கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2002.08-09

Page 1
உறுhறுAAAAAAA
உ சிவம் திருச்சிற்ற
சைவநீதி
பி4/VANEETHC
சைவு SAIVAN
ப( மலர் 6 | சித்திரபானு - ஆவணி | AL

TAVAATAMATAY,
பம் ம்பலம்
15)
சைவசமய வளர்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ்
EETHI
\GUST - SEPTEMBER 2002
இதழ் 05 )
எaSAAAAAAAAAASAAAA
ரூபா 25/= த

Page 2
பொருள் 1. வெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டா 2. திருஞானசம்பந்தர் தேவாரம்
3. சிவபூசை செய்தவைகள்
: 'ச
புராண பரிபாலனமூர்த்தி
5. நிதானம்
ஸ்ரீ இடைக்காடர்
ம் 6 ல் 5
ஆலயங்களில் கொடியேற்றுவிழா
பழ1 ... -
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தருடைய நட
நாவழுத்தும் சொல்மலர்...
10. சண்டேசுர நாயனார் ....
11. பிரசங்க வழி .....
12. சிவப்பிரகாசம்
13. தத்துவ உலகில் தடம் பதித்த மேதை
-------------------
சந்தா நேயர் முகவரி மாற்றம் இருப்பின் எமக்கு - இதழ்கள் ஒழுங்காகக் கிடைக்காவிடின் இதழ்களை அனுப்பிவைப்போம்.
சைவநீதி ட
பெறுமதி தனிப்பிரதி ரூபா 25.00 ஆண்டொன்றி
ஆண்டொன்றிற்கு ஸ்ரேலிங் சைவநீதியின் வளர்ச்சியில் எங்கள் பங்களிப்பு என
சந்தா அனுப்பவேண் C. Navaneethaka 42, Janaki Lane, C Sri Lanka. T'Phone No: 5952,
சைவநீதி இதழில் வெளிவரும் கட்டு கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பா

ாடக்கம்
ல்
.02
..03
..04
•09
10
லை நீக்கும் நற்பதிகங்கள்
15
.24
பண்டிதர் மு. கந்தையா
29
-------
----
கவனத்திற்கு அறியத்தரவும்.
எம்முடன் தொடர்புகொள்ளவும். கிடைக்காத
------ மாத இதழ்
தி விபரம்
ற்கு ரூபா 250.00 ஏனைய நாடுகளில் பவுண் 10 அல்லது US$ 15 என என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக. டிய முகவரி: umar olombo- 04,
ரைகளிலுள்ள கருத்துக்களுக்குக் ளிகளாவர். - இதழ் நிர்வாகிகள்

Page 3
உ
சிவம்
"மேன்மைகொள் சைவநீதி
சைவநீதி \\ ஒய் இம்)
/ே/VANEET
சை
VEETHY
மல 6 சித்திரபானு ஆவணி வைசமய வ
வெண்ணி
கெளரவ ஆசிரியர்:
ஞானசிரோமணி, சைவப்புலவர்மணி, வித்துவான், திரு. வ.செல்லையா
சைவர்கள் உருத்திராக்கரு நெற்றிபாழ்" என
மதியுரைஞர் :
காலையும், 1 முன்பும் பின்பும் முன்பும் பின்பும்
சிவரீ. கு. நகுலேஸ்வரக்குருக்கள்
திரு. D.M. சுவாமிநாதன்
அறங்காவலர், ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
திரு. அ. கந்தசாமி Chairman U.P.S.
திரு. கு. மகாலிங்கம்
வடக்கு மு வலது சுட்டுவிரல் திருநீற்றை எடு நெற்றியில் பரம் யோர் திருநீறு ; வாங்கி அணிய திருநீறு தரித்த திரும்பி நின்று
சிவதீட்சை வாங்கிய திருநீற ஒரு விரலால் த மேனும், குங்கு என்பவற்றை ரெ
பேணி அல் பாவங்களைப் (
அது நாம் அஞ்சு
பதிப்பாசிரியர்: திரு. வே. திருநீலகண்டன் லக்ஷமி அச்சகம்
விநியோகம்: திரு. க. சீனிவாசகம் ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி
நிர்வாக ஆசிரியர்: திரு. செ. நவநீதகுமார் 42, ஜானகி ஒழுங்கை, கொழும்பு - 04.
நோய் வந்த இறைவன் அடி திருவடியை வ கண்டால் அம்ப
தொடர்புகட்கு: 7.30 p.m. to 7.30 a.m.
பிணியெலாம் 6 துணிநிலா அன் திணிநிலம் பிள அணிகிலா தல
தொலைபேசி: 595221

யம்
விளங்குக உலகமெல்லாம்”
பநீதி
ளர்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ் - 03
று அணிகிலாதவரைக் கண்டால்
அவசியமாகத் தரிக்கவேண்டியவை திருநீறும் மாம். இவை சிவசின்னங்கள் எனப்படும். "நீறில்லா ர்பார் ஒளவையார். மாலையும், நீராடிய பின்னரும், உணவு உண்பதற்கு 5 நித்திரைக்கு முன்பும், பின்பும், சிவபூசைக்கு > அவசியமாகத் திருநீறு அணிதல் வேண்டும். கமாகவேனும் கிழக்கு முகமாகவேனும் நின்று , நடுவிரல், அணிவிரல் ஆகிய மூன்று விரல்களாலும் த்து அண்ணாந்து "சிவ சிவ” என்று சொல்லி விப் பூசுதல் வேண்டும். குரு, சிவனடியார், பெரி தந்தால் அவர்களை வணங்கி, இரு கைகளாலும் வேண்டும். குரு முன்னும், இறைவன் முன்னும் லாகாது. அவ்விடங்களில் திருநீறு தரிக்கும்போது
தரித்தல் வேண்டும். இல்லாதவர்கள் தந்த திருநீறும், விலைக்கு பம், ஒருகையால் வாங்கிய திருநீறும் அணியலாகாது. கிருநீறு தரித்தலாகாது. திருநீற்றின் மேல் சந்தன மமேனும் அணிதல் ஆகாது. சந்தனம், குங்குமம் நற்றியிலே புருவ மத்தியில் அணிதல் வேண்டும். னிபவற்குப் பெருமை கொடுக்கும் திருநீற்றை, போக்கும் திருநீற்றை அணியாதவரைக் கண்டால் ம் வகையாகும் என்பார் மாணிக்கவாசக சுவாமிகள். தாலும், பிறப்பிறப்பு வந்தாலும் அஞ்சமாட்டேன். உயவரோடு ஆனந்தத்தில் ஆழ்ந்து, இறைவன் எழ்த்தித் திருவெண்ணீறு அணியமாட்டாதவரைக் » அது நாம் அஞ்சும் வகையாகும். வரினும் அஞ்சேன் பிறப்பினோடிறப்பும் அஞ்சேன் ரியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால் பந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு -ரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே.

Page 4
சித்திரபானு - ஆவணி
திருஞானசம்பு
திருமுது
திருச்சி என்றும் இன்பமுடன்
திருவிருது
பண்: குறிஞ்சி
சுவாமி:- பழமலைநாதர்
நின்று மலர்தூவி, இன்று முதும் நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இ
அத்தன் முதுகுன்றைப், பத்தி | நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் ( ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கைகள் கூப்புவீர், வையம் உம்
ஈசன் முதுகுன்றை, நேச மாகிர வாச மலர்தூவப், பாச வினை
மணியார் முதுகுன்றைப், பணிவு பிணியா யினகெட்டுத், தணிவா
மொய்யார் முதுகுன்றில், ஐயா பொய்யா ரிரவோர்க்குச், செய்ய
விடையான் முதுகுன்றை, இடை படையா யினசூழ, உடையார்,
பத்துத் தலையோனைக், கத்த
அத்தன் முதுகுன்றை, மொய்த்து
இருவர் அறியாத, ஒருவன் முது உருகி நினைவார்கள், பெருகி
தேரர் அமணரும், சேரும் வகை நேரின் முதுகுன்றை, நீர்நின் று
நின்று முதுகுன்றை, நன்று சம் ஒன்றும் உரைவல்லார், என்றும்
திருச்சி

2 )
சியா
சைவநீதி ந்தர் தேவாரம்) ரகுன்றம் 3றம்பலம்
வாழ ஓதும் பதிகம் நகுக்குறள்
1 ஆம் திருமுறை தேவி:- பெரியநாயகி
தன்றை இன்பமே.
பாகிநீர் செல்வமே.
1 கெடநின்று
தாமே.
மது - D
பாமே.
il 1111. பு:
பா ரவர்கண்டீர்
ருலகிலே.
வெனவல்லார் பாள் அணியாளே.
டயா தேத்துவார் உலகமே.
விரலூன்றும் துப் பணிமினே.
On S
வகுன்றை
நிகழ்வோரே.
நயில்லான் ள்குமே.
10
பந்தன்
உயர்வாரே.
11
ற்றம்பலம்

Page 5
சித்திரபானு - ஆவணி)
சிவபூசை செ
}4 F
குதிரை சிலந்தி கழுகுடும்பு
குரங்கு நரியீ யெறும்புசிதன் மதுவண் டலவன் கரியரியா
மஞ்ஞை யெகினம் புறாவாந்தை ததியெண் காமைமுயல் கோம்பி
தத்தை கேழ லருச்சிப்ப விதியும் விலக்குங் கடந்தாற்கு
விதியா லொன்றை விதிப்பாரார்?
குறிப்புரை:- குதிரை, சிலந்தி, கழுகு, உடும்பு, குரங்கு, நரி, ஈ, எறும்பு, கறையான், வண்டு, நண்டு, யானை, சிங்கம், பசு, மயில், அன்னம், புறா, ஆந்தை, கரடி, ஆமை, முயல், பச்சைஓணான், கிளி, பன்றி முதலிய விலங்குகள் செய்த சிவபூசையையும் தேவர் ஏற்றுக் கொண்டுள்ளதால் தனி ஒரு விதி தேவையில்லை அன்றோ?
திருவண்ணாமலையைப் பிரதட்சணம் செய்த குதிரை நற்பதவி பெற்றது. திருந்து தேவன் குடியில் வழிபட்ட குதிரை பிறவி நீங்கியது. திருவானைக்காவலில் சிலந்தி பூசித்துப் பேறு பெற்றது. திருக்கழுக்குன்றத்தில் சண்ட, பிரசண்ட, சம்பாதி, சடாயு, கம்பு, குந்தன், மாகுத்தன் முதலிய கழுகுகள் பூசித்து முத்தி அடைந்தன.
திருமகாகறல் தலத்தில் உடும்பு சிவலிங் கத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறது. குரங்கணில் முட்டம், என்ற தலத்தில் குரங்கு, அணில், காகம் ஆகியவை சிவனை வழிபட்டு முத்தி பெற்றன. மயிலாடுதுறையில் நந்தி பூசித்துப்

- பொசான NAகம்
(சைவநீதி)
4. ?
மிதவைகள்
&
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்
பேறு பெற்றது, திருஈங்கோய்மலையில் ஈயும், திருவெறும்பியூரில் எறும்பும் பூசித்து நற்கதி அடைந்தன. நண்டு திருந்துதேவன்குடியில் வழிபட்டு சிவப்பேறு எய்தியது. திருஆமாத்தூரில் வண்டு வடிவில் பிருங்கி முனிவர் வழிபட்டுள்ளார். சீகாளத்தி, திருவானைக்கா, பெண்ணாகடம் எனப்பல தலங்களிலும் யானை பூசித்து நற்கதி அடைந்துள்ளது. திருவாவடுதுறை, பெண்ணாகடம் போன்ற தலங்களில் பசு வழிபட்டு சிவகதி அடைந்தது. மயிலாப்பூர் மற்றும் மயிலாடுதுறையில் மயில் வழிபட்டு பிறவி நீங்கியது. திருமணஞ் சேரியில் ஆமையும், திருக்கழுக்குன்றத்தில் பன்றி யும் வழிபட்டு சிவப்பேறு எய்தின. கறையான், அன்னம், ஆந்தை, கரடி, முயல், ஓணான், கிளி போன்றவைகளும் இறைவனை வணங்கிப் பிறவி நீங்கியுள்ளன. கறையான் எனப்படும் புற்றின் பெயரில் சிவன் நாமம் கொண்டு புற்றிடங்கொண் டராகித் திருவாரூரில் எழுந்தருளியுள்ளார். பிரமனின் வாகனம் அன்னம். பூச்சிகள், பறவைகள்,
விலங்குகள் ஆகியவை இறைவனை வழிபட்டு முத்தி அடைந்துள்ளதால் மானிடர்கள் சிவனை நாளும் பூசித்து நற்பேறு பெறுங்கள் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். விலங்குகள், மரங்கள், பறவைகள் மற்றும் சிவனை வழிபட்டு நற்கதி
அடைந்தமைக்குப் பல தல புராணங்களில் சான்
றுகள் உள்ளன.
புட்பவிதி

Page 6
சித்திரபானு - ஆவணி
புராண பரிபு
வாதநாராயணர் என்னும் பெயர்பெற்ற வியாச முனிவர் சிவபெருமானுடைய அநுமதிப்படி சனற் குமார முனிவரிடத்தில் மாணாக்கக் கிரமமாகப் பதினெண்புராணங்களையும் ஓதியுணர்ந்தார். பின்பு, யாவருந் தம்மை நினைத்துத் தொடங்கிச் செய் கின்ற கருமங்களை விக்கினமின்றி நிறைவேற்றுந் தெய்வமாகிய விநாயகமூர்த்தியை வழிபடாது அப்புராண சரித்திரங்களைச் சுலோகரூபமாகச் சொல்லத் தொடங்கினார். அவர் விக்கினேசுவர ருடைய கிருபையைப் பெற்றுத் தொடங்காமையால் உண்மை ஞானத்தைப் பெறாமல் ஊமரைப் போல வருந்தி மயங்கிப் பிரமதேவரிடம் போய்த் தமது குறையை விண்ணப்பித்தார். பிரமா, வியா சரை நோக்கி, "முனிவனே, நீ வேதத்தை நான் காகப் பகுத்தபோது, முதலில் பிரணவத்தை உச்சரியாதபடி வேதமோதுதல் முறையல்ல என் பதை உணர்ந்து முதலிற் பிரணவத்தைச் சொன் னாய்; பிரணவப் பொருளாயிருக்கும் விநாயகர் தம்மைப் பிரணவத்தினாற் தோத்திரஞ் செய்யத் திருவுள்ளமுவந்து இடையூறு சேராவண்ணங் காத்தருளினார். இப்பொழுது வித்தியாகருவத்தி னால் விக்கினங்களை நீக்குங் கடவுளை மனம் வாக்குக் காயங்களினால் வழிபாடு செய்யாமல் புராணஞ் சொல்லத் தொடங்கின்மையால் இத் துன்பம் வந்து சேர்ந்தது. விநாயகக் கடவுளைப் பூசை செய்யின் அவர் உண்மை ஞானத்தைத் தந்து, எடுத்த கருமத்தை நிறைவேற்றுவார்” என்று உபதேசித்தார்.
வியாச முனிவர் பிரமாவை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, ஒரு வனத்திற் சென்று கணபதி யைத் தியானித்துப் பன்னிரண்டு வருடந் தவஞ் செய்தார். விநாயகர் கிருபை கூர்ந்து காட்சி
செல்லத்துக்காப்பான்சனம் காப்பான்
காகன்னகாவாக்கால் என்க் பலிக்குமிடத்தில் சினம் வராமல் தடுப்பவனே, உ இடத்தில் அது தானே அடங்குவதால் அதைத்

வைந்தி
பாலனமுர்த்தி
சிவஸ்ரீ. ச. குமாரசுவாமிக்குருக்கள்
கொடுத்தருளினார். முனிவர் அன்புடன் நமஸ்கா ரஞ் செய்து, கண்களினின்றும் ஆனந்த அருவி சொரிய, சரீரம் புளகங்கொள்ள, அகமுருகிச் "சச்சிதானந்த சொரூபரே! அடியேனது மலபா சத்தை நீக்கி, நீங்காத மெய்யன்பைத் தருதல் வேண்டும். பதினெண் புராணங்களையும் இடையூ றின்றி நிறைவேற்றவும் கிருபை செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தார். விநாயகக் கடவுள், "அவ்வி தமே ஆகுக” என்று கிருபை செய்து, மறைந்தரு ளினார். வியாசமுனிவர் தமக்குக் கணேசப் பெரு மான் காட்சி கொடுத்தருளியவிடத்தில் ஒரு ஆல யமுண்டாக்கி, விநாயகரைப் பிரதிட்டை செய்து, பதினெண்புராணங்களையும் இடையூறின்றி நிறை வேற்றினார். இதனை விநாயகபுராணம் வியாசர் பிரமனையடுத்த படலத்தானும், வரம் பெறும் படலத்தானும் உணர்க.
புராணமாவது பரமசிவன் உலகத்தைப் படைத் தல், அழித்தல் முதலியவைகளைக் கூறும் வேதவாக்கியப் பொருளை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது. சைவபுராணம் முதல் பிரமாண்ட புராணம் இறுதியாகிய பத்தும் சிவபுராணங்களாம். காருட புராணம் முதல் பாகவதபுராணம் இறுதி யாகிய நான்கும் விஷ்ணு புராணங்களாம். பிரம் புராணம், பதும் புராணம் என்னும் இரண்டும் பிரம் புராணங்களாம். ஆக்கினேயம், அக்கினி புராண மாம். பிரமகைவர்த்தம் சூரியபுராணமாம்.
வைஷ்ணவ புராணங்களிலும் பிறவிடங்களி லும் சிவன் எனப்படும் உருத்தின் விட்டுணுவினி டத்திற் பக்தி செய்தார் என்றாவது, விட்டுணுவை வணங்கினார் என்றாவது அபகர்ஷமுடையவராகக்
அல் இடத்துக
ண்மையில் அதைத்தடுப்பவன் ஆவான் பலிக்காத தடுத்தாலென்ன? தடுக்காவின் பால் என்ன?

Page 7
சித்திரபானு - ஆவணி கூறப்படுமிடங்களில் அவர் சிவனாரது கேவலம் விபூதியாம் (அணுருத்திரராம்) என்று பராசரபுராணம் கூறுகின்றது. சிவபுராணக் கதைகள் சிறிதும் மறு வில்லாதன; அவை எவையும் பெருமை படைத் தனவாம். அவற்றுக்குச் சான்றாயுள்ளன வேதங் கள்; அவ்வுண்மையை அறிஞர்கள் வேதங்களில் ஆராய்ந்துணர்ந்து கொள்வார்களாக. சிவபுரா ணங்களை விடுத்து ஏனைய விட்டுணுபுராணம் முதலியன அவ்வத்தேவர்கள் செய்த செய்கை களுள்ளே நல்லனவாயுள்ளன சிறிதாயிருப்பின் அவற்றை விரித்துப் பேசும். அவர்களிடத்திற் குற்றங்கள் காணப்படின் மறைத்துவிடும். மறைத்து விடுதலோடமையாது இல்லாத கதைகளையும் முகமனாக எடுத்துக்கூறும்; உலகத்திலுள்ளார் விட்டுணுபுராணம் முதலியவைகளைப் படித்திருந் தாலும் அவர்கள் சந்தேகங்கள் சிவபுராணங் களைப் படித்தாலன்றித் தீரா. எங்ஙனமெனில், அரசனுடைய அகண்டைசுவரியத்தைப் போய்ப் பாராத ஒவ்வொருவனும் தன் தன் செல்வத்தையே பெரிதென்று எண்ணுமாறு போலாம்” என்னும் பொருள் தோன்ற கச்சியப்பசிவாசாரிய சுவாமிகள் கந்தபுராணத்திற் கூறியிருக்கின்றனர்.
வேதப் பொருள்களை உள்ளபடி உணர்ந்து கொள்வதற்குப் புராணங்களே அங்கமாகின்றன. ஆரணம் முழுதும் உணர்ந்த வேதியனேயானாலும் சிவபுராணத்தின் பொருளையுணர்ந்திலானாயின், வேதமானது அவனைப் பூமியிலே நம்மை வஞ்சிப் பவன் இவனாம் என்று அஞ்சுகின்றது. ஆதலி னாலே வேதத்தின் பொருளைப் புராணத்தால் அறியவேண்டும். அரகத்தாசாரியர் தாம் அருளிச் செய்த சதுர்வேத தாற்பர்ய சங்கிரகம் சுலோகம் 117-ல் வேதப்பொருளை நிச்சயித்தற்குப் புராணம் அங்கமாம் என்று அருளினார். சிவஞான சுவாமி களும் சிவஞானபோத பாஷ்யத்து முதற் சூத்தி ரத்து இரண்டாமதிகார உரையில், "இனி உண்மை யான் நோக்குவார்க்குச் சிவபுராணங்களெல்லாம்
CH CSI சிSITIC STUtilSITETITenT matter whether he restrain it, or does not restrain /

சைவநீதி ம் வேதப் பொருளையே விரித்தெடுத் தோதுதலிற் சிறந்த பிரமாணமெனவும், ஏனைய புராணங்கள் அங்ஙனம் அல்லாமையின் இவற்றோடு முரணிய வழி முரணாதவாறு உய்த்துணர்ந்து பொருள் கொள்ளப்படும் எனவும்” என்றருளிச் செய்தனர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சிவபெருமானது பரத்தன்மையை விளக்குவன புராணங்களே என்னுமுண்மையை,
வேத முதல்வன் முதலாக விளங்கிவைய மேதப்படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப் பூதமுதல்வன் முதலே முதலாகப் பொலிந்த சூதனொலி மாலையென்றே கலிக்கோவை சொல்லே.
என்றருளிச் செய்தனர். சேக்கிழார் சுவாமி களும். இத்தேவாரப் பொருள் அருளிச் செய்யு
மிடத்தில், வேத முதல்வனெனும் மெய்த்திருப் பாட்டினினே ராதியுல கோரிடர் நீங்கிட வேத்தவாடும் பாதமுதலாம் பதினெண் புராணங்க ளென்றே யோதென் றுரைசெய்தனர் யாவுமோதா துணர்ந்தார்.
என அவ்வுண்மையை நிலைநிறுத்தியருளி யமை காண்க.
புறச்சமயத்தார் சைவ சாஸ்திரங்களின் உண் மையை உணராமல் புராணத்தைப் பொய்க்கதை கள் என்று புகலுதல் போலச், சைவருள்ளும் அங்ஙனம் கூறுவார் உளரேல் அவர்களுக்குச் சைவ சித்தாந்த சாத்திரங்களும், சைவத் திரு முறைகளும் பொய்யெனப் பட்டுச் சமய சாத்தி ரங்களுமின்றாய்ச் சமயமுமின்றாய் முடியுமென்க.
எதனால் எனின், நாயகன் கண்ணயப்ப நாயகி புதைப்பு வெங்கும் பாயிரு ளாகி மூடப் பரிந்துலகினுக்கு நெற்றித் தூயநேத் திரத்தினாலே சுடரொளி கொடுத்த பண்பிற் றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேசதென்னார்.
என்றற்றொடக்கத் தனவாகச் சிவஞானசித் தியார் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்களுட்
சக18
UTEENWieniCAILLOTIINILUFE

Page 8
சித்திரபானு - ஆவணி புராண சரித்திரங்களே அனுபவப் பயனுக்கும், பிறவற்றுக்கும் பலப்பல விடங்களிலும் கூறப்படு. தலானும் “உயர் காயத்திரிக்குரிய பொருளாக லின்” என்னுஞ் செய்யுளுட்போந்த இருபத்திரண்டு ஏதுக்களுட் காயத்திரியை ஒழித்தொழிந்த இருபத் தொரு ஏதுக்களும் புராண சரித்திரங்களேயாக லானும். சித்தாந்த சாத்திரங்களும், திருமுறை களும் பொய்யெனப் பட்டுச் சமய சாஸ்த்திரங் களும் இன்றாய் முடியும். முடியவே, அச்சாத்தி ரங்களால் உணர்த்தப்படும் சைவசித்தாந்த சமய மும் இன்றாய் முடியும் ஆதலினால் என்க. இத்
அகில இலங்கைச் 6 2002 ஏப்ரல் மாதம் நடைபெற்ற இ
தேர்வில் சித்திய
இளஞ்சை
2ம் திரு. பாலசுப்பிரமணியம் பத்மநாதன் ஏழாலை செல்வி. ரேவதி பரமநாதன்
ஆனைக்கோட்டை
3ம் செல்வி. சாந்தினி வாமதேவன்
சுழிபுரம் செல்வி. பேபிவதனா தில்லையம்பலம் சுழிபுரம் செல்வி. பார்மதி. குமாரசாமி
சுன்னாகம் திருமதி. தேவதாசன் வனிதராணி
நெடுந்தீவு
சைவ
2ம் திரு. சண்முகலிங்கம் முகுந்தன்
இணுவில் திரு. லிங்கநாயகம் ரமணன்
நெடுந்தீவு திரு. குலசிங்கம் றஜீபன்
சுன்னாகம்
3ம் திரு. கிட்டினர் சிவமணி
யாழ்ப்பாணம் 2003 சைவப்புலவர் தேர்வு:- ஏப்ரல் விண்ணப்ப முடிவுநாள்:-
31-08-2 வகுப்பு ஆரம்பம்:-
செப்ரெ
செல்லாஇயத்துச்சமைத்
இலவதனின் சதய கற்க பலிக்காதாஇகத்தில் சினம்கொள்வது தனக்குத்தங் வோக் இல்லை

சைவநீதி 2
துணை விசேடமுடையன் சிவபுராணங்கள், சிவ புராண சிரவண விசேடத்தினாலே பாவம் நீங்கும்; புண்ணியம் வரும்; பக்தி வாய்க்கும்; மகாதேவ ருடைய அருளுண்டாகும்; தீமையெல்லாங்கழன்று மேற்கதியுண்டாகும்; ஆதலினாலே திருக்கோயில் களிலும், மடங்களிலும், சோலைகளிலும், நதிக் கரைகளிலும், வேள்வி நடக்கும் இடங்களிலும், சுத்தமான இடங்களிலும், மற்றும் புண்ணிய நிறைந்த இடங்களிலும் புராணங்களை ஓதுதல்
சிறந்த புண்ணியமாகும்.
நன்றி:- விநாயகர் பரத்துவம்
சைவப்புலவர் சங்கம் களஞ்சைவப் புலவர் / சைவப்புலவர்
டைந்தோர் விபரம் சவப்புலவர்
பிரிவு
செல்வி. உஷஜினி பேரானந்தம்
அல்வாய் செல்வி. துளசிமலர் வைத்தி
சாவகச்சேரி பிரிவு
திருமதி. ஜெயரட்ணராசா சிவக்கொழுந்து சுழிபுரம் செல்வி. சங்கீதா சதாசிவசர்மா
நீர்வேலி செல்வி. த. சிவசக்தி
கோப்பாய்
புலவர் பிரிவு
திரு. மயில்வாகனம் சிவலிங்கம் கோண்டாவில் திரு. சிவகுருநாதர் சிவசுப்பிரமணியம் யாழ்ப்பாணம்
பிரிவு
செல்வி. சுபாஜினி தம்பிராஜா
யாழ்ப்பாணம் 3ஆம் வாரம். 002 ம்பர் 2 ஆம் வாரம். வண்/ நாவலர் ம.வி.
வ. கந்தசாமி தேர்வுச் செயலாளர்.
து செல்லடத்தும்
நாகும்பலிக்கும் இகத்திலும் சினத்தைவித்த தயவை
28 சதி

Page 9
பித்தபானு - ஆவணி
நிதா
எல்லாவித தானங்களிலும் நிதானம் பெரிது. நிதானத்துடன் ஒவ்வொரு கருமத்தையும் நன்கு ஆய்ந்து செய்தல் வேண்டும். அவசரம் ஆயிரம் பொன்னையழிக்கும். 'பதறாக் காரியம் சிதறாது' என்பது பழமொழி.
நிதானத்தையிழந்தவர் நெடுந்துன்பம் அடை வர். இதனை விளக்கும் அடியிற்கண்ட உண்மை வரலாறு:
ஊர் ஊராகச் சென்று பண்டங்களைக் கூவி விற்கும் வணிகன் ஒருவன், முதல் வேண்டி ஒரு பெரிய முதலாளியிடம் கடன் வாங்கியிருந்தான். கடன் கொடுத்த தனவந்தன் வணிகனை ஒருநாள் தன் கடனைத் தருமாறு மிகவும் நெருக்கினான். கையில் பணம் இல்லாமையால், கடனைத் திருப்பித் தருவதற்கு வழியறியாத வணிகன் வருந்தினான். தனவந்தன் “நீ இப்படியே காலங் கடத்துகின்றாய்; இனி நான் பொறுக்க மாட்டேன். கடனுக்கு வழி சொன்னால் தான் உன்னை விடுவேன்” என்று கடிந்து கேட்டான்.
வணிகன் தன்வசம் அப்போதிருந்த ஒரு பொன் சங்கிலியை எடுத்துக் கொண்டு, தான் பட்ட கடனுக்கு அச்சங்கிலி போதுமானதாக இல்லாமையால், "ஐயா! இந்தப் பொன் சங்கிலியை யும், என் உயிரினும் இனிய நாயையும் ஈடாக வைத்துக் கொள்ளும். நான்கைந்து நாட்களுக் குள் பணத்தைக் கொடுத்து இந்த இரண்டையும் திருப்பிக் கொள்வேன்” என்று கூறிச் சமாதானம் செய்து சென்றான். அந்நாயும், பொற்சங்கிலியும் அம்முதலாளியிடம் இருந்தன.
இரண்டொரு நாள்களுக்குப் பின், நள்ளிரவில், அத்தனவந்தன் தன் வீட்டில் கள்வர்கள் நுழைந்
#70ge/49021e7teamSHAFireதரிக்க

சைவந்த்
னம்.
திருமுருக கிருபானந்த வாரியார்)
தார்கள். அதுகண்ட அந்நாய் கள்வரை நோக்கிக் குரைத்தது. கள்வர்கள் அதற்குவேண்டிய இறைச் சித் துண்டுகளை அதன்முன் எறிந்தார்கள். அறி வுள்ள அந்த நாய் இறைச்சியுணவினை ஒரு பொருளாக எண்ணாமல் மேலும் மேலும் குரைத் தது. இதற்குள் அத் திருடர்களில் துணிந்த ஒரு வன் வீட்டிற்குள் கன்னம் வைத்து, தனவந்தனு டைய பணம் நகைகள் வைத்திருக்கும் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிப்பட்டான். ஓடமுயன்ற அவனை ஓடவிடாது நாய் மேல் வீழ்ந்து கடித்து, மறித்து, பெரிய இரைச்சல் போட்டுக் குரைத்தது.
காற்றின் நிமித்தம் மேல்மாடியில் படுத்திருந்த தனவந்தரும், அண்டையயலாரும் விழித்து எழுந்து
வந்து, ஓடிக் கள்வர்களைப் பிடித்துக் கொண் டார்கள். அந்த நாயினால் அவருடைய பெரிய சொத்துக் காப்பாற்றப்பட்டது. அதனால் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. "ஆ! இந்த நாய் இல்லையானால், ஆயிரக்கணக்கான பணமும், பொன் வைர நகைகளும் போயிருக்கும். இதோ இங்கே இறைந்து கிடக்கும் இறைச்சித் துண்டு களை, இதற்கு இரையாக, வந்த திருடர்கள் இறைத்திருக்கின்றார்கள். அதனையும் இது பொருட்படுத்தாமல் தன் கடமையைச் செய்து நமது உடைமையைக் காத்தது. மனிதர்கள்கூட சிறு தொகைக்காகத் தமது கடமையை மறந்து மடமையடைகின்றார்கள். இந்த நாயின் அரிய செயலே செயல்” என்று எண்ணி எண்ணி வியப் பும் உவகையும் அடைந்தார்.
D
பொழுது விடிந்தது. நாய் செய்த உதவியைக் கருதி, அதன் தலைவன் பட்ட கடனை விடுவித்து,
சகோ தாக்கதி

Page 10
சித்திரபானு - ஆவணி ஒரு சீட்டில் இந்த வரலாற்றை எழுதி, அதன் கழுத்தில் கட்டி, "நீ உன் தலைவனிடம் போய்வா” என்று குறிப்பாகக் கூறினான். குறிப்புணரவல்ல அந்நாய் தன் தலைவனிடம் மிக்க மகிழ்ச்சியுடன் ஒரே ஓட்டமாக ஓடிவந்தது.
நன்றியறிவுள்ள நாயைக் கண்ட அவ்வணிகன் சினந்தான். "ஏ மதிகெட்ட நாயே! நான் பட்ட கட னுக்காக உன்னை அடகுவைத்துவிட்டு வந்தேன். கடன் தீர்ப்பதற்கு முன் இங்கு ஏன் ஓடிவந்தாய்? உனக்கு என்ன அத்தனை மமதை” என்று வைது, அருகில் இருந்த ஒரு பனம் பழம் அள வுள்ள கருங்கல்லை எடுத்து அதன்மீது எறிந்தான். அக்கல் அதன் தலையிற்பட மண்டை உடைந்து நலமிக்க நாய் அலறி வீழ்ந்து மாண்டது.
நாய் மாண்டபின் சினம் ஆறிய வணிகன், நாயை உற்றுப் பார்த்தான்; அதன் கழுத்தில் கடிதத்தின் சுருள் தெரிந்தது. அதை விரைந்து எடுத்துப் படித்துப் பார்த்தான்.
"அன்புள்ள ஐயா! நேற்று இரவு என்வீட்டில் கள்வர்கள் நுழைந்து பெருமதிப்புள்ள பணப் பெட்டியை எடுத்துச் செல்லலுற்றார்கள். தங்கள் நாய் தன்முன் எறிந்த மாமிசத் துண்டையும் மதிக்காமல் கள்வர்களைக் கடித்தும் குரைத்தும் மறித்தும் போரிட்டது. அதனால் நானும் அக்கம் பக்கமுள்ளவர்களும் கண்விழித்துக் கள்வர்களைப் பிடித்துப் பணப்பெட்டியை மீட்டோம். இந்த நாய் இல்லையானால் எனக்குப் பெரிய கேடு வந்திருக் கும். இது செய்த உதவியை உன்னி உன் கடனை நான் தள்ளிவிட்டேன். நாயைத் திருப்பிய னுப்பியுள்ளேன். நீ நேரில் வந்து உன் பொற் சங்கிலியைப் பெற்றுக்கொண்டு போவாய்.
இப்படிக்கு, அன்பும் நன்றியும் உள்ள, தொட்டப்பச் செட்டி.”
சமறத்தல் வெகுளயை
ததுலஅதனால் எத்தகையோரிசத்திலும் சினங்காள்ளாமல் தனுதைம்
இசாகாகுந்த்

8)
வைந்தி இக்கடித்தைப் படித்தவுடன் வணிகன் கீழே வீழ்ந்து அழுதான்; உருண்டான்; புரண்டான்; தலையின் மீது மோதிக்கொண்டான். நாயை எடுத்து அணைத்துப் புலம்பினான். “என் அன்புள்ள நாயே! அந்தோ நான் சண்டாளன். ஆத்திரக்காரன். நீ என்னைக் காண எவ்வளவு வேகமாகவும் அன்புடனும் ஓடிவந்தாயோ! பாவியேன் உன்னை அடித்துக் கொன்றுவிட்டேனே! உன் மண்டை பிளந்தபோது நீ என்ன நினைத்தாயோ? எப்படி வலித்ததோ? ஐயோ! என் இதயம் வெடிக்கவில் லையே! கொஞ்சம் நிதான புத்தியுடன் கவனிக் காமற் கெட்டேன். நான் மதிகெட்ட மடையன். நன்றி மிக்க உன்னைக் கொன்ற எனக்கு நற்கதி வருமா? என் உள்ளம் உருகுகின்றதே. அற்ப உயிராகிய உனக்கிருந்த அறிவு, மேலான உயிரா கிய எனக்கில்லையே” என்று பலவாறு புலம்பி அழுதான். இறந்த நாய் எழுந்திருக்குமா?
தனக்குக் கடன் தந்த தொட்டப்பச் செட்டியிடம் நடந்ததைக் கூறியழுதான். அவரும் கண்ணீர் வடித்தார். அப்பொன் சங்கிலியை அவனிடம் தந் தார். அதனைக் கண்டாரும் கேட்டாரும் கலங்கிக் கலுழ்ந்தார்கள். அவ்வணிகன் அந்த நாயைப் புதைத்து அங்கு ஒரு சிறு கோயில் கட்டி, அதற் குள் அந்த நாயைப் போன்ற கற்சிலையை வைத்தான். தான் செய்த தவற்றுக்கு அதை ஒரு சிறு பரிகாரமாகச் செய்து நன்றி செலுத்தினான்.
இக்கோயிலை இன்றைக்கும் பார்க்கலாம். ரெயிப்பூருக்கு (Raipur) பதினொரு கல் தொலை வில் இருக்கின்றது.
நன்றி:- வாரியார் விரிவுரை விருந்து
பார்மாட்டும் தயாட
துவிட வேண்டும் அந்தச் சினத்தால் தயவிளைவுகள்
08

Page 11
சித்திரபானு - ஆவணி பதினெண் சித்தர்கள்
பரீ இசை
புராணங்கள் கூறும் செய்திகளிலிருந்து திருமால்-இடைக்காடராகவும், நாமகள் - ஔவை யாராகவும், நான்முகன் - திருவள்ளுவராகவும் இப் பூவுலகில் அவதரித்தனர் எனவும் அறிகிறோம். திருமாலின் அவதாரமான இடைக்காடர் மருத்துவ வல்லுனராக விளங்கி காக்கும் கடவுளாகிய திருமாலைப் போல் பல நோயாளிகளைத் தமது சித்தமருத்துவத்தினால் காத்தார். இவரது பெரு மையை உலகிற்குக் காண்பிக்க ஒரு திருவிளை யாடலையே இயற்றி அதற்கு “இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்” எனப் பெயர் சூட்டினார். இவர் சங்கம் வளர்த்த முனிவர்களில் ஒரு சித்தராவர். குலசேகர பாண்டிய மன்னன் தமிழ் இலக்கிய இலக்கணத்தில் வல்லவன் என்பதால் சங்கப் பலகை அம்மன்னனுக்கு ஏற இடங்கொடுத்
கருதியநூல் கல்லாதான்
கணக்கறிந்து பேசா ஒருதொழிலு மில்லாதான்
ஒன்றுக்கு முதவாத பெரியோர்கள் முன்னின்று
பேசாம லிருப்பவகே பரிவுசொலித் தழுவினவன்
பசிப்பவருக் கிட்டும்
(இ-ள்) மதிக்கத்தக்க நல்ல நூல்களைக் கல் ஒரு தொழிலுமில்லாதவன் மூதேவி; ஒன்றுக்குழு வணங்காது மரம்போல் நிற்பவன் பேயன்; (போலி |பசப்பன், பசியாளருக்குக் கொடுத்துண்ணாதவர்
#9enewDWIGAyeதாகுத்த 15 #

சைவந்தி)
டக்காடர் (திருவண்ணாமலை)
|Dr. எஸ். லோகநாதன் B.S.M.S.(India) J.P
மரகதம் கிளினிக், நாநாட்டான், மன்னார்.
தது. அவன் கல்வியில் சிறந்தவன் என்பதைக் கேள்வியுற்ற இடைக்காடர் தம் நண்பராகிய கபிலருடன் சென்று தாம் இயற்றிய தமிழ்ச் செய்யுளை அம்மன்னனிடம் படித்துக்காட்டினார். பாண்டியன் பொறாமை கொண்டு, அச்செய்யுளில் பல அர்த்தம் பொதிந்திருப்பதைக் கண்டும் காணாததைப் போல பாராட்டாமல் இருந்தான். அன்றைய இரவே மன்னனின் கனவில் சொல்வடி வாகிய அங்கயற்கண்ணியும், சொற்பொருள்வடி வாகிய சோமசுந்தரக்கடவுளும் தோன்றி இடைக் காடரின் மருத்துவத் திறமைகளையும், அவரது தமிழ்ப் புலமையையும் கூறி மறைந்தனர். இதனால் ஆணவம் குறைந்த மன்னன் இடைக்காடரைப் போற்றி வணங்கினான் என்பது வரலாறு கூறும் உண்மையாகும். இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
----------- மூடனாகும் தான் கசடனாகும்
முகடி யாகும் என் சோம்பனாகும்
மரத்தைப் போலும் ன பேயனாகும் 1 பசப்பனாகும் ன்ணான் பாவி யாமே.
மலாதவன் மூடன்; அளவறிந்து பேசாதவன் கசடன்; | மதவாதவன் சோம்பேறி; அறிவுடையோர் முன்பாக | யொக) அன்புடையான் போல் கட்டித்தழுவுகிறவன் |
ன் பாவி.
- விவேக சிந்தாமணி |
க்கு HeFEOசதி

Page 12
சித்திரபானு - ஆவண
ஆலயங்களில் எ
ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டில் தின நிகழ்வாக பூசனையும், சிறப்பு நிகழ்வாகப் பெரு விழாவில் தம்ப வழிபாடும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதன் விளக்கத்தை அறியுமுன் சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கையை அறிந்திருப்பது நல்லது. சைவ சமயக் கொள்கை யில் இறை ஆகிய பதியும், உயிர் ஆகிய பசு வும், தளை ஆகிய பாசமும் என்றும் உள்ள பொருள்களாகும். இவ்வுண்மையினைத் திருமூலர் திருமந்திரம்,
"பதி பசு பாசம் எனப் பகர்மூன்றில் பதியினைப் போற் பசு பாசம் அநாதி பதியினைச் சென்றணுகாப் பசுபாசம் பதிஅணுகிற் பசுபாசம் நிலாவே." என அநாதியான பதியைப் போலப் பசு, பாச மும் அநாதியானவை எனவும், பசுவும் பாசமும் பதியினைச் சென்றணுகும் தன்மை இல்லாதவை எனவும், பதி எழுந்தருளி அணுகும்போது பசுவின் தன்மையும் பாசத்தின் தன்மையும் ஒடுங்கும் எனவும் பதி, பசு, பாச விளக்கத்தினை அளிக்கி றது. இந்த முப்பொருள்களின் விளக்கமாக ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் மூலமூர்த்தி, நந்தி, பலிபீடம், தம்பம் என்பன விளங்குகின்றன. மூலமூர்த்தியும் தம்பமும் பதியினையும் நந்தி ஆன்மாவையும் பலிபீடம் ஆன்மாவைப் பற்றி நிற் கும் பாசத்தினையும் குறிக்கின்றன.
கொடியேற்று விழாவில் தம்பத்தில் கொடிச் சீலையை ஏற்றுவது ஒருபேர் உண்மையின் விளக்கமாகும். இச்செயல் பதிக்கும் பசுவுக்கும்
நகையும் 2 வகையும் கெ
சகையாளவோ பிற முகமிலாகை கணகயையம் கடுக்கன் உள்ளனவோ

(சைவநீதி
கொடியேற்றுவிழா
இடையேயுள்ள உறவை விளக்குவது. விழாக் காலத்தில் தம்பத்தினிடமாக சிவசாந்நித்தியம் பொலிந்து விளங்கக் காணலாம். அதனால் அத னிடமாக நடைபெறும் கிரியைகளும் பூசனைகளும் மேலானவையாக மதிக்கப்படுகின்றன.
"பிறப்பெனும் பேதைமை நீங்கச் சிறப்பெனும் செம்பொருள் காண்பதறிவு.” எனும் தெய்வப் புலவர் வாக்கின் பொருள் அங்கு விளங்கக் காணலாம். (பேதைமை - பிறப் புக்குக் காரணமாகிய அறியாமை, செம்பொருள்பரம்பொருளாகிய சிவம்). இனி தம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு வருவோம். தம்பம் பதியாகிய சிவத்தைக் குறித்து நிற்க அதில் ஏற்றி வைக்கப்படும் கொடிச்சீலை பசுவாகிய ஆன்மாவையும் அதனோடு கூடிய தர்ப்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கின்றன. கொடிச் சீலையை மேலே உயர்த்தி தம்பத்துடன் சேர்க்கும் கயிறு அருள்சக்தியைக் குறிக்கின்றது. இவ்வாறு பதி, பசு, பாச விளக்கத்தையும் பசுவாகிய ஆன்மா அடையவேண்டிய பெருநிலையையும் விளக்குவது கொடியேற்று விழா. இவ்விழாவினால் அருள் சக்தியின் துணையின்றி ஆன்மா வீட்டுப் பேறாகிய பேரின்ப நிலையை அடைய முடியா தென்பதை அறிகின்றோம். அதனால் அருள்சக்தி பற்றியும் அறிவது நல்லது. திருவருள் சத்தியா னவள் எப் பொழுதும் பேரானந்த நிலையில் இருப்பவள். தன் பேரானந்த நிலையை ஆன்மாக் களுக்கு அருளுபவள் எங்கள் பிரானின் வேறா காதவள். அவள் மகிமையை,
ல்லும் கனத்தன்
றன்ததைவிமலருவனுக்கு வேறு பகைகளும்
F04

Page 13
சித்திரபானு ஆவணி
"தன்னிலமை மன்னுயிர்கள் சாரத் தரும் சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்."
என எடுத்துரைத்தார் திருவருட்பயன் எனும் நூலின் ஆசிரியர் உமாபதிசிவனார்.
அருட்சக்தியானவள் ஆன்மாவை உலக பாசத்திலிருத்தும் நடப்புச் சக்தியாகவும், பாசத்தில் விடுபட்ட ஆன்மாவைச் சிவத்தோடு சேர்க்கும் வனப்புச் சக்தியாகவும் இருக்கின்றாள். இதுவரை
சத்தியகா ஜபாலை என்ற மாதரசியின் மைந்தன் சத்திய படிக்க விரும்பினான். குருவைச் சந்திக்கும்பே எனப்படும். இன்னாரின் பிள்ளையாகிய நான் 6 தந்தை பெயரையும் தாங்கள் எந்த இருடியின் ரித்தான். அவள், "மகனே, நான் உன் தந்தையை |இருந்ததால் அவரிடம் குலம், கோத்திரம் விசாரி (போது இறந்துவிட்டார். பிறகு துக்கம் காரணமாக, . ஆகவே உன் குலமும் கோத்திரமும் எனக்குத் சத்தியகாமன், என் தாய் பெயர் ஜபாலா. என்ன Tஎன்று. சிறுவன் கௌதம முனிவரின் ஆசிரமத் Tபோனான். (இவைதான் அக்காலத்தில் 'ரியூஷ தன்னை அறிமுகம் செய்தான். குரு: 'உண்மை ே னாய்த்தான் இருக்கவேண்டும் என்று அவனைக் நோக்கிச் செல்பவன் பிராமணன்.)
இந்தக்கதை 'திருநான் மறைமுடிவு' எனப் டே (கிய உபநிடதம்) தன்னைத் தூய்மை செய்யும் கி வருகிறது. தூய்மை இல்லாதவன் வேதம்படிக்க எது என்று தெரியாதவன் அதை மறைக்காதபடி சத்தியம் இறைவனது அம்சம். பொய்மை இரு ஞானத்தை அடையத் தகுதி உடையவன்.
சத்தியகாமன் கதையை தாகூர், இராதாகி |விளங்கி, அவன் தாய் வழுக்கிவிழுந்தவள் என்
"தந்தையை அறியாவொரு பிள்ளை குருவுக் நீ பிராமணப் பிள்ளை தான் என்றார்."
IS IlleTEN STEWIE EINENTVIMUTAange withKTIIS

சைவநீதி )
யில் பதியினையும், பதியோடு கூடிய அருட் சக்தியினையும், பசுவினையும், பாசத்தினையும் அறிந்து கொண்டதோடு அவற்றின் விளக்கமாக அமைந்த கொடியேற்று விழா பற்றிய விளக்கத் தினையும் அறிந்துகொண்டோம். இறைபக்தியை வளர்ப்போம். பிறப்பின் பயனைப் பெறுவோம்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.”
- திருக்குறள்
மன் கதை
பகாமன். அவன் ஒரு குருவை அடைந்து வேதம் எது கூறவேண்டிய அறிமுக உரை அபிவாதனம் வணங்குகிறேன் என்று வரும். அதற்காகத் தன்
கோத்திரத்தவர் என்பதையும் தாயாரிடம் விசா 1 மணந்து, அவரது இல்லத்துப் பணிகளில் மூழ்கி க்கவில்லை. அவர் நீ என் வயிற்றில் இருக்கும் அவரது உறவினரிடம் அவற்றை விசாரிக்கவில்லை. | 5 தெரியாது. நீ குருவிடம் சொல்; 'என் பெயர் | னை சத்தியகாம ஜபாலன் என்று அழைக்கலாம்' | எதுக்குக் கையில் மலரும், சமித்தும் கொண்டு | ன்' சம்பளம்.) குருவிடம் தாய் சொன்னபடியே பசியவன், சத்தியத்தை விரும்புகிறவன், பிராமண குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார். (பிரமத்தை
பாற்றப்படும் உபநிடதத்தில் வருகிறது (சாந்தோக் | ரியை சம்ஸ்காரம். அது பற்றிப் பிரமசூத்திரத்தில் | த் தகுதி அற்றவன். கெளதமர் தன் குலமித்திரம் | யால், அவன் பிரமத்தை நோக்கிச் செல்பவனே. | ளின் அம்சம். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் !
ருஷ்ணன் போன்ற அறிஞர் கூட, மாறுபாடாக | எறு எழுதியுள்ளனர். இது பெரும்பிழை. த உண்மை சொன்னான். குரு உண்மை சொன்ன
பொ. கைலாசபதியவர்களின் சிந்தனை
PIIRATURILECTIONIQI

Page 14
சித்திரபானு - ஆவணி
நற்றமிழ் வல்ல » நடலை நீக்கும்
தவம் பெருக்கும் சண்பையில் பிள்ளையார் சிவம் பெருக்கத் திருவவதாரம் செய்தார். தந்தை யார் சிவபாதவிருதயர், தாயார் பகவதியார் திரு நிலைநாயகி அம்பாளுடைய திருமுலைப்பாலாகிய ஞானவாரமுதம் உண்ணப்பெற்றதனால் சிவஞா னத்தோடு சம்பந்தமானார். திருஞானசம்பந்தரானார். உவமை இல்லாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் உணரப்பெற்றார்.
தோடுடைய செவியன் முதலாகக் கல்லூர் என்னும் தொடை முடிவாகத் திருப்பதிகங்கள் பதினாறாயிரம் பாடினார். அவற்றில் இன்றுள்ளது
முந்நூற்றெண்பத்திநான்கு என்னும் உண்மை திருமுறை கண்ட புராணத்தால் அறியப்படும்.
ஆளுடைய பிள்ளையார் தம்மை ஆண்ட பெருமானை ஓரிடத்தில் இருந்து பாடவில்லை. ஒரு திருத்தலத்தின் மீது பாடவில்லை. அருவத்திரு மேனியாகப் பாடவில்லை. இறைவனால் திருவ ருட்டுறைத் தலத்தில் முத்துப்பல்லக்கு அருளப் பெற்றது. முழுமதிபோல ஒளிமிகுந்து பல்லக்கில் தலங்கள் தோறும் எழுந்தருளிச் சென்று பாடினார். தூரத்தே ஆலயத்தைத் தரிசித்த மாத்திரத்தில் பாடினார். திருக்கோவிலை வலம் வரும்போது பாடினார். கோபுரவாயிலின் வழியாக உள்ளே புகுந்து சுவாமி சந்நிதானத்தில் திருமுன்பாக நின்று கண்ணீர் மாரி பொழியக் காதலாகிக் கசிந்து பாடினார். அடியவருடைய இடர்களையும் கருணையினால் இறைவனிடத்தில் விண்ணப் பிக்கும் தன்மையாகப் பாடினார். பரசமயத்தைப் பாற்றுவதற்கு வாது செய்ய இறைவனுடைய திருவுளப்பாங்கை வினாவிப் பாடினார். அற்புதம் நிகழப் பாடினார். அதிசயங்கண்டு பாடினார். மற்றவர் அறிந்து காணக்காட்டிப் பாடினார்.
இதன்னைத்தான் காண்கன் தி
தன்னையே கொல்லும் சன ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பின காக்காவிட்டால், அச்சினம் தன்னையே அழித்துவிடு

சைவநீதி) ானசம்பந்தருடைய
நற்பதிகங்கள்.
(சிவ: சண்முகவடிவேல்)
எப்!
இவ்வாறாகத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சிவபெருமான் மீது வெவ்வேறு சமயாசமயங்களில் பாடப்பெற்ற தேவாரத் திருருப்பதிகங்கள் 1ம் 2ம் 3ஆம் திருமுறைகளில் அடங்குவன.
அவற்றுள் ஆளுடைய பிள்ளையார் அடியவர் களுடைய இடர்களைய இறைவனிடத்தில் விண் ணப்பித்த திருப்பதிகங்கள் ஒரு சிலவற்றை அடைவுபடக் கூறுவாம்.
அடியார் படும் அவலத்தைப் பார்த்து வாளா திரார் ஆளுடையபிள்ளையார். அவர்கள் படும் இடரைத் திருச்செவியில் ஏற்கும் வண்ணமாக ஏழிசையோடும் எடுத்துப்பாடும் இயல்பினார் பாலறாவாயர்.
திருப்பாச்சிலாச்சிராமத்தில் வல்லிக்கொடி போன்ற கொல்லி மழவன் மகளார் முயலகன் என்னும் நோயினால் வருந்தக் கண்டார். நோயி னால் பீடிக்கப்பெற்ற பெண்ணுடைய அவலத்தை அரனார்க்கு எடுத்து அறையும் கற்பனை அழகு தான் என்னே! பத்திச்சுவை நனிசொட்டும் பண்பை என்னென்பது...!!
"...அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோவிவர் மாண்பே...... "இலையுனை வேலரோ வேழையை வாட
விடர்செய்வ தோவிவ ரீடே...." "செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வ தோவிவர் சீரே....."
எமகாககாகாவாக்கால்
மல், தன் மனத்தில் சினம் வராமல் காக்கவேண்டும் த
£105

Page 15
சித்திரபானு - ஆவணி - என்று இவ்வாறு திருப்பாச்சிலாச்சிராமத் திருப்பதிகத்து ஒவ்வொரு திருப்பாடலிலும் பெண் கொடியின் பெருந்துயரத்தையும் பெரிய பெரு மானுடைய கருணைக் குறைவையும் வெளிப் படுத்துமுகமாக விளம்புகின்றார். பாடிய பதிகப் பலனாகப் பெண் நோய் நீக்கம் பெற்றெழ வைத் தது முத்தமிழ் விரகருடைய நற்றமிழ்மாலை.
திருமருகல் என்னும் திருத்தலத்தில் காத லனை நாகம் தீண்டியும் தான் தீண்டும் தகுதி பெறாதவளாகத் துயருற்றுச் சோரும் வணிகப் பெண்ணுடைய ஒழுக்கத்தையும் அவலத்தை யும் நன்கு அவதானிக்கின்றார் ஆளுடைய பிள்ளையார்.
கன்னிப் பெண்ணுடைய கவலையைக் களைய வேண்டுமாகில் காதலனுடைய உயிரை மீட்டுக் கொடுக்க வேண்டும். இந்த உண்மை பிள்ளையா ருடைய பெருமனத்தில் தெள்ளெனத் தெரிகின் றது. திருமருகல் பெருமானுடைய திருவருள் வந்து கைகூடச் செம்மேனி அம்மானாருடைய திருச்செவிக்கு ஏற்குமாறு எடுத்துப் பாடுகின்றார் இன்தமிழ் அறிந்த பிள்ளையார்.
"சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே."
இவளுடைய உள்ளத்தின் வருத்தம் உனக் குத் தகுமோ? என்று கன்னியினுடைய கவலைக்கு பெருமானிடத்தில் நீதி கேட்டு நிற்பவர் போலல்லவா சொற்றொடர்கள் விளங்குகின்றன.
ஒவ்வொரு தேவாரத்திலுமாக இவளை அயர் வாக்கினை, துயராக்கினை, அலராக்கினை என்று எல்லாம் மருகல் பெருமானுடைய வஞ்சனையால் நிகழ்ந்தது போல இறைவன் மீது அவள் துய ரத்தை ஏற்றிப் பாடுகின்றார். கொஞ்சும் தமிழ் விஞ்சப்பாடும் தம் மகனாருடைய பாடலுக்கிரங்கி இறைவன் வணிகப்பெண்ணுடைய காதலன் உயிரை மீட்டுக்கொடுத்தருளினார். காதலிக்கும்
ElitudாயாSECHigார்யா
4tiiFiயம்

சைவநீதி
காதலனுக்கும் திருமண வாழ்வு வகுத்து வைத்தார் மெஞ்ஞானச் செம்மலார்.
திருவீழிமிழலைப் பதியில் அடியவர்களுக்கு நாட்கூறு தப்பாமல் அன்னப்பாலிப்பு நிகழாமைக் கான காரணத்தைக் கண்டறிந்தார் காழியர். தினம் தமக்குக் கிடைக்கும் காசு வட்டம் உடை யதால் அதை மாற்றப் பதிகம் பாடினார் - பர சமய கோளரியார்.
"வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையேன்..."
பத்திச்சுவை பரிமளிக்கும் பாடல் கேட்ட பரம்பொருள் வாசி இல்லாக் காசு நல்கினார். நாட்கூறு தவறாமல் நல்லுணவு ஊட்டினார் ஞான சம்பந்தர்.
திருமறைக்காட்டில் திருக்கதவம் வேதத்தி னால் அடைக்கப்பட்டது. மீண்டும் அடியவர்கள் அபிமுகத்து வாயில் வழியாகச் சென்று வழி பாடாற்ற திருநாவுக்கரசு நாயனார் திருக்கதவம் நீக்கம் செய்யத் திருப்பதிகம் பாடியருளினார். மீண்டும் திருக்கதவம் அடைக்கவும் முகப்பு வாயிலை வழமையாக்கிக் கொள்ளவும், திருஞான சம்பந்தர் திருப்பதிகம் பாடினார். அடியார்கள் அவலப்படாமல் திருக்கதவு வாயில் வழியாகச் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என வைத்த கருணைப்பெருக்கு, அது.
"சதுரம்மறை தான்துதி செய்து வணங்கும் மதுரம்பொழில் சூழ்மறைக் காட்டுறை மைந்தா இதுநன்கிறை வைத்தருள் செய்க வெனக்குன் கதவந்திருக் காப்புக் கொள்ளுங்கருத் தாலே.”
பாண்டி நாட்டில் பரசமயத்தைப் பாற்றித் திரு நீற்று அன்பு பாலிக்க சுரவாதம், அனல்வாதம், புனல்வாதங்களில் திருப்பதிகங்கள் பாடி அடியார் மனம் களிப்புறச் செய்தார்.
திருமயிலாப்பூரில் சிவநேசச் செட்டியாருடைய உறுதியான நம்பிக்கைக்கு உரன் கொடுத்தார் ஆளுடையபிள்ளையார். என்றோ ஒருநாள் ஞான
ainst angerif he do not guard it, anger will kill
505

Page 16
சித்திரபானு - ஆவண சம்பந்தப் பெருமான் வருவார், என்பைப் பெண் ணாகச் செய்வார் என்று நம்பியிருந்தார் சிவநேசர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. ஞானசம் பந்தர் திருமயிலைக்கு எழுந்தருளினார் பூம்பாவைப் பாட்டுப்பாடினார்.
“கோற்றொடிச் செங்கை தோற்றிடக் குடமு டைந்தெழுவாள், போற்று தாமரைப்போதவிழ்ந் தெழுந்தனள் போன்றாள்” பூம்பாவை
அகில இலங்கைச்
| 1 கிலோ
புதிய ஆண்டு உ
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தில் 16-06-2002 ஞாயிற்றுக்கிழமை வண்ணை, நா புதிய ஆண்டு உத்தியோகத்தர் தெரிவு நடை
போஷகர்கள்:-
சைவப்புலவர்மணி வ சைவப்புலவர்
சைவப்புலவர் தலைவர்:-
சைவப்புலவர் உபதலைவர்கள்:-
சைவப்புலவர்
சைவப்புலவர் செயலாளர்:-
சைவப்புலவர் உபசெயலாளர்:-
சைவப்புலவர் தேர்வுச் செயலாளர்:- சைவப்புலவர் தேர்வு உதவிச் செயலாளர்:-
சைவப்புலவர்
த சி பொருளாளர்:-
சைவப்புலவர் சைவப்பிரசார அமைச்சர்:-
சைவப்புலவர் - இ செயற்குழு உறுப்பினர்:-
சைவப்புலவர் நி சைவப்புலவர்
ஞர் 9 - ச.
ரு
ஆகியோர் இவ்வாண்டிற்கான உத்தியே
கனமானனும் சேர்ந்தாரைகள்
ஏமப் புனையைச் சாருமதி சினம் என்னும் நெருப்பு தன்னைச் சேர்ந்தவரை ம படகு போல் உதவும் இனத்தாரையும் சுப்பழிக்கும்

சைவந்தி பூ
“மட்டிட்ட புன்னையங் கானன் மடமலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.” இவ்வாறு ஞானசம்பந்தப் பெருமான் அடியார் துயர் ஆற்றாது ஆற்றிய அற்புதங்கள் அளப்பில். திருக்கொடிமாடச் செங்குன்னூரில் பனிப்பிணி பாற்றியதும் திருவோத்தூரில் ஆண்பனையை பெண்பனையாக்கியதும் அவற்றுள் அடங்குவன.
சைவப்புலவர் சங்கம்
த்தியோகத்தர்கள்
ன் நாற்பத்து மூன்றாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் வலர் மகாவித்தியாலத்தில் நடைபெற்ற போது பெற்றது. 1. செல்லையா
அவர்கள் லாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் 7. செல்லத்துரை
அவர்கள் 2. திருஞானசம்பந்தபிள்ளை
அவர்கள் 4. தங்கமயில்
அவர்கள் 4. இராசரத்தினம்
அவர்கள் . செல்லத்துரை
அவர்கள் யாநிதி சத்தியரூபன்
அவர்கள் . கந்தசாமி
அவர்கள்
. நந்தகுமார் அவர்கள் ந்த. சத்தியதாசன்
அவர்கள்
ராசையா ஸ்ரீதரன்
அவர்கள்
த்திய. தசீதரன்
அவர்கள் த்திராதேவி பரமநாதன்
அவர்கள் பாகத்தராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கஎல்ல இனம் என்னும்
டுமல்லாமல் அவருக்குத் துன்பக் காலத்தில் ஏமப்
305

Page 17
சித்திரபானு - ஆவணி
நாவழுத்தும்
இப்பிரயோகம் தாயுமான சுவாமிகளின் திரு வாக்கில் அலர்ந்துள்ளது. பன்னிரு திருமுறை ஆசிரியர்களுக்குப் பின்னாலே தோன்றிய குமர குருபரர், அருணகிரியார், தாயுமானார், வள்ளலார் போன்றவர்கள் தமிழுக்கும், சைவத்துக்கும், அவை சார்ந்த சமுதாயத்துக்கும் உயர் சேவை செய்துள்ளனர். கருணைக்கும் பக்திக்கும் உவந்த மொழியான தமிழில் எழுந்த பக்தி இலக்கியங்கள் வைணவத்திலும் சைவத்திலும் நிறைய உண்டு. வைணவத்தில் எழுந்த பன்னிரு ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் ஸ்ரீ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எனப் பெயர் பெற்றது. ஆழ்வார்களின் பின்வந்த வேதாந்த தேசிகர், மதுரகவியென அழைக்கப்படும் பிள்ளைப் பெருமாளையங்கார் அளித்த பிரபந்தங்கள் பிரபல்யமானவை. அஃதே போலச் சைவம் சார் குமரகுருபரர் பிரபந்தங்கள், திருப்புகழ், தாயுமானவர் பாடல்கள், வள்ளலார் பாடல்கள் இலக்கிய வரலாற்றாய்வாளர்களாற் பெரிதும் போற்றப்பட்டன. இவ்வெழுச்சிக்காலம் சமயத்திலும், சமுதாயத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. இதை மறுமலர்ச்சிக்காலம், புதிய சிந்தனைக் காலம் என்றும் கூறலாம். எம்மொழிக் கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கு என்னவெனில் இறைவனைப் பாமாலையாற் பரவிப் பணிந்தமை ஆகும். இம்மரபு இன்றும் நம்மைவிட்டுப் போக வில்லை. இந்நிலைக் கோட்பாட்டைத்தான் பதி னேழாம் நூற்றாண்டவரான தாயுமானார் இறை வனிடம் கேட்பதாக அமைந்த கண்ணி இது. "நாவழுத்தும் சொல்மலரோ நாள் உதிக்கும் பொன்மலரோ தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே”
- பராபரக் கண்ணி 247
#சித்தாரகாசத்தார்த்

» த ட
-சைவந்திட
சொல்மலர்
முருகவே. பரமநாதன்
நா-நாக்கு வழுத்துதல், வணங்குதல், வாழ்த் துதல், போற்றித்துதித்தல் சொல்மலர், பாமலர், நாள்மலர், நாண்மலர், ஒவ்வொரு நாளும் பூக் கும் புத்தம்புதுமலர். இதன் சாரம் என்னவெனின் இறைவா! உனக்குப் பாமாலையா? பூமாலையா விருப்பம் என்பதுதான். பூக்கள் வாடுந்தன்மையன, உதிரும் தொழிலுடையன. மணம் மாறும் இயல் புடையன. தினந்தினம் மலர் எடுத்துத் தொடுப்பன. இவற்றை ஒருமுறை தான் பாவிக்கலாம். (இன்றோ ஆலயங்களிற் சூடிய மாலையைப் பெயர்த்தும் சூடக் காண்கிறோம்.) எனவே என்றும் புதுமை நாறும் பாமாலைகள் யுகயுகமாய்ப் பாவிக்கப் படுவன. வேதசாரமாய், மந்திரமாய் விளங்குவன. கீர்த்தனமாய் இசை மாலையாய்த் திகழ்வன. நெஞ்சை நெகிழவைப்பன. பக்தர்கட்கு அருள் பொழிவன என்பதை இன்னோர் பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார் தாயுமானவர்.
பன்மாலைத் திரள் இருக்கத், தமை உணர்ந்தோர்
பாமாலைக் கேநீதான் பக்ஷம் என்று நன்மாலை யாஎடுத்துச் சொன்னார் நல்லோர்;
-நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன், சொன்மாலை மாலையாக் கண்ணீர் சோரத்,
தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் என்மாலை அறிந்து, இங்கே வாவா என்றே
எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பிரானே.
- 16 பன்மாலை 1
Fiendship.

Page 18
பித்தபானு - ஆவணி
பன்மாலைத் திரள் இருக்க - பூமாலைகள் பல இருக்கச்செய்து, பக்ஷம் - விருப்பம், நன்மாலை - சிறந்த பாமாலை, என்மாலை அறிந்து - என்விருப்பத்தை உணர்ந்து, எனவே தன்னிடம் நிறைந்து வழியும் மொழிவளம் - பக்திவளம் - ஆளுமைவளம் - சிந்தனைவளம், எல்லாம் இருந்தும் - பாவினங்களால் நின்னைப் பாடிப் பரவலோ பக்திநெறி கிஞ்சிற்றும் இல்லை. வேதபாராயணங்களையும், மூவர் தேவாரங்களை யும் பண்ணோடு பாட இசைவளமும் என்னிடம் இல்லையே என ஆதங்கப்படுகின்றார் சுவாமிகள்.
பாகத்தி னால்கவிதை பாடிப்படிக்கவோ,
பக்திநெறி இல்லை, வேத பாராய ணப்பனுவல் மூவர் செய் பனுவலது
பகரவோ இசையும் இல்லை.
- சச்சிதானந்தசிவம் 3
இப்பாணியிலே பாவம் கொழிக்கும் பாக்கள் பல வடித்து வடித்துப் பண்பட்ட உள்ளம் தற் சிறுமையென்னும் நைச்சிய பாவத்தை விடாமற் பாடிப்பாடி அனுபவித்து ஓயாமற் பாடும் பக்கு வத்திறனைச் சுவாமிகளின் பாடல் தோறும் நாம் அனுபவிக்கலாம். நேர்ப்படுத்தவும் அவர் திருவா யினின்று உதிர்ந்த தேன்பாய் அணிகள் கைகொ டுக்கின்றன. பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன், மல
பரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இல்லை, நியமமோ செய்திடப்
பாவியேன் பாபரூப தேகமோ திடம் இல்லை, ஞானமோ கனவிலும்
சிந்தியேன், பேரின்பமோ " சேரஎன் றால்கள்ள மனதுமோ மெத்தவும்
சிந்திக்குது, என்செய்குவேன்
சனத்தைப் பொருளஎனறுக
சநலததுஅறந்தான் கைய தன் வலிமையை உணர்த்தது சினத்தை ஒரு நிலத்தில் அறைந்தவனுயைகைத் தப்பாதுநுேவ

வைநீதி ) மோகமோ, மதமோ, குரோதமோ, லோபமோ - முற்றுமாற் சரியமோதான்
முறையிட்டு எனைக்கொள்ளும், நிதியமோ தேடஎனில்
மூசுவரி வண்டு போல மாகம்ஓடவும்வல்லன், எனை ஆள வல்லையோ?
வளமருவும் தேவை அரசே! வரைரா ஜனுக்கு இருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண் உமையே!
நியமமோ செய்திட - ஒழுக்கத்தை முறையா கக் கைக்கொள்ள, மோகமோ - மயக்கமோ, மதமோ - தற்பெருமையோ, லோபமோ - ஈயா மையோ, மாற்சரியமோ - பொறாமையோ, முறிஉறுதி, முறியிட்டு - முறியோலை எழுதி, நிதி யமோ - பொருளையோ, மூசுவரிவண்டு போல - மலர்களில் மொய்க்கும் அழகான வண்டுபோல, மாகம் ஓடவும் வல்லன் - வானத்தில் செல்லவும் வல்லேன், வளம் மருவு தேவை அரசே - செழிப்பு நிறைந்த இராமேச்சரத்தின் தலைவியே, மலை யரசன் மகளாய் அவதரித்த உமையவள் - ஐமா வதியாய் சிவனை வதுவை செய்ததாகப் புராண வரலாறு பேசுகிறது. இப்பாடலிலும், மனப்பக்குவம் பெற உனைப்பாடும் செவ்வி என்னிடம் இல்லையே எனத்தவிக்கின்றார் தாயுமானாவர். அம்பிகையைச் சரணடைந்தால் அதிகவரம் பெறலாம் எனப் பின் வந்த பாரதியும் பாடி வைத்துள்ளார். இவ்வுலகிலே வாழும் நமக்குப் பதினாறு செல்வங்கள் முக்கிய மானவை. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ் கவென வாழ்த்தும் மரபு பதினாறு செல்வங் களையே குறிக்கும். அதிலொன்று மக்கட்செல்வம்.
LDU
உருவளர் வயது பூமி உயர்தவம் கருணை யூக்கம் அருநிதி ஒழுக்கம் சீலம் பேரபிமானம் கல்வி பொருவலி விஜயம் வீரம் புண்ணிய மாதின்போகம் திருநிறை புகழீ ரெட்டும் பெற்று நீர் வாழிவாழி.
காண்பவன் கேடு - ஐயாத்தற்றுத் பாருளாக மதித்துக் கைக்கொணசவனககிகடுவதுத் பிதல்க&ே ITனாத்
807

Page 19
சித்திரபானு - ஆவணி
இப்பதினாறு செல்வங்கள் பற்றி அபிராமி யம்மைப் பதிகமொன்றிலும் குறியீடு செய்யப் பட்டுள்ளது. அஃதே போல மலைவளர் காதலி யைப் பாடிய சுவாமிகள் பத்துச்செல்வங்களை அன்னைபராசக்தி அளிப்பாள். எப்போ என்பதைப் பாடலை ஊன்றிப் படித்து அறிந்து கொள்ளுங்கள், பதி உண்டு, நிதி உண்டு, புத்திரர்கள் மித்திரர்கள்
பக்கம் உண்டு, எக்காலமும் பவிசு உண்டு, தவிசு உண்டு, திருஷ்டாந்தம் ஆகயம் - படர் எனும் திமிரம் அணுகாக் கதிஉண்டு, ஞானம்ஆம் கதிர்உண்டு, சதிர்உண்டு
காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்பால் அம்மைநின் தாளில்
கருத்து ஒன்று உண்டாகுமேல் நதிஉண்ட கடல்எனச் சமயத்தை உண்டபர
ஞானஆ னந்த ஒளியே! நாதாந்த ரூபமே! வேதாந்த மோனமே!
நான்எனும் அகந்தை தீர்த்துஎன் மதிஉண்ட மதிஆன மதிவதன வல்லியே!
மதுசூதனன் தங்கையே! வனரரா ஜனுக்கு இருகண் மணியாய் உதித்தமலை
வளர்கா தலிப்பெண் உமையே!
- மலைவளர் காதலி
பதிஉண்டு, இருப்பிடம் இருக்கிறது, பக்கம் உண்டு - உறவினர்கள், உளர்பவிசுஉண்டு - திறமை இருக்கிறது, தவிசுஉண்டு - நல்ல உறக் கம் இருக்கிறது, திருஷ்டாந்தம்ஆக - உண்மை யாக, திமிரம் - அஞ்ஞான இருள், கதிஉண்டுவீடுபேறு உண்டு, ஞானம்ஆம்கதிர்உண்டு - ஞான மாகிய கதிரவன் ஒளி இருக்கிறது, சதிர்உண்டுதகைமை இருக்கிறது, காயசித்திகளும் உண்டு -
மாகாணannகாசாகாககாகா சான்னதாகச்சாத்

சைவநீதிம்
உடம்பைப்பாதுகாக்கும் வழிகளும் உண்டு, கறை உண்டகண்டர் - நஞ்சு, உண்டகழுத்தர், நீலகண் டர் - சிவன், அம்பாளது திருவடிப் பற்று ஏற்பட்டு, அருள்பொழிவாளானால் எல்லாச் சௌபாக்கியங் களும் நமக்குக்கிட்டும் என்பது இப்பாடலின் திரண்ட பொருளாகும். இப்பாடலில் வரும் நதி யுண்ட கடலெனச் சமயத்தை உண்ட பரஞான ஆனந்த ஒளியே என்ற தொடர், அம்பாள் சமயா தீதப்பழம் பொருளாய்த்திகழ்கின்றாள் என்பதை வெளிப்படுத்துகிறது. சமயங்கள் பலவும் இறை வனோடு ஒன்றிக்க வைப்பது எனக் காலாகால் மாய்ச் சொல்லி வருவதை நாம் காண்கிறோம். கம்பநாடனும் ஒருபாடலில் இதை முன்வைக் கின்றார்.
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈதுஎன்னத் தொல்லையின் ஒன்றே ஆகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயஞ்சொல்லும் பொருளும்போல் பரந்ததன்றே.
பல ஆறுகளும் கடலிற் கலப்பதுபோல் பல சமயங்களும் சென்றடையும் ஒன்றே என்று கூறு வது வழமையான கருத்து. அக்கருத்து இங்கே மாறிப்போடப்பட்டுள்ளமை கருத்திற் கொளத்தக் கது. ஒரே தெய்வம் பல சமயத்தவராலும் பல தெய்வங்களாகப் பரவப்படுவது போல ஒரே நதி பல கால்வாய்கள் ஆகப் பிரிந்து செல்கிறது என்னும் தொனிப் பொருளும் இதில் உண்டு. உண்மையிலே தெய்வம் ஒன்றுதான் என்பதைச் சைவம் சொன்னாலும் பல தெய்வ வணக்கத்தால், ஆலயங்களின் வகைகளும் பலவாயின. பாரதி இதைக் கண்டுதான் ஆயிரம் தெய்வங்கள் உண் டென்று பேசி அலையும் அறிவிலிகாள் - அறிவே தெய்வம் என்று அறிவுறுத்தினார். நம் ஆலயங் களில் ஐயப்ப வணக்கம், ஆஞ்சனேயர் வணக்கம்
er as a good thing, as surely as the hand of him
கிசி

Page 20
சித்திரானு - ஆவணி என்று புகுந்திருப்பதையும் காணமுடிகிறது. ஒரே பீடத்திற் பல தெய்வத் திருமேனிகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பதும் இன்றைய ஆலய அமைப் பாகும். இளஞ் (சைவசமய) சந்ததிகள் கணணி யுகத்தில் வசிப்பவர்கள். அவர்கள் சைவத்தை விட்டு நழுவவும், சமய அக்கறையின்றி வாழவும் செய்கிறார்கள். பலர் மதம் மாறுகிறார்கள் எனச் சைவம் அழுது பயனில்லை. எதிர்கால இளஞ் சந்ததியினருக்குச் சைவசமயம் பற்றித் தக்க பதில் கூறி அவர்களையும் சமய நீரோட்டத்திற் கலக்க வைக்கவேண்டும். ஆலயங்களோ அவற்றை நடத் துனருக்கோ இதில் அக்கறை இல்லை. சைவ சமுதாயம் வளர்ந்தாற்றான் ஆலயம் வளரும் நின்று நிலைக்கும். ஆடம்பரவிழா எடுப்பதோடு கோயில்கள் தம்மை நிறைவு படுத்தித் திருப்தி காண்கின்றன. இந்நிலை மாறாவிடின் புறச்சமய ஊடுருவல் தவிர்க்க முடியாதது. ஆம், சயாதீதப் பழம்பொருளாம் அன்னையைப் பாடிப் பரவி அருள் பெறுவோமாக.
வட்டம் இட்டு ஒளிர்பி ராண வாயுஎனும்
நிகள் மோடுகம னம்செயும் மனம்எ னும் பெரிய மத்த யானையை என்
வசம்அ டக்கிடின் மும் மண்டலத்து
தங்கள் நிலை
சங்குவெண் தாமரைக்குத் தந்தை அங்கதைக் கொய்துவிட்டா லழுக் துங்கவன் கரையிற் போட்டால் கு
தங்களினிலைமை கெட்டா லிப்பாம் சங்குபோலும் - வெள்ளைத் தாமரைக்குச் கு பினும், அத்தாமரையைக் கொய்துவிடில் அந்நீரே விடில் சூரியன் காய்ந்து கொல்லும் (அதுபோல்) த | வருந்துவார்கள்.
இணராக தொபயவு அன்னா
புணரின் வெகுளாமை நன்று அகர்த்தியானத்தயில் தோய்வது போன்ற தங்குகளைகள் மேல்சினங்கொள்ளாதிருத்தல் நல்லது

வைந்தி) இஷ்டம் உற்றவள ராஜ யோகம் இவன்
யோகம் என்று அறிஞர்புகழவே ஏழையேன் உலகில் நீடுவாழ்வன இனி
இங்குஇ தற்கும் அனு மானமோ பட்டவர்த்தனர் பராவு சக்ரதர --
பாக்யம் ஆனசுப யோகமும் பாரகாவிய கவித்வம் நான்மறை
பாராயணம் செய்மதியூகமும் அஷ்ட சித்தியும்நல் அன்பருக்கு அருள் - விருது கட்டிய பொன் அன்னமே
அகண்ட கோடிபுகழ் காவை வாழும் ஆகி
லாண்ட நாயகிஎன் அம்மையே!
நிகள்மொடு ககனஞ் செயும் - இணைப்போடு சேர்ந்து செல்லும், மும்மண்டலத்து - கனவு, நனவு, உறக்கம் என்னும் மூன்று நிலைகளில், வளராஜயோகம் - மேன்மை பொருந்திய அட்டாங்க யோகம், இதற்கு அனுமானமோ - இது மேலான மார்க்கம் என்பதற்குச் சான்று யாது, பட்டவர்த்தனர்பராவு - அரசர்கள் துதிக்கத்தக்க சக்ரதர பாக் கியம் - மன்னர் மன்னர் என்ற நிறைவுநிலை, பரா காவிய - பெருங்கவிதை ஞானமும், விருது கட்டிய - உறுதியான முடிவு செய்த, காவை வாழும் - திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள அகிலாண்ட நாயகியாகிய என் அம்மையே!
கான்ெ
லகெட்டால்....
கதா யிரவி தண்ணீர் கச்செய் தந்நீர் கொல்லும் சூரியன் காய்ந்து கொல்வான் ஒத் தயங்குவாரே. நரியனும் தண்ணீரும் தந்தை தாயாராக இருப் அதனை அழுகச் செய்து கொல்லும். கரையில் ங்கள் நிலை விட்டுப் பெயர்ந்தவர்கள் இவ்விதம் |
- விவேக சிந்தாமணி |
எனடாசயனும்
ஒருவன் தொடர்ந்து செய்தாலும் கூடுமானால் அவனது
ஐ08

Page 21
சித்திரபானு - ஆவணி
சண்டேசுர
பொன்னியாறு எந்நாளும் பொய்க்காமல் நீரால் வளங்கொழிக்கும் சோழநாட்டில், 'சேய்ஞலூர் என்னும் ஒரு மூதூர் உள்ளது. அது மண்ணி யாற்றின் தென்கரையில் விளங்குவது; முன்னாளில் கிரவுஞ்ச கிரியைப் பிளந்து தாம் ஏந்திய வேலா யுதத்தின் தன்மையைக் காட்டிப் பின்பு சூரபதுமன் முதலிய அசுரர்களை வெல்வதற்கு நின்றவராகிய 'முருகப்பெருமானால் நிலைபெறும்படி உண்டாக கப்பெற்றுச் சேய்ஞலூர் என்ற பேருடன் திகழ்வது; திருவெண்ணீற்றில் அன்பு " கொண்டவர்களும், முத்தீயினை என்றும் வளர்ப்பவர்களும், நான் மறைகளை ஓதி உணர்ந்தவர்களும், ஐம்புலன் களை அடக்கி ஆண்டவர்களுமாகிய மறைய வர்களைத் தன்னகத்தே கொண்டு பொலிவது; வேதமோதுகின்ற சிறு மாணவர்களும், அவர்க ளுக்கு வேதத்தை ஓதுவிக்கின்ற ஆசிரியனும், நட்சத்திரங்களும் சந்திரனும் போலப் பொருந்து கின்ற மடங்களில் வேத ஒலி மிக முழங்குவது; வேள்விச் சாலைகள் பல திகழ்வது. வீதிகளில் பொழுதுதோறும் பாலைக் கொடுக்கும் பசுக்கள் சென்று கொண்டிருக்கும். ஓமத்துக்குரிய சமிதை களைச் சிறுவர்கள் தாங்கிச் செல்லும் சிறப்பு டையது. நீராடிச் செல்லும் அந்தண மகளிர்களா லும் பொலிவு பெறுவது; ஆங்காங்கே வேள்வியை முடித்துச் செல்லும் தலைவர்களின் பெரிய தேர் களும், அவிர்ப்பாகமுண்டு செல்லும் தேவர்களின் விமானங்களும் மிகுதியாக விளங்குவன. வயல் மடைகளில் செங்கழுநீர் மலர்ந்திருக்கும்; தாமரை மலர்களில் கயல்மீன்கள் துயில் கொள்ளும்; வயல்களில் செந்நெற் பயிரும், சோலைகளில் கமுக மரங்களும் செழித்து விளங்குவன. தாமரைத் தடாகங்கள் நீர் நிறைந்து திகழ்வன ; நடைவழி களில் முல்லைக் கொடிகளும் காஞ்சி மரங்களும் நிழல் செய்வன.
IDள்
Though one commit things against you as painful you, ifir be possibe not to be angry, it will be well

சைவநீதி ம்
நாயனார்
இந்நகர் தில்லையைப் பொன்மயமாக வேய்ந்த அபயன் என்றும், குலோத்துங்கன் என்றும் பெயர் பெற்ற அநபாய சோழரின் முன்னோர்களாகிய சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து நகரங்களில் ஒன்றாக விளங்கும் பெரு மையை உடையது; பண்ணுக்கு இசையும், பாலுக்குச் சுவையும், கண்ணுக்குப் பெருகு ஒளி யும், கருத்திற்குத் திருவைந்தெழுத்தும், விண் ணுக்கு மழையும், வேதத்துக்குச் சைவமும் பய னாவன் போல மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமை பொருந்தியது.
பண்ணின் பயனாம் நல்லிசையும் - பாலின் பயனாம் இன்சுவையும் கண்ணின் பயனாம் பெருகொளியும்
கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும் விண்ணின் பயனாம் பொழிமழையும்
வேதப் பயனாம் சைவமும் போல மண்ணின் பயனாம் அப்பதியின்
வளத்தின் பெருமை வரம்புடைத்தோ? விசாரசருமர் - தோற்றம் - பண்பு - இத்தகைய பெருமை பொருந்திய திருச்சேய் ஞலூரிலே, அந்தணர் மரபிலே, இல்வாழ்க்கையில் சிறந்த காசிய கோத்திரத்திலே, தலைமை பெற்ற குடியிலே, மணியையும் விடத்தையும் ஒருங்கே அளிக்கும் பாம்பினைப் போல, நல்வினை தீவினை என்ற இருவினைகளையும் செய்வதற்கும் ஒரு வடிவாய் வந்த 'எச்சதத்தன் என்னும் ஒருவன் இருந்தான். அவன் பவித்திரை என்பவளை மனைவியாகப் பெற்று இல்வாழ்க்கை நடத்தி வந்தான். பவித்திரை நற்குடியில் பிறந்தவள்; சுற்றத்தார்களை ஓம்பும் இல்வாழ்க்கைத் தொழிலு டையவள்; நல்ல புதல்வரைப் பெற்று விளங்கும் தவமுடையவள்; சிவன்பாற் பற்று மிக்குடையவள்.
பா.
to bear) as ifa bundle of fire had been thrmust upon
காத

Page 22
சித்திரபானு - ஆவணி அவள் வயிற்றிலே வேதநெறி விளங்கவும், மறையவர் குலம் ஓங்கவும், ஏழு உலகத்தவர் களும் உய்யவும், சைவ உண்மைத் திறம் வளர வும், சிவபூசகர்களின் வெற்றி விளக்கமுறவும் விசாரசருமர் என்பவர் வந்து அவதரித்தார்.
விசாரசருமர் ஐந்தாண்டுகள் நிரம்பியதும், கலைகளைப் பயிலத் தொடங்கினார். அரும்பில் மறைந்துள்ள மணம் மலர்ந்தவுடன் வெளிப்படுவது போல, அவர் முற்பிறப்பில் வேதாகமங்களில் பெற்றிருந்த அறிவு, கல்வி பயில ஆரம்பித்தவுடன் பெரிதும் விளங்கலாயிற்று.
ஐந்து வருடம் அவர்க்கணைய
அங்கம் ஆறும் உடன்நிறைந்த சந்த மறைகள் உட்பட முன்
தலைவர் மொழிந்த ஆகமங்கள் முந்தை அறிவின் தொடர்ச்சியினால்
முகைக்கு மலரின் வாசம்போல் சிந்தை மலர உடன்மலரும்
செவ்வி உணர்வு சிறந்ததால். ஏழாண்டு நிரம்பியதும் பெற்றோர்கள் தம் மரபின் வழக்கப்படியே அவருக்கு உபநயனம் என்ற சடங்கினையும் செய்வித்து, வேதங்களை ஓதுவிக்கும் செயலையும் செய்வித்தனர். அவரு டைய அறிவுத் திறத்தைக் கண்டு, கற்பிக்கும் ஆசிரியர்கள் வியந்தார்கள். 'அழிவில்லாத கலை களின் பொருள்களுக்கெல்லாம் முடிந்த பொருள் தில்லையில் அருட்பெருங் கூத்து ஆடும் திருவ டியே ஆகும்' என்பதை அவர் உணர்ந்தார். "ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் இறைவரே நம்மை உடைய தலைவராவர்” என்ற உண்மை எப்பொழுதும் அவர் சிந்தையில் ஊற்றெடுத்து வருவதாயிற்று. அவர் இறைவனிடம் கொண்ட பேரன்பின் வழியே, திருத்தொண்டின் கடமையும் இயல்பாய் மேன்மேலும் எழுந்து விளங்கிற்று.
உள்ளம் எல்லாம் வாகனம்
உள்ளான வகுஎன்னத ஒருவன் தன் மனத்தால் சினத்தை ஒரு போதுங் கா பெறுவான்

சைவந்திடு - விசாரசருமர் ஆனிரை காக்க முற்படுதல்
ஆவின் பெருமை
ஒருநாள் வேதமோதும் அந்தணச் சிறுவர் களுடன் விசாரசருமர் தெருவழியே சென்றுகொண் டிருக்கையில், ஊரவர் ஆனிரையினுடன் கன்றை யீன்ற பசு ஒன்று, செல்லும்போது தன்னை மேய்க்கும் இடையனைக் கொம்பினால் முட்டப் போயிற்று. அவன் சிறிதும் கூசாமல் தன் கையி லிருந்த கோலினால் அப்பசுவை நையப்புடைத் தான். அதனைக் கண்ட விசாரசருமர் அப்பசுவின் மேல் இரக்கம் கொண்டு அதனை அடிபடுவதி னின்றும் தடுத்தார்; அடித்த இடையனைக் கோபித் தார்; பிறகு ஆயனுக்கு அருள் செய்பவராய், "பசுக்கள் உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் சிறந்த பெருந்தன்மையுடையன; தூய தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்தப்பெற்றன; தேவர் முனிவர் கூட்டங்கள் சூழ்ந்து பிரியாத அங்கங்களையுடையன; சிவபெருமான் திருமுடி யில் அபிடேகம் செய்யத்தக்க பஞ்சகவ்வியம் தரும் உரிமையுடையன; சிவபெருமான் திருமேனி யில் தரித்துக்கொள்ளத்தக்க திருநீற்றுக்குரிய கோமயத்தை (சாணத்தைத்) தருவன; சிவபெரு மானும் உமாதேவியாரும் எழுந்தருளும் இடப் தேவரின் குலத்தைச் சேர்ந்தன” என்று இன்ன பலவும் நினைந்தார்; "இத்தகைய பெருமை வாய்ந்த பசுக்களைக் காத்து வருதலே சிறந்த கடன்; இதுவே சிவபெருமானுடைய திருவடியை வழிபடுதற்குரிய நெறியுமாகும்” என்று துணிந்தார்; ஆயனை நோக்கி, “நீ இப்பசு நிரையை இனி மேய்க்கும் தொழிலை விடுக; நானே அவற்றை மேய்ப்பேன்” என்று கூறினார். இடைமகனும் தான் செய்த குற்றத்திற்குப் பயந்து அவரை வணங்கி மேய்த்தல் தொழிலை விட்டுவிட்டுச் சென்றான். விசாரசருமர் மறையோர்களின் இசைவு பெற்றுப் பசிய பயிர்களுக்கு மழை வருதல்போலப் பசுக்களை மேய்க்க முற்பட்டு வந்தார்.
தும் உள்ளத்தால்
தானாயின் அவன் நினைத்ததை எல்லாம் ஒருங்கே
309

Page 23
சித்திரபானு ஆவணி ஆனிரை காத்தல்
பசு மேய்க்கும் கோலும் கயிறும் கொண்டு பிரமசரிய வேடத்துடன் விசாரசருமர் பசுக்களைப் புற்கள் நிறைந்த இடங்களுக்கு ஓட்டிச் சென்று மேய்ப்பார்; மேய்க்க முடியாத இடங்களில் புற்க ளைப் பறித்துக்கொண்டு வந்து கொடுப்பார்; நீர்த் துறைகளுக்கு ஓட்டிச் சென்று நீர் அருந்தச் செய் வார்; வேற்று மிருகங்களால் ஒரு தீங்கும் ஏற்படா தவாறு பாதுகாப்பார்; வெய்யில் நேரங்களில் நிழற்பாங்கான இடங்களுக்கு ஓட்டிச் சென்று அமர்விப்பார்; பால் தரும் வேளைகளில் தவறாமல் அவரவர் வீடுகளுக்கு ஓட்டிச் சென்று விட்டுவரு வார்; மண்ணியாற்றங்கரையில் வளர்கின்ற முல் லைப்புறவின் அருகும், படுகர்களின் அருகும், சோலைகள் சூழ்ந்த கரைகளின் அருகும் ஆனிரை களை மேய்த்துச் சமித்தையும் அரணியும் (தீக்க டைக்கோலும்) கைக்கொண்டு இரவு வருமுன்பு வீட்டிற்குத் திருப்பி ஓட்டிவருவார். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. பசுக்கூட்டங்கள் நன்கு பாது காக்கப் பெற்று வந்ததால் அழகோடு விளங்கின; முன்னையினும் பல மடங்கு நிறையப் பாலைச் சொரிந்தன; வளமும் அடைந்தன. அதனைக் கண்ட யாவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
மண்ணியாற்றங்கரை மணலில் இலிங்க வழிபாடு
எல்லா வகையிலும் பசுக்கள் மகிழ்ச்சியுற்றன; மனையிலுள்ள தங்கள் கன்றுகளைப் பிரிந்தாலும் தம்முடன் வரும் விசாரசருமரைக் கண்டு அவர் பக்கத்திற் சென்று உருகித் தாம் தாய் போலக் கனைத்துக் கொண்டு மடி சுரந்து கறவாமலே பாலினைப் பொழிந்தன. அதனைக் கண்ட விசாரச் ருமரின் செம்மையான மனமானது, அந்தப் பால் சிவபெருமானுக்குத் திருமஞ்சனமாகும் குறிப்பினை உணர்ந்தது; அதனால், சிவபூசை செய்யும் ஆசையுற்றது. அவர் மண்ணியாற்றங் கரையி லுள்ள ஒரு மணல் திட்டில், ஆத்திமரத்தின் கீழே சிவபெருமானுடைய உருவமாகிய இலிங்
Jaman never indulges anger in his hear he will

சைவநீதி
கத்தை மணலால் அமைத்தார்;' அதனைச் சுற் - றித் திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் மண்ணி
னாலே உண்டாக்கினார். ஆத்திமலர், செழுந்தளிர், காட்டு மலர்கள் முதலியவற்றைத் தாமே கொய்து பூங்கூடையினில் கொண்டு வைத்தார்.
பிறகு விசாரசருமர், நல்ல புதிய குடங்களைத் தேர்ந்து எடுத்துக்கொண்டு பசுக்கள் மேயும் இடங்களில் சென்று, பாற் பசுக்கள் ஒன்றுக்கு ஒரு காம்பாக மடியைத் தொட்டார்; பசுக்கள் கனைத்துக் குடங்கள் நிறையப் பாலைப் பொழிந் தன. அவர் அப்பாற்குடங்களைக் கொண்டுவந்து மணற்கோயிலுக்கு அருகில் வைத்தார்; முன்னைத் தொடர்பாகிய அன்பினாலே வழிபட்டுப் பாலினால் அபிடேகம் செய்தார். இறைவரும் அப்பூசையினை அமர்ந்து ஏற்றுக்கொண்டார். விசாரசருமர், எம் பெருமான் மகிழும் பூசனைக்குத் தேடிக்கொள்ளாத பிறபொருள்களை அன்பினாலே நிரப்பிக் கொண்டு முறைப்படி அருச்சித்து வணங்கி மகிழ்ந்தார். இவ்வாறு இறைவருக்குக் குடங்குடமாகப் பாலைக் கொடுத்துவந்த பசுக்கள் வீட்டுக்குச் சென்றும் முன்போலவே குறைவின்றிப் பாலைச் சுரந்து வந்தன.
பாலை வீணாக்குவதாக அயலான் பழி
கூறுதல்
இவ்வாறு விசாரசருமர் முறையாகத் தம் சிவ பூசையினை நாடோறும் இயல்பில் திருவிளையாட் டாக நடத்தி வந்தார். இதனைக் கண்டு இதன் திறத்தினை அறியாத அயலான் ஒருவன், பசுவின் சொந்தக்காரர்களை அணுகி, விசாரசருமர் பாலை வீணாக்குவதாகப் பழிகூறினான். அதனைக் கேட்ட அந்தணர்கள், “இடையனுக்கு மாடு மேய்க்கத் தெரியவில்லை; யான் பசுக்களின் இச்சையறிந்து மேய்ப்பேன் என்று கூறி, நம்மை வஞ்சித்துப் பாலைக் கறந்துகொண்டு அவன் பொய்வேடம் பூண்டு நடிக்கிறான். இச்செயலைச் சொல்வதற்கு அவனுடைய தந்தையாகிய எச்சதத்தனை அழைத்து வாருங்கள்” என்று கூறினர். அவ்வாறே எச்சதத்தனும் வந்தனன்.
tomce obtain all he has thought of

Page 24
சித்திரபானு - ஆவணி
|
அந்த அந்தணர்கள் எச்சதத்தனைப் பார்த்து, “பசுக்களை அன்போடு மேய்க்கிறவனைப்போல் விசாரசருமன் நடித்து, அவற்றை மண்ணியாற்றின் கரைக்கு ஓட்டிச்சென்று, பாலைக் கறந்து மணலில் கொட்டி வீணாக்குகிறான்” என்று கூறினர்; எச்சதத் தன் பயந்து, "என் மகன் செய்த இதனைச் சிறி தும் நான் முன்பு அறியேன்; இதற்கு முன் நடந் ததை நீங்கள் மன்னித்தல் வேண்டும். இனி அங் ஙனம் நடைபெற்றால் குற்றம் என்னுடையதேயா கும்” என்றுகூறி, அவர்களிடமிருந்து விடை பெற் றுக்கொண்டு மாலைச் சந்திக் கடன் முடித்துத் தன் வீட்டுக்குச் சென்றான். அவன் தனது மக னால் தனக்குப் பழி வந்ததே என்று மனம் கவன்று அதனை மகனாரிடம் கூறாது, "இந்த நிலைமையினை யானே நாளை நேரில் கண்டறி வேன்” என்று எண்ணினான்; அன்றிரவு கழிந்தது.
எச்சதத்தன் மறைந்திருந்து பார்த்தல்
மறுநாள், விசாரசருமர் பசுக்களை வழக்கம் போல் மேய்ப்பதற்கு ஓட்டிச் சென்றார். அவருடைய தந்தையாகிய எச்சதத்தன் அவரறியாது மறைந்து சென்றனன். விசாரசருமர் மண்ணியாற்றங் கரையி லுள்ள மணல் திட்டில் பசுக்களை மேயும்படி விட்டார். அப்போது எச்சதத்தன் அங்கிருந்த குராமரம் ஒன்றின்மேல் ஏறிக்கொண்டு நிகழ்வதனை அறிவதற்காக ஒளிந்திருந்தான்.
விசாரசருமரின் சிவபூசை
பிரமசாரியாகிய விசாரசருமர் மண்ணியாற்றில் நீராடினார்; முன்னை நாட்களிற் போல மணலினால் திருக்கோயில் எழுப்பிச் சிவலிங்கத்தை எழுந்த ருளச் செய்தார்; அன்று மலரும் அரும்புகளையும் மெல்லிய மலர்களையும் கொய்துகொண்டு வந்தார்; குடங்களில் பசுக்கள் சொரிந்த பாலை நிறைத்துக் கொண்டு வைத்தார்; பூசைக்கு வேண்டிய பிற பொருள்களையும் அருகில் அமைத்துக் கொண் டார்; பிறகு, சைவ ஆகம விதிப்படி பூசனைபுரியத் தொடங்கினார்; அன்போடு சிவபெருமான் திருமுடி யின்மேல் மலர்களைச்சாத்தி அருச்சித்து, இனிய
இறந்தார் இறந்தார் அl;
"துறந்தார் துறந்தார் து சினத்தில் அளவு கடந்தவர் உயிரோடிருப்பினும், துறவியரை ஒப்பர்,

சைவநீதி
பாற்குடங்களை எடுத்து ஆவலோடு திருமஞ்சனம் ஆட்டினார்.
தந்தை தாள் எறிதல்
குராமரத்தின் மேலிருந்த எச்சதத்தன் தன் மகனாரின் செயலைக் கண்டான்; விசாரசருமரு டைய அன்பை வெளிப்படுத்துவதற்குச் சிவபெரு மான் மேற்கொண்ட திருவருளோ என்று சொல் லும்படி அறிவழிந்து கோபங்கொண்டான்; உடனே இறங்கி வேகமாக ஓடிவந்தான்; கையிலிருந்த கோலினால் விசாரசருமர் முதுகில் அடித்தான்; கொடிய மொழிகளைக் கூறிக் கடிந்தான். விசாரச ருமர் உடலும் உள்ளமும் பூசை புரிவதில் இரண் டறக் கலந்து நின்றதால், அவர் அடியையும் உணராது பூசையில் ஆழ்ந்திருந்தார். எச்சதத்தன் மேலும் கோபங்கொண்டு பலமுறை அடித்தான். விசாரசருமர் அவற்றினையும் கவனியாது பால் அபிடேகம் செய்திலேயே ஈடுபட்டிருந்தார். அறிவிலியாகிய எச்சதத்தன் மேலும் கோபங் கொண்டு பாற்குடங்களைக் காலினால் இடறிச் சிந்தினான். அதனைக்கண்ட விசாரசருமர் பெருங் கோபங் கொண்டார்; "பாலினை இடறியது யார்? என்று திரும்பிப் பார்த்தார்; தன்னுடைய தந்தையே அவ்வாறு என்பதை அறிந்தார்; தந்தை ஆயிற்றே என்றும் பொருட்படுத்தாமல், பாதகத்தைத் தண் டிக்க எச்சதத்தனின் கால்களைத் துணிக்கக் கருதினார்; அருகில் கிடந்த ஒரு கோலினை எடுத்தார். அக்கோல் அவருக்கு மழுப்படையாக மாறியது. அதனையே கொண்டு தாதையின், இரண்டு தாள்களையும் அவர் துணித்து வீழ்த் தினார். மறையோனும் மண்மேல் விழுந்து இறந் தான். மீண்டும் விசாரசருமர், பூசையில் வந்த இடையூற்றினைப் போக்கி முன்போல் பூசனை புரிவதில் ஈடுபட்டார்.
சிவபெருமான் காட்சி தந்தருளல்.
விசாரசருமனின் பூசனைக்கு மகிழ்ந்து, சிவ பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் ஏறி, பூதகணங்கள் புடைசூழ வந்து காட்சி தந்த
வனயர் தினத்தைத்
வா செத்தவரை ஒப்பர் சினத்தை அடியோடு விட்டவர்
250

Page 25
சித்திரபானு - ஆவணி
(2
ருளினார். முனிவர்களும் தேவர்களும் வேதமொழி களால் துதிக்க எழுந்தருளி வந்த சிவபெருமா னைப் பக்தி முதிர்ந்த பாலகராகிய விசாரசருமர் கண்டார்; மனத்தில் களிப்புப் பொங்கக் கைகூப்பித் தொழுது எம்பெருமானின் தாமரை மலர் போன்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். சிவபெருமான் விசாரசருமரைத் தம் திருக்கரங்களால் எடுத்து, "நம் பொருட்டாக உன்னைப் பெற்ற தந்தையின் கால்களை வெட்டி இறக்கச் செய்தாய். ஆதலால், இனிமேல் நாமே உனக்கு அடுத்த தந்தையா யினோம்” என்று அருளிச் செய்து, தம் மார்போடு அணைத்துத் தழுவி, உச்சிமோந்து மகிழ்ந்தார். சிவபெருமானுடைய திருக்கரங்களால் தீண்டப் பெற்ற விசாரசருமரின் மாயையால் ஆகிய உடல் சிவமயமாய்ப் பொங்கி ஒளி வீசியது. விசாரசருமர், நான்முகன் முதலிய தேவர்கள் துதிசெய்யத் தம்மைச் சூழ்ந்து விளங்கிய சிவ வொளியினுள்ளே தோன்றி விளங்கினார்.
சண்டீசப் பதவி
சிவபெருமான் விசாரசருமரைத் திருத்தொண் டர்களுக்கெல்லாம் தலைவராக்கி. "நாம் உண்ட பரிகலமம், உடுக்கும் உடைகளும். சூடும் மாலை அணிகலன் முதலியனவும் ஆகிய அனைத்தும் உனக்கே உரிமையாகும்படி சண்டீசன் ஆகும் பதவியையும் தந்தோம்” என்று கூறித் தம் சடை முடியிலிருந்த கொன்றை மலர்மாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினார்.
அண்டர் பிரானுந் தொண்டர் தமக்(கு)
அதிப னாக்கி "அனைத்து நாம் உண்ட கலமும் உடுப்பனவும்
- சூடு வனவும் உனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோம்”
என்றங் கவர்பொற் றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
எல்லாவுலகங்களில் உள்ளோரும் மகிழ்ச்சி யினால் 'ஹர ஹர' என்று ஆரவாரித்தனர்; தேவர்
Those who give way to excessive anger, are no be Iாid=10ாகாசார்

சைவந்தி) கள் மலர்மாரி பொழிந்தனர்; சிவகணநாதர்கள் ஆடிப்பாடினர்; மறைகள் துதித்து நின்றன; இசைக் கருவிகள் முழங்கின. சைவசமயம் நிலை பெற் றோங்கும் வண்ணம் விசாரசருமர் சண்டேசுர நாயனார் ஆகிச் சிவபெருமானைத் தொழுது, தமது 'சண்டீச பதம் அடைந்தார்.
சண்டேசுர நாயனாரால் கால்கள் வெட்டப்பட்டு இறந்த எச்சதத்தன் உலகறியச் சிவாபராதம் செய்தும் சிவபெருமானது திருவருளினால் அப் - பிழையினின்றும் நீங்கித் தன் சுற்றத்தாருடனே திருக்கயிலாயம் அடையும் பேறுபெற்றான். விசார சருமர் தாம் கொண்ட அன்பால் மானிட உடலோடு சிவபெருமானுக்குரிய திருமகனாராக ஆயினார். சிவபெருமானிடத்து அன்பு கொண்ட அடியார்கள் செய்யும் தவறு, தவறாகக் கருதப்பட மாட்டாது; அது தவமேயாகும். "மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்”
*************************************
1. இத்தலம் திருப்பனந்தாளுக்கு அண்மையில், கும்பகோ
ணத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் பெருவழியில் சுமார் ஒன்பதாவது மைலில் உள்ளது. 2. இத்தலத்தை திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில்,
'சேயடைந்த சேய்ஞலூர்' என்று பாராட்டுகின்றார். 3. எச்சதத்தன் - வேள்வி செய்யும் மரபில் தோன்றியவன்;
காரணப் பெயர். எச்சம் - யக்ஞம்; வேள்வி. தத்தன்இது, முன்னாளில் மறையவர் பூண்ட சிறப்புப் பெயர். 4. இவ்விடம் "திரு ஆப்பாடி” எனப் பெயர் பெறுகிறது. 5. சண்டீச பதம் - இஃது ஒரு பதவி; தானம். சிவன், உமை, விநாயகர், முருகன், சூரியன் ஆகிய இவர்க ளுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. சிவ சண்டீச பதத்தில் இருப்பவர் 'தொனிச் சண்டர்' எனப் பெயர் பெறுவர். உருத்திரனுடைய கோபாம்சத்தில் உதித்தவரே சண்டேசுரர், சண்டம் - கோபம்.
நன்றி:- திருத்தொண்டர் புராணம்
fer than dead men, but those who are freed from
போர்

Page 26
வித்தியனுட ஆவணி)
பிரசங்
"நாவலர் என்ற பெயர் உடையவர்கள் பலர் இருப்பினும் நாவலர் என்றால் ஆறுமுகநாவல ரையே குறிக்கும்” என்று பெருமையுடன் சொல் லக்கூடிய அளவிற்கு நாவலரது நாவன்மை பிர சித்தம் உடையது. தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் நாவலர் அவர்களே என்பதைச் "சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்”. 10
என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற் பாலது. சைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1847 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவி லிலே இவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பிரசங்க மரபானது, அவரது இறுதிக்காலம் வரை நடத்தப் பட்டது.
கிறிஸ்தவர்கள் தங்களது மதப்பிரசாரத்துக் காகத் தேவாலயங்களிலே நடாத்தும் மதப்பிரசங் கங்களை இவர் அனுபவ வாயிலாக அறிந்தி ருந்தார். கிறிஸ்தவப் பாதிரிமார்களின் வார்த்தை களால் மயக்கமுற்றுச் சைவசமயத்தின் உண் மையை அறியாது கலங்கி நின்ற சைவசமயி களுக்குச் சமய உண்மைகளை எடுத்துக்கூறி மீண்டும் அவர்களைச் சைவர்களாக்கவும், உண் மைச் சமயம் எது என்பது தெரியாது தவித்தோ ருக்குச் சைவத்தின் பெருமையை எடுத்துக் கூறவும் சிறந்த சாதனம் சைவப்பிரசங்கங்கள் செய்தலே என்பதை உணர்ந்து தமிழிலே பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.
ஈழத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் இவரது பிரசங்கங்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. நாவலர் என்ற பட்டத்தை கொடுத்துக் கெளரவித்தது திருவாவடுதுறை ஆதீனமே. தருமபுர ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், காஞ்சிபுரம், இராமநா தபுரம் ஆகிய இடங்களில் உள்ளவர்கள் இவரை

24
சைவந்தி
க வழி
திருமதி. யோகேஸ்வரி கணேசலிங்கம்
அழைத்து இவர் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந் தனர். நாவலரது பிரசங்கங்களைப் பற்றிக் குறிப் பிடுகையில்,
"பெயரளவில் திருவாவடுதுறை ஆதீனம் ஆறு முகநாவலரைத் தந்ததேயாயினும், உண்மையை நோக்குமிடத்துப் பதினான்கு வருடக் கிறிஸ்தவ சூழலே நாவலரை நமக்குத் தந்தது.'
என்ற கூற்றின்படி கிறிஸ்தவர் வருகையும் அவர்களது சூழலுமே ஆறுமுகத்தை நாவலர் ஆக்கின.
இவரது சைவப்பிரகாசங்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழி காட்டியாக அமைந்தன. கிறிஸ்தவர்களது வேக மான பிரசாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார் கள் இல்லை. மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவன செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த இலாபம் பெறும் நோக்கத்துடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரை களைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.
"யாழ்ப்பாணத்திலுள்ள சைவசமயிகளே! உங் களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல் பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெற்றும் என்னை! விபூதி ருத்திராக்ஷாதாரணம், பஞ்சாக்ஷரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை!. உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங் களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும், சிவபெரு மானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முத்தியின் இலக்கணங்களையும்,

Page 27
சித்திரபானு - ஆவணி
கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறி கின்றீர்களில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதபாராயணம், தேவார திருவாசக பாராயணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற் கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை.12
என உள்ளம் நொந்து நாவலர் சைவசமயி களுக்கு விடுத்த விண்ணப்பத்தில் 'உங்களிடத் துள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவை களைக் கேளுங்கள்' என்ற அவர் கூற்று சமுதா யத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்து கின்றது. சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவ லரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற் றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல் லிக் கொடுக்க ஆரம்பித்த நாவலர், 1847 ஆம் ஆண்டு பொதுமக்கள் நன்மையின் பொருட்டு சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இச்செய்கை கள் பாதிரிமார்களின் முயற்சிக்கு எதிர் முயற்சி களாக அமைந்தனவாகும். நாவலரோடு ஒருசாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடை யிடையே பிரசங்கம் செய்துவந்தார். வாரந்தவறாது நடைபெற்ற இப்பிரசங்கங்களால் திகில் அடைந்த மிசன்றிமார் பேர்சிவல் பாதிரியாருக்கு முறையிட் டதோடமையாது, நாவலர் பிரசங்கங்களை எழுதித் தமது உதயதாரகைப் பத்திரிகைக்கு அனுப்பு வோர்க்கு வெகுமதி அளிப்பதாகவும் வாக்களித்து, 1848 ஆம் ஆண்டு தை 31 ஆம் திகதி உதயதார
கையில் ஓர் அறிவித்தலை வெளியிட்டனர். உத யதாரகையில் வெளியிடப்பட்ட பிரசங்கங்கள் மிசன்றிமார் எண்ணப்படி திரித்து வெளியிட்டதைக் கண்ட நாவலர் கோபம் கொண்டு,
"ஐயாவே,
நான் வாரந்தோறும் சைவசமயத்தின் பேரில் விற்பன்னிப்பதைப் பற்றி உமது தாரகைக்கு எழுதினவர் ஒருவர் நான் பேசாத சில காரியங் களையும் கூட்டிப் புரளியெழுதியிருக்கிறார். அப்ப டியே இனிமேலும் என்னுடைய நடையில் தாக்கத்

25
சைவந்திட
தக்கதான படுபுரளிகளைத் தாரகைக்கு எழுது வார்களென்றஞ்ச வேண்டியிருக்கிறது. இனிமேல் அப்படி வந்ததேயானால், அப்படிப்பட்டவர்களை நான் கோட்டிலே துரற்சிபண்ண வேண்டியிருக்
கும்.......
இப்படிக்கு, க. ஆறுமுகர்13
எனக் கண்டித்து அச்சுறுத்தினார்.
உதயதாரகைப் பத்திரிகை, நாவலர் கிறிஸ் தவத்திற்கு எதிர்க்குரல் எழுப்பி பிரசங்கங்கள் நிகழ்த்தத் தொடங்கிய காலம் முதலாக அவரைக் கண்டிக்கத் தொடங்கியது. நாவலரும் சிறிதும் அஞ்சாது கிறிஸ்தவர்களையும், போலிக் கிறிஸ் தவர்களையும் வெளிப்படையாகக் கண்டித்துச் சைவசமய உண்மைகளையும், பெருமைகளையும் பிரசங்கித்துச் சைவசமய அபிவிருத்திக்கு உழைக் கத் தொடங்கினார். இச்செய்கை கிறிஸ்தவர்க ளுக்கு ஓரளவு பீதியைக் கொடுத்துவிட்டது என் பது பேர்சிவல் பாதிரியாருக்கு அவர்கள் முறை யிட்டவிதத்திலிருந்து தெளிவாகின்றது.
மகை
D
"முன்னிருந்த எங்கள் சமயாச்சாரியர்கள் தாம் தரிசனஞ் செய்யப்போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன இடங்களிலெல்லாம் லோகோபகாரமான சைவப்பிரசங்கங்கள் செய்து வந்தார்". 14
என்ற கூற்று நாவலர் பிரசங்கங்கள் வேறும் பல இடங்களிலே நடைபெற்று வந்ததை வெளிக் காட்டுகின்றது.
தான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங் காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லவர்களுக் குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.
- "தமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தி யாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ஸ்தாபித்தலும், சைவப்பிரசார ணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள். ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும்,

Page 28
சித்திரபானு ஆவணி கல்வியில் விருப்பமும், இடையறாமுயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீக்ஷிக்கப் பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வஸ்திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவசாஸ்த் திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்க ளுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தி யாயர்களாகவும் சைவப்பிரசாரகர்களாகவும் நியோ கிக்கலாம். 215
மேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ்சந்ததியினரை ஊக்குவிப்ப தற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.
பிரசங்கங்கள் நிகழ்த்துவதோடு மட்டுமல் லாமல், மதம் மாறிய கிறிஸ்தவர்களை மீண்டும் சைவத்தில் சேர்க்கும் முயற்சிகளும் இக் காலத்திலே நாவலரால் மேற்கொள்ளப்பட்டன. மு. தில்லைநாதபிள்ளை என்பவரும் ச. சின்னப் பிள்ளை என்பவரும் ஒருசமயம் நல்வழி காட்டு வோம், பேரின்பஞான வழி இதுவே என்று மருட் டிய பாதிரிமார் சொற்கேட்டுக் கிறிஸ்தவராக எண்ணினார். ஞானஸ்நானம் செய்து கொள்ளவும்
சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் |ஆட்களை அழைத்து, “பசுமாட்டுக்கு நாள்தோறும் Tறான். அதற்கு அவர்கள் “நாங்கள் பல்லக்கு மாத்தி என்றார்கள். இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களை வாருங்கள்” என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் |வர்களோ” என்றார்கள். அப்போது வர்த்தகன் அவர் |யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்கும் கன்றைத் தேடும்படி நெரிஞ்சிமுள் இருக்கிற காட் அப்படியே போய்த்திரிந்து வருந்துகையில், வர்த்த | "பல்லக்குச் சுமக்கிறது உங்கள் கடமை, கன்ன |அவர்கள் பல்லக்கை நிறுத்தாமற் சுமக்கும்படி ( | அடைந்து, எசமானன் ஏவும் எந்தக் காரியத்தையும்

சைவந்திட ஏற்பாடாகியிருந்தது. அச்செய்தியை அறிந்த நாவலர் இருவருக்கும் நற்போதனை செய்து அவர்கள் எண்ணத்தை மாற்றியதும், அவர்கள் கிறிஸ்தவர் ஆதலைக் கைவிட்டார்கள். இவ்வாறு நாவலராலே சைவத்தொண்டு தொடர்ந்து நடத் தப்பட்டது. 1848-ஆம் ஆண்டு தாம் வகித்த பண் டித உத்தியோகத்தைத் தாமாகவே தியாகம் செய்தார். பண்டித உத்தியோகத்தைத் துறந்ததன் பின் சைவமும் தமிழும் தழைக்க முழுநேரம் பாடுபடும் ஒரு தொண்டானாதால் அவருக்கு வசதியாய் இருந்தது.
******* * * * * * * ************ *******
10. கைலாசபிள்ளை. த, மு.கு.நஇ ப.25 11. கணபதிப்பிள்ளை. சி. நாவலர், நாவலர், சைவப்
பிரகாச வித்தியாசாலை வெளியீடு, 1966, ப.6. - 12. ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணச் சமயநிலை,
ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு, ப.59-60. 13. உதயதாரகை, 1948, பங்குனி 9. 14. கைலாசபிள்ளை. த, மு.கு.நூ, ப.36. 15. - மேற்படி - ப.55.
நன்றி:- நாவலர் வழியில் தமிழ் அறிஞர்
---------- இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற | புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்” என் | ரெம் சுமப்போம், வேறு வேலை செய்யமாட்டோம்” | 1 பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. ! ாப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு | பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிற | களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று | க் கொண்டுவரச்சொல்லி, அதிலே தான் ஏறி, | டுமார்க்கமாய்ப் போகச்சொன்னான். அவர்கள் ! நகனிடத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவன் றத் தேடுகிறது என் கடமை” என்று சொல்லி, | செய்தான். அன்றுமுதல் அவர்கள் நல்ல புத்தி | செய்வது கடமையென்று ஒப்புக்கொண்டார்கள். |
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பாலபாடம் 1

Page 29
சித்திரபானு - ஆவணி சைவசித்தாந்தம் பயில்வோம்
சிவப்பி
இன்மைமலம் மாயைகன்மம் என்றிரண்டே சிறைதான் - இங்குபல உயிர்களும்முன் புரிந்த இரு வினையின் தன்மைகளால் எவர்களுக்குந் தனுகரண புவனம்
தந்திடும்இங் கிதனாலே இருபயனும் சார்ந்து கன்மமெலாம் நேராக நேராதல் மருவக்
கடவுள்அரு ளால்எவையுங் கழித்திடுவன் அதனாற் பின்மலமா னவையணுகா பெருகொளிமுன் புளதே
பெற்றிடுமென் றித்திறமென் பேசு மாறே. 34
இ-ள்: இன்மை மலம் - ஆணவ மலமென்ப தொன்றில்லை, மாயை கன்மம் என்று இரண்டேமாயை கன்மம் என்னும் இரு மலங்களுமே உள் ளன, இறை இலங்கு பல உயிர்களும் முன்புரிந்த இருவினையின் தன்மைகளால் எவர்களுக்கும் தனு கரண புவனம் தந்திடும் - இறைவன் விளங் குகின்ற பல உயிர்களும் முன்பு செய்த நல்வினை தீவினைகளின் தன்மைகளுக்கேற்ப எல்லா உயிர் களுக்கும் தனு கரண புவன போகங்களைக் கொடுப்பன், இங்கு இதனால் இரு பயனுஞ் சார்ந்து - இச் சகலாவத்தையிலே தனுவாதிக ளால் இன்ப துன்பங்களை அனுபவித்து, கன்மம் எலாம் நேராக நேராதல் மருவ - எல்லாக் கன்மங் களும் துலையொத்துச் சமமாதலைப் பொருந்த, கடவுள் அருளால் எவையும் கழித்திடுவன் - இறைவன் தன் கருணையாலே அக்கன்மங்கள் எல்லாவற்றையும் நீக்குவன், அதனால் பின் மல மானவை அணுகா - அதனாற் பின்னர் மலங்கள் உயிரைப் பொருந்தா, முன்பு உளது பெருகு ஒளியே பெற்றிடும் - உயிர் முன்புள்ளதாகிய மிகுந்த பிரகாசத்தையே பெறும், என்று இத்திறமே பேசுமாறு என் - என்றிவ்வாறாக நீங்கள் பேசுவ தேன் எ-று.
'தனு கரண புவனம் தந்திடும்' என்றவிடத்தில் இனம் பற்றிப் போகம் என்பதும் சேர்க்கப்பட்டது.
ஐக்யவாத சைவர், உயிர் அறிவிக்க அறியுந் தன்மையுடையதல்லவெனவும் தானேயறியுந் தன் மையுடையதெனவும் மாயா மலமே ஞானத்தை மறைக்கும் எனவும் அதனின் வேறாகச் சகச மலமென்பதொன்றில்லை யெனவும் சிவபுண்ணிய

27 |
சைவநீதி
ரேகாசம்
மட்டுவில் ஆ. நடராசா
விசேடத்தால் புண்ணிய பாவம் இரண்டும் துலை யொத்துப் பொருந்தி அனுபவித்துத் தொலைக்கத் தக்கதாக வர, கடவுள் அருளால் அவற்றை நீக்குவன் என்பர்.
பாசுபதர், மாயை கன்மங்களே ஆணவ மல மெனப்படும் எனவும் அவற்றின் வேறாக ஆணவ மலமென்ப தொன்றில்லை எனவுங் கூறுவர். 'இத் திறமென் பேசு மாறே' என்றதனால், இவ்வாறு பேசக்கூடாதென்பது பெறப்படும். ஏன் பேசக்கூடா தென்பதற்குரிய காரணம் அடுத்த செய்யுளிற்
கூறப்படும்.
DT
மாயைமுத லெனவினையின் பான்மைமுத லெனவே
மன்னுபனை விதைமரபின் மயங்கும்மலம் சுத்தற் கேயுநெறி யென்கொல்அதன் இயல்பாயின் முத்தி
யென்பதென்மற் றிவைநிற்க இருங்கலாதி உணர்வாய் மேயபினர்த் தன்னுருவம் விளங்காமை விளக்கும்
மிகும்உலகந் தனில்என்னில் இவைவிடுங்கால் உணர்வுள் தோயுநெறி இலதாதல் அறியாமை யெனநீ
சொல்லியது மலமென்பர் துணிந்து ளோரே. 35
இ - ள்: மாயை முதல் என வினையின் பான்மை முதல் எனவே - (மாயையோ கன்மமோ முதலில் உயிரைப் பற்றிய தென்று கேட்க) மாயை முதலிற் பற்றியதென்றும் ஊழ்வினை முதலிற் பற்றியதென்றும் மாறி மாறிக் கூறவே, மன்னு பனை விதை மரபின் மயங்கும் - நிலைபெற்ற பனையோ அதன் விதையோ முதலிற் றோன்றிய தென்று வாதிட்டு முடிவின்றி மயங்குவது போல மயங்க நேரிடும், சுத்தற்கு மலம் ஏயும்நெறி என் கொல்? - சுத்தனாகிய ஆன்மாவை மாயையும் கன்மமும் பொருந்தும் முறை என்ன என்றுகேட்க, அதன் இயல்பாயின் - அம்மலங்கள் உயிருக்கு இயல்பாயுள்ளன என்பையாயின், முத்தி என்பது என் - உயிரின் இயல்பான மலங்கள் அழிய உயிரும் அழியுமாதலால் நீ சொல்லும் முத்தி என்பது என்ன, இவை நிற்க - இவை இவ்வளவில்

Page 30
சித்திரபானு - ஆவணி நிற்கட்டும், இரும் கலாதி உணர்வாய் மேய வினர் - பெரிய கலை முதலிய தத்துவங்கள் ஆன்மாவுக்கு அறிதற் கருவிகளாய்ப் பொருந்திய பின்னர், தன் உருவம் விளங்காமை மிகும் உலகந் தனில் விளக்கும் என்னில் - ஆன்மாவின் சொரூபம் விளங்காதபடி பெரிய உலகத்தை விளக்குமென்று நீ கூறின். இவை விடுங்கால் - இவ்வறிதற் கருவிகள் உயிரை விட்டு நீங்கும் போது, உணர்வுள் தோயும் நெறி இலதாதல் என் - அறிவு பொருந்தும் முறைமை இல்லாமற் போவதேன் என்று கேட்க, அறியாமை என - அதற்குக் காரணம் அறியாமை என்று நீ கூற, நீ சொல்லிய அது மலம் என்பர் துணிந்துளோரேநீ அறியாமை என்று சொல்லிய அதுவே ஆணவ மலமென்பர் தெளிந்த அறிவுடையோர் எ-று. - பனை விதை மரபு, தாலபீச நியாயம் எனப்படும்.
தாலம் - பனை, பீசம் - விதை. பனையோ விதையோ முந்தியதென்று வாதிட் டால், முடிவின்றி மயங்கநேரிடும். உடம்பு மாயா காரியம். அதனால் வினை செய்யப்படும். அவ் வினைக்கீடாக உடம்பு கிடைக்கும். அதனால் மாயையோ வினையோ முந்தியதென்னும் வாத மும் பனையோ விதையோ முந்தியதென்னும் வாதத்தைப்போல முடிவில்லாததாய் மயக்கந் தருவதாகும்.
இயல்பு, என்றும் ஒரே தன்மையாயிருப்பது 'உணர்தற் கருவிகளாய்' என்று கூறவேண்டி யதை, 'உணர்வாய்' என உபசாரமாகக் கூறினார்.
சொரூபம் - சிறப்பியல்பு. ஆன்மாவின் சிறப்பி யல்பு மலங்களினீங்கி நிற்றல். தனில் - தன்னை. அந்நியமா னவைஉணர்த்தி அந்நியமாய் நிறைந்த
அறிவறியா மையினானும் அருள்நிலவும் காலம் தனில்அவ னேயாவு மாய்நின்ற. தொன்மை
தாமுணர்த லானும்உயிர் தானெனவொன்றிலதாய் மன்னியிடும் மலமாயை கன்மங்கள் மாறி
வந்திடும் இங் கிதுவழுவா தாதலினான் மனத்தால் உண்ணரிய திருவருளை ஒழியமலம் உளதென்
உணர்வரிதாம் அதனுண்மை தெரிவரிதாம் உனக்கே.
இ-ள்: மலம் - ஆணவ மலமானது, அந்நிய மானவை உணர்த்தி - உயிர்களுக்கு அவற்றின்

சைவநீதிம் | வேறாகிய நிலையற்ற பிரபஞ்சத்தை நிலையான தென உணரும்படி செய்து, அந்நியமாய் நிறைந்த அறிவு அறியாமையினாலும் - அவ்வுயிர்கள் தம் மின் வேறாதலின்றிப் பரிபூரணமாய் நிற்கும் ஞானசொரூபமான சிவத்தை அறியாமற் செய்த லினாலும், அருள்நிலவும் காலம் தன்னில் அவனே யாவுமாய் நின்ற தொன்மை தாம் உணர்தலா னும் - திருவருள் விளங்குங் காலத்தில் சிவமே சடசித்துக்கள் எல்லாவற்றோடும் கலந்து நின்ற பழமையை அவ்வுயிர்கள் அறிதலினாலும், உயிர் என ஒன்று இலதாய் தானே மன்னியிடும் - திருவ ருள் விளங்கித் தோன்றுமளவும் ஆன்மாவென ஒரு பொருள் இல்லையென்னும்படி ஆணவமலம் ஆன்ம அறிவை மறைத்துத் தானேயாய் நிலை பெற்று நிற்கும், மாயை கன்மங்கள் மாறிவந்திடும் மாயையும் கன்மமும் படைப்புக் காலத்தில் உயி ரைப் பற்றுவதும் சங்கார காலத்தில் உயிரை விடுவதுமாக மாறி மாறி வரும், இங்கு இது வழு வாது - சகலகேவலம் இரண்டிலும் இவ்வாணவ மலம் உயிரை விட்டு நீங்காது, (ஆதலால்) மனத் தால் உன்ன அரிய திருவருளை ஒழிய மலம் உனது என்று உணர்வு அரிதாம் - மனத்தால் நினைத்தற்கரிய திருவருளின் துணையின்றி. ஆணவமலம் உண்டென்று அறியமுடியாதாகும், அதன் உண்மை உனக்கு தெரிவு அரிதாம் - ஆணவ மலத்தின் உண்மையைத் திருவருள் இல்லாத உன்னால் அறியமுடியாது எ-று.
'இங்கிது' என்பதை ஒரு சொல்லாகக் கொள்வாரும் உண்டு.
உணர்தல் - உணர்விற் கேதுவாதல்.
அறியாமை - அறியாமைக் கேதுவாதல். மாயையும் கன்மமும் ஆணவ மலத்தை நீக் கும்பொருட்டு இறைவன் கூட்ட, படைப்புக்காலத் தில் உயிரைக் கூடி, சங்கார காலத்தில் அதை விட்டு நீங்கும். அதனால் மாயை கன்மங்கள் மாறி வந்திடும் என்றார்.
விறகு தன்னுட் சூக்குமமாயிருக்கும் அக்கி னியை மறைத்துத் தன்னையே காட்டி நிற்பது போல, ஆணவமும் ஆன்ம அறிவை மறைத்து, ஆன்மாவென ஒன்றில்லை யென்னும்படி, தன்னி யல்பையே காட்டி நிற்கும். அதனால் 'உயிரென வொன்றிலதாய் மன்னியிடும்' என்றார்.

Page 31
சித்திரபானு - ஆவணி)
தத்துவ உலகில் :
பண்டிதர் மு
தத்துவ உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பண்டிதர் மு. கந்தையா அவர்கள். அண்மையில் காலமான இவ்வறிஞர் ஏழாலை ஊரில் பிறந்தவர். தான் பிறந்த ஈழத்திலும் தமிழ கத்திலும் பிறநாடுகளிலும் அறிஞர்களின் நன்மதிப் பைப் பெற்ற மேதை இவர்.
பண்டிதர் பிறந்த ஏழாலை ஊர் சைவத்தமிழ்ப் பாரம்பரியம் மிக்கது. அந்தப் பாரம்பரியத்திலே வந்த பண்டிதர் தமது சமயநெறியைப் பின்பற்று வதில் உறுதியும் கொள்கைத் தெளிவும் கொண்டி ருந்தார். அமைதியாக இருந்து, தனி மனிதனாக அரும்பெரும் பணிகள் ஆற்றினார்.
ஆறுமுக நாவலருக்கு உறுதுணையாக நின்று பல பணிகள் செய்தவர் குப்பிழான் கிராமத்தில் பிறந்த காசிவாசி செந்திநாதையர். செந்திநாதை யரின் வேதாகம நூல்களின் ஆராய்ச்சி முடிவு களாலும் திருமுறை விளக்கங்களாலும் ஈர்க்கப் பட்டவர் பண்டிதர். புன்னாலைக்கட்டுவனில் பிறந்த மகாவித்துவான் கணேசையரின் தமிழ்ப் புலமை யால் கவரப்பட்டு, அவரைத் தன் மானசீகக் குரு வாகக் கொண்டவர். இவர்களைப் போன்ற ஈழத் தமிழ் அறிஞர் பலரும் பண்டிதரின் ஞானவாழ்வில் தடம் பதித்தனர். தத்துவ உலகில் தடம்பதித்த மேதையாகப் பண்டிதர் விளங்கினார்.
இன்று ஆராய்ச்சியிலும் திறனாய்விலும் ஈடுபடு பவர், பொதுவாக, மேற்கத்திய அறிவியல் அணுகு முறைகளைப் பின்பற்றுவதைக் காணலாம். ஆராய்ச்சிக்கு வேண்டிய அறிவியல் நோக்கு சிலரிடம் இருப்பதில்லை. இதனால் அவரின் ஆய்வுமுடிவுகள் அறிஞர்களால் ஏற்றுக்கொள் ளப்படாத நிலை பிறக்கிறது.
முன்பிருந்த ஈழத்தமிழ் அறிஞர்கள் மேற்கத்திய ஆய்வுமுறைகளை அறிந்திருக்கவில்லை. ஆயி னும், அவர்களின் ஆய்வுமுறைகளும் முடிவுகளும் அறிவியல் சார்ந்ததாக இருந்தன. அவை தமிழ் மரபு வழிவந்த அணுகுமுறையில் அமைந்து சிறப்புற்றன. பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் எழுத்துக்கள் இதற்கொரு எடுத்துக்காட்டு. பண்டிதர்

சைவநீதி தடம் பதித்த மேதை
2. கந்தையா
சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம்
கந்தையாவின் ஆராய்ச்சி அணுகுமுறை இத்த கைய தமிழ் அறிஞரின் வழியையும், மேலை நாட்டறிஞரின் அணுகுமுறையையும் கொண்டு சிறப்புற்றது.
தமிழிலுள்ள நூல்களை, குறிப்பாகச் சிந்தாந்த நூல்களை, ஆய்வுசெய்தற்கும், தெளிவாக விளங் குதற்கும் மேலைநாட்டுத் திறனாய்வு முறை மட் டும் போதாது, அது குறையுடையது என்பது பண்டிதரின் கருத்து. அவரின் “சித்தாந்தச் செழும் புதையல்” என்ற நூலில் இது தெளிவாகத் தெரி கிறது. "உண்மை விளக்கம்” என்ற சைவசித்தாந்த நூலின் ஒரு பாடல், முத்தியில் இன்பத்தைத் தருபவன் இறைவன், அதனை அனுபவிப்பது ஆன்மா, அதனை விளைவிப்பது ஆணவம், என்று கூறுகிறது. உயிரின் ஆற்றலை மறைத்துக் கேடு செய்யும் ஆணவம் எங்ஙனம் முத்தியில் இன்பத்தை விளைவிக்கும்? என்ற கேள்வி எழுகிறது.
இது தத்தவ அறிஞருக்கு விளங்காத புதிராய், பல்வேறு விளக்கங்களுக்கு இடமளிக்கிறது. புகழ்பெற்ற தத்துவ அறிஞர்கள் தரும் விளக் கங்கள் வலிந்து காணப்பட்டவையாய் இருக்கின் றன. ஆனால் பண்டிதர் தரும் விளக்கம் அறிவியல் சார்ந்ததாக, சித்தாந்த உண்மையை உள்ளபடி உரைப்பதாக உள்ளது. பலவாறு விளக்கியபின், தமிழ்க் கவிதை அமைப்பைக் கைக்கொண்டு, அதன்மூலம், குறிப்பிட்ட அடிக்கு அவர் பொருள் காணுகிறார். திருக்குறட்பா ஒன்றை உதாரணம் காட்டி, "மழை பெய்யாமல் கேடு விளைதல் போல் ஆணவம் மறைப்பைச் செய்யாமல் இன்பம் விளைகிறது” என்று அவர் நிறுவும் பாங்கு, அவரின் சித்தாந்தத் தெளிவிற்கும், தமிழ்ப்புல மைக்கும், அறிவியல் நோக்கிற்கும் சான்று பகர்வது. இதுபோன்ற உதாரணங்களால் சித்தாந்த முடிவுகள் பலவற்றை அவர் விளக்கியுள்ளார். இது பண்டிதருக்கே உள்ள தனிப்பண்பு.

Page 32
சித்திரபானு - ஆவணி
சைவசமயக் கருத்துக்களைக் கூறுபவர் பலர் அவை வேதங்களில் உள்ளன, ஆகமங்களில் உள்ளன என்று கூறுவதுண்டு. ஆனால் எந்த வேத நூலையும், ஆகம நூலையும் குறிப்பிட்டுச் சொல்வதரிது. பண்டிதர், தான் மேற்கோள் காட்டும். வேதாகமக் கருத்துக்களை குறிப்பட்ட நூல்களின் பெயர்கள் கூறி விளக்குவதைக் காணலாம். அவ ருக்குள்ள மும்மொழி அறிவு இதற்குத் துணை புரிந்துள்ளது. சைவசித்தாந்த நூற் கருத்துக்களை, வேதாகம நூற்கருத்துக்களை ஆதாரமாகக் காட்டி விளக்குவது இவரின் தனித்திறமை. இத்திறமை கொண்டவரை இன்று ஈழத்திலும் தமிழகத்திலும் காண்பதரிது.
சைவத்துக்கு உடன்பாடற்ற கருத்துக்கள் பல வேத உபநிடதங்களில் பின்னாளில் புகுத் தப்பட்டன. வேதாந்திகள் உபநிடதக் கருத்துக் களைத் திரித்துக்காட்டிய இடங்களும் உண்டு. இவற்றை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தவர் செந்தி நாதையராவார். இந்த அறிஞரைப் பின்பற்றி, பண்டிதர் தந்த விளக்கங்கள் பல. அவை சைவ சித்தாந்தக் கொள்கை பற்றிய மயக்கங்களைத் தீர்த்தன. வேதாகம நூல்களின் உண்மைக் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தன.
தமிழ்த் திருமுறைகளுக்கு உயர்ந்த இடம் ளித்தவர் நாவலர் பெருமான். அவரின் வழியில் சித்தாந்தம் கண்ட முடிந்த முடிபுகளைத் திருமுறை களிற் கண்டு விளக்கிய பெருமையும் பண்டிதரைச் சாரும். இதனை அவரின் நூல்களில் பரவலாகக் காணலாம்.
சைவக் கிரியைகளின் உள்ளார்ந்த பொருள் தெரியாது அவற்றைக் கைக்கொள்வதில் பய னில்லை. கிரியைகளில் பாவனையும் ஈடுபாடும் அவசியம். இதற்கு அவை குறித்த அறிவு முக்கி யம். "சித்தாந்த விளக்கிற் சைவக்கிரியைகள்" என்ற அவரின் நூல் சமயச் சடங்குகளுக்குத் தத்துவ விளக்கம் அளிக்கிறது.
"சித்தியார்த்திறவு கோல்” என்ற நூல் சைவ சித்தாந்தம் படிக்கும் மாணவருக்கும், அறிஞ ருக்கும் மிகவும் பயன்தருவது. சிவஞான சித்தியார் கூறும் பல நுட்பமான கருத்துக்களைத் தெளிவாக விளக்குகிறது.
யாழ்/ பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய திருவாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப்

30)
சைவநீதி
பேருரை, யாழ்ப்பாணத்து சித்தாந்த மேதைகள் பதித்த சுவடுகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஈழத்துச் சைவசித்தாந்த பாரம்பரியத்தின் முன்னோடியான ஞானப்பிரகாசர் நாவலருக்கு முன் வாழ்ந்தவர். அவரின் சித்தியார் உரையில் சிவசமவாதத்தைப் புகுத்தியுள்ளார் என்று சித்தாந்தப் பேரறிஞர் சிவஞானமுனிவர் போன்றவரால் கண்டிக்கப்பட் டவர் அவர். இது தவறானது என்றும் ஞானப்பிர காசரின் கருத்து சிவசமவாதத்தைக் கொண்ட தல்லவென்றும் நிறுவி, சித்தாந்த உலகில்
முத்திரை பதித்தவர் பண்டிதர்.
பண்டிதரின் "சைவ சித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி” என்ற நூல், பல அரிய சித்தாந்தக் கருத்துக்களைக் கொண்டு, வரலாற்று நூலாகவும் திகழ்கிறது. அவரின் நுண்மாண் நுழைபுலத்துக்கு அரண் செய்வது இந்நூல்.
இந்திய மதங்களை இந்துசமயம் என்று குறிப்பிடும் வழக்கம் அன்னியராட்சியில் வந்தது. இந்துசமயம் என்று ஒரு தனிச்சமயம் இல்லை. அதற்கென்று ஒரு தனித்துவமோ கொள்கையோ கூட இல்லை. இந்து சமயம் என்ற பெயரில் இன்று சைவத்துக்கு உடன்பாடற்ற கொள்கை களும் வழிபாட்டு முறைகளும் புகுத்தப்படுகின்றன. சைவக்காவலராகத் திகழ்ந்த ஈழத்து அந்தணர் குலத்தவர் சிலர் இவற்றைப் புகுத்துவதும், சைவ சமயத்தவர் மத்தியில் செல்வாக்கு மிக்கவர் சிலர் இதனை ஆதரித்து ஊக்குவிப்பதும் பண்டிதர் மனத்தைப் பெரிதும் பாதித்தது. சைவத்தைச் சிதைக்கும் இந்தச் செயலை மாற்ற அவர் எழு திய கட்டுரைகள் பல. "சைவத் தமிழ் அறிவியல் பண்பாட்டு இயக்கம்” என்ற பெயரில், தனது தள் ளாத வயதில், பல கட்டுரைகளை வெளியிட்டார்.
ஈழத்தில் சைவம் இன்றிருக்கும் நிலையை எண்ணி வேதனைப்பட்ட பண்டிதர், "சைவசித்தாந்த மன்றம்” ஒன்று அமைத்துச் சைவத்தைப் பேண விரும்பினார். சைவமக்கள், குறிப்பாக இளைஞர் கள், தமது சமயத்தை அறிந்து, ஈழத்துச் சைவப் பாரம்பரியத்தைப் பேணவேண்டுமென்பதும், அதற்கு அவர் உருவாக்க எண்ணிய "சைவ சித்தாந்த மன்றம்” துணைபுரிய வேண்டுமென்பதும் அவரின் கடைசிக்கால விருப்பமாக இருந்தது. இதனை அவரின் கட்டுரைகள் மூலமும், இக் கட்டுரை ஆசிரியருக்கு எழுதிய கடிதங்கள் மூல மும் அறியமுடிகிறது.

Page 33
சித்திரபானு - ஆவணி
திருமந்திரம் - 5
முக்குணம்
சத்துவம், இராசதம், தாமதம்.
1. சத்துவம்
யாருக்கும் நல்லவனாய் ஞானகுணத்தனாய் இருக்கச் செய்வது; அதாவது தவம், சமம், கல்வி, செளமியம், பொறுமை, கிருபை, சந்தோ ஷம், அறிவு, அடக்கம் முதலியன உடைமை.
2. தாமதம்
உன்மத்தனாய் அதமகுணத்தனாய் இருக்கச் செய்வது; அதாவது மந்தம், கோள், அகெளரவம், நித்திரை, மதம், மச்சரம், அதர்மம், அறியாமை, சோம்பல் முதலியன உடைமை.
3. இராசதம்
1
அகங்காரமாய் மத்திம குணத்தனாய் இருக்கச் செய்வது; அதாவது செளரியம், உற்சாகம், அபிமானம், கிருபையின்மை, இடும்பை முதலிய உடைமை.
போகின்ற தெட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகின்ற முற்றினு மொன்பது வாயிலும் நாகனு மெட்டும் நான்கிரவி மதியும் பாகன் விடாவிடிற் படர்ந்தன லாமே.
பொ-ரை: உள்ளே புகுந்த அஷ்ட சரீரமும், பத்து வாயுக்களும், காமாதி அஷ்ட விகாரங்களும். குண்டலியாகிய பாம்பும், பன்னிரண்டு கலை களும். சூரிய சந்திரரும், நவத்துவாரங்களும் ஆகிய முழுமையும் அபான னென்னும் வாயு இடங்கொடாவிட்டால் தேகமுழுவதும் பரவி அக்கினி மயமாய்த் தீய்ந்து போய்விடும். “அத்தன மைத்தவுட லிருகூறினில் சுத்தமதாகிய சூக்குமஞ் சொல்லுங்கால் சத்த பரிசரூபர சகந்தம் புத்திமானாங் காரம்புரியட்ட காயமே.' - 2123 என்பதால் புரியட்ட தேகம் உணர்க.

சைவந்திட
வைத்தியப்பகுதி
தசவாயுக்கள்
பிராணன், அபான், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்.
காமாதி அஷ்டவிகாரம்
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம், இடும்பை, அகங்காரம்.
ஒன்பது வாயில்
கண்கள் 2, மூக்குத்துவாரம் 2, காது 2, வாய் 1, மலத்துவாரம் 1, நீர்த்துவாரம் 1.
பிராணன் - லலாடமத்தியில் தோன்றிச் சித்திரநாடி யில் விழுந்து, அவ் என்று நாபிஸ்தானத்தில் முட்டி, சவ் என்று இடை பிங்கலைகளிலோடி, கபாலத்தைச் சுற்றி, நாசியிற் பன்னிரண் டங்குலம் புறப்பட்டு, நாலங்குலம் கழன்று, எட் டங்குலம் மீண்டு, தான் நின்ற இடத்தில் தாக் குறுவது. இப்படி நாழிகை ஒன்றுக்கு சுவாசம் 360 ஆக இரவு பகல் நாழிகை 60-க்கும் சுவாசம் 21600. இதற்கு விபரம்:- மூலாதாரத்திற்கு
சுவாசம் 600 பிருதுவியில் சுவாதிஷ்டானம் பிரமாவிடம்
சுவாசம் 6000 அப்புவில் மணிபூரகம் விஷ்ணுவிடம்
சுவாசம் 000 தேயுவில் அநாகதம் உருத்திரனிடம்
சுவாசம் 6000 வாயுவில் விசுத்தி மயேசுரனிடம்
சுவாசம் 1000 ஆகாயத்தில் ஆக்ஞை சதாசிவனிடம்
சுவாசம் 1000 நாதாந்தத்தில் தட்சிணா
மூர்த்தியினிடம்
சுவாசம் 1000
ஆகக்கூடுதல்
21600

Page 34
சித்திரபானு - ஆவணி
இதில் 7200 சுவாசம் பாழாகப் பாய்ந்து 14400 சுவாசம் உள்ளே புகும் என்றறியவும்.
அபானன்
கீழ்நோக்கி குதத்தையும் குய்யத்தையும் பற்றி நின்று மலசலங்களைக் கழிப்பிப்பது.
வியானன்
தோலிலே நின்று பரிசங்களை அறிவிப்பது.
உதானன்
உதராக்கினியை எழுப்பி உண்ட அன்ன சாரத்தை 72000 நாடி நரம்புகளிலே கலப்பித்துச் சரீரத்தை வளர்ப்பிப்பது.
சமானன்
எல்லா வாயுவையும் ஏறுதல் குறைதல் செய்ய வொட்டாமல் சமனாய்க் கீழ்க்கொண்டி யங்குவது.
நாகன்
கொட்டாவியும் விக்கலும் கக்கலும் உண் டாக்குவது.
கூர்மன்
கண்ணிலே நின்று இமைப்பிப்பது.
அஞ்செழு
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேதநான்கினு மெய்ப்பொரு ளாவது நாதநாம் நமச்சி வாயவே.
இறைவனை அடைகி I 1. தாசநெறி
ஆண்டானடிமைத்த 2. சற்புத்ரநெறி
தந்தையும் மைந்த 3. தோழநெறி
தோழமை கொண் 4. நாயகி நாயகநெறி - இறைவனைக் கண
அன்பு செய்தல்.

சைவந்தி)
கிரிதரன்
புருவமத்தியத்தைப் பற்றி நின்று நீட்டல், முடக்கல், கோபித்தல், தும்முதல், அழுவித்தலும் செய்வது.
தேவதத்தன்
விழித்திருக்கும்போது ஓடுவித்தலும், உலாவு வித்தலும் யுத்தம் பண்ணுவித்தலும், சிரித்தலும், வியசனம் உண்டாக்கலையும் செய்வது.
தனஞ்சயன்
பிராணன் உடம்பை விட்டுப் போனாலும் தான் பிரியாமல் நின்று உடம்பை வீங்குவித்தலும் விரிவித்தலும், புளிப்பித்தலும் செய்து, மூன்று நாட்களுக்கு அப்பால் கபாலத்தைப் பிளந்தோடிப் போவது.
அஷ்டவிகாரங்கள்
1. காமம் - ஆசை, 2. குரோதம் - பிணக்கு, 3. உலோபம் - பிடிபாடு, 4. மோகம் - பிரியம், 5. மதம் - கெருவம், 6. மாற்சரியம் - உறவாயும். உதட்டில் - நகைப்புமாயிருந்து உட்பகை விளைவித்தல், 7. இடும்பை - உதாசினம், 8. அகங்காரம் - கோபித்தல்.
த்துண்மை
கொல்வாரேனுங் குணம்பல நன்மைகள் இல்லாரேனு மியம்புவ ராயிடின் எல்லாத்தீங்கையு நீங்குவ ரென்பரால் நல்லார் நாம் நமச்சி வாயவே.
ன்ற நெறிகள் நான்கு. றெம். அனுமாக நிற்றல். ந வணங்குதல். எவனாகக்கொண்டு ஆன்மா நாயகியாக நின்று

Page 35
சித்திரபானு - ஆவணி
பெயரும்
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினையாவையுமே.
என்று அருணகிரி வள்ளல் உபதேசித்தார். கபடத்தை ஒழித்து மெய்யன்பினால் முருகன் தாளை நாடு என்றார். ஆசைகளாகிய வினையை விட்டொழி என்றார். மண், பெண், பொன் முதலிய வைகளை நாடும் மனம். தான் உயிருடன் வாழும் வரையில் மட்டுமன்றி, உயிர் பிரிந்த பின்னர் தன்னைப் பிறர் நினைக்கவும் போற்றவும் கொண்டாடவும் வேண்டுமேயென்ற கவலையு - றுதல் மிகவும் வியப்பான காரியம். |
கண்ணெதிரில் பெருமக்களும் சிறுமக்களும் பல உயிர்களும் தனமும் மற்றெல்லாம் காலம் எனும் பெருவெள்ளத்தில் அழியக்கண்டும். அவைகளின் ஞாபகம் அறவே மறையக் கண்டும், உண்மையை உணர்ந்தான் அல்லன் மானிடன். தன் ஞாபகம் மறவாதிருக்க, உருவப் படங்கள் எழுதியும், உருஆக்கங்கள் நிலை நிறுத்தியும்; வில் (WILL) மூலமாய் தன் பேர் நிலையுற்றிருக்க அநேக ஸ்தாபனங்கள் நிறுவியும், சமாதிகள் ஏற்பாடு செய்தும் துன்புறுகின்றான். காலம் எனும் கொடும் வெள்ளம் இவைகளை யெல்லாம் அழித்தே செல்லுகின்றதை உற்று முன் பின்னோக்கிப் பார்த்தால் யாவரும் அறிவார்.
இன்றைக்கிருந்து நாளைமறையும் பெயரின் தன்மை இப்படியிருக்க, புகழுக்காக எவ்வளவு பொறாமை, துக்கம், கலகம், துன்பம் உலகத்தில்

சைவந்தி
- புகழும்
திருப்புகழ்மணி
காண்கின்றன. ஆகவே, 'எல்லாமற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா' என்று பாடி னார். பக்தியில் ஈடுபட்டு அன்புறும் தொண்டர்கள் நிலையை அப்பர் ஸ்வாமிகள் உபதேசிக்கும் பொழுது, 'தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே' என்றார். பேரும், பேரின் பெருமையும் ஈசன் விலா சமே என்று அப்பர் பாடியது காண்க. “பேராகி பேருக்கோர் பெருமையாகி..... சென்றடிகள் நின்ற வாறே” தன்னை மறந்த நிலையைக் குறிப்பாய்க் கொண்ட பக்தர்களுக்கு தன்பின் தன்பேர் நிலைத்திருக்க நாடும் கருத்துத்தான் வருமோ? சித்தர்கள் வற்புறுத்துகிறார்கள். “தன்னை மறந்து தலைவாசல் தாள் போட்டு; உன்னை நினைந்து உறங்குவது எக்காலம்”, "தன்னை மறந்து தலைத்த நிலைமறந்து, கன்மறந்து கதிபெறுவது எக்காலம்” எல்லாம் ஈசன் செயல் என்ற திண் மையில் ஈடுபட்ட பக்தர்களுக்கு, தங்கள் பேர், பெருஞ்சீர், போற்றும் புகழ் இவையெல்லாம் குறியில் நில்லாவாம். ஆகவே பிறந்தவாழ்க் கையின் கொள்கைதான் என்னவோ! இறந்த இடம் பேசுவது:
“என்னை மற இறையை நினை
அன்பால் சேவை செய் இதுவே போற்றும் பூஜை".
நன்றி:- ஆத்மஜோதி

Page 36
சவாலாக வாலை
சிவு
நினைவிற் .
புரட்டாதி
01 17-09-2002 செவ்வாய்க்கிழமை
18-09-2002
புதன்கிழமை 20-09-2002
வெள்ளிக்கிழமை 05 21-09-2002 சனிக்கிழமை
02
06
22-09-2002 08
24-09-2002
25-09-2002 10 26-09-2002 11
27-09-2002 18 04-10-2002
ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை
20 06-10-2002 ஞாயிற்றுக்கிழமை
07-10-2002
09-10-2002 25 11-10-2002 26 12-10-2002 28 14-10-2002
திங்கட்கிழமை புதன்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை திங்கட்கிழமை
29 15-10-2002 செவ்வாய்க்கிழமை
31 17-10-2002 வியாழக்கிழமை
எங்களிடம்,
ஐம்பொன், வெள்ளி, பஞ்சலோகம் வார் கலைநயம் மிக்க சிலாவிக்கிரகங்கள், கோபுரக் சந்திரவட்ட, பூச்சக்கரக் குடைகள், ஆலவட் வெள்ளி, முத்து, கிரீடங்கள், வாக மாலை | கலைத்திறம் படைத்த குத்துவிளக்குகள், வீட் கிடைக்கும்.
க5ை
23/1, விவேகானந்த மேடு, 6
Regd. No. QD/25/News 2002 இவ்விதழ் சைவநீ
கொழும்பு-13, லக்ஷமி அச்சகத்தில் அக் ANYAYAYAYAYAYA

VJAVFAVTAVIA VIAVA
உ
மயம்
கொள்வதற்கு
புரட்டாதி மாதப்பிறப்பு பிரதோஷ விரதம் நடேசரபிஷேகம் கடையிற்சுவாமி குருபூசை, பூரணை விரதம், உமாமகேஸ்வர விரதம் மஹாளயபக்ஷரம்பம் உருத்திரபசுபதியார் குருபூசை சங்கடஹரசதுர்த்தி விரதம் கார்த்திகை விரதம் திருநாளைப்போவார் குருபூசை பிரதோஷ விரதம், அருணந்தி சிவாசாரியார் குருபூசை அமாவாசை விரதம், மஹாளயபக்ஷ முடிவு நவராத்திரி விரதாரம்பம் சதுர்த்தி விரதம் ஷஷ்டி விரதம் சரஸ்வதி பூசை ஆரம்பம் சரஸ்வதி பூசை, ஏனாதிநாதர் குருபூசை விஜயதசமி, கேதாரகௌரி விரதாரம்பம் நரசிங்கமுனையரையர் குருபூசை
பப்பு விக்கிரகங்கள், வீட்டுப்பூசைப் பொருட்கள், கலசங்கள், பட்டுக்குடைகள், கும்பக்குடைகள், டம், சுருட்டி மகர தோரணம், திரைச்சீலைகள், மற்றும் மின்சார மங்கள வாத்தியங்கள் இந்திய டு அலங்காரப் பொருட்கள் குறைந்த விலையில்
Dயரசி கொழும்பு- 13. தொ. பே: 478885
தி நிறுவனத்தினரால் இல.195, ஆட்டுப்பட்டித்தெரு, =சிட்டு 30-08-2002 இல் வெளியிடப்பட்டது.
ASAAAAAAம்