணாத மலர்ப்பந்தல் அமைப்பேன் - நான் அன்பொழுகும் கனிவுசிந்தும் அகம்தன்னைக் குளிர்விக்கப் பண் ணொளிர விண்ணொளிரக் கண்ணொளிரும் களிப்பு வினைமானிலத்தார் காணாத மலர்ப்பந்தல் அமைப்பேன். (காண

(57)
2. நெஞ்சத்தில் எழுந்துயரை நீராக்கி நீர்பாய்ச்சி - என்
உள்ளத்தில் எழும்உணர்வைத்துயிலாக்கிக்கனவாக்கி-நான் இன்பமென்ற ஏரியை இம்மையில் அடைந்திடவே - நான் மானிலத்தார் காணாத மலர்ப்பந்தல் அமைப்பேன்.
முத்துவிதானம் கீழ்விரித்து முல்லைமலர் மேற்பரப்பி-ஊடே பட்டுநிலா மேல்விழுந்து பறந்தோடிச் சென்றுவர - அதன் மத்தியிலே நீரிரிருந்து மனம்குளிர்ந்து பாட்டிசைக்கும் -
அந்தக் காலம்வரும் நேரம்தன்னைக் காத்திருப்பேன்காத்திருப்பேன்
4.
காலமெல்லாம் காத்திருப்பேன் கோலமெல்லாம் போட்டு
வைப்பாய்-அக் காலத்தின் கருவிடத்தைஉன் கோலத்தால் அழித்துவிடு ஞாலமெல்லாம் போற்றிடவே காலமெலாம் ஒளிவீசி - நீ கலந்துபுகழ் பரப்பிவிடப் பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்
அன்புஎலாம் ஒளிவீசி அறிவு எலாம் உயிராக்கி - என் பண்பெலாம் பாலாக்கிப் பலமெலாம் உணர்வாக்கிப் - பின் முன்பெலாம் நீயாகி முகமெலாம் உனதாக்கி - இங்கு அன்பெனும் உலகினில் அழியாமற் காத்திருப்பேன்
என்னுயிரே லலிதாவே
அன்பிலே தேன்நிரப்பி ஆசையில் மணம்பரப்பி என்னருகில் ஓடிவா என்னுயிரே லலிதாவே உன்னிதயம் களிநிரப்பி உலகமெலாம்" உனதாக்கிக் கன்னியே காதலியே கடிதில்நீ ஓடிவா முன்னெனது உயிரேற்றி முழுமதியை உனதாக்கி இன்னுமின்னும் கொண்டுவந்து என்னருகில் ஓடிவா தின்னநல்ல கனிகொண்டு தித்திக்கும் மதுகொண்டு உன்னழகை எனக்கீந்து உயிர்மூச்சே ஓடிவா மின்னலிடை துடிதுடிக்கி மிளகிரண்டும் உடை பிய்க்க மின்மினியே மென்மயிலே மென்மலரே ஓடிவா.

Page 39
முத்தொளியே லலிதாவே
அன்பிலே பண்பிலே அறிவிலே ஒளிபாய்ச்சி முன்னழகே முழுமதியே முத்தொளியே லலிதாவே முன்னும் பின்னும் நடைபயில முகவிழிகள் உருண்டுவர கன்னங்கள் குழிகாட்டக் கையிரண்டும் சடை பின்னும் இன்னமுதம் நகைகக்க இடையொடிந்து துடிதுடிக்க என்னருகில் அடிபெயர்த்து இழமையிலே நடந்துவரும் உன்னழகை நான்ரசிக்க உதடுமென் நகைகக்க
முன்னழகை முழுதாக்கி முழுமதியாய் நடந்துவந்தாய் அன்னமது அசைவதுபோல் அடிபிரண்டு நகைகக்க அன்னமே ஆருயிரே அழகொயிலே ஆடிவா.
கனவுக் காரிகை
மதியைப் பழித்து இரு கறைகள் கொண்ட கருவிழிகள் கரியைப் பழித்துக் குதியைத் துடைக்கும் இருகுழல்கள் கொவ்வையைய் பழித்துக் குருதியை யொக்கும் உன்அதரம் குழியைப் பழித்துக் குங்குமம் கொண்ட உன்கன்னம் விதியைப் பழித்து மதியை யொக்கும் வெண்பற்கள் மானைப் பழித்துத் தேனை யொக்கும் செம்மேனி துன்பம் தீர்த்து இன்பம் கொடுக்கும் உன்நோக்கு
இவற்றைக் கண்டு இன்பம் கொண்டேன் நான் இருந்திடக் காலிற் தேளது ஓங்கி இறுக்கி விடக்கண் விழித்து ஏங்கிநின்றேன் புறத்தின் அழகையும் கண்டிலேன் அங்கு அகத்தின் அழகையும் கண்டிலேன் அங்கு எல்லாம் கற்பனை எல்லாம் கனவே.

முதலிரவு
உய்வதற்கு வழிதேடிப் புரட்சியிலே மணம் முடித்துக்
கையிலே தலைவைத்துக் குடிசையொன்றின் மூலையிலே பையநான் பாயிலன்றிப் பாரிலே கிடக்கையிலே கையிலே நயமெடுத்துக் காலிலே நடைபயிற்றி மெய்யிலே ஒளியெடுத்து மேனியெலாம் கிளுகிளுக்கத் தொய்மேனி சுழன்றாடத் துவளிடை துடிதுடிக்கப் பெய்யுமவள் சிரிப்பொலிகள் பித்தனெனைக் கவர்ந்திழுக்க ஒய்யார நடைபின்ன உலகமெலாம் விழிமயங்கத் தெய்வஒளிச் சித்திரமாய்த் தித்திக்கும் தேனமுதாய்க் காயன்றிக் கனிந்துவிட்ட கனியமுது போலாகிச் சேயாகித் தெறித்து விடும் தேனமுதம் வாய்சிந்த வாயெல்லாம் மலராகி வடித்துவிடும் நகைகக்கப் பாயுமவள் கண்வீச்சுப் பாவியெனைப் பதைபதைக்கப் பெய்ந்துவரும் கார்கூந்தல் பின்குதியைத் துடைத்துவர ஒய்யார நடைபயின்று உலகமெலாம் தனதாக்கிப் பையமெல்ல அடி பெயர்த்துப் பார்போற்றப் பணிவோடு தையலவள் தன்கடமை செவ்வனமே முடித்துவிட்டு மெய்யிரண்டைக் கையணைக்க மேனியெலாம் சிலிர்த்தெழும் தையலவள் எனைநோக்கி முதலிரவை எதிர்நோக்கிப் [பத் பைய மெல்ல அடி பெயர்த்தாள் பாரையெல்லாம் நான்
மறந்தேன் தையலவள் வருகையினாற் தனியின்பம் நானடைந்தேன்.

Page 40
சோகம் - 8
கடவுளும் காதலும்
1. கல்லு போல் வீற்றிருக்கும் பெண்ணுஅவள்
காதலெனை உணராமல் வீற்றிருந்து சொல்லுஓன்று கூறாமல் எனைவாட்டித்
துடிதுடிக்கப் பார்த்திங்கு வீற்றிருக்கும் கல்லுமன விடம்கொண்ட பெண்ணவளைக்
காட்டிவிட்ட கடவுளிங்கு என்முன்னே சொல்லொணாத் துயர்மூளப் பதைபதைத்துத்
துடிதுடித்துக் காதலினாற் சாகவேண்டும்; கல்லிலே அழகுஒயிற் சிலைவடித்துக்
காந்தவொளி நிதமிங்கு வீசிவிடும் நல்லவொரு இருவிழிகள் அதிற்படைத்து
நாம் போற்றும் தெய்வத்தின் கோவிலுள்ளே கல்லுமனக் கடவுளிடம் விட்டுவைத்துக்
காதல்வெறி கடவுளுக்கு ஊட்டிவிட்டால் நில்லுஎன்பான் நின்றுஎனை அணையென்பான்
நீண்டவிழி காதடைய நோக்குஎன்பான் சொல்லு என்பான் துடிதுடிக்கப் பிடித்திழுப்பான்
துயருடனே முகம்நோக்கி வணங்கிநிற்பான் சொல்லுமா அக்கல்லு வாய்திறந்து
துயரத்தைப் போக்கிடுமா சிலைநீக்கிச் சொல்லு சொல்லு சொல்லு என்று துடிதுடிப்பான்
சோர்வடைந்து உயிர்வாடிப் பதைபதைப்பான் இல்லையில்லை நீயின்றி நானிங்கு
என்றுதலை சிலைமீது உடைத்திடுவான் இல்லை யினி வேண்டாம் பெண் என்று எண்ணி
இனிப்படையேன் என்று அவன் உறுதிகொள்வான்.

(61)
2. மண்ணிலே மனிதனாய் உருவெடுத்து
மலைபோன்ற கண்கொண்டு, கடவுள் வந்து கண்ணினிமை நீன்றுபின் காதடையக்
காந்தவொளி தெறித்தெங்கும் நிதம்வீச விண்ணெங்கும் செவ்வானம் தெரிவது போல்
வீசுமொளிக் கன்னங்கள் மாறிநிற்க உண்மையுடல் இரத்தம்தான் நின்றதுபோல்
உமையவளின் அதரங்கள் சிவந்துநிற்கக் கண்ணிலே வேல்குத்த வருவது போற்
கட்டினுள் அவள்கொங்கை சீறிநிற்க விண்விண் விண்ணென்ற சிலவொலிகள்
நூலினிடை சுழருவதால் ஒலியெழுப்பக் கிண்கிண் கிண்ணெண்ற நாதவொலி
கிலுகிலுக்கும் அவள்நகையில் ஒலித்து நிற்கத் தண்ணென்ற அவள்பாதம் பட்டவுயிர்
தப்பிடோம் பனியென்று பதைபதைக்க விண்ணிலுள்ள முழுமதியே விழித்துக்கண்
விழுந்தடித்து விரைந்தோடி வந்தது போற் பெண்மையவள் வருவதையே பார்த்துவிட்டாற்
பிதற்றுவான் பிதற்றுவான் கனவென்று கண்களையே உருட்டியதைப் பார்த்திட்டுக்
கண்ணடிப்பான் கையசைப்பான் அணுகிடுவான் அணுகிப்பின் கண்டுவிட்ட அழகினது தோற்றத்தாற்
பெண்ணல்லப் பெண்ணல்ல உண்மையிலே கண்டதிது ஊனென்ற ஒன்றின்றி உறக்கங்கள் ஒன்றின்றி
உடலையும் உயிரையும் உருக்கிடும் பேயென்று எண்ணிப்பின் தன்மனத்தில் முணுமுணுத்து
இடறியே விழுந்து பின் மயங்கிடுவான்.
எனையிங்கு வாழவிடு காதலே நீயிங்கு அழிந்துவிடு
காலமெல்லாம் எனையிங்கு வாழவிடு காதலெனும் துயரினிலே கவிதை பெற்றுக்
கரைகாணாப் புயலினிலே இன்பம் பெற்றுக்

Page 41
(62) காதலினாற் கவிதைகளைத் தீயிலிட்டேன்
கண்டசுகம் வேறென்ன இவ்வுலகிற் சாதலினால் ஒளியதனைப் பெற்றுவிட்டேன்
சாந்தமெனும் உயிரதையே பெற்றுவிட்டேன் காதலினாற் கண்டசுகம் வேறில்லைக்
கற்பனையே கற்பனையே கற்பனையேதான் மோதல்பல கொண்டுவிட்டேன் புவிவாழ்வில்
முனிவராய் மாறிவிட ஆசையேதான் சாதலையே புரிந்து விடச் சக்தியில்லைச்
சரித்திரம்தான் பதில்கூற வேண்டுமிங்கு.
வரவில்லை ஐயையோ
குளித்துவிட்டு மலர்சூடிக் கும்பிடுவாய் என்றிங்கு
குந்திநான் காத்திருந்தேன் வரவில்லை ஐயையோ. விளியிலே ஒளிசெலுத்தி விண்ணிலே மலரெடுத்து
விளியிரண்டும் நசை கக்க விம்மிவிம்மி மார்துடிக்க வளியிலே மாலையிட்டு வாழ்வு பெற வந்து நின்றாள்
வணங்கினேன் காணவில்லை அவளல்லி ஐயையோ களிகொண்டு மனம்துள்ளிக் கட்டிலிற் காதல்பெற்றுக்
காலமெல்லாம் நான் பூர்க்கத் தொட்டிலிற் பரிசளிக்க இழிவில்லை என்று அவள் எனைப்பற்ற நான்புரண்டு
எழுந்திட்டேன் காணவில்லை அவளல்லி ஐயையோ விழிபுரட்டி நாநீட்டி வேண்டுமா என்று பல
விதம்விதமாய்க் கைநீட்டி விண்ணிலே கொடுசென்று ஒளிவின்றி மறைவின்றி நாம்வாழ்வோம் என்று விட
ஓடினேன் காணவில்லை அவளல்லி ஐயையோ.
கெஞ்சி நின்றாள்
வஞ்சி நெஞ்சு பஞ்சிக் கைஞ்சி
பஞ்சைப் பிஞ்சிற் கெஞ்சி மிஞ்சி அஞ்சிக் கெஞ்ச வஞ்சி மிஞ்சிப்
பிஞ்சு நெஞ்சுள் ஐஞ்சு கொஞ்சி

( 63 ) நஞ்சு நெஞ்சின் வஞ்ச நஞ்சால்
வஞ்சி பிஞ்சிற் பிஞ்சு கொஞ்சி கொஞ்ச நஞ்சப் பஞ்சா கொஞ்சி
நெஞ்சம் துஞ்ச வஞ்சி நெஞ்சு நெஞ்சிற் துஞ்சிக் கைஞ்சிக் கைஞ்சி
அஞ்சி அஞ்சிக் கெஞ்சி நின்றாள்.
பா ராய்
1. மனதைத் திருத்தக் கருத்தை யுதிர்த்துப்
பயனைக் குறித்துக் களித் (து) இருந்து கனவைக் கண்டு களிப்பு எய்தி
உருவைச் சுருக்கிப் படிப்பைக் கெடுத்து மனதை நெகிழ்த்து உடலை யுருக்கி
உருவை வணங்கி மண்ணில் வாழ்ந்து வனிதை நெஞ்சில் வணக்கம் போட்டு
வலுவையும் இழந்து வாழ்வதைப் பாராய்.
2. புயலைக் கிளப்பி மனத்திற் பரப்பி
அறிவைக் கெடுத்து அதையும் பார்த்து. இன்பம் பறித்துத் துன்பம் கொடுத்து
மனதை யலைத்து மனத்தை வருத்திப் புறமும் அகமும் ஒன்றென நம்பித்
துன்பம் பெற்றுச் சாந்தி யிழந்து நன்பயன் எதுவும் இன்றியே செய்து
என்கதி யிப்படி யானதைப் பாராய்
3. அலைகள் தோன்றிக் கலங்களைக் கவிழ்க்கும்
கடலின் அடியினிற் கூடவு மிப்படிக் கொலைகள் போன்று காட்சி யளிக்கும்
இ பலதாம் கிளர்ச்சிகள் காண்ப தில்லை

Page 42
( 64 )
கேட்டுக் கொண்டும் நினைத்துக் கொண்டும்
துயரம் அடைந்தும் துக்கம் அடைந்தும் நாட்களை யிங்கே வீணே கழித்து
நடந்ததை யெண்ணி நலிவதைப் பாராய்.
4. இன்பம் இன்றி இனிமை இன்றி
இதயம் இங்கே அன்பை ஏங்கித் துன்பம் என்றும் துயரம் என்றும்
துடிக்கும் வாழ்க்கை நிதமும் வாழ்ந்து; அன்பின் உருவே உன்னை வேண்டி
அலைந்து அலைந்து நிதமும் வாடி முன்பின் அறியா உன்னை நினைந்து
முதுகை வளைத்து நலிவதைப் பாராய்.
பெண்களே பெண்கள்
நெத்தியிலே நிறப்பொட்டுகளும்
நெஞ்சைப் பறித்திடும் திட்டுக்களும் குத்தியிலே பெரும் குத்திகளாய்க்
குதியினை யுயர்த்திடும் குத்திகளும் கத்தியின் கூரினைப் போலவரும்
வேல்விழி மான்விழிப் பார்வைகளும் இரத்தத்தை யுறிஞ்சிப் பருகினாற்போல்
இரத்த நிறம் கொண்ட சொண்டுகளும்.
தொத்திலே கிடந்து சுழன்றுவரும்
தோல்மயிர் மான்மயிர்க் கொண்டைகளும் கோதினால் வாரினாற் கொசுப்பறக்கும்
சிங்கார அகங்காரக் கொண்டைகளும் நாரத முனிவரின் தலையினைப்போல்
வானத்தைப் பார்த்திடும் கொண்டைகளும் பாரத்தைத் தாங்கிட முடியாத
பண்பினை யாரிங்கு எடுத்துரைப்பார்.

( 65 )
3. ம்
கையினை முற்றாகக் காட்டிவிடும்
கைவெட்டுக் கால்வெட்டுச் சட்டைகளும் வயிற்றினின் வகையறா மடிப்புகளை
வரிகளாய்க் காட்டிடும் சட்டைகளும் பையவே முதுகினைக் காட்டிவரும்
பாழ்பட்டுப் போகின்ற சட்டைகளும் பத்துடைப் பட்டுக்கள் சுற்றிய பின்பும்
பண்பினைப் பகர்ந்திடும் ஆடைகளும்.
காதிலே பெருஞ் சுழகுகளும்
கழுத்திலே இரும்பு வளையங்களும் பூதலம் எங்கும் புகழ்ந்துரைக்கும்
- பூசல் மாக்களைப் பூசிக்கொண்டு தாதிகள் மக்களை ஊட்டிவளர்க்கத்
தம்தம் கணவரை வீட்டிலிருத்தி நாதியோ இன்றி அலைவோர்போல
நாலா புறமும் சென்றிடுவர்.
இத்தனையும் உள்ள பெண்களிடம்
எத்தனை வருடங்கள் தவமிருந்து பித்தனாய்ப் பேயனாய் மாறிவரும்
பக்தர்கள் எத்தனை பேருண்டு சொத்தும் சுகமும் கண்டறியாச்
சோம்பேறி போன்ற மடையரினாற் சித்தம் கலங்கித் திருவுலவம்
சீர்கெட்டுப் போகுதே என்செய்வோம்.
வாராளோ
அன்புமலர் மணம்வீசி ஆசைமுத்தம் மேற்பொழிந்து துன்பப்புயல் பறந்தோடித் துயரமெலாம் தீர்ந்தபின்பு என்பும்மனம் மணம்கமழ்ந்து இதயமலர் மலர்ந்துவந்து இன்பமெலாம் சொரிந்து வர இங்கு அவள் வாராளோ

Page 43
(66)
அற்றைமுதற் தன்சுற்றம் அத்தனையும் துறந்துவிட்டு இற்றைவரை என்னுடனே இதமாக ஈர்ந்து விட்டுக் குற்றமிலா என்னிதயம் குடிமுழுகக் கதைகூறித் தொற்றலின்றி ஏகிவிட்டாள் துயர்நீக்க வாராளோ.
சொந்தமென்று எனைநாடித் துயரனைத்தும் தனதாக்கிப் பந்தமது பாசமது பாராமற் பகிர்ந்தேற்றுத் தந்தையது தாயாகத் தன்சுற்றம் முழுவதையும் எந்தையிலே கண்டுவிட்ட என்மலராள் வாராளோ.
கலையே நீ பிறவியெடுத்தால்........
1. !
ஆனுருவில் வந்து அழகான பண்பாடு தேனுருவில் வந்து தெவிட்டாத இன்பம் கொடு மானுருவில் வந்து மயக்கியே இன்பம் கொடு பெண்ணுருவில் வந்து பெருந்தவறு செய்யாதே.
அன்பினுக் கன்பனாய் அழகனுக் கழகனுமாய்ப் பண்பினிற் சிகரமாய்ப் பார்வைதனிற் கன்பனுமாய் என்பினுக் கின்பமாய் எழில் சிந்தும் குழவியுமாய்க் கண்முன் தோன்றிக் காண்போரைக் கவர்ந்துவிடு.
3.
தெய்வீக ராஜாவாய்த் தேன்சொரியும் சோலையாய்ப் பொய்யாகப் போகாமற் புனிதமாய் வளம்பாய்ச்சும் மெய்யான வாழ்வு பெற்று மேலோங்கி வாழ்ந்துவரப் பொய்யாமிங் குலகினிற் புனிதமாய் வாழ்ந்துவிடு. அன்பிலே தேன்சொரிந்து ஆசையிலே மலர் சொரிந்து முன்பிலே முத்தொளிர்ந்து முகத்திலே பால் சொரிந்து தன்னிலே தண்மையாம் தனியார்வம் மெய்சொரிந்து! உன்னிலே நீயென்றும் உளம்பூக்க வாழ்ந்து விடு
சோகமே இல்லாமற் சோம்பலே இல்லாமல் மோகமே இல்லாமல் முட்டலே இல்லாமற் தாகமே இல்லாமற் தவியுள்ளம் இல்லாமற் காகம்போல் அன்பீர்ந்து கடைசிவரை வாழ்ந்துவிடு.

செவிட்டில் நாதம்
பூவுமிட்டுப் பொட்டு மிட்டுப் - பின் அவிட்டு விட்டாள் அவைகளெல்லாம் செவிட்டுப் பெண்ணின் காதினிலே அவிட்டேன் எனது அன்பைக் காதலை தவிடு நீங்கிய அரிசி ஆய்ச்சுதே குவித்துக் கானம் இசைத்து நின்றேன் அவிந்து போய்ச்சுதே அந்தோ கானம் தவித்துத் தவித்து ஒதி நின்றேன் கவனம் இன்றிக் காதம் சென்றேன் புவியின் வாழ்ந்தேன் வாழ நின்றேன் கவிதைகள் இன்றி வேறெதும் இல்லை.
தழைத்தோங்க வாழ்ந்திடுவீர்
1.
பண்ணினைக் கேட்டுப் பரவசந்தா னடைந்தாலும் கண்ணினைக் கண்டு காட்சியைத்தான் மறந்தாலும் தன்னையே வெறுத்துத் தமிழ்த் தாயை வளர்த்தாலும் பெண்ணினைக் கண்டு பெரும்பித்தாய் மாறாதே.
உள்ளத்தில் உணர்வில் உயிரிலெங்கும் அன்புத் தமிழ்ரத்தம் ஓடித் தழைத்தோங்க வாழ்ந்திடுவீர் வெள்ளத்தில் ஓடுகின்ற இரத்தத்தின் வெள்ளத்தில் தமிழ்மணம் கலந்து பாய்ந்தோட வாழ்ந்திடுவீர்.
அன்பினை முழுவதும் பெண்ணிற்கே விற்காமற் பண்பினை முழுவதும் பெண்வாழ்விற் பாய்ச்சாமற் கண்ணினை முழுவதும் கலைப்பெண்ணில் வீசாமல் ஊண்போன்று வாழும் தமிழிலும் வீசிடுவீர்.

Page 44
முடிவும் பயனும் பூச்சியமே
உறவு உறவு தேடிவந்தேன்
உலகம்உலகம் சுற்றிவந்தேன் நிறைவுநிறைவு வேண்டிநின்றேன்
நிலவும்மலரும் பார்த்து நின்றேன் மறைவுமறைவு நீக்கிநின்றேன் ,
மயக்கம்மயக்கம் கொண்டு நின்றேன் உறவுஉறவு கேட்டுநின்றேன்
உருக்கஉருக்கப் பார்த்துநின்றேன்.
அன்பை அள்ளிக் கொட்டிநின்றேன்
அருளைக்கண்ணில் வீசிநின்றேன் இன்பம்உனக்குக் காட்டநின்றேன்
இதயமலரை வீசிநின்றேன் துன்பம் இன்றி வாழநின்றேன்
தூரத்தூரப் போகநின்றேன் . என்பும்அவைகள் பூச்சியமே
இனியும் இங்கு என்செய்வேன். காதற்தேனினைக் கொட்டிநின்றேன்
காந்தவலையினை வீசி நின்றேன் கோதற்கைகளை விரித்துநின்றேன்
கொடுமைகளனைத்தும் சகித்து நின்றேன் மோதல்அனைத்தும் ஏற்றுநின்றேன்
முடிவும்பயனும் பூச்சியமே ஈதல்மனமும் இல்லையெடி
இரக்கமனமும் இல்லை யெடி.

பெண்மை - 9
வேசியரும் குலமகளும்
தாசியர் தம்மழகைச் சில்லறைக்கு விற்றிடுவர்
தரணியில் உள்ளோர்கள் தாம் உண்டு வாழ்ந்திடுவர் பேசிப்பேசிப் புகழ்ந்து பின் பெற்றின்பம் முடிந்தபின்
பேச்செல்லாம் விட்டுவிட்டுத் தெருவோரம் எறிந்திடுவர் கூச்சமுள்ள குலமகளிர் தம்மழகை ஒருவர்க்கே
குணமான நயமான கொழுந்தான அழகாக்கிப் பேசிப்பேசி அலைந்தலைந்து பெருந்தொகைக்கு விற்றுப்பின்
பேணிப்பேணிக் காத்ததை பெண்மையுடன் வாழ்ந்திடு தூசிகள் படிந்து துருப்பிடித்துப் போனாலும்[வர்
துடைத்து மே பேணியதைச் சுற்றத்தார் காத்திடுவர் வேசியர்க்கும் குலமகட்கும் வேற்றுமைகள் இஃதேன்
வேறொன்றும் இங்கில்லை மானமாய் வாழ்ந்திடுவீர்.
கண்டேன்
1. .
ஆலயம் பூராய் அழகைக் கண்டேன்
அதிலே கூடப் பெண்மையைக் கண்டேன் சோலைகள் எங்கும் சொர்க்கம் கண்டேன்
சொரிந்திடும் பெண் மை அதிலும் கண்டேன்.
2.
காதலைக் கொண்டேன் கற்பனை கொண்டேன்
கடவுளாம் பெண்மை அதிலும் கண்டேன் சாதலைக் கண்டேன் மோதலைக் கண்டேன்
சாந்தியின் பெண்மை அதிலும் கண்டேன்.
எண்ணங்கள் கொண்டேன் எழுத்தினைக் கொண்டேன்
எழுத்திலும் கூடப் பெண்மையைக் கண்டேன் தண்மைகள் கண்டேன் தாகங்கள் கண்டேன்
தண்மையிற் கூடப் பெண்மையைக் கண்டேன்.

Page 45
( 70 )
4.
பித்தனைக் கண்டேன் பேயரைக் கண்டேன்
பித்தரிற் கூடப் பெண்மையைக் கண்டேன் பக்தரைக் கண்டேன் பாமரைக் கண்டேன்
பக்தரிற் கூடப் பெண்மையைக் கண்டேன்.
5.
மிருகங்கள் கண்டேன் மீன்களைக் கண்டேன்
மீன்களிற் கூடப் பெண்மையைக் கண்டேன் உருவங்கள் கண்டேன் உள்ளங்கள் கண்டேன்
உள்ளத்திற் கூடப் பெண்மையைக் கண்டேன்.
பெண்மை
1.).
தாயிழந்த பெண்ணொருத்தி தனியாகக் குடிநடத்தத் தாயைப்போல் உனைக்காப்பேன் தயங்காமல் வாவென்று மாயைகள் புரிந்துநின்றார் மனிதரொரு மடையரிங்கே பேயைப்போற் பின்சென்ற பித்துக்கள் எத்தனை யோ.
காலம் கெட்டுப் போச்சுதே கற்பையும் பறித்திடுவர் கோலத்தைப் போட்டுவிட்டாற் கும்பிடப் பலரிருப்பர் கோலம்போடும் வரையிற்றான் கொந்தளிப்பு என்றுரைத்து ஞாலத்தின் நற்பண்பை நயந்துரைத்தார் ஒருவரிங்கு. கீக்கீ என்றிழித்து பின்திரிந்த அனைவரையும் சீநாயே போவென்று சென்று விட்டாள் அவளங்கே கீகீகீகீ என்றிங்கு திரிந்தோர்கள் கொடுசெயலாற் தன்பெண்மை இழக்காமற் சென்றுவிட்டாள் அவள்வாழ்க
பெண்மையைக் காத்துவிட்ட பெண்மையே நீவாழ்க அண்மையின் ஆளெல்லாம் ஆவென்று பார்த்துமே திண்மையுளம் கொண்டுள்ள திலகமே நீவாழ்க உண்மையின் ஒளிவடிவே ஒளிச்சுடரே நீவாழ்க.
உலகெலாம் அழிந்து பின் உயிரெல்லாம் அழிந்துமே பலகாலம் வாழ்ந்துமே பண்புள்ள மனதுடனே சிலநேர இன்பத்திற் திளைக்காத பெண்மையே அலகுண்டோ இங்குன்னை அளந்து நாள் காட்டிவிட.

விதவை
1. தெருவோரம் செல்லும் பெண்ணுருவம் கண்டேன்
கருங்கூந்தல் எங்கே குறும்பார்வை எங்கே அருஞ்செல்வம் அவள் பெண்மை அடங்கியொரு மூலையிலே திரும் பியொழும் நோக்கமின்றி இருந்து விட்ட தையையோ.
2. மென்மேனி எங்கே தண்நோக்கு எங்கே
பெண்மையின் அணிகலமாம் திலகமும் கண்டிலேன் காதணியும் இன்றிக் காலணியும் இன்றித் தனித்தே சென்றாள் கையிலொரு குழவியு டன்.
3. வெண்மைநிறச் சேலைகட்டி வெண்சட்டை மேலணிந்து பெண்மையவள் தன்னவற் பேறுகள் அடக்கிவிட்டு அண்மையவள் அவரின்றி அருகிலொரு துணையின்றி உண்மையிலே உருக்குலைந்து உலகறிய மாழுவதா?
4. மணவீடு நோக்காமல் மகிழ்செய்தி பாராமற்
குணம்மாறு பலபேராற் கோவிலும் செல்லாமல் இரணம்பல எத்தனையோ இதயத்திற் தாங்கிப்பின் கணம்கணம் நீருகுத்துக் கதறிப் பின் மாழுவதா?
5, இயகாமனின் கொடுசெயலாற் கணவனை யிழந்ததின்றிப்
பயங்காட்டும் மனிதராற் பாதியுயிர் பறிகொடுத்து நயமென்று ஒன்றுமின்றி நாலுபேர் கொடுசெயலாற் கயல்போன்ற விழியிங்கு நீருகுத்து மாழுவதா?
5.
என்று தன் கணவனை எமனிடம் கொடுத்தாளோ? அன்றுமுதல் இன்றுவரை அழுதழுது நீர்வடித்து என்றும்நின்று ஏங்கியேங்கி இறுதிநாள் வரையுமிங்கு கன்றுஒன்று கைக்கொண்டு கணவனந்தப் பிதாவின்றி

Page 46
(72)
7. துன்றுகண்ணு நீர்மல்கத் துயரமது மனம்பற்ற
நின்றுகொண்டு பார்ப்பதா சச்சச்சா முடியாது என்று பலர் எண்ணிவிட்டால் இப்புவியில் விதவைகள் என்றுமே ஏங்காமல் எத்தனைபேர் வாழ்ந்திடுவர்.
8. பித்தனைப்போற் திரிந்து பிதற்றிக்கொண்டு வாழாமற் கத்தைகளை நோக்காமற் கடும்விதவை நோக்கிவிட்டாற் சொத்தனைத்தும் இருந்தும் சுகம்காணா விதவைகள் எத்தனைபேர் இப்புவியில் இன்பம் பெற்று வாழ்ந்திடுவர்.
9.
விதவைகள் நீங்கிப்பின் விலங்குகள் நீங்கிப்பின் கதவென்றும் தாளென்றும் கடுமின்னல் அவர்க்கின்றி உதவிட மக்களின் உயர்நிலை காத்திடச் சதமென்று இங்கெல்லாம் சலிப்பின்றி நான்வாழ்வேன்.
10. உயிர் மூச்சின் இறுதியாம் ஓரணு உள்ளவரை
பயிர்செய்யும் பெண்மையைப் பாழ்பட்டுப் போகாமற் செய்திங்கு நான்வாழ்வேன் செய்வதற் குதவிடும் உயிருள்ள ஆத்மாக்கள் எவரையும் மறவேன்நான்.

தொழில் - 10 உழைப்பு
1. கால்சோரக் கைசோர உடலெங்கும் ஒருசோர
கழைத்துமனம் சோரச்சோரக் காலம்போக்கி உலகத்துக் கோயிலெல்லாம் ஒருங்கே சுற்றி
உருப்படியாய் வாழ்ந்தவர்கள் யார்தான் இங்கு நிலையில்லா வாழ்க்கையின் பின்னைக் காலம் 1 நிம்மதியாய் வாழுதற்கு நிதமும் வேண்டும் அலகுள்ள இப்பணத்தைச் சேராமல் இங்கு
அழிகின்ற இவரைப்போல் மூடர் யார்தான்?
2. உண்மையில் நான் கூறுகின்றேன் கேளும் மக்காள்
ஊனவுடல் அழியும்வரை பணமே வேண்டும் எண்ணப்படி வாழுதற்கும் பணமே வேண்டும்
எழுச்சியுடன் வாழுதற்கும் பணமே வேண்டும் கண்ணனையோ கடவுளையோ காண மாட்டீர்
காசுபணம் சிறிதேனும் தரவும் மாட்டார் உண்மையுடன் உடல்வளைத்து பாடுபட்டு உழைத்து விடு
உலகத்தின் உயர்ச்சிக்கும் அஃதே துணை.
சலிப்பேயேதும் இவனுக்கில்லை
காற்றைக் கயிறாய் திரிக்கவில்லைக்
கடலைக் கரும்பாய் ஆக்கவில்லை ஊற்றை நிலையாய் மாற்றவில்லை
உடலை அணுவாய் மாற்றவில்லை ஆற்றைக் கடலாய் மாற்றவில்லை
அணுவை உயிராய் மாற்றவில்லைச் சோற்றைத் துணிவாய்ப் படைத்ததில்லை
துரும்பிலும் கடவுளைக் கண்டதில்லை.

Page 47
( 74 )
அணுவைப் பிழந்து சக்தியைப் பெற்றான்
4 அணுவின் சக்தியில் அழிவைப் பெற்றான் துணிவை மனதிற் பெற்று விட்டான்
துவைக்கும் ஆயுதம் பலதின் மூலம் கனிவைக் கடலில் எறிந்து விட்டான்
கடவுளின் பெயரிற் கலக்கம் விட்டான் தனிமையில் மனதிற் சஞ்சலம் கொள்வான்
சலிப்பே யேதும் இவனுக் கில்லை.
அன்று தொடங்கி இன்று வரையும்
ஆக்கம் ஊக்கம் பலதைக் கண்டான் இன்னும் பின்பு இதே முயற்சி
என்றும் இவர்க்கு ஓய்வே இல்லை கன்று பசியும் ஒன்றும் இல்லை
கனிவே யென்றும் மனதில் இல்லைத் தன்ரை யென்பான் உன்ரை யென்பான்
சலிப்பே யேதும் இவனுக் கில்லை.
கடமை கடமை என்று சாவான்
கற்பனை கண்டு காண முயல்வான் உடமை உடமை என்று சொல்வான்
உரியவர் நானோ நீயோ என்பான் மடமை மடமை மக்கள் வாழ்வில்
மலிந்து கிடக்குது என்று சொல்வான் தடக்குப் பட்டும் எழுந்து நிற்பான்
சலிப்பே யேதும் இவனுக் கில்லை.
மூச்சுடன் உழைத்திட வேண்டும்
1. கன்னியின் மனதிற் காதலைப் பெறலாம்
- காதலில் இன்பத் தேனினைப் பெறலாம் அன்னியன் கண்ணில் அறிவினைத் தரலாம்
அழிவுகள் இன்றி ஆண்மையைப் பெறலாம்

( 75 )
முன்னைய பின்னைய பேதங்கள் இன்றி
மூச்சுடன் என்றும் வாழப் போகலாம் தன்னையும் தமரையும் தங்கள் நாடையும்
தாங்கிட மூச்சுடன் உழைத்திட வேண்டும்.
2.
பித்தனாய்ப் பேயனாய்ப் பிதற்றியும் வாழலாம்
பெண்மையை வேண்டாப் பேயனாய் வாழலாம் கத்தலும் கதறலும் கண்களில் நீரும்
கக்கிடக் கக்கிடக் கருகியும் வாழலாம் குத்தலும் கிண்டலும் கொண்டிடக் கொன்றிடக்
கோழையாய் ஏழையாய்க் கொலைஞனாய் வாழலாம் இத்தனை கொண்டும் நாட்டுக்கும் நமக்கும்
என்னென்ன பயனை யாரிங்கு கண்டார்.
3. |
சோர்வினை விட்டுச் சோம்பலை நீக்கிச்
சோற்றினைக் காணும் வழியினைக் கண்டு பாரினில் மக்கள் பண்புடன் அன்புடன்
பலரும் வியக்கப் பண்புடன் வாழ்ந்து ஊரினில் ஊக்கம் ஊறிட உயர்ந்திட
உலகினில் அன்பை மையமாய்க் கொண்டு தர்மமும் கொண்டு தம்மையும் நாட்டையும்
தாங்கிட மூச்சுடன் உழைத்திட வேண்டும்.
உழைத்திடுங்கள்
1. கல்விதரும் ஏடொன்று கையிற் கொண்டு
நல்லவொரு எண்ணமொன்று மனதிற் கொண்டு புல்நுனிப் பனியன்ன வாழ்வினை விட்டு எல்லோரும் வாழ்ந்திட மாடாக உழையுங்கள்.
கைகால்கள் மட்டுமன்றிக் கருத்திலும் மனத்திலும் பொய்ச்சொற்கள் ஏதுமின்றிப் புகழ்வார்த்தை நிதம் கொண் ஏய்த்திடும் எண்ணங்கள் மனத்திலே ஏதுமின்றிப் பாடு பெய்யன்பை நிதம்வீசிப் பேணிவிட உழைத்திடுங்கள்.

Page 48
(76)
கல்லுமுள்ளுப் பாதைகண்டு கடிது மே கலங்காது நில் நில் என்றுமனம் நிதமிங்கு தடுக்காது சொல்வார்த்தை உள்ளத்திற் தூயதாய்க் கொடுவந்து பல்லோரும் வாழ்ந்துவிடப் பக்குவமாய் உழையுங்கள்.
சோர்வின்றி உள்ளத்திற் சொரசொரப்பு நீக்கிவிட்டுப் பார்வையிற் தண்பார்வை பாரெங்கும் நிதம்வீசப் பேர்வேண்டும் என வெண்ணிப் பிசகியே மாறாமல் ஊர் மக்கள் வாழ்வதற்கு உழைத்திடுங்கள் உழைத்திடுங்கள்
உண்மையாய் உழைத்திடுங்கள் உருவமாய் உழைத்திடுங்கள் திண்மையாய் உழைத்திடுங்கள் தீரனாய் உழைத்திடுங்கள் தண்மையாய் உழைத்திடுங்கள் தகமையாய் உழைத்திடுங்கள் எண்ணத்தில் உழைத்திடுங்கள் இதயத்தில் உழைத்திடுங்கள்
உழைப்பு
ஒருவர் இருவர் பலபே ரிங்கு
ஓடி யாடி உழைக்கின்றார் வருவார் போவார் வருத்தம் இல்லை
வகைவகை வேலைகள் எத்தனை எத்தனை கழைப்புச் சோர்வு கடினம் ஏதும்
கடிதும் அவர்கள் முகத்தில் இல்லை பிழைக்க வழிகள் எத்தனை எத்தனை
பிடித்தது எதையோ விரும்பிச் செய்வர்.
2,
காடுகள் வெட்டுவர் நாடுகள் ஆக்குவர்
கழனிகள் ஆக்குவர் கல்விகள் பேணுவர் மேடுகள் நீக்குவர் பள்ளங்கள் போக்குவர் - மேவிய தாவரம் பலதை நாட்டுவர் வீடுகள் கட்டுவர் வீதிகள் போடுவர்
(விறகுகள் வெட்டுவர் வீட்டினிற் போடுவர் ஓடுகள் ஆக்குவர் ஓலைகள் பின்னுவர்
ஓய்சல் ஒளிச்சல் எதுசரி இல்லை.

(77 )
ஆலைகள் கட்டுவர் ஆக்கங்கள் ஆக்குவர்
ஆக்கிய ஆக்கத்தை அயலினில் அனுப்புவர் மாலைகள் ஆக்குவர் மங்களம் பாடுவர்
மனிதர் மனத்தில் மணங்களைப் பரப்புவர் கள்ளுகள் இறக்குவர் கருப்பணி இறக்குவர்
காகிதம் ஆக்குவர் பேனைகள் ஆக்குவர் முள்ளுகள் கட்டுவர் வேலிகள் கட்டுவர்
முத்தம் கூட்டுவர் தெருக்கள் கூட்டுவர்.
கப்பல்
மரங்களை வெட்டினர் மாடாய் அங்கு கரங்களிற் தூக்கியே கடத்தினர் பின்பு சிரமங்கள் போக்கியே சீவினர் சீவினர் கருமையிற் செம்மையிற் பலதினைப் பெற்றனர்.
சட்டங்கள் வெட்டினர் துண்டுகள் வெட்டினர் திட்டங்கள் தீட்டினர் திறமையை ஊக்கினர் கட்டினர் அறைந்தனர் கலகங்கள் செய்தனர் ஓடினர் அலைந்தனர் உழைத்தனர் உழைத்தனர்.
நிமித்தினர் வளைத்தனர் நிலைகளை மாற்றினர் அமர்த்தினர் அழுத்தினர் ஆக்கினர் வெவ்வேறாய் தவிர்த்தனர் கெட்டதைத் தடுத்தனர் நீண்டதை நிவர்த்திகள் நீக்கினர் நிம்மதி பெற்றனர் -
பொருத்தினர் பலதைப் போக்கினர் பழையதைக் கருத்தினில் உதித்ததைக் கைகளிற் படைத்தனர் பொருத்தியே ஆக்கிக் கப்பலைப் படைத்தனர் பெருத்திட்ட கப்பலின் அழகினை வியந்தனர்.

Page 49
(78)
இறக்கினர் நீரில் இயக்கினர் இயந்திரம் பறக்குது என்றே பல்லோரும் வியந்தனர் சிறந்திட்ட தங்களின் உயிரது மூச்சால் உறங்கினர் மறந்தே உலகது நிலையை.
ஈழத் தமிழகத்தின் பொருள் வளம்
1. பரந்தனிற் கிடைக்கின்ற வைக்கலாம் பொருளதால்
வழமான காகிதச் சாலையொன்று செய்குவோம் பருத்தித்துறைப் பேதுருக் கடலதின் மீனினாற்
பாரெல்லாம் ரின்மீனை ஏற்றியேற்றி விற்குவோம் வல்லிபுரக் கோவிலின் வழமான மணலதால்
வாழ்வளிக்கும் கண்ணாடித் தொழிற்சாலை ஆக்குவோம் திருமலைக் கடலின் இயற்கைதந்த துறையதால்
திக்கெட்டும் பவனிவரும் கப்பல்களைக் கட்டுவோம் மட்டுநகர்த் துறையில் மண்டிவரும் நெல்லினை
மாவுலக மக்கட்கும் ஏற்றியேற்றி விற்குவோம் வன்னிவழ நாட்டின் வவுனியாப் பட்டினத்தில்
வழமான கல்விகற்கச் சாலையொன்று கட்டுவோம்.
2. இவையனைத்தும் கட்டுதற்கு வேண்டிவரும் பணத்தை
இங்குள்ளதமிழ்நாட்டின் பணம்படைத்த பெரியோர்கள் அவரவராம் வல்லமையால் அதிபெரிய கூட்டாக்கி
அகிலத்தின் வியப்பிற்கு ஆளாகிச் செய்குவோம் அவரொன்றாய்க் கூடிப்பின் இயந்திரத்தை இறக்குதற்கு
அரசாங்கம் அன்னியச் செலவாணி இல்லையென்று கைவிரித்துக் கூறிவிட்டாற் கடிது மே கலங்காமற்
கைநிறையப் பொருள்சேர்த்துக் கொண்டுவரமுடியாமல் இவைகளை என்செய்வோம் என்றுநிதம் மலைத்துநிற்கும்
இயந்திரப் பெருக்கங்கள் நிறையவுள்ள நாடதாம் அவ்விடத்தில் வாழுகின்ற நம் நாட்டின் தோழரின்
அன்பாலும் கொடையாலும் அவற்றினைத்தருவிப்போம்

வடக்கையும் கிழக்கையும் இணைப்போம்
முல்லைத்தீவு திருமலை இவ்விரண்டு ஊரிற்கும் செல்லுகின்ற கரையோரப் பாதையிலே மண்டியுள்ள நல்லநீர் மாரியிலே மாத்திரமே நல்கிவிட்டு அல்லவன்றிக் கோடையிலே உப்புநீர் ஆகிவிடும் தொல்லையன்றி நன்மையில்லா இவ்வாற்று மேலாகப் பாலங்கள் அமைத்துப் பாதையாய் ஆக்கியே செல்லுதற்கு வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு எல்லையில்லாப் பணம்வேண்டும் யாரினால் முடியுமது இலங்கையின் அரசாங்கம் இதற்குமா செலவிடும்?
சொல்லுகின்றேன் கேளுங்கள் துடிப்புள்ள இளைஞர்காள் கயிலையைத் தூக்கிய இராவணன் புத்திரரே குளத்திலே எஞ்சும்நீர் வான்பாய்ந்து போதல்போல் பாதைசெல்லும் நேர்க்கோட்டில் ஆற்றதின் கடற்பக்கம் கடலிலும் பார்க்க இரண்டடி உயரத்தில் | கல்லுடன் சீமெந்துக் கலவையாற் சுவர்கட்டி நல்லநீர் உள்ளபக்கம் வீதியின் நேர்கோட்டில் நல்லவொரு பாதையைச் சுவர்மட்ட உயரத்தில் கல்லினால் மட்டுமன்றித் தாரின்றி அமைத்தாலும்.
ஆற்றிலே நீர்பெருகி ஓடுகின்ற வேளையில் வீதியின் மேல்வந்து சுவர்மூலம் வழிந்தோடிக் கடற்பக்கம் விழுந்தோடிக் கடலினுட் சென்றுவிடும் சுவர்க்கட்டுக் கடலிலும் உயர்மட்டம் கொண்டதால் உவர்நீர் என்றுமே ஆற்றுடன் கலந்துவிடா ஆற்றுநீரை மறித்துக் குளம்கட்டி மக்கட்கு நீர்பாய்ச்சி வேளாண்மை செய்தற்கு உதவிடும் பேருதவி போன்றதாய் இருப்பது போலன்றி வடக்கையும் கிழக்கையும் இணைக்கவு உதவிடும்.

Page 50
( 30 )
மாரியிலே மழைமெத்தப் பெய்யுகின்ற வேளையில் மாத்திரமே இவ்வீதி மேலதின் ஊடாக நீர்பாய்ந்து சென்று மட்டமும் உயர்ந்திட்டால் ஓரிரண்டு தரமே போக்குவரத்துத் தடைப்படும் மற்றெந்தக் காலமும் அவ்வீதி உண்மையில் திறமான வீதியாய் இருப்பது மட்டுமன்றி மாரியிலே மட்டுமன்றிக் கோடையிலும் மக்கட்கு பருகுதற்கு நீரைப் பாங்குடனே கொடுப்பதன்றி ஊரிலுள்ள மக்கட்கு உய்வதற்கும் உதவிடுமே.
இவ்விரண்டு ஊரிற்கும் இடையிலே உள்ள ஆறுகள் மிகமிக அகலத்திற் குறைந்ததே குறுகிய நீளமும் கொண்டுமே உள்ளன உருப்படியில் ஐந்தும் இருக்குமென்றே நம்புகின்றேன் தீரமுடன் நீவிரெல்லாம் முன்வந்து உழைத்திடில் ஓர்வருட காலத்தில் அனைத்தையும் செப்பனிட்டு வடக்கையும் கிழக்கையும் ஒருங்காக இணைத்து வருங்காலம் என்றுமே தமிழினிற் பேதமின்றி வறண்டுவிட்ட இராவணன் புகழையும் நாட்டிடலாம்.

வாழ்வு - 11 வாழ்க்கை
பணமேதான் வாழ்க்கையின் உயிர் - அந்தப்
பணத்திற்கு வாழ்க்கையை விலைகூற வேண்டாம் மணமேதான் வாழ்க்கையின் கரு - அந்த
மணத்திற்கு மனத்தினை மாற்றிட வேண்டாம் குணமேதான் வாழ்க்கையின் மூலம் . அந்தக்
குணத்தினால் வாழ்க்கையை மாற்றிட வேண்டாம் உணவின்றி வாழ்வது கடினம் - ஆனால்
உணவேதான் வாழ்வென்று நினைப்பது மடமை கனவேதான் வாழ்க்கையின் திருப்பம் - அந்தக்
கனவினாற் கழுத்தையே அறுத்திடக் கூடா பிணமேதான் வாழ்க்கையின் முடிவு - அந்தப்
பிணத்தையே வலியவந் தழைப்பது மடமை மனமேதான் வாழ்க்கையின் உச்சி - அந்த
மனத்தினை மாற்றி மடிந்திட வேண்டாம் சினமேதான் வாழ்க்கையின் தாழ்வு - அந்தச்
சினத்தையே அழித்திட முயல்வது புத்தி இனமேதான் வாழ்வென்று மாய்வது மடமை - அது
இன்றையோ நாளையோ அழிவது சகசம் மனத்தினில் இவற்றினை நினைத்து - நித்தம்
மனத்தினில் இயற்கையை இறைஞ்சிநீர் வாழும்.
வாழ்வு பிறப்பு இறப்பு வாழ்வு தாழ்வு
பிரிவு துன்பம் சோகம் சோர்வு அறுப்பு அரிவு அலைவு உலைவு
ஆசை மோகம் வேகம் தாகம் கறுப்பு வெளுப்புக் கருமை செம்கை
களவு திருட்டுக் காமம் பாவம் மறுப்பு வெறுப்பு மனதிற் சஞ்சலம்
மனிதன் வாழ்வில் எத்தனை எத்தனை.

Page 51
(82)
அன்னை தந்தை அண்ணன் தம்பி
அக்காள் தங்கை அண்ணி அத்தான் மனைவி மக்கள் மாமன் மாமி
மச்சாள் மச்சான் பேரன் பேத்தி காணி பூமி வீடு வளவு
நகை நட்டு நண்பர் அன்பர் வீணில் இத்தனை விதம்வித உறவுகள்
வீழும் வாழ்வில் எத்தனை எத்தனை.
அணைப்பு அன்பு ஆசை வீசை
அச்சம் நாணம் பயிர்ப்பு மடமை இன்பம் துன்பம் காதல் தாகம்
இனிமை இன்மை கனிவு தணிவு நன்மை தீமை நீதி நியாயம்
நடப்பு நடிப்புச் செல்வம் வறுமை நாணிக் கோணி நயந்து வியந்து
நலியும் வாழ்வில் எத்தனை எத்தனை.
சோக வாழ்வு துயர வாழ்வு
சோம்பல் வாழ்வு சுறுதி வாழ்வு காக வாழ்வு கரும்பு வாழ்வு
காறும் வாழ்வு கண்ணீர் வாழ்வு ஆகும் எத்தனை அடக்கம் வாழ்வில்
அரிதாம் மனித வாழ்வு எத்தனை போகும் போக்கில் எத்தனை வாழ்வு
பொழுதும் இரவும் எத்தனை வாழ்வு.
மனதில் இன்பம் அடைய முடியுதா ?
உருட்டும் புரட்டும் திருட்டும் மலிந்த
உலகம் என்னும் போர்வையில் இங்கே குருட்டு மனிதர் வாழும் புவியிற்
குடிக்கும் கூழுக் கவதிப் படுவரை மருட்டி வெருட்டி மறித்துப் பறித்து
மக்கள் மனதிற் துயரை வளர்த்துத் திரட்டும் திருட்டுச் செல்வம் அனைத்தால்
மனதில் இன்பம் அடைய முடியுதா?

( 83 )
வெருட்டி வெருட்டிக் கிடைத்த பணத்தை
வேறு எவரும் அறியா விதமாய்ச் சுருட்டிச் சுருட்டி நிலத்திற் புதைத்துப்
பெருக்கிப் பெருக்கி மறைத்து வைக்கும் திருட்டுப் பணத்தாற் புவியில் மக்கள்
தினமும் தினமும் கொலையைப் போன்ற மருட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
மனதில் இன்பம் அடைய முடியுதா?
களவுகள் செய்து கயமைகள் புரிந்து
| கடத்தல் முதலிய கொடுமைகள் செய்து பிளவுகள் செய்து துயரினைக் கொடுத்துப்
பிரிப்பு அலுப்பு அரிப்புச் செய்து உளவுகள் செய்து உரிமை பறித்து
உலகில் எங்கும் ஒளித்து வாழ்ந்து அளவே இல்லா அச்சம் கொண்டு
மனதில் இன்பம் அடைய முடியுதா?
உலகமே உலகம்
1. நாறிக்கெட்டு நயங்கெட்டுப் போகுமிவ்
நங்கையரின் வாழ்வுதனை நல்கிவிட வேண்டுமென்று சீறிச் சினந்து சீற்றம் கொண்டு மேலெழுந்து
சிங்கம்போற் கற்சித்து சிறுத்தையாய் மேற்பாய்ந்து காறி யுமிழ்ந்து கருத்தமுதம் பலதந்து
கடவுளை வலம்வந்து கண்டவரை உடன்கூட்டி ஆறி அமர்ந்து அலசிப்பின் முடிவாக்கி
அஃதையே ஒளிப்பதற்கு ஆவலுடன் எழுவது போல்.
2. நூறுபேர் மத்தியிலே நுதல்சிறிய பெண்ணிற்குக்
கோடுசெய்யும் ஆடவரைக் கொண்டொழிக்க வேண்டு
மென்று கூறுகூறாய்ப் பிரித்துக் குலக்கொழுந்தை அழிக்காமற்
கும்பிடும் தெய்வம்போற் கொண்டுவர வேண்டுமென்று

Page 52
(84)
நூறு நூறு வார்த்தைகளை அடுக்கடுக்காய் அள்ளிப்பின்
பேசுவார் முழங்குவார் பெருஞ்சொற்கள் இறைத்
திடுவார் பேறு கொண்ட பெண்ணிற்குப் பெருமைதா என்றிடுவார்
பேதமின்றி அவரைநாம் பேணிவிட வேண்டுமென்பார்
வேதவாக்குப் போலயிவர் விண்ணிடியக் கதறிவிட்டுக்
காதலுக்கும் காமத்திற்கும் களவாகப் பெண்கள்வைத் காதலித்தோர் கற்புதனைக் களவாடிக் கருக்கொடுத்து (துக்
நடுத்தெருவின் மத்தியில் நாதியற்றுப் புலம்பவிட்டுக் காததூரம் பாராமற் கடுவழியும் பாராமற்
காதலனை நினைத்துக் கண்ணிறைத்துக் கதறச்செய்யும் காதலையும் சாதலையும் கன்னிகட் களிப்போர்கள்
பூதலத்தில் எங்கும் புதைந்துகொண்டு வாழுகிறார்.
சுடுகாடு 1. சொல்லென்றும் பொருளென்றும் கதையொன்று
மிங்கில்லைச் சோர்வில்லா என்நெஞ்சிற் துன்பமொன் றிங்கில்லை அல்லலென் றழிவென்றும் ஆபத்தொன் றிங்கில்லை
அன்பென்ற பண்பென்ற அடக்கங்கள் இங்கில்லை நல்லதாம் தீயதாம் நடுக்கங்கள் இங்கில்லை
நானேநான் நீயேதான் நப்பாசை இங்கில்லை கொல்லெண்ணம் கோளெண்ணம் குறியொன்றும் இங்கில் கொடுமையாம்இன்பத்தின் கொழுந்துமே இங்கில்லை (லை
2. எனதிடம் உனதிடம் என்றிடும் பேதமில்லை
என்சொத்து உன்சொத்து எனப்பலத் துன்பமில்லைப் மனமென்ற குணமென்ற மாறாட்டம் ஒன்றுமில்லை
மங்கைகள் மனுசிகள் மனவாட்டம் இங்கில்லை !

(85)
இனமுண்டோ பணமுண்டோ எனும் பேதம் இங்கில்லை
இராத்தூங்கல் பகற்தூங்கல் எனக்கூடப் பேதமில்லை தினம்தினம் மாறிடும் திருட்டுக்கள் இங்கில்லைத்
தின்பண்டம் பற்பல தின்பதற் கிங்கில்லை
3.
கொன்றோரும் வென்றோரும் குழைந்தோரும் நெளிந்தோ
கும்பிட்டு வாழ்ந்தோரும் குறிப்பிட இங்கில்லை [ரும் இன்றிங்கு ராஜாதான் எனக்கிங்கு குறைவில்லை
என்றெல்லாம் கூறிய இவருக்கு மிங்கேதான் அன்றாடம் வாழ்விற்கு அலைந்தலைந் தலுத்திட்ட
| அரைவயிறுப் பட்டினியாம் அவருக்கும் இங்கேதான் என்றென்றும் பேதமிலா எல்லோர்க்கும் ஒன்றாகி
இருந்திடும் சுடுகாடே என்றும் நீ வாழ்ந்திடுக.
வாழ்வர்
நல்லவர்கள் சிலபேர்கள் நஞ்சகர்கள் பலபேர்கள் உள்ளவர்கள் சிலபேர்கள் உள்ளமுள்ளோர் பலபேர்கள் வெல்பவர்கள் சிலபேர்கள் விழுந்தடிப்போர் பலபேர்கள் நல்லதொன்று சொல்லுமிந்த நானிலமும் வாழ்வரேதான் வாழ்வுடையோர் பலபேர்கள் வாழ்வில்லோர் சிலபேர்கள் வாழ்வுடையோர் பணமின்றி வலிமைவாழ்வு பெற்றிடுவர் தாழ்வுடையோர் சிலபேர்கள் தாழ்வில்லோர் பலபேர்கள் தாழ்வுடையோர்தம்மினத்தைத்தாழ்த்துவிட்டுவாழார்கள் இன்பமுள்ளோர் சிலபேர்கள் இன்பமில்லார் பலபேர்கள் இனியவர்கள் சிலபேர்கள் இல்லையென்போர் பலபேர்கள் பின்னடையார் சிலபேர்கள் பின்னடைவோர் பலபேர்கள் என்புமிந்த உலகினிலே எங்கும் நின்று வாழ்வரேதான் அன்புடையோர் பலபேர்கள் அவர்களிடம் பணமில்லை அன்னியர்கள் பலபேர்கள் அன்புடையோர் அவரேதான் கன்னியர் சிலபேர்கள் கற்பிழந்தோர் பலபேர்கள் துன்பமிகு வாழ்வுதனைச் சுகமென்று வாழ்வரிங்கு.

Page 53
மயங்கி விடாதீர்
மனதில் இன்பம் மருகிப் பெருகும்
மனிதத் தன்மை மனதில் இன்றி மனத்தி னாலும் மனிதரை வருத்தும்
மாக்கள் போன்ற வாழ்க்கை வாழ்ந்து குணத்தி லிழிந்த கொடுமையைக் கொண்டு
குடிகளை யழிக்கும் இழிவைக் கொண்ட தினம்தினம் மக்களை மாற்றி யமைக்கும்
சிதறும் பணத்தில் மயங்கி விடாதீர்.
குணத்தில் அன்பு பாசம் விட்டுக்
கொடுமைகள் கொண்ட வாழ்வைக் கெ 17 ண்டு பிணமே போகிலும் பணமே வேண்டிப்
பித்துப் பிடித்து அலைந்து திரியும் மணத்தைப் பெற்று மண்ணில் வாழும்
பாழும் வாழ்வை எமக்கு அளிக்கும் பணத்தின் மோகம் பிடித்துத் துரத்தும்
பண்பினைப் பெற்று மயங்கி விடாதீர்,
காதல் மோதல் சோகம் கொண்டு
காந்தம் அன்பு பேதம் கொண்டு சாதல் என்ற ஒன்றைப் பெற்றுச்
சரிந்து கீழே செல்ல வரினும் ஈய்தல் என்ற பெயரின் மூலம்
எவரும் உமக்குக் காட்டும் அந்தப் பேயின் தன்மைப் பணத்தைக் கண்டு
பிதற்றிப் பிதற்றி மயங்கி விடாதீர்.
தவக் கடமை செய்திடுவோம்
1. சாக்காடு சென்றாலும் தனியாகக் கிடந்தாலும்
பக்கத்திற் பணம்வைத்துப் பார்க்கவே ஆசையாம் எக்கேடு கெட்டு எமன்கையை அடைந்தாலும்
எதிரியைக் கூடவே இழுத்திட ஆசையாம்

( 87 )
தக்கார் ஒருவர் தனிப்பெருமை தான் பெற்றல்
முக்காலோ முழுதேனும் மற்றோர்கள் விரும்பாரே வாழ்க்கையென்றும் வரம்பென்றும் வழிவகுத்த மானிடர்
போக்கான வாழ்க்கையைப் புனைந்துவிட்டார் புவிமீது.
2. அன்பினை அளித்திட அச்சமே கொள்கிறார்
அன்பினைப் பெற்றிடல் நஞ்செனக் கொள்கிறார் துன்பினைக் கொடுத்திடத் துடுக்குடன் துணிகிறார்
துன்பினைத் தந்தாரைத் தூவென்று ஏசுறார் என்புமே எரிச்சலில் இனிமையைக் காண்கிறார்
இவையில்லா உலகொன்று இனியெங்கே தானுண்டு அன்புமே பண்புமே அரிதேனும் இல்லாட்டி
அழிவில்லா உலகினை யார்கண்டு சொல்வார்கள்.
3. சிந்தித்துச் செயலாற்றும் சிற்பியாய் மாறாமற்
பந்திக்கு முந்தும் பண்பதிற் சிறந்துள்ளோம் விந்தைமா உலகினில் விரித்தாடும் புயற்காற்றிற்
தூசியாய்த் துகளாகச் சுழன்றுநாம் அலைகின்றோம் சிந்துகின்ற து ளியாகச் சிதறிநாம் அழியாமல்
வந்தமிவ் வாழ்வினை வழமாக்கிப் பாய்ச்சுவோம் விந்தைமிகு புகழினை விண்மட்டும் பரப்பியே
தந்தைக்கு ஆற்றும் தவக்கடமை செய்திடுவோம்.
பி

Page 54
0025ts
2
குடும்பம் - 12
வேண்டும் பராசக்தி வாழக் காணிகள் வேண்டுமதில் வளமுள்ள மாஞ்சோலை வேண்டும் - பராசக்தி அழகுடன் கூடிய மாடிவீடும் அழகு நிறை சோலையும் வேண்டும் - பராசக்தி இழகிய தமிழனின் இனிமைபரப்பிட உளவவ் மாடியின் மேற்தளத்தில் அழகிய அச்சகம் வேண்டும் - பராசக்தி உளம் உடல் இரண்டும் உழைக்கும் பழமனப் பத்திரிகை வேண்டும் - பராசக்தி களவுகள் கட்டம் ஏதுமில்லாக் குலவிடும் பெண்டில் வேண்டும் - பராசக்தி பழமும் சுவையும் இணைந்ததுபோல் ஆழமாய் வாழ்ந்திட வேண்டும் பராசக்தி வாழ்க்கையின் கலையின் உயிராய்நான்கு வளங்கும் குழவிகள் வேண்டும் - பராசக்தி களங்கமில் கலைகள் பேணியுலகம் வழங்கியே வாழ்ந்திட வேண்டும் - பராசக்தி.
ஒரே 0
7
கந்த

੬. ਮ7 lOਮੀ ਸੰio .

Page 55
விரைவில் எ
+ ஈழத்துப் பாரதியார்
4 ஈழத்துப் பாரதியார்
4 ஈழத்துப் பாரதியார்
4 ஈழத்துப் பாரதியார்
> ஈழத்துப் பாரதியா!

நிர்பாருங்கள்
கவிதைகள் 2-ம் பாகம்
காப்பியத் தொகுதி
சிறுகதைத் தொகுதி
நாவல்
* கட்டுரைத் தொகுதி