கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அர்த்தம் 2013-2014

Page 1
அர்த்தம்
2013 - 2014
சோல்பரி அரசியலமைப்பு - ஒரு மதிப்பீ - செ. சக்திதரன்
2. மலையகப் பண்பாட்டுப் பேணுகை: சிக்க
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
3. எங்களின் தேவை இறந்த கடலா- உயிர்க்
- பொ. ஐங்கரநேசன்
4.
மலேயா ஓய்வூதியக்காரர் - அழகு சுப்பிரமணியம்
மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியு முன்நகர்த்த வேண்டிய பணிகளும் - சி.அ. யோதிலிங்கம்
திருமுறைகளில் வாழ்வியல்
- சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம்
7. மீதமிருக்கும் நேரம்
- யமுனா ராஜேந்திரன்
மனிதம் போற்றிய மணிவண்ணன் - எஸ். கோபாலகிருஷ்ணன்
9.
முதலாளித்துவத்திற்கும் அப்பால் - பேராசிரியர் ந. சண்முகரத்தினம்
10. இலங்கையின் நீதித்துறை பற்றிய யாப்பு
- தொகுப்பு - சங்கீத்தா
சமூக விஞ்ஞான

ISSN 2235-9829
- 3
விலை: 100.00
கல்களும், சவால்களும்
க்கடலா?
16
ம்
19
26
35
40
44
ஏற்பாடுகள்
54
ன ஆய்வுமன்றம்

Page 2
ஆசிரியர்
அர்த்தம் சஞ்சிகையின் மூன்றாவது இதன இவ்விதழ் மிகவும் காலதாமதமாகவே வெ எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. இது எ சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தை சேர்ந்த பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தாமதங்கள் இக்குறைபாட்டை நிச்சயம் நிவர்த்தி செ விரிவுரையாளர்களையும், மலையகத்தை சேர் விரிவாக்கியுள்ளோம். இந்த விரிவாக்கம் சம் உருவாக்கும்.
இந்த இதழில் செ. சக்திதரனின் “இ. அரசியலமைப்பு ஒரு மதிப்பீடு'', பேராசி பண்பாட்டுப் பேணுகை சிக்கல்களும் சவ தேவை இறந்த கடலா? உயிர்க் கடலா? ', வரலாற்று வளர்ச்சியும், முன் நகர்த்த ( ''திருமுறைகளில் வாழ்வியல்'', யமுனா ராே ந.சண்முக ரத்தினத்தின் "முதலாளித்துவத்திற்கு திரைப்பட நடிகர் மணிவண்ணன் பற்றி வ கட்டுரையும் வெளிவந்திருக்கின்றது. மூத்த எ வகையில் அவரது "மலேயா ஓய்வுதியக்க
அர்த்தம் இதழ்களில் வழமையாக நே மனவள வைத்திய நிபுணர் சிவதாஸ் அவர்க வேலைப்பளு காரணமாக நேர்காணலை முழு இதழில் அவரது நேர்காணல் நிச்சயமாக வ
இந்த இதழின் முக்கிய அம்சம் மலை டுள்ளமையாகும். பேராசிரியர் சிவத்தம்பி
கூருமுகமாகவும், மலையகம் பற்றிய அவ அவரது கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. . படைப்புகளுக்கு முக்கியம் இடம் வழங் தாங்கிப்பிடிக்கின்ற தூண்கள் தொடர்பான <
சஞ்சிகையில் வெளிவரும் ஆக்கங்க இருப்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அர ஏனையவை பெறவில்லை. குறிப்பாக ெ வெளிவரவில்லை. நூல்கள் அறிமுகம் ப காலத்தில் இக்குறைபாடுகள் நிச்சயம் தீர்க்க
வாசகர்கள் வழமை போன்று தங்களது

தலையங்கம்
ழ வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். ளிவருகின்றது. காலாண்டு சஞ்சிகை என்பதை மக்கும் கவலைதான். பொருளாதார நெருக்கடியும், 5வர்களின் இடப்பெயர்வுகளும், கட்டுரைகளை ம் இதற்கு காரணமாகிவிட்டன. எதிர் காலத்தில் ய்ய முயற்சிப்போம். யாழ் பல்கலைக்கழக ந்தவர்களையும் இணைத்து ஆசிரியர் குழுவினை நசிகை வெளியீட்டில் நிச்சயம் ஒரு ஒழுங்கினை
லங்கையின் அரசியல் வளர்ச்சியில் சோல்பரி ரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் "மலையகப் கல்களும்'', பொ.ஐங்கரநேசனின் "எங்களின்
சி.அ. யோதிலிங்கத்தின் “மலையக அரசியல் வேண்டிய பணிகளும்'', சிவமகாலிங்கத்தின் ஜந்திரனின் “மீத மிருக்கும் நேரம்", பேராசிரியர் ந அப்பால்" ஆகிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதிய அஞ்சலிக் ழுத்தாளர் அழகு சுப்பிரமணியத்தை கௌரவிக்கும் ரர்" என்ற சிறு கதையையும் சேர்த்துள்ளோம். ரகாணல் ஒன்றும் வருவதுண்டு. இந்தத் தடவை களுடைய நேர்காணலை வெளியிட இருந்தோம். ஐமையாக்கித்தர அவரால் முடியவில்லை. அடுத்த
ரும் என உறுதி கூறுகின்றோம். லயகம் பற்றிய இரு கட்டுரைகள் சேர்க்கப்பட் பின் 3வது ஆண்டு நினைவு தினத்தை நினைவு ரது அக்கறையை வெளிக்காட்டும் முகமாகவும் இனி வரும் காலங்களில் மலையகம் சார்ந்த கப்படும். குறிப்பாக மலையகத் தேசியத்தை கட்டுரைகளுக்கு முக்கிய இடம் வழங்கப்படும். ளைப் பொறுத்தவரை சமநிலைக் குறைபாடு சியல் விடயங்கள் பெறும் முக்கியத்துவத்தை பண்ணியம் பற்றிய விடயங்கள் இவ்விதழில் ததியும் முக்கியம் என உணர்கின்றோம். எதிர் ப்படும்.
ஆதரவினைத் தருமாறு வேண்டுகின்றோம்.
ஆசிரியர் குழு

Page 3
அர்த்த
2013
பிரதம் :
சி.அ. யோ
ஆசிரிய சி. திருச்ெ ப. கபிலே க. பிரே
அ. மெல் வே. இந்திர
ஆலோ கே.ரி. கலே
வெள சமூக விஞ்ஞான
A.C.A. கல் | 55, புனித லூசியா வீதி

தம் - 3
- 2014
ஆசிரியர் பதிலிங்கம்
பகம் - 4
பர் குழு செந்தூரன் மஸ்வரன் ம்குமார் டோனா "ச்செல்வன்
ரசனை னசலிங்கம்
ரியீடு ா ஆய்வுமன்றம் வி நிலையம் நி, கொட்டாஞ்சேனை

Page 4
இலங்கையின் அரசியல் வள சோல்பரி அரசியலமைப்பு -
செ. சக்திதரன்
இலங்கை சிறிய நாடாக விளங்குகி போதிலும் அரசியல் மாற்றங்களைப் பொறுத் இது ஒரு சமூக விஞ்ஞானிகளின் பரி தனைக் களமாக இருந்து வந்ததுள்ளது எ கல ா நி தி ஜெய சிங்க குறிப் பி டு வ பொருத்தமானதாகவேயுள்ளது. பிரித்தானி இலங்கைத் தீவை முழுமையாகக் கைப்பற்ற கொண்டபின் தமது நலன்களை உறுதிப்படுத் கொள்ளவும் அவ்வப்போது உள்நாட் மட்டத்திற் தோன்றி வந்த நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவும் வேறும் சில காரண களினாலும் காலத்துக்குக் காலம் அரசிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வந்த இந்த வகையில் கோல்புறூக் - கமெர் சீர்திருத்தம்(1833), குறு-மக்கலம் சீர்திருத்த (1910), மனிங் சீர்திருத்தம் (1920, மனி டெவன்சேர் சீர்திருத்தம்(1924), டொனe அரசியற் திட்டம் (1931), சோல்பரி அரசிய திட்டம் என்பன பிரித்தானியரால் இலங்கைக் வழங்கப்பட்ட அரசியற் சீர்திருத்தங்களாகு இதில் சோல்பரித் திட்டம் ஆங்கிலேயர் இலங்கைக்குத் தயாரித்து வழங்கப்பா கடைசி அரசியற் திட்டம் என்பதே இலங்கையர் கைகளுக்கு ஆட்சியதிக மாற்றத்தினைச் செய்தது என்ற வகையில் இலங்கையின் அரசியல் வரலாற்றி முக்கியத்துவம் பெற்றதொன்றாக மதிக் படுகின்றது.
சோல்பரி யாப்பினை இலங்கை அரசிய வளர்ச்சியுடன் வைத்து நோக்க முயலும் ! கட்டுரை யாப்பின் அம்சங்களையெல்ல தனித்தனியாக ஆய்வு செய்யப்போவதில்ன சோல்பரி அரசியற் திட்டத்தினையும் அ உள்ளடக்கியிருந்த அம்சங்களையும் தரப்பட

பர்ச்சியில் ஒரு மதிப்பீடு
பர்
திக்
எச்
ங்
பார். என்
தம்
ங்
Tற தரவாகக் கணித்துக் கொண்டு யாப்பின் இது பின்னணியிலும் நடைமுறையில் அதன் புற சா நிலையிலும் தோன்றிய சில அம்சங்களைச் "ன சுருக்கமாகப் பரிசீலிப்பதே இதன் நோக்க
து மாகும்.
உண்மையில் சோல்பரி அரசியலமைப்பின் தோற்றம் என்பது காத்திரமான பின்னணியில்
நின்று முகிழ்த்ததாகவேயிருந்தது. டொனமூர் -டு திட்டத்தின் குறைபாடுகளின் வழி உள்நாட்டு
மட்டத்திற் தோன்றியிருந்த கோரிக்கைகளுடன் அயல் நாடான இந்தியாவில் பிரித்தானியரை நெருக்கியிருந்த சுதந்திரப் போராட்டம், அதற் கும் அப்பால் இரண்டாவது மகாயுத்தத்தின் விளைவாக உலக வல்லரசாக முதலாவது நிலையில் நின்ற பிரித்தானியா மூன்றாவது
நிலைக்குத் தள்ளப்பட்டமை, பிரித்தானிய முர்
உள்நாட்டு அரசியலிற் தொழிற்கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டமை போன்ற பல காரணிகள் பொது விலிருந்தாலும் இலங்கைக்கேயுரித்தான தனித்தன்மைகளும் சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கான அதன் அணுகுமுறையும் கூட சோல்பரி யாப்பின் உருவாக்கத்திலும் அதனைத் தொடர்ந்த நாட்டின் சுதந்திரத்திலும் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. - 1833 இல் அறிமுகமான கோல்புறூக் திட்டத்தின் வழி உள்நாட்டில் வளரத் தொடங்கிய சுதேசிய உயர் குழாமினர் வர்க்க நிலையில் பிரித்தானியரை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவமுடையோராகக் காணப் பட்டதுடன் பின் சோல்பரி யாப்புக்கான கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் கூட முன்வைக்கப் போவதாக இருந்தனர். முன்னைய அரசியற் சீர்திருத்தங்கள்
பற்ற 2, ...
க்கு
ார்
ரம்
ல்..-ம.

Page 5
இலங்கையின் அரசியல் வளர்ச்சியில் .ே
போலல்லாது சோல்பரி யாப்பின் தோற்றத்தின் பின்னணியில் சுதேசிகளின் ஆலோசனைகளும்
கோரிக்கைகளும் கலந்திருந்தன என்னும் போது - எத்தகையோர் அத்தகைய கோரிக்கை களை முன்வைத்தனர் என்பதனைச் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே இலங்கையரசியலில் சுதேச மட்டத்திற் தோன்றியிருந்த வர்க்க நலன் பேணும் பண்பு சோல்பரியிலும் தொடர்ந்த துடன் இன நலன் பேணும் முயற்சிகளும் ஆரம்பித்திருந்தன எனலாம். முழுமையாகவே பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அமைச் சர்களைக் கொண்ட அமைச்சரவை தயாரித்த மந்திரிமார் நகல் திட்டமும் இதனை ஏற்றுக் கொள்ளாத வகையில் சிறுபான்மை மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்திய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் முன்வைத்த 50:50 திட்டமும் இது விடயத்தை வெளிப்படுத்து கின்றன. வர்க்க வாதத்திலிருந்து இனவாதத்தை நோக்கிய இலங்கையரசியலின் நகர்வினைச் சோல்பரி யாப்பின் பிறப்பிலும் நடைமுறை யிலும் நன்கு அவதானிக்க முடியும்.
பிரித்தானிய பாராளுமன்ற ஆட்சி முறையை அப்படியே அமுல்படுத்த முயன்ற சோல் பரி யாப்பு ஆட்சித்து றை யில் பிரித்தானிய மேலாண்மையைத் தொடர்ந்தும் அங்கீகரித்திருந்தது. பிரித்தானிய முடியின் பிரதி நிதி யான மகாதேசாதி பதி நாம நிர்வாகியாக நிர்வாகத்தில் மட்டுமன்றி சட்ட ஆக்கத்திலும் தொடர்புபட்டதுடன், நீதித் துறையில் பிரித்தானிய கோமறைக் கழகத்தின் மேன்மையதிகாரமும் சோல்பரி யாப்பின் கீழ் தொடர்ந்திருந்தது. மறுபுறத்தில் பொருளாதார ரீதியிலான இலங்கையின் சுதந்திரம் கேள்விக் குறியாகவேயிருந்தது. சுதந்திரத்தின் பின்னர் பிரித்தானியாவிற்கும் இலங்கைக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு - வெளி நாட்டுறவு - பொதுவிவகாரம் சம்பந்தமான மூன்று ஒப்பந்தங்களும் பிரித்தானிய மேலாண்மையைத் தொடர்ந்தும் இலங்கையில் உறுதிப்படுத்துவனவாக இருந்தன.

சால்பரி அரசியலமைப்பு - ஒரு மதிப்பீடு
3
பிரித்தானிய முறையிலான பாராளுமன்ற முறையை டொமீனியன் அந்தஸ்த்துடைய சுதந்திரத்தில் இலங்கை நடைமுறைப்படுத்த முயன்றபோது சேர்க்கையான சில அரசியல் மரபுகளை அது வலிந்து நிலை நிறுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. ஈரவைப் பாராளு மன்றம், அரசியல் மரபுகள், மந்திரி சபையும் கூட்டுப் பொறுப்பும், ஜனநாயக ஆட்சி முறைக்குத் தேவையான வலுவான எதிர்க்கட்சி போன்ற அம்சங்களில் இலங்கையில் இவ் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது கட்சி முறையில் வளர்ச்சியின்மையால் குறைபாடு கள் காணப்படுவது இயல்பானதாக விருந்தது.
இத்தகைய தன்மைகளும் குறைபாடு களுமே இலங்கையின் சுதந்திரம் என்பது அர்த்த மற்றதொன்று எனப் பலரும் விளக்கங் கூறுவதற்குப் பெருமளவு காரணமாக இருந்தது எனலாம். இது விடயத்தில் கியூக்டிங்கரின் விளக்கம் மட்டுமன்றி சோல்பரி யாப்பு நடைமுறை யி லி ருந்த காலத்தி லே யே இலங்கையின் பிரதமராகவிருந்த S.W.R.D பண்டாரநாயக்கா '... ஒரு நாள் அதிகாலை நாம் விழித்தெழுந்த போது நீவீர் டொமினியன் என சொல்லப்பட்டது என சுதந்திரத்தை மதிப்பிட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது'
1948 இல் சுதந்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை சுதேச அரசியலில் ஒரு வலுவான அடிப்படையின்றியே உள்நாட்டு விடயங் களில் பிரித்தானியரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிற் தொடர்ந்ததுடன் வெளிநாட்டு விவகாரங்களிலும் பிரித்தானியா வின் நிழலாகவே விளங்கியது. 1956 ஆம் ஆண் டில் S.W.R.D பண்டார நாயக்கா பதவியேற்ற போது இது விடயத்தில் ஒரு தி ருப்பு முனை ஏற் பட்டது எனலாம் வெளியுறவுக் கொள்கையிலும் உள்நாட்டு சுதேச உணர்வுகளையும் பண்புகளையும் பிரதி பலிப்பதிலும் பண்டாரநாயக்கா புதிய அணுகு முறையை அரசியலில் மேற்கொண்டாலும்
எ6

Page 6
ஏற்கனவே குறிப்பிட்டது போல வர் வாதத்திலிருந்து இனவாதத்தை நோக். நகர்வினையும் - உள்நாட்டு மக்கள் மனோவியலையும், ஏன்! பலவீனங்களை கூட நன்கு அவதானித் திருந்த அரசிய வாதியான இவர் தானும் அதனையே பின்ப வேண்டியவராயிருந்தார். பெரும்பான் மக்களின் மொழி, மதம் என்பவற்பு முதன்மைப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்று போட்டியில் தானும் அதனையே தீவிரமா. பின்பற்றுபவராகக் காட்டியும் செய்தும் ஆப் யைக் கைப்பற்ற வேண்டிய தன்மை ஓரளவி சோஷலிஸம் பேசிய பண்டார நாயக்காவுக்கு தவிர்க்க முடியாததாகவேயிருந்தது - இ இனவாத அரசியலுக்கு ஒரு அபிவிருத்திய அமைந்ததுடன் தொடரும் அரசிய அப்பாதையினின்றும் விலக முடியாதது எ இலங்கை அரசியல் வாதிகளை நம்பவ வைத்திருந்தது.
சோல்பரி யாப்பின் பிறப்பிலே சிறுபான்மையினரின் நியாயமான அச்சு தெரிவிக்கப்பட்டபோது சோல்பரி அவர்கள் நலன்களைப் பாதுகாக்கும் வகையிற் சி காப்பீடுகளைச் செய்திருந்தார். ஆனாலு நடைமுறையில் இவற்றினால் எதுவித பலனா இருக்கவில்லை. தனிச்சிங்களச் சட்டம் (1956 சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் (1964 பிரஜாவுரிமைச் சட்டம் (1948) போன்ற பு சோல்பரி யாப்பு நடைமுறையிலிரு காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன பிரித்தானிய மக்களின் அரசியற் கலாச்சாரம் போன்று இலங்கையர்களின் அரசியற் கல சாரமும் இருக்கும் என பிரித்தானியர் எர்த் பார்த்திருந்தால், உண்மையில் அது மிக தவறான கணிப்பீடாகும், ஆனால் இல கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த உப வர்க்கத்தினருடன் வர்க்கரீதியான உறலை கொண்டு தமது நலன்களைப் பெறுவன நோக்கமாகக் கொண்ட பிரித்தானியர் சி பான்மையினரின் காப்பீடுகளின் வலி

அர்த்தம் - 3
8 9 2
9 2 5 6 2 5 5 6 தி 9
க்க குறைந்தது எனத் தெரிந்தும் அதனை யாப்பில்
பெயரளவிற் சேர்த்திருந்தாலும் அஃது ன் ஆச்சரியப்படுவதற்கில்லை. இங்கு ஏற்கனவே பும் குறிப்பிட்டது போன்று அரசியல் மாற்ற நகர்வு பல் 1972 இல் முதலாம் குடியரசு யாப்பு ஆக்கப்
பட்டபோது வலிமையற்ற இக்காப்பீடுகளை முற்றாக நீக்கிவிட்டதுடன் இக்காப்பீடுகளின் ஒன்றான 29வது சரத்தின் (2)வது உபவிதிக்கு முரணான அம்சங்களையும் சேர்த்திருந்தது.
உண்மையில் ஒருநாடு காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும்போது தனக்கேற்ற வகையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினையும் தயாரித்துக் கொள்ளவேண்டும். ஆனால் இலங்கையின் அனுபவம் இவ்வாறு இருக்கவில்லை. 1947லேயே அமுலுக்கு ல் வந்த சோல்பரி யாப்பே 1948 பெப்ரவரி 4
இல் சுதந்திரம் கிடைத்த போதும் தொடர்ந்தமை கியூக்ரிங்கர், பண்டாநாயக்கா போன்றோர்
கூறியது போன்று குறைபாடுடையதாக - ய |
நாட்டின் சுதந்திரத்தினை - ஒரு அரசியல் ம் |
வளர்ச்சியின் பிரிநிலைக் கோடாகக் காட்டத் தவறியிருந்தது. சட்ட நிர்வாக, நீதித்துறை களுக்கு அப்பால் பொதுச்சேவை சம்பந்தப் ம் |
பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் ம் வலு வற்றனவாகவேயிருந்தன. 5), சோல்பரி யாப்பின் நடைமுறையில்
இலங்கையரசியலின் தனித்தன்மை அல்லது குறைப்பாட்டினூடே இன்னொரு விடயத் தினையும் அவதானிக்க முடியும். பிரித்தானிய ரால் வழங்கப்பட்ட இவ் அரசியலமைப்பை மாற்றி சுதேசிகள் தாமாகவே இலங்கைக்கான அரசியற் திட்டத்தை ஆக்க வேண்டும். என்ற எண்ணம் ஒரு தேசிய அடிப்படையிலெழுந்த வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தபோதும் இதனைவிட, வலிமை குறைந்த வரையிலாவது ர் இருந்த சிறுபான்மையினர் காப்பீடுகளை க் விரைவாக நீக்கி விடுவதிலேயே ஆட்சி
யிலிருந்தவர்கள் அதிக அக்கறை காட்டியிருந் தனர்-1971 இல் நிறைவேற்றப்பட்ட செனற்
ல |
2 அ சு. 3. 2. 3. 3. 4. 5: 7 8 2
0

Page 7
இலங்கையின் அரசியல் வளர்ச்சியில் ே
சபை ஒழிப்பு மசோதாவையும் முதலாவது குடியரசில் எஞ்சி யிருந்த ஏனையவை எல்லாவற்றையுமே நீக்கி விட்டமையையும் காணலாம்.
1972 இல் அமுலுக்கு வந்த 1 ஆம் குடியரசு அரசியற்திட்டமும் 1978 இல் நடை முறைக்கு வந்த 2 ஆம் குடியரசு அரசியற் திட்டமும் பெரும்பான்மை இனத்தவரின் அதனுள்ளேயும் குறிப்பிட்ட கட்சியின் செல்வாக்கிற்கு உட்பட்டவையாக ஆக்கப் பட்டன. இதுவே இவ்விரு குடியரசு யாப்புகளும் குறுகிய கால இடைவெளியிற் தோன்றுவதற்கும் பின்பல திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுவதற்கும் காரணமாயிருந்தது. பேராசிரியர் விஸ்வவர்ணபால கூறுவது போல் இனியும் பாராளுமன்றத்தில் 2/3 பெரும் பான்மையுடன் ஒரு கட்சி பதவிக்கு வருமா யிருந்தால் அரசியல் யாப்பு மாற்றப்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. நடைமுறையில் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிக்கான கோரிக்கைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்கலாம்.
சோல்பரி யாப்பு ஆங்கிலேயராற் தயாரித்து வழங்கப்பட்ட போதிலும் மந்திரி மார் நகல் திட்டத்தை சோல்பரி அப்படியே ஏற்றுக் கொள்ளாமையினால் பெரும்பான்மை உயர்வர்க்க சுதேசிகளுக்கும் யாப்பின் மீது முழுமையான விருப்பு ஏற்பட்டிருக்கவில்லை. மறு புறத்தில் இரு பக்கத்திலுமிருந்த முயற்சியாளர் வர்க்கத்தினை யாப்பை ஆக்கியோர் மட்டுமன்றி அரசியலிலீடு பட்டிருந்த சுதேசிய தலை வர்களும் கவனத்திலெடுத்திருக்கவில்லை மாறாக சுதந்திரம் கிடைத்தபோது இத்தகைய ஒரு முயற்சியாளர் வர்க்க அரசியல் இந்நாட்டில் ஏற்படாத வகையிற் திட்டமிட்டுப் பல நடவடிக் கைகயும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதிற் தலையானதொரு நடவடிக்கையாகக் கூறத் தக்கது 1948 இல் நிறைவேற்றப்பட்ட குடி

சால்பரி அரசியலமைப்பு - ஒரு மதிப்பீடு
5
யுரிமைச் சட்டமாகும். இச்சட்டத்தினை D.S. சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்தபோது ஏற்கனவே ஐம்பதுக்கு ஐம்பது கோரியிருந்த G.G. பொன்னம்பலம் ஆதரவு நல்கி தனது வர்க்க உறவை நிலை நிறுத்தியிருந்தார்
இன்னொரு புறத்தில் சோல்பரி நடை முறையிலிருந்த காலத்தில் இவ் யாப்பின் கீழ் மாறிமாறி ஆட்சியமைத்த ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க என்ற இரு கட்சிகளினதும் அரசியலில் நம்பிக்கையில்லாத - பெரும்பாண்மைச் சமூகத்திலிருந்தே வர்க்க அரசியல் பேசியபடி ஆயுத அரசியற் கலாச்சாரமொன்றும் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினரின் அரசியற் சித்தாந்தம் தூய இடதுசாரிவாதமாக இருக்க வில்லை எனக்குறை கூறப்பட்டாலும் அரசியல் வன்முறையின் அல்லது ஆயுத அரசியலின் அறிமுகம் இலங்கையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அகில இலங்கைத் தேசிய காங்கி ரசிலிருந்து பிரிந்து சென்ற கண்டிய தேசிய அசெம்பிளி யினர் 1920களில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த பின்னரே S.J.V. செல்வநாயகம் தலைமையிலான சமஷ்டிக் கட்சியினர் சமஷ்டிக் கோரிக்கையை 1949 இல் முன்வைத்தனர். இது போலவே சோல் பரி நடைமுறைக் காலத்தில் தென்னிலங்கையிற் தோன்றிய விரக்தி அரசியலின் வன்முறை சாயலே பின் முதலாவது குடியரசு யாப்பின் நடைமுறைக் காலத்தில் வேறொரு கோணத் தில் வட இலங்கையிலும் வளரத் தொடங்கியது.
முன்னர் குறிப்பிட்ட பிரஜாவுரிமைச் சட்டம் இலங்கையில் சிறுபான்மை மட்டத்தில் வாழ்ந்திருந்த இந்திய தமிழர்களை நேரடி யாகவே பாதிப்பதாகவிருந்தது. உண்மையில் இவர்கள் இந்தியத் தமிழர்கள் என்ற நோக்கில் அவர்களது பிரஜாவுரிமை கூடவே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை என்பவற்றைப்

Page 8
அர்.
பறிப்பது ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கவில்லை இவர்களிற் பெரும்பான்மை யானோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தவிடத்து ஒரு தொழிலாளர் வர்க்க அரசியல் இலங்கையில் அறிமுகமாகிவிடும் என்ற அச்சமே ஆட்சியாளர்களுக்கு இருந்தது இவ் அச்சத்தின் வழி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தோட்டத் தொழிலாளரை நாடற்றவர்களாக்கியதுடன் புதியதொரு அரசியற் பிரச்சனையை இலங்கையின் தேசிய அரசியலில் மட்டுமன்றி வெளியுறவிலும் ஏற்படுத்தியிருந்தது.
சோல்பரி யாப்பு தேர்தல் - வாக்குரிமை மூலமான ஆட்சி ஒழுங்கமைப்பை வழிப் படுத்தியபோது ஆட்சியாளர்கள் மேற்சொன்ன வகையில் இந்தியத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை அரசியலிற் பங்கு கொள்ளாத வகையில் நீக்கி தமது வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொண்டதுடன் மறுபுறத்தில் சுதேச மத்திய வகுப்பினரை சமூக நலத்துறை விடயங்கள் மூலம் கவரவும் முற்பட்டிருந்தனர். இதனால் தான் சுதந்திர இலங்கையின் முதலாவது நிதியமைச்சரான திரு. J.R. ஜெயவர்த்தன தனது முதலாவது வரவு - செலவுத் திட்டத்தில் 'முன்னேற்ற மிகு சமூக நலன்புரி நடவடிக்கை களை அரசாங்கம் நிறுத்தமாட்டாது' என வாக்குறுதியளித்திருந்தார். இது பின்னைய இலங்கை அரசியலை அரிசி அரசியலாக் பழக்குவதற்குப் பொறுப்புடையதாகவிருந்தது
பொதுவாக சோல்பரி யாப்பு ஆக்கப் பட்டபோது இலங்கைக்கேயுரித்தான தனித்து இயல்புகள், பல்லின மக்களைக் கொண்ட இத்தீவின் அரசியற் தேவைகள், சாதாரன மக்களின் பிரச்சினைகள் என்பவற்றை கவனத்தில் எடுக்காமை அதன் நடைமுறையில் பல இடங்களிலும் பிரச்சினைகளைத் தோற்று வித்திருந்தது. இப்பிரச்சனைகளே சுதந்தி இலங்கையின் அரசியலுக்கு சுதேசிகளால்

தம் - 3
வலிமையான ஒரு அத்திவாரத்தை அமைத்துக் கொள்ளத் தடையாகவுமிருந்தன. இவ்வாறு வலுவான அரசியலடிப்படையின்றிப் பிணக்கு களோடு கட்டியெழுப்பப்பட்ட அரசியலே இன்றும் இலங்கையில் அரசியல் என்பதைக் குழப்பங்களும் பிணக்குகளும் கொண்ட தொன்றாக நடத்திச் செல்வதற்கு ஓரு காரண மெனலாம்.
இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கி ஆட்சிப் பொறுப்பைச் சுதேசிகள் பெறக் காரணமாயிருந்த சோல்பரி அரசியற் திட்டம் தன்னகத்தே கொண்டிருந்த குறைபாடுகளின் தாக்கம் தொடர்ந்து வந்த குடியரசுயாப்பு | களிலும் அதிகளவிற் பிரதிபலித்ததேயன்றிக்
குறைவுபடவில்லை. இத்தகைய குறைபாட்டுத் [ தன்மைகள் எதிர்கால அரசியலிலும் தொடராது
என்பதை இப்போதைய நிலைமைகளினின்று யாரும் உத்தரவாதப்படுத்த முடியாது.
U'
துணைநூல்கள்
இலங்கை சோஷலிஸ ஜனநாயக குடியரசு அரசியலமைப்பு (1972). குலரத்தினம், க.சி., நோத் முதல் கோபல்லாவ
வரை. - 3. சமூக விஞ்ஞானிகள் சங்க வெளியீடு,
இனத்துவமும் சமூகமாற்றமும். சக்திதரன் செல்வநாயகம், தமிழ் தீவிரவாதமும் தமிழ் மக்களிடையிலான கட்சியரசியலும், சிறப்புக் கலைமானி ஆய்வுக்கட்டுரை.(பிர
சுரிக்கப்படாதது) 5. சிவராஜா, அ., கலாநிதி, இலங்கை அரசியல். 6. நித்தியானந்தன், வி., கலாநிதி, இலங்கை
அரசியற் பொருளாதார வளர்ச்சி. 7. Kodicara, S.U. Prof, Foreign policy of srilanka.
கை

Page 9
மலையகப் பண்பாட்டுப் பேணு சிக்கல்களும், சவால்களும்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
மலையகத்தின் சமூக அரசியல் தனித்துவம் பேணப்படுவது, இலங்கை தமிழ் நிலை நின்று பார்க்கின்ற போது கூட மிகமிக அத்தியா வசியமான ஒரு விடயமாகும். ஏனெனில் இலங்கையின் தமிழ்வாழ்க்கை பண்பாடு என நோக்கும் பொழுது அதிலே பிரதேச தனித்துவங்கள் மிக முக்கிய இடம் பெறுவதை அவதானிக்கலாம். மட்டக்களப்பு, திருமலை, வன்னி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் - சிலாபம் ஆகிய பிரதேசங்கள் ஒவ்வொன்றும் இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டின் பன்முகப் பாட்டையும், அதேவேளையில் வீறார்ந்த நிலையையும் காட்டுவனவாக உள்ளன.
இலங்கையின் நியாயமான பிரஜைகள் என்று இந்திய வம்சாவளித் தமிழர் ஏற்றுக் கொள்ளப்பட்டமை ஏறத்தாழ பூரணமாகியுள்ள இன்றைய நிலையில் இம்மக்கள் கூட்டத் தினரில் இயல்பாக தனித்துவங்களை வற் புறுத்துவதும், பேணுவதும் அவர்களின் சமூகக் குழுமத் தனித்துவத்துக்கும் அதே வேளையில் இலங்கையில் தமிழரின் நிலைபேறுடைமைக் கும் (Stability) உதவுவதாகும்.
இந்திய வம்சாவளித் தமிழரை மலையகத் தமிழர் எனும் வழக்கு ஏறத்தாழ கடந்த கால் நூற்றாண்டு காலமாகப் போற்றப்பட்டு வருகிறது. 'மலையகம்' என்ற தொடர் காரணமாக இலங்கையின் மேற்கு (அவிசா வளை), தெற்கு பகுதிகளிலுள்ள றப்பர் தோட்ட இந்திய வம்சாவளித் தொழிலாளர்கள் கொண்டு வரப்படவில்லை. பெருந்தோட்டச் செய்கை முறைமையினுள் முக்கியத்துவம் பெறும் தேயிலைத் தோட்டப் பகுதிகளும், அவை சார்ந்த நகரங்களுமே மலையகம் என்ற

கை:
தொடருக்குள்ளே கொண்டு வரப்படுகின்றன. இறப்பர் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் படிப்படியாக தங்கள் தமிழ் அடையாளங்களை கல்வி முதல் ஆடையணி, உணவு வரை பல முக்கிய துறைகளிலே இழப்பதை காணலாம். மலையக அரசியல் தலைமைகளிடத்து இது பற்றிய சிரத்தை இருப்பதாக தெரியவில்லை.
மலையகம் எனும் வரையறைக்குள் வருகின்ற பொழுது அதன் தனித்துவத்தை பேண வேண்டுமென்பதில் மலையக புத்திஜீவிகள் முதல் அரசியல்வாதிகள் வரை முக்கிய சிரத்தை காட்டுகின்றனர். இதன் தேவையை வற்புறுத்துகின்ற அதேவேளையில், இந்த பேணுகை எத்தகைய வடிவம் எடுக்க வேண்டுமென்பது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டுவதாகும். இயல்பாகவே பண்பாட்டு பேணுகையே முக்கியமானதாக வற்புறுத் தப்படும், வற்புறுத்தப்படுகிறது.
இக்கட்டத்திலே பண்பாடு பற்றிய ஒரு தெளிவு அவசியமாகின்றது. பண்பாடு என்பதை இரண்டொருவரி வரைவிலக்கணங் களால் அறுதியிட்டு கூற முடியாதென்பது பல அறிஞர் கருத்து. பண்பாடு எனும் பொழுது அதனுள் பின்வருவன நிச்சயமாக இடம் பெறும். 1. ஒரு சமூகப் பின்புலம்
அச்சமூகப் பின்புலத்தை தீர்மானிக்கும் அரசியல் பொருளாதார காரணிகள்
3. உறவுமுறை விவாகம்
4. நம்பிக்கைகள், வழிபாடுகள் (மதம்)
5. கலைகள்

Page 10
8
6. உணவு, உடை
வாழ்க்கைப் பற்றிய பெறுமானங்க (values) இதற்குள் சமூக நோக்கு உலகம் பற்றிய கண்ணோட்டம்
8. தங்கள் குழுமம் பற்றிய பிரக்ஞை
மேலே கூறியவை யாவும் ஒன்றுடம் ஒன்று இணைந்து நிற்கும் நிலையில், இந் வட்டத்தினுள் வராதோரின் கண்ணோட்டத்தி மாத்திரமல்லாமல் அந்த குழுவினரின் அ உணர்விலும் (நாம் இன்னார் என்ற உணர்வு பண்பாட்டு உணர்வினை தீர்மானிக்கும்.
பண்பாடு என்பது எப்பொழுதும் சமூ மாற்றங்களுடன் இயைந்து செல்வதாகும் பண்பாடு என்பது தேக்க நிலையல்ல. பன் பாட்டில் மரபு முக்கியமானதாகும். மரபி பிரதான பண்பு 'காலமும் வழக்கும் திரிந் விடத்தும், திரிந்தவற்றிற்கேற்ப அமைந்தது செல் வ தோர் முறைமை என்பர் முன்னேற்றங்களை தரும் மாற்றங்களை ஏற்று கொண்டு அந்த மாற்றங்ககளினூடே பார. பரிய - மரபு தொடர்ச்சியினை பேணுவது பண்பாட்டின் முக்கிய அம்சமாகும்.
மேற்கூறியனவற்றை ஆழமாக மனத்த லிருத்திக் கொண்டு மலையகப் பண்பாட்டில் அமைப்பினையும் வெளிப்படு நிலைகளையும் பற்றி நோக்க வேண்டியது அவசியமாகின்ற்றது
இவ் வாறு சிந்திக்கும் பொழுது மலையகத்தின் அரசியல், பொருளாதார 'சூழல்' முக்கியமாகின்றது. மலையகம் எனு பொழுது ஒருபுறத்தில் பெருந்தோட் வாழ்க்கையும் (தொழிலாளர் நிலை), இ. னொரு புறத்தில் நகர்ப்புற குடியிருப்புக்களும் பெரும்பாலும் வர்த்தகம் சார்ந்தோர் வாழ்க்கை முறையும் பிரதானமாகின்றன. ஆனால் மலை யகப் பண்பாடு எனும் பொழுது பிரதானமா பெருந்தோட்டத்துறை முக்கியம் பெறுகிறது

பர்த்தம் - 3
- ச
9: 4' ° சி
s' |
"பி
2'
தோட்டத் தொழிலாளரின் உத்தியோகப் பூர்வநிலை, அவர்களின் தொழில் முறைமை கள், குடியிருப்பு முறைமை, சமூக ஒருங்காடல் ஆகியனவற்றை தீர்மானிப்பதை காணலாம். உதாரணமாக கொழுந்தெடுத்தல், கொழுந்து கூடையை சுமக்கும் முறைமை, லயன்களை கொண்ட குடியிருப்பு, அந்தக் குடியிருப்புக் களின் கட்டட அமைப்பு, தோட்டத் தொழிலை செய்வதற்கான உடை ஆகியவை முக்கிய மாகின்றன.
தோட்டத்து பொருளாதார வாழ்க்கை முறைமை தொழிற்சங்க முறைமையை அத்தியாவசியமாக்குகின்றது. அந்த தொழிற் சங்கங்கள் இவர்களது அரசியலை தீர்மானிக் கின்றன. தொழிற்சங்கத்தின் அதிகார அமைப்பு இவர்களது சமூக அமைப்பை பாதிக்கின்றது.
இந்த பொருளாதார, தொழிற்சங்க அதிகார முறைமைகளுக்கு அமையவே கல்வி நிறுவ னங்களும் அமைக்கப்படுகின்றன. தோட்டப் பாடசாலை தோட்ட முறைமையை பேணுவ தற்கு உதவுகின்றதா?, அதனை மாற்ற உதவு கின்றதா? என்ற வினாவை நாம் கேட்பதில்லை.
ஆனால் மலையகப் பண்பாடு என நாம் அடையாளம் காணும் பல விடயங்கள் மேலே கூறியனவற்றிற்குள்ளேயிருந்தே கிளம்பு கின்றன. ஆனால் இப்பொழுதோ இந்த அமைப்பில் குறிப்பாக குடியிருப்பு முறைமை யில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இன்னுமொரு முக்கியமான விடய மென்னவென்றால், இந்த அரசியல், பொருளா தாரச் சூழல் அவர்களது மொழி, மதப் பேணு கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாகும். அதாவது தொழிற்சங்க தலைமை முறைமை இவர்களின் மத நிலைப்பாடு களையோ, தமிழ்த் தன்மையையோ வற்புறுத்து வதில்லை. இதனால் மலையகத் தமிழர்களே கல்வி மாகாண சபைகளில் கூட மலையகத்
இ•
b'
து
ம் 5 .0
ச• ப
T
5

Page 11
மலையகப் பண்பாட்டுப் பேணுவ
தமிழ்ப் பிள்ளைகளின் பாட சாலைகளில் சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். உண்மையில் இவர்களது தமிழ்த் தன்மையை வற்புறுத்த முயன்ற சில இயக்கங்களை தொழிற்சங்கத் தலைமை அழித்தொழித்து விட்டன என்று திரு.பெ. முத்துலிங்கம் கூறுகின்றார். அதில் நிறைய உண்மை உண்டு. அது மாத்திரமல்ல, தோட்டப் பாடசாலை களின் கல்வி முன்னேற்றத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் மறைமுகமாக தடை செய்கின் றார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இந்நிலையில், பண்பாட்டு பேணுகை என்பது ஒரு மறைமுகமாக அரசியல் சூழ்ச்சி யாக கூட மாறலாம். மாற்றங்களை வர வேற்பதும், அந்த மாற்றங்களினூடே மரபு தொடர்ச்சியைப் பேணுவதும் பண்பாட்டின் பயன்பாடாகும்.
அடுத்து மதத்தின் முக்கியத்துவம் பற்றி நோக்குவோம். முற்றிலும் தொழில்நுட்ப, கைத்தொழில் மயப்பட்ட சமூகங்கள் தவிர்ந்த மற்றைய சமூகங்களில் மதம், பண்பாட்டின் பிரதான தளமாகும். கைத்தொழில் மயமாக்கப் பட்ட சமூகங்களிலும் மதம் உண்டு. ஆனால் மதச்சார்பின்மையே சமூக நியமங்களை வழி நடத்தும். பாரம்பரிய, மரபு, வழி சமூகங்களில் மதம் முக்கிய இடம்பெறும். இது ஒரு சமூக வியல் இயல்பு. பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, பர்மா போன்ற நாடுகளில் இந்த பண்பைக் காணலாம்.
பெருந்தோட்டத்துறையில் பாரிய கைத் தொழில் மாற்றங்கள் இடம்பெறாது மனித உழைப்பையே அது சுரண்டுவதாக அமை கிறது. இதனால் அந்த சமூக அமைப்பும் அப்படியே பேணப்படுகிறது. அதனையே தொழிற்சங்க அமைப்புகளும் விரும்புகின்றன. தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டங்களில் கைத்தொழில் முன்னேற்றத்திற்கோ, தொழில் முறை அமைப்பிற்கோ வழிவிடுவதில்லை.

க: சிக்கல்களும், சவால்களும்
9
இதனால் மதம் முக்கியமாகிறது. பெருந்தோட்ட நிலையில் மத வழிபாட்டை
மூன்று நிலைப்பட எடுத்து கூறலாம். 1. சாதி நிலைப்பட்டது
(உ-ம்) மதுரை வீரன் வழிபாடு 2. தொழில் நிலைப்பட்டது
(உ-ம்) ரோதமுனி 3. பொதுப்படையான வழிபாடு, அதிலும்
மாரியம்மன் போன்ற வழிபாட்டு முறைகளே முக்கியத்துவம் பெறும். இருப்பினும் தோட்ட நிலைகளில் முருகன், பிள்ளையார் வழிபாடும் உண்டு.
ஊட
சற்று ஊன்றி நோக்கும் போது பொழுது தான் மத வழிபாட்டின் ஊடாகவே பல புது நிலைப்பட்ட மாற்றங்களை அறிந்து கொள் கின்றனர் எனலாம். கோவில்கள் நவீன மயப் பாட்டுக்கு வருவதை கும்பாபிஷேகம்
மூலமாக காணலாம்.
இன்னொரு முக்கிய உண்மை இந்த மதவழிபாட்டு நிலையே பெருந்தோட்டத் தொழிலாளர்களை மலையகத்து நகர்புறங் களுக்கு கவர்ந்திழுக்கின்றது. என்பதாகும். பெருந்தோட்ட பகுதிகளின் நகர்ப் புறங்கள் இரண்டு விடயங்களில் பண்பாட்டு மாறு நிலைகளுக்கு உதவுகின்றன. முதலாவது நகர்ப்புறத்து கோவில்களை சொல்லலாம். உதாரணம் நாவலப்பிட்டி, ஹட்டன், பதுளை, மாத்தளை, பண்டாரவளை, கண்டி போன்ற வற்றை குறிப்பிடலாம்.
இரண்டாவதாக கனிஷ்ட, இடைநிலை கல்விக்கான பாடசாலைகள் (கல்லூரிகள்) நகர்புறங்களிலேயே உள்ளன. கதிரேசன் கல்லூரி, சென்ஜோன் பொஸ்கோ, சென்மேரிஸ் - பொகவந்தலாவை, சென்மேரிஸ் - பண்டார வளை, ஹட்டன்- ஹைலன்ட்ஸ், பதுளை - சரஸ்வதி போன்றவற்றை குறிப்பிடலாம்.

Page 12
10
அர
இவை மூலம் ஏற்படும் புதிய பண்பாட்டு பரிமாணங்கள் முக்கியமானவையாகும். ம நிலைப்பட்ட முறைமைகளில் நவீன மயம் பாட்டின் வெளிப்பாடான சமஸ்கிருத நெறி படுகையை தோட்டத்துக் கோவில்களிலும் நகர்ப்புறத்துக் கோவில்களிலும் காண. கூடியதாக உள்ளது. (குருக்கள் பூசை செய்தல் கும்பாபிஷேகம் செய்தல், மஹோற்சவங்கள் நடத்தல் போன்றவை)
மலையகத்திலே பாரிய மத நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று உரத்து கூறப்படும் வேளையில், மலையக மத/கலை பண்பாட்டின் பிரதான வெளிப்பாடுகளால் காமன் கூத்து, அருச்சுணன் தபசு ஆகியலை போற்றப்படுவது பற்றிய பேச்சையே கான முடியாதுள்ளது. இது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
கல்வி நிலையில் மிக முக்கியமான ஒரு தொழிற்பாட்டினை காணலாம். மலைய. பாடசாலைகள் எல்லாவற்றிலும் இந்து மதத்தை பொறுத்தவரையில் 'சைவ நெறி' என்ற பாட புத்தகத் தொடரே பயன்படுத்தப்படுகிறது இது மட்டக்களப்பு, திருமலை, மன்னார் சிலாபம் பகுதிகளிலுள்ள ஆகம வழிசாரா
வழிபாடுகளை கணக்கில் கொள்ளவில்லை என்ற குறைபாடு ஏற்கனவே உள்ளது. யாழ் பாணத்தில் கூட தொண்டமானாறு செல்க சந்நிதி போன்ற மிக சில கோவில்களை தவி மற்றும் படி 'சைவ' நிலைப்பட்ட கோவில் களையே விதந்து கூறுகின்றது என்ற குற்ற சாட்டு உண்டு. மலையகத்தை பொறுத், வரையில் இந்த பாடப் புத்தகங்களிலே காணப்படுபவை அந்த மாணவர்களின் ம அனுபவ உலகிற்கு முற்றிலும் அப்பா பட்டவை என்று சில அறிஞர்கள் கூறுகி றார்கள். இந்த விடயத்தில் கவனஞ் செலுத்த படாமல் இருப்பதனால் மலையகத்து வழிபாட்டு மரபுகள் பலவற்றை வருங்காலி மலையக தலைமுறையினர் மறந்து போகலாம்

ரத்தம் - 3
Oாக
பி.
3
நி மத விடயத்தில் மலையகத்தில் இன்று த நடைபெறும் மத மாற்றங்களும், இடம்பெறும் - புதிய இந்து இயக்கங்களும் மலையகப் ப் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு பெரும் சவாலாக ), அமைந்துள்ளது என்றே கூற வேண்டும். க் மலையக அடிநிலைத் தமிழரின் கல்விப் பற்றி ), மலையக அரசியல் தலைவர்கள் சிரத்தை ர் காட்டாது இருப்பதால் மலையகத்தில் தமிழ்
மொழி வழிக்கல்வி பலவீனப்பட்டுள்ளதை பல இடங்களிலே காணலாம். பெரும்பாலான
மலையகத் தமிழ் மாணவர்கள் சிங்கள மொழி D மூலமே கல்வி கற்க வேண்டிய தேவை
ஏற்பட்டு வருவதையும் காணக் கூடியதாக உள்ளது. இவற்றுக்கு மேலாக சில நகர்ப் T புறங்களிலே காணப்படும் இன்டர் நெஷனல் ந (சர்வதேச) பாடசாலைகள் ஆங்கில மொழி
மூலமாக கல்வி கற்பிக்கின்றோம் எனும் நகைப்புக்கிடமான விநோதமும் காணப் படுகிறது. ஆங்கில மொழி வழி கல்வி எந்த மட்டத்தில் அவசியம் என்பதே வினா? இவ்வாறு நோக்கும் பொழுது மலையகத்தின் பண்பாட்டுப் பேணுகை என்பது இன்று ஆழமாக சிந்திக்கப்படாத ஒரு வாய்ப்பாட்டு கோஷமாகவே உள்ளது. இந்த விடயத்தில் மலையகப் புத்திஜீவிகளின் பொறுப்பு மிக
முக்கியமானதாகும்.
மேலே ஏறிவிட்டவன் ஏணியை மறக் கலாம். ஆனால் இனிமேல் ஏற இருப்பவர்க 5 ளுக்கு அந்த ஏணி முக்கியம். மலையகத்தின் ச் நவீனமயமாக்கம் மலையகத்தின் பண்பாட்டு
மரபை மறந்துவிட்டால் மலையகத்தின் தனித் துவத்துக்கான தொடர்ச்சி இழக்கப்பட்டுவிடும்.
ந க
த
த

Page 13
எங்களின் தேவை இறந்த கடலா - உயிர்க்கடலா பொ. ஐங்கரநேசன்
சுற்றுச் சூழல் பற்றிய மக்களின் விழிப் புணர்வையும், அரசுகளின் கரிசனையையும் செயற்பாட்டையும் வேண்டி ஜுன் 5 ஆம் திகதியை உலக சுற்றுச்சூழல் தினமாக (World environment day) ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு வருடமும் அக்காலப்பகுதியில் முன்னுரிமை பெற வேண்டிய சூழற் பிரச்சினைகளை அடையாளங் கண்டு கவனம் கொள்கிறது. 1970 களில் இருந்து கடந்த மூன்று தசாப்த காலத்தில் கடல்களிலும், சமுத்திரங்களிலும் சூழல் மாசு பாட்டால் ஒட்சிசன் பற்றாக்குறைவு ஏற்பட்டு உயிர்விட்ட 'இறந்த வலயங்கள்' (Deadzones) எண்ணிக்கையிலும் பரப்பளவிலும் அதிகரித் திருப்பது தெரிய வந்திருப்பதையடுத்து 'கடல்களும் சமுத்திரங்களும் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 'தேவை! கடல்களும் சமுத்திரங்களும்: பிணமாகவா - உயிருடனா?' (Wanted! Seas and Oceans: Dead or Alive ) என்பது கருப் பொருள் ஆகியுள்ளது.
விண்ணில் நிலவைக் கையகப்படுத்திய மனிதனுக்கு அவன் அருகில் உள்ள கடல் இன்னும் பிடிபடாத, மர்மம் நிறைந்த ஒன்றாகவே விளங்குகிறது. சந்திரனின் தரையை அறிந்த அளவுக்கு, விண்மீன்களைக் கணக்கிட்ட அளவுக்கு இன்னமும் கடலின் தரையை, மீன்களின் வகையை அறிய முடிய வில்லை. இருந்தாலும் கடலின் உயிர்ப்பைப் புரிந்து கொள்வதற்கும், கடல் சாகத் தொடங்கி யிருப்பதை உணர்ந்து கொள்வதற்குமான போதிய ஆதாரங்களைச் சுற்றுச் சூழலிய லாளர்களும் இயற்கை விஞ்ஞானிகளும் திரட்டியுள்ளார்கள். அப்படியான ஐம்பது திறவுகோல் உண்மைகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

1. சமுத்திரங்கள் பூமியின் மேற்பரப்பின் 70 சதவீதமான அளவை மூடிக் காணப்
படுகின்றன. 2. பூமியின் உயிர்த்திணிவில் (Biomass) 90
சதவீதத்திலும் அதிகமான அளவு சமுத்
திரங்களிலேயே உயிர் வாழுகின்றன. 3. உலகின் பெருநகரங்களில் நான்கில்
மூன்று பங்கு கடலை அண்மித்தே இருக்கின்றன. உலக சனத்தொகையில் 40 சதவீதமான வர்கள் கடற்கரையில் இருந்து 60 கிலோ மீற்றர்கள் தூரத்துக்குள் வாழ்கிறார்கள் 5. 2010 ஆம் ஆண்டளவில் 80 சதவீத
மான மக்கள் கடற்கரையில் இருந்து 100 கிலோமீற்றர்கள் தூரத்துக்கு உள்ளாகவே
வாழ்கிறார்கள் 6. கடல்களிலும், சமுத்திரங்களிலும் காணப்படும் மாசுக்களில் 80 சதவீத மானவை நிலம் சார்ந்த செயற்பாடு
களினாலேயே உண்டாகின்றன. 7. கடற்கரை நீர் மாசுபாட்டால் ஏற்படும்
நோயினாலும், இறப்பினாலும் உலகப் பொருண்மியத்தில் ஆண்டு தோறும் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுகிறது. மாச டைந்த கடல் உணவுகளை உட்கொள் வதால் உண்டாகும் ஈரலழற்சி (Hepatitis) நோயின் வருடாந்த பொருளாதார தாக்கம் மட்டும் 7.2 பில்லியன் டொலர்கள் ஆகும். ஆண்டுதோறும் தொன்கணக்கில் கடலை வந்தடையும் பிளாஸ்ரிக் கழிவுகளால் கடல் உயிரினங்கள் அழிகின்றன. அழியாத பிளாஸ்ரிக் சூழற்தொகுதி

Page 14
அர்
மீந்திருந்து திரும்பத் திரும்ப இந்த உயிரினப் படுகொலையை நிகழ்த்தி
வருகிறது. 9. பிளாஸ்ரிக் கழிவுகளால் சுமார் 1 மில்லியன் கடற் பறவைகளும், : இலட்சம் கடற்பாலூட்டி விலங்குகளும் எண்ணுக்கணக்கில்லாத மீன்களும்
ஆண்டு தோறும் பலியாகி வருகின்றன 10. கடலில் சேரும் மிதமிஞ்சிய போசணைப்
பொருட்களால், குறிப்பாக விவசாய உரங்களில் இருந்து பெறப்படும் நைதரச் னினால் பல்கிப் பெருகும் பாதகமான அல் காக்கள் ஒட்சிசன் வாயுவைப் பயன்படுத்தித் தீர்க்கின்றன. இதனால் உலகம் பூராவும் 150 வரை யான கரை யோரப் பகுதிகள் ஒட்சிசன் பற்றாக் குறைவான 'இறந்த வலயங்கள்' (Dead
zones) ஆகியுள்ளன. 11. நாடுகளுக்கிடையேயான வாணிபத்தில்
90 வீதத்துக்கும் அதிகமான பொருட்கள் கடல் மார்க்கமாகவே எடுத்துச் செல்லப்
படுகின்றன. 12. உலகம் நுகரும் எண்ணெயில் 60 வீத
மான அளவு - ஏறத்தாழ 2000 மில்லியன் தொன்கள் எண்ணெய் தாங்கிக் கப்பல் களினாலேயே காவப்படுகின்றது. - 13. கப்பல் தாங்கிகளில் இருந்து கழுவி
அகற்றப்படும் எண்ணெய், தெருக்களில் சிந்தும் எண்ணெய் தொழிற்சாலை கழிவுகளாக வரும் எண்ணெய் என 2: மில்லியன் பீப்பாய்கள் அள விலான எண்ணெய் ஆண்டுதோறும் கடலில்
கலக்கின்றது 14. கடந்த பத்தாண்டுகளில் ஆண்டு தோறு.
சராசரியாக 600,000 பீப்பாய்கள் எண்ணெய் கப்பல் விபத்துக்களில் மூலம் கடலில் சேர்ந்துள்ளது. இது 200) ஆம் ஆண்டில் 'பிறிஸ்ரிஜ் எண்ணெய் தாங்கிக் கப்பல் மூழ்கிய தால் கடலில்

ந்தம் - 3
5
கலந்த எண்ணெயின் அளவைப் போல
12 மடங்குகள் ஆகும். 15. ஒவ்வொரு வருடமும் 10 பில்லியன் தொன்கள் அளவு கடல் நீர் கப்பல்களில் அடித்தள நீராக (Ballast water) எடுத்துச் செல்லப்பட்டு அந்நிய கடற்பரப்பில் திறந்து விடப்படுகிறது. 16. கப்பல் அடித்தள நீரில் காணப்படும்.
மட்டி (Zebra mussel), ஜெலிமீன் (comb jelly fish) போன்ற இனங்கள் அடித்தள நீர் வெளியேற்றப்படும் புதிய சூழலில் உள்ள இனங்களையும், உள்ளூர்ப் பொருண்மியத்தையும் பாதிக்கும் வகை
யில் பெருக்கமடைகின்றன. [ 17. சூழல் மாசு, அயல் இனங்கள் (exotic
species), கரையோர வாழிடங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் போன் றவை மிக முக்கியமான கடற் சூழற் தொகுதிகளான கண்டற் காடுகள் (Mangroves) முருகைக் கற்பாறைத்
தொடர்கள் (aral reefs).... 18. முருகைக் கற்பாறைத் தொடர்கள் உலகில் 109 நாடுகளைச் சூழ (பெரும் பாலானவை அபிவிருத்தி அடையாத நாடுகள்) தடுப்பு அரண்களாக விளங்கு கின்றன. இவை கடல் அலைகள் புயற் கொந்தளிப்புக்களைத் தாங்கி கரை யோரம் வாழ் மக்களுக்குப் பாதுகாப்
பளிக்கின்றன. - 19. சமுத்திரத் தரைப்பரப்பில் 0.5 வீதத்
துக்கும் குறைவான இடத்தையே முருகைக் கற்பாறைகள் எடுத்திருந் தாலும், கடல் வாழ் உயிரினங்களில் 90 வீதத்துக்கும் அதிகமான இனங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ
இந்த பாறைகளிலேயே தங்கியுள்ளன. P 20. ஏறத்தாழ 4000 மீன் இனங்கள் முருகைக்
கற்பாறைகளுக்குரிய இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது

Page 15
எங்களின் தேவை இறந்த
கடல்மீன் இனங்களில் கால்வாசிப் பங்கு
ஆகும். 21. 2,000 கிலோ மீற்றர்கள் நீளத்துக்குக் காணப்படும் 'பாரிய தடுப்புக் கற் பாறைத் தொடர்' (Great Barrier Reef) எனப்படும். அவுஸ்திரேலியாவில் உள்ள முருகைக்கற்பாறைத் தொடரே உலகின் மிக நீளமான உயிர்வாழும் அமைப் பாகும். இதனைச் சந்திரனில் இருந்தே
பார்க்கமுடியும். 22. முருகை கற்பாறைகள் 93 நாடுகளில்
குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குத் தரம் இழந்துள்ளன. உலகில் மீந்திருக்கும் பவளப்பாறைகளில் 60 வீதமானவை வரும் 30 ஆண்டுகளுக்குள் பாரிய அழிவைச் சந்திக்கும் அபாயத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 23. புவியின் மீது மிகவும் அதிக அளவில் உயிரினங்களைக் கொண்டுள்ள தென் கிழக்காசியாவின் முருகைக்கற்பாறைத் தொடர்கள் வேறு எந்தப் பிராந்தி யத்திலும் பார்க்க மிகவும் அதிக அளவில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி யுள்ளன. இங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான பாறைகள் ஆபத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 24. முருகைக்கற்பாறை நலிவடைவதற்கான காரணிகளில் கரையோர அபிவிருத்தி, வண்டல் படிவு, அழிவைத் தரக்கூடிய மீன்பிடி முறைகள், சூழல் மாசடைதல், உல்லாசப் பயண ஊக்குவிப்பு, பூமி வெப்பமடைதல் போன்றவை பெரும் பங்காற்றுகின்றன. 25. கடல்நீர் வெப்பமடைவதால், அ தி
ஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் முருகைக்கற் பாறைகளில் இருந்து அல்காக்கள் வெளியேறிப் பாறை நிறமிழக்கும் தோற்றப்பாடு 'முருகை வெளிறல்' (Coral bleaching எனப் படுகிறது. முருகைக்கற்பாறைகள் எதிர்

கடலா- உயிர்க்கடலா?
நோக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் இதுவேயாகும். அல்காக்களின் உண வூட்டல் இன்றி வெளிறிய பாறைகள் இறுதியில் இறக்கின்றன. 1978 இல் 75 வீதமான பாறைகள் வெளிறுதலால் பாதிப்படைந்துள்ளது. 16 வீதம்
உயிர்ப்பை இழந்துள்ளன. 26. தட்ப - வெப்பநிலை மாற்றம் முருகைக் கற்பாறைகளுக்குப் பெரும் அச்சுறுத்த லாக இருக்கும் அதேசமயம், வளர்ந்து வரும் சிறு தீவு அரசுகளின் நொய்ந்த பொருண்மியத்திலும் பேரழிவை உண்டு பண்ணுகின்றது. 27. சராசரிக் கடல் மட்டம் கடந்த 100
வருடங்களில் 10 தொடங்கி 25 சதம் மீற்றர்களால் உயர்ந்துள்ளது. உலகின் பனிக்கட்டிகள் உருகுமானால் சமுத் திரங்கள் 66 மீற்றர்களால் உயர்
வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது 28. பசுபிக் கடலோரத்தின் 60 சதவீதமும்,
அத்திலாந்திக் கடலோரத்தின் 35 சதவீதமும் ஆண்டுக்கு ஒரு மீற்றர் என்ற
அளவினால் பின்வாங்கிச் செல்கிறது. 29. நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கான
உலக உச்சிமாநாட்டில் (World summit on sustainable development-WSSD) முன் மொழியப்பட்ட 'அமுலாக்கல் திட்டம் - 2004 ஆம் ஆண்டளவில் கடல் மதிப் பீடுகளையும் 2012 ஆம் ஆண்டளவில் பாதுகாக்கப்பட்ட கடற்பரப்புகளின் வலைப்பின்னலமைவிலான வளர்ச்சி
யையும் கோருகிறது. 30. நிலப்பரப்பில் 11.5 சதவீதமான பிர
தேசங்கள் பாதுகாக்கப்பட, கடல் வாழி டத்தில் பாதுகாக்கப்படும் பகுதியின் அளவு 0.5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. 51. தேசிய கடல் எல்லைகளுக்கு அப் பாலான ஆழமான கடற்பகுதி பூமியின் மேற்பரப்பில் 50 வீதமான பகுதியை

Page 16
அ
மூடியுள்ளது. இதுவே உலகின் மிக. குறைந்த பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாகும். 32. திமிங்கிலங்கள் போன்ற இனங்களை
பாதுகாப்பது தொடர்பான ஒப்ப தங்கள், சில மீன்பிடி உடன்படிக்கை களைத் தவிர ஆழ்கடலில் பாதுகா. கப்பட்ட வேறு பகுதிகள் இல்லை என்றே சொல்லலாம். 33. இக்கட்டான நிலையில் இருந்து பாத காக்கப்பட்டு வருகின்ற கடல்சா வாழிடங்களான முருகைக் கற் பாறை கள், கடற்புற்படுக்கைகள், கண்டற்கா( கள் ஆகியவற்றில் மரபுசார் மற்றும் வணிக ரீதியான மீன்பிடிக்கு நன்டை கிடைக்கும் அளவுக்கு மீன்கள் எண்ணிக்கையிலும், பருமனிலும் பெரிய அளவில் அதிகரித்து வருவது தெரிய
வந்துள்ளது. 34. உலகில் 90 வீதமான மீனவர்கள் சிறிய - சுதேசிய முறையான மீன்பிடி முறைகளையே கையாளுகின்றனர் உலகில் பிடிபடும் மீன்களில் அ ை வாசிக்கும் மேலானவை இவர்கள் லேயே பிடிக்கப்படுகின்றன. 35. உலக அளவிலான மீன்பிடியில் 9!
வீதமானவை - ஏறத்தாழ 80 மில்லியல் தொன்கள் மீன்கள் கடற்கரையை அண்டிய பகுதிகளிலேயே பிடிக்கப் படுகின்றன. 36.3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்
தங்கள் பிரதான உணவின் மூலமாக கடலையே நம்பியுள்ளனர். இன்னும் இருபது வருடங்களில் இந்த என்
ணிக்கை 7 பில்லியனாக இரட்டிக்கும் 37. உலக மீன் அறுவடையில் அரை வாக்
யளவைப் பெற்றுத்தரும் மரபுசார் மீல் பிடி சமூகத்தவர்கள் சட்ட முரணான ஒழுங்கமைக்கப்படாத அல்லது மானிய

ர்த்தம் - 3
சி' சி 5. L•
9 9 9. 2
4' b
E
க் உதவி பெறும் வர்த்தக வள்ளங்களால்
அச்சுறுத் தலுக்கு ஆளாகின்றனர். 38. உலக கடல் சார்மீன்பிடிப்பகுதிகளில் ப் 70 சதவீதத்துக்கும் அதிகமான இடங் ந் களில் தாக்குப்பிடிக்கக் கூடிய எல்லை
வரை அல்லது அதற்கும் அப்பால் க்' பிடிக்கப்படுகிறது. ல 39. வர்த்தக ரீதியாகப் பெறுமதிமிக்க பாரிய
மீன்களான tuna, cod. sword. fish. marli
ஆகியவற்றின் எண்ணிக்கை கடந்த ர் நூற்றாண்டில் 90 சதவீதத்தால் வீழ்ச்சி
கண்டுள்ளது. தி 40. 2015 ஆம் ஆண்டளவில் ஒரு அவசர
கால அடிப்படையில் எங்கே சாத்தி யமோ அங்கு மீனின் கையிருப்பைப் பேணுவது அல்லது குறைந்து சென்ற மீன் இருப்பைத் தாக்குப் பிடிக்கக் கூடிய உச்ச அளவுக்கு உயர்த்துவது என்று நாடுகளின் அரசாங்கங்கள் நிலைத்து
நிற்கும் அபிவிருத்திக்கான உச்சி +
மாநாட்டில் ஏற்றுக் கொண்டுள்ளன. 41. நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கான
உச்சிமாநாட்டின் அமுலாக்கல் திட்டம் T
அழிவு தரக்கூடிய மீன்பிடி முறை களையும், மற்றும் சட்ட பூர்வமற்ற, அறிவிக்கப்படாத, ஒழுங்கமைக்கப் படாத மீன்பிடியை ஊக்குவிக்கும்
மானியங்களையும், நீக்கக் கோருகிறது. ப் 42. அரசாங்க மானியங்கள் - இது
ஆண்டொன்றுக்கு 15 தொடங்கி 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது - உலக மீன்பிடித் தொழிலுக்கு 20 சதவீத வருமானத் துக்குக் காரணமாக இருக்கும் அதே சமயம் அளவுக்கு மிஞ்சிய மீன்
பிடித்தலையும் ஊக்குவிக்கிறது. எ 43. அழிவை ஏற்படுத்தக்கூடிய மீன்பிடி
முறைகளால் பல ஆயிரக்கணக்கான கடல் வாழ் இனங்கள் ஆண்டுதோறும் கொல்லப்படுவதுடன், கடலின் அடித்
ர
9 U1 = 4 ..'
11 • 40'

Page 17
எங்களின் தேவை இறந்த
என்
தள் வாழிடங்களும் மிகவும் மோசமாக
சேதமாக்கப்படுகிறது. 44. சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் நீள்வரிசைத் தூண்டில் வலை யின் ஆயிரக்கணக்கான வசிய இரைத் தூண்டில்களில் கொழுவி ஆண்டு தோறும் 300,000 க்கும் அதிகமான கடற்பறவைகள் பலியாகின்றன. இதில் 100,000 வரையான அழிந்து செல்லும் நிலையிலுள்ள கடலின் பெரும் பறவை
யான Albatross உம் அடங்கும். 45. இறைச்சிக்காகவும், 'சூப்' செய்வதற் காக செட்டைகளுக்காகவும் 100 மில்லியன் எண்ணிக்கையான சுறாக்கள் ஒவ்வொரு ஆண்டும் வேட்டையாடப் படுகின்றன. செட்டைகளுக்காக வேட்டையாடுவோர், செட்டைகளை வெட்டியெடுத்த பின்னர் சுறாக்களை உயிருடன் கடலில் வீசிவிட அவை நீந்த முடியாமல் அமிழ்ந்தும், இரத்தப் பெருக் கினாலும் பலியாகி வருகின்றன. 46. தேர்ந்து பிடிக்கும் மீன்பிடி உப கரணங் கள் அல்லாதவற்றில், உதாரணமாக இழு வலை, நீள்வரிசைத் தூண்டில் வலை, செவுள் வலை போன்றவற்றில் ஆண் டொன்றுக்கு 20 மில்லியன் தொன்கள் உப பிடிபாடுகளாக (By-catch) சிக்கு கின்றன. இதனால் கடலின் உயிர் வளத் தில் பாரிய சேதாரம் ஏற்படுகின்றது 47. உப் பிடிபாடுகளாகச் சிக்கி இறக்கும் சிறிய திமிங்கிலங்கள், டொல்பின்கள் மற்றும் கடற்பன்றிகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 300, 000க்கும்
அதிகம் ஆகும். 48. உலக அளவில் நுகரப்படும் கடல்வழி
உணவில் கடலில் பிடிக்கப்படும் இறால் களின் பிரதிநிதித்துவம் 2 சதவிகிதம் மட்டுமே. ஆனால் கடலில் இறால் பிடிப்பில் மூன்றில் ஒரு பங்கு உப பிடி பாடுகளாகும். இடைவெப்பப் பகுதி

கடலா- உயிர்க்கடலா?
களில் இந்த உப் பிடிபாடுகள் ஒரு இறாலுக்கு 5 தொடங்கி 10 என்ற எண்ணிக்கையிலும் வெப்பப் பகுதிகளில்
இன்னும் அதிகமாகவும் இருக்கிறது. 49. பண்ணை முறையில் இறால் வளர்ப்பது
கூட நாசகரமானது. இரசாயனங்கள், உரங்களின் மூலம் நீரை மாசடையச் செய்வதுடன் உலகின் கால்வாசிப்பங்கு கண்டற் காடுகளின் அழிவுக்கும் காரண
மாக அமைகின்றது 50. அயன மண்டல நாடுகளில் கண்டல்
காடுகள் 85 வீதமான வர்த்தக மீன் இனங்களின் வளர் இடங்களாக விளங்கு கின்றன.
நாம் நில வாழ்க்கைக்குத் தகவமைக் கப்பட்டபோதும் கடல்தான் எமது தாய் மடி உலகின் முதல் உயிரி கடலில் தோன்றியது என்ற அடிப்படையில் எமது நாடி நாளங்களில் கடல் நீர் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் உறவை மறந்து, பேராசை மிக்க நுகர்வுப் போக்கினால் கடலையே கருவாடாக்க எத்தனித்து வருகிறோம். நிலத்தில் இருந்து கடலுக்கு கழிவுகளை இறைத்துக் கொண்டிருக் கிறோம். கடலின் ஆரோக்கியம் நிலத்தினது ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. இரண்டினது ஆரோக்கியமுமே பூமி என்னும் உடலுக்கு உயிரை ஊட்டிக் கொண்டிருக்கிறது. எமது கடல் வளங்களைக் காப்பாற்றுவதற்காக இப்போதே செயற்படப் போகிறோமா?
அல்லது அவற்றின் செழிப்புமிக்க உயிர்ப் பல்வகைமை மீளமுடியாத எல்லைக்குள் வீழ்ச்சி யடைவதைப் பார்த்திருக்கப் போகிறோமா? தெரிவு எங்களிடமே!
தகவல் மூலம்: UNEP, IVCN

Page 18
மலேயா ஓய்வூதியக்காரர்
அழகு சுப்பிரமணியம்
யாழ்ப்பாணத்துப் புத்திஜீவிகள் உணவுண்ணு விடுதி ஒன்றினுள் நுழைந்தேன். சேற்றுநி முகத்தையுடைய ஒருவர் பல்லிளித்துக்கொண் என்னை நோக்கி ஓடிவந்தார்.
'நான் உணவுண்பதற்கு நண்பரொருவரை தேடிக் கொண்டு இருந்தேன்' என்று கூறி கொண்டு எனது கைகளைப் பற்றினார். 'உர களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வோம் நீங்கள் ஐரோப்பிய தேசங்களுக்குப் பிரயாண செய்துள்ளீர்கள். நான் தூரகிழக்கு நாடுகள் பலவற்றிற்குச் சென்றிருக்கிறேன். எங்கம் பிரயாண அனுபவங்களை ஒப்புநோக்குவோம் என்று கூறியபடி உணவு விடுதியின் ஓரத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார். சிறிய மே ை யொன்றின் முன் நாங்கள் அமர்ந்தோம் புகைபோக்கியின் அருகிலிருந்த அந்த இடம் ஒரே இரைச்சலாக இருந்தது.
'இந்த நாட்டில் உள்ளோர் உரத்த குரலி பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நாங்க அப்படியல்ல. பரந்த உலகின் பல பாக களுக்கும் நாங்கள் சென்றிருப்பதால் நாங்க பண்பட்டவர்களாக இருக்கிறோம்' என்றார்
நான் பரிசாரகனைக் கூப்பிட்டேன் அவரோ என்னை உடனே தடுத்தார்.
'நீங்கள் அவனைக் கூப்பிடக்கூடாது உங்களிடம் வந்து கேட்க வேண்டியது அவர் டைய கடமை. அவன் வருவதற்குப் பிந்தினா நீங்கள் கூப்பிடுவதில் தவறில்லை. 'ம ை முஹமதிடம் வருவதற்கு மறுத்தால் முஹம்ம மலையிடம் செல்ல வேண்டும். 'இந்தக் கோ பாடு எப்படியிருக்கிறது?' என்று கேட்டார்
'பிரமாதமான, மிகப் பொருத்தமா கோட்பாடு' என்றேன்.

.
2 ச• ச•
ம் 'விதா
6' .
இந்தக் கோட்பாட்டை எங்கிருந்து ற பெற்றேன் தெரியுமா? புத்தகங்களை > வாசித்து இதனை நான் அறியவில்லை. நீர்
ஒரு சுற்றுப்பயணியாக இருந்தால் புத்தகங் களை வாசிக்கவேண்டிய அவசியமில்லை.
பிரயாணங்கள் எவ்வளவோ அறிவினைத் ங் தருகின்றன. உங்களிடம் கூட ஒரு குறை
யிருக்கிறது. நீங்கள் தூர கிழக்கு நாடுகளுக்குப் ... பிரயாணம் செய்யவில்லை'
'விரைவில் அக்குறையை நிவர்த்தி ள் செய்யவிருக்கிறேன்' என்று கூறினேன். ள் 'அற்புதமான யோசனை. நீங்கள் அங்கு P' செல்லும்போது என்னைக் கலந்தாலோசிக்க த மறக்க வேண்டாம். பாங்கொக் , கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங் ஆகிய இடங்களில் தங்கு வதற்கு உரிய ஒழுங்குகளை நான் செய்து தருகிறேன்'
'மிகவும் நன்றி' என்றேன்.
பரிசாரகன் எங்களை நோக்கி அலட்சிய மாக நடந்து வந்தான். எனது நண்பர் அவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டார். அதுபற்றி அவன் அக்கறை கொள்ளவில்லை. உணவு வகைகள் மிகவும் சுவையாகவிருந்தன.
'சுவையான உணவுகளுக்கு இது புகழ் பெற்ற உணவுச்சாலை' என்றேன்.
- 'இதுவுமொரு உணவா?' அவர் என்னைக் கேலிசெய்தார். 'மலேயாவில் பேர்க்ஷயர் பன்றிக் கறியைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதுவல்லவா உணவு'
பின்பு மலேயாவின் புகழ்பெற்ற உணவான 'சாற்றாய்' என்பதைப்பற்றிக் கூறினார். இறைச்சித் துண்டுகளைச் சிறிதாக வெட்டி உறைப்பான ஆணத்திலிட்டுத்
ல்
.E
: 65 R ?
T் 2
து

Page 19
மலேயா ஓய்
தயாரிக்கப்பட்ட உணவு அது. மேலும் பல வகையான சீன, பாங்கொக் உணவு வகை யறாக்களைப் பற்றி விபரித்தார். தூரகிழக்கு நாடுகள் உணவுப்பிரியர்களின் சொர்க்கம் என்று கூறினார். எனக்கு நாவூறியது. சிறிது தண்ணீரைப் பருகி அதனைத் தீர்த்துக் கொண்டேன் நண்பர் தொடர்ந்தார்.
''நான் மலேயாவிலிருந்து ...... நில அளவையாளன் நான்."
எமக்கிடையில் ஒரு சிறு பிணைப்பு ஏற்படுவதை நான் உணர்ந்தேன். எனது மைத்துனர் ஒருவர் மலேயாவில் வாழ்ந்தார். 'தம்பத்தான்' என்று அவரை அழைப்போம். எனது சிறு பிராயத்து நிகழ்வுகள் நினைவு வந்தன. தம்பத்தான் பிறர்மேல் அன்பும், கருணையும் உள்ளவர். மலேயாவி லிருந்து வரும்போது உறவினர்களுக்கும் நண்பர் களுக்கும் சீனப்பட்டுத் துணிகளைக் கொண்டு
வந்து இலவசமாகக் கொடுப்பார்.
நில அளவையாளர் எனது சிந்தனையைக் கலைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
'ஒருநாள் நான் கை கழுவுவதற்காகச் சென்று கொண்டிருந்த போது, எனது வெள்ளைக்கார மேலதிகாரி பின்னால் வந்து 'திரு பிள்ளை அவர்களே, ஒரு முக்கியமான விஷமாக உங்களைக் காணவேண்டியுள்ளது' என்று கூறினார். அதற்கு நான், 'எனது பிரத்தியேக நேரத்தில் யாரையும் பார்க்க விரும்பவில்லை' என்று மட்டும் கூறினேன். அத்துடன் வெள்ளைக்காரத் துரை அடங்கி விட்டார்'
'வெளிநாட்டுப் பயணங்களின் பின்னர் இந்த இடம் உங்களுக்குப் பெரிதும் சலிப் பூட்டியிருக்குமே?' என்று கேட்டேன்.
'சலிப்புடன் சோர்வையும் ஊட்டிவிட்டது. தூரகிழக்கு நாட்டில் நான் இருந்தபோது ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் காபரே நடனத்திற்குச் செல்வேன். எவ்வளவு அழகான இளம் பெண்கள்! பாங்கொக் பெண்களின்

பவூதியக்காரர்.
எடுப்பான மார்புகளையும், பேலின் பெண் களின் கச்சிதமான உடல் அமைப்பையும் நான் முழுக்கப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.' என்று வர்ணித்தார்.
அடுத்த நாள் இராப்போசனத்திற்கு எனது வீட்டிற்கு வருமாறு அவரை அழைத்தேன். 'உங்கள் அழைப்பிற்கு நன்றி, ஆனால் வர . முடியாமலிருப்பதற்கு என்னை மன்னிக்க வும். பெரிய சுல்தான்களோடும், தூங்கு களோடும் உணவருந்திய எனக்குப் பொருத்த மான விருந்தை உங்களாற் கொடுக்க முடியாது ஒருமுறை தூங்கு என்னை விருந்தொன்றிற்கு அழைத்திருந்தார். அவருடைய அற்புதமான மாளிகைக்கு எனது ஏவலாளையும் கூட்டிக் கொண்டு சென்றேன். அவனுக்கென ஒரு சீருடை உண்டு. அதனை அணிந்து கொண்டு எனது கார்ச்சாரதியின் அருகில் அமர்ந்து வந்தான். அவனுடைய தொப்பியில் எனது முதலெழுத்துக்களான 'எஸ். எஸ். பீ வர்ண நூல்களினால் பின்னப்பட்டிருந்தன. தூங்கு வின் பிரித்தானிய விருந்தினர் பலர் அவனைக் கூப்பிட்டு என்னைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவன் 'இப்பொழுது நீங்கள் எஜமானைப் பார்க்க முடியாது. அவர் நெக்கிலி செம்பிலன் சுல்தானுடனும், சரவாக் ராஜா வுடனும் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் விரும்பினால் நாளை அவருடைய அலுவலகத் திற்கு வந்து சந்திக்கலாம் என்று கூறினான். அவனுடைய பதில் எனக்கு மிகத் திருப்தியாக இருந்தது, எனது ஒரேயொரு பலவீனம் உயர்வு மனப்பாங்கேயன்றி தாழ்வு மனப் பாங்கல்ல.'
அப்பொழுது இன்னொரு மலேயா ஓய்வூதியக்காரர் அங்கு வந்தார். எங்களுடன் கலந்து கொள்ளுமாறு அவரை அழைத்தேன். ஒரே நாட்டில் வாழ்ந்த இருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பு வார்கள் என்று நான் எதிர்ப்பார்த்தேன்.

Page 20
'நீர் எங்கெல்லாம் சென்றிருக்கிறீர்' எனது நண்பர் புதியவரைக் கேட்டார்.
'நான் சிறிது காலம் பாங்கொக், கோலால பூர், சிங்கப்பூர், பினாங் ஆகிய இடங்களி! தங்கியிருக்கிறேன்' என்றார் புதியவர்.
'அப்போ நீர் புகையிரத நிலையங்களை மட்டுமே பார்த்திருப்பீர்' என நண்ப குத்தலாகச் சொன்னார்.
'நீர் என்ன சொன்னீர்?'
'உம்மைப் போன்றவர்களை உடன யாகப் புரிந்து கொள்ளலாம். உண்மையாகவே அந்நாடுகளுக்குச் சென்று வந்த மனித உம்மைவிடப் பண்பாடுடையவராக இருப்பா என்றார் எனது நண்பர்.
'மடப்பயலே, என்னையா ஏளனஞ் செப் கிறாய்?' புதிதாக வந்தவர் கொதித்தெழுந்தார்
'நான் நீண்ட தூரம் பிரயாணஞ் செய், நில அளவையாளர். ஆளைப் பார்த்து மா யாதையாகப் பேசப்பாரும் புழுகரே'
நான் எழுந்து குறுக்கிடுவதற்கு முன்னா விஷயம் முற்றிவிட்டது. எனது நண்பர் தனது வலது கை முஷ்டியால் புதியவரின் தாடையில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். அவர் கதிரையுடன் பின்னாற் சாய்ந்து சீமெந்து நிலத்தில் விழுந்தார். பிடரி நிலத்தில் அடிபட்டு மண்டை உடைந்து இரத்தம் பீரிட்டது. தற்செயலா . அங்கு வந்திருந்த பொலிஸ் அதிகாரியொருவ விரைந்து வந்தார்.
'நீர் யார்? எதற்காக இவரை அடித்தீர்?
'நான்தான் எஸ்.எஸ். பிள்ளை ஒல் யாழ்ப்பாணத் தமிழன் மலேயா ஓய்வூதியம் பெறுபவர். தூர கிழக்கின் அரச குடும்பா களுக்கு மிகவும் வேண்டியவர். ஆனால் இந்தக் கர்வம் பிடித்த பயல் புகையிர; நிலையங்களை மட்டுமே பார்த்திருப்பவன் நான் பார்த்த அதிசயங்களை எல்லாம் தானும் பார்த்ததாக ஆணவத்துடன் சொல்கிறா இவன் ஒரு பச்சைப் புழுகன்'

ர்த்தம் - 3
S.
+
: .
தி 5
'அளவிற்கதிகமாக பிரயாணஞ் செய்தமை தான் உம்மைப் பிரச்சினைக்கு உரியவராக்கி விட்டது. நீர் சிறிது காலத்திற்காவது ஒரே யிடத்திலிருப்பதுதான் நல்லது. சிறைச்சாலை யின் ஓர் அறைதான் அதற்கு மிகப் பொருத்த மான இடம். உமது புதிய நண்பர்கள் தூங்கு களாக இருக்கமாட்டார்கள். சமூகத்திற்குத் தொல்லையளிக்கும் உம்மைப் போன்றவர் களாகவே இருப்பார்கள்' என்றார் பொலிஸ்
அதிகாரி.
'விசர்த்தனமாகக் கதைக்க வேண்டாம். அதிக தூரம் பிரயாணம் செய்த என்னைச் சிறைச்சாலையின் தனித்த அறையில் அடைப் பதால் 'கிளஸ் றோபோபியா' நோய் பிடித்து நான் அவதிப்பட நேரிடும்'
'அந்தச் சொல்லைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை' என்றார் பொலிஸ் அதிகாரி - 'உம்மால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? பிரயாணங்கள் தான் ஒருவருடைய சொல்லாட்சியை விரிவுபடுத்தும். பொலிஸ் வ டயறி சொல்லாட்சியை விரிவுபடுத்தமாட்டாது'
'திரு. பிள்ளையவர்களே, நான் உம் முடைய ஏவலானல்ல. ஒரு பொலிஸ் அதிகாரி. உம்முடைய அகராதிகளை நீரே வைத்துக் கொள்ளும். இப்பொழுது நான் உம்மைக் கைதுசெய்கிறேன்' என்றார் பொலிஸ் அதிகாரி.
நண்பருடைய கையைப் பிடித்து அவரை இழுத்துச் சென்றார் பொலிஸ் அதிகாரி. எஸ்.எஸ். பிள்ளை ஹிட்லரின் பாணியில் தனது மறுகரத்தை வீசிக் கொண்டு என்னை
நோக்கிக் கத்தினார்.
'தம்பீ! மிக விரைவில் பாங்கொக், ' கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங் ஆகிய
இடங்களில் உம்மைச் சந்திக்கிறேன்'
பொலிஸ் அதிகாரி நண்பரின் பிருஷ் டத்தில் குறுந்தடியால் ஒரு தட்டுத் தட்டி 'ஊர் சுற்றியாரே, உம்மை அவர் சிறைச்சாலையில் சந்தித்துக் கொள்ளட்டும்' என்றார்.
2 : 9

Page 21
மலையக அரசியல் வரலாற்று
முன்நகர்த்த வேண்டிய பணிக சி.அ. யோதிலிங்கம்
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்றார் சிந்தனை யாளர் அரிஸ்டோட்டில். இதன் அர்த்தம் சமூகத்துடன் இணைந்து கூட்டாகவும் தனியாகவும் வாழ்வதேயாகும். மனிதன் சமூகமாக வாழும் போது தான் கூட்டடை யாளத்தையும் கூட்டிருப்பையும் பேணிக் கொள்ள முடியும். அதன் வழி கூட்டுரிமை களுக்காக போராடவும் முடியும். ஒரு சமூகம் அதன் அடையாளத்தின் பேரால் ஒடுக்கப் படுகின்ற போது அதற்கு எதிராகக் கூட்டுச் செயற்பாடுகள் மூலம் தான் தனிப்பட்ட நலன்களையும் கூட்டு நலன்களையும் பேணிக் கொள்ள முடியும் கூட்டு ரிமைகளைப் போராடிப் பெற்றுக்கொள்ளவும் முடியும். இதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப் பட்ட பொறுப்புகள் இருக்கின்ற அதேவேளை கூட்டுப்பொறுப்பும் இருக்க வேண்டும். இங்கு கூட்டுப்பொறுப்பு என்பது, சமூக நலன்களுக் கான பொறுப்பேயாகும். தன் சமூகத்தில் ஏனையவர்களோடு இணைந்து சமூகத்தின் பொது நலன்களுக்காக உழைக்க வேண்டியது ஒவ்வொருவருக்குமுள்ள தார்மீகக் கடமை யாகும்.
நான் மலையக சமூகத்தை சேர்ந்தவ னல்ல. அதற்கு வெளியில் தனது விடுதலைக் காகப் போராடும் வடகிழக்கு சமூகத்தைச் சேர்ந்தவன். ஆனால், மலையக மக்கள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடையவன், முடிந்தவரை அவர்கள் தொடர்பான தேடல் களை மேற்கொண்டு வருபவன். வடக்கில் குடியேறிய மலையக மக்கள் மத்தியில் புனர்நிர்மாண பணிகளை மேற்கொண்டவர் களில் ஒருவன். எனினும் மலையக மக்களின்

வளர்ச்சியும் ளும்
அபிலாசைகளை அவர்கள் அனுபவித்து வெளிப்படுத்துவது போல ஒரு அகநிலை நின்ற ஆக்கத்தினை கொணர முடியாது. எனவே ஒரு புறநிலையாளன் என்ற வகையிலேயே எனது கருத்துக்களை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கருத்துக்கள் எப்போதும் முடிந்த முடிவுகளல்ல, விவாதங்களுக்கும் கலந்துரை யாடல்களுக்கும் உரியவை. கருத்துகள் மோது கின்றபோதுதான் உண்மைகளை தரிசிக்க முடியும். எனவே என்னுடைய கருத்துக் களையும் விவாதத்திற்கும் கலந்துரையாடல் களுக்கும் எடுத்துக் கொள்ளுமாறும் அதே வேளை தவறுகளை மன்னிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
மலையக மக்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை என்பவற்றை புறரீதியாக எதிர் நோக்குகின்றனர். அதேவேளை மலையக மக்களில் பெரும்பான்மையினர் சாதிரீதியான ஒடுக்குமுறை, உள்ளக வர்க்க ஒடுக்குமுறை என்பவற்றிற்கு அகரீதியாகவும் முகம் கொடுக் கின்றனர். எனவே ஒரே சமயத்தில் இன விடுதலையும் வர்க்க விடுதலையும் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதாவது தேச அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவர்கள் அதே தருணத்தில் சமூக மாற்றத்திற்கான அரசியலையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரே நேரத்தில் புறரீதியான ஒடுக்குமுறைக்கும் அகரீதியான ஒடுக்குமுறைக்கும் எதிராக

Page 22
போராடுகின்றபோது போராட்ட தந்திரே பாயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டி தேவை இருக்கின்றது. ஏனைய தேசங்க ை விட மலையக தேசத்திற்கு இதற்கா கட்டாயம் அதிகமாக இருக்கின்றது. ஏனெனி மலையக மக்களில் பெரும்பான்மையில் அடிநிலை மட்டத்தைச் சேர்ந்த தொழிலான களே! இன விடுதலையையும் பெறவேண்டு அதேவேளை அந்த விடுதலை அடிநின. மக்களையும் போய்ச் சேர வேண்டும்.
ஆனால், ஒரு தேசப் போராட்டம் என்ப அந்தத் தேசம் புறநிலையிலிருந்து வருகின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகு இதனால் வர்க்க, சாதி பிரதேச நிலைக கடந்து தேசத்தின் அனைத்துப் பிரிவினரையு இணைக்க வேண்டிய கட்டாயத் தே ை இருக்கின்றது. அதுவும் சிங்கள தேசத்தினா முற்றிலும் சூழப்பட்ட ஒரு தேசம் வெற் யடைவதற்கு தனது முழு ஐக்கியப் பலத்தைய காட்டவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது இதனால் தான் அனைவரையும் இணைத்து கொள்ள வேண்டிய தந்திரோபாயங்க மலையகத்தின் முன்னணி சக்திகள் கவனத்தி கொள்ள வேண்டும்.
எனது இந்தக் கட்டுரை அக ஒடுக்குமுன் பற்றி அதிக கவனத்தினைக் குவிக்கவில்லை. மாறாக புறரீதியான ஒடுக்குமுறையான இ ஒடுக்குமுறையிலேயே கவனம் செலுத் கின்றது.
இன ஒடுக்கு முறை தொடர்பா மலையகத்தின் இன்றைய அரசியல் நிலைய எதிர்கால பணிகளையும் பற்றி முழுமைய புரிந்துகொள்வதற்கு மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சி அது இன்று வந்தடைந்துள் கட்டம் என்பதை தெளிவாக விளங்கிக் கொ வது அவசியமானதாகும்.
III
மலையக மக்கள் சுமார் 95 வருடங்கள் நீண்ட போராட்டத்தினை நடாத்தி வ

ர்த்தம் - 3
லெ
கின்றனர். அவர்கள் அமைப்பு ரீதியாக
போராட வெளிக்கிட்ட ஆண்டாக 1919 ஆம் ள ஆண்டினைக் குறிப்பிடலாம். இந்த ஆண்டே
சேர். பொன்னம்பலம் அருணாசலமும், பெரிசுந்தரமும் இணைந்து தோட்டத்
தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பினை ார் உருவாக்கி மலையக மக்களின் அன்றாடப்
பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பியிருந்தனர். 1919 ஆம் ஆண்டிலிருந்து 1935 ஆம் ஆண்டு வரை மலையக அரசியலின் முதலாவது கட்டம் எனக் கூறலாம். அன்றைய காலகட்டத்தில் கொடூர ஒடுக்குமுறையாக இருந்த துண்டு முறையினை ஒழிப்பதற்காக ள் இவர்கள் குரல்கொடுத்தார்கள் எனக் கூறப்
படுகின்றது. ஆனாலும் இக்காலகட்டத்தினை வ நகர்த்திய பெருமை நடேசையரையே சாரும். ல் ஏ.ஈ.குணசிங்காவின் தொழிற்சங்கத்தில் றி உபதலைவராக இருந்த அவர் குணசிங்காவின்
இனவாத நடவடிக்கைகளால் அதிலிருந்து விலகி தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான தொழிற் சங்கமான இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட்டார். டொனமூரின் அரசாங்க சபையில் ஹட்டன் தொகுதி உறுப்பினராக 1936 தொடக்கம் 1947 வரை கடமையாற்றியும் இருந்தார். தோட்டங் களுக்கு வெளியார் செல்லக்கூடாது என்ற கட்டளையையும் மீறிச்சென்று தொழிலாளர் களுக்கு விழிப்பூட்டினார்.
1935 தொடக்கம் 1947 வரை மலையக அரசியலின் இரண்டாவது காலகட்டம் எனக் கூறலாம். இக்காலகட்டம் இடதுசாரிக்கட்சி கள் மலையக மக்களின் ஆதிக்கம் செலுத்திய
காலகட்டமாகும். இடதுசாரிகளே மலை உ யகத்தில் வேலை நிறுத்தம் உட்பட பல
போராட்டங்களை அறிமுகப்படுத்தியவர் களாவர். இவர்களினால் நடாத்தப்பட்ட முல்லோயாப் போராட்டம் புகழ் பூத்த
ஒன்றாகும். பிரஸ்கேடில் சம்பவமும் மலையக Tக அரசியலை மையமாக வைத்தே நிகழ்ந் ரு திருந்தது. (பிரஸ்கேடில் இடதுசாரி தொழிற்
2. ச.
8 8 8
ன
ன
த 8 5 5

Page 23
மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சி
மலையக
சங்க நடிவடிக்கைகளை மலையகத்தில் நகர்த்து வதற்கு முன்னோடியாக திகழ்ந்த ஒரு ஆங்கிலத் தோட்டத்துரையாவார்.) மலைய கத்தின் முதல் போராளி கோவிந்தனும் முல்லோயாப் போராட்டத்திலேயே மரண மானார். 1947 வரை மலையக அரசியலில் இன ஒடுக்குமுறை பெரிதளவிற்கு வளர்ச்சி யடைந்திருக்கவில்லை. வர்க்க ஒடுக்கு முறையே பிரதானமாகத் தொழிற்பட்டது. இதனால் நடேசையரும் இடதுசாரிகளும் வர்க்க ஒடுக்குமுறை களிலேயே அதிக கவனம் செலுத்தியிருந்தனர். ஆட்சி அதிகாரம் ஆங்கி லேயரின் கைகளில் இருந்ததினால் இன ஒடுக்குமுறை பெரியளவிற்கு வளர்ச்சியடைய வில்லை. ஆனாலும் கொழும்பு நகரத்தில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இன வாதம் 1920 களிலேயே ஆரம்பித்துவிட்டது.
அநகாரீகதர்மபால இந்திய வர்த்த கர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். ஏ.ஈ.குணசிங்கா கொழும்பில் வாழும் இந்தியத் தொழிலாளர் களுக்கு எதிரான இனவாதத்தினை தொடக்கி
வைத்தார். அரச அதிகாரம் சிங்களத் தலைவர் களிடம் இல்லாததினால் அது பெரியளவிற்கு நடைமுறைச் செயற்பாட்டில் எழுச்சியடைய வில்லை. எனினும் இந்தப் போக்கு நீண்ட காலம் நிலைக்கவில்லை. 1931 இல் அறிமுகப் படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்புடன் இனவாத சக்திகள் அதிகாரத்தை கையி லெடுத்துக் கொண்டு தமது செயற்பாட்டினை முடக்கிவிட்டனர். தமக்குக் கிடைத்த அரை குறை அதிகாரத்தை வைத்துக்கொண்டே நகரத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவளி அரசாங்க உத்தி யோகத்தர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போன்றோரை பதவியி லிருந்து நீக்கினர். இந்நிலையில் இவற்றுக்கு முகம்கொடுப்பதற்காகத் தான் நேருவின் வழிகாட்டலில் இலங்கை இந்திய காங்கிரஸ் 1939 இல் உருவாக்கப்பட்டது.1940 இல் இதனுடைய தொழிற்சங்கம் மலையகத்தில் பணியாற்ற ஆரம்பித்தது.

பும் முன்நகர்த்த வேண்டிய பணிகளும்
21
இந்திய வம்சாவளியினருக்கெதிரான இனவாதம் கொழும்பில் ஆரம்பித்தாலும் இக்காலத்தில் மலையகத்தில் முற்றுமுழுதாக அது நடைபெறவில்லை எனக்கூற முடியாது. 1937 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சிச் சபைச் சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும். பண்டாரநாயக்கா உள்ளூ ராட்சி அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் மூலம் உள்ளு ராட்சித்தேர்தலில் வாக்காளராகும் உரிமை மலையக மக்களுக்கு இல்லாமல் செய்யப் பட்டது. இதைவிட அரசாங்க சபைத் தேர்தல் களில் கூட மலையக மக்களின் வாக்கு வீதத் தினைக் குறைப்பதற்காக வாக்குரிமைச் சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் 1936 தேர்தலின் போது கொண்டுவரப்பட்டன.
மூன்றாவது காலகட்டம் 1947 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரை வருகின்றது. 1947 இன் சோல்பரி அரசியல் யாப்பு, அதன் பின்னர் 1948 இல் வழங்கப்பட்ட சுதந்திரம் என்பனவற்றின் மூலம் இலங்கையின் ஆட்சியதிகாரம் முழுமையாக சிங்களத் தலைமைகளின் கைகளுக்கு சென்றது. ஆங்கிலேயர்கள் இலங்கைத் தீவின் பன்முக சமூகத்தன்மையை கவனத்திலெடுக்காமல் ஒற்றையாட்சி அரசியலை அறிமுகப்படுத்தி விட்டுச் சென்றனர். பல்வேறு இனங்களும் நியாயமான வகையில் அதிகாரத்தை பங் கிட்டுக்கொள்ளும் தன்மை அதிகாரக் கட்டமைப்பில் இருக்கவில்லை.
சிங்களத் தலைமை தென் இலங்கையில் மலையக மக்களின் அரசியல் அடை யாளத்தையே இல்லாமல் செய்யும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இரு பிரஜாவுரிமைச் சட்டங்களின் மூலமும் வாக்குரிமைச் சட்டத்தின் மூலமும் மலையக மக்களின் அரசியல் அடையாளத்தை இல்லாமல் செய்தது. மலையக மக்கள் பலவந்தமாக தொழிற்சங்க அரசியலுக்குள் மட்டும் குறுக்கப்பட்டனர். மறுபக்கத்தில் அரச

Page 24
2
6
இயந்திரத்தை முழுமையாக சிங்களப் மாக்கும் முயற்சி நடைபெற்றது. 1950 8 தேசியக்கொடி, 1956 இன் தனிச் சிங்கம் சட்டம் என்பன சிங்கள மயமாக்கல் செ பாட்டில் பிரதான விடயங்களாக இருந்த ஏனைய இனங்களுக்கு பாதுகாப்ப சோல்பரி யாப்பில் காணப்பட்ட 29 ஆம் பிரிவு, கோமறைக்கழகம் என்பன மலை மக்கள் விடயத்தில் சிறிதளவு பாதுகாப்பைக்க கொடுக்கவில்லை. பிரஜாவுரிமைப் பிர னையில் உலக நீதிக்கு புகழ்பெற்ற கோமன் கழகமும் கையை விரித்திருந்தது.
இந்த அரசியல் அடையாளப் பறிப்பு உச்சநிலை அம்சமாகவே 1964 இல் ன சாத்திடப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந். அமைந்தது. மலையக மக்களின் சம் மில்லாமலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பா அரைவாசி இந்திய வம்சாவளி மக்கள் ந கடத்தப்பட்டனர். 1974 இல் கைச்சாத்தி பட்ட சிறிமா - இந்திரா ஒப்பந்தமும் இ நாடுகடத்தலில் பங்காற்றியிருந்தது.
ஏற்கனவே டொனமூர் காலத்தில் நக புறங்களில் பணியாற்றியவர்கள் வே நீக்கப்பட்டதால் சுயமாக வெளியேறி பின்னர் வந்த ஒப்பந்தத்தின் மூலம் | வந்தமாக நாடுகடத்தப்பட்டனர். இந்த 8 வகை வெளியேற்றங்களினால் 1940கள் இரண்டாவது பெரிய இனமாக 13 வீதம் இருந்த இந்திய வம்சாவளியினர் 1981 8 5.5 வீதமாக மாறினர்.
சுதந்திரம் கிடைத்தவுடனேயே மலை மக்களின் அரசியல் அடையாளத்தை பறி ஆட்சியாளர்கள் 1972 இன் பின்னர் மலை மக்களின் கூட்டிருப்பையும் இல்லா செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இதற்காக மேற்கொண்ட பிரதான | வடிக்கையே மண் பறிப்பாகும். 1972 ! கொண்டுவரப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட் 1975 இல் காணி உச்சவரம்புச் சட்டம் என் மலையக மக்களை அவர்கள் வளமாக்

அர்த்தம் - 3
கூட
ய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தின. அத் ஒல் தோட்டங்கள் பெருந்தோட்டத்துறையுடன்
எந்தவித தொடர்புமற்ற சிங்கள கிராமவாசி பற் களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு ன. எதிரான போராட்டத்திலேயே டெவன் ாக தோட்டப் போராளி சிவனு லட்சுமணன் பது சுட்டுக்கொல்லப்பட்டார். பக்
இலங்கை இந்தியர் காங்கிரசும் பின்னர் பெயர் மாற்றப்பட்ட இலங்கைத் தொழிலாளர் ச்சி
காங்கிரசும் இக்காலகட்டத்தினை நகர்த்திய றக்
முக்கிய அமைப்பாக இருந்தன. தொண்டமான்
பிரதான தலைவராக விளங்கினார். ஏனைய பின்
பல தொழிற்சங்கங்கள் தொழிற்பட்ட போதும் கச் இன அரசியலை நகர்த்திய அமைப்பாக தம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினையே மத குறிப்பிடலாம். மலையக ஆய்வாளர் காதர் ட்டு இலங்கை - இந்தி யர் காங்கிரசினையே ாடு மலையகத்தின் முதலாவது தேசிய இயக்க டப் மாகக் குறிப்பிடுகின்றார். 1947 தேர்தலில் ந்த இவ்வமைப்பின் சார்பில் 6 பிரதிநிதிகள்
பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டி கர்ப் ருந்தனர்.
லை
நான்காவது காலகட்டம் 1977 தொடக்கம் 2000 வரையிலான காலகட்டமாகும். இக் பல காலகட்டத்தில் மலையக மக்களின் நீண்ட இரு போராட்டத்தின் வாயிலாக மலையக மக்க
ளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் தொண்டமான் இல்
நுவரெலியா - மஸ்கெலியா தொகுதியிலிருந்து
மூன்றாவது அங்கத்தவராக தெரிவு செய்யப் யக
பட்டார்.
அதேவேளை இக்காலகட்டத்தில் தான் யக வட கிழக்கில் தனிநாட்டுப் போராட்டமும் மல் முனைப்புடன் தொழிற்படத் தொடங்கியது. னர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்துக்கான நட சர்வஜன வாக்கெடுப்பு என பிரச்சாரம் செய்து இல் போட்டியிட்டு வடகிழக்கிலுள்ள 19 தமிழ்த் டம், தேர்தல் தொகுதிகளில் 18 இணைக் கைப் பன பற்றியது. அதேவேளை 1977, 1983 காலங் கிய களில் இரு இன அழிப்புச் சம்பவங்களும்
னர். 20
ரில் |
மாக
த்த

Page 25
மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சி
இடம்பெற்றன. இதில் வடகிழக்குத் தமிழர்கள் மட்டுமல்ல மலையகத் தமிழர்களும் அழிக்கப் பட்டனர். 1983 இன் பின்னர் வட -கிழக்கில் பாராளுமன்ற அரசியலுக்கு முதன்மையான இடம் இல்லாமல் போனது. விடுதலை இயக்கங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டன. மலையக இளைஞர்கள் பலரும் இயக்கங்களில் இணைந்துகொண்டனர்.
வட- கிழக்கு நிலைமைகள் மலைய கத்திலும் விழிப்புணர்வுகளைக் கொண்டுவரத் தொடங்கின. மலையகம், மலையகத் தமிழர் என்ற எண்ணக்கருக்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையக விடுதலையை மைய மாக வைத்த தீவிரவாத இயக்கங்களும் மலையகத்தில் தோன்றின. பாராளுமன்ற அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிர சுடன் போட்டி போடக்கூடியளவிற்கு மலையக மக்கள் முன்னணியும் எழுச்சியடைந்தது. 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்கான மலையகப் பிரதிநிதிகளையும் அதிகரிக்கச் செய்தது.
மலையக மக்களும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடச் செய்தமை, வடகிழக்குப் போராட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைந்து விடுமோ என அஞ்சியமை போன்ற காரணங்கள் மலையக மக்களின் ஒடுக்குமுறைகளில் சிறிய நெகிழ்வுகளை ஏற்படுத்தின. இதன் காரணமாக நடாற்றவர் களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. அம்பேகமுவ, நுவரெலியா, பிரதேச சபைகள் மலையக மக்களின் தலைமையில் விடப் பட்டன. கிராம சேவகர்கள், ஆசிரியர் உத்தி யோகங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் மலையக மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் மேலும் தோன்று வதற்கு காரணங்களாயின. மலையக மக்கள் மேலும் மேலும் தங்கள் கூட்டிருப்பினை ஆதாரப்படுத்துவதற்கான வழிகளைத் தேடத்

யும் முன்நகர்த்த வேண்டிய பணிகளும்
23
ம ன்
பக.
ன.
தொடங்கினர். நுவரெலியா மாவட்டம் மலையக மக்களின் கூட்டிருப்பினை வன்மையாக வெளிப்படுத்தும் மாவட்டமாக வளரத் தொடங்கியது. சிறிபாத கல்விக் கல்லூரி மலையக ஆசிரிய உருவாக்கத்திலும் பெரிய பங்கினை ஆற்றத் தொடங்கியது. ஆசிரிய சமூகம் மலையக சமூகத்தில் முக்கிய சமூக சக்தியாக மாறத் தொடங்கியது.
2000க்குப் பின்னர் மலையக அரசியலின் ஐந்தாவது கட்டம் வருகின்றது. இக்கட்டத்தில் வடகிழக்குப் போராட்டம் சர்வதேச மயப்பட்ட வேறோர் வகையில் தொடர்கின்றது. முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்தி இனப்பிரச்சினத் தீர்வின் போது தங்களுக்கான தீர்வினையும் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், மலையகத்தைப் பொறுத்தவரை பாராளுமன்ற அரசியற் தலைமைகள் இனப் பிரச்சினைத் தீர்வின் போது மலையக மக்க ளுக்கான தீர்வினையும் வற்புறுத்தும் நிலையில் இல்லை. விகிதாசாரப் பிரதி நிதித்துவத்தின் கீழ் அதிகளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கு பின்னாலேயே அவை செல்லப் பார்க்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆளும் கட்சி எதுவோ அதில் சேர்ந்து விடுகின்றன. ஆளும் கட்சி அதிக அக்கறை காட்டாத போது கூட மந்திரிப் பதவிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தின் முன் தவம் இருக்கின்றன. ஒரு எதிர்க்கட்சி அரசியலை நடாத்துவதற்கு அவை எதுவும் தயாராக இல்லை. எதிர்க்கட்சி அரசியல் மூலம் தான் மக்களின் பிரச்சினைகளை கராறாக முன் வைக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வில்லை. வடகிழக்கில் தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைகள் 50 வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி அரசியலை தெளிவாக நடாத்தி யிருந்தன. அதுவே தமிழ்த் தேசிய அரசியலை தெளிவாக அடையாளப்படுத்தியதுமல்லாமல் ஆயுதப் போராட்ட அரசியலை நடாத்து

Page 26
22
இயந்திரத்தை முழுமையாக சிங்களப் மாக்கும் முயற்சி நடைபெற்றது. 1950 உ தேசியக்கொடி, 1956 இன் தனிச் சிங்க சட்டம் என்பன சிங்கள மயமாக்கல் செ பாட்டில் பிரதான விடயங்களாக இருந்த ஏனைய இனங்களுக்கு பாதுகாப்ப சோல்பரி யாப்பில் காணப்பட்ட 29 ஆம் பிரிவு, கோமறைக்கழகம் என்பன மலை மக்கள் விடயத்தில் சிறிதளவு பாதுகாப்பைக்கம் கொடுக்கவில்லை. பிரஜாவுரிமைப் பிர னையில் உலக நீதிக்கு புகழ்பெற்ற கோமன் கழகமும் கையை விரித்திருந்தது.
இந்த அரசியல் அடையாளப் பறிப்பு உச்சநிலை அம்சமாகவே 1964 இல் ன சாத்திடப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந் அமைந்தது. மலையக மக்களின் சம்! மில்லாமலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பா அரைவாசி இந்திய வம்சாவளி மக்கள் ந கடத்தப்பட்டனர். 1974 இல் கைச்சாத்தி ! பட்ட சிறிமா - இந்திரா ஒப்பந்தமும் இ நாடுகடத்தலில் பங்காற்றியிருந்தது.
ஏற்கனவே டொனமூர் காலத்தில் நக புறங்களில் பணியாற்றியவர்கள் வே நீக்கப்பட்டதால் சுயமாக வெளியேறி பின்னர் வந்த ஒப்பந்தத்தின் மூலம்
வந்தமாக நாடுகடத்தப்பட்டனர். இந்த இ வகை வெளியேற்றங்களினால் 1940கள் இரண்டாவது பெரிய இனமாக 13 வீதம் இருந்த இந்திய வம்சாவளியினர் 1981 இ 5.5 வீதமாக மாறினர்.
சுதந்திரம் கிடைத்தவுடனேயே மலை மக்களின் அரசியல் அடையாளத்தை பறி ஆட்சியாளர்கள் 1972 இன் பின்னர் மலை மக்களின் கூட்டிருப்பையும் இல்லா! செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இதற்காக மேற்கொண்ட பிரதான வடிக்கையே மண் பறிப்பாகும். 1972 ! கொண்டுவரப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட்ட 1975 இல் காணி உச்சவரம்புச் சட்டம் என் மலையக மக்களை அவர்கள் வளமாக்.

அர்த்தம் - 3
11
றக் முக்கிய அமைப்பாக விளங்கினார்
மய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தின. அத் இல் தோட்டங்கள் பெருந்தோட்டத்துறையுடன் ளச் எந்தவித தொடர்புமற்ற சிங்கள் கிராமவாசி பற் களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கு ன. எதிரான போராட்டத்திலேயே டெவன் ாக தோட்டப் போராளி சிவனு லட்சுமணன் பது சுட்டுக்கொல்லப்பட்டார். பக இலங்கை இந்தியர் காங்கிரசும் பின்னர் கூட பெயர் மாற்றப்பட்ட இலங்கைத் தொழிலாளர் ச்சி
காங்கிரசும் இக்காலகட்டத்தினை நகர்த்திய றக்
முக்கிய அமைப்பாக இருந்தன. தொண்டமான்
பிரதான தலைவராக விளங்கினார். ஏனைய பின் பல தொழிற்சங்கங்கள் தொழிற்பட்ட போதும் கச் இன அரசியலை நகர்த்திய அமைப்பாக தம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினையே மத குறிப்பிடலாம். மலையக ஆய்வாளர் காதர் ட்டு இலங்கை - இந்தி யர் காங் கி ரசினையே ாடு மலையகத்தின் முதலாவது தேசிய இயக்க டப் மாகக் குறிப்பிடுகின்றார். 1947 தேர்தலில் ந்த இவ்வமைப்பின் சார்பில் 6 பிரதிநிதிகள்
பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டி கர்ப் ருந்தனர்.
லை
நான்காவது காலகட்டம் 1977 தொடக்கம் னர். 2000 வரையிலான காலகட்டமாகும். இக் பல காலகட்டத்தில் மலையக மக்களின் நீண்ட இரு போராட்டத்தின் வாயிலாக மலையக மக்க ரில் ளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் தொண்டமான் இல்
நுவரெலியா- மஸ்கெலியா தொகுதியிலிருந்து மூன்றாவது அங்கத்தவராக தெரிவு செய்யப் பட்டார்.
அதேவேளை இக்காலகட்டத்தில் தான் யக வட கிழக்கில் தனிநாட்டுப் போராட்டமும் மல் முனைப்புடன் தொழிற்படத் தொடங்கியது. னர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்துக்கான நட சர்வஜன வாக்கெடுப்பு என பிரச்சாரம் செய்து இல் போட்டியிட்டு வடகிழக்கிலுள்ள 19 தமிழ்த்
ம், தேர்தல் தொகுதிகளில் 18 இணைக் கைப் பன பற்றியது. அதேவேளை 1977, 1983 காலங் கிய களில் இரு இன அழிப்புச் சம்பவங்களும்
மாக
யக த்த

Page 27
மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சி
இடம்பெற்றன. இதில் வடகிழக்குத் தமிழர்கள் மட்டுமல்ல மலையகத் தமிழர்களும் அழிக்கப் பட்டனர். 1983 இன் பின்னர் வட -கிழக்கில் பாராளுமன்ற அரசியலுக்கு முதன்மையான இடம் இல்லாமல் போனது. விடுதலை இயக்கங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டன. மலையக இளைஞர்கள் பலரும் இயக்கங்களில் இணைந்துகொண்டனர்.
வட- கிழக்கு நிலைமைகள் மலைய கத்திலும் விழிப்புணர்வுகளைக் கொண்டுவரத் தொடங்கின. மலையகம், மலையகத் தமிழர் என்ற எண்ணக்கருக்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையக விடுதலையை மைய மாக வைத்த தீவிரவாத இயக்கங்களும் மலையகத்தில் தோன்றின. பாராளுமன்ற அரசியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிர சுடன் போட்டி போடக்கூடியளவிற்கு மலையக மக்கள் முன்னணியும் எழுச்சியடைந்தது. 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்கான மலையகப் பிரதிநிதிகளையும் அதிகரிக்கச் செய்தது.
மலையக மக்களும் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடச் செய்தமை, வடகிழக்குப் போராட்டத்தில் மலையக இளைஞர்களும் இணைந்து விடுமோ என அஞ்சியமை போன்ற காரணங்கள் மலையக மக்களின் ஒடுக்குமுறைகளில் சிறிய நெகிழ்வுகளை ஏற்படுத்தின. இதன் காரணமாக நடாற்றவர் களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. அம்பேகமுவ, நுவரெலியா, பிரதேச சபைகள் மலையக மக்களின் தலைமையில் விடப் பட்டன. கிராம சேவகர்கள், ஆசிரியர் உத்தி யோகங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் மலையக மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் மேலும் தோன்று வதற்கு காரணங்களாயின. மலையக மக்கள் மேலும் மேலும் தங்கள் கூட்டிருப்பினை ஆதாரப்படுத்துவதற்கான வழிகளைத் தேடத்

பயும் முன்நகர்த்த வேண்டிய பணிகளும்
23
தொடங்கினர். நுவரெலியா மாவட்டம் மலையக மக்களின் கூட்டிருப்பினை வன்மையாக வெளிப்படுத்தும் மாவட்டமாக வளரத் தொடங்கியது. சிறிபாத கல்விக் கல்லூரி மலையக ஆசிரிய உருவாக்கத்திலும் பெரிய பங்கினை ஆற்றத் தொடங்கியது. ஆசிரிய சமூகம் மலையக சமூகத்தில் முக்கிய சமூக சக்தியாக மாறத் தொடங்கியது.
2000க்குப் பின்னர் மலையக அரசியலின் ஐந்தாவது கட்டம் வருகின்றது. இக்கட்டத்தில் வடகிழக்குப் போராட்டம் சர்வதேச மயப்பட்ட வேறோர் வகையில் தொடர்கின்றது. முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்தி இனப்பிரச்சினத் தீர்வின் போது தங்களுக்கான தீர்வினையும் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், மலையகத்தைப் பொறுத்தவரை பாராளுமன்ற அரசியற் தலைமைகள் இனப் பிரச்சினைத் தீர்வின் போது மலையக மக்க ளுக்கான தீர்வினையும் வற்புறுத்தும் நிலையில் இல்லை. விகிதாசாரப் பிரதி நிதித்துவத்தின் கீழ் அதிகளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கு பின்னாலேயே அவை செல்லப் பார்க்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்றதும் ஆளும் கட்சி எதுவோ அதில் சேர்ந்து விடுகின்றன. ஆளும் கட்சி அதிக அக்கறை காட்டாத போது கூட மந்திரிப் பதவிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தின் முன் தவம் இருக்கின்றன. ஒரு எதிர்க்கட்சி அரசியலை நடாத்துவதற்கு அவை எதுவும் தயாராக இல்லை. எதிர்க்கட்சி அரசியல் மூலம் தான் மக்களின் பிரச்சினைகளை கராறாக முன் வைக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வில்லை. வடகிழக்கில் தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைகள் 50 வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி அரசியலை தெளிவாக நடாத்தி யிருந்தன. அதுவே தமிழ்த் தேசிய அரசியலை தெளிவாக அடையாளப்படுத்தியதுமல்லாமல் ஆயுதப் போராட்ட அரசியலை நடாத்து

Page 28
24
வதற்கும் சரியான அடித்தளங்களை உ வாக்கிக் கொடுத்தது. செல்வநாயகம் போல் நேர்மையான பாராளுமன்ற அரசிய தலைவர்களை மலையக அரசியலில் கா
முடியவில்லை.
மறுபக்கத்தில் இனவாத ஒடுக்கு முன் மலையகத்தில் தற்போது புது வடிவத்தின எடுக்கத் தொடங்கியுள்ளது. மலையகத்தி உயிர்மையயாக இருக்கின்ற நுவரெலி! மாவட்டத்தில் மலையக மக்களின் நி தொடர்ச்சியை சிதைக்கும் வகையில் பே கொத்மலைத் திட்டம் கொண்டு வ பட்டுள்ளது. இது ஓர் இன்னோர் வ மண்பறிப்பாகும். மலையக பாராளுமன் சக்திகள் ஆரம்பத்தில் இதனை எதிர்த்தால் பின்னர் சரணடைந்து விட்டனர். ஏனை சக்திகள் தொழிற்சங்க அரசியலில் மட்( கவனத்தினைக் குவிக்கின்றன.
இந்நிலையில் தான் பாராளுமன்ற சாராத அரசியல் மூலம் மலையக மக்களி அபிலாசைகளை வெளிக்கொணர்வதற் புதிய இளைஞர் குழாம் முன்னுக்கு வந்தி கின்றது. இது வடகிழக்கு அரசியலில் பாரா மன்றம் சாராத இளைஞர் குழாம் முன்னுள் வந்து வரலாற்றை நகர்த்தியதைப் போன்ற தற்போது இச்சக்தி சிறியதாக இருந்தால் எதிர்காலத்தில் வளர்ச்சியடையலாம்.
அதேவேளை மலையக மக்கள் ஐத இருக்கின்ற இரத்தினபுரி, களுத்துன மாத்தளை மாவட்டங்களில் மலை மக்களின் இருப்புக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்ற நுவரெலியா மாவட்டத்தை பாதுகாப்பது மூலமே ஐதாக வாழ்கின்ற மக்களி இருப்பினைப் பாதுகாக்க முடியும் அல்ல மாற்று நடவடிக்கைகள் எதையாவது எடு முடியும்

அர்த்தம் - 3
Iy
பிற
பல்
ண
ன்
பன்
யா
லத
மல் ரப்
கை
வம்
ஓம்
மம்
பின்
- ரு
இதுவரை மலையக மக்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்த்தோம். இந்த வளர்ச்சி களுடாக மலையக மக்கள் புதிய கட்டம்
ஒன்றுக்கு வந்திருக்கின்றனர். தங்களுக்கான றை தேசிய அடையாளத்தை வரையறுப்பதும்
அதன் வழி தேசிய அபிலாசைகளை வென்றெ டுப்பதற்கான மார்க்கங்களை நாடுவதுமே இக்கட்டத்தில் அவர்களுக்கு முன்னால் உள்ள பணிகளாகும்.
இன அரசியல் பொதுவாக மூன்று கட்டங் களினூடாக வளர்வதே வழக்கமானதாகும்.
இன அரசியலை உருவாக்கும் கட்டம், இன எற
அரசியலை தேசிய அரசியலாக வளர்க்கும்
கட்டம், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ரய
கட்டம் என்பனவே அம்மூன்று கட்டங்களு மாகும்.
மலையக அரசியல் தற் போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. ஆனால், இரண்டாவது கட்டம் இன்னமும் பூர்த்தியாக் கப்படவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல தேசிய அடையாளத்தை வரையறுப்பது இக்கட்டத்தில் முக்கியமானதாகும். தேசிய அடையாளத்திற்கான கோரிக்கைகளை தெளி
வாக வரையறுத்து அதனைத் தொடர்ச்சியாக வம்
முன்னெடுக்கும் போதே தேசிய அடையாளம்
தெளிவாக வரையறுக்கப்படும். காக
இதற்கு பிரதான நிபந்தனை எதிர்க்கட்சி அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுப்பதே! பக
பாராளுமன்ற அரசியற் தலைமைகள் இதற்கு கள்
முன்வராவிட்டால் பாராளுமன்றம் சாராத து.
சக்திகள் இதனை முன்னெடுப்பதற்கு முயற் சித்தல் வேண்டும்.
மலையக மக்கள் முதலில் தமது பிரதேசத்தில் மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தி ஒரு சக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும். மலையக மக்களின் வெவ்வேறு பிரிவினராக இருக்கும் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அரசாங்க உத்தி
கு
நக்
ககு
ற >
நன்
ன்
மது
க்க

Page 29
மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சி
யோகத்தர்கள், புலமையாளர்கள், கலைஞர்கள், இலக்கி யவாதிகள் ஆகிய ஒவ் வொரு பிரிவினரும் தங்கள் தங்கள் தளங்களில் நின்று கொண்டு மலையகத் தேசியத்திற்கான பணி களை முன்னெடுக்க வேண்டும்.
தேசியத்திற்கான அரசியற் செயற்பாடுகள் .. என்பவை சிம்பனி இசையைப் போன்றது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இடங்களில் தமக்குரிய இசைக்கருவிகளை இசைக்கும் போதுதான் சிம்பனி இசை தெளிவாக வரும். அதேபோன்று தேசத்தின் அனைத்து சக்திகளும் செயற்படும் போது தான் தேசியச் செயற்பாடு களும் ஒரு சக்தியாக வெளிவரும்.
மலையக மக்களை ஒரு சக்தியாக உரு வாக்கிக் கொண்டபின் துணைச் சக்திகளையும் நட்புச்சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கு பிரதான துணைச் சக்தியாக இருக்கப் போகின்றவர்கள் வட கிழக்கு மக்களே ! வடகிழக்கின் புதிய தலைமுறை மலையக மக்களை மிகவும் அக்கறையோடு நோக்குகின்றது. ஒரு தரப்பி னுடைய அரசியல் அபிலாசைகளை மற்றைய தரப்பு அங்கீகரித்து பரஸ்பர ஒத்துழைப்பினை நல்குகின்ற நிலையினை உருவாக்குதல் வேண்டும். வடகிழக்கின் நீட்சியாக இருக்கின்ற புலம்பெயர் மக்கள் மலையக மக்களின் அபிலாசைகளை சர்வதேச மயப்படுத்தும் பணியில் பயனுள்ள பங்கினை ஆற்ற முடியும்.
இரண்டாவது துணைச் சக்தி தமிழக மக்கள். இவர்களுடன் உயிர்த்துடிப்பான தொடர்புகளை ஏற்படுத்த மலையக தேசிய சக்திகள் முன்வரவேண்டும். ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு இந்தியாவில் வாழும் மலையக வம்சாவளியினர் இது விடயத்தில் பயனுள்ள பங்கினையாற்ற முடியும்.
மூன்றாவது துணைச் சக்தி, உலகெங்கும் பரந்து வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இன்று தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பீஜித் தீவுகள் என பல இடங்களில் இந்திய வசம்சாவளித்

பும் முன்நகர்த்த வேண்டிய பணிகளும்
25
தமிழர்கள் வாழ்கின்றனர். இதை விட பல கல்விமான்கள் ஐரோப்பாவிலும், அமெரிக் காவிலும், வாழ்கின்றனர். அவர்களுடனும் உயிர்த்துடிப்புள்ள தொடர்புகளைப் பேணுவது சர்வதேச மயப்படுத்துவதற்கும் பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவி யாக இருக்கும்
இவர்களைவிட சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளும் உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் மலையக மக்களுக்கு நல்ல நட்பு சக்திகளாக இருப்பர்.
இவ்வாறு பரந்தளவில் வேலைத் திட்டங் களை முன்னெடுக்கும் போதே மலையக அரசியலை காத்திரமான நிலைக்கு கொண்டு வர முடியும். இவையெல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருப்பது முதலில் மலையக மக்கள் தங்களைச் ஓர் சக்தியாக உருவாக்கிக் கொள்வதாகும்.
முடிவுரை இறுதியாக மலையக அரசியல் தொடர்பாக அடிப்படையான சில கருத்துக்களை நான் முன்வைத்திருக்கின்றேன். தீர்வினை மலையக மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகம் ஏதாவது ஒருவகையில் அரச அதிகாரக் கட்ட மைப்பில் ஒரு சமூகமாக பங்குபெறாமல் அச்சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ள முடியாது என்பது பொது வான உண்மையாகும். அதிகார வடிவங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அச்சமூகங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்.
மற்றைய சமூகங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஒவ்வொரு சமூகமும் தமக்கான அதிகார வடிவங்களை தீர்மானித்துக் கொள்வதற்கு அவற்றிற் மறுக்க முடியாத உரிமை உண்டு.

Page 30
திருமுறைகளில் வாழ்வியல்
சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம்
தமிழ் பக்தி மொழி மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் தமி மொழியைப் பக்தி மொழி என்று கூறுகின றார்கள். உலகில் தோன்றிய தொன் ை வாய்ந்த மொழிகளில் ஒன்றாகிய தமிழ்மொழ காலவெள்ளத்தால் அழியாது இன்றும் வாழு மொழியாக, பலகோடிக்கணக்கான மக்களா பேசப்படும் மொழியாக, இளமை மிக்க மொழ யாகத் திகழ்கிறது. களங்கமிலாத பக்தியினா நால்வர் பெருமக்களும் பன்னிரு ஆழ்வா களும் அருளிய பாடல்களே தமிழ்மொழியில் இளமைக்கு காரணமாக அமைந்துள்ள என்பதைச் சுப்பிரமணிய யோகியார். களங்கமிலாப் பக்தியினால் பன்னிருவர் நால்ல கற்கண்டு சொற்கோவை கவிமாலை புனைந்து
எனத் தனது பாடலில் குறிப்பிடுகின்றா
பக்தி இயக்கம் கலியுகத்தில் இறையருளைப் பெறுவதற் பக்தி மார்க்கமே மிகச்சிறந்த வழி என நார் மகரிஷி தனது பக்தி சூத்திரத்தில் குறிப்பி டுள்ளார். 'பக்தி வலையில் படுவோன் காண் என்றே தெய்வ வாசகமாகிய திருவாசகமு குறிப்பிடுகிறது. பிறசமயப் பிடியிலிருந் நமது சமயத்தைப் பாதுகாப்பதற்கு நாய மார்களும், ஆழ்வார்களும் பக்தி மார் கத்தையே துணையாகப் பற்றினார்கள். பக் நெறியை இவர்கள் மக்கள் இயக்கமா மாற்றினார்கள். தமிழ் நாட்டில் தோன்றி பக்தி இயக்கமே, வட இந்தியாவில் பக் இயக்கம் வளர்வதற்குத் திசைகாட்டியாக திகழ்ந்தது.

p b 9: b:
9 4: S. 2. ரூ 2.
'பக்தி என்பது தமிழகத்தில் பிறந்தது, மராத்திய மாநிலத்தில் வட இந்தியாவில் வளர்ந்து பருவம் எய்தியது. குஜராத்தில் முதுமை எய்தியது என்று பத்ம புராணத்தில் ஒரு செய்தி கூறுகின்றது.
'பக்தி நெறி என்பது தமிழகத்திலிருந்து ல் உலகிற்கே ஒளி கூட்டுவதாக உள்ளது. அது தன்னலம் பற்றியது அன்று அது உலகிடை வாழும் அனைத்துயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் தனி நெறி பிறர் நலத்திற்காகத் தொண்டு புரிதலைக் தலையாய கடமையாகக் கொண்டது.
உண்மைச் சமயத்தின் உயிர் நாடியாகத் திகழ்வது பக்தி ஆகும். இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டுமென்று மனித மனம் முயல்கின்ற முயற்சியே பக்தி எனப்படும். ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் உள்ள உறவை ஒன்றை மட்டும் விரும்பி நிற்பதே உண்மையான பக்தனின் நிலையாகும். தன்னை மறந்து தற்போதமில்லாமல் ஒரு செயலைச் செய்தால் அது உள்நின்று தூண்டும்
இறையருளால் செய்யப்படும் செயலாகவே க அமையும். அடியார்களின் செயல்கள் ம் அனைத்தும் ஆண்டவனின் செயல்கள்
என்பதைச் 'சித்தம் சிவமாக்கி செய்தனவே தவமாக்கும் அத்தன்' என மணிவாசகரின் க் திருவாசகமும் குறிப்பிடுகிறது.
தி
தி
"அ.த E
க திருமுறைகளின் சிறப்பு
திருநெறிய தமிழ் என்று போற்றப்படும் பன்னிரு திருமுறைகளும் மானுட சமுதாயத் தின் வாழ்வியல் நெறிகளை வளப்படுத்தும் நோக்கில் அருளாளர்களால் அருளப்பெற்ற

Page 31
திருமுறைகளில்
வ .
0ெ 60 3
அருளியற் கொடைகளாகும். சங்ககாலம் / முதல் சோழர் காலம் வரை தோற்றம் பெற்ற . தெய்வீகப் பாடல்களின் தொகுப்பாகவே | பன்னிரு திருமுறைகள் காணப்படுகின்றன. பன்னிரு திருமுறைகளில் இறைவனால் ? அருளப்பெற்ற பாடலும் உண்டு. இறையருள் ( பெற்ற அருளாளர்களால் பாடப்பெற்ற பாடல்களும் உண்டு.
பன்னிரு திருமுறைகளும் சிவனையே முழுமுதற் கடவுளாகக் கூறுகின்றன. 'சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்
அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
என அப்பர் பெருமானும், 'சிவனோ டொக்கும் தெய்வம் தேடினும்
வேறில்லை' எனத் தவயோகி திருமூலநாயனாரும் ( சிவபரத்துவத்தை தங்கள் பாடல்களில் போற்றி 1 யுள்ளார்கள்.
தேவாரம் வேதசாரமாக இருப்பதைப் ஓ போன்று திருவாசகம் உபநிடத சாரமாகவும் திருமந்திரம் ஆகம சாரமாகவும் காணப் படுகின்றன. திருமறைக்காட்டில் வேதங்களால் பூட்டப்பட்டு இருந்த கதவை அப்பர் சுவாமிகள் தேவாரம் பாடியே திறக்கச் செய்தார் என அவருடைய வரலாற்றிலே கூறப் பட்டுள்ளது. வேதமந்திரத்திற்கு உள்ள சக்தி திருமுறைக்கும் உண்டு என்பதை இந்தச் சம்பவம் எடுத்து விளக்குகிறது. தமிழிலே இறைவனுக்குச் செய்யக்கூடிய அர்ச்சனை மலர்களாக இருப்பது திருமுறைப் பாடல்கள் என்பதை 'அர்ச்சனை பாட்டேயாகும்' எனப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
மக்கள் குலம் மாண்போடு வாழ வழிவகுப்பது திருமுறைகள், பிணி நீங்கி வாழவும், வினை நீங்கி வாழவும் இவை வழிகாட்டுகின்றன. நவகோள்களும் தீவினை யும் துன்பத்தைத் தருகின்றன. அத்துன்பம்
9 9 2 -
DL 9
a

வாழ்வியல்
தங்கி வாழ இறைவனை மலர் தூவி திருமுறை களை ஓதி வழிபட வேண்டும். திருமுறைப் பாடல்கள் பொருட் செறிவும், சொல்நயமும், நடையழகும் கொண்டவை. இறைவன் உள்நின்று உணர்த்த 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பெருநோக்கோடு அருளாளர்கள் அருளிய அருட் கொடையே திருமுறைச் செல்வம். 'எனதுரை தனதுரையாக என்று ஞானசம்பந்தர் கூறுவது போல சவனுக்குள்ளே சிவமணம் பூத்த ஞானச் செல்வர்கள் வழங்கிய மந்திர சொரூபமான மலர்களாகவே திருமுறைகள் நிகழ்கின்றன.
திருமுறைகளை ஓதும் போதும் ஓதி உணரும்போதும் உணர்ந்து உருகும்போதும், உருகிக் கனியும்போதும், கனிந்து பக்தி நெறியிற் படரும் போது படர்ந்து இறையருள் மாண்பினை எண்ணும் போதும் அருள் நெறியில் ஒன்றாகிப் போகும் தெய்வீக நிலை ஏற்படுகிறது.
Fம்
திருமுறைகளின் சமுதாய நோக்கு சமய இலக்கியங்களாகிய பன்னிரு திரு முறைகள் தனி மனித முன்னேற்றத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் சமுதாய முன்னேற்றமே சமய இலக்கியங்களின் குறிக் கோளாகக் காணப்படுகின்றன. மனிதனை முன்னேற்றி அவன் மூலமாக சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்பதையே சமய இலக்கியம் வலியுறுத்தும். இந்த அடிப் படையினை பன்னிரு திருமுறைகளும் நமது மெய்க் கொள்கையாக அமைத்துக் கொண்டிருக்கின்றன.
உடல், மனம், சித்தம், ஆன்மா, இறைவன் ஆகிய ஐந்து உறுப்புக்களைக் கொண்ட ஒரு கூட்டுச் சமுதாயமே மனிதன். இவைகளை முறைப்படி உணர்ந்து முன்னேற்றினால் இறைவன் தலைமைப் பொருளாகி நிற்பான். இறைவனின் தலைமையைப் புறக்கணித்து விட்டு மனிதர்களில் பலர் உடல், மனம்

Page 32
28
அர்
போன்றவற்றையே முதன்மைப்படுத்தி வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையை மாற்றி இறைவனை முதன்மைப்படுத்தி இறை யருள் பெற்ற அருளாளர்களால் பாடப்பெற்ற அனுபூதி வாசகங்களாகிய திருமுறைகளை உணர்ந்து ஓதினால் மனிதன் அருள் மனித னாகி தெய்வீக நிலைக்கு உயர்ந்து விடுவான்
தனிமனிதனிடத்தில் வளமான வாழ்வி யலுக்கான மூலக்கூறுகள் இருப்பது உண்மையே யானாலும் அவற்றைச் செயற்படுத்துவதா? குரிய சூழ்நிலையும் அவசியம் தேவைப்படு கின்றது. இத்தகைய சூழ்நிலையை உருவாக்கித் தருவதற்கு வழிகாட்டும் திசைகாட்டியா பன்னிரு திமுறைகள் அமைந்திருக்கின்றன
தனி மனித வழ்க்கையில் உந்துகோலா இருப்பவை முறையே உலகியல் அறிவு, அர இயல் விளக்கம், அறிவியல் மாண்பு, ஆன்ட இயல் ஞானம், அருளியற் பேறு ஆகிய படிமுறைகள். இப்படி முறைகளில் தன் மனிதன் உயர்ந்து சிறப்பதற்கும் அவள் வளர்ச்சிக்கும் சமுதாயப் பின்னணி தேவை அடியவர்கள் ஆத்மஞானம் உடையவர்களுடன் கூட இருந்தால் தான் அருளியற்பேற்றிலை அடைய முடியும் என்பதை 'அடியார் நடுவு ளிருக்கும் அருளைப் புரியாய்' எனத் தெய்வ வாசகமாகிய திருவாசகமும் குறிப்பிடுகிறது
பக்தி இயக்கத்தை மக்கள் இயக்கமா. மாற்றி அமைத்த தேவார முதலிகளால் தமிழகத்தின் சிற்றூர்களில், தெருக்களில் ஊரின் மையமாக விளங்கிய திருக்கோயில் களில் எழுந்த பாடல்களே இன்னிசை மலர்கள் என்று போற்றப்படும் தேவாரப் பாடல்கள் ஆகும். இப்பாடல்களிலே தேவார முதலிகளில் பக்தி மட்டும் மலரவில்லை. அவர்களது நம்பிக்கைகள் மலர்ந்திருக்கின்றன. அக்கா மக்களின் பழக்கவழக்கங்கள், சமூக அமைப்பு சமுதாய நாகரிகம், ஒற்றுமை நிரம்பிய வாழ்வு முதலிய யாவும் அவற்றைச் சார்ந்து மலர்ந்தது நிற்கின்றன.

த்தம் - 3
9' ட = .' ) 4 5 6 ட
A -A A
5
தி உலகியல் வாழ்க்கை - வரப்பிரசாதம்
சைவசமயம் உலகியல் வாழ்க்கையைச் சாபக்கேடன்றோ, தண்டனையன்றோ குறிப் பிடவில்லை. வரப்பிரசாதம் என்றே கூறுகிறது. இல்லறத்தை நல்லறமாகவே கூறுகிறது, அன்பைக் கடைப்பிடித்து வாழ்பவர்களுக்கு நற்கதியாகிய வீட்டின்பம் தானே கிடைத்து விடும். சிவனும் அம்மை அப்பராக இருந்தே அடியவர்களுக்கு அருளைப் புரிகின்றான். அவனை வழிபடும் சிவனடியார்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். அவர்களுக்கு நல்ல கதி கிட்டும். எண்ணியது கிடைக்கும் என்று சம்பந்தப் பெருமான் தனது தேவாரத் திருமுறை மூலம் உறுதி அளிக்கிறார். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை கண்ணில் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை
இருந்ததே
பல்லவராட்சியின் ஆரம்பத்தில் தமிழ் .. நாட்டில் சமண சமயம் செல்வாக்குப் எ பெற்றிருந்தது. பல்லவப்பேரரசின் அரசனாகிய ன முதலாம் மகேந்திர பல்லவனும் பாண்டியப் * பேரரசின் அரசனாகிய நின்ற சீர் நெடுமாறனும்
சமண சமயத்தைச் சார்ந்திருந்தார்கள். 'மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி' என்ற முது மொழிக்கேற்ப மக்களில் பலரும் சமணத்தை தழுவி நின்றார்கள். சமணசமயப்பிடியில் இருந்து தமிழ் நாட்டில் சைவத்தை மீட்ட பெருமை அருட் கடலாகிய சம்பந்தருக்கும், அன்புக் கடலாகிய அப்பர் பெருமானுக்குமே உரியது. இவர்கள் இருவரையும் சைவநெறி பெற்ற 'புண்ணியக் கண்' எனச் சேக்கிழார் பெரியபுராணத்திலே போற்றுகின்றார்.
உலகியல் வாழ்வில் சைவம் பெண்ணுக்கு உயர்வான இடத்தை வழங்கியுள்ளது. ஆனால் சமணசமயம் பெண் பிறப்பையே பாவப் பிறப்பு என்றே கூறியது. இவர்கள் இல்லற வெறுப்பாளர்கள், துறவு விருப்பாளர்கள்.
4

Page 33
திருமுறைகளில்
பெண்களை வெறுத்த சமணர்கள் அவர்களை மாயப்பசாசு என்று பழித்தார்கள். ஆனால் நாயன்மார்களால் உருவாக்கப்பெற்ற பக்தி இயக்கம் இல்லறத்தின் ஊடாக இறைவனை அடையலாம் என அறிவுறுத்தியது. பெண்களை மதித்தது. மனையறம் காக்கும் மங்கைகளாகப் பெண்களைத் திருமுறைகள் போற்றுகின்றது. வாலிப வயதில் ஏற்பட்ட மனமாற்றித்தினால் தடுமாறிப் போய் சமணம் சார்ந்திருந்த அப்பரை சைவத்திற்கு மீட்ட பெருமை அவரது சகோதரியாகிய திலகவதியாருக்கே உண்டு. பாண்டிய அரசனும் பாண்டிநாடும் மீண்டும் சிவநெறியில் திளைப்பதற்கு மங்கையர்க்கரசியாரே காரணகர்த்தாவாக இருந்தார். ஞானக்குழந்தையாகிய சம்பந்தரை பாண்டி நாட்டிற்கு அழைத்து சைவத்தின் உயர்நிலையைப் பாண்டிய அரசனுக்கும் மக்க ளுக்கும் உணர்த்தி வைத்தார். இதனால் 'மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்' என்றும், 'தென்னர் குலப்பழிதீர்த்த தெய்வப் பாவை' என்றும் சேக்கிழார் பெருமானால் பாராட்டப்படும் தகுதியினைப் பெற்றார்.
அதிகாரம், அந்தஸ்து, பொருளாதார பலம், வெளித்தோற்றக் கவர்ச்சி என்பவற்றைக் கருத்தில் கொண்டு அக்கால சைவமகளிர் தமது வாழ்க்கைத் துணையைத் தேடவில்லை. தெய்வ நம்பிக்கை உடையவர்கள், வாழ்வில் ஒழுக்கம் தவறாதவர்கள், கோலத்தாலும், சீலத்தாலும், புனிதமானவர்களாக வாழ்பவர் களே தங்களுக்குத் துணைவராகக் கிடைக்க வேண்டுமென்று இறைவனை வேண்டினார்கள் " 'உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே
பாங்காவோம் அன்னவரே எம் கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
என்ற திருவெம்பாவைப் பாடலுக்கு விளக்கமாக அக்கால மகளிர் வாழ்ந்தார்கள்.

> வாழ்வியல்
29
இந்து சமயம் கூறுகின்ற ஆச்சிரமம் தர்மங்களில் இல்லறமும் ஒன்றாகும். உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கு காற்று எவ்வாறு அவசியமோ அவ்வாறே மற்றைய ஆச்சிரம நெறிகள் நிலைத்து நிற்பதற்கும் இல்லறத் தானின் பங்களிப்பு அவசியம் என மனுதர்ம சாத்திரம் கூறுகிறது. 'காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து ' இல்லறத்தை நல்லறமாக நடாத்த வேண்டும் என்றே இந்து சமயத் திரு நூல்கள் எல்லாம் கூறுகின்றன. கொலை, களவு, கள்ளுண்ணல், காமம், பொய் ஆகிய ஐந்து குற்றங்களைப் பஞ்சமா பாதகங்கள் என நமது சமய நூல்கள் எடுத்துக் கூறியுள்ளன. காம இச்சையிலே அறிவிழந்து பிறர் மனைவி யிடம் தொடர்பு கொண்டு நாசம் அடைகிற பாவிகளை திருமந்திரம் பல பாடல்களில் சாடியுள்ளது.
கணவனுக்காக ஐம்புலன்களையும் அர்ப்பணித்து வாழும் மனைவியைப் புறக் கணித்துவிட்டு விலை மகளிர்பால் சென்று விழுந்து எழும்பும் ஆடவர்களைத் திருமந்திரம் கண்டிக்கிறது. இரு மாங்கனிகளில் ஒன்று திருத்தி வளர்க்கப்பெற்ற இனிமை நிறைந்த தேமாங்கனி, மற்றொன்று பல மரங்களிடையே வளர்ந்துள்ள புளி மாங்கனி. இவை இரண்டும் ஒன்று போலத் தோற்றமுடையன. குலமகளை விட்டு விலை மகள் மீது நாட்டம் கொள்ப வர்கள் தீராத உடல் நோய்க்கு ஆளாகி அல்லல்ப்படுவார்கள். அருமையில் கிடைத்த தேமாங்கனியை ஒதுக்கி வைத்துவிட்டுத் தோப்புப் புளிக்கனியை நாடும் கசடர்களைத் திருமூலர் கருத்து அறியாதவர்கள் எனக்
குறிப்பிடுகின்றார். திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனியை அருத்தம் என்றெண்ணி அறையில் புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங்கொம்பேறிக் கருத்தறியாதவர் கால் அற்றவாறே
(திருமந்திரம் - 202)

Page 34
30
அர்
கற்பு என்பது பெண்ணுக்கு மாத்திரமல்ல ஆணுக்கும் உரியது என்பதைக் 'கற்பு நெறி என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்' என மகாகவி பாரதியார் பாடியுள்ளார். ஆனால் பாரதியார் பாடுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே மனைமாட்சி காக்கும் மனைவி தான் இருக்க விலை மகளிர் வீடு புகுந்த தனது கணவர் திருநீலகண்டருக்கு அவரது மனைவியார் தன்னைத் தீண்டுவதற்கு தடையுத்தரவு போட்டார். ஆனால் கணவருக்குச் செய்ய வேண்டிய மற்றைய பணிவிடைகளை எல்லாம் தவறாது செய்து வந்தார். இளமையிலே பூண்ட விரதத்தை இருவரும் முதுமை வரை அயலில் இருப்பவர்கள்கூட அறியாத வண்ணம் கடைப் பிடித்து வந்தார்கள் என்பதைப் பெரிய
புராணம் பின்வருமாறு சித்தரிக்கிறது. கற்பு உறு மனைவியாரும் கணவனாருக்கு
ஆன எல்லாம் பொற்பு உறமெய் உறாமல் பொருந்தவே
போற்றிச் செய்ய இப்புறம் பொழியாது அங்கண் இருவரும்
வேறு வைகி அற்பு உறு புணர்ச்சி இன்மை அயல்
அறியாமை வாழ்ந்தார்
விதியையும் வினையையும் வெல்வதற்கான வழி சங்ககாலம் முதல் இன்றுவரை தமிழர் சமு தாயத்தின் உயர்விற்கு தடைக்கல்லாக அமைந்திருப்பது ஊழியற் கொள்கை வினைப்பயன், விதி என்ற சொற்களாலும் இக்கொள்கை குறிக்கப்பெறும். சமண சமயத் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இக்கொள்கை மேலும் வலுப்பெற்றது. திருவள்ளுவரும் ஊழின் வலிமையைப் பற்றிக் கூறியுள்ளார் முயற்சியினால் ஊழின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். ஊழினை வெற்றி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

த்தம் - 3
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர் (திருக்குறள் 620)
'வினைக் கொள்கையில் இறைவனை இடையில் புகுத்தாமல் விளக்கம் கொடுத்து
வந்தது சமணம் அக்கொள்கையில் இறைவன் | பங்குதான் முக்கியமானது என விளக்கி
இறைவன் மூலம் ஊழ்வினையை வெல்லுதல் [ எளிது என்று குறிப்பிட்டது திருமுறை'.
இறைவனிலும் இறையருளிலும் அபார நம்பிக்கை உடையவராகத் திகழ்ந்த ஞான சம்பந்தர் உலகியலில் வரும் துன்பங்கள் எதற்கும் அஞ்சாதவராகக் காணப்பட்டார், ''நாளும் கோளும் நம்பனடியார்க்கு நலிவு செய்யாது" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இறைவனின் துணை இருப்பவர்களுக்கு கோள்களின் பகை எதுவும் செய்யாது. என்பதனை 'ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே' எனக் கோளாறு பதிகத்தில் குறிப்பிடு கின்றார். பக்தியோடு பரமனைப் பணிந்து கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்பவர்கள் இராஜ கம்பீர வாழ்க்கையைப் பெறுவார்கள் என்பதை,
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே
எனக் கோளறு பதிகத்தின் இறுதிப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
நியதி என்பது ஒரு தத்துவம். அது தன்னுடைய பணியை ஒன்பது கோள்களின் மூலம் செயற்படுத்துகிறது. நியதி தத்துவமும் கோள்களின் ஆட்சியும் இறைவனால் அமைக்கப்பெற்றவைகள். இறைவனால் அமைக்கப்பெற்ற நியதி தத்துவத்தையும் கோள்களின் ஆட்சியையும் மாற்றி அமைக்கக் கூடிய சக்தி இறைவனுடைய அருளைப் பெற்ற அடியவர்களுக்கு மட்டுமே உண்டு. இறை யருள் தன்னைக்காக்கும் என்ற நம்பிக்கை
5

Page 35
திருமுறைகளில்
யுடைய அடியவனுக்கு எல்லாம் நல்லவை யாகவே அமையும். 'நாமார்க்கும் குடி யல்லோம்' என்று கூறக்கூடிய சான்றாண்மை வீரம் இவர்களிடம் தோன்றும். 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்பது இவர்களின் குறிக்கோள் வாசகமாக மாறிவிடும்.
தொழிலும் தொண்டும் தனி மனித வாழ்விற்குத் தொழில் தேவை. ஒவ்வொரு மனிதனும் உழைத்தே வாழ வேண்டும் என்று பொதுவுடமைவாதி கார்ல்மாக்சும் கூறுகின்றார். உழைக்காமல் உண்பது தண்டச்சோறு பொருளை அறவழியில் ஈட்டுதல் வேண்டும் என்பதை 'தீவினை விட் டீட்டல் பொருள் எனத் தமிழ் மூதாட்டி ஒளவையாரும் குறிப்பிடுகின்றார். கூலிக்கு மாரடிப்பது போலத் தொழிலைச் செய்யக் கூடாது. செய்யும் தொழிலில் அர்ப்பணிப்புத் தேவை செய்யும் தொழிலே தெய்வம்' என்ற நினைப்புடன் தொழிலை ஆற்றுதல் வேண்டும். பயன்கருதிச் செய்வது தொழில் பயன் கருதாமல் செய்வது தொண்டு, தொழிலே போதும் என்ற கொள்கையை நாயன்மார்கள் ஏற்கவில்லை. அப்பர் பெருமான் திருத் தொண்டு நெறிக்கே இலக்கணமாக வாழ்ந்தார். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது அவருடைய குறிக்கோள் வாசகம் ஆகும். உலகம் வாழ வேண்டும் என்ற பரந்த நோக்கத்தை ஆதாரமாகக் கொண்டே அப்பரடிகள் திருத்தொண்டு செய்தார் என்பதைப் 'பார்வாழத் திருவீதிப் பணி செய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார்'
எனப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது. திருநாவுக்கரசர் வாக்காலும் வாழ்வாலும் ஒருமித்து வாழ்ந்தார். நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி'

வாழ்வியல்
3
எனத் தான் சிவாலயங்களிற் செய்த திருத்தொண்டுகளையே தனது பாடலிலும் குறிப்பிட்டுள்ளார்.
'உழவாரத்தின் படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் '
எனக் காஞ்சிப் புராணம் அப்பரின் சிவக் கோலத்தைப் போற்றித் துதிக்கிறது. அப்பர் பெருமானை நடமாடும் கோயில்' எனச் சிவப்பிரகாச சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
தனிமனித வாழ்க்கைக்குத் தொண்டும் தேவை. தொழிலும் தேவை என்ற கொள்கையை அப்பழுக்கில்லாமல் ஒத்துக் கொள்ளும் திருஞானசம்பந்தர். 'தொண்டு அணை செய் தொழில்' அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். தொழிலின் ஒரு பகுதியைத் தொண்டாக மாற்ற வேண்டும் என்பது அவருடைய கொள்கை ஆகும். செய்யும் தொழிலில் ஒரு பகுதியை இறைவனுக்கு அல்லது இறை அடியவருக்கு உரிமையாக்குதல் மூலம் தொழிலையும் தொண்டையும் இணைக்கலாம் என்பது சம்பந்தர் காட்டும் வாழ்வியல் நெறி ஆகும். உழவுத் தொழில் செய்பவர் நாள்தோறும் ஓர் அடியவர்க்கு உணவளித்தல், நெசவுத் தொழில் செய்பவர் ஓர் அடியவருக்கு ஆடை கொடுத்தல் என்பவற்றால் தொழிலுடன் தொண்டையும் இணைத்துக் கொள்ளலாம். சிவப்பணிகளில் உயர்ந்த பணி சிவனடி யார்களுக்கு அமுது கொடுத்தல் என்பதை 'மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
எனப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.
இளையான்குடிமாற நாயனார் இறையடி யார்களை இறைவனாகவே கருதி அவர்களுக்கு அறுசுவை உணவளித்து வந்தார். வறுமை வந்துற்ற போதும் தான் செய்து வந்த அன்ன மிடும் பணியினைத் தொடர்ந்து செய்ய முற்படுகின்றார். மனையறம் காத்த மங்கை யாக இவருடைய மனைவியாரும் இவரின்

Page 36
அர்
தொண்டுக்குத் துணையாக நிற்கின்றார் வயலிலே விதைத்த விதை நெல்லை எடுத்து வந்து அமுதாக்கினார் சிறு பயிராகிய பசளிக் கீரையை இருட்டிலே தடவிப் பிடுங்கி கறிய முதாக்கினார். பசளிக் கீரையைப் பறித்த வரலாற்றைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் அவர் தனது பாசவினைகளை வேரோடு களைந்தார் என்பதை,
குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிய பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தலை கறிக்கு நல்க
எனக் குறிப்பிடுகின்றார்.
இளையான்குடிமாற நாயனார் இருளில் நடந்தார். இது ஆன்மாவின் பயணம் உள்ளம் அன்பு கொண்டு ஊக்கியதால் உணவு சமைக்கப்பட்டுச் சிவனடியார் உணவருந்த அழைக்கப்பட்டபோது அவர் ஒளிப்பிழம்பாகத் தோன்றி மறைந்தார் ''செழுந்திரு மனைவியாரும், தொண்டரும் திகைத்து நின்றார்" என்று சேக்கிழார் அடிகள் கூறும்போது இந்தத் திகைப்பு மிகச் சிறந்த இறையனுபவமாக மிளர்கிறது.
உள்ளத் தூய்மை இறைவனை வழிபடுவதற்கும் இறையருளைப் பெறுவதற்கும் புறத்தூய்மை அவசியம் ஆனால் புறத்தூய்மையிலும் பார்க்க அகத் தூய்மை மிகவும் அவசியம் என்பதைத் திரு முறைகள் வற்புறுத்துகின்றன. மாசுமறுவற்ற உள்ளம் இறைவன் வீற்றிருக்கும் கோயில் என்பதை 'உள்ளம் கவர் கள்வன்' என ஞால் சம்பந்தர் கூறுகின்றார். 'இறைவனோ தொண்டருள்ளத்து ஒடுக்கம் தொண்டர் தம் பெருமை பேசவும் பெரிதே'
என அடியவர்களின் உள்ளம் ஆண்டவன் வீற்றிருக்கும் கோயில் எனத் தமிழ் மூதாட்டி ஒளவையாரும் குறிப்பிடுகின்றார். 'எண்ன வார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்' என்பதற்கு

ந்தம் - 3
அமைய 'நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்' இறைவன் என அப்பரடிகளும் பகர்கின்றார்.
உடம்பு என்னும் ஆலயத்தினுள் உள்ளமே ' கர்ப்பக்கிருகமாக அமைந்துள்ளது. அந்தக் கருவறையினுள் இறைவன் வந்து வீற்றிருக் கிறான். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்சேந்திரியங்கள் இந்த உடம்பாகிய கோயிலுக்கு ஏற்றிய ஐந்து விளக்குகள். ஞானம் பெற்றவனுக்கு ஐந்து புலன்களும் அணையாத விளக்குகள். ஞானம் பெறாதவர் களுக்கு 'மலங்கப் புலன் ஐந்தும் வஞ்ச னையைச் செய்ய' என்ற மணிவாசகர் வாக்கிற்கு அமைய இவை கள்ளப் புலன் களாகவே மாறிவிடுகின்றன. ஞானம் பெற்ற வர்களுக்கு இந்த ஐந்து புலன்களுமே அகத்திலே சிவத்தைக் காட்டும் அணையாத விளக்குகளாக காட்சி தரும். உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பாலயம் வள்ளல் பிரானாற்கு வாய் கோபுர வாசல் | தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
(திருமந்திரம் -1823)
நமது உள்ளத்தில் உறையும் உள்ளொளி தான் உயிர்கள் அனைத்திலும் உறையும் இறைமையினை உணர்த்துகிறது. இதயத்தில் இசைந்துள்ள இறையுணர்வே எல்லாப் பொருள்களிலும் நிலவும் இறைமைத் தன்மையை நமக்குக் காட்டுகிறது. இதனால் தான் இறைவன் இருப்பது நமது இதயத்தில் தான் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள். தூய்மையான உள்ளம் தான் இறைவன் வீற்றிருக்க விரும்பும் இடம் என்பதனை 'உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
எனச் சுவாமி விபுலானந்தரும் கூறியுள்ளார். - 'உள்ளத்து ஒளிர்கின்ற ஒளியே' _ ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானே'
எனத் தெய்வ வாசகம் தந்த மணிவாச 5 கரும் இறைவன் அகத்துறையும் இடம்

Page 37
திருமுறைகளில்
அடியவர்களின் உள்ளமே எனக் கூறுகின்றார். ''உன்னைத் தேடுபவர் உள்ளங்களில் எல்லாம் உறைகின்றாய் நீ” எனத் தைத்திரீய உபநிடதம் கூறுகிறது. "ஓயாதே உள்ளுவார் உள்ளிருக்கும் உள்ளானை'' என மணிவாசகரும் இதே , கருத்தினை வலியுறுத்துகின்றார்.
'எல் லோரது உள்ளங்களி லே யும் இறைமை ஒளிர்கின்றது. ஆனால் அதனை ஓர்ந்து உணர்ந்து கொண்டவர்களே ஆனந்தப் பெருவெள்ளத்தில் திளைக்கின்றனர். அவ்வாறு காணாதவர்கள் இயலாதவர்கள், மறுக்கின்ற வர்கள் வாழ்க்கையையும் தொலைத்து தானும் வீழ்ந்து போகின்றனர்.'
நமது உள்ளத்துள் ஒளிந்து கொண்டிருக் கின்ற ஞானத்தை திருவருளை, இறைமையைத் தேடிக்கண்டுகொள்ள வேண்டும் என்று அறிவுரை பகர்கின்றார் திருமூலர். ஏட்டில் படித்தறிவது வேறு, அனுபவித்து உணர்ந்து கொள்வது வேறு என்பதை உலகத்தில் வாழும் அனைவரும் அறிந்துள்ளோம். ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் இறைவனைக் கண்டு கொள்ள முடியாது. உள்ளுணர்வினால் அனுபூதி நிலையில் மட்டுமே உணர்ந்து கொள்ளலாம்.
தேனின் சுவை இனிப்பு, தேனின் நிறத்தைக் கண்டறியலாம். ஆனால் இனிப்புச் சுவையின் வண்ணத்தைக் காண இயலாது. தேனுக்குள் இனிப்புக் கலந்திருப்பதுபோல், நம் உடம்பிற்குள் இறைவன் உறைந்திருக் கின்றான். ஆதலால் கடவுளை விண்ணிலே தேட வேண்டாம். அவன் நம்முள்ளே குடி யிருக்கிறான் என்பார் திருமூலர். தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர் தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே
(திருமந்திரம்)
செயல்களுக்குச் சிந்தனைகளே கால்கோள் செய்கின்றன. சிந்தனைகளின் வெளிப்பாடு

வாழ்வியல்
33
செயற்பாடாக மிளிர்கின்றது. எத்தகைய எண்ணங்களை, சிந்தனைகளை சிந்திக் கிறோமோ அதுவாகவே செயலும் கருக் கொள்ளும் பயன்பாடும் அதனையே சார்ந் திருக்கும். இதுதான் நியதி சிந்தனையில் தீமைகளின் சுவடு இருந்தால் செயல்கள் கண்டிப்பாய்க் காயப்படுத்தும். மாறாக நன்மை பயக்கும் அறம் விழுமிய எண்ணங்களாக உதித்தால் விளைவு செயற்கரிய செயலாக நின்று நீடு புகழ் பேசும் என்பதில் ஐயமில்லை.
இதயத்தை தூய்மையாக வைத்துக் கொள் மனத்தை மாசில்லாது பாதுகாத்தல் வேண்டும் என்பதே அனைத்துச் சமயப் பெருமக்களது வேண்டுகோளாகவும் உள்ளது. மனத்தின் மாசினை இறையுணர்வு ஒன்றால் தான் அகற்ற முடியும் என்பார் நாவுக்கரசர் தனத்தனைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவுவார்க்கு மனத்தினுள்மாசு தீர்ப்பார் மாமறைக் காடனாரே
(அப்பர் தேவராம்)
கடலெம்
சிவகதி கிடைப்பதற்கான வழி சிவகதி என்னும் பயிர் விளைவதற்குரிய வழியைச் சொல்லும் நிலையில் உழவராக நின்று உற்ற பல கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற அப்பர் பெருமான் கூறு கின்றார். மெய்ம்மை , பொய்ம்மை என்ற இருமைகளை உணர வேண்டும். மெய்ம் மையை மூல நிலமாக்கிப் பொய்மையைக் களைந்து நீக்க வேண்டும். தகவு என்னும் நடுவு நிலைமையை வேலியாக அமைத்துத் தம்மையும் நோக்கிக் காணுதல் வேண்டும். இவைகளையெல்லாம் இணைத்து நின்ற செம்மை என்ற அடிநிலைப் பொருளை உணர்ந்து அதனை இடமாகக் கொண்டு நிற்றல் வேண்டும்.
இவ்வாறு நின்றால் சிவகதியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சிவகதியானது நம்மிடத்திலே விளைந்து அனுபவப்படும் என்பதை அப்பர் பெருமானின் பின்வரும் பாடல் தெளிவாக விளக்குகிறது.

Page 38
34
N)
மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்
பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவு எனும்
வேலி இட்டுச் செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும்
அன்றே
(அப்பர் தேவார 'திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரசன்றன் அடியார்க்கு அடியேன்' எனச் சுந்தரமூர்த்தி சுவாமிக திருத்தொண்டர் தொகையில் அப்பர் டெ மானைப் போற்றித் துதிக்கின்றார். 1. மெய்ம்மையைச் சார்ந்து பொய்
மையை விலக்குதல் ஒருவகை உடலை விட உயர்ந்தது உயிர் என். லும் இறைவனை நோக்க உய தாழ்ந்தது எனத்தம்மை நோக்கிக் கண் தகவு என்னும் வேலி இடுதல் வேண்டு இருமைகளைக் கடந்த செம்மை பொருள் நம்முள் இருக்கிறது என் கண்டு அதன்மேல் அசையாமல் நிற்ற
மேற்கூறிய மூன்றையும் முறை நன்மை, உண்மை, செம்மை என்ற மும்பை பொருளாகக் கொள்ளலாம். மூன்றைய முழுநிலைப்படுத்தி நின்றால் அது திருநில் செம்மை எனப் பெறும்
வினைப்போகம் நம்மை அழுத்தும் வ இறை சிந்தனை நமக்கு ஏற்படாது, இல வனுடைய திருவருள் இல்லாமல் அவன நாம் வணங்கவும் முடியாது என்பன 'அவனருளாலே அவன்தாள் வணங்கி என தெய்வவாசகமாகிய திருவாசகமும் குறிப்பி கிறது. நம்மைப் பீடித்திருக்கம் வினையி தாக்கம் குறைய வேண்டுமானால் சிவனுடை நாமத்தை நாம் நாள்தோறும் உச்சரிக் வேண்டும். சிவநாமத்தை தொடர்ந்து கூறினா நமது தீவினைகள் முற்றாக நீங்கி விடுவதும் சிவகதியும் நமக்குக் கிடைத்து விடும்
3.

அர்த்தம் - 3
சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவருமாவர் சிவ சிவ என்னச் சிவ கதிதானே
(திருமந்திரம் - 2716)
அடிக்குறிப்புகள் 1. KrishnaswamyIyankar, Early History of Vaisnavisimin
South India, P-10.
2. Meenakshisundaram, TP, A History of Tamil literature. ப்க் 3. சிங்காரவேலன், சொ. மூவர் தேவாரம், இரண்டு
பார்வைகள். கள் 4. இரத்தினசபாபதி, வை ., திருமுறையே வாழ்வியல்
நெறிமுறை, பன்னிரு திருமுறை ஆய்வரங்கம், ப.37. 5. இராமச்சந்திரன், மு., பெரிய புராணம் திருமுறைகளின்
கவசம், ப.92. பம் 6. ப.முத்துக்குமார சுவாமி, ஓங்கு புகழ் சைவநீதி, ப.38.
7. வை. இரத்தினசபாபதி, திருமுறைப் பெருமை, பக்.
26-27
மா
7. 5.
எக்
2. சி,
பிர் உசாத்துணை நூல்கள்
1. சிங்கப்பூர் - பன்னிரு திருமுறை ஆய்வரங்கம் -
நிகழ்வுக் கொத்து திருமுறையே வாழ்வின் நெறிமுறை, திருமுறை மாநாட்டு வெளியீடு வெள்ளிவிழா ஆண்டு - 2005, சிங்கப்பூர். திருமுறை முற்றோதல், பத்தாவது ஆண்டு நிறைவு மலர், ஒன்ராறியே, இந்துசமயப் பேரவை, கனடா,
2009. மப் 3. ஓங்கு புகழ் சைவநீதி, ப. முத்துக்குமார சுவாமி
அவ்வை, அசோக் நகர், சென்னை. எற 4. திருமுறைப்பெருமை, முனைவர் வை. இரத்தினசபாபதி
தொகுப்பியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர். ரெ 5. பெரிய புராணம் - திருமுறைகளின் கவசம், முதுமுனை றெவர் தி.ந.இராமச்சந்திரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
ன 6. திருமுறை சிவ மஞ்சரி, திருமுறை முற்றோதல் நிறைவு தெ விழா மலர், ஒன்ராறியோ, இந்து சமயப் பேரவை, கனடா. எத் 7. திருமுறைச் செல்வம், சிவத்தமிழ் வித்தகர் சிவ
மகாலிங்கம். 8. சிவஜோதி, சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம். 9. ஞான தீபம், சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம்.
E 2.5
ல்

Page 39
மீதமிருக்கும் நேரம்
யமுனா ராஜேந்திரன்
எலியா சுலைமானின் காட்சி ரூபம் தரும் அனுபவத்தை எழுத்தில் விளக்குவது சாத்தியமில்லை. கண்களுக்கு மட்டும் துளைகள் விட்டு மூகமூடியணிந்த காட்டிக் கொடுப்பவன் போராளி பவுத் சுலைமானை துப்பாக்கி செய்பவன் என இஸ்ரேலிய படைத் தளபதிக்குக் காட்டிக் கொடுக்கிறான். அடர்ந்த மரங்கள் நிறைந்த வெளிக்கு பவுத் சுலைமான் கொண்டு செல்லப்படுகிறான். அவனது கண்களைக் கட்டக் காவலன் முயல்கிறான். காவலன் குள்ளம். கண்கள் அவனுக்கு எட்ட வில்லை. மரத்தின் அருகி லிருக்கும் கருங் கல்லை எடுத்து வந்து அதன்மேல் நின்று கண்களைக் கட்டிவிட்டுச் செல்கிறான். சுற்றிலும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தலைகள் குனிந்த நிலையில் சிதறிக் கிடக்கும் பாலஸ்தீன மனிதர்கள். கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் பவுத் சுலைமான் அசையும் மரங்களிலிருந்து வரும் ஆக்கிரமிக்கப்பட்ட அவனது சொந்த நிலத்தின் காற்றின் மணத்தை முழுமையாக இதயத்தை முழுமையாக விரித்து உள்ளே இழுக்கிறான். இலைகளின் அசைவை உணர்கிறான்.
படைத்தளபதி நெற்றியின் பக்கவாட்டில் துப்பாக்கி முனையை அழுத்திச் சொல்கிறான் ஒன்று முதல் பத்து எண்ணிக் கொண்டு வா. பத்து வருவற்குள் தயாரித்த துப்பாக்கிகளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று சொல்லிவிடு என்கிறான். பவுத் சுலைமான் எண்ணத் துவங்குகிறார். '1, 2, 3, 4, 5' என்கிறார். கொஞ்சம் இடைவெளி விடுகிறார். தொடர்ந்து 'பத்து' எனத் தெளிவாக அழுத்த மாகச் சொல்கிறார். பவுத் சுலைமானின் முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டு கோபத்துடன்
ரகச் செது' எனத் சென்று விடுகிறார்.

அருகிலிருக்கும் ராணுவத்தினருக்குக் கையசைத்துவிட்டுச் செல்கிறான் ராணுவத் தளபதி. இரண்டு ராணுவ சிப்பாய்கள் பவத்தைக் கீழே தள்ளி உதைக்கத் துவங்கு கிறார்கள். அடித்து முடித்து பவுத்தின் அசை வற்ற உடலை அருகிலிருக்கும் பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார்கள்.
பவுத் சுலைமான் பாலஸ்தீன இயக்குனர் எலியா சுலைமானின் தந்தை இருப்பு என்பது நிலமும் நினைவுகளும் சார்ந்தது. பாலஸ்தீன மனிதனின் இருப்பு, தாய்வீடு, நாடு திரும்புதல் போன்றவற்றுக்கு என்னதான் அர்த்தம்? பாலஸ்தீனத்தைத் எனது மொழிக்குள் கொண்டு திரிகிறேன் என்றான் மஹ்மூத் தர்வீஸ். ''கடைசி வானத்தின் பின் எங்கே செல்வது?' என்றான் எட்வரட் சைத். மீதமிருக்கும் நேரம் மரண பயத்திற்கும் அபத்தச் சிரிப்பிற்கும் விட்டுவைக்கப்பட்டிருக்கிறதாக அச்சம் தெரி விக்கிறான் பாலஸ்தீன சினிமாக் கலைஞன் எலியா சுலைமான்.
1960 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பிறந்த எலியா சுலைமான் தனது வாலிப வயதில் இஸ்ரேலியக் கொடியை எரித்தார்

Page 40
36
என்பதன் பின்னான நெருக்கடியின் பி இங்கிலாந்துக்கும் பாரிசுக்கும் பிற்பா நியூயோர்க் நகருக்கும் இடையில் பத்தாண் கள் அலைந்து திரிகிறார். இந்த அலைத் வசதியான. படித்த மத்தியதரவர்க்கக் க வானின் அலைதல் அல்ல. பாலஸ்தீ அரசியல் அகதியொருவனின் அலைத. 1982 முதல் 1993 வரை நியூயார்க் நகரி அடையாளமற்ற மனிதனாக வாழ் சுலைமானுக்கு அங்கு ஏற்பட்ட அனுபவம் அவரை ஒரு திரைக் கலைஞனாக உருவ கியது. பாலஸ்தீன மக்களின் இழப்பைய கையறு நிலையையும் துயரையும். அ இடையற்றுத் தொடர்வதையும் ஒரு மரம் தருணமாக அவர் அனுபவம் கொண்டார்.
இஸ்லாமியரதும், கிறித்தவர்களது யூதர்களதும் கூட்டுநிலமாக முன்னொருபோ இருந்த பாலஸ்தீனம் எனும் நிலப்பரப் அமெரிக்க மேற்கத்திய காலனியவாதிகளி ஆசியுடன் இஸ்ரேல் எனும் ஏக யூதநாட இப்போது யூதர்களால் நிரந்தரமாக திருடப்பட்டுவிட்டது என்பதனையும் பால் காலகட்டத்தில் இட்லரால் யூதமக்களுக் நேர்ந்த துயரை இப்போது அவர்க பாலஸ்தீன மக்களின் மீது மக்களின் மீ சுமத்தியிருக்கிறார்கள் என்பதையும் இதன தமது ஆதிக்க நோக்கங்களுக்கு அமெரி. மேற்கத்திய அரசுகளும், குறிப்பாக அதன் ஊடகங்களும் பயன்படுத்து கின்ற என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.
இரண்டாம் உலகப் போர் பாலஸ்தீனத்தி மீதான இஸ்ரேலியக் கொலைவெறியாட்ட பாசிசச்காலகட்ட யூதப்படு கொலை என்பதை சமகால அமெரிக்க, யூத ஆதி திரை அழ கி ய ல ாக முன்வைக்கு ஸ்டீபன்பீல்போக்ப், யூத ஆதிக்க நிலைபாட்டி இருந்துகொண்டு சமத்துவமும் ஜனநாயகம் போதிக்கும் அமோஸ்கித்தாய் போன்ற களின் பிரச்சாரத் திரைமொழிக்கு மாற்ற

ர்த்தம் - 3
டு
ன .
ன
9 'தி 9 ல்
ண
ன் பாலஸ்தீன மக்களின் பாடுகளை ஒத்ததாக டு இனம் கண்டு உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட
மக்களதும் விமோசன அழகியலாக திரைக் ல்
கலையை மாற்றிய கலைஞன் எலியா சுலைமான்
ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ஷின்டலர்ஸ் லிஸ்ட், சேவிங் பிரைவேட்ரயான், மியூனிக் போன்ற கடந்த காலத்தை மகோன்னப்படுத்து வதன் மூலம் நிகழ்கால அமெரிக்க யூத ஆதிக்க அரசியலைப் புனிதப்படுத்தும் திரைப்படங் களுடன் எலியா சுலைமானின் தி குரோனிக்கல் ஆப் எ டிஸ்ஸப்பியரன்ஸ் (1999) டிவைன் இன்டர்வென்சன் (2002) மற்றும் த டைம் தட் ரிமைன்ஸ் (2009) போன்ற படங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். எலியா சுலைமானின் இந்த மூன்று திரைப்படங்களும் அவரது சுயவாழ்வு
அனுபவங்களும், அவரது தாய் தந்நையரின் ன் டைரிக்குறிப்புகள் மற்றும் கடிதங்களின்
அடிப்படையில் அவரது பெற்றோரின் நண்பர் கக் களின் அனுபவங்களின் அடிப்படையில் சிச அமைந்த படங்கள்
சுலைமானின் படங்கள் பிற பாலஸ்தீனத் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வேறான அனுபவங்களைத் தருவது. பாலஸ்தீன தேசியம் அல்லது விடுதலை பற்றிய சைத், தர்வீஷ் போன்றவர்களின் பார்வையை ஒத்தது சுலைமானின் பார்வை, ஒடுக்கு முறைக்கு எதிராக பாலஸ்தீனக் கொடியை உயர்த்தும் நான் பாலஸ்தீனம் ஒரு அரசாக ஆகிய பின்னால் அரசுகளுக்கே உரிய ஒடுக்கு முறையின் தன்மையைக் கொஞ்ச மாகவேனும்
அது கொண்டிருக்குமானால் அந்தக் கொடியைக் க்க கீழே இறக்க நான் போராடுவேன் என்கிறார். ம் "பாலஸ்தீன நிலத்தின் விடுதலைக்காகப்
போராடும் நான் பாலஸ்தீனம் விடுதலை
பெற்றவுடன் அங்கிருந்து நீங்க விரும்பும் வர் நாடோடி'' என்கிறார் தர்வீஷ். Tக
எக
2 & 2. G
ன
5
ன
ன்
ம்

Page 41
மீதமிருக்கு!
பான
இந்த விடுதலைத் தேட்டமும் அலைவும் கலைஞனது இயல்பு மட்டுமல்ல, உலக வய மாதல் உலகில் நிலத்தையும் ஜீவாதாரங் களையும் கார்ப்பரேட்டுகளிடம் இழக்கும் சதா இடம்பெயரும் அனைத்து மனிதர் களுக்கும் உரியது என்கிறார் எலியா சுலைமான். இந்த வகையில்தான் குறிப்பான பாலஸ்தீன இருப்பற்ற அலைவு பற்றி தான் எடுக்கும் படங்கள் உலகில் எங்கிருக்கும் மனிதனோடும் பிரபஞ்சமயமான உறவைக் கொண்டிருக்கிறது என்கிறார் எலியா சுலைமான். எலியா சுலைமான் இப்போது இஸ்ரேலிய நிலம் எனக் கோரப்படும் நாசரத் நகரத்தில் பிறந்தவர். இஸ்ரேலிய அரபு நகரம் என்று இன்றும் சொல்லப்படும் நகரம் நாசரத், 69 சதவீத இஸ்லாமியர். 29 சதவீத கிறிஸ்தவர் வெறும் 2 சதவீத இஸ்ரேலியர் வாழும் நகராக அது 1948 ஆம் ஆண்டுகளில் இருந்தது.
இன்று மேற்குக்கரைப் பாலஸ்தீனத்தின் தலைநகராக இருப்பது ரமல்லா நகரம். யாசீர் அராபாத்தின் பதா விடுதலை அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள நகரம். பல்கலைக் கழகங்களும் நாடகத் திரைப்பட அரங்குகளும், திறந்தவெளித் தேநீர்க் கடைகளும், இரவு விடுதிகளும் நிறைந்த நகரம் ஹமாசின் கட்டுப்பாட்டிலிருக்கும் காஸா பிரதேசத்துடன் ஒப்பிட பெண்ணிலைவாதிகள் நிறைந்த நகரம் ரமல்லா, இஸ்ரேல் அரசு ரமல்லா நகரம் இருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பிரதேசத்தின் பகுதிகளையும் இணைத்துக் கொண்டு 25 அடி உயரம் கொண்ட 445 மைல்கள் நீளம் கொண்ட மதில் சுவற்றை இஸ்ரேலுக்கும் மேற்குக்கரைப் பிரதேசத் திற்கும் இடையில் எழுப்பியிருக்கிறது. பெர்லின் சுவரின் உயரம் 11 அடிகள், நீளம் 92 மைல்கள் இதனைப் போன்ற நான்கு மடங்கு உயரமும் நீளமும் கொண்டது இஸ்ரேலின் மதிற்சுவர் இன ஒதுக்கல் மதிற்சு வர் என இதனை சர்வதேச மன்னிப்புச்

ம் நேரம்
5!
சபை குறிப்பிடுகிறது. பாலஸ்தீனப் பயங்கர வாதிகளிடமிருந்து தனது மக்களைப் பாதுகாத்துக் கொள்ள இது தேவைப்படுகிறது. என்கிறது இஸ்ரேலிய அரசு.
தமது பாதுகாப்பை முன்வைத்து தமது அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப் படுத்தும் யூதவாதம் தோல்வியுற்ற ஒரு கருத்துநிலை என்கிறார் அரபு அறிஞரான ஹமித் தபாசி. இட்லர் காலத்தில் யூத மக்க ளுக்கு நடந்தது மிகப்பெரும் கொடுமை எனும் தபாசி இது போல் உலகில் எந்தவொரு இனக்குழுவுக்கும் அதற்கு முன்பாக இவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்படவில்லை எனவும் சொல்கிறார். அதற்காக அவர்களை உலகெங்கும் இருந்து ஏன் பாலஸ்தீன நிலப் பரப்பிற்குள் குடியேற்ற வேண்டும். பூர்வீகமாக அங்கிருக்கும் மக்களது நிலங்களை திருடி விட்டு அம்மக்களை வெளியேற்றி அகதிகளாக அலையச் செய்ய வேண்டும் என்கிறார் தபாசி. கிட்லர் யூதர்களுக்குச் செய்த கொடுமைக்கு பாலஸ்தீனர்களை ஏன் பழிவாங்க வேண்டும் என்கிறார் அவர். பாலஸ்தீன நிலம் பாரம் பரியமாக இஸ்லாமியர், கிறித்தவர், யூதர் என பல்லின மக்களுக்கு உரியது அதனை ஏன் யூதர்களுக்கென ஆக்க வேண்டும் எனக் கேட்கிறார் தபாசி.
பாலஸ்தீன மக்களின் பிரச்சினை இது தான். அவர்களது நிலம் திருடப்பட்டது. அவர் களது மொழி, புதைகுழிகள், வழிபாட்டிடங்கள், நினைவுகள் என அனைத்தும் திருடப்பட்டு விட்டது. எழுபது ஆண்டுகளாக அவர்கள் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர் களது உறவுகள், கிராமங்கள், வேலையிடங்கள், பாடசாலைகள், நூலகங்கள் என அனைத்தும் 25 அடி உயரச் சுவரினால் பிரிக்கப்பட்டிருக் கிறது. அந்நியர்களால் வன்முறையினால் திருடப்பட்ட தமது நிலத்தில் விலங்குகளால் பிணைக்கப்பட்ட அடிமை மனிதர்களாக
பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள்.

Page 42
அர்த்த
தமது சொந்த நிலத்துக்கு அந்நியர்கள் பாலஸ்தீனர்கள் வாழ்தலும் மரணமும் சம நொடியில் அனுபவமாக இருக்கும் நிலை இது. இந்த நொடி யுகம் போன்றது. மயான அமைதி கொண்டது. கைத்த மனநிலையில் உதடுகளின் இடையில் அபத்தப் புன்னகையை வரவழைப்பது. பாலஸ்தீன மக்களின் இந்தக் கூட்டு மனநிலை, கோபம், கையறுநிலை, மரணபயம். இடைவெளியில் உயிர்ப்புக்கான வேட்கையுடன் வெடிக்கும் அபத்தக்கெக்கலி என்பதாகவே எலியா சுலைமான் படங்கள் இருக்கின்றன.
நிரந்தரமான இடமற்றவனாக இருக்கும் பாலஸ்தீன மனிதன், நியூயோர்க்கிலிருந்து இஸ்ரேலின் பகுதியாக இருக்கும் தனது பூர்வீக நிலமான நாசரேத்திற்குத் திரும்புவதும், நாசரேத்திலிருந்து பாலஸ்தீனம் என இன்று அழைக்கப்படும் மேற்குக் கரைப்பிரதேசமான ரமல்லாவுக்கு திரும்புவதும் குறித்ததுதான் எலியா சுலைமானின் மூன்று படங்கள். இந்தப் பிளவுபட்டிருக்கும் இரு நகரங்களும் ஒரு போது பிளவுபடாத பாலஸ்தீன நிலத்தின் ஒன்றிணைந்த நினைவுகள், நினைவுகளின் தகர்வும், ஒன்றிணைந்த நினைவுகளைத் தேடி இஸ்ரேலிய அரசின் ராணுவச் சாவடிகளையும் மதில்களையும் கடந்து செல்லுவதுமான எலியா சுலைமானின் வன்மையான யாத்திரை யாகவே மூன்று படங்களும் உருவாகி யிருக்கிறது. இந்த மூன்று படங்களிலும் மிக அதிகமான உலகக் கவனிப்பையும் விவாதங் களையும் தூண்டிய படமாக இருப்பது 'த டைம் தட்ரிமைன்ஸ்'.
பாலஸ்தீன மக்களுக்கு முன்னிருப்பது இன்று முழு அழிவுக்கு முன்பான மீதமிருக்கும் காலமோ எனத் தான் அஞ்சுவதாக எலியா சுலைமான் குறிப்பிடுகிறார். என்றாலும் எதேச்சாதிகார அரசுகளை வீழ்த்திய அரபுப் புரட்சி அந்தக் காலத்தை நகர்த்திச் செல்வதாக தனக்கு நம்பிக்கை வந்திருப்பதாகப் பிற் பாடான தனது நேர்காணல்களில் சொல்கிறார்.

5ம் - 3
'த டைம் தட்ரிமைன்ஸ்', படம் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆயுதப் படைகள் நாசரேத் நகரைக் கைப்பற்றும் சம்பவங்களுடன் துவங்குகிறது. படம் எந்தக் காலத்தைத்தனது கதைகூறு களமாகக் கொண்டிருக்கிறது என்பதனை எகிப்து அதிபர் நாசரின் மரணம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தொலைக் காட்சிச் செய்தி. இஸ்ரேலியக் காவலரின் கிழக்கு ஆசிய மருத்துவத் தாதியான மனைவி பாடும் டைடானிக் படப்பாடல் என்பதாகக் குறித்துச் செல்கிறது. படம் டைட்டானிக் படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. எலியா சுலைமானின் பெற்றோரின் வாழ்வு குறித்த இந்தப்படம் அவரது அன்னை மருத்துவ மனையில் மரணப் படுக்கையில் இருக்கும் காட்சியுடன் முடிவு பெறுகிறது. தனதும் தனது பெற்றோருடையதும் ஐம்பதாண்டு வாழ்வு குறித்ததாக 'த டைம் தட்ரிமைன்ஸ்' படத்தை உருவாக்கியிருக்கிறார் எலியா சுலைமான்.
இஸ்ரேலிய ஆக்கரமிப்பை எதிர்த்து துப்பாக்கி ஏந்திப் போராடும் பவுத் சுலைமான், போராளிகளுக்கு துப்பாக்கி தயாரிக்கும் கடைசல் எந்திரத் தொழிலாளி சுலைமான், சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைக்கும் இதய சத்திரசிகிச்சை செய்யப்பட்ட மத்தியதர வயது சுலைமான், நாசரேக் கடற்கரையில் நண்பருடன் இரவில் மீன்பிடிக்க லெபனா னிருந்து ஆயுதம் கடத்தியதாகக் கைது செய்யப்படும் சுலைமான் உடல் தளர்ந்த நிலையில் இன்னொரு தலைமுறை பாலஸ்தீன இளைஞர்கள் யுவதிகளில் இஸ்ரேலிய அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்யும் சுலைமான், சதா கெரசின்கேணுடன் தற்கொலை செய்து கொள்ள முனையும் முதியவரை காப்பாற்றும் சுலைமான் என அவரது தந்தையின் வாலிப நாட்களும் பற்றியது 'த டைம் தட்ரிமைன்ஸ்' படக்கதையின் ஒரு கன்னி தந்தையின் அனைத்து நகர்வுகளிலும் ஒன்றித்து இயங்கி அவரது மரணத்தின் பின் முழுமையாக

Page 43
மீதமிருக்கு
Tக
மெளனியாகி உன்மத்த மனநிலையில் மரணிக்கும் சர்க்கரை வியாதி பாதித்த அன்னை கதையின் பிறிதொரு கண்ணி. பெற்றோரின் நினைவுகளான இந்த இரண்டு கதைத் தாரைகளையும் இணைத்தபடி கடந்த காலத்தினதும் நிகழ்காலத்தினதும் வாழ்வு மற்றும் அரசியலின் சாட்சியமாக வாழ்கிறார் எலியா சுலைமான்
பள்ளிச் சிறுவனாக, வாலிபனாக, தந்தை யின் மரணத்தின் பின்பான தனையனாக, வயோதிபத் தாயைப் பராமரிக்கும் நரைத்த மத்தியதரவர்க்க மனிதனாக வாழ்ந்திருக்கிறார் எலியா சுலைமான். இன்னும் இரண்டு காட்சி களைச் சொல்ல வேண்டும். ஓர் இளைஞன் குப்பையைப் போடுவதற்காக தெருவின் மறுமுனையிலிருக்கும் குப்பைத் தொட்டியை நோக்கி வருகிறான். அவனது வீட்டின் முன்பாக இஸ்ரேலிய டாங்கி நிற்கிறது. டாங்கியின் குழல் இளைஞனைக் குறிவைத்து முன்னும் பின்னும் நகர்கிறது. இளைஞன் அது குறித்துக் கண்டு கொள்வதே இல்லை. குப்பையைப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் முன்பு அவனது கைத்தொலைபேசி அடிக்கிறது. அது அவனது காதலியாகவோ நண்பனாகவோ இருக்கலாம். தொலைபேசிக்குப் பதில் சொல்லிக் கொண்டு தெருவில் ஒரு முனைக்கும் மறு முனைக்கும் நடக்கிறான். அன்று இரவு ஒரு நடன விருந்து இருப்பதாகவும். பல புதிய பாடல்கள் வந்திருப்பதாகவும் தொலைபேசி யில் பதிலிறுக்கிறான் இளைஞன். இந்த உரை யாடல் முழுவதிலும் டாங்கியின் குழல் இளைஞனைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் காட்சியின் அழகு அந்த இளைஞனின் கண்டு கொள்ளாத ஆன்ம பலத்திலும் அலட்சியத்திலும் இருக்கிறது.
பிறிதொரு காட்சியில் இளைஞர்களும் யுவதிகளும் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டிருக்கிறார்கள். ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள். அந்த வழியில்
பா

ம் நேரம்
காச
கறுப்புக் கண்ணாடி அணிந்த பெண் தள்ளு வண்டியில் தனது குழந்தையை வைத்து தள்ளிக்கொண்டு வருகிறாள். ராணுவத்தினன் அப்பெண்ணைப் பார்த்து 'சீக்கிரம் வீட்டுக்குப் போ' என்கிறான். தள்ளுவண்டியை சாவகாச மாக மெதுவாக நிறுத்தும் பெண், தனது கறுப்புக் கண்ணாடியை முன் தலைக்கு ஏற்றி விட்டு விட்டு, 'என்னையா வீடு போகச் சொல்கிறாய் நீ?' 'முதலில் நீ உன் வீட்டுக்குப் போ' என்று சொல்லிவிட்டு குழந்தையுடனான தள்ளு வண்டியை நகர்த்தத் துவங்குகிறாள்.
கிரேக்கத்தின் தியோ ஆஞ்சல் பெலொஸ், அமெரிக்கவின் பஸ்டர் கீட்டன், ஜப்பானின் ஓசு, சீனாவின் சிகோசியன் போன்றோர் தமது திரை ஆதர்சங்கள் என்கிறார் எலியா சுலைமான். ஓவியரும் கலை விமர்சகருமான ஜான் பெர்ஜர், தத்தவவாதிகளான பெனான், வால்ட்டர் பெஞ்ஜமின், கவிஞரான பிரைமோ லெவி போன்றோர் தனது அறிவாதர்ஷங்கள் என்கிறார் எலியா சுலைமான். கலை மனித விமோசனத்திற்கானது என்று கருதுகிற எவரும் ஆரத்தழுவிக் கொள்ளக்கூடிய திரைக் கலைஞன் எலியா சுலைமான்.
சம்பவங்களும் காட்சிகளும் கலைத்துப் போட்டபடி கிடக்கின்றன. அதிகமும் படத் தொகுப்புக்கு ஆட்படாத மிக நீள நீளமான காட்சிகள், மௌனம் மட்டுமே மொழியாகும் அதி நீண்ட காட்சிகள், அந்தந்தக் காலத்தில் குறித்த தலைமுறையினரை உன்னத மன நிலையில் வைத்திருந்த பாடகர்களின் குரல்கள் இசைத் தட்டுகள், திரும்பத் திரும்ப கொஞ்சமே மாறுதலுடன் நிகழும் நிகழ்வுகள், நடன அசை வுகள் போன்ற ஒத்திசைவும் லயமும் கொண்ட மனிதர்களின் நடவடிக்கைகள், ஒரு நொடிக்கும் மறு நொடிக்கும் இடையிலான காலம், ஓர் அடிக்கும் மறு அடிக்கும் இடையிலான இடம் போன்றவற்றை இசைவாக்கும் திட்டமிட்ட படியிலான காமெராவின் நிலைத்த பார்வை என ஓர் இசைக்கோர்வை போன்றது எலியா சுலைமானின் திரைமொழி.

Page 44
58
அர்த்
தமது சொந்த நிலத்துக்கு அந்நியர்கள் பாலஸ்தீனர்கள் வாழ்தலும் மரணமும் சம நொடியில் அனுபவமாக இருக்கும் நிலை இது. இந்த நொடி யுகம் போன்றது. மயான அமைதி கொண்டது. கைத்த மனநிலையில் உதடுகளின் இடையில் அபத்தப் புன்னகையை வரவழைப்பது. பாலஸ்தீன மக்களின் இந்தக் கூட்டு மனநிலை, கோபம், கையறு நிலை, மரணபயம். இடைவெளியில் உயிர்ப்புக்கான வேட்கையுடன் வெடிக்கும் அபத்தக்கெக்கலி என்பதாகவே எலியா சுலைமான் படங்கள் இருக்கின்றன.
நிரந்தரமான இடமற்றவனாக இருக்கும் பாலஸ்தீன மனிதன், நியூயோர்க்கிலிருந்து இஸ்ரேலின் பகுதியாக இருக்கும் தனது பூர்வீக நிலமான நாசரேத்திற்குத் திரும்புவதும், நாசரேத்திலிருந்து பாலஸ்தீனம் என இன்று அழைக்கப்படும் மேற்குக் கரைப்பிரதேசமான ரமல்லாவுக்கு திரும்புவதும் குறித்ததுதான் எலியா சுலைமானின் மூன்று படங்கள். இந்தப் பிளவுபட்டிருக்கும் இரு நகரங்களும் ஒரு போது பிளவுபடாத பாலஸ்தீன நிலத்தின் ஒன்றிணைந்த நினைவுகள். நினைவுகளின் தகர்வும், ஒன்றிணைந்த நினைவுகளைத் தேடி இஸ்ரேலிய அரசின் ராணுவச் சாவடிகளையும் மதில்களையும் கடந்து செல்லுவதுமான எலியா சுலைமானின் வன்மையான யாத்திரை யாகவே மூன்று படங்களும் உருவாகி யிருக்கிறது. இந்த மூன்று படங்களிலும் மிக அதிகமான உலகக் கவனிப்பையும் விவாதங் களையும் தூண்டிய படமாக இருப்பது 'த டைம் தட்ரிமைன்ஸ்'.
பாலஸ்தீன மக்களுக்கு முன்னிருப்பது இன்று முழு அழிவுக்கு முன்பான மீதமிருக்கும் காலமோ எனத் தான் அஞ்சுவதாக எலியா சுலைமான் குறிப்பிடுகிறார். என்றாலும் எதேச்சாதிகார அரசுகளை வீழ்த்திய அரபுப் புரட்சி அந்தக் காலத்தை நகர்த்திச் செல்வதாக தனக்கு நம்பிக்கை வந்திருப்பதாகப் பிற் பாடான தனது நேர்காணல்களில் சொல்கிறார்.

கதம் - 3
'த டைம் தட்ரிமைன்ஸ்', படம் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆயுதப் படைகள் நாசரேத் நகரைக் கைப்பற்றும் சம்பவங்களுடன் துவங்குகிறது. படம் எந்தக் காலத்தைத்தனது கதைகூறு களமாகக் கொண்டிருக்கிறது என்பதனை எகிப்து அதிபர் நாசரின் மரணம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தொலைக் காட்சிச் செய்தி. இஸ்ரேலியக் காவலரின் கிழக்கு ஆசிய மருத்துவத் தாதியான மனைவி பாடும் டைடானிக் படப்பாடல் என்பதாகக் குறித்துச் செல்கிறது. படம் டைட்டானிக் படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. எலியா சுலைமானின் பெற்றோரின் வாழ்வு குறித்த இந்தப்படம் அவரது அன்னை மருத்துவ மனையில் மரணப் படுக்கையில் இருக்கும் காட்சியுடன் முடிவு பெறுகிறது. தனதும் தனது பெற்றோருடையதும் ஐம்பதாண்டு வாழ்வு குறித்ததாக 'த டைம் தட்ரிமைன்ஸ்' படத்தை உருவாக்கியிருக்கிறார் எலியா சுலைமான்.
இஸ்ரேலிய ஆக்கரமிப்பை எதிர்த்து துப்பாக்கி ஏந்திப் போராடும் பவுத் சுலைமான், போராளிகளுக்கு துப்பாக்கி தயாரிக்கும் கடைசல் எந்திரத் தொழிலாளி சுலைமான், சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைக்கும் இதய சத்திரசிகிச்சை செய்யப்பட்ட மத்தியதர வயது சுலைமான், நாசரேக் கடற்கரையில் நண்பருடன் இரவில் மீன்பிடிக்க லெபனா னிருந்து ஆயுதம் கடத்தியதாகக் கைது செய்யப்படும் சுலைமான் உடல் தளர்ந்த நிலையில் இன்னொரு தலைமுறை பாலஸ்தீன இளைஞர்கள் யுவதிகளில் இஸ்ரேலிய அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்யும் சுலைமான், சதா கெரசின்கேணுடன் தற்கொலை செய்து கொள்ள முனையும் முதியவரை காப்பாற்றும் சுலைமான் என அவரது தந்தையின் வாலிப நாட்களும் பற்றியது 'த டைம் தட்ரிமைன்ஸ்' படக்கதையின் ஒரு கன்னி தந்தையின் அனைத்து நகர்வுகளிலும் ஒன்றித்து இயங்கி அவரது மரணத்தின் பின் முழுமையாக

Page 45
மீதமிருக்கு
மெளனியாகி உன்மத்த மனநிலையில் மரணிக்கும் சர்க்கரை வியாதி பாதித்த அன்னை கதையின் பிறிதொரு கண்ணி . பெற்றோரின் நினைவுகளான இந்த இரண்டு கதைத் தாரைகளையும் இணைத்தபடி கடந்த காலத்தினதும் நிகழ்காலத்தினதும் வாழ்வு மற்றும் அரசியலின் சாட்சியமாக வாழ்கிறார் எலியா சுலைமான்
பள்ளிச் சிறுவனாக, வாலிபனாக, தந்தை யின் மரணத்தின் பின்பான தனையனாக, வயோதிபத் தாயைப் பராமரிக்கும் நரைத்த மத்தியதரவர்க்க மனிதனாக வாழ்ந்திருக்கிறார் எலியா சுலைமான். இன்னும் இரண்டு காட்சி களைச் சொல்ல வேண்டும். ஓர் இளைஞன் குப்பையைப் போடுவதற்காக தெருவின் மறுமுனையிலிருக்கும் குப்பைத் தொட்டியை நோக்கி வருகிறான். அவனது வீட்டின் முன்பாக இஸ்ரேலிய டாங்கி நிற்கிறது. டாங்கியின் குழல் இளைஞனைக் குறிவைத்து முன்னும் பின்னும் நகர்கிறது. இளைஞன் அது குறித்துக் கண்டு கொள்வதே இல்லை. குப்பையைப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் முன்பு அவனது கைத்தொலைபேசி அடிக்கிறது. அது அவனது காதலியாகவோ நண்பனாகவோ இருக்கலாம். தொலைபேசிக்குப் பதில் சொல்லிக் கொண்டு தெருவில் ஒரு முனைக்கும் மறு முனைக்கும் நடக்கிறான். அன்று இரவு ஒரு நடன விருந்து இருப்பதாகவும். பல புதிய பாடல்கள் வந்திருப்பதாகவும் தொலைபேசி யில் பதிலிறுக்கிறான் இளைஞன். இந்த உரை யாடல் முழுவதிலும் டாங்கியின் குழல் இளைஞனைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் காட்சியின் அழகு அந்த இளைஞனின் கண்டுகொள்ளாத ஆன்ம பலத்திலும் அலட்சியத்திலும் இருக்கிறது.
பிறிதொரு காட்சியில் இளைஞர்களும் ச யுவதிகளும் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி ( ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். | ராணுவத்தினர் அவர்கள் மீது துப்பாக்கிப்
பிரயோகம் செய்கிறார்கள். அந்த வழியில் க

ம் நேரம்
கறுப்புக் கண்ணாடி அணிந்த பெண் தள்ளு வண்டியில் தனது குழந்தையை வைத்து தள்ளிக்கொண்டு வருகிறாள். ராணுவத்தினன் அப்பெண்ணைப் பார்த்து 'சீக்கிரம் வீட்டுக்குப் போ' என்கிறான். தள்ளுவண்டியை சாவகாச மாக மெதுவாக நிறுத்தும் பெண், தனது கறுப்புக் கண்ணாடியை முன் தலைக்கு ஏற்றி விட்டுவிட்டு, 'என்னையா வீடு போகச் சொல்கிறாய் நீ?' 'முதலில் நீ உன் வீட்டுக்குப் போ' என்று சொல்லிவிட்டு குழந்தையுடனான தள்ளு வண்டியை நகர்த்தத் துவங்குகிறாள்.
கிரேக்கத்தின் தியோ ஆஞ்சல் பெலொஸ், அமெரிக்கவின் பஸ்டர் கீட்டன், ஜப்பானின் ஓசு, சீனாவின் சிகோசியன் போன்றோர் தமது திரை ஆதர்சங்கள் என்கிறார் எலியா சுலைமான். ஓவியரும் கலை விமர்சகருமான ஜான் பெர்ஜர், தத்தவவாதிகளான பெனான், வால்ட்டர் பெஞ்ஜமின், கவிஞரான பிரைமோ லெவி போன்றோர் தனது அறிவாதர்ஷங்கள் என்கிறார் எலியா சுலைமான். கலை மனித விமோசனத்திற்கானது என்று கருதுகிற எவரும் ஆரத்தழுவிக் கொள்ளக்கூடிய திரைக் கலைஞன் எலியா சுலைமான்.
சம்பவங்களும் காட்சிகளும் கலைத்துப் போட்டபடி கிடக்கின்றன. அதிகமும் படத் தொகுப்புக்கு ஆட்படாத மிக நீள நீளமான காட்சிகள், மௌனம் மட்டுமே மொழியாகும் அதி நீண்ட காட்சிகள், அந்தந்தக் காலத்தில் குறித்த தலைமுறையினரை உன்னத மன நிலையில் வைத்திருந்த பாடகர்களின் குரல்கள் இசைத் தட்டுகள், திரும்பத் திரும்ப கொஞ்சமே மாறுதலுடன் நிகழும் நிகழ்வுகள், நடன அசை வுகள் போன்ற ஒத்திசைவும் லயமும் கொண்ட மனிதர்களின் நடவடிக்கைகள், ஒரு நொடிக்கும் மறு நொடிக்கும் இடையிலான காலம், ஓர் அடிக்கும் மறு அடிக்கும் இடையிலான இடம் போன்றவற்றை இசைவாக்கும் திட்டமிட்ட டியிலான காமெராவின் நிலைத்த பார்வை ன ஓர் இசைக்கோர்வை போன்றது எலியா லைமானின் திரைமொழி.

Page 46
மனிதம் போற்றிய மணிவண்ண
எஸ்.கோபாலகிருஷ்ணன்
அல்வா என்பது தமிழர்கள் மத்தி யில் பிரபலமான ஓர் இனிப்புப் பண்டம். 1994 இல் வெளியான அமைதிப்படை என்ற படம் அல்வா என்ற வார்த்தைக்கு தமிழ்ச் சொல் அகராதியில் புதுப்பொருளைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு யாராவது பொய் சொல்வதை உணர்ந்தால் 'ஏய்! யார் கிட்ட அல்வா கொடுக்கற?' என்று கேட்கத் தொடங்கினார்கள் தமிழர்கள். இதைப் போல் தமிழ் மக்களின் பேச்சுமொழியில் ஊடுருவும் திறமை தமிழ் திரைப்படத்தறையைச் வெகு சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர் களில் ஒருவர் அமைதிப்படை படத்தின் இயக்குநர் மணிவண்ணன்.
50 படங்களை இயக்கியவரும் 400 படங்களுக்கு மேல் நடித்தவருமான மணிவண் ணன் 2013 ஆண்டில் ஜூன் திங்கள் 15 ஆம் திகதி இன்னுயிர் நீத்தார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களுக்கே பேரிழப்பாக அமைந் திருக்கிறது.
1954 இல் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூலுார் கிராமத்தில் பிறந்தவர் மணிவண்ணன். இவரது தந்தை

ன்
ஆர்.எஸ்.மணியம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். தந்தையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம், திராவிடச் சிந்தனை மரபு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டார். பின்னர் இடதுசாரி சிந்தனை மரபில் ஈடுபாடு கொண்டு மார்க்ஸிய லெனினிஸக் கட்சியில் பணியாற்றினார். தன் தந்தையுடன் அரசியல் ரீதியாக முரண்படத் தொடங்கினார். ஈழப் பிரச்சினையில் ஈடுபாடு கொண்டு பின்னாட்களில் ம.தி.மு.க, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளிலும் பணி
யாற்றினார்.
நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரான மணிவண்ணன் கல்லூரிக் காலங்களில் தன் கதை வசனத்தில் முற்போக்குச் சிந்தனைகளைப் பறைசாற்றும் மேடை நாடகங்களை அரங் கேற்றியிருக்கிறார். 80களின் தொடக்கத்தில் தமிழ் சினிமா அலையைத் தன் வசம் திருப்பிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் திரைப் படங்களைப் பார்த்து திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டார். பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தைப் பார்த்து அதைப் பற்றிய 100 பக்கக் கடிதம் ஒன்றை எழுதி பாரதிராஜாவுக்கு அனுப்பினார். அது அவரை பாரதிராஜாவின் பட்டறையில் இணைத்தது. பாரதிராஜா இயக்கி நடித்துக் கொண்டிருந்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தின் துணை இயக்கு நரானார் மணிவண்ணன்.
பாரதிராஜாவின் துணை இயக்குநர்களுக்கு ஒரு நன்மை உண்டு. அவர்களிடம் எழுத்துத் திறமை இருந்தால் கதை வசனம் எழுதும் பொறுப்பை பாரதிராஜா வழங்கிவிடுவார். இதனால் பயன்பெற்றவர்கள் பாக்யராஜும் மணிவண்ணனும் தான். ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருந்த மணிவண்ணன்

Page 47
அர்த்
மணிவண்ணனிடம் திரைப்படப் பாடம் பயின்றவர்கள். இவர்கள் அனைவரும் தனி முத்திரை பதித்த இயக்குநர்கள் என்பதும் மணிவண்ணனுக்குப் பெருமை சேர்ப்பதாக
அமைந்திருக்கிறது.
அதற்கு முன் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் அமைதிப் படையில் தான் ஒரு சிறந்த நடிகராக கவனிக் கப்பட்டார் மணிவண்ணன். இந்தப் படத்தில் ஓர் அரசியல் கட்சித் தலைவராகத் தோன்றும் மணிவண்ணன், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், பேச்சுத் திறமையால் அப்பாவி மக்களை மயக்கிய திராவிடக் கட்சித் தலைவர் கள், கள்ள ஓட்டுக் கலாச்சாரம், வாரிசு அரசியல் ஆகியவற்றைச் சகட்டுமேனிக்கு வாரித் தள்ளியிருப்பார். இதனால் நடிப்பு வாய்ப்புகள் அவரை வந்தடைந்தன.
ரஜினிகாந்த, கமல்ஹாசன், விஜயகாந், சத்யராஜ், அர்ஜுன், அஜீத், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். முற்போக்கு சிந்தனை கொண்ட நடிகரான சத்யராஜும் இவரும் இணைந்து நடித்த படங்களில் மூட நம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களையும் பகிடி செய்யும் வசனங்கள் அதிகமாக இடம்பெற்று ரசிகர் களின் ஆதரவைப் பெற்றன. 90 களில் இந்த இணை நகைச்சுவையில் கவுண்டமணி செந்தில் இணைக்கு இணையான வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருந்தது என்றால் அது மிகை யல்ல
சுந்தர்.சி இயக்கிய ' உள்ளத்தை அள்ளித் தா' என்ற நகைச்சுவைப் படத்தில் இரட்டை வேடமேற்று நடித்த மணிவண்ணன் இரண்டு பாத்திரங்களையும் சிறப்பாகக் கையாண்டிருப்பார். இது தவிர 'முதல்வன்', 'அவ்வை சண்முகி', 'சங்கமம்', 'படையப்பா', 'வில்லாதிவில்லன்', 'மாமன் மகள் ', 'எட்டுப் பட்டிராசா', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பட்ஜெட் பத்மநாபன்', 'மாயாண்டி குடும்பத்தார் போன்ற எண்ணற்ற படங்கள் இவரது நடிப்புக்காகவும் கவனம் பெற்றிருக்கின்றன.

தம் - 3
எம்.ஆர்.ராதா பாணியில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடங்களை திறம்படக் கையாள்பவராக அறியப்பட்டவர் மணி வண்ணன். நடிப்புக்கான தன் ஆதர்சமாக எம். ஆர்.ராதாவையே குறிப்பிடுவார் மணி வண்ணன்.
அதே வேளையில் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்ததோடு பார்ப்பவரைக் கண்ணீர் சிந்தவகைக்கும் நடிப்பையும் வழங்கியிருக்கிறார். 'சங்கமம்', 'காதலுக்கு மரியாதை', 'சமுத்திரம்', 'மாயாண்டி குடும்பத்தார்' ஆகிய படங்கள் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை. குறிப்பாக சங்கமம் படத்தில் இவரது பாத்திரமே மையப் பாத்திரமாக அமைந்தது.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கைச் செயற்பாடுகளிலும் துணிச் சலையும் சமுதாய அக்கறையையும் வெளிப் படுத்தியவர் மணிவண்ணன். திராவிட முன் னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சிக்க அஞ்சியதில்லை. அதே நேரத்தில் அவரிடம் தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்டவும் தவறியதில்லை.
திரையுலகப் பிரபலங்கள் செய்த தவறு களையும் மணிவண்ணன் கண்டிக்கத் தவறிய தில்லை. 'விஸ்வரூபம்' திரைப்படத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியபோது அந்தப் படம் இஸ்லாமி யர்களை இழிவுபடுத்துவதாக கமல்ஹாசனைக் கண்டித்த வெகு சிலரில் ஒருவர் மணி வண்ணன். அப்போதுகூட கமல்ஹாசனின் திறமையையும் உழைப்பையும் கெளரவப் படுத்திவிட்டுத்தான் பேசினார். கமல்ஹாசன் ஹாலிவுட் தரத்தை தமிழ்த் திரைப்படங் களுக்குக் கொண்டு வருவது நல்லதுதான். ஆனால் ஹாலிவுட்டின் மோசமான அரசியலை தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவருவது கண்டிக்கத்தக்கது என்பதைச் சுட்டிக்காட்டிய வெகுசிலரில் மணிவண்ணனும் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக 'விஸ்வரூபம்'

Page 48
மனிதம் போற்றி
வெளியாவதற்கு முன் எந்தக் கருத்தையும் கூற மறுத்துவிட்டு படத்தைப் பார்த்த பின்பே அது குறித்த தன் கருத்துக்களை வெளிப்படுத்தி னார் என்பது அவரது நேர்மைக்குச் சான்று.
திரையுலகில் திரையில் மட்டுமல்லாமல் திரைமறைவிலும் மிக நல்ல மனிதராக அறியப் பட்ட சிலரில் ஒருவர் மணிவண்ணன். அவ ரிடம் உதவி இயக்குநராகப் பணியாற் றியவரும் இன்றைய முன்னணி ஊடகவி யலாளருமான கல்யாணகுமாரின் வார்த்தைகள் அதற்குச் சாட்சியமாக அமைகின்றன. தன் திருமணத்தைக் கைக்காசு போட்டு நடத்திக் கொடுத்தவர் மணிவண்ணன் என்பதை நினைவுகூரும் கல்யாணகுமார். மணிவண் ணன் கலகலப்பானவர் என்றும் திரையுலகப் பிரபலங்களிடம் இருக்கும் பகட்டை அறவே தவிர்ப்பவர் என்றும் தன் முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் ஞாநி மணி வண்ணன் மறைவுக்குத் தெரிவுத்துள்ள இரங்கலில் இடதுசாரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தமிழ் சினிமாவில் நுழைவது அரிதாக இருப்பதையும் அது போன்ற மிகச்சில ரில் மணிவண்ணனும் ஒருவர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எல்லா வற்றுக்கும் மேலாக அரண்மனைக்குள் (தமிழ் சினிமாவுக்குள்) நுழைந்த பின்னும் பிச்சைக் காரர்களுக்காகவே (துன்பத்தில் வாடும் எளிய மனிதர்களுக்காகவே) ஏங்கிய மனம் கொண்ட வர் என்று மணிவண்ணனை அடையாளப் படுத்தி அவரது மனித நேயத்துக்குக் கட்டியம் கூறுகிறார் ஞாநி.
பல்வேறு ஆளுமைகளையும் சாதி-மதம் சார்ந்த பழக்கவழக்கங்களையும் திரைப் படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் விமர் சித்தாலும் யாருடைய தனிப்பட்ட காழ்ப்பை யும் மணிவண்ணன் சம்பாதித்ததில்லை. 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட மணிவண்ணன் மீது தனிப்பட்ட முறையில் யாரும் எந்தக் குறையும் கூறிய தில்லை. இயக்குநர் பாரதிராஜாவைத் தவிர.

யே மணிவண்ணன்
அண்மையில் மணிவண்ணனுக்கும் பாரதிராஜவுக்கும் இருந்த உரசல்கள் பொது அரங்குக்கு வந்தன. தான் இயக்கிய கடைசிப் படமான 'நாகராஜ சோழன் (அமைதிப்படை- 2) படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாரதிராஜா தன்னைத் தவிர யாரையும் ஓர் இயக்குநராக மதிக்காதவர் என்றும், தனக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைக்க அவர் எந்த வகையிலும் உதவியதில்லை என்றும் கூறினார் மணிவண்ணன். அதேவேளையில் தனக்கு திரைப்படம் இயக்கும் கலையைப் பயிற்று வித்த குரு பாரதிராஜா தான் என்பதையும் அவர் பதிவு செய்யத் தவறிவில்லை.
இதற்கு எதிர்வினையாக பாரதிராஜா கூறிய பதில் ஒன்று 'ஆனந்த விகடன்' வார இதழில் வெளியானது. அதில் மணிவண் ணனுக்கு வாழ்வளித்தே தான்தான் என்றும் அந்த நன்றியை மறந்துவிட்டு மணிவண்ணன் பேசுவதாகவும் கூறியிருந்தார் பாரதிராஜா மணிவண்ணனை ஒரு பொய்யர் என்றும்
கூறியிருந்தார்.
அந்த பதில் வெளியாகி இரண்டு நாட்களில் இறந்துவிட்டார் மணிவண்ணன். மாரடைப்பால் இறந்திருப்பதால் மணிவண் ணனின் மறைவுக்கு பாரதிராஜாவின் இழிவான விமர்சனமும் காரணம் என்று சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அதை ஏற்க முடியாது என்றாலும் தன் கருத்துக் களை சற்று கண்ணியத்துடன் பாரதிராஜா வெளிப்படுத்தியிருக்கலாம் என்பதை மறுப் பதற்கில்லை
ஆழ்ந்த வாசிப்பின் மூலம் தமிழ்த் திரைப் படத்துறையில் ஓர் அறிவு ஜீவியாக விளங்கிய மணிவண்ணன் நடிகராகவும் உயர்ந்து தன் பன்முகத் திறமையை நிரூபித்தவர். இவற்றுக் கெல்லாம் மேலாக அவருக்கு இருந்த சமூக அக்கறையும் மனிதநேயமும் தனிநபர் காழ்ப் பில்லாமல் விமர்சனங்களை முன்வைத்த பாங்குமே அவரை வரலாற்றின் மிக முக்கிய மான ஆளுமையாக மாற்றியிருக்கிறது.

Page 49
முதலாளித்துவத்திற்கும் அப்பா
பேராசிரியர் ந.சண்முகரத்தினம்
இந்த உரையில் உலக முதலாளித்துவ போக்கு கள் தொடர்பான மூன்று அம்சங்கள் பற்றி சில குறிப்புக்களை கலந்துரையாடுவதற்கு எடுப்பதே எனது முக்கிய குறிக்கோளாகும் இவையாவன. 1. 20 நூற்றாண்டின் அடிப்படை வரலாற்று
போக்குகள்.
2.
20 நூற்றாண்டின் பிற்பகுதியில் உலக முதலாளித் து வ அமைப் பின் தன்மைகள்.
முதலாளித்துவத்திற்கு மாற்றமைப்பு பற்றிய கற்பிதத் தேவை.
இந்த நூற்றாண்டின் வரலாற்றின் அடிப் படைக் கேள்வி இது முதலாளித்துவத்தின் நூற்றாண்டா? அல்லது சோசலிச நூற்றாண்டா? எனும் கேள்வி இப்போது அர்த்தமற்றதாகக் கூட படலாம். ஆனால் ஒரு 20 வருடம் பின்னோக்கி போவோமாயின் இக்கேள்வி இந்நூற்றாண்டின் ஒரு பிரதான கேள்வியாக இருந்ததை காணலாம். சோசலிசவாதிகளினால் 18ஆம் நூற்றாண்டு முதலாளித்துவ புரட்சியின் நூற்றாண்டாகவும், 19 ஆம் நூற்றாண்டு முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி யும் உலகளாவிய பரவலான ஆதிக்கத்தின் நூற்றாண்டாகவும், 20 ஆம் நூற்றாண்டு சோசலிச புரட்சிகளின் காலனித்து வத்தினால் ஒடுக்கப்பட்ட இனங்களின் மக்கள் விடுதலை போராட்டங்கள் போன்றவற்றின் காலகட்டமாகவும் கருதப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டு சோசலிச நாடுகளின் ஆதரவுடன் புதிதாக தேசிய விடுதலை பெற்ற நாடுகள்

முதலாளித்துவ அபிவிருத்தி பாதையை நிராகரித்து சோசலிசத்திற்கு சார்பான பாதையை நோக்கிய மாற்றுப் பாதைகளை தேர்ந்தெடுக்கும் யுகமாகவும் இடதுசாரிகள் பொதுவாக கருதினர். இதற்கான காரணங்கள் பல இருப்பினும் ஒரு அரசியல் காரணம் முக்கியத்துவம் பெற்றது. அதாவது புதிதாக தேசிய விடுதலை பெற்ற நாடுகள் அதுவரை தம்மை ஆண்ட ஏகாதிபத்திய ஆட்சியாளர் களின் நாடுகளில் இருந்த சமூக பொருளாதார அமைப்பையும் அவை தம்மீது திணித்த அமைப்பினையும் நிராகரித்து ஒரு மாற்று அமைப்பைத் தேடிய போது அவைகளுக்கு அக்கால கட்டத்தில் இருந்து வந்த சோசலிச அமைப்புகள் ஆதர்சனமாக இருந்தன.
1917 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஏற்பட்ட போல்ஷேவிக் புரட்சி ஒரு புதிய வரலாற்றின் ஆரம்பத்தை பறைசாற்றி அறிவித்தது. பல சோசலிச வாதிகளை பொறுத்த வரை அதுவே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் போல் அமைந்தது. ஏனெனில் அவர்களின் சமுதாய மாற்ற கனவு நனவாகும் நூற்றாண்டென அவர்கள் கருதிய 20 ஆம் நூற்றாண்டு ஆரம்ப நிகழ்ச்சி போல் இப்புரட்சி அமைந்தது. இப் புரட்சி நடைபெற்ற தருணத்தில் அதன் ஒரு நேரடி பார்வையாளனாக இருந்த அமெரிக்க பத்திரிகையாளான ஜோன் ரீட் (John Reed) 'உலகை குலுக்கிய பத்து தினங்கள்' எனும் நூலை எழுதி வெளியிட்டார். இத்தலைப்பு அப்புரட்சியின் சர்வதேச முக்கியத்துவத்தை அழகாக விபரிக்கிறது.
அக்கேடாபர் புரட்சி பிரதிபலித்த செய்தி களின் சாராம்சத்தை பின்வருமாறு சுருக்கி
கூறலாம்

Page 50
முதலாளித்துவத்தி
A
முதலாளித்து வத்திற் கு எதிரான சாத்தியப்பாட்டினை இப்புரட்சி நடை முறையில் காட்டியது. ஒரு மாற்று அமைப்பின் சாத்தியபாடு பற்றியும் அது உலகிற்கு தெரிவித்தது முதலாளித்துவம் பெருமளவில் விருத்தி பெறாத காலனித்துவ, அரை காலனித்துவ நாடுககளின் புரட்சிகர இயக்கங்கள் தோன்றி வளர உந்துகோளாக அமைந் தது. இந்த புரட்சிகள் ஒரு புதிய திசையில் அதாவது சோசலித்திற்கு சாதகமான திசை யில் தேசிய விடுதலை போராட்டங்களை நகர்த்திச் சென்றன. சீனப் புரட்சியின் வெற்றியும் அதை தொடர்ந்து வேறு பல ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகர மற்றும் சீர்த்திருத்த சமூக மாற்றங்களும் இப் போக்கிற்கு உதாரணங்களாக அமைந்தன இந்த போக்கு 2 ஆவது உலக யுத்தத்தின் முடிவில் உலகின் ஜனத்தொகையின் பெரும் பங்கினர் வாழும் நாடுகளை மேற்கத்திய முதலாளித்துவ முகாமைக்கெதிராக திருப்பி விட்டது. இதை கிரகித்த இடது சாரிகள் இது ஒரு வளரும் போக்கு என்றும் 20 ஆம் நூற்றாண்டு சோசலிசத்தின் நூற்றாண்டுதான் என்பதில் நம்பிக்கை வைத்தல் நியாயமானது என்றும் கருதி இருந்தனர். 1950/60 களில் இந்த கருத்து சர்வதேச ரீதியில் சோசலிச வாதிகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பிற்கு வழிவகுத்தது. ஆனால் காலப்போக்கில் தமது எதிர்பார்ப்புகள் தோல்வியடையும் அடை யாளங்கள் படிப்படையாக எழுந்து வந்தன. 1989 ஆம் ஆண்டு மார்கழியில் பேர்லின் சுவர் வீழ்ந்தது ஒரு வரலாற்று காலக்கட்டத்தின் முடிவினை அறிவிப்பது போல அமைந்தது. 1917 அக்டோபரில் கேட்ட செய்திக்கும் 1989 மார்கழியில் கேட்ட செய்திக்கும் இடையில் எவ்வளவு முரண்பாடு! இவ்விரு ஆண்டு களுக்கிடையிலான கால கட்டம் ஒரு குறுகிய

திற்கும் அப்பால்
சமாக
20 ஆம் நூற்றாண்டு போல் அமைந்தது. இந்தக் கால வெளியில் மனித வரலாற்றின் முதலாவது பாரிய சோசலிச பரிசோதனையின் வெற்றி களும், தோல்விகளும் இறுதி வீழ்ச்சிகளும் அடங்கி யுள்ளன. பல சோசலிசவாதிகளைப் பொறுத்த வரையில் இது நம்பிக்கையுடன் ஆரம்பித்து அதன் நிராகரணத்தில் முடிந்த ஒரு சோகம் கலந்த வரலாறு. ஆனால் இங்கு முக்கியமாக மனங்கொள்ள வேண்டியது என்னவெனில் இவ்வரலாற்று பாடங்களை நாம் இன்னும் முற்றாக கற்கவில்லை. இங்கே பொதிந்துள்ள அனுபவங்கள் எதிர்காலத்தில் சோசலிசம் பற்றிய புதிய கற்பிதங்களுக்கு நிச்சயம் உதவவல்லன. துரதிஷ்டவசமாக சர்வதேச சோசலிஷ இயக்க வரலாறு மறதிக்கும் நினைவிற்குமிடையிலான ஒரு போராட்டம் போல் அமைந்துவிட்டது. உத்தியோக பூர்வமான வரலாறு வெற்றி பெற்றோரின் கதை என்பதை சோவியத் கட்சியின் காலத்திற்கு காலம் மாற்றங்களுடன் பிரசுரிக்கப்பட்ட வரலாறுகள் காட்டுகின்றன. மனித வரலாற்றினை மார்க்சின் இயங்கியல் பார்வையில் பார்ப்பதில் தேர்ச்சி பெற்ற கம்யூனிஸ்டுகள் தமது அமைப்புகளின் வரலாற்றினை அவ்வாறு பார்ப்பதில் பல இடங்களில் தவறிவிட்டனர் என்று கருத இடமுண்டு. 1917க்குப் பின்னான சோசலிச அமைப்புகளின் வரலாறுகளை பூரணமாக மீட்டெடுத்தல் சோசலிஸவாதிகள் எதிர் நோக்கும் இன்றைய கடமைகளுள் ஒன்றாகும். இது பற்றி இங்கு ஆழமாக தொடர்ந்து பேச நேரம் இடம் தரவில்லை.
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். இன்று நாம் கேள்வி படுவன என்ன? இங்கு மூன்று விடயங்களை
குறிப்பிடலாம்

Page 51
அர்:
1. முதலாளித்துவம் உலகை பூரணமாக
வெற்றி கொண்டுவிட்டது. சோசலிசம் ஒரு பயங்கர கனவாக முடி வடைந்துவிட்டது. அதாவது முதலாளித் துவத்திற்கு அப்பால் அதற்கு மாற்று அமைப்பு ஒன்றை தோற்றுவிக்கும் வரலாற்று போக்கு ஒரு இறுதி தோல்வியை தழுவிக் கொண்டது எனும் பிரசாரம் பலமாகவே கேட் கின்றது. அமெரிக்க அரசியல் ஆய்வாளரான பிரான்சிஸ் (Fukuyama) புக்குயாமாவின் பாஷையில் சொல்ல தானால் ''வரலாற்றின் முடிவு முத லாளித்துவ வரலாறு எனும் ரதத்தின் இறுதி நிலையை மனித குலம் கண்டு விட்ட அந்த முடிவு ஸ்தானம் லிபரல் முதலாளித்துவமே" அது மட்டுமன்றி மார்க்சின் வரலாற்று பொருள் முதல் வாத பார்வையை திருத்தி அமைக்க முற்படுகின்றார். அவருடைய கருத்தில் மார்க்ஸ் குறிப்பிட்ட வரலாற்றின் கடைசி நிலையம் வர்க்க மற்ற கம்யூனிசம் அல்ல. ஆனால் இன்று அமெரிக்காவிலும், மேற்கிலும் காணப் படும் லிபரல் முதலாளித்துவமே அது மார்க்சிசத்திற்கு விரோதமாக பிரச்சாரம் செய்வதே முதலாளித்துவ ஆய்வாள் ரின் பிரதான மரபாகும். ஆனால் Fukuyama வோ ஹேகல ஐயும் HEGE) மார்க்சையும் பயன்படுத்தியே வரலாறு பற்றிய தனது எடுகோள்களுக்குப் தரவுகளின் வியாக்கியானத்திற்குப் நம்பகத் தன்மையை தேடுகிறார். சோசலிசத்தின் மறைவோடு மார்க்சிய மும் மறைந்துவிட்டது என்பது பழைய பல்லவி. இது வழமையான மாக்சிய எதிர்ப்பாளர்களின் வரண்ட வறிய

ந்தம் - 3
கொச்சைவாதம். முதலில் மேற்கூறிய பதக் கருத்துகளில் உள்ள முரண் பாட்டை நாம் இங்கு அவதானிப்போம். முதலாவது கருத்திற்கும் மூன்றாவது கருத்திற்குமிடையான உறவினை பார்ப்போமேயானால் இங்கு இவை இரண்டிற்குமிடையே ஒரு முரண் பாட்டை பார்க்க கூடியதாகவுள்ளது. அதாவது முதலாளித்துவம் உலக ளாவிய அமைப்பாக எழுந்துவிட்டது என்றும் அதே நேரம் இருந்துவந்த சோசலிச மறைவோடு மார்க்கிசமும் மறைந்துவிட்டது எனக் கூறும் வாத மானது மார்க்சியத்தின் பிரதான உள்ளடக்கங்களை மறைக்கின்றது. முதன் முதலில் மார்க்சியம் முதலாளித் துவம் பற்றி ஒரு பன்முக ரீதியான ஆழ்ந்த அடிப்படையான ஒரு விமர்சன மாகும். மார்க்சின் பிரதான ஆய்வு முதலாளித்துவ அமைப்பின் இயக்கப் பாடுகள் பற்றியது. மூலதனம் எனும் தலைப்பில் அவர் எழுதிய நூலுக்கு உபதலைப்பும் கொடுத்தார். அது 'அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனம்' என்பதாகும். இவ் ஆய்வு நூலை மாக்ஸ் 19 ஆம் நூற்றாண்டில் மேலாட்சி செலுத்திய அரசியல் பொருளாதார சித்தாந்தம் (Theory) பற்றிய விமர்சனமாக கருதினார். இன்றைய பின்நவீனத்துவ வாதிகளின் சொல்லில் சொல்வதானால் மாக்சின் மூலதனம் எனும் நூல் 19 ஆம் நூற்றாண்டில் மேலாட்சி செலுத்திய அரசியல் பொருளாதார சிந்தனையின் கட்டுடைப்பு எனலாம். முதலாளித்துவ அமைப்பு பற்றி இது வரையில் வெளி வந்த விளக்கங்கள் விமர்சனங்களில் மிகவும் முழுமையானதாகவும் அடிப்

Page 52
முதலாளித்துவத்திற்கு.
இரு
ஆ!
மட்
வெ
.
இங்
அத்
தார்
பில்
படையானதாகவும் விளக்குவது மார்க்சின் ஆய்வே. இன்று முதலாளித் துவம் உலகளாவிய ரீதியில் வெற்றி பெற்றுவிட்டது என்றால் இவ் அமைப்பு
சத்தி பற்றிய மார்க்சின் விளக்கங்களும், விமர்சனங்களும் எப்படி காலாவதியாக முடியும். எனது அபிப்பிராயப்படி முதலாளித்து வத்தின் உலக ரீதியான வெற்றி மார்க்சிய தத்துவத்தின் பயன்பாட்டை
பித மேலும் அதிகரித்துள்ளது. மார்க்சின் விளக்க ரீதியான கருத்துக்கள் சில
கரு இன்றைய காலகட்ட முதலாளித்து
அ வத்தை புரிந்து கொள்ள போதுமானதாக
கற்பு இல்லாது இருக்கலாம். ஆனால் முதலாளித்துவம் எனும் உற்பத்தி அமைப்பின் இயக்கப்பாடு பற்றியும் அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் மார்க்ஸ் முன்வைத்த அடிப் முத் படை கோட்பாடும் விளக்கமும் , சரியானதே முதலாளித்துவம் பற்றிய (Th.
அரசியல், பொருளாதார, சமூகவியல்
வர் விமர்சனங்களுக்கும், விளக்கங்களுக் கும் மார்க்சிசத்தின் பயன்பாடு தொடர்ந்
சித்த தும் இருக்கவே தான் செய்கின்றது.
க ை இன்றைய முதலாளித்துவம் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட மார்க்சிய விளக்கங்கள் இருப்பதை காண்கின் றோம். உதாரணம் : உலகமயமாக்கல் பற்றி மார்க்சிய வாதிகள் இடையே
பே கருத்து வேறுபாடுகள் இருப்பதையும்,
ஒது விவாதங்கள் இடம் பெறுவதையும் காண்கின்றோம். இது மார்க்சியத்தின்
கொ காலாவதி தன்மையை காட்டவில்லை. அதற்கு மாறாக மார்க்சியம் ஒரு பரந்த
என் சமூக விஞ்ஞான மரபாகிவிட்டதையே காட்டுகின்றது. மார்க்சியத்தின் செல்
பெ
அன
தார்
தமது
மின் மர. தார் நடை
ரீதிய
இன் பாப்

ம் அப்பால்
வாக்கிற்கு ஆளாகாத சமூக விஞ்ஞான துறைகள் இல்லை யென்றே கூறலாம். நடைமுறையில் இருந்து வந்த சோசலி தின் வீழ்ச்சி தொடர்ந்தும் நடைமுறையில் தக்கும் முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய ப்வை காலாவதியாக்கிவிடாது என்பது டுமல்ல எனது கருத்து. அத்துடன் உலகை பற்றி கொண்டுள்ள முதலாளித்துவத்திற்கு பால் ஒரு மாற்று அமைப்பு பற்றிய கற் ங்களுக்கும் இவ்விமர்சனம் உதவுகின்றது. பகு நான் ஏற்கனவே குறிப்பிட்ட இன்னொரு த்தையும் இணைத்தல் அவசியமாகும் ாவது இந்த நூற்றாண்டு சோசலிசத்தின் னுபவம் பற்றிய விமர்சனமும் புதிய பிதங்களுக்கு உதவ வேண்டும்.
சாளவாதம், மார்க்சியம், எநவீனத்துவம்
லாளித்துவத்தை ஒரு உலகளாவிய மைப்பாக விளக்க முற்படும் சித்தாந்தங்கள் eory) எவை? அரசியல், பொருளாதர, லாற்றுப் பார்வையில் பார்க்கும்போது ாளவாதமும், மார்க்சியமுமே இத்தகைய காந்தங்கள் எனலாம். இவ்விரு மரபுகளும் க்கே உரிய உலகளாவிய சமூக பார்வை ளக் கொண்டுள்ளன. இவை இரண்டிற்கு டயே முதலாளித்துவ சமூக ஜனநாயக பான்றினை இனங்காண முடியும். ஆனால் ாளவாதமும், மார்க்சியமும் அத்துடன் -முறை வர்க்க போராட்ட மற்றும் சமூகப் ராட்ட அனுபவங்கள் ஆகியவற்றை க்கி சமூக ஜனநாயக மரபினை வரலாற்று பிலும் கோட்பாட்டு ரீதியிலும் புரிந்து
ள்ள முடியாது. அப்படியானால் பின்நவீனத்துவம் பதன் அந்தஸ்து என்ன ? இப்போக்கு றைய முதலாளித்துவத்தின் இயக்கப் டினை அதன் உலகளாவிய அரசியல், ருளாதாரம் பற்றிய மாற்று விளக்கத்தை

Page 53
48
அர்த
தரும் ஒன்றாக அமையவில்லை. பின் நவீனத்துவ வாதிகள் சொல்லுகிறார்கள் சர்வ லோக தன்மை கொண்ட கொள்கைகள் கோட் பாடுகள் பயனற்று போய்விட்டன என்று.
ஒரு சுவாரசியமான போக்கு என்ன வெனில் ஒரு புறம் பின்நவீனத்துவ வாதிகள் சர்வலோக தன்மை கொண்ட கொள்கைகளின் மரணத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் இன்றைய உலக அரசியல் பொருளா தாரத்திலும் தனி மனித சிந்தனையிலும் மேலாட்சி செலுத்தும் கொள்கையாக கருத்தமைவாக தாராளவாதம் விளங்குகிறது. இதற்கு எதிர் நிலையாக அமைகின்றது மார்க்சிய மரபு. அதாவது இன்று மேலாட்சி செலுத்தும் சர்வலோகத்துவக் கொள்கையை எதிர்க்கவல்ல சர்வலோகத்துவ கொள்கையாக மாக்சியம் விளங்குகிறது. இந்நிலையில் தாராள வாதத்தினதும், மாக்சிசத்தினதும் மரணத்தை அறிவிக்கும் பின்நவீனத்துவம் பரந்த உலக நிலைமைகளைப் பார்க்க மறுக்கிறது. (இங்கு நான் பின்நவீனத்துவம் பற்றி குறிப்பிடும் போது அது ஒரு குறிப்பட்ட கோட்பாட்டுக் கட்டமைப்பில் அமைந்துள்ள கொள்கை எனும் கருத்தில் அல்ல. அத்தகைய ஒரு ஒருங் கிணைந்த தன்மை பின்நவீனத்துவத்திற்கு இல்லை)
பாக
தாராளவாதத்தின் மேலாட்சி
தாராளவாதம் தனிநபரை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒரு தத்துவக் கொள்கையாகும். தனிநபர் சுதந்திரமே முழு சமூக சுதந்திரத்திற்கும் அடிப்படையென்றும் சமூகம் என்பது வெறுமனே தனிமனித கூட்டு என்றும் கூறுகிறது இக்கொள்கை. இங்கே வர்க்கங்களுக்கோ சமூக உறவுகளை உள்ள டக்கும் அமைப்புகளுக்கோ இடமில்லை. ஒரு முதலாளியும், தொழிலாளியும் இரு தனிநபர் என்ற வகையில் சமமானவர்கள் என்கிறது தாராளவாதம். இச்சமத்துவத்தை விளக்க ஒரு

த்தம் - 3
தர்க்கவியல் வாதத்தையும் அது முன் வைக்கிறது. அதாவது ஒரு சுதந்திர சமூகத்தில் ஒரு முதலாளி ஒரு தொழிலாளியை வேலை யில் இருந்த அகற்றும் சுதந்திரத்தை கொண்டிப்பது போல் ஒரு தொழிலாளியும் தனக்கு பிடிக்காத முதலாளியை விட்டு செல்லும் சுதந்திரத்தை கொண்டுள்ளார். நடை முறையில் இது ஒரு விசித்திரமான தர்க்கம் என்பதை விளக்க நான் இங்கு அதிக உதாரணம் கொடுக்க தேவையில்லை. மார்க்சியம் தனிநபர்களை அல்லாது வர்க்கங் களையும் சமூக பிரிவுகளையும், சமூக அமைப்புகளையும் பிரதானப்படுத்துகின்றது. தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு அமைப்பு ரீதியானது என்பது மார்க்சிசத் தின் நிலைப்பாடு. மனிதரிடம் தனித்துவம் இல்லை என்பதல்ல மார்க்சியத்தின் வாதம். சமூக அமைப்புகளை பொதுவாக அத்தகைய தனித்துவத்தால் விளக்கிட முடியாது என்பதே
அதன் நிலைப்பாடு
இனி தாராளவாதத்தின் மேலாட்சி பற்றி பார்ப்போம். தாராளவாதத்தின் இன்றைய உலக ரீதியான மேலாட்சி மூலதனத்தின் சர்வதேச மயமாக்கலை வலுப்படுத்தும் நோக் குடன் பலம் வாய்ந்த முதலாளித்துவ நாட்டு அரசாங்கங்களாலும் சர்வதேச நிறுவனங் களாலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு பொருளாதார, தாராளவாதமே அரசியல் தாராளவாதத்தைவிட மேலோங்கி உள்ளது. இம்முரண்பாட்டிற்கு ஆழமான அரசியல் முக்கியத்துவம் உண்டு. சுய போட்டி சந்தையை இயங்க வைப்பதும், தனியுடமையாக்கலும், பொருளாதார தாராளவாதத்தின் முக்கிய நோக்கங்களாகும். சந்தை சக்திகளுக்கு முன் முக்கியத்துவம் கொடுப்பதென்பது உழைப்பு இயற்கை வளங்கள் போன்றவற்றின் விலை களை சந்தைப் போட்டியிடமே முற்றாக விட்டு விடுவது என்பதாகும். இந்த போக்கானது தாராளவாதத்தின் மற்றய முகத்தை குறிக்கும் மனித உரிமைகள், தனிமனித சுதந்திரம், பாது

Page 54
முதலாளித்துவத்த
காப்பு போன்றவற்றுடன் முரண்படுகின்றது. தூய சந்தை போட்டியினை கட்டுப்படுத்தாமல் மனித உரிமைகளை எல்லோரும் நடை முறையில் அனுபவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியாது என்பது மேற்கத்திய வரலாறு தரும் பாடமாகும். சுய போட்டி சந்தையை உத்தரவாதப்படுத்தும் அரச கொள்கை தனி மனித பொருளாதார சுதந்திரம் பூரணமாக பேணுவதை நோக்காக கொண்டுள்ளது. நடைமுறையில் இது உற்பத்தி சாதனங்களின் தனி உடமையை பேணும் அதேவேளை உழைப்பாளரின் ஊதியத்தை தீர்மானிக்கும் பொறுப்பை சந்தை சக்திகளிடம் மட்டுமே விட்டுவிடுகின்றது. இதன் அரசியல் விளைவுகளில் ஒன்று தொழிற்சங்கங்கள் ஓரங்கட்டப்படுதலாகும். சந்தையை காட்டி தொழிற்சங்கங்களை நசுக்கும் செயற்பாடுகளில் அரசாங்கங்கள் ஈடுபடுவதை வட அமெரிக் காவில் இருந்து இலங்கை வரை காணக் கூடியதாக உள்ளது. மேற்கத்திய நாடுகளின் அரசு யந்திர பலாத்கார கருவிகள் தொழிற் சங்கங்களை நசுக்க பயன்படத்தப்படுவது இப்போது குறைந்துள்ளது. இங்கு சுயபோட்டி சந்தைக்கூடாக தொழிலாளிரின் உரிமை மறுப்புக்கள் இடம்பெறுவதை காணலாம். அதேவேளை தொழிற்சங்கங்கள் விவசாய அமைப்புகள் தமது உரிமைகளை பாதுகாக்க சட்ட பூர்வமான போராட்டங்களை செய் கின்றன. ஆனால் இலங்கை போன்ற நாட்டில் சுயபோட்டி சந்தை மட்டுமல்ல தொழிலாளர் களின் உரிமைகளை நசுக்க அரசயந்திரங் களையும் பயன்படுத்துகின்றனர். ஆட்சியாளர் களால் சொல்லளவில் மனித உரிமை பற்றி உலகெங்கும் பெரிதாக பேசப்படும் இக் காலத்தில் நடைமுறையோ பொருளாதார தாராளவாதத்தின் மேலாட்சிக்கு உதவக் கூடிய ஒடுக்குமுறைகளை கடைப்பிடிக்கின்றது.
இன்றைய சர்வதேச பொருளாதாரத்தின் தன்மைகள் பொருளியல் பாடப் புத்தகத்தில் காணப்படும் முதலாளித்துவ மாதிரியிடமிருந்து

நிற்கும் அப்பால்
49
பெருமளவு வேறுப்பட்டுள்ளது. இன்று பண மூலதனம் மிதமிஞ்சிய வேகத்தில் நகரும் சக்தியை பெற்றுவிட்டது. உற்பத்தி மூல தனத்தை விட பண மூலதனத்திற்கூடாக லாபம் பெறும் போக்கே இன்று மிகப் பெரும் போக்காகும். இன்றைய உலக பொருளாதார அரங்கில் பணத்தை விற்று பணம் பெறும் போக்கே நூற்றுக்கு 95% மேலாக இடம் பெறுகின்றது. ஊகமே (Speculation) உற் பத்தியை விட முக்கியத்துவம் பெறும் காலம் இது. அதுவும் உலக சந்தையில் லாபம் தரக் கூடிய குறிப்பிட்ட நாணயங்களே (உதாரண மாக அமெரிக்க டொலர்) இந்த ஊகத்தி னுடைய பொருளாக அமைகின்றது.
இன்று பல நாடுகளிலும் அமுல் நடத்தப் படும் பொருளாதார கொள்கைகள் குறிப்பாக வறிய நாடுகளில் தோல்வியடைவதை காண்கின்றோம். தேசிய பொருளாதாரங்கள் உலக சந்தையுடன் துரிதமாக ஒருங்கிணைக் கப்படுகின்றன. அதேவேளை பல வறிய நாடுகளில் மூலதனத்தின் குவியல் குறிப்பாக உற்பத்தி மூலதனத்தின் வளர்ச்சி மிகமிக அற்பமாகவே இருக்கின்றது. இந்நாடுகளில் சமூக சேவைக்காக அரசு செலவிடும் ஒதுக்கீடு பாரதூரமாக குறைக்கப்பட்டுள்ளதால் உழைப் பாளர்களும், வறியவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். தொழிற்சங்கங்கள் பலம் இழந்துள்ள நாடுகளில் தொழிலாளர் களின் சம்பள உயர்வுக்கான போராட்டங்கள் வெற்றி பெற முடியாத நிலையை காண் கின்றோம். உழைப்பிற்கும் நுகர்விற்கும் சந்தையே கதி எனும் நிலை பரவும் போக்கு வலுவடைந்து உள்ளது. மறுபுறம் இச்சமூகங் களில் புதிய செல்வந்தர்கள் கூட்டம் ஒன்று தோன்றியுள்ளது. தனிநபர் வாதம் வளர்ந் துள்ளது. தொழிலாளர்களும் நடுத்தரவர்க் கத்தினர் போன்று இச்சிந்தனைப் போக்கின் செல்வாக்கிற்கும் ஆளாகலாம். இந் நிலையில் இடதுசாரி அமைப்புகள் தொழிலாளர்களின், மற்றும் பொதுமக்களின் உரிமைகளுக்காக

Page 55
50
அ
போராட முற்படுகின்றன. தாராளவாதத்தின் ஜனநாயக விழுமியங்களுக்கான போராட்டம் களாக இவை அமைகின்றன. ஆளும் வர்க்க பொருளாதார தாராள வாதத்தை கடைபிடி கின்றது. போராடும் மக்களுக்கு தாராளவாத. தின் ஜனநாயக கோரிக்கைகள் ஒரு போராட் கருவியாக மாறுகின்றது. இங்கு மார்க்சியத்தில் பங்கு என்ன? ஜனநாயக போராட்டத்தை தாராள வாதத்தின் கட்டமைப்பிற்கு அப்பா எடுத்துச் செல்வதற்கான அரசியல் திட்டத்தை வகுப்பது எனலாம்.
முதலாளித்துவத்திற்கும் அப்பால் - புதிய கற்பிதத்தின் தேவை இன்று நாம் காணும் முக்கிய போராட்ட போக்குகள் என்ன? இவற்றை பின்வருமாறு சுருக்கி பட்டியல்படுத்தலாம்
1. தொழிற் சங்க இயக்கங்கள்
தொழிற் சங்க இயக்கங்கள் பற்றி பலவாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன அவற்றின் சீரித்திருத்தப்போக்கு, தொழில் சங்க அமைப்புகளின் ஊழல்கள் போன்றவை பல நாடுகளிலும் முன்வைக்கப்படும் விம சனங்களாகும். இவற்றில் உண்மை இருப்பதை மறைக்க முடியாது. இலங்கை போன்ற நாடு களில் தொழிற்சங்க இயக்கங்கள் பல காரணாம் களால் பிளவுண்டு இருப்பதை காணுகின்றோம் இதனால் தொழிற்சங்க இயக்கங்கள் வர்க் போராட்டத்தை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் சக்தியை இழந்து விட்டன எனும் விமர்சனத்தையும் கேட்கின்றோம். ஆயினும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் பேணவும் தொழிற்சங்கங்கள் தேவை என்பதை பொது வாக எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்

ர்த்தம் - 3
S 2. அ அ | அ. சி. 6 2.
ன் 2. இன விடுதலை, இன உரிமை இயக்கங்கள்
இனத்துவத்தின் எழுச்சியின் காலகட்டம் போல் அமைந்துள்ளது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அடுத்த நூற்றாண்டிலும் இப்போக்கு தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. இன, தேசிய உரிமைப் போராட்டங்கள் தம் இனங் களுக்குள்ளே தனி மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைவு என்பது ஒரு பொதுவான போக்காகிவிட்டது. இன ஒதுக்கலுக்கு எதிரான போராட்டங்கள் இனங் களுக்கிடையான சமத்துவம் பற்றிய கருத்துக் களை வலுப்படுத்தி உள்ளது. இன அடை யாளங்களுக்கு மதிப்பு கொடுக்கும் பல்லின அரசியல் அமைப்பிற்கான மாற்றம் பற்றிய தேவையையும் அவை எடுத்துக்காட்டு கின்றன. ஆயினும் இப்போராட்டங்கள் புதிய சமூக அமைப்பு பற்றிய பார்வைகளை தெளி வாக முன்வைப்பதில்லை. இன தேசிய வாதங்களின் எழுச்சி மார்க்சியத்திற்கு ஒரு தத்துவ சவாலாக அமைந்துள்ளது எனலாம். மார்க்சியத்திற்கும், தேசிய வாதத்திற்குமான உறவு பற்றிய விவாதங்கள் இப்போது புதுப் பிக்கப்பட்டுள்ளன.
வ
91
6' 9' 6' L
3. பெண்ணுரிமை இயக்கங்கள் 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட முக்கிய சிந்தனை மாற்றத்தை பெண்ணியத்தின் எழுச்சி காட்டுகின்றது. பால் சமத்துவத்திற்கான போராட்டம் இன்று பரவலான அங்கீகாரத்தை பெற்றுள்ள போதும் சமத்துவ உரிமைகளின் நிறுவன மயமாக்கல் பல நாடுகளில் பின் தங்கியே உள்ளது. பெண்ணிய விவாதங்கள் மார்க்சியம் பற்றிய விமர்சனங்களை முன் வைத்ததன் மூலம் மார்க்சிய சிந்தனை மரபின் விருத்திக்கு உதவியுள்ளது எனக் கூறலாம். மார்க்சியத்திற்கும், பெண்ணியத்திற்குமான தத்துவார்த்த உறவு முரண்பாடற்றதல்ல. இந்த முரண்பாடுகள் மார்க்சியத்தின் புதிய பரிணாமப் போக்குகளின் வளர்ச்சிக்கு

Page 56
முதலாளித்துவத்திற
உதவுகின்றன. பெண்ணுரிமை போராட்டங்கள் எவ்வளவு தூரம் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகின்ற போதும் பெண்ணிய விவாதங்கள் புதிய சமூக அமைப்புகள் பற்றிய கற்பிதங் களுக்கு நிச்சயம் உதவுகின்றது என்பதில் சந்தேகமில்லை. சமத்துவமான ஆண், பெண் உறவின்றி சமத்துவமான மனித சமூகம் ஒன்றினை கற்பிதம் செய்ய முடியுமா?
4. சிவில் சமூக இயக்கங்கள் புதிய சமூக இயக்கங்கள் என கூறப்படும் அமைப்புகள் பலவற்றை காண்கின்றோம். இவை குறிப்பிட்ட நோக்கங்களை அடிப் படையாக கொண்டு இயங்குபவை. சமூக குழுக்களை அணிதிரட்டி அடிமட்ட மாற்றங் களை நோக்காக கொண்டு, சில அமைப்புகள் இயங்குகின்றன. சூழல் பாதுகாப்பு, வறுமை குறைப்பு, பொதுச் சொத்து வளங்களின் பராமரிப்பு போன்றவை இத்தகைய இயக்கங் களின் முக்கிய செயற்பாடுகளாக விளங்கு கின்றன. சில சந்தர்ப்பங்களில் பரந்த நிலப்பரப்பை வாழ்விடமாக கொண்டுள்ள சமூகங்களின் உரிமைகன் அபிவிருத்தி எனும் பேரால் பாதிக்கப்படும் போது சிவில் சமூக இயக்கங்கள் தீவிரமாக செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சமூக இயக்கங்கள் குறிப்பிடத் தகுந்த பங்கினை வகித்து வருகின்றன. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அரசு சாரா நிறுவனங்கள்
அரசுடன் இணைந்து செயல் படுவதை காண்கின்றோம். பல அரசு சாரா நிறுவனங்கள் அரசாங்கத்தின் உப ஒப்பந்தகாரர்களாக மாறியுள்ளனர். ஆகவே இந்த சமூக இயக்கங் களின் செயற்பாடுகளை விமர்சன ரீதியில் பகுப்பாய்வது அவசியமாகும். எனது அபிப் பிராயத்தில் சில சமூக இயக்கங்களினுடைய

ற்கும் அப்பால்
அனுபவங்கள் அடிப்படை சமூக மாற்றத்தை வேண்டியுள்ள அரசியலுக்கு பயன் தருவன
வாய் உள்ளன.
இப்பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். இங்கு அரசியல் கட்சிகளை பற்றி தனியாகக் குறிப்பிடல் பயன் தரும். மேற்கூறிய அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பில்லை எனக் கூறமுடியாது. குறிப்பாக தொழிற் சங்கங்களுக்கும் அரசியல் கட்சி களுக்கும் இடையிலான உறவு மிக முக்கிய மானதாகும். மாற்று அமைப்பு வேண்டும் எனும் நோக்குடன் இயங்கும் அரசியல் கட்சி கள் பொதுவாக மார்க்சிய சோசலிச சிந்தனையே தமது அடிப்படையெனக் கூறுகிறார்கள். இந்த கட்சிகள் முதலாளித்துவ ஜனநாயக அமைப் பில் பயனுள்ள எதிர்கட்சிகளாகவும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் பிரதான நிறுவனங்களாகவும் விளங்கவல்லன. ஆயினும் இன்றைய நிலையில் இக்கட்சிகள் முதலாளித்துவத்திற்கு மாற்றமைப்பை முன் வைப்பதில் சமீபத்திய தசாப்தங்களின் அனுப வங்களை போதியளவு கணக்கில் எடுத்திருப்ப தாக தெரியவில்லை
உலக சோசலிச இயக்கங்களின் மீது சோவியக் கம்னியூஸ்ட் கட்சியும் சீன கம்னியூஸ் கட்சியும் செலுத்தி வந்த செல் வாக்கு பற்றியும் மூன்றாவது அகில காலத்தில் பல நாடுகளின் கம்னியூஸ்ட் கட்சிகள் மூன்றாவது அகிலத்தினால் தவறாக வழி நடத்தப்பட்டது பற்றியும் விமர்சன ரீதியாக பார்த்து சரியான பாடங்களை கற்றல் அவசியமாகும். ட்ரொஸ்கி புகாரின் போன்ற பல புரட்சிகர சிந்தனையாளர்களின் கருத்துகள் பற்றி அவர்கள் வகித்த பங்கு பற்றிய நியாயமான மீள் மதிப்பீடு அவசியம். மூன்றாவது அகிலத்தின் புத்தி மதி யின் விளைவாக இந்திய கம்யுனியூஸ்டுகள் அவர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை செல்வனே வழிநடத்த முடியாமல் போனதும் அதே மூன்றாவது அகிலத்தின் புத்திமதி

Page 57
52
அர்த்
இலங்கை சோசலிச இயக்கத்தை பாதித்தது பற்றியும் நாம் ஆராய்தல் பயன் தரும். சோவியத் அமைப்பின் வீழ்ச்சிக்கான உள்ளார்ந்த காரணிகள் பற்றியும், சீனாவில் பஞ்சத்தால் இலட்சக்கணக்கானோர் இறந்த காரணத்தை பற்றியும் அந்நாட்டின் கலாச்சார புரட்சியின் காரணிகள் விளைவுகள் பற்றியும் உண்மைகளை அறிந்து எதிர்காலம் பற்றிய அரசியல் சிந்தனைக்கு அவற்றை பயன் படுத்தல் அவசியம் இவற்றை செய்ய தவறிய கட்சிகளால் ஒரு மாற்றுப் பாதையை காட்ட முடியும் என நான் நம்பவில்லை
உரிமை போராட்டங்களை மக்கள் ஜனநாயக புரட்சியின் தேவைகளுக்கு ஏற்ப வழிநடத்துவதில் இக்கட்சிகள் வெற்றி பெறு வதாக தெரியவில்லை. இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் ஜனநாயக புரட்சியும் அதன் போராட்ட வழிவகைகளும் மீள் கற்பிதம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். இது ஒரு சிந்தனை ரீதியான, நடைமுறை ரீதியான சவாலாகும். இதை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை முன்வைப்பது எனது நோக்கமல்ல. இக் கேள்வியை விவாதத்திற்காக விடுவதே எனது நோக்கமாகும். இச்சவாலை நோக்கும் போது மேற்குறிப்பிட்ட இயக்கங்களின் குறை நிறைகளை மதிப்பிடுவது அவசியமாகும். தொழிற்சங்க போராட்டங்கள், இன உரிமை போராட்டங்கள், பெண்ணுரிமைப் போராட்டங் கள், சமூக இயக்கப் போராட் டங்கள் எல்லாமே உரிமைகளை முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்புக்கும் அப்பால் சென்று பார்ப்பதாக தெரியவில்லை. பல பெண்ணிய சிந்தனை யாளர்களும் சூழல் பிரச்சினை பற்றிய விமர்ச கர்களும் தமது எழுத்துக்களில் முதலாளித்து வத்தின் அடிப்படைகளை கேள்வி கேட்டு விமர்சிக்கும் நோக்கினை வெளிப்படுத்தி யுள்ளனர் என்பது உண்மை. ஆயினும் நடை முறையில் ஸ்தாபன ரீதியான உரிமை போராட்டங்கள் பூர்ஷ்ஷ்வா ஜனநாயக

கதம் - 3
உரிமைகளுக்கு அப்பால் இதுவரை செல்ல வில்லை.
நம்மால் இனத்துவ சமத்துவம் உள்ள பால் ரீதியான சமத்துவம் உள்ள, சாதி ஒடுக்கு முறைகள் அற்ற ஒரு முதலாளித்துவ ஜன நாயக அமைப்பினை கற்பிதம் செய்ய முடியும். அதன் நடைமுறை சாத்தியம் எப்படி இருப்பினும் முதலாளித்துவ சமூக ஜனநாயக உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய சமத்துவங்கள் உள்ள ஒரு அமைப்பை கற்பிதம் செய்யலாம். இது நடை முறையில் சுலபம் என்பதல்ல எனது வாதம். அதை முதலாளித்துவத்தில் அடையலாம் எனும் வாதம் தர்க்க ரீதியானது என்பதையே இங்கு குறிப்பிடுகின்றேன். ஆனால் வர்க்க சமத்துவம் உள்ள ஒரு முதலாளித்துவம் இருக்கவே முடியாது. அது தர்க்க ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமற்றது. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட வர்க்க வேறுபாடு அற்ற ஒரு சமூகத்தையே மார்க்ஸ் முதலாளித்துவத்திற்கு மாற்று சமூகமாக கற்பிதம் செய்தார். இதன் தேவை முதலாளித் துவம் இருக்கும் வரை அது மாற்றப்படும் வரை இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால் இத்தகைய சமூகத்தின் சாத்தியப்பாடு பற்றியும் உருவாக்கம் பற்றியும் புதிய கற்பிதங்கள் தோன்றுவதையும் தவிர்க்க முடியாது. தம்மை புரட்சிகர அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் சில குழுக்கள் இப்பணியில் ஈடு படாது பழைய கருத்தியல் கட்டமைப்புக் குள்ளேயே சிந்திக்க முற்படுகின்றார்கள்.
தாராளவாதம் தனிநபரின் சுதந்திரத்தை முதலாளித்துவ ஜனநாயகத்துக்கூடாகவே பேணமுடியும் என்கின்றது. இது நடைமுறை யில் தனி உடமையை பேணும் ஒரு கொள்கை என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். தனிநபர் சுதந்திரம் எனும் பேரில் முதலாளித்துவ அமைப்பை பேணும் கொள்கை இது. மார்க்சியத்தின் நிலைப்பாடோ முற்றிலும் மாறுப்பட்டது. முதலாளித்துவத்தின் முடி

Page 58
முதலாளித்துவத்த
விலேயே அதாவது அந்த சமூக அமைப்பிற்கு அப்பால் போவதன் மூலமே தனிமனிதனின் உண்மையான விடுதலையை பெறமுடியும் என்பதே மார்க்சிய நிலைப்பாடாகும். முதலாளித்துவம் தனி நபரின் உற்பத்தி ஆற்றலை வெளிப்படுத்த உதவும். அதே வேளை அவரின் ஆளுமையை துண்டாடு கின்றது என மார்க்ஸ் கூறுகிறார். முதலாளித் துவத்தின் விருத்தி சோசலிச மாற்றத்திற்கு வேண்டிய பொருள் ரீதியான முன் நிபந் தனையை பூர்த்தி செய்யும். அதேவேளை அது ஏற்படுத்தும் மனித அந்நிய மாக்கலை ஒழிப்பதற்கு முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் ஒழிக்கப்பட வேண்டும் என மார்க்ஸ் விளக்கினார். தாராளவாதம் சொல்லும் தனி நபர் சுதந்திரங்கள் பூர்ஷ்வா நீதியை குறிப்பன் எனக் கூறிய மார்க்ஸ் தனிமனிதனின் பூரண விடுதலையே வரலாற்றின் இறுதி நிலையம் எனவும் அதை ஒரு வர்க்க மற்ற அதாவது
சற்றே விலகி நந்தி வழிவிட வெலிக்கடை இருப்பு நெடு தானே திறக்க
அங்கே காவலர்கள் - கற்சுவர்கள் 6 அறைகட்குள் பகுத்தறிவு 4 புதிய யுகம்
அற்புதங்கள் ஒருக்காலோ ஒப்பார்கள் 6 இருகால் நட கண்டு அலுத் கற்சுவரோ ெ

நிற்கும் அப்பால்
பொதுவுடைமை (கம்னியூச) சமூகத்திலேயே அடைய முடியும் எனவும் வாதிட்டார். அத்தகைய சமூகத்திலேயே துண்டாடப்பட்ட மனித ஆளுமையின் பூரணத்துவமாக்கப்பட்ட மீட்சி சாத்தியப்படும். இந்தத் தேவை இந்தக் கனவுதான் நம்மை முதலாளித்துவத்திற்கும் அப்பால் ஒரு சமூகத்தை தேடவைக்கின்றது. இன்றைய உடனடியான பணி உரிமை போராட்டங்களை எப்படி மக்கள் ஜனநாயக புரட்சியின் அம்சங்களாக்குவது என்பதும் அந்த புரட்சியை எப்படி சோசலிச மாற்றத் திற்கான தயாரிப்பாக ஆக்குவது என்பது பற்றிய மீள் பரிசீலனையும் மீள் கற்பிதமும் ஆகும்
30.03.99 (31.10.98 இல் கொழும்பு விபவியினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் கருத்தரங்கில் பேராசிரியர் ந. சண்முகரத்தினம் ஆற்றிய உரை)
ட்டது போல டயில் சிறைக்கூட ங்ெகதவம்
கம்
அறியாமல் சூழ்கின்ற ர கொலை நடக்கும் ஆளுகின்ற
நடந்தாலோ என்பதானால்
ந்தேறும்
S
"மளனிக்கும்.
சி.சிவசேகரம்

Page 59
இலங்கையின் நீதித்துறை பற்
தொகுப்பு - சங்கீத்தா
105 (1) : இலங்கையிலுள்ள நீதி நிறுவனங்கள் 1. உயர்நீதி மன்றம் 2. மேன்முறையீட்டு நீதிமன்றம்
மேல் நீதிமன்றம் பாராளுமன்றம், காலத்துக்குக்காலம் உரு வாக்கும் வேறு நீதிமன்றங்கள், நியாயசடை
கள், நிறுவனங்கள் 105 (2) : அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் உயர்நீதிமன்றமாகும். ஏனைய நீதி மன்றங்களும், நியாயசபைகள் நிறுவனங்கள் என்பனவும் பாராளுமன்றத்தினால் உருவாக்கப் பட்டதாகக் கருதப்படும். இவற்றின் தத்துவங்கள் கடமைகள், நியாயாதிக்கம், நடபடிமுறை என்ப வற்றை பாராளு மன்றம் மாற்றலாம், திருத்தலாம் நீக்கலாம். 105 (3) : பதிவேட்டு நீதிமன்றங்களாக உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பன காணப்படுகின்றன. 106 (1) : நீதிமன்றங்கள் பகிரங்கமாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 106 (2) : எனினும் வழக்கின் நன்மை கருதி நேரடியாக அக்கறை கொண்டிராதவர்களை நீதி மன்ற நடவடிக்கைகளிலிருந்து விலக்கலாம் (அத்தகைய , ஏதேனும் நீதிமன்றத்தின் நியாய சபையின் வேறு நிறுவனத்தின் நீதிபதியொருவ
அல்லது தலைமை தாங்கும் அலுவலகர் - அவரது தற்துணிவில், அவ்வாறு செய்தல் விரும்பத்தக்க தென அவர் கருதும் போதெல்லாம், அங்கு நடை பெறும் வழக்கு நடவடிக்கைகளில் நேரடியாக அக்கறை கொண்டிராதவர்களை, இத்தகைய ஆப் களை அதிலிருந்து விலக்கி வைக்கலாம்.)
பின்வரும் வழக்குகளில் இவை மேற் கொள்ளப்படும்: 1. குடும்ப உறவுகள் சம்பந்தமான வழக்குகள் 2. பாலியல் விடயங்கள் தொடர்பான வழக்குகள்
தேசிய பாதுகாப்பு அல்லது பொது மக்கள் நன்மை கருதிய வழக்குகள்.

மறிய யாப்பு ஏற்பாடுகள்
4.
நீதிமன்றத்தின் அல்லது நியாய சபையின் அல்லது வேறு நிறுவனத்தின் ஒழுங்க மைப்பையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட வேண்டிய வழக்குகள்.
உயர்நீதிமன்றம் 107 (1) : உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராளு மன்றப் பேரவையின் அவதானிப்புக்களைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். 107 (2), (3) : உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்குவதாயின் ,
அ. துர்நடத்தை தகுதியின்மை போன்ற குற்றச்
சாட்டுக்களை முன்வைத்து பாராளுமன்றத்
தில் பிரேரணை கொண்டு வருதல் வேண்டும். ஆ.
பிரேரணையை மொத்தப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 1/3 குறையாதோர்
கையொப்பமிடல் வேண்டும். சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக் கொண் டால் அது தொடர்பான விசார ணைக்கு ஏற்பாடு செய்யலாம். விசாரணையை எவ்வாறு நடத்துவது தொடர் பாக சட்டத்தின் மூலம் அல்லது நிலையியல் கட்டளை மூலம் பாராளுமன்றம் ஏற்பாடு செய்யலாம். விசாரணை நடைபெறும் போது தானாகவோ தனது பிரதிநிதிகள் மூலமாகவோ தனது பக்க நியாயங்களை கூறுவதற்கு உரிமை உண்டு. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சமூகமளிக் காதோர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் களில் பெரும்பாண்மையினர் அதனை
நிறைவேற்றுதல் வேண்டும். எ. ஜனாதிபதி பதவி நீக்கத்தை மேற் கொள்வார். 107 (4) : பிரதம நீதியரசர் , மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவிகளைப் பொறுப்பெடுத்தல் வேண்டும்.
ஊள.

Page 60
இலங்கையின் நீதித்துறை
107 (5) : உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65, மேன்முறையீட்டு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63. 108 (1): உயர்நீதிமன்றத்தினதும், மேன்முறை யீட்டு நீதிமன்றத்தினதும் நீதிபதிகளின் சம்பளம் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு திரட்டு நிதியின் மீது பொறுப்பாக்கப்படும். 108 (2) : மேற்கூறிய நீதிபதிகள் ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர்கள். இவர்களுடைய ஓய்வூதியத்தையோ, சம்பளத்தையோ குறைக்க முடியாது. 109: பதில் நியமனங்கள் 110 (1) : உயர் நீதிமன்றத்தின் அல்லது மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் எழுத்திலான சட்டத்தின் மூலம் வேறு பொருத்த மான பணிகளை ஆற்றும்படி ஜனாதிபதியினால் பணிக்கப்படலாம். 110 (2) : நீதிபதிகள் எழுத்திலான சட்டம் அனுமதித்ததைத் தவிர வேறு சம்பளம் பெறும், பெறாத பதவிகளை ஜனாதிபதியின் சம்மதம் இன்றி மேற்கொள்ள முடியாது/ பெற்றுக் கொள்ள முடியாது. இலாபம் தரும் அல்லது ஊதியம் தரும் தொழில்களை புரிதல் கூடாது. 110 (3) : ஜனாதிபதியின் எழுத்து மூலம் சம்மதம் இன்றி சட்டத்தரணி தொழிலை மேற்கொள்ள
முடியாது. 111 (1): இலங்கைக்கு மேல் நீதிமன்றம் ஒன்று இருத்தல் வேண்டும். அது பாராளுமன்ற சட்டத்திற்கு ஏற்ப தனது அதிகாரத்தை பிரயோகித் தல் வேண்டும். 111 (2) : மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி யினால் அவரது கைப்பட எழுதிய ஆணையின் மூலம் நியமிக்கப்படுதல் வேண்டும். நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்படுவர். ஜனாதிபதியின் ஒழுக்காற்றக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள். 111 (3) : மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பேறு தொடர்பான கருமங்களுக்கு பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யலாம். 112 (1): நீதிச்சேவை ஆணைக்குழு ஒன்று இருத்தல் வேண்டும். இது பிரதம நீதியரசரையும்,

பற்றிய யாப்பு ஏற்பாடுகள்
குடியரசின் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இரண்டு உயர்நீதிமன்ற நீதியரசர்களையும் கொண் டிருத்தல் வேண்டும். இவ் இருவரும் பாராளு மன்றப் பேரவையின் அவதானிப்புக்களைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். 112 (2) : நீதிச்சேவை ஆணைக்குழுவின் கூட்ட நடப்பு எண் 2 ஆகும். 112 (4) : ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 5 வருடங்களாகும். 112 (5): உறுப்பினர்களை ஜனாதிபதி காரணம் காட்டி அகற்றலாம். 112 (7) : ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான சம்பளம் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு திரட்டு நிதியத்தின் மீது பொறுப்பாக்கப்படும். 112 (8): நீதிச்சேவை ஆணைக்குழுவானது நீதித்துறை அலுவலர்களையும் பகிரங்க அலுவலர் களையும் சேர்ப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும், அவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை முறை தொடர்பிலும் விதிகளை உருவாக்கலாம். அத் தகைய கருமங்களுக்கான ஏற்பாடு செய்யலாம். 112 (9): நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கான ஒரு செயலாளர் இருப்பார். அவர் அமைச்சரவையின் ஆலோசனையுடன் ஜனாதிபதியால் நியமிக்கப் படுவார். 113 அ : இலங்கைத் தீவு முழுவதற்குமென பிசுக்கால் ஒருவர் இருத்தல் வேண்டும். இவர் எல்லா முதனிலை நீதிமன்றங்களிலுள்ள பிரதிப் பிசுக்கால்களை மேற்பார்வை செய்வ தோடு கட்டுப்பாட்டையும் பிரயோகிப்பார். 114 (1) : நீதிச்சேவை அலுவலர்களினதும் (நீதிபதி அல்லாத) அட்டவணைப்படுத்தப்பட்ட பகிரங்க அலுவலர்களினதும் (பிசுக்கால் பதிவாளர்) நியமனம், இடமாற்றம், பதவி விலகல், ஒழுக் காற்றுக் கட்டுப்பாடு என்பன நீதிச்சேவை ஆணைக் குழுக்குரிய அதிகாரங்களாகும். 114 (5) : நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முதனிலை நீதிமன்றங்களின் பதிவேடுகளை சோதனையிடும் அதிகாரம் உண்டு. 115: நீதிச்சேவை ஆணைக்குழுவின் கடமைகளில் தலையிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஓராண்டிற்கு மேற்படாத சிறை / 1000 ரூபாவிற்கு மேற்படாத தண்டம்/ இரண்டும் வழங்கப்படுதல் வேண்டும்.

Page 61
அர்
@ ட் |
எ.
118: இலங்கைக் குடியரசின் உயர்நீதிமன்றமானது மிக மேலானதும், முடிவானதுமான மேனிலை பதிவேட்டு நீதிமன்றமாகும். இது பின்வரும் நியாயதிக்கத்தைக் கொண்டது:
அ. அரசியலமைப்பு கருமங்கள் தொடர்பிலான
நியாயாதிக்கம்.
ஆ.
அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தலும் கான நியாயாதிக்கம். மேன்முறையீட்டிற்கான இறுதி நியாயாதிக்கம்
ஆலோசனை நியாயாதிக்கம். தேர்தல் ஆட்சேபனை மனு வழக்குகளிலால்
நியாயாதிக்கம். ஊ. பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகளை மீற
படுதல் தொடர்பிலான நியாயாதிக்கம். சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் உரு வாக்கும் வேறு கருமங்கள் தொடர்பிலான
நியாயாதிக்கம். 119: உயர்நீதிமன்றம் பிரதம நீதியரசரையும் ( பேருக்கு குறையாத 10 பேருக்கு மேற்படாத ஏனைய நீதிபதிகளையும் கொண்டிருக்கும் இவர்கள் உறுப்புரை 107 இன் படி பாராளு மன்றப் பேரவையின் அவதானிப்புக்களைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றார் 120: அரசியலமைப்புத் தொடர்பிலான நியாயாதிக்கம் 121(1) : அரசியலமைப்புச் சார்ந்த நியாயாதிக்கத் தினை சாதாரணமாக பிரயோகித்தல் - ஜனாதிபதி அல்லது பிரஜை ஒருவர் எழுத்து மூலம் பிரதப் நீதியரசரை வேண்டலாம்.
சட்ட மூலம் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் மனுவை சமர்ப்பித்தல் வேண்டும். இதன் பிரதி சபாநாய கருக்கு வழங்கப்படுதல் வேண்டும். 121 (2): நீதிமன்ற விசாரணை முடியும் வரை இ. சட்ட மூலத்தை விவாதத்திற்கு எடுக்க முடியாது 121 (3) : மூன்று வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்குதல் வேண்டும். 122: அமைச்சரவையின் அவசர சட்ட மூலம் தொடர்பிலான நியாயாதிக்கம் 122 (1): அமைச்சரவையின் கருத்துப்படி தேசிய நலனுக்கு அவசரமானது என அமைச்சரவை செயலாளர் புறக்குறிப்பிட வேண்டும். ஜனாதிபதி இதனை பிரதம நீதியரசருக்கு அனுப்புவார். உய

த்தம் - 3
L'
| நீதிமன்றம் 24 மணித்தியாலத்திற்குள் தனது
தீர்ப்பினை வழங்கும் பிரதி ஒன்று சபாநாயகருக்கு ) அனுப்பப்பட வேண்டும்.
125: அரசியலமைப்பிற்கு பொருள் கோடல் [ வழங்கும் நியயாதிக்கம்.
125 (1) : ஏனைய நீதிமன்றங்கள் இப்பிரச் 5 சினை ஏற்படும் போது உயர்நீதிமன்றத்திற்கு
பாரப்படுத்தல் வேண்டும். 125 (2) : இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பினை வழங்க வேண்டும். 126: அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கம் 126 (2) : மீறல் நடைபெற்று ஒரு மாதத்திற்குள்
முறையிட வேண்டும். 5 126 (5) : இரண்டு மாதத்திற்குள் உயர் நீதிமன்றம் T தனது தீர்ப்பினை வழங்குதல் வேண்டும்.
126 (1) : அடிப்படை உரிமை / மொழி உரிமை 5 ஆட்சித்துறை நடவடிக்கைகளால் அல்லது நிர்வாக
நடவடிக்கையால் மீறப்பட்டால் ) 126 (3) : எழுத்தாணை தொடர்பில் உரிமை மீறல்
இடம் பெற்றால் மீறல் தொடர்பில் ஏனைய நீதி மன்றங்கள் உயர்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல்
வேண்டும். - 127: மேன்முறையீட்டு நியாயாதிக்கம்.
129: ஆலோசனை நியாயாதிக்கம். 130: தேர்தல் ஆட்சேபனை மனு தொடர்பான நியாயாதிக்கம் ஜனாதிபதித் தேர்தல் / மக்கள் தீர்ப்புத் தேர்தல் ஏனைய தேர்தல் தொடர்பான நியாயாதிக்கம். 5 நீதிபதிகள் விசாரணை செய்வர், பிரதம நீதியரசரும் இருப்பார் 131: பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்படுதல். 132 (1) : பிரதம நீதியரசர் வேறுவகையில் பணித்தாலொழிய உயர்நீதிமன்ற விசாரணைகள் கொழும்பிலேயே நடைபெற வேண்டும். 132 (2) : சாதாரணமாக மூன்று நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும். விசேட தேவை கருதி 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அதற்கு விசாரணை செய்வர். 136 (1) : உயர்நீதிமன்ற விதிகளை உருவாக்கும் அதிகாரம். பிரதம நீதியரசரும் அவரினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட 3 நீதியரசர்களும் இதனை உருவாக்குவர்.

Page 62
137: மேன்முறையீட்டு நீதிமன்றம்
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரையும் 6 பேருக்குக் குறையாத 11ற்கு மேற்படாத வேறு நீதிபதிகளையும் கொண்டிருக்கும். 138(1) : மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்கம்.
மேல் நீதிமன்றத்தினால்/ முதனிலை நீதிமன்றங்களினால்/ நியாயசபைகளினால் விடப்படுகின்ற நிகழ்வுப் பிழைகள்/ சட்டப் பிழைகளைத் திருத்துதல். 138 (2) : பாராளுமன்றம் சட்டத்தால் வழங்கப் படுகின்ற மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தையும் முதன்மை நியாயாதிக்கத்தையும் கொண்டிருத்தல். 140: ஆட்கொணர் எழுத்தாணைகள் தவிர, உறுதி கேள், எழுத்தாணை தடையீட்டு எழுத்தாணை, மேற்செல் எனும் எழுத்தாணை , ஆணையீட்டு எழுத்தாணை, யாதுரிமை எழுத்தாணை போன்ற எழுத்தாணைகளை வழங்குதல்.
எனினும் பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்ட எழுத் தாணைகளை உயர் நீதிமன்றம் வழங்கலாம். 141: ஆட்கொணர் எழுத்தாணைகளை வழங்குதல். 142: சிறையிலுள்ளவர்களைக் கொண்டு வரு
வதற்கும், அகற்றுவதற்குமான அதிகாரம். 143: உத்தரவுகளை வழங்குதல். 144: பாராளுமன்ற தேர்தல் ஆட்சேபணை மனுக்களை விசாரணை செய்தல். 145: முதனிலை நீதிமன்றங்களின் பதிவேடுகளை பரிசோதனை செய்தல். 146 (1) : மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் நியாயாதிக்கத்தை கொழும்பிலேயே பிரயோகித்தல் வேண்டும். 142 (2) : பல்வேறு நீதிபதிகள் தனித்தனியே அமர்வதன் மூலம் ஒரே நேரத்தில் வெவ்வேறு கருமங்களில் பிரயோகிக்கலாம். 146 (2) (I) :
அ. நீதாய விளக்கம் ஒன்றில் எடுத்துக் கூறப்பட்ட
மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள், கட்டளை கள் என்பவை தொடர்பாக மூன்று நீதிபதிகள் விசாரணை செய்யலாம்.

ஆ. மேல் நீதிமன்றத்தின் ஏனைய தீர்ப்புக்கள்,
கட்டளைகள் தொடர்பில் 2 நீதிபதிகள்
விசாரணை செய்வர். 146(2) (II) : பாராளுமன்ற தேர்தல் ஆட் சேபனை மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டுத் தலைவரினால் அல்லது அவரினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட நீதிபதி யினால் அல்லது தலைவரும் ஏனைய நீதிபதிகளும் கொண்ட
குழாமினால் விசாரணை செய்யப்படலாம். 146 (2) (III) : ஏனைய எல்லா கருமங்கள் தொடர் பிலும் தலைவர் பணித்தால் ஒழிய தனியொரு நீதிபதியினால் விசாரணை செய்யப்படல் வேண்டும். 146 (3) : இரு நீதிபதிகளிடையே கருத்து முரண் பாடு ஏற்படின் அதனை மீளாய்வு செய்ய மூன்று நீதிபதிகள் அமரும் வரை அதனை இடைநிறுத்தி வைத்தல் வேண்டும். 146 (4) : மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏகமனதாக இல்லாவிடின் பெரும்பாண்மை யோரின் முடிவு தீர்ப்பாக இருத்தல் வேண்டும். 147: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவகம் மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளரின் பொறுப் பில் இருத்தல் வேண்டும். இவர் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரின் கண்காணிப்பிற்கும், பணிப்பிற்கும், கட்டுப் பாட்டிற்கும் அமைந்தவராக இருத்தல் வேண்டும்.
மாகாண மேல் நீதிமன்றம்
154 ஞ (1) : ஒவ்வொரு மாகாணத்திற்கும், ஒவ்வொரு மேல் நீதிமன்றம் இருக்க வேண்டும். 154 ஞ (2) : பிரதம நீதியரசர் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகளிலிருந்து இதற்கான நீதிபதி களை நியமிக்கலாம். இவர்கள் பிரதம நீதியரசரி
னால் இடமாற்றம் செய்யப்படலாம். 154 » (3): மாகாண மேல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம்
அ. மாகாணத்தினுள் இடம்பெறும் குற்றவியல்
சம்பந்தமான வழக்குகள் ஆ.
அம்மாகாணத்தினுள் நீதவான் நீதி மன்றங் களிலும், ஆரம்ப நீதிமன்றத்தினாலும், வழங்கப்பட்ட மேன்முறை களை விசாரணை
செய்தல். இ.
பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்த வேறு கருமங்களை மேற்கொள்ளுதல்.

Page 63

Printed by Kumaran Press (Pvt) Ltd. kumbhlk@gmail.com