கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.07

Page 1
--ஞா)
கலை இ6
www.gnanam.info www.gnanamik
மொழிடெ உபாலி லீ
விலை: ரூபா 100/=

க்கியச் சஞ்சிகை
ஜூலை
2014
எழுத்தாளர் பயர்ப்பாளர் லாரட்ன

Page 2
agunan qala nomaanse Nagalingan
Jew
Designers and Manufac 22kt Sovereign Gold Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Suppliers t
DEALERS IN ALL KIND
FOOD COLOURS,
CAKE INGRE
76B, Kings S Tel: 081 - 2224187, 081 -

Fellers
turers of
SAL ESSENCE
SUPPLIERS
O Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, EDIENTS ETC.
treet, Kandy. - 2204480, 081 - 4471563

Page 3
ஒளி:15 சுடர்:02 |
த காதலின் மு.
(ஞானம்
கவி
வே சிற் எள்
கெ
தா
170: வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர் , ஸ்தாபகர் : தி.ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு
வி. தொ.பேசி.ச 0094-11-2586013
உ. 0094-77-7306506 தொ.நகல் • 0094-11-2362862
பு! இணையம் + WWW.gnanam.info
WWW.gnanam.lk
தளம்.ஞானம். இலங்கை மின்னஞ்சல் editor@gnanam.info
editor@gnanam.lk அஞ்சல் r 3B-46th Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம் ~ T. Gnanasekaran
ACC. No. - 009010344631 Hatton National Bank, Wellawatha Branch. Swift Code : HBLILKLX (மணியோடர் மூலம் சந்தா அனுப்பு) பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும்) சந்தா விபரம் Sri Lanka
ஒரு வருடம் :ரூ 1,000/= ஆறு வருடம் :ரூ 5,000/= ஆயுள் சந்தா ரூ 20,000/=|
ஒரு வருடம் Australia (AUS)
50) Europe (€)
40 India (Indian Rs.) 1250 Malaysia (RM)
100 Canada ($) UK (£) Singapore (Sin. $) Other (US$)
50
ஞொனம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள். 4 புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி, ஆகியவற்றை வேறாக இணைத் தல்வேண்டும்.
பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச்
| ) வ செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. படைப்புகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு
(அட்டை மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)
* 2 2 5 ந
க 5 5 5 6 8

வீரிவும் ஆழமும் வறுதுஞானம்! அதிரள்ளே...
கதைகள்
ப.ஐ. வரதராஜன்
06
பி
15
5. வஸீம் அக்ரம் F. ஞானராசா
ரி. இளங்கோவன் நிசார் லோலியூர் வேல் நந்தன்
ஸிம் அகம்மது
19 25 27 34
41
16
03
கட்டுரைகள்
கே. பொன்னுத்துரை பேராசிரியர் சபா ஜெயராசா சி. விமலன் இப்னு அஸ்மத்
11
16 24
26
றுகதைகள் நதமைந்தன்
07 Tகரை வாணன் காற்றை பி.கிருஷ்ணானந்தன் 29 எத்தி வெலிஸரகே
திக்வல்லை கமால் 31
42
பத்தி கே.விஜயன் பேரா. துரை மனோகரன்
கே.ஜி.மகாதேவா
47 51
மகால இலக்கிய நிகழ்வுகள் 5. பொன்னுத்துரை
53 53
பண இலக்கியக் கட்டுரை |
ஞானசேகரன்
36
36
ரசகர் பேசுகிறார்
55
-ப்பட ஓவியம் - மு.க.சு. சிவகுமாரன், யேர்மனி)

Page 4
ஆசிரியர் பக்கம்
சிறுபான்மை
ஒற்றுமையும் ] இந்தநாட்டில் கடந்தகாலா தாக்கப்பட்டுவந்த சம்பவங்க உச்சக்கட்டமாக கடந்த ஜூன் 1 நாட்களிலும் அளுத்கமை, தர் பிரதேசங்களில் முஸ்லிம்களுக் இடம்பெற்றுள்ளன. பள்ளிவாசல் வாகனங்கள், என்பன தீயிட்டுக் வாள் வெட்டுக்கும் உள்ளாகியும்
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க தஞ்சம் அடைந்து இருந்த வேல் இச்சம்பவங்கள், இடம்பெற்றதா
தொடர்ந்து இலங்கையின் மு 'நோலிமிட்' பாணந்துறையில் எ
150க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் சேதா கணிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் கட்சிகள் பெரும்பா நிலையிலும் முஸ்லிம்களுக்கெ தடுக்கமுடியாத நிலைமை கான
இந்தக்கலவரத்தின் பின்னன தொடர்பாக பகிரங்கமாகப் பலரு எதிராக எவ்வித நடவடிக்கை சந்தேகங்களைத் தோற்றுவித்து
இந்த நாட்டில் சிறுபா வன்முறைகள் தொடர்ந்தும் நட முடிவுக்குக் கொண்டுவர வேல நோக்குடன் செயற்படும் சிறுபா எதிர்காலத்திலாவது தமது செய் தமது சமூக நலன்கருதி இல நடந்து கொள்ளவேண்டும் எ சம்பவங்கள் தெட்டத் தெளிவா
அத்தோடு சிறுபான்மை இ ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் தெ அவசியமானதாகும்

யின மக்களிடையே சிந்துணர்வும் அவசியம் ங்களில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் ளை பலரும் அறிவர். அதன் 5ஆம் திகதியும் அதன்பின்னரான சில காநகர், மற்றும் பேருவளை ஆகிய த எதிரான வன்முறைத் தாக்குதல்கள் மகள் வர்த்தக நிலையங்கள், வீடுகள், க் கொளுத்தப்பட்டதுடன் முஸ்லிம்கள் ள்ளனர். ப்பட்டு, முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் ளையில், மின்சாரம் செயலிழக்கப்பட்டு கத் தெரிவிக்கப்படுகிறது. முன்னணி ஆடைவிற்பனை நிலையமான ரிந்து சாம்பலாகியது. ள், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள், ரம்580கோடியைத் தாண்டியுள்ளதாகவும்
LEHE
மான
ரலனவை அரசுக்கு ஆதரவு கொடுத்த -திரான வன்முறைகள் தொடர்வதைத் னப்படுகிறது. னியில் இருந்து செயற்படும் குழுவினர் கம் சுட்டிக்காட்டியபோதும் அவர்களுக்கு களும் எடுக்கப்படாதது பலவிதமான ள்ளன. -ன்மைச் சமூகங்களுக்கு எதிரான ந்த வண்ணம் இருக்கின்றன. இதனை ன்டுமெனில், இன்று சுயநல அரசியல் ன்மைச் சமூகங்களைச் சார்ந்தோர் சிலர் ற்பாடுகளை மாற்றியமைக்கவேண்டும். எ ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் ன்ற நிதர்சனத்தை நடந்து முடிந்த க்கியுள்ளன. | னெமக்களான தமிழ் முஸ்லிம் மக்கள் =யற்பட்டு தம்மைப் பலப்படுத்துவதும்
1ATrt1:14:15:54:15

Page 5
சுெம் 6
இமமகத்.
ரம்
"இலங்கைத் தமிழ் பேசும் மக்களைப் பற்றியும், அவர்கள் அனுபவித்து வரும் வாழ்வியல் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுகின்ற
படைப்புக்களைத்தான் நாம் தமிழிலிருந்து சிங்களத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம். அதேவேளை அத்தகைய உள்ளடக்கத்தைப் பற்றி சிங்களத்திற்கு ஈமட்டுமே கொண்டு செல்லும் நோக்குடன் பணிபுரியும் பொழுது சில வேளைகளில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகளை ஏற்படுத்தாத சில படைப்புகளும் உள்நுழைந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் இந்த உள்ளடக்கத்துடன் கூடிய இலங்கைப் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையிலான படைப்புகளையும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற விடயத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில்தான் தேர்வு முக்கியத்துவம் பெறுகின்றது” என்று மொழிபெயர்ப்புத் துறையில் தடம்பதித்த சிங்கள முற்போக்குப் படைப்பாளி உபாலி லீலாரட்ன கூறுகின்றார். இலக்கியத்திற்கு தமிழகத்தில் இரண்டு விருதுகளையும், பணப் பரிசுகளையும், பெற்ற இவர், பாராளுமன்ற உறுப்பினரும் இலக்கிய நேசருமான அஸ்வர் ஹாஜியாரால் பாராட்டுப் பெற்று பாராளுமன்ற ஹான்சட்டில் தனது பெயரைப் பதித்துக்கொண்டவர். இதுவரை 35க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்ட இவர், அவற்றுள் 23 தமிழ் மொழி நூல்களை சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

காடும்புர இனை நீதமென்றாடம்பர் இன்னரான
கே. பொன்னுத்துரை
தென்பகுதியில் காலி, மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களின் எல்லைக் கிராமமான அஹங்கமவில் 1958ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி குணபால, குசுமாவதி தம்பதிகளின் மூத்த மகனாகப் பிறந்த உபாலி லீலரட்ன சிறுவனாக இருந்தபோதே தந்தையார் தொழில் நிமித்தம் குடும்பமாக தலவாக்கலையில் குடியேறியபடியால் மலையகமே இவரின் வாழ்விடமாக மாறியது. உழைக்கும் மலையகத் தமிழ்பேசும் மக்களும் அவர்களின் பிள்ளைகளும் இவருக்குத் தோழர்களாயினர்.
தனது ஆரம்பக் கல்வியை எழில் கொஞ்சும் இளைய மலையகத்தின் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள சுமன சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து அங்கு புலமைப்பரிசுப் பரீட்சையில் சித்தி பெற்று கண்டி நுகவெல மத்திய கல்லூரியில் கற்றாலும் தனது தந்தையாருடன் அச்சகத்தில் தொழில் பார்த்த செல்வநாயகம், பாலைய்யா மற்றும் அந்தோனிப்பிள்ளை, ஆகியோரின் அன்பும் அரவணைப்பும் அவர்களின் தமிழ்மொழிப்
பற்றும் இவரை தமிழ்மொழிமேல் மோகம் கொள்ளச் செய்துள்ளது. அன்பு நண்பர்களான நஸிர், தமிழ் அரிச்சுவடியை கற்றுத்தந்த வெள்ளையா என்று அன்போடு அழைக்கும் நண்பன் தியாகராசா மற்றும் பலர் எனத் தமிழ் பேசுவோர் நட்புப் பட்டியலில் இடம் பிடித்தனர்.
சர்வதேச அரங்கில் எமது நாட்டின் வரைபடத்திற்கு முகவரி கொடுத்து தமது

Page 6
வாழ்நாளில் உயிரை உருக்கி தேயிலைச் செடிக்கு ஆகுதியாக்கிய மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், தாம் இறந்த பின்னர் அதே தேயிலைச் செடிக்கு தமது உடலை உரமாக்கிச் செல்லும் உழைக்கும் பெருமக்களின் அவலங்கள் இவர் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டன. அந்தக் குளிர்ந்த பிரதேசத்திலும் தினம் தினம் தங்களின் வாழ்க்கையை நினைத்து உஷ்ணப் பெருமூச்சு விடும் மக்களின் வாழ்வியல் உயர்வுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இந்த இளம் வயதுச் சிங்கள இளைஞன் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டபடியால் அவர்களைப் பற்றி சிங்கள மொழியில் கவிதை எழுதி நண்பர்களிடம் பாடிக்காட்டுவதுண்டு. சிங்கள மொழி அறிவுடன் தமிழ் மொழி அறிவையும் பெற்ற இவரால் நன்கு தமிழ் மொழியில் பேசவும், வாசிக்கவும் முடிகிறது.
சிறுவயதிலே தமிழ் மொழியில் எழுதவும் வாசிக்கவும் முடிந்த இவர் கல்கண்டு, ஆனந்த விகடன், அம்புலிமாமா, போன்ற சஞ்சிகைகளையும், அன்றைய தமிழக முன்னணி நாவலாசிரியர்களின் தமிழ் நாவல்களையும் நண்பர்களின் உதவியுடன் தேர்ந்தெடுத்து கற்கத் தொடங்கினார். அதேவேளை சிங்கள மூதறிஞர் மார்டின் விக்கிரமசிங்க போன்ற பிரபல நாவலாசிரியர்களின் படைப்புக்களில் தன் மனதைப் பறிகொடுத்து அவற்றைத் தேடி வாசிக்கும் தீவிர வாசகராக பரிணாமம் பெற்றார். அந்தக் காலத்தில் வெளிவந்த 'குமாரி' என்ற பத்திரிகைக்கு ஒரு கவிதையை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அது எந்தவிதத் திருத்தமும் இன்றி 1978ல் பிரசுரமானது. முதன் முதலில் தனது முதலாவது படைப்பு ஆக்கம் பத்திரிகையிலே வெளிவந்தது கண்டு மனம்மகிழ்ந்தாலும், என்னவோ தொடர்ந்து இவரால் கவிதை எழுதுவதில் நாட்டம் கொள்ள முடியவில்லை.
இவரின் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது. மறுபடியும் தென்னகம் சென்று தனது மாமன்
வீட்டில் தங்கியிருந்து ஹொரனை சாரிபுத்ர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று தனது உயர் படிப்பை நிறைவு செய்கிறார்.-
குடும்பத்தில் மூத்தவரான இவர் உடனடியாகத் தொழில்தேட வேண்டிய கட்டாயம் வந்து நின்றது. அதனால் ஒரு அச்சகத்தில் உதவியாளராகச் சேர்ந்து தனது

வாழ்க்கைக்காக தொழில் செய்தாலும் ஆக்க இலக்கிய உணர்வு உபாலியை விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து கதை, கட்டுரை என்று எழுதி பல இதழ்களுக்கு அனுப்பி வைத்தார், அவை பிரசுரமாயின் , பின்னர், லங்காதீப், திவயன, தினமின், மற்றும் வார இதழ்களான சிலுமின போன்ற பத்திரிகைகளிலும் பல முன்னணி வார இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் நிறையவே வெளிவரத் தொடங்கின. பலராலும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளராக உபாலி மிளிரத் தொடங்கினார்.
தற்போது பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான கொடகே நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவில் முக்கிய பதவி வகிக்கிறார்.
சிங்கள தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான உபாலி அதன் முக்கிய செயற்பாட்டாளரும் 'தீப(ம்)' சஞ்சிகையின் தொகுப்பாசிரியராகவும் கடமையாற்றுகிறார்.
தனக்கிருந்த தமிழ்மொழியின் அறிவைப்பு பாவித்து தமிழ்மொழி மூலக்கதைகளைச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்க எண்ணி முதன் முதலாக இந்தியாவின் பிரபல எழுத்தாளர் குப்புசாமியின் சிறுகதைத் தொகுதியிலிருந்து 'மனித வெடிகுண்டு' என்ற சிறுகதையை மொழிபெயர்த்தார். நண்பர்களின் தூண்டுதலால் பின்னர் தொடர்ச்சியாக 'பூலான் தேவி', 'சதாம் ஹுசைன்', 'சந்தனக்காட்டு சிறுத்தை' 'தெனாலிராமன் கதைகள்' 'அம்புலி மாமா' கதைகள் போன்றவற்றையும். தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனின் 'நேற்று வந்த நிலா' 'கனவு மெய்ப்பட வேண்டும்' 'நீள நதி' போன்ற நாவல்களையும், 'நேற்றைய மனிதர்கள்' சிறுகதைத் தொகுதியையும் மொழிபெயர்த்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
நாவல் உலகில் ஜாம்பவனான ஜெயகாந்தனின் 'இல்லாதவர்கள் 'குறுநாவலும், சுஜாதாவின் 'காயத்திரியும் இலங்கைப் படைப்பாளிகளான மலரன்பனின் 'பிள்ளையார் சுழி', அமரர் ஈழத்துச் சோமுவின் 'விடிவெள்ளி பூத்தது' சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணனின் 'நூல் அறுந்த பட்டங்கள்', 'விதிவரைந்த பாதையிலே'
ஆகியவற்றையும், தமிழகத்தின் இடதுசாரிச் சிந்தனையாளரும், பிரபல நாவலாசிரியருமான நாமக்கல் கு. சின்னப்பபாரதியின் 'சுரங்கம்',
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 7
'தாகம்' போன்ற நாவல்களையும் தனது நண்பர் அந்தனி ஜீவா மூலமாகக் கிடைக்கப் பெற்று அதனை வாசித்தபோது ஏற்பட்ட உழைக்கும் தொழிலாளவர்க்க உணர்வு இவரை அந்த நாவல்களையும் மொழிப்பெயர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. முதன் முதலில் 'சுரங்கம்' நாவலை மொழிபெயர்த்தார். அப்போது அந்த நாவலாசிரியர் அந்த நாவல்களில் பாவித்திருந்த சொற்பிரயோகங்கள் இலங்கைத் தமிழுக்கு புதியது என்றதால் புரிந்து கொள்ள மிகவும் கஷ்டப்பட்டதாகவும் பின்னர் நாவலாசிரியரின் துணையுடன் அந்தச் சொற்களைப் புரிந்து கொண்டு அந்த நாவலை நிறைவு செய்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறுகிறார். அந்நாவலில் சுரங்கத் தொழில்துறையில் எவ்வாறான அடக்கு முறைகள் மூலம் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுகிறது என்பதையும் அவர்களின் அவலங்களையும் சிங்கள மொழியில் வெளிக் கொணரத் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி (மகிழ்கிறார் உபாலி .
'சுரங்கம்' சிங்கள நாவலின் வெளியீட்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக நாமக்கல் நகரத்தில் நடைபெற்றது. அந்த நேரம் தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் மிக ஆவேசமாகச் செயற்பட்ட காலம். அந்த நேரத்திலும் என்னை மேடை ஏற்றி பாராட்டிய கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையினர், என்னுடன் தமிழகம் வந்த கலைஞர் கலைச்செல்வன், நண்பர் அந்தனி ஜீவா ஆகியோர் என் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாதவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.
அந்தப் பாராட்டுக் கிடைத்த பின்னர் எனது மொழிப்பெயர்ப்பின் வேகம் அதிகரித்தது என்றே கூறலாம். அதன் பின்னரான காலங்களில் டென்மார்க் படைப்பாளியான வீ. ஜீவகுமாரனின் 'சங்கானைச் சண்டியன்' திருமதி கோமதி ஜீவகுமாரனின் 'அன்புள்ள அம்மா' என்ற காவியம், கு.சின்னப்பபாரதியின் 'தாகம்' நாவல், தமிழகத்தின் பிரபல தொழில் அதிபர் வீ. கே. டி. பாலனின் 'சொல்லத் துடிக்கிறது மனசு' என்ற தன்னம்பிகை நூல், போன்றவற்றையும் மிக வேகமாகவே மொழிபெயர்ப்புச் செய்து அவற்றை அச்சிலும் வெளிக்கொணர்ந்து சிங்கள் வாசகர் வட்டத்தில் உலாவரச் செய்துள்ளார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

இவர் வெறுமனே மொழி பெயர்ப் பாளர் மட்டுமல்ல மானுட நேயமிக்க படைப்பாளியாகவும் திகழ்கிறார். அதன் பயனாக 'மனுதெவு அரன' 'மீதும் நிம்னய' 'பினிவந்தலாவ' 'கொடல்லவத்த' என்ற நான்கு நாவலுக்குச் சொந்தக்காரர் இந்தப் படைப்பாளி.
பினிவந்தலாவ என்ற நாவல் மலையக மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வரலாற்றுப் பின்னணியையும், இவரது " இளமைப் பருவத்தின் வாழ்வினையும் புனைகதை இலக்கியத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்நாவலில் தனது பால்ய நண்பன் வெள்ளையாவை இதன் பிரதான பாத்திரமாகச் சித்திரித்து தானும் ஒருவராக அதில் பவனி வந்துள்ளார். இந்த நாவலை 'விடைபெற்ற வசந்தம்' என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் திக்குவல்லை கமால் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவலை மலையாள மொழியில் பேராசிரியர் சுவாதி மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்ப்புக்காக இலங்கை அரச இலக்கியச் சான்றிதழ், தமிழ்நாடு 'நல்லி' திசை எட்டும் விருது, நாமக்கல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் இரண்டு ஆகியவை கிடைத்தன. இலங்கையில் இருந்து கொண்டு சிங்கள மொழியில் எழுதும் எனக்கு அண்டை நாடான இந்தியாவில் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறிமகிழ்கிறார்.
மொழிபெயர்ப்பு பற்றி அவர் கூறு கையில்:
"கடந்த காலங்களில் தனிநபர் முயற்சியாகவே மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த நூல்களை அவர்களே வெளியிடும் அவலநிலையும் காணப்பட்டது. ஆனால் சமீப காலமாக இன்றைய சமூக அரசியல் மாற்றங்கள் மற்றும் தேவையின் காரணமாக இம்முயற்சி பரவலாகியுள்ளது. அதேபோல் கொடகே புத்தக நிறுவனம், தோததென்ன போன்ற நிறுவனங்கள் மொழி பெயர்ப்பு நூல்களைத் தொடராக வெளியிட்டு வருகின்றன. இது இலங்கை இலக்கியத்திற்கு ஒரு புதிய முயற்சி என்றே கூறலாம். இருந்தாலும் ஒரு போதாமை இருக்கத்தான் செய்கின்றது. இன்றைய சமூக அரசியல் தேவையின் காரணமாக

Page 8
மிகப் பரவலாகப் பெருந் தொகையான பல நல்ல நூல்கள் இருமொழிகளிலும் பெயர்க்க வேண்டிய அவசியமும், அவசரமும் இருக்கிறது.”
இதற்கு அரச மட்டத்தில் ஒரு வேலைத்திட்டம் இருக்க வேண்டும். அதன் மூலம் இரு மொழிகளிலும் மொழி பெயர்க் கப்பட வேண்டிய நூல்களைத் தெரிவு செய்வதற்கான பணியும், மொழிபெயர்ப் பாளர்களின் கூட்டிணைப்பும், அவர் களுக்கான கொடுப்பனவும் இவ்வேலைத் திட்டத்தில் முக்கிய அம்சமாக இருப்பது
அவசியமாகிறது.
களுத்துறை ஹொரணையில் வாழ்ந்து வரும் இவருக்கு இரண்டு ஆண்மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புடவைத் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகவும், இளைய மகன் கணினி பொறியியலாளராகவும் தொழில் புரிந்து வருகின்றனர். அன்பு மனைவி இந்துமதி குடும்பப் பொறுப்புடன் இவரின் இலக்கிய வேலைகளையும் கவனித்துக் கொள்கின்றார்.
0 0 0
நூல்: சடலத்தின் வேண்டுதல்
ஆசிரியர்: மிகிந்தலை ஏ. பாரிஸ் வெளியீடு படிகள் பதிப்பகம், அனுராதபுரம் விலை: ரூபா 280/-
மிகிந்தலை பாரிஸ் வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதிய 29 கவிதைகளின் தொகுப்பு இது. அனேகமான கவிதைகள் போர்க்காலத்தைப் பிரதிபலிக்கின்றன. இவரது கவிதைகள் இன நல்லுறவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. பாரிஸ் ஓர் இராணுவ வீரன். அவருடைய சீருடைக்கு
LNத்தன் வேண்டுதல் அப்பால் உள்ள இதயத் துடிப்பை சிறந்த கவிதை கேளாக்கித் தந்துள்ளார்.
இந்நூல் ஒரு வெற்றிப் த படைப்பு என்று 2 துணிந்து கூறலாம்.
* 11 S L :
பிரிந்தறை ஏ. 1ார்ட்
படிமம்

நோயகாவிகள்
காற்று கனமாக
இருக்கிறது, கலந்திருக்கும் நுண் அங்கிகள்
நோய்களைக் காவிவருகின்றன.
பலமற்ற உடல்கள் தாங்கும் சக்தியை இழந்து நிற்கின்றன,
பா கேட்டியா?
கதிர்வீச்சு இயந்திரத்தால் காணமுடியாத நோய்கள்
மனித உடல்களில் பரவிப் பெருகுகின்றன.
நச்சு நீர்ச்சுனைகளாய் துர் எண்ணங்கள் ஏற்ரெடுத்து இழி நிலைக்கு உந்தும் - கோரமனம்கொண்ட
நோய்கள்
வலிகளைத் தருகின்ற உலர்ந்த சொற்களால் வீசப்படும் கணைகளும் காயங்களை ஏற்படுத்தி நொய்மைப் படுத்துகின்றன,
நோய்க் கூறுகள் முனைப்புப் பெற்று துயர் தருகின்றன, மீளமுடியாதவாறு.
(வே. 2. வரதராஜன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 9
மூட்டா சா
சாபம்காட்டி-1)
வாடி14ா- -Aiyாராபுரடாவடியாடிய wடம்:
கொடி'T44mாடிய பாடடையபு144 ன்
* பாாத.-பா.நா-" ய
எயளபா! படியாக, பாம்பு 72, 7 niா~பு பபுபட்ட
, ப தஃuக புனட்டிடம் - பாகாபுலரியா/ப்புடைய ஒட-ப, நா' ' ',பு--11-11-4nnisா-1:45*
பாயா4ரா "
பதாடையா1:சு --- " -:",
"""'கட்'
ஆபாடமாயம்
{சி
தண்6
அது மார்கழி மாதம். பருவகால மழையின் அட்டகாசம் ஊரையே மூழ்க வைத்துவிட்டது. காலை முதல் பாடசாலை விடுதிக்குள் மனைவியுடன் அடைபட்டுக்கொண்டிருந்த நான் பொறுமையை இழந்து அந்தப் பழைய குடையை விரித்தவண்ணம் அவ்வூர்ச் சந்தியை நோக்கிச் செல்ல ஆயத்தமானேன். இதைக் கண்ட மனைவி "இந்தாங்க, சந்தியிலே கருவாடுகள் கிடந்தா வாங்கி வாங்க, கறிபுளி ஒண்டும் வரமாட்டுது. அதோட ரெண்டு பக்கட் பிஸ்கட்டும் வாங்கி வாங்க” என்று
கூறினாள். மனைவியின் வார்த்தைகளைச் செவிமடுத்தவனாக மழைக்குள் இறங்கி நடக்கலானேன்.
பலத்த காற்றுடன் பெய்து கொண்டிருந்த பாரிய மழையை தாங்கிக்கொள்ள முடியாத அந்தக்குடை என் உடல் முழுவதையும் நனையச் செய்து என்னை நடுங்க வைத்துவிட்டது. தலையை மட்டும் காப்பாற்றிக்கொண்டு நசீர் நாநாவின் தேநீர்க் கடைக்குள் நுழைந்தேன். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

சிறுகதை
ணிவெடி
"என்ன மாஸ்டர் இந்த மழைக்குள்ள பழைய கொடையையும் பிடித்துக் கொண்டு நனைஞ்சுபோய் வாறீங்க? வாங்க, வாங்க உள்ளே வந்து முதலிலே, சாறணைக் களைந்து இந்தச் சாறணை மாத்துங்க” என்றவாறு அவருடைய சாறன் ஒன்றை எடுத்து நீட்டினார். அவர் நீட்டிய சாறணை வாங்கிக்கொண்ட நான் அதனை எடுத்துக் கொண்டு குசினிப் பக்கம் சென்று நனைந்திருந்த சாறணைக் களைந்து அங்கு கட்டப்பட்டிருந்த கயிற் றுக் கொடியில் போட்டுவிட்டு நசீர்நாநா
கொடுத்த சாறணை நதமைந்தன்
அணிந்து கொண்டு உள்ளே
வந்தேன்.
நசீர் நாநா
நீட்டிய ஆவி பறக்கின்ற தேநீரைப் பெற்றுக் கொண்ட நான் கண்ணாடிப் பெட்டிக் குள் இருந்த சீனி பனிஸ் ஒன்றையும் எடுத்துக் கடித்தவண்ணம் முன்னால் போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்தேன். மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது.
நான் அந்த ஊர்ப் பாடசாலைக்கு எங்களது ஊர் பாராளுமன்ற உறுப்பினரால் அவரது எதிராளிக்கு நான் வேலை செய்த காரணத்துக்காக தண் ணியில் லாக் காட்டுக்குப் போக' வென அனுப்பி வைக்கப்பட்டவன். ஆனால் நான் இந்த ஊரை ஒரு சுவர்ண பூமியாகக் க ண ட த ா ல மனை வியையும் அழைத்து வந்து இரண்டு வருடங்

Page 10
களாக அதிபராகக் கடமை யாற்றுகிறேன். போக்குவரத்து லைற் வசதிகள் இல்லா விட்டாலும் ஏனைய தொழில் வசதிகள் சாப்பாட்டு வசதிகள் நிறையக் காணப்பட்டன. பால், தயிர், முட்டை, தேன், இறைச்சிவகைகள் தாராளமாகக் கிடைத்ததால் வாழ்க்கை சந்தோசமாகவே கழிகிறது.
தொடர் மழையைச் சகித்துக்கொள்ள முடியாதிருந்த எனக்கு எதாவதொன்றில் ஈடுபட்டுக் காலத்தைப் போக்கவேண்டும் போல் இருந்தது. அவ்வேளையிற்றான் 'தண்ணிவெடி' ஞாபகம் எனக்கு திடீரென ஏற்பட்டது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் அவ்வூர் மக்களிற் சிலர் சேர்ந்து தோணிகளிற் சென்று காடுகளிற் தத்தளித்து வருகின்ற மான், மரை போன்றவற்றை வேட்டையாடிக் கொண்டு வந்து ஊர்மக்கள் மத்தியில் பகிர்ந்தளித்து கறிப் பிரச்சினையை நிவர்த்தி செய்வார்கள். இப்படி தோணியிற் சென்று வேட்டையாடுவதை அம்மக்கள் 'தண்ணிவெடி' என்று சொல்வார்கள்.
தண்ணிவெடி ஞாபகம் ஏற்பட்டதும் நானும் உஷாரானேன். தேநீர்க்கடை நசீர்நாநாவுடன் கலந்தாலோசித்துக்கொண்டு தண்ணிவெடியில் நன்கு பரிச்சயமான தாவூத்ஷாவை சந்திக்க அவர் வீட்டை நோக்கி வெள்ளத்தையும் பொருட்படுத்தாது செல்லலானேன்.
வெள்ளத்தினூடே மிகமிகக் கஷ்டப்பட்டு நடந்து வந்த நான் தாவூத்ஷாவின் வீட்டை அடைந்ததும் தாங்கொண்ணாச் சந்தோ ஷத்துடன் படலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றேன். முதலில் என் வருகையைக் கண்ட தாவூத்ஷாவின் மனைவி, "வாங்க சேர்” என வரவேற்றபடி திண்ணையில் படுத்திருந்த கணவனை அசைத்து, “இஞ்சங்க, ஸ்கூல்
சேர் வந்திருக்காங்க எழும்புங்க” என்றாள்.
கண்விழித்த தாவூத்ஷா என்னைக் கண்டதும், “வாங்க சேர், வாங்க, இந்த வெள்ளத்துக்குள்ளே வந்திருக்கிறீங்களே? இப்படி உட்காருங்க” என்றபடி அவர் முன்னால் கிடந்த பாயை எடுத்து விரித்துப் போட்டார். நானும் அமர்ந்துகொண்டேன்.
தாவூத்ஷாவின் வீடு அமைந்திருந்த இடம் மேடாக இருந்ததால் வீட்டினுள் வெள்ளம் ஏறாது, வீட்டைச் சுற்றி நீர் தேங்கி நின்றது.
உங்க பகுதியில் வெள்ளம் கடுமையாக இருக்குமே? அது பள்ளப் பகுதியாச்சே?

என விசாரித்தவர், "ஏன் சேர் இந்த மழை நேரத்தில் வந்திருக்கிறீங்க?” எனக் கேட்டார்.
“இன்றைக்கெல்லாம் விடுதிக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நான் நசீர் நாநாவின் தேயிலைக்கடைக்குப் போனேன். அங்கு வச்சுத்தான் தண்ணிவெடிக்குப் போகலாம் என்ற எண்ணம் வந்திச்சு. அதனாலதான் உங்களுக்கிட்ட ஆலோசிக்கலாம் என்று வந்தேன்” என்றேன்.
"நானும் நேத்துக்கூட யோசிச்சேன்தான் ஆனா ஆட்கள்தான் செட்டுப்படல, நீங்க விரும்பினா நாளைக்குக் காலத்தாலே போவம்” என்றார்.
“தோணி யாருகிட்ட இருக்கு?” என வினவினேன்.
“தோணிக்கா பஞ்சம், நம்முட உதுமான் கண்டக் கூப்பிட்டா தோணியோட வருவாரு” என்று கூறியவர், "இஸ்மாலெவ்வையையும் கூட்டிகிட்டா நல்லது, அவன் நல்லா இறைச்சி வேல செய்வான். சரிசரி நான் அவங்கள் செட் பண்ணுறன் நீங்க ஒரு பத்து பதினைஞ்சு தோட்டாவும் நல்ல கத்தி ஒன்றும் எடுத்துகிட்டு - வாங்க, எனக்கிட்டேயும் தோட்டா இருக்கிறது" போதாது" என்றார்.
"சரிசரி எடுத்துக்கொண்டு வாறன்" எனக் கூறியபடி எழுந்த என்னை தாவூத்ஷாவின் மனைவி பரிதா கொண்டு வந்து நீட்டிய தேநீர் சற்று தாமதமாக்கிவிட்டது.
அடுத்த நாட்காலை தோட்டாக்களையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு தாவூத்ஷா வின் வீட்டை அடைந்தேன். அங்கே உதுமான் கண்டு, இஸ்மாலெவ்வை ஆகிய இருவரும் தாவூத்ஷாவுடன் என்னை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். மூவரும் தோணிமீது ஏறினர், நானும் அவர்களுடன் சேர்ந்து ஏறிக்கொண்டேன்.
தோணியின் முன்பக்கத்தில் ஏறியதாவூத்ஷா துவக்கை ஆயத்தமாகப் பிடித்தபடி இருந்தார். உதுமான்கண்டு, அணியத்தில் இருந்தபடி தோணியை வலித்துக்கொண்டிருந்தார். தோணி வெள்ளத்தில் மிதந்தபடி பற்றைகள் கொடிகள் முதலியவற்றை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தது.
பத்து நிமிடங்கள் சென்றிருக்கும் முன்னால் இருந்த தாவூத்ஷா. எழுந்து நின்றவாறு துவக்கை நீட்டிப்பிடித்தவராக, "தோணியை நிப்பாட்டு, மரை ஒன்று வருவதுபோல் இருக்கு" என்றார். உடனே உதுமான்கண்டு சவளை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 11
7 "நீதான் என்ர புருஷனைச் சாவடித் 5 விடமாட்டேன்” என்று சத்தமிட்டவாறு தூக்கிக் கொண்டு என்னை நோக்கி
தரையில் பாய்ச்சி தோணியை நிறுத்திப் பிடித்துக்கொண்டார். நாங்கள் ஆவலோடு நாலா பக்கமும் கண்களைச் சுழலவிட்டோம். அங்கு எந்தவித மிருகமும் வருவதாகத் தெரியவில்லை. எனக்கு முன்னால் இருந்த இஸ்மாலெவ்வையின் முதுகைச் சுரண்டி "மரை எங்கே வருகுது?” என மெதுவாய்க்
கேட்டேன்.
"தண்ணிக்குள்ளே நடந்துவரும் சத்தத்தை மோப்பம் புடிச்சி சொல்லுறாரு போல” என மெதுவாகச் சொன்னார் அவர்.
என்ன ஆச்சரியம், அவர் சொன்னது போல பெரியதொரு மரை தண்ணீரை ஊடறுத்த முன்னால் சற்றுத் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. தோணியைப் பக்கத்தி கூலிருந்த பற்றைக்கு அப்பால் கொண்டு 3 போகுமாறு கூறிய தாவூத்ஷா துவக்கை முறித்து தோட்டாவை உட்செலுத்திக்கொண்டு அதை நீட்டியபடி ஆயத்தமாக நின்றார்.
தண்ணீரினூடே தத்தளித்துக்கொண்டு முன்னோக்கி வந்த மரை சற்றுத் தூரத்தில் காணப்பட்ட உயர்வான திடலொன்றைக் கண்டதும் அதனை நோக்கிச் சென்றது. திடலில் ஏறிக்கொண்ட மரை தனது உடலைச் சிலிர்த்தி உடலில் பட்டிருந்த நீரை வெளியாக்கிவிட்டு தனது கொம்புகளினால்
உடலின் இருபக்கங்களையும் சொறிந்து கொண்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடி நின்றது. இதுதான் தருணமென ஊகித்துக்கொண்ட தாவூத்ஷா மரையைக் குறிவைத்து துவக்கின் விசையை விரலால் நசித்துவிட்டார். பாய்ந்து சென்று சன்னங்கள் மரையின் முன்பக்கச் சங்கைத் தாக்கியதால் மரை தடாரெனத் தரையில் வீழ்ந்தது.
சற்றுத் தாமதித்த தாவூத்ஷா, "மயக்கம் தெளியும் முன்னே 'தக்பீர்' செய்ய வேண்டும் எனக் கூறியவாறு கத்தியை எடுத்துக்கொண்டு மரையை நோக்கி ஓடினார். நாங்களும் அவரது பின்னால் ஓடிச் சென்றோம்.
சாய்ந்து கிடந்த மரையின் பிடரிப் பக்கமாக நின்ற தாவூத்ஷா கத்தியைக் கையில் எடுத்தவாறு அதன் கழுத்தை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

துப் போட்டாய், உன்னை நான் சும்மா 1 ஓடிச் சென்று ஒரு மண்வெட்டியைத்
ஓடிவந்தாள்.
அறுப்பதற்காகக் குனிந்தார். அதேநேரம் எதிர் பாராதவிதத்தில் தனது நாலுகால்களையும் வேகமாக உதறியவண்ணம் கொம்பையும் பலமாக ஆட்டிக்கொண்டு எழுந்து நிற்க முற்பட்டது மரை. அவ்வளவுதான் வேகமாக ஆட்டிய கொம்பினால் தாக்குண்ட தாவூத்ஷா சற்றுத் தூரத்தே வீசப்பட்டு தண்ணீருக்குள் போய் வீழ்ந்தார்.
நாங்கள் மூவரும் ஓடிச் சென்று வீழ்ந்துகிடந்த தாவூத்ஷாவை தூக்கி நிமிர்த்தினோம். மரையின் கொம்பின் தாக்கத்தால் அவரது நெஞ்சில் ஏற்பட்டிருந்த பாரிய காயத்திலிருந்து 'குபு குபு' வென இரத்தம் கொப்பளித்துவழிந்துகொண்டிருந்தது. மூவரும் எங்களது சாறங்களைக் களைத்து உள்ளாடையுடன் நின்றவண்ணம் இரத்தத்தை தடுப்பதற்காக காயத்தின் மீது வைத்துக் கட்டினோம். ஆனால் இரத்தம் பாய்வது நின்றபாடில்லை. தாவூத்ஷாவைத் தூக்கி வந்து தோணியில் வைத்து தாங்கியபடி ஊரை நோக்கி விரைந்தோம்.
வழி நெடுகிலும் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாவூத்ஷா ஊருக்குச் சற்று தொலைவில் வைத்து மூர்ச்சையாகிவிட்டார். அதன்பின் அவரிடம் எந்தவித அசைவுமே தென்படவில்லை.
மய்யத்துடன் வீட்டை அடைந்த எங்களைக் கண்டு ஓடிவந்த அவரது மனைவி விசயத்தை அறிந்து கீழே விழுந்தவண்ணம் அழுது கூக்குரல் இட்டார். அக்கம் பக்கத்தாரும் கூடி விட்டார்கள்.
“என்ர புருஷன் இந்த மாஸ்டருதான் கொன்று போட்டாரு. சும்மா இருந்த என்ர புருஷனக் கூட்டிகிட்டுப்போய்க் கொலை செஞ்சு போட்டாரு,” எனச் சத்தமிட்டு அழுத தாவூத்ஷாவின் மனைவி, என்னிடம் ஓடிவந்து எனது நெஞ்சில் இருகைகளாலும் அடித்தபடி, "நீதான் என்ர புருஷனின் மெளத்துக்குக் காரணம், நீதான் என்ர புருஷனைச் சாவடித்துப் போட்டாய், உன்னை நான் சும்மா விடமாட்டேன்” என்று சத்தமிட்டவாறு ஓடிச் சென்று ஒரு மண்வெட்டியைத்

Page 12
தூக்கிக் கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். கூடிநின்றவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் சொன்னபோதும் அவள் எதனையும் செவிசாய்க்காது என்னையே அவளது புருஷனின் சாவுக்குக் காரணம் காட்டி தரையில் விழுந்து அழுது புலம்பினாள். எனக்கும் அவள் மீது அநுதாபமாகவே இருந்தாலும் முழுக்க முழுக்க அவள் என்மீதே பழியைப் போடுவதை என்னால் சகிக்க முடியாமலும் இருந்தது. என்றாலும் உணர்வுகளை அடக்கிக்கொண்டு பொறுமை காத்தவண்ணம் ஒரு ஓரமாக நின்றேன். எனது உள்ளமும் என்மீதே குற்றம் சாட்டுவது போன்ற பிரேமையோடும் தாங்க முடியாத வேதனையுடனும் மன அழுத்தத்தோடு தடுமாறிக்கொண்டிருந்தேன்.
"மாஸ்டர் நீங்க இதப்பத்தி ஒன்றும் யோசிக்காதீங்க, அவள் புருஷனின் மௌத் தைத் தாங்கிக்கொள்ள முடியாம சத்தம் போடுறாள். தயவுசெய்து நீங்க இங்க நில்லாம ஊட்டுக்குப்போய் உடுப்பை மாத்திக்கொண்டு பள்ளிவாசலுக்கு வாங்க, நாங்க மய்யத்தைக் குளிப்பாட்டி கபன் செய்து பள்ளிவாசலுக்குத் தூக்கிகிட்டு வாறம்” என அவ்வூர்ப் பெரியார்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால் நானும் அதற்கிசைந்து விடுதியை நோக்கி நடந்தேன். பாரிய தவறைச் செய்துவிட்டது போன்ற மனவழுத்தம் என்னைத் தாக்கிக்கொண்டே இருந்தது.
நான்கு ஐந்து நாட்கள் இதே நினைவினால் உண்ணவோ உறங்கவோ முடியாத நிலையில் தத்தளித்தேன். எனது பரிதாப நிலை கண்டு என் மனையாளும் பாரிய வேதனைக்குள்ளானாள். நிம்மதியாக இருக்க முடியாது தவியாய்த் தவித்தேன். எனது மனைவியின் ஆறுதல் மொழிகளைக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஐந்தாவது நாள், காலை நேரம் கட்டிலில் சாய்ந்தவண்ணம் கவலையில் மூழ்கிய வண்ணம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வேளை என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்ட என் மனைவி எனது தலையை வருடியவண்ணம், "இப்படிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தயவுசெய்து என் வார்த்தை களைக் கொஞ்சம் கேளுங்க, எழுந்து குளித்துவிட்டு உடுப்பை மாற்றிக்கொண்டு என்னுடன் வாருங்க, நாம இரண்டு பேரும் ஒரு இடத்துக்குப் போய் வருவோம்” என்றாள். 10

“எங்கே ஏன் போகவேணும்?” எனக் கேட்டேன்.
"தயவுசெய்து அதுபற்றி ஒன்றும் கேட்காதீங்க, அல்லாஉறுவுக்காக என்னுடன் வாருங்கள்” என அழைத்தாள். அவளுடையீ" பரிதாப நிலையைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாத நான் அவளுடன் செல்வதற்குச் சம்மதித்தேன்.
அவள் நேரடியாக தாவூத்ஷாவின் வீட்டை நோக்கி அழைத்துச் சென்றது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. என்றாலும் ஒன்றுமே கேட்காது அவளைத் தொடர்ந்து சென்றேன்.
அங்கே ஊர்த் தலைவருடன் பள்ளிவாசல் கதீப் உட்பட பல பெரியார்கள் காணப்பட்டனர். என்னைக் கண்டதும், “வாங்க சேர்” என மரியாதையுடன் அழைத்து இருக்கச் செய்தனர். எதையுமே தெரிந்துகொள்ளாத
நான் பரக்கப்பரக்க முழித்தபடி ஊர்த் தலைவரின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.
"சேர்" என அழைத்த ஊர்த்தலைவர், என்னைப் பார்த்து, "மெளத்தாப்போன தாவூத்ஷாவின் பொஞ்சாதியை அவவுடைய இத்தாக் கடமை நாலுமாசம் பத்து நாள் முடிந்த புறகு நீங்க அவவை ரெண்டாந்தாரமாகக் கல்யாணம் முடிக்கிற ஒரு யோசனையை உங்க மனைவி சொல்லுறா, அதிலே உங்கிட சம்மதத்த அறியத்தான் கூட்டிவரச் சொன்னோம், நீங்க என்ன சொல்லுறீங்க?” எனக் கேட்டுவிட்டு எனது முகத்தைப் பார்த்தார்.
எதிர்பாராத செய்தியால் அதிர்ந்துபோன நான் நிமிர்ந்து எனது மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவள் புன்சிரிப் பைச் சிந்தியவண்ணம், "ஓம்" என்று சொல்லுங்க, நானும் அவளை எனது தங்கையாக ஏற்றுக்கொள்வேன். இது சத்தியம்” என்று கூறியவள், “நீங்க கட்டாயம் ஏற்றுக்கொள்ளுவீங்க என்ற நம்பிக்கையா லேதான் இந்த யோசனையைச் சொன்னேன்” என்றாள்.
எனது மனக்கஷ்டத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி எடுத்த புத்திசாலித்தனமான முடிவை வியந்த நான் அங்கு கூடியிருந்தவர்களையும் மறந்து எழுந்தோடிச்சென்று . கட்டியணைத்தபடி மனைவியை முத்தமிடலானேன்.
எழுந் ேகூடியிருந்தவை வி..
0 0 0 ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 13
- /* 7 : * (கபய ப! தி : 1_A!* *கம்,
கவிதை மதிப்பீடுக இல்லை. அனைத்து மெய்யியல், சமூகவில் மானிடவியல் முதலா.
கவிதை வாசிப்பில் | முடிவுகளை மாற்றியமைக்கலாம் அல்லது கொண்டுவரலாம்.
மஹாகவி (உருத்திரமூர்த்தி 1929-19 கருத்துக்கள் எழுகோலம் கொள்கின்றன. ம உள்ளாக்கப்படவில்லை என்ற முன்மொழிவு எதிரிடையான புறநடைகளும் உண்டு. ஒருகவிஞனை மதிப்பிடவேண்டும். (நுஃ.ம. அனைத்தும் மதிப்பீடு தொடர்பான பிரச்சின
காலனித்துவ ஆட்சியில் கிராமநகர .ே கிராமங்களை அமைதியின் வடிவமாகவும் காணும் தரிசனம் பலநிலைகளிலே வளர் காந்தியும் தாகூரும் “கிராமங்களுக்குத் திரும்புத கிராமிய நயப்பும் மஹாகவியின் கவிதைக
மஹாகவி பிறந்து வளர்ந்த அள( பல தளவளர்ச்சிகளைக் கொண்டது. தவி இசைப்பாரம்பரியம் செவ்விய நிலை வழிபாட்டிடங்களை அடியொற்றி அந்த நாட்டார் இசையும் நாட்டுக்கூத்தும் கிரா வந்தன. அவை இரண்டும் இணைந்த செய் ஆக்கங்கள் அமைந்திருந்தன. அந்தச் செ இணைந்து கொண்டது.
வகை மாதிரிக்கு ஓர் எடுத்துக்காட்டு 6 "படலை திறந்தது; உள்ளே பாலப்பம் விற்கின்ற கிழவி வந்தாள்; எட, பெடியா ஏனிவளை இப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? சுடச்சுடவே தின்றாற் தான் சாப்பாட்டிற் சுவை தெரியும்; வயது வந்தால் கடகடவென்று காரியத்தை முடிக்காமல் காத்திருத்தல் அழகாய் இல்லை” (சடங்கு)
பேசுவது போன்ற கவிதைச் சொல்ல உரையாடற் பெறுமானங்களுக்கு இட்( பேச்சோசை, கவிதை ஓசையாகின்றது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

மீள் நோக்கில் மஹாகவி
கள் முடிந்த முடிவானவை என்று கொள்ளப்படுதல் து மதிப்பீடுகளும் சார்புநிலையானவை. பல், உளவியல், மொழியியல், கல்வியியல், ம் துறைகளில் நிகழும் புதிய தரிசனங்கள், மாற்றங்களைக் கொண்டுவரலாம். முன்னைய மேலும் பலப்படுத்தலாம். புதிய வாசிப்பைக்
71) பற்றி எழுதும் பொழுது மேற்கூறிய மஹாகவி இன்னமும் சரியான மதிப்பீடுகளுக்கு உண்டு. மஹாகவியின் சிறப்புப் பண்புகளுக்கு ஆனால் பொதுப்பண்புகளைக் கொண்டே ரன், 1984) என்ற கருத்தும் உண்டு. அவை னைகளோடு தொடர்புபட்டுள்ளன.
வறுபாடுகள் கூர்மையுடன் வளரத்தொடங்கின. - நகரங்களை அவலத்தின் வடிவங்களாகவும் ச்சி கொள்ளலாயிற்று. கோட்பாட்டு நிலையில் லை” வலியுறுத்தினர். கிராம நகர முரண்பாடும், ளிலே பளிச்சீடு கொள்கின்றன. வெட்டிக்கிராமம் இசையிலும் கலைகளிலும் வில் நாதஸ்வரக் கலைஞர்களினால் கர்நாடக லயிலே வளர்க்கப்பட்டுவந்தது. வைதிக வளர்ச்சி நிகழ்ந்தது. அதற்குச் சமாந்தரமாக மிய வழிபாடுகளுடன் இணைந்து வளர்ந்து ழங்கலவைத் (BLEND) தரிசனங்களாக அவரது லங்கலவையிற் பேச்சுமொழியும் இலாவகமாக
வருமாறு:
திக்கு கவிதையின் நிச் செல்கின்றது.
பேராசிரியர் சபா ஜெயராசா
11 -

Page 14
காட்சியைக் கவிதைப்படுத்தி "மனப்படம்" உருவாக்குதற்குத்திருப்புதல் மஹாகவிக்குரிய தனித்துவங்களுள் ஒன்றாகும். பின்வரும் கவிதையை அதற்கு எடுத்துக்காட்டாக்கலாம். அசையும் காண்பியங்களைக் கவிதை உருவாக்குதலைக்காணலாம்.
"போட்டர் மணி அடிக்கப் போகட்டும் என்று சொல்லிக் காட்டர் கொடி எடுத்துக்காட்டக் கனைத்தபடி ஓட்டம் தொடங்கிற்று உயிற்பெற் றொருவண்டி" (மற்றவர்க்காய்ப்பட்டதுயர்)
காலனித்துவ ஆட்சியில் "கிராமியச்சிதைவு " நிகழத் தொடங்கிவிட்டது. பண்பாட்டு நிலை, கல்விநிலை, தொழில் நிலை என்ற நிலைகளில் வெளித்துலங்கும் சிதைவுகள் ஏற்படலாயின. அக்காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் விரைந்து பரவத் தொடங்கிய காந்தியம், கிராமங்களை மீளக்கட்டியெழுப்புதலோடு தொடர்புபட்டிருந்தது.
காந்தியக் கருத்தியலின் ஊட்டத்தோடு வளர்ச்சி கொள்ளத்தொடங்கிய யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் கிராமங்களின் மறு மலர்ச்சியை மீளவலியுறுத்தியது. இயற்பண்பு நிலையிலும், நயப்புநிலையிலும் கிராமிய வாழ்வின் சித்திரிப்பை இலங்கையர் கோன் உள்ளிட்ட சிறுகதையாசிரியர்கள் முன்னெடுத்தனர்.
கிராமத்தின் குறியீடுகளாக கோயில்களைக் குறிப்பிடும் மரபு யாழ்ப்பாணத்தில் நிலவி யது. சமூக அடுக்கமைவுக்கு ஏற்றவாறு வேறுவேறுபட்ட கோயில்களும் கிராமங்களிற் காணப்பட்டன. "கோயிலின் பொலிவு கிராமத்தின் பொலிவு” என்ற நம்பிக்கை நீண்டு நிலவியது. கோயிலும், கிராமிய நிலைவரமும் மஹாகவியின் “கோடை” யிலே பலவாறு கவிதையாடல் செய்யப்பட்டுள்ளது. கவிதையாடலூடே "கிராமம் மீண்டெழும்” என்ற நம்பிக்கையின் அழுத்தம் “கோடை” யின் நிறைவுச் செய்தியாகத் தரப்பட்டுள்ளது.
மஹாகவியின் காலத்தில் மார்க்சியச் சிந்தனைகள் இலங்கைச் சூழலிலே பரவத் தொடங்கிவிட்டன. கிராமங்களின் சமூகவியல்பைத்திறனாய்வு செய்தலும், சமூக அடுக்கமைவின் தாழ்நிலைகளில் வாழ்வோர் எதிர்கொள்ளும் நெருக்கீடுகளை நவீன இலக்கிய
வெளிக்குக் கொண்டுவருதலும்
12

எத்தகைய கோட்பாடுகளைச் சார்ந்தோராலும் தவிர்க்கப்பட முடியாத எழுபொருள்களாகவும், எடுபொருள்களாகவும் அமைந்தன.
எழுத்தாளர்களாகிய டானியல், நீர்வைப் பொன்னையன் ஆகியோர் எழுதும் பரிமாணங் களுடன் களங்களில் நின்று வினைப்படுவோர் (ACTIMIST) என்ற வகிபாகத்தையும் மேற் கொண்டிருந்தனர். எழுத்துக்களின் மெய்ம் மைப் பாட்டுக்கு அந்த வினைப்பாட்டு அனுபவங்கள் கைகொடுத்தன என்பதை நிரா கரிக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த "ஆலயப் பிரவேசம்”, “தேநீர்க் கடைப்பிரவேசம்” முதலாம் போராட்டங்களில் இடதுசாரிகள், தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆகியோரு டன் காந்தியக் கருத்தியலோடு சம்பந்தப்பட்ட தமிழரசுக்கட்சியினரும் இணைந்து கொண்டனர். பிற்போக்காளரை முறியடிக்கும் ஒரு பரந்த இயக்கமாக அது உருவெடுத்தது.
அந்த வளர்ச்சியும் சாதியத்தைக் கருப்பொருளாகத் தெரிந்தெடுப்பதற்கு விசையூட்டியது. முற்போக்கு எழுத்தாளர் என சங்கம் பரந்த தளத்தில் தொழிற்படுவதற்கும் பலரையும் உள்வாங்கிக் கொள்வதற்கும் அந்த வளர்ச்சி ஒருவகையில் துணை செய்தது.
மஹாகவி சித்திரிக்கும் இடிந்து சிதைந்த கோபுரம் (கோடை) கிராமிய வாழ்வின் சிதைவைக் குறியீடாக்கியது. இயற்பண்பு, (NATURALISM) நடப்பியல், மனோரதியம் எனப்படும், எழுகவர்ச்சி ஆகியவை ஒன்றிணைந்த செழுங்கலவை நிலையில் அவரது கவிதைகள் அமைந்திருந்தன. தனித்து ஒருவகையான கலைக்கோட்பாட்டுக்குள் மட்டும் அவரது கருத்தியல் கட்டுப்பட்டிருக்கவில்லை. மானிட நேசிப்பு எழுத்தும், அதன் நிழலுமாகத் தொடர்ந்து செல்கின்றது.
அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் மனோரதியப்பாங்கும் பிற்காலக் கவிதைகளில் நடப்பியற்பாங்கும் இருந்ததென்றும் பிரி கோடிட்டுப் பார்த்தல் கடினம். எவற்றி லிருந்தும் பொருத்தமானவற்றைத் தெரிவு செய்யும் “நலன் தெரிவியல்” (ECLECTIC) பண்பு அவருக்குரியதாயிற்று அதனூடே இலக்கியத்தின் "மகிழ் பொழுது "ப் பரிமாணத்தில் ஊன்றிய - கவனம் செலுத்தினார். குறும்பாவில் அதன் நீட்சி இடம்பெற்றது.
மஹாகவியின் காலத்தில் தமிழ்ப்பண்பாடு, தமிழர்வாழ்விடம், தமிழ்மொழி தொடர்பான
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 15
அடையாளங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அரசியல் நிலைவரங்கள் கூர்மையடைந்து வளரலாயின. * அதற்கு முந்திய காலகட்டத்தில் மகாவலி கங்கையைக் குறியீடாக்கிப்பாடிய பெருந்தேசிய நோக்கு (நாவலியூர் சோமசுந்தரப்புலவர்) புதிய அடையாள நெருக்கடிச்சூழலில் மொழியையும் வாழ்விடங்களையும், பிரதேசங்களையும் முதன்மைப்படுத்தும் மாற்றுத் தேசியத்தை நோக்கிப் பெயர்ந்து சென்றது. தொகுப்பாக யாழ்ப்பாண அடையாளம் நீட்சி கொண்டது.
மஹாகவியின் கண்மணியாள் காதையில் "ஈழநாடே எழில் சூழும் நாடே” என்ற தேசிய அடையாளமும், "வாழத்தொடர்ந்து முயன்றதனால் இன்று வையத்துயர்ந்தது யாழ்ப்பாணம்" என்ற இனக்குழும அடை யாளமும் சமநிலைப்பட்டு நிற்கின்றன. அவர் காலத்தில் பாரதிதாசன் கவிதைகளுடன், பண்டிதர் சச்சிதானந்தன், கா. சி. ஆனந்தன் ஆகியோரின் தமிழ் எழுச்சிக் கவிதைகளும் அரசியல் மேடைகளில் பரவலாக எடுத் தாளப்பட்ட நிலையில், மஹாகவி, முருகையன் ஆகியோர் எழுச்சிக்குமுறல்களில் இருந்து பெருமளவில் தம்மை விடுவிப்போராய் இருந்தனர். எழுச்சி அலையை நிதானித்து நோக்கும் கலைப்பக்குவம் அவர்களுக்கு இருந்தது.
அக்காலத்தைய கவிதையாக்கங்களிலே காணப்பட்ட தேய்வியம்பலில் (CLICHE) இருந்து தம்மை விடுவித்துக்கொள்வோராய் மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், நீலாவணன், மு.பொ.முதலியோர் இருந்தனர். புதிய பொருளை முன்வைத்தலும், மாற்றுவகைப்புலக்காட்சியூடே சமூகத்தை நோக்குதலும், புதிய கவிதையாடலைக் கையாளுதலும் அவர்களிடத்தே காணப் பட்டன.
தேய்வியம்பலை உடைத்து உதறி எறிந்த நிலையில் மேலெழுந்த ஆக்கங்களாக மஹாகவியின் குறும்பா நறுக்குகள் அமைந்துள்ளன. குறுவரிகளால் நகைச் சுவையை உருவாக்கும் முயற்சியாக குறும்பா அமைந்துள்ளது. நகைச்சுவையூடே சமூகம் பற்றிய திறனாய்வும் மதிப்பீடும் நிரவல் செய்யப்படுகின்றன. தொன்மங்களை மானிடப் படுத்தலும் அக்காலத்தில் முன்னெடுக்கப் பட்ட இலக்கியச் செயற்பாடாயிற்று. பெண்ணிய நோக்கில்
குறும்பாவை
வாசிப்புக்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

உள்ளாக்கப்பட வேண்டிய தேவை இருப்ப தனை இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பெண்கள் பல நிலைகளிலே எடுத்தாளப்படுதலால், குறும்பா பற்றிய ஒரு பெண் ணிய வாசிப்பு தவிர்க்கமுடியாததாகவுள்ளது.
ஆக்கநிலையில் தமிழிற்குறும்பா ஒரு தனித்துவமான முயற்சி. அவற்றின் வழியாகக் கையளிக்கப்படும் செய்திகள் பன்மை நிலைப்பட்டவை. சமூக இயல்பின் பன்முகச் சிதறல் குறும்பாவில் பிரதிநிதித்துவம் செய்யப் * பட்டுள்ளது. உண்மை நிலைவரங்களை விளங்கிக் கொள்ளாது சமூகம் எவ்வாறு திண்டாடுகின்றது என்பதைக் குறியீட்டுப்படுத்தி எழுதப்பெற்ற ஒரு குறும்பாவை வகை மாதிரிக்குக் குறிப்பிடலாம்.
"ஆகா” என்றார் ஒரு சமீந்தார். ஐந்து பவுண் சங்கிலியை ஈந்தார், "மோகன மென்றால் எனக்கு மோகம்” என்றார். பாடகரோ "சா..ஹா”னா!?” என்றபடி சோர்ந்தார்.
வசனங்களுக்குரிய தெளிவுறுத்தல் மற் றும் நிறுத்தற் குறியீடுகளை கவிதையிலும் அவர் பொருத்தமாகப்பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கருத்தை ஏற்கனவே நுஃமானும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன காவிய மரபோடும் மஹாகவி தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் எழுதிய ஆறுகாவியங்கள் தொகுப்பாக்கப்பெற்று தேசிய கலை இலக்கியப் பேரவையினால் 2000ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
- பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத்தோடும் குயிற்பாட்டோடும் நவீன காவிய மரபு தமிழில் வளர்ச்சி கொள்ளத் தொடங்கியது. அலங்கார சாஸ்திரங்களிற் கூறப்பட்ட காவிய இலக்கண ஆசாரங்களைத் தகர்த்து, பாஞ்சாலி சபதத்தையும் குயிற்பாட்டையும் பாரதி பாடினார். பின் வந்த கவிஞர்களுக்கு ஒரு மாற்றுவகை நுழைவாயிலைத் திறந்து வைத்தார்.
பாஞ்சாலி சபதம் பாரதியின் சபதமாயிற்று. அக்காலத்து இந்திய நிலைவரங்களைக் குறியீடாக்கி அதனைப் படைத்தார். "போச்சுது போச்சுது பாரதநாடு” என்ற அடி குறியீட்டுப்படுத்தலைத் துல்லியமாக்கியது!
மஹாகவியின் காவியங்களில் யாழ்ப் பாணத்து இடநிலையச் சூழலும், பண் பாட்டுச்சூழலும் கவிதைவழியான காண்பிய (VISUALS) மாக்கப்பட்டுள்ளன. அவற்றை
13

Page 16
அ யம்
நிலைத்த இருப்பில் (STILL) வைத்திராது
அசையும் நிலைக்கு உருட்டிவிடுதல் மஹா கவிக்குரிய தனித்துவமாகின்றது. கல்லழகி காவியத்தின் தொடக்கமே பின்வருமாறு
அமைகின்றது.
"ஆல மரங்கள் அருகே வளர்ந்திருக்கும் சாலையினை விட்டுத் திரும்பினேன், சத்தமிடும் ஓலைப் பனங்காட்டின் ஒற்றையடிப்பாதையிலே நள்ளிரவு நேரம் "நருக்” கென்று தைத்துவிடும் முள்ளிருந்து காலில் முறிந்த பழந்தூண்கள் உள்ள இடம் உளதே ஊருக்குத் தூரத்தில், அங்கேதான் சென்றேன்...''
அரச நிர்வாகத்தில் வளர்ச்சியுறத் தொடங்கிய பணியாட்சியின் (BUREAUCRACY) வடிவைக் கவிதை வெளிக்குக் கொண்டு வந்தவர்களுள் மஹாகவி தனித்துவமானவர். பணியாட்சி வாழ்க்கையில் ஒன்றித்த அவரது சொந்த அனுபவம் நேர் வெளிப்பாடாக பின்வரும் கவிதையில் அமைந்தது.
(சடங்கு) கச்சேரி சேர்ந்துவிட்டான்; கடுதாசி மலைகளுக்குப் பின்னால் உள்ள
அச்சீமான் தனைக் காணத் தாழ்வாரத் தரை மணியாய்த் தவமே செய்தான்! "உட்செல்ல லாகா தென் றுரைக்கின்ற பலகையினைத் தாண்டிச் சென்றால்,
அச்சென்று தும்முகிறார் அதிகாரி சுழலும் ஒரு விசிறியின் கீழ்.
தொடர்ந்து வரும் பாடலில் கச்சேரி அதிகாரியின் இயல்பை நேர்நிலையில் (POSITIVE) சித்திரித்திருப்பது, மஹாகவி தன்னைப் புற நிலைப்படுத்தியதாகவும் கொள்ளத்தக்கது.
யாழ்ப்பாணத்துப் பேச்சு
மொழியிற் காணப்படும் உவமைகளை கவிதை வெளிக்கு இலாவகமாகக் கொண்டுவருதலும் மஹாகவிக்குரிய தனித்துவமாகின்றது. பார்
வைக்குப்பின்வரும் அடிகளைத் தரலாம்,
கோப்பிக்குள் பாலை அள்ளிக் கொட்டினாற் போல், இருட்டைச் சாப்பிட்ட கிழக்கு வானம் சரியாக வெளுக்க ......
யாழ்ப்பாணத்துச் சராசரி நடுத்தரவர்க்க மனித வாழ்வின் நெடுங்கோட்டுச் சித்திரிப்பை "ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்” காட்டுகின்றது.
மஹாகவியின் "கந்தப்பசபதம்" காவியம் விஞ்ஞானம் பற்றிய எதிரிடையான கருத்தைத் 14

தழுவியது. அக்காலத்தில் பரவலுற்ற காந்தியமும், தாகூரியமும், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பவளர்ச்சியை எதிரிடையாகவே நோக்கின. விஞ்ஞானம் முதலாளியத்தின், கைகளில் இருக்கும் பொழுது அது பாரதூ ரமான எதிர் விளைவுகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கும். அதிதீவிர இலாபமீட்டும் முதலாளியச் செயற்பாடுகளால் மூலவளங்கள் மூர்க்கத்தனமாகச் சுரண்டப்படுதலும் சூழல் கேடுறுதலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணமுள்ளன. அந்நிலையில் எதிர்கால மனிதன் பற்றிய அச்சத்துக்குரிய காரணியாய் விஞ்ஞானத்தைக்கொள்ளாது, நவீன முதலாளி யத்தைக்கொள்வதே பொருத்தமானது.
இருவர் சேர்ந்து எழுதும் காவிய மரபு ஒன்று “தகனம்" காவியத்தின் வழி மஹாகவியாலும், முருகையனாலும் தோற்று விக்கப்பட்டது. தொன்மக் கதையாகிய காமன் தகனத்துக்குப் புது வடிவம் கொடுப் பதற்கு இருகவிஞர்களும் முயன்றனர். இரு கவிஞர்களதும் கவித்துவம் அதிற்பளிச்சிடு கொள்கின்றது. வாசகரும் திறனாய்வாளரும் காவியத்தைக்
குறியீட்டுத்தேரில் ஏற்றி மறு வாசிப்பை வளர்த்துச் செல்லலாம். பிற்குறிப்பில் முருகையனும் அதனையே
அவாவிநிற்றல் போன்று தெரிகின்றது.
மஹாகவியின் காலத்தில் இலக்கியக் கருத்து நிலைகளில் முனைவுப்பாடுகள் அல்லது துருவப்பாடுகள் தோற்றம் பெற்றுவிட்டன. ஒரு முனைவில் முற்போக்குக் கருத்துக்கள் ஏறிநின்றன. மறுமுனைவில் மாற்றுக்கருத்துக்கள் நின்றன. அவற்றின் நீட்சியாக இருகோடல் (BINARY) நிலையில் இலக்கியங்களைப் பார்க்கும் முறைமை வளர்ந்து நின்றது. கருமை / வெண்மை, நல்லது / கெட்டது, அழகானது / அழகற்றது என்றவாறு வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, எதிரெதிராகப் பிரித்துப் பார்த்துப்பாரத்தல் இருகோடல் நிலையாகும்.
பின்னைய நவீனத்துவம் இருகோடல் நிலையை முற்றாக நிராகரித்திருத்தலும், பன்மைத்துவத்தை வலியுறுத்துதலும் பிறிதொரு செய்தி.
மஹாகவியின் காலத்தில் திறனாய்வுக் களத்தில் வலிமை பெற்றிருந்த இருகோடல் நிலையில், முற்போக்குத் திறனாய்வின் த
எதிர்ப்பிரிவுக்குள் மஹாகவியின் ஆக்கங்கள் | கொண்டுசெல்லப்பட்டன.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 17
வாழும்
"மீண்டும் இஞ்சி
ஈழத்தமிழ் மண்ணைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கோ - நீங்க வாழும் நாட்டை விட்டுமீண்டும் இஞ்சை வாருங்கோ.
எல்லைக்குள்ளே யாரோவந்து எம்மை ஏய்க்கிறார் கல்லை மண்ணை மரத்தைக் கிளறிக் காசு சேர்க்கிறார் - வல்லமையைக் காட்டி எங்கள் வளத்தை அள்ளிறார் தொல்லைகளைக் கூட்டி எம்மைத் தூர விரட்டிறார்.
எங்கள் மண்ணுள் ஊடுருவும் இழிகுணத்தாரால் தங்கமான தமிழர் வாழ்வு தடுக்கி விழுகுது சங்கடங்கள் குறைந்திருந்த எங்கள் மண்ணினைச் செங்களமாய் மாறச்செய்யும் சூதும் நடக்குது
அரசமதத் தந்தச்சாமி வந்து குந்தவே அரசமரப் பிள்ளையாரும் அகற்றப் படுகிறார் பிரச்சினைகள் நாளுக்குநாள் பெருகி வருகுது உரத்துக் குரல் கொடுக்கும் உரிமை உடைக்கப் படுகுது
மேலைநாட்டுப் பழக்கம் கட்டு மீறிப் பெருகுது சேலை வேட்டி கட்டும் பழக்கம் சுருங்கிப் போகுது வேலைவெட்டி இன்றித் திரியும் வீணர்களாலே மூலைமுடுக் கெல்லாம் குழப்பம் மூட்டப் படுகுது
வீட்டுக்கெண்டு நீங்கள் அனுப்பும் வெள்ளிக் காசினால் கோஷ்டிமோதல் குத்துவெட்டுக் கொலைகள் கூடுது பாட்டன்பூட்டன் பதித்துவைத்த பாசம் பண்பெல்லாம்
கூட்டுச் சேரும் கொடியவரால் குதறப் படுகுது
போதையூட்டும் பொருளை உண்டு பொடியள் மயங்கிறார் வேதனையால் அந்தப் பெற்றோர் வெம்பி அழுகிறார் சோதனைக்கு என்றுசீரு டைகளைப் போர்க்கும் பாதகரால் பணம் நகைகள் பறிக்கப் படுகுது
சிறிது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

நாட்டைவிட்டு 5 வருகே
கள்
தந்தைதாயர் பிறந்து வாழ்ந்த தமிழர் மண்ணிலே சொந்தமொழி சமயம் வாழ்க்கை சிதைந்து போகுது எந்தநாளும் இடைஞ்சல் என்பதெங்கும் மலியுது நொந்துமனம் வாடுகின்ற நிலையுந் தொடருது
எங்கள்மண்ணை விட்டுநீங்கள் ஏகிய போதும் உங்கள் வேர்இம் மண்ணில் என்ற உண்மை உறுதியே பங்கமின்றி உங்கள்பரம் பரைகள் தொடர்வே எங்கள் மண்ணே ஏற்றதுண்ம்ை; உணர்ந்து வாருங்கோ
எங்கள்தொகை நாளுக்குநாள் இறங்கிக் கொள்ளுது இங்குகுடி யேறஏவல் பேய்கள் முயலுது உங்கள் காணி பூமிகளை உதறிடா மலே இங்குவந்து வாழ்ந்து எமக்கு உதவி செய்யுங்கோ
சீரிலங்கை நாட்டி லெங்கள் சொந்த மண்ணிலே ஆருக்குமே அடிமையின்றி வாழவிரும்பு றோம் ஊருக்குரி யோர்களெல்லாம் ஒன்றுபட்டாலே தேரிழுக்க லாம்; அதனால் திரும்பி வாருங்கோ
0ாம் *
விரலுக்கேற்ற வீக்கம் என்ற வேதம் உணர்ந்தே அரியசிறிய தொழில்க ளாற்றி ஆக்கம் தேடுவோம் உரிமையோடு உலகில் எங்கள் உயர்வைக் காட்டுவோம் பெருமை மிக்க எங்கள் மண்ணின் பெருமை நாட்டுவோம்
செல்வசுகம் தேடிவெளியில் வாழ்ந்தது போதும் அல்லும் பகலும் வேலைசெய்து அலுத்ததும் போதும் நல்ல மனிதப் பண்புகளை நாளும் வளர்த்தே தொல்லை யில்லா நாட்டை ஆக்கத் திரும்பி வாருங்கோ
நல்லை மாவை சந்நிதியில் நாளும் வேண்டிறோம் நல்ல தீர்வு தந்து நம்மைக் காக்க வேண்டிறோம் கல்வி கலாசாரம் கமம் கைத்தொழிலோங்கிச் சொல்லுபுக ழோடுவாழத் தினமும் வேண்டிறோம்
15 -

Page 18
டி.ப IMUமர்
பட.
IT )'T'II
தமிழ்ப் புனைகதை வரலாற்றினை எடுத்து நோக்குகின்ற பொழுது அதன் உள்ளடக்கம் சார்ந்து கையாளாத பிரச்சினையே இல்லை எனும் அளவுக்கு பல்வேறு விதமான கருப்பொருளையும் கலைவடிவமாக்கி உள்ளது.
தமிழ்ச் சூழலில் எழுத்தைத் தமது ஜீவனோபாயத் தொழிலாகக் கொள்பவர்கள் பெரிதாக இல்லாவிட்டாலும்
பல்வேறு எழுத்தாளர்களும் தத்தமது தொழில் சார்ந்த அனுபவங்களை எழுத்தில் வெளிக்கொணர்ந்து புதுமெருகேற்றியே வந்துள்ளனர். இவ்வாறான வித்தியாசமான களங்களை அறிமுகப்படுத்தும் பொழுது வாசகர்களுக்கும் புதுவித அனுபவத்தை இவர்கள் தொற்றச் செய்கின்றார்கள்.
எழுத்தாளர்கள் சிலர் தமக்குப் பரிச்சியமில்லாத துறைகளைப் பற்றி படைக்கும் படைப்புக்களை விட துறைசார்ந்த படைப்பாளிகள் அது குறித்து எழுதும் பொழுது அது இன்னும் காத்திரம் வாய்ந்ததாக அமையும். இதனையே எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏனென்றால் நான் எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றியும் எழுதுவதில்லை என்றார் மார்க்ஸிம் கார்க்கி.
அந்த வகையில்தான் விளையாட்டுத்துறை சார்ந்த ஈடுபாடு எழுத்தாளர் பலருக்கும் இருந்தாலும் அது குறித்த
16

நம் பந்துகள்
தைகளில்
த்துறைச் சித்திரிப்பு
- சி.விமலன்
வகையிலான புனைகதைகளைப் படைத்த வர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். விளையாட்டுத்துறை சார்ந்த கருப்பொருளில் எந்தளவுக்கு மனித உணர்வுகளைப் பன்முக . நோக்கில் பிரதிபலிக்க முடியும் என்ற சந்தேகமும் விளையாட்டுக்கள் குறித்த ஆழ்ந்த புலமையும் விளையாட்டு விதிகள் குறித்த தேர்ச்சியும் கைவரப் பெற்றிருத்தல் அவசியம் என்பதனாலும் அது குறித்த பதிவுகளை ஆழமாக மேற்கொள்வதில் பலரும் அதிக சிரத்தை எடுப்பதில்லை.
விளையாட்டுத்துறையைப் பொறுத்த வரையில் புனைவிலக்கியங்களை விட புனைவுசாரா எழுத்துக்களே அதிகம் தோன் றியுள்ளன. விளையாட்டுத்துறை இன்று பல்கலைக்கழகங்களிலும் ஒரு துறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த
ஆய்வுகள் வளர்நிலையினை அடைந்திருப்பதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் வழமையான பல்கலைக் கழகப் பட்டத்திற்காக மேற்கொள்ளப் படும் நிர்ப்பந்தச் சூழலின்
ஆய்வுகளாகவே அவற்றில் பெரும் ) பான்மை காணப்படுகின்றன என்ற யதார்த்தமும் வெளிப் படையானதே.
இத்தகைய விளையாட்டுத் துறை சார்ந்து வெளிவந்த ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 19
புனைகதைகளில் பெரும்பாலான சித்திரிப்புகள் பத்தோடு பதினொன்றாகவே
இடம் பெற்றிருக்கின்றன எனலாம்.
ஒரு சமூகத்தின் இனவரைவியற்கூறுகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் சிறுகதைகளைவிட நாவல்களுக்கே அதிகமாக இருந்த பொழுதிலும் ஒப்பீட்டளவில் நாவல்களை விட சில சிறுகதைகளில் தனித்த கருப்பொருளில் இத்தகைய விளை யாட்டுத்துறை சார்ந்த சித்திரிப்புகளின் தாக்கத்தை அறியக்கூடியதாக உள்ளது.
இந்தப்பீடிகையோடு தமிழ்ப் புனைகதை களில்
1. உதைபந்தாட்டம் 2. கிரிக்கெட் 3. வலைப்பந்தாட்டம் 4. கரப்பந்தாட்டம்
ஆகிய போட்டிகள் குறித்த பதிவுகள் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளன என்பதை இனி நோக்கலாம்.
T
உலகில் பலகோடி ரசிகர்களின் ஏகோபித்த விளையாட்டாக இன்றும் காணப்படுவது உதைபந்தாட்டமே. இதன் ஆட்ட விறுவிறுப்பும் குறுகிய நேரமும் ரசிகர்களைத் தொடங்கி முடியும் வரை கட்டிப் போட்டு விடும் தன்மை வாய்ந்தது. இக்கட்டுரையில் உதைபந்தாட்டம் குறித்த புனைகதைகளை எழுதிய சுந்தர ராமசாமி, சுரேஸ்குமார இந்திரஜித், அ.இரவி ஆகியோரது சிறுகதைகள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. உதைபந்தாட்ட விளையாட்டுக்கு பிரித்தானியார்கள் Football என்ற சொல்லையும் அமெரிக்கர்கள் Soccer என்ற சொல்லையும் பாவிப்பது போல தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர ராம சாமியும் சுரேஸ்குமார இந்திரஜித்தும் 'கால்பந்தாட்டம்' என்ற சொல்லினையும் ஈழத்தைச் சேர்ந்த அ.இரவி "உதைபந்தாட்டம்' என்ற சொல்லினையும் பயன்படுத்தி இந்தப் புனைவுகளைப் படைத்துள்ளார்கள்.
சுந்தர ராமசாமி எழுதிய 'ஜே.ஜே : சில * குறிப்புகள்' நாவலில்
'1938லிருந்து 1943வரையிலுள்ள ஐந்து வருடங்கள் ஜே.ஜே கால்பந்தாட்ட வீரனாகப் பெரும் புகழ் பெற்றவனாக விளங்கினான். கால்பந்தாட்டத்தில் அவனுடைய பாணி ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

தனியானது. 'கால் பந்தாட்டக்காரனின் நினைவுகள்' என்ற தலைப்பில் அவன் எழுதியுள்ள நூலில் தோல்விகளுக்குப் பின் நாம் எப்போதும் காணும் பலவீனம், குழு அல்ல, நான் தான் முக்கியம் என்ற விளையாட்டுக்காரனின் - மனோபாவமே. காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. உனக்குக் கொண்டு போவதற்குச் சாத்தியமானதற்கு மேல் ஒரு அங்குலம் கூடப் பந்தை கொண்டு போக முடியும் என்று நினைக்காதே. நீதான் கோல் போட வேண்டும் என்று ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேலெடுத்துச் செல்ல, வசதியுடன் உன் சக ஆட்டக்காரன் காத்துக்கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே' என்றெல்லாம் ஜே.ஜே. எழுதியுள்ள குறிப்புகள், கால் பந்தாட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல என்று விமர்சகர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.
என்பது ஜே.ஜே பாத்திரத்தின் பன்முகச் சித்திரிப்பில் ஒன்றாக வருகின்றது. அதேசமயம் மேற்படி சித்திரிப்பை தனியே கால்பந்தாட்டம் குறித்தான பதிவாக மட்டுமல்லாமல்
'எங்கும் பலவீனத்தின் ஊற்றுக்கண் ஒன்று தான் என்றும், இந்த ஊற்றுக்கண்ணுக்கான காரணம் மனிதன், அவனுக்கும் அவன் ஆற்றும் பங்குக்கும் உள்ள உறவில் கோணல் ஏற்படுத்திக் கொண்டு விட்டதே என்றும் இந்தக் கோணல் சுய அபிமானத்திலிருந்து தோன்றுகிறது என்றும் ஜே.ஜே. கூறுவதாக விமர்சகர்கள் குறித்திருக்கிறார்கள்' என்று சுந்தர ராமசாமி குறித்துரைப்பதனையும் அவதானிக்கலாம்.
எழுத்தாளர் அம்பை 'ஜே.ஜே : சில குறிப்புகள்' நாவல் குறித்து எழுதிய விமர்சனத்தில் 'ஜே.ஜேயா தன்னையே சுந்தர ராமசாமி Characterise பண்ணியிருக்காரோன்னு தோணிச்சு. இவருடைய பல உணர்வுகள் ஜே.ஜே.கிட்ட இருந்தது' என்று குறிப்பிட்டதைப் போல இந்நாவலில் மட்டுமல்ல சுந்தர ராமசாமி அவர்களுக்கு கால்பந்தாட்டத்தில் இருந்த ஈடுபாடு ஒரு சிறுகதையிலும் பதிவாகி இருந்தமையும் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றது.
ஜ ஜே: இந்தி'களுக்கு
17

Page 20
அதே சமயம் ஈழத்து எழுத்தாளர் அ.இரவி 'சரிநிகர்' சஞ்சிகையில் எழுதிய 'வாணியின் வீடு' சிறுகதையில் வரும் மனோரஞ்சன் என்ற பாத்திரத்தை பந்தைக் கொண்டு செல்வதில் சுந்தர ராமசாமி சித்திரித்ததற்கு எதிர்மாறானதாகச் சித்திரித் திருப்பார். இந்தச் சிறுகதை இரண்டு பாடசாலை அணிகளுக்கிடையே நடைபெறும் உதைபந்தாட்ட இறுதிப்போட்டியைப் பார்வை யிடும் ஒரு ரசிகனின் மனோபாவத்தில் எழுதப்பட்டிருக்கும்.
'மனோரஞ்சன் வலது பக்கத்திலிருந்து பந்தை கொண்டு வந்தான். வேகம் வேகம் ஒருவராலும் அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது. அவுட்லைனின் அருகுடன் டபுள் போட்டு சுழித்து வளைத்து நெளித்து பந்தைக் கொண்டு போகிறான். அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்கிற பந்தின் வேகம். ஜெயராஜ் பின்னால் ஓடுகிறான். எதிராளிகள் துரத்துகிறார்கள்.
"மனோ, மனோ" ஜெயராஜ் கத்துகிறான். ஒன்றையும் கேட்கிற மனநிலையில் மனோரஞ்சன் இல்லை.
இங்காலை தட்டிவிடு
திரும்பிப் பார்க்கிறானில்லை.
ருத்ரதாண்டவம் ஆடுகிற நடராஜர் தான் அவன் முன்னே.
எதிராளிகள் துரத்துகிறார்கள். இருவர் மூவராகத் துரத்துகிறார்கள். அவன் ஒன்றையும் கவனியாதவன் போல.
வெளியிலிருந்து ரீ.பி கத்துகிறார். "பாலு பிரீயா வாறான் அவனிட்டைக் குடு. குடுத்திட்டு லெப்பருக்கு ஓடு”
மனோரஞ்சன் கேட்கிறானில்லை. நாளைக்கு ரீ.பி உதைக்கப் போகிறார் தெரியும்.
மனோ ரஞ்சனின் வேகத்துக்கு கம்பங்கள் காத்திருந்தன. எதிர்க்குழுவின் கோல் கீப்பர் சற்றுக் கூனிக்குறுகி நின்று புயலை எதிர்பார்த்து நடுங்குகிறான். கலங்குகிறான்... முகத்தில் வியர்வை அரும்புகள்.
தெரிகிறது வருவது புயல். மனோ ரஞ்சன் என்கிற அதிரடிப் புயல்.
பந்து அதிர கால் அதிர பார்வையாளர் அதிர கம்பங்கள் அதிர கம்பங்களில் கட்டப்பட்ட வலை அதிர காற்று அதிர 18

ஒரு உதை பந்துக்கு ஒரு உதை, பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு உதை .
உதை என்று சொல்ல முடியாது , அதனை
கம்பங்களின் வலை பொருமிப் பொருமி அடங்குகிறது.
புயல் திரும்புகிறது. ஓர்மம், வலிமை, ஆவேசம் யாவும் திரும்புகின்றன.
உதைபந்தாட்ட இறுதியாட்டத்தின் சரித் திரத்திலேயே இல்லாதவாறு அடுத்தடுத்து ஆறுகோல்கள்.
அவ்வாறே எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் எழுதிய 'கால்பந்தும் அவளும்' சிறுகதையில் ஒரு பெண் கால்பந்தாட்டத்தினைச் சிறப்பாக விளையாடும் வீரர் ஒருவரை காதலித்துக் கைப்பிடித்ததனையும் தனது கணவனுடைய ஆட்டத்தினை மெய்சிலிர்த்து நினைவு கூரும்படியான சித்திரிப்பு ஒன்று
வருகின்றது.
'அவர் தனது அழகான கால்களால் பந்தைத் தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியை நீங்கள் பார்த்ததில்லையா? என்ன ஒரு அழகான ஆட்டம்.'
அவர் வழக்கமாக நீல நிற டிராயர் அணிவார். அது மேகத்தின் நிறத்தில் இருக்கும். அவர் மேகத்தில் கால்பந்து விளையாடும் ஆட்டக்காரர். எத்தனை கோல்கள். அவர் வந்து மைதானத்தில் இறங்கும் போது மைதானம் பூரிக்கும். மலர்கள் பூரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதைப் போல். எதிர்த்து விளையாடுபவர்களிடம் அச்சம் கவிந்து கொள்ளும். அவர்களின் கால்கள் பின்னிக் கொள்வது போல் இருக்கும்.
'அவரிடம் கால்பந்து கொஞ்சிச் கொஞ்சிச் செல்லும். பந்தின் மீது நடப்பார். நிற்பார். பந்தை பாதங்களால் மேலெழுப்பித் தலையினால் கோலுக்குள் தள்ளுவார். பந்து அவர் கால்களுக்கிடையே இருக்கும்போது கர்வமாகப் பார்க்கும். அவர் கால்பட்டு பந்து தானாகவே ஓடும். அவர் அதைத் , தள்ளுகிறாரா என்றே தெரியாது. அவர் மீதுள்ள பிரியத்தில் பந்து ஓடும். காலால் தட்டினால் அந்தத் தட்டிற்கு ஏற்ப குறிப்பிட்ட தூரம்தானே பந்து ஓடவேண்டும். ஆனால் கூடுதலான தூரம் ஓடுவதை நான் அடிக்கடி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)
1INiis!!!!!!!
Tகப்

Page 21
பார்ப்பேன். எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. எல்லாம் யேசுவின்
ஆசீர்வாதம்'
இச்சிறுகதை குறித்து எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித்
மிகையான மனோபாவத்தின் குறியீடென கால்பந்து இக்கதையில் உருவாகி விட்டது என்று குறிப்பிடுகின்றார்.
கனவான்களின் ஆட்டமாகக் கருதப்படும் கிரிக்கெட் இன்று தொழில் முறையாக ஆடப்பட்டு சூதாட்டம் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தாலும் அதன் - மவுசு குறையாத ஆட்டமாகவே உள்ளது. இன்று பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தின் கீழிருந்த நாடுகளில் தவிர்க்க முடியாத ஒரு ஆட்டமாக அது விஸ்வரூபம் எடுத்துள்ளதோடு ஏனைய நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்பு நாடுகளாகி தமது நாடுகளில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியும் 7 வருகின்றன. பல நாடுகளின் தேசிய விளையாட்டினை புறமொதுக்கி விட்டு தன்னிகரற்ற ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இன்று பரிணமித்துள்ளது.
இந்தக் கிரிக்கெட் போட்டி
குறித்து தழிழக எழுத்தாளரான அசோகமித்ரன் 'நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது என்றதொரு சிறுகதையை எழுதியுள்ளார்.
இச்சிறுகதையில் கிரிக்கெட்டில் ஹட்ரிக் சாதனை புரிவது குறித்த விபரம்
'போலர் இம்முறையும் துள்ளியும் ஓடியும் வந்து பந்தை வீச அதை பாட்ஸ்மன் அவசரமாக அடிக்கச் சென்றதில் தவறவிட்டு போல்ட் ஆனான். அவன் மைதானத்தைக் கடந்து தன் இதர சகாக்களை அடைவதற்குள் இன்னொரு ஆட்டக்காரன் விக்கெட் முன்வந்து நின்று, அவன் போலரிடமிருந்து பெற்ற முதல் பந்திலேயே போல்ட் ஆனான். அத்துடன் அந்த ஓவர் முடிந்தது.... அடுத்த போலர் பந்துவீசுவதைப் பார்த்து நின்றேன். இவன் துள்ளல் குதித்தல் இல்லாமல் பந்து வீசினான். ஆட்டக்காரன் ஒழுங்காக ஆடிச் சில ஓட்டங்கள் கூட எடுக்க முடிந்தது.
'அந்த ஓவர் முடிந்தவுடன் முதல் போலரும் தலைவனுமாக அலுப்பு தோன்றுமளவுக்குப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

யாத்திரை, த
எம். எண்ம அக்ரம்
மரித்தல் கோடுகள் கீறிக் கொண்டு மனக்கூட்டில் வீடு கட்டியிருந்த பறவைறை கல்லெறிந்து துரத்திய பொழுது எனது ஆய்தக் காதல் ஒருங்கி எனது சுயத்தின் விருட்சக் கிளைகளும் வேர்களும் அசைந்து அசைந்து உதிர்கின்றது நான் போர் குற்றவாளி அல்லது தீவிரவாதி என்றான முரண்களால் உன்னிலான எதிர்வினைகளில் சிக்கிக்கொண்டு இருக்கின்றேன். எனது இருத்தலின் சுயாதீனத்தின் அடையாளங்கள் அற்றுப் போனபின்னும். எனதுவாழ்தலை அறுத்துப் போட முடியாது என்ற வாக்கியம் மட்டும் விஞ்சி நிற்க நான் எனது பயணத்தின் நீட்சியை எனது புனித யாத்திரையின் அழகை நெருங்கிக் கொண்டு இருக்கிறேன் என்ற பெறுமதியினை மட்டுமே உணக்கு சமர்ப்பிக்கின்றேன் எந்த அனர்த்த வர்க்கங்களாலும் எனது ஆத்மசக்தியை உடைக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது என்பது காலத்தின் எழுதுகோல் உணக்குச் சமர்ப்பணம் செய்யும்
பிற ஆட்டக்காரர்களை மைதானத்தில் நிறுத்தி வைப்பதில் அலட்டிக் கொண்டார்கள். ஒருவனையும் முன்பு நின்ற இடத்தில் இருக்க விடவில்லை. இறுதியாக போலர் பந்துவீசத் தயாரானவுடன் அனைவரும் ஒரு முனைப்பானார்கள். முதல் பந்து வீச்சில் ஒருவன் ஆட்டமிழந்தால் அந்த போலருக்கு ஹட்ரிக் கிடைக்கும். அதாவது மூன்று
19 .

Page 22
111111111.
அடுத்தடுத்த பந்துகளில் மூன்றுபேரை ஆட்டமிழக்கச் செய்த சாதனை..... அவன் வழக்கம் போல துள்ளியோடிப் பந்தை வீசினான். அது வலுவற்றதாக இருந்திருக்க வேண்டும். ஆட்டக்காரன் மிக எளிதாக அதைத் தடுத்துவிட்டான்'
என்று சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டிருக்கும். மேலும் இச்சிறுகதையில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் குறித்த பதிவாக
'என் காலத்திலும் கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள். அமர்நாத், ஹசாரே, மன்கட், சற்றுக் கற்பனை மிகுந்தவர்களுக்கு பிராட்மன், மில்லர், பெட்ஸர் எல்லா வீரர்களுமே செய்திப் பத்திரிக்கை போட்டோக்கள் மூலந்தான் எங்களுக்கு அறிமுகம் ஆனவர்கள். நேரில் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு'
என்ற சித்திரிப்பையும் சுட்டிக்காட்டலாம்.
அசோகமித்ரனின் சிறுகதைகள் பெரும் பாலும் நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்க்கை முறையினையும் உள்முரண்பாடுகளையும் சிறப்பாகப் பதிவு செய்பவை. அந்தவகையில் இச்சிறுகதையில் கிரிக்கெட் போட்டி குறித்து நேரடியாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அவற் றின் அடிச் சரடாக அந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கும் மனிதனின் உணர்வினை வெளிப்படுத்துவதனையே பிரதானமாக உண ரக்கூடியதாக உள்ளது.
சுஜாதா தனது சிறிய வயது ஸ்ரீரங்கத்து அனுபவங்களை 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' என்ற பெயரில் வெளிக்கொணர்ந்த நூலிலும் கிரிக்கெட் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அத்தொகுப்பில் இடம்பெற்ற
- 'பேப்பரில் பேர்' என்ற சிறுகதையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் களுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட்
போட்டி குறித்து, * 'மொத்தம் ஆறு ரன் ஆகிவிட அந்த ராம்கி சற்றுக் கோபத்துடன் டீப் ஃபைன் லெக்கில் ஒரு ஆளை நிறுத்தி இன்னும் கொஞ்சம் அடியெடுத்து இன்னும் கொஞ்சம் தூரம் போய் ஓடி வந்து கேவியின் தலைக்கு மேல் பெரிதாக பம்பர் போட்டார்'
'கேவி அஞ்சா நெஞ்சன்! என்னவோ மாதிரி பாட்டை வைத்துக் கொண்டு ஒரு வீசு வீச பந்து பட்டு ஏறக்குறைய இரண்டு தென்னை 20

iiiiiiiiii11
மர உயரத்துக்கு எவ்வியது. ராம்கி நிறுத்தி வைத்திருந்த ஃபீல்டருக்கு, அருமையாக அழகாக ஒரு காட்ச் வந்தது. அவருக்கு நிதானமாகப் பந்தின் கீழ் அட்ஜஸ்ட் பண்ணி நின்று கொள்ள ஏக சமயம் இருந்தது. சிரித்துக் கொண்டு கையைத் தேய்த்துக் கொண்டு கீழே வரும் பந்தை வாங்கி வழிபட்டார்! சற்று அசட்டு முகத்துடன் "ஸாரி காப்டன். தி ஸன் வாஸ் ஆன் மை ஐஸ்” என்றார். இதற்குள் கேவி கவலைப்படாமல் என்னுடன் ஓடி இரண்டு ரன் எடுத்து விட்டான்.
என்பதான சித்திரிப்பின் ஒரு பகுதி வருகின்றது. இவ்வாறான கிரிக்கெட் சித்திரிப்புகள் அத்தொகுப்பில் உள்ள 'எதிர்வீடு', 'கிருஷ்ணலீலா' சிறுகதைகளிலும் வருகின்றன.
ஆனாலும் இவற்றை விட சர்வதேச கிரிக்கெட்டில் சூதாட்டம் பெரிதாக இடம்பெறுவதற்கு முன்னதாகவே 1990களில் சுஜாதா அது குறித்து தீர்க்கதரிசனமாய் எழுதிய 'கறுப்புக்குதிரை' என்ற சிறுகதை தற்போதைய கிரிக்கெட் சூழலுக்கும் பொருந்தி வருவதுதான் ஆச்சரியமான விடயம்.
அவ்வாறே ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான குப்பிளான் ஐ.சண்முகலிங்கனின் 'ஹீரோ' சிறுகதையிலும் கிரிக்கெட் குறித்த பதிவினைக் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இரண்டு பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் ஆட்டத்தில் கலந்து கொண்ட ஐம்பது வயது ஆசிரியர் ஒருவரது மன உணர்வுகளை சிறப்பாக இச்சிறுகதையில் அவர் 'வெளிக்கொணர்ந்திருப்பார்.
'மைதானத்தில் பெரிய ஆரவாரம். எங்கள் அணியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தன. இளைஞர்களான நிருபனும் ரமேசும் ஆடிக்கொண்டிருந்தார்கள். பந்து நாலாபுறமும் பறந்து கொண்டிருந்தது. ஆறு, நான்கு, இரண்டென ஓட்டங்கள் மளமளவென்று
குவிந்து கொண்டிருந்தன. பெரிய ரசிகர் கூட்டம் து ஆரவாரத்துடன் ரசித்துக் கொண்டிருந்தது'
'எங்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கை நூறைத் தாண்டி நிருபனின் ஓட்ட எண்ணிக்கை
அறுபதையும் தாண்டி விட்டிருந்தது'
'எங்கள் அணியின் ஒன்பதாவது விக்கெட்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 23
சரிய பத்தாவது ஆளாக அவர் நிருபனுடன் சோடி சேர்ந்தார்'
'ஆடி இரண்டு ஓட்டங்களைப் பெற்றிருந்தார். நிருபன் பந்தை எதிர்கொள்ளச் சந்தர்ப்பம் அளித்ததற்காக அடுத்த முறை பந்தைத் தட்டிவிட்டு ஓடுகையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
என்ற பகுதியின் ஊடாக துடுப்பாட்டம் குறித்த சித்திரிப்பை அறிந்து கொள்ளலாம்.
நடைபெற" மாலை அண- °றுகதையில்
கோகிலா மகேந்திரன் எழுதிய 'வாழ்வும் ஒரு வலைப்பந்தாட்டம்' சிறுகதையில் இரண்டு பாடசாலை அணிகளுக்கிடையில் நடைபெறும் வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியினைச் சித்திரித்து அதன் ஊடாக ஆசிரியர்களுக்கிடையில் ஏற்படும் குரோத மனப்பான்மைகளையும் முரண்பாடுகளையும் மிகைப்படுத்தல் ஏதுமின்றி புனைவாக்கம் செய்திருப்பார்.
'மையத்தில் நின்று விளையாடும் தேவகி 5 அபாரமாக ஆடிக்கொண்டிருந்தாள். அவளிடம் வருகின்ற பந்துகள் யாவும் பெரும்பாலும் தவறாமல் சிறை தாக்குவோளிடம் சென்று பேற்றுக்கெய்யும் மதிவதனியிடம் சென்று கொண்டிருந்தன. மதிவதனி கொக்கு என்ற பிரபலமான அவளது பட்டத்திற்குப் பொருத்தமாய் நல்ல உயரம்! அவளிடம் பந்து போய்விட்டால் 'நின்ற நிலையில் எட்டிப் போட்டால் போதும்! பந்து தவறாமல் வளையத்தினூடாக விழுந்து கை தட்டலைப் பெற்றுக்கொள்ளும்'
என்ற சித்திரிப்பினையும் பார்வையாளர்கள் மத்தியில் போட்டி ஏற்படுத்தும் தாக்கத்தினை
'ஆட்டம் ஆரம்பித்து ஏழு நிமிடங்கள் முடிந்த நிலையில் எதிரணி தான் முன்னுக்கு நின்றது. ஆயினும் அவளுக்கு அபரிமிதமான நம்பிக்கை'
"கஸ்டம் போல கிடக்கு என்ன?” நல்லநாதன் மாஸ்ரர் கேட்டார். இவள் மௌனமானாள். நல்லதை எதிர்பார்த்துக் -கூடப்பழக்கமில்லாத ஆசிரியர்கள். தான் நம்பும் போது மற்றவர்களை நம்ப வைக்க வேண்டியது என்ன நிர்ப்பந்தம் என்ற கேள்வி மனதில் தோன்ற அமைதி பெற்றாள்.
சித்திரிப்பின்
ஊடாகவும்
என்ற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

11111111
எடுத்துக்காட்டுகின்றார். இச்சிறுகதையின் சிறப்பம்சமாக வலைப்பந்தாட்ட விளை யாட்டினை வாழ்வியலிற்குச் சமானமாகப் பொருத்தமுற சில இடங்களில் சித்திரித்திருப்பதுதான்.
'இவர்களின் பேற்றுக் கம்பத்தின் பக்கமாய் வேகமாய் வரும் பந்தை மதிவதனி பிடிக்கப் போகும்போது தள்ளிப்பாய்ந்து வந்த எதிராளி ஒருத்தி மதிவதனியின் கால்களை முழங்கால் கொடுத்து தடக்கி மடக்கி விட்டாள். அவள் இடறிக் கீழே விழ பந்து எதிரணிக்குச் சென்றது. மனதிற்குள் எரிந்தது இவளுக்கு! வாழ்க்கையிலும் செய்கிறார்கள்! இங்கும் செய்கிறார்கள்! ஒரே மனிதர்கள், அதே மனிதர்களின் பிள்ளைகள்'
"நிப்பாட்டு விளையாட்டை” பலமாய் எழுப்பப்பட்ட கோஷங்கள் சிறிது நேரத்தில் மெதுவாக ஓய்ந்தன. கோஷங்கள் நீதியை அநீதியாயும் உண்மையை பொய்யாகவும் மாற்றி விடுமோ? மாற்றி விடும் போலத்தான் தெரிந்தது.
அதேசமயம் விளையாட்டுப் போட்டிகளில் நடுவர்கள் விடும் தவறுகள் குறித்தும் இயல்பாகச் சித்திரித்திருப்பதை
'எதிரணியின் மைய ஆட்டக்காரியான பிள்ளை குறிவட்டத்தினுள் வந்து பந்தைப் பிடித்து வேகமாய் தமது பேற்றுக் கம்பத்தின் பக்கமாய் வீசி எறிந்தாள். மைய ஆட்டக்காரி குறிவட்டத்தினுள் வரலாமா? இவளுக்கு கண்களில் புன்னகை மறைந்து சிறிது எரிச்சல் தெரிந்தது. நடுவர் இந்த நிகழ்வுக்கு விசில் ஒலிக்கவில்லை. ஒருவேளை காணாமல் இருக்கலாம். சிலவேளை கண்டும் காணாதது போல் இருக்கலாம்.
"காலைத்தடக்கி விழுத்தியினம், வேணுமெண்டு இடிக்கினம் வெளியாக்கள் அம்பயரைக் குழப்பினம்,பவுல் கேம் விளையாடினம் எல்லாத்துக்கும் அம்பயர்ஸ் பேசாமல் நிண்டால், இதென்ன சேர் விளையாட்டு”
என்ற பகுதிகள் நிரூபித்துக் காட்டுகின்றன.
அது மாத்திரமல்ல பயிற்றுனர் ஒருவர் வீராங்கனைகளுக்கு எவ்வாறு ஆட்டம் குறித்த நுட்பத்தினை விளக்குகின்றார் என்பதான சித்திரிப்பையும் காணக்கூடியதாக உள்ளது.
'டிஃபென்டேர்ஸ் பக்கம் தான் கொஞ்சம்
21

Page 24
வீக். உங்கடை பாட்னேர்ஸை விட்டிட்டு விலகப்படாது நீங்கள்...
“தேவகி கட்டை தானே அவக்குப் பந்து போடேக்கை லோவர் பாஸ் போடுங்கோ”
தேவகி நீர் கோமதிட்டைக் குடுக்கிற மாதிரிக் காட்டிச் சீற்' பண்ணிப் போட்டு நேரை மதிவதனிக்கு எறியும்”
'இவளது ஆர்வம் நிறைந்த உற்சாக மொழிகளைக் கேட்டுக்கொண்ட மாணவிகள் மீண்டும் மைதானத்தில் இறங்கினார்கள்'
'ஞானம்' ஒக்ரோபர் 2012 இதழில் திருமலை வீ.என்.சந்திரகாந்தி எழுதிய 'வருவது போல் வரும்' என்ற சிறுகதையில் வெளிநாட்டில் இருந்து வரும் சிந்துஜன் என்ற கதாபாத்திரம் மின்னொளியில் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்துவது குறித்த பதிவின் ஒரு பகுதி
'இண்டைக்கு ட்றோ(Draw) போட்டாச்சு. நால்வர் கொண்ட நூறு ரீம் பங்குபற்றுது. மத்தியஸ்தர்கள் ஒருவர் தவறாமல் அனைவரும் வர சம்மதிச்சு விட்டாங்கள். வெளியூர் கழக வீரர்கள் தங்கப் பாடசாலை ஒன்றில் இடவசதி செய்தாச்சு. இரண்டு வொலிபோல் கோட்
நூல்: கைவிளக்கு (கருத்துரைகள்)
ஆசிரியர்: பதியத்தளாவ பாறூக் பதிப்பு : 2014
இந்நூலில்
500
கருத்துரைகள் அடங்கியுள்ளன. அவை சிந்தனையைத் தூண்டும் அற்புத மணிகளாக அமைந்துள்ளன. “சமுதாயத் தெருவில் சந்தித்துக்கொண்ட பலதரப்பட்ட சமூக முகங் களின் அழுக்குகள், அவ லங்கள், கண்டு நின்ற கசப்புகள், உணர்வுகளின்
கை விளக்கு உடன்பாடுகள், ஆசிரியர் அனுபவித் தவைகளின் காக்க விளைவுகள்
បង))
21 Ne)
ஆகியவற்றின் பதிவுகள்
இவை. வாசித்துப் IA பயன் பெறலாம்.
TEE}}) 1 2:7-71 HY 100 ச]]t+F'
94ழேLitn L4
S) |

(Volley Ball Code) ஆயத்தம். தற்காலிக மின்சார இணைப்புக்கு காசு கட்டியாச்சு. ஒரு லட்சம் ரூபாய்க்கு கேடயங்களும் (Shield) பரிசுப் பொருட்களும் வாங்கியாச்சு. பொலிஸ் அனுமதி" எடுத்தாச்சு. ஒலிபெருக்கி, மின்விளக்கு (Focus* Light), படங்கு (Tent), சோடனை, ஆசனங்கள், மேசைகள், பாத்திரங்கள் எல்லாம் ஓடர் செய்தாச்சு. மூன்று நேர சாப்பாட்டுக்கும் குளிர்பானத்துக்கும் ஒழுங்குகள் செய்தாச்சு. சுற்றுப்போட்டி நடைபெற மூன்று நாள்தான் இருக்கு. முதல் நாள் காலை விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும் போட்டிகள் இரவிரவாக மின்னொளியில் நடைபெற்று மறுநாள் மதியம் பரிசளிப்புடன் முடிவடையும். என்னுடைய குரல் ஒலிபெருக்கியில் சுற்றுப்போட்டியை நிர்வகிக்கும்'
என்றவாறாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.
இப்புனைகதைகள் தவிர எஸ்.எல். எம்.ஹனீபாவின் 'மக்கத்துச் சால்வை' சிறுகதையில் சிலம்பாட்டம் குறித்த பதிவுகளும் நந்தினி சேவியரின் "தொலைந்து - போனவர்கள்' சிறுகதையில் மல்யுத்தம், கபடி விளையாட்டுக்கள் நடைபெற்ற மைதானங்கள் பற்றிய பதிவுகளும் இடம் பெற்றிருந்தமை நினைவில் வருகின்றன.
எனவே தொகுத்து நோக்குகின்ற பொழுது தமிழ்ப் புனைகதைகளில் உதைபந்தாட்டம், கிரிக்கெட், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களின் ஆடும் முறைகள், எவ்வாறு ஆட்டத்தினை மேலும் மெருகூட்டுவது, நடுவர்களின் ஒரு பக்கச் சார்பான தீர்ப்புகள், ரசிகர்களின் மனவோட்டங்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் குறித்த தகவல்கள் என்று பல்வேறு வகையினதான சித்திரிப்புக்களையும் மேற்கூறிய எழுத்தாளர்கள் பதிவு செய்ததை எடுத்துக்காட்டியுள்ளேன். எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை சார்ந்தவர்களில் படைப்பூக்க மனோநிலை அடையப் பெற்றவர்கள் அதுகுறித்த புனைவுகளில் நேரடியாக ஈடுபடுகையில் இத்தகைய படைப்புகள் இன்னொரு பாய்ச்சலை தமிழ்ப் புனைகதை உலகில் நிகழ்த்தும் என்று நம்பலாம்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 25
2இனம் சாட்சிகஅருக.
ஈAHHE AtteHHHHHHHEtihleheHEAH4hee 64
POOBALASIN
IMPORTERS, EXPORTERS,
STATIONER பூபாலசிங்கம் புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்
தலை6 இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11, இலங்கை. தொ. பே.: 24
கிளைகள் : 340, செட்டியார் தெரு, கொழும்பு 11 தொ.பே.: 2395665
இல. 309 A-2/3, காலி.வீ கொழும்பு 06 தொ. பே. : 4-51575, 2
புதிய வர
| புத்தகங்களின் பெயர்
பதிப்பாசிரியர்
1. காலந்தோறும் நாட்டியக்கலை
கார்த்திகா கணேசர்
2. தமிழ் இலக்கிய வரலாறு (சங்ககாலம் முதல் நாயக்கர்காலம் வரை) இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு (பிரித்தானியர் காலம்வரை)
கிருஷ்ணபிள்ளை நட
வாரார் "
3. எல்லாள் காவியம்
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
4. எந்தையும் நானே
ஆணி
5. சிறு கடன்
எஸ்.அமலநாதன்
6. திரையும் அரங்கும் :
கலைவெளியில் ஒரு பயணம்
அ. யேசுராசா
7. ஸ்ரீதரன் கதைகள்
8. அசுரன் (வீழ்த்தப்பட்டவர்களின்
வீர காவியம்)
ஆனந்த் நீலகண்டன் தமிழில் நாக லட்சுமி
9. எனது இலக்கியத்தடம்
தி.ஞானசேகரன்
10. வட இந்திய பயண அனுபவங்கள் தி.ஞானசேகரன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

GHAM BOOK DEPOT
SELLERS & PUBLISHERS OF BOOKS, S AND NEWS AGENTS.
புத்தகசாலை
குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
மை : -22321. தொ. நகல்: 2337313 மின்னஞ்சல்: pbdho@sltnet.lk
இல.4A, ஆஸ்பதிரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
504266
Tவுகள்
பதிப்பகம்
விலை
பூபாலசிங்கம் பதிப்பகம்
450 - 00
ராசா
பூபாலசிங்கம்பதிப்பகம்
200 - 00
அன்னை வெளியீட்டகம்
600-00
மித்ரா
675-00
400.00
காலச்சுவடு
843-75
காலச்சுவடு
2812-50
சண்முகம்)
மஞ்சுள்
1481-00
ஞானம் பதிப்பகம்
500-00
ஞானம் பதிப்பகம்
300-00
23 *

Page 26
ஹைக்கூ கவிதைகளின் தாயகம் ஜப்பான். அண்மையில் சிங்கரு - கு என்றொரு வகைக் கவிதைகளை வாசிக்கக் கிடைத்தது. இது ஜப்பானிய ஹைக்கூவின்
அவுஸ்திரேலிய வடிவம் எனப்படுகிறது.
அவுஸ்திரேலியாவிலுள்ள
சிங்கள் சகோதரர்கள் "கெடபத்த” (கண்ணாடி) என்றொரு பத்திரிகையை வெளியிடுகின்றனர். இதிலிருந்துதான் இந்த “சிங்கரு கவிதைகளைக் காணக்கூடியதாக இருந்தது.
கு”
"சிங்கரு-கு” பற்றி ஓர் அறிமுகம்
ஜப்பானிய ஹைக்கூ
கவிதைகள் அடிப்படையில் சுற்றுச்
சூழலை கருப் பொருட்களாகக்
கொண்டே படைக்கப்படுகின்றன. ஹைக்கூ படைப்பு களின்போது இயற்கைக்கு
முதலிடம் வழங்கப்படுகிறது. சுற்றுச் சூழலுடன் வாழக்கூடியதானதும் அன்றாடம் காணக் கூடியதுமான மென்மையான காட்சிகளுக்கு கடுமையான அர்த்தங்களைக் கற்பிக்கக் கூடிய படைப்புகளை தரக் கூடியளவு ஹைக்கூ கவிஞர்களது ஆற்றல் அமையப் பெறுகிறது.
இலங்கைக் கவிஞர்கள் இவ்வாறான கருப்பொருட்கள் தொடர்பில் தங்களது அவதானங்களைச் செலுத்துவதை விட,
"சிங்கரு அவுஸ்திரேலிய சாரு
உண்மை நிகழ்வுகளுக்கே
முதலிடம் வழங்குகின்றனர்.
இ மன்சுவா பாஷோ சிறந்த ஜப்பானிய ஹைக்கூ கவிஞர். இவரது மாணவர் ஒருவர் ஒரு நாள் இப்படி ஒரு கவிதையை எழுதினார்.
"சிட்டுக் குருவிகளில் எடுங்கள் சோழ சிறகு இதோ ஒரு மிளகு”
இந்தக் கவிதையைப் படித்த பாஷோ தனது மாணவருக்குக் கூறினார்:-
"உண்மையிலேயே நீ திறமையானவன். அபூர்வமானதொரு கவிதை - எழுதி இருக்கிறாய். என்றாலும் வேதனை என்ன என்றால், நீ நல்லதொரு கவிஞனல்ல. இயற்கையை சிதைப்பது நல்லதொரு கவிஞனின் வேலை - அல்ல. - மானுட 24

வர்க்கத்திற்காக இயற்கையை மிக நல்ல முறையில் ஒழுங்கமைத்துக் கொள்வது ஒரு நல்ல கவிஞனின் பணியாகும்.”
இதன் பின்னர் மேற்படி கவிதையை . பாஷோ இவ்வாறு எழுதினார்.
“பழுத்த ஒரு மிளகுக்கு கொடுங்கள் சோடி சிறகு இதோ சிட்டுக் குருவி”
19ம் நூற்றாண்டில் ஜப்பானில் வாழ்ந்த சிறந்த ஹைக் கூ கவிஞர் இசா. இவர் அடிக்கடி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர். இவர் எழுதிய இரு கவிதைகள் இவை:-
"எனது நட்சத்திரம்
இரவில் தங்கி இருப்பது எங்கே?” "அட்டா சிறு நத்தைகளே ஏறுங்கள் பூஜி மலை கவனம் மெல்ல - மெல்ல"
இந் நிலையில் "கெடபத்த" பத்திரிகைளில் சிங்கள கவிஞர்களால் எழுதப்பெற்ற "சிங்கரு - கு” கவிதைகள் சில:-- "காய்ந்த மேபல் மட்டையில்
வர்ணம் வீசும் முள்ளுக்கு” - திலினி ஈரியவல
- கு”
இப்னு அஸிமத்
தகள் ஹைக்கூ 5
"குளிர் பூமியை முத்தமிடும் சுட்டியான நரை மயிர் ஆட்டக்காரி
- சாமந்த
"மூடி வானம் மீது வரையும் ஓவியம் மாலை டெங்டினொத் மலை மேல் நடிக்கும் தூரிகை தனிமையில்”
- சாகர இத்தவல “இருந்து பெட்டியின் மூலைக்
கதிரையில் வயோதிபர் வசிக்கிறர்எல்னபுத்தகங்களும் தனியே
திமிர வினிவித
"10, 1:"கம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 27
"ஆழத்திலிருந்து வடிகட்டி எழுந்த கடல் மஞ்சல் சூரியன் கதிர்மேல் நீந்தி நீந்தி சிரித்தது பெண் குருவி
- திமிர வினிவித
"சூரியன் கதிர் பிரித்து நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் வானவில்”
திலினி ஈரியவல
இதற்கு சிங்கரு - கு என்று ஏன் பெயர் வந்தது என்றால் - அவுஸ்திரேலியாவை கங்கரு தேசம் என்றே சிங்கள மக்கள் பொதுவாகக் கூறுவர்.
எனவே, சிங்களவர்களால் கங்கரு நாட்டில் எழுதப்பட்ட ஹைக்கூ என்பதால் சிங் - கரு -
கு என்ற பெயர் வந்துள்ளது.
0 0 0
நூல்: சுதேச மருத்துவம் பற்றிய
இலங்கைத் தமிழ் நூல்கள் ஆசிரியர் : கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் வெளியீடு: குமரன் புத்தக இல்லம்
“சித்த வைத்தியர்கட்கே உரித்தான நூல்களான 'பரராசசேகரம்' 'செகராசசேகரம்' 'அமுதாகரம்; போன்ற நூல்கள் ஆயுர்வேத நூல் களாகும். அஷ்டாங்க இருதயம், மாதவ நிதானம், சரஹசம்கிதை போன்ற நூல்களோடு வரலாற்று ரீதியாக, அடிப்படை ரீதியாக, விஞ்ஞான ரீதியாக, இலக்கிய ரீதியாக, இறையியல் ரீதியாக
ஒப்பீடு செய்திருப்பது இந் நூலிற்குத் தனிச்சிறப்பைத் தருகிறது. இலக்கியத்தை, பக்தி இலக்கியத்தை,
சுதேச மருத்துவம் பற்றிய மருத்துவத்தைப்பற்றிய
இலங்கைத் தமிழ் நூல்க தெளிவினை இந்
பெல்லகவசம் அலறல் நூலில்
காண முடிகிறது.
வயாவும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

ஆழ்ந்த உறக்கம் தரும் அதிகாலைப் பொழுதாக எங்கும் பேரமைதி எதிலும் அமைதிப் போர்
இனிவரும் நாளையில் ஏதோ நடக்கப்போகிறது மதக் கலவரமாகவோ மனக்கலவரமாகவோ இருக்கக்கூடும்
(606
உடும்புப் பிடியாய் பிடிவாதம் தளராமல் கடும் பகைக்கு முகம் காட்டி விடாப் பிடியில் தப்புத் தப்பாகவே தவறுகள் தொடரும்
ஆனாலும் இடையிடையே அமைதி நதியோடுவது ஆச்சரியம் ஆகும் அடுத்து என்ன நடக்கும் எடுத்து எதை ஒழிக்கும் கொடுத்ததுகிடைக்குமா? கிடைத்ததும் பறிக்கப்படுமா?
கெஞானராசா
அமைதிக்குப் பின் புயலும் புயலுக்கு முன் அமைதியும் மறநானுறு வரை இதுவாக நியதி உள்ளது!
தொன்றுதொட்டு ஒன்றுவிட்டு ஒன்றுகெட்டு ஒன்று படாமலே நின்று குழப்பம்நிலவும் திருநாட்டில்! அடுத்து நடக்க விருப்பதை வெளிக்காட்டாயோ அதற்காக அநாவசியஅமைதியே விலகிப்போ!

Page 28
HE ||
செடுக் ெஒன்றுேம் பக்கம்
அடர்ந்துகிடந்த - முள்ளுக் காட்டை வெட்டிச் சாய்த்து, காய்ந்ததும் அதனை நெருப்புக்கு உணவாக்கி, பின் அரைகுறையாக எரிந்த அடிக்கட்டைகளோடு காட்சி தரும் அந்தப் பெருவெளி நிலத்தைச் சுற்றிவர சரவேலி அடைத்து, ஐப்பசி மாத மழையின் புழுதிமண் வாசத்தில் ஒரு பக்கம் மையரும் மறுபக்கம் சோழனும் போட்டு அவை இரண்டும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு பனியிலும் மழையிலும் செழித்து வளரும் பாங்கினைக் கண்டு அள விலா ஆனந்தம் அடைந்த அப்பு, தனது சேனை யின் மத்தியில் தான் போட்ட புரையின் கீழ் சப்பாணி கட்டி அமர்ந்திருக்கிறார்.
அப்புவின் பக்கத்தில் அவரது வாழ்க்கைத் துணைவள்ளி அப்போது தான் இழுத்தெடுத்த ஒரு பாத்திமையர்க் கிழங்கைத் தோல் உரித்து வெட்டிக் கழுவி ஒரு அண்டாவில் போட்டு அவிக்கின்றாள்.
காட்டுக் கொள்ளியில் மூண்டெழும் கனலில் விரைவாகக் கிழங்கு அவிந்துவிடும் என்று கருதிய வள்ளி , அடுத்த வேலையாகத் தனது புருஷனுக்கு மிகவும் பிடித்தமான இறால் கருவாட்டுச் சம்பல் இடிப்பதற்காக உரலைத் துடைத்து நிமிர்த்தி வைத்துவிட்டு தேங்காய் துருவுகிறாள்.
தேங்காய் துருவி முடிந்ததும் கிழங்கு அடுப்பிற்குப் பக்கத்தில் இருந்த இன்னுமொரு அடுப்பில் இரண்டாக உடைந்த ஒரு ஓட்டுப் பாதியைத் தூக்கிவைத்து அதில் கருவாட்டைப் போட்டு பக்குவமாக வறுக் கின்றாள். கருவாட்டின் மணம் அப்புவின்
மூக்கைத் துளைத்தெடுக்கிறது.
கருவாட்டுமணத்தால் கவரப்பட்ட அப்பு, தனது அன்புக்கினியவளின் பக்கம் திரும்பி
26

வாகரைவாணன்
தனது முப்பத்தியிரண்டு சேங்குப் பல்லையும் வெளியில் காட்டியபடி கொன்னிக் கொன்னிச் சொல்கிறார். மையர்க்கிழங்கு இறால் கரு வாட்டுச் சம்பல் சோக்கா இருக்கும்... இண் டைக்கு ஒரு வெட்டு வெட்டலாம்.
கணவனின் திக்குவாய்ப் பேச்சில் வழிந் தோடிய ஆசையைக் கண்டு கொடுப்புக்குள் . சிரித்துக் கொண்ட வள்ளி , கிழங்கோடு பகல் பொழுதுபோயிரும்... இரவைக்கு ஆட்ட மாப்புட்டு இல்லாட்டி றொட்டிதான் என்கிறாள்.
இரவுச் சாப்பாட்டைப் பற்றி தனது சகதர்மபத்தினியின் முன்னறிவித்தலுக்குக் காதுகொடுத்த அப்பு, புட்டுத்தான் அவி... நான் ஆத்துக்குப் போய் அஞ்சாறு கொய்மீன் குஞ்சு வீசித்துவாறன்... ஆணம் வைச்சாப் புட்டுக்குக் கலாதியாக இருக்கும் என்று செழித்து வளர்ந்த சேனைப் பயிர்களைப் பார்த்தபடி கொன்னிக் கொன்னிச் சொல்லி விட்டு, குடத்தடியில் கையை அலம்பிக் கொண்டு மதியபோசன விருந்திற்கு ஆயத்தமா "கின்றார்.
கணவனைச் சாப்பிட விட்டுவிட்டு வாழைச்சேனை மம்முறாயன் காக்காவிடம் நாலுசுண்டு மஞ்சள் சோளன் பருப்பும் ஒரு பாரைக் கருவாடும் கொடுத்து வாங்கிய மண்குடத்தை எடுத்துக் கொண்டு துரவுப் பக்கம் போன வள்ளி, அங்கு ஓலைக் கூந்தலை விரித்துப் போட்டுக் கூட்டமாக நிற்கும் கரும்புப் பெண்களின் அழகில் ஒரு கணம். கிறங்கிப் போகின்றாள். ஆயினும் இந்தக் கிறக்கம் சாப்பிடும் கணவனின் நினைவினால் தெளிவுபெறவே தண்ணீர்க் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு வேகமாகப் புரைக்குத் திரும்புகிறாள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 29
வயிறுமுட்டச் சாப்பிட்ட அப்பு, ஒரு பெரிய ஏவறையோடு எழுந்து வாலை ஆட்டிய படி படுத்திருக்கும் தனது வேட்டை நாய் வீமனுக்கு ஐந்தாறு கிழங்குத் துண்டுகளோடு சம்பலும் வைத்துவிட்டு குடத்தடியில் பீங்கானைக் கழுவி தண்ணீர் குடிக்கின்றார். துரவுத் தண்ணீர் அவர் வயிற்றைக் குளிர்விக்கின்றது.
மருதம் கமகமக்கும் மட்டக்களப்பின் வடக்கில் உள்ள கிராமங்களில் தட்டு முனையும் ஒன்று. அப்புவையும் அவர் மனைவி வள்ளியையும் பெற்றெடுத்த புண்ணியபூமி அது. இதையிட்டு அதிகம் பெருமையாக அப்பு கொன்னிக் கொன்னிக் கதைப்பதுண்டு.
அப்புவுக்கு அவரது ஊர் தான் உலகம். இந்த உலகத்தை விட்டு எனது சொர்க்க லோகத்துக்கு வா என்று கடவுளே நேரில் வந்து அழைப்புவிடுத்தாலும் அப்பு அசைய மாட்டார். அப்பு என்ன அந்தக் கிராமத்து மக்களில் ஒரு குழந்தை கூட அசையாது. அசைய எப்படி மனம் வரும்?
ஆற்றோரம்... பாளை, இளநீர்க்குலைகள். தேங்காய் என்று பல்வேறு சுவை அமுதங்களை ஏந்தி வருவோருக்கு விருந்து படைக்கக் காத்து நிற்கும் தென்னைகள் . விரிந்துகிடக்கும் ஓலை மெத்தையில் அமர்ந்து கதைபேசி மகிழும் கிளி, குருவிகள்... பின்நேரத்தில் காலை நீட்டிக் கொண்டு படுத்திருப்பதற்கேற்ற சொருசொரு மணல்... கொழுத்த பன்றி இறைச்சி . . சோழன் புட்டு... எருமைத் தயிர்.... தேன்... இப்படித் தனது கிராமத்தில் உள்ள எத்தனையோ சுவை அமுதங்கள் கடவுள் வாழ்வதாகச் சொல் லப்படும் சொர்க்கபுரியில் கிடைக்குமா? உண்மைச் சொர்க்கமாகிய தனது கிராமத்தை விட்டு வெளியேற அப்புவுக்குப் பைத்தியமா பிடித்துவிட்டது?
அப்புவுக்கு இப்போது வயது அறுபது. நல்ல உயரம். ஆறு அடியாவது இருப்பார். அமாவாசைக்கும் அவர் நிறத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சிலுப்பியபடி தோன் றும் அவரது கேசம் தேங்காய் எண்ணெய் படாவிட்டாலும் கன்னங்கரேர் என்றே காட்சி தரும். இந்த வயதில் அவரது தலையில் ஒரு வெள்ளைமயிர் கூட இல்லாமல் இருப்பது தான் பெரும் அதிசயம். வட அறுபதிலும் ஒரு இளைஞன் போல்
தோற்றம் தரும் அப்புவுக்கு அவரது "கொன்னை" இயற்கை தந்த திருஷ்டி பரிகாரம் என்பது தான் மற்றவர்களின் எண் ணம். ஆனாலும் அப்புவுக்குக் கோபம் வந்து விட்டால் அந்தக் கொன்னை இருக்கிற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

தீயிற் கருகுது இயற்கை - அழுக்கு நீரில் மூழ்குது நிலம் பச்சை வாயிற் சேர்வது எல்லாம் செயற்கை வயிற்றுக்குள் போவதும் நஞ்சே..
கோயிற் பொருளும் கொள்ளை போகுது குவலயம் ஒன்றாகுது என்றே பேச்சு தாயிற் பெரிதென மதிக்கும் பூமி தரிசாகிப் போகுது ஐயோ பாரும்..
காணற் கரிய எம்பூமிதான் கருகிடச் சித்தமாமோ - அதனைப் பேணத் தலைப்பட வேண்டாமோ படித்தவர் தான்பேசத் தடையுளதோ.
பெயர்:
எங்க கட்டிப் பயம்
மாணப் பெரியது விவசாயம் அதன் மகிமைதான் அறியீரோ மக்காள் பூண வேண்டும் சபதமிந்தப் பூமிப் பந்தின் நலம் பேணவேண்டும்..!
பயட் HHHHHA
===
24E EEE.
மாறுகின்ற உலகினில் மக்கள் மாற்றமொன்று காண்பதற்கு உதவும் சாறுகொண்ட படைப்புகள் தான் சந்தைக்கு வரவேண்டும்தோழா..!
மாற்றம் வேண்டா!
6.5.இளங்கோவன்
பிரான்ஸ்
27.

Page 30
இடமே தெரியாமல் போய்விடும்.
அப்புவுக்குச் சோறு இல்லாவிட்டாலும் சுருட்டு அல்லது வெற்றிலை பாக்கு கட்டாயம் வேண்டும். பாடசாலைக்குப் போகின்ற வயதில் காலையில் தண்ணீர்ச் சோற்றோடு தயிரும் சேர்த்து ஒரு பிடிபிடித்துக் கொண்டு மண்வெட்டியையும் கோடரியையும் கையில் எடுக்கத் தொடங்கியதால் அப்புவின் கைகால் நரம்புகள் எல்லாம் முறுக்கேறி சதையைப் பிய்த்துக் கொண்டு வெளியே வரப் பார்ப்பது போல் தோற்றம் தரும். இந்த வயதிலும் அப்பு இளைஞனாக இருப்பதன் மர்மம் இதுதான்.
அப்புவுக்கு நான்கு மக்கள். அந்த நான்கு மக்களும் பெண் மக்களாகப் பிறந்ததையிட்டு அவர் என்றைக்குமே அலட்டிக் கொண்டதில்லை. அதேவேளை படைத்தவனுக்குத் தெரியும் படி அளக்க என்ற பழமொழியை நம்பிக் காலை நீட்டிப் போட்டு இருக்கவும் அவருக்குத் தெரியாது. உழைப்பு.... உழைப்பு .. இது ஒன்றுதான் அப்புவுக்குத் தெரியும்.
நான்கு பெண் மக்களும் இன்று பிள்ளை குட்டிகளோடு இருப்பது கண்டு அப்புவுக்குப் பெரும் சந்தோஷம். ஒரு மனிதன் வாழ்நாளில் காணவேண்டிய செல்வம் இதுதான் என்று தனது மனைவி வள்ளிக்கு அடிக்கடி கூறும் அப்பு, இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது தனது வாரிசுகளுக்காகத்தான்.
வாழைச்சேனையில் இருந்து தட்டு முனைக்குச் சைக்கிளில் வரும் பொட் டணிக்காரன் மம்முறாயன் காக்காவின் வாடிக்கையாளர்களில் அப்புவும் ஒருவர். சித்திரை வருடப் பிறப்பிற்கு இந்தக் காக்காவிடம் இருந்துதான் அப்பு தனக்கும் தனது மனைவிக்கும் உடுபுடைவைகளை வாங்குவார். ஆனால் அப்போது தனது பேரப் பிள்ளைகளுக்கு வாங்காவிட்டால் அவர் தலை வெடித்துப் போய்விடும். வாரிசுகளும் அவரைச் சுலபத்தில் விட்டுவிடமாட்டார்கள். - அப்பு தான் வாழும் உலகத்தை விட்டு சிலசமயம் சாமான் வாங்குவதற்காக தெற்கே இருபது மைல் தொலைவில் உள்ள ஓட்டமாவடி அல்லது வாழைச்சேனைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதுண்டு. அப்படி நேரிட்டால் சாமான் வாங்கிய கையோடு அடுத்த பஸ்ஸில் ஊருக்குப் புறப்பட்டுவிடுவார். அதுவரை அவரது நிலைமை நீரில் இருந்து வெளியே போடப் பட்ட மீனைப் போலத் தான்.
தட்டுமுனைக் கிராமம் முழுவதும் ஒரு வேரும் அந்த வேரின் மரமும் கிளைகளுமாக
28

இருந்தாலும் அப்பு மற்றவர்களிலிருந்து பெரிதும் வித்தியாசமானவர். இந்த வேறு பாட்டிற்குக் காரணமே அவரிடமிருந்த கலை உணர்வு தான்.
அப்பு ஒரு பிறவிக் கவிஞர். இந்த உண்மையை ஊரில் உள்ளவர்களிடம் யாராவது சொன்னால் "அந்தக் கொன்னை யனா" என்று ஒரு மாதிரியாகக் கேட்கத்தான் செய்வார்கள். அந்தச் சமயங்களில் அப்பு 'வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்' என்ற சினிமாப் பாட்டைத்தான் பதிலாகச் சொல்வதுண்டு.
நினைத்த போதெல்லாம் கவிமழை பொழிவதில் அப்புவுக்கு நிகர் அப்புதான். இதில் ஒரு போட்டி வைத்தால் அந்தக் காலத்து கவிகாளமேகம் உயிர்பெற்றுவந்தால் கூட அப்புதான் வாகை சூடுவார்.
அப்புவை ஒரு கவிஞனாக்கியவை அவரது கிராமத்தைத் தொட்டுக் கொண்டு ஓடும் ஆறும் மற்றும் குளங்களும் வயல்களும் தான். இந்த இயற்கை அழகைக் காணும் போதெல்லாம் அப்பு என்ற காளமேகம் தானாகவே கவிமழை பொழியும்.
கவிமழை பொழியும் அப்புவின் குணங் களும் ஒரு கவிஞனுக்குரியதாகவே இருந்தன. கொடுமை கண்டு கொதிப்பது, ஏழை எளியவர்களுக்கு இரங்குவது, தனிமையை நாடுவது, பழமையோடு சண்டை பிடிப்பது.
இந்தக் குணங்கள் தான் அப்புவை அவரது சொந்த ஊரிலேயே ஓர் அன்னியனாகக் காட்டின. ஆனாலும் அப்பு இந்த அன்னியம் பற்றி அலட்டிக் கொண்டதே இல்லை. ஏனென்றால் அவரது உலகம் தனி. அதற்குள் வேறு யாரும் நுழையமுடியாது.
அப்பு அன்று வழக்கம் போலத் தனது வீட்டின் முற்றத்தில் மல்லாந்து படுத்திருக்கின்றார். மேலே சித்திரைப் பூரண நிலவு வானத்தை மட்டுமன்றி பூமியையும் தனது வசமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கொருதடவை வானில் நடைபெறும் இந்த ஒளிவிழாவில் பூமியும் பூரித்துப் போகின்றது.
இனிய இந்தச் சூழலில் திளைத்த அப்புவிடமிருந்து தானாகவே கவிமழை பொங்கிப் பொழிகின்றது. அப்புவுக்கு இயல் பாகவே நல்ல சாரீரம். தட்டுமுனைக் கிராமம் முழுவதுமே தனது பிறவிக் கவிஞனின் கவிமழையில் மூழ்கிப் போகின்றது.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 31
வியாபாரத்தில் முழுக்கவனத்துடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார் வேலாயுதத்தார். அக்கடையில் முதலாளியும் அவர்தான். * சிப்பந்தியும் அவர்தான்.
பத்துப்பத்தரை மணிக்கு
கடை களைகட்டத் தொடங்கினால் மத்தியானம் ஒருமணிவரைக்கும் சனம் குறையாது. பலசரக்குக்கடையென்றபடியால்
ப மதிய உணவுக்குரிய பொருட்களை வாங்குவதற்காக குறைந்தது ஏழெட்டு வாடிக்கையாளருடனாவது கடை கலகலப்பாக இருக்கும்.
குடியிருக்கும் வீட்டுடன் இணைந்துள்ள இந்தக்கடையை சாப்பாட்டிற்காகவும், சற்று ஓய்வெடுப்தற்காகவும் பி.ப மூன்றுமணியளவில் மூடினால் மாலை 4.30 மணிக்குத்தான் திறப்பார். இந்த இடைவேளையில் ஏதும் அவசியத்தேவைக்காயினும் திருஞான சம்பந்தரே நேரில் வந்து தேவாரம் பாடினாலும் அது திறவா நெடுங்கதவம்தான் என்பது சூழலில் உள்ளவர்களுக்குத் தெரியும்.
இரவு பத்துமணிக்குக் கடையை மூடினால் அதற்குப் பின்வருபவர்களுக்கும் அதே நிலைதான். முன்பு ஒன்பது மணிக்குக் கடையைப் பூட்டினால் காத்திருந்து ஒன்பதுமணிக்குப் பிறகுதான் வந்து "வேலாயுதண்ணை வேலாயுதண்ணை'' என்று கூப்பிடுவார்களாம். கதவையும் தட்டுவார்களாம். பனடோல், பேபிக்கொலோன், கிறேப்வாட்டர் இப்படி ஏதோ ஒன்றுக்காகத்தான் என்று கதவைத்திறந்தால்
கதவைத்தட்டியது
(உலகம்
NA
கொற்றை பி. கிருஷ்ணால
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

வேறொன்றுக்குமில்லை. மிக மிக அத்தியாவசியமான சிகரெட்டுக்காகத்தான். இந்த ஆய்க்கினைக்காக கடைமூடப்படும் நேரத்தை 9.30 ஆக மாற்றப்போக பின்னர் 9.40 - 9.45 க்கு வந்து கதவைத் தட்டுவார்களாம் அதனால் கடை மூடப்படும் நேரம் இரவு பத்துமணியாகியது. பத்து மணிக்குப் பிறகு கவர்னரே வந்தாலும் கடையைத் திறக்க மாட்டேன் என்பார். வேலாயுதத்தார்
கண்டபடி
கடன் கொடுக்கமாட்டார். ஆரவாரத்துடன் திறப்புவிழா செய்து கடையைத் தொடங்கியவர்கள் கண்டபடி கடனுக்கு வியாபாரம் செய்து மிக விரைவாக கடைக்கு மூடுவிழா செய்த கதைகளை அவர் அறிவார். கடன் தராத ஆத்திரத்தில் ஒருசிலரால் தனக்கு 'கஞ்சன் வேலாயுதம்' எனத் திருநாமம் சூட்டப்பட்டிருப்பதையும் அவர் அறிவார். அவர் இதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை. எந்தச் சந்தர்ப்பத்தில் யார் யாருக்குக் கடன் கொடுப்பார் என்பதையும் அவர் யாருக்கும் சொல்லிக்கொள்வதில்லை. அவருக்குகென்று ஒரு நியாயம் வைத்திருப்பார்.
வேலாயுதத்தார் கறாரான பேர்வழி என்றாலும் அவரது கடைக்கு வாடிக்கை யாளர்கள் அதிகமாக வருவதற்கு அவரது நியாய விலைதான் காரணம். பக்கத்தில் கூட்டுறவுச்சங்கக் கிளையிருந்தும் இவரிடம் சனம் வருகிறதென்றால் ஒரு காரணமிருக்கத்தானே வேண்டும்.
இன்று நண்பகலிலிருந்து நேரம் இரண்டு மணியாகியும் கடை வாசலின் முன்படியில் ஓரமாக, சனம் கலையும் வரை கந்தசாமி காத்திருக்கிறான். நெடுநேரமாக மிகவும் பவ்வியமாக அவன் உட்கார்ந்திருப்பதை தனது வியாபார நெருக்குவாரத்திற்குள்ளும்
எந்தன்
29,

Page 32
அவதானித்துக்கொண்டிருந்த வேலாயுதத்தார் அவன் ஏதோ கடன்கேட்கத்தான் இருக்கிறான் என்பதை அனுமானித்துக் கொண்டார்.
"கந்தசாமி ........... கடையைப் பூட்டிற நேரமாகுது .. ஏன் இருக்கிறாய் சொல்லு”
எழும்பி வந்தான் கந்தசாமி "அண்ணை... மூண்டுநாளா தொழிலில்லை. இரண்டு நாள் எப்படியோ சமாளிச்சுப்போட்டம். இண்டைக்கு காலமை பாணுக்கும் வழியில்லை. பெடியள் பட்டினி... ஒரு அறுநூறு ரூபாவுக்கு அளவாகக் கடன் தாங்கோ அண்ணை. ரண்டு மூண்டு நாளைகுள்ள கொண்டு வந்து தாறன்.”
கந்தசாமி வேலாயுதத்தாரின் நாளாந்த வாடிக்கையாளனல்ல. என்றாலும் “பிள்ளைகள் பட்டினி” என்ற வார்த்தைகளைக் கேட்டதும் மனமிரங்கிவிட்டார். கந்தசாமியினுடைய தமையன் தங்கராசா இப்படியான வசனங்களைப் பாவித்து முந்நூறுரூபாவுக்கு சாப்பாட்டுச் சாமான்கள் கடனுக்கு வாங்கிக்கொண்டு போய் அயலிலுள்ள ஒரு வீட்டில் கொடுத்து விட்டு, காசை வாங்கிக் சாராயம் வாங்கிக் குடித்த சம்பவம் இவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. அந்தக் கடனும் இன்னும் அடைப்பு விடவில்லை.
என்றாலும் கந்தசாமிக்கு கடனாகப் பொருட்களை வழங்க வேலாயுதத்தார் முன்வந்தார்.
"சரி என்னென்ன வேணும் சொல்லு.''. “இரண்டு கிலோ அரிசி....'' "ம்ம் '' “இரண்டு கிலோ கோதுமைமா...'' "ம்ம்...'' “அரைக்கிலோ சீனி.....” "ம்ம்...... “ஒரு தேயிலைப் பைக்கற்...” "ம்ம். "ரண்டு தேங்காய்....'' “ம்ம்.... "பற்பசை சிக்னல் சின்னது ஒண்டு...''
197
"ம்ம்... ”
"சேவ்எக்சல் பவுடர் சின்னது
ஒரு பைக்கற்...''
"ம்ம்”
கந்தசாமி சொல்லச் சொல்ல "உம்" ! கொட்டிக்கொண்டே வேலாயுதத்தார் பொருட்

99
களை உடனுக்குடன் மேசைமீது வைத்துக் கொண்டிருந்தார்.
"ம் வேறை "நூறு ரூபாவுக்கு ஒரு டயலொக் - காட்டும், இந்தக் கன்டோஸ் சொக்கிலேற் - நூறுரூபாவான் ஒண்டும் தாங்கோ”
வேலாயுதத்தாரின்
முகம்
தீடீரென மாற்றமடைந்தது.
"டேய்........ நீயும் உன்ரைமனிசியும் தின்னுறதெண்டாலென்ன.. உன்ரைபிள்ளையள் தின்னுறதெண்டாலென்ன, காசு கையிலை இருக்கிற நேரம் சொக்கிலேற்றை வாங்கித் தின்னுங்கோ...... காசிருக்கேக்கை போனிலை கதையுங்கோ...... இப்ப உந்தச் சாமான்களை எடுத்துக்கொண்டு வீட்டைபோய்ச் சேர்..... கடன்கணக்கு நானூற்றி ஐம்பத்தெட்டு ரூபாவையும் நாலைஞ்சு நாளைக்குள்ள கொண்டுவந்து தா”
சொல்லிக்கொண்டே கடையைப் பூட்டு வதற்குரிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.
0 0 0
நூல்: திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை ஆசிரியர்: தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா வெளியீடு: கொடகே நிறுவனம் விலை : ரூபா 600/-
இந்நூலில் 40 விமர்சனக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை கவிதை நூல்கள், நாவல்கள், சிறுவர் இலக்கியம், ஏனையவை எனத் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. நூலில் ஆசிரியை ரிஸ்னா, தான் வாசித்த நூல்களில் காணப் படும் விடயங்களை ஆழ மாகவும், நேர்த்தியாகவும்
திறந்த கதவுள் தெரிந்தவை
ஒருபார்வை எளிமையான தமிழ் - நடையில் தந்துள்ளார்.
அண்மைக்காலத்தில் A வெளியான பல A நூல்களின்
ஓர் இரசனைக்குறிப்புத் திரட்டாக இந்நூல்
அமைந்துள்ளது.
தியத்தலாம்ம்ரிஸ்னா
{ (1 N \
ரா wெeiw |
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 33
* பூமிதோஷம்
V9ல்
அந்தச் சிறிய சந்தியில் பாழடைந்த ஒரு கொட்டில். பதினேழு பதினெட்டு வயது மதிக்கத்தக்க பொடிப்பயல்கள் சிலரைத் தினந்தோறும் மாலைவேளையில் அங்கு காணலாம். தென்னோலைக் கொட்டிலில் சிறிய பலகை வாங்கில் அமர்ந்தபடி அவர்கள் கதையளந்து கொண்டிருப்பார்கள். பாதுகை - ஹொரணை பஸ் நிறுத்தப்படுவதும் அதனருகேதான். கிராமத்துக்குள் செல்லும் சிறிய பாதை ஆரம்பிக்கும் இடத்திற்கு வலப் பக்கமாக அமைந்துள்ள இந்தக் கொட்டிலில் முன்பு சொன்ன சிலரைத் தவிர்த்தால், நிரந்தர மாக அங்கு காணக்கூடியது கட்டாக்காலி நாய்கள் மாத்திரமே.
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு மரக்கறிக் கடையாகவே இந்தக் கொட்டில் உருவாக்கப்பட்டது. சந்தையில் விற்று எஞ்சிய மரக்கறிகளை இங்கு வைத்து விற்பனை செய்வதே பண்டார ஐயாவின் எண்ணமாகவிருந்தது. இருந்தும் எடுப்புத் தன்மை கொண்ட ஓரிருவர் வந்தார்களே தவிர, மதிக்கத்தக்க மனிதர்கள் அங்குவராததால்
அது அப்படியே கைவிடப்பட்டது.
அந்த இடம், கொட்டில் இவற்றின் சொந்தக்காரரான பொடிராலஹாமி உடனடியாக ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

மொழிபெயர்ப்புச்
சிறுகதை சிங்கள மூலம்: கீர்த்தி வெலிஸரகே
தமிழில்; திக்வல்லை கமால்
அங்கு விறகு வியாபாரத்தைத் தொடங்கினார். மரக்கறி இடும் பெட்டியமைப்பு அகற்றப்பட்டு அந்த இடத்தில் விறகு பிளக்கும் ஏற்பாட்டைச் செய்தபின் கொட்டிலின் இருபக்கமாகவும் இரண்டு வாங்குகள் எழுந்தன. இரண்டொரு மாதத்தில் விறகு மடுவம் வங்குரோத்தானபின் அந்த இடத்தில் வியாபாரம் செய்ய எவரும் முன்வரவில்லை. அந்த இடத்தில் ஏதோ பூமிதோஷம் இருப்பதாகவும் அதற்கு
வைரவர் பூஜையொன்று நடத்தாதவரையில் எதுவுமே அங்கு சரிப்பட்டுவராதென்றும் ஒரு கருத்தோட்டம் நிலவியது.
பரீட்சை எழுதிவிட்டு
பாடசாலை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்த சுனிலும் காமினியும் முதலில்
இந்த தங்குமிடத்திற்கே மாலை வேளையை கழிக்க வந்தனர். அவர்களது வீடுகளும் சந்திக்கு அருகாமையிலேயே காணப்பட்டன. பஸ் வண்டிகளிலிருந்து இறங்குவோருடனும், நகரத்திற்குச் செல்ல வருவோருடனும் கதைத்து சல்லாபித்தனர். இரண்டொரு வாரம் செல்லும்போது இன்னும் நாலைந்து பேர் வரப் பழகிவிட்டனர். விக்ரம் பால, அமரஸிரி, தயாரத்ன குமாரதாஸ் போன்றோரே அவர்கள்.
இக்குழுவினர் இந்த
இடத்தை வெகுவாக விரும்பியதோடு அதன் புதிய உரிமையாளர்களாகவும் மாறியிருந்தனர். பலகைச் சுவரில் ஆணியடித்து தங்களது
சேர்ட்டுகளை கொளுவ ஒழுங்கு செய்து கொண்ட னர். அதுமட்டுமின்றி சங்கீதக் கச்சேரிகளின்
31

Page 34
விசாலமான போஸ்டர்களை எங்கிருந்தோ கொண்டுவந்து ஒட்டி அலங்கரிக்கவும் செய்தனர். கொட்டிலின் அருகாமையில் பெரு வீதிக்கு முகம்காட்டி பொருத்தப்பட்ட சினிமா விளம்பரப் பலகையைக் கவனமாகப் பார்த்துக் கொள்வதும் அந்த அங்கத்தவர்களின் வேலைகளில் ஒன்றாகும். அதற்கு மாற்றாக நகர திரைப்படக் கொட்டகையால் மாதாந்தம் இரண்டு இலவச டிக்கட்டுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
கொட்டிலின் புழுதி நிலத்தில் புரளும் நாய்களினால் அவற்றின் தோலிலிருந்து விழும் தெள்ளு குத்துவதால் கால்கள் சொறிச்சலெடுப்பதைத்தவிர இளவட்டத் தினருக்கு வேறு சிக்கல்கள் எதுவுமில்லை.
"இந்த நாய்களோட படும்பாடு”இப்படி விக்ரம்பால் அடிக்கடி சத்தமிடப் பழகியிருந்தாலும் அவற்றை விரட்டிவிட எவருமே முயற்சிக்கவில்லை. அடிக்கடி காண்பதாலும் அவற்றின் இயல்புகளை விளங்கிக் கொண்டதாலும் அவற்றுக்கு 'கண்கொடா'... 'கடுவா...' 'சுத்தி..' என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டனர். தற்செயலாக ஒன்றையேனும் காணாவிட்டால் தேடிப்பார்க்கு மளவுக்கு அவர்கள் அன்புள்ளம் கொண்டி ருந்தனர். அவ்வப்போது அருகேயுள்ள பேக்கரிக்குச் சென்று பாண் கொண்டுவந்து சுடச்சுடப் பிய்த்துச் சாப்பிடும் போது அவற்றின் பங்கைக் கொடுத்து விடுவதற்றும் அவர்கள் மறக்கவில்லை.
"ஒரு நாளைக்கு இந்த நாய்களுக்கு சாப்பிட கொஞ்சம் சமைத்துக் கொடுக்கக் கிடைத்தா எவ்வளவு நல்லாயிருக்கும்” ஒரு நாள் சுனில் ஆலோசனை தெரிவித்தான்.
"நாய்களுக்கா...”
"ஷா... நல்ல யோசன... சந்தயால கருவாட்டு முள்ளு கொஞ்சம் கொண்டுவந்து.... சோற்றோடு சமைத்துக் கொடுத்தா... சாப்பிட்டுத் தள்ளும்” தயாரத்ன தன் விருப்பத்தை வெளிப் படுத்தினான்.
"இதுதான்... செய்றதென்னா அப்படியொரு வேல இருக்கு..
"அதென்ன?” "நாய் தானம்” "சா... செய்வோமே”
32

"போயா நாளொன்றப் பிடிச்சுச் செய்தா நல்ல புண்ணியம்தான்”
"புண்ணியம் எப்படிப்போனாலும் செய்ய முடியுமென்னா பெரிய விஷயந்தான் , இல்லயா?”
“இனி செய்வோமே” "செய்வோம் என்று சொல்லிச் சரிவராது. இதுகளுக்கென்றா கருவாட்டு முள்ளு கொஞ்சமும் ஒரு சேரு அரிசியும் காணும். இப்போ நாய்தானம்தான் செய்றதென்றா கொஞ்சம் கூடுதலாக தேவப்படும். அதாவது கருவாட்டு முள்ளு ரெண்டு கிலோ .. மற்றது ஏழெட்டு கிலோ அரிசி.. போதாமத்தான் போகும்... ம்... நாய்களுக்கென்றாலும் தின்னக் கூடிய விதமாக சமைக்கவும் வேணுமே... தெரியாதா...இடியப்ப வீட்டு மாமியிடம் ஒருக்கா கேட்டுக் கொண்டா நல்லது. தேவயென்றா அங்கேயே சமைத்துக்கொள்ளவும் முடியும்.” சுனில் விளங்கப்படுத்தினான்.
“சரி இன்னும் என்னென்ன தேவ .....?”
"இன்னும் பருப்பொன்றும் இருந்தால்.. சமைத் - துக் கலக்கிவிட்டா சொல்லிவேலயில்ல...”
"இனி செலவு?”
"பென்டிஸ் ஐயாவிடம் சொல்லுவம் ஐம்பது ரூபா சுவர்தான்”
"ஆரி
ஐயாவென்டாலும்
சபோட் பண்ணுவார்”
"ம்.” "மற்றது கைக்கரத்தையொன்றும் வேணும்” வில்பிரேக்கென்றா சரிவராதென்ன. "ஹ்ம் வில்பிரேக் சரிவராது. கைக்கரத்லத்தான் நல்லது. ஆ”. கரத்தய குருத்து தூக்கி அலங்கரிக்கணும். ம். ஒரு விதமா செய்து முடிப்பம்”
"செய்வம் செய்வம்”
மறுநாள் காலை முதல் கொட்டிலில் கூடி கதைத்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நாய்தான நடவடிக்கைகளில் பொடியன்கள் மும்முரமாக ஈடுபட்டனர். அவர்கள் சிலரை . சந்தித்து தாங்கள் முன்னெடுக்கப்போகும் விடயத்தைத் தெளிவுபடுத்தினர். அதற்கு ஓரளவு பண உதவியும் கிட்டியது. தத்தமது கைகளிலிருந்து பத்திருபது ரூபாக்களையும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 35
அதில் இட்டபோது அவசியமான பணத்தை ஒழுங்கு செய்து கொள்ள முடிந்தது. கூடவே இடி யப்ப வீட்டு மாமியையும் நாய்தான சமையல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டனர்.
கைக்கரத்தை ஒன்றையும் எப்படியோ தேடிக்கொண்டார்கள். அது மிகவும் சீர்கெட்ட நிலையில் காணப்பட்டபோதும், அதைத் திருத்திச் சரிசெய்து கொண்டார்கள். அதற்காக அவர்கள் ஒரு முழு நாளைச் செலவிட வேண்டியிருந்தது. இறுதியாக பதினைந்தாம் நாள் நோன்மதி நாளன்று விடிகாலையில் நாய்தானத்தை இளைஞர் குழு முன்னெடுத்தது.
அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய நடவடிக்கையாக அமைந்தது. அன்றைக்கென்று கண்கொடனும், லபயாவும் காணாமல் போயிருந்ததால் ஆரம்பத்திலேயே சிறிது சிக்கலேற்பட்டுவிட்டது.
"என்னடா இது எப்பவும் சுற்றிச்சுற்றி நிக்கும் நாய்கள் இன்றைக்கு எங்க போயிற்று? இஜங் .இஜங்".
தயாரத்ன முதல் தானப் பங்கை கடுவாவுக்குப் பகிர்ந்துவிட்டு இன்னும் இரு இலைகளை நிலத்தில் விரித்து சுற்று முற்றும் பார்த்தான். கடுவா தன் பங்கை அவசர அவசரமாகச் சாப்பிட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு அகப்பை நிறையப் பகிர்ந்தான். பத்து விநாடிகள் நகர்வதற்கிடையில் லபயாவும் கண்கொடாவும் மின்னல் வேகத்தில் எங்கிருந்தோ ஒடிவந்தன. கந்த இலையையும் கரத்தையும் மோப்பம் பிடித்த புல்லியா, காலை உயர்த்தி கரத்தைச் சில்லுக்கு மூத்திரம் அடித்தது.
"ஆ லபய் ஸிபய் எல்லாம் வந்திட்டுது
ஆ. சாப்பிடு சாப்பிடு ஒவ்வொரு நாளும் கிடைக்காது எல்லா இடமும் கிடைக்காது
இந்தா .."
அது சிறியதொரு ஊர்வலமாக உரு வெடுத்தது. தென்னங்குருத்து கிழித்துத் தூக்கிய அலங்காரக் கரத்தையின் முன்னால் சிவப்பு பனியனை கழற்றித் தலையில் சுற்றிக்கொண்டு.. நீட்டக் காற்சட்டையை முழங்கால் மட்டும் மடித்தபடி விக்ரம்பால் கம்பீரமாக நடந்தான்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

"பார்த்தீங்களா முன்னணித் தலைவர?” "இஜுங்” என்று நாய்களுக்கு ஒரு பிடியை போடுவதும் சிறு குடிசை முற்றங்களில் நாய்களைக் காணாவிட்டால் "நாய்கள் இருக்கா?” ஏன்று கத்திக் கேட்பதும் அவனது ராஜகாரியங்களாக இருந்தன.
"நாய்கள் இருக்கா நாய்கள்” அவன் சற்றே குரலுயர்த்தி குறிப்பாக வீட்டு முற்றங்களில் தலை சீவிக் கொண்டோ...உடுப்பு மடித்துக்கொண்டோ இருக்கும் யுவதிகளிடம் எந்தப் பயம் பதற்றமுமின்றிக் கேட்டான். யாரையுமே காணக்கூடியதாக இல்லாதபோது நாய்கள் போல் ஊளையிட்டு அவற்றை உசுப்பேற்றி பாதைக் கெடுக்க முயற்சித்தான்.
"சங்கீத மொன்றும் தேவயல்லவா? தயாரத்ன கைக்கரத்தையால் இலை யெடுத்து, குமாரவுக்குச் சொல்லி உணவு பகிர்ந்துக்கொண்டு வீட்டு வாயிலண்டை கொண்டு போய் வைத்து விட்டு வந்தான். சில வீட்டுக்காரர்கள் தங்கள் நாய்களுக்கு மிக்க மகிழ்சியோடு தானம் பெற்றுக்கொடுத்து விட்டு இன்னும் நாய்களுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக்கொடுக்க ஒற்றையடிப் பாதைகளைக் காட்டியும் பலவித நாய் நாமங்களைச் சொல்லி அழைத்தபடியும் கரத்தையின் பின்னால் சற்று தூரம் வந்தனர்.
கரத்தையை சுனிலும் காமினியும் மாறி மாறித் தள்ளிக்கொண்டிருந்தனர். அயலண்டைச் சின்னதுகள் நாலைந்து அவர்களோடு
சேர்ந்து கொண்டதைக் காணமுடிந்தது.
"மற்ற நாட்களில் எவளவு நாய்கள்... இன்னக்கி பார்த்து எங்க போய்த் தொலைந்ததோ ..இஜுங்.. இஜூங் .."
"ஏய் விக்ரம்" நாய்கள் மட்டுமல்ல காகங்களையும் கூப்பிடு. இத நாய்க்காக தானமென்று சொல்றது”.
அந்த இடத்திலிருந்து விக்ரம்பால காகங்களையும் அழைக்கத் தொடங்கினான் .
"காக்... காக்... காக்கா.”
அரைமைல் தூரமளவு செல்கையில் சிறிய பாதையின் வலப்பக்கமாக ஓரளவு பெரிய கல்வீடொன்றைக் காணமுடிந்தது. பார்த்த பார்வைக்கு ஏதோவொரு விழாக் கோலம் தெரிந்த அவ்வீட்டின் முற்றத்தில் நாலைந்து பேர் கதைத்துக்கொண்டிருந்தனர்.
33.

Page 36
புதிதாக வீட்டுக்கு சாந்து.சாயம். வார்னிஷ் பூசும் மணம் பாதைவரை பரவியது.
கேற்றுக்கு சாயம் பூசிக்கொண்டிருந்த இளைஞன் அதை நிறுத்திவிட்டு சத்தமிட்டபடி வரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்தான்.
"நாய்களிருக்கா நாய்கள்”- விக்ரம்பால வழமையான தனது உரத்த குரலில் அந்த இளைஞனிடம் கேட்டான்.
அவனது வாயிலிருந்து ஏதோ வார்த்தைகள் வருவதற்கிடையில் இலையிலிட்ட இரண்டு உணவுப் பங்குகளை கேற்றுக்கு முன்னால் கொண்டுபோய் வைத்தான் குமார்.
“இஜுங் இஜூங்” என்று விக்ரம்பால் நாய்களை அழைப்பதற்கிடையில் முற்றத்தின் மத்தியில் நின்றவர்களில் வெள்ளைச் சாரனும் மேஸ் பனியனும் உடுத்தியிருந்த மெலிந்த உருவம் கொண்டவன் அவசர அவசரமாக கேற்றடிக்கு ஒடிவந்தான்.
"என்ன என்ன இது?
அவன் முதலில் பெயின்ட் பூசுபவனிடமும் அடுத்து பாதையில் நின்ற பொடியன்களிடமும் வினவினான். அவனது தோற்றம் பெரும்பாலும் கோபக் கொதிப்பை வெளிப்படுத்தியது. அவன் கதைக்கும்போது மேல் முரசில் தங்கப் பல்லொன்று பளபளத்ததுடன், ஒடுங்கிய முகத்தில் மிக வறண்ட தோற்றப்பாடொன்று நிலைகொண்டிருந்தது.
"நாய்தானம் நாய்தானம்” - யாரோ ஒருவன் பதில் சொன்னான்.
"வேணாம் வேணாம் எங்களுக்கும் தேவயில்ல... போங்க..”
"நாய்களுக்கு நாய்களுக்கு ... நாய்கள் இருந்தா போடுவம்... இஜுங்.. மெலிந்த மனிதனைக் கோபமூட்டுமாப்போல் விக்ரம்பால வாயை நெளித்து நெளித்துச் சொன்னான்.
"போவம் போவம்”- அவனது தோற்றம் அவ்வளவு நல்லதாக இல்லையென்பதைப் புரிந்துகொண்ட சுனில் அவசரப்படுத்தினான்.
சுனில்"குர்குர்” என்று சத்தமெழுப்பிய கரத்தையைப் தள்ளும் போதுதான் அவன் கேற்றடியில் வைத்திருந்த சோற்றிலையைக் கண்டான்.
“இங்க.... அவன் கீழேவைத்திருந்த சோற்றிலையைக் கோபத்தோடு பார்த்துச் சத்தமிடத் தொடங்கினான்.
34

புழுவொன்றின் உடலுக்குள் புகுந்திடத் தூண்டில்
விழுந்தது நீரில் உடனேமீன்களுக்கிடையே போட்டாபோட்டி தூண்டிலை விழுங்க
தண்ணீரத்ததாண்டி தரையிலேவழுல
இருட்திரைகிழித்து ஒளியலேகுளிக்கல
# பாகைகள்
சிறகுகள்வர்ய சுதந்திரமாய் பறந்து விண்மீன்களுடன் உறவாடி மகிழும்
விடுதலை வேட்கையுடன் ஒருமீன் விழுங்கியது இரையை
அடுத்தகணம் விடுதலை கிடைத்த குதூகத்தில் துள்ளியது மீன் தரையில்
விடுதலை
உ நிசார்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 37
முற்றத்தில் நின்ற அனைவரும் கேற்றடிக்கு வந்து வழிப்பறிக் கோஷ்டியொன்றைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"யாரிடம் கேட்டடா இந்த இடத்தில் போட்டீங்க..?” |
பற்கள் நறநறக்க . மெலிந்த உடல் படபடக்க... கழுத்து நரம்புகள் புடைத்தபடி வார்த்தைகள் வெளிக்கொட்டின.
”பார்க்காம கேட்காம இந்தக் குப்பய கொண்டு வந்து கொட்ட உங்களுக்கு யாரடா சொன்னது?... எங்கட நாய்களுக்கு சாப்பாடு போட எங்களுக்குத் தெரியும்... போய் உங்கட வேலய பாருங்கட...
"சரி சரி நாங்க போறம்” "அப்ப இங்க போட்டது?"
துடிதுடிக்கும் உதட்டோடு விக்ரம்பால் ஏதோ சொல்ல ஓரடி முன்னே வைத்தபோது காமினி கையைப்பிடித்து பின்னே இழுத்துக் கொண்டான். வீட்டினுள்ளிருந்து படபடவென்று வந்த வாட்டசாட்டமான ஒருவர் சூடான வாக்குவாதத்தில் இணைந்தார்.
மறுகணம் அந்த மெலிந்தவனின் கையை மெல்லப்பிடித்து கேற்றினுள்ளே இழுத்தபடி "பெரியண்ணா உள்ள போவம். இருக்கிற வேலைக்குள் இதென்ன தொல்லை... போங்கடா போங்க... கொண்டுவந்திட்டாங்க... குடுக்கிறதொன்ற எங்க போயாவது குடுங்க" என்று பெருங்குரலில் சத்தமிட்டான்.
கேற்றினுள் புகுந்தவன் கோணல் வாயோடு வாலிபர்களைப் பார்த்து "போகச் சொன்னன் இப்ப .. என்று மீண்டும் ஒரு குறவை விட்டான்.
"இதென்ன அநியாயம்?” "ம்... என்னத்தச் சொல்றது” "போதாதா நாம நல்லது செய்ய வெளிக்கிட்டது " பொடியன்கள் கரத்தையைத் தள்ளியபடி முன்னே நகர்ந்தனர்.
"போட்டத என்ன செய்றது? சூடாக ரெண்டு வார்த்த சொல்ல நெனச்சன்” சாக்கடைப்பக்கம் உமிழ்ந்தபடி விக்ரம் பால் சொன்னான்.
"ஏன்டா சொல்லியிருக்கலாமே" "சொல்லாம விட்டது நல்லதுடா அந்த வீட்டுக்குள்ளிருந்து வந்தவன..... ஒரு மாதிரி சமாளித்தான். ஆளுக்கும் கோபமேறியிருந்தா ரொம்பத்தூரம் போயிருக்கும்....."
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

“சத்தம் போட்டதுக்கென்ன அவனுக்கு விஷயமே விளங்கல்ல”
"அதுதானே பாரு... யார்டா - அந்த சுடுமூஞ்சி?”
"விடியக் காலமே போறத நீ ஒருநாளும் காணல்லயா? எங்கோ ஹோட்டல் ஒன்றில் வேல யென்னு சொல்றாங்க... எப்படியும் பொடியன்களுக்கென்ற முகம் கொடுக்கிற ஆளல்ல.
"மொத்தத்தில் நாங்க வேல தொடங்கின இடம் சரியில்ல... அந்த இடத்தில் தொடங்கின எந்த வேலயாவது சரிவந்ததா?... இல்லயே!.... பூமிதோஷம் ஆமா...”
"பைத்தியம்”
ஒரு வாரமளவு கடந்துவிட்டது விடி காலையொன்றில் மண்வெட்டி கடப்பாறை சகிதம் பொடியன்கள் கூடுமிடத்திற்கு இருவர் வந்தனர். கொட்டிலை உசுப்பி வீழ்த்தினர். இனி விறகுக்குத்தான் பயன்படுத்துமளவுக்கு இற்றுப்போன தடிகளை ஒரு பக்கமாகக் குவித்தனர். கூரை மேய்ந்திருந்த தென்னங் கிடுகுச் சிதைவுகளைக்குவித்துத் தீமூட்டினர்.
வேறேதோ அலுவலுக்காக சைக்கிளில் வந்த தயாரத்ன இதனைக் கண்ணுற்று அந்த இருவரிடமும் ஏனென்று வினவினான்.
"எல்லாம் அப்புறப்படுத்தச் சொல்லி ராலஹாமி எங்களுக்குச் சொன்னவர். என்ன விஷயம்?"
ஒன்றுமில்ல சும்மா அறிந்து கொள்றதுக் காகக் கேட்டன்.
தயாரத்ன தன் பயணத்தை பிற்போட்டு விட்டு, சுனில் குமார் போன்றவர்களோடு சுமார் அரைமணி நேரத்தின் பின்பு மீண்டும் அங்கே வந்தான். அப்போது அவர்கள் வேலையை முடித்து வெளியேறியிருந்தனர்.
மாலை நேரத்தில் பொடியன்கள் கதைச் சுகத்துக்காக அங்கே வருவதில்லை. இருந்தும் கிடுகு, தடி, சருகு போன்றவற்றை எரித்த சாம்பல் மேட்டின்மீது கண்கொடவும் அதன் சகபாடிகளும் மழைக்காலம் வரும் வரையில் உருண்டு புரண்டன.
நன்றி - களு கஹவனு (சிறுகதைத் தொகுதி - 1996) 0 0 0

Page 38
தி.ஞானசேகரன்
எழுதும் இலண்டன்
பயா MW AM)
பயண
5 : 21 நொசா'டிம்.
அனுபவங்கள்
#1;
எங்களது இலண்டன் பயணத்தின் முக்கிய நோக்கம் அங்கு நடைபெற்ற உலகத்தமிழியல் மாநாட்டில் கலந்து கொள்வதுதான் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அந்த மாநாடு முடிவடைந்த மறுநாள் இலண்டன் நகரினை பேராளர்கள் சுற்றிப்பார்ப்பதற்கு மாநாட்டு அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். அதில் இலங்கை இந்திய மலேசியப் பேராளர் கள் சிலர் கலந்து கொண்டனர். அவ்வாறு பேராளர்களுடன் சேர்ந்து சுற்றிப்பார்த்த இடங்களில் ஒன்றுதான் பக்கிங்காம் அரச மாளிகை.
நாங்கள் அந்த மாளிகையை உள்ளே சென்று பார்க்கக் கூடிய காலநேரத்தில் செல்லாததால் அந்த மாளிகை தொடர்பான விடயங்கள் அடங்கிய விபரங்களை முன்னா லுள்ள தகவல் வழங்கும் நிலையத்தில் பெற்று அறிந்து கொண்டோம்.
அந்த மாளிகை இங்கிலாந்து அரசரின் அதிகாரபூர்வமான இல்லமும் பணியிடமும் ஆகும். இந்த அரண்மனைக்கு செல்லும் பாதையை மோல் (Mall) என அழைக் கிறார்கள்.
இந்த மாளிகை 1703ஆம் ஆண்டில் பக்கிங்காம் பிரபு ஷெவ்வீல்ட்டுக்காகக் கட்டப்பட்டதாம்.. பின்பு1761ல் மூன்றாவது ஜோர்ஜ் என்பவருக்கு விற்கப்பட்டது. அவரது வாரிசான நான்காவது ஜோர்ஜ் அதனைத் திருத்தி அமைத்தார். 1837ல் அரசி விக்டோரியா
36

பொறுப்பேற்றபின்னர் இந்த மாளிகை அரச குடும்பத்தினரின் இடமாகியது.1901ல் ஏழாம் எட்வேர்ட் மன்னர் அரியணை ஏறிய பின்னர் நடன அறை, பிரமாண்ட நுழைவாயில் , , மார்பிள் அறை, பிரமாண்ட படிகள், கூடங்கள் யாவும் பாலாடை வெள்ளை நிறமும் தங்க முலாமும் பூசப்பட்டன. 1913ல் மேலும் அம்மாளிகையின் முகப்புப் பகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டன. ஆனாலும் இந்த மாளிகை இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஜேர்மன் வெடி குண்டுகளால் அழிந்தது. பின்னர் புனருத்தாரணம் செய்யப்பட்டது. இவ் அரண்மனையில் 19 பெரிய அறைகளும் 52 முக்கிய படுக்கை அறைகளும் 188 பணியாளர் படுக்கை அறைகளும் 92 அலுவலகங்களும், 78 கழிப்பறைகளும் உள்ளன. இ 1990ல் இருந்து அரண்மனையின் ஒரு பகுதி பொது மக்கள் பார்வைக்குத் திறந்து
விடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட 19 பெரிய அறைகளில் உலகின் மிகப்பிரபலமான ஓவியர்கள் தீட்டிய ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்
வைக்கப்பட்டுள்ளன.
பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே கண்ணைக்கவரும் இரண்டு பூந்தோட்டங்கள் உள்ளன. இவற்றில் 350 வகையான பூக்கள் பூத்துக்குலுங்கி பார்வையாளர்களை மகிழ்விக் கின்றன. அருகே அரச குடும்பத்தினருக்குச் சொந்தமான குதிரை லாயங்கள் உள்ளன. இவற்றிற்குத் தெற்குப் புறத்தில் மிகப் பெரிய ஏரி ஒன்றுள்ளது. இந்த அரண்மனையைச் சுற்றிப்பார்க்க சுமார் மூன்று மணி நேரம் எடுக்கும் எனக் கணக்கிட்டுள்ளார்கள்.
அரண்மனைக்கு அண்மித்தான பகுதியில்
சுற்றுலாவில் கலந்துகொண்ட பேராளர்களில் ஒரு பகுதியினர்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 39
மிகப்பெரிய பணக்காரர்களும் ஹொலிவூட் நட்சத்திரங்களும் வசிக்கின்றனர் என அறிய முடிந்தது. இந்தியத் தொழில் அதிபர்களான இந்துஜா சகோதரர்களுக்கும் இப்பகுதியில் ஒரு மாளிகை இருப்பதாகவும் அதனை அவர்கள் 1000 கோடி இந்திய ரூபாய் கொடுத்து வாங்கினார்கள் எனவும் அறியமுடிந்தது.
அரண்மனையைப் பார்க்கவென தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் கூடு கின்றனர். பலர் அரண்மனையின் முன் நின்று தம்மைப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இந்த அரண்மனையின் முன் அரசகாவலர்கள் எந்த நேரமும் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பார்கள். தினமும் பகல் 11மணிக்கு அவர்களது பணிமாற்றம் இடம்பெறும். அக்காட்சியைக் காண்பதற்கெனவும் அவ்வேளையில் பலர்
அரண்மனையின் முன்னால் காத்திருப்பர்.
இந்த அரண்மனையில் முதன்முதலி லில் வசித்த அரசி விக்டோரியா என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன். 1200 வருட பிரித்தானிய அரச வரலாற்றில் இந்த அரசியின் அரசாட்சிக்காலம் மிகமுக்கிய மானது. பிரித்தானிய வரலாற்றில் அதிககாலம் அரசோச்சியவர் இவரே. இவர் 64 வருடகாலம் அரசாட்சி செய்தார். (1837-1909) இவர் தனது 18ஆவது வயதிலேயே அரசியாக முடி சூட்டப்பட்டார். இவரது மாமனாரான அரசர் நான்காவது வில்லியம் அவர்கள் பிள்ளைகள் இல்லாமல் இறந்து விடவே வாரிசான இவருக்கு அரசாட்சி வந்துசேர்ந்தது. இவரது காலத்திலே தான் பிரித்தானியா உலகின் பெரிய வல்லரசாக இருந்தது. நமது நாடாகிய இலங்கை உட்பட உலகின் காற்பங்கு நிலப்பரப்பு பிரித்தானிய வல்லரசின் கீழ் இருந்தது. 1877ல் இவர் இந்தியாவின் பேரரசி யாகவும் பிரகடனப்படுத்தப்பட்டார். இவருக்கு 9 பிள்ளைகள். 40 பேரப்பிள்ளைகள். 37 பீட்டப்பிள்ளைகள். இவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரச குடும்பங்களில் திருமணங்கள் செய்துவைத்து ஐரோப்பா - எங்கும் தனது உறவுகளை விஸ்தரித்தார்
மகாராணி .
தற்போதுள்ள இரண்டாவது எலிசபெத் மகாராணி இவரது பூட்டியாவர். இவரது தாயார்தான் முதலாவது எலிசபெத் மகா ராணி. அவர் 102 ஆண்டுகள் வாழ்ந்தவர்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

விக்டோரியா மகாராணியின் சிலையின் முன்னால்
சீனத் தம்பதிகளின் திருமணம்
(1900-2002) தாயாரது வாழ்க்கையையும் நடைமுறைகளையும் பின்பற்றி அமைதியாக வாழ்க்கை நடத்தும் இந்த மகாராணியின் மேல் நாட்டு மக்கள் பெருமதிப்பு வைத்திருக் கிறார்கள்.
எலிசபெத் மகாராணி 21-04-1926ல் பிறந்தவர். தற்போது இவருக்கு வயது88 ஆகிறது. இவருக்கு நான்கு பிள்ளைகள். சார்ள்ஸ் இளவரசர் (1948), இன்று இவர் வேல்ஸ் இளவரசர் என அழைக்கப்படகிறார். இளவரசி ஆன் (1950), இளவரசன் ஆன்ட்ரூ (1960) இன்று அவர் டியூக் ஒப் யோக் என அழைக்கப்படுகிறார், இளவரசர் எட்வேர்ட் (1964) இப்போது ஏர்ள் ஒப் வெஸெக்ஸ் என அழைக்கப்படுகிறார்.
சார்ள்ஸ் இளவரசர் முதலில் டயானாவை திருமணம் செய்தவர். இவர்களிடையே மனமுறிவு ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்து விட்டது. இதற்குக் காரணம் சாள்ஸ் இளவரசர் கமீலா பாக்கர் என்பவருடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந்ததுதான் எனக்கூறப் படுகிறது. கமீலா ஏற்கனவே திருமணமானவர். சாள்ஸைத் திருமணம் செய்வதற்காக சொந்தக் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றவர். அரச சம்பிரதாயம் விவாகரத்துப் பெற்ற ஒருவரை மறுமணம் செய்ய ஏற்றுக்கொள்வதில்லை. ஆனாலும் பெரும் சர்ச்சைகளுக்கும் சிக்கல்களுக்குமிடையே சாள்ஸ்- கமிலா திருமணம் நடந்தேறியது.
சாள்ஸ் இளவரசருடனான திருமண முறிவின்பின் டயானா பிரபல செல்வந்தரான டோடி என்பவருடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந்தார். இருவரும் பாரீஸ் நாட் டில் கார் விபத்துக்குள்ளாகி இறந்தனர். அது தொடர்பாக அரச குடும்பத்தினரைச்
37

Page 40
விக்டோரியா மகாராணி
சம்பந்தப்படுத்தி பாரதூரமான செய்திகள் வெளிவந்தன.
இவற்றையெல்லாம் எலிசபெத் மகா ராணி பொறுமையுடன் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.
பட்டத்து இளவரசர் சாள்ஸுக்கும் டயானாவுக்கும் பிறந்தவர்கள்
வில்லிய மும் ஹரியும் இவர்களும் பட்டத்து இளவரசர்கள்தான். இவர்கள் இருவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அண்ணா வில்லியம் கேற் மிடில்ரன் என்ற பெண்ணையும், தம்பி ஹரி செல்ஸி என்ற பெண்ணையும் காதலித்து மணந்தார்கள். இந்தப் பெண்கள் இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். இதன்காரணமாக பத்திரிகைகளில் இவர்களைப்பற்றிய செய்தி களும் கிசுகிசுக்களும் வெளிவந்து தற்போது
அடங்கிப்போயுள்ளன.
இந்த பக்கிங்காம் மாளிகையின் எதிர்ப்புறத்தில் விக்டோரியா அரசியின் அழகான சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையோடு ஒட்டிய படிக்கட்டுகளில் அமர்ந்து பலர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்
இந்த விக்டோரியா மகாராணியின் சிலையின் முன்னால் நின்று சுற்றுலாவரும் சோடிகள் சிலர் தமது திருமணத்தை நடத்துவார்களாம். நாங்கள்
அங்கு சென்றவேளை ஒரு சீன இளஞ்சோடியின் திருமணத்தைக் கண்டு களிக்கக் கூடியதாக 38

இருந்தது. அந்தத் திருமணத் தம்பதிகளுக்கு நாமும் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தோம்.
பிரித்தானிய அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம் 250 வருட வரலாற்றைக்கொண்டது. 1660ல் பிறந்த சேர் ஹான்ஸ் ஸ்லேன் என்ற வைத்தியர் தனிப்பட்ட ரீதியில் அருங்காட்சிப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 1753ல் அவர் இறந்தபோது 79575 பொருட்களை அவர் சேகரித்திருந்தார். தான் இறந்த
பின் அவற்றைத் தேசிய சொத்தாக்கும்படி அப்போதிருந்த இரண்டாவது ஜோர்ஜ் மன்னரிடம் வேண்டியிருந்தார். அதற்கு அமையவே பிரித்தானிய அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.1759 ஜனவரிமாதம் 15 ஆம்திகதி பொதுமக்களின் பார்வைக்கு இந்த அருங்காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.
அதன்பின்னர் பல பொருட்கள் இங்கு அன்பளிப்புகளாக வந்து சேர்ந்தன. அக்காலத்தில் புகழ் பெற்றவாரன உலகம் சுற்றும் கடலோடியும் அவுஸ்திரேலியாக் கண்டத்தைக் கண்டுபிடித்தவருமான கப்ரின் ஜேம் குக் என்பவர் தனது கடல் பயணங் களின்போது கிடைத்த அரிய பொருட்களை இந்த அருங்காட்சிச் சாலைக்கு வழங்கினார். சேர் வில்லியம் ஹமில்ரன், கிறீக் தேசத்திலிருந்து பல அரிய பொருட்களை இரண்டு வள்ளங்களில் அனுப்பிவைத்தார். சாள்ஸ்ரவுண்லி என்பவர் உரோமாபுரிப் பொருட்களை விற்றார். நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட
பின்னர் அங்கிருந்து ஈஜிப்ற் தொல்பொருட்கள் கிடைத்தன. 1816ல் ஏதென்ஸ் நகரத்திலிருந்து பலவிதமான மாபிள் கற்கள் கிடைத்தன. எல்கின் பிரபு கிறீஸ் நாட்டுத் தொல்பொருட்களை 1802ல் விற்றார். உலகநாடுகளில் அக்காலகட்டத்தில் இருந்த பிரித்தானியத் தூதுவர்கள் பலர் அந்தந்த நாடுகளில் இருந்த தொல்பொருட்களைத் தம் தாக்கி அனுப்பிவைத்தனர். மேற்குறிப்பிட்ட தகவல்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய பிரசுரங்களில் காணப்படுகின்றன.
ஆனாலும் உள்ளே சுற்றிப் பார்த்தபோது ஓர் உண்மை புலப்பட்டது. பிரித்தானியர்கள் உலக நாடுகள் பலவற்றைக் கைப்பற்றி தமது ஆட்சியின் கீழ்வைத்திருந்த காலத்தில் அந்த
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 41
நாடுகளில் உள்ள தொல்பொருட்செல்வங்கள் பலவற்றை சூறையாடித் தமது நாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவை இன்று இந்த அருங்காட்சியகத்தின் . காட்சிப்பொருட்களாக இருக்கின்றன.
எமது இலங்கைத் தீவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பல பொருட்களும் அந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றுள் 'தாரா' என்ற புத்த சமய பெண்தெய்வத்தின் சிலை என் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பெண் தெய்வத்தின் வலது கரம் வரதகரமாக அமைக்கப்பட்டுள்ளது. வரதகரம் என்பது கொடுக்கும் கரம். வரமளிக் கும் கரம். அந்தத் தெய்வச் சிலை எனக்கு காசியில் அமைந்திருக்கும் அன்ன பூரணியின் சிலையை ஒத்ததான உணர்வினைத் தந்தது. இந்தச் சிலை மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பிரதேசத் தில் கண்டெடுக்கப்பட்டு, சேர். றொபேட் பிறவுன்றிக் என்பவர் அதனை 1830ல் பிரித்தானியாவுக்குக் கொண்டுவந்துள்ளார். இலங்கை அனுராதபுரக் காலத்தில் மகாயான பௌத்தம் இலங்கையில் நிலவியதற்கு இச் சிலை சான்று பகர்கிறது என்ற குறிப்புகள் சிலையின் அருகில் காணப்படுகின்றன.
'மகாயான பௌத்தத்தில் கெளதம் புத்தரைக் கடவுளாகக் கொள்வர். மகாயான பெளத்தம் சைனா, யப்பான் போன்ற நாடு களில் தற்போது கைக்கொள்ளப்படுகிறது. இலங்கையில் தற்போது கைக்கொள்ளப்படும் தேரவாத பௌத்தத்தில் புத்தர் கடவுளாகக் கொள்ளப்படுவதில்லை. தேரவாத பௌத்தம் இலங்கையில் இருந்து கம்போடியா, தாய்லாந்து, பர்மா, லாஓஸ் போன்ற நாடுகளுக்குப் பரவியுள்ளது' என்ற தகவலை ஞா. பாலச்சந்திரனின் 'அங்கோர் உலகப்பெருங்கோயில்' (2013) பயணக் கட்டு ரையில் படித்த ஞாபகம் அப்போது எனக்கு ஏற்பட்டது.
சிந்துவெளி நாகரீகம் பற்றி வாசகர்கள் அறிந்திருக்கலாம். வட இந்தியாவில் உள்ள சிந்து நதிப்பிரதேசத்திலே 5000 ஆண்டு களுக்கு முன்னர் ஒரு பழமையான நாகரிகம் நிலவியுள்ளது என்பதையும் அங்கு சிவ வணக்கம் நிலவியுள்ளது என்பதையும் சேர் ஜோன் மார்ஷல், சேர் அலெக்ஸாண்டர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

விக்டோரியா மகாராணியின் கீரிடத்தில் பொறிக்கப்பட்ட கோஹினூர் வைரம்
சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட 5000 ஆம் வருடங்களுக்கும் முந்திய இலச்சினைகள்
அசோக மன்னனின் (கி.மு 3ஆம் நூற்) தூண் ஒன்றிலிருந்து பெறப்பட்ட பிராமி எழுத்துக்கள். (இந்திய மொழி வரிவடிவங்களின் முன்னோடி)
கண்ணிங்காம் முதலான பேரறிஞர்கள் 1920 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி செய்து உலகுக்கு அறிவித்தனர். அங்கு ஹரப்பா, மொகஞ்சதாரா என்னும் நகரங்கள் இருந்தன. அந்நகரங்களில் பாழடைந்து கிடக்கும் பலவிதமான கட்டிடங்கள், சிற்பங்கள், கற்சிலைகள், தாயத்துகள், மிருகங்களின் உருவங்கள், மனிதர் யோகியர் உருவங்கள், என்பன காண்பவர்கள் எல் லோரையும் வியக்க வைத்தன. அங்கே கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் முத்திரை கள் முதலியவற்றைக்கொண்டு 5478 ஆண்டு களுக்கு முன்னரே சிவ வழிபாடு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம்
கருத்தூன்றிக்
39

Page 42
கவனித்த ே சைவசமயம் அது உலகி அது இன்று பிரித்தானிய நாகரீக அக் பலவற்றை ! எமது பண்ப பெரும் மகிழ
நானும் அதிசயங்கள் பார்க்கச் செ அழகிலும் | பெரிதும் சுவர்களிலும் தோண்டி 6 காணப்பட்ட தீபெத், சை ஆகிய நாடுக உள்ளன. பி நவரத்தினங்க கொண்டு ெ
இந்த கூறவேண்டிய விலைமதிப்பு பிரதேசத்தை காலகட்டங்க
ஆப்கன், சீ. சண்டையிடப் கிழக்கிந்திய விக்டோறியா மகாராணி கப்பட்டபோது
இந்தக் கூறுவதானா. பணத்தில்
நாட்கள் உன கூறியுள்ளார்.
இந்த  ை திருப்பிக் ெ நாட்டின் ச அதற்குப் பத் அதனைத் தி பிரித்தானிய என்று கூறியு
பிரித்தான வளர்ச்சியடை
இலங்கையில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட மகாயான பௌத்த மத பெண் தெய்வத்தின் (தாரா) வெண்கலச் சிலை (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு)

"சர் ஜோன் மார்ஷல் என்னும் ஆராய்ச்சியாளர்
சிந்துவெளி நாகரீகத்துக்கு முந்தியது என்றும் 7லேயே மிகவும் பழமை வாய்ந்தது என்றும் வம் நிலவி வருகிறது என்றும் கூறியுள்ளார்.
அருங் காட்சியகத்தில் இந்தச் சிந்துவெளி ச கழ்வுகளில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகள் நான் பார்த்தேன். 5000 வருடங்களுக்கு முற்பட்ட ாட்டு வேர் ஒன்றை அங்கே பார்த்தது எனக்குப் ழ்வையும் மன நிறைவையும் தந்தது.
மனைவியும் சிலவருடங்களின் முன்பு உலக சில் ஒன்றெனக் கருதப்படும் தாஜ்மகாலைப் சன்றிருந்தோம். தாஜ்மகாலின் பிரமாண்டத்திலும் மயங்கிய எங்களுக்கு ஒரு விடயம் மனதைப் உறுத்தியது. தாஜ்மகாலின் நான்கு பக்கச்
பதித்து வைக்கப்பட்ட நவரத்தினங்கள் பல எடுக்கப்பட்டு சுவர்களிலே சிறு கோறைகள் ன. அங்கு பதித்து வைக்கப்பட்ட நவரத்தினங்கள் னா, ஸ்ரீலங்கா, பேர்ஸியா, ஆப்பகானிஸ்தான் களிலிருந்து பெறப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் ரித்தானியர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இந்த களைத் தோண்டி எடுத்து தமது நாட்டுக்குக் சன்று விட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இடத்தில் கோஹினூர் வைரம் பற்றியும் - புள்ளது. உலகில் அதிகம் அறியப்பட்டதும் பற்றதுமான இந்த வைரம் இந்தியாவின் ஆந்திரப் ப்பிறப்பிடமாகக் கொண்டது. வரலாற்றின் பல்வேறு ளில் இந்து முஸ்லீம், முகலாயர், பேர்சியர், க்கியர், மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பபட்டு கைமாறிக்கொண்டே இருந்தது. இறுதியாக கம்பனி மூலமாகக் கைப்பற்றப்பட்டு மகாராணி கவிடம் கையளிக்கப்பட்டது. விக்டோறியா 1877ல் இந்தியாவின் பேரரசியாக அறிவிக் து மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது.
கோஹினூர் வைரத்தின் விலை மதிப்பைக் ல்' இதனை விலை கொடுத்து வாங்கும் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை அவளிக்க முடியும் என ஒரு வரலாற்று ஆசிரியர்
"வரம் இந்தியாவுக்குச் சொந்தமானது அதனைத் காடுத்துவிடுங்கள் என அவ்வப்போது இந்திய சார்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. லெளித்த இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரூன்
ருப்பித் தரமாட்டோம். அப்படித் திருப்பித்தந்தால் -
அருங் காட்சியகம் சோபை இழந்து விடும் பள்ளார். னிய அருங்காட்சியகம் காலத்துக்குக் காலம் உந்து தற்போது பல பிரிவுகளாக பல கட்டிடங்களில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 43
இலங்கையை ஆண்ட
இராவண மன்னனின் சிலை இயங்கிவருகிறது. பிரித்தானிய நூலகம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், போர் - தொடர்பான அருங்காட்சியகம், டவர் லண்டன் அருங்காட்சியம் எனப் பலபிரிவுகள் உள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு அருங்காட்சிப்பொருட்களை பிரித் தானியர்கள் எப்படியெல்லாம் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்ற பலதரப்பட்ட விமர் சனங்களுக்கு அப்பால் அவர்கள் அவ்வாறு
அந்தப்பொருட்களைக் கொண்டு
சென்று தமது நாட்டில் பாதுகாப்பாக வைத்துக் காட்சிப்படுத்துவதனால் ஒரு பெரும் நன்மை ஏற்பட்டிருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இங்குள்ள அருங்காட்சியகங்கள் மனிதப் பண்பாட்டின் கதையை அதன் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை விளக்கி ஆவணப்படுத்து கின்றன. இத்தகைய பல்துறைசார்ந்த பரிணாம வளர்ச்சித் தடயங்களை இங்குதான் ஒன்றுசேரக் காணமுடிகிறது.
இந்த அருங்காட்சியகங்களில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான பொருட்கள் இருப்ப தாக அறிய முடிந்தது. அவற்றையெல்லாம் பார்ப்பது சாத்தியமில்லை. பார்த்தவை எனது சிந்தையில் ஏற்படுத்திய உணர்வலைகளையே இங்கு பதிவுசெய்துள்ளேன்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

பிணம் எரியும் சுடுகாடாய்
பக்கக்கடுகக்காங்
பிணம் எரியும்
சுடுகாடாய் எங்கள் வாழ்வு நாளும் பலியிடல்களில் பதைக்கிறது உள்ளம் கனவுகளுக்காய் உயிர் கொடுத்த மண்ணில்
இன்று கண்டதற்கும் உயிர் கொடுக்கும் பரிதாபம் விளைவிழந்து போன நிலம்
இன்று 'களை' கூடிக் கனக்கிறது அழையா விருந்தினராய் யார் யாரோ எமக்காய் கதையளக்க நாளும் படிதாண்டிப் போனபடி எம் தாய்மடி வாழ்வு பார்போற்ற வாழ்ந்த பண்பாட்டின் வாழ்வே
நீ எங்கே தேடுகிறோம்
-புலோலியூர் வேல்தந்தள்.

Page 44
Cெ
கே.விஜய'
பதினான்காவது வயதில் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் அரசியல்வாழ்வு முகைவிட்டது. இவ்வருடம் ஜூன் மாதம் 3ஆம் திகதி 91 வயதை எட்டிய அந்த முகை மலர்ந்த வாடாத ரோஜாவாகவே இருக்கிறது. தேர்தலில்தோல்வி கண்டபோதும் தமிழகம் எங்கும் தமிழ் மணம் கமழும் திருவிழாக் கோலம் கொண்டிருந்தது.
'அதென்ன வாடாத ரோஜா? அதுதான் மனுஷன் அரசியலில் மண்ணைக் கவ்விப்போட்டாரே பிறகென்ன புகழாரம்?' என்று கலைஞர் எதிர்ப்புக் கோஷ்டி. வேஷ்டியை வாறி வரிந்து கட்டி நரநரவென பல்லைக் கடித்தவாறே மல்லுக்கு தாவிக்
குதிக்கலாம்.
இரண்டு சிறுகதைகளும் மூன்று கவிதைகளும் எழுதி பயில்வான்கள் (கராட்டே) சங்கத்திடமிருந்து கலாநிதி பட்டமும், ஒரு நகரசபை உறுப்பினர் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்த வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்ற ஒரு சில்லரைக் கடை முதலாளியும், எனது நண்பருமான ஓர் எழுத்தாளர் கலைஞரைப் பற்றி எழுதப்போகிறேன் என்று சொன்னதும் ஏதோ பெரும் அநீதி நடந்துவிட்டது போன்று என்மீது சாடி விழுந்தார்.
'தமிழுக்குச் சேவைச் செய்து விருதும் பட்டமும் பெற்ற எங்களைப்பற்றியெல்லாம் எழுதமாட்டியள். தமிழரை காட்டிக்கொடுத்த உவையளைப்பற்றித்தான் புராணம் புராணமாக எழுதித்தள்ளுவியல். தமிழன் தலைவிதியை ஆரிட்டச் சொல்லி அழுரது' இதுதான் அந்த தமிழ்மணியின் சுனாமிச் சீற்றம்.
"யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்ல

அட. அண்டங் காக்கை குயில்களுக்கும் பேதம்
புரியல்ல” என்று பாடி கிண்டலடிப்பு வேறு செய்தார்.
சீனத்தின் தலைவர் மாவோசேதுங். வடவியற்நாம் ஹோசிமின். ரஷ்யாவின் விளாடிமீர் இலிலியச் லெனின் போன்ற மாபெரும் அரசியல் தலைவர்கள் தமது . தாய்மொழி மீதும். இலக்கியம்
மீதும் பெரும்பற்றாளர்களாக இருந்திருக்கிறார்கள். சமுதாய உணர்வுமிக்க அரசியல் போராளி களான அவர்கள் இலக்கியத்திற்கு சமூக வளர்ச்சி தொடர்பான ஓர் இலக்கு உள்ளதென்றும் வாதாடியும் எழுதியும் உள்ளனர். ஒரு நாட்டின் அரசியலுக்குள் வர்க்கச்சார்புத் தன்மை எவ்வாறு இரத்தமும் சதையுமாக இழையோடிக் கிடக்கின்றது என்பதை தமது அரசியல் இலக்கியத் திறனாய்வுகளில் வெளிப்படுத்தினர். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம். வர்க்க விடுதலைக்கான தொழிலாளர். விவசாயப் போராட்டம் என்பனவற்றை முன்னெடுக்க . ஆக்க இலக்கியத்தை கவிதை. சிறுகதை. நவீனம் ஆகிய வடிவங்களில் ஓர் ஆயுதமாக பயன்படுத்தவேண்டும் எனும் புதிய கோட்பாடுகளை செப்பனிட்டனர். அவற்றை மக்கள் முன்வைத்தனர். சிறந்த படைப்பாளிகளை உருவாக்கினர். அக்டோபர் ம். சோவியத் புரட்சிக்கு மாக்சிம் கார்க்கி. என்டன் செக்வோவ் தாஸ்தோவர்க்கி. துர்கனேவ் போன்ற எழுத்தாளர்களின் பெரும் பங்களிப்பு இருந்துள்ளது. அவர்களெல்லாம் லெனின் சிந்தனையில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 45
அரசியல் வேறு இலக்கியம் வேறு ஒன்றையொன்று கலப்படம் செய்து சாம்பாராக்கக் கூடாது என்றவாதம் இலக்கிய உலகில் சர்வவியாபகமாக இருக்கின்றது. நம்மிடையேயும் இந்த அடிதடி உண்டு. அதையெல்லாம் ஒரு பக்கம் மூட்டைக் கட்டிவைத்து விட்டு சண்டை என்றால் ஆளுக்காள் கிடைத்ததை தூக்கிக் கொண்டு மல்லுக் கட்ட ஓடுவார்கள்தானே என்று மனதை சமரசம் செய்து சப்ஜெட்டுக்கு தாவுவோம்.
கலைஞர் தமது பதினான்காவது வயதிலே அரசியலுக்கு வந்துவிட்டார் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தார். தமிழ் மொழியுரிமை பகுத்தறிவு வாதமும் இணைந்த ஓர் அரசியல் பேராட்டத்தை கொண்ட திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்டார். அதன் மூலவர்களில் ஒருவராக பரிணமித்தார்.
திராவிட முன்னேற்ற
கழகத்தின் (தி.மு.க) தலைவராக செயற்பட்ட சி.என் அண்ணாத்துரையைப் போன்றே கலைஞர் கருணாநிதியும் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். சங்க இலக்கியங்கள் நவீன இலக்கியங்களில் புலமைமிக்கவர் கதை கவிதை நவீனம் போன்றவற்றை படைக்கும் ஆக்கத்திறன் படைத்தவர். தமது அரசியலுக்கு மக்களை ஒன்றிணைக்க பகுத்தறிவு சிந்தனையை இலக்கியங்கள் மூலம் வெளிப்படுத்தி சிந்தனைத் தெளிவை ஏற்படுத்தவும் முனைந்தார்.
மக்களை நெறிப்படுத்தியது மட்டும் அல்லாது போராட்டங்களில் ஈடுபட்டும் சிறை சென்றார். அதீத கடவுள் நம்பிக்கையும், கடவுளின் பெயரால் சாதிக் கொடுமைகளை போற்றி வளர்த்துக் கொண்டிந்த மேலாதிக்ககாரர்களின்
அதிகாரம் ஓங்கியிருந்த யுகத்தில்
"கோயில் பூசாரியை தாக்கினேன்! கோயில் கூடாது என்பதற்காக அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாக மாறக்கூடாது என்பதற்காக. பக்தி வேண்டாம் என்று சொல்லவில்லை அது பகல் வேஷமாகக் கூடாது என்பதற்காக”
என்ற கலைஞரின் எளிமையான நாடக திரைப்பட வசனங்கள் மக்களின் இதயங்களை வேகமாக ஊடுருவின. தாய் நாட்டின் தேசிய கீதம் போன்று தமிழகத்தின் பட்டி தொட்டி ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

எல்லாம் கலைஞரின் எழுது கோலிலிருந்து உதிர்ந்த எழுத்தோவியங்கள் முழங்கின.'
தமிழ் எங்கள் இளமைக்கு பால் | இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் அறிவிக்குத் தோள்
இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வாள். என்றல்லவோ தமிழை அமுதம் என்று கூறிய அருமைக் கவிஞன் பாடியிருக்கிறான்.
அத்தமிழை நன்கு கற்றுணர்ந்து மொழி ஆற்றலையும். ஆக்க இலக்கிய திறனையும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆயதமாகவே பயன்படுத்திய கலைஞரின் முயற்சி திருவினையானது.
தமிழ் மக்களுக்காக ஒரு கட்சியை உருவாக்குவதன் பொருட்டு கலைஞர் கரிசனையுடன் செயற்பட்டிருக்கிறார். நாள் தோறும் அவருக்கு வரும் நூற்றுக் கணக்கான கடிதங்களில் இந்த 91வது வயதிலும் மூன்று கடிதங்களை மிகவும் பத்திரமாக வைத்திருக்கிறார்.
அவை 1952.62.68 ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணாத்துரை அவருக்கு எழுதிய கடிதங்களாகும். தி.மு.க.வின் தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த அண்ணா கட்சியை கட்டிவளர்க்கும் விசயத்தில் கலைஞர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை
அக்கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன.
1949 ஆம் ஆண்டு உருவான தி.மு.க 3 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியை கண்டு 52. இல் காஞ்சிபுரத்தில் பெரும் மாநாட்டை நடத்தும் முயற்சியில் முனைந்திருந்தது. அப்பொழுது காஞ்சிபுரத்தலிருந்த அண்ணா கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர்களிடையே நிலவிய அந்நியோன் யத்தையும் தோழமை உணர்வையும் கடிதத்தின் சுருக்கமான நான்குவரிகளில் தெளிந்த நீர்போல் காணமுடியும்.
'அன்புத் தம்பி!
மாநாடு பெரிய அளவில் நடைபெற விருக்கிறது. கட்சி நடவடிக்கைகளுக்காக பல் வேறு இடங்களுக்கு போகவேண்டிருப்பதால் ஒரு பழைய கார் இருந்தால் நல்லது. தேவ ராஜ் என்பவரிடம் ஆயிரம் ரூபா கொடுத்திருக் கிறேன். உன்னிடம் இருந்தால் ஓர் ஆயிரம் கொடு. மிகுதியை எப்படியாவது நண்பர்களிடம் கேட்டு கொடுக்கலாம். - அண்ணா
43

Page 46
1962இல்
டில்லி
மேற்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்து எழுதியது.
'அன்புத் தம்பி! டில்லி மேற்சபையில் இருக்கிறேன். எதிர்க்கட்சியின் இரண்டாவது வரிசையில் முதலாவது ஆசனம் தந்திருக் கிறார்கள். இங்கிருந்து சபை நடவடிக்கைகள் அனைத்தையும் பார்க்க முடிகிறது. மூன்று நாட்களின் பின்னர் எனக்கு பேசுவதற்கு அனுமதி தருவார்கள் என்று நினைக்கிறேன். காங்கிரஸ்காரர்களான ஓவி. அழகேசனும் சிவி சுப்ரமணியமும் என்னை அன்பாக உபசரித்தார்கள்.-
உன்னைப் பிரிந்து கழகத் தோழர்களைப் பிரிந்து இருக்கும் தனிமை கவலை தருகிறது. ஆனால் கழகப் பணிகள் குறித்து கவலை இல்லை. தம்பி! நீ என்னை விட இருமடங்கு நன்றாகச் செய்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.'
ஒரு தலைவன் இன்னொரு தலைவனுக்கு எழுதும் வரிகளா அவை? ஓர் இளம் தோழன் நேசமிக்க தன் நெருக்கமான நண்பனுக்கு கூறும் தோழமைமிக்க நெஞ்சைத் தொடும் வரிகள் அல்லவா.
மூன்றாவது கடிதம் 1968இல் சத்திர சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது எழுதியது.
அன்புத் தம்பி! டாக்டர் மில்லரிடம் சிகிச்சை பெறுகிறேன். விரைவில் குணமடைந்து நாடு திரும்புவேன். உங்களையெல்லாம் பிரிந்திருக்கும் தனிமையைத் தவிர எனக்கு கவலை வேறொன்றும் இல்லை.
அவ்வாறு எழுதிய அண்ணா மூன்று திங்களின் பிறகு காலமானார். தலைவனை இழந்த கழகம் மாலுமியை இழந்த கப்பலானது. ஆனால் அந்த வெற்றிடத்தை கலைஞர் நிறைவு செய்தார் தேர்தல்களில் மாபெரும் வெற்றிகளைப் பெற்று தமிழகத்தின் முதல்வராக 5முறை ஆட்சிபீடம் ஏறினார் ஆட்சி செய்யும் அரசியல்வாதியாக கலையுள்ளம் படைத்த கலைஞராக ஆற்றல் மிகு படைப்பாளியாக அகவை 91இல் காலடிபதித்து இன்றும் கம்பீரம் மாறாத தலைவராக. சங்கத்தமிழையும் கசடறக்கற்று சந்தனமாக நெஞ்சில் புதைத்து பல அரும் நூல்களுடன் திருக்குறளையும் 44
மாறாத தலைகாக நெஞ்சில் களையும்

குறளோவியமாகத் தந்து நிகரற்ற இலக்கியப் புலவனாக பவனி வருகிறார்.
சங்கத்தமிழ் திருக்குறள் உரை, ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிசிங்கம், பொன்னர், வெள்ளிக்கிழமை , நெஞ்சுக்கு நீதி, இனியவை இருபது, குறளோவியம், தொல்காப்பியம் உரை, பூம்புகார் என அவர் எழுதிய நூல்களின் பட்டியல் விரியும்.
எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடகக் கலைஞர், கவிஞர், சினிமா பிரதியாக்க கர்த்தா, அரசியல் தலைவர் என்று பல நாமங்களை இளமையிலே பெற்றுவிட்ட கலைஞரின் திரைப்படத்துறை வாழ்வு இருபதாவது வயதில் ஆரம்பமானது. ஜூபிடர்ஸ் தயாரிப்பான ராஜகுமாரி திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினார். எம்.ஜி இராமச்சந்தரன் நடித்த அத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம், பாடல்கள் எழுதினார்
ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, மணமக்கள், தேவகி, திரும்பிப்பார், நாம், மனோகரா, அம்மையப்பன், காஞ்சித்தலைவன், பூமாலை, மறக்கமுடியுமா, அவன்பித்தனா, மலைக்கள்ளன், புதுமைப் பித்தன், எல்லோரும் இந்நாட்டு மன்னர், பூக்காரி, நீதிக்குத் தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், கண்ணம்மா, பெண்சிங்கம், உளியின் ஓசை, பராசக்தி, பணம், தங்கரத்தினம் என தொடரும் திரைப்படங்களும் மணிகுடம், ஒரு ராகம், தூக்கு மேடை, காகிதப் பூ, நான் அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன, சிலப்பதிகாரம் எனத் தொடரும் மேடை நாடகங்களும். ஏராளமான பாடல்களும் கவிதைகளும் சிறுகதைகளும் அன்று சமுதாய பிரச்சனைகளாகத் திகழ்ந்த சீர்கேடுகளையே கருவூலமாகக் கொண்டவை. அவற்றுக் கெதிராக மக்களின் எழுச்சிக்குரலுக்கு அழைப்போசை விடுத்தவை. பாலிய விவாகம், விதவைத் திருமணம், தீண்டாமை, ஜமீன்தார் முறைக்கு எதிரான கலைஞரின் மேடை நாடகங்கள் அரசின் கெடுபிடியினூடே பலமுறைகள் தடை செய்யப்பட்டன.
கலைஞரின் திரைப்பட, மேடைநாடக வசனங்களும், பாடல்களும் மொழி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 47
ஆளுமையில் மாபெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தன. கடினமான மரபுக் கவிதை முறையில் அமைந்திருந்த வசனங்களையும், பாடல்களையும் சாதாரண மக்கள் புரிந்து ரசிகக்கூடியனவாக அவை அமைந்தன.
அக்காலத்தில் வரலாற்றுப் படங்களில் இடம்பெற்ற உரையாடல்களையும் கிண் டல் செய்யும் நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டபோது அந்நிலையை தலை கீழாக மாற்றிய பெருமை கலைஞருக்கே உரியது. மிகமிக வைதீக சிந்தனைகளே கொடிகட்டிப் பறந்த காலத்தில் "யாரது அம்பாளா பேசுவது?” என்று பூசாரி கேட்க "அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?” என்று பராசக்தி சிவாஜி கர்ஜ்ஜிக்கும் போது திரையரங்குகள் அதிர்ந்தன. தமிழகத்தில் இன்றும் இந்நிலை நிலவுகிறது.
திரைப்பாடல்களிலும் எளிமையான சொற்களை பயன்படுத்தினால் சில தயாரிப்பாளரின் முகம் அஷ்டகோணலாகி * விடுமாம். பி.யு சின்னப்பா பாடிய வதனமே சந்திரபிம்பமே என்ற பாடல் முதலில் முகம்மது சந்திரபிம்பமே என்றுதான் எழுதப்பட்டதாம். அதைக்கேட்ட தயாரிப்பாளருக்கு கடும் கோபம் வந்துவிட்டது "ஏலே! முகம்மது சந்திரபிம்பமின்னா?யேசுநாதர் என்ன பிம்பம்?” என்று கேட்டு கடிநாயாகப் பாய்ந்தாராம். இத்தகையதொரு
காலகட்டத்தில்தான் கலைஞரின் திரைப்பட பாடல்கள் நெஞ்சை வருடும் வரிகளுடனும் மனநெகிழ்வு தரும் இசையுடனும் வெளிவரலாயின.
உலவும் தென்றல் காற்றினிலே ஒடம் இதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே! அலைகள் எங்கும் மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே!
என்று காதல்கள் பாடல்களை எழுதிய கவிஞன்.
எல்லோரும் வாழவேண்டும் உலகம் இன்புற்றிருக்கவேண்டும்
':14 N14
நல்லோர்கள் எண்ணமிதே- முத்தம்மா நானில வாழ்வும் இதே.
என்றும் சர்வதேச குரல் எழுப்பிய | கலைஞர் நெகிழ்வுதரும் கவித்துவமும் தாலாட்டுப்
பாடல்களிலும்
சமூக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

யதார்த்தத்தை வெளிக்கொணர்ந்தார்
'பொருளே இல்லாார்க்கு தொல்லையா புதுவாழ்வே இல்லையா
இருள் நீங்கும் மார்க்கம் சொல்லையா வறுமைப் பேயை விரட்ட நாட்டில் வழியே இல்லையா
என்று குரல் எழுப்புவதும். பூமாலை நீ ஏன் புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய்? பறவை கூட்டில் பிறந்திருந்தாலும் பசியாற உணவும் பறந்தோடி வந்திடும்
என்று கவிதை தீட்டுவதும் மக்கள் இலக்கியத்தின் உச்சம் அல்லவா! இன்றைய திரையுலகத்தின் சிறந்த பாடல்களுக்கும். கதை கருவூலத்திற்கும் கலைஞர் கவிஞர் கருணாநிதியே நதிமூலம் என்றால் மிகையாகுமா? அவர் நீண்ட ஆயுள் பெற்று தொடர்ந்து தமிழை வளம்படுத்த வாழ்த்துவோம்.
0 0 0
நூல்: சைவ நற்சிந்தனைகள் ஆசிரியர்: கலாபூஷணம் இராஜேஸ்வரி ஜெகநாதகுரு வெளியீடு: காயத்திரி பப்ளிகேஷன்
விலை: ரூபா 500/-
இலங்கை வானொலியில் ஆசிரியை வழங்கிய 110 சைவ நற்சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல். இந்த நற்சிந்தனைகள் ஆன்மீகச் சிந்தனைகள் பொதிந்துள்ளவையாகவும், அறி வைப் புகட்டுபவையாகவும், மனவெழுச்சி ஊட்டுபவையாகவும் அமைந்துள்ளன. இந் நூல் இளையோர், முதியோர் ஆகியோரை
நல்வழிப்படுத்தக் கூடியது.
அறம், ஆளுமை, வர tலாறு, வழிபாடு, தரி சனம், தத்துவம் எனப்
சைவ நற்சிந்தனைகள் பலதரப்பட்ட கட்டு
ரைகள் இந்நூலில்
அமைந்துள்ளன.
苏教的批新的指將

Page 48
ஒ0ானத்தி
மரத்தைப் போன்றவர்கள் நாங்கள் வெட்ட வெட்ட சஞ்சலப்படோம் மீண்டும் மீண்டும் துளிர்த்தெழுவோம் வேருடன் பிடுங்கி வீசிழனும் விழுந்த விதைகளால் மீண்டும் மரமாவோம்.
பீனிக்ஸ் பறவைகளல்ல நாங்கள்
சாம்பரிலிருந்து உயிர்த்தெழ. நம்ரூத் வளர்த்த தீயாய் எரிக்க வருபவர்களின் கரங்களை ஏமாற்றி எரிந்து கொண்டிருக்கும் ஊழித் தீயுள்ளிருந்தும் குளிர்ந்து மீண்டும் மேலெழுவோம்
இறைவனின் இனப்பெருக்க விதிகளுள் ஏதாவதொன்றாய் இருப்பவர் நாம் இறந்தபின்னரும் எமது வாரிசுகள் எம்மை இனங்காட்டும்.
எண்ணங்களில் இருந்தும் கூட எம்மை ஒழித்துவிட எடுக்கும் எத்தனங்கள் அத்தனையும்
(நம்ரூத் : இறைதூதர் இப்றாகீமை தீ வளர்த்து
46

ன் முகத்துல "
தாமிம் அகமது,
வீழ்த்தி, எழுத்து வண்ணங்களுள் நாம்
வாழ்ந்துவருவோம் எம்மவர் பண்னும் சான்றாண்மையிலாப் பண்பிலிப் பழிப்புரைகள் திண்ணமாய் ஒருகாலும், மறுகாலும் திரும்பிவரப் போவதில்லை எமைநோக்கி
மௌனம் எனும் ஆயுதத்தை ஏந்தியவர்களாய் நாம் இருப்போம் எமது மரணத்தின் பின்னரும் எம்மை அது மறுமைவரை காக்கும்.
இம்மையில் மட்டுமே இவை மட்டும் எதிர் கொள்ளவிருக்கும் மறுமையின் பக்கங்கள் பற்றி ஏதுமறியோம் ஆயினும் மறுமையில் மௌனம் பேசும் நிச்சயமாய்.
அஞ்ஞானத்தை மெய்ஞ்ஞானம் ஆட்கொள்ளும்போது நெஞ்சக்கனல்களெல்லாம் பேசா மௌனத்துள் நீர்த்துப் போகும் நிஜமாய். 1 எரிக்க முயன்ற தீயவன். தீ-அவன்)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 49
எழுதத் இ
எண்ண
இந்தியாவின் பொதுத்தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி ஏற்பட்ட பின்னர், வடக்கில் காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டில் தி.மு.க.வும் தமது தோல்விக்கான காரணங்களை விலாவாரியாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றன: இதற்காகப் பெரிதாகத் தலையைப் போட்டுப் பிய்த்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இரண்டு கட்சிகளுமே குடும்ப ஆட்சிக்குப் பெயர்போனவை. அவற்றின் குடும்ப ஆட்சிதான் அவற்றின் தோல்விக்கான முழுமுதல் காரணம். என்று இந்த இரண்டு கட்சிகளும் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து விடுபடுகின்றனவோ, அன்றுதான் அவற்றுக்கு விமோசனம். இல்லையேல், மக்களின் சாபத்தைத்தான் அவை பெற்றுக்கொள்ளும். ஒரு கட்சியில் தாயும், தனையனும் (காலப்போக்கில் மகளும் இணைந்து கொள்ளக் கூடும்). மற்றைய கட்சியில் தந்தையும் மகனும். பிறிதொரு நாட்டில் அண்ணன், தம்பிகள், மகன் என்று பட்டியல் நீளும்.
இந்தியப் பிரதமர் மோடி திறமையானவர், துணிச்சலானவர், விஷயங்களை விளங்கிக் கொள்ளக்கூடியவர், தாமாக முடிவுகளை எடுக்கக் கூடியவர். எனினும், அவரைச் சுற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ். வலைக்குள்ளும் சிக்கியிருப்பவர். அண்மையில் ஆர்.எஸ்.எஸ்.
முக்கியஸ்தர்
ஒருவர், இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு, இலங்கையுடனான தனது நட்பை இழந்துவிடக்கூடாது என்ற பாணியில் கருத்துத்
தெரிவித்திருந்தார். இப்போது ஓரளவுக்கு வாயைச் சற்று மூடிக்கொண்டிருக்கும் அகில இந்திய அரசியல் கோமாளியாகிய சுப்பிரமணிய சுவாமியும் அவ்வப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

இதூண்டும் கல்கள்
பேராசிரியர் துரை மனோகரன்
போது மோடியின் கால்களை இடறக்கூடியவர். "சுவாமி” எப்போதும் இலங்கைத் தமிழர்களைப் பற்றிச் சிந்தியாது, தமது அயல்நாட்டு நண்பர்களையே நேசிப்பவர். இத்தகையவர்கள் மத்தியில்தான் மோடி, தமது ஆளுமையை வலுப்படுத்த வேண்டியவராக உள்ளார்.
நமது நாட்டின் பக்கம் நமது பார்வையைச் செலுத்துவோமானால், பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. மேலிட ஆசீர்வாதங்களுடன் நடந்துவரும் "சேனா”க்களின் அநியாயங்கள் அக்கிரமங்கள், அட்டூழியங்களைத் தட் டிக்கேட்பதற்கு
யாரும்
இல்லை.
ஏகும் இங்கும்
அண்மையில் தென்பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு மேற்குலகச் சக்திகளின் சதிகளே காரணம் என்று, எசமானர்களுக்காக அவ்வப்போது ஊடகவியலாளர்களை ஒன்று கூட்டிச் “சமாதானம்" பேசும் சர்வமதக் கூட்டமைப்பு ஒன்றின் இஸ்லாமியப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டமை மிக வேடிக்கையானது! பேரினவாத எசமானர்களுக்காகச் சர்வ மதங்களையும் சேர்ந்த சிலர் படும்பாடு சொல்லுந்தரமன்று.
இலங்கையின்
முக்கிய முஸ்லிம் கட்சி, கிழக்கு மாகாண சபையில் தனக்குக் கிடைக்கவிருந்த முதல்வர் பதவியை முன்னர் கோட்டை விட்டமை சகலரும் அறிந்த செய்தி. தமது பேரினவாத எசமானர்களுடன் கூட்டுச் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைக்க விரும்பி,

Page 50
தனது முக்கியத்துவத்தை இழந்தது, அக்கட்சி. முக்கிய தமிழ்க்கட்சி ஒன்றுடன் இணைந்து, "ராசா” மாதிரி இருந்திருக்க வேண்டிய அக்கட்சி, பழக்கதோஷத்தின் காரணமாகப் பேரினவாதக்கட்சி ஒன்றுடன் இணைந்து "அடிமை” போலச் செயலாற்றுகின்றது. முன்னர் கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, இன்னொரு சந்தர்ப்பத்துக்காக அது காத்திருந்தது. அதற்கேற்ப ஆட்சியின் பின்னரைப் பகுதியில் தனக்கே முதல்வர் பதவி தரப்படவேண்டும் என்று கேட்டிருந்தது. உறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. அது எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் இப்போது வந்தபோதும்கூட அக்கட்சிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி வழக்கம்போல் காப்பாற்றப்படவில்லை. தனக்கு உறுதி அளிக்கப்பட்டபடி முதல்வர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று தெரிந்ததும், அடுத்த மார்ச் மாதம் வரை இப்பிரச்சினையை ஒத்திவைப்பதாகக் கூறி, தனக்கும், தனது பேரினவாத எசமானர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு பக்குவமாகத் தப்பிக்கொண்டது. பாவம் முஸ்லிம் மக்கள்! ஏமாந்து ஏமாந்து ஏமாந்து பழகிவிட்டனர். அடுத்த மார்ச் மாதம் வரும்போது, அக்கட்சி பிறிதொரு சாட்டைக் கண்டுபிடித்துச் சொல்லும். முஸ்லிம் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியின் முக்கியஸ்தர்கள் காலத்துக்குக் காலம் மக்களுக்கு ஏதாவது சொல்லிச் சொல்லிச் சமாளித்துவிடுவார்கள். "பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை” என்பது, அக்கட்சிக்கு மிகப் பொருத்தமானது. அண்மைக்காலமாகத் தமது கட்சி "தீர்க்கமான முடிவு” ஒன்றை எடுக்கப் போவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பேசியும், அறிக்கைகள் விட்டுக்கொண்டும் இருந்தனர். அதை நம்பி, நானும் எனது பத்தியெழுத்தை ஒருநாள் தள்ளிப்போட்டுக்கொண்டேன். ஆனால், இதை எழுதும்வரை அக்கட்சியின் "தீர்க்கமான முடிவு" எதுவும் வெளிவரவில்லை.
மந்திரி பிரதானிகளாக எப்போதும் இருப்பதையே குறிப்பிட்ட கட்சி மனதார விரும்புகிறது. அவற்றில்
இருந்து வெளியேறிவிட்டால், அக்கட்சி
மேலும் மேலும் துண்டுதுண்டுகளாக உடையும் 48

வாய்ப்பு இருக்கிறது. தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு, தமது எசமானர்களைப் பாதுகாப்பதே அவர்களின் ஒரே இலட்சியம். ஏதாவது விசாரணை அது இது எனது எது வந்தாலும், தமது எசமானர்களைக் காட்டிக்கொடுக்கும் "அநியாயத்தை”த் தாம் செய்யமாட்டோம் என்றும்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் தங்கள் பிரச்சினைகளை யாரிடம் சொல்லி அழுவது?
தமிழ் அரசியல்வாதி ஒருவர் அண்மையில் பயனுள்ள மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு உண்மையில் ஆனந்தத்தை ஏற்படுத்துகின்ற அறிக்கை அது. தாம் நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். காலம் தாழ்த்தியாவது இந்த நல்லெண்ணம் அவருக்கு ஏற்பட்டமை வரவேற்கத்தக்கது. இந்த முடிவை எடுத்தமைக்காகத் தமிழ்மக்கள் ஒருபோதும் அவர்மீது கோபப்படமாட்டார்கள். பதிலாக அவரைப் பாராட்டவே செய்வர். முன்னர் தமிழ்மக்களின் ஆனந்தத்தைச் சங்கரித்தவர், இப்போது அவர்களுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கை வானொலி - இன்றைய நிலை
இலங்கை வானொலி நீண்ட காலமாகத் தமிழ்மக்களதும், முஸ்லிம் மக்களதும் விருப்பத்திற்குரிய வானொலியாகத் திகழ்ந்து வந்துள்ளது. பல்வேறு தனியார் வானொலிகள் வந்துள்ளபோதிலும், இலங்கை வானொலியின் தனித்துவம் மகத்தானது. இலங்கை வானொலியின் ஓர் ஒலிபரப்புக்குத் "தென்றல்" என்று பெயரிட்டமையில் தொடர்புபட்டவன் என்ற முறையிலும், அதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவன் என்ற முறையிலும் இலங்கை வானொலியின் வளர்ச்சி தொடர்பாக எனக்கு இயல்பாகவே ஈடுபாடு உண்டு. “இலங்கை வானொலி பற்றிக் கருத்துக் கூறுவதற்கு இவருக்கு என்ன அருகதை உண்டு?” என்று பத்திரிகைகளில் எழுதியவர்களும் உண்டு. இவர்களை நான் பொருட்படுத்துவதே இல்லை.
இலங்கை வானொலியைப் பொறுத்த
ழ்ச்சி அறையில், மயில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 51
வரையில், 80 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதைக் கொண்டிருக்கும் அதேவேளை, 1950களில் இருந்து புகழ்பெற்ற வானொலியாக அது இருந்துவந்துள்ளது. எஸ்.பி.மயில்வாகனன், பரராசசிங்கம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீட், ராஜேஸ்வரி சண்முகம், ஜோர்ஜ் சந்திரசேகரன், நடராஜசிவம், புவனலோஜினி, சற்சொரூபவதி முதலானோர் இலங்கை வானொலியின் புகழை உயரப் பறக்கச் செய்த ஒலிபரப்பாளர்கள். இவர்களைத் தொடர்ந்து, இன்றும் திறமையான சில ஒலிபரப்பாளர்கள் இலங்கை வானொலியில் சேவையாற்றி வருவது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்களில் ஜெகன்மோகன் பல்வேறு திறமைகள் வாய்ந்தவர். சிறந்த அறிவிப்பாளர்களில் ஒருவர் மட்டுமன்றி, திறமையான பாடகரும் கூட. குரல் மாற்றிப் பாடுவதில் திறமை வாய்ந்தவர். வானொலி நிகழ்ச்சிகளை அழகாகச் செய்வதில் வல்லவர். ஜெயரஞ்சன் யோகராஜ் இலங்கையின் சிறந்த ஒலிபரப்பாளர்களில் ஒருவர். அண்மையில் சிறந்த தமிழ்த் தொலைக்காட்சிச் * செய்திவாசிப்பாளர் என்ற விருதினையும் பெற்றுள்ளார். சிறந்த ஒலிபரப்பாளராகிய ஜெ.யோகராஜ் வார இறுதிநாளில் தாம் நடத்துகின்ற காலை நிகழ்ச்சியொன்றில் யாரோ சார்பாகவும், எதனோ சார்பாகவும் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுகிறார். நிகழ்ச்சிகளில் தொலைபேசி மூலம் பங்குபற்றும் நேயர்கள், இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பாக உணர்ச்சிவசப்படுவது இயல்பானதே. ஆனால், ஒலிபரப்பாளர் ஜெயராஜ் யாருக்காகவோ எதற்காகவோ வக்காலத்து வாங்குவதுபோல் உணர்ச்சி வசப்படுவது என்னவோ போல இருக்கிறது. சிறந்த ஓர் ஒலிபரப்பாளர் தமது தரத்தை இவ்வகையில் தாழ்த்திக்கொள்வது நல்லதல்ல.
முருகேசுரவீந்திரன் இலங்கை வானொலியில் இன்னொரு சிறந்த ஒலிபரப்பாளர், அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர் ஆகிய இரு துறைகளிலும் திறமை வாய்ந்தவர் அவர். அத்தோடு, ரவீந்திரன் இலங்கையின் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவருமாவார். இலங்கை வானொலியின் பிறிதொரு சிறந்த ஒலிபரப்பாளர் கே. ஜெயகிருஷ்ணா. அவர் சிறந்த அறிவிப்பாளர், செய்திவாசிப்பாளர் என்பதோடு, சிறந்த ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

வானொலி நடிகர், பாடகரும் கூட.
இலங்கை வானொலியில் தனித்துவம் மிக்க ஒருவராகச் செயல்படுபவர். ஏ.எம்.தாஜ் சிறந்த அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர் என்பவற்றோடு அவர் குறிப்பிடத்தக்க கவிஞரும் கூட இலங்கை வானொலி அரசு சார்பான வானொலியாக இருந்தபோதிலும், தாஜ் தாம் நடத்தும் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளை நிதானத்துடனேயே நடத்துவார். எதிரணியினரின் கருத்துகளும் அந்த நிகழ்ச்சிகளில் உள்வாங்கப்படும். எப்போதும் தமது நிகழ்ச்சிகளைத் தரமாக நடத்தும் ஒலிபரப்பாளர், தாஜ்.
பெண் ஒலிபரப்பாளர்களிலும் கணிசமானவர்கள் திறமையுடையவர்களாகவே விளங்குகின்றனர். ஜெயலட்சுமி சந்திரசேகர் சிறந்த அறிவிப் பாளர்களில் ஒருவரும், சிறந்த செய்தி வாசிப்பாளர்களில் ஒருவருமாகத் திகழ்கிறார். அத்தோடு, அவர் நல்ல பாடகியும்கூட. நாகபூஷணியும் சிறந்த அறிவிப்பாளர், சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற பெருமைகளைப் பெற்றவர். அவர் ஒரு கவிஞராகவும் விளங்குகின்றார். நாகபூஷணி எனது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. புர்கான்பீ இப்திகார் இன்னொரு சிறந்த பெண் ஒலிபரப்பாளர் ஆவர். அவரும் தனித்துவ ஆளுமை கொண்டவர். இலங்கை வானொலியின் பிறிதொரு சிறந்த ஒலிபரப்பாளராக ஜெயந்தி ஜெயசங்கர் விளங்குகிறார். அத்தோடு, அவர் ஒரு கவிஞராகவும் திகழ்கிறார். கலையழகி வரதராணியும் நல்ல குரல் வளம் கொண்ட சிறந்த அறிவிப்பாளர்களுள் ஒருவராக விளங்குகின்றார். அவரது சில மேடைப்பேச்சுகளைப் பார்த்துள்ளேன். நன்றா கவே செய்கிறார்.
இவ்வாறு திறமை வாய்ந்த கணிசமான ஒலிபரப்பாளர்கள் இலங்கை வானொலிக்குக் கிடைத்துள்ளனர். சில இளம் அறிவிப்பாளர்களும் இயன்றவரை திறமையாகச் செயல்படுகின்றனர். போட்டாபோட்டிகள் நிறைந்த வானொலிச் சமூகத்தில் திறமையுள்ளவர்கள் எப்படியும்
முன்னுக்கு வந்துவிடுவார்கள்.
இலங்கை வானொலியைப் பொறுத்தவரை சில ஒலிபரப்பாளர்கள் விமர்சகர்கள் மீது ஒருவகை வெறுப்புணர்வு கொண்டவர்களாக விளங்குவதையும் அவதானிக்க முடிகிறது. இலங்கை
வானொலியின்
காலை
49.

Page 52
தன, பரிகாசத்யாயமான கரும்பறது.
நிகழ்ச்சியொன்றில், எனது ஞாபகத்தில் இரு தடவைகள் விமர்சகர்களை மட்டந்தட்டும் முயற்சிகள் நடந்தன. 31.07.2012, 6.11.2012 ஆகிய இரு தினங்களில் அவ்வாறான முயற்சிகள் இடம்பெற்றன.
இவ்வாறான தரக்குறைவான முயற்சிகளும் இலங்கை வானொலியில் இடம்பெற்றமை, அதன் தரத்தைக் குறைப்பதாகவே அமைந்துவிட்டது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக காலை நிகழ்ச்சியொன்றில் நல்ல மாறுதல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. சமூகம் தொடர்பான பிரச்சினைகளில் நேயர்களின் கருத்துகளை அறிய முயற்சிப்பது பயனுடையதாக விளங்குகிறது. ஆனால், பத்திரிகைச் செய்திகளை வாசிக்கும்போது சில அறிவிப்பாளர்கள் எதிரணியினரின் நியாய மான கருத்துகளைக்கூடக் கேலியுடனும், கிண் டலுடனும் கொச்சைப்படுத்துவது, அவர்களின் தரமற்ற நிலைப்பாட்டையே இனங்காட்டுகிறது. எதிர்க்கட்சிகளின் நியாயமான கருத்துகளை ஏன் பரிகாசத்துக்கு உட்படுத்தவேண்டும்? சிலவேளைகளில் அறிவிப்பாளர்கள் தமது அறியாமையையும் அவ்வப்போது பத்திரி கைச் செய்திகள் வாசிக்கும்போது வெளிப் படுத்துவது உண்டு. வானொலியைச் செவி மடுப்பவர்கள் எல்லோரும் பாமரர்கள் அல்லர் என்ற பய உணர்வு - அறிவிப்பாளர்களுக்கு இருத்தல் வேண்டும். பத்திரிகைச் செய்திகளை வாசிப்பவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நிதானத்துடனும், நேர்மையுடனும் அவற்றை வாசகர்களுக்கு வழங்கவேண்டும். வட மாகாண முதலமைச்சரைக்கூடப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிண்டல் செய்து, தங்கள் எசமானர்களைத் திருப்திப்படுத்த இவர்கள் முயற்சித்துள்ளனர். இவை எல்லாம் வானொலி மரபுக்கு மாறானவை.
முன்னர் கே.எஸ். நடராசா இலங்கை வானொலியின் தமிழ்ப்பிரிவு அதிகாரியாகக் கடமையாற்றியபோது தமிழ் நிகழ்ச்சிகள் தொடர்பாகக் கண்ணும் கருத்துமாக இருப்பார். துவறான சொற்பிரயோகங்கள் அறிவிப்பாளர் களால் பிரயோகிக்கப்பட்டால்கூட, அடுத்தநாள் அவர்கள் அவற்றுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். தரமற்ற கருத்துகள், தரமற்ற பாடல்கள், தரமற்ற நிகழ்ச்சிகள் வானொலியில் ஒலிபரப்பப்பட முடியாத நிலை இருந்தது. இன்று அப்படியல்ல. யார்
50
வா

எதுவேண்டுமானாலும் எப்படியும் செய்யலாம் என்ற ஒரு வரன்முறையற்ற நிலை இலங்கை வானொலியில் காணப்படுகிறது. முறையான கல்வித்தகைமைகள் இல்லாதோர்கூடப் பதவி உயர்வுகளை இலகுவாகப் பெற்றுவிடுகின்றனர். மேலிடத்தின் கடைக்கண்பார்வை மாத்திரம் இருந்தால் போதும் என்ற
நிலை காணப்படுகிறது.
இலங்கை வானொலியின் உயர் அதிகாரிகளாகத் தரமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழ் ஒலிபரப்பைப் பொறுத்த வரையிலும் உரிய மாற்றங்கள் செய் யப்படவேண்டும். இலங்கை வானொலியை மீண்டும் தரமான சேவையாக மாற்றுவதற்கு, இத்துறை தொடர்பாக ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் முயற்சிக்கவேண்டும். கே.எஸ். நடராசா, திருஞானசுந்தரம் போன்ற திறமைமிக்க அதிகாரிகளைக் கொண்டதாகத் தமிழ் ஒலிபரப்பு விளங்கவேண்டும்.
0 0 0
நூல் அபிவிருத்தி வங்கியியல்
ஆசிரியர்: பொன். பாலகுமார் வெளியீடு : சன்மார்க்க சபை, குரும்பசிட்டி
ஆசிரியரின் துறை சார்ந்த இக்கட்டுரைத் தொகுதியில் கிராமக்கடன், வறுமை தணிப்பதற்கான கருவியாக
நுண்நிதி, அபிவிருத்தி வங்கியியலில் பங்கேற்பு, அபிவிருத்திச் செயன்முறைகள்,
சமூக வங்கியியல், சிறு கைத்தொழில் முயற்சிக்கான வங்கிக் கடன் வசதிகள், சமகால வங்கியியல், சாமான்னியர்க்கான வங்கியியல், அபிவிருத்தி வங்கியியலில் ஒரு புதிய பரிமாணம், ஏதிலிகளுக் கான கடன் திட்டம், விவசாயி களுக்கான கடனட்டை வழங்குவது சாத்தியமானதா? ஆகிய
அபிவிருத்தி வங்கியியல் கூபயன்மிக்க கட்டுரைகள் "அடங்கியுள்ளன. பவங்கியியலாளர்களுக்கு
4 மட்டுமன்றி 4 பயனாளிகளுக்கும் 4. பயன்தரவல்ல நூல்.
ஆசிரியர் பாராட்டுக்
குரியவர்.
பாலகுமார்
|
1 2 )
சாதி At LTE.
"1:12:
வா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 53
தமிழகச்
ரெய்ட்
கே.ஜி.மகா
முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்மைக் கால யூகங்களையும் வியூகங்களையும் நினைத்தால் “உன் சமயலறையில் நான், உப்பா சர்க்கரையா ... எனும் சினிமா பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது என்றாலும், "என் சமையறையில் எல்லாம் அம்மாதான் சர்வமயம்" என்று பதிலளிக்கத் தோணுகிறது!
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா காய்கறி, அம்மா தேயிலை - டீ, அம்மா சீனி!
பாராளுமன்றத் தேர்தலில் பணமழை பொழிந்து, ஜாம் ஜாம் என்று வாக்குகளைக் குவித்து டில்லியையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, இரண்டு ஆண்டுகளில் நடக்கப்போகும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இப்பொழுதே காய்நகர்த்தி, தமிழக வாக்காளர்களில், ஆண் வாக்காளர்களுக்கு சமமாக இருக்கும் தாய்க் குலத்தை வளைத்துப்போட தொடங்கிவிட்டார்.
தேர்தல் காலம் நெருங்கினாலே இலவசமாக (ஆட்சி அகராதியில் விலை இல்லாத) மிக்ஸி, கிரைன்டர், மின்விசிறி, கேஸ் அடுப்பு இவற்றுடன் ஆடு, மாடு ஆகியவை ஓகோ என்று பட்டுவாடா செய்யப்பட்டு, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் பணநாயகத்தார் கோலோச்சத் தொடங்கிவிடுவார். இந்த நிலையில் மக்கள் மனதில், குடும்பங்களில் தினமும் நினைத்து வாழும் வகையில் நேற்றைய நிலவரப்படி சாப்பிட நுழைந்தால் அம்மா உணவகம், அம்மா குடிநீர் போத்தல், அம்மா மலிவு விலை காய்கறி நிலையம் என்று பிரசார யுத்தி வளர்ச்சிகண்டு இன்று "அம்மாஉப்பும் ஜெயலலிதா புகைப்படத்துடன் சந்தை
யைத் தொட்டுவிட்டது. வரவிருப்பது
அம்மா சர்க்கரை
(சீனி), ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)
'அம்மா உப்பு'

திகள்
சதேவா
Hi--ட்பு 4 பேங்க்
14 Whion துப்புயும் பய
பயம் -- பர்பு படபடப்பு:ாட
கர-1: தா
அம்மா தேயிலை , அம்மா டீ என்று ஜெயா படத்துடன் தாய்மார்களின் சமையல் அறையை ஆக்கிரமிக்கப்போகிறது! எங்கும் எதிலும் அம்மா பெயர், படம் காணப்பட்டாலும் தேர்தல் காலத்தில் இவை மறைக்கப்படுவது ஒரு பாஷனாகிவிட்டது.
“அம்மா உப்புக்கு என்ன அவசரம்? உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
புதிதாக கடந்த மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட "அம்மா உப்பு” வின் தரத்தைப் பார்க்க முன்னர் தமிழ்நாடு உப்பு பற்றி ஒரு புள்ளி விபரம்: இந்தியாவிலேயே அதிக உப்பு விளையும் மாநிலம் குஜராத்தான். இதற்கு அடுத்தது தமிழ் நாடு. மேலும், தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகத்துக்கு எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து தான் உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது! இதனைப் படித்ததும் "அட பாவிகளே... உப்பை "கட்” பண்ணி, காவிரி, முல்லைப்பெரியாறு மற்றும் நதிநீர்ப் பிரச்சனைகளை தீர்த்துவைக்கவேண்டியது தானே ... என்று நீங்கள் நினைப்பது சரிதான் என்றாலும், அது பழிதீர்த்த கதையாகிவிடும். எப்பொழுதும் ஏதோ ஒரு பிரச்சனையில் கொக்கி போடுவதுதானே அரசியல்!
உப்பு பற்றி ஒரு சின்னக் கணக்கு : ஒரு “கிலோ சாதாரண உப்பை தயாரிக்க ஆகக்கூடிய செலவு நாற்பது காசுகள்தான். இதனை பாக்கெட்டில் நிரப்பி, கடைகளில் விநியோகிப் பதற் கு .
கொடுத்து பெண்களின் நாடிபிடிக்க யற்சிக்கும் ஜெயலலிதா!

Page 54
ஆகும் செலவு ஒரு ரூபாதான். இந்த நிலையில், அம்மாவின் அயோடின் உப்பின் அடக்கவிலை ஒரு ரூபா மட்டும்தான் எனும் நிலையில் அதன் பாக்கெட் செலவு, கடைகளுக்கான விநியோகம் என்று கூட்டிக் கழித்தால் ஒரு கிலோ உப்பு விலை நான்கு ரூபாவைத் தாண்டாது. ஆனால், "அம்மா உப்பு” மூன்று தரங்களில் முறையே 10,21,25 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துவிட்டது. உப்பு விற்க முயற்சித்ததற்கு ஒரு காரணம்: ஆஸ்தான ஜோதிடர்கள், "குடி நீர், அன்னதானம்” இதே சூட்டுடன் உப்பும் கொடுத்தால் (உப்பு தின்னவன் குடிநீர் குடித்துத்தானே தீரவேண்டும்) வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அம்மா பக்கம்தான்” என்று அளித்த உறுதியும் தானாம்.
ஒரு (குடும்ப) பெண் தனது வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்தால்: போத்தல் குடி நீரை கையிலெடுத்தால் அதில் தெரிவது அம்மா படம். தேயிலை பாக்கெட் என்றால் அதில் வருவது அம்மா படம், சீனி பாக்கெட், அன்றாட அவசியத் தேவை, உப்பு என்றால் பாக்கெட்டுகளில் பளிச்சிடுவது அம்மா, இது மட்டுமல்ல கிரைன்டர், மிக்ஸி, மின்விசிறி, காஸ் அடுப்பு எல்லாவற்றிலும் அம்மா படம் தான். இவற்றுடன் தமிழ்நாட்டிலுள்ள விலை குறைந்த 654 அம்மா உணவகங்களிலும் ஜெயா படம் காட்சி கொடுக்கிறது. பிரச்சாரம் இல்லை ஆனால் பிரச்சாரம்! கடைசியாக சந்தைக்கு வந்திருக்கும் மூன்று வகை "அம்மா உப்பில்” அயோடின் உப்பு கிலோ ரூ.10, அயர்ன் மற்றும் அயோடின் கலந்த உப்பு கிலோ ரூ.21, சோடியம் குறைக்கப்பட்ட உப்பு கிலோ ரூ.25. விஷயம் தெரிந்தவர்கள் இந்த உப்பு வகைகளை கேட்டு வாங்குவார்கள். படிப்பறிவில்லாதவர்கள் மற்றும் இந்த அயர்ன், அயோடின், சோடியம் சமாச்சாரம் புரியாதவர்கள்... ஒருகையில் காசு, மறு கையில் உப்பு. அவ்வளவுதான்.
அரசு நலத் திட்டங்களில் அம்மாபடம்: வாக்கு வேட்டைக்கு தயாராகிறார்!
பாராளுமன்றத்தேர்தலில்37தொகுதிகளைச் சுருட்டிக்கொண்டு அனுபவம் பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, சூட்டோடு சூட்டாக 2016இல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு ஊட்டச்சத்து நிறைந்த மலிவு விலை “அம்மா உப்பை” முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி, 52

நிதியில் அதிலிருந்லிேருந்தே
"உப்பிட்டவனை உள்ளளவும் நினை!" என்று தாய்மாரை பயமுறுத்தியிருக்கிறார்.
அம்மா படத்துடன் போத்தல் குடிநீர் விநியோகம் வந்தபோதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தின் கதவைத் தட்டியவர், வழக்குகள் புகழ் சமூக ஆர்வலர் "ரபீக்” ராமசாமி. இப்பொழுது "அம்மா உப்பும்” வீதிக்கு வந்துவிட கொதித்துப்போனார். செய்தியாளர்கள் இவரைச் சந்தித்தபோது அம்மாவை கடுமையாகச் சாடினார்.
"அரசு மது பான கடைகள் மூலம் மக்களிடம் பறிக்கும் கோடிக்கணக்கான பணத்தை வைத்தே தரமான குடிநீரையும் உப்பையும் ஏழை மக்களுக்கு இலவசமாகவே வழங்கலாம். அதைச் செய்ய ஜெயாவுக்கு மனமில்லை. அரசு திட்டங்களில், அம்மா அம்மான்னு தனது பெயரையும் போட்டோவையும் அவர் போட்டுக்கொள்வதே சட்டத்துக்குப் புறம்பானது, ஜெயலலிதாவுக்கு தகுதி கிடையாது. அவங்களோட பர்ஸிலிருந்தோ, அவங்கட வருமானத்திலிருந்தோ அல்லது அவர் கட்சி நிதியிலிருந்தோ ஒரு பைசாகூட இந்த உப்புக்காக செலவு பண்ணலை. மக்கள் வரிப்பணத்தில் கைவைத்து, உப்பு தயாரித்து, அதை மக்களிடமே விற்கும் காரியம் இது. சட்டத்தின் பார்வையில் 18 ஆண்டுகளாக அவர் சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் குற்றவாளி. இப்படியிருக்க, அரசின் உப்பில் அவரது பெயரையும், புகைப்படத்தையும் போடலாமா? இவரா இந்த உப்பை தயார் செய்தார்? உப்பை தயார் செய்த தமிழ்நாடு உப்பு நிறுவனத் தலைவர் பெயர் போட்டிருந்தால் நியாயம் இருக்கிறது. முதல்வர் உப்பு என்றாவது போட்டிருகலாம். அரசு நலத்திட்டத்தில் எல்லாம் தனது பெயர், படம் போட்டு, வாக்குகளுக்காக மக்கள் பணத்தை வீணடிக்கலாமா? அம்மா உப்பைத் தொடர்ந்து அம்மா மிளகாய்த் தூள், அம்மா மஞ்சள் தூள் என்று தொடங்கி, பாடசாலை, பல்கலைக்கழகம், மருத்துவமனை, பஸ் நிலையம் என்று அம்மா பெயர் நீடித்து, தமிழ் நாட்டுக்கே "அம்மா நாடு” ன்னு பெயரை வச்சாலும் வச்சிடுவாங்க. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்துள்ளேன்... என்று "உப்பு தவிர்த்து உணவருந்தும்” ரபிக் ராமசாமி, ரத்தக் கொதிப்பு ஏறிய நிலையில் உணர்வுகளைக் கொட்டினார்!
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 55
- கே. எ
சம கால .
பிபில இலக்
மகேழ்வும்
"திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை” நூல் ெ
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் திறந்த வெளியீட்டு நிகழ்வு (07.06.2014) பெண்கள் க கலீல் தலைமையில் புரவலர் அப்துல் கையு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கலாநிதி எஸ்.முருகானந்தன் வழங்க, கவிவாழ்; கருத்துரையை "கலாபூஷணம்” எம்.எம்.மன்ஸ்? ரிஸ்னா வழங்கினார்.
பொன்மனச் செம்மல் பட்டமளிப்பு வைபவ இறுவட்டு
இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகம் கொள்கைகளோடு செயல் புரியும் தொண்டா பட்டம் வழங்கி கெளரவம் செய்தது. அந்த நி புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் த உமர் முன்னிலையில் சிரேஸ்ட சட்டத்தரணி 8 விழாவை நடத்தியது. இந்நிகழ்வில் வரவேற் "செம்மொழித் தமிழ்த் தென்றல்” கலைஞர் . இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகத் த ை பொன்மனச் செம்மல் இதிரிஸ்க்கு பொற்கிழி
தமிழ்க்கலைஞர் அபிவிருத்தி நிலையம் க சுகதாச ஸ்போர்ட்ஸ் ஹோட்டலில் தொழில் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை இதிரிஸ்க்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வினை முத்தப்பன் செட்டியார் வழங்க, சிறப்புரையை த கலைஞர் கலைச்செல்வன் நிகழ்த்தினார். கொ கையும் கெளரவம் வழங்கி சிறப்பு செய்தார். அவர்களின் சில பார்வைகளும் சில பதிவுகள் தொகுத்த சிற்றேட்டை கொழும்பு மாநகர ச வெளியிட்டு வைக்க அதன் முதற்பிரதியை " கோவிந்தபிள்ளை பெற்று சிறப்புச் செய்தார். ! எம். இதிரிஸ் ஏற்புரையை தொடர்ந்து அல் - ஹா. மிகவும் சுவாரசியமாக பாடகர், அறிவிப்பாளர் தமிழ்க் கதைஞர் வட்டத்தின் (தகவம்) பரிசளிப்பு வேலுப்பிள்ளை நினைவும்.
தமிழ்க் கதைஞர் வட்டத்தினரின் (தகவ சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தகவம் மு. தய சிறப்பு அழைப்பாளர்களின் மங்கல விளக்கே நூறாவது ஜனன தினத்தைக் கொண்டாடும் மை உருவப்டத்திற்கு அவரின் புதல்வியார் திருமதி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

மபான்னுத்துரை
மவளியீடு
கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற நூல் கல்வி ஆய்வு நிலையத்தில் கவிஞர் கலைவாதி ம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பு செய்தார். ஆசியுரையை வைத்திய த்தை கவிஞர் என். நஜ்முல் ஹுஸைன் பாடினார். ர் வழங்க, ஏற்புரையை தியத்தலாவ எச்.எப்.
வெளியீடு ம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இலட்சியக் ளர்களுக்கு "பொன்மச் செம்மல்" என்ற சிறப்பு கேழ்வை இறுவட்டாக, அண்மையில் (14.06.2014) மிழ் தொண்டாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் ஜீ. இராஜகுலேந்திரா தலைமையில் வெளியீட்டு புரையை அந்தனிஜீவா வழங்க, சிறப்புரையை கலைச்செல்வன் நிகழ்த்தினார். நன்றியுரையை லவர் இம்ரான் நெய்னார் வழங்கினார்.
கடந்தவாரம் (15.06.2014) தலைநகர் கொழும்பில் திபர் எட்மண்ட பெர்ணான்டோ தலைமையில் லயில் "பொன்மனச் செம்மல்" எஸ்.எச்.எம். ன நடத்தியது. வரவேற்புரையை தேசபந்து அ. தமிழ்க்கலைஞர் அபிவிருத்தி நிலைய செயலாளர் டை வள்ளல், தேசமான்ய அல்ஹாஜ் அப்துல் "பொன்மனச் செம்மல்" எஸ்.எச்.எம். இதிரிஸ் நம் என்ற தலைப்பில் கலைஞர் கலைச்செல்வன்
பை உறுப்பினர் ஜனாப் எம்.எச்.எம் மன்சில் பொன் மனச் செல்வி” திருமதி கெளசல்யாதேவி விழா நாயகன் “பொன்மனச் செம்மல்” எஸ்.எச். ஜ் எஸ். பி. சி. தாஸிம் வழங்கினார். நிகழ்வுகளை எம் எம். இர்பான் தொகுத்து வழங்கினார். பு விழாவும், மலையக மக்கள் கவிமணி சி.வி.
ம்) பரிசளிப்பு விழா கொழும்புத் தமிழ்ச் சங்க பாபரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வு ற்றல், தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்மாகியது. லயக கவிமணி அமரர் சி. வி வேலுப்பிள்ளையின் ஜீன் விமலசூரிய மலர்மாலை செலுத்தி அஞ்சலி
53,

Page 56
செலுத்தினார்.
தேசியப் பத்திரிகைகள், சிறுசஞ்சிகைகள் காலாண்டுக்கும் தெரிவு செய்து கதைஞர்க தகவத்தின் பணியுடன் வருடந்தோறும் மூத்த பல பாராட்டி கௌரவம் செய்வதும் தகவத்தின் ப எழுத்தாளரும், உளவளத்துறை ஆலோசகரும் கதைஞர் வட்டத்தினரால் கௌரவிக்கப்பட்டார். வழங்க, ஏற்புரையை திருமதி கோகிலா மகேந்
2012,2013 ஆண்டுகளில் பரிசு வழங்குவதற் கருத்துரையை எழுத்தாளரும் வைத்தியருமான
சிறந்த சிறுகதைகளுக்கான பரிசுகளை மூத்த படைப்பாளி திருமதி கோகிலா மகேந்திரன் திருமதி அன்னலெட்சுமி இராஜதுரை ஆகியோர்
மக்கள் கவிமணி அமரர் சி.வி வேலுப்பி பேருரையை மல்லியப்பூ சந்தி திலகர் நிகழ்த்த
தகவம் குடும்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் வசந்தி தயாபரனின் நன்றியுரையுடன் நிகழ்வு ந
தகவம் சிறுகதைமதிப் ஞானத்திற்கு முதலில் எமது நல்வாழ்த்துக்கள்
2012/2013 ஆம் ஆண்டுகளில் பிரசுரமாகிய (தகவத்தின) மதீப்பீட்டு முடிவுகள் (18.05.2014 தெரிவு செய்யப்பட்டுள்ள மொத்தம் 21 சிறுகதைக் தட்டிக் கொண்டுள்ளது. ஞானத்தின் முயற்சிக்கும் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக இதனைக் க வீரகேசரி மற்றும் கலைமுகம் ஆகியன தலா இ சுடர்ஒளி, செங்கதிர் மற்றும் ஜீவநதி ஆகியன | விளிம்புநிலை இருப்பைத் தற்காத்துள்ளன.
ஞானம் தனது ஒவ்வோரடியையும் மிக நி தீர்க்கதரிசனத்துடனும் முன்னெடுத்து வருவது மக்
ஞானத்தின் போர்இலக்கியச் சிறப்பிதழ் நவீ. புதுப்புனலாகும். அதனைத் தொடர்ந்து வெளி. சிறப்பிதழும் நவீன தமிழ் இலக்கியத்தின் . இலக்கியப்பணி தொடர் எமது நல்வாழ்துக்கள்.
அதேவேளை ஈழத்து சிறுகதைகளின் தரத் தகவத்திற்கு எமது பாராட்டுக்கள். இரண்டு ஆண்டு மற்றும் சஞ்சிகைகளில் பிரசுரமாகிய சிறுகதைகள் மதிப்பீட்டாளர்களைக் கொண்டு காய்தல் உவத் மிகச்சிரமமான பணியாகும். தகவம் இராசையா ம பணியை அவரது மகள் திருமதி வசந்தி தயாபர 1974 ஆம் ஆண்டு வேல்அமுதன் கவிஞர் கோத்திர தமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) தனியே தரமான ஓர் அமைப்புமட்டுமன்று. அது ஈழத்திலிருந்து பெ தராதரத்தினை நிர்ணயிக்க உதவும் உரைகல்லாக (அனைத்து சிறுகதை எழுத்தாளர்களுக்கும் எமது
தகவத்தின் அரும்பணி தொடர்வதுடன் எ (விரிவடைதலும் வேண்டும்.

ரில் வெளியான சிறுகதைகளை ஒவ்வொரு நக்கு பரிசளித்து கெளரவம் செய்து வரும் டப்பாளி ஒருவரைத் தெரிவு செய்து மேடையில் னியாகும். அந்த வகையில் இவ்வருடம் மூத்த ரன திருமதி கோகிலா மகேந்திரன் தமிழ்க் அவருக்கான பாராட்டுரையை தெ. மதுசூதனன் திரன் நிகழ்த்தினார். த தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளைப் பற்றிய
எம்.கே.முருகானந்தன் வழங்கினார்.
பேராசிரியர் சபா.ஜெயராசா, பரிசு பெற்ற , தெளிவத்தை ஜோசப், மூத்த ஊடகவியலாளார்
வழங்கினர். ள்ளையின் நூற்றாண்டை யொட்டி நினைவுப்
னார். நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். திருமதி
றைவு எய்தியது. ) 0
வீடுபற்றியஒருகுறிப்பு
சிறுகதைகள் பற்றிய தமிழ் கதைஞர் வட்டம் தினக்குரலில்) வெளியாகியுள்ளன. பரிசுக்காகத் களில் ஞானம் 10 சிறுகதைகளுக்கான பரிசினைத் ) அயரா உழைப்பிற்கும் மற்றும் அதன் தரத்திற்கும்) ருதலாம். தினக்குரல் நான்கு சிறுகதைகளுக்கும்) ரெண்டு சிறுகதைகளுக்கும் பரிசில் பெற்றுள்ளன.) தலா ஒவ்வொரு கதைக்கு பரிசில் பெற்று தமது)
தானமாகவும் முழுமையான அர்ப்பணிப்புடனும் ) ழ்ெச்சிதருகின்றது.
ன தமிழ் இலக்கிய வரலாற்றில் பொங்கியெழும்) வரவிருக்கும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச்) ஆற்றுப்படையாக அமையவுள்ளது. ஞானத்தின்)
தின் உரைகல்லாக தகவம் விளங்குவதையிட்டு) கெளாக ஈழத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள்) - யாவற்றையும் சேகரிப்பதும் அவற்றைத் தரமான) தலற்ற வகையில் தெரிவிற்கு உட்படுத்துவதும், சஸ்டர் ஆற்றிவந்த தன்னலமற்ற இந்த இலக்கியப்)
ன் முன்னெடுத்துச் செல்வது போற்றுதற்குரியது. சன் ஆகியோரின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட சிறுகதைகளைத் தெரிவுசெய்து பரிசில் வழங்கும் வளிவரும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளின்
வும் விளங்குகின்றது. தகவத்தின் பரிசில் பெறும்? நல்வாழ்துக்கள். திர்காலத்தில் அதன் செயற்பாட்டு எல்லைகள்
சி. வன்னியகுலம், அல்வாய்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 57
வாசகர்
சிற்றிதழ்கள் சம்பந்தமாக 'ஞானம்' ஆசிர் தொலைக்காட்சி அறிவிப்பாளருடன் அண்ன தாமதாகவேனும் பார்த்து மகிழ முடிந்தது.
கலந்துரையாடலின்போது வாசிப்புப் ப அதிபர்களுடாக சஞ்சிகைகளை அறிமு பலன் தராததோடு சில சமயங்களில் அ தெரிவிக்கப்பட்டது.
இக்குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன் மூலம் கையைக்கடித்துக்கொண்ட கசப்பான வந்த அரசுகளின் கல்விக் கொள்கையே இதற்க முறையான கல்விக் கொள்கை இன்மை மாணவர்களைத் தயார் படுத்துவதில் கவன அதைவைத்துப் பிழைப்பு நடத்த, அதிபர்கள் பெறுபேற்றைப் பெறுவதில் ஆர்வம் காட்ட, ப தொழிற் சாலைகளாக உருமாற்றம் பெற்றிரு அதிபர்களும் ஆசிரியர்களும் கூட சூழ்நிலைக்க
எந்த மட்டத்திலும் தேடல் முயற்சிகா சமூகத்தில் ஆடலுக்கும் பாடலுக்கும் ஓரளவு ( படைப்பிலக்கியம் உட்பட ஏனைய கலைகளின் இந்த நிலை மாறும் போதுதான் எழுத்தாளர்கள் தீரும்.
எழுதத்தூண்டும் எண்ணங்கள் வாசித்த தி அதனால் எழுதுகிறேன். “சாத்தானின் வேதம்" ஐயாவின் உண்மை உணர்வினை நினைத்து மா
இப்படியான சிந்தனைகளோடு அடிக்கடி. நானும் ஒருவன் என்ற ரீதியல் இதை எழுதுகில் விட்டு எண்ணக்கூடிய துணிவானவர்களில் இ
நேர்கோட்டு அறிவுசால் புத்திசாலிகளே ஈ! உயரம் குறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அந்த இலக்கியப் படைப்பாளிகள் பலரும் தங்கள் : சேர்கிறார்கள். 10 அல்லது 12 பேருடன் ஒரு க சந்தர்ப்பத்தை உருவாக்குகிறார்கள். தங்களிலும் பேசுகிறார்கள். இத்தகைய விமர்சகர்களுக்கு 2 தட்டுகிறார்கள். ஒரு நல்ல இலக்கியக்காரன் = புவியல் சார்ந்த அனைத்துப் பின்னணிகளில் கூடக் குறைய இருக்கலாம். அது அவரவர் திற
ஒரு நேர்கோட்டில் பல கிளைகள் கொல் வேண்டும். இத்தகைய குறும் மனசுக்காரர்கள்
மற்றவர்களை மாட்டிவிடுவதற்கு ஒருதயங்காது இலக்கியக்காரன் என்பவன் எதையும் நேருச் > இருக்க வேண்டும். அப்படி இல்லையென்ற அத்துறையிலிருந்து விலகிவிடுவதே சாலவும் !
மற்றவர்களை மட்டம் பண்ணுவதை விட் யும் எண்ணிப் பார்த்துச் செயற்படுங்கள். கூட் ஜெயித்ததாகச் சரித்திரம் இல்லை. அது உ சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

பேசுகிறார்
யரும் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களும் வசந்தம் மயில் நிகழ்த்திய கலந்துரையாடலைச் சற்றுத்
ழக்கம் குன்றியிருப்பது குறித்தும் பாடசாலை கப்படுத்தவென நாடப்பட்ட ஒத்துழைப்பு வமானத்தை அளித்தமை குறித்தும் கவலை
மை நிராகரிக்க முடியாததே. நூல் வெளியீட்டின் அனுபவம் எனக்கும் உண்டு. எனினும் அடுத்து ரன காரணி என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. யால் பெற்றோர் போட்டிப்பரீட்சைகளுக்கு ரஞ் செலுத்த, ஆசிரியர்களிற் கணிசமானோர் ஏனைய பாடசாலைகளைவிடவும் அதிகமான ல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளை உருவாக்கும் க்கின்றன. இதனால் வாசிப்பில் அக்கறையுள்ள கைதிகளாக வலுவிழந்து நிற்கின்றனர். ள் அவ்வளவாக ஊக்குவிக்கப்படுவதில்லை. போலித்தனமான அங்கீகாரம் கிட்டியிருப்பினும் பெறுமதி அறிவுபூர்வமாக உணரப்படுவதில்லை. ரின், கனதியான சிற்றிதழ் ஆசிரியர்களின் ஏக்கமும்
- வே. தில்லைநாதன், திருகோணமலை.
நப்தி ஏதாவது எழுத வேண்டும் என்ற பேர் அவா! என்கிற பத்தி வாசிக்கிறபோது துரைமனோகரன் னம் பூரித்துப்போனேன். அவர் எழுதும் பத்திகளை விரும்பிப் படிப்பர்களில் றேன். ஈழத்தில் இருக்கிற பேராசிரியர்களில் விரல்
வரும் ஒருவராவார். ழத்திலே காணப்படுகிறார்கள். அந்த நேர்கோடும் 5 குறுங்கோட்டுக்கு ஒப்பான அறிவுடைய ஈழத்து உயர்வு நிலை மிக நீண்டது என்ற காட்ட குழுச் கூட்டத்தை ஒழுங்கு செய்து தாங்கள் பேசுவதற்கு ம் பார்க்க திறமையானவர்களை மட்டம் பண்ணிப் ஜால்ரா போடும் (ஜிங்ஜக்) ஒரு சிலர் உரத்துக் கை அரசியல், விஞ்ஞானம், கணிதவியல், சமூகவியல், றும் செயற்படுபவனாக இருக்கவேண்டும். அது
மைக்கு ஏற்றது.
ண்ட நீளமான நேர்கோடுகளாக அவை இருக்க அநாமதேயக் கடிதங்கள் எழுதிப் போட்டுவிட்டு த ஆயுதத்தைக் கொண்டு திரிவதையும் காணலாம். க்கு நேர் சொல்லக்கூடிய தகுதி உடையவனாக ரல் அவன் இலக்கியக்காரனே அல்லன். அவன் நன்றாகும்.
டு உங்கள் ஒவ்வொரு தனிமனிதரது வளர்ச்சியை டம் சேராதீர்கள். கூட்டம் சேர்த்தவன் எல்லாம் ங்கள் பலவீனத்தின் வெளிப்பாடு என்பதையும்
55

Page 58
துரை மனேகரன் ஐயா, எம்.ஏ.நுஃமான் ( வாழ்வது என்பது பெருமையே! அவர்கள் மற்றவர்களை விமர்சிக்கும் எண்ணம் இல்லாம வழி கோலிவிடும்.
மேலும், பேராசிரியர்கள் எல்லோருக்கும் என்ற அந்த எண்ணப்பாட்டை மாற்ற வேண்டும் பேராசிரியர்களுக்கு "இலக்கிய இரத்தினம்" வேண்டும் என்ற அந்தத் தீர்மானம் சரியான ஒன்
ஜனாப் முஸ்டீன் 'ஹராங்குட்டி' ஆசிரியர்
ஐயா,
ஹராங்குட்டி தங்கள் மேற்படி நூலை நான் பார்த்திராவிட இதழ் 50 ஆம் பக்கத்தில் இடம்பெற்றிருந்த சிறு
அதில் 'ஹராங்குட்டி' என்ற கதை - மார்க் செய்யும் மௌலவிகள் பற்றியது என்று குறிப்பி
இதை வாசித்ததும் என்னைப் போன்றவர்க யடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் போட்டு பறை அறிவித்து மௌலவிமார்களை முஸ்லீம் சமூகத்தின் மீது மதிப்பும் மரியாதை ஒருவராகிய நீங்களே அவமரியாதை செய்கிறீர் உதவுவது மரத்திலான கோடரிக்காம்புதானே. என்று உங்களைச் சொல்வதில் என்ன தவறு இரு
கதை எழுதிப் பெயர் சம்பாதிக்க வேண் என்பதற்காக, நமது சகல ஆலிம்களையும் தூசித் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது அல்லவா?
இப்படித்தான் உங்களைப்போன்ற இன்ெ வீரகேசரியில் 2006ல்ஒருகதை எழுதினார். புதும் என்பதற்காக, அந்தப் புதுமணப்பெண் அடு இரவில் நேரம் குறித்திருப்பதாக கதையை முடித் எழுத, மற்றொருவர் எதிர்க்கட்டுரை எழுத, அ ஒட்டாத கதையாக அந்த எழுத்தாளர் தவறை நியாயப்படுத்திக் கொண்டார். அதுகாறும் 8 ஒழிந்தது. அதன்பின்னர் அவருடைய கதை கட் காணவில்லை. எனவே கவனம்.
மேலும் ஹராங்குட்டி முஸ்லீம்கள் மட்டுே உங்கள் கதைத் தொகுப்புக்குப் பெயர் வைத்துள் பிரான்ஸ், கனடா முதலிய அந்நிய சமூகம் வாழு ஹராங்குட்டியை இத்தகைய சஞ்சிகைகளில் கேட்கிறேன்.
ஜூன் 2014 ஞானம் இதழில் இடம்பெற்ற இலக்கிய வாதிகளுக்கே” என்ற தலைப்பில் இட சொல்வதாக இருந்தால்' என்பது, 'பாரதி | அமைந்திருக்க வேண்டும். தவறுதலாக அவ்வா.
யார் இதனைக் கவனிக்கிறார்களோ இ கவனிப்பார். முன்னொரு முறை கவியோகி சுத் தேசிக விநாயகம்பிள்ளை என்று நான் தம் சுட்டிக்காட்டியிருந்தார். அகளங்கனுக்கு எனது
ந்தி இக்கே,இதழி..
0 (
56

போன்ற பல ஜாம்பவான்கள் மத்தியில் நாமும் என் எழுத்துக்களைப் படித்தாலே போதும் ல் ஒழிந்து நல்ல இலக்கிய சிந்தையாளராக வாழ
| "இலக்கிய இரத்தினம்" வழங்க வேண்டும், இம். ஆனாலும், எம்.ஏ.நுஃமான் ஐயா போன்ற (ஸாஹித்திய இரத்தினா) கட்டாயம் வழங்க Tறானதே ஆகும்.
- சமரபாகு சீனா உதயகுமார்.
டனும் 'ஞானம்' சஞ்சிகை (மே -2014) 168 ஆவது
விளம்பரத்தை வாசித்தேன். கத்தின் பேரால் சிறுவர்களைத் துஷ்பிரயோகம்
டப்பட்டிருந்தது. ளும், மெளலவி மார்களும் மிகவும் மனவேதனை மத்ரஸாக்களிலும் அல்லது அங்கும் இங்கும் என்பதற்காக ஊர் உலகம் அறிய தண்டோரா ர அவமானப்படுத்த வேண்டுமா? அந்நியர்கள் தயும் வைத்திருக்கும் வேளை, இப்படி நம்மில் கள். மரங்களை வெட்டிச் சாய்க்க கோடரிக்கு எனவே குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு நக்கிறது ? டும். அத்தோடு பணம் சம்பாதிக்க வேண்டும் து எழுதியிருப்பது, தங்களது சுயநலப் போக்கை
னாரு பிரபலமான கிழக்கிலங்கை எழுத்தாளர் ரப்பிள்ளை40 நாள்ஜமாஅத்தில் போய்விட்டார் த்த வீட்டு நண்பனோடு விபச்சாரம் செய்ய திருந்தார். அதை எதிர்த்து நான் ஓர் எதிர்க்கதை டுத்த வாரம் - கீழே விழுந்தும் மீசையில் மண் எடுத்துக் காட்டியவர்களைத் தூசித்து தன்னை இருந்த அவரது இலக்கிய வாழ்க்கை அன்றே டுரை எதுவும் இதுவரை நான் பத்திரிகைகளில்
ம பாவிக்கும் ஓர் இழிவான சொல். அதைப்போய் ளீர்கள். ஞானம் சஞ்சிகை வீரகேசரி போன்றவை ழம் நாடுகளுக்குச் செல்பவை. எனவே உங்களது விளம்பரப் படுத்தத்தான் வேண்டுமா? என்று
- நீனா, புத்தளம்
எனது பத்தியில் “சாகித்திய இரத்தினம் விருது டம்பெற்ற பகுதியில் 'பாரதி தாசன் பாணியிலே பாணியிலே சொல்வதாக இருந்தால்' என்று
று அமைந்துவிட்டது. இல்லையோ நிச்சயம் அகளங்கள் இதனைக் > தானந்த பாரதி என்பதற்குப் பதிலாகக் கவிமணி வறாகக் குறிப்பிட்டிருந்தமையை அகளங்கன் "நன்றியும் பாராட்டுகளும் உரியவை.
- துரை மனோகரன், பேராதனை. D 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூலை 2014 (170)

Page 59
1.9's thi.|
OUR PRODUCTS ARE THE FOLLOWING
MASALA POWDERS IDDLY PODDY ITEMS
VADAGAM ITEMS - PICKLESTEMS |
Manufactured by:- SITHI ENTERPRISES,
14/2, Madapitiya
(“ஞானம்” சஞ்சிகை -
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார் (
பூபாலசிங்கம் 309A 2/3, காலி வீதி
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீ.
துர்க சுன்ன
ஜீவ அல்வாய். தொகை
லங்கா சென்ற 84, கொழும்பு

Enterprises
Our Products are
healthier and நேgienical
197eparedf .
Road, Colombo - I5.
Tel: 01 - 2540033
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை 3, வெள்ளவத்தை.
புத்தகசாலை தி, யாழ்ப்பாணம்.
க்கா பாகம்
நதி லபேசி : 077 5991949
ல் புத்தகசாலை
வீதி, கண்டி.

Page 60
GNANAM - Registered in the Department of
(Luck
BIS MANUFA
(Luckland
NATTARANPOTHA, K T: +94 081 2420574, 242
E: luckyla
Printed by the

*osts of Sri Lanka under No. 9ெ18/Newது2014
yland) 307 ACTURERS
உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
பிஸ்கட்டிலும் தான் !
UNDASALE, SRI LANKA. 20217.8F: +94 081 2420740 und@sltnet.lk
'Prints - Tel: 2804773