கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.01

Page 1
20ல
38 ஆபத
A-N|
2007 ஜனவரி
ரூபா. 125/-

20082
ஆண்டு மலர்
எணள்ள கர ச ைத க
ஒய7- வெனேர் பா

Page 2
Vijaya Gen
Agro Servie Dealers In Agro Chemic
Sprayers & Fe
197
, : **
*** 85, Wolfendhal Stre Tel.: (94.1)-327011 Tele
Email: vijaya76 ‘V’ Care for
Rani Grin
Chillie Powder, Curry Stuff. Tu
Rat
ESTO.
219, Main Sti
Tel: 066.
The Flavou

eral Stores ce Centre
als, Vegetable Seeds. ertilizers Etc.
ܗ
Pet, Colombo - 13. efax: (94-1] - 331596
@hotmail.com your crops
ding Mills Curry Powder, rmeric Powder
f
reet, Matale. -22425
+ of Lanka

Page 3
'ஆடுதல் பா யாதியினைய ஈடுபட்டென் ஈன நிலை
மல்லிகை
38-வது ஆண்டு மலர்
தெ
- (
--2
ஜனவரி 2003
மல்லி
--
085
ஒரு ப 'மல்லிகைப் வெளியிட்டு தாக்கத்தை
இது நாற்பதுக் வெளியிட்டு
அது
* 11:11
இபை வெளியீடுக சுவைஞர்க
வந்துள்ளே
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை
மல்லிகை எதிர்பார்க்கின்றது.)
நாமறி சஞ்சிகை தவமாகச் திரிந்து, க பலருக்குத்
தான்.
அதற் இலக்கியக்
201-1/1, SriKanchiresan 3reet,
Colombo -13.
' %I: 320721. £-mal:pmtha/@sltnet.JK
நூல்க எமக்குப்
பல ம

எடுதல் சித்திரம் கவி - 4 கலைகளில் உள்ளம் றும் நடப்பவர் பிறர் பகண்டு துள்ளுவர்'
மல்லிகை
ikai Progressive Monthly Magazine. ரடர்ந்து வெளிவரும் சிற்றிலக்கியூஏடு
"//* 1995M:Frt
22 (C1 08
4. *
கைப் பந்தலாம்
பந்தல்PUBLIC LIBRARY
த அ தாதா - 1/N
- - - -
: மாத இதழையும் வெளியிட்டுக் கொண்டு அதற்கமைவாக
பந்தல்' நிறுவனத்தின் மூலம் இலக்கிய நூல்களையும் டு வருவதென்றால் அதன் ஆழமான பொருளாதார - அறிந்தவர்களே அறிந்து கொள்வார்கள். வரையும் மல்லிகைப் பந்தல் பதிப்பகத்தின் மூலம் சுமார் கு அதிகமான இலக்கியத் தரமான புத்தகங்களை இள்ளோம்."
டயிடையே மல்லிகை இதழ்களில் நமது சமீபத்திய ள் சம்பந்தமாக நமது புதிய வரவு நூல்கள் பற்றியும் ள் தெரிந்து கொள்ளத் தக்கதாக விளம்பரப் படுத்தியும்
பாம்.
ந்ெத வரைக்கும் 'எழுத்து' செல்லப்பா அவர்கள் தான் வெளியீட்டுடன் நூல்கள் வெளியிடுவதையும் ஒரு செய்து வந்தவர். அவற்றைத் தமது தோளில் சுமந்து கல்லூரி கல்லூரியாகப் போய் விற்று வந்தவர் என்பதும் - தெரியாமல் இருக்கலாம். ஆனால், உண்மை அது
கலாம்
கு அடுத்ததாக மல்லிகை தான் இந்த ஆரோக்கியமான
கடமையைத் தொடர்ந்து செய்து வருகின்றது. களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் இதே சமயம் பல்வேறு அநுபவங்கள் ஏற்படாமல் இல்லை.
மகிழ்ச்சிகரமான சம்வங்கள். சில கசப்பான அநுபவங்கள்.

Page 4
இவைகளை அதன் இயல்பான தன்மைகள் மாறாமல் அந்த அந்தச் சந்தர்ப்பங்களில் நாம் ஏற்றுக் கொள்ள நம்மை நாமே பழக்கப் படுத்திக் கொண்டோம்.
இந்தப் புத்தக வெளியீட்டுத் துறைக்குப் பலர் பல வழிகளில் உதவி செய்துள்ளனர். இவர்களில் நண்பர் செங்கை ஆழியானது பங்களிப்பு முக்கியமாகக் குறிப்பிடத் தக்கது. 'கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ' என்ற சிரித்திரன் ஆசிரியர் சுந்தரின் நுால் வெளிவருவதற்கும் அதைச் சீராகத் தொகுத்துத் தருவதற்கும் இவர் முழு முதற் காரணமாக இருந்துள்ளார். இந்த நூல் மல்லிகை வெளியீடுகளில் மிக முக்கியமானதொன்று. அடுத்தது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவ மாணவியரது சிறுகதைத் தொகுதி. 'மண்ணின் மலர்கள் ', 'முனியப்பதாசனின் சிறுகதைகள் கண்டிப்பாக வெளிவந் தேயாக வேண்டும்' எனப் பாரிஸில் நடந்த அகில ஐரோப்பிய புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட சிலரால் இக் கருத்து வைக்கப் பட்டது.
அவர்கள் கோரிக்கையை இங்கு ஏற்றுக் கொண்டு செங்கை ஆழியான் வெற்றிகரமாகக் கருமமாற்றினார். அடுத்து மல்லிகைச் சிறுகதைகளைத் தேடித் தேடித் தொகுத்தளித்தார். அத்துடன் நமது மண்ணின் அற்புத ஓவியர் எனக் கணிக்கப்ப்பட்டுப் புகழ்ந்துரைக்கப்படும் ரமணி ' அவர்களிடம் அட்டைப் படங்களையும் வரைந்து தர உதவினார். தொடர்ந்து மல்லிகைக் கதைகள் இரண்டாம் பாகத்தையும் வெளியிடக் கதைகளையும் சேகரித்துத் தந்தார். பாரிய உழைப்பு இது.
இந்த இரண்டாம் பாகத்தில் நாற்பது சிறுகதைகள் இடம் பெற உள்ளன. அச்சு வேலைகளெல்லாம் ஏற்கெனவே ஒப்பேறி விட்டன. அதைப் பாரிய நூலாக்குவதுதான் புத்தாண்டில் புதுவேலை..
இந்தத் திட்டத்திற்கு நமது பொருளாதாரம் இடம் தரக் கொஞ்சம் சங்கடப் படுத்துகிறது. நிச்சயம் இதைச் செய்து முடித்து விடுவோம். மல்லிகையின் அர்ப்பணிப்பு உழைப்பின் மீது அபிமானம் கொண்டவர்கள் இந்த வெளியீட்டுத் திட்டத்திற்கு உதவி செய்ய முன் வந்தால், எமது தோளின் பாரம் சற்றுக் குறையலாம். மலரின் முன் முகப்பிலேயே ஏன் இதைப் பற்றி எழுதுகின்றோம் என்றால், மல்லிகையைக்

கடந்த காலங்களில் ஆதரித்து வந்த சுவைஞர்கள் பலருக்கு எமது வெளியீடுகள் போய்ச் சேரவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதற்காகவே.
ஆசிரியரது சுயவரலாற்று நூலான 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' என்ற புத்தகம் வெறும் சுய சரிதமல்ல. வடபுலத்து வாழ் மக்களின் கடந்த நூற்றாண்டின் முழு வாழ்க்கையின் வெட்டுமுக வசன இலக்கியமது. அவசியம் நூலகங்களில் இடம்பெற வேண்டிய ஒன்று. இளந்தலைமுறையினர் படித்துப் பார்த்துச் சேமித்து வைக்கத் தக்கதான பல நூல்களை மல்லிகைப் பந்தல் இதுவரை வெளியிட்டு
வந்துள்ளது.
நமது தேசத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளந்தமிழ்ப் படைப்பாளிகளின் ஆக்கங்களை மல்லிகைப் பந்தல் தந்து பட்ட நோக்கில் இதுவரை விெளியட்டுள்ளது. அந்தப் படைப்பாளிகளின் பெயர்களை ஊன்றிக் கவனித்தாலே அது விளங்கும்
மல்லிகைப் பந்தல் தோன்றிய மண். வடபுலத்துப் பிரதேம் தான். ஆனால், அது தன் இயங்கு தளத்தையும் கடந்து தனது வெளியீடுகள் மூலம் ஐரோப்பிய, கனடா. அவுஸ்திரேலியா போன்ற பிரதேசங்களிலும் இன்று விதந்து பேசப்பட்டு வருகிறது.
35, 36, 37-ம் ஆண்டு மலர்கள், அவுஸ்திரேலியச் சிறப்பிதழ்கள் சிறிதளவு எம்மிடம் உண்டு.
இந்தத் தேசத்தின் " பகுதிகளிலும் இயங்கி வரும் நூல் நிலையங்கள். கல்லூரி நூலகங்கள், மற்றும் பல்கக்ை கழகங்கள் நமது வெளியீடுகளைத் தெரிந்து கொள்வதுடன், அவை இலக்கியத் தரமாக இருந்தால் அவற்றைக் கொள் வனவு செய் து நமது நல் முயற்சியை ஆதரிக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
Tள் வலெ வெ
இந்த அதரவு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகைச் சஞ்சிகையின் வளர்ச்சிக்கு அடிப் பசளையிட்டுத் தண்ணீர் வார்த்ததற்குச் சமனாகும் என இச் சந்தர்ப் பத் தில் கூறிக் கொள்ளுகின்றோம்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
|2

Page 5
எப்பொழுதுமே 6 நானே உருவாக்
வெளிவரும் ஒவ்வோர் ஆண்டு மலர்களின் தலையங்கப் பகுதிகளில் கடித மூலமாக உங்களுடன் தொடர்பு கொண்டு எழுதி வருவதை வழக்கமாகக் கொண் டுள் ளேன். அதையொட்டியே இந்தக் கடிதத்தையும் இங்கு எழுத்தில் எழுதிப் பதிய வைக்கின்றேன்.
என் மன ஆதங்கங்களை இப்படி எழுத்தில் எழுதிப் பதிந்து வைப்பதில் எனக்கொரு ஆத்ம . திருப்தி உண்டு.
எனது எழுத்து வாழ்க்கைக்கு அரை நூற்றாண்டுக் காலத்திற்கு அதிகமாகவே வரலாறு உண்டு.
நான் நேசிக்கும் மக்கள் புழங்கும் மொழியினூடாக என்னால் எழுத்தில் பதியப்பட்டு வரும் கருத்துக்கள், பின்பொரு காலத்தில் சர்ச்சிக்கப் பட்டு, விவாதிக்கப் படும் என்ற மன நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.
இந்தத் தன்னம்பிக்கையைச் தப்பாகப் புரிந்து கொண்ட சிலர், இது வெறும் தலைக்கனம் எனக் குற்றஞ் சாட்டி வருகின்றனர். வேறு சிலரோ ஆணவமிக்கவன் என விமரிசனம் செய்வதும் உண்டு.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறுமே தனிமனித சுய ஆணவமல்ல. ஒடுக்கப் பட் டோர் பரம்பரையில் பிறந்து, சகல இடையூறுகளையும் புறமொதிக்கி நிமிர்ந்து நின்று, 'நாவலர் பூமியில் தொடர்ந்து சிற்றேடொன்றை நடத்தி வருபவனின் என்கின்ற நியாயமான பெருமையில் முகிழ்ந்த, போராட்ட குணம் மிக்க ஒருவனது ஆரோக்கியமான முன்னோடி ஆணவம், அல்லது மனத் திமிர் தான் இது!
பட்டப் படிப்புகளாலும் உயர் குடி மேட்டிமை வாய் ந்த பரம்பரைக் குலச் சிறப்புகளாலும் பொருளாதார வளத்தாலும் தமிழைத் தமது

எனக்கான மொழியை கிக் கொள்ளுகிறேன்
தனியுடமையாக்கிக் கொண்டு திரியும் சில இலக்கிய உலகின் பிதா மகர்கள் - தமிழை வட்டிக்கு விட்டுப் பிழைக்கும் சில புதுப் பண்டிதக் கூட்டத்தினர் - போன்றவர்கள்தான் என் மீது தொடர்ந்து அபாண்டம் சுமத்தி வருவதற்கு முழுமுதற் காரணம் என நான் வடிவாகவே அறிந்து வைத்திருக்கிறேன்.
அறிவுச் சறுக்கல் கொண் டுழலும் இத்தகையவர்களுக்காக நான் அநுதாபப் படுகின்றேன்.
இத் தயைவர்களது மரபணுக் கூறுகளில் இன்னமும் இவர்களது மூதாதையினரின் உயர் மேலாதிக்கக் குலத்தினரது நுண் துகழ்கள் படிந்து போயுள்ளதோ என நான் அடிக்கடி சந்தேகிப்பது வழக்கம்.
இதை இந்த மூலத் தொடர் பரம்பரையினர் மறுக்கலாம். விஞ்ஞான ரீதியாகச் சிந்தித்துப் பார்த்தால் இது தான் பச்சை உண்மை.
'வசன நடை கை வந்த வல்லாளர் நாவலர் இன்று இருந் திருந் தால் என்ன கருத்துக் கொண்டிருப்பார்? என நான் சிந்தித்துப் பார்ப்பதுமுண்டு. மனசுக்குள் சிரித்துக் கொள்வதுமுண்டு.
இலக்கிய உறவுகள், சாதனைகள், பாராட்டுக்கள், ஏன் பல்கலைக் கழகப் பட்டமளிப்புகள் கூட, இன்று இந்த மண்ணில் சாதியின் அடிப்படையைக் கொண்டே நிர்ணயிக்கப் படுகின்றன. என்பதை நன்றாகவே நானறிவேன்.
சில விதிவிலக்குகள் உண்டு. அதையும் நான் | ஒப்புக் கொள்ளுகிறேன். ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னரும் பல தடவைகளில் இதைப் பற்றி விளங் கப் படுத்தியிருக்கிறேன். தன்னம்பிக்கை என்பது வேறு. தலைக்கனம் என்பது வேறு. இரண்டுமே ஒன்றல்ல. தன்னம்பிக்கை ஆரோக்கிமானது. தலைக்கன ஆணவம்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
| 3

Page 6
கணிசமானவர்கள் தான் "பேரினவாதிகள் எங்களது உரிமைகளைக் கூடத் தரமறுக்கிறார்கள்!'' என உரத்த குரலில் ஊடகங்களினூடாகக் குரலெழுப்புபவர்கள்.
இதற்கெதிராக, இள வயசில் இருந்தே நான் எனது நாவைப் பயன் படுத்தி வந்துள்ளேன். பின்னர் எனது பேனாவால் மக்களுடன் பேசக் கற்றுக் கொண்டேன்.
இதற்கமைவான மொழியைச் சதாகாலமும் தேடியலைந்து கொண்டிருக்கிறேன்.
மனிதம் என்ற தத்துவத்தை எனக்குக் கற்றுத் தந்தது, நான் விரும்பி ஏற்றுக் கொண்ட தத்துவம் வெகு சனத் தொடர்பு அதைத் தொடர்ந்து கடைப் பிடிக்க வைத்தது. - வளர்த்தெடுத்தது.
தனது பழைய நைந்துபோன சட்டையைப் பாம்பு தோல் உரிப்பது போல, தமிழ் மொழியும் தனது சட்டையை உரித்தெடுக்க வேண்டும் என அடிக்கடி யோசித்து வருபவன், நான்.
வாலாயமாக அந்தப் புது மொழி - மண்ணின் மக்கள் பேசும் பாஷை - எனக்குக் கைகூடி வந்தது. அந் தப் பாமர மக்களின் மொழியே எனது படைப்புகளை, கருத் துகளை உருவாக்கம், படைப்பாக்கம் செய்யப் பயன்பட்டுவருகிறது.
நான் மக்களிடமிருந்து தனிமைப் பட்டுப் போய்விடவில்லை. பெரும் புகழையோ பெரும் பெரும் மக்களின் நட்புறவையோ நான் தேடியலையவுமில்லை.
நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் மக்களின் நல உரிமை காக்கவே எனது சகல திறமைகளையும் இன்று வரை பயன்படுத்தி வந்துள்ளேன். அதற்காக எனது பேச்சு மொழியையும் எழுத்து மொழியையும் பக்கத்துணையாக, போராயுதமாக - கைக்கொண்டு
வருகின்றேன்.
இந்த அயராத கடும் உழைப்பின் பின்னணி தான் மல்லிகையின் வரவும், தொடர் வளர்ச்சியும்.
எனது எழுத்து வளர்ச்சியிலும் மல்லிகையின் பரம்பல் முன்னேற்றத்திலுமே நான் இன்று நிறைவு காணுகின்றேன்.
முன்னொரு காலத்தில் மல்லிகை வெறும் யாழ்ப்பாணத்துச் சஞ்சிகையாகத் தான் வெளி வந்தது. பின்னர் கொஞ்சம், கொஞ்கமாக, எனது அணுகுமுறை காரணமாக அகில இலங்கை மாசிகையாக மலர்ந்து மணம் பரப்பி வந்தது. அதற்கு அடுத்ததாக. தமிழகத்தையும் தொட்டு மணத்தது. இன்று யார் விரும்பினாலும் சரி, விரும்பாது விட்டாலும் சரி, ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா என்ற கணக்கில்
இ-கம்

கண்டங்கள் தாண்டி மல்லிகை ஒரு சர்வ தேசச் சிற்றிலக்கிய ஏடு என்ற அந்தஸ்திற்கு உயர்ந்து போயுள்ளது.
எனது எழுத்து வளர்ச்சியிலும் அதன் பரம்பல் முன்னேற்றத்திலும் முற்போக்குக் குணம் குறி கொண்ட சகலரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர் என்பது ஓர் ஆரோக்கியமான சங்கதி.
இல்லாது போனால் இச்செடி எப்போவோ கருகிப் பட்டுப் போயிருக்கும். பலர் பசளையிட்டு, நீர் வார்த்து அதனைப் பசுமை காத்து வளர்த்து வந்துள்ளனர். ஆரம்ப காலங்களிலிருந்து இன்றுவரை மல்லிகையில் தொடர்ந்து எழுதி வருவோரின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தாலே, அது புரியும். பல வகைமட்டத்தினர்
அவர்கள்.
'நான் மல்லிகையைப் படிப்பதில்லை!'' எனச் சிலர் சொல்வதாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இது ஒருவகைப் பந்தா!
இப்படியான உயர் தேடல் பந்தாக்காரர்கள் படிக்காமல் இருப்பதே வாழும் இலக்கியத்திற்கு நல்லது. எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கும் உகந்தது.
இந்தக் கும்பலாளிகளைக் கொஞ்சம் கொஞ்சம் துருவித் துருவி நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் அவர்களினது குரலில் 'நாவலரது தொனி' அதில் எதிரொலிக்கும். இதுவும் எனக்குத் தெரியும். 'இவன்களெல்லாம் இழிசனர் தானே!' என்ற கருத்து இதில் தொனிக்கும். இதை இப்படியானவர்களே மறுக்கலாம். இவர்களினது மரபணுக்கூறுகளில் இவர்களது பரம்பரையின் மிச்ச சொச்சங்கள் தானே ஒட்டிக் கிடக்கின்றன!
இது கூட எனக்கு விளங்கும்.
ஆரம்ப காலங்களில் மல்லிகையில் எழுதிய சிலர் என்னைச் சந்திக்க வருவதில்லை. வந்தால் சலூனின் கேற்றைத் தள்ளிக் கொண்டல்லவா மல்லிகை ஆசிரியரைப் பார்க்க வேண்டும்.
இந்த வடிகட்டுமுறை மல்லிகை மீது பற்றுதி கொண்டவர்களை எனக்கு இனங்காட்டி உதவியது.
நாலு பேர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அதனால் வருவதில்லை. ஆனால் மல்லிகையில் படைப்பு இடம் பெற வேண்டும். ஏனென்றால் அது தமிழ் இலக்கிய சேவை!
இத் தகைய வக்கரித்த செமியாக் குணம் கொண் டவர்களைக் கண்டுணர்ந் தும் நான் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (5

Page 7
என்றால், அது தீர்க்கதரிசனம். என்றோ ஒரு நாள் இப்படியானவர்களினுடைய பேரனோ, பேத்தியோ இந்தத் தேசத்தின் பல்கலைக் கழகமொன்றில் உயர் கல்வி கற்கும் போது, ஈழத்து இலக்கிய ஆய்வுக்காக மல்லிகைத் தொகுதிகளைத் தேடித் தேடி அலைவார்கள். அவர்களின் கல்வித் தேவைகளை நினைவில் வைத்துக் கொண்டே தான், நான் இன்று இயங்கி வருகின்றேன். ஆண்டு மலர்களைத் தயாரிப்பதில் விசேஷ கவனமெடுத்து செயல்பட்டு வருகின்றேன்.
எனது எழுத்து மொழி பற்றியும் இலக்கண வழு பற்றியும் தம்மைத் தாமே தமிழின் காவலர்கள் எனப் பிரகடனப் படுத்தித் திரியும் சில இலக்கிய ஓய்வூதியம் பெற்று ஒதுங்கிப் போயுள்ளவர்கள், தமது இருப்பை நிலை நாட்டிக் கொள்ள இப்படியாகக் குறை சொல்வதைக் கேட்டுள்ளேன்.
பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுகின்றேன். நானொரு சாதாரணன். பட்டப் படிப்புகளேதும் அற்றவன். உண்மை ...... மல்லிகை ஆசிரியராக இன்று மிளிர்கின் றேன் . எழுத்தாளனாக இன்று
விளங்குகின்றேன்.
எனது இள வயதுக் கல்வியை நாசப்படுத்தியது யார்? தொடர்ந்தும் உயர்கல்வியைப் பெற முடியாமல் முட்டுக் கட்டைப் போட்டது யார்? எவர்? எனக்கு மாத்திரமா இந்தச் சமூகக் கொடுமை நடந்தது? நான் நேசிக்கும் பஞ்சமர் பரம்பரைக்குமல்லவா இந்தக் கல்வித் தடுப்பு திட்டமிட்டுப் பின்பற்றப் பட்டது?
என் குழந் தமைத் தனம் வீணடிக்கப் பட்டுவிட்டதே!
இதன் உள்ளடக்கத்தை விரிவாக எனது சுய சரிதையில் பதிந்து வைத்துள்ளேன்.
தனக்குக் கீழே சாதிப் படிமுறைக் கலாசாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் தீட்டுக் கலாசாரம் கொண்ட 'இருமரபும் 'துய்ய' உயர் மேலாண்மைக் குழுவைச் சார்ந் த ஆண்ட பரம் பரையினரின் ஆளுகைக்குட்பட்டு, அடிமை குடிமைகளாக மதிக்கப் பட்டு, அடக்கி ஒடுக்கப் பட்டவர்களின் புத்திரர்கள் மொழியில், இலக்கண வலுவுள்ள தூய தங்களது தமிழைத் தேடுவது எத்தனைக்கு நியாயம்?
என் மக்களின் மொழிதான் எனக்குத் தெரியும். அவர்களது மொழியில் இலக்கணப் பிழைகள் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி எனக்குக் கிஞ்சித்தும் கவலையில்லை. அது அவர்களது சொந்த மொழி. அது அவர்களால் காலம் காலமாகப் பாதுகாத்து வரும் பாஷை!

உழைத்துப் பிழைப்பவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பேசும் பாஷைதான் வாழும் வளமுள்ள மொழி, அநுபவம் இதைத் தான் எனக்குக் கற்றுத்தந்துள்ளது.
எனது எழுத்து மொழியில் இலக்கணப் பிறழ்வு உண்டா? இல்லையா? எனக் கவலைப் பட வேண்டியவர்கள் மல்லிகையை நீண்ட நெடுங்காலமாக ஆதரித்துப் போஷித்து, வளர்த்து வரும் சுவைஞர்களே தவிர, இந்த மனக்குரோதம் படைத்த, சாதி அகம்பாவம் கொண்ட நவீன பண்டிதர்கள் அல்ல என் பதை இவர்கள் விளங் கிக் கொள் வது இவர்களுக்கே நல்லது. தமிழின் இலக்கணக் கட்டுக் கோப்புப் பற்றிப் பதறித் துடிக்கும் இந்தப் புதுப் பண்டிதர்கள், தங்களது இலக்கணச் செறிவு மிக்க மொழியில் ஒரு நாவலைப் படைத்துக் காட்டட்டுமே பார்க்கலாம்? ஓரு சிறுகதையைச் சிருஷ்டித்துக் காட்டட்டுமே!
இவர்கள் படைத் தாலும், படித்து ரஷிக்க இவர்களது உறவினர்களே தயக்கம் காட்டி நழுவிப் போவார்கள்.
'நாட்டார் இலக்கியம்' என்ற துறை பற்றி இன்று பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஆய்வுக்கு எடுத்தாளப் பட்டு வருகின்றது. இப்படியான முறைசார் கல்வியாளர்கள் பிற்காலத்தில் ஆராய்ச்சி செய்யப் போகின்றார்கள் என முன் கூட்டியே தெரிந்து கொண்டா வயல் வெளிகளில் அருவி வெட்டிக் கொண்டும், வாழைத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சத் துலா மிதித்த வண்ணமும் பாடல் புனைந்தார்கள்? அவர்கள் தங்களது பாமரத் தமிழில், பேச்சு மொழியில் தானே பாடல் புனைந்தார்கள். அந்த இயல்பான நாட்டார் பாடல்களைத் தேடித் தேடித் தானே இன்று பேராசிரியர்கள் ஊரூராக அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆய்வு செய்து வருகின்றனர்.
இலக்கணம் மீறிய பாடல்கள் தானே அவை! இன்றுங் கூட அப் பாடல் கள் உயிர்ப்புடன் வாழவில்லையா, என்ன?
நான் உலகத்தை இதயத்தின் வழியாகப் பார்த்துப் பழகியவன். கற்றுக் கொண்டவன்.
அப் படியே தான் எனது படைப்புகளைப் பார்க்கின் றேன். மக்களையும் பார்க்கிறேன். மொழியையும் பயன்படுத்தி வருகின்றேன்.
பொமினிக் ஜீவா
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
6

Page 8
இவன் மிச்சம் நல்லவன்
இப்ப பே
இவன் இங்
ஓ ....... இத
அந்த நாள். என் நெஞ்சில் ப
அன்றைய ;
முதற் பாட ( காரியாலயத்தில் ஆலோசித்துக் ெ
'இப்ப என் வந்திருக்கிறதாலே ஒரு மாணவன் கூ
''இதுக்கெல்
''பாடம் மா பாடங்களைப் படி
382
எதை மா? 'ஸேர், கு. இரண்டு பாடங்க பல்கலைக் கழக
''இரண்டும் இரண்டையும் பரி
''ஸேர், கே பாடங்களும் படி மாணவர்கள் பலி மறக்கவில்லை. எல்லாம் தலை |
''புதிசாக எ
Ofb o)
20032னவரி

தெணியான்
ால இருக்கிறது
கு வந்தது.
ற்குள் ஒரு வருஷம் கழிந்தா போச்சு! ....... இவன் வருகை....... அழியாத ஓவியமாக இன்னும் திந்து கிடக்கிறது.
தினம்.
வேளை. வகுப்புக்கள் ஆரம்பித்துச் சற்று நேரம், கல்லூரிக் 2 அதிபருக்கெதிரே நான் அமர்ந்திருந்து, இருவரும் காண்டிருக்கின்றோம்.
ன செய்கிறது! சற்(2) புள்ளித் திட்டம் நடை முறைக்கு ல இங்கே படிக்கின்ற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உட கடந்த முறை பல்கலைக்கழகத்திற்குப் போகவில்லை" ன்ன செய்யலாம்?'
த்த வேணும். புதிய புள்ளித் திட்டத்துக்கு வாய்ப்பான ஓப்பிக்க வேணும்" த்தப் போறியள்?''
றை நினைக்கக் கூடாது. இந்து நாகரீகம், இந்து சமயம் களையும் படித்து அதிக புள்ளிகள் பெற்ற ஒருவன்
ம் போவதில் நியாயமில்லைத் தானே!"
இலகுவான பாடங்கள் எண்டு சொல்லுறியள்! அப்ப, ட்சை எழுத அனுமதித்திருக்கக் கூடாதல்லவா?"
காபிக்கக் கூடாது. நீங்கள் கஷ்டப்பட்டு அந்த இரண்டு ப்பித்ததாலே தான் கடந்த காலங்களில் எங்களுடைய லர் பல்கலைக் கழகம் போனார்கள். அதை நான் ஆனால் புதிய புள்ளித் திட்டம் நடைமுறைக்கு வந்ததும் கீழாக மாறிப்போச்சு” என்ன பாடம் அறிமுகப்படுத்தலாம்?"
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
| 7

Page 9
வேறையென்ன ஸேர்! பொருளியல், புவியியல், வரலாறு....... இப்பிடிப் பாடங்கள் தான்!''
''இந்தப் பாடங்கள் படிப்பிக்க ஆள் வேணுமே!''
'அதுதான் இப்பவுள்ள பிரச்சினை. ஸேர் நீங்கள் எக்கணமிக் செய்யேலுந்தானே!'' -
''செய்யலாந்தான். ஆனால் ....... நான் அதைப் படிச்சு, மறந்து எவ்வளவு காலம்!”
''ஒரு மாதிரி சமாளியுங்கோ ஸேர்! பிள்ளையள் ரியூட்டறியிலே படிப்பாங்கள்”.
.......'>
நான் அதிபரைப் பார்த்த வண்ணம் மெளனிக்கின்றேன்.
“என்ன ஸேர், சொல்லுங்கோ!”
எனது மௌனம் கலையவில்லை.
அப்போது.....
''எக்ஸ்கியூஸ் மீ ஸேர்''
குரல் வந்த திக்கில் ஒரே சமயம் இருவரும் திரும்பிப் பார்க்கின்றோம், காரியாலய வாசலில் அடக்க ஒடுக்கமாக இவன் நின்று கொண்டிருக்கின்றான்.
நெற்றியில் அழுந்தப் பூசி பளிச்சிடும் திரிபுண்டரத் திருநீற்றுப் பூச்சு. அதன் நடுவே சிறிய அழகான சந்தனத்திலகம். கறுப்புப் பிறேமில் தடித்த லென்ஸ் பொருத்திய கண்ணாடி. எதிரில் நின்று பார்க்கும் போது கண்ணாடிக்குள் உருண்டு புரண்டு கொண்டிருப்பது போலத் தோன்றும் பெரிய விழிகள். வளர்ந்து நெடுத்த தோற்றம், சிவந்த மேனி. தோற்றத்தில் ஒரு ஆங்கிலக் கனவான். அதே சமயம் ஒரு சைவப் பழம். கையில் ஒரு பயிலுடன் இவன் நின்று கொண்டிருக்கின்றான்.
சில விநாடிகள் இவனை உற்று நோக்குகின்றேன். காரியாலய விறாந்தையில் இவன் நடந்து வந்த சத்தம் தானும், எங்கள் செவிகளில் வந்து விழாத மென்மை.
வெளித் தோற்றத்துக் கம்பீரத்துக்குள்ளே வளர்த்த நாயின் குழைவு, வாலை ஆட்டி மடிக்கும் பணிவு.
பூனைப் பதுங்கல் இவைகள் யாருக்குரியவைகள்?
எனக்குச் சட்டென்று எல்லாம் புரிந்து போய் விடுகிறது. இவனை விளங்கிக் கொண்டு உதட்டுக்குள் நகைக்கிறேன்.
''யெஸ், வாங்கோ!” அதிபர் அழைக்கின்றார்.

இவன் நாகரிகமாக, பணிந்து, மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே வருகின்றான். அதிபர் எதிரில் வந்து நின்ற வண்ணம் கையில் வைத்துக் கொண்டிருக்கும். பயிலை மெல்லத் திறக்கின்றான். பயிலிலிருந்து நோகாமல் இரண்டு கடிதங்களைக் கையில் எடுத்து, சற்றுத் தலை குனிந்து பணிவோடு அதிபரிடம் கொடுக்கின்றான்.
அதிபருக்கு முன், எனக்கருகே இன்னொரு கதிரை வெறுமையாகக் கிடக்கிறது.
இவனை அமரும்படி அதிபர் சொல்லவில்லை.
இவனும் அமர்ந்து கொள்ளவில்லை.
நான் மீண்டும் இவனை உறுதிப் படுத்திக் கொள்ளுகின்றேன், அதிபர் இரண்டு கடிதங்களையும் படித்துப் பார்க்கின்றார். பின்னர், அதிபருக்குரிய கடிதத்தை என்னிடம் அதிபர் தருகின்றார். அவனுக்குரிய கடிதத்தை இவனிடம் கொடுக்கின்றார்.
நான் கடிதத்தைப் படித்து முடித்து விட்டுத் தலை நிமிருகின்றேன். அதிபர் முகம் நோக்கி ஆவலுடன் இவன் ஏங்கி நிற்கின்றான்.
அதிபர் முகத்தில் தெளிவில்லாத ஒரு குழப்பம். கலவரம் படருகிறது. விழிகளில் எழும் வினாக்களுடன்
அவர் என் முகம் நோக்குகின்றார்.
நான் இவன் பக்கம் திரும்புகின்றேன். 'வெளியிலே கொஞ்ச நேரம் இருந்து கொள்ளும்'
இவன் முகத்தில் இப்பொழுது திடீரெனக் குழப்பம். தயக்கத்துடன் திரும்பி மெல்ல நடந்து வெளியே போகின்றான்.
''இதென்ன ஸேர் கூத்தாயிருக்கு! உடனடியாக ஆளை மாத்தி இங்கே அனுப்பி இருக்கிறார்கள்''.
''ஏ எல் படிப்பிக்க ஆள் வேணுமெண்டு கேட்டியள். அனுப்பி இருக்கிறார்கள்.”
''ஆள் எப்படியோ?'' ''நல்ல பிள்ளை"
''எப்படிச் சொல்லுறது! சொந்த வலயத்துக்குள்ள இடம் கொடுக்காமல் இங்கே அனுப்பி இருக்கினம். குழப்படியா இருக்குமோ!''
'வடமராட் சியான் நுணுக்கமான வன் . விவரந்தெரிஞ்சவன். எதிர்காலத்தில் வரக்கூடிய சிக்கலை இப்ப நினைச்சு ஆளைக் காய் வெட்டி அனுப்பி இருக்கிறான்கள். சும்மாவே, இவன் எம்.ஏ. பாஸ் பண்ணிப் போட்டானெல்லே! பதவி உயர்வ அது இதென்று வந்தால்.....''
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (8)

Page 10
"அப்ப... இவர்?"
வேறை என்ன!''
''ச்ச... ஆளைப் பார்க்க அப்படித் தெரியவில்லை"
''சமய ஆசாரத்தினாலே தங்களை மேன்மைப் படுத்திப் போடலாமெண்டு நினைக்கிற ஆக்களைச் சேர்ந்தவன். எதுக்கும் ஆளைக் கூப்பிடுங்கோவன், எல்லாம் விளங்கும்.
அதிபர் மேசை மீதுள்ள 'பெல்லை' ஒரு தடவை அழுத்துகின்றார்.
காரியாலயப் பியூன் வந்து எதிரில் நிற்கின்றான். “வெளியிலே இருக்கிறவரை வரச் சொல்லு”
அவன் வெளியே போகின்றான்.
அடுத்த கணம், பவ்வியமாக இவன் மெல்ல நடந்து உள்ளே வருகின்றான்.
என் அருகே வெறுமையாகக் கிடக்கும் அந்தக் கதிரையைத் தொட்டும் தொடாமலும் இவன் நின்று கொண்டிருக்கின்றான்.
''நீர் ஏ எலுக்குப் பாடம் எடுப்பீரா? ''எடுப்பன்”
''என்ன பாடம்?'
''தமிழ், பொருளியல், புவியியல்"
அதிபர் விழிகள் மலர என்னை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பகின்றார்.
''அதுசரி, வடமராட்சி கிழக்கில் இருந்து இங்கே என்னத்துக்காக மாத்தி விட்டிருக்கினம். வடமராட்சியிலே நல்ல ஒரு கல்லூரி தந்திருக்கலாமே!''
''நான் விரும்பிக் கேட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன் ஸேர். பயிற்றப் பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பயிற்சி முடிந்ததும் வடமராட்சி கிழக்கு கஷ்டப் பிரதேசத்துக்கு அனுப்பினார்கள். இப்ப எம்.ஏ.முடிச்சிட்டன். பட்டதாரிச் சம்பளம் எடுக்க வேணும். ஏ/எல் வகுப்புக்குப் படிப்பிக்க வேணும். கேட்டால் தட்டிக் கழிக்கிறார்கள். அதனாலே நானாக விரும்பி வலயம் மாறி வந்திருக்கிறேன்.”
''நீர் தேவரையாளிச் சூரன்ரை பள்ளிக் கூடத்திலேயே படிச்சனீர்? நான் இவனைப் பார்த்துக் கேட்கின்றேன்.
ஓமோம் ....... தேவரையாளி இந் துக் கல்லூரியிலே...''
----

உம்மைப் பார்த்த உடனே எனக்கு விளங்கிவிட்டுது, இந்த ஆசாரம் வேறை ஆருக்கு வரும்? சொல்லிக் கொண்டு அதிபரைப் பார்த்து மெல்லக் கண் சிமிட்டுகின்றேன்.
அதிபருக்கும் விளங்கிப்போய் விட்டது.
இவன் சற்று நிமிர்ந்து முகத்தில் பெருமை பொங்க நின்று கொண்டிருக்கின்றான்.
அதிபர் கள்ளச் சிரிப்புடன் குறிப்பாக என்னை ஒரு தடவை நோக்குகின்றார். 'ஸேர் நீங்கள் திறமைசாலிதான்' எனச் சொல்லாமல் சொல்கிறது அதிபரின் அந்தப் பார்வையும் சிரிப்பும்.
''ஏஎல் வகுப்புக்கு பொருளியல், புவியியல் இரண்டு பாடங்களும் உம்மை நம்பித்தான் தொடங்கப் போகின்றேன். ஓஎல் வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்க வேணும்"
''சரி ஸேர்''
''ஸேரோடை போம். ஏ. எல். விஷயங்கள் ஸேர் சொல்லுவார்! கடமை ஏற்றுக் கொண்டதுக்கான கடிதம் எழுதிக் கொண்டு வாரும்'.
"சரி வாரும்" நான் எழுந்து போகின்றேன்.
வளர்த்த நாய்க்குட்டியாக என்னைத் தொடர்ந்து எனக்குப் பின்னால் இவன் வந்து கொண்டிருக்கின்றான்.
அந்த நாள் இப்பவும் எனக்கு மறந்து போனதாக இல்லை.
அன்று ஆசிரியர் கூட்டம், பத்து மணிபோல அதிபர் கூட்டுகின்றார்.
அந்தக் கூட்டத்தில் என்னருகில் வந்து அமருகிறான். இன்றும் என்னருகில் தான். -
ஆசிரியர் கூட்டம் மாத்திரமல்ல. என்ன விழா, என்ன கொண்டாட்டம் நடக்கட்டும். இவன் என்னருகே இருப்பான்.
முதல் நாள் பார்த்த இவன் இன்றும் அப்படியே தான். எந்த மாற்றமுமில்லை.
முதற் பார்வை என்றும் அழியாது நெஞ்சில் பதிந்துவிடுகின்றது என்பார்கள்.
அது காதலர்களுக்கு மாத்திரமல்ல.
முதற் பார்வையில் ஒருவனைச் சரியாகக் கணிக்கும் ஆற்றலுள்ள என்போன்றவர்களுக்கும் பொருந்தும்,
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
9 ,

Page 11
நான் கல்லூரியில் பகுதித் தலைவர். எனக்கென்று தனியான ஒரு மேசை. 'ஸ்ராவ் றூமுக்குப் பெரும்பாலும் போகின்ற வழக்கம் எனக்கில்லை.
இவனும் அநேகமாக அங்கு போவதில்லை.
என்னைத் தேடிக் கொண்டு என்ரை மேசைக்கு வந்துவிடுகிறான் கல்லூரி இடை வேளைகளில் தினமும் தவறாது என்னிடம் வருகின்றான்.
"சரி வாரும்" என்று அழைத்துக் கொண்டு கன்ரீனுக்குத் தேநீர் பருகுவதற்கு இருவரும் புறப்பட்டுப் போவோம்.
அங்கு போன பிறகு தான் இவன் சொல்லுவான், ''ஸேர், குடியுங்கோ ! நான் இண்டைக்குப் பிரதோஷ விரதம்” - - விரதம் "
இன்னொரு நாள், ''விநாயக சதுர்த்தி'' வேறொரு நாள்,
''கார்த்திகைத் திருநாள், நவராத்திரி, கந்த சஷ்டி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை...'
எனக்கு உள்ளுர வியப்புத் தான்.
ஆனால் அவன் பொய் பேசவில்லை என்பது எனக்குத் தெரியும்.
விரதமெதுவுமில்லாத நாட்களில் மாத்திரம் என்னோடு சேர்ந்து தேநீர் பருகுவான்.
என்றாவதொரு தினம் கையிலொரு உணவுப் பார்சல் தந்தனுப்புவாள் என் மனைவி. அன்றைய தினம் மாத்திரம் இவனோடு சேர்ந்து நான் கன்ரீனுக்குப் போவதில்லை.
ஒரு தினம் இருவரும் கன்ரீனுக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருக்கையில் நான் கேட்கின்றேன் -
"ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தாரெண்டு நினைக்கிறேன் ....... யாழ்ப்பாணத்திலே முதல் முறையாக ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆசார சீலராக இருந்த உங்களின்ர ஆக்களத் தான் நல்லூர் முருகன், வண்ணார் பண்ணைச் சிவன்....... கோயிலுக்குள்ளே விட்டவை.''
''ஓம் சேர், நான் அப்ப பிறக்கவில்லை. உள்ளுக்குப் போன ஐந்தாறு பேரிலை என்ர பேரனும் ஒராள்.
அப்பாவின்ர தகப்பன்."
"உம்மைப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே எனக்கெல்லாம் விளங்கிவிட்டுது. அதிபர் ஒருமாதிரிப் பின்னடிக்கப் பார்த்தார். நான்தான் உம்மை இங்கே எடுக்க வேணும் எண்டு விடாப் பிடியாக நிண்டுகொண்டேன்."

''எனக்கது தெரியும் சேர்".
இவனிங்கே வந்தது எவ்வளவு நல்லதாப் போச்சு. அற்பணிப்போடு வேலை செய்கின்றான். என்ர வேலைகளிலே முக்கால் பங்கும் இவன் செய்து தாறான், வகுப்பறைக் கணிப்பீட்டு வேலைகள், எனக்குரிய வினாப் பத்திரங்கள் தயாரித்தல், விடைப் பத்திரங்களைத் திருத்திறது, ஏ எல் இந்து நாகரிகம் வினாப் பத்திரங்களையும் ரகசியமாக இவன் தான் பார்வையிட்டுப் புள்ளியிட்டு தாறான்.
இவன் தோத்திரப் பாடல்கள் பாடினால் கண்களை மூடிக் கொண்டு மெய்மறந்து கேட்டுக் கொண்டு நிற்கலாம். அப்படி ஒரு லயிப்பு! அப்படியொரு இன்ப அனுபவம்! நாயன்மார்கள் தாளம் போட்டு பண்ணோடு தோத்திரங்கள் ஏன் பாடினார்கள் என்பது, இவ்ன வாயினால் பாடல்களைக் கேட்ட பிறகு தான் எனக்குப் புரிந்தது.
எங்கள் கல்லூரி மாணவர்கள் காலையிலும் மாலையிலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னுக்கு .
வந்து இப்போது தேவாரம் பாடுகிறார்கள். ஒழுங்காக நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறார்கள். எல்லாம் இவன்ர வேலை.
சங்கீத ஆசிரியைக்கு இவன் மீது உள்ளூரக் கொஞ்சம் பொறாமை தான்.
-- நானும் இவனும் நல்ல ஒட்டு.
ஆசிரியர்கள் சிலருக்கு எங்களின்ர நெருக்கத்தைக் கண்டு பொல்லாத வயித்தெரிச்சல். ''எஞ்சினும் பெட்டியும் என்று ரகசியமாக சொட்டை பண்ணுகிறார்கள். நான் எஞ்சினாம், இவன் பெட்டியாம். மனம் பொறுக்காதவன் எதுவும் சொல்லி கேலி பண்ணுவான்.
ஒரு நாள் என்ர மேசையில் பேசிக் கொண்டிருந்த சமயம் இவன் சொல்றான்
''நான் ஒரு நாளைக்கு சேர் வீட்டுக்கு வரவேணும்”
''வந்தால் போகுது, சொல்லிப் போட்டு வாரும்...... அது சரி, உமக்குச் சின்னவனைத் தெரியுமோ?"
''ஆர் சேர்''
''சின்னவன்..... சின்னப் பிள்ளை....... உங்கட பக்கத்திலே தான் படிப்பிச்சவன்.”
''சின்னப் பிள்ளை சேர்... அவரிட்டப் படிச்ச நான்." ''அவனொரு நல்ல பிள்ளை." "சேருக்கு அவரை நல்லாத் தெரியும் போல"
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
10

Page 12
''நல்லாத் தெரியுமென்ன! என்ர அயலூர் தானே! இந்தியாவிலே கிறிஸ்டியன் கொலேஜ்ஜிலே இரண்டு பேரும் ஒண்டாத் தான் படிச்ச நாங்கள். எங்களுக்கு அங்கே பெரிய மதிப்பு"
''அப்பிடியா ஸேர்!'' 'என்ன மதிப்பெண்டு கேக்கவில்லை!''
''இந்தியாவிலேயே பெயரைக் கொண்டு சாதியைச் சுலபமாகக் கண்டுபிடிச்சிடலாம். நாடார், சாஸ்திரி, செட்டியார்....... எண்டெல்லாம் பெயரோடை சாதிப் பெயரும் ஒட்டி வரும். உதாரணத்துக்குச் சொல்லப் போனால் காமராஜர் நாடார் எண்டு தானே பெயர். இந்தச் சாதிகளுக்கே பிள்ளைமார் தான் பெரிய சாதி. இஞ்சை எங்களைப் போல....... வெள்ளாளர் போல....., நான் கதிரவேற் பிள்ளை அவன் சின்னப் பிள்ளை - பிறகென்ன சொல்லவே வேணும்! எங்களுக்கிருந்த மதிப்பை! சின்னவன் ஒரு மாதிரி மசிந்துவன். உதெல்லாம் இஞ்சை காட்டிக் கொள்ளக் கூடாது எண்டு நான் சொல்லிப் போட்டன்.
அவன் என்னைக் 'கதிர்' எண்டு கூப்பிடுகிறவன். நான் சுருக்கமாகச் சின்னவன்' எண்டு சொல்லுவன். என்ன சொன்னாலும் நான் இருக்கிற கட்டிலே வந்து சமமாக ஒரு நாளும் இரான். எங்களோடை கூட இருக்கிறவர்களுக்குப் பிடி குடாமல் ஒரு மாதிரி மசிந்திக்கிசிந்தி நிண்டிட்டு, மெல்ல நழுவிப் போய்விடுவான். அவன் ஆள் நல்லவன்”
''ஸேர், ஆரும் நோகும் படியாக நடக்க மாட்டார்.''
நவராத்திரி விழா வந்தது. கல்லூரியில் அதற்கு நான் தான் பொறுப்பு. இவனைக் கூப்பிட்டுச் சொன்னேன்.
''வாணி விழா இந்த முறை சிறப்பாக நடக்க வேணும்”
''நல்லாச் செய்வம் ஸேர்''
பூசை, அவியல் பாகம் எல்லாம் எனது பொறுப்பில் வைத்துக் கொண்டு, சோடனை முதல், போட்டிகள் நிகழ்ச்சிகள் எல்லாம் இவன் பொறுப்பில் விட்டு விட்டேன்.
"தேவாரம் நீர் பாட வேண்டாம், எல்லாம் மாணவர் நிகழ்ச்சியாக இருக்கட்டும்”
பொறுப்புக்களை இவனிடம் கொடுத்தது ஆசிரியர்கள் சிலர் மனதுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
அதிபரிடம் போய் அந்தரங்கமாகச் சொல்லி முறைப்பாடு செய்தார்கள்.
''வாணி விழாவுக்குப் பொறுப்பு கதிரவேற்பிள்ளை

ஸேர் அவர் தனக்கு உதவியாக ஆரையும் வைச்சிருக்கலாம்” அதிபர் சொல்லி அனுப்பிவிட்டார்.
வாணி விழா அன்று பார்க்க வேணும்! விழா நடை பெற்ற மண்டப அலங்காரம் என்ன! சகலகலாவல்லி மாலை ஓதுதல், பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, பட்டி மண்டபம், நாடகம்....... அப்பப்பா....... எல்லாம் உச்சமாக இருந்தது. எல்லோரும் மூக்கிலே விரல் வைத்துக் கொண்டு பார்த்தார்கள். இவன் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை. நான் நேரிலும் இவனைப் பாராட்டினேன்.
கல்லூரியில் மூன்றாந் தவணைப் பரீட்சை ஆரம்பித்து விட்டது. நானும் இவனும் ஏ/எல், பாடங்கள் அதிகம் எடுப்பதால் இந்தச் சமயம் அதிக வேலை எங்களுக்கில்லை. எனது மேசைக்கு இவன் தேடிக் கொண்டு வந்து விட்டான். இருவரும் அமர்ந்திருந்து சாவகாசமாகப் பேசுகின்றோம். இவன் சொல்லுகின்றான்:
''வாழ்க்கையில் சில மனிதர்களை நாங்கள் சந்திக்காது போயிருந்தால் அது எங்களுக்கொரு இழப்பு'
'இப்படி ஏன் சொல்லுறீர்?' “ஸேரை நான் சந்திக்கத் தவறியிருந்தால்.....” "ஹா... ஹா.....” நான் சிரிக்கிறேன். ''ஸேரின்ரை ரீச்சர் றெயின்ட் தானே"
''ஓமோம்....... அவ றெயின்ட் தான்''
''என்ன பாடம்?" ''கிறிஸ்தவம்"
இவன் வாயடைத்துப் போய் எனது முகத்தில் எதையோ தேடுகிறான்.
“என்ன, ஆச்சரியமாக இருக்கா!" ''லவ் மரீச்சா ஸேர்?" “ஓம் அப்பிடித்தான். இப்ப அவ சைவம்” 'கம்பஸ் இப்ப வக்கேசன்!'' ''ஓமோம்....... பிள்ளையள் வந்து நிக்கினம்"
"ஸேரோடை நெருக்கமாகப் பழகத் தொடங்கி ஒரு வருஷமாகுது, ஸேரின்ரை குடும்பத்தில் ஒருத்தரையும் எனக்குத் தெரியாது. வாற ஞாயிறு காலையில் வல்லிபுரக் கோயிலுக்குப் போய்விட்டு அப்பிடியே ஸேர் வீட்டுக்கு வரப் போகிறன்"
'வந்தாப் போச்சு. இப்ப வாரும் ரீ குடிக்கப் போவம்”
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 11

Page 13
இருவரும் கன்ரீனுக்குப் போகிறோம். ரீ குடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து முன் போல அமர்ந்து கொள்ளுகிறோம்.
''சின்னவனிட்டை நீர் படிச்சனீர் எல்லே!” ''ஓம் ஸேர்''
''அவன் நல்லவன், படிக்கிற காலத்தில் எப்போதாவது சிலசமயம் என்னைத் தேடிக் கொண்டு எங்கடை வீட்டுக்கு வருவான். எவ்வளவு தெண்டிச்சாலும் அவன் வீட்டு வாசலோடை நின்று விடுவான். உள்ளுக்கு வாடா எண்டு விடாப்பிடியாகக் கேட்டால் 'இஞ்சை வராமல் விட்டு விடுவன் எண்டு சொல்லுவான். வாசலிலே நிண்டு பேசி முடிச்சுக் கொண்டு திரும்பிப் போய்விடுவான்.
அவன் நல்லவன்"
''எனக்குத் தெரியும் சேர்! அவர் நல்லவர் தான்!”
அடுத்தவாரம் முதல் நாள் திங்கட் கிழமை. நான் கல்லூரிக்கு வந்து காரியாலயத்தில் கைச்சாத்து இட்டு விட்டு எனது மேசைக்கு வந்து உட்காருகிறேன்.
''குட்மோனிங் ஸேர்” சிரித்த வண்ணம் என்றும் போல இவன் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.
- -: கர்
மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள்
சுத்தமான,
சுகாதார முறைப்ப சிற்றுண்டி வகைகளுக்கு கொழு ஹோட்டல், எப்பொழுதும் நிலை
VEGETARI
!,
கோல்ட 98, பாங்ஷால் வீதி
தொலைபே

''குட்மோனிங்....... குட்மோனிங்....... வாரும்” நான் இவனை வழமை போல வரவேற்கிறேன்.
சின்னவன் நல்லவன்,
சின்னவனிலும் பார்க்க இவன் மிச்சம் நல்லவன்.
: ਪਵਈ ॥
: - கவிதை -
'மல்லிகைச் சுவைஞர்கள், விளம்பர தாரர்கள், படைப்பாளிகள்
அனைவருக்கும் எமது 'புத்தாண்டு, பொங்கள்
' வாழ்த்துக்கள் அசதம் - து 'ਚ ਹੈ ਹਰ ਤੇ 5 ਨੂੰ
-ப-ப-ப-ப-ப----
ਤੇ, ਨ ਵਲੋਂ:
சுவையான,
டிதயாரிக்கப்பட்ட
ம்பு மாநகரில் பிரசித்தி பெற்ற எவில் வைத்திருக்கத் தக்க பெயர்
AL HUTET
NN
நகர் கபே இ 5, கொழும்பு - 11. பசி: 324712
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (12)

Page 14
Best Wishes to
Mallikai 38
MILLER
Flera
Establish
Sole Agents /
KODAK Photogra BONLAC Instant TOBLERONE Che CADBURY Choco KRAFT Cheese P. TANG Flavoured POST Breakfast C
alia
1 ਤਸਵੀਰ A liste
P.O.Box: 100, 5
Colombo - 01 Tel: 329151-5 F E-mail:millers@m
- PUBL

th Year Issue
ES LTD.
med 1854
Distributors
aphic Products
Skim Milk Powder Dcolates -lates roducts
Powdered Drink Cereals
Cereals
H
50, York Street, 1, Sri Lanka. ax: +94 1 440273 illerslimited. Com
LIC LIBRARSI AL DI BIDAvi Amourf - 2003 13
JAFFINA

Page 15
வானத்தை வெறித்துப் பார்த்தபடி முருகேசர் படிக்கட்டில் குந்திக் கொண்டிருந்தார்.
முன்னால் நின்ற தென்னை மர ஓலைகளில் வந்தமர்ந்து கதைபேசும் மைனாக் கூட்டத்தையோ, கொச்சை கொச்சையாகக் காய்த்துக் கிடக்கும் அவரைப் பந்தலையோ, வெள்ளைச் சேலையை விரித்து விட்டாற் போல பூத்திருக்கும் மல்லிகைச் செடியையோ அவரால் பார்க்க முடியவில்லை. அவருக்கு எல்லாமே சூனியமாகத் தெரிந்தது.
மாலை மாலையாக விழிகள் கண்ணீரைச் சொரி ய, அவரையு மறி ய மல் அடிக்கடி பெருமூச்சுப் பறந்தது.
-- -- ----..
''காலம் உங்களுக்குத் தந்த துன்பத்தை யாரும் மாற்ற முடியாது. காலம் தான் அதை மறக்கப் பண்ணும். வீணாக மனதைப்
தனிவழி
செ.குணரத்தினம்
லிகை
38:22 25 லர் 200327வரி

போட்டுக் குழப்பாம் பொறுமையா இருங்க. எல்லாம் சரிவரும்” என்று தங்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவந்த நண்பரொருவர் சொல்லிப் போனது அந்த வேளையில் அவருக்கு நினைவில் வந்தது.
காலம் நீண்டு துன்பத்தை மறக்கப் பண் ணும் வரை பொறுமையைக் கடைப் பிடிக்க அவரால் முடியவில்லை.
Fமன
அவரால் மாத்திரமல்ல, அவர் மனைவி, பிள்ளைகள் எவருக்குமே பொறுமையில்லை.
அவரது துன்பத்தை நெஞ்சுக்குள்ளேயே புதைத்து மௌனமாக அழுதபடியிருந்தார். ஆனால், மனைவியும், பிள்ளைகளும் வாய்க்கு வந்தபடி எதையோ வெல்லாம். சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
எல்லோருக்குமே சமனான துன்பம் தான். ஆனாலும் 'எனக்கு மட்டும் தான் தாங்கமுடியாத துன்பம்' என்று ஒவ்வொருவரும் எண்ணிக் கொண்டு, துன்பத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
''எல்லாம் நீங்க கெடுத்தகேடு! இயக்கத்தில சேரப் போறனெண்டு ஓடிப் போனவனக் கூட்டி வராம அப் படியே விட்டிருக்கலாம். செத்துத் துலஞ்சிருந்தாலும் மாவீரர் குடும்பமாக நாமளும் பெருமையோட வாழ்ந்திருக்கலாம்!” என்றாள் மனைவி..
அதைக் கேட்டு எல்லாப் பிள்ளைகளும் ஒத்தூதினார்கள்.
"அது தான் போகட்டும், அதுக்குப் புறகு ஆமிக்காரன் இவனச் சுட்ட நேரத்தில செத்துத் துலஞ்சானா! அப்படி நடந்திருந்தா இந்நேரம் மனமாறிப் போயிருக்கும்!'' என்றாள் மூத்தவள்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 14

Page 16
அதைக் கேட்டு மற்றப் பிள்ளைகளும், | | தாயும் ஆமாப் போட்டார்கள்.
''நான் கலியாணம் முடிக்கப் போறனெண்டு எனக்கிட்டையாவது சொல்லியிருந்தா நம்மட சாதிக்குள்ள ஒரு ஏழப் பிள் ளை யாப் பாத்துக் கட்டி வைச்சிருப்பன்!'' என்றான் மூத்தவளுக்கு அடுத்தவன்!
"அது தானே ! நம்மட சாதிக்குள்ள எத்தின வடிவான - மரியாதையான பிள் ளையளிருக்கு! அறிவு கெட்டவன்! போயும் போயும் எழியசாதிப் பெட்டையைக் கூட்டிக் கொண்டு போனதால ஊருக்குள்ள எப்படித் தலை காட்டுறது!''
-
"இந்த நாசமறுப்பான்ட வேலையால் எங்களுக்குத்தான் நாசம்! இனி எவன் எங்களக் கட்ட வரப் போறான்?''
இப்படி ஆள் மாறி ஆள், வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
2.
முருகேசர் ஒன்றுமே பேசவில்லை. மனம் குமுறக் குமுற அழுதபடியே இருந்தார். அவர் எதையாவது பேசினால் மனைவியும் பிள்ளைகளுமாகச் சேர்ந்து தன்னை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
சூனியப் பார்வையிலிருந்து மெல்ல விலகி, பின் நோக்கி யோசிக்கத் தொடங்கினார்.
***
முகுந்தன் முருகேசருக்கு ஐந்தாவது பிள்ளை. அவரையே உரித்து வைத்தது போல

தோற்றம். அவன் கடைக்குட்டி என்பதால் வீட்டில் எல்லோருக்குமே அவன் மீது அளவு கடந்த பாசம். இரவு பகலென்று பாராது எந்நேரமும் இனிமையாகப் பாடுவான். கதிரை மேசைகளில் பாட்டுக்கு ஏற்றாற்போல் தாளமும் போடுவான்.
"கொஞ்ச நேரமா வது கா து கி ழி யக் கத்தாம், பாடப் புத்தகத்த தூக்கி வச் சிப் படியண்டா'' என்று தாய் கத்துவாள். அவன் அதற்கெல்லாம் காது கொடுக்கவே மாட்டான்.
அவனை அதிகமாக எவரும் கண்டிக்காத - தண்டிக்காத காரணமோ என்னவே பள்ளிப் படிப்பில் அவன் பெரி தாக வெற்றி பெறவில்லை.
ஏனைய நான்கு பிள்ளைகளும் ஏ .எல் சோதனையையும் தாண்டி பல்கலைக்கழகமும் சென்று, பட்டம் பெற்று வந்து விட்டார்கள். இவன் இன்னும் ஓ.எல் பரீட்சையில் கூட முழுமையாகச் சித்தி யடையாதவனாக இருந்தான். "இன்னும் ஒரு தடவை சோதனையை எடுத்துப் பார்!'' என்று எல்லோருமே சொன் னார்கள். அவன் ஓம்படவேயில்லை.
"ஒரு தேங்காய்க் குலையில் ஒன்றிரெண்டு பிச்சாவதில்லையா! ஏதோ அவன் தலைவிதி போல நடக்கட்டும்!'' என்று முருகேசர் சொல்ல, எல்லோரும் அப்படியே விட்டுவிட்டார்கள்.
முகுந்தனுக்கு இருபது வயது நாண் டிவிட்டது. ஆள் திடகாத்திரமாக வளர்ந்திருந்தான். ஆனாலும் அறிவுதான் வளரவில்லை. காலையில் சாப்பிட்டுக் கைகழுவிய அடுத்த நிமிடமே வெளிக்கிட்டுக் கொண் டு ஊர் சுற் றப் போனானென்றால் மத்தியானம் சாப்பாட்டு
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
| 15

Page 17
கவ ைல
நேரத் திற்கு வருவான். கொஞ்ச நேரம் தூங்குவான், பிறகும் வெளியே போவான். தப் பாமல் இரவுச் சாப் பாட்டுக்கும் வந்துவிடுவான். இவன் போக்கைப் பார்த்து யார் ஏசினாலும், பேசினாலும் கோபிக்க மாட்டான். மாறாக ஏதாவது சிரிப்புக் கதையைச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்து நிலைமையைச் சமாளித்துவிடுவான்.
''எப்போது தான் இவனுக்குப் புத்தி பிடிபடப் போகிறதோ!'' என்ற கவலை எல்லோருக்குமே இருந்தது.
ஒரு நாள் இரவு முருகேசர் இவனைப் பார்த்துச் சொன்னார்.
"முகுந் தா, நீ இன் னும் சின்னப் பிள்ளையில்லை. அக்கமாரைப் பார்! அண்ணாவைப் பார் எல்லோரும் படித்து உத்தி யோகம் பார்க்கிறார்கள். நீ எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் இருந்தால் பின்னடி காலத்திற்கு என்ன செய்யப் போகிறாய்?''
இதைக் கேட்டு இவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்தார்கள்.
- ட ட , அவன் சொன்னான்.
“அப்ப, இந்த உலகத்தில எல்லோரும் படித்துப் பட்டம் பெற்றா சீவிக்கிறாங்க இவன் நம் மட செல்லையாவப் பாருங்க கனக்கப் படிக்கல்ல. ஆனா இண்டைக்கு எஞ்சின் போட், வல தோணியெல்லாம் வாங்கி பெரிய முதலாளி யாயிருக்கான். கனக்க வேணாம் இவன் கனகப் பாருங்கவன் கையெழுத்துக் கூடப் போடத் தெரியாதவன் இண்டைக்கு சில்லறைக் கடை போட்டு லச்சச் கணக்காக வங் கி யில பணம் போட்டு வைச்சிருக்கான்! அவனவனுக் கெண் டது

அவனவனுக்கு கிடைக்கும். எல்லாரும் ஒரே மாதிரியிருந்தா அது வாழ்க்கையே இல்ல”
இதைக் கேட்டதும் எல்லோரும் மூக்கில் விரலை வைத்தார்கள்.
"இவனா புத்தியில்லாதவன்! இவனுக்கா மூளை வளர்ச்சியில்லை''
"அப்ப நீயும் வருங்காலத்தில ஒரு பெரிய தொழிலதிபராக வரப் போறனெண்டு சொல்!''
"சும்மா போங்கப்பா இந்தக் கொலனிப் பகுதி யிலெல்லாம்
எத்தனையோ ஆயிரமாயிரம் சனங்கள் சீவிக்குதுகள் . அதுகளுக் கெல்லாம் ஒழுங்கான வேல வெட்டியிருக்கா? அப்படியிருந்தும் அதுகள் சீவிக்கலையா?''
- பார்ட்டி - "அப்படியென்றால் உன்ர வழி” "தனி வழி! நான்லேற்றாக வந்தாலும் லேற்றசாகத் தான் வருவன்!” என்று சினிமா வசனம் பேசிவிட்டு வெளியே போய்விட்டான்.
இப்படி எவரையும் பகைக்காமல் - கோவிக்காமல் எல்லோரையும் சமாளித்து, சிரிப்புக் காட்டி, எவரும் வெறுக்காதபடி வாழ்ந்தவன் ஒரு சாதி குறைவானவளைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போய் விட்டான் என்பதை அறிந்ததும் முருகேசர் குடும்பம் கதிகலங்கிப் போனது.
''உங்க ரெண்டு பேரையும் குத்துவன்! கொலை செய் வன்!'' என்று தாயையும் தந்தையையும் பார்த் துச் சீறினான் முகுந்தனின் அண்ணன்.
"அவன எங்கிருந்தாலும் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து கால் முறிச்சிப் | போட வேணும்!'' என்று கர்ச்சித்தாள் அக்கா.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (16

Page 18
“தேவடியாள் என்ர பிள்ளையை ஏமாத்தி, ஏதோ மருந்து மாயத்தச் செய்து கூட்டித்துப் பொயித்தாளே! முதல்ல அவளைத் தான் கொல்ல வேணும்!'' என்று திட்டினாள் தாய்.
ஆயிற்று!
எல் லோரும் ஆளுக்கொரு திக்காக ஓடினார்கள்.
தேடுதேடென்று தேடி முகுந்தனைப் பிடித்துக் கொண்டு வந்து ஆத்திரம் தீரு மட்டும் அடித்தார்கள்.
"அவளோடு உன்னைச் சேர்ந்து வாழ விட மாட்டோம் உனக்குக் கலியாணம் தான் வேணுமெண்டால் நாங்க வேறொருத்தியக் கட் டித் தாறம் அவளை விட்டு விடு!'' என்றார்கள்.
"அவளை விட்டுப் போட்டுப்பிரிந்து வாறதுக்கு எனக்கு மனச் சாட்சி இடம் கொடுக்கல்ல!'' என்று அவன் ஒரேயடியாகச் சொல்லி விட்டான்.
"இவனை இங் கு வைத் திருந்தால் திருந்தமாட்டான். குடுக்கிற இடத்தில தான் கொண் டுபோய்க் குடுத்து வழிக்குக் கொண் டுவரவேணும்!'' என்று பெரிய இடத்துக்கும் கொண்டுபோய் இரண்டு நாட்கள் தனி யே அறையில் போட்டுப் பூட்டிவைத்தார்கள்.
எதற்கும் சரிவரவில்லை. முகுந்தனையும், அவளையும் கூட்டி வைத்து விசாரணை செய்தபோது இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், அவளுக்கு வயிற்றில் பிள்ளை மூன்று மாதம் என்பதுவும் தெரிய
வந்தது.
"எங்களால் எதுவும் செய்ய இயலாது!

இருவரும் விரும்பும் போது யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அதோடு வயிற்றிலும் பிள்ளை வளர்கிறது!” - பெரிய இடமும் கைவிட்ட நிலையில் கைகளைப் பிசைந்தபடி எல்லோரும் வீட்டுக்கு வந் தி ருந்து ஆத் தி ரம் தீராமல் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
***
நடந்த சம்பவங்கைள் மிக விரைவாகவே மீட்டுப் பார்த்த முருகேசர் பெருமூச்சை விட்டபடி, மெல்ல எழுந்து போய் சாய்வு நாற்காலியில் சவம் போல் விழுந்து படுத்துக் கொண்டார். மனைவியும், பிள்ளைகளும் மாரி மழையாகத் திட்டித் தீர்த்து களைத்துப் போனார்கள்.
முருகேசர் ஒன்றும் பேசவில்லை. மனைவியும், பிள்ளைகளுமே பேசினார்கள்.
"முகுந்தன் மாத்திரம் தானா புதினமாக இப் படிச் செய்திருக்கிறான், எழி ய சாதியெண்டு நையாண்டி செய்யிற இந்தச் சமூகம் கும்பிடுற முருகன் கலியாணம் செய்தது உயர்ந்த சாதிக்காரியையா? சும்மா விட்டுத் தள்ளுங்க!'' இப்படித் தாயும் பிள்ளைகளும் சமூகத் துக்குப் புத்தி சொல்வதாக நினைத்துக் கொண் டு சொன்னார்களே தவிர, தங்கள் மனங்களை இன்னும் அவர்கள் தேற்றவில்லை என்பது - முருகேசருக்கு மாத்திரமல்ல அவர்களுக்கும்
தெரியும்.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
| 17

Page 19
மல்லிகை 38-வது ஆண்டு மல அதற்கே உரிய வாசனை வெளிவர எமது வாழ்
M.P. JAINU
80
Coconut, Copra a
அடக்கிடம்
ஒrop;
m4. 74)
362, Main S Tel: 066 - 2330

களுடன் ஒத்துக்கள்
L ABDEEN
ON
ad Rice Merchants
- அல் ----
S.S.அameeo aukerveen
treet, Matale. 4,074-460230
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
18

Page 20
* 9 E - லெ ல் °!
3824 ஆன்5லர் 20032வரி
:-)
உத்தி மிருக
-மல்லிகை
சிமு பஷீர்

ளிரில், விடிகாலை உறைந்திருந்தது. சோர்வும் உறக்கக் கலக்கமுமாக உற்சாகம் பிறக்கவில்லை. வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு, சூழ்ந்திருந்த மரம், செடிகளை, அர்த்தமின்றி வெறித்தேன். எங்கும் புகை கவிந்த பனிமூட்டம். மாமரத்திலிருந்து முத்துத் துளிகள் சொட்டுச் சொட்டாய் தரையை நனைத்தன.
'கூ....... வ்!, கூ........ வ்...!'
எங் கோ கிளையொன்றிலிருந்து, லதா மங்கேஷ்கார், தொனியில் குயில் கூவத் தொடங்கியது. சுருதியிசை, குருதி நாளங்களை, தொட்டுலுப்புவது. ஒரு ஆனந்த லாகிரி தான். குயிலிசையில் தான், எத்தனை இன்னிசை! சூட்சும், ராகபாவ, குழைவு. இந்த, தேனாமிர்த இசை லயத்தில், மயங்கிச் சிலிர்த்து, மனதை பறிகொடுக்காதோர், யார் உளர்?
நமது கவி, பாரதிக்குக் கூட, குயில் பாட்டு, ஆன்மாவின், கூவலாக உள்ளுணர்த்தி இருக்கிறதே!
''குக்குக்கூ. என குயில் பாடும், பாட்டினிலே தொக்க பொருளெல்லாம், தோன்றிய தென் , சிந்தைக்கே. கன்னிக்குயில் அன்று காவிடத்தே பாடியதோர், இன்னிசைப் பாட்டினிலே, யாதும் பரவசமாய் ....!''
எனத் தன் குயில் பாட்டினிலே பாரதி பரவசமடைந் துள்ளான். ஒவ் வொரு காலைக் கருக்கலிலும், குயிலிசை இயல்பாய்த் தொடங்கி, ஆற்று நீரோசையாக, பிரவாகம் கொள்ளும். ஒற்றைக் தயிலின், சோக ஆலாபனை, உயிரணுக்களை, சுண்டியிழுக்கும். சில பொழுதுகளில், அவை, போட்டிக்குக் கூவி, தமது ஆளுமையை பறைசாற்றிக் கொள் ளும் .கிராமத்து விடியலை, அர்த்தமுள்ளதாக்குவதில், குயில் கூவுகை, பிரதான பங்கு வகிக்கும்.
என்னுள், ஒரு கேள்வி, தீவிரமாய் எழும்.
குயிலின் நெக்குருக வைக்கும் இனிய சுருதி, சோகமயமானதா?, இன்பமயமானதா? இதுபற்றித் நீர்க்கமான, ஒரு முடிவிற்கு வர இயலாத, ஒரு மயக்க நிலை எனக் கெப் போதும் , உண்டு. அதன் பாடுபொருளில், இனம் புரியாத சோக நெருடல், உள்ளழுந்திக் கிடக்கிறது, என்பது மறுக்க வியலாத உண்மைதான்.
சோகம், என்பது ஒருகை ஓசை, மட்டுமல்லவே. அதன் மறுபக்கம், இன்பம் என்று, ஒன்றிருக்கிறதே,
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
19)

Page 21
அதை எப்படி அது வெளிப்படுத்துகிறது?எனது, குயிலாய்வு, இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆவி பறக்கும் தேனீரை, பிரியமுடன் நீட்டினாள் மனைவி. இது ஒரு உற்சாகமான சமாச்சாரம், தான். (நான் தேனீரைச் சொன்னேன்) மதுரக் குரல், ஜானகியின் , பழைய பாடலொன்று நெஞ்சில் , இனித்தது.
குயிலே....... குயிலே!, உந்தன் கீதங்கள் கேட்காதோ? உயிரே - உறவே, அந்தக் காலங்கள் வாராதோ?மனைவியை வாஞ்சையோடு, ஏறிட்டுப் பார்த்தேன். குயிலே!, என்று இவளை அழைக்கலாமா? ஒரு இருபது வருடங்களுக்கு முன்பென்றால், அப்படி அழைத்திருக்கலாம். அழைத்தும் இருக்கிறேன்.....
இப்போது கூடாது ! நெற்றிப் பரப்பின் இரு பக்கமும், வெள்ளை நரை, படர்ந்திருக்கிறது. என் ப தற் காகவல் ல. இவளது குரல், பல சந்தர்ப்பங்களில், கர்ண கடூரமாய், ஒலித்துக் கொண்டேயிருக்கும் அபஸ் சுரமாய். இவளை அப்படியழைத்து, குயிலைக் கொச்சைப் படுத்துவது, அநியாயம்.
ஒவ்வொரு காலைப் பொழுதிலும், ஏதாவது ஒரு விண்ணப்பம், அல்லது வேண்டுகோள், கெசட், அறிவித்தல் போன்று, இவளிடமிருந்து, எனக்குத் திடீரென்று வரும். அவை அதிகாரதொனியிலோ, அல்லது, நளின் பாவனையிலோ, வரலாம். சூழலைப் பொறுத்தது அது.
இந்த வைகறைப் பொழுது, இருக்கிறதே, அது வயதான தம்பதியினருக்குக் கொஞ்சம் நெருக்கமான தருணம் தான். வேறொன்றுக்குமில்லை. நிறைய மனம் விட்டு, பேசிக் கொள்ளலாம். ஏனைய பொழுதுகளில், இளசுகளின், மேலாதிக்கம், ஓங்கி நிற்கும். இது தவிர - இளைய தலைமுறையின், தூக்கம் களைய,
எட்டுமணியைத் தாண்ட வேண்டும்.
"எங்கட ஆடு. ராவெல்லாம், தொண்ட, கிழியக் கத்துற. தீன் தின்னுரோமில்ல! ஒரு கிடாயக் கொணாந்து, பட்டிக்கு, போடானுமப்பா!”
விண்ணப்பம் கையளிக்கப் பட்டதை, உறுதி செய்யுமாப் போல, கொட்டிலிலிருந்து, காட்டுத் தனமாகக் கத்தியது, பெண் ஆடு.
''நாளைக்கு, ஒரு கிடாய் கொணந்து, பட்டி, போட்டுட்டு, திருப்பிக் கொடுக்கோணும்!”
எனது பதிலில் தொனித்த உறுதிப்பாட்டில், அவளது முகத்தில் திருப்தி பரவுகிறது. நண்பன் ரசாக்கின் வீட்டில் நிறைய ஆடுகள் உள்ளன. அதற்கும்

மூன்று மைல்களைத் தாண்டிப் போகவேண்டும். இது விடயமாக ரசாக்கிடம் அண்மையில் கதைத்தேன்.
"இது ஒரு சின்னப் பிரச்சினை தானே, மச்சான். என்கிட்ட ஒரு வாட்டசாட்டமான, பங்காளக்கிடாய் இருக்கு. அத நான் கிட்டடியில், ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். நீ அதக் கொண்டுபோய், காரியத்த முடிச்சிப் போட்டு, திருப்பித்தா!'' என்றான்.
ஓரிரண்டு, சிறிய ஆட்டுக் குட்டிகள், எங்கள் தோட்டத்திலே துள்ளிக் குதித்து, விளையாடுவதைப் பார்க்க, எனக்கு மட்டும், ஆசையில்லாமல் போய்விடுமா? ஒரு நேரத்தை ஒதுக்கி, அங்கு போவதில் உள்ள சிரமமே, இந்தத் தாமதத்திற்கு, காரணம். இனியும் காலம் தாழ்த்தக் கூடாது. எப்படியும் காரியத்தில், இறங்க வேண்டும்.
ரசாக்கை சந்தித்ததில், பரமதிருப்தி, அவன் ஒரு ஆட்டுப் பண்ணையையே, வைத்திருந்தான். பென்னம் பெரிய, அழகான, பங்காளி கிடாய் ஒன்றை தெரிவு செய்து தந்தான். அது கொஞ்சம் முரண்டு பிடித்தபோதும், ஒருவாறு சமாளித்து, கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடையிலேயே, வீடு வந்து சேர்ந்தேன்.
மனைவி, புதிய நிபந்தனை ஒன்றை விதித்தாள்.
''வயசுக்கு வந்த கொமறுப் புள் ளகள் வூட்டுக் குள்ள, இரிக்கிற. ஆடு ரெண்டையும் தோட்டத்துக்குள்ள, கொண்டு பெயித்திருங்க!"
ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடக்கப் போவதைப் போன்ற பதட்டம் அவளுக்கு. நான் எரிச்சலோடு, அவளை முறைத் து விட்டு, தோட்டத்தின் நடுப்பகுதிக்குச் சென்றேன்.
இப்போதுள்ள வயசுப் புள்ளகளுக்கு எதுதான், தெரியாது. காலமாற்றமும், சூழலும், அவர்களை மனரீதியாக முதுமைக்குள் தள்ளிவிட்டன.
சிறகு சிலிர்த்திக் கொண்டு சேவல், கோழியைத் துரத்துவதும், இடம், பொருள், ஏவல், கருத்திற் கொள்ளாது , நாய்கள், பாதைகளில், பகிரங்கமாக, புணர்ச்சியில், ஈடுபடுவதினதும், தாற்பரியம் பற்றி, சிறுபிள்ளைகளே, மனதிற்குள், ரகசியமாக அனுமானிக்கும் போது, வயசுக்கு வந்த பிள்ளைகளின் மனதில், இவையொன்றும், சிதம்பர ரகசியங்களல்ல!
இது தவிர, சும்மா சொல்லக் கூடாது. நமது , தொலைக்காட்சி சேவைகள் குறித்து, பெருமைப் பட்டுக் கொள்ளலாம். இளம் மனதுகளில் பாலியல்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (20)

Page 22
குரூரங் களை, தூண்டிவிட, இருபத்தி நாலு மணித் தியாலங் களிலும், அவற்றின் பங்கு அழுத்தமானது. தமிழ் சினிமா, மோசமான பாலியலை புகுத்தி, இளையவர்களின் மனசை அசுத்தப் படுத்தி, காசு சம்பாதிக்கிறது.
வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள், புதிதாக கற்றுக் கொள்ள எதுவுமில்லை.
கலாசார, சீரழிவும், நெறி பிறழும், சுற்றுச் சூழல்களும், அவற்றினால் எழும் மன அழுத்தங்களும், வியாபித்த வண்ணம் இருக்கின்றன. சமூக மாற்றங்கள், தலைகீழாகிப் போவதை எப்படித் தடுப்பது?
இவை பற்றிய அல்ட் டல்கள், மனதைக் குடைந்தன. கிடாயைத் திடீரெனக் கண்ட ஆடு, அச்சத்தினால் பின்வாங்கித் தடுமாறுகிறது. கிடாய், தும்முவதும், அழைப்பதுமாக, கணங்கள் நீள்கிறது. சிருஷ்டி உபாதை, உயர்திணைகளுக்கு மட்டும் தான் என்பதில்லை. அது அஃறிணைகளையும், அதீதமாக
ஆட்கொள்ளத் தான் செய்கிறது.
ஆடுகளிரண்டும், வேட்கை தணிப்பதில், உற்சாகமாகத் துள்ளிக் குதிக்கின்றன. சம்போகத்தில், ஒன் றை யொன் று, சளைப் பதாயில்லை. களைப்பதாயுமில்லை. கிடாயின், மன்மத அலறல் ஓங்கி தோட்டத்து மரங்களை, கிலிகொள்ளச் செய்தன. இருட்டத் தொடங்கியதும், ஆடுகளிரண்டையும், கொட்டிலில் கட்டிவிட்டு, களைப்போடு உறக்கத்தில் ஆழ்ந்து போனேன்.
பாதிராத்திரி ஒரு மணியிருக்கும். ஆடுகளின் கத்தல், ஓங்கி ஒலித்தன. கழுத்திறுகி, சாகப் போவதைப் போன்ற, கோரமான கூக்குரல். டோர்ச் ஒளியை பாய்ச்சியவாறு கொட்டிலை நோக்கி விரைகிறேன். மனைவியும் பின்னால், ஓடிவருகிறாள். ஆடுகளின், கழுத்தில் கட்டியிருந்த கயிறு இறுகி, சுவாசம் விடக் கூட, முடியாதவாறு, மூச்சடைத்து சங்கடப் பட்டன. கயிற்றுப் பிணையலின் சிக்கல் நீக்கி, ஒவ்வொன்றையும், வேறு வேறாக மரத்தில் கட்டினேன்.
“கிடாய, சும்மா அவிழ்த்து வுடுங்கோ, பெண் ஆட்ட, மட்டும் கட்டுங்கோ! பெண்ண வுட்டுட்டு, ஆண், எங்கேயும் பெயித்திரப் போவதில்ல!''
அவள் ஆட்டுக்குச் சொன்னாளோ? அன்றி, முழு ஆண் சமுதாயத்திற்கும், சேர்த்துத் தான் சொன்னாளோ? உடனடி தீர்வுக்கு வர இயலவில்லை.
அவளது ஆலோசனையை, அமுல் படுத்தின்ேன.

பொதுசன நூலக!
யா: ழ்ப்பாணம்.
பொழுது புலர்ந்தது. எந்த ஆரவாரமும் இல்லை. கொட்டிலில் இருந்து எந்த ஓசையும் கேட்கவில்லை.இரவு போட்ட களியாட்டத்தில், அவை களைத்துப் போய். ஓய்வெடுப்பதாக, எண்ணிக் கொண்டேன். ஆறுதலாக, வெளியே வந்து, கொட்டிலை
எட்டிப் பார்த்தேன்.
தலை கிறுகிறுத்து, மூச்சு, நின்றுவிடும் போலிருந்தது. பேரதிர்ச்சி! கிடாயைக் காணவில்லை. பெண் ஆடுமட்டும், சாவகாசமாக அசை போட்டுக் கொண்டிருந்தது.
மூத்திர நெடி மூக்கைத் துளைத்தது.
மனைவியை திட்டித் தீர்த்தேன். கிடாயை கட்ட வேண்டாம் என்று ஆலோசனை சொன்னவளே, அவள்தானே. எல்லாம் நாசமாகி விட்டது. பெண்ணின் பேச்சை கேட்டதால், இப்படியாகிவிட்டதே! ரசாக்குக்கு என்ன பதில் சொல்வேன்? கிடாய், காணாமல் போய்விட்டது, என்று சொன்னால், அவன் நம்புவானா? அதன் பெறுமதியான ஐயாயிரம் ரூபாயைத் தண்டமாக, செலுத்த, என்னிடம், ஏது பணம்?
பித்துப் பிடித்தவனைப் போல் நின்று, பலவாறும் சிந்தித்தேன்.
கிடாய்க்கு என்ன நடந்திருக்கும்? திருடர்கள் யாரும், கடத்திக் கொண்டுபோய், கசாப்புக்கடைக்கு கொடுத்து, இரவிரவாகக் காசாக்கியிருப்பார்களா? கிடாய் , ரசாக்கின் வீட்டைத் தேடிக் கொண்டு போயிருக்குமா? அதெப்படி சாத்தியம்? இந்தப் பகுதி அதற்கு புதிய இடம், வழி தெரியாது. எங்காவது பாதை தெரியாமல், தறி கெட்டுத் தடுமாறித் திரிகிறதா?
இது ஒரு தேவையில்லாத வேலை இவளது பேச்சைக் கேட்டு, இப்படிச் சிக்கலில் மாட்டிக் கொண்டேனர்? நண்பனுக்கு என்ன பதில் சொல்வேன்?
"இஞ்ச எங் கை யெண் டாலும், மேஞ்சி கொண்டீக்கும். தேடிப் பாத்துட்டு, இழுத்துக் கொண்டு
வாங்க!”
ஒரு காட்டமான பார்வையால் அவளை , முறைத்தேன். இப்படியான சந்தர்ப்பங்களில் மனைவி என்பவள், வாயை மூடிக் கொண்டு, மெளனமாய் இருப்பது மேலான செயல், என்பதை இவள் எப்போது உணரப் போகிறாள். மொத்தமான தடித்த வேலிக்
கம்பொன்றை முறித்து கையில் எடுக்கிறேன்.
மனைவியை அடிப்பதற்காக வல்ல! ஆடு எங்காவது நின்றிருந்தால், நாலு விளாசி அதை,
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (21)

Page 23
இழுத்து வரத்தான் சுற்றுப் பிரதேசத்தில், தேடுதல், விசாரணை, என்று எல்லாம் ஆயிற்று ஆட்டைப் பற்றிய எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. பொலிசில் ஒரு முறைப்பாடு, கொடுக்கலாம் தான் எதற்கும், ரசாக்கைக் கண்டு நடந்ததை சொல்ல வேண்டும்.
பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவன், என்னைக் கண்டதும், உற்சாகமாக வரவேற்றான். என் முகத்தில், மலேரியா பிடித்தவனின், சோர்வு. தயங்கித் தயங்கி நிலைமையை எடுத்துச் சொன்னேன். அவன் என்மீது ஒரு சந்தேகப் பார்வையை உதிர்ப்பது போல் உணர்ந்தேன்.
ஆட்டின் விலை - ஐயாயிரத்தைத் தந்தாலும் சரி, அல்லது அதே போன்ற ஒன்றை வாங்கித் தந்தாலும் சரி! எது வசதி? எனக் கேட் பான் , என்று எதிர்பார்த்தேன்.
"வா!, என்கூட!" என்றவாறு என்னையழைத்துக் கொண்டு பின்புறம் சென்றான்.
ஆச்சரியம் நீங்கச் சில கணங்கள் எடுத்தன எனக்கு. காணாமற் போன கிடாய், நிம்மதியாக அசைபோட்டுக் கொண்டிருந்தது. சாம்பலும், மஞ்சலும் கலந்த அதன் ஒளிமிக்க விழிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
"மச்சான் இதை காட்டுப் பாதை வழியாகத் தான் நான் கூட்டிச் சென்றேன். இது சரியாக இலக்கைக் கண்டு பிடித்தது, எப்படி இங்கு வந்து சேர்ந்தது?'
தேனுகாவின் புதிய வெளியீடுகள்
1. சுதாராஜின் சிறுகதைகள்
விலை: 200/=
ஏழு நண்பர்கள் - செ. யோகநாதன்
விலை: 100/=
- காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு
வந்த கதை - சுதாராஜ்
58/3, அநுராதபுர வீதி,
புத்தளம்.

நண்பன் ரஸாக், குழந்தைச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுக் கூறினான்.
“மச்சான்!, மனிதனை விட, விலங்குகளுக்கு, சமயோசித புத்தியும், மோப்பம் பிடிக்கும், சக்தியும் அதிகம். அது புதிய இடங்களுக்குப் போகும் போது இடத்திற்கிடம் சிறுநீரைக் கழித்தவாறே, செல்லும். திரும்பி வரும் போது, அந்த மூத்திர நெடியை, இனங்கண்டு முகர்ந்தவாறே, இருப்பிடத்தை அடைந்து விடும். விஷயம் அவ்வளவுதான்."
எனக்கு இது புதிய தகவலாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருந்தது. அவன் மீண்டும் விபரித்தான்.
"மச்சான்! விலங்குகளின் அனுபவ உலகம் மிக விசித்திரமானது. கூர்ந்து அவதானித்தால் இவற்றை எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழ்ப் படக் கதாநாயகனைப் போல, பலபேரோடு சண்டையிட்டு, வீரத்தை நிலைநாட்டும், மிருகத்தைத் தான், பெண்மிருகம், சடுதியில் இணை சேர்த்துக் கொள்ளும். நாய்களைப் பொறுத்த மட்டில், பல கூட்டாக பின்னால் போனாலும், அவற்றையெல்லாம் கடித்துக் குதறி, வீரத்தை நிலைநாட்டுமே ஒன்று, அதுதான். கதாநாயகன் அந்தஸ்துக்கு, வரமுடியும்.''
இவ் வளவு விடயங் களையும் அறிந் து வைத்திருக்கிறானே, இவன் ஆடுகள் வளர்க்கிறானா? நாயப்பண்ணை வைத்திருக்கிறானா? என்ற சந்தேகமும் எனக்கெழத்தான் செய்கிறது. இந்த விலங்கினத்தின், ஹீரோ, இஸத்தை கருத்திற் கொண்டுதான், தமிழ்ப்பட கதாநாயகர்களின் விதியை, நிர்ணயித்தார்களோ, படத் தயாரிப்பாளர்கள்? யார்கண்டார்கள்.
ஏதோ பெரிய சங் கட மொன்றிலிருந் து மீண்டுவிட்டேன்! அதுவே பெரிய ஆசுவதம். வீட்டை அடைந்தேன். மனைவியின் பரபரப்பு அடங்கவில்லை. - கிடாய் அதன் இருப்பிடத்திற்கே போய்விட்ட விபரத்தைச் சொன்னேன்.
பற்கள் வெளியே தெரிய, உடல் குலுங்கிச் சிரித்தாள். எந்தப் பெண் சிரித்தாலும், ஒரு அபாரமான கவர்ச்சி வந்து விடுகிறது. இது அவர்களுக்கு கிடைத்த, தனித்துவக் கொடை. என் மனைவியின் சிரிப்பில், ஒரு பத்து வயது குறைந்து, இளமைத் தோற்றம் வந்து விட்டதாய் நான் உணர்ந்தேன்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
' 22

Page 24
Best Wishes to
Mallikai 3.
BE.ES.EN.
Reg: ( 276, Wolfendhal S
Show E/G/1, Central Ro Tel: 348418, 3484
E-mail:bees@isplan Sole Agent for:
1. Offset Printing Plates - Li 2. Tracing Paper - SCHOEI 3. Black Covering Spray - A 4. Printing Chemicals - Hul 5. Printing Chemicals - Han 6. Printing Ink - Coates of Ir 7. Polyester Film - Sam Wo 8. Blankets - CNI Graphics 9. Damper, Ducktor Cover 10. Damper, Ducktor Cover 11. Cutter Knife - Bimal Pla
er
Direct Dealer For:
Tech Nova Imagir Offset Printing Plat and Laser Film

Sth Year Issue
TRADERS
Dffice:-
treet, Colombo - 13
Room: pad, Colombo - 12. 419, Fax: 449809
ka.lk, bees@ltnet.lk
ge
ho Plates - SPAIN LLERSHAMMER - GERMANY bezeta - SPAIN ser Products - Germany
mond Service Ltd. U.K. idia Ltd. » Fils Co; KOREA.
· U.S.A.
· Chapel Hill MFG Co; U.S.A. "- M.S. Graphic Industries - NEW DELHI stics - INDIA
ig Systems (P) Ltd. Mumbai, India əs, Chemicals, Nova Dom Plates
38615 600IGLDUÍ 601 urf- 2003 23

Page 25
னு டீச்சர் அன்றைய புதினப் பத்திரிகையை | ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் மன
அமையின்றித் தவித்த வேளை - பத்திரிகைச் "செய்திகள் வேறு அவளை அலைக்கழித்தன.
என்ன மோசமான செய்திகள் இவை? கிட்டத்தட்ட நாளாந்தம் பாலியல் பலாத்காரச் செய்திகள்! முன்னர் இப்படியான செய்திகளைப் பார்ப்பது அருமைதான். இனப் போர்வையின் போர்வையில் மலிந்துபோன இத்தகைய குற்றச் செயல்கள், சண்டையே ஓய்ந்த பின்பும் தொடர்கிறது என்றால், என்ன காரணம்? நமது நாடு எங்கே செல்கிறது? என்றவாறு அவள் மனம், எண்ணி அலை பாய்ந்தது.
“இந்த நிலமை வளர இன்னும் பல தசாப்தங்கள் இருக்கு தனு. பெரியோரை மதிக்க வேணும் என்கிற எண்ணம் இப்போது குறைந்து போய் விட்டது. சமூகத்தில நாலுபேர் எங்களை மதிக்கிற மாதிரி நடக்கவேணும் எண் ட மாதிரியான சமூக விழுமியங்களும் மதிப்பிழந்து போய்விட்டது. எந்த வழியிலாவது பணம் சம்பாதிச்சால் போதுமெண்ட நிலைப்பாடும் வந்துட்டுது. வெளிநாட்டு மோகம் ஒருபக்கம், போதும், போதாதற்கு சினிமாவும், டீவியும் வேறு எங்களை ஆட்டிப் படைக்கிது......"
நித்தியா டீச்சர், ஒரு நாள் 'ஸ்டாவ் ரூமில்' இப்படியான ஒரு கலந்துரையாடலில், கருத்துக்கூற, 'ஏன் நித்தியா? சினிமா பார்ப்பதற்கு ஆலாய்ப் பறந்த காலமெல்லாம் கடந்த காலமாச்சுதோ?' என்று இன்னொரு டீச்சர் நக்கலடிக்க, 'சினிமாவும், டீவியும்
ஒரு தாயா இருக்கு
'கொடுன்
382) 25 லம் 20032ரவரி
* அன்ன

வேணும் தான். யாரில்லை எண்டது? நல்ல விஷயங்கள் எவ்வளவோ சினிமாவிலை பார்க் கிறம் . சந்தோஷப்படுகிறம். ஆனால், எதுக்கும் லிமிற் இருக்கு என்ன? இது விடிஞ்சால், பொழுதுபட்டால் எந்த நேரமும் சினிமா எண்டு, கன்றாவி உடுப்புகளும், நெளிப்புகளும், காதல் எண்ட பெயரில் காமக் களியாட்டக் காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும், வன்முறைக் காட்சிகளும் இதை தாய், தகப்பன், பிள்ளை, பெரிசு, சிறிசு எல்லாம் வீட்டுக்குள்ள ஒண்டாயிருந்து டீவியில் பார்த்து ரசிக்கிறதும், பல தீமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் தானே? என்று நித்தியா டீச்சர் கூறியதும், தனுவின் நினைவோட்டத்தில் குறுக்கிட்டன.
சந்திர கலாவின் நிலைமையும் இப்படியொரு பக் கவிழைவா? அவள் அப் போது தனுவின் அறையிலிருந்து படித்துக் கொண்டிருந்தாள்.
தன் வீட்டு வாசலில் தனு உட்கார்ந்திருந்தாள். அன்று லீவு நாள் - பாடசாலை இல்லை. அவளது . சிந்தனை சந்திரகலாவைச் சுற்றித்தான் சுழன்றது. பொதுவாகவே அவள் பரந்த மனப்பான்மையும், இரக்க சிந்தனையும் கொண்ட ஓர் ஆசிரியை. வசதியும் செல்வாக்கும் படைத்த அவள் பிறருக்கு உதவுவதில் முன்னிற்பவள். அதில் திருப்தி காணும் இதயம் அவளுக்கு.
கேற் பக்கம் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். நடுத்தர வயது. அடக்கமான தோற்றம். வசதியான
ம?'
லட்சுமி. இராஜதுரை
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 24)

Page 26
குடும்பத்துப் பெண் அல்ல என்பதும் புரிந்தது. தனுவுக்குச் சில வயதுகள் மூத்தவளாக இருக்கலாம்.
''வரச் சொன்னீங் களாம் ரீச் சர். நான் சந்திரகலாவின் அம்மா. என் பெயர் கலாவதி” என்றாள்.
''ஓமோம். வரச் சொன்னேன். வந்து இருங்கோ” அவள் மெல்ல வந்து கதிரையொன்றில் அமர்ந்தாள்.
''வீட்டைக் கண்டு பிடிக்கக் கஷ்டமாக இருந்ததா?”
" "இல்லை. இல்லை. மகள் தெஹிவளை எண்டு சொல்லி விலாசம் தந்தா. அதன் படி வந்தேன்"
அவள் மெல்லப் புன்னகைத்தாள்.
தனு அந்தப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினாள்.
"எதுக்கு ரீச்சர் வரச் சொன்னீங்கள் மகள் படிக்கிறாளில்லையா?''
“அப்பிடி இல்லை. சந்திரா நல்லாப் படிப்பா"
"அப்போ ஸ்கூல்ல ஏதாவது பிரச்சினையா?"
''இல்லை.......... இல்லை............'
தனுவுக்குச் சங்கடம். "உங்களுக்கு எத்தினை பிள்ளையள்?” என்று விசாரணையை ஆரம்பித்தாள்.
''நாலு பொம்பிளைப் பிள்ளையள். சந்திரா மூத்தவ”
"அப்ப அவை எங்க படிக்கினம்?”
''வீட்டுக்குப் பக்கத்திலை உள்ள பள்ளிக் கூடத்தில. சந்திரா தான் உங்கட ஸ்கூல்ல படிக்கிறா"
"உங்கட புருஷன் என்ன செய்யிறார்?''
"கொம்பனி ஒண்டிலை டிறைவர் வேலை........"
தனு நேரே விஷயத்துக்கு தாவினாள். “பொதுவாய், பொம்பிளைப் பிள்ளையளின்ரை முதலாவது தோழி அவையின்ர தாயாகத்தான் இருப்பா. நீங்கள் உங்கட மகளோடை நெருங்கிப் பழகிறதில்லையோ?” என்று கேட்டாள்.
கலாவதியின் முகம் சட்டென்று சுருங்கியது.
''ஏன் ரீச்சர் அப்பிடிக் கேட்கிறியள்? எனக் கொண்டும் விளங்கேல்லை” குரலில் பரபரப்பு ஏதாவது காதல் விஷயத்தில் மகள் மாட்டிக் கொண்டு விட்டாளோ என்று அவள் பரபரத்தாள்.
"கலாவதி! கேளுங்கோ! சந்திர என்ர வகுப்பு மாணவி, மட்டுந்தான். நல்லாப் படிக்கிற ஒரு பணிவான

பிள்ளை எண்டதாலை நான் அவவில் ஒரு அன்பை வைச்சிருக்கிறன். அவ்வளவு தான்....... ஆனால்” என்று நிறுத்தினாள் தனு.
ஆனால் உண்மையாகவே ஒரு தாயிடம் அடுத்த வார்த்தையைப் பேச அவளுக்கு பெரும் தயக்கமாகவும் வேதனையாகவும் இருந்தது. அவளும் இரு பெண்பிள்ளைகளுக்குத் தாய்தான்.
''என்ன ரீச்சர்? என்ர பிள்ளைக்கு என்ன? விளக்கமாய்ச் சொல்லுங்கோ!” அவள் கதிரையிலிருந்து எழும்பி நின்றாள்.
''கலாவதி! என்னை மன்னியுங்கோ! உங்கட மகளைப் பற்றி உங்களுக் குத் தெரியாத ஒண் டைப் பற்றி உங் களுக்குச் சொல்ல வேண்டியிருக்கு...... நாங்கள் கண்டு பிடிச்சது அவ கர்ப்பமாயிருக்கிறா. இதைச் சொல்லத்தான், இதைப் பற்றிக் கதைக்கத்தான் கூப்பிட்டனுப்பினனான்....''
''என்ன சொல்லுறியள்?....... கடவுளே...'' கலாவதி 'பக்' என்று சோர்ந்து போய் கதிரையில் இருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் குபு குபுவென்று வெளி வர ஆரம்பித்தது.
"கடவுள் சத்தியமாய் எனக் கொண்டும் தெரியாது ரீச்சர்! அவள் உங்களுக்குச் சொன்னாளா? என்னெண்டு சொன்னாள் யாரெண்டு சொன்னாள்?"' படபடப்பு மாறவில்லை.
"மன்னியுங்கோ கலாவதி! நான் இப்பிடிச் சொல்லுறதுக்கு. அவ தன்னுடைய தகப்பன் எண்டு சொல்லுறா.......''
"ஐயோ! கடவுளே! இது என்ன ரீச்சர் எனக்கொரு புதுச் சோதனை! இப்பிடியும் உலகத்தில் நடக்குமா? அந்தப் பரதேசி ஒரு குடிகாரன் தான். ஆத்திரக்காரன் தான். ஆனா ஒழுக்கங் கெட்டவன் எண்டு நான் அறிஞ்சிருக்கேல்லையே ரீச்சர்! இப்பிடியும் ஒரு பரிசு கேடா? அதுகும் பெத்த பிள்ளைக்கு!........ எப்பிடி ....... ரீச்சர் இவளைக் கண்டு பிடிச்சு........'
தனு கஷ்டப் பட்டு உமிழ் நீரை விழுங்கினாள். "சந்திரா சோர்ந்து போய் வகுப்பிலை இருப்பா. முன்னர் போல இல்லை. ஒரு யோசனையோட இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. நித்தியா எண்டொரு ரீச்சரும் இதை கவனிச்சு என்னட்ட சொன்னா. கடந்த வாரம் கூப்பிட்டு விசாரிச்சன். அவ ஒண்டும் சொல்லாமல் மௌனம் சாதிச்சா. அம்மாவைக் கூப்பிடவா? அப்பாவைக் கூப்பிடவா? எண்டு கேட்ட போது அழத் தொடங்கினா. பயந்து நடுங்கின சந்திரா மயங்கிவிட்டா. நாங்கள் டொக்டரிடம் காட்டியபோது அவர் சொன்ன செய்தி
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 25
PUBLIC LIBRARY
JAFF12

Page 27
எங்களுக்கு நம்ப முடியாதிருந்தது...... சந்திர கர்ப்பமாய் இருக்கிறதாய் டொக்ரர் சொன்னார். இதைச் சொல்லத்தான் நான் கூப்பிட்டனுப்பினேன்."
"எனக்கு அவள் ஒண்டும் சொல்லவில்லை. நான் இதுக்கு என்ன செய்வேன்” என்று கேட்ட கலாவதி விம்மி அழுதாள். தனுவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
"கலாவதி மன்னிக்க வேணும், நான் இப்படிக் கேட்பதற்கு. நீங்கள் வீட்டில இருக்கிறதில்லையா? ஏதேனும் வேலைக்குப் போறதில்லையா?'
"நான் வீட்டில இருக்கிற ஆள் தான் ரீச்சர். ஆனால், ஒரு ஆளின்ர உழைப்பில் நாலு பிள்ளையள் வளர்த்தெடுக்கிறதெண்டது லேசுப்பட்டதே ரீச்சர்? அதோட அவருக்கு குடிக்கும் பணம் வேணும். பலகாரங்கள் செய்து கடைகளுக்குக் கொடுத்து கொஞ்சக் காசு உழைத்து வந்தேன். அதுவும் போதாது. இந்த நேரத்தில தான் டுபாய்க்கு வேலைக்குப் போக ஒரு சந்தர்ப்பம் வந்தது. அவரும் சரி என்றார். நானும் பிள்ளைகளின் நன்மைக்காகத் துணிந் து , பிள்ளைகளைத் தகப்பன்ர பொறுப்பிலும், என்ர அம்மாவின் பொறுப்பிலும் விட்டிட்டுப் போனன். அம்மாவுக்குச் சுகவீனம் வர அவ ஊருக்குப் போயிற்ரா. ஆக ஒரு வருஷம் தான் அங்க நிண்டன். வந்து இரண்டு வருஷமாகிட்டுது. வந்தால் இங்கே எனக் கொரு இடி காத்திருக்கெண்டு இப்பத்தான் தெரிகிறது ரீச்சர்...'' என்று கம்மிய குரலில் கலாவதி கூறினாள்.
பிள்ளைகளை ஏனையோரின் பொறுப்பில் விட்டு விட்டு வெளி நாட்டுக்குத் தொழிலுக்குப் போன தாய்மாரின் குடும் பங்க்ள சிலவற்றில், இடம் பெற்றிருக்கக் கூடிய சீரழிவு தான் கலாவதியின் குடும்பத்திலும் நேர்ந்திருக்கிறது என்பது தனுவுக்கு தெளிவாயிற்று.
சோதனைகள் ஏழைகளைத் தான் துரத்தித் துரத்தி தாக்குகின்றன.
"மகளை ஒருக்கால் கூப்பிடுவியளே ரீச்சர்'' என்றாள்.
சந்திரா மெல்ல மெல்ல பயந்து பயந்து வந்தாள். 'ரீச்சர் சொன்னதெல்லாம் உண்மையாடி? என்று தாய் கேட்டதும், தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள் சந்திரா. தாயும் அழுதாள்.
''குற்றவாளி அப்பா எண்டு சொன்னியாமே?" என்று மகளிடம் கேட்கவே அவளுக்குச் சங்கடமாக இருந்தது. "அது..... அது..... அப்பா எண்டு .........''

என்று தாய் இழுத்ததும் 'ஓம்' எண்டதுக்கு அடையாளமாய் தலையசைத்தாள். "ஐயோ! என்னடி மோசமிது! நான் ஆருக்குச் சொல்லுறது? எங்கை போய் முட்டுறது?” என்றழுதாள்.
சிறிது நேரம் தாயும் மகழும் கண்ணீரில் கரைந்தார்கள். பாவம் அப்பாவிகள்.
"சந்திரா! நீர் போய் அறையில் இரும். நான் அம்மாவோடை கொஞ்சம் கதைக்க வேணும்" என்று தனு கூறியதும், சந்திரா அவ்விடத்தை விட்டு
அகன்றாள்.
"இங்கை பாருங்கோ கலாவதி! பாடசாலையி லை இனி இவவை வைச்சிருக்காயினம். இனி நடக்கப் போறது என்ன எண்டதைத் தான் பார்க்க வேணும்...''
"என்ன செய்யலாம் ரீச்சர். நீங்கள் பெரிய மனசோடை எங்களுக்கு ஒரு வழி காட்டினியள் எண்டால் நாங்கள் கட்டாயம் ஏற்பம் ரீச்சர்' உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்" அவள்
இருகரம் கூப்பினாள்.
தனு சிறிதுநேரம் யோசித்தாள். 'சந்திராவைப் பார்க்க எனக்கும் கவலையாய்த் தான் இருக்கு ...... எனக்குத் தெரிந்த சில ஆட்களின்ர உதவியோடை எனக்குத் தெரிந்த ஒரு பெண்கள் விடுதியிலை இவவைத் தங்க வைப்பம். நான் கவனிச்சுக் கொள்ளுகிறன். நீங்கள் கவலைப் படாதீங்கோ. ஆனால் ஆருக்கும் சொல்லாதீங்கோ. ஹொஸ்டல்ல இருந்து படிக்கிறதாய்ச் சொல்லுங்க. ஆனால் அடிக்கடி என்னை
வந்து சந்திக்க வேணும். தெரிஞ்சுதோ?"
தனுவின் வார்த்தைகள் கலாவதியின் ஓலமிட்ட மனசைத் தொட்டு விட்டன.
''என்ர பிள்ளையின் ர மானத்தைக் காப்பாற்றுங்கோ ரீச்சர். உங்களை நான் கையெடுத்துக் கும்பிடுகிறன். உங்களை நான் என்ர உயிர் இருக்கும் வரைக்கும் மறக்க மாட்டன்" என்று கசிந்தாள்.
***
அவமானம், ஆத்திரம், வேதனை. கலாவதி என்றதாயின் உள்ளத்துணர்வுகள் கடல் அலை போல் ஆர்ப்பரித்துப் பொங்கிக் கொண்டே இருந்தது. அடக்க முயன்று கொண்டிருந்தாள
"சே! புருசன், புருசன் எண்டு எவ்வளவு பணிவாய் கடமைகளைச் செய்து வந்தேன்? ஒரு வருஷம் குடும்பத்திற்காக பிரிஞ்சு இருந்ததைத் தவிர வேறை
மொ|26
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003

Page 28
என்ன பிழை செய்தன்? அப்படியிருந்தும், இப்படி ஒரு நாயிலும் கேவலமான மனிசனாய் நடந்தானே பாவி! இப்படியான ஒரு கேடுகெட்ட சென்மம் இனியும் ஒழுங்காய் இருக்கும் எண்டதற்கு என்ன உத்தரவாதம்? ஐயோ! இதை நான் ரீச்சரைத் தவிர, வேறை ஆரோடை கதைக்க? தங்கடை பொம்பிளைப் பிள்ளைகளின்ர வாழ்வுக்காகப் பாடுபடுகிற தகப்பன் மாருக்கு மத்தியிலை இந்தச் சென்மம் ஒரு களங்கம்! இவனோடை ஒரு பெண்சாதி எண்டு நான் இனி எப்படி கல்மிஷமில்லாமல் புழங்குவேன்! என்ரை பிள்ளையள் எப்படி அப்பா எண்டு நடந்து கொள்ள அனுமதிப்பேன்? தெய்வமே! எனக்கொரு வழியைக் காட்டு!” மன உணர்வலைகள் பொங்கிப் பொங்கி எழுந்தன.
மற்றப் பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வந்து விட்டார்கள். அழுது அழுது வீங்கிய முகத்தைப் பிள்ளைகள் பார்ப்பது அவளுக்கு இஷ்டமில்லை. போய்ப் படுத்துக் கொண்டாள். "அம்மா! என்னம்மா சுகமில்லையா?'' என்று உலுப்பினார்கள்.
"தலையிடிக்குது பிள்ளையள் நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ! நான் கொஞ்ச நேரம் படுத்திருக்கிறன்'' என்றாள் அவர்கள் சாப்பிடப் போய்விட்டார்கள்.
இரவாயிற்று. பிள்ளைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க வேண்டும்.தலைவலி குறைந்த பாடில்லை.பகல் உணவும் உண்ணவில்லை. மன ஆறுதலும் இல்லை. எப்படி தலைவலி தீரும்?
அவள் சிரமப் பட்டு உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது புத்திரி குசினிக்குள் ஓடி வந்தாள். ''என்னம்மா, அக்காவை இன்னும் காணேல்லை. இருண்டு போச்சுது. நீங்களும் பேசாமல் இருக்கிறியள்" என்றாள்.
"ஓமம்மா! நானும் கேட்க வேணும் எண்டு நினைச்சனான். பெரியக்கா எங்கை அம்மா? இன்னும் ஏன் வாரேல்லை?” என்று மூன்றாவது மகளும் கேட்டாள்.
"ஏதோ படிக்க வேணுமாம். ஹொஸ்டல்ல தங்கிப் படிக்கிறா'' என்றதும் பிள்ளைகள் தம்பாட்டிற்கு உட்கார்ந்துவிட்டார்கள்.
இரவு ஒன்பது மணியிருக்கும். சங்கரலிங்கம் வந்து சேர்ந்தான். வழக்கம் போல குடி மயக்கத்திலிருந்தான். இரவு நேரத்தில் இந்தக் கதையைத் தொடங்கக் கூடாது என்று தான் கலாவதி நினைத்துக் கொண் டிருந் தாள் . ஆனாலும் நினைத்தது நடக்கவில்லை.
வந்து உடையை மாற்றிக் கொண்டவன் 'கலா கலா' என்று கூப்பிட்டான். கலாவதி போகவில்லை.

நேராகக் குசினிக்குள் வந்தான். அவள் கணவனைப் பார்க்கவில்லை. தன் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டாள்.
'என்ன செய்யிறாய் இஞ்சை கூப்பிட்டதும் கேளாமல்? எங்கை சந்திரா? அவன் கேட்டான். மதுவின் நெடி வீசியது. கலா திரும்பினாள். அடக்கி வைத்த ஆத்திரம் பீறிட ஆரம்பித்தது.
''எதுக்கு” கேள்வியில் வெறுப்புத் தெறித்தது. ''என்ன நீ? பிள்ளை எங்கை எண்டு கேட்டால், எதுக்கென்கிறாய்? என்ன இண்டைக்கு உன்ரை கதை ஒரு மாதிரியாய் கிடக்கு. எங்கை அவள்?"
அவள் அவனைப் பார்க்காமலே பதில் சொன்னாள். "ஹொஸ்ரல்ல''
"ஹொஸ்ரல்ல? ஏன்?"
''படிக்க.''
"படிக்க? என்ன படிக்க? ஆரைக் கேட்டு விட்டனீ? அப்பன் எண்டு நானொருத்தன் இஞ்சை இருக்கிறது தெரியேல்லையோ? ஒழுங்கு முறை பேணும் உத்தமத் தந்தை இவர்!
கலாவதிக்கு சவுக்கால் அடித்தது போல் இருந்தது. தன்னை மறந்தாள். சடக்கெனத் திரும்பிய அவள், 'அப்பனா நீ? பெத்த பிள்ளைக்கு துரோகம் செய்த' நீ ஒரு அப்பனா? மானங் கெட்ட எளிய பிறவி!” என்று கத்தினாள்.
“என்னடி சொன்னநீ? என்னை எதிர்த்துக் கதைக்க வெளிக்கிட்டிட்டயோடி?'' என்று அவள் கன்னத்தில் பளார் பளார் என்று அறைய, பிள்ளைகள் ஓடிவந்து பார்த்து அலற, சிறிது நேரம் அங்கு களேபரந்தான்.
கலாவதி அழுது கொண்டு கீழே உட்கார்ந்து விட்டாள். பிள்ளைகள் தகப்பனைப் பார்க்கவே அஞ்சினார்கள். என்ன நடந்தது, என்ன காரணம் என்று அவர்களுக்குப் புரியவில்லை.
'கதைக்க வந்திட்டா கதைக்க! எப்பிடி வந்தது உனக்கு இந்தத் தைரியம்? என்று உறுமியவன் மீண்டும் அவளுக்கு அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு போனான். பிள்ளைகள் அப்பா, அப்பா என்று கத்த, அடிக்காமல் விட்டான்.
"இஞ்சை என்னை ஒருத்தரும் திருத்தேலாது! எனக்கொருத்தரும் இஞ்சை வாத்தியார் இல்லை!... எல்லாரும் போகலாம்! எனக் கொருத் தரும் தேவையில்லை!''
“அடப்பாவி! மிருகக் குணம் தலைதூக்கி விட்ட
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
127)

Page 29
இவனிடம் எப்படி விஷயத்தை உடைத்துக் கேட்பது? விவஸ்தை கெட்ட கதையல்லவா அது! பேசாமல் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு திருகோணமலைக்குப் போய்விட்டால் என்ன?... அம் மாவும் வருத்தக் காரி. தம் பியும் பிள்ளைகுட்டிக்காரன். ஐயோ! என் பிள்ளைகளின் கதி.... ஒரு வருஷம் ....... என் பிள்ளைகளின் நன்மைக்காகப் பிரிஞ்சு போனேன் ....... அதுவும் புருஷனின் அனுமதியோடை ...... அதுக்கே இந்தத் தண்டனை......... இனி?..........''
கலாவதி எண்ணச் சுழிகளில் சோர்ந்து போனாள்.
இந்த வாக்கு வாதத்தின் பின் அவள் கணவனுடன் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. பிள்ளைகள் மூலந்தான் பேச்சுவார்த்தை. அதுவும் பிள்ளைகள், அப்பா, அப்பா என்று அழைத்துக் கதைக்கும் போது அவளுக்கு பெரும் அந்தரமாக இருக்கும். இருந்தும் என்ன செய்வது? இப்படி ஒரு தாய்க்குச் சோதனை வரலாமா?
மனைவி தன்னை மதிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சங்கரலிங்கம் மதுவருந்தி வரும் நேரமெல்லாம், 'வெளிக்கிட்டுப் போடி!” என்று திட்ட ஆரம்பித்தான். இந்நிலையில், கலாவதி தன் பிள்ளைகளை எண்ணி , மனவேதனைகளை எல்லாம் தன்னுள் அமுக்கிக் கொண்டாள்.
மூன்று வாரங்கள் நடந்துபோயின. அன்று தனு ரீச்சரைப் பார்க்க வந்திருந்தாள் கலாவதி.
அவளைப் பார்க்க, தனுவுக்கே பாவமாய் இருந்தது. மிகவும் மெலிந்து போயிருந்தாள். கண்கள் குழிவிழுந்து தோன்றியது.
''ரீச்சர்! சந்திரா எப்படி இருக்கிறா?"
"சுகமாய் இருக்கிறா. அவ இப்ப ஸ்கூலுக்கு வாறதில்லை. நான்தான் அவவை அங்கே இருந்தபடி படிக்க ஒழுங்கு செய்திருக்கிறேன். பாப்பம். கவலைப்பட்டுத்தான் என்ன நடக்கப் போகுது? நடந்தது நடந்துபோயிட்டுது. இனி இப்படி விபத்துகள் வராமல் பார்க்க வேணும். உண்மையிலை எங்களைப் போல தாய்மாருடைய பொறுப்பு மிகப் பெரியது தான். ஏதோ பெற்றோம், சாப்பாடு போட்டோம் என்று நாங்கள் திருப்திப்பட ஏலுமா என்ன? பேணி வளர்த்தெடுத்து, படிப்பித்து ஆளாக்கி நல்ல சூழலை வைத்திருந்து தக்க இடத்திலை கட்டிக் குடுத்து... எண்டு எவ்வளவு பொறுப்புகள்!'' தனு ரீச்சர் வெளிப்படையாகப் பேசினாள்.
''எந்தப் பொறுப்பையும் ஒரு தாயெண்டு நான்

தட்டிக் கழிக் கேல்லை ரீச் சர். பொம்பிளைப் பிள்ளைகளை வைச்சிருக்கிற நான், புருசன்ர கையை மட்டும் நம்பியிராமல், மற்றப் பொம்பிளையள் மாதிரி வெளிநாட்டுக்குப் போய்ப் பணிப்பெண்ணாய் நாலு காசு நானும் உழைப்போமே எண்டு துணிஞ்சு வெளிக்கிட்டன்.......... இடிவிழுந்துது.... இதை நான் என்ர அம்மாக்கிட்டக் கூடச் சொல்லேல்ல.
"சொன்னா ....... பாவம் அவ அதிர்ச்சியிலை செத்துப் போவா!"
"சொல்ல வேண்டாம். அவ எங்கே இருக்கிறா?"
''வவுனியாவில் தம்பியோட இருக்கிறா. இப்ப வருத்தக்காறி தான் ......
"மனிசன் என்ன சொல்லுறான்?"
"என்னத்தைச் சொல்லும் கேடு கெட்ட சென்மம்? குற்றவாளி ஒரு பெரிய நீதிவான் போலயும், குற்றஞ் செய்யாத நான் அவுற்ற பெண்சாதி எண்டபடியால், குற்றவாளி போலயும் வருந்திக் கொண்டிருக்கிறன்.''
"என்ன கதைச்சவர்?' தனு மீண்டும் கேட்டாள்.
"தன்னிலை நான் பிழை கண்டு பிடிச்சிட்டன் எண்டு என்னிலை சரியான கோவம் அவருக்கு. இதெல்லாம் மறைக்கிற விசயமோ மறைகிற விசயமோ ரீச்சர்?... கண்டதுக்கும் பாய்கிறார்? வெளிக்கிட்டுப் போடி எண்டு துரத்திறார். என் பக்கத்தில ஆமான ஆட்கள் இல்லை எண்டு அவருக்குத் தெரியும். அதுதான் காரணம். நான் தனி ஆளே ரீச்சர். ஒரு தாய். அதுகும் பொம்பிளைப் பிள்ளையளின்ர தாய். எப்பிடி அதுகளை விட்டுட்டுப் போவன்? நடந்த சீரழிவு போதாதா? எப்படிக் கூட்டிக் கொண்டு போவன்? பக்கத்து வீட்டுச் சனங்களும் இப்ப வாய்விட்டுக் கேட்கத் துடங்கிவிட்டுதுகள். மற்றையவையள் எப்படிச் சொன்னாலும், என்னைப் பொறுத்தமட்டில் ஒரு தாயாய் இருப்பது கொடுமை எண்டு எனக்கு தோன்றுது ரீச்சர், ஓம் ....... கொடுமை தான்” என்றாள் கலாவதி. உலகம் என்றென்றும் போற்றும் தாய்மை, இந்த உலக இயக்கத்தின் ஆதாரம். அந்தத் தாய்மையை இத்தாய், குறைத்துப் பேசுகிறாள் என்றால், அவளது மனதில் எவ்வளவு விரக்தி, எவ்வளவு வேதனை செறிந்திருக்க வேண்டும்?
தனு இவ்வார்த்தைகளால் நெகிழ்ந்து போனாள். ''நீங்க கவலைப் படாதேங்கோ! சந்திராவை நான் நல்லபடியாப் பார்த்துக் கொள்ளுகிறேன்." என்றாள்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (28)

Page 30
னங்கள் எப்போதுமே பறவைகளுக்கு விலங்குகளுக்குமே உரியவை. அத்துடன் வன்னியின் வனங்கள் தம்மிடையே பல சிறு சிறு கிராமங்களையும் கொண்டிருப்பவை பறவைகள் விலங்குகளை மட்டுமல் 6 மனிதர்களையும் வாழவைப் பவை பறவைகளுடன் பேசும் சிநேகமாய் வாழு! எளிமையான மனிதர்கள் இவர்கள்.
நாங்கள் இந்த வனங்களிடையேயும் இந்த மனிதர்களிடையேயும் ஆறு வருடங்களாக வாழ்ந்தோம் எங்கள் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஓடிவந்து இந்த வனங்களில் அடைக்கலம் புகுந்தவர்கள் நாங்கள் ஆறு வருடங்களாக வாழ்ந்த இந்த இடங்களை விட்டுத் தமது சொந்த இருப்பிடங்களுக்கு இப்போது மக்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்கந்தபுரத்திலிருந்து அக்கராயன் சந்திவ ை வீதியின் இருபக்கமும் சனநடமாட்டம் குறைந்த வெறிச்சிட்டுக் கிடக்கிறது. அம்பலப் பெருமாள் சந்தியிலிருந்து வன்னேரிக்குளம் வழியாக ஜெயபுரம் போகும் பாதை என்றாலும் சரி, கோட்டைகட்டிய குளம் உயிலங்குளம் வழியாக மல்லாவி போகும் பாதை என்றாலும் சரி சனநடமாட்டம் குறைந்த நிலையில் மெளனமாய் நீண்டிருக்கிறது. தெருக்கரைகளில் மன குடிசைகள் அழிந்து மண்மேடாகிப் போக மறுப பற்றைகள் படர்கின்றன. இப்போதெல்லாம் இந்தக் கிராமங்களைச் சொந்த இடமாகக் கொண் ( வாழ்பவர்களின் நடமாட்டம் மட்டுமே இங்கே இருக்கிறது
அம்பலப் பெருமாள் சந்தியிலிருந்து மல்லாவி போகும் பாதை ஆரவாரம் அடங்கிப் போய் இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களாகத் தெருவெல்லாம் நிறைந்து போயிருந்த மனிதர்களை இப்போது காணவில்லை. வெறிச்சிட்டும் கிடந்த அந்த வீதியைப் பார்த்த போது அன்றொரு நாள் நாம், மழையாய் வந்து விழுகின்ற ஷெல் வீச்சுக்களுக்கும் கிபிர் விமானங்களின் குண்டு வீச்சுக்களுக்கு ! அகப்படாமல் அவலப் பட்டு ஓடிவந்த நாள் தான் நினைவுக்கு வருகிறது. ஆனையிறவிலிருந்து கிளிநொச்சியை நோக்கிய ராணுவத்தின் நகர்
ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒவ்வொரு எறிகணை வீச்சு. வானில் ஒரே தடவையில் இரண் கிபிர் விமானங்கள் இரண்டு ஹெலிஹொப்டர்கள் சுற்ற வந்து போடும் குண்டுகளின் சிதறல்கள்..... இவற்றுக்கு அகப்படக் கூடாது என்ற பதைபதைப்போடு ஊே ஓலமிட்டுக் கதறியபடி ஓடிவந்த நாள், தொண்ணூற்ற ஆறு யூலை இருபத்தாறாம் திகதி, வாழ்நாளில் ஒ போதுமே மறக்க முடியாத அளவுக்கு துயரத்தை ஏற்படுத்திய நாள்.

வு
எ
=' சி' சி + 5' - எ 1' * 9.
& சி 5' 5: - 2'
= அ - 2' அ அ அ .. 2 - E S. 5.
- -
மல்லிகை
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
தாமரைச்செல்வி
மனிதர்களும்
திரும்பும் வனங்களும் கொடுக்கும்
வீடு
'!!'!!\
200327வரி அ லர் 38:22
விடை
29

Page 31
கண்ணுக்கு முன்னால் காயப்பட்டு விழுந்த உறவுகளைத் தோளில் தாங்கிக் கொண்டு ஓடிய ஓட்டம். அம்மா எங்கே அப்பா எங்கே, தம்பி எங்கே என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கேட்டு தேடிக் கொண்டே தெரு நீளம் ஓடிய அவலம். பூநகரி வீதி ஆயிரக்கணக்கான பாதங்களினால் மிதிப்பட்டது. கையில் அகப்பட்டதை மட்டுமே எடுத்துக் கொண்டு உயிர் தப்பும் ஒரே நோக்கம் தவிர வேறு எந்தச் சிந்தனையுமில்லாமல் ஓடிய மனிதர்கள். துரத்தும் எறிகணைகளிலிருந்து தப்ப குஞ்சுப்பரந்தன் கடந்து உருத்திர புரம் கடந்து அப்பாலும் ஓடியவர்கள் கோணாவிலிலும் ஸ்கந்தபுரத்திலும் அக்கராயனிலும் நிண்டு மூச்சு விட்டார்கள். பிரதான வீதிக்கு அந்தப் பக்கம் இருந்தவர்கள் தர்மபுரம் விசுவமடு புதுக்குடியிருப்பு என்று ஓடினார்கள்.
இந்த விதமாகத் தான் கிளிநொச்சி நகரம் மனிதர்களை இழந்து வெறுமையாய் மாறிப்போனது. நகரத்தில் வாழ்ந்தவர்கள் நகரை அண்டிய கிராமங்களில் வாழ்ந்தவர்கள் அடர்ந்த வனம் தேடி வெறுங்கால்களுடன் ஓடிய கதை இந்த விதமாகத் தான் ஆரம்பித்தது.
குடியிருக்க நிலம் இல்லை. அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லை. மாற்றி உடுக்க உடைகள் இல்லை. இந்த நிலையில் தான் அநேகம் பேர் இருந்தார்கள்.
மர நிழல்களில் நின்று கொண்டு இங்கும் கிபிர் வந்து குண்டு போடுமோ - இங்கும் எறிகணைகள் வந்து வெடித்துச் சிதறுமோ - இங்கும் ராணுவம் வந்து விடுமோ என்ற ஏக்கத்துடன் உறங்கவும் முடியாமல் தவித்த மனிதர்கள், வயிற்றில் பசியுடனும் கண்களில் பயத்துடனும் தெரு நீளம் நடந்தார்கள்.
சின்னச் சின்னக் கிராமங்களைத் தனக்குள்ளே கொண்டிருந்த இந்த வனங்கள் தான் ஓடிவந்த இத்தனை மக்களையும் தமக்குள் அரவணைத்துக் கொண்டன. கிராமங்களில் வாழ்ந்து வந்த இந்த மனிதர்கள் மிகவும் நல்லவர்கள். எளிமையானவர்கள். ஓடிவந்த முகம் தெரியாதவர்களுக்கும் தங்கள் குடிசைத் தாழ்வாரங்களில் உறங்க இடம் தந்தார்கள். தங்களின் உணவைப் பகிர்ந்தளித்தார்கள். தங்கள் காணிகளில் குடிசைகள் போட இடம் கொடுத்தார்கள்.
இந்தக் காட்டுக் கிராமங்கள் மனிதர்களின் நடமாட்டங்களினால் நெரிபட்டன. அக்கராயனிலிருந்து மல்லாவி போகும் இதே வீதி கலகலப்பாய் மாறியது. அடர்ந்த காட்டை ஊடுருவிச் செல்லும் குண்டும்

/ குழியுமான இந்த மண் சாலையில் புழுதி பறந்தது.
வீதியின் இரு புறங்களிலும் அடர்ந்த பற்றைகள் குடையப் பட்டு குடியிருப்பாக மாறியது. காட்டு மரங்களின் . கிளைகளில் பழைய சேலைகளினால் கட்டப் பட்ட ஏணைகளில் குழந்தைகள் உறங்கின. நாலு பக்கமும் இருக்கும் மரக்கிளைகளை ஆதாரமாய்க் கொண்டு சுற்றிக் கட்டப் பட்ட சேலைகளின் மறைப்பில் குடித்தனம் தொடங்கியது. மரங்களின் கீழே சுள்ளிகளின் நெருப்பில் உலைகள் கொதித்தன.
பெரிய பெரிய மரங்களின் மறைவுகளில் நின்று பெண்கள் உடைகளை மாற்றினார்கள். குளங்களிலும் வாய்க்கால்களிலும் கூட்டமாய் நின்று குளித்தார்கள். புழுதி பறக்கும் தெருக்களில் குடங்களைச் சுமந்து கொண்டு தண்ணீருக்காக நடந்தார்கள்.
அதிகாலைகளில் பறவைகளின் ஒலி கேட்டு மகிழ்ந்த நெஞ்சங்கள் இரவுகளில் யானைகளின் பிளிறல் கேட்டு நடுங்கின. ஆரம்ப நாட்களில் இருள் நேரங்களில் இந்த வீதியில் போனவர்களை யானை அடித்து இறந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. பறவைகளுக்கும் விலங்குகளுக்குமே உரிய இந்த அடர்ந்த வனங்களிடையே மனிதர்கள் வந்து வாழவேண்டியதால் ஏற்பட்ட துயரம் இது.
வன்னியின் வடக்குத் திசையிலும் தெற்கு திசையிலும் போர்மேகம் திரண்டது. யுத்த பேரிகை முழங்கப் பாதை பிடிக்கும் போர் முனை ராணுவத்தால் திறக்கப் பட்டது. விடிகாலையிலேயே தொடங்கிவிடும் 'கிபிர்' விமானங்களின் இரைச்சல்கள், எறிகணைகளின் தொடர்ச்சியான அதிர்வுகள்..... பாதுகாப்பென்று நினைத்து ஓடிவந்த இடங்கள் வரை வந்து தாக்கியது.
தலைக்கு மேலால் கூவிக் கொண்டே நெருப்புக் கோளங்களாய் பறந்து போய் அக்கராயன் வைத்திய சாலையின் மீது விழுந்து வெடித்ததில் நான்கு பேர் இறந்து போன கொடுமை... வவுனிக் குளம் தேவாலயத்தில் தஞ்சமடைந்த அகதி மக்கள் மீது குண்டு விழுந்து ஒன்பது பேர் இறந்து போன
வே தனை .................
வைத்தியசாலைகளும் தேவாவலயங்களும் கூட உயிருக்குப் பயந்து ஓடி வந்து அடைக்கலம் புகுந்த மக்களுக்கு பாதுகாப்புத் தர இயலாமல் போன துயரம்..........
வன்னியின் வாசல்கள் மூடப் பட் டன. பள்ளமடுப்பாதைப் பயணம் பயங்கர அனுபவம். ஒரு பனடோல் பத்து ரூபாவுக்கும் ஒரு லீற்றர் | மண்ணெண்ணெய் இருநூற்றைம்பது ரூபாவுக்கும்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
| 30

Page 32
வாங்க வேண்டிய நிலமை. அநேக வீடுகள் இருளில் கிடந்தன. நிலவெறிக்கும் நாட்களுக்காய் மனங்கள் காத்திருந்தன.
பசிபட்டினிக்கும் பல வித நோய்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. வைத்திய சாலைகளில் நோயாளர்கள் வரிசை முற்றம் தாண்டி தெரு வரை நீண்டிருந்தது. இரவு பகல் என்று பாராமல் இருபத்திநாலு மணிநேர சேவையை வைத்தியர்களும் தாதிகளும் செய்ய நேர்ந்தது. அர்ப்பணிப்புடன் செய்தார்கள்.
மக்கள் மட்டுமல்ல கிளிநொச்சி நிர்வாகமே ஸ்கந்த புரத்துக்கு இடம் பெயர்ந்து வந்திருந்தது. நீள நீளக் கொட்டில்களில் கச்சேரி இயங்கியது. அரச அதிபருக்கும் மண்தரையே வசிப்பிடமானது.
கல்வித் திணைக்களம் அக்கராயன் பாடசாலையின் ஒரு பகுதியில் இயங்கியது. நீளமான கொட்டில்களில் மரப் பலகைகளினாலும் காட்டுத் தடிகளினாலும் தயாரிக்கப் பட்ட இருக்கைகளில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். மரநிழல்களில் வகுப்புக்கள் நடந்தன. மழை நாட்களில் குடைகளைப் பிடித்துக் கொண்டே படித்தார்கள். தரையில் பாய் விரித்து அமர்ந்து பரீட்சைகள் எழுதினார்கள்.
வாழ்க்கை பெரும் சுமையாயிற்று. எல்லோர் வாழ்வும் வேதனை மயமாயிற்று. வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப் பட்ட நிலையில் சுற்றி வளைக்கப் பட்ட மண்ணில் இருந்து கொண்டே வன்னி மக்கள் வாழ்வோடு போராடினார்கள். போரின் விளைவுகளுக்கும் வாழ்வின் சுமைகளுக்கும் முகம் கொடுத்து இந்த மக்கள் வாழ முயற்சித்த விதமும் வன்னி வரலாற்றில் எழுதப்பட்டது.
பசி நெருப்பை அனுபவத்தில் உணர்ந்தோம். மண்தரையில் படுத்து உறங்கினோம். மரநிழலில் சமைத்து உண்டோம். புதிய இடங்களில் புதிய உறவுகள், புதிய திருமணபந்தங்கள் ஏற்படுத்திக் கொண்டோம். திருமணங்களின் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டது போலவே மரணத்தின் துயரங்களையும் பகிர்ந்து கொண்டோம். மண்ணெண்ணெயில் ஓடிய வாகனங்களில் பயணம் செய்தோம். சைக்கிள் டைனமோ சுற்றி வானொலிச் செதிகளைக் கூட்டமாய் இருந்து கேட்டோம். வெரித்தாஸ் தமிழ்ப் பணியில் கஸ்பார் அடிகளாரின் குரலில் ஒலித்த எமக்கான பிரார்த்தனையில் நெஞ்சம் உருகினோம்.
கிடுகளினால் வேயப்பட்ட கூரையின் கீழ் சுற்றி |

அடைக்கப் பட்ட கொட்டில்களில் மின்பிறப்பாக்கிகளின் உதவியோடு சத்தியஜித்ரேயின் படங்கள் பார்த்தோம். அகிராகுரேசேவாவின் குறும்படங்கள் பார்த்தோம். 'பாரதி' பார்த்தோம். முற்றத்து மாமர நிழல்களில் இலக்கிய ஆர்வலர் சேர்ந் து 'காலச் சுவடு' விமர்சித்தோம். புத்தக வெளியீடுகள், இலக்கிய கருத்தரங்குகள், நாடகப் பயிற்சிப் பட்டறை, எல்லாமே நடந்தன. ஒழுங்கைகள் தோறும் நடக்கும் தெருவெளி நாடகங்களில் எங்கள் வாழ்க்கை அவலங்களை மறுபடி தரிசித்தோம். இங்கிருந்து 50 மைல் பயணித்து முள்ளியவள்ளை போய் முத்தமிழ்க் கலையரங்கில் கலந்து கொண்டோம். இருக்கும் நிலத்தில் தோட்டம் போட்டோம். பயிர் வளர்த்தோம். கைத்தொழிலில் ஈடுபட்டோம். யுத்த முழக்கங்களின் நடுவேயும் வெடிகளின் அதிர்வுகளின் நடுவேயும் அத்தனை பொருளாதாரத் தடைகளின் நடுவேயும் இத்தனையும் நடந்தன.
எமக்கான வாழ் வு இது என்றாகியது. பசித்திருந்தாலும் போர் முனை பயமுறுத்திக் கொண்டிருந்தாலும் எமக்கு கால் வீசி நடக்கும் சுதந்திரம் இருந்தது. நடு இரவிலும் உலாவர முடிந்தது. வன்னி மக்களின் அவலக் குரல் கேட்டு உலகில் உள்ள எம் உறவுகள் வழங்கிய உதவி கொண்டு இங்கு தொடங்கப்பட்ட பட்டினி தவிர்ப்பு திட்டத்தினால் பல ஏழைக் குழந்தைகளின் பட்டினிச் சாவுகள்
தவிர்க்கப் பட்டன.
ஆக்கிரமிப்பு போரின் முகம் குரூரமானது. அதன் விளைவுகள் யாராலும் விரும்ப முடியாதவை. போருக்குள் வாழ்ந்த இந்த ஆறு வருடங்களும் எங்கள் வாழ்வின் முக்கிய பாகம், எவராலும் மறக்க இயலாத அனுபவங்களைத் தந்த காலம்.
வாகனங்களைக் குடைந்து குடியிருந்ததையும் நாட்டு மரக்கிளைகளில் கட்டப்பட்ட ஏணைகளில் குழந்தைகள் ஊஞ்சலாடியதையும் புழுதி பறக்க நீண்டிருந்த தெருக்களில் தண்ணீருக்காக குடங்களுடன் நடந்ததையும் நோய்களுடன் போராடிக் கொண்டே வைத்திய சாலை வாசலில் வரிசையில் நின்றதையும் எறிகணைகளின் தாக்குதலுக்கு தப்புவதற்காக இரவெல்லாம் பயத்துடன் பதுங்குகுழிகளில் இருந்ததையும் எவராலும் மறக்க இயலாது.
பசிக்கொடுமையை கண்களில் தேக்கி கையேந்தி நின்ற குழந்தைகளைக் கண்டு பதைபதைத்ததையும் 'வெற்றிமனையில் மனநிலை பாதிக்கப் பட்ட பெண் களின் பரிதாப நிலை பார்த்து மனம்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 31

Page 33
கலங்கியதையும் முதியோர் இல்ல வயோதிபர்களின் நிலை கண்டு மனம் இரங்கியதையும் - தாய் தந்தையரை யுத்தத்திற்குப் பலி கொடுத்து விட்டு அனாதரவாய் நின்ற சிறுவர்களின் அவல நிலை கண்டு கண்ணீர் தழும்ப நின்றதையும் - கூட எவராலும் மறக்க இயலாது.
ஒருவருக்கொருவர் இரக்கப் பட்டு ஒருவருக் கொருவர் கைகொடுத்து எல்லாவற்றையும் ....... எல்லா அவலங்களையும் தாங்கி அவைகளை எதிர்கொண்டு நம்பிக்ளையோடு நிமிர்ந்த அனுபவத்தையும் எவராலும் மறக்க இயலாது. போதும் என்ற வரை துன்பப் பட்டாயிற்று. நிமிர்ந்து எழுவதற்கும் நிறைய விலை கொடுத்தாயிற்று.
இன்று மூச்சு விடக் கிடைத்திருக்கின்ற இந்த அவகாசத்தில் இதுவரை பட்ட களைப்பு தீர்ந்து போகிறது. மறுபடி நமது ஊர் திரும்பும் கனவு நனவாகிறது.
ஆனையிறவு ராணுவ முகாமுக்கு அருகாமையில் இருந்திருந்ததனால் 83-ம் ஆண்டிலிருந்து நாம் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கு அங்கு முகாம் இல்லை என்பதனால் ராணுவ ஆக்கிரமிப்பு பற்றிய அச்சமின்றி ஊர்திரும்ப முடிகிறது. எத்தனையோ போராளிகளின் உயிர்த்தியாகத்தினால் மறுபடி கிளிநொச்சி நகரம் எழுந்து நிற்கிறது.
கிராமங் கள்
உயிர் பெறுகின்றன. விளைநிலங்களில் பயிர்கள் வளர்கின்றன. எமது
பவள விழாக் கி
பிரபல எழுத்தாளர் செ.கணேச நண்பர்கள் ஒருங்கு சேர்ந்து பவள வி
வருகின்றனர்.
பவள விழா மலரொன்றும் தயார இந்தப் பாராட்டு விழாவை வெகு சிற அமைக்கப் பட்டுள்ளது. பவள விழாக் காணும் இலக்கிய நன வாழ்த்துகள்.

வீடுகள் இடிக்கப் பட்டு விட்டன. பயன் தரும் மரங்கள் தரையோடு சாய்க்கப் பட்டு விட்டன. ஆனாலும், எங்கள் முற்றங்கள் களவு போகவில்லை. அதை அள்ளிக் கொண்டு போக அவர்களால் முடியவில்லை. எங்களின் முற்றங்கள் எங்களுக்கானதாய் இருக்கிற வரை நாலு தடி நட்டு மேலே கூரை வேய்ந்து எம்மால் குடியிருக்க முடியும்.
மறுபடி ஊர் திரும்பத் தயாராகின்ற நிலையில் ஒரு வித துக்கத்துடன் இந்த வனங்களைப் பார்க்கிறோம். இவை எம்மை பாதுகாத்தவை. நாம் சிரித் ததையும், அழுததையும் மௌனமாய் பார்த் திருந் தவை. வனங் கள் எப்போதுமே பறவைகளுக்கும் விலங்குகளுக்குமே உரியவை. அதனால் அவைகளுக்கானதாய் இந்த வனங்களை விட்டு விட்டு இவைகளிடமும் இந்த கிராம மக்களிடமும் விடை பெற்றுக் கொள்கிறோம்.
திரும்பவும் எங்கள் முற்றங்களில் எம் பாதங்களைப் பதிக்கப் போகும் மகிழ்வுடன் இந்த வனங்களுக்கு கையசைக்கிறோம். வனங்கள்
அழகானவை தான்.
ஆனாலும், இன்னொரு தடவை அவலப்பட்டு ஓடி வந்து இருந்த வனங்களுக்குள் சரணடைய வேண்டிய தேவையை ஆண்டவன் எங்களுக்குத் தராதிருக்க வேண்டும். நொந்து போய் மீண்டிருக்கும் எங்களது பிரார்த்தனை இதுதான்.
ரனும் படைப்பாளி
லிங்கன் அவர்களுக்கு இலக்கிய ழாவை நடத்த முன் முயற்சி எடுத்து
ராகி வருகின்றது. கூடிய சீக்கிரம் கப்பாக நடத்த விழாக் குழுவொன்றும்
ன்பருக்கு மல்லிகையின் வாசம் கலந்த
- ஆசிரியர்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (32)

Page 34
Professional Gok
Indoor & Outdoor Quality Colour Film Photo Laminating C Quality & Normal E Video Filming
Quick Photo S,
64, SUMANATIS
(ARMOUR
COLOM TEL: 074

surah & Studio
Photography
Processing & Printing overing Album Picture Framing
zrvice Systems
SSA MAWATHA
STREET), BO - 12. 1-610652
386US) I, 60ÖIGLDOVİ 260Tourf - 2003 |33

Page 35
3823
ᎠᎾᎾ
அன்பி லர் 20032பரி
- செ.யோகராசா
அரசு, மதம், கு கருத்து நிலைகள் என்பவ குரலே 'எதிர்ப்பு இலக்க இவ்வாறான எதிர்ப்பு இ வருகின்றதாயினும் எதிர்ப்பு இலக்கியத்தை அணுகும் காலமாகவே மேற்கொள்
சனநாயக ஆட்சி நிலையூன்றிய பின்னரே பெற்றிருக்கும் என்பது மன்னராதிக்கம், மதநிறுவு இடம் பெற்றிருந்த காலகட் தனித்தனிக் குரல்களாக இலக்கியங்களுடாக அறி
மேலும், இவ்வெதிர்ப் வாய்மொழி இலக்கியங்க தக்கது. தமிழ்ச் சூழலில் கிடைக்கவில்லையாயினும் வைத்துக் கொண்டு அதன் முடியும்.
இங்கு, ஈழத்திலே இன்றுவரையிலான காலப் எவ்வாறு இடம் பெற்று மேற்கொள்ளப் படுகின்ற
ஈழத்திலே நவீன க கூறப்பட்டு வந்தாலும் அத அண்மைக்கால ஆய்வுக யாழ்ப்பாணப் பிரதேசம் ! மீனாட்சியம் மாள் ந கவனத்துக்குரியவர்கள்.

எதிர்ப்பு இலக்கிய
நோக்கில் ஈழத்து நவீன
கவிதை
டும்பம் முதலான நிறுவனங்கள், அவை சார்ந்த ற்றிற்கெதிராக, இலக்கியங்களுக்கூடாக எழுப்பப்படும் கியம்' என்று சுருக்கமாக வரையறை செய்யலாம். இலக்கிய முயற்சிகள் நீண்ட காலமாக இடம்பெற்று பு இலக்கியம் (Resistance Literature) என்ற விதத்தில் - ஆய்வு முறை, ஆய்வாளர், மத்தியிலே அண்மைக்
ளப் பட்டு வருகின்றது. முறைமை அல்லது அது பற்றிய சிந்தனைகள் இத்தகைய எதிர்ப்பு இலக்கிய முயற்சி முதன்மை வெளிப்படையானது. ஆயினும், அதற்கு முன்னர் பன ஆதிக்கம், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் முதலியன படங்களிலும் இலங்கியங்களுடான எதிர்ப்புக் குரல்கள் அவ்வப்போது வெளிப்பட்டுள்ளதனைப் பழந் தமிழ் யலாம். புக் குரல்கள் எழுத்து இலக்கியங்களுடாக மட்டுமன்றி களூடாகவும் இடம் பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் இத்தகைய எதிர்ப்பு இலக்கியங்கள் பண்டு தொட்டுக் ம் அதன் எச்சசொச்சங்களாக இன்று கிடைப்பனவற்றை 1 முன்னைய நிலையினை ஓரளவு ஊகித்துக் கொள்ள
நவீன கவிதை தோற்றமுற்ற காலந்தொடக்கம் ப்பகுதிகளிலே நவீன கவிதையில் எதிர்ப்புக் குரல்கள் வந்துள்ளதென்பதனை கோடிட்டுக் காட்டும் முயற்சி
து.
விதையின் தோற்றம் நாற்பதுகளின் தொடக்கமென்று கற்கான கால்கோள் முப்பதுகளிலே இடப்பட்டுள்ளமை ளுடாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. இவ்விதத்திலே சார்ந்த ஈழகேசரிக் குழுவினரும் மலைநாடு சார்ந்த நடேசய்யர், கோ.நடேசய்யர் ஆகியோரும்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
34

Page 36
ஈழகேசரிக் குழுவினர் கவிதைகளிலே ஆங்கில ஆட்சிக்கெதிரான எதிர்ப்புக் குரல் முதன் முதலாக ஓரளவு கேட்கின்றது. எ-டு:
'காட்டிக் கொடுத்திடும் கட்சிக் கிலங்கையும் காணியோ - சொந்தப் - பூமியோ? நாட்டிற் பிறந்திடும் நாங்க ளனைவரும் நாய்களோ - பெல்லிப் - பேய்களோ? ஆட்சிப் படைபெறு மாங்கில ராட்சியை
- 2 அஞ்சிடோம் இனித் - துஞ்சிடோம் மாட்சி கொளிலங்கை வாழச் - சுதந்திரம் வாங்குமோம் - கொடி - தாங்குவோம்
அத் துடன் சமகால பல் வேறு சமூகக் குறைபாடுகளுக்கெதிரான குரல்களும் ஓரளவு இடம் பெறுகின்றன.
'தீண்டப் படாதாதென்று - உலகில் திசைமுகன் செய்ததுண்டோ? வேண்டப்ப டுவதீதோ - ஐயோ வீண்கதை பேசுகிறீர்
உரிமை உரிமை யென்பீர் - உங்கள் எளிய சோதரர் தங்கள் உரிமை உரிமை யென்றால் - வேத ஏடுவிரிப் போமென்பீர்
மேற்கூறிய எதிர்ப்புக் குரல்களின் பின்னணியில் யாழ்ப்பாணப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸினர், ஈழகேசரி பொன்னையா முதலானோரின் செயற்பாடுகள் ஓரளவு இடம் பெற்றிருப்பினும் இந்திய - தமிழ்நாட்டு தேசிய விடுதலை இயக்கம், கவிஞர் பாரதியார் முதலான தனிமனிதர் செல்வாக்கு என்பனவே அதிகமென்பது கண்கூடு. ஏனெனில் இங்குள்ள மத்தியதர வர்க்கத்தினர் ஆங்கில ஆட்சியிலிருந்து ஈழம், இந்தியா போன்று விடுதலை பெறுவதற்கான செயற்பாடுகளையோ அவற்றைப் பொதுமக்கள் மயப்படுத்துவதையோ விரும்பினாரல்லர். அத்துடன் குறிப்பாக யாழ்ப்பாண மத்தியதரவர்க்க மேட்டிமைக் குழுவினர் சீர்திருத்த அமைப் புக்களை தோற்றுவிப்பதிலும் ஆர்வம் காட்டினாரல்லர். அவ்வாறு தோற்றமுற்ற ஒரு சில அமைப்புகளும் அற் பாயுளிலேயே மடிந்துள்ளன. அன்றைய யாழ்ப்பாணச் சமூகம், சமூகச் சீர்திருத்தத்தில் பெருமளவு நாட்டங்கொள்ளாத பழைமைபேண்

சமூகம் என்று கூறுவது பொருத்தமாகப் படுகின்றது.
எனினும், மலை நாட்டில் நிலைமை வேறுவிதமானது. முப்பதுகளளவில் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் அங்கு முனைப்புற்றிருந்தன. இவ்வித்திலே கோ.நடேசய்யர், மீனாட்சியம் மாள் நடேசையர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களது பல் வேறு விதத் தொழிற் சங்கச் செயற் பாடுகளுள் பாடல்களிலும் இலங்கை அரசாங்க சபை, இந்திய அரசு ஆகியவற்றிற் கெதிரான ஆக்ரோஷமான எதிர்ப்புக் குரல்களைக் கேட்கமுடிகின்றது.
'சிங்கள் மந்திரிகள் கூற்று - மிக சீருகெட்ட தென்று சாற்று ) சங்கடமே நேருமென தோற்று திந்திய சமூகம் நெருப்பாய் வரும் காற்று நன்றி கெட்டப் பேசும் மந்திரிமாரே - உங்கள் நியாய மென்ன சொல்லு வீரே இன்றி யமையாத வொரு போரே - செய்ய இடமுண் டாக்குறீர் நீரே'
மேற்கூறியவாறான பாடல்கள் இசைத்தன்மை, நாடகப் பாடல் மெட்டு என் பவற்றைக் கொண்டிருந்தமையும், தேயிலைத் தோட்டங்களில் மக்களுக்கு முன்னாலே பாடப் பட்டமையும் கவனத்திற்குரியன. இத்தகைய எதிர்ப்புக் குரலினை ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சிப் போக்கிலே இப் போது தான் பிரக்ஞை பூர்வமாகவும் முதன் முதலாகவும் கேட்கமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாற்பதுகளளவில் நவீனகவிதை பிரக்ஞை பூர்வமாக இடம் பெற்ற போது அம்முயற்சியில் ஈடுபட்டோர் 'மறுமலர்ச்சிக்குழு" வினராவர். ஆயினும், இவர்களது கவிதைகளில் எதிர்ப்புக் குரல் அரிதாகவே இடம் பெற்றிருந் தது. இதே காலப்பகுதியில் ஈழத்துக் கவிதையுலகினுள் முதன்முதலாகப் பிரவேசித்த மார்க்சியச் சார்புடைய கவிஞர்களிடம் (எ-டு: கே.கணேஸ், அ.ந.கந்தசாமி) முதலாளித்துவம், தொழிலாளர் துயரம், சாதிமை ஆகியவற்றிற்கெதிரான குரல்கள் பிரக்ஞை பூர்வமாக வெளிப்படுகின்றன. இவ்விதத்தில் அ.ந.கந்தசாமி எழுதிய 'வில்லூன்றி மயானம்' என்ற கவிதை முக்கியமானதொன்று. யாழ்ப்பாணத்தில் 1946 அளவிலே இடம் பெற்ற சாதிப் போராட்டத்துடன் தொடர்புபட்ட இக்கவிதையின்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 135

Page 37
முக்கியமான பகுதி பின்வருமாறு.
'நாட்டினர் நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந் தீ அன்று கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்கு
கிளர்ந்தெழுந்த தீயென்று நெடுநாளெங்கள் நாட்டினிலே கிளை பரப்பும் சாதி என்றும்
நச்சுமரவீழ்ச்சியினைக் காண்பதற்காய் வாட்டமுற்று மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித் தீ வாழ்க அஃது'
இக்காலம் (1946) வெளிவரத் தொடங்கிய 'பாரதி' சங்சிகையில் இத்தகைய மொழிபெயர்ப்புக் கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன. ஆயினும் இவ்வாறான முற் போக்குக் கவிஞர்களது கவிதைகள் எண்ணிக்கிையல் குறைந்தவை என்பது மனங்கொள்ள பாலது.
ஐம்பதுகளளவில் ஈழம் சுதந்திரம் பெற்ற வேளையிலேயே தமிழ்த் தேசிய உணர்வும் ஆரம்பித்து விட்டது. இதன் வெளிப்பாடே தமிழரசுக் கட்சியின் தோற்றமும் ஆகும். எனினும், இச்சூழலில் உருவான தமிழ்த் தேசியம் மொழிவழித் தொடர்புடைய து என் பது நாமறிந் ததே. இப்பின்னணியில் எழுந்த கவிதைகளில் 'சிங்கள' அரசுக்கெதிரான எதிர்ப்புக் குரல்கள் மிகுந்த ஆக்ரோஷமான முறையில் வெளிப்பட்டுள்ளன. இவ்விதத்தில் நீலாவணனின் ஆரம்பகாலக் கவிதைகள் கவனத்திற்குரியவை. இவ்விதத்தில் பின்வரும் கவிதைப் பகுதி நினைவு கூரத் தக்கது.
அ - 'உரிமைக் குரலைத் திருகத் தகுமோ?
சுழிமண்டைகளே செவி கொண்டிடுவீர் விழி தேவையிலை வழிகாட்டிகள் நாம் மொழிவேன் உமக்கு எனவே மொழியும்
இழி பெண் சிறிமா விழிமுன் தொடுபோர்' இதன் உச்சமாக, காசி ஆனந்தனின் பிற்காலக் கவிதைகள் (அறுபதுகள்) உள்ளன. இத்தகைய கவிஞர் வரிசையில் பலருமறியாத ஆரையூர் அமரன் கவனத்திற்குரியவர். சினிமா மெட்டுக்களிலமைந்த இவரது சிங்கள அரச எதிர்ப்புப் பாடல்கள் மேடைகளிலும் ஊர்வலங்களிலும் பாடப்பட்டுள்ளன.
எ-டு:
(மெட்டு : 'வாழ்வது போனாலும் வறுமையே வந்தாலும் ')
எடுப்பு உடலது சாய்ந்தாலும்

உயிரையே மாய்த்தாலும் உன்நிலை தளராதே - தமிழா
பாட்டு உடலது சாய்ந்தாலும் உயிரையே மாய்த்தாலும்
உன்நிலை தளராதே சூழ்ச்சிகள் சூழ்ந்த ஆட்சியில் யாரும்
வீழ்ச்சியே காண்பாரே அதனால்
இக்காலப் பகுதியில் ஊற்றெடுத்த தமிழுணர்ச்சி முதன்முதலாகப் பலவிதேசக் கவிஞர்களையும் ஒன்றுபடுத்தியது. எ-டு: (யாழ்ப்பாணம்) மஹாகவி, முருகையன் : (மட்டக்களப்பு) நீலாவணன், ராஜபாரதி, (மலைநாடு) சக்தி.அ.பாலையா, (திருகோணமலை) தாமரைத் தீவான். இவ்விதத்தில் 'தமிழ் எங்கள் ஆயுதம்' என்ற தொகுப்பும்
குறிப்பிடத்தக்கது.
பின்வருவது "தமிழ் எங்கள் ஆயுதம்” என்ற தொகுதியில் உள்ள 'மஹாகவியின் கவிதையின் இறுதிப்பகுதி. ''கரையிலாத் தமிழ் தெருக்கணிகை மாதென வெறிக் கயவரின் தயவிலாக் காலிடைப் படுவதா? முறையிலா வழிகளில் முரடர் எம் . முடிவையே முயல, நாம் முடியோர் மூலையில் துயில்வதா பறையெல்லாம் அதிர்க: நம் பலமெல்லாம் திரள்கவே பாதிநாடெங்களுக்காக வென்றெழுகவே''.
ஐம்பதுகளளவில் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியிலே குறிப்பிடத் தக்க இன்னொரு மாற்றம் ஏற்பட்டது. ஈழத்தில் முஸ்லீம் கவிஞர்கள் நவீன கவிதைத் துறைக் குள் முதன் முதலாக வரத்தொடங்குகின்றனர். இத்தகைய கவிஞர்களின் முன்னோடியான புரட்சிக் கமால் முஸ்லீம் சமூகத்தினரின் குறிப்பாக முஸ்லீம் பெண்களின் மூடநம்பிக்கைகளுக் கெதிராக ஆவேசமான கவிதைகள் பல புனைந்தவர்.: எ-டு:
''முக்காட்டுச் சிறையுனக்கு வெல்லமாடி? மூலையிலே இருட்டுலகில் கிடக்கின்றாயே? செக்காட்டும் மாட்டுக்கே உணர்ச்சியுண்டு செயலழிந்தாய், ஏ பெண்ணே ஒன்று கேட்பேன், எக்காலும் இந்நிலையே வாழ்க்கை என்றால்
என்னோடி கீழடிமைவீக்கம், வெட்கம் இக்காலே உன்னுயிரைத் தீர்ப்பாய் நாளை எழுகின்ற
புத்துலகைப் பாழாக்காதே" (புரட்சிக் கமாலுக்குப் பின்னர் அவ்வாறு இன்று
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
36

Page 38
வரை முஸ்லீம் சமூகம் பற்றி முஸ்லீம் கவிஞர் எவரும் விமர்சனம் செய்யவில்லை என்பது கவனிக்கற்பாலது.'
- ஈழத்தில் அறுபதுகளளவிலேயே மார்க்சியச்சார்புடைய முற்போக்குக் கவிஞர்கள் பலர் உருவாகினர். இவர்கள் கவிதைகளில் வெளிப் பட்ட சாதிமை, முதலாளித்துவம் என்பனவற்றிற்கான எதிர்ப்புக் குரல்களில் இருவேறு தன்மைகளை இனங்காணலாம். (அ) நேரடியாக வெளிப்படுத்தல் எ-டு: பசுபதி, (ஆரம்பகால )
சுபத்திரன் கவிதைகள்:
காலம் நெருங்குதடா கோடித் தலையுடன் சீறி வருங்கடல் கோபமுன் கோபமடா - தோழா வாடி உழைத்திடும் போது எரிமலை | வாயின் துள்ளமடா - குடில் - தேடிக் கிடந்திடும் துன்ப மரிந்திடத் தோழா எழுந்திடுவாய் - பல கேடி புலியொரு யானையென உருக்கம் கொண்டது என்று நட்!
F - சுபத்திரன்
ஒட்சி, க்
(ஆ) காட்சிப்படுத்தல், நாடகப்பாங்கு முதலான விதங்களில் வெளிப்படல்:
எ-டு: நுஃமான், சண்முகம் சிவலிங்கம், கவிதைகள். பின் வருவது நுஃமான் கவிதையொன்றின் ஆரம்பமாகும்.
துயில் கலைந்தோர் 2 அந்த வெயிலில் அவர்கள் நடந்தார்கள் எந்தச் சிறுநிழலும் இல்லாத பாதையிலே அந்த வெளியில் அவர்கள் நடந்தார்கள் 'எங்களிடம் ' என்ன இழக்க இருக்கிறது? எங்களிடம் என்ன இழக்க இருக்கிறது? வாருங்கள் நாங்கள் இந்த வையகத்தை வென்றெடுப்போம் வாருங்கள் நாங்கள் இந்த வையகத்தை வென்றெடுப்போம்
அந்த வெளியில் அவர்கள் நடந்தார்கள் எந்தச் சிறுநிழலும் இல்லாத பாதையிலே அந்த வெயிலில் அவர்கள் நடந்தார்கள்.

காற்று இப் பெருங்குரலைக் கைஎடுத்துச் சென்றது நாற்றிசையும் இக்குரலின் நாதம் பரவியது மண்ணின் புழுதி இவ்
வார்த்தைகளை ஏந்தியது விண்ணில் முகிலில் இதை மீண்டும் எழுதியது.
அந்த வெளியில் அவர்கள் நடந்தார்கள் எந்தச் சிறுநிழலும் இல்லாத பாதையிலே அந்த வெயிலில் அவர்கள் நடந்தார்கள். இவர்களினதும் இவர்கள் வழிவந்த பிற்கால முற் போக்குக் கவிஞர்களான சிவசேகரம் முதலானோரதும் கவிதைகள் இன்றைய தமிழ்நாட்டு ஆய்வாளர்களால் பாராட்டப் படுகின்றமை இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது.
யாழ்ப்பாண உயர் மத்தியதர வர்க்கத்தினரின் மூடுண்ட பண்பாட்டின் மறுபக்கங்கள் சிலவற்றை புனைகதைகளூடாக வெளிப்படுத்தியவர்கள் டானியல், எஸ்.பொன்னுத்துரை முதலானோர். தமது புதுக் கவிதைகளுடாக அத் தகையோரின் பண்பாட்டிற் கெதிரான குரல் முதன் முதலாக தா.இராமலிங்கத்தினூடாக இக்காலப் பகுதியில் வெளிப்படுவது விதந்துரைக்கப் படவேண்டியது. அவரது பிரசித்தமான கவிதையான தூக்கட்டும் தூக்கட்டும் என்ற கவிதையின் ஆரம்பப் பகுதி, இது.
கற்புக்கரசியாய் வாழ் என்று வாழ்த்திச் சிலப்பதிகாரமும் சீதனம் தந்தார் பாத்தி பிடிப்பார் அள்ளி இறைப்பார் பிஞ்சு மாதுளை வெள்ளை மணிகளில் இரத்தம் பிடித்திடும் பொதிந்த ஆசைகள் முற்றும் பலித்திடும் என்ற கனவுடன் கைப்பிடித் தேகினேன் புகுந்த புதுமனையில் கறந்த மனப்பாலைக்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
137 |

Page 39
காச்சி உறிஞ்சுதற்கு ஈர விறகு தந்தார்
எனினும் இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் கவிதையூடாக பின்னர் எழுப்பப் படவில்லை.
இந்த அறுபதுகளளவிலேயே மலைநாட்டுத் தமிழர் மத்தியில் 'தேசிய' உணர்ச்சி ஏற்படுகின்றது. இதனைத்
தொடர்ந்து தோட்ட நிருவாகத்திற்கெதிரான எதிர்ப்புக் குரல்களும் மலைநாட்டுக் கவிஞர் மத்தியில் ஓரளவு ஒலிக்கத் தொடங்கின எனலாம். (எ-டு: குறிஞ்சித் தென்னவன், அல் அஸுமத் ). குறிஞ்சித் தென்னவன் கவிதையொன்றின் ஒரு பகுதி, பின்வருவது:
''பஞ்சமும் நோயும் பட்டினிச்சாவும் பாட்டாளி எங்களுக்கோ? தினம் கொஞ்சிக் குலவிக் கூத்தாடி மகிழ்வதெம் கூட்டாளி என்பவரோ? பொங்கிடு பொங்கிடு: பொங்கி யெழுந்திடு புத்துலகம் சமைப்போம் - நாம் இங்கு படுந்துயர் மங்கி மடிந்திட பொங்கி எழுந்திடு வோம்"
மட்டக்களப்பில் நிலவுகின்ற சமூகக் குறைபாடுகளுக்கெதிரான எதிர்ப்புக் குரல்கள் மார்க்சியச் சார்பில் லாத முற் போக்கு கவிஞர்களாலும் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இத்தகைய கவிஞர் வரிசையில் முன்னோடி என்று கூறத்தக்கவர் ஜி. எம். செல்வராஜ் என்பவர். போடிமார்களுக் கெதிரான அவரது கவிதை இவ்வாறு ஆரம்பிக்கிறது.
ஏழைகளைக் கூப்பிட்டு ஏசிப்பேசி ஏலாத வேலைகளைச் செய்துவிட்டு 'நாளைவா' கூலிதர என்று சொல்லி நாட்டாண்மை காட்டி எந்நாளும் தங்கள் பேழையிலே நிரப்பிட்ட பணத்தைக் கொண்டு பெருமையுடன் ஊரறியப் பொங்கலிட்டு ) வாழையிலை வெட்டி யதில் புக்கை கட்டி வறியவர்க்கு வழங்குவதும் பொங்கலாமோ?
ஆயினும் இவ்வரிசைக் கவிஞர்களுள் விதந்துரைக்கப் பட்டி வேண்டியவர் நீலாவணன். சாதிமை, சுரண்டல், ஊழல் எனப் பல விடயங்கள் தொடர்பாக அதிகம் எழுதியிருப்பவர் அவர். பின்வருவது இத்தொடர்பிலான அவரது கவிதையின் சில பகுதிகள்:

''அடிபறை அடிச்சடையா - ஊர்
அரள்க, அரள்கவென அடிடையா . அன்னம் போல தலையை முன்னால் நீட்டு கையை முன்னும் பின்னும் காலைத்தூக்கி உன்னி யுன்னித் தாளந்தீர்த்து தங்கமென்றால் எங்கள் முதலாளி - தானத் தருமத் தண்ணீர் நிறைந்து பொங்குங்கேணி தங்கக் காசின் ஓரமாகத் தங்கி வாழும் நீதி! தூசு
அடிபறை அடிபறை அடிப்டையா - ஒரு அவரமில்லை இனி அடிடையா ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது மட்டக்களப்பு பிரதேசக் கவிஞர்களிடம் இத்தகைய எதிர்ப்புக் குணம் அதிகமுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஈழத்து இலக்கிய ஆய்வாளர் பலருமறிந்தது போன்று எண்பதுகள் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாக கவிதை வளர்ச்சியில் மிகமுக்கியமானதொரு காலப்பகுதியாகின்றது. 'ஈழத்துக் கவிதையில் எதிர்ப்புக் குரல்கள்' என்று நோக்கும் போது அத்தகைய முக்கித்துவம் முதன்மை பெற்றுக் காணப்படுவது குறிப்பிடத் தக்கது. இவ்விதத்தில் மூன்று விடயங்கள் முனைப்புறுகின்றன.
இவற்று ளொன்று, அரசியல் சார்ந்த எதிர்ப்புக் குரல்கள் முதன் முதலாக பிரக்ஞை பூர்வமாக பரந்துபட்ட ரீதியிலும் இடம் பெறுகின்றமையாகும். எழுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து ஏற்பட்ட அரச இராணுவ ஒடுக்குமுறையும் அதன் உச்சக் கட்டமாகிய 83 -ன் இனக்கலவரமும் ஈழம் முழுவதும் ஏற்பட்டமையும் இவற்றின் விளைவாக உருவான தமிழீழ விடுதலை இயக்கங்களும் அவற்றின் ஆயுதப் போராட்டங்களும் முனைப்புற்றமையும் இத்தகைய அரசியல் எதிர்ப்புக் கவிதைகளின் பின்னணியாகத் திகழ்ந்தன என்பது தெளிவு.
இவ்வாறன அரசியல் எதிர்ப்புக் குரல்களில் இருவேறு அடிப்படைகளில் அமைந்துள்ளன. ஒன்று இன ஒடுக்குமுறைக்கெதிரான வர்க்கரீதியிலான எதிர்ப்புக் குரல்.எ - டு : நுஃமான், சிவசேகரம் கவிதைகள். எ-டு: நேற்றைய மாலையும் இன்றைய காலையும்
{{
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (38)

Page 40
திருவிழாக் காணச் சென்று கொண்டிருக்கையில் படம் பார்க்கச் செல்லும் பாதிவழியில் பஸ்நிலையத்தின் வரிசையில் நிற்கையில் சந்தியில் இருந்து திரும்பி வருகையில் எங்களில் யாரும் சுடப்பட்டு இறக்கலாம் எங்களில் யாரும் அடிபட்டு விழலாம் உத்தரவாதம் அற்றவாழ்க்கையே மனிதனின் விதியா?
அடக்குமுறைக்கு அணி பணிவதே அரசியல் அறமா? அதை நாம் எதிர்ப்போம் அதைநாம் எதிர்ப்போம் எங்களின் தேவை: மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள் மனிதனுக்குரிய கெளரவம் வாழ்க்கைக்கான உத்தரவாதம் யார் இதை எமக்கு மறுத்தல் கூடும்? மறுப்பவர் யாரும் எம் எதிர் வருக .......
மற்றொன்று, இன ஒடுக்குமுறைக்கெதிராக தனிநாடு கோரும் நோக்கிலான எதிர்ப்புக் குரல். (எ-டு: புதுவை இரத்தினதுரையின் கவிதைகள்.
மேலும், இத்தகைய எதிர்ப்புக் குரல்கள், மெல்லிசைப் பாடல்கள், கவிதா நிகழ்வுகள், சுவரொட்டிகள் என்ற விதங்களிலும் வெளியிடப்பட்டமையும் இவ்வழி கவிதை ஜனரஞ்சக மயப் படுத்தப் பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
எண் பதுகளிலேற் பட்ட குறிப்பிடத்தக்க பிறிதொரு முயற்சி படித்த ஈழத்துப் பெண்கள் மத்தியிலே முகிழ்ந்த சமூகவிழிப்புணர்ச்சியின் பின்னணியில் நீண்டகால ஆணாதிக்கத்திற்கெதிராக (சழத்தமிழ்) பெண்கவிஞர்கள் முதன் முதலாக எதிர்ப்புக் குரல் எழுப்பியமையாகும். இவ்விதத்தில் "சொல்லாத சேதிகள்' என்ற தொகுப்பின் வரவு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கயமானதொரு இடத்தைப் பெறுகின்றது. எ-டு:
அவர்கள் பார்வையில் எனக்கு முகம் இல்லை இதயம் இல்லை

Kashullah -
ஆத்மாவும் இல்லை அவர்களின் பார்வையில் இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல்
சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன சமையல் செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும். கற்பு பற்றியும் மழைபெய்யெனப் பெய்வது பற்றியும் கதைக்கும் அவர்கள் எப்போதும் எனது உடலையே நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்''
அ. சங்கரி
மேற்கூறியவாறான பெண்கவிஞர்களுள் சிலர் பெண்நிலைவாத நோக்கிலான கவிதைகளை மட்டுமன்றி, அரசியல் சார்ந்த கவிதைகளையும் எழுத முற்பட்டனர். சிவரமணி கவிதைகள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகின்றன.
எண் பதுகளிலேற் பட்ட குறிப் பிடத் தக்க இன்னொரு முயற்சி, புகலிடக் கவிதைகளுடாக எதிர்ப்புக் குரல்களாகும். எண் பதுகளின் நடுக்கூற்றிலே ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா, கனடா முதலான நாடுகளுக்குச் சென்ற இளந் தலைமுறையினரின் படைப் பாக்க முயற்சிகளில் - குறிப்பாக கவிதைகளில் அரச இராணுவ ஒடுக்குமுறைக் கெதிரான குரல்கள் தீவிரமாக ஒலித்தன. அது மட்டுமன்றி தமிழீழ விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகளுக் கெதிரான எதிர்ப்புக் குரல்களும் முதன்முதலாகக் கேட்டன. புகலிடப் பெண்கள் மத்தியிலிருந்தும் குறிப்பிடத் தக்க கவிஞர்கள் உருவாகினர்.
மேற்கூறியவாறான புகலிடம் சார்ந்த அரசியல் எதிர்ப்புக் குரல்களும் ஆணாதிக்கத்திற்கெதிரான பெண் நிலை வாதக் குரல்களும் ஈழத்துக்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 39

Page 41
கவிதையை மூன்றாம் உலகநாட்டுக் கவிதைப் போக் கு டன் சங்கமிக்கச் செய் கின் றது. எடுத்துக்காட்டாக புகலிட நாடுகளில் நிலவும் நிறவாதத்திற் கெதிராக பின் வரும் கவிதை அமைந்துள்ளது:
''நாங்கள் ஏன் அகதிகளானோம் என்தாய் எங்கே? என்தாய் மொழி எது? நாங்கள் ஏன் கறுப்பர்களாயிருக்கிறோம்?
'அவர்களால' ஏன் ஒதுக்கப் படுகின்றோம்? துருக்கித் தோழி ஏன்
எரிக்கப் பட்டாள்''
- நிருபா. எண்பதுகளிலேற்பட்ட மேற்கூறியவாறான எதிர்ப்புக் குரல்கள் தொண்ணூறுகளிலே சிற்சில மாற்றங்களைக் காண்கின்றன. இவ்விதத்திலே பின்வரும் விடயங்கள் குறிப்பிடத் தக்கன. 1. தமிழீழ விடுதலை இயக்கங்களுக் கெதிராக முன்னர் புகலிட நாடுகளிலே ஒலித்த எதிர்ப்புக் குரல் கள் இப் போது ஈழத்திலேயே கேட்க ஆரம்பிக்கின்றன. (எ-டு: ஆத்மாவின் கவிதைகள்) 2. பெண்நிலைக் கவிஞர்களின் படைப்புகள், முன்னரைவிட இப்போது பெண் நிலைவாதச் சிந்தனைகள் பரவலடைந்தமை காரணமாக ஆழமும் கூர்மையும் தெளிவும் பெற்றமைகின்றன. (எ-டு: பெண்ணியா, ஆழியாள், கல்யாணி) 3. விடுதலை இயக்கங்கள் சார்ந்த பெண் போராளிகளுட் பலர் கவிதை எழுத முற்படுகின்றனர்.
எ-டு:
''எனது இனிய தேசமே குறிப்பெடுத்துக்கொள்க எளியுண்டு - சிதைந்துபோன க என் தேசத்தின்
கேள்வி காப்பகழி ஒன்றில் எழுகின்ற . உணர்வு அலைகளைக்
குறிப்பெடுத்துக் கொள்.
- மேஜர் பாரதி

4. அரச, இராணுவ ஒடுக்குமுறைகளுக்கெதிரான விடுதலை இயங் கஞ் சார்ந்த கவிதைகள் தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியிலே முன்னரைப் போல் பரவலாக அறியப் படாவிட்டாலும் அவ் வப் போது இராணுவக் கட்டுபாடற்ற பகு திகளிலிரு ந் து ஓரளவு வெளி வந்து கொண்டிருக்கின்றன. (எ-டு: செம்மணிக் கவிதைகள், ஆனையிறவுப் பாடல்கள்)
இறுதியாக, தொகுத்து நோக்கும் போது, எழுத்து ஊடகக் கவிதைகளில் முப்பதுகள் தொடக்கம் அரசியல் எதிர்ப்புக் குரல்களும் சமூக எதிர்ப்புக் குரல் களும் ஓரளவு ஒலிப்பதை அவதானிக்க முடிகின்றது. எனினும் இவ் எதிர்ப்புக் குரல்கள் அறுபதுகளில் மார்க்சியச் சார்புடைய முற்போக்குக் கவிஞர்களின் வரவிற்குப் பின்னரே முதன்மை பெறுகின்றன. எனினும் எண்பதுகள் தொடக்கம் முனைப் புற்று வருகின்ற இன ஒடுக்குமுறைக்கெதிரான குரல்கள் ஈழத்திலேயே பெருமளவு இடம் பெற்றுள்ளன. இத்தகைய கவிதைகள், முன்னரெழுந்த சமூக நோக்குடைய எதிர்ப்புக் கவிதைகள் போலன்றி, பொதுமக்களைப் பரவலாகச் சென்றடைகின்றமை கவனத்துக்குரியது.
ஆம் - - காதல் - 2 -- உவம்.
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின்
சுய வரலாறு. '(இரண்டாம் பதிப்பு - புதிய தகவல்களுடன்.)
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (40)

Page 42
Best Wishes to
Mallikai 38
uko P
Quality Offset Printers & Scanning, Planning, Plat
Binding & Manufactum
*
VILE
98 A, Vivebanonda
Tel: 34 Tele Fax:
Partei

tif-ger 3:;ue
ܘ
rinterss
z Computer Typesetters,
ܕre &Positive Processing
ring of Exercise Books
Hil, Colombo -13. 4046
614153-74ܝ
2003 . 6boof Acoloutܘܿܣܜܦ 38ong
41

Page 43
முன் குறிப்பு:
இந்தச் சிறு கதை எனது முதல் முயற்சி. என்ன யோசிக்கிறீர்கள்? தயவு செய்து தொடர்ந்து படியுங்கள்.
நான் கட்டுரைகள், நாடகங்கள், திரைப் படக் கதையும் வசனமும் , போன்றவை பல தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். ஆனால் சிறு கதை எழுதத் துணிவு வரவில்லை. காரணம் ஒன்றேதான். ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தான் எனது சகோதரரான நந்தி. ஆனால், சில நாட்களுக்கு முன் அவரே, கனடாவை மையமாக வைத்து என்னை ஒரு சிறு கதை எழுதும் படி தூண்டினார். எனவே, துணிந்து, நானும் என் பொல்லாச் சிறகை விரித்து ஆடுகிறேன் - அப்பர்
11 11CII
( 9 ம்
14/11 / }||
'அப்பர் '
அ ப
அதன் பி முன்னேற் அவரவரே செயல்'. விட்டு வ நடந்தபின் எழுதியது மாற்ற மு தவிர்த்து படைப்பது உங்கள்
கேட்கலா படைத்து தவறினீர்
பு'
ஒரு
33-22 Of5 லர் 20, 20032வரி
11 137 |
NCTITITH
கனவள்
அளவு க சிலவற்றி பிழைத்து வெடிப்பு ஒன்றிலே துவாரம்

எனது அடியில்
நடப்பதோடு என்னுடைய தொழில் முடிவடைகிறது. பின், நான் படைத்த ஒவ்வொரு உயிரும் தத்தம் மறம், சுகம், இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் [ கவனித்துக் கொள்ளுதல் வேண்டும். 'எல்லாம் அவன் 'அவன் விட்ட வழி' என்று பொறுப்பை என்னிடம் விட்டு சும்மா இருப்பதும், தாம் விரும்பாத ஒன்று 'விதி எப்படியோ அப்படியே தான் நடக்கும்', 'அவன் அவ்வளவு தான்' 'விதியின் சதி', 'தலையெழுத்தை மடியாது' என்ற காரணம் கூறித் தேற்றிக் கொள்வதும் க் கொள்ள வேண்டியவை. திரும்பவும் கூறுகின்றேன் ப மட்டுமே என்னுடைய வேலை, மிகுதி எல்லாம்
கைகளிலே தான். நீங்கள் என்னைப் பார்த்துக் ம். அப்படியென்றால் எல்லோரையும் ஏன் ஒரே மாதிரிப்
ஒரே சுகத்தையும், ஒரே அறிவையும் கொடுக்கத் என்று. நியாயம் போலிருக்கிறது கேள்வி.
குயவன் மட் பானைகள் செய்கிறான். ஒரே வைக் கொண்டவை எல்லாம். ஒவ்வொன்றும் சமமான ளி மண்ணால் ஒரே வடிவத்தில் அமைகின்றது. ஆனால் லே எங்கோ ஓர் இடத்தில் களி மண்ணின் கலப்பு ப் போகிறது. இதனால் அந்தப் பானையிலே ஒரு ஏற்பட்டுச் சில நாட்களில் உடைகிறது. இன்னும் இதே காரணத்தினால் ஒரு துவாரம் உண்டாகிறது. பானையின் அடிப்பகுதியிலேயெனின் அதை நீர்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 42

Page 44
அள்ளப் பயன்படுத்த முடியாது. உப்பு, புளி போன்றவற்றைப் போடலாம். பானையினால் நாம் எதிர்பார்த்த பயனைப் பெற முடியாது. உற்பத்திக் குறைபாடு - என்று இதைத் தான் நீங்கள் குறிப் பிடுவீர்கள். எனது படைப் புகளைப் பொறுத்த மட்டிலும் இதையே நான் கூறவிரும்புகிறேன். உற் பத்திக் குறைபாடு ஏற்பட்டபின் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அக் குறைபாட்டை, முற்றாகவோ ஓரளவுக்கோ நிவர்த்தி செய்வது உங்கள் சாமர்த்தியமேயாகும். இப்படி நான் கூறுவதால் என்மேல் நம்பிக்கை வைக்கவேண்டாம் என்பதல்லக் கருத்து. என்மேல் நீங்கள் வைக்கும் அளவிலாத நம்பிக்கையே உங்கள் குறைபாட்டைத் தீர்ப்பதற்கு ஊன்று கோலாக இருக்கும். உங்கள் அடிமனதிலே இந்த நம்பிக்கை நன்கு பதியப்பட்டால், உங்கள் முயற்சி, அது எதுவாக இருந்தாலும், வெற்றியடைய வாய்ப்புகள் உண்டு இப்படித்தான் நான் படைத்த மனோவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
என்னுடைய படைப்புகளில் ஐவர் தான். பச் சைவேலி வந்தான் குளத்தைச் சேர்ந்த அம்பலவாணர் சின்னத்தம்பியும், இவரது மனைவி அழகம்மாவும், இவர்களது இரு மகள்மாரும், கனடாவிலே வசிக்கும் சண் எனப் படும் சண்முகநாதனும், படைப்பிலே உற்பத்திக் கோளறு என்று பெரிதாக ஒன்றுமிருக்கவில்லை. இவர்கள் அனுப்பப்பட்ட சமூகம் அவர்களது பொருளாதார நிலையும் மிகக் குறைவாக இருந்தது. அந்தக் குயவன் செய்யும் பானைகள் கூட பலதரப்பட்ட இடங்களை அடைகின்றன. ஒன்று என்னுடைய பிரதிநிதியொருவருடைய சன்னிதானத்திலே தெய்வீக அந்தஸ்த்துப் பெறுகிறது. இன்னொன்றிலே கருவாடு சேர்க்கப் படுகிறது. வேறொன்று கடம் வாசிப் பவர் கைகளினால் ஓயாமல் அடி வாங் கு கிறது. கொள் ளிக் குடமாக மரண ஊர்வலத்திலே சென்று அழிந்து போகிறது இன்னொன்று.
சின்னத்தம்பி குடும்பத்திலே உற்பத்திக் குறைபாடுகள் ஒரு சிலதான். சின்னத்தம்பி பிறக்கும்போதே இடது கால் சற்றுக் கட்டையாக இருந்தது, அழகம்மாவுக்கு காது மந்தமாகவும் சண்ணுக்கு வாக்குக் கண்ணும் அவர்கள் பிறந் தபோதே இருந் ததாம். இந் தக் குறைபாடுகளுடனும் சின்னத்தம்பி தனது கமத்தைச் சிறப்புடன் செய்து வந்தார். இவர்கள் தத்தம் குறைபாடுகளை அவர்களின் குலதெய்வமென்று

கூறப்படும் வந்தான்குளக் காளியம்மனிடம் அடிக்கடி முறையிட்டுக் கொள்வது வழக்கம். எது எப்படியிருந்தும் சின்னத்தம்பியும் அழகம்மாவும் தமது கமத்தைச் சிறப்புடன் செய்து பணம் சேர்த்தார்கள். என்னால் ஆகாது எனினும் முயற்சி தம் மெய் வருத்தக் கூலி தரும் என்று நான் படைத்த ஒருவன் முன்பு கூறினான். இந்த வாக்கை நன்கு விளக்கும் வண்ணம் சின்னத்தம்பியும் அழகம்மாவும் சிறப்புடன் வாழ்ந்து தமது இரு பெண்களில் மூத்தவளை அரச உத்தியோகஸ்தருக்கு மணஞ் செய்து வைக்க அவர்கள் யாழ்ப்பாணம் சென்று வாழ்ந்தார்கள். இந் நிலையிலே உள்நாட்டுப் போர் துவங்கியது. இந்தப் போருக்கும் எனக்கும் கூட ஒரு தொடர்பும் இல்லை. இரு தரப்பினரும் செய்த தவறினால் வந்தது அது. பலர் மிக வசதியாக என்னைக் குறை கூறுவார்கள். போர் மூண்டதும் சின்னத்தம்பியர் தனது பணத்தையும் அறிவையும் பயன் படுத்தித் தங்கள் ஒரே மகனை வழமைக்கு மாறான ஒரு வழியிலே கனடாவுக்கு அனுப்பினார். பின்பு அவனை நான் தான் காப்பாற்ற வேண்டும் என்று இருவரும் விரதம் இருந்து மன்றாடினார்கள்.
கனடா வந்த சண் அவன் தனது அறிவாலும் ஆற்றலாலும் தனது வயதையொத்த சிலரைப் போலல்லாது, பொறுப்பை உணர்ந்து ஒரு நல்ல அத்திவாரத்தைக் கனடாவிலே ஸ்தாபித்தான். தனது பெற்றோரையும் தங்கை காந்தமாலாவையும் கனடாவிற் கு சட்டப் படி அழைத்துப் பொறுப்பேற்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கண்ணும் கருத்துமாக, செயற்பட்டான். பகலிலே முழுநேர வேலையும் இரவிலே ஒரு பகுதி நேர வேலைகளையும் செய்த இவனின் பாசம் கனேடிய வங்கி ஒன்றிலே ஒழுங்காக வளர்ந்தது. இவனின் பொருளாதார நிலையையும் விரைவிலே வரவிருக்கும் மாலாவையும் அறிந்த இவன் வயதையொத்த சில வாலிபர்கள் வலிய வந்து நட்புக் கொண்டிடாடினார்கள். சிலர் குறுகிய வழிகளில் மேலும் விரைவாகப் பணம் சேர்க்கலாம் என்று கூறி ஒரு முற்பணத்துடன் தங்களுடன் சேரும்படி வேண்டினார்கள். எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத 100 டொலர் தாள்களை அச்சடிக்கும் இயந்திரத்தை ஒருவன் வைத்திருந்தான். வங்கிகளின் பணம் எடுக்கும் அட்டைகளிலிருந்து கள்ளமாகப் பணம் எடுக்கும் யுக்தி தனக்குத் தெரியும் என்று இன்னொருவன் ஆசை காட்டினான். ஆனால் சண் அவனைப் பண்புடன் வளர்த்த பெற்றோர்களின் திறமையினாலோ தன து சுய அறிவின்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 43

Page 45
ஆற்றலினாலோ இவர்களுடன் சேர மறுத்தான். இந்த மறுத்தலுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. என்மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கை அவன் இப்படியான கெட்ட செயலில் ஈடுபடாமல் இருந்தமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனது நல்ல காலம் அவன் அப்படி வீண் போகவில்லை. அல்லாவிடில் அவன் கனடாவின் சிறைச்சாலைகளிலே இருக்கும் அவனின் சமூகத்தினருடன் சேர்ந்து இருக்கும் போது அவனின் பெற்றோர் என் மேல் தான் பழிபோட்டிருப் பார்கள். உண்மையிலேயே, அகப்படாமல், கள்ளமான வழிகளிலே பணம் சேர்ப்பவர்கள் கூட எனக்குத் தான் நன்றி கூறுவார்கள். அவர்களின் வீடுகளிலே கூட எனது பிரதிநிதிகளின் படங்கள் தொங்கும்.
சண் தனது பெயரிலே வங்கிப் பணம் போதுமான அளவு காட்ட வேண்டும் என்ற காரணத் தால் மூன்று தொழில் கள் புரிய வேண்டியிருந்தது. காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிமுதல் ஒரு தொழிற் சாலையிலே மரப்பெட்டிகள் தயாரிக்கப் பலகைகள் வெட்டிக் கொடுத்து பின்பு இரவு 7.30 மணிமுதல் 11.00 மணிவரை ஓர் உணவு விடுதியில் பகுதிநேர தொழில் புரிந்தான். சனி ஞாயிறுகளில் அதிகாலை 3.00 மணிக்கெல்லாம் எழுந்து வீடு வீடாகப் பத்திரிகை விநியோகம் செய்வது இன்னொரு வேலையாக இருந்தது. அந்த நாட்களில் பத்திரிகை விநியோகம் செய்த பின் - கனடிய தமிழிலே பேப்பர் போட்ட பின்- இவனுக்குக் காலை 6 மணி முதல் இரவு உணவு விடுதிக்குப் போகும் வரை ஓய்வு நேரமாகும். இந்த நேரம் தான் அவன் தனக்குத் தேவையான காய் கறி வகைகளை வாங்கி வைப்பது வழக்கம். தாய்க்குக் கடிதம் எழுதி, சமைத்து உண்ட பின் அவன், அண்மையில் உள்ள நண்பன் வீட்டிற்குப் போய் வீடியோவிலே தமிழ்த் திரைப்படம் பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு. வீடு திரும்பியதும் கனடாவிலே இலவசமாகக் கிடைக்கும் தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றை வாசித்த பின் 24-மணி நேர தமிழ் வானொலி நிகழ்ச்சிகளையும் விரும்பிக் கேட்பான். அவன் கனடா வந்த நாட்களில் அவனை அதிசயிக்க வைத்தது, உலகிலே தனித்து நிற்கும் மிக உயரமான கோபுரமாகிய சீ என் கோபுரமல்ல, உலகப் பிரசித்தி பெற்ற நயகரா நீர் வீழ்ச்சியல்ல, சுரங்க ரயிலோ 30 மாடித் தொடர் மாடிகளோ அல்ல, ஆனால் ஸ் காபரோ ரொரண்டோ ஆகிய நகரங்களிலே வீர நடை

| போட்ட முக்கிய நகரங்களில் சிறப்புடன் வீற்றிருந்த | தமிழ் மொழியே ஆகும். வர்த்தக நிறுவனங்கள் கூட மேலே தமிழ் மொழியிலேயே தமது நிறுவனத்தின் பெயர்களை பெயர்ப் பலகைகளிலே போட்டிருந்தார்கள். இப்படியான ஒரு ஆசை அங்கு வாழ்ந்த மக்களுக்குத் தமிழ் பற்றினால் வந்ததோ அல்லது வர்த்தக நோக்கினால் வந்ததோ என்பதை அவன் சிந்தித்ததும் உண்டு. ஆனால், கனடாவில் 20 வருடங்களுக்கு மேல் வசித்து வந்த அவனின் தகப்பனின் தகப்பனாரின் நண் பரான கணபதிப்பிள்ளை மாஸ்ரரிடம் இதைக் கூறி இவன் ஆச்சரியப் பட்டபோது அவர் பலமாகச் சிரித்தார். சிரித்து விட்டு அவர் சொன்னார், தம்பி கனடாவிற்கு வந்த புதிதில் எல் லோரும் இப் படித்தான் சந்தோஷப்பட்டார்கள். காலம் போகப் போக உண்மை தெரிந்து வருகிறது. எனினும், அவர்கள் தமது மனதிலே இருக்கும் ஒரு சந்தோஷமான சிந்தனையை இழக்க விரும்பவில்லை. உண்மை இது தான். உனது பிள்ளைகள் தமிழ் பேசக் கூடும். ஆனால் எழுதமுடியாமல் இருக்கும். உனது பேரப்பிள்ளைகள் - நீயும் உனது மனைவியும் பேசிய மொழி ரமில் என்பார்கள். அதன் பின் ..... இருந்து பாரேன் நீ தான் இங்கே இன்னும் 50 ஆண்டுகள் போல வாழப் போகிறாயே என்று சொன்னார். தமிழைப் பற்றி அவர் கூறியதில் விஷயமிருக்கிறது என்று தான் நானும் எண்ணுகின்றேன்.
சண்ணின் பெற்றோரையும் தங்கையையும் கனடா வரவழைக்கும் செயல்கள் துரிதமாக நடைபெற்றன. பெற்றோருக்குக் கனடா செல்ல அனுமதி கிடைத்தது. வயது காரணமாக மாலாவின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. அவளை அம்பலவாணர் தனது சகோதரியுடன் விட்டு விட்டு மனைவியுடன் கொழும்பு பயணமானார். பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. போர் நடக்கும் பகுதியூடாகச் சென்றபோது 2 நாட்கள் ஒரு பாழடைந்த பள்ளிக்கூடத்திலே தங்கியதும், ஓர் இரவு வாங்கிய நுளம்புக் கடியும் தேள் கடியும் மறக்க முடியாதவை. அப்பனே எங்களை எங்கள் மகனுடன் கொண்டுபோய் சேர்த்து விட்டால் போதும் இந்த துன்பங்கள் எல்லாவற்றையும் நாம் தாங் கத் தயார், என்று அம் பலவாணரும் அழகம்மாவும் என்னை வேண்டினார்கள். தனது தங்கையால் அப்போது வரமுடியவில்லை என்று சண்முகநாதன் அறிந்தும் பெற்றோர் வருவதில் தலை கால் தெரியாத புளுகம். மேன் முறையீடு செய்தோ வேறு வழியாலோ தங்கையையும் எடுக்க
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (44)

Page 46
முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. தான் வசித்து வந்த அறையை விட்டு ஒரு தொடர் மாடியிலே மாதம் 750 டொலருக்கு ஓர் அறை கொண் ட வீட்டை வாடகைக்கு எடுக்கவேண்டியிருந்தது. தவணை முறையில் பணம் கட்டும் தளபாடங் களையும் சமையலறைப் பொருட்களையும் வாங்கினான். மொத்தத்தில் 9 வருடங்கள் பிரிந்திருந்த பெற்றோரை சுகமாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்கச் சகல ஏற்பாடுகளையும் செய்தான் சண்முகநாதன். பெற்றோருக்காக ஒதுக்கிய வீட்டின் ஒரே அறையிலே இரட்டைக் கட்டில் ஒன்றும் கண்ணாடி மேசை போன்ற வேறு தளபாடங்களும் வைக்கப் பட்டன. சண்முகநாதன் சிறு வயது முதற்கொண்டு என்மேல் அபார நம்பிக்கை வைத்திருந்தான். 7 வயதிலேயே தனது கிராமப் பாடசாலையில் மாசில் வீணையும் மாலை மதியமும் என்று அப்பர் சுவாமிகள் என்னைப் பற்றி பாடிய பாடலை மிகச் சிறப்பாக இராகமெடுத்துப் பாடியதால் வெள்ளிக் கிண்ணம் பரிசாகப் பெற்றவன். அந்தப் பாடலிலே ஈசன் சொல் என்னையே குறிப்பிடும் என்பது அவன் கருத்து. இந்தப் பாடல் எந்தச் சமயத்தவருக்கும் ஏற்றது என்று வண.பிதா தனிநாயகம் அடிகளார் ஒரு சொற் பொழிவிலே கூறியதாக அவன் பயடித்திருந்தான். அந்த வெள்ளிக் கிண்ணமும் கனடா வருவதில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
சண்ணின் பெற்றோர் ரொறொண்டோ சர்வதேச விமான நிலையத்திலே ஒரு சனி காலை வருவது அவனுக்கு வசதியாக இருந்தது. அன்று காலை பேப்பர் போடும் வேலையை தனது நண்பன் ஒருவனின் தகப்பனாரிடம் கொடுத்துவிட்டு, வெள்ளி இரவே தனது மோட்டார் வாகனத்தை நன்றாகக் கழுவி, உட்புறத்தையும் சுத்தம் செய்தான். குகா இனப்படும் இவனது நண்பன் குகானந்தராஜாவும் அடுத்தநாள் விமானநிலையத்திற்குச் செல்ல இருந்ததால் வெள்ளி இரவு இவனுடனேயே நுங்கினான். சனி காலை இருவரும் நேரத்துடனேயே விமான நிலையம் சென்று காத்திருந்தார்கள்.
விமானம் குறிப் பிட்ட நேரத் திற் கு வந்திறங்கியது. தத்தம் பெட்டிகளைக் கொண்டு தாயும், தகப்பனும் வருவதைக் கண்ட சண்ணிற்கு அளவிலா மகிழ்ச்சி, ஓரளவு துக்கத்துடன் கலந்து கரற்பட் டது. 9 வருடங்கள் கழிந்து தனது (யெற்றோரைக் காண்பதால் உண்டானது மகிழ்ச்சி. இந்த 9 ஆண்டுகளில் இவர்களின் தோற்றம் 18 ஆண்டுகள் கூடியது போன்று இருந்ததால்

உண்டானது துக்கம். சண் தன் பெற்றோரைக் கட்டி அணைத்து வரவேற்ற பின் தனது நண்பனையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தான். புலம் பெயர்ந்து வாழும் நாட்களில் முன்னிலையிலே இருக்கும் நாடாகிய கனடாவிலே வாழக் கிடைத்ததற்கு நான் தான் காரணம் என்று எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு காரிலே ஏறினார் அம் பலவானர். நடந்தவை எல்லாம் சண்முகநாதனுடைய பிரயாசம் என்பது அந்தப் பிதாவுக்குத் தெரியவில்லை. அவனைப் பிழை கூற முடியாது. அவன் என் மேல் வைத்த நம்பிக்கையே அவனின் செயல்களுக்குத் தெம்பு கொடுத்தது எனபதை நான் மறுக்க மாட்டேன்.
ஒரு மாதத்திற்கு முன் கணபதிப்பிள்ளை மாஸ் டர் சண் ணைக் காணப் போனார். அம்பலவாணரும் மனைவியும் கனடா வருவதை அறிந்த அவர், இவர்கள் முற்பிறவியிலே செய்த புண்ணியத்தாலே தான் இவர்களுக்கு இந்த நல்வாழ்வு கிடைக்கிறது என்றார். இந்த கூற்றினால் பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால், முற்பிறப்பிலே செய்த பாவத்தினாலே தான் இப்பிறப்பில் ஒருவருக்கு நான் தண்டனை கொடுக்கிறேன் என்றும் பலர் சொல்வார்கள். சில நாட்களுக்கு முன் பெருந்தெரு ஒன்றிலே கார் ஓடிய ஒருவன் இன்னொருவன் செய்த பிழையின் காரணமாக விபத்துக்குள்ளானான். மிக ஒழுங்கானவன், நல்லவன் என்று பெயரெடுத்த அவனின் உயிரற்ற உடலை எடுப்பதற்கே 4 மணி நேரம் எடுத்தது. முற்பிறப்பில் செய்த பாவம் என்றார்கள் மக்கள். செய்த குற்றம் என்ன என்பதைச் சொல்லாமல் உலகின் எந்த நாட்டிலாவது நான் படைத்த மனிதர் ஒருவருக் கும் தண்டனை கொடுப்பதில்லையே? இது இப்படி இருக்க நான் கொடுப்பேனா? நான் எப்பிறப்பிலும் தண்டனை கொடுப்பதில்லை. மன்னிப்பதும் மனிதர் செய்யும் கருமங்கள். பெற்றோரை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து சண்முகநாதன் சுடச் சுட தன் கைப்பட தயாரித்த தேநீரை அவர்களுக்கும் தனது நண்பனுக்கும் கொடுத்தபின் தனது வீட்டைச் சுற்றிக் காட்டினான். படுக்கை அறை, நவீன முறையான கழிவு அறை, சமையலறை இவற்றைப் பார்த்த அம்பலமும், அழகும் - இனி இவையே சண்ணின் பெற்றோரின் கனேடியப் பெயர்கள் - ஆச்சரியப் பட்டார்கள். தாங்கள் 9 வருடங்களாகச் செய்த தியாகங்களுக்குக் கிடைத்த பரிசென என்னைப் போற்றினார்கள். உடைகளை மாற்றிய பின் சாலையில் அமர்ந்து தொலைக்காட்சியிலே ஓடிய தமிழ்த் திரைப்படத்தைப் பெரியவர்கள் பார்க்க,
11111111111111181 க
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
(45)

Page 47
அடுத்த நாளாகிய ஞாயிறு அன்று இவர்களை எங்கே கூட்டிச் செல்லலாம் என்பதைச் சண்ணும் குகாவும் ஆலோசித்தார்கள். கண்ணைப் பறிக்கும் நயாகரா நீர் வீழ்ச்சியைக் காட்டுவதோ, அல்லது ரொறண்டோவின் சுரங்க றயிலிலே கொண்டு செல்வதோ என்பன போன்ற பலவற்றை இருவரும் சி ந் தித் தார்கள் .. நயகரா போவதானால் அதிகாலையிலேயே புறப்பட்டு கணபதிப் பிள்ளை மாஸ்டர் வீடு சென்றும் போகலாம். சண் கனடா வந்த நாள் முதல் அவனுடன் மிகவும் அன்புடன் இருப்பவர்கள் அவர்கள். ஞாயிறு பிரயாணத்தைப் பற்றி இருவரும் ஒரு முடிவுக்கும் வரவில்லை. திரைப் படம் முடிந்தபின் பெற் றோருடன் கலந்தாலோசிப்பதாக முடிவு எடுக்கப் பட்டது.
சண்ணின் தாய் தகப்பன் கொண்டு வந்த பெட்டிகள் சாலையிலே இருந்தன. அவன் பரிசாகப் பெற்ற வெள்ளிக் கிண்ணமும் தாம் செய்த பயற்றம் பணியாரமும் பெட்டிக்குள் இருக்கிறது என்று தாய் சொல்ல சண் பெட்டியைத் திறந்து ஆவலுடன் தேடினான். மகனின் அவசரத்தைக் கண்ட பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்முறுவல் செய்தார்கள். திடீரென்று கைகளை எடுத்த சண்
COMPUTER T
(Singhala / T. AKMEE TRAD COMPUTEE
Graphics Design Colour Printing, Photo Cop
off Set & S! SPECIALISED IN LE
Quality Job: In T
!- - - T
258/3, Dam Street, Colo
----------
***"

'ஐயோ அம்மா' என்று அலறினான். பெட்டியை விட்டு வெளியே வந்த ஒரு புடையன் பாம்பு விறு விறென்று படுக்கை அறையை நோக்கிச் சென்றது. அந்தப் பாம்பினால் தீண்டப் பட்டதால் சிறிது நேரம் துடிதுடித்த சண் , மக் கள் மொழியில் சொல்வதென்றால், என் அடியில் சேர்ந்தான்.
பின் குறிப்பு:
கதையில் வருவன கற்பனை - மூலக் கருவை விட, ஆம் ஆம் மூலக் கருவை விட, சில வருடங்களுக்கு முன் தமது ஊரில் மிக கஷ்டப்பட்ட ஒருவரும் அவரின் மனைவியும் தமது மகனுடன் சேரக் கனடா வந்த அன்றே அவர்களுடைய பிள்ளை இதே முறையில் மரணமடைந்த செய்தி கனடா மக்களையே மெய் சிலிர்க்க வைத்தது. தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமல்ல ஆங்கில பத்திரிகைகள் கூட செய்தியையும் படங்களையும் முதற் பக்கத்திலேயே கொடுத்தன. அதிர்ச்சியுள்ள பெற்றோரையும் தொலைக்காட்சியிலே கூடக் காட்டினார்கள்.
மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள் YPE SETTING amil / English)
DING COMPANY R DIVISION
ing, Laser Printing, y, Scanning, E-mail Facilities creen Printing EGAL DOCUMENTS ime: Better Rates
( க
ombo - 12. Tel: 01-421987
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 |

Page 48
முத்தமிழில் நாம் இது
இசைத் தமிழ் மீள்கொணரப் படவேன்
' ழத் தமிழினம் தனது தேசியத்தை வென் றெடுக் கும் பரிணாமக் கட்டத்தினை அடைந் துள் ள வேளையில் அதனுடைய கலாசாரத்தின் பிரதான கூறுகளையும் கண்டறிந்து வலுப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவைப்பாடு எழுந்துள்ளது. ஓர் இனத்தின் இருப்பும் வளர்ச்சியும் செழுமையும் அதன் கலாசாரத்தினூடாகவே பேணப்படுகின்றன, பதிவுசெய்யப் படுகின்றன. அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன.
தொன்மைச் சிறப்புமிக்க தமிழ் மொழி சங்கத் தமிழர்களால் இயற் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று முத்தமிழாகப் பகுக்கப் பட்டு போற்றி வளர்க்கப் பட்டது. இவற்றுள் இசைத் தமிழை தமிழர்கள் இழந்து மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. இன்று கர்நாடக சங்கீதமே தமிழர்களின் மரபார்ந்த இசையாகக் கொள்ளப் படுகிறது, பாடவிதானங்களில் சேர்க்கப் பட்டுப் போதிக்கப் படுகிறது.
:-
உலகில் வேறெந்த இனத்தையும் விட தமிழினம் இசையுடன் ஜன்மார்ந்தத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. குழந்தை கருவில் உருவாகும் போதே நலுங்குப் பாடல் இசைக்கப் படுகிறது. குழந்தைப் பருவத்தில் தாலாட்டுப் பாடல், சிறுவர் பருவத்தில் நிலாப்பாடல், விளையாட்டுப் பாடல், வாலிபப் பருவத்தில் வீரப் பாடல், காதற் பாடல், திருமணப் பாடல், இறந்த பின்னர் ஒப்பாரிப் பாடல் என்று வாழ்வியலின் அனைத்துப் பருவங்களுக்கும்

38:24 கேலிகை 25 லர்
20033னவரி
ஓந்த
ன்டும்.
- ராஜ ஸ்ரீ காந்தன்.
இசைப் பாடல்கள் உள்ளன. இவற்றுடன் தொழில் சார்ந்த ஏற்றப்பாட்டு, பள்ளுப் பாட்டு, ஓடப் பாட்டு, கப்பற் பாட்டு போன்றவை இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஒரு நாளின் அதிகாலை, காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல், மாலை, இரவு ஆகிய நேரப் பிரிவுகளிலும் எந்நேரங்களிலும் பாடத்தகுந்த பண்கள் இசை முன்னோர்களால் உருவாக்கப் பட்டிருந்தன. முதலாம் நூற்றாண்டிற்கும் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட சங்க காலத்திலேயே குறிஞ்சிப் பண், முல்லைப் பண், மருதப் பண், நெய் தற் பண், பாலைப் பண் போன்ற பிரதேசரீதியான தமிழ்ப் பண்கள் சிறப்புடன் இசைக்கப் பட்டமைக்கு இசை வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளும் வழங்கும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகம், கேரளம் ஆகிய நான்கு இந்திய மாநிலங்களிலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் ஏனைய நாடுகளிலும் இசைக்கப் பட்டுவரும் ''கர்நாடக இசை'' என்ற இசைக்குத் தாய் பண்டைத் தமிழ் இசையே என்பதும் இந்த இசை 3000 ஆண்டுகாலத் தொன்மை கொண்டது என்பதும் கர்நாடக இசைத் தமிழ் இசையல்ல என் பதும் இசை ஆய்வாளர்களின் ஒருமித்த
முடிபாகும்.
தமிழிசை மூவர்களாகக் கருதப்படும் முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை , அருணாசலக் கவிராயர் ஆகியோர் 15-ம் நூற்றாண்டின்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (47)
PUBLIC LIBRADY

Page 49
முற்பகுதியில் பிறந்து ஏராளமான தமிழிசை உருப்படிகளை இயற்றி தமிழிசைக்கு வளம் சேர்த்தனர். கீர்த்தனை என்ற உருப்படி வகையை இசைத்துறைக்கு அறிமுகப் படுத்தியவர்களும் இவர்களேயென்று குறிப்பிடப் படுகிறது. இவர்கள் காலத்தில் தமிழிசை உச்சம் பெற்றிருந்தது.
14- ம் நூற்றாண்டில் அலாவுத்தீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்கபூர் தென்னாட்டின் மீது படையெடுத்தார். விந்தமலைக்குத் தென்பாற்பட்ட பாண்டிய, சோழ, யாதவ, காகதீய அரசுகள் மாலிக் கபூரினால் கைப்பற்றப்பட்டன. முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து இந்துக்களைக் காக்க பல் லாரி மாவட் டத் தில் விஜயநகர அரசு உதயமானது. துங் கபத்திரை ஆறு முதல் கன்யாகுமரி வரை உள்ள நாடு விஜயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. கருநாடகரும் ஆந்திரரும் தமிழ்நாட்டை ஆட்சி புரிந்தனர் அவ்வரசர்கள் கன்னடத்தையும் தெலுங் கையுமே போற்றி வளர்த்தனர்.
17 - ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு ஓங்கியிருந்தது. இக்காலத்தில் கன்னட மாநிலத்தில் பிறந்தவரான புரந்திர தாசர் மிகுந்த செல்வமும் அரச செல்வாக்கும் கொண்டிருந்தார். இவர் சங்கீதத்திலும் அதீத ஈடுபாடு கொண்டவர். கர்நாடக சங்கீத பிதாமகர், ஆதிகுரு என்றழைக்கப் படும் இவர் தமிழிசை நுட்பங்களைக் கற்றுத் தெரிந்தவரென்று கூறப்படுகிறது.
கர்நாடக சங்கத்தின் மும்மூர்த்திகளாகக் கொள்ளப் படும் சியாமா சாஸ்திரிகள், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றினார்கள். இவர்களில் மூத்தவரான சியாமா சாஸ்திரிகள் வடமொழியிலும் தெலுங்கிலும் கீர்த்தனைகளை இயற்றினார்.
தமிழ்ப் பண்ணிசை ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த திருவாரூரில் 1767 மே 4-ம் திகதி தியாகராஜர் பிறந்தார். கொண்டி வெங்கட ரமணய்யாவிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றுத் தெளிந்தார். உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட அற்புதமான தெலுங்குக் கீர்த் தனைகளை இயற்றினார். எளிமையான வாழ்க்கையை நடாத்திய தியாகர ஜர் அவர்களே கர்நாடக சங் கீத மும்மூர்த்திகளில் மிகச்சிறப்பாகப் போற்றப் படுகிறார்.
தென்னகத்தை ஆட்சிபுரிந்த நாயக்க மன்னர்கள்

கர்நாடக இசையின் வளர்ச்சிக்குப் பூரண ஆதரவு வழங்கி அதன் மேம்பாட்டிற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். தமிழ் இசை படிப்படியாக மறைக்கப் பட்டது. இதனையடுத்து வந்த காலப் பகுதிகளில் தமிழகத்திலிருந்த கான சபாக்கள் அனைத்திலும் தெலுங்குக் கீர்த்தனைகள் மட்டுமே பாடப்பட்டன. தமிழ் வித்துவான்கள் கூட தெலுங்கு மொழியில் இசைவழங்கி தங்கள் திறமைகளுக்குப் பாராட்டுப் பெறுவதிலேயே முனைப் பான அக்கறை கொண் டிருந்தனர். தெலுங்கில் பாட்டிசைப்பதனைப் பெருமையாகவும் கருதினர். பல கான சபாக்களில் தமிழ்ப் பாடல்களை இசைப்பதற்குத் தடைகளும் விதிக்கப் பட்டன. தமிழில் பாடல் இசைப்பது இழிவாகவும் தீட்டாகவும் கருதப் பட்டது.
இசைப் பேரறிஞர் பி.சாம்பமூர்த்தி தனது நூலொன்றில், 'தமிழ் மக்கள் தமது பூர்வகாலத்தில் ஓர் உன்னதமான இசையை அப்பியாசித்து வந்தார்கள். புராதன தமிழ் இசை நூல்களும் சிலப்பதிகாரமும் இதனை நன்கு விளக்குகின்றன. இந்த அற்புதமான இசைமுறை இன்று தமிழில் மறைக்கப் பட்டு வழக்கத்திலில்லாமற் போய்விட்டது. தற்போது தமிழ்நாட்டிலுள்ள சங்கீத பரம்பரை சியாமா சாஸ்திரிகள், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகிய சங் கீத மும்மூர்த்திகளால் உண்டாக்கப் பட்டதாகும்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலாசார சூறையாடலிலிருந்து தமிழ் இசையை மீட்டெடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சி 18-ம் நூற்றாண்டில் செட்டிநாட்டரசர் சேர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களினால்
ஆரம்பித்து வைக்கப் பட்டது. - தமிழிசையின் மீள் வருகைக்கான ஆய் வுபூர்வமான அத்திவாரத்தை இட்டவர் ஆபிரகாம் பண்டிதராவார். பெருஞ் செல்வந்தரான இவர் இசைமீது பெரு மோகம் கொண்டிருந்தார். தென்னகத்தில் முதன் முதலாக இசை மகாநாட்டை ஏற்பாடு செய்தார். பண்டைய இசைநூல்களைப் பயின்று தகவல்களைச் சேகரித்தார். வடமொழியிலும் தெலுங்கிலும் எழுதப்பட்டிருந்த இசைநூல்களை நுணுக்கமாகப் படித்தார். நீண்ட கால ஆராய்ச்சியின் பின் ''கர்ணாமிர்த சாகரம்" என்ற இசை ஆராய்ச்சி நூலை எழுதினார். சுமார் 1000 பக்கங்களைக் கொண்ட இந்நூலை அச்சிடுவதற்காக ஒரு மின்
அச்சகத்தையே நிறுவினார்.
இவரையடுத்து தமிழ் இசை ஆய்வுகளை
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (48)

Page 50
முறையாக மேற்கொண்டவர் மயில் வாகனன் என்ற இயற்பெயர் கொண்ட நம்மவரான விபுலானந்த அடிகளார். இவருடைய ஒப்புயர்வற்ற ஆராய்ச்சிகளைத் தமிழகத்து அறிஞர்களே வியந்து போற்றினர். இவர் எழுதிய 'மதங்க சூடாமணி', “யாழ் நுால்' என் பவை தமிழிசையின் தொன்மையினையும் மாண்புகளையும் உலகறியச் செய்தன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் பணியாற்றிய காலம் தமிழிசை மறுமலர்ச் சிக் கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தென்னகத்தில் ஆரம்பத்தில் கன்னடருக்கும் ஆந்திரருக்கும் மாத்திரமே பல்கலைக் கழகங்கள் உருவாக்கப் பட்டிருந்தன. தமிழின் மேம்பாட்டிற்காக ராஜா சேர் அண் ணா மலைச் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். இதன் தமிழ்த் துறைத் தலைவராகச் சுவாமி விபுலானந்தர் நியமிக்கப் பட்டார். தமிழ் இசையை வளர்ப்பதற்காகத் தனித்துறையொன்று 1929-ல் தொடங்கப்பட்டது. 1943-ல் சென்னையில் தமிழ் இசைச் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது. இச்சங்கம் இதே ஆண்டில் பெரியதொரு இசை மகாநாட்டினை நடாத்தியது. இம்மகாநாட்டைத் தொடக்கி வைத்த அண்ணாமலைச் செட்டியார், 'தமிழர் இசைச் செல்வமே இந்திய சங்கீதத்திற்குத் தாயுற்றாக இருந்த'தென்று தக்க புலவர்கள் ஆராய்ந்து சொல்கின்றனர். 'பிறமொழிப் பாடல்களை வெறுப்பது நமது நோக்கமல்ல. அந்த மொழியறிந்தவர்கள் மத்தியில் அவை பாடப்படலாம். ஆனால் தமிழர்கள் மத்தியில் நடக்கும் இசை அரங்குகளில் தமிழ் பாடல்கள் இசைக்கப் படவேண்டும். தமிழர்களாகிய நாமே தமிழிசையை ஆதரித்துப் போற்ற முன்னிற்க வேண்டும்' எனக் கூறினார், மூதறிஞர் ராஜாஜி. கல் கிரா.கிரு ஷ்ண மூர்த்தி, அறிஞர் அண்ணாத்துரை, ரசிகமணி டி.கே.சிதம்பர நாத முதலியார் உட்பட பல அறிஞர்கள் தமிழிசையின் சிறப் புகள் பற்றி இம் மகாநாட்டில் உரையாற்றினார்கள். தமிழ் இசையை மீளக் கொணர்வதற்கான பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டுவருகின்ற போதிலும் தமிழிசைத் நீண்டாமையின் கொடிய விளைவுகளை தமிழகத்தில் முழுமையாக அகற்ற முடியாமலிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
நாயக்கர்கள் காலத்திலிருந்து அரசியல் ஆதிக்கம் - முத்தமிழில் ஒன்றான இசைத் தமிழை மெல்ல மெல்ல இல்லாதொழிக்கும் முயற்சிகளைக் கச்சிதமாகச் செய்துள்ளது, அதனிடத்தில் கர்நாடக

இசையை வலுவாக நிலைபெறச் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள கான சபாக்கள் பல இன்னும் தெலுங்கு மொழி பேசும் மக் களின் ஆதிக்கத்திலேயே உள்ளன. தமிழகத்திலும் தென்னகத்திலும் கோடிக்கணக்கான தெலுங்கு மொழி பேசுபவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இசைத் துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களின் மனங்களிற் கூட தெலுங்குக் கீர்த்தனைகளே உயர்வானவையென்ற தவறான எண்ணக் கருக்கள் விதைக்கப் பட்டு அவை
விசாலித்து வளர்ந்துள்ளன.
தமிழ் இசையை முழுமையாக மீளக் கொணர்வதற்கு சாதகமானதும் சாத்தியமானதுமான சூழல் நமது நாட்டிலேயே உள்ளது. இங்கு தெலுங்கு மொழி பேசுபவர்கள் எவருமில்லை. கான சபாக்களுமில்லை. உலகில் முதன் முதலாகத் தமிழ் மொழிக் கல்வி பல்கலைக் கழகம் வரை ஆரம்பிக்கப் பட்டு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப் படுவது நமது நாட்டிலேயேயாகும். இதனை அடியொற்றி தமிழர்களின் பாரம்பரிய கலாசார வடிவமான, முத்தமிழில் ஒரு கூறான இசைத் தமிழை மீட்டெடுப்பதற் கும் நிலை பெறச் செய்வதற்கும் உலகெங்கும் பரவச் செய்வதற்கும் மிகவும் உகந்த இடம் நமது நாடேயாகும். இந்த அத்தியாவசியப் பணியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரச மட்டத்திலும் ஏனைய மட்டங் களிலும் பின் வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவது சாலப் பொருத்தமானது. 1. கலாசார அமைச்சின் கீழுள்ள கலைக் கழகத்திலிருக்கும் கர்நாடக இசைப் பிரிவு தமிழ் இசைப்பிரிவாக மாற்றப் படவேண்டும். 2. தமிழ் இசையின் மறுமலர்ச்சிக்காக ஆய்வுகள் பல மேற்கொண்ட விபுலானந்த அடிகள் நினைவாக நிறுவப் பட் டுள் ள விபுலானந்தர் இசைக் கல் லுாரியிலும் ஏனைய உயர் கல் வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் கர்நாடக இசைக்குப் பதிலாக தமிழ் இசை கற்பிக்கப் படவேண்டும். 3. ஈழத் தமிழ் இசைச் சங் க மொன்று தோற்றுவிக்கப் பட்டு தமிழகத்திலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் தமிழ் இசைக் கலைஞர்களும் தமிழ் இசை ஆய்வாளர்களும் வரவழைக்கப் பட்டு தமிழ் இசை மகாநாடுகளும் ஆய்வரங்குகளும் கருத்தரங்குகளும் நடாத்தப் படவேண்டும்.
.. தமிழ் இசைக்கெனத் தரமான ஆக்கங்களைக்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (49)

Page 51
ண்விடுதலை பற்றிய சிந்தனைகளை தமது ஆக்க இலக்கியப் படைப்புகளில் எழுதாத எழுத்தாளர்கள் எவருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண் விடுதலை பற்றிய ஆக்கங்கள் நிறையவே வெளி வருகின்றன. பெண்விடுதலை இலக்கு நோக்கிய பயணம் முன்னேற்ற கரமாக சென்று கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில், தாம் வாழும் காலத்தைப் பிரதிபலிக்காமல் எழுத்தாளனால் இருக்க முடியாது.
கி.மு.5000-ம் ஆண்டளவில் பெண் ஆதிக்க சமுதாயமே இவ்வுலகில் இருந்ததாகவும், அதன் பின்னர் இடைப்பட்ட காலத்தில் ஆண் பெண் சமத்துவம் பேணப்பட்டு வந்ததாகவும், பின்னர் இந்நிலை படிப்படியான மாற்றம் கண்டு ஆண் ஆதிக்க சமுதாயம் உருவானதாகவும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றது
இதன் பின்னர் கடந்த சில மிலேனியங்களாகப் பெண்கள் தாழ்த்தப் பட்டு வருகின்றனர். இந்நிலை மாற்றம் காணவேண்டியதன் அவசியம் இனம் காணப்பட்டாலும், அதை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் தடைக்கற்களாகின. மத வாதம் பண்பாட்டுப் போலிகள் , பெண்களின் அறியாமை ஆணாதிக்க சமுதாயத்தின் ஆக்கிரமிப்பு எனப் பல காரணிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
பெண் விடுதலை பற்றிய சிந்தனைகள் மேலைத் தேய நடுகளில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரும்பிய போதிலும், வளர்முக நாடுகளில் காலம் தாழ்த்தியே முளைவிட்டது. பெண்களது ஒடுக்கப் பட்ட - தாழ்த்தப் பட்ட நிலைகள் பற்றியும், அதில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுவதன் அவசியம் பற்றியும் 19-ம் நூற்றாண்டின் பிற் பகுதியில்
இருந்துதான் எழுத்தாளர்கள் ஆர்வம் காட்டினர்.
தமிழ் நாட்டில் பாரதியும், ஈழத்தில் பாவல துரையப்பா பிள்ளையும் இந் தத் தடத்தின் முன்னோடிகளாகக் கருதப் படுகின்றனர். வேதநாயகம் பிள்ளை, மாதவையா முதலான ஆரம்பகால நாவல்
ஆசிரியர்களும் வ.வே.சு.ஐயர், இலங்கையர் கோன முதலான சிறுகதை இலக்கிய முன்னோடிகளும் பெண்விடுதலை பற்றிச் சற்று மெதுவாகத் தமது படைப்புக்களில் கூறியுள்ளனர். பொதுவுடைமைக் சித்தாந்தவாதிகளும் விடுதலைக்கு வலு சேர்த்தனர் ஆரம்பத்தில் மேடைப் பேச்சு, நாடகம், கட்டுரை செய்யுள், பாடல்கள், என்பவற்றின் மூலம் தெளிவு படுத்தப் பட்டு வந்த பெண் விடுதலைச் சிந்தனைகள் பின்னர் நாவல் சிறுகதை புதுக்கவிதை என்ற தடங்களிலும் தூவப்பட்டன.

-.",*: ச ...
T
D - 42
D - 5 ,
பீலா வ ை
D - 3
பெண் விடுதலையும்
இன்றைய இலக்கியப் போக்கும்
E :
U T
-பா - சந்திரகாந்தா முருகானந்தன்.
மல்லிகை
|-
38-23 O்லர் 200327வரி
1 -- D
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 51

Page 52
பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை ஆண் எழுத்தாளர்கள் சிந்திக்க ஆரம்பித்துப் பல ஆண்டுகளின் பின்னரே பெண் எழுத்தாளர்கள் சிந்திக்க ஆரம்பித்தமைக்கு பல காரணங்கள் உண்டு. அறியாமை, கல்வி அறிவின்மை, பண்பாட்டு மயக்கம், பயம், எனப் பலவற்றை இதற்குக் காரணங்களாகக் கூறலாம்.
19-ம் நூற்றாண்டில் முளை இட்ட பெண்ணியச் சிந்தனைகள், 20-ம் நூற்றாண்டில் நவீன கலை இலக்கிய வடிவங்களில் மலர ஆரம்பித்து 21-ம் நூற்றாண்டில் உத்வேகம் அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கத் தாமே போராட வேண் டும் என்ற கருத்தினையும், ஏகாதிபத்தியத்திற்கும், ஆக்கிரமிப்பிற்கும் எதிரான விடுதலைப் போருடன் பெண் விடுதலையும் ஒருங்கே முன்னெடுத்துச் செல்லப் பட வேண்டும் என்று பல ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பெண் களின் கல்வி மேம் பாட்டினால் அவர்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வினாலும், நவீன கலை இலக்கிய வடிவங்களை ஆக்கிட பெண் எழுத்தாளர்களின் வருகையினாலும் பெண் விடுதலை பற்றிய சிந்தனைகள் கலை இலக்கிய வடிவங்களில் தவிர்க்க முடியாதவை ஆகின. புதிய மிலேனியத்தில் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பொருள்களில் ஒன்றான பெண்கள் பற்றியமையை இன்றைய இலக்கியப் போக்கில் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக புதுக்கவிதை வடிவினைப் பல பெண் எழுத்தாளர்கள் தமது தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பெண்களின் உரிமை, சமூகத்தில் பெண்களின் பங்கு, பெண்களின் நிலை என வெவ்வேறு தடங்களில் மகளிர் தொடர்பான பிரச்சினைகள் இன்றைய ஆக்க இலக்கியங்களில் எடுத்தாளப் படுகின்றன. இவ் வாறு பெண் கள் குறித்துத் தெளிவுடனும் செறிவாகவும் தமிழ் எழுத்தாளர்கள் தாம் வாழ்ந்த வாழ்கின்ற கால கட்டத்தின் பெண்கள் நிலைகளை அவதானித்து, அவ்வவ் காலத்தில் நடைமுறைப் படுத்தக் கூடிய அளவிலும் வகையிலும் பெண்ணியச் சிந்தனைகளை மெதுவாகவும், ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெண்களின் அடிப்படை உரிமைகள் என்பன எவை என்பதை வரையறுப்பதில் பெண்ணியச்

சிந்தனையாளர்கள் பல விடயங்களில் ஒத்த கருத்துக்களைக் கொண்டவர்களாகவும், சில விடயங்களில் மாறுபட்டும் நிற்கின்றனர். தமிழில் பெண் விடுதலையின் முன்னோடி இலக்கிய கர்த்தாவான பாரதி கல்வி உரிமை, தொழில் உரிமை, திருமண உரிமை, சுதந் திரம், சொத்துரிமை அரசியல் சுதந்திரம், குடும்பத்திலும், சமூகத்திலும் சம உரிமை என்பன வேண்டுமென்று வலியுறுத்தி, நிற்கின்றார். இது இன்றைய எழுத்தாளர்களால் தமது படைப்புக்களில் வலியுறுத்தப் பட்டு வருகின்றது.
பலரும் பாரதி வலியுறுத்திய விடயங்களை அவற்றின் அவசியத்தைப் புரிந்து கொண்ட போதிலும், அவரசமான விடயம் என்பதைப் புரிந்து செயற்படுவதில் தயக்கம் காட்டினர். சமூகப் பண்பாட்டு விழுமியங்கள் ஏற்படுத்தியிருந்த தாக்கங்களே இத் தாமதத்திற்குக் காரணம் எனலாம். பெண் நிலை உயர வேண்டுமானால் பெண் தன்னைத் தானே புரிந்து கொள்ளுதல் அவசியம். தாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக இச்சமூகத்தில் தாழ்த்தப் பட்டிருக்கும் நிலையைப் பல பெண்கள் உணர்ந்திருக்க வில்லை.
1. கல்வி
பெண் விடுதலையின் முதலாவது அம்சமாகக் கல்வியில் சமவாய்ப்பு அவசியமாகும். ஆசிய ஆபிரிக்க நாடுகளில் அண்மைக்காலம் வரையில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப் பட்டே வந்துள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி நிகரான சந்தர்ப்பம் கல்வித் துறையில் வழங்கினால் தான் பெண் தன் தாழ்நிலையை உணர்ந்திடவும், விடுதலை பெறவும் வாய்ப்பு ஏற்படும். எனவே தான் ஆக்க இலக்கியக் காரர்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்குக் கல்வியில் சம சந்தர்ப்பம் வழங்கப் படவேண்டும் என்று வலியுறுத்தினர்.
எமது நாட்டில் மிசன் பாடசாலைகளின் வருகையின் பின்பே கல்வி துரித வளர்ச்சி கண்டது. கலவன் பாடசாலைகளில் பெண் களை அனுமதிப்பதில் இருந்த தயக்கம், பெண் கல்வி வளர்ச்சியைப் பின்தள்ளியதால், மகளிருக்கான தனிப் பாடசாலைகள் ஏற்படுத்தப் பட்டன. இதைத் தொடர்ந்து இந்து, பௌத்த மதத்தினர் மத்தியிலும் பெண்களின் கல்வி வளர்ச்சியின் அவசியம் உணரப்பட்டு மகளிருக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. இஸ்லாமிய சமூகத்துப்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 52

Page 53
பெண்களின் கல்வி வளர்ச்சி சற்றுத் தாமதமாகவே துளிர் விட்டது.
2. வேலைவாய்ப்பு
பெண்கள் உழைத்துச் சம் பாதிக்காது இருந்தமையினால் அவர்கள் ஆண்களில் தங்கியே வாழவேண்டி இருந்தமை, பெண் விடுதலைக்குத் தடைக்கல்லாக இருந்தது. விரும்பிய தொழில் செய்யும் உரிமை பெண்களுக்கு வழங்கப் பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப் பட்ட போது சமூகத்தில் இதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. பெண்கள் வேலைக்குச் செல்வதால் எமது கலாசாரம் பண்பாடு என்பன சீரழிந்து விடும் என்றும், குடும்பத்தை கவனிக்க முடியாது போய்விடும் என்றும் எதிர்க்குரல் எழுப்பியோர் கருத்துத் தெரிவித்தனர். பெண்கள் அடுப்படியில் அடைத்து வைக்கப் பட வேண்டியவர்கள் அல்ல என்றும் அவர்களும் வெளி உலகோடு இணைந்து சகல தொழில்களும் புரிந்திட வாய் ப் பளிக்க வேண் டும் என்றும் பெண்ணியலாளர்கள் வலியுறுத்தினர்.
விவசாயம் கைத்தொழில் என்பவற்றில் ஈடுபட்டு கடினமாக உழைக்கின்ற பெண்களால் எந்த வேலையையும் செய்திட முடியும். சந்தர்ப்பங்கள் தான் வழங்கப் படுவதில்லை. இந்நிலை மாறிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து நவீன கலை இலக்கியப் படைப்புக்கள் பல வெளிவந்தன. இறுதியில் இன்று பெண்கள் பல தொழில்களையும் புரியக் கூடியவர்கள் என்பது நடை முறையில் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், வைத்தியர்கள், பொலிசார், இராணுவத்தினர் எனப் பதவிகளையும் பெண்கள் இன்று வகித்து வருகின்றனர். இன்னும் ஒருபடி மேலாகச் சென்று போராளிகளாகமாறிய பெண்கள் யுத்த களத்திலே பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர்.
-- எனினும் பெண் தொழிலாளர்களுக்குச் சில தொழில்களில் சம சம்பளம் வழங்கப் படாமையும், பாலியல் அழுத்தங்களும் இன்னமும் தொடர்கின்ற அனர்த்தங்களாக இருந்து வருகின்றது. இவை பற்றிய ஆக்கங்கள் இன்னமும் முனைப்புடன் இலக்கிய வடிவங்களில் பிரதிபலிக்க வேண்டியது இன்றி அமையாதது. குறுகிய பணம் தேடும் நோக்கில் பெண்கள் தம்மைச் சோரம் போக வைத்தலும் தவிர்க்கப் படவேண்டும்.

3. திருமணம்
பெண்களுக்குத் திருமணச் சுதந்திரம் நீண்ட காலமாக எட்டாக் கனியாக இருந்து வருகின்றது. சிறுபிள்ளைத் திருமணம் தற்போது வெகுவாகக் குறைந்து விட்ட போதும், 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப் படும் நிலை இன்றும் உள்ளது. மேலும் திருமணத்தில் பெண்ணின் சம் மதத் திற் கு முக்கியத் துவம் அளிக்கப் படுவதில்லை. சீதனக் கொடுமை இன்று எம் நாட்டில் பெண்களின் திருமணத்திற்கு முக்கிய தடையாக இருந்து வருகின்றது.
காதல் என்பது கதைகளிலே போற்றப் படுவது போல, நிஜ வாழ்வில் ஏற்கப் படுவதில்லை. காதலித்து தோல்வி கண்ட பெண் களை மணப்பதற்கு தயக்கம் காட்டும் சமூகம், ஆண்கள் விடயத்தில் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றது.திருமணத்திற்கு முன்னைய பாலுறவுகள், ஒழுக்க நெறி தொடர்பானது என்றாலும், இவ்விடயத்தில் ஆண்கள் விடும் பிழைகள் பெரிது படுத்தப் படாமலும் பெண்களின் தவறுகள் அவர்களது வாழ்வையே பாதிக்கும் அளவிற்குப் பெரிது படுத்தப் படுவதும் ஆண்பெண் சமத்துவத்தை நிராகரித்து நிற்கிறது. கற்பு எனும் ஒழுக்க நெறி இரு பாலருக்கும் வலியுறுத்தப் படுதல் அவசியம். பெண்களை மட்டும் குற்றவாளியாகப் பார்க்கக் கூடாது. பாலியல் வல்லுறவின் மூலமோ, வஞ்சிக்கப் பட்டதன் மூலமோ உருவாகும் கரு பெண்ணின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிப்பதனால் சுதந்திரமாகக் கருச்சிதைவைச் செய்யும் உரிமை பெண்களுக்கு வழங்கப் படவேண்டும்.
திருமணம் என்ற பந்தத்தில் பெண்களைப் போகப் பொருளாகவும் வேலைக்காரியாகவும் நடாத்தும் நிலை இன்றும் பல குடும்பங்களில் இருந்து வருகின்றது. திருமணமான கணவன் மனைவியரிடையே கூடப் பல சந்தர்ப்பங்களில் பெண் மீது பாலியல் வல்லுறவு பிரயோகிப்பதை அவதானிக்கலாம். அதாவது மனைவியை வற்புறுத்தி உடல் சுகம் காணுகின்ற நிலையும் ஆண் ஆதிக்க செயற்பாடே எனலாம். திருமணம் என்ற பந்தம் புனிதமானது தான். எனினும் கணவன் மனைவியரிடையே பரஸ்பர புரிந்தணர்வு இல்லாது விட்டால் இவ்வாழ்வு சிறக்க முடியாது. இருமனம் சேரும் திருமண வாழ்வில் ஏற்படும் உறவு, பிற உறவுகளை விட வித்தியாசமானது. இந்த உறவு நெருக்கமானதாகவும், பிரத்தியேகமானதாகவும்,
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (53)

Page 54
தீவிரமானதாகவும், உடல் உள்ளம் இரண்டையும் பகிர்வதாகவும் இருக்க வேண்டும். நுட்பமான இவ் உறவில் நிரந்தர நிறைவு கிடைக்க வேண்டுமாயின் , ஆண் பெண் சமத்துவம் இங்கு அவசியமாகின்றது. இருவரிடையே அன்பு, பாசம், அக்கறை, நெருக்கம் என்பன இருப்பதற்கும் பெண் சமத்துவம் முக்கியம் மனவியல் ஆய்வாளர்கள் பல குடும்பங்களின் தோல்விக்கு பெண் சமத்துவம் வழங்கப் படாமையே காரணமாகும் என்று சுட்டி நிற்கின்றனர்.
திருமணம் என்ற பந்தம் புனிதமானது தான். எனினும் கணவன் மனைவியிடையே பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் இல்லாவிட்டால் இல்வாழ்வு சிறக்க முடியாது. சீதனம், திருமணத்திற்குப் புறம்பான உறவு, போதைப் பொருள் பாவனை, பொருளாதார சிக்கல்கள் என்பன இல்வாழ்விற்கு இடைஞ்சல் கொடுக்கும் காரணிகள் ஆகும். சீதனச் சீர்கேட்டினால் பெண் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றாள். இக்கொடுமையினால் தற் கொலை செய்யும் பெண்கள் ஏராளம்.
பெ
4. மறுமணம்
மனதிற்கு ஒவ்வாத வாழ்வில் இருந்து விடுபடப் பெண்ணுக்குச் சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். மறுமண உரிமைகள் எமது பண் பாட்டிற்கு மாறானவை என்ற போலித் தனமான மாயை இச் சமூகத்தில் இருந்து அகல வேண்டும். இன்றைய யுத்த சூழலில் பல இளம் பெண்கள் விதவைகள் ஆகின்றனர். இன்னும் சில பெண்கள் முது பெண்களை ஒதுக்கி வைக்கப் படும் கொடுமை ஒழிய வேண்டும். விதவா திருமணத்தை வலியுறுத்தி பல ஆக்க இலக்கியப் படைப்புகள் வெளிவந்துள்ளன. இன்று விதவைகளின் நிலை சற்று மேம் பட்டுள்ளது. விவாகமாகாத பெண்களும், விதவைகளும் சுதந்திரமாகத் தொழில் புரிந்து வருவாய் தேட வாய்ப்பு அளிக்கப் பட்டால் அவர்கள் வாழ்வு முன்னேற்றமடையும். இல்லாவிட்டால் ஒழுக்க நெறி பிறழ்வடைவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். உடன் கட்டை ஏறும் கொடுமைகள் இன்று அருகி வருவது மகிழ்ச்சியான விடயமாகும்.
5. அரசியல் உரிமை.
பெண்களுக்கு அரசியல் சுதந்திரம் இன்றும் கூட சில நாடுகளில் மறுக்கப் பட்டு வருகின்றது. வாக்குரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ இன்றி நசுக்கப்படும் பெண்கள்

| விடயத்தில் மனித உரிமை ஆர்வலர்களும், இலக்கிய வாதிகளும் அவர்களுக்காக உரத்த குரல் எழுப்புகின்றனர். எமது நாட்டில் இந்நிலையில் ஏற்பட்ட மாற்றமானது உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய பெருமையை ஈட்டித் தந்தது.
மேற் கூறிய யாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில் பெண்களுக்குச் சமூகப் பொருளாதார அரசியல் சமத்துவமும் சம சந்தர்ப்பமும் வழங்கப்பட வேண்டிய அவசியம் பற்றி இலக்கிய கர்த்தாக்கள் உறுதியாக இருப்பது தெரிகிறது. பெண் விடுதலையை மறுத்து நிற்கும் ஆக்கங்கள் இப்போது வெகு குறைவு. எனினும் நகைச்சுவையான ஆக்கங்களில் மறைமுகமாகப் பெண் விடுதலை கிண்டல் செய்யப் படுவதை அவதானிக்க முடிகின்றது. பெண் விடுதலை என்பது ஆண்களின் அதிகாரத்தைப் பறிப்பது என்ற தப்பான எண்ணமும் ஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆக்கங்கள் வெளிவர வேண்டும்.
தமிழர் தாயகப் போராட்டத்துடன் ஒன்றிணைந் ததாக தமிழ்ப் பெண் களின் விடுதலையும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற வலுவான கருத்து நிலவுவது ஆரோக்கியமான சூழ்நிலை ஆகும். பெண் போராளிகளின் பிரவேசம் இதற்கு வித்திட்டு, சமூக, அரசியல் ரீதியில் பெண்களுக்கு உரிமை வழங்கப் படவேண்டியுள்ள அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது."
இன்றைய எழுத்தாளர்கள் பலரும் எழுதுவது போலவே முன்னோடிகளாக வாழ்ந்து காட்ட வேண்டியது தலையாய கடமையாகும். பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் பெண் எழுத்தாளர்கள் ஆண்களைக் கொச்சைப் படுத்தி எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். பெண்ணியத்திற்கு எதிரான சக்தி ஆண் ஆதிக்க சமூகமே அன்றி ஆண்கள் அல்ல என்ற புரிதல் முக்கியமாகும். சில் பெண்களே பெண்களுக்கு மாறாகச் செயற்படும் நிலை மாற வேண்டும்.
இலக்கியவாதிகளால் மட்டும் இவ் இலக்கை எட்டிவிட முடியாது. மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணிலை வாதிகள், சமூக சீர்திருத்த வாதிகள், அரசியல் வாதிகள் அனைவரும் இணைந்து செயற்பட்டாலே பூரண பெண்விடுதலை கிட்டும்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
54

Page 55
Best Wishes to
Malikai 38
Deale Jute Gunny Bags, Tea (
Import
All Jute Ite Pearl Brand Cellophane
Jayaram
118/7, S.R.Sara (Wolfendhal Street), Cole
Tel: 445615 Stores: 345099 Fa
E-mail:jayarar

th Year Issue
SSSUE
ers in Chest, Twine, Polythene
ters of
ms, Paper, e (Chinese & Japanese)
Brothers
vanamuttu Mw, ombo - 13. Sri Lanka. 5, 348430, -x: 00941-330164
n@slt.net.lk
3805) AL, 60ŐIGLDvi 2601 urfl - 2003 55

Page 56
38வது
IDS
2015 லர் 2003 2ுபரி
இனமே...... என் சனமே....
பிள்ளைகளின் ஜீவிதக்கனவும் - அவர்களின் பாடசாலை விடு முறையும் - புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னான போர் ஓய்வும் - அதிசயமாய் காலப்பாட்டையில் ஒருங்கு குவியவும் வீட்டுக்குக் கார்பெட் போடவும், தளபாடங்கள் வாங்குவதற்காகவும் - கட்டியசீட்டை அவசரமாக எடுத்து - விமான டிக்கெட்டுக்கள் வாங்கிங் கொண்டு ஆரவாரமாக இலங்கைக்குப் புறப்பட்டோம்.
எங்கள் வீடு சற்றே குடியிருப்பு அடர்த்தி குறைவான இடத்திலேயே இருந்தது. சூரியக்கதிர் தாக்குதல்கள் இடப் பெயர்வுகளின் போது கல்லுக்கல்லாய் வீட்டையும் ஓடுகள், ஜன்னல் நிலை கதவுகள் மதில் கேற் உட்பட அனைத்தையும் ஒருவாறு இடம்பெயர்த்து விட்ட எம் இனமும் சனமும் காலி வளவில் எதுக்கு இவங்களுக்கு இந்தப் பெரிய மரங்களென்று முற்றத்தில் நின்ற வேம்பையும் மாவையும் சேர்த்துப் பெயர்த்துவிட்டார்கள். பெரியம்மா வீட்டிலே தங்கியிருந்த அம்மா ஏற் கெனவே எமக்கு எல்லா விபரமும் எழுதியிருந்தார். அதனால் நாங்களும் பெரியம்மா வீட்டுக்கே போயிறங்கினோம். வழியில் பஸ்ஸுக்குள் கணியன் ' 'ஐயோ கதவைச் சாத்தாமல் ஓடுறானுவள் நான் கீழை விழப்போறன்.... ஐயோ சீற்றுக்குக் கீழாலை றோட்டும் தெரியுது ஹில்ஃ.ப ....... ஹில்'. ப" என்று கத்தினான். எங்களைப் பார்க்கத் தினமும் வந்துபோய்க் கொண்டிருந்த உறவுகள், நண்பர்கள், செங்கரும்பு, நுங்கு, செவ்விளனிக் குலைகள், இராசவள் எக் கிழங்கு, வெள் ளரிப் பழம் ,
< மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (56)

தி
தை
காலை
12
என்
வ பொ.கருணாகரமூர்த்தி
(ஜேர்மனி)
ச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு, தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இது நாள் வரையில் என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும் டீவியிலும் சினிமாவிலுந் தான் காட்டிக் கொண்டிருந்தேன்.
'மத்திய மலைப்பகுதியில் ஜெர்மனியின் வசந்தத்தையும் கரையோரமாக ஸ்பெயின் கன்றித் தீவின் வெண்மணல் புரளும்' கோடைகாலத்துக் கடற்கரைகளையும் ஒருசேரக் கொண்ட அழகிய தீவு இல ங் கை யென் று எங் கள் டீச்சர் சொல்லியிருக்கிறார்' என்று தன் கனவுகளை மகள் கனிமொழி விரிக்க -
''எங்கள்(?) பயேர்ண். மாநிலத்தை விடவும் சிறிய குட்டித் தீவாமே இலங்கை?” என்று தன்
ஆச்சர்யத்தை எல்லாளன் குவிக்கவும்.
குட்டித் தீ வென்றால் அது நிச்சயம் அழகானதாய்த் தானிருக்கும்” என்று மிகவும் தெரிந்தவளைப் போல் ஆமோதித்தாள் நாலு வயது வெண்ணிலா.

Page 57
கெக்கரிக்காய், பெரியம்மா வேறு ஒடியல் கூழ், மாங்காய் போட்டு வாளைமீன் குழம்பு, இறால் பொரியலென்று தினமும் சமைத்து அசத்திக் கொண்டேயிருக்க பொழுதுகள் சந்தோஷமாய்க் கழிந்து கொண்டிருந்தன.
இருந்த வெய்யிலுக்கும் காங்கைக்கும் போய்த் தொண்டமானாற்றுக் கடலில் இறங்கினால் நல்லாயிருக்கும் போலிருந்தது, போனோம். எனினும் கடலில் இறங்கக் கால்கள் கூசின.
அது சுழிகள் அதிகமுள்ள கடல். திடீர் திடீரென வந்து ஆட்களை இழுத்துச் சென்றுவிடும். முன்னமுமொருமுறை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாலு பிள்ளைகளை இரக்கமில்லாமல் ஒரேயடியாய் இழுத்துச் சென்று கொன்ற கடல்! அப்போதெல்லாம் வராதபயம் இப்போது தொண்டமானாற்றுக் கடலைப் பார்க்க வந்தது.
குமுதினிப் படகினில் யார் வெட்டினார்கள் நெடுந்தீவுக் கடலினில் யார் கொட்டினார்கள்
அமுதெனும் சிறுவனை யார் குத்தினார்கள் அதனாலே வரும் பாவம் யார் கட்டினார்கள்?
''ஊ... ஊ... ஊ... ஊ...'' என்று வீசிய காற்று புதுவையாரின் கவிதை வரிகளைக் காதில் சொல்லிச் செல்லவும், கடல் சிவப்பாக இருப்பதுபோலவும், கடலில் வீசப்பட்ட பாலகர்கள் அலைகளில் நீந்திக் கொண்டு வருவது போலவுமிருக்கிறது.
எங்கள் கிராமமான புத்தூருக்கு கொய்யகம் கட்டிவிட்டது போலிருக்கும் குறிச்சிக்கு காளியானையென்று பெயர். அங்கு தான் சரவணன் வீடு இருக்கிறது. இக்காளியானையைக் கடந்தும் சாவகச்சேரி நோக்கிய திசையில் ஒரு மைல் தள்ளித்தான் எங்கள் வீடு இருந்தது. அக் குறிச்சிக்கு அந்திரானை என்று பெயர். புத்தூருக் கும் அச் சுவேலிக் கும் இடையில் துாக்கிச் சொருகிவிட்டுள்ளது போலுள்ள பகுதி ஆவரங்கால். இவ்விநோதமான பெயர்கள் எதன் வேரிலிருந்து தோன்றியவையோ தெரியவில்லை. ஏதாவது காரணப் பெயர்களாகக்கூட, இருக்கலாம். ஊரணி, புத்தர்கலட்டி, நாரந்தனை, அம்போடை, குஞ்சு மந்துவில், வாதரவத்தை, வீரவாணி என்று ஒன்றுசேர்ந்த பத்தூர்கள் தான் காலப்போக்கில் மருவிப் புத்தூரானது என்றுகூட ஒரு கருத்து இருக்கிறது. காளியானையின் பெரும்பான்மையர் வெள்ளாளர் தான். எனினும், புத்தூர் மேற்கின் வெள்ளாளர் காளியானை வீடுகளில் சம்பந்தம்

கலப்பதே சொம்பு எடுப்பதோ இல்லை. நாட்டில் மணியம், விதானை, உடையார் பதவிகளை வகிக்க ஒறிஜினல் வேளாளரால் மட்டுமே முடிந்த காலத்திலிருந்து மேற்கு வெள்ளாளர் மணியத்தின் மகன் றிஜிஸ்த்தாரென்று பதவிகளைப் பரம்பரைச் சொத்தாக்கி அனுபவித்தவர்களாதலால் ஒரு காலத்தில் இவர்களுக்கு ஊருக்குள் நிலபுலன்கள், தோட்டம், வாரம், எடுபிடி, படிப்பு, பந்தா மற்றையோரை விட அதிகம் இருந்தன.
மேற்கில் ஒருவருக்கு யாழ் - மின்சார நிலைய வீதியில் மலாயா கபேயிலிருந்து ராணி தியேட்டர் சி.வி. பாட் கடைவரையிலான கட்டடங்கள் சொந்தமாயிருந்தன. இன்னொரு குடும்பத்துக்கு யாழ் சின்னக் கடையில் பாதிக்கும் மேற்பட்ட கடைகளும், யாழ் கச்சேரிவளவும் , பழையகச்சேரியும் (பின்னால் நில அளவையாளர் அலுவலகமானது) அதனருகே மலைவேம்புகள் நிற்கும் பெருவளவில் ஆரம்பித்து நிலங்கள் தற் போது புளு றி பண ஹோட் டல் வரை சொந்தமாயிருந்தன. தங்கள் நிலபுலன்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவென்றே சரிவரத் தெரியாதோர் நாட்டில் இன்னும் அநேகம் பேர் இருக்கின்றனர்.
காளியானையார் பெருநிலபுலன்களோ, கோட்டை கொத்தளங்களோ வைத்து ஆண்டதாய் சரித்திரம் கிடையாது. ஆனால் யாரையாவது பிடித்துக் கேட்டால் ''என்ரை காணிக்குள்ள வடக்குப் பக்கமாக வீடுகட்டின னெண்டால் கைதடித் தபால் கந்தோரிலிருந்தும் தெற்குப் பக்கமாகக் கட்டின்னெண்டால் புத்தூர் தபாற்கந்தோரிலிருந்தும் காயிதம் வரும் " என்றும் பீற்றுவார்கள்.
அவர்கள் தோம்பு இருப்பதாகச் சொல்லும் காணிகள் பலவும் ஊரி நிறைந்த தரிசுகளும் கலட்டிகளுந்தான். நடப்பில் இப்போதும் பலருடைய வீடுகள் மண்வீடுகள் தான். அனேகமானோரின் வளவுகளுக்குச் செப்பனான வேலிகளே கிடையாது. ஆனாலும் அவர்களிடம் பெருங்காய டப்பாவின் வாசனைபோல சாதிப் பெருமை மட்டும் இன்னும் விடாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
சரவணனை என் நண்பன் என்பதிலும் 'கிளாஸ் மேட்' என்று சொல்வதுதான் பொருந்தும். தமிழில் வகுப்புத் தோழன் என்றாலும் அதுவும் அவனை நண்பனென்றால் எமக்கு பல விஷயங்களில், கருத்துக்களில் இரசனைகளில் ஒற்றுமைகள் இருந்திருக்கும். அவனிடம் அரசியல் உலகியல்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 57

Page 58
கருத்துக்களில் வேற்றுமைகளிருந் தால் பரவாயில்லை. சாதியம், மனித நேயம் , பெண்விடுதலை ஆகிவற்றில் நவீன சிந்தனைப் போக் கு களின் வாடையே அறியாத பூர் ஷவாகவிருப் பதால் என் மனதுக்கு நெருக்கமானவனாகக் கொள்ளமுடியாதவனாகச் சில மனத்தடைகள் உள்ளன என்போம்.
கல்லூரி நாட்களில் ஒரு நாள் சரவணன் சொன்னான்: ''அரசாங்கம் புத்தர் கலட்டியில் பௌத்த பாடசாலையைக் கட்டினது தான் கட்டிச்சு' எளியான் சாதியெல்லாம் செருப்பு நடப்போடை எங்கடை ஊருக்குள்ளால முற்றத்தில் திரியுதுகள்''.
''மேற்குத்தெரு வேளாளர் தங்களுடைய கல் லுாரியில் தாழ்த் தப் பட் டோருக் கும் இடங்கொடுத்திருந்ததால் அவர்களுக்குச் சிங்களம் படிக்க வேண்டிய நிலமை எதுக்கு வருது? சாதியம் இந்து மதத்தின் மாற்றவேமுடியாத சாபக்கேடென்று தானே அம்பேத்கார் தானாகவே பௌத்தத்தைத் தழுவினார், பெரியார் எல்லோரும் இஸ்லாத்துக்கும் போங்கடா என்றார். பெளத்த பாடசாலை சிங்களமெல்லாம் இங்க வந்ததுக்கே நம்முடைய
ஐக்கியக்குறைவுதானே காரணம்?"
சாதியத்தை இப்படிப் பற்றியிருக்கும் சரவணன் விலங்கியலிலோ தாவரவியலிலோ சேதனப் பரிணாமம், மரபியல் பகுதிகள் சிறப்பாகவே செய்வான். ஒரு நாயுக்கும் மனிதனுக்குமுள்ள (முலையூட்டி விலங்குகள் என்ற வகையில்) ஒற்றுமைகளைக் கேட்டால் மைல் நீளப் பட்டியலே போட்டிடுவான். அதெல்லாம் சும்மா பரீட்சைக்கு மாக்ஸ் வாங்கத்தான் ....... ஆனால் மானுஷத்துக்குள் சாதியச் சங்கதிகள் அறிவைவிடவும்
அனாதியானவை.
மேற்குத் தெருவிலிருந்து வரும் ஒரு மாணவி வகுப்பில் என்னோடு கொஞ்சம் நெருக்கமாக இரு ந் தாள் .என் னிடமும் அவளுக்கான மென்மையான பக்கங்கள் கொஞ்சம் இருக்கத்தான் செய்தன. பின்னாளில் கொஞ்சம் இயக்கப் பாசறைப் பணிகளில் கவனங்கள் குவிந்துவிட அது டெவலப் பண்ணுப்படாமல் போனது. அதைவிட அவளிடம் வேறு நிறையக் காரணங்கள் இருந்திருக்கும். அதுவே சரவணனுக்கு உளைஞ்சிருக்க வேணும். ஒரு நாள் என்னிடம்: 'உவள் உப்பிடித்தான் எல்லோரோடையும் குழையிறவள்... வேசை.'' என்றான்.
சரவணனுக்கும் வறுமையோடான விவசாயக்

குடும்பந்தான். எண்ணிக்கை சரிவரத் தெரியவில்லை. சாவிச்செற் போல மில்லிமீட்டர் வித்தியாசங்களில் ஆண்களும் பெண்களுமாக ஏழெட்டுச் சகோதரர்கள். எல்லாமே ஒரு மாதிரியான மண்ணெய் நாறும் மலிவான கூப்பன் துணிகளில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டுதான் பள்ளிக்கூடம் போகுங்கள். அவர்களுக் கு வெங்காயம், மிளகாய் பயிர்ச் செய் யக் கூடிய தறை கொஞ்சம் அந்திரானையில் இருந்தது. அத்தோடு அவனது தந்தை வண்டி மாடு வைத் துக் கொண் டு சீவியத்தைத் தள்ளிக் கொண்டிருந்தார்.
கல்லூரி நாட்களில் எனக்குச் சேதன இரசாயனத்தில் கொஞ்சம் சிக்கல்களிலிருந்தன. அதனால் யாழ்ப்பாணத்தில் ரியூட்டோரியல் வகுப்புக்களில் பிரபலமாயிருந்த வி.ரி.கந்தசாமி மாஸ்டரிடம் நான் அப்பகுதியில் பிரத்தியேகமாக டியூசன் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்பாடக் குறிப்புகள் சிலது தனக்கும் தேவையென்று சரவணன் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்தான். அரைமணிக்கு மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
அக்கா இருவருக்குமாகத் தேநீர் கொண்டு வந்தார். சரவணன் தேநீரைக் குடியாதிருந்தான். ''தேநீர் ஆறிவிடப் போகிறது குடி" என்று இரண்டு மூன்று தடவைகள் சொல்லியிருந்திருப்பேன். நான் சொல்வது அவனுக்குக் காதில் விழுந்தமாதிரி இல்லை. அதில் கவனஞ்செலுத்தாமலேயிருந்தான். எனக்கு எப்போதும் தேநீர் கோப்பி சூடு மிதமாக இருக்கையிலே குடித்துவிட வேணும். எனது கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு அப்பாவித்தனமாக 'நல்ல அளவான சூடா இருக்கப்பா குடியேன்" என்று கூடச் சொல்லிப் பார்த்தேன். அவன் அதைக் காதில் போடுவதாயில்லை. ஆறின் தேநீர்தான் பிடிக்கும் போல, பிறகு குடிப்பானென்று நினைத்தேன். கடைசி , வரையில் அவன் குடிக்கவேயில்லை. நான் தேநீர் குடிப்பதில்லையென் றோ அல்லது அதைக் குடிக்காததுக்கு வேறொரு காரணமோ சொல்ல வில்லை. பின் தன் பாட்டுக்கு எழுந்து போனான்.
அதை அவதானித்த அம்மா அக்காவையே ஏசினார்.
' 'பெடியன் இஞ்ச வந்ததே பெரிசு........ தேத்தண்ணியெல்லாம் எங்கள் வீடுகள் ல
குடிக்காயினம் நீ ஏன் கொடுத்தனி?''
''ஏனாமணை குடிக்காயினம்........?”
4மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (58)

Page 59
'அது ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் ..... அவை குடிக்காயினம்!"
''தம்பியின்ரை கிளாஸ்மேற்றாச்சேயென்று தான் கொடுத்தனான், வந்தது பதின்மூன்றாம் நூற்றாண்டுச் சாமானென்று யாருக்குத் தெரியும்?”
'நானென்ன அவனுக்கு வெத்திலையா வைச்சன் ....... தனக்கு நோட்ஸ் வேணுமெண்டு வந்தான், குடிக்காட்டிப் போறான், போகட்டும் எமக்கென்ன?"
மறுநாள் பள்ளிக்கூடத்தில் வெகு இயல்பாக என்னிடம் பேசினான். எனக்கு அவனைத் தவிர்க்க வேணும் போலிருந்தாலும்
தவிர்க்க முடியாதபடியொரு நிர்ப்பந்தம். இரசாயனவியல் செய்முறைகளில் என் ஆய்வுசாலைப் பார்ட்னர் அவன் தான், பிணைத்து விட்டிருந் தார்கள் . வட்டவட்டமான கையெழுத்தில் அவன் தயாரிக்கும் பிறாக்டிக்கல் றெக் கோர்ட் தெளிவாக அழகாகவிருக்கும். அது திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கல்லூரி முதல்வராக இருந்த நேரம். மாணவர்களின் உயர் எண் ணிக்கைக் கு வகுப்பறைகள் போதுமானதாக இருக்கவில்லை. தேவையான நிதியை ஊர் மக்களிடம் திரட்டிக் கட்டங்களை விஸ்தரிப்பதென்று பெற்றார் ஆசிரியர் சங்கத்தில் முடிவுசெய்து அதிபரோடு சேர்ந்து கல் லுாரி வளர்ச் சியில் ஆர்வமுள் ள ஊர்ப்பிரமுகர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும், சில மாணவர்களுமாக ஊருக்குள் ஒரு நாளைக்கு ஒரு பிரிவென்று வைத்துக் கொண்டு நிதிதிரட்டப் புறப்பட்டோம்.
நிதி திரட்டும் குழுவானது பிரமுகர்களின் வழிகாட்டலில் தாழ்த்தப் பட்ட மக்களின் குடியிருப்புக்களுக்குப் போவதை மிகக் கவனமாகத் தவிர்த்துக் கெண்டிருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. குழுவில் எல்லோரிடமும் தமாஷாகப் பேசிப்பழகக் கூடிய பண்டிதர் சுப்பிரமணியத்திடம் என் மனக்குறையை வெளியிட்டேன். பண்டிதரோ “'நீயும் நல்ல விசர்க்கதை பறையிறாய்... கறையான் புத்தெடுக்க நாளைக்கு நாகம் குடிபுகுந்த கதையாயல்லோ முடியும்'' என்று அலறவும் முழுக் குழுவினரும் அதற்குப் பெரும் விதூஷகம் போல் கோரஸாய் சிரித்து ஓய்ந்தனர்.
முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட இதே அதிபர் 1972-ல் ஸ்ரீசோமஸ்கந்தக் கல்லூரியில் தாழ்த்தப் பட் மக்களின் பிள்ளைகளையும் துணிச்சலாக அனுமதித்துப் பெருமை கொண்டார்.

தியாகி சிவகுமாரன் மரணித்திருந்த நேரம். பொலிசாரைக் கண்டிக்கும் விதத்திலும் பாடசாலைகளைப் பகிஷ்கரிகு மாறும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்த மாணவர்கள் பலர் கைதானபோது சரவணனும் அகப்பட்டு கோப்பாய் பொலிஸில் 3 நாள் றிமாண்டில் இருந்தான். அடுத்த நாள் நான் கோப்பாய்ச் சந்தி ஐயர்கடையில் வாங்கிப் போன ஒறேஞ்ச் பார்லியையும் இட்லியையும் சாப்பிட்டான்.
1974-ல் ஏப்ரலில் பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை அண்மிக்கவும் வாரமுறையில் அச்சுவேலி ரியூட்டறியொன்றில் சில பாடங்களில் மேலதிக வகுப்புக்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு ஞாயிற்றுக் கிழமை இயற்பியல் ஆசிரியருக்கு முதனாள் ஓவராகப் போட்ட சாராயம் எழுந்திருக்க விடாமற் பண்ணியதால் வகுப்பு 'கட்' ஆனது.
''தொண்டமனாத்துக் கடலிலே போய் ஒரு முங்கு முங்குவோமா?” | ''உடுப்புக்கெங்கை போறது?
பென்டரோடை இறங்கவேண்டியது ....... வெய் யில்லை பதினைஞ்சு நிமிஷத்தில காஞ்சுடும்டா"
''காஞ்சுடும்..... காஞ்சுடும்”
அனுபவசாலிகள் வழிமொழிய எல்லாச் சைக்கிள்களும் தொண்டைமானாறு நோக்கித் திரும் பின. இடையில் புதுப் பனங் கள் ளுச் சேகரித்தோம். மதியம் திரும்பும் வரையில் கடலில் விளையாடினோம். பனங்கள்ளும் கடற்குளிப்பும் சோந்துகொண்டு திடீரென வயிற்றில் 'பேர்ள் ஹாபர்' தாக்குதலைத் தொடங்கின. கடல் குளிப்பு பசியைக் கிளப்புமென்பது தெரிந்ததுதான். குளிப்போடு பனங்கள்ளு சேர்ந்து கொண்டு சதி செய்தது. எல்லோருக்கும் குளுக்கோஸ் ஏற்றினால் தான் எடுத்து மறு அடி வைக்கலாம் போலொரு நிலைமை. கண்கள் சொருகத் தொடங்க எல்லோரும்
வீடு நோக்கிப் புறப்பட்டோம்.
இடையில் தோட்டங்களில் மரவள்ளி கிழங்கு இழுத்துக் கொண்டிருந்தனர். கிழங்கைப் பார்த்த சிவபாதம் (பின்னாள் குட்டிமணி, தங்கத்துரையுடன் வெலிக்கடையில் மடிந்தவன்) அபிப்பிராயப்பட்டான்.
''இந்தக் கிழங்கை ரிசுப்பேப்பர் மாதிரி மெல்லிசாய் வெட்டி மச்சான் மிளகாத் தூளும் உப்பும் தூவிப்பொரிச்சு அடிச்சால்..
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (59)

Page 60
''அடிச்சால்..........?
''இந்தப்பசிக்கொரு கணிதமாயிருக்கும்.''
''நான் பின்னே இருக்காதென்றனே....... நீயும் கனக்க அடிச்சிட்டாய் இந்தா கையைத் துடை.'' என்று தன் அப்பியாசக் கொப்பியிலிருந்தொரு தாளைக் கிழித்துக் கொடுத்தான் இன்னொருவன்.
எதைப் பார்த்தாலும் சாப்பிட வேணும் போலிருந்தது. பசி இப்படியெல்லாம் பண்ணுமென்று ஜீவிதத்தில் உணர்ந்தது அன்று தான். கட்டப்பராய், இடைக்காட்டுப் பையன்கள் குறுக்குப் பாதையால் வெட்டிக் கொண்டு போய்விட, வீதி எங்களுக்கு பட்டத்து வால்போல் துடித்துக் கொண்டிருக்க நானும் சரவணனும் தனியாக கண்களைப் பூஞ்சிக்கொண்டு வந்துகொண்டிருந்தோம்.
அச்சுவேலி பஸ் நிலயத்தைக் கடக்கவும் அருகே கடைகளில் கொத்துரொட்டி அடிக்கும் சத்தமும் வீதிக்கு வந்திட்ட வாசமும் சைக்கிளின் சில்லுக்கிடையே குறுக்காக யாரோ அலவாங்கைச் செலுத்தியது போல் அவற்றை மேற்கொண்டு நகரமுடியாதபடி அழுத்திப் பிடித்தன.
“கொத்து அடிக்காமல் என்னால அங்கால ஒரு அடிகூடப் போகேலாது'' என்றேன்.
''நான் கூடாதென்றேனா.......... என்னட்டைச் சல்லிக்காசில்லை" என்றான் சரவணன். என்னிடம் நோட்ஸ் புத்தகங்கள் வாங்குவதற்காக அம்மா முதனாள் தந்திருந்த பத்து ரூபாய் இருந்தது. அவதிக்குதவாக காசு பிறகெதற்கு... முதல்ல இந்தப் பிரச்சனை தீரட்டும்.'
''என்னட்டை இருக்கு, காசு நோ புறப்ளம்”.
நாங்கள் டியூசனுக்கு வந்து போகும் போது டீ குடித்து சிகரெட் பத்தும் வாடிக்கைக் கடை. இருவரும் அவசரமாய் உள் நுழைந்தோம். ஆளுக்கு டபுள் கொத்து சூடாக அடித்து நிமிர்ந்தபோது தான் முன்னாலிருப் பவர்கள் கலங் கலில்லாமல் தெரிந்தனர். பின்னால் கோல்ட் லீஃபின் தீரத்துக்கு செஸ்ரோ ரொபியின் பெப்பர்மின்டின் காரக்கூட்டு திவ்யமாயிருந்தது. சரவணன் புகையெல்லாம் பிடிக்கமாட்டான்.
ஐந்து வருஷங்களுக்கு முன்னர் நான் ஒரு முறை தனியாக இலங்கை போய் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது சரவணனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.

இப்போது நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு வந்திருந்தான். நீண்ட இருபது வருஷங்கள். முன்னந் தலையில் கொஞ்சம் நரை விழுந்திருந்ததைத் தவிர அவனில் பெரிய மாற் றம் எதுவும் ஏற் பட்டிருக்கவில்லை. என் தொப்பையைக் கிண்டலடித்தான்.
யாழ் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்ற பின்னால் உள்ளூராட்சி சிறகத்திலே சோந் தானாம். அரச சேவையில் இருந்தவர்களெல்லாம் வெளிநாடு வெளிநாடென்று கழன்று விட சேவைமூப்பின் அடிப்படையில் விரைவிலேயே சிறகத் தின் உயர்
அதிகாரியாகியிருந்தான்.
சர்வதேசம் - உள் ளுர் என்று பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தோம். தன் சகோதரிகளில்
அனைவருமே கட்டுப்பட்டுவிட்டதாகவும் அவர்களில் இருவருக்கு கனடா மாப்பிள்ளைகள் கிடைத்ததால் அவர்கள் அங்கேயே போய்விட்டதாகவும் சொன்னான். மீதிக் குடும்பம் சூரியக் கதிர் தாக்குதலில் இடம் பெயர்ந்து போனதிலிருந்து பாண்டியன் குளத்திலேயே (வன்னி) தங்கிவிட்டதாகவும் சொன்னான். தான் கோப்பாயில் புறொக்டர் கனகசுந்தரத்தின் மகளைத் திருமணஞ் செய்ததாகச் சொன்னவன் சற்று இடைவெளிவிட்டு கொடுப்புக்குள் சிரிப்போடு செமை சீதனம்" என்றான்.
''நீ சிங்களத்தியைக் கட்டினதும் அறிஞ்சன் ....... ஏன் இப்படிக் குறுக்க இழுத்தனீ.......?” என்றான்.
நான் கார் விபத்தொன்றில் சிக்கி இடுப்பை உடைத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் காலைத்தூக்கிக் கொண்டே ஆஸ்பத்திரியில் அசையாமல் படுத்தெல்லாம் இருந்திருக்கிறேன். அது பற்றி யாருக்குமே இங்கு தெரிந்திருக்கவில்லை. விசித்திரமாய் சிங்களத்தியைக் கட்டினேன் என்றொரு செய்தி இத்தனை கடல்கள் மலைகள் பாலைவனங் கள் தாண்டி வந் திருக் குப் பாருங்களேன்.
என் ஆயிஷா மாத்தளைத் தமிழ்ப் பெண். பத்து வயதிலேயே ஜெர்மனிக்கு வந்துவிட்டவர். இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கையுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவளெனினும் அவள் பெற்றுக் கொண்ட கல்வியும், Bread for the world என்ற சேவை அமைப்பில் சோந்து கொண்டு இரண்டு வருஷங்கள் எதியோப்பியாவில் புரிந்த தன்னார்வப் பணியும்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 60

Page 61
அவளுக்கு எந்த மத மார்க்கத்திலுமே நம்பிக்கை இல் லாமற் செய் து விட் டன. அவள் தேடல்களெல்லாம் மானுஷ வாழ்வியல் மார்க்கத்தில் தான். பகுத்தறிவும், இலக்கியத் தாகமும் மானுட நேயமுமுள்ள பெண்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்க பிள்ளைகள் வந்து அவனுக்கு ''வணக்கம்” சொன்னார்கள்.
''அட ஆச்சர்யமாயிருக்கு ....... பிள்ளைகள் தமிழ் கதைக்கினமே?”
''தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கதைக்காமல்....?"
“எனக்கு சிங்களமோ ஜெர்மனோ புரியாது. ஜெர்மன் காரர்கள் - மொழிப் பற்று அதிகமுள்ளவர்களாம். லேசில் இங்கிலிஸ் பேசமாட்டர்களென்று அறிந்திருக்கிறேன். உன் மனைவிக்கு இங்கிலிஸ் வேச வருமில்லை?"
''எல்லாவற்றையும் விடத் தீந்தமிழ் நன்றாய் வரும்..... பேசித்தான் பாரேன்."
எமது சம்பாஷணைக்கு இடையூறில்லாது தானே தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்த ஆயிஷாவுக்கு
''இது சரவணன் என் ஸ்கூல் நண்பன் " என்றே அறிமுகம் செய்து வைத்தேன்.
"வணக்கம்'' நமஸ்கரித்தாள்.
இப்படியொரு நண்பர் இருப்பது எனக்குத் தெரியாதே......... ஏன் நீங்கள் இவருக்கு ஏதும் கடிதங்கள் கூடப் போடுவதாகத் தெரியவில்லையே” என்றவள் அவனைப் பார்த்து ''ஏன் நீங்கள் குடும்பத்தையும் கூட்டிவந்திருக்கலாமே?” என்றாள் அப்பாவியாய்.
அப்படியெல்லாம் லேசில் வந்திடுவார்களா இவர்கள் ....... ஒரு இடைவெளிவிட்டுத் தான் இவர்களால் பழகமுடியும் என்பதோ, யாழ்ப்பாண சாதியத்தையும் அதன் உட்கட்டுமானங்களையும் அறிந்திராத அவளுக்கு எப்படிப் புரியப் போகிறது? ஏன் இவ்வளவு காலம் கழித்தென்னைப் பார்க்க வந்திருக்கிறானே ........... என் கணிப்புகள் தவறாகக் கூட இருக்கலாம். இந்த நீண்ட கால இடைவெளி நிச்சயம் அவன் சிந்தனையோட்டங்களை, கருத்துக்களைப் புடம் போட்டிருக்கலாம்.
"இவ்வளவு சரளமாய் தமிழ் கதைக்கிறாவே?”

'கதைப்பா.... விஷயத்தைப் பொறுத்து இதைவிட அதிகமாகவும் கதைப்பா."
'உனக்குப் பொன்னென்ன பூவென்ன கண்ணே... ஞாபகமிருக்கோ?” என்றேன். விழுந்து விழுந்து சிரித்தான்.
''முழுக்கத்தான் சொல்லுங்களேன் ....... நானும் சிரிக்க" என்று ஆர்வமானாள் ஆயிஷா.
''அப்போ ஸ்ரீதரின் 'அலைகள்' என்றொரு படம் வந்து கலக்கிக் கொண்டிருந்த நேரம். இருவருமாகப் படத்தை மெற்னி பார்த்திட்டு சைக்கிளில் வந்துகொண்டிருந்தோம். அதில வர்ற இந்தப்பாட்டின் பல்லவியை வழி நெடுகிலும் மூக்குப் பொடி அள்ளுகிற மாதிரி கைவிரல்களைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடியபடி -
பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே கல்யாணப் பெண்ணாக உன்னை புவி காணாமப் போகாது கண்ணே....... என்று அனுபவித்துப் பாடிக் கொண்டு நீர்வேலிச் சந்திக்குக் கிட்ட வந்த சரவணனுக்கு பட்டப்பகல்ல முன்னால் நிறுத்தியிருந்த தட்டிவான் தெரியாமப் போச்சு''
''பிறகு?”
பிறகென்ன இடிபட்டும் தொபுகடீரென்று . விழுந்து மூக்குடைஞ்சது தான்''.
பிறகு?”
''பிறகென்ன மூக்கால ரத்தம் ஓடத்தொடங்கிவிட்டுது, கோப்பாய் ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து கட்டினதுதான்."
இப்படிப் பல சம்பவங்களை மீட்டுயிர்ப் பித்துச் சிரிக்கையில் கூடவே என் பிள்ளைகள் வந்து செய்த தமாஷ்களையும் அவனுக்குச் சொன்னேன்.
''இங்கே பெரியம்மாவிட்ட வெள்ளைக்குட்டிப் பூனை ஒன்று இருக்கு, அங்கார்..... அதில நின்று தெண்டா எடுக்குது அது தான். சனசந்தடியில்லாமல் வெளிச்சுப் போயிருந்த வீட்டில் நாங்களும் போயிறங்கி அமர்க்களம் பண்ணினது அதுக்கும் குஷியை ஏற்படுத்தியிருக்க வேணும். நடையிலும் தலைவாசலிலும் குசினியிலுமாக எங்களோடு உரசிக் கொண்டு திரிஞ் சுது. குட்டிப் பூனையல்லே........... பெரியம்மா சொன்னார்: இந்தப்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 61

Page 62
பூனையும் குறுக்கையும் மறுக்கையும் சும்மா சுத்துது. ஆற்றையன் காலுக்குள்ள அநியாயமாய் மிதிபடப் போகுது''.
''அப்படியெண்டால் அதின்ரை பாட்டரியைக் கழற்றிவிடுங்கோவன்.'' என்றான் கணியன்.
பின்னொருநாள் பெரியம்மா மீன்குழம்புக்கு மிளகாய் கூட்டரைக்க அம்மியைக் கழுவிக் கொண்டிருந்தார். அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலா கேட்டாள்:
''என்ன பாட்டி செய்யிறீங்கள்?” ''அம்மி கழுவுளன்"
''அம்மியென்டால்............?''
இதில் அரைக்கிறது
''இதுதான் அம்மி ............ கிரைண்டர்.''
''அப்படியெண்டா எங்கை அதின்ரை பிளக் வயர்?”
''இதுக்கு மின்சார சக்தி தேவையில்லை" இப்பிடித்தான் அரைக்கிறதென்று இழுத்து அரைத்துக் காட்டினார். அவளுக்கோ ஆச்சரியத்திலும்
ஆச்சரியம்.''
''நான் பள்ளிக் கூடத்தால் திரும் பும் வேளைகளில் வழியில வெற்றிலை வாங்கிச் சப்பும் மாடு மேய்க்கும் மனுஷி என்னைப் பார்த்துச் சரியாக அப்பாவைப் போலவே இருக்கிறீர் என்றவர் இன்னும் என்னை எமது மூத்த அண்ணன் என்று நினைத்தே என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்''
நம் பேச்சிடையே ஆயிஷா சரவணனுக்கு எத்தனை பிள்ளைகள் என்பதை விசாரித்து தன் உறவினருக்காக வாங்கிவந்த சில உடுப்புக்களை அவனுக்குக் கொடுக்க முன் வந்தாள். நானும் என் பங்குக்கு இரண்டு டீ சேர்ட்டுக்களையும் இரண்டு டிரொளசர் துணிகளையும், லோஷனோடு ஒரு ஷேவிங் செற்றையும் சேர்க்க அவற்றோடு உருகிவிடாது எஞ்சியிருந்த சொக்கலேட் சட்டங்கள் சிலவற்றையும் ஒரு பையில் வைத்து ஆயிஷா கொடுத்தாள். வாங்கிக் கொண்டு விடைபெற்றுச் சென்றான்.
அவன் போனபின்னால் நாங்கள் முற்றத்தில் கொஞ்சநேரம் பாட்மின்டன் விளையாடினோம். மாலையானாலும் வியர்த்தொழுகியது.
''ஒரு டவல் தாரும் குளிச்சிட்டு வாறேன்”

| என்றேன். "இதோ" என்று வீட்டுத் தலைவாசலுக்குள் போன ஆயிஷா சரவணனுக்கு வைத்த தேநீர் தீண்டப் படாமல் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப் பட்டு, ''என்னப்பா உங்கள் சிநேகிதர் தேத்தண்ணி குடிக்கவேயில்லை, மறந்திட்டார்'', என்றாள். தேநீர் கிளாசை எட்டிப் பார்த்த எழிலியும் வருத்தத்தோடு
ஓம் அப் பா ........... அந்த மாமா தேத்தா குச்சேல்ல...'' என்றாள்.
அயிஷா கூடத் தன் வாழ்க்கையில் கொஞ்சம் நிற வெறி, பாசிசம் , நாஷிசத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால், சாதியம்? என் பிள்ளைகளுக்கும் அவைகளை உணரும் வயது பற்றாது. முன்னவற்றைவிடவும் நீண்டகால வரலாறுடையது சாதியம் ஒரு சகமனிதனின் விருந்தோம்பும் உணர்வுகளைச் சட்டை செய்யாத, வெளித்தோன்றாது உள்வைரம் பாரித்திட்ட வன்மம் அது . ஜென்மாந்தரங்களுக்கும் தொடர்வது.
ஜாதிய அநாகரீகங்கள், அவமானங்கள், அவமதிப்புகளின் நிழல் கூட இவர்கள் மேல் படவேண்டாம். அதன் அசிங்கமான முகத்தைக் கண்டால் இவர்களும் வெட்க வேண்டிவரும்.
''ஜா ....... சிநேகிதன் மறந்துவிட்டான் .... நீங்களும் மறந்துவிடுங்கள்.” என்றேன்.
'எல்லா வெள்ளாளனையும் சந்தேகி' என்ற கூற்று முதன் முதலாக மிகவும் அர்த்தம் மிக்கதாகப் பட்டது.
தேநீர் ஆடைகட்டி வெகுநேரமாகியிருந்தது.
35-வது, 36-வது, 37-வது, ஆண்டு மலர்களும் அவுஸ்திரேலியச் சிறப்பு மலரும் நம்மிடம் உண்டு. இலக்கியத் தேடல் ஆர்வமுயற்சி உள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். அத்துடன் 2002 ஆண்டுக்கான அத்தனை இதழ்களும் உண்டு. தேவையான
இலக்கியச் சுவைஞர்கள் தொடர்பு கொள்ளவும்.
- ஆசிரியர்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 62

Page 63
பூனையும் குறுக்கையும் மறுக்கையும் சும்மா சுத்துது. ஆற்றையன் காலுக்குள்ள அநியாயமாய் மிதிபடப் போகுது".
''அப்படியெண்டால் அதின்ரை பாட்டரியைக் கழற்றிவிடுங்கோவன்.'' என்றான் கணியன்.
பின்னொருநாள் பெரியம்மா மீன்குழம்புக்கு மிளகாய் கூட்டரைக்க அம்மியைக் கழுவிக் கொண்டிருந்தார். அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலா கேட்டாள்:
''என்ன பாட்டி செய்யிறீங்கள்?" 'அம்மி கழுவுளன்" 'அம்மியென்டால்..........?"
''இதுதான் அம்மி ............. இதில் அரைக்கிறது கிரைண்டர்.''
''அப்படியெண்டா எங்கை அதின்ரை பிளக் வயர்?"
“இதுக்கு மின்சார சக்தி தேவையில்லை" இப்பிடித்தான் அரைக்கிறதென்று இழுத்து அரைத்துக் காட்டினார். அவளுக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம்."
''நான் பள்ளிக் கூடத்தால் திரும்பும் வேளைகளில் வழியில் வெற்றிலை வாங்கிச் சப்பும் மாடு மேய்க்கும் மனுஷி என்னைப் பார்த்துச் சரியாக அப்பாவைப் போலவே இருக்கிறீர் என்றவர் இன்னும் என்னை எமது மூத்த அண்ணன் என்று நினைத்தே என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்"
நம் பேச்சிடையே ஆயிஷா சரவணனுக்கு எத்தனை பிள்ளைகள் என்பதை விசாரித்து தன் உறவினருக்காக வாங்கிவந்த சில உடுப்புக்களை அவனுக்குக் கொடுக்க முன் வந்தாள். நானும் என் பங்குக்கு இரண்டு டீ சேர்ட்டுக்களையும் இரண்டு டிரொளசர் துணிகளையும், லோஷனோடு ஒரு ஷேவிங் செற்றையும் சேர்க்க அவற்றோடு உருகிவிடாது எஞ்சியிருந்த சொக்கலேட் சட்டங்கள் சிலவற்றையும் ஒரு பையில் வைத்து ஆயிஷா கொடுத்தாள். வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றான்.
அவன் போனபின்னால் நாங்கள் முற்றத்தில் கொஞ்சநேரம் பாட்மின்டன் விளையாடினோம். மாலையானாலும் வியர்த்தொழுகியது.
''ஒரு டவல் தாரும் குளிச்சிட்டு வாறேன்"

என்றேன். ''இதோ" என்று வீட்டுத் தலைவாசலுக்குள் போன ஆயிஷா சரவணனுக்கு வைத்த தேநீர் தீண்டப் படாமல் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப் பட்டு, "என்னப்பா உங்கள் சிநேகிதர் தேத்தண்ணி குடிக்கவேயில்லை, மறந்திட்டார்'', என்றாள். தேநீர் கிளாசை எட்டிப் பார்த்த எழிலியும் வருத்தத்தோடு 'ஓம் அப் பா ........... அந்த மாமா தேத்தா குச்சேல்ல ......'' என்றாள்.
அயிஷா கூடத் தன் வாழ்க்கையில் கொஞ்சம் நிற வெறி, பாசிசம் , நாஷிசத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால், சாதியம்? என் பிள்ளைகளுக்கும் அவைகளை உணரும் வயது பற்றாது. முன்னவற்றைவிடவும் நீண்டகால வரலாறுடையது சாதியம் ஒரு சகமனிதனின் விருந்தோம்பும் உணர்வுகளைச் சட்டை செய்யாத, வெளித்தோன்றாது உள்வைரம் பாரித்திட்ட வன்மம்
அது . ஜென்மாந்தரங்களுக்கும் தொடர்வது.
ஜாதிய அநாகரீகங்கள், அவமானங்கள், அவமதிப்புகளின் நிழல் கூட இவர்கள் மேல் படவேண்டாம். அதன் அசிங்கமான முகத்தைக் கண்டால் இவர்களும் வெட்க வேண்டிவரும்.
'ஜா ....... சிநேகிதன் மறந்துவிட்டான் .... நீங்களும் மறந்துவிடுங்கள்." என்றேன்.
'எல்லா வெள்ளாளனையும் சந்தேகி' என்ற கூற்று முதன் முதலாக மிகவும் அர்த்தம் மிக்கதாகப் பட்டது.
தேநீர் ஆடைகட்டி வெகுநேரமாகியிருந்தது.
35-வது, 36-வது, 37-வது, ஆண்டு மலர்களும் அவுஸ்திரேலியச் சிறப்பு மலரும் நம்மிடம் உண்டு. இலக்கியத் தேடல் ஆர்வமுயற்சி உள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். அத்துடன் 2002 ஆண்டுக்கான அத்தனை இதழ்களும் உண்டு. தேவையான
இலக்கியச் சுவைஞர்கள் தொடர்பு கொள்ளவும்.
- ஆசிரியர்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 62

Page 64
jெற்கெனவே இருந்து வருகின்ற மரபில் இருந்து புதிய மரபொன்று தோற்றம் பெற்று நடைமுறையில் சமூகத்தின் வரவேற்பைப் பெறும் போது, அப்புதிய மரப நவீன மரபாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
'இங்கு புதியமரபு சமூகத்தினால் எவ்வவு தூரம் ஏற் றுக் கொள்ளப் படுகின்றது என் பதில் பிரச்சனைகள் எழுவது வழக்கம். எந்த ஒரு புதிய மரபும் உடனடியாகப் பழைய விழுமியங்களில், வடிவத்தில் ஊறித் திளைத்த பொது மக்களால் உடன் ஏற்றுக் கொள்வதில் சிரமங்கள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால், எந்த எதிர்ப்பையும் மீறி அம் மரபு காலத்தால் அரவணைக்கப் பட்டும் தன்னை உறுதியாகக் கால்பதித்து நின்றமையே வரலாற்று உண்மையாகும். ஆனால், எவ்வளவு காலம் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது பார்க்கும் போது அக்கால கட்டத்தின் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களுடன் இணைந்தே நவீன மரபுகளும் வளர்ந்து கொண்டோ அல்லது இல்லாமலோ போய்விடுவதையும் நாம் கருத்திற் கொள்ளாமல் இருக்கமுடியாது.
முதலில் தமிழில் நவீன நாடகம் எவ்வாறு இனங்காணப் பட்டது என நோக்கும் போது செய்யுள் மரபுள் கட்டுண்டிருந்த எமது நாடகமரபு உரை நடை மரபுக்குள் பிரவேசிக்கத் தொடங்கிய போது அது தமிழ் நாடகத்தின் நவீன வடிவமாகக்
ஈழத்
தமிழ்
38.29 (வரலாற்றுப் ப
5 லர் 20032வரி

கொள்ளப் படுகின்றது. இங்கு வடிவமே முதலில் நவீனத்தைத் தீர்மானித்தது. யதார்த்தவாத உள்ளடக்கம் பின்னர் படிப்படியாகவே அரும்பத் தொடங்கியது. இந்த உரை நடை அரங்கு, வசன நாடகம், சொல்லாடல் அரங்கு என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.
அவ்வாறாயின் நவீன தமிழ் நாடகங்களில் செய்யுள் பாடல்கள் இடம் பெறவில்லையா என வினாவப் படின், எந்த ஒரு மரபும் ஆரம்பத்தில் பழைய மரபின் எச்ச சொச்சங்களைக் கணிசமாகக் கொண்டிருக்கும் என்று கூறவேண்டும். எதுவும் சூனியத்தில் இருந்து தோன்றித் தனித்துவம் பெற்று விடுவதில்லை.
ஈழத்தில் தமிழ் நவீன நாடக மரபு ஆங்கிலேயக் காலனி ஆட்சியின் பெறுபேறுகளில் ஒன்றாகும். ஆங்கிலேய ஆட்சியின் போது உருவான புதிய மத்தியதர வர்க்கத்தினரின் தோற்றம், அவர்கள் ஆங்கிலக் கல்வியூடாகத் தாம் சுவைத்த நாடக இலக்கிய அறிவை தமிழிற்குள் அறிமுகப் படுத்தியது.
ஈழத்தில் நவீன நாடகத்தின் தோற்றம் 1905 - ல் பாவலர் துரையப்பா பிள்ளையவர்களால் சகல குணசம்பன்னன் என்ற உரையாடற் பண்பு மிகுந்த நாடக எழுத்துருவால் ஆரம்பித்து வைக்கப் பட்டது.
தில் நவீன
நாடக வளர்ச்சி ார்வையில் சில குறிப்புகள்)
- பா. இரகுவரன்.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (63

Page 65
தமிழ் நாட்டைச் சேர்ந்த பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபையினர் 1911, 1913 காலப்பகுதிகளில் உரை நடைப் பாங்கான தமிழ் நாடக அரங்கை ஈழத்தில் அரங்கேற்றி முதன்மை பெறவைத்தது. இந்நாடகங்கள் புராண, இதிகாச கற்பனை வரலாறு, மொழி பெயர்புகள் என பலவகையான நாடகங்களை அரங்கேற்றின் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்களால் மிகவும் ஈர்க்கப் பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலையரசு சொர்ணலிங்கம் பம்பல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகப் பிரதிகளை, தமது ஆளுமைக்கு ஏற்பத் தயாரித்து கொழும்பை மையமாகவும், ஈழத்தின் பல இடங்களிலும் அரங்கேற்றி உரை நடை அரங்கிற்கு பரந்துபட்ட அறிமுகத்தையும், வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தார்.
கலையரசு சொர்ணலிங்கம் லங்கா சுபோதவிலாச சபை என்ற நாடகக் குழுவை அமைத்து, கட்டுப்பாடு, நேரச் சுருக்கம், உடனடிக் காட்சி மாற்றம், ஒழுங்கான ஒத்திகை, மேற்கத்தைய நாடக கோட்பாட்டினடியிலான அரங்கப் பயன்பாடு, நவீனமேடை அமைப்பு என்பவற்றால் பரந்துபட்ட மக்கள் சமூகத்தால் குறிப்பாக மத்திய தரப் பார்வையாளர்களினால் பெரிதும் வரவேற்கப் பட்டது.
கலையரசு சொர்ணலிங்கம் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்களை அரங்கேற்றினாலும், நாடகம் ஒரு இறுக்கமான வடிவத்தைப் பெற்றமையையும், தேவையற்ற காட்சிகள் நீக்கப் பட்டமையையும், நாடகத் தளத்தை வெளிப்படுத்தப் பொருத்தமான பல காட்சித் திரைகள் பயன்பட்டதையும் எமது ஈழத்தில் தமிழ் நாடகப் போக்கில் இணையவைத்து நாடகத்தின் பரந்துபட்ட நவீன அரங்கு சாதாரண மக்களின் பெருவர வேற்பைப் பெற்றுக் கொடுத்தார்.
சொர்ணலிங்கத்தின் நெறியாள்கையில் இங்கு உருவான நாடகங்கள் நடிப்பிலும், காட்சி அமைப்பிலும் யதார்த்தத் தன்மையை நோக்கி நகர்வதை நாம் அவதானிக்கலாம். ஆனால் நாடகக் கதையானது யதார்த்தத் தன்மையில்லாமல் புராண, இதிகாச கற் பனை வரலாற்று , மற்றும் ஷேக்ஸ்பியரின் நாடக மொழி பெயர்ப்புகளாக இருந்தன.
கலையரசு சொர்ணலிங்கம், சுயபிரதி ஆக்கங் களையோ, ஈழத்து மக்களின் பிரச்சனைகளையோ வெளிப்படுத்துவதில் அக்கறை

கொள்ளவில்லை. இவரைப் பொறுத்தளவில் நாடகம் என்பது பொழுதுபோக்கும், வெறும் களிப்பூட்டல் சாதனம் என்ற நிலைப்பாட்டிலேயே நின்று விட்டார்.
1930 - களில் இருந்து 50 -கள் வரை பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் வருகையுடன் முதன் முதலில் தமிழில் இயற்பண்பு சார்ந்த மரபொன்று உதயமாகி தமிழ் நாடக வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கின்றது.
அனைத்துப் பாத்திரங்களையும் பேச்சுத் தமிழில் உரையாடவைத்து ஈழத்து மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கடந்து கொண்டு ஈழத்துக் கதாபாத்திரங்கள் மேடையில் களிப்பூட்டலையும், அறிவு பூர்வமான சிந்தனையையும் தூண்டிவிட்டன.
உடையார் மிடுக்கு என்ற நாடகம் பேராசிரியரின் புகழ் பெற்ற நாடகமாகும். இன்னொரு முக்கியமானதொரு விடயம் அரசியல் அரங்கை ஆரம்பித்து வைத்தமையாகும். அரசியல் வாதிகளின் ஏமாற்று வித்தைகளால் ஏமாற்றப் பட்டு ஒடுக்கு முறைக்குள்ளாகும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பர் என்பதை தீர்க்க தரிசனமாக 1950களில் நாடகமாக எழுதி இருந்தார். அதை இன்று நேரில் அனுபவிக்கிறோம்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடக எழுத்துருவில் நவீன நாடகத்துக்குரிய உத்திகள் ஏதும் இல் லாமை ஒரு குறைபாடாகவே கருதப்படுகிறது.
அத்துடன் பேச்சுத் தமிழ் இயற் பண்பு வாதம் என்றெல்லாம் நாம் கூறிக் கொள்கிறோம். ஆனால் பேராசிரியரின் நாடகங்களில் கீழ்பட்ட பாத்திரங்கள் கூட பூசிமெழுகப் பட்ட பேச்சுத் தமிழே. உண்மையில் பேச்சுத் தமிழில் மேல்மட்டமாயினும், கீழ் மட்டமாயினும் எவ்வளவு வம்பு தும்புகள், துாசணை கள் என் பவை சாதாரணமாக வந்துபோகின்றன. இங்கு தான் விழுமியம் பற்றிய பிரச்சனை எழுகின்றது. என்ன இருந்தாலும் ஆட்களுக்கு முன்னால் இப்படி பேசலாமோ , எழுதலாமோ. ஆனால் நடைமுறை வாழ்க்கையில்..... இது தான் எமது இயற் பண்புவாதம்.
பேராசிரியரின் நாடகங்களில் துரோகிகள்,
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 64

Page 66
சுந்தரம் எங்கே? என்பன நூலுருப் பெறவில்லை. இரு நாடகம், நாடகம், மாணிக்க மாலை, சங்கிலி என்பன நூலுருப் பெற்றுள்ளன. சங்கிலி கூட ஒருவரலாற்று நாடகம் போல் தோன்றினாலும், உள்ளார்ந்தமாகச் சங்கிலியன் அன்னியர்களின் ஒடுக்கு முறைக்கு எதிராக வாளை ஏந்தும் அவசியத்தை நமக்கு எடுத்துக் காட்டுவதை மறுக்க இயலாது.
60-களின் பிற்பகுதியிலும் 70-களிலும் தான் நவீன தமிழ் நடக அரங்கு மேல் நாட்டு உத்திகளை நாடகப் பிரதியிலும், நெறியாள் கையிலும் கையாண்டு வடிவரீதியான தொரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. அக்கால கட்டத்தில் அரசியலில் இடது சாரிகளின் கூட்டமைப்பு இருந்ததால், இடது சாரிக் கொள்கை பின் பற்றப் படுவதாகக் கூறப்பட்டது. எமது முற்போக்கு இடது சாரிகள் தாம் படித்த மூளைக்குள் வைத்திருந்த வர்க்கப் போராட்டம் பற்றி தாரளமாக நாடகங்களை எழுதினர். ஒருவகையில் கனவுலகில் நின்று நாடகங்களை நிஜமாக்க முயன்றனர். கூர்மையடைந் து விட் ட இன ஒடுக்கு முறைக்கெதிராக எழுதாமல் வர்க்கப் பிரச்சனை பற்றி அரங்கு பேசியமை உள்ளடக்க ரீதியிலான உண்மையான வளர்ச்சிப் போக்கா!
ஆனால், 60-களில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பாரம்பரிய நாடகங்களைப் (குறிப் பாக நாட்டுக் கூத்து) பேணுதலும், நவீனமயமாக்கலும் என்ற இவரது முயற்சிகளின் முதல் அறுவடையாக 70-களில் மெளனகுரு, தாசீசியஸ், நா.சுந்தரலிங்கம் போன்ற பலரூடாகக் கூத்து வடிவங்கள், கூத்தின் மூலகங்களை நவீன நாடகங்களில் பாவித்தல் என்பன தொடரப் பட்டு இன்றும் தாக்கத்தைச் செலுத்தி வருவதை மறந்து விடலாகாது.
இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமான நெறியாளராக கணிக்கப் பட்டவர் சுஹைர் ஹமீத் ஆவார். தமிழில் நல்ல நாடகப் பிரதி இல்லை யெனக் கூறி அதிகம் மொழி பெயர்ப்பு, தழுவல் நாடகங்களை நெறியாள்கை செய்தார். நாடகம் அதன் உத்திகளிலேயே தங்கியுள்ளது என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டினார்.
ஆனாலும் இவரது நாடகங்களில் உள்ளடக்க

வெளிப்படுத்தலை விட உத்திகள் மேலோங்கி நின்று மறைந்து விட முயன்றன. சொல்லப் போனால் 70-களில் நெறியாளர் அரங்கு ஒன்று உருவாகியது. இன்றும் தொடர் அத்திவாரமிட்டது. பிற்கால நாடக வரலாற்றில் உத்திகளுக்கு அத்திவாரமிட்ட பல நாடகங்களை நெறிப்படுத்தினர்.:
இக் கால கட்டத்தில் நா.சுந்தரலிங்கத்தின் அபசுரம், விழிப்பு ஆகிய நாடகங்களும், சி.மெளன குருவின் சங்காரம் என்ற நாடகமும். கூத்து வடிவத்துள் புதிய உள்ளடக்கமாக்கப் பிரச்சனை பற்றி பேசியது.
இக்கால கட்டத்தில் இன்னொரு மரபாகப் பாநாடகங்கள் தோற்றம் பெற்றன. நாடக எழுத்துருவின் கனதிக்கு பா நாடகங்களின் சொற் சேர்க்கை வலுவூட்டின. இ.முருகையனின் கடூழியம் ந.சுந்தரலிங்கத்தாலும், மஹாகவியின் கோடை, புதியதொரு வீடு ஆகிய நாடகங்கள் தாஸீசியசாலும் நவீன உத்திகள் பலவற்றைக் கையாண்டு எழுதப்பட்டன. மஹாகவியின் நாடகங்களில் பேச்சுத் தமிழ் பண்பு அதிகம் விரவிக் காணப்பட்டது. இதில் கோடை அன்னியர் ஆட்சி கோடை யெனத் தகிப்பதை அற்புதமானதொரு எழுத்துருவாகவும், தாஸீசியசால் மிகச் சிறப்பாகவும் நெறியாள்கை செய்யப் பட்ட நாடகமாகும்.
77, 83 களில் நடை பெற்ற இனக் கலவரம் யாழ்ப்பாணத்தை நாடகமையமாக்கியது. அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத் துறையில் நாடகமும் அரங்கியலும் ஒரு பாடநெறியாக அறிமுகப் படுத்தப் பட்டமையும் இன்னொரு பிரதான காரணமாகும்.
குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடக அரங்கக் கல்லூரியில் 1978-லும், இ.பாலேந்திராவின் அவைக் காற்றுக் கழகம் 1979-லும் உருவாக்கப் பட்டுத் தீவிரமாக நாடகச் செயற்பாடுகளில் ஈடு பட் டன. இந்த இரண்டு நாடகக் குழுக்களுக்கிடையில் கருத்து ரீதியான முரண்பாடு நாடக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.
இ.பாலேந்திராவின் அவைக்காற்றுக் கழகம் தமிழில் நல்ல நாடகப் பிரதிகள் இல்லை என்று கூறி பிற மொழிகளில் உள்ள சிறந்த நாடகங்களை
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
65

Page 67
மொழிபெயர்த்து அதிகம் அரங்கேற்றினர். அவைக்காற்றுக் கழகம் 1983ன் பின் ஏற்பட்ட இராணுவ நெருக்கடி காரணமாக செயற்படமுடியாத வரலாற்று நிலை ஏற்பட்டது. ஆயினும் மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு மொழிபெயப்பு நாடகங்களை அதுவும் வெவ்வேறு மோடிகளில் தயாரித்து ஈழத் தமிழ் நாடக உலகிற்கு வடிவரீதியிலும், 70களை விட உள்ளடக்க ரீதியிலும் பாரிய பங்களிப்பைச் செய்திருந்தது.
இவ்வேளை 70ளில் அதிக அளவில் மொழி பெயர்ப்பு நாடகங்களைத் தயாரித்து அளிக்கை செய்த சுஹைர் ஹமீத் அவர்களை மீண்டும் நினைவு படுத்த வேண்டியுள்ளது.
''நாடகம் என் பது நாடகமாக அமைய வேண்டும். அதற்கு அதன் வடிவம் முக்கியமானது" எனக்கூறி நாடக உத்திகளில் அதிக கவனம் செலுத்தியதாகவும், சிலவேளைகளில் நாடக உத்திகள் நாடக உள்ளடக்கத்தை மறைத்து விடும் அளவிற்கு அதிக அளவில் இருந்தது என்றும் பொருள்பட பேராசிரியர் சி.மௌனகுரு 'தமிழ் நாடக அரங்கு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள்
TMS DAYAS |
Importers & |Dealers in Electroplatin Foundry Materials, Ferrous
No.9, Malib Colombo - 11, Tel: 324130 Fax:

சுஹைர் ஹமீத்தின் நாடகங்களை நான் பார்க்கக் கூடிய வயதில் அப்போது இருக்கவில்லை. ஆனால் இ.பாலேந்திரா இயக்கிய நாடகங்களில் உத்திகள் பிரதானமாக இருந்தாலும் ஒரு கருப் பொருளுக்கும் சூழ்வு, கட்டமைப்பு என்பவற்றிற்கும் நெறியாளனின் திறமையால் பொருத்தமான உத்திகளைக் கையாண்டு நாடக உள்ளடக்கத்தைச் சிறப்பாக அனேக நாடகங்களில் வெளிப் படுத்தியுள்ளார் என எனது அனுபவ வாயிலாகக் கூறுகின்றேன்.
இவ் வேளை தான் நாடக அரங் கக் கல்லூரிக்கும், அவைக் காற்றுக் கழகத்திற்கும் ஏற்பட்ட முக்கிய முரண்பாடு என்னவெனில் சொந்த மண்ணின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட சுய பிரதிகள் எழுதப்பட வேண்டும் எனவும் இதன் பலம், பலவீனம் என்பவற்றை இனங்கண்டு நாம் எமது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக்கூறி நாடக அரங்கக் கல்லூரி தனது பெரும் பாலான செயற் பாடுகளில் வெளிக்காட்டியது.
-- ---
METALS STORES
1.5.1
* Exporters g Materials Chemicals, 6 Non Ferrous Metals Etc;
an Street,
Sri Lanka. 094-1-384102
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 66

Page 68
ஆனால், அவைக் காற்றுக் கழகமோ நாடக அரங்கக் கல்லூரியில் நாடகங்களில் வடிவச் செழுமை குறைவாகவே உள்ளது. இதற்கு நல்ல நாடகப் பிரதி இன்மையே எனக் கூறியது.
மொத்தத்தில் இரு சாராரும் மறந்து விட்ட சமாச்சாரம் நல்லதொரு உள்ளடக்கம், நல்லதொரு வடிவத்தைப் பெறும் போது தான் அது நல்ல தொரு கலை வடிவமாகப் பரிணமிக்கின்றது. இது நாடகக் கலைக்கு மட்டுமன்றி ஏனைய கலைகளுக்கும் பொருந்தக் கூடிய தொன்றாகும் என்பதேயாம்.
நாடக அரங்கக் கல்லூரி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களைப் பிதாமகனாகக் கொண்டு தொடர்ந்தும் செயற்பட்ட போது, 85-ல் இராணுவம் முகாம்களுள் முடக்கப் பட்ட போது, யாழ் பல்கலைக் கழக கலாச்சார சபைக்காக மண்சுமந்த மேனியர் நாடகத்தைக் குழந்தை ம. சண்முகலிங்கம் எழுத, க. சிதம்பர நாதன் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார். இந் நாடகம் யாழ்ப்பாணத்தில் 60 தடவைகள் வரை பல்வேறு இடங் களில் அரங் கேறி குழந் தை ம. சண்முகலிங்கத்தை கணிப்புக்குரிய நாடக எழுத்தாளராகவும் க . சிதம் பர நாதனை கணிப்புக்குரிய நெறியாளராகவும் இனம் காட்டியது.
87-ல் இந்திய அமைதிப் படையினரின் ஒடுக்கு முறைகளால் வெளியில் சுதந்திரமாக நாடகம் அளிக்கை செய்ய முடியாத நிலையில் பாடசாலைகளுக்குள் நாடக அரங்கக் கல்லூரி தனது செயற்பாடுகளைத் தொடர்ந்தது. பாடசாலை அரங்கு கல்விப் பிரச்சினைகளை மட்டுமன்றி பெண்ணிய அரங்குக்கான அருட்டலையும் ஏற்படுத்தியது. சமூகப் பிரச்சினைகளையும் திறம்பட வெளிப் படுத்திய ஈழத்து நவீன தமிழ் நாடக வரலாற்றில் பெரும் பங்களிப்பை செய்தது. பாடசாலை நாடகங்களை அதிகம் குழந்தை, ம.சண்முலிங்கம் எழுத க. சிதம்பர நாதன், பிரான்சிஸ் ஜெனம் ஆகியோர் ஆரம்பத்தில் நெறியாள்கை செய்தனர். இவை பின்னர் பலரால் பல பாடசாலைகளில் இன்னும் மேடையேறி வருகின்றது. பேராசிரியர் சி.மௌனகுருவின் மழை, நம்மைப் பிடித்த பிசாசுகள் என்பன கூத்தில் ஆடல், பாடல் மெட்டுகள் நிறைந்த பாடசாலை
அரங்குகளாகும்.

இதே வேளை 1979 - ல் குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதிய 'கூடி விளையாடு பாப்பா' என்ற நாடகம், சிறுவர் நாடக விதிமுறைகளுக்கு அமைய ஈழத் தமிழிழ் எழுதப்பட்ட முதலாவது நாடகமாகும். தொடர்ந்து பல சிறுவர் நாடகங்களை இவர் எழுதி அரங்கேற்றியுள்ளார். பேராசிரியர் சி.மௌனகுருவின் தப்பிவந்த தாடி ஆடு, வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் என்பனவும் சிறுவர் நாடகத் துறையில் எளிமையான கூத்தின் ஆடல் பாடல்கள் மெட்டுக்களை உண்டாக்கிச் சிறுவர் நாடகத்திற்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தன.
ஈழத்து நவீன தமிழ் நாடக வரலாற்றில் ரசிகர் அவையை முதன் முதலில் எழுபதுகளில் கொழும்பில் நடிகர் ஒன்றியம் உருவாக்கி நாடகங்களை இலக்குப் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கியது.
பின்னர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியும், அவைக் காற்றுக் கழகமும் தொடர்ந்தன.
இரண்டொரு - முன்னரே குறிப்பிட்டிருக்க வேண்டிய விடயங்களில் ஒன்று, 1978-ல் நாடக அரங்கக் கல்லூரி நிறுவப்பட்ட போது வார இறுதி நாட்களில் தாஸீசியஸ் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து களப் பயிற்சிகளை அளித்து, அதன் முடிவில் 'பொறுத்தது போதும்' என்ற நாடகத்தை தயாரித்து அகில இலங்கை மட்டத்தில் பல பரிசில்களைப் பெற்றுக் கொண்டது. மற்றது பிரான்சிஸ் ஜெனம் சிறந்த நடிகருக்கான ஜனாதிபதி விருதினைப் பெற்றது.
பின்னர் குழந்தை ம.சண்முகலிங்கம் நாடக அரங்கக் கல்லூரியால் பல களப்பயிற்சிகளை நடாத்திப் பல அரங் கவியலாளர்களைத் தோற்றுவித்தார். இவருடன் பேராசிரியர் சி. மெளனகுரு, க. சிதம்பர நாதன் ஆகியோரும் இணைந்து பயிற்சி வழங்கினர்.
80 களில் அரங்கு சண்முகலிங்கத்துக்குரிய அரங் காயிற் று. 80- களில் நாடகங்கள் உள்ளடக்கத்தில் யதார்த்தமாகவும் உருவத்தில் பதார்த்தமற்ற பெரிய அசைவுகளைக் கொண்டதாகவும் அத்துடன் பேச்சுத் திமிரும் உரத்து சத்தத்தைக் கூட்டி இழுத்துப் பேசப்பட்டது.
ஆனால், 90-களில் நவீன நாடகங்கள் - .. யதார்த்தத் தன்மையை நோக்கி நகருதல் . அதிக மோடி, குறியீட்டு தன்மைகள்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 7

Page 69
கொண்டதாக இருத்தல் . யதார்த்தத் தன்மையை நோக்கி நகர்ந்த நாடகங்கள் சீரமைக்கப் பட யதார்த்த நாடகங்கள் எனப் பட் டன. கணபதிப்பிள்ளையின் யதார்த்தத்தில் இருந்து இவை இடைப்பட்ட கால அரங்க காலங்களை உள்வாங்கி 90களில் வேறொரு பரிமாணத்தில் யதார்த்தம் சென்று கொண்டிருந்தது. இதில் சி. ஜெய்சங்கர், க.ரதிதரன், ஜோன்சன், பா.இரகுவரன் என்போர் முக்கியமாகத் தொழிற் பட்டனர் ரதிதரனின் சைக்கிள், அண்டவெளி, மலநீக்கம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. அதீத அசைவுகள் குறியீடுகளைக் கொண்டதாக நாடகங்களும் வெளிவந்தன. உ+ம் : சிதம் பர நாதனின் நெறியாழ்கை நாடகங்கள் இதில் இவரின் தென் கிழக்காசிய சுற்றுப் பயணமும், இதையொட்டி, நடந்த ஆசியாவின் ஓலம் (Cry of Asia) என்ற நாடகமும் இவரை அகஸ்ரா போல் போன்றவர்களின் நாடக மரபுகளை உள்வாங்கக் கூடியதாக இருந்தது. (உ+ம்: உயிர்த்த மனிதர் கூத்து, பொய்க்கால்)
குழந்தை ம.சண்முகலிங்கம் தனது மோடிப்படுத்தப் பட்ட மரபில் இருந்த 90- களில் விடுபட்டு யதார்த்தத் தன்மை கூடிய வடிவத்தில் நாடகங்களைத் தயாரித்தார். இதில் எந்தையும் தாயும் என்ற நாடகம் நாற்சார் வீட்டு இடங்களை அரங்காகக் கொண்டு தயாரிக்கப் பட்டது. நாடகவீடு என்ற அரங்க அமைப்பும் உதயமானது.
அன்னை இட்ட தீ என்ற இவரது நாடகம் யுத்தகாலத்தில் மக்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் பற்றி கலைத்துவத்துடன் வெளிப்பட்டது. வேள்வித் தீ என்ற இவரது நாடகத்தில் இராணுவத்தினரின் பாலியல் வன் முறைக்கு உள்ளான பெண்ணொருத்தியின் குடும்பத்தில் ஏற்படும் அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான முரண்பாடு கலை வெளிப்பாடாகியது.
திருமறைக் கலாமன்றம் யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி, கொழும்பு, ஐரோப்பிய நாடுகள் என்பவற்றிலெல்லாம் நாடகத்தை அரங்கேற்றித தமிழர் பிரச்சினைகளையும் வெளி உலகிற்கு உயர்த்தியது. இதே போல் குழந்தை சண்முகலிங்கத்தின் எந்தையும் தாயும் நாடகம், இந்தியாவிலும் 'நாராய் நாராய்' என்ற சுற்றுப் பயணம் மூலம் அங்கு பல இடங் களில் அரங்கேறியது. லண்டனில் தாஸியசினால் நெறிப்படுத்தி அரங்கேற்றப் பட்டது.
நிலாந்தனின் அகதிகளின் கதை, யுத்தத்தின்

நாட்கள், நவீன பஸ்பமாசூரன் ஆகிய நாடகங்களை சி. ஜெய் சங்கர் நெறிப் படுத்தி இருந்தார். ஜெய்சங்கரின் கன்ரீன், தம்மதுவீபத்தின் கதை, தீ சுமந்தோர் ஆகிய நாடகங்கள் கணிப்புக் குள்ளாகியன. தீ சுமந்தோர் 15 தடவைகளுக்கு மேல் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும்
அரங்கேறியது.
அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் நாடக முயற்சிகள் தற்போது தீவிரமாக தே.தேவானந்தால் முன்னெடுத்துச் செல்லப் படுகின்றன. அரங்கச் செயற் பாட்டுக் குழுவினர், திருமறைக் கலாமன்றத்தினர் அகதிகள் வாழும் மரநிழல்கள் பாடசாலைகள், கோயில்கள், அகதி முகாம்கள் என்பவற்றுக்குச் சென்று அவர்களை உறுதியுடன் மனம் தளராது வாழவும், சிறுவர்களின் மனத் தாக்கங் களைத் தணிக்கச் சிறுவர் நாடகங்களையும் அரங்கேற்றி வருகின்றார்கள்.
சரி... கட்டுரை நீண்டு கொண்டே போகின்றது அதற்கு முன் 80-களில் ஆரம்பமான தெருவெளி அரங் கு (மாயமான், திரு விழா, கசிப்பு , விடுதலைக்காளி) 90- களில் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் சென்று பல நூறு தடவைகள் மேடையேறிப் பிரச்சார வெற்றியையும் கொடுத்தது. தற்போதும் தெருவெளி அரங்க முயற்சிகள் தொடருகின்றன. அகதிகள் பிரச்சனை, மிதிவெடி விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு போன்ற கருப்பொருளில் இவை ஆற்றுகை செய்யப்படுகின்றன.
வேறென்ன நவீனம் என்பதற்கு என்னால் இயன்ற வரை, விளக்கம் கொடுத்துள்ளேன். வளர்ச்சி என்பதற்கு என்ன அளவு கோல் பேச்சுத் தமிழ், எமது பிரச்சனைகளைப் பேசுதல், நாடக பிரதியிலும், வடிவத்திலும் உத்திகள், பல்வேறு மோடிகளில் நாடகங்கள் என்று சிலவற்றைக் கூறலாமா? எனக்குத் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் கூறலாம். ஈழப் போர் நிறைய அனுபவங்களை கலை வெளிப்பாட்டுக்கு அளித்துள்ளது. அந்த அனுபவங்கள் முழுமையாக கலைவடிவம் பெற இன்னும் கால அவகாசம் தேவை. அப்போது வளர்ச்சி பற்றிப் பேசலாமே.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 68

Page 70
Best Wishes to
Mallikai 380
Wa
Shoppin,
Dealers in T.V. Radi Audio Cassettes, Calculato
UUUUUUUU) OOOOOOOO
I DDODmman
OOOOOOO
DOODGOODU
152, BANKSHA
COLOM TEL: 446028, 44

Eh Year Jesue
hls
g Centre
o, Video Cassettes, Prs, Luxury & Fancy Goods
Ir ITO
ALL STREET.
30 - 11, 1982 FAX: 323472
3865) AL 60ÖIGLDOVÍT X6076urf - 2003 69

Page 71
நாவலப்பிட்டியின்
មើល
இலக்கியம் முன்னோடிகள்
19 ! க.
ப.ஆப்டீன்
38-23 25 லர் 200327வரி

மலையகத்தைச் சேர்ந் த கேந் திர நகரங்களில், அழகிய கண்டி மாநகரிலிருந்து 32 கிலோ மீற்றர் தூரத்தில், மலைகளால் சூழப் பெற்று, சுவாத்திய சுகந்தத்துடன் மகாவலி கங்கை மருவும் வளமார் நாவல் நகர் அல்லது நாவலப்பிட்டியின் கலை இலக்கிய முன்னோடிகளைப் பற்றி எதிர்கால ஆய் வாளர்களின் பார்வைக்கு தகவல் கள் சமர்ப்பிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1920-ல் தான் மலையக எழுத்தின் ஆரம்பம் என்று எடுத்துக் கொண்டாலும், மூத்த தலைமுறைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் கிளர்ந்தெழுந்து தோட்டந் தோறும் துண்டுப் பிரசுரங் கள் விநியோகிப்பதை பிரதானமாகக் கொண்டார்கள். கனதிமிக்க கட்டுரைகளாலும், மரபுக் கவிதைகளாலும் மலையக இலக்கியத்திற்கு ஒரு பலமான அடித்தளத்தை உருவாக்கினார்கள். அந்த வரிசையில் நாவலப்பிட்டியில் கவிஞர் பெரியாம் பிள்ள குறிப் பிடத்தக்க ஒருவர். ஆரம்பத்தில் இவர் நாவலப்பிடிட்க்கு அருகே ஒரு தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளியாக இருந்தார், இவரிடம் அடங்கிக் கிடந்த கவிதா வேகம் காரணமாக தொழிலை உதறித் தள்ளித் தோட்டங்கள் தோறும் - தொழிலாளர் பாடல்களும் மரபுக் கவிதைகளும் அடங்கிய பத்துப் பன்னிரட்டு பக்கங்களைக் கொண்ட சிறு சிறு நூல்களாக அச்சேற்றி, விநியோகித்து ஒரு முழு நேர கவிஞராகத் தோட்டங்கள் எங்கும் சஞ்சாரம் செய்தார். தனக்கென எழுதப்படிக்கத் தெரிந்த ஒரு வாசகர் கூட்டம் அமைத்தார். சுமார் நூறு பிரதிகளை மட்டுமே வெளியிட்டு, ஒரு கபில நிறப் பையில் அடக்கிக் கொள்வார். தொழிலாளர்கள் தரும் அன்பளிப்புகள் தான் இவர் ஜீவனோபாயம் . சுமார் ஐந் தரையடி உயரம். வெள்ளை வேட்டி நெஷனல்.ஒல்லியான தோற்றம் பிரமச்சாரி.
வீரகேசரியிலும் ஆக்கங்கள் வெளிவந்த ஞாபகம். திருவிழாக்களிலும், தோட்டத் தொழிலாளர் மகாநாடுகளிலும் இவரது பிரசுரங்கள் விற்பனையாகும்.
நான் மாணவனாக இருக்கும் போது இவர் எனக்கு அறிமுகமானார். ஒரு சிறு அன்பளிப்பு கொடுத்து அவரது பையிலிருந்து ஒரு கும்மிப் பாடல் பிரசுரத்தை எடுத்துப் படித்து ரசித்த ஞாபகம். அவரும் பாடிக் காட்டினார். சன்மானம் தராத பத்திரிகைகளுக்கு எழுத வேண்டும் என்னும் விருப்பம் அவரிடம் இருக்கவில்லை.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (70)

Page 72
இவரது உறவினர் ஒருவர் தோட்டத் தொழிலாளியாக வாழ்ந்தார். அவரது உண்மைப் பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவரைக் 'கிறுக்கன்' என்று தான் அழைத்தார்கள். அது அவரது புனை பெயரோ என்னவோ தெரியாது. ஆனால், இருந்தாற் போல் ஓய்வு நேரங்களில் 'மூட்' வந்துவிட்டால் மரபுக் கவிதைகளாகவே கிறுக்கித் தள்ளி விடுவதாகச் சொல் வார்கள். சும்மா ஆத்ம திருப்திக்காக.
இப்படியாகத் தோட்டங்கள் தோறும் ஓரளவு கல்வி கற்ற தொழிலாளர்கள் மத்தியில் பத்திரிகைகளில் தமது ஆக்கங்களைப் பிரசுரித்து இலக்கிய உலகில் பதிவு செய்யப் படாத பிறவிக் கவிஞர்கள் வாழ்ந்துள்ளனர்.
இந்த இடத்தில் நாவலப்பிட்டியைச் சூழ்ந்த தோட்டங்களைப் பிறப்பிடமாகக் கொள்ளாத ஒரு தொழிலாளர் ஞாபகத்திற்கு வருகிறார். இவர் 'லபுக்கலயைச் சேர்ந்தவர். 'குறிஞ்சித் தென்னவன்' என்பது இவரது புனைபெயர். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் மரபுக் கவிதைகள் எழுதி மலையகக் கவிஞர்கள் வரிசையில் தடம் பதித்துக் கொண்டவர்.
நாவலப்பிட்டியை 'நாவல் நகர்' என்று மாற்றி 'நாவல் நகர் தீன்மன்னன்' என்னும் புனை பெயரில் மரபுக் கவிதை, மேடை நாடகம், நடிப்பு, தி.மு.க. பாணியில் மேடைப் பேச்சு, போன்ற பல துறைகளில் தமது ஆற்றலை வெளிப்படுத்திய இவரது இயற் பெயர் சி.எம்.பி. மொஹிதீன். இவர் ஒரு பிறவிக் கலை இலக்கிய வாதி. ஓரிரு நாட்களில் மேடை நாடகம் எழுதி அரங்கேற்றும் வல்லமை மிக்கவர். இலக்கியத்தில் ஒரு துறையை தேர்ந்தெடுத்து தன்னை நெறிப்படுத்திக் கொள்ளத் தவறியதால் இவரது ஆக்க இலக்கியத் திறமை இனங்காணப் படவில்லை. 'காங்கிரஸ்' என்றொரு கட்சிப் பத்திரிகையில் நீண்ட காலம் கடமையாற்றிய பின் சுயமாக 'முன்னோடி' என்னும் இலக்கிய மாத சஞ்சிகையை இரண்டு வருடங்கள் தரமாகவும் புதுமையாகவும் வெளியிட்டார். புதுமையும் புரட்சியும் வேகமும் இவருடன் ஒட்டிப்பிறந்த தன்மைகள்.
பிற்காலத்தில் 'உவைஸ் ஹஸரத்' தொடங்கிய 'இஸ்லாமிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவரது திருமணமும், புரட்சித் திருமணமாகும்.
தொழில் காரணமாக கொழும்பிற்குக் குடி பெயர்ந்தார். ஆனால், தொழிலகம் இவருக்குப் பொருத்தமான இடமாகத் தோன்றவில்லை. இலக்கிய முயற்சிகளை விட்டு முற்றாக ஒதுங்கிவிட

வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட் டார். நோய்வாய்ப்பட்டு காலமானார். ஆரம்பகாலந் தொட்டு மல்லிகை இதழ்களை இவர் விரும்பிப் படித்தவர்.
மற்றுமொரு பிறவிக் கவிஞன் 'வழுத்தூர் ஒளியேந்தி' இவரது இயற் பெயர். ஈ.பி. நூர் - முஹம்மது. தமிழகத்தில் வழுத்தூர் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில் காரணமாக 'நாவலப்பிட்டி எஸ்டேட் சப்ளைஸ்' நிறுவனத்தில் இரண்டு தஸாப்தங்களாகக் கடமையாற்றினார். இவர் வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார். மலையகமெங்கும் நடைபெறும் கவியரங்குகளில் இவருக்கு முக்கிய இடமுண்டு. தனது கவிதை வீச்சால் மலையக கவிஞர்கள் வரிசையில் இவர் தடம் பத்தித்துள்ளார். மேடைகளில் உரையாற்றும் போதும், கவியரங்குகளில் பங்குபற்றும் போதும் மிகுந்த உணர்ச்சி வசப் படுவார்.
இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. சிறந்த சிறுகதை எழுத்தாளர். நாவலர் நகர் எட்வட் டானியலின் 'ரோஜா' சஞ்சிகையில் இவர் கதைகள் எழுதியுள்ளார்.
நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தின் உப தலைவராகப் பணிபுரிந்துள்ளார். 1970-ம் ஆண்டளவில் இவர் வழுத்தூர் கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தாயகம் திரும்பிய பிறகு இவரிடமிருந்த தகவல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் குமுதம்' சஞ்சிகையில் இவர் எழுதிய 'மோதினார் சாப்பாடு ' மிக அருமையான சிறுகதை. 'நூற்று நாற்பது நாட்கள் பேசக் கூடாது' (அறபு மொழியில் 'இத்தா') என்ற தலைப்பில் மற்றுமொறு சிறுகதை மிக அற்புதமாக இருந்தது. 1965-ம் ஆண்டு மலையகத்தில் வெளியான 'குறிஞ்சிப்பூ' என்னும் மலையகக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவரது 'நான் செய்த குற்றம்' தலைப்பில் ஒரு நீண்ட கவிதை இடம் பெற்றது.
ஐம்பதுகளில் நாவலப் பிட்டி கதிரேசன் கல்லூரியிலும் சென்ற மேரிஸ் கல்லூரியிலும் எஸ் .எஸ் .சி வகுப்புகளில் கல்விகற்றுக் கொண்டிருந்த மாணவர்களிடையே மலர்ந்த இலக்கிய ஆர்வம் குறிப்பிடத் தக்கது.
அவர்களுள் இன்றைய பிரபல எழுத்தாளர் என்.எஸ்.சிவலிங்கம் 'ஆசிய ஜோதி ஸ்ரீ நேருவுக்கு' என்ற தலைப்பில் ஒரு வரலாற்று நூல் வெளியிட்டார். நாவலப்பிட்டி 'சேலம்பிரிஜ்'ஜில் வசிக்கும் இவர் மேடை நாடகங்களிலும் ஈடுபாடு காட்டினார்.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 71

Page 73
திருக்குறள் டயறி, பாரதி டயறி, கீதை டயறி போன்றவை வெறும் நாட்குறிப்பு மட்டுமன்றி, அறிவு நூல்களாகவும் விளங்குகின்றன. இப்பொழுது அவர் தயாரித்துக் கெண்டிருக்கும் தமிழ், சிங்கள் ஆங்கில டயறி நாட்டில் நிரந்தரச் சமாதானத்திற்கு துணை புரிகிறது.
இரா.பரமேஸ்வரன் ஒரு கவிஞர், எழுத்தாளர் இன்று பெரும்பாலும் சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.
நாவலப்பிட்டிக்கு அருகே தொளஸ்பாகைத் தோட்டத்தைச் சார்ந்த எஸ்.தங்கவேல் மரபுக் கவிஞர். நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார் இவரும் சு. பிரேமசம்பு அவர்களும் லங்கா சமசமாஜக் கட்சியின் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள். 'செங்கதிர் என்னும் தொழிற்சங்கப் பத்திரிகையில் நிறைய எழுதினர்.
பிரேமசம்பு நாவலப்பிட்டி ஆத்மஜோதி அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகத் தொழில் புரிந்தார். தினகரன் பத்திரிகைக்கு நாவலப் பிட்டி குரூப் நிருபராகவும் பணிபுரிந்தார். பத்திரிகை சஞ்சிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதினார். 'இரண்டு நாட்கள்' என்னும் தலைப் பில் இந்தியாவையும் இலங்கையையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு நூலை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்குச் சென்ற இவர் ஒரு பஸ் விபத்தில் காலமானார்.
உலப்பனை சந்தன வேலன் தி.மு.க. பாணியில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதியவர். பெரும் பாலும் பத்திரிகைகளில் 'களம் தேடுவதில்லை.
மூன்று தஸாப்தங்களுக்கு மேலாகக் கதிரேசன் கல்லூரியில் ஆசிரியராகவும், பின்னர் அதிபராகவும் சேவை செய்த ஒரு பெரியார் நா.முத்தையா மாஸ் டர். நகரின் அமைதியான சூழலில் ஆத்மஜோதி நிலையத்தை நிறுவி ஆன்மீகப் பணியில் மக்கள் மத்தியில் மானுட நேயத்தை மலரச் செய்தவர். 'ஆத்மஜோதி' மாத சஞ்சிகையை மூன்று தஸாப்தங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தினார். அதிபர் என்ற முறையிலும், ஆசிரியர் என்ற முறையிலும் ஆத்மஜோதி நிலையமும் கதிரேசன் கல்லூரி மண்டபமும் எமது கருத் தரங் குகளுக் கும், கூட் டங் களுக் கும் எப்பொழுதும் கிடைக்கும். எமது கூட்டங்களுக்கு தூர இருந்து வரும் பிரமுகர்களுக்கு தங்கும்

வசதியளித்து உபசரிக்கத் தவறியதே இல்லை. இவரது சமய இலக்கிய பணிகளுக்கு அருமைநாயகம் மாஸ்டரும், நடேசன் மாஸ்டரும் உறுதுணையாக இருந்தன. முத்தையா மாஸ்டரின் பணிகள் வெளிநாடுகளிலும் தொடர்ந்தது.
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாக இவர் ஆற்றிய பணி தனியாக ஆய்வு செய்ய வேண்டிய ஒரு விடயமாகும். இந்து சமயமும் நாகரிகமும் கற்கும் மாணவர்கள் இவ் ஆய்வினை மேற்கொண்டால் அது காத்திரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தரமான வாசகர்களை உருவாக்கவேண்டும் என்ற இலட்சியத்துடன் 1950-களின் நடுப்பகுதியில் தோன்றிய 'கலைமகள் படிப்பகம்' இலக்கியத் துறையில் பலருக்கு உந்து சக்தியாக விளங்கியது. எழுத்தாளர் இ.ர.சந்திரசேகர சர்மாவின் தலைமையில், சிறந்த மேடை நாடக நடிகனாக விளங்கிய கணபதி, உலப்பனை சந்தன வேலன், ராமகிருஷ்ணன் (ராமு) நாகேந்திர சர்மா. எஸ் .வேலாயுதம், ஆகியோரின் ஒத்துழைப்பு
குறிப்பிடத் தக்கது.
புவியியல் சிறப்புப் பட் டதாரியும், சட்டத்தரணியுமான இரா. சடகோபன் ஒரு சிறந்த முற் போக்குக் கவிஞரும், எழுத் தாளரும், பத்திரிகையாளருமாவார்.
நாவலப் பிட்டி தொளஸ் பாகையில் அமைந்துள்ள 'மொஸ்வில்ல' தோட்டத்தைச் சார்ந்தவர். கவிதை, நாடகம் விமர்சனம், சிறுகதை, பத்திரிகைத் துறை ஆய்வு எனப் பல துறைகளில் தடம் பதித்த இவர் ஒரு சிறந்த ஓவியருமாவார்.
''சமூக அநீதிகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற சீற்றத்துடன் எழுத்துத் துறையில் புகுந்த இளைஞர் வரிசையில் முன் செல்பவர்...'' என்று இவர் கல்வி கற்ற கதிரேசன் கல்லூரி அதிபர் எஸ்.வி.ஆறுமுகம் இவர் எழுதிய 'வசந்தங்களும் வசீகரங்களும்' நூலில் அறிமுகப் படுத்தியுள்ளார்.
சடாகேபன் குழுவினர் கல் லூரியின் ஆண்டுமலரான, 'நற்றமிழ் அருவி'யை சிறப்பாக வெளியிட்டுள்ளனர். சடகோபனின் இலக்கிய நண்பர் குழுவில் சகாய சீலன், மயில்வாகனம், குமாரசாமி, ஜெயசீலன், ஆனந்த குமார், விவேகானந்தன், சிவப்பிரகாசம், யோகரட்ணம், ஹூசைன், ஹஸ்கின், கனகராஜ், ஓவியர் தர்மசீலன், ஆர்.டி. பாலா
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
72

Page 74
போன்றவர்கள் குறிப் பிடத் தக்கவர்கள் . இரா.சடகோபனின் தந்தையாரும் ஒரு கலை ஆர்வலர். தர்மசீலன், கணேசதாசன், பத்மகுமார் ஆகிய மூவரும் இணைந்து 'மலைக்குருவி' கையெழுத்து சஞ்சிகையை வெற்றிகரமாக நடத்தினர்.
1950-களில் சென்ற்மேரிஸ், கல்லூரியில் கல்வி கற்றவர்களில் 'வின்சன்ஸ்' என்பவர் தமிழ் சினிமா துறையில் ஆர்வம் கொண்டு தமிழ் நாட்டுக்கு புலம் பெயர்ந்தார் என்று அறியக் கிடக்கின்றது.
சுரா ஸ் டீன் என்பவர் பொறியியல் இலக்கேரானிக் துறையில் ஆழ்ந்த அறிவுடையவர். ஆயினும் நாடகத்துறையில் ஈடுபாடு திரைப்படத்தின் சகல துறைகளையும் மிகத்துல்லியமாக ஆராய்ந்து வைத்துள்ளார். புதுமையான ஒரு தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்ற இலட்சியம் உடையவர்.
நாவலப்பிட்டி கொத்மலை வீதியில் வாழ்ந்த பக்திக் கவிஞர் பரமஹம்சதாசனார் நீண்ட காலமாக மரபுக் கவிதைகள் எழுதினார். இவரது பெரும்பாலான கவிதைகள் தினகரன் வீரகேசரி இதழ்களில் வெளியாகின.
1960-களில் நாவல் நகர் சித்தி பரீதா முஹம்மது கட்டுரை, கவிதை வானொலி நாடகம் போன்ற துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
என்.எஸ்.பாக்கியநாதன், மொஹிடீன் பிச்சை, ஆத்மஜோதி அச் சகத்தில் கடமையாற்றிய பாலபாரதி ஆகியோரின் இலக்கிய ஆர்வமும் பங்களிப்பும் குறிப்பிடத் தக்கது. பால பாரதியின் மரபுக் கவிதைகள் பெரும்பாலும் ஞாயிறு தினகரன் மஞ்சரியிலும் வீரகேசரியிலும் பிரசுரம் பெற்றுள்ளன.
பயிற்றப் பட்ட விஞ்ஞான ஆசிரியரான ஹபுகஸ்தலாவை ஏ.ஏ.ஹசீன் புதுக்கவிதையில் அதிக ஈடுபாடு. இவரது கவிதைகளில் புரட்சிகரமான கருத்துக்கள் தொனிக்கும். கவியரங்குகளில் பங்குபற்றும் போது உணர்ச்சிவசப் படுவார். இவருடைய கட்டுரைகளில் நிறையத் தகவல்கள் பொதிந்து கிடக்கும்.
நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் கே.வேலாயுதன் அவர்கள் தற்பொழுது புத்தளத்தில் குடும்பமாக வாழ்கிறார். இவருக்கு சிறுகதைத் துறையிலும் ஆழ்ந்த ஈடுபாடு. அண்மையில் இவரது செவத்தக் கமலம் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியது.

நாவலப்பிட்டியில் நீண்ட காலமாக வாழ்ந்த ஏ.எஸ்.வடிவேல் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். வீரகேசரிச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர் இவர். நாவலப்பிட்டியில் ஒரு தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்குப் பொறுப்பாகக் கடமையாற்றினார். திரு. சதாசிவம் புலோலியூரைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் நாவலப்பிட்டிக்கு அருகில் கட்டபூலா தேயிலைத் தோட்டத்தில் இரு தஸாப்தங்களுக்கு மேலாக வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய இவர் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை இலக்கியமாக்கியவர். நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடாக இவரது 'யுகப்பிரவேசம்' 1970-களில் வெளியாகியது. அதைத் தொடர்ந்து அவரது நாவல்கள் வெளியாகின. 'நாணயம்' நாவலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.
ஆசிரியர் நீலன் மயில்வாகனம் இலக்கியத் துறையில் மேடை நாடகம் சமய, இலக்கியக் கட்டுரைகள், சங்கீதம் போன்ற துறைகளில் பங்களிப்பு செய்து வருகின்றார்.
'மாலியின் சகோதரர் இராமனுஜம் நாட்டார் பாடல், கட்டுரை, பத்திரிகைத் துறை போன்ற வற்றில் ஈடுபாடுடையவர்.
நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். ஆன்மீக கலை இலக்கிய மன்றம் மூலம் பல ஆண்டுகளாக கே.பொன்னுத்துரை அவர்கள் காத்திரமான இலக்கியப் பணி புரிந்து வருகிறார்.
நாவலப் பிட்டியின் இலக்கிய வரலாற்றில் 1959ம் ஆண்டு தொடக்கம் 1970 ரைக்கும் மிக முக்கியமான ஒரு காலகட்டமாகும்.
1960-ல் கவிஞர் பி.மகாலிங்கம் (மாலி) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் மிகுந்த வேகத்துடன் செயற்பட்ட ஓர் இலக்கியவாதி. இவரது அயராத முயற்சியினால் நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது. சிறுகதை எழுத்தாளர் சந்தனப் பிச்சை கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி, பிரேசம்பு, ப.ஆப்டீன், பெ.இராமனுஜம் போன்றோர் இளம் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப் பட்டு இலக்கியக் கருத்தரங்குகளையும், கவியரங்குகளையும் நடத்தினர். இச் சங்கத்தின் செயற்பாடுகளால் நாவல் நகரில் ஒரு புதிய விழிப்புணர்வு முகிழ்ந்தது.
நாவலப்பிட்டிக் குச் சுகாதரா வைத்திய அதிகாரியாக மாற்றம் பெற்று வந்த நாடறிந்த
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (73)

Page 75
எழுத்தாளர் நந்தி அவர்களின் வருகை இளம் எழுத்தாளர்களிடையே ஒரு திருப்பத்தையும் உதவேகத்தையும் தோற்றுவித்தது.
''இளம் எழுத்தாளர் சங்கங்கள் தோன்றி வருதல், மலையகத்தின் இலக்கிய விழிப்புணர்ச்சியைக் காட்டுகிறது...'' என்று கனக செந்தி நாதன் தமது ' ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். 'வரதரின் பல குறிப்பிலும் இச் சங்கத்தின் பெயர் பதிவாகியுள்ளது.
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் டாக்டர் நந்தி அறிமுகப் படுத்தினார். அவர்களுள் கே. டானியல் டொமினிக் ஜீவா ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.
இவர்களது படைப்புகளைப் பற்றி கருத்துப் பரிமாறல் மூலம் நாவலப்பிட்டியில் முற்போக்கு இலக்கியச் சிந்தனை வித்திடப் பட்டது.
ஆக்க இலக்கியத் துறையில் பிரதேச மண்வாசனை சமூகப் பார்வையுடன் மிளிர்ந்தன. நந்தியின் தலைமையில் அடிக்கடி இலக்கியச் சந்திப்புகளும், விமர்சனக் கருத்துப் பரிமாறல்களும் இடம் பெற்றன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச) சார்ந்த பல எழுத்தாளர்களின் கடிதத் தொடர்புகள் காத்திரமான வழிகாட்டல்களாக அமைந்தன.
1963-ம் ஆண்டு இ.மு.எ.ச.வின் நாவலப்பிட்டி கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
டொமினிக் ஜீவா, நந்தி, பிரேம்ஜி, சோமகாந்தன் போன்ற இ.மு.எ.ச.வின் தேசிய சபை உறுப்பினர்கள்
வழிகாட்டினர்.
இலக்கியத்தில் தேசியப் பிரச்சினைகள் அடிப்படையாக மிளிர வேண்டும் என்ற கொள்கை முன்வைக்கப் பட்டது.
நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கமும், இ.மு.எ.ச. நாவலப்பிட்டி கிளையும் இணைந்து இரு தஸாப்தங்களுக்கு மேலாக நவீன இலக்கியத் துறையில் ஆற்றிய சேவைகள் இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்ச்சியையும், எழுத்தாளர்களிடையே ஒரு புதிய போக்கையும் நிலைநாட்டியிருக்கிறது.
இத்தகைய ஒரு திருப்புமுனைக்கு 'மல்லிகை' சஞ்சிகையின் வருகையும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

மல்லிகையில் எழுதி தமது இலக்கியப் பாதையை செப்பனிட்ட முன்னோடி எழுத்தாளர்கள் பலர். தரமான நூல்களை வெளியிட்டு இன்று ஒரு பலம் வாய்ந்த நிறுவனமாக வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது 'மல்லிகைப் பந்தல்'. 'இரவின் ராகங்கள்' சிறுகதைத் தொகுப்பு மல்லிகைப் பந்தலின் ஐந்தாவது வெளியீடு. மல்லிகைப் பந்தலின் ஊடாக இது தமிழ் நாட்டில் மறுபதிப்பு செய்யப் பட்டது. இது நாவல் நகர் எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். 1996-ம் ஆண்டு வெளியான 'கருக் கொண்ட மேகங்கள்' நாவலும் எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைத்த மற்றுமொரு வெற்றி. இவ்விரு படைப்புகளின் ஆசிரியர் ப.ஆப்டீன். இவருக்கு அண்மையில் கலாபூஷணப் பட்டம் வழங்கப் பட்டது.
இ.மு.எ.ச.வும் மல்லிகையும், மல்லிகைப் பந்தலும் நாவலப்பிட்டியின் இலக்கிய வளத்திற்கு பசளை இட்டு மேம்படுத்தியிருப்பதுவும் நன்கு புலனாகின்றது.
நாவலப்பிட்டி இந்து வலிபர் சங்கம், நற்றமிழ்க் கழகம், இளம் எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நாவலப்பிட்டிக் கிளை , நாவலப்பிட்டி மலாயர் சங்கம் போன்றவற்றின் உறுப்பினர்கள் நாவலப்பிட்டியின் இலக்கிய வளர்ச்சிக்காகப் பங்களிப்புகள் செய்துள்ளனர். 1980-களில் 'மலையக மறுமலர்ச்சி மன்றம்' என்ற இலக்கிய அமைப்பு கலை இலக்கிய வளர்ச்சிக்கு கணிசமான சேவை செய்துள்ளது.
இக்காலகட்டத்தில் புதியவர்கள் இலக்கிய உலகில் பிரவேசித்துள்ளனர். அவர்களுள் கிரெகரி, செல்வி ஸ்டெல்லா மேரி ஆகிய இருவரும் தரமான சிறுகதைகளை எழுதியுள்ளனர்.
இவ்வாறாக நாவல் நகர் சார்ந்த முன்னோடி படைப்பாளிகள் இலக்கிய உலகில் காத்திரமான பங்களிப்புகள் நல்கி புதுமை சேர்த்துள்ளனர். மலையக இலக்கியத்திற்கு மட்டுமன்றி ஈழத்து இலக்கியத் திற் கும் நாவலப் பிட்டி கலை இலக்கியவாதிகள் ஆற்றும் பணி காலத்தால் மறக்கப் படாதது.
எனினும் அண்மைக் காலமான நாவலப் பிட்டியின் இலக்கிய வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 |
74

Page 76
Best Wishes to
Mallikai 387
Importers & Distribu
Electrical
KALKI
BG. B 102, Wolfendhal St
Tel: 328729. Fax: 94-1-43962
E-mail: kall

Ah Year Issue
itors of Machinery & Equipments
SONS
uilding reet, Colombo - 13. - 332949-50 23, 94-1-576273 zison@slt.lk
380augi 500IGDuit 201uf - 2003 75

Page 77
இஸ்லாமிய இலக்கிய முஸ்லிம் இலக்கியமும்
ா டந்த நான்கு நூற்றா
தமிழ் இலக்கியங்கள்
இங்கு இஸ்லாமிய 8 திருக்குர்ஆன் என்பவற்றை |
இஸ்லாமியமென்றால் இ பேசுவோருமுளர். இந்தியாவில் மாநாடுகளென்று கொண்டா படுத்துகிறார்கள். அதன் தெ வாழ்நிலை தொடர்பான இன்
பரி
மாறாக, அதனைப் படைப்பாளிகளுக்கு பொன்னா நடக்காமலில்லை.
'தமிழ் இலக்கிய வளர்ச்சி புகுவோர் எம்.எம்.உவைஸோ
முஸ்லிம்களால் அவ்வா கூட, இஸ்லாமிய இலக்கியம் ஆக்க இலக்கியத்துக்கு முக்கி கவிதை என்று வெளியிட்ட இருந்துவிடுகின்றன.
எனவே முஸ்லிம் இலக்கி மாநாடுகள் நடாத்த வேண்டிய வாழ்க்கைச் சிக்கல்கள், முர அடிப்படையைத் தேடி தீர்வை முடியும்.
உண்மையில் அரசியல், முஸ்லிம்கள், தங்களைத் செயற்படுகிறார்களே தவிர, ? உன்னத வழி முறைகளை ெ

3824 விகை5ை 6லர்
200327பரி
பமும்
திக்குவல்லை கமால்
ண்டுகளாக நாலாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமிய - படைக்கப் பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுவர். இலக்கியமென்பது நபிமார்கள், நபித் தோழர்கள், மையப் படத்தி எழுதப்பட்ட எழுத்தையே குறிக்கும். தைத் தவிர வேறில்லை என்று இன்றும் அடித்துப் லும் சரி, இலங்கையிலும் சரி, இஸ்லாமிய இலக்கிய டப் படும்போதும் சரி இதனையே முக்கியத்துவப் தாடர்ச்சியாக வளர்ச்சியாக முஸ்லிம் மக்களின் மக்கியத்தைப் பேசப் பயப்படுகிறார்கள்.
பேசாமல் கிடப்பில் போட்டுவிட்டு, அதன் டை போர்த்தி, பொற்கிழி வழங்கிவிடும் கைங்கர்யமும்
சியில் முஸ்லிம்களின் பங்கு' என்று எழுதவும் பேசவும் ரடு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள். ப்போது வெளியிடப்பட்ட பத்திரிகை, சஞ்சிகைகள்
தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டனவே தவிர, கியத்துவம் கொடுக்கவில்லை. இடைக்கிடை சிறுகதை, டாலும் அவையும் இலட்சியப் படைப்புக்களாகவே
யம் தொடர்பாகப் பேசவும் எழுதவும் ஆய்வு செய்யவும் தேவை இருக்கிறது. அப்போது தான் முஸ்லிம்களின் ண்பாடுகள், போராட்டங்களை அறியமுடியும். அதன் நோக்கி இட்டுச் செல்லும் சிந்தனைகளை விதைக்க
பொருளாதார, சமய ரீதியாக மேல்நிலையில் இருக்கும் தக்கவைத்துக் கொள்வதில் குறியாக இருந்து உண்மையான இஸ்லாமியர்களாக... இஸ்லாம் கூறும் மய்ப்பிப்பவர்களாக வாழவில்லை. அவர்கள் அவ்வாறு
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (76

Page 78
வாழ்ந்திருந்தால், சகல சமூகப் பிரச்சினை களுக்குமான தீர்வை இஸ்லாமே தந்திருக்கும்.
நவீன முஸ்லிம் எழுத்தாளர்கள் தங்களது ஆக்கங்களில் இந்த நிலைப்பாடுகளை மிகத் தெளிவாகத் தோலுரித்துக் காட்டுகிறார்கள். அக்கு வேறு ஆணிவேறாக வெளிப்படுத்துகிறார்கள். முகமூடிகளைக் கிழிக்கிறார்கள். வேஷங்களைத் திரை நீக்கிக் காட்டுகிறார்கள். இந்த எழுத்துத் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தான் 'முஸ்லிம் இலக்கியம்' பற்றிப் பேசுகிறார்களில்லை. இஸ்லாமிய இலக்கியம் என்று கூத்தாடுகிறார்கள்.
அத்தோடு விட்டுவைக்கவில்லை. தங்களது குட்டு வெளிப்படுகிறதே என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முஸ்லிம் களைப் புண் படுத்துகிறார்கள் ....... இஸ்லாத்தை இழிவுபடுத்துகிறார்கள். வெளிநாட்டுப் பணத்துக்காக இயங்குகிறார்கள். ஸல்மான் ருஸ்தியைப் போல் எழுதுகிறார்கள்'' என் றெல் லாம் ஒப்பாரி வைக்கிறார்கள்.
இவர்கள் சொல்வதெல்லாம்... இஸ்லாத்தைப் பற்றி எழுதுங் கள்...... பொழுது போக்காக எழுதுங் கள்...... ஆபாசமாக எழுதினாலும் பிரச்சினையில்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகளை எழுதி எங்களைச் சீண்ட வேண்டாம் என்பதுதான்.
புத்திஜீவிகளுக்கு விஷயம் விளங்கினாலும் மேல்தட்டு மனிதர்களை பகைத்துக் கொள்ள விரும்பாத மத்தியதர வர்க்க மனோபாவத்தோடு மெளனமாகி விடுகின்றனர். பாமரர்கள் அவர்கள் பின்னே ஜிஹாதுக்கு கிளம்பிவிடுகிறார்கள்.
அன்றும் சரி இன்றும் சரி, இந்த நிலைப் பாடு தொடர்வதை அவதானிக்க முடிகிறது.
1970 முற்பட்ட காலத்தில் இத்தகைய தாக்கத்துக்கு இலக்காகியவர்களாக மூவரைக் குறிப்பிடலாம். எச்.எம்.பி.முஹிதீன், இளங்கீரன் (சுபைர்), ஏ.ஏ.லத்தீஃப் ஆகியோரே அவர்களாவர்.
இவர்கள் மாக்ஸியத்தை ஏற்றுக் கொண்டவர்கள். இடதுசாரிக் கட்சிகளில் இணைந்து அவற்றின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள். பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி போன்ற கட்சிகளில் இணைந்து, முஸ் லிம் கள் அதன் வளர்ச்சிக்காக உழைப்பதுபோல....
மேற்குறித்த மூவரும் நாஸ்தீகர்களல்ல. ஆனால் நாஸ்திகர்களென்று முத்திரை குத்தப்

பட் டார்கள். இவர்கள் இஸ்லாத்தை மறுத்தவர்களல்ல. ஆனால், இஸ்லாத்தின் எதிரிகளாகக் காட்டப்பட்டார்கள். அரசியல் ரீதியாகவும் முஸ்லிம் சமூகத் துக் குள் ளே இவர்களால் பிரவேசிக்க இயலாமல் செய்துவிட்டது. இவர்களில் காணப்பட்ட சில பலவீனங்களையும் நாம் கணக்கிலெடுக்காமலிருக்க முடியாது.
இளங்கீரன் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர். முப்பதுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். வர்க்கப் போராட் டத்தைச் சுட்டிய இவரது முற்போக்கான படைப்புக்கள் பெருந் தொகை வாசகர்களை ஈட்டியிருந்தது. கைலாசபதி அவர்கள் இவரது 'நீதியே நீ கேள்' நாவலை பெரிதும் சிலாகித்துள் ளார். 'அவளுக்கொரு வேலை வேண்டும்' இளங்கீரனின் இறுதியானதும் உச்சமானதுமான நாவலாகும். யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த இவர், முஸ்லிம் பகைப்புலத்தில் நின்று எந்தவொரு நாவலையும் எழுதவில்லை.
எச்செம்பி, முஹிதீன் பத்திரிகையாளராகவே பெரிதும் செயற்பட்டார். ஆக்க இலக்கியங்கள் மிகக் குறைவு. எதை எழுதினாலும் வாசகரை ஈர்க்கும் எழுத்து நடை இவருக்கிருந்தது. ஆங்கிலப் புலமை மிக்கவர். பெரும் பாலும் பேச்சாளனாகச் செயற்பட்டார். இறுதிக் காலகட்டத்தில் மிலாத் மேடைகளிலும் பேசினார்.
ஏ.ஏ.லத்தீஃப் சோவியத் தகவல் பிரிவில் கடமையாற்றினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை, சிறுகதைகள் சில எழுதியுள் ளார். முன்னைய இருவரிலிருந்தும் இவர் வித்தியாசப்பட்டு நிற்கிறார். இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சரியாக எடைபோட்டு அவர்களுக்குள் எப்படி பிரவேசம் செய்வதென்பதை தெளிவாக விளங்கியிருந்தார்.
1967-களில் 'இன்ஸான்' என்ற வாராந்தரியை இவர் ஆரம்பித்து நான்கு வருடங்கள் நடாத்தினார்.
இன்ஸான் என்ற அறபுச் சொல் மனிதன் என் பதைக் குறிக்கும். அறபு எழுத்தணிப் பாணியிலேயே இதனை வடிவமைத்திருந்தார். இதன் முகப்புச் செய்தி கூட முஸ்லிம் தமிழிலேயே எழுதப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் விடயங்கள் செய் திகளாக எழுதப் பட் டன. அரசியல் விமர்சனங்கள் இடம் பெற்றன. சமூகப் பிரச்சினகள் அலசப்பட்டன. சர்வதேச இஸ்லாமிய உலகு பற்றியும் உலகப் புகழ் பெற்ற முஸ்லிம் இலக்கியவாதிகள் தொடர்பான கட்டுரைகள் இடம்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 77

Page 79
பெற் றன. ஏகாதிபத்திய நடவடிக்கைகள்
அப்பட்டமாக்கப் பட்டன."
எல்லாவற்றையும் விட படைப்பிலக்கியத்துக்கு கொடுக்கப் பட்ட இடம் முக்கியமானது. வாரம் ஒரு சிறுகதை சித்திரத்தோடு இடம் பெற்றது. கவிதைகள் நிறைய வெளிவந்தன. மொழிபெயர்ப்புக் கவிதைகள் பிரசுரிக்கப் பட்டன.
சமூகப் பிரச்சினைகள் மிக அழுத்தமாகவும் தெளிவாகவும் அதிரடியாகவும் சிறுகதைகளில் இடம் பெற்ற காலகட்டம் இதுதான். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் உள்ளீடு தொடர்பான புரட்சி இன் ஸானோடு தான் ஆரம்பித்ததென்றால் அது தவறில்லை. இன்ஸான் எழுபதில் ஓய்ந்து போனபின்பும் அதன் தொடர்ச்சி அறுபடவில்லை.
ஈழகேசரிக் கதைகள், மறுமலர்ச்சிக் கதைகள், சுதந்திரன் கதைகள், மல்லிகை கதைகள் என்று வெளிவந்து கொண்டிருப்பது போல், இன்ஸான் கதைகளென்று ஒரு இருபத் தைந் து கதைகளையேனும் தொகுத்து வெளியிட முடிந்தால் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் ஆய்வு செய்யவும் நிச்சயம் உதவும்.
எம்.எச்.எம். சம்ஸ், ஏ.இக்பால், யுவன், வை.அஹ் மத், பண் ணாமத்துக் கவிராயர், எஸ் .எல் .எம் ஹனீபா, மொயின் ஸமீன் , சாரணாகையூம், எம்.எஸ்.ஏ.ரஹீம், எம்.எல்.எம்.மன்சூர், கலைவாதி கலீல், ஜௌபர் மெளலானா, எம்.ஏ.அஸீஸ், திக்குவல்லை கமால் போன்றவர்கள் இன் ஸானை சிறப் பாகப் பயன் படுத்திக் கொண்டவர்களாவர்.
சகோதரத்துவம், சமத்துவம், சமூகநீதி போன்ற அடிப்படைகளை முன்னிறுத்தி, பெண்ணடிமை, மேலாதிக்கம், குருத்துவம் போன்றவற்றை எதிர்த்தும், உழைப்பு, வளப்பகிர்வு, சமூகப்பணி போன்றவற்றை வலியுறுத்தியுமே கதை, கவிதைகள் பின்னப்பட்டன. இவை அனைத்துமே இஸ்லாம் விதந் துரைக் கு ம் உயர் அம் சங் களுக்கு மாறுபடவில்லை. எனினும் மேல் வர்க்கத்தை உலுக்கியதால், இத்தகைய எழுத்தாளர்கள் 'இஸ்லாமிய எதிரிகளாகக் காட்டப் படும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இன்ஸானின் அணுகுமுறையால் வெகுவாக ஈர்க்கப் பட்டவர் ஷம்ஸ். பல்துறைப் பங்களிப்பை அவர் செய்தார். சிறுகதை, கவிதை, சமூக விமர்சனம், செய்திகள் என்று வாராவாரம் எழுதத் தொடங்கினார். தன்னை முழுமையாக உள்வாங்கிக்

கொண்டவராக ஷம்ஸை லத்தீஃப் இனம் கண்டார். கொழும்பிலிருந்து வீடு தேடிவந்து அவரது பங்களிப்பையும் நட்பையும் உறுதிப் படுத்திக் கொண்டார்.
இன் ஸான் தொடர்பு ஏற் படு ம் வரை படைப்பிலக்கியம் செய்திருந்தாலும் கூட, எழுத்தின் சமூப் பெறுமானத்தை அவர் புரிந் து கொண்டிருக்கவில்லை. ஒரு ஆற்றல் வெளிப்பாடாக மட்டுமே அவ்வப்போது செய்துவந்தார். இன்ஸான் ஷம்ஸை முற்றுமுழுதாகவே மாற்றியமைத்தது. கனன்றெழும் உணர்வோடு சமூகத்தைப் புடம்போட அவரது எழுத்துக்கள் புறப்பட்டன.
லத்தீ...புக் கூடாகவே மார்க்ஸிய சிந்தனைகள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மல்லிகை சஞ்சிகை, படைப்பாளிகள் தொடர்பு, பரந்த வாசிப்பு போன்ற விதங்களில் தனது ஆளுமையை ஆழ அகலப் படுத்திக் கொண்டார்.
பின் நாளில் அஷ்ஷரா போன்ற பத்திரிகை நடாத்திய போதும் அதிலே இன் ஸானின் தாக்கத்தை காணமுடிந்தது.
லத் திஃபின் மறைவுக்குப் பின்னரும் முழுமையாக அதே நெறியிலே சென்றார் ஷம்ஸ். தன் னோடு தொடர்புபட் டவர்களையும்
அரவணைத்துக் கொண்டார்.
கிராமத்திலே வாழ்ந்தவர் என்ற வகையில் ஷம்ஸ் சநாதனவாதிகளதும் பிற்போக்குச் சக்திகளதும் பலவிதமான தொந்தரவுகளுக்கு கடைசிக் கட்டத்திலும் ஆளானார். எனினும் கடைசி மூச்சுவரை பின் வாங்கவோ ஒதுங்கவோ இல்லை.
முன் அனுபவங்களைக் கொண்டு சமூகத்தின் மத்தியில், ஒரு முஸ்லிம் எழுத்தாளன் இலக்கியப் பணியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டுமென்று லத்தீஃப் வடிவமைத்தார். இன்ஸான் மூலம் அதனை முன் னெடுத்தார். ஷம்ஸ் அதனை முழுமைப் படுத்தினார். இன்று இருவருமே எங்கள் மத்தியில் இல்லை.
முதலாளித்துவம் இருக்கும் வரை அதன் ஆதிக்க வெறித்தனம் செயற்பட்டுக் கொண்டே இருக்கும். இன்ஸான் அணியில் நெறிப்படுத்தப் பட்டவர்களும், அதன் கருத் தோட்டத்தில் கைகோர்த்துக் கொண்டவர்களும், தங்களது இலக்கியப் பணியை மேலும் வீச் சோடு வெளிப்படுத்தியே வருகின்றனர்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
78

Page 80
ஈழத்து முன்னோடி
நாவல்கள் (1856 - 1940)
செங்கை ஆழியான் ச க.குணராசா
33:23
25 லர் 20032வரி

*4'' -ச/t:43:4"+
- **** * * *. * 2. பகல் ***: '
'ழத்தில் தமிழ் நாவலிலக்கியம் தோன்றி 146 வருடங்கள் (2002) கழிந்துவிட்டன. ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் ஆரம்பம் 1856-ல் 'காவலப்பன் கதை' என்ற நுாலுடன் ஆரம்பமாகின்றது. தமிழின் முதல் நாவலென அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம்' (1876) வெளிவருவதற்கு இரு தசாப்தங் களுக்கு முன்னாலேயே நாவலின் சாயலில் காவலப்பன் கதை வெளிவந்து விட்டது குறிப்பிடத் தக்கது. அதனைத் தொடர்ந்து பல நாவல்கள் வெளி வந்தன. ஆங்கிலப் புலமை வாய் ந் த கல வி யா ளர் கள் மேலைத் தேய இலக்கிய வகையான ஆங் கில நாவல் களைப் படித்ததன் அருட்டுணர்விலும், தமிழக ஆரம் ப க க சநtes ஈங்பத்தார்களை அவர்கள் நாவல்களைப் படித்ததன் அருட்டுணர்விலும் ஈழத்தில் நாவல்களை எழுதியிருக்கிறார்கள் என்பதில் இரண்டு கருத்துக்களில்லை. இலக்கிய வரலாற்றில் உரைநடையின் வருகையும் அதனோடு உரைநடையில் கதை கூறும் முறையும் தவிர்க்க முடியாத கால நிகழ்ச்சிகள் . ஈழத்தவர்கள் அக்கால ஓட்டத்தில் தம்மையும் இணைக்காது தனித்து நின்றுவிடமுடியவில்லை. நாற்பத்தைந்து நாவல்கள்
1856-லிருந்து 1940 - வரையிலான எண்பத்தினான்கு வருட இடைவெளியில் ஈழத்தில் ஏறத்தாழ ஐம்பது நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் என்னால் நிச்சயமாகக் குறிப்பிடத் தக்கனவாக 45 நாவல்கள் உள்ளன. அவற்றினைப்
ஆரோக்கம் பட்டியலிட்டு இங்கு
நீல கண்டன். ஆவணப்படுத்துவது வ ரு ங க ா ல
ஆம் அத்தியாஸ் ஆய் வா ளருக்கு
4t: 23 : கத்தக் கார்க்கி : 93wwதம்
**: * *ஜப் தகஜ: சக்க :** * - உதவும் என
- *கரதா ஆழx:3ஃஜமாதம் நம்புகின்றேன்.
» ** **ச்** தலை :த.464. : 835 * ஜா
*த்*: 23 :4 ண் ** * ** ** * * A # ? 5 :* ... - 8 * ** **.க, அ. < 5: *:*. **...*: :::.:54ல் &: *:•4:44
**.* தன் ததார் , 45 -'
sri *தகம்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
79.

Page 81
- - சு - - N -
23
காவலப்பன் கதை (1856) அசன்பேயுடைய கதை (1885) - முகமது காசி ஊசோன் பாலந்தை கதை (1891) - எஸ்.இன் மோகனாங்கி (1896) - தி.ச.சரவணமுத்துப்பிள் இன்பவதி (1902) - த.கைலாசபிள்ளை
கமலாவதி (1904) - சுவாமி சரவணமுத்து 7 வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜெயம் (1905
நொறுங்குண்ட இதயம் (1914) - மங்களநாயகி
உதிரபாசம் அல்லது இரத்தினபவானி (1915) 10 விஜயசீலம் (1916) - சி.வை. சின்னப்பபிள்ளை 11 சம்சோன் கதை (1911) - எஸ். தம்பிமுத்துப்பிள் 12 சுந்தரன் செய்த தந்திரம் (1918) - எஸ். தம்பி 13 நிலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு (1923) 14 காசிநாதன் நேசமலர் (1924) - ம.வே.திருஞா 15 இராசதுரை (1924) - செம்பொற்சோதீஸ்வரன் 16 நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் (1925) - ! 17 சித்தகுமாரன் (1925) இடைக்காடர் 18 அரியமலர் (1926) மங்களநாயகி தம்பையா 19 அழகவல்லி அல்லது பிறர்க்கிடு பள்ளம் (192 20 கோபால நேசரத்தினம் (1927) ம.வே.திருஞ 21 புனிதசீலி (1927) - ஞானச்சகோதரர் ஜோன்பே 22
துரைரத்தினம் நேசமணி (1927) - ம.வே.திரு
சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் 24 பாவசங்கீர்த்தன் இரகசியப் பலி (1928) 25 சரஸ்வதி அல்லது காணாமற்போன பெண்மணி 26 தேம்பாமலர் (1929) - சார்ள்ஸ் ரிக்னி 27 காசிநாதன் நேசமலர் (1929) - ம.வே.திருஞா 28 அருமைநாதன் (1930) - ஞானசகோதரர் ஜோ 29 பூங்காவனம் (1930) - வண்ணை மா.சிவராமலி 30 வீராம்பாள் அல்லது விபரீத மங்கை (1930) 31 மேகவர்ணன் (1930) - வே.வ. சிவப்பிரகாசம் 32 குலநாயகி திலகவதி (1930) - ம.க. சின்னையா 33 பவளகாந்தன் அல்லது கேசரிவிஜயன் (1932) 34 அருணோதயம் அல்லது சிம்மக்கொடி (1933) 35 ஞானபூமி (1933) - சார்ள்ஸ் ரிக்கி 36 அரங்கநாயகி (1934) வை. ஏரம்பமுதலி 37 உத்தம மனைவி (1935) - பொன் குமாரவேற் 38 செல்வரத்தினம் (1935) - வே.நவரத்தினம் 39 இதயரத்தினம் (1935) - ஞானசகோதரர் ஜோன் 40 காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936) -
தேவி திலகவதி அல்லது குப்பையிற் குண்டும் 42 காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவும6 43 செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக்குச் ச 44 சுந்தரவதனா அல்லது இன்பக் காதலர் (1938) 45 சேரமாவதி அல்லது இலங்கை - இந்தியர் நட்பு ஆய்வுத் தகவல்கள்
இந்த ஈழத்தின் முன்னோடி நாவல்கள் பற்றிய பார்ப்போம்:
*84 & 99% ஆ
1
MA

Page 82
2.அம்பலப்/தக் க$)) -6.
கோச்சல பத்தி: சகியா ம. வெ. திருஞானசம்பந்தப்பிள்ளை
சியற் ?vஓ.
புதன், 1.4 பரிஸ்,
144..வா து > 1. ' '$ .. )+ 4. !* * ) :: - .,
அரி.. ஆக்ட்கட் • 4.
1944.
** '.t'' %81:%.
-'சி!*igi 1sg:34:41;
1. ஈழத்து நாவல்கள் போல - நேசரத்தினம்.
பற்றிய தகவல்களைத் தரும் நூல் களென இரசிகமணி கனகசெந்தி நாதனின் 'ஈழத் து இலக்கிய வளர்ச்சி' (1964), சில்லையூர் செல்வராசனின் 'ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி (1967),  ேப ர ா ச ா யர் க.கைலாசபதியின் 'தமிழ் நாவல்
இலக்கியம்' (1968), பேராசிரியர் நா.சுப்பிரமணியத்தின் 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' (1978) என்பவற்றினைக் குறிப்பிடலாம். இவற்றில் ஈழத்தின் ஆரம்ப நாவல் கள் குறித்த விபரங்கள் உள் ளன. கைலாசபதி தவிர்ந்த மற்றைய மூவரும் ஈழத்தின் ஆரம்ப நாவல்களுக்கு மிக முக்கியத்துவம் தந்துள்ளனர். தமக்குக் கிடைத்த நாவல்களை ஆய்விற்கெடுத்துள்ளனர். இங்கு பட்டியலிட்ட முழு நாவல்களும் அவர்களின் ஆய்விலகப்படவில்லை. இவர்களோடு சோ சிவபாதசுந்தரம், சிட்டி சுந்தரராஜனுடன் இணைந்தெழுதியுள்ள தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்" என்ற நூலிலும் ஈழத்து நாவல் வரலாறு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. 2. ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய விபரங்களை மூவர் நுாற் பட்டியல்களாகத் தொகுத்து வெளியிட்டுள் ளனர். 1971-ம் ஆண்டு கனகசெந்திநாதனால் வெளியிடப்பட்ட 'ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டியில் முன்னோடி நாவல்கள் பற்றிய விபரங்களில்லை. நவீன நாவல்கள் பற்றிய தகவல் களேயுள் ளன. அதேயாண் டு க.கைலாசபதியும் எஸ்.எம்.கமாலுதீனும் தொகுத்து வெளியிட்ட 'ஈழத்துத் தற்காலத் தமிழ் நூற்காட்சி - 1947 -1970 தேர்ந்த நூற்பட்டியல்' என்ற ஆவணத்தில் தமிழ் நாவல்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. 1977-ல் நா.சுப்பிரமணியன் வெளியிட்ட ''ஈழத்துத் தமிழ் நாவல்கள், நூல் விபரப் பட்டியல் 1885-1976" இல் ஆரம்ப நாவல்கள் பல குறித்து விரிவான செய்திகளுள்ளன. 3. ஈழத்தின் குறிப் பிடத்தக்க முன்னோடி நாவல்கள் குறித்துத் தனித்தனியான ஆய்வுக் கட்டுரைகளைப் பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். 1962 - ம் ஆண்டு 'வீரசிங்கன்' கதை குறித்தும்

'விஜயசீலம்' குறித்தும் கனகசெந்தி நாதன் முதன் முதல் தமிழுலகிற்கு அறிமுகம் செய் து வைத்துள்ளார். 1972-ல் சோ சிவபாதசுந்தரம் 'தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல்' என்ற தலைப்பில் 'மோகனாங்கி' நாவலை அறிமுகப் படுத்தியுள்ளார். அதேயாண்டு ஆ. சிவனேசச் செல் வன் மிக ஆழமாகவும் விரிவாகவும் 'நொறுங்குண்ட இதயம் கதையும் கதைப் பண்பும்" என நொறுங்குண்ட இதயத் தினை ஆய்ந்தளித்துள்ளார். 1974-ல் எஸ்.எம்.கமாலுதீன் 'அசன்பே கதையைத் தனிக் கட்டுரையாகத் தினகரனிலும் அந்நூலின் முன்னுரையாகவும் விளக்கியுள்ளார். 1975-ல் கனக செந்திநாதன் 'கோபால நேசரத்தினம்' நாவல் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ளார். 1976-ம் ஆண்டு கலா பரமேஸ்வரன் 'முப்பதுகளில் சிறந்த தமிழ் ஆசிரியர்கள்' என்ற தலைப்பில் தேம்பாமலர், ஞானபூரணி ஆகிய நாவல்களை ஆராய்ந்து அறிமுகம் செய் துள் ளார். அதேயாண்டு மனோன்மணி சண்முகதாஸ் 'அ.நாகலிங்கம்பிள்ளை ஈழத்தின் நாவலாசிரியர்' என்ற தலைப்பில் 'சாம்பசிவம் ஞானாமிர்தம்' நாவலை ஆய்ந்துள்ளார். 1977-ல் கனக செந்திநாதன் 'அழகவல்லி' நாவல் குறித்தும், நா.சுப்பிரமணியன் மீண்டும் வீரசிங்கன்' நாவல் குறித்தும் ஆராய்வுக் குறிப்புகள் தந்துள்ளனர். 1979-ல் க.கைலாசபதி 'நாவலாசிரியர் நாகமுத்து இடைக்காடர் ' என்ற தலைப்பில் 'நீலகண்டன் ஒரு சாதி வேளாளன்' என்ற நாவல் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். எனவே ஈழத்தின் முன் னோடி நாவல்களில் சில, ஆய்வாளர்களின் பார்வையில் பட்டு வெளியுலகிற்கு நினைவு படுத்தப் பட்டுள்ளன. என்னால் பட்டியலிடப் பட்டுள்ள 45 ஆரம்ப நா வ ல களு க் கு ம் இவ்வாறான ஆய்வு கள் செய்யப் படல் வேண்டும்.
4. கொக கு வில் சோதிடவிலாஸ் புத்தக சாலையினர் தங்களது சோதிடப் பிரகாச யந்திர சாலையில் அச்சிட்டு வெளியிட்ட நுாற்றுக் ணக் கான பலதுறை நூல்களுள் மூன்று ஆரம்பகால ந ா வ ல க ளு ம அட ங் கு கின் றன.
:"), 3, 4 45 4 : 1- *'** : 24, : :
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 81
PUBLIC LIBRARY
TANA

Page 83
காந்தமலர், செல்வரத்தினம், பூங்காவனம் என்பன அவையாம். வண்ணார்பண னை நாவலர் அச்சுக்கூடத்தில் நீலகண்டன், சித்தகுமாரன், இராசதுரை, ஆகிய நாவல் கள் அச் சிடப் பட்டுள்ளன. திருஞானசம்பந்தபிள்ளையின் மூன்று நாவல்களும் சைவப்பிரகாச யந்திரசாலையிலும், பாவசங்கீர்த்தனம், புனிதசீலி என்பன சென்ஜோசெப் கத்தோலிக்க அச்சகத்திலும், பதிப்பிக்கப் பட்டுள்ளன. மேலும் தனலக்சுமி புத்தகசாலை (பவளகாந்தன், அருணோதயம்), ஸ்ரீ கணேசா அச்சகம் (வீராம்பாள்) சங்கானை சச்சிதானந்தா பிரஸ் (சுந்தரவதனா), ஞானப்பிரகாச யந்திரசாலை (சம்சோன் கதை, அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம்), வீரகேசரி வெளியீடு (காந்தாமணி, சோமாவதி) அமெரிக்க இலங்கை மிசன் (தேம்பாமலர், ஞானபூரணி), என்பன ஈழத்தின் ஆரம் ப நாவல்களை வெளியிட்டுத் தொண் டாற்றியுள் ளன. மோகனாங் கி, அசன்பேயுடைய கதை, வீரசிங்கன், நிலாக்ஷ ஆகிய நாவல்கள் தமிழ் நாட்டில் பதிப்பிக்கப் பட்டு வெளிவந்துள்ளன. அக்காலப் பதிப்பகங்கள் நவீன இலக்கிய வடிவம் ஒன்றிற்கு அளித்திருக்கின்ற முக் கியத் துவம் நன்றியுடன் நினைவு கூரத்தக்கதாகும்.
முதல் நாவல் எது?
ஈழத்திலக்கியத்தின் முதல் நாவல் எது என்பது குறித்து ஆய்வாளர்கள் தத்தம் பார்வையில் முதலில் தம் கண்ணில் பட்ட நாவலை முன் வைத்து விளக்கந் தந் துள் ளனர். இரசிகமணி கனகசெந்திநாதனின் படி, , ஈழத்தின் புனைகதை இலக்கிய முயற்சிகள் திருகோணமலையிலே தொடங்கிற்றென்றும், எஸ்.இன்னாசித்தம்பி எழுதிய 'ஊசோன் பாலந்தை கதை' ஈழத்தில் வெளிவந்த முதலாவது நாவல் என்றும் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 1856-ம் ஆண்டில் வெளிவந்த 'காவலப்பன் கதையே தமிழில் வெளிவந்த முதலாவது நாவலென மு.கணபதிப்பிள்ளை கருதுகிறாரெனச் சில்லையூர் செல்வராசன் தனது 'ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். புனைகதை ஆய்வாளர் தெளிவத்தைஜோசெப்பும் 'காவலப்பன் கதையை ஈழத்தின் முதல் நாவலாக ஏன் கொள்ளக் கூடாதென ஆதங்கப் பட்டு ஒரு கட்டுரையில் குறித்துள்ளார். எஸ்.எம்.கமாலுதீன், இலங்கையில் முதலாவது எழுந்த புனைகதை சித்திலெப்பையின் 'அசன்பேயுடைய கதை' என அந்த நூலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில்

அடோக் இழக்கிலும் படிப்பதைத்யம்,
டிமாதம் சசியாக
ம. வே. தி ந ஞா ன சம் ப த ப் பின் எ
எழுதியது
வன்கணார்பண்ணைா ஜயனார்கோயிலடி தி. 6. சபா - த ென ம வர்சனல்
வலியுறுத் தியுள் ளார் . நா.சுப்பிரமணியம் தனது
உலகம் பலவிதம் கூ; ' ஈழத்துத் தமிழ் நாவலின்
துரைரத்தினம்-நேசமணி, தோற்றம்' என்ற நூலில் கமாலுதீனின் வழியொட்டி, 'அசன் பேயுடைய கதை' ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல்
என்ற சிறப்பினையும் , தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் இரண்டாவது
4 நாவல் என்ற சிறப்பினையும் பெறுகின் றது எனக் குறிப்பிட்டுள் ளார். ஆக ஒவ்வொரு ஆய்வாளரும் தமக்குக் கிடைத்த ஆரம்ப நாவலின் அடியொற்றி அதனையே ஈழத்தின் முதல் நாவலாகத் தெரிவித்துள்ளனர்.
காழ்ப்புபால் ப்பியர்ல்ண்யம்
அன்க்ேலப்பேத்க.
பிசோயத் தவ.
*செக் மேழwroi4
ஈழத்து ஆரம்ப நாவல்கள் வெளிவந்த காலவரன் முறையில் 1856-ல் வெளிவந்ததாகக் கூறப்படும் 'காவலப்பன் கதையை ஈழத்தின் முதல் நாவல் எனக் கொள்வதில் தவறில்லை. ஹன்னா மூர் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய 'பார்லே தி போர்ட்டர்' என்ற நூலின் தமிழாக்கமே காவலப்பன் கதையாகும். இந்த நூலிற்கு தமிழ் நாட்டில் 1876-லும் 1869-லும் இரு மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன என சுப்பிரமணியன் குறித்துள்ளார். காவலப்பன் கதை மேலைநாட்டுச் சமயக் கதைகளில் ஒன்றாகவிருக்கலாமென்பது அவரின் கருத்து. ஈழத்து நாவலாக வெளிவந்த காவலப்பன் கதையின் பிரதியை எவராவது ஒருவர் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனைப் பற்றிய ஆரம்பத் தகவல்கள் வெளிவந்திருக்க முடியாது. எனினும், ஈழத்தின் முதல் நாவல் என்ற அந்தஸ்தினை அதற்குக் கொடுப்பதற்கு அதன் மூலப்பிரதி ஆய் விற் குட் படுத்தப் பட வேண்டியது அவசியமாகிறது. அது ஒரு தமிழாக்கம் பெற்ற நாவல் என்பதற்காக அதனை ஒதுக்கி விட முடியாது. வால் மீகியின் சமஸ் கிருத இராமாயணத்தின் தமிழாக்க மான கம் ப ராமாயணத்தை நாம் ஒதுக்கியாவிட்டோம்?
சமயம் சார் ஒழுக்கம்
ஈழத்தின் இரண்டாவது
நாவலான 'அசன்பேயுடைய கதையை இஸ்லாமிய அறிஞரான முகமது காசிம் சித்திலெப்பை மரைக்கார் எழுதியுள்ளார். ஈழத்தின் மூன்றாவது நாவலான 'ஊசோன் பாலந்தை கதையை இன்னாசித்தம்பி
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 182

Page 84
என் தம்பிமுத்து பிள்ளை, சி.வை. சின்னப்பிள்ளை அருட்சகோதரர் ஞானமேரி ஆகியோர் தந்துள்ளனர். அவர்கள் மும் மூன்று நாவல் களை எழுதியளித்துள்ளனர். இடைக்காடர், சார்ள்ஸ் பிக்னி, எச்.நல்லையா, மங்களநாயகி தம்பையா, வரணியூர் ஏ.சி.இராசையா ஆகியோர் இவ்விரு நாவல்களை ஈழத்துப் புனைகதைத் துறைக்கு வழங் கியுள் ளார். மற் றும் சித்திலெப்பை, இன் னாசித் தம் பி, சரவண முத் துப் பிள்ளை, கைலாசபிள் ளை, சுவாமி சரவணமுத் து, எஸ் .கே. சுப்பிரமணியம், செ.செல்லம் மாள் , அ.நாகலிங்கம்பிள்ளை, சு.இராசாம்பாள், வண்ணை மா.சிவராமலிங்கம்பிள்ளை, வ.மு. சின்னத்தம்பி, வை.ஏரம்பமுதலி, பொன், குமாரவேற்பிள்ளை, வே.க.நவரத்தினம், க.இராசரெத்தினம், மூத்ததம்பி செல்லப்பா முதலானோர் ஒவ்வொரு நாவல் மூலம் ஈழத் தின் ஆரம்ப நாவல் மனைக் கு அத்திவாரமிட்டவர்களாவர். தமது மனதில் சமூகம் ஏற் படுத் திய சுமைகளை இறக்கி வைத்துவிடுவதற்கும், சமூகத்திலிருந்தும் மேம்பட்ட நிலையிலிருந்து கூறிவிடும் ஆவலாலும், ஆங்கில நாவல்களும் தமிழக நாவல்களும் ஏற்படுத்திய அருட் டுணர்வில் ஒன்று, இரண்டு, மூன்று, நாவல்களைப் படைத்தளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
மோகனாங்கி
ஈழத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் முதன் முதல் தமிழில் சரித்திர நாவல் ஒன்றினைப் படைத்தளித்த பெருமை திருகோணமலையைச் சார்ந்த தி.ச.சரவணமுத்துப்பிள்ளையையே சாரும். ஈழத்தவரின் நான்காவது நாவல் 'மோகனாங்கி' ஆகும். சென்னையில் கீழைத்தேயச் சுவடிகள் நிலையம் ஒன்றில் கடமையாற் றிய சரவணமுத்துப்பிள்ளை, நாயக்க மன்னர்களின் சரித்திரத்தை 'மோகனாங்கி' என்ற நாவலாகப் படைத்தார். இது 1895-ல் தமிழ் நாட்டில் பதிப்பிக்கப் பட்டு வெளிவந்துள்ளது. இந்த நூலின் சுருக்கப் பதிப்பாக 'சொக்கநாத நாயக்கர்' என்ற பெயரில் அவரே மோகனாங் கியை மீள எழுதி வெளியிட்டுள்ளார். சரவணமுத்துப்பிள்ளையின் சரித்திர நாவலிற்குப் பின்னரே கல்கி சரித்திர நாவற்துறையில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஈழத்தின் ஆரம்ப நாவல்களில் சி.வை. சின்னப் பபிள் ளை யால் 1916-ல் எழுதி வெளிவந்த 'விஜய சீலம்' ஈழத்தின் இரண்டாவது சரித்திர நாவலாகும். இலங்கை
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
| 83)

By
Y. [ NAYARITN44
VALI.08.F..
ஓர் இளீய கற்பனா சரித்திரம்.
AA நல்லூர்
எமூரீச்.
சோடப்பிசகா சந்திாசாவே
கொக்குவில்,
SELVARATNAM
என்ற கிறிஸ்தவப் பெரியார்
3 amll ovel.
எ ழு த ? யு ள' ள ா ர் . உண்மையில் ஈழத்தின் ஆரம் ப நா வல் களைக்
கவனத் திற்கு எடுக் கும்
செ ல் வரத் தினம்
போது நாவல் என்ற நல்ல இலக்கிய வடிவத்திற்கு
கிறிஸ்தவப் படைப்பாளிகள்
வே. க. நவரத்தினம்
ஆற் றி ய ரு க க ன ற பங் கினைக் குறைத் து
மதிப்பிட்டுவிட முடியாது.
F%9 Pipit.] 1945. =R. யா 1-25
நொறுங்குண்ட இதயத்தை
எழுதிய மங் களநாயகி தம்பையா, சம்சோன் கதையை எழுதிய தம்பிமுத்துப் பிள்ளை, புனிதசீலி, அருமைநாதன் ஆகிய நாவல்களை எழுதிய ஞானசகோதரர் ஜோன்மேரி, தேம்பாமலர், ஞானபூரணி ஆகிய நாவல்களை எழுதிய சார்ள்ஸ் ரிக்னி ஆகியோர் கிறிஸ்தவப் படைப்பாளிகளாம். பாவசங்கீர்த்தன இரகசியப்பலி என்ற நாவலை எழுதிய ஆசிரியரையும் இப்பிரிவில் அடக்கிவிடலாம். இந்தப் படைப்பாளிகள் நாவல் எழுதியதற்கான நோக்கம் ஒழுக்கம் சார்ந்த நெறிகளையும், சமயம் சார்ந்த ஒழுக்கத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லிவிடவேண்டுமென்ற பேராசையே என்பதை மேற்குறித்த நாவல்களைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. சைவசமயம் சார்ந்த கருத்துக்களைப் பெய்து கோபாலநேசரத்தினம், துரைரத்தினம் நேசமணி, காசிநாதன் நேசமலர் ஆகிய நாவல்களைப் படைத்துத் தந்த திருஞானசம்பந்தம்பிள்ளையும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.
சுருக்கமாகக் கூறில் ஈழத்தின் ஆரம் ப நாவல்களின் சமூகச் செய்தி, ஒழுக்கம் சார்ந்த நெறிகளையும் சமயம் சார்ந்த ஒழுக்கத்தையும் கூறுவனவாக, சில விடத்துப் போதிப்பனவாக அமைந்துள்ளன. சி.வை.சின்னப்பபிள்ளையின் 'வீரசிங்கன் அல்லது சன் மார்க்க ஜெயம், மங்களநாயகியின் 'நொறுங்குண்ட இதயம்', எஸ்.கே.சுப்பிரமணியத்தின் ' நீலாக்ஷl அல்லது துன்மார்க்க முடிவு ', எஸ். தம்பிமுத்துப்பிள்ளையின் 'அழகவல்லி அல்லது பிறர்க்கிடு பள்ளம்', அ. நாகலிங்கம் பிள்ளையின் 'சாம் பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக்களஞ்சியம்' என இப்பட்டியல் நீண்டுகொண்டு செல்லும். அனைத்தும்
சமூக ஒழுக்கம் பற்றியே பேசிச் செல்கின்றன.
ஈழத்தின் ஆரம்ப நாவல்களில் எண்ணிக்கையில் அதிக நாவல்களை ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை,

Page 85
வரலாற்றில் முதல் மன்னனாகக் கருதப்படும் விஜயன் பற்றிய சரித்திரக்கதை இதுவாகும். எனவே ஈழத்தின் நாவலாசிரியர்கள் தம் திறனை வரலாற்று நாவல் வகையிலும் காட்டியுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
வன்னி நாவல்
'இன் பவதி' என்ற நாவலை எழுதிய த.கயிலாசபிள்ளை முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வன்னிப் பிரதேச நாவலிலக்கியத் தின் முன் னோடியாகத் திகழ் பவர் கயிலாச பிள்ளையென்றும், இது 1912-ல் எழுதப்பட்ட 1942ல் ஆரியபாஷாவிருத்திச் சங்கத்தின் 'கலாநிதி' என்ற சஞ்சிகையில் வெளிவந் த தென்றும் முல்லை மணி வே.சுப்பிர மணியம் தனது 'வன்னியியற் சிந்தனை' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அவ் வாறாயின் ஈழத்தின் ஐந்தாவது நாவல் என்ற பெருமையை கயிலாசபிள்ளையின் இன்பவதி பெறுகின்றது. இது நூலுருப் பெறவில்லை. மட்டக்களப்பினைச் சேர்ந்த வே.ஏரம் பமூர்த்தி 'அரங்கநாயகி' என்றொரு நாவலை எழுதியுள்ளார். சேர் வால்டர் ஸ்கொட் எழுதிய கெனிஸ்வேர்த் நாவலின் தமிழாக்கம் இதுவென நா.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த நாவலின் கதாபாத்திரங்களும் கதைச் சூழலும் நம் நாட்டிற்குரியனவாகத் தமிழாக்கம் செய் யப் பட் டிருப் பதாகவும் குறிப் பிடுகிறார். கொழும்பைச் சேர்ந்த எச்.நல்லையாவின் இரு நாவல்களை விட, ஏனையவை யாழ்ப்பாணத்தின் பல் வேறு பகுதிகளான வட்டுக் கோட்டை , வண்ணார்பண்ணை, கந்தர்மடம், நல்லூர், சங்கானை, அச்சுவேலி, தெல்லிப்பளை முதலான விடங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களால் படைக்கப் பட்டிருக்கின்றன.
அசன்பேயுடைய கதை
சித்திலெப்பை
மரைக் காருடைய 'அசன்பேயுடைய கதையின் முதற் பதிப்பு 1885-ம் ஆண்டில் முஸ்லிம் பிரன்ட் பிரஸில் அச்சிடப்பட்டு கொழும்பில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு எஸ்.எம்.கமாலுதீன் முயற்சியினால் 1974-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியினால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இரண்டாம் பதிப்பில் 'அசன்பேயுடைய கதை' என்ற தலைப்பு 'அசன்பே சரித்திரம்' என்று மாற்றப் பட்டுள்ளது. மிசுறு தேச இராஜவம்சப் பிள்ளையான அஸன் பம்பாயில் வளர்கிறான். அவன் ஆற்றுகின்ற

வீரதீரச் செயல்கள், தீயோரைத் சட்டத்தின்பிடியில் கொடுத்தல் என்பனவும் அவன் காதல் வாழ்க்கையும் அசன்பேயுடைய கதையில் விபரிக்கப் படுகின்றது. திருகோணமலை இன்னாசித்தம்பியால் எழுதப்பட்ட 'ஊசோன் பாலந்தை கதை' போர்த்துக்கேய நாவலான ஓசோன் அன்ட் வலன்ரைன் என்பதன் தழுவலாகும். ஊசோன், பாலந்தை என்ற இரு இளைஞர்களின் வீரசாகசங்கள் இந்நாவலில் விபரிக்கப் பட்டுள்ளன. அதைப் போலவே சி. வை. சின்னப்பிள்ளை எழுதிய 'உதிரபாசம் அல்லது இரத்தின பவானியில் இரத்தினம் என்ற வாலிபன் வீரசாகசங்கள் தமிழ்நாட்டின் பகைப்புலத்தில் விபரிக்கப்ப படுகின்றன.
ஈழத்தில் - நகைச் சுவையோடு கூடிய முதலாவது நாவல் என்ற பெருமை எஸ்.தம்பிமுத்துப்பிள்ளையின் 'சுந்தரன் செய்த தந்திரம்' பெறுகின்றது. யாழ்ப்பாணப் பின்னணியில் எழுதப் பட் ட இந் நாவலில் சுந் தரன் என்ற போலித் துறவியின் ஏமாற்று வாழ்க்கை சித்திரிக்கப்படுகின்றது. ஏராளமான பழமொழிகள் நாவலெங்கும் கையாளப்பட்டிருக்கின்றன. இப்பண்பு சுந்தரன் செய்த தந்திரத்தில் மாத்திரமில்லாது, ஈழத்தின் ஆரம்ப நாவல்களான பலவற்றிலும் ஒரு பொதுப் பண் பாகவிருப்பதைக் காணலாம். ஞானசகோதரர் ஜோன் மேரி எழுதிய மூன்று நாவல்களான 'புனிதசீலீ', 'அருமைநாதன்', 'இதயரத்தினம்' என்பன கிறிஸ்தவம் சார்பு வெளிப்படையான நாவல்களாகும். கதைப்பண்பினை மீறிச் சமயப் பிரச்சாரம், மிகக் குறிக்கின்றது. 'உலகம் பலவிதம்' என்ற பொதுத் தலைப்பில் வெவ்வேறு உப பெயர்களில் மூன்று நாவல்களைத் தந்தவர் ம.வே.திருஞானசம்பந்தம் பிள்ளையாவார். யாழ்ப்பாணச் சூழலில் சமூகப்பிரச்சினைகளையும் சமயப் பிரச்சினையையும் நாவல்களாகப் படைத்தார். இந்து சாதனத்தின் ஆசிரியராக விளங்கியமையால் அவரது படைப்பிலக்கியக் கருத்துக்கள் சைவ சமூக மேம்பாட்டினை மையமாகக் கொண்டிருந்தன.
சாம்பசிவம் ஞானாமிர்தம்
காரைநகரைச் சேர்ந்த அ.நாகலிங்கம் எழுதிய 'சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம்' என்ற நாவல் முன்னைய ஆரம்ப நாவல்கள் போல சமூக ஒழுக்கநெறி சார்ந்ததே. அத்தியாயம் ஒவ்வொன்றும் வழக்கிலுள்ள பழமொழி ஒவ் வொன்றைத் தலைப் பாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. 'கற்பனைக் கதைகள்' எனப் பெயர் புனைந்து காமவெறியூட்டும் கதைகள் மலிந்த
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (84)

Page 86
இக்காலத்தில் சாம்பசிவம் ஞானாமிர்தம் என்னும் இந்நவீனம் இன்பமும் பயனும் இனிதளிக்கும் நூலாய் இருக்கின்றது' என இந்நாவலுக்கு மதிப்புரை வழங்கியிருக்கும் ரா.பி.சேதுப்பிள்ளை குறித்துள்ளார். தருமம், ஆலய வழிபாடு, கல்வியின் பெருமை, மதுபானத்தால் வரும் கேடு, பெரியாரைப் பேணல், புலாலுண்ணாமை, மனரம்பியம், வேளாண்மை, முதலானவற்றின் மாட்சி ஆங்காங்கே விளக்கப் பட்டுள்ளன என ம.வே.திருஞானசம்பந்தம்பிள்ளை இந்நாவல் பற்றி அபிப்பிராயப்பட்டுள்ளார். இந்நூல் சைவ வளர்ச்சிக்கும் அறம் ஆற்றுவதற்கும் பயன்படுக என நோன்பு செய்யும் ஆசிரியர் கருத்து இனிது நிறைவேறியுள்ள தென' பண்டிதர் வ.சு. இராச ஐயனார் இந் நுாலில் மதிப்புரை தந்துள் ளார். இந்த நாவலின் - கூறு பொருள் இவைதாம்.
'பாவசங்கீர்த்தன இரகசியப்பலி' என்ற நாவல் 1928-ல் எஸ்.ஆசீர்வாதம் என்பவரால் பதிப்பிக்கப் பட்டது. கிறிஸ்தவ சமயக் குருவானவர் ஒருவர் பாவசங்கீர்த்தன் இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக அனுபவித்த துன் பங் களை இந தநாவல் விளக்குவதாகவும், பிரான்சில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம் பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாகவும் நா.சுப்பிரமணியம் தன் 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்ற நூலில் கூறியுள்ளார்.
நாவலாசிரியைகள்
ஈழத்தின் ஆரம் பகால நாவல் இலக்கியத்துறையில் மங்களநாயகி தம்பையா, செம் பொறிசோதீஸ் வரன் செல் லம் மாள் , சு.இராசம்மாள் ஆகிய மூன்று பெண் படைப்பாளிகள் பங் கேற்றிருக்கின்றனர். மங் கள நாயகி தம்பையாவின் நாவல் இலக்கியப் பங்களிப்புத் தனித்து நோக்குதற்குரியது. ஈழத்தின் முதலாவது நாவலாசிரியை அவராவார். செம்பொற் சோதி செல்லம்மாவின் 'இராசதுரை', சு.இராசம்மாவின் 'சரஸ்வதி அல்லது காணாமற் போன பெண்மணி' என்பன மர்மப்பண்புகள் நிறைந்த நாவல்களாம். இவ்வகையில் எம்.கே.சுப்பிரமணியத்தின் 'நிலாகஷl அல்லது துன்மார்க்க முடிவு', வ.மு.சின்னத்தம்பியின் 'வீராம்பாள் அல்லது விபரீதமங்கை', சார்ள்ஸ் ரிக்ஸியின் 'தேம்பாமலர்', ஞானபூரணி', மூத்த தம்பி செல் லப் பாவின் 'சுந் தர வதனா அல் லது இன் பக்காதலி', வரணியூர் ஏ.சி.இராசையாவின் 'பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்', 'அருணோதயம் அல்லது சிம்மக்கொடி' முதலான

நாவல்களை இனங்காணலாம் . இவை தமிழகத்தில் அக் காலத் தில் நிறையவே வெளிவந்த ஆரணிகுப்புசாமி முதலியார், ரெங் கராஜூ, முதலானோரின் மர்மப்பண்புகள் நிறைந்த துப்பறியும் கதைகளின் சாயலில் ஈழத்துப்படைப்பாளிகளால் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமாகக் குறிப் பிடத் தக்க இந்த நாவல்களின் களம் இலங்கையாகக் குறிப்பாக யாழ்ப்பாணமாக அமைந்தமையாகும்.
பூங்காவனம் - காந்தமலர்
வண்ணை மா. சிவராமலிங்கம் பிள்ளை எழுதிய 'பூங் காவனம்' என்ற நாவல் வண்ணார்பண்ணையைக் களமாகக் கொண்டது. 'இது பூங்காவனம்' என்னும் பெண்மணியின் கதை. ஆச்சரியத்தைத் தரக்கூடிய அநேக சம்பவங்கள் நிறைந்தது. காதல், வீரம், கருணை முதலான பலவித ரசங்களும் படிப்போர் மனதைக் கவரும் வண்ணம் எழுதப் பெற்றிருக்கின்றது' என இந்நூலை வெளியிட்ட சோதிட விலாஸ் புத்தகசாலையினர் குறிப்பிட்டுள்ளனர். அது முற்றிலும் ஏற்கக் கூடிய கூற்றாகும். உரையாடல்கள் நாடகத் தன்மை கொண்டவை. இப் பண்பு ஈழத்தின் ஆரம் ப நாவல்களில் காணப்படும் பொதுவான அம்சமாகும்.
சோதிடவிலாஸ் புத்தகசாலையினர். வெளியிட்டிருக்கும் இன்னொரு நாவல் 'காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி' என்பதாகும். இதனை யாழ்ப் பாணம் கந் தர் மடத்தைச் சேர்ந்த சி.வே.தாமோதரம் பிள்ளை எழுதியுள் ளார். காந்தமலர் பதிப்புரையில் இ.சி.இரகுநாதையர் 'மேலைத்தேசங்களில் கற்பனை மிக அதிசயிக்கத் தக்க விதமாக முன்னேற்றமடைந்துள்ளன. உயர்ந்த கற்பனா சரித்திரங்களை எழுதும் ஆசிரியர்கள் மிகவும் கீர்த்தி பெற்றவர்களாய் இருக்கின்றனர். இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அநேக கற்பனா சரித்திரங்கள் வெளிவந்திருக்கின்றன. கீர்த்தி பெற்ற ஆரிசியர்களாகவும் பலர் விளங்குகின்றனர். தமிழ்க்கல்வி அபிவிருத்தியில் தாய்நாட்டோடு ஒப்புக் கூறத் தக்கமுறையில் யாழ்ப்பாணத்தில் கற்பனா சரித்திரங்களை இயற்றுவாரில்லை. ஆங்காங்கே சில கற்பனா சரித்திரங்கள் வெளிவந்துள்ளனவாகத் தெரிகிறது'', எனக் குறிப்பிடுவது, அக் கால நாவலிலக்கிய முயற்சிகள் எந்த அளவில் இருந்துள்ளனவென்பதற்கு எடுத்துக்காட்டாகின்றது. 'காந்தமலர்' என்னும் இக்கற்பனாசரித்திரம் சென்ற வருடம் கந்தர்மடத்தில் வசிக்கும் சி.வே.தாமோதரம்பிள்ளை என்னும் இளைஞர்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
85)

Page 87
அல்லது
யாழப்பாணம், மதம்
“சேrதிடசிபாலினி" ஆசிரியர்
காந்த மலர்
ஒருவரால் தமது
நண்பரான செல்வ கற்பின் மாட்சி
நாயகம் என்னும் மாணவருதவியுடன் எழுதப்பெற்று எம்
மிடம் காட்டப் 9. வே. தாமோதரம்பிள்ளை அவர்கள் எழுதியது
பட் டது. இவர் கல்வியறிவில்லா தவாரகவிருந்தும்,
இவர் இயற்றிய யாழ்ப்பாணம், கொக்குவில்
இக்கதை யானது ஓ.ரேகாரை அவன் கனால்
நல்ல நடையுடைய சோதிடப்காயாகமில்
தாகவும் கற்பின் பிப்பெற்றது.
மாட்சியென்னும்
நெறியைத் தன்ன பசுறா Righ.|
(கூ ஆயா 1-50 .
கத்தே கொண் டுள்ளதாகவும் இருக்கக் கண்டோம். அதனால் அச்சிட்டு வெளியிட்டோம்' என இரகுநாதையர் மேலும் குறிப்பிடுகிறார். காந்த மலர் ஒரு முக்கோணக் காதல் கதை. தன் மைத்துனனை வெறுத்து இன்னொருவனைக் கலியாணம் செய்து கொள்வதால் காந்தமலர் அனுபவிக்கும் துன்பங்கள் இந்த நாவலில் விபரிக்கப் படுகின்றன. பேச்சு வழக்கற்ற உரைநடையில் இக்கதையை ஆசிரியர் எழுதியுள்ளார். மக்களின் சாதாரண வழக்கு மொழிப்பிரயோகங்களைப் பொதுவாக ஈழத்தின்
ஆரம்ப நாவல்களில் காண்பது அரிது.
186.
செல்வரத்தினம்
சோதிடவிலாஸ் புத்தகசாலை இரகுநாதையர் வெளியிட்டிருக்கும் இன்னொரு நாவல் 'செல்வரத்தினமாகும். அதனை நல்லூர் வே.க. நவரத்தினம் என்பவர் எழுதியுள்ளார். யாழ்ப்பாண மண்ணில் நிகழ்வதாக இக்கதை விபரிக்கப் பட்டுள்ளது. ஈழத்து நாவலிலக்கிய ஆரம்பக் கட் டத்துப் படைப் புக்களில் 'செல்வரத்தினம்' இரு காரணங்களுக்காக தனித்துக் குறிப்பிடும் சிறப்பினையுடையது. ஒன்று இந்த நாவல் தன்னிலைக் கூற்றாக அதாவது கதாநாயகனே தன் கதையைக் கூறுவதாக எழுதப்படிருக்கின்றது. மற்றையது ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் புதுமையான தலைப்புகள் இடப்பட்டிருக்கின்றது. முன்னைய நாவல்களைப் போல பழமொழிகளைப் பயன்படுத்தாது அத்தியாத் தலைப்புகளிடப் பட்டிருக்கின்றன. இந்த நாவலும் மர்மப் பண்பு வாய்ந்த துப்பறியும் நாவலேயாயினும் ஏனைய துப்பறியும் நாவல்களிலும் பார்க்கக் கதை கூறும் முறையில் வித்தியாசமானதாக

விளங்குகின்றது. சமூகநீதி எப் பொழுதும் சாவதில்லை என்ற கருத்தினை இந்த நாவல் வலியுறுத்திச் செல்கிறது.
சாதிய நாவல்கள்
- யாழ்ப்பாணத்தின் சாதியப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதப்பட்ட நான்கு நாவல்கள் ஈழத்தின் ஆரம்ப நாவல்கள் வரிசையில் அடங்குகின்றன. அவை இடைக்காடரின் 'நீலகண்டன் - ஒரு சாதி வேளாளன்', எச். நல்லையாவின் 'காந்தாமணி அல் லது தீண்டாமைக்குச் சாவு மணி' எம்.ஏ. செல்வராஜன் 'செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி', மூத்ததம்பி செல்லப்பாவின் 'சுந்தரவதனா அல்லது இன்பக் காதல்' என்பனவாம். இடைக்காடரின் 'நீலகண்டன்' தனித்து ஆய்வுக்குரியது. சுந்தரவதனாவில் சாதியின் அடிப்படை பற்றிய தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. 'காந்தா மணியிலும் செல்வி சரோஜாவிலும் தீண்டாமை பற்றிய தீவிர கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கலாமென' நா.சுப்பிரமணியம் கருத்தைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியக் கொடுமை பற்றிய எண்ணக் கருத்துக்களும் அக்கொடுமைக்கு எதிரான படைப்புக்களும் ஈழத்தின் ஆரம்ப நாவல் காலத்திலேயே எழுத்தாளர்களின் படைப்புக்களில் பொதிந்துள்ளன. எனினும் சாதியத்துக் கெதிராகவோ, அக்கொடுமைகளை அச்சமூகத்திலிருந்து அறவே அழிப்பதற்குகந்த கருத்துக்களாகவோ, சித்தாந்த ரீதியில் முன் வைப்பதற்கு மேலும் ஒரு தசாப்தம் காத்திருக்க வேண்டியிருந்தது.
வே.சிவப்பிரகாசத்தின் 'மேகவர்ணன்', ம.க. சின்னையாவின் 'குலநாயகி திலகவதி', வை. ஏரம்பமூர்த்தியின் 'அரங்கநாயகி', பொன் குமாரவேற் பிள்ளையின் 'உத்தம மனைவி', க.இராசரத்தினத்தின் 'தேவி திலகவதி அல்லது குப்பையிற் குண்டுமணி' என்னும் நாவல்கள் குறித் துக் கருத்துக்கள் தெரிவிப் பதற்கு அந்நாவல்கள் பார்வைக்குக் கிடைக்கவில்லை.
சிறந்த ஐந்து நாவல்கள்
ஈழத்தின் ஆரம்பநாவல்களென என்னால் அடையாளங் காணப் பட்ட நாற்பத்தைந்து நாவல் களில் ஐந்து - நாவல் கள் ஏனையவற்றிலிருந்தும் பல அம்சங்களில் தனித்துவமானவை. ஈழத்தின் நாவலிலக்கியத்திற்கு அணிசேர்க்கும் படைப்புக்களென இவற்றைக் கருதுகின்றேன்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 200386

Page 88
ல் -
அச்சிறப்பான ஐந்து ஆரம்ப நாவல்கள்:- 1.
சி.வை. சின்னப்பிள்ளையின் 'வீரசிங்கன்' (1905) 2. மங்களநாயகி தம்பையாவின் 'நொறுங்குண்ட
இதயம்' (1914) இடைக்காடரின் 'நீலகண்டன்' (1925) எஸ். தம்பிமுத்துப்பிள்ளையின் 'அழகவல்லி'
(1926) 5. ம.வே.திருஞானசம்பந்தபிள்ளையின்
'கோபால நேசரத்தினம்' (1927)
வீரசிங்கன், நொறுங்குண்ட இதயம், நீலகண்டன், அழகவல்லி , கோபாலநேசரத்தினம் ஆகிய ஐந்து நாவல்களும் ஈழத் தின் ஆரம்பநாவல்களில் முதன்மை பெறுவதற்கான காரணங்கள் பலவிருந்தாலும், முக்கியமானது யாதெனில் இந்த ஐந்து நாவல்களும் நாவல் இலக்கியத்தின் பல்வேறு அம்சங்களையும் சமூகத்தின் யதார்த்த நிலைகளையும் தம்முள் கொண்டிருக்கின்றன. கலைநயத்துடன் கூடிய சமூகத் தேடலும் செய்திகளும் இந்த நாவல்களில் விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம். நாற்பத்தைந்து நாவல்களிலும் வித்தியாசமான நவீனங்கள் இவையாம்.
வீரசிங்கன்
'வீரசிங்கன்' கதையை எழுதிய சி.வை. சின்னப்ப பிள்ளை தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் சகோதரர். வீரசிங்கன் கதையைத் தொடர்ந்து 'உதிரபாசம்', 'விஜயசீலம்' என்றிரு நாவல்களையும் தந்துள்ளார். வீரசிங்கன் நாவலை முதன் முதல் கனக செந்திநாதன் 1962 வீரகேசரிப் பொங்கல் மலரில் அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து 1977-ல் மல்லிகை 105-வது மலரில் நா.சுப்பிரமணியன் வீரசிங்கன் நாவல் குறித்து விரிவான ஆய்வுக் குறிப்பொன்றினைத் தந்துள்ளார். 'இருபதாம் நூற்றாண்டிற்குரியதாக எமக்குக் கிடைக்கும் முதல் நாவல் என்ற வகையிலும் ஈழத்தின் பின்னணியில் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற வகையிலும் 'வீரசிங்கன்' நூல் சிறப்புப் பெறுகிறது. இவ்வகையில் சி.வை. சின்னப்பபிள்ளை ஈழத்துப் பின்னணியில் எழுதப்பட்ட முதல் நாவலின் ஆசிரியர் என்ற பெருமைக்குரியவராகிறார்' என நா.சுப் பிரமனியன் தனது கட்டுரையில் குறித்துள்ளார். அக்கால கட்டத்திலேயே தனது நாவலில் இந்த மண்ணின் மக்களைப் பற்றிக் கரிசனையோடு தனது நாவலை சின்னப்பிள்ளை படைத்துள்ளார். நல்லொழுக்கப் போதனைகளும் வீரதீர பராக்கிரம சாகசங்களும் இந்த நாவலில்

இடம் பெற்றிருக்கின்ற போதிலும் யாழ்ப்பாணத்தினதும் வெளியே ஆனையிறவுக்கு அப்பாலும் வாழ்கின்ற மக்களின் கதையை இந்த நாவல் சித்திரிக்கின்றமை இந்த நாவலை முதல் ஈழத்து நாவலாக எண்ண வைக்கின்றது. உரையாடல் உட்பட கதையின் வளர்ப்பு செந்தமிழ் நடையில் அமைந்திருக்கின்றது. இந்திய வேலையாள் ஒருவரின் பேச்சுமட்டும் பேச்சு வழக்கில் கையாளப் பட்டிருக்கின்றது.
நொறுங்குண்ட இதயம்
ஈழத்து ஆரம்ப நாவலிலக்கிய வரலாற்றில் மங்களநாயகி தம்பையாவின் 'நொறுங்குண்ட இதயம்' நாவலிற்குள்ள அதி முக்கியத்துவத்தினை எவரும் மறுதலிக்க முடியாது. ஈழத்தின் முதலாவது நாவலாசிரியையான மங்களநாயகி தம்பையாவை முதன் முதல் தக்கவாறு வெளியுலகுக்கு அறிமுகப் படுத்திய பெருமை ஆ.சிவநேசச் செல்வனுக்குரியதாகும். பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாக்களில் 1972 - ல் விரிவான ஆய்வுக் குறிப்புக்களைத் தந்துள்ளார். மங்களநாயகி தம்பையா 'அரியமலர்' என்றொரு நாவலையும் எழுதியுள்ளார். நொறுங்குண்ட இதயம் கதையமைப்பிலும் சூழல் சித்தரிப்பிலும் யாழ்ப்பாண மண்வாசனை வீச எழுதப்பட்ட நாவல்' என்பது சிவனேசச் செல்வனின் கணிப்பு. தப் பான கணிப்பன்று. 'சன்மார்க்க சீவியத்தின் மாட்சிமையை உபதேசத்தால் விளக்குவதிலும் உதாரணங்களால் உணர்த்துவது மேல் என்றும், சில காரியங்களைப் போதனையாகவும் புத்திமதியாகவும் கூறுவது நன் றென்றும் 'மங் களநாயகி தம்பையா எண் ணியுள் ளமை அவரது நாவலின் முன்னுரையிலிருந்து தெரியவருவதை சிவனேசச் செல்வன் சுட்டியுள்ளார். கிறிஸ்தவ மார்க்கத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டினைக் கொண்டிருந்தாலும் பாத்திரங்கள் இந்த மண்ணின் மக்களாகவும், ஆசிரியை கையாண்டுள்ள உரையாடல்கள் இயல்பான யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழாகவும், இருக்கின்றமை இந்நாவலின் சிறப்பிற் குக் காரணங்களாகின்றன. ஆசிரியர் கூற்றில் கூட யாழ்ப்பாணத்தின் தனித்துவச் சொற்கள் அவற்றின் அழகுடன் ஏற்றவாறு பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. மங்களநாயகி தம்பையாவின் 'நொறுங்குண்ட இதயம்' தான் ஈழத்தின் முதல் நாவல் என ந. சுப்பிரமணியன் போன்றோர் இன்றும் வலியுறுத்தி வருகின்றனர். காலவரன்முறையிலன்று நாவற் பண்புகளின் அடிப்படையிலாகும். ஈழத்தின் ஆரம்ப நாவல்கள் நாற்பத்தைந்தில் 'நொறுங்குண்ட
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
87

Page 89
இதயம்' தவிர்ந்த அனைத்தும் அந்நாவல்களில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரைத் தம் நாவலின் பெயராகக் கொள்ள, மங்களநாயகி தம்பையா மட்டும் கதாபாத்திரத்தின் உணர்வைத் தன் நாவலின் பெயராக்கியுள்ளார்.
நீலகண்டன்
இடைக்காடரின் நீலகண்டன் - ஒரு சாதி வேளாளன்' என்ற நாவல் யாழ்ப்பாணச் சாதிப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. இந்த நாவலை பேராசிரியர் க.கைலாசபதி 'நாவலாசிரியர் நாகமுத்து இடைக்காடர்' என்ற ஆய்வுக் கட்டுரை மூலம் மல்லிகை இதழ் ஆகஸ்ட் 1979-ல் அறிமுகப் படுத்தி வைத்துள்ளார். இடைக்காடர் 'சித்தகுமாரன்' என்றொரு இரண்டு பாக நாவலையும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. 'வேளாள குலத்துப் புவிமன்னனுக்கும் பண்டாரப் பெண் கமலாவதிக்கும் பிறந்த நீலகண்டன் தந்தையின் சொத்துரிமையைப் பெறுவதற்குத் தடையேற்படுகிறது. தடை செய்த தீயோரைத் தனது வீரசாகசங்களால் வெற்றி பெற்று நீலகண்டன் முதலிப்பட்டம் பெற்று உயர் வாழ்வு வாழ்கின்றான். இடைக்காடர், சாதிப்பாகுபாடு இயற்கையில் இல்லாதிருந்து காலப்போக்கில் வளர்ந் தது என்ற கருத்துடையவர்' என நா.சுப்பிரமணியன் தன் நூலில் நீலகண்டன் குறித்து விபரித் துள் ளார். 'சாதியபிமான மின் ன தென விளங்காத, தம்மிற்றாழ்ந்த வர்களை ஹிம்சை செய்பவர்களுக்கு புத்தி புகட்டும் நோக்கமாகவும், ஏனையோருக்கு நம்மவர்களின் உண்மையான சாதிநிலையின்னதென உணர்த்தும் நோக்கமாகவும் எழுதப் பட்ட ஒரு கற்பனா கதை' என நீலகண்டன் நுாலின் முகவுரையில் இடைக்காடர் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய இக்கருத்தியல் நிலை அவர் நாவலில் தெளிவாகப் பதிந் திருக்கின்றது. தனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒருங்கே இந்த நாவலில் கூறிவிட வேண்டுமென்ற அவா இடைக்காடரிடம் இருந்துள்ளதுள்ளமை இந்த நாவலை வாசிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம்.
அழகவல்லி
ஈழத் து
ஆரம்ப நாவல்களில் எஸ். தம்பிமுத்துப்பிள்ளையின் 'அழகவல்லி' நாவலின் முக்கியத்துவத்தினைத் தவிர்த்து விடமுடியாது. தம்பிமுத்துப்பிள்ளை 'சம்சோன் கதை', 'சுந்தரன் செய்த தந்திரம்' ஆகிய நாவல்களையும் தந்தவர். ஆனால் அவரின் படைப்பான 'அழகவல்லி'

முக்கியமான ஈழத்து நாவல்களில் ஒன்றாகவுள்ளது. அழகவல் லி நாவலை முதன் முதல் கனகசெந்திநாதன் 1977-ல் மல்லிகையின் 106-வது இதழில் அறிமுகப் படுத்தும் விதமான ஓர் ஆய் வுநிலைக் கட்டுரையை எழுதியுள் ளார். 'பச்சைப்படியான யாழ்ப்பாண வாழ்க்கையையும் சில ஆசாரங்களுயும் தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறும் இந்த அழகவல்லி நாவலைப் போல வேறொரு நாவலையும் நான் கண் டதில்லை' என கனகசெந்திநாதன் குறித்துள்ளமை மிகைக் கூற்றாக எனக்குப் படவில்லை. ஐம்பத் தொரு பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் சிறியதாயினும் அது ஈழத்து நாவலிலக்கியத்திற்கு அளித்திருக்கும் பங்கு மிகப்பெரியதாகும். செண்பகமழவன் என்ற ஒரு வாலிபன் பணத் தினால் பெருமை பேசும் அழகவல்லியை மணந்து படும் அவலத்தை இந்த நாவல் சித் திரிக்கின்றது. அழகவல்லி
அக்குடும்பத்தினருக்குத் தீங்கு செய்யும் ஒரு பாத்திரமாகக் காட்டப் படுகிறாள். 'முழுக்க முழுக்க யாழ்ப் பாண மண் வாசனையைக் கொண் ட இந்நாவலின் கருப்பொருள் கூட மிகச் சிறந்தது. உயர்சாதி வேளாளருக்கிடையே இருக் கும் சாதிக்குள் சாதி பார்த்தல் என்ற விடயத்தை எழுதியிருப்பது வியப்புக்குரியது' எனக் கனக செந்திநாதன் கூறுகிறார். யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சிறப் பாக இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கின்றது. நாம் மறந்துவிட்ட பண்பாட்டுச் சொற்கள் இந்த நாவலில் விரவிக்
கிடக்கின்றன.
கோபால - நேசரத்தினம்
ஈழத்தின் ஆரம்ப நாவலிலக்கியத்திற்கு அணி சேர்த்தவர்களில் ம.வே.திருஞானசம்பந்தம்பிள்ளை குறிப்பிடத்தக்க இன்னொருவர். ஈழத்தின் பழம்பெரும் சைவப் பத்திரிகையான இந்துசாதனத்தின் ஆசிரியராக நீண்ட காலம் கடமையாற்றியவர். அப்பத்திரிகையில் 'உலகம் பலவிதம்' என்ற பொதுத் தலைப்பில்' கோபால - நேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம் நேசமணி' என மூன்று நாவல்களை எழுதி ஆரம்ப நாவலிலக்கியத்தில் இடம் பிடித்துக் கொண்டவர். அவருடைய நாவல்களில் 'கோபால - நேசரத்தினம்' சிறந்த நாவலாகக் கணிக்கப் படக்கூடியது. இந்த நாவல் 1921- இல் இந்து சாதனப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1927-ம் ஆண்டு நூலுருப் பெற்றது. ஆசிரியரே சில திருத்தங்களுடன் பதிப்பித்திருந்தார். சில மாதங்களுள் அச்சிட்ட பிரதிகள் விற்றுத் தீர்ந்து போயின. அதனால் 1948 - இல் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. 'படித்தவர்கள் வாசிக்க, படியாதவர்கள் தாமும் கேட்டு
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (88)

Page 90
விளங்கக் கூடிய இலகுவான வசன நடையில் இந்நூல் ஆக்கப் பட்டிருப்பதோடு, ஆண் பாலார் பெண்பாலார் எவரும் கூசாது படிக்கவுங் கேட்கவுந் தக்கதாய் காமசிருங்கார வருணனை, அசாத்தியமான நிகழ்ச்சிகளின் வரலாறு என்றெண்ணும் இவைகளின்றிச் சிறந்த முறையில் எழுதப் பெற்றதாகும்' என இந்நூலின் நூன்முகத்தில் ம.வே.திருஞானசம்பந்தம்பிள்ளை குறிப்பிடுகின்றார். இந்த நாவலின் கருப்பொருள் வித்தியாசமானது. கோபாலன் என்ற சைவப்பையனை தன் விதவை மகளுடன் குட்டித் தம்பிப்போதகர் பழகவிடுகிறார். குட்டித்தம்பிப் போதகரின் மகள் நேசரத்தினம் சைவ மதம் மாறிக் கோபாலைக் கலியாணம் செய்து கொள்கின்றாள். 'தம்முடைய கல்விக்கூடங்களுக்கு வரும் ஏழைப்பிள்ளைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ மிசனரியினரின் சமயப் பிரசார நோக்கைக் கண்டிக்கும் வகையில் எழுந்த இந்நாவல் அக்காலப் பகுதியில் நிலவிய சமயப் போட்டிச் சூழ்நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. என நா.சுப்பிரமணியன் தன் நூலில் குறிப்பிடுவது ஏற்ற வாதமாகும். இந்த நாவலில் ஆற்றொழுக்கான உரைநடை கையாளப் பட்டுள்ளது. பேச்சுவழக்கின்றிச் செந்தமிழிலேயே கதை விபரிக்கப் பட்டிருக்கின்றது. பாத்திரங்களும் செந்தமிழிலேயே உரையாடிக் கொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும்
மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள்
taRR Book Depot C
5ook 8://lers, 3ா
No. 195, Olcott Maw
Tel: 449565, 3311
Branch: 3, Bus

திருஞானசம்பந்தம்பிள்ளை இந்த நாவலை வெகு சீராக வளர்த்துச் செல்கின்ற பாங்கும், முரண்பாடற்ற பாத்திர வார்ப்பும், யதார்த்த பூர்வமாகக் கதை சொல்லும் நேர்த்தியும் கோபால நேசரத்தினத்தை ஆரம்ப நாவல்களுள் சிறந்த ஒன்றாகக் கருத வைக்கின்றது.
முடிவுரை
ஈழத்தின் ஆரம்ப நாவல்கள் இட்ட நாவல் மனையின் அத்திபாரத்தில் இன்று கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. 'அன்னபூரணி' (க.சச்சிதானந்தன் 1949) யிலிருந்து 'போரே நீ போ' (செங்கை ஆழியான் - 2002) வரை நானூறுக்கு மேற்பட்ட நாவல்க்ள ஈழத்தில் வெளிவந்து விட்டன. இவ்வாறான வளர்ச்சி நிலைக்கு, அதாவது எண்ணிக்கையிலும் இலக்கியத்தரத்திலும், ஈழத்தின் ஆரம்ப நாவல்கள் வித்திட்டன. ஈழத்தின் அந்த ஆரம்ப நாவல்கள் எமக்குப் படிக்கும் போது வியப்பையும் சிரிப்பையும் தந்தாலும் நாவல் மனையின் அடிக்கற்கள் அவைதாம். அந்த மூத்த முன்னோடிப் படைப்பாளிகளை நாம் என்றும் நினைவு கூரல் வேண்டும்.
milan
Communication
Pioners & Publishers
ratha, Colombo - 11,
22 Fax: 331123 Stand, Jaffna.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (89)

Page 91
தொண்டின் மறுவுரு தோழர் எம்.சி.சுப்ரமணிய
இன்றைய சமாதானச் எனப் பெருமூச்சைக் க பிரச்சினைகளை உள் படுத்துவதற்குத் தயங். ஆத்தலைந்து கொன பஞ் சமரே! அர்த்த கொடுத்தவர்களும் இ கல்வியைத் தாரை எ
1 -Hi)
ஈழத்தை மூவலை வரலாறு! அந்நியர் திணிப்புகளையும் கை கோலங்களைக் காத்து இந்த அசல் தமிழர்க படுமோசமாகவே கணி விடியுமா?' என அபச
பஞ்சமர்களது 8 சம்பவங்களைத் தெ சிந்தனையாளனும், | மேலாதிக்கச் சாதிக் துல்லியமாகப் புரிந்து
பஞ்சமருக்கான க படுகிறது. அரச நிறு மாணவனொருவன் அ கற்றலை இழந்தான். பிதாவான செல்லன் க வைத்துத் தாக்கப் ப பஞ்சம போராளிகளா? கலக்கிய போதும், பஞ்சமர்களுக்கு வழி

38:22
Sகேலிமை அ5ைலர்
20032ரவரி
அவளது -மா.பாலசிங்கம்
சூழலிலும், ஈழத்துப் பஞ்சமர்கள் 'நமக்கும் விடியுமா?' க்குகின்றனர். மனச் சாட்சியோடு இவர்களது இன்றைய வாங்கும் எந்தவொரு தமிழனும் அவைகளை நியாயப் கான். பேரினவாதிகளின் நிலப்பசிக்கு முகங் கொடுத்து, ர்டிருக்கும் ஈழத்தமிழர்களில் கணிசமான பகுதியினர் மற்ற யுத்தப் பிரகடனத்திற் குப் பெரு விலை வர்களே! அமைதியான வாழ்வை, உயிரை , தொழிலை, வார்த்து இவர்கள் படும்பாடு சொல்லி மாளாது! கயான அந்நியர்கள் கபளீகரம் செய்து கொண்டது
ஆதிக்கத்தில் கூட அவர்களது எந்த விதமான கயேந்தாது தமிழனது பண்பாடு, கலாசார, கலைக் து வருபவர்கள் இந்நாட்டுப் பஞ்சமர்களே! இருந்தும் ள் தமது சொந்த நாட்டவர்களால் அந்நியரை விடப் க்கப் படுகின்றனர். இதுவே தான் பஞ்சமரை 'நமக்கும் ஈரமிசைக்க வைக்கிறது.
இதயத்தைச் சுடும், சாதிய இலக்கோடு நிகழ்ந்த காகுத்துப் பார்க்கும் எந்தவொரு மனிதாபிமானச் பஞ்சமர்களது அடிப்படை உரிமைகள் எவ்வண்ணம் களால் காவு கொள்ளப் படுகின்றனவென்பதைத்
கொள்ளலாம். கல்வி மறுப்பு இன்றும் நாசுக்காக நடைமுறைப் படுத்தப் வனமான புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் பஞ்சம் ஆதிக்க சாதியைச் சார்ந்த ஆசிரியரொருவரால் தனது
இந்த மாணவன் த.லதீபன். தற்போதைய யாழ்நகர கந்தையன் அவரது கடமை நேரத்தில் பணிமனைக்குள் டார். இது மட்டுமல்ல! இன்னும் பல! எழுபதுகளில் ல் நடாத்தப் பட்ட ஆலயப் பிரவேசம் யாழ் குடாவைக் இன்னமும் பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் பாட்டுச் சுதந்திரத்தை மறுத்து வருகின்றன. பஞ்சம்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 90)

Page 92
அகதிகள் பாவித்த கிணறுகளுக் குள் இரணியத்தனமாக மலம் கொட்டப் பட் டது. விடுதலைப் புலிகள் தலையிடுவார்கள் என்ற அச்சத்தால் மௌனித்து, பஞ்சமரது பாவனைக்கு விடப் பட்ட கோயில் கிணறுகள், புலிகள் இடம் பெயர்ந்ததும் பஞ்சமரது பாவனைக்கு மறுக்கப் பட்டுள்ளன. அரச செலவில் அமைக்கப் பட்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் பஞ்சமர்கள் குடியமர மறுக்கப் பட்டு, சமத்துவ புரங்களின் உண்டாக்கல் தடங்கல் படுத்தப் பட்டுள்ளது.
இப்படி, இப்படி எத்தனையோ!
புலம் பெயர்ந்தோர் இலக்கியம் சாதி இனி மெல்லச் சாகுமென ஆருடம் பேசியது. வேற்றிடம், வேற்று மொழி, வேற்றுப்பண்பாடு, கலாச்சாரம் சாதிய முறைமைகளை உடைக்கு மெனக் கருத்தியல் மாற்றத்தைக் காட்டியது. ஆனால், தமிழரது வர்த்தக நிறுவன மொன்றில் வேலைக்கமர்த்தப் பட்ட பஞ்சமப் பெண்ணொருத்தி, காலப்போக்கில் அவளது சாதி அடையாளம் துருவிக் கண்டு பிடித்த பின் வெளிநாட்டில் வேலையிலிருந்து நீக்கப் பட்டதாகப் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இன்று வாக்கு மூலம் தந்துள்ளது. ஆனானப்பட்ட எஸ்.பொன்னுத்துரையையே நக்கலடிக்குமளவிற்கு அதன் கருத்துத் தளம் மாறுபட்டு விட்டது. எஸ்.பொ.வின் 'பனியும் பனையும்' என்ற சிறுகதைத் தொகுப்பு குறித்து உயிர் நிழல் (ஒக்.2000) இப்படிக் கூறுகிறது. 'எஸ்.பொ . யாழ் மேலாதிக்க மனோபாவத்தில் அன்றில்லாமல் பனையை யாழ் ஒடுக்கப் பட்ட தலித்துகளின் சின்னமாகக் கருதினாரோ தெரியவில்லை' இப்படியாகப் புலம் பெயர் இலக்கியம் பனையைச் சாதிமயப் படுத்துகிறது. தொகுப்பின் தலைப்பில் 'பனை' என்ற சொல் வந்ததற்கு இப்படியானதொரு ஒப்புவமை. இப்பொழுது 'வடலி' என்றொரு சிறு சஞ்சிகை புகலிடத்தில் வீச்சாகப் புறப்பட்டுள்ளது. அதற்கும் எப் படியான வரவேற் பென் பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! இவைகளைத் தவிர எமது அயல் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தலித்துகளுக்கு எதிரான அடாவடித்தனங்கள், ஈழத்துப் பஞ் சமர்களுடைய குமுறல் களை வேகப்படுத்துகின்றன. வாழ்க்கையை நெறிப்படுத்தும் வேதங்களின் தாய்வீடு இந்தியா! இந்து, பௌத்த சமயங்களின் பிறந்த மண்! மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற உலகப் பெரியார்களை மானுடத் திற்கு அளித் ததும் அந் நாடே. தலித்துகளான, ஏ. எல். நாராயணனை குடியரசுத் தலைவராகவும், காமராஜ் நாடாரை அந் நாட்டின் அதிகார பீடத் தலைமைகளை உண்டாக்குப்

வராகவும், அம்பேத்காரை அந்நாட்டின் அரசியல் சட்ட வரைஞராகவும் ஏற்றுக் கொண்டதும்
இந்தியாவே!
இருந்தும், தலித்துகளுக்கு அங்கு நடந்துவரும் மிருகத்தனமான வதைகள் இங்குள்ள பஞ்சமரது சிரசைக் கிறு, கிறுக்க வைக்கிறது. தலித்துகளுக்கு மனித உரிமைகள் மறுக்கப் பட்டுள்ளன. மலம் தீத்தப் பட்டுள்ளது கொடூரமாக எரியூட்டிக் கொல்லப் பட்டிருக்கின்றனர் தலித்துகள். இக் கொடுமைகளைத் தாங்க முடியாது அங்குள்ள தலித்துகளும் கொந்தளிக்கின்றனர். அலை, அலையாக ஒன்று சேருகின்றனர். அமைப் புகள் ஈசல் போல் கிழம்புகின்றன. சாதியக் கொடுமைகளை பரம்பல் செய் வதற்காக ஏராளமான பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஏடுகள் ஈழத்துப் பஞ்சமர்களுக்கும் படிக்கக் கிடைக்கின்றன. இதனால், உலகளாவிய தாழ்த்தப் பட்ட மக்களின் இன்றைய நிலைமைகளைப் புரிதல் செய்து பஞ்சமர்கள் உறுமுகின்றனர். 'நமக்கும் விடியுமா?' என்ற கோஷம் திண்மமாகின்றது! ஒடுக்கப் பட்டு நசுங் கிக் கொண்டிருக்கும் பஞ்சமர்களது மனோ நிலை இப்படி இருக்கச் சாதி முறையை அழிக்க முடியாது. அது தேச வழமையால் உருவாக்கப் பட்ட முறைமை எனப் படித்த மேலாதிக்க வர்க்கத்தினர் இன்றும் சொல்லிச் சொல்லிப் பஞ் சமரை அச்சுறுத்துகின்றனர். சாதியத்தின் தொடர்ச்சியான இருத்தலை வற்புறுத்துகின்றனர்!
இன விழுமியங்களின் புகழ்பாடும் தமிழனது சாதி முறைமை இத்தகைய தளத்தில் விரிந்து கொண்டு போகும் இக்கால கட்டத்தில் அதற்கான போராட்டங்களைத் தோற்று வித்துத் தனது வாழ்க்கைப் பயணத்தைச் சாதி ஒழிப்பிற்கெனவே அர்ப்பணித்த தோழர் எம்.சி. சுப்ரமணியத்தின் தொண்டைச் சுமந்த வாழ்வில் சற்றுத் தோயல் பொருத்தமாக இருக்கும். அத்தோடு அவரது நினைவு தினம் ஜனவரி 12-ல் என்பதும் குறிப்பிடத் தக்கதே! சாதி அனுட்டானத்தில் கைதேர்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தை வியாக்கியானம் செய்வதிலும் அதை மாற்றி அமைப்பதே மேலான தென எம்.சி. கோஷித்தார். இதையே தனது வேதமாக மதித்தார். உதாரணங்களை விட உணர்வுகளே முக்கியமென்பதற்கமையத் தனது சக தோழர்களை புத்துணர்வுகளோடு சிந்திக்க வைத்தார்.
அவரால் நேசிக்கப் பட்ட அன்றைய பஞ்சமர்களின் குறைபாடுகளை தகுந்த முறையில் அளவிடும் தராசாக விளங்கினார். ஆவணங்களில்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 91

Page 93
கையொப்பத்திற்குப் பதிலாகப் பெருவிரல் அடையாளமிடுபவர்கள் பஞ்சமர்கள் மத்தியிலே அநேகம் பேர் இருந்தனர். எனவே இத்தகைய நிலையிலிருந்தும் அவர்களை மீட்கும் மீட்பராக அவர் இயங்கினார். பஞ்சமர்களது கல்வித் தளத்தை உயர்த்துவதன் மூலமாகத் தனது செயற்பாட்டை நிறைவேற்ற முனைந்தார். பஞ்சமருக்கு அடைக்கப் பட்ட கல்விக் கதவுகளை திறக்க வைப்பதற்கான போராளியாக மாறினார்.
எம்.சி.லண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்திபெற்ற கல்விமான். அத்தகைமை அவருக்கு அர ச எழுதுவினைஞராகும் தகைமையைச் சித்தித்தது. ஆனால், அந்தச் சுக போகத்தை அவர் அனுபவக்கவில்லை. அரச எழுதுவினைஞராக இருந்திருந்தால் அவரை யாழ்ப்பாணச் சமூகம் பெரியதோர் அந்தஸ்திற்கு உயர்த்தி இருக்கும். ஏந்தி எடுத்திருக்கும். ஆனால் அவர் அதில் நிலைக்கவில்லை. தான் சார்ந்த மக்களின் நலனுக்காக உழைப் பதற் குத் தன் னை
அர்ப்பணித்தார். மக்களுக்காக வாழ்பவர் என்றும் மக்களால் மதிக்கப் படுபவார் என்பதில் கரிசனை கொண்டார்.
எம்.சியின் கல்விக்கும் சாதி இடக்காகவே இருந்தது. அவரது ஆரம்பக் கல்வியைத் தொடக்கிய சேணிய தெரு மிசனரிப் பாடசாலையில் அவரையும் அவரது பந்துக்களையும் மண் நிலத்தில் இருத்திக் கற்பித்தனர். இது எம்.சியின் தந்தையாருக்குப் பிடித்தமாக இருக்கவில்லை. தனது செலவில் தனது மகனும் ஏனைய பஞ்சம் மாணவர்களும் இருந்து படிக்க வசதியாகத் தளபாடங்களை வாங்கிக் கொடுத் தார். எம். சியின் இளம் உள் ளம் இத்தாக்கத்தை அன்றே நெஞ்சில் நிறுத்தியது. பிற்காலத்தில் கல்வி சார்ந்த பணிகளுக்கு அவர் முக்கியத்துவம் காட்டியதற்கும் இதுவே உந்து சக்தியாகவும் இருந்திருக்க வேண்டும்.
''வித்தியாதானத்திற்குச் சமமான தானம் ஒன்றுமில்லை. அதுவே எல்லாத் தானங்களிலும் சிறந்தது" என ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கூறினார். இக்கருதுகோளோடு யாழ்ப் பாணத்தில் பல பாடசாலைகளை நிறுவினார். ஆனால், இப்பாடசாலைகளில் பஞ்சமருக்கும் படிப்பதற்கு இடம் தரப்படவில்லை.
சீ.டி.டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவின் இலவசக் கல்வித் திட்டம் கூட, பஞ்சமர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு, உரிய முறையில் பயன்படுத்த முடியாமலிருந்தது. பாடசாலைகளில்

கடமை புரிந்த ஆசிரியர்கள் மேலாதிக்கச் சாதியத்தவராக இருந்தனர். இவர்கள் பஞ்சம் மாணவர்களைக் கல்வியில் ஊக்கப் படுத்தவில்லை. இந்த மாணவர்களது படிக்கும் புத்தகங்கள் களவாடப்பட்டு அழிக்கப் பட்டன. இதனால் பெற்றோர்கள் தமது சொந்தத் தொழில்களைப் பழக்கி அவர்களைப் பால்ய வயதிலேயே தொழிலாளிகளாக்கினர். இதனால் பஞ்சமர்கள் கற்கும் விகிதம் மிகவும் வறிதாகவே இருந்தது. படிப்பை இடையில் கைவிடு பவர்களும் பஞ்சமர்களாகவே இருந்தனர்!
தொழிலைத் துறந்த எம்.சி. பஞ்சமருக்குக் கல்வி புகட்டும் சேவையில் ஈடு பட் டார். முதியோருக்குக் கல்வி புகட்டினார். அவரால் தாபிக்கப் பட்ட ஆரியகுளம், சன்மார்க்க ஐக்கிய - வாலிபர் சங்கத்தில் வகுப்புகள் நடத்தினார். இப்படிப் பட்ட வகுப்புகளில் படித்தவர்களில் இன்றைய இலக்கிய உச் சமான, எழுத் தாளர் எஸ்.பொன்னுத்துரையும் (எஸ்.பொ) ஒருவர் எம்.சியின் ரியூசன் குறித்து எஸ்.பொ. சொல்லும் போது:
''இங்கிலீசு சொல்லித்தாற சாட்டிலை மனிசன் வாட்டு வாட்டென்று வாட்டுவார். Dictation சோதினை என்றால் உயிர் போகும். ஒவ்வொரு பிழைக்கும் கலப்படமில்லாத சித்திரவதை. பணம் பெற்றதில்லை. சமூகத்தின் இளந்தலைமுறையினர் கல்வியில் முன்னேற வேண்டுமென்ற சமூகப் பிரக்ஞை உடனும் சேவா உணர்ச்சியுடனும் படிப்பித்தார். ஒருவகைத் தர்மாவேசம்!'' என்கிறார் எஸ்.பொ.
எனவே, வித்தியாதானம் செய்ததில் ஆறுமுக நாவலரை விட, எம்.சி.யே.முக்கியமானவர் எனலாம்! பின் தங்கிய கிராமங்களில் பாடசாலைகளை அமைப் பதற் கு அர சிடம் போதிய நிதி இருக்கவில்லை. இதனால் கிராமங் களில் பாடசாலைகள் குறைவாகவே இருந்தன. ஆனால், நகரங்களில் அரசின் ஏற்பாட்டிலும், மிஸனரிகளின் ஏற் பாட்டிலும் பாடசாலைகள் இயங் கிக் கொண்டிருந்தன. நிதி வசதியிருந்த குடும்பங்கள் தமது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்பி உயர்கல்வியைக் கொடுத்தனர். இது வறிய அடித்தட்டு மக்களுக்கு முடியாதிருந்தது. இத்தகைய கிராமங்களில் பாடசாலைகளை நிறுவி, கணிசமான மாணவர்கள் அதில் கற்பிக்கப் பட்டால் அத்தகைய பாடசாலைகளுக்கு அரசின் அங்கீகாரம் கிடைக்குமென அரசு முடிவு செய்தது. இதனால் சிங்களக் கிராமங்களும் பயன் பெற்றன. எம்.சியின்
4 02 | 9) |
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003

Page 94
விடாமுயற்றியால் பஞ்சமர்கள் வாழ்ந்த பின்தங்கிய கிராமங்களில் பாடசாலைகள் எழுந்தன. பஞ்சமச் சிறுவர்கள் கல்வியைப் பெற்றனர். இதுவும் மேட்டுக் குடியினருக்கு அளலைக் கொடுத்தது. இந்தப் பாடசாலைகள் பலவற்றிற்குத் தீயூட்டினர். இதை நெஞ்சில் இருத்தித் தான் நாவலாசிரியர் கே.டானியல் யாழ்ப்பாண நூலகம் தீயிடப்பட்டு நாசமாக்கப் பட்ட பொழுது உயர் சாதிகள் மத்தியில் எழுந்த ஆக்ரோசத்தைக் கண்டு, 'அன்று தாழ்த்தப் பட்ட சிறுவர்கள் படித்த பாடசாலைகளைக் கொளுத்தியபோது ஏற்படாத ரோசம் இப்பொழுது எப்படி வந்த தென நெற்றி அடி கொடுத்தார். இருந்தும் எம்.சியின் ஆவேசம் தணிந்து விடவில்லை. கொளுத்தக் கொளுத்தப் பீனிக்சுகள் போல பாடசாலைகள் எழுந்தன! வேலையற்றிருந்த படித்த இளைஞர்கள் இப் பாடசாலைகளில் ஆசிரியர்களாகக் கடமை புரிந்தனர். இவர்களது பணி ஆரம்பத்தில் சிரமதானமானதாக இருந்தது. அதற் கான நயத் தைப் பின்னர் பெற்றனர். இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனங்கள் கிடைத்தன. ஆசிரியர் கலாசாலைக்குச் சென்று ஆசிரியர் பயிற்சியைப் பெறும் தகைமையையும் பெற்றனர்.
எம்.சியின் இத்திட்டம் திறம்படச் செயற்பட உறுதுணையாக இருந்தவர் அமரர் டபிள்யூ. தஹநாயக்க . யாழ்ப்பாணத்திற்கு 15 பாடசாலைகள் மேலதிகமாகக் கிடைத்தன. பஞ்சமருக்காக அமைக்கப் பட்ட இப்பாடசாலைகளில் தற்பொழுது சகல சாதியினரும் கலந்து படிக்கின்றனர். இது தான் உண்மையான கல்வித்தானம்! இன்று எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் தமிழ் புலமையும், எழுத் துழியமும் உலகப் பிரசித்தமானது ! இதைத் தமிழுலகு மறுக்காது. எஸ்.பொவின் இந்த வளர்ச்சியில் எம்.சிக்கும் பங் குண்டு ! எஸ். பொன்னுத்துரை புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, வடமாகாண ஆசிரியர் சங்கம் (NPTA) நடத்திய பரீட்சையில் திறமைச் சித்தியைப் பெற்றார். பாடசாலை நிருவாகம் இவரது விவேகத்தைக் கனம் செய்யும் பொருட்டு, எஸ்.பொ.வை கனிஷ்ட பொதுத் தராதர வகுப்பிற்கு, (S.S.C) வகுப்பேற்றல் செய்தது. அந்த மாணவப் பருவத்தில் எஸ்.பொ பொதுவுடைமைக் கட்சியின் சித்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கட்சியின் ஏடான 'தேசாபிமானி' என்ற பத்திரிகையைக் கல்லூரியில் தனது மாணவ நண்பர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கினார்.

புனித பத்திரிசியார் கல்லூரி கத்தோலிக்க திருச்சபையின் நிருவாகத்தில் இயங்குவது. கட்டுப் பாடுகளை இறுக்கமாகக் கடைப்பிடிப் பது. எஸ்.பொ.வின் இந்த நடவடிக்கையை நிருவாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ''மதம் மக்களுக்கு அபின்” என லெனின் சொல்லி இருக்கிறார். அவரது கொள்கைகளைப் பரம்பல் செய்யும் தேசாபிமானிப் பத்திரிகையை பார்ப்பதற்கே வெறுப்படைபவர்கள். எனவே, எஸ்.பொ.வின் திறமையைக் கூடப் பொருட்படுத்தாமல் அவரை கல்லூரியிலிருந்து விலக்கியது. இக் கையறு நிலையில் எஸ்.பொ.விற்கு எம் . சி தான் கை கொடுத் தார். அங் கும் எஸ்.பொ. சாதனை புரிந்தார்! அப்போதைய அதிபரான சிவபாத சுந் தரம் என் பவரை எம்.சி. அணுகி, எஸ்.பொ. பரமேஸ்வராக் கல்லூரியில் படிப்பைத் தொடர வழி செய்தார். இக்கல்லூரியில் கற்கும் சந்தர்ப்பம் பெற்ற முதல் பஞ்சம் மாணவன் எஸ்.பொ.தான்! இரண்டாவது மாணவன் தானென என்.கே.ரகுநாதன் சொல்கிறார். தக்க தருணத்தில் எஸ் .பொ விற்கு எம்.சி.யின்
உதவி கிடைத்திருக்காவிடின் தமிழ் இலக்கிய உலகு சிறந்ததொரு படைப்பாளியை இழந்திருக்கும்! எஸ்.பொவின் வாழ்வும் வேறு விதமாக அமைந்திருக்கலாம்! தோழர் எம்.சி. சுப்ரமணியத்தின் சாதியப் போராட்டங்களில் அவரது பெயரை மிகவும் ஆழப் பதிய வைத்தது வில்லூன்றி மயானச் (1944) சூட்டு வழக்கு வள்ளியம்மை என்ற பஞ்சமப் பெண்ணின் பிரேதத்தை வில்லூன்றி மயானத்தில் எரிக்க வந்தவர்களுக்கு மேட்டுக் குடியினர் துப்பாக்கியால் சுட்ட பொழுது முதலி சின்னத் தம்பி என்ற பஞ்சமன் குண்டு பட்டு நிலத்தில் சரிந்தான். இக்கொலையை எம்.சியால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அக்காலத்தில் பொலிஸ், நீதித்துறை ஆகியன ஆதிக்க சாதிகளின் கைப்பொம்மையாக இருந்தன! இருந்தும், இந்த மனிதாபிமானமற்ற கொலைக்குத் தீர்வைப் பெற எம்.சி.யும் அவரது நண்பர்களும் நீதி மன்றம் சென்றனர். இதை எதிர்பார்க்காத மேட்டுக்குடி வேளாளர் அசந்து போயினர். திரை மறைவில் பல தில்லு முல்லுகளைச் செய்தனர். பஞ்சமருக்காக வாதாட வழக்குரைஞர்களுக்கு தடை போட்டனர். ஆனால் நீதிக்காக வாதாட ஒருவர் முன்வந்தார்!
''உங்கள் மரங்களை அவர்கள் வெட்டினால், அவர்களுக்கு வருமானம் கொடுக்கும் புகையிலைச் செடிகளை நீங்கள் அரிவாளால் வெட்டுங்கள்" இப்படிக் கூறிப் பஞ்சமர்கள் மத்தியில் போர் வெறியைக் கிழப்பியவர் எஸ். தர்மகுலசிங்கம். இவர் ஒரு சமதர்மவாதி. இவர்தான் பஞ்சமரின் பக்கம்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 93)

Page 95
நின்று அவர்களுக்காக வாதிட்டார் வழக்குப் பஞ் சமருக்குச் சார்பாகவே தீர்வைக் கொடுத்தது. எம். சிக்குக் கிடைத்த பெருவெற்றி இது. கொலைஞர்களுக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. இந்தத் தர்மகுலசிங்கம் இறந்த பொழுது யாழ்ப்பாண மக்கள் எங்கள் அருந்தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே, எங்கெங்கு தேடினிலும் அவரைப் போல் தங்கம் கிடைக்காதே" என நெகிழ்ந்தனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னரும் வில்லூன்றி மயானம் பஞ்சமரது பாவனைக்கு விடப்படவில்லை. ஐம்பதுகளில் தான் பஞ்சமர்கள் அனுமதிக்கப் பட்டனர். இதற்கு முன் ஆரியகுளப் பகுதியிலிருந்து ஒரு பிரேதம் சுடக் கொண்டு வரப்பட்டபொழுது, அதையும் வில்லூன்றி மயானத்திற்குக் கொண்டு வந்து விடுவார்களோவென்ற அச்சத்தில் பொலிஸ் உதவி நாடப்பட்டது. கொட்டடிச் சந்தி , கடற்கரை வீதிச் சந்தி, மயானம் என்பவற்றிலெல்லாம் பொலிஸ் படையினர் நிறுத்தப் பட்டிருந்தனர். ஆனால் பிரேதம் வேறு மயானத்திற்குக் கொண்டு போகப் பட் டது. கொட்டடியைச் சேர்ந்த திரு.சோ.இராரெத்தினம் செட்டியாரின் நிருவாகத்தில் வில்லுான்றி மயானம் இருந்த பொழுது, கொட்டடியைச் சேர்ந்த பொக்கன் தம்பிப்பிள்ளை என்பவர் இறந்தார். ஊரவரின் வேண்டு கோள் ஏற்கப்பட்டு இவரது பிரேதம் இம்மயானத்தில் எரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர், இதே மயானத்தில் (1989-01-12) எம்.சியின் பிரேதமும் வெந்தது!
அன்றைய காலகட்டத்தில் எம்.சியால் விடிவு காணப்பட வேண்டிய ஏராளமான பொதுப் பிரச்சினைகள் நிலவின. பொதுக் கிணறுகளில் பஞ்சமர்கள் நீரள்ள முடியாது. தேநீர் கடைகளில் உட்கார்ந்து போசனம் அருந்தவோ தேநீர் பருகவோ முடியாது. இந்தப் பரிதாப நிலையைக் கண்டு மனம் வெதும்பிய தோழர் மு. கார்த்திகேசன் 'குறள் படிக்கும் தமிழனுக்கு கறள் பேணிகளில் தேநீர்!' என வெகுண்டார். பஞ்சமர்கள் பாவிக்கும் பேணிகள் கிருமிகள் உண்டாகக் கூடிய வகையில் அழுக்கானவையாக இருந்தன. யாழ்ப்பாண நகர மத்தியில் இருக்கும் சத்திரக் கிணற்றில் பஞ்சமர்கள் நீரள்ள முடியாது. ஏழைத் தொழிலாளிகள் கட்டப்பட்டிருந்த வக்கில் கொண்டு வரும் மாடுகளை நீர் பருகச் செய்து, தாம் தண்ணீர் பருகுவதற்கு எந்த ஆசீர்வதிக்கப் பட்ட - தீட்டற்ற திருக்கரம் வருமென காத்திருப்பர். இன்னும், ஆண்டவனின் சன்னிதிகளில் நந்தனார் குருபூசை நாளன்று கூட பஞ்சமர்கள் உட்சென்று, 'சற்றே விலகும் பிள்ளாய்'

எனப் பஞ்சமனான நந்தனை ஏற்றுக் கொண்ட ஆதி சிவனை வழிபட அனுமதி இல்லை. இவைகளை வென்றெடுக்க எம்.சியின் மனம் கொதித்தது. புரட்சி விதைகள் ஊன்றப்பட்ட பஞ்சம் வாலிபர்கள் அங்குமிங்குமாகத் தேநீர்க் கடைகளுக்குள் புகுந்து கட்டுப்பாடுகளை உடைக்க எத்தனித்தனர். இதனால் கைகலப்புகளும் ஏற் பட் டன. கொலைகளும் விழுந்தன. ஆனால், இவ்விஷயத்தை யாழ்ப்பாண மேயர் மறைந்த அல்பிரட் துரையப்பாவுக்கு எம்சி நயமாக எடுத்துரைத்து இதில் மேயரை பிரவேசிக்க வைத்தார். மேயரின் தலையீட்டால் யாழ் நகரில் தேநீர்க் கடைகள் சில, பஞ்சமருக்குத் திறந்து விடப்பட்டன. ஆனால், கிராமங்கள் மரபைக் காத்து வந்தன. பஞ்சம் போராளிகளின் இடைவிடாத போராட்டங்களால் நாளடைவில் அவைகளும் தமது கண்களைத் திறந்தன. இதில் கே. டானியல், டொமினிக் ஜீவா, கணபதி இராசையா (அரசடி) ஆகியோரது பங்களிப்பு சிலாகித்துச் சொல்லக்கூடியது.
அங்குமிங்குமாக எரிந்தும் நுார்ந் தும் கொண்டிருந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைத்து ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு எம்.சி. முயற்சித்தார். வடமராட்சி சமூக சேவா சங்கம், ஆரிய குளம் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், திருவள்ளுவர் மகா சபை ஆகியவை பஞ்சமர்களது வழி நடத்தலில் இயங்கி வந்த பஞ்சமர் அமைப்புகளாகும். இவைகளின் ஒருங்கிணைப்பே (1942) சிறுபான்மைத் தமிழர் மகாசபை. 1957-ல் எம்.சி. சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவரானார். அவரது தலைமையின் கீழ் இயங்கிய காலமே இதன் பொற்காலமெனலாம்! திரு. ஈ.வி.செல்வரத்தினம் (இலங்கையன்), கவிஞர் பசுபதி ஆகியோர் செயலாளர்களாக எம்.சி.க்குத் துணை நின்றனர்.
காந்தியத்திற்குள் விழுந்து, எழுந்துதான் இன்று பலர் பொதுப் பணிக்கு வந்துள்ளனர். இதற்கு தோழர் எம்.சி.சுப்ரமணியமும் விதிவிலக்கல்ல! இவர் குல்லா அணிந்து காந்தியவாதியாகக் கொஞ்சக் காலம் தன்னை இனங்காட்டியவர். ஆனால், அவர் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தியம் பரிகாரமாகாது எனத் தெளிந்து மார்க்ஸிய வாதியானார். 1943-ல் இயக்கம் கண்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். இவரது சரித்திரத்தை துலங்கவைத்ததில் இக்கட்சிக்கு பெரும் பங்குண்டு. தோழர்கள் மு.கார்த்திகேசன், பீற்றர் கெனமன், எஸ் .ஏ . விக்ரசிங் கா , வைத்திலிங்கம், பொன்.கந்தையா ஆகியோரது நெருங்கிய நட்பும் இவருக்குத் தேறியது.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 94

Page 96
தோழர் கார்த்திகேசனை யாழ்ப் பாண அமைப்பாளராக நியமித்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.சியை வடமராட்சி அமைப்பாளராக்கியது. நகரச் சூழலில் பயணித்த எம்.சிக்கு கிராம வாழ்க்கையை அறிதல் செய்வதற்கு இந்த நியமனம் பெரும் வாய்ப்பைக் கனிய வைத்தது. எம்சியோடு சேர்ந்து கே. டானியல், டொமினிக் ஜீவா ஆகிய எழுத்தாளர்களும் கிராமங்களுக்கு இழுபட்டனர். இதனால் பெற்ற பட்டறிவு தான் பிற்காலத்தில் கிராமத்தவர்களை தட்டி எழுப்பக் கூடிய படைப்பாளிகளாக அ அவ் விருவரையும் உண்டாக்கியது.
பஞ்சம சமூகங்களுக்குத் துடிப்பான முழு நேரத்தலைவனொருவன் கிடைத்ததை உள்வாங்க முடியாத ஆதிக்க சாதிகள் எம்.சியைக் கொலை செய்வதற்கும் முயற்சித்ததுண்டு! சங்கானை நிச்சாமம், மந்துவில் போன்ற கிராமங்களில் வெடிக்கும் சாதிக்கலவரங்கள் குறித்தும், பொதுக் கூட் டங்களில் கலந்து கொள் வதற்காகவும் எம்.சி. பயணிப் பதுண்டு. இப் படி ஒரு நாள் வடமராட்சிக்குச் சென்று திரும்புகையில் அவர் பயணித்துக் கொண்டிருந்த காருக்குக் கைக் குண்டொன்று வீசப் பட்டது. குறி தவறிக் காரின் போணற்றில் விழுந்து வெடித்தது. குண்டைச் சற்று வீச்சாக எறிந்திருந்தால் அது கண்ணாடியில் பட்டு வெடித்திருக் கும். காருக்குள் இருந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். எம். சிக்கு அருகில் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தவர் இன்றைய மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா - கொலைஞர்களின் திட்டம் நிறைவேறி இருந்தால், நீண்ட 38 ஆண்டுகளாக , தடங்கலில் லாது மல்லிகை சஞ்சிகையை வெளியிட்ட நாடு ஈழம் என்ற சாதனையை இந்நாடு இழந்திருக்கும். அத்தோடு தொண்டிற்கு இலக்கணமாக வாழ்ந்த எம்.சியின் உயிரும் காவு போயிருக்கும்.
தனது கொள்கைகளை பின்பற்றுபவர்களை தன்னோடு, தேடி அரவணைப்பதில் எம்.சி.சமர்த்தர். இந்த அணுகமுறைதான், சர்வ தேச ரீதியில், கொம்யூனிஸ்ட் கட்சி (1960 - களில்) பிளவுண்ட பொழுது, தனது முகாமிலில்லாது, மாற்று முகாமிலிருந்த கே. டானியல், எஸ்.ரி. நாகரத்தினம், ஆகியோரோடும் எம்.சியைத் தோழமை கொண்டிருக்க வைத்தது. அவர்கள் சீன அணி. இவர் மொஸ்கோ அணி. முகாங்களைக் கணக்கிடாது, எந்த இலக்கை நோக்கிப் போராடுகின்றனர் என் பதையே கவனித்தார். ''ஊர் கூடித் தேர் இழுப்பது தான் " வெற்றிக்கு அடிக்கல் என நினைத்தார். அன்றைய

தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகளான ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம் என்பவற்றில் அவர்களோடு சேர்ந்து தானும் வடம் பிடித்தார். மாவிட்டபுரம், கந்தசாமி கோயில் (1968 - ல்) போராட்டத்தில் மலையொன்றுடன் மோதினார். கணக்கியல் பேராசிரியரான சி. சுந்தரலிங்கம் பஞ்சமரின் ஆலயப் பிரவேசத்தை எதிர்த்து நின்றார். ஆனால் போராட்டத்தில் பஞ்சமரே வென்றனர்!
தமது வாக்குரிமை பறிக்கப் பட் டது. யாழ்ப்பாணத்தாரின் ஆதரவுடன் தானென இன்னமும் மலையக மக்கள் வெதும்புகின்றனர். இதே வகையில் யாழ்ப் பாணத் து
- பஞ் சமரையும் வாக்குரிமையற்றவர்களாக்க மேல்தட்டு வர்க்கம் வியூகம் வகுத்தது. பஞ்சமருக்குப் புள்ளடியிடப் போதிய அறிவில்லையென அதிகாரிகளுக்குப் பரிந் துரைத்தது. ஆனால், டொன மூர் ஆணைக்குழுவுக்கு எம்.சி.நிலைமையைத் தெளிவு படுத்தி, இம்மக்களுக்கு வாக்குரிமை இருந்தால் தான் அவர்களது அடிமட்ட நிலையிலிருந்தும், அவல வாழ்விலுமிருந்தும் அவர்களால் மிதக்க முடியுமென வாதிட்டார். ..
ஆணைக்குழு ஆலோசனையை ஏற்றது. இதன் பின்னர் தான் பஞ்சமர்கள் வேட்பாளர்களாகவும் மிதந் தனர். கிராமசபைகள், நகர சபைகள் என்பனவற்றில் உறுப்பினராகினர். இதே திசைவழி - இன்று செல்லன் கந்தையன் என்பவரை யாழ்ப்பாண நகரபிதாவாக்கியது.
1970-ம் ஆண்டில் தோழர் எம்.சி. சுப்ரமணியம் இலங்கைப் பாராளுமன்றப் பிரதிநிதியானார். அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கூட்டு அரசாங்கம் எம்.சிக்குக் கெளரவத்தைக் கொடுத்து இலங் கைத் தாழ்த் தப் பட் ட தமிழரின் முன்னேற்றத்தில் கரிசனை காட்டியது. இந்த எம்.பி.ப் பதவியைக் குறித்து எம்.சி. கூறும் பொழுது - ''எனக்கு வழங்கப் பட்ட எம்.பி. பதவி ஒடுக்கப் பட்ட தமிழ் மக்கள் தம் உரிமைகளுக்காக நடத்திய போராட்டத்திற்குக் கிடைத்த பரிசு" என தாழ்த்தப் பட்ட மக்களின் போராட்டங்களை மேன்மைப் படுத்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத்த இந்த உறுப்புரிமை உடுப்பிட்டி ரி.இராஜலிங்கத்தோடு தடைப்பட்டது, இன்றைய பஞ் சமருக்கு ஆதங்கத்தைத் தருகின்றது. தொடர்ந்திருந்தால் பஞ்சமருக்கு அதிகமான பயன்களை நுகரக் கூடியதாக இருந்திருக்கும்! அக்கறையுள்ள பெரியோருக்கு இது சமர்ப்பணம்! தனக்குக் கிடைத்த இப் பதவியைத் தன்னை அலங்கரித்து அழகு படுத்தும் ஒரு சாதனமாக எம்.சி.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 95)

Page 97
கொள் ளாமல் , அதையொரு தொண்டின் கருவியாகப் பயன்படுத்தினார். பஞ்சமர் அரச நிறுவனங் களில் உயர் பதவிகளைப் பெற உதவினார். பஞ் சமச் சாதிகள் சார்ந்த கல்விமான்கள் கல்வி அதிகாரிகளாக நியமனம் பெற்றனர். சமாதான நீதிவான்கள் உதயமாகினர். இதனால், பஞ்சம சாதிகள் தமது வாழ்விலும் மினுக்கம் கண்டனர். சிந்தனை மலர்ச்சி பெற்றனர். அவர்கள் து சிந்தனைத் தளம் உயர்வான சிந்தனைகளை நோக்கி நகர்ந்தது.
வர்க்க சிந்தனைகளில் நாட்டம் கொண்ட எம்.சி. பஞ்சம் தொழிலாளர் மத்தியல் வர்க்க இணைப்பை உண்டு பண்ணும் பொருட்டு தொழிற் சங்கங்களை உண்டாக்கினார். இந்த வகையில் அமைக்கப்பட்டது தான் கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம். இதனால் தமது சாதிக் குள் ளேயே தொழிலாளர்கள் சுரண்டப் படுவது தடுக்கப் பட்டது. இச்சங்கத்தின் செயலாளராக இருந்து எம்.சி. ஆற்றிய பணிகள் என்றுமே மறக்க முடியாதவை! இதன் மூலம் பெற்ற ஊட்டம் தான் இன்று தெங்கு பனம் பொருள் கூட்டுத்தாபனம் தொழிலாளர்களை சூறையாடாதிருக்கத் துணை நிற்கிறது. எம்.சியின் ஆலோசனைகள் பனை அபிவிருத்திச் சபைக்கு நிறையவே உதவி இருக்கின்றன.
அமரர் எம்.சி. சுப்ரமணியம் 27-09-1917- இல் யாழ்ப் பாணத் தில் பிறந் தார். முத் தர் கணபதிப்பிள்ளை, கண்ணாத்தாள் தம்பதியின் கனிஷ்ட புத்திரர். இவருக்கு இரு சகோதரிகள். தனது மூன்றாவது அகவையில் அன்னையை எம்.சி. இழந்தார். சகோதரியான விசாலாட்சி ஐயம்பிள்ளையின் அரவணைப்பில் வளர்த்தெடுக்கப் பட்டார். திருமதி.விசாலாட்சி ஐயம்பிள்ளைக்குப்
- முத்த எழுத்தாளர் திரு 72 கனடாவின் 'இயல் விருது' வ
கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் வழ அன்று கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்தேறியது. )
இலக்கியத் தோட்டம் சார்பாக ஒன்டாரியோ ப கனகநாயகம் அவர்கள் நேரில் சமூகமளித்து இந்த கெளரவித்தார்.

பிள்ளைகள் இல்லாததால், சகோதரனுக்குப் பெற்ற தாயின் உணர்வலைகள் ஏற்படாதவாறு, மிகுந்த வாரப் பாடோடு வளர்த்தெடுத்து, எம் .சியை மற்றவர்கள் பின்பற்றி நடக்கக் கூடிய பெருந் தலைவராக்க முடிந்தது. எம்.சிக்குத் திருமணம் இலட்சுமி செல்லையாவோடு 1944-தையில் நிகழ்ந்தது. தனது கணவனின் மனமறிந்து இவர் சேவித்த தன்மையும் எம்.சி. வாழ்வில் உச்சங்களைத் தொட உதவியதெனலாம்.
நிறைவாக, எம்.சி. அடிமட்ட மக்களின் எழுச்சிக்குத் தனது சுகபோகங்களை அர்ப்பணித்தும், இன்றுவரை அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் யாழ்ப்பாணத்தில் இல்லாதிருப்பது, பஞ்சம சமூகங்கள் கூட எம்.சியை மறந்து விட்டதோவென ஐயப்பட வைக்கிறது. என்றாலும் , அவரது மகன் எஸ்.சந்திரபோஸ் தொலை நோக்கோடு "எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி" என்ற கட்டுரைத் தொகுதி நூலை வெளியிட்டிருப்பது தந்தை பெய்த உணர்வுத் துளிகள் மகனில் இன்னமும் வற்றவில்லை யென்பதை நினைக்க வைக்கிறது. அது மட்டுமல்லாது, தானாட விட்டாலும் தன் சதை ஆடுமென்பதை வலுப்படுத்துகிறது!
எம்.சி. ஐயா! துப்பாக்கி நிழலில் சாதிகள் இப்போ மறைந்து கிடக்கின்றன - மரித்துவிடவில்லை. துப்பாக்கியால் மட்டும் ஒரு சமூக நியதியை, வாழையடி வாழையாக வரும் சமூக வழக்கத்தை நிரந்தரமாக ஒழித்துவிட முடியாது. எனச் சாதிமான்கள் பஞ்சமரை அச்சுறுத்துகின்றனர். எனவே பஞ்சமரின் இந்நிலையில் உமது தொண்டு அவர்களுக்குத் தேவை! உம்மை மனதார விரும்பி அழைக்கின்றோம். வருவீரா!
.கே.கணேஷ் அவர்கள் ழங்கிக் கெளரவிக்கப்பட்டார். 2
ங்கிய இயல் விருது வழங்கும் விழா 02 - 01-2003 பேராசிரியர் சோ.சந்திசேகரன் அவர்களது தலைமையில்
ல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியர் திரு. செல்வா விருதை திரு. கே.கணேஷ் அவர்களுக்கு வழங்கிக்
- ஆசிரியர்
க.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 196

Page 98
Ishes to
Mallikai 38th O
LEELA
REFERENCE
Fancy, Sta
Saloon
24, Sri Kathi
Colombe Tel: 43

Year Issue
Enterprises
utionery &
Items
528
Fresan Street,
- 13. 294 12
386US A 600I GLDVİ 260IOurf - 2003
97

Page 99
61னது சொந்த வாழ்க்கையையும் இ மாற்றியமைக்கும் அந்தக் காத்திரமான முடிவை எடுத்தேன்.
இலக்கியச் சிற்றேடொன்றை இந்த யாழ்ப்பாணத்து கொணர வேண்டுமென்ற எனது நீண்ட நாள் அ
கொடுத்தேன்.
இந்த ஆக்க பூர்வமான முடிவிற்குப் பின்னால் ! இதற்காகக் கொடுத்த உழைப்பின் விலை எழுத்தில்
இது சம்பந்தமாக என்னைத் தெரிந்த பலரிடமும் சிலரிடமும் ஆலோசனை கலந்தேன்.
பலர் உண்மையாகவே பயமுறுத்திக் காட்டினர். திறமையில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் கூ பின்னணியைக் காரணம் காட்டி யோசித்துச் செய்யும்
விந்தன் என்ற எழுத்தாளனை எனக்கு அந்தக் பிடிக்கும். அவரது எழுத்தையும், எழுத்து நடை சுவைத்துப் படிப்பேன். அவர் 'மனிதன்' என்றொரு | சென்னையில் நடத்திக் கொண்டிருந்தார். அதே போல் 'சாந்தி' என்றொரு மாசிகையை நெல்லையில் | சஞ்சிகைகளுக்கு நேரடியாகச் சந்தா செலுத்தித் தரு அதே போல, க.நா.சு ; ஜெயகாந்தன் போன்றோரு சில சிற்றேடுகளைத் தொடங்கித் தொடர்ந்து நடத்தி ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி 'ஞான ரதம்'.
இவை அத்தனையும் ஒரு சில காலங்களே ! பின்னர் சில ஆண்டுகளில் இயல்பாகவே இயற்கை
என்னால் ரொம்பவும் மதிக்கப் பட்டவர் விஜ கோவையைச் சேர்ந்தவர். இவர் 'சரஸ்வதி ' என்ற த சஞ்சிகையைச் சென்னையிலிருந்து வெளியிட்டு வந்த தான் ஜெயகாந்தன் நிறைய நிறையச் சிறுகதைகள் க.நா.சு. எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணன், ரகுநாத சிதம்பரனார், வல்லிக்கண்ணன் போன்றோர் அடிக்க வந்தனர். சுந்தர ராமசாமியும் எழுதி வந்தார்.
இதே காலகட்டத்தில் நானும் சரஸ்வதிய தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தேன். தமிழக எழுத்தாளர் உருவப் படங்களுடன் எனது படமும்
அட்டையில் வெளிவந்திருந்தது. அந்தக் காலத்தில் இங்கு அது பேசப்பட்டது.
சரஸ் வதியில் வெளி வந்த அட்டைப் பட வெளியீடுகள் தான் எனக்கும் மல்லிகையில் கலைஞர்களை அட் டைப் படமாக வெளியிட்டு வைக்கும் முயற்சிக்கு உந்து சக்தியாகத்
டொ திகழ்ந்து வருகின்றது.

லக்கிய வாழ்வையும் அந்த நிமிஷமே நான்
து மண்ணிலிருந்து வெளிக் பூசைக்கு உயிர் வடிவம்
நான் கடந்த காலங்களில் வடிக்க முடியாததொன்று. 5 என்னால் நேசிக்கப்படும்
மல்லிகை
சிலர் என்னுடைய ஆர்வத் ட, எனது பொருளாதாரப் படி கேட்டுக் கொண்டனர். காலத்திலேயே ரொம்பப் யையும் நான் ரஸித்துச் மாசிகையைச் சில காலம் ல, ரகுநாதன் அவர்களும் நடத்தி வந்தார். இந்தச் தவித்துப் படித்து வந்தேன். நம் தங்களுக்கமைவாகச் வந்தனர். ஜெயகாந்தனை பந்த சஞ்சிகையின் பெயர்
824 o் லர் 200327வரி
தொடர்ந்து வெளிவந்தன. கயெய்தி விட்டன. ஓயபாஸ்கரன் அவர்கள். தரமான ஓர் இலக்கிய கார். இந்த இதழில் ர எழுதிவந்தார். கன், சாமி. கடி எழுதி
ติด
அச்சுத் தாளின்
ஊடாக ஓர் அநுபவப் பயணம்
மினிக் ஜீவா
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 98

Page 100
இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் சரஸ்வதியின் மறைவிற்குப் பின்னர் தான், அப்படியான ஓர் இலக்கிய இதழை யாழ்ப்பாணத்தில வெளியிட வேண்டும் என்ற மன ஓர்மத்தை என்னுள் விதைத்து வைத்தது என்று கூடச் சொல்லலாம்.
நான் அணுகிய சில ஆத்மார்த்திக நண்பர்கள் இந்தத் தகவல்களைச் சொல்லித் தான் என்னை இது சம்பந்தமாக ஆலோசிக்கும்படி வேண்டிக் கொண்டனர். உண்மையைச் சொல் கிறேனே, எனக்கும் உள்ளூரப் பயந்தான். ஆனால், எனது மன மருட் சியை நான் வெளிக் காட்டிக் கொண்டதில்லை. அந்தக் கால கட்டத்தில் ரஸிகமணி கனகசெந்திநாதன் வாரம் இருமுறைகள் என்னைச் சந்திப்பது வழக்கம் அவரிடமும் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்டேன்.
''டேய் சொக்கா! இது உனக்கேற்ற சோக்கான வேலைதானடாப்பா! ஆனா, வெகு கவனமாக இருக்க வேணும். இருக்கிற கைக் காசையெல்லாம் பறிச்சுக் கொண்டு போயிடும். பெரிசா ஆசைப்படாதை. ஏதோ உன் போக்குப் படியே செய்!'' என்று ஆலோசனை கூறினார்.
இப்படிப்பட்ட பல்வேறு ஆலோசனைகளுக்கு மத்தியில் நான் சஞ்சிகை வெளியிடுவதற்கான வேலைகளை வெகு உற்சாகமாகக் கவனிக்கத் தொடங்கி, தொடர்ந்து இயங்கி வந்தேன்.
பணம், மாசிகைக்கான உள்ளடக்கக் கதை, கவிதை, கட்டுரைகளைச் சேகரிக்கத் தொடங்கி நண் பர்களுடன் தொடர்பை விஸ்தரித்துக் கொண் டேன் . கடிதத் தொடர்புகளை
விரிவுபடுத்தினேன்.
அடைவு வைக்கப் போவதாகப் பொய் சொல்லி மனைவியின் காப்பை வாங்கி விற்றேன். 360 ரூபாய் கிடைத்தது. புத்தகக் கடைப் பூபாலசிங்கம் 25 ரூபாய் தந்தார். ஐ.ஆர்.அரியரத்தினம் 40- ரூபாய் தந்தார்.
இந்தச் சஞ்சிகைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதே என் நெஞ்சில் நிறைந்துள்ள அடுத்த கேள்வியாகும். காலம் கால மாகக் குழந்தையில்லாமல் உறவினரால் - 'மலடி' எனத் தூற்றப் பட்ட ஒரு நடு வயதுப் பெண், தனது கருவில் உருவைச் சுமக்க நேரும் போது, பிறக்கப் போகும் குழந்தைக்கு அது ஆணாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம்? பெண்ணாக இருந்தால் என்ன பெயர் வைத்துக் கூப்பிடலாம்? எனத் தனக்குள் தானே ஆயிரம் பெயர்களைச் சொல்லிச் சொல்லி பின்னர் ஒவ்வொன்றாக அவற்றை அழித்து, ஏதோ ஒரு நல்ல, மனசுக்குகந்த பெயரைத் தேர்வு

செய்வதில் எத்தனை தூரம் மனத் தவிப்படைவாளோ அந்தளவுக்கு நானும் பெயர் தேடுவதில் தவியாய்த் தவித்துப் போனேன்.
இலங்கை பூராவுமுள்ள இலக்கிய நண்பர்களிடமெல்லாம் ஆலோசனை கேட்டேன்.
எழுத்தாளர் நந்தி, அவர் தம்பி, திருவாளர்கள் ஆப் டீன், கனகரட்னா, கமால் , லத்தீப், பி.ராமநாதன், கே.கணேஷ், கைலாஷ், முருகபூபதி, சோமகாந்தன், வரதர், வித்துவன் வேந்தனார், ஓட்டப்பிடாரம் குருசுவாமி, ரெங்கநாதன், கிஸார் போன்றோரிடமெல்லாம் என் ஆதங்கத்தைச் சொல்லிச் சொல்லி ஆலோசனை கலந்தேன்.
பலர் பலவிதமான பெயர்களைச் சொன்னார்கள். உண்மையைச் சொன்னால் எனக்கு உள்ளூர ஓரு ஆசையுண்டு. மணிக் கொடி, மறுமலர்ச்சி, மரகதம் என்பது போல முதலெழுத்து 'மானா' வரியில் அமைய வேண்டும் என்பது என் பெரு விருப்பம். அதே போல புதிய எனது சஞ்சிகைக்குத் தாமரை, செம்மலர் போல ஒரு பூவின் பெயர் அமைந்தால் வெகு சிறப்பாக அது இருக்கும் என்பதும் என்னுடைய மன ஆசைகளில் ஒன்றாகும்.
ஒரு பெயருக்காகப் பெரும் தவமிருந்தேன்.
இதே சமயம் என் அடி நெஞ்சிலிருந்து ஒரு வாசம் கமகமத்துக் கொண்டிருந்தது. இளவயசில் நானொரு பெண்ணை இதய பூர்வமாக நேசித்தேன். அவளும் என்னை விட ஆழமாக என்னிடம் அன்பு செலுத்தினாள். இருவரும் இரவு நேரத்தில் ஒரு மல்லிகைப் பந்தலின் கீழ்தான் அடிக்கடி சந்திப்பது வழக்கம். பிரிவு கூட, அந்தப் பந்தலின் கீழ்தான் இறுதியில் நிகழ்ந்தது. இது சம்பந்தமான விவரமான குறிப்பை எனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளேன்.
அந்த அடி மனத்தூய வாசம் தான் 'மல்லிகை' என்ற பெயரை எனது சஞ்சிகைக்குச் சூட்டச் செய்ததோ என்பதை நான் அறுதியிட்டுக் கூற
முடியாது.
அதே சமயம் அதை முற்றாக மறுதலித்து விடவும் என்னால் இப் போது இயலாதுள்ளது.
'மணிக் கொடி' சஞ்சிகைக்கு வ.ராவும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பெயர் சூட்டிய சம்பவத்தை அது சம்பந்தப் பட்டவர்கள் எழுத்தில் சொல்லக் கேட்டிருக்கிறேன். பாரதியாரின் பாட்டு வரிகளிலிருந்து - தாயின் மணிக்கொடி பாரீர்! - இந்தப் பெயர் சூட்டியதாகவும், சிலர் கம்பன்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
| 99

Page 101
மிதிலையை வர்ணிக்கும்
பொ ழுது கோட்டை யெங் கும் மணிக் கொடி பறந்து . கொண்டிருந்ததை எழுத்தில் வடித்ததைத் தேடி மணிக் கொடி எனப் பெயர் சூட்டியதாகவும்
குறிப்பிட்டுள்ளார்கள்.
சஞ்சிகைக்குப் பலர் பல பெயர்களைத் தந்துதவினாலும், முடிவில் மல்லிகை என்ற பெயரையே நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
முதல் இதழை வெளியிட்டு விட்டேன். அதன் விலை முப்பது சதம். ஐந்நூறு பிரதிகள் தான் அச்சிட்டேன். அச்சக மொத்தச் செலவு 250/- ரூபாய்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள நாமகள் அச்சகத்தில் அதன் முதல் இதழ் அச்சாகி வெளிவந்தது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், முதல் இதழை நாமகள் அச்சகத்தில் அச்சுக் கோத்த திரு கா . சந்திரசேகரம் தான் பின்னாளில் மல்லிகையின் பிரதம அச்சுக்கோப்பாளராகக் கடமை புரிந் ததுடன் என்னுடன் மல்லிகை வளர்ச்சிக்குப் பங்காற்றியவருமாவார்.
இதில் சரித்திர முக்கியத்துவம் என்னவென்றால் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி 60-ம் எண்ணுள்ள ஜேசேப் சலூனுக்குள்ளிருந்து, அந்தச் சிகையலங்கரிப்பு நிலையத்தில் முடி திருத்தும் தொழில் புரிந்து கொண்டிருந்த ஓர் உழைப்பாளியை ஆசிரியராகக் கொண்டு, ஈழத்து வரலாற்றில் புதுமையாக ஓர் இலக்கிய இதழ் முதல் முதலில் யாழ்ப்பாணத்தில் தான் வெளிவந்தது.
நாவலர் மண்ணில் தான் இந்தப் புதுமை நடந்தது. 1966-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மல்லிகை இதழ் வெளிவந்தது. விற்பனைக்காக புத்தகக் கடைகளில் தொங்கியது.
1960-ம் ஆண்டுக்கான படைப்பிலக்கியப் பரிசு 1961-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு முதன் முதலில் படைப்பு இலக்கியத்திற்குக் கிடைத்தது. எனது சிறுகதைப் படைப்பான 'தண்ணீரும் கண்ணீரும்' தொகுதிக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.
யாழ்ப்பாண உயர்சாதி வெறியர்களால் இதைச் சீரணிக்க இயலவில்லை. நான் பிறந்த குலத்தை இழிவு படுத்தி, என்னைத் தரக் குறைவாக விமர்சித்தனர். அந்தக் காலகட்டத்தில் தெணியான் யாழ்ப் பாணம் கொழும்புத் துறை ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவனாகக் கல்வி பயின்று வந்துள்ளார். அவருக்கும் எனக்கும் தொடர்பேதுமில்லை, அப்போது.

எனக்குப் பரிசு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை வீரகேசரி எனது புகைப்படத்துடன் முன் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. பாராட்டியிருந்தது.
அன்று ஆசிரிய கலாசாலையில் இலக்கிய வகுப்பெடுக்க வந்தவர் பண்டிதர் இராசையா என்பவர். வகுப்புக்குள் நுழைந்த சூட்டோடு, சூடாக கூடியிருந்த மாணவர்களை விழித்து 'உங்களுக்கு ஓர் அதிசயச் செய்தியைக் கூறப்போறேன். இந்த ஆண்டு அரச சாஹித்திய மண்டலப் பரிசு ஒரு நாவிதனுக்கல்லவோ கிடைச்சுப் போச்சு! தமிழ் போற போக்கைத் தான் பாருங்கோவன்!” என்று புறுபுறுத்தாராம். மட்டரகமாக எனக்குப் பரிசு தந்ததைப் பற்றி விமரிசித்து வாய்க்கு வந்தவண்ணம் பேசினாராம்.
'நீங்கள் படிப்பிக்கிறது கம்பராமாயணம். ராமாயணத்தின் மூல ஆசிரியர் வால்மீகி. வால்மீகி ஒரு வேட்டுவன். இலக்கியத்தில் சாதி ஏற்றத் தாழ்வு பேசும் நீங்கள் ராமாயணத்தைக் கூடவல்லவா எங்களைப் போன்ற மாணவர்களுக்குப் படிப்பிக்கக்
கூடாது!'' எனக் கேட்டாராம், தெணியான்.
இதையேன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், சாதி அகங்காரம் உயர் கல்வித் துறையிலும் அறிவு மட் டத் திலும் எத் தனை துாரம் அவல நிலைக்குட்பட்டு அவஸ்தைப் பட்டு நின்றது என்பதைப் புலப்படுத்துவதற்கே. இன்றும் கூட அது மாறவேயில்லை!
இதில் ஆச்சரியப் படத் தக்க விஷயம் என்னவென்றால் சாதித்தூய்மை வாதம் பேசிய பண்டிதர் இன்று அவுஸ்திரேலியாவில் அகதி. நான் இந்த மண்ணில் மல்லிகை ஆசிரியர். இப்படியான மனத் தூய்மையற்ற, படித்தவர்கள் எனத் தங்களைத் தாங்களே பிரகடனப் படுத்திக் கொண்ட, ஒரு சமூகச் சூழ்நிலையில் ஒரு தலித் சலூனுக்குள் தன்னை முகப்பில் ஆசிரியராக எழுத்தில் பிரகடனப் படுத்திக் கொண்டு, சிற்றேடொன்றை வெளியிடத் துணிந்து செயல் பட்டானென்றால் அவனுக்கு எத்தனை மனத் துணிச்சல் வேண்டும்! எத்தனை நெஞ்சழுத்தம் வேண்டும்!
முதல் இதழை வெளியிட்டு விட்டேன். அதைத் தொடர்ந்து சந்தைப் படுத்த வேண்டுமே!
எப்பொழுது ஒரு பொருளுக்கு விலை மதிப்புப் பொறித்து விட்டோமோ, அதே கணம் அப்பொருள் விற்பனைப் பண்டம் தான். ஆனால், நான் மல்லிகையை ஒரு வணிகப் பொருளாகக் கருதவேயில்லை. அதன் முகப்பில் அதன் விலையைக் குறிப்பிட்டதற்குக் காரணமே அது ஓர்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 100

Page 102
இலவசப் பிரசுரமல்ல என்பதைப் பலருக்கும் பகிரங்கமாக அறிவுறுத்துவதற்காகவே.
கஸ்தூரியார் வீதி யாழ்ப்பண நகரத்தில் மிகவும் பிரபலமான தெருக்களில் ஒன்று. அதுவும் ஜோசப் சலூன் இடம் பெற்ற இடம் முக்கியமான பகுதி. அந்தச் சலூனுக்கு வெளியே பகிரங்கமாகப் பெரிய எழுத்தில் 'மல்லிகைக் காரியாலயம், ஆசிரியர்: டொமினிக் ஜீவா' என விளம்பரப் பலகை எழுதி மாட்டி வைத்திருந்தேன்.
பஸ்ஸில், சைக்கிளில், கால் நடையாகப் போகும் பலரின் கண்களில் இந்த விளம்பரப் பலகையின் வாசகம் பட்டுக் கொண்டேயிருக்கக்
கூடிய கோணத்தில் அதை அமைத்திருந்தேன்.
பாதசாரிகள் பலருக்கு இவ் விளம்பரம் ஓர் அதிசயம். பார்வையை நிறுத்தி, நிதானமாகக் கவனமெடுத்து இந்த விளம்பரத்தைக் கண்ணுற்றுப் போனவர்கள் பலரை நான் இடையிடையே
அவதானித்து வந்துள்ளேன்.
நான் இன்றுங்கூட நினைக்கின்றேன். சஞ்சிகை ஒரு சலூனுக்குள் தோற்றுவித்தது கூட அதிசயமல்ல. புதுமையல்ல. யாழ்ப்பாண நகரத்தின் இதய மையமான பகுதியில் சிகையலங் கரிப் பு நிலையத்திற்கு முன்பாகக் பகிரங்கமான ஒரு சஞ்சிகையின் காரியாலய
ஆசிரிய விளம்பரங்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த எனது செயலை எண்ணித்தான், இன்று கூட, நான் நெஞ்சுக்குள் மகிழ்சிப் பெருமிதமடைகின்றேன்.
உண்மையைச் சொல்லப் போனால் என்னிடம் நெருக்கமாகப் பழகும் பலருக்குமே இந்த இதழ் தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கையில்லை. கூடிய சீக்கிரமே வாடி, உதிர்ந்து போய்விடும் என நம்பினார்கள். சிலர் எனக்கு நேரடியாகச் சொல்ல முடியாமல் தமக்குள் பேசித் திருப்திப்பட்டுக் கொண்டனர்.
மல்லிகை வெறும் இயற்கைப் பூவாக இருந்திருந்தால் அது எப்போவோ ஒரு நாள் வாடிக் கருகி உதிர்ந்து போயிருக்கும். மல்லிகை வெறுமனே ஒரு மலரல்ல . அர்ப்பணிப்பு, உழைப்பு, அயராத தன்னம்பிக்கை என்ற உருக்கினால் வார்க்கப்பட்ட சிற்பம் அது.
'பிரபலமானவர்களாலும் வெகு சனங்களின் அபிமானம் நிரம்பப் பெற்றவர்களாலும் கடந்த காலங்களில் இந்த மண்ணிலும் தமிழகத்திலும் பொறுப்பேற்று வெளியிடப் பெற்ற சிற்றிலக்கிய ஏடுகள் ஏன் தொடர்ந்து வெளிவர முடியவில்லை?

ஏன் அவைகள் இடை நடுவில் மரித்துக் போய் விடுகின்றன?' என உணர்வு பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தேன். பொது
சனங் களுக் கும்
இந் த வெளியீடுகளுக்குமிடையே தொடர்ந்து தொடர்பற்றுப் போனதற்கு என்ன காரணம்? இலக்கியத் தரமானதும் தேடல் தகவல் மிக்கதுமான ஆரோக்கியமான இலக்கியத் தரமான அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டு வெளிவந்த இத்தகைய தரமான இதழ்கள் பொதுசன அபிமானத்தைப் பெற்றுக் கொள்ளாமல் போனதற்கு என்னதான் காரணமாக இமைந்திருக்கலாம்? என மண்டை சூடேறும் வகையில் சிந்தித்துப் பார்த்தேன்.
சஞ்சிகையைத் தயாரித்து, அச்சேற்றி முடித்து விற்பனவு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதோடு இவர்களது முயற்சி முடிவடைந்து போய் விடுகின்றது. அதைச் சந்தைப் படுத்தும் திட்டம் இவர்கள் ஒருவரிடமும் இல்லை. அதனால் தான் சிற் றேடுகள் தோல்வியைத் தழுவிக் கொள் ளுகின் றன. முடிவில்
சில ஆண்டுகளுக்குள்ளேயே மரித்துப் போய் விடுகின்றன என்ற முடிவுக்கே நான் வந்தடைய முடிந்தது.
இந்தத் தொடர் சிந்தனையில் தாக்கம் என்னுள் புதிய புதிய பார்வையை ஏற்படுத்தியது.
மல்லிகையைச் சுமந்து கொண்டு வீதியில் இறங்கி விட்டேன். தெருத்தெருவாக இதழ் விற்று குடும்பம் நடத்தத் தொடங்கினேன்.
தரமான வாசகர்கள் நம்மைத் தேடி வருவதற்குப் பதிலாக, காத்திரமான வாசகர்களைத் தேடி நானே தெருத் தெருவாக அலையத் தொடங்கினேன். வீதியெல்லாம் சுற்றி வந்தேன்.
வாசகர் வட்டத்தைப் பெருப்பிப்பதற்கு எனக்குச் சூட்சுமம் கற்றுத் தந்தவர் பெரியார் தான்.
ஆரம்பகாலத்தில் குடியரசுப் பத்திரிகையை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அவர் கையாண்ட வழி முறைகளை எழுத்தில் படித்து நான் கற்றுத் தெளிந்தேன்.
பல, பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் தனது அரசியல் பத்திரிகையை மக்களிடம் கொண்டு செல்வதற்கு, கைக்கொண்ட உத்தி முறைகளை நானும் கையாளத் தொடங்கினேன். ஆரம்ப காலங்களில் ஆனந்தவிகடன் வாசகன் கடைப்பிடித்த நுட்பங்களையும் கடைப்பிடித்தேன்.
- (அநுபவம் தொடரும்)
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 101

Page 103
மிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இந்நாட்டுத் தமிழ் புலவர், அறிஞர்கள் பலர், காத்திரமான பங்களிப்பைச்
செய்துள்ளனர். மிகப் பழங் காலத்தில் தொடங்கிய இப்பணி இடையீடின்றி இன்றுந் தொடர்கின்றது. சங்கப் புலவர்களுள் ஒருவராக இருந்த ஈழத்துப் பூதன் தேவனார் இதற்குக் கால்கோளிட்டவராகக் கருதப் படுகின்றார். அவரைத் தொடர்ந்து பல புலவர்களும் கவிஞர்களும் தம் கவிதைகளாலும், காவியங்களாலும் தமிழ் மொழியை வளப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்பு முனை ஏற்படுத்துவதற்கு வழி வகுத்தவர் யாழ்ப்பாணத்து நல் லுார்
ஆறுமுகநாவலர்.
எழுத்துச் சிறுகதைகள்
கவிதையிலே நடனமிட்ட தமிழ் அணங்கை - வசனத்திலே நடக்க வைத்தவர் அவர்.
அன்ன நடை பிடியினடை யழகுநடை
யல்ல வென வகற்றி யந்நாட் பன்னமுது புலவரிடஞ் செய்யுண்டை
பயின்ற தமிழ்ப் பாவையாட்கு வன்ன நடை வழங்குநடை வசனநடை யெனப் பயிற்றி வைத்த வாசான் .....
எனத் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவராலும் 'வசன நடை கைவந்த வல்லாளன்' எனப் பரிதிமாற் கலைஞர் என்ற வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியாலும் பாராட்டப் பட் டவர்
ஆறுமுகவாநலர்.
செய்யுளில் மட்டும் அமைவதே இலக்கியம் என்ற இறுக்கமான நிலை, மெல்ல மெல்லத் தளரத் தொடங்கியது. உரைநடையிலும் இலக்கியம் உருவாக ஆரம்பித்தது.

தமிழ் மொழியிலே 'கதைகளுக்கு என்றுமே பஞ் சம் இருந்ததில்லை. பாலர்களுக் கும் சிறுவர்களுக்கும் 'கதை சொல்வது' பாட்டிமாரின் எழுதாக் கடமையாக - மரபாக இருந்து வந்துள்ளது.
ஆனால், மேலைநாட்டினரின், குறிப்பாக ஆங்கிலேயரின் வரவாலும், தொடர்பாலுமே கதைகள் , ' சிறுகதை', 'புதினம்' (நாவல்) என்ற இன் றைய வடிவங் களைப் பெற்றதாக விமர்சகர்களும் ஆராய்ச் சியாளர்களும் கூறுகின்றனர்.
ஆங்கிலேயரின் ஆட்சியில் ஏற்பட்ட ஆங்கிலக் கதைகளை இங்குள்ளோர் வாசிக்க ஆரம்பித்தனர்.
அரசியல் துறையில் ஏற்பட்டுக்
38:22 மல்லிகை அஸ்லம்
20032ுவரி
வரும் சிற்பி
கொண்டிருந்த மாற்றங்கள் சமூக விழிப்புணர்ச்சி,
பத்திரிகைகளின் தோற்றம், விஞ்ஞான வளர்ச்சி காரணமாக மக்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரம் போன்றவை, மேனாட்டுச் சிறுகதைகளைப் போல், தமிழிலும் எழுதவேண்டும் என்ற உந்துதலை எழுத்தாளர்கட்கு ஏற்படுத்தின.
முதன் முதலில் அத்தகைய சிறுகதைகளைத் தமிழில் எழுதியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆணல்ட் சதாசிவம் பிள்ளை என் பராவார். இலங்கையின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான 'உதய தாரகை'யின் ஆசிரியராக 1860 - களிற் பணியாற்றத் தொடங்கிய அவர், அப்பத்திரிகையிற் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறுகதைத் தொகுதி ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றார்.
தமிழ்ச் சிறுகதையின் மூலர்களாக வ.வே.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா ஆகியோரைக் குறிப்பிடுவதுண்டு. இலங்கையில், இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்தியலிங்கம் ஆகியோர் 'சிறுகதை முன்னோடி' களாகக் கருதப்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 102

Page 104
படுகின்றனர். ஈழத்துச் சிறுகதையாசிரியர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுவாகவே தமிழ்ச் சிறுகதையாசிரியர்கள் அனைவருக்கும் முன்னோடி ஜே.ஆர்.ஆணல்ட் சதாசிவம் பிள்ளை என, சோ.சிவபாதசுந்தரம், சிட்டி, ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'தமிழ்ச் சிறுகதைகள்' என்ற நூல் ஆதார பூர்வமாக நிறுவியுள்ளது. (சமீப காலத்தில், இந்தத் தகவல் செங்கை ஆழியான் மூலமாக ஈழத்து எழுத் தாளர்களுக் கும் வாசகர்களுக் கும் எட்டியுள்ளது)
ஆரம்ப காலச் சிறுகதைகளை வெளியிட்ட பெருமை 'உதய தாரகை'க்கே உரியதெனினும் இலக்கிய - சமூகப் பிரக்ஞையுடன், உருவ, உள்ளடக்க நேர்த்தி மிக்க பல சிறுகதைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்ட பெருமை 1930 - ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டு 1938-ம் ஆண்டு தொடக்கம் சோ சிவபாதசுந்தரம் அவர்களின் ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்த 'ஈழகேசரி”க்கே உரியது. சோ. சிவபாதசுந்தரம் அவர்களுக்குப் பின்னர் 'ஈழகேசரி'யின் ஆசிரியராகப் பணியாற்றிய இராஜ.அரியரத்தினம் அவர்களும் நல்ல, தரமான சிறுகதைகளை இந்நாட்டு எழுத்தாளர்களிடம் பெற்று வெளியிட்டார். நமது நாட்டில் அவ்வப்போது தோன்றி மறைந்த சில சஞ்சிகைகளும் இப்போதும் வெளிவரும் நாளிதழ்களின் வாரமலர்களும் சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றிய, ஆற்றி வருகின்ற பங்களிப்பு கணிசமானது.
***
பாடசாலை மாணவனாக நான் இருந்தபோதே வாசிக்கும் பழக்கம் என்னிடம் ஏற்பட்டுவிட்டது. கையிற் கிடைக்கும் நூல் களையும் சஞ்சிகைகளையும் நான் வாசித்தேன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், ஈழகேசரி ஆகியவற்றைத் தவறாது வாசித்தேன். நான் மிகவும் விரும்பி வாசித்தவை சிறுகதைகள் தாம். தமிழகப் பத்திரிகைகளில் அழகான படங் களுடன் சிறுகதைகள் வெளியிடப்பட்டன. ஈழகேசரிக் கதைகள் படங்களின்றியே வெளியாகின. எனினும் ஈழகேசரிக் கதைகளும் என்னைக் கவர்ந்தன. எழுதியவர்களின் எழுத்தாற்றலும், எங்கள் நாட்டுப் பின்னணியில், இங்குள்ள மக்களின் வாழ்க்கை சம்பந்தமான கதைகளாக அவை இருந்ததும் காரணமாக இருக்கலாம். தமிழக எழுத்தாளர்கள் பிரபலமடைந்த அளவுக்கு எமது எழுத்தாளர்கள் அடையாவிட் டாலும், இவர்களின் தரம் எவ்வகையிலும் குறைந்ததல்ல என்ற எண்ணம் |

என்னுள்ளே உருவாகத் தொடங்கியது. சில ஆண்டுகளின் பின்னர் கரவைக் கவி கந்தப்பனார் என்ற பெயரில் கனக செந்திநாதன் 'ஈழகேசரியில் எழுதிய 'ஈழத்துப் பேனா மன்னர்கள்' என்ற தொடர் விமர்சனக் கட்டுரை என் எண்ணத்தை உறுதிப் படுத்தியது. இலங்கையர் கோன், சம்பந்தன், சோ.சிவபாதசுந்தரம், சி.வைத்தியலிங்கம், அ.செ.முருகானந் தன் போன்றவர்களின் சிறுகதைகள், சென்னை அல்லயன்ஸ் கம்பனி வெளியிட்ட 'கதைக்கோவை'களில் இடம் பெற்ற செய்தியையும் கனக செந்திநாதனின் கட்டுரைகள் தெரிவித்தன. கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், போன்ற பிரபலமான சஞ்சிகைகளில் ஆசை அருமையாக இலங்கை எழுத் தாளர்களின் சிறுகதைகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்திலிருந்து 'சிறுகதை மஞ்சரி' என்ற நூல் வெளிவந்தது. தமிழக எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து, 'சோமு' என்ற மீ.ப.சோமசுந்தரம் அவர்கள் இந்திய சாகித்திய அக்கடமியின் சார்பில் அந் நுாலை வெளியிட் டிருந்தார். இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதை எதுவுமே அந்தத் தொகுதியில் இடம் பெறாதது ஒரு குறையாகவே எனக்குப் பட்டது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு என்னுள்ளே ஏற்பட்டது. ஆனால் என்னத்தைச் செய்வது? அதை எப்படிச் செய்வது? என்பதொன்றும் எனக்குத் தெரியவில்லை.
நான் சிறுவனாக இருந்தபோது எனக்குத் தமிழ் கற்பித்து, இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்படும் படி செய்த ஆசிரியர் திரு.சி.பொன்னம்பலம் (ஆதவன்) அவர்களுக்கு இதைப் பற்றிச் சொன்னேன்.
திரு.அ.செ.முருகானந்தன் அவர்களுடன் இது பற்றிப் பேசிப் பார்க்கலாம் என அவர் சொன்னார். அ.செ.மு.அவர்களை அவருக்கு நன்கு தெரியும். தன் தாயாருடன் அளவெட்டியில் அப்போது வசித்து வந்தார் அ.செ.மு.
அவரைச் சந் தித் தபோ து ஈழத் து எழுத்தாளர்கள், சிறுகதைகள், சஞ்சிகைகள் பற்றிய பல தகவல் களை அறிய முடிந் தது. பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான சிறுகதைகளை வைத்துக் கொண்டு இந்நாட்டு எழுத்தாளர்களுக்காக வாதாட முடியாது. நல்ல சிறுகதைகளைத் தெரிவு செய்து ஒரு நூலாக வெளியிட வேண்டும். ஆனால், அது சாத்தியமா?'' என்று கேட்டார் அ.செ.மு.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
|103

Page 105
என்னுடைய மனத்திலும் இப்படியான ஓர் எண்ணம் அரும்பியிருந்தது தான். ஆனால், அதை யாரிடமுஞ் சொல்லும் துணிவு எனக்கிருக்கவில்லை. இப்போது அ.செ.மு. அவர்களும் அப் படிச் சொன்னபடியால், நான் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினேன்.
யாழ்ப்பாணத்தில் இத்தகைய நூலொன்றைப் பிரசுரிப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். நாங் களாக வெளியிடுவதானால் அதிக பொருட்செலவு ஏற்படும், அந்த அளவு பொருளாதார பலம் எங்களிடம் இல்லை. நூலை அழகாகவும் கவர்ச்சியாகவும் வெளியிட முடியுமா என்பதும் சந்தேகமே.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்த என் நண்பர் அழ. சிதம் பரம் அவர்களுக்கும் சென்னை வை.எம்.சி.ஏ.பட்டிமன்றத் தலைவர் திரு.அன்பு பழம் நீ அவர்களுக்கும் எழுதினேன். அவர்களுடைய பதில் எனக்கு உற்சாகமூட்டியது. சென்னை பாரி நிலைய உரிமையாளர், நூல் வெளியீட்டில் உதவ முன்வந்திருப்பதாக அவர்கள் அறிவித்தார்கள். இதைக் கேள்வியுற்ற திரு.முருகானந்தன் 'பெரிதாக ஒரு தொகுதியை வெளியிடாமல் சிறியவையாக நான்கு தொகுதிகள் வெளிவர வேண்டும்' என்று சொல்லி, ஒவ்வொன்றிலும் இடம் பெறவேண்டிய எழுத் தாளகளின் பட்டியலையும் என்னிடம் கொடுத்தார்.
முதலாவது தொகுதி
சி.வைத்தியலிங்கம்,
சம் பந்தன், வ.அ.இராசரத்தினம், தாழையடி சபாரத்தினம், அ.செ.முருகானந்தன். இராச . அரியரத்தினம், சி.சரவணபவன், தி.ச.வரதராசன், சு.வே., சகிதேவி.
இரண்டாவது தொகுதி
இலங்கையர்கோன், சோ சிவபாதசுந்தரம், சோ.நடராசா, ராஜநாயகம், எஸ்.டி. சிவநாயகம், சொக்கன், கே.கணேஷ், கனக செந்திநாதன்,
அ.ந.கந்தசாமி, புதுமைப்பிரியை.
மூன்றாவது தொகுதி
குல. சபாநாதன், செ.கணேசலிங்கன், கே. டானியல், இ.நாகராசன், சுயா, ம.த.லோறன்ஸ், அருள். செல்வநாயகம், மகாகவி, பண்டிதர் பொ.கிருஷ்ணபிள்ளை , இந்திரா மகாதேவன்.

நான்காவது தொகுதி
பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை, மாயாவி (S.வேலுப் பிள் ளை) தேவன், இளங்கீரன் , கு. பெரியதம்பி, ச.ப.சர்மா, ரகுநாதன், புரட்சிக்கமால், ரீ.பாக்கியநாயகம், செ. நடராசா (அகலவத்தை)
பட்டியல் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. கசின், தெல்லியூர் நடராசா, புதுமைலோலன், நாவேந்தன், எஸ்.பொன்னுத்துரை, சில்லையூர் செல்வராசன், அன்புமணி, எஸ்.பொன்னுத்துரை, ஜீவா, உதயணன் போன்ற பலர் விடுபட்டிருந்தனர்.
''முதலாவது தொகுதியில் இலங்கையர் கோன், சம் பந்தன், சி.வைத்தியலிங்கம், இராஜ.அரியரத்தினம் ஆகியோரின் கதைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும். பழம் பெரும் எழுத்தாளர்களுடன், அனுபவமற்ற என்னயும் சேர்ப் பது பொருத்தமற்றது' என்ற என் நிலைப்பாட்டை அவரிடம் விளக்கினேன். பட்டியலில் இடம் பெற்ற எல் லோரையுமே சிறுகதை எழுத்தாளர்களாகக் கொள்ள முடியுமா?'' என்று கேட்டேன். 'வெறும் ஞாபகத்தைக் கொண்டு, அவசரத்திலே தயாரிக்கப்பட்ட பட்டியல் இது. தேவையான மாற்றங்களை அவ்வப்போது செய்து கொள்ளலாம்' என்றார் அ.செ.மு.
திரு.கனகசெந்திநாதன் அவர்களுடனும் நான் கலந்துரையாடினேன்.
வெள்ளிப் பாதசரம் (இலங்கையர் கோன்), வெள் ளம் (ராஜ - அரியரத்தினம்), மனிதன் (சம் பந் தன் ), குருவின் சதி (தாளையடி சபாரத்தினம்), அவன் (ராஜநாயகன்) ஒரு பிடி சோறு (கனக. செந்திநாதன் ), பிள்ளையார் கொடுத்தார் (வரதர்), தோணி (வ.அ.இராசரத்தினம்), வாழ்வு உயர்ந்தது (சகிதேவி), கங்கா கீதம் (சி.வைத்தியலிங்கம்), உப்பிட்டவரை (கே.டானியல்) ஆகியவற்றுடன் செ.கணேசலிங்கன் அவர்களின் ஒரு கதையையும் சேர்த்துப் பன்னிரண்டு சிறுகதைகளை ஒரு தொகுதியாக விெளயிட முடிவு செய்தோம்.
இலங்கையர் கோன் அவர்களின் 'வெள்ளிப் பாதசரம்' இத்தொகுதியின் முதற் கதையாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவரோ தன் `கடற்கரைக் கிளிஞ்சல்' என்ற சிறுகதையையே வெளியிட வேண்டும் என்பதிற் பிடிவாதமாக இருந்தார். பழம் பெரும் எழுத்தாளர் ஒருவரின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படும் துணிவு என்னிடம் இருக்கவில்லை. செ.கணேசலிங்கன்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
|104)

Page 106
IIT NW -
அவர்களிடம் சிறுகதைப் பிரதியைப் பெற்றுக் கொள்ளச் சென்றபோது, தான் விரைவில் சென்னைக்குச் செல்ல இருப்பதைக் குறிப்பிட்டு, தன் சிறுகதையைப் பாரி நிலையத்திற்கு கொடுப்பதாகச் சொன்னார். நான் வாசித்துப் பார்க்காமல் அவருடைய கதையைத் தொகுதியிற் சேர்த்துக் கொள்வதிற் தயக்கம் ஏற்பட்ட போதிலும், என்னுடைய இந்த முதல் முயற்சி குழம்பிவிடக் கூடாது என்பதற்காக நான் அதற்கு உடன் பட்டேன்.
பதிப்புரை, அணிந்துரை, எழுத்தாளர் பற்றிய குறிப்புக்கள் ஆகியவற்றையும் சேர்த்து 168 பக்கங்களில் சுன்னாகம் தமிழருவிப் பதிப்பக வெளியீடாக 1958 - ஆம் அண்டு மே மாதம் ' ஈழத்துச் சிறுகதைகள்' முதலாவது தொகுதி வெளிவந்தது. சென்னை, பாரி நிலையம் விற்பனை உரிமையைப் பெற்றிருந்தது.
ஏற்கெனவே 'ஆனந்த விகடன்' நடத்திய இலக்கிய விமர்சனப் போட்டி ஒன்றில் முதற் பரிசாகத் தங்கப் பதக்கம் ஒன்றைப் பெற்றிருந்தவரும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியருமான பண்டிதர் பொன்.கிருஷ்ணபிள்ளை தன் முன்னுரையில், 'இப்பன்னிரு கதைகளில் உயரிடம் வகிக்கத் தக்க , உலகத்துக் கதைவரிசைகளில் மிளிரக் கூடியனவும் சில உள எனத் துணிந்து கூறலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கை இந்திய எழுத்தாளர்கள் பலரின் பாராட்டுக்களை இந்நூல் பெற்றது. 'சுதேச மித்திரனில் வல்லிக் கண்ணனும், 'கலைச் செல் வி யில் யாழ்ப்பாணம் தேவனும், 'உதயதாரகை'யில் நாவேந்தனும் விரிவான விமர்சனங்களை எழுதியிருந் தனர். ஈழத்து எழுத்தாளர்களின் திறமையைப் பாராட்டிய 'மஞ்சரி' வ.அ.இராசரத்தினம் அவர்களின் 'தோணி' சிறுகதையை மறுபிரசுரஞ் செய்தது. ஈழநாட்டுச் சூழ்நிலையிற் சிறுகதைகளைப் புனைந்து அவற்றை 'ஆனந்தவிகடனுக்கு அனுப்பிவைக்குமாறு, இத்தொகுதியில் இடம் பெற்றிருந்த பன்னிரு எழுத்தாளர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார் 'ஆனந்த விகடன்' உதவி ஆசிரியரான மணியம் 'தினகரன்' ஞாயிறு இதழொன்றிலே சில்லையூர் செல்வராசன் எழுதிய விமர்சனம் மட்டும் சிறிதும் உற்சாகமளிப்பதாக அமையவில்லை. 'பல்லாண்டுகளாக எழுத்துத் துறையில் ஈடுபட்டுத் தமக்கெனத் தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்ட பழம் பெரும் எழுத்தாளர்களும், அவர்களைப் பின் பற்றி எழுதத் தொடங் கி, நல்ல பல

படைப்புகளாற் புகழடைந்துள்ள இளைஞர்களும் இம்முதற் தொகுதியில் இடம் பெறுகின்றனர். இதைப் போன்றே அடுத்து வரும் தொகுதிகளிலும் பழைய, புதிய எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள்' என நுாலின் பதிப் புரையிற் தெளிவாகக் குறிப் பிடப் பட்டிருந்தது. இருந்தும் தரமான எழுத்தாளர்கள் பலர், வேண்டு மென்றே புறக்கணிக்கப் பட்டுள்ளார்கள் எனக் கண்டித்தார் அவர். 'கடற்கரைக் கிளிஞ்சல்' கதையை வெளியிட்டதன் மூலம் 'இலங்கையர் கோன்' என்ற புகழ் பெற்ற எழுத்தாளரைப் பப்பாசி மரத்தில் ஏற்றிவிட்டதாகவும் குறைபட்டுக் கொண்டார்.
***
இலங்கை எழுத்தாளர்கள் சிலரின் சிறுகதைத் தொகுதிகள் சில, ஏற்கெனவே வெளிவந்துவிட்டன. ஆனால், பல்வேறு எழுத்தாளர்களின் தரமான சிறுகதைகளுடன் வெளியான முதலாவது தொகுதி 'ஈழத் துச் சிறுகதைகள்' தான் . 'திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்' என்பதை மனத்திலிருத்தி வெளியிடப்பட்ட இத்தொகுதி, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
நூலின் விற்பனை உற்சாகமளித்தது. அதிக எண்ணிக்கையாலான பிரதிகள் தமிழகத்திலேயே விற்பனையாயின. நீண்ட இலக்கிய அனுபவமோ, பல எழுத்தாளர்களுடைய பரிச் சயமோ இல்லாதிருந்த எனக்கு, இவ் வெளியீடு பெரு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளித்தது.
திட்டமிட்டபடி இரண்டாவது தொகுதிக்கான வேலைகளை ஆரம்பித்தேன். சொக்கன், சு.வே, புதுமைலோலன், எஸ்.பொன்னுத்துரை, ஆகியோரின் சிறுகதைகள் கிடைத்தும் விட்டன. ஆனால், 'திடீர்' என்று எடுத்த ஒரு முடிவின் படி 'கலைச்செல்வியை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். நாட்டின் அரசியல் நிலை காரணமாக, இந்தியாவுடனான கடிதப் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டது. நூல் வேலையைப் பின்போட்டேன். அதை வெளியிடும் சந்தர்ப்பம் பின்னர் எனக்குக் கிடைக்கவேயில்லை. திட்டமிட்டபடி நான் கு தொகுதிகளையும் வெளியிட்டிருந்தால் ..............!
ர்
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 105

Page 107
Best Wishes to
Mallikai 30
Poobalasingha Importers, Exporters, S
Books, Stationers
340, 352, Colombo - 1 Tel: 422321
E-mail:pbd
Bran 309 A-2/3, Colombo - 0
Tel: 074
4-A, Hosp Bus Stan

Bth Year Jesue
am Book Depot
ellers & Publishers, Of a and News Agents Sea Street, 1, Sri Lanka.
Fax: 337313 ho@sltnet.lk
ches: Galle Road, 6, Sri Lanka. --515775
pital Road, d, Jaffna.
$voi osaa 38015I , AMDİ GIDvit amoufl - 2003 106

Page 108
38:22
மேலிமை அ லர்
தேதி
20032பரி
அடக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரல்கள்.
கல்"
கறுப்பின
அடிமையின் சுயவரலாறு.
- ஆக .
* 3 / 2
'''''' -
* -15 -
«:?
'ரோ'
- எம்.கே.முருகானந்தன்

அடக்கி ஒடுக்கப் பட்டு, வாய் திறந்து பேச முடியாது வாழ நிர்ப்பந்திக்கப் பட்ட மக்களின் வாழ்க்கையானது துயரம் மிக்கது. ஒரு வாய் உணவிற்கும், ஒரு துண்டு துணிக்குமாக உதிரம் கொட்ட உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்ற பேச்சே அவர்கள் அறியாதது. உயிரைத் தக்கவைத்து உழைப்பை உறிஞ்சுவதற்கான ஆகக் குறைந்த உணவே அவர்களுக்குக் கொடுக்கப் பட்டது.
அதிலும் மனித அடிமைகளாக வாழ் ந் தவர்களின் வாழ்க்கையோ பரிதாபத்திற்குரியது. ஆடுகள் போல, மாடுகள் போல, ஏன், அதிலும் மோசமாக உயிரற்ற பண்டகப் பொருள்கள் போல, அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள். வாங்கியவனின் சொத்து அவர்கள். அடிமை உரித்தாளனின் பிரத்தியேகச் சொத்துத் தான் மனித உயிர்களான அடிமையானவர்கள்..
அடிமைகளை அடிக்கலாம், உதைக்கலாம், இரத்தம் கொட்டச் செய்யலாம் , உணவு கொடுக்காமல் துன்புறுத்தலாம். ஏன் வேண்டுமென்றால் கொல்லவும் கூடச் செய்யலாம். கேட்பார் யாருமில்லை. சட்டம் கைகட்டி நிற்கும். சமூகம் மனச் சாட்சியின்றி மெளனமாய்
அங்கீகரிக்கும்.
இவையெல்லாம் எங்கு நடந்தன?
நாகரீகம் மிக்க நாடாக , மனித உரிமைகள் எதுவுமே மீறப்படாத தேசமாகக் காட்டிக் கொள்ளும் நாட்டிலே தான் உலகின் தலைமைப் பொலீஸ்காரனாகத் தன்னைத் தானே நியமித்துக் கொண்டு தவறு செய்பவர்களைத் தண்டிக்க முற்படும் அமெரிக்க நாட்டில் தான் இவையெல்லாம் நடந்திருக்கிறது.
ஆபிரிக்க நாட்டில் சுதந்திரமாகத் திரிந்த கறுப்பின மக்களைக் கபடமாகத் திருடி, கடல் கடந்து அமெரிக்கக் கரைக்குக் கடத்தி, விலை பேசி, விற்று, அடிமைகளாக வைத்த காலம் புராதன சரித்திரம் அல்ல. வெறும் 200 ஆண்டுகளுக்கு உட்பட்ட அண்மைக்காலச் சரித்திரம் மனித சரித்திரத்தின் மிக வெட்கக் கேடான, கொடூரமான அத்தியாயம் அது.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 107

Page 109
அத்தகைய அமெரிக்க அடிமைகளின் துயர் சொரிந்த கதைகளும், வரலாறும் இலக்கியத்தில் நன்கு பதிவு செய்யப் பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கும் அவை அந்நியமானவை அல்ல. பல மொழி பெயர்ப்புகளைக் கண்டிருக்கிறோம். நோபல் பரிசு பெற்றதும், உலகில் மிகப்பிரபலம் பெற்று, பல இலட்சம் பிரதிகள் விற்ற நாவலுமான Roots தமிழிலும் வெளிவந்ததை நாம் மறக்க முடியாது.
இருந்த போதும் ஒடுக்கப் பட்ட மக்களின் உணர்வுகளையும், சோகங் களையும் , அவலங்களையும், சுயசரிதைகள் பேசுவது போல் வேறு எந்த இலக்கியமும் பேசமுடியாது. அது கவிதையாக இருக்கலாம், நாடகமாக இருக்கலாம், வாழ்க்கையை விஸ்தாரமாக அலசும் நாவலாகக் கூட இருக்கலாம். ஆயினும் சுயசரிதையின் சத்தியமான வரிகள் போல வேறு எதுவுமே வாசகனின் உள்ளத்தைத் தொட்டுவிட முடியாது. ஏனெனில் அவை ஆத்மாவின் கீதங்களாக ஒலிப்பவை. கண்ணீரால் வரையப்பட்டவை.
யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும் எனக்கும் எமது பிறந்த தினம் தெரியும். குறைந்தது திருமணம் ஆகும் வரையாவது பெற்றோர்களது பாதுகாப்பு அரணும், அரவணைப்பும் கூடிய சந்தோஷமான குடும்ப வாழ்க்கை எமக்குக் கிட்டியிருக்கும். ஆயினும் அவர்களுக்கு இவற்றையெல்லாம் கனவுகளில் காணும் பாக்கியம் கூடக் கிடையாது.
எம்மிடையேயும் அத்தகைய கொடுமைகளுக்கு ஆளானவர்கள் இல்லையா என நீங்கள் கேட்கக் கூடும். உண்மைதான் சாதி அடக்கு முறைக்கும், குடிமை முறையின் வஞ்சிப்பிற்கும் ஆளாகி துயரப் பட்ட கதைகள் மறக்ககக் கூடியவை அல்ல. மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் ஒன்றுபட்ட சொந்தச் சகோதரர்களையே வதைத்த பாவிகள் அல்லவா நாம்.
இருப்பினும், கறுப்பின மக்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் மோசமானவை மட்டுமல்ல, நன்கு பதிவாகியும் உள்ளவை. அமெரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த ஒரே இனமான கறுப்பின் சமுதாயமானது! நாடு பூராவும் அடிமை விலங்குகளாகப் பரவலாகக் கொடுமைப் படுத்தப் பட்டார்கள். அவர்கள் தமது பிறந்த திகதியை அறியாதது மட்டுமல்ல, பலருக்கு, தமது பெற்றோர்கள் யார் என்பது கூடத் தொயாது. தாயின் கருவிலிருந்து, பிறந்து பச்சை மண்ணில்

விழும் போதே அடக்குமுறையின் குரூரக்
கரங்களுக்குள் சிக்கித் தவித்தார்கள்.
தாயை யார் என்று சிலவேளை அடிமைகள் அறிந்து வைத்திருக்கக் கூடும். ஆனால், அவளோடு சேர்ந்து வாழும் பாக்கியம் கிடையாது. நினைவு தெரிவதற்கு முன்னரே பச்சிளங் குழந்தைகளைப் பிரித்தெடுத்து, வேலைக்கு லாயக்கற்ற அடிமைக் கிழவிகளின் பராமரிப்பில் விட்டுவிடுவார்கள்.
மலையகத்தின் பிள்ளை மடுவம் போல, பகலில் மட்டும் குழந்தைகளை பராமரிக்கும் இடம் போன்றவையல்ல, அவை. முழுமையாகக் குழந்தையைப் பிரித்தெடுத்து வளர்க்கும் கபடத்தனம் கொண்டவை. தாய், தந்தை, குடும்பம், என்ற பந் தங்களுக் கும், பாச உயர்வுகளுக்கும் ஆளாகாமல் பிஞ்சிலேயே பிரிக்கப் பட்டனர். சின்னஞ் சிறுசிலேயே வேலை பார்க்கும் இயந்திரமாக வளர்வதற்குத் தயார் படுத்தப் பட்டனர்.
ஒரு அடிமை சொல்கிறான். 'என் தாய் நான் குழந்தையாக இருக்கும் போதே, அவள் தான் என் தாய் என்று அறிய முன்னரே பிரிக்கப் பட்டாள்........
(வாழ்க்கையில்) நாலைந்து முறை தவிர என் தாயை நான் பார்த்தோ, அறிந்தோ, உணர்ந்தோ இல்லை. அவளைச் சந்தித்த பொழுதுகள் குறுகியவை. இருண்ட இரவுகள்.'
காரணம் அவனது தாயான அடிமை 12 மைல் தொலைவிலுள்ள இடத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்தாள். லீவு என்றால் என்ன என்பதே அவர்கள் அறியாதது. நாள் முழுவதற்குமான வேலைகளை முடித்த பின் இந்தப் பன்னிரண்டு மைல்களையும் நடந்து வந்து தான் இவனைச் சந்திக்க முடியும். மீண்டும் அதிகாலை பண்ணையில் வேலை என்பதால் இருளோடு புறப்பட்டு, திரும்பவும் நடந்து சென்று வேலைத் தலத்தில் நிற்க வேண்டும். வேலைக்குத் தாமதமானால் கசையடி கிடைக்கும்.
இப்படிச் சந்திப்பது கூட அவர்களுக்கு பொதுவாக மறுக்கப் பட்டிருந்தது. வருவதற்கு உரிமையாளனிடம் சிறப்பு அனுமதி பெறவேண்டும். அது இலேசாகக் கிடைத்துவிடாது. கொடூரம் மிக்க உரிமையாளரிடையே இத்தகைய அனுமதியைக் கொடுப்பவன் கருணை படைத்த உரிமையாளன் எனப் போற்றப் படுவான்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 108

Page 110
இத்தகைய அவலமான உண்மைகளை எழுத்தில் வடித்துத் தந்துள்ளவர் பிரெடிக் டக்ளஸ் (1818-1895) அது கறுப்பின் அடிமையின் சுயவரலாறு என்ற நூலாக, மொழிபெயர்ப்பு நூலாக இப்பொழுது தமிழில் வெளிவந்துள்ளது.
இரா.நடராஜன் தமிழில் மொழிபெயர்க்க , ஸ்நேகாவினால் டிசம்பர் 2001-ல் வெளியிடப்பட்டுள்ளது. இயல்பான, வாசிக்க
இதமான மொழிபெயர்ப்பு.
தாய் இறக்கும் போது இவனுக்கு வயது ஏழு மட்டுமே. ஆனால், அவள் நோய்வாய்ப்பட்டதோ படுக்கையில் கிடந்ததோ, இறந்ததோ இவனுக்குச் சொல்லப் படவில்லை. சிறு வயது. இவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்ற பரிதாப உணர்வினாலல்ல. ஈமச் சடங்கிற்குக் கூட இவனுக்குச் சொல்லப் படவில்லை. அடிமை விலங்குகளுக்கு இவை பற்றியெல்லாம் ஏன் சொல்ல வேண்டும் என அமெரிக்க வெள்ளையர்கள் நினைத்தார்கள்.
இதிலுள்ள மிகப் பெரிய சோகம் என்னவென்றால் அவனது தகப்பன் யார் என்ற உண்மையை அவனுக்குச் சொல்ல முன்னரே தாய்
இறந்து போனாள்.
ஆனாலும் அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தன்னுடைய உரிமையாளரே தனது தந்தையாகவும் இருக்கவேண்டும் என்று ஊகித்தான்.
எத்தகைய மனிதக் கொடூரம் அது. சொந்த மகனையே அடிமையாகவும் நடத்த இந்த அமெரிக்கர்களைத் தவிர வேறு யாருக்கு மனம் வரும்.
தந்தை யார் என்ற சந்தேகம் இருந்த போதும் அதை அறிவதில் அவ் வளவு அக்கறை காட்டவில்லை. ஏனெனில் அறிந்து கொள்வதால் அவனுக்கு எந்தவித நன்மையும் கிட்டப் போவதில்லை. பெரும்பாலான அக்கால கறுப்பின அடிமைகள் தந்தையை அறியாது தாய்வழி அறியப்பட்டவர்களாகவே இருந்தனர். காரணம் தந்தையாகவும் உரிமையாளனாகவும் இரு வழிப் பாத்தியத்தை உடையவர்களாக வெள்ளையர்களே இருந்தார்கள்.
இதனால் அடிமைக் குழந்தைகள் மத்தளம் போல, இரு பக்கத்தாலும் அடிவாங்க

வேண்டியிருந்தது. வெள்ளை உரிமையாளனுக்கு இந்தக் கறுப்பு மகன் ஒரு கள்ளப் பிள்ளை. தனது அந்தஸ்திற்குப் பங்கம் விளைக்கும் ஒரு கண மோகத்தின் சிந்தல். அவனுடைய அசிங்க நடத்தையின் பெறுபேறு. எனவே மகன் என்ற அந்தஸ்துக் கிடைக்காமல் போவது மட்டுமல்ல, வேலையிலோ வாழ்க்கையிலோ எந்த வித சலுகையும் கிடைப்பதில்லை.
மாறாக உரிமையாளரின் சொந்த மனைவியாகிய வெள்ளைப் பெண்மணிக்கு இவர்களோ கணவனின் குற்றத்தின் விளைபொருள். கணவனின் வெட்கக் கேடான கறுப்பின அடிமை மீதான மோகத்தின் அறுவடை. எனவே எப்பொழுதும் குற்றம் குறை பிடிப்பதே அவளது வேலையாக இருக்கும். அப்பிழைகளுக்காக அவன் கதறக்கதற சாட்டை அடி பெறுவது அவளுக்கு மகிழ்வூட்டும்.
அடிமைத் தண்டனை பெறுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் தேவையில்லை. அது உரிமையாளரின் அவ்வவ் நேர மனநிலையைப் பொறுத்தது. உதாரணமாக அடிமையானவன் குதிரையைப் பராமரிப்பாளனாக இருந்தால், குதிரை வேகமாக ஓடவில்லை என்றாலோ, அழகாகத் தலையை உயர்த்தவில்லை என்றாலோ அது அடிமையின் தவறு. குதிரையின் தவறு அல்ல என்றே உரிமையாளன் கருதுவான். குதிரை அந்நேரத்தில் அழகாகத் தலை உயர்த்தியதா இல்லையா எனத் தீர்மானிப்பது உரிமையாளரின் மனநிலைதானே ஒழிய எந்த நியாயமான காரணங்களுக்காகவும் இல்லை.
அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளோ கொடூரமானவை. நியாய உணர்வு கொண்ட எந்த மனிதனையும் தலை குனிய வைப்பவை. ஆனால், வெள்ளை உரிமையாளர்கள் இந்தக் கறுப்பு அடிமைகளை மனிதர்களாக என்றும் கருதியதில்லையே. பசியையும், வேதனையையும், மரணபீதியையும் உணரக்கூடிய மிருகங்களாகக் கூட நினைக்கவில்லை. வெறும் ஜடங்களாகவே
மதித்தனர்.
அவர்களுக்குக் கிடைத்த தண்டனைகள் எத்தகையவை? தின்னக் குடிக்க விடாமல் நாள் முழுவதும் வெய்யிலில் நிற்கவைப்பது தான் மிகக் குறைந்த தண்டனை எனலாம். இரத்தம் கசியச் சாட்டையால் அடிப்பது, உடம்பு முழுவதும் சூடு
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 109

Page 111
வைப்பது, வாயில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது, வேலைக்கு லாயக்கற்றவர்களை அழித்து ஒழிப்பது என எதுவுமாகலாம். சுட்டுக் கொல்வதும் உண்டு.
இவன் சிறுவனாக இருந்த போது இவனது சித்திக்குக் கிடைத்த தண்டனை . இவனுக்குப் பீதியையும், மாறாத மனவடுவையும் ஏற்படுத்தியது. அச்சம்பவத்தை அவனது வார்த்தைகளிலேயே கேளுங்கள்.
''கசையடி தொடங்கும் முன் சித்தி ஹெஸ்டரை சமையற்கட்டிற்கு இழுத்துப் போய் கத்தியால் கழுத்து முதல் முட்டிவரை ஆடைகளைக் கிழித்து கழுத்து, தோள்பட்டை, புட்டம் மற்றும் முதுகை நிர்வாணமாக ஆக்கினான். அவளது கைகளை அவன் குறுக்காகக் கட்டி கேவலமான கெட்ட வார்த்தைகளால் ஏசியபடி இழுத்துச் சென்றான். பிறகு கசையடி மேடையில் அவளைக் கட்டிப் பிணைத்தான். கைகளை உயர்த்திக் கட்டியதால், கால் கட்டை விரலால் அவள் நிற் க வேண்டியிருந்தது.
காட்டெருமைச் சாட்டையால் அவளை அடிக்கத் தொடங்கினான். அவளது கதறல் மற்றும் அவனது கூப்பாடுமாக ஒரு ரத்தக்களரி அரங்கேறிக் கொண்டிருந்தது.''
அடிமைகளை ஏன் இவ்வாறு கொடுமைப்படுத்தினார்கள்? பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட, மனசாட்சியற்ற ஈவிரக்கமற்ற உரிமையாளர்களின் வெறித்தனம் எனலாமா? சகமனிதனை மாடுகளாக நினைத்த மனங்களின் குரூர வெளிப்பாடு எனலாமா?
இல்லை. இவற்றிற்கு மேலான நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட சூட்சுமமான காரணம் இருந்தது. அடிமைகள் பயந்து நடுங்க வேண்டும். மறுபேச்சுக் கூடாது. இயந்திரம் போல இட்டவேலையைச் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அடிமை வாழ்க்கையை அவர்களுக்குத் தெரிந்த ஒரே விடயமாக இருக்க வேண்டும். சுதந்திரம் என்ற எண்ணமே அவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதே அது.
அடி வாங்கி அடக்கப்பட்ட மனிதனின் மனநிலை எவ்வாறு மோசமாகப் பாதிக்கப் பட்டிருந்தது என்பதை பிரடெரிக் இவ்வாறு எழுதுகிறார்.
'அங்கு போன புதிதில் நான் சமாளிப்பதற்கு சற்று கடினமானவனாகவே இருந்தேன். ஆனால்

சில மாதங்கள் வாங்கிய அடி உதைகள் என்னை நேர் செய்தன. கொவே என்னைப் பழக்குவதில் வெற்றி அடைந் தான். நான் உடலால் , உள்ளத்தால், ஆன் மாவால், நொறுங்கிப் போயிருந்தேன். என்னுடைய இயல்பான தாக்குப் பிடிக்கும் சக்தி நசுக்கப் பட்டது. ஏன் அறிவுத் தாகம் சிதைக்கப் பட்டது... நம்பிக்கை ஒளி செத்துப் போனது"
இவ்வாறாகத் தான் அடிமைகளின் சுதந்திர தாகம் நலுங்கடிக்கப் பட்டுச் சிதைக்கப் பட்டது.
அடிமைகள் மீதான தமது அழுங்குப் பிடி தளர்ந்து விடாமல் இறுகிக் கிடப்பதற்கு உரிமையாளர்கள் கையாண்ட இன்னுமொரு முக்கிய வழி அவர்களை அறிவிலிகளாக வைத்திருப்பதே. அடிமை உரிமையாளர்களுக்கு அடிமைகள் மறு பேச்சுப் பேசாமல், மறுகேள்வி கேட்காமல் வாய்பேசா விலங்குகள் போல உழைக்க வழி வேண்டியிருந் தது. இதற்காகத் தான் அடிமைகளுக்குக் கல்வி அடியோடு மறுக்கப் பட்டது. அடிமைகளுக்கு கல்வி போதிப்பது தண்டனைக்குரிய சட்டமாகவும் ஆக்கப் பட்டிருந்தது.
ஆனால் இவனுக்கோ ஆங்கில எழுத்துக்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அதிஸ்டமாகக் கிடைத்தது. இவனுக்கு 7 அல்லது 8 வயதாக இருந்தபோது இவன் வேலைக்காக அனுப்பப்பட்ட வீட்டு எஜமானி சற்று வித்தியாசமானவள். சற்று இரக்ககுணமுடையவள். அவள் இவனுக்கு அன்புடனும், நேசத்துடனும், எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கத் தொடங்கினாள். A முதல் Z வரை கற்பித்த பின் வார்த்தைகளை வாசிக்கப் பழக்க ஆரம்பித்தாள். வேறு எந்த அடிமைக்கும் கிடைக்காத பேரதிஸ்டம் இது.
ஆனால், அங்கும் துரதிஸ்டம் குறுக்கிடுகிறது. அவளது கணவன் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தார். இதற்குமேல் சொல்லித்தரக் கூடாது என்று தடைவிதித்தார். 'ஒரு அடிமை நாய்க்கு ஒரு அங்குலம் தந்தால் அவன் வீட்டைப் பிடுங்கிக் கொள்வான். அவனுக்கு ஒரு எஜமானுக்கு அடிபணிவது தவிர வேறெதுவும் தெரியக்கூடாது. என்ன சொல்கிறோமோ அதை மட்டும் செய்ய அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
....... நீ எழுதப்படிக்கச் சொல்லிக் கொடுத்தால் அவன் அடிமையாக இருக்கும் தகுதியையே இழந்துவிடுவான்" என்றார்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 110

Page 112
அடிமையாக இருக் கும் தகுதியையே இழந்துவிடுவான் என்ற உரிமையாளனின் வார்த்தைகள் அவனது வாழ்வில் திருப்புமுனையானது. பாதை தெரியாத இருண்ட அவனது வாழ்க்கையில் அவை ஒரு சிறு ஒளிக்கீற்றை ஏற்றி வைக்கின்றன. அடிமை முறையே இறுதியானதும் மாற்ற முடியாததும் என மிக இயல்பாக இதுவரை ஏற்றுக் கொண்டிருந்த இவன் மனதில் அச்சொற்கள் புத்தம் புதிய சிந்தனை ஓட்டங்களை ஊற்றெடுக்கச் செய்தன. அடிமைகளும் விடுதலையடைய வாய்ப்பு இருக்கிறது என்பதை முதற் தடவையாக உணர்ந்தான். எப்படி இது முடியும் என்பது பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. ஆயினும் அது சாத்தியம் என்பது மட்டும் புரிந்தது. அவ்வார்த்தைகள் அவனது விடுதலை நோக்கிய பாதைக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி வைத்தன.
கணவனின் சொற்களை ஏற்றுக் கொண்ட மனைவி இவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை நிறுத்தினாள். அத்துடன் ஒரு அடிமையின் உரிமைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு இவனுடன் கடினமாக நடக்கத் தொடங்கினாள். இவன் ஓய்வு நேரங்களில் இரகசியமாப் படிப்பதைக் கூடக் கண்காணித்துத் தடை விதித்தாள்.
ஆனால், அவனது அறிவிற்கான தாகத்தை இவற்றால் தணித்து விடமுடியவில்லை. ஏனெனில் அது வெறுமனே அறிவிற்கான தாகமோ தேடலோ இல்லை. மாறாக கல்வியானது விடுதலைக்கான அடித் தளம் என் பதை அவன் புரிந் து கொண்டிருந்தான். எனவே பல்வேறு தடைகளையும் தாண்டி எழுத்துக்களை அறியவும், வாசிக்கவும் பின் எழுதவும் இவன் எடுத்துக் கொண்ட முடிற்சிகள் பல. கல்விக்காக அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள், பிரயத்தனங்கள், அர்ப்பணிப்புகள் ஏராளம். அவை வாசிக்கச் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல ஓர் அடிமையின் சுதந்திரத்திற்கான வேட்கையை எடுத்துக் காட்டுவன. வாசிக்கும் போது நீங்களே உணர்வீர்கள்.
ஆங்கிலேயர்கள் மேலை நாடுகளில் வாழ்ந்த தமது சொந்த மக்களுக்கு சுதந்திரமான நெகிழ்வுத் தன்மையோடு கூடிய உன்னத கல்வியைக் கொடுத்தார்கள். ஆனால் தமது ஆட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு அளித்த கல்வியோ வேறானது. அவர்கள் தமது குடிமைகளான வெவ்வேறு சமூகத்தினருக்கு வழங்கிய கல்வி முறைகளில்

உள்ள வேறுபாடுகளை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். தமது ஆட்சியைத் தக்க வைப்பதற்காகவும், குடிமைகள் மீதான தமது பிடியை இறுக்குவதையுமே அவை நோக்கமாகக் கொண்டவை. தமது பொருளாதார மேம்பாட்டையே இலக்காகக் கொண்டவை.
இலங் கையின் வடபுல மக் களுக்கு ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னான மிஸனரிமார் வழங்கிய கல்வியால் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அவை ஏன் வழங்கப்பட்டன? தமது ஆட்சி முறையை இறுக்குவதற்குத் தேவையான குற்றேவலர்களை உருவாக்குவதற்காகவே அவை உருவாக்கப் பட்டன. தமிழ் மக்களையே மதமாற்றங்களுக்கூடான பிரிவினைகளுக் கும், புதிய சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவை வழிவகுத்தன. முழு இலங்கை ரீதியில் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் மீதான புதிய சந்தேகங்களுக்கு வித்திட்டதும் இதே கல்விதான்.
வடபுலத் தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டளவில் நல்ல கல்வியை வழங்கினார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் மலையகத் தமிழ் மக்களின் கல்வி மேம் பாட்டிற்கு என்ன செய் தார்கள் ? தென்னிந்தியாவிலிருந்து போலி வாக்குறுதிகளுடன் அழைத்து வரப்பட்ட அவர்களது கல்வியில் எந்த அக்கறையும் ஆங்கிலேயர் காட்டவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையானது. தோட்டங்களில் நாள் பூராகவும் உழைக்க வேண்டியிருந்தது மக்களுக்கு கல்வியறிவை வழங்கினால் அது அவர்களின் நோக்கங்களிலும் பார்வைகளிலும் புதிய எண்ணங்களை வளர்த்து அவர்களின் உழைப்பின் வேகத்தைக் குறைத்துவிடும் எனச் சரியாகவே கணித்தனர். இது தமது சுரண்டலுக்கு ஆப்பு வைத்துவிடும் என்பதை உணர்ந்ததாலேயே மலையக மக்களின் கல்வியில் எந்தவித அக்கறையையும் காட்டவில்லை.
இன்று சுதந்திரம் கிடைத்து 50 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் கூட மலையக மக்களுக்கு ஒப்பீட்டளவில் நல்ல கல்வி வழங்கப்படுவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆட்சியாளர்களின் தோலின் நிறத்தில் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளதே ஒழிய சுரண்டல் மனோபாவங்களில் மாற்றம் ஏற்படவில்லை.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 (111

Page 113
இதே காரணங் களுக்காகத் தான் அடிமைகளாகத் தமது நாட்டில் வாழ்ந்த கறுப்பின மக்களுக்கு கல்வியின் வாசனையே கிடைக்கக் கூடாது என்பதில் அமெரிக்கர்கள் உறுதியாக இருந்தார்கள். கறுப்பின மக்களுக்கு கல்வியறிவு வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் எனச் சட்டம் இயற்றும் அளவிற்கு அவர்கள் தமது நோக்கத்தில் உறுதியாக இருந்தார்கள்.
இலங்கையின் அண்மைய வரலாறும் இதுதானே! தமிழ் மக்களின் கல்வித்தரத்தையும் பொருளாதார வளங்களையும் நசுக்கித் தமது மக்களுக்கு சுபீட்ச வாழ்வு கொடுக்கலாம் என எண்ணிச் சிங்கள அரசுகள் கல்வித்தரப்படுத்தல் முறையை அறிமுகப் படுத்தினர். ஆனால், நடந்ததோ அவர்கள் எதிர்பாராதது. அவர்களது சட்டம் தமிழ் மக்களின் தன் தமானத்தை உசுப்பிவிட்டது. உரிமைப் போராட்டத்தில் நாடே வெடித்துச் சிதறியது. பொருளாதாரம் கலகலத்தது. பிடரியைச் சொறிந்து கொண்டு சமாதானப் பேச்சென்று இன்று இறங்கியிருக்கிறார்கள். இப்பொழுது கூட அவர்கள் பேசப்புறப்பட்டிருப்பது ஈடாடும் தமது நிலைப் படுத்துவதற்காகவே அன்றி தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல என்பது தெளிவாகிவிட்டது.
ஆனால் கல்விக்காகப் போராட வெளிக்கிட்ட நாமோ இன்று பல்கலைக் கழகக் கல்வியைக் கூடக் கைவிட்டு விட்டு வெளிநாட்டில் கூலிவேலைக்கும் தயார் எனப் பறக்கும் மனோநிலைக்கு இறங்கிவிட்டோம். தரப்படுத்தல் இல்லையெனில் எமது மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குள் நுழைய முடியாத அளவிற்கு எமது கல்வித்தரம் தாழ்ந்துவிட்டது என அறிக்கைகள் கூறுகின்றன. சுதந்திரத்திற்கும் சுபிட்சத்திற்கும் கல்வி முக்கியம் என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.
பிரடரிக் டக்ளஸ் எழுதிய இப் புத்தகம் 96 பக்கங்களைக் கொண்டது. இதில் முதல் மூன்றில் ஒரு பகுதியில் ஒரு மனிதன் எப்படி அடிமையாக ஆக்கப் படுகின்றான் என்பது சொல்லப் படுகிறது. அடிமை வாழ்வில் அவன் பெறுகிற துன்பங்கள், வேதனைகள், அவமானங்கள் போன்றவை அங்கு விபரிக்கப் படுகின்றன. இறுதி மூன்றில் ஒரு பகுதியில் அந்த அடிமை எவ்வாறு தன்னைத்தானே மனிதனாக ஆக்கிக் கொள்கிறான் என்பதைக் காட்டுகிறது. அடக்கப் பட்ட, ஒடுக்கப்பட்ட, சுதந்திரம் நசுக்கப் பட்டு அடிமையாக்கப் பட்ட

ஒவ் வொருவனுக்கும் சுதந்திரம் நோக்கிய பயணத்திற்கான பாதையையும் அதற்கான துணிவையும் உற்சாகத்தையும் ஊட்டுகிற பகுதி.
அடக்கப்பட்ட ஒவ்வொருவனுக்கும் நம்பிக்கை ஊட்டுகிற பகுதி. நிச்சயம் படிக்க வேண்டியது.
அடிமையாக இருந்த பிரெடரிக் பெய்லி 1938 நியூயோர்க் நகருக்குத் தப்பி வருகிறார். சுதந்திர மனிதனாகித் திருமணமும் செய்து கொள்கிறார். அதன் பின் அடிமை ஒழிப்பு இயக்கத்தில் இணைந்து முழு நேரப் பேச்சாளர் ஆகிறார். தேசிய அளவில் புகழும் பெறுகிறார்.
பலரும் அடிமைகளின் சுயவரலாற்றை எழுதியபோதும், இதுவே அவை யாவற்றுள்ளும் தலைசிறந்தது எனக் கருதப் படுகிறது. புத்தக விற்பளையில் பல சாதனைகளை நிலைநாட்டியது.
இவரது இரண்டாவது நூலான My Bondage and my freedom என்ற நூலும் பெரும் புகழ் ஈட்டியது. மூன்றாவதாக எழுதிய Life and time of frederic Douglous என்ற நூல் இவையளவு சோபிக்கவில்லை.
அ தென்னாபிரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடி வெற்றி கண்டு, பதவியும் பெற்ற நெல்சன் மண்டேலா இந்நூல் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். 'பிரெடரிக் டக்ளசின் சுயசரிதை உலக அடிமை முறை பற்றிய முக்கிய ஆவணம் என்றே சொல்லலாம்' என்கிறார். இது தவிர வேறென்ன சான்று வேண்டும்.
சமூக விடுதலையிலும், மனித நேயத்திலும் அக்கறை காட்டும் ஒவ் வொருவரும் தவற விட்டுவிடக் கூடாத நூல் இது.
வாழ்த்துகின்றோம் சென்ற, இரண்டு ஆண்டிற்கான கலாபூஷண விருது பெற்ற அத்தனை கலைஞர்களையும் மல்லிகை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றது. பாராட்டி மகிழ்கின்றது
ஆசிரியர். 1
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 112

Page 114
Best Wishes to
Mallikai 38th
(RA
Ats
Dealers in Electrical Gift Items & Readyr.
F-A, Plaza 23/22, Sea Stree
Tel: 386484,

Year Issue
maternational
1-Fancy Goods anade Garments
Complex, 1, Colombo - 11
Fax: 521552
PUBLIC LIBRARY
JAFFN2
386UGI 600IGDvi 2601 urfi - 2003 113

Page 115
போரே உனக்கே
அஞ்சல்
உனக்கான அஞ்சலி மட்டும் அழுகை வராமலேயே -
(9 பாடம்
மல்லிகை
உன் இறப்பு எங்கள் சிறப்பானது உன் எதிரி எங்கள் நண்பனானது:
தர்மத்தின் கையில் நீ அரசி அதர்மத்தின் கையில் நீ அரக்கி உன் மரணம்
அரசில் சமரசம் அல்ல. காலத்தின் அவசிய சமாசாரம். நேற்று வரை அரக்கக் கரங்கள் வீசிய 'ஷெல் ' வில் இருந்தது உன் இருப்பு அமைதிக் கரங்கள் இன்று பேசிய சொல்லில் இருக்கிறது உன்னை அழித்த பொறுப்பு: எல்லா நேசங்களின் கல்லறைகளோ சோகப் பறவையின் கூடு : உன் கல்லறை மட்டும் சமாதான தேவதையின் கருவறை வீடு : நேசங்களின் மரணங்களோ நெஞ்சில் தரும் மெளனமான காயம் உன் மரணம் மட்டுமே எங்கள் நெஞ்சின் சந்தோஷ ஆகாயம் :
மூச்சுகள் வாங்குவது அன்றைய உன் பசிக்கு ருசியான உணவானது ; எங்கள் பேச்சுகளில்

கார்
...
கண்
இ
>ஃப்
பவர் - மேமன்கவி 38வ Of5 லர் இன்றைய உன் மரணம் 200327வரி
நாங்கள் வாங்கி வரும் இன்றைய உன் மரணமே!
எங்கள் வாழ்வின் வசீகர கனவானது.
தற் கொலைகளையும் தற்பொழுதைய கொலைகளையும்
இப்பொழுதே நிறுத்திய அரங்கேற்றம் உன் மரணமானதுஎங்கள் பொற்கனவொன்றின்
அற்புத ஜனனமானது : நாங்கள் வேண்டி நின்ற உன் நிரந்தர அழிவானது
இன்றைய எங்கள் உன்னத புரிந்துணர்வுக்கு வழியானது சமாதானமே உன் மரணத்திற்கான
நஞ்சானது - அதனால் சாந்தி அடைந்த தளமோ
எங்கள் நெஞ்சானது.
உனக்கான அஞ்சலி மட்டும்
அழுகை வராமலேயே.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 114

Page 116
சிந்தனை உலகின் புதிய
அலை - பின் நவீனத்துவம்
பர்-மு. அநாதரட்சகன்
மல்லிகை -
பேகை 38:29
OY் லர் 200320வரி
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 115

நவீன சிந்தனைப் போக்குளின் பல்பரிமாண இணைப்பிலிருந்து பெறப்பட்ட கருத்தியலாக இன்று பின் நவீனத்துவம் (Post Modernism) என்ற கோட்பாடு பரிணமித் துள் ள து. கலை இலக்கியங்களைத் தழுவியதாக முகிழ் ந்த இக் கருத்தியல் இன்று பல் வேறு அறிவுத் துறைகளையும் , வாழ்வியல் கோலங்களையும் ஊடுருவி நின்று தத்துவ உலகில் அலைகளை எழுப்பிய வண்ணம் உள்ளது. அரசியல், கலை இலக்கியங்கள், தொடர்பாடல் எனப் பல்துறைகளிலும் ஆரவாரமாகப் பேசப்படும் கோளமயமாக்கல் (Globalaization) என்பதற்குப் பின் புலமாக நிற்கும் கருத்தியலாக பின் நவீனத்துவம் இருந்து வருகிறது.
பின் நவீன சிந்தனையாளர்களான மாக்லக்கான், மிசேவ் பூக்கோ, டானியல் பெல், விப்சிற், டெலூல் சரூர்? வியோதார் முதலானோரின் சிந்தனைத் தெறிவீச்சுக்களின் தொகுப்பாக பிள் நவீனத்துவத்தினை நோக்கலாம்.
இக்கோட்பாடு முன்வைக்கும் முக்கிய
கருத் துக்களிலொன்று, மரபு வழிவந் த சிந்தனைகளின் கட்டுமானத்தை நிராகரித்து, அவற்றை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதாகும். அதாவது மூடிய சிந்தனைக்குப் பதிலாக திறந்து விரிந்த சிந்தனைகளை வளர்ப்பதை இலக்காகக் கொண் டுள் ளது. பாரம்பரியமான சிந்தனை மரபுகள், கோட்பாடுகள் யாவும் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை. அவை இக்கால உலகியல் மாற்றங்களுக்கும், வாழ்வியல் கோலங்களுக்கும் பொருத்தமற்றவை. அத்தகைய மரபுவழிச் சிந்தனைகளில் மேலாதிக்கப் பண்பு, ஒன்று திரட்டிய பண்பு (Totalising) வன் முனைப் பு (Hegemonising) முதலியவை மிகுந்துள்ளன. அவை இன்றைய உலகில் நிராகரிக்கப் படவேண்டியவை. என பின் நவீனவியலாளர் வலியுறுத்துகின்றனர். அந்த வகையில் மனித உணர்வு, அறிவு, ஒழுக்கம், விழுமியங்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்ட மெய்யியல் போக்குகள் எல்லாம் வெறும் எடுத்துரைப்புச் சொல்லாடல் களே என் பது இவர்களது முதன்மையான கருத்தாகும்.

Page 117
வியோதார் என்பவரின் கருத்துப்படி, எதனையும் பூரணமாக விளங்கிக் கொள் ளல் என் பது நடைமுறையில் சாத்தியமற்றது. இத்தகைய முயற்சிகள் யாவும் தோல்வியையே தழுவியுள்ளன. சமூகம் மிகச் சிக்கலானதும், எல்லையற்ற வேறுபாடுகளையும் உள்ளடக்கியது. இதனால் அனைத்து சமூக உறவுகளையும் ஒரு தத்துவத்தின் அடிப்படையில் விளக்குவது இயலாத காரியம். மனிதகுலம் எதிர்கொள்ளக் கூடிய எல்லாப் பிரச்சனைகளும் விடை தரக்கூடிய தத்துவமென்பது வெறும் கற்பனையே. இதனால் இயற்கையையோ அல்லது சமூகத்தையோ முழுமையாக விபரிக்க முயலும் கோட்பாடுகள் அனைத் தும் எடுத்துரைப்புக்களே என்பது பின் நவீனத்துவ வாதிகளது நிலைப்பாடாகும்.
பின் நவீனவியலாளர் மிசேல் பூக்கோ அறிவின் மேலாதிக்கம் பற்றிக் கூறுகையில் 'அறிவு' என்பது அதிகார வர்க்கத்தின் கருவியாகவே உள்ளது. தொடர்பில்லாமலுள்ளது என்கிறார். மேலாதிக்க சக்திகளின் கோட்பாடுகளையும், கருத்துக்களையும் உன்னதப் படுத்த அறிவே பயன்படுகிறது. இத்தகைய மரபுவழித் தத்துவங்களின் அறிவானது எப்பொழுதும் ஒடுக்கப் பட்டோருக்கு எதிராகவே இருந்து வருகிறது. பாரம்பரிய சமூகங்களில் நாடோடிக் கதைகள், ஐதீகங்கள், புராணங்கள் எனப் பல எடுத்துரைப்புக்கள் காணப்பட்டன. இவை அத்தகைய சமூகங்களில் நிலவிய மேலாதிக்க நிறுவனங்களையோ, பண்பாட்டுக் கூறுகளையோ நியாயப் படுத்துவனவாகவே உள்ளன, என பின் நவீனவியலாளர் கூறுவர்.
பின் நவீனவியலாளர் முன் வைக்கும் இன்னோர் கருத்தாக்கம் கட்டுடைத்தல் (De - Construction) என்பதாகும். ஒரு இலக்கியப் படைப்புக்கென மாறாத அல்லது நிலையான கருத்து என்று ஒன்றில்லை. படைப்பை வாசிக்கும் வாசகனின் அறிவுக்கும், புலமைக்கும் ஏற்ப நூலின் கருத்து மாறிக் கொண்டிருக்கும். ஒரு படைப்பை விளங்கிக் கொள்வதற்கு என ஒரு நியாயமும் இல்லை என்பது இவர்களது கருத்தாகும். அதாவது ஒரு படைப்பை வாசகன் எப்படியும் அணுகமுடியும், எப்படியும் விளக்கங்களைக் கொள்ள முடியும். ஒரு படைப் பிற் கான அர்த்தம் வாசகனாலேயே உருவாக் கப் படுகின்றது என்பது இதன்
தார்ப்பரியமாகும்.

பின் நவீனவியலாளரின் இன்னுமோர் கருத்து நிறுவனமயமாக்கல் (Institute) என்பதாகும். இனம், மதம், மொழி, சாதி, பிரதேச உணர்வு, வர்க்கங்கள் என்பன நிறுவன மயப்பட்ட வடிவங்கள் ஆகும். இவை 'இயற்கையானவை' என அதிகாரத்திலுள்ளவர்களால் நிலை நிறுத்தப் படும் போது வன்முறைகள் வெடிக்கின்றன. ஒவ்வோர் அதிகார ஒழுங்கமைப்புக் கும், அதன் எஞ்சியவற்றுக்கும் (Reminder) இடையேயான வேறுபாட்டைக் கண்டறிதல் வேண்டும் எனக் கூறுவர். அதாவது அதிகாரக் கட்டமைப்பினுள் அடங்காது தனித்து நிற்கும் எச்சங்கள் மீது கவனம் செலுத்துதல் அவசியம். இந்த எச்சங்கள் தனித்துவமானவர்கள். இவர்கள் ஆற்றலில், அறிவில், சுவையில் வேறுபட்டிருப்பர். பொது வாழ்வியல் நீரோட் டத் திலிருந் து நழுவவிடப்பட் டோராய் இருப்பர். இத்தகையோருக்கே வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். எனவே நாம் ஒருமையாகச் சிந்திக்காது பன்மைப் பாங்கில் சிந்திக்க வேண்டுமென பின் நவீனவியலாளர் கூறுவர். அதாவது மூடிய சிந்தனைக்குப் பதிலாக திறந்த அகல் விரிவான சிந்தனைகளை வளர்க்க வேண்டுமென்பர்.
சுருங்கக் கூறுவதாயின், பின் நவீனத்துவம் சமூக உறவுகளையும் , அர சியல் நடைமுறைகளையும், கலை இலக்கியங்களையும் தனியொரு கோட்பாட்டின் அடிப்படையில் வைத்து விளக்க முற்படுவதனை நிராகரிக்கின்றதெனலாம். இதனாலேயே இது ஒட்டுமொத்தமான முழுமையான அணுகுமுறைக்குப் பதிலாக தனித்தனியாக பகுதி பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கும் அணுகுமுறையை முன்வைக்கின்றது.
சிந் தனை உலகில் அலைகளைத் தோற்றுவித்துள்ள பின் நவீனத்துவம் என்ற கருத் தாக்கம் பற்றிய எதிர்வினைகளும் அண்மைக்காலத்தில் பரவலாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
பின் நவீனத் துவத்தின் முன்னெடுப்புக்களான நவீன முதலாளித்துவத்தின் கோளமயமாக்கல், அதன் விளைவுகளான நுகர்வோர் தொடர்பான பல்வினப் பாங்கு, நாடுகளிடையே எல்லைகளற்ற தன்மை, மூலதனத்தின் சுதந்திர நகர்வு, பல்தேசிய நிறுவனங்களின் மேலாண்மை போன்றவை குறித்து எழும் அபாய நிலை பற்றிய விழிப்புணர்வு இன்றைய
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 116

Page 118
உலகில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக வளர்முக நாடுகள் இவற்றை அச்சுறுத்தல்களாகவே நோக்கத் தொடங்கியுள்ளன.
இத்தகைய எதிர்பாளர்கள் பின் நவீனத்துவம் வேறுபாடுகளை - முரண்நிலைகளை உணர்வு பூர்வமாக அங்கீகரித்து ஒத்தியை பற்ற நிலைமைகளைச் சகித்துக் கொண்டு, வாழவேண்டுமெனக் கூறுவது, ஒடுக்குமுறை சுரண்டல், அநீதிகள் என்பவற்றைச் சகித்துக் கொண்டு எல்லாம் வினைப் பயன் என வாழாவிருப்பதற்கு இட்டுச் செல்கிறது எனக் கூறுவர்.
சமூக இயக்கத்தினைப் பூரணமாக விளங்கிக் கொள்ள முடியாது சமூகம் மிகச் சிக்கலானதும், எல்லையற்ற வேறு பாடுகளை தன்னுள் இயல்பாகக் கொண்டது. இந்நிலையில் சமூகமாற்றம் என்பது இயலாத காரியம் சமூகப் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வு காண்பது இயலாதவொன்று என்பது பின் நவீனவியலாளர் கருத்து.
இது இயங்கியல் அடிப்படையில் சமூகமாற்றம், வளர்ச்சி முரண் நிலைகள், பற்றி விஞ்ஞான பூர்வ அணுகுமுறையை முன்வைத்த மார்க்சியத்தினை நிராகரிப்பதாக உள்ளது.
மேலும், தேசிய அரசுகளின் எல்லைகளை மறுப்பதன் மூலம் இனம், மொழி, கலாசாரம், பண்பாடு, வரலாறு, சுயநிர்ணயம், இறைமை என்பவற்றின் இருப்பை மறுத்து, ஏகமும் தனியார் மயம் என்பதனை நியாயப்படுத்த முயல்கிறது. அத்துடன், விஞ்ஞானம், தொழில் நுட்பம், என்பவற்றின் மைய நோக்கான 'உண்மையைக் கண்டறிதல்' என்பதை விடுத்து, பதிலாக அவற்றின் உடன் பயன் நோக்கினை மட்டுமே வலியுறுத்துகிறது. இது செல்வந்தர்களின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதனால், செல்வந்தர்களே உலகின் சிறந்த தொழில்
மல்லிகை சிறு அSSதை 3 இறுகதைகள்
'மல்லிகை ஆசிரியரின் பவள விழா ஞ
தொகுதி. ' 30 எழுத்தாளர்களினது தரமான சி '- 40 சிறுகதைகளை உள்ளடக்கிய !
'மல்லிகைப் பந்தல்

நுட் பத்தினைப்
பயன் படுத் தும் உரித்துடையோராகின்றனர். இந்நிலைமை செல்வத்துக்கும், உண்மைக்குமிடையில் புதியதொரு சமன்பாட்டிற்கு வழிகோலும் முயற்சியாகும்.
பின் நவீனத்துவம் இன்று முதன் நிலைப்படுத்தும் பல பிரச்சனைகள் பற்றி மார்க்சிய, நவமார்க்சியவாதிகள் ஏற்கெனவே முன்னர் ஆழமாக
ஆராய்ந்துள்ளனர்.
அறிவு மேலாதிக்கம், அதிகார ஒழுங்கமைப்பு, சமூக முரண்நிலை என்பவை வர்க்க நலன்களைக் கொண்டிருக்கும் என்ற யதார்த்தத்தைக் கூறியுள் ளனர். தவிர, அரசியலுக்கும், அதிகாரத்துக்குமுள்ள தொடர்புகள் பற்றி ஏலவே மார்க்சியவாதிகளால் நோக்கப் பட்டுவிட்டது.
இந்நூற்றாண்டின் முற்பகுதியில் கியூபிஸம், ஃப்யூச்சரிஸம், நியோ ஃப்யூச்சரிஸம், டாடாயிஸம் போன்ற மேற்குலகச் சிந்தனைச் சிதறல்கள் தமது பிரகடனங்களை ஆரவாரமாக வெளிப்படுத்தி விட்டு வலுவிழந்து போயின என்ற அனுபவத்தினையும் இவ்விடத்தில் புறந்தள்ள முடியாமல் உள்ளது.
ஆக, உலகில் சுரண்டலற்ற, தன்னலமற்ற ஒரு புதிய சமூகத்தை எவ்வாறு உருவாக்கலாம் என் பதை பின் நவீனத்துவம் தெளிவாக விளக்காமல் , முரண் பாடுகளிற் கிடையே வாழ்தலையே வாழ்வின் சாரமாகக் கொள்கிறது. உலகின் புதிய வளர்ச்சிப் போக்குகளை புதிய சொல்லாடலையும் நடையியலையும் கையாண்டு விளக்குகின்றது. ஆனால் அவற்றில் உட்பொதிந்துள்ள அவலங்களை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற முன்மொழிவுகளை முன்வைக்கப் பின் நவீனத்துவம் தவறிவிட்டது எனலாம்.
கதைகள் விலை 275/=
காபகார்த்தமாக வெளியிட்டு வைக்கப் பெற்ற சிறுகதைத்
றுகதைகள் அடங்கிய தொகுப்பு. இரண்டாம் பாகம் தயாராகின்றது.
லுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 117

Page 119
அழகு சுப்பிரமணியத்தின் இரு கதைத் தொகுதிகளே இன்று எமக்குக் கிடைக்கின்றன. அவரது மனைவி அவர் 98 சிறுகதைகளை எழுதியதாகக் கூறுகின்றார். அவைகள் எமக்குக் கிடைக்காமையினால்
இவ் விரு தொகுதிகளிலுமுள்ள சிறுகதைகளை ஆதாரமாகக் கொண்டு அவரது சமூகப் பிரக்ஞை பற்றி அறிய
முற்படுகின்றோம்.
இவ்விரு தொகுதிகளிலுமுள்ள சிறுகதைகளை, இரு பெரும்பிரிவுக்குள் அடக்கலாம். 1. யாழ்ப்பாணத்தைப் பின்புலமாகக் கொண்ட சிறுகதைகள் 2. இங்கிலாந்தைப் பின்புலமாகக் கொண்ட சிறு கதைகள்.
அழகு சுப்ரமணியத்தின் சிறுகதைகளை முழுமையான ஒரு பார்வைக்குட்படுத்தினால் அவைகளினூடே 'மனிதம்' விழித்துக் கொண்ட வரலாறு தெரியும். மொழியினூடாக மனிதத்தை வெளிக் கொணருகின்றது என்பது தெரியும். பேராசிரியர் சிவத்தம்பி 'ஒரு சிறுகதையின் அமைப்புச் செம்மை அதன் சிக்கனத்திலும் அது சுட்டி நிற் கும் சொற் களுக் கப் பாலான 'மெளனங்களிலும்' தான் உண்டு" எனக் கூறியமை
கூர்ந்து கவனிக்கத் தக்கது.
அழகு சுப்பிரமணியம் ஒரு 'புளூம்ஸ் பெரி' வட்டத்தைச் சார்ந்தவர். இவ்வட்டத்தினர் தலைப் படைப்பை ஒரு 'பார் பார்லர் கேம் (Bar Parlour Game) எனக் கொள்பவர்கள். இவர்களிலிருந்து விலகி இலக்கியத்தை ஒரு காத்திரமான கலை வடிவமாகக் கொண்டு கதை மாந்தர்களினூடாக மானுடம் கண்ட வகையில் இவர் சிறப்புப் பெறுகின்றார்.
வாழ்க்கையின் பல் வேறு தளங்களைக் கதைப்பொருளாகக் கொண்டு அங்கே தான் கண்ட அனுபவங்களை அல்லது தான் எதிர்பார்த்த விழுமியங்களைக் கதை மாந்தரில் கண்ட பெருமை இவருக்குண்டு. எமது தமிழ் எழுத்தாளர்களிடையே பொதுவாகக் காணப்படும் கதை சொல்லல் மரபு இவரிடம் அரிதாகவே காணப்படுவதனால் இவரால் தன் படைப்புக்களில் ஒரு செறிவை, சிக்கனத்தைப் புகுத்த முடிகின்றது.
யாழ்ப் பாண மண் ணையும், அதன் மைந்தர்களையும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் - கதைப்பொருளாகக் கொண்டு பாத்திரங்கள் என்றல்லாது மாதிரிகளை மிகுதியாகப்

அழகு சுப்பிரமணியத்தின்
சமூகப் பார்வை
ஆ.கந்தையா
38-23 Og்லர் 20032வரி
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003, 118

Page 120
பயன்படுத்தி எழுதியமையால் ஒரு பொதுமை அவரது கதைகளில் புகுந்து விடுகின்றது. 'செக்கோவ்' போன்று அவரது பேனா மிகவும் நளினமாகவும் நயமாகவும்
அத் துடன் நகைச் சுவையுடனும் நிகழ்வுகளைக் காட்டி நிற்கின்றது. சீற வேண்டிய இடங்களில் கூடச் சிறு அதிர்ச்சி. அவ்வளவே, கதை மாந்தரும் ஏதோ தனித்துவமான சீர் திருத்த வாதிகளாக, கொள்கை விளம்பிகளாக வலம் வருவதில்லை. ஏதோ குறைவும், நிறைவும் கொண்ட நாளாந்தரம் சந்திக்கும் மனிதர்கள் போன்று ஒரு பிரமையை வாசகர்கள் மனதில் ஏற்படுத்தி விடுகின்றனர்.
பிரதேசம் தழுவிய படைப்புக்களாக இருப்பினும் அவை எல்லைகளைக் கடந்து எல்லா மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய பொதுத் தன்மைகளை வலியுறுத்துவதனாலேயே அவரது கதைகள் சர்வதேசப் புகழ் பெற்றன.
'கணித மேதை' சந்திரம் சமூகப் பிராணியாக மாற மறுத்து அறிவுலகில் வலம் வந்தமையால் 'அங்கொடை' வாசியாகின்றான். கல்வி ஒருவனை மனிதனாக்க வேண்டும். ஆனால் இன்று கல்வி ஒரு மனிதனைக் கிறுக்கனாக்கி விடுகின்றது. ஏ.என்.வயிட்கெட் கூறுவார் 'படித்த ஒருவன் பூமியல் பெரும் சலிப்பு' என்று.
இவரின் சிறுகதைகளில் பெரும் பான்மை யானவை நீதி மன்றம், சட்டத்துறை, மேல்மட்ட மக்கள் சார்ந்தவையாக இருக்கின்றன. சட்டத்துறையுடன் நெருங்கிய பழக்கம் இருந்தமையும், குடும்பமும் சட் டத் துறை சார்ந்ததாக இருந்தமையும் , இவைகளுக்கும் மேலாக இவருடன் பழகியவர்கள் கூட டாக்டர்கள், பொறியியலாளர்கள் போன்றோராக இருந்தமையும் இதற்குக் காரணங்களாகக் கொள்ளலாம். ஆனால், அவரது மனிதம் விழித்துக் கொண்டது, இவர்களை நாடி வரும் கீழ்மட்ட மக்களின் அவலங்களைக் கண்ட போது தான்! 'பிரளயம்' சிறுகதை இதற்குச் சான்று பகரும்.
இவ்விரு நேர்விரோத முரண்பாடுகளால் ஏற்பட்ட 'அதிர்வுகள்' கதை மாந்தராகி அவரது எழுத்துக்கு உரமாக அமைகின்றன. 'கலைப் படைப்பு என்பது மனிதனூடாக வந்து மனித நிலையைக் காட்டுவது' எனும் கூற்று எவ்வளவு பொருத்தமுடையது என்பது புரிகின்றதல்லவா?
அழகு சுப்பிரமணியம் ஒரு றோமன் கத்தோலிக்கர். இருப்பினும் கட்டாய மதமாற்றத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் மேலைத்தேயப் பழக்க வழங்கங்களை நாகரிகம்

என்ற போர்வையில் தழுவுவதை அவர் நிராகரித்தார். அதேசமயம் அவர் இறுதிவரையும் அசல் ஆங்கிலேயன் போன்று வாழ்ந்தவர் என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை.
'முள்ளு', 'மதம் மாறியவர்', 'தம்பு மச்சான்' போன்ற சிறுகதைகள் மத ஈடுபாட்டை சமநிலை நின்று பார்க்கின்றது.
'முள்' சிறுகதையில் வரும் சிறுமி மேற்றன் அக்காவை 'உங்களது யேசுவுக்கு எத்தனை மனைவியர்?' எனக் கேட்கிறாள். அப்பாவிச் சிறுமியின் அறியாமையைக் கூடப் புரியும் திறன் அற்ற மேற்றன் சிறுமியைக் கடிந்துரைக்கின்றாள். அதே சமயம் சிறுமி 'எங்களுடைய சுப்ரமணியக் கடவுளுக்கு இரு மனைவியர்' எனக் கூறும் போது மதத்தைப் பற்றிப் பிள் ளை அலட்டிக் கொள் ள வில் லை என் பது புரியும். சிறியவர்களுக்கிருக்கும் சகிப்புத் தன்மைகூடப் பெரியவர்களுக்கு இல்லையே என எண்ணி வேதனைப் படுகின்றார். இறுதியாகச் சிறுமி கண்ணயரும் போது 'முள் ...... முள்...' என முணுமுணுப் பது எம் மை முள் கொண்டு குத்துகின்றது. அந்நியப் பாரம்பரியம் - அது சிறந்ததாக இருப்பினும் - ஏற்காதவிடத்து வேண்டாத ஒன்று எனக் கூறி நிற்கின்றார்.
மேலைத் தேய ஈடுபாடு மிகுதியாக இருந்தாலும், பெண்கள் என வரும் போது அழகு சுப்பிரமணியம் யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களின் நிலையை அங்கீகரிப்பது போல் தெரிகின்றது. பெண்கள் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு இசைவாகக் 'கொண்டை' போடுவதை வெறுத்தவர் தமிழ்ப் பெண்கள் ' சாறி' கட்டுவதைக் கிண்டல் செய்தவர். ஆனால் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் பெண்கள் வகித்த பங்கை அவரால் கேலி செய் ய முடியவில்லை. மாறாக அவர்களது நிலையைப் பரிவுடன் பார்க்கின்றார். அவரது மேலைத் தேய நாட்டம் ஒரு நாகரிக ஈர்ப்பேயல்லாமல் பண்பாட்டுக் கோலம் அல் லது. ஒரு வகையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் கூறுவது போன்று 'பெண்ணின் பிரதான கடமை திருமணமும், தாய்மைமையுமே' எனும் கொள்கை உடையவர் போலும்.
'கணித மேதையில்' வரும் படித்த நாகரிகம் தெரிந்த சந்திரம் - சுபத்திரா இருவரது உரையாடல் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டியதொன்றாகும். சுபத் திரா படிப்பை இடையில் நிறுத்திச் சந்திரத்தைத் திருமணம் செய்து கொள்கின்றாள். சந்திரம் கேட்கிறான் "ஏமாற்றம் அடைந்து விட்டாயா? பதட்டத்துடன் பதில் வருகின்றது
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 119

Page 121
'இல்லை ஓ இல்லை' அதே சமயம் சுபத்திரா நீங்கள் படித்தவர்' என மெச்சிக் கொள்கிறாள். பெண்ணியவாளர்களுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் வார்த்தைகள் சந்திரம் உதிர்க்கின்றான். 'நீயும் படித்தவள். ஆனால், அதிகம் அல்ல. அதிகம் கல்வி ஒரு பெண்ணுக்கு உகந்ததல்ல. எனது படிப்பில் ஈடுபாடு காட்டுவதற்குரிய கல்வி உனக்குண்டு. எனக்கு எரிச்சலூட்டும் வகையிலான கல்வி உனக்கில்லை.'
யாழ்ப்பாணச் சமுதாயத்தைப் பொறுத்த வரையில் ஒரு பெண்ணின் நிறைவு திருமணத்திலேயே தங்கியுள்ளது. இவற்றால் அவர்கள் கணவனுக்கு அடிமையாக வாழ்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் திருமணத்தில் பாதுகாப்புக் காண்கிறார்கள். பெண்களது கல்வி
கூட நல்ல வரனைப் பெறுவதற்கே.
இன்றும் பெண்களுக்குச் சகல நிறுவனங்களின் கதவுகளும் திறந்தே இருக்கின்றன. எல்லா அரச நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பெண்கள் உயர் பதவி வகிக்கின்றனர். ஆண்களுக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் போட்டி போடுகின்றனர். ஆனால், கல்யாணச் சந்தையில் மட்டும் அவர்கள் போட் டி போடுவதில்லை.
யாழ்ப்பாணப் பெண்களில் காணப் படும் இன்னுமொரு பண்பை 'ரெனிஸ்' சிறுகதை காட்டி நிற்கிறது. பெண் கள் கணவனை நேசிக்கின்றார்களோ என்னவோ அவனது அந்தஸ்தை நேசிக்கின்றார்கள். ஒரு ஆண் அழகான பெண்ணைத் தேடுகிறான், பெண்ணோ அவனில் அந்தஸ்துடைய ஆணைத் தேடுகின்றாள். இவற்றை அழகு சுப்பிரமணியம் ஒரு பொதுப் பண்பாகப் பார்க்கின்றார். 'ரெனிஸ்' விளையாட்டில் கணவர்மார் ஈடுபட்டுள்ளனர். இவர்களது விளையாட்டை இரசிப்பதற்காகவே மனைவியர் அங்கிருக்கின்றனர். ஆனால் நடப்பதென்ன? எப் பொழுதும் தமது கணவரைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்களைத் தமக்கும் பிடிக்கவில்லையெனக் கூறிக் கொண்டு அவற் றையே இப் - பெண் கள் செய் து கொண்டிருக்கின்றனர். வரட்டுக் கெளரவத்தில் யாழ்ப்பாணப் பெண்கள் கொண்டிருக்கும் ஈடுபாட்டை எவ்வளவு நாசுக்காகத் தனது கதையினூடாகப் புலப்படுத்துகின்றார்.
யாழ்ப்பாண மண்ணின் சாபக்கேடு அங்கே ஆழக் கால் பதித்து நிற்கும் சாதிப்பாகுபாடே. உயர்சாதி, தாழ்ந்த சாதியின் ஒவ்வொரு பிரிவிலும் இன்னோரன்ன ஆயிரம் சாதிகள் எம்மண்ணின்

பெருஞ் சொத்து, நல்ல நோக்கங்களுக்காக எழுந்த சாதிப் பிரிவினைகளை அறிவில் குறைவுடையவர்கள் 'மண்ணின் மேல் வரைந்த கேலிச் சித்திரமாக்கி விட்டனர்' என்பார் ரீ.எம்.பி.மகாதேவன்.
தாழ்ந்த சாதியினர் உயர் சாதியினரின் முக்கியமான நிகழ்வுகளில் 'குடிமை' வேலை செய்வது வழக்கம். இன்றும் இவ்வழக்கம் சில இடங் களில் நடைமுறையில் இருக்கின்றது. 'குடிமைத் தொழில்' காலப் போக்கில் நெகிழ்ச்சி கண்டாலும் சாதியம் என்பது எமது சமுதாயத்தை
இறுகப் பற்றிக் கொண்டுள்ளது.
அழகு சுப்பிரமணியம் கூலிக்கு மாரடிப்போர்' சிறுகதையில் சாதியின் கொடுமையை அழகாகக் காட்டுவார். கதையின் மாந்தர்கள் கற்ற சமுதாயத்தின் "முன்னோடிகளாகத் திகழும் ஒரு வசதி படைத்த குடும்பம். இங்கு அறிவில் குறைந்தவர் என முத்திரை இடப்பட்ட 'விழா நாயகன் ஒரு பாடசாலை ஆசிரியன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இக் குடும்பத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இறந்து விடுகின்றாள். 'விழாவைச் சிறப்பிக்க மாரடிப்போர்' வரவழைக்கப் படுகின்றனர். துர்அதிஸ்டவசமாக 'மாரடிப்போர்' வீட்டிலும் ஒரு சாவு நிகழ்கின்றது. மாரடிப்போர் தமது இரத்தமும் தசையுமான உறவினர் வீட்டில் நிற்க வேண்டும். மாரடிப்போர் வர மறுக்கின்றனர். 'விழா நாயகன்' மாரடிப்போரை தலைமயிரைப் பிடித்து இழுத்துச் செல்கின்றார். ஏனெனில் ஒரு மேலமட்ட மரணச் சடங்குக்கு மாரடிப்பதற்கு ஒரு
கூலிப் படை வேண்டியிருக்கின்றது. -
கதை சொல் வோன் நிகழ்ச்சிகள் அனைத்தையும் பார்ப்போனாகவும், பங்காளனாகவும் விளங்குகின்றான். அவனது பிரத்தியட்சப் பரிமாணம் கதைக்கு ஒரு மேலதிக செறிவை ஏற்படுத்திச் சாதியத்தை அவன் - இளம் சந்ததி - எவ்வாறு வெறுக்கின்றான் என்பதைக் காட்டுகின்றார்.
அழகு சுப்ரமணியம் இவ்விடத்தில் ஒரு முக்கிய கருத்தை முன் வைக்கின்றார். சாதியதில் குறைந்தவர்கள் தாமாக உணர்ந்தோ போராடியோ தமது விடுதலையைப் பெற முடியாது. மாரடிப்போர் குடியிருப்புக்கு வாசகனைக் கதை சொல்வோன் அழைத்துச் செல்லும் போது பல சாதியினரின் குடியிருப்புக்களைத் தாண்டிச் சொல்கின்றான். எல்லைப் புறத்தில் பற்றைகள் நிறைந்த பாம்புப் புதர்கள் நிரம்பிய கொட்டில் வீடுகளில் குறுக்கை' கட்டிய பெண் களது கையாலாகாத் தனம் அவர்களது விமோசனத்திற்குத் தடையாக
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 120

Page 122
இருக்கிறதென்பதைக் காட்டுகின்றார். அவர்களுது சுதந்திரத்தை அவர்களே ஏற்கத் தயாராக இல்லாத நிலையிலேயே அவர்கள் வாழ்வு அமைந்திருக்கின்றது.
நீதிபதி அவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு அனுமதி அளித்த பின்பும், தமது கடமையைச் சரியாகச் செய் து வீடு திரும்ப விருப்பம் தெரிவிக்கின்றனர். இப்பெண்கள் கடமையைச் சீராகச் செய்ய வேண்டுமெனக் கூறுவது வயிற்றைக் கழுவும்' உத்தியல்லவா? பசி உரிமையை விஞ்சி நிற்குமென்பது தான் உண்மை.
சொல்லப் போனால் இவர்களது விமோசனம் இவர்களிடம் இல்லை என் பது அழகு சுப்பிரமணியத்தின் நம்பிக்கை. இவர்களுக்கான விமோசனம் நீதிபதியிடமிருந்தே வருகின்றது. ஆக சாதியத்தை ஒழிப்பதற்கு நல்ல இதயம் படைத்த உயர் குலத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமென அவர் எண்ணுகின்றார். இவ்வேள்வியில் தீக்குழிக்க உயர் சாதியினரிடம் நல்ல இதயங்கள் இருக்கவே செய்கின்றன என்றும் அவர் கருதுகின்றார்.
யாழ்ப்பாணத்தை முதன்மைப் படுத்திய சிறுகதைகளில் பல சமூக விழுமியங்களின் சிதைவுகளையே பிரஸ்தாபிக்கின்றன. அதனாலோ என்னவோ கதைமாந்தரில் ஒரு வித விரக்தி வெறுமை காணப்படுகின்றது. மனிதர்களது அக முரண் பாடுகள் யாவும் கதை மாந் தர து அவலங்களைச் சுட்டும் விரக்தி நிலை போலும் 'யேம்ஸ் ஜொய்ஸ்', 'போக்னர்' போன்றோரது கதைகளிலும் இத்தன்மைகள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாண ஆண் வர்க்கத்தின் வக்கிரங்கள் இங்கிலாந்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதிய கதைகளில் காணலாம். கற்பைப் பற்றி அலட்டிக் கொண்டவரல்ல அழகு சுப்பிரமணியம். ஆனால் நேர்மையை நேசித்தவர். மனைவிக்குத் துரோகம் செய்யும் ஈனத் தொழிலை அறவே வெறுத்தார். 'தனி அறை' 'குட்டி' போன்ற கதைகள் இவற்றை வெளிக் கொணர்கின்றன. இங்கிலாந்தில் படிக்கும் போது மனைவிக்குத் தெரியாது ஒரு 'சின்ன வீடு' வைத்திருக்கும் ஒரு ஆணின் அயோக்கியத் தனத்தை அவர் அம்பலப் படுத்துகன்றார். மேல் மட்ட மக்களிடம் இச் சமுதாயத்தில் பொதுவாகக் காணப்படும் நோய் என அவர் கருதுகின்றார்.
அவர் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக வைத்திருக்க வேண்டுமென விரும்புகின்றார். 'இலங்கைத் தேயிலை' கதையில் வரும் நாதசா பாத்திரம் இதற்குச் சான்று பகரும். மோகன்

இவளுடன் கதைக்கும் போது ....... உங்களைப் பற்றிய பல விடயங்கள் எனக்குத் தெரியும்" எனச் சாதாரணமாகக் கூறுகின்றான். ''நல்லவைகளா? கூடாதவைகளா?" என மீண்டும் கேட்கும் போது மிகவும் கூடாதவைகள் .... பரவாயில்லை'', என்கிறான். ஒழிவு மறைவின்றி ஒருவரை ஒருவர் ஏமாற்றாது புரிந்துணர்வுடன் வாழ்வதையே அவர் விரும்புகின்றார்.
ஆனால் 'பாதுகாவலன்' எனும் போர்வைக்குள் பதுங்கிச் செல்லமாகக் 'குட்டி' எனப் பெயர் சூட்டி ஒருத்தியைப் பெண் ஆண்டு வாழும் ஆணைச் சம்மாட்டி கொண்டு அடிக்கின்றார். மறைமுகமாக யாழ்ப்பாணச் சமுதாயத்தின் 'தேவையில்லாது மெய்பேசா விழுமியத்தை நையாண்டி செய்கின்றார். இவர்களெல்லாரும் சமுதாயத்தின் மேல் மட்ட அரிச் சந்திரர்கள் தனது படிப்பு முடித்து யாழ்ப்பாணம் செல்கின்ற காலம் நெருங்கும் போது அவளை மோகனது கழுத்தில் 'கட்டி விட்டுச் செல்லத் துணிந்து கல்யாணம் பேச வரும் யாழ்ப்பாண ஆணைப் பார்த்து 'டோன்ட் கிட் மீ' என்னைப் பேக்காட்டாதே' எனக் கூறி திடுமென அவ்விடத்தை விட்டகலுகின்றாள்.
'காதல் உணவு' எனும் சிறுகதையில் மனைவிக்குத் தெரியாத இங்கிலாந்தில் பிறிதொரு பெண்ணுடன் தகாத உறவுவைத்திருக்கும் ஆணைப் பார்த்து 'இது காதல் உணவு அல்ல, அதற்கான பதிலீடு' எனக் கேலி செய்வது நோக்குதற்குரியது.
இவர்களுக்கெல்லாம் நேர்விரோதமாக 21 வயது வரும்வரையும் பெற்றோரைக் கெளரவித்து, நெறி பிறழாது வாழ்ந்து பின் அவ்வயதைப் பூர்த்தி செய்தவுடன் தனது சுதந்திரத்தை நிலை நாட்டித் தான் விரும்பியவருடன் வாழ எண்ணும் நாதசாவை 'இலங்கைத் தேயிலை ' சிறுகதையில் காட்டுவதன் மூலம் எமது சமுதாயத்தின் அடிமட்டத்தை ஆடவைத்துவிடுகின்றார்.
இவ்வாறு பல தளங்களில் நின்று எமது நாட்டைப் பிரதிபலித்த அழகு சுப்ரமணியம் ஏன் தனது வாழ்வைச் செம்மைப் படுத்த முடியவில்லை ன்பது வேதனைக் குரியதாகும். கலைஞர்கள் எல்லோரும் இப்படித்தானோ?
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 121

Page 123
இலங்கையில் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
3824
-மல்லின
5 லர் 20032வரி
மதுரை மனோகரன்
h\%
*/

தரைப் படத்
துறை வளர்ச்சியின் பிறிதொரு பரிமாணமாக விளங்குவது, தொலைக்காட்சி நாடகம். திரைப் படத் தொழில் நுட்பத் தின் வளர்ச்சியாகத் தொலைக்காட்சி நாடகங்கள் விளங்கினும், இவையிரண்டுக்கும் இடையே வேறுபாடுகளும் பல உள்ளன. கமரா முதற் கொண்டு பல்வேறு தொழில் நுட்ப அம்சங்கள் வரை இவற்றுக்கிடையே வித்தியாசங்கள் காணப் படுகின்றன. ஆயினும், இத்தகைய வேறுபாடுகளை விளங்கிக் கொள்ளாத போக்கும் தமிழ்க் கலையுலகிற் காணப்படுகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை, பல தொலைக்காட்சி நாடகங்கள் சினிமாக்களைப் போன்று தயாரிக்கப் படுகின்றன. இலங்கையில் பல தொலைக் காட்சி நாடகங்கள் மேடை நாடகங்களைப் போல உருவாக்கப் படுகின்றன.
இலங்கையின் சிங்களத் தொலைக்காட்சி நாடகத்துறையின் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. இயற்கையான சூழலில் யதார்த்தமான போக்கில் தொலைக்காட்சி நாடகங்கள் சிங்களத்தில் தயாரிக் கப் படுகின்றன. சிறந்த பல கலைஞர்களுக்கும் நெறியாளர்களும் பல்வேறு முறைகளில் இத்துறைக்குப் பங்களிப்புச் செய்து வந்துள்ளனர். ஆனால் இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி நாடகத் துறை வறுமை நிலையிலேயே இருக்கிறது. ஆதரிப்பாரும் அரவணைப்பாரும் இன்றி, மிகப் பரிதாபகரமான முறையில் தேக்க நிலையிற் காணப்படுகின்றது. முன்பாவது அத்திபூத்தாற் போல் சில தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தன. இப்போது அவை பெரு நாள், திருநாள் விஷயமாகி விட்டன. முக்கிய பண்டிகை நாட்களில் ஆசை அருமையாக ஒரு தமிழ்த் தொலைக்காட்சி நாடகமொன்றை ஒளிபரப்பி விட்டு, அதுவே அதிகம் என் பதைப் போல நமது தொலைக்காட்சி நிறுவனங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன. இந்த நிலையில் தமிழ் நாட்டு இறக்குமதித் தொலைக்காட்சி நாடகங் கள் 'யாமிருக்கப் பயமேன்?' என்ற தோரணையில் தமிழ்பேசும் ரசிகர்களுக்குத் தீனி போடுகின்றன. இந்நாட்டில் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் வளரவேண்டும் என்று சிந்திப்பவர்கள் மிகக் குறைவு. இலங்கையின் தமிழ்பேசும் கலைஞர்களும், சில ரசிகர்களும், கலை இலக்கிய விமர்சகர்களும் மட்டுமே இந்நாட்டிலும் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 |

Page 124
வளரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக விளங்குகின்றனர் எனலாம்.
இலங்கையின் தமிழ்த் திரைப்படத் துறை எண்பதுகளின் முற்பகுதி வரை கணிசமான அளவுக்கு முன்னேறி வந்துள்ளது. 1983 - ன் பேரினவாத விபரீதம் இத் துறையைப் படுபாதாளத்துக்குத் தள்ளிவிட்டது. மீண்டும் இத் துறை எழுந்து நடக்க முடியுமா? என்ற நிலையில் இருந்த போது, பேராதனை ஜூனைதீன் இத்துறையை வளர்க்க வேண்டும் என்று முயன்று, தமது கையைச் சுட்டுக் கொண்டார். மீண்டும் இந்நாட்டில் சமாதானம் முழுமையாக மலரும் போது, தமிழ்த் திரைப்படத் துறையும் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஆயினும் தமிழ்ச் சினிமாத்துறையின் இத்தகைய தேக்க நிலையிலே, தமிழ்த் தொலைக்காட்சி நாடகத்துறையையாவது வளர்த்தெடுப்பதில் உறுதியான ஆர்வம் காட்டப் பட்டாமல், இத்துறை வளர்ச்சி பெறுவதற்கு
வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
இலங்கைத் தொலைக்காட்சியில் முதன் முதல் ஒலிபரப்பான தமிழ் நாடகம், க.பாலேந்திராவின் கண்ணாடி வார்ப்புகள் . அந் நாடகத்தைத் தொலைக்காட்சிக்காக பி.விக்கேஸ்வரன் தயாரித்து ஒளிபரப்பினார். இதன் பின்னர் தொலைக்காட்சி நாடகங்கள் புதிதாகத் தயாரிக்கப் பட்டு ஒளிபரப்பப் பட்டன. நிஜங்களின் தரிசனம், உதயத்தில் ஓர் அஸ்தமனம், ஒரு நீண்ட கனவு, துணை ஒன்று, மலையோரம் வீசும் காற்று, காலங்ககள், சமூக சேவகி, தூரத்துக் கனவுகள், குடும்பம் ஒரு கலைக் கதம்பம், காத்திருந்தவன், திருப்பங்கள், வீடு, தப்பு முதலான பல்வேறு தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப் பாயின. இடையிடையே மேடை நாடகங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயின. இத் துறையில் பி.விக்னேஸ்வரன், அருணா செல்லத்துரை, ஜோர்ஜ் சந்திரசேகரன், காவலூர் ராஜதுரை, எஸ்.ராமதாஸ், எஸ்.விஸ்வநாதன், எம்.என்.ராஜா முதலியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் வாயிலாகத் தரமான சில கலைஞர்களை இனங்கண்டு கொள்ள முடிகின்றது. ஓரளவுக்கு தொலைக்காட்சி நாடகப் பிரதி எழுதக்கூடியவர்கள் சிலரையும் இனங்காண முடிகின்றது. ஆயினும், ஓரிருவரைத் தவிர சிறந்த நெறியாளர்களை இன்னும் கண்டு கொள்ள
முடியவில்லை.
இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சித் துறையின் வறுமை நிலைக்கு முக்கிய

அடிப்படையாக இருப்பது, தரமான தொலைக்காட்சி நாடகப் பிரதிகள் இல்லாமையே ஆகும். எனினும், தம்மளவில் தமது சொந்த ஈடுபாடு காரணமாகத் தொலைக்காட்சி நாடகப் பிரதிகளை எழுதியவர்கள் பாராட்டுக்குறியவர்களே. நான் அறிந்தவரையில் நூல் வடிவில் அருணா செல்லத்துரையின் வீடு, (1993) ஜெகியா ஜுனைதீனின் வேலி (2001) ஆகிய தொலைக்காட்சி நாடகப் பிரதிகள் வெளிவந்துள்ளன. இவை தொலைக்காட்சி நாடகம் எழுத விரும்புவோர்க்கு ஓரளவுக்கு வழிகாட்டிகளாகவும் விளங்குகின்றன. வானொலி நாடகம் எழுதுவதற்கும், மேடை நாடகம் எழுதுவதற் கும், தொலைக்காட்சி நாடகம் எழுதுவதற்கும், இடையே பல வேறுபாடுகள் உள் ளன. வானொலி நாடகம் எழுதுவோர், வானொலி ஒரு செவிப்புலன் ஊடகம் என்பதை மனங்கொண்டு எழுத வேண்டும். மேடை நாடகம் எழுதுவோர் மேடைக்குரிய கள் வசதிகளை மனம் பதித்து எழுதவேண்டும். தொலைக்காட்சி நாடகப் பிரதியை எழுதுபவர், கமரா மூலமாகத் தான், தமது கற்பனையும், காட்சிகளும் ரசிகர் முன் கொண்டு செல்லப்படப் போகின்றன என்பதை மனத்திற் கொண்டு எழுதவேண்டும். தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் பாத்திரங்கள் வளவளவென்று வசனம் பேசிக் கொண்டிருப்பது பொருந்தாது. நடிப்பு, முகபாவம், விறுவிறுப்பான சம்பவத் தொடர்ச்சி முதலியவற்றுக்கு முக்கிய இடமளித்தல் வேண்டும். தொலைக்காட்சி நாடகப் பிரதியின் இடதுபுறம் நெறியாளருக்கு வழிகாட்டக் கூடி முறையில் காட்சிகள் தொடர்பான குறிப்புகளையும், வலது புறம் உரையாடல்களையும் கொண்டிருத்தல் வேண்டும். நெறியாளர் பிரதியை அடிப்படையாகக் கொண்டு காட்சிகளைப் படமாக்குவதற்காக மேலும் சில குறிப்புகளைச் சேர்த்துக் கொள்வார்.
நெறியாள்கை செய்பவர் கமராக் கண் கொண்டு காட்சிகளை உருவாக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகளைப் படமாக்குவது போன்று ஒரு சில கோணங்களில் மாத்திரம் தொலைக்காட்சி நாடகத்தைப் படம் பிடிக்க முடியாது. தொலைக்காட்சி நாடகத்தின் கதை , சம்பவங்கள், நடிப்பு, முகபாவம் முதலியவற்றுக்கு ஏற்ற முறையில் கமராக் கோணங்களை நெறியாளர் தீர்மானிக்க வேண்டும். பல வகைக் கமராக் கோணங்கள உள்ளன. 'குளோஸ்அப்'பில் மாத்திரமே மீடியம் குளோஸ் அப், பிக் குளோஸ் அப், எக்ஸ்ட்றீம் குளோஸ் அப் எனப் பல வகைகள் உண்டு. உதாரணமாக மார்பு வரை காட்டுவது மீடியா
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 123

Page 125
குளோஸ் அப். முகத்தைப் பெரிதாகக் காட்டுவது பிக் குளோஸ் அப். ஒரு கண்ணை மாத்திரம் பெரிதாகக் காட்டுவது எக்ஸ்ட்றீம் குளோஸ் அப். நெறியாளர்கள் தொலைக்காட்சி நாடகம் தொடர்பான பல தொழில் நுட்ப அம்சங்களையும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
நடிப்பைப் பொறுத்தவரையில் இலங்கையின் தமிழ்பேசும் நடிக நடிகைகள் பலரும் வானொலி மேடை நாடகங்களுக்குப் பரிச்சயமானவர்கள். சிலர் அத்தகைய அனுபவமும் இல்லாதவர்கள் , தொலைக்காட்சி நாடகங்களில் பங்கு பெறும் பெரும்பாலான கலைஞர்கள், தம்மை அறியாமலே தாம் அதிகம் சார்ந்த ஊடகத்துக்குரிய நடிப்புச் சார் பினை வெளிப் படுத்துபவர்களாக ஆகிவிடுகின்றனர். பெரும் பாலும் நடிக நடிகைகளிடம் மேடை நாடகம் சார்பான நடிப்பினையே தரிசிக்க முடிகிறது. ஆகவே, தொலைக்காட்சி நாடகத் துறை தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறை தொடர்பாகவும் இத் தகைய கு றைகள் காணப்பட்டன. ஆயினும், இத்தகைய குறைகளையும் மீறி, ஒரு சில கலைஞர்கள் தொலைக்காட்சி நாடகத்துக்கு ஏற்ற முறையில் தமது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வந்துள்ளனர் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களின் வளர்ச்சி வேகம் போதாமைக்கு விளம் பர தாரர்களின் அக்கறையின்மையும் ஒரு வகையில் காரணமாகிறது. தமிழ் நாட்டுத் தொலைக்காட்சி நாடகங்களுக்கும், சிங்களத் தொலைக்காட்சி, நாடகங்களுக்கும் இருக்கும் விளம்பரதாரர்களின் அனுசரணை, இலங்கைத்
மல்லிகை 8 சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் | 37வது ஆண்டு மலர் தேவை
ஆண்டுச் ச
தனிப்பி தொடர்பு கொள்ள 201 -1/1, ஸ்ரீ கதிரேச
தொலைபே
ஈ- மெயில் : par (காசுக் கட்டளை அனுப்புவோர் Dominic)

தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களுக்குப் போதிய அளவு கிடைப்பதில்லை. விளம்பரதாரர்கள் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இயல்பானதும், நியாயமானதும் ஆகும். அதேவேளை, விளம்பரதாரர்கள் மனமுவந்து உதவுவதற் கேற்ற முறையில் தர மான தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப் பட வேண் டும் என்ற மறுபக்கத்தையும் நாம் நிராகரிப்பதற்கு இல்லை.
தமிழில் திரைப்படத்துறை தொடர்பாக நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தொலைக்காட்சி நாடகம் தொடர்பாக அவ்வளவு அக்கறை காட்டப் படுவதில்லை. இலங்கையில் அருணா செல்லத் துரையின் இலங்கையில் தொலைக் காட்சி (1997) என்ற நுால் வெளிவந்துள்ளது. இத்துறை தொடர்பாக இன்னும் பல நூல்கள் தமிழில் வெளிவருதல் வேண்டும்.
இந் நாட்டில் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங் கள் தொடர்பான அக்கறையையும், ஆர்வத்தையும் அதிகரிக்க ஆவன செய்யப்படல் வேண்டும். பிரதியாக்கம், நெறியாள்கை, தயாரிப்பு, தொழிநுட்பம், நடிப்பு முதலான துறைகளில் பயிற்சிப் பட் டறைகள் நடத் தப் பட்டு, ஈடுபாடுள் ள கலைஞர்கள் ஊக்குவிக்கப் படவேண்டும். இலங்கை அரசும், தொலைக்காட்சி நிறுவனங்களும் சிங்களத் தொலைக்காட்சி நாடகங் களுக் குத் தான் இந்நாட்டில் முதல் மரியாதை அளிக்கப் படும் என்ற நிலையான - தவறான கோட்பாட்டிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் வளர்வதற்கும் போதிய ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
அகா
பூண்டுச் சந்தா மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள் பயானோர் தொடர்பு கொள்க.
ந்தா 250/- ரதி 20/- வேண்டிய முகவரி
ன் வீதி, கொழும்பு - 13. சி: 320721 thal@sltnet.lk. eeva, Kotahena. P.0 எனக் குறிப்பிடவும் )
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 124

Page 126
ந ா ங் கள் எங்களின்ரை ஸ்கூலுக்கு வந்திட்டம் எண்டு ஹப்பியாக இருக்கு. ஃபேர்ணிச்சர் எல்லாம் உடைஞ்சிருக்கு. மரங்களின் ஷடோவ்ஸ் கீழேதான் கிளாஸ் நடக்குது. பில்டிங்கை குயிக்காய் றிப் பயர் பண்ணித் தர வேணும்' - தமிழ் மகாவித்தியாலயம் என்ற விளம்பரப் பலகை வாசலில் தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளேயிருந்த பெரிய கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து கூரை ஓடுகள் சிதறி ..... இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்திய, கிராமத்தின் அவசர அவசரமாகப் போடப் பட்ட நீண்ட கிடுகுக் கொட்டகையில் பாடசாலை நடந்து கொண்டிருந்தது. அதற்கு அருகில் வைத்து நேர்காணலை நடத்திய தனியார் தொலைக்காட்சி நிருபரிடம் அந்த மாணவி மேற்குறிப்பிட்டவாறு
கூறினாள்.
தமிழ் எங்கே
போகிறது?
என்.சோமகாந்தன்
உல்ேலிகை
38:24
5 லர் * 200329வரி

'என்ரை பிறெண்ட்ஸ் எல்லாரையும் மீண்டும் காணுகிற போது ஹபியாய் இருக்கு. பேறன்ஸ் இன் னும் றிடேண் ஆகவில்லை. அன்ரியோடை வந்திருக்கிறன். போன முறை எக்ஸாம் எழுதிக் கொண் டிருந்த போது, ஷெல்லடியால் பாதி குளம்பிப் போச்சு. நான் றிப்பீற் செய்ய வேணும். ரீச்சர்ஸ் பலர் ட்ரான்ஸ்பர் எடுத்துக் கொண்டு அவுட்ஸ்ரேஷன் போட்டினம். அதனால் என்ரை ஸ்ரடீஸ் டிஸ்ரேப் ஆகிவிடுமோ என்று என் மனசில ஒரு ஃபியராக இருக்கு' - இன்னொரு மாணவி சொன்னாள்:
'கடையில் ஸ்ரொக் இல்லை. சாமான்களுக்குச் சரியான டிமாண்ட். கொழும்பில் இருந்து சப்ளை கொண்டுவாற லொறிகளை டிலே பண்ணி வவுனியாவில் சம்திங் , அளவுக்கதிகமாய் கறக்கிறான்கள்...... இந்த டிபிகலரியால நாங்கள் பிறைஸ் இங்கிலீஸ் பண்ணி, சேல்ஸ் நடத்துவது கஷ்டமாயிருக்கு' - அந்த ஊருக்கு அருகிலுள்ள நகரில் கடை நடத்தும் இளைஞர் கருத்தைக்
கூறினார்.
தொலைக்காட்சிச் செய்தியில் இதனைப் பார்த்து நான் துணுக்குற்றுப் போனேன். போரின் அழிவுகளையும் அந்த இளம் தலைமுறையினரின் ஏக்கங்களையும் பார்த்து மட்டுமல்ல, எளிதாக விளக்கக் கூடிய வகையில் கூறக் கூடிய மொழியிலிடம் பெற்றிருந்த ஆங்கிலச் சொற்கள் எவ்வளவு? யுத்தம், அழிவு, இடப் பெயர்வு இவையெல்லாம் மொழியின் தன்மையைக் கூட வா கெடுத்து விடும்? அதற்குச் சம்பந்தமேயில்லை, பிறகு ஏன் இப்படி........? எதனால் இப்படி?
எங்களுக்கெனத் தனித்துவமான இலக்கியப் பாரம்பரியம் உண்டு. அதன் வேர்களாக ஈழத்தில் தமிழ் வளர்த்த ஆறுமுக நாவலர், பொன்னம்பலம் பிள்ளை, பொ.கைலாசபிள்ளை, வித்துவான் கணேசையர், விபுலானந்த அடிகள், தமிழகக் கடல் கடந்த முருகேசனார், முருகேசு சுந்தரப்புலவர், பண்டிதமணி சி.கணபதிபிள்ளை, தென்புலோலியூர் மு.கணபதிப் பிள்ளை எனப் பட்டியலைக் காட்டி, ஈழத்து இலக்கியவாதிகள் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறார்கள். நல்ல காலம்! அவ்வறிஞர்கள் எமது இளஞ் சந்ததியினரின் தமிழைக் கேட்க இன்று நம்முடன் இல்லை.
லக்சல், ஒசுசல, சதொச, மஹாஜன சம்பத் முதலிய சிங்கள வார்த்தைகளின் கணிப்பு தடுத்து நிறுத்தப்பட முடியாமல் நீண்டு கொண்டே போகிறது ஒருபுறம், மறுபுறம், இளம் தலைமுறையினரின் கலப்பட மோகம்! தமிழ் எங்கே போகிறது?
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 125

Page 127
வெகுஜன ஊடகங்களான பத்திரிகைகள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி என்பன இன்று நகரங்கள், கிராமங்களை மட்டுமல்ல, அகதி முகாம்களையும் கூட வெகுவாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. வெகுஜன ஊடகங்களின் பிரதான பணிகள் அறிவூட்டுவது, தகவல்களைத் தருவது,
மக்களைக் களிப்பூட்டுவது முதலியவையாம்.
தமிழ் நாட்டிற்கும் ஈழத்துக்குமிடையே நீண்ட காலத்தொடர்புண்டு. மொழி, கலை இலக்கியம், கலாசாரம் என்ற வகையில் நெருக்கமான தொப்புள் கொடி உறவு நீடித்து நிலவுகிறது. 'உலகமே ஒரு கிராமம்' ஆகிவரும் இக்கால கட்டத்தில் வெகுஜன ஊடகங்கள் இத் தொடர்பை இன்னும் மிக்க நெருக்கமாக்கியுள்ளன. அங்கே மழைபெய்தால், இங்கேயும் குடை பிடிக்க வேண்டிய நிலைமையாகிவிட்டது.
அங் குள்ள வானொலிகளை மன்னித்து விடலாம். இக்காலத்தில் பெரும் பாலும் வானொலியின் மவுசு குறைவு. எங்கள் நாட்டுத் தனியார் வானொலிகள் பக்திப் பாடல்கள், சினிமாப் பாடல்கள் கலகலப்பான சம்பாஷனைகள் எனக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. காலையில் செய்திகளுக்காகவும் தூரப் பயணம் செல்கையில் பொழுது போக்குவதற் காகவும் மட்டுமே வானொலியை பெரும் பாலானவர்கள் திறக்கிறார்கள். ஏனைய நேரங்களில் தொலைக்காட்சியைத் தானே கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!
திறந்த பொருளாதாரம் என இங்கே அகலமாகக் கதவு திறந்து விடப்பட்டிருப்பதால், (இங்கு ஏழுதினப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கிற போதிலும்) சென்னையிலிருந்தும் தினசரிகள், வார ஏடுகள், என் வந்து குவிகின்றன. ஒவ் வொரு நிறுவனமும் தத்தமது இராட்சத அச்சியந்திரத்துக்குத் தீனி போடுவதற்காக, அகப்பட்டவற்றையெல்லாம் அவற்றின் வாய்களில் அள்ளிக் கொட்டி, பிரதான இதழுக்குத் துணையாக கவர்ச்சியையும் பாலுணர்வையும் கலந்து பல குஞ்சுகளையும், பொரித்து அவற்றுக்கு அழகான தமிழ் பெயர்களைக் கூடச் சூட்டாமல் ஏமாளி வாசகர்களின் தலைகளில் மிளகாய் அரைத்து, பையை நிரப்பிக் கொள்ளுகின்றன. ஆங்கில் பெயர்களைச் சூட்டிக் கொண்டு வெளிவரும் இதழ்களான ஜூனியர் விகடன், தமிழன் எக்ஸ்பிரஸ், டிசினிமா, குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த், குமுதம் ஜங்ஷன், குமுதம் ரிப்போட்டர் ..... பெயரில் மட்டுமல்ல, உள்ளடக்க விஷயங்களிலும்

தாராளமான தமிழ்க் கொலைகள், ஆங்கிலம் எக்கச்சக்கமாகக் கலந்த உரையாடல்கள், இளம் வாசகர்களைக் கிளு கிளுக்க வைக்கும் செய்திகள், கவர்ச்சிப் படங்கள்.....
தினப்பத்திரிகைகளில் தினமணி, முரசொலி போன்ற சிலவற்றைத் தவிர ஏனையவற்றில் செய்திகள், அவற்றின் தலைப்புகள், - முன்னர் மணிப்பிரவாளம் என்ற பிராமணத் தமிழ் இருந்த இடத்தில் இப்போது 'ஆங்கிலப் பிரவாகம்' ஏறி உட்கார்ந்து விட்டது. இவ்விடயத்தில் இன்னும் காலடி எடுத்து வைக்காமலிருக்கும் எமது நாட்டுத் தினப் பத்திரிகைகளுக்கு, கற்பூரம் கொளுத்திக் காட்டித் துதிக்க வேண்டும்!
புதிதாக வெளிவரும் தமிழ்த் திரைப் படங்களின் உரையாடல்களில் அரைவாசிக்கு மேல் ஆங்கிலச் சொற்கள், இடம் பெற்றிருப்பது மட்டுமல்லாமல், பெயர்களோ, ஃபயர், ஏர்த், வின்னர், ரெட், றன், ஜீன்ஸ், யூத், ஐ லவ் யூடா என்ன அற்புதமான தமிழறிவு படைத்த இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்! அவர்களைப் பொறுத்தவரை பைகள் நிறைந்தால் போதும்! மொழியாவது மண்ணாங்கட்டியாவது?
சென்ற ஏப்றில் மாசத்தில், சென்னையில் எனது நிகழ்வுகளும் நினைவுகளும்' பத்மாவின் 'வேள்வி மலர்கள்' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர்கள் பத்திரிகைத் துறை சார்ந்தவர்கள், திரைப்படத் துறை சார்ந்தவர்கள், இலக்கிய ஆர்வலர்களென 150 பேருக்கும் மேல் கலந்து கொண்ட அவ்விழாவில், சென்னையின் பத்திரிகை, திரைப்படத் துறைகளின் போக்குகளைக் கண் டித்து அப் போக்கினால் இளம் தலைமுறையினரிடம் ஏற்படக் கூடிய மொழி, கலாசாரப் பிறழ்வுகளை விளக்கி - இறுக்கிக் குட்டினார் நமது நாட்டின் எழுத்தாளர் நந்தி. பணம் பண்ணுவதே குறியாகக் கொண்டிருக்கும் செவிடன்
காதில் சங்கு ஒலி கேட்குமா? அன்புடன் மணமக்களை வாழ்த்தும், Vராசாமி, Pட்டர், வொனந்தம், Aகாம்பரம், Kதாரநாதன், Jகதீசன்
இது என்ன இடையில் புதுக்கரடி! சென்ற ஜூன் மாதம், தூத்துக்குடியில் நடைபெற்ற எனது நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவுக குச் செல் வதற்காக திருநெல்வேலிப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி, வாகனத்தில் பயணித்துக் கொண் டிருந்த போது திரு நெல் வேலித் தெருச்சுவர்களில் வர்ண வீராசாமி, பீட்டர்,
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003

Page 128
ஜீவானந்தம், ஏகாம்பரம், கேதாரநாதன், ஜெகதீசன் என்னும் பெயர்கள் இவ்வாறு தந்தி மொழியில் அச்சிடப் பெற்றிருந்தன. அப் பகுதிகளில் மணமக்களை வாழ்த்தி நண்பர்கள் இவ்வாறு சுவரொட்டி வாழ்த்துக்களை ஒட்டிப் பிரபலப்படுத்திக் கொள்ளும் புதிய வழக்கம், திரைப்படங்களைப் பார்த்துப் போலும், தொற்றிக் கொண்டுள்ளது. எனக்கு அருகில் இருந்த அவ்வூர் நண்பர் விளக்கிச் சொன்னார். வாழ்த்துக்களைத் தெரிவிக்கட்டும். மகிழ்ச்சி தான். ஆனால் சிறந்த தமிழ் வளங்கப்படும் இடமென தமிழ் நாட்டில் பெருமைப் படும் திருநெல்வேலியில் தறுதலைத் தனமாக தமிழை இப்படிக் கூறு போட வேண்டுமா?
இப்படியான போக்கில் ஒரு சாரார் மயங்கிப் போயிருக்க......
தூத்துக் குடியில் திருமணவிருந்தைச் சுவைத்தபின், காற்றோட்டமான விஸ்தாரமான மண்டபத்தில், விருந்தினர்கள் வெற்றிலையை மென்றபடி, குழுக்குழுவாக அமர்ந்து, மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தனர். இலங்கையிலிருந்து
அங்கு சென்றிருந்தவர்களில் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என் போன்ற சிலர்) வட்டமாக, உட்கார்ந்து குசலம் விசாரித்து, பத்தும் பலதுமாக எமது மொழியில் உரையாடிக் கொண்டிருந்தோம். அரை மணித்தியாலம் கழிய, உண்ட களைப்பு கண்களைச் சுருட்டியது. ஓய்வெடுக்கச் செல்வதற்காக எழுந்தபோது, அருகில் இருந்து நாம் கதைப்பதை அவதானித்துக் கொண்டிருந்த பெண்கள் குழு ஒன்று, உற்சாகமும் பூரிப்பும் கொண்டவர்களாக எம்மைச் சூழ்ந்து கொண்டனர்.
"என்ன அருமையாகத் தமிழ் பேசுகிறீர்கள்! இவ்வளவு நேரமும் இனிமையான உங்கள் தமிழைக் கேட்டு மகிழ்ந்து போனோம். ரொம்ப சந்தோஷம். அடிக்கடி எம்மூருக்கு வாங்க" என அவர்கள் மகிழ்ந்து பாராட்டிய போது பெருமையாக இருந்தது.
சின்னத்திரை என்ற தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்று அநேகவீடுகளில் நுழைந்து விட்டன. ஊடகச் சாதனங்களில் அது ஏனைய எல்லாவற்றையும் விட, அதிக சக்திவாய்ந்தது. எமது நாட்டிலுள்ள, ஆறு தொலைக்காட்சிகளில் தேசியத் தொலைக் காட்சி ஒன் றிலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் மட்டுமே தமிழ் மொழி நிகழ்ச்சிகள் சில மணித்தியாலங்களுக்கு ஒளிபரப்பப் படுகின்றன. மேலும், இரண்டொன்றில் அபூர்வமாக ஏதாவது தமிழ்ப்படம் ஓடும் ! தமிழ் நிகழ்ச்சிகளைத் தருகின்ற தொலைக்காட்சிகள் கூட , செய்திகளைத் தவிர ஏனையவற்றிற் கு தமிழ் நாட்டின்

நிலையங்களின் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புச் செய்வதிலேயே தொங்கிக் கொண்டுள்ளன. தாலி என்ற புனிதத்தைப் பேணும் மரபார்ந்த உணர்வு, முக்கோணக் காதல் , மாமி மார் கொடுமை, மருமகள்மார், குழந்தைக்காக ஏங்கி அரசமரத்தைச் சுற்றல் போன்ற கண்ணைக் கசக்கும் வழமையான புளித்துப்போன சமாசாரங்களை வைத்துக் கொண்டு ஆங்கிலச் சொற்களை அளவுக்கு மீறி சம் பாஷணைகளில் புகுத்தி, ஆறு மாசம், ஒருவருடமென இழுத்து அரைத்த மாவையே அரைக்கும் அறுவைத் தொடர் நாடகங்கள் தான் மாறி மாறி அயலகத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின்றன. "டிஷ்' அன்டனா ' உள்ளவர்கள், உடனுக்குடன் தமிழ் நாட்டு நிலையங்களிலிந்து இங்கு இவற்றைப் பார்க்கக் கூடிய வசதி பெருகிவருகின்றது. வேறு வேலைகள், படிப்பு நேரங் களை ஒதுக்கி வைத்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் பல மணிநேரம் உட்கார்ந்திருப்பதை, பெண்கள், இளைஞர்கள், இளைஞிகள் இப்போது இங்கும் வழக்கமாக்கிக் கொண்டு விட்டார்கள்.
முன்னர் குறிப் பிட் ட இதழ்களிலும் , இத்தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் ஊறித் திழைத்த எமது நாட்டின் இளம் தலைமுறை இப்படி ஆங் கிலம் கலந்து உரையாடுவது தான் நவநாகரிகப் பாணி என கருதத் துவங்கிவிட்டனர். தடம் புரண்ட அவர்களை, சரியான வழிக்குக் கொண்டுவராவிடில், இன்னும் சில காலத்தில் எங்கள் தமிழ் உருமாறி எங்கோ போய் விடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நூற்றாண்டு முடிவுக்குள் உலகில் வழக்கு ஒழியப் போகும் 40 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றென ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான கலாசாரப் பிரிவு (Unesco) எச்சரித்திருப்பதை நாம் அவசரமாக மனங்கொள்ள வேண்டும்.
'மண்ணை இழந்துவிட்டால் மீட்டெடுத்து விடலாம். மொழிலை இழந்து விட்டால் நாங்கள் ஒரு இனத்தையே அழித்ததாக அமைந்து விடும்' அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த 'தமிழ் கூடல் 2002ல் மேலோங்கி கிளர்ந்தெழுந்த இவ்வுண்மையை நாம் ஒவ்வொருவரும் கருத்தில் அழுத்தமாகப் பதித்துக் கொண்டு, செயலில் இறங்க வேண்டியது அவசரமும் அவசியமுமான பணி.
--தட்ட 5 -
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 127

Page 129
இக்கோவையில்லை
கலைமிகிழமை கட்சி
NAwwழச***AWWWசம்
மNood
மல்லிகைப் பர் வெளியிட்டுள்
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்தி
(இரண்டாம் பதிப்பு - புதிய அநுபவத் தகவல்கள். தகவல்களில் ந 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் - (சிறுகதைத் ! 3. அநுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - (இரண்டா 5. மண்ணின் மலர்கள் -
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - 1 6. நானும் எனது நாவல்களும் - செங்கை ஆழிய 7. கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்ல 8. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் -
டொமினிக் ஜீவா 9. முனியப்ப தாசன் கதைகள் - முனியப்பதாசன் 10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) - பாலரஞ்சனி 11. இப்படியும் ஒருவன் - மா. பாலசிங்கம் 12. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் 4 13. சேலை - முல்லையூரான் 14 மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியா
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 15. நிலக்கிளி - பாலமனோகரன் 16. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் - தெ 17. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்)
தொகுப்பு - செங்கை ஆழியான்
மேற்படி நூல்கள் தேவையானோர்
வியாபாரிகளுக்கு |

பபந்துல தல் சமீபத்தில் -
ள நூல்கள்
கிரம் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
ம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது)
விலை: 250/= தொகுதி) சாந்தன்
விலை: 140/=
விலை: 180/= ம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர்
விலை: 175/=
மாணவியரது சிறுகதைகள்) பான் மாஹ்
(பிரயாணக் கட்டுரை)
விலை: 110/= விலை: 80/= விலை: 100/=
விலை: I10/= விலை : 150/=
விலை : 60/= விலை: 150/=
தொகுப்பு)
விலை: 175/= விலை: 150/= விலை: 275/=
விலை: 140/= விலை: 150/=
பகுப்பு: டொமினிக் ஜீவா தயாராகின்றது.
எம்முடன் தொடர்பு கொள்ளவும் பிசேஷ கழிவுண்டு
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 128

Page 130
தாத்தா சுட்ட
'மணியம், இனி உன்னாலை குறி பார்த்துச் சுட முடியாது.... பேரனைக் கூட்டிக் கொண்டு போ... இனி அவன் தான் சரியாகக் குறி பார்த்துச் சுடுவான்....'
சரஸ்வதி முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டாள். மணியத்தால் தாங்க முடியவில்லை.
'சரஸ்வதியா சொன்னாள்? என்னைப் பார்த்தா சொன்னாள்...? மணியத்தினால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.
'ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டிக்குப் போனாலும் மணியத்திற்கு தான் முதற் பரிசு....' விதானையார் ஒருமுறை சொன்னதை இப்போதும் பெருமிதமாக நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த சரஸ்வதி.....
'மணியம் இனி உன்னால குறிபார்த்துச் சுட முடியாது....'
'என்னையா, என்னைப் பார்த்தா......
உண்மை தான்!
மணியம் வேட்டு வைத்து விலங்கு விழாத சரித்திரமே கிடையாது.
இடியன் மணியம் என்றால் அந்த ஊரில் மட்டுமல்ல, அயலூர்க்காரர்களுக்குக் கூடத் தெரியும். அதுவும் குறிப்பாகக் குடா நாட்டு இடப் பெயர்ச்சி வன்னிக் கிராமங்களுக்கு வந்தடைந்த காலகட்டத்தில் இறைச்சிப் பிரியர்களுக்கு மணியம் என்ற பெயர் பிரசித்தம்.
உடும்பு வேணுமென்றால் நாய்களோடு புறப்பட்டால் சில மணிகளில் நாலைந்து கொண்டு வந்து விடுவான். இரவு தங்கு வேட்டைக்குச் சென்று அவன் சுட்டுப் போட்ட வத்தல்கள் கொழும்பு வரை என்ன, தூர

3823 ஆன்50)
மல்லி
மான் 20032வரி
- ச.முருகானந்தன்
- - - - - -
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
| 129

Page 131
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குக் கூட பார்சலில் பறக்கும்.
மணியம் எனக்கொரு கூழக்கடா..... மணியம் புறா இறைச்சி இருமலுக்கு நல்லமாம்....
மணியம் மயிலெண்ணை வேணும்.... மயிலிறகும் வேணும்..... காவடி எடுக்க வேணும்... மான்தோல் இருக்கோ?
எல்லோருக்கும் அட்சய பாத்திரம் போல் 'ஓம்' என்று தலையசைப்பான் சொன்ன சொல்லு பிசகியதில்லை. காசு களஞ்சு சுணங்கினாலும் பொருட்படுத்துவதில்லை.
இடியன் என்ற அடைமொழி அவனுக்கு வரக் காரணம் அவன் பாவிக்கும் அடைப்புத் துப்பாக்கி தான்.
முறையான சன்னம் இல்லாத அடைப்புத் துவக்குகளைத் தான் வன்னி மக்கள் வயல் காவலின் போது பாவிப்பார்கள்.
இது அனுமதி பெறாத கள்ளத் துவக்கு.
அவர்களும் தான் என்ன செய்வார்கள்? கொக்கு, குரங்கு தொடக்கம், எருமைக்கடா, யானை வரை கமங்களை அழிப்பது இங்கு சகஜம்.
துப்பாக்கிக்கு அனுமதி பெறுவதென்பது லேசான காரியமில்லை. முறையாக விண்ணப்பித்தாலும் துவக்குகள் வழங்கப் படாமையினால் இந்த மாதிரி இடித்து அடைத்துப் பாவிக்கும் துப்பாக்கிகளை வன்னிக் கமக்காரர்கள் பலரும் வைத்திருக்கிறார்கள்.
ஒரு தடவை அடைத்த பின் இந்தத் துவக்கினால் ஒரு முறை தான் சுட முடியும். மறுபடியும் இத்துப்பாக்கியைப் பாவிக்க வேண்டுமென்றால், மறுபடியும் சக்கை அடைக்க வேண்டும். தீப்பெட்டி மருந்து, தீக்குச்சி மருந்து, பிசுங்கான் துண்டுகள், பழைய சைக்கிள் போல்ஸ்கள் என பல பொருட்களை முறைப்படி கலந்து குழாயில் இடித்து அடைப்பார்கள்.
சக்கை அடைப்பதென்பது லேசுப் பட்ட காரியமில்லை. நல்ல அனுபவமுள்ளவர்களால் தான் இதை இடித்து அடைக்க முடியும். 'கரணம் தப்பினால் மரணம்' என்ற சர்க்கஸ் காரனின் பணி போன்றது இது.
இதனால் கைவிரல்களையும், கண்களையும் இழந்தவர்களை ஒவ்வொரு கிராமத்திலும் பட்டியலிட முடியும்.

மணியத்திற்கு சின்ன வயதிலிருந்தே அத்துப்படி. இடித்து அடைப்பதிலும், சுடுவதிலும் அவன் வலு விண்ணன்.
பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் முதன் முதலில் கிடைத்த துப்பாக்கி அனுபவம், முதன் முதலாக மீனாட்சி மாமியிடம் கிடைத்த அனுபவத்திற்கு குறைந்ததல்ல.
அந்த நினைவுகள் இந்த வயோதிபத் திலும் நினைத்துப் பார்க்கையில் பெருமிதம் மனதில் வரும்.
பொதுவாக வயல்கள் செழித்து வரும் காலங்களில் கூட்டமாக குழுவன்களோ, யானைகளோ, மான்களோ வந்து பயிர்களை சர்வநாசம் செய்வதால் இராக்காவல் காக்காமல் பயிர்களை காத்தெடுத்து அறுவடை செய்து பலன் பெற முடியாது. நெல்லுப் பொறுக்கும் கூட்டம் வரை துவக்கு இல்லாமல் விரட்டப் படுவது கடினம்.
ஏத்துக்கட்டி அல்லது திட்டியில் காவல் கொட் டிலமைத்து, பனியிலும், மழையிலும், நுளம்புக்கடியிலும், காவலிருந்து தான் விவசாயிகள் உழைக்கிறார்கள். எரிகொள்ளி டோச் லைற் , மண்ணெண்னை, பழந்துணி, லாம்பு, தீப்பெட்டி, கயிறு, கத்தி என்று பல பொருட்களுடன் ஒரு இடியன் துவக்காவது வேண்டும்.
சில சமயங்களில் பாம்பு, பூச்சிப் பயமும் உண்டு. இவை எல்லாம் உழைக்கும் வன்னி விவசாயிகளுக்குப் பழக்கப் பட்டு விட்டது. பயிர்களைச் சங்காரம் செய்துவிடும். தனியன் யானை வந்தால் விரட்டினாலும் போகாது. வெடி வைக்காது விட்டால் உயிருக்கே ஆபத்து வரலாம்.
மணியன் - சிறுவனாகவும் இல் லாத, இளைஞனாகவும் மாறாத விடலைப் பருவத்தில் ஒரு நாள் அப்பு அவனை வயலுக்குக் காவலுக்குக் கூட்டிச் சென்றார்.
அன்று தான் துவக்கை எப்படிக் கையாள வேண்டும், எப்படி குறிவைக்க வேண்டும், எப்படி அணைத்துக் கொண்டு சுட வேண்டும் என்று காட்டிக் கொடுத்தார்.
அப்புவுக்குக் கொஞ்சம் சுகமில்லை. கூடவே அசதி என்று கள்ளும் குடித்திருந்தார். 'மணியம்.... நித்திரையாய்ப் போகாத.. அப்பு படுக்கப் போறன்.... ஏதும் முறுகம் வாற சந்தடி என்றால் எழுப்பு.... மேனை அயர்ந்து போகாத...' என்று மீண்டும் எச்சரித்து விட்டுப் படுத்தார்.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 130

Page 132
தூங்கித் தூங்கி விழித்திருந்த மணியத்தை சலசலப்பு உசாராக்கியது. 'எணேயப்பு எழும்பணை..... முறுக சாதி வருகுது...' என்று அவரை உலுப்பினான். அவரோ எழும்புவதாயில்லை. ஆழ்ந்து குறட்டையுடன் திரும்பிப் படுத்தார். 'எணேயப்பு.... பயமாயிருக்கணை.....'
மணி யத் திற் கு கையு மோடவில்லை, காலுமோடவில்லை. இடியனைக் கையிலெடுத்து, தோள்மூட்டோடு அணைத்தபடி குறி வைத்தான். நிலா ஒளியில் உருவ அசைவு தெரிந்தது. வில்லை அழுத்தினான். 'டமார்' என்ற சத்தத்துடன் புறப்பட்டுச் சென்ற சன்னம் தவறாமல் விலங்கை வீழ்த்தியது.
இந்தச் சந்தடியில் கண்விழித்த அப்பு திடுக்கிட்டு டோச் லைட்டை அடித்தார். 'என்னடா மேனை ...'
அங்கே...!
--------
ஒரு பெரிய யானை பிளிறியபடி சரிந்துபோய்க் கிடந்தது. அக்கம் பக்கத்து வயல் களில் காவலிலிருந்தவர்களும் வந்து கூடி யானையைப் பார்த்து அப்புவைப் பாராட்டினார்கள். மணியன் தான் சுட்டது என்று அவர் சொல்லியும் யாரும் நம்புவதாயில்லை.
'இந்தச் சின்னப் பொடியனா...? பொய்....'
எது எப்படியோ அன்றிலிருந்து மணியத்திற்கு துப்பாக்கி மேல் ஆசை வந்து விட்டது. 'படிச்சு என்னத்தைக் கண்டது! எனக்கும் வேலை வெட்டிக்கு உதவி வேண்டுமே' என்ற அப்புவின் அருட்சியில் பள்ளிக்கூட வாசலுக்கு டாட்டா காட்டினான்.
கண்டறியாத கணிதமும் விஞ்ஞானமும்.
இவன் படிப்பை விட்டதில் அம்மாவுக்குக் கொஞ்சம் கவலை. அப்புவும் பிள்ளையும் சேர்ந்து நின்றமையினால் அவளது கூற்று எடுபடவில்லை.
மணியம் வளர்ந்து வந்தபோது, கமத்தோடு வேட்டையும், அவனது தொழிலாகிவிட்டது. மிக நீண்ட கால மாக இடியன் து வக் கைப் பார் த் து வந்தமையினால் 'இடியன் மணியம்' என்ற மகுடம் அவனுக்குச் சூட்டப் பட்டுவிட்டது.
இப்பேர்ப்பட்ட மணியத்தைப் பார்த்து சரஸ்வதி என்ன சொல்லிவிட்டாள்!
'மணியம் உன்னால இனி சுடமுடியாது. பேரனைக் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போ... அவன் தான் இனி குறிபார்த்துச் சுடுவான்'.
சரஸ்வதியின் வார்த்தைகள் அவனைக்

குடைந்தது. உண்மைதான். இப்ப கொஞ்ச நாளாக மணியத்தின் உடலில் ஒருவித சோர்வு தெரிகிறது. 'மார்க்கண்டேயரைப் போல் என்றும் பதினாறாக எல்லோராலும் இருக்க முடியுமா என்ன?'
மணியம் இளமையிலேயே குழப்படி. கொஞ்சம் அப்படி இப்படித்தான். அது என்னவோ தெரியவில்லை. மணியத்தின் பார்வைப் பட்ட பெண்கள் அவனுக்கு மறுப்புச் சொல்வதில்லை. ஆனால் காதல் என்று யாரும் மூச்சு விட்டால் அந்த நட்பு அதோடு சரி. வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான்.
இவனுக்கு ஒரு கால் கட்டுப் போடாவிட்டால் இவனைத் திருத்த முடியாதென்று அப்புவுக்குத் தெரிந்தது. மாமன் மகள் வள்ளியை சடக்கென்று பேசி முடித்து வைத்துவிட்டார்.
வள்ளி கட்டழகி தான். இவனது குதியன் குத்தலுக்கெல்லாம் ஈடு கொடுத்துத் தனது காலடியில் கட்டி வைத்திருந்தாள். செல்வியைப் பெற்றெடுத்த பின்னர் வள்ளியால் மணியத்திற்கு ஈடு சொல்ல முடியவில்லை. தனது அழுங்குப் பிடியைத் தளர்த்த வேண்டியதாயிற்று.
மணியத்தின் ஆஜானு பாகுவான தோற்றமும் வசீகரமான பேச்சும் பெண்களை ஈர்த்ததில் வியப்பில்லை. காமத்திற்குக் கண்ணில்லை என்பது போல குப்பத்து ஆராயி முதல் முதிர்க் கன்னி ஆசிரியை அம்பிகா வரை இவனிடம் தடக்கி விழுந்து எழுந்தவர்கள் ஏராளம்.
இவனது கூத்தையெல்லாம் பார்க்க முடியாமலோ என்னவோ மூன்று நாள் வயிற்றோட்டத்தில் வள்ளி கண்ணை மூடிக் கொண்டு விட்டாள்.
இதன் பின் இவனைத் தட்டிக் கேட்கவும் ஆளில்லாமல் போனது. மணியம் தனிக்காட்டு ராஜாவானான். மணியம் வைத்த குறி தப்பாது என்று இரட்டை அர்த்தத்தில் ஊரில் பேசிக் கொள்வார்கள்.
இந்த வரிசையில் கடைசிச் சில வருடங்களாக இவனுக்கு இனிப்புக் கொடுத்து வந்தவள் சரஸ்வதி. அவள் தான் சொல்லிவிட்டால் மணியத்திற்கு இனி குறிபார்த்துச் சுட முடியாது......
மணியத்தால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
கனத்த மூன்றடி நீளத் துப் பாக்கியை தூக்குவதற்கு சங்கடமாய் வயது வந்ததை உணரும் சந்தர்ப்பங்கள் சிலவற்றைக் கடந்த சில நாட்களாக மணியம் உணர்ந்து தான் வருகிறான்.
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 131

Page 133
துப்பாக்கியைத் தூக்குகின்ற போதெல்லாம் தோள் பட்டையில் ஒரு வித வலியை உணர்கிறான். இருந்து
விட்டு எழும்பும் போது இலேசான தலை சுற்றல், இரவில் இரண்டு மூன்ற தடவைகள் சலம் விட எழும்புதல் என்று தேக்க நிலையில் சில மாற்றங்களை அவனால் சகித்துக் கொள்வது கஸ்டமாக இருக்கிறது. நாரிப்பிடிப்பு வேறு!
மூன்று நாட்களுக்கு முன் சரஸ்வதி 'அட சீ .... இவ்வளவு தானா? என்று சலிப்போடு கேட்டது அவனது ஆண்மைக்குச் சவாலாகப் பட்டது.
காட்டிலே நண் பர்களோடு தலைவனாக நடைபோட்டு எதிர்ப்படும் விலங்குகளை நொடிப் பொழுதில் சுட்டு வீழ்த்தி தினமும் இறைச்சிக் கறியும், பொரியலுமாக.......
இறைச்சி என்றால் வள்ளிக்கு அலாதிப் பிரியம். மகள் செல்விக்கும், அவள் வயிற்றுப் பேரன் சந்திரனுக்கும் கூட இறைச்சி என்றால் ஒரு கோப்பை சோறு கூடுதலாக எடுக்கும்.
சரஸ்வதிக்கு மட்டும் என்னவாம்? எத்தனை நாட்கள் முழு ஈரலையே அவளிடம் கொடுத்து விட்டு வெறும் இறைச்சியோடு போயிருக்கிறான். --
முயல்கறி, பறவைக் கறி என்று அவள் ஆசையாய் கேட்கிற போதெல்லாம் தவறாமல் சுட்டு வந்து கொடுப்பான். உடும்பு உடம்போடு ஒட்டும் என்று கேட்டு பிடிப்பித்து வந்து ஆசை தீரச் சாப்பிடுவாளே!
அவளுக்கு இப்போது உடம்போடு ஒட்ட விருப்பமில்லையாம்....... பாவி .......
'மணியத்திற்கு இனி குறிபார்த்துச் சுட முடியாது...... இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவரது காதில் நாரசமாக ஒலிக்கிறது.
சுட்டுக் காட்டிறன் ....... சுட்டுக் காட்டிறன் என்று கறுவிக் கொண்டார். 'எளிய பெண் ஜென்மம்....'
நண்பர்களோடு காட்டிலே சிறாம்பி கட்டி, ஏத்திலே ஏறி அமர்ந்து கொண்டு குழுவனையும், மரையையும் குறி பிசகாமல் சுட்டு விழுத்தியதெல்லாம் வெறும் பழங்கதையா?
கூட்டமாக அமர்ந்திருக்கும் பறவைகளை கைதட்டிப் பெரும் ஓசை எழுப்பிக் கலைத்து, அவை கூட்டமாய்ச் சிதறிப் பறக்கும் போது சுட்டு ஒரே தடவையில் இரண்டு மூன்று பறவைகளைப் பொத் பொத்' என்று வீழ்த்தியது எல்லாம் இனி முடியாதா...?

தலை மயிர் இன்னும் வெளுக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளிக் கம்பிகளாக.......
இந்த மீசையும், தாடை மயிரும்தான் கொஞ்சம் பிசகு பண்ணியது. 'இந்தக் காலத்துப் பசங்க டையோ ஏதோ ஒண்ணு பூசுறாங்களே...'' என்று நினைத்துக் கொள்வார். பின்னர் தனது நினைப்பை எண்ணிச் சிரிப்பார்.
இப் போது நண்பர்கள் அதிகம் அவரோடு காட்டுக்கு வருவதில்லை. எல்லாம் ஒரு வயசுக்குத் தானோ? பேரன் சந்திரனைத் தான் தேவைப்படும் போது கூட்டிச் செல்வார்.
'தாத்தா நீங்க அந்த நாளயிலை யானையை சுட்டீங்களாமே? அவன் ஆர்வமாகக் கேட்கும் போது இப்பவும் பெருமிதம் மனதை தாலாட்டும்.
'தாத்தா...... இனி இந்தத் துவக்கு வேண்டாம்....... நல்ல மெசின் கண்ணோடு வேட்டைக்குப் போகலாம்.. நாலைஞ்சு தரம் சுட்டாலாவது ஒண்ணை விழுத்தலாம் தானே?'
'உன்ர தாத்தா கவரி மானடா ....... ஒரு தரம் குறி பார்த்துச் சுட்டால் சுட்டது தான் ....
அ காட்டிலே பேரனுடன் நடந்து கொண்டிருக்கையில் எதிரே ஒரு மான்! டோச்சை அதன் கண்களுக்கு அடிக்கும் படி பேரனிடம் கொடுத்து விட்டு மானைக் குறி பார்த்தார். மானின் முகம் மங்கலாக இரண்டு மூன்று முகங்களாக அவரை அலைக்களித்தது.
அது திரும்பி ஓட முன்னரே வெடி வைக்க வேண்டும்.
'டுமீல்'
சூடு பட்ட மான் அலறிக் கொண்டு ஓடி வீழ்ந்தது. ஆவேசம் வந்தவர் போல் மானருகில் சென்று குத்திக் கிழித்து ஈரலைப் பிடுங்கி எடுத்தார்.
'இதைக் கொண்டு போய் சரஸ்வதி மாமியட்டைக் கொடு தாத்தா சுட்ட மான் ....... சமைச்சு வைக்கட்டாம் என்று........''
இடியன் மணியத்தால் இனியும் சுட முடியும்!
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 132

Page 134
'ழத் தமிழ் நாடக வளர்ச்சிக்குக் கொழும்பு கலைஞர்களின் பங்களிப்பு இதுவரை வரலாற்றுப் பதிவாக்கப் படாதது பெரும் குறைபாடாகும்.
கொழும்பு நாடக மேடைக் கலைஞர்களிடையே விஸ்வரூப தரிசனம் தந்தவர் நடிகவேள் லடீஸ் வீரமணி யாகும்.
ஐம்பதுகளிலிருந்து 90 களின் பிற்பகுதி வரை நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நாடக மேடையில் நடிப்பின் சிகரமாக திகழ்ந்தார், அமரர் லடீஸ்.
'கொழும்பில் சமூக மாற்றங்கள் பல ஏற்பட்டன. (5060) ஜிந்துப் பிட்டிப் பிரதேசம் மாத்திரம் அடிநிலைத் தமிழ் உயிர்ப்புக் கொண்ட பிரதேசமாக இருந்தது. 50
களில் திரைப் படத்தின்
ஜ ன ர ஞ ச க மு ம வா னொலி ய ன்
புதுமையும் வர இந்த இளைஞர் குழாத்தின் நாடக முயற் சிகளும் வேறு பட் ட ன . இ வர் க ளோ டு தொடர்பு கொண்ட போது தான் நாடக ஆற்றுகை எத்தகைய
ஒரு வலுவான ஒரு சமூக தவக்கலஞர்
வெளிக் கொணர்கையாக ஸoஸ் வீரமணி
தொழிற் பட் ட தென் பது
நடிக வேள் ல
60
அறிமுக
- அந்தனி ஜீவா

தெரிய வந்தது. வெளியுலக வாழ்க்கையும் சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும் இந்தக் கலை உதவிற்று. பார்ஸி மரபு மறக்கப் பட்டுப் போய் அதனை உள்வாங்கிய திரைக்கதை அமைப்பு கோலோச்சிய நாட்களில் (ஏறத்தாழ வேலைக்காரி முதல்) அப்பகுதியில் வாழ்ந்த தமிழ், தமிழ்பேசும் இளைஞர்களுக்கு நாடகம் ஒரு முக்கிய கலை வடிவமாயிற்று. தங்களின் திறமைகளைத் தங்களுக்குத் தாமேயும் தங்கள் நண்பர்களுக்கும் நிரூபிப்பதற்கான ஒரு கலை வடிவமாக நாடகம் அமைந்தது.'
இவ்வாறு பேராசிரியர் கா.சிவத்தம்பி 'வட கொழும்பில் தமிழ் நாடக வளம்' என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். 'கலைஞர்களின் ஆற்றல், பணி பற்றிய எவ்வித பதிவும் இல்லாமலிருப்பது மனவருத்தத்திற்குரிய ஒன்றாகும்' எனக் குறிப்பிடுகின்றார்.
1956-ம் ஆண்டுக்குப் பின்னர் நம் நாட்டில் அரசியல் ரீதியாக ஒரு தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனைச் சகோதரச் சிங்கள இனம் கலை இலக்கியத்துறைகளில் நன்கு பயன்படுத்திக் கொண்டது. பேராசிரியர் சரத்சந்திரா போன்றவர்கள் சிங்கள நாடக மேடையை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டினார்கள். பழைய கிராமியக் கதைகளையும் கூத்துக்களையும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். தற்கால நவீன தமிழ் நாடக மேடைக்கு ஏற்ற வகையில் நாடகங்களை எழுத முனைந்தார்கள். உலக நாடக ஆசிரியர்களின் நாடகங்களைச் சிங்கள
வடிவமாக்கி மேடையேற்றினார்கள்.
டீஸ் வீரமணி
க் குறிப்பு
3829 05 லர் 200329வரி
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003 133

Page 135
1956-ம் ஆண்டிற்குப் பின்னர் சிங்கள் நாடக மேடையில் ஏற்பட்டது போன்ற விழிப்புணர்வு தமிழ் நாடக மேடையில் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். அதனால் தமிழ் நாடகத்தைத் தவிர இலக்கியத் துறையின் ஏனைய பகுதிகள் நன்கு பிரகாசித்தன. படைப்பாளிகள் தங்களின் படைப்புகளின் மூலம் தனித்துவமிக்க பங்களிப்பைச் செய்தனர். காத்திரமான கலை, இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. தமிழ் நாடக மேடையில் வறட்சி தென்பட்டாலும் அத்திபூத்தாற்போல நல்ல முயற்சிகள்
ஓரிரண்டு இனங்கானப்பட்டன.
அதனால் தமிழ் நாடகமேடையின் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் காரணமாக அமைந்த திராவிட முன்னேற்றக் கழகப் பிரசார நாடகங்களின் வழி வந்த முயற்சிகளும், கலையரசு சொர்ணலிங்கம் போன்றவர்களின் மத்திய தர வர்க்க நாடக முயற்சிகளும் நாடக
முயற்சிகளை முன்னெடுத்தன. :
ஆனால், தமிழ் நாடக மேடையின் தோல்விக்குக் காரணம் அது மக்கள் பிரச்சனைகளை யதார்த்த பூர்வமான கலைத்துவச் சிருஷ்டியாக எடுத்துக் கூறத்தவறியது தான். போலி ரசனை உணர்வைத் தூண்டும் பகிடி நாடகங்களை மேடையேற்றுவதற்குப் பலர் முன்னின்று உழைத்தனர். சமூகப் பார்வையற்ற மனித பிரச்சனைகளை அணுகாத பகிடி நாடகங்கள் பலமுறை மேடையேற்றப் பட்டன.
Sap
-?'- '.
Excellent P "Modern Compute
- for Weddit - & Child
300, Modera Stre
-- --- Tel: 5
11 A
க - - -

இலங்கை வானொலியில் கூட, இத்தகைய நாடகங்கள் ஒலிபரப்பப் பட்டதால் இவைகளுக்கு ஒரு மௌசு ஏற்பட்டு ஒரு ரசிகர் கூட்டமே உருவாகியது. ஆனால், ஒரு சிலர் சத்திய வேட்கையுடன் சமூகப் பார்வை கொண்ட நாடகங்களை மேடையேற்றினார்கள்.
1960-க்குப் பின்னர் அரங்கேற்றப் பட்ட நாடகங்களில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியது. 1960-க்கும் 1970-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமூகப் பார்வை கொண்ட மனிதப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட நாடகங்களை பலர் அரங்கேற்றினாலும் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடக மேடையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நாடகத்தை நடிகவேள் லடீஸ் வீரமணி சிறப்பாக நெறிப்படுத்தினார். தான் தோன்றிக் கவிஞரான சில்லையூர் செல்வராசன் போன்றவர்கள் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர்.
நாடகக் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகவேள் லடீஸ் வீரமணி அறிஞர் அ.ந.கந்தசாமியின் வழிகாட்டல், நாடக நெறியாளர் சுவைஞர் ஹமீடின் தொடர்பு ஆகியவற்றின் ஊட்டங்களால், தலைநகரில், தமிழ் நாடக மேடையில் விஸ்வரூப தரிசனம் தரும் கலைஞராகப் பரிணமித்தார்.
நடிகவேள் லடீஸ் வீரமணி நாடக மேடையின் சகல
py Photo
2otographers rized Photography ng portraits -
Sittings
eet, Colombo - 15. 26345
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
134

Page 136
நுட்பங்களையும் அறிந்திருந்தவர். ஒப்பனை முதல் - காட்சி அமைப்புகள் வரை இவருக்குக் கைவந்த கலையாகும்.
நான் அறுபதுகளில் பம்பலப் பிட்டியில் சென்மேரிஸ் பாடசாலை இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது, இவர் சொந்தமாக வாடகைக் கார் வைத்து தொழில் செய்து கொண்டே நாடக முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
நாடக மேடையில் தனித்துச் செயற்பட்டு வந்த நடிகவேள் லடீஸ்வீரமணிக்கு, நாடக மேதை சுஹைர் ஹமீடின் தொடர்பு அவரது நடிப்புலக ஆளுமைக்கு ஒரு காரணியாக அமைந்தது. நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட் நெறிப்படுத்திய 'பொம்மலாட்டம்' நாடகத்தில் இவரின் நடிப்பாற்றலை தமிழ் பத்திரிகைகள் மாத்திரமின்றி ஆங்கிலப் பத்திரிகைகளும் சிறப்பாக விமர்சனம் செய்தன.
தமிழகப் படைப்பாளி ஜெயகாந்தனின் புகழ்பெற்ற 'யாருக்காக அழுதான்' கதையை மேடை நாடகமாக்கி, அப்பாவி ஜோசப்பாக நடித்துப் பலரின் பாராட்டைப் பெற்றார். இது பின்னர் தமிழகத்தில் சினிமாவாகத் தயாரிக்கப் பட்டு ஜோசப் பாத்திரத்தில் நடிகர் நாகேஷ் நடித்தார். அந்த நடிகர் நாகேஷின், நடிப்பை விடப் பல மடங்கு சிறப்பாக நடிகவேள் லடீஸ் வீரமணியின் நடிப்பு அமைந்தது. பல தடவை லடீஸ்வமணியின் நடிப்பை அறிஞர் அ.ந.கந்தசாமி வியந்து பாராட்டியுள்ளார்.
நடிகவேள் லடீஸ் வீரமணி வீரபாண்டியக் கட்டபொம்மன, நாடற்றவன், சலோமி, கங்காணியின் மகன், வீரத்தேவன், மனிதர் எத்தனை உலகம் அத்தனை நாடகங்களில் நடித்தும் நெறிப்படுத்தியுமுள்ளார். இவற்றில் சில நாடகப் பிரதிகளை இவரே எழுதியுள்ளார்.
1970-ம் ஆண்டு அரங்கேற்றப் பட்ட கவிஞர் அம்பியின் 'வேதாளம் சொன்ன கதை' என்ற கதை நாடகத்தில் நடிகவேள் லடீஸ் வீரமணியின் நடிப்புத் தான் நாடகத்திற்கு உயிரூட்டியது எனக் கலா விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் எழுதியிருந்தார். இதனை நாடக நெறியாளர் சுஹைர் ஹமிட் நெறிப்படுத்தியிருந்தார். இவருடைய 'நந்தவனத்து ஆண்டிகள்' 'ரகுபதிராகவா' 'வாடகை அறை' போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார்.
நடிப்புத் துறையில் மாத்திரமின்றித் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான - வில்லிசைத்து பாடுவதிலும் நடிகவேள் லடீஸ் வீரமணி சிறப்புற்று விளங்கினார். இவர் வில்லிசைத்துப் பாடுவதை நேரில் பார்த்த அநகந்தசாமியின் முயற்சியால் மஹாகவி நடிகவேள் லடீஸ் வீரமணிக்காக 'கண்மணியாள் காதை' என்ற காவியத்தை எழுதினார். அதனை அவர் முன்னிலையில் நடிகவேள் லடீஸ்வீரமணி வில்லிசைத்து பாடியுள்ளார். இந்த வில்லிசை நிகழ்ச்சியை இலங்கையில் பல பாகங்களில் மாத்திரமின்றி, புலம்பெயர்ந்த தமிழர்வாழும் நாடுகளிலும், அவர்களின் அழைப்பின் பேரில்

அங்கு சென்று நடத்தியுள்ளார். இந்த வில்லிசை நிகழ்வு மூலம் வில்லிசைக்கு ஒரு வீரமணி என்ற பாராட்டினையும் பெற்றார். மற்றும் கவிஞர் வி.என்.பெரியசாமி இயற்றிய 'வாழ்வின் வசந்தம்' என்ற நிகழ்ச்சியை கொழும்பு கலைச்சங்கச் செயலாளரான கே.பாலச்சந்திரன் தயாரித்தளித்ததுடன், ஆங்கில, சிங்களப் பிரமுகர்களையும் பார்க்க வைத்துள்ளார். இந்த வாழ்வின் வசந்தம். இலங்கையின் பல இடங்களிலும் மேடையேறியது.
ஆரம்ப காலங்களில் நடிகவேள் லடீஸ் வீரமணியின் நடிப்பைப் பார்த்துவிட்டு, மலையகத்தில் பல இடங்களிலும் இவருடைய நாடற்றவன், கங்காணியின் மகன், முன்னின்று மேடையேற்றியதுடன் இவருக்கு 'நடிகவேள்' என்ற பட்டத்தை வழங்கியவர், அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக இருந்தது இளஞ்செழியனாகும், என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாத உண்மையாகும்.
இத்தனை திறமைகளைத் தன்னகத்தே கொண்ட அபூர்வ ஆற்றல் வாய்ந்த, கலையரசு சொர்ணலிங்கம் அவர்களால் 'எனது வாரிசு' எனப் பெரிதும் பாராட்டப் பட்ட, தமிழ் நாடக மேடையில் தனிக் காட்டு ராஜாவாகத் திகழ்ந்த நடிகவேள் லடீஸ் வீரமணி, எண்பதுகளில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் தமிழகம் - சென்றார். 90- களில் தமிழகத்தில் அகதிகளாகச் சென்ற இலங்கையர்களை வைத்து நாடகம் ஒன்றைச் சென்னை கலைவாணர் அரங்கில் மேடையேற்றினார்.
அப்பொழுது சென்னைக்குச் சென்றிருந்த எனக்கு, நாடக ஆரம்பத்தில் நடிகவேள் லடீஸ்வீரமணியை அறிமுகப் படுத்தும் வாய்ப்பை எனக்கு தந்தார். இதனை ஏற்பாடு செய் தவர் 'மதுரா' டிரவல் ஸ் கலைமாமணி வி.கே.டி.பாலனாகும். அப்பொழுது என்னோடு கூடவிருந்து நாடகம் பார்த்தவர் பத்திரிகையாளர் எஸ்.சிவநாயகமாகும். (இவர் 'சட்டடே ரிவ்வியு' ஆசிரியராவார்)
இந்த நாடக மேடையேற்றத்திற்கு பின்னர் வெளிநாடுகளில் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்திய நடிகவேள் லடீஸ் வீரமணி இலங்கைக்குத் திரும்பி சில காலம் வடபகுதியில் வாழ்ந்தார். பின்னர் கொழும்பு வந்தார். இளைய தலைமுறை நடிகர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சுகவீனம் காரணமாக காலமானார்.
நாடக மேடையில் சகலகலா வல்லவராகத் திகழ்ந்த நடிகவேள் லடீஸ் வீரமணியின் நாற்பதாண்டு கால நாடகமேடை வரலாறு எழுதப்பட வேண்டியது அவசியமாகும்!
38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
135)

Page 137
Best Wishes to
Mallikai z தையல் - பின் சாதனை நின
சம்பியன்
1
in
பின்னல் வேலைக6 சகா முயல் மார்க் 6
**
சம்பியன் நூல் கம்! உறுதியானவை - நீடித்
சம்பியன் நூல்களை சம்பியன் திறெட் மனு
(Champion Thread இல. 100, புதிய சோனக
தொலைபேசி: ஈ- மெயில்:chi
201 - 1/1, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசி
அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இல

8th Year Issue
னல் கலைகளில் ல நாட்டுபவை நூல்கள்
ளுக்கு உன்னதமானது வூல் (Wool) நூல் பெனித் தயாரிப்புகள்
த பாவனைக்கு உகந்தவை. யே கேட்டு வாங்குங்கள் அ பெக்சரிங் கொம்பனி
manufacturing Co:) கத் தொரு, கொழும்பு - 12.
435034, 451528 Imptrd@sltnet.l12
ப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா க்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
மல்லிகை 38வது ஆண்டுமலர் ஜனவரி - 2003
|136.

Page 138
புத்தளம் மாவட்டத்தில் சாஹித்திய புத்
எம். டீ. குணசேன
மல்லிகைப்பந்தல் வெளியீ
இங்கு பெற்றுக்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத்
பாட நூல்கள், அகராதி
இலக்கிய நூல்கள் ஈழத்து மற்றும் புலம் பெய
நூல்கள் அை
புத்தகக் கண்காட்சி
சாஹித்திய புத்
4, குருநாக (பஸ்நிலையத்திற்கு
* புத்தள தொலைபேசி/ தொலை
ஈழத்து மற்றும் புலம் பெயர் பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு
உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து

- ஒரு புத்தக இல்லம்! தக இல்லம் சவின் ஏஜன்ட்
டுகள் அனைத்தையும் கொள்ளலாம்
5 தேவையான காகிதாதிகள் கள், உபகரணங்கள்,
சஞ்சிகைகள், சர்ந்த எழுத்தாளர்களின் னத்திற்கும்
டிம் விற்பனையும்
தக இல்லம் FUSIC BRARY ல் வீதி,
JTNA 5 அண்மையில்)
ம்.
மநகல் : 032-66875
பிந்த எழுத்தாளர்களும்,
செய்து தொடர்பு கொள்ளுங்கள் 5 விற்பனை செய்து உதவுவோம்

Page 139
MALLIKA) 38MYear Special Issue January 2008
PARA EXPO PRC
U.K. Printerss - 344046

Best wishes to
MALLIKAI 38th Year Special Issue
ODUCTS (PVT.) LTD
Exporters of Non Traditional Srí Lankan Foods
80, Sea Avenue,
Colombo-08 Tcl:STEIN