கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காற்று வெளி 2002.04

Page 1
இதழ்

] வெளி
ஏப்ரல் - 2002 நன்கொடை ரூ.10

Page 2
மாற்று வெளி
இதழ்எப்ரல் 2007 இந்த காலை 10
நினைத்தபோது வரும் இதழ்
Bார்
ரா : பா
இதர கு? மே 135 A8.
2 இ த இ த் இஇஇ இஇ 13
8.தாலம்
8, 3:18
மற்றவை தி10:0ானவை.30: 807 அக்னன் கோனார் தாம் துதர
தன் 23ம் 8
தம்: பத்துதிர்தாத
இத்தாளர் 13காபர் திம்மானந்துரு கோத்ரா: 92
22.5.99

மீண்டும் ஒரு சந்திப்பு,
அதிசயமாய் நிகழ்ந்திருக்கிறது.
வழமைபோல்பலரிடம் கேட்டிருந்தோம்.
அடுத்த இதழ்களில் நிறையவே எதிர் பார்க்கலாம்.
காத்திரமான வாசகர்களைப் | பெற்றுக் கொண்டதும்
விமர்சனத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்வோம்.
அதுவரை அடுத்த இதழிலும் சந்திப்போம். நன்றியுடன் 624ாப்டி.

Page 3
பா.பா
பாடசாலையில் இரண்டாம் முறை யாக மணியடித்ததும் அவசரமாக வகுப்புக் குள் நுழைந்த நான், என் வகுப்பு மாணவர் களை ஒருமுறை சுற்றிப் பார்வையிட்டேன். அன்று வழக்கத்தைவிடமாணவர் தொகை அதிகமாகவே இருந்தது.
அதற்குக் காரணமில்லாமலும் இல்லை. அன்று இரண்டாந் தவணைப் பரிட்சையின் ஆரம்ப தினம் என்பது சொல்லாமலே விளங்கியது. மாணவர் களின் வரவைக் கண்காணிப்பதற்காக எண்ணத் தொடங்கினேன். நாற்பதாவது மாணவனோடு எண்ணிக்கை முற்றுப் பெற்றுக் கொண்டிருந்த சமயம், காலடி யோசை கேட்டுத் திரும்பினேன்.
மூன்று மாத காலம் வகுப்புக்கு வராமல் பிரத்தியேக 'லீவு' வாங்கியிருந்த மணிகூட புத்தகப்பை, பேனா, காகிதம், கலர்ப் பெட்டி இவற்றுடன் ஆறுதலாக வகுப்புக்குள் அடியெடுத்து வைத்தான்.
அவனுக்கும் இது புதிய அனுபவ மில்லை. எனக்கும் புதிதல்ல. ஆகவே இருவரும் மெளனமாகப் பார்வை பரி மாறிக் கொண்டோம். பணக்கார வீட்டுப் பிள்ளையவன்.!
"உத்தியோகம்
பெறவேண்டும், 03

லேஸ்வரி
பரிட்சை சித்தியடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதோ அறிவுக்குப் படித்தால் போதும்.”
-அவனுடைய வரவில் ஒழுங் கீனத்தை முறையிட்டபோது அவனுடைய அப்பாதான் இப்படிக் கூறினார். கரியைக் காசாக்கிப் பெற்ற பணத்தைக் கொண்டே உலகத்தை அடிமைப்படுத்தி விடலாம் என்று நினைக்கும் பிரபல விறகுக் கொந்த ராத்துக்காரர் அவர்.
தவணை முற்றாகப் பாடசாலைக்கு வராவிட்டாலும் பாதகமில்லை. பரீட் சையில் பெரிய சைபர் உருட்டி வைத்தா லும் பரவாயில்லை. வெற்றுத்தாளாகவே விடைத்தாளைக் கொடுத்தாலும் கவலை யில்லை. நானும் பரிட்சை எழுதினேன் என்ற கௌரவம் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கும் மணியைப் போல பல மாணவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.
இருந்தும் மணியைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. எவ்வளவோ சிரமத்துடன் அடக்கிக் கொண்டேன். வருடம் முற்றாக விழித்திருந்து படித்து விட்டுப் பரிட்சை எழுதிக் கோட்டடிக்கும் மாணவர் குழாத்தைவிட மணி ஒன்றுங் குறைந்தவனல்ல என்பதுதான் என்
காற்றுவெளி - 4

Page 4
தாழ்மையான அபிப்ராயம்.
காகிதமும் பேனாவும் வைத்துக் கொண்டு வினாப்பத்திரத்திற்காக காத் திருந்த மாணவர்களை மீண்டும் ஒரு முறை நோட்டம் விட்டேன். எல்லாரிட மும் பேனா இருக்கிறதா என்று பார்ப்பதற் காக வகுப்பைச் சுற்றி நடந்தேன்.
என்னுடைய வகுப்பைப் பொறுத்த வரையில் ஒன்றிரண்டு பேரைத் தவிர ஏனையவர்கள் அத்தனை பேரும் பசை யுள்ள பெற்றோருக்குப் புதல்வராகப் பிறக்கும் பேறு பெற்றவர்கள்.
தரத்தின்படி பார்த்தால் மூன்றே மூன்று மாணவர்கள்தான் ஏழைகள். அவர் களிலும் இளங்கோ மிகவும் ஏழை. வழமையாகப் பென்சில் கொண்டு வருவதற்குக் கூடக் கஷ்டப்பட்டு நான் உதவி செய்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. வகுப்பில் சுட்டியான மாணவன். எந்த விஷயத்தையும் சுலபமாகக் கிரகிக்கும் ஆற்றல் மிக்கவன்.
இரண்டு நாட்களுக்கு முன் பேனா கொண்டு எழுதாதவர்கள் பரிட்சைக்கு அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று பிரின்சிபல் இட்ட கட்டளையை உறுதிப் படுத்துவதற்காக நான் ஒவ்வொரு மாணவன் அருகிலும் நெருங்கிப் பார்வை யிட்டேன்.
இளங்கோவை நெருங்கியதும் என் கண்கள் வியப்பால் அகல விரிந்தன. அவன் கையில் பிடித்திருந்த பதினைந்து ரூபாய் மதிப்பிடக்கூடிய 'சுவான்' பேனா தான் காரணம்.
அவனுடைய நேர்மையை விளம் பரப்படுத்த எனக்கு யாரும் அத்தாட்சிப் பத்திரம் தரத் தேவையில்லை. ஆனால் பேருக்குப் பொருத்தமாகப் பிச்சை காற்றுவெளி - 4

எடுத்துக் குடும்பம் நடத்தும் பிச்சை யாண்டி தன் பிள்ளையை மட்டும் இளங்கோவாக்கி இப்படியொரு விலை யுயர்ந்த பேனாவையும் வாங்கிக் கொடுக் கக்கூடிய அளவுக்கு அதிர்ஷ்டம் செய்திருக் கவில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.
நான் அவனுடைய கையில் இருந்த பேனாவை வாங்கி அதைத் திருப்பித் திருப்பிப் பார்வையிட்டேன்.
அப்போது அவன் என்னைப் பார்த்த பார்வை "ஏழைகள் உயர்ந்த பொருட் களைப் பாவிப்பதற்கு உரிமையில் லையா..?” என்பது போலப்படவே, நான் மெளனமாகப் பேனாவை அவன் கையில் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து என் பரி சோதனையை ஆரம்பித்தேன்.
- எனக்கு அதிக சிரமம் வைக்கக் கூடாது என்ற நினைவில் மாணவர்கள் எல்லா ஆயத்தத்தோடும் வந்திருந்தார்கள். குறிக்கப்பட்ட நேரத்தில் பரிட்ஷை வினாத் தாட்களை எடுத்துக் கொடுத்துவிட்டு வகுப்புக்கு முன்னால் நாற்காலியை இழுத்து நடுவில் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.
அங்கே மரணத்தின் அமைதி நிலவ மாணவர்கள் விடையெழுதுவதில் ஈடு பட்டிருந்த சமயம் "கிறிச் கிறிச்” என்ற சப்தத்தின் ஒலி என்னைக் கவர்ந்தது. வகுப்புக்குள் அவசரமாக நுழைந்து கொண்டிருந்த பிரின்சிபலைக் கண்டதும் நான் எழுந்து நின்றேன்.
என்னைத் தொடர்ந்து எழுந்து நின்ற மாணவர்களை இருக்கும்படிகையமர்த்திக் காட்டிய அவர் என் காதோடு காதாகக் கூறிய விடயம் என்னைத் திடுக்கிட வைத்தது.
04

Page 5
...இல்லை சேர், என்னால் இதை நம்பவே முடியாது. அவன் அப்படியான மாணவன் இல்லை” என்று வாய்மட்டும் வாதாட... ஆரம்பத்தில் என் மனதில் என்னையறியாமல் துளிர் விட்ட சந்தேகம் இப்போது கிளைவிட்டுத் தளைக்க ஆரம் பித்தது.
எதற்கும் ஒருமுறை விசாரித்தால் தான் என்ன...? என்று அபிப்ராயம் கூறிய பிரின்சிபலின் சொல்லைத் தட்ட முடியாமல் அவனை அழைத்துக் கொண்டு காரியாலய அறைக்குள் நுழைந்தேன்.
"உண்மையைக் கூறு தம்பி! உனக்கு இது எப்படிக் கிடைத்தது?” என்று நான் மூன்றாவது முறையாகக் கேட்டகேள்விக்கு மூன்றாவது முறையாக "நான் திருட னில்லை! நான் திருடனில்லை! நான் திருடனில்லை சேர்!” என்று ஒப்புவித்த அவனைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது.
அவனை நான் நம்பத்தான் செய் கிறேன். ஒரு மயிரிழைகூட அவன் மேல் எனக்குச் சந்தேகம் இல்லை.
ஆனால்... ஆமாம்! ஆனால் மற்றவர் கள் அவனைத் திருடனாகவும், என்னைப் பைத்தியமாக்கவுந்துணிந்து நிற்கும்போது நான் விசாரணை நடத்தாமல் எப்படி இருக்க முடியும்?
"இளங்கோ நீதிருடவில்லை என்பது எனக்குத் தெரியும், பிரின்சிபலிடம் கூட எடுத்துக் கூறினேன். ஆனால் அவருக்கு யாரோ உன்னைப் பற்றித் தவறாகக் கூறி யிருக்கிறார்கள். ஆகவே உனக்கு இந்தப் பேனா எப்படிக் கிடைத்தது என்பதை மட்டும் கூறிவிடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.”
நான் அவனை மீண்டும் பரிவோடு 05.

வினவினேன். "என்னை யார் நம்பா விட்டாலும் உங்கள் ஒருவருக்கு நான் திருடனில்லை என்பது தெரிந்தால் போதும். ஏழைகள் எப்படியாது திருடா மல் கெளரவமாக வாழ வேண்டும் என்று நினைத்தால் அந்த எண்ணத்தில் மண்ணைத் தூவிவிடுகிறது இந்த உலகம், சேர்! நான் சத்தியமாக இந்தப் பேனாவைத் திருடவில்லை. ஆனால் இது எப்படி எனக்குக் கிடைத்தது என்பதை மட்டும் கூறமாட்டேன்! கூறவே மாட் டேன், சேர்! அதைக் கூறுவதைவிட நான் திருடினேன் என்ற பெயரோடு வாழ்ந்து விடுகிறேன்.
அதை உலகம் கௌரவிக்கிறது சேர்.”
இவ்வளவு அழுத்தமாகப் பேசிய அந்தப் பதினான்கு வயதுப் பையனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
அதற்கு மேலும் அவனைத் துன் புறுத்த விரும்பாமல் பிரின்சிபலிடம் சென்று விடயத்தைக் கூறினேன்.
"இப்படியான ஏழைப் பையன்களுக் கெல்லாம் இவ்வளவு உயர்ந்த கல்லூரியில் இடங்கொடுத்தால் இப்படித்தான் நடக் கும்... சரி... இதை நானே விசாரிக்கிறேன்” என்று பொறுப்பை அவர் ஏற்றுக் கொண் டார். நான் வெளியே அடியெடுத்து வைக்க வில்லை
"இல்லை... சேர்... நான் திருடவே யில்லை சேர்... என்ன தண்டனை வேண்டு மானாலும் அளியுங்கள். ஆனால் திருடன் என்று மட்டும் கூறாதேயுங்கள் சேர்!”
-அடியைப் பொறுக்க மாட்டாமல் வீரிட்ட அந்தச் சிறுவனை நினைந்து மனம் ஏங்கியது.
பரிட்சை எழுதமுடியாத தண்ட னையை அந்தப் புதுப்பேனா அவனுக்கு வாங்கித் தந்திருந்தது. முன் விறாந்தையில்
காற்றுவெளி - 4

Page 6
அவன் ஒரு காட்சிப் பொருளாக நிறுத்தப் பட்டிருந்தான். அவன் கண்களில் இருந்து நீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது.
முதலாவது பாடம் எழுதி முடிய மணி அடித்ததும் அதுவரை புற்றுக்குள் ஈசல் போல் இருந்த மாணவர் குழாம் புறப்பட்டு அவனைச் சுற்றி மொய்த்துச் கொண்டது.
அவர்களைச் சில ஆசிரியர்களின் உதவியோடு அப்புறப்படுத்திக் கொண் டிருந்த சமயம் எங்கள் அதட்டலுக்குச் சிறிதும் செவி சாய்க்காமல் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அருள்மொழி. அருள்மொழி டாக்டர் சுந்தரத்தின் மகன்.
"அருள்மொழிக்கு நாங்கள் கூறியது கேட்கவில்லையோ?” என்றேன் அரை குறையாக.
பணக்காரப் பிள்ளையாயிருந்தாலும் தன் பண்பு, அன்பு, அறிவு இவற்றால் ஒரு தனிச் செல்வாக்கை அவன் இந்தக் கலா சாலையில் பெற்றிருந்தான்.
"என்னை மன்னிக்க வேண்டும் சேர் என்னிடம் கூட இப்படி ஒரு பேனா இருக் கிறது. இதே நிறம்! இதே மார்க்... உங்கள் அபிப்ராயப்படிப் பார்த்தால் நானும் ஒரு திருடன்தான்! ஆனால் என்னை நீங்கள் அடிக்கவில்லை. விசாரணை செய்ய வில்லை, கண்ணீர் விட வைக்கவில்லை ஏன்..?
சிரேஷ்ட வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அவன் உணர்ச்சியோடு பேசிவிட்டு எங்கள் பதிலுக்காகக் காத்து நின்றான்.
"அருள்மொழி, உன்னிடம் யாரும் இப்போ நியாயம் கேட்கவில்லை. உன் காற்றுவெளி - 4

இவன். தித்தரும் தமக்கு இப்பட
அப்பா டாக்டர். அவருக்கு இப்படி ஒரு பேனாவாங்கித்தரும் சக்தியுண்டு. ஆனால் இவன்..? இவனைத் தண்டித்ததில் என்ன தவறு அருள்மொழி? மாணவர் தலைவன் என்ற நிலையில் உனக்குக் கேட்க உரிமை யுண்டு. என்னுடைய பேனாவை இவன்.
தான் திருடியிருக்கிறான்.”
இதுவரை தன் அறைக்குள் இருந்த பிறின்சிபல் வெளியே வந்து அருள் மொழிக்கு நியாயம் காட்டினார்.
"சேர். என்னை மன்னிக்கவேண்டும். உங்கள் பேனாவுக்கு ஏதாவது அடையா ளம்...? தன் வாதத்தைத் தொடர்ந்து நடத்தினான் அருள்மொழி.
"அருள்மொழி, நீ மாணவர் தலை வன் என்ற முறையில் உன்னை இதுவரை பொறுத்து வந்தேன். நீ உன் அப்பாவின் செல்வாக்கைக் கொண்டு என்னை எதிர்க் கத் துணிந்துவிட்டாய், இருந்தாலும் உன் முன்னிலையில் நான் இந்தக் களவை நிரூ பிக்கத்தான் போகிறேன். என் பேனாவின் அடிப்பாகத்தில் என் பெயரின் தலை யெழுத்து பொறிக்கப் பட்டிருக்கிறது.”
ஆத்திரத்தில் பேசினார் பிரின்சிபல்.
"சேர்! என்னை மன்னிக்கவேண்டும் என்று மீண்டும் பணிவாக வேண்டுகிறேன். இதோ என்னிடம் இருக்கிறது உங்கள் பேனா. உங்கள் அடையாளம் கூட இதோ.”
அவன் முடிக்கவில்லை. போனவை அவன் கையிலிருந்து 'லபக்' என்று பிடுங்கிய பிறின்சிபல் அதைப் பார்த்துவிட்டு... அதே சமயம் தன் சட்டைப் பையிலிருந்த இளங்கோவின் போனவை எடுத்து அவனிடம் கொடுத்து அவனை வகுப்புக்கு அனுப்பிவிட்டு
"அருள்மொழி, நீ ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டதாகப்
06

Page 7
பெருமைப்படுகிறாய். நான் இளங்கோ விடம் இருந்து பேனாவைப் பெறுவதற்கு முன் நீ அவனைத் தப்ப வைப்பதற்காக உன் பேனாவை அவனிடம் கொடுத்து மாற்றிவிட்டு வெறும் நாடகம் போடுகிறாய்.
"யாராக இருந்தால் என்ன ? குற்றம் குற்றமென்று ருசுப்படுத்தப்பட்டுவிட்டால் தண்டனை ஒன்றுதான். பாடசாலையிலி
ருந்து நீக்கப்படுவார்கள்.”
- "அதற்கு நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் ஒரு உண்மையை மட்டும் உங்களி டம் ஒப்புவிக்க விரும்புகிறேன்.
"சேர் நான் என்னை ஒரு டாக்டர் மகன் என்று எப்போதுமே நினைத்து நடந் தது கிடையாது. நீங்களே என்னை ஒரு உதாரணமாக எடுத்து ஏனைய மாணவர் களுக்குப் பெருமையாகப் பேசுவீர்களே.
"இன்று என் நடத்தை சற்று அளவுக்கு அதிகமாகப்பட்டிருந்தால் என்னை மன் னிக்க வேண்டும் என்று மீண்டும் பணி வோடு வேண்டுகிறேன்.
"இளங்கோ ஒரு ஏழைப் பையனாக இருந்தும் மிகவும் நேர்மையும், கண்யமும் நிறைந்தவன் என்பது அப்பாவுக்குத் தெரி யும். படிக்கக்கூட வகையில்லாத நிலையில் நான் சிபார்சு செய்ததின் பேரில் அப்பா அவனுக்குப் பாடசாலை ஓய்ந்த வேளை களில் ஆஸ்பத்திரியைச் சுத்தஞ் செய்யும் பணியை ஒப்புவித்திருந்தார். அதனால் பெற்ற ஊதியத்தைக் கொண்டு இளங்கோ தன் படிப்புக்குச் செலவிட்டு வந்தான்.
“தோட்டி வேலை பார்த்துப் பேனா வாங்கினேன் என்ற உண்மையை ஒப்புக் கொள்வதைவிடத் திருடன் என்ற பெயர் அவனுக்குக் கெளரவமாகப் பட்டிருக்கிறது.
"நேற்று என்னிடம் வந்து ஒரு பேனா வாங்கித் தரும்படி கெஞ்சிக் கேட்டதைப் 07

பார்த்துக் கொண்டிருந்த அப்பா அவனுக் குத் தன் செலவில் பேனா வாங்கித் தந்தார்.
"ஏழை என்ற ஒரு காரணத்துக்காக நீங்கள்கூடத் தீரவிசாரியாமல் அவனுக்குத் திருட்டுப் பட்டங்கட்டிவிட்டீர்கள்.”
"அருள்மொழி, எனக்கு உன்னுடைய விளக்கம் தேவையில்லை. என்னுடைய பேனா இப்போது உன் கையில் இருக்கிறது. யாராக இருந்தாலும் தண்டனை ஒன்று தான்.”
"சேர்! கொஞ்சம் பொறுங்கள். முதலில் இதைப் படித்துப் பாருங்கள். அதற்குப்பின் என்ன தண்டணையையும் ஏற்க நான் சித்தமாக இருக்கிறேன்.”
கடிதத்தை விரித்துப் படித்த பிரின் சிபலின் முகத்தில் பிரேதக்களை தட்டியது.
"அருள்மொழி, என் அறைக்குள் வா.” என்றவர் என் பக்கந் திரும்பி "இராசு நீயுங்கூட” என்றார்.
நானும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றேன்.
"சேர், நான் எப்போதும் உங்கள் கீழ்ப்படிவுள்ள மாணவன்தான். இதோ உங்கள் பேனா இருக்கிறது. ஒருவிதமான விசாரணையுந் தேவையில்லை. உங்கள் கெளரவத்தை நான் காப்பாற்றியே தீருவேன். யாருடைய பேனா என்று தெரியாமல் கீழே கிடந்து நான் கண்டெடுத் ததாகக் கூறிவிடுகிறேன். நான் வருகிறேன் சேர்.”
அருள்மொழி நிதானமாகக் கூறி விட்டு வகுப்புக்குப் போய்விட்டான்.
பிறின்சிபல் கையில் பிடித்திருந்த துண்டுக் கடிதம் மின் விசிறியில் படபடத்
தது.
காற்றுவெளி - 4

Page 8
' த்துல விட்
“இராசு, என்னை இறைவன் நல்லா கத் தண்டித்துவிட்டான். அருள் மொழி தான் மிகவும் நல்ல மாணவன் என்பதைக் கடைசிவரை நிருபித்துவிட்டான். இதைப் படித்துப் பார்!”
கை நடுங்க அவர் நீட்டிய கடிதத்தை வாங்கிப் படித்தேன்.
"இத்தால் அறிவிப்பது, ரூபா பதி னைந்து பெற்றுக் கொண்டு இந்தப் பேனாவை அருள்மொழிக்கு விற்று விட்டேன்- சீனிவாசகம் மகேந்திரன்.”
எனக்கு என் கண்கள் பொய்த்தன. உடல் பதற, உள்ளம் எதையோ எல்லாம் சிந்திக்க, பிறின்சிபல் சீனிவாசகத்தை உற்றுப் பார்த்தேன்.
"இராசு, உன்மேல் எனக்கு என்றுமே ஒரு தனி அன்பு. நீ எனக்கு ஒரு உடன் பிறந்தவன் மாதிரி. இந்த விஷயத்தை உன் உயிர் உள்ளவரையும் யாரிடமும் கூறி விடாதே. பேனை தவறிது என் குற்ற மாகவே இருக்கட்டும். இளங்கோவிடம் நான் இரகசியமாக மன்னிப்புக் கோரு
கிறேன். உன்னை நம்பட்டுமா?”
பரிதாபமாக என்னைப்பார்த்து வின விய அவர் கையில் அடித்து "சத்தியமாக இதைத் திருடியது உங்கள் மகன் என்ற உண்மை என் உயிர் உள்ளவரை வெளி வராது” என்று கூறிவிட்டு அவரைப் பார்க் கும் சக்தியற்று வெளியே நடந்தேன்.
நன்றி!
திருகோணமலைத் தமிழ் எழுத் தாளர் சங்க
முதலாமாண்டு மலர் 1961.
காற்றுவெளி - 4

ஊருக்கொரு சுகாதார நிலையம் சுற்றுப்புறம் மட்டும் சுகாதாரம் இன்றி.
கண்கள் மூடியும் உறங்கவில்லை இதயம்
கனவு.
பொ ன் . கு மா ர்
அமைதி வேண்டி நடந்த ஊர்வலத்தில் வன்முறை.
உயர்கிறது பொருள்களின் விலை உயரவில்லை தரம்.
சமாதானப் புறா சிறைக்குள் வெள்ளாடை விதவை.
றை :
கொக்கே சைவமாக மாறிடு பாவம் மீன்.
ஒரே பாட்டு அலுப்புத் தட்டவில்லையா குயிலே !
08

Page 9
மெளன ராத்திரிகள்...
இறந்து இறந்து பழகிப்போன எங்கள் இரவுகளில் இன்னும் நாம் விலக முடியாமல் வாழ்ந்துகொண்டே(?)
பயந்த இரவுகளாய் இன்னும் எத்தனை யுகங்கள் கழிவதாய் எண்ணுகிறார்கள்.
நிம்மதிக்காய் உலகினில் பிறந்தோம் என்பது பழமொழி. நிம்மதி அறுப்பதற்காய் குழந்தைகளே இனி - இனி ஜனனியுங்கள்.
மெளனமான இருண்ட இரவுகள் எங்கள் முன் கொலைகாரனாய்.. செத்துப்போகும் நினைவுகள் சொல்லாமல் எந்தக் காலையும் எந்த மாலை புலர்வதுமில்லை - மறைவதுமில்லை.
இப்பொழுதெல்லாம் எங்கள் இரவுகள் மெளனமாய்த்தான் இருளுகின்றன. சின்னவர் - பெரியவர் - கிழவிகள் - விதவை எல்லோரும் விழிபிதுங்க... மெளனமாய்.
இளைய அப்துல்லாஹ் நன்றி - அஆஇ.
09

யும்
-4ம்
பகள்
காற்றுவெளி - 4

Page 10
ஒரு முத்து இர.
வாழ்ந்து கைப்பதுதான் வாழ்க்கை. வாழாமலே கைப்பது வாழ்க்கையேயல்ல.
"வெள்ளத்துக்கு எதிர் திசையில் நீந்துவதுதான் வாழ்க்கை” இப்படி யாரோ எழுதியிருந்தார்கள். ஆர்.? ஆர்..?”
ஓ... ஓ... காண்டேகர் 'சுகம் எங்கே' என்ற தனது நாவலில் எழுதியிருந்தார்.
ஞாபகம் இருக்கு. ஆனால்..
நீச்சலடிச்சு நீச்சலடிச்சு கையும் ஓய்ஞ்சு காலும் ஓய்ஞ்சு மனமும் ஓய்ஞ்சு போச்சு. இனி?
மழைவரும் என்று உழுது விதைத் தவன் மழையே இல்லாமற் காய்ந்த பயிரைப் பார்ப்பதுபோல் எனது 'சேர்டி பிக்கற்றுக்களை அடிக்கடி பார்த்துக் கொள்ளும் பொழுது எனது மனத்திலே எத்தனை கோட்டைகள் வெடித்துச் சாம்ப ராகி விட்டது என்பது கண்களை நீராட்டுகிறது.
நான் பள்ளிக்கூடக் காசுகட்ட ஐயாவைக் கேட்கும்போதெல்லாம் ஐயா சொல்லுவார் "நீயென்ன படிச்சுக் கிழிக்கப் போறியே?
கரைச்சல் குடுக்காமல் போடா!”
நல்ல தீர்க்கதரிசனம். ஆனால் நான் காற்றுவெளி - 4

கருவி
பாசரத்தினம்
படிக்கச் செலவிட்ட காலத்தை வேறே எங்கே செலவழித்திருக்கவேணும்..? அதை அவர் சொல்லித்தர மறுத்துவிட்டார். ஏனென்றால், அது அவருக்குத் தெரியாது.
இன்று எல்லோருக்கும் தெரியும். எது எமக்கு வாழ்வைத் தருகிறது என்று. பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்.
அது-அதுதான் மண்!
வானத்தை நம்பி எமது இரத்தத்தை வேர்வையாக்கும்போது மண் சிரிக்கிறது. செழிக்கிறது.
எம்மை மறந்து நாம் நீண்ட உறக் கத்தில் இருக்கும் பொழுது, எம்மை அணைக்கிறது. மறைக்கிறது.
அந்தமண் - எல்லோருக்கும் சொந்த மாக இருக்கிற அந்த மண்.
இப்பொழுது எனக்கில்லை. என்னி டம் காசு இல்லாதபடியால் காசு வைத் திருக்கிற எவனெவனோ எல்லாம் தன் காலடியுள் வைத்திருக்கிறான்! நான்?
எனது 'பொக்கற்றுகளைத் தடவிப் பார்த்ததில் பதினைஞ்சு சதம் கிடைத்தது. இன்னும் பத்துச் சதம் வேணும் 'பிளேயின் ரி' குடிக்க, அந்த ஆசையை மறந்துவிட வேண்டியதுதான்.
10

Page 11
வெறுங்குடலுக்குள் பச்சைத் தண் ணீர் குளிர்ந்து கொண்டிறங்கியது. அப் பொழுது ஒரு வேதனை ? எனது கால்கள் நடந்து கொண்டேயிருக்கிறது. ஆனால்,
அதற்கொரு லட்சியம் கிடையாது.
என்னிடம் லட்சியம் இருந்தது. அது இப்பொழுது இல்லை. இப்பொழுது இருக்கிற ஒரே லட்சியம் நான் தினசரி ஒரு வேளையாவது சாப்பிட ஒரு வேலை. அது எடுபிடி வேலையாக இருந்தாலும் பாதக மில்லை.யாருடைய காலைக்கழுவியாவது காசு வாங்குவதற்கு நான் தயாராக இருந்தேன். ஆனால், எந்த வேலைக்குமே நான் லாயக்கில்லாதவன் என்று உதறித் தள்ளுகிறார்களே, அது ஏன்?
சிறுகல்லைத் தூக்கிப் போடுவதற் குரிய சக்தி எனக்கில்லையாம். ஆனபடி யால் மண்வெட்டி விவசாயம் செய்ய என்னால் முடியாது என்று எனக்குக் காணி தர மறுத்துவிட்டார்கள் காணி வழங்க 'இன்ரவியூ' வைத்த பெரியவர்கள்.
எனக்கு அது சந்தோஷம்.
ஏனென்றால் என்னுடைய பலவீ னம் ஒன்று. காணியைப் பெற்றபின் திருத் திச் சீர்படுத்தப் பணமில்லையென்பது முக்கிய மான அடுத்த காரணம்.
என்னுடைய கைகள் என்னை அறி யாமலே 'பொக்கற்றுக்குள் நீச்சலடித்தது.
தட்டுப்பட்டது அதே பதினைஞ்சு சதந்தான்.
என்னிடம் பதினைஞ்சு சதம் இருக் கிறது! திருப்தி, அதைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டேகற்பனையில் ஒருசில மணி நேரத்தையாவது கழித்துவிடலாம்,
பிறகு.

வீட்டிலை எப்படியாவது உலை வைப்பார்கள் தானே?
'பப்ளிக் லைப்ரரிக்குள் நுழைந்து பத்திரிக்கைகளைத் புரட்டினேன்.. தலை யைச் சுற்றியது. மெதுவாகப் புறப்பட்டு முனியப்பர் கோயிலுக்குப் போனேன். யாரோ நேர்த்தி வைத்துப் பொங்கினார் கள். நான் கோட்டை முகப்புச் சுவர்க் கட்டில் இருந்தேன்.
எனக்கு ஒரு நப்பாசை. பொங்கு பவர்கள் படைக்கும் பொழுது எனக்கும் ஒரு படி தருவார்கள்.
எனக்கு முன்னிருந்த சிறுகற்களை என்னை அறியாமலே பொறுக்கிக் கோட்டை அகழிக்குள் எறிந்து கொண்டி ருந்தேன். யாரோ எனக்கு அருகில் வருவது போன்ற சலனம் ஏற்பட்டது.
வந்தவர் நல்ல வசதியான இடத்து ஆள் போலும் எனக்கருகில் சிரித்துக் கொண்டிருந்தார். நானுஞ் சிரித்தேன்.
"தம்பி,
என்ன கோயிலுக்கு வந்தனீரோ?”
"இல்லை நான் சும்மா..” எப்படிப் பதில் சொல்வதென்று எனக்குத் தெரிய வில்லை. அவர் என்னென்னவோ எல்லாம் பேசினார். நானும் எனக்குத் தெரிந்தவரையில் அவருடன் அளவளா வினேன்.
"சிறி"க்கு நூறு ரூபா எண்டு வரி போட்டான்கள். 'சிக்ஸ் சிறி' கார் வைச்சி ருக்கிறவன் எல்லாம் காரை என்ன வித்தே போட்டான்கள். முன்னையப் போலத் தான் இப்பவும் காரிலை போறான்கள். 'பிறிஸ்ரல் சிகரட்' பிடிக்கிறான்கள், குடிக் கிறான்கள். அவங்கள் எப்பவும் போலைத்
காற்றுவெளி - 4

Page 12
தான் இருக்கிறார்கள். கஷ்ரப்படுவது ஏதோ எங்களைப்போல ஏழைகள்தானே? அவர் சொன்னார்.
"உண்மைதான். எங்களைப் போல ஆக்கள், அரசாங்கம் எவ்வளவு சம்பள உயர்வுத் திட்டத்தைப் போட்டாலும் போட்ட திட்டம் அப்படியே இருக்க பழைய சம்பளத்தையே இப்பவும் எடுத்துக் கொண்டு சீவியம் நடத்திற்து என்றால் எங்கடை உழைப்பு ஆரிட்டைப் போகுது?
கட்டுப் பாட்டு விலைக்கு இல்லாத சாமானெல்லாம் கறுப்பு விலைக்குக் கொடுத்துக் கொள்ளை லாபம் அடிக்கிற வன்கள் ஏன் கஷ்ரப்படப் போறான்கள்?' நான் ஆத்திரத்துடன் பேசினேன்.
"இதெல்லாம் ஆற்றைபிழை, ஆளத் தெரியாதவன்கள் ஏன்றால் விட்டிட்டுப் போகவேண்டியதுதானே? ஏன் எங்களைப் போட்டுக் கஷ்டப்படுத்தவேணும்?”
அவருடைய பேச்சின் மாற்றம் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் உடனடியாக என்னை உஷார்படுத்திக் கொண்டேன்.
“சீ, ஆளத்தெரியாதவன்கள் எண்டு சொல்லக்கூடாது. அவன்கள் வந்தபிறகு நாங்கள் கஷ்டப்பட்டாலும் நாடு எவ்வளவோ முன்னேறியிருக்கு.” .
- "என்ன முன்னேறியிருக்கு? தினம் சாப்பாடில்லாமற் சாகிறதுதான் முன்னே றியிருக்கு. சனத்தைப்பற்றி இவன்களுக்கு ஏதாவது கவலையிருக்கா? ஏதும் ஒரு லட்சியம் இல்லாதவன்கள்தானே இவன் கள்” ஆத்திரத்துடன் பேசினார்.
"இல்லை நீங்கள் சொல்லுறது பிழை இவங்களிட்டை லட்சியம் இருக்கிற காற்றுவெளி - 4

படியால்தான் நாங்கள் கஷ்டப்பட வேண்டி இருக்கு. இண்டைக்கு எங்களின் விவசாயிகள் எவ்வளவு முன்னேறியிருக் கிறார்கள்? அதை மறக்கக் கூடாது. லட்சியம் இல்லாதவன்களிட்டை ஆட்சி யைக் குடுத்திட்டுக் கஷ்டப்படுகிற திலை பலனில்லை. அதாலை நாங்களும் முன் னேறலாது, நாடும் முன்னேறாது. இப்ப நாங்கள் கஷ்டப்பட்டாலும் நாடு முன்னேறுது". நான் நீண்ட லெக்சர் அடிச்சன். அவருக்கு அது புரியேல்லை. அவர் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பேச்சை வேறுபுறம் மாற்றினார். நானும் ஏன் வீண் கரைச்சல் என்று பேசாமல் இருந்தேன்.
"தம்பி அதிலை நிக்கிற சைக்கிள் என்னுடையதுதான். அதை ஒருக்கால் எடுத்துக் கொண்டு வாறீரே. வெயிலுக் குள்ளை நிக்கிது.”
திறப்பை வாங்கிக் கொண்டுபோய் பூட்டைத் திறந்து அவர் காட்டிய சைக்கிளைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன். அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டுப் போயிட்டார். நான் பொங்குபவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். கோயிற் பின்புறத்தால் சுற்றிக் கும்பிட்டுவிட்டு வந்த ஒருவர், முன்புறத் திற்குச் சென்று முனியப்பரை விழுந்து கும்பிட்டார். கும்பிட்டு எழுந்தவர் சந்த னக் கல்லில் சந்தனம் அரைத்துப் பொட்டு வைத்துவிட்டு வந்து, அங்குமிங்கும் தடு மாறித் திரிந்து எதையோ தேடினார். அங்குள்ளவர்கள் அவரை விசாரித்தார்கள். அவருடைய சைக்கிளைக் காணவில்லை யாம்.
அவர் அடிபட்ட நாய்போல அங்கும் இங்குமாக ஓடினார். அவர்
12

Page 13
படுகின்ற அந்தரத்தைப் பார்த்தவர்கள் அனுதாபப்பட்டார்கள்.
நான்... நான்...!
ஏமாற்றப்பட்டுவிட்டேன். என்னை ஒரு கருவியாக வைத்து இன்னொரு அப்பாவிக்கு ஒரு கொடியவன் நஷ் டத்தை ஏற்படுத்திவிட்டான்.
எனக்குப் பயமும், ஆத்திரமும் தடுமாறற்மும் ஏற்பட்டது. மரத்தின்கீழ் நான் பைசைக்கிளை எடுக்கும்பொழுது தேங்காய் துருவிக் கொண்டிருந்த பெண் ணாகத்தான் இருக்க வேண்டும், என்னைக் காட்டி ஏதோ சொல்கிறாள்.
எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஓடுவதா, வேண்டாமா? என் கால்கள் சோர்ந்து விட்டன. அப்படியே இருந்து விட்டேன். என்னை நோக்கி அங்கு நின்ற ஒரு சிலர் விரைவாக வந்தார்கள்.
"நீ எங்கை இருக்கினி ? ஒரு குண்டாக இருந்த, கீஸிங்கர் 'கெயர்கட்' பேர்வழி என்னைக் கேட்டார்.
நான் இருக்கிற இடத்தைச் சொன்னேன்.
"உன்னோடு கதைத்துக் கொண் டிருந்தவன் எங்கை?”
"போய்விட்டான்” அவனுக்கு மரி யாதை கொடுக்க என்னால் முடிய வில்லை. நான் இழிவுபடுத்தும் தொனி யோடுதான் சொன்னேன்.
"அவன் எங்க இருக்கிறவன்?” "எனக்குத் தெரியாது”
"இவன் ஒழுங்காய்ப் பதில் சொல்ல மாட்டான், முறையாகக் கொடுக்கிறதைக் கொடுத்தாத்தான் சரியான பதில் வரும்."
13

அந்த மனுசி சொன்னாள்.
"ஐயோ, எனக்கு அவனை உண்மை யாகத் தெரியாது.”
"நீதானே, அதிலை நிண்ட சைக் கிளைக் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தனி ?”
அவர் பதில் சொல்வதற்கு முதலே தடதடவென்று அடிகள் விழுந்தன. அதன் பிறகு நடந்த நிகழ்சிகள் எனக்குக் கனவு போல் இருந்தது. நான் பொலிஸ்
ஸ்ரேசனில் இருந்தேன்.
''உண்ட பெர் என்னா?'' இன்ஸ் பெக்டர் கேட்டார்.
"பாலச்சந்திரன்” "உன்னோடை
பேசிக்கிட்டிருந் தானே அவன் ஆர்?”
"தெரியாது” "தெரியாது ?” "உண்மையாகத் தெரியாது சேர்.”
"அப்படியெண்டா அவனுக்கேன் சைக்கிளை எடுத்துக் கொடுத்தே?”
"அது அவனுடைய சைக்கிள் என்று சொன்னான். திறப்புக்கூடக் கொடுத்தான் சார். அதுதான் நான் அவனுக்கு உதவி யாகச் செய்தேன்.”
"அவனுக்கேண்டா நீ உதவணும்?”
"ஐயோ! '' வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே குந்தியிருந்து கொண்டேன்.
பலவிதமான கிண்டல், குடைச்சல் கள், தண்டனைகளுக்குப் பிறகு நான் நிரப ராதி,ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டார்கள்.
காற்றுவெளி - 4

Page 14
நான் வெளியே வந்தேன்.
தெருவைப் பார்க்க வெட்கமாக இருந்தது. உடலிற் பட்ட அடிகாயங்கள் வேறு சுள் சுள் என்று வலித்தது. முக்கி முனகி வேதனையை மறைக்க முயன்றேன்
ஒரு சில மணிநேரப் பேயாட்டங் களுக்கு ஈடாடிய பாலச்சந்திரன் பழைய பிரச்சனைகளுக்குரிய பாலச்சந்திரனாக, உடல் நோவோடு நின்றேன்.
நானும் வாழவேண்டும் !
மின்னி மறைந்த எண்ணத்திற்குள் அடி, உதை, ஏச்சுப் பேச்சுக்களெல்லாம் என்னைச் சுற்றி வளைய வந்தன. உடல் கூனிக் குறுகிச் சக்தி இழந்து துவண்டது.
எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
ஆனால். நான் எப்படி வாழ்வது?
ஒரு கல்லை நான் மட்டுந்தான்தூக்க முடியாது -நூறு பேரோடை நானும் ஒருவ னாக நின்றால் தூக்க முடியுந்தானே? என் னையும் தங்களோடை ஐஞ்சாவது ஆளா கச் சேர்த்துக் கமஞ் செய்ய ஆராவது கூப் பிடமாட்டானா?
காஞ்ச வயிற்றுடன் அந்தத்திசையை எதிர் பார்த்துக் கொண்டு வீட்டை நோக்கிப் பசியுடன் நடக்கிறேன்.
நன்றி - சிலந்தி வயல் தொகுதி.
காற்றுவெளி - 4

வாசித்து விட்டீர்களா?
அக்கரைக்குப் போன அம்மாவுக்கு
- ஹம்சத்வனி கவிதை
நீர் வலயங்கள்
- சண்முகம் சிவலிங்கம் கவிதை
ஒரு அகதி உருவாகும் நேரம்
- பொ.கருணாகர மூர்த்தி, நாவல்
வட இலங்கை நாட்டார் அரங்கு
- கலாநிதி. காரை.செ.சுந்தரம்பிள்ளை,
ஆய்வு இந்து சமுத்திரத்தில் ஓர் இரவுப் பயணம்,
யாகம்,
- முல்லை அமுதன், நாவல்
அவனும் சில வருடங்களும்
- ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம், நாவல்
தெய்வம் பேசுவதில்லை
- நா. பாலேஸ்வரி, நாவல்
திசைகள் வெளுக்கும்
- தாட்சாயணி, சிறுகதை
கிடைக்குமிடம்
காற்றுவெளி நூலகம் :- 34 RED RIFFE ROAD,
PLAIS TOW, LONDON,
E13 OIX, TEL: 020 8586 7783.
14

Page 15
கவித
இதழாய் ஓர் 31, டி.கே.எஸ். நகர் தொலைபேசி |
ஒரு 6 அன்பு வாசக நண்பர்களுக்கு, வணக்கம். இந்த இதழைப் பத்து ஆண்டுகள் நடத்தி வந்திருக்கிறோம். இருக்கும் காலம்வரை நடத்தியே தீர்வது எங்கள் முடிவு.
எண்ணம்தான் மானுட வாழ்வின் சாரம் அல்லது சாரமின்மை. இதழ்தான் இப்போது எங்கள் வாழ்வு.
இலக்கியம்சார் இயல்கள் மட்டுமே பேசும் சிற்றிதழ்மரபை உடைத்து, சமூகம் சார் சகல அம்சங்களையும் அர்த்தப் பரிமாணங்களாக்கும், மாற்றுச் சிந்தனையை முன்னெடுக்கும், அரிய சில இதழ்களில் தீர்க்கமும் மூர்க்கமும் காக்கும் இதழ் எம்முடையது. எந்தக் குழுவின் நிழலிலும் ஒதுங்கவோ, எந்த உடுக்கடி மடத்திலும் ஒட்டிக் கொள்ளவோ முயன்றதில்லை.
தின்னும் சோற்றுக்கும், தேடிவருவோரைச் சீராட்டுவதற்கும் எந்தப் பற்றாக்குறையும் எங்களுக்கு வந்ததில்லை.
மனித நேசிப்புக்கும் கருத்து மோதலுக்கும் எப்போதும் நாங்கள் பின்வாங்கியதில்லை.
சொல்வதை நேர்மையாகவும், சிந்திப் பதைக் கூர்மையாகவும் வெளியிடத் தவறிய தில்லை. இவை யாவுக்கும் இதழே மொழியாகிறது. இதழுக்கென்று அச்சகம் உண்டு. எழுத்தோடு அச்சுப்பணியும் எங்களுக்கு.
சந்தா கேட்டு இதுவரை யாருக்கும் கடிதம் எழுதியதே இல்லை.நேரமிருந்ததில்லை.ஆயினும் எங்கள் மொழியை நேசித்தோரின் தன்னெழுச் சியான ஆதரவு எங்களை எப்போதும் தாங்கத் தவறியதில்லை.
இதழுக்குத் தேவையான தாளும்,மையும், தைப்பு முள்ளும், சிறிது பசையும் இருந்தால் போதும், எங்கள் உணர்வூட்டம் பொங்கும் உழைப்பின் உயிர்க்கொப்பளிப்பாய் இதழ் வெளிவந்திட.
ஊள ஒப்"."ன் இன்னும்
15

எசரண் - எழுத்தியக்கம் ', சென்னை-600019, 044 - 5734499. விண்ணப்பம்
இதுவரைக்கும் இதழுக்கு பணத்தேவை ஒரு பிரச்சினையே இல்லை.
இனி, அது மட்டுமே பிரச்சினை என்பத னாலேயே இந்த விண்ணப்பம்.
அச்சுப் பணியைத் தொடர்வதோ ஆள் வைத்து வேலை வாங்கிக்கொள்வதோ சாத்தியப் படவில்லை.
கூடிய மெய்வருத்ததம் எழுத்தையும் இதழையும் தாமதப் படுத்துகிறது. எழுதித் தீர்ப்பதென்னும் முடிவு இயலாமையில் கரைய எங்களுக்குச் சம்மதமில்லை.
எனவே,அச்சுப்பணியைவெளியில் செய்து பெற முடிவெடுத்துள்ளோம்.
கடைசிப் பைசாவரை இனி கைப்பணமே செலவிடப்பட வேண்டும்.
மேலும், எழுத்தொன்றே பணியாவதால் இதழை இன்னும் விரிந்த அளவில் கொண்டு சேர்க்கவும், திசைதோறும் இருள் தீற்றும் ஈன ஞானங்களைக் கேள்விக்குள்ளாக்கவும் ஊமை மாந்தரின் வெடித் தெழும் குரலாய் அறைகூவல் விடுக்கவும் ஆசை.
இதற்கு எங்களுக்குப் பணம் வேண்டும். ஆயிரக்கணக்கில், பல்லாயிரக்கணக்கில், சந்தா வழங்குங்கள், இதழ் கவலையற்றுத் தொடர்ந்து வர கொடையாய் வழங்குங்கள். நீடுழிப் பணி யாற்ற நிறைய வழங்குங்கள். சிந்தனையூற்றம் அதன் போக்கில் செயல்பட நட்பாய்த் துணை யிருங்கள்.
எங்களின் மொழிக்கும் சுதந்திரத்திற்கும் அரணாயிருந்துதவுங்கள்.
12 இதழ்களுக்கான நன்கொடை ரூ. 200 30 இதழ்களுக்கான நன்கொடை ரூ. 500 60 இதழ்களுக்கான நன்ெைகாடை ரூ. 1000
அன்புடன், திருமதி திரு கவிதாசரண்.
காற்றுவெளி - 4

Page 16
பறவையின் காவி
லியு லீ ஏ, குருவி வேட்டைக்காரா, தயைகூர்ந்து என்னை மன்னிப்பாய் மாளிகையில் உன் வாசம். பற்றை வேலியில் என் ஓய்வு வலையில் என்னை அகப்படுத்தி வலிமையான உன் கையில் என்னைப் பற்றி, சிறையில் இடுவதில் உனக்கேது மகிழ்ச்சி?
50 3
ஓ, குருவி வேட்டைக்காரா உன்னிடம் உண்மையைச் சொல்கிறே சப்தம் எதுவுமற்ற உலகமும் கண்டதுண்டமாய் வெட்டப்பட்ட ஊனும் இரத்தமும் நிறைந்த கசாய்ப்புக் கடையும் தான் உன் நாட்டமாய் இருப்பதனால் இறக்கை மூடிய உடலையும் இனிய குரலையும் நான் பெற்றமை என் துரதிருஷ்டமே.
உயிர்மேல் ஆணையிட்டுச் சொல்கிே தங்கமும் வைரமும் ஜொலிக்கும் மாளிகை ஒன்றுக்காக வனாந்திரத்தில் உள்ள, என் கூட்டிலிருந்து நான் வேறிடம் செல்வதற்கில்லை.
அன்றேல் தங்கச் சங்கிலி ஒன்றுக்காக பச்சை மரங்களையும் நீல வானையும் பிரிந்து
வேறிடம் செல்வதற்கில்லை.
• ••!?
நன்றி சீனத்துக் கவிதைகள் (வை.கந்தல்
காற்றுவெளி - 4

"யம்
Lu1 4
21ாபன்
அ) 8)
றன்
நசன்)
16

Page 17
"தி.
அ
இவ்வழியால் நான் சென்
- ஷாங் ஷிம்
ஆர்.
மலைப்பள்ளத்தாக்கில் புதிதாய்க் கட்டப்பட்ட
அச்செங் கட்டிடம் 'சுரங்கப் பணியாளர் இல்லம்'
இவ்வழியால் நான் சென்ற பொழுதெல்லாம் ஒரு கணம் தரிக்காது செல்ல முடியவில்லை. சாளரம் ஒவ்வொன்றையும் நிமிர்ந்து நோக்கினேன் புதிய மனைகளிலிருந்து ஒலிக்கும் பிள்ளைகளின் பாடலையும் சப்தத்தையும் செவிமடுத்தேன். மேல் மாடிகளையும் சிறுவர் சிறுமியரின் ஆடைகளையும் ஒவ்வொன்றாக எண்ணினேன்.
அச்சிறுவரின் செந்நிற மேலங்கிகளின் அழகுதான் என்ன உதயப் பிரகாசத்தில் உரோசநிற முகில்கள் என அவை
அச்சிறுமியரின் வண்ண ஆடைகளின் வடிவுதான் என்ன எங்கும் தூங்கும் காலைக் கவின் என அவை நீண்ட நீண்ட பொழுது
அவற்றில் என் பார்வை நிலைத்து மறந்தேன் இல்லம் செல்வதற்கு.
அச்சிறுவரின் அங்கிகளில் இத்துணை அக்கறை எனக்கேது எனக் கேட்பின் எடுத்துச் சொல்வதற்கு
நன்றி, சீனத்துக் கவி இல்லை வார்த்தை,
17

றபோதெல்லாம்...
பின்
இதயத்தில் மட்டுமே என் பதில். புரிய வைப்பதாயின் எளியது சிறியது இதற்கான காரணம். என் பிள்ளைப்பிராயத்திலிருந்து ஈங்குள்ள மழலைகளுடன் பரிச்சயம் எனக்குண்டு. இம் மலைச்சாரலில்
அம்மணமாய் அவர்கள் பிறந்தனர். இம் மலையடிவாரத்தில்
அம்மணமாகவே அவர்கள் புதைக்கப்பட்டனர்.
தைகள் (வை.சுந்தர நேசன்)
காற்றுவெளி - 4

Page 18
பெண்மையே ! உன்னை நான் நேசிக்கின்
வண்மையே! உன்னை நான் நேசிக்கின்றேன் ஏன் என்றால்... ஆண்டவன் படைப்பிலே! நீயோர்!
அற்புதமானப் படைப்பாக இருப்பதால்...
அதனால்... தான் என்னவோ!
அறிஞர்களும், கவிஞர்களும் உன்னைப் பாடியும், புகழ்ந்தும் வருகின்றார்கள் போலும் நான் மட்டும்
இங்கு! விதிவிலக்கா என்ன? பெண்மையே! உன்னைப்படைத்த ஆண்டவன் உன்னிடத்தில் பெரும் பொறுப்பைத் தந்துள்ளான்.
அது! யாது என்றால்... மனித இனத்தைப் படைக்கும் பொறுப்பு! அந்தப் படைப்புக்கு ஆண் சிறு கருவி மட்டும் தான்
காற்றுவெளி - 4

நீயோ! அதை, வயிற்றிலே வாங்கி உருவம் கொடுத்து அவனது பெயருக்கு முகவரி கொடுக்கின்றாய்.
ஆனால்... பெண்ணாகப் பிறந்து விட்டோமோ! என்று எண்ணுகின்றாய் பெண்ணினமே! நீ தாய்மை அடையும்போது! உனது வயிற்றிலே மகனோ! மகளோ! துள்ளி விளையாடும்போது! உனக்கு ஏற்படும்
அந்த ஆனந்த உணர்வு ஆண் இனத்துக்கு என்றுமே கிடைக்காது! அதை, அவன் உன் மூலம்
அறிந்து கொண்டாலும் நீ! உணர்வதைப் போல அவனால் உணர முடியாது! இவ்விடத்தில் தான் பெண்மையே! உன்னிடத்தில் கூட எனக்குப் பொறாமை இருக்கிறது! பெண்மையே! உன்னை நான் நேசிக்கின்றேன் ஏன் என்றால்... ஆண்டவன் படைப்பிலே! நீயோர்!
அற்புதமான படைப்பாக இருப்பதால்..
18

Page 19
பிர!'' 1979('! அடுத்து (0)
தீபா எந்த வேலையும் செய்யாமல் யோசித்துக் கொண்டிருந்தாள். அப்பா இன்று அலுவலகம் இருந்து வந்ததும் முடிவைக் கேட்பார். என்ன சொல்வது? சங்கரைத் திருமணம் செய்வதா? வேண்டாமா? எப்படிச் சங்கரை நான் திருமணம் செய்வது ? சங்கர் வேறு யாருமல்ல. அவளது உயிர்த் தோழியின் முன்னாள் காதலன். இவள் அவர்களது காதல் விடயமாக எத்தனையோ உதவி செய்திருக்கிறாள். அவனை எப்படி இவளால் மணக்க முடியும்? தீபா மேல் படிப்பிற்காகப் பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றிருந்தாள். திரும்பி வந்தபோது கதையே மாறியிருந்தது. சங்கர் படிப்பை முடித்துவிட்டு தீபாவின் தந்தை பணிபுரியும் அலுவலத்தில் பணி புரிகின்றான். அவனது நடத்தை தந்தை யின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அதனாலே விளைந்ததுதான் இந்த எதிர் பாராத மாற்றம். அப்பாவிடம் முடிவை நாளை சொல்கின்றேன், நாளை சொல்கின் றேன் என்று நாட்கள் பலவற்றைக் கடத்தி விட்டாள். இன்று அவரிடம் தப்ப முடியாது. என்ன செய்வது? யோசித்த வண்ணம் இருந்தாள். படிப்பு முடித்து
19

==C)
பு!'
(U) 1 2 )
சாமியா
விட்டு வந்த நாள் முதல் சுமதியும் கண்ணில் படவில்லை. அம்மாவிடம் கேட்டதற்கு ஒழுங்கான பதில் இல்லை. அப்பா அலுவலகம் இருந்து வந்து விட்ட தால் அம்மா சமையலறையில் போராடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. யோசித்த வண்ணம் இருந்தவள் தூங்கி விட்டாள். திடுக்கிட்டு விழித்தெழுந்த போது மணி இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அது வரை தன்னை யாரும் தொந்தரவு செய்ய வில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். அறையை விட்டு வெளியில் வந்தபோது அப்பா செய்தி கேட்டுக் கொண்டிருந்தார். அப்பாவிடம் சென்று எப்படி இந்த விடயத்தைப் பற்றிக் கேட்பது ? என்று தயங்கிய வண்ணம் நின்றவளை அப்பா வின் சிம்மக் குரல் அழைத்தது. என்னம்மா நடந்தது இன்று முழுவதும் நீ அறையை விட்டு வெளியில் வரவில்லை என்று அம்மா சொன்னாள். அப்படி உனக்கு என்ன நடந்தது என்று விசாரித்த அப்பாவை இடை மறித்து தீபா பேசத் தொடங்கினாள். அப்பா நீங்கள் சொன்ன விடயமாக என்னால் எதுவித முடிவும் எடுக்க முடியவில்லை. அதற்கு முன்
காற்றுவெளி - 4

Page 20
ஒருமுறை நான் சங்கரைச் சந்தித்துப் பேச அனுமதி தரமுடியுமா என்று வினவிய மகளை ஏற இறங்கப் பார்த்தார். இந்தக் காலத்துப் பெண்கள் எதற்கும் துணிந்து விட்டார்கள் என்றது அவளது பேச்சு. ஆனாலும் அவர் அவளது விருப்பத்திற்கு உடன்படவில்லை. நாட்டு நிலைமை, வீட்டின் பொருளாதார நிலைமை, குடும்ப வழமை என்று பல விடையங்களை அவளுக்கு எடுத்துக் கூறி அவளை கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்து விட்டார். அப்பாவின் விருப்பத்திற்கு எவ்வளவோ போராட்டத்திற்குப் பின் சம்மதம் கொடுத்தாலும்கூட அவள் மனம் இன்னும் சமாதானம் அடையவில்லை. அவள் மனப் போராட்டத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவு தெரிந்து விடும். முறைப்படி அவள் கல்யாணத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டிருந்தது. சங்கரை அவள் ஒரு நாளும் தனியாகச் சந்திக்கச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. சில வேளை சங்கரின் மனமும் என்னுடையது போலவே கஸ்ரப் படுமோ. அதனால்தான் அவனும் அவளைச் சந்திக்க விரும்பவில்லையோ என்று எல்லாவற்றையும் யோசித்து தீபா மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தாள். குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. சங்கர் மணமேடையில் கம்பீரமாக இருந்தான். அவனது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. தீபா மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள். குறிப்பிட்ட அந்த நேரத்தில் தீபா திருமதி சங்கர் ஆனாள். அவளது கழுத்தில் தாலி ஏறியவுடன் அவள் மனதிலும் பாரம் ஏறியது. அவள் அவனது நடவடிக்கை எல்லாவற்றையும் அவதானித்
காற்றுவெளி - 4

துக் கொண்டே இருந்தாள். எந்த மாற்ற மும் இல்லை. அவளை முன்பு தெரிந்தது போலவே அவன் காட்டிக் கொள்ள வில்லை. எல்லா சடங்கு சம்பிரதாங்களும் முடிந்து இரவு வேளை அவன் முன் அவள் தனிமையில் விடப்பட்டாள், யார் முதலில் பேசுவது ? மெளனம் நிலவியது. திடீரென்று அவன் பேசத் தொடங்கினான். தீபா... என் வாழ்வில் நான் எனது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க விரும்ப வில்லை. அது முடிந்த முடிவாகவே இருக் கட்டும். இனி நடக்கப்போவதைப் பற்றிச் சிந்திப்போம் என்றான். அவள் இத்தனை நாளும் கேட்க வேண்டும் என்று இரவு பகலாக மனதில் போட்டுப் போராடிய ஒரு விடையத்தை முற்றுப் புள்ளி வைத்து விட்டான். அவளால் எப்படிப் பேசாமல் இருக்க முடியும்? அவளது பதிலிற்காகக் காத்திருந்த அந்தச் சந்தர்ப்பத்தை அவள் பயன்படுத்திப் பேசத் தொடங்கினாள். நீங்கள் உங்கள் கடந்த காலத்தைப் பற்றி என்னிடம் விபரமாகச் சொல்லாவிட்டால் என்னால் உண்மையான மனைவியாக உங்களுடன் வாழ முடியாது. உங்கள் கடந்த கால வாழ்க்கையில் எனக்கும் பங்குண்டு. தெரியாமல் நான் குழம்பித் தவிப்பதை விட தயவு செய்து சொல்லி விடுங்கள் என்றாள். அவளது பேச்சிலும் நியாய முள்ளதை உணர்ந்த சங்கர் ஒரு நிமிடம் அவளிடம் அனுமதி பெற்று வெளியில் சென்றவன் ஒரு டயரியுடன் திரும்பி வந்தான். அதனை அவள் கையில் கொடுத்து யூலை மாதம் 22ம் திகதியில் உள்ளதைப் படிக்கும்படிச் சொன்னான். அவள் தயங்கவும் உனது கேள்விற்கு பதில் உள்ளது. என் அனுமதியுடன்தான் எனது
TIப
20

Page 21
டயரியைப்
படிக்கின்றாய். அதில் தப்பில்லை என்றான். அவன் சொன்னதன் பின் டயரியில் யூலை 22ஐப் புரட்டினாள். அவன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய அந்த நாள் சுமதி வெளிநாட்டிலிருந்து வந்த அவளை மாமன் மகன் மணந்து கொண்டான். ஏற்கெனவெ சுமதி பற்றி நன்றாய்த் தெரியும். ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பும் ஒரு பெண். வெளி நாட் டிற்குச் செல்ல வேண்டும் என்ற சிறு வயது ஆசை இத்தனையும் இருந்த அவளுக்கு காலம் கை கொடுத்தது. அவளது ஆடம் பரத்தை வெளிப்படுத்தியது அவளது கல்யாண மடல். சீ இவளும் ஒரு பெண்ணா? கவலையுடன் சங்கரைப் பார்த்தாள். அவன் எதனையோ யோசித்த வண்ணம் இருந்தான். தீபா அவனருகில் சென்று என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கடந்த காலம் இவ்வளவு கொடுமையானது என்று எனக்குத் தெரியாது. உங்களை வீணாகக் கவலைப் படவைத்துவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறிய வளிடம் பரவாயில்லை தெரியாமல் இருப் பதைவிட தெரிந்து கொள்வது எவ்வளயோ மேல். என் மனம் குழம்பிவிட்டது.மீண்டும் அது பழைய நிலைமைக்கு வரும் வரை எனக்காகக் காத்திருப்பாயா? பிளீஸ் என்று மிகவும் பணிவாகக் கேட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறி விட்டான். தீபாவின் மனதில் அவன் மிகவும் உயர்ந்து விட்டான். அவனுக்காக அவள் ஆயுள் முழுவதும் காத்திருக்கத் தயார்.
21

'அரமைக்ரிம்
எங்கள் கவிதைகள்'
பாகம் 1, பாகம் 2
வானொலி கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுதி.
தொடர்புக்கு :-
நந்தினி பதிப்பகம்
TALLEE RAOUL DUFY BAT-BRETAGNE: RES:-FAVTNINE '93420 MLLEPINTE
FRANCE.
'உதயன்'
(பத்திரிக்கை)
ஆசிரியர்: R.N.லோகேந்திரன் 1235 ELLESMERER ROAD, SCHR BOROUGH ONT
M1P 2X B CANADA.
லண்டனில் பரபரப்புடன்.
''நம் நாடு”
(பத்திரிக்கை)
TA. SIBLEY GROVE
EASTHAM LONDON E12 6SD
UK.
காற்றுவெளி - 4

Page 22
தோல்விக்கு
எதுவும் முடியும் உன்னால் - நீ ஏக்கம் கொள்வது எதனால் - உன் இளமை இருக்கும் போதே நீயும் எதையும் செய்திடு அதனால் !
நெஞ்சில் இருக்கு துணிவு -பின் நிழலுக் கெதற்கு பணிவு - அட
அஞ்சிச் சாவும் அடிமை வாழ்வை விட்டால் வாழ்வில் விடிவு!
துணிந்தால் எதுவும் முடியும் - நாம் நிமிர்ந்தால் இருளும் மடியும் - காணும் மடமை எல்லாம் உடனே அழிந்தால் நம்மின் வாழ்விருள் விடியும்!
எழுந்தால் எதிரிகள் இல்லை - உன் இமையை மூடினால் தொல்லை - நீ விழி எழு எதிரியின் கதையை இன்றே
முடித்தால் இன்பம் எல்லை!
காற்றுவெளி - 4

கத் தோல்வி...
புதுவை தமிழ் நெஞ்சன்
எதையும் முடித்துக் காட்டு - உன் சொல்லை செயலாய் நாட்டு - வாழ்வில் துன்ப துயரை தூர நீயும் துணிந்து விரைந்து ஓட்டு!
தோல்வி எதற்கும் இல்லை - நீ துணிந்தால் வெற்றி எல்லை - உன் நெஞ்சில் கனிவும் நேர்மைத் திறனும் இருந்தால் வாழ்க்கை முல்லை!
தோல்விக்கு தோல்வி தந்திடு - உன் தோள்களில் வலிமை பெற்றிடு - வரும் கேட்டை எல்லாம் நெஞ்சக் கோட்டையால் தூள் தூள் ஆக்கி வென்றிடு !
22

Page 23
முற்று
என்.எஸ்.எ சரசு வேலைக்குப் புறப்பட்டாள்.
சேலைக்கு மேலாக இறுகக்கட்டிய படங்குச் சாக்கு கனமாய் உறுதியாய் இருந்தது. நான்காக மடித்திருந்த எட்டு முழ வேட்டியைத் தலையில் போட்டுக் கூடையை எடுத்து, கயிற்றை உச்சந் தலையில் மாட்டிக் கொண்டபோது, இவையாவும் வேண்டாத மேலதிக பாரங்கள் என்று மனம் மெல்லப் பொருமி முணுமுணுத்தது.
லயத்திலிருந்து ரோடு வரைக்கும் இறங்கும் இருபது கருங்கல் படிக்கட்டு களும் ஐஸ் துண்டங்களாகச் சில்லிட்டு வேர்த்திருந்தன.
ஏற்கெனவே மலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சில அவள் வயதுப் பெண்கள் நின்று "சுருக்காவா” என்றனர். கூட்டத்தில் சங்கமம் ஆனதும் ஒருத்தியின் கோடிச் சேலை சட்டென சரசுவின் கண்களில் பட்டது.
"கோடியா?”
அவள் சிரித்தாள்.
"நல்லா இருக்குதடி” விரல்கள் வாஞ்சையோடு சேலையைத் தடவின. 23

Dதை
ம்.ராமையா
"அதுக்குள்ளே மலைக்குக் கட்டி நாசம் பண்ணணுமா?”
“ஒரு நாளைக்குத் தானே ?” "எப்ப வாங்கினே?”
"நா எங்கே வாங்கிறது ? அண்ணன் வாங்கிட்டு வந்திருக்குது.”
"டேயப்பா! கொழும்புக்காரக வந்திருக்காகளோ?” எல்லோரும் சிரித் தனர்.
அந்தத் தோட்டத்திற்கு நேர் எதிரே இருந்த இன்னொரு தோட்டத்துத் தேயிலை மலைகளின் உச்சியில் வெயில் விழுந்து மங்கியிருந்தது.
அது கீழிறங்கி பெரிய பள்ளம் போலிருக்கும் - இப்போது பனிப்பு கார் மூடியிருக்கும் - நாட்டுக்கும் தங்கள் தோட்டத்துக்கும் வர இன்னும் அரை மணி நேரமாவது ஆகும்.
ரோடிலிருந்து குறுக்குப் பாதை வழியாக இறங்கத் துவங்கினர். நெருக்க மான தேயிலைச் செடிகளின் பக்கவாது கள் உரசப்பட்டு ஆடி பனி முத்துக்களால் கால்களை நனைத்தபோது சர்வாங்கமும் புல்லரித்து எரிச்சலாக வந்தது..
காற்றுவெளி - 4

Page 24
"இன்னைக்கு எந்த மலை ?” "பதினெட்டு”
"ஐயோ சவர்க்காரம் கொண்டார மறந்துட்டேன். அட்டை புடுங்கித் திங்கப் போகுது”
“பயப்படாதே ! நான் கொண்டாந் திருக்கேன்.”
மலையில் கங்காணி கத்திக் கொண்டு நிறை போட்டுக் கொண்டிருந் தான். வீட்டிலேயே அலங்காரத்தை முடித்துக் கொண்டவர்கள் வந்ததும் நிறை பிடித்தனர். மற்றவர்கள் படங்கை உதறிக் கொண்டிருந்தார்கள்.
"சரசு சவர்க்காரத்தையும், புகை யிலையையும் சேர்த்து காலில் தேய்த்துக் கொண்டு நிறைக்கு ஏறினாள். கோடிச் சேலை கட்டியிருந்த தெய்வானை பக்கத்து நிறை பிடித்தாள்.
அவர்களுக்குப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்தன. தெய்வானையின் அண்ணன் கொழும்பிலிருந்து வந்திருக் கின்றான். அவனுக்குத்தான் சுரசுவைக் கேட்டிருக்கிறார்கள். அப்புறம் என்ன ?
கொஞ்ச நேரம் "பொலியோ பொலி” சத்தமாக இருந்தது. அந்தப் பக்கமாக “லோ லோ” என்று கத்திக் கொண்டு வந்த கங்காணியை நிறுத்தி, "பொலி சொல்லுங்க கங்காணியாரே” என்றனர் இருவரும். அவர் பொலி சொன்னால் கூடை வழியுமாம்! அவர்
வாய் அவ்வளவு ராசியாம்.!
ஐஸ்... மிகவும் பொருத்தத்தோடு பொலி
காற்றுவெளி - 4

சொன்னார் கங்காணி.
இரண்டு மூன்று மரம் கொழுந்து எடுத்த பிறகு தெய்வானை ரகசியம் போல் "அப்பா ராத்திரி அண்ணனுக்கிட்டே சொல்லிருச்சு” என்றாள்.
"என்னென்று?”
"இப்படி ஒன்னைக் கேட்டிருக் கின்னு”
“ம்” கனமாக பொருள் ஒன்று நெஞ்சுக்குள் விழுந்த மாதிரி கனத்தது மனம்.
"அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் சொணங்கிச் செய்யணும்னு நெனப்பு போல இருக்கு. ஆனா அம்மா ஒடம்பு இருக்கிற நெலமையிலே சொணங்க முடியாது அப்படீன்னு
அப்பா சொல்லிடுச்சி”
அங்கு ஒரு யந்திரம் பழுதாகி விட்டது. ஆகவே இவள் தேவைப் படுகிறாள்... அதுவும் அவசரமாக.
இந்தச் சின்ன வட்டத்துக்குள் அந்த வாழ்க்கையின் 'மகத்துவம்' அடங்கி விட்டது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
அவளுக்கு முன்னால் பத்து யார் தூரத்தில் இருந்த முருங்கை மரக் கிளை யில் ஒரு வாலாட்டிக் குருவி “கிறிச் கிறிச்' என்று குரல் கொடுத்தது. ஒவ்வொரு குரலுக்கும் வால் பணிந்து, பணிந்து உயர்ந்ததை, அழைப்பாகக் கொண்டோ, என்னவோ இன்னொரு குருவியும் விர் ரென்று பறந்து வந்து அமர்ந்தது. இரண்டும் ஜோடியாக மாறி, மாறிக்
24

Page 25
கத்தின. பின்னர் பறந்தன.
வெய்யில் விழத்துவங்கியது. அவர் களுக்கு முன்னால் நீண்டு ஏறுமுகமாக ஓடிய மழை ஒரு இடத்தில் தேங்கிக் 'குப்' பென்று திரைபோல் எழும்பி உயர்ந்திருந் தது. நீர்க் கசியும் கற்பாறைகளையும் அதனுள் கருமையையும், கண்டமாகக் கொண்டிருந்த அந்த மலையின் உச்சியில் நீலகண்டனின் உச்சிப் பிறைபோல் வெய் யில் மரங்களின் பின்னால் மினுமினுத் தது.
மாலையில் சரசுவின் வீட்டிற்கு அந்தக் கொழும்புப் பையன் வந்திருந் தான். அவன் வந்த நேரம் சரசுவையும் அவள் அண்ணன் பழனியையும் தவிர வேறொருவரும் இல்லை.
"வா ஓய்” என்று வரவேற்றான் பழனி. இருவரும் திண்ணையில் அமர்ந் தார்கள். உள்ளே சரசு அடுப்பைப் பற்ற வைத்தாள் தேனீர் ஊற்ற.
“எப்படி இருக்கு கொழும்பு?” என்றான் பழனி.
"இருக்கு” "எங்கே வேலை செய்யிறே ?” "ஒரு இரும்புக் கடையிலே” "என்ன வேலை?” "நாட்டாமை வேலைதான்”
நாட்டாமை என்ற சொல் பழனிக் குப் புதிது. ஆகவே "என்ன ஆமை" என்று கேட்டுவிட்டுச் சிரித்தான்.
அடுத்த வீட்டில் இருக்கும் வடிவேல் கங்காணி அந்தப் பக்கமாகப் போனவர் நின்று பார்த்துவிட்டு "போடு சக்கை, 25

எப்படீ வந்தே?” என்று கேட்டுக் , கொண்டே வந்து திண்ணையில் அமர்ந் தார். அவருக்கு எப்பவும் எதிரே தெரியும் அனைவருமே சக்தி சொரூபங்கள்தான்!
"கொழும்புக்குப் போனதும் சிலு சிலுன்னு ஆளே மாறிட்டியே” என்று பெருமைப்பட்டுக் கொண்டதை உள்ளே சரசுவும் அனுபவித்துச் சிரித்தாள். தற் செயலாக அங்குமிங்குமாகப் போகும் போது லேசாகக் கவனித்ததில் அவளும் அப்படித்தான் எண்ணினாள்.
"என்ன வேலை, என்ன சம்பளம்” என்று கங்காணி கிண்டிக்கொண்டிருந் தார். கடைசியாகச் சொன்னார் "இஞ்ச பாரு! இப்படிக் கொழும்பு, கண்டின்னு போனா நஷ்டம் நமக்குத்தான் பாத்துக்க. ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா சம்பளங்குறே, ஆனா வீடு இல்லே. இங்கே மூணு ரூபா, ஆனா வீடு இருக்கு. கணக்கு எல்லாம் ஒண்ணுதான். ஆனா அங்கே நீ அனாதை. இங்கே அப்படி இல்லை. ஒனக்கு ஒண்ணுன்னா தட்டிக்கேக்க ஒரு பட்டாளமே ஒம்பின்னாலே வரும்டீ...”
கொழும்புப் பையன் சிந்தனையி லாழ்ந்தான். கொழும்பு நகரின் ராஜ பாட்டைகள் போன்ற ரோடுகள், பெரிய பெரிய கட்டிடங்கள்.. எப்படியாவது நாலுகாசு தேட முடிகின்ற வாய்ப்பு, இத் தனைக்கும் மேலாக அறிவை எந்நேரமும் சுறுசுறுப்பாக முடுக்கிக்கொண்டிருக்கும் சுற்றாடல் இவை அனைத்தும் அவனுக் குப் பிடித்திருந்தன. ஆனால் மனதில் எதிர் காலம் என்பது கேள்விக்குறியாக வளைந்து நின்றது.
கங்காணி தொடர்ந்தார். "ஒனக்கு கல்யாணம் கூடுது போலிருக்கே...”
காற்றுவெளி - 4

Page 26
"ஆமா...”
"தேன்வை முடிஞ்ச பொறகு 'இதை' எங்கே வைக்கப்போறே... இங்கேயா இல்லாட்டி கொழும்புக்குக் கூட்டிக் கிட்டுப் போகப்போறியா?”
சரசு செவியைக் கூர்மையாக்கிக் கொண்டு கவனித்தாள்.
“இனிமேதான் யோசிக்கணும்” "ஒங்க அப்பாரு என்ன சொல்றாறு ?” "அவரு இங்கேயே வரச்சொல்றாரு”
"அதாண்டி ஞாயம்! செட்டுப் பயலுகளா சேர்ந்துக்கிட்டு தேன் எடுக்கப் போவிகளே அந்த பம்பரைக் கூட்டைப் பார்க்க இல்லையா? ஒரு ஈயிக்கி ஒண் ணுன்னுாலும் எல்லாம் சேர்ந்து என் னமா துடிச்சுப்போகுது ! என்ன மா வெரட்டி அடிக்குது! நாளும் அப்படித் தான் இருக்கணும்”
"இங்கேதான் வேலை கிடைக்க மாட்டேங்குது, பேரு பதிய மாட்டேங் கிறான்”
"நாம சண்டை போடுறது பத்தல்லே” மூவரும் சிரித்தனர்.
சரசு . மூவருக்கும் தேநீரைக் கொண்டு வந்து தன் அண்ணனிடம் கொடுத்தாள். வடிவேல் கங்காணியார் உற்சாகமாக "ஆத்தாடி புதுப் பொண்ணு வருதுடா, புதுப் பொண்ணு வருதுடா” என்று கிண்டல் செய்தார்.
அந்தக் கொழும்புப் பையன் புன் சிரிப்போடு தலையைக் குனிந்து கொண்டான்.
நன்றி - ஒருகூடைக் கொழுந்து. காற்றுவெளி - 4

சமவெளி
இலக்கிய இதழ்
ஆசிரியர் தரும். இரத்தின குமார்.
வெளியிடுபவர் இலக்கிய வட்டம் காஞ்சிபுரத்திற்காக
வெ. நாராயணன். 113. காமாட்சியம்மன் சன்னதி தெரு,
காஞ்சிபுரம்-2 பேச 04112-220890
தமிழன் வரைகலையகம்
உங்கள் சிற்றிதழ்கள், கவிதை, சிறுகதை,
நாவல், அனைத்தையும் சிறந்த முறையில் முழுப் பொறுப்பேற்று அச்சிட்டுத் தரப்படும்.
தரும். இரத்தின குமார்,
தமிழன் வரைகலையகம், அ - 14, கணிகண்டீஸ்வரர் கோயில் தெரு.
காஞ்சிபுரம் - 1.
26

Page 27
துை
அ,க
கல்லூரிக்கு எதிர்ப்புறமிருந்த மாதாக் கோவில் மணிக்கூண்டில் மூன்று முறை மணி அடித்தது. பேராசிரியர் ஒருவரைக் கண்டதால் தவிர்க்கும் மனதோடு கீழே குனிந்தபடி நடந்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான். காவி நிற மாடத்தில் சரேலென விரியும் விசிறியாகச் சடசடக்கும் சிறகு களுடன் சப்தமிட்டுப் புறாக்கள் பறந்து போயின. பறப்பது மிகுந்த ஆனந்தம் தரக் கூடியது. அதைப் பார்க்கும்போது கிடைப் பதோ அழகான காட்சி. எப்படிப் பறந் தாலும் புறாவின் பறப்பு காவியமாக அழகான ஓவியமாகப் பார்ப்பவர்களின் மனங்களில் பதியும். விரிந்த புத்தகத்தின் புரண்ட பங்கங்களில் பறந்த புறாக்கள். உதிர்ந்த சிகரெட்டுச் சாம்பலில் பிறந்த பீனிக்ஸ் பறவைகளாய் நினைவுப் புறாக்கள். பொய்யாய்... பழங்கதையாய்.. கனவாய்...
கனவுதான். இந்தக் கல்லூரியில் கோ. எஜிகேஷன் படிச்சதுகூட கனவுமாதிரி தான் இருக்குது. அது ஒரு நிலாக்காலம். அவனுக்கு அந்த நிலாக்காலத்தில்தான் அவள் அறிமுக மாகியிருந்தாள். பூஜையும் புனஸ்காரமுமாய் வளர்க்கப்பட்டிருந்தாலும் அதுவரை கோ. எஜிகேஷனில் படிக்காத காரணத்தினாலும் ஏற்பட்டிருந்த மதிப்பீடுகள் மனதில் உறைந்து போயிருந்ததால் பெண்களிடம்

ண ...
அருள்
பேசுவதே பெரிய... விஷயமாக இருந்தது.
தனக்குள் எப்போது புறா பறந்தது? என்று யோசித்துப்பார்த்தான். ஒரு முறையா? இருமுறையா? பல தடவைகள் பறந்தன புறாக்கள். சட்டை நன்றாக இருந்ததாகச் சொன்னபோதும், அவனுடைய பாடல்கள் கேட்க இனிமையாக இருப்பதாகச் சொன்ன போதும், இன்னும் நிறத் தேர்வுகள் பற்றியும், ரசனைகள் பற்றியும் பாராட்டிய போதெல் லாம் பல புறாக்கள் பறந்தன. அவைகள் இவனுக்கும் சிறகுகள் கொடுத்து மனதுக்குள் இனம் புரியாத உணர்வுகளை உண்டாக்கி யிருந்தன. அப்படிப் பறந்த புறாக்கள் எல்லாம் எங்கே போயின?
அவளைப்பற்றி, அவளது குடும்பம் பற்றி, அவளது அபிலாஷைகள் பற்றி, ஏக்கங்கள் உணர்வுகள் பற்றி, கண்களில் இழையும் கனவோடு பேசிக்கொண்டிருந் தபோது கேட்பதற்கும் சுகமாகத்தான் இருந்தது. உரையாடல்களில் இழையும் உணர்வுகள் இரவுகளில் கனவுகளை உண்டாக்கிக்கொண்டிருந்தன.
தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வியாபாரிகளுக்கு உண்டாக்கும் பயன்பாடுகளை அறிந்திருந்த அவள் புது வருடத்தின் அனுகூலமான
காற்றுவெளி - 4

Page 28
வாழ்த்து மடல் ஒன்றை அவனுக்கு அனுப்பி யிருந்தாள். துணையற்றுப் போயிருப்பதாக நீ உணர்ந் திருந்தால் நானிருப்பேன் எப்போதும் உன்னருகில் துணையாக என்ற அர்த்தத்தைக் கிட்டத்தட்ட தரக் கூடிய ஆங்கில வரிகளைக் கொண்டி ருந்த வாழ்த்துமடலின் ஓவியங்களுடன் கூடிய வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை களாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அதன்பின் உண்டான நெருக்கம்தான் "மந்திரம் போல் சொல்லின்பம்” என்ற கவிதை வரியின் உண்மையை அவனுக்கு உணர்த் தியது. படபடப்பு குறைந்து விட்டது ஆனால் இதற்காக நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சின்னச் சின்னப் பொய் களை அவ்வப்போது மென்மையான பூக்க ளாகத் தூவியும் கொட்டியும் ஜரிகைகளாக இழைத்தும் உறவை அலங்காரப்படுத்தி அதை இறுக்கியாகி விட்டது. ஊடே இழைந்து கொண்டிருந்த உறவின் தன்மையைப் பிரித்துப் பார்க்கக்கூடத் தோன்றவில்லை.
"ருந்?” அலி? ஆதி 9
கல்லூரிக் கேண்ட்டினான வசந்த பவனுக்கு அவளோடு போகும் நேரம் சந்தோஷமான கணங்கள்தான். அவளை அமர்த்திவிட்டு காப்பி, தேநீர் என எதுவாக இருந்தாலும் தானே எடுத்து வருவதுண்டு அது அவளுக்கும் பிடித்த ஒன்றாகத்தான் இருந்தது. இவனுக்கும்கூட பிடித்திருந்ததால் தான் அதைச் செய்துகொண்டிருந்தான் தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வரும் போது தளும்பிக் கொண்டிருந்த மனது "மெஸ்ஸில் நிறைய தடவை சுயசேவை பண்ணிக்கொள்ள முடியாமல் சர்வரைத் திட்டிவிட்டு கோபித்துக் கொண்டு டம்ளரைத் தட்டி வெறியைத் தீர்த்துச் கொண்டு சாப்பிடாமல் வந்தியே அப்ப எங்ச போச்சு இந்தப் பொறுமையும் சாந்தமும் என்று கேள்வி கேட்டுக் கொடுத்தது. அது
காற்றுவெளி - 4

வேற? இது வேற? என்ற பதிலின் விளக்கமாய் மெஸ் வேலையாள் சர்வராய் நின்றான். இவளோ நான் உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்வியுடன் மனசு முழுக்க வியாபித் துக்கொண்டிருந்தாள். கேள்வியின் பதிலாய் உருவான கனவுகள் உதிர்ந்த பூக்கள் உயிர்த் தெழுந்து வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறந்து
அழகு காண்பித்துக் கொண்டிருந்தன.
இதற்கெல்லாம் நிறைய பணம் செல வாகிறதே என்ற குற்ற உணர்வு மனதில் நிரம்பி வழிந்தது. இதுக்குத்தான் இங்க வந்தோமா? என்ற கேள்வியைத் தூண்டிவிட்டது குற்ற உணர்வு. சரி அதுக்காக என்ன செய்யலாம்? வீட்ல இருந்துதான் அனுப்புறாங்க. அனுப் பட்டும். இப்பச் செலவு செய்யாம வேற எப்பச் செலவு செய்யறது? சுயமா சம்பா திக்கும் போதா? சம்பாரிக்கும்போது கூடவே கஞ்சத்தனத்தையும் சேர்த்தே அல்லவா சம்பாதிக்க வேண்டியிருக்கும். அதனால் இப்பவே எஞ்ஜாய்.. என்று அவனுடைய துள்ளும் இளமை குற்ற உணர்வுகளைப் புதைத்து அவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தது.
சினிமாப்பட போஸ்டர்களாலும் நைலக்ஸ்களாலும் இன்ன பிறக்களாலும்... மாசுபட்டிருந்த மனசுக்கு இந்த உறவு சைக்கோ அனாலிசிஸ் செய்து கொண்டிருந் தது. மகிழ்வுதரக்கூடிய உறவுதான். ஆனால் மற்றவர்களால்தான் இந்த உறவைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏன் தனக்குக் கிட்ட வில்லை என்ற பொறாமையா? இல்லை அவனவன் மனசுக்குள்ளிருக்கும் தாத்தாப் பாட்டிகளின் தொண தொணப்பா? எது வாக இருந்தாலும் ஏதோ நம்மால் முடிந்த காரியம் என்ற சுயசந்தோஷத்தோடு கூடிய அவர்களின் எதிர்வினையாக டாய்லெட்டுக் களிலும் சுவர்களிலும் பெயர்களின் கிறுக்
28

Page 29
கல்கள், கோடுகள், படங்கள்..
ஒரு பெண்ணின் உறவு அதற்கு முன்பு பழகிய அத்தனை நண்பர்களையும் தூக்கி யெறிந்து விடுமளவுக்கு மனதை உருமாற்றி விடுகிறதே? எப்படி நிகழ்கிறது இந்த மாற்றம்? முன்னை பின்னை பெண் களையேப் பார்க்காததாலாயா? இல்லை வேறெப்படி? மரணமாகிக் கொண்டிருக்கும் அன்பின் வித்தைகள் ஜாலங்கள் சர்க்கஸ் காரனின் ஊஞ்சலாட்டங்கள். தனி மனிதர் கள் எல்லாம் பொருள்களாய்ப் பார்வை கொண்டிருப்பதால் உண்டாகும் சொந்தம் கொண்டாடும் மனோபாவம் உறவுகளின் இயல்பையே செயற்கையானதாவும் சிடுக்கு கள் நிறைந்ததாகவும் உருமாற்றி விடுகின்றன.
இழை இழையாகப் பிரித்தெடுக்க முயன்ற நேரத்தில்தான் தேர்வு நெருங்கி இருந்தது. எல்லோருமே சிரத்தையுடன் படித்துக் கொண்டிருக்க அந்தத் தீவிரம் இவனையும் பற்றிக்கொண்டது. எல்லா ஆட்டமும் ஆடி முடிச்சிட்டு சாகப் போறப் பதான் சங்கரா சங்கரான்னு கோஷம் போட றது. அப்பவாவது மோட்சம் கிடைக்கா தான்னு ஒரு நப்பாசைதான். எப்படி இருந் தாலும் வாந்தி பேதிக்கு ஒரு பத்துப் பதி னைந்து நாட்களே போதும். மூன்று வருஷமா படிச்சி உள்வாங்குவதை மூன்று மணி நேரத்துல வாந்தியெடுத்தோ துப்பியோ எப்படியோ...
அப்போது அவசரமாகக் கொஞ்சம் வந்துவிட்டுப் போகும்படி அவளிடமிருந்து போன் வரவே உடனடியாக அவளுடைய விடுதிக்குப் போனான். அவனோ வெளியே கிளம்பும் நோக்கத்தில் தயாராக வந்திருந் தான். அவளுடைய பழைய தோழியின் சகோதரி இறந்து போய் விட்டதன் பொருட்
29

டுத் துக்கம் விசாரிக்கப் போகவேண்டும் என்று கூறி அவனைத் தனக்குத் துணையாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். மறுப்பேதும் கூறாமல் அப்படியே அவ ளோடு நடக்கத் தொடங்கினான்.
கோட்டை புகைவண்டி நிலையத்தை அடைந்து எலமனூருக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு வண்டிக்காகக் காத்திருந்தனர். மரங்கள் நிறைந்த அந்தச் சின்ன ரயில் நிலையம் அழகாக இருந்தது.
- வந்த ரயிலில் ஏறி ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தவனின் அருகிலமர்ந்து கொண்டு அவளுடைய பழைய தோழி பற்றி
பேசிக் கொண்டிருந்தாள். முகமறியாத அந்தப் பெண்ணைப் பற்றிப் பேசப் பேச கேட்டுக் கொண்டிருந்தான். அந்தச் சிநேகிதி அவளுடைய பள்ளிக்கூட காலங்களில் அவளோடு விடுதியில் ஒன்றாய்ச் சேர்ந்து படித்தவளாம். பன்னிரெண்டாம் வகுப்பி லேயே தேர்ச்சியடையாமல்போய் விட்டதால் அதன்பின்னான கல்லூரிப் படிப்பை அஞ்சல் வழியில் கற்றுக்கொண்டிருக்கிறாளாம். பின் அவளுடைய சின்ன வயதில் செத்துப் போன அவளுடைய சகோதரன் பற்றியும் அவனு டைய காதல் பற்றியும் அந்தக் காதலியின் அழகு அவர்களிருவருக்கும் பிடித்த அன்னக் கிளி படம் என்று கண் பனிக்கப் பேசிக் கொண்டுவந்தாள். காதலி அவனை ஏமாற்றி விட்டு வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளவே தற்கொலை செய்து கொண்டா னாம். சில சமயங்களில் நினைவு கூறப்படும் சோகம்கூட பெண்களை அழகாக்குவதாக யோசித்தாள். ஆனால் சோகத்தில் ஒளிரும் அழகை ரசிப்பதற்கான மனம் சாதாரண மானதாக இருக்க முடியாது என்று தோன்றியது.
எலமனூர் ரயில் நிலையத்தில் இறங்கிய
காற்றுவெளி - 4

Page 30
பின்பு அவனை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு வேகமாகச் சென்றுவிட்டாள். பொன் வண்டுறங்கும் சிறியத் தீப்பெட்டியாக ரயில்வே ஸ்டேஷன் அழகு காண்பித்துக் கொண்டிருந்தது. ஸ்டேஷன் விட்டு வெளியே வந்தான். நீண்டிருந்த திருச்சி கரூர் சாலைக்கு அந்தப்புறம் தண்ணீர் புரளும் காவேரி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற் றோரத்து ஏரிகட்டத்தில் பிணமெரித்த படி சாராயக்குரலில் பாட்டுப் பாடிக் கொண் டிருந்தான் வெட்டியான். ஏரிக்கட்டங் களைச் சுற்றித் தாழம்புதர்கள். பிணம் எரியும் வெளிச்சத்தில் நெளிந்தபடி நகர்ந்து கொண் டிருந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த முக்கொம்புப் பாலத்தில் எரியும் விளக்குகள் ஆற்றில் வெளிச்சப்புள்ளிகள் வைத்து கோலம் போட்டிருந்தன. இவனுடைய மனசும் கோலம்போட கனவுப்புள்ளிகளை வைத்தன. முக்கொம்பு அனுபவம் பற்றிக் கல்லூரியில் நிறையக் கதைகள் கேள்விப் பட்டிருக்கிறான். இங்கே வந்த எல்லோருமே சந்தோஷமான அனுபவத்தோடுதான் திரும்பி வந்ததாகச் சொல்கிறார்கள். இந்த இடத்தின் ராசியே ஆணையும் பெண் ணையும் இணைத்து வேடிக்கை பார்ப்பது தானாம். பரிட்சை முடிச்ச உடனே ஒரு நாள் அவளை அங்கே கூட்டிக்கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தான். இருண்ட நீரில் நெளியும் ஒளிப்புழுவாக உருமாறிய மனசு “துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் சந்தோஷக் கனவு காணறியே மனுஷன்தானா நீ? என்று கேள்வி கேட்டு அவனைக் குத்திக் கிளறியது.
காலம் 2ாச்சப்புள்கம் விளக்குக
ச்ச துக்கம் விசாரிக்க வந்த இடத்துல வேறெதையோ யோசிச்சிக்கிட்டு இருக்கமே! இந்த ஊரின் இன்றைய இந்த துக்கத்துக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் எல்லோரிடமும் இருக்கும் அவரவரின் துக்
காற்றுவெளி - 4

கங்களே துக்க விசாரிப்பில் வெளிப் பட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. செத்துப் போன பெண் கருப்பா சிகப்பா என்று கூடத் தெரியாது. ஆனாலும் அவளுடைய சாவுக் குத் துக்கம் விசாரிக்க வந்தவளுக்குத் துணையாக வந்ததன் பொருட்டு இந்தத் துக்கத்தோடு சம்மந்தப்பட்டவனாகி விட் டான். ஆனாலும் கொஞ்சம்கூட துக்கப்பட முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையே மனதுக்கு ரொம்பவும் சங்கடமாக இருந்தது.
யோசித்தபடியே ரொம்ப நேரமாக நின்று கொண்டிருக்கும் இவனையே உறுத்துக் கொண்டிருந்த வெட்டியான் பாட்டை நிறுத்தி விட்டான். பின் இவனை விசாரித்தான். “சும்மா” என்ற பதிலை மட்டும் உதிர்த்து மௌனமாகிவிட்டான் அநேகமாக அவள் துக்கம் விசாரிக்கப்போன வீட்டுப் பெண்ணாகத் தான் இது இருக்க வேண்டும். ஆற்றுக்கு இறங்கும் பாதையில் இறங்கி ஏரிக்கட்டத்தை அடைந்தான். பின் அவனிடம் பேச்சு கொடுக்க பதிலோடு தொடர்ந்தான் வெட்டியான்.
"பதினெட்டுப் பத்தொம்பது வயசு தாம்பா இருக்கும். பாத்தவனைப் பாத்துக் கிட்டே இருக்கவைக்கற அழகுப்பா இது. பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளை. பொம்பளைகூட பாத்தா ஆசைப்படணும் அப்படிப்பட்ட அழகி. ஒருத்தன் ஏமாத்திப் புட்டான். அவனை நான் பாத்திருக்கேன். வாந்தியெடுத்தமாதிரி இருப்பான். அவன் பின்னாடி அலைஞ்சா... முடிச்சிட்டுக் கைவிட்டுட்டான்போல இருக்கு. வெளில தெரிஞ்சா அசிங்கம்னு வீட்டுலையே முடிச் சிட்டாங்க. செத்தப்பிறகும் என்னா அழகு. வெறுமனே இவ உடம்பைப்பாத்தவனால வேறெந்த உடம்பையும் நினைக்கவும் முடியாது அணைக்கவும் முடியாது... இந்த
30

Page 31
இளம் வயசே ஒரு நெருப்புதான். ஜாக் கிரதையா இருக்கணும். நெருப்பு மாதிரி அழகு நெருப்புல எரிஞ்சிக்கிட்டு இருக்கு.” பேசியபடியே இடுப்பிலிருந்து உருவிய சாராய பாட்டிலிலிருந்து கொஞ்சம் வாயில் ஊற்றிக் கொண்டான்.
ஆற்றிலிருந்து மேடேறி சாலையைக் கடந்து ரயில் நிலையத்தை அடைந்தான். மங்கிய நிலவொளியில் படர்ந்திருந்த மரங் களின் நிழலில் ஊமையாய் அடங்கிச் சுருண்டு கிடந்தது புகைவண்டிநிலையம். அருகிலிருந்த சினிமாக்கொட்டகையில் டைட்டில் முடிந்து படம் தொடங்கு வதற்கான மணி அடித்தது. நாளைக்கு பரிட்சையில் என்ன படித்து எதை எழுத?
தெருவிளக்கின் குறைந்தவெளிச்சத்தில் தென்பட்ட சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தான். அருகில் வந்தவுடன் வெகுநேரம் காக்கவைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். பின் “கேட்டா என்னான்னு அறிமுகப்படுத்தறதுன்னு தெரியலை. பிரதர்னு சொல்லிக்கவும் முடியலை.. அதனாலதான்.” என்று மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். ரயில்வர இன்னும் நேரமிருந்தது. பிளாட் பார இருக்கையில் அமர்ந்தார்கள். பின் இப்படிப் பட்ட நேரத்தில் அவனுடைய அருகாமை மிகுந்த ஆறுதலையும் தெம்பை யும் கொடுப்பதாகச் சொல்லிவிட்டுப் பறந்து கொண்டிருக்கும் மின்மினிப் பூச்சிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரயில் ஏறிய உடனே பொங்கி வழிந்து கொண்டிருந்ததை கொட்டத் தொடங்கி விட்டாள். "எவ்வளவு அழகு தெரியுமா இவ. பாக்கப்பாக்க பாத்துக்கிட்டே இருக்கணும் போலத் தோணும் இப்படிப் பண்ணிட்டா...

காதல் தோல்வியாம் தற்கொலை செஞ்சிக் கிட்டா. இப்படிக் காதலிச்சிட்டு ஏமாத்தற வங்களை நிக்கவச்சிச்சுடணும்” என்று புலம்பிக் கொண்டே வந்தாள்.
இரவில் விடுதிக்கு வந்தபோது படித்துக் கொண்டிருந்த அறை நண்பர்கள் எல்லோ ரும் இவனை விநோதமாகப் பார்த்தனர். பின் இவனுடைய தந்தை அன்று இவனைப் பார்க்க வந்திருந்ததையும் கூறினர். யாரோ உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு இவனைப் பார்க்கலாம் என்று வந்திருந்தாராம். வெகுநேரம் காத்திருந்து விட்டுக் கனத்த மனதோடு திரும்பிப்போன தாகக் கூறினார்கள்.
அதன் பின் இதுவரை அந்த வருகை யைக் குறித்து அவனுடைய தந்தை அவனிடம் பேசியதே இல்லை.
இன்று அவளுக்கு எங்கோ கலியாண மாகி விட்டதாக யாரோ நண்பன் சொல்லக் கேள்வி. தேர்ச்சியடையும் பொருட்டுத் திரும்பத் திரும்பக் கல்லூரிக்கு வந்து சேர்ந்த பின் இப்போது வேலை தேடி நாயாக அலைந்து கொண்டிருக்கிறான். அப்போ தெல்லாம் இரண்டு ரூபாய்க்குக் குறைந்து எந்தச் சர்வருக்கும் டிப்ஸ் வைத்ததாக ஞாப கமே இல்லை. இலையில் மீதம் வைக்கா மலும் சாப்பிடமாட்டான். வீணாவதைப் பற்றிக் கேட்டால் காட்டக்கூடாத கஞ்சத் தனம் பற்றியும் பின்பற்ற வேண்டிய மேசை நாகரிகம் பற்றியும் மிகப்பெரிய விரிவுரை யாற்றும் அறிவுரை வித்தகனாக உருமாறி விடுவான். ஆனால் இப்போதோ மெளன மாக டவுன்பஸ்சுக்கு வைத்திருந்த ஒன்றரை ரூபாய்க்கு பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டு விட்டு பொடி நடையாக வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான்.

Page 32
நேற்றுவரை சுற்றத்தில் நல்ல பெயர்
ஊராரின் மரியாதை நண்பர்களின் அமோக விழைச்சலுமாய்,
என் மூதாதையரின் கையுடனும் காலுடனும் செவியுடனும் தோலுடனும்
கண்கள் மூக்குடனும் வாயுடனும் வயிற்றுடனும்
நானிருந்தேன்.
இன்றோஎன் கண்களால் பார்த்து என் செவிகளால் கேட்டு
என் கைகளை வீசி என் கால்களால் நடந்தபோது,
என் மூக்கினால் நுகர்ந்து |
என் நாவினால் ருசித்து என் வயிற்றுக்கு உண்டபோது,
m0000
என் இயத்தின் பெருக்கை நான் இறைத்தபோது,
என்.
முகம் சுழிக்கிறது ஊர் உதிர்ந்து போயினர் நண்பர்
தண்ணீருக்குள் துளி எண்ணெய் போல்
தனித்துள்ளேன்

நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த
யாரோ ஓர் மனிதனுக்காய் என் வாழ்வு பலியாகும் அர்த்தமின்மை தீவிரமாகையில்,
இரும்பினாலும் தங்கம் பொன் செம்பினாலும் ஈயம் பித்தளை வெண்கலத்தாலும் கெட்டித்த மூதாதையரின் இதயம் கொண்டு ஊரினை வெல்லேன். தசைகளாலான எனதே எனது இதயம் பூக்க வாழ்வினைப் புணர்வேன் கானகத்துள் நீர்ச்சுனை தேடும் வெறியன் நான்
நேற்றுவரை என்னிடம் இருந்தது முன்னோர்கள் பலரின் மூளை... இன்றோ என்னிடம் இருப்பது ஒரேயொரு மூளை - என்னுடைய மூளை என்னுடைய மூளை என்னுடைய மூளை
- வாசுதேவன்.