கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2013.10

Page 1
அருள்
ஐப்பசி மாத
89 ஐப்பசி மாதம் கந்தசஷ்டி 8
வெளி ஸ்ரீ துர்க்காதே
தெல்லிப்படை
20

& ஒளி
-==-13
சிறப்பு மலர்
யீெடு : பி தேவஸ்தானம் ஓ, இலங்கை 013

Page 2
ஒப்புரவாளர், அதிப
அமரர் தெ.து. (முன்னாள் நிர்வாக சபைத் தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழா எம்,
7 பஸ்த

ர், ஏழை பங்காளன்
ஜயரத்தினம் , ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் ) து தேவஸ்தானத்தில் நடைபெற்றது.
செல்லும்

Page 3
ட்
(மா
கலாநிதி
சைவத்
வெளியீடு: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை , இலங்கை. e-mail : thurkaiammantemple@gmail.com Facebook: tellidurga@gmail.com
வலிவடக்கு வாழ்விடங் பாடுபட்டுத்தேடி, பலநாள்கள் வீடுகளை வீழ்த்துதல் தர்மத்துக் இருப்பிடங்களை மனிதர்களே அருவருக்கத்தக்க செயல். பிறருக் மாறாக அபகரிப்பவர் வாழ்ந்த சரித், மாறாக அதிகாரத்தால் செய்யும் ஆபத்தாகிவிடும். அரசியல் பிழை சிலப்பதிகாரச் செய்தி எல்லாச் ச கண்ணீர் வடிக்க பிழைத்தவர் எவரு
வலிவடக்கில் எத்தனையோ பூசையின்றி கடந்த முப்பது ஆண்டு எடுத்துரைத்தும் பயனில்லை. கடந்த மயிலிட்டி, தையிட்டி, கட்டுவன், கு வயாவிளான் போன்ற பழம் பெரும் இடம்பெயர்ந்து தற்காலிக இருப்பிட் உலகறிந்த செய்தியாகும் என்றோலெ எம் பாரம்பரிய வளவில் வாழ்வோம் என செய்தி கிடைத்துத் துடிக்கிறார்கள்.

PUBLIC INARY
JAMB
எருள் ஒளி
தாந்த சஞ்சிகை)
ஆசிரியர் ஆறு.திருமுருகன் அவர்கள்
உதவி ஆசிரியர் திரு. கா. சிவபாலன் அவர்கள்
ஐப்பசி மாத மலர் 5, 2013
பதிவு இல.: OD/74/NEWS/2006Y
களை வாழவிடுங்கள் -உண்ணாமல் உறங்காமல் கட்டிய கு மாறான செயல். மனிதர்களின் - அழித்தொழிப்பது என்பது க்குரிய உடைமையை அறவழிக்கு திரம் இல்லை. இன்று தர்மத்துக்கு ம் தீமை அவர்தம் சந்ததிக்கே மத்தோர்க்கு அறம் கூற்று என்ற சமூகத்துக்கும் பொருந்தும். பிறர் தமிலர். இதை யார் உணர்வர்?
- கோவில்கள் மணி ஓசையின்றி, கள் அநாதரவாக இருப்பதை பலர் 20 ஆண்டுகளாக காங்கேசன்துறை, ரும்பசிட்டி, மாவிட்டபுரம், பலாலி, ங் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் ங்களிலும் முகாம்களிலும் வசிப்பது பாருநாள் எம் வீட்டுக்குப் போவோம், அக் காத்திருந்த மக்களுக்கு அபாயச் வீடு வளவு யாவும் உயர் பாதுகாப்பு

Page 4
வலயத்தில் நிரந்தர இராணுவ பாது. செயலும், அவசரம் அவசரமாக ச இயந்திரங்களால் உடைக்கப்படும் 6 வைத்துள்ளது. பரம்பரையாக வாழ சனசமூக நிலையம், உணவு தந்த தே தினமும் அகத்தால் அழுதுகொண்டி புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையா அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வே அப்பால் இப்பிரச்சினையைத் தீர்ப்ப வேண்டும். கோவில்களை அழிப்பது பாரிய பழியைத் தந்துவிடும் என்பதை சொல்வதற்கு மதத்தலைவர்களும் ஒ கட்டாய கடனாகும்
முறை செய்து காப்பாற்றும் மன்னன் இறையென்று வைக்கப்படும்.
நீதி நெறியுடன் அரசு நட ஆட்சியாளன்தான் மக்களுக்குத் த எனத் திருவள்ளுவர் எடுத்துரைத்து
எச்சமயத்தவர்களும் தீடை புண்ணியம் பற்றிய போதனையை ச
புண்ணியம் ஆம் பாவம் போம் போல மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பெ
ஈ தொழிய வேறில்லை எச்சமயத்த தீ தொழிய நன்மை செயல்.
அருள் ஒளி

காப்பு வலயமாக பிரகடனப்படுத்தும் வுப்பகுதிகளிலுள்ள வீடுகள் பாரிய செய்தியும் கண்ணில் உதிரம் வடிய ஓந்த ஊர், வீடு, கோவில், கேணி, தாட்டம், தாகம் தீர்த்த கிணறு என்று நக்கும்மக்களுக்கு இச்செய்திவெந்த கிவிட்டது. இத்துன்பத்தைப் போக்க பண்டும் அரசியல் வேறுபாடுகளுக்கு தற்கு அனைவரும் முயற்சி செய்ய ம், குடியிருந்த வீடுகளை இடிப்பதும் உரியவர்களுக்கு ஆன்மீக வழியில் ன்றுபட்டு எடுத்துரைத்தல் காலத்தின்
நன் மக்கட்கு
த்தி மக்களைக் காப்பாற்றும் லைவன் எனப் போற்றப்படுவான் ள்ளமை குறிப்பிடத்தக்கது.
மயை வெறுப்பார்கள். பாவம் மயத்தின் பெயரால் உணர்வார்கள்.
அநாள் செய்த அவை ாருள் - எண்ணுங்கால் நார் சொல்லும்
- நல்வழி
ஆசிரியர்
ஐப்பசி மாத மலர் - 2013

Page 5
கார்த்திகைத்
சப்தரிஷிகளில் மிகச் சிறந்தவராகத் திகழ விரும்பிய நாரதமுனிவர், விநா யகப் பெருமானிடம் சென்று அதற்குரிய வழியைக் கூறும்படி விண்ணப்பித்தார். விநாயகப் பெருமான் கார்த்திகை விரதம் அனுட்டித்து முருகக் கடவுளை வழிபட்டு வந்தால் நாரதரின் விருப்பம் நிறை வேறும் என்றார். நாரதமுனிவர் அந்த ஆலோசனையைக் கேட்டு கார்த்திகை விரதமிருந்து முருகவேளை வழிபட்டு, வேண்டும் வரத்தைப் பெற்றார்.
மாதந்தோறும் கார்த்திகை விரத நாள் வருகிறது. கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நாளைத் திருக்கார்த்திகை என்பர். முதல் நாள், ரோகிணி நட்சத் திரத்தன்று பகல் மட்டும் ஒரு பொழுது உணவு உண்டு, கார்த்திகையன்று அதி காலையில் நீராடி, தூயவராய், தூய சிந்தனையோடு இறைவழிபாடுகள் செய்து, இறைவன் புராணம் படித்துவிட்டு, நீர் மாத்திரம் அருந்தி, அன்றிரவு முழுவதும் தியானம் புரிந்து கொண்டிருந்து, மறுநாள் காலை வழிபாடுகளை முடித்துவிட்டு இறைவன் அடியார்களுடன் சேர்ந்து பஜனை செய்தல் மூலம் கார்த்திகை விரதம் நிறைவேற்றப்படுகிறது. இப்படிப் பன்னிரண்டு ஆண்டுகள் விரதமிருந்து முருகனைப் பிரார்த்தனை செய்வதால் வேண்டும் வரங்களைப் பெறலாம். திருக்கார்த்திகைத் தினத்தன்று முருகன் ஆலயங்களில் தீபத் திருவிழா இடம் பெறுகின்றது. குமாராலய தீபம் என்று இதனை அழைப்பர்.
அருள் ஒளி

தீபத்திருநாள்
திருக்கார்த்திகைத் தினத்தன்று ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி வடிவமாகப் பிரமா, விஷ்ணு ஆகிய இரு வருக்கும் சிவபெருமான் காட்சி கொடுத்த ருளினார். பிரம்மா, படைத்தல் தொழில் செய்பவர். மண்ணையும் விண்ணையும்; மனிதர்களையும் தேவர்களையும் மற்றும் விலங்குகள், தாவரங்களையும் படைத்தவர் தாம் என்ற முறையில், தானே மேலான பரம்பொருள் என்று கூறிப் பிரம்மா செருக்குற்றார். சகலவற்றையும் காத்து வருவதால், காத்தல் புரிபவராகிய விஷ்ணு, தான்தான் பரம்பொருள் என்று அகந்தை கொண்டார். மேலும் பிரம்மாவை நோக்கி, "உன்னைப் பெற்ற தாயும் தந்தையும் நானே; என் உந்திக் கமலத்திலிருந்து உதித்தவன் நீ. உன் குருவும் நானே, கடவுளும் நானே. அப்படியிருக்க நீ எப்படி என்னிலும் பெரியவன் என்று சொல்லமுடியும்" என்று விஷ்ணு வெகுண்டெழுந்தார். பிரம்மா, விஷ்ணு இருவருக்குமிடையில், யார் பெரியவன் என்று எழுந்த வாக்குவாதம், பின்னர் போருக்கு இட்டுச் சென்றது. போர், பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன. அதனால் உலகத்தவர்களும், விண்ணவர் களும், பெரிதும் துன்புற்றனர். போர் ஒழிந்த பாடில்லை. ஈற்றில் சிவப் பரம்பொருள் ஒரு பெரும் ஜோதிப் பிழம்பாக அவர்கள் முன் தோன்றியது. "உங்கள் போரை நிறுத்துங்கள். இச் சோதியின் அடி முடியைத் தேடுங்கள்" என்றொரு பேரொலி வானில் கேட்டது. போரை நிறுத்தினார்கள். அடியையோ, முடியையோ யார் முதலில் காண்கிறாரோ, அவரே பெரியர் என்று முடிவு செய்தனர்.
3 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 6
பிரம்மா, முடிகாண, அன்னமாகி விண்ணில் மேலே பறந்து சென்றார். விஷ்ணு பன்றி வடிவங்கொண்டு, அடி காண வேண்டி, கொம்பால் நிலத்தைக் கிண்டிக் கொண்டு கீழே சென்றார். திருமால் ஆயிரம் ஆண்டுகள் அடியைத் தேடினார். காணமுடியவில்லை. பிரம்மாவும் முடியைத் தேடிக் காணமுடிய வில்லை. இருவரும் களைத்துச் சோர்ந்து மீண்டார்கள். தம் இருவருக்கும் மேலே ஒருவன் இருக்கிறான். அவனே சிவன் ; முழுமுதற் கடவுள்; எல்லோரிலும் பெரியன் என்று பிரம்மாவும் விட்டுணுவும் ஏற்றுக் கொண்டு சிவனைப் போற்றித் துதித்தனர். தாம் கண்ட, காண்டற்கரிய இச்சோதிக் காட்சியை, எல்லோரும் கண்டுகளிக்கும்படி காட்டி அருளவேண்டுமென்று சிவபெரு மானுக்கு விண்ணப்பிக்க, “கார்த்திகை மாதத் துக் கார்த்திகை நட்சத்திரதன்று காட்டுவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு வண்ணாமலையில் திருப்பெருஞ்சோதியை அத்தினத்தில் தரிசிக்கலாம்.
நாமும் இல்லங்களில், கார்த்திகைப் பௌர்ணமியில் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்கின்றோம். இதைக் கார்த்திகை விளக்கீடு என்றும் சர்வாலய தீபம் என்றும் அழைக்கின்றோம். "இல்லக விளக்கது இருள் கெடுப்பது" என்பது தேவாரம் தீபம் இருளை நீக்கிப் பொருளை விளக்கம் பெறச் செய்கிறது. திருக்கோயில் களிலும் திரு விளக்குகள் ஏற்றிப் பூசைகள் நடைபெறு கின்றன. தீபம் பிரகாசமாக இருக்குமிடத்தில் இலட்சுமி கடாட்சம் உண்டாகும். உள்ளத் திலும் ஒளி ஏற்ற வேண்டும். அப்பொழுது தான் அறியாமை இருள் அகன்று அறிவு பிரகாசிக்கும். மகாபலிச் சக்கரவர்த்தி முத்தியடைந்த தினத்தைக் குறிப்பதாகவும்
அருள் ஒளி

கார்த்திகைத் தீபத்திருவிழா அமைகின்றது. திருவண்ணாமலையை அக்கினித்தலம் என்று குறிப்பிடுகின்றனர். இங்குள்ளது ஜோதிலிங்கம் “அண்ணாமலை தொழுவார் வினை வழுவாவண்ணம் அறுமே என்பது தேவாரம்.
கார்த்திகை மாதம் முழுவதும் மாலை யில் விளக்கேற்றி வீட்டு வாயிலில் வைக்கின்ற வழக்கமும் உண்டு. சில இடங்களில் தீபாவளி தொடக்கம், திருக் கார்த்திகைத் தீபவிழா வரை இவ்வாறு மாலையில் அகல்விளக்கு ஏற்றிவைப்பர்.
திருக்கார்த்திகையன்று முருகன் ஆல யங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வர். ஆலயத்தின் முற்புறத்தில், காய்ந்த ஓலை, மட்டை இலைகளால் பனை வடிவில் கட்டப்பட்ட சொக்கப் பானைக்கு சிவாக்கினி ஏற்றிச் சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து, சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து தரிசனம் செய்வர்.
சர்வாலய தீபத்தன்று, வீடுகளிலும், முருகன், விஷ்ணு ஆலயங்களைத் தவிர்ந்த மற்றெல்லா ஆலயங்களிலும் தீபங்கள் ஏற்றி, விழாக்கள் நடைபெறும் குமாராலய தீபத்தன்று முருகன் கோயில்களிலும்; விஷ்ணுவாலய தினத்தன்று விஷ்ணு கோயில்களிலும் தீபத்திருவிழா நிகழும்.
இத்திருக்கார்த்திகைத் தீபத்திருநாளில், எம் எல்லோரது வாழ்விலும் ஒளி ஏற்பட வேண்டும் ; சர்வ மங்களமும் பொலிய வேண்டும் என்று சோதிவடிவான இறை
வனைப் பிரார்த்திப்போமாக.
4
ஐப்பசி மாத மலர் - 2013

Page 7
தேசவழமைச் சட்டத்
செல்க
தேசவழமைச் சட்டமும் அதன் பின்னணியும்
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் புத்தளம், கற்பிட்டி ஆகிய பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்களிடையே நிலவிவந்த சில சமூக வழமைகள் கால வெள்ளத்தில் திருத்தங்களுக்குட்பட்டாலும், இற்றைக்கும் வழக்கிலிருந்து வருகின்றன. அத்தகைய சமுக வழமைகளைத் தேசவழமை , சமூக வழமை என இருவகைப்படுத்தியிருந்தனர். தேசத்திலுள்ள எல்லாச் சமூகத்தவருக்கும் பொதுவாக அமைந்த வழமைகள் தேச வழமை என்று கொள்ளப்பட்டது. வட மாகாணத் தமிழர் எல்லோருக்கும் பொது வானதும் தற்போது நடைமுறையி லுள்ளதுமான தேசவழமைச் சட்டத்தை இந்த வகைக்குள் அடக்கலாம்.
யாழ்ப்பாணத்திலுள்ள பலதரப்பட்ட சமூகக் கட்டமைப்பிலிலுள்ளவர்களால் (சாதி முறைமை) பின்பற்றப்பட்டு வந்த பொதுவான சமூக வழமைகளாக கலியாண முறைகள், சொத்துரிமைகள், பயிர்ச்செய்கை யினால் உண்டாகும் உரிமைகள், மற்றும் காடு, பூமி, தோட்டம் முதலியவற்றை ஒற்றி வைக்கும் முறைகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
தமிழருக்கென தனித்துவம் வாய்ந்ததும் காலத்தால் மிகவுந் தொன்மை வாய்ந்தது மானதேசவழமைச் சட்டமானது, யாழ்ப்பாண இராசதானிக் காலத்திலும் பின்னர் நிகழ்ந்த அந்நியப்படையெடுப்புக்களின் போதும் கூட
அருள் ஒளி

PUBLIC LIBRARY தில் இந்து மதத்தின் - NA
செல்வி.புராதனி ஏழுர்நாயகம் (சட்டத்தரணி)
தனது செல்வாக்கை இழக்கவில்லை. போர்த்துக்கீசர் மற்றும் டச்சுக்காரரின் ஆட்சியின் போது நீதிமன்றுகள் தேச வழமையின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்து தீர்ப்புக்களை வழங்கின. கோவைப்படுத்தப்படாது வழக்கிலிருந்து வந்த அத்தகைய சட்டங்களை 18ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராசதானியில் "திசாவை பதவியிலிருந்த Class Isaacs என்பவர் அப்போதிருந்து முதலியார்களின் உதவியுடன் தொகுத்தார். அவ்வாறு கோவைப்படுத்தப்பட்ட வழமை களை டச்சுக்காரர்கள் 1707ம் ஆண்டளவில் தேசவழமைச் சட்டமாகப் பிரகடனப்படுத்தி னார்கள். பிற்போந்த காலப்பகுதிகளில் இலங்கை பிரித்தானியர்களின் கால ணித்துவ நாடாக இருந்த போதிலும், தேசவழமைச்சட்டம் வழக்கொழிந்து போய் விடவில்லை. 1806ம் ஆண்டின் கட்டளை இல.18 இனாலும், 1869ம் ஆண்டின் கட்டளை இல.5 இனாலும் பிரித்தானியர்கள் தேச வழமைச் சட்டமாக அங்கீகரித்தனர். ஆயினும் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப காலங்களில் தேசவழமைச் சட்டத்தில் ஏதேனும் இடைவெளி காணப்படுமிடத்து இந்து சட்டம் மேலோங்கியமையும் பின்னர் நீதிமன்றுகள் அத்தகைய இடைவெளிகளை நிரப்புவதற்கு உரோம டச்சு சட்டங்களை நாடியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1911ம் ஆண்டில் கட்டளை இல.01இனால் கொண்டுவரப்பட்ட யாழ்ப்பாணத் திருமண உரிமை மற்றும் வழியுரிமை கட்டளைச் சட்டத்தின் மூலம், சொத்துக்கள் மற்றும்
:-
ஐப்பசி மாத மலர் - 2013

Page 8
வழியுரிமை சம்பந்தமாக தேசவழமைச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்ட மக்களின் திருமண உரிமைகள் மீது சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இச்சட்டம் 1947ம் ஆண்டு மீண்டும் சில திருத்தங்களுக் குட்பட்டு இன்றும் வடமாகாணத் தமிழர் களுக்குரிய தனியார் சட்டமாக அங்கீ கரிக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது.
இலங்கையில் இந்துமதத்தின் ஆதிக்கம்
இலங்கையின் ஆதிக்குடிகளான இயக் கர்களினதும் நாகர்களினதும் வாழ்வியலை ஒப்புநோக்கும் பொழுது, நாகர்களின் வழிபாட்டு முறையில் இந்து மக்கள் வழிபடும் நாகசர்ப்பம் முதன்மைத் தெய்வ மாகக் கருதப்பட்டதை வரலாறுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். பண்டைய சிங்கள் மன்னர்கள் கூடத் தாம் கட்டிய குளங்களில் நாகசர்ப்பத்தின் உருவத்தைப் பொறித்து காவல் தெய்வமாக வழிபட்டதை மகாவம்ச நூல் கூறுகின்றது. இற்றைக்கும் அவ்வழிபாடுகள் ஈழத்தில் முதன்மை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாது நாகர் கோவில், நாகபட்டினம் என்கின்ற இடப் பெயர்களும் வழக்கிலிருப்பதைக் காண லாம். இவை தவிர புராண இதிகாசங் களின்படி இலங்கையை ஆண்ட இராவண் மன்னன் திருக்கோணேச்சரப் பதியில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதும், மாருதப்புரவீகவல்லி என்ற அரசி தனது குதிரை முகம் நீங்கிய இடத்தில் மாவிட்ட புரம் எனும் ஆலயம் அமைத்து வழிபட்டதும், நகுல முனிவரின் கீரிமுகம் நீங்கிய இடத்தில் நகுலேச்சரம் என்ற ஆலயம் தோன்றியமையும் பண்டைய ஈழத்தில் இந்து மதத்தின் செல்வாக்கினைப் பிரதிபலிப்ப தாகவுள்ளது.
அருள் ஒளி

இவ்வாறு இலங்கையின் ஆதிக் குடிகளிடையே நிலவி வந்த இந்துமதம் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த மக்களி னாலும் இந்திய அரசர்களின் படையெடுப் புக்களினாலும் இன்னும் முக்கியத்துவ மடைந்தது. அந்த வகையில் இலங்கையில் பல்வேறு குடியேற்றங்களும் படை யெடுப்புக்களும் நிகழ்ந்த போதிலும், இந்து மதத்தை தேசவழமைச் சட்டத்தோடு இணைத்துப் பார்க்கையில் மலபார் மக்களின் குடியேற்றமும், ஆரியச்சக்கர வர்த்திகளின் படையெடுப்புமே இங்கு முதன்மையாக நோக்கப்படல் வேண்டும். கலாநிதி H. W. தம்பையா Q. C அவர்கள் தனது 'The Laws and Customs of the Tamils of Jaffna” என்ற நூலில், தேச் வழமைச் சட்டமானது பல நூற்றாண்டு களுக்கு முன்பிருந்தே தென்னிந்தியா விலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப் பாணத்தில் குடியேறிய தமிழ் மக்க ளிடையே நிலவியது என்று கூறுகின்றார். இக்குடியேற்றமானது இருவிதங்களில் நிகழ்ந்தது. ஒருபுறம் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள மலபார் (Malbar) மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்த தமிழர் களும் மறுபுறம் கிழக்கு கரையோரத்தி லிருந்து (Coromondol Coast) குடி பெயர்ந்த தமிழர்களுமாக இலங்கையின் வடபகுதியில் வந்து குடியேறினார்கள். பெண்ணை குடும்பத் தலைவியாகக் கொண்டமைந்த மலபார் சமூகத்திலிருந்து தோற்றம் பெற்றதே மருமக்கற்றாயச் சட்டம். இச் சட்டத்தின்கீழ் ஆதன வழி யுரிமையானது சகோதரியின் மகனுக்கு அதாவது மருமகனைச் சென்றடையும். இம் மருமக்கற்றாயச் சட்டமே பின்னர் தேசவழமைச் சட்த்தின் உருவாக்கத்திற்கு அடிகோலியது. இம் மலபார் மக்களின்
ஐப்பசி மாத மலர் - 2013

Page 9
வழக்காறுகள், சமூகக் கட்டமைப்புக்கள் இற்றைக்கும் வழக்கிலிருப்பதைக் காண லாம்.
இரண்டாவது குடியேற்றமானது ஆரியச் சக்கரவர்த்திகளின் வருகையுடன் இடம் பெற்றது. இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழருக்குச் சிறப்பாகவுள்ள சமுதாயவமைப்பும் சமூக வழமைகளும் சொத்துரிமைகள் பற்றிய வழமைகளும் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலேயே அழுத்தம் பெற்றது. யாழ்ப்பாண இராச்சி யத்துக்கு உரியதான நிர்வாகமுறை இவர் களினாலேயே அறிமுகஞ் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் பூர்வீகம் பற்றி செகராசசேகரமாலை பின்வருமாறு கூறுகின்றது. "யாழ்ப்பாண மன்னர்களின் முன்னோர்கள் குலத்தால் மறையவர். அவர்களின் கோத்திரம் காத்தி யாயன சூத்திரத்துக் காசிபகோத்திரம். அவர்கள் சேது கரையிலே இராமேஸ்வரம் எனும் புனித ஷேத்திரத்திலே பூசை செய்வதற்கென்று அமைக்கப்பெற்ற 512 அங்கத்தவர்களைக் கொண்ட சதுர்வேதி மங்கலத்து மறையவரின் பரம்பரையில் வந்தவர்கள். ஆரியச்சக்கரவர்த்திகள் சேது, விடைக்கொடி வெண்கொற்றக்குடை, வலம் புரிச்சங்கு என்பவற்றை இராமபிரானிட மிருந்து அரச சின்னங்களாகப் பெற்ற
வர்கள் என்றுஞ் சொல்லப்படுகின்றது.
ஆரம்பத்தில் பெண்ணை தலைமை யாகக் கொண்ட குடும்பக் கட்டமைப்பை இவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தாலும் பிற்போந்த காலங்களில் திருமண ஒருங் கிணைவானது நிலையானதாக மாறவும் ஆணைக்குடும்பத் தலைவனாகக் கொண்ட மைந்த சமூகத்தையே அங்கீகரித்தனர்.
அருள் ஒளி

இவர்களது வழமையின் கீழ் ஆணின் சொத்துகள் (முதுசம்) ஆணையும், பெண் ணின் சொத்துகள் (சீதனம்) பெண்ணையும் சென்றடையும். இக்குடியேற்றக் காலப் பகுதியிலே இந்துச் சட்டமும், அதனோடு இணைந்த கூட்டுக்குடும்ப அமைப்பு முறை மற்றும் பிராமணீயம் அறிமுகப்படுத்தப் பட்டது.
தேசவழமையில் இந்துச் சட்டத்தின் செல்வாக்கு
முன்னைய காலங்களில் வடமாகா ணத்தில் வாழ்ந்த தமிழர்களில் பெரும் பாலானவர்கள் இந்துமதத்தைப் பின்பற்று பவர்களாக இருந்தபோதிலும், ஆரியச் சக்கரவர்த்திகளுடன் உருவான இரண் டாவது குடியேற்றத்தின் போது அதி களவிலான பிராமணர்களின் வருகை யினால் இந்துமதம் இன்னும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்பட்டது. குறிப்பாக இவர் களின் ஆண்வழிச் சமூகக் கட்டமைப்பு மற்றும் பிராமணீயம் என்பன இலங்கையில் இந்து மதத்தின் செல்வாக்கிற்கு முக்கிய காரணிகளாக விளங்கினவெனலாம். அத்தகைய சமூக அமைப்பிலிருந்து . தோற்றம் பெற்ற இந்துச் சட்டமானது தர்மசாஸ்திரங்களை மூலமாகக் கொண்ட மைந்தது. சமய மற்றும் தார்மீகக் கடமை களை விபரிக்கும் தத்துவவியலான தர்மசாஸ்திரமானது பிரித்தானியர்களால் அங்கீகரிக்கப்படும் வரை சட்ட அந்தஸ் தெதனையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் தர்மசாஸ்திரங்கள், நடை முறைச் சட்டங்களை கோட்பாட்டு ரீதி. யாகப் பிரதிபலிக்கும் தத்துவவியலே யன்றி காணிச் சட்டங்களையோ அல்லது அவை தொடர்பான சட்டக் கருத்துக்கள் எதனையும் உள்வாங்கியிருக்கவில்லை.
"1- -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 10
ஆயினும் இந்து மதக் கோட்பாடுகளை உள்வாங்கி வளர்ச்சியடைந்த இந்துச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் சில தேசவழமைக் கோவையிலும் இடம்பெற்றி ருப்பதைக் காணலாம்.
அவையாவன் - 1.
ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாண மக்களின் திருமணங்களின் போது எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டிருக்கவில்லையாயினும் பிராமணர்களின் வருகையின் பின்னர் இந்துமதச் சடங்குகளைத் தழுவி திருமணங்கள் இடம்பெறலாயின. பிள்ளையார் பூசை, தாலி, கூறை கட்டுதல் போன்ற நிகழ்வுகள் ஒழுங்குற அமையப் ற்ெறிருந்தால் அவை வலி தான திருமணங்களாகக் கொள்ளப் பட்டன. யாழ்ப்பாணத் தமிழரிடையே இந்துமத முறைப்படி நிகழும் வழக் காற்றுத் திருணங்கள் வலிதான தொன்றாக அங்கீகரிக்கப்படுவதற்கு இரத்தினம்மா எதிர் இராசையா [(1947 48 NLR 475] மற்றும் King எதிர் பெருமாள் [(1911) 14NLR496] என்ற வழக்குகள் அடிப்படையாயய் அமைந் துள்ளன. இலங்கை திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டமானது திருமணம் பதிவு செய்யப்படுதல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற போதிலும், அவற்றைக் கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறே இந்துமத முறைப்படி நிகழும் வழக்காற்றுத் திருமணங்கள் இற்றைக்கும் சட்டபூர்வமாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளன.
முன்னைய காலங்களில் ஆணொ ருவன் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மனைவியாகக் கொண்டிருப்பதை
அருள் ஒளி

இந்துச் சட்டம் எதிர்க்கவில்லை. அவ்வாறு பல மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகள் சட்டரீதியாகப் பிறந்த பிள்ளைகளாகவே கருதப்பட்டன. திருமணத்திற்கு முன்னதாகப் பிறந்த பிள்ளைகள் மட்டுமே முறைதவறிப் பிறந்த குழந்தைகளாகக் கருதப்பட்டன. இந்த முறையானது டச்சுக் காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் பின்பற் றப்பட்டமைக்கு முருகுப்பிள்ளை எதிர் பூதத்தம்பி என்ற வழக்கும், தேசவழமைக் கோவை - பகுதி 1, பிரிவு 18 உம் சான்று பகர்கின்றன.
3. ஆயினும் பிற்பட்ட காலங்களில் பல தார மணமானது சமூக நியதிகளுக்கு முரணானதாக அமைந்தமையால் இந்துமதமும் அத்தகைய மணங்களை அங்கீகரிக்க மறுத்தது. நவீனகாலச் சட்டங்களானது சட்டரீதியான திரு மணமொன்று வலிதிலிருக்கும் போது கணவனோ அல்லது மனைவியோ வேறொருவரை இரண்டாவது முறை திருமணஞ் செய்வதைக் குற்றமாகக் கொள்கின்றன. நவீன சட்டங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்த இந்துச் சட்டமும் அத்தகைய பலதார மணங்களை நிராகரித்ததோடு அவ்வா றான திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகளை முறைதவறிப் பிறந்த பிள்ளைகளாகக் கருதியது. இவ்வாறு முறைதவறிப் பிறந்த பிள்ளைகள் தாயின் சொத்துக்கள் மீது மட்டுமே உரிமைகோர முடியுமென்றும் தந்தை வழி ஆதனத்தின் மீது அவர்களுக்கு எவ்வித உரித்தும் கிடையாதென்றும் கூறுகின்றது. இத்தகைய ஏற்பாடுகள் யாழ்ப்பாண திருமண உரிமைகள்
ஐப்பசி மாத மலர் - 2013

Page 11
மற்றும் பரம்பரைச் சட்டம் (1911) பிரிவு 34இல் கூறப்பட்டுள்ளது.
4. பெற்றோர் உயிருடன் இருக்கும்
வரையில் அவர்களின் சொத்துக்கள் மீது மகன்கள் உரிமைகோர முடியாது. மாறாக, அவர்கள் தங்களுடைய பிரம் மச்சரிய காலப்பகுதியில் எவற்றை யெல்லாம் இலாபமாகப் பெற்றுக் கொண்டார்களோ அல்லது உழைத்துப் பொருளீட்டினார்களோ அவற்றை யெல்லாம் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரக் கடமைப்பட்டவர்கள். இதில் அவர்களது மனைவிமார் அணி யும் பொன், வெள்ளி ஆபரணங்கள் நீங்கலாக மற்ற அனைத்தும் குடும் பத்தின் பொதுச் சொத்தாகவே கருதப் பட்டது. (தேசவழமைக் கோவை - பகுதி 1, பிரிவு 7) இந்த ஏற்பாடானது இந்து கூட்டுக்குடும்ப அமைப்பினையே பிரதிபலிக்கின்றது.
முதுமையின் காரணத்தால் பெற்றோர் களால் தாங்கள் தேடிய சொத்துக் களை பராமரிக்க முடியாதிருப்பின் மகன்கள் அச்சொத்தை தங்களிடையே பகிர்ந்து கொள்ளலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது பெற்றோரைப் பராமரிப்பதற்கும் தமது தந்தையார் பெற்றுக்கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் மகன்கள் கடமைப் பட்டவர்கள். (தேசவழமைக்கோவை - பகுதி 9 , பிரிவு 3).
6.
கணவன் மனைவி தமக்கு பிள்ளைகள் இல்லாதவிடத்து தமது சொத்தக்களை (முதுசம், சீதனம்) மருமகன்கள் அல்லது மருமகள்கள் அல்லது வேறு எவருக்கும்
அருள் ஒளி

வழங்க விரும்பின், அவர்கள் தங்களது பரஸ்பர உறவுகளிடமிருந்து முதலில் சம்மதத்தைப் பெறவேண்டும். அத்தகைய சம்மதம் கிடைக்கப்பெறா விடின் அவர்கள் தங்களது பரம்பரைச் சொத்தை எவருக்கும் கையளிக்க முடியாது. (தேசவழமைக்கோவை - பகுதி 4, பிரிவு 2)
7. இந்து சமூகமானது ஆணைத் தலை
மையாகக் கொண்ட குடும்ப முறை யைப் பின்பற்றினும், கணவனது இறப்பிற்குப் பின்னர் குடும்பத்தின் பொறுப்பை மனைவி ஏற்றுக் கொள்வதை மறுக்கவில்லை. அவ் வாறு கணவன் குழந்தைகளை விட்டு இறந்திருப்பின், சொத்துக்கள் முழு வதும் மனைவியிடம் சென்றடையும். அக்குழந்தைகள் பராயமடையும் வரை மனைவி அச்சொத்தக்களை பிள்ளைகளின் சார்பில் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளின் (குறிப்பாக மகள்களின்) திருமணத்தின் போது தாயானவள் சீதனமாக அச்சொத்தி லிருந்து ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும். மகன்களைப் பொறுத்த வரையில், மேலே பந்தி 1இல் குறிப் பிட்டதுபோல அவர்கள் தமது தாய் உயிரோடிருக்கும் காலம் வரை
எதனையும் கோர முடியாது.
8. ஆரம்ப காலங்களில் சொத்துக்கள் தொடர்பிலான வழியமைப்பை நோக் கும்போது பெண்ணின் சொத்துக்கள் பெண்ணிடமும், ஆணின் சொத்துக்கள் ஆணிடமும் சென்றடைந்தன. பெற் றோர் முதலில் மகள்களுக்கு அவர் களின் திருமணத்தின் போது சொத்
9 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 12
துக்களைக் கொடுப்பர். பின்பு எஞ்சி யிருக்கும் சொத்துக்களைத் தமது ஆண் வாரிசுகளுக்கு வழங்குவர். இந்த வழியுரிமையானது பெண்ணைத் தலைவியாகக் கொண்ட மலபார் மக்களின் குடும்ப அமைப்பிலிருந்து தோற்றம் பெற்றது. ஆயினும் பின்வந்த காலங்களில் பெற்றோரின் தேடிய தேட்ட ஆதனங்கள் மீது ஆண், பெண் இருபாலரும் உரிமை கோரத்தக்க வகையில் தேசவழமைக் கோவையில் பிரிவுகள் கொண்டுவரப்பட்டன. (தேச வழமைக் கோவை - பகுதி 1, பிரிவு 2) இந்த மாற்றமானது ஆணைத் தலைமை யாகக் கொண்டமைந்த பிராமணீயர் களின் வருகையினால் ஏற்பட்ட மாற்ற மெனலாம்.
9. இன்னொருவரின் பொருட்களை
அல்லது நகைகளை ஈடாகப் பெற்றுக் கொண்டவர் அப்பொருட்களைத் தனது சொந்தத் தேவைகளுக்காக உபயோகப் படுத்தியிருப்பின் அப்பொருட்களின் மீதான வட்டியைப் பெற்றுக்கொள்வதிலிருந்து அவர் விலத்தப்படுவார். அதேவேளை அப் பொருட்களை முதலில் அறவிட்ட அதே விலைக்கே மீண்டும் அதன் உரிமையாளருக்கு கையளிக்க வேண்டும். (தேசவழமைக்கோவை பகுதி 3 பிரிவு 8)
10. இரு நபர்கள் ஒன்றாகச் சேர்ந்து கடன் பெற்றிருந்தால், இருவரில் எவரை முதலில் கடன் கொடுத்தவர் காண் கின்றாரோ அவரிடம் கடனைத் திரும்பச் செலுத்தும்படி கோரலாம். பொதுவாக அத்தகைய கூட்டுக்கடன்
அருள் ஒளி
- 10

பத்திரத்தில் முன்னின்றான் முன்னி ருக்க" என்ற சொற்பதம், (தற்போது எவர் என் முன்னே சமுகமளித் துள்ளாரோ அல்லது எவர் என் முன்னே உள்ளாரோ அவரே மொத்தக் கடனையும் செலுத்தவேண்டும் ) பிரயோகிக்கப்பட்டிருக்கும். அதன் விளைவாக கடன்பட்ட இருவர்களில் எவர் முன் வருகின்றாரோ அவரே முழுக்கடனையும் செலுத்தவேண்டும். பின்னர் எவர் தனது கூட்டுக் கட னாளியை எப்போது காண்கின்றாரோ அப்போது அவரிடம் பாதிக்கடன் தொகையைச் செலுத்தும்படி கோர லாம். இந்தச் சட்டத்தினைத் தழுவிய இவ்விதி, தேசவழமைக் கோவை பகுதி 9 பிரிவு 2இல் உள்வாங்கப் பட்டுள்ளது.
11. தேசவழமைக் கோவை பகுதி 2 பிரிவு 1 ஆனது, குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியர் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்க விரும்பின் முதலில் அவர்களது சகோ தரர்களிடம் சம்மதத்தைப் பெற வேண்டும் எனவும் அவ்வாறு சம்மதம் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் முன்னிலையில் குழந்தையைச் சுவீ கரித்தக் கொள்ளவேண்டும் எனவும் கூறுகின்றது. இச் சடங்கில் துணி களைச் சலவை செய்பவனும், முடி வெட்டுபவனும் கட்டாயமாகப் பிர சன்னமாயிருக்கவேண்டும் என்றும் கூறுகின்றது. அத்தகைய சடங்கு முறை மற்றும் தொழிற் பாகுபாடு என்பன இந்துச் சட்டங்களினாலேயே தோற்றம் பெற்றன.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 13
12. வழக்காற்றுச் சட்டத்தின் மூலம்
வளர்ச்சிகண்ட இன்னொரு சட்டமாக இந்துக் கோயில்களை நிர்வகிப்பது சம்பந்தமான சட்டத்தைக் கருதலாம். இச்சட்டம் வடபகுதிக்கு மட்டுமல்லாது இலங்கையிலுள்ள அனைத்து இந்துக் கோயில்களுக்கும் ஏற்புடைத்தானது. தேசவழமைச் சட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஏற்புடமைகள் ஏதும் இல்லாத போதிலும், இந்தியாவி லிருந்து குடிபெயர்ந்த இந்துக்களின் பாரம்பரிய வழக்காறுகளின் மூலம் இந்துக் கோயில்களை நிர்வகிப்பது தொடர்பான விதிகள் தோற்றம் பெற்றன. கோவில் அறங்காவலர்கள், தர்மகர்த்தாக்களை நியமித்தல், தர்மஸ்தாபனமாகச் செயற்படல் மற்றும் கோவில் வருமானங்களை நிர்வகித்தல் என்பன இவற்றுள் அடங்கும்.
மேற்போந்த ஒப்புநோக்குதலின் மூலம், இலங்கைத் தேசவழமைச் சட்டத்தில் இந்து மதமும் இந்துச் சட்டமும் எத்துணை தூரம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதைக் காணலாம். இவ்வாறு தேசவழமைக் கோவையில் நிலையூன்றிய இந்துச் சட்டக் கோட்பாடுகளில் சில காலவோட்டத்தில் மருகிச் சென்றாலும் இன்றும் யாழ்ப் பாணத்திலுள்ள இந்துக்களிடையே செல்வாக்குப் பெற்றிருப்பது கண்கூடு.
இந்தியாவில் இந்துச் சட்டம்
இக்கட்டுரையானது தனியே தேச வழமைச் சட்டத்துடன் நிற்காது, இந்துச் சட்டத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வித்திட்ட இந்தியச் சட்டங்களுடன் ஒப்பு நோக்க முனைகின்றது. அந்த வகையில்
அருள் ஒளி

இந்தியாவின் தற்கால இந்துச் சட்டங் களானது இந்து மக்களின் திருமணம், சுவீகரிப்பு மற்றும் பரம்பரை தொடர்பான விடயங்களைக் கொண்ட தனியார் சட்டங்களாக, வழக்காற்றுச் சட்டங்களாக இந்தியக் குடியரசின் அரசியலமைப்பி னால் (1950) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1950களின் ஆரம்பத்தில் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட இந்துக் கோவை சட்டமும் அது தொடர்பிலெழுந்த விவா தங்களின் விளைவாகவும் இந்து திருமணச் சட்டம் (1955), இந்து வழியுரிமைச் சட்டம் (1956), இந்து சிறுபராயம் மற்றும் பாதுகாவல் சட்டம் (1956) மற்றும் இந்து சுவீகரிப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் (1956) என்பன நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவில், பிணக்குகளைத் தீர்ப் பதற்கு மத ரீதியான நீதிமன்றுகள் எதுவும் அமைக்கப்படாதிருப்பினும், மாவட்ட நீதிமன்றுகளிலுள்ள மாநில அதிகாரிகள் மூலம் அத்தகைய பிணக்குகள் தீர்க்கப் பட்டு வருகின்றன. கிராமப் புறங்களில் நிலவும் பஞ்சாயத்து முறையில் ஊர்ப் பெரியவர்கள் வழக்காறு மற்றும் மதச் சட்டங்களைத் தழுவி பிணக்குகளைத் தீர்ப்பர். இந்திய நீதிபதிகளின் சட்ட வியலின் அடிப்படையிைல் வளர்ந்த நவீன கால இந்துச் சட்டங்களானது பண்டைய இந்துக் குடும்பங்களிடையே நிலவிய வாய்மொழி மூல சொத்துப் பிரிப்பை (Oral Partition) தற்கால சட்ட திட்டங்களுக்கமைவாக அனுமதிப்பது தொடர்பிலும் கவனஞ் செலுத்தியுள்ளது. அண்மையில் பம்பாய் உயர் நீதிமன் றத்தால் தீர்க்கப்பட்ட Shekoji Bhimrao Vs Moriram Maruti Maratha (2007(5) RCR
11
ஐப்பசி மாத மலர் - 2013

Page 14
9
[Civil] 694 [Bombay]4 என்ற வழக்கில், கூட்டுக் குடும்ப அங்கத்தவர்கள் தமது குடும்பச் சொத்தைப் பிரிக்க விரும்பின் அது உறுதி வடிவில் இருக்கவேண்டிய அவசியமில்லை. வாய் மொழி (Oral) மூலம் அச் சொத்து / காணி பிரிக்கப் படலாம். அவ்வாறு வாய்மொழி மூலம் அச்சொத்து பிரிக்கப்படின் அது தொடர்பாக வருமான அதிகாரிகளுக்கு (Revenue Officers) தெரியப்படுத்தல் வேண்டும். அதன் பின்னர் அவ்வதிகாரிகள் அக்காணி பதியப்பெற்ற ஆவணத்தில் மாற்றங்களை மேற்கொள்வர். இத்தகைய தீர்ப்பை நவீன் கால இந்துச் சட்டத்தின் வளர்ச்சிகளி லொன்றெனக் கருதலாம்.
1.
8
முடிவுரை
இலங்கை பல்லின, மத, மொழி, கலாசாரத்தைப் பின்பற்றும் மக்களைக் கொண்ட நாடாகும். இங்கு பெரும் பான்மைச் சிங்களவர்கள் பௌத்த மதத்தையும், சிறுபான்மை இனத்தவர் களான தமிழர்களில் பெரும்பாலானோர் இந்து மத்தையும் பின்பற்றி வருகின்றனர். இவை தவிர இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களும் இங்குள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இலங்கை சோசலிச சனநாயகக் குடியரசின் அரசி யலமைப்பின் (1978) உறுப்புரை 10இன் கீழ் ஆளொவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடைய வராயிருத்தற்கான அல்லது மேற்கொள் வதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் . பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவர். மேலும், உறுப்புரை 14 (1) (உ) இன் பிரகாரம் ஒவ்வொரு பிரசையும் தனியாக அல்லது
அருள் ஒளி
- 12 -

மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாக வேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், சாதனை யிலும், போதனையிலும் வெளிக்காட்டு வதற்கான சுதந்திரமுடையவர். ஆயினும் உறுப்புரை 9 பௌத்த மதத்திற்கு முன்னு ரிமை கொடுப்பதோடு புத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும் விதந்துரைக்கின்றது. இவ்வாறு மதங் களுக்கிடையில் ஒத்திசைவான தன்மை பினைச் சட்டங்கள் ஏற்படுத்தத் தவறி பிருப்பினும் இலங்கை பல்லின மக்களைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில் அவ்வின மக்களின் மொழி, மத, கலாசார அடையாளங்களை உறுப்புரை 16(1) இன் கீழ் உறுதிப்படுத்தியுள்ளமை கண்கூடு. ஆயினும் இந்துச்சட்டம் என்ற கருத்தியலின் அடிப்படையில் இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இலங்கைச் சட்டங்களில் அவற்றின் செல்வாக்கு அருகிக்கொண்டு வருகின்றதென்றே கூறலாம்.
உசாத்துணை:
The laws and Customs of the Tamils of Jaffna, H. W.Thambiah Q.C.
2. The Yalpana - Viapava - Malai or
the History of the Kingdom of Jaffna, C.Brito (1879 , re print 1999)
3. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்,
தமிழரசர் உலகம், நல்லூர் சுவாமி
ஞானப்பிரகாசர்.
-. Matrimonial Property and Gender
Equality, Kamala Nagendra.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 15
5. இலங்கைத் தமிழர் தேச வழமைகளும்
சமூக வழமைகளும், சி.பத்மநாதன்
- N...
6. Influence of Hindu Law and
Marumakattayam Law on the Laws and Customs of the Tamils of Jaffna, J.M. Swaminathan.
7. தேசவழமைச் சட்டம், செ. செல்வக்
குணபாலன்.
8. Thesawalamai Code of 1869.
உலகின் தலைசிறந்த சிர்
திருவா
சிங்கப்பூரிலுள்ள பிரபலப வழங்கும் MDIS என்னும் (Man Singapore) கல்லூரி வளாகத்தில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. அ முதன்மை பெற்றுள்ளது. ஏனைய ஐன்ஸ்டின், இப்கல்டன், பென் ஜா கன்புயுசியஸ், சாக்ரடிஸ், மரியா நிறுவனத்தின் செயலர் முனை தந்தையின் பூர்வீகம் இலங். மாணவர்கள் இங்கு கற்றுவருவது
அருள் ஒளி

9. Matrimonial Rights and Inheritance
Ordinance (Jaffna) No.01 of 1911 (as
amended by No.58 of f 1947). 10. 1907ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க
திருமணம் (பொது) மற்றும் பதிவுகள் கட்டளைச் சட்டம் (2001 ஆம் ஆண்டின் சட்ட இல. 11 இனால் திருத்தப்பட்டது).
11. http://indiankanoon.org/doc/1471673/ 12. http://en.wikepedia.org/wiki/Hindu
law#Modern Hindu law
ந்தனையாளர் வரிசையில் ள்ளுவர்
மான மேலாண்மை பட்டப்படிப்பு agement Development Institute of 5 பத்து சிந்தனையாளரின் உருவச் வர்களில் திருவள்ளுவர் சிலையும் வர்கள் - லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ன்சன், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, மண்டேசரி. இச்சிலையை நிறுவிய வர் தேவேந்திரன். இவரது தாய் கை, யாழ்ப்பாணம். பன்நாட்டு து குறிப்பிடத்தக்கது.
- கணேஸ்
13 - |
ஐப்பசி மாத மலர் - 2013

Page 16
அரனாரிடத்தில் அந்
அரும்பிய ஆர்வம்
( சென்ற இதழ் ஒளி
"எம்மைப் பாதுகாத்து இங்கே தழுவும் என்று வேண்டினாலும் மோகத்தைத் தணித்தல் செய்திலீர், இன்பத்தோடு சேர்க்ககில்லீர். இச்செயல் சங்கரன் என்று எவரும் சாற்றுவதற்குத் தகுவதோ என்று பின்தொடர்ந்தார் தெரிவைமார் சிலர்.
அழகில் மேம்பட்ட சில பெண்கள் சிபெருமானுடைய திருக்குறியின் மீது தளரும் மயக்கத்தோடு மாலுற்றார்கள். வணங்குந் தன்மை போல நாணித் தலை தாழ்த்திக் கூட்டத்தவரோடு கூடிச் சென்றார்கள்.
இவ்வாறாக முனிவர் பன்னியர்கள் பலரும் நெருங்கிச் சூழ்ந்தார்கள். ஆடை துறந்தார்கள். சங்கு வளையல்களை இழந்தார்கள். செறிந்த ஆபரணங்களைச் சிதைத்தார்கள். நாணம் நழுவினார்கள். துறத்தற்கரிய கற்பைத் தோற்றார்கள். உயிர் ஒன்றைத் தாங்கினார்கள். விரக தாபத்தோடு தொடர்ந்தார்கள். பிச்சா டனர் தமது திருவடிக்கமலம் சேப்ப புனிதமாகிய வீதியில் போக்கினை
மேற்கொண்டார்.
பிச்சாடனர் செல்லும் பாதையில் சில விடங்களில் வீணாகானம் செய்தார். சில விடங்களில் வேதகானஞ் செய்தார். சில விடங்களில் சிவாகமங்களைச் சிலா
அருள் ஒளி
- 14

தண் அரிவையர்க்கு |
ம் அளவின்றால் சிவ. சண்முகவடிவேல் அவர்கள் த் தொடர்ச்சி...)
கித்தனர். சில விடங்களில் தமது உண்மை வடிவத்தை உணர்த்துவார். சில விடங்களில் பிச்சை இச்சிப்பார். சில விடங்களில் சிவ னடியார் போலத் தமது புகழைப் புகழ்ந்து போவார்.
இலக்குமி தேவிக்கு நிகரான தெரிவை மார்கள் பிச்சாடனரை வணங்கும் பொழுதில் பெருமானுடைய திருவடிகளில் இட்ட மலர்களும் அவர்கள் சிந்தும் மலர் மாலைகளும் சங்கு வளையல்களும் பொன்னாபரணங்களும் மன்மதன் மலரம்பு களும் எங்குஞ் செறிதலால் அப்புனித வீதி மேலும் பொலிவு பெற்றது.
திருமகள் அனைய திருமேனி, சிற்றடி கருங்கண், செவ்வாயுமுடைய மகளிர்க் கெல்லாம் வெவ்வேறு அளவற்ற உரு வத்தைக் கொண்டு கற்பு என்னுங் கடலைக் கடைகின்ற மந்தர மலையைப் போன்றார் பிச்சாடனப் பெருமான்.
சிவபெருமானிடத்தில் மோகங் கொண்ட முனிபத்தினிகள் எல்லாரும் கருப்பவதியானார்கள். அவர்கள் மேலான கருப்ப வேதனையும் வேறு யாதொரு வருத்தமும் இல்லாமல் புத்திரர்களைப் பெற்றார்கள். ஆண் பிள்ளைகளான அவர்கள் எண்ணிக்கை நாற்பத்தெண்ணா யிரம் ஆகும்.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 17
ஐயனிடத்தில் ஆர்வங் கொண்டு அக் கணத்தில் அரிவையர் பெற்ற பிள்ளைகள் சிவனுடைய செம்மலர்ப் பாதங்களைச் சேவித்தார்கள். மனங் கொண்ட மகிழ்வோடு வணங்கிய அவர்களைக் கருணைக்கடல் கடைக் கணித்தார்.
"நீவிர்கள் எம்மை உள்ளக்கிழியில் உருவெழுதி நற்றவத்தை ஆற்றி அம் ருங்கள் என்று நமச்சிவாயப் பெருமான் நல்லாசி நல்கினார்.
பெ
புதல்வர்களான முனிவர்கள் தவ மாற்றச் சென்ற போதில் சிவபெருமான் வீதியில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்த பெண்கள் கூட்டம் கடல் வெள்ளம் போலப் பின் சென்றது.
மோகினி வடிவங் கொண்ட திருமால் சிவபெருமானிடத்தில் வந்தார். மோகினி மீது மோகங் கொண்ட முனிவர்கள் பின்வந்தார்கள். முனிவர்களுடைய தீவினைப் பயன் காரணமாகச் சிவபிரான் தமது திருவுருவத்தை மறைத்தருளினார். வேற்றொரு வடிவம் தாங்கி நின்றார்.
முனிவர்கள் தங்கள் தங்கள் பத்தினி மாரைப் பார்த்தார்கள். இவர்களும் எங்களைப் போலப் பிச்சாடனரைப் பின் தொடர்ந்தார்கள். அணியும் ஆபரணத்தை யும் ஆடையையும் இழந்தார்கள். நாணத்தையும் நழுவவிட்டார்கள். ஒழுக்க நெறியை ஒருவிப் போனார்கள். ஆடவனைக் கண்டு ஆசையால் மோசம் போனார்கள் என்றார்கள்.
மௌனமாக நோற்கும் முனிவர்கள், மோகினியின் மோகத்திலிருந்து சற்று
அருள் ஒளி

விலகிப் போனார்கள். அரிய குலமக ளிரின் இழிவைக் கண்டு ஏங்கி னார்கள், இரங்கினார்கள், வருந்தினார்கள். மானா பிமானம் கொண்டார்கள். நீங்காத உயிரோடு நின்று நிலை தடுமாறினார்கள்.
'பொன்னணிப் பெண்ணொருத்தி எம்மிடம் வந்தாள். எங்கள் தவத்தைக் குலைத்தாள் , மயக்கத்தை வருவித்தாள். ஆடவன் ஒருத்தன் வந்து எங்கள் கன்னிமார் கற்பைப் பறக்கச் செய்தான். ஐயகோ! இது என்ன மாயம் " இவ்வாறு முனிவர்கள் ஒருங்கு கூடி ஆலோசித்தார்கள். ஒரு தீர்மானத்திற்கு வந்து சொல்லுகின்றார்கள்.
“இந்தப் பெண்களுடைய கற்பாறை யாகிய கற்பைப் கைலைவாசராகிய சிவபெருமானே உடைத்தார். யாம் முன்னம் செய்த தவத்தை அழிக்க மோகினியாக வந்தவன் முழுகுலகு உண்ட மாயவன் போலும்.
"நாரணன் தானே நம் தவத்தை அவமாக்க வந்தான் என்பது பொருந்தாது. மாயவன் சிவபெருமானுடைய பணிப்பின் பிரகாரம் மாயம் பண்ணினான். திருமால் எமக்கு என்னத்தைச் செய்தான்? நாரா யணனால் நமது நற்றவம் நிலை மாறியது நன்றே, நிகழ்ந்த குற்றத்திற்குப் பிராயச் சித்தம் தேடி மேலும் தவத்தைச் செய்து கொள்வோம்.
"சிவபெருமான் வந்து தாருகா வனத்தில் தரித்திருக்கின்ற வனிதை யருடைய கற்பை வாரிய வசை வாக் கிற்குத் தீர்வும் உண்டோ! செஞ்ஞாயிறும் வெண்டிங்களும் செல்லும் திசைகள்
எங்குஞ் சஞ்சரிக்குமன்றோ!!!
15 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 18
தான் ஒரு பிச்சையாள் வடிவின ராகியும் துளவமாலைத் திருமாலை வேற்று வடி வத்தோடு இங்கு விடுத்தும் இக்காரி யங்கள் அனைத்தையும் சாதித்து வெற்றி கொண்டவன் கொன்றை மாலை சூடிக் குழகன் அன்றோ!" என்று மானாக் கினியும் கோபாக்கினியும் ஒருங்கு சுவாலிக்க முனிவர்கள் முனிவோடு முறுகினார்கள்.
முறுகிய முனிவர்கள் யாவரும் நெருப்பெழ நோக்கினார்கள். பொன் மலை போன்ற தனங்களையுடைய பெண்கள் குழுவினரைப் பார்த்தார்கள்.
"நீங்கள் யாருக்குப் பின்னே போகின் றீர்கள்? கற்பினால் செய்யக்கடவதனைச் செய்யாது தவிர்த்தீர்கள்! நீவிர் இவ்விடத்தில் இறந்துபடுதல் இனிது. அது ஆகாதாயின் உங்கள் இல்லங்களுக்குச் செல்லுங்கள்" என்று முனிவர்கள் பெண்கள் கூட்டத்தை அதட்டினார்கள்.
முனிவர்களுடைய போக்கைக் கேட்ட பெண்கள் சிந்தனை எதிர்மாறாகச் செயற் பட்டது. “பிச்சாடனரைத் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் சீவன் முத்தர்களாய் இருப் பார்கள். அல்லாமல் வாழா பாழா வார்களோ! இந்த முனிவர்கள் பைத்தி யர்கள் ஆனார்களோ! என்று இரக்கம் கொண்டார்கள். பின்னர் பிச்சாடனாருடைய பிரகாசிக்கின்ற திருவுருவத்தை உள்ளக் கிழியின் உருவெழுதினார்கள். சித்தராகிய அத்தருடைய திருவருளினால் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். நகரத்திலுள்ள தமது இருப்பிடங்களைச் சென்று சேர்ந்தார்கள்.
பெண்ணினத்தார் பெயர்ந்த பின்பு சிவபெருமான் அருகில் மோகினி வடிவம்
அருள் ஒளி
- 16

தாங்கி நின்ற திருமால் திருமாலானான். அந்த அதிசயத்தை அறியும் பொருட்டு பிரமதேவர் முதலாய தேவர்கள் அவ்விடத்தை அடைந்தார்கள்.
தேவர்கள் வந்த சமயத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை முனிவர்கள் முனிவோடு பார்த்தார்கள். கொடியதொரு அபிசாரக வேள்வி செய்வோம். சிவனைக் கொல்வோம் என்று பொங்கி எழுந்தார்கள். அறி யாமையில் அழுந்திய முனிவர்கள் ஆலோசனையைச் செயற்படுத்தினார்கள். கொடிய யாகத்தை மேற்கொண்டார்கள்.
இகழ்ச்சிக்குரிய யாகத்தில் எவரும் சிந்தித்தற்கரிய உருவத்தையும் இடியின் ஒலியை ஒத்த குரலினையும் பிளந்த வாயினையும் கடுங்கோபத்தினையும் பொறிப்பறக்கும் கண்களையும் தறு கண்மையையையும் சிவந்த கால்களையும் கூரிய நகங்களையுமுடைய ஒரு புலி விரைந்து எழுந்தது.
முனிவர்கள் யாகப் புலியைப் பார்த் தார்கள். 'சிவனைக் கொல் எனச் சின மொழி செருப்பினார்கள், 'செல்' எனக் கூறி வணங்கி விடுத்தார்கள். பணிப்பை ஏற்ற புலி சிவபெருமானை நோக்கி வந்தது. சிவபிரான் புலியின் எதிரில் சென்றார். தமது திருக்கரத்தினால் புலியின் தோலை உரித்தார். புலித்தோலை ஆடைக்கு ஒப்பாகத் திருமேனியில் அணிந்து கொண்டருளினார்.
புலி வலி இழந்தது கண்டு ஒரு மழுவாயுதம் வேள்வித் தீயினின்றும் வெளிப்பட்டது. கொடிய முனிவர் விடுப்பச்
ஐப்பசி மாத மலர் - 2013

Page 19
இல்4 ~
சிவபெருமானிடத்தில் சென்றது. சங்கரர் முன்னியில் சார்ந்தது மழு. சங்கரனார் தமது திருக்கரத்தில் மழுவை ஏந்தி 'நீ நமது அடுதொழில் படையாக அமர்தி' என்று அருளிச் செய்தார்.
அதன் பின்பு யாக குண்டத்திலிருந்தும் ஒரு மான் தோன்றியது. அந்த மானை முனிவர்கள் யாவரும் சிவபெருமானி டத்தில் விடுத்தார்கள். மான் எழுந்து ஆகாயத்தில் பாய்ந்தது. தனது நெடிய குரலினால் சரம் அசரம் அனைத்தினையும் அழித்துச் சென்றது. சிவபிரான் மானினால் உயிர்கள் இறந்துபடாவண்ணம் திருவருள் நோக்கஞ் செய்தார். பின்பு எம்பிரான் அந்த மான் பிணையை தம்மிடம் அழைத்தார். நமது செவியினுக்கு அணிக்கதாகச் சென்று நில். நாளும் கூவுவாய்" என்று நல்லருள் பாலித்தார். தமது அழகிய இடத்திருக் கரத்தில் மானைத் தாங்கிக் கொண்டார்.
அதன் பின்பு வேள்வித் தீயினின்றும் அளவற்ற அரவங்கள் தோன்றின. அவை
சிவபூமிக்க தானங்களில் சிறந்த தான வாருங்கள். உங்கள் இறப்புக் ஒருவருக்கு ஒளி கொடுக்க நீங் இப்புண்ணிய காரியத்திற்கு ஒப்
தொடர்பு
கலாநிதி ஆறு.திருமுருகன் 021 : 222 6550
அருள் ஒளி

கொடிய முனிவர்களுடைய கூற்றினால் கோபத்தோடு சென்றன. அந்நாகங்களை நாராயணனுடைய கருடப் பறவைக்குப் பயந்து முன்னரே அடைக்கலம் புகுந்த அரவங்களோடு ஒன்று சேரச் சிவபெருமான் செப்பமாக அணிந்து கொண்டார்.
பின்னர் மந்திரங்களால் அலங்கரிக்கப் பெற்ற அக்கினியின் நடுவனாக இடிகள் தோன்றினாற்போல கணக்கற்ற பூதங்கள் புற்றீசல் போலப் புறத்தே வந்தன. "நீங்கள் நீலமணி போன்ற கண்டத்து நிமலன் வன்மையை மாற்றுங்கள்' என்று முனிவர்கள் ஏவி விட்டார்கள்.
அண்டமும் நடுங்க ஆரவாரித்து எழுந்த பூதர்கள் பொங்கு சினத்துடன் போனார்கள். போன பூதர்களைப் புண்ணியமூர்த்தி பார்த்து “நீவிர் எம்மைவிட்டு நீங்காமல் எப்போதும் எமது படையாகிப் பணி யாற்றுங்கள் என்று பணித்தருளினார்.
(அடுத்த அருள் ஒளியில் நிறைவு)
ன்தான சபை
மாக கண் தானத்தைச் செய்ய முன் குப் பின் பார்வையற்றிருக்கும் பகள் உதவுங்கள். வாழும் போதே புதல் தாருங்கள்.
களுக்கு
கண் வைத்திய நிபுணர் Dr ச. குகதாசன் 021 : 222 3645
17
ஐப்பசி மாத மலர் - 2013

Page 20
பாலி (இந்தே இந்துக்களின்
உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவுதான் பாலி (Bali) இங்கே 93 சதவீதம் மக்கள் இந்துக்கள். 42 லட்சம் இந்துக்களின் தாயக பூமியாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் இந்து சாம்ராட்சியமாக இருந்த இந்தோனேசியாவில் முஸ்லீம்களின் படை யெடுப்பிற்குப் பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit) என்ற கடைசி இந்து மன்னரை வீழ்த்திய பிறகு இந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபுகுந்தனர்.
பாலியைப் பற்றிய சுவையான தகவல்கள் 1. இங்கே ஒவ்வொரு ஆண்டும் மார்ச்
மாதத்தில் ஒருநாள் மௌன விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை NYEPI Day என்று சொல்கிறார்கள். 2013இல் மார்ச் 12ஆம் திகதி இந்த மௌன தினம் வருகிறது. இந்துக்களின் பண்டிகை போன்று அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தப் போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான DENPASAR (Bali) விமான நிலையம் கூட மூடப் பட்டிருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டிலிருந்தபடியே தியானம் செய்வார்கள். 2. பாலியில் உள்ள இந்து கலாச்சாரம்
இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்று கூட
அருள் ஒளி
- 18

ரனேசியா) சொர்க்க பூமி
ரிஷிகளைப் பற்றிய பாடங்கள் இருக் கின்றன. புராணங்களில் வரும் மார்க் கண்டேய, அகஸ்திய , பரத்துவாஜ ரிஷிகளைப் பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில் இந்த ரிஷிகளைப் பற்றி பாலி குழந்தைகள்
கூட தெரிந்து வைத்திருக்கிறார்கள். B. பாலியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தேசிய உடை "வேஷ்டி" தான். எந்த வொரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்கள் தான் பாரம் பரிய உடை கட்டாயமாகவுள்ளது. (குரு வாயூர் போன்று) ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்த செல்லவேண்டும்.
பாலியின் சமூக, பொருளாதார அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உரு வாக்கிய trihitakarana என்ற கோட் பாட்டின்படிதான் அமைந்துள்ளது. அதைத்தான் அவர்கள் தங்கள் வாரிசு களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். Paranyangan - Pawongan Palemahan என்று பொருள்படும். TRI - HITA- Karana என்பது சமஸ்கிருதம். TRIKALA SANDHYA என்பது சூரிய நமஸ்காரம். அனைத்துப் பாலி பள்ளிகளிலும் கட்டாயமாக மூன்று வேளையும் காயத்திரி மந்திரத்தை பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி றேடியோவில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் ஒலி பரப்புச் செய்யப்படும்.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 21
6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை
இந்தோனேசியா அரசாங்கமே கொடுக் கிறது. முஸ்லீம் மத நாடான இந்தோ னேசியாவில் அனைத்து மத பூசாரி
களின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. 7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்
அனைவரும் இந்துக்களே அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகமுள்ளது. உலகில் அரிசி விளைவிக்கும் நாடு களில் இந்தோனேசியா முக்கிய இடம்பெறுகிறது. பாலித்தீவு முழு வதும் அரிசி வயல்கள் தான் இருக் கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு படைப்பர்.
8.
தலம்: துர்க்கையம்பாள்
அழுதுனது வாச லுற்று அடிபணிகு
அழுதுயரம் யாவும் வற்றி - அதிகருணை வாரி பக்தர்க் கருளிய
அகிலமதி லேயு யர்த்தி - 1 எழுகிழமை நாடி சித்த முளதுயரம்
யொடுமுருகு தீபம் வைத்து எவருமதி வாழ்வளித்து புவனிபல
இருவரம தேகொ டுத்து - கழுபிணிய தேய கற்று கமலபத பே
தொழுதுவர லேவி டுத்து - கவலைகளெ லாம றுத்து கருணை
கழலிணையி லேகி டக்க - பழுதில் கவி பாடு பட்டர்க் குருகிகெ
பருமதிய தாக விட்ட - அ பரவடியார் வாழ நித்தம் பதவருகை
பழையதனில் வாழு துர்க்
முருகு - எலுமிச்சை
அருள் ஒளி

9. பாலி இந்துக்கள் பூசை செய்யும்போது
அச்சடித்த நூல்களைப் பயன்படுத்துவ தில்லை. ஏடுகளையே பயன்படுத் துவர். இராமாயணம் அனைவருக்கும்
நன்கு தெரியும். 10. அனைத்துத் திருவிழாக்களிலும் பாலி
நடனம் ஆடுவார்கள். இதிகாசக் கதைகளை மையமாகக் கொண்டு நடனம், நாடகம் இடம்பெறும்.
சொர்க்கபூமியாக இந்துக்களின் பாலித்தீவு விளங்குகிறது.
நன்றி : https Facebollk Jananayagam தொப்பு - கலாநிதி ஆறு.திருமுருகன்
இடம் : தெல்லிப்பழை வார்கள் கொட்டி - புவிமீதே புள மேநி றைத்து
விடுதாயே கூறி பக்தி 5 - தொழவேதான்
யோக முற்று அருள்தாயே நினைத்து
அலைநாயேன் மழையால் நனைத்து
அருளாயோ? வி தோடெ டுத்து நளாழி
எ வார தெல்லிப் Dக - அம்பாளே.
இராசையா குகதாசன்
நாயன்மார்கட்டு
19 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 22
சிவலிங்கம் பற்றி ர
ஆராய்ச்சியில்
(ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதைப் படித்துப் பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்துப் பகிரவேண்டிய அரிய விஷயம்) சிவலிங்கங்கள் பற்றிய டாக்டர் "விளாதி மீர்" என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தி யாசமானது. அது இந்தப் பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக் கப் பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர்
விளாதிமிர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு மலை உச்சி! அதில் பெளர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தார். ஒரு இஸ்லா மியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவ தாகக் கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகான்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று
அருள் ஒளி
- 20

ஓய விஞ்ஞானியின் கிடைத்த முடிவு
திடமாகக் கருதி இருந்த இடத்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படித்தான் கேட்கிறார்.
மேலும் அவர் புராணங்களிலும், இதி காசங்களிலும் சிவம் பற்றிச் சொன்னதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புக்களை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம் , செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்ப தாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒரு பொருள் தருவ தாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவ லிங்க சொரூபத்துக்குள் விலாவாரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்டதெல்லாம் தரும் என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்
ஐப்பசி மாத மலர் - 2013

Page 23
திரமா? டாக்டர் வினாதிமீரின் சிவஸ்ரூப் ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வவ்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிற தாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின் புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த கூட்டுறவோடும் செயற்படு கிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்கைளப் பஞ்ச பூதங்கள் ஆரா திக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குரிய இடங் களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக் கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயற்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக் கான மழை, காற்று, அக்கினி, மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார். இந்தப் பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்கினித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக்
அருள் ஒளி

குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டுவிட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான் முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் - கொண்ட குறைந்த பட்சம் 150 கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு, இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை , நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறி யிருக்கின்றான். பல ஆயிரம் ஆண்டு களாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று, ஒரு பெருச்சாளி போல் நிலப் பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனுமானங்கள். இந்தப் பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே! இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துக்களுடன், நமக் கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடிய வில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராண வழி அறியப்பட்ட சிவ மானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான்
21
ஐப்பசி மாத மலர் - 2013

Page 24
நான் ! மானுடமே முடிந்தால் என்னைப் . புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது. என்கிறார் டாக்டர் விளாதிமீர்!" இந்தப் பு பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் (
குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆபிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங் - களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் . "கிராண்ட் கன்யான்" என்னும் வித்தியாச 4 மான மலைப்பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் "சிவம், விஷ்ணு, பிரம்மன்" மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் | தொடர்பான சிந்தனைகளும் சைவம் 2 என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ( ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் 8 கருதுகிறார். உலகின் உயர்ந்த சிகரமான 8 இமயம் பூகோள ரீதியில் பூமியின் 6 மையத்தில் (கிட்டத்தட்ட) காணப்படுகிறது. ப
திருவா.
ஆன்ம .
ஆடுகின்றில்லை; கூத்து
அனபு இலை ; என் பாடுகின்றிலை; பதைப்பு
பணிகிலை; பாத | சூடுகின்றிலை ; சூட்டுகின்
துணை இலி பிண தேடுகின்றிலை; தெருவு
செய்வது ஒன்று சி
அருள் ஒளி
- 22.

அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ . இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்சபூத ஆராதனையாகக் குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகத் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாகச் சிவத்தை அடைந்துவிட, உணர்ந்துவிட ஏதுவாகிறது. அதனா லேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து! இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சகம்
சுத்தி
உடையான் கழற்கு ரபு உருகிப்
தும் செய்கிலை; மலர் மதும் இலை!
நெஞ்சே! தோறு அலறிலை; அறியேனே.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 25
மன்னர் பெண்வெல
வேடர் தலைவன், தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டுவதற்குத் தனது மகள் வள்ளியைத் தினமும் அனுப்புவது வழக்கம். முருகக் கடவுளிடத்தில் அதிக பற்றுதல் கொண்டவளாக வள்ளி இருந்தாள். இது தந்தைக்குத் தெரியும்.
அடியார்க்கு எளியவரான முருகன் வள்ளியின் மனதைப் பரீட்சிக்குமுகமாகத் திருவிளையாடல் செய்கிறார்.
பொதுவாக, இறைவன், நல்லவர் களைச் சோதிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது உண்டு. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பம் சுடச்சுட நோக்கிற்பவர்க்கு
(குறள் 267)
ஆகவே, திருமுருகன், அந்தத் தினைப் புனத்துக்கு வேடனாகவும், விருத்தனாகவும் வந்து வள்ளியிடம் பழகத் தொடங்கினார். தனக்கு ஒரு உதவி கிடைத்ததாக எண்ணிய வளாக, அதேநேரம் மிகுந்த எச்சரிக்கை யோடு நடந்துகொள்கிறாள் வள்ளி.
ஒருநாள், முதியவராக வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பு வதாகக் கூறுகின்றார். இதனை வேடிக்கைப் பேச்சாக எண்ணிய வள்ளி, "அப்படியே ஆகட்டும்” என்கிறாள். ஆனாலும் அவர் கையில் அகப்படாமல் அங்குமிங்கும் ஓடிக் கிழவனைக் களைப் படையச் செய்கிறாள்.
பாவம் முருகன் அண்ணனை உதவிக்கு அழைக்கிறார். ஓடித்திரிந்த வள்ளியை யானையொன்று வந்து தடுத்தது. வள்ளி பயந்து தன்னைக் காப்பாற்றும்படியும், தான்
அருள் ஒளி

காளல் ஒக்குமோ?
நா. நல்லதம்பி அவர்கள்
முதியவரை மணக்கச் சம்மதம் என்றும் சொல்கிறாள். யானை திரும்பிப்போய் விட்டது.
ஆயினும், தனது தந்தையிடம் வந்து முறைப்படி கேட்டு, மணஞ் செய்யும்படி கேட்டுக் கொள்கிறாள். அப்போது முருகப் பெருமான் தனது அழகுக் கோலத்தைக் காட்டியருளுகின்றார்.
முருகன் முறைப்படி வேடர் தலை வனிடஞ்சென்று வள்ளியைத் திருமணஞ் செய்து கொண்டதாகப் புராணங் கூறு கின்றது.
இவ்வாறான வள்ளி திருமணக் கதையைக் கொண்டு துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், திருவெங்கைக் கலம்பகம் என்ற நூலில் இலக்கியச் சுவை மிகுந்த ஒரு சம்பவத்தை எமக்குத் தருகிறார். அதனைப் பார்ப்போம்.
இந்த வேடன் வீட்டிலே, பெண் எடுக்க ஒரு மன்னன் விரும்பித் தனது தூதுவன் ஒருவனை அங்கு அனுப்புகிறான். மன்னன் பெண் கேட்கிறான் என்றதும் வேடனுக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அத்தூதுவனை வேடன் பின்வருமாறு ஏசுகிறான்.
விற்றதார்? கலை பாதியோடு வனத் திலே அழவிட்ட தார்? வெஞ்சிறைபுக விட்டதார்? துகிலுரிய விட்டு விழித்ததார்? என்று கேள்விக்கணை தொடுத்துவிட்டு, இப்படி மன்னர் நடந்தால்...
உற்ற தாரமும் வேண்டும் என்றினி மன்னர் பெண் கொளல் ஒக்குமோ?
23
ஐப்பசி மாத மலர் - 2013

Page 26
உமியடா மணமென்ற வாய் கிழித் தோலை காற்றில் உருட்டடா!
என்று சொன்ன வேடன், தொடர்ந்து தன் நிலை கூறுகிறான்.
வெற்றியாகிய முத்திதந்திடும் வெங்கை மாநகர் வேடர் யாம்; விமலரானவர் எமை யடுத்து, இனிது எங்கள் எச்சில் மிசைந்ததால் பெற்றவேலன் தனக்கு, நாம் ஒரு பெண் வளர்ப்பினில் ஈந்தனம்; அப்படியிருக்கும் போது- (யாம்) பெற்ற பெண்ணைக் கொடுப் பமோ? இஃதென்? பேய் பிடித்திடுந் தூதரே! என்று கூறி, மன்னன் அனுப்பிய தூதரைத் திரும்பிப் போங்கள் என வேடன் கூறுவ தாக துறைமங்கலம் சுவாமிகள் நயம்படப் பாடியுள்ளார்.
இனிமேல், மன்னர்மேல் வேடன் கூறிய குற்றங்களைப் பார்ப்போம். i) விற்றதார்? தனது மனைவியை விலை கூறி விற்றவன் அரிச்சந்திரன்.
விண்ணுலகிலே விசுவாமித்திர ருக்கும் வசிட்டருக்குமிடையில் ஒரு சந்தேகம் வந்தது. மண்ணுலகில் சாத்தி யந்தவறாத மன்னர்கள் யாரும் இருக் கிறார்களா? எனக் கெளசிகர் கேட்க, ஆம்; அரிச்சந்திரன் இருக்கிறான் என்று வசிட்டர் பதிலளித்தார். "இல்லை, இல்லை அவன் பொய் சொல்லுபவன் என்று வாதாடினார் விசுவாமித்திரர். அப்படி அவன் பொய் பேசினால் நான் எனது தவத்தில் பாதியை உமக்குத் தருகிறேன் என வசிட்டர் கூற, உடனே மண்ணுலகம் புறப்பட்டார் விசுவாமித்திரர். அரிச்சந்திர னுடைய அரண்மனைக்குச் சென்ற விசுவா மித்திரர், தவஞ்செய்வதற்குப் பணம் தேவைப்படுகிறது என அரசனைக் கேட்டுப் பெற்றார். சில நிமிஷத்தில் அப்பணத்தை அரசனிடமே கொடுத்து விட்டு, "தேவை வரும்வேளையில் வந்து கேட்பேன்”
அருள் ஒளி
- 24

எனக் கூறிச் சென்றுவிட்டார். சில நாட்கள் செல்ல, முனிவர் அரசனிடம் வந்து, தவஞ் செய்வதற்கு இடம் தேவை எனக் கேட்டார்.
உடனே அரிச்சந்திரன், தனது அரண் மனை வளாகத்தில் ஒரு பகுதியைக் கையளித்தான். அதன்பின், முன்பு தந்த பணத்தைத் தா எனக் கேட்டார். பணம் அவன் கொடுத்த பகுதிக்குள் போய்விட்டது. அதனை எடுக்கவிரும்பாத மன்னன், மனைவி, பிள்ளைகளுடன் அரண்மனையை விட்டு வெளியேறிய நிலையில், சில நாட்கழித்து அந்தப் பணத்தைத் தருவாகத் தவணை கேட்டான். அதற்கு முனிவர், "முன்பு நான் பணம் தரவில்லை என்று சொன்னால், நான் பணத்தைக் கேளாமல் விடுவேன்" என்கிறார். "அப்படி நான் சொல்ல மாட்டேன் என்று கூறிய அரிச்சந்திரன், தனது மனைவி யையும் பிள்ளையையும் விற்று முனிவரது கடனைத் தீர்த்துவிடுகிறான்.
கலை பாதியோடு வனத்திலே அழவிட்டது ஆர்?
நிடத நாட்டை ஆண்ட நளமகாராசன் என்ற மன்னன், புட்கரன் என்ற சிற்றர சனோடு சூதாடி, நாடு நகரிழந்து மனைவி யோடு வேலூர் சென்றான். பிள்ளைகளை மாமன் வீமராசன் வீட்டுக்கு அனுப்பி விட்டான். பின்பு மனைவியோடு போகும் வழியில் ஒரு அழகான பறவையைக் கண்ட மனைவி தமயந்தி, அதனைப் பிடித்துத் தரும்படி கேட்டாள். அரசன், தனது வேட்டியைக் கழற்றி, வலைபோல பறவை மேல் வீசி அதனைப் பிடிக்க முயன்றான். அந்த மாயப்புள் வேட்டியோடு பறந்து ஓடிவிட்டது. அதனால், அரசன் மனைவியின் சேலையின் ஒரு பகுதியால் தனது உடலை மறைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந் தான். இரவு வேளை ஒரு பாழ் மண்ட
ஐப்பசி மாத மலர் - 2013

Page 27
பத்துள் இருவரும் உறங்கினர். கொஞ்ச நேரத்தில், மன்னன் விழித்தெழுந்து, சேலையின் அரைப் பங்கை மனைவி பக்கம் விட்டு விட்டு மறுபாதியோடு அவளைப் பிரிந்து போய்விட்டான். அவள் தன்னோடு துன்பப் படுவதை விரும்பாமலே அவ்வாறு செய்தான். ஆனால் சிறிது பொழுதில் விழித் தெழுந்த தமயந்தி, கணவனைக் காடெல் லாந்தேடி அழுதாள். பின்பு ஒருவாறு தனது தந்தையின் ஊருக்குப் போய்ச் சேர்கிறாள்.
வெஞ்சிறைப்புகவிட்டது ஆர்?
தசரத இராமன், வனவாசம் செய்த காலத்தில், பஞ்சவடி என்னும் வனப்பகுதி யில் தங்கியிருக்கும் பொழுது, சீதையைப் பற்றி இராவணன் கேள்விப்பட்டான். அவனைக் கவர்ந்து செல்ல மாரீசன் என்ற மாமனை உதவி கேட்டான். மாரீசன், மாயமான் போல பஞ்சவடியில் வந்து உலாவினான். அதனைக் கண்ட சீதை, அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனைக் கேட்கிறாள். 'அது மாயமான் என்று இலக்குமணன் சொல்லியும் சீதை பிடிவாதமாக நிற்கிறாள். அதனால் இராமன் மானைப் பிடிக்கப் போகிறான். ஏமாற்றிய மாயமானை அம்பெய்து கொல்கிறான். இறக்குந்தறுவாயில், இலக்கு மணா ஓடிவா எனக் குரல் கொடுத்து மாரீசன் மடிகிறான். இலக்குமணன் அண்ணனைத் தேடிப் போகிறான். தனித் திருந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்று. இலங்கையில் சிறை வைக் கிறான். சிறையிலிருந்து சீதை இராமனை எண்ணிக் கலங்குகிறாள்.
துகில் உரியவிட்டு விழித்தது யார்?
பாண்டவர் ஐவருக்கு மனைவியான பாஞ்சாலியைச் சபை நடுவில் கொண்டு
அருள் ஒளி |

13 வந்து துகில் உரிகிறான் துச்சாதனன். கணவன்மார் ஐவர் இருந்தும் அவளுக்கு உதவி செய்ய முடியாமல், சூதாட்டத்தில் தம்மைத்தாமே தோற்றுப் போனார்கள் தருமன் முதலியோர். ஐவர் இருந்தும் பயன் இல்லாத நிலையில், அவர்கள் விழித்திருக்க நேர்ந்தது! திக்கற்றவர்க்குத் தெய்வம் துணை! பாஞ்சாலி கண்ண பிரானிடம் தஞ்சடைந்தாள்; கண்ணன் காப்பாற்றினான். பாஞ்சாலியின் மானம் காப்பாற்றப்பட்டது.
இவ்வாறு பெண்களைக் காப்பாற்ற முடியாத மன்னர்கள், ஒரு இடத்திலே பெண் கேட்டுப்போவது ஒக்குமோ? என வேடர் தலைவன் கேட்பது நியாயந்தானே எனக் காட்டுகிறார் துறைமங்கலம் சுவாமியார். பாடலை முழுமையாகப் பார்ப்போம். விற்றதார்? கலை பாதியோடு வனத்திலே அழவிட்ட தார்? வெஞ்சிறைப்புக விட்டதார்? துகில் உரியவிட்டு விழித்ததார்? உற்ற தாரமும் வேண்டுமென்றினி மன்னர் வண் கொளல் ஒக்குமோ? உமியடா மணமென்ற வாய் கிழித்தோலை காற்றில் உருட்டடா! வெற்றியாகிய முத்தி தந்திடும் வேங்கை மாநகர் வேடர் யாம் விமலரானவர் எமையடுத்து இனிது எங்கள் - மிச்சில் மிசைந்ததால் பெற்ற வேலன் தனக்கு நாம் ஒரு பெண்ணை வளர்பினில் ஈந்தனம் பெற்ற பெண்ணைக் கொடுப்பமோ, ஈஃதென் பேய்பிடித்திடு தூதரே
என இலக்கிய நயத்தோடு இப்பாடல் அமைந்திருப்பதைப் படித்துப் பயன் பெறுவோமாக.
25 --
ஐப்பசி மாத மலர் - 2013

Page 28
சக்தி வடிவங்கள் எத்
எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா
என்று பாவேந்தர் பார்த்து | வியந்த அன்னை எங்கள் சக்தி. சிந்துவெளிக் காலம் முதல் இந்துக் களாகவும், சித்தாந்தச் சைவர்களாக வும் இருக்கும் நாம் சக்தி வழி பாட்டிற்குத் தனிப்பெருமை தருவ தற்குக் காரணங்கள் பல. மெய்ஞ் ஞானக் காரணங்களை மேன்மக்கள் பலர் விளக்கிக் கூறியுள்ளனர். விஞ்ஞானக் காரணங்களை வினாவ விழைகின்றது என் மனம்.
T
சக்தியின்றிச் சிவமில்லை என்ற பண்டைய கூற்றை, விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சக்தியின்றிச் சடமில்லை 1 எனக் கணித சமன்பாட்டால் நிறுவினார்.
E = MC2 எனக் கற்கும்கணித மாணவர்கள் இந்த அற்புதத்தை எண்ணிப் பார்க்கவேண்டும். எமது - உடல் இயங்க மட்டுமல்ல, ஒவ்வொரு ( அணுக்கருவும் இயங்கவும் சக்தி வேண்டும். சக்தியற்ற உடல் சவ மாகவும், சக்தியற்ற அணு வெறும் சடமாகவும் இருக்கும். சக்தி சேர, இயக்கம் ஆரம்பமாகின்றது. அகிலமே அசைகின்றது. ஐன்ஸ்டீன் கூற்றுப் படி, சக்தி சேரச் சேர சடம் சுருங்கும். முழுச் சக்தி நிலையில் உருவமில்லை, உடலுமில்லை. அருவமும், உருவ மாகி, அநாதியாப் பலவாய், ஒன்றாய் நிற்பது அனைத்தும் சக்தியே.
அருள் ஒளி
- 26

நனை? எத்தனை?
Dr. T. திவாகரன் அவர்கள்
சக்தி வடிவங்கள் பல என்பதனை ரம் சனாதன தர்மம் சரிவர உணர்ந் துள்ளது. நவராத்திரி விழாக்களும், துர்க்கா, இலக்குமி, சரஸ்வதி மூர்த் தங்களும் இந்த உண்மையை உணர்த்து நின்றன. ஒருநாமம், ஓருருவம் என் நில்லாது எங்கும் பல வடிவங்களில் சக்தி வண்ணமாகின்றாள் என்பதனை நாம் உணரவேண்டும்.
நவீன விஞ்ஞானம் நாள்தோறும் புதிய சக்தி மூர்த்தங்களைக் கண்ட றிந்து கொண்டுள்ளது. ஒளி, ஒலி, வெப்பம் முதலிய பண்டைய கணிப்பீடு களுக்கும் மேலாக, மின்சக்தி, காந்த சக்தி என்பவற்றையும் புறந்தள்ளி புதிய சக்தி வடிவங்களும் நாளும் கண்டறி யப்படுகின்றன.
இணையவெளி முழுவதுமே சக்தி மின்னஞ்சல் முதல் 'Skype முதலிய நேரடித் தொடர்பாடல் முறைகள் வரை அனைத்துமே சக்தியினாற் சாத்தியமாகின்றது. கணத்தினும் குறைவான நேரத்தில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்ய முடிகின்றது. காணொளிகள் கண்டங் களைத் தாண்டி காட்சிப்படுத்தப்படு கின்றன.
இதயம் இயங்கும் சக்தியையும், மூளையில் முனைப்பெடுக்கும் ECG, EEG போன்ற அளவீடுகளூடாக
ஐப்பசி மாத மலர் - 2013

Page 29
ஓரளவேனும் அறிந்துகொள்ள அறி வியலால் முடிகிறது. இந்த இரண்டும் இயங்கும் வரையே மனிதன் உயிர்வாழ்கிறான்.
ஞாயிறின் சக்தியில் கிரகங்கள் சுழல்கின்றன. கிரகங்களின் சக்தி யில் சந்திரன் போன்ற சிறிய கிர கங்கள் சுழல்கின்றன. ஞாயிறு கூட பிறிதொரு சக்தியின் ஆட்கொள்ள லில் பால்வீதியில் இயங்குவதாக அறியப்பட்டு பல ஞாயிறுகளைக் கொண்ட அண்டத்தில் கரும்புள்ளிச் சக்திகள் ஈர்ப்பைத் தம் இருப்பாக வைத்துள்ளன. இவ்வாறு பல சேர்ந்த பகிரண்டத்தின் சக்தியை நாம் இன்று பார்க்கவில்லை.
மீண்டும் பாரதிதாசன் பாடல் என் நினைவுக்கு வருகின்றது.
“அங்கு தங்கும் வெளியினில் கோடியண்டம் அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா
சக்தி வடிவங்களைத் தான் நாம் அறிகின்றோமே தவிர, இவை எல்லாவற்றுக்கும் மூல ஊற்றான தாய்ச்சக்தி பற்றிய அறிவு எமது வல்லமைக்கு அப்பாற்பட்டது.
அருள் ஒளி

வல்லமைக்கோர் எல்லையிந்த வையகத்தோர்
- வகுக்கவில்லை. வல்லமையே வையகமாய் வைகுவது தன்னமைவு அது இல்லையெனில் இவ்வுலக மில்லை, இயக்கமில்லை
- இறைவனில்லை பல்லமைவும் பொருட்களின் பண்புருவம் வல்லமையே”
எல்லையில்லா வல்லமையை (சக்தியை) தாயாகக் கண்டு மகிழும் கலாசாரம் எம்முடையது. அபிராமிப் பட்டர் அந்த அம்மாவை அகக் கண்ணிலும், புறக்கண்ணிலும் கண் டார். அடியார்கள் காண்பதற்காக சக்தி, துர்க்கை எனும் மூர்த்தத்தில் எம் ஊர்களில் உறைகிறாள்.
நாம் பாக்கியசாலிகள், நவீன விஞ்ஞானமும், நல்ல மெய்ஞ்ஞானி களும் தேடியலையும் சக்தியை மிக இலகுவாக "துர்க்காதேவி" என காணக்கிடைக்கும் பாக்கியம் தெல்லிப்பழையில் கிடைத்துள்ளது.
என்ன புண்ணியம் செய்தனை ரெநஞ்சமே
இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினை பயனிடை என நாளும் நாம் இறும்பூது எய்தலாம்.
எங்கெங்கும் சக்தி வடிவம் என்றும் அவள் காலடி நாம் பணிவோம்.
27
ஐப்பசி மாத மலர் - 2013

Page 30
மாதகல் மயில்வ
சிறுகுறிப்பு
மயில்வாகனப் புலவர் பற்றிய இந்தக் குறிப்பு யாழ்ப்பாண வைபவமாலையைப் பதிப்பித்தவர்களில் ஒருவராகிய குல. சபாநாதன் அவர்களால் யாழ்ப்பாண வைபவமாலை பதிப்பில் எழுதப்பட்டதாகும்.
மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாணம் பண்டைத்தரிப்புக் கோயிற்பற்றைச் சேர்ந்த மாதகற் கிராமத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிர மணியம் எனவும், தாயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். கண்டியர்சன் மீது கிள்ளைவிடு தூது பாடிய மாதகல் சிற்றம் பலப்புலவரின் சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர் இளமையிலே தம் மாமனாரிடம் கல்வி கற்று சிறந்த பாண்டித்தியமடையலானார். இவர் வையா :
எனும் புலவர் மரபிலே உதித்தவர். அது நெய்யார்ந்த வாட்கைப் பரராச சேகரன் போர்நிறுவி மெய்யாக நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரித்துரைத்த வையாவின் கோத்திரத் தான் மயில் வாகனன் மாதவங்கள் பொய்யாத வாய்மைப் புலியூரந்தாதி புகன்றனனே.
என்னும் புலியூரந்தாதிச் சிறப்புப் | பாயிரச் செய்யுளாலறியப்படுகின்றது. இச் 6 செய்யுள் வரதபண்டிதர் பாடியதெனப் . பொதுவாக நம்பப்படுகின்றது. வையா எனும் புலவர், சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் ( காலத்தில் (கி.பி. 1380 - 1414) சமஸ்தானப் புலவராய் கீர்த்தியுடன் விளங்கினார். இவர் |
வையாபாடல், பரராசசேகரன் உலா, பரராசசேரன் இராசமுறை என்னும் நூல்களின் ஆசிரியர்.
அருள் ஒளி
28.

மாகனப் புலவர்
மயில்வாகனப் புலவருடைய வர லாறு திரு.அ.சதாசிவப் பிள்ளையவர்கள் எழுதிய “பாவலர் சரித்திர தீபகம்" எனும் நூலிலும், திரு.அ. குமாரசாமிப்புலவர் அவர்கள் எழுதிய 'தமிழ்ப்புலவர் சரித்திரம்' எனும் நூலிலும் , வயாவிளான் திரு. க. வேலுப் பிள்ளையவர்கள், வெளியிட்ட 'யாழ்ப்பாண வைபவ கெளமுதியிலும், வித்துவான் பிரம்மஸ்ரீ . சி.கணேசையர் அவர்கள் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் எனும் நூலிலும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வண்ணை வைத்தீஸ்வர சுவாமி கோயிலை கி.பி. 1787இல்கட்ட ஆரம்பித்து 1791இல் திருப்பணியை முடித்து கும்பாபிஷேகம் செய்வித்த தர்மப்பிரபு வாகிய வண்ணை வைத்திலிங்கச் செட்டி யாரும், மயில்வாகனப் புலவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இவ்விருவரும், இந்தியாவினின்று யாழ்ப்பாணத்தில் வந்திருந்த கூழங்கைத் தம்பிரானிடம் ஒருங்கு கற்றனர். கூழங்கைத் தம்பிரான் ஒரு பாடத்தை ஒரே முறையன்றி இரண் டாம் முறை சொல்லிக் கொடாரொன்றும், வைத்திலிங்கச் செட்டியார் ஒரே முறையிற் கிரகிக்கத்தக்கவரல்லரென்றும், மயில் வாகனப்புலவர் ஒரே முறையிற் கிரகிக்கத் நக்க, சிறந்த ஞாபக சக்தி யுடையவ ரென்றும், அதனால் தம்பிரான் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை மயில் வாகனப் புலவர் ஒரே முறையிற் கிரகித்து வைத்தி லிங்கச் செட்டியாருக்கு மீளச் சொல்லிக் கொடுப்பாரென்றும் சரித்திரா சிரியர் சிலர் கூறுவர். இதனால், மயில்வாகனப் புலவர்
ஐப்பசி மாத மலர் - 2013

Page 31
சிறந்த ஞாபகசத்தியுடையவர் என்பது புலனாகின்றது.
மயில்வாகனப் புலவர் காலம்
கல்வளையந்தாதி, மறைசையந்தாதி, பறாளை விநாயகர் பள்ளு, கரவை வேலன் கோவை முதலிய நூல்களை இயற்றிய நல்லூர் சின்னத்தம்பிப் புல வரும், சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம், பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிய வரதபண்டிதரும், மயில்வாகனப் புலவரும் ஒரே காலத்தினர் எனச் சரித்திராசிரியர் சிலர் கருதுகின்றனர். மயில்வாகனப் புலவர் இயற்றிய யாழ்ப் பாண வைபவமாலை எனும் நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுளில், மேக்கரண் எனும் ஒல்லாந்து தேச மன்னன் பெயர் குறிப்பிடப்படுதலால், அது கி.பி. 1736இல் கொம்மந்தேராயிருந்த இயன் மக்கா ராவையே குறிக்குமெனக் கருதி, இப் புலவர் காலமும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகுமென யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொண் டார்கள். காலஞ்சென்ற பிறக்ரர் திரு.வ. குமாரசுவாமி அவர்கள் ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையில், 1934ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் இக்கொள்கையை விரிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
மயில்வாகனப் புலவர் அவர்களின் பிற்காலச் சீவியத்தையும் அவரது காலத்தை யும் கரவை வேலன் கோவை பதிப்பித்த பிரம்மஸ்ரீ தி. சதாசிவ ஐயர் அவர்கள் அரிதில் முயன்று ஆராய்ந்து, அப்பதிப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். அதனை ஈண்டெடுத்துக் காட்டுதல் பொருத்த
முடையதாகும் என நம்புகின்றோம்.
அருள் ஒளி

கி.பி. 1805ஆம் ஆண்டில் வைத்தி லிங்கச் செட்டியார் தம் ஆஸ்திகளைப் பற்றி மரண சாதனப் பத்திரம் பிறப் பித்தார் என்பது அப்பத்திர வாயிலாகவே இன்றும் நாமறியக்கிடக்கின்றது. அங்ஙனம் . பத்திரம் பிறப்பித்த பின்னர், செட்டியார் பெரும்பொருள் எடுத்துக் கொண்டு, வேண்டிய பரிசனங்களுடன் தம் தோழராகிய மயில்வாகனப் புலவரையும் அழைத்துக் கொண்டு காசிக்குப் பிரயாணமானார். வழியிலும் காசிப்பதியிலும், பல தரும் தாபனங்கள் செய்து, அங்கு சிறிது காலத்திற் செட்டியார் காலகதியடைய, மயில்வாகனப் புலவர் மீண்டும் யாழ்ப் பாணம் வந்து, மேலும் சில காலம் வாழ்ந்தி ருந்தனர். அப்போது அவரால் எழுதப்பட்ட கந்தபுராண ஓலைச்சுவடி ஒன்று இப்பொழுதும் மாதகலில் அவர் வழித்தோன்றலாகிய ஒருவரிடம் இருக் கின்றது.அவ்வேட்டின் இறுதியில் முந்தின
கையெழுத்திலேயே ஈசன்மைந்தன் புராண மெழுதினோன் தேசு லாவு திருவளர் மாதையூர் மாசிலாமணி மாமகன் மைந்தனாம் காசி காண்மயில் வாகன யோகனே
எனும் செய்யுள் எழுதப்பட்டிருக் கின்றது. இச்செய்யுளால் மயில்வாகனப் புலவர் காசிக்குச் சென்று மீண்ட சம்பவம் நன்கு தாபிக்கப்படுகின்றது. 1814ம் ஆண்டில் மாதகற் பகுதியில் பெரு வெள்ளம் ஒன்று நிகழ்ந்ததென்றும், அவ்வெள்ளத்தையும், அதனால் நிகழ்ந்த சேதத்தையுங் குறித்து ஓர் அம்மானை மயில்வாகனப் புலவராற் பாடப்பட்ட தென்றும் அவர் வழித்தோன்றலாயுள் ளோர் கூறக்கேட்டலின், மயில்வாகனப் புலவர் கி.பி. 1814ம் ஆண்டில் வாழ்ந் திருந்ததாகல் வேண்டும். ஆகவே அவர்
29 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 32
Tண
செய்த 'யாழ்ப்பாண வைபவமாலை என்னுஞ் சரித்திர நூல் கி.பி. 1736ம் ஆண்டில் இயற்றப்பட்டதென்னுங் கொள்கை எவ்வாறு பொருந்தும் என்பது அறிஞர்கள் ஆராயத்தக்கது. 1736இல் மயில்வாகனப் புலவரும், சின்னத்தம்பிப் புலவரும், பத்து வயதுக்குட்பட்ட சின்னஞ் சிறுவர் களாகவே இருந்திருப்பார்கள்.
இவ்வறிஞருடைய கொள்கைப்படி மயில்வாகனப் புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியெனக் கருத இடமுண்டு. மயில்வாகனப் புலவர் வண்ணை வைத்திலிங்கச் செட்டியார் காலத்தில் வாழ்ந்தவராதலின், இப்புலவர் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இருந்தி
ருக்க வேண்டும் என முதலியார் இராச நாயகம் அவர்கள் கருதி அவ்விடயம் பற்றி ஆங்கில இந்து சாதனப் பத்திரி
கையில் (29- 10 - 34) ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டார்கள். சதாசிவ ஐயர் அவர்கள் கொள்கையும் இதற்கு ஆதர வளிக்கின்றது. அதனை மேலே காட்டி யுள்ளோம். 'தமிழ்ப்புலவர் சரித்திரம்' என்னும் நூலினை 1916ம் ஆண்டில் வெளியிட்ட சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களும், "காலம் ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் என்பர்' எனக் கூறியிருத்தலும் இக்கொள்கைக்கு ஆதர வளிக்கின்றது. இன்னும் 'யாழ்ப்பாண வைபவ கெளமுதி' என்னும் நூலில் இப் புலவர் காலத்தை விபரிக்குமிடத்து மயில் வாகனப் புலவர் வைபவமாலையை இயற்றிய காலம், 1736 வரையிலென மெஸ்.விருத்துரை (Britto) கூறிப் போந்தார். ஆயின் வைத்திலிங்கச் செட்டியாரோடு அவரைக் கூழங்கைத்
அருள் ஒளி
- 30

தம்பிரானிடம் பாடங்கேட்டவராகச் சொல்லும் ஐதீகத்தின்படி அந்நூலியற்றிய காலம் இன்னும் ஐம்பது வருடம் வரையிலென்றாலும் பிற்பட்டதேயாக வேண்டும் எனக் கூறப்பட்டிருத்தலும் ஈண்டு ஒப்பிட்டு நோக்கற்பாற்று. ஆயின், அரசாங்க சாசன பாதுகாப்பு நிலையத் திலுள்ள (Archives) டச்சு காலத்துப் பத்திரங்களில் 1706 ஆம் ஆண்டில் பீற்றர் மக்காரா என்பவர் பிசுக்கால் அதிகாரி யாக யாழ்ப்பாணத்தில் இருந்தார். (Peieter Macare - Independent Fiscal of the Jaffna Pattam in (1706) என்னுங் குறிப்புக் காணப்படுதலால், இவருடைய கேள்விப்படியே மயில்வாகனப் புலவர் 1706இல் வைபவமாலையை இயற்றினார் எனத் திரு.வ.குமாரசுவாமியவர்கள் இந்து சாதனப் பத்திரிகையில் எழுதிய கட்டுரை யொன்றிற் குறிப்பிட்டுள்ளார். (A Peep into Dutch Archives in Ceylon V. Coomaraswamy B.A - Hindu Organ of 3- 2 - 1936). காலியில் கொம் மாந்தரா யிருந்த இயன் மாக்காரா யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தில் நாட்டமுடையவராய் இருந்தார் என்பது பொருத்தமற்ற கூற்று என்பதைப் பிள்ளையவர்கள் ஒத்துக் கொண்டு, மயில்வாகனப் புலவர் வைபவ மாலைய இயற்றிய காலம் 1706ம் ஆண்டென்றே கொள்கின்றார். ஆனால், பிசுக்கால் அதிகாரியாயிருந்த ஒருவனை உலாந்தேசு மன்னன் என மயில்வாகனப் புலவர் குறிப்பிட்டிருப்பாரோ என்பது ஐயத்துக்கிடமானது. எனினும் அவ்வதி காரியையே உலாந்தேசு மன்னன் எனப் புனைந்துரையாகப் பாடியிருத்தல் கூடு மெனக் கொள்ளலாம். அங்ஙனமாயின் , மயில்வாகனப் புலவர் காலம் 18ம் நூற்றாண் டின் முற்பகுதியெனக் கொள்ளவேண்டும்.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 33
எனவே, மயில்வாகனப் புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியெனக் கொள்ளுவார் ஒரு சாரார். 18ம் நூற் றாண்டின் பிற்பகுதியும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனக் கொள்வர் பிறிதொரு சாரார். சிறப்புப் பாயிரத்திற் கூறப் பட்டுள்ள, மேக்கரன் என்பவர் யார் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளும் வரை, மயில்வாகனப் புலவர் காலத்தை யும் திட்டமாகக் கூறல் கஷ்டமானது. எனினும், வண்ணை வைத்திலிங்கச்
ஸ்ரீ துர்க்காதேவி தேவள்
வன்னி வாழை
அருள் ஒளி

செட்டியாரும் மயில்வாகனப் புலவரும் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்ட தாகக் கூறப்பட்டாலும், செட்டியாருடன் காசி யாத்திரை செய்த மயில்வாகனப் புலவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து மேலும் சில காலம் வாழ்ந்திருந்தனர் என திரு.தி. சதாசிவ ஐயர் அவர்கள் தக்க சான்றுடன் நிறுவியிருத்தலாலும், மயில் வாகனப் புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி யும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனக் கொள்வதே சாலப் பொருத்தமுடையது.
மதான ஆலய முன்றலில் வெட்டும் நிகழ்வு
ஐப்பசி மாத மலர் - 2013

Page 34
நல்லைநகர ஆ
தோற்றம்
ஆறுமுகநாவலர் - யாழ்ப்பாணம், நல்லு (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) புதன்கிழமை சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி ப ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் க. இலங்கைக் காவல் முதலியார் ஆகிய அனை வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூ இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசா ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பில்
கல்வி
ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்ய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமி. தந்தையை இழந்தார். மூத்த தமையனால் பின்னர் அவரது குருவாகிய சேனாதிரா. அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வய, மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்க கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்ற அப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி நிறுவுனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு
அருள் ஒளி
- 32

றுமுகநாவலர்
ரார் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18இல் ம அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் வரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் -த்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்
ங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் Tளை அவர்களின் தாயார்.
பப் பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய ழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் ச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க திலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய
முன்னணி ஆங்கிலப் பாடசாலையான காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) மார். அவரது இருபதாவது வயதில் யேற்ற நாவலர், அப் பாடசாலையின் பாதிரியார் கிறிஸ்தவ விவிலியத்தைத் உதவியாக இருந்து பணியாற்றினார்.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 35
பேர்சிவல் பாதிரியாருடன் சென்னைப் பு யாழ்ப்பாணம் திரும்பினார்.
பணிகள்
சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இகை வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் ப சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் 6 பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெ
இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும்
வண்ணார்பண்ணையில் சைவப் பிர. சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சம் செலவிடத் தீர்மானித்து செப்ரெம்பர் 1848 சம்பள் ஆசிரியப் பணியைத் துறந்தார்.
அச்சுப்பணி
சைவப் பிள்ளைகளுக்குப் பாடந வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பில் சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆத புலமையை வெளிப்படுத்தி நாவலர் ப காலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் செ ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் தி
தமது இல்லத்தில் வித்தியானு பால் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்தி தரிசனவிதி, சைவசமய சாரம், கொன திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியு ை நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர்
அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரி வெளியிட்டார்.
இ கிங்
இலங்கை
5க.
அருள் ஒளி

பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு
சவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847ஆம் நாள் ள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். - சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.
காச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு மய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் -இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச்
நூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் ள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை தீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது ட்டத்தைப் பெற்றார். சென்னையில் சில ௗந்தரியலங்கரிஉரையும் அச்சிற் பதித்தபின் ரும்பினார்.
- - -
மன யந்திரசாலை என்னும் பெயரில் ஓர் சூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலய மல மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, ர, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல பெரியபுராணத்தை வசனநடையில் எழுதி காரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை
க அரசு வெளியிட்ட நாவலர் முத்திரை
33 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 36
தமிழகப்பணி
இவரது பணி இலங்கையில் மட்டுமல் சென்னையில் திருவாசகம், திருக்கோவை வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்த தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன் பல நூல்களையும் அச்சிட்டார்.
சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும், தங்கி சைவப் பிரசங்கங்கள் செய்தபின் 1862
1863 மார்கழியில் மீண்டும் தமிழ சமஸ்தனாத்தில் பிரசங்கம் செய்தார். அங்க சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சி பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்க
குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆ நாவலரைப் பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓத வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய் திருப்புள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங் 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித
1866 மார்கழி மாதம் சென்னை திரு நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவல்
போலியருட்பா மறுப்பு
இராமலிங்கம்பிள்ளை (வள்ளலார்) தாம் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், ே வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்ப விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரை. உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மம் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகள்
சிதம்பர வழக்கின் பின் நாவலர் தரும்! காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்க ை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
அருள் ஒளி
- - 34

ன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. யார் நூல்களை 1859 வைகாசி மாதம் ரெத்தை விலைக்கு வாங்கி, சென்னை இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப்
திருநாகைக் காரோணம் ஆகிய இடங்களில் பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
கம் சென்றார். அங்கு இராமநாதபுர கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை க்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் கப்பட்டார்.
தீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி துவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு த்தியாசாலையை நிறுவினார்.
சாலை
ம்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் மர் ஈடுபட்டார்.
பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி மரம் சென்றார். அப்போது சைவாகம் வலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் க் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி அங்கு நாவலரைப் பலவாறாக நிந்தித்து ஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத்
ளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.
புரி, திருவிடைமுருதூர், திருவேட்டக்குடி, ளத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில்
ஐப்பசி மாத மலர் - 2013

Page 37
சைவப் பாடசாலை நிறுவல்
1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வி நடத்தினார். 1871இல் வண்ணார்பண்னை வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் | 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நித ஆண்டுகளே நடைபெற்றது.
1872 ஐப்பசி மாதத்தில் தாம் அ உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றா பூசைக்கு இடம் பண்ணும் விதி, சிரார்த் தமிழ் அகராதி, தமிழ் - சமஸ்கிருத அக நூல்களை எழுதுவதிலும் சைவப் பி ஈடுபட்டார்.
ஆறுமுகநாவலரின் உரைத்திறன்
நீதிவெண்பா உரையில் நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த துன்று கிளைக்கும் துயர்சேரும் - குன் பின் இரவில் வந்தகரும் பிள்ளைக் கிட அன்னமுதற் பட்டதுபோ லாம் (-74) என்ற பாடற்கதையை நாவலர் பின்வ
“எவராலும் ஏறமுடியாத ஒரு பெரிய அன்னப் பட்சிகளோடு வாசம் செய்து 6 பெருமழையினால் வருந்திய ஒரு க மந்திரியாகிய அன்னம் காக்கைக்கு இட அரச அன்னம் அதன் சொல்லைக் கே காக்கை அன்று இரவில் அங்கே தங்கி வித்து முளைத்து எழுந்து பெரிய விருக்ஷ விழுதுகளைப் பற்றிக் கொண்டு அ அன்னங்களைப் பிடித்தான்'.
அருள் ஒளி

த்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் ணயில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய ல் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் பாடசாலை ஒன்றை வண்ணார்பண்ணையில் தி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு
துவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் 1878இற்கும் இடைப்பட்ட காலத்தில் திருவிளையாடல் புராணம், நன்னூற் ம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், த விதி, தருப்பண விதி, போசன விதி, ராதி, தமிழ் - ஆங்கில அகராதி முதலிய ரசங்கங்கள் செய்வதிலும் நாவலர்
நல்லோர்க்கும் றிடத்தில் ங்கொடுத்த
நமாறு விளக்குகின்றார்.
ப மலைக்குகையில் ஓர் அரச அன்னம் கொண்டிருக்கும்போது, ஒருநாள் இரவு ாக்கை , தான் இருக்க இடம் கேட்டது. ம் கொடுக்கலாகாது என்று சொல்லவும், ளாமல் காக்கைக்கு இடம்கொடுத்தது. எச்சமிட அச் எச்சத்தில் இருந்து ஆலம் மாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் ம் மலையில் ஏறிக் கண் ணிவைத்து
5
ஐப்பசி மாத மலர் - 2013

Page 38
சாதிப்பிரசாரம்
சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இக்கால நோக்கின்படி பிற்போக்கு வாதி வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்கன எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மூடத்தனமான சாதிக் கட்டு சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோ நாவலர்.
இறுதிநாட்கள்
நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன் . வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆ! மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ந மூன்று தினங்களும் குளிக்க முடியாதிரு வேதாரணியத்துச் சைவாசாரியார் ஒரு வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேன் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது முதலிய புண்ணிய தலங்களின் விபூதி அணி உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து விட்டு மறைந்தார்.
குருபூசைத் தினம் கார்த்திகை மகம்
அருள் ஒளி
- 36

இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பாக இருந்தார். சாதிப் பிரசாரங்களை த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ளத் தனது முதலாம் சைவ-வினாவிடை'
ஒப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியகமென்று கொள்வது சுருதி, யுத்தி தம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்
ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச ம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை ாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த ந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், ந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை
ஐப்பசி மாத மலர் - 2013

Page 39
நாகராஜா கன
திருகோணமலையில் 1970 இற்குப் பின்னர் அதிகம் பேசப்பட்ட ஆளுமை களில் ஒருவராக வாழ்ந்த நாகராஜா கணபதிப் பிள்ளை இன்று நம்மிடம் இல்லை. அவர் தன் இறுதி மூச்சை 10.11.2013 இல் நிறுத்தும் வரை எங்கள் மத்தியில் கர்மயோகியாக வாழ்ந்த மிக உயர்ந்த பண்பாளன். திரு கோணமலை ஆன்மீக உலகத்திற்கு தன் எழுத்தாலும் நிழற்படத்தாலும் கர்மயோகி யாக உழைத்த ஒரு உயர்ந்த மனிதனை இன்று திருகோணமலை இழந்திருக்கின்றது.
அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை ஆழ்ந்த இன, மொழிப் பற்றோடு ஆன்மீகச் சிந்தனையால் உயர்ந்து விளங்கிய பெருமகன். உள்ளதை உள்ளபடியே கூறும் இனிய பண்பாளன். இன்முகத்தாலும் இனிய நற்பேச்சாலும் எல்லோர் மனங் களிலும் என்றும் நிறைந்து வாழ்ந்தவர் தன் வாழ்நாளில் திருகோணமலை நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மனிதராக வாழ்ந்ததோடு பொது நிகழ்வுகள் அனைத் திலும் தவறாது சமூகமளித்து தன் பங்க ளிப்பைச் செய்த பெருமகனார் ஆவர். ஊர் போற்றும் பண்புமிக்க நல்மக்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தாலும் மிக எளிமையான தன் வாழ்வால் இறுதிவரை உயர்ந்து நின்றவர்.
அவர் எழுதிய ஆன்மீக வரலாற்றுக் கட்டுரைகள் ஏராளம். திருக்கோணேஸ் வரம் தொடர்பாக பல விளக்கக் கட்டுரை களை எழுதினாலும் அவருடைய கீதை
அருள் ஒளி
- 3

பரமயோகி
பதிப்பிள்ளை மறைவு
விளக்கங்கள் அவரது மிக ஆழமான வாசிப்பின் வெளிப்பாடாகவே இருந்தது. அவர் தனது இறுதி மூச்சை நிறுத்துவதற்கு சில நாட்களுக்கு முன் எழுதிய "கீதை தரும் கர்மயோகம் என்ற கட்டுரை அவரது . வாழ்க்கையின் சாட்சியாக அமைந்தி ருந்தது. கீதைப்பிரியன் என்ற புனைவுப் பெயருடன் கீதையின் தன்னறம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் ஆழமான தத்துவப் புலமை கொண்டவை. அவரது ஆன்மீக ஆளுமை பெரிதும் வெளிப்படும் கட்டுரைகளில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு நண்பனாக அவரிடம் நீண்ட காலமாக அவதானித்தது அவரது இந்துத் தத்துவ அறிவுசார் சாராம்சங்களை தனது கட்டுரைகளில் கையாளும் விதத்தையே ஆன்மீக உலகிற்கு தனது பெரும் பங்களிப்பாக அவர் செய்தி ருப்பது அவரது எழுத்துக்களும் புகைப் படங்களுமே. இலங்கை அரசின் வனத் துறையில் பணியாற்றினாலும் நேரடி யாகத் தன் புகைப்படக் கருவியையும் கீதையையும் நம்பி வாழ்ந்த அவர் திருக்கோணேஸ்வர வரலாற்றைத் தேடு வதில் அதிகம் வேட்கை கொண்டிருந்தார்.
திருகோணமலை தொடர்பான தகவல் களையும் நிழற்படங்களையும் தேடித் திரட்டி ஆவணப்படுத்துவதைத் தன் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தவர். குறிப் பாக கோணேசர் ஆலய அகழ்வில் கிடைத்த விக்கிரகங்கள் அனைத்தும் அவரினால் நிழற்படங்களாக்கப்பட்டு வெளிவந்தன.
7
ஐப்பசி மாத மலர் - 2013

Page 40
அவரிடம் இருந்த ஆன்மீக - வரலாற்று அறிவுகளை கட்டுரைகளாக வெளியிட்டார். அவர் தனது எழுத்தினால் மறந்துபோன பல விடயங்களை இளைய தலைமுறையின் கவனத்திற்கு எடுத்தச் சென்றவர். 1966இல் உள்ளக் கமலம் இதழுக்கு அவர் எழுதிய திருக்கரசை மாநகரும்” திருமங்கலாயும் என்னும் கட்டுரை வழியாக கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனம் தொடர்பான மறைந்து போன ஐதீக மரபுகளையும், கதைகளையும் வெளியுலகிற்குக் கொண்டு வந்தவர். மறைந்த தமிழறிஞர் வே. அகிலேசபிள்ளை பதிப்பித்த திருக்கரசை புராணத்தில் அவருக்கிருந்த தேர்ச்சி அவரது பல உரை யாடல்களில் இயல்பாகவே வெளிவருவ துண்டு. மேலும் அவர் ஆன்மீக ஆர்வம் வழியாக சிற்பங்கள், விக்கிரகங்கள் தொடர்பான இலச்சினைகள், தாந்திரீகக் குறியீடுகள் குறித்து ஓரளவு ஞானமுடைய வராக இருந்தார். சிற்பங்கள் தாந்திரீகக் குறியீடுகள் வழியாக உணர்த்தும் தத்து வங்களை மிக நுட்பமாகப் புரிந்திருந்தார். தத்துவங்கைளப் புரிந்து கொள்ளாத பாமர உள்ளங்களுக்கு விக்கிரகங்கள் வெளிப் படுத்தும் தோற்றங்கள் இலகுவாகப் புரிந்து
விடும் எனத் தன் புகைப்படக்கலை குறித்துப் பேசும்போது சொல்வார். 1960 களுக்குப் பின்னர் திருகோணமலை தொடர்பான வரலாற்று ஆவணப்படங்களின் களஞ்சியம் அவரிடம் மாத்திரமே உள்ளது.
கர்மயோகியாக வாழ்ந்த அவர் தன் இறுதி மூச்சை நிறுத்துவத்றகு சில நாட்களுக்கு முன் அறிவு சஞ்சிகைக்காக கீதை தரும் கர்மயோகம் என்ற தத்துவக் கட்டுரையை எழுதி முடித்திருந்தார். அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளையின் மரபார்ந்த ஆன்மீக அறிவின் வீச்சு
அருள் ஒளி
- 38

வெளிப்படும் அவரது கட்டுரைகளில் இது மிக முக்கியமானது. மரணத்தை உதறித் தள்ளும் தெளிவுடன் இறுதிவரை கடமை யைத் தவறாது செய் என்று உரத்து ஒலிக்கும் உயர்ந்த மனிதனின் உள்ளத்தை இக் கட்டுரை தொட்டுப் பேசுகின்றது. கீதையின் சில வரிகளை அவரது சொற் களால் அறிந்து கொள்வது பொருத்தமான தாக இருக்கும்.
ஒவ்வொரு கணப் பொழுதிலும் நீ செயலாற்றியே ஆக வேண்டும். உனக்கு விதிக்கப்பட்டுள்ள நித்திய கருமத்தைச் செய். கர்மம் செய்யாமல் இருப்பதைவிட கர்மம் செய்வதே சிறந்தது. நீ வேலை செய்யாமல் இருக்கும் நிலையில் உன் சொந்த உடம்பைக்கூட உன்னால் பேணுதல் முடியாமல் போய்விடும். பற்றற்று வேலை செய்யும் புருசனே மேலான நிலையை அடைகின்றான்.
அது அவர் நேசித்த கண்ணனின் குரலாகவே உள்ளது. கீதை மீதிருந்த பற்றுதல் போல உபநிடதத்திலும் ஆழ்ந்த பற்றுதல் கொண்டிருந்தார். அவரது ஆங்கிலத் தமிழ்ப் புலமையோடு இனிமை யாகச் சிரித்தபடியே உரையாடும் அவரது பண்பு வெகு சிலருக்கு மாத்திரம் கிடைத்த வரம். அமர்நாத், கங்கோத்தரி, காசி, பத்திரிநாத், இராமேஸ்வரம் என அவ ருடைய யாத்திரைகள் மிக நீண்ட நெடும் பயணமாக இருந்தது. புனித தலங்களும் அவற்றின் வரலாறுகளும் அவரது எழுத்துக் களாகவும் நிழற்படங்களாகவும் பலரைச் சென்றடைந்தன.
சோகத்தின் சுவடுகள் என்றும் ஆறாதவை. ஆனாலும் அதிலிருந்து
--
ஐப்பசி மாத மலர் - 2013

Page 41
மீண்டெழுந்து நமக்கு விதிக்கப்பட்டி ருக்கும் வாழ்வை பொருள் பொதிந்ததாக எண்ணி, முடிந்தால் வாழ்வின் உன்னதங் களை எட்ட ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதே அவரது வாழ்வு வழங்கும் இறுதி விருப்பாக இருந்தது. அது இல் வாழ்வில் இணைந்த ஓர் கர்மயோகியின் வாழ்க்கை யின் சாராம்சம்.
மரணம் குறித்துப் பேசும் தத்துவங்கள் அனைத்துமே மரணத்தை ஒரு கதவாக உருவகித்தே தாண்டுகின்றன. அவ ருடைய சிந்தனைகள் கீதையை மையப் படுத்தியே இருந்தது.
91
அவருடைய துணைவியார் பிரிந்த போது அவருடைய பெரு விருப்பாக இருந்த மகா நாராயண உபநிடதத்தின் ஈரடிகளைக் கூறியே அமைதியைத் தேடியவர் அவர். அதே அடிகளையே அவருக்காக இன்று நாம் நினைவூட்டுவோம்.
அகவை நூறு கண்
இணுவில், கலாபூஷணம் முதுபெரும்ப
அவ
அன்ன திரு பல்ல
வாழ்த்து
அருள் ஒளி

PUBLIC LIBRARY
TATA "ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஸ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் - ம்ருத்யோர் முஸ்சிய மாம்ருதாத்
இயற்கையான நறுமணமுடைய வரும் கருணையால் அடியார்களைப் போசித்து வளர்ப்பவருமாகிய முக் கண்ணனை பூசித்து வழிபடுகின்றோம். வெள்ளரிப்பழம் தனது கொடிக்காம்பி னின்று விடுபடுவது போல் நாம் மரணத்தின் பிடிப்பிலிருந்து உமதருளால் விடுபட்டு மோட்ச மார்க்கத்திலிருந்து விலகாமல் இருப்போமாக.
அவரது உழைப்பு என்றும் மற்றவர் களுக்கு வழிகாட்டலாக அமையட்டும். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த் திப்போம்.
கலாநிதி கனகசபாபதி சரவணபவன்
டமுதுபெரும் புலவர்
அளவெட்டி புலவர் வை. க.சிற்றம்பலம் ரகள்
னை துர்க்காதேவியின் பருளால்
Tண்டு பல்லாண்டு வாழ த்துகிறோம்.
- அருள்ஒளி
ஐப்பசி மாத மலர் - 2013

Page 42
கொக்குவில் சபார
யாழ்ப்பாணம் கொக்குவிற் பதியில் முல்லைத்தீவிலே எழுதுவினைஞராகப் பணியாற்றிவந்த சபாபதிப்பிள்ளை என்பா ருக்கும் அவரது துணைவியார் ஆச்சிமுத்து விற்கும் 1858ம் ஆண்டு சித்திரை மாதம் மூன்றாம் நாள் பிறந்தவர்தான் சபாரத்தின முதலியார். ஆரம்பக் கல்வியை சூழலில் நிறைவு செய்து கொண்ட அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த கல்விமான்களில் ஒருவரான சுயம்புநாதரிடம் தமிழ் பயின்றார். இப்பொழுது. மத்திய கல்லூரி என்று வழங்கும் 'கொக்' பாடசாலையில் ஆங்கிலங் கற்றார். வண் ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியா சாலையில் நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவல ரிடம் தமிழுஞ் சமயமும் கற்றார். நாவலரின் அருட்பார்வையினாலே சபாரத்தின் முதலி யார் தன் பத்தொன்பதாவது வயதிலிருந்து சமயப்பணி ஆற்றத் தொடங்கினார்.
சபாரத்தின் முதலியார் காலத்தில் சாள்ஸ் பிரட்லாங் என்னும் பெயரையுடைய கிறிஸ்தவ தத்துவஞானி ஒருவர் புகழ்பெற்ற பண்டிதராக இருந்தார். எல்லாம் இயற்கை மேலே எந்த சக்தியுமில்லை. நாம் காண்பவை உண்மை யானவை. அவையெல்லாம் இயற்கைத் தோற்றங்கள் என்றவகையிலான நிரீச்சுரவாதக் கொள்கையை உடையவர் அவர். தம் கொள்கையைப் பரப்பும் பல வெளியீடுகளை யும் வெளியிட்டார். கொள்கைப் பிரகடனங் களை பத்திரிகையிலும் வரச்செய்தார். இவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சபாரத்தின முதலியார் அவர் பிரச்சாரங்களை பொறுத்துக் கொள்ளாத வராகி தருக்க முறையில் அவர் சிந்தனைகளை மறுத்துரைத்தார். தம் சிந்தனை களை வெளியிடுவதற்கு தமிழ் இதழ்களைத் தம் வயப் படுத்திக் கொண்டார். உதயபானு எனும் தமிழ்ச் செய்தி இதழ் சபாரத்தின் முதலியாரின் கட்டுரைகளை ஒழுங்காகப் பிரசுரித்தது. இக்கொள்கைக்கு எதிராக சபாரத்தின முதலியார் அருள் ஒளி
- 4

த்தின் முதலியார்
எழுதிய கட்டுரைகள் 'ஈசுர நிச்சயம் என்னுந் தலைப்புடன் ஒரு நூலாகி 1896இல் வெளிவந்ததுண்டு. 1878இல் அரச எழுதுவினை ஞராகப் பதறியேற்ற இவர் இலங்கையின் பல பாகங்களிலும் பணிபுரிந்த பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தை அடைந்து முதலியார் பதவி யில் அமர்ந்தார். தொடர்ந்து பத்து ஆண்டுகள் உதவிப் பிஸ்கால் பதவியையும் வகித்துள்ளார். இவரைக் கௌரவித்து அரசு 1905இல் முதலி யார் என்னும் விருதையும் 1919இல்இராசவாசல் முதலியார் என்னுஞ் சிறப்பான கௌரவ விருதினையும் அளித்து கௌரவப்படுத்தினர். 1917இல் அரசு இவருக்கு சமாதான நீதவான் எனும் கௌரவ விருதையும் வழங்கினர்.
- நகல் 2
பிரபஞ்சவிசாரம், வீவான்ம போதம், இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள், மறுபிறப்புண்மை, சரவணபவமாலை, நல்லை நான்மணிமாலை, கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை, கொக்குவில் சிவசுப்பிரமணியர் மும்மணிக்கோவை என்பன இவர் ஆக்கிய நூல்களிற் சில.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் மறைவின்போது முதலியார் அவர்கள் பாடிய கையறுநிலை வருமாறுசிவசமயமக் கமலமதைத் தமிழ்நாடாந் திருமடுவிற் செறித்த வர்த்திப் பவமயராற் தாங்கணுற்ற பரசமய விருள்கடமைப் பதற வோட்டித் தவநெறியாந் தேரினிடைத் தானியூர்ந்து தற்பரனா மாழி சார்ந்தா னவமகல வுலகுபெறு மாறுமுக நாவலனா மனில யோனே
திருத்தல யாத்திரையாக காசிவரை சென்று மீண்ட இவர், துந்துபி வருடம் ஐப்பசி மாதம் 30ம் திகதி (1922-11-15) இவ்வுலக வாழ்வை நீத்து பரமனடி சேர்ந்தார்.
) -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 43
உலகில் மிக உயர்ந்த 0
அந்தக் கோயில் இருக்குமிடம் கோலாலம்பூர். ஆனால் அந்தக் கோயிலில் இருக்கும் இறைவனின் பக்தர்கள் உலகம் எங்கும் இருக்கிறார்கள்.
தமிழ்க் கடவுள் என்று அழைக்கப் பட்டாலும் அந்தத் தெய்வத்திற்கு நாடு, மொழி கடந்து பல்லாயிரம் பக்தர்கள் இருக்கிறார்கள்.
யார் அந்தக் கடவுள் என்றும்; இப்போது நாம் தரிசிக்கப்போகிற வெளிநாட்டுக் கோயில் எது எனவும் அநேகமாக உங்களில் பலர் யூகித்திருப்பீர்கள். ஆமாம்... பத்துமலை முருகன் கோயிலுக்குத்தான் நாம் இப்போது செல்கிறோம்.
மலைகள் யாவும் மாலவன் மருகன் இருக்கும் இடம். எனவே இங்கும் மலை இருக்கிறது. ஆறும், பன்னிரண்டும் , பதினெட்டும் முருகனோடு தொடர்புடைய எண்கள் என்கின்றன தமிழ் நூல்கள். இதில் பத்து எப்படி எங்கே வந்து மலையொடு சேர்ந்தது?
பத்துமலை என்று அழைக்கப்பட்டாலும், படு கேவ்ஸ் (Batu caves) என்றுதான் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். காரணம் இது ஒரு மலையைக் குடைந்து அமைக்கப் பட்ட கோயில். கோயில் இருக்கும் மலையின் அடிவாரத்தில் ஓடும் பத்து என்கிற ஆறின் பெயர்தான் மலையின் பெயராகி பத்துமலை ஆகிவிட்டது.
அருள் ஒளி

முருகப்பெருமான் சிலை
மலையின் பெயருக்குக் காரணம் பார்த்தாகிவிட்டது. மயில் வாகனக் கடவுள் இங்கே வந்த கதையைப் பார்ப்போமா?
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு வணிகப் பணியாகச் சென்ற தம்புசாமி பிள்ளை என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. முருக பக்தரான அவர் இப்பகுதிக்கு வந்தபோது பத்து குகைகளின் நுழைவாயில் வேல் வடிவில் இருந்ததைப் பார்த்தார். அதனால் உந்தப்பட்டவர், தமது இஷ்ட தெய்வமான முருகனுக்கு ஒரு கோயிலை இங்கே அமைத்திட எண்ணி னார். "வேலிருக்க வினையுமில்லை, மயிலிருக்க பயமுமில்லை. நாட்டை விட்டு வந்தால் என்ன, தெய்வ பலமும் பக்தியும் நமக்கு இருக்கும்போது அந்த தெய்வமே தனது முயற்சிக்குத் துணையாக இருக்கும் என நம்பினார். அப்படியே அருள் பாலித்தார் ஆறுமுகக் கடவுள்.
அரச அனுமதி பெற்று, ஆலயப் பணிகளை ஆரம்பித்தார்கள். சுமார் 400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை என்று சரித்திர ஆய்வாளர்களால் கூறப்படும் லைம் ஸ்டோன் கற்களால் ஆன மலையைக் குடைந்து கட்டப் பட்டது குமரன் இருக்கும் இந்தக் குகைக் கோயில்.
மலேசியாவில் குடியேறிய தமிழ்ச் செல்வந்தர்கள் பலரும் கோயில் கட்டு மானப் பணிகளுக்கு உதவி புரியவே,
ஐப்பசி மாத மலர் - 2013

Page 44
கந்தனின் அருள்போல நாளுக்கு நாள் வளர்ந்தது கோயில்.
1890களில் கோயிலுக்குச் செல்ல கரடு முரடான மலைப்பாதைதான் இருந்தி ருக்கிறது. பின்னர் 1920இல் மரப்படிக் கட்டுகள் அமைக்கப்பட்டன.
இதோ கோயிலை நெருங்கி விட்டோம். 'தகதக தகவென ஆடிவா! என்று திரைப்படம் ஒன்றில் ஈசனைப் பார்த்து அவ்வை பாடுவாரே, அந்தப் பாடலைக் கேட்டு முருகனுக்கு உருவம் தந்ததுபோல் ஜொலிக்கும் தங்க வண்ணத்தில் கம்பீரமாகக் காட்சிதரும் முருகன் சிலை, பிரமிப்போடு நம்மைத் தலை உயர்த்த வைக்கிறது. தமிழ்க் கடவுளுக்கு அயல் நாட்டில் இவ்வளவு பெரிய சிலை இருக்கும் பெருமையும் நம்முள் எட்டிப் பார்க்க அதனாலும் நம். தலை மேலும் உயர்கிறது.
வேல் தாங்கிய கரமும் புன்னகை தவழும் முகமும், அருள் பொழியும் விழிகளும் கொண்டு 147அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சிதரும் இந்த முருகன் சிலைதான் உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாம். 2006இல் இச்சிலை அமைக்கப் பட்ட பின்னர் சுற்றுலாப் பயணிகள் வரவு பலமடங்கு அதிகரித்துள்ளது என்று மகிழ்வோடு சொல்கிறது இந்நாட்டு அரசாங்கம் இந்தியச் சிற்பிகளும், மலேசிய சிற்பக் கலைஞர்களும் இணைந்து இச்சிலையை வடிவமைத்திருக்கிறார்கள்.
பெருமையும் வியப்புமாக கழுத்து வலியையும் மறந்து சிலையை அண் ணாந்து பார்க்கிறோம். அடுத்து வழிப்
அருள் ஒளி
- 42

பிள்ளையார் கோயில். கணபதி முன் கைதொழுதுவிட்டு மீனாட்சி, சிவன் தரிசனம் முடித்தபின்னர், முருகனின் ஆறுபடை வீடுகளைத் தரிசிக்கலாம்.
ஒரு நிமிடம் கோயிலுக்குள் நுழையும் முன் சற்று நின்று, நிதானமாக மூச்சு வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், பத்துமலை முருகனைக் கண் குளிர தரசிக்க நாம் 275 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
படியேறும் வழி நெடுக கடைகள் இருக்கின்றன. மலேசியாவில் தமிழ் பற்றி தனியாகக் கூறவேண்டியதில்லை. எங்கும் தமிழ் மணம்தான். வியாபாரிகள் அனை வருமே பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த தமிழர்கள். இன்னொரு விஷயம், கையில் உணவுப் பொட்ட லங்களோ, பழங்களோ கொண்டு சென்றால் ஜாக்கிரதை; குரங்குகள் துரத்திப் பிடுங்கிவிடும். நம் ஊர் மலைக்கோயில் களைப் போலவே இங்கும் குரங்குக்
கூட்டம் அதிகமாக இருக்கிறது.
மலை ஏறி மேலே வந்தவுடன் குகைக்குள் செல்ல மீண்டும் படிகள். இம்முறை கீழே இறங்கிச் செல்ல வேண்டும் இங்கும் கடைகள், பூ, பழம், அர்ச்சனைத்தட்டு, தமிழ் சினிமா சீடிக்கள் என அனைத்தும் கிடைக்கின்றன.
வெயில் நேரத்தில் மலையேறி களைப் புடன் கோயில் இருக்கும் குகைகளுக்குள் நுழைந்தால், சில்ன்ெறு இருக்கிறது.
சுப்ரமணியஸ்வாமி என்னும் திருப்பெயர் தாங்கி இங்கு வீற்றிருக்கும் பெருமான் முன், தமிழர்கள் மட்டுமன்றி மலேசிய
ஐப்பசி மாத மலர் - 2013

Page 45
மக்களும் பக்தியோடு நின்று பிரார்த் தனை செய்கிறார்கள். கோயிலில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படுகிறது.
தெய்வ சாந்நித்யம் தவழும் இங்கே வேறுபாடுகள் கடந்து எந்நாட்டவரும் கந்தனைப் பணிந்து பக்தியில் ஆளும் காட்சி பரவசமானது. அந்த சூழல் அனுபவித்தால் மட்டுமே உணரக்கூடிய அலாதியானது. அமைதியும் ஆனந்தமும் தரக்கூடியது. பிரார்த்தனை செய்தபின், வேல்பிடித்து நின்றிருக்கும் வடிவேலன் வெற்றிகளை நமக்கு நிச்சயம் அருள்வான் என்ற நம்பிக்கை நம்முள் பிறப்பது நிச்சயமானது.
கோயிலுக்குள் வலம் வரும் பன்னாட் டவர் நெற்றியிலும் திருநீறு கமழ்கிறது. அதனைக் காண்கையில் சண்முகன் தமிழ்க் கடவுள் மட்டுமல்ல சர்வதேசக் கடவுள் எனும் எண்ணம் வருகிறது.
தைப்பூசத் திருவிழா தமிழகத்தை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இங்கே 1893ல் முதல் தைப்பூசத் திருவிழாவினைக் கொண்டாடியிருக் கின்றனர். வருடந்தோறும் தைப்பூசத் திருவிழாவின் போது, இந்து மக்களைத் தவிர சீன, மலாய் மக்களும் பத்து ஆற்றில் நீராடிவிட்டு, அலகு குத்திக் கொள்வது, பால்குடம் எடுப்பது, காவடி என நேர்த்திக் கடன்களைச் செய்கிறார்கள். பால் காவடி மச்சக் காவடி, பன்னீர்க்காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என பலவகைக் காவடிக் கொண்டாட் டங்கள் நடைபெறுகின்றன.
அருள் ஒளி,
- 4

பக்தியுடன் பால்குடம் எடுத்துச் செல்கையில் 'நான்' என்னும் அகந்தை அழிந்து போகிறது. அதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளுக்குக் காத்திருந்து வருகிறோம் என்கின்றனர் மலேசிய பக்தர்கள்.
பக்தர்கள் சாமியாடுவதையும், அலகு குத்திக் கொள்வதையும் ஆச்சரியத்தோடு பார்க்கவும் டாக்குமென்டரி படங்கள் எடுக்கவும் வெளிநாட்டினர் கூட்டம் கூடுவது தனிக்கதை.
கோயிலை அடைய சுமார் 160 மலைப் பாதைகள் இருக்கின்றன. படிக் கட்டுப் பாதை இருந்தாலும் பல இளை ஞர்கள் தெய்வீக யாத்திரை போல் மலையேறி வந்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
காரைக்குடியைச் சேர்ந்த சிற்பிகளின் கைதேர்ந்த வேலைப்பாடுகளுடன் சமீ பத்தில் சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளி ரதம் மலேசிய முருகனுக்கு உருவாகியிருக்கிறது.
'வேற்றுமத மக்கள் அதிகம் வாழும் நாடாக மலேசியா இருப்பினும், பத்து மலைக் கோயிலை மலேசியாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களுள் ஒன்றாக அரசின் சுற்றுலாத்துறையே விளம்பரப் படுத்துகிறது. அதனைப் பார்க்கையில் தமிழர் என்ற கர்வம் வரத்தான் செய்கிறது.
B -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 46
சமயச் சடங்குகள் விரு
பூஜை செய்யும்போது
ஆலயங்களில் மக்கள் கூட்டம் அதிக மாக இருக்கும். இதன்போது ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு எள்ளது. கற்பூரம் கொளுத்தும்போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது. அத்துடன் ஒட்சிசன் வெளிவிடப்படுகின்றது. அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்துவிடு கிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல்நலம் கிடைக்கிறது. கூடவே இறை யருளையும் பெறமுடிகிறது. கற்பூரம் கடைசி வரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. அதுபோல மனிதன் இறந்த பிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்தத் தத்துவத்தை உணர்த்தவே கோயில் களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப் போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது. மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாத மாகக் கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத் தியம் மிஞ்சும். அதை பிரசாதமாகக் கொடுப்பதற்கு வழி உண்டு. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப் போல நாமும் மற்றவர் களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.
அருள் ஒளி

தஞானப் பார்வையில்
காலில் விழுந்து வணங்குவது ஏன்?
பழங்காலம் தொட்டே தமிழகத்தில் காலில் விழுந்து வணங்கும் பழக்கம் உள்ளது. இதன் அடிப்படையான காரணம் என்னவெனில், ஆன்றோர்கள் காலிலும், ரிஷிகளின் காலிலும் விழுந்து வணங்குவ தால் அவர்களின் ஆசியினால் நம்முடைய பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை யாகும். பொதுவாகவே உயர்ந்த தர்ம சிந்தனை கொண்ட பெரியோர்களின் காலில் விழுந்தால், நம் பாவங்கள் விலகி, அவர்கள் செய்த புண்ணியங்களும் நமக்குச் சேரும். சுயலாபத்திற்காக பாவிகள் காலில் விழுந்தால் அவர்கள் பாவமும் நம்மை வந்து சேர்ந்துவிடும். அதேபோல் பணத்திற் காகவும் மற்ற தேவைக்காகவும் யார் காலிலும் விழக்கூடாது.
மார்க்கண்டேயரின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து கொண்ட அவர் தந்தை வயதான சான்றோர் அனைவரின் காலிலும், விழச் செய்தார். அதேபோல் சப்தரிசிகள் காலில் விழும்போது அவர்கள் சிரஞ்சீவியாக வாழு என்றார்கள். அப்புறம் தான் அவர்களுக்கே மார்க் கண்டேயனின் அல்பாயுசு அமைப்பு தெரிய வந்தது. இருந்தாலும் சப்த ரிஷிகளின் ஆசீர்வாதத்தால் சிவபெரு
மானால் மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக . வாழ்ந்தார் என்பது புராணமாகும்.
நம்முடைய முதல் தெய்வமான. பெற்றோர்கள் காலில் விழுந்து
ஐப்பசி மாத மலர் - 2013

Page 47
வணங்கினால் நம்முடைய கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். பாவங்கள் விலகி வளமான வாழ்வு அமையும் என்பதே உண்மையாகும். அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
விநாயகரின் வாகனம் மூஞ்சுறு தத்துவம்..
அவரது வாகனம் மூஞ்சூறு. இருளில் தான் சஞ்சரிக்கும். அத்துடன் மூஷி கத்திற்கு வாசனை பிடிக்கும். வாசனை பிடித்துக் கொண்டே எந்தெந்த உணவுப் பொருள் எங்கிருக்கிறது எனக் கண்டு கொள்ளும். ஆன்மீகத்தில் இருள் என்பது அஞ்ஞானத்தையும் வாசனை என்பது ஆசைகளையும் குறிக்கிறது. எனவே தான் அஞ்ஞானத்தையும் ஆசைகளையும் கட்டுப் பாட்டில் வைப்பவர் என்பதை விளக்கவே அவற்றின் உருவமாக விளங்கும் மூலி கத்தை வாகனமாகக் கொண்டு உள்ளார். விநாயகர் சதுர்த்தியில் விசேடமான உணவுப் பண்டங்கள் கடவுளுக்கு நிவே தனமாக அளிக்கப்படுகின்றன. அப்பண் டங்கள் நீராவியில் தயாரித்தவை அல்லது எள் அறுவடையாகும். எள்ளானது சுவாச சம்பந்தமான நோய்களையும் கண் நோய்களையும் தீர்க்கவல்லது. நீராவி யில் வெந்த பண்டங்கள் சீரணிக்கக் கூடியவை ஆகும். இவ்வாறு முன் னோர்கள் ஆரோக்கியமும் ஆனந்தமும் கூடிய வகையில் இறைவனை வழி பட்டார்கள். ஊரில் கோயில் கோபுரம் உயரமாக
இருக்கவேண்டும் என்பது ஏன்?
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ் ஞானம்!! மன்னராட்சிக் காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக அருள் ஒளி

எந்தக் கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங் களையும் அதன் மேல் இருக்கும் கலசங் களையும் பார்த்திருப்பீர்கள். அவற் றுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மீகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (Earth) கலசங் களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்கா சோளம், சாமை, எள்) ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானி யத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப்போனால் ஆச்சரிய மாக இருக்கிறது. "வரகு" மின்னலைத் தாங்கும் அதீத ஆற்றலைப் பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்தக் கல்லூரியில் படித் தார்கள் எனத் தெரியவில்லை!! இவ்வளவு தானா... இல்லை, பன்னிரெண்டு வருடங் களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்டுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாக மட்டும் கடைப்பிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்தத் தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி
இருக்கிறது. அதன் பின்பு அது செயல்
15 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 48
இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!! அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? எவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் "எர்த்" ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம்,
HெR Te),
வாழ்த்து
அகவை 70வது, |கலாநிதி மனோன்மணி
வாழ்த்து சிறந்த பேச்சாளரும் கட்டுரைகளை எ மகாநாடுகள் பலவர் சேர்த்து வருபவர். 4 கலாநிதி அ. சண பல்லாண்டு நி பிரார்த்திக்கிறோம்.
அருள் ஒளி

ஐம்பது மீற்றர் என்றால் நூறு மீற்றர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள்!!! அதாவது 7500 சதுர மீற்றர் பரப்பில் இருக்கும். மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள். சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 7500 சதுர மீற்றர் பரப்பளவைக் காத்துக்கொண்டு நிற்கிறது!! இது ஒரு தோராயமான கணக் குத்தான். இதைவிட உயரமான கோபுரங்கள், இதைவிட அதிகமான பணிகளைச் சத்த மில்லாமல் செய்து வருகின்றது.!!! பிரமிப்பு! இதை எல்லாம் பார்க்கப் போனால் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வரு கின்றது. சும்மாவா சொன்னார்கள் பெரியவங்கள்!!!
நன்றி : இணையத்தளம்
(தினகரன் - இந்தியா)
கிறோம் நிறைவு பெறும் சண்முகதாஸ் அவர்களை) கிறோம் தமிழ்மொழி ஆய்வாளரும், பல ஆன்மீகக் ழுதியவருமாகிய அம்மையார் உலக Dறில் பங்குபற்றி எம்மண்ணுக்குப் பெருமை அன்னாரது கணவர் வாழ்நாட் பேராசிரியர் சமுகதாஸ் அவர்களோடு பல்லாண்டு றைவாக வாழ துர்க்காதேவியைப்
- அருள் ஒளி
ஐப்பசி மாத மலர் - 2013

Page 49
இரத்தச்சோகை /
இரத்தத்தில் ஹீமோகுளோபீன் (Hb) குறைவடைவதால் ஏற்படும் நோய் நிலையே இரத்தச்சோகை எனப்படும். இக் ஹீமோகுளோபினே உடல் முழுவதும் ஒட்சிசனைக் கொண்டுசென்று உடற் செயற்பாடுகளைச் சரியான முறையில் தொழிற்பட வைக்கிறது.
இது ஏற்படுவதற்கான காரணங்கள் 1. இரத்த இழப்பு
இரத்த இழப்பு எனப் படும்போது திடீரென ஏற்படும் இழப்பாகவோ அல்லது சிறிது சிறிதாக நீண்டகால இழப்பாகவோ
இருக்கலாம்.
உ-ம் : திடீர் இழப்பு - விபத்துக்கள், சத்திரசிகிச்சை. இவற்றிற்கு அதிகமாக இரத்தம் வழங்கப்படும்.
நீண்டகால இழப்பு - உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் நோய்கள் - குடற்புண் (Ulcer) மூலம் (Pile) புற்றுநோய் (Cancer) 2. சில மருந்துகளின் தொடர் பாவனை
(உ-ம்) அஸ்பிறின், புறுபன் 3. பெண்களில் மாதவிடாய் நேரத்தில்
அதிக இரத்தம் வெளியேறல். மகப்பேற்றின் பின்னரான குருதிப் பெருக்கு.
2. உற்பத்தியில் பாதிப்பு
இது பொதுவாக உற்பத்திக்குத் தேவையான உணவின் கூறுகள் கிடைக்கப் பெறாமையால் ஏற்படுகிறது. பிரதான மாக இரும்புச்சத்து, விற்றமின் B12, அருள் ஒளி

பாண்டு (Anaemia)
Dr. S. டிசியந்தி அவர்கள் துர்க்காதேவி ஆயுள்வேத வைத்தியசாலை
போலிக்கமிலம் என்பன உற்பத்திக்கு இன்றியமையாதன. எனவே இவற்றை நாம் உணவில் தினமும் எடுக்காதவிடத்து உற்பத்தி செய்யப்படும் இரத்தத்தில் பாதிப்பு ஏற்படும். சில நோய் நிலை களிலும் உற்பத்தி பாதிப்படையும். (உ-ம்) எலும்பு மச்சையில் நோய் ஏற்படும். (Bone marrow and stem cells problem)
ஈரல் பாதிப்பு - liver disease
| 1 கங்காவின்
3. இரத்தத்தில் சிவப்பணுக்களின் அழிவு (Red blood cells) இது பொதுவாக நோய் நிலைகளிலேயே ஏற்படும்.
eg _ மலேரியா தாக்கம், கொழுக்கிப் புழு தாக்கம்.
3. 2
இதன் அறிகுறிகள் 1. உடல் வெளிறல் - தோல், நாக்கு, கண்மடல், நகங்கள் என்பவற்றில்
அறியமுடியும். 2. களைப்பு / சோர்வு / மயக்கம்
திடீரென உடல் பருத்தல் 4. தூக்கமின்மை 5. இருதய படபடப்பு 6.
கை கால்கள் வீக்கம் 7. மூச்சுக்கஷ்டம் 8. ஞாபகமறதி 9. சிறுவர்களில் வளர்ச்சி பாதிப்பு 10. கர்ப்பவதிகளில் ஏற்படுவதால் நிறை
குறைந்த பிள்ளை உருவாதல், சிசு
மரணம் ஏற்படல். 11. இலகுவில் நோய்கள் தொற்றிக்
கொள்ளல்.
:7 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 50
இதனை அறிந்து கொள்ளுவதற்காக இரத்தத்தினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதாவது முழுமையான இரத்த எண்ணிக்கை (Full blood count) இனை பரிசோதித்து அறியலாம். இது சாதாரணமாக ஆண்களில் - 12 - 18g
பெண்களில் - 12 - 16g
நிவர்த்தி செய்தல்
3 இரத்தசோகை அதிகம் (severe
anaemia) எனில் குருதி ஏற்றல், மருந்துகள் பயன்படுத்துவது இன்றி யமையாதது. அதாவது மருந்துகள் எனப்படும் போது இரும்புச்சத்து, விற்றமின், போலிக்கமிலம் போன்றவை யாகும். (Supplements)
இரத்தசோகை குறைவாக (Moderate/ mildanaemia) இருப்பின் உணவுகளைச் சரியான முறையில் உட்கொள்வதுடன் மருந்துகள் தேவைப்படுமிடத்து அவற்றையும் பயன்படுத்தலாம்.
முக்கியமாக உணவில் இரும்புச்சத்து அற்ற உணவுகளை தினமும் உள்ளெடுப்ப தாலேயே இரத்தச்சோகை பெரும்பாலா னோருக்கு ஏற்படுகிறது.
வ4ை
நயான்
இரத்தச்சோகை ஏற்படாது தடுக்க சில வழி வகைகள் 1. தினமும் ஒவ்வொரு வகையான இலைக்கறிகளை உணவில் சேர்த்தல். அத்துடன் இவற்றில் காணப்படும் இரும்புச்சத்து அகத்துறிஞ்சுவதற்கு விற்றமின் C தேவை. எனவே தேசிப்புளியையும் தினமும் உணவில்
சேர்த்தல் வேண்டும். (உ-ம்) முளைக்கீரை, பொன்னாங்காணி,
வல்லாரை, வாதமடக்கி, வாதநாராணி,
அருள் ஒளி
4

2. 2
அகத்தி, முசுட்டை , முல்லை, வண்டு கொல்லி, கரட் இலை, பீற்றூட் இலை வள்ளல் கீரை, கொவ்வை, தூதுவளை, மொசுமொசுக்கை, குறிஞ்சா (பெரியது / சிறியது) தவசி முருங்கை, கறி முருங்கை, சண்டி, தொய்யில், சாறணை கீரை, தோட்டக் கீரை, பனங்கீரை, கறிவேப்பிலை, பசன் புருட் இலை, பசளி, லீக்ஸ், முள்ளங்கி ' இலை, வட்டத்துத்தி இலை, பூசணி இலை, மரவள்ளி இலை போன்றவை. பேரீச்சை, திராட்சை போன்ற பழங்களை தினமும் 3-5 பழங்களை உண்ணல். உணவில் மல்லி, நற்சீரகம், கடுகு, மிளகு என்பவற்றையும் தினமும் உண்ணல். இதனாலேயே முன்னோர் பூப்படைந்த, மகப்பேற்றின் போது காயம் கொடுத்தார்கள். ஏனெனில் காயச்சரக்குகளில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. அக் காலங் களில் இரும்புச்சத்து அதிகம் தேவை என்பதை இன்றல்ல, எமது முன்னோரே
தெரிந்து வைத்திருந்தனர். 4. சிறிதளவு மீன், இறைச்சி என்பவற்றை தினமும் உள்ளெடுப்பதனாலும்
இதனைப் பெற்றுக் கொள்ளலாம். 5. பழங்களைத் தினமும் உணவில்
சேர்த்தல். (உ-ம்) வாழை, கொய்யா, தோடை,
அப்பிள், விளாம்பழம், நெல்லி, மாம்பழம், பப்பாசிப்பழம். 6. தேன் தினமும் 2 மேசைக்கரண்டி
பயன்படுத்துதல். உணவு உண்பதற்கு 1/2 மணிநேரம் முன்பும், பின்னரும் தேனீர், கோப்பி அருந்துவதைத் தவிர்த்தல். தானியங்களைக் கோதுடன் பயன் படுத்துவது சிறந்தது.
ஐப்பசி மாத மலர் - 2013
7.
8 -

Page 51
9.
நோய் நிலைகளிலும் இரத்தச்சோகை ஏற்படுவதனால் வைத்திய ஆலோ சனைப்படி மருந்து, உணவுகளைப் பின்பற்றி நோய் நிலைகளை மாற்ற வேண்டும். (உ-ம்) ulcer, piles.
யார் இர் கலைந்த தலை சட்டை, வெள்ள அடையாளம். மது எரிக்கவும், புதைக் பணியாற்றுபவர். நடத்திய சாதனை விழாவில் விருது தந்தையை இழந்த இவர் 12 வயதில்
மயானமாகும். பசி செய்யத் தயாராக இருந்த ஹரிக்கு அா உதவியாளர்களின் உதவியாளாக இருக்கு என்பதோடு நேர, நேரத்திற்கு சாப்பாடு கிடை கற்றுக் கொடுத்தது. அதில் முக்கியமானது ! காரணமாக இவர் படிப்படியாக வளர்ந்து மய வருடகாலமாக இந்த வேலையைச் செய்தபே கொள்ளாமல் தன் தேவைக்கு மேல் வருவது வருகிறார். ஏழை மாணவ, மாணவியரை படி வாங்கிக் கொடுப்பது, உடல் ஊனமுற்றவர் கொடுப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு | பார்வையற்றவர்களுக்கு ஊன்றுகோல் வழ இருக்கிறார். கையில் கொஞ்சம் காசு இருந்தது அவர்களுக்கு உதவி செய்ய இவர் கிளம்பி சடலங்களை எரித்தும், புதைத்தும் உள்ள சடலங்களுக்கு இவரே உற்றமும், நட்புமாக இந்த விஷயங்களை எல்லாம் கேள்விப்பட் வழங்கப்பட்டது. சுதேசி நிர்வாக ஆசிரியர் ஹண்டே முன்னாள் பொலீஸ் கமிஷனர் நந்த விருதினை வாங்கும்போது எழுந்த கை எவ்வளவோ பேரின் சடலங்களை எரித்தும், தெரியுமா? தன் மரணத்திற்குப் பிறகு தனது மாறாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் படி கல்லூரிக்குத் தானமாக வழங்கிவிட வேண்
அருள் ஒளி

இவற்றிற்கு மேலதிகமாக தாங்கள் மேற்படி உணவுகளைக் கைக்கொண்டும் மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தென்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நத ஹரி?
ல, செருப்பில்லாத கால்கள், அழுக்கு வேட்டி, ந்தியான தோற்றம். இதுதான் ஹரியின் துரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை கவும் செய்யக்கூடிய மயான உதவியாளராகப் சென்னையில் கடந்தவாரம் சுதேசி பருவ இதழ் யாளர்களுக்கான "துருவா விருது வழங்கும் பெறுவதற்காக உட்கார்ந்திருந்தார் அவர். தாய், நிலையில் வறுமையும், வாழ்க்கையும் விரட்ட தஞ்சமடைந்த இடம்தான் மதுரை தத்தநேரி Fக்காக நேர்மையான எந்த வேலையையும் ங்கிருந்த வெட்டியான் எனப்படும் மயான நம் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தது த்தது. மயானம் இவருக்கு பல விஷயங்களைக் எதற்கும் ஆசைப்படாதே என்பதுதான். இதன் பான் உதவியாளராக மாறிகிட்டத்தட்ட நாற்பது பாதும், தனக்கு என்று எதுவும் சேர்த்து வைத்துக் து அனைத்தையும் சேவைக்காகச் செலவிட்டு க்கவைப்பது, அரச ஆஸ்பத்திரிகளுக்கு கட்டில் ர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுப்பது, பங்குவது என்று ஏதாவது செய்து கொண்டே துவிட்டால் தகுதியான ஆளைத் தேடிப் பிடித்து விடுவார். இதுவரை 2 லட்சத்து 88 ஆயிரம் Tார். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற இருந்து இறுதிச் சடங்கினைச் செய்துள்ளார். டதன் அடிப்படையில்தான் அவருக்கு விருது பத்மினி ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பாலன் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து வழங்கிய தட்டலின் சத்தத்தில் அரங்கம் அதிர்ந்தது. புதைத்தும் வரும் ஹரியின் விருப்பம் என்ன உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது, ப்பதற்கு உதவியாக தனது உடலை மருத்துவ டும் என்பதுதான்.
நன்றி - இணையத்தளம்,
நான் தமிழ
19 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 52
--
சிறுவர் விருந்து
தொண்டைமான்
அன்பான பிள்ளைகளே!
அன்பான தீபாவளி வாழ்த்துக்கள். சிறுவர் தினம், முதியோர் தினம், உளவளநாள், உணவு தினம், அஞ்சல் தினம் என்று பல நல்ல நினைவூட்டல் தினங்கள் இந்தஐப்பசிமாதம் வருகின்றன. மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கூட அக்டோபர் இரண்டாம் திகதிதான். நல்லவற்றை நினைக்கவும், செய்யவும் தூண்டுவது நல்ல செயல்தானே!
இன்று இப்படி ஒரு நல்ல செயல் செய்த மனிதர் பற்றி அறிந்து கொள்வோமா!
தமிழ்நாட்டிலே திருச்சி என்று ஒரு ஊர் இருக்கிறது. திருச்சிராமலை என்று ஒரு சிறு மலையும் இருக்கிறது. அந்த மலையின் சிகரத்தில்தான் மலைக் கோட்டைப் பிள்ளையார் என்ற அருள்மிகு பிள்ளையார் கோயில் இருக்கிறது. மலையில் நடுப்பகுதியில் தாயுமான சுவாமி கோயில் இருக்கிறது. திருமாலை கட்டிக்கொடுத்துத் தொண்டு செய்த ஒரு முதிய தாய் வடிவில் வந்து அவர் மகளுக்கு மருத்துவிச்சியாகப்பணி செய்த சிவபெருமான் தாயுமானவர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். அம்பாள் பெயர் மட்டுவார் குழலி.
இந்தப் பகுதியில் ஆலயத்தை மலையைக் குடைந்து அமைத்தவர் மகேந்திர பல்லவன் என்ற அரசன். அவனுக்குப் பின் தொண்டைமான் அரச . பரம்பரை இந்தப்பகுதியை ஆண்டு இருக்கின்றது. அருள் ஒளி
1.

சத்திர விருந்து
சகோதரி யதீஸ்வரி அவர்கள் தொண்டைமான் ஆட்சிக்காலத்தில் தாயுமானவர் கோயிலுக்கு அருகே ஒரு சத்திரம்கட்டிவைத்தனர். போக்குவரத்து வசதிகளற்ற அந்தக் காலத்தில் மலைமீது ஏறி ஆலய தரிசனம் செய்யும் சாது சந்நியாசிகள், பக்தர்கள் இளைப்பாறுவதற்கு அந்தச் சத்திரம் பயன்பட்டது.
தொண்டைமான் அரசன் அந்த அடியார்களுக்கு மதிய உணவு அளிக்க ஒரு ஏற்பாடு செய்தான். தினசரி மூன்றுபடி அரிசியை அமுது செய்து சுவாமிக்குப் படைக்கவேண்டும். அதைப் பட்டைச் சாதமாக்கி (கிண ணத்தில் வைத்து கட்டி போல் செய்து) சத்திரத்திற்கு அனுப்பவேண்டும். சத்திரத்துச் சிப்பந்திகள் அதை எடுத்துப் போய் சத்திரத்திற்கு வரும் அடியார் களுக்குப்பிரசாதமாக வழங்கவேண்டும்” என்று கட்டளை செய்தான். அதன்படி தினசரி அமுது கட்டிகள் மடத்துக்கு வரும் அடியவர்களுக்கு அதை மதிய உணவாகக் கொடுப்பார்கள்.
மலை ஏறி இறங்கிக் களைப்புடன் வரும் அடியவர்கள் அந்த அமுதை ஆவலோடு சாப்பிடுவார்கள். சிலவேளை விக்கல் எடுக்கும் தண்ணீரைக் குடித்துக் குடித்து அமுதை விழுங்குவார்கள்.
சத்திரத்தில் மேற்பார்வையாளராக, பொறுப்பாக இருந்த சண்முகநாதபிள்ளை என்பவருக்கு இது மிக வேதனையாக
0 -
ஐப்பசி மாத மலர் - 2013

Page 53
இருந்தது. சில நாள் யோசித்து அவர் ஒரு வழி கண்டுபிடித்தார்.
அரசர் தொண்டைமானின் கட்ட ளையை மீறாமல், அடியார்கள், வயிராற உண்ண ஒரு வழி செயதார். தமது மடத்துச் சிப்பந்திகளுடன் ஆலோ சித்தார். அவருடைய நல்லமனத்தின் விருப்பத்திற்கு அவர்களும் உடன் - பட்டனர்.
தனி ஆளான சண்முகநாதபிள்ளை தமக்கு அரசர் தரும் ஊதியத்தைப் பயன்படுத்தி தினசரி ஒரு சாம்பார், கூட்டு, தயிர், மோர் என்பவற்றுடன் அடியவர்கள் சாப்பிட ஒழுங்கு செய்தார். ஊழியர்கள் மகிழ்வுடன் கறிகளைச் சமைப்பார்கள். கோயில் அமுதுபடி வந்தவுடன் அடிய வர்களுக்கு அன்புடன் பரிமாறுவார்கள். மனங்குளிர, வயிறு குளிரச் சாப்பிட்டுச் செல்லும் அடியவர்கள் "எல்லாம் தொண்டமான் புண்ணியம், அரசர் நீடூழி வாழ்க!" என்று வாழ்த்திச்செல்வார்கள்.
இந்தச் செய்தி அரசர் தொண்டை மானுக்கும் எட்டியது வெறும் அமுது மட்டும்தான் கொடுப்பதென்பது தமது கட்டளையாய் இருக்க, ஆடம்பரமான விருந்து படைக்கிறார்களாமே நம் சத்திரத்தில்..." என்று யோசித்தார். உண்மையை அறிய ஒருநாள் சரியாக மதிய உணவு வேளை சத்திரத்திற்கு விஜயம் செய்தார் அரசர். கணக்கு வழக்கைப் பார்க்கவேண்டும் என்றார். சண்முகநாதபிள்ளை கணக்குப் பதிவுகளைப் பயபக்தியுடன் காட்டினர். அதில் மதிய உணவுக்கு மூன்றுபடி அரிசிக் கணக்கு மட்டுமே இருந்தது.
அரசர் பலவாறு விசாரித்தார். பிள்ளை பயபக்தியுடன் தாம் அடியார்கள் வெறும்
அருள் ஒளி.

அமுதை விழுங்கிய காட்சி கண்டு அவர்கள் நன்றாகச் சாப்பிடவேண்டும் என்ற ஆர்வத்தில் செய்த ஏற்பாட்டைப் பற்றி விபரித்தார்.
"தனிப்பட்டமுறையில் இவர் தமக்குப் பேரும் புகழும் தேடுகிறாரே!” என்று அரசர் மனம் கொதித்தது. அதேவேளை தாயுமான சுவாமிக்கு அரோகரா! தொண்டமான் அரசர் நீடூழி வாழ்க!" என்ற கோசத்துடன் ஒரு அடியார்கூட்டம் சத்திரத்துக்கு வந்தது. வெய்யில் நேரம். விரதமிருந்து வெகுதூரமிருந்து வந்து மலை ஏறித் தரிசனம் செய்து, மிகுந்த பசியுடன் வந்த அந்த அடியவர்களை உபசரித்து, மடத்துச் சிப்பந்திகள் உணவு படைத்தனர். அரசர் மறைந்திருந்து
பார்த்தார்.
சாம்பார், கூட்டுடன் மோர், தயிர் விட்டு வயிராறச் சாப்பிட்டு எழுந்த அவர்கள் முகங்களில் தோன்றிய மகிழ்ச்சியையும்,
"அப்பா! மலைக்கோட்டைப் பிள்ளையாரே! தாயுமான சுவாமியே! எங்கள் அரசர் தொண்டைமான் நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தியபடியே செல்லும் அடியவர்களின் நிறைந்த வாழ்த்தையும் கேட்ட அரசர் தாமும் தாயுமான சுவாமியை நினைத்து கைகுவித்தார். தமது கோபம் அர்த்த மற்றது என நினைத்துக் கூசினர்.
""இனிமேல் , ஒரு சாம்பார், கூட்டு, அவியல், பொரியல், இரசம், மோர் தயிருடன் அடியார்களுக்கு அமுது படைக்கவேண்டும்" என்று கட்டளை எழுதி அதற்கான நிதியையும் உடனே வழங்கிவிட்டு, சத்திரத்தில் இருந்த எல்லோருக்கும் அன்புடன் வணக்கம்
கூறிச் சென்றார்.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 54
அருள் ஒளி தகல்
மாத்தளை முத்துமாரி அம்மன் கும்பாபிஷேகம்
புகழ்பூத்த மாத்தளை முத்துமாரி அம்பாளின் மகா கும்பாபிஷேகம் 15-11-2013 அன்று நடைபெறவுள்ளது. மிக அற்புதமான வேலைப்பாடுகள் நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் மணிவாசகர் மடாலயத்தல் மணிவாசகர் பிரதிஷ்டை
17-11-2013 காலை 7.00 மணிக்கு ஐம்பொன்னிலான மாணிக்கவாசக சுவாமிகள் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. ஈழத்து சிதம் பரத்துக்கு வரும் அடியார்களுக்கு அன்னதானப் பணியை மிகச் சிற்ப்பாக ஆற்றிவரும் மடாலயத்தில் திருமுறை முற்றோதல் நடைபெறுவது சிறப்புக் குரியது.
புதிய மடாலய மண்டபம் திறப்பு
விழா
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தி லுள்ள மணிவாசகர் மடாலயத்தின்
அருள் ஒளி

பல் களஞ்சியம்
புதிய மண்டபத்திறப்புவிழா 01-12-2013 அன்று நடைபெறவுள்ளது. 'தானங் களில் சிறந்தது அன்னதானம்' என்ற தலைப்பில் செஞ்சொற் செல்வரின் சிறப்புரை இடம்பெற வுள்ளது.
முதுபெரும் புலவர் வை.க.சிற்றம்பலம் ஆசிரியரின் நூறாவது பிறந்தநாள்
இணுவிலைப் பிறப்பிடமாகவும் அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மூதறிஞர் முதுபெரும் புலவர் வை.க.சிற்றம்பலம் அவர்களின் நூறாவது பிறந்தநாள் சென்ற மாதம் இணுவிலில் அவரது மகளது இல் லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மல்லாகம் வீரபத்திரர் கோவில் அறங் காவலர் இறைபதம் அடைந்தார்
மல்லாகம் வீரபத்திரர் கோவில் அறங்காவலரும், இளைப்பாறிய அதிபரும், சித்தவைத்திய அறிஞரு மான திருமிகு. தவராசா அவர்கள் இறைபதம் அடைந்தார். பல சமய, சமூகப்பணிகளை ஆற்றிய இப்பெருந் தகைக்கு பலர் அஞ்சலி செலுத்தினர்.
ஐப்பசி மாத மலர் - 2013

Page 55
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான
2 இ3
யாழ் மத்திய கல்லூரியில் ர பட்டிமன்றப் போட்டியில் 6
துர்க்காபுரம் மகளிர்

த்தில் ஏடு தொடக்கல் நிகழ்வுகள்
கார்க்கம்
நடைபெற்ற மாவட்ட ரீதியான வெள்ளிப் பதக்கம் பெற்ற
இல்ல மாணவிகள்

Page 56
சைவத்தமிழ நாவலர் ெ
குருபூசை 2
கார்த்தின
Andra. T.P. 021 222 8929

பின் காவலர் பெருமான்
5-11-2013 Dக மகம்