கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குன்றம் 2008.01

Page 1
கு.
500
ශ්‍රී ලංකා மத 31 AM2
-17(Y1.
சமூக மாற்றத்தி

!பறும்)
த - 2008 |
ISSN - 1800-3958
விலை 30/-
ற்கான சஞ்சிகை

Page 2
ஜே. கே. டிரேடிங் கோ தரமான பொலீதீன் வகைகளும் பொலிதீன் பேக் வதைகளும்
ஏக விநியோகஸ்த்தர்கள்
Dealers in Poliythene, poli/propylene, Shopping Bாரs, Carrier Bags, Grocer14 Bags, Lunch Sheets, Stra14, R10 Materials, H.D.P.E, L.D.P.E, L.L.D.P.E, P.P. Poliustyrene 'ஒ' MasTCr Batch.,
I.K.TRADING CO.,
No. 103A, Bankshall Street,
Colombo - 11. Tel : 242125972338954
Fax: 2387705

விலைவாசி
விஷமேறும் தலைக்கு.....
அரசின் கடமை என்ன? "விறுவிறு வென்று”
நாட்டில் சுபீட்சம் விலை வாசியும் ஏறும்
பொருளாதார மேம்பாடு விஷத்தைப் போல.......
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல்
எல்லோருக்கும் இல்லம் ஈழத்தீவிலும் விலைவாசியின் ஏற்றமும்
எல்லோருக்கும் உணவு விஷத்தைப் போலத்தான்!
எல்லோருக்கும் நல்வாழ்வு!
இது இயலாதென்றால் விஷத்தின் வகைதான்
எதற்காம் அரசு? விளங்க வில்லை ஆலகால விஷமா?
எவனோ ஒரு புத்திசாலி
இப்படிச் சொன்னான் அணுத்துகள் விஷமா?
"பொருட்களை” வாங்கி அல்ல... அல்ல...... "சயனைட்" டின்
விற்பதற்கு அரசு எதற்கு....
வர்த்தகரே போதும் சுவையும் அறியேன்!
அவன் வாய்க்குப் "'சுரீர்" என ஏறும்
போடவேண்டும்... சர்க்கரை! வேகமும் அறியேன்!
சர்க்கரையும் சரியான விலை! அறிந்து கொண்டேன்... விலைவாசி மூலம்!
மாவையும் மண்ணெண்ணையையும் அரிசி விலை ஏறியது
நம்பி வாழும் குடும்பங்களெல்லாம் சீனி விலை ஏறியது
நாடி இழந்து கிடக்கிறார்கள்!
அரசியல்வாதிகளோ.... பெற்றோல் விலையும்
நியாயத்தைக் கேட்க... "பிசாசு” போல் ஏறியது...
நாதியற்றுக் கிடக்கிறார்கள்! "மா' விலையும்
பாவம் - "மளமள' வென்று
போராடவக்கின்றி! ஏறிக்கொடேயிருக்கிறது
தட்டினால்தான் ஓசை! எல்லோரும் மெளனம்
ஆளும் அரசே! "மெளனத்தைத் தவிர
மாவின் விலையையும் வேறொன்றறியேன் பராபரமே”
மண்ணெண்ணையின் விலையையும் என்று எண்ணி
உடனே குறை! எல்லோரும் துயில்கிறார்!
- கலைவாதி கலீல் -
குன்றம் வாழ்க! வளர்க! குன்றத்தில் பிறந்த நான்
குன்றத்தின் குறுகிதான் நிற்கிறேன்
குயில் மக்கள் குறுகி வாழும் எமக்காக
குறை நீங்க குன்றத்தின் குரல்கள்
கூவ வேண்டும் குமுற வேண்டும்
குன்றம் வாழ்க! வளர்க!! - சங்கர் கைலாஷ் - கலஹா

Page 3
லாக 438
( குன்றம்
இதழ் 1
தை 2008 ISSN 1800- 3958
குன்றம்
அக்னி குஞ்சாய் அவதாரம் சஞ்சிகையில் பிரசுரமாகும்
வாசிப்பதும் , எழுவதும் தவம் போல் தொடர ஆக்கங்களின்
வேண் டும். பார்க்கவும், கேட்கவும் ஊடக வளர்ச்சி கருத்துக்கு
உயர்ந்திருந்த போதும், தேடலின் தெளிவுக்கு வாசிப்பை அவற்றை
வளர்க்க வேண்டும். எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும். எழுதியவர்களே பொறுப்பாளிகள்
எனவே, சமுகத்தின் உணர்வுகளை, உண்மை
நிலைமைகளை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், குட்டை முதிய - புதிய
மனங் கள் வளர்வதற்கும், குறுகிய உள் ளங்கள் எழுத்தாளர்கள் காத்திரமான
விசாலமாவதற்கும், சமுக அடையாளத்துடன், ஆக்கங்களை
குறிக்கோளுடன் கதம்பமாக வரவேண் டும். இந்த அனுப்பிவையுங்கள்.
பெருநோக்கோடு சிந்திக்கும் குழுவின் முயற்சியில் "குன்றம்” சகல சமூக
ஜனனித்துள்ளது. முட்டையின் கோதுவினை நீக்கிக் மாற்றத்துக்கான
கொண்டு "அக்னிகுஞ்சாய்" அவதரித்து இருக்கிறது. மாற்று கருத்துக்கள்
சமுக அக்கறையுள்ளவர்களின் ஆக்கமும் வரவேற்க்கப்படும்.
ஊக்கமும் தொடரும் பட்சம் ஆரோக்கியமான மாற்றத்தை
நோக்கி நகர முடியும், வாசிப்பு நம் சமூகம் மத்தியில் வளர (விலை 30/=
வேண்டும். வளர்க்க வழிகள் உருவாக்கப்பட வேண்டும்.
- ஆசிரியர் -
ஆசிரியர் : கலாவிஸ்வநாதன் பதிப்பாசிரியர் : எல். பிள்ளே சண்முகநாதன்
(ஆசிரியர் குழு) பிரதீப் பப்ளிகேஷன்ஸ் 297.5.2இ நீர்கொழும்பு வீதி,
வத்தளை,
தொலைபேசி : 011 - 4970299, 060 - 2135166, 0785 - 367280
மின்னஞ்சல் : Kundramk@yahoo.com
பாண்ட பாபா-ர:

குறுஞ்செய்திகள்
பத்திரிகைதான் பெரிது.
சவால் !
"எனக் குச் சட்ட சபை
மலையக சமூக கட்டமைப்பில் பெரிதல்ல, பத்திரிகைதான் பெரிது.
பலவீனங்கள் காரணமாகவும் நான் சட்டசபைக் குப் போய் மலையக பெரு ந தோட்ட செய்யக் கூடிய நன்மையைவிட
சமூகத்தை பிரதான அபிவிருத்தி பன் மடங்கு அதிக நன்மை
நீ ரோட் டத் திற் கு கொண் டு பத்திரிகையால் ஏற்படுத்த முடியும்".
வரு தலில் பல சவால் களை இல ங் கைத் தமிழ்
எதிர்நோக்க வேண்டியுள்ளது. பத் திரிகையின் முன் னோடி ,
அமைச்சர் பெ. சந்திரசேகரன் இலங்கை சட்டசபையில் இந்திய வம்சாவளி முதல் அங்கத்தவர்.
ஆயுர்வேதம் - தேசபக்தன் கோ. நடேசய்யர்
பதுளை மாவட்டத்தில் புதிய எழுத்தாளர்களின்
பெரு ந தோட் ட த து றையில் பார்வை
ஆயுர்வுேத வைத்தியசாலைகள் "மக்களுக்கு விளங்கும்
அமைக்க பிரதி சுகாதார அமைச்சர் மொழியில் விளங் கக் கூடிய
வடிவேல்
சுரே ஸ் வழியில் எழுதும் எழுத்தாளர்கள்
 ேம ற க' கெ ா ண டு ள ள ார் . மத்தியில் ஓர் அழியா இடம்
பெருந்தோட்டத்துறை மக்கள் பெறுகிறார்கள். இலக்கியம் எந்த
ஆயுர்வேத வைத்திய சிகிச்சைக்கு மொழியில் படைக்கப்படுகின்றதோ
பழக்கப்பட்டு ஆரோக்கியம் பெற அ ந் த மொழியிலே
வழிவகுக்கும். படிப்பவர்களுக்கு அது விளங்க வேண்டும்.
ஓட்டைப்பானை புதிதாக எழுதும், புதிய எ ழுத் தாளர்களும், முதிய
தெற்கின் பேரினவாதக் எழுத்தாளர்களைவிட பார்வை
கடும் போக்கு சக்திகளையும் விரிந் த வர் க ளா க இ ரு க் க
பிராந்திய நலனுக்காக இந்திய வேண்டும். ஏனெனில் அவர்கள்
மேலாதிக்கத்தையும் குளிர்வித்து, ஏற் கன வே செப் பனி டப் பட் ட
அவர் களின் ஆதர வுட ன் பாதையில் செல்கிறார்கள். எனவே,
யுத்தத்தை தீவிரப் படுத் தும் புதிய எழுத்தாளர்களின் பார்வை
வகையிலேயே பதின்மூன்றாவது விரிவானதாக இருக்கவேண்டும்”.
திருத்தத்தை பெயரளவிலேயே - தெளிவத்தை ஜோசப் -
அரைக்குறையாகவும்

Page 4
பெண் சுரண்டல்
நடைமுறைபடுத்த ஜனாதிபதியும்
சில துறைகளில் அரசும் கையில் எடுத்து அரசியல் பெண்களை நியமித்து அதிகமாக தீர்வுக்கான முதல்படி எனக்கூறுவது
வேலை வாங்கி லாபம் ஈட்டி ஓட்டைப் பானையில் நீர் நிரப்பும் வருகின்றார்கள். வெளிநாடுகளில் அர்த்தமற்ற செயல்.
வேலை வாய்ப்புக்களைப் பெற்றுச் - புதிய ஜனநாகய கட்சி..
செல்லும் பெண் கள் பாலியல் முதலான மலிவு தொழில்களிலும்
ஈடு ப டுத் தப் ப டு கின் றார்க ள் . காணியும் வீடும்
தோட்டங்களில் ஊழியர் சேமலாப பெ ரு ந'  ேத ா ட ட த'
நிதி உட் பட மறை முகமான தொழிலாளர்களின் நலன்கள் கருதி சு ர ண் ட ல் களு க் கும் ஆளாகி
அ  ைம ச ச ர  ைவ ய ா ல' வருகின்றார்கள். அங் கீகரிக் கப் பட் டுள் ள 10
உழைக் கு ம்
பெண் ஆண் டுத் திட் டத்தில் 7 பேர்ச் வர்க்கத் தினர் சிந் திக் கத் காணியுடன் வீடுகள் அமைத்துக்
தலைப் படுவதன்
மூலம் கொடுக்கப்பட வேண்டும். என்று
மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, கோரப் பட் டுள் ளது. அதன் படி உரிமைகளைப் போராடிப் பெறுகின்ற அர் சா ங் க ஊழியர் களுக் கு விழிப் புணர்வை மேற் கொள் ள வழ ங் கப் ப டு வ து போல் 4 வேண்டும். வீதவட்டியுடன் கடன் வசதி
- கே. யோகேஸ்வரி - ஏற் ப டுத் திக் கொடுக் கப் பட உழைக்கும் பெண்கள் முன்னணி வேண் டும்
என் பது
மாற்றம் கொள்கையளவில் ஏற் றுக் கொள்ளப்பட்டுள்ளது.
உலக மயமாக் களுக்கு
எதிராகவே "மற்றுமொரு உலகம்" என் வே.
தனியான முன்வைக்கப் பட்டுள் ளது. புதிய காணியை வீடமைப்புக்காக போராடி உலகின் நம் பிக்கை தேவை பெற்றுக் கொள்ளாவிட்டால் எமது என்பதை கார்ல் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் மக்களுக் கு மண் ணுரிமையும் போன்ற மேதைகள் வீட்டுரிமையும் கிடைக் காமல் வ லி யு று த த யு ள் ளார் க ள . தொடர்ந்து கூலிவர்க்கமாகவே வாழ்க்கையை மாற்றியமைக்க இருக்க வேண்டிய நிலை ஏற்படும். வேண் டும் என் பதையும்
- பெ. முத்துலிங்கம் -
கூறியுள்ளார்கள்.
- ஒ. ஏ. இராமையா -

வறுமைக்கு காரணம்
கம்பனிகளின் காரியமாக
தொடர்ந்து கெடுபிடிகளால் பலர் நிறைவேற்றப் பட வேண் டும். தோட் டங் களில் வேலை சம் பந் தப் பட் டவர்கள் சரியாக வாய்ப்பை இழந்துள்ளார்கள்.
கவனித் து
சகல வேலை வாய்ப்பை .
தொழிலாளர்களுக்கும் கிட்ட செய்ய இ ழ ந து ள ள வர் க ள ன'
வேண் டும். இல்லையேல் குடும்பங்களில் அங்கத்தவர்
தொழிலாளர் சாபத்துக்கு ஆளாக தொகையும் வறுமையும்
நேரிடும். அதிகரித் துள் ளதை மறுக்க
மனோ கணேசனுக்கு முடியாது.
பாதுகாப்பு இ அதே
நேரம் தொழிலாளர்கள் மதுவுக்காக
மேலக மக்கள் முன்னணி பணத்தை செலவிடு தால்
தலைவர் மனோ கணேசன் வறுமை அதிகரிக்கின்றது. என்று ஆளுங்கட்சியில் ஐக்கியமாகாது மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் எதிர்வரிசையில் இருந்துக்கொண்டு, தொழிலாளர்களுக்கு எதிரான
தமிழ் தேசிய உணர்வுடன் தனது சதிதிட்டமாகும்.
அரசியலை நடத்தி வருகின்றார். - எஸ். முருகையா -
ஜனவரி முதலாந் திகதி மானிய விலையில்
கொச்சிக்கடை சிவன் ஆலயத்தில்
வைத்து பாராளுமன்ற உறுப்பினர் தி. திடீர் திடீரென உயரும்
மகேஸ் வரன் படு கொலை விலைவாசி உயர்வால்
செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து குறைந்த ஊதியம் பெரும்
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற தோட்டத் தொழிலாளர்கள்
உறுப்பினரான மனோ கணேசனுக்கும் திக்கு முக்காடும் திரிசங்கு
மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டைவிட்டு நகரும் நிலைக்கு தொழிலாளர்கள் துயர்துடைக்க
இட்டுச் சென்றுள்ளது. மானிய விலையில் அரிசி
மனோ கணேசன் எம்பியின் வழங்கும் வைபவம் நாட்டின் ஜனாதிபதி கரங் களில்
பாதுகாப்பு குறைக்கப்பட்ட நிலையில்
நீதிமன்றம் செல்ல எட்டுப் பேரை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு அமர்த்தும் படி காணி உறுதிப்பத்திரம்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடுத் தது போன்று கண் துடைப்பாக இல்லாமல்

Page 5
சிரசு
பதில்கள்!
* விஷ மாய் ஏறும் : நாட்டில் கொலையுதிர்காலம் விலைவாசியால் ஏற் படும் -
ஒழியும் நாள் வருமா? விளைவுகள் என்ன?
ஆர். சுமதி ' - வவுனியா ஜி. ஞானகுமாரி - இரத்மலானை
கலியுகம் கழியட்டும்! குண்டுப்பட்டு சாவதைவிட கொடுமையானது.
* வருமானம் குறைவு செலவு * அட்டன் நகரில் எத்தனை
அதிகம் வாழ்க்கையை நடத்துவது தொழிற்சங்க காரியாலயங்கள்
எப்படி? உள்ளன?
க. அன்பழகி
கண்டி அருள்ஞானம் - அட்டன்
உபு
தொழிலை எண்ணிப் பார்த் தால்
தேர்ந்தெடுங்கள். "மரக்கறி தோட்டம் இரண்டு டசின்கள்.
போடலாமே தையல் தொழிலை - மக்களின் மெளனம் எங்குப்
நாடலாமே!" போய் விடியும்?
* பாடசாலைக் கல்வியுடன் கந்தசாமி
மட்டக்குளி
சமூகக்கல்வி கற்பது அவசியமா? எத்தனை நாள் மௌனமாக
எஸ். கீதாகுமாரி - நாவலப்பிட்டி இருப்பது. மக்கள்தான் தீர்மானிக்க
அ ச மூ க க க ல் வி யுட ன் வேண்டும்.
தொழிற்கல்வி பயில்வதும் அவசியம். * ஏனைய தொழிலாளர்களுக்கு
* தோட்டக் குடியிருப்புகள் போன்று
தோட்டத்
தொழிலாளர்க்கு சொந்தம்தானே? தொழிலாளர்களுக்கும் சம்பள
வி., லோகநாதன்-தலவாக்கலை உயர்வு கிடைக்காதது ஏன்?
அப்படித்தான் நினைத்துக் வி. சந்ரகாந்தன் - இரத்தினபுரி
கொண்டிருக்கிறோம். ஆனால், தோட்டங்களை கம்பனி
இல்லை! யாருக்கு கையளிக்கப்பட்டதின் விளைவு.
6

* இல்லற வாழ்க்கை இனிக்க
* விளையாட்டு பொழுது கணவன் மனைவி இருவரில் யார்
போக்கா? அதிமுக்கிய காரணம்?
வி. வினோராஜா - அவிசாவளை எம்.எஸ்.ஜெனிட்டா - மருதானை
உடலை முறுக்கேற்றும் இருவருமே! ஒருவரை
உடற்பயிற்சி. அளவோடு இருந்தால் ஒருவர் புரிந்துக் கொண்டால்
ஆனந்தம். உருவாகும் இன்பம்
* மது, மாது எதில் சுகம் அதிகம்? CL காதலில் லாமல்
எம். வாமதேவன் - மருதானை வாழ்க்கையுண்டா?
மனதில் கண்ணியமான ஜி. எஸ். பாஸ்கரன்- இங்கிரியா
கட்டுப்பாட்டில் மலரும் சுகம். நிச் சயமாக இல்லை !
* சினிமா - தொலைகாட்சி காதல் இல்லையேல் வாழ்தலில்லை.
நாடகம் எது மக்களை உடனே : பெண்கள் சுமக்கும் சுமை
சென்றடைகிறது? பெரும் சுமைதானே
பி. சரோஜினி - களுத்துறை கே. திவ்யா - வெள்ளவத்தை
தொலைகாட்சி நாடகந்தான் சுமைக் கேற்ற சுகமும்
வீட்டுக் குள் வந்து ராஜ்யம் உண்டு. சுமையை பகிர ஆண்
பண்ணுகின்றது. துணையாகும் போது.
: இலங்கை அரசியலில் இந்திய * தொழிலாளர் போராட்டம்
வம்சாவளி மக்களின் இருப்பு சோர்வடைய தொழிற் சங் கப்
எங்கே இருக்கிறது? பெருக்கம் காரணமாகுமா?
எம். சங்கர்
- பதுளை பி. செல்வராஜா - ஹட்டன்
அடையாளப்படுத்தப்படாததால் தொழிற் சங் கத்
இருப் பை தேட வேண்டிய தலைமைகளின் முரண்பாடுகளே நிலையில் இருக்கிறோம்.
காரணம்.
என் கேள்விக்கு என்ன பதில்? என்று உங்கள் உள்ளம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் வேண்டுமா? உங்கள் கேள்விகளை உடனே எழுதி அனுப்புங்கள்.
tார் சிரசு பதில்கள்
"குன்றம்". 279/5/2, நீர்கொழும்பு ரோட்,
வத்தளை.

Page 6
மலையகமும் 60 ஆண்டு சுதந்திரமும்
இலங்கை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட கால கட்டமான 1820களில் பெருந்தோட்ட பயிர்செய்கையை ஆரம்பிப்பதற்காக தென் இந்தியாவில் இருந்து தமிழ் கிராம கூலி விவசாயிகளை வெள்ளையரால் அழைத்து வரப்பட்டனர்.
அவ்வாறு வந்த சமூகம் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காது. வரும் வழியில் தனது சொந்தங்களை இழந்து துன்பத்திலும் துயரத்திலும் மலைப்பிரதேசம் வந்து பெருந்தோட்ட பயிர்செய்கைக்கு தன் இன் உயிரையும் தியாகம் செய்தனர்.
இம்மக்கள் செய்த தியாகம், சிந்திய இரத்தம், வியர்வை விலை மதிக்க முடியாதவையாகும். இலங்கையின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் வளத்துக்கும் இம்மக்களை போல் பங்களிப்பு செய்தவர்கள் இலங்கையில் யாரும் இருக்க முடியாது. இருக்கவும் இல்லை.
அவ் வாறு தனதும் தனது சொந்தங் களும் வழங் கிய உழைப்புதான் இன்று உலக அளவில் இவர்களைப்பற்றி பேசுகின்றார்கள். இவர்களின் உழைப்பு ஈவு இரக்கமில்லாமல் சுரண்டப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட இலாபத்தால் பிரித்தானியா உயர்ந்தது. எமது மக்களின் வாழ்க்கை உயரவில்லை.
நிலபிரபுத்துவ அமைப்பை கொண்டிருந்த தென் இந்தியாவில் விவசாய கூலிகளாக இருந்த எமது மக்கள் முதலாளித்துவ சமூக அமைப்பு அதன் பொருளாதார கட்டமைப்புக்கு பழக்கமில்லாதவர்களாக இரு ந் த படியால் முதலாளித் துவத் தின் மூர்க்கதன மான சுரண்டலுக்கெதிராக பாரிய அளவில் கிளர்த்தெழவில்லை. இந்த நிலைமையை அவ்வாறே பேணப்பட்டு வந்தது. அதற்கு இசைவாக போக்குவரத்து வசதிகளையும் பகிரங்கமாக திறந்து விடப்பட்டிருந்தது. ஆகையால், தொடர்ந்து இந்த நாடு எமது நாடு எமது உழைப்பால் உருவான நாடு, என யோசிக்க தவறினார்கள்.
இருப்பினும் இலங்கை முதலாளித்துவத்துக்கு எதிராக தேசிய முற்போக்கு சக்திகள் கிர்ந்தெழுந்த போதும் எமது பங்களிப்பு குறைவாகவே இருந்திருக்கின்றது. எது எப்படி இருப்பினும் 1931ம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டவுடன் எமது மக்கள் வாழ்வில் சிறு ஒளி கீற்றுபட்டது. அதுவும் குறுகிய காலத்தில் இல்லாது போனது. எமக்கு வாக்குரிமையை வழங்கிய பிரித்தானியர்கள் அது தொடர்பான உத்தரவாதத்தை வழங்கத் தவறினார்கள்.

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது. உண்மைதான் அது யாருக்கு? வெள்ளையர்களின் அதே கொள்கையுடைய சிங்கள் இனத்தவர்களுக்கு கைமாறியது. அவர்கள் எமது மக்களை பற்றி மனிதாபிமான முறையில் சிந்திக்காமல் காட்டுமிராண்டிதனமாக சிந்தித்ததால் நாடு சுதந்திரம் அடைந்த அதே ஆண்டு எமது மக்களின் வாக்குரிமை பறிக்கப்க்கப்பட்டு எம்மை இருண்ட யுகத்திற்கு தள்ளினார்கள். அந்த இருண்ட யுகத்திலிருந்து மீள்வதற்கு நீண்ட நெடுங்காலம் எடுத்தது. 1948ல் இலங்கையின் சகல நிர்வாக உரிமையும் சிங்கள பேரினவாத முதலாளித்துவ சக்திகளுக்கு வழங்கிய வெள்ளையர்கள் வெளியேறினர்.
ஆனால் 1772 - 73 காணி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு வெள்ளையர்களின் தோட்டங்களை அரசு பொறுப்பேற்றது. அதுவரை சுமார் 24 ஆண்டுகள் எம்மை வெள்ளையர்களே ஆட்சி செய்தனர். எனவே இலங் கையின் தேசிய வளர்ச்சியில் நாம் 24 ஆண்டுகள் பின்தள்ளப்பட்டோம். 1945 இந்து பாக்கிஸ்தான் பிரஜாவுரிமை சட்டம், 1964 ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், 1986 பிரஜாவுரிமை சட்டம் என எமது உரிமை சுதந்திரம் பல சட்டங்களால் வழங்கப்பட்டிருந்தாலும் பிரஜாவுரிமைக்கான முழுமையான சுதந்திரம் நாம் இன்னும் அடையவில்லை.
இன்று இலங்கையின் 60வது சுதந்திரம் கொண்டாடும் இவ்வேளையில் எமது சுதந்திரம் தொடர்பாக மீண்டும் மீண்டும் நாம் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. 1948ல் எமது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதால் நாம் அரச தொழில்வாய்ப்பை இழந்தோம், அரசு வழங்கிய காணிகளை பெற முடியாது காணி உரிமையை இழந்தோம், பொருளாதார அபிவிருத்தியை ஒட்டு மொத்த சுதந் திரத்தின் நன்மைகளையும் இழந்தோம், கலாச்சார உரிமையை இழந்தோம், கல்வி உரிமையை இழந்தோம்.
இன்று 60 ஆண்டு சுதந்திரத்தின் பங்காளிகளாக எம்மால் கலந்து சிறப்பிக்க முடியவில்லை. எனவே 1948ல் கொண்டு வரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தை அரசு வாபஸ் வாங்கி ஒரு பொது பிரகடத்தில் 1931 சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்தியது போல் எமது அனைத்து உரிமைகளையும் அரசு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
1949 - 1964, 1986, 2003 ஆகிய சட்டங்களால் வழங்கப்பட்ட பேப்பர் பிரஜை அந்தஸ்தை நிராகரித்து, ஏனைய சமூகத்தை போல் எமது சுதந்திரமும் நிலைநாட்டும் பட்சத்தில் நாம் ஆனந்த சுதந்திரத்தை அடைந்தோம் என பூரிப்போம்.
ரோகினி சுப்ரமணியம் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி
Tாக

Page 7
குன்றம் சஞ்சிகை வளர்ச்சிக்கு
வாழ்த்துகின்றோம்
வெளியீட்டாளர்கள் :
மாணவர் முன்னேற்றத்தின் வழிகாட்டிகள்
குருகுல பிரசுரம்
46, டன்பார் வீடமைப்புத் திட்டம்,
அட்டன்.
With Best Compliments from
KUNDRAM
NEW ABE SHOE PALACE Dealers in all kinds of Ladies & Gents Footwear,
Bags, Belts, Purses & Watches Etc.
280 A, Sea Street, Colombo - 11.
Tel : 0114 - 913575

With Best Compliments from a
Propereiter A.M.D Balan (J.P.)
GOLDEN BUILDING CONSTRUCTION
No. 65/143, Crow Island, Mattakkuliya,
Colombo - 15.
குன்றம் சஞ்சிகைக்கு
எமது வாழ்த்துக்கள்
Anusha Jewellery (Pvt) Ltd.
No. 165, Sea Street, Colombo - 11.
Tel : 2338891

Page 8
ஹோமியோபதி வைத்தியம் எனும் போர்வையில்
ஆங்கில வைத்தியம் மலையகப் பகுதிகளில் ஹோமியோபதி வைத்தியர்கள் ஆங்கில மருந்துகளை மக்களுக்கு விநியோகித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளது. ஹோமியோபதி வைத் திய முறை உண் மையிலேயே அறிமுகப் படுத்தப் பட்டது ஆங்கில மருத்துவ முறையில் உள்ள குறைபாடுகளையும், பலவீனங்களையும் நிவர்த்தி செய்து மானிட வர்க்கத்துக்கு, பக்கவிளைவற்ற ஓர் பாதுகாப்பான, நிரந்தர குணமளிக்கும் சிகிச்சையாகும்.
ஆனால், இன்று சில ஹோமியோபதி வைத்தியர்கள் ஹோமியோபதி என்னும் போர்வையில் ஆங்கில வைத்திய முறையை மேற்கொண்டு இருக்கின்றார்கள். இது அவர்களின் ஹோமியோபதி வைத்தியத்தின் அறிவு குறைபாட்டையே வெளிப்படுத்துகின்றது. ஹோமியோபதியின் தந்தை டாக்டர். சாமுவேல் ஹனிமனுக்கும், ஹோமியோபதி வைத்திய முறைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்துவதே ஆகும். நோயின் மூலக்காரணத்தை அறிந்து, நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதே ஹோமியோபதி சிகிச்சை முறையாகும்.
இலங்கை ஹோமியோபதி சங்கம் வரை சென்றுள்ள இப்பிரச்சினை சகல ஹோமியோபதி வைத்தியர்களையும் குறுகிய காலத்துக்குள் தமது ஹோமியோபதி பயிற்சியை முடித்துக்கொண்டு, ஆங்கில மருந்துகளை விநியோகிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை ஹோமியோபதி வைத்தியர் சங்கம் கடுமையான எச் சரிக்கை விடுத்துள்ளது. ஹோமியோபதி முறையையோ ஆங்கில மருத்துவ முறை ஒன்றையே தேர்ந்து எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
சந்தா விபரம் தனிப்பிரதி ரூபா 30/- , 12 பிரதிகளுக்கு ரூபா 450/-
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். மணியோடர் அனுப்புபவர்கள் அதனை வத்தளை தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக எல்.பி. சண்முகநாதன் பெயருக்கு அனுப்பவும்.
இலகுவான முறையில் உங்கள் பிரதேசத்திலுள்ள செலான் வங்கி மூலமும் சந்தாவை செலுத்தலாம். வங்கிமூலம் சந்தாவை எல்.பி. சண்முகநாதன், செலான் வங்கி வத்தளை கணக்கு இலக்கம் 0710 - 02128872 - 101 என்ற கணக்கில் வைப்பிட்டு வங்கி ரசீதை சந்தாப்படிவத்துடன் இணைத்து அனுப்பவும்.
10

பா / A -
4. 4. A
平本《李
திறப்பு விழா
來歷
தி
- மல்லிகை சி. குமார் - பாடசாலையின் முகப்பில் - அலங்காரப் பந்தல் : பந்தலின் முகப்பில் வைத்து கட்டுவதற்காக எழுதப்பட்ட போர்டை கீழே இருந்து இருவர் தூக்கிக் கொடுக்க..... மேலே - பந்தலின் விளிம்பில் நிற்கும் இருவர் கவனமாக வாங்கி பந்தலின் மையப்பகுதியில் வைத்து இருவர் கயிற்றால் கட்ட முனைகின்றனர்.
"நல்வரவு” என அழகான எழுத்தில் வரையப்பட்ட அந்த போர்ட்டின் வலது புறத்தில் கரங்களை குவித்தபடி இருக்கும் தலைவரின் உருவப்படமும் தீட்டப்பட்டிருக்கிறது.
"வேலு போர்ட்... இன்னும் கொஞ்சம் சென்றவருக்கு எடுங்க” கீழே நிற்கும் அதிபர் சத்தமிடுகிறார்.
'சேர் இப்ப பாருங்க' இன்னும் கொஞ்சம் 'இப்ப' கரைக்ட் "இப்பக்கட்டுங்க" "இறுக்கியே கட்டுங்க" அதிபர் சொன்னதற்குப் பிறகு மேலே இருக்கும் ஜேமாலையும் வேலுவும் போர்டை கட்டுகிறார்கள்.
"சேர் ராஜரட்ணம் மாஸ்டர் நேத்தே இதை வரைஞ்சிருந்தா ரவ்வே கட்டியிருக்கலாம்” என்றான் தனபாலு.
"சரிதான் தலைவர் பதினொரு மணிக்குத்தானே வரப்போறாரு" என்ற அதிபர்..

Page 9
மேலே கும்பிடு போட்டுக் கொண்டிருக் கும் தலைவரின் உருவப்படத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டே....... "தனபாலு தலைவரோட உதட்ட இன்னும் கொஞ்சம் பெருசாக்கியிருந்தா நல்லா இருக்குந்தானே" எனக் கேட்டார்.
"இது போதுங்க மாஸ்டர். தலைவர் அதையா நோன்டிப்பார்க்கப் போறாரு. மாலைகளை கழுத்து நெறையா போட்டுட்டா சரி. தவறை எல்லாம் மறந்திடுவாரு" என்றான் சற்று தள்ளி நின்ற அழகிரி.... "தலைவருக்கு சரியா இருக்கலாம். ஆனா... பிரதிநிதிக்கு .....?” என்ற அதிபர்... இரண்டுபக்க சேப்புகளிலும் கையை விட்டுக் கொண்டு "பிரதிநிதியைப் பத்தி தெரியுந்தானே... என்னா தலைவர் வாயை கோணி வரைஞ்சிட்டீங்கலேன்னு" ஒரு சந்தர்ப்பத்தில்....... என்னை கேட்டாலும் கேட்டுருவாரு என்றார்.....
"சும்மா போங்க மாஸ்டர் நீங்க எதுக்கு பிரதிநிதிக்கு பயப்படணும். தலைவரோட அன்பு ஆதரவு எல்லாம் அந்த பிரதிநிதிக்கு இருக்கலாம்.
அதுக்காக ஸ்கூல் பிள்ளைங்க தேவாரம் பாடற போதுகூட அவருதான் வந்து தலைமை வகிக்கனுமாக்கும் பழைய ஸ்கூல்ல எது நடந்தாலும் அவரக் கூட்டிவச்சி மீட்டிங் போட்டீங்க ஆனா இனிமே அதெல்லாம் விட்டுடுங்க....." பொரிந்தான் அழகிரி..
"நான் ஒண்ணும் அவருக்குப் பயப்படல ஆனா அரசாங்கத்துக்கு மிகவும் ஆதரவாக இருக்கும் ஒரு தொழிற்சங்கத்துல இவர் ஒரு முக்கியப்புள்ளி மாகாணச்சபை தேர்தலில் தலைவர் வெல்லவேண்டும் என இந்த பிரதிநிதி ரொம்பப் பாடுபட்டிருக்காரு தலைவரும் எலக்ஷனில் வென்று இப்ப ஒரு மந்திரியாகவும் வந்திட்டாரு.
அது மட்டுமல்ல இந்த மாவட்ட கல்வி அதிகாரி இந்த பிரதிநிதிக்கு மிகவும் நெருங்கிய உறவு. பிரதிநிதி எது சொன்னாலும் கல்வி அதிகாரி கேட்பார் நாளைக்கே என்னை இங்க இருந்து மாற்றிவிட்டு யாரோ அனுபவமில்லாதவரை பிரின்ஸிபாலாக்கி போடக்கூடிய வசதி கல்வி அதிகாரிக்கு உண்டு" தன் சங்கடமான நிலையை அதிபர் சொன்னபோது அழகிரி மெளனமாக நின்றான்.
"அதே நேரம் தூரத்தில் வேன் வரும் இரைச்சல் கேட்டது ஏய் அழகிரி... பிரதிநிதியோட வேன் வருதுடா... நீ ஏணியைப்பிடி நாங்க கீழே இறங்கிக்கிறோம்....." என்று மேலே இருந்து கத்தினான் ஜேபமாலை.
12

தனபாலும் அழகிரியும் ஓடிப்போய் ஏணியைப் பிடித்துக் கொள்ள....... நல்வரவு போர்டைக் கட்டி முடித்த வேலுவும் ஜேபமாலையும் கீழே இறங்கினார்கள்.
தூரத்தில் ..... வேன் வருவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவனை "ஏய் சிவராஜ் வதனா டீச்சரை கொஞ்சம்
வரச் சொல்லு" என்றார்.
வதனா டீச்சர் வந்ததும் "என்ன மாஸ்டர்" என வினாவ "பிள்ளைகளை எல்லாம் கூட்டி வச்சி பாட்டுக்கள் ஒரு முறை ஒத்திக பார்த்திருங்க” என்றார்.
"ஓம் எல்லாம் உள்ளால நிக்குதுக. ஆனா உதுகளுக்கு ராகம் தான் சரியாகவே வரமாட்டுது..." என அலுத்துக்கொண்டு திருப்பி நடந்தாள்.
"சேச் சே.. ஒருமாசமா இந்த டீச்சர்கிட்ட இதே கதத்தான்" என தலையில் அடித்துக் கொண்டார் அதிபர். பின் சிறிது பின்னால் சென்று பாடசாலை முழுவதும் அடக்கி ஒரு நோட்டமிட்டார்.
பழைய ஸ்கூல் இருக்கவே ஒரு பகுதியை இடித்து புதிதாக இரண்டு வகுப்பறைகளும் ஒரு ஹோலும் கட்டப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு நிறுவனத்தின் உதவியால்தான்.
பிரின்ஸ்பலோடு நான்கு வாத்திமார்.
இரண்டு டிவிஷனிலிருக்கும் பிள்ளைகளுக்கு நான்குவாத்திமார் போதாதுதான். இன்னும் ரெண்டு பேர் வேணும் என்று போன மாதம் பாடசாலை அபிவிருத்திச்சபை கூட்டம் நடந்தபோது இரு தோட்டத் தலைவர்களும் கேட்டனர்.
"புது ஹோலை திறந்த பிறகு இன்னும் இருவர் வருவார்.” என நம்பிக்கை தெரிவித்ததை நினைத்துக் கொண்டார் அதிபர்.
வேன் பாடசாலை முகப்பில் வந்து நின்றது. வேனிலிருந்து கட்சியின் மாவட்டத் தலைவர், இரண்டு முதலாளிமார்கள், பால் சேகரிக்கும் பெரும்புள்ளி ஒருவர் என இறங்கி வந்தனர்.
"என்னங்க மாஸ்டர் வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதா?" எனக் கேட்டுக்கொண்டே வந்த பிரதிநிதி பந்தல் முகப்பைப் பார்த்தவுடன்
13

Page 10
"அட தலைவரை அப்படியே வரைஞ்சிட்டீங்களே யாரு வரைஞ்சது" என அதிசயப்பட்டுக் கேட்டார்.
"நம்ம ராஜரட்ணம் மாஸ்டர்தான்" என்றான் தனபாலு.
"நல்லா இருக்கே... டவுன்ல உள்ள நம்ம கட்சி ஆபிஸிலக்கூட ராஜரட்ணம் மாஸ்டரை கூட்டிப்போய் சுவரில் இதேமாதிரிப் படம் வரைஞ்சிரணும்" என்றார்.
"மாஸ்டர் தலைவர் பதினொரு மணிக்கு முன்னமே வந்துருவாரு. பணிய மெயின் சந்தியிலிருந்து தலைவரை ஊர்வலமா அழைச்சிட்டு வரணும்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது "தலைவருக்கு மாலை எல்லாம் கட்டியாச்சா?” எனக் கேட்டார்.
"போய் லயத் தில் பாருங்க எத்தனை மாலை கட்டி வச்சிருக்காங்கன்னு" என்றார் ஜேபமாலை
"நேற்றே சொல்லி விட்டோமே எட்டுமணிக்கெல்லாம் அவுங்களை வரச் சொன்னேன்” என்றார் அதிபர், பிரதிநிதி கையை உயர்த்தி மணியைப்பார்த்தார்.
சே என்னா மனுஷங்க சொன்ன நேரத்தில் காரியத்தச் செய்யணும் மணி எட்டேமுக்கால் என முகத்தைச் சுளித்தவர்.
மாஸ்டர் ஸ்டூடன்ஸ் எல்லாம் எப்படி என கேட்டுவிட்டு சீயோ இப்ப வரமாட்டார் தலைவரோடதான் வருவாரு என்றார்.
"இந்த முறை கல்வி அதிகாரிக்கும் மாலை போடனும்" என்றார் ஒரு முதலாளி. இவரது மகன் ஆசிரியர்க்கலாசாலை ஒன்றில் றெயினிங் எடுக்கிறான். றெயினிங் முடிந்து வந்ததும் இந்த ஸ்கூல்லேயே இடம்பிடிக்கும் திட்டமது.
"அதுக்கென்னா நீங்களே போட்டிருங்க” என்றார் பிரதிநிதி.
"ஆமாசீ...... யோ.வுக்கு பள்ளிப்புள்ளைங்க போடுறதைவிட முதலாளி போடுவது மதிப்புதான்” ஒத்துப்பாடினார் மாவட்டத் தலைவர்.
இதைக்கேட்ட அழகிரிக்கு ஆத்திரமாக இருந்தது. அவன் தோட்டத்தொழிலாளியாக இருந்தாலும் இவர்களின் பகல் கொள்ளைகளை அறிந்தவன்.
14

"இந்தப் பாடசாலையை திறப்பதற்கு இந்த ஆடம்பர விழாவே தேவையில்லை. மந்திரியாக வரும் தலைவருக்கு தங்கள் பவரைக் காண்பிப்பதற்கு இப்படி ஏற்பாடு, பாவம் அதிபர்” என அவன் மனம் வேதனைப்பட்டது.
பிரதிநிதி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். "மாஸ்டர் அணிவகுப்பு செய்கிற பிள்ளைகளை தனியா ஒரு ரோவில விட்டுடுங்க.'
வரவேற்பு பாடுற டீச்சர்மாரும் பிள்ளைகளும் மேடையில் இருந்தால் சரி.
கோலாட்டம் அடிக்கிற நடனம் ஆடுகிற மாணவ மாணவிகள் ஊர்வலத்தோடேயே வரணும். டவுன் ஸ்கூல்ல இருந்து மாணவர் டீச்சர்மார்கள் வருவாங்கத்தானே என்று முடித்தபோது
"தோட்டத்தில இருந்து கரகம் ரம்செட் எல்லாம் வருது" என்றார் மாவட்டத்தலைவர்.
"எப்படியோ ஒரு பெரிய கிரவ்ட் வந்தா சரி பக்கத்து தோட்டத் தலைவர்மாருக்கெல்லாம் கடிதம் போட்டிருக்கு ஆளுங்களை அவுங்க திரட்டிக்கிட்டு வந்திடுவாங்க” என்ற பிரதிநிதியை வரவேற்பு கீதத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்துக்கு கூட்டிப்போனார் அதிபர். பிரதிநிதியின் ஆலவட்டங்களும் சென்றன.
அந்திக்கு செலக்ட்பண்ணி எடுத்துக்குவோம் என்றார். செவிகளை கூராக்கிக்கொண்டு தூரநின்ற அழகிரிக்கு ஆத்திரமாக இருந்தது. நாளைக்கே வேலையை தொடங் கிடு. புடவைக் கடைக் கு ஏத்தாப்போல...
கடைக்கு அழகாக போர்ட நீங்க எழுதித்தரணும். முடிஞ்சா சாரியை தூக்கிக்கிட்டு இருக்கமாதிரி யாராவது ஒரு நடிகையோடப் படத்தையும் வரஞ்சிடுங்க.
வதனா டீச்சர் மிகவும் சிரமப்படும் பாவனையில் இருந்தாள். "பெரிய ஸ்கூல்பிள்ளைகள் என்றால் சொன்னபடி கேட்கும் உதுகள் சின்னதுகள் தானே" என்றாள்.
அதன் பின் மைதானம் சென்ற பிரதிநிதி அணிவகுப்பும் அதன் இசையும் ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்ததில் திருப்திப்பட்டார்.
15

Page 11
பின் அதிபரைப்பார்த்து
"மாஸ்டர்..... உண்மையிலேயே இது நல்லா இருக்கு. ராஜரட்ணம் மாஸ்டர் நல்லாவே பிள்ளைகளை பழக்கி எடுத்திருக்கிறார்" என்றார். ராஜரட்ணம் மாஸ்டர் பிரதிநிதியைப் பார்த்து நன்றி சிரிப்பை காட்டினார்.
"நீங்கள் வரைந்திருக்கிற தலைவரோட படம் நம்பர் வன் இந்த வருஷக் கடைசியில் நடக்கபோற கட்சி மகாநாட்டுக்கு இந்த மாதிரி நிறைய படங்கள் வரைய வேண்டியிருக்கும்” என்று சொன்ன போது
ஆயிரம் ரூபா அட்வான்ஸ் வாங்கியது போல் இருந்தது.
பிரதிநிதியும் அவர் ஆட்களும் வாகனத்தை நோக்கி நடக்க ராஜரட்ணம் மாஸ்டரும் சென்றார். அதே நேரத்தில் மேள வாத்திய கோஸ்டியும் வந்து சேர்ந்தது.
"என்னா நானயக்காரரே... இப்பத்தான் விடிஞ்சிச்சா?” பால்கார முதலாளி தலைபோன காரியம் போல் குதித்தார்.
"பதினொரு மணிக்குத்தானே தலைவர் வருவாரு மணி ஒம்போதரதானுங்களே” என்றார் நானயக்காரர்.
"ஆமாய்யா, எட்டுமணிக்கு வர்ரேன்னு இப்ப பத்து மணிக்கு வந்துட்டு வாய்வேற போடுரியா சல்லி வாங்குறமாதிரி வாசிக்கணும் சோகப்பாட்டுகள் வாசிச்சிடாத" என்றார் பிரதிநிதி. சரிங்க தலையை ஆட்டினார் நானயக்காரர் வேனில் முன் சீட்டில் ஏறப்போன பிரதிநிதி ராஜரட்ணம் மாஸ்டரை சாடையில் அழைத்தார். நெருங்கிவந்தவரை சிறிது தூரம் அழைத்துப் போன பிரதிநிதி...
"மாஸ்டர் நமக்கு ஸ்பெஷலாக ஒரு வேலை செய்யனும்..." என்றவர் அமைதியான குரலில் அடுத்த மாதம் டவுன்ல ஒரு புடவைக்கடை திறக்க ஐடியா இருக்கு கொழும்பில் இருந்தே புடவை எல்லாம் வந்திரும்.
"மாஸ்டர்... மறந்திடாதீங்க விழா முடிஞ்சதும் வாகனத்திலேயே யூனியன் ஒபிசுக்கு வந்திடுங்க. தலைவர் இங்கவந்து மிச்சநேரம் நிக்கமாட்டாருண்ணு நினைக்கிறேன்.”
ft
"அட்டனில் ஒன்பது மணிக்கு தலைவர்மார் மீட்டிங் நடக்குது. தலைவர் பேசிமுடிந்ததும் நுவரெலியாவிற்குப் போற வழியில் இந்த எஸ்டேட் ஸ்கூலை ஓப்பன் பண்ணிட்டு போங்கனு போனவாரமே போன்
மூலம் கதைச்சிட்டேன்” என்ற பிரதநிதி
16

ஹோன் பண்ணும் சாரதியை "கொஞ்சம் பொறுப்பா மாஸ்டர்கிட்ட ஒரு முக்கிய சங்கதி" என கையை நீட்டிச் சொல்லிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.
"கட்சியின் நிர்வாக சபை நுவரெலியாவில் கூடுது. நீங்களும் வந்தீங்கனா மகாநாட்டு பெனர் எழுதுற விசயமா ஜி எஸ் கிட்டேயே கதைச்சிக்கலாம். இங்க ஓப்பன் முடிந்ததும் நானும் தலைவரோடேயே நுவரெலியாவுக்கு போவனும்" என்றார்.
"நீங்க போங்க என்னால் அங்க வரமுடியாத நிலை. பின்னேரம் மாணவர்களோட கலை நிகழ்ச்சி இருக்கு. அதை நான் கவனிக்காமல் அங்க வந்தால் பிரின்ஸிபல் ஒரு மாதிரி நினைப்பார்.'' என்றார் ராஜரட்ணம்
"அதுவும் சரிதான் நீங்க இதை கவனியுங்க நான் கடைக்கி என்ன பெயர் வைக்கலாம் என்ற யோசிச்சிக்கிட்டு வர்ரேன்" என்று வாகனத்தில் ஏறி பிரதிநிதி சிறிது தள்ளி நிற்கும் அதிபரைப் பார்த்து......
&t
"மாஸ்டர் எல்லாரையம் சந்திக்கேவரச் சொல்லியிருங்க சந்தியில் இருந்தே ஊர்வலமா அழைக்கலாம்" என நினைவுபடுத்தினார்.
"சரிங்க... சரிங்க எல்லாம் கரைக்ட்டா நடக்கும்" அதிபரை முந்திக்கொண்டு தனபால் சத்தமிட்டான். வாகனம் கிளம்பியது. சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். தலைவர் அதோ வரப்போகிறார் இதோ
வரப்போகிறார் எதிர்பார்ப்பு.
பதினொரு மணிக்கு வரவேண்டிய தலைவர் பன்னிரண்டாகியும் வரவில்லை. நமது தலைவர் வருவார் வந்துக்கொண்டிருக்கிறார் தோட்டத் தலைவர்மார்கள் மக்களுக்கு அறிவித்தனர். பாடசாலையின் திறப்பு விழாவை கட்சியின் பொதுக்கூட்ட மெனவே நினைத்துவிட்டார்கள். அதிபருக்கு சங்கடமாகவே இருந்தது.
"இது ஒரு பொதுவான விழா பலதரப்பினரும் வந்திருக்கின்றனர். ஒரு தனிக்கட்சியின் விழாவாக இதை எடுத்துக்கொள்ளாதீர்கள். இது ஒரு பாடசாலையின் திறப்பு விழா" எடுத்துச் சொன்னார். நேரம் ஓடியது.......
மலர்களைப்போலவே சிறுவர் சிறுமிகளும் வாடினர். நடனம் ஆடுவதற்கு ஒப்பனை செய்திருந்த சிறுமியர்களின் முக ஒப்பனை எல்லாம் வியர்வையில் கரைந்தது. சந்தியின் ஓரங்களிலும் தேயிலைச் செடிகளின் ஓரங்களிலும் மக்கள் ஒதுங்கி நின்றனர். தலைவருக்காக மக்கள் நிற்கலாம்..... நேரமுமா காத்து நிற்கும்?...
17

Page 12
"மண்ணாங்கட்டி அந்தத் தலைவர் வந்துதான் இதை திறந்து வைக்கணுமாக்கும். வேற ஆளே இல்லையா...?”
ஒருவன் ஆத்திரப்பட்டுக்கொண்டான்.
மணி ஐந்துக்கும் மேலாகி விட்டது மாலையும் நெருங்கியது. பால் முதலாளியின் வேன் வந்தது மக்கள் கலகலப்படைந்தனர். ஆனால் வேறு வாகனங்களைக் காணோம். வாகனத்தை கட்சிக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். கிளார்க் ஒருவர் வாகனத்திலிருந்து இறங்கி வந்து
"பிரின்ஸிபல் எங்க..... பிரின்ஸிபல்......
"என்னப்பா சொல்லு" என்றார் அதிபர்.
"சேர் தலைவர் நேரா நுவரெலியாவிக்குப் போயிட்டார். இங்க வர நேரமில்லையாம். இந்த புரோகிராம் அவர் டயரியிலும் இல்லையாம் ஆகவே அடுத்த மாதத்துக்கு ஒத்திப்போடுவீங்களாம்” என்றவர் வேனில் ஏறி யாரையும் சட்டை செய்யாமல் பயணமானார்.
அதிபரை விட சுற்றிநின்ற மக்கள் திரள் வெகுண்டது.
"மாஸ்டர் அந்த தலைவர் வராட்டி ஒண்ணும் குடிமுழுகிப் போகாது. உங்க முகத்தில் கரியப்பூச நினைக்கிற அந்த பிரதிநிதிக்கு சரியான அடி கொடுக்கணும். நீங்களே பாடசாலையை திறந்து வைங்க" என்றார் தோட்டத்தலைவர்களுள் ஒருவர்.
சற்று யோசித்த அதிபரின் பார்வை தூரத்தில் நின்ற மரத்தடியை நோக்கியது. "என்னைவிட அந்த ஸ்கூலை திறந்து வைக்கிற தகுதி உங்கள்ல ஒருத்தருக்குத்தான் இருக்கு" என்றார்.
சந்தியிலிருந்த ஊர்வலம் பாடசாலையை நோக்கி கிளம்பியது... அழகிரி நன்றியோடு அதிபரைப் பார்த்தான்.
"சேர் இதுதான் சரி நமக்குள் ஒரு மாற்றத்தை நாம்தான் செய்யணும் சந்தர்ப்ப போலிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது."
அழகிரியின் தோளில் கைபோட்டு அனைத்துக் கொண்டே முன்னோக்கி நடந்தார் அதிபர்.
(யாவும் கற்பனையே)
18

முதல் பலி - கலா விஸ்வநாதன் -
முல்லோயா தோட்டம் அல்லோல கல்லோலபட்டுக் கொண்டிருந்தது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இனம் தெரியாத பீதி, உணர்ச்சி மிகுந்த நிலையில் என்னவோ, ஏதோ என்றறிய துடிக்கும் துடிப்பு.
பதினாறு சதம் சம்பளம் உயர்வும்,
அத்தியாவசிய மான ஆறு அம் சக் கோரிக்கைகளை முன் வைத்து பதின்மூன்று நாட்களாக நடந்த பாரிய போராட்டம் அன்றுதான் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குத் திரும்பியிருந்தனர்.
வேலைக்குச் சென்ற தொழிலாளர் ஏன் மீண்டும் பதட்ட நிலைக்கு ஆளாக வேண்டும்?
முல்லோயா தோட்டத்தில் தொழிற் சங்கம் ஆரம்பித்து, அதன் ஒன்றுபட்ட செயல் வடிவமாய் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் உதயமாகியது.
முல்லோயா தோட்ட நிருவாகம் போராட்டத்தை நசுக்க பல வழிகளிலும் முயற்சித்தது. ஆனால், அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.
மேலும், முல் லோயா தோட் டத் தொழிலாளர்களின் முற்போக்கான போராட்டத்திற்கு முகம் கொடுக்க முடியாத நிருவாகம் பேச்சு வார்த்தைக்கு இணங்கியது.
பேச்சு வார்த்தையின் பிரதிபலிப்பு, தொழிலாளர் அனைவரும் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு வேலைக்கு அன்று தான் திரும்பியிருந்தனர்.
வெற்றிபெற்ற பெருமிதத்தோடு தொழிலாளர்கள் வீறு கொண்ட மக்களாய் தேயிலை மலைகளில் உழைக்க சென்றனர்.
அன்று
பகல் உணவிற்காய் வீடு திரும்பிய அந்த நேரத்தில் பொலீஸ் ஜீப் ஒன்று தோட்டத்துள் நுழைந்தது.
19

Page 13
நுழைந்த ஜீப்பிலிருந்து பொலீஸ்காரர்கள் இறங்கினர். கைகளில் துப்பாக்கி, கம்புகள் சகிதம் லயத்தை நோக்கி படையெடுத்தனர்.
படையெடுப்பு கண்டுதான், அந்தத் தோட்டமே பதட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
லயத்தை நோக்கி வந்த பொலிஸார் அங்கே முன்னால் எதிர்ப்பட்ட தொழிலாளர்களிடம் "யாரடா சங்கம் சேர்த்தது? குழப்பம் செய்தது யார்? எங்கே உங்களின் தலைவன்?" என அதட்டி உருட்டினர்.
அதட்டல், உருட்டலோடு அவர்கள் விட்டுவிடவில்லை. அங்கு இருந்த தொழிலாளர்களை துப்பாக்கி கட்டையினால், கைகளில் இருந்த கம்புகளால் அடித்தனர். அடித்து இழுத்துப் போட்டு மிதித்தனர்.
"எங்கே தலைவன் சொல்லு" என அதட்டி அவர்களை துன்புறுத்தியது அந்த பொலிஸ் கோஷ்டி.
லயத்தில் உள்ள தொழிலாளர்கள் அங்கு ஒன்று கூடி விட்டார்கள். பொலிஸாரின் துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது.
கோவிந்தன் குமுறும் எரிமலையானான். உழைத்து உரம்பெற்ற அவனது தோள்கள் தினவெடுத்தன. இளைஞனான கோவிந்தனின் இதயம் உறுமியது.
லயத்து முற்றத்தில் தொழிலாளர்களை அடித்து, மிதித்து துன்புறுத்தப்படும் காட்சி கோவிந்தனை பொங்கி எழ வைத்தது.
கோவிந்தன் வேலையை அப்படியே விட்டு விட்டு, விறு விறுவென வெளியேறினான். சீலை தட்டும் மட்டையை கையில் எடுத்த அவன் லயத்தை நோக்கி ஓடி வந்தான்.
கோவிந்தன், புயற்காற்று போல் ஓடி வருகிறான் படிக்கட்டில் பாதம் பதிக்காது, தேயிலை செடிகளை உரசி, ஒதுக்கி பறந்து வருகிறான்.
அவன் ஓடி வரும் வேகம், அவனது கையில் இருக்கும் மட்டை , ஜீப்பில் உட்கார்ந்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் சுரவீர கண்களில் குத்திவிட்டது.
நிச்சயம் ஏதோ நடக்கப் போகிறது. அவன் கையில் ஏதோ இரும்பு போல் ஆயுதம் தனக்கு ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்ச
20.

உணர்வு ஆக்கிரமிக்க, சுதாகரித்துக் கொண்ட சார்ஜண்ட் சுரவீர
துப்பாக்கியை எடுத்தான்.
ஓடி வரும் கோவிந்தனின் விழிகள் லயத்து முன் அடிபடும் தொழிலாளர்கள் மீதே பதிந்திருந்தது. அதனால் அவன் ஜீப்பிலிருந்த சார்ஜண்டை காணவில்லை.
கோவிந்தனின் வேகமான ஓட்டத்தை நிறுத்த எண்ணிய சார்ஜண்ட் துப்பாக்கியின் விசையை தட்டி விட்டான்.
கோவிந்தனை குறி வைத்து பறந்த தோட்டாக்கள் அவனது மார்பை துளைத்தன. மலைபோல் வீழ்ந்தான். மறவீரன் மரம் போல் சாய்ந்தான்.
கோவிந்தன துடிதுடித்து மரணத்தை முத்தமிட்டான்.
தோட்டத் தொழிலாளர் வரலாற்றில் "முதற்பலி” கொடுத்தவன் கோவிந்தன் என்று முரசு கொட்டி உறங்கி விட்டான்.
முல்லையோ கோவிந்தன் முதற் பலியாகிய செய்தி முழு மலையகத் தோட்டங்களிலும் எதிரொலித்தது. ஒரு தொழிலாளியை இழந்த சோகம் ஒவ்வொரு லயத்திலும் குடி கொண்டது.
பத்திரிகை செய்தியைவிட காட்டுத் தீ போல் பரவிய செய்தி தொழிற்சங்க போராட்டகளத்தில் இருந்த ஏனைய தொழிலாளர்களை எழுச்சியுடன் போராடதூண்டியது.
உணர்ச்சிமிகு தொழிலாளர்கள் உரிமை போராட்டத்தில் ஈடுபட கோவிந்தன் உயிரை பலி கொடுத்தது ஓர் உந்து சக்தியாகியது.
மரணமடைந்த கோவிந்தன் பூதவுடலை நல்லடக்கம் செய்ய முல்லோயா தோட்டம் முழுமரியாதையுடன் ஆயத்தமாகியது.
அக்கம், பக்கம் உள்ள அனைத்து தோட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வந்தனர்.
லயத்து முன் போடப்பட்ட பந்தலில் கோவிந்தன் உடல் கிடத்தப்பட்டிருக்கின்றது. மல்லிகைப்பூ மாலைகளும், கொழுந்து மாலையும் அணிவிக்கப்பட்ட நிலையில் மெளனமாக கோவிந்தன் என்ற எரிமலை உறங்கிக் கொண்டிருக்கின்றது.
21

Page 14
கோவிந்தனின் இளம் மனைவி பொட்டு புரண்டழுகிறார். மகன் இராமையா அம்மா அழுவதை பார்த்து அழுகிறான்.
தோட்டத்து பெண்களின் ஒப்பாரி மற்றவர்களின் கண்களில் கண்ணீரை கரைய வைக்கின்றது.
தொழிற் சங்கத் தலைவர்கள் . வருகைக்குப் பின் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முன் ஈமக்கிரியைகள் நடந்தன.
தியாகி கோவிந்தனை இழந்த சோகம் மலையகமெங்கும் மேகமாக பரவியது.
வழக்கு மன்றம், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு எதிரான வழக்கு.
வாத பிரதி வாதங்கள் முடிவில் தீர்ப்பு என்ன என்று அறியும் அவாவில் தலைவர்கள் தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர்.
தீர்ப்பு தியாகி கோவிந்தன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
நஷ்டஈடாக தமிழ்நாட்டில் சொந்த ஊரில் காணி வழங்கப்பட்டது.
அத்தோடு தொழிலாளர்கள் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையும் உண்டு. பதினாறு சதம் சம்பள உயர்வு உயர்த்தப்பட வேண்டும்.
அதே சமயம் அரசு சார்ஜண்ட் சுரவீரவுக்கு சன்மானமும், பதவி உயர்வும் கொடுத்தது.
தலை மன்னார் துறைமுகத்தில் கப்பல் புறப்படுகிறது. கரையை விட்டு கப்பல் நகர்கிறது. கப்பலிலிருந்த பொட்டு மகன் இராமையாவை அணைத்தவாறு கரையை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
கணவனை பிரிந்த சோகம், இலங்கை மண்ணையும் பிரியும் நேரம், பொட்டுவின் விழிகளில் கண்ணீர் பூத்து கொட்டுகிறது. கப்பல் விரைகிறது. கரையும், மறைகிறது. பொட்டுவின் கண்களில் நீர் அருவியாக...........
(இது ஓர் உண்மைச் சம்பவத்தை உணர்த்தும் கதை. 1940-01-15 முல்லையோ கோவிந்தன் அமரரானார் )
22

ஆறு கேள்விகள் அர்த்தமுள்ள பதில்கள்
முன்னால் இந்து கலாசார அமைச்சரும், சர்வதேச இந்திய வம்சாவளி மக்கள் மகாசபையின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் கெளரவ பி. பி. தேவராஜ் அவர்களுடனான செவ்வி
கேள்வி :
சர்வதேச இந்திய வம்சாவளி மகாசபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் அதனூடாக சர்வதேசமெங்கும் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு ஏற்படும் நன்மை என்ன?
பதில் :
உலகெங்கும் 100 நாடுகளில் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நாடுகளில் 34 நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதிகள் சர்வதேச இந்திய வம்சாவளி மகாசபையில் அங்கம் வகிக்கின்றனர். இந்தியாவை விட்டு வெளியே வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்கள் ஓர் அமைப்பாக ஐக்கியப்படுவதன் மூலம் இந்தியாவின் கவனத்தை இலகுவாக கவரமுடியும். ஒவ்வொரு நாட்டிலும் இந்திய வம்சாவளியினருக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி தெளிவான தீர்வுக்கும் வர முடியும்.
சர்வதேச மட்டத்தில் ஒன்றிணைந்து இந்திய மக்களை உள்ளடக்கிய எல்லைக் கோடுகளற்ற தேசமாக, உறவு பரிவர்த்தனை ஏற்படவும் இச்சபையின் ஊடாக வழிவகுக்கலாம். இதனூடாக இந்திய வம்சாவளியினர் எனும் உணர்வு வலுப்பெறவும் வாய்ப்புண்டு.
கேள்வி :
இலங்கையின் பிரஜைகளான இந்திய வம்சாவளி மக்களின் அடையாளம் இந்திய தமிழர் என்பதிலிருந்து விடுபட்டு, மலையகத் தமிழர், இலங்கைத் தமிழர் என்று அடையாளப்படுத்த ஆர்வப்படுவது பற்றி உங்கள் அபிப்பிராம் என்ன?
பதில் :
இலங்கையின் நான்கு பிரதான பிரிவினர்கள் உள்ளனர் அதாவது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லீம், இந்திய வம்சாவளி தமிழர் என்பனவைகளாகும். ஏனைய இனத்தவர் அனைவரையும் சேர்த்தால்கூட 1% குறைவாகவே உள்ளனர். எனவே நான்காவது பிரதான கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.
23

Page 15
நிலம் சார்ந்த அடையாளமாக மலையகத் தமிழர் என்ற பதம் குறிக்கப்பட்டு பழக்கத்துக்கு வந்துள்ளது. மலையகத் தமிழர் என அடையாளப்படுத்தி அழைத்துக்கொள்வதில் எந்த தப்பும் இல்லை. இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கை பிரஜாவுரிமை பெற்றதும் தங்களை இலங்கைத் தமிழராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பி இலங்கைத் தமிழராக பதிவு செய்தும் உள்ளனர். ஆனால் அடையாளம் மாறுவதில்லை.
கொழும்பு மாவட்டத்திலே இந்திய வம்சாவளி தமிழர்கள் 150,000க்கு அதிகமானோர் வாழுகின்ற போது 25,957 பேர் மட்டும் வாழ்வதாக 1981ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரம் காட்டுகிறது.
இலங்கையின் நான்காவது பிரிவினராக இந்திய வம்சாவளி தமிழர் என்று கணிப்பீடு இருப்பதால் இந்திய வம்சாவளி தமிழர் அடையாளம் கொண்டிருப்பது விகிதாசாரத் தொகைக்கேற்ப வளங்களை பெறவும், அபிவிருத்தியில் பங்கு கொள்ளவும் பேருதவியாகும்.
இந்திய வம்சாவளி மக்களுக்கான அதிகாரப் பகிர்வு இன விகிதாசாரத்துக்கு ஏற்பவே அமைக்கப்படும் போது இந்திய வம்சாவளி தமிழர் எனும் அடையாளத்தில் பதிவாகியிருப்பது அவசியமானதாகும்.
கேள்வி :
இன்றைய போக்கில் இலங்கை இந்திய வம்சாவளி தமிழர்களின் அரசியல், தொழிற்சங்க நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?
பதில் :
நான் தற்போது அரசியல் துறையை விட்டு விலகியிருப்பதால் கருத்து கூறுவது பொருத்தமாகப் படவில் லை. பொதுவாக சொல்லப்போனால் கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் இன்மையே பிரிவுகள், பிளவுகளுக்கும் காரணமாகி விடுகின்றது.
கேள்வி :
மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் பற்றி நீங்கள் மலேசியா சென்றிருந்தப்போது கண்டறிந்தவைப் பற்றி கூறமுடியுமா?
பதில் :
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இருக்கும் நிலை போன்றே இருக்கிறார்கள் என்று ஒப்பீடு செய்யப்படலாம். என்ற போதும் மலேசிய இந்திய காங் கிரஸ் நீண்டகால தலைமைத்துவத்தை வகித்து வருகின்றது. இத்தலைமைத்துத்துக்கு எதிரான இளைய தலைமுறையினர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். இது ஒரு முரண்பாடாக இருக்க,
24

அரசகட்சி, எதிர்கட்சிக்கும் இடையில் நிலவும் போட்டியும் இந்திய வம்சாவளி மக்களை பாதிக்கின்றது. மலேசியாவில் இந்தியர்கள் உயர்வாக வாழ்கின்ற போதும், இன்னும் அடிமைநிலையில் வாழும் இந்தியர்களும் இருக்கின்றார்கள் என் பது அவர்களுக்காக போராடும் இளைய தலைமுறையினரை சந்தித்தப்போது உணர முடிந்தது. இது பற்றி விரிவாக நாம் பேச வேண்டும். மேலெழுந்தவாரியாக கருத்தை கூறுவது பொருத்தமாக இராது. கேள்வி :
2007 டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய வம்சாவளி மக்கள் மகாசபையின் (கோப்பியோ) 9வது மகாநாட்டில் நீங்கள் தலைவராக தெரிவு செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேற்படி அமைப்பு பற்றி விளக்கிக் கூறுவீர்களா? பதில் :
கோப்பியோ (Gopio) என்பது சர்வதேச இந்திய வம்சாவளி மக்கள் மகாசபை ஆகும். 1989ம் ஆண்டுதான் கோப்பியோ அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. உலகில் பலநாடுகளில் வாழ்கின்ற ஏறக்குறைய 27, கோடி இந்திய வம்சாவளி மக்களின் நலன்களை பேணுவதையே இந்த அமைப்பு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த அமைப்பின் செயற்பாட்டினால் சர்வதேச ரீதியிலான இந்திய வம்சாவளி மக்களிடையே உறவுகளும் பரிமாற்றங்களும் வளர்ந்து வந்துள்ளன, வருகின்றன. கேள்வி :
இலங்கையில் சர்வதேச இந்திய வம்சாவளி மக்கள் மகாசபையின் செயற் பாட் டு டன் , இ ந தி வம் சாவளி அமைப் புக் க ளை யும் இணைத்துக்கொண்டு செயல்படுவீர்களா? பதில் :
'கோப்பியோ' அமைப்பிற்கு எந்தவித பக்கச்சார்பான அரசியல் போக்கு இல்லை. எல்லோரையும் மதிக்கிறோம். அனைவரையும் அணைத்துக் கொண்டோ அதன்மூலம் பயன்களைப் பெற்று ஐக்கியத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.
இலங்கை 'கோப்பியோவின்' முயற்சியினால்தான் (OC!) திட்டத்தில் இலங்கை - இந்தியா இரட்டைப் பிராஜாவுரிமை இலங்கை இந்திய வம்சாவளியினருக்கு கிடைப்பதற்கு வழிவகுக்கப்பட்டது. இதனால் பத்தாயிரத்துக்கு அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர். இன்னும் - செய்ய வேண் டி யவை ப ல இருக் கின் றன. இலங்கை வாழ் இந் திய வம்சாவளியினருக்கு (Gopio) கோப்பியோ மிகவும் பயனுள்ள அமைப்பாகும். இதனை சக்திப்படுத்த இந்திய வம்சாவளி மக்கள் முன் வருவது அவசியமாகும்.
25

Page 16
மலையகத்தின் புதிய எதிர்பார்ப்பு
- சிவேரா -
ஒரு திருப்பத்தின் சாயல் மலைமுகட்டை எட்டிப் பார்ப்பதென்பது மகிழ்ச்சியளிக்கிறது. புதிய சிந்தனைகளின் வடிவமைப்பு எதிர்கால மலையகத்தை கட்டியெழுப்பவும், நிர்மாணிக்கவும் உருவாக்கவும் அடித்தளமாகவும், நிர்மாணிக்கவும் உருவாக்கவும் அடித்தளமாக அமைய வேண்டுமென்ற குறிக்கோள் சிறிதும் சிதறடிக்கப்படாமல் முழுமையான ஆக் கச் செயற் பாடுகளை நிறைவேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அதுவே மலைவாழ் மக்களின் எதிர்கால திருப்பங்களுக்கும், இருப்புகளின் மறு சீரமைப்புக்கும் உகந்ததாக ஏற்றதாக அமையும்.
மலையகத்தின் மறுசீரமைப்பின் அடித்தள மூலவேர் வலுவான சிந்தனைகள் மூலமே உருவாக்கப்பட வேண்டும். ஆழமும் விரிவும் கொண்ட சிந்தனைகள் வலுவூட்டல் மூலம் சமூகத்தின் நிலைப்பாடுகளை சீரமைக்கவும் வாழ்வியல் அரசியல் பொருளாதார வளர்ச்சி கல்வி போன்றவைகளில் மேம்பாட்டைச் செய்யவும் முடியும். இன்று இல்லாமை, இயலாமைக்கும் மத்தியில் ஓர் சமூகம் சீரழிகிறது என்பது இதுவரை காலமும் கடைப்பிடித்து வந்த கொள்கை குளறுபடிகளாலும் சமூகத்தைப் பிடித்து வந்த கொள்கை குளறுபடிகளாலும் சமூகத்தைப் பிடித்தாட்டும் அறியாமையென்னும் அவமானக் கட்டுமான அமைப்புக்களாலும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சிதறிப் போய் கிடக்கும் சமூக ஒருமைப்பாடு என்பனவாகும்.
இன்று மலையக சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள், பிரச்சினைகள் என்று சொல்வதைவிடத் தாழ்வுகள், பின்தங்கல்கள் குறுகல்கள், நிறுவனங்கள் சார்ந்த இறுக்கங்கள், தொழிற்சங்கங்கள் சார்ந்த கொள்கை, சிந்தனை வேறபாடுகள் இதையெல்லாம் தக்க வைத்துக் கொண்டு போகக்கூடிய மனோபாவங்களுக்கு எதிராக இரு க் கக் கூடிய விஷய ங் க ளை மறு பரிசீலனை செய் தோ உடைத்துக் கொண்டு போகவேண்டிய சுதந்திரம் கட்டாயம் புதிய திருப்புமுனைக்கான செயற் பாடும் முன்னோடிகளுக்கு அவசியம் தேவையென்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.
மலையக மக்களின் சிந்தனை ஆற்றலை வலுவடையச் செய்யாமல் பெரும் புரட்சியையோ சிறு மாற்றங்களையோ செய்ய முடியாது என்பது தெரிந்தால் அதுவே புதிய மாற்றங்கள் உருவாக ஏற்புடையதாகும்.
இன்று மலையக மக்கள் பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற விமர்சனம் நிலவுகிறது. இது
26 -

ஒரு வகையில் உண்மையின் ஞாயப்பாட்டை உணர்த்துகிறது. இந்த உண்மையை ஒத்து கொள்ளாத சிலர் மலையக மக்களுக்கு தாழ்வு மனப்பான்மையில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களின் சாராம்சங்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தாழ்வு மனப் பான்மை நோய் கொண்டவர்கள் மாத்திரமல்ல தாழ்வு மனப் பான்மையை மறுக்கக்கூடிய நோய் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆக இரண்டு விஷக்கிருமி நோய்களுக்கான உள்ளடக்கம் கொண்டவர்கள் என்று கூறாமலிருக்க முடியாதல்லவா.
மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வு, சமுதாய மாற்றம் புதிய மதிப்பீடுகளும் தோன்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்று இருக்கக்கூடிய கலாசார ரீதியிலான ஒரு மறுபார்வையும் புதிய மதிப்பீடுகளும் தோன்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இன்று இருக்கக்கூடிய கலாசார சீரழிவில் அரசியல் மாற்றமோ சமுதாய மாற்றமோ நிகழ்வதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. இன்றைய சமூகக் கட்டமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள் ள வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் சமுதாய மாற்றத்திற்கிெரான சக்திகள் சமுதாயத்தை சுரண்டக் கூடிய காரியங்களை வெற்றிகரமாகச் செய்து கொண்டு வருகின்றன. மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்பது ஓர் முக்கியமான விஷயம். இன்றைய நிலையில் அவர்கள் பார்க்கக்கூடிய முறையில் விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. மக்களை ஏமாற்றுபவர்களின் கனவுகள் வேறுவிதமாக இருக்கின்றன. மக்களோ ஏக்க கனவுகளுடன் ஏமாற்றுபவர்களின் கைகளில் சிக்கி சீரழிகின்றனர். அரசியல் இருப் பில் மிகப் பலவீனமடைந்துள்ள மலையக மக்கள் சகல இருப்பின் திருப்பங்களிலும் முற்றாக வலுவிழந்து விட்டனர். இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் நிலையை அடைந்துள்ளதை உலக வங்கியும் ஊர்ஜிதம் செய்துள்ளது.
மலையகத்தில் மூட நம்பிக்கைகளின் கோட்பாடுகள், ஆழ வேரூன்றியிருக்கிறது. அந்த வேர்கள் மலையக மக்களின் மூளைக்குள் எந்த அளவுக்கு வேரூன்றி ஆழமாக இறங்கியிருக்கின்றன என்பதை அறிந்து தெரிந்திடாமல் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண முடியாத நிலையில் புதிய திருப்பங்களுக்கான அடித்தள முன்னெடுப்புக்கள் எந்த
அளவுக்கு பலனைத் தருமென்பதை ஆராய வேண்டியுள்ளது..
இன்று மலையக மக்களுக்குரிய பிரச்சினைகள் பொருளாதார பிரச்சினைகள், பற்றாக்குறை, வறுமை, நோய்கள், அறியாமை, உறைவிடங்கள் அற்ற நிலையில் வாழ்வே ஒரு பிரச்சினையாகி துன் பப் படு பவர்களை ஏமாற்றி பய முறுத்தி பதவிகளையும் அதிகாரங்களையும் காட்டி ஏமாற்றும் தலைமைத்துவங்கள் மலையகத்தை
27

Page 17
மிகப் பெரிய மாட்டு பண்ணையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் புதிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியுள்ளது. இன்று பரந்த அளவில் மலையக மக்களை ஊடறுத்து வேரறுத்து போலித்தன் வியாக்கியானங்கள் பொய்யுடன் கலந்த புனைசுருட்டு கதைகள் யாவையும் ஈவிரக்கமின்றி அறிவொளிகொண்டு பொதுவுடைமை தத்துவார்த்த கொள்கையுடன் பகுத்தறிவு சிந்தனைகள் மூலம் இல்லாமலாக்கி உண்மையின் கீற்றுகள் ஒளிப்பிரவாகம் கொள்ள புதிய சமூகமாற்றம் சீறியெழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மூன்றாந்தர அரசியல் தரகுத்தன வியாபார பேரப் பேச்சுகளுக்கு இணக்க முறை அங்கீகார முறையை முற்றாக நீக்கி தனித்துவ சுதந்திர தீர்மான முடிவுகளுக்கு வழிகோல வேண்டும்.
சிந்திக்க முடியாத மலையக சமுதாயம் அல்லது மலையக சமூகம் விடுதலைக்கான பெரும் போராட்ட வழிமுறைகளை உருவாக்குமென்று கற்பனை காணவே முடியாது. சூடு சுரணை கெட்ட தனத்திலிருந்து, சமரசங்களிலிருந்து அடிமைப் புத்தியிலிருந்து அற்பத்தனங்களிலிருந்து அடகு வைக்கப்பட்ட சுய மரியாதையிலிருந்து, தாழ்வுகளைப் போற்றும் கொடுமைகளிலிருந்து பெண்மையை இழிவு செய்யும் கொடூரங்களிலிருந்து போராட்ட முறைக்கான வழிவகைகள் தோன்ற முடியாது. தேர்தல் காலங்களில் மட்டும் காட்டும் அக்கறைகளும், அளிக்கப்படும் வாக்குறுதிகளும், மேடைகளில் காட்டும் முகமூடி கோமாளித்தன அருவருப்புமிக்க முகபாவ தரிசனங்களும் மக்களின் விடுதலைக்கு வித்திட முடியாது என்பதை கடந்த கால நிகழ்வுகள் சம்பவங்கள் துல்லியமாக எடுத்தக் காட்டி விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய சமுதாயத்தின் பிறப்புக்கான அடித்தளத்தை யார் செப்பனிடுவது அச்சாரம் போடுவதற்குக் கூட மனித நேயமிக்கவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தேடுதலுக்கான முயற்சியையும் மலையகத்தில் தேட வேண்டியுள்ளது.
சிந்தனை வலுமிக்க ஓர் சமுதாயத்திற்குள் அதன் அடிப்படை தளத்திற்குள் நுழைய முடியாமல் நாம் சறுக்கிவிழுந்து கொண்டிருப்பதால் நம் மனங்களில் வாழ்க்கையை தீர்மானிக்கும் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வர முடியாமலிருக் கிறோம். அதனால் எல்லாவித பலவீனங்களுக்கும் தாழ்மைகளுக்கும் நாம் முகங்கொடுத்த வண்ணம் நமது அடையாளத்தை இழந்து வருகின்றோம். அரசியல் பொருளாாரம், சமூகம், வாழ்வியல் பற்றிய சிந்தனைகளற்று இரவல் சிந்தனைகளை பெற்று சமூகத்தை ஏமாற்றியும் பந்தாடியும் வருகிறோம். நாம் பெற்றுவந்துள்ள இரவல் சிந்தனைகள் மூலமே வித்தைகளை காட்டி வருகிறோம். வெட்கப்பட வேண்டிய இச்செயலை வித்தைகளை
28

வெட்கப்படாமல் பலரும் காட்டிக் கொண்டு பவனி வருகிறார்கள். இந்த கேவலங்களால் நம் வாழ்க்கை சார்ந்து சிந்திக்க முடியாமல் போன வெட்கம் நம் மனதை அரிக்கிறது. நமது எதிர்கால சமூக முன்னேற்றம் குறித்து உருப்படியான காரியங்கள் எதுவும் நடக்கவில்லையென்ற உண்மையை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்பட வேண்டியுள்ளது. மலையகத்திற் கு இன்றைய கால கட்டத்தில் தேவையானதும் முக்கியமானதுமாகக் கருதப் படுவது அறிவியல் ரீதியிலான சிந்தனைப்புரட்சியே, அகலமான ஆழமான பார்வை ஒன்று விரிவதற்கு சிந்தனைகள் முதல்படியாக அமையலாம். இத்தகைய முயற்சிகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிகழாவிட்டாலும் காலத்தின் போக்கில் அது மாற்றங்களை உண்டுபண்ணும். சமூகச் சூழலில் நிகழும் மாற்றங்களும் அரசியல் காரணங்களினால் ஏற்படும் மாற்றங்களும் சமூக மாற்றங்களுக்கான தடைகளாக வரலாம். அதற்கு அறிவியல் ரீதியாகவே அறிவியலை கற்றுக் கொள்ளக்கூடிய தளங்களை கண்டறிய வேண்டும் யந்திரவியல் பிரக்ஞை, சமயம், அறிவியல் ஆகியவற்றிற்கிடையே நாம் உருவாக்கியுள்ள இடைவெளியில் ஒரு புதிய படிமானத்தை அடித்தளத்தை உருவாக்கிட முன்வர வேண்டும்.
இதற்கான மலையக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களின் அயராத உழைப்பை மூலதனமாக்குதல் வேண்டும். கட்சி, அரசியல், தொழிற்சங்க சார்பு, சமயம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பால் நின்று சிந்தனையாளர், புத்தி ஜீவிகள், பேராசிரியர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தங்கள் பங்களிப்பைச் செய்வதோடு, ஊடகங்கள், ஊடகவியாளர்கள், சமூகச் சேவையாளர்கள் சமூகத்தின் மீது பற்றுள்ள வணிகர்கள் இம்முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பணியினை நல்க வேண்டும்.
மலையகத்திலுள் ள ஆசிரியர்களில் ஐயாயிரம் பேர் இத்தகையதோர் பணியினை மேற்கொள்வார்களானால் குறைந்தது ஐநூறு மாணவர்களை பல்கலைகழக பட்டதாரிகளாக்கலாம். இது முடியாத
காரியமல்ல நிச்சயம் நிறைவேற்றக்கூடிய காரியமாகும்.
அறிவுத் தளத்தில் அக்கறை காட்டி தளம் கண்டிருக்கும் புதிய சிந்தனைகள் கொண்ட இளந்தலை முறையினர் வாய்ப்புக்களுக்காக முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதாவது மலையகம் தலை நிமிரு மா. மனிதர்கள் மனிதர்களாகவும் , மனித நேயமிக்கவர்களாகவும் தங்களை புதிய முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்வார்களா? இன்றைய தேவையின் அவசியம் இதுதானென்று எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ள சமூகம் எல்லோருடைய பங்களிப்பையும் எதிர்பார்க்கிறது.
29

Page 18
உயர்கல்வியை நோக்கி
- கணிதன் -
"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பது முன்னோர் மொழிந்த கூற்று. ஒரு சமூகத்தில் உயர்ந்தோர் அச்சமூகத்தின் உயிரோட்டம் போன்றவர்கள், கல்வியில் வளமான சமூகம் சமூக, பொருளாதார, அரசியலில் மேன்மையான நிலையை அடைந்திருக்கும். ஒரு சமூகத்தின் உன்னத வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சி மிக முக்கிய காரணியாகும் . கல்வித் துறையில் ஆரம்ப நிலைக் கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி என்ற பிரிவுகளாக இருக்கின்றன.
ஆரம்பக்காலங்களில் பெருந் தோட்டங்களில் ஆரம்பநிலை கல்வி மட்டுமே அரைக் குறையாக வழங்கி, அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
தற்காலத்தில் மலையகப் பெருந்தோட் டங்களில் கல்வி வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. காலங் காலமாக கல்வித் துறையில் பின் தங்கியவர்களாக இந்திய வம் சாவளி தோட்டத்தொழிலாளர்கள் இருந்து வருவது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்று தோட்டத் தொழிலாளர்களிடம் பெரும் பாலும் பெண்மணிகளிடம் பிரச்சினைகளை அறிய பேட்டி காணும் போது "விலைவாசி ஏற்றத்தால் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியவில்லை. எமது பிள்ளைகளை பாடசாலை அனுப்பி படிப்பிக்க சிரமமாக இருக்கிறது” என்று கல்வி பற்றிய அக்கறையை கரிசனையுடன் வெளிப்படுத்துவதை ஊடகங்கள் ஊடாக உணர முடிகின்றது.
எனவே, மலையகத்தில் கல்வி வளர்ச்சிக்கான கவனம் தோட்டத் தொழிலாளர்களிடம் ஏற்பட்டிருப்பது ஓர் ஆரோக்கியமான மாற்றமாகும்.
"கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்ற காத்திரமான வரிகளுக் கேற் ப புத்தெழுச் சி ஏற் பட்டிருந் தப் போதும் வள பற்றாக்குரைகளுக்கு மத்தியில் ஆரம்பக்கல்வி பயின்று அதன் தொடராக இடை நிலைக் கல்வியை எட்டிப் பிடிக்கும் மாணவர் தொகை மலையகத்தில் பெருகியிருக்கின்றது.
க.பொ.த சாதாரணதரத்துடன் கல்வியை முடித்துக் கொண்ட காலம் மறைந்து உயர்தரம் கற்கும் உற்சாகம் ஏற்பட்டிருப்பது உயர்வான மாற்றமே ஆகும்.
30.

எனினும் உயர் கல்வி கற்க பல்கலைக்கழகம் நோக்கி விரைவோர் எண்ணிக்கை ஏற்றம் பெற்றுள்ளது என்று இயம்ப முடியாது!
மலையக மக்களுக்கென பல்கலைகழகம் வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. மாறாக ஒரு சிறுபான்மை சமூகத்திற்கான பல்கலைகழகம் உருவாக்குவதற்கு தேவையான உயர்கல்வி பெரும் மாணவர் தொகை மலையகத்தில் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். எனினும் இலங்கைத் தீவு எங்கும் வாழ்கின்ற இந் திய வம் சாவளி தமிழ் மக்களுக் கென பல் கலைகழகம் ஏற்படுத்தப்படவேண்டும் எனும் வேலைத்திட்டத்தைக் கொண்டு முயற்சிப்பது பல்கலைகழகம் நிறுவுவதற்கான கடுகதி செயற்பாடாக அமையும் எனக் கருதலாம்.
"இந்திய மரபு வழித் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக கருதப்பட்டு அவர்களுக் கென்று வேலைவாய்ப்புக்களில் ஒரு விகிதாசாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இன்றைய பல்கலைகழகங்களில் மொத்தமாகவும், பயிற்சிநெறிவகைப் படியும் எத்தனை இந்திய மரபுவழித்தமிழ் மாணவர்கள் பயிலுகின்றனர் என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடுவதில்லை. மொத்தமாக எத்தனை தமிழ் மாணவர்கள் உள்ளனர் என்ற விபரங்களே தரப்படுகின்றன. இனவிகிதாசாரத்தில் இந்திய மரபுத் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருக்கும் என்பதால் அவ்வாறு தனியாக விபரங்கள் தரப்படுவதில்லைப் போலும்" என்று 'மலையகக் கல்வி சில சிந்தனைகள்' என்ற நூலில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
எனவே உயர்கல்வியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் மாணவர்கள் முன் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உற்சாகமாக உயர் கல்வி கற்கும் வாய்ப்புக்கு ஒரு பாரிய வேலைத்திட்டம் அவசியம் என்பதை உணர முடிகின்றது.
இதுவரை உயர்கல்வி பயின்று பட்டதாரிகளான உயர் கல்வி கற்கும் பட்டதாரி மாணவர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரம் வருட அடிப்படையில் திரட்டப்படுவது உயர் கல்வியில் இந்திய வம்சாவளி தமிழர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதனை தெளிவாக, திட்டவட்டமாக தெரிந்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்பதனை ஆராய்வதற்கு அத்திவாரமாக அமையும் அதற்கான அடித்தளம் இடப்படுவது புத்திஜீவிகளின் புதிய கடமையாகும்.
31

Page 19
உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து நோயை
குணமாக்கும் அக்யூபிரஷர் சிகிச்சை
5-L
விசை எண் குறிக்கும் உடலுறுப்புகள் / இயக்கங்கள்
1. இரத்த சுத்தி மையம் 2. ஜீரண மண்டலம் - 1 3. ஜீரண மண்டலம் - 2 4. இரத்த அழுத்தக் கட்டுப்பாடு 5. மூச்சு மண்டலம் 6. வளர்ச்சி 7. இடுப்பிற்குக் கீழே 8. இடுப்பிற்கு மேலே இதயம் நுரையீரல் 9. இதயம், நுரையீரல் 10. பிறப்பு உறுப்புகள் 11. ஞாபகசக்தி, கழுத்து எலும்பு 12. மூளை 13. கண்கள் 14. காது 15. மூக்கு, பீனிசப் பகுதிகள்
AA
நம் உடல் முழுவதும் பரவியுள்ளது பிராணசக்தி. இதனால்தான் ஒருவர் மறைந்துவிட்டால் பிராணன் போய்விட்டது என்கிறார்கள். எனவே, பிராண சக்தியைச் சீரான முறையில் வைத்துக்கொண்டால் உடல் நலம் எப்போதும் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கும். நரம்புகளின் வழியேதான் பிராண சக்தி பாய்ந்து செல்கிறது.
குறிப்பாக 14 வகையான நாடிகளின் வழியே பாசிட்டிவ் பிராணசக்தியும், இன்னொரு 14 நாடிகளின் வழியே நெகட்வ் பிராண சக்தியும், பாய்ந்து செல்கின்றன. இந்த இரண்டும் சந்திக்கும் இடத்தில் ஆற்றல் ஏற்படுகிறது. மின்சாரத்தைப் போல! இந்த நாடிகள் எனப்படும் மெரிடியன்களிலிருந்து பல கிளை நாடிகள் பிரிந்து உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்கிறது. அப்படிச் செல்லும் பகுதிகளில் 900 சுவிட்சுகள்
அங்கங்கே உள்ளன.
இந்த நரம்புகளின் முனைகள் கைகளிலும் கால் பாதங்களிலும் முடிகின்றன. எனவே கைகளிலோ அல்லது கால்களிலோ அழுத்தம் கொடுத்தால் குறிப்பிட்ட சுவிட்ச் ஆன் ஆகி நோயைக் குணப்படுத்துவதுடன் பிராண சக்தியும் சீராகிறது. எனவே செலவில்லாமல் உடல் ஆரோக்கியம் தொடர்கிறது. இப்படி அழுத்தம் கொடுத்து நோய்களைக் குணமாக்கும் முறைக்கு அக்யூ - பிரஷர் சிகிச்சை என்று பெயர்.
32

நமது கைகளில் உடலின் எல்லா உறுப்புகளுக் கும் பிரதிநிதித்துவம் உள்ளது. உடலின் எல்லா உறுப்புகளும் மூளையுடன் தொடர்பு கொண்டுள்ளன. மூளையிலிருந்து உள்ளங்கைகளுக்கும் தொடர்பு உள்ளது.
உள்ளங்கையில் 5 நிமிடங்கள் அழுத்திவிட்டால் மூளையின் மூலமாக அந்தந்த உடலுறுப்புகளை இயக்கிவிடுவதன் மூலம் சிகிச்சை நடைபெறுகிறது. உள்ளங்கையில் ஏற்படுத்தும் அழுத்தம் நரம்பு மண்டலத்தையும் இரத்த ஓட்டத்தையும் நிணநீர் மண்டலத்தையும் சீர் செய்கிறது. சீராக இயக்கிவிடப்பட்ட இரத்த ஓட்ட நரம்பு, நிணநீர் மண்டலத்தை இயக்கி, நோய் அணுகாதபடி பாதுகாத்து உதவுகிறது. மனிதனின் நோய் களில் 70% நரம் புத் தளர்ச்சியைத் தான் : உண்டாக்குகின்றன. எனவே, காலையிலும், மாலையிலும் அதிகபட்சம் 15 நிமிடங்கள் வரை கைகளை அழுத்திவிட்டால் போதும். முதல் ஒரு மாதத்திற்கு 5 நிமிடப் பயிற்சியே போதும். கையில் விட்டு விட்டு அழுத்தும் சிகிச்சை முறை இது. சுமார் 5 விநாடிகள் அழுத்தத்தை ஏற்படுத்திச் சுமார் 5 விநாடிகள் வரை அழுத்தத்தைத் தளர்த்தவும்.
மணிக்கட்டிலிருந்து உள்ளங்கை முழுவதும் விரல்களும் உள்ளங்கையும் சேரும் இடங்கள், விரல்களின் இடையே உள்ள கணுக்கள், புறங்கை, இரண்டு விரல்களுக்கு இடையில் உள்ள சதைப்பகுதிகள், விரல் நுனிகள், நகக்கணு ஆகிய இடங்களில் நமது கைகளாலேயே அழுத்திக்கொண்டால் போதும். இரண்டு கைகளிலும் இது போல் அழுத்தி விடலாம்.
சாதாரணத் தலைவலி என்றால் கட்டைவிரலைச் சிறிது நேரம் அழுத்திவிட்டால் போதும். மூச்சு மண்டலமும் கட்டை விரலோடு தொடர்புடையதுதான். ஆஸ்துமாக்காரர்களும் கட்டை விரலை நன்கு அழுத்திவிடலாம்.
ஆள்காட்டி விரல், இதயம், தும்மல், இருமல், ஜீரணம், நீட்டல், மடக்கல் முதலியவை தொடர்பான விசைகளைக் குறிக்கிறது.
நடுவிரலானது ஜீரணம், பார்வை, சிரிப்பு, விக்கல், கொட்டாவி முதலியவற்றோடு தொடர்பு உடையது.
மோதிர விரல் எனில் உணவுப் பொருள் உபயோகம் செய்தல், கோபம், அழுகை, இருமல், தும்மல்.
சுண்டு விரலுக்கு சோர்வை நீக்கி, பசியைத் தூண்ட, ஓடுதல்
33

Page 20
உலாவுதலோடு தொடர்பு உண்டு.
முதுகு வலியைக் கு ண மாக்க உள் ளங் கையிலும் , உள்ளங்கையின் பின்புறமும் அழுத்திவிடவும்.
விரல் முனைகளையும் நன்கு பிடித்து விடுவது நல்லது.
எந்த நோய் இருந்தாலும் குணமாகவும், வேறு மருந்துகள் சாப்பிடுகிறவர்களும் இந்த அக்யூபிரஷர் மூலம் விரைந்து குணமாகலாம்.
நம் கைகளிலேயே ஆரோக்கியம் உள்ளது. குறிப்பாக உள்ளங்கைகளில் உள்ள பத்துப் புள்ளிகளையும் (படம் காண்க) ஒருவர் அழுத்திவிட்டுக் கொண்டால் இதயநோய்களே அணுகாது.
சாப்பிடும் முன்பாக அக்யூபிரஷர் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உணவு உண்டபின் என்றால் மூன்றுமணி நேரம் கழித்துச் செய்வது நல்லது. இந்தியாவில் தோன்றிய இந்த அக்யூபிரஷர் முறை தற்போது சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாக உள்ளது. |
புராணத்திலும் சரித்திரத்திலும் இவ்வகை வைத்தியத்திற்கு ஆதாரம் உள்ளது. இராமாயணத்தில் சுக்ரீவனை வாலி அடித்து விடுகிறான். இராமன் சுக்ரீவனிைன் வலியைப் போக்க அவனது உடலைத் தொட்டவுடன் வலி குணமாகிறது. இராமர் அக்யூபிரஷர் முறையில்தான் உடலில் உள்ள புள்ளிகளைத் தொட்டு குணமாக்கினார் என்று நாம் நம்ப இடமிருக்கிறது.
கௌதம புத்தரின் மருத்துவரான ஜீவக் (Jeevak) என்ற மருத்துவரும் நோயாளிகளுக்கு மருந்து எதுவும் கொடுக்காமல் உள்ளங்கைகளில் உள்ள புள்ளிகளைச் சிறிது நேரம் அழுத்திவிட்டே குணமாக்கினார்.
உள்ளங்கைகளையும் விரல்களையும் சுலபமாக அதே நேரத்தில் இப்படி கவனமாக அழுத்தம் கொடுத்துப் பிடித்துவிடுவதால் செலவின்றியும் பக்கவிளைவுகள் இன்றியும் பாதுகாப்பான முறையில் உடல்நலத்தைத் திரும்பப் பெறலாம்.
34.

மலையக மாணவர்களுக்கு கனவாகிப் போகும்
உயர்கல்வி ! - லக்ஸ்மன் சாந்திகுமார் -
மலையகத்தின் உயர்கல்வி உட்பட கல்வி சார்ந்த அம்சங்கள் வரலாற்று ரீதியானக் காரணிகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கத தக்கன. பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏட்படாத வண்ணமும், குறைந்த ஊதியத்திற்கு வேலைவாங்கக் கூடிய சிறுவர் ஊழியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும், ஆரம்ப காலத்தில் கல்வி என்ற பதத்தையே தோட்ட நிர்வாகங்கள் பாவிக்க விரும்பவில்லை.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில், முக்கியமாக தொழில் கட்சியினர் ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக தோட்டப்புறக் கல்வி நிலைக் குறித்து அறியவும், திட்டமிடவும் என 1902, 1907 ஆகிய ஆண்டுகளில் இரண்டு கமிசன்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 1907ம் அமைக்கப்பட்ட வேஸ் (Wace Commission) அறிக்கையின் அடிப்படையிலேயே தோட்டப்புறங்களில் கல்விக்கான ஏற்பாடுகள் அறிமுகமாகின.
இதன் பிரகாரம் தோட்டப்புற பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், அவற்றில் 3ம் வகுப்பு வரை அல்லது 5ம் வகுப்பு வரையிலும், சூழ்நிலைக்கேற்ப கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் ஏற்பாடாகி இருந்தது.
பாடவிதானத்தில் எழுத்து, வாசித்தல், ஆரம்ப கணிதம் ஆகிய மூன்று அம்சங்கள் மாத்திரமே குறிக்கப்பட்டிருந்தன. 1945ல் அறிமுகமான C.W.W. கன்னங்கராவின் நாடு தழுவிய கல்வி சீர்திருத்தம் மலையகத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 1970ன் பிற்பகுதியிலும், 1980ன் ஆரம்பங்களிலும் தோட்டப் பாடசாலைகள் தேசிய கல்வி முறைமையின் கீழ் கொண்டு வரப்படும் வரை இந்நிலையே நீடித்தது.
எனவே வடகிழக்கு தமிழ் மக்களுக்கு இருந்ததைப் போல மலையக மக்களுக் கான ஒரு கல் வி ரீதியான வரலாற்றுப் பாரம்பரியமின்மை உயர் கல்வியை பாதிக்கும் அடிப்படைக் காரணியாக அமைகின்றது.
இன்றைய சமகால சூழ்நிலையில், தமிழ் பேசும் மக்களாகிய
35

Page 21
வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களோடு ஒப்பிடும் போது மலையக மக்கள் மத்தியிலான பெறுபேறுகள் மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றது. இதற்கான காரணங்களை அடையாளம் காணுவது
அவசியமாகின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னால் வந்த பல்வேறு அரசாங்கங்கள் கடைப்பிடித்த இனரீதியான பாரபட்சமான நடவடிக்கைகள் மலையக உயர்கல்விக்குப் பெரும் தடையாக அமைந்தன. 1948ம் ஆண்டு பிரஜாவுரிமை பறிப்பிற்குப் பிறகு, பிறநாட்டு மாணவர்களைப் போல, மலையக மாணவர்களும் பல்கலைக்கழகம் போன்ற உயர்மட்ட அரசாங்க கல்வி அமைப்புகளில் கட்டணம் செலுத்தியே கற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். : இலங்கையின் கல்விசார் நிர்வாக இயந்திரத்தில் மலையகக் கல்வி
குறித்துக் காட்டப்படும் பாரபட்சமும், இப்பாரபட்சத்திற்கு பின்னணியில் உள்ள இனவாத அணுகுமுறையும். ஃ மேலும், கல் விக்கான நிர்வாக அமைப்பில் மலையகத்தை சார்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவேக் காணப்படுகின்றது. இதனால் மலையக பாடசாலைகளின் தேவைக் கருதி முடிவெடுப்பதில் தடங்கலும், தாமதமும் ஏற்படுகின்றது. உயர் கல்விக்கான வசதிகள் உள்ளப் பாடசாலைகளிலும், தகுதியான ஆசிரியர் பற்றாக்குறைக் காணப்படுகின்றது. வடகிழக்கை சார்ந்தவர்களின் ஆசிரிய நியமனம் நிறுத்தப்பட்டு, மலையகத்தை சார்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் தகுதியான விண்ணப்பதாரர்கள் குறைவாகவேக் காணப்பட்டதால், உயர்தர தகுதியின்றியே அந்நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இவை இரு வருடங்களுக்குள் அத்தகைய ஆசிரியர்கள் உயர்தராதரக் கல்வியைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டன. துரதிஷ்டவசமாக கணிசமான மலையக ஆசிரியர்கள் இல் லாக் குறையைக் காப்பாற்றத் தவறியமையும், தகுதியான ஆசிரியர் பற்றாக்குறைக்குப் பிரதானமானக் காரணமாக இருக்கிறது. தற்போது கல்வி ரீதியாக உயர் தகமைப் பெற்றவர்களின் மலையக பாடசாலைப் பிரவேசத்திற்கு இவர்கள் தடைக்கல்லாக உள்ளனர் என்பது வருந்தத் தக்க உண்மையாகும். * மலையகத்தில் உயர்தரத்திலானப் பாடசாலைகள் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக முழுமலையகத்திற்கும் பசறை தேசியக் கல்லூரி ஒன்று மாத்திரமே தேசியக் கல்லூரி தரத்தில் காணப்படுகின்றது.
மேற்குறித்த அம்சங்களை விடவும், மலையக உயர்கல்வியில்
36

தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு பிரதான அடிப்படை மற்றும் சமூகக் காரணிகளும் உள்ளன.
மனித மூளையின் சில முக்கியப் பகுதிகள் குழந்தைப் பருவத்தில் ஆறு வருடங்களுக்குள்ளேயே பிரதான வளர்ச்சியைப் பெறுகின்றன. இவற்றில் அவதானம் (Concentration) தொடர்புடைய பகுதியும் அடங்கும். இந்த வகையில் 3 வயதிற்கும் 6 வயதிற்கும் இடைப்பட்டக் காலப்பகுதி மிக முக்கியமானதாகும். இந்த வகையிலேயே சிறுவர் பாடசாலைகளுக்கு (Pre - School) உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இவ்வடிப்படையில் தற்போது கல்வியிலும் பெருந்தோட்ட மாணவ, மாணவிகளில் கணிசமானோர் சிறுவர் முன்பள்ளி அனுபவங்களை தவற விட்டவர்களேயாவர். குறிப்பிட்ட சிறுவர் பிராந்தியத்தில் தேவையான புறசூழலும் போஷாக்கும் கிடைக்காமை இந்த அவதானிப்பு திறனிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அப்பாதிப்பு பின்னால் பள்ளிப் பருவத்திலும் தொடரவே செய்கிறது. இப்போஷாக்கு குறைவிற்கு தொழிலாளர்களாகிய பெற்றோரின் வறுமை நிலையும் காரணமாகும். பெரும்பான்மையான பெருந்தோட்ட மாணவர்கள் கணிதம் (Maths) மற்றும் விஞ்ஞானம் (Science) போன்ற பாடங்களில் சித்தியடையாமைக்கு இக்குறைப்பாடே அடிப்படை காரணியாக அமைகின்றது.
மேலும் மனோரீதியாக உயர்கல்வியில் ஈர்ப்பினை தூண்டக்கூடிய முன் மாதிரிகளை தரிசனம் கொள் ளும் சந்தர்ப்பம் மலையக மாணவர்களுக்கு அரிதாகவே அமைகின்றது. மலையகத்தில் உயர்கல்வி பெற்றோரும் அதன்மூலம் உயர்பதவி மற்றும் அந்தஸ்த்து வகிக்கும் அதிகமானோர் மலையக தோட்டப்புற யதார்த்த வாழ்வில் இருந்து அன்னியமயப்பட்டு (Alianated) நிற்பது இந்த வகையில் ஒரு சூன்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் மலையக தொடர்பு வெறும் அறிவு சார்ந்தது என்ற நிலையில் இருந்து மக்கள் மட்டத்திற்கு இறங்கும்வரை இக்குறை நீடிக்கவே செய்யும்.
இதைவிடவும் எதிர்கால உயர்கல்வி பாதிக்கும் ஒருப் பாரிய அம்சம் இன்று பலத் தோட்டங்களில் நிலவுகின்றது. இது தோட்டங்களில் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களிலேயே முன்பள்ளிகளும் நடத்தப்படும் முறையாகும். இம்முறைக் குறித்து நடத்தப்பட்டு ஆய்வுகள் பின்வரும் அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. * பெரும்பாலான குழந்தை பராமரிப்பு நிலை முன்பள்ளி முறை (Creche
Based Pro - Schools)கள் அடைசல் மிக்கவையாகக் காணப்படுகின்றன. * முன்பள்ளி சிறுவர்களின் சத்தத்தால் அமைதியும், நித்திரையும் தேவையானப் பிஞ்சுக்குழந்தைகள் பெரிதும் கலவரமடைகின்றன.

Page 22
* முன்பள்ளி என்பது சிறுவர்கள் சுதந்திரமாகவும் விலையாடியும் திரிந்தும் கற்கும் இடமாகும். ஆனால் இங்கே அவர்கள் சத்தம் போடாமல்
அடங்கி ஒடுங்கி இருக்க வைக்கப்படுகின்றனர். * குழந்தை பராமரிப் பாளரே முன் பள் ளி ஆசிரியையாகவும் கடமையாற்றுவதால் இரண்டும் பொறுப்புகளையுமே சரியாகக் கவனிக்க
முடியாத நிலை. * அதிகமான குழந்தைப் பராமரிப்பாளர்கள் முறையான முன்பள்ளி ஆசிரியை பயிற்சியைப் பெறாதவர்கள் என்பதோடு அல்லது பெரும் பான்மை இனத்தை சேர்ந் தவர்களாக இருப் ப தால் இக்கடமையை அவர்களால் சரிவர செய்ய முடிவதில்லை. அத்தோடு முன் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தாய்மொழி உரிமையை மீறும் ஒரு செயலுமாகும்.
மேற்குறித்த முறை தோட்ட மக்களுக்கு மத்தியில் மாத்திரமே காணப்படுகின்றது என்பதோடு இளம் குழந்தைகள், சிறுவர்கள் இருபாலாருக்குமே உடல்-உள ரீதியான பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்பு பள்ளிப் பருவத்திலும், அதைத் தாண்டியும் எதிர்மறையான தடங்களைப் பாதிக்கும் ஆபத்து உள்ளது,
குழந்தைப் பராமரிப்பு நிலையமும் முன்பள்ளியும் ஒருங்கிணைந்து இயங்கும் முறைக் குறித்த ஆய்வினை மேற்கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரின் அபிப்பிராயத்தை வெளியிடுகிறார். "இம் முறை தோட்டப்புற சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கான கொலைக் களமாகும்",
மலையக பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சி என்பது வெறும் மாணவர்களின் பெறுபேறுகளோடு மாத்திரமே தொடர்புடைய அம்சம் அல்லது மலையக மக்களின் வருங்கால சந்ததியினரின் தலைவிதியையும் நிர்ணயிக்கும் ஒரு விடயமாகும். இதில் தகுந்த கவனம் செலுத்தத் தவறினால் மலையக சமூகம் ஏனைய சமூகங்களுக்கு சேவை செய்யும் சமூகமாக நிரந்தரம் கொள்ள நேரிடும்.
இதை மனதில் கொண்டு மலையக சமூக, அரசசார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் பிரமுகர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் மலையக மக்களில் அக்கறை கொண்டோர் அனைவரும் மலையக உயர்கல்வியைப் பாதிக்கும் அம்சங்கள் மற்றும் அவற்றிற்குத் தேவையானப் பிரதியீடுகள் குறித்து அக்கறை செலுத்துவது ஒரு காலத்தின் தேவையாகும்.

இயற்கையும் போராட்டமும்
இன்னும் முன்னேற...... வானம் அழுதுகொண்டிருக்கிறது
சுழல் பந்து வீச்சில் எனது எழுதுகோலும்தான்
பல 'விக்கட்டுக்களை வீழ்த்தி, உதிர்த்த கவிதை துளிகள்
சாதனை சிகரமாய் முன்னேறிய, மழை துளிகளாய் அல்ல
சுழலும் உலகம் புகழ் உள்ளத்தில் உறங்கிய
முரளிதரனே! ரத்த துளிகளாய் !
இலங்கையின் மத்திய அதோ அங்கே ஓர்
மலையகத்தின் அழகான உலகம்
இனிய புத்திரனே! விண்மீன்களும்
மலையகம் கூடி குலாவுகின்றன!
ஈன்றெடுத்த அதனிடையே அந்த
வீரத்திருமகனே! அழகு நிலாவும் பவனி வருகிறது!
தொப்புள் கொடி உறவாய்
தமிழக இலங்கை உறவு இருக்க, இருளில் தெரிந்தவை
தமிழ் நாட்டில் மணமுடித்து, பகலவன் வர
தாலிக்கொடி உறவை, மறைந்து விடுகின்றது.
தக்க வைத்த மீண்டும் கூடி குலாவல்
தங்க குணமிக்க சிங்கமகனே! குலாவி களைத்ததினால் சில நாட்கள்
மலையக இளைஞர்களுக்கு காணாமல் போய் விடுகின்றன!
விளையாட்டு முன்னோடியாய், இனி பகலவன் ராஜ்யம்
முன்னேறும் பூமியின் வெளிச்சத்தில்
முத்தையா முரளிதரனே! சிதறி கிடக்கின்ற மண்டைஓடுகள் குவித்து வைக்கப்பட்ட சதைகள்
முயற்சியால் முன்னேறுவோம் அடுக்கி வைக்கப்பட்ட பிணங்கள்
இன்னும் முன்னேற பூமியிலும் ஒரு சில வெடிப்புகள்!
எங்கள் முரளிக்கு
இதயபூர்வமான வாழ்த்துக்கள்! போராடிய களைப்பு தீர
- கவின் - மீண்டும் போராட்டம்! வானில் தோன்றுகிறது
மலையக விளையாட்டு வீரர் அதே அழகான உலகம்
முத்தையா முரளிதரனுக்கு இலங்கை பூமியில்
அரசு 709 விக்கெட்டுகளை நிர்மூலமாய் நிர்மலமாய்
வீழ்த்திய சாதனைக்காக முத்திரை மெளனமாக மெளனிக்கிறது
வெளியீட்டு கௌரவித்தது. - கலையரசன் -
39

Page 23
ஹோமியோபதி
பாதுகாப்பான, சிக்கனமான,
சகல விதமான தீராத நிரந் தர
குண மளிக் கும் நாட்பட்ட நோய்களுக்கும் விஞ்ஞானபூர்வமான மருத்துவமுறை. நிரந்தர நிவாரணம்.
ஹோமியோபதி அடிப்படை நியதிகளுக்கும் விதிமுறைகளுக்கும் அமைய சிகிச்சையளிக்கப்படும்.
உலகில் தலைசிறந்த ஹோமியோபதி வைத்தியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட டாக்டர்.
Dr. A. Shanthakumar Consultant Homeopath, Chairman The National Homeopathic Reasearch Institute
Mobile : 0777 - 754108
72. H. Liberty Building,
480/151, Roxy Garden 39, Springvally Road, Danbar Road, Hatton. I Wellawatha, Colombo-06
Hindagoda, Badulla. Te! : 051 - 2222078
Tel : 011 - 2361402
Tel : 055 - 2224726
குன்றம் சஞ்சிகைக்கு
எமது வாழ்த்துக்கள்
நியூ தினூசா பென்சி ஹவுஸ் NEW THINUSSHA FANCY HOUSE
No. P66, St. Anthony's Mawatha,
Colombo - 13. Tel: 060 - 2136242 Mobile : 071 - 6023405

உ
""குன்றம்”
மலையக மக்களின் தனித்துவத்தையும் சமூக விழுமியங்களையும் காத்து நிற்கும் தூணாக விளங்கிட
வாழ்த்துகின்றோம்.
சுவை சோலை இல. 6, கிரீன் பாக் கம்ப்லெக்ஸ், டன்பார் ரோட், அட்டன்.
குன்றம் குன்றின் மேல் ஏற்றிய தீபமாக விளங்க
வாழ்த்துகின்றோம்.
0122
සිගරම්
SIGARAM
''பெருந்தோட்ட மக்களின் வரலாறு கலாச்சார தகவல் நிலையம்”
39A, டன்பார் ரோட், அட்டன் தொலைபேசி இல. : 051 - 2223055

Page 24
ஒஜேge காடுகதை
POOBALASINGHAM
B00K DEPOT
IMPORTERS, EXPORTERS, SELLERS&PUBLISHERSOF BOOKS,
STATIONERS AND NEWS AGENTS.
Head Office : 340, 202 Sea Street, Colombo 11, Sri 1Lanka.
Tet. : 2422321. Fax ; 2337313
E-mail : pbdho@sltnet.lk
Branches: 309A-2/3, Galle Road, Colombo 06, Sri Lanka, Tel : 4-515775, 2504266
4A, Hospital Road, Bus Stand, Jaffna.
பூபாலசிங்கம் புத்தகசாலை
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள்,
நூல்வெளியீட்டாளர்கள்
தலைமை !
இல. 340,202 செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை.
தொ.பே. 2422321. தொ. நகல்) 2337313
மின்னஞ்சல்: pbdho@sltnet.lk கிளை :
இல. 309 /\-2/3, காலி வீதி,
இல. 4A, ஆஸ்பத்திரி வீதி, கொழும்பு 08, இலங்கை
பஸ் நிலையம், யாழ்ப்பாணம். தொ. பே. 4-5 15775, 2504266 தாஜesGGாளவாதடுதலொக்கோலுறைஜைஜதேடுமாற்றத்தைதகதக:ை38

நாங்கள் ) - கனிவுமதி -
அன்றாடம் பாடுபட்டு அடிமைப்பட்டு கிடக்கும் நாங்கள்
சூரியனை தொலைத்துவிட்ட விடியாத கிழக்குகள்
மலையக மாணிக்கங்களென மார்த்தட்டிக் கொண்டாலும் நாங்கள்
முகடுகளுக்குள் எழுதப்பட்ட முகவரியில்லா கடிதங்கள்
ஆங்கிலேயர் காலம் தொட்டு அரசியல் ஆட்சியிலும் நாங்கள் பொசுக்கப்பட்ட புன்னகைகள் பூட்டிவைத்த உண்மைகள்
ஏற்றமிகு வாழ்வினை எதிர்ப்பார்த்திருக்கும் | நாங்கள் ஏமாற்றப்பட்ட நெஞ்சங்களின் ஏக்கப் பெரு மூச்சுக்கள்
'91
லயப்புதருக்குள் புதைந்து போன நாங்கள் சொர்க்கத்தை தேடும் சோகத்தின் முதல்வரிகள்
சுடுகாடு மண் கூட சொந்தமில்லாத நாங்கள் சொரணையற்று கிடக்கும் சுதந்திர தியாகிகள்
கூடை கூடையாக கொழுந்தெடுத்தும் நாங்கள் இருநூறு ஆண்டின் இருண்ட பள்ளங்கள்
இவையனைத்திலும் மாற்றம் காணத்துடிக்கும் நாங்கள் புதுயுகம் படைக்கப்போகும் புதிய இதிகாசங்கள்
சோற்றுக்காக சுமைகளை தோண்டிப் புதைத்து விட்ட நாங்கள் இலங்கை தேசத்தின் இறப்பர் மரங்கள்
'மேலிருந்து ~ கீழ்' இனமத பேதமற்ற உறவு உறுதி செய்யப்பட்டது. சிகரெட்டிலிருந்து பீடிக்கு நெருப்பு பரிமாறியபோது.
- கணேஷ்தர்மலிங்கம் -
(ஈழகணேஷ்)
பாரத தேசமிருந்து பணி செய்ய வந்தும் நாங்கள் பட்டினியில் சாவுகின்ற பஞ்ச தலை முறைகள்

Page 25
மலேசியத் தமிழரின் சுயநிர்ணய உரிமை
- லெனின் மதிவானம் - (ஆய்வுக் கட்டுரை)
மலேசிய நாட்டின் சமூக பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் மலேசியத் தமிழர் எனும் உழைக்கும் மக்கள் குழுமத்தினருக்கு முக்கிய பங்குண்டு. இவர்கள் ரயில்பாதை, வீதிகள் அமைக்கும் பணிகளிலும் மற்றும் ஈயம் தோண்டும் பணிகளிலும், இரப்பர், செம்பனைத் தோட்டத் தொழில்களிலும் ஈடுபட்டனர்.
அவ்வகையில் மலேசிய நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பலமான அடித்தளத்தை இட்டதில் மலேசிய தமிழர் முக்கிய பங்களிப்பு நல்கியுள்ளனர் : இன்றும் நல்கி வருகின்றனர்.
மலேசியத் தமிழர் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அவர்களின் கலாசார பண்பாட்டு பாரம்பரியமானது தென்னிந்தியத் தமிழர்களின் கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை கொண்டிருப்பினும் அவை மலேசிய சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய பரிணாமம் அடைந்து விளங்குவதை காணலாம். மலேசிய பிரதேச உற்பத்தி அமைப்பும், உற்பத்தியை தளமாகக் கொண்டு எழுப்பப்பட்ட சமூக கட்டமைப்பும் அவற்றை தீர்மானம் செய்கின்ற உற்பத்தி முறை உற் பத்தி உறவுகளும் சார்ந்து யதார்த்தமாகியுள்ள வர்க்க
முரண்பாடுகளே இப்பண்பாட்டை தோற்றுவிக்கின்றன.
மலேசியாவில் அரசியல் பொருளாதார சமூக வாழ்வில் மலேசிய தமிழர் ஒரு தனித்துவமான பண் பாட்டை கொண்டவர் களாக காணப் படுகின்றனர். மலேசியாவில் வாழ்கின்ற பிற மக் கள் தொகுதியினரான சீனர்கள், மலாயர்கள் மற்றும் ஏனைய இனத்தவரிலிருந்து பிரித்தறியக் கூடிய உடலமைப்பு, குணநெறிகளை கொண்டதோர் சமூகமுமாக விளங்குகின்றனர். இப்பின்னணியில் அம்மக்களின் அரசியல் சமூக பொருளாதார, பண்பாட்டு அம்சங்கள் குறித்து நோக்குகின்ற போது இம்மக்கள் மலேசிய நாட்டின் மூன்றாவது தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல் நியாயமானதே.
மலேசிய தமிழர்கள் குறிப்பாக அடிநிலை மக்கள் எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்லர். எந்தவொரு நாகரிக சமூகத்தின் மூலத்தைப் போலவே இவர்களும் இம்மண்ணின் மக்களே என்பதை ஆதாரப்படுத்துகின்றன.
42

ெைவ
ஒருபுறமான காலனித்துவ ஆதிக்கமும் மறுபுறமான சமூகவுருவாக்கமும் இணைந்து, தாம் தனித்துவமான தேசிய இனம் என்ற உணர்வை உருவாக்கியுள்ளது எனலாம். இன்றுவரை இவர்கள் பல்வேறுலவிதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டு வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் எழுச்சி பற்றிய கருத்தினை முன் வைக்க ஒரு பிற்போக்கு வாதியின் பார்வையும் ஒரு மார்க்ஸிய வாதியின் பார்வையும் அடிப்படையில் முரண்பட்ட சிந்தாந்தங்களை கொண்டவையாகும். மலேசிய தேசிய இனத்தின் வளர்ச்சியை உழைக்கும் மக்கள் நலன் சார்பான கண்ணோட்டத்தில் நோக்குவது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வலிகோலும்.
ஆனால் இன்று வரை மலேசிய அரசாங்கமும் ஏனைய ஏகபோக சக்திகளும் இம்மக்களை குறிப்பதற்காக "இந்தியத் தமிழர்" என்ற அடையாளத்தையே உபயோகித்து வருகின்றனர். இப்பதமானது மலேசிய பெருந்தேசியவாதிகளும் ஏகபோக வர்க்கத்தினரும் இம்மக்களை எவ்வாறு நோக்குகிக்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. ஓர் உறுதியான இன, மத, மொழி, அரசியல், பொருளாதார, பிரதேச வேறுபாடுகளை கொண்டிருக்கின்ற இம்மக்கள் மலேசிய தமிழர் என்ற உணர்வையே கொண்டு காணப்படுகின்றனர்.
மலேசியாவில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கக் கூடிய, அதே சமயம் மலேசியத் தமிழருடைய எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு வகைப்பிரிவினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்கள் மலேசிய தரகு முதலாளிகளுடன் ஏகபோக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றவர்களாவர். இந்திய மலேசிய நட்புறவின் மூலம் கிடைக்கின்ற சகல விதமான சலுகைகளையும் இவ்வர்க்கத்தினரே அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நலனின் பின்னணியில் தான் மலேசிய தமிழர் சமுதாயத்தில் தோன்றிய தரகுமுதலாளித்துவ வர்க்கம் அவ்வப்போது வந்து குடியேறும் இந்தியத் திமிழர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உழைக்கும் வர்த்தகத்தினரை தமக்கு சாதகமாக காட்டி அதனூடாக தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே "இந்திய தமிழர்" என்ற பதத்தை பிரயோகிக்கின்றனர்.
தேசிய சிறுபான்மை இனத்தரகு முதலாளித்துவ வர்க்கம் பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் போக்கு மலேசியாவிற்குமட்டும் உரித்தானதொன்றல்ல.
பர்மாவிலே இந்திய நிலவுடைமையாளர்களும் பூர்ஷ்வாக்களும், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் சீன
43

Page 26
பூர்ஷ்வாக்களும், மலேசியாவில் சீன, இந்திய பூர்ஷ்வாக்களும் இவ்வாறே ஆதிக்கம் செலுத்தினர். இதற்கான காரணம் யாதெனில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மூலதனத் திரட்சி மிகவும் மந்தமாக இருந்தபடி படியால் ஓரளவு வர்த்தக மூலதனத்துவ வளர்ச்சி பெற்ற அண்டை ஆசிய நாடுகளைச் சேர்ந்த பூர்ஷ்வாக்கள் வர்த்தகத்துறையை கைப்பற்றிக் கொண்டனர் என்பதேயாகும்.
இவ்விடத்தில் மலேசியாவின் சூழலை இலங்கையுடன் ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமானதாக அமையும். இங்கு நகரத்தை மையமாகக் கொண்ட பெரும் வர்த்தக பூர்ஷ்வாக்கள் தேசிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களான இருந்தார்கள். அதே சமயம் அவர்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத அதே சமூகத்தை சார்ந்த பெருமளவு மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்ந்து கொண்டு தனியான மக்கள் குழுவாக உருவாகிக் கொண்டிருந்தார்கள்.
உள்நாட்டு பூர்ஷ்வாக்கள் தோன்றி வளர ஆரம்பித்த போது இந்த "அந்நிய பூர்ஷ்வாக்களுக்கு" எதிராக தேசியவாதம் கிளப்பப்பட்டது. அத்தேசியவாதம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராகவும் திசை திரும்பியது. அதை விட முக்கியமான விடயம் யாதெனில் அதுவரை தம் சமூகத்தைப் பற்றி கவலைப்படாத தேசியச் சிறுபான்மை பூர்ஷ்வாக்கள் தமக்குப் பிரச்சினை வந்தபோது தமக்கு எதிராக தேசியவாதம் எழுப்பப்பட்டபோது தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொழிலாளரிடம் ஓடினர். அவர்கள் மத்தியில் தேசியவாதத்தைத் தட்டி எழுப்பி அவர்களை ஸ்தாபனப்படுத்தினர். ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் கொடுத்தனர். தேசிய இயக்கங்களைத் தொடக்கி தலைமைத் தாங்கினார். (மோகன்ராஜ் (1984) இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், (மலையக மக்களின் வரலாறு), ஈழம் ஆய்வு நிறுவனம், சென்னை, பக்.70-71.)
மறுபுறமாக மலேசிய தமிழர் என்ற உணர்வு அதன் வெளிப்பாடான தேசியமானது மலேசிய தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்.
ஒடுக்குதலுக்கு உட்படும் எந்த மக்கள் பிரிவினரும் அந்த ஒடுக்கு முறை எந்த வடிவில் இடம் பெறுகின்றதோ அந்த வடிவத்திற்கு எதிராக போராட வேண்டியது நியாயமானது என்ற வகையில் மலேசிய தமிழர்கள் தமது கலாசார ஒடுக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது முற்போக்கானது. அதே சமயம் அவ்வார்ப்பாட்டங்கள் இந்துத்துவ அடிப்படைவாதத்திற்குள் மூழ்கி விடாமல் இருக்க வேண்டியது
44

முக்கியமானதொன்றாகும். மலேசியாவில் இடம்பெற்ற கலாசார ஒடுக்கு முறைக்கெதிரான இந்து மக்களின் போராட்டங்களை இந்தியாவில் இடம் பெற்று வருகின்ற இந்து தீவிர வாத இயக் கங் களின் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது அது பல்வேறு அம்சங் களில் குணாம்ச ரீதியான வேறுபாடுகளையும் வர்க்க நலன்களையும் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். இந்தியாவில் இடம்பெற்று வருகின்ற இந்துத்துவவாதிகளின் போராட்டமானது இந்து மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகவே அமைந்து காணப்படுகின்றது. ஆனால் மலேசியாவை பொறுத்தமட்டில் தமது உரிமை மீறல்களுக்கெதிராக தமிழர்கள் மேற் கொண்டுள்ள போராட்டம் மலாயர்களுக்கு எதிரானது அல்ல என்பதயும் வலியுறுத்த வேண்டும். ஒடுக்கும் இனத்திலுள்ள அனைவரும் இன ஒடுக்கலின் மூலமாக நன்மை பெறுவோரல்ல. பெரும்பாலானோர் பொருளாதார சுரண்டல்களுக்கும் ஒடுக்கு முறைக்கும் உட்பட்டு வருகின்றவர்கள்.
அமெரிக்க (யூ.ஸ்.) நீக்ரோ இன விடுதலை போராட்டம், அடிமை முறையிலிருந்து விடுபடும் போராட்டங்களிற் தொடங்கி பல்வேறு உரிமைப் போராட்டங்களுடாக வளர்ந்து இன்னும் அமெரிக்க சமுதாயத்தில் நிற வேறுபாடின்றி சமத்துவம் வேண்டி நிற்கும் போராட்டமாகத் தொடர்கிறது. அமெரிக்காவில் வெள்ளை நிற வெறியும் இன ஒடுக்கலும், அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய வல்லரசாகத் தொடரும் வரை ஒழியப்போவதில்லை.
நீக்ரோ மக்களதும் அவர்கள் போன்று ஒடுக்கப்பட்ட ஹிஸ்பானிக் (ஸ்பானிய மொழி போசும் லத்தின் அமெரிக்கா) சிறுபான்மையினரும். தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சில்லறைத் சீர்திருத்தங்கள் பிரச்சினையின் ஆணிவேரைத் தொட தவறிவிட்டன. எனவே, அவர்களது இன விடுதலை போராட்டம் தொடர்கிறது. அவர்களது நீணடகால கலாசார வரலாற்று வேறுபாடுகள் அவர்களைத் தனித் தேசிய இனங்களாக அடையாளங் காட்டினாலும் அவர்களது போராட்டம் பிரிவினைப் போராட்டமாக வடிவம் பெற இயலாது.
அமெரிக்க நீக்ரோக்களை ஒரு சுதந்திர தனி நாடாக்கும் கருத்து சில இயக்கங்களால் 60களில் முன்வைக்கப்பட்டு பெருவாரியான நீக்ரோ இனத்தவர்களால் நிராகரிக்கப்பட்டது. இன்று தென் ஆபிரிக்கா (அசானியா) வில் நடக்கும் விடுதலைப் போராட்டமும் முன்பு ஸிம்பாப்வேயில் நடந்ததும் உள் நாட்டில் இருந்த வெள்ளை இன வெறி அதிகாரத்திற்கு எதிரானவை. வெள்ளை இன மக்களும் ஒடுக்கப்பட்ட ஆபிரிக்கா மக்களும் பெருமளவிற்கு ஒரே தேசத்திற்குரிய இயல்புகளை உடையவர்களல்ல. ஆயினும் அந்த நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் அங்கு |
45

Page 27
வெவ்வேறு சுதந்திர நாடுகளை உருவாக்குவது தொடர்பானவையல்ல. அங்கே விடுதலைப் போராட்டத்தின் மூல நோக்கம் நிறம், இனம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் ஒடுக்க அனுமதியாத ஐக் கிய மான சுதந் திர தேசத் தை உருவாக்குவதாகும். (இமயவரம்பன் (1988), இன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும், புதிய பூமி வெளியீட்டகம், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை. பக் 22,23)
அந்த வகையில் மலேசியாவில் இடம் பெற்று வருகின்ற தமிழர்களின் கலாசார ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டமானது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப் படுவதுடன் பின் வரும் அம் சங் களும் இணைக்கப் பட வேண்டு மென் பது காலத்தின் தேவையானது.
மலேசிய தமிழரின் பாரம் பரியமான பிரதேசங் கள் ஒன்றிணைக்கப் பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் முழு அதிகாரங்களும் கொண்ட பூரணமான சுயாட்சி முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இப்பிரதேச சுய ஆட்சியின் கீழ் அவர்களின் பொருளாதாரம், நிதி, நிர்வாகம், மொழி கல்வி போன்ற விடயங்கள் நிர்வகிக்கப்படல் வேண்டும்.
இனம், தேசியம், மதம் அல்லது மொழி என்பவற்றினால் ஒரே மக்கள் கூட்டத்தில் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்ட மக்கள் கூட்டம் என அவர்கள் கொள்வார்களாயின் அந்த இனம் ஒரு தேசிய இனம் என்று அழைக்கப்படலாம் என அண்மைக்கால சமூகவியல் அறிஞர்கள் எடுத்து கூறியுள்ளனர். அந்த வகையில் மலேசிய தமிழர்கள் தொடர்ச்சியான பிரதேசத்தை கொண்டிராமையின் காரணமாகவும் பெரும்பான்மையின மக்களிடையே பெரினவாத கருத்துக்கள் செல்வாக்கு பெற்றுள்ள மக்களிடையே வாழ்ந்து வருகின்றவர்கள் என்ற வகையிலும் மலேசிய தமிழர்கள் தொடர் பான அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதில் நிதானம் தேவை.
மலேசிய தமிழர்களின் இனவொடுக்கு முறைக்கு எதிராக சுயநிர்ணய உரிமைக்கான மக்கள் போராட்டமானது குறுகிய இனவாதமாகவோ ஏனைய இனங்களுக்கு எதிரானதாகவோ அல்லது தனிநபர் குழு போராட்டங்களாகவோ முன்னெடுக்கப்படாமல் பரந்துப்பட்ட மக்கள் போராட்டமாக அது அமைய வேண்டும். யாவற்றிற்கும் மேலாக மலேசிய தமிழர்களின் சுபிட்சத்திற்கான மக்கள் போராட்டமானது மலேசியாவில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப்பட்ட மக்களின்
46

போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை போராட்டங்களுடனும் இணைக்கப்படல் காலத்தின் தேவையாக உள்ளது.
இவர்களின் மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுபட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன் னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன என்பது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்க கூடிய மக்கள் இயக்கமொன்றினை கட்டியெழுப்புதல் அவசியமானதொன்றாகும். இவ் விடத் தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்கு தல் அவசியமானதாகும். அதாவது கடந்த காலங்களில் மலேசிய தமிழர்களிடையே எழுந்த மக்கள் இயக்கங்கள் குறித்த பார்வையும் விமர்சனங்களும் முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். அவ்வியக்கங்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட புதியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஆதர்சனமாக அமைகின்றன.
மலேசிய தமிழர்தமது தன்னடையாளங்களையும் கலாசார பண்பாட்டு பாரம்பரிய கூறுகளையும் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் அவசியம். இவற்றை பாதுகாத்தல் என்பதன் மறுபுறமாக தமிழர் சமுதாய அமைப்பில் புரையோடிப் போயிருக்கின்ற பிற்போக்கு கலாசாரத்தை முற்றாக மாற்றியமைக்க வேண்டிய சந்தர்ப்பங்களை கவனங் கொள்ளாது விட அவசியமில்லை தமிழர் தமது பண்பாட்டை முன்னோக்கிதள்ள கூடிய நாகரிகமான கலாசார தன்னடையாளங்களை வளர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.
மலேசிய அரசாங்கத்தினால் காலத்திற்கு காலம் கொண்டு வரப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களில் தமிழரின் நலன்களும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட் டங் களை முன் னெடுத் தல் அவசியமானதாகும் . தோட்டங்களிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் தோட்டங்களுக்கு அருகாமையிலே குடியிருப்பு திட்டங்களை உருவாக்கி தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக மலேசியத்தமிழர்கள் அந்நாட்டின் மூன்றாவது தேசிய இனம் என்ற வகையில் அவர்களின் இனத்துவ அடையாளங்களை சிதைக்காத வகையில் அத்திட்டங்கள் ஆக்கப்படல் வேண்டும்.
47

Page 28
மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப
வேண்டியது அவசியம் மலேசியாவில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான போராட்டத்தில் மலேசிய தோட்டத் தொழிலாளர்களை இன ரீதியாக தனிமைப்படுத்தி அவர்களின் சமுதாய உணர்வை சிதைக்கின்ற முயற்சியில் மலேசிய அரசாங்கமும் ஏகபோக வர்க்கமும் ஓரளவு வெற்றிக் கண்டுள்ளது. எனக் கூறின் தவறாகாது. இந்நிலையில் மலேசிய தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்தித்தல் அவசியமாகும்.
இவ்வமைப்பானது தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற அதே சமயம் அதன் ஜனநாயக சக்திகளை தன்னுள் உள்ளடக்கிய அமைப்பாக வளர வேண் டும். அத்துடன் அவ் வமைப் பானது நீண்ட கால தொழிலாளவர்க்க அரசியலைக் கொண்டு முழுமக்களையும் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அது முழு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுதல் முக்கியமானதொரு விடயமாகும்.
மலேசிய தமிழரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாத அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்தும் பேரம் பேசுகின்ற அரசியல் நடவடிக்கைககளால் எதனையும் (தலைவரையும் அவரைசார்ந்தோரின் குடும்ப நலன்களையும் தவிர) சாதிக்க முடியாது என்கதை ம.இ.க.வினதும் அதன் தலைவர் டத்தோ சாமிவேலுவினதும் அரசியல் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இது பேரம் பேசும் மலேசிய இந்திய காங் கிரஸ் அரசியலுக்கும் அதன் தலைவருக் கும் கிடைத்த தோல்வியாகும்.
இவ்வாறானதோர் சூழல் புதிய தலைமைத்துவத்திற்கான தேவையை தமிழர் மத்தியில் உருவாக்கியுள்ளது. இப்பின்னணியில் உருவாகின்ற ஸ்தாபனம் ஒன்றின் மூலம் மலேசிய தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சரியான திசையில் கொண்டு செல்ல முடியும்.
அயலகத் தமிழ் இலக்கியம் தமிழகத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அயலகத்தமிழ் இலக்கியப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தமிழ் இலக்கிய நூல்களை ஆய்வு செய்வதற்கு, அயல்நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் தங்களின் நூல்களின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி, Dr. A Karthikeyan Prof & Heand Dept of Tamil Studies in Foreign Countries Tamil University Tanjauvr - 613010, South India. நூல்களை அனுப்பிவைக்கும் எழுத்தாளர்கள் அதுப் பற்றிய விபர ங் களை தந் துதவுமாறு கேட்டுக்கொள்கிறார். அந்தனி ஜீவா (ஆசிரியர் கொழுந்து) த.பெ. இல். 32, கண்டி. தொலைபேசி : 077 - 661315
48

கலண்டர் உலகில்
நம்பர் வன் நாட்காட்டி
(யுனிலங்காஸ்)
""பெயர் பார்த்து வாங்க அல்ல
தரம்பார்த்து வாங்க!''
32, St. Anthony's Mawatha,
Colombo - 13. | Mobile : 077 6258778 E-mail : balendra_co13@yahoo.com
இந்தக் குன்றம் ~ இமயமாக வேண்டும் ~ குன்றத்தில் இருந்து ~ குறைகளையே ~ சுமக்கும் எம் மலையக நெஞ்சங்களுக்கு குன்றம் நல் மருந்தாகட்டும்
அன்புடன் செ. மோகன்ராஜ் காப்பாளர் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் 157/3, செட்டியார் தெரு, கொழும்பு - 11.

Page 29
ஆதிதிது
ஆர் டி. ஜ
தலைநகர் செட்டியார் தெருவில் உங்கள் பணத்திற்கு
உரிய பெறுமதியான தங்க நகைகளை 22 கரட்டில் நவீன டிசைன்களில் மங்கா அழகுடன் செய்துக் கொள்ள இன்றே நாடுவீர்
> வங்கிகளில், அடகுக
மீட்க்கப்படாத நிலையில் மீட்டு, கூடிய விலையில்
அடகு வைத்த ரசீது ரசீதுடன் தொடர்பு .ெ
R.T, JEW (Genuine 22 KT(
142/7, Se: (Komathy Vila
Colom
2 IS3

இட !
வேலர்ஸ்
டைகளில் அடகு வைத்து இருக்கும் தங்க நகைகளை - வாங்கப்படும்.
டன், நகைகள் வாங்கிய காள்ளவும்
ELLERS
Gold Jewellery) a Street, -ss Complex) bo 11.
அ'N