கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிங்ககிரிக் காவலன் 1963

Page 1

சொக்கன்

Page 2

சிங்ககிரிக் காவலன்
'' சொக்கன்''
பூபாலசிங்கம் புத்தகசாலை
பாடசாலைப் புஸ்தகங்கள் உபகரணங்கள் விற்பனையாளர் 57, பெரிய கடை, யாழ்ப்பாணம்
கலைவாணி புத்தக நிலையம்
10, பிரதான வீதி, யாழ்ப்பாணம். கிளை : 130, திருகோணமலை வீதி, கண்டி. பதிப்புரிமை ]
விலை : 1- 50
1963

Page 3
முதற் பதிப்பு ஏப்பிரல் - 1963
விலை : ரூபா 1-50
கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம். 248-63

1 07: சண்மவடிலோ
26• 6 • 63
இலங்கைக் கலைக் கழகம்
தலை வர் : சு. வித்தியானந்தன், M. A., Ph. D.
செயலாளர் : கா. சிவத்தம்பி, B. A.
கலா பவனம், 106, கிரீன்பாத், கொழும்பு - 7
தமிழ் நாடகக் குழு
இலங்கைக் கலைக் கழகம் 1961-ம் ஆண்டு நடாத்திய தமிழ் நாடக எழுத்துப் போட்டியில் முதற் பரிசில் திரு. க. சொக்கலிங்கம் அவர்கள் (சொக்கன்) எழுதிய “சிங்ககிரிக் காவலன்' என்னும் நூலுக்கு வழங்கப்பட்டது.
சு. வித்தியானந்தன்
தலைவர்.
19-11.1961

Page 4
ந ன் றி
நீதியும் பண்பும்- நேர்மையும் மிக்கோய்! ஓதிடும் தமிழிற் குயிரையும் நல்குவை வித்தியா னந்த வித்தக! நன்றி உத்தம ! 'நந்தி'யாம் உயர்சிவ ஞான சுந்தர! உளநிறை நன்றியை ஏற்பாய் புத்தகம் வெளியிடு நற்கழ கத்துமென் சித்தந் தன்னிலும் நித்தம்வாழ் முத்தையா! உன்றனுக் கென்றன் உளஞ்சார் நன்றி ! கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் நிலைபெறு 'கைலாஸ்' நின்னையான் மறவேன்! சிங்க கிரியுடைச் சித்திரம் அமைத்த மங்காத் திறனுடை மயில்வா கனனே! உன்னை நினைத்துயான் உளம்பூ ரிப்பன் என்னுடைப் படையலை எழிற்றமிழ்க் கணியாய் நின்றிடச் செய்திடு கு. வி. தம் பித்துரை! உன்னையும் நினைப்பனென் நன்றியும் உனக்கே.
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.
1.4-63
க, சொக்கலிங்கம்
( "சொக்கன்'' )

முன்னுரை
கிறித்துவுக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டிலே இலங் கையில் அரசோச்சியவன், சிங்கள மன்னன் காசியப் பன். ஆட்சியுரிமையைக் கைப்பற்றுவதற்காகவும், அத னைக் காப்பாற்றுவதற்காவும் கொடுஞ்செயல் சிலவற் றைச் செய்த அம்மன்னன் இலங்கை வரலாறு கண்ட கலையுணர்வு நிரம்பப் பெற்ற மன்னருள் ஒருவனாகவும் விளங்குகின்றான். முரண்பாடுகள் நிறைந்த அவனது வாழ்க்கை, வரலாற்று - ஆசிரியரிடையே மாறுபட்ட கருத்துக்களைத் தோற்றுவித்துள்ளது. வரலாற்றாசிரிய ரின் வாதப் பிரதி வாதங்களுக்குட்பட்ட இம்மன்ன னது வாழ்க்கையும் சாதனைகளும் இலக்கிய ஆசி ரியரைப்' பலகாலமாகக் கவர்ந்து வந்துள் ளன. சிங் களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் காசியப்பன் வாழ்க்கையை அடிநிலையாகக் கொண்ட புனைகதைகளும் பாடல்களும் பல எழுதப்பட்டுள்ளன. "ஒவ்வொரு இலக்கிய கருத்தாவும் தன் தன் மானோபா வத்திற்கேற்பக் காசியப்பனைக் கண்டு, பிறர்க்கும் காட் டியுள்ளார். இந்த வரிசையிலேயே திரு. சொக்கலிங்கம் (''சொக்கன்'') அவர்களும் இடம் பெற்றுள்ளார்.
ஒரு நாடகத்திலே மாறுபடுஞ் சக்திகளின் மோதல் முக்கியமானதாக அமைகின்றது. துன்பியல் நாடகங் களிலே இப்பண்பு மிகவும் துலக்கமாகத் தெரியும். காசியப்பனது நற்குணங்களுக்கும், சந்தர்ப்ப சூழ்நிலை உருவாக்கிய சக்திகளுக்கும் இந்நாடகத்திலே மோதல் காணப்படுகிறது. - இயல்பாகவே . காசியப்பனிடம் அமைந்திருந்த உணர்ச்சி செறிந்த உள்ளமான து திரிந்து விகாரப்பட்டுத் தேய்வதனையே நாடகத்தின்

Page 5
71
உயிர் நாடியாக உணர்கின்றார், ஆசிரியர். நன்மை யின் அழிவே சோகத்தை உண்டாக்குகிறது என்று நாடகவியல் வல்லார் கூறுவர். அவ்வுண்மைக்குச் சான்
றாக அமைந்துள்ளது இந்நாடகம்.
காசியப்பன், அல்லி, மகாநாமதேரர் முதலியோர் எத்துணை உணர்ச்சிப் போராட்டங்களுக்கு ஆளாகின் றனர்! வரலாற்று நாடகங்களுக்குரிய பண்புகள், குறை வின்றி எழுதுதல் எல்லோர்க்கும் எளிதன்று. பாத்தி ரங்கள் தமது சூழ்நிலையிலே ' தோன்றி நடமாடல் வேண்டும்; தமது காலத்திற்குப் பொருந்தச் சிந் தித்தும் உனர்ந்தும் பேசியும் செயலாற்றல் வேண்டும்; வரலாற்றுப் பாத்திரங்களுடன் ஆசிரியர் தாமாகப் புனைந்துள்ள பாத்திரங்களை இணைக்கும் பொழுது அமைதியும் நிலவுதல் வேண்டும். இவற்றைச் செய்து முடிப்பதற்கு. வரலாற்று உணர்வும் நூற் புலமையும் நாடக நுணுக்கமும் பெரிதும் வேண்டற்பாலன. அவற் றைச் "சொக்கன்'' குறிப்பிடத் தக்க அளவு பெற்றுள் ளார் என்றே கூறுவேன்.
பல்கலைக் கழகத்திலே வித்துவான் பட்டம் பெற்ற 'சொக்கன்'' தாம் கற்ற செய்திகளைத் தக்கபடி பயன் படுத்தி விருத்தி செய்துள்ளார் என்பதில் எனக்கு ஐயமில்லை. நாடகமுழுவதும் ஆசிரியரது இலக்கியப் பயிற்சியும் இசை இரசனையும் இழையோடுகின்றன. அவை கற்றோர்க்குப் பேருவகை தரு வன; மற்றோர்க் கும் இன்பம் அளிப்பன.
நாடகத் துறைக்கு ஆசிரியர் புதியவரல்லர். பல ஓரங்க நாடகங்களையும், வானொலி நாடகங்களையும் எழுதிப் பயிற்சி மிக்க திரு ''சொக்கன்''' கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு நடாத்திய நாடகப் போட்டியிலே

vii
ஈராண்டுகள் முதற் பரிசில் பெற்றவர். முதலாவது நாடகமாகிய ''சிலம்பு பிறந்தது"' முன்னர் வெளிவந் தது. இந்நூலுக்கு அன்புரை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி யடைகிறேன். ஆசிரியர் என து மாணவர்; நண்பர்; பழகுதற்கு இனியவர்; பண்பாளர்; பொது வாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள நாடகத்துறையிலே அயராது உழைக்கும் சிலருள் ஒருவர். இதைப் போன்ற நாடகங்களை அவர் மேன்மேலும் எழுதியு தவுவார் என நம்புகிறேன். வளம் பெற்றுவரும் ஈழத் துத் தமிழிலக்கிய உலகம், இவர் போன்றாரை - ஆவ லுடன் எதிர் நோக்கியிருக்கின்றது.
பல்கலைக்கழகம்,
பேராதனை, 1- 2 - 1963
சு, வித்தியானந்தன்

Page 6
9Ꮈ

நுழைவாயில்
வரலாற்றின் ஏடுகள் விரிகின்றன. பதினைந்து நூற் றாண்டுகள் பின் நோக்கிச் செல்கிறோம். அப்பொழுது ஈழத்தின் அரசனாய் விளங்கியவன் காசியப்பன். (Sigiri Kasubu 477-524)
இவன் தன் மைத்துனனான மீகாரனின் (Migara) தூண்டுதலாலும், மண்ணாசையாலும் தன் தந்தை யையே உயிரோடு சமாதி செய்தான். வரலாறு காணாத மாபெருங் குரூரச் செயல் இது! சூளவம்சம் முதலான பண்டை நூல்கள், இவனை ஓர் அரக்கனாகச் சித்திரிக் கின் றன.
எனினும், காசியப்பனின் ஒரு செயல், அவனு டைய கொடுமைகளையெல்லாம் மறக்குமாறு செய்கி றது. சிகிரியாவை இராசதானியாக்கி, அதனைக் கலைக் கோயில் ஆக்கிய காவலன் அவன்!
அன்றியும் தன து கொடுமையை நினைந்து, நினைந்து வருந்தி வருந்திச் சாகாது செத்துக்கொண் டிருந்த அவன், எ ம து இரக்கத்திற்கு உரியவனே! "'அவன் பல தெய்வப் படிமங்களையும், அன்னசத்திரங் களையும், இவை போன்ற பலவற்றையும் அமைத்தான், ஆனால் இனிவரும் ஓர் உலகிற்காய் அஞ்சியே வாழ்ந் தான்.'' (He made many images, alms houses and the ike, but he lived in fear of the world to come' Culavansa)
காசியப்பன் தாது சேனனின் மகனாயினும் பட்ட மகிஷியின் வயிற்றிலே பிறந்தவன் அல்லன். மூத்த

Page 7
வன் எனினும் கீழ்மகள் ஒருத்திக்கு மகனாய்ப்பிறந் தான். (He (Dhatusena) had two sons, Kassapa the elder, by a consort of lesser degree and Mogallana by the consecreted mahesi a n d a daughter'. A concise history of Ceylon P. - 125) பட்டமகிஷியின் வயிற்றிலே பிறந்த முகலானன் என்னும் ஒரு தம்பியும், தங்கை ஒருத்தியும் இவனுக்கு உளர். எனவே, மூத்தவனாய்ப் பிறந்தும் அரசியல் உ ரி  ைம கிடைக்காமையாலும், காமக்கிழத்தி மகன் என் ற தாழ்வு மனப்பான்மையா. லும், இவன், தந்தையாகிய தாதுசேனனுக்கு இறுதி சூழ முயன்றிருக்கலாம்.
- இந்த முயற்சியிலே சேனாபதியும், காசியப்பனுக்கு மைத்துனன் முறையானவனுமாகிய மீகாரன், அவனைத் தூண்டிக் கொண்டே இருந்தான். இவ்வாறு தூண்டு வதற்கு மீகாரனுக்கு ஒரு காரணமும் இருந்தது. அது வருமாறு:
தாதுசேனன், தன் மகளை மீகாரனுக்கு மணம் முடித் திருந்தான். ஒரு நாள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சிறு சச்சரவு நிகழ்ந்தது. அச்சச்சரவால்' கோபமுற்ற மீகாரன், தன் மனைவியைச் சவுக்கால் அடித்தான். மனைவியோ தான் அரசன் மகள் என்ற கர்வத்தாற்போலும் தந்தையிடம், இரத்தம் தோய்ந்த தன் ஆடையோடு சென்று முறையிட்டாள்.
- தாதுசேனனின் வெகுளி எல்லை கடக்கவே, அவன் கொடிய விலங்கு போலானான்; தன் சொந்தச் சகோ தரி என்றும் நோக்காது, மீகாரனின் தாயை, நிருவாண மாக உயிரோடு தீயில் இட்டு எரித்தான்! மருமகன் மீது எத்தகைய பழிவாங்கல்!
இதை மீகாரன் மன்னிக்கவேயில்லை! அவன் தாது சேனனின் 'கேள்போற் பகை' யானான்; முன்னரே மண்ணாசை கொண்டு திரிந்த காசியப்ப

னின் ஆசைத் தீக்கு நெய் வார்ப்பதே" மீகாரன் தொழிலாயிற்று. (A Concise history of Ceylon by C - W - Nicholas and S. Paranavitana pp. 125.126)
அவன் தன் முயற்சியில் வெற்றிபெற்றான். காசி யப்பனும் ஈழத்தின் அரசனானான்! அவனுடைய அரி யணை, தாதுசேனனின் சமாதியின் மீது எழுந்தது!
இந்நிலையிலே முடிக்குரியவனாகிய முகலன், 'தனது உயிருக்கஞ்சி இந்தியா சென்று பதினெட்டாண்டுகள் கரந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டதில் வியப்பில்லை. இவ்வாறு இவன் இந்தியாவிலே வாழ்ந்த காலத்தில், இவனுடைய சுகதுக்கங்களிலே தாதுசேனனின் மாது லராகிய மகாநாமதேரரும், இவனுடைய மைத்துன்னா கிய சீலகாலனும் பங்கு கொண்டனர். மகாவம்ச ஆசிரிய ராகிய மகாநாமதேரர், அக்கால ஈழத்தரசியற் சூதாட் டத்திலே முக்கிய பங்கு கொண்டிருந்தவர்; அன்று இலங்கையிலே ஆதிக்கம் பெற்றிருந்த தமிழரைத் தொலைத்துத் தாதுசேனனை அரசனாக்குவதிலே வெற்றி பெற்றவர். மீண்டும் தமது விளையாட்டைத் தொடர்ந்து நடாத்தி முகலனையும் அரியணையிலேற்றப் பகீரதப் பிர யத்தனம் செய்தார், அவர்!
சீல காலனும் ஒரு காலத்திலே பிக்குவாய் இருந்த வனே! மதபக்தி மிகுந்தவனாகிய இவன், முகலன் இந் தியாவிலே கரந்துறைந்த காலத்தில் அவனுக்குப் பலவாறு உதவி செய்தான். முகலன் படைகளோடு நாடு திரும்பியபொழுது, இ வ னு ம் ந ா டு திரும் பிப் புத்தரின் மயிர்க்கற்றையாகிய புனிதச் சின்னத் தையும் தன்னோடு கொணர்ந்தான். (''The king's (Mo gallana's) brother - in - law Silakala, who had fled with him to India, is said to have brought from India, a lock of the Buddha's hair which was treated as a relic (L. E. Blaze. in his “A History of Ceylon')

Page 8
நிற்க, முகலன் பதினெட்டாண்டுகளின் பின் நாடு தி ரு ம் பி ப் போர்முரசு கொட்டியபடி, சிகிரியாவை நோக்கி முன்னேறினான். நாட்டைக் கைப்பற்றுவதாகிய அவன் முயற்சி காசியப்பனின் தற்கொலையால் எளிதா யிற்று. (''When he (Kassapa) was defeated by his brother, he committed suiside' Codrington in his “A short history of Ceylon')
இதன்பின் முகலன் பழையபடி அநுரதபுரியை இராசதானியாக்கினான். தன்னை அரசனாக்குவதிலே பல தியாகங்களையும் மேற்கொண்டு முயன்ற மகாநாமதேர ருக்குச் சிகிரியாவை அளித்தான். மகா நாமதேரர் அதனை விகாரையாக்கிக் கொண்டார். தமது மகாவம்சத்தை இந்த அமைதிக் காலத்திலேதான் அவர் எழுதியிருத்தல் கூடும். ('After the death of Kassapa Mogollana, his brother donated the fortress to Mahanama Thero, Mogallanas paternal grand uncle'- Observer, Sunday Magazine Nov-12, 1961)
இனி, காசியப்பனின் கலைக்கோயில் பற்றிய சில கருத்துக்களை நோக்குவோம். சிகிரிக் குகையில் அழியா ஓவியங்களாய் நிலைத்து வாழும் மலர் மங்கையரின் தொகை இருபத்தொன்றாகும். இவை அ ஜ ந் த ா க் குகை ஓவியங்களின் (Frescoes) போக்கில் அமைந் தவை. ('The style of the frescoes is similar to the contemporary paintings at the Ajanta caves in India' - A concise History of Ceylon pp. 128) இலங்கையில் இன்று எமக்குக் கிடைக்கும் மிகப் புராதன ஓவியங்கள் இவை களேயாகும்.
இவைபற்றி வரலாற்றாசிரியர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இவை தேவலோக அப்சரசுகளைக் சித்திரிப்பவை என்றும், வேறு சிலர் இவை காசியப்பனின் மனைவிமாரைச் சித்திரிப்பவை என்றும் கூறுவர். இவற்றுள் பின்னவரின் கருத்தே

xiii
இந்த நாடகக் கற்பனையின் அத்திவாரமாகும். " இவை (ஓவியங்கள்) காசியப்பனின் மனைவிமார், பூக்களோடு அண்மையில் உள்ள விகாரம் ஒன்றிற்கு வழிபடச் செல்வதுபோல் வரையப்பட்டவை.'' ( H, C. P. Bell declared, they were the wives of Kasspa proceding with flowers in thier hands to worship at a temple nearby'- (Archelogical survey of Ceylon 1907)
இவற்றை வரைந்தோர் வடநாட்டு ஓவியர் என்று சிலர் உரைப்பர்; சிங்கள ஓவியர் என்று வேறு சிலர் உரைப்பர்; தமிழக ஓவியர் என உரைப்பாரும் உளர். இக்கருத்து வேறுபாடுகளினின்றும் நீங்கிக் கலைஞன் என்ற உரிமையால் 'காசியப்பனே சித்திரம் வரைந் தனன்' எனக் காட்டுவது நூலாசிரியனின் கற்பனையே அன்றி  ேவ ற ன் று. இது போலவே போரிடத்துத் தற்கொலை செய்த காசியப்பனைச் சிகிரிக் குகையி னுள்ளே தற்கொலை பண்ணவைத்ததும் நாடகாசிரி யனின் கற்பனைதான்!
மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டா கிய காசியப்பனது ஆட்சிக்காலம் வரையுள்ள காலப் பிரிவைத் தமிழகத்தின் இருள் சூழ்ந்த காலம் என்பர். களப்பிரர் என்ற இனத்தார் தமிழகத்தைக் கைப்பற்றி அதன் கலைவாழ்வையே நாசஞ் செய்த காலம் இந்தக் காலம்.
மேலே கூறப்பட்ட வரலாறுகளின் அத்திவாரத்திலே க ா சி ய ப் ப னி ன் சிகிரியாவையும் தமிழகத்தையும் பிணைத்தபடி 'சிங்ககிரிக் காவலன் ' எழுகிறது.
செல்க ! சுவைக்குக!

Page 9

GT சமர்ப்பணம்
6 - 3 - 62, 10 - 3 - 62 ஆகிய நாட்களில்
யாழ். மாநகரசபை மண்டபத்தில்
'சிங்ககிரிக் காவலன்'
மேடை யேற அயராதுழைத்த இலங்கைத் தமிழ்ப் புத்தக வெளியீட்டுக்
கழகத்தினர்க்கும், நடிக, நடிகையர் மற்றும் கலைஞர்க்கும்
இந்நூல் உரியதாகுக,

Page 10
பாத்திரங்கள்
காசியப்பன்
*கருணவதி
முகலன்
சிகிரி மன்னன் காசியப்பனின் மனைவி, பின்பு பிக் குணி ஆகின்றவள்: காசியப்பனின் தம்பி; பட்டத்திற்
குரியவன். முகலனின் தந்தை வழிப்பாட்டன்; பிக்கு. தமிழகத்துப் பெண்; காசியப்ப னின் காதலி.
அல்லியின். வளர்ப்புத் த ந்  ைத ;
மகாநாமதேரர்
*அல்லி
--
அல்லியின் தோழிகள்
*தென்னவன் *கயற்கண்ணி *செந்தாமரை ) *கூத்தன்
சிலகாலன்
நடன ஆசிரியர் முகலனின் மைத்துனன் சேனாதிபதி; முகலன், காசியப்பன்
ஆகியோரின் மைத்துனன்
மீகாரன்
* கற்பனைப் பாத்திரங்கள்

சிங்ககிரிக் காவலன்
காட்சி 1
[ சிகிரியாவின் மாளிகையிலே ஓர் அறை. அதன் சுவரெங்கும் 'அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயி ரோவியங்கள்'; சிற்பங்கள். கலைஞனின் பொன்வண் ணக் கனவெல்லாம் அங்கு நிலைபெற்று வாழ்கின்றன.
திரை விலகும்பொழுது அறை நடுவிலே தூண்டா மணி விளக்கு ஒன்று எரிகிறது. சிற்பங்களும், ஓவியங் களும் மங்கிய நிழல் உருவங்களாய்த் தெரிகின்றன. சிறிது சிறிதாக ஒளி வளர்கிறது. யாவும் துலாம்பரமாய்த் தெரிகின்றன. அவற்றின் பின்னணியிலே, ஓர் ஆசனத் தில் வலக்கையால் நாடியைத் தாங்கியபடி காசியப்பன் அமர்ந்திருக்கிறான்.
எல்லை கடந்த துன்பம் இழையோடும் முகக்களை; சோர்ந்து துவளும் உடல்; மது உண்டு வெறி ஏறிச் சுழல்கின்ற விழிகள்; அவை அச்சத்தோடு அங்கும் இங்கும் வெறித்து நோக்குகின்றன.
-- உபயோகம், வ
நினைவு என்ற திரை விலகுகிறது. பழைய சம்பவங்கள் நிழலாடுகின்றன. அ  ைவ காசியப் பனின் முகத்திலே சலனங்களை ஏற்படுத்துகின்றன.]
248--2

Page 11
சிங்ககிரிக் காவலன்
(மெல்லிய பின்னணித்திரையிலே Projector இன் ஒளியில் நிழல் உருவங்களை விழச் செய்து, நிழலாட்டமாக இந்நிகழ்ச்சி நடைபெறும்.)
தாதுசேனன் : (நிழல்) மகனே! காசியப்ப! திரவிய ஆசை! உன் கண்களை மறைத்து விட்டது. மண் ணாசை உன்னை மனிதப் பேயாக மாற்றிவிட்டது. உன்மண்ணாசையால் இந்த மீகாரப் பயலின் கைப் பொம்மையாக நீ மாறிவிட்டாய்.
மீகாரன் : (நிழல்) சீ! கிழட்டு நாயே! வாயை மூடு.
(கன்னத்தில் அறையும் ஒலி)
தாதுசே : பார். உனது கண் முன்னாலேயே உன்
தந்தை அடிவாங்கி அலறுகிற அவல நிலையைப் பார். உனது உடலிலே ஓடுவதும் இந்தக் குருதிதானே? நீ வெறும் மரக்கட்டை அல்லவே! உனது இரத்தம் கொதிக்கவில்லையா? உன் நரம்புகள் துடிக்கவில் லையா? அடப் பாவி!
காசியப்பன் : (நிழல்) (ஏளனச் சிரிப்போடு) தாதுசேனரே! நிறுத்தும் உமது உளறல்களை. 'மகனே' என்று என்னை அழைக்க உமக்குத் தகுதி ஏது? நான் உமக்கு மகனுமல்ல; நீர் எனக்குத் தந்தையும்
அல்ல!
தாதுசே : (கோபத்துடன்) என்ன சொன்னாய்?
காசியப் : ஆம்! நீர் எனக்குத் தந்தை அல்ல! அவ்வாறு
நீர் என்னுடன் நடந்துகொள் ளவே இல்லை. என்னை உமது மகன் என்று சொல்லவே உமக்கு வெட்கம்! கேவலம்! நான் காமக்கிழத்தி மகன் தானே? முக லனைப்போல் பட்டமகிஷியின் மகன் அல்லவே!

காட்சி -1
தாதுசே: (வருத்தத்தோடு) பண்
(வருத்தத்தோடு) பண்டையோர் வகுத்த விதி அப்படி. அரசியல் கூறும் சட்டம் அது! நீ எனது மகன் தான். ஆனால் முதல் உரிமை முகலனுக்கு என்று விதிகள் எனக்குத் தளையிடுகின்றன. (தள தளக்கும் குரலிலே) மகனே! நான் என்ன செய்வேன்?
காசியப் : (வெறுப்பு, வேதனை, வெகுளி கலந்த தொனியில்) 'மகனே' என்று மீண்டும் அழையாதீர். உயிருக்கு அஞ்சி இன்று 'மகனே' 'மகனே' என்று அலறு கிறீரே? இந்தப் பந்தமும், பாசமும் இதுவரை எங்கு ஒளித்திருந்தன? உமது அரண்மனையிலே நான் அனாதையாக வாழ்ந்து, பலரது பரிகாசத்திற் கும் இலக்கான நாட்களிலே, நீர் எங்கு போயி ருந்தீர்?
மீகாரன் : இன்று சட்டம் பேசுகிறீர்! தாதுசேனரே!
அது இப்பொழுது உமது கையில் இல்லை. உமது மருமகனாகிய எனது கையிலும், காசியப்பன் கை யிலும் அது சிக்கியிருக்கிறது.
தாதுசே : மீகாரா! என் மகளை உன் தாய் கொடுமை
செய்தாள். 'மாமி' என்ற மமதையிலே, என் செல் வத்தைச் சீரழித்தாள்! வெகுளி கொண்டு உன் தாயை உயிரோடு எரித்தேன்! அதற்குப் பழிவாங் குகிறாயா, நீ?
மீகாரன் : சட்டத்தின் மமதையினால் என் தாயைச்
சுட்டெரித்தீர். இன்று ' என் புத்திவலிமையாலே, உம்மைச் சித்திரவதை செய்கிறேன்! இதில் ஒன்றும் தவறு இல்லையே?

Page 12
சிங்ககிரிக் காவலன்
காசியப் : ஆம்! உமக்கு ஒரு நீதி! மற்றவர்க்கு ஒரு!
நீதியா? (பல்லை நெருமியபடி) நீர் செய்ததற்கெல்லாம் அநுபவிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
மீகாரன்: காசியப்ப! சற்றுப் பொறுமையாக இரு..
தாதுசேனரே! காலவீவாவின் கரையிலே புதைய லைக் காட்டுவதாக வந்தீரே? எங்கே புதையல்? சொல்லும்.
தாதுசே : புதையல்! (சிரிக்கிறான்) இதோ! கண்முன்னே
''கல'' ''கல'' வென்று நகைக்கிறதே! தெரியவில் லையா? குருடர்களா நீங்கள்?
காசி+மீகா : (வெகுளியோடு) என்ன?
தாதுசே : இந்தக் 'காலவீவா' தான் எனது புதையல்?
மண்ணை மலர்வித்து, மக்களின் வாழ்வை வளஞ் செய்யும் மாபெரும் புதையல்! அள்ளக் குறையாத அமுதசுரபி! நான் இறந்தாலும் என் இசைபாடும் இன்பக் காவியம்!
காசியப் : (எல்லை கடந்த வெகுளியோடு) தாதுசேனரே!
எனது பொறுமையைச் சோதிக்கிறீர்! சொல்லும்;
புதையல் எங்கே? தாதுசே : அதுதான் சொல்லியாகிவிட்டதே!
காசியப் : நல்லது! நானும் எனது முடிவைச் சொல்லி
விடுகிறேன். அன்றும், இன்றும், என்றுமே உலகம் கண்டிராத மிகப்பெரிய தண்டனையை உமக்கு அளிக்கப்போகிறேன். உமது பு...தை...ய...ல் இருக் கிறதே? அந்தப் புதையலோடு நீர் நிரந்தரமாக. வாழ வழிசெய்யப் போகிறேன்.

காட்சி 1
தாதுசே: ஆ... எ...ன்.ன?
காசியப் : ஆம்! உயிரோடு உமக்குச் சமாதி எடுக்கப்
போகிறேன்.
தாதுசே : ஐயோ!
மீகாரன் : (பேய்ச் சிரிப்புச் சிரித்தபடி) என்ன? கேட்கவே
அச்சமாக இருக்கிறதோ? மாமனாரே! இந்தத் தண்டனை ஒன்றும் உமக்குப் புதியதல்லவே!
தாதுசே : (தளதளக்கும் குரலிலே) இதுதான் உங்கள்
முடிவா? மகனே! எனக்கு இரங்கமாட்டாயா?
காசியப் : சீ! 'மகனே' 'மகனே' என்று அழைத்து,
எனது நெஞ்சப் பாறையிலே நீர் சுரக்க வையாதீர்! எனது முடிவை மாற்றமுடியாது. (வேதனையோடு) எனக்காகவும், எனது உயிர் நண்பன் மீகாரனுக் காகவும் நான் செய்த முடிவு இது!
(நெஞ்சைக் கடினமாக்கியபடி)
மீகாரா! ஏன் தயக்கம்! தண்டனையை நிறைவேற்று.
மீகாரன்: சரி! (மீகாரனும் ஏவலரும் தாதுசேனனை இழுத்துப்
போகிறார்கள். விலங்கு கலகலக்கும் ஒலி.)
தாதுசே : ஐயோ! ஐயோ! மகனே! என்னைச் சித்திர
வதை செய்யாதே! கொன்றுவிடு; எனக்கு இரங்கு. உன் தண்டனையை இந்தக் கிழட்டுடல் தாங்கா தப்பா. மகனே! மகனே!

Page 13
சிங்ககிரிக் காவலன்
(நிழற்காட்சி மறைகிறது. தாதுசேனனின் அலறல் ஒலி, சுவர்: களில் முட்டிமோதுவதுபோன்ற பிரமை ஏற்படுகிறது, காசியப் னுக்கு.]
காசியப் : (விம்மி வெடிக்கின்ற குரலிலே) தந்தையே! தந்
தையே! தந்தையே!
என்னால் இந்த வேதனையைத் தாங்கக்கூட வில்லை. மனச்சாட்சி என்னை வாள் கொண்டு அறுக் கிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அது என்னைச் சித்திரவதை செய்கிறது! தந்தையே! தாங்கள் உயிருடன் சமாதி செய்யப்பட்டபொழுது, சில கணங்களே துன்பப்பட்டீர்கள். ஆனால் நானோ வாழ்க்கை முழுவதும் வருந்துகிறேன். வருகின்ற உலகிற்காய் வருந்தி, வருந்தி இறந்து, இறந்து பிறக்கிறேன்.
தெய்வப்படிமைகள் செய்தேன்; ஆதுலர் சாலை! கள் அமைத்தேன்; அறம் பல செய்தேன்; அன்ன சத்திரம் ஆயிரம் கட்டினேன். ஆனால் அமைதி பிறக்கவில்லையே! நான் என்ன செய்வேன்?
(சிறிது நேரத்தில் கருணவதி வருகிறாள், பிக்குணிக்கோலம்)
கருணவதி : அரசே!
காசியப் : யார்? (நிமிர்ந்து பார்த்து) கருணவதி! நீயா??
நான் கனவு காணவில்லையே!
கருண: நானேதான்!
காசியப்: இது என்ன கோலம்? உனக்கு.......

காட்சி 1
கருண : பைத்தியம் பிடிக்கவில்லை. சுய அறிவோடுதான்
இருக்கிறேன். காசியப் : அப்படியானால் என் கண்கள் தாம் தவறு
செய்கின்றன. மேகத்தைக் களைந்துவிட்ட இந்த முகமதியையும்,
[கிட்ட நெருங்குகிறான். கருணவதி அஞ்சி விலகுகிறாள்.]
பிறைத்துண்டுகளைப் பிடுங்கி எறிந்துவிட்ட இந்தப்' புருவங்களையும், பூவிழந்த கொம்பெனத் துவழும் இந்தக் கொடியுடலையும், கருணவதி! நான் காண்கிறேன் என்பது உண்மையா? சொல், கருண வதி! சொல். உன்னை மன்றாடிக் கேட்கிறேன். அத்தனையும் பொய் என்று சொல். என் நெஞ்சிற்கு
அமைதி தா. கருண: அத்தனையும் உண்மையென் று சொல்ல நேர்ந்
தமைக்கு என்னை மன்னித்துவிடுங்கள்.
காசியப்: கருணவதி! பொன்னையும், மணியையும்
சூடப் பிறந்தவள் நீ! பஞ்சணையிலே துயிலவும், பாலன்னம் அருந்தவும், பண்ணிசை மிழற்றி என் னைப் பரவசம் செய்யவும் என்றே படைக்கப்பட் டவள் நீ. என் உயிருக்குள் உயிர் நீ! நெஞ்சிலே நினைவு நீ! உடலினுள் இன்பம் நீ! இவற்றைத் துறக்க உனக்கு உரிமையே இல்லை!
கருண : அந்த அடிமை நிலை நேற்றுவரைதான். இனி
நான் அந்தப் பரிபூரணன் ஒருவனுக்கே அடிமை!
காசியப் : சரி! நீ அந்தப் பரிபூரணனுக்கே அடிமை
யாய் இரு. அதே வேளையில் பாழடைந்த என் நெஞ்சிற்கும் அரசியாய் வீற்றிரு.

Page 14
சிங்ககிரிக் காவலன்
கருண : வேந்தே! என்னை மன்னியுங்கள்; மறந்து
விடுங்கள்; செத்துச் சிதைந்த உணர்ச்சிகளுக்குப் புத்துயிர் அளிக்க முயலாதீர்கள்.
காசியப்: (பரவசனாய்) இன்பம் என்ற காவியத்தின் விரி
வுரையாய் விளங்கினாய். காதற் கடலிலே என்னை நீந்தித் திளைக்க வைத்தாய்! இருள் ஏறிய நெஞ்சிலே ஒளியேற்றி வைத்தாய்! இவற்றையெல்லாம் எப்படி மறப்பது?
கருண : தாங்கள் இவற்றை மறக்கத்தான் வேண்டும்.
வேறு வழியில்லை, அரசே!
காசியப் : கருணவதி! என்னைப் பார். சூழவரத் துரோ கிகளின் கூட்டம்! சுற்றிவர அன்பு வரண்ட பாலைப் பெருவெளி! இவைகளுக்கிடையே எனது மன அமைதிக்கெல்லாம் உன்னையே நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கை வெறும் கானல் நீரா?
கருண : தங்களுக்காக மி க வு ம் வருந்துகிறேன்.
ஆனால் இனியும் இந்தப் பொன்விலங்கிலே அகப் பட்டு வருந்த என்னால் இயலாது.
காசியப் : பொன்விலங்கல்ல, அன்புச் சிறை!
கருண : அரசே! எங்கோ ஒரு மூலையிலே ஏழ்மையைக் கைகோத்து வாழ்ந்தேன்; துன்பத்தை எழுத்தெண் ணிக் கற்றேன். அன்பை நான் கண்டதில்லை; அலட் சியத்தை அறிந்திருக்கிறேன்.
இந்த நிலையிலே தாங்கள் வந்தீர்கள். எனது ஏழ்மையைப் போக்கினீர்கள்; கண்ணீரைத் துடைத்

காட்சி 1
தீர்கள்; அன்பால் என்னை ஆட்கொண்டீர்கள். இத் தனைக்கும் என் ஆழ்ந்த நன்றி. ஆனால்.......!
காசியப் : (ஆவலோடு) ஆனால்?
கருண : ஆனால், அதே சமயத்தில் கொலைக்கறை படிந்த அரியணையிலே அமரவும் வைத்தீர்களே? அதைத்தான் என்னால் தாங்கக்கூடவில்லை. மனச் சாட்சிக்குச் சமாதி எழுப்பிச் சுகபோகங்களிலே வாழுமாறு என்னை வற்புறுத்துகிறீர்களே? அதைத் தான் என்னால் ஏற்கக்கூடவில்லை. எனக்கு முன்னால் என்னைப் புகழ்ந்தும் எனது தலை மறைந்தால் என்னை இகழ்ந்தும் வாழும் எத்தர் கூட்டத்திடையே என்னை இருக்கச் சொல்கிறீர்களே? இதைத்தான் என்னால் பொறுக்க முடியவில்லை. ஒவ்வோரு கண மும் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை எனக்குப் பிடிக்கவே இல்லை,
காசியப் : என்ன சுய நலம் உனக்கு? கருணவதி! நான்
மட்டும் மகிழ்ச்சியோடு வாழ்கிறேன் என்றா நினைக் கிறாய்? உன து. தூய அன்பிலேயே நான் தளிர்த்து நிற்பதை நீ அறியாயா?
நீ இல்லையேல் நான் தனிமையிலே தள்ளப்படு வேன். அங்கு என் தந்தையின் எண்ணங்கள் விசுவரூபம் எடுக்கும். அவை என்னைக் கொன்றே ஒழித்துவிடும். கருணவதி! என்னை அவல நிலைக்கு ஆளாக்காதே.
கருண : தாந் தாம் செய்த வினைக்குத் தாமே கழுவாய்
தேடவேண்டும். நான் பிரிந்து செல்வதே அதற் காகத்தான். தனிமையிலே உங்கள் பாவத்திற்

Page 15
சிங்ககிரிக் காவலன்
காய்க் கசிந்துருகுங்கள். அதுவே உயர்வதற்கு
ஒரே வழி! சாலச் சிறந்த வழி! காசியப் : (கோபத்தோடு) அப்படியானால் நீ உன் தீர்
மானத்தை மாற்றப்போவதில்லையா?
கருண: (புன்சிரிப்புடன்) தங்கள் கேள்வியிலேயே பதி"
லும் தொக்கு நிற்கிறது, அரசே!
காசியப்: (மிகுந்த வெகுளியோடு) கருணவதி! நீ என்
அடிமை! எனக்கு உதவாத உன் உடலிலே உயிர் தங்கியிருக்க முடியாது, கூடாது!
(பல்லை நெருமிக்கொண்டு கருணவதியை நெருங்கி, அவளு
டைய கழுத்திலே கையை வைத்து நெரிக்கிறான்.)
கருண: (அச்சமே அறியாதவளாய்) புத்தஞ் சரணங் கச்
சாமி! சங்......... கம் சர......... ணங்......... கச்.......... சாமி... .தம்........மம்...
காசியப் : (திடீரென்று மனம்மாறி அவளின் கழுத்திலிருந்து
கையை எடுக்கிறான். கைகள். நடுங்குகின்றன.) என்ன காரியம் செய்யத் துணிந்தேன்? - எனது பாபச் சுமையை மேலும் பெரிதாக்க அல்லவா முயன்றேன்?
கருணவதி! என்னை மன்னித்துவிடு.... போய்வா. (கருணவதி அமைதியாகச் சிரித்தபடி போகிறாள். 'புத்தஞ். சரணங் கச்சாமி' மெலிந்து நிற்கிறது. காசியப்பன், மலைத்து நிற்கிறான், பின்பு தள்ளாடியபடியே போய் ஆசனத்திலே இருக்கிறான். முகத்தை மூடியபடியே 'கருணவதி! கருணவதி!” என்று தேம்புகிறான்.

காட்சி 1
அந்த வேளையில் ஏவலன் ஒருவன் வருகிறான். 'அரசே!” என்று வாய் புதைத்து நிற்கிறான்.] காசியப் : என்ன?
ஏவலன் : வாயிலிலே தளபதி மீகாரர் வந்து காத்து ?
நிற்கிறார். வரச் சொல்வதா?
காசியப் : (உரத்த குரலிலே) போடா போ! என்னை யாரும்
சந்திக்க வேண்டாம். அவனைச் சந்திக்கமுடியாது என்று சொல், போ! (ஏவலன் அச்சத்துடன் ஓடுகிறான். காசியப்பன் மீண்டும் அவனை "ஏய்! இங்கே வா'' என்று அழைக்கிறான். ஏவலன்
வாய் புதைத்தபடி வருகிறான்.] காசியப் : (மீண்டும் மனம்மாறி) சரி, சரி! போ! மீகாரனை
வரவேண்டாம் என்று சொல், போ.
(ஏவலன் போகிறான்). காசியப் : (தளதளத்த குரலிலே) போங்கள். எல்லாரும் -
போய்விடுங்கள். என்னைத் தனிமையிலே அநாதை யாக விட்டு ஓடிவிடுங்கள். (தள்ளாடித் தள்ளாடி நடக்கிறான். கருணவதியின் ஓவியத் .
திற்கு அருகிலே போகிறான்). காசியப் : கருணவதி! உனது நெஞ்செல்லாம் நஞ்சு..
நினைவெல்லாம் நஞ்சு! உன் உடல் கூட நஞ்சி னாற் செய்த அமிர்தம்! உன்னை நம்பி ஏமாந்து விட்டேன்! நீ துரோகி!
ஆனால் உன்னை மறக்க என்னால் கூடவில்லையே! (தளதளத்த குரலில்) கருணவதி!
(திரை)

Page 16
காட்சி 2
[சோழ நாட்டிலே, ஒரு சிற்றூரிலே ஒரு சிறிய மாளிகை. அதன் முன் மண்டபத்திலே, நடுவில் அழகிய முருகனின் வண்ணச்சிலை; சுவர்களில் பலவகை நடனத் தோற்றத்திலே ஒரு மங்கை, அழகிற்கு வரைவிலக்கணம் கூறி நிற்கிறாள்.
மாலை வேளை, நாட்டிய பாவத்திலே உள்ள சிலை ஒன்றின் தலையிலே வைத்துள்ள விளக்கொன்றைப் பணிப்பெண் ஒருத்தி ஏற்றிச் செல்கிறாள். ஒளி பரவு
கிறது.
500
சிறிது நேரத்தில் வீணை ஒன்றைத் தூக்கியபடி ஒரு பெண் வந்து, ஒரு பக்கலிலே அமர்கிறாள் தொடர்ந்து கூத்தன் வருகிறான். அவனுக்குப் பின்னால் வேறொரு பெண் வந்து கூத்தனின் பக்கலிலே உட்கா ருகிறாள். வீணையிலே சுருதி சேர்க்கப்படுகிறது.
தொடர்ந்து சுவரிலே எழுதப்பெற்றுள்ள ஓவியத் தின் சாயலைப் பெற்ற பெண் - அல்லி - வந்து நடுவிலே ஒயிலாக நிற்கிறாள்.] அல்லி : ஐயா! இன்று என்ன புதுப்பாடம்?
கூ த்தன் : புதிதாக ஒன்றும் இல்லை, குழந்தாய்! நேற்
றைய பாடத்தைத்தான் தொடரப்போகிறேன்.

காட்சி 2
13
அல்லி : அகநானூற்றுப் பாடல் என்றீர்களே? அதுவா?
கூத்தன் : ஆமாம்! முதலிலே பாடலின் பொருளை விளக்குகிறேன். அந்தப் பொருள் தரும் உணர்ச்சி களை நீ உன் முகத்திலும், உடலிலும் வடித்துக் காட்டல்வேண்டும். புரிந்ததா, அல்லி!
அல்லி : தங்கள் கட்டளைக்குக் காத்து நிற்கிறேன்..
கூத்தன் : சரி, கேள். நீங்களும் கவனமாகக் கேளுங் கள். அப்பொழுதுதான் அல்லியின் ஆட்டத்திற்கு உங்கள் ஒத்துழைப்பும் நன்கு கிடைக்கும். இசை யும், நடனமும் ஒன்றிய வழியேதான் தெய்வக் கலையே பிறக்கிறது. இது நீங்கள் அறிந்ததே. என்ன? கேட்கிறீர்களா?
பெண். இரு.: அப்படியே ஆகட்டும் ஐயா!
கூத்தன் : இந்தப் பாடல் இருக்கிறதே? இதனைப் பாடி
யவர் கபிலர். ஒவ்வொரு புலவனும் கபிலர் போலத் தான் பாடுகின்ற உணர்ச்சியே தானாகி, பாடலிலே வருகின்ற பாத்திரத்தின் நெஞ்சிற்குள்ளே புகுந்து நின்றால், எவ்வளவு நன்றாக இருக்கும்? பாடல் ஒவ்வொன்றுமே நிலைபேறு அடைந்திருக்குமல்லவா? [பெண்களில் ஒருத்தியான கயற்கண்ணி சிரிக்கிறாள்)
அல்லி : ஏன் சிரிக்கிறாய், கயல்!
- கயற்கண்ணி : இல்லை! எங்கள் நடன ஆசிரியரும் ஒரு
புலவரல்லவா? புலவர்களைப் புகழ்வதென்றால் அவ ருக்குக் கரும்பு தின்பது போல! -. இல்லாவிட்டால்

Page 17
சிங்ககிரிக் காவலன்
சொல்ல வந்ததை மறந்து, என்னவெல்லாமோ பேசுவாரா?
-கூத்தன் : அட்டா! என்ன திறமை! என்ன திறமை!
எனது உள்ளத்தையே எழுதிக் காட்டி விட்டாயே!
(பெண்களில் ஒருத்தியான செந்தாமரை பொய்க்கோபம்
கொள்கிறாள்.]
செந்தாமரை : இப்பொழுது பாடலின் பொருளைச்
சொல்லப் போகிறீர்களா, இல்லையா?
கூத்தன் : (கன்னத்தில் அடித்தபடி பயந்தவர்போல் பாசாங்கு பண்ணி) தப்பு! தப்பு! செந்தாமரையின் கட்டளை யைத் தலைமேல் தாங்கிப் பாடலின் பொருளை விரிக்கிறேன்.
அதன் பொருள் இதுதான். காடு பல கடந்து மேடும் பள்ளமும் நிறைந்த வழியிலே, நள்ளிரவிலே தலைவன் தலைவியைக் காண வருகிறான். அவன் தங்கள் திருமணம் பற்றிச் சற்றேனும் நினைக்க வில்லையே என்ற வருத்தம் தலைவிக்கு! இதனைத் தலைவனுக்கு நாகரிகமான முறையிலே உணர்த்த நினைத்தாள்.
கயல் : இதிலே என்ன நாகரிகம் வேண்டிக் கிடக்கிறது?
"ஐயா! என்னை மணம் செய்து கொள்ளுங்கள்" என்று வெட்டொன்று துண்டிரண்டாகக் சொல்வது தானே?
கூத்தன் : (ஏளனமாகச் சிரித்தபடி) அது உண்மை! இது
உங்கள் காலம் பார். இதுமட்டுமா நீ கேட்பாய்? உன் கணவனின் காதிலே அங்குசம் போட்டு

காட்சி 2
15
இழுத்து வருவாயே! வாய் நீளத்தைப் பார். கயற் கண்ணி என்று உனக்குப் பெயர் வைத்தது தவறு! கயல் வாயள் என்று பெயர் வைத்திருக்க வேண் டும். தவறிழைத்து விட்டார் தந்தை!
செந் : (சிரித்தபடி) அமைதி! அமைதி! ஆசிரியப் பெரு
மானே! நீங்கள் தொடர்ந்து சொல்லுங்கள்.
கூத்தன் : தலைவன் வந்து வெளிப்புறத்திலே நிற் பதை அறியாதவள் போன்று தன் தோழியைப் பார்த்து அவள் சொல்கிறாள் "தோழி! பொதுவிடத் திலே ஒலி அடங்கியது. வீடுகள் தோறும் மக்கள் தூங்கி விட்டார்கள். கொல்லும் கூற்றுவன் போல் நடுயாமமும் வந்தது. எனது உள்ளத்து ஆசைகள் கடல்போலப் பெருகுகின்றன. இந்த நிலையிலும் என் மனம் கேட்டால்தானே? அது உன்னையும், என்னையும் கேளாது என் தலைவன் வருகின்ற வழியை நோக்கிச் சென்றுவிட்டது.
அல்லி : பூ! இவ்வளவுதானா? (சிரிக்கிறாள்)
கூத்தன் : என்ன, அப்படிச் சொல்லிவிட்டாய்?
அல்லி : தோழியையும் கேளாது, தன்னையும் சூழாது ஓடுகின்ற மனத்திற்கு உரியவள் ஒரு தலைவியா?
அவளின் சிறப்பைப் பாடுவதற்கு ஒரு பாடலா?
கயல் : (சிரித்தபடி) சரியான கேள்வி கேட்டாய், அல்லி!
புலன் அடக்கம் இல்லாது, நிலை இல்லா மனத் தோடு இருக்கிறாளே உங்கள் தலைவி?

Page 18
சிங்ககிரிக் காவலன்
கூத்தன் : நீங்கள் குழந்தைகள் தானே? உலக அது பவமே இல்லாத உங்களுக்கு இவையெல்லாம் எங்கே புரியப்போகிறது? அல்லி! ஒரு நாள் வரும்? அன்று இந்தத் தலைவியைப் போலவே உன் நெஞ் சும், உன்னையும், தோழியையும் கேளாது ஒருவர் பின் ஓடியே சென்றுவிடும். அன்று இந்தக் கிழட் டுக் கூத்தன் சொல்லித்தந்த பாட்டை நினைத்து நினைத்து நீ உருகுவாய்!
அல்லி : அதுதான் இந்த அல்லியிடம் நடவாது!
செந் : அடேயப்பா! உன் உறுதி தளரும் நாளும்
வரும்! காதலையும், கலையையும் தேக்கி நிற்கும் உன் விழிகள், உனது நெஞ்சையும் காந்தமாக ஈர்த்து உன்னைத் தன் வலையிலே விழவைத்து விடும்.
கூத்தன் :
அப்படிச் சொல். எனது பக்கம் நீ ஒருத்தி யாவது இருக்கிறாயே!
அல்லி : (கோபத்தோடு) வீண் கன வு காண்கிறீர்கள்.
அது ஒருபோதும் நடவாது. இந்த உடல் கலைக்கு அடிமை! உயிரோ முருகனுக்கு அடிமை! இந்த அடிமை வாழ்வே போதும்! வேறு வாழ்வை விரும் பேன். இது உறுதி!
செந் : இருந்துதான் பார்ப்போமே!
கூத்தன் : சரி! சரி! உங்கள் சண்டையை நிறுத்துங் கள். அம்மம்மா! பெண்ணைப் படைத்தாலும் படைத்தான். அவளுக்கு ஒரு நாவையும் படைத்

காட்சி 2
தானே? அதைச் சொல். [பெண்கள் கோபத்தோடு
அவரைப் பார்க்கிறார்கள்.) கூத்தன் : அடடா! தயவு செய்து உங்கள் விழி வேல் களை உறைக்குள் போடுங்கள். எனக்கு ஏன் இந்த வீண் தொல்லை? நல்லது! பாடலின் பொருளைத் தொடரட்டுமா? அல்லி : சொல்லுங்கள். கூத்தன் : என் மனம் அவர் பின்னால் போயிற்றா?
(பெண்கள் சிரிக்கிறார்கள்) கூத்தன் : ஏன் சிரிக்கிறீர்கள்? கயல் : இல்லை! உங்கள் மீசைதான் நரைத்திருக்கிறது
ஆசை ஒன்றும்............ கூத்தன் : ஓ! 'நான்' என்று சொன்னதற்காகவா
இப்படித் துள்ளுகிறீர்கள்?
பெண் : (தலையை ஆட்டிச் சிரிக்கிறார்கள் ) கூத்தன் : அட! நான் அந்தப் பெண் சொல்வதைப் போலச் சொன்னால்...........(பெண்ணைப் போல
அபிநயம் செய்தல்; பெண்கள் சிரித்தல்) கூத்தன் : உஷ்! போதும், இரைச்சல்! நிறுத்துங்கள்.
(பெண்கள் வாய்மூடிச் சிரிக்கிறார்கள்) கூத்தன் : நீங்கள் சிரித்தால் நான் எழுந்து போய்
விடுவேன்! ஆமாம்! அல்லி : மன்னியுங்கள், ஐயா! நாங்கள் இனி மூச்சுக்
கூட விடவில்லை. நீங்கள் சொல்லுங்கள்.
248-3

Page 19
சிங்ககிரிக் காவலன்
கூத்தன்: அப்படி வாருங்கள் வமிக்கு! சும்மாவா?
நான் ஆண் சிங்கமல்லவா? (நரைத்த மீசையை முறுக் கிய படி) கேளுங்கள். யானையின் முதுகிலே உள்ள கயிற்றுத் தழும்பு போன்ற பாதையிலே அவர் வருகிறார். அந்த வழி மழை நீர் நிறைந்து மேடு பள்ளந் தெரியாது கிடக்கிறது. அவரோ அந்தப் பள்ளங்களிலே விழுந்து, எழுந்து வருகிறார். அவ ரது தளர்ந்த காலடிகளைத் தாங்கவே என் நெஞ்
சம் சென் றது.
கயல் : ஐயோ! பாவம்! அந்த நெஞ்சு பஞ்சாய்ப்
பறந்திருக்குமே!
கூத்தன்: சரி! சரி! விளக்கம் போதும்! ஆட்டத்தைக்
தொடங்குவோமா?
பெண். எல்.: நல்லது!
கூத்தன் : எங்கே, கயல்! பாடு.
(தாளத்தைத் தட்டுகிறார். பாடல் ஆரம்பிக்கிறது. நடனம் தொடங்குகிறது)
பாடல்
மன்றுபா டவிந்து மனைமடிந் தன் றே கொன்றோ ரன்ன கொடுமை யோ டின்றே யாமங் கொளவரின் கனை இக் காமம் கடலிலும் உரை இக் கரைபொழி யும்மே எவன்கொல் வாழி! தோழி! மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னோடும் நின்னோடும் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற்

காட்சி 2
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின்
இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே.
(நடனம் முடிகிறது. ஏவலன் வருகிறான்)
ஏவலன் : அம்மா!
அல்லி: என்ன? சொல்.
ஏவலன் : தங்கள் தந்தையார், மகாநாம தேரரோடும்
முகலரோடும், சிலகாலரோடும் நாற்சதுக்கத்திலே வந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு விருந்து தயாரிக்குமாறு தங்களிடம் சொல்லச் சொன்னார்.
அல்லி: மகிழ்ச்சி! நீ போகலாம். (ஏவலன் போகி
றான்]
கூத்தன் : எங்களுக்கு விடைகொடு, அல்லி!
அல்லி : சென்று வாருங்கள் ஐயா!
(செந்தாமரையும் கூத்தனும் போகிறார்கள்) கயற்கண்ணி! நீ சிறிது பொறுத்துப் போகலாமே! கயல் : ஓ! அதற்கென்ன?
[அல்லியும் கயற்கண்ணியும் ஆசனங்களை ஒழுங்கு படுத்துகிறார்கள்).
(திரை)

Page 20
காட்சி 3
[தென்னவன், மகாநாமதேரர், முகலன், சிலகாலன் முதலியோர் உணவுண்டு வந்து ஆசனங்களிலே அமர்ந். திருக்கிறார்கள். அல்லியும், கயற்கண்ணியும் தென்னவ னின் ஆசனத்துக்கு அருகிலே நிற்கிறார்கள்.]
மகாநாமதேரர் : (அல்லியைப் பார்த்துப் புன்முறுவலோடு)
அல்லி! சென்ற ஆண்டு நான் இங்கு வந்தபோது, அரும்பாக இருந்தாய். இன்றோ மலர்ந்து மணம் பரப்புகிறாய். முதலில் எனக்கு அடையாளமே தெரிய வில்லை! போதிமாதவன் அருளால் நீ நலத்தொடு வாழ்க! குழந்தாய்! நீயும், உன் கலையும் நலந்தானே?
அல்லி : தங்கள் கருணையால் நான் நலமாகவே இருக்
கிறேன், அடிகளே!
கயற்கண்ணி : வாணியின் அருளால் அல்லியின் கலை
யும் நலந்தான், அடிகளே!
மகாநாம : (சுட்டுவிரலைக் காட்டி, வியப்புத் தெரிவித்து) நீ .....?
அல்லி : என் தோழி! கயற்கண்ணி!

காட்சி 3
சீலகாலன் : பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது!
ஆனால் விழியிலும் வாய்வீறுதான் உயர்ந்து நிற் கிறது!
(யாவரும் சிரிக்கின்றனர்) (கயற்கண்ணி சிலகாலனை உறுத்து நோக்குகிறாள். அவன் வாயைப் பொத்திக்கொள்வது போலப் பாசாங்கு செய்கிறான்.]
முகலன் ; சீல கால! இது ஈழமல்ல! தமிழ் நாடு! வாலை
ஆட்டாதே. ஒட்ட நறுக்கிவிடுவார்கள்.
தென்னவன் : (குழைந்தபடி) கயற்கண்ணி, நல்ல பெண்!
கோபிக்கவேமாட்டாள். எங்கே? கயல்! சிரி! ஆ! அப்படித்தான்!
கயல் : (நாணத்தோடு) சும்மா போங்கள், மாமா!
(உள்ளே ஓடுகிறாள்)
தென்ன : அம்மா! கயல்! (அழைக்கிறான்)
மகாநாம: வேண்டாம், அவள் அங்கேயே இருக்கட்
டும். எங்களின் அந்தரங்க உரையாடலுக்கு அவள் தடையாக இருப்பாள்.
தென்ன : தங்கள் விருப்பம்!
முகலன் : நல்லது! தென்னவரே! சிகிரியாவின் சிற்ப
வேலை எந்த அளவில் இருக்கிறது? உமது கை வண்ணத்தால்......

Page 21
22
சிங்ககிரிக் காவலன்
சீலகா : சொல்லவேண்டுமா? சிகிரியா தெய்வலோகம்
போலக் காட்சியளிக்கும்! தமிழகத்தின் தவச் சிற்பி
யல்லவா தென்னவர்? தென்ன: (அடக்கத்தோடு) போதும் புகழ்மாலை! மகாநாம : இருக்கட்டும், தென்னவரே! சிகிரியாவின்
நிலை எப்படி இருக்கிறது? எங்கள் கனவு நிறை வேறும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறதா? எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லும்!
முகலன் : (பொறுமையை இழந்து) கனவு! கனவு! கனவு!
ஸ்வாமி! இன்னும் எத்தனை ஆண்டுகள் கனவு காண்பது? காசியப்பனைப் பிடித்துக் கழுத்தைத் திருகி, அவன் செங்குருதியிலே குளிப்பாடும் நாள்,. எந்நாள் என்று ஏங்குகிறேன், நான்! என் மன நிலை தங்களுக்குத் தெரியாதா?
மகாநாம: (சிரித்தபடி) முகல! 'இளங்கன்று பயம் அறி
யாது' என்பதை நீ ஒவ்வொரு கணமும் நிரூபிக் கிறாய். வான் உயர்ந்த சிகிரிக்கோட்டை உன் பிள் ளைமை செறிந்த கண்களுக்கு, வெறும் மணல் வீடாய்த் தோற்றுகிறது! இல்லையா? மீகாரனின் வாள் வலியும், தோள் வலியும், மனவலியும், மூளைத்திறமும் வெறும் பிரமை என்பதுதான் உன் எண்ணம்! இல்லையா? எனது ஆற்றலையும் உனது செல்வத் தையும் திரட்டிக் கடந்த பதினெட்டாண்டுகளாய் நான் முயலும் முயற்சியையெல்லாம் பாழ் செய்து விடுவாய் போல இருக்கிறதே! தென்னவரே! நீர் தான் இவனுக்குப் புத்தி சொல்லவேண்டும்.
தென்ன : இளவரசே! பொறுங்கள்; மாற்றான் வலியும்,
தன்வலியும், சூழ்நிலையும் அறிந்தே போர் என்ற

காட்சி 3
முயற்சியிலே தலைப்படவேண்டும். அதுவே அரச னுக்கு ஏற்ற செயல்! எங்கள் திருக்குறள் கூறும் செந்நெறி அது! அதனை மறந்து செயலில் இறங்கி னோமானால், எல்லாம் கெட்டுவிடும். இன்னும் சில காலத்திற்காவது பொறுமையைக் கடைப்பிடியுங் கள். இப்பொழுதுதான் எமக்குச் சாதகமான சூழ் நிலை சிகிரியாவில் உருவாகிறது.
முகலன் : (ஆவலோடு) எப்படி? சொல்லும்.
தென்ன: அரசியலையே மறந்து வாழும் காசியப்பர் மீது மக்கள் வெறுப்புக்கொள்ளத் தொடங்கிவிட் டார்கள். அவரது மனைவி கருணவதி கூடப் பிக் குணி ஆகிவிட்டாள்.
சீலகா : பிக்குணியா? கருணவதியா? இன்பத்தை எழுத் தெண்ணிக் கற்றவள் அல்லவா அவள்? தண்ணீரே தீயாகித் தரணியையே சுட்டுப் பொசித்தது, என்றால் யார் நம்புவர்? ஆச்சரியந்தான்!
தென்ன : அது மட்டுமா? காசியப்பர்கூடத் தம் செயல்
களுக்காய்க் கசிந்துருகுகிறார், என்று அறிகிறேன்.
மகாநாம : (சிந்தனையோடு) புலி பதுங்குவதும், கொக்கு, கண் மூடி யோகநிலையில் இருப்பதும் நன்மைக் கல்ல. நாம் இனித்தான் கவனமாக இருத்தல் வேண்டும். சிகிரியாவின் சுரங்க வழிகள் இன்னும் மர்மமாகவே உள்ளன! கரையோரக் காவல்கள் இன்னும் அதிகமாகப் பலப்படுத்தப் படுகின்றன வாம்! இதுவா மனமாற்றத்திற்கு அறிகுறி?

Page 22
24
சிங்ககிரிக் காவலன்
முகலன்: சிந்திக்க வேண்டியதுதான்!
மகாநாம: (அவன் தோளிலே தட்டி) அஞ்சாதே. உனது
படைப்பலமும், எனது மூளைப்பலமும் விரைவிலே வெற்றி ஈட்டித் தரும். இருக்கட்டும். இப்பொழுது சிகிரியாச் சுரங்கப் பாதைகள் பற்றி உளவறிவது தான் எங்கள் அடுத்த வேலை.
சிலகா : அதனை என்னிடம் ஒப்படையுங்கள். விரை
வில் எல்லாம் அறிந்து வருகிறேன். எனது மைத் துனன் முகலனுக்காக, எதுவும் செய்யத் தயார்.
மகாநாம : (சிரித்தபடி) நீ மிகவும் அவசரப்படுகிறாய். மீகாரனின் கழுகுக் கண்ணின் திறமையை நீ அறியாய் போலும்! ஈழத்திலே ஊர்ந்து செல்லும் எறும்புகூட உன்னைத் தெரிந்துகொள்ளும் என்றால், உனது வேடம் மீகாரன் முன் கலைவதா பெரிது?
முகலன் • (அலுப்போடு) அப்பொழுது எ ன் ன தா ன்
செய்வது?
மகாநாம : (புன்முறுவலோடு) காசியப்பனின் கோட்டை
யிலே உளவறிவதற்கு ஆண்கள் தகுதியில்லை. பெண் கள் தாம் வேண்டும்! அவன் நெஞ்சம் ஒரு மெழுகுப் பாறை! காரிகையின் கடைவிழிச் சுடரிலே அது உருகி நீராக ஓடும்!
முகலன்: தாங்கள் சொல்வது........?
மகாநாம : முகல! தென்னவரே! சீலகால! கேளுங்கள்.
என் திட்டத்தின் இறுதிக்கட்டம் இது. இ த ன்

காட்சி 3
25
வெற்றியிலேதான் முகலனின் அரியணையும், மணி
முடியும் ஊசலாடுகின்றன.
முகல : விளக்கமாய்ச் சொல்லுங்கள், ஸ்வாமி!
மகா : அம்மா! அல்லி! இப்படி வா, குழந்தாய்!
அல்லி : (அருகில் வந்து) அடிகளே!
மகா : நான் வயதால் முதிர்ந்தவன். உனக்குத் தந்தை
போன்றவன். இன்று நான் உன் காலடியிலே மண்டியிட்டு ஒன்றை இரக்கிறேன், என்று வைத்
துக்கொள். அதை நீ எனக்கு மறுப்பாயா?
(எழுந்து யாசிப்பவர் போல நிற்கிறார். எல்லோரும் திடுக் குற்று நிற்கின்றனர். அல்லி பதற்றத்துடன் அவரின் காலடி யிலே மண்டியிட்டு நின்று)
அல்லி : அடிகளே! தாங்கள் 'பெரியவர்; என்னை இப்
படிச் சோதிக்கலாமா?
மகா : எழுந்திரு குழந்தாய்! எழுந்திரு.
(அல்லி எழுந்து வேண்டுதல் பிரதிபலிக்கும் முகத் தோடு நிற்கிறான்)
மகா : (எங்கோ பார்த்தபடி) முகலன் என் பேரன்; என்
மருமகனின் மகன்! அரியணையிலிருந்து அரசோச்ச வேண்டிய இவன் சூழ்ச்சிக்காரரால் துரத்துண்டு அல்லற்பட்டு, ஆ ற் றா து" அழுத கண்ணீரோடு என்னை அடைக்கலமாய் அடைந்தான். புத்த விகா ரம் ஒன்றிலே புலன்களை அ ட க் கி, உலகைத் துறந்து வாழ்ந்த நான் அவனுக்காக எனது துறவு

Page 23
26
சிங்ககிரிக் காவலன்
வாழ்வையே துறந்தேன். ''மகாவம்சம்'' என்ற வர லாற்று நூலை, எழுதும் முயற்சியையும் கைவிட் டேன். சுருங்கச் சொன்னால் இவனுக்காக எனது இலட்சியங்கள் அனைத்தையுமே துறந்தேன். கடந்த பதினெட்டாண்டுகளாய் இவனைக் காட்டிலும், மேட் டிலும் அலைத்தேன். ஆனால், என் எண்ணம் இன் .
னும் நிறைவேறவில்லை.
(சிறிது மௌனமாக நிற்கிறார்)
படை உண்டு; வலி உண்டு; பக்க பலமும் உண்டு. ஆனால் காசியப்பனின் புற அரணை வெல்ல வழி அறியாது தவிக்கிறேன். இந்தப் புற அரணை வெல்லக் காசியப்பனின் அக அரணை முதலில் வெல்லவேண்டும்.
அந்த வெற்றியின் சின்னங்களை அல்லியின் சுட்டும் விழிச் சுடரிலும், சுந்தரப்புன்னகையிலும் நான் காண்கிறேன்!
தென் : அடிகளே! அல்லி குழந்தை! உலகம் அறி
யாதவள்.
அல்லி: எலியின் தலையிலே மலையை வைக்காதீர்கள்.
மகா : (புன்னகை மலர) அல்லி! உன் வலிமையை நீ
அறியாய்! மண்டலங்களை மண்மேடாக்கும் சக்தி, உன் மதிமுகத்திலே இருக்கிறது. சாம்ராச்சியங் களையே சாம்பராக்கும் ச க் தி உன் விழிகளிலே தூங்குகிறது. காவலரைக் காலடியிலே தவஞ் செய்ய வைக்கும் காந்தசக்தி, உன் மின்னுடலிலே ததும்பி நிற்கிறது!

காட்சி 3
அல்லி: (வெகுளியோடும். வருத்தத்தோடும், படபடப்போடும்)
அடிகளே! என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர் கள். தென்னவரின் வளர்ப்புப் பெண் தான் நான்!" தெருவிலே பிச்சையேற்றுத் தி ரி ந் த பெண்தான் நான்! உங்கள் ஆதரவில் உயிர்வாழும் ஏழைதான் நான்! ஆனால் நான் ஒரு தமிழ்ப்பெண்! ஒழுக்கம் -
எனது உயிர்! தென் : அடிகளே! களப்பிரரால் அலைப்புண்டு எனது
சிற்பச்சாலையை இழ ந் து நின் றேன். அந்த வேளையிலே க ட வு ள் போலவந்து என்னைக் காப்பாற்றினீர்கள்; வாழ்வளித்தீர்கள். இவற்றிற்கு. ஈடாக இவளின் பெண்மை நலங்களையெல்லாம் கேட்பது முறையா?
மகா : (காதுகளைப் பொத்தியபடி) ஐயையோ! தென்ன
வரே! குழந்தாய்! நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.
அல்லியைக் காசியப்பன் என்ற வேங்கையின் காமப்பசிக்கு இரையாக நான் சொல்லவில்லை. "
அவள் தன் நடனக்கலையால் சிகிரிய அரண்மனை யிலே பெயரும் புகழும் பெறல் வேண்டும். அந்தப் பெயரையும், புகழையும் பயன்படுத்தி, அரண்மனை யின் சுரங்க வழிகளை அறிதல் வேண்டும். அவ் வளவுதான்! இதற்கெல்லாம் அவள் என்னிடம் கற் றுக் கொண்ட சிங்களம் நன்கு உதவும்.
அல்லி : (அமைதிப் பெருமூச்சோடு) அப்படியா?
முக : அடேயப்பா! பெரிதாகப் பயந்துவிட்டீர்கள்!
என்றாலும் உங்கள் பண்பிற்குத் தலைவணங்குகி றேன்.

Page 24
28
சிங்ககிரிக் காவலன்
மகா : தென்னவரே! சம்மதந்தானே?
தென் : உங்கள் உப்பில் வாழ்பவர்கள் நாங்கள். தங்
களுக்கு உதவுவது எங்கள் கடமை,
மகா : அல்லி.............?
அல்லி : "நன்றி மறப்பது நன்றன்று ' என்பதிலே
நம்பிக்கை உடையவள் நான்.
முக: மிக்க நன்றி! நாளையே நீ புறப்பட வேண்டும். சிலகாலன் மாறுவேடத்தில் உன்னை மாதோட்டம் வரை அழைத்துச் செல்வான். எப்படியாவது உள வறிந்து வந்துவிடு. உனக்குப் பொன்னாலும், புக மாலும் கோயில் எடுக்கிறேன்.
அல்லி : என் கடமையை நான் செய்வேன். பொன்
னும் புகழும் எனக்குத் துச்சம்!
மகா : நல்லது. பட்டினத்திலே முகாமிட்டிருக்கும்
படைகளைப் பார்த்து வரல் வேண்டும். ஈழத்திலே இருந்து எமக்கு உதவவந்த பன்னிரு பெருங்குடி வீரரும் நம்பிக்கை இழந்து, மனங்களைத்து இருக் கிறார்கள். அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தரல்வேண்டும். நாங்கள் வருகிறோம். நாளைக்காலை யிலே புகார்த்துறைமுகத்திலே, சீலகாலனோடும் தக்க துணையோடும் அல்லியை அனுப்பிவையுங் கள். சரிதானே? வணக்கம்.
(தேரர், முகலன், சிலகாலன் போகிறார்கள்)
அல்+தெ : வணக்கம்!
(கயற்கண்ணி ஓடிவருகிறாள்)

காட்சி 3
கயல் : (படபடப்புடன்) மாமா! அல்லி உங்கள் உரையா
டலை எல்லாம் உள்ளே இருந்து! கேட்டுக்கொண்டு தான் இருந்தேன். இது ஒன் று ம் நன்மைக்குப் போல எனக்குத் தோன்றவில்லை. அவ்வளவுதான் சொல்வேன்.
அல்லி : (நகையரும்ப) 'நம்பினார் கெடுவதில்லை; நான்கு
மறைத் தீர்ப்பு.'
கயல்: அப்படியானால் நானும் உன் னை என் உயிரி
லும் மேலாக நம்புகிறேன். நானும் உன்னோடு வர லாம் அல்லவா?
அல்லி : நீ இல்லாமல் நான் ஏது?
தென் : கயற்கண்ணியும் உன்னுடன் வருகிறாளா?
மிக நன்று (சிறிது யோசிக்கிறார். அல்லியும் கயற்கண்ணி யும் உள்ளே போக அடியெடுத்து வைக்கிறார்கள். ) அல்லி! கயற்கண்ணி! சிறிது பொறுங்கள்.
(இருவரும் திரும்பி வருகிறார்கள். தென்னவன் முருக னின் சிலைக்குக்கீழே உள்ள பீடத்தைத் திறந்து அதனுள்ளே இருந்து இரண்டு ஏடுகளையும், இரண்டு குத்தீட்டிகளைபும் எடுக்கிறான்)
தென் : குழந்தைகளே! நீங்கள் படித்தவர்கள். நன்
றுந் தீதும் உணர்ந்தவர்கள். தலைமுறை பலவாய் மானங்காத்த மரபு உங்கள் மரபு. இதை எந்தச்
சூழ்நிலையிலும் மறந்து விடாதீர்கள்.
அல்லி : (பணிவோடு) தங்கள் சித்தம் தந்தையே!

Page 25
-3ா.
சிங்ககிரிக் காவலன்
தென் : செஞ்சோற்றுக் கடன் கழிக்க நீங்கள் போகி
றீர்கள். நீங்கள் செல்லும் நாடு புதிது; மொழி புதிது; மக்கள் புதியவர். தடைகள் பல குறுக்கிட லாம். சோதனைகள் பல ஏற்படலாம்.
கயல் : காவிரித் தண்ணீரோடு கரையாத உறுதியை
யும் பருகி வளர்ந்தவர்கள் நாம்! முருகனின் அருள் வேறு உள்ளது! அஞ்சாதீர்கள் மாமா! வெற்றியு டன் திரும்புவோம். எங்களை வாழ்த்துங்கள்.
(தலை குனிந்து வணங்கி நிற்கிறார்கள். தென்னவன் திருநீற்றினை எ டு த் து அவர்களின் நெற்றியிலே பூசுகிறான் கண்ணை மூடித் தியானத்தில் ஆழ்கிறான். அல்லியும் கயற்கண்ணியும் பயபக்தியோடு அவன் முன்னால் முருகனை வணங்கி நிற்கிறார்கள்.)
தென் : (திடீரென்று ஆவேசம் வந்வனாய் ) அன்னைமீதாணை!
எங்கள் அருந்தமிழ்மீதாணை! எ ந் தச் சூழலிலும் கற்பையும், பண்பையும் இழந்துவிடாதீர்கள்.
''மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்''.
என்ற பொன்மொழியை மறக்கவேண்டாம். எப்போதாவது அந்நிலை ஏற்பட நேர்ந்தால்..... இதோ..
(இருவருக்கும் இரு குத்தீட்டிகளை அளிக்கிறான். அவர் கள் பணிவோடு அதைப் பெறுகின்றனர்) இவை உங்கள் மானத்தைக் காக்க உதவட்டும். ஒன்றில் எதிரியை அழித்து நீங்கள் வாழுங்கள். அல்லது உங்களை அழித்துக் கண் ணனைய கற்பைக் காப்பாற்றுங்கள்.

காட்சி 3
மன அமைதி வேண்டுமா? இதோ, திருக்குறள் உள்ளது. [இருவர்க்கும் இரு ஏடுகளை அளிக்கிறான்.) இதுவே மன அமைதியின் கொள்கலம்; மாண்பின் பிறப்பிடம்; தமிழின் சிறப்பும், அறமும் குடியே றிய கோயில்.
அல்லி : (திருக்குறளை வாங்கியபடி) நாட்டின் மானத்தைக்
காப்போம்; நிலையான பெரும் புகழை உரிமை கொள்வோம். கற்பும், பண்பும் எம் இரு கண்கள்!
தந்தையே! திருப்திதானே?
தென் : (அமைதியாகப் பெருமூச்சுவிட்டு) இப்பொழுதுதான்
என் நெஞ்சிலே அமைதி பிறந்தது.
(திரை)
0 0

Page 26
காட்சி 4
[சிகிரியா அரண்மனையிலே ஒரு தனி இடம். காசி யப்பன் ஓர் ஆசனத்திலே அமர்ந்திருக்கிறான். கயற் கண்ணி வீணை வாசித்துப் பாட அல்லி ஆடுகிறாள்.]
(ஆடல் முடிகிறது)
காசியப்பன் : ஆஹா! தெய்வீக நடனம்! நடனக்கலையே உனது கைவிரல்களின் முத்திரையிலும், கால்களின் ஐதியிலும் அடைக்கலம் புகுந்துவிட்டது, போலும்!
அல்லி : (அடக்கமாய்க் குனிந்து நின்று) இது என் தகு.
திக்கு மேற்பட்ட புகழ்மாலை, அரசே!
காசியப்: அல்ல, அல்ல! இசையிலே ஒன்றி, அபிநயத் திலே உணர்ச்சிகளை எல்லாம் சிறை செய்து நீ ஆடியபொழுது என்னையே மறந்துவிட்டேன். வான வெளியிலே உடலின் பாரத்தை இழந்து, மெல்லிய சிறகை விரித்துப் பறக்கும் சிட்டுக்குருவி போல நான் ஆகிவிட்டேன். எனது உள்ள மே நாத வெள் ளமாகப் பெருகி ஓடுவது போலவும், இந்த உடல் உன் அபிநயத்திலே உருகிச் செயல் இழப்பது
போலவும், உணர்ந்தேன்.

காட்சி 4
33
அல்லி : (மெய்ம்மறந்து) ஆஹா! கலை நுணுக்கங்களை எல் லாம் துறைபோகக் கற்றிருக்கிறீர்கள். தங்கள் முன்னால் ஆடக் கிடைத்தது என் பேறுதான்! தங்க ளோடு பழகிய இந்த ஒரு திங்களிலே, கலையின் பெருமையை முற்ற உணர்ந்துவிட்டேன், அரசே!
காசியப் : அப்படியெல்லாம் என்னைப் புகழாதே! நான்
சாதாரண ரசிகன்! அவ்வளவுதான்.................. இருக் கட்டும், அல்லி! உன்னிடம் தனிமையிலே ஒரு. விஷயம் கேட்கவேண்டுமே?
அல்லி : ஓ! நன்றாய்க் கேட்கலாமே! காசியப் : கயற்கண்ணி! நீ........?
கயல் : நான் வெளியே இருக்கிறேன், அரசே!
(வெளியே போகிறாள். காசியப்பன் சிந்தனையோடு அங்கும், இங்கும் நடக்கிறான். வீணையின் அருகிலே போய், வீணை நரம் புகளைத் தட்டி அதன் ஓசையிலே ஈடுபடுபவன் போலப் பாசாங்கு செய்கிறான். திடீரென்று அவன் முகத்திலே சோகம் கவிகிறது; பெருமூச்சு விடுகிறான்.)
அல்லி : (வியப்போடு அவனை நோக்கி) அரசே! நானும்
கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். தங்கள் முன்னிலையிலே முதன்முதல் நடனம் ஆடி னேனே? அன்றிலிருந்து என்னிடம் எதையோ கேட்க முயல் கிறீர்கள். பின் தயங்குகிறீர்கள்! ஏன் இந்தத் தயக்கம்?
காசியப் : (மீண்டும் பெருமூச்சு விடுகிறான்) அல்லி! அதோ
அந்தச் சித்திரத்தைப் பார்த்தாயா? மலையின் உச் 248-4

Page 27
34
சிங்ககிரிக் காவலன்
* சியிலே ஒரு தனிமரம் ; அதிலே ஒரு தேன்கூடு. அந்தத் தேனைப்பெற ஏங்கிக்கொண்டு பள்ளத்தாக்
கிலே ஒரு முடவன்! அல்லி: (தயக்கத்துடன் அதைச்சுட்டிக்காட்டி) அது.............?
காசியப் : அந்தச் சித்திரம் நான் வரைந்ததுதான். நீ
இந்த அரண்மனையின் நடனமங்கையான மூன்றா வது நாள், வரைந்தேன்.
அல்லி : அரசே! எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
காசியப் : விளங்கவில்லையா? அல்லி! அன்பு என்ற கால்
களை இழந்து நிற்கும் அந்த முடவன் தான் நான் .. மலையின் உச்சியிலே அந்தத் தனிமரத்தின் உச்சிக் கொம்பரிலே, உள்ள தேன் கூடுதான் நீ!
அல்லி : (வெகுளியுடன்) அரசே!
காசியப் : (மன்றாடும் குரலிலே) அல்லி! சிறிது பொறுமை
யாக இரு. நான் சொல்வதைக் கேள்.
அல்லி : (ஏளன நகையோடு) ஓகோ! தங்கள் வேஷம்,
இப்பொழுது தான் வெளியாகிறது! அரசே! புகழ் மொழியால் துதிபாடி, என்னைத் தங்கள் அடிமை யாக்க எண்ணினால், அதை இப்பொழுதே மறந்து விடுங்கள்.
காசியப் : அப்படியெல்லாம் எண்ணாதே! உடலைக் காமுற்று உலுத்தனாய் அலைந்த காசியப்பன் அல்ல நான். இன்று நான் புதுமனிதன்! உன் கலையை, கனிமொழியை, இவை அனைத்திலும் மேலாக உன் உள்ளத்தை நான் விரும்புகிறேன்.

காட்சி 4
அல்லி : இதனை நான் நம்ப வேண்டும்!
காசியப் : அல்லி! என்னை நம்பு. புனிதமான உனது
உடலைத் தீண்டி அதனை மாசுபடுத்துவேன் என்று, அஞ்சாதே! எனது உள்ளத்தில் உன்னைத் தெய்வ மாக ஏற்றி வைப்பேன். உன் கடைவிழிப் பார்வை யிலே எனது துன்பங்களை எல்லாம் கரைத்து விடு வேன். நான் வேண்டுவது உனது அன்பு!
அல்லி : அன்பு என்ன அங்காடிப் பொருளா, கேட்
டவுடன் கிடைப்பதற்கு?
காசியப் : (கண்ணீர் தயங்க) அல்லி! ஏ ள ன ம் செய்
யாதே. புண்பட்ட என் நெஞ்சிலே வேலைப்பாய்ச் சாதே. என்னை இன்னுமா நீ புரிந்து கொள்ள வில்லை?
அல்லி : போதும், அரசே! போதும்! தங்கள் கொடு
மைகளை எல்லாம் மறந்து, தங்கள் கலை ஆர்வம் ஒன்றையே நம்பி இந்த அரண்மனைக்கு வந்தேன், ஆடினேன்; மகிழ்ந்தீர்கள்! அரண்மனையின் தலைமை நடனகாரியும் ஆக்கினீர்கள். இவற்றின் பின்னணி யிலே சூழ்ச்சி ஒன்று பதுங்கியிருக்கும் என்று நான் நம்பவே இல்லை!
காசியப் : (வியப்போடு) சூழ்ச்சியா?
அல்லி: ஆம்! சூழ்ச்சிதான்! அன்பு என்ற பெயரைச் சொல்லி என் கற்புக்குக் கண்ணிவைக்கிறீர்கள். அலங்காரப் பேச்சால் உண்மைக்குத் திரையிட்டு என் வாழ்வைக் கசக்கி முகரப்பார்க்கிறீர்கள்.

Page 28
36
சிங்ககிரிக் காவலன்
காசியப் : (வேதனையோடு) அல்லி! அல்லி: இதற்குத்தானா தயங்குவதுபோல நடித்தீர்கள்? காசியப் : (உரத்த குரலில்) அல்லி! அல்லி : அவையிலே ஆடவேண்டாம் என்று நிறுத்
தித் தனியிடத்திலே ஆட வைத்ததும் இதற்குத்
தானா? காசியப் : (வெகுளியோடு உரத்த குரலில்) அல்லி!..
நிறுத்து. நான் மாத்திரம் பழைய காசியப்பனாக
இருந்தால்.............? அல்லி; (சிரித்தபடி) எதிர்த்துப் பேசும் என் நாவை
அறுத்திருப்பீர்கள்! அவ்வளவுதானே? காசியப் : அல்ல! நீ என் கீழ்ச் சேவை செய்பவள் ? உன்னைப் பலவந்தமாக எனது உடற்பசிக்கு இரை யாக்கியிருப்பேன். அந்தக் கீழ் நி லை என்றோ 'இல்லை' என்று ஆகிவிட்டது! கு டி க் க மதுவும், குலாவ மங்கையரும் என்று வாழ்ந்த காசியப்பன் செத்துவிட்டான்!
அல்லி : சுடலை ஞானத்திலே எனக்கு நம்பிக்கை
இல்லை!
காசியப் : (வேதனையோடு) சுடலைஞானம் அல்ல! வெந்து
கருகிய உள்ளத்தின் வேதனைக்குரல்! அல்லி! சூழ வர அன்பின் வாடையே வீசப்பெறாது, தொழுத கையுள்ளும் படையொடுக்கும் பாதகரிடையே நான் வாழ்கிறேன். என் கருணவதிகூட என்னைத் துறந்துவிட்டாள். நான் அநாதை! எனக்கு யாரும் இல்லை! நீயும் என்னை வெறுத்தால் நான் என்ன செய்வேன்?

காட்சி 4
அல்லி : (வேதனையோடு) அரசே! மனதிற்கும், வாக் கிற்கும் தொடர்பின்றி வாழவேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னை மன்னித்து மறந்துவிடுங்
கள். நான் தங்கள் எதிரி. காசியப் : அல்லி! உ ன து கையால் சாவே வரினும்
அதைத் திறந்த கைகளோடு வரவேற்பேன். அல்லி : (கதறுகிறாள்) அரசே! எ ன து குறிக்கோளை
முறியடிக்காதீர்கள். என் கடமையிலிருந்து நான் தவற வழி செய்யாதீர்கள்.
காசியப் : அல்லி! நீ என்ன சொல்கிறாய்?
அல்லி : ( விம்மல் பொருமலுடன் ) உங்களில் எனக்கு
அன்பு இல்லை! உங்களை நான் வெறுக்கிறேன்! நஞ்சிலும் கொடியவராக வெறுக்கிறேன்!
காசியப் : உண்மையாகவா, அல்லி!
அல்லி : '(அவனைப் பார்த்தபடி) ஓ! ஏன் என்னைச் சித்திர
வதை செய்கிறீர்கள்? தங்கள் காதலை
- என் னால் ஏ ற் க முடியாது; முடியாது; முடியாது!
போதுமா? (விம்மி, விம்மி அழுகிறாள்). காசியப் : உன் உள்ளம் ஒன்று சொல்கிறது. நாவோ
வேறொன்று! உரைக்கிறது. அல்லி! உன்னை நான் புரிந்து கொண்டேன்.
(அல்லியின் அருகிலே செல்கிறான். அவள் கையைப் பற்றுகிறான். அல்லி குத்தீட்டியை உருவுகிறாள். அது தற்செயலா கக் காசிபப்பன் கையைக்கீற உதிரம் வழிகிறது. அல்லி பதற்றத் துடன் அவன் கையைப் பற்றச் சென்றவள், பின் மனம் மாறி விலகி நிற்கிறாள். காசியப்பன் அலட்சியமாகச் சிரிக் கிறான்)

Page 29
38
சிங்வு, கிரிக் காவலன்
காசியப் : இந்தக் குருதியின் * ஒவ்வொரு துளியும் பவழமணியாக மாறி, அதனால் ஒரு மாலையைக்
கோத்து உனக்கு அணிந்தால் எப்படி இருக்கும்? அல்லி : (வெகுளியுடன் கத்துகிறாள்) இவ்விடத்தை விட்டுப்
போகப்போகிறீர்களா, இல்லையா? காசியப் : (சிரித்தபடி) போகிறேன் அல்லி! போகிறேன்.
ஆனால் போவதற்கு முன் ஒன்று சொல்கிறேன், ஒரு நாள் வரும்; அன்று முழுமனத்துடன் நீ,
என்னை நேசிப்பாய். இது உறுதி. அல்லி : அதுதான் நடவாது. வீணில் ஏமாறாதீர்கள்! காசியப் : (வேதனையோடு) நான் கிழவன்! நாற்பத்தேழு
வயதைக் கடந்தவன். என் தலை நரைத்துவிட்டது. கடந்த கால வாழ்க்கையால் நோயின் பிறப்பிட மாகிவிட்டேன். உனக்குக் காணிக்கை தர, என் னிடம் என் அன்பைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. தெய்வத்திற்கு மலர் சாத்துவதுபோல், என் நெஞ்
சையே கொய்து உன் முன்பு வைத்தால்.......? அல்லி : (முகத்தைப் பொத்திக்கொண்டு விம்மி வெடித்தபடி)
போங்கள் இவ்விடத்தை விட்டு.......! (காசியப்பன் சிறிது தயங்கிப் பின் அவ்விடத்தை விட்டுப் போகி றான். அல்லி விம்மி, விம்மி அழுகிறாள். அப்பொழுது கயற்கண்ணி வருகிறாள்.] அல்லி : (கயற்கண்ணியைத் தழுவிக்கொண்டு)
நான் குற்றவாளியா? உண்ட வீட்டிற்கு இரண் டகம் செய்துவிடுவேனா? எனது உணர்ச்சிகளுக்கு நான் அடிமையாகி விடுவேனா? சொல், கயற் கண்ணி! சொல். (கயற்கண்ணி மெளனமாக அல்லியின் கூந்தலை நீவுகிறாள்.
(திரை)

0 da •
காட்சி 5
(நிலாமுற்றம். வெளியே காற்றுச் சுழன்றடிக்கிறது. மெல்லிய திரை ஆடி அசைகிறது. விளக்கு ஒன்றிலே சுடர் துடிக்கிறது. அல்லி கூந்தல் அவிழ்ந்து தொங்க வீணையிலே இசை எழுப்புகிறாள். கண்களிலே நீர் மடை திறக்கிறது.
வேதனை கூடுகிறது; வீணையின் இசையும் விரைவை அடைகிறது. நெஞ்சைக் கசக்கிப் பிழிகின்ற இசை!
அல்லிக்குப் பின்னால் யக்ஷன் மேகத்தைத் தூதாக அனுப்பும் காட்சி (காளிதாசனின் மேகதூதம்) ஓவிய மாக எழுதப்பட்டிருக்கிறது. அந்தச் . சித்திரத்திலும், அல்லியின் முகத்திலும் துடிக்கின்ற தீபச்சுடர் அடிக் கடி கண்ணாமூச்சி விளையாடுகிறது.
இசையின் வேகத்தைத் தாங்காதது போலத் திடீ ரென்று வீணையின் நரம்பு ஒன்று, அறுந்து இசையை வசையாக்கி வதைக்கிறது.
அல்லி விம்மியபடியே வீணையில் சாய்கிறாள். சிறிது பொழுதில் தலையை உயர்த்தி, வேதனை புகாரிடும் முகத் தோடு பாடுகிறாள்.]

Page 30
40
சிங்ககிரிக் காவலன் -
பாடல்
இராகம் : சுகபந்துவராளி யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் உந்தையும் எவ்வழிக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.
அல்லி : (விம்மி, விம்மிப் புலன்கள் எல்லாம் நைந்து நடுங்க)
'அன்புடை....... நெஞ்சந் ....... தாங்கலந்...தன வே.' (மீண்டும் வீணையில் சாய்கிறாள்.) (கயற்கண்ணி வருகிறள். அல்லியின் நிலை கண்டு அதிர்ச்சி அடைகிறள். அவளின் அருகிலே சென்று)
கயல் : அல்லி! அல்லி! (அவளின் முகத்தைத் தூக்குகிறாள்.
அல்லி கண்ணை மூடியபடி மாலை மாலையாய்க் கண்ணீர் சொரிய இருக்கிறாள். கயற்கண்ணி அவளின் நாடியைத் தாங்கியபடி) என்ன இது? உன் கண்களிலே கண்ணீர்!
அல்லி : கண்ணீர் அல்ல! செந்நீர்! என் நெஞ்சு கீறப்
பட்டு அதிலிருந்து பெருகி ஓடும் குருதி!
கயல் : (நாடியைத் தாங்கியபடி) அல்லி! 'நிமிர்ந்த நன்
னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செருக்கு' என்ற இத்தனைக்கும் - உடையவளாய் வாழ்ந்தவள் நீ! இன்று மன உறுதி தளர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுகிறாயே? உனக்கு என்ன
நேர்ந்துவிட்டது?
அல்லி : நேரக்கூடாதது - நேர்ந்துவிட்டது, தோழி!
நடக்கக்கூடாதது நடந்துவிட்டது!

காட்சி 5
கயல் : (கேள்வியை முகத்திலே எழுப்பி அல்லியைப் பார்க்கிறாள்.)
அல்லி : கயல்! நான் சில கேள்விகள் கேட்கிறேன்.
பதில் சொல்வாயா? கயல் : முயல்கிறேன்.
அல்லி : சூழவரக் கோடையின் வெம்மை! கொடிய வன் நெஞ்சம் போல வரண்ட பாலைப்பெருவெளி. அதன் நடுவிலே நீ நிற்கிறாய். உன் கையிலே, ஒரு கலசத்திலே சிறிது நீர் வைத்திருக்கிறாய். உனக்கு முன்னால் காலும், கையும் இழந்து நகரவே முடியாத ஒரு முடவன் தாகத்தால் தவித்துக் கொண்டிருக் கிறான். அப்பொழுது நீ என்ன செய்வாய்? நெடுந் தொலை நடக்கவேண்டும்; போகும் இடத்திலோ நீர் கிடைப்பது அரிது! இந்த நிலையிலே நீரைக் கொண்டு செல்வாயா? முடவனின் தாகத்தைத் தணிப்பாயா?
கயல் : (உறுதியோடு) போகும் வழியிலே ஒரு துளி தண்ணீர் கூடக் கிடைக்காதென்றாலும், அந்த முடவனின் தாகத்தைத் தணிப்பதையே என் கடமை யாகக் கொள்வேன். கண்களுக்கு எழில் தருவது, நெஞ்சிற்கு அணியாய் அமைவது, இரக்கந்தானே?
-அல்லி : நன்று. உன் வீட்டு வாயிலிலே விளக்
கொன்றை ஏந்தி நிற்கிறாய். நடுயாம நேரத்திலே ஒரு வழிப்போக்கன் இருளிலே வழிதடவி வருகி றான். "'பெண்ணே! மையிருளில் வழி தெரியவில்லை. நானோ நெடுவழி நடக்கவேண்டும். உன் கையில் உள்ள விளக்கைத் தா'' என்று அவன் இரக்கிறான். விளக்கைக் கொடுத்தால் நீ இருளிலேயே கிடக்க நேரிடும்! இந்த நிலையிலே நீ என்ன செய்வாய்?

Page 31
42
சிங்ககிரிக் காவலன்
கயல் : நானோ பாதுகாப்பாக வீட்டிலே இருக்கிறேன்.
அவனோ நெடுவழி நடக்க வேண்டும். ஆதலால் அவனுக்குத்தான் விளக்குத் தேவை! தயங்காமல் கொடுத்து நான் இருளிலே இருப்பேன்.
அல்லி : மிக நன்று! இன்னும் ஒரே ஒரு கேள்வி.
கயல் : கேள்.'
அல்லி : வேடனின் அம்பு - பட்டுக் குருதி வழிய ஒரு
புறா வருகிறது. அதை ஒரு வேடன் துர்த்தி வரு கிறான்; புறாவிற்குப் பதில் உன் தசையைக் கேட்
கிறான்......
கயல் : (சிரித்தபடி) சிபியின் கதையா?
அல்லி : சிபியின் கதையாகவே இருக்கட்டும். நீ
அந்தச் சிபியின் நிலையிலே இருந்தால் என்ன செய்வாய்?
கயல் : (பெருமையோடு) 'சிபியைப் போலவே செய்திருப்
பேன். தண்ணளியும், அன்பும் சிபிக்கு மட்டும் உரிய பண்புகள் அல்லவே! அவை தமிழரின் வழி" வழிவந்த பெருநிதிகள் அல்லவா? நான் ஒரு தமிழ்ப் பெண் என்ற உணர்வு உள்ளவரை, பெண்மையைப் பேணிவளர்த்த பெருங்குலத்தின் வழிவந்தவள் என்ற பெருமை உள்ளவரை நான் ஒரு சிபியாக, மனுநெறி கண்ட சோழனாகத்தான் நடந்து கொள் வேன்.
அல்லி : (கயற்கண்ணியை அணைத்துக் கொண்டு) என் அரு
மைக் கயல்! நான் உன் தோழி! என்னிடமும்

காட்சி 5
அந்தப் பண்பு இருக்கும் என்று நீ எதிர்பார்ப்பாய் அல்லவா?
கயல் • நல்ல கேள்வி! இத்தனையும் நான் உன்னிடம்
கற்றவைதாமே? நீதான் ஒளி! நான் வெறும் நிழல்!
அல்லி : (தளதளத்த குரலில்) நீ பெருமைப்படும் ஒளி
யாக வாழ முடியாது போல இருக்கிறது.
கயல் : (அதிர்ச்சியோடு) ஏன்?
அல்லி : இரக்கத்திற்கும் கடமைக்கும் இடையே என் உள்ளமும், உயிரும் ஊசலாடுகின்றன. வாழ்விற் கும் சாவிற்கும் இடையே தொங்கிக்கொண்டிருக் கிறேன்.
'”கும் இன சலாடுகின் இடையே எ.
கயல் : எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!
அல்லி : (ஏக்கத்தோடு) பாலை வெளியிலே முடவனுக்கு
நீர் அளிப்பதா? அல்லது கலசத்தைக் கொண்டு செல்வதா? வழிப்போக்கனுக்கு வி ள க் கி னை க் கொடுப்பதா? அல்லது அவனை இருளிலே அலைய விடுவதா? புறாவைக் காப்பதா? வேடனிடம் கைய ளிப்பதா? இவை விடுவிக்க முடியாத புதிர்களாகி என் நெஞ்சை வதைக்கின்றன!
கயல் : தண்ணீருக்குத் தயங்கும் அந்த முடவன் யார்?
வழிதடவி அலையும் அந்த வழிப்போக்கன் எங்கிருக் கிறான்? உயிருக்காய்த் துடிக்கும் அந்தப் புறாவை
நீ எங்குக் கண்டாய்?

Page 32
சிங்ககிரிக் காவலன்
அல்லி : இந்த அரண்மனையின் நெடிய சுவர்களிடை யேதான் துன்பப்பாலையிலே துவள்கின்ற முடவன் வாழ்கிறான். பகைமை என்ற இருளிடையே வழி தடவும் வழிப்போக்கனும் இங்குத்தான் உள்ளான்! காலதேவனால் துரத்துண்டு நெஞ்சில் குருதி கொட் டப் பறந்து வந்த புறாவும் இங்கேதான் இருக்கிறது!
கயல் : விளக்கமாய்த்தான் சொல்லேன்.
அல்லி : சுருக்கமாகவே சொல்கிறேன். இந்தத் துன்
பத்திற்கெல்லாம் உரியவர் காசியப்பர் தாம்!
கயல் : நீ என்ன சொல்கிறாய்?
அல்லி : அன்று உன்னை வெளியே அனுப்பிவிட்டு, அவர் தமது இதயத்தையே திறந்து காட்டினார்! அந்த வேளையிலே என் மனக்கண்களிலே காசியப் பர் தோன்றவில்லை. புயலிடையே சிக்கித் தத்தளிக் கும், ஒரு சிறு துரும்பு, மலையின் நுனியிலே அந் தரத்திலே தொங்கிக்கொண்டு துடிக்கும் ஒரு சிறு புழுத்தான் தோற்றின!..
கயல் : உன் நினைவாகத்தான் பேசுகிறாயா, அல்லி!
அல்லி : நான் நானாக என்னில் நின்றுதான் பேசு கிறேன். இன்னும் கேள். அவர் எனது அன்புக் காக ஏங்கி மன்றாடிய பொழுது எனது நெஞ்சே உருகி ஓடத் தொடங்கிவிட்டது! ஆனால் கடமையை முன் நிறுத்தி, வார்த்தைகள் என்ற பாணங்களை அவர்மீது தொடுத்தேன்; எனது குத்தீட்டியால் அவ ரைக் காயப்படுத்தினேன். குருதி வழியும் கையோ டும், குமுறிப்புயல் வீசும் நெஞ்சோடும் அவர்

காட்சி 5
45.
சென்றபொழுது எனது கொடுமையே என்னைக் கூசிக் குன்றவைத்து வருத்தியது! நான் என்ன செய்வேன்?
கயல் : (கோபச் சிரிப்போடு) சரிதான்! எங்கள் நடன ஆசி ரியர் சொன்ன அந்த நாள் வந்துவிட்டது போலும்! என்னையும், உன்னையும் கேளாது உனது உள்ளம் காசியப்பரைத் தாங்கச் சென்றுவிட்டது போலும்!
அல்லி : (தலைகுனிந்து உடல்சோர, உயிர் சோர, உள்ளஞ்சோர
நிற்கிறாள்.)
கயல் : (கோபத்தோடு) அல்லி! 'நன்றி மறப்பது நன்
றன்று' என்பது உனக்குப் புதுப்பாடமல்ல! களப் பிரரால் அலைப்புண்டு நீயும் உன் தந்தையும் தெரு விலே நின்றபோது, உங்களுக்கு உதவியவர் மகா நாம தேரர்! அவரின் செஞ்சோற்றுக் கடன் கழிக் கவே நீயும் நானும் இங்கு வந்திருக்கிறோம். இவற்றை மறப்பது தீது மட்டுமல்ல; கொடிய பாவ
முங் கூடத்தான்! தெரிந்துகொள்.
அல்லி : (கதறியபடி) கயல்! என்னைச் சித்திரவதை செய்
யாதே; என்னைக் கொல்லாதே; என் மன அமைதி யைக் குலையாதே!
கயல் : (கோபத்துடன்) தூ...! உனக்கும் ஒரு மனம்!
அதற்கும் ஓர் அமைதி! கொடியவளே! இந்தக் காசி யப்பருக்கா இரங்குவது? அவர் கொலைஞர்! தந்தை யையே உயிரோடு சமாதி செய்த சண்டாளர்! காமுகர்! மதுவிலே மதிமயங்கி மக்களின் வாழ்
வையே பகடையாடும் மதி கெட்டவர்!

Page 33
46
சிங்ககிரிக் காவலன்
அல்லி : (வெகுளியுடன்) கயல்! (கயலின் கன்னத்திலே
அறைகிறாள்.)
கயல் : (அதிர்ச்சியோடு) அல்லி! (கண்ணீர் மல்க) அல்லி!
(அழுதபடி) அல்லி!
(போகிறள்)
அல்லி : கயல்! கயல்! என்னை மன்னித்துவிடு கயல்! - (கயலின் பின்னால் தொடர்ந்து செல்கிறாள். அவளோ திரும் பியும் பாராமல் செல்கிறாள். அல்லி, 'கயல்! கயல்!' என்று கதறித் தன் முகத்திலே அறைந்து கொள்கிறாள். அந்த வேளையிலே உள் நுழைந்த காசியப்பன் பதற்றத்துடன் அல் லியின் கரங்களைப்பற்றி) ............ அல்லி!
அல்லி : (திரும்பிக் கோபத்தோடு) நீங்களா? ஏன் இங்கு
வந்தீர்கள்?
காசியப் : என்னைத்தான் கேட்கிறாயா?
அல்லி : பின் யாரை? அரசே! இது தங்கள் அரண்
மனையாக இருக்கலாம்! ஆனால் ஒரு பெண்ணின் தனியிடத்திலே அகால வேளையில் நுழைவது அழ கன்று! தங்கள் பண்பு இவ்வளவுதானா?
காசியப் : உண்மையாகவே நீ என்னைக் கோபிக்கி
றாயா?
அல்லி : தாங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்!
காசியப் : அல்லி! உனது அன்பு என்ற நெருப்பிலே
வெந்து மடிவதைக்கூட என் பாக்கியமாகவே கருதுகிறேன்!

காட்சி 5
47
அல்லி : நான் வெறும் நெருப்பல்ல, வேந்தே! சொல்
லும் நாவையும், நினைக்கும் நெஞ்சையும் சுட்டெ ரிக்கவல்ல ஊழித்தீ! வீணில் அழியாதீர்கள்; போய் விடுங்கள்!
காசி : (ஏகத்துடன்) உன்னை என் அன்பிற்கு உரியவள்
என்று நினைக்கின்ற அந்த ஒருகண நேர இன்பத் திற்கு, எனது பாசத்தையெல்லாம் நாவிலே தேக்கி ''அல்லி'' என்று உன்னை அழைக்கின்ற அ ந் த இன்பத்திற்கு, கேவலம் இந்த உடலையும், உயிரை யும் ஈடுதருவதுதான் பெரிதா?
'அல்லி : (தலையில் அடித்தபடி) ஐயோ! என்னை விட்டுப்
போகிறீர்களா, இல்லையா?
காசியப் : (வருத்தத்தோடு) போகிறேன் அல்லி! போகி
றேன். என்னைக் காண்பதே உனக்கு வெறுப்பைத் தருமானால், என் பேச்சுக்கள் உனக்கு நஞ்சுபோல் வேதனை தருமானால், நான் போய்விடுகிறேன்!
(போகிறான்)
அல்லி : (கோபம் மறைய அன்பும், வேதனையும் போட்டியிட ஓடிச்சென்று அவன் காலடியில் வீழ்ந்து) என்னை மன் னித்து விடுங்கள். எனது நாவை உள்ளம் வென்று விட்டது. தங்கள் தூய அன்பிற்கு அடிமையாகி விட்டேன்.
காசி : (மிகுந்த மகிழ்ச்சியோடு அவளைத் தூக்கியபடி) அல்லி!
அல்லி! (பின் அஞ்சி அவளிலிருந்த த ன து கரங்களை எடுத்து) வேண்டாம்! உன்னை நான் தீண்டக்கூடாது. பாவச்சுமை படிந்த இந்த உடலின் ஸ்பரிசத்தால்

Page 34
48
சிங்ககிரிக் காவலன்
நீ தொட்டாற் சுருங்கி ஆகிவிடுவாய். புயலிலே அகப்பட்ட பூங்கொடியாய்ச் சிதைந்து போவாய்.
அல்லி : (நடுக்கத்தோடு அவனது வாயைப் பொத்தி) வேண்
டாம். அப்படிச் சொல்லாதீர்கள். உலகம் முழு வதுமே திரண்டு தங்களைக் கொடியவர் எ ன் று தூற்றினாலும், எனது நெஞ்சும், நினைவும் உதடுக ளும், தாங்கள் ''உத்தமர் உத்தமர்'' என்றே ஓல மிடும். நான், நான் அல்ல! நான் தாங்களாகி விட் டேன். தங்களுடன் இரண்டறக் கலந்துவிட்டேன்..
காசியப் : (அளவு கடந்த மகிழ்ச்சியோடு) அல்லி! இந்த.
மகிழ்ச்சியை என்னால் தாங்கவேகூடவில்லை.
அல்லி : என்னாலும் கூடத்தான்! இந்த மகிழ்ச்சியை?
எல்லாம் ஒன்று திரட்டி, என் உள்ளத்து உணர்வை எல்லாம் ஒன்று கூட்டித் தங்கள் முன் ஆடப் போகிறேன்.
காசியப் : ஆடு! ஆடு! இறந்தகாலத்தையும், எதிர் காலத்தையும் மறந்து, நீ ஆடுகின்ற அந்த நிகழ் காலம் ஒன்றையே நம்பி, அந்த மகிழ்ச்சி அநுப" வத்தையே சிரஞ்சீவியாக்கி என் நெஞ்சுக்குள்ளே புதைத்துக் கொள்கிறேன், ஆடு.
அல்லி: (ஆனந்தமாகப் பாடி ஆடுகிறாள்)

காட்சி 5
49
பாடல்
இராகம் : கல்யாணி
தாளம் : ரூபகம்
பஞ்சிலே பொதிந்த வானில்
எஞ்சலில் ஒளி விளங்க வஞ்சிபோல் ஒசிந்து வந்த வெண்மதி! காதல்
கொஞ்சு வாழ்வு கோடிகண்ட தண்மதி! (பஞ்சிலே) கொஞ்சும் அஞ்சுகங்கள் போல
அஞ்சொல் பேசும் மங்கைமார்கள். வஞ்ச முற்றுக் கொடுமை செய்தல் சாலுமே?-நல்ல
கஞ்ச மலரில் நஞ்சுவைகல் போலுமே! (பஞ்சிலே) வஞ்சி எந்தன் நஞ்சு விழியில்
எஞ்ச லற்ற அன்பை வைத்துக் கொஞ்சு மிந்த அரசர் உண்மை அறிவரோ? பின்னும்
தஞ்ச மளித்துத் தீமைதன்னை மறப்பரோ ?(பஞ்சிலே) தஞ்ச மென்று வந்தடைந்து
நெஞ்சகத்தில் என்னை வைத்துக் கொஞ்சுகின்ற அரசருக்கு விண்மதி!- நானும்
கொஞ்ச மேனும் தகுதியற்றேன் தண்மதி!
(மிக மெதுவாக அழுகையால் தளதளத்த குரலில்) கொஞ்ச மேனுந் தகுதியற்றேன் தண்மதி!
(பின்பு வேகமும் வெறியுங் கொண்டவளாய்) பஞ்சிலே 'பொதிந்த வானில்
(என்ற பாடற்பகுதியை விரைவாகப் பாடிச் சுழன்று சுழன்று ஆடுகிறாள்.)
காசியப் : (அவளின் வேகத்தைக் கண்டு அலறுகிறான்)
அல்லி! அல்லி! அல்லி!
248-5

Page 35
50 -
சிங்ககிரிக் காவலன்
(அல்லி இடையிலிருந்த குத்தீட்டியை உருவித் தன் னையே குத்திக் கொண்டு சரிகிறாள். காசியப்பன் ஓடிச் சென்று அவளைத் தாங்கித் தன் மடியிலே கிடத்திக் கொள் கிறான்)
காசியப் : அல்லி! ஏன் இந்தக் கொடுமை செய்தாய்?
என் இதயமே சுக்கு நூறாக வெடித்துத் துகள் துகளாகப் பறக்கிறது. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை!
அல்லி : (மிக மெல்லிய குரலில் முனகியபடி) அரசே! தங்கள்
வாழ்விற்காகத்தான் நான் சாவை அரவணைக்கி றேன். நான் உயிரோடு இருந்தால், துரோகியாக மாறித் தங்கள் ....... உயிரையே கவர்ந்திருப்பேன்.
காசியப்: (அவளின் வாயைப் பொத்தி) அல்லி!
அல்லி : (வாயிலிருந்து கையை எடுத்தபடி) அரசே! நான்
தங்கள் சகோதரர் முகலரின் கையாள்; மகா நாம தேரரால் உளவறிய அனுப்பப்பட்டவள்!
காசியப் : (அதிர்ச்சியோடு) என்ன?
அல்லி : (நோவால் துடித்தபடி) ஆம்! - வேந்தே! உள
வறியத்தான் நான் வ ந் தேன். ஆனால் தங்கள் நிலைகண்டு இரக்கம் ஏற்பட்டது. மனச் சாட்சியின் கையிலே சிக்குண்டு தாங்கள் அணு வணுவாக இறந்து கொண்டிருந்தீர்கள். அன்புக் காக ஏங்கிய வண்ணம் இருந்தீர்கள். அதன்பின் னும் சூழ்ச்சி செய்ய என் ...... மனம்.......இடந்தர வில்லை!

காட்சி 5
51
காசியப் : (கண்ணீர் அவளிலே பட்டுச் சிதற) அல்லி! நீ
கதை சொல்கிறாய். நான் நம்பமாட்டேன். தூய உன் விழிகள் தீயன செய்யா! கள்ளமே அறியாத இந்தப் புன்னகை, புனிதத்தின் கோயில்! இவற்றை நான் என் உயிரிலும் மேலாக நம்புகிறேன்.
அல்லி : (வேதனையோடு சிரித்தபடி) நம்புவது' தங்கள்
இயற்கை! ஏமாற்றுவது என் பண்பு!
காசியப் : அல்லி! உன் சொற்கள் என் கோபத்தீயைக் கிளறுகின்றன. ஆனால் ....... (உணர்ச்சியால் தளதளத்த குரலில்) உன்னை வெறுக்கக் கூடவில்லையே! நீ கானல் நீராக , இருந்தாலும் உன்னைத் துரந்து தாழாத வேட்கையோடு ஓடிவருவேன், நான்!
அல்லி : (மிகவும் கஷ்டப்பட்டு அவனுடைய கழுத்திலே கைக
ளைப் போட்டபடி) இந்தக் கொடிய அன்புதான் என் னைக் கவர்ந்தது. "அரசே! எனது சொற்களின் கொடுமை அனைத்தும் தங்கள் அன்புக்கு முன் துகள் துகளாகிவிட்டன. அ ந் த வேளையிலேதான் என் துரோகச் செயல் என்னைச் சுட்டெரிக்கத் தொடங்கியது................ இந்தக் கணத்திலேகூடத் தாங்கள் என்மீது அன்பு செய்கிறீர்கள்! நான் பாக்கியசாலி!
காசியப் : (அவளின் கையை எடுத்துத் . தன் கன்னத
தோடு வைத்தபடி விம்மிப் பொருமி, அல்லி!........) அல்லி!
அல்லி : ஆவியோ நிலையிற் கலங்கியது! யாக்கை
அகத்ததோ புறத்ததோ அறியேன்! இந்த அவல வேளையிலே. சொல்கிறேன். தங்களை நான் காதலித்

Page 36
52
சிங்ககிரிக் காவலன்
தேன். என் உயிரிலும் மேலாக விரும்பினேன். அந்தக் காதலைக் கடுமையான சொற்களால் அர ணிட்டுப் பாதுகாத்தேன். உலோபியின் கருவூலம் போல அது என் நெஞ்சினுள்ளே பத்திரமாக இ ரு ந் த து. என்னை நம்புங்கள். நா............ன் தங்....... களை.......
(காசியப்பன் அவளை இறுக அணைத்து அவளது நெற்றி யிலும், கூந்தலிலும், 'அல்லி! அல்லி!'' என்று கதறி, ஆவே சத்துடன் முத்தமிடுகிறான், அல்லி பிணமாகிறாள். நீண்ட நெடுவேளைக்குப் பின்னே, தன்னிலையடைந்து, அல்லியின், நிலையைக் கண்டவன், சுவர்கள் எல்லாம் அதிரும்படி கதறு கிறான்)
காசியப் : அல்லி! அல்லி! அல்லி!
திரை

காட்சி 6
]நிலாமுற்றம். பழமையின் அழகெல்லாம் அழிந் தொழிந்து பாழிடமாக அது காட்சி தருகிறது. திரை கள் அறுந்து தொங்குகின்றன. அங்கிருந்த சிற்ப வடிவங்களில் ஒன்று, தலை உடைந்த முண்டமாகச் சரிந்து கிடக்கின்றது. இன்னொன்று தரையை முத்த மிட்ட கோலத்திலே கிடக்கிறது.
காசியப்பன் வருகிறான். துன்பம், ஏமாற்றம் எல் லாம் வைரித்த பாறைபோல அவன் முகம் காட்சி தரு கிறது. கண்ணீர் வரண்டு பாலையான கண்கள்!
அவன், ஓர் ஆசனத்தின் அருகே நிற்கிறான். கடந்தகால நினைவுகளும், தானும் அல்லியும் உரை யாடிய உரையாடல்களும் அவனது நினைவுத் தரங்கத் திலே அலையாக மோதுகின்றன. (பின்னணியில் வச னங்கள்; இவற்றிற்கு Tape recorder பயன்படுத்தப் படலாம்)
பாறை, உருகி ஒவ்வொரு கணமும் வேதனையாகக் கொப்புளித்து முகத்திலே, கண்களினூடாக ஓடுகிறது.]

Page 37
54.
சிங்ககிரிக் காவலன்
பி. அ வ. 1: அல்லி! அன்பு என்ற கால்களை இழந்து நிற்கும் அந்த முடவன்தான் நான்! மலையின் உச்சி யிலே அந்தத் தனிமரத்தின் உச்சிக் கொம்பரிலே தொங்குகின்ற தேன்கூடுதான் நீ!
(இடைவெளி)
பி. அ. வ 2: இந்தக் குருதியின் ஒவ்வொரு துளியும்
பவழமணியாக மாறி, அதனால் ஒரு மாலையைக் கோத்து உனக்கு அணிந்தால் எப்படி இருக்கும்?
(காசியப்பன் மெல்ல மெல்ல அடி வைத்து நகருகிறான். பெருமூச்சு
நெஞ்சைப் பிய்க்கிறது.)
பி. அ. வ. 3: உங்களில் எனக்கு அன்பில்லை. உங்களை ,
நான் வெறுக்கிறேன், நஞ்சிலும் கொடியராக வெறுக்கிறேன்.
(இடைவெளி)
பி. அ. வ: 4: அல்லி! உனது அன்பு என்ற நெருப்
பிலே வெந்து மடிவதைக்கூட என் பாக்கியமாகவே கருதுகிறேன்.
பி. அ. வ, 5: நான் வெறும் நெருப்பல்ல, வேந்தே! சொல்லும் நாவையும், நினைக்கும் நெஞ்சையும் சுட் டெரிக்க வல்ல ஊழித்தீ! வீணில் அழியாதீர்கள்! போய் விடுங்கள்!
(இடைவெளி)

காட்சி 6
55
பி, அ. வ. 6 : ஆடு! ஆடு! இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் மறந்து, நீ ஆடுகின்ற அந்த நிகழ் காலம் ஒன்றையே நம்பி, அந்த மகிழ்ச்சி அரு பவத்தையே சிரஞ்சீவியாக்கி என் நெஞ்சுக்குள்ளே புதைத்துக்கொள்கிறேன். ஆடு!
(திடீரென்று அமைதி கொலுவிருக்கும் அந்த இடத்திலே, சலங் கையின் மெல்லிய ஒலி கேட்கிறது. காசியப்பன் வியப்போடு 'அல்லி! அல்லி! என்று அழைக்கிறான். சலங்கை ஒலி தொடர்கிறது. பிறகு மிக மெல்லிய குரலில் (பின்னணி இசை இன்றி) அல்லியின் பாடல் எழுகிறது.)
தஞ்ச மென்று வந்தடைந்து நெஞ்ச கத்தில் என்னை வைத்துக் கொஞ்சு கின்ற அரசருக்கு விண்மதி !- நானும் கொஞ்ச மேனுந் தகுதியற்றேன் வெண்மதி! நான்....... கொஞ்சமேனும் ....... தகுதியற்றேன்.... விண்மதி!
காசியப் : அல்லி! நீ இறக்கவில்லையா? இன்னும் உயி
ரோடுதான் இருக்கிறாயா? அல்லி! அல்லி!
(சலங்கையொலி வளர்ந்து அடங்குகிறது)
அல்லி! நடனக் கலைக்கென்றே பிறந்தவள் நீ! உனது உடலின் ஆட்டம் ஓய்ந்துவிட்டது. உத டுகளின் அசைவு நின்றுவிட்டது. ஆனால் உன் ஆத்மாவிற்கு அழிவில்லை! அது இன்னும் ஆடிக் கொண்டே இருக்கிறது. சலங்கையின் ஒலியிலே, வீணையின் இசையிலே அது இரண்டறக் கலந்து நிற்கிறது. இதை நான் நன்கு உணர்கிறேன்.

Page 38
56
சிங்ககிரிக் காவலன்
(வீணையின் ஒலி எழுகிறது. மெல்லிய, மிக மெல்லிய உயிரைத் தொடுகின்ற இசை)
அல்லி : வீணையின் நரம்புகளிலே உன் உயிர்
தவழ்ந்து விளையாடுகிறது. உனது காந்தளம் கைத் தலத்தின் மென்விரல்கள், வீணையைத் தொட்டுத் தடவி இசை எழுப்பி எனது நெஞ்சிலே கனவுகளை எழுப்புகின்றன! அல்லி! அல்லி!
(சலங்கை ஒலி, பின் வீணை ஒலி, பின்னர் அல்லியின் பாடல் மாறி மாறி ஒலிக்கின்றன. காசியப்பன் வெறிகொண்ட வன் போல் அங்கும் இங்கும் ஓடுகிறான். ''அல்லி! அல்லி! அல்லி!'' என்று கதறுகிறான். பின் களைத்துப்போய் ஆசனத் தில் அமர்கிறான். ஒலிகள் அடங்குகின்றன)
பி. அ. வ. 7: அல்லி! நீ கதை சொல்கிறாய். நான்
நம்பமாட்டேன். தூய உன் விழிகள் தீயனசெய்யா. கள்ளமே அறியாத இந்தப் புன்னகை, புனிதத்தின் கோயில்! இவற்றை என் உயிரிலும் மேலாக நம்பு கிறேன்.
பி. அ வ. 8: நம்புவது தங்கள் இயற்கை! ஏமாற்று
வது என் பண்பு!
(இடைவெளி) பி. அ. வ.9:
....... ஆனால் உன்னை வெறுக்க என் னால் கூடவில்லையே! அல்லி! நீ கானல் நீராக இருந்தாலும் உன்னைத் துரந்து தாழாத வேட்கை யோடு ஓடிவருவேன் நான்!
காசியப் : (விம்மியபடி மெதுவாக) அல்லி! அல்லி!
(இடைவெளி)

காட்சி 6
57
பி. அ. வ. 10: தங்களை நான் காதலித்தேன். என் உயி ரிலும் மேலாக விரும்பினேன். அந்தக் காதலைக் கடுமையான சொற்களால் அரணிட்டுப் பாதுகாத் தேன். உலோபியின் கருவூலம் போல அது என்
நெஞ்சினுள்ளே பத்திரமாக இருந்தது. என்னை நம் புங்கள். நான்....... தங்...களை .......
காசியப் : அல்லி! அல்லி! நீ என்னை உணர்ந்து கொள்
ளவில்லை. நீ விரும்பியிருந்தால் இந்த அரசுதானா எனக்குப் பெரிது? இ  ைத முகலனிடமே ஒப் படைத்துவிட்டு, உன் பின் னா ல் ஓடிவந்திருப் பேனே? மண் குடிசையிலே கூட நாங்கள் மகிழ்ச்சி யோடு வாழ்ந்திருக்கலாமே!
வ"ன்னாய் ஆவனேன். உனது 9 நினைத்தேன்,
அல்லி! இன்று எனக்கு மண்ணாசை இல்லை. போக வாழ்வுகூடக் கசந்து விட்டது. மண்டலங்களின் மன்னனாய் ஆவதிலும், இதயம் உள்ள ஒருவனாக இருக்கவே எண்ணினேன். உனது அன்பால் எனது நெஞ்சப்பாலையைப் பசுமை செய்திட நினைத்தேன். ஆனால், நீ என்னை ஏமாற்றிவிட்டாயே! அல்லி!
அல்லி!
அல்லி! இனி எனக்கு வாழ்வு இல்லை. இன்பம் இல்லை. எதுவுமே இல்லை! இதயத்தால் செத்து விட்டவன், நான்! விரைவிலே உன் பின்னால் ஓடி வந்துவிடப் போகிறேன். உனது உயிரோடு எனது உயிர் இரண்டறக் கலக்கின்ற ஒரு நாள் வரும்.
அன்றுதான் எனக்குப் பேரானந்தம்!
(காசியப்பன் யோக நிலையில் கண்மூடி நிற்கிறான் வீணையும், சலங்கையும், அல்லியின் இசையும் கலந்து குழம் புகின்றன. அந்த இன்பம் காசியப்பனின் முகத்தை ஆக்கிர மிக்கிறது. சிறுது நேரத்தில் மீகாரன் வருகிறான்.]
(பின்னணி இசைகள் ஓய்கின்றன)

Page 39
58
சிங்ககிரிக் காவலன்
மீகாரன் : காசியப்ப!
காசியப் : (திடுக்குற்று) ஆ......யார்? மீகாரனா?
மீகாரன் : ஆமாம்! நான் தான். நீ கனவு காண்கிறாயா?
காசியப் : கனவு அல்ல! மீகார! என் நெஞ்சிலும் நினை விலும் நிலைபெற்றுவிட்ட அல்லியின் சலங்கை ஒலி யிலே, இன்னிசையிலே என்னை இழந்து நிற்கிறேன். உனக்கும் அவை கேட்கின்றன அல்லவா?
மீகாரன் : காசியப்ப! நீ அவளை இன்னும் மறக்க
வில்லையா?
காசியப் : மறப்பதா? கடலுக்கு அலைபோல, காற்றுக்கு
அசைவுபோல என் நெஞ்சுக்கு அவள் நினைவு உள்ளது! எப்படி மறப்பேன்?
மீகாரன் : சரியான பைத்தியந்தான்! வரவர உன் புத்தியே மழுங்கி வருகிறது! அல்லி துரோகி!
அவளையா நினைந்து உருகுகிறாய்?
காசியப் : (வெகுளியோடு) அவளைத் துரோகி என்று இன்
னும் ஒரு தடவை சொல்லாதே. அவள் தெய்வம்!
மீகாரன்: தெய்வம் அல்ல! உன்னைக் கவரவைத்த இரை! அவள் தொலைந்ததையிட்டு நீ மகிழ்ச்சி அடையவேண்டும்.
காசியப் : (கோப நகை நகைத்து) மீகார! வாள் சுழற்று
வதிலே நீ வல்லவனாக இருக்கலாம். அரசியற்

காட்சி 6
59
சூதிலே ஆற்றல் பெற்றவனாக இருக்கலாம். எதிரி யின் நெஞ்சிலே ஈட்டியைச் செலுத்தி அவனை எம னுலகுக்கு அனுப்புவதில் இணையற்றவனாக இருக்க லாம். ஆனால் ம னி த னா க 'வாழ உனக்குத் தெரியாது! இதயங்களின் துடிப்பை உணர்ந்து உருக உன்னால் இயலாது! அன்பு என்றால், விலை என்ன என்று கேட்பவன் தானே நீ? ஒட்டும் இரு உள்ளங்களின் தட்டிலே, உண்மையான வாழ்வு மலர்வதை நீ ஏடுகளிலே கூடக் கற்றதில்லையே!
0
மீகாரன் : (வெறுப்புடன்) போதும்! நிறுத்து. காமத்தை எழுத்தெண்ணிக் கற்றவன் நீ! உன் கையிலே நாட் டின் காவற் பொறுப்பைப் பெற்றுத் தந்தேனே? அது என் தவறு! நீ அரசனாகத் தகுதியற்றவன்.
த காசியப் : (வேதனையோடு) ஆம்! உண்மை தான்! நான்
அரசனாகும் தகுதியற்றவன் தான்! குருதித் தடத் திலே குளிக்கவும், பிணமலையிலே ஏறவும் பழக்கப் படாதவன், நான்! உள்ளத்தைக் கொன்று உதட் டாலும் மூளையாலும் வாழ எனக்குத் தெரியவில்லை! உனது கைப்பாவையாக இயங்கிக் கடந்த பதி னெட்டாண்டுகளாய் நான் பட்ட துயர் போதும்!
மீகாரன் : (ஏளனமாக) ஏது? கருணவதியின் அடிச்சுவட்
டிலே செல்ல எண்ணமோ?
காசியப் : ஆயிரம் ஆயிரம் இழைகளைப் பின்னி அவற்
றாலான வலையிலே, தன்னையே சிறை செய்யும் சிலந்திதான் நான்! தளைகளை அறுத்துச் சென்ற கருணவதியின் உறுதி எனக்கு இல்லை! அவளுக் காக இன்னுங்கூட என் நெஞ்சிலே ஒரு பகுதியை ஒதுக்கிக் காத்திருக்கிறேன்.

Page 40
60
சிங்ககிரிக் காவலன்
மீகாரன்: மற்றவரால் ஏமாற்றப்படுவதிலே உனக்கு
இன்பம் போலும்!
காசியப் : ஏமாற்ற ஆள் இருந்தால் ஏமாறவும் ஒருவன் வேண்டுந்தானே? நீ உட்பட எல்லாருமே என்னை ஏமாற்றிக் கொண்டுதான் வருகிறீர்கள்! ஆனால் உங்களையெல்லாம் எ ன் னா ல் வெறுக்க முடிய வில்லையே!
மீகாரன் : என்ன? நான் உன்னை ஏமாற்றினேனா?
காசியப் : மீகார! நீ என் மைத்துனன் மட்டுமல்ல!
நண்பனுங் கூட! அப்படித்தானே?
மீகாரன் : நண்பனல்ல! உயிர் ந ண் பன், என்று
திருத்திக்கொள்!
காசியப் : மீகார! உன் நெஞ்சைத் தொட்டுச் சொல். உன் அன்பு தன்னலம் அற்றதா? அன்புக்காகவே
அன்பு செய்பவனா நீ?
மீகாரன் : (பதில் பேசாது நிற்கிறான்)
காசியப் : நீ பதில் பேசமாட்டாய். உன்னால் பதில் சொல்ல முடியாது. வாழ்வு முழுவதும் என் நெஞ்சை அரிக்கும் துன்பம் எல்லாம், உன் போன்றாரின் தன் னலத்தாலேயே ஏற்பட்டது.
மீகாரன் : நீ....... என்ன...?

காட்சி 6
61
காசியப் : உனக்கு விளங்காதுதான்! இன்று அதை விளக்கப்போகிறேன். வாழ்க்கை நாள்களாகக் குறுகி வருகிறது. இந்த வேளையிலாவது , எனது மனப்பாரத்தைக் குறைக்கத்தான் வேண்டும்! என து உள் ளத்தை உனக்குத் திறந்து காட்டத்தான் வேண் டும்! கேட்க நீ தயாரல்லவா?
மீகாரன் : அதைவிட எனக்கு வேறு வேலை இல்லை.
காசியப் : நான் அரசன் மகனாகத்தான் பிறந்தேன்.
ஆனால் ஏழை ஒருத்தியின் வயிற்றிலே பிறந்து விட்டேன். இன்னும் விரிவாகச் சொன்னால்....... நான் காமக்கிழத்தி மகன்!
(முகத்தை மூடி வேதனையை அடக்கி நிற்கிறான். சிறிது தயக்கம். பின் சொல்கிறான்.)
என்னை யாரும் மதிக்கவில்லை! மதிக்காவிட்டால் என்ன? சிறிது அன்பையாவது காட்டினார்களா? அதுவும் இல்லை!
சிறு வயதிலேயே தாயை இழந்தேன்! அன்பே காணாது வளர்ந்தேன். தாதுசேனருக்கோ என்னைத் தமது மகன் என்று சொல்லவே வெட்கம்! தந்தை யின் அன்பே இல்லை என்றபோது தரணியிலே யார் மதிப்பார்? வரண்ட பாலையிலே தண்மைக்கு ஏங்கும் கள்ளிச் செடிபோல நான் வளர்ந்தேன்!
(சிறிது நிற்கிறான். பின் தொடர்கிறான்.)
அந்தச் சிறு பருவத்திலே அன்பு, பாசம், பரிவு என்ற சொற்கள் வெறும் சொற்களாகவே நின்றன !

Page 41
62
சிங்ககிரிக் காவலன்
உணர் வாக நின்று என்னை அவை வழி நடத்தியி ருந்தால், காசியப்பன் கதையே வேறாக இருந்தி ருக்கும்!
(பெருமூச்சு விடுகிறான்)
உலகமே வெறுத்தது! செல்வத்தைக் கொண்டு போலி இன்பங்களைப் பெற்று, என்னையே நான் ஏமாற்றினேன்; காமுகனானேன். மதுவின் அடிய
னானேன்!
இந்த நிலையிலேதான் உனது நட்புக் கிடைத்தது. உலகம் எல்லாம் அலட்சியம் செய்த வேளையிலே நீ என்னில் அன்பு கொண்டாயே? என்னையும் ஒரு பொருட்டாக்கி உன் நண்பனாக ஏற்றுக்கொண்
டாயே! அதனை என்னால் மறக்கவே கூடவில்லை!
உன்னை நம்பினேன்! அன்பு கொண்டேன்; உனக்காக எது செய்யவும் தயாரானேன்.
மீகாரன் : (கதறுகிறான்) காசியப்ப! பொறு! கொஞ்சம்
பொறு!
(கண்களைத் துடைக்கிறான். விம்மலை அடக்கப் பிரயத் தனப்படுகிறான். சிறிது அமைதி அடைந்ததும்)
சரி, மேலே சொல்.
காசியப் : உன் தாயைத் தாது சேனர் உயிரோடு எரித்
தார். அந்தக் கொடுமை கண்டு இரங்கினேன்! நீ என் தந்தைக்கு எதிராக என்னைத் தூண்டியபோ தெல்லாம் உன் கைப்பாவையாக இயங்கினேன்.
(குரல் தளதளக்கிறது)

காட்சி 6
கடைசியில் உனக்காக, உன் மன அமைதிக்காக, உன் நட்பிற்காக என் மனத்தைப் பாறையாக்கி (குரல் தடுமாற) என் தந்தையை உயிரோடு சமாதி செய்தேன்.
மீகாரன் : உண்மையைச் சொல். உனக்கு அரசனா
வது எண்ணமில்லையா? உன் தந்தையைக் கொன் றது எனக்காகவா?
காசியப் : என்னை அநாதை ஆக்கிய தந்தையைப் பழி வாங்க எண்ணியது உண்மை! போகங்களைப் பெற்று அநுபவிக்க, அரசனாகிட நினைத்ததும் உண்மை! ஆனால் எனது தந்தையைக் குரூரமாகச் சித்திர வதை செய்தேனே? அது உனக்காகவேதான். உன் மனத்திலே அமைதி பிறக்க, உன் முகத்திலே மகிழ்ச்சி மலர நான் செய்துகொண்ட தியாகம் அது! மீகார! வரலாற்றின் ஏடுகளிலே எனது பெயர் மாளாத அவமானச் சின்னமாகப் பொறிக்கப்பட் டதுகூட, உனது நட்பிற்காக நான் செய்த குரூரச் செயலால் தான்!
மீகாரன் : (தளதளத்த குரலிலே) ஐயோ! காசியப்ப! என்னை மன்னிக்க முடிந்தால், மன்னித்துவிடு. இந்தக் கணம்வரை, சுய நலமும், பழிவாங்கும் உளப் பாங்குமே என்னை வழி நடத்தி உன் வாழ்வைக் கறைப்படுத்தின!
காசியப் : போகட்டும்! இந்த உண்மையை அறிந்த பின்னரும் நான் உன்னை வெறுக்கவில்லை! இன்றும்,
இந்தக் கணமுங்கூட நீ என் நண்பன்தான்!

Page 42
சிங்ககிரிக் காவலன்
மீகாரன் : (அவன் கால்களைப் பற்றிக்கொண்டு) காசியப்ப!
உன் கால் தூசிலே மிதிப்பதற்குக்கூட நான் தகுதி யற்றவன்!
காசியப் : வேண்டாம். எழுந்திரு! (தூக்கி விடுகிறான்)
இன்னுங் கேள்!
தந்தையைக் கொன்றேன்; அரசனானேன். மண்ணை ஆள முடிந்த என்னால், அந்த நிலையிலும் என் மனத்தை ஆளமுடியவில்லை.
இந்த வேளையிலே கருணவதி வந்தாள். மனச் சாட்சியின் சித்திரவதையால் குற்றுயிராகிவிட்ட உள்ளத்தை அவளுக்குக் காணிக்கையாக்கினேன்.
அவள் என்னை ஏமாற்றவில்லை!
பதினெட்டாண்டுகள் என்னோடு வாழ்ந்தாள். துன்பம் எல்லை மீறும் போதெல்லாம், ஒரு குழந்தை போல அவளின் மடியைச் சரணடைவது என் வழக்கமாயிற்று.
அவள் பிக்குணியானாள். நான் அநாதையா னேன். கண்ணீர்க் கடலிலும், துன்பப் புயலிலும் சிக்கிக் கரை தெரியாது அலைந்தேன்.
அல்லி வந்தாள். தன்னலமே அறியாத அவ ளின் . முரட்டுப்போக்கிலே என்னை இழந்தேன். இன்று அவளும் போய்விட்டாள். ஆனால் அவளை என்னால் மறக்கக் கூடவில்லை! அவள் நினைவே எனது நெஞ்செல்லாம் நிறைந்து நிற்கிறது.
மீகாரன் என்ற விண்மீனிலே தொடங்கி, கருண வதி என்ற விடிவெள்ளியைக் குறிவைத்து நடந் தேன். விடிவெள்ளி மறைந்தது. அல்லி என்ற

காட்சி 6
65
வெங்கதிர் தோன்றியது. அதன் வரவிலே என் இதயத்தாமரை மலர்ந்தது. இன்று ஒரே இருள் ! கனத்த இருள்! என் நெஞ்சமலர் வாடி உதிர்ந்து போய்விட்டது, மீகார! நெஞ்சமலர் வாடி உதிர்ந்து போய்விட்டது!
மீகாரன்: காசியப்ப! உன் வாழ்வைப் பாழ் செய்த
என்னைக் கொன்றுவிடு.
காசியப் : என் தந்தையைக் கொன்ற கறையே இன்
னும் கழுவப்படவில்லை. இனி உன்னையும் கொன்று என் கறைக்குச் சிரஞ்சீவித்துவம் அளிப்பதா? வேண்டாம்!
ஆனால், செய்தவைக்குக் கழுவாய் தேட விரும் பினாயானால், எனக்காக ஒன்று செய்.
மீகாரன் : (ஆவலோடு) என்ன செய்யவேண்டும்? சொல்.
காசியப் : (சுவரோடிருந்த திரைச்சேலையை நீக்குகிறான். அங்குத்
தாமரை மலரைத் தாங்கி நிற்கும் கருணவதியும், தட்டம் ஒன்றிலே மலர்களை நிறைத்துக்கொண்டு அல்லியும் ஓவியமாக நிற்கிறார்கள்.) யார் என்று தெரிகிறதா?
மீகாரன் : நல்ல கேள்வி கேட்டாய். உன் கைவண்
ணத்தால் நிலைபேறடைந்த அல்லியும், கருணவதி யுந்தான் இவர்கள்!
காசியப் : இவர்களை உயிரோவியமாக ஆக்கிடும் ஒன்
றிற்காகவே நான் இன்று உயிர் வாழ்கிறேன்.
248-6

Page 43
66
சிங்ககிரிக் காவலன்
மீகாரன் : இதற்கு நான் என்ன உதவி செய்ய
வேண்டும்?
காசியப் : மீகார! இந்த ஓவியத்தைச் சிகிரியாவின்
குகைகளிலெல்லாம் வரைந்திட ஆசைப்படுகிறேன். அதற்கு ஒரு திங்களாகலாம்!
"இந்த இடைவெளியில் முகல்ன் படையுடன், வந்தால்..............
மீகாரன் : (பெருமிதத்துடன்) அந்த அச்சமே உனக்கு வேண்டாம்! எனது உடலில் வலிமையும், உள்ளத் தில் உறுதியும் உள்ளவரை முகலனின் கனவு பலிக்காது.
காசியப் : பதற்றப்படாதே. மன்னனாய்த் தொடர்ந்து
வாழ எனக்கு எண்ணமும் இல்லை. முகலனை எதிர்த் திடும் நோக்கமும் இல்லை. சாவிற்குப் பயந்து இப் படிச் சொல்வதாக எண்ணாதே! உடலால் சாவது தானா மரணம்?
மீகாரன் : நீ என்னதான் சொல்கிறாய்?
காசியப் : அமைதியாகக் கேள். சொல்கிறேன். என்னை
இந்தச் சிகிரியாவினுள்ளேயே அடைத்துவிடு. அவ் வாறு செய்வதன் மூலம் எனக்கு விடுதலை அளி.
மீகாரன் : (அதிர்ச்சியடைந்து அவனைப் பார்க்கிறான்.)
காசியப் : ஒரு வேளை உணவு தந்தால் போதும். இந்த ஓவியத்திற்கு உயிர்தந்து காலத்தை வெல்ல வைத்துவிடுவேன். அரசியற் பொறுப்பெல்லாம் இனி உன்னுடையதுதான். இதோ முத்திரை மோதிரம்!

காட்சி 6
மீகாரன் : (நடுங்கிய கரங்களை நீட்டியபடி)
உ.ன...க்..கு.....
நீ...........
காசியப் : பைத்தியம் இல்லை! என் நினைவோடுதான் சொல்கிறேன். முகலன், வந்தால் போர்க்களத்திலே சந்திப்பதா, சமாதானமாக அவனை ஆளவிடுவதா என்றெல்லாம் தீர்மானிப்பது உன்' பொறுப்பு!
மீகாரன் : அப்பொழுது நீ முகலனோடு போர் செய்யப்
போவதில்லையா?
காசியப் : (சிரித்தபடி) ஒரு வீரனாக இல்லாமல், கலைஞ
னாகவே எனது கடைசி மூச்சையும் விட விரும்பு கிறேன். மண்ணும், மகிமையும் மறையும்! கலையும் கலைவாழ்வும் சிரஞ்சீவிகள்!
மீகாரன்: (அவனைத் தழுவிப் பின் விடுபட்டு) நான் உன்
அடிமை! உன் சொல் எனக்குக் கட்டளை. உன் விருப்பப்படியே எல்லா ஒழுங்குகளையும் செய் கிறேன்.
நான் வருகிறேன்.
(மீகாரன் போகிறான்.)
காசியப் : (சித்திரத்தைப் பார்த்தபடி நீடு நிற்கிறான். பின்பு
அல்லியின் சித்திரத்தை நோக்கி)
அல்லி! இன்னும் ஒரு திங்கள் பொறுத்துக் கொள். உன்னையும், கருணவதியையும் சிரஞ்சீவி களாக வாழவைத்துவிட்டு, உன்னிடம் வந்துவிடு கிறேன், அல்லி! வந்துவிடுகிறேன்.
(பின்னணியில் சலங்கை, வீணை ஒலிகள்)
(திரை)

Page 44
பின்னணி வசனம்
நாள் மலர்ந்தது ; வாடியது; கருகிப் பின் உதிர்ந்தது” காசியப்பன் ஊண், உறக்கமின்றி ஓவிய வார்ப்பிலே:
ஆழ்ந்து போனான்.
- 3
ஒரு நாள் ....... முகலனின் போர்ப்பறை கேட்டது. மீகாரன் படைதிரட்டி எதிர்சென்று பொருதான்.
முடிவு பாதகமாகவே ஆயிற்று. மீகாரன் தோற்றுவிட்டான்; இறுதியில் உயிரை யும் இழந்தான். ஓவியம் முடிந்த அன்றே காசியப்பனின் உயிரும் முடிந்தது. ....... சிகிரியா எங்கும் முகலனின் வெற்றிப்பறை
ஒலிக்கலாயிற்று. அந்த வெற்றிப் பறையின் பின்னணியில், இராட் சதனாகிய முகலனின் பயங்கரக் கொடுமைகள் காவி யமாக அரங்கேறிக் கொண்டிருந்தன. அந்த வேளையிலே............
* "His (Moggalana's) cruelty earned for him the nickname Rakkhasa or devil"
- Concise History of Ceylon Pg. 129

காட்சி 7
சிகிரியாவிலே உள்ள புத்த விகாரம். தாமரை மலரிலே அமர்ந்த புத்தரின் சிலை, அமைதியிலே குளித் தெழுந்து விளங்குகிறது. (திரை விலகும் போது ஊது வர்த்திகளினதும், அகிலினதும் புகையின் பின்னணி யிலே இருந்து சிறிது சிறிதாகப் புகை விலகச் சிலை காட்சி தரும்.) அதன் முன்னால் மலர்கள் குவிந்திருக். கின்றன. பின்னணியிலே வெற்றிக் கோஷங்களும், இசையும், மக்களின் ஒலியும் கலந்து குமைகின்றன.
சிலையின் முன்னால் (பக்கவாட்டிலே) மகாநாமதேரர் -அமர்ந்து கண் மூடித் தியானத்தில் இருக்கிறார். அவரது விழிகளிலிருந்து இரண்டு துளிக் கண்ணீர் குவித்திருக் கும் மலரிலே விழுந்து தெறிக்கிறது.]
மகாநாம : புத்ததேவா! நீ காட்டிய வழியிலே துறவி
யானவன் நான். உலக இன்பங்கள் வானவில்லிலே 'தோன்றும் நிறங்கள் என மதித்து வாழ்ந்தவன்
நான்.

Page 45
70
சிங்ககிரிக் காவலன்
ஆனால் முகலனின் பாசம் என்னை வாழ்க்கைப் புளுதியிலே புரளவைத்துவிட்டது. அதனால் எனது
குறிக்கோளே திசை திரும்பிவிட்டது. உன் பாதச். சுவடுகளைத் தாங்குந் தகுதியை இழந்துவிட்டேன் .--
எனது உள்ளத்திலே அமைதி எட்டாக் கனவாகி விட்டது. பாவத்தின் சுமையைத் தாங்க இயலாது அலமரும் என்னைக் கடைக்கண் பார். என் கண் களைத் திறந்துவிடு. பாசத்தளைகளை அறுத்தெறியும் வலிமையை எனக்குத் தா.
(முகலனும், சீலகாலனும் நுழைகிறார்கள். முகலன் அரச உடைகளை அணிந்து கம்பீரமாக நிற்கிறான். அவன் முகத், திலே மகிழ்ச்சிக் களை! அதன் கதிர் சீலகாலனிலும் பட்டுத். தெறிக்கின்றது. இருவரும் புத்தபிரான் முன்பு மண்டியிட்டு வணங்குகிறார்கள்.)
முகலன் : (எழுந்து) ஸ்வாமி!
(சிலகாலனும் எழுந்து வணங்கி நிற்கிறான்.)
சீலகா:
என்ன? 'ஸ்வாமி' என்று அழைக்கிறாயே! அவ* ரின் துறவு வாழ்க்கை நேற்றுடன் தொலைந்தது. இன்றைய முடிசூட்டுவிழாவிலே அவர் உனது முதல் அமைச்சர் ஆகப்போகிறார். இனி, ''பாட்டனாரே' என்று முறை சொல்லி அழைக்கலாமே!
முகலன் : ஆமாம்! மறந்தே போய்விட்டேன். பாட்ட
னாரே!
மகா : (வெறுப்புடன்) அப்படி அழைக்காதே! முப்பது.
ஆண்டுகளுக்கு முந்திய ஏடுகளைத் திருப்பாதே. இந்த மஞ்சட் துணியுடனேயே என்னை வாழவிடு.

காட்சி 7
சீல : ஸ்வாமி! தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மகா : (தளதளத்த குரலில்) முகல! பதினெட்டாண்டுக
ளாக உனக்காக வாழ்ந்தேன். இனி எனக்காக நான் வாழவேண்டும்.
(புத்தர் சிலையின் பக்கத்திலே இருந்த துணிப்பொதி ஒன்றை எடுத்து முகலனின் முன்னால் எறிகிறார். அது அவிழ்ந்து அதனுள்ளே இருந்த பட்டாடைகளும், ஆபரணங்களும் சிதறு கின்றன.)
இவற்றை நீயே எடுத்துக்கொள். கடந்த இர வெல்லாம் எனது அமைதியைக் குலைத்து நெஞ் சைச் சுட்டெரித்துச் சாம்பராகிவிட்டன.
முகலன் : (வியப்போடு) ஸ்வாமி! அரசியற் பகடையை
லாவகமாக 'உருட்டிய மகாநாமதேரர்தாமே தாங் கள்? காசியப்பனையும், மீகாரனையும் அழித்து எனக்கு மணிமுடி அளித்த மாவீரர்தாமே தாங்கள்? ஒரு இரவிலேயே அந்த மாபெரும் இராஜதந்திரி, மனமாற்றம் அடைந்து, மீண்டும் துறைவியாகி விட்டார் என்று என்னால் நம்பவே கூடவில்லை!
மகா : (பெருமூச்சோடு) நீ அ  ைத நம்பித்தான் ஆக வேண்டும். அந்த நம்பிக்கையிலேதான் எனது உறுதி தளிர்த்து நிற்கும்.
சீல : ஸ்வாமி! முகலர் அனுபவம் இல்லாதவர். அரசி
யலிலே நீங்கள் தாம் அவருக்கு வழிகாட்டவேண் டும்.
மகா : (ஏளனச் சிரிப்போடு) குருடன் குருடனுக்கு வழி
காட்டுவதா?

Page 46
சிங்ககிரிக் காவலன்
முக+ சீல : (அதிர்ச்சியோடு) ஸ்வாமி!
மகா : ஆம்! நான் குருடன் தான்! பாசம் என் கண்
களைத் திரையிட்டு மறைத்தது. அதனால் இந்த மஞ் சள் அங்கியையே மாசுபடுத்தினேன். அரசியற் சேற்றை என் மீது அள்ளி அள்ளிப் பூசினேன். அரும்பிப் போதாகி மலரவேண்டிய மலர் ஒன் றைக் கசக்கி எறிந்தேன்.
முகலன் : (வருத்தத்தோடு) அல்லியின் மரணத்தைச் சொல்கிறீர்களா? பாவம்! உணர்ச்சிக்குப் பலியாகி விட்டாள். அவளுக்காக நானும் வருந்துகிறேன்.
சீல : (வெறுப்படைந்தவனாய்) அல்லிக்காகவா வருந்துகி
றீர்கள்? கடமையையும், நன்றியையும் மறந்து, காசியப்பனின் காலடியிலேயே உயிரைவிட்ட அந் தத் துரோகிக்காகவா இரங்குகிறீர்கள்? நல்லகாலம்! கயற்கண்ணி உளவறிந்து வந்து, எங்கள் கனவை நனவாக்கி வைத்தாள்! அல்லி! துரோகத்தின் பிழம் புருவத்திற்கு மறுபெயர் அல்லி!
மகா : (கோபத்துடன்) அப்படிச் சொல்லாதே. இதயம்
உள்ளவள் அவள்!
சீல : இதயம்! அது எங்களுக்கு மட்டும் இல்லையா?
மகா : (சிரித்தபடி) இதயம் இருக்கிறது. ஆனால் ஈரம்
இல்லையே!
முகலன் : ஸ்வாமி! ''அரசியற் பகடை ஆட ஈரமற்ற நெஞ்சம் வேண்டும். கொடுமை என்ற நெருப்பிலே பதவி வேட்கை என்ற பொன்னைப்புடம் பண்ண

காட்சி 7
73
வேண்டும்'' என்றெல்லாம் இடித்துரைத்தீர்களே? இன்று இரக்கத்தைப்பற்றித் த ா ங் க ள் பேசும் பொழுது, என்னால் அதைப் புரிந்து கொள்ளக்கூட வில்லை.
மகா: (கண்கலங்க) நான் ஒரு துறவி! கருணையைப் பேணும் கடப்பாடு உடையவன்! இதோ........... அஹிம்சையின் பிழம்புருவாய் அமர்ந்திருக்கும் இந்தப் போதிமாதவனைப் பார். அல்லும், பகலும் 'புத்தம் சரணம் கச்சாமி' என்று கூறித்திரிந்த என்னையும் பார்.
மஞ்சள் உடைக்கே மகிமை தந்தார், இந்த மகான். நானோ அதை மாசு செய்ததோடு; உன் அரியணைக்காய் இரத்த ஆற்றிலே நடந்து வந் தேன்! எனக்கு மன்னிப்பே இல்லை!
(தலைகுனிந்து நிற்கிறார். பின் தளதளத்த குரலிலே) ஈரத்தின் பொருள் இப்பொழுதுதான் புரிகிறது. கருணையின் கருத்து இன்று தான் புலனாகிறது.
முகலன் : கொடுமை செய்தவனைக் 'கோறுதல் வசை
யன்று! வையத்தியற்கை'!
மகா: யார் கொடுமை செய்தான்? காசியப்பனா?
அல்ல! அல்ல! அவன் கொடியவனே அல்ல!
முக+சீல : (வியப்போடு) என்ன?
மகா : ஆம்! அ வ ன் இயற்கையில் கொடியவனே
அல்ல! குகையின் வாயிலிலே அவனைக் காத்து நின்று உன் குத்தீட்டிக்குப் பலியானானே, மீகாரன்?

Page 47
சிங்ககிரிக் காவலன்
அவன் குற்றுயிராய்க் கிடந்து கொண்டு காசியப்ப? னின் கதையை எனக்குச் சொன்னான்.
- அந்தக் கதை. பாறையாய்க் கிடந்த என் நெஞ். சைக்கூட உருக்கிவிட்டது! கண்ணீரையே கண் டறியாத என் க ண் க ள் குளங்களாகிவிட்டன. குலப்பெருமை பேசி, பிறப்புயர்வு காட்டி அவனை நச்சுமரமாய் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் தாம்.
முகல! அப்பொழுது நீ சிறு குழந்தை; எனது மருமகனின் மகனாகிய உன்னில் நான் உயிரையே வைத்திருந்தேன். நீ 'தாத்தா!' என்று கூறி என் மடியிலே ஏறும்பொழுது என் உள்ளமே உருகும்!
அந்த வேளையிலே காசியப்பனைக் கண்டாலோ அருவருப்பு நெஞ்சிலே அரவமாய் நெளியும்!
காமக்கிழத்தி மகன்! அரச வம்சத்திலே பிற வாதவன்! வாழவே தகுதியற்ற பிராணி! இந்த எண்ணத்தால் அந்தச் சின்னஞ்சிறிய உள்ளத்தை நான் சித்திரவதை செய்த நாட்கள் மிகப்பல.
நீ என் மடியிலே இருந்து மழலை மிழற்றுவாய் பாலும் பழமும் அருந்துவாய். அந்த நேரத்திலே காசியப்பன் உன் முன்னால் ஆசையைக் கண்களிலே சுடரவிட்டு நிற்பான். அவனைச் சொற்கள் என்ற பாணங்களால் குத்திக் கிளறுவது எனக்கு ஒரு - விளையாட்டு!
நான் மட்டுமா? தாதுசேனனும் அவ்வாறே நடந்து கொள்வான். உன் தாயைப் பற்றியோ

85L 56 37 LT6. T 6&ID%0T
D60T CSGD
ul l! @ ဗီ (ဤ လ ဤ E(၆ 6&r 6လီ၊ 5 56 5 6DuJခံ ဝါ IT က 5!
hipt 5ai.)
60 Luu႕ 5 sd ဤ5 ၆ လT6. }(6၀လံ ၂ ၊ IJq လ! 5 LiGLITLဗီ L us႕၊
_60T 5. B(56= ဗ G STL D က b5T လှူ စံ, 860
L်o 50TCLT 6doT6(STG မ်ား (5 (ဖီ.. 60T BooT ၏ ဝါဒီ က 5T? Bm mg ဤလ ၅ BIT suf T of tD60T ယ်လ် b b 5, dr 6or စံ (ဗီ ၆ က Julလ 6၂ ထံက် -
utud၊ ၈ ၊ UTj ဗီ ဗီ 5 IT or 65 66 sd ၊ ..
16 5၍စံလ.

Page 48
சிங்ககிரிக் காவலன்
இதுபற்றி அன்று வியந்தேன். இன்றுதான் உண்மை புரிகிறது! எல்லாம் சகோதர பாசத்தின் திருவிளையாடல்!
முகலன் : (தளதளத்த குரலில்) அவ்வளவு நல்லவரா,
காசியப்.......? என் அண்ணன்!
மகா: முகல! நாம் ஒரு நல்லவனை மாத்திரம் அழிக்க
வில்லை. நாடே போற்றவேண்டிய மிகப் பெரிய ஓவியன் ஒருவனையே நாசஞ் செய்துவிட்டோம்!
சீல : ஆம்! மிகப்பெரிய கலைஞன் தான்! கருணவதியும்
அல்லியும் நிலையாக வாழ ஓவியந் தீட்டிய மாபெருங் கலைஞன் அவர்! ஐயோ! காசியப்பரே! இறுதியில் உமது வாழ்க்கை தற்கொலையிலா முடியவேண்டும்?
முகலன் : (கண்ணீர் விட்டபடி) அண்ணா உன்னைக் கொன்று மணிமுடியைப் பெறத்தான் இந்தப் பதி னெட்டாண்டுகளையும் செலவழித்தேனா? என் பாவத் திற்குக் கழுவாயே இல்லை!
ஆனால், ஒன்று சொல்கிறேன்! இந்தச் சிகிரியா விலே, எனது சகோதரனதும், அல்லியினதும், பாதங்கள் படிந்த இந்தப் புனித இடத்திலே இருந்து கொண்டு நான் முடிசூடி அரசாளமாட்டேன். என்
மனம் தாங்காது. ஸ்வாமி! தாங்காது!
மீண்டும் அநுரதபுரி செல்கிறேன். இன்றிலி ருந்து இது ஒரு புத்த விகாரமாக மாறும்! ஸ்வாமி! தாங்கள் தான் இதன் விகாராதிபதி!

காட்சி 7
என் மீதுள்ள பாசத்தால் தங்கள் துறவு வாழ்வே கறைபடிந்து போய்விட்டது. தாங்கள் எழுதிய மகா வம்சமும் குறைவுபட்டு நிற்கிறது. நாடும், மக்க ளும், வருங்காலமும் போற்றிப் புகழவேண்டிய கவிஞர் பெருமானை, எனது சுய நலத்திற்குப் பயன் படுத்தினேன். நான் மகா பாவி!
இனி நான் தங்கள் வாழ்க்கையிலே குறுக்கி டவே மாட்டேன். தூய துறவினை மேற்கொண்டு, மகாவம்சத்தினைத் தாங்கள் பூர்த்திசெய்யப் போதி மாதவனின் அருள் கிட்டுமாக!
சீல : பூஜ்யரே! எனது வேண்டுகோளையும் ஏற்றுக்
கொள்ளுங்கள்.
(மடியிலிருந்து மயிர்க்கற்றை வைத்த பேழையை எடுத்து - மகாநாமரிடம் கொடுக்கிறான்.)
இது புத்ததேவனின் மயிர்க்கற்றை வைத்திட்ட புனிதச் சின்னம். இதனைப் பாதுகாக்கவேண்டியது இனித் தங்கள் பொறுப்பு.
(மகாநாமதேரர் அதை வாங்கிக் கண்களிலே ஒற்றிக் கொள் கிறார். பின் அதனைச் சிலையின் முன் வைத்துக் கண்மூடி நிற்கிறார்.)
முகலன்: (தேரரின் காலடியில் வீழ்ந்து) ஸ்வாமி! என் பிழைகளுக்காக என்னை மன்னித்துவிடுங்கள்.
மகா : என் காலடியிலே விழாதே. அவை மிகமிகச்
சிறியவை. அன்பால் உலகழந்த அந்தப் பேரடிக ளைப் பற்றுவோம். 'பற்றற்றான் பற்றினைப் பற்றிப் : பற்றுக்களை விடுவோம்; வா!

Page 49
78
சிங்ககிரிக் காவலன்
(மூவரும் புத்த சிலையின் முன்னால் மண்டியிட்டு நிற்கின் றனர். .
பின்னணியிலே வீணையின் மெல்லிசை.)
மகா :
(விருத்தம்)
(இராகம் : பூபாளம்) அன்பு மலர்க! அறம் வளர்க! பண்பு செழிக்க! பாரெலாம் சிறக்க!
புன்மை ஒழிக! போதி மாதவன் தாள் வாழ்க! வாழ்க! வாழிபல் லாண்டே.
மூவரும் : புத்தஞ் சரணங் கச்சாமி!
தம்மஞ் சரணங் கச்சாமி! சங்கஞ் சரணங்
கச்சாமி!
(திரை)
(முற்றும்)


Page 50

அநுபந்தம்
சி கி ரி [ஒரு வரலாற்றுக் குறிப்பு ]
க. கைலாசபதி B. A. (Hons) (தமிழ் விரிவு ரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம்)
சிகிரி (சிங்ககிரி) இலங்கையின் வரலாற்றிலே சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுள்ள பெயர். உல் லாசப் பிரயாணிகளும், வரலாற்றாராய்ச்சியாளரும் அடிக் கடி விரும்பிச் செல்லுமிடங்களில் ஒன்று சிகிரிமலைக் கோட்டை. அஜந்தாக்குகை ஓவியங்களைப்போல, உல கப் புகழ் பெற்றவை சிகிரிமலைச் சித்திரங்கள். ஆயி னும் சிகிரியிலே மன்னரும் மக்களும் வாழ்ந்த காலப் பகுதியோ மிகமிகச் சிறியது. மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதென்பர். சிகிரியின் கதையும் அத்த கையது ஒன்றுதான்.
- சிகிரிக் காவலனான காசியப்பன் கதை யாவருமறிந் ததொன்றே. அநுராதபுரத்திலிருந்து அரசாண்டு வந்த தாதுசேனன் என்னும் மன்னனுக்கு மகனாகப் பிறந்த காசியப்பன், தகப்பனது படைத்தலைவனுடன் சேர்ந்து தந்தையைக் கொன்றான்; காசியப்பனுடைய சகோதரன் அஞ்சித் தென்னிந்தியாவிற்கு ஓடினான். தனது சகோ தரன் எந்நேரமும் தென்னிந்தியாவிலிருந்து படைத்

Page 51
30
சிங்ககிரிக் காவலன்
துணையுடன் வருதல் கூடும் என்றஞ்சிய காசியப்பன் அநுராதபுரத்தைவிட்டு, அரண்மிகுந்த சிகிரிமலையிற் கோட்டை சமைத்துப் பதினெட்டாண்டுகள் ஆண்டு இறுதியில் எதிர்பார்த்த வ ண் ண  ேம நடைபெற்ற போரிலே தற்கொலை செய்து மாண்டான், என்று வர லாற்று நூல்கள் கூறும். ஆயினும், இந்நிகழ்ச்சி நடந்து பதினான்கு நூற்றாண்டுகள் கழிந்த பின்னும், அமர சிருஷ்டிகளாகவும், 'தந்தையைக் கொன்ற தனயனின் அழகுணர்ச்சியின் கவின்பெறு சின்னங்களாகவும், நின் றிலங்குகின்றன, சிகிரிச் சித்திரங்களும் மலைக்கோட்டை யும். இவற்றைக் கண்ணுற்ற இக்கால வரலாற்றாசிரியர் சிலர், இவை உயிருக்கஞ்சியஞ்சிச் செத்துக் கொண்டி ருந்த ஓர் அரசனின் கற்பனையிலே உதித்திருக்கமாட்டா என்றும், தன்னுணர்வும், கலையுணர்வும் மிக்கிருந்த மன் னன் ஒருவனாலேயே இவை கட்டப்பட்டிருத்தல் வேண் டும் என்றும் வாதிடுவர். சுருங்கக் கூறின் காசியப்ப னுடைய வாழ்க்கை, வரலாறு காட்டுவதிலும் வேறுபட் டதாக, சிறந்ததாக, இருந்திருத்தல் கூடும் என்பர்.
காசியப்பன் (கி. பி. 473 - 491) ஐந்தாம் நூற்றாண் டிலே முதன்முதலாகச் சிகிரியை மன்னன் ஒருவனது உறைவிடமாக்கினான். அம்மலையிலே, அக்காலத்திற்கு முன்னர் புத்த பிக்குகள் வாழ்ந்திருந்தனர் என்பதற் குச் சான்றுகளாகப் பிராமி எழுத்திலமைந்த கல்வெட் டுக்கள் காணப்படுகின்றன. கிறித்துவிற்குப் பின் 473 இலி ருந்து, பதினெட்டாண்டுகள் காசியப்பன் அங்கிருந்து அரசாண்டான். அவனை வென்ற மொகலன் தனது. தலைநகராக அநுராதபுரத்தினை யே மீண்டும் அமைத்துக் கொண்டான். தந்தையைக் கொன்றவன் ஒருவன் இருந்து அரசாண்ட இடமாகையால், சிகிரியைக் காசி யப்பனுக்குப் பின்வந்த மன்னர் எவரும் நாடினாரல்லர். எனவே சிகிரி பதினெட்டு வருட காலமே சீரையுஞ் சிறப்பையுங் கண்டது. இலங்கையின் வரலாற்றைக்
பதி ெடுகி "ராமி ஜந்திருக் அக்கா

அநுபந்தம்
81
கூறும் காவியங்களான மகாவமிசம், சூளவமிசம் ஆகியவற்றிலும் சிகிரி அருகியே இடம்பெற்றுள்ள து. காசியப்பன் வரலாறு கூறுமிடத்துச் சூளவமிசம் சிகிரி யைத் தேவை கருதியே வருணிக்கின்றது. அதற்கு ஏறத் தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் சூள வமிசம் மீண்டுமொருமுறை சிகிரியைக் குறிப்பிடும். நற்செய்தி கள் கூறுதற்கன்று; சோகக்கதையொன்றனைக் குறிப் பிடுவதற்கே. கி. பி. 606 ஆம் ஆண்டளவிலே அரசு கட்டிலேறியவன் சங்கதிசன். என்பான். அவனுக்குப் பகைவனாகப் போர் தொடுத்தான், மொகலன் எனப் பெயரிய படைத்தலைவன் ஒருவன் . போரிலே பல சூழ்ச்சிகள் காரணமாகச் சங்கதிசன் தோல்வியுற்றுத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சன் ஒருவனையும், தன்னுடைய மகன் ஒருவனையுங் கூட் டிக்கொண்டு தலைமறைவாக ஓடினான்; பௌத்த துறவிகளின் உடையில் அவர்கள் சென்றபோதும் மின்னேரிக்கண்மையில் இனங். கண்டுகொள்ளப்பட் டனர். மொகலன் ஆணைப்படி, மூவரும் சிகிரிக்கரு கிற் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். மூன்றாவது மொக லன் எனப்படும் இக்காவலன் நெடிது நாள் அரசாண் டான் அல்லன். சீலமேகவர்ணன் என்பான் இவனைப் போரிலே புறங்கண்டான். மொகலன் தப்பியோடும் பொழுது சிகிரிக்கருகிலே வாளுண்டிறந்தான். இந் நிகழ்ச்சிகளைக் கூறுஞ் சந்தர்ப்பங்களிற் சூளவமிசம் சிகிரிக் குன்றைக் குறிப்பிடும். அதன் பின்னர் காவிய கர்த்தா, சிகிரியை மறந்துவிடுகின்றான்; சிகிரியின் கதை பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடுகின்றது. காவிய ஆசிரியர் மட்டுமன்றிப் பிறரும் சிகிரியைப் பல நூற்றாண்டுகளாக மறந்திருந்தனர்; அநுராதபுர அரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அதன் பெயரும் மங்குதசையையடைந்தது எனலாம்; செடி கொடி
248-7

Page 52
82
சிங்ககிரிக் காவலன்
களும், மரங்களும் மன்னன் காசியப்பனின் கோட்டை கொத்தளங்களை மூடி வளர்ந்தன; பல நூற்றாண்டுக் காலப் பருவ மழைகள் கரையக்கூடியவற்றைக் கரைத் தன; காலமென்னும் புயல், கடும் மறதி மணல் வாரிக் கோலிப் பழம் நினைவிற் கொட்டிவிட்டுப் போனது; பத் தொன்பதாம் நூற்றாண்டிலே ஆங்கிலேயராட்சியில், அகழாராய்ச்சி தொடங்கப்பெற்றதன் விளைவாகப் பண் டைய பெருமைமிகு தலங்களும் இடங்களும் புதை பொருள் நிலையிலிருந்து, வெளிதெரிநிலைக்கு வந்தன; பலவருட முயற்சிகளுக்குப்பின் 1895ஆம் வருடம் சிகிரியாவில் அகழாராய்ச்சி தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் காசியப்பன் கனவின் சின்னமான அரண்மனையும் பிறகட்டிடங்களும் உல கறியப் பெயர்பெற்றன; காவியங்கள் கூறியனவெல் லாம் கண்முன்னே காணப்பட்டன; அஜந்தா, சித் தர்மலைவாசல், ஏலோரா முதலிய இடங்களைப் போலச் சிகிரியும் ஓவிய உலகிலே ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டது.
ஆனால், அந்நிலையிலேதான் அறிஞருக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டாயின. சிகிரிக் கோட்டையைப் பாதுகாப்பு நோக்குடனேயே காசியப்பன் கட்டுவித் தானா? அவ்வாறாயின் அங்கு, கலைப்பண்புகளைப் புகுத் தக் காரணம் யாது? மலையுச்சியிலே அமைந்திருந்த அரண்மனையிற் சித்திரசாலை ஒன்றனை அமைக்காது, மலைச்சரிவிலே அணுகுதற்கு அரிய ஓர் இடத்திலே அதனை நிருமணித்ததற்குக் காரணம் யாது? சிகிரிச் சித்திரங்களில் காணப்படும் இருபத்தொரு பெண்கள் யாவர்? அச்சித்திரங்கள் எமக்குணர்த்தும் பொருள் என்ன? இவை போன்ற கேள்விகள் இன்றுவரை ஆராய்ச்சியாளருக்குக் கருத்து ஒற்றுமையளிக்காத கேள் விகளாக இருந்துவருகின் றன.

அநுபந்தம் :
83
இக்கேள்விகளுக்கு - அறிஞர் தரும் விடைகளை அறிந்துகொள்வதற்கு முன் சிகிரியைப் பற்றிய சில குறிப்புக்களை நாம் கவனிக்கலாம்.
கடன் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,193 அடி உயர்ந்தெழும்பும் சிகிரிக்குன்று, சுற்றுப்புறத்திலிருக் கும் தரைமட்டத்திலிருந்து சற்றேறக்குறைய அறுநூறு அடி செங்குத்தாக மேலோங்குகின்றது. இக்குன்றின் உச்சியிலேயே காசியப்பன் தனது அரண்மனையை அமைத்தான். மேலே மூன்று ஏக்கர் பரப்பு நில முண்டு; சிகிரிக்குன்று, கோட்டையாக இருந்த காலத் திலே அதன் பரப்பு நூற்றுப்பத்து ஏக்கராக இருந் திருக்கும் என்று ஆராய்ச்சியாளர் மதிப்பிட்டுள்ளனர். இன்றுள்ள நிலையில், சிகிரிக்குன்றின் மேற்குப் புறத் திலே ஏறத்தாழ 500 அடி நீளத்துக்குச் சாலையொன்று இருக்கின்றது; இந்த நடைசாலைக்கு 40 அடி மேலே செங்குத்தான மலைப்பாறை முகத்திலுள்ள செயற்கைச் சுவர்களில், புகழ்பூத்த சிகிரிச்சித்திரங்கள் காலத்தை யும் வென்று, சித்திரத்திற் காணப்படும் நங்கையரின் அழகைப்போலக் காட்சி தருகின்றன. சித்திரங்களைப் பார்ப்பதற்காகப் புதைபொருள் இலாகா ஏற்படுத்திய சுழற்படிகள் இப்பொழுதுள்ளன. குன்றின் மறுபுறத் திலே பிரமாண்டமான சிங்கத்தின் உருவம் கல்லிற் கட்டப்பட்டுள்ளது. சிங் கத் தின் வாய்க்குள்ளாகப் போவது போன்ற பிரமை மேலே ஏறுபவருக்கு ஏற் படாமற் போகாது. இவ்வாறு செங்குத்தான குன்றின் மேலே தனது உவளகம், ஓலக்கமண்டபம் முதலிய வற்றை நிறுவிப் புதியதொரு நகரத்தை நிர்மாணித் தான், காசியப்பன்.
ஆயினும் சிகிரி சாதாரண மலைக்கோட்டையன்று. காவல் மட்டும் அதன் தனிப்பயனாக அமையவில்லை. அரண்மிகுந்த கோட்டையாக மட்டுமின்றி அற்புதமான விந்தை நகரமாகவும் அதனைக் கண்டான் காசியப்பன்.

Page 53
84
சிங்ககிரிக் காவலன்
அந்த அடிப்படை உண்மையிலிருந்தே கோட்டையைப் பற்றிய பிற செய்திகளும், . காசியப்பன் பண்புகளும் பெறப்படுகின்றன; அவை காரண காரியத் தொடர் புடன் பின்னிக்கிடக்கின்றன.
காசியப்பன் கதையானது சூளவமிசம் முப்பத் தெட்டாம் முப்பத்தொன்பதாம் அதிகாரகளிற் கூறப்படு கின்றது. அதிலோர் இடத்திலே ஆசிரியர் முக்கிய மான குறிப்பொன்றை அறிந்தோ அறியாமலோ கூறி யுள்ளார். அக்குறிப்பே, காசியப்பன் வாழ்க்கையினை யும், அதன் போக்கினையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளத் துணை செய்கிறது, என் பார் பேரறிஞர் பரனவித்தான, காசியப்பன் சிகிரிக்குன்றின் மேல் குபேரனைப்போல வாழ்ந்தான் என்பதே சூளவமிசத் திற் காணப்படும் குறிப்பு ஆகும்.
சிகிரிக்குன்றினைக் குபேரன் வதியும் கைலாசமலை போல ஆக்க விரும்பினான் காசியப்பன், என்பதற்குப் போதிய சான்றுண்டு என்பார் பரனவித்தான. புராண நூல்களிலே கைலாசமலையிலே சிவன் உறைவதாகக் கூறப்படினும், கைலாசமலை குபேரனுக்கும் உரியது என்று பழைய வடமொழி நூல்கள் பல கூறும்; குபே ரன் நிதிக்கதிபதி; தேவர்க்கரசன்; கா வற்றெய்வம்; பெளத்தமரபிலே அடிக்கடி பேசப்படுபவன்; மனிதர் விழையும் பதவி வகிப்பவன். இத்தகைய சிறப்புமிக்க குபேரனுக்குச் சமதையாகத் தான் வாழ்ந்து காட்ட விரும்பினான் காசியப்பன். தான் குபேரனாகில், தனது உறைவிடம், கைலாசமலையாகக் காட்சி அளித்தல் வேண்டுமல்லவா? எனவே, எந்தெந்த வகைகளிலே சிகிரிக்குன்றிற்கும் அள காபுரிக்கும் - ஒப்புமைகாட்ட முடியுமோ அந்தந்த வகைகளிலெல்லாம் இயைபு கண் டான் என்பர். மகாகவி காளிதாசர் மேகதூதம் என்னும் தமது காவியத்திலே அளகாபுரியைப் பலவாறு வரு

அநுபந்தம்
85
ணித்துள்ளார்.- காளிதாசனுடைய , வருணனைகளில் ஒன்று வருமாறு:
''எங்கே மின்னலையொத்த மோகன மங்கை யரும், வானவில்லைப் போன்ற வர்ண ஓவியங் களும், இடியின் கம்பீரத் தொனியை நிகர்த்த சங்கீத கோஷ்டிகளின் மிருதங்க ஓசைகளும், உனக்குள்ளிருக்கும் ஜலத்துளிகளுக்குச் சமமான இரத்தினங்கள் இழைத்த தரைகளும், வானமளாவி நின்ற உப்பரிகைகளும் பொருந்திய மாளிகைகள் உன்னைப் பலவகைகளில் ஒத்திருக்கின்றனவோ; ........... எங்கே குபேரன் கீர்த்தியைக் கின்னரர் இனிய குரலுடன் பாட, உத்தம தேவலோக தாசிக ளோடு சல்லாபம் செய்துகொண்டு, அழியாத செல் வம் நிறைந்த மாளிகைகளில் வசிக்கும் யக்ஷயுவர் கள், வைப்பிராஜமென்ற வெளி உத்தியான வனத் திற்குத் தினந்தோறும் உலவச் செல்லுகின் றனரோ.......'' அதுவே எங்கும் அழகும் ஆனந்தமும் நிறைந்த அள காபுரி என்பர் காளிதாசர். அளகாபுரியுள்ள கைலாச மலையானது 'தங்கத்தாமரை படரும் மாஸை' ஏரிக்கு வடக்குக் கரையிலிருந்து மேலெழுந்து காட்சி தரு கிறது.
வே இருந்22, காலத்திலே - சிகிரி
காளிதாசனுடை கவிநயத்தைவிட்டு, அவன் கூறும் வருணனைச் செய்திகளை இங்கு கவனிக்கலாம், சிகிரி அதன் சிறப்பு ஓங்கியிருந்த காலத்திலே கைலாச பர் வதம் போலவே இருந்திருத்தல் வேண்டும். சிகிரிக் குன்றிற்குத் தென்னடியிலே சிகிரிவாவி அமைந்துள் ள து. இப்பொழுதிருப்பதைவிடப் பெரியதாக அன்று அந்த ஏரி இருந்திருக்கும். மாஸை வாவியாகச் சிகிரி வாவியும், தேவகன்னிகைகள் முகக்கண்ணாடியாக உப் யோகிக்கும் கைலாசத்தின் வெள்ளி வெண் தோற்றம்

Page 54
86
சிங்ககிரிக் காவலன்
போல, சிகிரியின் பளபளக்கும் சுவர்களும், யக்ஷயுவதிக ளைக் காட்டும் சித்திரசாலைகளைப்போல சிகிரி ஓவியங் ளும் அமைந்திருந்தன எனக் கொள்வதில் தவறிருக் காது. இந்தத் தத்ரூபமான ஒற்றுமையானது கேவலம் தற்செயல் நிகழ்ச்சியாக இருத்தல் முடியாது என்று > வாதிடுவர் பேராசிரியர் பரனவித்தான.
சிகிரிக்கும் அள காபுரிக்குமுள்ள ஒப்புமை இவ்வாறி ருக்கக் காசியப்பன் தன்னைக் குபேரனாகக் கருதியதற் கான சூழ்நிலையை இனிச் சிறிது நோக்குவோம். காசியப்பன் தன்னைத் தேவராஜனாகக் கருதியதற்குப் பல கருத்துக்கள் உதவிசெய்தன. முதலிலே, காசியப் பன் வாழ்க்கையினைக் கவனிப்போம். சூளவமிசத்தின் கூற்றுக்களைக் கூர்ந்து நோக்கின், அநுராதபுரத்திலி ருந்த முக்கியமான பௌத்த சங்கத்தினரான மகா விகாரைப்பிக்குகள் தந்தையைக் கொன்ற தனயனுடன் எத்தகைய ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ள மறுத்து விட்டனர் எனத் தெரியும். சங்கம் காசியப்பன் அளிக்க முன் வந்த கொடைகளையும் தானங்களையும் ஏற்க மறுத்து விட்டது. அதற்குப் பின்னர் காசியப்பன் மனம் எவ் வாறு தன்னம்பிக்கையையே அடி நிலையாகக்கொண்டு செயற்பட்டது என்பதனை விரிக்கவேண்டிய அவசிய மில்லை. வைராக்கிய சித்தம் அவனுக்கு ஏற்பட்டிருத் தல் வேண்டும். அதே சமயத்திலே காசியப்பனுக்குப் போதனை செய்தவர் சிலர் மனிதன் தெய்வமாக இருந்து அரசோச்சும் கருத்தினை அவனுள்ளத்தில் வித்திட்டிருத் தல் வேண்டும். அதனைப்பற்றிக்கொண்ட காசியப்பனை மகாவிகாரைப் பிக்குகள் மேலும் வெறுத்தொதுக்கி யிருப்பின் அதுவும் வியப்பிற்குரிய தொன்றன்று.
னை மே. அ. சித்த விரிக்கா
ஆனால் மனிதன் தன்னைத் தேவனாகக் கருதும் மனோ நிலை, பண்டுதொட்டே உலகின் பலபாகங்களிலும் காணப்பட்டு வருவது. உதாரணமாகக் கிறித்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டளவில் இந்தோனீசியாவில்

அநுபந்தம்
87
உருப்பெற்ற சைலேந்திர அரசபரம்பரையினர். தம் மைத் தேவராஜர்களாகக் கருதினர். சீன வரலாற்று நூல்கள் இச்சைலேந்திர அரசினைப் பூ-னான் என்று குறிக்கும், மலையரசர், பர்வதபூபாலர், சைலராஜர், தேவராஜர் என்றெல்லாம் இப்பரம்பரையினர் தம்மைக் "கூறிக்கொண்டனர்; அவர்களுடைய கல்வெட்டுக்கள் இச்செய்தியை எமக்குணர்த்துகின்றன. அவர்கள் தொடக்கத்திற் சைவராகவிருந்தனர். சைலேந்திர அரசையாண்டவனான இரண்டாம் ஜெயவர்மன் (கி. பி. 802-850) தனது இராச்சியத்திலுள்ள மகேந்திர மலை யில் அரண்மனையமைத்துக் கொண்டான். அவன் தேவராஜனாவதற்கு வேண்டிய சமயச்சடங்குகளைச் சிவகைவல்யர் என்னும் சிவப்பிராமணர் செய்தார் என்று அவனது கல்வெட்டொன்றின் மூலம் அறிகின்றோம். இந்திய வைதீக புராணமரபிலே வரும் மகாமேரு, அளகாபுரி முதலியவற்றைப் பௌத்தரும் சமணரும் தமக்கேற்ற வகையில் ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தமது புராணங்களில் வருணித்துள்ளனர். தனாதிபதி யான குபேரன் பௌத்த புராணமரபினிலே வைஸ்ரா வணன் எனக்குறிப்பிடப்படுவான். சமணம், பௌத் தம் ஆகிய தத்துவங்கள் தோன்றிய காலத்து, அவற் றைப். பேரார்வத்துடன் ஆதரித்தவர்களுள் வைசிய (வணிக) குலத்தவர் குறிப்பிடத்தக்கவர். எனவே, செல்வக் கடவுளான குபேரன் சைவர்களுக்கு மட்டு மன்றிப் பௌத்தர், சமணர் முதலாயினோருக்கும் உரிய திக்குப்பாலகனாகக் கருதப்பட்டான். பெளத்த சம யம் பரவிய திபெத் நாட்டிலே லாசா என்னுமிடத்தில் பொத்தாலா என்னும் மலையிலேயே தலைலாமாவின் கோயில் அமைந்துள்ளது. தலைலாமாவும் தேவரா ஜனே.
வைதீக மரபிற்கு நீதிவகுத்த மனு குபேரனைப்பற் றித்
தமது-தருமசாத்திரத்திற் குறிப்பிட்டுள்ளார்.

Page 55
காவ
88
சிங்ககிரிக் காவலன் குபேரனைப்பற்றி மனு ஓரிடத்திற் குறிப்பிடுவது வரு மாறு:
காவலன் இல்லையேல், எளியோர் வலியோரை அஞ்சி அழிந்து போவர். ஆனால், உலகம் அழியா திருக்கும் பொருட்டே இ  ைற வ ன் மன்னனைப் படைத்தார்.
இந்திரன், வாயு, எமன், சூரியன், அக்கினி வருணன், சந்திரன், அளகேசன் ஆகிய திசைக்கா வலர் அனைவரின் தன்மைகளும் ஓருருவாகத் தோன் றியவனே அரசன்.
திசைக் காவலரான தேவர்களின் வடிவினன் ஆதலால் மனிதர்களின் மிக்கொளியுடையவனாயும், ஆண்டு கொள்ளும் ஆற்றல் மிக்கவனாயும் அரசன் திகழ்கின்றான்.
தனது மகிமையினால் அவ்வப்போது தீயாகவும், காற்றாகவும், சூரியனாகவும் சந்திரனாகவும், எமனாக வும், குபேரனாகவும், வருணனாகவும், தேவேந்திரனாக வும் இருப்பான்”
( மனு : 7 : 3-7) தருமசாத்திரத்திலே 'தூயதான சுவர்க்கத்தைத் தரு கின்றபட்டத்து அரசரான 'வர்களின் மாண்பையும் பண் பையும் கூறும் ஏழாம் அத்தியாயத்திலேயே மனு மேற் கண்டவாறு எழுதிச் செல்கின்றார். மன்னரின் தெய் வாம்சத்தை இது வலியுறுத்தும். தெய்வ அரசர் என் னும் கொள்கை உருப்பெறுவதற்கு இத்தகைய கருத் துக்களும் உதவின எனக் கொள்ளலாம்.
சிற்சில நாடுகளிலே இக்கருத்தானது திட்டவட்ட டமான சமூக - அரசியற் கோட்பாடாக வளர்ந்தது. காசியப்பன் இக்கொள்கைக்கு ஆட்பட்டான் எனக் கருத இடமுண்டு. அதனை எடுத்துப் போதிக்கத் தகுந்த

அநுபந்தம்
89
ராஜகுருக்களும் இருந்தனர் போலும். புராதன சுமே ரியச் சக்கரவர்த்திகளைப் போலவும், பிற்காலத்துத் தலை லாமாக்களைப் போல வு ம், சைலேந்திர மன்னரைப் போலவும், காசியப்பனும் தேவராஜக் கோட்பாட்டிற்கு ஆளாகித் தன்னை உயர்த்தியதன் விளைவாகவே மகா விகாரைக்கும் அவனுக்கும் இணைக்கமுடியாத பிளவு ஏற்பட்டது. அவனுக்குப் பின்னர் வேறெந்த இலங்கை மன்னனும் சிகிரியைத் தனது உறைவிடமாகக் கொள்ள விரும்பாமைக்கும் இதுவே காரணமாயிருக்கலாம்.
மேற்கூறிய கருத்துக்களின் மெய்ப்பொய்ப்பாடு எவ் வாறாக இருப்பினும், அரசியற் சதுரங்கத்திலே வலுக் கொள்கையைக் கடைப்பிடித்தவனாகக் - காணப்படும் காசியப்பன், அற்புதமான கலாவிநோதனாகவும் இருந் திருக்கின்றான் என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை - வண்மைக் கவிஞர் கனவினைப்போல வான்புகழ் பெற்ற ஓவியங்களை அவன் அனுபவித்துள்ளான். புகழ் மணக் கும் இக்குகை ஓவியங்களைப்பற்றியும் அறிஞரிடையே கருத்தமைதியில்லை. இடைக்குக் கீழே முகில்களாலே மறைக்கப்பட்டவரான கன்னிகையர் இருபத்தொருவர் இன்று இவ்வோவியங்களிற் காணப்படுகின்றனர்; காலத் தால் அழிந்தவை பல என் பதற்குப் போதிய சான்று கள் உண்டு. இச்சித்திரங்கள் குறித்து நிற்கும் மெல் லியலார் யாவர் என்பதே ஆராய்ச்சியாளர் கருத்தை அலைக்கும் கேள்வி.
கிளைவ் பெல் என்னும் தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர், இப்பெண்கள், காசியப்பனின் உவளக மகளிர் என்றும், அவர்கள் அண்மையிலுள்ள கோயிலொன்ற னுக்குச் செல்வதனையே இவ்வோவியங்கள் குறித்து நிற்கின்றன என்றும் கூறுவர்.
கலாயோகி ஆனந்தக்குமாரசாமி அவர்கள், வேறு விதமாகக் கூறுவர்; "இவர்கள் மானிடப் பெண்டிர்

Page 56
90
சிங்ககிரிக் காவலன்
அல்லர்; முகிற்கூட்டங்களுக் கூடாகச் செல்லும் அப் சரப் பெண்கள் " என்பார்.
ஹாவெல் என்னும் கலாவிமர்சகர் முற்கூறிய இரு வரது கருத்தையுந் தழுவி, காசியப்பனின் மனைவியர் தேவலோகஞ் செல்லும் கற்பனைக் காட்சி அவ்வோவி யங்கள் என் பார்.
- பேராசிரியர் பரனவித்தான முற்றிலும் நூதனமான கருத்தொன்றனைக் கூறியுள்ளார். ஓவியங்களிலே காணப் படும் பொன்னொளிர் மேனியினர் மின்னலையும், சற்றுக் கருநிறத் தோற்றத்தினர் மேகங்களையும் குறிப்புணர்த் திக் காட்சி தருகின்றனர் என்பது அவர் துணிவு. சிகிரிக்குன்று அளகாபுரியாகக் கொள்ளப்பட்டதால் இத் தகைய விளக்கம் பொருந்தும் என்று வாதிடுவார்.
திருவாளர் நந்ததேவ விஜயசேகரா அவர்கள் கருத் தும் இங்கு குறிப்பிடத் தக்கதே. காசியப்பனின் அர சியர் கவன்று அழுங்காட்சியே ஓவியத்தின் செய்தி என்று அவர் தருக்கிப்பார்.
பிரபல சிங்கள எழுத்தாளரான மார்ட்டின் விக் கிரமசிங்கா அவர்கள் கூற்றும் சுவையானதே.. மலருங் கையுமாகக் காணப்படும் பெண்கள் நீர் விளையாட்டிலே ஈடுபட்டுள்ளனர் என்றும், ஒரு பெண்ணின் கரங்களிலே நீர் சிவிறும் விசிறி காணப்படுகின்றது என்றும் அவர் கூறுவார். பண்டைய இலக்கியங்களிலே இத்தகைய காட்சிகள் உள்ளன.
சிகிரிச் சித்திரங்களைப்பற்றிய முக்கியமான விளக் கங்கள் இ  ைவ யே. ஒவ்வொன்றும் தக்கவர்களால் எடுத்து மொழியப்பட்டுள்ளது. எனினும் உண்மை இதுதான் என்று இயம்பிவிடுவது இலகுவன்று. ஏனெ னில், ஒவ்வொருவரும் சான்றுகள் காட்டியே தத்தம் கட்சியை நிலை நிறுத்துவர். உதாரணமாகக் கொழும்பு நூதனசாலையில், இனவியல் அறிஞராகக் கடமையாற்
ல சி' கள் சி, பெண்,

அநுபந்தம்
91
றிய திரு. எம். டி. இராகவன் என்பார், இன்றுகூட இலங்கையிலே இத்தகைய காட்சியைக் காணலாம் என்றும், பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த சிங்களப் பெண்கள், பணிப்பெண்கள் பின்னாலே வட்டில் ஏந்தி வர, மங்கலமாகச் செல்லும் காட்சியையே இது நினை வூட்டுகின்றது என்று கூறியுள்ளார். அவர் கூற்றும் அமைதியுடையதாகவே தோற்றுகின்றது. ஒருவேளை எதிர்காலத்தில் இவ்வோவியங்கள் பற்றிய உண்மை - பொதுமையாக நிரூபிக்கப்படக்கூடும்.
நவீன ஆராய்ச்சியாளர் ஓவியங்களின் ' ெச ய் தி பற்றித் தம்முள் முரண்படினும், ஒன்று மட்டும் உண்மை. இவை தீட்டப்பெற்ற காலத்திலிருந்தே கலாரசிகர்கள் இவற்றைச் சிறந்த படைப்புக்களாகக் கருதி வந்துள் ளனர், காலத்தாற் சாகாமலும், காலத்தின் ஏலத்தால் மலியாமலும் விளங்கும் வர்ண ஓவியங்கள் அவை. பல நூற்றாண்டுகளாகச் சிகிரிமலைக்குச் சென்று ஓவி யங்களைக் கண்ட னுபவித்தவர்கள் எண்ணற்றோர். அவ ருட் சிலர் தம்முள்ளத்து உவகையைச் செய்யுளிலும் உரையிலும் சிகிரிச் சுவர்களில் கீறிவிட்டுப் போயினர். ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டிலிருந்தே இவ்வழக்கம் ஏற் பட்டுவிட்டது. வடமொழி, சிங்களம், தமிழ் முதலாய மொழிகளில் எழுதப்பட்டுள்ள இக்கீறற் செய்யுட்களிற் பெரும்பாலானவை சிங்கள மொழியில் அமைந்தவை. சிகிரிக் கீறற் செய்யுட்கள் (Sigiri Graffiti) என்னும் பெயரில் அவற்றையெல்லாம் பல்லாண்டுகளாக அரிதின் முயன்று சேர்த்து, ஆராய்ந்து அரும்பெரும் நூலாக வெளியிட்டுள்ளார் பேராசிரியர் பரனவித்தான. அவற் றில் இரண்டொன்றை இங்கு நோக்குவோம். செய்யுட் களை உரைநடையில் மொழிபெயர்த்துள்ளேன்.
மகா அமுந்தோரை என்னுமிடத்திலிருந்து சிகிரி சென்ற மகாசாத்தாய் என்பவர் என்றோ பல நூற்றாண் டுகளுக்கு முன் எழுதியது இது.

Page 57
92
சிங்ககிரிக் காவலன்
"சிகிரிச் சித்திரங்களைக் கண்டு சிந்தையிழக் காதவர் யார்? பிரிந்த காதலர் கூடினர் எனின்
சேர்ந்தே இருப்பவர் மன நிலை செப்புந் தரமாமோ?'' யாரோ ஒரு பாண்டிய மன்னது அடிமைகள் நாய கம் (மேற்பார்வையாளன்) என்று தன்னைக் குறிப் பிடும் நக்க(ன்) மாதம்பியா(ன்) என்பவன் உயர்வு நவிற்சியாக மேல்வருமாறு கூறியுள்ளான்,
''சிகிரி மெல்லெனத் தேவருலகைத் தாங்குவத னால், மேருமலை - தன் துயர் தவிர்ந்து மகிழ்ந்திடு கின்றது".
சிகிரி ஓவியங்களிற் காணப்படும் பெண்களை ஊனும் உதிரமும் கொண்ட உயிர் மங்கையராகவே கொண்டு செய்யுட்கள் புனைந்தனர் பலர். உணர்ச்சி வசப்பட்ட ஒரு பிரகிருதி பின்வருமாறு எழுதிச்சென்றது.
''ஆடையிலே பல நிறக் குளிர் மலர்களைச் சொரு கிய நீள்விழிப் பொன்னொளிர் மேனியாளைக் குகை
யிற் கண்டதும் என் வசமிழந்தேன்'' இலக்கிய நயம் பொருந்தும் கற்பனையுடன் எழுதிச் சென்றார் யாரோ ஒரு இரசிகன்.
''கையிலே கொண்ட மலரையே தாங்க முடி யாமல் வருந்தும் மெல்லியலாள் கொத்துமலர் கொய்ய மாட்டாதவள்! ஆயின் உள்ள முழுவதை
யுந் திருகிக் கொள்ளை கொண்டவள்'' ஓவியங்களைப் பார்த்துச் சுவைத்த சிலர் அழகை மாந் தியதால் நிலைதவறிச் சற்று விரஸமாகவுஞ், சில வார்த் தைகளைக் கூறியுள்ளனர். ஒரு பாடலிலே பின்வரும் கருத்துக் காணப்படுகின்றது.
''அசையாத கண்களிலே என்ன அழகைக் கண்டனரோ? கன்னியின் அங்கங்கள் தோறும் பற். பல அழகுகள் தோன்றுவதைக் கண்டபின்னும்...''

அநுபந்தம்
93
கீறற் செய்யுட்கள் சிலவற்றிலிருந்து பல அழகிய ஓவி யங்கள் அழிந்தொழிந்தன என ஊகிக்க வேண்டியுள் ளது. ஏனெனில், சில செய்யுட்கள் வருணிக்கும் காட்சி கள் இன்று காணப்படவில்லை. உதாரணமாக ஒரு கீறற் செய்யுளிலே மேல்வரும் அடிகள் காணப்படுகின்றன.
" தன் காதலன் இறந்தான் எ ன க் கேட்ட பொழுது, அவ்வீணையினைக் கீழே புழுதிக்குள்
எறிந்தாளோ?" இன்று வீணையைக் கீழே போட்ட பெண்ணைக் காட்டுஞ் சித்திரம் எதுவும் சிகிரியில் இல்லை. அது காலத்தால், மறைந்து போயிருத்தல் வேண்டும்.
மனித உள்ளங்களுக்கு எண்ணற்ற இதயத் துடிப் புக்களைக் கொடுத்த சிகிரிச் சித்திரங்கள், பல வகை களில் அஜந்தாக் குகையோவியங்களோடு நெருங்கிய ஒப்புமையுடையன; சில முக்கியமான வேறுபாடுகளும் உள். அதனைப் போலவே இந்தியாவின் பிறபகுதிகளி லுள்ள கலைப்பண்புகளோடும் மிகுந்த ஒற்றுமையுடை யன சிகிரிச் சித்திரங்கள். கிறித்து சகாப்தத்தின் முற் பகுதியிலே ஆந்திர நாட்டில் அமராவதிக் கரையிலே செழித்து ஓங் கி ய சிற்பவடிவங்களிற் காணப்படும் பெண்ணுருவங்களுக்கும் சிகிரி ஓவியப் பெண்வடிவங் களுக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறதென்று பல கலாவிமர்சகர்கள் கூறியுள்ளனர். கிருஷ்ணை நதிக் கரையில் ஒரு காலத்திலே நிலவிய கலைமரபு இலங்கை யிற் கலைவளர்ச்சிகுப் பெரிதும் உதவியது. இஃது வர லாறறிந்த உண்மையாகும்.
சித்தர் மலைவாசல், அஜந்தா முதலாய இடங்களிற் காணப்படுவதைப் போலவே சிகிரியிலும் ஓவியங்கள் நூதனமான வர்ணச் சேர்க்கைகளினாலே தீட்டப்பெற் றன. அவ்வோவிய முறையும் மரபும் பிற்காலத்தில் அருகிப் போயின. அஜந்தாக் குகை ஓவியங்களிலே

Page 58
94
சிங்ககிரிக் காவலன்
களது முடி அவற்றின்திரங்கள்"
சமயப் பண்பு தோய்ந்துள்ளது; அவற்றைத் தீட்டிய கலைஞர்களுக்குச் சமயப்பற்றும் சமய நோக்கும் இருந் தன; ஆனால் சிகிரிச் சித்திரங்கள் அத்தகையன அல்ல; சமயப்பண்பு அவற்றில் காணப்படவில்லை என்பதே அறிஞர து முடிவாகும். எனினும் அஜந்தா ஓவியங் களைப் போலவே இவை புலனின்பத்தை அளிப்பன;
அதிலே ஒப்புமை காணப்படுகின்றது.
சிகிரிச் சித்திரங்களிலே சமயப்பண்பும் நோக்கமும் இல்லாமையால் அஜந்தா, சித்தர் மலைவாசல் முதலிய விடங்களிற் காணப்படும், ஓவியங்களிலிருந்து சிற்சில வகைகளில் வேறுபட்டுள்ளன. பிரகாசமான வர்ணங் களைத் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளனர், சிகிரிச் சித்திரங்களைத் தீட்டியவர்கள். சமயப்பொருளை எடுத் துக் கூறும் அடக்கமும், பண் பு ம் அவர்களிடத்துக் குறைவாகக் காணப்படுவது இயல்பே. புலனுணர்ச் சியே மிக்குக் காணப்படுகின்றது. கீறற் செய்யுட்களை வரைந்தவர்களும் இப்பண்பினையே கண்டுள்ளனர். ஓவி யத்திற் காணும் பெண்களும் இலட்சணமான மேனி யழகுள்ளவாரய்க் காணப்படுகின்றனர். சமூகத்தில் உயர்ந்த நிலையிலுள்ள பெண்களாக இவர்கள் சித்திரிக் கப்பட்டுள்ளனர் எ ன் ப து சில விமர்சகர் கருத்து. உடலமைப்பும், நிறமும், மென்மை இனிமை, நளினம் ஆகியவற்றைக் காட்டுகின்றன. இப்பெண்களின் கைகள் மலர்களைப்போல உருவகப் படுத்தப்பட்டுள் ளன. மருட்சியும் துவட்சியும் அவர்களுடைய மனக் கோலத்தைக் காட்டுகின்றன. உடலின் காற்பாகம் மேகத்திரைக்குள் மறைக்கப்பட்டுள்ள இப்பெண்கள், சொப்பன சுந்தரிகளாக விளங்குகின்றனர். ஓவியர்க்கு ஓவியமாகத் திகழ்கின்றனர். அழகுக்கு அழகு கூட்டு கின்றனர்.
கீறற் செய்யுட்கள் நூற்றாண்டுக் காலமாகப் பற். பல கலாரசிகரின் உள்ளத்திலே எண்ணங்களை அலை

95
அநுபந்தம் மோதுவித்துள்ளன; அதைப் போலவே இலக்கிய கர்த் தாக்களும் காசியப்பன் வாழ்க்கையையும், சாதனைகளை யும் வெவ்வேறு கண்ணோட்டங்களிற் கண்டுவந்துள் ளனர். முரண்பாடுகள் நிரம்பிய ஒரு பெருமகனின் வாழ்க்கை முடிவற்ற ஆய்வுகளுக்கு இடந்தருவ தொன்றே. அத்துடன் ஒவ்வொருகாலமும் . தனக்கு முந்திய காலப்பகுதியினரை வேறு வேறு நோக்குடன் விளங்கிக் கொள்கின்றது. ஒரு காலத்து வீரன் பிறி தொரு காலத்து மக்களாற் கொடுஞ் செயலாளன் என்றும், பண்பற்றவன் என்றும் மதிப்பிடப்படுவதை உலக வரலாற்றிலிருந்து நாம் அறிகின்றோம். அச்சமும் அஞ்சாமையும், கொடுமையும், குளிர்மையும், நேர்மை யும் நேர்மையின்மையும், பெருநோக்கமும், சிற்றெண்ண மும் மூர்க்கத்தனமும் இளகிய சுபாவமும் அருகருகே உறையும் ஒரு விசித்திர மனிதனாகக் காணப்படுகின் றான் காசியப்பன். இயல்பாக அவனுக்கமைந்த மனப் போக்குகளைத் தவிர, அவனது சூழலே மனோபாவ னையை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தது; அந்தச்
சூழலை ஒருவாறு அறிந்துகொள்ள உதவுவனவே சிகிரிக் குன்றும், அதிற் காணப்படும் சின்னங்களுமாம், "'தக்கார் தகவிலர் என்பது, அவரவர் எச்சத்தாற் காணப்படு மா'' தலின், காசியப்பனின் கற்பனைக்கும், கடுமையான வாழ்க்கைப் போருக்கும், எண்பது கோடி நினைவுக ளால் இடியுண்ட அவன் இதயத்திற்கும் விளக்கந்தரும் வகையில் அமைந்துள்ளன இச்சின்னங்கள். காணப் படும் சிதறுண்ட, சீரழிந்த சின்னங்களைக் கொண்டு வரலாற்று உண்மைகளையும் அநுசரித்து அவற்றை ஒட்டிச் சேர்த்துப் பார்ப்போமாயின் அகக்கண்ணில் அளகாபுரியெனத் த கு ம் பெருமண்டபமொன்றிலே அமைதியின்றித் தன்னுள் அழுங்கிக்கொண்டிருக்கும் மன்னன் காசியப்பன் உருவம் தெரியலாம். ஆயினும் அது சிருட்டி இலக்கிய கர்த்தாவின் சிறப்புரிமையா கும்; அவ்வுரிமையை நாடக ஆசிரியர் 'சொக்கன்' தமது 'சிங்ககிரிக் காவலனிற்' பயன்படுத்தியுள்ளார்.

Page 59
அச்சுப்பதிவு :
கலைவாணி அச்சகம், 10, மெயின் வீதி,
யாழ்ப்பாணம்.

一一

Page 60
நஈ யா யா யா யா யா
சிலம்பு பி
(196 ம் ஆண்டு கலைக்கழக 0
சொக்க
பத்திரிகைகள் 5
இவ்வளவு குறைந்த வி! கம் கிடைத்தது நமது பா.
2ா யாய யா யா யா யா யா யா யா யா காப்பி ) பாபா யா யா யா ளரி யம்
இந்நூலாசிரியரின் முய தமிழ் நாடகக் குழுவினரின்
குரியது.
இந்நாடகம் 8 யில் எழுதப்பெற்றிருக்கிறது
ஏழு காட்சிகளில் இந்து = பது பெரும் சிறப்பு.
சிலப்பதிகாரச் செய்யுள் = ஆக்கப்பட்ட செய்யுள்கள் * தி பெற்றுள்ளன. அவை நல்ல
ஓர் இலக்கிய நாடகமா அமைந்துள்ளது.
இதன் விலை |
பயிற ர. Jain. I )

-ரிம் யா யா ய
சிறந்தது
முதற்பரிசு பெற்ற நாடகம்)
கன் 9)
கூறுகின்றன:
Fin lim " liா யாilm I ா ய ா ய ாாை டா ட
லையில் இந்த நல்ல நாட 2 க்கியம் - தினகரன் *
பற்சியும், கலைக் கழகத் த " சேவையும் போற்றற் 5
- வீரகேசரி 7
சிறந்த இலக்கிய நடை 3
- கல்கி 5 5 நாடகம் அமைந்திருப் =
- தமிழ்முரசு 2 கள் சிலவும், ஆசிரியரால் = சிலவும் இந்நூலில் இடம் =
செய்யுள்கள்.
- கலைச்செல்வி 5 கச் “சிலம்பு பிறந்தது !
- ஈழந டு = ரூபா 1.25 வா டா டாவயா
|
12