கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையும் கொழும்புத் திட்டமும்

Page 1


Page 2
இங்கினியாகலை மின் நிலையம் - இதற்கு கொழும்புத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டது.

இலங்கையும் கொழும்புத் திட்டமும்
- *4 1/அ/or)
KAT-?:R **? PRINCPA1. , //UF. 8. 4. ,
HOTwIvry
4 4, € 8 ! A !
TAG A #
*-17 HY V!
CA-பு EARLALAI WEST
CHUNNAKAM
{ } 3 4 5
கொழும்புத்திட்டத்தின் 16 ஆம் ஆண்டுப் பூர்த்தியையொட்டி தகவல், ஒலிபரப்புப் பகுதியின் தகவல் பிரிவு இச்சிறு நூலைத்
" தயாரித்துள்ளது.

Page 3
1950, ஜனவரி மாதம் கொழும்பில் கூடிய பொதுநல அரசு நாடுகளின் ராஜதந்திரிகள்.
** *** 94 2474 # 2
4 4 }}
அட்டைப்படம் : இங்கினியாகலை மின்சார நிலையம். இதனை நிறுவுவதற்கு கொழும்புத்திட்ட உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

: A YA GA >
A'-ம்"
" W/14 :
-- EET
கொழும்பு, செனற்சபைக் கட்டடத்தில் நடைபெற்ற பொதுநலவரசு நாடுகளின் வெளி நாட்டு மந்திரிமார்களது சரித்திரபிரசித்திபெற்ற கூட்டம். இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த காலஞ் சென்ற அதி கெளரவ டி. எஸ். சேனாநாயக்க உரையாற்றுவதைப்
படத்திற் காணலாம்.
இலங்கையும் கொழும்புத் திட்டமும்
பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் எண்ணம் உதித்தது. அதன் பலனாக ஓர் உன்னத வேலைத்திட்டம் இலங்கையில் உருப்பெற்றது. தென் ஆசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் கோடிக்கணக் கான மக்களின் தேவைகளைப்பற்றி மனம் விட்டுப் பேச பொதுநல அரசு நாடுகளைச் சார்ந்த எழு தலைசிறந்த தலைவர்கள் 1950, ஜனவரி 9 ஆம் திகதி கொழும்பிலே சந்தித்தனர். யுத்தத்திற்குப் பின்னர் ஆசிய மண்ணிலே நடைபெற்ற முதலாவது சர்வதேச மகாநாடு அதுவேயாகும்.
தென் ஆசிய, தென்கிழக்காசிய பிராந்தியங்களில் கூட்டுறவு அடிப் படையில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குச் சூட்டப் பட்ட பெயர்தான் கொழும்புத்திட்டம். இத் திட்டம் இலங்கையில்

Page 4
முளைவிட்டு, பலவருடங்களாக சிட்னியிலும் லண்டனிலும் காப்பாற்றி வளர்க்கப்பட்டது.
இத்திட்டத்தின் இணைக்கர்த்தாக்கள் என்ற பெருமை அவுஸ்தி ரேலியாவின் சேர் பேர்சி ஸ்பென்டருக்கும், இலங்கையின் அப்போ தைய நிதி அமைச்சராக இருந்த கெளரவ ஜே. ஆர். ஜயவர்த்தனா வுக்குமே சாரும். கொழும்புத்திட்டம், அப்போது கொழும்பில் வந்து குழுமிய பொது நல அரசு நாடுகளின் அரசியல் ஞானிகளின் மேதா விலாசத்தினாலும் தூரதிருஷ்டியினாலும் உருப்பெற்ற ஒரு படைப்பு என்றும் சொல்லவேண்டும். அந்தக் காலத்தில் பொருளாதார, அரசியல் துறைகளில் சிந்தனைக்கும் செயலுக்கும் இருந்த எல்லை விரிந்ததுடன், இப் பிராந்தியத்தில் புதிதாகச் சுதந்திரம் பெற்ற அரசாங்கங்கள், சமூக ஸ்திரநிலைக்கு இன்றியமையாத பொருளாதார சீர்திருத்தத்தை வளர்க்கும் பிரச்னைகளுடன் போராடிக்கொண்டி ருந்தன.
பதினாறு வருட காலத்தில் கொழும்புத் திட்டம் சர்வதேச கூட்டுற வில் ஒரு துணிச்சல் மிக்க திட்டமாகத் திகழ்ந்துள்ளதுடன், அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் இருபத்திரண்டாக அதிகரித்துள்ளது. கணிசமான சாதனைகள் ஏற்பட்டு வந்துள்ளன. பிராந்திய மக்களி னதும் அரசுகளினதும் முயற்சிகளும், பிராந்தியத்துக்கு வெளியே உள்ள உறுப்பு நாடுகளின் தாராள உதவியும் ஆசியாவின் தோற்றத் திலேயே பெரும் மாறுதலை ஏற்படுத்தியுள்ளமையைக் காணக்கூடிய தாக இருக்கிறது. ஆயினும் அபிவிருத்தி வேலைகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. அதனால் இந்தப் பிராந்திய மக்களுக்கு சிறந்த பூரண வாழ்வுக்கான வசதிகளை அளிப்பது லட்சியமானால் முயற்சிகள் எதுவும் தளர்ந்துவிடக்கூடாது. '1950 இல் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பை நினைத்துப் பார்த் தால், பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ஒருவர் வர்ணித்துள்ளதைப் போன்று அது மாபுருஷர்களின் சந்திப்பேயாகும். " விறு விறுப்பும், நுண்ணறிவும் வாய்ந்த பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் ஏனெஸ்ற் பெவின், யுத்தத்திற்குப் பின்னர் ஆசியாவில் விடுதலை அடைந்து வந்த நாடுகளின் அபிலாட்சைகளை எடுத்துக்கூறிய நாவன்மைபடைத்த ஜவஹர்லால் நேரு, தூரதிருஷ்டி பெற்ற அவுஸ்திரேலிய அரசியல் ஞானி பேர்சி ஸ்பென்டர், மதிநுட்பம் வாய்ந்த கனேடிய சர்வ தேசீயவாதி லெஸ்ரர் பியர்சன், மதிப்பிற்குரிய இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க, பிற்காலத்தில் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக வந்த குலாம் முகமத்-இவர்கள் அனைவருமே எதிர் காலத்தை ஊடுருவி நோக்கவல்ல ஒப்பற்ற திறமை பெற்றிருந்தனர்'' என்கிறார் அந்த எழுத்தாளர்.

மூன்று பிரேரணைகள் இக்கூட்டத்தில் அப்போது இலங்கையின் நிதி அமைச்சராக இருந்த திரு. ஜே. ஆர். ஜயவர்த்தன தென்னாசியாவினதும் தென்கிழக்கு ஆசியாவினதும் பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய பல முறைகளைப்பற்றி யோசனை கூறினார். அவற்றுள் முக்கியமானவை :
1. பொதுநல அரசு நாடுகளில் அபிவிருத்திக்குறைவான பிர தேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும். ஒவ்வொரு நாடும், விவசாயமோ, கைத்தொழிலோ அதனதன் தேசீய அபி விருத்தித்துறையைக் கொண்டிருத்தல் வேண்டும். அபிவிருத்திக் குறைவான நாடுகள் வேண்டிய உபகரணங்களை ஸ்ரேலிங் பிராந் தியத்தில் பெறுதல் சிரமமாக இருப்பதனால், பொதுநல அரசைச் சார்ந்த இதர நாடுகள் என்ன மூலதனப் பொருட்களை வழங்க
முடியும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
2. அபிவிருத்தி குறைவாகவுள்ள நாடுகளின் உற்பத்திகளுக்கு இதர பொதுநல அரசு நாடுகள் உத்தரவாத விலையில் சந்தை வாய்ப்புத் தரவேண்டும்.
குடை துறையைக் கொண்டலா அதனதன் சேரு
இந்நோக்கினை எய்த அவர் மகாநாட்டுக்கு இந்த நகல் தீர்மானத் தைச் சமர்ப்பித்தார் :-
" தென்னாசிய, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள அபிவிருத்திக் குறைவான நாடுகள் பொது நல அரசினுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அந்நாடுகளில் அதிக , ஸ்திரமான வேலை வாய்ப்பும், உயர்ந்த வேலை வாய்ப்பும் கிட்டச் செய்தற்கு, அவற் றின் விவசாய, கைத்தொழில் பொருளாதாரங்களை விருத்திசெய் தல் அவசியமாகும்.
''எனவே, இம்மகாநாடு சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரி களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்கவும், அதனைக் கொண்டு இந்நாடுகளின் அபிவிருத்திக்குப் பத்து வருடத் திட்டத்தைத் தயா ரிக்கவும், தகவல் திரட்டவும் ஒப்புக்கொண்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற பொதுநல அரசின் இதர நாடுகள் பணமாகவோ, உத்தரவாத விலைகளாகவோ, தொழில் நுட்பம், யந்திர சாதனம் போன்ற வகையிலோ உதவி வழங்குவதைப்பற்றிப் பரிசீலனை
செய்யலாம்.
'' சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் நிபுணர் குழு ஒன்று திட்டத்தைப் பரிசீலனை செய்து, இதனை நிறைவேற்ற பொதுநல் அரசு நாடுகள் அளிக்கக்கூடிய உதவிபற்றி சிபார்சுகள் செய்யும் ''.

Page 5
அவுஸ்திரேலிய இலங்கை பிரேரணை
சேர் பேர்சி ஸ்பென்டர் மூலம் அவுஸ்திரேலிய தூதுகோஷ்டி இதே வகையான சில பிரேரணைகளைக் கொண்டு வந்தது. இலங்கையினதும் அவுஸ்திரேலியாவினதும் பிரேரணைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, நியூ சீலந்து நாட்டின் தூதுகோஷ்டியுடன் கலந்தாலோசித்து ஒரு கூட்டுச் சிபார்சாகச் செய்யப்பட்டது. சில திருத்தங்களுடன் இச் சிபார்சுகள் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களுக்கு அனுப்புதற்கு ஏற்றுக்கொள்ளப் பட்டது. பொது நல அரசுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கலந்தா லோசனைக் குழு ஒன்றை நிறுவுதலும் அப்பிரேரணைகளுள் ஒன்று. அமைச்சர் ஸ்திதியில் இக்குழு அமைவதுடன் கூட்டுறவு அடிப்படை யில் பொருளாதார அபிவிருத்திப் பிரேரணைகளை நிறைவேற்றும் வழிவகைகளையும் ஆராயும்.
சிட்னி மகாநாடு கொழும்புத் திட்டக் கருத்தை, கலந்துகொண்ட அரசாங்கங்கள் அங்கீ கரித்தன. அத்துடன், அவுஸ்திரேலியாவின் அழைப்பின் பேரில் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் 1950, மே மாதம் சிட்னி யில் நடைபெற்றது.
இரு முடிவுகளை வகுத்ததன் மூலம் அக்குழு திட்டத்துக்குச் செயற் படக்கூடிய ஒரு தோற்றத்தை அளித்தது. இம்முடி.வுகள் பின்னர் அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன :-
1. ஆறு வருட அபிவிருத்தித் திட்டம்
இப்பிராந்தியத்தைச் சார்ந்த பங்குபற்றும் ஒவ்வொரு நாடும் தன் பொருளாதார சூழ்நிலையைப் பற்றியும் திட்டங்களைப்பற்றியும் யதார்த்தமான, விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்தல் வேண் டும். இப் பிராந்தியத்தின் தேவைகளையும் வளங்களையும், திட்டங் களை நிறைவேற்றுதற்கு வெளியாரிடமிருந்து வேண்டியிருக்கும் உதவியையும் பரவலாக மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும். அபிருத்திக்கான காலம் அதிகம் நீண்டதாகவும் இன்றி, அதிகம் குறுகியதாகவும் இன்றி இருத்தல் வேண்டும். இந்தக் காலஎல்லை 1951 ஜூலை மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஆறு வருடங்களாக இருத்தல் வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இக்கால் எல்லை யினுள் அபிவிருத்திக் குறைவு பிரச்னை தீர்க்கப்படும் - என எதிர்பார்க்கப்படவில்லை. வறுமையின் கொடிய பிடியைத் தகர்ப் பதற்கும் மேலும் அபிவிருத்தி எற்படுதற்கு ஒரு ஸ்திரமான அடிப்படையை அமைக்கவுமே எதிர்பார்க்கப்பட்டது.

2. தொழில்நுட்ப உதவித் திட்டம் எந்த அபிவிருத்தித் திட்டமும் செயற்படுத்தப்படுதற்கு முன்னர் முகாரி, தேர்ச்சிவாய்ந்த வினைஞர், தொழில்நுட்ப வல்லுநர், விஞ் ) ஞானிகள் போன்ற பயிற்சி பெற்ற நபர்கள் இருக்க வேண்டிய தன் அவசியத்தை குழு உணர்ந்தது. இன்றேல், திட்டம் கடுதாசி யுடனேயே தங்கிவிடும். ஆசியாவில் பயிற்சிபெற்ற நபர்கள் அதிக மாக இருக்கவில்லை. எனவே அத்தகையோரைப் பெறுதற்கு ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. ஐக்கிய நாடுகள் தாபனத் தினதும் அதன் விசேஷ நிறுவனங்களினதும் உதவித் திட்டத் துக்கு அனுசரணையாக தொழில்நுட்ப உதவித் திட்டம் ஒன்றை உருவாக்குவதெனவும் குழு முடிவு செய்தது.
இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் திரு. ஜே. ஆர். ஜயவர்த் தன சிட்னியில் நடந்த மகாநாட்டில் நிகழ்த்திய உரையின் இறுதி யில் சொன்னார் : “' கொழும்பில் நாம் கண்ட முன்னேற்றத்தின் அடுத்தபடிக்கு இம்மகாநாடு எங்களை இட்டுச் செல்கிறது. பரஸ்பர அடிப்படையிலேயே உதவி அளிக்கப்படும் எனவும், கூட்டுறவாக நடைபெறுமே தவிர போட்டியில் நடைபெறாது எனவும், கேட்கப் பட்டால் உதவி கிடைக்குமே தவிர, விரும்பாத நாட்டுக்குப் பலி வந்தமாக உதவி திணிக்கப்படாது எனவும் அங்கே நாங்கள் தெளிவு படுத்தினோம். இக்கோட்பாடுகளை மீண்டும் இங்கு நான் வலியுறுத்துகையில், உதவி கோரிப் பெறும் நாடுகளின் சுதந்திரத் திலோ உள் விவகாரங்களிலோ எவ்வித தலையீடும் ஏற்படும் என்ற . பிரச்னைக்கே இடமில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்பு கிறேன். பொதுநலவரசுடன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளதுடன், இன்று எம்மிடையே ஏற்பட் டுள்ள கருத்து யாதெனில், வெவ்வேறு தேசீய இனங்களைச்சார்ந்த ஓர் உலகமேயாகும். ஒவ்வொரு நாடும் தன் சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொண்டு, தன் தனித்தன்மையையும் விருத்திசெய்து கொண்டு, கூட்டுத்தன்மையும் ஒருமைப்பாடும் வாய்ந்த மானிட சமா ஜத்தை உருவாக்க அதன் காலச்சாரத்தையும் வழங்கும். எனவே, சுதந்திர, ஜனநாயக மக்களான நாம் எவர் மீதும் குரோதமின்றி, வலது பக்கமும் பாராது இடது பக்கமும் பாராது, எங்களின் இதய விருப்பப்படி உலகினை உருவாக்க நேராகவே வீறு நடைபோட்டுச் செல்வோமாக ''.
"தையும் எம் குரே". இதய
லண்டன் மகாநாடு 1950 செப்ரெம்பர் மாதத்தில் லண்டனில் மூன்றாவது மகாநாடு ஒன்று நடைபெற்றது. அவ்வேளையில், சிட்னி மகாநாட்டின் சிபார்சுகள் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களினால் செயற்படுத்தப்பட்டன.

Page 6
காலஞ் சென்ற அதி கெளரவ ஹியூ கேய்ட்ஸ்கல் தலைமையில் 1950, செப்டெம்பர் மாதம் லண்டனில் நடைபெற்ற ஆலோசனைக் கமிட்டிக் கூட்டம். முன்வரிசையின் வலது கோடியில் இரண்டாவதாக இருப்பவர் அதுகாலை இலங்கையின் நிதி அமைச்சராகக் கடமையாற்றிய கெளரவ ஜே. ஆர். ஜயவர்தனா.
பிரிட்டிஷ் தூதுகோஷ்டியின் தலைவரான அதி. கெளரவ ஹியூ கெயிட்ஸ்கல் மகாநாட்டின் தலைவர் என்ற முறையில் பின்னர் பத் திரிகைக்கு விடுத்த அறிக்கை ஒன்றில் சொன்னார் :-
இந்த எண்ணத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு எடுத்துக் கொண்ட இரு அமைச்சர்களைப்பற்றி நான் குறிப்பிட வேண்டும். இலங்கையின் நிதி அமைச்சர் திரு. ஜயவர்த்தனாவும், அவுஸ்தி ரேலியாவின் வெளிநாட்டு அமைச்சர் திரு. ஸ்பென்டருமே அவ் விருவர்.
லண்டன் மகாநாட்டில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை:-
1. தொழில் நுட்ப ஒத்துழைப்பு மன்றத்தின் நகல் அமைப்பு விதிகளை அரசாங்கங்கள் அங்கீகரிக்க வேண்டுமெனச் சிபார்சு செய் தல் அங்கீகரித்து அனுவதிக்கப்பட்டது.

2. தேவைகள், கிடைக்கக்கூடிய வளங்கள், அபிவிருத்தித் திட் டங்கள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை நிறைவேற்றப் பட்டதுடன், இவ்வறிக்கையை " தென்னாசிய, தென்கிழக்காசியா வின் கூட்டுறவுப் பொருளாதார அபிவிருத்திக்கான கொழும்புத் திட்டம் " என அழைப்பதெனவும் ஏகமனதாக முடிவு செய்யப் பட்டது. இவ்வறிக்கையை இலங்கையின் ஜனப்பிரதிநிதிகள் சபை யில் 1950, நவம்பர் மாதத்தில் திரு. ஜே. ஆர். ஜயவர்த்தன சமர்ப்பித்தார்.
இவ்வாறு கொழும்பிலே கருவுற்று, அவுஸ்திரேலியாவிலே வளர்ச்சி பெற்று, லண்டனிலே பிறந்த எண்ணம் ஒன்றுக்குக் "' கொழும்புத் திட்டம் ”' என நாமகரணஞ் சூட்டப்பட்டது.
1951 பெப்ரவரியில் நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் கொழும்பிலேயே இடம்பெற்றது.
திட்டத்தின் வளர்ச்சி,
ஒரு வருடத்திற்குப் பின்னர் (1952) அதி. கெளரவ. டி. எஸ். சேனாநாயக்க கொழும்புத் திட்டத்தின் வளர்ச்சியைப் பற்றி சுருங்கக் கூறினார். அவர் பேசியதாவது ; " இப்போது ஒவ்வொரு நாட்டிலும் தெரிந்த செய்தியாகிவிட்ட கொழும்புத் திட்டம், உலக வரலாற்றி லேயே முன் ஒருபோதும் இடம்பெற்றிராத ஒரு துணிகரமான கருத்து மிக்க முயற்சியாகும். உலகின் இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க் கைத் தரம் மிகவும் குறைவானது. இந்தக் குறைவான வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவதற்கு வேண்டிய செயல் விபரங்களைக் கொண் டதே இத்திட்டமாகும். புதிய தென்னாசியா, தென்கிழக்காசியா ஒன்றை உருவாக்கவே இத்திட்டம் எத்தனிக்கிறது. இம்முயற்சியின் வெற்றியிலேயே பெரும்பாலும், உலக நாகரீகம் எவ்வாறு கருத் தெடுக்கிறது என்பது தங்கியுள்ளது. இத்திட்டத்தினால் நன்மை பெறும் நாடுகளின் முயற்சிகள், முனைவுகளில் மாத்திரமன்றி, கூடுத லான செல்வம் பெற்றுள்ள நாடுகளின் வழிகாட்டுதல், உதவி போன் றவற்றிலும் இதன் வெற்றி தங்கியுள்ளது. எனவே இத்திட்டம் முன் ஒருபோதுமே முயலப்படாத மனித ஒத்துழைப்பில் ஒரு பரிசோதனை யாகும். பொது நல அரசு நாடுகளிடையிலும், அமெரிக்காவிலும் இத்திட்டம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை இதன் வெற்றிக்கு ஓர் உத்தரவாதம். ''

Page 7
கொழும்புத் திட்டப் பொருட்காட்சி அதேவருடத்தில், கொழும்புத் திட்டத்தில் பங்குபற்றும் நாடுகள் கலந்துகொண்டு தங்கள் வளங்கள், உற்பத்திகள், கலாச்சாரம் ஆகிய வற்றை எடுத்துக்காட்டுதற்காக கொழும்பில் நடத்தப்பட்ட பொருட் காட்சியும் வெற்றிகரமாக அமைந்தது.
கனவு நனவாகியது. கொழும்புத் திட்டம் ஆரம்பமாகிப் பத்து வருடங்களுக்குப் பின்னர் விடுத்த ஒரு விசேஷ செய்தியில் சேர் பேர்சி ஸ்பென்டர் கூறுவதா வது : " இத்திட்டத்தின் சாதனைகள் தொல்லைமிக்க உலகில் கலங்கரை விளக்குகளாகத் திகழ்கின்றன. மனிதரை மனிதர் புரிந்து கொள்வ தனாலும், உதவி செய்யும் ஆவலினாலும் என்ன எல்லாம் சாதிக்கப் படலாம் என்பதை அவை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அநே கம் செய்தாயிற்று. இன்னும் எத்தனையோ செய்யப்படவேண்டியிருக் கிறது. இது நீண்டகாலத்துக்குத் தொடர்ந்து நடைபெறும் என்பதே எனது மனப்பூர்வமான நம்பிக்கை. கொழும்புத் திட்டமே ஒரு பரி சோதனை, மனித நல்லெண்ணம், நல்விளக்கம் சம்பந்தப்பட்ட வியத் தகு, உள்ளம் குளிரவைக்கும் பரிசோதனையாகும்.
என்னைப் பொறுத்த மட்டில் இத்திட்டம் நனவாகிய கனவு. இத னுடன் எனக்குச் சம்பந்தப்படக் கிடைத்தது உண்மையில் எனது அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். " ,
இதே தருணத்தில் திரு. ஜே. ஆர். ஜயவர்த்தன கூறியதாவது : " இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு விஜயஞ் செய்யும் எவரும் பத்து வருட தன்னலமற்ற உழைப்பினதும் தாராள கொடையினதும் பலன்களைக் காணலாம். அதிகரித்து வரும் ஜனத்தொகைக்கேற்ப பொருளாதார நலன்கள் பெருகாதபோதிலும், தினசரி பசியிலும் கஷ்டத்திலும் அவலப்படும் கோடிக்கணக்கான மக்களுக்குக் கொழும் புத் திட்டம் நன்மை பயக்காமல் இல்லை.''
கொழும்புத் திட்டம் அதன் லட்சியங்களை எய்துவதில் சாதித்த வெற்றிகளை உலக அரசியல் ஞானிகள் புகழ்வது மாத்திரமன்றி, அதன் 22 உறுப்பினர்களிடையே தோற்றுவிக்கப்பட்டுள்ள பரஸ்பர. நல்விளக்கத்தையும் பாராட்டுகிறார்கள். ஒருகாலத்தில் பொதுநல அர சின் கருத்தாக இருந்தது இப்போது சர்வதேச ஒத்துழைப்பு முயற்சியாக விரிவு பெற்றுள்ளது. உறுப்பு நாடுகளாவன: ஆப்கானிஸ்தான், அவுஸ் திரேலியா, பூட்டான், பிரிட்டன், பர்மா, கம்போடியா, கனடா, இலங் கை, இந்தியா, இந்தோனேஷியா, யப்பான், கொரியா குடியரசு, லாவோஸ், மலேசியா, மாலைதீவுகள், நேப்பாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அமெரிக்கா, வியட்னாம்.
10

பிரதேசவாரியான பயிற்சி பிரதேசத்தினுள்ளே, குறிப்பாக தொழில்நுட்ப தரத்தில் அல்லது அதற்கு நடுக்கூற்றில் பயிற்சியின் அவசியத்தைப்பற்றி கொழும்புத் திட்டம் ஆரம்பித்தபோதே வலியுறுத்தப்பட்டது. பயிற்சி வசதிகளைப் பயன்படுத்தல், பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே பயிற்சியாளர் களைப் பரஸ்பரம் பரிமாறுதல், போன்றவை இப்பிராந்தியத்தில் ஆட் சக்தி திட்டமிடுதலுக்கு முக்கிய அம்சமாக உள்ளன.
தென்னாசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அரசாங்கங்களும், மக்களுமே அபிவிருத்திக்கான முக்கிய பொறுப்பை வகித்தல் கொ ழும்புத் திட்டத்தின் சாரமாகும். அவர்களது பொருளாதார வளர்ச் சிக்கு வேண்டிய வளங்களில் பெரும்பாகத்தை அவர்களே உருவாக்கு கின்றனர். இப்பிராந்திய நாடுகளின் அபிவிருத்திச் செலவு படிப் படியாக அதிகரித்துள்ளது. பிராந்தியத்துக்குப் புறத்தே உள்ள அங்க நாடுகளிடமிருந்து கிடைத்த உதவி (15 வருடங்களிலும் 148 கோடி டொலர்) இப்பிராந்தியத்தினுள் கிடைக்கக்கூடிய வளங்களுக்குத் துணையாக நிற்பதில் பெரும் பங்குவகிக்கின்றன. அத்துடன், அபி விருத்தி நாடுகளில் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க முக்கிய பங்கும் வகிக்கிறது.
திட்டத்திற்கான கால எல்லை
இத்திட்டம் 1950 இல் ஆரம்பிக்கப்பட்டபோது, ஆறு வருடங்களுக் கென, அதாவது 1957 ஜூன் முடிவுவரைக்கும் என்றே வகுக்கப் பட்டது. ஆலோசனைக் குழு 1955 இல் நடைபெற்ற கூட்டத்தில் திட்டத்தின் ஆயுட்காலத்தை 1961 ஜூன் வரை நீடிப்பதெனத் தீர் மானித்தது. இக்கால எல்லைக்குப் பின்னரும் அதன் ஆயுளை நீடிப்பதைப்பற்றி 1959 நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனைக்குழு பரிசீலனை செய்து, திட்டத்தின் காலத்தை 1966 வரை நீடித்தது. 1964 ஆம் ஆண்டில் நடைபெற்ற குழுக்கூட்டத்தில் இது பரிசீல னைக்கு எடுக்கப்பட்டு, திட்டத்தை 1971 ஆம் ஆண்டுவரை நீடிப்ப தென முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பரஸ்பர உதவி
கடந்த 15 வருடகாலத்திலும் இப்பிராந்தியம் கணிசமான நன்மை அடைந்துள்ளது. இந்த நன்மையில் இலங்கைக்கும் ஓரளவு பங் குண்டு. இப்பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் உதவி பெறு வனவாகவும், உதவி அளிப்பனவாகவும் இருப்பது இத்திட்டத்தின் மகிழ்ச்சிக்குரிய அம்சமாக இருக்கிறது. இத்தகைய பரஸ்பர் உதவி
11

Page 8
வழங்கும் முயற்சியில் இலங்கை தன்னால் உதவி அளிக்கக்கூடிய துறைகளில் தனது பங்கைச் செலுத்தியுள்ளது. உதாரணமாக, உறுப்பு நாடுகளின் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கியதைக் குறிப்பிட லாம். கூட்டுறவு, காசநோய் ஒழிப்பு தாதிப்பயிற்சி, மின்சார பொறி யியல் போன்ற துறைகளில் இலங்கை 78 பயிற்சி வாய்ப்புக்களை பர்மா, இந்தோனீஷியா, மலேசியா, நேப்பாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லந்து, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு வழங்கி யுள்ளது. இலங்கை இரு நிபுணர்களையும் கொடுத்துள்ளது. மாலை தீவில் உள்ள ஹூலுல்லே தீவில் விமான ஓட்டப்பாதையை அமைப் பதற்கு நிபுணர்களைக் கொடுத்து உதவியமை இலங்கை வெகு அண்மையில் வழங்கிய உதவியாகும்.
வெளிநாட்டு உதவி
கொழும்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இலங்கை பல துறைகளிலும் 524 நிபுணர்களைப் பெற்றுள்ளது. முக்கியமாக அவர் கள் விவசாயம், பொறியியல் கைத்தொழில், மின்சார அபிவிருத்தி, செளக்கியம், கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள். இதுவரை யில் சுமார் 2,150 பேர் கொழும்புத்திட்டத் தொழில்நுட்ப ஒத்து ழைப்பின் கீழ் பல்வேறு துறைகளிலும் பயிற்சி பெறுவதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இவர்களில் 347 பேர் உணவு, விவ சாயம், வனஇயல் ஆகிய வற்றிலும், 312 பேர் வைத்தியம், சௌக் கியம் ஆகியவற்றிலும், 217 பேர் கைத்தொழில், வர்த்தகத்திலும், 194 பேர் பொறியியலிலும், 240 பேர் கல்வியிலும், 308 பேர் நிர்வாகத்திலும், 171 பேர் போக்கு வரத்துத் தொடர்பிலும், 71 பேர் சமூக சேவைகளிலும், ஏனையோர் இதர துறைகளிலும் பயிற்சி பெறுதற்காக வெளிநாடுகள் சென்றுள்ளனர்.
நன்கொடை முதல், கடன் முதல், உபகரண நன்கொடைகள், இலங்கையர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் நுட்பப்பயிற்சியளிப் பதற்கான வசதிகளையளித்தல், நடவடிக்கைகளின் பல்வேறு துறை களில் நிபுணர்களின் தொழில்நுட்ப உதவிபோன்ற பலப்பல வெளி நாட்டு உதவிகள் இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றன. கொழும்புத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளைப் பெருமள வில் அளித்துள்ள நாடுகள், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கன டா, இந்தியா, நியூசீலந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியன. அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஏற்பாடுகளின்மூலம் கொழும்புத்திட்டத்தின் கீழான உதவி கிடைக்கக்கூடியதாக இருக்கி றது. உதவிக்கான பேச்சுவர்த்தைகள், நேரடியாகச் சம்பந்தப்பட்ட
12

நாடுகளால், அதாவது வசதிகோரும் நாட்டுக்கும் வசதிகோரப்படும் நாட்டுக்கும் இடையே சிநேகபூர்வமான சூழ்நிலையில் நடாத்தப்படு கின்றன. பிராந்தியத்தின் சுபீட்சத்தை விருத்தி செய்வதையே தமது பொதுவான குறிக்கோளாகக் கொண்டுள்ள அங்கத்தவர்கள் மத்தியில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின்போது இதேவகையான சிநேகபாவமும் உதவிசெய்யும் மனப்பான்மையும் செறிந்து காணப்படுகின்றன.
அண்மை வருடங்களின்போது இலங்கைக்குக் கிடைத்துள்ள கொழும்புத்திட்ட உதவியின் சில அம்சங்கள் வருமாறு :-
அவுஸ்திரேலியா
1965 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ந் திகதிவரையுள்ள காலத் தில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு அளித்த நன்கொடைகளின் மொத்தத்தொகை 92 லட்சத்து 70 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் களாகும். இலங்கையில் மேற்கொள்ளப்படும் 16 பொருளாதார அபிவிருத்தித்திட்டங்கள், 38 தொழில்நுட்ப உதவித்திட்டங்கள் ஆகிய வற்றின் செலவும் இதில் அடங்கும். இலங்கைக்கு அளிக்கப்பட்ட மூலதன உதவியில் வெள்ளத்தடுப்புக்கு உபயோகிப்பதற்கான மோட் டார் ட்றக்குகள், இயந்திரக் கலப்பைகள், மற்றும் இவை தொடர் பான உபகரணங்களும் பண்டைய நீர்ப்பாசனக் குளங்களைப் புனருத் தாரணஞ் செய்வதற்கான நீர்ப்பாசன உபகரணங்களும் லக்சபான மின் சாரத்திட்டத்துக்கான மின்செலுத்திகள், வானொலி உபகரணங்கள் ஆகியனவும் அதி உயர்ந்த அதிர்வெண் இணைப்பொன்றுக்கான வானொலி உபகரணங்களும் அடங்கும். 66 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களுக்கதிகமான பெறுமதிவாய்ந்த கோதுமைமா நன்கொ டைகள் பலவும் இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளன. உள்ளூரில் ஏற்படும் உணவுத்தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்வதற்கு இந்த நன் கொடைகள் துணைபுரிந்துள்ளதுடன் உள்ளூர்ச் சந்தைகளில் இவற் றை விற்பனை செய்வதனால் கிடைக்கும் வருவாயையும் பெரிய அபி விருத்தித்திட்டங்களின் பேரில் செலவிடப்பட்டுள்ளது. பேராதனை யிலுள்ள அரிசி ஆராய்ச்சித்தாபனம், கயரோக சிகிச்சா நிலையங்களை நிறுவுதலும் அவற்றுக்கான உபகரண வசதிகளையளித்தலும், உடல் நலவியல் நிலையமொன்று, நீர்ப்பாசனக் குளங்களைப் புனருத்தார ணஞ்செய்தல் ஆகியன இவற்றுள் அடங்கும். ஒரு கப்பல் நிறைந்த புகையிரதப்பாதை சிலிப்பர் கட்டைகளையும் அவுஸ்திரேலியா வழங் கிற்று.
13

Page 9
இலங்கையில் அவுஸ்திரேலியா மேற்கொண்ட உபகரணத்திட்டங் களில், தொழில்நுட்பக் கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான உபகரணங் களையும் பிரசுரங்களையும் வழங்குதல், வைத்திய, மருத்துவமனை உபகரணங்களை வழங்குதல், பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக் குமான மேற்கோளுக்குதவும் அவுஸ்திரேலிய நூல்களை வழங்குதல், கரும்பு அறுவடை செய்யும் இயந்திரங்கள், மரத்தை அறுத்துப் பாதுகாக்கும் உபகரணங்கள் ஆகியவை உட்பட்ட விவசாய உபகரணங் களை வழங்குதல், செளக்கிய அமைச்சின் இளம்பிள்ளைவாதத்தடை இயக்கத்துக்குத் தேவையான இரும்புச் சுவாசப்பைகள், மூச்சுக் கருவிகள் ஆகியவற்றை வழங்குதல் ஆகியன அடங்கும்.
களுத்துறையிலுள்ள உடல் நலவியல் நிலையம். இதற்கு அவுஸ்திரேலிய உதவி வழங்கப்பட்டது.
அவுஸ்திரேலியா இதுகாலவரை, 331 இலங்கையர் பல்வேறு கல்வித்துறைகளில் பயிற்சிபெறுவதற்கான வசதிகளையும் 479 பேர்கள் தபால்மூலம் பயிற்சிபெறுவதற்கான வசதிகளையும் மற்றும் 73 நிபுணர்கள், ஆலோசகர்கள் ஆகியோரையும் இலங்கைக்கு அளித் திருக்கிறது.
14

உபகரணங்களாகவும் பொருட்களாகவும் அவுஸ்திரேலியா அளித்த சில நன்கொடைகளின் விபரம் வருமாறு :-
பெறுமதி, ரூபாக்களில்
விவரணம்
(நீர்ப்பாசன) குளங்களின் புனருத்தாரணத்துக்கான உப
கரணங்கள் உணவு உற்பத்தித்திட்டத்துக்கான இயந்திரக்கலப்பைகளும் (190) இவை சம்பந்தமான உபகரணங்களும், மோட்டார் ட்றக்குகள் (25), பாவனைக்குகந்த மோட்டார் வான்கள் (12), வேலைக்கள உபகரணங்கள்
* * * *
19,11,434
58, 54,717 2,46,342
லக்சபா
கான உபகரணங்கள்
3,74,113
53,695
மரவேலை, உலோகவேலைகளுக்கான ஆயுதங்களடங்கிய 150
தொகுதிகள் மின்உலை, காற்றிலுள்ள ஈரலிப்பை உலர்த்தும் கருவி, ரன்னர்
ஆலை, றோட்டரித்திரை முதலியன 750 சிறு அலுமாரிகள், 20 உணவு கொண்டு செல்லும் தள்ளு வண்டிகள், 1 எக்ஸ்-ரே கூறும் துணைக்கருவிகளும், 20 பார்வைப் பெட்டிகள் .... யூனிவர்சல் மரவேலை இயந்திரம், இணைப்புக்கருவிகளுடன் ... மரம் அரிந்து பதப்படுத்தும் உபகரணங்கள் ... இதர நன்கொடைகள் ... புகையிரதப்பாதை சிலிப்பர்கட்டைகள்
வானொலி இணைப்பு உபகரணங்கள் அ.உ.அ. 3 கரும்பு வெட்டும் இயந்திரங்கள்.
2,06,633 2,45,937
53,439 4,52,155 9,06,100 3,05,792 1,86,550
அவுஸ்திரேலிய ஈடிணையான நிதிகள் வழங்கப்பட்டுள்ள திட்டங்களிற் சில வருமாறு:-
பங்கீடு திட்டம்
ரூபா மார்புநோய்ச் சிகிச்சா நிலையங்களை நிறுவுதல்
79,34,690 பதவியா, பாவற்குளம், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திட்டங்
களின் அபிவிருத்தி
1,16,95,079 முறப்போல எல அபிவிருத்தித்திட்டம்
3,50,000 மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையமொன்றினை நிறுவுதல்
17,20,000 உடல் நலவியல் நிலையம் ...
20,40,000 கயரோகத்தடை மருந்துகளை வாங்குதல்
13,49,021 வெள்ள விவாரண வேலைகள்
7, 27,900 மதுகங்கை வடிகாலமைப்பு, உவர்நீர் விஸ்தரிப்புத்திட்டம் ... " 10,36,486
..
15

Page 10
1964 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ஆலோசனைக் கமிட்டியின் 16 வ து கூட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் அதிகெளரவ ஹெரல்ட் வில்சன் உரையாற்றுகிறார்.
பிரித்தானியா
கொழும்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1965 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ந் திகதிவரையுள்ள காலத்தின்போது கொழும்புத் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு அளிக்கப்பட்ட பிரிட்டிஷ் தொழில்நுட்ப உதவியின் பெறுமதி 14, 90, 205 பவுண்களாகும். 1965 ஆம் ஆண்டின் கடைசி ஆறுமாதங்களின்போது மேலும் 45,000 பவுண்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இத்தொகையில், பிரித்தானியாவில் பயிற்சியளிப்பதற்காக 26,000 பவுண்களும் இலங்கைக்கு நிபுணர்களை வழங்கியதன் பேரில் 17,000 பவுண்களும் தொழில்நுட்பப் போதனா உபகரணங்களை வழங்குவதற்காகச் சுமார் 2,000 பவுண்களும் செலவிடப் பட்டன. 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ந் திகதியளவில் மேலும் ஒரு லட்சம் பவுண்களைச் செலவிடுதற்கு பிரிட்டன் உறுதி பூண்டுள்ளது.
16

எந்த ஒரு சமயத்திலும் 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட தொகை யினரான இலங்கையர்கள் நானாவித செயல்முறை, நூற்கல்வித் துறைகளில் பிரித்தானியாவிலே பயிற்சிபெற்றுக் கொண்டிருந்திருக் கின்றனர். தற்சமயம், கொழும்புத்திட்டத்தின்கீழ் கொடுத்துதவப் பட்ட 5 பிரிட்டிஷ் நிபுணர்கள் இலங்கையில் பணியாற்றுகிறார்கள். அடுத்த சிலமாதங்களில் பின்வருவோரும் இங்கு வரவிருக்கிறார்கள் :
அரசாங்கக் கட்டு வேலைப்பகுதிக்கு 5 நிபுணர்கள் ; தபால், தொலை செய்திப்போக்குவரத்துப் பகுதிக்கு ஒரு கடல்வழித்தந்திப் பொறியிய லாளர் ; தரப்படுத்தும் நிலையமொன்றினை நிறுவுவதற்காக ஒரு நிபுணர் ; மற்றும்
கூட்டுறவு மொத்தவிற்பனவு நிலையத்துக்குக் கணக்கீட்டு ஆலோசகர் ஒருவர்.
கொழும்புத் திட்டத்தின்கீழ் பிரித்தானியா இலங்கைக்கு அளித்த நன்கொடைகளில், பேராதனையிலுள்ள இரண்டாவது வைத்தியக் கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்தின் புதிய பொறியியல் துறைக்குமான உபகரணங்களை வழங்கியது, குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். விசால கொழும்புத் தொலைசெய்திப் போக்குவரத்து அபிவிருத்தித் திட்டத்தின் வெளி நாட்டுச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக 35 இலட்சம் பவுண்களைக் கொண்டதொரு கடனும் வழங்கப்பட்டது. இலங்கையில், இலங்கைப் போக்குவரத்துச்சபை, கல்லோயா அபிவிருத் திச்சபை, கடற்றொழில் பகுதி, தபால், தொலைசெய்திப் போக்கு வரத்துப் பகுதி, சிலோன் இன்ஸ்ரிரியூட் ஒவ் சாட்டட் அக்கெளண் டன்ற்ஸ், செளக்கியப் பகுதி, கல்விப் பகுதி ஆகியவற்றில் பிரிட்டிஷ் நிபுணர்கள் பணியாற்றியுள்ளார்கள். இலங்கைக்கு கொடுத்துதவிய உபகரணங்களின் பேரில் பிரிட்டன் செலவிட்ட மொத்த தொகை 30,000 பவுண்களுக்கு மேலாகும். இலங்கை விஞ்ஞான, கைத்தொழில் ஆராய்ச்சி நிலையத்துக்கான உபகரணங்களும் இதில் அடங்கும்.
கடற்கெப் போக்குல "ரு கடனும்"
பிரிட்டிஷ் தொழில்நுட்ப உதவியைப் பெறும் மூன்றாவது பெரிய நாடாக இலங்கை திகழ்ந்துள்ளது. சுமார் 134 பிரிட்டிஷ் நிபுணர்கள் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். இப்பிராந்தியத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தவிர வெறெந்த நாட்டுக்கும் இவ்வளவு அதிகமான தொகையினர் சென்றதில்லை. எண்ணற்ற துறைகளில் பயிற்சிபெறு வதற்காக 779 மாணவர்கள் பிரித்தானியாவுக்கு விஜயஞ் செய்திருக் கிறார்கள்.

Page 11
1950 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உபகரணங்கள், பொருட்கள் ஆகியன சிலவற்றின் விபரங்களைக் கீழ்க்காணும் அட்டவணை எடுத்துக்காட்டுகின்றது :-
விவரணம்
ஸ்ரர்லிங். பெறுமதி பவுண்கள்
சமமான ரூபா
ரூபா ச.
இலங்கைப் பல்கலைக்கழகம் :
உடற்றொழிலியல் பகுதி மின்பொறியியல் பகுதி
ஆராய்ச்சி நிலையம், இரசாயனப் பகுதி பௌதிகவியல் பகுதி பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம்
இரண்டாவது வைத்தியக் கல்லூரி, உடற்றொழிலியல்,
உயிர்வேதியியல், உடலமைப்பியல் பகுதி |
2,169 ...
28,912 77 8,853 ... '1,18,010 49 1,584 ... } 21,114 72 2,000 ... 26,660 00 1,584 ... 21,114 72
21,000 ... 2,79,930 00
செளக்கியப்பகுதி ;
913 ... 12,170 29
பொதுச் செளக்கிய ஆய்கூடம்,
குருநாகல்
நூல்களும் பொதுச் செளக்கிய ஆய்கூடம்,
உபகரணங்... களுத்துறை
களும் பிரசவ ஆஸ்பத்திரி, காசில் வீதி,
கொழும்பு மார்பு சத்திர வைத்தியத்துக்கான உபகரணங்கள் | கயரோகப் பயிற்சிக் கல்லூரி, வெலிசறை
320 ... 4,265 60 767 ... 10,224 11
392 ...5,225 36 368 ... 4,905 44 193.
2,572 69 17,801 ... 2,37,267 33
363 ... 4,838 79
சிறைச்சாலை, நன்னடத்தைப் பாதுகாவல் சேவைகள்திரைப்படங்கள், திரைப்படம் காட்டும் கருவிகள், உபகரணங்கள், நூல்கள் தகவல் பகுதி-திரைப்படங்கள் வளிமண்டலவியல் பகுதிக்கான உபகரணங்கள் வனப்பகுதி ஆராய்ச்சி வேலைக்கள ஆய்கூடம் வர்த்தகப்பகுதி தரப்படுத்தும் ஆய்கூடம் அரசாங்கக்' கட்டுவேலைப்பகுதி.-அதன் பயிற்சித்திட்
டங்களுக்கு ..
கொழும்புத் துறைமுக அதிகாரசபை விசேட, வர்த்
தகத் தொழில்பயில்வோரின் பயிற்சிக்கு ... அரசாங்க அச்சகத் தலைவர் பகுதி-நூல்கள் நன்னடத்தைப் பாதுகாவல், சிறுவர் பராமரிப்பு உத்தி
யோகத்தர்களின் பயிற்சிக்கு ...! கணக்காளர் தலைமை அதிபதியின் பகுதி-நூல்கள் - உயர் நிலைப்பள்ளி வேலைக்களங்கள் நில அளவைப்பகுதி-உபகரணங்களும் நூல்களும் ...
1,170 ... 15,596 10
51 ...
679 83 115 ... 1,532 95
381 ...
5,078 73 150 ...
1,999 50 77,040... 10,26,343 20
200 ... 2,666 00

விவரணம்
சமமான
ஸ்ரர்லிங் பெறுமதி
ரூபா
பவுண்கள்
ரூபா ச.
கனிஷ்ட தொழில் நுட்பப் பாடசாலைகள், காலி, மஹா
ரகமை, யாழ்ப்பாணம், கண்டி-நூல்களும் உபகர
ணங்களும்
7,401 ...
98,655 33 தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு நுணுக்குக் காட்டி
கள் (மைக்குற்ஸ்கோப்) முதலியன
242 ...
3,225 86 ஆதார தொழில் நுட்பப் பயிற்சி நிலையம், இரத்ம்
லானை-திரைப்படம் காட்டும் கருவி, திரைப்படங்கள் நாடாவில் ஒலிப்பதிவு செய்யும் இயந்திரம் (ரேப் றெக்கோடர்)
678 ...
9,037 74 கல்லோயா அபிவிருத்திச்சபை, தொழில் நுட்பப்
பயிற்சி நிலையம்
21,205 ... 2,82,662 65 இலங்கை விஞ்ஞான, கைத்தொழில் ஆராய்ச்சித்தா
பனம்-உபகரணங்களும் நூல்களும்
... 1,00,000 ... 13,33,000 00 மட் பாண்டத் தொழில் ஆராய்ச்சி ஆய்கூடம்
165 ...
2,199 45 இலங்கை அரசாங்கப் புகையிரத வேலைக்களப் பயிற்சித்
திட்டங்களுக்கான நூல்களும் திரைப்படங்களும்
102 ...
1,359 66 அக்குவினாஸ் பல்கலைக்கழகத்துக்கான உபகரணங்
கள்
500 ...
6,665 00 சாட்டட் அக்கெளண்டன்ஸ் நிலையத்துக்கான நூல்கள்
(முதலாவது பருவம்)
500 ... 6,665 00 சாட்டட் அக்கெளண்டன்ஸ் நிலையத்துக்கான நூல்கள்
(இரண்டாவது பருவம்)
900 ..
11,997 00 நீர்ப்பாசனப்பகுதி ஆய்கூடத்துக்கான உபகரணங்கள்
1,156 ...
15,409 48 கதிரியக்க ஐசதோப்பு நிலையத்துக்கான உபகரணங்கள்
(இரண்டாவது பருவம்)
2,300 ... 30,659 00 இலங்கைப் பல்கலைக்கழகப் பொறியியல் துறைக்கான
உபகரணங்கள்
22,500 ... 2,99,925 00 இலங்கைப் பல்கலைக்கழக வைத்தியத்துறைக்கான உப
கரணங்கள்
24,000 ... 3,19,920 00
கனடா
கொழும்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1965-66 ஆம் ஆண்டு இறுதிவரை கனடா இலங்கைக்கு வழங்கிய பங்கீடுகளின் மொத்தத் தொகை மூன்றுகோடி டாலர்களுக்கு அதிகமாகும்.
19

Page 12
1965-66 ஆம் ஆண்டில்மட்டும் கொழும்புத்திட்டத்தின்கீழ், கனடா இலங்கைக்கு 45 லட்சம் டாலர்களை உதவியாக அளித்தது. இதன் விபரம் வருமாறு :
20 லட்சம் டாலர் பெறுமதியான கோதுமைமா (உணவு உதவி) ; கல்நார் (அஸ்பெஸ்ரோஸ்) தும்பு வாங்குவதற்காக ஒரு நீண்ட கால அபிவிருத்திக்கடனாக 10 லட்சம் டாலர்கள் ; பின்வருவனவற்றிற்காக 15 லட்சம் டாலர்கள் உதவியாக வழங்கப்பட்டன :-
(அ) தொழில்நுட்ப உதவிக்கு 70,000 டாலர்கள் (இலங்கையி
லிருந்து சென்றவர்கள் கனடாவில் பயிற்சிபெறுவதோடு கனேடிய ஆலோசகர்களும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்) ;
(ஆ)
கட்டுநாயக்கா விமானத்துறைக்கு 10 லட்சம் டாலர்கள். கட்டுநாயக்கா திட்டத்துக்கு மேலும் 46 லட்சம் டாலர்கள் உதவியாக அனுமதிக்கப்பட்டன ;
முகத்துவார் மீன்பிடித்திட்டத்துக்கு 1,30,000 டாலர்கள். (இத்திட்டத்துக்கு மொத்தம் 4,70,000 டாலர்கள் அனுமதிக்
கப்பட்டுள்ளன) ;) (ஈ) சாம்பலுப்பைப் பாசிகைப்படுத்துவதற்கு 1,50,000 டாலர்கள்.
1966-67 ஆம் ஆண்டின் உதவித்திட்டத்தின்கீழ், மேலும் 20 லட்சம் டாலர் பெறுமதியான கோதுமைமாவும் 15 லட்சம் டாலர் களைக்கொண்ட நீண்டகாலக் கடனொன்றும் (கட்டுநாயக்காத்திட்டத்தின் செலவினங்கள் அதிகரிப்பதனால் இது அவசியமாகிறது) வழங்கப் படுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.)
விவசாயம், வனவிருத்தி ஆகியவற்றிற்காக நிலத்தைப்பயன்படுத் துவதுபற்றி ஆகாயத்திலிருந்து செய்யப்பட்ட ஆராய்ச்சியையும் புவிவரலாற்றியல் பற்றிய மதிப்பீட்டையும் பூரணப்படுத்தியது, பதுளைஇங்கினியாகலை மின்செலுத்தற்கம்பி அமைப்பு, இங்கினியாகலை மின்சார நிலையம் போன்ற மூலதனத்திட்டங்களை அமைத்தது ஆகியவற்றின் மூலம் கடந்த சில வருடங்களாக கனடா இலங்கைக்கு உதவியிருக்கிறது. மின்செலுத்தற்கம்பிகள் அமைப்பானது இந்நாட் டின் கிழக்கு, மேற்குப் பகுதிகளிடையே பரஸ்பர தொடர்பை ஏற்படுத் துவதோடு மட்டுமன்றி கல்லோயாப்பிரதேசம் பூராவிலுமுள்ள கிராமங் களுக்கும் பாடசாலைகளுக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட மின்சாரத்தைக் கிடைக்கக்கூடியதாகவும் செய்கிறது. இலங்கையில் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கும் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்குமாக நேரடியான கனேடிய மூலதன உதவி வழங்கப்
20

பட்டுள்ளதுடன் இலங்கையின் பெரிய திட்டங்களான கல்லோயா அபிவிருத்திசபைத் திட்டத்துக்கு விவசாய உபகரணங்களும் நோய்க் கட்டுப்பாட்டுக்குத் தேவையான உபகரணங்களும் இலங்கைப்பல்கலைக் கழக விவசாய ஆய்கூடத்துக்கும் ஆராய்ச்சி நிலையத்துக்கும் தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. கடற்றொழில் அபிவிருத்தித்திட்டமானது மற்றொரு முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தில், முகத்துவாரத்தில் ஒரு மீன்பிடித்துறைமுகத்தையும்
கட்டுநாயக்கா விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தை திருமதி சிறிமாவோ பண்டார நாயக்கா அங்குராப்பணஞ் செய்து வைக்கின்றார். இத்திட்டத்திற்கு கனடா உதவி
யளித்துவருகின்றது.
21

Page 13
குளிர்களஞ்சிய இயந்திரத்தையும் பக்கவிளைவுப்பொருள் தொழிற் சாலையையும் நிறுவுவதற்கும் மீன்பிடிவள்ளங்களை இயந்திரமயமாக்கு வதற்கும் தேவையான உபகரணங்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் கனடா அளித்ததோடு இழுகப்பல்களையும் வழங்கியது.
கனடா மேற்கொண்ட பெரியதிட்டங்களில் கட்டுநாயக்கா விமானத் துறை விஸ்தரிப்புத்திட்டம் ஒன்றாகும். விமானப்பாட்டை, இறுதியாகத் தங்கும் கட்டிடம் ஆகியவற்றின் நிர்மாணமும் இதில் அடங்கும். இத்திட்டத்துக்கு 2 கோடியே 60 லட்சம் ரூபா செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. விமானத்துறைக்குச் செல்வதற்கான வீதிகளை யும் புகையிரதப்பாதையொன்றையும் அமைக்கும் பொறுப்பு, இலங்கை அரசாங்கத்தினுடையது. விமானப்பாட்டை அமைப்பு வேலை கள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளன. இறுதியாகத்தங்கும் கட்டிட நிர்மாணவேலைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்கு வரத்து, செய்தித்தொடர்புகள் ஆகியவற்றின் துறைகளிலுள்ள பல்வேறு திட்டங்களுக்கு கனடா உதவியளித்திருக்கிறது. இலங்கைப் புகையிரதப்பகுதியை நவீனப்படுத்துவதில் உதவிசெய்யும் பொருட்டு புகையிரத இழுவை இயந்திரங்களையும் டீசல் இருப்புப்பாதை இயந் திரங்கள் பலவற்றையும், கொழும்பு துறைமுக அபிவிருத்தித்திட் டத்துக்கு உதவிசெய்யும் பொருட்டு டீசல் மின்சார பாரந்தூக்கி களையும் கனடா வழங்கியிருக்கிறது. சிவில் விமானத்துறைப் பகுதிக் குத் தொலை செய்திப்போக்குவரத்து உபகரணங்கள் வழங்கப்பட்டுள் ளன. கனடா, கட்டுபெத்தையில் ஒரு செய்முறை நுண்தொழில் கல்லூரியையும் காலியில் ஒரு கனிஷ்ட தொழில்நுட்பக் கல்லூரியையும் நிர்மாணித்து அவற்றுக்கான உபகரணங்களையும் வழங்கியிருக்கிறது. அபிவிருத்தித் திட்டங்களுக்காக அண்மையில் "இலகு” கடனொன்றை வழங்குவதற்கும் கனடா முன்வந்திருக்கிறது.
இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள் உதவியில் கோதுமை மாவும் (95 லட்சம் டாலர்) புகையிரத இழுவை யந்திரங்களும் (1,80,000 டாலர்) பிரதானமாக இடம்பெற்றுள்ளன. 1963-64 இன் வேலைத்திட்டத்தின்கீழ் 10 லட்சம் டாலர் பெறுமதியான கோதுமைமா இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இதுவரை 149 இலங்கையர்களுக் குக் கனடாவில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதுடன் 116 கனேடிய நிபுணர்க ளும் ஆலோசகர்களும் இலங்கையில் பணியாற்றியுள்ளார்கள்.
கல்லோயா மீளக்குடியிருத்தல் திட்டத்திலுள்ளதொரு தொழில் நுட்ப நிலையத்தில் இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இலங்கையின் விவசாய, கைத்தொழில் விஸ்தரிப்புக்கு இவர்கள் அளப்பரிய பணி ஆற்றுவார்கள். கனடா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து நல்கும் உதவிக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். அண்டை நாடுகளிலுள்ள
22

மாணவர்களுக்கு "' தொழில் செய்யும் '' பயிற்சியளிக்கின்ற தொரு பிராந்திய பயிற்சி நிலையமாகவும் இது திகழ்கின்றது. இந்நிலையத் தின் ஸ்தாபகரும் கனடா தேசத்தைச் சேர்ந்தவருமான பேராசிரியர் இவான் ஹார்டி அவர்களுக்கு அஞ்சலிசெலுத்துமுகமாக கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்நிலையத்துக்கு " ஹார்டி நிலையம் '' என்று மறு நாமகரணம் சூட்டப்பட்டது. இலங்கையில் 14 ஆண்டு களுக்குமேலாகப் பணியாற்றிய இவர் கல்லோயாவில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் 1963 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உயிர்நீத்தார்.
கனடா உதவியளித்த இதர அபிவிருத்தித் திட்டங்கள் சில வருமாறு :-
திட்டங்கள்
பங்கீடு ரூபா ச.
66,01,719 40 28,58,043 46 -
2,47,375 00 47,50,000 54 8,55,000 00
கிராம வீதியமைப்பு செய்முறை நுண்தொழில் நிலையம் பேராதனை, இலங்கைப்பல்கலைக்கழக விவசாயத்துறைக்கான
ஆய்கூடக்கட்டிடம் ... முகத்துவாரம் மீன்பிடித்துறைமுகம் ... கடற்றொழில் கூட்டுறவுக் கல்வித் திட்டத்தின் விஸ் தரிப்பு ... பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழக விவசாயத்துறை
மிருகவைத்தியவியல் கட்டிடங்கள் ... கொழும்பில் வர்த்தகப்பாடசாலை நிர்மாணம் கொபால்ற் சிகிச்சைக் கூறொன்றை வாங்குதல் டீசல் இருப்புப்பாதை இயந்திரங்களை வாங்குதல் கொழும்புத்துறைமுக உபகரணங்களை வாங்குதல் வெள்ள நிவாரணமும் புனர்வாழ்வும் ., கல்லோயா லக்சபான மின்சார இணைப்பும் இங்கினியாகல
மின்சாரகூடத் திட்டமும் கிராமாபிவிருத்திச் சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட கிராம்
வேலைகள் முகத்துவாரம் மீன்பிடிக்குளிர்க்களஞ்சிய இயந்திரகூடத்தின்
கூரையைப் பழுதுபார்த்தல் கிராம வேலைத்திட்டங்களின் பேரிலான செலவுகள் மின்னேரியா கந்தளாய் யொட எலத்திட்டம் நிமல் ஓயா நீர்த்தேக்கத் திட்டம்
2,07,295 56 9,99,014 78
2,41,521 88 17,87,261 90 23,18,610 03 96, 57, 220 30
19,03,525 30
14,88,620 31
2,97,724 06 17, 87, 832 99 37,50, 000 00 68, 54,000 00
23

Page 14
விமானத்திலிருந்து நில அளவை செய்து பூகோளப்படங்களைத் தயாரிப்பதில் கனேடிய
நிபுணர்கள் இலங்கையருக்குப் பயிற்சியளிக்கின்றார்கள். இந்தியா இலங்கைக்கு உதவிசெய்ய முன்வந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்திய அரசாங்கமும் சேர்ந்துள்ளது. இது பயிற்சி வசதிகளையளிப் பதுடன் நிபுணர்களையும் கொடுத்துதவியுள்ளது. இந்தியா பல்வேறு துறைகளில் 310 இலங்கையர்களுக்குப் பயிற்சியளித்திருப்பதோடு 40 நிபுணர்களையும் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. ஜப்பான் இலங்கையில் மீன்பிடித் தொழில்நுட்பத்தை விருத்திசெய்யும் பொருட்டு ஜப்பான் தேசத்து உதவியுடன் நீர்கொழும்பில் ஒரு மீன் பிடித்தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இதற் காக 54 லட்சம் யென் செலவில் நிபுணர்களின் சேவைகளையும் சுமார் 3 கோடி யென் செலவில் பயிற்சி நிலையத்துக்குத் தேவையான உபகர
ணங்களையும் ஜப்பான் அளித்திருக்கிறது.
ஜப்பானின் முன் முதலீட்டு ஆராய்ச்சிகளில் காலி மீன்பிடித்துறை முகத்தினதும் அதன் பொருளிறக்கும் உபகரணங்களினதும் ஆராய்ச் சியும் அடங்கும். ஜப்பான் பல்வேறு சமயங்களில் அரிசி ஆராய்ச்சி நிபுணர்களைக் கொடுத்துதவியிருப்பதோடு விவசாயத்துறையில் பல
24

இலங்கையர்களுக்குப் பயிற்சியும் அளித்திருக்கி றது. ஜப்பான் கொடுத்துதவிய மொத்தம் 96 நிபுணர்கள், பிரதானமாக, மீன்பிடி, குடிசைக் கைத்தொழில், விவசாய, கட்டிட நிர்மாண, சுரங்கமறுத் தல், கைத்தொழில் ஆகிய தொழிற்துறைகளிலும் இதரபல தொழிற் துறைகளிலும் பணியாற்றியுள்ளார்கள். 120 இலங்கையர்கள், பெரும் பாலும் விவசாயம், மீன்பிடித்தொழில், மென்கைத்தொழில், வர்த்தக மும் வியாபாரமும் முதலிய துறைகளில் ஜப்பானில் பயிற்சி யளிக்கப்பட்டுள்ளனர்.
நியூசீலந்து 1951 ஆம் ஆண்டுக்குப்பின்னர், நியூசீலந்து 121 கோடியே 60 லட்சம் நியூசீலந்துப் பவுண்களைக் கொழும்புத்திட்ட உதவியில் இலங் கைக்கு அளித்திருக்கிறது. விவசாயம், செளக்கியம், தொழில் நுட் பக்கல்வி ஆகிய துறைகளிலுள்ள நானாவித திட்டங்களுக்காக மொத் தம் 9,43,718 பவுண்கள் முதலீட்டு உதவியாக வழங்கப்பட்டுள்ளன. மஹா இலுப்பலாமையிலுள்ள வரண்ட கமத்தொழில் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்கூடங்களையும் இதர கட்டிடங்களையும் நிறுவுதற் கும் உபகரணங்களை வழங்குதற்குமாக நியூசீலந்திலிருந்து கிடைத்த
பயிற்சி பெறுதற்காக நியூசீலந்துக்குச் சென்ற இலங்கைப் பல்வைத்திய தாதிமார்
களின் முதலாவது கோஷ்டி.
25

Page 15
பெருந்தொகையைக் கொண்டதொரு நன்கொடைப்பணம் பயன்படுத் தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள "வரண்ட பிரதேச” த்தை அதிக விளைச்சலைக்கொடுக்கும் பூமியாகச் செய்வதற்கான வழிவகைகளை இந்த நிலையம் பரிசீலனை செய்து வருவதோடு இப்பிரதேசத்தில் பயி ரிடுவதற்கு உகந்த பயிர்களையும், அவற்றைப் பயனுள்ளவகையில் பயிரிடும் வழிவகைகளையும் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. நியூசீலந்து முதலீட்டு நன்கொடைகளின் மூலம் உதவியளிக்கப்படும் இதர பெரிய திட்டங்களில், கொழும்பு பால் திட்டம், கண்டியிலும் யாழ்ப்பாணத்திலுமுள்ள கனிஷ்டதொழில் நுட்பக்கல்லூரிகள், மஹாரகமையிலுள்ள பல்வைத்திய தாதிமார் பயிற்சிக்கல்லூரி, அக்கராயன் குளத்திலுள்ள நீர்ப்பாசனக்குளத்தின் புனருத்தாரணம் ஆகியன அடங்கும். அம்பியுலன்ஸ் படகொன்று (யாழ்ப்பாணம்), நகரும் மருந்துச்சாலை வான்வண்டிகள் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யும் உபகரணம் ஆகியவற்றை வாங்கு தற்கு உதவியாக சிறுதொகைகளைக் கொண்ட பல நன்கொடைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நாட்டில் பாற்பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்காகக் கடந்த வருடம் நியூசீலந்து, 500 ஜேர்சி இனப் பசுக்களையும் பால்கறக்கும் நான்கு இயந்திரங்களையும் இலங்கைக்கு
வழங்கியது.
1963-64 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப உதவி விஷயமாக மேற் கொண்டும் 15,979 நியூசீலந்துப்பவுண்கள் செலவு செய்யப்பட்டன. ஆகவே இத்துறையில் மொத்தம் 2, 73,252 நியூசீலந்துப் பவுண் கள் செலவு செய்யப்பட்டுள்ளன. நியூசீலந்து இதுவரை 30 நிபு ணர்களைத் தந்துதவியுள்ளது. பிரதானமாக பல்வைத்தியத் தாதி மார் தொழில், பொறியியல், விவசாயம், தொழில்நுட்பக்கல்வி ஆகிய துறைகளில் மொத்தம் 129 இலங்கையர் நியூசீலந்தில் பயிற்சி பெற்றுள்ளார்கள்.
நியூசீலந்து இலங்கைக்கு வழங்கிய மூலதன உதவியைப்பற்றிய கணக்கு வருமாறு :-
ஒதுக்கிய தொகை
ரூபா
1,85,079 13,42, 464 21,66,304
விவரம் (1) அம்பியுலன்ஸ் படகு (2) கனிஷ்ட தொழில்நுட்பப்பாடசாலைகள் (3) கொழும்பு பால் விநியோகத்திட்டம் ... (4) மகா இலுப்பலாமை வரட்சிப் பண்ணை ஆராய்ச்சி
நிலையம் (5) செயற்கைக் கருவூட்டல் வான் வண்டிகள் (2) (6) நகரும் மருந்துச்சாலை வான் வண்டிகள் (2) (7) அக்கராயன்குளம் நீர்ப்பாசன வாவிப் புனருத்தாரணம். (8) பல்வைத்தியத் தாதிமார் பயிற்சிப்பாடசாலை |
65,75,342
50,000
39,578 11,93,604 7,11,498
26

ஐக்கிய அமெரிக்கா
மூன்று வருடகாலத்துக்குப்பின் ஐக்கிய அமெரிக்கா 1966, பெப்ர வரி மாதம் இலங்கைக்குத் தனது பொருளாதார தொழில்நுட்ப உதவியை மீண்டும் ஆரம்பித்தது.
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்தற்கு 75,00,000 டாலர்களை ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளு தற்கு ஓர் உடன்படிக்கை பெப்ரவரி மாதம் 15 ந் தேதியன்று கைச்சாத்திடப்பட்டது. பசளைகள், கிருமிநாசினிகள், விவசாய இரசா யனப் பொருட்கள், விவசாய உபகரணங்கள், திராக்டர்களும் உதி ரிப்பாகங்களும், கைத்தொழில் இயந்திரங்களும் உபகரணங்களும்.
ஆதியன இறக்குமதி செய்யப்படவிருக்கும் பொருட்களில் அடங்கும்.
சமாதானத்திற்கான உணவு உடன்படிக்கையொன்று (யு.எஸ். பொதுச்சட்டம் 480) 1966, மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்டது. இவ் வுடன்படிக்கையின் பிரகாரம், 2 கோடி ரூபா பெறுமதியான கோது மை மாவையும் காக்காச் சோளத்தையும் ஐக்கிய அமெரிக்கா இலங் கை அரசாங்கத்திற்குக் கொடுக்கும். ஏறத்தாழ 50,000 மீட்றிக் தொன் கோதுமை மாவும் 5,000 மீட்றிக் தொன் காக்காச் சோள மும் இவ்வாறு கொடுக்கப்படும். இலங்கை அரசாங்கம் இதற்கான பணத்தை ரூபாக்களில் செலுத்தும்.
இந்த ரூபாக்களில் 70 சத வீதத்தைப் பொருளாதார அபிவிருத் தித் திட்டங்களுக்கான நீண்டகால . கடன்களாக இலங்கை அரசாங் கத்துக்கு வழங்க இவ்வுடன்படிக்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நடவடிக்கையாக, 1965-66 ஆம் நிதி வருடத்தில் ராஜாங்கனை நீர்த்தேக்கத் திட்டத்திற்கான உள்நாட்டு நாணயச் செல வுகளை சமாளிப்பதற்காக கிட்டத்தட்ட 30 லட்ச ரூபா உபயோகிக்கப் படுமென இலங்கை அரசாங்கமும் ஐக்கிய அமெரிக்காவும் உடன் பட்டுள்ளன.
அமெரிக்க விவசாயப் பொருட்களை இலங்கை ரூபாக்களுக்கு விற் பனை செய்ய இரு அரசாங்கங்களும் கைச்சாத்திட்ட சமாதானத்திற் கான உணவு உடன்படிக்கைகளில் இது ஐந்தாவது உடன்படிக் கையாகும். இதற்கு முத்திய உடன்படிக்கைகள் 1958, 1959, 1960, 1962 ஆகிய வருடங்களில் கைச்சாத்திடப்பட்டன.
1964 ஆம் ஆண்டில், 33 லட்சம் டாலர் பெறுமதியான உணவு ''கெயார் '' ஸ்தாபனத்தால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலை, பிரசவத்தாய் மார் பராமரிப்புத் திட்டமொன்றுக்கு வழங்கப்பட்டது. 19 லட்சப் பாடசாலைப்பிள்ளைகளுக்கும் 60,000 பிரசவத் தாய்மார்களினதும் குழந்தைகளினதும் சேமாபிவிருத்தி வேலைக்கும், விசேஷ செளக்
27

Page 16
ஐக்கிய அமெரிக்கா நன்கொடையளித்த திராக்டர் ஒன்றை கெளரவ சி. பி. டி சில்வா
செலுத்துகின்றார்.
கியப் பிரச்னைகளையுடைய 3,000 பேருக்கும் இத்திட்டம் பயன்பட்டது. அறிவியல்கள், வீட்டுப் பொருளாதாரம், உடற்பயிற்சி ஆகியவற்றைப் போதிக்கும் சமாதானப்படைத் திட்டம் 1964, ஜூன் மாதம் பூர்த்தி யாக்கப்பட்டது.
முன்னர், 1956 தொடக்கம் நிகழ்ந்து வந்துள்ள ஐக்கிய அமெரிக் காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுறவின் பிரதான உதா ரணங்களுள் கொழும்புப் பிரதேச புகையிரத சேவைகளின் அபி விருத்தி, வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, காணி அபிவிருத்தி, கைத் தொழிலும் செளக்கியமும் ஆகியன அடங்கும். நீர்வளங்களைத் திட்ட மிடுவதில் மல்வத்து ஓயாவை ஒரு குறிப்பிட்ட மாதிரித்திட்ட வமைப்பு, செய்துகாட்டற் பிரதேசமாகக்கொண்டு ஐக்கிய அமெரிக்க தொழில் நுட்பவல்லுநர்கள் அங்கு வேலை செய்தார்கள். இதர கூட்டுறவுத்திட்டங்களில், செயல்முறைக் கமத்தொழிற் பாடசாலைகள், விவசாய விஸ்தரிப்பு, ஆராய்ச்சி, கல்வி ஆகியன அடங்கும். விவ சாயம், பொறியியல், அறிவியல்கள் ஆகியவற்றில் போதனைகளை
28

விஸ்தரிப்பதில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் இலங்கைப்பல்கலைக்கழகத் திற்கு உதவிபுரிந்தது. ஐக்கிய அமெரிக்கா, பொதுச்சட்டம் 480 ன் கீழ் வழங்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க கோதுமைமாவின் விற்பனை யினால் கிடைத்த 25 லட்ச ரூபாக் கடனைக் கொண்டு இலங்கையின் முதலாவது கைத்தொழிற் பேட்டையைத் தாபிக்க உதவி புரிந்தது. இதன் முதலாவது கட்டத்தைத் திட்டமிட்டு நிர்மாணிப்பதில் அமெ ரிக்க ஆலோசகர் ஒருவரின் சேவையையும் அது வழங்கியது.
இத்துறைகளில் இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்கா அளித்த உதவி சுமார் 8 கோடியே 40 லட்ச டாலர்களாகும்.
இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்கா அளித்த சில டாலர் நன்கொடைகள் அதாவது உபகரணங்களின் பெறுமதி, பொருட்கள் முதலியன பற்றிய விபரம் பின்வருமாறு :-
தொகை
விவரம்
டாலர்
ரூபர் விவசாய விஸ்தரிப்பு, ஆராய்ச்சிக் கல்வி
3,72,000 ... 17,67,000 நீர்ப்பாசனமும் காணி அபிவிருத்தியும்
... 23,02, 344..1,09,36,134 நீர்வளங்களைத் திட்டமிடுதல் -...
... 56,000 ... 2,66,000 இயற்கை வளங்களைக் கணித்தலும் திட்டமிடுதலும்... 2,66,624 ., 12,66,464 சல்வீனியா ஒழிப்பு
6,537 ... 31,050 கைத்தொழில் உற்பத்தி
... 1,05,000 ... 4,98,750 கனிஜப்பொருள் ஆராய்ச்சி
54,435 ... 2,58,566 நீர்மின்சக்தி ஆராய்ச்சிகளும் பயிற்சியும்
69,000 ... 3,27,750 பெருவீதி அபிவிருத்தி
... 10,37,000 ... 49, 25,750 பெருவீதி, புகையிரதப்போக்குவரத்து ஆராய்ச்சி ...
11,743 ... 55,779 கொழும்புப் பிரதேசப்புகையிரத சேவைகள்
... 18,75,000 ... 89,06, 250 விமானம் செலுத்துதற்கான வசதிகள்
70, 312 ... 3,33,982 தொழிலாளர் கல்வி
2,000 ..
9,550 மலேரியா ஒழிப்பு
... 10,19,000 ... 48,40,000 செளக்கியக் கல்வி
28,000 ... 1,33,000 இலங்கைப்பல்கலைக்கழகம்
.. 1,64,000 ... 7,79,000 விஞ்ஞானக் கல்வி !
. 1,47,000 ... 6,98,000 தொழில்நுட்ப உதவி
66, 771 ... 3,17,162 இது எவ்வகையிலும் ஒரு விரிவான விவரமாக இல்லாத போதி லும், பொருளாதார அபிவிருத்தியின் சகல முக்கிய துறைகளிலும் செல்வாக்கைப் பிரயோகித்துள்ள கொழும்புத்திட்ட உதவியின் சில உதாரணங்கள் இதிற் காணப்படுகின்றன.
கேந்திர ஸ்தானம்
ஸ்தாபன ரீதியாகக் கவனிக்குமிடத்து, கொழும்புத் திட்டச்சபையும் கொழும்புத்திட்ட நிலையமும் கொழும்பில் நிறுவப்பட்டுள்ளன என்ற உண்மையைக் கொண்டு, கொழும்புத்திட்டத்தின் தாயகம் என வர்ணிக்கப்படும் இலங்கை, இரண்டாவது கேந்திரஸ்தானமுமாகும்.
29

Page 17
(முதலாவது கேந்திரஸ்தானம், அங்கத்துவ நாடுகளின் தலைநகரங் களில் வருடாந்தம் நடைபெறும் அமைச்சர்களின் அந்தஸ்தி லுள்ளவர்களடங்கிய ஆலோசனைக் குழுக்கூட்டங்களே.) இதைச் சுற் றியே கொழும்புத்திட்டம் இயங்குகின்றது. கொழும்பில் ஒழுங்காகக் கூட்டங்களை நடாத்தும் இச்சபையில் சகல் கொழும்புத்திட்ட நாடு களினதும் பிரதி நிதிகள் உள்ளனர். இந்நாடுகளிற் பெரும்பாலான வற்றிற்கு கொழும்பில் பிரதி நிதிகள் இருக்கின்றனர். மூலதன உத் வியை இச்சபை கையாளுவதில்லை. ஆனால் இப்பிரதேசத்தில் தொழில் நுட்ப உதவியைப் பரிசீலனை செய்வதிலும் ஒருமுகப்படுத்துவதிலுமே அது கவனஞ் செலுத்துகின்றது. நடைமுறைகள், கொள்கை கள் ஆகிய பிரச்னைகள்பற்றி விவாதிப்பதற்கும் கருத்துக்களைப் பரி மாறிக் கொள்ளுதற்கும் அது ஓர் அரங்காக இருப்பதோடு ஆலோ சனைக் குழுவின் சிபார்சுகளையும் அமுல் நடாத்துகின்றது. இதன் ஆரம்பகாலந் தொடக்கம், ஆலோசனைக் குழுவினதும் சபையினதும் பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் பிரதி நிதிகளும் பங்குபற்றிக் கொண்டுள்ளார்கள். ஆசியாவைச் சேர்ந்த அங்கத்துவ நாடுகளுக் கிடையிலிருந்து ஒவ்வொரு வருடமும் சபையின் தலைவர் தேர்ந் தெடுக்கப்படுகிறார். இலங்கையர் இரண்டு பேர் இதன் தலைவர்களா கக் கடமையாற்றியுள்ளார்கள்-திரு. ராஜூ குமாரஸ்வாமி (இரண்டு தடவைகள்), திரு. - திலக் ஈ. குணரத்தின. அக்காலத்தில் இச் சபையில் இலங்கையின் பிரதிநிதியாக விருந்த திரு. ஏ. எல். பெரேரா, பிராந்தியத்திற்குட்பட்ட பயிற்சி விஸ்தரிப்பு பற்றிய செயற் குழுவின் தலைவராகக் கடமையாற்றினார்.
கொழும்பில் நிறுவப்பட்டுள்ள கொழும்புத்திட்ட நிலையம் சிறிய அளவிலான ஒரு சர்வதேச ஸ்தாபனமாகும். இது கொழும்புத் திட்டச் சபைக்கு அதன் அலுவலகமாக விளங்குவதோடு இப்பிராந் தியத்திற்கு வழங்கப்படும் சகல தொழில்நுட்ப உதவிகளையும் பதிவு செய்து, இம்முழுத்திட்டம் சம்பந்தமான தகவல்களையும் அளிக் கின்றது. இதன் ஊழியர்கள் 30 பேரில் 26 பேர் இலங்கையராவர்.
செய்துமுடிக்க வேண்டிய வேலைகள் | கொழும்புத்திட்டம், இந்தப் பிராந்தியத்தின் அவசரமான தேவை களில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க உதவிபுரிந்துள்ளதோடு மட்டுமல்லாமல், இப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்துவ நாடும் இதர அங்கத்துவ நாடுகளின் பிரச்னைகளை நன்குணர்ந்துகொள் ளவும் அவற்றிற்குத் தகுந்த மதிப்பளிக்கவும் செய்துள்ளது.
ஒரு வளமிக்க கலாசார, ஆத்மீக பாரம்பரியத்தினையுடைய தெற்கு, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் மனிதசக்தியும் தாராளமாக உள் ளது. போதியளவில் உபயோகப்படுத்திக் கொள்ளப்படாத பெரு
30

மளவு மூலப்பொருட்களும் இப்பிராந்தியத்தில் உள்ளன. முன் னேற்றமடைய வேண்டுமென்ற உறுதியின் துடிப்பு இங்கு காணப் படுகின்றது. ஆனால் இப்பிராந்தியத்தின் பல பாகங்கள் இன்னும் சாதனையின் எல்லைக் கோட்டிலேயே நிற்கின்றன.
விரிவான தேசியத்திட்டம் வாயிலான பொருளாதார வளர்ச்சி, கொழும்புத்திட்ட நாடுகளின் கொள்கையென பொதுவாக எற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும் அபிவிருத்தியிலும், உலகின் மிக உயர்ந்த அபிவிருத்தி யடைந்த நாடுகளினதும் கைத்தொழில் நாடுகளினதும் தீவிர ஆதர வுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடனும் கூடிய திட்டவட்டமான சர்வ தேச முயற்சிகள் ஒரு பெரும்பாகத்தை வகிக்க வேண்டியிருக்கின் றன. இந்த சூழ் நிலைப் பொருத்தத்தில் தான் கொழும்புத்திட்டத் தின் நோக்கங்கள் வகுக்கப்பட்டன. இதே கருத்தோடுதான் இப்பிர தேசத்தின் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு சாதனாரீதியான தீர்வு காண கொழும்புத்திட்ட நாடுகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த் திருக்கின்றன.
1964 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கொழும்புத்திட்டப் பொருட்காட்சியின் இலங்கைக்கூடத்திற்கு விஜயஞ் செய்த அதி கெளரவ திருமதி பார்பரா காஸில் அவர்களை அதுகாலை இலங்கையின் நிதி அமைச்சராகவிருந்த டாக்டர் என். எம். பெரேராவும், ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையின் ஹைகொமிஷனராகவுள்ள பேரா
சிரியர் ஜி. பி. மலலசேகராவும் வரவேற்றார்கள்.

Page 18
இதுவரையில் கொழும்புத்திட்டத்தின் சாதனைகள் குறிப்பிடத்தக்க வைகளாகக் காணப்படுகின்றன. ஆனால் இன்னும் எவ்வளவோ வேலைகள் செய்துமுடிக்கப்படவேண்டியிருக்கின்றன. உலகின் தரைப் பாகம் பதினாறில் ஒருபங்கில் உலக சனத்தொகையில் கால் வாசிக் கும் (இத்தொகை வருடத்திற்கு ஒரு கோடியாக அதிகரித்து வரு கிறது) அதிகமானோர் வாழும் ஒரு பிரதேசத்தில் இவ்வேலை மிகவும் கடினமானதாக இருந்துவருகிறது. இப்பிரதேச மக்களினதும் அதற்கு வெளியேயுள்ள நல்லெண்ணம் படைத்தவர்களினதும் கூட்டு முயற்சிகளைக் கொண்டே அல்லாமல் அதைச் செய்துமுடிக்க முடி யாது. ஆரம்பத்தில் ஆறுவருடங்களுக்கு மட்டுமே உத்தேசிக்கப்பட் டிருந்த கொழும்புத்திட்டத்தின் ஆயுட்காலம் 1966 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் நீடிக்கப்பட்டிருப்பது, தெற்கு, தென்கிழக்காசியாவில், மனிதனின் கூட்டு முயற்சியினால் மனிதனின் தேவைகளைச் சமாளிக்க, பதினாறு வருடங்களுக்குமுன் தீர்க்கதரிசிகளால் , இயற்றப்பட்ட சாத னம் அதன் தொழிலைச் செய்ய ஆரம்பித்துள்ளதென்பதற்கு, அதிலும் திட்டத்தில் "உள்ள, 22. நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அவ்வளவு திறமையுடன் அப்பணியை ஆற்றி வருகிற தென்பதற்குச் சான்றாகும்.
RR 15131–2,505 (6/66) அரசாங்க அச்சகம், இலங்கை.
32

* KATHYG AVELU, B.A. (Ceylon)
RINCIPAL,
/URELU GANESHA VIDYASALA!
CHUNNAKAM.

Page 19