கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கை 2011 (36)

Page 1
இல்
= = = = = = = 365
Nangai W.

ISSN 1800-3109
சற்கு
இதழ் 36/ 2011
கதைக்கரு
- 32
omen's journal

Page 2
தலைப்பு ஆசிரியர் ஆசிரியர் குழு
வெளியீடு
: நங்கை - இதழ் - 2011/ : சரோஜா சிவச்சந்திரன் ( : எம்.தேவகெளரி, விரிவுன்
கோகிலா மகேந்திரன், : கே.எஸ்.சிவகுமாரன், : மகளிர் அபிவிருத்தி நின இல. 07, இரத்தினம் ஒன் கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம். : தீபம் பிறிண்டேர்ஸ்,
717, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம். : உள்நாடு
தனிப்பிரதி : ரூபா ஆண்டுச் சந்தா : ரூபா 2
தபாற்செலவு உட்பட)
அச்சிட்டோர்
விலை
1 1 1 | ! ! | 41
Title
Editor Editorial Board
Publishers
: Nangai - Issue - 2011 ) : Saroja Sivachandran, : Ms.M.Devagwory, Led : Ms. Kokila Mahendra : Mr.K.S. Sivakumaran, : Centre for Woman an
No. 07, Ratnam Lane, Jaffna,SriLanka.
Phone : 4398 : Theepam Priters,
717, K.K.S. Road, Jaffna. : 1800 - 3109 : 977-180-03100-0-2
Printed by
ISSN ISBN

36
M.A)
-ரயாளர், ஊடக கல்வி நிலையம், கொழும்பு. எழுத்தாளர், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர். எழுத்தாளர் / விமர்சகர். "லயம்,
ழங்கை,
பாம்
25.00 240.00
வெளிநாடு தனிப்பிரதி: ரூபா 50.00 ஆண்டுச் சந்தா : ரூபா 540.00
தபாற்செலவு உட்பட)
(36 B.A Hons (Cey), M.A.Jaf). ctures, College of Journalism, Colombo.
n, Writer, Former Deputy Director of Education, . Writer / Critic
d Development, Off.K.K.S. Road,
01-10-2011

Page 3
மகளிர் அபிவி
யாழ் Certre for Wome

கை
இதழ் 36/ 2011
பிருத்தி நிலையம் ப்பாணம். en and Development affna.

Page 4
பொருள்
1. சிறுவர் உரிமைகளை மதிப்போம் 2. சிறுவர்களே இவை உங்கள் உரிமை 3. உலக சிறுவர் தினம் - ஒக்ரோபர் 01 4. இலங்கையில் சிறுவர் உரிமைகளும்,
பாதுகாப்பு நடைமுறைகளும். 5. சிறுவர் வாழ்வு ஒளிபெற அனைவரும் 6. இளவயதுக் கர்ப்பத்தின் தாக்கங்கள் 7. சிறுவர் வாழ்வை வளமாக்குவோம் 8. இலங்கைச் சிறுவர்களின் இன்றைய 9. சிறுவர்களும் குடும்பச் சூழலும் 10. சிறுவர்களும் கைத்தொலைபேசிப் பா II. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 12. மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் இ 13. மகளிர் அபிவிருத்தி நிலையம் மேற்கெ
செயற்திட்டங்கள்

டக்கம்
கள்
8 8 3 2
சிறுவர்
10
ம் ஒன்றிணைவோம் நம் அதனைத் தவிர்த்தலும்
13
15
நிலை
18
21
3
வனையும் ரின் எதிர்காலம்
25
லவச சட்டசேவை
28
நாள்ளும் சிறுவர்களுக்கான
30

Page 5
சிறுவர் உரிமைக் சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமவாயத்தைத் தொடர்ந்து உலகெங்கும் சிறுவர் தொடர் பான விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருவது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இன்று சிறுவரை இலக்காகக் கொண்டு நடக்கும் சம்பவங் கள் அதிகரித்துள்ளன. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் பராமரிப்பின்மை, சுரண்டுதல், வேலைக்கமர்த்துதல், ஆபாச காட்சிகள் என சிறுவர்களை நோக்கிய பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆயினும், இவ்வாறான துஷ்பிரயோகங் களிலிருந்து முதலில் சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியவர் - அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களே.
நாம் சிறுவர்களைப் பற்றிகூறும் போது இவை சாத்தியமான நிகழ்வுகளா என பலர் அங்கலாய்க்கின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக இவை எல்லாம் நிகழும் நாடுகளிலேயே நாம் வாழ்கின்றோம். மக்களோடு மக்களாக நம்பிக்கையையும், நிராகரிப்பையும் நாம் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உள. இப்பொழுது என்ன நடக்கின்றது. நாம் முரண்பாடுகளைச் சந்தித்தோம்; கொடிய போரை எதிர் கொண்டோம்; பசி, பட்டினியால் வாடிய பிஞ்சு முகங்களைச் சந்தித்தோம். இத் தாக்கங்களிலிருந்து மீள முடியாத தாய் மாரைச் சந்தித்தோம். இச்சிறுவர்களின் மீள் உருவாக்கம் சமூகமயப்படுத்தல் என்பன எம் கைகளில் இல்லையா?
இப்பாதிப்பிற்குட்பட்ட சிறுவர்களை மேலும் மேலும் துன்பத்திற்குள்ளாக்கும் செயல்களை எம் சமூகம் பொறுப்புடன்
* * .
|இதழ் - 36/ 2011

ளை மதிப்போம்... பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? சிறுமி கள் மானபங்கப்படுவதும், தொழில் ரீதி யாக கடத்திச் செல்லப்படுவதும், பாட சாலை செல்லாது சிறுவர் சிறு தொழில் களில் ஈடுபடுத்தப்படுவதும் எமது பிரதேசங் களிலும் நடக்கின்றன என்பது செய்தி மட்டுமல்ல; சம்பவங்களுமே. நடந்து முடிந்த சம்பவங்களுக்கு நீதி, நியாயம் கேட்ப துடன் நிற்காது, இவை நடக்காமல் பார்த் துக்கொள்வதும், வருமுன் காக்கும் செயற் பாடுகளாகும்.
எழுத்து வடிவில் எத்தனையோ விடயங்கள் எழுதப்பட்டுவிட்டன. நாம் பேச்சளவில் மட்டும் நின்றுவிடாது சிறுவர் தொடர்பான விடயங்கள் சமூகத்தில் மிகப் பாரதூரமான விடயங்கள் என்பதைக் கவனத்திற்கொண்டு அது தொடர்பாக செயற்பட வேண்டும். சிறுவரின் மன எழுச்சிகளை சமூகமோ, கல்விச்சாலை களோ நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். பெற்றோர் விடும் தவறுகளால் பிறக்கும் பிள்ளைகளின் மன எழுச்சிகள் தூண்டி விடப்படும் சந்தர்ப்பங்கள் பல உள. இதனால் உள ரீதியாகப் பாதிக்கப்படும் சிறார்கள் தாழ்வு மனப்பான்மையுடன், விரக்தியடைந்தவர்களாகவும், சமூகத்தின் பிறழ்வு நடத்தைகட்குக் காரணமானவர் களாகவும் அமைய வாய்ப்புக்கள் உண்டு. அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் சிறுவர்கட்கு தீங்கு செய்யாதீர். சிறுவர் உங்களுக்கு ஏதாவது சொல்ல வரும்போது அதனைப் பொறுமையுடன் கேளுங்கள்.
- ஆசிரியர்
- * * * * *
01.
| நங்கை

Page 6
ஓ சிறுவர்களே! இழை
உலகம் முழுவதிலும் பரந்து ! இந்த உரிமை உண்டு. இந்த உரின உரிமைகளைப் பற்றிக் கற்றுக்கொ யிலும் உங்கள் கழகத்திலும் உங்க களுடனும் இந்த உரிமைகளைப் பற் * எல்லாப் பிள்ளைகளும், முக்கிய
முக்கியமான இடம் உண்டு. * தனக்கென ஒரு பெயரைப் பெறு
கும் உண்டு. என்னுடைய பெயர் * என்னுடைய தாயாருடனும்
எனக்கு உரிமை உண்டு. * எனக்கு அடிப்பதற்கு அல்லது
ஒருவருக்கும் அனுமதி இல்லை. 4 சிறந்த நல்வாழ்க்கை வாழ்வதற்கு * எனக்கு சுகயீனம் ஏற்படும்பொ
உரிமை உண்டு. * நான் நினைப்பதைச் சொல்வதற் * சிறுவர்கள் பாடசாலையிலும் (
எனக்கு உரிமை உண்டு. * பயப்படாமல் வாழ்வதற்கு உங்க பிள்ளைகளுக்கும் உரிமை உண்டு
|இதழ் - 36/ 2011

2 உங்கள் உரிமைகள் | வாழும் ஒவ்வொரு பிள்ளைக்கும் -மகள் பற்றி வாசியுங்கள். இந்த ள்ளுங்கள். உங்கள் பாடசாலை களுடைய தோழர்கள் தோழியர் றிக் கலந்துரையாடுங்கள். மானவர்கள். எனவே எனக்கும்
ம் உரிமை ஒவ்வொரு பிள்ளைக்
தந்தையாருடனும் இருப்பதற்கு
என்னைக் கேலி செய்வதற்கு
எனக்கு உரிமை உண்டு. ழுது உதவி கேட்பதற்கு எனக்கு
கு எனக்கு உரிமை உண்டு. பல விசயங்களைப் படிப்பதற்கு
ளுக்கும் எனக்கும் மற்ற எல்லாப்
நங்கை

Page 7
உலக சிறுவர் திக
பதினெட்டு வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களை சிறுவர் என்ற பிரிவினுள் அடக்கலாம். சிறுவர் உரிமைகள் தொடர் பான சர்வதேச சட்டத்தின் வரையறையின் பிரகாரம் சிறுவர்கள் சிறுவர்களாக இருக்க வேண்டிய தனித்தன்மை பேணப்பட வேண்டும் என வரையறை செய்கின்றது. சிறுவர் உரிமைகள் என்பது சிலசமயங்களில் மேல்நாட்டு கோட்பாடு போலத் தோன்றி னாலும், சிறுவரின் ஆளுமை சிறுவரின் வளர்ச்சியோடு இணைந்ததாகவே உள்ளது. சிறுபராயத்திலிருந்து வளர்ந்து வரும் பிள்ளை, பதினெட்டு வயது வரும்வரை பல படிநிலை மாற்றங்களை அதாவது குழந்தைப் பருவம் , ஆரம்பநிலை முன் இளமைப் பருவம், கட்டிளம் பருவம் என பல மாற்றங் களை உள்வாங்கி வளர்ச்சி பெறு கின்றது. இப்படியான நிலைகள் சிறுவரின் எழுச்சி, உள, உடல் ரீதியான வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இப்பருவ நிலைகளில் சிறுவர் சரி யாக வழிநடத்தப்படவேண்டிய தேவை உள்ளது. ஐ. நா மரபொழுங்கின் பிரகாரம் சிறுவர் உரிமைகள் சட்டமானது, சிறுவர் தகுதியான நல்ல சூழலில் சிறுவரின் உள், உடல் ரீதியான மாற்றங்களை உள்வாங்கு வதாக அமைவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும். ஏனைய மனித உரிமை சட்டங் களைவிட சிறுவர் உரிமைகள் கோட்பாடானது வேறுபட்டதாக உள்ளது. ஏனெனில் சிறுவரால் தன்னை, பெரியோரின் உதவியின்றிப் பராமரிக்க முடியாது. ஆகவே சிறுவர், தனிமையில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ முடியாது. அவர்கட்கு குடும்பத்தின், பெற்றோ ரின் பாதுகாவலரின் நெருங்கிய உறவு என்றும் தேவையாக உள்ளது. 1991 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகள் மரபொழுங் கானது இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக் கப்பட்டதுடன் அதனை நடைமுறைப்படுத்து வதற்கான செயற்பாடுகளும் ஆரம்பமாகின.
இதழ் - 36/ 2011

எம் - ஒக்ரோபர் 01
முதலில் பொலிஸ் நிலையங்களில் தேசிய பெண்கள் மற்றும் சிறுவர்கட்கான ஓர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையின் 36 பொலிஸ் நிலையங்களில் செயற் படுத்தப் பட்டு வருகின்றது. இங்கு பெண்கள் மற்றும் சிறுவர்கட்டு எதிரான வன்முறைகள் விசாரிக்கப்படுவதுடன் இவ்வாறான வன் முறைகள், துஸ்பிரயோகங்கள் இடம் பெறாது இருப்பதற்கான ஓர் தளத்தை இது உருவாக்கியது. மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஒன்றும் உரு வாக்கப்பட்டது. தொடர்ந்து குற்றவியல் சட்டக் கோவையில் பெண்கள் சிறுவர் தொடர்பான வேலைவாய்ப்பு விதிமுறைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது எவ்வாறு இருந்தபோதிலும் தற்போது அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் சிறுவர் மேல் மேற்கொள்ளப்பட்டுவரும் துஸ்பிர யோகங்களை ஆழமாக நோக்கும் போது, இவை தொடர்பான சட்டங்களை திருப்தி யளிப்பதாக இல்லை என்றே கூற வேண்டும்.
சிறுவர் தொடர்பாக நீதிமன்ற . நடவடிக்கைகட்கு அரச சார்பில் நன்னடத்தை அதிகாரி (Probation Officer) பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேலதிக மாக சிறுவர் உரிமைகள் மேம்படுத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறுவர் பட்டயம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. இது சிறுவர் மேம்பாடு தொடர்பான ஓர் கொள்கை விளக்க ஏற்பாடேயன்றி சட்டரீதியான பொறுப்பு எதுவும் இப்பட்டயத்திற்கு இல்லை.
சிறுவர் உரிமைகள் சாசனத்தை அங்கீகரித்த நாடுகள் ஐ.நா.வின் சிறுவர் தொடர்பான குழுவிற்கு அறிக்கைகளை தவறாது அளித்தல் வேண்டும். இவ்வறிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர் மேம்பாடு தொடர்பாக அரசு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக அமை யும். 2008 இல் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் பின் சிறுவர் தொடர்பான பல்வேறு மேம்
நங்கை
03

Page 8
பாட்டுத்திட்டங்கள் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் தொடர்பான அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.நா.வின் சிறுவர் உரிமைகள் தொடர்பான மரபொழுங்கினை 193 நாடுகள் அங்கீகரித்து, சிறுவர் தொடர் பாக மேம்படுத்தும் திட்டங்களை நடை முறைப்படுத்தி வருகின்றன. கூடுதலான நாடு கள் அங்கீகரித்துள்ள மரபொழுங்காக இம் மரபொழுங்கே இன்று உள்ளது. ஆயினும் ஜக்கிய அமெரிக்கா, சோமாலியா போன்ற இரு நாடுகளும் இம்மரபொழுங்கை இது வரை அங்கீகரிக்காமை கவலை அளிப்பதாக உள்ளது.
அரசு தவிர்ந்த வேறு நிறுவனங் களான அரச சார்பற்ற நிறுவனங்களான சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் இலங்கை யில் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற நிறுவனமும் சிறுவர் தொடர்பான அறிக்கை களை ஜ.நாவின் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு குழுவிற்கு அனுப்பி வைக் கின்றன. ஐ.நாவின் ஒழுங்குபடுத்தப்பட்ட 40 விதிமுறைகளுக்கு உள்ளாக ஒவ்வொரு படிமுறையிலும் குறிப்பிட்ட நாட்டில் சிறுவர் தொடர்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையில் தெளிவு படுத்துதல் அவசிய மாகும். சிறுவர் தொடர் பான நடவடிக்கை யில் ஈடுபடும் எந்த நிறுவனமும் பெற்றோர், பாதுகாவலர் மட்டுமன்றி இனம் அல்லது சமூக பிரிவு, சொத்துடமை, உடற்குறைபாடு, பிறப்பு மற்றும் எவ்வித அந்தஸ்தையும் பாராது சிறுவரை சமமாக நடத்தவேண்டும் என்ற உறுதிப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
பெற்றோர் விவகாரத்து பெறும் நிலையில் பிள்ளை யாருடைய பொறுப்பில் விடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் பிள்ளையின் நலனே முக்கிய இடத்தைப் பெற வேண்டும். சிறுவரின் விருப்பம் பெறப் படுவதற்கு அவர்களது முதிர்வுத்தன்மை கணக்கிற் கொள்ளப்படுகின்றது. சில நாடு களின் சிறுவர் குறைந்த வயதிலேயே சில தீர்மானங்களை எடுக்க கூடிய முதிர்ச்சியை
இதழ் - 36/ 2011

பெற்றுள்ளனர். உதாரணமாக ஹோஜியா நாட்டில் 10 வயதுடைய பிள்ளை தான் யாரிடம் அல்லது எங்கே போக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய பக்குவம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கையில் சிறுவரின் சம்மதம் பெறு வதற்குரிய வயது 10 ஆகும். இவ்வயதிற்குக் குறைந்த பிள்ளை சார்பாக, நீதிபதி சரி யானது எது என்பதை தீர்மானித்து முடிவு எடுக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார்.
இன்று சாதாரணதர, உயர்தர வகுப்பு பாடங்களை சரியாக தெரிவு செய்ய முடியாமல் பல சிறுவர் தடுமாறுவதை நாம் பார்த்திருக்கின்றோம். இவ்வாறான சந்தர்ப் பங்களில் நாம் அவர்கள் மீது எந்த விதத் திலும் திணிப்பை ஏற்படுத்தகூடாது.
சிறுவர் அவர்களது வயது, மற்றும் தீர்மானம் எடுக்கமுடியாத தடுமாற்றம் காரண மாக பல்வேறு இன்னல்கட்கு ஆளாகின்றனர். இவ்வாறான சந்தர்பங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும். ஆயினும் சிறுவர் தமது நிலைபாட்டில் சரியாக சிந்திக்கக்கூடிய வகை யில் அவர்கட்கும் சிறிது இடம் கொடுத்தல் இன்று தேவையாக உள்ளது. பெரியவர்களே, சிறுவர்கட்காக எப்போதும் சிந்தித்து முடி வெடுத்தல் என்பது சிறியவர்களின் உரிமை யில் அநாவசியமாக தலையிடுவதாகக் கூ அமையலாம். ஒவ்வொரு சிறுவரும் மற்ற சிறுவரை விட வேறுபட்ட ஆளுமை. குணாதியங்களை கொண்டவர்கள். ஆகவே ஒவ்வொரு சிறுவர்களோடும் தனிப்பட்ட ரீதியில் அச்சிறுவர் ஓர் தனிநபர் என். ரீதியிலேயே கவனம் எடுத்தல் வேண்டும்.
சிறுவர் பெற்றோருடன் இரவு நேரம் உட்பட 10 அல்லது 12 மணித்தியாலம் களையே செலவிடுகின்றனர். ஏனைய நேரம் முழுவதும் ஒன்றில் பாடசாலையில் அல்லது பராமரிப்பாளர்களோடு செலவிடுகின்றனர். ஆகவே சிறுவர் யார், அவர்களுடன் எப்படி பழக வேண்டும். என்பதை சமூகத்தில் அவர்களுடன் பழகும் சகலரும் அறிந்து கொள்ள வேண்டும். சிறுவரின் சரியான
நங்கை

Page 9
11ili
தேவைகளை சரியாக இனம் காணப் படாவிட்டால் இதனால் பிற்காலத்தில் அச் சிறுவர் பல பின் விளைவுகளை எதிர். நோக்கலாம். குழந்தைப்பருவமான இரண்டு வயதினுள் அன்பு, பராமரிப்பு என்பவை குழந்தைகட்கு தேவையாகும். இக்காலத் திலேயே குழந்தை ஏனையோரிடம் நம்பிக்கை வைக்கும் உணர்வை விருத்தி செய்கிறது. இக்கால கட்டத்தில் தாய் குழந்தையைப் பிரிந்து வேறு இடத்திற்கு செல்லும் போது குழந்தை பாதுகாப்பற்ற தன்மையை உணர்கின்றது. இவ்வுணர்வு குழந்தை வளர்ந்து இளமைப்பருவம் அடையும் போது கூட அச்சிறுவரிடம் காணப் படும் குழந்தை 2 - 5 வயதினுள் நடப்பதற்கு ஆரம்பிக்கிறது. இக்காலகட்டத்தில் குழந்தை யிடம் "தான்" என்ற சிந்தனை வலுப் பெறுகிறது. தன்னால் எதுவும் செய்ய முடியும் என்ற சிந்தனை ஏற்படும்போது அதனை சிறந்த கருவியாக அபிவிருத்தி செய்ய வேண்டியது கடமையாகும்.
மனித உரிமை மீறல் போலன்றி சிறுவர் உரிமைகள் தொடர்பான மீறல்கள் அதே குடும்பத்தில், வீட்டில் இடம் பெறு வதை காணமுடிகிறது. சிறுவர் ஓர் நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கும் போது வெளிநபர்களினால் இவ்வாறான மீறல்களை அவதானித்துக்கொள்ள முடியும். ஆனால் குடும்ப உறவுகட்குள் இவ்வாறான உரிமை மீறல்கள் இடம் பெறும்போது வெளி நபர்கள் எவ்வளவு துாரம் அவ்வாறான சம்பவங்களில் தலையிட முடியும் என்பது கேள்வியாகவே உள்ளது. எமது சமூகத்தில் சர்வதேச சிறுவர் உரிமைகளை குடும்ப அலகினுள் பாது காப்பது சிரமமாகவே உள்ளது. ஆனால் மேலை நாடுகளில் குடும்பங்களுள் இடம் பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர் பான பல முறைப்பாடுகள் அங்கு கிடைப்பது வெளிப்படுதன்மையைப் பேணுவதாக உள்ளது.
பெரும்பாலும் வசதிகுறைந்த குடும் பங்களில் சிறுவர் பலவாறான துஸ்பிரயோ கங்கட்கு ஆளாகின்றனர். வறுமைகாரணமாக ஆண்கள் மதுபாவனைக்கு அடிமையாகி ( இதழ் -36/ 2011
!********

குடும்பங்களின் பொறுப்பை தட்டிக்கழிக் கின்றனர். இதனால் பெற்றோர் தாமே மன அழுத்தங்களுக்கு உள்ளாவதோடு சிறுவரும் பல துன்பங்களை சந்திக்கின்றனர். தமது குழந்தைப் பராயத்தில் கிடைக்க வேண்டிய அன்பு பராமரிப்பு என்பவற்றை இழக் கின்றனர். எமது குடித்தொகையில் 2001 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி 15 வயதிற்குட்பட்ட சிறுவர் 6.2 மில்லியனாகும். முன்னைய காலங்கள் போன்று சிறுவர் இன்று பல சிக்கலான நிலைமைகட்கு முகம்கொடுத்து தமக்கு அப்பாற்பட்ட பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். போரின் காரணமாக சிறுவர் பலர் பெற்றோரை இழந்தவர்களாக வும் உள்ளனர். எமது நாட்டில் பெற்றோரை இழந்த சிறுவர்கட்கான இல்லங்கள் பராமரிக் கப்படுகின்றன. ஆயினும் இவ்வில்லங்களில் கூட பலவாறான துஸ்பிரயோகங்கள் இடம் பெறுவது அம்பலமாகியுள்ளன. பல பெண் பிள்ளைகள் பாலியல் நடவடிக்கைகட்காக கடத்தப்படுகின்றனர். அவற்றை கட்டுபடுத்து வதற்கான சரியான பொறிமுறை இன்று காணப்படவில்லை. சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளில் கூடிய கவனமும் விரைவான கண்காணிப்பு நடவடிக்கை களும் அறிமுகப்படுத்தல் அவசியமாகும்.
- இன்று சிறுவர் மத்தியில் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் ஆன்மீக அறிவு ஆர்வம் என்பன மங்கிச் செல்கின்ற நிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலமை களில் இலங்கையில் இளைஞர்கள், வன்முறை யின் போக்குகட்குள் தள்ளப்பட்டதுடன் அதன் பாரதூரமான விளைவுகளையும் எதிர்நோக்க வேண்டியநிலை ஏற்பட்டது. ஆகவே எமது சிறுவர் தாமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்க் கக்கூடிய சிந்தனைகளை அவர்கள் மத்தியில் வளர்த்தல் வேண்டும். அவர்கட்கு பாதுகாப் பான இடமாக தாம் வாழும் இடம் அமைதல் வேண்டும் சிறுவர் எப்போதும் அன்பையும் சிறந்த பராமரிப்பையுமே எதிர்பார்க்கின்றனர். இதனைக் கொடுப்பதற்கு செலவு ஏதும் இல்லை. தாராளமாக இதனை நாம் கொடுக்கலாமே!
05
நங்கை

Page 10
இலங்கையில் சிறு6
சிறுவர் பாதுகாப்பு "18வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாக கணிக்கப்படுவர்" என ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் 1989ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுவர்களின் வயதடிப்படையில் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்கள் என தொழிற்திணைக்களம் வரை யறுத்துள்ளது. மேலும் சட்டவல்லுனர்கள் 16 வயதுக்குட்பட்டள்கள் சிறுவர்கள் என வரையறுத்துள்ளனர். இதனடிப்படையில் சிறுவர்களின் உடல், உள்நிலையைக் கருத் தில் கொண்டு ஜ.நா 18 வயதுக்குட்பட்ட வர்கள் அனைவரும் சிறுவர்கள் என வரை யறுத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுப் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களின் குணவியல்புகளை நோக்கின், * இவர்கள் வெள்ளை மனம் கொண்டவர்
தி.
கள்
* துடுக்குத்தனம் மிக்கவர்கள் * கள்ளம் கபடமற்றவர்கள் * விளையாட ஆசைப்படுபவர்கள் * அன்பை எதிர்ப்பார்ப்பவர்கள் * பயம் தெரியாதவர்கள் * வன்முறையை எதிர்ப்பவர்கள் * பெறுமதி சார்பில்லாது விருப்படுபவர்கள் * இனிப்புச் சுவையை அதிகம் விரும்பு
பவர்கள் ) * பாகுபாடு பற்றிச் சிந்திக்கத் தெரியா
தவர்கள்
எனப் பகுத்துப் பார்க்கலாம்.
1923ம் ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதியில் சிறுவர்களுக்கென்று தனிப்பட்ட சலுகைகளோ இவர்களை மென்மையான வர்களாகப் பார்க்கவேண்டும் என்ற
| இதழ் - 36/ 2011
06

வர் உரிமைகளும், நடைமுறைகளும்
எண்ணமோ, இவ் வயதுடையோருக்கு சில விசேட சலுகைகள் செய்யவேண்டும் என்ற நோக்கமோ இருந்ததில்லை. அக்காலத்தில் சிறுவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கும், துன்பங்களுக்கும், துஸ்பிரயோகங்களுக்கும் உட்பட்டு உடல், உள, பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை நாளாந்தம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் 1923ம் ஆண்டில் சுவிற்சிலாந்து நாட்டின் எக்லான்ரன் ஜெப் எனும் பெண்மணி முதல் முறையாக இல்வாறான சிறுவர்களைப் பாதுகக்க வேண்டும் என்ற நோக்கில் “சிறுவர் உரிமைகள் பிரகடனத்தை” வரைந்தார். இதன் பின்னர் தான் சிறுவர்களுக்கென ஒரு தினம் வேண்டும் என்ற சிந்தனை கராணமாக ஒக்டோபர் முதலாம் திகதி “சர்வதேச சிறுவர்தினம்” பிரகடனப்படுத்தப்பட்டது.
இவ் சிறுவர் உரிமை பிரகடனத்தை 1991ம் ஆண்டு இலங்கையும் ஏற்றுக்கொண்டு சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களது உரிமைகளை மேம்படுத்துவதற் காகவும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறாக உருவாக்கப்பட்ட சிறுவர் உரிமைப் பிரகடனத்தில் மொத்தமாக 54 . உறுப்புரைகள் உள்ளன. இவற்றில் முதல் 41 உறுப்புரைகளும் சிறுவர்களுக்கு என்ன? எப்படி? சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி விளக்குகின்றது. ஏனையவை இவ் உரிமைகளை நடைமுறைப் படுத்துவது சம்பந்தமாகவும், அறிக்கை யிடுவது தொடர்பாகவும் விளக்குகின்றது.
இவற்றில் முக்கிய உரிமைகளாக குறிப்பிடப்பட்டவை 1. சிறுவர்கள் எனப்படுவோர் 18 வயதுக்கு
குறைந்தவர்.
நங்கை

Page 11
2. இவர்களை சாதி, குலம், பால், ஏழை, பணக்காரர் போன்ற எந்தவொரு பார பட்சமும் காட்டப்பட வேண்டாதவர்கள் இவ்வாறான பாரபட்சத்திலிருந்து சிறுவர் கள் பாதுகாக்கப்பட வேண்டும். 3. சிறுவர்களின் உயரியநலனைக் கருத்தில் கொண்டே அவர்கள் தொடர்பான தீர்மானங் களை எடுத்தல் வேண்டும். 4. சிறுவர்களின் உரிமைகளை செயல்படுத்து
வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 5. சிறுவர்கள் தமக்கென பெயர் ஒன்றைத்
தாங்கவும், இனம் ஒன்றைச் சாந்திருக் கவும், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெறு
வதற்கும் உரிமையுடையவர். 6. பெற்றேரின் பராமரிப்பை விட்டுப் பிள்ளை தூரமாகப் பிரிந்து இருக்ககூடாது. பெற்றோர் இருவரும் பிரிந்திருப்பின் அவ்விருவரையும் தனித்தனியாக சந்தித்து உறவைப் பேணுவதற்கு பிள்ளைக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். 7. சிறுவர்கள் தொடர்பான தீர்மானங்களை
மேற்கொள்ளும் போது அவர்களின் கருத் துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் தமக்குத் தேவையான தகவல் களைத் திரட்டிக் கொள்ளவும், அக் கருத்துக்களை வெளியிடவும் அவ களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் 9. சிறுவர்கள் பெற்றோரின் வழிகாட்டலில்
கீழ் தான் விரும்பியதைச் சிந்திப்பதற்கும் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்று
வதற்கும் உரிமையுடையவர்கள். 10. ஒவ்வொரு சிறுவர்களுக்கும் தனது தனி
துவத்தைப் பேணுவதற்கு உரிமை யுடையவர்கள். 11. சிறுவர்களின் மேம்பாடு, வளர்ச்
தொடர்பாக தாய், தந்தை, ஆகிய இருவரும் பொதுக்கடப்பாடுடன் நடத்த வேண்டும் |இதழ் - 36/ 2011

12. பாதுகாவலர்கள், பெற்றோர்களால் சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்களிலிருந்து விலகியிருக்க உரிமையுண்டு.. மேலும் பெற்றோர் பாதுகாவலர் இல்லாத சிறுவர்களைப் பொருத்தமான இடத்தில் வைத்துப் பராமரிக்க அரசாங்கத்திற்கு பொறுப் புண்டு. 13. சிறுவர்கள் உடலியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ, விசேட தேவைக் குரியவர்களாக இருப்பின் ஏனைய சிறுவர்களுக்கு உரிய சகல சலுகைகளும் சிறுவர்களுக்கும் உண்டு. 14. எந்தவித பாரபட்சமும் காட்டாது சிறுவர் களுக்கு கட்டாய முதனிலைக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும். இரண்டாம் நிலைக்கல்வி மற்றும் எதிர் காலக் கல்விக்கான வழி வகைகளும்
ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 15. சிறுவர்கள் விளையாட்டுக்கள், மகிழ்ச்சி கள் கேளிக்கைகள், கலாசார நடவடிக் கைகள் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு உரிமையுடையவர்கள்.) 16. சிறுவர் உழைப்பாளிகளாகாதிருக்கவும், சிறுவர்கள் கடத்திச் செல்வதற்கோ, விற்று விடுவதிலிருந்தும் பாதுகாக்க உரிமை யுடையவர்கள் 17. சிறுவர்களை எந்தவொரு பாலியல் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபடுத்த முடியாது. இவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற உரித்துடையவர்கள்.
இவ்வாறான உரிமைகளை முக்கியப் படுத்தி சிறுவர் உரிமைகள் பிரகடனம் சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உரிமைகளை எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையில் பல நடைமுறைகள், கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
07
நங்கை

Page 12
1. இதற்கெனவே சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சு என
ஓர் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. 2. நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு
சேவைகள் திணைக்களம் தேசிய ரீதியிலும், மாகான ரீதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. 3. இவ் திணைக்களத்தினால் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் விசேட உத்தியோகத்தர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். * சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர். * சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தி
யோகத்தர். * முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி
உத்தியோகத்தர். * நன்னடத்தை நிகழ்ச்சித்திட்ட உதவியாளர். * தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
உத்தியோகத்தர். ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர், பெண்களுக்கென விசேட பிரிவு (Women & Child Desk) உருவாக்கப் பட்டுள்ளது.
இவ்வாறான அரச அமைப்புக்களுடன் சர்வதேச, உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங் களும் சிறுவர்களின் முன்னேற்றத்திற்காக இயங்கி வருகின்றன. அத்துடன் சிறுவர் களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு மட்டங் களிலும் பல கட்டமைப்புக்களை உருவாக்கி அவற்றினூடாக சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இவைகள் சிறுவர் உரிமைகளைப் | vறிப்பதாகும்.
பிள்ளை நம்பிக்கை உங்க
இழக்கச் செய்தல்
இதழ் - 36/ 2011

* கிராம மட்டத்தில் கிராம அலுவலர்களை தலைவராக கொண்ட கிராம மட்ட சிறுவர் பாதுகாப்பு குழு * பிரதேச மட்டத்தில் பிரதேச செயலரை தலைவராகக் கொண்ட பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு * மாவட்ட மட்டத்தில் அரச அதிபரை தலைவராகக் கொண்ட மாவட்ட சிறுவர்
அபிவிருத்தி குழு * மாகாண மட்டத்தில் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணை யாளரை தலைவராகக் கொண்ட மாகாண சிறுவர் அபிவிருத்தி குழு * தேசிய மட்டத்தில் சிறுவர்களை பாதுகாப் பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு
அதிகார சபை * இவற்றை விட கிராமிய மட்டத்தில் சிறுவர்களது பங்களிப்பை அதிகரிக்க சிறுவர்கழகங்கள் அமைக்கப்பட்டு அவர் களது பல்துறை ஆற்றல்கள் வெளிப் படுத்தப்படுகின்றது. * இவ்வாறு உருவாக்கப்பட்ட சிறுவர்
கழகங்கள் விரிவுபடுத்தப்பட்டு பிரதேச சிறுவர்சபை, மாவட்ட சிறுவர்சபை, தேசிய சிறுவர் சபை என்ற நிலைகளில் செயற்படுகின்றது.
இவ்வாறான கட்டமைப்புக்களுடன் பாதிக்கப்பட்ட, உதவிதேவைப்படும் சிறுவர் களுக்காக அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்களை உருவாக்கி மேற்குறிப்பிட்ட
ள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள பிள்ளைகளை வதைத்தல்.
அவசியமின்றிக் கோபமூட்டுதல்.
நங்கை

Page 13
பாலியல் நடவடிக்கைக்குத்
தூண்டுதல்
கெட்ட எண்ணத்துடன் பிள்ளைகளை வருடுதல்.'
III
உத்தியோகத்தர் மூலம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. * பெற்றோரை இழந்து உறவினர் களுடன் வாழும் சிறுவர்களின் கல்வி, பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக பொருத்தமானவர் களை இப்பிள்ளைகளுக்கு நியமித்து பொருத்தமான நபருக்கான கொடுப்பன வாக மாதாந்தம் 500/= நீதிமன்ற அனுமதி மூலம் வழங்கப் பட்டுவருகின்றது. வறுமைக் கோட்டினுள் வாழும் குடும் பங்களில் பிறக்கும் இரட்டைப் பிள்ளை களின் உணவுத் தேவைகளுக்காக "இரட்டைப் பிள்ளைகளின் கொடுப்பன வாக” மொத்தமாக 7500/= அல்லது 5000/= வழங்கப்பட்டு வருகின்றது. மருத்துவ உதவி தேவைப்படும் (இருதய நோய், சிறுநீரக நோய்) வறிய மாணவர்களுக்கு "மருத்துவ உதவிக் கொடுப்பனவாக” 10000/= அல்லது 5000/= உணவு, மருத்துவ உதவிகளுக் காக வழங்கப்பட்டு வருகின்றது. தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத சிறுவர்களுக்கான அடிப்படைத்தேவைகளை இனங்கண்டு முக்கியமாக நிறைவேற்ற வேண்டிய தேவைகளை அரசசார்பற்ற நிறுவனங் களின் உதவியுடன் திணைக்களத்
னவ
|இதழ் - 36/ 2011

இவற்றிலிருந்து உங்கள்
மைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
குற்றம் செய்ய அல்லது விபத்தில் சிக்க வழிசெய்தல்.
தலைவரூடாக நிறைவேற்றி வருகின்றது. * இவற்றைத் தவிர உடல், உள, பாலியல் ரீதியில் துஸ்பிரயோகத்துள்ளாகும் சிறுவர்களுக்கு சட்ட ரீதியிலான உதவியை நன்னடத்தை உத்தியோகத்தர் மூலம் பெற்றுக்கொடுத்தும், பாதிப்பை ஏற்படுத்திய நபருக்கான தண்டனையை பெற்றுக் கொடுத்தும் சிறுவர்களை பாதுகாத்து வருகின்றது. இவ்வாறு சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சிறுவர்களின் உயரிய நலன்பேணப்பட்டு சிறுவர்கள் பாதுகாப்புடனும், உரிய பராமரிப்புடனும் வாழவேண்டும் என்றும் அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துவந்த போதிலும் தற்கால சூழ்நிலையில் எமது சிறுவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதால் அவர்களின் உயரிய நலன் கேள்விக் குரியதாகும் நிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
திரு. ச.ம.யூ. பிறிட்ஜெந், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நல்லூர்.
* * * * * *
09
நங்கை)

Page 14
சிறுவர் வாழ்வு ஒளிபெற அவ
சிறுவர்களின் வாழ்வினை ஒளியேற்று வதற்கு அவர்களின் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியான ஆரோக்கியத் தினை உருவாக்கிக் கொடுத்தல் என்பது அனைவரதும் கடமையாகும். இதனை உறுதிப்படுத்தும் முகமாக "ஒவ்வொரு சிறுவரும் அடிப்படைத் தேவைகளைப் பெற உரிமை உள்ளவன் எனவும் நாம் அவற்றை ஒவ்வொரு பிள்ளைக்கும் வழங்குவதில் முனைப்பாக இருக்க வேண்டும்” எனவும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சிறுவர் உரிமைச் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்துமுகமாக உலகலாவிய ரீதியில் பல்வேறுபட்ட மட்டங்களிலும் பல்வேறுபட்ட செயற்திட்டங்களும் முன் னெடுக்கப்படுகின்றது.
பிள்ளைகள் தமது வாழ்க்கைக்கும் இருப்புக்குமாகப் பல அத்தியாவசியத் தேவைகளைக் கொண்டிருக்கின்றனர்.
2 அத்தகைய அடிப்படைத் தேவைகளாவன உணவு, உடை, உறையுள் அன்பு, பாதுகாப்பு என்பன உரியவகையில் கிடைக்காவிடில் பிள்ளையின் சாதாரண வளர்ச்சி பாதிப்புறும். எனினும் பொதுவாக பொரும்பாலானவர்கள் சிறுவர்களுக்கு உணவு, உடை, உறையுள் என்பன மட்டும் போதுமானது எனக்கருது கின்றார்கள். எனினும் யதார்த்த நிலையில் நோக்குவோமாயின் இதற்கு அப்பால் அன்பு, பாதுகாப்பு என்பனவும் சிறுவர்களைப் பொறுத்தவரை மிகவும் அத்தியாவசியமான தேவைகளாகும். இது மட்டுமல்லாது குடும்ப சமூகப் பொருளாதார சூழலும் ஏற்புடையதாக அமைய வேண்டியது இன்றியமையாது ஆகும். இவையனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளன. ஓன்றில் ஏற்படும் தாக்கமானது மற்றவற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும். உதாரணமாக சட்டரீதியற்ற மதுஉற்பத்தி அதாவது கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் ஓர் கிராமத்தில் தந்தை ஓருவர் மதுவுக்கு அடிமையாதலுக்கான
இதழ் - 36/ 2011

மனவரும் ஒன்றிணைவோம்
சாத்தியக்கூறு அதிகமாகும். இதனால் மதுவுக்கு அடிமையான தந்தை தினமும் வீட்டு வன்முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். இதனால் அக்குடும்பத் தில் உள்ள சிறுவகளுக்கு உரியவகையில் உணவு, பாதுகாப்பு, மற்றும் கற்றலுக்கான சூழல் கிடைக்கமாட்டாது. இதனால் சிறுவர் களின் வாழ்வு இருளடைகின்றது. இத்தகைய சூழ்நிலையானது தனிய சிறுவர் சார்ந்த பிரச்சினையாகக் கருதமுடியாது. அக் குடும்பம், சமூகம், எதிர்கால சந்ததி யினைப் பாதிக்கும் ஓர் பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
- மற்றும் உணவு, இருப்பிடம், அன்பு ஆதரவு, உணர்வைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய உறவுகளின் கவனிப்பு, கற்றலுக்கான வாய்ப்புக்கள் என்பன பூர்த்தியாகின்றபோது பிள்ளை தனது நன்நிலையை உணர்வதுடன் உடல் உள ரீதியான விருத்தியையும் சரியாக அடைய முடியும்.
பொதுவாக சிறுவர் வாழ்வு ஒளி பெறவேண்டுமாயின் பின்வரும் தேவைகள் திறைவேற்றப்படவேண்டும். 4 அன்பும் ஆதரவும் தமக்கு கிடைப்பதாக
உணர்தல் பலம்வாய்ந்த ஒற்றுமையான குடும்பத் திலிருந்து கிடைக்கும் பாதுகாப்பு நாளுக்கு நாள் மாறாத நிலையான சுழலில் வாழுதல் (போர் இடம்பெயர்வு, வறுமை இதில் தாக்கத்தை செலுத்தும்) - உடலியல் தேவைகளான உணவு நீர் சுத்தமான சுற்றாடல் மருத்துவக் கவனிப்பு ஒரு சாதாரண வாழ்வில் கிடைக்கக் கூடிய வாழ்வியல் அனுபங்கள் பெறப் படல் சிறந்த முன்மாதிரிகள், புதிய திறன் களைக் கற்பதற்கு அவர்கள் ஊக்கு விக்கப்பட வேண்டும்
நங்கை

Page 15
2000
நீங்களும் சிறுவர்களுக்கான உரிமைகளை வழங்க மறுப்பவரா?
பிள்ளை எதிர்பார்க்கும் அன்ன
ஆதரவையும் வழங்கானை உணர்வுத் தாக்கங்களிலிருந்து பிள்ளை களும் பெற்றோரும் தாமாகவே விடுபடு வதற்குரிய உதவி வழங்கப்படல் வேண்டும்.
இத்தகைய தேவைகள் நிறைவேற்றப் படும் சந்தர்பத்தில் சிறுவர்களின் உணர்ச்சி, அறிவாற்றல், மனப்பாங்கு, நடத்தை என்பன ஆரோக்கியமானதாக இருக்கும். இது பிள்ளைகளிடையே மறைந்திருக்கும் ஆற்றல் களை வெளிக்கொண்டு வருவதற்கும் வித் திடும். ஒவ்வொரு பிள்ளைகளும் ஏதாவது திறன்களைக் கொண்டுள்ளனர். எனவே அதனை அடையாளம் கண்டு வழிகாட்டல் அவசியமானதாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு முக்கியமான தாகும்.
சிறுவர்கள் சிறந்த பிரஜைகளாக எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு பின் வரும் காரணிகள் அவசியமானதாகும். 4 உளசமூக ஆதரவுவழங்கல் * குழுச் செயற்பாடுகளை ஊக்குவித்தல்
சமூக நிறுவனங்களின் செயற்பாட்டில் இணைதல் சமூக கலாசார நிகழ்வுகளில் பங்குபற்ற
வைத்தல் * ஆளுமை விருதி செயற்பாடுகளை
ஊக்குவித்தல் * சிறந்த பயனுள்ளபொழுது போக்கு
அம்சங்களை ஊக்குவித்தல் 4 வாண்மை விருத்தி செயற்பாடகளைகளை
ஊக்குவித்தல்
|இதழ் - 36/ 2011

தாய்வு, புரிந்தமான தீர்வுகாலம்களுக்கு
பயும் பிள்ளைகளின் கருத்துக்கு
பிள்ளைகளின் உடை, உணவு,
சுத்தம் ஆகியவற்றில் D'
மதிப்பளியாமை
அக்கறை காட்டாமை. 4 வாழ்க்கைத்திறன் கல்வி ஏற்படுத்தல் - தீர்மானம் எடுத்தல், பிரச்சினைகளுக்கு எவ்வாறு சாதகமான தீர்வுகாணுதல், பகுத் தாய்வு, புரிந்துணர்வு, தனிநபர்களுக்கிடை
யேயான சிறந்த தொடர்பாடல் * சுயவிழிப்புணர்வை ஏற்படுத்தல் * சுய முயற்சிகளை ஊக்குவித்தல் * தொழில்னுட்ப கல்வியை வழங்கல் * தொடர்பாடல் திறனை விருத்தி செய்தல் + பிற இன மத மக்களுடனான உறவுப் பாலம் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தல்
யுத்தகால் சூழலைப் பொறுத்தவரை யில் குடும்ப மற்றும் சமூக கட்டுமான சிதைவு கள், நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் இழப்பு அல்லது காயமடைதல், சொத்து இழப்பு, கொடூரமான காட்சிகளைக் காணுதல், போரில் ஈடுபடுதல் என்பன சிறுவர்களை பெரிதும் பாதிக்கும் ஓர் விடயமாகும்.
இதுமட்டுமல்லாது வறுமை, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் (தந்தை இறப்பு அல்லது பிரிவு) மற்றும் வீட்டு வன்முறைகள் காரணமாக சிறுவர்கள் தமது கல்வியை தொடர முடியாத நிலையுடன் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள் அல்லது கல்வியைத் தொடர முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். அதுமட்டுமல்லாது சில சிறுவர்கள் துஸ்பிரயோகம் மற்றும் சுரண்ட லுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இதனால் ஒளிமயமான வாழ்வை அடைய முடியாமல் மொட்டுகளாகவே வாடவேண்டிய துர்ப்பாக் கிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்
11
நங்கை

Page 16
இத்தயை சூழலில் உள்ள சிறுவர் களின் உரிமைகளையும் தேவைகளையும் பாதுகாப்பாகவும் அனுபவிக்கவும் அவர் களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உதய மாக்கி கொடுக்கவும் பல திட்டங்கள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தகைய திட்டங்ளாக சிறுவர்களின் போசாக்கின் மையை ஒழிக்கவும் சிறுவர்களின் கல்வி கற்றலுக்கான வதிகளை அளித்தல், சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் ஆகிய துன்புறுத்துதல் களை தடுத்து நிறுத்தவும், பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் தமது குடும்ப சூழலில் வாழுதலை ஊக்குவித்தல் என்பவனவற்றை குறிப்பிட்டுக் கூறலாம்.
சிறுவர்களுக்கான ஒளிமயமான வாழ்வை உருவாக்குவதற்கு அவர்களை புரிந்து . கொண்டு ஊக்குவித்தல் மட்டுமன்றி அவர் களது நலனுக்காக தமது பொறுப்புக்களை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுகின்ற மக்களைக் கொண்டவொரு சமுதாயத்தைக் 6 கட்டி எழுப்புதல் அவசியமானதாகும். அந் நோக்கத்தற்காக கிராமமட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் இதற்காக கிராம மட்ட சிறுவர்
v - - - EL'
ܒܖ. ܘ ܣ
நீங்களும் இப்படியா
299 999 29
பிள்ளையின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாமை
பிள்ளையை வீட்டு வேலைக்கு அமர்த்துதல்
|இதழ் - 36/ 2011

கழகங்களை உயிர்ப்பூட்டல் அவசியமாகும். தொடர்ந்தும் மிகவும் செயற்திறனுடன் | செயற்படும்போது நிச்சயமாக ஒவ்வொரு ரொமத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்வை மளியூட்ட முடியும். அத்துடன் சிறுவர் வாழ்வை ஒளியூட்டவேண்டிய பொறுப்பு ! துறைசார் உத்தியோத்தர்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் காணப்படுகின்றது. உண்மையில் சிறுவர் களின் வாழ்வை ஒளியூட்ட வேண்டுமானால் . இத்தகைய உத்தியோத்தருடன் பெற்றோர் ஆசிரியர் அதிபர் மத, சமூகத்தலைவர்கள் அரசு, அரச்சாற்பற்றநிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புகள், உறவினர், நண்பர்கள் எனப் பலரதும் கடமையாகும். இவ்வாறு பலதரப் பினரும் ஒன்றிணைந்து செயற்படும் போது ச்ெசயமாக சிறுவர்களின் வாழ்வை ஒளியூட்ட முடியும். எதிர்காலத்தில் இச்சமூகத்தின் சிற்பிகள் சிறுவர்கள் என்பதால் ஒளிமயமான சிறுவர் சமுதாயமொன்றை உருவாக்கு வதற்கு ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
உதயனி நவரத்தினம் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்.
பிள்ளையின் நோய்நொடிகள் பற்றி
அக்கறை கொள்ளாமை
பிள்ளையைப் பாடசாலைக்கு
அனுப்பாமை
நங்கை

Page 17
இளவயதுக் கர்ப்பத்தி
அதனைத் இளவயதுக் கர்ப்பம் என்று குறிப் பிடப்படும் 19 வயதிற்குட்பட்டவர்களின் கர்ப்பங்கள் யாழ் மாவட்டத்தில் பல் வேறுபட்ட இடங்களில் குறிப்பாக காரை நகர், மானிப்பாய், தெல்லிப்பழை, கோப்பாய் போன்ற சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் மிகவும் அதிகள வில் அவதானிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இதனால் ஏற்படும் கவலைக்கிடமான 19 வயதிற்குட்பட்ட தாயிலும், பிறக்கும் குழந்தையிலும் ஏற்படும் பாதிப்புகளினால் தொடர்ந்து அக்குடும்பங்கள் சீரழிவுக்குட்படுகின்றன.
19வயதிற்குட்பட்ட தாயின் கர்ப்பப்பை பிறப்புவழி, அவரது மனோ நிலை என்பவை ஒரு புதிய குழந்தை யைப் பெற்று அதனைப் பேணி வளர்க் கும் நிலையிலிருக்காது மட்டுமல்லாது தாயில் கர்ப்பகாலத்தின்போது ஏற்படும் உயர்குருதியமுக்கம் குருதிச் சோகை (Anaemia), திடீர்குருதிப்பெருக்கு, கர்ப்பத் தில் குழந்தை இறத்தல், பிறப்பு நேரத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் (Prolonged or obstructed labour), தாய் மரணம் என்பன மிகவும் அதிகமாக இவ்விளம்தாயைப் பாதிக்கும் என விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக் காட்டு கின்றன.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தை யானது, பிறப்பு நிறைகுறைவு (Law birth weight), கர்ப்பகால வளர்ச்சிக் குறைவு (Intra uterine growth retardation), மூளைப்பாதிப்புற்ற அல்லது அங்கவீனமுள்ள குழந்நை (Eg:
இதழ் - 36/ 2011

கதின் தாக்கங்களும் நவிர்த்தலும்
Cerebral palcy இருதயக் குறைபாடு), தாய்ப்பாலூட்டல் சிக்கல்கள் போன்ற வற்றினாலும் மேலும் குழந்தை வதைக் கும் உட்படுத்தப்படலாம் (Childabuse)
இளவயதில் பாடசாலையில் இருந்து விலகி வேறு வேலையின்றி இருக்கும் ஆண்கள், பெண்கள் அதிக சனநெருக்கமுள்ள இடங்களில் உதாரண மாக இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசிப்போர், அரசியல் அல்லது பொருளா தார இலாபங்களைக் கருத்திற்கொண்டு பெற்றோரின் அறிவுக்குறைவினால் வலுக்கட்டாயமாக செய்து வைக்கப்படும். திருமணங்கள், போர்ச்சூழலில் பாது காப்பற்ற நேரங்களிலும் இடங்களிலும் பயமின்றி பெண்கள் நடமாடுதல், ஆண் துணையற்ற வீடுகளிலிருக்கும் இளம் பெண்களைக் குறிவைத்து அவர்களுக்கு பொருளாதார, சரீர உதவி செய்வது போல் நுழைந்து வல்லுறவுக்குட்படுத்தல் போன்ற பல காரணங்களால் ஏற்படு கின்றன. நம் நாட்டின் பல இடங் களிலுள்ள பல்கலைக்கழகங்களும்
இதற்கு விதிவிலக்கல்ல.
இதனால் பாதிக்கபப்பட்ட குடும் பங்களில் பெண்கள் கர்ப்பகால கவனிப் பின்றி சமுதாயத்திற்கு பயந்து மறைத்து வைக்கப்படுவதால் தாயின் உடல் நிலை யும் வளரும் கர்ப்பமும் பாதிக்கப்படுவது மல்லாமல் சட்ட விரோத கருக்கலைப்புக் களால் தாய் மரணமடையும் சூழ்நிலை யும், பிறந்த தேவையற்ற குழந்தையை வயல் வெளியிலும் குப்பையிலும், விட்டுச் செல்லுதல் அல்லது கிணற்றில் வீசிச் செல்லுதல் அதிகமாகி வருகின்ற
| நங்கை

Page 18
-.
1:11:11:11111111)
மையை தற்போது யாழ் மாவட்ட மாதாந்த தரவுகள் காட்டுகின்றன.
இளவயதுக் கர் ப் பத் தின் பிரச்சினைகளை தரம் ஒன்பதிற்கு மேற் பட்ட மாணவர் யாவரும் அறிந்து கொள்ள வலயக்கல்வி அதிகாரிகள் சுகாதார ஊழியர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். * இடம்பெயர்ந்தோர் முகாம்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இதனைப் பற்றிய ஓர் விழிப்புணர்வு ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பினும் தொடர் கண் காணிப்புச் செயற்பாடுகளும் அவசியம்
* ஏற்கனவே இளவயதில் திருமண மானதோர் பெண்ணிற்கு 20 வயது தொடங்கும் வரை குடும்பத் திட்டமிடலை. ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். * பாதுகாப்பற்ற இடங்களில் தேவையற்று பெண்கள் தனியே உலாவு வது தடுக்கப்பட வேண்டும் * யாராவது வல்லுறவுக்குட்படுத் தப்பட்டிருப்பின் அவர்கள் மிக விரைவாக 48 - 72 மணித்தியாலத்திற்குள் தமது அல்லது வேறு சுகாதாரப்பிரிவு குடும்ப சுகாதார மாது (Public Health Midwife), பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector), பொது சுகாதார வைத்திய அதிகாரி (Medical Officer of Health) அல்லது பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் தாய் சேய் நலப்பிரிவை (RD HS office, MOMCH unit) உடனடியாக நாடுங்கள். இதனால் ஏற்படும் கர்ப்பத்தை தடுக்க தேவையான விசேட கர்ப்பத்தடை மாத்திரை மேற் குறிப்பிட்டவர்களிடம் இலவசமாய்ப் பெற்றுக் கொள்ளலாம். இவர்கள்
|இதழ் - 36/ 2011

உங்கள் தனிநபர் இரகசியங்களை பேணும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை தவறான பாலியல் நடத்தைகளுக்குத் துணையாக அதனை அடிக்கடி பாவித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளல் நன்று. - பின்வரும் தொலைபேசி எண் களில் அவசர அழைப்புக்களை ஏற் படுத்தி உங்களுக்கு தேவையான உதவி களையும், மற்றும் மருத்துவ ஆலோசனை களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
காப்புரிழகி'
தொலைபேசி எண்கள் :
* RDHS Office (MOMCH Unit)
- 021 222 3662 MOH Jaffna - 021 222 2645
MOH Kayts
- 060 221 3588 * MOH Point Pedro
- 021 2264482 * MOH Kopay
- 060 221 3615 * MOH Manipay |
- 060 2213614 * MOH Chavakachcheri
- 060 221 3621 * MOH Thellipalai
- 060 221 3620
தகவல்:- Dr. சி. திருமகள்
தாய்சேய் நலப்பிரிவு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை,
யாழ்ப்பாணம்.
நங்கை

Page 19
சிறுவர் வாழ்வை
குடும்பம் ஒரு அடிப்படையான மனித முறைமையாகும். ஒரு குடும்பத் தின் தேவைகள், சட்ட ஒழுங்குகளின் படி தான் குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரோடு, ஒருவர் தொடர்புகொள் கின்றனர். குடும்பத்தின் சட்ட ஒழுங்கு கள் நடைமுறையின்படி, ஆரம்பத்தில் பெற்றோர் தமது கோபம், இயலாமை, பயம் என்பவற்றைக் கையாளவும் பிள்ளைகளை நெறிப்படுத்தவும் உதவு கின்றன. இன்று சிறுவர் சட்டத்தில் பலவற்றை ஆராயும்போது அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. குடும்ப அமைப்பு முறையிலே பரம்பரையிட மிருந்து தாங்கள் கற்றுக்கொண்டவை களை இனங்காண வைத்தல், தமது பெற்றோரின் யதார்த்த நிலைப்பாட்டை அறிய வைத்தல், தமது தனித்துவமான ஆளுமையைக் கண்டுபிடிக்க உதவுதல் போன்ற மூன்று அடைதல்கள் காணப் படுகின்றன.
இதன் அடிப்படையில் குடும்பத் திலுள்ளவர்களுக்கிடையில் இருக்கும் உறவே குடும்பச் சூழலாகின்றது பெற்றோர்களை மாதிரிகளாகக் கொண்டே ஒரு ஆண் பிள்ளை அல்லது பெண்பிள்ளை மற்றவர்களுடனும் சமூகத் துடனும் தொடர்பு கொள்ள உதவு கின்றது. இவ்வாறான மாதிரிகளுடாக வரும் அனுபவம் ஒரு குழந்தையை மகிழ்வாகவும், கோபப்பட்டும், அன்பு காட்டியும், பயமுறுத்தியும், கடுமை யாகவும், இசைந்து கொடுத்தும், ஈடு கொண்டும், காப்பாற்றியும், எதிர்த்தும்,
|இதழ் - 36/ 2011

வ வளமாக்குவோம்
பராமரித்தும், சவால்விடுத்தும், மதித்தும் வாழ வைக்கின்றது. குடும்பத்தின் மதிப் பீடுகள் முன் மாதிரிகள் குடும்பப் பின்னணியில் பாரிய தாக்கத்தை ஏற் படுத்துகின்றன.
மேலும் ஒரு குடும்பத்தில் பெற்றோர், பிள்ளைகள், கூட்டுக் குடும்பத்தின் அங்கத்தவர்களும் அடங்கு வர். இவ்வமைப்பின் மூலம் ஒரு குழந்தை மற்றவர்களுடன் எவ்வகையில் பேணுவது, மற்றவர்களுடன் தன்னை எவ்வாறு பிணைத்துக்கொள்வது, தங்களுடன் வேறுபட்டவர்கள் யார், தாய் தந்தை மற்றும் உறவினர்கள் தம்முடன் சேர்ந்துள்ளார்கள் அல்லது வெறுக்கிறார்கள் என்பவற்றைக் குழந்தை கற்றுக்கொள்கிறது.
பிள்ளைகள் பெற்றோர்களின் அன்பிலும், அக்கறையிலும், பாதுகாப் பிலும் இருத்தல் அவசியம். ஏனெனில் ஆரம்பத்திலிருந்து வளர்க்கும் முறையே அவர்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக் கின்றது. மேலும் சிறுவர் வாழ்க்கையை திசைதிருப்பும் செயலாக குடும்பக் கட்டமைப்பு சீர்குலைவதும் சில காரணங் களாகும். அவையாவன:- * யுத்த நிலைமைக்குட்பட்ட குடும்பங்
கள். " < குடும்ப அங்கத்தவர்களிடையே புரிந்
துணர்வு இல்லாமை. * வறுமை மிக்க குடும்ப சூழல்.
நங்கை

Page 20
குடும்ப அங்கத்தவர்களிடையே நம்பிக்கையீனங்கள். பெற்றோர் எவரேனும் காணாமற் போதல். குடும்பச் சண்டைகள். குடும்ப உறுப்பினர்களின் ஒழுக்கக் கேடுகள். குடும்பங்கள் பிரிந்திருத்தல் (பிள்ளை கள், பெற்றோர்) பெற்றோர் மறுமணம் புரிதல். தந்தை குடிபோதைக்கு அடிமை யாதல். பெற்றோர், பிள்ளைகள் அங்கவீன மடைதல். * பெற்றோர் விவாகரத்துப் பெறல். + பெற்றோர், பாதுகாவலர் இறப்புக்
கள்
போன்ற காரணங்களால் குடும்பங் கள் பல இன்று வர்ணிக்க முடியா தளவிற்குச் சீரழிந்துபோயுள்ளன. இவ் வாறான நிலையினை போர்க்காலச் சூழல் மேலும் பாரதூரமான விளைவு களுக்கு இட்டுச் செல்கின்றன. இன்றைய
உ இ ) 6 அ ஆ ( C ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
1948ஆம் ஆண்டு ஐ.நா பொதுச்சா மனித உரிமைகள் பிரகடனம் வளர்ந்த
பிரயோசனமானதென குறிப்பாக
1990 - செப்டெம்பர் 2ம் திகதி சமவ
ஏற்றுக்கொள்ளப்பட்டு ந
சிறுவர் உரிமைகள் சமவாயம் 1989ம் ஆண்டு நவம்பர் 20ம்
|இதழ் - 36/ 2011

ழலில் பல குடும்பங்களுக்கு மத்தியில் ற்றவுணர்வு, இழப்பின் பாதிப்புக்கள், சரக்தி, தற்கொலை எண்ணம் பான்றவை அதிகரித்துக் காணப்படு "ன்றன. யுத்தத்தின்போது உறவினர் ள் காணாமற்போதல், பிரிந்து போதல், எயப்பட்ட உறவுகளைக் கைவிட்டு வந்தமை, இறந்த உறவுகளை விட்டு பிட்டு வந்துள்ளமை, பிள்ளைகளைக் எப்பாற்றுவதற்காகத் தாய், தந்தை 2றந்து போயுள் ளமை போன்ற ல்வேறு காரணங்களால் குடும்ப அமைப்புக்கள் சிதைந்து காணப்படு ஊன்றன. வறுமையான குடும்பங்கள். மது குடும்ப அமைப்பைச் சரியான மறையில் தீர்மானிக்காத காரணத் பினால் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்குத் தகுந்த டும்பத் திட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வும் காணப்படுவதில்லை.
இந்நிலைமைகளினால் தமது ள்ளைகளைப் பணத்திற்காக விற்று டுவதும், சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்புவதன் மூலமும் தமது குடும்பச்
பையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவர்களுக்கும் சிறுவர்களுக்கும்
மேற்கோள் காட்டப்பட்டது.
Tயம் அனைத்து உலக சட்டமாக டைமுறைக்கு வந்தது.
ஐ.நா பொதுச்சபையினால் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நங்கை

Page 21
*11 1 5
சுமை குறைந்துவிடுவதாக சில பெற்றோர் எண்ணுவதன் அடிப்படை யில் "சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு” உள்ளாகும் நிலையேற்படுகின்றது. சில பெற்றோர் தமது பிள்ளைகளை அடிப்படை வசதியின்மையால் சிறுவர் இல்லங்களில் சேர்த்துவிடுகின்றனர். இதன் பின் இத்தகைய பெற்றோர் பிள்ளைகளைச் சென்று பார்ப்பதில்லை. அவர்களின் நற்பழக்கவழக்கங்கள், கல்வி, சுகாதாரம், சிறுவர் மனநிலை, பிள்ளை களின் விருப்பு வெறுப்புக்களையும் மதித்துச் செயற்படுவதில்லாமல் போவ தும் அக்கறையீனமும் தொடர்ந்து காணப் படுகின்றது.
இந்நிலைப்பாடு சிறுவர் இல்லங் களிலேயே அவர்கள் பாலியல் சுரண்டல், வன்முறைகளுக்கு ஆளாக நேரிடு கின்றது. இதனால் இவர்களை இந் நிலைக்கு ஆளாக்குபவர் களிற்கு இசைந்து போகவேண்டிய கட்டாய தேவை ஏற்படுகிறது. இல்லையேல் தனிமைப்படுத்தும் நிலையினையும், உள் நெருக்கீடுகளுக்கும் ஆளாக்கப் படுகின்றனர்.
ஆகவே பிள்ளைகள் ஒவ்வொரு வரும் தன்னையும் குடும்ப, நிலைமை யையும் உணர்ந்து, விளங்கி, விருப்பத் துடன் இல்லத்தில் சேர்ந்தால், அவர்கள் தமது இலக்கினை அடைய முடியும். சிறுவர்கள் பெற்றோரின் அன்பு,
( 1979ம் - ஆண்டு குழந்தை
( இதழ் - 36/ 2011

அரவணைப்பு, பாதுகாப்புடன் இருக்க வேண்டியதுடன் சமூக ஒற்றுமையிலும் ஈடுபடுதல் அவசியமாகும். ஏனெனில் "ஆளுமை விருத்திக்கு அடித்தளமாவது
குழந்தைப் பருவம்” ஆகும்.
இவற்றைவிட சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இல்லங்களிலுள்ள பிள்ளைகளை "மீளிணைத்தல்” எனும் செயற்திட்டத்தினூடாக பெற்றோர் களுடன் பிள்ளைகளை மீளிணைத்தும் வருகின்றன. இது சிறுவர்களின் பாது காப்புத் தன்மையை பலப்படுத்தும் ஒரு நன்முயற்சியாகும். இவ்வகையான சமூகத் தொண்டு நிறுவனங்கள் மேலும் பல சிறுவர்களின் வாழ்வை ஒளிபெறச் செய்வது நாளைய இளைய தலைமுறை களை மேம்படுத்தும் செயற்பணியாகும்.
இ. நகுலேஸ்வரி
நகளின் சர்வதேச ஆண்டு.
நங்கை

Page 22
இலங்கைச் சிறுவர்கள்
இலங்கையில் சிறுவர்களுக்கான கணிசமான அளவு சட்டப்பாதுகாப்பு 1993 இலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் சிறுவர் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைக்கு இலங்கை ஒப்புதல் அளித்து அங்கீகாரம்! வழங்கியதோடு சிறுவர் உரிமை இலங்கை யில் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்துள்ள தோடு அவ்வுடன்படிக்கையின் நிபந்தனை களின்படி அதில் காணப்படும் ஏற்பாடுகள் உள்ளூர்ச்சட்டத்துடன் ஒருங்கிணைக்கப் படுதல் அவசியமானதொன்றாகும், சிறுவர் உடல்நலம்
இலங்கையில் சேய் மரணம் அதிகரித்த நிலையில் காணப்படுவதுடன் அம் மரண வீதம் 1000 பிறப்புக்களுக்கு 19.3% என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ்வாழும் சிறுவர்கள் 45% உள்ளனர் என மதிப்பீடு ஒன்று தெரிவிக் கின்றது. ஊட்டச்சத்து குறைந்து காணப்படும் சிறுவர்களில் 100% வறுமையோடு முழுமை யாகப் பிணைந்துள்ளது. ஊட்டச்சத்து குறை பாடு காரணமாக வளர்ச்சி குறைபாட்டுக்கு இட்டுச் செல்லப்படுவதுடன் அவர்களின் அபிவிருத்தியையும் தடுத்துவிடக் கூடிய நிலை காணப்படுகின்றது. சர்வதேச ரீதியில் அம்மைப்பால் ஏற்றல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இளம்பிள்ளை வாதம், சின்னம்மை போன்ற நோய்களிலிருந்து சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கல்வி
இலங்கையில் சிறுவர்கள் இலவசக் கல்விக்குரிய வாய்ப்பைக் கொண்டுள்ளனர். கல்விக்காக அரசாங்கத்திடமிருந்து வருடாந் தம் சராசரியாக சுமார் 2780 ரூபா பெறுமதி யான உதவியை ஒவ்வொரு சிறுவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் இதில் சிந்திக்க வேண்டிய விடயம் யாதெனில் வறுமை, போர், போசாக்கின்மை, சிறுவர் களை வேலைக்கமர்த்தல் போன்ற 10 இற்கும் 15 வயதிற்குமிடைப்பட்ட சிறுவர்கள் 16% பாடசாலையை விட்டு வெளியேறியவர்களாக
| இதழ் - 36/ 2011

ரின் இன்றைய நிலை
இருக்கின்றனர். இதன் காரணமாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை தற்போது அரசு அறிமுகம் செய் துள்ளது. இதன் கீழ் பாடசாலையை விட்டு விலகிய சிறுவர்கள் மீளவும் கல்விச் செயற்பாட்டில் இணைக்கப்பட்டு வரு கின்றனர் அவர்களுக்கான விசேட மேலதிக கல்வியும் வழங்கப்படுகின்றது.
அண்மைக்கால சலுகைத்திட்டங்களாக அரசு இலவச மதிய உணவு, கல்விக்கான புலமைப்பரிசில் திட்டங்கள் போன்றனவற்றை கல்விக்கு பெரும் பங்களிப்பாகச் செய் துள்ளது. அங்கவீனமுற்ற சிறுவர்கள் தன்னில் தானே நம்பிக்கை கொள்வதற்கும், சமுதாய முழுமையாக்கலில் தாமும் ஒரு பங்கு என்பதை உணர்ந்து கொள்வதற்குமான விசேட கல்வியையும் தொழிற் பயிற்சி களையும் வழங்க வேண்டிய கடப்பாட்டை அரசு கொண்டிருக்கின்றது. அங்கவீனமுற்ற சிறுவர்களில் 20% ஆனோர் அரசாங்கத் தாலும், அரச்சார்பற்ற நிறுவனங்களாலும் கவனிக்கப்படுகின்றனர். யுத்த மோதலில் சிறுவர்கள்
இலங்கையில் யுத்தம் ஆரம்பித்த காலந்தொட்டு 1983 இலிருந்து இன்றுவரை 4,87,000 சிறுவர்கள் ஆயுத மோதலால் பாதிப்படைந்துள்ளதாக அண்மைக்கால அறிக்கையொன்று சிறுவர் ஆய்வாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிப்புற்ற சிறுவர்கள் பின்வரும் பிரிவுக்குள் அடங்
குவர்,
1. கைவிடப்பட்ட அநாதைச் சிறுவர்கள் 2. பெற்றோரில் ஒருவரை மட்டும் உடைய
சிறுவர்கள் - 3. ஊட்டச்சத்துக் குறைவால் வாடும்
சிறுவர்கள் 4. ஆயுத வன்முறைகளுக்கு முகங் கொடுத்து வாழ்வதால் ஏற்பட்ட உடல் உள ரீதியான பிரச்சினைகளால் வாடும் சிறுவர்கள் 5. அங்கவீனமுற்ற சிறுவர்கள் 6. பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்பை
இழந்த சிறுவர்கள்
நங்கை

Page 23
இச் சிறுவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கும் கடின சூழ்நிலையின் பாரிய தன்மையும் சிக்கல் நிறைந்த தன்மையும் இப்பிரச் சினைக்கு துரிதமான இலகுவான தீர்வைக் காணமுடியாதவாறு செய்துவிடு கின்றன, இன்னும் பல சிறுவர்கள் தடுப்பு முகாம்களிலும், நலன்புரி நிலையங்களிலும் வசிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை காணப்படுகின்றது, யுத்தத்தால் அதிர்ச்சிக் குள்ளாகி நிலைகுலைந்துபோன சிறுவர் களையும் குடும்பங்களையும் புனரமைப் பதற்கும், உயிர்வாழ்வதற்கான முக்கிய தேவைகளை வழங்கல், இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலகுவாக்கல், சுகாதார அபிவிருத்தியை இலகுவாக்கல், போர்ச்சூழல் பாதிப்பிலிருந்து மீண்டுவரவும், சமாளிக்கும் திறன்கொண்ட சக்திவாய்ந்த சிறுவர்கள், அங்கவீனமுற்ற அல்லது அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவி வழங்கல் என்பனவும்
அத்தியாவசிய தேவையாகும் தெருவோரச் சிறுவர்கள்
இலங்கையில் பெற் றோரில் ஒருவரை மட்டுமே உடைய சீரழிந்த குடும் பங்களில் வாழும் குழைந்தைகள். முறை கேடாகப் பிறக்கும் குழந்தைகள் தெருவோரச் சிறுவர்கள் சுமார் 10,000 வரையுள்ளதாக நன்னடத்தைகள் திணைக்களத்தால் கணக் கிடப்பட்டுள்ளது, இவர்களுக்காக அரசு, அரச சார்பற்ற நிறுவனத் திட்டமாக தெருவோரத் திலும் விரும்பத்தகாத சூழ்நிலையிலும் வாழும் சிறுவர்களை அப்புறப்படுத்தி பராமரிப்பு நிலையங்கள், சிறுவர் இல்லங் களில் பாதுகாப்பு, பராமரிப்பு, உணவு, சுகாதாரம், கல்வி. உடை உளம் சார்ந்த அபிவிருத்தி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சி, மருத்துவ உதவி போன்ற .. அடிப்படைத் தேவைகளை வழங்கி வருகின்றது. சிறுவர்களை வேலைக்கமர்த்தல்
இலங்கையில் வேலைக்கமர்த் தப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. வறுமையே இதற்கான முக்கிய காரண மாகும். சிறுவர்கள் முறையற்ற வகையில் வேலை செய்வதுடன், சட்டத்தினால் பாது காப்பின்றியும் விடப்பட்டுள்ளனர். இவர்களில் | இதழ் - 36/ 2011

அநேகமானோர் வீட்டு வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு எதிராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கடும் சட்ட நடவடிக்கையை அமுல் படுத்தி வருகின்றது. குற்றமிழைக்கும் சிறுவர்கள்
- சட்ட முரண்பாட்டுக்குட்பட்ட, குற்றஞ் : செய்யும் சிறுவர்கள் இளவயது குற்றவாளி களாக கருதப்படுகின்றனர், இதற்கெனச் சிறப்பாக உருவாக்கப்பட்ட காவல் நிலையங் கள், அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் என்பன நாட்டில் காணப்படுகின்றன, இலங்கைச் சட்டமானது எட்டு வயதிற்குக் கீழ்பட்ட சிறுவர்கள் குற்றம் இழைக்கக் கூடிய செயல்திறன் அற்றவர்களெனக் குற்றவியல் கோவை விதந்துரைக்கிறது, ஆனால் பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்டோர் தாம் புரியும் குற்றத்திற்கு முழுப்பொறுப்பும் உடையவர் களாவார், சிறுவர் உடன்படிக்கை வலியுறுத்துவது யாதெனில் குற்றமிழைப் போர் சிறுவராயின், அவர்களுக்குச் சில சலுகைகள் காட்டப்பட வேண்டும் என்ப தாகும், இதன்படி குற்றமிழைக்கும் - ஒரு சிறுவனோ, சிறுமியோ (14 வயதிற்குட் பட்டோர்) சிறையில் அடைக்க முடியாது, ஒரு காவல்வீட்டிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையிலோ தடுத்து வைக்கப்பட முடியாத அளவிற்கு அடங்கா தவர்களாக வும், ஒழுக்கங்கெட்டவர்களாகவும் இருக் கின்றவரென ஒரு நீதிமன்றம் அத் தாட்சிப் படுத்தினாலும் 14 - 16 வயதிற்கு இடைப்பட்ட இளவயதினரை சிறையிலிட முடியாது.
இதன்படி பொலிஸ் நிலையங்களில், குற்றம்புரியும் இளவயதினர் ஏனைய வளர்ந்த குற்றவாளிகளிலிருந்து வேறாகப் பிரித்து வைக்கப்பட வேண்டும், இவர்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் மறைவாக நடத்தப் படுவதோடு, வழக்கில் தொடர்புடையோர், சாட்சிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் மட்டுமே, அவ்விடத்தில் சமூகமளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது சிறுவர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையாக குறிப்பிட்ட பெற்றோர் அல்லது பாதுகாவல ரின் தொடர்புகளுடனோ அன்றியோ மூன்று வருடத்திற்கு மேற்படாத ஒரு குறித்த
| நங்கை

Page 24
'தேன்" சிறுவர் இலங்
காலத்துக்கு ஒரு நன்னடத்தை உத்தியோகத் தரின் மேற்பார்வையின் கீழ் வைக்குமாறு நீதவானொருவர் உத்தரவிடலாம்... " சிறுவர்கள் உரிமைகள் பாதுகாக்கப் படுதல் பற்றி இலங்கை சட்ட மொன்றைக் கொண்டிருக்கும் அதே வேளை யில் சிறுவர் அபிவிருத்தியில் மாறுபட்டுள்ள தன்மை (யுத்தச் சீரழிவாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் )களின் எண்ணிக்கையில் இலங்கை எதிர் நோக்கியுள்ள தற்போதைய பிரச்சினைகளில் ஒன்றாக இவையும் அடங் கும். இத்தகைய சவால்களை ஈடுகொடுக்கக்
யாழ் மாவட்டத்திலுள்ள
இல/ பிரதேச பிரிவு சிறுவர் இல்லம் 01 சண்டிலிப்பாய் 11. றோமன் கத்தோலிக்க மக
2. பெதனி சிறுவர் இல்லம் 3. எலிம் சிறுவர் இல்லம் 4. அருள்மனை ஆண் சிறுவு 5. ஹாரியல் வின்சிலோ மக6
6. லிவிங் லைற் மிசன் இல்ல 02
சங்கானை
7. பொதனியா சிறுவர் இல்ல! 8. கானான் சிறுவர் இல்லம் 9. வள்ளுவர் சிறுவர் இல்லம்
10. வசந்தம் ஜெனிபர் மகளிர் 03 கோப்பாய்
11. பாலம் சிறுவர் இல்லம் 12. கருணை சிறுவர் இல்லம் 13. கானான் சிறுவர் இல்லம் | 14. பாசச்சோலை சிறுவர் இல்
15. கருணாலயம் சிறுவர் இல் 04 (கரவெட்டி
16. சிறி பரமானந்தா சிறுவர் 8 05 சாவகச்சேரி
17. மிருசுவில் றோமன் காத்ே 18. சோல்வேசன் ஆமி சிறுவர்
19. விஷன் ஒவ் பியூச்சர் ஜென 06 நல்லூர்
20. இந்து சபை சிறுவர் இல்ல 21. தாயகம் 22. கருணாலயம் அன்னை க 23. நாற் சதுரம் சிறுவர் இல்ல
24. தியாகி அறக்கொடை நிை 07
தெல்லிப்பளை
25. துர்க்காபுரம் மகளிர் இல்ல 08
ஊர்காவற்துறை26. சென்மேரிஸ் மகளிர் இல்ல
27.சென் அந்தோனிஸ் ஆண்
28. கரம்பன் மகளிர் இல்லம் பருத்தித்துறை) 29. கடவுளின் சொந்தம் சிறுவு |யாழ்ப்பாணம் 130. கருணா நிலையம் மகளிர்
31. திருமறை ஆண்சிறுவர் 8 உடுவில்
32. அளகம் சிறுவர் இல்லம் |
33. இளையதம்பி சிறுவர் இல் மொத்தம்
தகவல் : மாவட்ட சிறுவர் நன்கு இதழ் - 36/ 2011
09 10.

கூடிய வகையில் சிறுவர்கள் பற்றிய அபிவிருத்தித் திட்டங்கள் பலமானதாகவும் மேம்படுத்தலுடன் கூடியதாகவும் அவர்களின் - எதிர்காலத்தை வளப்படுத்தலுடன் கூடிய நல்லதொரு செயற் திட்டமாக அமைக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான தொன்றாகக் கருதப்படு கின்றது.
இ.நகுலேஸ்வரி ஆதாரம் :இலங்கை மனித உரிமை நிலை சட்டத்துக்கும் சமுகத்துக்குமான நிலையம்)
சிறுவர் இல்லங்கள்
ளிர் இல்லம்
ஊர் இல்லம்
ளிர் இல்லம் மம்
சிறுவர் எண்.
35 1O 47.
13 -- 23
12 17 27
19
இல்லம்
04
34
இருபாலை
லம் -லம் ... .
லம்
35 33 09 77 29
இல்லம் தோலிக்க சிறுவர் இல்லம்
இல்லம் எரேசன் சிறுவர் இல்லம்
aேlels 3 el/? க இ ை88/8/8/812 ele's 2 /2 aெlls
39 . 26
08
ம் ..
169 09
கிருஷ்ணம்பை சிறுமிகள் இல்லம்
லய சிறுவர் இல்லம் :
120 27 17 147 40 106
ஓம்
லம் .-
சிறுவர் இல்லம்
51
மர் இல்லம்
இல்லம் இல்லம்
132 37 29
31 -17 1429
லம்
மடத்தைத் திணைக்களம்
நங்கை

Page 25
சிறுவர்களும் தாயும், குடும்பமும் குழந்தையும் முதலாவது சூழலாக அமைகின்றன. குழந்தை யின் வாழ்வு, பாதுகாப்பு, அன்பு ஆகியவை அடிப்படை திருப்தி நிலை யிலாவது குழந்தைகளுக்கு வழங்கப்படல் வேண்டும். ஒருவர் மீது மற்றவர் தங்கி இருக்கின்றனர் என்ற உணர்வு குடும்பத்தால் வளர்க் கப்படுதல் முக்கியமாகும். இந்த நம்பிக்கை குழந்தையின் உளச் சமூக வளர்ச்சியில் அவசியமான ஒன்றாக காணப் படுகின்றது.
குடும்பக் கட்டுமானம், குடும்ப உறுப் பினர்களின் பரஸ்பர தொடர்புகள், குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் தமது கடமை களை பொறுப்புணர்ச்சியுடன் நிறை வேற்றுதல் முதலியவை குழந்தை வளரும் சூழலில் செல்வாக்கு செலுத்துகின்றது. குடும் பச் சூழலில் சமூகச் சூழலின் செல்வாக்கு நேரடியாக உண்டு.
குடும்பத்துச் சூழலியற் காரணிகளும் குழந்தை வளர்ச்சியிலே செல்வாக்கு செலுத்து கின்றன. குடும்ப வசதிகள், சுத்தம், குடும்ப உறுப்பினர்களின் மொழிப் பிரயோகம் உரை யாடல், நடத்தைகள் தாவரங்கள், விலங்கு கள், பொழுது போக்குகள், இசைக்கருவிகள் இவ்வாறான பல்வேறு அமைப்புக்கள் குடும்பச் சூழுலில் அடங்குகின்றன.
குழந்தை வளர்ப்பு முறை தாய் தந்தையின் முதிர்ச்சி பண்புகள், குழந்தை யின் சகோதரரிடையே காணப்படும் வயது வீச்சு, குடும்பத்தில் காணப்படும் கட்டுப்பாட்டு முறைமைகள், முறைகள் குழந்தையின் வளர்ச்சியிலே தாக்க விளைவுகளை ஏற் படுத்துகின்றது.
சிறுவர்கள் மீது அதிக செல்வாக்கு செலுத்தும் விசையினராக உடன் குழுவினர் (நண்பர்கள்) விளங்குகின்றனர். குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்காத திருப்தி உடன் | குழுவினரிடம் கிடைக்கின்றது. வளர்ந்தோரை காட்டிலும் உடன் குழுவினரது மாதிரிகை யினையே சிறுவர்கள் கூடுதலாக பின்பற்று |இதழ் - 36/ 2011)

குடும்பச் சூழலும்
கின்றனர். கீழ்ப்படிவு, கீழ்ப்படிவின்மை, சுய கட்டுப்பாடு, சுய வெளிப்பாடு முதலியவற்றின் உருவாக்கத்தில் உடன்குழுவினரது செல் வாக்கு மிகையாகக் காணப்படுகின்றது. மனவெழுச்சிகளின் செயற்பாட்டிலும் நண்பர் கள் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
சிறுவர்களை அரவணைத்து வளர்க் கும் முறை குடும்ப நிலைக்கு ஏற்பவும் பண் பாட்டு வேறுபாடுகளுக்கு ஏற்பவும் வேறு படுகின்றது. சில குடும்பங்களில் சிறார்கள் உடல் சார்ந்த அரவணைப்புக்கு கூடுதலாக உட்படுத்தப்படுகின்றனர். சில குடும்பங்களில் சிறார்கள் கூடுதலான மொழியுரையாடல் களால் தூண்டப்படுகின்றனர். பெற்றோரும் ஆசிரியர்களும் சிறுவர்களின் நல்ல நடத் தைக்கு பாராட்டு வழங்கும் போது சிறுவர் - களிடத்து சமூக நடத்தை வெளிப்படுகின்றன.
சிறுவர்கள் நிலையில் ஏற்படும் பயம் அடிமனதில் மாறாத வடுவாக பதிந்து வளர்ந்த பின்பும் அதன் தாக்கம் அதிகரித்துச் செல்வதை ஆய்வுகளில் குறிப்பிடப்படு கின்றன. சிறுவர்களாக இருக்கும் போது உடல் உள ரீதியாக ஏற்படும் ஆபத்துக்கள், வன்முறைகள், அசம்பாவிதங்கள் போன்ற வற்றின் தாக்கங்கள் பெரியவர்காளான பின்பும் அடிமனதில் உறைந்து போய்விடு கின்றன. பாதுகாப்பின்மை தொடர்பாக சிறுவர்கள் மனதில் தோன்றும் பயம் அவர் . களை வாழ்க்கையில் நிச்சயம் அற்ற நிலைக்கு தள்ளிவிடுகின்றது. பெற்றோர் பிள்ளைகள் மீது அன்பு காட்டுதல் பராமரித்தல் உணவு உடை வழங்குதல் போன்றவற்றில் பாரபட்சம் காட்டும் போதும் அளவிற்கு அதிகமான குற்றங்களைச் சுமத்தும் போதும் தண்டனைகளை வழங்கும் போதும் சிறுவர்களின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெற்றோரின் அறியாமை மூடக் கொள்ளைகள் பழக்க வழக்கங்கள் பயத்தை ஏற்படுத்தும் கதைகள் கூறுதல் போன்றனவும் சிறுவர்களின் மனங்
|நங்கை

Page 26
களில் மாறாத வடுக்களாக அச்ச நிலையை உருவாக்கி விடுகின்றது.
இததைகைய பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களின் தேவைகள் நிறைவேற்றப் படாதவிடத்தும் அவர்களின் கொள்கைகளில் குறுக்கீடுகள் தோன்றும் போதும் வேண்டு மென்றே கட்டுப்பாடுகள் விதிக்கும் போதும் இவர்கள் கோப் உணர்ச்சிகளுக்கு ஆளாக நேரிடும். மேலும் ஆத்திரமூட்டும் நிகழ்வு களும் இத்தகைய உணர்வை அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடத்தே பயம், கோபம், பொறாமை மனமுறிவு என்பவற்றால் ஏற்படும் மன எழுச்சிகளை பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற நிலைப்பாடுகளால்
அவசியமின்றி அதட்டுதல்
மன அதிர்ச்சி உ ஏற்படும் வகையில்
1959ம் - ஆண்டு இரவு
உரிமைப் பிரக ஐ.நா பொது சபை ஏ
1991 - சிறுவர் உரிம் சிறீலங்காவினால் உ
|இதழ் - 36/ 2011

அவர்களை நல்வழிப்படுத்தும் தேவை ஒன்றுள்ளது.
எனவே சிறுவர்களை போதிய அன்பு, அரவணைப்பு, அளவான கண்டிப்பு, தாமாகவே முயற்சிகளை முன்னெடுக்கும் திறன் வளர்த்தல் நற்பழக்க வழக்கங்களுடன் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு மட்டுமல்லாது குடும்பத்திலுள்ள ஏனைய அங்கத்தவர்களையும் சார்ந்துள்ளது என்பது சிறுவர்கள் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
- சியாமளா
சிறார்களின் உள்நலப் பாதிப்பில் உங்களுக்கும் பங்கிருக்கிறதா?
S *
உளப்பாதிப்பு : ம தண்டித்தல்.
ன்டாவது சிறுவர்கள் கடனத்தினை
ற்றுக் கொண்டது.
மைகள் சமவாயம் றுதிப்படுத்தப்பட்டது.
நங்கை

Page 27
சிறுவர்களும் கைது
இப்போதெல்லாம் வசதியைக் காட்டிக்கொள்ள பெற்றோரே பிள்ளை களுக்கு செல்போன்களை வாங்கிக் கொடுப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. தூர இடங்களுக்கு சென்று படிக்கும் பிள்ளைகளுக்கு தொலைபேசி தேவை தான். வீட்டை விட்டு தூரப் போய் படிப் பதால் என்ன, ஏது என்று விசாரிப்பதற்கு இப்பாவனை மிக அவசியமாகதொன்றே. ஆனால் அவர்கள் வகுப்பிலோ, பரீட்சையின் போதோ கைத்தொலை பேசியைப் பாவிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. கைத்தொலைபேசிப் பாவனை அவசியமானதென்றாலும் இதன் பின்னணியில் ஆபத்து ஒளிந் திருப்பதால் சிறுவர்களுக்கு இப் பாவனை அவசியமற்றதாகவே கருதப் படுகிறது.
கைத்தொலைபேசிப் பயன்பாட் டால் நன்மை உண்டு என்றாலும் தீமை களே அதிகம். பக்குவப்படாத வயதில் தேவையற்ற விடயங்களில் இளவயதினர் கெட்டுப் போவதற்கும் தடுமாறி விழு வதற்கும் வழிவகுப்பது இத்தொலை பேசிப்பாவனைதான். இளவயதில் அதிக கவனத்துடன் வளர்க்கவேண்டிய தேவை பெற்றோருக்கு உள்ளது. ஆனால் கணனி யுகத்தில் பார்க்கக் கூடாத விசயங்கள், படங்கள், பரிமாறல்களுக்கு இப்பாவனை வழிவகுக்கிறது. நாம் அவசரமான முக்கியமான செய்திகளை பரிமாறிக் கொள்ளவே கைத்தொலைபேசியைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆனால் அது இன்று இளவயதினரை பிஞ்சிலே பழுக்க வைத்து விடுகிறது.
ta *
|இதழ் - 36/ 2011

தாலைபேசி பாவனையும்
பெரியவர்களுக்கே தொடர்ந்து ஒரு மணிநேரம் கைத்தொலைபேசியில் பேசினால் கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகி பின்விளைவுகள் மிக மோசமாக இருக் கும் என மருத்துவர்கள் எச்சரித்து இருக் கிறார்கள். பெரியவர்களுக்கே இப்படி என்றால் சிறுவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என நினைக்கும் போது அச்சமாகவுள்ளது. எந்த ஒரு விசயத் திலும் நாணயத்தின் இருபக்கம் போல் நன்மையும் தீமையும் கலந்தே காணப் படுகிறது. நெருக்கடியான நேரங்களில் செல்போன் பாவனை உயிர்காக்கும் தோழனைப் போலிருந்தாலும் சிறுவர் களைப் பொறுத்தவரை அளவிற்கு மிஞ்சினால் விஷம் தான். ஆகவே சிறுவர் களுக்கு கைத்தொலைபேசி அவசியமற்ற ஒருவிடயமாகவே கருதப்படுகின்றது.
பாடசாலை செல்வும் சிறுவர்கள் வகுப்பில் திருட்டுத்தனமாக வைத்துக் கொண்டு பாட்டு கேட்பது, குறுஞ்செய்தி அனுப்புவது, தேவையற்ற படங்களை எடுத்து வேறு நண்பர்களுக்கு அனுப்பு வது என ஈடுபடுவதால் பாடத்தில் கவனம் குறைந்து தேவையற்ற பல பிரச்சினை களுக்கு ஆளாக நேரிடும். கடந்த காலத்திலெல்லாம் இத்தொலைபேசிப் பாவனை வீடுகளிலோ வெளியிடங் களிலோ அதிகளவாக இல்லை. அப்போது சிறுவர்கள் பிரச்சினைகள் இல்லாமற்தான் இருந்தார்கள். ஆனால் தற்போது சிறுவர்கள் காதில் கைத் தொலைபேசியை வைத்துக் கொண்டே பொழுது போக்குவதால் அவர்களின் செவிப்பறை பாதிக்கப்பட்டு கேட்கும்
| நங்கை

Page 28
திறன் குறைவடைந்து செல்ல நேரிடும் ஆபத்துள்ளது. தேவையற்ற அழைப்புக் களால் கவரப்பட்டு திசைதிருப்பப்பட்டு முகம் தெரியாதவர்களின் வலையில் வீழ்ந்து சீரழிந்த பெண்பிள்ளைகளும், தீயவழிகளில் இழுத்துச் செல்லப்பட்ட ஆண்பிள்ளைகளும் நடைமுறையில் காண்பது அதிகமாகவுள்ளது.
விளையாட்டாக பெண்பிள்ளை கள் கைத்தொலைபேசிகளில் தங்களைத் தாங்களே விபரீத கோணங்களில் படம் எடுத்து அவை மற்றவர்கள் கையில் அகப்படும்போது அவமானம் தாங்காமல் தற்கொலையில் முடிகிற விபரீதங்களும் நடக்கிறது. ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளைகளைப் படம் பிடித்து "பிளக் மெயில்” பண்ணுவதும் நடந்து கொண்டு தானிருக்கிறது. படிப்பிற்கு எந்தவித்திலும்
* * * * *
1923ம் ஆண்டு எக்ல உரிமைகள் பிரகடன்
* * * *
1924ம் ஆண்டு சிறுவர் சர்வதேச சங்கத்தினால்
* * * *
சிறுவர் உரிமை சமவ
செயற்குழு ஒன்று
'இதழ் - 36/ 2011

உதவாத கைத்தொலைபேசி சிறுவர் களுக்குத் தேவையற்றதாக இருந்தாலும் நல்லமுறையில் பயன்படுத்தினால் சிறுவர் களுக்கு கைத்தொலைபேசி கொடுப்பது பயனள்ள விடயமாகும்.
தீ அழிக்கும் என்பதற்காக நாம் அதனைப் பயன்படுத்தாமல் இருப்ப தில்லை. சிறுவர்கள் கைத்தொலை பேசியை உபயோகிப்பதில் சில தீமை களும் இருக்கத்தான் செய்கின்றன. இருந் தாலும் அதிலுள்ள நன்மை, தீமைகளைச் சிறுவர்களுக்கு எடுத்துச் சொல்லி ஆக்க பூர்வமான வகையில் செல்போனைப் பயன்படுத்த அறிவுறுத்தி பிள்ளைகளை நல்வழி நடத்தி அவர்களை கண்காணிப் பதே பெற்றோர்களின் கடமையாகும்.
- நிசானா
மான்ரன் ஜெப் சிறுவர்
த்தினை வரைந்தார்.
* * * * *
ர் உரிமைகள் பிரகடனம் 5 ஏற்றுக் கொள்ளப்பட்டது)
* * * * *
ரயத்தை வரைவதற்கு உருவாக்கப்பட்டது.
* * * * *
நங்கை

Page 29
யுத்தத்தால் பாதிக்கப்பட்
இலங்கையில் யுத்தத்தின் பின் கேள்விக் குறியாகவுள்ளது பாதிக்கப் பட்ட சிறுவர்களின் எதிர்காலமே. யுத்த நெருக்கடிகள், வன்முறைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளாலும் அதன் சுழற்சிகளினாலும் மிகவும் கஷ்டமான வாழ்வை அனுபவித்து வரும் சிறுவர்கள், பெற்றோரை, உறவுகளை, கல்வியை இழந்த நிலையில் வறுமை, பசி, பட்டினி ஆதரவற்ற நிலை போன்றவற்றால் அடித் துச் செல்லப்படும்போது அவர்கள் நிலை பரிதாபமிக்கதாகவே அமைகிறது. இது போன்ற நிலைகளால் சிக்கித் தவிப்பவர் கள் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறை களாலும், முதலாளித்துவ தலைமை களின் பிடிகளினாலும் பிரித்தாடப்படு கின்றனர்.
யுத்த அனர்த்தங்கள், பிரச்சினை கள் பொதுவாக எல்லோரையும் பாதித் தாலும் குழந்தைகள், சிறுவர்களைத்தான் அதிகளவு அவை பாதிக்கின்றன. சகல விதமான எதிர்பார்ப்புக்களுடன் பாதிக்கப் பட்ட சிறுவர்கள் சுயாதீனமாக சமூகத்தில் வாழமுடியாத நிலையிலும் யுத்தத்தின் பயங்கரமான நெருக்கடிகள், வறுமை, தனிமை போன்ற சூழ்நிலைகள் இச் சிறுவர்களை ஒரு விதமான மனவிரக்தி அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றுக்கு உள்ளாக்குகின்றன.
யுத்தப்பாதிப்புகள், வறுமை, குடும்ப வன்முறைகள் வீடில்லாமை, அகதிவாழ்வு, உடலில் ஏற்பட்ட காயங் கள், அன்புக்குரியவர்களின் இழப்புகள், உறவுகளின் மரணங்கள் மற்றும் பயங்கர மோசமான சம்பவங்களை நேரடியாகக் கண்டு அதனால் மனம் தாக்கப்படல் போன்றன சிறுவர்களுக்கு மன அழுத் | இதழ் - 36/ 2011

!//i 11
ட சிறுவர்களின் எதிர்காலம்
தம், மனச்சுமை மற்றும் உடல் உளப் பாதிப்புகள் ஏற்படக் காரணங்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை உட்பட ஆப்கானிஸ் தான், ஈராக், பலஸ்தீனம் போன்ற பல நாடுகளில் யுத்தத்தால் பாரிய நெருக் கடிகளுக்கு சிறுவர்கள் முகம் கொடுக் கின்றனர். இலங்கைச் சிறுவர்களில் 1/3 பங்கினர் மன அழுத்தத்தால் பாதிக் கப்பட்டுள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதேவேளை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பல நாடுகளில் அநாதரவான சிறுவர்கள் சிறுவர் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களின் போசாக்கு நிலை மிகக் கவலையளிப்பதாகவே உள்ளதாகவும் போதியளவு சத்துணவு அளிப்பதில் விழிப்புணர்வற்ற நிலையே காணப்படுவதாகவும் அறிக்கைகள் பல சுட்டிக்காட்டுகின்றன. இது இவ்வாறிருக்க அநேகமான சிறுவர்கள் வறுமை, பசி இடம்பெயர்தல், வேலையின்மை, அகதி வாழ்வு போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்ட்டுள்ளதோடு தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் யுத்தின் பின் சிறுவர்கள் ஆதரவற்ற நிலைமை, வறுமை, பட்டினி, வேதனை, பயம், இயலாமை, பிறரில் தங்கிவாழும் நிலைமை போன்றவற்றால் தன்னம்பிக்கை இழந்து அவர்களின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.
யுத்த ஏதிலிகளான சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகம், குடும்ப வறுமை, அநாதரவான சூழ்நிலைகளால் கடும் விரக்தியடையும் மனநிலைக்கு ஆளாகின்றனர். அத்துடன் சந்தர்ப்ப
நங்கை)

Page 30
சூழ்நிலை காரணமாக போதைப் பொருட் பாவனைக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன் உளவியல் தாக்கங் களுக்கும் அவர்கள் உட்படுத்தப்படு கின்றனர். இதன் காரணமாக சிறுவர்கள் வன்மம் மிக்க மனநிலை படைத்தவர் களாக மாற வழிவகுக்கின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர் கள் சுமக்கமுடியாத சுமைகள், துர்ப் பாக்கிய நிலைமைகள் அல்லது உதவி பெற முடியாத சூழ்நிலைகள் நாளாந்த வாழ்வில் எதிர்மறைத் தன்மைகளை உருவாக்கி அவர்களின் எதிர்காலம் இருள்மயமாகின்ற நிலைமை ஏற்படக் காரணமாகின்றது. இதனால் இவர்கள் வன்முறையாளர்களாகவும் இறுக்கமான மன, உளத்தன்மை கொண்டவர்களாகவும் மாறுகின்றனர்.
குறிப்பாக யுத்தப்பாதிப்பில் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பழக்கவழக் கங்களானது, சாதாரண பெற்றோரின் குழந்தைகளை விட அதிகமானவன் முறை, மூர்க்கத்தனம் கொண்டவர்களாக உள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக் கின்றன. பொதுவாக குடும்ப சூழலில் கிடைக்கின்ற அன்பு, அரவணைப்பு, ஆதரவான பாதுகாப்பு உணர்வு மற்றும் நல்ல வழிகாட்டல் என்பன யுத்தம் போன்ற நெருக்கடியான சம்பவங்களின் பின்பு உருவாகின்ற மனச்சுமை, மன அழுத்தம் மற்றும் உளவியல் பாதிப் புக்களைக் குறைப்பதாக சிறுவர் ஆய்வாளர்கள் கூறுகின்றார்.
இது தவிர மேலும் இலங்கையில் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் குறிப் பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் தொடர்ச் சியாக சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்
| இதழ் - 36/ 2011

படுவதாகவும், அதன் மூலம் அவர் களுக்கு வழங்கப்படுகின்ற கல்வி உட்பட பல்வேறுபட்ட உரிமைகள் மறுக்கப்படு வதாகவும் முறைப்பாடுகள் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
இவ்வாறான செயற்பாடுகளினால் சிறுவர்களுடைய எதிர்காலம் அழிக்கப் படுகின்றது. எனவே நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களை அன்போடு ஆதரித்து அவர் களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மாத்திர மன்றி நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் தும் கடமையாகும். இப்போது சிறுவர் களை வேலைக்கு அமர்த்துவது தொடர் பாக நம் நாட்டில் பல்வேறு புதிய சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆகவே இச் சட்ட மூலங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுடைய பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
18 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கமர்த்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது. ஆகவே இது தொடர்பாக நாங்கள் எல்லோரும் விழிப்புணர்வோடு செயற்பட வேண்டும். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறுவர்களையும் தங்களுடைய பிள்ளை களாக நினைத்து சிறுவர்கள் எங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டாலும் அது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அல்லது 1929 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் இச்செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடிவதுடன் சிறுவர்களின் எதிர்கால பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.
நங்கை

Page 31
சிறுவர்கள் தொடர்பாக பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திணைக்களங்களாவன:-
* சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம் * சிறுவர் நன்னடத்தைச் செயலகம் + தொழிற் திணைக்களம் + பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்
கள் * மனித உரிமை ஆணைக்குழு * சிறுவர் தொடர்பான அரசசார்பற்ற
நிறுவனங்கள் + தேசிய பாதுகாப்பு அதிகாரசபை
ஆகியவையும், மேலும்
அரசினால் மேற்கொள்ளப்படும் சிறுவர் அபிவிருத்தி திட்டங்களான, * சிறுவர் பராமரிப்பிற்கான மாதாந்த
உதவிப் பணம் * இலவச கல்வி, சீருடை, உணவு,
போக்குவரத்து வசதி * கல்விக்கான புலமைப் பரிசில் திட்டம்
நடமாடும் சுகாதார, மருத்துவ முகாம், போசாக்குணவு வழங்கல் * அரச சிறுவர் இல்லங்கள், மாணவர்
விடுதிகள் அமைத்தல் * ஊனமுற்ற, விசேட தேவைக்குரிய சிறுவர் குடும்பங்களுக்கான மருத்துவ செலவுக்கான உதவி வழங்கல் * உளவள ஆற்றுப்படுத்தல் நிலையம்
அமைத்தல் * வாழ்வதார உதவித்திட்டமும், வீட்டுத்
திட்டம் வழங்கலும் * முன்பள்ளி மாணவர்களுக்கான பால்
வழங்கும் திட்டம் |இதழ் - 36/ 2011)

போன்றவையும், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமய நிறுவனங்களால் வழங்கப்படும் உதவி களாவன:- * சிறுவர் கழகங்கள் அமைத்தல், அற
நெறிப் பாடசாலை அமைத்தல் * சைக்கிள், கற்றல் உபகரணம் வழங்கல், விளையாட்டு உபகரணம் வழங்கல் * போசாக்குணவுத் திட்டம் * வாழ்வாதார உதவி, சுயதொழில் கடன் வழங்கல் (சிறுவர் சார்ந்த
குடும்பங்களுக்கு) * கல்விக்கான ஊக்குவிப்பு பணம்
வழங்கல் * மருத்துவ சுகாதார வசதிகள் வழங்கல். * சிறுவர் பராமரிப்பு இல்லங்கள்
அமைத்தல் + உளவள விழிப்புணர்வுச் செயற்பாடுகள்
நடத்தல்
என்பவையும் சிறுவர்களின் எதிர் காலத்தினை வளப்படுத்தவும், பேரழிவி லிருந்து அவர்களை மீட்டெடுக்கவும் கைகொடுத்து உதவுகின்றன. இத் தகைய அபிவிருத்தித் திட்டங்கள் வாழ்வை ஒளிமயமானதாகவும், நம்பிக்கையூட்டும் ஊன்றுகோலாகவும், இன்றைய சிறுவர் களை நாளைய தலைவர்களாக உருவாக் கும் சக்தி வாய்ந்த அபிவிருத்தியை நோக்கிய செயற்பாடாக அமையும் என் பதில் சந்தேகமில்லை.
- சர்மிளா ஆதாரம் - சிறுவர் உரிமைகள் சீடோ
நங்கை

Page 32
மகளிர் அபிவிருத்தி நிலைய
(காணாமல் போன மகன்
கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்துவந்த ஸ்ரீரெங்கநாதன் வசந்தி என்பவரின் மூத்த மகன் 16 வயதிலே வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது காயமடைந்த நிலை யில் மல்லாவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொடர்ச்சியான . இடம்பெயர்வின் போது இவர்கள் தமது மகனை தவறவிட்டுள்ளனர். பின்னர் வவுனியா முகாம் ஒன்றினில் -ஏனைய பிள்ளைகளுடன் தஞ்சமடைந்த நிலையில் காணாமல்போன தமது மகனை ஒவ்வொரு முகாமாக தேடியும் காணாத நிலையில் தமது மகனை காணவில்லையென தாம் தங்கி யிருந்த கிராமசேவகரிடமும் ஐ.சி.ஆர்.சி யிடமும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர்வதற்கான நிலைமை சாதகமாக அமைந்தனால் இவர்கள் இடப்பெயர்வுக்கு முன்னர் தாம் வசித்த கொக்குவில் பகுதிக்கு வந்து உறவினர் வீடு ஒன்றில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையிலும் இவர்கள் தமது மகனை தேடும் முயற்சியில் தீவிரமாக அலைந்து திரிந்தனர். கிளிநொச்சி, வவுனியாவில் உள்ள உறவுகளும் இவரது மகனைத் தேடுவதற்கான முயற்சிக்கு பல வழிகளிலும் உதவ முன்வந்துள்ளனர்.
இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட போரினால் பாதிக்கப் பட்ட பெண்கள் என்ற விடயம் தொடர்பான கருத்தரங்கிற்கு பங்குபற்றுவதற்கான வாய்ப்பு காணாமல் போனவரின் தாயா ருக்குக் கிடைத்தது. இவர் நிலையத்தால் நடத்தப்பட்ட தொடர்கருத்தரங்குகளிலும் தவறாது கலந்துகொண்ட நிலையில் மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற |
* * * * *
'இதழ் - 36/ 2011

ந்தின் இலவச சட்ட சேவை தடும்பத்துடன் இணைவு) நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் காணாமல் போன மகன் பற்றிய தகவல்கள், ஆவணங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை மகளிர் அபிவிருத்தி நிலையம் ஒழுங்குபடுத்தி இருந்தது. இதன்போது இவர் தனது மகனின் நிலைப்பாட்டினை அறியத் தருமாறு அவர்களிடம் கேட்டிருந்தார்.
இவரது முறையீடு தொடர்பாக ஆணைக்குழு முன் தகவல் வழங்கி 2 மாதங்களின் பின் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலைத்திற்கு இவரது மகன் பற்றிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம் ஒன்று இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவர்களது உறவினர்கள் மூலம் கொக்குவில் உள்ள இவர்களுக்கு தகவல் அறிவிக்கப் பட்டது. இவர்கள் கிளிநொச்சி சென்று காணாமல்போன மகனை பார்வையிடுவதற் கான விண்ணப்பத்தினை வழங்கியுள்ளனர்.
இதன் அடிப்படையில் இவர்களது மகன் மன்னாரில் உள்ள தடுப்புமுகாம் ஒன்றினுள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு சந்திப்பதற்கான நேரம் திகதி தரப்பட்டுள்ளது. இதன்போது இதுவரை காலமும் தமது மகன் எங்குள்ளான் என தெரியாது தவித்த நிலையில் இருந்த இவர்கள் மிகுந்த மன . ஆறுதலுடன் காணப்படுகின்றனர். இவர்களது மகன் திருப்பவும் கிடைத்துள்ள நிலைமை யானது மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட தொடர் செயற்பாட்டின் ஓர் வெற்றிவாய்ப்பாகக் கருதப்படுகிறது. இதன் பின்னர் இந்நிலையத்திற்கு மேலும் பல பெற்றோர் தமது காணாமல் போன உறவுகளைத் தேடித் தரும்படி விண்ணப் பங்ளைச் சமர்ப்பித்து வருகின்றமை இந் நிலையத்தின் முன்னேற்றப் படிகளுக்கு ஒரு சான்றாகும்.
* * * *
நங்கை

Page 33
மகளிர் அபி CENTRE FOR WOM
மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆற் வரும் செயற்திட்டங்கள்
மகளிர் அபிவிருத்தி நிலைய சட்ட ரீதியாக 1988ம் பதிவு செய்யப்பட் தேசிய நிறுவனமாகும். பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்ப களை மையமாகக் கொண்டு பெண்களு கான சுயதொழில் வாய்ப்பினை ஏ படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பி கப்பட்டது. இதன் நீண்ட காலத்திட்டமா பால்நிலை சமத்துவத்தினை ஏற்படுத்தி கொடுத்தலும், சமுதாயத்தில் பெண்களை மேல்நிலைப்படுத்தும் நோக்கிலும் ஆர பிக்கப்பட்டது. அண்மைக்கால நடவடிக்கைகள்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பி வரும் செயற்திட்டங்களை நடைமுறை படுத்தியுள்ளது. இடம்பெயர்ந்து வாழு குடும்பங்கள் உடமைகளையும், சொத்து களையும் இழந்து வாழ்கின்றார்கள் இவர்களுக்கு மகளிர் அபிவிருத், நிலையம் பெண்களைத் தலைமையாக கொண்ட குடும்பங்களில் வருமான ஈட்டும் வகையில் அவர்களை சு தொழிலில் ஈடுபடுத்துவதற்கு பல உத களைப் புரிந்து வருகின்றமை குறி பிடத்தக்கது. 1. வாழ்வாதார உதவித் திட்டம்
வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட் பெண்களுக்கு ஆலோசனை வழ கலும், விழிப்புணர்வுக் கருத்தரங் களும் 3.
இலவச சட்ட ஆலோசனை, இலவ
வழக்கு தாக்கல் 4. விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் (இதழ் - 36/ 2011)

விருத்தி நிலையம் EN& DEVELOPMENT(CWD)
சி. பி. பி. F. 5.
5 E 5. சி. சூ 3: சு. 5. (.
றி 5. போஷாக்குத் திட்டம்
6. மாணவர்களுக்கான கல்வி ஊக்கு
விப்புத் திட்டம். 7. மீள்குடியமர்ந்த பெண்களின் சவால்
களை ஆய்வு செய்தல் ங் * வாழ்வாதாரம்
இத் திட்டம் இடம் பெயர்ந்து வாழும், மற்றும் பிரதேச ரீதியாக வாழும்
கணவனை இழந்த பெண்களையும், க கணவனால் கைவிடப்பட்ட பெண் க் களையும் இலக்காகக் கொண்டது. இத் ள திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட
பிரதேசங்களாக. 4 வேலணைப் பிரதேசம்
* மண்கும்பான்
சரவணை * வங்களாவடி ஊர்காவற்றுறை பிரதேசம் * சண்டிலிப்பாய்
* பாண் ட வெட் டை நலன் புரி
நிலையம் * சபாபதிப்பிள்ளை நலன் புரி
நிலையம் * உடுவில்
* கண்ணகி நலன்புரி நிலையம் < பெரியமதவடி நலன்புரி நிலையம் * தெல்லிப்பளை
* பிள்ளையார் நலன்புரி நிலையம் ங் * சங்கானை த * ஓடக்கரை நலன்புரி நிலையம்
ஆகிய பிரதேசங்களில் வாழும் குடும்பங்களில் உள்ள வருமானம் குறைவானவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான வாழ்வாதார உதவி
நங்கை)
29

Page 34
4
களை மேற்கொண்டு வந்தமை குறிப் பிடத்தக்கது. * தையல் பயிற்சி நெறிகள் - 60
பெண்கள் பயிற்றப்பட்டனர் பற்றிக் பிறிண்டிங் பயிற்சி நெறிகள் - 200 பெண்கள் பயிற்றப்பட்டனர் வெள்ளி வேலை செய்வதற்கான சுயதொழில் ஊக்குவிப்புக் கடன் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டது. சிறு வியாபாரம் செய்வதற்கான ஊக்குவிப்புக் கடன் - 10 பெண்களுக்கு வழங்கப்பட்டது. மீன்பிடி வலைகள் வழங்கல் - 40 பயனாளிகள் மிளகாய்த்தூள் அரைத்து விற்பதற் கான பொருட்கள் - 30 பயனாளிகள். சைக்கிள் - 50 பயனாளிகள்
தையல் இயந்திரம் - 20 பயனாளிகள் * நீர் இறைக்கும் இயந்திரம் - 20
பயனாளிகள் : பன்னவேலை செய்வதற்கான ஊக்கு
விப்புப் பணம் - 20 பயனாளிகள்
193 பயனாளிகளுக்கும், 260 பயிற்சி பெற்ற மாணவிகளுக்கும் அவர் களின் சுயதொழில் வாய்ப்பினையும், வாழ்வாதாரத்தினையும் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது. வீட்டுவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங் கலும், விழிப்புணர்வுக் கருத்தரங்கு களும்
ICTA நிறுவனத்தினூடாக தகவல் தொழில்நுட்ப முறையினைப் பயன் படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்ட தகவல் சேகரிப்பினூடாக வன்முறையால் பாதிக் கப்பட்ட பெண்களின் தரவுகள் சேகரிக் கப்பட்டுள்ளது. இத்தரவுகளின் மூலம் |இதழ் - 36/ 2011
ள்ளது.

பாமா
பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உளவள ஆலோசனைகளையும், நீதிமன்ற - நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இதற்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டு அவ் இணையத் தளத்தில் தொடர்ந்தும் பெண்களுக்கான வன்முறைகள் சம்பந்தமான தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. www.vawjaffna.org எனும் இணையத் தளத்தில் பதிவு செய்யப்பட்டு வரு கின்றது.
இலவச சட்ட ஆலோசனை
மகளிர் அபிவிருத்தி நிலையம் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சட்ட ரீதியான பிரச்சினைகளை இலவசமாக நீதிமன்றம் மூலம் நடத்தி வருகின்றது, மற்றும் DNA Testஉம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக நிறுவனத்தின் சட்டத்தரணியாக ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் ஆண்டு நிலையத்திற்கு வருகை தந்த 76 ஆலோசனைகளும், வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றில் சட்ட ரீதியாக 40 வழக்குகள் முடி வடைந்த நிலையில் உள்ளது. போஷாக்குத்திட்டம்
கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர் களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக் கப்பட்ட "சக்தி” நிறையாகாரம். இம்முறை, * வாழ்வகம் - கோண்டாவில் - 300
பொதிகள் * சைவச் சிறுவர் இல்லம்
திருநெல்வேலி 200 பொதிகள் * தெல்லிப்பளை துர்க்காதேவி மகளிர்
பராமரிப்பு இல்லம் - 200 பொதிகள் * வேலணை பிரதேச சபை, சுகாதாரப்
பணிமனை 500 பொதிகள்
ஆகிய இடங்களில் உள்ள
நங்கை

Page 35
ID60
சிறுவர்களுக்கு 1200 பொதிகளும் வழங் கப்பட்டது. மாணவர்களுக்கான கல்வி ஊக்கு
விப்புத்திட்டம்.
பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களை கிராமசேவகர், பாடசாலை அதிபர்களூடாகவும் தெரிவு செய்து மாணவர்களின் கல்விக்காக மாதம் ஒன்றிற்கு 1000/= கல்வி ஊக்குவிப் பிற்காக பணமாக செலுத்தி வருவதுடன், வருட முற்பகுதியில் குடும்ப வருமான அடிப்படையில் வசதி குறைந்த மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களிற்கு கல்வி சார் உபகரணங் களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம்
திகதி * சர்வதேச சமாதான தினம் செப் 21ம்
திகதி: * சர்வதேச சிறுவர் தினம் ஒக் 1ம்
திகதி
சர்வதேச மனித உரிமைகள் தினம்
டிசெ 10ம் திகதி * "நங்கை” இதழ் 35 வெளியிடப்
பட்டது. மீளக்குடியமர்ந்த பெண்களின் சவால் களை ஆய்வு செய்தல்
வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேறிய குடும் பங்களையும் குறிப்பாக, பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த பெண்களையும் சந்தித் தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்துகொள்ளும் முகமாக பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் மற்றும் அந் நிலையத்தின் திட்ட அலுவலர்கள் மார்ச் 18, 19, 20ஆம் திகதிகளில் மாங்குளம், கிளிநொச்சிப் பிரதேங்களுக்குச் சென்று கள ஆய் வுகளை நடாத்தினர். |இதழ் - 36/ 2011

முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆகஸ்ட் 2ஆம் திகதியும் தெல்லிப்பழை பிரதேசத் தில் ஆகஸ்ட் 3 ஆம் திகதியும் சென்று
அங்குள்ள பெண்களுடன் கலந்துரை யாடல் ஒன்றை மேற்கொண்டனர். மீன்பிடி வலைகள்பெறும் பயனாளிகள்
《》《家以 10
人為此地的 是1386 表中的對的織
விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்குபற்றிய பெண்கள் -
சைக்கிள், பொதி ஓட்டும் இயந்திரம் பெறும் பயனாளிகள்
|நங்கை

Page 36
மீன்பிடி வலை, நீர் இறைக்கும் இயந்திரம் பெறும் பயனாளிகள்
சிறீலங்காவில் சமவா சமவாயம் 1990ம் ஆண்டுதை மாதம் 26 * 1991ம் ஆண்டு ஆடி மாதம் 12ம் தகதி உறு. * 1991ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுவர்களு * 1992ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிறுவர் சிறுவர் உரிமைகள் நடைமுறைப்படுத்தல் 1994ம் ஆண்டு தை மாதம் அனுப்பப்பட்டது மேலதிக அறிக்கை அரசசார்பற்ற நிறுவன நவம்பர் மாதம் அனுப்பப்பட்டது. இவ்வறிக்கைகள் சம்பந்தமான தனது உரிமைகள் கண்காணிப்புக்குழு 1995ஜு நடைமுறைப்படுத்தல் சம்பந்தமான அரக முதலாவது அறிக்கை 2002ம் ஆண்டள மேலதிக அறிக்கை அரசசார்பற்ற நிறுவன ஜனவரி மாதத்தில் அனுப்பப்பட்டது. இவ்வறிக்கைகள் சம்பந்தமான தனது உரிமைகள் கண்காணிப்புக்குழு 2003ஜ இச்சமவாயம் சிறீலங்காவினால் எந்த கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்
|இதழ் - 36/ 2011

பாரம்தூக்கி கைவண்டில் பெறும் பயனாளிகள்
யத்தின் நடைமுறை ம் திகதி கையொப்பம் இடப்பட்டது. திப்படுத்தப்பட்டது. க்கான செயற்திட்டம் உருவாக்கப்பட்டது. சபட்டயம் உருவாக்கப்பட்டது.
சம்பந்தமான அரசின் முதலாவது அறிக்கை
து.
எங்களின் ஒன்றியத்தினால் 1994ம் ஆண்டு
அவதானிப்புக்களை ஜெனீவா சிறுவர் லை மாதத்தில் அனுப்பியது. பின் ஐந்து வருடங்களுக்குப் பின்னதான) பில் அனுப்பப்பட்டது.
ங்களின் ஒன்றியத்தினால் 2003ம் ஆண்டு
அவதானிப்புக்களை ஜெனீவா சிறுவர் சன் மாதத்தில் அனுப்பியது. . பித பிரகடனமோ ஒதுக்கீடுகளோ இன்றி | கின்றது.
நங்கை

Page 37
மகளிர் அபிவிருத்தி நி
சிறுவர்களுக்கான மகளிர் அபிவிருத்தி நிலையத் தின் ஏற்பாட்டில் “சமுதாயத்தின் வழிகாட்டிகள் மாணவர்கள்" எனும் தலைப்பில் வட மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இக் கருத்தரங்கானது தரம் 9 - 13 வரை யான மாணவர்களை உள்ளடக்கிய தாகவும், மாணவர்கள் மத்தியில் சமூகச் சீரழிவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நற்பிரஜைகளாக, எதிர்காலத்தில் சிறந்த இளம் சமுதாயத் தினரை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகவும் கொண்டு வடிவமைக் கப்பட்டுள்ளது. ஏ9 பாதை திறப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றங்கள், இணையதள பாவனை, கைத்தொலைபேசிப் பாவனை போன்ற மேலதிக தொடர்பு ஊடகங்களின் பாவனையால் இன்று இளைய தலை முறையினர் மத்தியில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துக் காணப் படுவதை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய நிலையானது வெளியிடங் களிலிருந்து தினமும் வந்து போகும் சுற்றுலாப் பயணிகள், வியாபார நோக்கோடு வந்து செல்வோர் எனப் பலதரப்பட்டவர்களின் வருகையினா லும் இளைய சமுதாயத்தினர் மத்தியில்
|இதழ் - 36/ 2011

லையம் மேற்கொள்ளும் எ செயற்திட்டங்கள்
போதைப்பொருள் அறிமுகம் ஆபாசப் படங்கள் பரிமாறல், முன்பின் அறியா தவர்களின் தேவையற்ற தொடர்புகள் என்பவை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.
நாளாந்தம் ஊடங்களில் இளவய தினரின் துஷ்பிரயோக செயற்பாடு களும் அடாவடித்தனங்களும் பாலியல் வன்முறைகளும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. நாளாந்தம் இது தொடர்பான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களிலும் நீதிமன்றங் களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதை காண முடிகிறது. இந்நிலையை எதிர்த்து பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும், குரல் கொடுத்துக்கொண்டிருந்தாலும், இளவயதினர் மத்தியில் மிக வேகமாக பரவிக் கொண்டிருப்பது கலாசார சீரழிவே என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மாணவர்கள் மத்தியில் தேவை யற்ற முறையில் கமரா பாவனை, கைத் தொலை பேசி பாவனை, இணையத்தள பாவனை, மது, புகைத்தல் பாவனை, பாடசாலை நேரங் களில் ஜோடிகளாவும் குழுக்களாகவும் சேர்ந்து பொழுதுபோக்கு இடங்களுக்
B3
நங்கை

Page 38
கும், மறைவிடங்களுக்கும் சென்று பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கை களில் ஈடுபடுதல், சட்டத்திற்குப் புறம் பான கருக்கலைத்தல் போன்றவை இளம் சமுதாயத்தினரிடையே புரை யோடிப்போயுள்ள விடயமாகும்.
க6
மாவ
யாழ்மாவட்டம் கலை கலாசார பண்பாடுகளைப் பாரம்பரியமாக கொண்டு ஏனைய மாவட்டங்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது. பல கல்விமான் களையும், அறிஞர்களை யும், பல்துறைசார் நிபுணர்களையும், சமய வித்தகர்களையும் தத்துவஞானி களையும் தன்னகத்தே கொண்ட பிரதேசத்தில் இன்று கலாசார சீரழிவு கள் வரம்பு மீறித் தொடர்ந்து கொண் டிருப்பது வருந்தக்கூடிய விடயமாகும்.
இந்நிலை தொடர்ந்து கொண்டு செல்லுமேயானால் வருங்காலத்தில் நாம் சமுதாயத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். இத்தகைய சீரழிவிலிருந்து மீளவும் சிறந்த இளஞ் சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு பெற்றோரின் பங்கும், அதிபர் ஆசிரியர் களின் வழிகாட்டலும் மாணவர்களுக்கு மிகத் தேவையான தொன்றாகும்.
இத்தகைய செயல்களைக் கட்டுப் படுத்தும் அடித்தளமாகவும் ஆரம்ப
இதழ் - 36/ 2011

முயற்சியாகவும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளினால் இதுவரை 15 பாடசாலைக்கு மேற்பட்ட மாணவர்கள் பால் நிலை தொடர்பான வளவாளர்களினால் நெறிப்படுத்தப் பட்டும், தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டும், உரிய சட்ட நெறி முறைகளை அறிந்தும் உளவள ஆற்றுப்படுத்தல் மூலம் மனநிலை ஒருமைப்பட்டு மிகுந்த பயனைப் பெற்றுவருகின்றனர்.
இக்கருத்தரங்கில் மகப்பேற்று வைத்திய நிபுணர், சட்டத்தரணி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உளநல ஆலோசகர்கள், குடும்பல நல உத்தியோகத்தர்கள் என பல வள வாளர்கள் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துரை களை வழங்கியும், மாணவர்களிடையே எழும் சந்தேகங்களுக்கான கேள்வி களுக்கு உரிய பதில்களையும் விளக் கங்களையும் அளித்து மாணவர்கள் மத்தியில் சுமூகமான ஓர் உறவை ஏற்படுத்தியும் கல்விச் செயற்பாடு களில் மேன்மையடையவும் வழிவகுக் கின்றனர்.
மாண
நங்கை

Page 39
- -: கர்கா: 5 காய்
எதிர்காலத்திலே இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக உருவாக்கவும் நாட்டில் ஓர் நற் பிரஜையாகத் திகழவும் இது போன்ற விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் வழி கோலும் என்பதில் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் இச்செயற்பாடானது ஓர் எடுத்துக்காட்டாக அமைவதோடு பாட சாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி வலய, கோட்ட மட்ட அதிகாரிகளினாலும் மிகவும் விரும்பி வரவேற்கப்படும் பயனுள்ள விழிப்புணர்வுக் கருத்தரங் காக அமைகின்றது. இக்கருத்தரங் கானது மேலும் பல பாடசாலைகளில் தொடர் செயற்பாடாக நடாத்தப்பட வுள்ளது.
மேலும் எமது நிலையத்தி னால் சிறுவர்கள் மேம்பாட்டுக்காக மேற் கொள்ளப்படும் செயற்பாடுகளாவன:-
-- Eா- 811 11 2'!'
+ பாடசாலை மாணவர்களுக்கும் நலன்புரி நிலையங்களிலுள்ள சிறுவர் களுக்கும் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள், போசாக் குணவு வழங்கல் சிறுவர்கள் மத் தியில் வாசிக்கும் திறனை ஊக்கு விக்குமுகமாக சனசமூக நிலையங் களுக்கு கதைப்புத்தங்கள் வழங்கல்.
CWD CEI CE FO சOMEN AS மகளிர்

ப்3ாப் 10 12:29:-
4 சர்வதேச சிறுவர் தினம் வருடம் தோறும் ஒக்டோபர் 1ம் திகதி கொண் டாடப்பட்டு வருவதோடு சிறுவர்களுக்கு இடையே போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப் படுவதும் உண்டு.
பா: 15 E -
4 மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப் புத் திட்டமாக 10 வறிய மாணவர்களை கிராம அலுவலர், பாடசாலை அதிபர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் தெரிவு செய்து மாதாந்தம் 1000/= ரூபா வழங்கப் படுகிறது.
* போசாக்குத் திட்டம் - கர்ப்பிணித் தாய் மார், சிறுவர் ஆகியோருக்கென தயாரிக் கப்பட்ட "சக்தி" எனும் போசாக்கு நிறையாகாரம் வழங்கப்படுகின்றது. இப் போசாக்கு மா தெரிவு செய்யப்பட்ட கிராம மக்கள், முன்பள்ளிச் சிறுவர் களுக்கு வழங்கப்படுகின்றது.
CIND - TRE FOR WOMEN ARN DEVIION I மகளிர் அலவிருத்தி

Page 40
மகளிர் அபிவிரு
கே.கே.எஸ் யாழ்ப்பா 021 222

| ட க ப்பட்ட- டாக ல தா -
த்தி நிலையம் 5. றோட், ரணம். 4398