கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.11

Page 1
www.gnanam.info www.gnanamika
ஞா
பேராசிர்
தி
கலை இல

5க்கியச் சஞ்சிகை
நவம்பர் 2014
37 - 1
விலை: ரூபா 100/=
ஞரான துணைவேந்தர் யெர் என்.சண்முகலிங்கன்

Page 2
ason, qala nomaaga
Nagalingai
Jen
Designers and Manufa 22kt Sovereign Gold
Quality Jewellery
101, Colombo Street, Kandy Tel: 081 - 2232545
(CENTI
Suppliers
DEALERS IN ALL KINI FOOD COLOURS,
CAKE INGR
76B, Kings Tel: 081 - 2224187, 081

3....
ns
vellers
cturers of
RAL ESSENCE
SUPPLIERS
to Confectioners & Bakers
DS OF FOOD ESSENCES,
FOOD CHEMICALS, CEDIENTS ETC.
Street, Kandy. |- 2204480, 081 - 4471563

Page 3
ஒளி:15 காதலின் குணம்
ஒளி:15 சுடர் :06
(ஞானம்
174=
இத
கவி கெ ரா.
பு=ே
வா
பதி
மிவ பெ மெ
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர், ஸ்தாபகர் : தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு தொ.பேசி. - 0094-11-2586013
0094-77-7306506 தொ.நகல் r 0094-11-2362862 இணையம் ~ WWW.gnanam.info
www.gnanam.lk
தளம்.ஞானம். இலங்கை மின்னஞ்சல் editor@gnanam.info
editor@gnanam.lk அஞ்சல் r 3B-46h Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம் T. Gnanasekaran
ACC. No. - 009010344631
Hatton National Bank, Wellawatha Branch. Swift Code : HBLILKLX (மணியோடர்மூலம் சந்தா அனுப்பு பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும்) 7 விபரம் Sri Lanka
ஒரு வருடம் :ரூ 1,000/= ஆறு வருடம் :ரூ 5,000/= ஆயுள் சந்தா :ரூ 20,000/=
ஒரு வருடம் Australia (AUS) Europe (€) India (Indian Rs.) 1250 Malaysia (RM)
100) Canada ($) UK (£) Singapore (Sin. $) Other (US $)
50)
சிறு
உ.
ச. (
అం
50).
40
50
40)
சின்
பவ
சம்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந் தப் பெயர், தொலைபேசி எண், முகவரி, ஆகிய வற்றை வேறாக இணைத்தல்வேண்டும்.
பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு.
படைப்புகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.
கே.
வா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

வீமி ழேமிரணுஞானமி?
திரள்ளே ..... ஆ
17
19
தைகள் க்கிறாவ ஸுலைஹா
நித்தியானந்தன் லாலியூர் வேல்நந்தன் கரைவாணன் "யத்தளாவ பாறூக் > ஹிந்தலை ஏ பாரிஸ் ரலிகை ஜெயா
- 9, - -'
27, 34 36
ாழிவரதன் * { 27 Nov 2014
40
Aா?
- 4 '11)
03
0 கட்டுரைகள் 19:13 ய )
இ. இராஜேஸ்கண்ணன் க. சண்முகலிங்கம் என். செல்வராஜா
12 37
றுகதைகள் ஜீவகுமாரன் திசார் முருகானந்தன் னைதா ஷெரிப்
8 இ ல எ
• பத்தி
கே.ஜி.மகாதேவா பேரா. துரை மனோகரன்
46 49
ரிமா
நீதா லோகநாதன்
28
கால இலக்கிய நிகழ்வுகள்
பொன்னுத்துரை
52
சகர் பேசுகிறார்
55

Page 4
அணரட அதிதி
கலைஞரான துணை பேராசிரியர் பென்சண்டு
6 இரா
புலமையாளர்கள் வெறுமனே தங்கள் புலமைத்துவ ஆற்றல்களுடன் சுருங்கிப் போய்விடாது மக்கள் நிலைப்படுத்தப்பட்ட புலமையாளர்களாக அமைதல் வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சமூகவியற்றுறையின் தொடக்க காலத்துத் தலைவரும் இந்நாள் சமூகவியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான என்.சண்முகலிங்கன் அவர்கள். சமூகவியல் மற்றும் சமூக, பண்பாட்டு மானுடவியல் துறைகளைத் தன் புலமைத்துவ எல்லைகளாகக் கொண்ட இவர் எல்லைகளைக் கடந்துநிற்கும் பல்பரிமாண (ளுமை கொண்டவராக விளங்குகின்றார். தன் பமைசார் துறைகளோடு இலக்கியம், ஆக்க சை, நாடகம் முதலிய பல்வேறு துறைகளில்
மை அடையாளப்படுத்திக் கொண்டவர்.
யாழ்ப்பாணத்துக் கல்வி மரபில் தனித்துவ இடம் வகிக்கும் மஹாஜனக் கல்லூரியின் உயிர்ப்புமிக்க 'தயாரிப்புக்களில்' ஒரு முதன்மை ஆளுமை இவர். மஹா ஜன அதிபர் ஜெயரட்ணம் காலத்தின் செழிப்புக்களுடனும் செழுமைகளுடனும் வளர்ந்தவர். ஆசிரியர்களான கனகசபாபதி, கதிரேசர்பிள்ளை, செல்லத்துரை போன்றவர்களின் வழிப்படுத்தலால் மிளிர்ந்தவர். இவரது புலமைச்சிறப்பிற்கும் கலைப் பயில்வுக்கும் அடித்தள மிட்ட' நாற்றுமேடையாக' மஹா ஜனக் கல்லூரி அமைந்ததுடன் இதுநாள் வரையிலான இவரின் சாதனைகளைக் கௌரவித்தும் இருந்தது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

வந்தர்,
-இது
கலிங்கன்
ஜேஸ்கண்ணன்
பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர் கள் அடிப்படையிலே ஒரு சமூகவியல் மற்றும் மானுடவியல் புலமையாளர். தமிழில் சமூகவியல் மற்றும் மானுடவியல்சார் அறிவினை கொணர்ந்து சேர்ப்பதில் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் தனித்துவமான பணிகளை ஆற்றிவருபவர். உலகப் புகழ்பெற்ற மானுடவியல் அறிஞர் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர அவர்களின் வழிகாட்டலில் மேற்கொண்ட The New Face of Thurga: Religious and social changes in Sri Lanka. என்ற கலாநிதிப்பட்ட ஆய்வு யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அசைவியக்கம் ஒன்றினைப் பேசும் சமயத்தின் சமூகவியல் சார்ந்த ஆய்வு. இதனை டெல்கி காலிங்கா பதிப்பகத்தினர் பதிப்பித்திருந்தனர். பின்நாளில் புகழ்மிக்க இந்திய மானுடவியலாளர் முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் 'துர்க்கையின் புதுமுகம்: யாழ்ப்பாணத்தில் சமயம், வழிபாடு, மாற்றங்கள்” (2013) என்ற நூலாகத் தமிழாக்கம் செய்துள்ளார். முனைவர் பக்தவத்சல பாரதி யுடன் இணைந்து 'இலங்கை இந்திய மானுட
வியல்' என்ற ஆய்வு நூலை வெளியிட்டிருந்தார். பண்பாட்டின் சமூகவியல் (2002), மரபுகளும் மாற்றங்களும் (2001), சமூக மாற்றத்தில் பண்பாடு (2000), தொல்சீர் சமூகவியல் சிந்தனை யாளர்கள் (2002), சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள் (2008), அறிவின் சமூகவியல் சிந்தனை கள் (2013) முதலிய நூல்கள் வாயிலாக பண்பாடு, சமூகம், சமயம், கல்வி, மேம்பாடு, ஊடகம்

Page 5
போன்ற பல்வேறு துறைசார் அறிவினைத் தமிழிலே தந்துள்ளார். தமது வாழ்வியல் புலத்தின் சமூக பண்பாட்டு அம்சங்களை ஆங்கில வழியாகப் பிறர் அறியும் வண்ணம் தந்திருந்த அதேவேளை பிறமொழியிலமைந்த சமூகவியல், மானுடவியல் சார்ந்த அறிவினைத் தமிழ் உலகிற்கு தருவதிலும் அரும்பணியாற்றி வருகின்றார்.
தமிழர்களின் வாழ்வின் இடர்மிகுந்த காலமொன்றில் யாழ்ப்பாணப்
பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்து பேராசிரியர் ஆற்றிய சேவைகள் மிகமுக்கிய மானவை. போரின் உக்கிரமான வீச்சினுள் அகப்பட்டு அல்லற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காகவும் வாழ்வுக்காக வும் தகுந்த பணியாற்றியவர். உறவுகளைப் பிரிந்து துயர் சுமந்து தனித்துப் போயிருந்த தருணத்தில் எதிர்கால வாழ் வின் இருப்புக்கான சூழமைவினை உருவாக்குவதற்காய் உழைத்த வர். பல்கலைக்கழகத்தில் பல மேம்பாட்டுச் செயற்றிட்டங்களுக்கு அத்திபாரமிட்டவர். யாழ்ப் பாணப் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவரான பேராசிரியர் கைலாசபதி அவர் களுக்கு முதன்முதலில் நினைவுப் பேருரை நிகழ்த்துவித்தார். பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் உருவச்சிலையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வித்தியானந்தன் நூல கத்தில் அமைப்பித்திருந்தார். பல்கலைக் கழகத்துக்கெனத் தனித்துவமான ஒரு ஆய்வு மாநாட்டின் உருவாக்கத்திற்கு அடிப்படையிட்டார். இந்தியா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றிருந்ததுடன் அந்தப் பல்கலைக்கழகங்களுக்கும் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்திற்குமான பயன் மிக்க இணைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார். தென்னாபிரிக்கத் துணைவேந்தர் மாநாட்டிலே தமிழ்க்கவிதை பாடி தமிழர் வாழ்வின் வெட்டுமுகத்தினைப் வெளிப்படுத்தி பிறர் உணரவைத்தார்.
புலமையாளர்கள் புனைவு ஆற்றலை வளர்த்துக் கொள்வது மிக அரிது. இவை இரண்டும் எப்போதுமே ஒன்றை இன்னொன்று ஊடறுக்க முடியாது - ஊடறுக்கவும் கூடாது என்று கருதுவது வாலாயமாகிவிட்டது. புனை வாற்றல் புலமைநெறியால் முற்றாகத் தின்று தீர்க்கப்பட்ட படிப்பினைகளும் உண்டு. ஆனால் புலமைநெறியும் புனைவாற்றலும்

ஒருங்கே வாய்த்துவிட்ட சிலரைத்தான் எங்கள் புலமைப் பாரம்பரியத்தில் காணமுடிகின்றது. பேராசிரியர் அவர்கள் இவை இரண்டும் வாய்க்கப் பெற்றவர். பேராசிரியர் கைலாசபதி அவர்களால் இனங்காணப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளராக வருவதற்கு முன்னர் இவர் இலங்கை வானொலியின்வழி அறியப்பட்ட கலைஞராகவிருந்தார். ஈழத்துக்கெனத் தனித் துவம்வாய்ந்த பாணியுடன் மெல்லிசைப் பாடல்களை ஆக்கும் பாடலாசிரியராகவும் அப் பாடல்களை இசைகூட்டிப் பாடும் ஆக்க இசைக் கலைஞராகவும் நல்லதொரு கவிஞனாகவும் நன்கு அறியப்பட்டிருந்தார். இலங்கை வானொலிக் காலத்தில் 'பரா' என நன்கு அறியப்பட்ட பரராஜசிங்கம் அவர்களுடனும் சி.வி.இராஜசுந்தரம் அவர்களுடனும் இணைந்து தனது ஆக்கஇசைப் புலமையினை வளர்த்துக் கொண்டவர். 'இதயரஞ்சனி'க்காக பராவுடன் சேர்ந்து இவர் எழுதித் தொகுத்த பிரதிகள் தனித்துக் குறிப்பிடத்தக்கன. அக்காலத்தில் ஒலிபரப்பப்பட்ட ரசமஞ்சரி நிகழ்ச்சிக்கான தொகுப்பானது இன்றும் வானொலி நேயர் களின் காதுகளில் சங்கமித்திருக்கும். ஈழத்து மெல்லிசை மரபிற்கு தன்னுணர்ச்சிப் பாடல்களால் வளம் சேர்த்த பெருமை பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களுக்கு உண்டு. இந்த ஆக்க இசைக் கலைப் புனைவின் தொடர்ச்சியில் மானஸி, உயிரின் குரல், கண்ணீரைத் துடைத்துக்கொள், ஞானக் குயில் முதலிய ஆக்கஇசை அரங்குகளின் வழி தனது தனித்துவ இசைப்புலமை அடையாளத்தைப் பதித்திருந்தார். அண்மையில் ஆத்மா, அம்மா முதலிய இறுவெட்டுக்களின் வழியாக இசையின்வழி உள் ஆற்றுப்படுத்தலுக்கான கலைத்துவமான தன் பங்களிப்பினைச் செய்துவருகின்றார். சமூகத்துக்கான ஊடக அறிவினைக் குறித்து அதிகம் எழுதிவரும் பேராசிரியர் அவர்கள் காட்சிசார் மானுடவியல் விவரணங்கள் பண்பாட்டுக் கற்கையில் பெறும் முக்கியத்துவத்தினை உணர்ந்து மண்டூர் முருகன் வழிபாட்டு மரபுகள்(2000), மட்டக்களப்பில் அம்மன் வழிபாடும் சடங்கும் (1999) என்பவற்றை மானுடவியல் ஆவணங்களாக்கினார்.
மஹாஜனக் கல்விக்காலத்தில் ஆசிரியர் களான கதிரேசர்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் நாடக அரங்குகளின் வாயிலாக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 6
விதைகளில் (1992) என்ற பரப்பினையும்
நடிப்புக்காகக் கலைக்கழக முதற்பரிசு பெற்றிருந்த இவர், இசை மற்றும் பேச்சுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். கொழும்புப் பல்கலைக்கழக காலத்தில் நாடகத்துறையில் இவர் ஈடுபடவும் வானொலி நிகழ்வுகளில் பங்கேற்கவும் மஹாஜன கல்லூ ரியின் மேடைகள்தான் அடித்தளமிட்டதெனப் பெருமையுடன் குறிப்பிடுவார்.
தென்மயிலைச் சண்முகன்,
சண்முக பாரதி போன்ற புனைபெயர்களில் கவிஞனாக அறியப்பட்ட பேராசிரியர் அவர்கள் நாகரிகத் தின் நிறம் (1993) என்ற கறுப்பினக் கவிதைகளின் மொழிபெயர்ப்பினையும் சந்தன மேடை (1992) என்ற தன்னுணர்ச்சிக் கவிதைகளின் தொகுப்பினையும் படைத் துள்ளார். இவரின் சந்தன மேடை கவிதைத் தொகுப்புப் பற்றி 1993 மார்ச் மல்லிகை சிற்றிதழில் எழுதிய குறிப்பொன்றில் 'தன் னுணர்ச்சிப் பாட்டுக்களை இயற்றுவதில் இவர் ஊன்றிய கவனம் செலுத்தியுள்ளார். அதனோடுகூட இசையோசையுடன் இணைந்த விதத்திலேதான் இவருடைய கலையாக்க எழுச்சி உந்தல்கள் செயற்படுகின்றன என்பதும் மனங்கொள்ளத்தக்கது (பக்-22) என்று கவிஞர் முருகையன் குறிப்பிடுகின்றார். இக் கவிதைகள் ற்றிக் கூறும் சில்லையூர் செல்வராஜன் 'தனி மனித மனக்கனிவைப் பல கவிதைகளில் Tணலாம்' என்றார். 'அனுபவ வெண்சூட்டில்
ந்த கவிதைகள்' என ஆ.சிவநேசச்செல்வன் குறிப்பிடுகின்றார். கறுப்பினக் கவிஞர்களின் கவிதைகளின் மொழியாக்கத்தில் ஈழத்தில் என்.சண்முகலிங்கன் அவர்களின் முயற்சி
முந்தியதாகும். இ கவிதைத் துறையில் மாத்திரமன்றி புனைகதை இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுவருபவர் பேராசிரியர் அவர்கள். ஊழித்தாண்டவம் (2004) என்ற சிறுகதைத் தொகுதி மணிமேகலைப் பிரசுரத்தினரால் வெளியிடப்பட்டது. இவரின் சான்றோன் எனக்கேட்ட தாய் (1993) என்ற சிறுவர் நாவல் யுனெஸ்கோ அரசகரும மொழித் திணைக்களத்தின் விருதினைப் பெற்றுக் கொண்டதுடன் தோதன்ன அமைப்பினால் சிங் களத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது. இவரது படைப்பாக்கங்களும் கட்டுரைகளும் சுபமங்களா, தாயகம், மல்லிகை, வீரகேசரி,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

ஈழநாடு, ஞானம் முதலிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பிரசுரமாகி வந்துள்ளன, வருகின்றன. இவரின் புனைவாக்கங்களில் தனித்துக் குறிப்பிட வேண்டிய இன்னொரு வகை தாயாரின் வாழ்வின் வழித்தடத்தை பதிவு செய்வதாய் அமைந்த என் அம்மாவின் கதை (2004) என்ற படைப்பும் தந்தையின் வாழ்வின் வசீகரங்களை இலக்கியமாக்கிய என் அப்பாவின் கதை என்ற படைப்புமாகும். நீத்தார் பெருமையினைக் கூறும் நினைவேடு ஒன்று இலக்கியமாகலாம் என்பதற்கு இவரின் இந்தப் படைப்புகள் சான்றாகின்றன.
பாரதி, ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விபுலானந்தர் போன்றவர்களின் கருத்துக் களினாலும் கவிதைப் படைப்புக்களினாலும் அதிகம் ஆகர்ஷிக்கப்பட்டவர் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள். சண்முக பாரதி என்று தனக்குப் புனைபெயர் சூட்டி மகிழ்ந்தார். தாகூரின் கல்விச் சிந்தனை களுக்கும் கவிதைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். பத்தியாளரும் விமர்சகருமான கே.எஸ்.சிவகுமாரனுடனான நேர்காணல் தொகுப்பான Le Roy Robinson in Conversation with K.S.Sivakumaran on Aspects of Culture in Sri Lanka என்ற நூலில் சிவகுமாரன் சண்முகலிங்கன் பற்றிக் குறிப்பிடும்போது "Swami Vipulananda the first professor of Tamil at the University of Ceylon wrote a magnum opus on it, Yal Nool now to continue. You may be especially interested in knowing that Shanmugalingan is also a writer of sorts' (பக்-57) என்று குறித்துரைப்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.
பல்கலைக்கழகத்தின் உயர் பதவியான துணைவேந்தர் பதவியினை அலங்கரித்த பலரும் புலமைநெறியில் ஆழத் தடம்பதித்தவர்களாக இருந்தனர். பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் புலமைத்துவத்துடனும், ஒத்துணரும் மனிதாபிமானத்துடனும், கலையுணர்வின் உள்ளொளியுடனும் துணைவேந்தராயிருந்து பணியாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் தடத்தின் இன்னொரு பரிமாணமாக 'கலை
ஞரான துணைவேந்தர்' என மிளிர்ந்தார்.
000

Page 7
வி. ஜீவகுமாரன்
கழுவி குசினியின் பின் தாழ்வாரத்தில்
சறோ என்னும் சறோஜினிதேவி.
அடுத்த பத்து நாளும், அதாவது | மற்றும் மாமிச வகையறாக்கள் எதுவும்
தங்கராசாவும் பிள்ளைகளும் எப் எண்ணத் தொடங்குவார்கள்.
தங்கராசாவுக்குப் பறவாயில்லை. ஆசிரியர்களுடன் வெளியில் எங்கேயா சாப்பிடலாம்.
பிள்ளைகளுக்கு அப்படிபில்லை. கடைக்கண்ணாடிக்குள் இருக்கும் மீன் பார்த்துவிட்டு வரும்வழியில் வாசலில் பார்த்துக் கும்பிட்டுவிட்டு வீடு திரும்ப
காகம் வேறு குசினிக் கூரைக்கும் மாறி பறந்து கொண்டும் கத்திக் கொ
“இண்டைக்கு யாரோ வீட்டை கிடக்கு காலமை தொடக்கம் ஓயாமல் இருக்குது...” பாரத்தில் கிளைகள் முருங்கை மரத்தில் இருந்து இலகு மூன்றைப் பிடிங்கி கொண்டு காகத்தை தாழ்வாரத்திற்கு வந்தாள்.
"சும்மா உந்தக் குந்திலை இருக்கிறது பத்து பத்துக்காய் கட்டிக் கொண்டு உ

ஏதாவது ஒரு கோயிலின் ஒலிபெருக்கியில் இருந்து கேட்கும் சுப்பிரபாத ஒலியுடன் காலைப் பொழுது புலர்வது போலவே இன்றும் புலர்ந் திருந்தது.
- இன்று அது பின்வளவு வைரவ கோயிலில் இருந்து என்பதால் அதிக சத்தமாய் இருந்தது.
உயரப் பனையில் நாலு லவுட்ஸ்பீக்கர் கட்டியி ருந்தார் கள் - நாலு திசையையும் பார்த்தபடி.
காகம் வேறு கரைந்து கொண்டு இருந்தது.
“மைக்காரனின் அம்பிளி பயருக்குள் தண்ணியைக் கொண்டு போய் ஊற்றினால் தான் அடுத்த பத்து நாளும் பிள்ளைகள் ஒழுங்காக படிக்க முடியும்”குசினிக்கு பின்னால்
இருந்து சட்டிகளைக் கழுவிக் குப்புற அடுக்கி வைத்தாள் சறோ.
வைரவமடை முடியும் வரை, சறோ வீட்டில் மீன் மே இல்லை. போது பத்து நாள் முடியும் என தினம் தினம்
பாடசாலையில் வேலை என்பதால் இதர ரவது போனால் ஏதாவது மாமிச மணம் மணக்க
பாடசாலைக்கு போகும் வழியில் உள்ள பொரியல்களையும் குழம்பு வகையறாக்களையும் ல் நின்று கன்னத்தில் போட்டு வைரவரையும்
வேண்டியதுதான். பின்பக்க வேலிக்கும் மாறி ண்டும் இருந்தது.
வரப் போகினம் போலை இது வேறு கத்திக் கொண்டு
தாழ்ந்திருந்த பின்வளவு வாக முருங்கைக்காயைகள் யும் திட்டிக் கொண்டு வீட்டுத்
1. உந்த முருங்கைக்காய்களை திலை சந்தையில் வித்தாலும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 8
சின்ன சின்ன சாமான் சக்கட்டியள் வேண்டலாம் தானே”
"இப்ப காகத்தோடை முடிஞ்சு என்னட்டை வாறாய்” தங்கராசா வீரகேசரியில் இருந்து தலையைத் தூக்காமலே கேட்டான்.
"இப்ப நான் ஏதோ சண்டைக்கு வாற மாதிரிக் கதைக்கிறியள்.. ஒண்டும் சொல்லக் கூடாது”
"இப்ப உனக்கு என்ன வேணும். இதிலை இருக்காமல் ஏதாவது வளவுக்கை வேலை செய்து நாலைஞ்சு கண்டோ காலியோ வைச்சு நாலு காசு சம்பாதிக்க வேணும். அது தானே”
“ஏன், அப்பிடி செய்தால் குறைஞ்சோ போகப் போறம். எத்தினை வாத்திமார் கிளிநொச்சிப் பக்கத்திலை பின்னேரத்திலை வயல் தோட்டம் எண்டு செய்து நல்லாய் இருக்கினம்”
"அப்ப அவையிலை ஒருத்தரை நீ கட்டியிருக்க வேணும்”
“எல்லாருமாப் போல நல்லாய் இருக்க வேணும் எண்டால் ஏன் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடு
றியள்”
“இண்டைக்கு எங்களுக்கு என்ன குறை?.. எல்லாம் இருக்கு.. உன்னை வேலைக்கு போகச் சொல்லுறனோ?. பிள்ளையளுக்கு ழுத்திலை கையிலை ஏதாவது இல்லாமல் இருக்குதுகளே.. நல்லது கெட்டது எண்டால் கொண்டு வந்த காணி இருக்கு. பிறகு ஏன் * காசு எண்டு காலமையே குதிக்கிறாய்”
“இப்ப நான் குதிக்கிற மாதிரியே இருக்கு?”
"நான் போயும் போய் உன்னைக்.... சனிஞாயிறும் பள்ளிக்கூடம் திறந்திருந்தால் எவ்வளவு நிம்மதி..” சொல்லிக் கொண்டே சேட்டையும் மாட்டிக் கொண்டு சைக்கிளில் ஏறிக் கொண்டான்.
"ஒண்டு சொல்லக் கூடாது. உடனை உரு ஏற வாகனத்திலை ஏறிவிட வேண்டியது தான்”
"ஏன் வீட்டுக்கை இருந்து உன்னோடை குத்துப்படச் சொல்லுறியோ..” என்றவாறே சைக்கிளை உந்தினான்.
அது படலையைத் தாண்டி றோட்டில் இறங்கியது.
"போங்கோ.. போங்கோ.. எங்கையெண்டு பார்த்துக்கொண்டு இருந்த மாதிரி.. இனி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

ஊர் உலாத்திப் போட்டு பின்னேரக்கைக்கு வாங்கோ” அவனுக்கு கேளாது என்று தெரிந்தும் அவள் புறுபுறத்துக் கொண்டு இருந்தாள்.
"ஏனப்பா அப்பாவை சனிஞாயிறு என்று பார்க்காமல் கரிச்சுக் கொட்டுறாய்”
“பொத்திக் கொண்டு பள்ளிக்கூட வீட்டு வேலையளைச் செய்யுங்கோ.. தரகுக்கு வர வேண்டாம்”
தமக்கையும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு மெளனமானார்கள்.
காகம் கத்திக் கொண்டு இருந்தது. "பொங்கலுக்கு வேண்டின வெடி எதுவும் இருந்தால் கொளுத்தி போட்டி. உந்தச் சனியன் துலையட்டும்”
“சனியன் என்று திட்டிக் கலைக்கிறாய் அம்மா.. பிறகு சனிக்கிழமை விரதத்துக்கு அது களைத்தானே கா.. கா.. என்று கூப்பிடுறாய்”
“உங்களை படிப்பிக்கிறதே பிழை” சறோ மீண்டும் குசினியுள் போய்விட்டாள்.
அல்லது காகத்திடம் தோற்றுவிட்டாள். அது இப்போ கிணற்றுக்கட்டிலில் போய்க் குந்திக் கொண்டது.
நேரம் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
”மீனு... மீனு.” வாசலின் கூவியவனின் குரலுக்கு சறோ வீட்டிலிருந்து பதில் வராத தால், அவனே கதவைத் திறந்து கொண்டு வந்தான்.
"அம்மா.. நல்ல ஒட்டி கொண்டு வந்திருக் கிறன்... எவ்வளவு போட..”
சறோ எள்ளும் கொள்ளும் வெடித்தது போல் வெளியே வந்தாள்.
“சீமோன் உனக்குத் தெரியும்தானே.. கோயிலிலை கொடியேறிட்டுது. இனி எங்கடை வீட்டை பத்து நாளும் மச்ச மாமிசம் ஏதும் இருக்காது எண்டு”
“தெரியும்.. ஆனால்...” “தெரியாது எண்டு சொல்லப் போறியோ”
“இல்லை.. தம்பியை மீன் சந்தைக்கை கண்டனான்”
“என்ன?”
“கூழுக்கு எண்டு திருக்கையும் சின்ன நண்டும் வேண்டிக் கொண்டு நிண்டவர்.”
"அது யாரும் வாத்திமாருடன் வந்திருப் பராக்கும்.”
“இல்லை தனியத்தான் வந்திருந்தவர்” “சரி, நான் அவர் வரக் கேட்கிறன்.. நீ போட்டு வா.. இனிப் பத்து நாளைக்கு இந்தப்

Page 9
பக்கம் வராதை”
குசினிக்குள் திரும்பினாலும்.. கூழுக்கு எண்டு திருக்கையும்.. சின்ன நண்டும்... மீன்கார செமியோன் சொன்னதே காதில் கேட்டுக் கொண்டு இருந்தது.
வாத்திமார் எல்லாரும் சனிக்கிழமை தண்ணிப் பார்ட்டி நடக்குது போல என மனதைத் தணிக்கப் பார்த்தாள்.
காகம் இப்பொழுது குசினி யன்னல் கரை யோரம் வந்திருந்து கத்தியது.
அப்போது தான் வடித்த சுடு தண்ணியை எடுத்து யன்னலினூடு காகத்தின் மீது ஊற்றினாள்.
அது அவளின் அரவரத்தைக் கேட்டவுடனே எழுந்து பறந்து போய் மாதுள மரக் கொப்பில் உட்கார்ந்து கொண்டது.
அதன் மீது சுடு தண்ணி படவேயில்லை. சறோவின் மனம்தான் கொதித்தது. வெளியே ஊற்றிய கஞ்சியில் கிடந்த சோற்றுப் பருக்கைகளை கொத்தித் தின்பதற் காக காகம் கீழே வந்து லாவகாமாக நிலத்தில் கிடந்த சோற்றுப் பருக்கைகளை உண்ணத் தொடங்கியது.
இப்போ அதனுடன் இன்னும் இரண்டொரு காகங்களும் சேர்ந்து கொண்டன. |
காலையில் கொஞ்சம் வாயை அடக்கிக் கொண்டு இருந்திருந்தால் தங்கராசு வீட்டை விட்டு சின்னக் கோவத்துடன் போயிருக்க மாட்டோனே என மனது நினைத்துக் கொண்டது.
வாசலில் மணிச் சத்தம் கேட்டது. இந்த நேரம் இது தபால்காரனின் மணிச் சத்தமும் இல்லை.
எழுந்து போய்ப் பார்த்தாள். தங்கராசுவின் உறவுக்கார மனுசனும் அவர் மனைவியும் வந்திருந்தனர்.
"வாங்கோ.. காலையிலை இருந்து காகம் கரைஞ்சு கொண்டு இருந்தது”
அவர்கள் கையில் திருமண அழைப்பிதழ் இருந்தது.
வீட்டினுள் அவர்கள் வந்து உட்கார்ந் திருந்ததும் சின்னவளைக்
கூப்பிட்டு பக்கத்துக் கடையில் ஒரு சோடா வேண்டி வர அனுப்பினாள்.
“எல்லா வீட்டையும் குடிச்சுக் கொண்டுதான் வாறம்... கொஞ்சமாய் தாங்கோ என இருவரும் கல்யாண அழைப்பிதழை சறோவிடம் நீட்டினார்கள்.”
"அவர் இல்லை.. வாசிகசாலையடிக்கு |

போயிருக்கிறார்.. இனி மத்தியானத்துக் கிட்டத்தான் வருவார்”
வந்திருந்த கணவனும் மனைவியும் ஆளை ஆள் பார்த்தார்கள்.
சறோ என்ன என்பது போல் அவர்களைப் பார்த்தாள்.
"இல்லை, தங்கராசா எங்கடை ஊர்ப் பக்கம் தலையாட்டிப் போட்டு போறார்”
"தனியவோ.. சறோவிடம் ஒரு துழாவல் இருந்தது.
'ஓம்'
'யாரும் மாஸ்டர்மாரைப் பார்க்கவாய் இருக்கும்”
"அங்கை அப்பிடி. இங்கை படிப்பிக்கிற மாஸ்டர்மார் என்று இல்லை.. புனிதம் ரீச்சர்தான் இங்கை படிப்பிக்க வாறவா.. சரி.. சரி.. எங்களுக்கு நோரமாய்ச்சிட்டு.. நாங்கள் வாறம்.. பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாய் வாங்கோ”
அவர்கள் போய் விட்டார்கள். சறோவுக்குள் கொதிக்கத் தொடங்கியது.
மகள்மார் இருவரும் வந்த இருவருக்கும் கொடுத்தது போக மீதியாய் இருந்த சோடாவை பகிர்ந்து குடிக்கத் தொடங்கினார்கள்.
'டெய்லி விசிற்றேஸ் வந்தால் நல்லாய் இருக்குமல்லவா அக்கா..” சின்னவள் கேட்க பெரியவள் சிரித்தாள்.
"ஒம் கடைக்காரன் மாதக்கடைசியில் கடன் கொப்பியோடை வந்துநிற்கேக்கை தெரியும்”
"ஏன் இப்பிடி எல்லாத்துக்கையும் தலையை ஓட்டிக் கொண்டு..” தங்கை, தமக்கையின் காதுக்குள் குசுகுசுத்தாள்.
கோயிலில் இருந்து மத்தியான பூஜைக்கான மணி அடித்துக் கேட்டது.
அவர்கள் வந்திராவிட்டால் இப்பொழுது சமையலை முடித்துவிட்டு சறோ கோயில் வாசலடியில் நின்றிருப்பாள்.
மீன்காரன் போட்ட முதல் குண்டு. இப்போ இவர்கள் போட்ட இரண்டாவது
குண்டு.
இப்போது காகத்தின் கரையல் சத்தம் கேட்கவில்லை.
மனம் தானே கிடந்து கரைந்தது.
9 8 9
சறோ அவசர அவசரமாய் சமையலை முடித்து, குளித்து விட்டு பின்பக்க வெறுங்காணி வழியே கோயிலுக்குப் போய்விட்டாள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 10
இப்போ வசந்த மண்டபப் பூஜை நடந்து கொண்டிருந்தது.
இப்போவாவது வரக் கிடைத்ததே என மனம் அமைதி கொண்டாலும் தங்கராசாவையே மனம் சுற்றி சுற்றி வந்தது.
கோயில் கொடியேற்றம் எனத் தெரிந்தும் மாமிசம் வேண்டியிருக்கிறார்... பக்கத்து ஊருக்குப் போய் இருக்கிறார். அங்கு இவருடன் படிப்பிக்கும் சங்கீத ரீச்சர் ஒருவர் இருக்கிறார். அவரின் கணவன் இறந்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது.. பிள்ளைகள் இல்லை.
கோயில் வாசலில் போட்டிருக்கும் புள்ளிக் கோலம் போல அவளின் மனமும் கோலம் போட தொடங்கியது.
அத்தனையும் அலங்கோலங்களாகவே இருந்தன.
மனம் கோயிலுடன் ஒட்ட மறுத்தது.
இடைக்கிடை ஆண்கள் பக்கம் திரும்பி திருப்பி பார்த்தாள் - தங்கராசா வந்து விட்டாரா என்று.
அதிகமான திருவிழாக் காலங்களில் தங்க ராசாவும் சேர்ந்து சுவாமி காவுவது வழமை.
இன்று அவன் இல்லாதது மனதுக்கு வெறுமையாக இருந்தது.
அல்லது இன்னோர் போருக்குத் தயாராகிக் கொண்டு இருந்தது.
= = =
செக்கல் பொழுதாகிய போதும் தங்கராசா டுக்கு வரவில்லை. பின்னேர பூஜைக்கான மணி கோயிலில் அடித்தாயிற்று.
காலையில் தொடங்கிய சுப்பிராத ஒலிபரப்பு மத்தியானத்திற்கு பின் திரைப்பட வசனத்திற்கு மாறி இப்பொழுது கண்ணகியா மாதவியா கற்பில் சிறந்தவள் என பட்டி மன்றம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
முற்றத்தில் மகள்கள் இருவரும் நின்று கயிறு அடித்துக் கொண்டிருந்தார்கள் - மேல் மூச்சு கீழ் மூச்சு வேண்ட......... ஒருத்தி இருநூறைத் தாண்டியிருந்தாள். மற்றவள் இருநூறை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
"ஏனக்கா.. கண்ணகி கற்பில் சிறந்தவள் எண்டால் கோவலன் மாதவியிட்டை போக வேணும்”
கொடியில் உலரப் போட்டுக்கொண்டு நின்ற சறோ.. மாதவியள் எங்கை ஆம்பிளையள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

எண்டு அலைஞ்சால் எந்தக் கோவலனும் தடுமாறுவான்கள்தான்”
அந்தக் கணத்தில் சின்னவளின் கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்தாலும் மனம் தங்கராசுவையும் சங்கீதா ரீச்சரையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்து அருவருப்பு பட்டது.
பின்பு அப்படி ஒரு நினைப்பே தனக்கு வந்திருக்க கூடாது வைரவ கோயிலைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
ஆகாயத்தில் பட்சிகள் பல சேர்ந்து தம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தன.
இவை எதையும் ரசிக்கும் மனநிலையில் சறோ இருக்கவில்லை.
தங்கராசாவைப் பற்றிய நினைப்பு என்பதை விட தங்கராசா பற்றிய துப்பறிவிலேயே மனம் நின்றிருந்தது.
கதவு திறந்த சத்தம் கேட்டது.
பக்கத்து வீட்டு பூர்ணம் கையில் கூடை நிறை பூவுடன் வந்தாள்.
"உங்கடை வாழையிலை நார் கொஞ்சம் உரிச்சுத் தா.. பூமாலை கட்ட வேணும்”
சறோ பின்பக்க வாழைத் தோட்டப்பக்கம் போனாள்.
"என்னடி.. தங்கராசாவை கோயிலடி யிலை காணேல்லை”
"பள்ளிக்கூட அலுவலாய் போயிருக்கிறார்” மழுப்பினாள்.
"என்ன சனி ஞாயிறிலும் பள்ளிக் கூடமோ போ. உப்பிடித்தான் அங்கை ஒரு வாத்தி பின்னேர வகுப்பு எண்டு ஒரு பிள்ளையை இப்ப வாந்தி எடுக்க வைச்சிட்டார் எண்டு கச்சேரியிலை கதைக்கினமாம்”
சறோவிற்கு வயிற்றில் புளி வார்த்தது போலிருந்தது.
“சரி நான் வாறன், பெட்டையளை கெதியாய் அனுப்பினாய் என்றால் அதுகளுக்கும் கோயி லிலை வைத்து மாலை கட்டக் கற்றுக் குடுப்பன்” என வாழை நார்களைப் பெற்றுக் கொண்டு பூரணம் வெளியேறினாள்.
அவள் திரித்து விட்டுப் போன நார்க்கயிறு சறோவின் கழுத்தை நெரிப்பது போல இருந்தது.
சுவாமி விளக்கை ஏற்றி விட்டு வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள லைற்களைப் போட்டாள்.
நின்றும்.. இருந்தும்... வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் கண்கள் மட்டும் அடிக்கடி வாசல் படலை அடிக்கடி
கச்சே வராந்தப்பு
வெ

Page 11
பார்த்துக் கொண்டு இருந்தது.
நேரம் மெதுவாக நகர்ந்தது. இது சறோவுக்கு மிகவும் கனத்தது. சறோவின் அடி மனதுக்கு அறிந்தவரை சறோ தங்கராசாக்கோ தங்கராசா சறோக்கோ எந்தக் குறையும் விடவில்லை.
ஆனாலும் இப்போ அடிக்கடி தங்கராசா வீட்டை விட்டு வெளியே போகின்றான்.
ஆனாலும் வீட்டுக்குத் திரும்பி வருகின்
றான்.
காரணம் மட்டும் அவளுக்குப் புரிய வில்லை.
எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே வாசல் படலை திறந்து கொண்டது.
தங்கராசாதான்!
“ஒரு சனிஞாயிறு.. விடுதலை நாள் என்றால்.. மனிச சென்மங்கள் வீடு வாசல் மனுசி பிள்ளை குட்டிகளோடை சந்தோசமாய் இருக்க வேணும். இது காலமை ஊர் மேய வெளிக்கிட்டால் பகல் இராத்திரி எண்டு திரிஞ்சிட்டு பட்டியிலை அடைக்கிற நேரத்துக்குத்தான் வீட்டை வாறது.. என்ன மனுசப் பிறப்புகளோ...?
தங்கராசா எதுவுமேகதையாதுசைக்கிளைச் சுவரில் சாற்றிவிட்டு கிணற்றடியில் போய் முகம் கால்களைக் கழுவிக் கொண்டான்.
“கோயிலுக்கு போனால் சனம் எல்லாம் கேட்குது உன்ரை புருசன் எங்கை எண்டு.. எப்பவும் சாமி தூக்க முன் கொம்புக்கு நிற்கிற ஆளைக் காணேல்லை எண்டு... நான் என்னத்தை சொல்லுறது?” பொரிந்து தள்ளியபடியே இரவுப் பூஜைக்கு போக சேலையை மாற்றத் தொடங்கினாள்.
தங்கராசா சாய்மணைக் கதிரையை நிலவு எறிக்குத் தொடங்கிய முற்றத்தில் கொண்டு போய் போட்டான்.
“ஏன் கோயிலுக்கு வரேல்லையோ..? “இல்லை” "ஏன்.. மச்சம் மாமிசம் ஏதும் சாப்பிட்ட னீங்களோ”
"ஓம்”
“கடவுளே.. ஏன் இந்த மனுசனுக்கு இந்தப் புத்தியைக் குடுத்திருக்கிறியோ.. தாருக்கு நான் என்ன பாவம் செய்தனான்.. யாருட்டை கண் எங்கடை குடும்பத்திலை பட்டதோ...”
“இப்ப ஏன் பழையபடி கத்தத் தொடங்கீட்டாய்?'
"கத்தாமல் என்ன செய்யுறது.. காலமை
10

போன மனுசன் இப்ப திரும்பி வரேக்கை.. அதுவும் பின்வேலிக்கை இருக்கிற கோயி லிலை கொடியேற்றம்.. மீன் கடைக்கை நிற்கிறியள் எண்டு சனம் சொல்லுது”
"நீ காலமையே கத்தினதாலைதான் வீட்டை விட்டுப் போனான்” |
"இங்கை நான் கதைச்சால் கத்துறது.. வேற ஆக்கள் கதைச்சால் சங்கீதமாய் இனிக் குதோ.."
தங்கராசாக்கு 'திக்' என்றது. "அப்பிடியில்லை, இது வீடு போலை இல்லை”
"அப்ப இன்னும் பெரிசாய் கட்டுங் கோவன்."
-பெரிசாய் கட்டினாப் போலை என்ன மாறப் போகுது?.... வீடு எண்டது ஒரு கோயில் போல அமைதியாக இருக்க வேணும்.. முன் வாசலிலையோ ஹோலுக்கையோ.. பின் விறாந்தையிலோ.. எங்கை இருந்தாலும் அமைதியாய் தியானம் செய்யற மனநிலை இருக்க வேணும்... எங்கடை வீடு எப்பவும் பம்பர் வந்து விழுற ஒரு யுத்த பூமி போலை கிடக்கு...”
சறோ திடீரென தனது கத்தலை நிறுத்தினாள்.
வாழ்க்கையில் முதல் தடவை தங்கராசு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது.
தங்கராசுவின் மனதில் மத்தியானம் புனிதம் ரீச்சர் வீட்டில் ஒடியல் கூழும், அதனுள் சுவைத்த திருக்கையும் சின்ன நண்டும், மாலையில் கமுக மரங்களின் நிழலில் கிணற்றங்கட்டில் இருந்து குடித்த தேநீரும், சாப்பிட்ட கொழுக்கட்டையும் இப்போதும் இனித்தது.
9 9
4 அடுத்த நாள் காலையில் அவர்கள் வீட்டில் கரையும் காகத்தின் சத்தத்தைக் காணவில்லை.
வீட்டுக்கு வெளியேயுள்ள மின்கம்பத்தின் கீழ் அது செத்துக் கிடந்தது.
பல காகங்கள் வந்து சுற்றி நின்று கத்த முன், அதனை எடுத்துக்கொண்டு பின் வளவினுள் சறோ கிடங்கு வெட்டி அதனுள் போட்டு மூடினாள்.
முதன்நாள் சுடுகஞ்சியை அதன்மேல் ஊற்றியதற்காக மனம் வேதனைப்பட்டது.
000
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 12
HE Eாட்டா
= (OO
நேபாள மொழியில்:- Bhishma Upreti
ஆங்கிலத்தில்:-Manu Manjil தமிழில்:- கெகிறாவ ஸுலைஹா
ஒரு 4 என்னோ
யோகா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

நான் எரிந்து கொண்டேயிருக்கிறேன்
அக்னியின் உலைக்களத்திலன்று, என் சொந்த இதயத்தினுள்ளேயே.
துப்பாக்கியில் வெளியான
சன்னங்கள் பிறழ்ந்து ஆழ்துயிலிலாழ்ந்து கனவிழைக்கும்
கன்னியரின் தலையைத்
தொட்டுத் துளைத்துப் போகவாரம்பிக்கையில், அவலட்சணமான பேரச்சம் பள்ளி செல்லும் சிறுவனைத் துரத்தி விரட்ட ஆரம்பிக்கையில், விசுவாசங்களை கொன்றழித்து பேரிரைச்சலுடன் மரணங்கள்
வெடித்திடுகையில்
எல்லாப் புறத்திருந்தும் மூடிடும் பனிபோல் விரிவடைந்து
நான் எரிய ஆரம்பித்தேன்
கன்னங்கரு பீதியில்.
கனவேதுமின்றி
பரவசங்களும் ஏதுமின்றி நான் வளர்ந்து ஆளாகிய குன்றுகளோ காய்ந்து வரண்டு துரும்பாகி இளைத்து
வெடித்துச் சிதற ஆயத்தமாகி இருக்கின்றன ஆதலினால் இருளடர் வருங்காலத்துக்கான முன்னறிவிப்பு டு எரிந்த வண்ணம் அடியாழத்தே ஆழமாய்.
நான் விட்டு விடுதலையாகிட
அபார ஆசை கொள்கிறேன் ஜீவிதத்தினது இராகத்தையே கொல்லுகின்ற
எல்லாவகை எரிதல்களிலிருந்தும்.
இசை இன்னும் ஓயவில்லை. என்ன விலையாயிருந்தாலென்ன
வாழ்வினது ஜீவன் அழகேயாம். வாழ்க்கை அதன் சொந்த நறுமணத்தையே
குடித்தழிக்கக் கூடாது. நான் இவைபற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்
ஆழத்தே அடியாழத்தே. என்னைப் பச்சையாய் எரிக்க ஆரம்பிக்கும் ஆன்மாவோடு.
11

Page 13
-.13
எனது பார்வையில் உலகம்' (The world according to me) என்ற தலைப்பில் பேராசிரியர், சசங்க பெரரா ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட் டுள் ளார். இத்தொகுப்பில் சமூக வியல், மானிடவியல் சார்ந்த பத்துக் கட்டு ரைகள்
உள்ளன. இக்கட்டுரைகளில் ஒன்று நிகழ்காலத்தில் கடந்த காலத்தின் பிரசன்னம்' (The Presence of the past in the Present) என்ற தலைப்பில் உள்ளது. ஆங்கிலத்தில் 31 பக்கங்களுடைய நீண்ட இக்கட்டுரை வரலாற்றின் தத்துவம் என்ற விடயம் பற்றியது. வரலாற்று எழுதியல் பற்றிய தத்துவார்த்த விமர்சனம் என்றும் இதனைக் கூறலாம். ஈ.எச்.கார், ரொமிலா தாப்பார் ஆகியோர் வரலாற்று எழுதியல் பற்றி எழுதியுள்ளவை சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த அறிஞர்களான ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தன, எச்.எல்.செனிவிரத்தின ஆகியோரும் வரலாற்று எழுதியல் பற்றி சிறப்பான ஆய்வுரைகளை எழுதியிருக்கிறார்கள். சசங்க பெரராவின் இக்கட்டுரை மனிதர்களின் கூட்டு நினைவிலும் (Collective Memory) தனிநபர்களின் நினைவிலும் கடந்த காலம் பற்றிய நினைவு எவ்வாறு பதிவாகிறது. மக்கள் எதனை ஏன் எப்படி நினைவு கூருகிறார்கள்? கடந்த காலத்தின் எந்தெந்த விடயங்களை தமது கூட்டு நினைவில் இருந்து அழித்து விடுகிறார்கள்: ஏன் அழிக்கிறார்கள்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி
=எனது பார்வையில்,
படிப்பொடியாயபபடபப்
AD5
12

துட்டகைமுனு காலத்து நிலைமைகளும், அப்போது என்ன
நடந்தது என்பதும் இன்றைய
அரசியல் நிகழ்வுகள், மக்கள் மனதில் உள்ள சந்தேகங்கள், அச்ச உணர்வு என்பவற்றின் ஊடாகவே பார்க்கப்படுவதைக் காணலாம். நிகழ்காலத்திற்கு ஏற்றபடி கடந்த காலத்தை ஒழுங்கமைத்தல் என்று
இதனைக் கூறலாம்.
அதற்கான விடையைத் தருகிறார். இந்த நினைவும், மறப்பும் என்ற செயல்முறையில் நிகழ்காலம் - எவ்விதம் தொடர்புபடுகிறது என்பதையும் அவர் எடுத்துக் காட்டுகிறார். தனிநபர்களின் நினைவுகள் இக்கூட்டு நினைவில் அலட்சியப்படுத்தப்படுகின்றன. ஆயினும் அதிகாரபலம் மிக்க சில தனிநபர்களின் கடந்த காலம் பற்றிய எண்ணங்களும் கூட்டு மனத்தின் நினைவுகளுக்குள் சேர்க்கப்பட்டு விடுவதையும் அவர் எடுத்துக்காட்டுகிறார்.
துட்டகைமுனுவும் எல்லாளனும்
இலங்கையில் சாதாரண சிங்கள மக்களும் நன்கறிந்த வரலாற்றுக் கதைகளுள் துட்ட கைமுனுவின் வீரவரலாறு முதன்மையிடம் பெறுகிறது. துட்டகைமுனுவும் எல்லாளனும் வரலாற்று
மனிதர்கள். இவ்வரலாற்று மனிதர்கள் இன்று நிகழ்காலத்தில் சிங் கள மக்களின் வாழ்வில்
கந்தையா
சண்முகலிங்கம் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 14
நிகழ்கால மனிதர்கள் போன்றே பிரசன்னமாக இருக்கிறார்கள். இவ்வரலாற்று மனிதர்களின் நிகழ்காலப் பிரசன்னம் தேசிய வாதம் என்ற பின்னணியில் நோக்கப்பட வேண்டும். துட்டகைமுனு ஒரு மாவீரன். எல்லாளன் ஒரு வில்லன். தேசிய வாதமே மாவீரன், 'வில்லன் என்ற வகிபாகங்களை இவர்களுக்கு வழங்கியது. கெம்பர் (Kemper) என்ற மானிடவியலாளரின் கூற்றைச் சசங்க பெரரா மேற்கோளாகத் தருகிறார் (பக்கம் 117). அதன் மொழி பெயர்ப்பு வருமாறு:
சமகாலத்துச் சிங்கள மக்கள் கடந்த காலம் பற்றிப் பேசும்போது, கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களை இன்றைய வாழ்வின் (வர லாற்றுக் கட்டத்தின்) ஊக்கிகளே இயக் கின என்ற எண்ணத்தோடு பேசுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய காலத்து அளவு கோல்களும், வருணனைகளும், வகைமைகளும் இருந்
நூல் : கரு நாவு ஆசிரியர் : ஆழியாள் விலை : ரூபா 60/= முதற்பதிப்பு : டிசம்பர் 2013 ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதிவரும் மதுபாஷினி இலங்கை திருகோணமலையில் !பிறந்தவர். அவுஸ்திரேலியாவில் அரசாங்கத்தில் யர்பதவி வகிப்பவர். ஆங்கில முதுமாணிப் ட்டமும் தகவல் தொழில் நுட்பத்தில் டிப்ளோமா பட்டமும் பெற்றவர். ஏற்கனவே 'உரத்துப் பேசு', 'துவிதம்' ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர். சமீபத்தில் இவர் எழுதிய கருநாவு தொகுதியில் 14 கவிதைகள் அடங்கியுள்ளன. பன்முகக் கலாசாரங்களுக்கு மத்தியில் வாழும் இவரது கவிதைகளில்
துவித வாழ்நிலையும்
கருநாவு அவற்றிலிருந்து
பெறப்படும் வாழ்வு
ஆழியாள் | அனுபவங்களும்
சிறந்த கவிதைகளாக
வடிவமைக்கப் பட்டுள்ளன.
RA
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

துள்ளன என்ற பாவனையில் பேசுகிறார்கள்.
கெம்பரின் மேற்குறித்த
கூற்றை உதாரணம் காட்டி விளக்குதல் அவசியம் துட்டகைமுனு - எல்லாளன் யுத்தம் சிங்கள மக்களால் சிங்களவர்களுக்கும் தமிழர் களுக்கும் இடையேயான சமகால மோதல்கள், முரண்பாடுகளின் பின்னணியிலேயே பார்க்கப் படுகிறது. கடந்த காலத்தையும் நிகழ் காலத்தை யும் இவ்வாறு இணைத்து விடும்போது தொடர்ச்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. முந்திய கால நிகழ்வுகளும் இக்கால நிகழ்வுகளும் ஒரே தன்மையினவே என்ற இன்னொரு மாயையும் தோற்றுவிக்கப்படுகிறது. ஆனால் துட்டகைமுனு காலத்தில் இன்று இருப்பது போன்ற இனமுறுகலும், மோதலும் இருக்கவில்லை. அன்று நடந்த யுத்தம் ஒரு பிராந்தியத்தின் ஆட்சியாளர்களான அரசர்களிடையே நடந்தது. இன்றைய அரசியலும், மக்களிடையே உள்ள சந்தேக உணர்வும், அச்ச உணர்வும் இதே மாதிரியில் அன்றும் இருந்ததாக நம்பப்படுகிறது. நிகழ் காலத்தின் தேவைகளுக்காக கடந்த காலத்தை மாற்றியமைப்பதற்கு இது சிறந்ததொரு உதாரணமாகும்.
கடந்த காலச் சம்பவங்களைத் தெரிவு செய்தல்
துட்டகைமுனு எல்லாளன் யுத்தம் போன்ற நூற்றுக்கணக்கான யுத்தங்கள் இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்தன. சமகாலத்து மக்கள் ஏன் துட்டகைமுனுவின் கதையில் மட்டும் விசேட கவனம் செலுத்துகிறார்கள்? இத்தெரிவு தற்செயலானதா? தேசிய வாதம் பற்றிய ஆழமான ஆய்வினை எழுதியவர் ஏர்ணஸ்ட் கெல்னர் (Ernest Gellner) அவரின் கூற்று ஒன்றை சசங்க பெரரா மேற்கோளாகத் தருகிறார்.
'தேசிய வாதம் தெரிவு செய்து உபயோகிக்கும் பண்பாட்டுக் கிழியல் துண்டுகள் எழுந்தமானமான வரலாற்றுக் கண்டுபிடிப்புக்களே ஆகும். பழமையான எந்த ஒரு கிளிஞ்சலும் அதன் தேவைகளுக்கு - ஏற்றதுதான்'
தேசிய வாதத்தை பல துண்டுகளை வைத்துத் தைத்த ஒரு துணியாக உருவகித்தால், எத்தகைய பழம் துண்டுகளும் அந்த வேலைக்கு உகந்ததுதான் என்ற பொருள்பட ஏர்ணஸ்ட் - கெல்னர் கூறுகிறார். கெல்னர் கூறுவது போல் எழுந்தமானமான தெரிவுகளும் இடம்
13

Page 15
துட்டகைமுனு காலத்து நிலைமை என்பதும் இன்றைய அரசியல் | சந்தேகங்கள், அச்ச உணர்வு என்பன காணலாம். நிகழ்காலத்திற்கு ஏற்றம் என்று இதனைக் கூறலாம்.
NN
பெற்றிருக்கலாம். ஆனால் இலங்கையில் கடந்தகால நிகழ்வுகளை தேசியவாதம் எழுந்த மானமாகச் சேகரிக்கவில்லை. அவற்றின் தெரிவுக்குப் பின்னால் வலிதான நியாயங்கள் இருந்தன என்று சசங்க பெரரா கூறுகிறார். துட்டகைமுனுவைத் தேர்ந்தெடுத்துக் கொண் டதையே எடுத்துக்கொள்வோம். துட்ட கைமுனு வாழ்ந்த காலத்தில் (கி.மு.161-137) சிங்கள - தமிழ் இனத்துவ அடையாளங்களும் உறவுகளும் இன்று உள்ளதுபோல் இருக்க வில்லை. ஆயினும் தமிழர்களுக்குப் பெரும் தோல்வியை ஏற்படுத்திய வீரன் துட்டகை முனுவே என்று கூறுவதற்கும், நம்புவதற்கும் பல சாதகமான காரணிகள் உள்ளன. துட்டகைமுனு தென்பகுதியில் (றுகுணுவில்) பிறந்தவன். அப்பகுதி நவீன காலத்தில் சிங்கள தேசிய வாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்து வரும் பகுதியாகும். துட்டகைமுனுவோடு தொடர்புடைய கதைகளும், நம்பிக்கைகளும் அவனுடைய பௌத்த சமய பக்தி, நாட்டுப்பற்று, அவனது தாயின் நாட்டுப்பற்றும் உயர் குணங்களும், துட்டகைமுனுவின் துணிச்சலும் வீரமும் ஆகிய பண்புகள் யாவும் இந்தப் பாத்திரத்தை அவனுக்கு வழங்கின. துட்டகைமுனு காலத்து நிலைமைகளும், அப்போது என்ன நடந்தது என்பதும் இன்றைய அரசியல் நிகழ்வுகள், மக்கள் மனதில் உள்ள சந்தேகங்கள், அச்ச உணர்வு என்பவற்றின் ஊடாகவே பார்க்கப்படுவதைக் காணலாம். நிகழ்காலத்திற்கு ஏற்றபடி கடந்த காலத்தை ஒழுங்கமைத்தல் என்று இதனைக் கூறலாம்.
கடந்த காலத்தின் வெற்றிகளை ஞாபகப்படுத்தும் வேளையில் தோல்விகளை மறைத்தலும், திரிபுபடுத்தலும் இடம் பெறுவதையும்ச்சங்க பெரரா சுட்டிக்காட்டுகிறார். தோல்விகள் உண்மையில் கசப்பானவை: அவை வேதனை தருவன. கசப்பான வேதனை தரும் தோல்விகளை மறப்பதும், மறைப்பதும் நியாயம்தானே? ஆயினும் சில
14

மகளும், அப்போது என்ன நடந்தது நிகழ்வுகள், மக்கள் மனதில் உள்ள பற்றின் ஊடாகவே பார்க்கப்படுவதைக் டி கடந்த காலத்தை ஒழுங்கமைத்தல்
N
தோல்விகள் ஞாபகப்படுத்தப்பட வேண்டியன. உதாரணமாக தமிழ்ப் படைகள் விளைவித்த அழிவுகள் ஞாபகப்படுத்தப்பட வேண்டியன. அவ்வாறு ஞாபகப்படுத்தல் தேசியவாதத்திற்கு உந்துதல் தரும் விடயமாகும். ஆயினும் தோல்விகளை ஞாபகப்படுத்தும்போது அவை பற்றிய விபரங்கள் தரப்படுவதில்லை. அவை மங்கலாகவும் தெளிவற்றும் உள்ளன. ஆனால் கூறப்படும் தொனி தீவிரம் மிக்கதும் உணர்ச்சியைத் தூண்டுவதுமாக இருக்கும் என்று சசங்க பெரரா குறிப்பிடுகிறார்.
நினைவு படுத்தலும் மறத்தலும்
நிகழ்கால நிலைமைகளை
தொடர்பு படுத்தியே கடந்த காலம் நினைவில் கொண்டு வரப்படுவதை எடுத்துக் காட்டும் சசங்க பெரரா கடந்த காலத்தின் சம்பவங்களை மறத்தல் ஏன் நிகழ்கிறது? அவ்வாறான மறத்தல் நிகழ்காலத்துடன் தொடர்புடையதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறார். நிகழ்கால நிலைமைகளோடு இணைத்து நோக்கும் போது வெட்கப்பட வேண்டியனவும், வேதனையைத் தருகின்றனவும், பொருத்தம் இல்லாதனவுமான சம்பவங்கள் மறக்கப்படுகின்றன, என்று அவர் பதில் தருகிறார். வரலாறு என்பது நிகழ்காலம் கடந்த காலத்துடன் செய்து கொள்ளும் உரையாடல் என்று கூறினால், நிகழ்காலத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள சக்திகள் இந்த உரையாடலின் போது ஞாபகப்படுத்தக் கூடாத விடயங்கள் எவை என்பதையும் தீர்மானிக்கின்றன. மறக்கப்படும் அந்த விடயங்கள் புனைவுகளால் இட்டு நிரப்பப்படுகின்றன. கடந்த காலத்தை நினைவு கூரும்போது சிங்களவரின் ஆரிய வம்ச மூலம் ஞாபகப் படுத்தப்படுகிறது. வரலாற்றின் மிகப் பிந்திய காலத்தில் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறிய கராவ, சலாகம துராவச் சாதிகள் தென்னிந்திய மூலத்தை உடையவை.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 16
(
அவை தமது தென்னிந்திய மூலத்தை மறப்பதோடு தாம் வடஇந்தியாவின் சத்திரியக் குலத்தவர்களிலிருந்து தோன்றியவர்கள் என்ற புனைவை உருவாக்கிக் கொள்வதோடு
அதனை மிகவும் தீவிரமாக நம்புகின்றன.
துட்டகைமுனுவையும், சிங்கள கலாசா ரத்தின் இன்னொரு வீரனான மஹாபராக்கிரம் பாகுவையும் (கி.பி.1153 - 1186) ஒப்பீடு செய்து பார்க்கலாம். பராக்கிரமபாகு நீர்ப்பாசனக் குளங்களை அமைத்தவன், கோவில்களைக் கட்டியவன் என்று அறியப்படுகிறானே தவிர துட்டகைமுனுவின் உயர் அந்தஸ்தை சிங்கள மக்கள் நினைவில் அவனால் பெற முடியவில்லை. இதற்குக் காரணம் அவன் போரில் தோற்கடித்த மன்னர்களில் பெரும்பான்மையினர் சிங்கள அரசர்களேயாவர். அவன் அந்தஸ்தில் இரண்டாம் நிலையில் இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும் பராக்கிரமபாகு இலங்கைக்கு வெளியே படையனுப்பித் தாக்குதல்களை நடத்தினான். பராக்கிரமபாகு பர்மா மீதும், தென்னிந்தியாமீதும் படைகளை அனுப்பித் தாக்குதல் நடத்திய பெருவீரன் என்பதைச் சில வரலாற்றுப் பாட நூல்கள் ஞாபகப்படுத்துகின்றன. அது மக்கள் மனதிலும் பதிந்துள்ளது. ஆயினும் பராக்கிரமபாகுவின் படைகள் இராமநாதபுரத்திலும், மதுரையிலும் தொடக்கத்தில் வெற்றியீட்டி முன்னேறிய போதும் இறுதியில் தோற்கடிக்கப்பட்டன. பராக்கிரமபாகுவின் படைத்தலைவன் லங்கா புரவினதும் அவனது படைவீரர்களதும் தலைகளைக் கொய்து சோழப் படைகள் மதுரையின் வாயிலில் தொங்கவிட்டன என்று சோழர்களின் வரலாற்று நூல்கள் விபரிக்கின்றன. இந்த விபரங்களை தேசிய வாத வரலாறு நினைவுபடுத்துவதில்லை என்பதைச் சசங்கப் பெரரா குறிப்பிடுகிறார். கூட்டு நினைவு மனத்திலிருந்து இவை அகற்றப்படுதலே ஏற்றது என்பதே இதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்பதைத் தெளிவு படுத்துகிறார்.
தனிநபர்களின் வரலாறு - நினைவும் மறப்பும்
கடந்த காலம் தனிநபர்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தின் மீதான தாக்கத்தில் இருந்து வேறானது. தனிநபர்களின் தனிப்பட்ட அனுபவம், அவரின் புலக்காட்சி ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

அடையாளம் என்பது தெளிவானது. சிங்களவர் யார், தமிழர் யார் என்ற கேள்விகள் சந்தேகத்திற்கு இடமில்லாத
தெளிவான வரையறைகளையும், எல்லைகளையும் உடையவை என்று பொதுவாக நம்பப்படுகிறது. குறிப்பாக
தேசிய வாதம் சிங்களவர்,
பௌத்தர் என்ற தெளிவான வரையறைகளை வகுத்துக் கொள்கிறது.
ஆயினும் சந்தேகங்களும், தெளிவின்மையும் முரண்பாடுகளும் நிறைந்ததாக அடையாளப்படுத்தல் செயல்முறை அமைந்துள்ளது.
யுத்த காலச் சூழ்நிலையில் சிங்கள - பௌத்த மேலாண்மைக்
கருத்தியல் அடையாளத்தை ஒரு கருவியாக உபயோகித்தது.
இதே போன்று தமிழர் தரப்பில் தமிழ் - இந்து என்றமேலாண்மைக் கருத்தியல் மேற்கிளம்பியது
என்பன கூட்டுமனத்தின் நினைவுகளில் இருந்து வேறுபாடு உடையன. கூட்டு மன நினைவுகள் தரப்படுத்தப்பட்டு அன்றாட சமூக வாழ்வின் அங்கமாக மாற்றப்படுகின்றன. இவற்றை சமூக மயமாதல் (Socialisation) செயன்முறையூடாகத் தனிநபர்கள் உள்வாங்குகின்றனர். சமூகக்கூட்டு மன நினைவுகள் நீண்ட கால எல்லையில் உருவாக்கப்படுபவை. தனிநபர்கள் நினைவுகள் குறுகிய காலத்தைக் கொண்டவை. இதனால் தனிநபர்களுக்கு புனைவுகளைச் செய்வதற்கும், தாம் கண்டு பிடித்தவற்றை இட்டு நிரப்புவதற்கும் வாய்ப்புக்கள் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்டவை. தனிநபர்கள் தமது வரலாற்றில் நினைவுபடுத்தல், மறத்தல், புதிதாகக் கண்டுபிடித்தல் என்பவற்றைச் செய்வதோடு சமூகத்தின் கூட்டு மனநினைவுகளில் இருந்தும் தேர்ந்தெடுத்தவற்றை தமது வரலாற்றோடு கலந்து விடுகிறார்கள். இலங்கையின் ஜனாதிபதிகளாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, ஆர். பிரேமதாச என்ற இரு தனிநபர்கள் கடந்த காலத்தில் எவற்றை நினைவுபடுத்தினர், எவற்றை மறந்தனர், புதிதாக கண்டுபிடித்தவை
15

Page 17
எவையென்பதைசசங்க பெரராவிளக்கியிருப்பது இக்கட்டுரையின் மிகச் சுவாரஸ்யம் மிக்க பகுதியாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன 1977 இல் தேர்தலில் வெற்றி பெற்ற பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்காக கண்டியின் தலதா மாளிகையில் உள்ள 'பட்டிருப்புவ' என்ற அரங்கைத் தெரிவு செய்தார். 1815 இல் கண்டி ராச்சியம் பிரித்தானியர் ஆக்கிரமிப்பால் வீழ்ச்சியடையும் வரை கண்டி மன்னர்கள் பட்டிருப்புவவில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த மரபை தொடக்கிவைத்ததன் மூலம் ஜே.ஆர்.ஜயவர்த்தன தாமும் பண்டைய இராச பரம்பரையின் வழியில் வந்த மன்னர் என்ற நினைவை உறுதிசெய்தார். இது போலவே 1 வப்மகுல' என்ற ஏர்மங்கலச் சடங்கை தொடக்கி வைத்து ஏர் பூட்டி உழுதல், நெல் விதைத்தல் சடங்கைப் பண்டைய மன்னர் பாணியில் நடத்தினார். இவை போன்ற செயல்கள் மூலம் புனையப்பட்ட பண்டைய வரலாற்றுடன் தன்னை இணைத்தார். ஆயினும் அவர் பல விடயங்களைத் திட்டமிட்டே மறைக்கவும் முயன்றார். தம் முன்னோர்களில் ஒரு கிளையினர் தென்னிந்தியாவின் கர்நாடகக் கரையில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்கள் என்பதையும், அவர்கள் டச்சுக்காரர்களுடனும், பின்னர் பிரித்தானியர்களுடனும் ஒத்துழைத்துச் சலுகைகளைப் பெற்றவர்கள் என்பதையும் அவர் மறந்தார். இவ்வாறு சிலவற்றை நினைவு கூர்தலும், சிலவற்றை மறப்பதும் அவரது அரசியல் திட்டத்தின் பிரிக்க முடியாத அம்சம் என்றே கொள்ளலாம். ஆர். பிரேமதாசவும் இவ்வாறே நினைப்பு, மறப்பு, புதிது கண்டுபிடித்தல் ஆகிய வழிகளில் கடந்த காலத்தைச் சிருஷ்டிக்க முற்பட்டதை சசங்க பெரரா விளக்குகிறார். (பக் 131)
அடையாளமும் அரசியலும்
சமகால இலங்கையில் இனத்துவம், சமயம் என்பன தொடர்பாக மக்கள் உருவாக்கிக் கொள்ளும் அடையாளம் என்ற விடயம் பற்றி ஆராயும் கட்டுரையொன்றையும் சசங்க பெரரா இத்தொகுப்பில் சேர்த்துள்ளார். Constructions of Identity The Politics, the Rhetoric and Confusions' என்பது இக்கட்டுரையின் தலைப்பு. இந்த நீண்ட தலைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு அடையாளங்களைக் கட்ட 16

மைத்தல் அரசியலும் உணர்வெழுச்சிப் பேச் சும், கருத்துக் குழப்பங்களும்' ஆகும். நூலின் இரண்டாவது அத்தியாயம் ஆக இது உள்ளது. மேலே குறிப்பிட்ட 'நிகழ்காலத்தில் கடந்த காலத்தின் பிரசன்னம்' என்ற கட்டுரைப் பொருளோடு நெருங்கிய தொடர்புடைய இந்த விடயம் பற்றிச் சசங்ப பெரரா கூறியுள்ள கருத்துக்களை அடுத்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.
அடையாளம் என்பது தெளிவானது. சிங்களவர் யார், தமிழர் யார் என்ற கேள்விகள் சந்தேகத்திற்கு இடமில்லாத தெளிவான வரை யறைகளையும், எல்லைகளையும் உடையவை என்று பொதுவாக நம்பப்படுகிறது. குறிப்பாக தேசிய வாதம் சிங்களவர், பௌத்தர் என்ற தெளிவான வரையறைகளை வகுத்துக் கொள்கிறது. ஆயினும் சந்தேகங்களும், தெளிவின்மையும் முரண்பாடுகளும் நிறைந்த தாக அடையாளப்படுத்தல் செயல்முறை அமைந்துள்ளது. யுத்த காலச் சூழ்நிலையில் சிங்கள - பௌத்த மேலாண்மைக் கருத்தியல் அடையாளத்தை ஒரு கருவியாக உபயோகித்தது இதே போன்று தமிழர் தரப்பில் தமிழ் - இந்து என்ற மேலாண்மைக் கருத்தியல் மேற்கிளம்பியது என்றும் சசங்க பெரரா கூறுகிறார். ஆனால் தமிழர்களிடையே ஐக்கியத்தைச் சிதைத்துப் பலவீனத்தை அதிகரிக்கும் என்பதால் தமிழ் - இந்து அடையாளம் ஒப்பீட்டளவில் மேலோங்க வில்லை என்றும் அவர் கூறுகிறார்.
1998 ஆம் ஆண்டு சசங்க பெரரா தம் நண்பரும் ஆய்வாளருமான யொக் ஸ்ரிறாற் (Jock Stirat) என்பவருடன் சிலாபம் நகருக்குச் சென்றபோது பிரான்சிஸ் என்ற 75 வயதுடைய முதியவரைச் சந்தித்தார். இம்முதியவரோடு அவர் நடத்திய உரையாடல் அவரால் பதிவு செய்யப்படுகிறது. கொழும்பு நகருக்கு வடக்கே 70 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் சிலாபத்திலும் நீர்கொழும்பின் பிறபகுதிகளிலும் உள்ள கத்தோலிக்கர்கள் தமது சமய, இனமொழி அடையாளங்களை எப்படி வரையறை செய்கின்றனர் என்பதை பிரான்சிஸ் என்ற தனிநபர் ஒருவரின் வாழ்க்கை மூலமாக இந்த உரையாடலைக் கொண்டு விபரிக்கிறார். யொக் ஸ்ரிறாற் 20 வருடங்களுக்கு முன்னர் (1970 களின் பிற்பகுதி) சிலாபத்தின் இரணவில்ல கிராமத்தில் பிரான்சிஸ்சை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 18
பணமும் 6ல்லம்
ரா நித்தியானந்தன்
உன் நுரை ஈரல் விரிந்து மடியும், அதன் இரத்தத்தில் சிறகுகள் முளைக்கும்,
இதய அறைகள், விடுதலை பெரு மூச்சுடர் நீலன்ட உறக்கத்தில் ஆழ்ந்து போகும் - இனி
மண்ணின் பூச்சுகள் உன்னால் தன் பசிக்கு தற்காலிகமாக விடை கொடுக்கும் கடவுளர் கூட உசன், படையலில் மகிழ்வர். 16 முடிந்து அல்லது 30முடிந்து ஆண்டுகள் தோறும் நடக்கும் விருந்தில் உன் இனி
மரணம் எல்லை காணும்
(கற்பனைப் பெயர்) சந்தித்திருக்கிறார்: கள ஆய்வின் போது அவரை நேர்காணல் செய்தார். சசங்க பெரரா 20 ஆண்டுகள் கழித்து அவரைச் சந்தித்துப் பேசும்போது பிரான்சிஸ் சிங்களத்தில் உரையாடினார். அவரின் பேச்சு, உச்சரிப்பு ஆகியன சாதாரண சிங்களவரில் இருந்து வேறுபட்டிருப்பதை பெரரா உடனேயே அடையாளம் கண்டுகொண்டார். அவரின் பேச்சில் தமிழர்களின் உச்சரிப்பைக் காண முடிந்தது. மேலும் சில சந்தர்ப்பங்களில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

தன் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமான சொற்களை உபயோகிக்க முடியாமல் அவர் திணறுவதையும் பெரரா அவதானித்தார். மாலையில் பெரரா அவரின் வீட்டிற்குச் சென்றார். அந்த வீடு சிங்கள கத்தோலிக்கர் ஒருவரின் சகல அடையாளங்களையும் கொண்டிருந்ததை அவர் கண்டார். சிங்களப் பத்திரிகைகள், சிங்கள இசை ஒலிப்பேழைகள், சிங்களத்தில் எழுதப்பட்ட கத்தோலிக்க சமய நூல்கள் என்பன வரவேற்பறையில் காட்சியளித்தன. போப் பாண்டவர் இலங்கைக்கு வந்தபோது பிரான்சிஸ் கத்தோலிக்க மதத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டும் சான்றுப் பத்திரம் ஒன்றை வழங்கியிருந்தார். அது சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பத்திரத்தில் பிரான்விஸ்ஸின் பெயர் வர்ணகுலசூரிய டொன் பிரான்சிஸ் பெர்ணாண்டோ என எழுதப்பட்டிருந்தது. (இப்பெயரில் வர்ணகுலசூரிய, பெர்ணான்டோ ஆகியன கிராமத்தில் வாழும் பலருக்கும் பொதுவான குடும்பப் பெயர்கள். பிரான்சிஸ் என்பது குறித்த நபரின் பெயர். இப்பெயர் இங்கு கற்பனையானது. நபரின் அடையாளத்தை மறைப்பதற்காக உபயோகிக்கப்பட்டது). இவ்வாறு சிங்கள் அடையாளங்கள் வெளியில் தெரிந்த போதும் சில குழப்பமான தகவல்களும் வெளிப்பட்டன. பிரான்சிஸ் படிப்பதற்கான சமய நூல் ஒன்று தமிழில் இருந்ததைக் காண முடிந்தது. வீட்டில் தன் மனைவியுடனும் பெண் பிள்ளைகளுடனும் பிரான்சிஸ் தமிழில் பேசினார். அவரது கேள்விகளையும் கட்டளைகளையும் அவர்கள் விளங்கிக் கொண்டு செயற்பட்டனர். மனைவி தமிழிலேயே பதில்களைக் கூறினார். பெண் பிள்ளைகள் சிங்களத்தில் பதில் இறுத்தனர். ஆயினும் அவர்களுக்கு பிரான்ஸ் பேசிய தமிழ் புரியத் கூடியதாக இருந்தது. பிரான்சிஸ் தமிழரா அல்லது சிங்களவரா என்ற அடையாளக் குழப்பம் மேலும் வலுப்பெற்றது. ஆயினும் பிரான்சிஸின் கத்தோலிக்க அடையாளம் குறித்து எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. பெரரா தமது விசாரணையை அன்று தொடரவில்லை. பிரான்சிஸ் உடன் நெருக்கம் ஏற்பட்ட பின் இரண்டு மாதம் கழித்து அவரிடம் ஒரு நாள் நேரடியாகவே தன் சந்தேகத்தை தெளிவுபடுத்த விரும்பினார்.
"நீங்கள் சிங்களவரா அல்லது தமிழரா?”
17

Page 19
யாழ்தேவி என்பவரே
யாழ்தேவியும் வந்ததெம் முற்றத்திற்கு
மகிழ்வுதான் வெடியோசையில்லா வாழ்வு தந்தவரே
ஆக்கிரமிப்பின் மனவோசை மட்டும்
இன்னும் மாறாததேனோ
ஒருதேசம் என்பவரே
எதற்காய்
இரு தேசந்தான் 1000
என்று அடிக்கடி நீங்களே
எமக்கு
ஞாபகமூட்டுகிறீர் வந்த
எங்கள் நகர்களை முற்றத்தின்
உங்கள் வர்ணங்களால் பாடல்
அழகாக்கும் அக்கறையை எங்கள் அகதி
வாழ்வின் காணாமற்போனவர்
வாழ்வின் வர்ணங்களை
மாற்றுவதில் காட்டாததேனோ நாங்கள் இன்று
கேட்பது பிரிவினையல்ல பகிர்ந்து வாழும் எங்கள் மீதான பரிவினைத்தான்
- புலோலியூர் வேல்நந்தன்
"நான் ஒரு சிங்களவர்”
“அப்படியானால் தமிழை எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?”
இவ்வாறாக அந்த உரையாடல் தொடர்ந்தது. இந்த உரையாடல் முழுவதையும் இங்கு தராமல் அதன் மூலம் வெளிப்பட்ட தகவல்களை மட்டும் சுருக்கிக் கூறுகிறேன். பிரான்சிஸ் இளமைக் காலத்தில் தமிழ்ப் பாடசாலையில்
18

UIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
படித்தார். அவரது சகோதரர்களும் தமிழிலேயே படித்தனர். எல்லோரும் தமிழை நன்றாகப் பேசக் கூடியவர்கள். அவர் திருமணம் செய்தபின் குழந்தைகள் பிறந்தன. தமிழில் பேச அவை கற்றுக் கொண்டன. பெண் பிள்ளைகள் பாடசாலையில் சிங்களத்திலே படித்தனர். ஆசிரியர்கள் அப்பிள்ளைகள் தமிழ் படிப்பதை விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கு தமிழில் பேசுவது சிறிது கடினமாயிற்று. ஆனால் பிரான்சிஸ் உடைய ஆண் பிள்ளைகள் மீன்பிடித் தொழிலுக்கு போகிறவர்கள். வெளி உலகில் பழகுபவர்கள். அவர்களால் தமிழில் நன்றாக உரையாட முடியும். பெண் பிள்ளைகள் தமிழில் படிப்பதை ஆசிரியர்கள் ஊக்குவிக்கவில்லை என்று பிரான்சிஸ் கூறியபோது நிகழ்ந்த உரையாடல் சுவாரஸ்யமானது.
சசங்க: நீங்கள் சிங்களவர் தானே?
பிரான்சிஸ்: ஆமாம். ஆனால் நான் சிங்களவனாக இருந்தால் என்ன தமிழனாக இருந்தால் என்ன எல்லோரும் மனிதர்தானே? இல்லையா?
சசங்க: இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சிங்களவரா தமிழரா என்ற கேள்வியை நான் கேட்டிருந்தால் நீங்கள் என்ன பதில் கூறியிருப்பீர்கள்?
பிரான்சிஸ்: நான் ஒரு தமிழன் என்று அப்போது கூறியிருப்பேன். இப்போது நிலைமை மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும்.
தமிழ்ப் பேசுவோரான வடமேல் மாகாணத்தின் கத்தோலிக்கர் படிப்படியாக சிங்களவர்கள் ஆன வரலாற்றை பிரான்சிஸ் என்ற தனிநபரின் வாழ்க்கையூடாக காண முடிகிறது. 14 ஆம் நூற்றாண்டு முதலாக தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களில் ஒரு பகுதியினர் 500 வருடங்களுக்கும் மேலாகத் தம் தமிழ் அடையாளத்தை இழக்காது வாழ்ந்தனர். அவர்களும் பிரான்சிஸ் தலைமுறையுடன் முற்றாக அழிந்து விட்டனர் என்ற உண்மை பிரான்சிஸின் வாழ்க்கையூடாக அறிய
முடிகிறது.
வடமேல் மாகாணத்தின் கரையோர மக்கள் பற்றி மானிடவியலாளர்களின் ஆய்வுகள்
பிரான்சிஸ் போன்றவர்களின் அடையாளம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 20
குறித்த முரண்பாடுகளினை
விளங்கிக் கொள்வதற்கு இலங்கையின் வடமேல் மாகாணத்தில் தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய கராவ சாதியின் குடியேற்றம், அச்சாதி சிங்களப் பண்பாட்டுடன் ஒன்றிக் கலந்து விட்ட (Assimilation) செயல்முறை ஆகியவற்றின் மூலமே புரிந்து கொள்ளலாம் என்று சசங்க பெரரா கூறுகிறார். 14 ஆம் நூற்றாண்டு முதல் வெவ்வேறு காலப் பகுதிகளில் தென்னிந்தியாவின் கர்நாடகக் கரையில் இருந்தும், மேற்கேயுள்ள கேரளக் கடற்கரைப் பகுதியில் இருந்தும் இலங்கைக்கு வந்த கராவ சாதியினர் குடியேறினர். இருப்பினும் இச்சாதியினரின் தோற்ற மூலம் பற்றிய தொன்மக் கதைகளில் இச்சாதியினர் வட இந்தியாவில் இருந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்றும்,
மீன்பிடித் தொழிலைச் செய்யாத வீர மறவர் குலத்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டனர். இக்கதைகள் எதனைக் கூறினும் 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தபொழுது சிலாபம் நீர்கொழும்புப் பகுதியில் வாழ்ந்த இம்மக்கள் தமிழைப் பேசுவோராக இருந்தனர் என்று சசங்க பெரரா குறிப்பிடுகிறார். இதற்கு
நூல் : முற்றத்துக் கரடி ஆசிரியர் : அகளங்கள்
விலை :ரூபா 500/= வெளியீடு:எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்.
இதுவரை 41 நூல்களை எழுதி வெளியிட்ட அகளங்கள் அவர்களது முதலாவது சிறுகதைத் தொகுதி 'முற்றத்துக் கரடி : இத்தொகுதியில் 21 கதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பல கதைகள் (தலைப்புக்கதை உட்பட) ஞானம் சஞ்சிகையில் வெளிவந்தவை. இக்கதை கள் குறிப்பாக வன்னி மண்ணின் வாழ்வியலை அதிகமாகப்பதிவு செய் துள்ளன. அதேவேளை
முற்றத்துக்கரடி சில கதைகள் இலங்கை அரசியலை எதிர்ப் போராட் டத்தை விளைவுகளைப் பதிவு செய்துள்ளன. புதிய சுவையை புதிய தரிசனத்தைத் தரும் கதைகளாக |
இக் கதைகள்
மிளிர் கின்றன.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

ஸ்ரீரறற் 1988 ஆண்டில் எழுதிய On the Beaches Fishermen, fishwives and Fish traders in Post Colonial Sri Lanka. (Delhi Hindustan Publishing Corporation) என்ற நூலில் இருந்து ஆதாரம் காட்டுகிறார். கொழும்புக்குத் தெற்கே வாழ்ந்து வந்த கராவ சாதியினர் 19 ஆம் நூற்றாண்டளவிலேயே சிங்கள சமூகத்தின் மொழி, சமயம், பண்பாடு என்பனவற்றுடன் ஒன்றிக் கலந்து விட்டனர். (Stirrat1988:24). தெற்கில் கணிசமான தொகையினர் கத்தோலிக்கர்களாக இருந்தனரேனும் பெரும் பான்மையோர் சிங்களவராக மாறி விட்டனர். ஆனால் கொழும்புக்கு வடக்கே நிலைமை வேறாக இருந்தது. குறிப்பாக நீர்கொழும்பிற்கு வடக்கே இருந்தோர் தமிழைத் தம் தாய் மொழியாகக் கொண்ட கத்தோலிக்கர்களாக இருந்தனர். 1867 இல் கடல் மீன்பிடி பற்றி மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை யொன்றில் 'நீர்கொழும்பின் சிங்களவர்கள் தமிழ் மூலத்தை உடையவர்களாய் தோன்று கின்றனர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கராவ சாதி என்ற அடையாளம் பிரதான மானது. அந்த அடையாளம் மூன்று வம்ச பரம்பரைகளோடு தொடர்புபட்டிருந்தது. மிகுந்து குலசூரிய, வர்ணகுலசூரிய, குருகுலசூரிய என்ற பெயருடைய இந்த மூன்று வம்சங்களில் மிகுந்து குலசூரிய வம்சத்தினரில் பெரும்பான்மை சிங்களம் பேசுபவர்களாயும், வர்ணகுல சூரிய வம்சம் தமிழ் பேசுவோராகவும் இருந்தனர். 1888 ஆம் ஆண்டில் சிலாபத்தில் உதவி அரசாங்க அதிபராக இருந்த அதிகாரி, சிலாபத்தின் தமிழ் பேசும் கராவாக்கள் தமது பெண் பிள்ளைகளை சிங்களம் பேசும் கராவக்களுக்கு (குறிப்பாக மிகுந்து குலசூரிய வம்சம்) திருமணம் செய்து வைக்கச் சம்மதிக்கமாட்டார்கள் என்று எழுதியிருந்தார். ஒரு தடவை பிரான்சிஸ் தம் மனைவி சிங்களக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் தம்மைவிட அந்தஸ்தில் குறைந்தவரென்றும் தமக்குக் கூறியதை சசங்க பெரரா குறிப்பிடுவதோடு முற்காலத்தில் நிலவிய அந்தஸ்து வேறுபாடுகளை இது சுட்டுவதாகவும் குறிப்பிடுகிறார். ஆகவே பிரான்சிஸின் அடையாளத்தை இடப் பெயர்வின் சமூக வரலாறு, வரலாற்று நினைவுகள், புனைவுகள், குழும அடையாளத் தேவைகள் ஆகியவற்றின் பின்னணியிலேயே
19

Page 21
விளங்கிக் கொள்ளலாம் என்று சசங்க பெரரா கூறுகிறார். எதை நினைவுபடுத்துவது எதை மறப்பது என்பதைச் சமகால வரலாற்று நிகழ்வுகள் தீர்மானிக்கின்றன. 1958ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது நீர்கொழும்பு பகுதியின் தமிழ் கத்தோலிக்கர்கள் இனவன் முறைத் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. 1983 வன்முறையின் போதும் பிரான்சிஸ் வாழ்ந்த இறன்வில்ல கிராமம் வன்முறையில் இருந்து தப்பிக்கொண்டது. இதற்குக் காரணம் அங்கிருந்த தமிழ் அடையாளம் மறைந்து கொண்டு சென்றதேயாகும். பிரான்சிஸ் இரு அடையாளங்களைக் கொண்டிருக்கிறார். ஒன்று பொது வாழ்வில் அவரது அடையாளம். இது சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் சிங்கள அடையாளமாக உள்ளது. ஆயினும் அவரது தனிப்பட்ட வாழ்வில் அடையாளக் குழப்பம் - தொடருகிறது. உதாரணத்திற்கு அவரின் காதுகளில் துளை அடையாளம் உள்ளது. 30 வருடங்களிற்கு முன்னர் அவர் காதுகளில் தோடு அணிந்திருப்பார். அது சிங்கள அடையாளம் அல்ல. இப்போது அவர் தோடு அணியாமல் விட்டதன் காரணம் தனது சிங்கள் அடையாளம் என்ற பொது வாழ்வின் படிமத்தோடு முரண்பாடு இருக்கக்கூடாது என்பதற்காகவே. ஊருக்குள் சிங்களத்தில் பேசிக் கொள்ளும் அவரது ஆண் பிள்ளைகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது தமிழில் பேசுகிறார்கள். ஏனெனில் இன்றும் கடற் தொழிலுக்குரிய மொழி தமிழாகவே உள்ளது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளால் இப்போது தமிழை ஒழுங்காகப் பேச முடியாது. அடுத்த சந்ததி முழுமையாக சிங்கள கத்தோலிக்க அடையாளத்தைத் தழுவிவிடும். சசங்க பெரராவின் நூல் சமூகவியலாளர் ஒருவரால் எழுதப்பட்ட சுவாரஸ்யம் மிக்க நூல். அதில் உள்ள ஏனைய எட்டுக் கட்டுரைகளும் வெவ்வேறு பொருள் பற்றிவை. நூலின் தலைப்பு
The world According to me: An Interpretation of the Ordinary, the Common and Mundane
151 பக்கங்களைக் கொண்ட இந்நூல் கொழும்பு ICES நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
000

ஏதே உரத்தட்டம்
தேர்தலுக்காக ஒரு வரவு செலவுத் திட்டம் இந்தத் தேசத்தில் தான்!
குடும்ப ஆட்சி தொடர இது ஒரு குறுக்கு வழி!
மக்களாட்சிக்கு மகிந்த சிந்தனை தந்த மரியாதை இது!
அமராஜா TN8
போரில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு
இந்த வரவு செலவுத் திட்டம் பிச்சை கூடப் போடவில்லை
தனக்கென ஒரு வரவு செலவுத் திட்டம் தயாரித்த முதல் ஜனாதிபதி 3 மகிந்த தான்!
கடலுக்குள் வீழ்ந்த கப்பல் போல கடனுக்குள் எங்கள் கையளவு தீவு காப்பாற்றுவது யார்? கடவுளா? இல்லை சீனா!
வாகரைவாணன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 22
(6
டாபயாடிகளா4RHEாயல்
"அடியே மறுமகளே, இங்க வாடி. வந்து ஓண்ட மகள்ட கெட்டித்தனத்த பாருடி.”
மைமூன் நாச்சியாவின் ஓங்கிய குரல் அசீனாவை அதட் டுவது போல் இருந்தது.
"ஏ... மாமி, ஏ... இப்பிடிக் கத்துறீங்க? கத்தி ஊரக் கூப் பிடவா போறீங்க? நடந்தீற விசயங்களச் சொல்லிப் போட் டுக் கத்துங்களே.”
"நான் ஊரக் கூப்பிட இல்ல. ஒன்னத்தான் கூப்பிட்டேன். இங்க பாருடி. நான் செல் லித்தான் ஓண்ட மகள்ட விஷயங்கள் நீ அறிஞ்சி கொள்ள வேணுமெண்டா | நீ என்ன பொம்புலடி? பக்கீருக்கு பாட்டுப் பாடுறதும் கையேந்துறதும் தாண்டி அவல் தொழில் அப்பிடி ஈக்க, நீ அந்தப் பக்கீர் வாத்திய ஊட்டுள்ளுக்குக்
கோந்து வச்சி என்னத்துக்கடி புள்ளக்குப் பாடம் படிப்பிச்சிக் குடுத்தாய்?”
“ஐயோ மாமி, அதுல இப்ப என்ன கொற வந்திட்டுது?”
“என்ன கொறயா? அங்க பாருடி. ஓண்ட மகள் சத்தி எடுக்கிறத்த.”
"மாமி என்னத்தயோ செல்லுறீங்க. அந்தப் 1ள நேத்தயில ஈந்தே தலவலி, தலவலி எண்டு செல்லிக் கொண்டு ஈந்திச்சிது.
அதனால் அது பித்தச் சத்தியா ஈக்கும்.”
"அடியே மறுமகளே, நான் பெரிய வைத்தியருட பேத்தி. எனக்கு நீ பித்தச்சத்தியப் பத்தி பாடம் படிப்பிச்சித் தரப் போறீயா? அந்தப் பக்கீர் வாத்தியக் கூட்டிக் கொண்டு வந்து, அவளுக்குப் பாடம் படிப்பிச்சிக் குடுக்கக்குள்ள நான் நெனச்சேன், இது நடக்கும் எண்டு.”
"ஏ மாமி, நீங்க ஏண்ட புள்ளக்கி இப்பிடியெல்லாம் கத காரணம் கட்டுரீங்க? லைலா, நீ வா உம்மா. நாங்க ஊட்டுள்ளுக்குப் போவோம். நான் ஒனக்குச் சுக்குக் கோப்பி ஒரு கோப்ப ஊத்தித் தாரேன். பித்தச் சத்திக்கு அது மிச்சம் நல்லம்.”
"சரி, சரி போ. நானும் ஒனக்குப் பின்னால் வருவேன். வந்து,
என்ன, ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

உ. நிசார்
விடுதலை
ஏதெவடம் எண்டு அவளிட்டக் கேட்டு தெரிஞ்சி கொள்ளுவேன்.”
அதைத் தொடர்ந்து அசீனா தனது மகளுடன் வீட்டுக்குள் செல்ல, மைமூன் நாச்சியா அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள்.
"அடியே மறுமகளே, நடந்தீர விஷயங்கள் நீ அவளிட்ட கேக்குரியா? இல்ல நான் கேக்கவா?”
“மாமி, அவள் ஒங்களுக்கு ஈற பயத்தால ஒண்டும் செல்ல மாட்டாள். அதனால நானே
கேட்டுத் தெரிஞ்சி கொள்ளுறேன்.”
“மறுமகளே, இங்க பாருடி பூத்தானத்துக்குப் புள்ள வளத்தா இப்பிடித்தாண்டி நடக்கும். சரி, இப்ப நீ பெய்த்து அவளுக்கு நடந்த எல்லா விஷயங்களையும் அடியில ஈந்து, நுனி வர கேட்டறிஞ்சி கொண்டு வந்து எனக்கிட்ட செல்ல வேணும் பார்.”
அதன் படி அசீனா தனது மகளை அவளின் அறைக்குள் அழைத்துச் செல்ல, மைமூன் நாச்சியா அங்கிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டாள். நரை, திரை, மூப்பு அனைத்தும் அவளை நெருங்கியிருந்தாலும் அவளின் உடலுறுதி பார்ப்போரையும் சொல்லுறுதி கேட்போரையும் வியக்க வைத்தன.
21.

Page 23
"மம்மனிபா, நீ இப்ப இங்க வாடா.”
மைமூன் நாச்சியா வீட்டில் இருந்த வேலையாள் ஓடோடி வந்து, அவளுக்கு முன்னே கூனிக்குறுகிய வண்ணம் நின்று கொண்டான். அந்த வீட்டுக்குப் பரம்பரை பரம்பரையாக உழைத்த அவனின் முன்னோர் களது கொத்தடிமைத்தனம், அவனையும் அவ்வாறு நிற்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
| “மம்மனிபா, நீ இப்ப பெய்த்து, ஏண்ட சுருட்டுப் பொட்டிய எடுத்துக் கொண்டு ஓடி வாடா இங்க.”
மம்மனிபாவின் உடல் தளர்ந்து இருந்தாலும் அதை மைமூன் நாச்சியாவுக்கு முன்னே காட்டிக் கொள்ள அவன் எப்போதும் விரும்பவில்லை. அதனால் தனது கைகளை வீசி, கால்களை நீட்டி வைத்து, ஓட்டமும் நடையுமாக அவன் அங்கிருந்த பெட்டகத்துக்கு அருகே வந்து, அதன் லாட்சுகளில் ஒன்றுக்குள் இருந்த சுருட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டான்.
"நாச்சியாவுக்கு நெருப்பெட்டியும் தேவப் படுமே.”
அதனால் சுருட்டுப் பெட்டியுடன் அதற் குப் பக்கத்தில் வைக்கப் பட்டிருந்த தீப் பெட்டியையும் அவன் கைகளில் எடுத்துக் கொண்டான். அதன் பிறகு ஓட்டமும் நடையுமாக வந்து, மைமூன் நாச்சியாவிடம் அவற்றை ஒப்படைத்து விட்டு, மீண்டும் அவளெதிரே கூனிக் குறுகிய வண்ணம் நின்று கொண்டான்.
"மம்மனிபா இப்ப நீ பெய்த்து வெளீல ஈற வேல வெட்டிகள் கவனி.”
அவன் அங்கிருந்து அகன்று செல்ல, மைமூன் நாச்சியா சுருட்டுப் பெட்டியில் இருந்து நல்லதொரு சுருட்டைத் தெரிந்து, அதைப் பற்றவைத்து வாயில் வைத்துக் கொண்டாள்.
அவள் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்குப் பக்கத்து அறையில் தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உரையாடல் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அதைத் தனக்குள் நன்கு உள்வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக, அவள் தனது தலைமுடியை நன்கு கோதி, காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள். அதனால் அவளது காது மடல்களை அழகு செய்த பதினொரு சோடி அல்குத்துகளும் பளிச் என மின்னிக் கொண்டிருந்தன.
22

அப்போது அவளின் வாயில் சுருட்டு புகைந்து கொண்டிருந்தது. நடந்திருக்கும் அசம்பாவிதங்களை எதிர்கொண்டு, தனது அந்தஸ்துக்கு ஏற்ப எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி, அவள் அப்போது தீர யோசித்தாள். அது மட்டுமல்ல, எதிரியை எவ்வாறு மடக்கலாம் என்பது பற்றியும் அவள் தனது மனதுக்குள் வியூகம் ஒன்றை அமைத்துக் கொண்டாள். அச்சமயம் அசீனாவின் அதட்டல்களையும், லைலாவின் விம்மல்களையும் அடிக்கடி கேட்கக் கூடிய தாகவே இருந்தன. அப்போது அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே பாய்ந்த அசீனா, மைமூன் நாச்சியாவின் காலடியில் வந்து குந்த வைத்துக் கொண்டாள்.
“ஐயோ மாமி, ஒங்கட ஊகம் சரி. அந்தப் பாழாப் போன பக்கீரு வாத்தி, எங்கட மொகத்துல கரியப் பூசிட்டான். நாங்க இப்ப என்ன செய்ய மாமி? என்ன செய்ய?”
"அடியே மறுமகளே, நடந்தது நடந்திட்டுது. நீ இப்ப பதறாம இரி. அதெல்லாத்துக்கும் ஏத்த மாதிரி நான் காரியம் வகுத்திட்டேன்.”
“மாமி, அப்ப கருவக் கலச்ச வேணு மெண்டா செல்லுறீங்க?”
“அடியே மறுமகளே, கருவக் கலச்சா அந்தப் பக்கீரு வாத்திக்குப் பாடமொண்டு படிச்சிக் குடுக்க ஏழாமப் போகும். அதனால விஷயம் உண்மையா எண்டு செல்லிப் பாக்க, மொதல்ல இந்தச் சிறுக்கீட நாடியப் புடிச்சிப் பாக்க வேணும்.”
மைமூன் நாச்சியா மிகவும் பதற்றத்துடன் தனது பேத்தியின் அறைக்குள் நுழைந்தாள், அவளின் கண்களில் கோபக் கனல் பறந்தது.
"அடியே லைலா ஓண்ட எடது கைய இங்கால நீட்டுடி.”
தலை குனிந்த வண்ணம் அழுகையும் விம்மலுமாக இருந்த லைலா அச்சம் மிகுந்த வளாய் தனது இடது கையை நீட்டினாள்.
வைத்தியப் பரம்பரை யொன்றின் வாரிசாக இருந்த மைமூன் நாச்சியா, லைலாவின் நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு, அவளின் கையை ஓங்கி உதறி விட்டாள்.
"மறுமகளே, நடக்க வேண்டிய விஷயம் நடந்தீக்குது, இனிக் கவலப்பட்டு வேல இல்ல. இப்ப நீ மம்மனிபாவக் கடக்கி அனுப்பி, புவாது மகனுக்கு ஒடனே இங்க வரச் செல்லி செய்தி ஒண்ட அனுப்பி வை.”
அசீனா மம்மனிபாவைத் தேடிக் கொண்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 24
வெளியே செல்ல, மைமூன் நாச்சியா கதிரை யில் நன்கு சாய்ந்த வண்ணம், அணைந்த சுருட்டை மீண்டும் பற்ற வைத்து, புகைக்க ஆரம்பித்தாள். பிரச்சினைகளை சமாளிப்பதை விட, அவற்றை ஒரு சவாலாக எதிர்கொண்டு, தீர்வு காண்பதிலேயே அவள் சதா நாட்டம் வைத்திருந்தாள். சுருட்டுப் புகை அதற்கொரு உந்துதலை அவளுக்குக் கொடுத்த வண்ணம் இருந்தது. அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். அவளின் முன் அனுபவங்களும் அதற்கு உறுதுணையாயின. அப்போது பதறியடித்துக் கொண்டு புவாது ஹாஜியார்
வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
க "யாவாரம் சூடு புடிச்சிக் கொண்டு வார நேரத்துல, மெனக்கெட்டு என்ன இங்க வர வழச்ச, என்னெத்தென் உம்மா, என்னெத் தென் இங்க நடந்தீக்குற?”
“என்னெத்தென் இங்க நடந்தீக்குறதா? நடக்கக் கூடாத விஷயமொண்டு இங்க நடந்தீக்குது. அந்தப் பக்கீரு வாத்தி இங்க வந்து போனத்தால ஓண்ட மகளுக்கு புள்ள உண்டாயீக்கு.”
அதைக் கேட்டதும் புவாது ஹாஜியாருக் குள் ஒரு பொல்லாத ஆவேசம் வந்து விட்டது.
“உம்மா எங்க அந்தச் சிறுக்கி? அவள்ட கையக் கால ஒடச்சி மூலயொண்டுல போட் டுட்டு, அந்தப் பக்கீரு வாத்திய கண்ட துண்டமா வெட்டிப் பொதச்சாத்தான் ஏண்ட
இந்த கோவம் அடங்கும்.”
அவர் தனது மகள் இருந்த அறையை நோக்கி வேகமாக முன்னேறிச் செல்ல ஓரிரண்டு அடி எடுத்து வைத்து விட்டார். அப் போது அறைக்குள் இருந்த அசீனாவின் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.
"டேய் புவாது நில்லுடா அங்க.”
மைமூன் நாச்சியா போட்ட சத்தத்தில் புவாது ஹாஜியார் நின்ற இடத்திலேயே நின்று விட்டார்.
"டேய் மகனே, ஓண்ட பொல்லாத பொண் டாட்டிதான் இதெல்லாத்துக்கும் காரணம். அவள் பஞ்சு ஈற எடத்துல நெருப்பக் கோந்து வச்சிட்டாள். ஒரு பக்கத்துக்கு அவளக் கொற செல்லியும் வேல இல்ல. இதெல்லாம் இந்தப் பக்கீருகளால் வந்த வென. நோன்பு காலத்துல 'கருக்கு மனிஷர எழுப்புறத்துக்கும், பித்தரா அரிசி வாங்குறத்துக்கும், ராத்திபுக் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

களரிகளுல தஹரா அடிச்சிறத்துக்கும், தவுஸ் குத்துரத்துக்கும் இந்த ஊருல வந்து குடிய மந்தவனுகள் இப்ப எங்கட தலயில் கைகழுவ வந்துட்டானுகள். அதெல்லாம் இந்த மைமூன் நாச்சியாட்ட எங்க பலிக்க?”
"உம்மா அதெல்லாம் சரி. நாங்க இப்ப என்ன செய்ய வேணும் எண்டத்த மொதல்ல செல்லுங்கோ.”
“டேய் மகனே, ஓண்ட மகள் செஞ்சிக் கொண்டிக்கிற வேலகளுக்கு அவள வெட்டிப் பொதச்ச வேணும். இல்ல, அவள அந்தப் பக்கீரு வாத்திக்கே கலியாணம் கட்டி குடுக்க வேணும்.”
“உம்மா, அவள் ஏண்ட புள்ள. அவள வெட்டிப் பொதச்ச ஏண்ட மனசு எடம் குடுக்க இல்ல.”
"நீ சரி, எந்தத் தகப்பனும் தண்ட புள்ளயொண்ட வெட்டிப் பொதச்சிப் போட விரும்ப மாட்டான்தான். அதனால நீ விரும்பினாலும் விரும்பாட்டியும் அவள் அந்தப் பக்கீருக்கே கலியாணம் கட்டிக் குடுக்க நான்
முடிவெடுத்திட்டேன்.”
“உம்மா, நாங்க அப்பிடிச் செஞ்சா ஊர் சிரிக்குமே உம்மா. எங்கட மாணம், மரியாத கப்பலேருமே உம்மா. நாங்க ஊருக்குத் தல குனிய வேண்டி வருமே உம்மா. இதெல்லாத்தையும் நெனச்சக்குள்ள ஏண்ட கைகாலெல்லாம் பதறுதே உம்மா.”
"டேய், நீ ஹம்தூன் மத்திசத்துட மகன். ஓண்ட வாப்பாட தங்கச்சி, எவனோ ஒத்தனுக்கு ஏமாந்து, அவனோட பாஞ்சி போன நேரம், ஓண்ட வாப்பா அவனுக்கும் அவளுக்கும் படிப்பிச்ச பாடம் ஒனக்குத் தெரிய வாய்ப்பில்ல. நீ அப்ப சின்னப் புள்ள. ஆனா, மம்மனிபா அதெல்லாத்தையும் நல்லாத் தெரிஞ்சி வச்சிக்குறான்.”
அப்போது கதவுத்திரைக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த மம்மனிபா பாய்ந்து வந்து, அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டான்.
"நாச்சியா, அந்த விஷயங்கள் மகனிட்ட செல்லவா? வானாமா?”
“மம்மனிபா, நீ அதெல்லாத்தையும் இவ னிட்ட இப்ப செல்லத்தான் வேணும். பொம்புளப் புள்ளயப் பெத்த மனிஷரு கம்புக்கு கத்தி போல ஈக்கோணுமெண்டத்த அப்பவாவது இவன் அறிஞ்சி கொள்ளுவான்.”
23

Page 25
"மகன், ஒங்கட சவுதா மாமி சின்ன வயசில நல்ல அழகான, பசுந்தான புள்ள. அவ எங்கட தோட்டந்தொரவுல் கூலி வேல செஞ்ச உபைதுட ஆச வாத்தகளுக்கு மயங்கி, ஒரு நாள் அவனோட ஓடிப் பெய்த்திட்டா, அப்ப, நானும் ஒங்கட வாப்பாவும்தான் பின்னால பெய்த்து, அவங்க ரெண்டு பேரையும் புடிச்சி, அவன மரத்துல கட்டி வச்சிட்டு, சவுதா மாமிய ஊட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்த. அதுக்குப் பெறகு வாப்பாவும் நானும் திரும்பப் பெய்த்து அவன்ட கையக்கால ஒடச்சி.'
"மம்மனிபா அது வரக்கிம் சென்னாப் போதும்.”
"புவாது கேட்டாயா வாப்பாட கெட்டித் தனத்த. அது மட்டுமல்ல வாப்பா, சவுதா மாமிக்கு கலியாணம் காப்பொண்டு செஞ்சி குடுக்காம அவவ வாழாவெட்டியாக்கி ஊட்டுலேயே வச்சிக் கொண்டதும் குடும்பத்துல மத்தப் பொம்புளகளுக்கு அது ஒரு பாடமா ஈக்கட்டும் எண்டுதான்.”
"நாச்சியா, அது பிழ. அவவ வாழாவெட்டியாக்கினது மத்திஷம் காக்கா அல்ல. அவக்கிருந்த சொத்து சொக மெல்லாத் தையும் அபகரிச்சிக் கொள்ள, நீங்கதான் அந்த வேலயச் செஞ்சீங்க. இத நான் செல்ல இல்ல. ஒங்கட இன சனமும் ஊர் மனிஷரும் தான் செல்லுறாங்க.”
"மம்மனிபா, நீ இப்ப அளவுக்கதிகமா பேச வாராய். நீ இப்ப இங்க ஈந்து போறியா? இல்ல, ஒன்னக் கொண்டத்து இருட்டறையில் போட்டுக் கதவ மூடவா?”
“உண்மயப் பேசவும் நெலத்துல உக் காரவும் பயப்புடாதே எண்டு, மத்திஷம் காக்கா அடிக்கடி செல்லுவார். அது ஈக்கட்டும் நாச்சியா, நீங்க செல்லுறதாக ஈந்தா நான் வாய மூடிக் கொள்ளுறேன். எனக்கென்னத்துக்கு வீன் தொரட்டு?”
மம்மனிபா அங்கிருந்து ஓடிச் சென்று கதவுத் திரைக்குப் பின்னால் மீண்டும் மறைந்து கொண்டான். நாச்சியாவின் இருட்டறைத் தண்டனைக்கு ஆளானால் மூன்று நாட்களுக்கு பச்சைத் தண்ணீரும் கிடைக்காதென்பது அவ
னுக்கு நன்கு தெரியும்.
“உம்மா, நீங்க ஏண்ட மகளயும் வாழா வெட்டியாக்கிடு வீங்களோ எண்டு எனக்குப் பயமாக ஈக்கு.”
"டேய் புவாது, இது போல எத்தனையோ விஷயங்கள் நான் கண்டும் கேட்டும் 24
போட்டுகன்னக் கொட அங்க ஈந்து

ஈக்குறேன். நானும் ஒரு பொம்புல எண்டத்தால் பொம்புலகளப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். பொம்புள எப்பவுமே ஒரு புள்ளி மானப் போல. ஆனா ஆம்புள? ஆம்புள எப்பவுமே பொல்லாத புலியப் போல. புள்ளிமான் புலியிட்ட வலியப் பெய்த்து அதுக்கு எறயாகுற இல்ல. புலிதான் பாஞ்சி வந்து, புள்ளி மானப் புடிச்சி, கடிச்சி, எறயாக்கிக் கொள்ளுற. ஆம்புள், பொம்புளகளுக்கு எடயில் நடக்குற பொல்லாத ஒரவுகளும் அதுபோலத்தான். அதனால இங்க பொம்புளக்கி அல்ல ஆம்புளக்கித்தான் தண்டன குடுக்க வேணும். நீ பயப்படாதே. நான் ஓண்ட மகள் வாழ வெச்சுவேன். ஆனா அந்தப் பக்கீரு வாத்திக்கு ஒரு பாடம் படிப்பிச்சிக் குடுக்காம விட மாட்டேன். அதெல்லாம் என்ன, ஏது எண்டு நீ எனக்கிட்ட கேக்கப் படாது. இப்ப நீ ஒரு வேல செய்ய வேணும். அந்தப் பக்கீரு வாத்தீ வாப்பா ஈக்குறாரே மம்மசன் பக்கீரு. அவர் இன்டெய்க்கு கடெக்கி வந்தா அவரிட்டச் செல்லு, என்ன வந்து சந்திக்கச் செல்லி.”
அதன்படி அன்று மாலை மம்மசன் பக்கீர் மைமூன் நாச்சியாவைச் சந்திக்க அவளது வீடு தேடி வந்தார். அப்போது அவள் என்றுமில்லாதவாறு அவருக்குச் சலாம் சொல்லி வரவேற்றாள். பதிலுக்குச் சலாம் சொல்லவதற்குத் தயங்கிய மம்மசன் பக்கீர் அங்கே தனக்கேற்ற ஆசனமொன்றைத் தேடி சுற்றும் முற்றும் பார்க்க, மைமூன் நாச்சியா முந்திக் கொண்டாள்.
"பாவா இங்க வாங்கோ. வந்து இந்த எடத்துல உக்காருங்கோ.”
அவள் தனக்கு முன்னால் இருந்த ஆசனத்தைச் சுட்டிக் காட்ட, அவரின் கண் களில் பிரமிப்பொன்றே ஏற்பட்டது.
"பாவா, நீங்க மகனப் படிப்பிச்சி, ஆளாக்கி, வாத்தித் தொழிலும் எடுத்துக் குடுத்துட்டீங்க. அதனால ஒங்கட அந்தஸ்தும் ஒசந்திட்டுது. இப்ப இனி எனக்கு முன்னால ஒங்களுக்கு உக்காரத் தகுதியும் ஈக்கு.”
அதன்படி மிகவும் கூனிக்குறுகிய வண்ணம் மம்மசன் பக்கீர், மைமூன் நாச்சியா காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
"சரி பாவா, நாங்க இப்ப விஷயத்துக்கு வருவோம். ஒங்கட மகன் இங்க எங்கட பேத்திக்கு படிப்பிச்ச வந்தான். அவன் அவளுக்குப் படிப்ப மட்டும் குடுக்க இல்ல.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 26
புள்ளயொண்டையும் குடுத்திட்டான்.”
"யா அல்லாஹ்! அவன் இப்பிடி ஒரு காரியத்த ஒங்களுக்குச் செஞ்சிட்டானா? இப்ப நீங்க செல்லுங்கோ. நான் பெய்த்து, அவன்ட கையக் காலக் கட்டிக் கொண்டு வந்து, ஒங்கட காலடியில் குந்த வச்சுறேன். அப்ப நீங்க அவனுக்கு ஏத்த தண்டனையக் குடுங்கோ. நான் எதுவும் பேச மாட்டேன். ஒங்களுக்கு ஊழியம் செய்யாமலே நீங்க போட்ட பிச்சையால பொழச்சித் திண்ட ஜனங்கள் நாங்க. ஒங்கட எந்த உத்தரவுக்கும் நான் தல சாய்ப்பேன்.”
"பாவா, பதறாம இறீங்கோ. நான் ஒங்கட மகனுக்கு ஏண்ட பேத்திய கல்யாணம் கட்டி வச்ச தீர்மானிச்சிட்டேன். அதுதான் நான் அவனுக்குக் குடுக்கிற தண்டன. அதனால் நீங்க இப்ப எதுவும் பேச வானம். நாளெக்கி அஸருத் தொழுகைக்குப் பெறகு நீங்களும், ஒங்கட மகனும், இனசனங்களும் இங்க வரவேணும். இது சம்பந்தமா கதச்சி, ஒரு முடிவுக்கு வந்து நிக்காஹையும் முடிச்சிப் போட வேணும். இப்ப எல்லாம் சரி. சவ்தா கோப்பி ஒரு கோப்ப ஊத்தித் தருவாள். அதக் குடிச்சிட்டு இங்க ஈந்து பெய்த்திடுங்கோ."
அந்த வீட்டுக்குள் மாத்திரமல்ல, அதன் எல்லைகளைத் தாண்டி அந்த ஊருக்குள்ளும் பியாபித்திருந்த மைமூன் நாச்சியாவின் அதிகாரத்தின் முன்னே மௌனம் காப்பதைத் விர மம்மசன் பக்கீருக்கு மாற்று வழி எதுவும்
ன்படவில்லை. அதனால், சவ்தா கொண்டு வந்த கொடுத்த கோப்பியை குடித்து விட்டு, பதை பதைக்கும் உள்ளத்துடன் அவர் தனது வீடு நோக்கிச் சென்றார். போகும் வழியில் அவருக்குக் கைகால் விளங்கவில்லை. ஏதேதோ பயங்கரக் கற்பனைகள் வந்து போய்க் கொண்டிருந்தன.
“மைமூன் நாச்சியா பொல்லாத கெழவி. பச்சத் தண்ணீக்குள்ள நெருப்புக் கொண்டோர பொம்புள. எங்கள் நாளெக்கி அஸர் தொழுகைக் குப் பெறகு வந்து அவளச் சந்திக்கச் சென்னது என்னத்தயோ வஞ்சகமொண்ட மனசுல வச்சிக் கொண்டுதான். பாவம், அந்த சவ்தா. அவள வாழாவெட்டியாக்கினதும் மைமூன் நாச்சியாதான். அது மட்டுமல்ல சவ்தாவக் கூட்டிக் கொண்டு பாஞ்சி போன உபைதுட கையக்கால ஒடச்சி, குத்துயிராக்கி, செங்கள்ளுச் சூழயில போட்டுச் சாம்பலாக்கி, ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

அந்த சாம்பல கொண்டத்து ஹம்தூன் மத்திஷம் ஆத்துல கறச்சதும் அவள்ட பேச்சக் கேட்டுத் தான் எண்டு, இண்டும் ஊரில் கதச்சிறாங்க. அந்த அநியாயம் எல்லாத்துக்கும் ஒடந்தயா ஈந்த மம்மனிபாவோட சேந்து கொண்டு அவள் நாளெக்கி எங்களுக்கு என்ன கொடும் செய்யக் காத்திருக்கிறாளோ தெரியா? இனி, தப்பினோம் பொழச்சோம் எண்டு எங்க சரி போறதுதான் எனக்குத் தெரிபடுற ஒரே வழி. யா அல்லாஹ்! நீ இப்பிடியெல்லாம் எங்கள் சோதிச்சிறாயே? நாங்க என்னதான் பாவம் செஞ்சிட்டோம்?”
ஓட்டமும் நடையுமாக தனது வீடு நோக்கி வந்து சேர்ந்த அவர், உரத்த குரலில் தனது மனைவியை அழைத்தார்.
"அடியே பீபி ஜான், இங்க வாடி. வந்து ஓண்ட மகன் செஞ்சீற வேலயக் கேளுடி. இந்த ஊருள நாங்க ஈரதா, இல்ல ஊர் உட்டுப் போறதா எண்டத்த நீதாண்டி எனக்குச் செல்ல வேணும்.”
"வந்தும் வராததுமா சும்மா கத்திக் கொண்டே போறீங்க. நடந்தீற விஷயத்த மொதல்ல செல்லிட்டு இரீங்களே.”
"அடியே, ஓண்ட வாத்தி மகன், மைமூன் நாச்சியாட பேத்திக்கு பாடம் செல்லிக் குடுக்கப் பெய்த்து அவள்ட வயித்துக்குப் புள்ளயொண்டயும் குடுத்திட்டு வந்தீக்குறான். இப்ப அந்தக் கெழவி என்னக் கூப்பிட்டுச் செல்லுறாள், அவள்ட பேத்திய எங்கட மகனுக்குக் கல்யாணம் கட்டிக் குடுக்க வேணும் எண்டு.”
"யா அல்லாஹ்! அவள் பொல்லாத கெழவி. அவள்ட நெழல் படுற எடத்துல ஈந்தாலும் அது மனுஷருக்குத் தீமயாத்தான் முடியும். ஏண்ட மகன நான் நம்புறேன். அவன் அப்பிடி கீழ்த்தரமான வேலயொண்டச் செஞ்சீக்க மாட்டான். அவள் என்னமோ எங்களோட வம்புக்கு வாராள். அதனால் நாங்க ராவோடு ராவா இந்த ஊர உட்டுப் போறதுதான் எங்களுக்கு சொகமாக ஈக்கும்.”
"அப்ப இனி சாமான் சட்டி எல்லாத்தையும் கட்டி ரெடியாக்கு. அது சரி, இப்ப எங்க ஓண்ட நம்பிக்கையான மகன்?”
"பொஸ்தகம் ஒண்ட வாசிச்சிக் கொண்டு அது அங்கால ஈக்குறானே.”
“அப்ப, அவன இங்கால வரச்செல்லு.” பீபி ஜான் அவனை அழைக்கச்

Page 27
செல்வதற்கு முன்பே
அவன் அங்கே பிரசன்னமாகி விட்டான்.
"என்னடா மகனே, நீ செஞ்ச காரியம்? நீ எங்கள் ஊர் தேசம் உட்டுப் போக வெச்சிட்டாயேடா.”
“பாவா, நீங்க உம்மாவிடம் சென்ன விஷயங்கள் எல்லாத்தையும் நான் கேட்டுக் கொண்டு தான் ஈந்தேன். நாங்க பக்கீர் குடும்பத்துல பொறந்தது உண்மதான். பித்ரா வும் ஸக்காத்தும் வாங்கத் தகுதி உள்ள எட்டுக் கூட்டத்துல அடங்குறதும் உண்ம தான். அதுக்காக நாங்க எந்த வகயிலயும் தாழ்ந்தவங்க அல்ல. இஸ்லாம், முஸ்லிம்கள் எல்லாரும் சகோதரங்கள் எண்டுதான் செல்லுது. அவங்க எல்லாரும் சம அந்தஸ்து உள்ளவங்க எண்டுதான் செல்லுது. அரசனும் ஆண்டியும் ஒரே ஸஃப்பில் ஈந்து தொழ இஸ்லாம் வழியுறுத்துற அதனால்தான். ஆனா வரலாறு பூரா மைமூன்நாச்சியாட மனநிலையில் உள்ளவங்க
எங்கள் தாழ்த்தித்தான் பாத்திருக்குறாங்க. பாவா, அதிலிருந்து நாங்க விடுபட வேணும். அல்லாஹ் மேல சத்தியமா நான் செல்லுறேன்.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
அமரர் செம்பியன் செல்வன் (ஆ.
ஞாபகார்த்தச் சிறுகதைப் ே (அனுசரணை : செம்பியன் செல்வா
முதற் பரிசு : ரூபா 50 இரண்டாம் பரிசு: ரூபா 3
மூன்றாம் பரிசு: ரூபா 2 ஏனைய ஏழு சிறுகதைகளுக்கு பரிசுச் சான்ற
போட்டிக்கா சிறுகதைகள் முன்னர் எங்கும் பிரசுரி போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பெயர்
இணைத்தல் தபால் உறையின் இடது பக்க மூலையில் "
சிறுகதைப் போட்டி” எனக் 8 அனுப்ப வேண்டிய முகவரி:
ஞானம் கிளை அலுவலகம் - 3B, 4
போட்டி முடிவுத் தி முடிவு திகதிக்குப் பின்னர் கிடைக்கும் கதைகள்

மைமூன் நாச்சியாட பேத்தி லைலாவுக்கு நான் பாடம் செல்லிக் குடுத்தேனே தவிற, எந்தத் தகாத ஒறவும் எனக்கும் அவளுக்கும் எடயில ஈக்கெல்ல. லைலாட வைத்தில வளருற புள்ளெக்கி தகப்பன் நான்தான் எண்டு மைமூன் நாச்சியா செல்லுறதாக ஈந்தா நான் லைலாவக் கலியாணம் கட்டிக் கொள்ள விருப்பம்.”
“டேய் மகனே, அந்தக் கெழவி ஒரு நல்ல பாம்பு. அவள்ட புத்துக்குள்ள பெய்த்தா நீ பொண் எடுக்கப் போறாய்?”
"பாவா, அந்தப் புத்துக்குள்ள பூந்து அந்த நல்லபாம்புட வெஷப்பல்ல கழற்றி எறியத்தான், நான் அவள்ட பேத்திய கலியாணம் கட்டிக் கொள்ளப் போறேன். அது மூலமா அவளுக்குப் பாடமொன்று படிப்பிச்சத்தான் போறேன். - அதுக்குப் பெறகு அந்தக் கெழவீட, அந்தஸ்துக்கு சம் அந்தஸ்து எங்களுக்கும் கெடைச்சும். பாவா, அப்போதாவது எங்களுக்கு ஒரு விடுதல் கிடைக்குமா எண்டு செல்லிப் பாப்போம்.”
0 0 0 IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
இராஜகோபால்) பாட்டி 2014 ன் குடும்பத்தினர்) 00 /= 3000/= 000/= தெழ்கள் வழங்கப்படும். "ன விதிகள்
க்கப்படாததாக இருத்தல் வேண்டும். - முகவரி போன்ற விடயங்களை வேறாக வேண்டும். அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் தறிப்பிடப்படல் வேண்டும்.
5ஆவது ஒழுங்கை, கொழும்பு 06. கதி: 30.11.2014
போட்டியில் சேர்க்கப்படமாட்டாது. - ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 28
பபி டி ப சிய 41 AM
எஜமானர்கள் போ இப்பொழுதெல்லாம்
எலும்புகளைக் கடி தெரு நாய்களின் தொல்லைகள் கூடிவிட்டதால்
குரைக்கும் தொழில் மக்களைப் பார்த்துக்
கொடிகட்டிப் பறக்கி குரைப்பதும் துரத்துவதும் தொடராகிவிட்டன!
மோப்பம் பிடித்து கடிநாய்களெல்லாம்
குறிவைத்துக் குரை கடைவீதி
கறுப்பு வெள்ளை 8 வீடு வாசல்
கூட்டாகி விடுகின் தெருக்களுக் கெல்லாம்
வந்து விட்டதால்
கண்டும் காணதது கண்டவைகளை எல்லாம்
கண்கள் இருந்து 1 கடித்து விடுகின்றன.
எங்கும் தரைப்போ
யாரையும் காப்போம் பொறாமைத் தீ
இறுமாப்பு! தலைகளுக்குப் பரவிவிட்டதால் இவைகளுக்கு
அழுக்குகளுக்கு மதம் பிடித்துவிட்டதாக பலரும் பேசிக்கொள்கிறார்கள்.!
அடையாளமாகிக்
சுத்தம் என்பது | இதனால்
படு சூன்யம் வருவோர் போவோர்
பார்க்கு மிடங்களில் இருப்பவர்களுக் கெல்லாம்
பாழ்குணத்தைக் க இரவு பகலாக நாய்களின் பயம்!
வைக்கோல் கட்டில்
படுத்துக் கிடந்து ஆட்டைக் கடித்து
மாட்டுக்குக் காட்டிப் மாட்டைக் கடித்து
சண்டித்தனம் மனிதர்களைக் கடிக்கின்ற
இன்று மனிதனுக் நாய்க் காலமிது!
நாய்களிடமிருந்து
மக்களைக் காப்பா ஊரார் போடுகின்ற
எச்சில்களை
இவைகளைப் பிடித் உண்டு திரிவதால்
கட்டிப் போடுவதற்க இவைகளுக்கு
இதுவரை நக்குவாரப்புத்தி!
எவராலும் முடியில் - பாவரசு பதியத்தளாவ பாறூக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

மகின்ற ப்பதால்
றெது!
கெடும்
ரப்பதால் கலர்களென றன!
பபோல்
விடுவதால்
Tமென்ற
கிடப்பதால்
இடு)
F412
எப்பேன்;
THE
- கபம்;
ல்
காட்டுகின்றன.!
காகிவிட்டது!
ற்றுவதற்கு த்துக்
எE ப ப ய
குருக்கம்
லை!

Page 29
உலகசினி
12
200II
அன்பன்
வாழ்க்கை என்பது ஒரு பயணம். அந்த வாழ்வில் இருந்து மாறுபட்டதாக இருக்க ே ஆசைப்படுகிறோம்.
- மற்றவர்களிலிருந்து நம்மை வித்தி அடையாளப்படுத்த நம் தோற்றம், இயல்பு, மாற்றிக்கொள்ள முனைகிறோம்.
அப்படி எல்லாம் அடைந்த பிறகு அதில் < பெரும்பாலானோருக்கு இல்லை என்றே சொ அன்பு கலந்த அற்புத நிமிடங்கள் சாகச வா! இந்த ஒரே ஒரு வாழ்க்கையில் அப்படிபட்ட வெறுமை தந்துவிடும். -- உண்மையான அன்புடன் பிறருக்கு உ
தைரியமாக எதிர்கொள்ளும் இயல்பு வாழ்க்
இதுதான் உண்மை, 1000 சாகசங்கள் ஈடா என்பதை உணர்த்திய அற்புத திரைப்படம் த தென் அமெரிக்க காடுகளில் உள்ள ஒரு கொண்டுவர, அப்படி ஒருபறவையே இல்6 அவரின் உறுப்பினர் தகுதியையும் பறித்து விடு உள்ளான சார்லஸ் அந்த பறவையை உயி திரும்பமாட்டேன் என்று சபதம் செய்து த பயணப்படுகிறார். அதன் பிறகு அவரைப் L
சார்லஸை தம் ரோல் மாடலாக நிை வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான் சிறுவு ஒத்த ரசனை, ஆசைகளால் சிறுமி எல்லிய தென் அமெரிக்க காட்டிற்கு சென்று Para( என்பதுதான்.
28

0வரsே)
ந பயணம் சாகசங்கள் நிரம்பியதாக சராசரி வண்டும் என்று நம்மில் பெரும்பாலானோர்
யாசப்படுத்திக்காட்ட அல்லது தனித்து குணம், வாழ்முறை என்று அனைத்தையும்
சந்தோசமும் நிம்மதியும் இருகிறதா என்றால் சல்லலாம். சராசரி வாழ்க்கையில் சந்திக்கும் ழ்க்கையில் கிடைப்பதில்லை. நமக்கிருக்கும் சந்தோசங்கள் இல்லாத நிலை சிலசமயம்
தவும் சில சந்தர்ப்பங்கள், பிரச்சனைகளை
கை காது அன்பின் சில நிமிட தருணங்களுக்கு கான் UP. சார்லஸ் முண்ட்ஸ் ஒரு சாகசவீரர். - அபூர்வப்பறவையின் எலும்புக் கூட்டை லை, இது போலி என்று நிராகரிப்பதோடு கிறார்கள் .அவமானத்துக்கும் கோபத்துக்கும் நடன் பிடித்து வருகிறேன் அதுவரை நான் ன் நாய்களுடன் தென் அமெரிக்காவுக்கு ற்றி எந்த தகவலும் இல்லை . னத்து அவரைப்போலவே சாக்சவாழ்க்கை பன் கார்ல் பிரெட்ரிக்சென். அவரைப்போலவே டன் நட்பாகிறான். எல்லியின் ஒரே கனவு ise Falls இல் வீடு கட்டி வாழ வேண்டும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 30
இவர்களுடைய நட்பு காலப்போக்கில் காதல் தங்களது கனவை நனவாக்க பணம் சேகரிக்கிறார் மகிழ்ச்சியுடன் உடைக்கப்படுகிறது .
சாகசவீரன் ஆகவேண்டும் என்று ஆசைப் தன் வாழ்க்கையை வாழ்கிறார்.
என்றுநினைக்கின்றேன் என்ன உதவி வேண்டு அவன் வரவை விரும்பாத கார்ல் , அவனை தன் தோட்டத்தை நாசம் செய்வதாகவும் அல் சொல்கிறார் .
இந்த சந்தர்ப்பத்தில் "கார்ல் எல்லி” பெயர் எழுதப்பட்ட தபால் பெட்டி பக்கத்து கட்டிடவேலையாளால் இடிக்கப்பட, கார்லுக்கும் கட்டிட தொழி லாளர்க்கும் தகராறு ஏற்படுகிறது .
- கார்ல் அவரை தாக்க பிரச்சினை நீதிமன்றம் வரை செல்கிறது. கார்லை முதி யோர் இல்லத்துக்கு செல்லும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
முதியோர் இல்லம் செல்லும் நாள் வருகிறது முதியோர் இல்லம் செல்ல விரும்பாத கார்ல் தனது வீட்டில் ஆயிரக்கணக்கான பலூன்களை இணைத்து வீட்டையே பலூன்போல மாற்றி வீட்டோடு பறந்து செல்கிறார்.
எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டு மனைவியின் கனவை நிறைவேற்றப் போகிறோம் என்ற திருப்தியுடன் தென் அமெரிக்க நோக்கி செல்கையில் கதவு தட்டப்படுகிறது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

மாகி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ர்கள். ஆனால் அந்த பணம் பல தேவைகளுக்காக
பட்ட கார்ல் ஒரு பலூன்விற்பனை செய்பவராக
குழந்தைகள் அற்ற இந்தத் தம்பதிகள் இறுதிவரை தங்களது கனவைநிறைவேற்ற முடியாது வாழ்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் எல்லி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட கார்ல் தனி மையில் தவிக்கிறார். எல்லியின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற கவலையும் எல்லி இல்லாத வெறு மையுமாக அவருடைய நாட்கள் கடந்து போகின்றன.
ஒருநாள் அவர் வீட்டுக்கு வருகிறான் சிறுவன் ரஸ்ஸல். "சாரணர்சங்கத்தில் பல பதக்கங்களை பெற்று விட்டதாகவும் முதியவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் கிடைக்கும் ஒரு பதக்கத்தை மட்டும் இன்னும் பெறவில்லை உங்களுக்கு
உதவி செய்து அதை பெறலாம் ம் என்றாலும் கேளுங்கள்” என்று கூறுகிறான். வெளியேற்ற முயற்சிசெய்கிறார். ஒரு பறவை தைபிடித்து வரும் படியும்

Page 31
திறந்து பார்த்தால் வாசலில் சிறுவன் ரஸ்ஸல். அதிர்ச்சியடையும் கார்ல் வேறு வழியில்லாததால் ரஸ்ஸலுடன் பயணத்தை தொடர்கிறார். Paradise Fallsஐ தேடி வீட்டை வைக்க முனையும் போது பேசும் நாயையும் வினோத பறவை யையும் சந்திக் கிறார்கள்.
ரஸ்ஸல் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறான். " அந்த பறவைக்கு "கெவின்” என்று பெயரிடு கிறான் ரஸ்ஸல்.
முதலில் தயங்கும் கார்ல் பின்னர் அவர்கள் ஒரு கட்டத்தில் அந்தக் காட்டில் சார்லசை தன் ஆதர்ச நாயகனுடன் மகிழ்ச்சியாக உல ரஸ்ஸல், "கெவின்” என்று பெயரிட்ட அந்த வாழ்கிறார் அதற்காகத்தான் காடுகளில் நாய்கை கிறார். தன் வீட்டிற்குள் இருக்கும் அந்த பற ை கார்ல் அங்கிருந்து கிளம்ப நினைக்கிறார்.
கார்ல் வீட்டில்தான் அந்த பறவை இருக்கிறது துரத்துகிறார்.
சார்லசிடமும் வேட்டை நாய்களிடமிருந்தும் காப்பாற்றினார்?
அவருடைய கனவு என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு அற்புதமாக பதில்
அனிமேஷன் படமாக இருந்தாலும் அதை கதாபாத்திரங்கள் போலவே உணர முடிகிறது. .
பலூன்களை விடுவிக்க வீடு அப்படியே க வேடிக்கை பார்ப்பதும் அனிமேஷன் என்று சொ வண்ண வண்ண பலூன்கள் வீட்டை பறக்க
ஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் அ நேரத்தில் சிறந்த படத்துக்காக பரிந்துரைக்கப்பட
Pixar ன் முதல் 3 D அனிமேஷன் படமான | Pixarன் அதிக வசூல் பெற்ற படங்களின் பட்டிய
கார்லும் எல்லியும் ஆதர்ச தம்பதிகளை க ஒருவருக்கொருவர் அன்பை வெளிபடுத்தும்
ஒரு நடுத்தர வர்க்க குடும்பங்களின் நிலை யடையும் தருணங்களையும் தனிமையின் நினை
இருவரும் மரநிழலில் மேக உருவங்களில் த வேலைகளை பகிர்ந்து செய்வதும், இருக்கையி
30

தடன் பயணத்தை தொடர்கிறார்.
சந்திக்கிறார் கார்ல். எவருந்துகிறார்.
விநோத பறவையை பிடிக்கத்தான் அவர் அங்கு ள உலவவிட்டிருக்கிறார் என்று தெரிந்து கொள் வயை காப்பாற்ற வேண்டும் என்றுநினைக்கும்
து என்று அறிந்து கொண்ட சார்ல்ஸ் அவர்களை
தப்பித்து கார்ல் எப்படி அந்தப் பறவையை
தருகிறது UP திரைப்படம்
நாம் உணர முடிவதே இல்லை. நிஜமான அத்தனை நேர்த்தியான படைப்பு. ாற்றில் மிதந்து செல்வதும் அதை எல்லோரும் சல்ல முடியாத காட்சிகள்.
வைப்பது ரசனையான அனுபவம். னிமேஷன் பிரிவிலும் பொது பிரிவிலும் ஒரே ட்டு அனிமேஷன் பிரிவில் விருது வென்றது. UP கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றதோடு பலில் 2 ம் இடத்தில் உள்ளது ன்முன் நிறுத்துகிறார்கள்.
கட்டங்கள் அத்தனை அழகு. மயை அழகாக பதிவு செய்கிறார்கள். முதுமை
வுகளையும் அற்புதமாக தந்திருகிறார்கள். ங்கள் கனவுகளை பரிமாறிக் கொள்வதும், வீட்டு பில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014

Page 32
21 12 2 2
படிப்பு
- பக் பயா, பு11:
களையும் மனைவி மீதான வைத்திருக்கின்றார்கள்.
எல்லோரின் கோபத்தையும் சம்பாதித்துக் வேண்டும் என்று வீட்டை அந்த மலை உச்சிய பார்த்து லேசாக புன்னகைக்கும் இடமாகட்டும்
அற்புதமான நடிப்பு. (அசைவு)
ஒரு வீடு என்பது நம் வாழ்வின் அடையால் அடையாளம் அந்த வீடுதான். அவள் நினை உணரும் கார்ல் அந்த வீட்டையும் அவள் போ
மனைவியின் டயரியை பார்க்கையில் ! சாகசங்கள் நிரம்பியது அல்ல கார்லோடு வா தெரிந்து கொள்கிறார்
தான் மனைவியை சந்தோசமாகதான் கை காப்பாற்ற சாகச வீரராக மாறுவதும்தன் உயின உயிருக்கு மேலாக நேசிக்கும் வீட்டை இழப் சந்தோசத்தில் நாடு திரும்புவதும் என்று கார்ல் சொல்லப்பட்டிருகின்றன.
கார்லினுடைய கதாபாத்திரம் Spencer Trac குறிப்பிடத்தக்கது.
அனிமேஷன் படத்தில் அன்பு, வாழ்க்கை திரையாக்கிய இந்த படம் ஒவ்வொருவரும் 4 மனிதர்களுடன் வாழும் வாழ்க்கையின் ஒவ்வெ என்று எனக்கு உணர்த்திய படைப்பு.
அன்பைக்கொடுப்பதும் பெறுவதும் சந்தோ
வாழ்வின் அழகிய அருமையான நிமிட இவர்களைப்போல் ....
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

அன்போடு புத்தகம் படிப்பதும், முதுமையில் அன்போடு ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதும், தன் காதலின் அடையாளகமாக பலூன்களை கொடுப்பதும் என்று இயல்பான காதலின் அழகிய தருணங்கள் ரசிக்க வைக்கின்றன
கு ழந் தை க ளு க் கா ன திரைப்படத்தில்வழக்கத்துக்கு மாறாக 78வயது முதியவரை
கதாநாயகனாக்கி அவரின் வயதாவதன் சோகத்தையும் கனவு ன அபரிதமான அன்பையும் காண்பித்து நெகிழ
கொண்டு மனைவியின் கனவை நனவாக்க பில் வைத்து விட்டு மனைவியின் இருக்கையை அவள் இல்லாத ஏக்கத்தை உணர்வதாகட்டும்
ளம் என்பார்கள்.. கார்ல் - எல்லி வாழ்க்கையின் எவுகள் அந்தவீட்டில் இருப்பதை முழுமையாக
லவே நேசிக்கிறார் இறுதியில் உண்மையான வாழ்க்கை என்பது ழ்ந்த நாட்கள்தான் என்று எல்லி நினைத்ததை
வத்திருந்தோம் என்ற திருப்தியோடு கெவினை ரையே பணயம் வைப்பதும் இறுதியில் அதற்காக பதும் இருந்தாலும் எல்லாரையும் காப்பாற்றிய கதாபாத்திரம் மூலம் அற்புதமான விஷயங்கள்
- ஐ மாதிரியாக கொண்டு படைக்கப்பட்டுள்ளது
5 தத்துவம் என்று அற்புதமான விடயங்களை காட்டாயம் பார்க்க வேண்டிய படம். அன்பான ரு தருணங்களையும் நேசிப்போடு தொடருங்கள்
சம்தான்... ங்களை நாமும் சொந்தமாக்கிக் கொள்வோம்
00

Page 33
பார்
அம்மா பத்தாம் பசலி அந்த நாளில் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டவர். பருவமடைந்து அடுத்த வருடமே அப்பாவைக் கைப்பிடித்தவர். அதனால் அவருக்கு காதலைப் பற்றி புரிந்திருக்க நியாயமில்லை. அதுதான் இவ்வளவு பயப்படுறா. கோபப்படுறா.
"சுசீ, சொல்லிப்போட்டன். இந்த வயசிலை பொம்பிளைப் பிள்ளையள் கவனமாக இருக்க வேணும். நோட்ஸ் வாங்க, சந்தேகம் கேட்க என்ற சாட்டில் இங்க பொடியங் கள் வாறது நல்ல தில்லை.. கிறவை சந்தேகப் படுவினம்” அழுத்திக் கூறிய அம்மாவை நோ க க னேன் “அம்மா, இப்ப மற்றவைக்கு சந் தேகமோ, இல் லாட்டில் உனக் குத்தான் என்னில் சந்தேகமோ?”
"எனக்கு உன் னில் சந்தேக மில்லை. உன்ர வயசிலதான் சந்தேகம்.. இக் கணம் சனம் என்னைத்தான் திண்டு துப்பும்... தகப்பன் இல்லாத பிள்ளையை சரியாக வளர்க்கேல்லை என்று பழி சொல்லம்.. நீ படிச்சு பாஸ் பண்ணத்தான் வேணும்... மற்ற பெட்டையளோட சேர்ந்து படி. பொடியங்கள் வேண்டாம்”
அம்மா புத்திமதி சொல்லச் சொல்ல எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. ஆனாலும் அதை அதிகம் வெளிக்காட்டாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். வசந்தன் அடிக்கடி இங்கே வாறதுதான் அம்மாவுக்குப் பிடிக்க வில்லை என்பது புரிந்தது.
ச. முருகா
(4 முகானந்தன்
பாசிப்படி
மாறாங்களாம்பிய
32

பெரியவர்கள், அனுபவசாலிகள், அவர் களிடம் இப்படியான விசயங்களை மறைக்கிறது கஸ்டம்போல. கடந்த சில வாரங்களாக வசந்தன் எனது மனதைக் குழப்பிவிட்டான். பரீட்சை நெருங்கிற நேரத்திலை பார்த்து என்னைக் காதலிக்கிறதாக சொல்லி சம்மதம் கேட்கிறான். எனக்கு ஒரே குழப்பம். படிக்கவும்
முடியேல்லை.
ஒரே யோசனைதான்.
அம்மாவுக்கு எப் படியோ இது புரிந்து விட்டது. பாவம் அம்மா. அப்பாவை ஆமி பிடிச்சுக் கொண்டு போய் காணாமல்
-பா-
--அட போங்கட நீங்களும் உ ங்கட காதலும்
போகப் பண்ணின பிறகு அவ நொடிந்து போய் விட்டா. ஒரு சிறைச்சாலையிலும் இல்லை என்று அறிஞ்ச பிறகு அப்பாவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிந்தது. தோண்டப்பட்ட எலும்புக்கூடுகளிலை ஒன்று
அப்பாவுடையதாக இருக்கலாம்.
அப்பாவை நினைக்கிற போதெல்லாம் எனக்கு அழுகை அழுகையாக வரும். எவ்வளவு பாசமானவர். அவருக்கு என்னில் சரியான பாசம். எனக்கும் அப்பா என்றால் சரியான விருப்பம். அப்பா இருக்கும் வரை எனக்கு
ஒரு குறையும் இருக்கவில்லை. னந்தன்
நான் எதை விரும்பினாலும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 34
2:22
- கயா 27
- ”நிச்சயமாக சுசீ உன நிராகரித்திருக்க மாட்டாள். உ பெண் கடைசிவரை அவனுக்கு காதலின் அர்த்தம் என்னவென்று உ
ஆரம்பித்திருக்கிறவ
அப்பா மறுக்க மாட்டார். சில வேளைகளில் என்னுடைய மனதைப் படிச்சவர் மாதிரி நான் மனதிலை நினைக்கிறதை எல்லாம் நிறைவேற்றி வைப்பார். அப்பாவுடைய பிரிவு என்னையும் அம்மாவையும் நன்றாகப் பாதிச் சுப் போட்டுது.
அப்பாவுடைய பென்சனுடன் அம்மாவும் சிறு சிறு வேலைகள் செய்து ஓரளவு வாழ்க்கைச் சக்கரத்தை கொண்டுசெல்ல முடிஞ்சுது. என்னை ஒரு டொக்டராக படிக்க வைச்சுப் பார்க்கவேணும் என்று அப்பா ஆசைப்பட்டவர். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேணும் என்று அம்மாவும் பாடுபடுறா. நானும் கவனமாகப் படிக்கிறன். ஆனா இந்த வயசில வாற எண்ணங்களை கட்டுப்படுத்தி படிக்கிறதுதான் கஸ்டமாக இருக்கு. இருக்கு.
அம்மா பயப்படுற மாதிரி நான் ஒன்றும் ஊரவைக்குப் பயப்படேல்லை. இப்ப, உலகம் எவ்வளவோ மாறிப்போச்சு. வீட்டுக்குள்ள பெண்ணைப் பூட்டிவைத்த காலம் எல்லாம் மாறிப்போச்சு. விண்கலத்தில் மாற்றுக் கிரகத்திற்கு பயணிக்கிற அளவு பெண் முன்னேறி விட்டாள். ஆனாலும் எங்கட சனம் மாறயில்லை. பழசில ஊறினவை. பண்பாட்டு மாயைகளை விட்டு வெளியில் வரயில்லை. அம்மாவைக் குறை சொல்லேலாது. ஒரு ஆணும் பெண்ணும் கதைத்தாலே தப்பு என்கிற மனநிலையில் வளர்ந்தவை. இப்ப காலம் மாறின பின்னரும் பழையவை மாறேல்லை.
அம்மா நேராகச் சொன்னா. அயலவை இதையே முதுகுக்குப் பின்னாலை குத்தலாக பேசுவினம். வசந்தன் நல்லவன். சோலி சுரட்டு இல்லாதவன். படிப்பில் என்னைப் போலவே வலு கெட்டிக்காரன். நான் சுமாரான அழகி. ஆனாலும் படிப்பில் வலு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

க்கொன்று நடந்திருந்தாலும் உன்னை உண்மையாக ஒருத்தனைக் காதலித்த என்ன நடந்தாலும் நேசிப்பாள்.. சீ... னக்குத் தெரியுமா?..இப்ப காதலிக்க ளையாவது கடைசி வரை கைவிடாத”
|
dார்
கெட்டிக்காரி. விளையாட்டுகளிலும் திறமையை வெளிப்படுத்துவேன். வசந்தனுக்கு கலை இலக்கிய விடயங்களில் ஈடுபாடு அதிகம். தமிழ்த்தின போட்டிகளிலும் பரிசு பெற்றிருக் கிறான். இவை எல்லாம் எமக்கிடையே ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
வசந்தன் தனது மனதை என்னிடம் வெளிக்காட்டும் வரை நான் நிச்சலனமாகவே இருந்தேன். நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அப்பாவின் பிரிவுக்குப் பிறகு அண்ணாவும் இயக்கத்திற்குப் போட்டான். அம்மாவுக்கு நான் தான் எல்லாம்.
அம்மாவுடைய மனது வேதனைப்படும்படி நடக்கக்கூடாது. வசந்தனுக்கு மாட்டன் என்று பதில் சொல்லுவம்.. ம்.. வசந்தனைப்போல நல்ல ஒருத்தனுடைய காதலை தட்டி கழிக்கவும் மனசில்லை. வாற வருஷம் இரண்டு பேரும் கம்பசுக்குப் போவம்தானே. பிறகு யோசிக்கலாம். எப்படி வசந்தனுக்குப் பதில் சொல்லுவது? பல வித நினைவுகளின் அலைக்களிப்பில் இரவு சரியாக தூங்க வில்லை.
வசந்தனை மறுநாள் சந்தித்தபோது மனதில் பூக்காடு! அவனைக் கண்டதும் மனது குதூகலிக்கின்றது. காணாதபோது மனது தவிக்கிறது. இதுதான் காதல் என்பதோ? இப்போ இவனுக்கு என்ன பதில் சொல்வது?
வசந்தன் எனது பதிலை எதிர்பார்த்தான். நான் மெளனம் சாதித்தேன். "உங்கட மௌனத்தை சம்மதம் என்று எடுக்கட்டோ?”
சட்டென்று அவனை நோக்கினேன். “அப்படியில்லை. இப்பகாதல் வேண்டாம். இது படிக்கிற முக்கியமான காலம்.. காதலைப்பற்றி யோசிக்க இன்னும் காலம் இருக்கு.. முதல்ல கவனமாக படியுங்கோ”
“இந்த வயசிலை காதலிக்காமல் வேற எப்ப
33

Page 35
காதலிக்கிறது?... நீங்கள் என்ன சொன்னாலும் உங்கட முகத்திலை விருப்பம் தெரியுது” அவன் குறும்பாகச் சிரித்தான். இந்த சிரித்த முகம் தான் என்னை அலைக்களிக்கவைக்கிறது..ம்... இவன் எப்படி எனது உள்ளத்தில் இருப்பதை சரியாக வாசிக்கிறான்?
“என்னைப் பிடிக்காட்டில் சொல்லுங்கோ” அவன் ஆழமாக என்னை நோக்கியபடி சொன்னபோது, பிடிக்கவில்லை என்று சொல்ல என்னால் முடியவில்லை. மெளமான நிலம் நோக்கினேன்.
"சொல்லுங்கோ” “இல்லை. ஒரு நண்பன் என்ற வகையில் உங்களைப் பிடிக்கும்.. ஆனா”
"பிடிச்ச நண்பனை ஏன் காதலிக்கக் கூடாது?... சரி.. நீங்கள் சம்மதமோ இல்லையோ என்கிறதைச் சொல்லுங்கோ... நாங்கள் பழகாமல் இருப்பம். சம்மதமெண்டால் நான் உங்களுக்காக எத்தனை வருசம் என்றாலும் காத்திருப்பன்”
« 99
"சொல்லுங்கோவன்” “இப்ப காதலிக்கிறதை
அம்மா விரும்பமாட்டா”
"காலம் முழுவதும் அம்மாவுடனேயா வாழப்போறீங்கள்? பருவ வயசு வந்திட்டா ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படவேணும் தானே? அம்மாவின்ர சுமையும் நீங்கும்”
"நீங்கள் என்ன சொன்னாலும் எனக்கு காதலிக்கிறதில விருப்பமில்லை...” மனதைத் திடப்படுத்திக் கொண்டு கூறினேன்.
"என்னைப் பிடிக்கேல்லை என்று சொல்லு றீர்... அப்படித்தானே?... அப்படி யெண்டாதல் நான் செத்துப்போவன்”
“சீ... அப்படியில்லை... விசர்க்கதை கதை யாதையுங்கோ”
"உங்களுக்கு கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை. மனதினைத் திடப்படுத்த முடியாத உங்களுக்கு காதல் தேவையில்லை” என்றான். என் மனது படபடத்தது.
"அதைத்தான் நானும் சொல்லுறன்... எனக்கு காதல் தேவையில்லை. படிப்பு தான் முக்கியம்” கறாராக சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றேன். அழுகையை அடக்கமுடியவில்லை.

ஒரு இடுல. ( ளளகரதங்இருக்கிறாள். 'விர்த்திகள் |
> விதாண்டர்கள்0
ராணம் ரமான்றால்
ற்கேமிடும் - எட்ரம் கூறும் - தேர்கள்!
மிஹிந்தலை ஒமாரிஸ்
இநசாராரைவான
ஐலன கடறைசெய்தால்
இத்தாலி த கண்கம்ேண்று
கதிளாட்டு
சுத்தனம் காட்டும்
அக் கூட்டம் ஹேராஜன் ற்கள் ஹை தோல் கல்ஸ் ஹால்ஹம் கலாம்
கொள்ளைப்பம்இன்று இல்ல அபன்றை
கக்கதைகள் கூடும்?
மோடி வித்தை
இன்றக்காட்டி இன்னொன்றை பெற்படுத்தும் இன்றைவித்ரைம் அன்றறவீைேஹாம்
கம்கூம் இன்பவல்தான்.
மாடு ஹருள் ஜேவித்தை
பாடும் வீரம்? ஹொற வித்தையில், ( ஓடும் நீலப்படம் | ( முடிவால் பாணீ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 36
படிப்பு.. பரீட்சை பெறுபேறுகள் என அடுத்த கட்ட நகர்வு. நான் எதிர்பார்த்தது போலவே நல்ல பெறுபேறு கிடைத்தது. எனது மறுப்பினால் தேவதாஸ் கோலம் பூண்ட வசந்தன் யாரும் எதிர்பார்க்காத வகையில் பரீட்சையில் சறுக்கினான்.
அவன் சித்தியடையாதது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. அவனுக்கு ஆறுதல் சொல்வதா, பேசாமல் விடுவதா என்ற குழப்பம். ஆறுதல் சொல்லப் போனால் பழையபடி வேதாளம் முருக்க மரத்தில் ஏறக்கூடும். எனினும் மனம் கேட்கவில்லை. அவனிடம் சென்று ஆறுதல் கூறினேன்.
"வசந்தன், படிக்கிற வயசிலை படிக்கவேணும். தேவையில்லாமல் ஒரு தலைராகம் பாடி பரீட்சையில் கோட்டை
விட்டுட்டியள்”
"சுசீ, வாழ்க்கையே இல்லையாம், பிறகென்ன படிப்பும், பட்டமும்?” அவன் சலிப்போடு கூறினான்.
"வசந்தன், உலகத்தில் எத்தனையோ பொம்பிளையள் இருக்கினம். உங்களுக்கு என்றொருத்தி பிறந்திருப்பாள். யோசிக்காமல் படியுங்கோ”
"எனக்கென்று பிறந்தவள் நீங்கள் தான்” அவனது பதில் அவளைத் திக்கு முக்காட வைத்தது. இப்போது என்ன செய்வது?... இப்படி மூர்க்கத் தனமாக காதலிக்கிற இவனை ஏற்றுக்கொள்ளவதில் என்ன தவறு? என ஆழமாக யோசித்தேன்.
"சரி வசந்தன்.. நான் உங்கட காதலை ஏற்றுக்கொள்ளுறன். ஆனால் ஒரு நிபந்தனை அடுத்த முறை நீங்கள் சோதினையில சிறப்பாக பாஸ் பண்ணி கம்பசுக்கு வாங்கோ.. அங்கே காதலிப்போம்”
எனது பதிலில் வசந்தனின் முகம் என்னமாய் மலர்ந்தது! அவன் பூரிப்போடு என்னை நோக்கினான். "தாங்ஸ் சுசீ"
"முதல்ல பரீட்சையில் சாதிச்சுக் காட்டுங்க.. மற்றதெல்லாம் பிறகுதான். அதுவரையில என்னிடம் வரக்கூடாது." நான் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு விடை பெற்றேன். எனது மனதிலும் தென்றல் வீசியது.
ஒரு பெண்ணின் வார்த்தைகளுக்கு இவ்வளவு வலு இருக்கிறதா? வசந்தன் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

னை
படிப்பில் மூழ்கிவிட்டது மனதுக்கு மகிழ்ச்சி யளித்தது. அவன் எப்படியும் பரீட்சையில் சித்தியடைந்து அடுத்த வருடமே பல்கலைக் கழகம் வரவேண்டும் என கடவுளை வேண் டினேன்.
என் பிரார்த்தனையும், வசந்தனின் விடா முயற்சியும் பரீட்சையில் வெற்றிக் கனியைத் தந்தபோது வசந்தனை விட நான் தான் அதிகம் மகிழ்ந்தேன். அவனை வாழ்த்திவிட்டு எனது பூரண சம்மதத்தையும் தெரிவித்து விட்டு அவனது பல்கலைக்கழக வரவிற்காக காத்திருந்தேன். இடையிடையே இரகசியமாக சந்திப்போம்.
நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைத்துவிடுகிறதோ? ஒரு நாள் உக்கிரமாக ஏவப்பட்ட ஷெல் ஒன்று நான் தங்கியிருந்த வீட்டில் விழுந்தபோது ஒரு சன்னம் எனது தோள்பட்டையைத் துளைத்துச் சென்றது. வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட எனது உயிர் காப்பாற்றப்பட்டாலும் கைக்கு ஏற்பட்ட பாதிப்பை மாற்ற முடியவில்லை. எனது வலக்கை தோள் மூட்டுக்கு கீழ் இயக்கமற்றுப் போனதுடன் தோள் பட்டையிலும் ஒரு பள்ளம் விழுந்திருந்தது.
வசந்தன் முதலில் கதறியபடி வைத்திய சாலைக்கு வந்தான். சில தடவைகள் வந்து பார்த்துவிட்டுப் போன பின்னர் வருவதை நிறுத்திக்கொண்டான். எனக்கு அந்தரமாக இருந்தது. என்னைப் பார்க்க வந்த சினேகிதி யசோவிடம் வசந்தனை வரும்படி தகவல் அனுப்பினேன். அவன் பதில்தான் வந்தது.
அங்கவீனமான ஒருத்தியைக் கட்டிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஸ்டப்படமுடியாதாம். என்னுடனான காதலை முறித்துக் கொண்டு விட்டானாம். இன்னொரு மேலதிக தகவலை சினேகிதி கொண்டு வந்தாள். வசந்தன் தன்னுடன் படிக்கும் முதல் வருட மாணவியுடன் நெருக்கமாக பழகுகின்றானாம்.
இந்த தகவல் எனக்கு பேரிடியாக இருந்தது. எனது அம்மாவின் அறிவுரைகள் ஞாபகத்திற்கு வர, மனது பீறிட்டுக் கொண்டு கண்கள் குளமாகின.
சினேகிதி என்னைத் தேற்றினாள். "யோசிக் காத சுசீ .. நான் வசந்தனை கிழிய கிழிய நாலு
வார்த்தைகள் கேட்கிறன்”
35

Page 37
“பிரயோசனமில்லை யசோ .. காதலிக்கிற போது இவங்க கெஞ்சுவாங்க.. நீ இல்லாவிட்ால் உலகமே இல்லை என்பாங்க.. உண்மையான சுயரூபம் பின்னர் தான் வெளிப்படும். அவனோட இனிகதைக்கிறதில பிரயோசனம் இல்லை” நான் அவளை மறித்தேன்.
ஆனாலும் அவள் சென்று அவனோடு உரையாடினாள். நான் நினைத்த மாதிரியே வசந்தன் குதர்க்கமாக கதைத்தானாம். யசோ விபரமாக கூறினாள்.
"வசந்தன், நீ செய்யுறது நன்றாக இல்லை.. சுசீ பாவம்.. எவ்வளவு நாள் இவள் பின்னாலே அலைந்து மூர்க்கமாக உனது காதலைத் தெரிவித்து அவளை சம்மதிக்க வைத்தாய். இப்போது தட்டிக்கழிப்பது என்ன நியாயம்”
“யசோ, அங்கவீனமான பெண்யோடு காலம் பூராக வாழச் சொல்லுறியா?...அவளு டைய விதி அப்படி”
"வசந்தன், அவளுக்கு ஆறுதலளிக்க வேண்டிய நீ புண்ணிலை புளிகரைச்சு ஊத்தின மாதிரி நடக்கிறே... இது அடுக்காது.. கடவுள் உன்னைத் தண்டிக்காமல் விடமாட்டார்”
“யசோ கனக்கக் கதைக்கிறே... ஒரு வேளை எனக்கு அங்கவீனம் ஏற்பட்டிருந்தால் அவளும் இதைத் தான் செய்திருப்பாள்... வாழ்க்கையை யதார்த்தமாகப் பார்க்கவேணும்.”
”நிச்சயமாக சுசீ உனக்கொன்று நடந்திருந் தாலும் உன்னை நிராகரித்திருக்க மாட்டாள். உண்மையாக ஒருத்தனைக் காதலித்த பெண் கடைசிவரை அவனுக்கு என்ன நடந்தாலும் நேசிப்பாள்.. சீ... காதலின் அர்த்தம் என்ன வென்று உனக்குத் தெரியுமா?... இப்ப காதலிக்க ஆரம்பித்திருக்கிறவளையாவது கடைசி வரை கைவிடாத”
“உபதேசம் செய்யுறியா யசோ?” “சீ..போங்கடா, நீங்களும் உங்கட காதலும்” ஆத்திரத்துடன் கூறிய யசோ, என்னிடம் வந்து அனைத்தையும் கூறினாள். மீண்டும் அழுகை தான் பீறிட்டு வந்தது. அம்மா அந்த நாளில் கூறிய ஆலோசனை தான் மீண்டும் எனது மனதை உறுத்தியது.
000
36

அழகுதான்
மாலிகை ஜெ07 (சுவிஸ்)
திேத்திரியும் மீன் திெல் சென்என்ன செ சூதன் ஒளியில் அழகோ அழகு
ஏழ்மை கலந்திட்ட
5தின் கதகதப்பு 2ாழப்பாளியின் 2வலுழைப்புக்கு
55லச்சு. சுகமாச்சு
பொங்க் டெப்
நீன்டு தொடரும் மலைகளின் ஒனப்பு மரங்களின் செழிப்பு கீசிடான் குருவியின் ஓசை அழகோ அழகு
ஓடும் அருவியின் சலசலப்பு ஒலை பருப்பர்களின் ஏ999லோ ஏலேலோ... பாட்டின் ஓசை பர்க்க
பர?சமூட்டுகிறது
பர்க்கரிபால்
8 இங்கு “போரைத்தவிர" அனைத்தும் அழகோ அழகுதான்.
11 Hi4451
ஞானம் - கால இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 38
அண்மைக்காலத் வெளிவந்த ஈழத் சில மொழிபெயர் நாடகநூல்கள்
அண்மைக்காலத்தில் மொழிபெயர்ப்பில் வெளி பற்றிய தகவலைப் பகிர்வ
இலங்கையின் அரங்கிய மேலாக அறியப்பட்டவர் (26.9.1934-).
- இவர் விமானப்படையில் பணிய நாடகங்களை எழுதி மேடை He still comes from Jaffn நாடகங்களை நாடகப்பிரிய 69 காலகட்டத்தில் கொழு கல்லூரியின் நாடகத்துறை குறுகியகாலத்திலும் அங்கு பணி விதந்து போற்றப்பட் காலத்தில் யுனெஸ்கோவில பணியாற்றியபோது Stage குழுவொன்றை அமைத்து : மேடையேற்றத்தலைப்பட்டார் புலம்பெயர்ந்து அவுஸ்திே தொடர்ந்தது .
- ஏனெஸ்ட் தளையசிங்க நாடகம் குழந்தை ம.சண்முக கப்பட்டு ஐராங்கனி என காலத்தின் ஒரு துன்பியல் | மித்ர பிரசுராலயத்தினால் (G க்ரியேஷன்ஸ், 2012 ஜக்கரிட நவம்பர் 2012இல் புகைப்ப (ISBN: 978-93-81322-08-6).
சோஃபகிள்ஸ் எழுதிய - பாதிப்பில் சமகால இலங்ை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

தில்
நவரின்
நூலகவியலாளர், லண்டன்.
என்.செல்வராஜா
இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளின் பந்த நான்கு நாடக இலக்கிய நூல்கள் து இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும். பல் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயர் 1961-1967 காலகட்டத்தில் இலங்கை பாற்றிய காலங்களிலிருந்து ஆங்கில பயேற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். a, Rasanayagam's last Riot போன்ற பர்கள் மறந்திருக்கமாட்டார்கள். 1968ழம்பு அக்வைனாஸ் பல்கலைக்கழகக் றயின் இயக்குநராகப் பணியாற்றிய 5 அவர் ஆற்றிய நாடகத்துறைக்கான டது. பின்னர் 1969-1973 வரையிலான ர் வேலைத்திட்ட அதிகாரியாக இவர் and Set என்ற பெயரிலான நாடகக் சர்வதேச ரீதியில் நாடகங்களை எழுதி - இவரது நாடகப்பணி 1973இல் இவர் ரலியாவுக்குச் சென்றதன் பின்னரும்
ம் மக்கின்ரயர் எழுதிய ஐராங்கனி கலிங்கம் அவர்களால் மொழி பெயர்க்
சிறிலங்காவின் அன்ரிகனி: நமது நாடகம் என்ற தலைப்பில் சென்னை சன்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் பா காலனி, 1வது தெரு, சூளைமேடு) டங்கள் சகிதம் வெளிவந்திருக்கிறது. .
அன்ரிகனி என்ற கிரேக்க நாடகத்தின் கயை வைத்து எழுதப்பட்ட நாடகம்

Page 39
19
.ே
SO
) 6
ஃ
இதுவாகும். ஐராங்கனி ஜெயவீரவும், அவளது சகோதரன் ரொபர்ட்டும் மோட் டார் சைக்கிள் விபத்தொன்றில் தமது பெற்றோரை இழந்து பௌதிகவியல் விரி வுரையாளரும் தாய்மாமனுமான சிதார்த் ராஜகருணவினால் வளர்க்கப்படுகிறார்கள். ராஜகருண பின்நாளில் சிறீலங்காவின் ஜனாதிபதியாகிறார். இவ்விருவரும் ஜே.வி. பிகிளர்ச்சியாளருடன் தொடர்பு படுகின்றனர். கிளர்ச்சியின் உச்சகட்டத்தில் ரொபர்ட் பொலிசாரினால் கொல்லப்படுகிறான். அவனது பிணமும் அக்காலத்தில் வழக்கி லிருந்த அதாவது, 1983 ஜூன் 4ஆம் திகதி அமுலுக்குவந்த சட்டத்தின் பிரகாரம் உரிய கெளரவமின்றி துரோகிகளாக்கப் பட்டு குவியல்களாக எரிக்கப்படத் தயாராகின்றது. இந்நிலையில் சகோதரனின் உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டுமென ஐராங்கனி வளர்ப் புத் தந்தையான ஜனாதிபதியுடன் வாதிடு கின்றாள். ஜனாதிபதி மந்திரிசபைக் கூட்டத்திற்கு சென்றுவருவதாகக் கூறிச் சென்றவர் இடைநடுவில் தற்கொலை குண்டு தாரியினால் நடுத்தெருவில் கொல்லப் படுகிறார். ஜே.வீ.பீ. மற்றும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் ஆகிய இரண்டு வரலாற்றுச் சம்பவங்களுக்கிடையே நாடகம் உரையாடல்களினூடாக நடத்திச் செல்லப் படுகின்றது. ஏனெஸ்ட் தளைய சிங்கம் மக்கின்ரயர் தமது தமிழுணர்வினைச் சமரசஞ் செய்யாத கலைஞர். மனிதநேயம் போற்றும் ஈழத் தமிழர். கிரேக்க நாடக மரபையும், நாட்டிய சாத்திரத்தையும் உள்வாங்கி, உலகின் தலைசிறந்த நாடக மேதைகளான இங்கிலாந்தின் ஷேக்ஸ்பியர், அமெரிக்காவின் ஹென்றி மில்லர், ஐரோப்பாவின் பிரெக்ட் போன்றோருடைய பாணிகள் அனைத்தையும் ஒருசேர இலங்கையர் சுவைப்புக்கு முன்வைத்த நாடகமேதை. இதனை இந்நாடகத்தில் தெளிவாக மீள்பதிவுசெய்திருக்கிறார்.
Akinwande Oluwole Soyinka (13.7.1934-) நைஜீரியாவின் ஓகுன் மாநிலத்தில் பிறந்தவர்; Wole Soyinka வோலோ ஸொ யின்கா என்று பரவலாக இலக்கிய உலகில் அறியப்பெற்ற இவர் சிறந்த கவிஞரும் நாவலாசிரியரும் நாடகாசிரியருமாவார். 38
V V ணி N V V V 9 v - v v

36இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வன்றவர். முதன்முதலாக இலக்கியத்துக்கான நோபல் பரிசினை வென்ற ஆபிரிக்கர் என்ற பருமையை இதன்மூலம் நைஜீரியரான Wole yinka பெற்றுக்கொண்டார். இவரது ஆபிரிக்க டகநூலே மரணமும் மன்னனின் குதிரை ரனும் என்பதாகும். இந்நூலை தமிழகத்தில் Tழும் ஈழத்துப் படைப்பாளி எஸ். பொ. வர்கள் அண்மையில் தமிழாக்கம் செய்து தனது திப்பகத்தின் வாயிலாக, மித்ர வெளியீடாக சப்டெம்பர் 2012இல் வெளியிட்டிருக்கிறார். :BN: 978-93-3132-07-9).
மித்ர வெளியீட்டு வரிசையில், 'தடம் பதித்த பிரிக்க இலக்கியங்கள்' என்ற தொடரில் வளிவந்துள்ள நைஜீரிய மொழிபெயர்ப்பு டகமான இந்நூல், வோலோ ஸொயின்கா ழுதிய DeatandheKing's Horseman என்ற நாடக ழுத்துருவின் தமிழாக்கமாகும். 1945ல் நைஜீரியா 'ல் நடந்த உண்மை நிகழ்வின் பாதிப்பில் ருவாகிய நாடகம் இது. நைஜீரியாவின் பழைய பாருபா நகரமான ஓயொவின் அலாஃ.பின்
தூல்:அஸின் ஆழம்
ஆசிரியர் தேவகி கருணாகரன் பதிப்பு : மித்ஆல் இத் தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் அனைத்தையும் ஒரு சேரப்பார்க்கும்போது, மனித சமுதாயத்திற்கு பொதுவான சில பண்புகளே கதைக்கருவாக அமைவதையும் நடப்பியலுக்கு ஏற்ற கதைகளாகவும் இருக்கின்றன. உணர்ச்சி களையும் நினைவோட்டத்தையும் நன்கு வெளிப்படுத்தி கதைகளுக்கு ஒரு முழுமையுைம் அழுத்தத்தையும் கொடுத்து வடித்து, படித்து சுவைக்க கூடியனவாக படைத்திருக்கின்றார்! ஆசிரியர்.. இந் நுாலில் உள்ள கதைகள் யாவும் தமிழ்! நாட்டின் பிரபல சஞ்சிகை கலைமகள், இலங்கையின்
அன்பின் ஆழம் பிரபல பத்திரிகை வீரகேசரி, தினக்குரல்,
-அவுஸ்திரேலிய சஞ்சிகை கலப்பை முதலியவற்றில் வெளிவந்துள்ளன. இது போன்ற படைப்புகள்
புலம் பெயர்ந்து
வாழும் ஒருவரிடம் இருந்து வருவதை மனமாரப் பாராட்டியே
ஆகவேண்டும்.
(பக்கம் இராசிக்க
எதிLIN |
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 40
செயலுடங்கின.வின்
மன்னன் ஒபாசியன் போலா 33 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் இறக்கிறான். அவனுடைய குதிரைவீரன் ஓலொரி எலெசின் விசேஷ வசதிகளுடன் வாழ்ந்தவன். ஓயோவின் மக்கள் அவன் தற்கொலைச் சடங்கைச் செய்து முடித்து, தன் எஜமானின் வழியில் பின்தொடர்வான் என்று எதிர்பார்க்கின்றனர். சுமார் மூன்றுவார காலம் கழித்து, அவன் ஓயோவுக்குத் திரும்பிவந்து, பாரம்பரியத் தற்கொலைச் செயலுக்கு முன்பாக வெள்ளை ஆடை புனையும் சடங்கிலே நடன மாடிக்கொண்டே போகிறான். ஓயோவின் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த பிரித்தானிய மாவட்டம் கொலொனியல்
அதிகாரி, அந்தக் குதிரைவீரனின் தற்கொலையைத் தடுக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறான். தன் தந்தை கைதுசெய்யப்பட்ட செய்தியை அறிந்த குதிரைவீரனின் கடைசி மகன் துரானா, தந்தைக்குப் பதிலாகத் தன் உயிரை மாய்த்து, சடங்கின் தேவையைப் பூர்த்திசெய்கிறான். நைஜீரியக் கலாசாரப் பின்னணியில் இந் நாடகத்தை விளங்கிக்கொள்ள, பெரிய தலைவன் அல்லது பெரிய போர்வீரன் என்பவன் மிகவும் சக்திவாய்ந்த மூதாதையராக இருப்பார் என்பதை அறிதல் முக்கியமானது. மதிப்பையும் மரியாதையையும் இழக்கும் ஒருவர் வெறுக்கப்பட்டு எதற்கும் தகுதியற்ற மூதாதையர் ஆகிவிடுவார் என்பதும் பெறப் படும். எகுன்குன் சடங்குகளின்போது மூதா தையரை மறுபடியும் உயிரூட்டித் திரும்பக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை யொருபாக்கள் மத்தியில் உண்டு. 1995 செப்டெம்பர் 17ம் திகதி இந்நாடகம் பீ.பீ.சீ ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டவேளை அதனை நெறியாள்கை செய்த அல்பி ஜேம்ஸ் கண்ட வோலோ ஸொயின்காவுடனான நேர்காணலும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது. இந்நாடக நூலின் வழியாக எஸ்.பொ அவர்கள் நாட கத்தை மாத்திரமல்லாது, அந்நாடகத்தின் பாத்திரங்களின், கதைக்களத்தின், சமூகப் பின் னணியையும் ஆங்காங்கே வழங்கி வாசிப்பினை எளிதாக்கியிருக்கிறார். ஆபிரிக்க தேசங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இந்நூ லில் இவருக்குக் கைகொடுத்திருக்கிறது.
அமெரிக்கரான ரெனெஸ்ஸி வில்லியம்ஸ் Thomas Lanier Williams II (26.3.1911-25.2.1983) ஐக்கிய அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

பிறந்தவர். சிறந்த நாடகாசிரியரான இவர் சந்தோஷமற்ற தன் சொந்த வாழ்க்கையின் பாதிப்பில் எழுதிய கண்ணாடி வார்ப்புக்கள் The Glass Menagerie என்ற நாடகம் 1944இல் இவரை புகழின் உச்சத்திற்குச் சடுதியாகக் கொண்டுசென்று சேர்த்தது. A street car named Desire, Cat on a Hot Tin Roof, Orpheus Descending, Sweet Bird of Youth என்று மேலும் பல நாடகங்களை இவர் எழுதி வெற்றிகரமாக மேடையேற்றியபோதிலும் ரெனெஸ்ஸி வில்லி யம்ஸ்ஸின் பெயரை உலக மொழிகளில் அறிய வைத்தது கண்ணாடி வார்ப்புகளாகும். இந்நாடகம் இலங்கையின் நாடகத்துறை முன்னோடிகளில் ஒருவரான க.பாலேந்திரா அவர்களாலும் அவரது குழுவினராலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கைக் கையாண்டு 09.06.1978இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதலில் மேடையேற்றம் கண்டது. அன்றுமுதல் இந்நாடகம் பிரசித்திபெற்று இன்றளவில் அதன் மொழிபெயர்ப்புக்காகவும், பாத்திர வார்ப்புக்காகவும் அரங்கியல் மாணவர்களால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. இலங் கையில் மட்டுமல்லாது, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பல தடவைகள் மேடையேற்றம் கண்ட இந்நாடகம், அண்மையில் மீண்டும் ஈழத்து நாடகப்பிரியர்களுக்காக இலங்கையில் 2013 இல் மேடையேற்றம் கண்டுள்ளது. அந்த நாடகத்தின் நூலுருவே கண்ணாடி வார்ப்புகள்: - நாடகம் என்ற பெயரில் நிர்மலா நித்தியானந்தன், மல்லிகா ராஜரட்ணம், க.பாலேந்திரா ஆகியோரின் கூட்டுத் தமிழாக்கத்தில் கொழும்பு குமரன் புத்தக இல்லத்தின் வெளியீடாக 2013 இல் வெளிவந்துள்ளது. (ISBN: 978-955-659 - 401-0). எமக்குச் சொந்தமான பாத்திரங்கள், எமது வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவை நாடகத்திலும் பிரதிபலித்ததால் அமெரிக்க நாடகமானாலும் பரிச்சயமான அனுபவத்தை இந்நாடகம் தமிழ்ப் பார்வையாளருக்கு வழங்கிவந்துள்ளது.
ஹென்றிக் இப்சன் Henrik Johan Ibsen (20.3.1828-23.5.1906) ஒரு நோர்வேஜிய நாட காசிரியர். 19ஆம் நூற்றாண்டின் பிரபல்ய மான நாடகாசிரியராகவும் கவிஞ ராகவும் வாழ்ந்து மறைந்தவர். A Dol's House (1879), Ghosts (1881), An Enemy of the People (1882),
39

Page 41
சாம்பலிலும் பிறப்போம் நாம்
எமது
நாட்டின் சிரசே அதிர்ந்தது நகரம் கிராமம் கோயில் குளம்
காக்கிச் சட்டை அணிந்து கொண்டது
பேய்கள் விழித்துச்
சிரித்தன இருள் அவர்களை அணைத்தே வளர்த்தது மின்னல் இடிமுழக்கம்
மேலோங்கியது வானமெங்கும் இது தொடர்ந்து பரவியது விரைந்து பிடிக்கும் நெருப்பாய் அது
பரவியது சிரசைத்தொட்ட சனிளங்கும் பரவியது
உடலங்கள் உருண்டன
-மொழிவரதன்
The Wild Duck (1884), Hedda Gabler(1890) ! ஆகிய பிரபல்யமான நாடகங்களை எழுதி மேடையேற்றியவர். ஹென்றிக் இப்சன் அவர்கள் 1879இல் இத்தாலியில் வாழும் போது எழுதிய பொம்மை வீடு (A Doll House) என்ற நாடகத்தின் தமிழ் வடிவம் பெண் | பாவை என்ற தலைப்பில் அண்மையில் நூலுருவாகியுள்ளது. காசிநாதர் சிவபாலன் அவர்களின் தமிழாக்கத்தில் உருவாக் கப்பட்ட இந்நாடக நூல், சென்னை மித்ர பதிப்பகத்தின் வாயிலாக மார்ச் 2013இல் வெளியிடப்பெற்றுள்ளது. (ISBN: 978-93-8132215-4).
ஆணாதிக்கச் சூழலில் நோரா என்ற பெண்ணை அவரது கணவன் ஒரு பாவையாக - பண்டமாகக் காண்பது கதையின் அடிநாதம். இந்நாடகத்தில் இப்சன் அன்றாடம் தான் காணும் அசாதாரணமான மனிதர்கள் பற்றி பாரம்பரிய துன்பியல் முறையில் தலைப்பு களையும் கட்டமைப்பையும் பயன்படுத்தி
40

பனியால் முடிய
குளிர் இராவணன் தேசம் அமைதியில் ஆழ்ந்திருந்தது வந்தமகாவலிபான் கரியவிமானம் பீதுறுமலைக்குமேல் உயரப் பறந்திட குளிர் தேசத்திலும் சூடு தகிக்கத் தொடங்கியது நாட்டின் சிசம் வடபுலத்தில் பனுவலின் பொக்கிஷத்திலும் புகை முட்டியவர்
இவர்எனகம் மீண்டும் நிலைநப்து காலங்கள் வந்தன சாம்பல்கள் மறைந்தன மீண்டும் குளிர்தேசம் உயிர்ப்பெறத் தொடங்கியது எரிந்தசாம்பலில் எம்மவர் கோலங்கள் எழிலாய் நர்த்தனமாடின...
) இந்நாடகத்தை ஆக்கியிருக்கிறார். ஐரோப்பா
வில் பெண்ணுரிமை இயக்கம் வேகம் பெறக் ) காரணமாக இந்நாடகம் அமைந்திருந்தது. » இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் > 60களிலேயே வேர்ணன் அபேசேகரா என்ற 2 அரச அதிபரின் ஆதரவுடன் எழுத்தாளர் தேவன் - யாழ்ப்பாணம், இதனை நாடக மாக்கியிருக்கிறார். அத்தகைய முக்கியத் துவம் பெற்ற ஒரு நாடகத்தின் மீள் அறிமுகம் இது. நோர்வேயில் சட்டத்தரணியாகத் தொழில்புரியும் கா.சிவபாலன் திருக்கோண மலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அனைத்துலக உறவுகள் துறையில் முது கலைமாணிப் பட்டத்தைப் பெற்றவர். இலங் கையில் சட்டவாளராகவும் (Attorney - at) Law) இங்கிலாந்தில் சொலிசிட்டராகவும், அவுஸ்திரேலியாவில் பாரிஸ்டராகவும் சட்டத் துறையில் உயர்ந்தவர்.
000
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 42
''ாகரிப4
+4 GMH4Eோ
இங்sேana
=பகுப்பாகை
நெய்னாகுடியின் தென் கோடியில் அமைந்திருந்தது உமர் இப்னு ஹத்தாப் பள்ளி வாசல். உமறுப் பள்ளி என ஊரவர்களால் அழைக்கப் பட்டாலும் பதினாறாம் நூற் றாண்டில் கட்டப்பட்டது அது.
சிலுவையுத்தத்தில் கொன்ஸ்ந் தாந்தி நோபல் சந்தையை இழந்த ஐரோப்பிய கிறிஸ் தவர்கள் நாடுகாண் பயணம் தொடங்கினர். அவ்வாறு காணும் நாடுகளிலிருந்து ஐரோப்பிய சந்தைக்கு பொருட்களைக் கொண்டு வருவது பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந் தாலும் கிழக்காசிய நாடு களில் அப்போது வணிகத்தில் ஏகபோகம் செலுத்திய இஸ்லாமியர்களை முறியடித்தால் தான் தங்களது இலக்குகள் பூர்த்தியாக வழி பிறக்கலாம் என்ற நிலைக்கு ஆளானார்கள்.
அகஸ்மாத்தாக துறைமுகத்தில் வந்திறங்கிய போர்த்துக்கேயர் பின்னர் கொழும் புத் துறைமுகத்துக்கு வந்தபோதுதான் வியாபார இராச்சியம் இஸ்லாமியர்களின் கைகளில் இருப்பதை அறிய வந்தார்கள். தங்களது தொடர்ச்சியான இருப்புக்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இடைஞ்சலாக நிற்கும் இஸ்லாமியர்களை வாழுமிடங்களிலிலிருந்து துரத்திவிட்டால் வணிகத்தில் ஏகபோகத்தை அனுபவிக்கலாம் என்ற ஆசை உந்துதலில் கோட்டை இராச்சிய மன்னனை எப்படியோ கைக்குள் போட்டுக்கொண்டு எடுத்த முயற்சி மேற்குக் கரையோர முஸ்லிம்களின் பலாத்கார இடம்பெயர்வுக்கு ஏது
வாகியது.
பதினாறாம் நூற்றாண்டின் முற் பகுதியில் கண்டி இராச்சியத்தை ஆன்ட செனரத் மன்னனின் கரு ணைமிகு நடவடிக்கைகளால் இடம்பெயர்க்கப்பட்டவர்கள் மலை நாட்டிலும் கிழக்கு மண்ணிலும்
காலி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

\ல்லாப்
புகழும்
றைவனுக்கே
ஜூனைதா ஷெரீப்
குடியமர்த்தப்பட்டனர். அத்தகைய குடியேற்றங் களில் ஒன்றுதான் நமது நெய்னாகுடி.
நெய்னாகுடியில் ஆரம்பத்தில் கட்டப்பட்ட சிறிய தைக்கியாக்களில் தொடர்ச்சியாக நிலைத்திருப்பது உமறுப்பள்ளி. களிமண் சுவர்களுடனும் ஓலைக் கூரையுடனுமாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் காலப் போக்கில் பற்பல மாறுதல்களுக்குள்ளாகி இப்போது சிறியதென்றாலும் வானுயர்ந்த மினாராக் களுடனும் மாபிள் தரையுடனும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சுற்றிவர கறுத்தக்
கொழும்பான்கள், கிளிமூக்குகள், நீண்டுயர்ந்த தென்னை மரங்கள், அகலமான கிணற்றைச் சுற்றிவர கமுகு, விளிமாங்கா, கொய்யா என நானாவித மரங்களின் நிழல் சோலையினுள் பள்ளி நிமிர்ந்து நின்றது. கடும் கோடையிலும் ஹவுலின் நீரில் கை பட்டதும் உடல் நடுங்கும். அவ்வளவுக்கு குளிர். மதிய உணவை வீடுகளில்
41

Page 43
முடித்துக்கொண்ட வேலையில்லாத சில பழசுகள் பிற்பகல் தொழுகை வரை தங்களது சயன அறையாக பள்ளிவாசல் வராந்தையைப் பாவிக்கும்.
காலத்துக்கு காலம் வாழ்ந்த சில தனவந்தர்களும், இரக்கமும் அன்பும் உடை யவர்களுமான பலர் அதிலும் புள்ளை குட்டிகள் பெறாத சில விதவைகளுமாக ஏகப்பட்டோர் உமறுப்பள்ளிக்கு தங்களது சொத்துக்களில் பலவற்றை எழுதி வைத்து விட்டு மறைந்துள்ளனர்.- உமறுப்பள்ளி நெய்னாகுடியில் ஒரு பணக்காரப்பள்ளி என்பது ஊரார்களின் அபிப்பிராயம்.
கடந்த பல வருடங்களாக அபுதாஹிர் ஹாஜியார்தான் பள்ளியின் தலைவர். ஊரார்களை தாஜா மாஜா பண்ணி, தனது மகுடிக்கு ஆடக்கூடிய 'அடிடா' என்றால் அடிக்கக்கூடிய மூளை சிறுத்து கைகால்கள் பெருத்த சில அடிவருடிகளுடன் பள்ளியை நிர்வகித்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் பிரதம நம்பிக்கையாளராக தெரிவு செய்யப்படுவதற்காக
அவர் கொடுக்கும் விலை - அவருக்கும் அல்லாவுக்கும்தான் தெரியும் என்பது ஊரார் சப்பும் அவல்களில் சிலவாகும்.
“ஆஜியாரு. எங்கஹா போறாய்?” நெய்னா குடி அங்காடியில் வாங்கிய மீன்களை பையொன்றில் போட்டுத் தூக்கியவாறு வேகமாக நடந்து வந்துகொண்டிருந்த அபுதாஹிரைப் பார்த்து அவரது தூரத்து உறவினர்களுள் ஒருவரான மம்மது சாலி கேட்டார்.
“ஊட்டதான். சந்யிைலே மீன் வாங்கிக்கிட்டு வாறன். ஏன் கேக்கே?”
“இல்லே...” “தலையைச் சொறியாத, சில்லறையா வேணும்?”
"அதெல்லாம் வாணா ஆஜியாரு. பள்ளி வளவுக்குள்ளே தேங்கா ஆயிற குத்தகையை இந்த வருசம் எனக்குத் தந்துடு. உன்னைக் கவனிக்கிற மாதிரி கவனிக்கன்.”
"அதானா விசயம்? வாற மாசம் குத்தகைக்கு உடுவது பத்தி விளம்பரப்படுத்துவம். அப்போ வந்து சந்திய். உனக்கு சாதகமா நடந்துக்கு வேன்.”
“இன்னுமொரு விசயம்கா.” “என்ன?”
வேதான்றிடியில்

"மெயின் றோட்டிலே பூட்டிக்கிடக்கிற ரெண்டு கடைகளில ஒரு கடையை என்ட மகன் எடுக்க விரும்புறான். சாப்புச்சாமான் கடை போடப் போறானாம். வாடகையைப் பத்தி விசாரிக்கச் சொன்னான்.”
தாஹர் நெற்றியைச் சுருக்கி சிந்தித்தார்.
"உன்ட மகனை என்ட ஊட்ட வந்து என் னைப் பாக்கச் சொல்லு. அப்ப சொல்றன்”
தாஹர் தொடர்ந்து நடந்தார். கடை வாடகையில் தன் சட்டைப் பையினுள் பிரதி மாதமும் கிடைக்கக்கூடிய தொகையை மனம் திட்டமிட்டது |
6 - 9 - ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல் அஸர் தொழுகையைத் தொடர்ந்து உமறுப் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைக் கூட்டம் அகன்ற வராந்தையில் நடை பெற்றது. மாமூலான சில விடயங்களைத் தவிர்ந்து பிரதான வீதியில் உள்ள கடைக் கட்டிடங்களுக்கு அறவிட வேண்டிய வாடகைக் கட்டணம் தொடர்பாக ஆராயப்பட்டது. அங் கத்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ் வேறான தொகைகளுக்கு வாடகைக்கு விடலாம் என்றனர்.
"இதப் பாருங்க. இந்த நாளையிலே எந்தக் கடைக்காரனுக்கும் ஒழுங்கான யாவாரம் இல்ல. முக்கிமுக்கிப் பண்ணினாலும் ஒரு நாளைக்கு மூவாயிரம் தேறுவதும் கஷ்டம். நம்முட பள்ளிக் கடைகள் கூட பொருத்தமான இடத்திலே அமைந்து இருக்கல்ல. அதனாலே சாலி நானாட மகன் கேட்ட மாதிரிக்கு மாதத்துக்கு ஆயிரத்து இருநூறு ரூபா வாடகைக்கு கொடுத்துடுவோம்.” என்றார் அபுதாஹிர்.
நம்பிக்கைச் சபை அங்கத்தவர்களில் சிலர் முகங்களைச் சுருக்கினாலும் தலைவருக்கு எதிராகப் பேசப் பயந்து ஆமையாக அடங்கிக் கொண்டனர்.
“சாலி நானாட மகனுக்கிட்டயிருந்து ரெண்டாயிரத்த வாங்கினா மாதாமாதம் நமக்கு எண்ணூறு மிஞ்சும்” அபுதாஹிரின் மனம் கணக்கிட்டது.
"அடுத்த விசயம் என்ன ஆஜியார்?” தலையில் வலைத் தொப்பியுடன் சுவரில் சாய்ந்தவாறு வீற்றிருந்த ஒருவர் கேட்டார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 44
"மற்ற விசயம் என்னன்னா... நம்முட நம்பிக்கையாளர் சபைக்கு எதிராக வக்பு சபைக்கு யாரோ பிட்டிசம் போட்டிருக்கானுகள். அதப் பத்தி அறிக்கை கேட்டு எனக்கு வந்திருக்கு.”
"பிட்டிசன்ல என்ன எழுதியிருக்கு?” அபுதாஹிருக்குப் பக்கத்திலிருந்த அவருடைய உறவினரான ஒருவர் கேட்டார்.
"பள்ளிக்கு வார வருமானம், செலவு குறித்து ஒழுங்கா நான் கணக்கு காட்டுறதில்லயாம். நோட்டீஸ் போட்ல கணக்கைப் போடுற தில்லையாம். பள்ளிக் காசை நான் விளை யாடுறேனாம். பாத்தீங்களா குற்றச்சாட்டு எப்படி இருக்குதென்டு?” அபுதாஹிர் கூறிவிட்டு மெலிதாக மூச்சிரைத்தார். முகத்தில் கோப் ரேகைகள் கோடிட்டன.
"இந்தாங்க. வேணுமுன்னா யாராவது படிச்சுப் பாருங்க” தனது சட்டப் பையினுள் ஒளிந்திருந்த கடதாசியொன்றை எடுத்து சபை யோரிடம் நீட்டினார்.
“எதுக்கு ஆஜியார் படிக்கோணும்? நீங்க எவ்வளவு சுத்தமானவரு. எவ்வளவு ஒழுங்கா பள்ளியை நடத்துறீங்க என்ட விசயமெல்லாம் எங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன? ஒவ் வொரு நாயும் குலைக்கும்தான். அதுக்காக நாமும் குலைக்கணுமா? பிட்டிசனை தூக்கி குப்பையிலே போட்டுட்டு பள்ளியை ஒழுங்கா நடத்துறதைப்பத்தி யோசிப்பம்” என்றார் மீண்டும் அபுதாஹிரின் உறவினர்.
அவர்கள் நீண்ட நேரம் அந்த விடயம் தொடர்பாக கதைத்தாலும் வரவு செலவுக் கணக்குகளைப் பள்ளிவாசல் விளம்பரப் பலகையில் போடுவது தொடர்பாக தீர்க்க மானதொரு முடிவும் எடுக்கவில்லை.
9 8 9 தென்னிந்தியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ஒருவர் இஷா தொழுகையைத் தொடர்ந்து உபன்னியாசம் செய்யவுள்ளதான அறிவிப்பு ஒருநாள் பகல் உமறுப்பள்ளியிலிருந்து ஒலித்தது.
வழக்கமாக தொழுகைக்கு வருபவர்களுடன் இன்னும் அநேகம் பேர் இஷா தொழுகைக்கு பள்ளிக்கு வந்தனர். பிரதான தொழுகையும் தொடர்ந்த சுன்னத்துத் தொழுகையும் முடிந்த பின்னர் அறிஞர் எழுந்து நின்றார். நீண்ட தாடியுடன் கூடிய முஅத்தின் சரேலென ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

எழுந்து ஒலிவாங்கியை அவரது உயரத்துக்கு கூட்டியும் குறைத்தும் சரி செய்தார்.
அறிஞர் வெள்ளை ஜூப்பாவும், தொப்பியும் அணிந்திருந்தார். ஒட்ட வெட்டப் பட்ட அடர்ந்த தாடி முகத்தின் அழகை அதிகரித்தது. வாய் திறந்ததும் வார்த்தைகள் ஆற்று நீராக ஓடத் தொடங்கின.
“தொழுகை முடிந்ததும் நாம் முப்பத்து மூன்று தடவைகள் அல்லாஹ் தூய்மையானவன் என்ற பொருளுடைய சுப்ஹானல்லாஹ் கலிமா வையும், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்ற அல்ஹம்துலில்லாஹ் கலிமாவையும் அல்லாஹ் பெரியவன் என்ற அல்லாஹு அக்பர் கலிமாவையும் முப்பத்து மூன்று தடவைகள் சொல்வது ஏன் தெரியுமா?” கேட்டுவிட்டு அவரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண் டிருந்தவர்களை மேலோட்டமாக மேய்ந்தார்.
பள்ளிவாசல் மரத்தூண்களிலொன்றில் சாாய்ந்தவாறு ஒருகால் பாதத்தைத் தரையில் குற்றி மறுகாலை மடக்கிக் கிடத்தி உட்கார்ந்து கொண்டிருந்த அபுதாஹிர் அதுவரை வளைந்து கிடந்த முதுகை சற்று நிமிர்த்தினார். மார்க்க அறிஞரின் முகத்தை அழுத்தமாகப் பார்த் தார்.
"எதற்காகவிருக்கும்?” ஹாஜியாரின் மூளைத் திசுக்கள் அறிஞரின் கேள்விக்கான பதிலைத் தேடின.
- "அல்லாஹ் தூய்மையானவன் என ஒவ் வொரு தொழுகையின் பின்னும் முப்பத்து மூன்று தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்வது அவனைப்போன்று - நாமும் தூய்மையானவர்களாக இருக்கவும், நமது வாழ்க்கையை தூய்மையாக அமைத்துக் கொள்ளவும் அதற்காக மனதைத் தூய்மை யாக வைத்துக்கொள்ளவும் வேண்டும் என திடசங்கற்பம் செய்வதற்காகத்தான். அதைப் போலவே...
"அட! இப்பிடியும் ஒரு அர்த்தம் இருக்கா?” ஹாஜியாரின் மனம் விநாடிக்குள் சிந்தித்தது.
“மனிதர்களுக்கெல்லாம். மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை, புகழாசை என நான்கு விதமான ஆசைகள் உள்ளன. இந்த ஆசைகள் எல்லாமே எல்லை மீறும் போது துன்பங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தக் கூடியவை. புகழுக்குரியவன் அல்லாஹ்தான் என்று நாம் மீண்டும் மீண்டும் கூறுவது
43

Page 45
மன்
நாம் செய்யும் எந்தக் காரியத்துக்குமான புகழ் நமக்குச் சொந்தமானதல்ல என்பதை மனதில் இருத்திக்கொள்வதற்குத்தான். புகழ் என்பது கண்களால் பார்க்கமுடியாத மனம் மட்டும் சம்பந்தப்பட்டதொன்று. புகழுக்காக நாம் செய்யும் நல்லறங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நமது செயல் களின் மூலம் நமக்குப் புகழ் கிடைக்க வேண்டுமென்பதற்காக நமது தான்மை நம்மை எத்தனையோ விதமான ஈனச் செயல்களைச் செய்யத் தூண்டுகிறது...
அறிஞர் தனதுரையைத் தொடர்ந்தார். அபுதாஹிரும் தூணில் தொடர்ந்து சாய்ந்திருந்த வாறே செவிமடுத்துக்கொண்டிருந்தார்.
“அபரிமிதமாக அனுபவிக்க வேண்டுமென்ற ஏனைய ஆசைகளைப் போல புகழாசையும் மன நோய் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். புகழ் கிடைத்தால்தான் தன்னை ஏனைய மக்கள் மதிப்பார்கள் என்ற எண்ணத்தின் உந்துதல் காரணமாக என்ன விலை கொடுத்தாவது தான் கையாளும் ஒவ்வொன்றிலும் தனக்குப் புகழ் கிடைக்கவேண்டுமென மனிதன் நினைக்கிறான். அதற்காக அவன் செய்யும் சூழ்ச்சிகள் ஏராளம். கூசாமல் பொய் கூறுதல், ஏமாற்றுதல், வஞ்சனை செய்தல் போன்ற படு பாதகமான காரியங்களையெல்லாம் செய்யும் புகழ் விரும்பிகள் பலரை நமது நாளாந்த வாழ்க்கையில் சந்திக்கிறோம்”
உமறுப்பள்ளியில் தொடர்ந்தும் பல வருடங்களாக தான் பிரதம நம்பிக்கையாளராக இருப்பதற்காகச் செய்யும் தகிடுதத்தங்கள் பலப்பல தாஹிரின் மனத்திரையில் தொடராக ஓடிக்கொண்டிருந்தன.
அறிஞர் பேச்சை முடித்துக்கொண்ட தும் பள்ளிவாசலிலிருந்தவர்கள் பரவலாக கலைந்து கொண்டிருந்தார்கள். அதுவரை மார்க்க வுரையைக் கேட்டுக்கொண்டிருந்த மம்மலிவா வெளியே வந்து பாதங்களில் செருப்புக்களை மாட்டிக்கொண்டு சற்று வேகமாக நடந்துகொண்டிருந்த அபுதாஹிர் ஹாஜியாரை நோக்கி மார்பு குலுங்க கைக ளைத் தூக்கியவாறு ஓடினார்.
“ஆஜியார் கொஞ்சம் நில்லுங்க என்றார்.

“என்னப்பா? என்ன விசயம்?”
"விசயம் இருக்கு. கதைக்கணும். கொஞ்சம் நில்லுங்க”
"எதைப் பத்திக் கதைக்கணும்?” “இவன் குரங்குப் பல்லன்ட
மகன் நாவுரான் உங்களப்பத்தி தாறுமாறா கதைச்சித் திரிகிறான். நீங்க கேள்விப்படல்லியா?”
"இல்லியே. என்ன கதைக்கான்?” நாகூரான் அவரைப்பற்றி நாலு பேரிடம் கதைத் ததை ஏற்கனவேயே அறிந்திருந்தாலும் மம்மலிவா வேறு ஏதாவது புதுத் தகவல்கள் சொல்லு வாரோ என்ற ஆதங்கத்தில் தனக்கு தெரியாத தாக நடித்தார்.
"பள்ளிவாசல் தலைவரா இருந்து நீங்க நடந்துக்கிற விசயமாகத்தான் கண்டபடிக்கு கதைச்சுத் திரிகிறான்.”
“அப்படி நான் என்னதான் செய் கிறேனாம்?
"பள்ளிச் சொத்துக்களை உங்க ஊட்டுச் சொத்துப்போல நினைச்சி நடந்துக்கிறீங் களாம்.”
"அவன் சொல்றது சரிதானே. என்ட சொந் தச் சொத்துக்களைப் போலத்தான் பள்ளிச் சொத்துக்களையும் அவ்வளவு கவனமா நான் பராமரிக்கேன்.”
"நீங்க நல்லவரு. நல்ல வம்சத்திலே பொறந்தவரு. எதையும் நல்லதா நினைக் கிறீங்க. இது எங்கே அந்த வளிசலுக்கு தெரியப்போகுது. அவன் வாய்க்கு வந்த மாதிரிக்கு கன்னா பின்னாவென்று உங்களைத் திட்டித் திரிகிறான்.” முகத்தில் ஆத்திரத்தைக் காட்டியவாறு மம்மலிவா குரலை ஓங்கி ஒலித்தார்.
“திட்டுறானா? என்னன்னு?”
"பள்ளிவாசல் பணத்திலேதான் உங்க குடும் பமே நடக்குதாம்னு சொல்றான்... நாகூரான் ஊராரிடம் சொல்லித்திரிவதையெல்லாம் ஒன்றும் விடாமல் அபுதாஹிரிடம் ஒப்படைத் தான். தன் பங்குக்கு மேலும் சிலவற்றையும்
சேர்த்துக்கொண்டான்.
"ஓஹோ! அப்படியா சங்கதி. நான் அவ னைப் பார்க்கிற மாதிரி பாத்துக்கிறேன்.” தாஹிர் பற்களை நறநறத்தார்.
“உடப்போடா ஹாஜியார். உங்க புக ழென்ன? கீர்த்தியென்ன? செல்வாக்கென்ன?
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 46
உங்க பரம்பரையென்ன? நேத்து முளைச்ச இந்த வழிசல் உங்களப் பத்தியா கதைச்சுத் திரிவது?”
மம்மலிவாவால் உசுப்பேற்றப்பட்ட அபு தாஹிர் நாகூரானை எவ்வாறு பழிவாங்கலாம் என்ற எண்ணங்களுடன் நடையைத் தொடர்ந் தார். வக்பு சபைக்கு பிட்டிசன் எழுதியவன் அவனாகத்தான் இருக்கலாம் என்ற முடிவுக்கும் வந்தார்.
= = = உமறுப்பள்ளியின் நம்பிக்கையாளர் சபைத் தெரிவு நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டது. வழக்கம் போலவே ஏகமனதாகத் தெரிவு செய்யப்படும் அபுதாஹிர் ஹாஜியாரின் கோஷ்டிக்கு எதிராக நாகூரான் தலைமையிலும் சிலர் நிறுத்தப்பட்டனர்.
தெரிவு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு. நிலா வெளிச்சம் மெலிதாகப் படர்ந் திருந்தது. நீண்ட இடைவெளிக்கொன்றாக சில தெரு மின் விளக்குகள் ஒளி உமிழ்ந்தன. மாரி காலத்தை எதிர்நோக்கி குளிர் காற்று இதமாக வீசியது.
கையில் நீண்டதொரு டார்ச் லைட்டுடன் நாகூரான் சற்று வேகமாக நடந்துகொண் டிருந்தான். மேயப்போன அவனது மாடுகளில் சில காலைக்குத் திரும்பாததால் அவற்றைத் தேடி அங்குமிங்குமாக ஒளியைப் பாச்சினான். அப்போதுதான் இரண்டொரு ஆட்களுடன் எதிரே வந்த அபுதாஹிர் ஹாஜியாரைச் சந்தித்தான்.
"ஆஜியார். நீங்க தேடிக்கொண்டிருந்த நாகூரான்தான். இவன்தான் உங்களுக்கு எதி ராக போட்டிபோடுறவன்.” என்றான் அபு தாஹிருடன் நின்றிருந்த ஒருவன்.
"டேய் நாவூரான்! நில்றா அங்க!” கோடை யிடியாய் அபுதாஹிர் கத்தினார்.
திடுக்குற்ற நாகூரான் தன் கையிலிருந்த டார்ச் லைட் வெளிச்சத்தை அபுதாஹிரின் முகத்தில் பாய்ச்சினான்.
"எட்றா முகத்திலேருந்து லைட்டை என்னடா நினைச்சிக்கொண்டிருக்கே? நீ பள்ளித் தலைவரா வரணுமோ? கூறுகெட்ட நாயே!” என்றவாறே எச்சிலைத் துப்பினார்.
"ஆஜியார்! மரியாதையாக் கதைங்க. எனக்கும் உங்களப் போல கதைக்கத் தெரியும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

பெரிய மனுசன் எனப் பாக்கேன்.” என்றான் நாகூரான் வெடித்தவாறு.
"பெரிய மனுசன்தான்டா. பரம்பரைப் புகழுடைய பெரிய மனுசன்டா நான். என் கெளரவம், என் மதிப்புத் தெரியாம என்னோட மோதப் போறியோ?” பற்களைக் கடித்தவாறு வளர்த்தார்.
"பள்ளி வருமானத்திலே குடும்பம் நடத்துற உங்க மதிப்புத்தான் ஊருக்கெல்லாம் தெரியும் தானே. நல்ல மனுசன்க, பெரிய மனுசங்க அவங்கட சொத்துக்களை பள்ளிவாசலுக்கு எழுதிப் போட்டுட்டு மவுத்தாயிட்டாங்க. ஆனா அதெல்லாம் இப்போ உங்க ஊட்டுச் சொத்தாப் போயிட்டு. வார வருமானத்திலே பள்ளிக்குப் பாதி உங்களுக்குப் பாதி தெரியாமக் கிடக்கு உங்க கெளரவும், புகழும்!” என்றான் தொண்டை வெடிக்க நாகூரான்.
“பாருங்க ஆஜியார், இந்தப் படுபாவி எப்படியெல்லாம் நாக் கூசாம கதைக்கிறான்னு. பள்ளியிச் சொத்தை நீங்க திங்கிறீங்களாம்!” பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் அபுதாஹிரைக் கடுப்பேற்றினான்.
கடும் கோபமாக இரு தரப்பாரிடமுமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தொடர்ந்தன. தனது புகழுக்கும் கீர்த்திக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அபுதாஹிர் விடாப்பிடியாக நின்று கதைத்தார்.
படிப்படியாக வார்த்தைகளில் சூடேற.. அபுதாஹிர் பாய்ந்து சென்று நாகூரானின் தோளில் ஓங்கி அடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத நாகூரான் பின் விளைவு எதைப்பற்றியும் சிந்திக்காது தனது கையி லிருந்த நீண்ட டார்ச் லைட்டினால் ஓங்கி
அபுதாஹிரில் தலையில் அடித்தான். தலை பிளந்து இரத்தம் கக்கத் தொடங்கியதைக் கண்ணுற்ற அருகில் நின்ற அவரின் அடியாட்கள் நாகூரானை உண்டா இல்லையா எனப் பண்ணினர்.
செய்தி அறிந்த ஊரவர்கள் அடுத்த நாள் அதிகாலையில் பக்கத்துப் பட்டிணத்திலிருந்த வைத்தியசாலைக்குச் சென்று பிளக்கப்பட்ட தலைக் காயங்களுக்காக பெருத்த கட்டுக் களுடன் பக்கத்துப் பக்கத்துக் கட்டில்களில் அபுதாஹிரும், நாகூரானும் மயக்கம் தெளி யாமல் படுத்திருந்ததைக் கண்டனர்.
000
45

Page 47
தமிழகச்
செப்
கே.ஜி.மக
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறையும் நூறுகோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு, கடந்த மாதம் கடுமையான பல நிபந்தனைகளுடன் இடைக் கால ஜாமீன் வழங்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றச் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டுத்தான் வெளியே வந்திருக்கிறார்! ஒரு வழக்கில், விசாரணைக் கைதியாகவோ அல்லது தண்டனைக் கைதியாகவோ சிறைக் குச் சென்ற இருபத்தொரு நாட்களில் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருப் பது இதுவே முதல் முறை என்பது குறிப் பிடத்தக்கது! நாற்பது நாட்களுக்கு முன்னர் யாருக்கும் இதுவரை உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது கிடையாது!
சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை! உச்ச நீதிமன்றமே தலையிட்டது!
ஜெயலலிதாவுக்கு இன்று கட்சி, ஆட்சி, வழக்கு என்று மூன்று சவால்கள் எதிர் நோக்கியிருந்தாலும், கட்சியைப் பொறுத்த வரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெய லலிதாதான் நிஜம். நிழல் எதுவும் கிடையாது. நிஜமுகத்துக்கு மிகவும் கட்டுப்பட்டவர்கள் அ.தி.மு.க.வினர். தனக்குப்பின்னர் என்று யாரை விரல் காட்டுகிறாரோ அந்த உண்மை விசுவாசி மிகவும் சுலபமாக ஜெயலலிதாவால் முதல்வராக்கப்படுவார்! இந்த "முள்சூட்டுவிழா'
நடந்தாலும், ஜெயலலிதா இருபத்தொரு நாட்கள் சிறைவாசம் இருந்த காலப்பகுதியில் அ.தி.மு.க.வினர் தமிழ்நாட்டில் கட்டவிழ்த்து விட்ட வன்செயல்கள் சொல்லில் அடங்காது. தனியார் மற்றும் பொதுச்சொத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் பல நூறு கோடி ரூபாவாகும்! 'அம்மா'வுக்கு அளிக்கப்படட்ட தண்டனையால்
46

திகள்
ஈதேவா
1141)
அராஜகம் தலைதூக்கிய தமிழ்நாட்டில்
சட்டத்தை நிலைநாட்டிய உயர்நீதிமன்றம்!
அதிர்ச்சியடைந்து நூற்று ஐம்பத்து ஐந்து பேர் தற்கொலை செய்து 'தியாகிகள்' ஆகியிருக்கின்றனர்! சட்டம் ஒழுங்கை பராமரிக்கவேண்டிய காவல் துறையினர், கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அரசு நிர்வாகம் முற்றிலும் செய லிழந்தது. அமைச்சர்கள் அனைவரும் அந்த மூன்று வாரமும் பெங்களூரில் முகாமிட்டதால் அரசுக்கோட்டை குறட்டை விட்டது! 'நீதிபதியை, நீதிமன்றத்தை கண்டிக்கும் வகையில் நீதித்துறைக்கு எதிரான செயல்பாடுகளில், எவ்விதமாக அசம்பாவிதங்களில் யாரும் ஈடு பட்டாலோ, மேல்முறையீட்டு விசாரணையில் ஒருமுறை கூட ஒத்திவைக்க முயற்சித்தாலோ, வழக்கை தாக்கல் செய்த மனுதாரர்கள் தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருக்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 48
ஜெயலலிதா தரப்பிலிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடினால் உடனடியாக ஜாமீனை ரத்துச் செய்துவிடுவோம்' போன்ற நிபந்தனைகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா மீது விதித்துள்ளனர். ஜாமீனில் வெளியே வந்து, நீதிமன்ற அறிவுரைப்படி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட பின்னரே தமிழ் நாட்டில் அமைதி திரும்பியது. ஆக தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை உச்ச நீதிமன்றமே நிலைநாட்டியிருக்கிறது! இந்தச் சூழலில் ஜெயலலிதாவின் துயிலை இப்பொழுது தொலைத்திருப்பது: கட்சி, ஆட்சி, வழக்கு எனும் முக்கோண நெருக்கடிகள்தான்.
கட்சியை எடுத்துக்கொண்டால் 'தூங்கிக் கொண்டே வெல்வேன்' எனும் காமராஜர் அரசியல் ஜெயலலிதாவின் நிர்வாகத்தில் இன்றும் கோலோச்சுகிறது. 'எம்.ஜி.ஆருக்கு அடுத்த வாரிசாக அவர் துணைவியார் ஜானகி இருக்கமுடியாது. நான்தான் வாரிசு' என்று மார்தட்டிய ஜெயலலிதா தனக்குப் பின்னர் யார் என்பதை நியமிக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. 'நான் மட்டும் தான்' எனும் சர்வ அதிகாரம் அவர் கண்ணை மறைத்திருக்கிறது! தீர்ப்பு நாளன்று ஜெயலலிதா தரப்பினர் பெங்களூர் செல்கின்றனர். இவர்களுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக சுமார் இரண்டாயிரம் அ.தி.மு.க.வினர் பெங்களூரில் முகாமிடுகின்றனர். 'அம்மா'விடுதலையாவதை வெற்றித் திருநாளாக பெங்ளுரைக் கலக்க முன் ஏற்பாடுடன் அனுப்பப்படுகின்றனர். தீர்ப்பு எதிரானதும் இவர்கள் அமைதி காத்தார்களா? இல்லை! நீதித்துறையை, தீர்ப்பளித்த நீதிபதியை, காவிரி நதி நீர் பங்கீட்டில் அம்மாவுக்கு கிடைத்த உச்சநீதிமன்ற வெற்றியை பழிவாங்க, கர்நாடக அரசு சதி செய்துவிட்டது என்று இழிவுபடுத்தும் வகையில் நீதிமன்ற வளாகத்துக்குள்ளும், வெளியிலும் வழக்கறிஞர்கள் சகிதம் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு பூராகவும் கண்டன எதிர்ப்பு சுலோகங்கள், சுவரொட்டிகள், பதாகைகள்! முதல்வர் பன்னீர்செல்வத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஜெயலலிதா, அனுமதி இல்லாமல் வாய் திறக்க முடியாத நிலை. 'பொம்மலாட்டத்தை'
விடுங்கள். ஜெயலலிதா சிறைக்குள் இருந்து டி.வி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

யில் அ.தி.மு.க.வினரின் வன்முறைகளைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். 'அமைதி காருங்கள். நான் சட்டத்தை மதிப்பவள். தர்மத்தை சூது கவ்வும், மறுபடியும் தர்மம் வெல்லும். நீதி கிடைக்கும்' என்று அன்றே ஜெயலலிதா அறிக்கை விட்டார்களா? நீதித்துறையை, நீதிபதியை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்பது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு தெரியாதா என்ன! முன் கூட்டியே திட்டமிட்டது போல் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பிள்ளையார் பிடிக்க குராங்காகும் நெருக்கடியை இவர்கள் எதிர்பார்த்தார்களா எனும் விமர்சனம் எழுந்தது. 'நாட்டாமை தீர்ப்பை மாற்று' என்று சட்டம் பேசினார்கள்! தமிழ் நாடே சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து ஸ்தம்பிக்கும் நிலைக்கு வந்தும் கூட ஜெயலலிதா அமைதி காக்கும் அறிக்கையை விடவில்லை. பொதுச்சொத்து, தனியார் சொத்து சேதமாக்கபட்டது. சட்டத்தை அ.தி.மு.க.வினர் கையிலெடுத்து, அராஜகம் தலைவிரித்தாடியது. இரண்டாம் நிலைத்தலைவர்கள் என்று யாரையும்
நூல்: மருதூர்க்கொத்தன் கதைகள் தொகுப்பு ஆசிரியர்: வீ. எம். இஸ்மாயில் விலை: ரூபா 290/= கல்முனைப் பிரதேசத்தை இலக்கிய வளம் மிக்க தாகப் பரிணமிக்கச் செய்த பலருள் அறுபதுக்குப் பிந்திய காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கவர் மருதூர்க் கொத்தன். அவர் எழுதிய சகல கதைகளையும் அடக்கிய | தொகுதியாக வெளிவந்துள்ள இத்தொகுதியில் 40 சிறுகதைகள் அடங்கியுள்ளன. மருதமுனைச் சூழலைப் பின்னணியாகக்
கொண்டு அடித்தள முஸ்லிம்களின் வாழ்க்கைப்பிரச்சினைகளை, அவர்களின் போராட்
நூேற்ரென் டங்களை வர்க்க முரண் பாடுகளை இக்கதைகள்
பேசுகின்றன. வாசித்துப்
பயன்பெறத்தக்க சிறுகதைத்தொகுதி.
கதைகள்
IhiTTTTA +1 Bht 1)
பாப்பா பாப்பார்
47

Page 49
ஜெயலலிதா, வளர்த்தெடுக்காததால், அ.தி. மு.க.வில் அந்த 'நிஜ' முகத்துக்கு மட்டும் தான் அ.தி.மு.க.வினர் கட்டுப்படுவார்கள். 'நிழலுக்கு' கிடையாது. அதே நேரம், தனக்குப் பதிலாக யாரை ஜெயலலிதா அடையாளம் காட்டுகின்றாரோ அவர் முழு மனதுடன் அ.தி.மு.க.வினரால் ஏற்றுக் கொள் ளப்படுவார்கள் என்பது நிதர்சனம்!
பெங்ளூரில் 21 நாள் சிறை வாழ்க்கை அனுபவித்து பிணை மூலம் சென்னை திரும்பிய ஜெயலலிதாவை தரிசிக்க, அவர் முகம் காண சென்னை விமான நிலையத்திலிருந்து போயஸ் கார்டன் வரையுள்ள பதினாறு கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதான சாலையின் இருபக்கங்களிலும் கொட்டும் மழையிலும் நனைந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தது, தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் தியாகிகள் ஆனது, ஜெயலலிதாவை தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது. ஜெயலலிதாவும் தொண்டர்களுக்கு நன்றி கூறும் வகையில் இருபது நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை (தனது காரை ஊர்ந்து செல்லுமாறு கூறி) சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்து முகத்தில் முகம் காட்டி பயணித்தார். தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நினைத்து மகிழ்ந்தார். நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்று கட்சியினருக்கு ஜெயலலிதா விடுத்திருந்த கட்டுப்பாடு கண்டு பூரித்துப்போனார்! முன்னாள்
முதல்வர் எதிர்நோக்கும் சவால்களில் அடுத்தது ஆட்சி.
ஜெயலலிதா
சிறையிலிருந்த அந்த மூன்றுவார காலமும் தமிழ்நாடு வன்செயல்களால் தள்ளாடியது. ஆட்சியே நடைபெறாத மாதிரி ஸ்தம்பித்தது. முதல்வராக 'முள் கீரீடம்' சூடிய பன்னீர் செல்வம், முதல்வர் எனும் வார்த்தையை ஊடகங்கள், எழுத்திலும் உச்சரிப்பதிலும்
பயன்படுத்துவதைத் தவித்தார். சுயமாக முடி வெடிக்க முடியாது, சிறை சென்று அம்மாவின் தரிசனமும் பெற கதவடைப்பு. அ.தி.மு.க.வினரே சட்டத்தை கையிலெடுத்தால் காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். சட்டம், ஒழுங்கு குறட்டை விட்டுத் தூங்கியது. சட்ட மன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி 48

கவிழ்ந்து விடும் பயமில்லை என்பது மட்டுமல்ல 37 எம்.பிக்களை பாராளுமன்றத்திலும், மேல் சபையில் கணிசமான எம்.பி.க்களுடன் இந்தியாவில் இரண்டு தேசிய கட்சிகளுக்கு அடுத்தாக -மூன்றாம் இடத்தை வகிப்பதாலும் அ.தி.மு.க அரசு கலைக்கப்பட வாய்ப்பே இல்லை என்பது அம்மா முடிவாகும். இது அ.திமுக உயர் மட்டத்துக்கும் தெரிந்ததே! வன்முறை ஆட்டத்தின் காரணமும் இதுதான்!
அடுத்த சவால் வழக்கு!
மேல்முறையீடு சம்பந்தமான
- சட்ட நடைமுறைகளை ஆராய்வது சட்ட வல்லு நர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்தான் என்றா லும் ஜட்னரில் இவர்கள் சொதப்பியது, ஜெயலலிதாவால் ஜீரணிக்க முடியவில்லை. தண்டனை ரத்தாகி, விடுதலைபெற்று, அந்த அனுதாப அலையில் 2016 தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தனித்து நின்று அறுதிப் பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் கனவும், நனவும். “பொம்மலாட்டத்தை நீடிக்க முடியாது என்று திடமாக நம்பும் ஜெயலலிதா, ஐந்து மாதங்களில் வழக்கில் தீர்வு காண விரும்புகின்றார். அதே நேரம், தனக்கு அடுத்ததாக அ.தி.மு.க.வை கட்டிக்காக்க யார் சரியான நபராக இருப்பார் என்பதையும் 'வன் ஈ திற் மூலம் கண்டறிந்து அவர்களை தயார்படுத்தும் அவசர கட்டாயத்தையும் ஜெயலலிதா உணர்ந்திருப்பதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதில் தான் அ.தி.மு.க இயக்கத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்பது காலத்தின் கட்டாயம் என்று ஜெயா நினைக்கிறார் போலும்! வழக்குத்தான் பிரச்சனை என்பது ஒரு பக்கம் என்றாலும், அதன் முடிவுரை எழுதப்படும்வரை தொலைநோக்குப்பார்வையில்
தனது இரண்டாம் நிலைத் தலைவரை அல்லது தலைவர்களை இப்பொழுதே தயார்படுத்தும் நிலைப்பாடு ஜெயலலிதாவை வலியவந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது! வாரிசு நியமிக்கப்பட வேண்டும்!
இலை , S *சல்: னைகா ஒரு க,
000
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 50
எழுதத் இ)
ண்ெணா
வாழ்த்த விரும்புகிறேன்
1மண்ட காலமா
[க
காலமாக எழுதவேண்டும் என்று நான் நினைத்திருந்த ஒருவரைப் பற்றி எழுதுவதற்கு இதுதான் பொருத்தமான சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன். அவ் வாறு நான் நினைத்திருந்தவர் நூலக வியலாளர் என்.செல்வராஜா . ஞானம் 173ஆவது இதழில் அட்டைப்பட அதிதியாக கெளரவிக்கப்பட்டிருப்பது மனத்திற்கு மட் டில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவ் வாண்டின் மணிவிழா நாயகராக விளங்கும் அவரைப் பற்றி, அவரது மணிவிழா மலரில் எழுதவேண்டும் என்று என்னைக் கேட்டிருந் தார்கள். நானும் எழுதவேண்டும் என்ற மகிழ்ச்சியிலும், துடிப்பிலும் இருந்தேன். ஆனால், குறிப்பிட்ட கால எல்லைக்குள் அதனை எழுதி முடிக்க இயலாதவாறு வேலைப்பளுக்கள் சூழ்ந்துவிட்டன. ஆயி னும், என்.செல்வராஜாவைப் பற்றி எழு தாமல் இருக்க என்னால் முடியவில்லை. எழுதப்பட வேண்டிய ஒரு பெருமகன் அவர். அவரைப் பற்றிச் சிறப்பாக இரா.உதயணன் ஞானத்தில் எழுதியிருப்பதைப் பார்த்தபோது மனம் குதூ கலித்தது.
நூலகவியலாளர் என். செல்வராஜா உல கம் அறிந்த ஓர் உழைப்பாளர். அவரது கடின உழைப்பை பறைசாற்றிக் கொண்டிருப்பவை, அவரது நூல்தேட்டம் தொகுதிகள். பத்தாயிரம் நூல்களைக் குறிப்புரைகளு டன் தனிமனிதராக நின்று சொந்த நிதியில் தொகுத் தளிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. எந்தவித வேறு பாடும் காட்டாது அவர் செய்யும் பணி மெச்சத்தக்கது. நூல் தேட்டத்தின் பத்தாவது தொகுதி 2015இல் வெளிவர விருப்பது, அவரது சாதனை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)
சிரிப்பு, நிதாக '

தூண்டும் ல்கள்
பேராசிரியர் துரை மனோகரன்
யின் உச்சத்தைக் காட்டுவதாக உள்ளது.
நான் 2013 இல் லண்டனுக்குச் சென்றபோது, இரண்டு சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றேன் (அதற்கு முன்னரும் இலங்கையில் சந்தித்திருக்கிறேன்). லண்டனில் அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டேன். என்னுடன் இலங்கையில் இருந்து சென்ற ஞானம் ஆசிரியர் ஞானசேகரன், திருமதி ஞானம் ஞானசேகரன், பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இராசையா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தியா, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பேசியபின், இலங்கையைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடலிலும் ஈடு பட்டனர். இரவு உணவும் வழங்கப்பட்டது. நல்லதொரு சந்திப்பு நிகழ்ச்சி அது.
பின்னர், ஒருமுறை என்னையும், இராசையா மகேஸ்வரனையும், இரண்டு மலேசியப் பேராசிரியர்களையும் என்.செல்வராஜா தமது வீட்டுக்கு விருந்தினர்களாக அழைத்திருந்தார். லண்டன் நகரில் இருந்து சற்றுத் தூரத் தில் சற்றுக் கிராமியம் சூழ்ந்த அழகான இடமொன்றில் அவர் வாழ்ந்து வருகின்றார். செல்வராஜா குடும்பத்தினர் அனைவரும் எம்மை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். நாம் விருந்துண்டு மகிழ்ந்தோம். அவரது மகள் ஒருவர், மிக இளம் வயதிலேயே இங்கிலாந்துப்
பிரதமரின் பாராட்டைப் பெற்று, புகழ்பெற்ற இலக்கியவாதியாக விளங்குவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?
செல்வராஜா வீட்டின் மேல் மாடியில் ஓர் அறையில் உள்ள தமது நூலகத்தையும் எமக்குக் காட்டினார். நூலகவியலாளர் ஒருவருடைய நூலகம் எவ்வாறு அமைந்திருக்கும்
49

Page 51
என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அவரது நூலகம் விளங்குகிறது. ஒருசில நூல்களையும் எங்களுக்கு அன்பளிப்பாகத் தந்துதவினார். அது ஓர் இனிய மாலைப்பொழுதாக அமைந்தது. எங்களைச் செல்வராஜாவின் வீட்டுக்கு அழைத் துச் சென்ற அந்த இனிய நண்பரையும் (பெயரை மறந்தது என் தவறு) இச்சந்தர்ப்பத்தில் நான் நினைவு கூரவிரும்புகிறேன்.
என்.செல்வராஜா எப்போதும் எங்கள் மனத்தில் நிறைந்திருப்பவர், நிலைத்திருப்பவர். அவரை அவரது மணிவிழா வேளையில் வாழ்த்துவது என்பது, எங்களை நாங்களே வாழ்த்துவது போன்றது. மனத்துக்கு இனி மையைத் தருவது. தமிழியல் வரலாற்றில் என். செல்வராஜாவுக்கு நிச்சயமாக நிரந்தர இடம் உண்டு. எதிர்காலத்திலும் பல்லாண்டுகள் வாழ்ந்து, தமது இலட்சியங்கள் நிறைவேற அவர் உழைக்கவேண்டும் என்று செல்வராஜாவை வாழ்த்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.
இலங்கை வானொலி - மரபு மாற்றமா?
இலங்கை வானொலியில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி, 'என்றும் இனியவை என்னைப் போலவே பல நேயர்களை இந்த நிகழ்ச்சி கவர்ந்து வந்துள்ளது. காலையிலே அந்த நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டே எனது வாசிப்பு வேலைகளையோ, எழுத்து வேலைகளையோ செய்வது வழக்கம் நீண்டகாலமாக ஒலிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, சில காலத்திற்கு முன்னர் நேரம் மாற்றப்பட்டிருந்தது. அவ்வவ்போது அந்த நிகழ்ச்சிக்கு இடையில் வேறு சில நிகழ்ச்சிகளும் வந்துவிடுவதால், பாடல்களை அதிகமாக ஒலிபரப்ப முடியாமல் போவதும் உண்டு. இப்போது இந்நிகழ்ச்சிக்கான நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பது, என் போன்ற பழைய இனிய பாடல்களை விரும்புகின்ற நேயர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
என்றும் இனியவை நிகழ்ச்சியில், அனுபவம்மிக்க மூத்த அறிவிப்பாளர்கள் கலந்து கொள்ளும்போது, நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடல்கள் சிறப்பாக அமைவதுண்டு. சில வேளைகளில் சில கற்றுக்குட்டி அறி விப்பாளர்கள் கலந்துகொள்ளும்போது, அக் கறையின்றிப் பின்னணிப் பாடகர்களின் பெயர் களைத் தவறாகச் சொல்வதும் உண்டு. பாடல் ஒலிபரப்பான பிறகு கூடத் தவறைச் சிலர் திருத்திக் கொள்வதில்லை. அக்கறையின்றி 50

ஏனோதானோ என்று பாடல்களை ஒலிபரப்பி விட்டு, நிம்மதி காண்பதும் உண்டு. )
அதேவேளை, சில அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியின் தாற்பரியத்தை விளங்கிக் கொள் ளாமல், அதை ஒரு தொகுப்பு நிகழ்ச்சி போலக் கருதிச் செயற்படுவதும் உண்டு. அது தவறு. உண்மையில் அது தொகுப்பு நிகழ்ச்சி அல்ல. என்றும் இனியவையாக உள்ள பாடல்களை ஒலிபரப்புவதே நிகழ்ச்சியின் நோக்கம். ஆனால், சிலவேளைகளில் திரைத்துறையோடு சம்பந்தப்பட்ட கலைஞர்களின் நினைவு நாட் களில், அவர்கள் பாடிய அல்லது அவர்களோடு தொடர்புடைய பாடல்களைத் தொகுத்து வழங்குவது வரவேற்கப்படவேண்டிய விஷயம். அதை இலங்கை வானொலி ஒழுங்காகச் செய்துவந்துள்ளது.
அண்மைக்காலமாக என்றும் இனியவை, ஏறத்தாழ 5ாலை 5.20 முதல் (வேறு சில நிகழ்ச்சிகளையும்) உள்ளடக்கிக் காலை 7 மணிவரையில் ஒலிபரப்பாகிறது. பெரும் பாலும் மூத்த அறிவிப்பாளர்கள் ஒருவர் அல்லது இருவர் கலந்துகொள்வர். அவ்வப்போது இளம் அறிவிப்பாளர்களும் இவர்களுடன் சேர்ந்துகொள்வர். ஆனால், அண்மைக்காலமாக நிகழ்ச்சியை ஒலிபரப்பும் மூத்த அறிவிப்பாளர்கள், நாள்தோறும் அதை ஒரு தொகுப்பு நிகழ்ச்சி போல நடத்தத் தொடங்கிவிட்டார்கள். அவ்வாறு அண்மையில் ஒருநாள் ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் இரு பாடகிகள் சேர்ந்து பாடும் பாடல்களாக அமைந்தன. ஆனால், அவற்றில் கணிசமானவை சக்களத்திப் போராட்டம் தொடர்பான பாடல்களாகவே அமைந்துவிட்டன. அதனைச் சில நேயர்கள் சுட்டிக்காட்டியிருந்தமையை அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்கள். உண்மை யில் அது அறிவிப்பாளர்களின் தவறு அல்ல. தற்செயலாக ஏற்பட்டதுதான். ஆனால், எல்லாப் பாடல்களையும் இரு பாடகிகள் பாடிய பாடல்களாகத் தொகுக்கப்போனதன் விளைவுதான் இது. அவர்கள் ஒலிபரப்பிய பாடல்கள் எல்லாம் இனியவைதான். ஆனால், அந்த நிகழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அமையவேண்டிய தொகுப்பு நிகழ்ச்சி அல்ல என்பதை, நமது ஒலிபரப்பாளர்கள் விளங்கிக்கொள்கிறார்கள் இல்லையே என்பதுதான் எனது கவலை. முன்னர் எல்லாம் சில அறிவிப்பாளர்களைத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 52
தவிர, பெரும்பாலனவர்கள் அதைத் தொகுப்பு நிகழ்ச்சியாக நடத்தவில்லை. அதனால், அந்த நிகழ்ச்சி சிறப்பானதாக இருந்தது.
நான் வழக்கம்போல இந்த நிகழ்ச்சியைக் கேட்பதற்காக 18.10.2014 சனிக்கிழமையன்றும் காலை 5.25 அளவில் வானொலியை முடுக்கியபோது, என்றும் இல்லாத ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக, அந்தக் காலை நேரத்தில் சோகப்பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. நாட்டில் ஏதாவது துயரச்சம்பவம் நடந்துவிட்டதோ என்று மனம் திணறியது. இலங்கை வானொலியின் சிறந்த, திறமையான ஒலிபரப்பாளர்களில் ஒருவராகிய மூத்த அறிவிப்பாளர் ஒருவர் பெண்களின் வேதனை களை வெளிப்படுத்தும் பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டிருப்பதாக இடையிடையே அறிவித்துவந்தார். எனது ஞாபகத்திற்கு எட்டிய வரையில், காலைவேளயிைல் தொடர்ச்சியாகச் சோகப்பாடல்களை (துயர சம்பவங்கள் நடைபெற்றபோது தவிர) இலங்கை வானொலி ஒலிபரப்பியதில்லை. பெண்களுக்கு வேதனைகள் உள்ளன என்பது உண்மைதான். அதற்காக, விடியற்காலை வேளையிலா இத்தகைய பாடல்களை ஒலி பரப்பி, அவர்களின் வேதனையை இன்னும்
அதிகமாக்குவது?
குறிப்பிட்ட மூத்த அறிவிப்பாளரும், அவ ரோடு, இணைந்து கடமையாற்றிய பெண் அறிவிப்பாளரும் அந்த விடியற்காலை வேளையில் ஒலிபரப்பிய பாடல்களில் சில வற்றை இங்கே தருகிறேன்: 'ஏமாற்றம் தானா என்வாழ்விலே?', 'நான் வாழ்ந்த தும் உன்னாலே நிலை சாய்ந்ததும் உன் னாலே', 'கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே நிலா வீசும் வானில் மழை தூறலாச்சே!', 'உன்னை நம்பினார் கெடுவ தில்லை ஆண்டவனே! உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே!' நிகழ்ச்சியின் இறுதியிலே 'வருந்தாதே மனமே வீணே வருந்தாதே மனமே' என்ற எஸ்.சி. கிருஷ்ணனின் பாடலை ஒலிபரப்பி, நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். சில 'நேயர்கள்' அந்நிகழ்ச்சியைப் பாராட்டவும் செய்தனர்.
இலங்கை வானொலி இதுவரை செய்திராத 'புதுமை' இது. கருத்துச் செறிவுள்ள நல்ல பாடல்களாக இருந்தாலும், காலை வேளைகளில் கண்விழித்து வானொலியை
முடுக்கும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014

போது சோகப்பாடல்களைக் கேட்க மனம் விரும்புவதில்லை. மனிதரின் இயல் பான உளவியல் இது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாத நிலையில் நமது அன்னை வானொலியான இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளர்கள் நடந்துகொள்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விடயம். காலைவேளைகளில் (குறைந்தது எட்டுமணி வரைக்குமாவது) சோகமான பாடல்களை வானொலியில் ஒலிபரப்பாமல் இருப்பது நல்லது. நல்ல எண்ணங்களோடு மக்கள் காரியங்களை ஆற்றத் தொடங்கும்போது, மக்களின் உளவியலை அறியாது அல்லது புரிந்துகொள்ளாது இவ்வாறு சோகத்தை அவர்களின் மனங்களில் அப்பிவைப்பது பொருந்தாது. இரவு வேளைகளில் கூட ஒன்பது மணிக்குப் பின்னர், எவ்வளவு சிறந்த பாடல்களாக இருப்பினும் சோகப்பாடல்களை ஒலிபரப்பாமல் இருப்பது நல்லது. மக்கள் நித்திரைக்குச் செல்லும்போது நிம்மதியாகச் செல்லவேண்டும்.
இலங்கை வானொலியில் தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளர், தமிழ் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்றெல்லாம் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெறும் பெயருக்குத்தானா பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்? தாங்கள் பொறுப்பாகவுள்ள வானொலியில் என்ன நடக்கிறது என்பதை இவர்கள் காதுகொடுத்துக் கேட்பதே இல்லையா? அறிவிப்பாளர்கள் தங்கள் மனம்போனபடி நிகழ்ச்சிகளைச் செய்கிறார்கள். அதனைத் தட்டிக்கேட்பதற்கு யாருமே இல்லையா? முன்னர் இலங்கை வானொலியில் கடமை யாற்றிய அதிகாரிகள் தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களாக இருந்தார்கள். தவறுகளைத் திருத்துபவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இலங்கை வானொலிக்கு ஏன் இந்த நிலை? குறைந்த பட்சம், 'என்றும் இனியவை நிகழ்ச்சியையாவது சிறப்பாக, ஒழுங்காக ஒலிபரப்புவதற்கு முயற்சி செய்வது நல்லது. நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் போது அந்த நேயர் அப்படிப் பாராட்டினார். இந்த நேயர் இப்படிப் பாராட்டினார் என்று அறிவிப்பாளர்கள் அறி வித்துக்கொண்டிருப்பது பெருமை அல்ல. விஷயம் அறிந்தவர்கள் பாராட்டும்படி நிகழ்ச்சியை ஒலிபரப்புவதே சிறப்பானது.
000

Page 53
சம நா
கலை ம
நீதும்
சனி "அதான் ?ன் கல்
கட்டடக்காடு நாவல் அறிமுகவிழா
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பூபால. பசுந்திரா சசி எழுதிய அமேசன் காட்டின் அ
வாழ்வினையும் தமிழ் இலக்கிய உலகிற்கு அற விழா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை | மணி 'இலக்கிய புரவலர்' ஹாசிம் உமர் முன்னி தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிற்பி சிவசரவணபவன் கலந்து சிறப்பு செய்த ஆலோசகர்) வீ.தனபாலசிங்கம் பிரதம ஆசிரிய வீரகேசரி நாளிதழ், பூபாலசிங்கம் ஸ்ரீதர்சிங். பூப் முகாமையாளர் கெளரி பிரின்ட் ஆகியோர் கல
தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி வரத வரவேற்புரையை கொழும்புத் தமிழ்ச் சங்க | கந்தசாமி நிகழ்த்தினார். பிரதம அதிதிக்கு கெ நூல் வெளியீட்டு உரையை கொழும்புத் தமி நிகழ்த்த, முதற்பிரதியை திருமதி சாந்தனி ச வழங்கி வைத்தார். நூல் விமர்சன உரையை தி மேமன் கவியும் நிகழ்த்தினார்கள். பிரதம அதிதி கெளரவம் செய்தார். நன்றி உரையை ஊடக நிகழ்வை செல்வி பவநீதா லோகநாதன் மிகச்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் "விவாதப் போ
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கொழும்புத் ஒன்றுகூடல் நிகழ்வில் சங்கத்தலைவர் ஆ. இர மண்டபத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடைே
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம், வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவ நிகழ்த்தினர்.
சிறப்பு கவியரங்கம் "தென்றல் வந்து வீசாதே
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கொழும். இளக்கியக்களம் நிகழ்வில் சங்கத்தலைவர் ஆ. இ மண்டபத்தில் 'தென்றல் வந்து வீசாதோ' என்ற ; மீநிலங்கோ தலைமையில் கவியரங்கு நடைபெ
கவிஞர்கள் அருள்சீலன் ஹரிசன், மாதின ரட்னம் ஆகியோர் கவிமழை பொழிந்தனர்.
நாட்டியாச்சாரி மீரா. எஸ். ஹரிஷின் "இலங்கை
கூத்துக்கள்” அறிமுக விழா
நாட்டியாச்சாரி மீரா ஹரிஷின் 'இலங்கை இந்
52

கே. பொன்னுத்துரை
வக்தி Jவுகள்
ர் தில், அதிக கல.
சிங்கம் புத்தகசாலை வெளியீடான செட்டியூர் ழகையும் அங்கு வாழும் பழங்குடி மக்களின் நிமுகப்படுத்தும் 'கட்டடக்காடு' நாவல் அறிமுக மண்டபத்தில் 04.10.2014 சனிக்கிழமை மாலை 5.00 "லையில், 'ஞானம்' ஆசிரியர் வைத்தியகலாநிதி.
பிரதம அதிதியாக கலைச்செல்வி ஆசிரியர் பர். சிறப்பு அதிதிகளாக க.மு. தர்மராசா. (சட்ட ர் தினக்குரல், எஸ். ஸ்ரீகஜன், பிரதம ஆசிரியர் பாலசிங்கம் புத்தகசாலை அதிபர். இராஜரட்ணம்
ந்து சிறப்பித்தனர். கா யோகநாதன் பாடி ஆரம்பித்து வைக்க, இலக்கியக்குழு செயலாளர் ஆழ்வாப்பிள்ளை களரவமும் அவரின் உரையும் இடம்பெற்றது. ழ்ச் சங்க உதவிச் செயலாளர் ப.க.மகாதேவா சிகரன் 'இலக்கிய புரவலர்' ஹாசிம் உமருக்கு இருமதி வசந்தி தாயாபரனும், நூல் நயவுரையை க்கு நிகழ்வின் தலைவர் பொன்னாடை போர்த்தி வியலாளர் கே. பொன்னுத்துரை நிகழ்த்தினார். சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
கட்டி”
தமிழ்ச் சங்கம் 15.10.2014 புதன்கிழமை அறிவோர் குபதிபாலஸ்ரீதரன் தலைமையில் சங்கரப்பிள்ளை ய விவாதப் போட்டி நடைபெற்றது. கொழும்பு றோயல் கல்லூரி, தெஹிவளை தமிழ் ப , மாணவிகள் கலந்து சிறப்பாக விவாதத்தினை
கா” புத் தமிழ்ச் சங்கம் 17.10.2014 வெள்ளிகிழமை ரகுபதிபாலஸ்ரீதரன் தலைமையில் சங்கரப்பிள்ளை தலைப்பில் கவிஞர் தெய்வேந்திரன் ஞாலகீர்த்தி ற்றது. இங்த கவியரங்கில் ரி விக்னேஸ்வரன் முரளிதரன் மயூரன், சண்முக
க இந்திய வம்சாவழி மக்களின் பாரம்பரியக்
திய வம்சாவழி மக்களின் பாரம்பரியக் கூத்துகள்'
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 54
என்ற நூலின் அறிமுக நிகழ்வு இலங்கை தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 04. 'இலக்கிய புரவலர்' ஹாசிம் உமர், திரு. கொ ஆகியோர் முன்னிலையில் பேராசிரியர் சோ.ச
பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றலுடனும், ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையை கண்டி பேராசிரியர் சோ. சந்திரசேகரன் நிகழ்த்தினார் இலங்கை கோபியோ. திரு. எம். மாணிக்கவாச ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன், தலைவர் கொழும்! வாழ்த்தினார்கள். இலங்கை கோபியோவை திரு பலர் கலந்து சிறப்பினர்.
ஊடக அதிதிகளாக சுடரொளி ஆசிரியர் பீ. வார மஞ்சரி செய்தி ஆசிரியர் விசு. கருண ஜே.ஜீ. ஸ்டீபன், வசந்தம் எப்.எம். விரிவாக்கம் சிறப்பித்தனர்.
இலங்கை கோபியோவின் ஸ்தாபக தலை 'சங்கமம்' ஆசிரியர் ஜீவா சதாசிவம் நூல் அறிய பாடசாலைகளின் பணிப்பாளர் கவிஞர் சு. முரளி
விரிவுரையாளர் எம்.ஜெயசீலன் ஆகியோர் நூல்
கருத்துரைகளை கொழுந்து ஆசிரியர் அ வழங்கி சிறப்பித்தனர். நூலாசிரியர் நாட்டியாச் வைத் தொகுத்து வழங்கிய கவிஞர் மல்லியப் இந்நிகழ்வை ஊடகவிலாளர் கே. பொன்னுத்தும்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் “சுழலும் சொ
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கொழும்பு கொண்ட சுழலும் சொற்போர் நிகழ்வினை கடந் நிகழ்வில் சங்கத்தலைவர் ஆ. இரகுபதிபாலஸ்ரீத நடத்தியது.
இன்றைய தமிழ் இளைஞர்களிடையே த காரணமாக இருப்பது? என்ற தலைப்பில் என்.
தொலைக்காட்சியே! என்று செல்வி பிரிந்த திரு. சுப்பையா அனுஸனும், இணையமே! எ கல்வி முறையே! என்று செல்வி. எழில்மொழி ! திரு. ஸ்ரீஸ்கந்தராஜா வருணும், இன்றைய படை தங்களின் வாதத்தினை முன் வைத்து சபையே
கு.சின்னப்பயாதி இ பர்ன்
பாக்கள் ம் ஆணா பெறு
வழங்கும் 22 க.
யா EE ELEபயங்கம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

கோபியோவின் அனுசரணையுடன் கொழும்புத் 10.2014 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் எசிக் உதேசி தலைவர் இலங்கை கோபியோ சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
திருமதி வரதா யோகநாதனின் தமிழ் வாழ்த்துடன் - இரா. அ. இராமன் நிகழ்த்த, தலைமையுரையை - தொடந்து, திரு. கௌசிக் உதேசி தலைவர் =கம் உப தலைவர் இலங்கை கோபியோ திரு. புத் தமிழ்ச் சங்கம் ஆகியோர் நூலாசிரியரை -.எஸ்.முத்துசாமி, திரு.எஸ்.வெள்ளந்துரை மற்றும்
டத்தை சேர்ந்த கவிஞர் சி.எஸ்.காந்தி, தினகரன் ாநிதி, வீரகேசரி ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த ல் அதிகாரி எஸ் தனராஜ், ஆகியோர் கலந்து
வர் பி.பி. தேவராஜ் சிறப்புரையாற்ற, வீரகேசரி முகத்தை செய்ய, உயர் கல்வி அமைச்சின் தமிழ் ரிதரன், பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை லினை விமர்சனம் செய்தனர். பந்தனிஜீவா, கவிஞர் மேமன்கவி ஆகியோர்கள் =சாரி மீரா.எஸ்.ஹரிஷ் ஏற்புரை நிகழ்த்த, நிகழ் ப்புச் சந்தி திலகர் நன்றியுரையும் வழங்கினார்.
ரை ஒழுங்கமைத்திருந்தார்.
மற்போர்”
த் தமிழ்ச் சங்கம் முற்றிலும் இளையோர்களைக் த 24.10.2014 வெள்ளிக்கிழமை இலக்கியக் களம் ரன் தலைமையில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில்
மிழ் வாசிப்பு குறைந்து வருதற்குப் பெரிதும்
கே. அசோக்பரன் தலைமை வகிக்க. தா குணரட்ணமும், இன்றைய சினிமாவே! என்று ன்று திரு.சிவபாலன் சிவாம்சனும், இன்றைய இராஜகுலேந்திராவும், ஆங்கில மோகமே! என்று டப்பாளிகளே! என்று திரு.தவேந்திரன் கபிலனும்
யாரின் பாராட்டுகளைப் பெற்றனர்! 20
சமீபத்தில் தமிழ்நாட்டில் இடம்பெற்ற சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விழாவில் திரு அந்தனி ஜீவா அவர்கள் சமூகப்பணிக்கான சிறப்பு விருதினை திரு. கு. சின்னப்பாரதி அவர்களிமிருந்து பெறுவதைப் படத்தில் காணலாம்.
53

Page 55
-*
பாரிஸ் மாநகரில் நடைபெ
மூத்த எழுத்தாளர் வி. தங்கப்பதக்க மாலை , சிறுவயதிலேயே பேச் முற்போக்குச் சிந்தனையால் விளங்கும் வி. ரி. இல் பட்டார்.
விழாவில் கெளரவிக்க அண்மையில் (02 - 10
அறக்கட்டளை விருதும் ( சான்றிதழ்) கிடைத்தமை (
கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் !
கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த வழங்கும் விழா 31-10-2014 வெள்ளிக்கிழமை ஸ்காபரோவில் உள்ள கொன்வின்ஷன் செ நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவி ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதை, ஈழ எழுத்தாளரான குரு அரவிந்தன் அவர்கள் ( கொண்டார். 2011 ஆம் ஆண்டு தமிழகத்தி வெளிவரும் இதழான கலைமகள் நடத்திய ராம் நினைவு குறநாவல் போட்டியில் “தாயுமானவர் குறநாவலுக்கான பரிசைப் பெற்ற குரு அரவிந்த ஆம் ஆண்டு தமிழர் தகவலின் இலக்கியத் விருதையும் பெற்றவர். இலங்கை இந்தியா க சிறுகதை, புதினம் போன்றவற்றுக்கும் பல வி
காவலூர் ராஜதுரை அவர்
ஞானத்தின் கண்ணீர் இலங்கையின் மூத்த எழுத்தாளர்களி ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் முன்னாள் நீ காவலூர் ராஜதுரை அவுஸ்திரேலியா சிட்னி காலமானார் என்ற செய்தி ஈழத்து எழுத்துல ஆழ்த்தியுள்ளது.
திரு. காவலூர் ராஜதுரை அவர்களில் (2008 மார்ச் - 94ஆவது இதழில்) அட்டை அந்திமகாலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த வே பேராசிரியர் சண்முகலிங்கன் எழுதிய கட்டுரை அவருக்கு மரியாதை செலுத்தியது.
காவலூர் ராஜதுரை அவர்களின் பிரிவா எழுத்தள நண்பர்கள் ஆகியோரின் துன்பத்தில் செலுத்துகிறது.

ற்ற விழாவில்
ரி. இளங்கோவனுக்குக் கெளரவம்..! அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டார்..!! சாற்றல், எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டு, ளராகப் பார்வைாட்த்து. இன்று பல்துறை வித்தகராக எங்கோவன் சாதனையாளராகக் கெளரவிக்கப்
ப்பட்ட மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனுக்கு - 2014) தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி இலக்கிய ரூபா பத்தாயிரம் - 10000 - விருதுச் சின்னம் - குறிப்பிடத்தக்கது.
- ஓவியா (பாரிஸ்)
விழா - மிரர் விருது அன்று =ன்ரரில் ல் 2014 முத்தமிழ் பெற்றுக் லிருந்து ரத்தினம் ” என்று தன் 2012 -திற்கான கனடா போன்ற நாடுகளில் நடந்த போட்டிகளில்
ருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர்.
மணிமாலா
EEET ELEME:
2thi 24 1
17 2h EF:
CFA 224 : 5491 FEF 1:54% 5
"களின் மறைவு | அஞ்சலி! ர் ஒருவரும் இலங்கை கேழ்ச்சித்தயாரிப்பாளருமான நகரில் 14-10 2014 அன்று கைப் பெரிதும் கவலையில்
1 பவளவிழாவின்போது ஞானம் அவரை ப்பட அதிதியாகக் கெளரவித்தது. அவரது பளையில் அவர்பற்றிய நினைவுகளை மீட்டி சயை ஞானம் 168 ஆவது இதழில் பிரசுரித்து
சல் வாடும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 2 பங்கு கொண்டு 'ஞானம்' கண்ணீர் அஞ்சலி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 56
வாசகர்=
ஆசிரிப்பும்  ெஒரு த
மலேசிய மலையகத் திருநாட்டில் பலமாதா விட்டு தாயக இல்லத்தில் நுழைந்த பொழுது | நடுநாயகமாக 'ஞானம்' (செப்) வீற்றிருந்து என்
ஒரு சில நிமிடங்களில் என்னை ஆசு கெட்டபழக்கமோ, நல்ல பழக்கமோ எந்த இதழை வகையில் 60 களில் என்னை ஒரு படைப்பிலக் அடையாளப்படுத்திய 'சிற்பி' அய்யா திருமிகு 4 கண்டு படித்தபொழுது அது ஒரு தந்தையை இலக்கிய ஆழுமையையும் சொல்லி வாழ்த்திப்
அய்யா, ஆசிரியர், நிறுவனர் 'ஞானம்' இலக் ஓர் இலட்சியப்பிதாவாக (தந்தை) வாழ்ந்து கா (இலக்கிய) வழியிலே மகனையும் வழிநடத்த செய்துவிட்டிருக்கிற ஒரு பெரும் வரலாற்றுச் சா அறிந்து பரவசம் அடைந்தேன்.
வரலாற்றுச் சாதனை - என்றெல்லாம் ஏன் இலக்கியத்தை, உயிராகக்கொண்டு வாழும் எந் ஓர் இடைவெளியில் சாஹித்திய விருதுபெற்ற |
ஆரம்ப கர்த்தா தாங்கள்! தொடர்ந்து மகன் இறைஞ்சுதல்கள்.
இன்னுமொரு குறிப்பு: தமிச் சிற்றிதழ்கள் ஆசிரியரும் இத்தகைய அதியுயர் விருதாளர்கள்
இவ்விடயங்கள் அனைத்திலும் பெருமைப்பு அவர் இணை ஆசிரியர் திருமதி ஞானம் » வேண்டியவர்.
"உடலொன்றே உடமையா” ராஜேஸ்வரி ஆங்கில உரையாடல்களை அப்டியே ஆங்கில தமிழ்நாட்டில் அதற்கான முயற்சியில் யாரும் இ
தன்மனைவியை அடுத்தவன் குறை சொல் மனைவி அப்படியாகத்தான் இருப்பாளோ..?, இ தவிப்பும் அழுத்தமும் நிரம்பி இருந்தது. நல்லந
எம்.ஜே. எம். ஜெப்ரான் எழுதிய தாகூர்பற் விடயங்களை கட்டுரை கூறிச் செல்கிறது. கட்டு சர்ச்சையை ஏற்படுத்திய "சாஹித்தியம்' என்ற 1
"சுய அனுபவத்தினூடாக பொதுமை அனுபவ அமரத்துவ நிலையின் அனுபவம் ஒருவனது பொது வங்க மொழிச் சொல்லான 'சாகித்தியம்' சமஸ்கி 'சாகித்தியம்' என்ற சொல் மீளவும் இணைதல் எக அதாவது இலக்கியம் மீளவும் பொது மானுடத்தே தாகூரின் கருத்து”தாகூரின் கருத்து, 'சாஹித்தி ர
வலிமை சேர்ப்பதாக அமைகிறது. பேரா. துரை.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

பேசுகிறார்
ங்கள் மருத்துவ மகளார் பராமரிப்பில் இருந்து பல அழைப்பிதழ்கள், அஞ்சல்களுக்கு மத்தியில்
னை வரவேற்றது. வாசப்படுத்திய பிறகு இதழ்விரித்தேன். என் ஓயும் கடைசிப் பக்கத்திலிருந்து புரட்டுவது ! அந்த க்கியக்காரனாகக் கண்டு, 'கலைச் செல்வியில்', சரவணபவன் அவர்களது ஓர் அபூர்வக் கவிதை ரயும் தனையனையும் பற்றியதாக அவர்களது
பாராட்டுவதாக அமைந்திருந்தது. 5கியச் சிற்றிதழின் பிதாமகனே, வாழ்க்கையிலும் ட்டியிருக்கிற தாங்கள், தங்கள் உயிர் மூச்சான தி "சாஹித்திய விருதாள"ராகப் பரிணமிக்கச் தனையை சிற்பி அய்யாவின் பாக்களின் மூலம்
ன் வர்ணிக்கின்றேன் என்றால் தமிழை, தமிழ் கத நாட்டிலும் சரி ஒரு தந்தையும் தனையனும் சரித்திரம் இல்லை. எ! இனி அவர்தம் வாரிசோ! இறைகிருபைக்கு
வரலாற்றில் ஒரு பிரதம ஆசிரியரும் நிர்வாக பானது இதுவே முதல் தடவை. படுவதற்கு இன்னொருவருக்கும் உரிமையுண்டு. Tானசேகரன்! அம்மா, தாங்களும் வாழ்த்தப்பட
எ6
- தமிழ்மணி மானா மக்கீன் பாலசுப்பிரமணியத்தின் சிறுகதை படித்தேன். மத்தில் வைத்திருந்தது புதுமையாக இருந்தது. றெங்கியதாகத் தெரியவில்லை. மவதை ஏற்றுக்கொள்ள மனத்திடம் வேண்டும். ருக்கமாட்டாள்... என கதையில் கதைமாந்தரின் டையில் ஒரு வித்தியாசமான கதை.
- அண்டனூர்சுரா - தமிழ்நாடு றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. பல புதிய ரையில் பின்வரும் பகுதி ஞானம் சஞ்சிகையில் சொல்லுக்கு பொருள்தருவதாக அமைகிறது. பத்தினை இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. =மானிடம் சார்ந்த அனுபவமாகும். இலக்கியத்தின் நத மொழியின் அடிப்படையிலிருந்து வருகிறது. ன்ற பொருளைக் குறிப்பதாக அவர் காட்டுகிறார். வாடு இணையும் ஆற்றலை வழங்குகிறது என்பது த்னா' விருது எழுத்தளர்களுக்குரியது என்பதற்கு மனோகரனும் இதையேதான் கூறியிருந்தார்.
- ஏ. எம். நிஸ்வான், பாணந்துறை
55

Page 57
அக்டோபர் ஞானம் கிடைக்கப்பெற்றேன். நன் எனது பாராட்டுக்கள். தங்களது பணி தொடரட்டு
0 ( ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கு சிறுகதை, நாவல், கவிதை, சிறுவர் இலக்கியம் ஆய்வு, ஆய்வியல், பயணக்கட்டுரை அறி சிறந்த நூல்களின் ஆசிரியர்களுக்குப் பரிசு தமிழியல் விருதும் பொற்கிழியும் வழங்கியும் ! தமிழ் இலக்கியப்பணியை கடந்த சில ஆ டாக்டர் ஓ.கே. குணநாதன் தலைமையில் இ பாரிய பணியைப்பாராட்டி ஊக்குவிக்கும் வல வெளியிடுகிறோம்.
இந்தவுல கம்மென்றும் ஏற்றிப் பே இலட்சியநல் வாழ்க்கையினுக் (8 செந்தமிழ்நூல் பலபுதிதாய் வேண் செப்பியநம் பாரதியின் சிந்தை ஓ வந்திடுநூல் களையொழுங்காய் , வகைகண்டு நடுநிலையில் வரி முந்துநிலை யானவற்றை மொழிந் முத்தான பரிசளிக்கும் முறைமை
தனிமனித னாய்நின்று தளர்வொன தகைசான்ற புலமைநலச் செல்க கனிவுடனே விருதும்பொற் கிழியும் கண்ணியவான் குணநாதன் கடல் தனித்துவநற் பணிகளினைச் சாவு தமிழ்த்தாயும் மகிழ்ந்துதலை நி கன்னித்தமிழின் பெருமைக்கா சி
கருத்துடனே பாராட்டிக் களிப்பார்
0 (
ஈழத்துப் புலம்பெய ஞானம் 175 ஆவது இதழ் 'ஈழ வெளிவரவுள்ளது.
ஞானம் சஞ்சிகையின் 150ஆ சிறப்பிதழ்' போலவே இச்சிறப்பிதழு வேண்டிய பிரமாண்டமான தயாரி களுக்கு அறியத்தருவதில் மகிழ்வு

றி பாராட்ட வேண்டியவர்களை பாராட்டியமைக்கு
ம்ெ.
- ஜெயராச சர்மா, மெல்பேண்
தம் நோக்குடன் ஒவ்வோராண்டிலும் வெளியாகும் நாடகம், காவியம், சமயம், கட்டுரை, வரலாற்று வியல், முதலான துறைகளைச்சேர்ந்த மிகச் வழங்கியும் மூத்த படைப்பாளிகள் ஐவருக்கு இந்நாட்டின் வேறு எந்த நிறுவனமும் செய்யாத ண்டுகளாகச் செய்து வருகிறது. எழுத்தாளர் யங்கும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் கெயில் அமைந்த கவிதைகளை மகிழ்ச்சியுடன்
ாற்றும் கேது வாகச் டும் என்று ர்ந்து பரவில் வைத்து நச் கண்டு து நல்ல | வாழ்க.
எ றின்றித் வர்க் கெல்லாம் 5 நல்கும்
மை வீரன் ன்றோர் ஏற்கத் மிர்ந்து நிற்கத் னியோ ரெல்லாம் , உண்மை.
- சிற்பி
0 0
3 இலக்கியச் சிறப்பிதழ் த்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழாக
வது இதழான “ஈழத்துப் போர் இலக்கியச் ம் அதிக பக்கங்களுடன் பேணிப்பாதுகாக்க ப்பாக வெளிவரவுள்ளது என்பதை வாசகர் கொள்கிறோம்.
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - நவம்பர் 2014 (174)

Page 58
(ய)
ஐsChi.
OUR PRODUCTS ARE THE FOLLOWING - MASALA POWDERS
IDDLY PODDY ITEMS
VADAGAM ITEMS - PICKLES ITEMS
Manuel SITH பாரும்.
. 149/N2 Madanty
"ஞானம்" சஞ்சிகை
பூபாலசிங்கப் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கப் 309AI 2/3, காலி வீ
பூபாலசிங்கப் 4, ஆஸ்பத்திரி எ
தூர் சுன்:
ஜீ அல்வாய். தொன
லங்கா சென்ற 84, கொழும்பு

Enterprises
Our Products are (Rester andf
[gேienically
5cள் *
prepared
pேad மோடி- 15.
Tel: 0ll - 2540093
கிடைக்கும் இடங்கள்
b புத்தகசாலை
தெரு, கொழும்பு-11
b புத்தகசாலை
தி, வெள்ளவத்தை.
5 புத்தகசாலை வீதி, யாழ்ப்பாணம்.
க்கா னாகம்
வந்தி
மலபேசி: 077 5991949
பல் புத்தகசாலை பு வீதி, கண்டி.

Page 59
பாப்பாபாபாபாபய
71-1 -12 - 1' - EFFப்ப
ஆசிரியர் பக்கம்
மண்ணில் புதைப்பு
பதுளை மாவட்டத்தில் உள்ள கொ 2014 அன்று காலை 7.15க்கு ஏற்பட்ட | பேரவலம் மலையகம் எங்கும் பெரும் (
இரண்டு மலைகளுக்கு நடுவில் இ அந்த இரண்டு மலைகளில், 300 3 குடியிருப்புகளின்மேல் சரிந்து பல உயி
இதில் ஏழு 'லயங்களை ' உள்ளடக் நிலையம், கடைகள், வாசிகசாலை, ( ஆலயம் என்பன மண்ணிற்குள் புதையும்
இந்த மீரியபெத்த தோட்டம் குடியிரு ஆண்டிலும் அதன்பின்னர் 2011 ஆம் ஆ அறிய முடிகிறது. இவ்வாறு எச்சரிக்கை மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இ அரசாங்கமோ அல்லது தொழிற்சங்கங்க என்பது பொதுவான குற்றச்சாட்டாகவுள்
மயைகத்தில் காலத்துக்குக் காலம் ஏற்படுவதும் அது தொடர்பான எச்சரிக் மறந்து போகப்படுவதுமான நிகழ்வுகள்
இது ஒரு இயற்கை அனர்த்தம் முறைதான் இந்தப்பாரிய உயிரிழப்புகளு ஏறத்தாழ 250 வருடங்களுக்கு முன்னர் | காலத் தேவையைப் பூர்த்தி செய்வதற் தொடர்' வீடுகள். இந்த அமைப்பு பலகு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.
மலையகத் தோட்டத் தொழிலா வீடுகளும் பாதுகாப்பான இடங்களில் அ மண்சரிவுச் சோகச் சம்பவம் வலியுறுத்து
இந்த நாட்டுக்குப் பெருந்தொகை லாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய் அதனைச் செய்ய வேண்டும்.
இருந்தபோதிலும் எதற்கெடுத்தாலும் செய்து தரவேண்டும் என மலையக மக் இருந்து விடுபட்டு சொந்தக்காலில் நிற். பல தோட்டங்களில் தொழிலாளர்கள்
வைத்து வங்கிகளில் கடன்பெற்று தங் சுதந்திரமாக வாழும் நிலைமை உ இருக்கிறது. வசதியுள்ளவர்கள் இந்த ல தாங்களே விடுவித்துக் கொள்ளுதலே ச பாதுகாப்பையும் அவர்களுக்கு வழங்கும்
இப்புகாடாபய Tாடளாயானா

ண்ட 'லயத்துச் சிறைகள் எஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் 29-10பாரிய மண்சரிவினால் உண்டான மனிதப் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மீரியவத்த தோட்டம் அமைந்துள்ளது. அடி உயரமான மலையே இந்த லயக் ர்களைக் காவுகொண்டுள்ளது. 5கிய 128 குடியிருப்புகள், பால் சேகரிக்கும் எழுபது வருடப் பழமைவாய்ந்த மாமுனி
ண்டன. தப்பதற்கு ஆபத்தான பகுதி என்று 2005ஆம்
ண்டிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக -க விடுக்கப்பட்ட நிலையிலும் இங்கிருந்த படங்களில் குடியமர்த்த தோட்ட நிர்வாகமோ, ளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ளது. சிறிய - பெரிய அளவுகளில் மண்சரிவுகள் கைகள் விடுக்கப்படுவதும் பின்னர் அவை தொடர்கதையாகவுள்ளன. என்றாலும், இந்த 'லயத்துக் குடியிருப்பு க்குக் காரணம் என்பது நிதர்சனமாகவுள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், அன்றைய உகாக அமைக்கப்பட்டவையே இந்த 'லயத் டும்பங்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு வாழும்
ளர்களுக்கு தனித்தனியான காணிகளும் புமைக்கப்படவேண்டும் என்பதனையே இந்த துகிறது.
யான வருமானத்தை ஈட்டித்தரும் தொழி வது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம்
TIMINITIMINNINாணயகாய மாராணாயாணா
தோட்டம் செய்து தரவேண்டும் அரசாங்கம் க்கள் பிறரில் தங்கி வாழும் நிலைமையில் கவேண்டிய காலம் தற்போது கனிந்துள்து. தமது சேமலாப நிதியை உத்தரவாதமாக பகளுக்கான வீடுகளைத் தாமே அமைத்து ருவாகி வருவதையும் காணக்கூடியதாக யத்து வாழ்க்கையில் இருந்து தங்களைத் கல வகையிலும் சிறந்த எதிர்காலத்தையும் ம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

Page 60
GNANAM Registered in the Department of Po
Lucky
BISC MANUFAL
Luckyland
Cardsiana
NATTARANPOTHA, KUI T: +94 081 2420574, 24202
E: luckylan
Printed by : Tharanjee Prints, 506, Highlevel F

asts of SiLanka under No. QD/18INewsl2014
ஏland)
EU07
CTURERS
உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
'பில்கட்டிலும் தான் !
Glus
NDASALE, SRI LANKA. 217. F: +94 081 2420740 d@sltnet.lk
Road, Nawinna, Maharagama - Tel : 2804773