கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2012.09

Page 1
1 அருள்
நவராத்திரி விழ
வெள ஸ்ரீ துர்க்காதேவி தெல்லிப்பழை
20

1 ஒளி
5 = க - 15;
111.04
எச் சிறப்பு மலர் பியீடு பி தேவஸ்தானம் p, இலங்கை
12

Page 2
பொன்விழாக் ரிஷி தொண் (அமெரிக்கா - ஹவாய்

காணும் புனித பிறவி நிநாதன் சுவாமிகள்
-- ---காரம்

Page 3
s
(மா
கலாநிதி -
"ரம்
சைவத்தி நந்தன வருட
வெளியீடு : ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை, இலங்கை.
பாடசாலைகளில் பார
இலங்கையில் சுதேசிகளால் பாடசாலைகள் 1961 ஆம் ஆன மயமாக்கப்பட்டன. குறிப்பாக சை விக்கப்பட்ட பாடசாலைகளில் கெ மங்கையர் கழக வித்தியாசாலை பாடசாலைகளும் அரசாங்கத்திட்ட சைவப் பாடசாலைகள் கையளிக்க முன்வைக்கப்பட்டன. ஸ்தாபகர்களி வகையில் சில வரன்முறைகளை குறிப்பிடப்பட்டது. சைவப் பாடசாலை சைவநெறிக்கு மாறாக மாமிச உன் தவிர்க்கப்படல் வேண்டும்.
சா6
க
காலை, மாலைப் பிரார்த்தனை போன்ற மரபுகளைத் தவறாது பின்பு விடயங்கள் ஆராயப்பட்டு அத்தகை. தொடர்ந்து பேணும் என்ற நி பாடசாலைகள் கையளிக்கப்பட்டன
- 1

ருள் ஒளி தாந்த சஞ்சிகை)
ஆசிரியர் ஆறு. திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் | ரு. கா. சிவபாலன் அவர்கள் நவராத்திரி விழாச் சிறப்பு மலர்
பதிவு இல.: QD/74/NEWS/2006Y
பெரிய மரபு பேணல்
உருவாக்கப்பட்ட பெரும்பாலான ன்டு காலப்பகுதியில் தேசிய சவசமயத்தவர்களால் தோற்று காழும்பு, வெள்ளவத்தை சைவ யெத் தவிர ஏனைய அனைத்துப் ம் கையளிக்கப்பட்டது. அரசிடம் ப்பட்டபோது சில நிபந்தனைகள் பின் குறிக்கோளுக்கு பங்கம் வராத எப் பேணுதல் வேண்டும் எனக் ல வளாகங்களில் எக்காலத்திலும் னவு சமைப்பதோ பரிமாறுவதோ
எயில் திருமுறை வழிபாடு செய்தல் கற்றல் முக்கியத்துவம் உட்பட பல ய மரபுகளை அரச பாடசாலைகள் "பந்தனைகளுக்கு அமையவே 7. ஆனால் இன்று இவை அருகி
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.

Page 4
வருவதைக் காணலாம். சத்துண முட்டை போன்ற மாமிச உணவு வ நிறுவனங்களும் விடுத்த வேண பாடசாலைகள் கோழி முட்டைை மிகவும் வேதனைக்குரியது. பல பா. குருபூசைகள் நடைபெறுவதில் பாதகமான விளைவுகளை உருவா பாடசாலைகளின் மரபுகளைக் கா சமய நிறுவனங்கள் என்றும் விழிப்பு
பலிபி
பலி பீடம் ஆன்மாக்களின் ஆணவ . புனிதப்படுத்துகின்றது. பத்திரப்படுத்துவது
சிவாலயங்களில் நந்தி தேவருக் பலிபீடமாகும். இவை பொதுவாக . பாதங்களைத் தாங்கியதாக தாமரை வ சென்று நம்மிடமுள்ள காம, குரோத, ( கொடுத்ததாக உறுதி செய்து கொள்ள பலியிடப்பட்ட பின்னரே தெய்வ தரிசன தத்துவத்தை இது சுட்டிக் காட்டுகிறது.
சைவசித்தாந்தம் பதி, பசு, பாசத்தில் மிகப்பெரிய சிவாலயங்களிலே எட்டு வழிபடுவதை இன்றும் காணலாம்.
23 CANCA Fir) * K. 4 மு tik aft
அகம்.2 பிப்டி 4 48, 44, 46;

0ா
புத் திட்டத்தில் மாணவர்களுக்கு ழங்குமாறு அரசாங்கமும், உதவி டுகோளை ஏற்று சில சைவப் ய மாணவருக்கு வழங்கிவருவது டசாலைகளில் சமய விழாக்கள், ல. இவை எதிர்காலத்தில் பல க்கிவிடும். சைவப் பாரம்பரியமான ப்பதற்கு பாடசாலை அதிபர்கள் பாக இருக்கவேண்டும்.
அ .. ---
- ஆசிரியர்
டிடம்
மலங்களை அழித்துப் பக்குவப்படுத்தி எல் அதற்கு பத்திரலிங்கம் என்று பெயர்.
குப் பின்னுள்ள பலிபீடம் பிரதான ஆலயத்தின் பிரதான மூர்த்தியின் டிவில் இருக்கும். பலிபீடத்தின் அருகே லோப, மத மார்ச்சார்யங்களைப் பலி Tவேண்டும். அஹங்காரம் மமகாரம் த்தைப் பெறவேண்டும் என்ற உயர்ந்த
ம் பலிபீடம் பாசத்தை உணர்த்துகிறது. நித் திக்கிற்கும் பலிபீடம் அமைத்து

Page 5
உ சிவம்
நவராத்தி
இறைவனுக்கு உரிய விழாக்களைச் செய்ய அனைத்து நாட்களும் உகந்தனவே. எனினும் ஒவ்வொரு திருமூர்த்தங்களுக்கும் உகந்த நாட்களாகச் சில நாட்கள் ஒதுக்கப் பட்டு, அந்நாளில் விழாவைச் செய்வது சிறப்புடையதாகச் சான்றோர்களால் கூறப் பெறும் இம்முறையில் சிவனுக்குச் சிவராத்திரி யன்றும், சக்திக்கு நவராத்திரியின் போதும், திருமாலுக்கு வைகுண்ட ஏகாதசியன்றும் விரதமிருத்தலும் விழாச் செய்தலும் உகந் தவை. இம்முறையில் முருகப் பெரு மானுக்குக் கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகியனவும், விநாயகப் பெருமானுக்குச் சதுர்த்தி விழாவும் சிறப்புக்குரியவை.
இறைவனின் பல்வேறு திருமூர்த்தங் களுக்குச் செய்யப்படும் இத்திருவிழாக்கள் மக்களின் நல்வாழ்வுப் பயன் நோக்கிச் செய்யப்படுபவை. இம்முறையில் சக்திக்கு உகந்த திருவிழாவாகக் கூறப்படுவது நவராத்திரி விழா.
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்பது பொருள். மலைமகளாகிய துர்க்கை திருமகளாகிய இலட்சுமி, கலைமகளாகிய சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களுமே இந்த நவராத்திரி விழாவின் வழிபாட்டுக்கு உரிய நாயகிகள். ஒவ்வொரு தேவிக்கும் மூன்று நாட்கள் வீதம் மூன்று தேவிக்கும் ஒன்பது நாட்கள் இவ்விழா கொண்டாடப் பெறும். தேவியர்கள் ஒவ்வொருவருக்கும் சாத்துவிகம், இராஜதம், தாமதம் என்ற மூன்று குணங்களையும் உரியதாகக் கொண்டு, முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்
அருள் ஒளி

யம்
ரி விழா
கும், இடை மூன்று நாட்கள் இலட்சுமிக்கும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியன் வாக இவ்விழா கொண்டாடப் பெறும்.
கொலு வைத்தல்
நவராத்திரியின் போது, இல்லங்களிலும் கோவில்களிலும் கொலு வைக்கப்பெறும். படிப்படியாக ஏழு அல்லது ஒன்பது படிகள் வைத்து, ஒவ்வொரு படியிலும் உலகப் பொருட்கள் அனைத்துக்கும் உரிய மாதிரி களாக மண்ணாலும் மரத்தாலும் செய்த பொம்மைகளை வைப்பர். சில இடங்களில் கொலு ஐந்து படிகளிலும் வைக்கப்பெறுதல் உண்டு.
ஐந்து படிகளாக இருப்பின் அவற்றைப் பஞ்சபூதங்கள் என்றும், ஏழு படிகளாக இருப்பின் ஏழுவகைப் பிறவிகள் என்றும், ஒன்பது படிகளாக இருப்பின் ஒன்பது இரவுகளையும் குறிப்பிடும் ஒன்பது படிகள் என்றும் கூறப்பெறும். இவற்றுள் ஏழு படி களில் கொலு அமைப்பதே பெரும் பான்மை. பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, வான் என்ற ஐந்தாலும் ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத் துக்கும் சக்தியே பரம்பொருள் என்பதை ஐந்து படிகளில் அமைக்கப் பட்ட கொலு உணர்த்துகிறது. ஏழு வகைப் பிறவிகளிலும் உழலும் மக்களைக் காக்கும் பரம்பொருள் சக்தியே என்பதை ஏழு படிகளில் வைக்கப் பெறும் கொலு விளக்கு கிறது. ஒன்பது வாயில் கொண்ட உடலைப் பெற்ற மனிதர்களுக்குச் சர்வ வியாபியாக மூன்று குணங்களாய் முத்தேவியராய் விளங்கும் பராசக்தியே உறுதுணையாக
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 6
இருந்து உய்தி நெறியைக் காட்டுவாள் என்பது ஒன்பது படிகளாக அமைக்கப்படும் கொலுவிற்கு உரிய தத்துவம் இம் முறையில், கொலு அமைக்கப்பெறும் படிகளின் எண்ணிக்கைக்கேற்பத் தத்துவ விளக்கம்
கூறலாம்.
உலகனைத்தையும் காக்கின்ற அரசன் ஒருவன், அமைச்சர், தானைத் தலைவர் மற்றும் மக்கள் குழுமிய அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து அரசாட்சி நிகழ்த்தும் ஆட்சிச் செயல் முறைக்குக் 'கொலுவிருத்தல் என்று பெயர். அது போல், உலகத்துக் கெல்லாம் பரம்பொருளாகத் தலைவியாக விளங்கும் பராசக்தி, இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் தன் அருட்பார்வையால் ஆட்சி செய்து காக்கின்றாள் என்பது நவராத்திரிக்குக் கொலு வைப்பதன் தத்துவமாகும்.
விழாவும் நோக்கமும்
மூன்று தேவியர்கள், மூன்று வகைக் குணங்கள் என்பதைக் காட்டும் வகையில் ஒன்பது இரவுகள் விழா நடத்துதல் என்பதே முறையான தத்துவ விளக்கம் பிற்காலத்தில் இது கன்னிப் பெண்களுக்கு உரிய விழா வாகவும், குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகினி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்க்கை, சுபத்திரை என்ற நவதுர்க்கைகளாக, நவ சக்திகளாக ஒன்பது கன்னிப் பெண்களை வைத்து உன்பது நாட்கள் நிகழ்த்தப் பெறும் விழாவாகவும் கூறப்பெறும்.
நவராத்திரி விழாவுக்கு வரும் மங்கலப் பெண்டிர், கன்னிப் பெண்கள் ஆகியோர் முத்தேவியர் மீதும் தோத்திரப் பாமாலைகள் பாடுதல், ஒவ்வொரு நாளும் நைவேந்தியப் பொருட்களோடு
அருள் ஒளி

தூபதீபம் காட்டி வணங்கிய பின்னர், அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, குங்குமம், சந்தனம் முதலிய மங்கலப் பொருட்களையும் நைவேத்தியம் செய்த பிரசாதங்களையும் தருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நவராத்திரி விழாவுக்குரிய சிறப்பு நிகழ்ச்சிகள்.
உலக வாழ்வில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்று சிறப்புக்களையும் குறைவறப் பெறுதல் இவ்விழா நிகழ்த்தப்பெறும் நோக்கமாகும். முத்தேவியரும் பெண் தெய்வங்களாக இருத்தலால், இவ்விழாவில் மங்கலப் பெண்டிரும், கன்னிப் பெண்களும் சிறப்பாகப் பங்கு பெறுகின்றனர்.
அன்னைக்குச் சிறப்பு வழிபாடுகள்
பராசக்தியாகிய அம்மைக்குச் செய்யப் பெறும் வழிபாடுகள் ஆடவர், பெண்டிர் இருவருக்கும் தனித்தனியே உள்ளன. அம்மை வீரத்துக்கு உரிய தெய்வம் ஆதலால், ஆடவருக்கு தீமிதிக்கும் வழிபாடும், அம்மை மங்கல வாழ்வை அளிக்கும் தெய்வம் ஆதலால் பெண்டிருக்கு மாவிளக்கு ஏற்றும் வழிபாடும் சிறப்பாக உரியவை.
பண்டைக் காலத்தில் வீரர்கள் வேள்வித் தீ வளர்த்து ஆகுதி சொரிந்து அம்மையை வழிபடும் முறையை நினைவுறுத்தும் வகையில் அமைவது தீமித்தல் நீளவாக்கில் அமைந்த ஒரு குழியில் தீயை வளர்த்து வைத்திருப்பர். நெருப்புத் துண்டங்களாக ஒளிப்பிழம்போடு கனன்று கிடக்கும் அந்நெருப்புக் குழிக்குப் 'பூக்குழி' என்று பெயர்.
அம்மையின் தண்ணருள், வெம்மை யாகக் கொதித்துக் கனன்ற தீக் குழியை,
4
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 7
பக்தர்களுக்குப் பூக்குழியாக மாற்றும், பூக்குழியையொட்டி, சிறிய பள்ளமொன்றில் பாலும் நீரும் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். இதற்குப் பால்குழி என்று பெயர். பக்தர்கள், பக்திப் பரவசத்தோடு அம்மையின் திருப் பெயரை உச்சரித்துக் கொண்டே பூக் குழியில் இறங்கி நடப்பர். இறுதியில் பால் குழியில் காலை நனைத்துக் கரையேறுவர்.
இம்முறையில், நிகழ்த்தப்பெறும் தீமிதி வழிபாடு அம்மைக்கு உகந்தது. ஆடவரின் வீரப் பெருமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய இத் தீமிதித்தல் வழிபாடு, இன்று பெண்டிருக்கு உரியதாகவும் மாறி
வளர்ந்துள்ளது. மக்கள், தாங்கள் ஏதேனும் ஒரு பொருள் குறித்து வேண்டிக் கொண்டு செலுத்தும் நேர்த்திக் கடனாகவும் இன்று தீமித்தல் விளங்குகின்றது. மேலும் அம்மை யாகிய வீரத் தெய்வத் திருக்கோவில்களி லேயே நிகழ்த்தப் பெற்ற இவ்வழிபாடு, பிற கடவுளர் திருக்கோவில்களுக்கு உரிய வழி பாடாகவும் மெல்ல மாறி வளர்ந்து
வருகிறது.
தீமிதித்தல், ஆடவருக்குரிய சிறப்பு வழிபாடாக இருத்தல் போல, பெண் களுக்குரியது மாவிளக்கு ஏற்றும் வழி பாடு. தங்கள் குடும்பத்தில் துன்பங் களைந்து இன்பம் நிலவச் செய்த அம்மைக்குச் செலுத்தும் நேர்த்திக் கடனாகவும், நல் வாழ்வு அருள்வேண்டும் வழிபாடாகவும் இரு நிலைகளில் மாவிளக்கு ஏற்றும் வழி பாடு நிகழ்த்தப்பெறுகிறது. பச்சை அரிசி மாவு, சர்க்கரை, பால் ஆகியவற்றைக் கலந்து உருண்டையாகப் பிடித்து, அதன் உச்சியில் குழித்து நெய் ஊற்றி, விளக்கு
அருள் ஒளி

முகங்களில் குங்குமமிட்டுத் திரியை ஏற்றி வைப்பதே மாவிளக்கு ஏற்றுதல். அம்மை யின் சந்நிதியில் கிழக்கு முகமாகத் திரி எரியும்படியாக வைத்து இறை புகழைக் கூறி வணங்குவதே இவ்வழிபாட்டு முறை.
இம்முறையில் ஆடவர் சிறந்த வீர வாழ்வு பெறவும், மகளிர் நிறைந்த நல்வாழ்வு பெறவும் நிகழத்தப் பெறும் இருவகை வழிபாடுகளும் அம்மைக்கு உகந்தவை.
திருக்கோலச் சிறப்பு
அன்னையின் திருக்கோலம், உலக மக்கள் அனைவருக்கும் மங்கல் நல்வாழ்வு அளிக்கும். தன்னை நாடி அடைக்கலம் புகுந்தோருக்கும் அற்றாருக்கும் அலந்தா ருக்கும் துயர் தீர்த்து இன்பம் அளிக்கவல்லது. இறைவனின் அருட் சக்தியாகிய பராசக்தி, பல்வேறு திருக்கோலங்களைத் தாங்கி யிருப்பது உயிர்களுக்கு அருள்புரிவதற்காக வேயாம். எளியவர் முதல் ஞானியர் வரை ஒவ்வொருவரும் தத்தம் அறிவு வேறு பாட்டுக்கேற்ப, அம்மையின் பல்வேறு திருக் கோலங்களை வணங்கிப் பேறு பெறு கின்றனர்.
அம்மையின் தெய்வத் திருக்கோலங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆழ்ந்த தத்துவப் பொருண்மை உண்டு. அருட்சக்தியின் உருவத் திருக்கோலங்களைத் தத்துவ விளக் கத்தோடு வணங்கி உய்தி பெற வேண்டும். அனைத்து வகை அருள் நலங்களையும் உலக மக்கட்கு வழங்கி, சேயைக் காக்கும் தாய்போல விளங்கும் அம்மையின் அழகுத் திருக் கோலங்களைக் கண்டு மகிழ்வதே நம் பிறவியின் பயன்.
முற்றும்
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 8
நவராத்திரி
- கலாநிதி சிவத்தமிழ் செ
உண்மையென் றுணர்ந்த நெல் நன்மை செய்பவர்களுக்கு ஞா மென்மையான பண்பினோடு ரே பன்மை ஒன்றும் பாங்கில் வந்
அன்னையை வாழ்த்த அகில உலகமும் வாழும் அவளை ஏன் வாழ்த்துகிறோம். நாம் வாழவேண்டும் என்பதற்காகவே வாழ்த்துகிறோம். அத்தகைய வாழ்த்துக்கும் வழிபாட்டுக்கும் உரிய நாட்கள் இந்த நாட்கள். ஒன்பது இரவுகள் எமக்குத் தவப் பொழுதாகும். இரவையே பகலாகக் காணும் சிறப்பு பக்தர்களுக்கு உண்டு. திருவருளினிடத்திலே எம்மை ஒப்புக் கொடுத்துத் தூங்காமல் தூங்கி நிற்கும் இரவுகள் நவராத்திரி நாட்கள். தேவி உபாசனை, மக்களை மகான்களாக்கு கின்றது. தரித்திரரைச் செல்வந்தனாக்கு கிறது. அமங்கலத்தை மங்கலம் ஆக்குகிறது. மூடனை முழு ஞானியாக்குகிறது. ஆம்! தேவி பராசக்தியே இவ்வாறு மொழிகிறாள். "காண்பது, கேட்பது, மூச்செறிவது உண்மை யில் யாவும் என்னுடைய ஆற்றலால் நிகழ் கின்றன. இந்தப் பிரபஞ்சம் தோன்றும்போது நான் காற்றாகி எப்பொருளிலும் ஊடுருவி நிற்கிறேன் என்பது தேவி சூக்தம்.
எமது சமயத்தை நோக்குமிடத்து விழா வின் தத்துவங்கள் யாவும் நன்மை, தீமை களுக்கிடை நடைபெற்ற போராட்டமாகவே விளக்கம் தருகிறது. எப்போதும் எந்த இடத்திலும் இந்தப் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதனையே தேவாசுர யுத்தமாகப் புராணங்கள் அருள் ஒளி

) மகத்துவம்
ல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
ஞ்சில் ஓடி வந்து நிற்பவள் ரன தீபம் ஆனவள் மவும் அன்புக் காவியம்
த பாரின் அன்னை வாழ்கவே.
வர்ணிக்கின்றன. இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெற்ற தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் வெற்றி கண்டனர். அதனால் இறுமாப்புக் கொண்டனர். இந்த இறுமாப்பை அடக்கி யவள் அம்பிகை.
மகிடாசுரன் என்பவன் எருமை வடிவங் கொண்டவன். அஞ்ஞான வடிவமே எருமை, இவ்வடிவங் கொண்ட அசுரன் விரும்பிய போது தேவ, மானுட மிருக வடிவங்களைப் பெறும் சக்தி பெற்றிருந்தான். அவனுக்கு ஒரு பெரிய அசுரப் பட்டாளம் கிடைத்தது. இப் பலங் கொண்டு தேவர்களை எதிர்த்தான். கடும்போர் புரிந்தும் வெற்றி கொள்ள முடியவில்லை. மரணபயமில்லாமல் உடனே போர் புரிய விரும்பினான். பிரம்மனிடம் சென்றான். மகிடன் தவம் புரிந்து நின்றான். ஆனால் பிரம்மனால் மரணமில்லா வரம் கொடுக்க முடியவில்லை. வேறு நிபந்தனை கேட்டான். உடனே பெண்ணால் அன்றி வேறெவராலும் மரணம் நேரக்கூடாது என்றான் மகிடன், அதே வரம் கிடைத்தது.
மகிடன் தேவர்களைக் கலக்கினான். துன்பத்தைத் தாங்கமுடியாத இந்திரன் வியாழபகவானிடம் சென்றான். அவர் எல்லாம் உணர்ந்தவர். இது பராசக்தியின் லீலை என்பதைப் புரிந்து கொண்டார். பரதேவதையாகிய சக்தியை மறந்ததால்
6
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 9
அசுர சக்திகள் இவர்களுக்கு மேல் ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்தார். இப்படி அடிபட்டு நின்றால்தான் அம்மாவின் நினைவு இவர்களுக்கு வரும் என்பது தேவகுருவின் நினைவு.
உடனே இந்திரனைப் பார்த்துச் சொன் னார். "இந்திரா! இப்போதுதான் உனக்குத் தெய்வ நினைவு வரத் தொடங்கியிருக்கிறது. பகைவனின் எழுச்சியில் பகவானின் நினைவு தோன்றும். அகங்காரம் போனால் அன்றி ஆனந்தம் ஏற்படாது. யுத்தத்தையே தொடர்ந்து செய்து உன்னுடைய கர்ம வினையைக் கலைத்து விடு. மகிஷனிடம் சரணாகதி அடையாதே தெய்வ சகாயத்தை நாடினால் எல்லாம் வெற்றி கிட்டும்” என்று கூறிய வியாழபகவான் இந்திரனையும் அழைத்துக் கொண்டு பிரம்மனிடம் சென்றார். பின்பு பிரம்மனோடு சேர்ந்து வைகுந்தம் சென்றார். ஆனால் நாராயணன் போரிலே ஊக்கத்தைக் கொடுத்து இந்திர னுக்கு உற்சாகம் ஊட்டினார். இந்நிலையில் மகிடனிடம் இந்திர தேவர்கள் போர் புரிய முன்வந்தனர். ஆனால் மாயப் போரினால் தேவர்களுடைய பார்வைக்கு எந்தப் பக்க மும் மகிடாசுரன் காட்சி கொடுத்தான். இந்நிலையில் ஸ்ரீமத் நாராயணன் சக்க ரத்தைச் சுழற்ற மகிடனின் மாயரூபம் மறைந்தது. ஆனால் அவன் சிம்ம வடிவம் எடுத்துக் கொண்டான். உடனே நாரா யணன் அவ்விடத்தை விட்டு நீங்க மகிடன் பழைய வடிவத்தை எடுத்தான். இந்திரன் கலங்கித் தன்னுடைய யானையாகிய ஐராவதமும் திகைத்து நிற்க அங்கிருந்து மறைந்து ஓடிவிட்டான். தேவலோகம் அசுரலோகமாகி விட்டது. இந்திரன் அரியா சனத்தில் மகிடாசுரன் அமர்ந்தான். பரா சக்தியாகிய பரதேவதை தர்மக்கோல்
அருள் ஒளி

வழுவாமல் இக்காட்சியை நடத்திக் கொண்டிருந்தாள். மீண்டும் தேவர்கள் பிரம்மனிடம் தஞ்சம் புகுந்து மகுடனுக்குக் கொடுத்த வரம் மிகத் தப்பானது என்பதை உணர வைத்தார்கள். ஆனால் பிரம்ம தேவர் மகுடனின் முடிவைப் பற்றியும் அது ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் கூறிய வுடனே தேவர்கள் கயிலைக்குச் சென்று பரமேசுவரனை வணங்கி நின்றார்கள். அப்பொழுது இறைவன் பிரம்மனைக் கண்டித்து மகுடாசுரனுக்கு வரம் கொடுத்தது. முற்றிலும் தவறு என்பதை உணர்த்தி விட்டார். அதுவுமின்றி நாராயணனிடமே ஆலோசனை கேட்கும்படி அனுப்பி விட்டார். உடனே நாராயணனைக் கண்டு தமது அவலத்தைத் தேவர்கள் முறையிட்டனர்.
நாராயணனோ அந்த மகாசக்தியின் லீலைகளை நினைத்துப் பார்த்து தேவர் களை நோக்கி அந்தப் பராசக்தியைத் தியானிக்க வேண்டும் என்று வழிகாட்டினார். எல்லோரும் தியானத்தில் ஈடுபட்டனர். ஏன் சிவனும் நாராயணனுமே தியானம் செய்து நிற்க ஒரு பேரொளி அவ்விருவரது முகங் களிலிருந்து தோன்றியது. அற்புதமான புயபல பராக்கிரமங் கொண்ட தாய்மை யின் உரு கற்பனைக்கும் எட்டாத செளந்த ரியப் பிரகாசத்தை வெளிக் காட்டிக் கொண்டு காட்சியளித்தது. அம்மா வந்து விட்டாள். மகிடன் மடிந்தான் என்று தேவர் கள் ஆனந்தம் அடைந்தனர். பரமேசுவரன் சூலாயுதத்தை அம்பாளுக்கு அளித்தார். நாராயணன் ஒரு சக்கரத்தைக் காணிக்கை யாக் கொடுத்தார். இமவான் சிங்க வாக னத்தைக் கொடுத்தான். சிம்மானேசுவரி என்ற பெயர் இவள் ஒருத்திக்குத்தானே உண்டு. அஞ்ஞான வடிவமான மகிடனை வதைக்க ஞானாம்பிகை தோன்றினாள்.
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 10
மகிடன் அடங்கினான். அவனையே நல்லு ணர்வு கொடுத்து வாகனமாகவும் ஏற்றுக் கொண்டாள்.
மகிடாசுரனை வதைத்த அட்டமி, நவமி தினங்களை சாக்தர்கள் நவ ராத்திரியில் மிகப் புண்ணிய கால மாகக் கருதுகின்றனர். துர்க்கையும் மகாலட்சுமி யும் அட்டமி நவமி கூடும் வேளையில் மகிட வதம் செய்ததால் இவ்விரு திதி களும் விசேடம் பெற்றன. மகிடவதத்தின் பின் தேவர்கள் உடனேயே அம்பிகையின் ஆக்ஞையை முன்னிட்டுத் தமது ஆயுதங் களை அவள் அடியில் வைத்துப் பூசித் தார்கள். அடுத்த தினமாகிய விஜய தசமி என்பது தேவி தனது அவதார காரியம் முடிந்ததும் உருக்கரந்த தினமாகும். தான் மறைந்ததாக அவர்கள் வருந்தா வண்ணம் தன் நினைவை அவர்களுக்கு வெகு அழுத்தமாகத் தந்து தேவருலகில் அவர்கள் வெற்றிவிழாக் கொண்டாடு மாறு இந்த ஜகந்மாதா அருளிய தினம் விஜயதசமி. விஜயம் என்றால் வெற்றி. பொதுவாகப் பெரியோரது வருகையை விஜயம் என்கிறோம். ஆனால் அம்பிகை யின் போக்கிலே (திரும்புதல்) இவ்விழா எடுக்கப்படு கிறது. அவள் அசுரரை மட்டும் வெல்ல வில்லை, தேவர்களின் இறுமாப்பை யும் வென்றாள்.
அருள் ஒளி

இவ்வெற்றியின் காரணமாக அவளுக்கு சண்டி, சண்டிகா என்ற நாமங்கள் உண்டு. அதாவது தீவிர மாகத் துளும்பும் மூர்த்தி அவளே. இவளே துர்க்காதேவி, துர்க்கை யிலிருந்து எம்மை மீட்பவள் இவளே . எனவே இத்தேவியை அர்க்கியம், அலங் காரம், சுகந்தம், சந்தனம், மலர், அட்சதை, தூபம், தீபம் ஆகியவற்றால் பூசிப்பாயாக என ஞானிகள் வழிகாட்டினர். இவ்வாறு சின்மயமான தேவியுடன் விபாட்டினால் தன்மயமாகி விடவேண்டும். மகிடாசுரனின் பிடரியில் தன்னடிகளை ஊன்றி நிற்கும் எழில்மிகு வடிவத்தையே துர்க்காதேவியின் எழில் விக்கிரமாகக் காண்கிறோம். மர்த்தனம் என்பது அரைப்பது, அதாவது கெட்டியான தன்மை கரைகிறது. மகிடன் அடங்கினான் என்பதும் இதுவே. நம் திருக்கோயிலில் சங்கு சக்கர தாரிணி யாக விஷ்ணுசக்தியாக அம்பாள் விளங்கு கிறாள். ஞானபராசக்தி அன்பில் ஆனந்த ரூபிணியாக சிம்மத்தில் இருந்து துதிகளைச் செவி மடுத்து அருள்புரிந்தாள் என்பது நவராத்திரி விழாவின் பயனாகும். நவ ராத்திரி தினங்களில் இத்துதியை நாம் மேற்கொண்டு விரத அனுட்டான சீலர்களாக வாழ்ந்து எமது அஞ்ஞானத்தை நசித்து மெய்ஞ்ஞானத்தைப் பெருக்கிக் கொள் வோமாக.
முற்றும்
8 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 11
நவராத்திரி கால
ஸ்ரீ மகாலட்
- குப்பிளான் மாத
ஒரு மனிதனைப் பூரண மனிதராக்கு வது வீரம், செல்வம், கல்வி என்பனவாகும். செல்வத்திற்கதிபதியாக விளங்குபவள் மகாலட்சுமியாவாள். அத்தகைய மகா லட்சுமி அம்சம் கொண்டவர்கள் பெண் களேயாவர். எனவேதான் பெண்களை வீட்டுக்கு விளக்கேற்ற வந்த இல்லத் தரசி மகாலட்சுமி என்று இன்றும் கூறும் மரபு உண்டு.
அதிகமாக மகாலட்சுமியானவள் பசு வின் பின்புறம் யானையின் முகம், தாம் பூலம், மலர், திருவிளக்கு , நறுமணமுள்ள சந்தனம், கன்னிப் பெண்கள், உள்ளங்கை, பசுமாட்டின் கால் தூசி, வேள்விப்புகை போன்ற இடங்களை எல்லாம் தனக்கு வதிவிடமாக்கிக் கொண்டாள்.
ஸ்ரீ மகாலட்சுமியானவள் ஸ்ரீரங்க ஷேத்திரவிருட்சம், வில்வம் போன்ற வற்றை நாடுபவள். வில்வமரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்கின்றாள். வில் வத்தால் அர்ச்சனை செய்வதும் வில்வ மரத்தைப் பேணுவதும் ஸ்ரீ மகாலட்சு மிக்குப் பிரியமானதாகும்.
மக
சூரியனைப் போன்ற ஒளியுடைய ஸ்ரீ மகாலட்சுமியே உன்னருளால் உண்டா கிய வனஸ்பதி என்று புகழ் பெற்ற வில்வ மரம், அதனுடைய பழம் எங்கள் மனத்தை யும் புற இந்திரியங்களையும் பற்றியுள்ள அஞ்ஞானத்தையும் மங்களம் இல்லாத வற்றையும் போக்கடிக்கட்டும். அருள் ஒளி

மத்தில் வழிபடும்
சுமி தேவி
Tஜி விசுவம்பா விசாலாட்சி அம்மையார்
ஒருமுறை தேவர்கள் சாவாமருந்தா கிய தேவாமிர்தம் திருப்பாற் கடலில் கடைய விரும்பி, மேரு மலையை மத்தாக வும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு ஒருபுறம் தேவர்களும், அசுரர் மறு புறமாகவும் நின்று திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீ மகாலட்சுமியுடனே சந்திரன் கௌத்துபமணி, காமதேனு முதலி யன் வெளிவந்தன. இவைகள் யாவும் ஸ்ரீ மகாலட்சுமியின் உடன் பிறந்தவைகளாகும்.
தாமரைமலர், ஸ்ரீ மகாலட்சுமியுடன் பிறந்தவனான சந்திரனைக் கண்டதும் அவனை வெறுத்து இதழ்களைக் குவிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டது. இதனைக் கண்ட மகாலட்சுமி, தாமரை மலரில் அதிகமாக வசிக்காது, தன்னுடன் பிறந்த கௌத்து மணிக்குப் பெருவாழ்வு கொடுக்க எண்ணி அதனை அணிகின்ற திருமாலின் மார்பில் நிரந்தர வசிப்பிடம் கொண்டாள். இதனால் மக்கள் உடன் பிறந்தாரை வெறுத்துச் சினவாது நேசமாக இருப்பதையே ஸ்ரீ மகாலட்சுமி அதிகம் விரும்பி அருள்புரிவாள்.
மகாலட்சுமியானவள், நெல்லி மரத்தி லும், நெல்லிக் கனியிலும் அதிக விரும்ப முடையவள். இவைகள் எங்கெங்கு காணப் படுமோ அங்கெல்லாம் ஸ்ரீ மகாலட்சுமி
வாசம் செய்வாள். நெல்லிக்கனி சாப்பிடுவ தால் ஆரோக்கியத்துடன் புண்ணியமும் கிடைக்கின்றது. ஆனால் வெள்ளிக்கிழமை களிலும் இரவிலும் உண்ணக் கூடாது.
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 12
நெல்லி மரநிழலில் அன்ன மளிப்பது மிகவும் சிறப்பானது. துவாதசியன்று நெல்லிக்கனி உணவில் சேர்த்தால் ஏகாதசிப் பலனுண்டு.
வெண்ணிற மாடப்புறாக்கள் வாழும் இடங்கள், கலகம் என்பதையே அறியாத பெண்கள் வதியும் வீடுகள், தானியக் குவியல்கள், உமி சிறிதும் இல்லாத அரிசிக் குவியல், எல்லாருடனும் பகிர்ந்துண்டு வாழும் மனிதன், இனிமையோடும் கனி வோடும் இருக்கும் மனிதன், நாவடக்கம் உள்ளவன், உணவு உண்பதில் அதிக நேரம் போக்காதவன், பெண்களைத் தெய்வ மாக மதிப்பவள். இவர்களிடத்தில் ஸ்ரீ மகா லட்சுமி நித்திய வாசம் செய்வாள். மேலும் வலம்புரிச் சங்கு, நெல்லிக்காய், கோமயம், தாமரை வெண்மையும், பரிசுத்தமான ஆடை அணிகளிலும் ஸ்ரீ மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.
ஸ்ரீ மகாலட்சுமிக்கு வேண்டத் தகா தவைகளும் செய் யத் தகா
தவைகளும் : 3 பூசைகளிற் பயன்படுத்தப்பட்ட மலர்
கள், கெட்ட மணம் வீசும் மலர்கள், அழுக்கான இடத்தில் படுத்தல், உடைந்த ஆசனப் பலகையை உபயோகித்தல், அவலட்சணமான பெண்ணின் உறவை நீக்க வேண்டும். மயானக்கரி, சுடுகாட்டு எலும்பு, அக்கினி, விபூதி, அந்தணன், பருத்தி விதை, பசு, உமி, குருவின் திருவடி, எச்சில் இவை களைக் காலால் மிதித்தல் கூடாது.- தன்னுடைய ஒருகாலை மற்றொரு காலால் தேய்த்துக் கழுவுதல், ஈரக் காலுடன் படுத்தல், இருக்கும்போதும் படுக்கும் போதும் கால்களை ஆட்டுதல்
கூடாது.
அருள் ஒளி

3 சதுர்த்தசி, அமாவாசை, காலை, மாலை உடலற்ற தலையற்ற நட்சத்திர நாள் களிலும் மாதர் உறவுகள் ஆகாது. ஆடை யில்லாமல் குளிக்கவோ படுக்கவோ ஆகாது. அழுக்கான ஆடைகளை அணி தல் கூடாது. துடைப்பத்தின் தூசி, ஆட்டின் கால் தூசி, கழுதைப்புழுதி, பெண்களின் நடைப் புழுதி, மனிதன் மீது படுதல் ஆகாது. ஆங்கிலி வில்வம், விலக்கப் பட்ட காய்கறிகள், தயிர் ஆகியவற்றை இரவில் உண்ணுதல் ஆகாது. இருட்டில் படுத்தல் கூடாது.
எச்சிற் கையால் தலையைத் தொடுதல் ஆகாது. இடது கையால் தீண்டிக் கொண்டும் சோம்பேறி போல்
இருப்பதும் ஆகாது. ஆண்கள் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து முழுகக் கூடாது. அமாவாசையில் வாசனைப் பொடி தேய்த்துக் குளித்தல் கூடாது. அசுத்தமாக இருக்கும்போது சூரிய சந்திரனப் பார்த்தல் கூடாது. சூரிய உதயத்திற்கு முன் படுக்கைவிட்டு எழுதல் வேண்டும். நகம், முள், இரத்தம், மண்கட்டி, கரி இவற்றால் நிலத்தில் கீறுதல் கூடாது. சந்தனம், சுகந்தம், புஷ்பம், தண்ணீர், இரத்தினம், கடல் இவற்றைக் கண்டால் வணங்குதல் வேண்டும். நீங்காத செல்வம் நிறைந்து வாழ விரும்பின் பிறர் தேடி வைத்த பொரு ளிலும் பிறர் மணந்த மாதரிடத்தும் மனத்தைச் செலுத்துதல் ஆகாது. பெருந்தீனியின்றி அளவோடு உண்ண வேண்டும். அவலமாக உருட்டி விளை யாடுதல் ஆகாது. முகம், செவி, மூக்கு, பாதம், முதுகு, இரு கால்கள், இரு கண்கள் ஆகிய
10 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 13
இடங்களிலும் சந்தனம் பூசுதல்
ஆகாது. 3 மேலே கூறப்பட்டவற்றை அவதானித்து
ஒழுகி வந்தால் ஸ்ரீ மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
அஷ்ட இலட்சுமிகள் எழுந்தருளி யிருக்கும் இடங்கள்
அபயம் தரும் திருக்கரங்கள் உடை யவளாய் தாமரை மலர் மாலை அணிந்த - கழுத்தினளாய், இருபக்கங் களிலும் இரு தீபங்களால் அலங்கரிக்கப்பட்டவளும் தாமரை மலரில் வீற்றிருப்பவள் ஆதி லட்சுமி எனப்படுவாள்.
தண்ணீர் நிறைந்த குடம், கத்தி, அவயம், சிசு இவைகளை நான்கு கரங்களில் வைத்திருப்பவளும், இரண்டு சக்திகளால் அலங்கரிக்கப்பட்டவளும், தாமரை மலரில் வீற்றிருப்பவளும் சந்தான லட்சுமி என்று அழைக்கப்படுவாள்.
இரண்டு கரங்களிலும் இரு தாமரை | மலர்களையும் இரு கரங்களில் வர அபயங் ( களையும் தாங்கிக் கொண்டு இருப்பவளும் யானைகளால் அபிடேகம் செய்விக்கப்படு பவளும் கஜலட்சுமி எனப்படுவாள்.
சங்கு, சக்கரம், குடம், தாமரை மலர், வில் த அம்பு, கூடை அபயம் இவற்றைத் தாங்கும் !
ஸ்ரீ மகாலட்சுமியின் பூசைக்குர் கிழமை
நிவேதனம் ஞாயிறு
சர்க்கரைப் பொங்கல் திங்கள்
தேன், சர்க்கரை, பழம் செவ்வாய்
சித்திரான்னம், பழம், தேன் புதன்
பால், பாயாசம் வியாழன்
தயிர்ச்சாதம் வெள்ளி
தேங்காய்ப்பாகு சனி
எள் அன்னம் அருள் ஒளி
- 11

எண் கருத்தினளும் தங்கம் போன்ற திருமேனியுடையவளும் தனலட்சுமி எனப்படுவாள்.
வரம், அபயம், தாமரை மலர், கரும்பு இவைகளைத் தரிக்கும் நான்கு திருக் கரங்கள் உடையவளாயும், சம்பா நெற் பயிர், வாழை மரங்கள் முதலியவற்றால் சூழப்பட்டவளாயும் தானியச் செல்வத்தை அளிப்பவளாயும் இருப்பவள் தானிய இலட்சுமி எனப்படுவாள்.
சக்கரம், சங்கு, வரம், அபயம், பாசம், அங்குசம், கத்தி, கேடயம் இவற்றை எட்டுக் கரங்களில் தரித்திருப்பவளும் விஜயா என்ற நாமம் கொண்டவள் இராஜலட்சுமி எனப்படுவாள்.
இரண்டு தாமரை மலர்களையும் வர அபயங்களையும் தாங்குகின்ற நான்கு கரத்தினளாய் இரண்டு யானைகளால் பூஜிக்கப்படுபவளாய் வெண்ணிறப் பட்டாடை தரிப்பவளாய் தாமரை மலரில் வீற்றி நப்பவளாய் இருப்பவள் செளபாக்கிய லட்சுமி யாவாள்.
வரம், அபயம், வில், அம்பு, சங்கு, சக்கரம், சூலம், கபாலம் இவற்றைத் தரித்திருப்பவள் வீரலட்சுமி எனப்படு வாள். ரிய நிவேதனப் பொருட்கள்
உ. பலன் நோய்கள் அகலும் ஐஸ்வரியப்பதம் வளரும். கிரகபீடைகள் நீங்கும். புத்திரப் பாக்கியம். புத்தி வளர்ச்சி, பரீட்சை சித்தி சீக்கிர விவாகம். கவலை துன்பம் நீங்கும். பு.
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 14
தாய்த்தெய்வ வழிப
மானிடவியலாளர் பெண் வழிச் சமுதாய அமைப்பே ஆதியான தென்றும், பின்னரே ஆண்வழிச் சமுதாய அமைப்புத் தோன்றிய தென்றும் சமூக வழக்காறு என்று வாதிடுவர். இவ்வாறு முக்கியம் பெற்ற தாய்வழிச் சமுதாய அமைப்பில் அன்னை வழிபாடு பிரபல்யமடைந்தி ருந்தது ஆச்சரியமன்று. இத்தகைய வழிபாட்டின் தோற்றத்தினைப் பழைய கற்காலத்திலேயே காணலாம். இன விருத்தியின் சின்னமாக ஐரோப்பாவிற் காணப்படும் பெரிய தளங்களும், அகன்ற பிருஷ்டங்களையுமுடைய பெண் பாவை களே உலகிலுள்ள மிகப் பழைய தாய்மை வழிபாட்டின் சின்னங்களாகும். பின்னர், புதிய கற்காலத்திலும் செம்புக் காலத்திலும் இது வளர்ச்சி கண்டது. செம்புக் கால நாக ரிகங்களான சுமேரியா, எகிப்து, கிறீஸ், சிந்துவெளி ஆகியவற்றில் இதற்கான தடயங்கள் உள். இந்தியா வில் சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட் சோப், குல்லி ஆகிய கலா சாரங்களிலும், சிந்துவெளி நாகரி கத்திலும் கண்டு எடுக்கப்பட்ட சுடு மண்ணினா லான பெண் பாவைகளே இப்பகுதியிற் கிடைத்துள்ள மிகப் பழைய அன்னை வழி பாட்டின் எச்சங்களாகும். இத்தகைய எச்சங்கள் புதிய கற்காலம், குறுமணிக் கற்காலம் ஆகியவற்றிலும் காணப்படு கின்றன.
இதனால் இதன் வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட மக்களின் வழிபாடாகவோ அன்றி ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தின் சின்னமாகவோ கொள்ள முடியாது. ஈழம்
அருள் ஒளி
-
- 12

காட்டின் தொன்மை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள்
உட்பட்ட தென்னாசியாவில் வாழ்ந்த பல்லின மக்கள் வளர்த்தெடுத்த வழி பாடாக இது அமைந்துள்ளது. இதன் ஆரம்ப கர்த்தாக்களாகக் குறுணிக்கற்கால மக்களைக் கூறலாம். இவர்களே தென் னாசிய நாகரிகத்தின் அடித்தளமானவர்கள். மானிடவியலாளர் இவர்கள் 'வேடொ யிட்' அல்லது 'ஒஸ்ரலோயிட்' என அழைப்பர். இவர்களைத்தான் இலக்கி யங்கள் சபரர்கள், முண்டர்கள், சண்டாளர்கள், புலிண்டர்கள் என அழைக்கின்றன. ஈழத்து பாளி இலக்கியங்கள் குறிப்பிடும் யக்ஷர் களும் இவர்கள் தான். இவர்கள் பேசிய மொழி ஒஸ்ரோ ஏசியாற்றிக் குடும் பத்தினைச் சார்ந்ததாகும். ஈழத்திலும் மகாவம்சம் குறிக்குணம் சண்டாளர்கள், புலிண்டர்கள் ஆகி யோரோடு சபரர்களை நினைவு படுத்தும் சப்ரகமுவ என்ற மாகா ணத்தின் பெயரும் ஈழத்தின் பழங்குடிகள் இந்தியாவைப் போன்று ஒரே தன்மை யினராக விளங்கியதை எடுத்துக் காட்டு கின்றன. வேடர்கள் இவர்களின் சந்ததி யினரே.
இத்தகைய வழிபாடு தென்னாசியாவில் திராவிடரால் வளர்க்கப்பட்டது. பாளி இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் யக்ஷ - ருடைய தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய செய்திகள் ஆதி ஈழத்தில் இவர்களாலும், பின் வந்த திராவிடர்களாலும் பேணப்பட்ட வழிபாட்டு நெறிகள் என்று ஊகிப் பதில் தவறில்லை. ஆதியில் ஆரியரின் வழி பாட்டில் அன்னை வழிபாடு முக்கியம் பெறவில்லை. கங்கைச் சமவெளியில்
!-
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 15
ஆரியரின் நாகரிகம் பரந்த பின்னர் தான் தாய்த் தெய்வங்களான துர்க்கை, உமா, அம்பிகா, பார்வதி, காளி போன்றவை முக்கியம் பெற்றுப் புராண இதிகாச காலத்தில் திராவிட ஆரிய நாகரிங் களின் கலப்பால் அகிலந்திய வழிபாட்டு முறையாக மேன்மை பெற்றன. இருக்கு வேதத்திற் தாய்த் தெய்வத்திற்குப் பதிலாக ஆண் தெய்வங் களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. இதற்கு ஆரிய சமுதாய அமைப் பானது ஆண்வழிச் சமுதாயப் பண்புகளைக் கொண்டிருந்தமை முக்கிய காரணமாகும். இதனால் ஆரியரின் ஆரம்ப காலச் சமய நடவடிக்கைகளை எடுத்தியம்பும் இருக்கு வேதப் பாக்களிற் தாய்த் தெய்வ வழிபாடு முதன்மை பெறவில்லை என்பது புலனா கின்றது.
ஆனால் இருக்குவேதப் பாக்களில் உஷஷ், ராத்ரி, ராகா, சினிவாலி, குங்கு, அதிதி, பிருதுவி, திதி, சுவஸ்தி, பிருஷ்னி, புரம்தி, அனுமி, ஆப்தேவிஸ், சரஸ்வதி, வாக், ஆண்யானி, இந்திராணி, வருணாளி, சசி, ரோதசி, சீதா, ஊர்வரா, ஆரணி, சிரார்த்த, திஷனா, ஈள், நிருத்தி, குன்றிதா, சூர்யா போன்ற பெண்வழிப் பெயர்கள் காணப்படு கின்றன. இவை இயற்கைக்குத் தெய்வாம்சம் கொடுத்து வழிபட்ட தன்மையைப் பிரதி பலிப்பனவாகும். அதாவது உஷஷ் என்ற தெய்வம் விடியற் காலையைக் குறித்து நின்றது. பிருதுவி நிலத்திற்குரிய தெய்வ மாகக் குறிக்கப்பட்டது. இவற்றிற்கு உருவம் அமைத்து வழிபடும் மரபு இக் காலத்திற் காணப்படவில்லை. அத்துடன் பிற்பட்ட வேத இலக்கியங்களில் இவை செல்வாக்கைப் பெற்ற தெய்வங்களாகவும் காணப்பட வில்லை. பிருதுவி பற்றி மூன்று வரிகள் மாத்திரமே இருக்கு வேதத்தில் உண்டு.
அருள் ஒளி.
- 13

பிற்பட்ட அதர்வ வேதத்தில் இத்தெய்வம் பற்றிய நீண்டபா ஒன்று மட்டும் காணப்படு கின்றது. அதில் இத்தெய்வம் 'தயுஸ் என்ற தெய்வத் துடன் இணைத்து விளிக்கப்படுவ தானது இத் தெய்வங்கள் உயர்ந்த நிலையிற் பேணப்படவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
மேற்கூறப்பட்ட இத் தெய்வங்களுக்கும் பிற்பட்ட வேத காலத்திற் குறிப்பாக ஆரண்யங்களிலும் உபநிட தங்களிலும் செல்வாக்குற்றுக் காணப்படும் உமா, அம்பிகா, ஹிம்பதி (பார்வதி), துர்க்கா, காளி போன்றவற்றிற்கும் எவ்வித தொடர்பும் காணப்படவில்லை. இத் தெய்வங்கள் பண்டைய வழிபாட்டு மரபில் திராவிடத் தெய்வாம்சங்களைப் பெற்றிருந்தன. ஆரியர் சிந்துவெளியில் இருந்து கங்கைச் சமவெளிக்குப் பரந்த காலத்தில் அதாவது பிற்பட்ட வேத, உபநிடத , ஆரண்ட காலத்தில் தான் இத்தெய்வங்களின் கலப்புகள் நிகழ்ந்திருக்கவேண்டும். ஆதலால் இப்பெண் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் ஆரியர் இந்தியாவிற்குள் நுழை வதற்கு முன்னர் இங்கு வழக்கி லிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டை ஆரி யர் தம்மோடு இணைத்துக் கொண்டதை எடுத்துக்காட்டுகின்றன எனலாம்.
இத்தகைய இணைப்பைப் பிற்பட்ட இந்து வழிபாட்டு நெறிகளிலும் காணலாம். இருக்கு வேதத்தில் தெய்வமாகக் குறிக்கப் பட்ட சரஸ்வதி பிற்பட்ட வேத, ஆரண்ய, உபநிடத காலத்தில் வாக் தெய்வத்துடன் இணைக்கப்பட்டுக் கல்வித் தெய்வமாக உயர்ச்சி பெறுகின்றாள். இவ்வாக் தெய்வம் ஆரியருக்கு முன்பிருந்த வழிபாட்டு மரபின் எச்சமாகவும் விளங்கியிருக்கலாம். நாள்
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012
பே14:19 AT நூலகம்
யாழ்ப்பாணம்.

Page 16
டைவில் இரண்டும் சங்கமித்தன. இவ்வாறே ஸ்ரீயும் செல்வத்தின் அம்சமாகக் குறிக்கப் பட்டாலும் பிற்காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய லஷ்மியுடன் இணைக்கப்பட்டுச் ஸ்ரீயும் லஷ்மியும் வளம், செல்வம் ஆகிய வற்றின் தெய்வங்களாகப் போற்றப்படு கின்றன. இதனால் ஆரிய சமய நம்பிக்கை களுக்கு முன்னர் வட இந்தியாவில் செல்வாக் குடன் விளங்கிய திராவிடராற் பேணப்பட்ட பல தாய்த் தெய்வங்களுக்கு வடமொழி நாமங்கள் சூட்டப்பட்டு, இத் தெய்வங்கள் ஆரியமயமாக்கப்பட்டன எனக் கூறுவதே பொருத்தமாகின்றது. ஈழத்திலோ எனில் தமிழ கத்தினைப் போன்று சங்க இலக்கி யங்களோ, அன்றி அகில இந்திய ரீதியில் கிடைக்கும் வடமொழி இலக்கியங்களைப் போன்ற இலக்கியங்களோ காணப்பட வில்லை. இதனால் இந்தியாவைப் போன்று ஈழத்தில் காணப்பட்ட அன்னை வழிபாடு பற்றி அறிவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. இதற்குக் காரணம் பௌத்த மதம் கி.மு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கு புகுந்தமையும், இம்மதத்தோடு கூடிய பௌத்தம் சார்ந்த செய்திகள் அந் நூல்களில் முக்கியத்துவம் பெற்றமையுமாகும். இத னால் இத்தகைய வழிபாட்டு முறைகள் இவற்றில் இடம்பெறாது போயின . ஆதலால் இப்பாளி நூல்களில் இவ்வழிபாடு பற்றி அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் சான்றுகளே தாய்த் தெய்வ வழிபாடு பற்றி ஈழத்திற் கிடைக்கும் மிகப்பழைய இலக்கியச் சான்றுகளாக அமைகின்றன.
ஈழத்திற்குப் பெளத்தம் வந்தபோது நிலைபெற்றிருந்த யக்ஷ வழிபாடு கூடத் தாய்த் தெய்வத்தின் வழிபாடே எனலாம். செழுமை, வளம் ஆகியனவற்றின் சின்ன மாக வழிபடப்பட்ட உள்ளூர் கிராமியத்
அருள் ஒளி
- 14

தெய்வங்களான இவற்றைப் பௌத்த மதம் தன்னுடன் இணைத்ததென்பர் அறிஞர். ஈழத்தில் இவ் யக்ஷிகள் பற்றிய குறிப்புக்கள் பண்டுகாபயன் மன்னனின் காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இவர்களுள் சேத்திய என்ற யக்ஹி குதிரை முகத்தையுடையவள். இவள் பண்டுகாபய மன்னன் அரசனாக வருவதற்கு உதவி யவள். இவளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாக இம்மன்னன் அரண்மனையில் இவளை அமைத்து வழிபாடியற்றியதாக மகாவம்சம் குறிக்கின்றது. இத்தகைய குதிரை முகத்தையுடைய யக்ஷி உருவங்கள் இந்தியாவிலுள்ள பௌத்த மதக் கலைப் பீடங்களான பாரூட், சாஞ்சி, புத்தகாயா, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களிற் காணப்படுகின்றன. அம்பாளின் பல்வேறு மூர்த்தங்களில் குதிரை முகத்தையுடைய மூர்த்த மொன்று அமைந்திருப்பதால் இது தாய்த் தெய்வத்தினைக் குறிக்கின்றது எனலாம். இதனைவிட அனுராதபுர நகரின் தெற்கு வாசலில் “சித்த" என்ற யக்ஷிக்கும் மேற்கு வாசலில் “பச்சிம ராஜினி" என்ற யக்ஷிக்கும் அமைவிடங்களை இம்மன்னன் அமைத்ததாகவும் மகாவம்சம் குறிக்கின்றது. இம் மன்னனின் காலத்தில் நகரத்தின் காவல் தெய்வமாகப் 'புரதேவ' என்ற தெய்வம் விளங்கியதென்ற குறிப்பும் உண்டு. பெண் தெய்வங்களான மேற்கூறிய யக்ஷிகளும் அனுராதபுர நகரின் காவல் தெய்வங்களாக விளங்கி யிருக்கலாம். நகர்களின் காவல் தெய்வங்களாகப் பெண் தெய்வங்கள் விளங்கியதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய காவல் தெய்வங்களில் துர்க்கை முன்னணியில் இருந்ததைச் சிலப்பதி காரம் எடுத்தியம்புகின்றது. துர்க்கை
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 17
மதுராபதித் தேவதை எனச் சிலப்பதி காரத்தின் 23ஆவது காதையில் விளிக்கப்படு கின்றாள். இந்நூலில் இன்னோரிடத்தில் இம் மதுராபதித் தேவதை மகாலஷ்மி, மகா சரஸ்வதி, மகா துர்க்கை ஆகிய தெய்வங்களின் அம்சங்களை உடையவ ளாகக் குறிப்பிடப்படுவதைப் பின்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.
"மாமகளு நாமகளுமாமயிடற்செற்றுகந்த கோமகளுந்தாம்படைத்த கொற்றத்தாள் - நாம் முதிரா முலைகுறைத்தான் முன்னரே வந்தாள் மதுராபதி என்னு மாது"
(சிலப்பதிகாரம் : மதுரைக் காண்டம் 2 வெண்பா) மேற்கூறியவாறு துர்க்கையைச் சரஸ்வதி, லஷ்மி ஆகியோருடன் இணைக்கும் மரபை மார்க்கண்டேய புராணத்திலும் காணக் கூடியதாக உள்ளது. மணிமேகலையில் குறிப்பிடப்படும் சம்பாபதித் தெய்வம் பற்றிக் காணப்படும் வர்ணனையும் துர்க்கை யைக் குறிப்பிடுகின்றதென நாகசுவாமி கருதுகின்றார். இச் சம்பாபதி காவிரிப்பூம் பட்டினத்தின் காவல் தெய்வமாகக் குறிப் பிடப்படுகின்றாள். இவ்வாறே காடமர் செல்வியான காளியின் கோயிலும் இங்குள்ள சுடுகாட்டிற் காணப்பட்டதாக இந் நூலில் குறிப்புண்டு. இக்காளிதான் விந்தியாவாசினியாகப் பழைய சாக்த இலக்கியங்களிலே விளிக்கப்பட்டாள். காளி தன் கைகளிலே கபாலங்களைத் தாங்கியவாறு பேய்களைப் போஷிப்பவ ளாக மணிமேகலையிற் (18:115 - 116) குறிக்
அருள் ஒளி

கப்படும் பின்வரும் செய்யுளை நாகசுவாமி மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளார்.
"காடமர் செல்வி கடிப்பசி களைய ஒடுகைக் கொண்டுநின்றூட்டுநள்
இதே நூலில் (17:87 - 88) காளியின் கோயில் முதியோள் கோட்டம்' என விளிக்கப்படுவதும் ஈண்டு அவதானிக் கத்தக்கது. மேற்கூறிய சான்றுகள் தமிழகம் , ஈழம் ஆகிய பகுதிகளில் நகரின் காவல் தெய்வங்களாக, நகரின் பல்வேறு திசைகளிலும் இருந்த தெய்வங்களை எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய மரபு தமிழகத்தில் இருந்ததைச் சிலப்பதி காரம், மணிமேகலை ஆகியன கூற , ஈழத்தில் இத்தகைய மரபு வழக்கிலி ருந்தமையை மகாவம்சம் பிரதிபலிக்கின்றது. இவ்வாறே தான் பௌத்தம் இங்கு வந்துபோன பலர் பௌத்த மதத்தினைத் தழுவினாலும்கூட அப்போது அவர்கள் சூடியிருந்த பெயர்கள் அவர்களின் பழைய வழிபாட்டு முறை களைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. இத்தகைய பெயர்களாகக் கல்வெட்டுகளிற் காணப்படும் ஸிரி (திரு), பத்மா (பதும்), லஷ்மி (வஸி), அம்பிகா (அபிக), காளி (துடி), துர்க்கை (துக), கார்த்திகா (கதி), கெளரி (குர), மீனாட்சி (மச்சக) ஆகியன அமைகின்றன. இவ்வழிபாட்டின் எச்சங் களாக நாட்டின் பல்வேறு தொல்லியல் மையங்களில் காணப்பட்ட சுடு மண்ணினா லான பெண் பாவை உருவங்களும் விளங்குகின்றன.
15 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 18
சர்வ வியாபகம் நில
- தமிழ்மணி சக்தியை போற்றி வழிபடும் எமது வாழ்க்கை முறையின் தொன்று தொட்டு வந்த ஒன்றாகும். மெய்ஞானம் கூறும் "சக்தியின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் இன்றைய விஞ்ஞானம் முக்கியத்துவப்படுத்து வது சக்தி வழிபாட்டின் சிறப்பாகும். சக்தி இன்றி சிவன் இல்லை. அவன் இன்றி அணு வும் அசையாது என்பதெல்லாம் மெய்ஞானம் சக்தியை சிறப்புறக் கூறுவதாகும்.
சக்தியை முதன்மைப்படுத்தி மேற் கொள்ளும் வழிபாட்டு முறை தொன்மை யானது என்பதை சிந்துவெளி நாகரிக வரலாற்று ஆய்வுகள் சான்று பகர்கின்றன. இந்த வழிபாட்டு முறை காலத்துக்கு ஏற்ப பரிணமித்து இன்று எமது வாழ்வியல் அம்ச மாக உள்ள சக்தி வழிபாடு சமயத்தையும், கலையையும் பிரதிபலிக்கும் ஒன்றாக உள்ளது. ஏனைய சமய விழாக்களுடன் ஒப்பிடும் போது நவராத்திரி விழாவிற்கு என்று சில விசேட சிறப்புகள் உள்ளமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நவராத்திரி வழிபாட்டின் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் விரதம், கலை நிகழ்வு, கொலு வைத்தல், வித்தி யாரம்பம், புதிய முயற்சி என்பன போன்றன பல வாக்கிய விடயங்கள் ஆகும்.
விரதம்
சக்தி விரதங்களில் ஒன்றான நவராத்திரி விரதம் முதல் ஒன்பது நாட்களும் விரதம் இருந்து 10 ஆம் நாள் விஜய தசமியன்று பாரணை பண்ணுதலுடன் நிறைவுபெறும். இவ்விரதம் மாணவர்களும், பெண்களும் விரும்பி அனுஷ்டிக்கும் விரதமாகும்.
அருள் ஒளி

ஊறந்த சக்தி வழிபாடு
பரமக்குட்டி ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் வித்தையை விரும்புவோருக்கு வரப்பிரசாத மாகும். இவ் விரதத்தை அனுஷ்டித்து கல்வி ஞானத்தையும் கலைஞானத்தையும் பெற லாம் என்பது கண்கூடு. சக்தியை உபாசித்து வித்தை கைவரப் பெற்றவர்கள் பலர். இதற்கு உதாரணமாக எம்முன் வாழ்ந்து வாழ வழிகாட்டினர். உதாரணம் குமரகுருபரர், அபிராமிப்பட்டர், இராமகிருஷ்ணர், காள் மேகப் புலவர், பாரதியார் போன்றோர். முறையாக விரதமிருந்து தத்தமது வசதிக் கேற்ப சக்தியை வழிபட்டு சக்தியின் அருளைப் பெற்றனர். மாணவர்களும் வித்தை (கலை) கற்பதோடு கீர்த்தியையும் சித்தியையும் பெறலாம்.
4
கலை நிகழ்வுகள்
நவராத்திரி நாட்களில் மற்றொரு அம்சம் சக்திக்கு எமது கலைகளை அர்ப்பணம் செய்தலாகும். பொதுவாக நவராத்திரி சரஸ்வதி பூஜை என்னும் பொது நாமம் கொண்டு அழைக்கப்படுவதும் உண்டு. சரஸ் வதி கல்வித் தெய்வம், கலைமகள் என்றும் அழைக்கப்படுவாள். கலைகளின் கர்த்தா வாகிய கலைமகளுக்கு கலைகளை கற்று சமர்ப்பணம் செய்வது கலைஞர்களின் சிறப்பு ஆகும் . நவராத்திரி நிகழ்வின் இறுதி மூன்று நாட்களும் கலைமகளுக்கு உரியது. இத்தினங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது எமது கலைகளின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும், காரணமாக அமைகின்றது. கலைக்கூடங்களிலும், கல்வி நிலை யங்களிலும் இத்தினங்கள் கலைமகள் உலாவரும் நாட்களாகவே இருக்கும். இச் செயற்பாடு சமயத்தினூடாக எமது கலைகளுக்கு செய்யும் பெரும் தொண்டு ஆகும்.
16
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 19
கொலு வைத்தல்
நவராத்திரியின் மற்றொரு விசேஷம் கொலு வைத்தல் ஆகும். இது ஓர் அழகியல் அம்சமாகும். எமது சமூகம் கலாரசனை ! உடையது. இக் கொலு சிறுவர் முதல் பெரி
யோர் வரை அனைவரையும் கவர்ந்து | ரசனை கொள்ளச் செய்வதாகும். கொலு வைத்தல் அறிவு பூர்வமான ஒன்று ஆகும் என்பது படிகளிலும் அறிவு மட்டத்திற்கு ! ஏற்ப வகைப்படுத்தப்பட்ட ஓர் அறிவுள்ள புல் பூண்டுகளுக்கும் 2ஆம் படியில் இரு அறிவுள்ள ஊர்வனவும், 3ஆம் படி யில் 3 அறிவுள்ள பறவைகளும், 4ஆம் படியில் 4 அறிவுள்ள விலங்குகளும், 5ஆம் படியில் 5 அறிவுள்ள வீட்டு விலங்குகளும், 6ஆம் படியில் மனிதனும், 7ஆம் படியில் ஞானி களும், 8ஆம் படியில் முனிவர்களும், 9ஆம் படியில் சக்திகளும் அலங்கரிக்கப் பட வேண்டும். இதைக் காணும் மனிதன் தனது நிலையை உணர்ந்து தனது ஆளுமையை விருத்தி செய்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதை யும், தமக்கு கீழ் உள்ளவற்றுடன் அவற்றின் அறிவு நிலை கருதி அன்பு காட்ட வேண்டும் என்பதையும் விளக்கம் உள்ளதாகும்.
வித்தியாரம்பம் புதிய முயற்சி
இவை விஜயதசமி அன்று ஆரம்பிக் கப்படும் விடயங்களாகும். சாதாரண மாக ஒரு செடியை நடும்போது நாம் பொருத்த மான இடத்தைத் தெரிவு செய்து நடும் போது தான் அதன் பயனை அடைய முடி கின்றது. அது போன்று தான் குழந்தைக்கு முதன் முதலில் கல்வி புகட்டும் போதும் வியாபார முயற்சிகளையும், புதிய கலை களைக் கற்கும் போது இத் தினத்தில் தகுந்த குருவைக் கொண்டு ஆரம்பித்தல் வேண்டும் என்பதை இத்தினம் உணர்த்து கின்றது.
அருள் ஒளி
- 17

இவ்வாறான சிறப்புகள் பொருந்திய நவராத்திரி விழா இலங்கையில் குறிப்பாக எல்லாப் பிரதேசங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இது மட்டுமின்றி பௌத்தர்களும் நவராத்திரியை விரும்பிக் கொண்டாடுவதைக் காணமுடிகின்றது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றம் முதல் அனைத்து நிறுவனங் . களும் தமது சக்தியின் மேலாண்மைக் காக இவ் விழாவைக் கொண்டாடுவது சிறப்பான தொரு நிகழ்வாகும்.
தமிழர்கள் வாழும் அனைத்து நாடு களிலும் இந்த நவராத்திரி நிகழ்வு சிறப் புற்றுக் காணப்படுகின்றது. விஞ்ஞான உலகின் இயக்கத்துக்கு காரணம் சக்தி என்றே கூறுகின்றது. நாம் பூமியில் நிலைத் திருக்க புவியின் ஈர்ப்பு சக்தி புவியின் அச்சை விட்டு அகலாது இருக்க சூரிய சக்தி. இந்த சூரிய சக்தியே வெப்பசக்தி, ஒலிச் சக்தி, ஒளிச்சக்தி, இயக்கசக்தி என பல் வேறு பெயர்களால் அழைக்கப்படு கின்றது. இந்த சக்தி இல்லாது போனால் உலகம் இயங்காது. இச் சக்தியில் ஏற்படும் மாற்றம் இயற்கை நிகழ்வுகளுக்கு காரணமாகும் எனக் கூறப்படுகின்றது. இச் சக்தியையே நாம் வடிவம் கொடுத்து சக்தி வழிபாடு எனப் போற்றுகின்றோம். ஜகன் மாதாவாகிய பார்வதியே சக்தியின் மூலம் அதை பல்வேறு உருப்படுத்தி மலைமகள், திருமகள், கலைமகள் எனப் பெயரிடுகின்றோம். சக்திக் காப்பு இன்று விஞ்ஞானத்தின் முக்கிய குரலோசைகளில் ஒன்று. இச் சக்தியைக் காப்பதன் மூலமே இப் புவியில் உயிரினம் நிலைத்து நிற்கும் என்பது அவர்களின் கருத்து. இதை மெய்ஞானமும் விஞ்ஞானமும் இணைந்து போற்றும். இச்சக்தியை வீடு தோறும் எழுந்தருளச் செய்து சக்தி கடாட்சம் பெறுவோம்.
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 20
கேட்ட வரம் தரும் கே
விரதங்களுக்கு சிறந்த விரதங்களில் ஒன்று கேதார கெளரி ஆகும். அதுவும் சக்தி விரதங்களில் மகத்துவம் மிக்கது இந்த கௌரி விரதமாகும். ஆண்களும் பெண்களும் விரும்பி நோற்கும் இவ் விரதம் சிவ விரதங்களில் ஒன்றாகக் கொள்ளப்படுவதும் உண்டு. இது இவ்விர தத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாகும். இவ்விரதத்தைப் பொது வாக ஆண்களும் பெண்களும் விரும்பி நோற்று மேன்மை யடைவர்.
பெண்ணின் பெருமை கூறும் இன்றைய பெண்ணுரிமை வாதிகள் கட்டாயம் அறிந்து தமது கருத்துக்களை மறுசீர் செய்யவேண்டிய சமயக் கருத்துக்கள் எத்தனையோ உண்டு என்பதை அறிந்து கொள்ள இவ்விரதமும் விரதத்தின் பலனும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
இவ்விரதம் உலக மாதாவான பார்வதி தேவி இறைவனின் உடலில் சமபாகம் பெற அனுஷ்டித்தது என்று புராணம் கூறுகின்றது. பிருங்கி முனிவர் சிவனை மட்டுமே வழிபட்டு சக்தியை உதாசீனப்படுத்த, இதைப் பொறுக்காத சக்தி விருங்கி முனிவ ருக்கு சாபமிட்டு முனிவரின் சக்தியை எல்லாம் இழக்கச் செய்ய, உலகை எல்லாம் இரட்சித்து உயிர்களைக் காக்கும் கர்த்தா பரமேஸ்வரன் தனது பக்தனைக் காக்க மூன்றாவது காலை வழங்கினார். இதைப் பார்த்த பார்வதி இறைவனுடன் சேர்ந்தே
அருள் ஒளி

கதாரகௌரி விரதம்
இருந்தால் இந்த முனிவர் சிவனை மட்டும் எப்படி வணங்க முடியும் என்று சிவனுடன் இணைந்தே இருக்க அனுஷ்டித்த விரதமே
இவ் விரதம்.
இதன் மூலம் சிவனின் இடப்பாகம் பெற்று இறைவனும் இறைவியும் அர்த்த நாரீஸ்வரராக காட்சியளித்தனர். இவ்வா றான பெருமை மிக்க விரதத்தை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் அனுஷ்டித்து அரும்பெரும் பேறு பெறுகின்றனர். எமது புராணங்களும் இதிகாசங்களும் இவ்விர தத்தின் பெருமையை எடுத்தியம்புகின்றது. இவ்வாறான பெருமையான விரதத்தை முறையாக நோற்று பலன்பெற வேண்டும்.
விரதம் அனுஷ்டிக்கும் முறை
மிகவும் பக்தியுடம் அனுஷ்டான மும் மிக்க இவ் விரதத்தை முறையாக அனுஷ்டிக்க வேண்டும். அதிகாலை எழுந்து தமது கடமைகளை முடித்து உலர்ந்த ஆடை யணிந்து, விளக்கேற்றி இறைவழிபாடு செய்து, ஆலயம் சென்று இறைவழிபாடு செய்து பூஜையில் கலந்து கொண்டு சிவாச் சாரியாரிடம் பூவும் தீர்த்தமும் பெற்று சிவலிங்கத்துக்கு சாத்தி வழிபட்டு வீட்டிற்கு வந்து எம்பெருமானை வழிபட வேண்டும்.
பின்பு தமது கையாலே உலை வைத்து உணவு சமைத்து ஒருவேளை உண்டு விரதமிருக்கலாம். இது ஒருவேளை உண்டு விரதம் இருப்போருக்குப்
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 21
பொருந்தும். இதைவிட உபவாசம் இருப்போர், பால் பழம் அருந்துவோர் என பல வகை உண்டு. அது அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.
காலை எழுந்து தோய்த்து ஆடை யணியும் போது முதல் நாள் தண்ணீரில் நனைத்து தோய்த்து உலரவைத்து (இது மடி எனப்படும்) அதையே மறுநாள் அப்படியே உடுக்க வேண்டும். தலைக்கு சவர்க்காரம் இடல், தலை வாருதல், அடை அழுத்து தல், புதிது புதிதாக உடுத்துதல், காலில் செருப்பு அணிதல் என்பன தவிர்க் கப்படுகின்றது. இது விரத நியதி. அதற்காக இதைத்தான் இன்றும் அனுஷ்டிக்க வேண்டும் என்றில்லை. அதற்காக அப்படியே இந்த நியதிகளை மீறி விரதம் என்னும் பேரில் அதை ஒரு கேளிக்கையாக்கக் கூடாது. காலத் துக்கும் சமூக அமைப்புக்கும் ஏற்ப பொருத்தமான மாற்றங்களைச் செய்வது தவிர்க்க முடியாதது. அதே போன்று உணவு விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். சிலர் காலையில் தோய்ந்து இறைவழிபாடு செய்த பின் பால் அருந்துதல், பகல் உணவு அருந்துதல், இரவில் பல காரங்கள் உண்ணுதல் என்ப தெல்லாம் விரதம் இல்லை. இது சாதாரண நடைமுறையாகும். எனவே உணவு விட யத்தில் கவனம் செலுத்தி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். உணவில் சமூகமும் காலமும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நாமும் ஏற்படுத்தத் தேவையில்லை.
காப்புக் கட்டுதல் |
இருபத்தொருநாள் நிறைவில் விரத மிருப்போர் காப்புக் கட்டி பாறணை செய்து விரதத்தை நிறைவு செய்வர். காப்பு தாமரைத் தண்டிலிருந்து பெறப்படும்
அருள் ஒளி

நூலில் திரித்து அதை பூஜையில் வைத்து நாள் தோறும் பூப்போட்டு வழிபட்டு விரத முடிவில் சிவாச்சாரியார் மூலம் கட்டிக் கொள்வர். பின் நாள் தோறும் வீட்டில் விளக்கு வைத்து காப்புக்கு பூ வைத்து வணங்க வேண்டும். விரத நாட்களில் சில தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் ஆலயம் சென்று பூப்போட்டு வணங்க முடியாது எனில், அச்சங்கடங்கள் தீர்ந்த பின் மூன்று நான்கு நாட்களுக்கும் சேர்த்து ஒன்றாக பூப்போட்டு வழிபட முடியும். அதே போன்று குறித்த தினத்தில் ஆலயம் சென்று காப்புக் கட்ட முடியாது போனால் காப்பை ஒரு பெரியவர் வீட்டிற்கு கொண்டு வந்து புனிதமாக சுவாமியறையில் வைத்து பொருத்தமான ஒரு நாளில் பெரியவர் மூலம் கட்டலாம் அதைவிட ஆலயம் சென்று ஆலயத்தில் பூஜையின் பின் சிவாச்சாரியார் மூலம் கட்டுவதே சாலச் சிறந்தது. இவ்விர தத்தை குறிப்பிட்ட காலம் வரை நோற்க வேண்டும், நிறுத்த வேண்டும் என்றெல்லாம் வரையறைகள் இல்லை. ஒருவர் விரதம் இருந்து குறித்த ஒரு வருடம் அனுஷ்டிக்க முடியாது போனால் இவ்வருடம் இயலு மான வரை கட்டுப்பாடாக இருந்து அடுத்து வரும் வருடம் தொடரலாம்.
தொடர்ந்து விரதமிருந்து வரும் ஒருவர் வயதின் மூப்பினால் விரதம் அனுஷ்டிக்க முடியாது போனால் தனது மகளிடம் கொடுத்து இதை தொடரச் செய்வது சிறப்பானதே அப்படி வாரிசுகள் விரதம் அனுஷ்டிக்கும் வகையில் இல்லை யெனில் இது வரை கட்டிய காப்புக்களை யும் கையில் உள் காப்பையும் சேர்த்து ஆலயத்தில் சிவாச்சாரியாரிடம் கொடுத்து பூஜை செய்து பின் அதை சமுத்திரத்தில் இட வேண்டும்.
19 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 22
தொடர்ந்து விரதம் இருந்து வருவோர் வயதால் இறக்க நேரிடும் போது தீட்சை எடுத்தவர்களாயின் பூதவுடலுடன் சேர்த்து காப்பையும் இட்டு எரிக்க வேண்டும். இதைவிட இருபத்தொரு வருட முடிவில் விர தத்தை முடிக்க வேண்டும் என்பதோ குறித்த சிலர் விரதம் இருக்கக் கூடாது என்பதோ நியதியல்ல.
சிலர் விதிவிலக்காக நிறைவான மூன்று நாளும் விரதமிருந்து அல்லது உபவாசமிருந்து விரதத்தை முடிப்பர். இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
விரதத்தை நிறைவு செய்யும் போது உறவினர், நண்பர் மற்றும் வறியோருக்கு
சிவபூமிகன தானங்களில் சிறந்த தானப் வாருங்கள். உங்கள் இறப்புக் ஒருவருக்கு ஒளி கொடுக்க நீங்க இப்புண்ணிய காரியத்திற்கு ஒப்பு
தொடர்புக் கலாநிதி ஆறு.திருமுருகன் 021 - 222 6550
அருள் ஒளி

உ
உணவளித்து தத்தமது வசதிக்கு ஏற்ப தான தர்மம் செய்து விரதத்தை நிறைவு செய்ய முடியும். விதிவிலக்கான சந்தர்ப் பங்கள் தவிர மற்றைய சந்தர்ப்பங்களில் காப்புக் கட்டிய பின்பே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
தேவி இவ்விரதம் இருந்ததன் மூலம் சிவனின் உடலில் பாதியைப் பெற்று இறைவனும் இறைவியும் சேர்ந்து அர்த்த நாரீஸ்வரராக பேறு பெற்றார். இத்தகைய சிறப்புமிக்க விரதத்தை ஆசாரசீலராக விரத நியதிகளை மதித்து மனம், மொழி, மெய்யால் ஈசனை வழிபட்டு நாமும் எம்மைச் சோர்ந் தோரும் எமது சமூகமும் உய்ய வழிசமைக்க வேண்டும்.
ர்தான சபை
மாக கண் தானத்தைச் செய்ய முன் தப் பின் பார்வையற்றிருக்கும் கள் உதவுங்கள். வாழும் போதே
தல் தாருங்கள். நளுக்கு
கண் வைத்திய நிபுணர் Dr. ச. குகதாசன் 021 - 222 3645
0 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 23
அட்ரம்
நிறை
நிறை உணவு என்றால் உணவின் கூறுகள் அனைத்தும் (காபோவைதரேற்று, கொழுப்பு, புரதம், விற்றமின்கள், கனியுப்புக்கள்) அடங்கிய உணவு எனப் பொருள்படும் நிறை உணவு என்றதும் பால், முட்டை என்பனவே
எமது மனக்கண் முன் நிழலாடும்
ஆனால் இலைக்கஞ்சி ஓர் நிறை உணவு
இலைக்கஞ்சி என்றவுடன் பலரும் கசக்கும் என்பதுடன் முகத்தைச் சுழிக்கவும் செய்கிறார்கள். பின்வரும் முறைப்படி இலைக் கஞ்சியைத் தயாரித்து, ருசிப்போமானல்
அதுவும் சுவைமிக்க பானமே ஆகும்.
இதனை சைவ, அசைவ வேறு பாடின்றி குழந்தைகள், பெரியோர், நோயாளிகள் அனைவருமே உட்கொள்ள முடியும். இலகுவில் சமிபாடடையைக் கூடியதாகவும், அகத் துறிஞ்சப்படக் கூடியதாகவும் உள்ளது.
நார்த்தன்ைைமயும் அடங்குவதால் மலச்சிக்கலை நீக்கக்கூடியது. அதிக உடற் பருமன் உள்ளவர்களிற்கு உடற் பருமனைக் குறைக்கவும், மெலிந்தவன், இழைத்த வனிற்கு உடற்பருமனைக் கூட்டுவதுடன் தேக சாந்தியை வழங்குகிறது.
ஒவ்வொரு நோய் நிலைகளிற்கு ஏற்ப அதில் சேர்க்கப்படும் இலைகளை மாற்றம் செய்வதனால் அந்நோயி லிருந்தும் பாதுகாப்பைப் பெறமுடியும். தயாரிப்புப் பொருட்களை இலகுவில் பெறக்கூடிய தாக உள்ளதுடன், இலகுவில்
அருள் ஒளி -1)
- 2)

தம்
உணவு
Dr. S. டிசிஜயந்தி வர்க்காதேவி ஆயுள்வேத வைத்தியசாலை
தயாரிக்கவும் முடிகிறது. பக்கவிளைவு களை ஏற்படுத்தாது.
பால், முட்டை என்பவற்றை சில நோய் நிலைகளில் உட்கொள்ள முடியாது. அத்துடன் இவற்றை தினமும் அளவுக்கதிக மாக எடுப்பதனால் நோய் நிலைகளை உருவாக்கவும் வாய்ப்பதிகம் உள்ளது. இலைக் கஞ்சியை ஒருவேளை உண வாகவே பயன்படுத்த முடியும்.
தேவையான பொருட்கள் : பாகம்
ஒரு கோப்பை இலைக்கஞ்சி தயாரிப் பதற்குத் தேவையான அளவு குறிப்பிடப் படுகிறது. 1) சிவப்பரிசி - 15g 2) முளைத்த பயறு - 04g | 3) வறுத்த உழுத்தம்மா - 04g 4) இலை - தேவையான அளவு 5) தேங்காய்ப்பால் 6) உப்பு 7) சீனி - சிறியவர்கள், உடற்பருமன்
குறைந்த அல்லது இழைத்தவர்கள் பன்படுத்தவும். 8. ஏலக்காய் - ப் வாசனைக்காக
தேவைப்படின்.
செய்முறை : 1) பயற்றை முதல் நாள் நீரில் ஊற
விடவும். நீரானது பயற்றின் மட்டத்திற்கு விடுவதனால் பயறு.
முளைத்துவிடும். 2)
அரிசியினையும் பயறையும் அவிய விடவும்.
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 24
3) இலையை அரைத்து வைத்துக்
கொள்ளவும். 4) தேங்காய்ப் பாலில் உழுத்தம்மா
வினைக் கரைத்து வைக்கவும். 5) நன்கு அரிசி, பயறு அவிந்தவுடன் தேங்காய்ப்பாலுடன் உழுத்தம்மா, உப்பு என்பவற்றை இடவும். 6) இறக்குவதற்கு சற்று முன்னராக
அரைத்த இலையையும் சேர்த்து விட்டு பின் இறக்கிக் கொள்ளவும். 7) சீனி, ஏலக்காய் (அரைத்த பொடி)
சேர்ப்பதாயின் அதனையும் இறக்கு வதற்கு சற்று முன்னர் இடவும்.
பொதுவாக பயன்படுத்தப்படும் இலைகள் 1) பொன்னாங்காணி 2) வல்லாரை 3) கொவ்வை 4) கறிவேப்பிலை 5) கறிமுருங்கை 6) தவசி 7) சண்டி 8) அகத்தி 9) முசுட்டை 10) கறிமுல்லை 11) தூதுவளை
இவற்றில் ஒன்றோ, பலவோ பயன் படுத்த முடியும் பலவற்றைச் சேர்க்கும்போது கஞ்சியின் தரம், ருசி அதிகரிக்கும்.
பின்வரும் நோய்நிலைகளிற்கு ஏற்ப சிலவகையான இலைகள் பயன்படுத்த முடியும்.
1ா (-::-
அருள் ஒளி கர்ம
- 22

சலலோக நோயாளி (Diabetes) சிறு
குறிஞ்சா, கறிவேப்பிலை, கொவ்வை 3 உயர்குருதி அமுக்கம் (Hypertention)
கறிவேப்பிலை, பசன்புருட் இலை. 3 குடற்புண் (Ulcer)
பிரண்டை, மணித்தக்காளி, அகத்தி,
சாத்தாவாரி 3 சுவாசத்தொகுதி நோய்கள் (இருமல்,
சளி) -
துளசி, தூதுவளை, மொசுமொசுக்கை.
குறிப்பாக சிறுவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க
வல்லாரை , பிரமி 3 மூட்டு, தசைப்பிடிப்பு
முடக்கொத்தான், வாதமடக்கி சிறுநீரக நோயாளிகள் - முள்ளங்கி இலை, சாறணை இலை, நன்னாரி
மேலே குறிப்பிட்ட நோய் நிலை களுக்கு ஏற்றாற்போல இலைகளில் மாற்றம் செய்து பொதுவான இலைகளை யும் சேர்த்துக் கொள்ள முடியும்.
சிறியவர்கள், மெலிந்த அல்லது இழைத் தவர்களிற்கு அரைத்திண்ம வடிவிலும் (நீரின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்) ஏனையவர்கள் (நீரின் அளவைக் கூட்டி) திரவ நிலையிலும் உட்கொள்வதால் தேவைப்படும் கலோரி / சக்தியின் அளவையும் சரி செய்து கொள்ள முடியும்.
இதனைத் தயாரித்து உட்கொள்வத னால் சுகவாழ்வை நோக்கிப் பயணிக்க முடியும்.
நவராத்திரி சிறப்பு மலர் - 2012

Page 25
தமிழினுள் :
தமிழ் மொழிக்குள் அறிவியலை நோக்கும்கால் அதுவே எம்மை உயர்ந்து நிற்கும் உலகின் அறிவியற் தட்டுக்களிற்கு இட்டுச் செல்லும். "சூழலுக்கு இசைதல்" (Adaptation) எனும் கோட்பாட்டின் படி எம் சூழலில் நிறைந்துள்ள தாவரங்கள், பல வகைப் பூச்சிகள், ஏனைய விலங்குகள் மற்றும் மனிதன் உள்ளடங்கலாக எவ்வாறு சூழ்நிலைக்கமைவாகத் தம்மை மாற்றி யமைத்து வாழ்கின்றனவோ அவ்வாறான தொரு நிலையையே எம் தமிழ்மொழி கொண்டு முன்னேற வேண்டும். முன்னேறும் துறைகள் அனைத்திலுமே திகழ்கின்ற அறிவியற் படைப்புகள் தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு எம்மால் அவை பயன்படுத்தப்பட வேண்டும்.
இருவழிக் கோட்பாடு (Symbiosis) எனும் விலங்கியற் கோட்பாட்டினை நாம் நமது தமிழ் அறிவியலுடன் பயன்படுத்தல் வேண்டும். வெவ்வேறு இன விலங்குகள் இருதரப்பிற்கும் பயன்தரும் வகையில் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்கின்ற கடல் அனிமுனி (Sea anemone) என்னும் விலங்கு, முனிவன் நண்டுடன் (Hermit Crab) இந்த வகையில் ஒரு கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்கிறது. கடல் அனிமுனி யானது, முனிவன் நண்டு தாங்கியுள்ள ஓட்டின் மேல் தன்னைப் பதித்துக் கொள்ளும். இதனால் முனிவன் நண்டு தான் செல்லு மிடமெல்லாம் கடல் அனிமுனியைச் சுமந்து செல்கிறது. கடல் அனிமுனியின் உடலில் கொட்டும் செல்கள் காணப்படுவ தால், முனிவன் நண்டை இரையாகக்
அருள் ஒளி
- 23

அறிவியல்
திரு. தி. கதிர் அவர்கள்
கொள்ள வரும் மீன்கள் அகன்று சென்று விடுகின்றன. இதனால் முனிவன் நண்டிற்கும் பாதுகாப்புக் கிடைக்கின்றது. கடல் அனி முனிக்கும் உணவு கிடைத்து விடுகிறது. நமது அறிவியல் வல்லுநர்கள் வேற்றின வல்லுநர்களுடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் நம் இனமும் வளமும் வளர்ச்சியும் அடைய முடியும்.
அறிவியல் துறையில் உயிரியற் துறையின் வளர்ச்சியில் முதல் நிலை யில் பண்டைய கிரேக்க அறிஞர்கள் வெளி யிட்ட கருத்துக்கள் திகழ்கின்றன. இன்றயை உயிரியல் வகைப்பாடு புறப் பண்புகளோடு, பரிமாண உணர்வினையும் அடிப்படை யாகக் கொண்டுள்ளது. எனவே தான் உயிரின் வகைப்பாட்டில் புற அமைப்பின் அடிப்படையில் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட பாகுபாடான Classification உம் Systematics எனும் பரிணாம தொடர்பு சார்ந்த வகைப்பாட்டு முறையும் எமது அறிவியலில் நிலவுகின்றது. இவ்வகை யில் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை முதலிய நிலங்களின் தன்மைகளையும் அங்கு வாழும் உயிரினங்களை விவரித்துக் கூறும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுதலையும் குறிப்பிடலாம்.
தமிழில் கலந்துள்ள சில அறிவியற் கருத்துக்கள் பொறியியற் கருத்துக்களை எடுத்தியம்புகின்றன. திண்ம, திரவ வாயுப் பொருட்களில் திண்மத்தையும், வாயுவை யும் புற அமுக்கத்தினால் சுருங்கச் செய்ய லாம். ஆயினும் திரவங்களில் சுருங்கா
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 26
இயல்பு (Non Compressibiliquids lity of | liuqits) காணப்படுகிறது. இதனை ஒளவை
யார் தனது பாடலில், ஆழி அமுக்கிமுகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால் நாழி - தோழி! நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் விதியின் பயனே பயன்.
என்ற பாடல் மூலம் மிகச் சிறந்த முறையில் விளக்கி யுள்ளார். நியூற்றனின் முதலாம் விதியில், புறவிசை தாக்காத விடத்து இயங்கும் பொருட்கள் இயற்கிக் கொண்டே இருக்கும். ஓய்விலுள் பொருட்கள் ஓய்விலேயே இருக்கும் என்ற உண்மையை திருவாசகத்தில் இடம்பெறும் வாக்கியங்களான - நடப்பன நடா ஆய் கிடப்பன கிடா அய் நிற்பன நிறுவிச் சொற்பதங்கடந்த மேலோன்
எனும் வாக்கியங்கள் அக்காலத்தி லேயே தமிழில் உணர்த்தியுள்ளன.
பாதம் “இரசாயனவியல்” எனும் இன்றைய பதமானது இலக்கியங்களில் "வேதி யியல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் உணர்வின் பால் எடுத்தியம்பப்பட்டுள்ள காரண காரியங்களிற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையானது அறிவியல் கருத்துக் களின் பால் வழங்கப்பட்டிருக்கவில்லை
என்பது உண்மையாகும்.
இரசாயனவியல் தோன்றி வளர் வதற்கு அடிப் படையாக அமைந்தது 'ரசவாதம் என்பதாகும். சித்தர்களால் கடைப்பிடிக்கப்பட்ட சில நடைமுறை களை இதற்கு ஆதாரமாகக் கொள்ள லாம். இரும்பையும் செம்பையும் பொன் னாக்கவும், நோய் வயோதிப மற்ற இளமையைப் பெறுகின்ற முயற்சிகளிலும் இவ் இயலைப் பயன்படுத்தி உள்ளனர்.
அருள் ஒளி - 2
- 24

திருமூலரின் திருமந்திரத்தில் உப்பா னது நீரில் கரைந்து உருவ மிழத்தல் மற்றும் சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாகி உப்பு உருப்பெறுதலும் ஆகிய நிகழ்ச்சி கள் குறிப்பிடப்பட் டுள்ளமையானது, அபினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற்றுருச் செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகுமாறு போற் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே எனும் செய்யுளிற் காட்டப்பட்டுள்ளது.
பிராணவாயுவாகிய ஒட்சிசனானது "வாசி" என்று தமிழிலக்கியங்களிற் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2 சித்தர் பாடல் வரிகளில் வெடியுப்பு (KNO,), கல்லுப்பு (NaCI) என்பன பயன்படும் முறை பற்றி உப்பான வெடியுப்பு செயநீராலே ஒரு கோடி வித்தையெல்லா மாடலாகும் அப்பான கல்லுப்பு நீரினாலே ஆடலாந் துருசிடை அங்கமெல்லாம்
என்று சூரியானந்தர் எனும் சித்தர் பாடல் வரிகள் குறிக்கின்றன. தாயுமானவர் பாடலில் இடம்பெறுகின்ற, அலைகின்ற மனவோட்டத்தை வெளிப் படுத்தும் இயல்பதாக இரசத்தின் (Hg) இயல்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் இலால் பரமசி நிஷ்டை பெறுமோ?
என்பதே அவ் வரிகளாகும். மக்கள் எந்த இனத்துடன் சேர்கின்றனரோ அந்த இனத்தாரின் தன்மைக்கு ஏற்ற அறிவே ஏற்படும் என்ற கருத்தானது திருவள்ளுவராற் கூறப்படுகையில்,
4
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 27
நிலத்தியல் பால் நீர் திரிந்தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியர்பதாகும் அறிவு.
எனும் குறளில், நிலத்தின் இயல்பு நீரிற்கு மாற்றப்படுதல் எனும் கருத்தானது மண் இரசாயனவியலின் இன்றைய கருத்தி யலில் மண்ணின் கனிம இயல்புகள் (Mineral Characters) நீரிற்கு வழங்கப்படும் தன்மை யானது மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக எமது பிரதேச தரைக்கீழ் சுண்ணக்கற் பாறைத் தொடர்களின் கல்சியம் கனிமமானது எம்பிரதேச நீரில் அதிகள் விற் காணப்படுதலும், தென்மராட்சியின் சில பகுதிகளில் காணப்படும் மஞ்சள் லற்றசோல் (Yellow Latasol) மண்ணின் மஞ்சள் நிறமான இயல்புகள் அப்பிர தேசத்தின் நீரின் நிறத்திலும் பிரதி பலிப்பதனை இங்கு நாம் கருதலாம்.
தமிழர் மருத்துவமனை சித்த மருத்துவ மானது தமிழ் அறிவியற் துறையில் தனித்து வமான பாதையில் சிறப்புற்று வருதலிற்கு மருத்துவத்துறை சார்ந்த எமது விடயங்கள் தக்க முறையிற் பேணப்பட்டு வந்தமை ஒரு காரணமாக அமைகின்றது. இதற்கமை வான சிறிய உதாரணமாய் பால்வினை நோய்களிற்குத் தீர்வாக சித்தர்களால் கூறப்பட்ட
ஆழ்க தீயது என்றோதித்து - எல்லாம் அரன் போர் சூழ்க என்ற அஞ்செழுத்து ஓதி வளர்கவே.
அருள் ஒளி

"தாசி வீடு சென்ற தறுதலைக்குச் செம்மையாய்த் தருக செருப்படிதான்”
என்பதில் “செருப்பு" எனும் சொல் மூலிகையின் பெயரொன்றை கட்டுவதாக உள்ளது.
இன்றைய நனோ தொழில்நுட் பத்தை அன்றே தமிழில் ஒளவையார் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தறித்த குறள் எனும் வார்த்தைகளில் கூறியுள்ளார்.
நாட்டுப்புற பாடல் ஒன்றில், காலை யிலே உழவன்,
"மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே” என்ற வரிகள் மூலம் ஆவியுயிர்ப்பு தத்துவம் உணரப்பட்டமையையும் காணலாம்.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்" என்ற பாரதியின் வார்த்தைகளுக்கு தமிழர் நாம் உயிர் கொடுக்க முகங்கொடுப்போமா?
அயல்நெறி வீழ்க என்றது; வேறு து, தொல்லுயிர் யாவையும் வாழி
, 34, நூலகம் யாழ்ப்பாணம்.
5 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 28
கொல்லாமை எத்தனை
- ே
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்
தமிழ்மறை 260
பிறப்புண்டேல் மரணம் உண்டு. மண்டை வந்த நாளிலே மரணமுண்டு தோளிலே. இந்தப் பிறப்பை அழிக்கத் தான் மனிதப் பிறவி வந்தது என்கிறது மாண்டூக்கியம். எனவே இறவாமல் பிறவாமல் எனையாள் சற் குருநாதா என முருகனை வேண்டினார் அருண கிரிப் பெருமான். நாம் பிறந்த சைவ சமயம் பிறப்பினை ஒழிக்க நாம் சற்குண ராய், அறப்பண்புடையவராய், பக்குவ ஆன்மாக்களாய், பவ்விய சீவன்களாய் மிக உயர்ந்த மனிதர் களாய் வாழவேண்டுமென ஒரு கொள்கை நெறியை வகுத்துத் தந்தி ருக்கிறது. பிறப்பொக்கும் எவ்வு யிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யால் என்பது குறள் வாசகம். எனவே பிரம்மத்தை நோக்கிச் செல்பவர்கள் பிராமணர். இவர்கள் அந்தணர் எனவும் படுவர். யார் அந்த ணர் என்பதற்கு உயரிய வரைவிலக்கணம் தந்தவர் வள்ளுவர் தான். பார்ப்பார் எல்லாரும் அந்தணர் அன்று.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்.
தமிழ்மறை 30 அந்தணர் எனின் துறவிகள் என்றும் பொருள். துறவு வெளி வேசமன்று. மனத் துறவுதான் அசற் துறவு. மற்றையது பொய்த் துறவு, போலி வேடம். மரணம் எல்லா உயிர்க்கும் பொது. மரணமில்லாப் பெரு வாழ்வு நம் இறுதி இலக்கு. மரணம் இயற்கை மரணம், செயற்கை மரணம்
அருள் ஒளி

குணக்கேட்டை நீக்கும் பரறிஞர் முருகவே பரமநாதன் அவர்கள்
என்றெல்லாம் அமைகிறது. செயற்கை மரணமே அவமிருந்து. மரணத்தை வென்றவர் சீவன் முத்தர். மறைஞானச் செல்வர். மரணம் இன்றேல் சென்னம் இல்லை. வாழ்க்கை என்பது வியாபாரம். ஜனனம் என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும் என்று பாடியவர் கவியரசு கண்ணதாசன் . ஆண்டியென்ன அரச னென்ன எல்லார்க்கும் ஒரு நாள் சாவு வரும். எண்ணிப் பார்த்தால் நிலை யற்ற வாழ்வு மனித இயற்கை. மரணம் பெரிதாய் மதிக்கப்படத் தேவை யில்லை. வாழ்விற் துன்பம் வரவு, சுகம் செலவு. இருப்பது கனவு. இதைச் சிந்தித்தது சைவம் . இயற்கையை மீறிய செயற்பாடு தான் கொலை, தற்கொலை, படுகொலை, இனக் கொலை, திட்டமிட்ட கொலை, பாலியற் பின் கொலை போல்வன். இன்று மனித நேயம் பட்டுப்போன தால் மனித உயிர்கள் பறிபோகின்றன. ஒரு காலத்திலே சமயப் போர் வழி கொலைகள் மலிந்தன. இன்றும் அது நிகழாமல் இல்லை. ஆகச் சமயந் தேவையா என்ற விசாரம் தானே எழுகிறது. நரபலி ஏன்? இரத்தக் களரி ஏன். பெறுமானமுள்ள மனித உயிர்கள் கொலை மூலம் மரணத்தைத் தழுவு கின்றன. இலங்கையிற் சுமார் நாற்ப தாயிரம் கைம்பெண்கள் இருப்பதாக (அவர்கள் தமிழ்ப் பெண்களென) இணைய தளம் குறிப்பிடுகிறது. இந்த மனித அவ லங்கள் தீர்வே கொலையையும், புலையை யும் வெறுத்தார் வள்ளுவனார். எல்லாக் கொலைகட்கும் அடிநாதமாய் அமைவது மனச்சாட்சியைக் கொல்வது தான். கொலைஞர் வளர மனிதம் அழிகிறது,
26
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 29
அழிப்புத் தொடர்கிறது. ஈவிரக்கம் இல்லாத தா மனிதப் பிறவி? இதை நிகழ்த்துவது மனிதமா. இவர்கள் மிருக நிலைக்கு மாறிய ஐயறிவு மாக்களா?
கொலை செய்பவன், கொலைக்கு முயல்பவன், கொலைக்கு உதவியாய் இருப்பவர் எல்லாரும் கொலைஞரே, இவர்கள் புலைஞரினும் கொடியரே. இவர்களை இனம் கண்டு தண்டிக்கா விடின் அழிவு வளரலாம். இன்று சைவ மென்ற பெயரை மாற்றித் தம்மை இந்துக் கள் என்போர் மாட்டிறைச்சி உண்பதால் பசுவதை அதிகரிக்க வியாபாரம் நிகர லாபம் தருகிறது. இதை நன்கு கண்டித்த வர்கள் அறவாணர்கள். பொய்யாமொழி யார் கொல்லாமை, புலான் மறுத்தலென்ற அதிகாரங்களில் மட்டுமன்றி ஒல்லும் வகையெல்லாம் அறவினையைப் பேணுங் கள் என்றார்.
கொலையிற் கொடியானை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.
தமிழ்மறை 550
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து
மேலது 226
கொலைமேற்கொண் டாரிற் கொடி தேஅலை மேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து
மேலது 551
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு
மேலது 984
அருள் ஒளி -
- 27

ஒன்றாக நல்லது பொல்லாமை மற்றதன் மின்சாரப் பொய்யாமை நன்று
மேலது 323
தினற் பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப் பொருட்டால் ஊன்றருவாரில்
மேலது 256
இந்த மனிதக் கொலை மட்டுமன்றி எவ்வுயிரையும் அழித்தல் பெரும் பாவமாம். நாம் ஒரு உயிரை ஆக்கும் திறன் உடை யவர்களா? படைப்பது எம்கையில் இல்லை. அஃதே போலத் துடைப்பதும் நம் வேலை யல்ல. இந்த அன்பு நம்மைவிட்டு அகன்றத னாற் றான் கொலை மலிந்து நிற்கிறது. இன்றைய மலிவான செயல் உயிர்க் கொலைதான். பெண் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்வது, பணயக் கைதி களாக்கி பணம் பறிக்கும் கொலை, உலகின் மூலை தோறும் நிகழ்கிறது. நீதியெங்கே நியாயம் எங்கே, தர்மம் எங்கே?சட்டம் எங்கே, நீதித்துறை எங்கே? எல்லாமே பராதீயமாய் விட்டன. வன்முறைக் கலாசாரம் துப்பாக்கி நாகரிகங்கள், அரிவாட் பண்பாடு, இரத்தக்களரியாகி மனித உயிர்களைப் பலியெடுக்கின்றன, பழிவாங்குகின்றன. மனிதப் பண்பாட்டியல், கலாசாரப் பக்குவம் சரிந்து போகிறது. இக்கொடிய சூழ்நிலை களால் மனிதம் மாக்களாய் மாறுவதே இதற்கு அடிப்படைக் காரணி எனலாம். மெய்யுணர்வு நெகிழ்ந்து விஞ்ஞானம் தலைதூக்க வாழ்வியற் தர்மங்கள் தாழ்ந்து போயின . ஆக் சமுதாயம் அழிவை நோக்கி, கொடுமையை நோக்கிப் பயணிக்கிறது.
தன்னுயிர் போல் மன்னுயிர் நினை. கொலையும் புலையும் களவுந்தவிர் என்றார் ஒளவையார். கொல்லாமற்
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012
ஆக ய லபகம்
95 ட க “e-
யாழ்ப்பாணம்.

Page 30
கொன்றதைத் தின்னாமல் குத்திரம் கோள் கொலை, களவு கல்லாமல், கைதவரோடு இணங்காமல், கனவிலும் பொய் சொல்லா மல், சொற் கேளாத் தோகையர் மாயை யிலே செல்லாமற் செல்வாய செல்வந்திரு வாயே எனப் பாடி எம்மை வழிநடத்து கிறார் பட்டினத்தடிகள்.
பக்குவமான மனிதன் கொலை ஞன், கொடியன் என்ற பெயரைப் பெறுவதா. நம்மை நாம் தர்மத்தின் பாதையிலே வழிநடத்த வேண்டும் இளமையில் இருந்தே ஒவ்வொரு குழந்தைகளும் நற்குழந்தை களாக வளர்க்கப்படவேண்டும். இதை எண்ணா தவர் மனிதப் பிள்ளைகளன்று. சமுதாய நலன் பேணப்படல் முக்கியம். இக் கண்ணோட்டத்திலே தான் தாயு மானவர் நம்மை வழிப்படுத்துகிறார்.
கொல்லாவிரதம் குவலயம் எல் லாம்ஓங்கம் எல்லார்க்கும் சொல்லுவது என்இச்சை பராபரமே.
தாயுமானவர் பாடல்கள் பராபரக்கண்ணி 54
யாதொரு சீவனையும் எதன் பொருட் டேனும் கொல்லாதிருக்கும் ஓர் விரதமானது இவ்வுலக முழுதும் பரம ஆன்ம கோடி கட்கெல்லாம் எடுத்துச் சொல்லுதற்கே
அடியேனுக்கு விருப்பம் உளது.
உவ் உயிரும் என்னுயிர்போல் எண்ணி இருக்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே
மேற்படி 65 எத்தகைய சிற்றுயிரினையும் என்ன ருமையான உயிரைப் போன்று எண்ணி, அவைகட்கு இரங்குமாறு, தெய்வத் தன்மை வாய்ந்த திருவருளாகிய கருணை செய்தல் வேண்டும்.
அருள் ஒளி
- 23

தம் உயிர்போல் எவ்வுயிரும்தான் என்று தண்அருள்கூர் கொத்தடிமை ஆனகுடிநான் பராபரமே
மேலது 149
தம்முயிர் போலவே (அன்னிய ) எவ்வு யிரும் ஆம் என்றெண்ணித் தண்ணிய அருள்மிகுந்த செவ்விய நடையை உடை யவர்க்கு எக்காலத்தில் ஏவல் செய்யக் கடவேன்.
கொல்ல விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே
மேலது 192
கொல்லாமையாகிய விரதமொன்றை மேற்கொண்டவர்களே நல்ல மனிதர்கள். அவரையொழிந்த கொல்லுந் தன்மை வாய்ந்த மற்றையோர்கள் யாவரோ? அவர் பேர் சொல்ல அறியேன் (பொல்லார் எனக்கூறின் அத்தகையர் மனிதர் என ஏற்படுமாதலின் அங்ஙனமும் சொல்ல வியலாது. ஆதலின் காட்டில் வாழும் நாய் நரிகளேயாவர்.
எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணும் தபோதனர்க் செவ்வறிவை நாடி மிகச் சிந்தை வைப்பது எந்நாளோ
எந்நாட்கண்ணி 12
எத்தகைய உயிரினையும் தனது உயிரினைப் போலவே நினைக்கின்ற (சைவர்களாகிய) தவத்தினர்களது நல்ல அறிவினை விரும்பி அதன் பொருட்டுச் சிந்தை வைப்பது எந்நாளோ?
பிறக்கும் குழந்தைகள் எல்லாம் நல்ல குழந்தைகள் தான். அவர்கள் நல்லவர் களாய் வருவதும், கெட்ட வர்களாய் வரு வதும் தாயின் வளர்ப்பிலே தான் தங்கி
-
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 31
யிருக்கிறது என்கிறார் கண்ணதாசன். நிலத்தியல் பால் நீர் மாற்றமடைவது போல - மனிதர்கள் சேரும் இனத்தியல்ப தாகும் அவர்களது நற்குணங்களும் நற் செய்கைகளும், போதி மாதவன் வகுத்த அட்டசீலங்களும் உயர்ந்தவை. அப்பழுக் கற்ற குழந்தைகளின் வெள்ளை உள்ளங் களை மாசடையாமற் பாதுகாக்க வேண்டும். ஒரு தீய பழக்கமோ, ஒழுக்கமோ நம்மிடம் புகுந்துவிட்டால் பல தீய குணங்கள் நம்மைப் பற்றிப் படர்வது சகசம். புகைக்கப் பழகியவர். குடிப்பது, மாமிசம் உண்பது, ஹெரோயின் பாவிப்பது, மாதுடன் சேர்வது, களவெடுப்பது, சூதாடுவது என்று வளர்ந்து கொலைப் பாதகம் செய்யும் நிலையை எட்டிப் பிடிக்கின்றது. ஆக ஆரம்பத்தி லேயே தீய பழக்கங்கட்கு இடம் கொடா மல் வாழ்வது தூய வாழ்வுக்கு உறுதுணை யாகும் என்பதை நாம் உணர்ந்து முன்னெச் சரிக்கையாக இருக்க வேண்டும். வேண்டாப் பழக்கங்களை முளையிலேயே கிள்ளி யெறிய வேண்டும். இதற்கு நல்ல மன உறுதி, வைராக்கியம் வேண்டும். புகைப்பவர் ஒருவர் அதை விட வேண்டும் என நினைத்தால் அதை அந் நேரத்தில் இருந்தே விட்டுவிட வைராக்கியம் கொள்ள வேண்டுமென பாபா அடித்துக் கூறியுள்ளார். எனவே நாம் வேண்டாப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் வாழ வேண்டும். நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோமாக.
UIII
தாயுமான சுவாமிகள் கொல்லாமைக் குக் கொடுத்த கனதி, காத்திரம் வாழ்வுக்கு நல்ல வழித்துணையாகும். இந்த விழுமி யத்தை நிலைநாட்டு வதற்காக வேறோர் உத்தியைப் பாவித்து கொல்லாமையை வலியுறுத்தியுள்ளார். இதோ அப்பாடல் :
அருள் ஒளி
- 2

கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும், அக்
குணம் ஒன்றும் ஒன்றிலேன்பால் கோரம் எத் தனை , பக்ஷபாதம் எத்தனை, வன்
குணங்கள் எத்தனை கொடிய பாழ்ங் கல்லாமை எத்தனை, அகந்த எத்தனை மனக்
கள்ளம் எத்தனை உள்ளசற் காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை
கதிக்கு என்று அமைத்த அருளில் செல்லாமை எத்தனை விர்தாகோஷ்டி என்னிலோ
செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்திரஜாலம் போன்ற
தேகத்தில் வாஞ்ஞைமுதலாய அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை
ஆனேன் இவைக்கும் ஆளோ? அண்டபதி ரண்டமும் அடங்குஒரு நிறைவு ஆகி
ஆனந்தம் ஆனபரமே!
ஆனந்தமான பரம்!
இப்பாடலின் பொருள் (கருத்து) கொல்லாமை - கொல்லாமை ஆகிய குணம், எத்தனை குணக்கேட்டை நீக்கும் - எத்தனை துர்க்குணங்களை போக்கும், அகுணம் ஒன்றும் ஒன்றி லேன்பால் - அக்குணம் ஒன்றும் பொருந்தாதவனாகிய என்னிடத்தில், கோரம் எத்தனை (அமைத் தனை), கோரமான நடத்தைகள் எத்தனை அமைத்தாய், பக்ஷபாதம் எத்தனை அமைத்தாய் - பட்சபாதங்களெத்தனை அமைத்தாய், வன்குணங்கள் எத் தனை (அமைத்தனை) கொடிய பாழ் (2) கல்லாமை எத்தனை அமைத் தனை - கொடியளவும் பாழ்படுவதற்குக் காரண மும் ஆகிய கல்லாமைக்குணங்கள் எத்தனை அமைத்தாய், அகந்தை எத்தனை அமைத் தனை அகங்காரக் குணங்கள் எத்தனை அமைத்தாய், உள்ள சற்காரியம் சொல்லிடி னும் அறியாமை எத்தனை (அமைத்தனை) உளதாகிய சற் காரியத்தை சொன்னாலும்
9 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 32
அதை யறிந்து கொள்ளாமையாகிய துர்க் குணங்கள் எத்தனை அமைத்தனை, தாய்; கதிக்கு என்று அமைத்த அருளில் செல்லா எத்தனை (அமைத்தனை) மோட்சத்துக்கு என்று அமைக்கப்பட்ட அருட்குணங்களில் பிரவேசியாமையாகிய குணங்கள் எத்தனை அமைத்தாய்? விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை அமைத்தாய், பய னில்லாத முயற்சியில் செல்லும் சிந்தைகள் எத்தனை அமைத்தாய், சலனம் இந்திர சாலம் போன்ற தேகத்தில் கெடும் ஈயற்கை யில் இந்திரசாலத்தை ஒத்த சரீரத்தில், வாஞ்சை முதலான அல்லாமை எத்தனை அமைத்தனை - விருப்பம் முதலியன வாகிய, தகாமையாகிய குணங்க ளெத்தனை அமைத்தாய், உனக்கு அடிமை ஆனேன் - தேவ ரீருக்கு அடிமை ஆயி னேன் - இவைக்கும் ஆளோகோரம் முதலிய இவ்வண்டங்களும், இவற்றின் புறத் திலுள்ள அண்டங்களும், அடங்க குறுகயுள் அடங்கும்படி ஒரு நிறைவு ஆகி ஒரு பரிபூரணமாகி ஆனந்தம் ஆன பரமேசுகானுபமான பரம்பொருளே!
அருள் ஒளி

கொல்லாமை எத்தனை குணக் கேட்டை நீக்கும்
3 கொல்லாமை என்கின்ற தர்மத்தின் வழி நின்றால் எல்லாப் புண்ணியங்களும் இலகுவாய்க் கைகூடும். கொலை செய்வதனால் எல்லாப்
அனுபவிக்க நேரிடும். இக் கொலை செய்வதனால் இப்பிறப்பிற துன்பமும் மறுமை யில் தண்டனையும்
அனுபவிக்க வேண்டி வரும். 3 கொலைஞர்களிடத்து கோரமான நடத்தை, பட்சபாதம், வன்குணம், வன் செயல், கற்காமை, அகந்தை, மனக்கள்ளம், அறியாமை, அருள் வழி செல்லாமை, விறுதாக் குணம், உப் யோகமற்ற செயற்பாடு, அநித்தி யத்தில் ஆசை போல்வன ஏற்படும்.
எனவே சைவசமயிகளாகிய நாம் சைவப் பாரம்பரியங்களைப் பேணி முத்தியின்பம் பெறுவோமாக.
B0 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 33
தன்னையே தரு
- ப
கருவறை மூடிக் கலந்தெடு திருவருங் கோவென் நிகா ஒருவனும் நீருற ஒங்கொள் அருவரை யாய் நின்றருள்
ராகம் - குந்தலவராளி
க
ால்
கண்டவர்ககுக் கனவிலும் கால பயம் ஏது? கனக ஸபையின் உள்ளே இடது கால் தூக்க
அனுபல்
தொண்டருக்கு தொண்டனாகித் தூது நடந் தூமறையோர் உள்ளம் தினம் துதிக்கும் கு
1
சரண
மெய்யன்பர் மனம் போலே வேண்டுவதீயும் ப மேதினியே வியக்கும் ஆதிபகவன் பாதம் பொய்யன்பர் செயற்கேற்பப் புத்தி புகட்டும் பா. புகழ் பொருள் போகமுடன் போதகமும் தரும்
காலனை மார்க்கண்டற்காய் கடிந்து உதை கள்ளமில்லா உள்ளத்தில் கலந்தருள் செய் தலைவிதி எதுவானாலும் அதைத்தான் மா தனை நம்புவார் எவர்க்கும் தன்னையே தா
அருள் ஒளி
- 31

நவான் பாதம்
ரக்டர் ஸ்வர்ண வேங்கடேச தீட்சிதர்
ழம் வெள்ளத் ல இறைவன் ரி யாகி புரிந்தானே
- திருமந்திரம்
(தாளம் ஆதி)
யா?
(தில்லைக் - நியாடும் காஜி (கண்ட)
மலவி
த பாதம் ஞ்சிதபாதம்
(கண்ட)
எதம்
தம்
பாதம்
(கண்ட)
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
த்த பாதம் வோன் பாதம் ற்றுவான் பாதம்
வான் பாதம்
(கண்ட)
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 34
ஆழி ஜலம் ஒடுங்க அன்று எழலுவாய் ஆ ஊழி தாண்டபம் செய்து உம்பர் வாழச் செய வாழையடி வாழையாய் எம்மைநன்கு வாழ வஞ்சினம் பேசுவோரை எல்லாம் அஞ்சி
மலையெலாம் மூழ்கிடவே வந்த பிரளயத்த மாலயற்கருள் செய்யவே வந்துயர்த் தோல் கலைத் தெய்வமே எனக் காசினியோர் தெ கஷ்டங்களைத் தீர்க்க கனைகஸபையுள்
அருள் ஒளி
- 3

னேன் பாதம்
தோன் பாதம்
வைக்கும் மலர்ப் பாதம் ட வாட்டும் பாதம்
(கண்ட)
தின் போது ர் பாதம் நாழக் நிறைந்தாடும் பாதம்
(கண்ட)
2
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 35
மல்லாகம் த திரு.ச.அம்பிகை
- கலாநிதி சிவத்தமிழ் செல்க
அன்று திருஞானசம்பந்த மூர்த்தி நாய் னார் குருபூசைத்தினம் வைகாசி மூலத்தில் பெரிய புராணப் படிப்பைத் தொடக்கி வைக்க வேண்டும் என்று எமது நிர்வாகசபை விரும்பியது. இது நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய செய்தியாகும். இவ்விழாவுக்கு . யாரைச் சிறப்பாக அழைக்கலாம் என்று | சிந்தித்தபோது திரு.ச.அம்பிகைபாகன் அவர்களின் பெயர் முன்னுக்கு வந்தது. சைவநூல் தேர்ச்சியிலும், தமிழ் நூல் பண்பாட்டிலும், சமூக உறவு மேம்பாட்டிலும் அக் காலத்தில் அனைவராலும் மதிக் கப்பட்டு வந்தார் திரு.ச.அம்பிகைபாகன் ( அவர்கள். இப்பெரியாரின் வாழ்விடம் மல்லாகம்.சைவ பண்பாடு மிக்க குடும்பம். மல்லாகம் பழம் பிள்ளையாரோடும், தெல்லிப்பழை துர்க்காதேவியோடும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அந்த ஈடுபாட்டின் காரணமாக பெரிய புராண ஆரம்ப நிகழ்ச்சிக்குத் தொடக்குநராக அழைத்திருந்தோம். உரிய நேரத்தில் வருகை தந்து தமது கடமையைச் சிறப்புற நிறைவேற்றினார். மல்லாகம் கல்விமான் - திரு.அ.சரவணமுத்து அவர்கள், புகழ்பெற்ற கல்வியாளர் திரு.நம் . சிவப்பிரகாசம் |
அவர்கள், நிர்வாகசபைத் தலைவரும் ஓய்வு பெற்ற வித்தியாசிரியருமான திரு.சே.தியாகராஜா ஆகியோரும் இவ் வைபவத்துக்கு வருகை தந்திருந்தனர். வரவேற்புரையை நான் நிகழ்த்தி னேன். பெரியபுராணச் சிறப்புக்களை திரு.ச. அம்பிகைபாகன் எடுத்துரைத்தார். அருள் ஒளி
|
|
- 33

தே மாமனிதர் பாகன் அவர்கள்
வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
-எடுக்கு மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திட தடக்கை ஐந்துடை தாழ்செவி நீண்முடி கடக்களிற்றை கருத்துள் இருத்துவாம்"
என்ற காப்புச் செய்யுளை எடுத்துக் கூறி சைவமக்கள் வழிபாட்டில் விநாயப் பெருமான் இடம்பெறும் மேன்மையை நல்லபடி எடுத்துரைத்தார். பின்பு புராண படனம் ஆரம்பமானது. ஆரம்பித்து வைத்த வரும் இவரே. "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்..." என்ற முதற் பாடல் அங்கிருந்த எல்லோராலும் ஓதப்பட்டது. தொடர்ந்து பெரிய புராண படனம் நடை பெற்றது. அளவெட்டி அறிஞர் புராணபடன் விரிவுரையாளர் திரு.செ. கதிரேசபிள்ளை அவர்கள் இராகத்தோடு பயன் கூறிக் கேட் போரை மகிழவைத்தார். இந்நிகழ்ச்சி திருவாளர் அம்பிகைபாகனை நான் அறி
முகமான முதலாவது நிகழ்ச்சியாகும்.
மல்லாகம் தந்த மாமனிதர் என்ற புகழைத் தமதாக்கிக் கொண்ட பெரியார் அம்பிகைபாகன் அவர்கள் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப் பெரி யாரின் பிறந்த திகதி 03.05.1908 என்ப தாகும். தந்தையார் சங்கரப்பிள்ளைக்கும் தாயார் சிவகாமசுந்தரிக்கும் திருமக னாக அவதரித்தவர் இவர். ஆரம்ப காலத்தில் மல்லாகம் இந்துக் கல்லூரியிலும் அதனை அடுத்து யாழ் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். உயர்தரக் கல்விக்காகத் தமிழ கத்துக்குச் சென்று சென்னைப் பல்கலைக்
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 36
கழகத்தில் அமைந்த பச்சையப்பன் கல்லூரி யின் B.A (பீ.ஏ) பட்டம் பெற்று இலங்கைக் குத் திரும்பினார். இப்பெரியாருக்கு ஆரம்ப காலத்தில் இராமகிருஷ்ண மண்டபத்தின் சுவாமிகள் தொடர்பு ஏற்பட்டது. கிழக்கு மாகாணத்தில் கல்லடி உப்போடையில் அமைந்த இராமகிருஷ்ணமிஷன் நிறு வனத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவராக இருந்த சுவாமி விபுலானந்த அடிகளின் தொடர்பையும் பெற்றார். இதன் பயனாக மட்டக்களப்பு சிவானந்தா வித்தியால யத்தின் ஆசிரியப் பதவியையும் பெற்றார். இந்தக் காலத்தில் விபுலானந்த அடிகளோடு கூடிப் பழகும் பேறு இவருக்குக் கிடைத்தது. பார்த்தவர்கள் எல்லோரும் அம்பிகை பாகன் அவர்களையும் ஒரு துறவி என்றே கருதினர். அத்தனைக்கும் தம்மை ஒரு இல்லறத்தான் என்று மதிப்பிட முடியாத தனித்துவமுடையவராக இருந்தார். பெற் றோர்களின் விருப்பப்படி முன்னமே திரு மணமாகி சான்றாண்மை மிக்க பிள்ளைகள் மூவருக்குத் தந்தையாய் விளங்கினார். கல்வி கேள்விகளில் சிறந்த குடும்பம் இதுவென்று நாட்டிலுள்ள அனைவரும் பாராட்டினர். தந்தை எவ்வழி மைந்தனும் அவ்வழி எனக் குடும்பமும் பெருமை யுற்றது. மட்டக்களப்பில் பெரியார் அவர் களின் சேவை ஈராண்டுகளே நிலைத்தது. யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தி யாலயத்தின் அதிபராக இராம கிருஷ்ண சபையாரால் இவர் அனுப்பப்பட்டார். 1935 ஆம் ஆண்டு அக் கல்லூரியிலேயே அதிபராக ஆரம்பித்து முத்திரண்டு வரு டங்கள் கல்விப்பணி ஆற்றிய காலம் பொற் காலமாகும்.
இ ததி இவர் ஆற்றிய கல்விப் பணி, சமூக சேவை, சமய சேவை என்பவற்றைப் பற்றி
அருள் ஒளி அம்மன்
- 34

எழுதப் போனால் மிக விரிந்து கொண்டே போகும். இவருடைய மனையாள் நகு லாம்பிகை அம்மையாரின் குடும்பத்தவர் களும் இச் சேவையில் பெரியார் அம்பிகை பாகனுக்கு உந்து சக்தியாக அமைந்தனர். குடும்பத்தின் மேன்மைக்கு மனைவியின் பங்கு அமையவேண்டிய சிறப்பை வள்ளு
வர் அழகாகக் காட்டுகிறார்.
"மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான் வளத்கத்காள் வாழ்க்கைத் துணை"
என்பது வள்ளுவர் குறட்பாவாகும். இந்த வகையில் பெரியார் அம்பிகை பான் அவர்களது பணிகள் மேலும் சிறப்புப் பெற்றது.
ஈழநாட்டுப் பத்திரிகை நிறுவனத் தின் ஸ்தாபகர் திரு.கே.சி.தங்கராசா அவர்கள் அம்பிகைபாகன் பற்றிப் பாராட்டிப் பேசிய கருத்துக்களைக் கவனிப்போம். "யாழ்ப் பாணத்தின் கல்விப் பாரம்பரியம் எத்துணை மேன்மையானது என்று உலகறிய வைத்த அறிஞர்களில் அம்பிகைபாக னும் ஒருவர். அவருடைய அறிவு, ஆற்றல், அயராத உழைப்பு, எந்நேர மும் புன்னகை தவழும் முகம், இன்சொல் என்பன அவர் ஈட்டிய கல்விச் சாதனைக்குக் காரணங் களாகும். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக மேடைகள் தோறும் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமக்குத் தமிழ் நாட்டி லிருந்து செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழறிஞர்களை இங்கு வரவழைத் தார். அவர்களின் கருத்தமைந்த சொற் பொழிவுகள் மேடைகள் தோறும் முழங்கின. அத்துடன் ஆலயங்களில் புராணபடனமும் இடம்பெறுவதற்கு சைவ அறிஞர்களைத் தேடி புராணபடன் ஒழுங்கு களைச் செய்து வைத்தார்.
- -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 37
"இதனை இதனால் இவன்முடிக்கு மென்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்
என்பதை நிரூபித்துக் காட்டினார். இதன் மூலம் இவருடைய நிர்வாகம் . சிறப்புப் பெற்றது. ஈழநாட்டுப் பத்திரி கைக்குக் கட்டுரைகள் எழுதியும் எழுது வித்தும் ஆதரவு நல்கினார். இவை யாவும் திரு. கே.சி. தங்கராஜாவின் கருத்தாகும்.
பெரியார் அம்பிகைபாகன் பற்றி "கல்வி கிருஷ்ணமூர்த்தி” அவர் களின் கருத்தைக் கவனிப்போம். "அந்த நாளி லிருந்து யாழ்ப்பாணத் துக்கும் எனக்கும் மனோ உலகில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. பிற்பாடு இந்த உறவு வளர்வதற்குரிய மூன்று ஏதுக்கள் ஏற்பட்டன. ஒன்று தேச சேவை, இரண்டாவது சமயப்பற்று, மூன்றா வது தமிழபிமானம், இந்த மூன்றுக்கும் பிரதிநிதிகளாக எனக்கு மூன்று நண்பர்கள் ஏற்பட்டார்கள். அவர்கள் ஸ்ரீ சிவகுரு நாதன், ஸ்ரீ அம்பிகைபான், ஸ்ரீ சிவபாத சுந்தரம் என்பவர்கள். ஸ்ரீ அம்பிகைபாகன் சென்னை பிரஸிடென்சி கலாசாலை யில் படித்துக் கொண்டிருந்தபோது அவரை ஒருநாள் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தில் சந்தித்தேன். பெண்ணைப் பெற்ற தகப்ப னார் யாராயிருந்தாலும் சரிதான் இந்தப் பிள்ளையாண்டானை அவர் பார்த்தா ரானால் உடனே ஒரே ஒரு எண்ணம் தான் தோன்றும். எந்தப் பாக்கியசாலிஇந்தப் பையனுக்கு மாமனாராகப் போகிறாரோ?" என்று தான் அவர் நினைப்பார். அப்படிப்பட்ட பிள்ளையைச் சந்நியாசிகள் மடத்தில் பார்த்ததும் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியம் ஏற்பட்டது. சமயப்பற்றும் சமூகத் தொண்டில் ஆர்வமும் அப்போதே இவரிடம் காணப் . பட்டன. தற்சமயம் ஸ்ரீ அம்பிகைபாகன் யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலானந்தர்
அருள் ஒளி
- 3:
க: 874yசன நூலகம் 4 ழ்ப்பாணம்.

20
அவர்களால் நடாத்தப்பட்டு வரும் ஸ்ரீ
வைத்தீஸ்வரா வித்தியால யத்தில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.
பெரியார் அம்பிகைபாகனுக்கு இசைந்த ஒரு நண்பராக அமைந்தவர் கலைப்புலவர் திரு. க.நவரத்தினம் அவர்கள். இவர்கள் இருவரும் கொழும் புத்துறை தவமுனிவர் அவர்களின் அருளாசி பெற்றவர்கள். பன் மொழிப் புலவர் டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தமிழ்நாட்டில் பல மேடைகளில் இவர்கள் இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார். யாழ்ப்பாணத் தில் நடைபெற்ற ஒவ்வொரு கலாசார நிகழ்ச்சி களிலும் இவர்கள் இருவரும் பங்கு கொண்டுள் ளார்கள். இவர்களை நண்பர்களாகப் பெற்ற தில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பன்மொழிப் புலவர் அவர்கள் குறிப் பிட்டுள்ளார். பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆண்டிலே இளை யவர் அறிவிலே முதியவர்' என்று பாராட்டி யுள்ளார். பெரியார் அம்பிகை பாகன் அவர்கள் மதுரையில் நடை பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் "ஈழநாடும் தமிழ்ச்சங்கங் களும்" என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். புள்ளி விவரங்களுடன் இவர் சமர்ப்பித்த கட்டுரையை அங்கு பாராட்டிப் பேசாதவர்கள் இல்லை என்றே கூறலாம். இப்பெரியாரை உலகறியச் செய்த பெருமை வணக்கத்துக்குரிய பிதா தனிநாயகம் அடிகள் போன்றவர்களுக்கு உண்டு அடிகளா ரோடு பல மேடைகளில் அம்பிகைபாகன் சொற்பொழிவாற்றியிருக்கின்றார். யாழ்ப் பாணத்தில் 1974ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு ஆலோசனை வழங்கியும், கட்டுரை சமர்ப்
5
5
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 38
பித்தும் பங்கு கொண்டவர் இவர். இதில் பேரா சிரயர் சு.வித்தியானந்தன் அவர்கள் மிகச் சிறப்பாகப் பாராட்டை வழங்கியுள் ளார். அதாவது அனைத்துலக நான்காவது தமிழாராச்சி மகாநாடு நடைபெற்றபோது தமிழ் எழுச்சியும் இன எழுச்சியும் ஏற்படக் காரணமாக அமைந்தவர் இவர். பேராசி ரியர் வித்தியானந்தன் அவர்களுக்கு துணைத் தலைவராக இருந்து மகாநாட்டை நடாத்தி முடித்தவர். இம்மகாநாடு யாழ்ப்பாணத்தி லேயே நடைபெற வேண்டும் என்று விடாப் பிடியாக நின்றவர் இவர். அரசின் தடையும், ஒருசிலரது எதிர்ப்பும், பத்திரிகைகளின் ஆதரவின்மையும் இருந்தபோதும் பேராசிரி யர் சு.வித்தியாந்தனுக்குத் துணையாக நின்று மகாநாட்டை நடாத்தி முடித்தவர் அம்பிகைபாகன் அவர்களே. அதேபோன்று மட்டக் களப்பில் பிராந்திய தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெற்ற பொழுது 19.03.1976 இல் விபுலாந்த அடிகளின் பல்துறைப் பணிகள் என்ற பொருள் பற்றிக் கட்டுரை சமர்ப்பித்தார். மேலும் விபுலானந்தர் என்ற நூலும் இப்பெரி யாரால் வெளியிடப்பட்டது. யாழ்ப் பாணத்தில் பல்கலைக்கழகம் உருவா வதற்குப் பெருமுயற்சி எடுத்தவர் இவரே. எந்தக் கருமத்திலும் நிதானத்தையும் நேர்மையையும் கடைப்பிடித்து கல்வி உலகுக்குப் பெருமைதேடித் தந்த பெரியார் அம்பிகைபாகன் அவர்கள் அமரராகிப் பதினாறு ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டது.
தி
அருள் ஒளி 2 அருள் ஒளி

இவருடைய இறுதி மூச்சு அடங்கிய பொழுது மல்லாகம் மணிமனையில் நான் இவருக்குப் பக்கத்தில் இருந்தேன். அந்த நேரம் அவருடைய இறுதிப் பிரயாணத்துக்கு ஆயத்தம் நடைபெற்ற நேரம் அன்பர் களும், அபிமானிகளும் வெளி விறாந்தையில் சோகம் தாங்கிய முகத்தோடு அமர்ந்தி ருந்தனர். இரவு 7.00 மணியிருக்கும் மெல்ல மெல்ல நொடி மூச்சு குறுகிவிட்டது. திரு முறை ஒன்றை அந்த நேரத்துக்குப் பொருத்தமாகப் பாடினேன். "பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி
எத்தினால் பக்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டாம் முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடுகின்ற அத்தாஉன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே. என்ற திருமுறையைப் பாடி கலங்கிய கண்களுடன் வெளியே வந்தேன். நூறு யார் தொலைவில் நடந்து வந்தபோது ஒருவர் ஓடி வந்து எல்லாம் முடிந்தது என்றார். நான் திரும்பிச் செல்லவில்லை. மறுநாள் சென்று அனைத்திலும் பங்கு கொண்டேன்.
அமரர் அம்பிகைபாகன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று கூறும்போது அதில் எனக்கும் பெருமை உண்டு. இத்தகைய பெருமை யான எம்மவரில் பலர் சான்றோர்கள் தொடர்பினால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறி அமைகின்றேன்.
36 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 39
திங்கள் சூடிய ப
சிவன் என்ற சொல்லுக்கு மங்கல வடிவினன் என்பது பொருள். தானும் மங்கல வடிவோடு விளங்கித் தன்னை வழிபடும் அடியார்களையும் மங்கலத் திற்கு உரியவர்களாகச் செய்பவன்.
சிவபிரானது நிலை இருவகைப் படும். குணம், குறி, செயல் முதலியன இல்லாத அவரது நிலை தடத்தம்; உயிர்களின் உய்வு கருதி அருவம், அருவுருவம், உருவம் என்ற நிலைகளில் தோன்றி
அருள்புரியும் நிலை சொரூபம்.
சிவபெருமான் பல்வேறு சமயங் களில் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளிய நிலைகளைப் புராணங்களில் காண்கிறோம். அவ்வுருவ நிலைகளைச் சிவமூர்த்தங்கள் என்பர். இறைவன் கொண்டருளிய வடிவங் களைப் போக வடிவம், யோக வடிவம், வேக் வடிவம் என மூன்று வகையாகக் கூறுவர்.
போக வடிவங்கள் உயிர்களுக்குப் போகத்தை அளித்தற்பொருட்டும், யோக வடிவங்கள் யோக நிலைகளை அருளுதற் பொருட்டும், வேக வடிவங்கள் உயிர்களின் வினைமாசுக்களை நீக்குதற் பொருட்டும் அப்பெருமான் கொண்டருளியனவாகும். அவ்வடிவங்களைத் தொகுத்து 64 என வகைப்படுத்தியும் அவற்றைச் சுருக்கி 25 எனத் தொகைப்படுத்தியும் கூறுவர்.
திருக்கோயில்களில் விளங்கும் அம் மூர்த்திகளை வழிபடும்போது அவ்வடி வத்தை மனத்திலே நிறுத்த தியான சுலோகமும் அவ்வடிவம் மேற்கொண்ட
அருள் ஒளி
- 3

மங்கல நாயகன்
திரு. N. ராமகிருஷ்ணா அவர்கள் காரணத்தை அறிய வரலாறும், தேவாரமும் பயன்படு கின்றன.
சிவபராக்கிரமம் என்ற நூலில் சிவ பிரானது அஷ்ட்டாஷ்டமூர்த்தி விளக்கங் கள் தரப்பெற்றுள்ளன.
மா
சிவலிங்கம் என்பது முக்கியமானது; சிவபெருமானை நாம் அறிந்து ணரும் அடையாளம் . இலிங்கம் என்பதற்குச் சித்திரித்தல் என்பது பொருள். உலகைச் சித்திரித்தல் என்ற பொருள் ஏற்புடையது. சிவ லிங்கம் மும்மூர்த்திகளின் சொரூப் மாக விளங்குவது. ஆவுடையாரின் அடிப் பாகம் பிரம்பாகும். மேற்பகுதி விஷ்ணு பாகம், குழவி - உருத்திர பாகம். இவை மூன்றையே இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்திகளாக விளங்குகின்றன எனவும் கூறுவர். சிவலிங்கம் சதாசிவமூர்த்தியாக விளங்குவதை அறியலாம். கருவறை யில் விளங்கும் மூலலிங்கம் அருவுருவ நிலை யிலேயே பிராகாரங்களில் தனி இடங்களில் இருப்பதைக் காணலாம்.
சிவலிங்கம் சுயம்புலிங்கம், கணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுட லிங்கம் என ஐந்து வகைப்படும். ஸ்ரீமகா லிங்காஷ்டகம் இதை விளக்குகின்றது.
ஸ்ரீசந்திரசேகரமூர்த்தி -
தக்கன்தன் 27 பெண்களைச் சந்திர னுக்கு மணமுடித்தான். சந்திரன், கார்த்திகை, ரோகிணி இருவரிடமேமிக்க அன்பு செலுத்தினான். இது கேட்டுத் தக்கன் தினமும் ஒரு கலையாகக் குறைந்து
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 40
அழியக்கடவன் எனச் சாபம் கொடுத்தான். சந்திரன் பயந்து சிவபெருமானைச் சரண டைணந்து தன்னைக் காப்பாற்றவேண்டி னான். சிவபெருமான் சந்திரனைத் தன் திருமுடி மீது தரித்து, அவனைக் காத்துத் தக்கன் சாபத்தால் இழந்துவரும் கலை களைத் தம் வரத்தால் வளர்ந்து வர அருளினார். சரண் அடைந்த சந்திரனை முடி மீது தரித்துக் காத்த காரணத்தால் சந்திரசேகரர் எனப் பெயர் பெற்றார்.
ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தி :
உமையம்மை இமவான் மகளாகப் பார்வதி என்ற பெயருடன் தோன்றி வளர்ந்தாள். வயது வந்தவுடன் சிவனைக் குறித்துக் கடுந்தவம் செய்தாள். பெருமான் கிழவேதியர் உருவம் கொண்டு, அம்மை யிடம் திருவிளையாடல் புரிந்து முடிவில் விடை மீது காட்சி தந்து, அவரை மணம் புரிந்து அருள்புரிந்தார். சிவபெருமான் பார்வதி தேவியை மணம் செய்து கொண்ட ருளிய திருக்கோலத்தில் கல்யாணசுந்தரர் என வழங்கப்பெற்றார்.
ஸ்ரீகாமதகனமூர்த்தி :
உமையம்மை சிவபெருமானைப் பிரிந்து இமவான் மகளாகப் பார்வதி என்ற யெரோடு தவம் செய்து வந்தாள். பெருமான் சனகாதி முனிவர்களுக் காகக் கணப்போது யோகியாக இருந்தார். உலகம் ஸ்தம்பித்து நின்றது. திருமால், பிரமன் தேவர்கள் எல்லாரும் சிவபெரு மான் யோக நிலை நீங்கிப் பார்வதி தேவியை மணம் புரிந்து கொள்ளுமாறு செய்ய மன்மதனை அழைத்து மலர்க்கணை களைப் பெருமான் மீது செலுத்தப் பணித் தனர். மன்மதன் முதலில் மறுத்தான். நான்முகன் முதலியோர் சபாத்தால் உயிர்
அருள் ஒளி

இழப்பதைக் காட்டிலும் பெருமான் மீது மலர் அம்பு தொடுத்து மாள்வது மேல் என முடிவு செய்து பஞ்சபாணங்களைத் தொடுத் தான். சிவனுடைய நெற்றிக் கண் திறந்தது. மன்மதன் நீறானான். இரதிதேவி புலம்பிப் பெருமானைத் துதித்தாள். பார்வதி தேவியை மணம் புரிந்து கொள்ளும் நாளில் உன் மணவாளன் உயிர்பெற்று எழுவான் என்று அருளினார். இறைவன் காமனை எரித்ததால் காமதகனமூர்த்தி எனப் பெயர் பெற்றார். இறைவனது எட்டு வீரச் செயல்களில் இது ஒன்று. இடம் குறுக்கைத்தலம், தஞ்சை மாவட்டம்.
ஸ்ரீஅர்த்தநாரீசுவரர் :
திருக்கயிலையில் திருமால், பிரமன் முதலிய தேவர்களும் பலரும் சிவபெரு மானையும் தேவியையும் தொழுது மகிழ்ந்தனர். பிருங்கி முனிவர் மட்டும் உமையம்மையாரை வணங்காது சிவபெரு மானை மட்டும் வணங்கி நின்றார். அம்பிகை தன்னை மதியாத முனிவர் உடலில் சக்தி அம்சமாக உள்ள உதிரம், மாமிசம் முதலிய வற்றை ஒடுக்கி அகற்றினாள். முனிவர் எலும்பும் தோலுமாய்த் தள்ளாடி நின்று பிரார்த்தித்தார். அதைக் கண்ட பெருமான் மனம் தாளாது மூன்றாவ தாக ஒரு காலை உதவினார். மூன்று கால்களோடு இறை வன் முன் நின்று ஆடிப்பாடிக் களித்தார். அம்பிகை வருத்தமுற்று தவம் புரிந்து, இறைவன் அருளால் திருமேனியில் இடது பாகத்தைப் பெற்றார். உமையம்மை இடப் பாகமாகவும், பெருமான் வலப்பாகமாக வும் விளங்கும் திருக்கோலமே இது.
சண்டேச அனுக்கிரகமூர்த்தி :
சண்டேசர் வரலாறு நாம் அறிந்ததே. சிவபெருமானை வழிபடுவதே செய்யத்
38 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 41
தக்கது என்பதை உணர்ந்தவர். பசுக் களை அன்போடு பேணி மேயவிட்டு அவர் அவர் இல்லங்களில் சேர்ப்பித்து வந்தார். பசுக்களும் மிக்க பாலைத் தந்து வந்தன. இவர் சிவபூஜை செய்ய விரும்பி ஆற்றங் கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பசுக்களின் மடியில் சொரியும் பாலை அபிஷேகம் செய்து வந்தார். இதைப் பார்த்த ஒருவன் அவர் பாலை வீணாக்கு கிறார் என்ற வதந்தியைப் பரப்ப அவ ருடைய தந்தையார் அதை நேரில் காண ஆற்றின் கரையை அடைந் தார். மணலால் லிங்கம் அமைத்துப் பால் அபிஷேகம் செய்வதைக் கண்டு கோபித்துப் பாற் குடங்களைக் காலால் இடறினார். விசார சருமர் அபராதம் செய்தவர் தன் தந்தை ன்று அறிந்தும், அவர் காலைத் தடித்தற் பொருட்டு, அருகிலிருந்த ஒரு கோலை எடுத்தார். அது மழுவாக மாறிற்று. அதனால் தந்தையின் காலைத் தடித்தார். சிவ பெருமான் விடை மீது காட்சியளித்து, சிவ கணங்களுக்கெல்லாம் தலைவ ராகும் சண்டேசுவரப் பதத்தையரு
ளினான்.
அருள் ஒளி விளக்கேற்றினார்
- 31

ஸ்ரீசுகாசனர் :
கயிலை மலையின் உச்சியில் கோடிக் கதிரவர்கள் தோன்றினாற் போன்று ஒளி வீசும் நவரத்தின் மண்டபத்தில் அன்பர் களுக்கு அருள் செய்யும் குறிப்போடு உமை யம்மையாருடன் இரத்தின் சிங்காசனத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக் கோலம் இது. அருகில் திருமால், பிரமன் முதலிய தேவர்களும், இந்திரன் முதலிய திக்குப் பாலகர்களும், அஷ்டவசுக்களும், தேவர்கள், முனிவர்கள் கருடகாந்தர்வ சித்தர்களும் துதித்து வணங்குகின்றனர். தும்புரு, நாரதர் இன்னிசை பாடுகின்றனர். வேதங்கள் தோத்திரம் செய்கின்றன. அரம்பை யர் ஆடுகின்றனர். இறைவன் எல்லோருக்கும் வேண்டும் வரங்கள் அளிக்கின்றார். அம்பிகை வேதசிவாகமங்களின் உண்மையை உணர்த்தி அருளுமாறு வேண்ட இறைவன் சுகாசனராக எழுந்தருளி அன்னைக்கு அவற்றின் உண் மைப் பொருளை உபதேசித்தருளுகிறார்.
இப்படி இருபத்தைந்து சிவமூர்த்தங்கள் உள்ளன. தீபாவளித் திருநாளில் மங்கல வடிவினனை வணங்கி நலம் பெறுவோம்.
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 42
செவ்வா
- கலா
ஆடி மாதம், தெட்சணாயன காலம் தொடங்கும் மாதம். சூரியன் தென் திசை நோக்கிச் செல்லும் காலம் தெட்சணாயனம் எனப்படுகிறது. ஆடி மாதத்தில் வருகின்ற செவ்வாய்க் கிழமைகளில் அம்பாள், முருகன் ஆகிய தெய்வங்களை நோக்கி மனம், மொழி, மெய்த் தூய்மையுடன், பக்தி பூர்வமாக விரதம் அனுட்டிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு சைவ மக்களிடையே இருந்து வருகிறது. ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் தொடங்கித் தொடர்ந்து மாதந்தோறும் வருகின்ற செவ்வாய்க் கிழமைகளிலும் விரதம் அனுட்டிப்பதால் இகபர சுகம் கிட்டும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக, திருமணம் ஆகாத வர்கள் நல்ல திருமணம் வேண்டியும்; திருமண மானவர்கள் மாங்கல்ய பலம், குடும்ப நலம், நோயற்ற வாழ்வு, புத்திர பாக்கியம், தொழில் விருத்தி என்பன வற்றை வேண்டியும்; செவ்வாய்க் குற்றமுடையவர்கள், தோஷ நீக்கம் வேண்டியும் செவ்வாய்க்கிழமை விரதத்தை மேற்கொள்கின்றனர்.
செவ்வாய் ஒரு கிழமையின் பெயர். செவ்வாய் என்பது நவக்கிரகங்களுள் ஒன்றாகவும் உள்ளது. அது சிவப்பு நிறக் கதிர்களை வீசுகிறது. செவ் வேள் என அழைக்கப்படும் முருகனும் சிவந்த நிறத்தை யுடையவன் செம் மேனி எம்மான் சிவனின் திருக் குமாரன், முருகன். முருகனை வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விசேட மாக வழிபாடு செய்யும் வழக்கம் சைவர் களிடையே காணப்படுகிறது. அருள் ஒளி

ய் விரதம்
நிதி குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள்
அம்பாள் கொவ்வைச் செவ்வாயை உடையவள். சிவந்த வாய், செம்மை நிறம் பொருந்திய திருவாய், செம்மை யான வாய் எனும் பொருள்கள் செவ் வாய் என்னும் சொல்லில் தொக்கி நிற்கின்றன. கொவ்வைச் செவ்வாய் என்றால் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாய் என விரியும். செவ் வாய்க்கிழமைகளில் விரதமிருந்து அம்பாளை வழிபட்டு வந்தால், எண்ணிய கருமமம் கைகூடும்.
விரதமாவது யாது என்பதை ஆறுமுக நாவலர் பின்வருமாறு விளக்குகிறார். "விரதமாவது மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும், சுருக்கியேனம் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய் யன்போடு விதிப்படி வழிபடல்" . விரத மனுட்டித்தல் ஒரு சிறப்பு வழிபாடு ஆகவும், சைவ சமயப் பயிற்சியாகவும் கொள்ளப்படு கிறது. மன வடக்கம், புலனடக்கம் என்ப வற்றை மேம்படுத்துதல் விரதமனுட்டித்தலின் பிரதான நோக்கமாகக் கொள்ளப்பட வேண்டும் என்பது நாவலரின் கருத்தாகும்.
“பசித்திரு, தனித்திரு, விழித்திரு' என்பன விரதமனுட்டித்தலின் பிரதான அம்சங்கள் ஆகும். பசியைப் பொறுத்தி ருத்தல் தவமாகும். பசி என்பது பிணி. உற்ற நோய் நோன்றல் விரதலட்சணம். மற்ற இலட்சணம் எந்த உயிர்க்கும் உறுகண், தீங்கு செய்யாமை என்பவர் வள்ளுவப் பெருந் தகை. பசியினால் ஏற்படும் கோபம், பொறு மையிழத்தல், கடுஞ் சொல் பேசுதல், வஞ்சம்
40 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 43
என்பவற்றை வெளிப்படுத்தாமலும், உணர்ச் சிக் கொந்தளிப்புகளுக்கு இடங்கொடுக்கா மலும் பசித்திரு' என்பதன் கருத்தை அறிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.
விரதத்தின் மற்றொரு பிரதான அம்ச மான "தனித்திருத்தல்" என்பது எமக்கு வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களி னதும், மனத்தினதும் சேர்க்கையிலிருந்து விலகித் தனித்திருந்து இறைவனைத் தியானித்தல் ஆகும். தியானம், மனத்தை ஒரு நிலைப்படுத்தி இறைவன் பால் செலுத்த உதவும் சாதனமாகும். உபவாசம் என விரதத்தை அழைக்கும் வழக்கமும் நம்மிடையே உள்ளது. "உப்' என்பது உடன் என்னும் பொருள் கொண்டும் "வாசம்" என்பது உறைதல் என்னும் பொருளிலும் வருகின்றன. எனவே, உபவாசம் என்பதன் பொருள் உடனுறைதல் ஆகும். இறைவ னுடன் உறைதல் விரதமாகும். இறைவனு டன் சேர்ந்து உறையும் போது இறை பண்புகள், தெய்வீகக் குணங்கள் என்பன எம்முடன் இணைந்துவிடுகின்றன. உண வின்றி இருந்து விட்டால் மாத்திரம் அது உபவாசமாகி விடாது. இறைவனோடு உடனுறையும் போது தான் அது உபவாசம் எனப்படுகிறது..
விழித்திருத்தல் என்பது நித்திரையை ஒழித்துக் கண்விழித்து இருத்தல் மாத்திர மன்று; இறைவனைத் தியானிப்பதில் ; மனத்தை அடங்கச் செய்வதில், ஐந்து புலன்களையும் தன்னிச்சையாக அலைய விடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருத்த லில்; நல்லனவற்றைப் புரிவதில்; தீயன வற்றை விலக்குவதில் விழிப்பாயிருத்தல், கண்ணுங் கருத்துமாயிருத்தல் என்ப
வற்றையும் உள்ள டக்கும்.
அருள் ஒளி
si 329 நூலக
யாழ்ப்பாணம்,

செவ்வாய் என்பதைச் செம்மை + வாய் என்ப பிரித்துப் பொருள் கொள்ள லாம். செம்மையான, சீரான, செவ்வையான வாய் தூய்மையுடையதாய் இருக்கும். பல்லைத்தீட்டி, நாக்கை வழித்து, வாயில் நீர்விட்டு நன்றாகப் பலமுறை அலம்பிக் கொப்பளித்தல் மூலம் வாயைச் சுத்தமாக
வைத்திருத்தல் ஒரு முறையாகும்.
இதைவிட, வேறு ஒரு விதத்திலும் வாயைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் அறிந்திருத்தல் வேண்டும். செவ்வாய் விரதம், வாய்ச் செம்மையை, வாய்மையை, வாக்குத் தூய்மையை நினைவுபடுத்து கிறது. வாய்த் தூய்மை என்பது நாக்கின் தூய்மையையும் உள்ளடக்குகிறது. நாக்கின் தொழிற்பாடுகளில் ஒன்று பேசுதல் ஆகும். "ஆக்கமும் கேடும் அதனால் வருத லால், காத்தோம்பல் சொல்லின் கண் சோர்வு” என்கிறார் வள்ளுவர். சொல்லால் செய்யப் படும் குற்றம் பாரதூரமானது என்பதால் "நா காக்க" என்றும் பரிந்துரைக்கிறார்.
"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
என்பது திருக்குறள். காக்கவேண்டிய வற்றுள் எவற்றைக் காக்கத் தவறினாலும், நாவினைக் காக்கவேண்டும். காக்கத் தவறி னால் சொற்குற்றத்திற்கு ஆளாகி, தீய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். தீயினால் சுட்ட புண் ஆறிவிடலாம். ஆனால், நாவினால் தீய சொல் கூறி, கடும் வார்த்தை கள் பேசி, அதனால் ஒருவரின் மனதில் ஏற்படுத்தப்பட்ட புண் என்றுமே ஆறாது.
நல்ல சொற்களால் ஒருவரை வாழ்த்தி னால், அந்த வாழ்த்து வாழ்த் துக்குரிய
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 44
வரையும், வாழ்த்தியவரையும் வாழ் விக்கும் எமக்கு இறைவனால் வழங்கப்பட்ட வாய், இறைவனையும் மற்றெல்லா உயிர் களையும் வாழ்த்து வதற்கும் வாய்மை பேசுவதற்கும் இன்சொல் பகர்வதற்குமே பயன்படுத்தப்பட வேண்டும். "வாயே வாழ்த்து கண்டாய்" என்கிறார் அப்பரடிகள். "வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்த சென்னியும் எமக்கு இறைவன் அருளியுள்ளான். எனவே, இறைவனின் நோக்கினை அறிந்து செயற்பட்டால், ஒரு பொல்லாப்பும் இல்லை.
(44ம் பக்கத் தொடர்ச்சி...) ஆசிரிய சிரோன்மணி ச.விநாயக ரத்தினம் அவர்களின் பவள விழா
கீரிமலை சிவநெறிக் கழகத்தின் ஸ்தாப் கரும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் புகழ்பூத்த ஆசிரியரும், சைவ சமய பாட ஆசிரிய ஆலோசகரும், தெல்லிப்பழைஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக சபை உறுப்பினருமாகிய ஆசிரிய சிரோன்மணி ச .விநாயக ரத்தினம் அவர்களின் பவள் விழா தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மண்ட பத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் (சிரேஷ்ட விரிவுரையாளர் - சப்பிரகமுவ பல்கலைக் கழகம்) அவர்களின் தலைமையில் மேற்படி வைபவம் நடைபெற்றது. அன்னாரிடம் கற்ற மாணவர்களும் சமய ஆர்வலர்களும் பெருந்தொகையாகப் பங்குபற்றினர்.
திருக்கேதீஸ்வரம் திருப்பணிச் சபையின் புதிய தலைவராக திருமிகு
மா. தவயோகராசா
பாடல்பெற்ற மன்னார் மாதோட்டம் திருக்கேதீஸ்வரத்தின் திருப்பணிச் சபைத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர் சைவப்பெரியார் வழக்கறிஞர் உயர்திரு. இ.நமசிவாயம் அவர்கள். அன்னார் சிவபதம் அடைந்த பின் சென்ற மாதம் மேற்படி சபை யின் பொதுக் கூட்டத்தில் உயர்திரு. மா.தவ
அருள் ஒளி

செவ்வாய் விரதமனுட்டிப்பவர்கள் வாய்ச் செம்மை பேணி, தமது வாய் மூலம் வெளிப்படுத்தப்படும் எண்ணங் கள், கருத்துக்கள், உணர்வுகள் யாவும் தூய்மை யானவையாயும், பிறரை வாழ்விப்பன வாயும் அமைய வேண்டி இறைவனைப் பிரார்த்தித்தல், ஒழுகுதல், இன்றியமை யாததாகும்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
- திருக்குறள்
யோகராசா அவர்கள் ஏகமனதாக நிய மிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரான திரு. தவயோகராசா அவர்கள் திருக் கேதீஸ்வரத் திருப் பணிச் சபையில் உப் தலைவராகவும், அகில இலங்கை இந்துமா மன்றத்தின் பிரதித் தலைவராகவும் பல்வேறு சமய சமூக நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்குகொண்டு வருவது குறிப்பிடத் தக்கது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஞான வயிரவர் கோவில் திருப்பணி
யாழ் இந்துக்கல்லூரி வளாகத்திலுள்ள ஞான வயிரவர் கோவில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு திருப்பணி கள் புதிதாக நிறைவேற்றப்படவுள்ளது.
மழை வேண்டிப் பிரார்த்தனை
யாழ்குடாநாட்டில் பல்வேறு இடங்களிலும் பெருவரட்டி நிலவுகிறது. மழையின்மையால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலமிருகங்கள் தண்ணீரின்றித் தவிக்கிறது. சில ஊர்களில் கிணறுகள் வற்றிச் செல்வதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைவேண்டிப் பல கோவில்களில் விசேட பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. ஈழத்து திருமுறை மன்றம் விசேட திருமுறை முற்றோதல் நிகழ்ச்சிகளை மழைவேண்டி ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
42 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 45
சிறுவர் விருந்து
தினை விளை
- ~~
அன்பான பிள்ளைகளே! அன்பு வாழ்த்து!
இறைவன் மிக இனிய எளிய வடிவத்தில் க வந்து உதவுபவன் என்ப தற்கு உதாரணமாக ய ஒரு சிறு கதை - நடந்த கதை - சொல் வ கிறேன் கேளுங்கள்.
5 உ ஊ 2) உ உ
மிக ஏழையான ஒரு விவசாயி வ இருந்தான். ஒரு சிறு துண்டு நிலம் அவ . னுக்கு இருந்தது. நீர் வசதி குறைவு. என்றா ம லும் தினைப்பயிர் செய்து, அதில் ஒரு ே பகுதியைக் கோயிலுக்குக் கொடுத்து, எ மிகுதியைப் பயன்படுத்திச் செம்மையாக வாழ்ந்து வந்தான். அவன் பெயர் பெரியான். குணத்திலும், பண்பிலும் அவன் பெரியவ னாகவே வாழ்ந்தான்.
5 5
க
ஒரு முறை அவன் தன் நிலத்தை உழுது 6 கொண்டிருந்தான். விதைப்ப தற்குத் திணை
வைத்திருந்தான். அது செலவாகிவிட்டது. சு இம்முறை விதைப்பதற்குத் தினை வேண்டும். எப்படியும் தான் வணங்கும் சிவக்கொழுந்தீசர் என்ற குலதெய்வம் எ
கைகொடுக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் | உழுது கொண்டிருந்தான். நடு வெய்யில் நேரம். மிகுந்த பசியுடன் ஒரு ஏழைப் பண்டாரம் பெரியாரிடம் வந்தார்.
உ
50 (
ெ
“பெரியான்! நல்ல பசியப்பா. ஏதாவது சாப்பிடத்தா!” என்று கெஞ்சிக் கேட்டார். ரு பெரியான் வயலுக்குக் கொண்டுவந்த பழங்கஞ்சியைச் சற்று முன் தான் குடித்து
முடித்திருந்தான். "இப்போ இந்த எ அடியவருக்கு எதைக் கொடுப்பது?"
CD
அருள் ஒளி :
- 43 .

த்த ஈசன்
- சகோதரி யதீஸ்வரி அவர்கள் "சுவாமி! இந்த மரநிழலில் கொஞ்சம் ளைப்பாறி இருங்கள். இதோ! ஒரு நொடி பில் வீட்டுக்குப் போய்ச் சோறு கொண்டு பருவேன்!” என்று அன்போடு வேண்டிக் காண்டு, கலப்பையை விட்டு விட்டு வீட்டிற்கு டினான். வீட்டில் மனைவி சுடச்சுடச் சோறு படித்து வைத்துவிட்டுக் கீரைக்கறி மசித்துக் காண்டிருந்தாள். பெரியான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழை இலையை எடுத்துச் சாறு படைத்துக் கீழைக்கறியும் வைத்துக் =காண்டு ஓடோடி வந்தான். தன் வயலுக்கு பந்த அவனது கண்களும் மனமும் மிகப்பெரிய அற்புத அனுபவத்தால் வியந்து திகைத்தன.
ஏனென்றால் அவனது வயலில் மிக றைவாகத் தினைப்பயிர் செழித்து, கதிர்கள் பாற்செண்டுகள் போல முற்றி நின்றன. பந்திருந்த முதிய அடியவரை உரத்த குரலில் கூவிக் கூவிக் கூப்பிட்டான் பெரியான். அவரைக் காணவில்லை! "இது என்ன அதிசயம்!” “கடவுளே! சிவக்கொழுந்து ஈசா!
ன உள்ளம் விம்பிக் கூவியவன் எதிரே இறைவன் கருணைமயமாகக் காட்சி கொடுத்துக் கொண்டு நின்றார்.
இந்த அதிசயம் நடந்த அந்த ஊர் "திருத் ைென நகர்" என்று பேர் பெற்றது. சுந்தர முர்த்தி நாயனார் இந்த தலத்திற்குப் போயி நக்கிறார். தேவாரமும் பாடியிருக்கிறார். வீர சேனன் என்றொரு அரசன்நடு நாட்டை ஆண்ட வன். வெண்குஷ்ட நோய் பிடித்து வருந்தி மான். அவனது நோய் தீர்ந்த தலம் இது. அந்த அரசன் கட்டிய கோயிலே இங்கு உள்ளது.
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 46
அருள் ஒளி தாக
வேலணை வரலாற்று நூல் வெளியீடு
பிரசித்தி பெற்ற வேலணைக் கிராமம் தொடர்பாக 556 பக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய வரலாற்று நூல் 15.09.2012 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளையின் தலைமையில் வெளியிடப்பட்டது. வேலணை உயர்திரு. மாணிக்கவாசகர் (ஆசிரியர்) அவர்களின் கடின உழைப்பால்வெளிவந்த இந்நூலில்வேலணை யிலுள் சகல திருக்கோவிலின் வரலாறுகள், சைவப் பெரியார்களின் வரலாறுகள், பாட சாலைகளின் வரலாறுகள், கல்விமான்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் உட்படப் பல விடயங்கள் இந்நூலில் இடம்பெற் றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் கோவிலில் சரவணைப்பொய்கை தீர்த்தத் தடாகம் அமைப்பு
பல லட்சம் ரூபா செலவில் எண்கோண வடிவில் புதிய தீர்த்தக்கேணி அமைக்கப்பட்டு, அதற்கு சரவணப் பொய்கை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தீர்த்த மண்ட பத்தின் பிரகாரங்களில் ஆறுபடை வீடு அமைக்கப்பட்டு படை வீட்டுக் குரிய முருகப் பெருமானின் சிற்பங் கள் செதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய நிலையில் பழனியாண்டவர் கோவில் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. இந்திய சிற்பிகளின்கைவண்ணத்தில் திரு சபா.முருக பரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இப்பணி நடை பெற்றுள்ளது. நல்லை ஆதீன முதல்வர் 30.08.2012 அன்று இத்தீர்த்தத் தடாகத்தைத் திறந்து வைத்தார்.
சைவப் பெரியார் அளவெட்டி அமரர் மயில்வாகனம் அவர்களின் உருவச் சிலை திறப்பு
அளவெட்டியைச் சேர்ந்த சமய சமூகத் தொண்டரும் அளவெட்டி கும்பழாவளைப்
அருள் ஒளி

வல் களஞ்சியம்
பிள்ளையார் கோவில் அறங்காவலர் சபைத் தலைவராகவும், அளவெட்டி மகாஜனசபைத் தலைவ ராகவும், பாடசாலைகள் பலவற்றின் முகாமையாளராகவும், இராமநாதன் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராகவும் விளங்கிய இப் பெருமகனாருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அளவெட்டி மகாஜனசபை வளா கத்தில் கடந்த மாதம் உருவச்சிலை நிறுவப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திரு நா.வேதநாயகம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மகாஜன சபையின் தலைவர் திரு சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால் இப் பணி நிறை வேறியது. ஆசிரியர் மயில்வாகனம் அவர் களின் ஏக புதல்வனே அமரர் ஸ்ரீகாந்தா (முன்னாள் வடமாகாண அரச அதிபர்) என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்துச் சித்தர் வரலாறு மீள் பதிப்பு வெளிவந்தது
ஏழாலை ஆத்மஜோதி முத்தையா அவர்களின் ஞாபகார்த்த சபை அன்னாரால் பதிப்பிக்கப்பட்ட நூல்களை மறுமதிப்புச் செய்து வருகிறது. சமீபத்தில் ஈழத்துச் சித்தர்களின் வரலாறு வெளியிடப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலண்டனில் சைவமகாநாடு
இலண்டன் திருக்கோவில்களின் ஒன்றி யத்தின் ஏற்பாட்டில் ஆச்வே முருகன் ஆலய மண்டபத்தில் எதிர்வரும் 04.10.2012, 05.10.2012 நாள்களில் இம்மகாநாடு நடை பெறவுள்ளது. சைவசமயத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து பல்வேறு செயற்திட்டங் களை உலகளாவிய ரீதியில் செயற்படுத்த இம்மகாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
(42ம் பக்கம் பார்க்க)
44 -
நவராத்திரி விழாச் சிறப்பு மலர் - 2012

Page 47
KE & e പ
1
:18,

၁၁
SA

Page 48
பயம்
வா
“எல்லாம் எப்பவே
ஒரு பொல்லா
முழுவதும்
ANDRA DIGITAL PRINTERSPORI 222 1820

பா முடிந்த காரியம் ரப்பும் இல்லை - உண்மை”