கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2012.11

Page 1
விழி 08
பார்வை
அக
ஆசிரிய
• Nishantha Wijesinghe - L
• கலாநிதி கோணாமலை கோ.
R.S.Pattiyagodage • கலா செ. ரூபசிங்கம் • அபூபக்க
www.viluthu.org

1 88
நொவம்பர் - 2012
விடி
த்துவ நோக்கு.
ப:-:55
alFonseka • அகிலநேசன் ணேசர் - M.M. ஹிர்பஹான் . திதி கனகசபாபதி நாகேஸ்வரன் கர் நளீம்
விலை: 100/=

Page 2
கடந்த மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் தே. ஆசிரியர் கலாசாலையிலும் 'புதிய உத்தேச கல்வி செயலமர்வு நடைபெற்றது. கல்வியியலாளரும் விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழக மற்றும் இரு கல்வி நிறுவனங்களினதும் பீடாதிபதி செயலமர்வில் 900 ஆசிரிய மாணவர்கள் கலந்து 6 மேம்பாட்டு மையத்தின் சார்பில் 'அகவிழி” சஞ்சின

சிய கல்வியில் கல்லூரியிலும் கோப்பாய் அரசினர் ச்சீர்திருத்தம் - 2009' இறுதி அறிக்கை தொடர்பான ஆய்வாளருமான திரு. தை. தனராஜ் (சிரேஸ்ட கம்) அவர்கள் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார். கெளும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருந்தனர். கொண்டிருந்தனர். இச்செயலமர்வை விழுது ஆற்றல் கெயினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இடத்தை தக்க ஆக இ ப பத வ த
- அனன்
immiiniliminimiminimimiminiminimicitiitliiminn

Page 3
ISSN 1800-1246
இகவி6
AHAVILI 3, Torrington Avenue Tel.: 011 250 6272 E-mail: ahavili.viluth
-- ஆசிரியத்துவ நோக்கு...
உள்ளே......
செவிமடுத்தல், குறிப்பெடுத்தல், உரைநிக
விளைதிறன்மிகு கற்றலும், பரீட்சையும்
ஆசிரியர் தினம்
உலக ஆசிரியர் தினம்
5. இலங்கையில் சிறுவர் கல்வி உரிமையை
6, தி--
கிராமியச் சமூகமும் பாடசாலையும்
7. பாரதி பன்முக நோக்கு - தமிழ்மொழி உ
8. வளரிளம் பருவத்து அறிவியல் தமிழ் வள
9. மெல்லக்கற்போரும் குறைபாடுடைய மான
10.
மாணவர் அடைவுமட்டம் தொடர்பான அடி
11.
கல்வி அமைச்சுடன் இணைந்த கல்விசார்
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு -
இடம்பெறும் கருத்துக்கள் "அ

அகவி
, Colombo 07
u@gmail.com
ழ்த்தல்
11
14
ப் பாதுகாப்பதில் கட்டாயக் கல்வி
உணர்ச்சி குறித்த சிறப்பு நோக்கு
மர சில குறிப்புகள்
எவர்களும்
டப்படை புள்ளிவிபரத் தகவல்கள்
நிறுவனங்கள்
அதன் ஆசிரியர்களே பொறுப்பு, கட்டுரைகளில் கவிழி”யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
ISSN 1800-1246
இகவி6
ஆசிரியத்துவ நோக்கு...
மாத இதழ்
ஆசிரியர்: V.S. இந்திரகுமார்
நிர்வாக ஆசிரியர்: சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் திருமதி பத்மா சோமகாந்தன்
ஆலோசகர் குழு: திரு.து. ராஜேந்திரம்
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஓய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் இரா.வை. கனகரட்ணம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திரு.தை. தனராஜ்
முதுநிலை விரிவுரையாளர், இலங்கைத்திறந்தபல்கலைக்கழகம்
திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்தபல்கலைக்கழகம்
திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு
திரு.கே. சாம்பசிவம்
தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
திருமதி. அருந்ததி ராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம்
ஜி. போல் அன்ரனி முன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர்
27 அகவிழி - நவம்பர் 2012

ஆசிரியரிடமிருந்து.........
புதிய அறிவுசார் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் கல்வியை உருமாற்றும் செயல் முறைகளிலும் கல்வித் தொழில்நுட்பவியலானது மிகமுக்கிய வகிபாகத்தை ஏற்கிறது. இன்றைய உலகிலுள்ள தொழிநுட்பவியல் முன்னேற்றங்களுடன் இணைந்த வகையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் பொதுவாழ்வில் அதிசயிக்கத்தக்க வகையில் வலுவான தாக்கங்களை உருவாக்கியுள்ளது. ஆயினும், இந்நூற்றாண்டின் சவால் களுக்கு முகங்கொடுக்கக் கூடிய கல்வித் தொழி நுட்பவியலின் நன்மைகளை இன்றும் நாம் உபயோகத்திற்கு கொண்டு வரவில்லை என்பது துரதிஷ்டவசமானது. கல்வித் தொழில்நுட்பவியலானது கல்விசார் விடயங்களில் பெருமளவில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளது. நவீன தொடர்பாடல் சாதனங்களான இணையம், பல்லூடகதொழில்நுட்பவியல், கம்பியில்லாத் தொடர்பாடல் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆசிரியர் களின் கட்டுப் பாட்டுக் குள் இருக் கும் வகுப்பறைப் போதனை முறையிலிருந்து கற்பவர் மைய மற்றும் வள அடிப்படைக்கல்வி சார்ந்து செல்லும் போது, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குப் பரவலான வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய ஏற்பாடானது மிகக் கவனமாக நியாயத்தன்மை மற்றும் பேண்தகு தன்மை என்பவற்றில் கவனஞ் செலுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டும். நியாயத் தன்மையானது முன்னேறியோருக்கும் பின்தங்கி யோருக்கும் இடையிலுள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் வசதியற்றோருக்கு போதிய வாய்ப்புக்களை வழங்குதலாகும். நிலைபேண்தகு தன்மை பயன்படுத்து வோரின் விரக்தியை இழிவளவாக்கக் கூடிய வகையில் கொள்வனவுத் திறன் மற்றும் பேணுகை போன்ற விடயங்களில் கவனக்குவிப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
இன்று எமது நாட்டில் 1500 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பல்பக்க நிதி வழங்கும் முகவர்களிட மிருந்து கடன் பெற்று உருவாக்கப்பட்ட கணினிக் கற்றல் நிலையங்கள், கணினி வள நிலையங்கள் அல்லது கணினி ஆய்வு கூடங்களைக் கொண்டிருக்கின்றன. பாடசாலைகளிலுள்ள ICT வசதிகளுக்கும் (தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியல்) மேலாக பாடசாலைக் கணினி வலையமைப்பு ஒன்று மேற்கூறப்பட்ட நிலையங் களையும் ஆய்வுகூடங்களையும் மாகாண ICT நிலையங்

Page 5
களையும் தேசிய கல்வியியற் கல்லூரிகளையும் தேசிய கல்வி நிறுவகம் (NIE) மற்றும் கல்வி அமைச்சையும் இணைக்கும் நோக்குடன் உருவாக்குதல் வேண்டும் என்றும் கல்வியியலாளர்கள் கூறி வருகின்றனர்.
நவீன கல்வித் தொழில்நுட்பத்தை கற்பித்தல் கற்றல் செயல்முறைகளில் உள்ளடக்கலானது நாட்டின் தற் போதைய சமூகப் பொருளாதார நிலை, இயைபாக்க குறைபாடுகள், இணைப்பின்மை, வெவ்வேறு பாடசாலை களில் கிடைக்கும் வசதிகளிலுள்ள வேறுபாடுகள் என்பன தாமதப்படுத்திவிட்டன என்றும் ICT ஐ ஒரு கற்பித்தல், கற்றல் கருவி என்ற வகையில் அறிமுகஞ் செய்வதற்குக் கூட பெருமளவிலான வளங்கள் (பிரதானமாக வன்பொருள் பராமரிப்பு, இணைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி) என்பன தேவை எனவும் ஏனைய காரணிகளான விழிப் புணர்வை உணர்த்துதல், கலைத்திட்ட சீர்திருத்தம், நிதி ரீதியான நீடித்து நிலவும் தன்மை, உள்ளடக்கம், தொழில்நுட்பப் பயிற்சி, கற்பித்தலியலில் ஆற்றலைக் கட்டியெழுப்புதல் என்பனவும் பாடசாலைக் கலைத் திட்டத்தில் ICT ஐ ஒன்றிணைப்பதற்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய தேவைகளாகும் எனவும் கல்விக் கொள்கை வகுப்போர் தெரிவிக்கின்றனர். இவை எல்லா வற்றிற்கும் மேலாக சகல பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டால் உருவாக்கப்படும் பின்தங்கிய நிலைமைகளால் ஆபத்துக்கள் இருப்பதையும்
அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்காகப் பயன்படக்கூடிய இலத்திரனியல் துணைச் சாதனங்கள் உரிய முறையில் பாடசாலைகளில் முறையான விதத்தில் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பதே இன்று நம் முன்னால் எழுந்து நிற்கும் கேள்வியாகும்.
இன்று எமது பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நவீன தொழில் நுட்பவியல் சாதனங்களை பயன்படுத்தும் பொறிமுறை மிக மிக தாழ்ந்த நிலையிலேயே உள்ளது, அல்லது முற்றுமுழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நகரத்திலுள்ள முன்னேற்றமடைந்த ஒரு சில பாடசாலை களைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்ட சாதனங்கள் முடங்கிக்கிடக்கின்றன. மின்சார வசதி இல்லாத பின்தங்கிய பாடசாலைகளைத் தவிர ஏனைய அனேகமான பாடசாலைகளில் இணைய வசதிகளுடனான கணினித் தொழில் நுட்பம், பல்லூடகத் தொழில் நுட்பவியல்

(Multimedia) தொலைக்காட்சி மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பல பாடசாலை களில் கனிஷ்ட மற்றும் இடைநிலை மாணவர்களிடம் இது பற்றிய அடிப்படை அறிவு கூட காணப்படவில்லை. கல்வி அமைச்சின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பாடசாலை இணையத்தினூடாக (School Net) கற்றல் கற்பித்தலுக்கான முறையியல்கள் செயற்படுத்தப்பட்டு நிழற்பிரதிகளாகவும் காணொளிகளாகவும் (Video) வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பல பாடசாலை மாணவர்கள் அறிந்திருப்பதாகக் கூடத் தெரியவில்லை. பல பாடசாலைகளில் Multimedia வை வருடம் முழுவ திலும் ஒரு தடவையேனும் பயன்படுத்தியிருக்கவில்லை. 10ஆம் 11ஆந்தர மாணவர்களுக்கான கருப்பாடங்கள் யாவும் பாடசாலை இணையத்தினூடாகப் போதிய தகவல்களோடு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும் பெரும் பாலான பாடசாலை மாணவர்கள் இவற்றை ஒரு தடவை யேனும் தரிசிக்கவில்லை. இதற்கான காரணங்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்களிடம் வினவினால் பல்வேறு குறைபாடுகளை கூறுகின்றனர். கற்றல் சூழலும் பாடசாலை வசதிகளும் போதியதாக இல்லை என கூறுகின்றனர். பல இடங்களில் பாடசாலை வளாகமும் (School Plant) பாடசாலையின் மொத்தச் சூழலும் பிள்ளையின் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு ஏற்ற வகையில் இல்லை என்றும் கூறுகின்றனர். இவ்வாறான சூழ்நிலைகளை மறுக்க முடியாதென்றாலும் பெரும்பாலான பாடசாலைகள் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. போதிய வளங்களும் வசதிகளும் இருந்தும் சரியான பொறிமுறையைப் பயன் படுத்த முடியவில்லை என்றால் அதில் செல்வாக்கு செலுத்தும் புறக்காரணிகள் எவை என்பதை கண்டறிந்து செயற்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டோரின் கடப்பாடாகும்.
எனவே, கல்வித்தொழிநுட்பவியலை பயன்படுத்து வதில் மாணவர் கள் விருத்திசெய் து கொண்ட பொறிமுறைத் திறன் கள் அவர்களது அறிகைசார் திறன்களை கீழ்ப்படுத்திவிட அனுமதிக்காமல் விரைந்து செயற்படவேண்டியது கல்வியமைச்சு அல்லது மாகாண கல்வி அதிகார அமைப்புக்களின் கடப்பாடாகும்.
V.S. இந்திரகுமார்
அகவிழி - நவம்பர் 2012 / 3

Page 6
செவிமடுத்தல், (
உரைநி
ஆக்கம் : Mr.
B.Sc தமிழாக்கம் : Mr.
கற்றல் எனும்போது ஆசிரியர் கூறுபவற்றை செவி மடுத்தலும், குறிப்பெடுத்தலும் அத்துடன் கற்பித்தல் அல்லது உரைநிகழ்த்தல் என்பன இன்றியமையாதன. தான் வகுப்பறையில் அல்லது விரிவுரைமண்டபத்தில் குறிப்பிட்ட விடயமொன்றிற்குரிய விரிவுரைக்கு செவி தாழ்த்தும் போது அங்கு கூறப்படும் விடயங்களுக்கு செவிமடுக்க பழக்க மற்றிருத்தல் மிக மோசமான நிலையாகும். விடயங்கள் கற்பிக்கப்படும்போது சுற்றுச்சூழலை சற்று அவதானித்த வண்ணம் வேறுவேலைகளில் ஈடுபடுபவர்கள் தான் தனக்கு செய்து கொள்ளும் அழிவு எத்தகையதென்பதை விளங்காதுள்ளனர்.
கற்பிக்கும்போது கூர்ந்து கவனித்தல்/அவதானித்தல் மிக மிக முக்கியம். இது சில மாதங்களினுள் உம்மால் அறியாமலேயே வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய பண்பென்பதை விஷேடமாக மனதிற்கொள்க. "நான் நன்கு செவிமடுப்பவன்” என தற்கருத்தேற்றம் செய்துகொள்க. நீர் பாடமொன்றைக் கற்கும்போது அதற்கு பூரணமான கவனம் செலுத்தல் மூலம் அடையும் மகிழ்ச்சி, ஆறுதல், தெளிவு, என்பவற்றை மனக்காட்சியில் படமெடுத்து இரசனையுறுக. உமக்கு சிறப்பான செவிமடுக்குமாற்றல் உள்ளதாக நேர்நிலைச் சிந்தனை (Positive thinking) செய்க. ஏனையவர்களுடன் கதைக்கும்போதும் அவர்கள் கூறுபவற்றை கவனத்திலெடுத்து செவிசாய்க்குக. இதனை எவ்வேளையிலும் பெருக்கிக்கொள்வதற்கு முயற்சிசெய்க.
நீர் விரிவுரையொன்றை செவிமடுக்கும் போது அதற்கு கூர்ந்த அவதானிப்பைச் செலுத்த வேண்டியதுடன் அதனிடையே விடயங்கள் கற்பனை பண்ணுவதிலிருந்தும் தவிர்த்துக் கொள்க, அவ்வாறு செய்யும்போது விரிவுரையின் (விளக்கவுரை) சில பகுதிகள் உமது செவிகளுக்கு எட்டாது போய்விடும். விரிவுரைக்கு அல்லது வகுப்பில் படிப்பதற்கு செல்லும்போது அதற்கு முன்னர் அப்பாடத்தை, அப்பாடத்தினுள் கற்ற விடயங்களை நன்கு படித்தறிந்து சிறந்த முன்னாயத்தத்துடன் வகுப்பிற்கு சமுகமளிப்பதற்கு வழிசெய்துகொள்க.
தனக்கு அமருவதற்குகந்த இடமொன்றில் அமர்ந்து கொள்க. அதிக நெருக்கடியுடைய, போதிய ஆதாரமற்ற (வசதிகளற்ற) இடங்களிலிருப்பதன் மூலம் நன்கு செவி
47 அகவிழி - நவம்பர் 2012

குறிப்பெடுத்தல், கழ்த்தல்
Nishantha Wijesinghe (Agri) Applied Psychologist A.A. Azees (R.N.)
மடுக்கவும் குறிப்பெடுக்கவும் கடினமாகையால் அவற்றைத் தவர்த்துக்கொள்க. அவ்வாறின்றிய நிலையில் அது வெறுமனே காலத்தை விழுங்கும் செயல்மாத்திரமே.
ஆசிரியரின் குரலுக்கு பூரண அவதானிப்பைத் செலுத்தி செவிமடுக்க இன்றைய தினப்பாடத்தை நன்கு கற்றறிந்து சிறந்த முறையில் குறிப்பெழுதலையும் மேற்கொள்வேன் என நேர்நிலைச் சிந்தனையில் செயற் படுக. நீர் தீவிர ஆர்வத்தில் சிறந்த கவனத்துடன் கற்றலில் தொடர்புறும்போது கடினமென நினைக்கும் விடயங்கள் கூட உமக்கு இலகுவாய் அமையும். குறிப்பிட்ட பாடமொன்றைக் கற்கும் போது அதனுடன் ஒட்டி இணைந்து கொள்க. அதன்மூலம் நன்கு தெளிவாய் அறிந்துகொள்ள கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
குறிப்பெடுக்கும்போது உம்மால் கவனிக்கப்படவேண்டிய
விடயங்கள் வருமாறு
அனைத்து விரிவுரைகளுக்கும் இடைவிடாது தொடர்ந்து சமூகமளித்து பூரணமாக குறிப்புகளை ஒழுங்காகப் பெற்றுக்கொள்க. உயர்தர வகுப்புவரை அப்பியாசக் கொப்பிகள் பொருத்தமாயிருப்பினும் அதனைக்கடந்து செல்லும்போது A-4 அளவிலான வெண்கடதாசி பொருத்த மானது. இவற்றிலும் ஒரு பக்கத்தில் மாத்திரமே எழுதுதல் வேண்டும். தானாகக் குறிப்பெழுதும்போது பாடம், திகதி, அலகு, பக்க இலக்கம் என்பவற்றைத் தவறாமல் மேல்புறமாகக் குறிப்பிடுக. குறிப்பெடுப்பதற்கு பின்வரும் அமைப்பின் முன்கூட்டியே தானாக வடிவமைத்துக் கொள்ளல், வழக்கமாக்கிக்கொள்ளல் மிகச்சிறந்தது.
அதற்காக இவ்வடிவம் மிகவும் பொருத்தம்.
பாடம் -
திகதி
அலகு
பக்கம் --
குறிப்பு 5 1/2”
சிறுகுறிப்பு 5 1/2” '
2 1/2”
முக்கியமான விடயங்கள்

Page 7
குறிப்பெடுத்தலில் செயற்றிறன்மிகு முறையை உபயோகிக்குக.
குறிப்பெடுத்தல் தொடர்பாக மிகச்சிறந்த முறையைக் கண்டறிய ஆய்வு நடாத்திய ஆய்வாளர்கள் மிகச்சிறந்த
முறையாக சிலவற்றை இனங்கண்டுள்ளனர். அவற்றுள் மிகவும் உகந்த முறைகளிரண்டு வருமாறு.
1. 5RL முறை
CR புத்தகம் அல்லது A4 அளவிலான வெண்கடதாசி களையெடுத்து பின்வருமாறு 2 அங்குலம், 5அங்குலம் என கோடிட்டுக் கொள்க.
- 2” -->
5'' --
> - 1''>
சுருக்கக்குறிப்பு
குறிப்பு
சாராம்சம்
A4
இவ்வாறு கோடிட்டுக்கொண்டு பின்வரும் படிமுறை களுக்கமைய குறிப்பெடுத்துச் செயற்படுத்துக. 1. Record
- குறிப்பை எழுதிக்கொள்க.
2. Reduce
- சுருக்கக் குறிப்பெடுக்குக. 3. Recite
ஞாபகத்திலிருந்து மீட்டெடுக்குக.
4. Reflict
- தெறிப்பு செய்க. 5. Review
- மீளாய்வு செய்க. 6. Link the items - தொடர்புபடுத்துக.
1. Record
குறிப்பெழுதலுக்காக ஓதுக்கப்பட்டுள்ள 5 அங்குலக் கோட்டினுள் பாடத்திற்குரிய குறிப்புகளையெழுதுக. போதகர் குறிப்புத்தருவாராயின் அக்குறிப்பை இங்கு எழுதுக. அவ்வாறு குறிப்பு தரவில்லையாயின் விரிவுரையில் கூறப்படும் முக்கியமான விடயங்களை இப்பகுதியில் எழுதிக்கொள்க.
2. Reduce குறிப்பெழுதிய தினத்திலேயே (முடியுமாயின் குறிப் பெழுதி முடிந்த பின்) பாடத்திற்குரிய சுருக்கக் குறிப்பை தயார்செய்து கொள்க. விடயங்களிடையே தொடர்பு உறுதிப்பாட்டையும் வகையில் சுருக்கக்குறிப்பை மேலும் சாராம்சமாக்கி ஒர் அங்குலக் கோட்டினுள் எழுதுக.

3. Recite
பாடத்தின் சாராம்சத்தை ஞாபகத்திலிருந்து கூறுவதற்கு முயற்சிசெய்க. அவ்வாறு ஞாபகத்திலிருந்து நீர் கூறும் விடயங்கள் சரியானவையா என பரீட்சித்துப்பார்க்க. பிழையானவை கூறப்பட்டிருப்பின் உடனே அவற்றை சரிசெய்து கொள்க.
4. Reflect
பாடத்திற்குரிய சாராம்சம் அல்லது சுருக்கக் குறிப்பை மீண்டும் மீண்டும் தெறிப்பு செய்து பார்த்து நினைவில் நிலைநிறுத்துக. பாடத்தின் சாராம்சத்தை ஏனைய பாடங்களுடன் (ஒரு பாடஅலகுகளுக்குரிய) தொடர்புபடுத்தி விடயங்களிடையே தொடர்பை மேம்படுத்திக் கொள்க. உம்மை திறமையான மாணவராக்குவதில் Reflect இன் பங்கு அளப்பரியது என்பதை மனதில் கொள்க.
5. Review
பாடத்தின் சாராம்சத்தை வாரத்திற்கொருமுறையேனும் வாசித்துப் பார்க்க. வேகமாக வாசிக்குக. அவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது உமது மனதில் நிலைநிறுத்தும் சக்தி வளர்ச்சிபெறும்.
6. Link the Items
மேற்கூறியவாறு கற்ற பாடங்களின் அனைத்துப் பகுதி களையும் அவற்றிற்குரிய விடயங்களையும் முடியுமானளவு ஒன்றுடனொன்று தொடர்பு படுத்திக் கொள்க. அதன்மூலம் உமது ஞாபகசக்தி மேலும் விருத்தியடையும்.
அத்துடன் (மேற்படி படிமுறைகள் செயற்படுத்தப் படுவதுடன்) பின்வருமாறு CR புத்தகத்தின் பக்கம் அல்லது A4 அளவிலான தாளில் இரண்டால் வகுத்து குறிப் பெழுதுவதும் சிறந்தமுறையென அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இங்கு தாளை ஆறு (6) அங்குலம், மூன்று (3) அங்குலம் என வேறாக்கிக் கொள்க. ஆறு அங்குலக் கோட்டினுள் குறிப்பையும் மூன்று அங்குலக் கோட்டினுள் சிறு குறிப்பு, சாராம்சத்தையும் எழுதுக அதன் பின்னர் மேற்படி படிமுறைகள் ஆறையும்(5RI) கடைப் பிடித்தொழுகுக.
4 - 2” -- >
6'
குறிப்பு
சிறுகுறிப்பு, சாராம்சம்
A4!
அகவிழி - நவம்பர் 2012 / 5

Page 8
மேலும் சில விடயங்கள்
போதகரின் குரலுக்கு செவிதாழ்த்தவும் குறிப்பெடுக்கவும் மனதை கவனம் செலுத்தி மேற்கொள்வதில் எப்போதும் உன்னிப்பாயிருக்குக.
விரிவுரைகளில் நீர் பெற்றுக்கொள்ளும் குறிப்பு விரிவுரையின் உள்ளடக்கங்களை (Core Ideas) உள்வாங்கு மாறு திருத்தமாக அமைத்துக் கொள்க. இங்கு பூரண வாக்கியம் அவசியமற்றது என்பதுடன் தனித்தனி விடயங் களாக எழுதிக்கொள்வது மிகச்சிறந்தது.
விரிவுரைகளில் ஒரேதடவையில் குறிப்பெழுதவும், தெளிவாகவும் துரிதமாக எழுதவும் பழகிக்கொள்க. விரிவுரையின் பின் மீண்டும் குறிப்பெழுதுதல் உகந்ததன்று. இதனால் விரிவுரை நடக்கும் போதே குறிப்பெடுத்தலை நிறைவு செய்யவும். அக்குறிப்பு படிப்பதற்கு இலகுவான முறையில் அமையுமாறு அமைத்துக் கொள்க. சுருக்கக் குறிப்பெழுதலை வகுப்பின் பின் அல்லது இடைவேளைகளில் செய்யமுடியும்.
விரிவுரையின்போது குறிப்பின் யாதேனும் பகுதி விடப்பட்டிருப்பின் விரிவுரை முடிந்தவுடன் நண்பரிடம் கேட்டறிந்து எழுதிக் கொள்க. அடிக்கடி கூறப்படும் சொற்பதங்களை எழுதும் போது சுருக்கக்குறியீடு, குறுகிய வடிவத்தில் எழுதிக்கொள்க. விரிவுரையாளர் மிகவும் முக்கியமானதாக கூறப்படும் விடயங்களை இலகுவாக அறிந்து கொள்ள முடியுமாறு நிறந்தீட்டல் (Highlight) அல்லது குறியீடு இடுதல் என்பவற்றைச் செய்யலாம். முக்கிய விடயங்களை எழுதும் கோட்டினுள் விஷேடமாகக் குறிப்பிடும் முக்கிய விடயங்களை எழுதிக்கொள்க. அதேபோல் அதனுடன் தொடர்பான உஷாத்துணை நூல்கள் பற்றிய விபரங்களையும் எழுதிக்கொள்க. வேறு நூல்களில் இருந்து நீர் தேடியறியும் விடயங்களையும்
அதனுள் சேர்த்துக் கொள்க.
விரிவுரையாளர் பாடத்தை நிறைவுசெய்யும்முன் பொழிப்பை கூறிக்கொண்டு செல்லும்போது நன்கு கிரகித்துக்கொண்டு யாதேனும் விடுபட்ட அம்சங்கள் இருப்பின் வகுப்பு நிறைவுற்றதும் அவற்றையும் பூரணப்படுத்திக் கொள்க. விரிவுரை நிறைவுற்ற அந்நாளே மீளாய்வு செய்து வேறு யாதேனும் மேலதிக குறிப்புகளிருப்பின் அவற்றையும் தேடிப்பெற்று கற்று குறிப்புக்கோவையை பூரணப்படுத்திக் கொள்க. அனைத்துபாடங்களினதும் குறிப்புக்கோவையை நன்கு பூரணபடுத்திக் கொள்ளல் மீட்டல் செய்து ஞாபகத்தில் நிலைநிறுத்த நன்கு துணை புரியும். ஏனையோரின் குறிப்புகளைவிட தனக்கேயுரிய பாணியில் குறிப்புக்கோவையைப் பூரணப்படுத்தி நன்கு பேணிக்காத்துக்கொள்ளல் மிகவும் உகந்த முறையாகும்.
நூல்களை வாசித்து அவற்றில் இருந்து பெறவேண்டிய விடயங்களையும் பெற்றுக்கொள்க. நூல்களிலிருந்து குறிப்புகளைப் பெறும்போதும் முன்னர்கூறிய மாதிரிகையை
67 அகவிழி - நவம்பர் 2012

உபயோகிக்குக. நூலினுள் விடயங்களை ஒழுங்கமைத்துத் தரப்பட்டிருப்பதனால் அதிலிருந்து குறிப்புகளைப் பெறுவது விரிவுரைகளிலிருந்து குறிப்புகளைப் பெறுவதிலும் இலகுவானது.
உரைநிகழ்த்தல் மாணவர் பருவத்தில் நன்கு உரைநிகழ்த்தும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளல் மிக முக்கியமானது. இதற்கு உம்மில் காணப்படும், மனதில் கொண்டிருக்கும் ஐயங்களை அகற்றும் விஷேட முறையொன்று இங்கு தரப்படுகின்றது.
நீர் மிகத்திறமையான பேச்சாளராவதற்கு மிகத் திறமையான பேச்சாளர் என நேர்நிலையான (Positive) திடநம்பிக்கை கொள்வதற்கு பயிற்சி பெறுக. நீர் மிகத்திறமையான பேச்சாற்றலுடையவராக பெருந் திரளானோர் முன்னிலையில் உரையாற்றுவதை மனதில் நினைத்து மகிழ்ச்சி பெறுக. உமது திறமையை ஆசிரியர் கள், நண்பர்கள், பெற்றோர் ஆகியோர் கணிப்புக் கொடுக்கும் முறையை மனதில் கற்பனை செய்து மகிழ்ச்சி பெறுக. நீர் திறமையான பேச்சாற்றல் உடையவராய் மாறியிருப்பதாக தற்கருத்தேற்றம் செய்து கொள்க. எப்போதும் தளராத நம்பிக்கை வைத்துக் கொள்க, மூன்று வாரங்களாகும்போது நீர் மிகச்சிறந்த பேச்சாற்றலுடையவராவீர்.
முடியுமானவரை சொற்களைத்தேடி உமது மொழி வளத்தை தீவிரமாக மேம்பாடு செய்துகொள்க. அதற் கப்பால் உமக்கு பேச்சாற்றலும் அதேபோல் கற்றலுக்கும் பெரும்பயன்கள் கிட்டுவது நிச்சயம். கூர்ந்து கவனிப்பதன் மூலம் நாளாந்தம் புதிய சொற்களுக்குரிய கருத்துக்களைத் தேடி மொழிநடையை திடப்படுத்திக் கொள்க.
எப்போதும் உரையாற்றுமுன் நீர் உரையாற்றவிருக்கும் தலைப்பைப்பற்றி இயன்றளவு அறிந்து தெரிந்து புரிந்து கொள்க. எனினும் மனனத்தின் மூலம் உரையாற்ற வேண்டாம். தெளிவுடன் விடயங்களை ஒன்றிணைத்து உரையாற்றும் திறனை மேம்படுத்திக்கொள்க. கழகங் களில் சங்கங்களில், ஒன்றியங்களில் உரைநிகழ்த்த வழக்கப்படுத்திக்கொள்க.
செயற்றிட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கும்போதும் அதற்கெனக் நன்கு திட்டமிட்டு தயாரான அறிக்கையை அளிப்பதற்க்கு வழியமைத்துக் கொள்க.
முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டி குரலை ஏற்றவாறு உயர்த்தித் தாழ்த்தி கட்டுப்படுத்தி நிறைவுற்றவுடன் கவர்ந்திழுக்கும் விதத்தில் உரையாற்ற பயிற்சியெடுத்துக் கொள்க. ஒத்திகை (Rehearsal) பார்த்துக் கொள்க.
-முற்றும்

Page 9
விளைதிறன்மிகு க
Mr. La (தங்கப் பதக்கம் - 6
கொழும்புப்ப
விளைதிறனுடனும் வினைத்திறனுடனும்
பரீட்சைக்கு முகங்கொடுத்தல்.
பொருளாதார மேம்பாட்டிற்கு, வறுமையைக் குறைப்பதற்கு, கல்வியினூடாக நிறைவேற்றக்கூடிய பணி அளப்பரியது. 21ம் நூற்றாண்டிற்கு அவசியமான விளைதிறன்மிகு ஊழியப்படையை உருவாக்குவதற்கு கல்விசார் புதிய திருத்தங்கள் செய்து சிறந்த பயிற்றுவிப்பின் மூலம் மனிதவள அபிவிருத்திக்கு நீண்டநேரத்தை வழங்குவது கட்டாயமானது என்பது இனங்காணப்பட்டுள்ளது.
எமது நாட்டில் கல்வியின் விளைவாகக் கொள்ளப் படுவது பல்வேறு சோதனைகளும், பிரபலமான பரீட்சை கள் மூலமும் அளவிடப்படும் அறிவு, திறமை, மனப்பாங்கு என்பவற்றின் விருத்தியாகும். இங்கு நடைமுறையில் உள்ள பரீட்சை முறையில் எவ்வளவு குறைபாடுகள் ஏற்படினும் பரீட்சைப் பெறுபேறுகள் எமது நாட்டுச்சிறார்களின் அடைவைக் காட்டி நிற்குமென்பதில் இரகசியங்களெதுவு மில்லை. எனினும் இங்கு சிறார்களின் பரீட்சைப் பெறு பேறுகளில் கவனம் செலுத்தும் எவ்வேளையிலும் உணரப்படும் பிரதான இயல்பு இப்பரீட்சைப் பெறுபேறுகளின் மூலம் ஒருபோதும், எவராலும் மகிழ்ச்சியடைய முடியாது என்பதாகும்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் இருபது சதவீதத்திற்கு கிட்டிய பெறுமான முடையோர் உயர்தரத்திற்கு தகுதி பெறுகின்றனர். அண்ணளவாக பத்து சதவீதமானோர் அனைத்துப் பாடங்களிலும் பலவீனமடைகின்றனர்.

ற்றலும், பரீட்சையும்
I Fonseka வங்கி நிதியியல்த்துறை) ல்கலைக்கழகம்
உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளும் மேற்கூறிய தகவல்களுடன் ஒரளவு பொருந்தும். உயர்தரத்தில் எவ்வளவு திறமையாகக் சித்தியெய்தினும் பல்கலைக்கழக வரம் கிடைப்பது 16,000 பேரளவு சிறு தொகையினருக்கே. எஞ்சிய ஒருலட்சத்திற்கு அண்மித்த தொகையினருக்கு எஞ்சுவது பெருமூச்சு மாத்திரமே. எவ்வாறெனினும் எமது நாட்டில் நடாத்தப்படும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, சா/தரப் பரீட்சை, உ/த பரீட்சை என்பவற்றின் பெறுபேறுகளை நோக்குமிடத்து எமது பிள்ளைகளில் அதிக சதவீதமானோர் தோல்வியைத்தழுவுவது யாராலும் புரிந்துகொள்ள முடியுமான உண்மையாகும். - 11 வருடங்கள் அல்லது 13 வருடங்கள் தொடர்ச்சி யாக கல்வியில் ஈடுபட்டபின் ஒரு பாடமேனும் சித்தி யடைய முடியாவிடின் அந்நிலைமை மிகவும் துர்ப்பாக்கிய முடையதாகும்.
இதற்கான காரணங்கள் இரண்டு எனது மனதில் எழுகின்றன. அவற்றுள் முதலாவது நடாத்தப்படும் பரீட்சை ஒழுங்கிலுள்ள குறைபாடுகள். இரண்டாவது பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் திறமையின்மையும் ஆற்றலின் மையும். அவற்றைத்தவிர மாணவர்களின் முயற்சிக்குறைவு (கவனயீனம்) ஒழுங்கின்மை என்பவற்றையும் குறிப்பிட முடியும். பரீட்சை முறைகளை மாற்றியப்பதைப்பற்றி ஆலோசிப்பதை ஒரு புறந்தள்ளி மாணவர்களின் ஆற்றல் களை வளர்க்கக்கூடிய உபாயங்கள் யாவையென்பதை கலந்துரையாடுவோம். சுருக்கமாகக் கூறின் பரீட்சையில் சித்தியடைய தனது உழைப்பு, காலம், அறிவு, என்பவற்றை பயனுடைதாய் உபயோகிப்பது எவ்வாறு என்பதை
ஆராய்வோம்.
பரீட்சையில் ஏன் சித்தியடையவேண்டுமென்பதை மீண்டுமொரு முறை சிந்தித்துப்பார்க்க வேண்டியது என்ன காரணத்திலாகும்?
பரீட்சையில் சித்தியடையாவிடின் சமுகத்தில் எமக்கு அங்கீகாரம் கிடையாது. தொழில்வாய்ப்புகளைப் பெறுவதும் கடினமானவிடயம். இவ்வளவுகாலம் பாடுபட்டுழைத்த பெற்றோருக்குச் செய்யும் அகெளரவம்.
நானறிந்த குறிப்பிட்ட தொழிற்சாலையொன்றில் இயந்திர இயக்குனர் போன்ற தாழ் பதவிகளுக்குக்கூட தற்போது கேட்கப்படும் குறைந்த தகுதி உயர்த்தரப்
அகவிழி - நவம்பர் 2012 / 7

Page 10
பரீட்சையில் மூன்று சாதாரண சித்திகளாகும். அதே பதவிக்கு இற்றைக்கு மூன்று வருடங்களிற்கு முன் கேட்கப்பட்ட தகுதி 8ம் தரம் சித்தியடைதலாகும்.
இதன் மூலம் தெளிவாவது சுயாதீனமான கெளரவத் துடன் கூடிய ஒருவராய் வாழுவதற்கு மட்டுமல்ல போட்டிநிறைந்த சந்தையை வெற்றிகொண்டு நாட்டின் பொருண்மிய மேம்பாட்டில் ஈடுபடுவதற்கும் கல்வியொரு அத்தியாவசியக் காரணியாக அமைந்துள்ளது.
இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டின் ஜொம்ரியன் நகரில் நிகழ்ந்த கல்வி தொடர்பான உலக செயலமர்வொன்றில் கூறப்பட்ட கருத்தொன்று மேற்கூறப்பட்ட விடயங்களை உறுதிசெய்யும் வகையில் நினைவிற்கு வருகின்றது. அச்செயலமர்வு 1990இல் நடைப்பெற்றது. அதன் கருப்பொருள் 'அனைவருக்கும் கல்வி' என்பதாகும். அங்கு ஈக்குவதோர் நாட்டு ஜனாதிபதி பொர்ஜா (Borja) இவ்வாறு எடுத்துரைத்தார்.
"வாக்கு (Vote) என்பது விருப்பைத் தெரிவித்தலாகும். சிறந்த அரசொன்றை நிறுவதற்கு வாக்களிக்க முடிவது அந்நாட்டு மக்கள் சரியான தீர்மானமெடுப்பதற்கு அவசியமான சிறந்த கல்வியைப் பெற்றிருப்பின் மாத்திரமே.”
இதற்கமைய நோக்கும்போது தேர்வினில் சித்தி யடைவது இன்றைய உலகின் அத்தியாவசியக் காரணி யாகவிருப்பது தெளிவாகின்றது. இதனால் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைவதற்கு பயன்மிகு செயற்பாடுகள் சிலவற்றையேனும் விளங்கவைப்பது நாட்டினருக்கும், நாட்டிற்கும் வழங்கும் ஈடு இணையில்லாச் சேவையாகக் கருதுகின்றேன்.
கீழ்வரும் தலைப்புகளின் கீழ் நாம் இவைபற்றிய தெளிவைப் பெறுவோம்.
பரீட்சைக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டியவை.
பரீட்சை தினமன்று செய்யவேண்டியவை
பரீட்சை நடைபெறும்போது செய்ய வேண்டியவை பரீட்சைச் செயற்பாட்டை மதீப்பீடு செய்தல் பரீட்சைப் பதகளத்தை பரீட்சையின் உயர் எதிர் பார்ப்பாக அமைத்துக்கொள்ளல்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் முழுமையாகவே அழிவடைந்த வேளையில் மீண்டும் அந்நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெரும்பாலும் அவர்கள் செய்தது அமெரிக்க இனத்தவரான விலியம் எட்வட் டெமிங் அவர்களின் எச்சரிக்கைப் போதனைகளைப் பெறுதலாகும்.
டெமிங் அவர்களால் அன்று அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்டதொரு செயன்முறை இன்றுவரைக்கும் மிகவும் வெற்றிகரமாக உலகிலுள்ள அனைத்து நிறுவனங்களாலும்
87 அகவிழி - நவம்பர் 2012

உபயோகிக்கப்படுவது போன்று தென்படுகின்றது. இந்த முறையானது PDCA என அழைக்கப்படும். இதுவொரு சுழற்சியாகும். PDCA வட்டம் எனவும் அழைக்கப்படும்.
|- D
வட்டமென்பது ஒயாத பயணமாகும். இங்கு
P - Plan
திட்டமிடல் D- Direct
- நடாத்துதல்/செயற்படுத்தல் C- Check - பரிசோதித்தல்
A - Act
நடைமுறைப்படுத்தல் பரீட்சைக்குத் தயாராகும்போதும் இந்த PDCA வட்டத்தை சிறப்பாக உபயோகிக்க முடியும். அவ் வாறாயின் அதனை எவ்வாறு செய்யலாம் என்பதைக் கலந்துரையாடுவோம்.
"P” - Plan. திட்டமிடல் அல்லது முன்னாயத்தம்
இது இரு பகுதிகளைக் கொண்டது. முதலாவது மீட்டல். மற்றையது கற்றல் நுட்பங்களை மேம்படுத்தலாகும். இங்கு முன்னாயத்தமென்பது டெமின்க் வட்டத்தில் Plan அல்லது திட்டமிடலாகும்.
1) மீட்டல் பரீட்சை மட்டுமல்ல நாம் உயிர்வாழும் உலகை இரு விழிகளையும் திறந்து நோக்குமிடத்து எமக்கு ஒரேயடியாக விளங்குவது யாதெனில் எந்தவொரு வேலையும் ஒரேமுறையில் சரியாக நிறைவேற்றுவதற்கு

Page 11
தேவையாயிருப்பின், அதனை நிறுவி திட்டமிடலிற்குட்படுத்தி போதிய விழிப்புணர்வுடனும் அவதானத்(கவனம்)துடனும் நிறைவேற்ற வேண்டும்.
"விளைதிறன்” எனும் பதத்தினுள் தொழிற்பாட்டுடன் வாழும் ஒருவருக்கு நான் அடிக்கடி கூறும் விடயம் யாதெனில் நீர் செய்யும் பணி எதுவாகவிருப்பினும் அதனை திருத்தமாக, உயர்தரத்தில் ஒரே தடவையில் நிறைவேற்றி உயர் மற்றும் திருத்தமான விளைவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதாகும்.
உதாரணத்தைக்கொண்டு இதனை விளங்கவைப்ப தாயின் நீர் பரீட்சைக்கு அமருவதாயின், உம்மால் ஒரே தடவையில் மிகச்சிறப்பாக சித்தியடைய முடியுமாயின் நீர் விளைதிறனை வளர்த்துக்கொண்ட ஒருவராகக் கருத முடியும். இருமுறையில் அல்லது மும் முறையில் பரீட்சையை சித்தியடைய எமக்கு பரீட்சை ஒழுங்கில் அவகாசங்கள் வழங்கப்பட்டிருப்பினும் அவ்வாறு தாமதமாக சித்தியடைவதன் மூலம் உமது வாழ்க்கையில் எதிர் பார்ப்புகள் ஒராண்டினால், ஈராண்டினால் பின்தள்ளப்படுதல் நிச்சயிக்கப் பட்ட விடயம்.
அதனால் ஒரேதடவையில் சிறந்த பெறுறுேகளைப் பெறுதவற்கு நாம் அனைவரும் முயற்சியெடுக்க வேண்டும். இங்கு மீட்டல் செய்வதை நாளாந்தம், வாராந்தம், பரீட்சைக்கு சில தினங்களுக்கு முன் என செய்தல் வேண்டும்.
நாளாந்த மீட்டல்
வகுப்பறையென்பது உமது வேலைத்தளம். உமது சேவைநிலையம். எந்தவொரு வேலைத்தளத்திலிருந்து மகிழ்ச்சிகரமான விளைவைப் பெற வேண்டியிருப்பின் கட்டாயமாக வகுப்பறையும் சுற்றுச்சூழலும் கண்ணைக் கவரும் சூழலாக இருந்தல் அத்தியாவசியமானது. அதனைத்தவிர செய்யப்படும் பணியையும் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டியுள்ளது. அப்போது அங்கு சேவை யாற்றுவதற்கு அல்லது கற்றலுக்கு பெரும் மனமகிழ்ச்சி உம்முள் ஏற்படுத்தப்படும்.
அவ்வாறான சூழலிலிருந்து கற்பவைகள் உமது மனதில் நன்கு நிலை நிறுத்தப்படும். எனினும் அவ்வாறு கூறிக்கொண்டு உம்மால் அமைதியாயிருக்க முடியாது. ஆகையால் யாதேனுமொன்றைக் கற்றபின் அடுத்துவரும் 12 மணிநேரம் கழிவதற்கு முன் வகுப்பறையில் கற்றவற்றை சோம்பலின்றிய நிலையில் மீட்டல் செய்தல் வேண்டும். அவ்வாறு நிகழாவிடின் அவை உமக்கு மறந்துபோகலாம். அவ்வாறு செய்யப்படும் மீட்டல் குறைந்தளவு ஒரு பாடத்திறிகு 30 நிமிடமேனும் செய்தல் வேண்டும். இரு பாடங்களிடையே சிறு ஓய்வெடுக்கவும். இங்கு சோம்பல் உமது எதிரியாகும். அவ் எதிரியை முறியடிக்கும் சக்தியை உம்மினுள் வளர்த்து கொள்ளல் மிக முக்கியமானதாகும்.

இவ்வாறு மீட்டல் செய்வதிலிருந்து எதிர்பார்க்கப்படுவது அன்றாடம் கற்றுக்கொள்பவற்றுடன் வாழ வழியமைத்துக் கொள்ளலாகும். மேலும் கற்றவற்றை இன்னுமின்னும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு முடியுமாயமைவதுடன், பெருமளவிலான காலப்பகுதியையும் மீதப்படுத்த முடியும். இம் மீட்டலை வாராந்தமும் செய்தல் வேண்டும். அவ்வாறு வாராந்தம் செய்யும் மீட்டல்களை செய்ய வேண்டிய சிறந்தநாட்கள் வார இறுதிநாட்களாகும். ஒரு பாடத்திற்கு ஆகக்குறைந்தது ஒரு மணிநேரம் ஒதுக்க முடியுமாயின் அது விளைதிறன் மிகுந்தது என்பது கண்கூடு.
இங்கும் சோம்பல் உணர்வைத் துரத்தியடித்தல் வேண்டும். வார இறுதியில் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஹிந்தி திரைப்படங்கள் காண்பிக்கப் படினும் அவை உமக்குரியவையல்ல என்பதைக் கவனத்திற் கொள்க. உமது முதலாவது இலக்கு வேறேதுவுமல்ல சிறந்த கல்வி மூலம் உயர் அறிவுத்திறனுடைய ஒழுகலாறு பேணும் பிரஜையாக உருவாதலேயாகும்.
இவ்வாறு வாராந்தம் செய்யப்படும் மீட்டல்களினூ டாக உமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பிரதிபலனாவது உமது மனதினுள் சீராக ஒருவாரகாலமாக நீர் கற்றதை உள்வாங்கிக் கொள்ளலாகும்.
இச்செயன்முறை தொடர்ச்சியாக இடம்பெறல் வேண் டும். ஒருவாரம் நிறைவேற்றியும் மறுவாரம் நிறைவேற்றா மலும் விடப்படுமாயின் கல்விச்சுற்றுலாவில் நீர் இடை நிலையில் கைவிடப்படுவீர். அடுத்த வாரத்தினுள் நீங்கள் இயல்புநிலைக்கு மீள்வீர்களாயினும், முன்னைய வாரத்தில் எஞ்சியவைகளை நிறைவு செய்யாமல் இவ்வாரத்தில் படித்தவற்றை மீட்டல் செய்வது பயனற்ற காரியம்.
மீட்டலுக்குரிய மேலும்சில அறிவுரைகள் 1. மீட்டலிற்காக பின்தொடர்ந்து செல்லாது எனினும் விளைவுதரும் முறையான "Routines” மேற்கூறிய பிரகாரம் உபபோகிப்பதன் மூலம் கற்றலை பெரு மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற முடியுமென்பது நிச்சயம். இவற்றைத்தவிர குறிப்பிட்ட பாடத்தைப்பற்றி எழுதப் பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட வேறு நூல்களையும் வாசிப்பது பயனளிக்கும். இவ்வாறு வாசிக்கப்படும் மேலதிக நூல்களில் காணப்படும் சந்தேகமான இடங்களை வேறொரு அப்பியாசக் கொப்பியில் எழுதிக்கொண்டு மறுநாள் பாடசாலை செல்லும் போது உரிய ஆசிரியரிடம் கேட்டறிந்துகொள்ளல் உம்மால் செய்யப்பட வேண்டிய முக்கியமான விடயமென்பதை மனதில்கொள்க. 3. மீட்டல்செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய விடயம் பாடத்தினுள் மிகமுக்கியமென நீர்கருதும் அதேபோல் ஆசிரியர் மூலம் கீழ்க்கோடிடுமாறு கூறும் விடயங்கள், தலைப்புகள் பற்றி மிகவும் கவனம்
அகவிழி - நவம்பர் 2012 / 9

Page 12
செலுத்தி அவைதொடர்பாக அதிகமாக மனதில் பதித்துக்கொள்ளல் வேண்டும்.
பரீட்சை முன்னாயத்தம்
பரீட்சைக்குரிய முன்னாயத்தமென்பது பரீட்சைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமேனும் முன்கூட்டி செய்யப்படும் ஆயத்தமாகும். இறுதித் தறுவாயில் ஏற்படும் படபடப்பைத் தவிர்த்துக்கொள்வதற்கு முன்னாயத்தம் அவசியமாகும். மேற்கூறிய படிமுறைகளை நீர் அடியொட்டியதாக பின்பற்றியிருப்பின் உமக்கு படபடப்பு அல்லது பரீட்சைப்பீதி எற்படுவதற்கு எக்காரணமுமில்லை.
எவ்வாறாயினும் பரீட்சைக்கு மூன்று நான்கு மாதங்கள் இருக்கும்போதே நீர் இதுவரை கற்ற விடயங்களை மீட்டல் செய்தல் முக்கியமானதாகும். அங்கு ஒவ்வொரு பாடத்திற்குமுரிய காலத்தை ஒதுக்கவேண்டியது அவற்றின் விரிவைப்பொறுத்தாகும்.
இக்காலப்பகுதியில் வாய்ப்பாடமாக்கல் (மனனம்) செய்வது உகந்ததன்று. இக்காலப்பகுதியில் புதிதாக யாதேனுமொன்றை மனதினுள் புகுத்துவதென்பது காலத்தை வீணாக்குவது மாத்திரமல்லாமல் இதுவரை நீர் கற்றவற்றை
அடிப்படுத்திக் கொள்ளலுமாகும்.
இக்காலப்பகுதியில் நீர் செய்யவேண்டியது சிறந்த காரியம் சுருக்கக் குறிப்புகளை வாசித்துப்பார்த்தலாகும். சுருக்கக் குறிப்பு பற்றி விரிவாக வேறொரு இடத்தில் தரப்பட்டுள்ளது. எந்தவொரு வேலையையும் திருத்தமாக செய்யவேண்டுமாயின் அதனை ஒழுங்குமுறையில் நிறைவேற்றல் அத்தியாவசியமாகும். ஒழுங்குமுறையில் யாதேனுமொன்றை நிறைவேற்ற வேண்டுமாயின் ஒழுகலாறு பேணல் அவசியம். ஒழுக்கமற்ற இடத்தில் நிகழ்வது அழிவு.
முன்னாயத்தம் எனும் தலைப்பின்கீழ் நாம் குறிப்பிட்ட இரண்டாவது காரணியைப் பார்ப்போம்.
கற்றல் நுட்பங்கள்
சுருக்கக் குறிப்புகள் ஒலிப்பதிவு இயந்திரம் குழுமுறைக் கற்றல் ஆலோசனை / சீர்மியம் கடந்தகால பரீட்சைகள்
சுருக்கக் குறிப்பெடுத்தல் சுருக்கக் குறிப்பெழுதும் முறையைக் கடைப்பிடிக்காத மாணவ மாணவிகளுக்கு தனது பரீட்சையில் திறம்பட சித்தியடைய முடிந்ததாயின், அது மிகவும் அரிதான செயல். எனினும் உலகில் வாழ்கின்ற மிகவும் வெற்றி
107 அகவிழி - நவம்பர் 2012

கண்டுள்ளவர்கள் பெருந்தொகையானோர் தனது பரீட்சை பில் சித்தியெய்த உபயோகித்த விளைதிறன் மிகு முறையாக சுருக்கக் குறிப்பெடுத்தலைக் குறிப்பிடலாம். - நீதிமன்ற வளாகத்தினுள் சற்று நேரம் நின்று அங்கிருக்கும் வழக்கறிஞர்களைப் (Lowyers) பாருங்கள். அனேகமானவர்களிடம் இரண்டாக மடிக்கப்பட்ட பைல் (File) மட்டைகளிருப்பதைக் காணலாம். இப்பைல் மட்டைகளினுள் அனைத்தும் சுருக்கக் குறிப்புகளே அடங்கியுள்ளன. அவ்வாறு இடப்பட்டுள்ள சுருக்கக் குறிப்புகளை நோக்கி தனது பார்வையைச் செலுத்தும் எவ்வேளையிலும் அதற்குரித்தான பூரண விளக்கம் மனதில் தோன்றும். அதன்மூலம் அனைத்தையும் மனதில் நிலை நிறுத்திய ஒருவராய் நீதிமன்றினுள் வாத விவாதங்களில் ஈடுபடமுடியும்.
அவ்வாறு படிக்கும்போதும் விஷேடமாக பரீட்சைக்கு முகங்கொடுக்கும் வேளைகளில் அதேபோல் அதற்காக முற்பயிற்சி பெறும் வேளைகளில் சுருக்கக்குறிப்பெடுத்தல் இன்றியமையாதது.
அதற்காக சிறந்த முறையொன்றை உமக்கு அறிமுகம் செய்கின்றோம்.
- A4 அளவிளான தாளொன்றையெடுத்து, நீளத்தில் இரண்டாக மடிக்க. இவ்வாறு மடிக்கப்பட்ட தாளில் மேலாக திகதியைக் குறித்து நீர்வாசிக்கும் நூலின் விபரத்தை யும்குறிப்பிடுக. வாசிப்பவற்றில் மிகமுக்கியமானவற்றை சுருக்கக் குறிப்பெடுப்பதை மிகவும் விழிப்புணர்வுடன் தெளிவாக நிறைவேற்றுதல். -- பாடம் நிறைவுற்றபின் குறித்துக்கொண்டவற்றின் பால் கவனம் செலுத்துக. வாசித்துப்பார்க்க. அங்கு குறிப்பிடப்பட்டுள்ள சிறுதலைப்புகளில் பார்வை செய்யும் போது படித்தபாடம் மீளநினைவில் வருமாயின் நீர் வெற்றியடைந்தவர்.
நீர் வாகனமொன்றில் பயணிக்கும் போது கூட இக்குறிப்பில் கவனம் செலுத்துக. - A4 அளவிளான தாளிற்குப் பதிலாக 16x10cm அளவுடைய வன் அட்டைகளையும் பயன்படுத்தலாம். இம்முறையை நீர் இதுவரையில் செயற்படுத்தவில்லையாயின் இன்றே ஆரம்பிக்குக. பெறுபேறு நிச்சயம். கண்கூடு. இங்கு குறிப்புகளை இலக்கமிட்டு உரியமுறையில் கோவையிட்டுக் கொள்ளல் கட்பியம் செய்யப்படல்வேண்டும். அவ்வாறில்லாவிடின் அவை காணாமல் போவதற்குரிய சாத்தியம் அதிகம்.
மிகுதி அடுத்த இதழில்.......

Page 13
ஆ
சென் அந்தனீ
ஆசிரியர் தின நிகழ்வு இராமநாதன் இந்து மகளிர் கல்
நடைபெற்றபோது அந்நிக
பட்ட மே 19,
தன் முத்துத் திருமணி வயிற்றில் எனக்கு தண்மை மிகு இடம் தந்து என் சித்தத்தை செழுமை பெறச் செய்த என் தாய்க்கு முதல் வணக்கம். என் உயிரோடு கருவாகி உணர்வோடு ஒளியாகி
அகமோடும் அறிவோடும் திடமான செம்மொழியே உனக்கு என் தலை வணக்கம். உயர் ஞானம் மிகத்திகழ பலவேறு துறை பயின்று வருமானம் மிகக்குறைவு . வாழ்க்கைப் படியும் மிகக்குறைவு வளமான பெரு வாழ்வு கனவோடு கனவாக நிறைவான மனதோடு திறமாகி சேவை புரியும் என் சகபாடிகளே வணக்கங்கள்.
அறிவுப் பசிக்குப் பால்வார்த்து அக்டோபர் ஆறில் என்னையும் உங்களையும் இவ்விடத்தில் தருவித்த நம் ஆசான்களுக்கு
அக வணக்கம். உண்மை விளக்கம் பெற்ற உன்னத சமூகம் - உலகெங்கும் உருவாகி உயர்வாகி மனிதம் வளர ஊக்கத் தோடும் உழைக்கின்றான்
ஆசான். அறிவென்னும் ஒளியூட்டி பண்பென்றும் நீரூற்றி சமுதாய விருட்சத்தை சரியாக நிறுத்துகிறான் ஆசான்.

சிரியர் தினம்
அகிலநேசன் ஸ் மகாவித்தியாலயம், கொழும்பு 13
மலூரியில் ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்
ழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை
குந்தி இருந்து குளம் தேடி அலையும் அரியண்ட சமூகத்தில் அறிவென்னும் குடத்தில் அன்பென்னும் நீர் கொண்டு அழுக்ககற்றும் அற்புதமான அதிமனிதன் ஆசிரியன்.
பENN
அமெ 3ெ) KRWINY
-2வு -
பலவேறு துயரோடும் கனமான மனதோடும் விடிகாலை உணவின்றி வருவார் - அவர் இதழ்போன்ற மனதோடு இதமாக உரையாடி அன்போடும் பரிவோடும் துயர் தீர்ப்பார் - இவர்.
படும் பாடுதனை - இங்கு பரதேச பரிகாரியேறும் பரிவோடு பார்க்காரோ படிதன்னை உயர்த்தாரோ.
அகவிழி - நவம்பர் 2012 / 11

Page 14
ஒருசாண் வயிற்று மையத்தில் சுற்றும் உலகின் தேவைகள் வட்டத்தின் பரிதியாக ஆசை நாண்களில் இழுத்து எய்தப்படும் அதிகார அம்புகளில் பலிக்கடாவாக
ஆக்கப்படுகின்றான் ஆசிரியன். மாணவ மனங்களை - மேய்ந்து அவர்தம் மனதோடு பலமான - உரமாகி படிப்படியாக எளிதான - வழிகாட்டி விடு சுடர்போன்ற தெளிவான - அறிவோடு அன்பு என்னும் நூலில் மலராகத் தொடுத்து -
எடுத்து அடியொன்றைத் தந்தோன் ஆசான்தான் தலைமுறை யொன்றைத் தந்தோன் குருவேதான். கூக்குரல் கும்மாளம் - மேசையில் தவிலோடு கூடியகுத்தாட்டம் குரு இல்லா வகுப்பறைகள் குரவையாடும் இடமாகும் மேலான பிரளய ஒளி கையில் பிரம்பின்றி உடலில் தெம்பு குன்றி எட்டுப் பாட வேளையும் காட்டுக் கத்தாகக் கத்தி மாணவர் புத்தியை கத்திக்கூர்மை ஆக்குவான் குரு.
127 அகவிழி - நவம்பர் 2012

ஸ்கீம் ஒப் வேக்கில் பூராயும் தேடி நோட்ஸ் றுப் லெசனை தேவாரமாய் எழுதி புதிதான முறையொன்றை தெளிவாக உருவாக்கி திங்கள் தொடங்கி வெள்ளிவரும் போது அவுட்டான தொண்டையுடன் அலுப்பின்றி அடுத்தவார கற்பித்தலுக்கு ஆயத்தமாவான் ஆசான். மாணவ மனங்களின் மேய்ப்பராக
அறிவை விருத்தி செய்யும் - ஆசானின் மனங்கள் மரணப்படுக்கையில். நொடிப் பொழுது மரணங்களில் மனிதத்துவம் மனித நேயமின்றி மீண்டும் மரணிக்கிறது. சாவு முனைகளில் சரித்திரங்கள் புதைக்கப்படுகின்றது. நெஞ்சில் பச்சையமில்லா பாசிச வாதிகளின் பருவ ஆசைகளுக்கு பலிக்கடாக்களாகும் பாலகர்கள் பரீட்சை முடிவுகளும்தான். நமது கோரிக்கைகளுக்கு மறைக்கப்பட்ட திரைகள்) நடத்தப்பட்ட நாடகங்களின்

Page 15
எதிர்வினைகள் நம் தேசத்தின் துயரக்குன்றுகள். விரக்திச்சிகரத்தின் விளிம்பில் நிற்போர் ஆசிரியர்தான். சமத்துவத்தின் பெயரால் சமதர்ம ஆசனத்தில் சமதர்ம போதனையின்
முரண்பாடுகளுக்கு முடிவு, முற்றுப் புள்ளியின்றி தொடர்கிறது மௌனத்தோடு
அந்தரித்து மறைந்து போகிறது நம் நியாயமான கோரிக்கைகள். ஆசிரிய உளவியல் அல்லல்ப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது மனதிலும் களைப்பு மணிப்பையிலும் வெறுமை.
அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் மரக்கறி மிகவும் மலிவான விலையேற்றம் காஸ்
காற்றோடு கரையும் காசு கறண்பில் தண்ணிபில் தாராளமாய் வரும் வீட்டு வாடகை விரல் எண்ண நாள் நகரும் பால்மா பரம ரகசியமாய் நள்ளிரவில் உயரும் படி மட்டும் உயராது. பொருளுயரும் நூறு நூறாக படி உயரும் பத்துப் பத்தாக. படிப்புச் செலவு உடுப்புச் செலவு பஸ் செலவு நோய்ச் செலவு திறந்து வைத்த பெற்றோளாய் காற்றாய்ப் பறக்கும் ஆசிரியன் காசு. நம்பிரச்சினைகள் | பட்டுத் தெறித்த இடத்தில் சிறு அடையாளம் கூட இல்லை ஆனால், உள்ளே பெரிய பள்ளம் அகத்தில் அடித்துவிட்டு புறத்தில் காயங்களைத் தேடுகிறார்கள்.

தோழர்களே நம் சேவையின் மகத்துவத்தையும் தியாகத்தின் கனதியையும் அறியாதவர்களை நம் கண்கள் கண்டு கொண்டால் போதும் அதை இதயத்தில் இறக்கிவிடாதீர்கள் துயர்ப்பட்டுக் கொள்வீர்கள். கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளின்
ஞாபகங்கள் உங்கள் செவிப்புலனில் எதிரொலிக்கும் போதெல்லாம் அவற்றை உங்களை உயர்த்திக் கொள்ளும் படிநிலைகளாக்கி விடுங்கள் நாளைய சந்ததி உங்கள் கைகளில். இலைகளின் வழுவழுப்பும் பூக்களின் நறுமணமும் வேர்களின் வியர்வைகளை வெளிக்காட்டுவதில்லை வெற்றிதந்த வெண்பட்டுத்துணிகளில் இரத்தத் துளிகளைச் சிந்தாது ஆசிரியத்தின் வழி மனிதம் வளர்ப்போம்.
- நன்றி - - வணக்கம் -
அகவிழி - நவம்பர் 2012 / 13

Page 16
உலக .
கலாநிதி (
B.Ed.(Fi M.A., M
ஆசிரியர்கள் கல்விக்காகவும் விருத்திக்காகவும் ஆற்றிவரும் பணியை மெச்சும் நோக்கமாகவும் அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் உலக ரீதியான கொண்டாட்டமொன்றை ஐக்கிய நாடுகள்
கல்வி விஞ்ஞான பண்பாட்டு அமைப்பு சிபார்சு செய்தது. இதன் பயனாக 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடக்கம் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பெறத் தொடங்கியது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரை செய்யபெற்ற மற்றைய உலக தினங்களைப் போல உலக ஆசிரியர் தினம் ஒரே நாளில் அதாவது ஒக்டோபர் 5ஆம் நாள் எல்லா நாடுகளாலும் கொண்டாடப்படுவதில்லை. ஆசிரியர் தின வரலாறே இதற்குக் காரணமாகும்.
ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் சிந்தனை பல நாடுகளில் சென்ற நூற்றாண்டு வெவ்வேறு கால
147 அகவிழி - நவம்பர் 2012

ஆசிரியர் தினம்
காணாமலை கோணேசர் 1st Class Hons.) (Colombo) Sc., Ed.D (Columbia, USA)
கட்டங்களில் தோன்றியுள்ளது என அறியக்கூடியதாக இருக்கிறது. அதாவது ஒரு நாட்டின் அறிஞர் பிறந்த அல்லது இறந்த தினத்தையோ அல்லது அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்ச்சியின்
ஆரம்ப நாளோ ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் பெற்றுள்ளது. ஆசிரியர் தினம் 1915ஆம் செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் ஆஜன்ரீனாவில் கொண்டாடப்பெறுவதாக அறியமுடிகிறது. இது அந்த நாட்டு அறிஞரான டொமிங்கோ போஸ்ரினோ சர்மியின்ரோ (Doming Faustino Sarmiento) அவர்களின் இறந்த தினமாகும். இந்தியா செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடு கிறது. செப்டம்பர் மாதம் 5ஆம் நாள்தான் இந்தியாவின் முதலாவது துணை ஜனா திபதியாகவும் இரண்டாவது ஜனாதிபதி யாகவும் பணியாற்றிய கலாநிதி சர்வப் பள்ளி ராதா கிருஷ்ணனின் பிறந்த தின மாகும். ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழகங் களில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பேராசிரியராக பணியாற்றிய பேரறிஞர். இந்தியா 1962ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நாளில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவருகிறது.
ஆசிரியர் தினம் ஒக்டோபர் மாதம் 5ஆம் நாள் என ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரகடனப்படுத்தியதனால் ஆப்கனிஸ்தான், பல்கேரியா, எஸ்ரோனியா, ஜேர்மனி, லித்துயானியா, மொல்டோவா குடியரசு, நெதர்லாந்து, பாக்கிஸ்தான், இதே தினத்தில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகின்றன. ஒக்டோபர் மாதத்தில் பங்காளதேஷ் 4ஆம் நாளும், இலங்கை 6ஆம் நாளும், லாஒஸ் 7ஆம் நாளும், போலாந்து 14ஆம் நாளும் பிறேசில் 15ஆம் நாளும், சில்லி 16ஆம் நாளும் நியுசிலாந்து 29ஆம் நாளும் ஆமேனியாவும் பிலாரஸும் ஒக்டோபர் முதல் ஞாயிறும், அவுஸ்திரேலியா ஒக்டோபர் கடைசி வெள் ளிக் கிழமையும் ஆசிரியர் தினத்தை கொண்டாடுகின்றன.

Page 17
பன்னிரண்டு நாடுகள் ஆசிரியர் தினத்தை பெப்ரவரி 28ஆம் நாள் கொண்டாடுகின்றன. அல்ஜுறியா, எகிப்து ஜோடான், லிபியா, மொராக்கோ, ஒமான், சவுதி அரேபியா, ருனிஸியா, யுனைரெட் அரபு, எமறேற்ஸ், யெமன், கட்டார், ஆகிய நாடுகளே இவை. மொங் கோலியா பெப்ரவரி முதலாவது வார இறுதியில்
ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகிறது.
ஏனைய நாடுகள் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் தினங்களை மாதம் மாதமாக நோக்குவோம். ஜனவரி 16ஆம் நாள் தாய்லாந்தும் 29ஆம் நாள் ஸ்பெயினும். மார்ச் முதலாம் நாள் ஈராக்கும் 9ஆம் நாள் லெபனானும் 18ஆம் நாள் சிரியாவும் 28ஆம் நாள் சிலோவாக்கியாவும். ஏப்பிரல் 30ஆம் நாள் பிராக்கியும் மே 2ஆம் நாள் பூட்டானும் ஈரானும், முதலாவது செவ்வாய் ஐக்கிய அமெரிக்காவும் 6ஆம் நாள் ஜமேக்காவும் 15ஆம் நாள் கொலம்பியாவும் மெக்சி கோவும் தென் கொரியாவும், 16ஆம் நாள் மலேசியாவும்.
யூன் முதலாம் ஞாயிறு ஹங்கேரியும் 6ஆம் நாள் பொலியாவும் 22ஆம் நாள் எல்சவடோரும் கொண்டாடு கின்றன. எல்சவடோர் இத் தினத்தை தேசிய விடு முறையாகவும் பிரகடனப்படுத்தி ஆசிரியர் களுக்கு பெருமதிப்பளித்துள்ளது.
யூலை மாதம் வரும் பூரணையில் நேபாளம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகிறது.
செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் இந்தியாவிலும் 10ஆம் நாள் சீனாவிலும் 11ஆம் நாள் ஆஜன்ரினாவிலும் 23ஆம் நாள் புறுனாயிலும் 28ஆம் நாள் தாய்வானிலும் இம்மாத முதலாவது வெள்ளி சிங்கப்பூரிலும்

நவம்பர் 20ஆம் நாள் வியற்னாமிலும் 24ஆம் நாள் துருக்கியிலும் 25ஆம் நாள் இந்தோனேசியாவிலும்
டிசம்பர் மாதம் முதலாம்நாள் பனாமாவிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள பிலிப்பினோ-சீன பாட சாலைகளில் செப்டம்பர் 27ஆம் நாள் மாணவர்கள் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் சில நிகழ்ச்சி களை ஒழுங்கு செய்து ஆசிரியர்களை மகிழ்விப்பார்கள். அடுத்த நாளான 28ஆம் நாள் ஆசிரியர் தினம் பாடசாலை விடுமுறையாகும். செப்டம்பர் 28ஆம் நாள் சீன தத்துவஞானியின் பிறந்த நாள் ஆகையால் இது ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மே மாதத்து முதல் வாரம் ஆசிரியர்களைக் கனம் பண்ணும் வாரமாக அவ தானிக்கப்பெறுகிறது. இவ் வாரத்தில் மணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு மலர் பரிசு முதலிய வற்றைக் கொடுத்து அவர்களை மகிழ்விப்பார்கள். பெற்றோரும் பிள்ளைகளும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று ஆசிரியர்களை மகிழ்விப்பதும் உண்டு. இவ் வாரத்தில் வரும் செவ்வாய் தேசிய மட்டத்தில் ஆசிரியர் தினமாக்க கொண்டாடப்பெறுகிறது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவின் மாகாணங்களில் ஒன்றான மசசூசெற்ஸ் மாகாணத்தில் யூன் மாதத்தில் வரும் முதலாவது ஞாயிறு ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பெறுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மாகாணங்கள் (States) பல விடயங்களில் தனித்து இயங்கும் உரிமையுண்டு.
ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் எந்த நாட்டிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதாகத் தெரியவில்லை.
அகவிழி - நவம்பர் 2012 / 15

Page 18
இலங்கையில் சி
பாதுகாப்ப,
M.M. B.A., PG.D.E
இயல்பான சுதந்திரத்தோடு வாழவும், தான் இணைந்து வாழும் சமுதாயத்திற்கான கடமைகளை முழுமையாகச் செய்யவும் மனிதன் முற்படும் ைேவளைகளில் உரிமைகள் மறுக்கப்படும் போதோ அல்லது அளிக்கப்பட்டு வந்த உரிமைகள் தடை செய்யப்பட்டாலோ மனித சமுதாயம் பொறுத்துக் கொள்வதில்லை. இவ்வாறான நிலைமைகள் ஏற்படும்போது, தனிமனித உரிமைக்காவும், சமூகத்தின் உரிமைக்காவும் கேள்விகளும் போராட்டங்களும் தொடுக் கப்படுகின்றன. இவ்வாறான உரிமைகள் மனித உரிமை எனப்படும்.
சிறுவர்கள் மனிதப் பிறவிகள் என்ற வகையில் மனித உரிமைகள் அனைத்தும் சிறுவர்களுக்கும் உரித்தாகும். சிறுவர் உரிமைகளில் இருந்தே மனித உரிமைகள் தோற்றம் பெற்றுள்ளன. சிறுவர் உரிமைகள் என்றால் சிறுவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமான நிபந்தனைகளே சிறுவர் உரிமைகளாகும். பிரத்தியேகமான முறையில் சிறுவர்களுக்கேயுரியவை என்று சர்வதேசரீதியாக ஐக்கிய நாடுகள் தாபனத்தால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் சிறுவர் உரிமைகளாகும்.
உலகில் வாழ்கின்ற மக்களில் 1/3 பகுதியினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர் உலகளாவியரீதியில் பார்த்தால் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான
16/அகவிழி - நவம்பர் 2012

றுவர் கல்வி உரிமையைப் தில் கட்டாயக் கல்வி
ஹிர்பஹான், SLPS,
(Merit), D.C.Sc. (Merit) , M.Ed.
வன்முறைகள் உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்தவண்ணம் உள்ளது. சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்கள் பாலியல் வன்புணர்ச்சிகள் சிறுவர் தொழிலும் வேலைப்பழுவும் சிறுவர்களை ஆயுதப் போராட்டங்களில் இணைத்துக்கொள்ளுதல் கடத்துதல் மோசடிகள், உளரீதியான பாதிப்புக்காளாகுதல் எனப் பல்வேறுவடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலைமைகளில் இருந்து சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவே சிறுவர் உரிமை பிரகடனம் கொண்டுவரப்பட்டது.
- மனிதர்களின் வாழ்க்கைக்கு மிக அத்தியவசியமான ஒன்றாக கல்வி காணப்படுகின்றது. எனவே இக் கல்வியும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் உலகின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள அறிஞர்கள் காலத்துக்குக் காலம் பல சிந்தனைகளையும் , கருத்துக்களையும் கூறியுள்ளனர். இக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து உலக நாடுகள் இதற்கு முன்னுரிமை கொடுத்துவருகின்றன.
கிரேக்க தத்துவ ஞானியான பிளேட்டோ (கி.மு. 420 - 348) என்பவர் “உண்மை, நன்மை, அழகு இம் மூன்றினையும் உணர்த்தும் கல்வியே கல்வி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கக் கல்வி அறிஞரான ஜோன் டூயி (1859 - 1952) என்பவர்
- “பிள்ளைகளுக்குரிய சூழலையும் அங்கு வாழ் வதற்குதவும் அனுபவங்களையும் பெற்றுக் கொடுத்தல் கல்வியாகும்” என்றார் “அறிவுப் புரட்சியை ஏற்படுத்திய 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜீன் ஜாக்ஸ் ரூசோ (1712 - 1778 ) என்பவர் ” கல்வி இயற்கைக்கு ஏற்ப விருத்தி செய்யப்படவேண்டும் என்றார்.
மகாத்மா காந்தி “கல்வி என்பது உள்ளிருந்து வெளியே வருகின்றதேயன்றி பிள்ளையினுள்ளே செலுத்துவதன்று” எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
மேலுள்ள வரைவிலக்கணங்களை தொகுத்து நோக் கும்போது ஒருவன் தன்னையும் தான் வாழும் சூழலையும்

Page 19
அறிந்து கொள்ளத் துணை நிற்பது கல்வியாகும். தான் வாழும் சமூகத்தையும் அதன் பாரம்பரியத்தையும் நாகரீகத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து உணரவும், அவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் கல்வி பயன்படுகின்றது. சுருக்கமாகச் சொல்வதானால் சமுதாயம் காண விளை கின்ற சான்றோர்களை உருவாக்கி சிறந்த குடிமகனை நாட்டுக்கு அளிக்க உதவுவதே கல்வியாகும்.
சமூகம் இன்று விரைவாக மாறிக் கொண்டிருக்கின்றது. அம்மாற்றத்திற்கு ஈடுகொடுக்க ஒவ்வொரு மனிதனும் தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ளவேண்டிய வனாகவுள்ளான். இதற்கு கல்வியே உதவி செய்கின்றது. அதுமாத்திரமல்லாமல் மனித ஆற்றலை மேம்படுத்தவும் வலுவூட்டுவதும் கல்வியாகும். ஓவ்வொரு குடிமகனும் குறைந்த மட்ட கல்வி அறிவைப் பெறாத வரை அவனால் குடிசார், அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை அனுபவிக்க முடியாதவனாக போய்விடுகின்றான். இதனால் தான் கல்வி என்பது சிறுவர் சிறுமியரின் அடிப்படை உரிமையாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
உலகில் 774 மில்லியன் வளர்ந்தவர்கள் எழுத வாசிக்கத் முடியாதவர்களாக உள்ளனர். 75 மில்லியன் பிள்ளைகளுக்கு ஒருபோதும் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை எழுத வாசிக்கத் தெரியாததால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் சிக்குண்டு வாழ்க்கையினைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் பெண்கள் ஆவர்.
க' (2) இனது மன
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பிரகடனமான மனித உரிமை பிரகடனமானது மனித உரிமைகளின் உறுப்புரை 26 (1), (2) இல் கூறப்பட்டுள்ளவாறு ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமை, ஆரம்பக் கல்வியின் அவசியம் கல்வி மனிதனது ஆளுமை விருத்தியில் முழுமையாக வியாபித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சிறுவர் உரிமை சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரையும் சிறுவர்கள் என்றும் உறுப்புரை 28 சிறுவர்களின் கல்வி உரிமையும் வலியுறுத்துகின்றது. இலங்கையில் 5 முதல் 16 வயதுவரை கட்டாயக் கல்வி வழங்கப்பட்ட போதிலும் சிறுவர் கொலைச் சம்பவங்களும், சிறுவர்களைத் தொழிலுக்கமரத்தலும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இதற்குக்காரணம் வறுமையும், பொருளாதார நெருக்கடிகளுமாக சொல்லப்படுகின்றது.
வறுமை, பெற்றோர்களின் அறியாமை, பெற்றோர்களை இழந்திருத்தல் வேலைக்கமர்த்தல், பெற்றோர்களின் தொழிலுக்கு உதவவேண்டியிருத்தல் , குடும்பச் சூழ்நிலை காரணமாக ஏதாவது தொழிக்குப் போகவேண்டியிருத்தல், நோயுற்றிருத்தல் (உடல் உளரீதியாக), பிறப்பிலுள்ள குறைபாடு , வீட்டிற்கும் பாடசாலைக்கும் உள்ள தூரம்.

பிள்ளைகளுக்கு பாடசாலை மீது வெறுப்பு ஏற்படல், பெற்றோர்களுக்கு பாடசாலைகள் மீது நம்பிக்கை இல்லாதிருத்தல், சிலவேளை பாடங்களிலோ ஆசிரியர் களிலோ வெறுப்படைந்து பாடசாலையை விட்டு வெளி யேறல், ஒழுக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக பாடசாலையை விட்டு விலகல், பாலியல் குற்றவாளிகளாக இருப்பதனால் பாடசாலையிலிருந்து வெளியேறல், சமவயதுப் பிரிவினரிடையே உள்ள செல்வாக்கு காரணமாக கல்வி மீது வெறுப்படைதல் போன்ற காரணங்களினால் கிராமங்களிலும் நகரங்களிலும் பொரும்பாலான பிள்ளை கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களது கல்வியை பெற்றுக்கொள்ளும் உரிமை இழக்கப்படுகின்றது. இதனால் இவர்களை பாடசாலைக்கு செல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேன்டியது தாய், தகப்பன், அல்லது வயதுவந்தவர்கள் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டியது எங்கள் எல்லோரினதும் கடமையாகும்.
கட்டாயக் கல்வி
எல்லோருக்கும் கல்வி என்பது இன்று பரவலாகப் பேசப்படும் ஒருவிடயமாகும். யாவருக்கும் ஆரம்பக்கல்வி. யாவருக்கும் இடை நிலைக்கல்வி என்ற நிலைகளினூ டாக இக்குறிக்கோள்கள் அடையப்படுவதற்கு முயற்சிகள் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் எழுத்தறிவின்மையை முற்றாக இல்லாமல் செய்யும் நோக்கில் எல்லா மட்டங்களிலும் கல்வியைப் பெறு வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என நாட்டின் அரசியலமைப்பில் 27 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது.
உறுப்புரை 28 கல்வி உரிமை பற்றிக் கூறும்போது கல்வி பயிலும் உரிமை எல்லாப் பிள்ளைகளுக்கும் உண்டு. ஆரம்பக் கல்வியாவது கட்டாயமாகவும், இலவசமாகவும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவது அரசங்கத்தின் கடமையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுப்புரை 29 கல்வியின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் போது பிள்ளையின் ஆளுமை , திறமை, உடல் மற்றும் உள ஆற்றல்கள் ஆகியவற்றை முழுமையாக விருத்தி செய்வதே கல்வியின் நோக்கம். சுதந்திரமான சமுதாயத்தில் பொறுப்புடனும் அமைதியுடனும் வாழ்வதற்கு, அடிப்படை மனித உரிமைகள், தமது சொந்தக் கலாசார , தேசிய ஆசார சீலங்களை மட்டுமல்லாது பிறரின் விழுமியங் களையும் கனம் பண்ணுவதற்கு கல்வி சிறுவர்களை தயார்படுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டுகின்றது.
இதற்காகத்தான் அரசாங்கம் 5 முதல் 16 வயது வரை உள்ள சகல பிள்ளைகளுக்கும் கட்டாயமாகப் பாடசாலை செல்லவேண்டும் என்ற சட்டத்தை இயற்றி அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி தற்போது
அகவிழி - நவம்பர் 2012 / 17

Page 20
வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டம் 1998 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல் நடத்தப்படுகின்றது.
இதன்படி ஒவ்வொரு பிள்ளை களுக்கும் கல்விக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது சகல பெற்றோர் களினதும் முதியோர்களினதும் கடமை யாகும். இக் கடமையை உதாசீனம் செய்வோர் சட்டப்படி குற்றவாளி களாவர். 5 வயதைப் பூர்த்தி செய்த சகல பிள்ளைகளையும் பாடசாலைகளில் சேர்ப்பதற்காக இரண்டு வகையான கு ழு க க ள் நாடு பு, ர ா வு ம நிறுவப்பட்டுள்ளது.
கிராம சேவகர் மட்டத்தில் உள்ள பாடசாலை மட்டக் கட்டாயக் கல்விக் குழு
இதன் அங்கத்தவர்கள்
அப்பிரிவுக்குள் அடங்கும் பாடசாலை அதிபர்கள்
அப்பாடசாலை அபிவிருத்திச் சங்வத்தின் இரு உறுப்பினர்கள்
அப் பிரிவின் கிராம சேவகர் அப் பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர்
பிரதேச மட்டத்தில் உள்ள கட்டாயக் கல்விக் குழு இதன் அங்கத்தவர்கள்
உரிய கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர்
சிறுவர் நன்நடத்தை அதிகாரி
ஒரு பொலீஸ் பரிசோதகர் தரத்திற்கு கீழ்படாத ஒரு பொலீஸ் அதிகாரி பிரபலமான ஒரு சமூக சேவையாளர்
இக்குழுக்கள் பெப்ரவரி மாதத்தில் அக்குழு தாபிக்கப் பட்டுள்ள பிரிவில் வாழும் பாடசாலைக்குச் செல்லாதவர்கள், இடைவிலகியவர்கள் , கல்வியை தொடர்வதற்கு பொருத்த மான ஏற்பாட்டை செய்யாதவர்களுமான 5 வயதிற்கும் 16 வயதிற்கும் உட்பட்டவர்களின் பட்டியலைத் தயாரித்து அப்பிரிவுக்கென நியமிக்கப்பட்ட அலுவலகருக்கு சமர் பித்தல் வேண்டும். பட்டியலை தயரிப்பதற்கு சாத்தியமாய் அந்தப் பிரிவுக் கிராம அலுவலகர் பிள்ளைகளின் பெயர், பெற்றோர் விபரம் வதிவிடம் முகவரி போன்றவற்றை இக்குழுவிற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
18 / அகவிழி - நவம்பர் 2012

Dleaf
1 leaf
பிள்ளைகளுக்கு கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு என்ன செய்யலாம்
- 5 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லாத
பிள்ளைகளை முதலில் இனங்காணல்.
அவர்கள் பாடசாலை செல்லாதிருப்பதற்கான காரணங்களை கண்டறிதல். 5 - 16 வரை உள்ள பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் , பாதுகாவலர்களுக்கும், வளர்ந்தவர் களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குதல் கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்கு தேவையான பொருத்தமான ஆவணங்கள் எவை என்பது பற்றி அறிவுறுத்தல்கள் வழங்குவதும், அதற்கான உதவி களை வழங்குதலும். உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நபர்கள், அலுவலர்கள், அமைப்புக்கள், பற்றி அறிவுறுத்தல்கள் வழங்குதல்
பொருத்தமான கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல்.
இவ் வாறான பிள்ளைகளுக்கு கல்விக்கான சந்தர்ப்பங்களை எவ்வாறு ஏற்படுத்தலாம்.
அவர்களை அண்மையில் உள்ள பாடசாலையில் சேர்த்தல். முறைசாராக் கல்வி எழுத்தறிவு வகுப்பு என்பவற்றுக்கு அனுப்புதல் சமய நிலையங்களில் நடைபெறும் பாடநெறிகளுடன் இணைத்துவிடல்.

Page 21
பொருளாதாரக் கஷ்டங்கள் காரண மாக கல்விக்கான வாய்ப்பை இழக்கும் பிள்ளைகளுக்கு அதற்கான உதவிகளை வழங்குதல். அது மாத்திரமல்லாமல் அப்பிரதேசத்தில் உள்ள தனவந்தர்களின் உதவி களைப் பெற்று பிள்ளைகளின் பொருளாதரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை செய்தல்.
பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் தடையாக இருப்பவை யாக பின்வரும் விடயங்கள் இனங் காணப்பட்டுள்ளது
பிறப்புச் சான்றிதழ் இல்லாதிருத்தல். பாடசாலை சேரும் வயதைத் தாண்டி இருத்தல் வறுமையினால் தொழிலில் ஈடுபட்டிருத்தல்
அனாதரவாக இருத்தல்
பெற்றோர்களின் அறியாமை
வன்செயல்கள்
தொழிலுக்காக இடம் பெயர்ந்திருத்தல்.
ஆனால் இவ்வாறான காரணங்கள் எவையும் பிள்ளை களின் கல்விக்கான தடைகள் அல்ல கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாமற்போன பிள்ளைகளுக்கு அவ்வாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகப் பாடசாலைகளில் சேர்க்கப்படும் சட்ட திட்டங்கள் இலகு வாக்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமல்லாமல் எழுத்தறிவு வகுப்பு, அடிப்படை எழுத்தறிவு வகுப்பு, பற்றி பிடித்தல் வகுப்பு, மாலை நேர வகுப்புகள், வருமானம் தரும் கற்கை நெறிகளுக்கான வகுப்புக்கள், போன்றன பாட சாலை செல்லாத பிள்ளைகளுக்காகவே நடை முறைப்படுத்தப்படுகின்றன. உங்கள் பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளை இவ்வாறான வகுப்புக்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் நாட்டிற்கும் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பிரயோசனமளிக்கும் ஒரு குழுவை உருவாக்கியவர்களாக மாறுங்கள். அது மாத்திர மல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை ஒழுங்கமைத்துக் கொள்ள அடிப்படைத் தளத்தை இடுவதற்கு வழிகாட்டுவதன் மூலம் இந்த நாட்டின் பொறுப்பு மிக்க ஒரு பிரஜை என்ற வகையில் எமது கடமையை நாம் நிறைவேற்றியுள்ளோம் என்ற திருப்தியை நாம் பெற்றுக் கொள்வோம்.
வறிய பிள்ளைகள் தமது குடும்பத்தின் குறை பாடுகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பல்வேறு வழிகளில் பணம் தேடுகின்றனர். ஒருவர் வீதியில்

யாசிக்கும் அதே நேரம் மற்றொருவர் கடையில் வேலை செய்வார். இன்னும் பலர் வேலைத் தளங்களிலும் வீடுகளிலும் ஊழியர்களாக வேலை செய்வர். இவ்வாறான பல்வேறு முறைகளிலும் சிறுவர்களிடம் வேலை கொள்வ தோடு அவர்களுக்கு துன்பங்களும் துயரங்களும் இழைக்கப்படுகின்றன, அவர்களின் உழைப்பும் சுரண்டப் படுகின்றது. இதனால் இவர்கள் எதிர்காலத்தில் எமது சமூகத்துடன் வெறுப்புக்கொண்ட பாதிக்கப்பட்ட பிரிவினராக மாறிவிடுவதை நாம் நிதர்சனமாகப் பார்க்கின்றோம்.
ஒரு பிள்ளை தேவையான ஓய்வைப் பெற்றுக்கொள்ளும் உரிமை, சுதந்திரம் பாதுகாப்பு என்பவற்றிற்கான உரிமை, சுக சேவை வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை என்பற்றை வயது வந்தவர்களாகிய நாம் அபகரித்துக் கொள்வது எவ்வளவு அநீதியான செயல் என்பதை நாம் எல்லோரும் உள்ளத்தால் உணரவேண்டும். இதுபற்றி எமது சமூகத்தில் உள்ள பலர் அறியாதவர்களாக இருக்கலாம். அறிந்திருந்தபோதும் அதுபற்றி சிந்திக்க வேண்டிய தேவையும், நேரமும் இல்லாதவர்களாக பலர் உள்ளனர். எனவே, இதுசம்பந்தமாக அறிந்த நீங்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும். இதனால் அப்பாவிச் சிறுவர்களின் உரிமைகள் கிடைக்கப்பெறச் செய்வதற்கும் சுறுசுறுப்பான சமூகத்தில் பலன் தரக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு காலாக இருங்கள். இந்த மேன்மையான செயற்பாட்டை நேர்மையாகச் செய்து எமது சமூகத்திற்கும், நாட்டிற்கும் அளப்பரிய சேவை யாற்றுவோம்.
அகவிழி - நவம்பர் 2012 / 19

Page 22
கிராமியச் சமூகமும்
சிங்களத்தில - Mr:R
Lectu
Unive
தமிழில்
Mr: A
ஒவ்வொரு சமூகத்திலும் புதிய அங்கத்தவர்களை சமூகத் திற்கு பழக்குவதற்கு, அல்லது சமூகமயமாக்கலிற்கு (socialization) நிறுவனங்கள் பல நிறுவப்பட்டுள்ளன. அந்நிறுவனங்களில் பாடசாலையெனும் சமூக நிறுவனம் பிரபலமான முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக கருதப் படுகிறது. பாடசாலை சமூகம் என்பவற்றில் அவற்றிடையே காணப்படும் நெருங்கிய தொடர்பு காரணமாக பாட சாலைக்கு முதலிடம் கிடைக்கிறது. அத்தொடர்பை பின்வரும் பரிசீலனை மூலம் காண்பிக்க முடியும்
சமூகத்தொகுதியினுள்ளே காணப்படும் சிறு சமூகமாக பாடசாலையைக் கருத முடியும். அதன் நிலையான தன்மை அதன்மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கொள்கைகள், சம்பிரதாயங்களில் தங்கியுள்ளது. அவ்வாறு பாடசாலையில் தனித்துவம் பேணும் பாடசாலைச் சின்னம், சீருடை, பாடசாலைக் கொடி என்பன அவ் உப் பண்பாட்டை உறுதி செய்யும் பண்புகளாகும். பாடசாலையையும் சமூகத்தையும் ஒன்றிலிருந்தொன்று வேறுபடுத்த முடியாதது போன்று பாடசாலையும் பண்பாடும் ஒன்றுடனொன்று இணைந்துள்ளது. (குணவர்தன. 1996:76)
பாடசாலை சமூகம் மற்றும் பண்பாடு என்பவற்றிடையே காணப்படும் தொடர்பு இதன்மூலம் வெளிக்காட்டப்படுகிறது. அதே போன்று பாடசாலையென்பது முழு சமூகத்தினதும் தளவாடி (mirror) எனவும் குறிப்பிட முடியும். குறிப்பிட்ட தொரு சமூகத்தில் முன் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பாடசலைக் கல்வி மிக முக்கிய (தீர்மானிக்கப்பட்ட) காரணியாகும். அத்துடன் அச்சமூகத்தின் பாடசாலைத் தொகுதியை கூர்ந்து நோக்குவதன் மூலம் காணப்படும் சமூக பொருளாதார, அரசியல் நிலைமைகளை ஊகம் செய்துகொள்ள முடியுமாய் அமையும்.
அதிலிருந்து விளங்குவது பாடசாலையும் சமூகமும் ஒன்றிலொன்று இடைத்தொடர்புகளைப்பேணும் நிறுவனங் களிரண்டு என்பதாகும். குறிப்பிட்டதொரு சந்தர்ப்பத்தில் பிரதமர் வின்ஸ்ரன் சர்ச்சில் அவர்கள் கல்வியின்
முக்கியத்துவம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
207 அகவிழி - நவம்பர் 2012

ம் பாடசாலையும்
.S. Pattiyagodage rer, Dept. of Sociology ersity of Peradeniya.
1.A.Azees
எனது இனத்தின் ஆயுள் அவர்கள் பெறும் கல்வியில் தங்கியுள்ளது. (குமாரசிங்க- 1958) | இக்கூற்றின் மூலம் கல்வியென்பது சமூகத்திற்கு எந்தளவு முக்கியமான செயற்பாடென்பதை உணர்ந்து கொள்ள முடியும். மேலும் முக்கியமானதொரு மக்கள் கருத்து,
ஒரு பாடசாலை திறக்கப்படும்போது பல சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன.
பாடசாலைக் கல்வி மூலம் நற்பண்புடைய சமூக மொன்றை உருவாக்குவதற்கு பாரிய பங்களிப்பு வழங்கப் படுவது இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் டூகர் எனும் கல்வியியலாளரின் கருத்துப்படி,
எதிர் காலத்தில் நாட்டினது அடிப்படையான பொருளா தாரமாக அமைவது பணம், இயற்கை வளங்கள், உழைப்பு என்பனவையல்ல. அடிப்படைப் பொருளாதார வளம் அறிவாகும். (knowledge) (குமாரசிரி - 1999).
அனைத்து சமூகங்களினதும் எதிர்கால சுபீட்சத்திற்கான கட்டாயக்காரணி பாடசாலையும் பாடசாலைக்கல்வியுமென்பது தெளிவாகின்றது. அதேபோன்று அனைவருக்கும் கல்வி எனும் எண்ணக்கரு யுனெஸ்கோவினால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வெண்ணக்கருவினூடாக கல்வியின் முக்கியத்துவம் புலனாகிறது. அத்துடன் ஒவ்வொரு பிள்ளைக்கும் சாதி, மத, குல பேதமின்றி சம கல்வியைப் பெறும் அடிப்படை உரிமையுண்டு. அதன் மூலம் சமூகத் திற்கு கல்வியுடன் காணப்படும் தொடர்பு உறுதிப் படுத்தப்படுகிறது.
கல்வியென்பது எழுத்தறிவைப் பெறுவது மட்டுமன்றி அதன் மூலம் சமூகத்தின் நகர்வுத்திசையையும் பொதுச் சிந்தனையும் கூட கையாழும் திறனுடையது என்பது மற்றுமொரு முக்கிய விடயமாகும். ஒருவருக்கு சுதந்திர மாகவும், சுயாதீனமாகவும் சிந்திப்பதற்கு வரம் தருவது கல்வியாகும்.

Page 23
இவ்வளவு பெறுமதியான நிலை பாடசாலைக் கல்வித் திட்டத்தில் காணப்படினும் தனது சமூகத்தின் அனை வருக்கும் சமகல்வியை வழங் குவது முடியாமற் போயுள்ளது. அபிவிருத்தியடைந்த சமூகங்கள் தனது அங்கத்தவர்களுக்கு பெரும்பாலும் சமனான கல்வி வாய்ப்புக்களை வழங்குவதில் ஈடுபடுகின்றன. எனினும் வளர்ந்து வரும் சமூகங்களிற்கு சிறந்த முறையில் ஒரேயளவு வளங்களையுடைய பாடசாலைத்தொகுதி யொன்றை பேணி நடாத்துவது பாரிய பிரச்சினையாகும். அதேபோல் அந்நாடுகளில் வறுமையும் உயரளவில் தலைதூக்கியுள்ளது. அத்துடன் வருமான அசமநிலை பாரியளவில் காணப்படும் சமூகமாற்றம் மூன்றாம் உலகைக் குறிப்பிட முடியும். இதனால் இச்சமூகங்களில் பாடசாலைக் கல்வியில் பெருமளவில் நெருக்கடி நிலையை உண்டு பண்ணியுள்ளது.
இந்திய கிராமப்புறப் பாடசாலைகளின் நிலைமை.
இலங்கைக்கு அருகேயமைந்த இந்திய சமூகத்தின் கிராமப்புற பாடசாலைக்கல்வியிலும் மேற்கூறிய நெருக் கடி நிலைமைகளை கண்டுகொள்ள முடியும். இந்தியக் கிராமப்புற பாடசாலைகளினுள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி நடாத்தப்பட்ட ஆய்வுகளில் அவை தெரிய வந்துள்ளன.
இவற்றில் ஓர் ஆய்வு கர்நாடக மாநிலத்தில் கிராமப்புற பிள்ளைகளின் பாடசாலையை விட்டு விலகும் தன்மை பற்றி செய்யப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டில் ஆரம்ப நிலைக் கல்விக்கு 98% ஆனோர் பதிவு செய்திருப்பதுடன் அவற்றுள் 33% ஆனோர் மாத்திரமே தரம் நான்கு (4) வரை கல்வி பயின்றுள்ளனர். இவ்வாறு பெருமளவில் பாடசாலையை விட்டு விலகிச்செல்வது இந்தியக்கிராமப்புறச் சமூகத்தில் பாரிய பிரச்சினையாகும்.

கர்நாடக மாநிலத்தில் கிராமப்புற மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிச் செல்வதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் இருவகையென்பது அந்த கற்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
1) அகக்காரணிகள்
2) புறக்காரணிகள்
அகக்காரணிகளாக கற்பித்தல் தர அடிப்படை, ஆசிரியரின் குண இயல்புகள் , கட்டிடங்கள் விளையாட்டு மைதானம், நூலகம், பாடசாலையில் இடம்பெறும் விழாக்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
புறக்காரணிகளாக ,
பெற்றோரின் கல்வித்தகைமை.
பெற்றோரின் தொழிலும் வருமானமும்.
குலம் / குல வேறுபாடு.
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை. பெற்றோர் ஊக்கமளிக்குமளவு மற்றும் பாடசாலை செல்வதற்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் அளவு. பிள்ளை உழைப்பை விவசாய நடவடிக்கைகளில்
பெறும் தன்மை. என்பனவாகும்.
(Seetha Ramu. 1985.38)
கிராமப்புற பாடசாலைகளில் உரிய காலத்திற்கு முன் பாடசாலையை விட்டு விலகிச்சென்ற மாணவர்களில் ஒவ்வொரு ஐவருக்கும் நால்வரின் குடும்பப் பொருளா தாரம் வறுமைக்கோட்டின் கீழிருப்பது இவ் ஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றை விட கரும்பலகை இன்றிய பாடசாலைகள் 64% என இனங்காணப்பட்டுள்ளன. அதே போன்று இந்திய கிராமியப் பாடசாலைகள் பிரதான பாதையிலிருந்து பெருந்தொலைவில் அமைந்திருப்பதும் கண்டறியப்பட்டது. இவ்வாறு பாடசாலையை விட்டு விலகுவதன் மூலம் பாடசாலைகளில் மாணவர்கள்
எண்ணிக்கை வெகுவாகக் குறைவடையும். அத்துடன் பாடசாலை மீதான கவனமும் குறைவடையும். இவை மேலும் விரிவடைந்து பாடசாலையை மூடும் நிலைக்கு இட்டுச்செல்லும்.
இங்கு குறிப்பிடப் பட்ட பாடசாலைக் கல்வி நெருக்கடிகள் இலங்கைவாழ் சமூகத்திலும் காணப் படுகின்றது. அதற்கு இலங்கவைாழ் சமூத்தில் காணப்படும் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலைமை
அகவிழி - நவம்பர் 2012 / 21

Page 24
மற்றும் பண்பாட்டுச் சூழல் என்பன செல்வாக்குச் செலுத்தியுள்ளமை புரிகிறது. விசேடமாக இலங்கைவாழ் சமூகத்தில் நகர்ப்புற, கிராமப்புற ரீதியாக பாடசாலைக் கல்வியில் வேறுபாடுகளைக் காண முடிகிறது. அவை காலனித்துவ ஆட்சியிலிருந்து தொடர்ந்து வரும் நிலைமையாகும். இதனால் நகர்ப்புற பாடசாலைகளை விட கிராமியப் பாடசாலைகளுக்கு அதிக அழுத்தம் ஏற் பட்டுள்ளது. அதன் மூலம் கிராமியப் பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைக்குரிய நிலைமைகளேற்படுவது காணக்கிடைக்கின்றது. அது கடந்த பல தசாப்தங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது.
இலங்கைச் சமூகத்தின் கிராமியப்பிரதேசங்களில் அமைந்திருக்கும் கிராமியப் பாடசாலைகளைப் பற்றி இதுவரையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ் ஆய்வினூடாக கிராமியப்பாடசாலை மற்றும் குடி யிருப்போர் தொடர்பாக பல்வேறு கோணங்களினூடு ஆய்ந்தளிக்கப்பட்டுள்ளமை தென்படுகிறது. இவற்றுள் ஓர் ஆய்வில் இலங்கையின் கிராமியப்பாடசாலைகளுக்கு மானிட, பௌதீக வளங்கள் சமநிலைகள் காணப்படக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்துப் பாடசாலைகளிலும் தேவையான வளங்கள் குறைந்த மட்டத்திலேனும் காணப்படுதல் வேண்டுமெனவும் வலி யுறுத்தப்பட்டது. இவ் ஆய்வின் மூலம் இருக்க வேண்டிய மனித, பௌதீக வளங்கள் இவ்வாறு குறிப்படப்படுகிறது.
1. மனித வளம் - Human Resource
கற்பித்தல் தொழிற்பாட்டில் முன்னிலை வகிப்பவர்கள் ஆசிரியர்களும் அதிபர்களுமாவர். பாடசாலையின் சிறப்பான தொழிற்பாட்டை உறுதிப் படுத்துவதில் அவசியமான ஏனைய ஊழியர்கள். பாடசாலைத்தொகுதியினுள் கற்றல் - கற்பித்தல் செயற்பாடு எதிர்பார்க்கை இலக்கை எட்டப்படு கின்றதோ, திருப்திகரமான, மகிழ்ச்சிபூர்வமான முறையில் இடம்பெறுகின்றதோ என்பதை ஆராய் வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கண்காணிப்பு மற்றும் பரீட்சை அதிகாரிகள்.
2. பௌதீக வளங்கள் - தற்போது தொழிற்பாட்டிலிருக்கும் 10,000 அளவான
பாடசாலைத் தொகுதி (பாடசாலை வலையமைப்பு)
பாடசாலைகளுக்கு தேவையான
வகுப்பறை, மரத்தளபாடங்கள், ஆய்வுகூடம், விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள், நூலகமும் நூ லக வசதிகளும், ஆசிரியர் விடுதிகள், விளையாட்டு
227 அகவிழி - நவம்பர் 2012

கா
மைதானம், சுகாதார வசதிகள் (சிறுநீர் கழிப்பறை, மலக்கழிப்பறை, நீர் வசதிகள்) மற்றும் சித்திரம், நடனம், சங்கீதம், விவசாயம், உலோக வேலை என்பவற்றிக்கு அவசியமான கட்டிடங்களும் உபகரணங்களும். (Kularathna &kodithuwkku 1991) இந்த மனித, பௌதீக வளங்கள் இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளிலும் சமஅளவில் காணப்படுகின்றதா என்பது பிரச்சினைக்குரியது. விசேடமாக கிராமிய ஆரம்பநிலைப் பாடசாலைகளில் இவ்வளங்களில் பெரும்பாலானவற்றை காணக்கிடைப் பதில்லை. 1990 ஆம் ஆண்டில் மொத்த அரச பாடசாலை களில் (9864) 4399 பாடசாலைகள் மூன்றாம் நிலை ஆரம்பநிலை பாடசாலைகளாகும். (பாடசாலை மதிப்பீட்டு அறிக்கை 1990) இங்கு விசேட அம்சம் அப்பாடசாலைகளில் பெருமளவானவை கிராமப்புற விசேட கஷ்டப்பிரதேசங்களில் அமைந்துள்ளன.
1960ம் தசாப்தத்தில் இலங்கைப் பாடசாலைத் தொகுதியினுள் புதிய பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டன. அதனூடாக கிராமங்கள் தோறும் பாடசாலைகள் நிறுவும் ஆற்றல் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு கிடைக்கப் பெற்றது. இதனால் பலர் ஆசிரியத்தொழிலைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதாரமாக தனது பிரதேசங்களில் தற்காலிக பாடசாலைகள் உருவாக்கிக் கொண்டமையாகும்.
தொழில் வாய்ப்புக்களைப் பெறும் தந்திரோபாயமாக நாடு பூராகவும் பல பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு கிடைக்கும் மனித, பௌதீக வளங்கள் வரையறைக்குட்பட்டனவாக இருந்தன. அதே போன்று அப்பாடசாலைகள் உரிய முறையில் கண்காணிக்கப் படவில்லை. இவற்றிலிருந்து புலனாவது தரநிர்ணயங்களின்றி பாடசாலைகள் எண்ணிக்கையில் அதிகரித்தன.
இக்காரணங்களால் கிராமியப்பாடசாலைகள் மனித, பௌதீக வளங்கள் குன்றிய நிலையிலமைந்த சமூக நிறுவனமாக ஆக்கப்பட்டுள்ளது.
கிராமிய, நகர, தோட்டப் பிரிவுகளில் அமைந்துள்ள சிறுபாடசாலைகளில் காணப்படும் வளப்பற்றாக்குறை காரணமாக அப்பாடசாலைகள் குடும்ப அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் ஒன்றி ணைவதன் மூலம் தனது வளங்களைப் பொதுவாக பிரயோசனப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான. பயன்மிகு சேவையொன்றை வழங்க முடியுமென எதிர் பார்க்கப்படுகின்றது. எனினும் பாடசாலை குடும்ப ஒழுங்கமைப்பின் மூலம் இக்குறிக்கோள் நிறைவேற்றப் படவில்லை என்பது தென்படுகின்றது. (சூரியகுமார் - 1982)
கிராமப்புற, கஷ்டப்பிரதேசங்களில் அமைந்துள்ள சிறுபாடசாலைகள் பற்றி நடாத்தப்பட்ட ஆய்வில் கிராமியச்சமூகத்திற்கும் பாடசாலைக்கும் இடையேயுள்ள

Page 25
தொடர்பு இனங்காணப்பட்டுள்ளது. விசேடமாக கிராமியச் சமூகம் மற்றும் பாடசாலைக்கிடையேயான தொடர்பின் தொலைவு அதன்மூலம் உணர்த்தப்படுகிறது. 1. பெரும்பாலான சிறுபாடசாலை ஆசிரியர்கள் கிராமவாசி மக்களைப் பற்றிய தகவல்களை அறியாத அவர்களை அறிவு பூர்வமாக அணுகும் பயிற்சியற்ற, ஆயத்த மடையாத ஒரு தொகுதியினர் என்பது வெளியிடப் பட்டிருத்தல். அவர்கள் சிறு கிராமியப்பாடசாலைகள் மற்றும் அக்குடிமக்களை அபிவிருத்தி செய்யும் குறிக்கோளைக் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் அவர்கள் தூரப்பிரதேசங்களிலிருந்து வருகைதந்து அசௌகரியங்களுக்கு மத்தியில் சேவை செய்திருப்பதும் புலனாகிறது.
2. கிராமத்தையும் பாடசாலையையும் தொடர்புபடுத்தும் ஆலோசனை வழங்கும் அல்லது தொடர்பாடல் வழங்கும் முறைகளில் குறைபாடுகள். அதனால் கிராமவாசிகளிடையே உயிர்ப்பான தொடர்பின்றி யிருப்பதால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்ப
வற்றிட்கு சமூகமளிக்காதிருத்தல். 3. பெற்றோரின் வறுமை காரணமாக பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், சீருடை மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வசதிவாய்ப்புகளற்ற நிலை காணப்படல். 4. பாடசாலை மாணவர் கள் மந் தபோசனையில் (Malnutrition) பாதிப்படைந்த அதேவேளை தாய்மார் சகோதரப்பிரச்சினைகளால் கஷ்டப்பட்ட நிலை வெளிப்படுத்தப்படுதல். 5. பெற்றோர் சிறார்கல்வி, கிராம மக்களின் எதிர்காலம்
பற்றிக் கொண்டிருக்கும் ஆர்வம் குறைவடைதல். 6. பசி, உடற்பலவீனம் காரணமாக பிள்ளைகள் பாட சாலைச் செயற்பாடுகளில் சிறந்த ஆர்வம் கொண்டி ராமை. பிள்ளைகளின் பாடசாலை வரவு பாதிப்படைதல், பாடசாலையை விட்டு விலகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், ஒரே வகுப்பில் திரும்பத் திரும்ப கற்க (சித்தியடையாமல் ) ஏற்படல் மற்றும் மீண்டும் மீண்டும் பாடசாலைக்கு வருதல் விஷேட பிரச்சினையாகக் கருதப்படல். 7. பிள்ளைகளில் பலருக்கு பிறப்புச்சான்றிதழ்கள் இன்மை
யால் பாடசாலைகளில் அனுமதி வழங்கப்படாமை. 8. சிறுபாடசாலை ஆசிரியர்களைத் தாக்கும் பிரதான
பிரச்சினைகளாக,
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு கற்பிக்கவேண்டியேற்படல்.

பல்வேறு பரிந்துரைகளுக்கேற்ப ஒவ்வொரு வகுப் பிற்கும் கற்பிக்க வேண்டியேற்படல்.
கல்வித்தகைமையைக் கொண்டிராத பெற்றோரின்
பிள்ளைகளுக்கு கற்கும் வசதிகளின்றி காணப்படல். என்பன விளங்குகின்றன.
9. பல பாடசாலைகள் தனியாக அமைந்திருப்பதால்
நலவியல் (Health) விவசாயம் (Agri) மற்றும் வேறு துறைகளுக்கான சேவைகளும் இப்பாடசாலைகளிலிருந்து விலகிக் காணப்படல்.
10. இப்பாடசாலைகளுக்குரிய இளம்பருவத்தினரில் பெரும் பாலானோர் 4-5ம் தரம் வரையே கல்வி கற்றிருப்பது
தெரியவருகின்றது. 11.5-14 வயதுடைய பிள்ளைகள் பாடசாலை செல்ல விருப்பத்துடன் காணப்படினும் பெற்றோரினால் வீட்டு வேலை, விவசாய நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப் படுவதால் பாடசாலை செல்வதிலிருந்து விலகிக் கொள்ளுதல். 12. சிறுபாடசாலைகளை சுற்றி வாழும் மக்கள், தாய்மார், தகப்பன்மார், பாட்டன். பாட்டி மற்றும் வயதில் கூடிய முதியோர் கல்வியறிவில் பூரணமின்மையால், அவர்கள் அன்றாட நடவடிக்கைகளுக்குப் போதிய கல்வியறிவு இருந்தால் போதுமென எதிர்பார்த்தல்.
(சிறுபாடசாலைகள் மதிப்பீட்டு அறிக்கை 1976:5 - 10)
பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படாமை இவற்றிலிருந்து புலனாகிறது. எனினும் இவ்வாய்வு நடாத்தப்பட்டு மூன்று தசாப்தங்களாகின்றன. அதனால் தரப்பட்ட விடயங்கள் அதே அமைப்பில் அதே அளவில் காணப்படுமா? என்பது சந்தேகமாகக் காணப்படினும் அக்கருத்துக்களின் முக்கியத்துவம் கருதி
தரப்பட்டுள்ளன.
இலங்கையின் கிரராமியப்பாடசாலைகளில் பெரும் பாலானவை உள்ளடங்கும் இரண்டாம் நிலைப்பாடசாலை களின் மாணவ-மாணவிகளின் சமூக, பொருளாதார நிலைகளைப்பற்றி நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் மாணவர் களின் பெற்றோரில் 96% ஆனோர் க.பொ.த.(ச/த) வகுப்பிற்கு கீழ் கல்வித்தகைமையை உடையவர்களென்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டாம் நிலை கிராமியப்பாடசாலைக்குரிய பாடசாலை மாணவர்களது 97% ஆனோர் சாதாரண தரத்தை விட குறைவான கல்வி மட்டத்தைக் கொண்டுள்ளனர்.அத்துடன் இப்பாடசாலை களுக்கு வரும் மாணவர்களில் 91% ஆனோர் மூன்று பிள்ளைகளுக்கு அதிகமான பிள்ளைகளையுடைய குடும்பங்களிலிருந்து வருகின்றனர்.இப்படசாலைகளுக்கு புதிய அனுமதி பெறுவோர் பெரும்பாலும், கல்வித்தரமுடைய
அகவிழி - நவம்பர் 2012 / 23

Page 26
அதனால் உடலுழைப்பை நம்பி வாழும் பிள்ளைகள் என்பதும் அடையாளங்காணப்பட்டுள்ளது. நகர்ப்புறப் பாடசாலைகளில் போட்டிப்பரீட்சை மூலம் திறமையான ஆர்வமுடைய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சமூக, பொருளாதார ரீதியில் பின்னடைவான பின்னணியை யுடைய பிள்ளைகள் இப் பாடசாலைகளில் எஞ்சுகின்றனர். பாடசாலையை அண்மித்த சூழலில் வசிக்கும் இவர்கள் போட்டியின்றி பாடசாலையில் சேர்ந்து கொள்வர். சமூகத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மாண வருக்கு சேவையளிக்கும் இப் பாடசாலைகளின் கல்வி யடைவுகளும் பின்னடைவானவை யென்பதையும் குறிப்பிட வேண்டும்.
(Rupasingha - 1994) மேலும் கிராமிய பாடசாலை மாணவர்கள் பாட சாலையை விட்டு விலகுவது பற்றி மற்றுமொரு ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. இது தம்புள்ள (Dambulla) கிழக்கு கல்வி வலயத்தில் செய்யப்பட்டுள்ளது. இவ் ஆய்விலிருந்து உரிய காலத்திற்கு முன் பாடசாலையை விட்டு விலகுவதால் காணக்கிடைக்கும் இயல்புகள் சில இங்கு தரப்படுகின்றன. 1. பாடசாலையை விட்டு விலகுபவர்களில் 40% - 60%
இடைப்பட்ட பிரிவினர் 1 - 3 வரையான வகுப்பு களிலிருந்து விலகிச் செல்கின்றனர். -
பாடசபம்
அவை நகரப்பாடசாலைகளை விட கிராமியப் பாடசாலைகளில் அதிகம்.
3.
4.
வகுப்பிற்கு உரிய வயதை விட கூடிய வயதுடைய வர்களே அதிகமாக விலகிச் செல்கின்றனர். பொருந்தாத ஆசிரியர் குழாம் அல்லது போதியளவு ஆசிரியர்களைக் கொண்டிராத பாடசாலைகளில் பாடசாலையை விட்டு விலகிச் செல்வோர் அதிகம்.
ஒரே வகுப்பில் பலமுறை சித்தியடையாமலிருக்கும்போது சித்தியெய்தாமை அதிகரிக்குமளவிற்கு பாடசாலையை விட்டு விலகிச் செல்வதும் அதிகம். அளவில் சிறிதாயுள்ள பாடசாலைகளில் விலகிச் செல்லல் அதிகமாக இடம்பெறுகிறது.
(Madagedara - 1974)
6.
Madagedara தனது ஆய்வின் மூலம் பிள்ளைகள் பாடசாலையை விட்டு விலகுவதற்கான காரணங்கள்
ஆறு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
1. பொருளாதாரக் காரணிகள்.
புத்தகங்கள், சீருடை பெற்றுக் கொள்வதில் கஷ்டங் கள் நிலவுதல்.
24/ அகவிழி - நவம்பர் 2012

- தொழில்களுக்கு உதவி பெறல்.
கற்று அரச தொழில்களைப் பெறுவதிலுள்ள கடின நிலை. என்பன காணப்படுகின்றன.
2. சமூகக் காரணிகள்.
பிள்ளை வளர்த்தல் மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தல்.
வேறிடங்களில் வேலைக்கமர்த்துதல். பூப்பெய்துதல். பிள்ளைகளின் ஆர்வமின்றிய நிலை.
மதகுருவாக்குதல். (சமயக் கல்விக்காகவும், சமயக் காரணங்களாலும் நிறுத்துதல்). பெற்றோர் பிரிந்து வாழ்தல் அல்லது மரணித்தல் என்பனவாகும்.
3. புவியியல் காரணிகள்.
உயர் வகுப்புகளையுடைய பாடசாலைகள் அண்மை யில் காணப்படாமை.
போக்குவரத்து பிரச்சினைகள்.
4.
கல்வியியல் காரணிகள்.
- டி
பிள்ளையின் பின்னடைவான கற்றல்.
வகுப்பில் சித்தியடையத் தவறுதல்.
பாடசாலையில் சீரற்ற கற்பித்தல் இடம்பெறல் என்பனவாகும்.
5. உடலியல் காரணிகள்.
பிள்ளை அடிக்கடி நோய்வாய்ப்படல்.
குடும்ப அங்கத்தவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படல். என்பனவாகும்.
6. மனப்பாங்கு.
காணப்படும் கல்விமுறைகள் திருப்தியளிக்காமையும் பெண் பிள்ளைகளுக்கு அதிகளவு கற்றல் அவசிய மற்றது எனும் காரணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாய்வில் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிச் செல்வதற்கான காரணிகள் ஆராயப்பட்டிருப்பினும் பாடசாலையை விட்டு விலகுவதால் ஏற்படும் பாட சாலையைத் தொடர்ந்து நடாத்துவதில் ஏற்படும் நெருக் கடிகள் ஆராயப்படாமையும் புலப்படுகிறது.

Page 27
கிராமியச் சமூகத்திலும் பெற் றோர் தனது பிள் ளைகளை கல்வி கற்க உற்சாகமூட்டுவது தென்படுகிறது. அது எவ்வாறிருப்பினும் கிராமியப் பெற்றோரின் பொருளாதார நெருக்கடி நிலை அவர்களின் பிள்ளைகளின் கல்வி இழப்பிற்கு காரணமாகியுள்ளது. அத்துடன் கிராமியப் பெற்றோர் தனது பிள்ளைகளின் கல்வியில் கவனமெடுக்காமையும் முக்கிய குறைபாடாகும். அது நாவுலை (Naule) கிராமத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்றிலிருந்து தெளிவாகியுள்ளது.
(Jayasuriya - 1974)
இவற்றை விட மொனராகலை மாவட்டத்தில் கிராமியப் பாடசாலைகளில் காணப்படும் சீரற்ற நிலை பற்றி செய்யப்பட்ட ஆய்வில் அப்பாடசாலைகளில் கல்வி பலவீனமடைவதற்கான காரணங்கள் பல எடுத் துரைக்கப்பட்டுள்ளன.
திறமையான ஆசிரியர்களைப் பெறுவதும் அவர்களைப் பாடசாலையில் தங்க வைப்பதும் கடினமாயிருத்தல். தேவையான வசதிகளின்மை.
தற்போதைய கல்வி முறை கிராமியச் சமூகத்திற்கு பொருந்தாமை. குடும்பக் கட்டமைப்பினால் கல்வி பயிலும் அங்கத்தவர்களுக்கு கிடைக்கும் உதவி ஒத்தாசைகள் தாழ்நிலையில் காணப்படல்.
(Baker - 1988)
இவ்வாறான பிரதிகூலமான நிலைமைகளுடன் வறுமை, சம்பிரதாயபூர்வ அல்லது மறைநிலை மனப்பாங்கு, கல்வித்திட்டத்தின் பலவீனங்கள் என்பன ஒன்றிணைவதால் கிராமியப் பாடசாலைகளுக்கு தீங்கேற்படும் வகையில் தொழிற்படுகிறது.
1986இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிற்கமைய இலங்கையில் காணப்பட்ட பாடசாலைகள் 10,000இல் 22.3% மிகவும் தாழ்நிலையில் காணப்பட்ட சிறு பாடசாலைகள் என குறிப்பிடப்படுகின்றது.அவற்றுள் 13.4% மிகவும் கொடூரமான வறுமைக் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களைக் கொண்டிருந்ததுடன் ஆசிரியர்களும்
ஓரிருவர்களே காணப்பட்டனர்.
(Jayaweera - 1989) இவற்றை விட சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக வசதியற்ற மாணவர்களை அடையாளங்காணும்போது கிராமிய மாணவர்களும் வசதியற்ற மாணவர் குழுவில் அடங்குகின்றனர். மானிடத் தேவைகளை முழமையாக நிறைவேற்ற முடியாத நிலை வசதியற்ற நிலை என மாரியோ. டீ. பென்டனி குறிப்பிடுகிறார். அவரின் கூற்றிற் கமைய "கல்வி பெறா கிராமிய விவசாயச் சமூகமும்

வசதியற்றோராக கருத முடியும். அவர்கள் அண்மிக்க முடியாத தொலைப்பிரதேசங்களில் வசிப்பதுடன் தன்னுடன் தொடபின்றிய கல்வியையும் பெறும் ஜனவர்க்கத்தினராவர்” (Jayawardane-1996) வசதியற்ற சனசமூகங்களின் பிரதான பிரச்சினை வறுமையாகும். அதேபோன்று பிள்ளைகளின் கல்வியின்பால் கவனம் செலுத்துமளவு பொருளாதார வலிமை அவர்களிடமில்லை.இவ் ஆய்வில் பொதுவாக வசதிகளற்ற கிராமிய, சிறுபான்மை, நகர்ப்புற முடுக்கு வாசிகள் ஆகிய பிரிவினர்களின் கல்வி மட்டம் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வசதிவாயப்புகள் குறைந்த பிரதேசங்களில் பல வகுப்புகளையுடைய பாடசாலைகளை நிறுவுவது காணக் கிடைப்பதுடன் இலங்கையில் 80% கிராமிய சனத்தொகை யாயிருப்பதால் கிராமங்கள் தோறும் பாடசாலைகள் நிறுவப்படுவதை ஊகம் செய்ய முடியும். இலங்கையில் பல வகுப்புகளையுடைய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளின் பண்புகள் சிலவற்றை அடையாளங் காணமுடியும்.
1. கிராமப்புற, வேறாகிய பிரதேசங்களில் வாழ்தல். 2. பொருளாதாரக் கஷ்டங்களும் வறுமையும். 3. நோய்களும் மந்த போசனையும். 4. வீட்டில் செய்யவேண்டிய பொறுப்புக்கள்.
5. பெற்றோரின் துணை கல்விக்கு கிடைக்காமை. 6. பால் வேறுபாடுகள் காணப்படல்.
7. கருத்து, மனப்பாங்கு என்பவற்றில் நெகிழ்வற்ற நிலையும் மூட நம்பிக்கைகளும்.
இப்பிள்ளைகள் ஒரே சமூகநிலையில் அங்கம் வகிப்பதனால் பாடசாலையினுள் போக்கு அல்லது நடத்தை மாற்றம் இடம்பெறுவது மிகக் குறைந்தளவிலாகும். (Jayawardane - 1995). இவ்வாய்வில் கிராமியச் சமூக மாணவர்கள் வசதியற்ற ஒரு பிரிவினராக அடையாளங் காணப்பட்டிருப்பதுடன் கிராமியப் பாடசாலைக் கல்வியில் குடும்ப நிறுவனத்தினால் கிடைக்காது போகும் உதவிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.)
அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாடசாலைக்கல்வியைப் பெறுவதற்கு சம உரிமை காணப்படுவதாக அடிப்படை உரிமைகள் சாசனத்தில் 26வது சரத்தின் கீழ் அனுமதி யளிக்கப்பட்டுள்ளது. எனினும் நகர-கிராம அசமநிலையில் கல்விச் சமவாய்ப்புகள் நகரப்பிரதேசங்களிற்கு சார் பாக கிராமப்பிரதேசங்களிற்குக் கிடைப்பதில்லை. கிராமியச்சிறாரின் பாடசாலைக்கல்விக்கு சம அந்தஸ்து கிடைக்காத விடயங்கள் சிலதுண்டு.
அகவிழி - நவம்பர் 2012 / 25

Page 28
1. கிராமியப்பண்பு.
2.
நகரிலிருந்து தொலைவிலிருத்தல்.
4.
3. போக்குவரத்து வசதிகளின்மை.
மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைமை.
5.
மக்களால் இலகுவில் சென்றடைய முடியாத வசிப் பிடங்கள்.
6. -
சமூகப் பிரிவுகள்.
7.
வளங்கள் சரியான முறையில் பகிரப்படாமை.
ஆசிரியர் பற்றாக்குறை. 9. பயிற்றப்படாத ஆசிரியர்கள் உபயோகிக்கப்படல்.
10. கல்வி முகாமைத்துவ நுட்பங்கள் பயன்பாடின்மை.
8. -
_யாக
'கல்வியில் சம அந்தஸ்து வழங்கல்' எனும் ஆக்கத்தின் மூலம் ஜயவர்தனா இக்கருத்துக்களை முன்வைக்கிறார். இதன்மூலம் எடுத்துரைக்கப்படுவது கிராமியச் சமூகத்தில் காணப்படும் புவியியல், சமூக, பொருளாதார நிலைமைகள் அச்சமூகத்தில் பாடசாலைக் கல்வியை சரியான முறையில் வழங்குவதற்கு தடையாக அமைகிறது என்பதாகும்.
இத்தகவல்கள் Economic Review. 1978 இல் பிரசுர மாகிய "The Rural School and Development ” எனும் கட்டுரையிலிருந்து பெறப்பட்டது. கிராமியப் பாடசாலைகள் மூலம் முழுச் சமூகத்தற்கும் வழங்கப்படும் பங்களிப்பு கவனத்திலெடுக்கப்படவில்லையென இவ் ஆக்கம் குற்றம் காண்கிறது. அதே போன்று திட்டமிடுவோர், ஆசிரியர்கள், நிர்வாகிகள் (Administrators) ஆகியோர் தம்மால் நிறைவேற்றப்படவேண்டிய பணிகளை சரிவர நிறைவேற்றுவதில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றது. (கண்காணிப்பு குறைவாகையால் தனிப்பட்ட விடயங்கள் முன்னுரிமை பெற்றிருத்தல்) இலங்கைவாழ் சமூகத்தின் கிராமியப் பாடசாலைகள் வீழ்ச்சியடைவதற்கு சமூக சமத்துவமின்மை, வறுமை, முயற்சியின்மை என்பன காரணமாய் அமைவதாகக் குறிப்பிடப்படுகிறது. இக் காரணிகள் கிராமியப் பாடசாலைகள் மூடப்படுவதற்கும் அடித்தளாய் விளங்குகின்றன. இவ் ஆய்வு கிராமியப் பாடசாலைக்கும் கிராமியச் சமூகத்திற்கும் காணப்படும் மறைநிலை (Negative) தொடர்பு, பிள்ளைகள் பாட சாலைக்(கல்வி)யை விட்டு விலகிச் செல்லல், கிராமங்களை நோக்கிய வளப்பகிர்வு முறையின்றிய நிலை காணப்படல் என்பனவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.எனினும் கடந்த இரு தசாப்த காலத்தினுள் இலங்கைச் சமூகத்தில் ஏற்பட்ட கிராமியப் பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பாக நடாத்தப்பட்ட ஆய்வுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை.
26/அகவிழி - நவம்பர் 2012

லங்காதீப செய்தித்தாளில் பிரசுரமாகிய கிராமியப் பாடசாலைகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்தல் எனும் ஆக்கத்தில் கிராமியப் பாடசாலைகள் மூடப்படுவதற்கான காரணங்களாக பின்வருவன தரப்பட்டுள்ளன.
கிராமியப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டங்கள் எதுவும் கல்வி அமைச்சில் காணப்படாமை.
கல்வி முகாமைத்துவ அதிகாரிகள், கல்வி அமைச்சு, மாகாணக்கல்வித் திணைக்களங்கள் என்பவற்றிடையே கருத்து வேறுபாடு நிலவுதல். கிராமியப் பாடசாலை மற்றும் சிறு பாடசாலைகளில் போதிய தகைமை கொண்டிராத அதிபர், ஆசிரியர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் நிறைந்திருத்தல். கிராமியப் பாடசாலைகளுக்கு வளங்கள் (மனித, பௌதீக) பகிரப்படும்போது முறைகேடுகள் இடம் பெறல்.
(லங்காதீப - 2003 பெப்ரவாரி 23
இங்கு கிராமியப் படசாலைகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக எடுக்கவேண்டிய செயற்பாடுகளுக்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிலும் விஷே டமாகக் கூறப்பட்டிருப்பது பாடசாலைகளை மீள கட்டமைக்கும் (Restructuring) எனும் விடயம் ஆரம்பிக்கப் படல் வேண்டும் என்பதாகும். அதன் மூலம் பிரபல பாடசாலை சிலவற்றிற்கு ஏற்பட்டிருக்கும் போட்டி மிகுந்தநிலை குறைவடைவதுடன் கிராமியப் பாடசாலை களில் மாணவர்கள் தங்குவதும் நிகழுமென எதிர்பார்க்கப் படுவதாக குறிப்பிடுகின்றது. எனினும் கிராமியப் பாட சாலைகள் மூடப்படுவதற்கான காரணங்களை ஆராயும்
ஆய்வுகள் இங்கு நடைபெறவில்லை.
இலங்கைச் சமூகத்திற்கு கல்வி தொடர்பாக தேசிய கொள்கையெதுவும் இல்லாமையும் அரசியல் கட்சிகள் ஆட்சியமைக்கும் ஒழுங்கைப் பொறுத்து பாடசாலைக் கல்விச் செயற்பாட்டை முன்னெடுப்பதில் பல்லினத்தன்மை (Diversity) நிலவுவதாலும் கிராமியப் பாடசாலைகளில் கஷ்டநிலை அதிகரித்துள்ளது.
(Buthpitiya Jayasena - 1994) இந்நூலில் முழு பாடசாலைத் தொகுதிக்கும் முகங் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை பற்றி விரிவான முறையில் Buthpitiya Jayasena ஆராய்ந்துள்ளார்.
எனினும் கடந்த இரு தசாப்தங்களினுள் கிராமியப் பாடசாலைகள் மூடப்படுவது அதிகரிப்பைக் காட்டுகிறது. அது பற்றிய ஆய்வுகள் செய்யப்படாமை பெருங் குறைபாடாக அமைவதுடன் பாடசாலைகள் மூடப்படுவதற்கு பின்புலத்திலிருக்கும் சமூக, பொருளாதார காரணிகளை
ஆராய்வது இன்றியமையாதது.

Page 29
பாரதி பன்முக உணர்ச்சி கு
கலாநிதி கனக
முதுநின சப்பிரகமுவ பல்
பாரதி சிந்துக்குத் தந்தை, புதுயுகக்கவி, புரட்சிக்கவி, புதுக்கவி, பாரதி கவிஞன், சிறுகதையாளர், கட்டுரை யாளர், தேசியவாதி, புரட்சிவாதி, புதுமைவாதி, நவயுகக் கவி மேதை, பாரதிகாலம் அவர் பற்றிய ஆய்விலே மிக மிக முக்கியமாகும். தமிழ்க் கவிதை மரபை உடைத்தெறிந்து புதுநெறி பாய்ச்சிய புலவன். சமுதாயச் சீர்திருத்தத்தை அவாவியவன், பெண்ணடிமைத் தனத்தை உடைத்தெறிவதற்கான உந்துதலையும் இந்தியத் தேசியத்தை முன்னெடுப்பதற்கான முனைப்பையும் உக்கிரமாகவே முன்னின்று நடைமுறைப்படுத்தியவர். ஆங்கிலேய ஆட்சிமுறைக்கெதிராக கொதித்தெழுந்து உத்வேக கவிதைகளையும் உணர்ச்சிமிக்க வசனங்களையும் கட்டுரைகளையும் எழுதியவர். அரசியலிற் சிறைவாசம் கண்டவர். திருமணமானவர். இயற்கையையும் மானுட வாழ்வையும் யதார்த்தம் - அனுபவிக்க வேண்டியவை என்பதனை வலியுறுத்தியவர். தமிழ் உணர்ச்சி, தமிழர் உணர்ச்சி, தமிழ் நாட்டுணர்ச்சி, பண்பாட்டுணர்ச்சி, பக்தியுணர்ச்சி, தேசிய உணர்ச்சி என்பன இயல்பாகவே வாய்க்கப் பெற்றவர். சமுதாய மறுமலர்ச்சியையும் சீர்திருத்தத்தையும் அவாவியவர். தமிழர் தம் வீர உணர்ச்சியை எடுத்துரைத்து எழுச்சிமிக்க தேசியத்தை அழுத்தமாகவே பிரசாரப்படுத்தியவர். தத்துவ சாந்தி நுண்ணறிவும், புரட்சி மனோபாவமும் கொண்டவர். அவர் வாழ்ந்த அரசியற் பின்னணி அவரை மிதவாதியாகவும் தீவிரவாதியாகவும் ஆக்கின. அபின் எனப்படும் கஞ்சாக் காரனாக பாரதியைக் குறிப்பிடுவார். கலை, மொழி, பெண், தேசம், கடவுள், சக்தி, விஞ்ஞானம், சுதந்திரவேட்கை, காந்தி, சரஸ்வதி, காளி, இலக்குமி என்று அவர் பாடிய பொருள்கள் அநேகம். எளிமையான சொல், எளிய மெட்டு, பொது சனங்களும் படித்து விளங்கும் பாட்டு, எழுதியவர் பாரதி. "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்பது பாரதியின் கவித்துவ மேதா விலாசத்தைப் புலப்படுத்தும் வரி. இவ்வாறு பன்முகத் தன்மைகொண்ட பாரதியின் சிந்தனைகள் குறித்தும் தமிழ் மொழி உணர்ச்சி குறித்தும் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.)
தமிழரின் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியல் தமிழ் மொழியில் வந்து சேர்வதிலேயே தங்கியிருக்கிறதென்பதை

க நோக்கு - தமிழ்மொழி தறித்த சிறப்பு நோக்கு
சபாபதி நாகேஸ்வரன் M.A, Ph.D, தல விரிவுரையாளர், மொழித்துறை, ல்கலைக்கழகம், பெலிகல்லோயா, இலங்கை
உணர்ந்த பாரதி அறிவியற் கல்வியாகிய காலத்திற்கேற்ற உரத்தினையிட்டு வளர்க்கப் பெறாவிட்டால் தமிழ் அழியக் கூடுமென்பதும் தமிழ் அழிந்தால் தமிழர் வீழ்வர் என்பதும் பாரதிக்குப் புலப்பட்டிருக்கின்றன என்பது அவரது பாடல்களாலும் கட்டுரைகளாலும் தெளிவாகின்றன.
"புத்தம் புதிய கலைகள் பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும், மெத்தவளருது மேற்கே -அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை" என்று குறையைச் சுட்டிக் காட்டிய பாரதி, "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'' எனத் தமிழ்த்தாய் மூலம் தமிழர்களுக்கு ஆணையிடுகிறார். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். என்ற பகுதியிலும் பாரதி அறிவியல் நெறிக்காலத்தை வரவேற்கிறார் என்று கூறலாம்.
கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்ற புதிய வேகத்துடன் பாரதி தமிழ்க்கவிதை உலகில் அடியெடுத்து வைத்தார். தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ் நாட்டுக்கில்லை என்னும் வசை என்னால் கழிந்தது என்று பெருமிதத்துடன் புறப்பட்டார் அவர். கவியரசர் என்பது புகழ்ச்சியன்று, உண்மை. பாரத தேசம் அடிமை இருளில் முழ்கியிருந்த போது பாரதி இளைஞராகத் தோன்றினார். விடுதலை வேட்கை கொண்டு வீறிட்டெழுந்தார். இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலை உணர்வு பொங்கி எழுந்தது. இந்நாளில் நிலைகெட்ட மாந்தராய் அடிமையில் இன்பம் காணுவதிலும் சில ஆத்மாக்கள் இருந்தன.
“மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ”
என்று குமுறுகிறார். இவ்வாறு உயிர்த்துடிப்புமிக்க தேசிய பாடல்கள் பல பாடினார்.
அகவிழி - நவம்பர் 2012 / 27

Page 30
“எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஓர் நிலை எல்லாரும் ஓர் விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்னும் ஒப்பில்லாத சமுதாயத்தை உலகுக்கு ஒரு புதுமையை படைக்க வேண்டும் எனக் கனவு கண்டார். இதற்கு நாட்டு விடுதலை போதாது. சமுதாய வாழ்வும் விடுதலை பெறவேண்டும் என்று கருதினார். சக்தியைத் தெய்வமென முழங்கிய அவருக்குப் பெண்கள் ஏட்டையும் தொடுவது தீமை என்று வாழ்வது வேதனை அளித்தது, பாடுகிறார்.
“பெண்ணுக்கு விடுதலை என்று இங்கோர் நீதி
பிறப்பித்தேன் பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை”
என்று கூறுகிறார். பலர் பசியால் வாடுவதும் அறி யாமை இருள் மூழ்குவதும் கண்டு,
“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்”
என்று வேண்டுகோள் விடுத்தார். பாரதி தேசிய, சமுதாய, நலன்களைக் கருதிச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கருதிப் பல கவிதைகள் பாடினார். பிறந்த மண்ணின் இயல்புக்கு ஏற்பத் தோத்திரப் பாடல்களை தேசிய துடிப்போடு அருளினார். கண்ணன்பாட்டு குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம், என்னும் முப்பெரும் பாடல்கள் படைத்தும் எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் இவையே இவருடைய பாடல்களின் தனித்தன்மை.
பாரதி மறுமலர்ச்சிக் காலத்தின் விடிவெள்ளி, கற்றோர்க்கு மட்டும் உரிய கவிதையைப் பொதுமக்களுக்கு உரித்தாக்கிய மக்கள் கவி. பழமைக்கும் புதுமைக்குமாக அமைந்த புதுமைக் கவி, உருவகக் கவிதை என்ற புதிய கவிதை அமைப்பைக் குயிற்பாட்டு மூலம் தோற்றுவித்த மூலவர். குழந்தைப் பாடல்களை (பாப்பாப்பாட்டை) உருவாக்கிய முதல்வர். வசன கவிதையின் தந்தை. கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்ற இரண்டு குறிக்கோள்களையும் இணைத்துப் புதிய கவிதையைத் தமிழில் தோற்றுவித்த சீர்திருத்தவாதி, கவிதை உலகிலே “பாரதி சகாப்தம்" வரலாற்றுப் புகழ்பெற்றது. தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் உயிர் கொடுத்த யுகக் கவிஞன் பாரதி. மிதவாதத்தை வெறுத்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்க் கவிஞர். பாரதி இடதுசாரி மனோபல முடையவர். 18.08.1906 இல் நடந்த பம்பாய் தபால்காரர் தொழில்
28 / அகவிழி - நவம்பர் 2012

நிறுத்தத்தையும், 1906 செப்டம்பரில் நடந்த ஈஸ்ட் இந்திய இரும்புப்பாதைத் தொழிலாளர்களின் தொழில் நிறுத்தத்தையும் வரவேற்று எழுதினார். காசி, கல்கத்தா, காங்கிரஸ்களின் மிதவாதிகள் காட்டிய 'டம்பத்தை' விளம்பரப்படுத்தி அது விபினசந்திரபாலர், பாலகங்காதர திலகர், லாலாலஜ்பதிராய் போன்ற தீவிரவாதிகளால் பொய்யென நிரூபிக்கப்பட்டதை வெகு சந்தோஷத்துடன் பாரதி எழுதியுள்ளார். "சுதந்திரத்தைப் பிச்சைக்காரன் கேட்பது போலக் கேட்கவேண்டும் என்று பாரதி, திலகர் வழிநின்று உபதேசித்தார், விதவாவிவாகம் பற்றிய ஸ்ரீமான் காந்தியின் கருத்தைக் கடுமையாகக் கிண்டல் செய்து எழுதியமையும் இவ்விடம் குறிக்கத்தக்கது. இக்கட்டத்தில் பாரதியின் பார்வை சகல அம்சங்களிலும் தீவிரவாதத்திலேயே திரும்பியது."
உடைமை-முதலாளி வர்க்கத்தைத் தாக்கும் முகத்தின் தான் உடைமை என்பது 'கனவே' எனும் புரூதோடன் கருத்தை வழிமொழிந்து எழுதினார். செல்வர்களே அநியாயம் அதிகம் செய்கின்றனர் என்று பாரதி கூறினார். சுரண்டலையும் கடுமையாக எதிர்த்துக் காட்டூன் போட்டுத் தாக்கியவர் இவர். ஐமீன்தார்களையும், மிராசுதாரர்களையும் 'தீ வெட்டிச் சோம்பேறிகளை' விட கேடுகெட்டவர்கள் என இவர் வருணித்துள்ளார். வருவதுணரும் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்தும் கவிஞருக்கேயுரிய உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிச் சில அதிதீவிர செயல்களில் பாரதி ஈடுபட்டுச் செயல்புரிந்திருக்கிறார். கல்கத்தா, காசி நகரவாசல்களின் போது (1898-1902) நாட்டு வெடிகுண்டுகள் செய்யும் முறைமையைக் கற்றறிந்தார். பாரதி தீவிரவாதக் கருத்து கள் கொண்டவராதலால் மிதவாதப் போக்குடைய சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிட இயலாத செய்திகளை வெளியிடவென 'பாலபாரதா' 'விஜயா' 'சக்கரவர்த்தினி' 'கர்மயோகி' 'சூர்யோதயம்' 'இந்தியர்' எனும் தீவிரவாதப் பத்திரிகைகளை நடத்தினர். பாரதியின் தீவிரவாதம் இவர் எழுதிய 'புதிய ஆத்திசூடி' அம்பலப்படுத்தும் அச்சம் தவிர், உடலினை உறுதிசெய், குன்றென நிமிர்த்துதல், கொடுமையை எதிர்த்துநில். கொள்கை கொன்டுவாழ், சினங்கொண்டெழு. சீறு வேர்ச் சீறு, நையப்புடை ரௌத்திரம் பழகு என்பன அவர் தம் மணிவாக்குகள்..
பாரதியின் அதிதீவிர செயல்களுக்கு ஒரு காரணம் உண்டு. பாரதியும் வ.உ.சிதம்பரப்பிள்ளையும் மாமன் மருமகன் உறவுமுறை கொண்டாடிப் பழகிய தேசபக்தர்கள். கோரமில் பஞ்சாலைத் தொளிலாளர்களுக்காக முதன் முதலில் சங்கம் தொடங்கிப் போராடியவரும், சுதேசிக் கப்பல் கம்பனி நடத்திய தேசாபினியுமான வ.உ. சிதம்பரப்பிள்ளை மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் ஆட்சிக்கு எதிராகச் சதி செய்ததாக வழக்கு சோடித்து ஆங்கிலேயர் சிறையில் அடைத்தனர். மருமகன்

Page 31
வெஞ்சிறை செக்கிழுத்து வாடுவதறிந்து சகிக்காத மாமன் வாஞ்சிநாதன் வினையாற்றத் தொடங்கினார். சிறைப்பட்டிருக்கும் மருமகனுக்குச் சங்கேத மொழியில் செய்தியும் அனுப்பினான். ஒரு பெரிய தேசத்தவர்கள் ஆயுதங்கள் உபயோகிக்க கூடாது பேடிகளால் பிறப் பது தெய்வநீதிக்கு முற்றிலும் மாறுப்பட்ட விஷயம். என்பது பாரதியின் கருத்து. சோவியத்தின் புரட்சியும், ஜாரின் இறங்கு முகமும் இக்காலகட்டத்தில் பாரதிக்கு இது போன்ற சிந்தனையையும் செயல்முறையையும் தூண்டியிருக்கலாம். தேசிய ஒற்றுமை, தமிழ்ப்பணி, புரரட்சி, புதியனகாணல், பெண் விடுதலை சுதேசியம், சுதந்திரம், தொழிலாளர் தலம், ஆகியவற்றுக்காகப் பாரதி உறுதியுடன் போராடினார். “தமிழர்களிடையே தேசியவிழிப் புணர்ச்சியை உண்டாக்கிய முதற் கலைஞன் பாரதியே என்பது ஜீவாவின் கருத்தாகும்.
இருபதாம் நூற்றாண்டிலே தமிழிலக்கியத்தின் புதிய இலக்கிய மரபைத் தோற்றுவித்தவர் பாரதி. 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி' என்பது தமிழ்த்தாயின் விடுதலை குறித்துப் பாடியதாகக் சொன்னாராம். இக்காலத்திற்கு அவர்கள் வாயில் வழங்கும் உணர்ச்சிக் கலப்புடைய சொற்கள் ஏற்றவை என்பதையும் வழக்கொழிந்த சொற்களும் சொற்றொடர்களும் பயனற்றவை என்பதையும் பாரதி கண்டு காலத்திற் கேற்ற மொழி நடையைப் பயன்படுத்தியதனால் அவருக்கு பின்வந்த பாரதிதாசன் புதுமைப்பித்தன் முதலிய ஆசிரியர்கள் ஆற்றல் பொருந்தி அந்நடையினைக் கையாண்டு இலக்கியப் பண்பு வாய்ந்த கற்பனைச் சித்திரங்கள் என்பவற்றை ஆக்கியுள்ளனர். காலத்திற்கு ஏற்ற யாப்பு முறைகளைத் தழுவிப் பொதுமக்களுக்கு நெஞ்சைப் பிணிக்கவல்ல பாடல்களைப் பாரதி பாடியமை அவர் ஒரு பெரும்புலவர் என்பதற்குப் போதிய சான்றாகும். அவருக்குப் பின்வந்த புலவர்கள் எல்லோரும் அவர் காட்டிய வழியைப் பின்பற்றியதால் தமிழ் சொல்லும் வரலாற்றில் அவர் ஒரு புதிய காலப்பகுதியைத் தொடக்கி வைத்தவர் என சொல்லுதல் பிழையாகாது. முன்னோர் கையாண்ட தமிழிசைத்துறை விருத்தம் முதலிய யாப்பு வகையைத் திறமையுடன் வகையாளக் கூடிய அறிவும், ஆற்றலும் பாரதிக்கு இருந்தபோது அவற்றை விடப் பொதுசனத்தின் உள்ளத்தைக் கவரக் கூடிய சிந்து, தெம்மாங்கு முதலிய புதிய யாப்பு கைகளைக் கையாண்டார். அதுவொன்றே பாரதி தமிழ்நாட்டில் தோன்றிய பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணப்படுவதற்குரிய தகுதி வாய்ந்தவர் என்பதற்குப் போதிய சான்றாகும். பாரதி இருபதாம் நூற்றாண்டில் சிந்து முதலிய யாப்புவகைகளைப் பயன்படுத்திப் பல கற்பனைச் சித்திரங்களை உருவாக்கித் தந்தமையால் அவர் காலம் தொடக்கமாகத் தமிழில் ஒரு புதியமரபு தழைக்கலாயிற்று.

பாரதி கையாண்ட புதிய யாப்பு வகைகளுள் சிந்து என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் தனிச்சொல் பெற்று அளவு ஒத்து வருதலும் ஒவ்வாது வருதலும் சிந்து என்னும் யாப்பிற்கு உரிய இலக்கணமாகும். இரண்டேயன்றி நான்கடிகள் ஓரெதுகையாய் வருதல் உண்டு. அடிகள் அளவு ஒத்து வருவது சமனிலைச்சிந்து எனவும் அளவு ஒவ்வாது வருவது வியநிலைச் சிந்து எனவும் பெயர் பெறும் சமநிலைச்சிந்திலே குறளடி இரண்டு இரு சீரிரட்டை என்றும் சிந்தடி இரண்டு வரின் முக்கிரிரட்டை என்றும் அளவடி இரண்டுவரின் நாற்சீரிரட்டை என்றும் கூறப்படும். முச்சீரடியானும் வந்தனவற்றிற்கு உதாரணம்
"ஓடிவிளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்பது வியனிலைச்சிந்துகளுள் இருமுச்சீர் இரட் டைக்கும் இருநாற்சீர் இரட்டைக்கும் உதாரணம் வருமாறு:
ஓடுமனப் பெரியோர்கள் - என்றும் ஓதுவதாய் வினை மோதுவதாய் தீமைகள்
மரப்பதுவாய் - துயர் தீர்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய் - என்பது. பாரதி நன்கு ஆராய்ந்து காவடிச்சிந்து நொண்டிச்சிந்து ஆன்தகளிப்பு, தெம்மாங்கு என்பனவற்றின் போக்கினை நன்கு ஆராய்ந்து பயன்படுத்தியுள்ளார். சில நூற்றாண்டுகளாகப் பொதுசனப் பெண்களையும் அடிமைப்படுத்தி வைத்திருந்த சமூகத்தலைவர்களையும் அறுத்தெறியத் தருணம் பார்த் திருக்கும் ஒரு சமுதாயத்தினது மனோநிலைதான் பாரதியின் கவிதைகளிலும் உரைச்சித்திரங்களிலும் பிரதிபலிக்கின்றன. அவர் பிரயோகித்த சொற்றொடர்கள் கையாண்ட விடயங் கள் முதலியவற்றை நோக்கி தமிழிலக்கியத்திற்கு அவர் புத்துயிர் அளித்தமை புலனாகும். சிட்டுக்குருவி முதல் ஊழிக்கூடத்து ஈறாக அவரியற்றிய பாக்கள் யாவும் காலத்தின் போக்கிற்கிணங்க மக்கள் எல்லோரும் படித்து அனுபவிக்கக் கூடிய மொழிநடையில் அமைந்துள்ளன.
எழுத்தறியா ஏழையொருவனுக்கும் உணர்ச்சியின்பம் 'வல்ல உயிர்த்துடிப்புள்ள பாக்காளாக அவர் பாடியதன் பின் இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்தோரே பொருளறிதற்குரியது தமிழ்ப்பாட்டு என்னும் கருத்து நீங்கலுற்றது.'' மக்களுள்ளத்திற் சுதந்திர உணர்ச்சியைச் சுடர்விட்டு எழச்செய்த தேசியப் பாடல்கள் அவருக்குப் பெரும்புகழ் ஈட்டிக் கொடுத்த போதும், அவருடைய உண்மையான கவித்திறனையும் கற்பனைச்சக்தியையும், கண்ணன்பாட்டு, பாஞ்சாலிசபதம், குயிற்பாட்டு என்பவற்றிற் காணலாம். கண்ணன்பாட்டு பொருட்டெளிவும், உணர்ச்சி வேகமும் பொருந்திய பாடல்களைக் கொண்டது. பாரதி யின் சொல்லிலும், பொருளிலும் அவர் அமைத்த சக்தி புதுமையைக் காண்கிறோம் பழையபாட்டுகள் அரசர்
அகவிழி - நவம்பர் 2012 / 29

Page 32
களையும் அவதார புருடர்களையும், கடவுளையும் பாராட்ட, பாரதி பாட்டுகள் பொதுசனத்தையும், சன சமுதாயத்தையும் பாராட்டுகின்றன. பெண்ணிடத்திற் காணப்படும் கற் பொழுக்கம், பொறுமை அன்பு முதலிய சீரிய குலப் பண்புகளைக் காவியங்களிற் புனைந்து கூறிய தமிழ்ப் புலவர்களுட் பெண்ணுக்குப் பெருமையளித்துப் பெண்ணி டத்து விளங்கும் சக்கியைத் தெய்வீகப் பெற்று தமிழ்ப் புலவன் பாரதி ஒருவன் தான் எனக்கூறுதல் மிகையாகாது.
தமிழ்நாட்டிற் பாரதியுகம், மறுமலர்ச்சி என்று தோன்றிய பொழுது, 'என்றுதணியும் இந்தக் சுதந்திரதாகம்' என்ற ஏக்கம் பாரதியின் கவிதைகள் பலவற்றில் ஊடுருவித் துடிப்புடன் விளங்குகிறது. விடுதலை அல்லது சுதந்திரம் என்பது பாரதியின் மூச்சு எனலாம். தாழ்சமுதாய இயக்க சமுதாயங்களிலும் தமிழ் இலக்கியத்திக்கும் விடுதலை வேண்டி முற்பட்டுநின்றும் பாரதி நாட்டு விடுதலைக்குச் சமூக முன்னேற்றம் அவசியம் என்று கொண்ட பாரதி வேளாட்டுச் சமூகத்தோடு தமிழ்ச்சமூகத்தை ஒப்பிட்டுத் தமிழ்ச்சமூகத்துள் அன்று களைப்பு குறைகளைச் சாடினார். தமிழ்ச்சமூக ஒற்றுமை சர்வசமய சேமரசத்திலேயே கட்டியெழுப்ப படலாமென்று உணர்ந்த பாரதி சைவ, சாக்த, வைணவ, வேதாந்தம், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் விளம்பிய சமரச சன்மார்க்கத்தை வற்புறுத்துகிறாரெனலாம், பாரதி இன்னும் படி மேலே சென்று கிறிஸ்தவ இஸ்லாமியக் கடவுளையும் பாடியுள்ளார். அவர் சாதாரண மக்கள் வாழ்கையையே தமிழ் கவிதைகளுக்குப் பொருளாகக் கொண்டார்.
பாரதி தமிழுக்கு புதுவழிகாட்டிப் புதுமையை உணர்த்தின். தமிழர் தன் மானத்தோடு வாழந்து சிறக்க வேண்டுமென்று விரும்பினார். தமிழரின் தன்மான உணர்ச்சியை வளர்ப்பதற்காகப் பழமையை பாடினார். பழமைச் சிறப்புப்பெற்ற தமிழர் புதுமைசிறப்பும் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டார். பாரதி பழமைச் சிறப்பை எடுத்துப் பாடிய அளவு வேறு எந்தத்தமிழ்ப்புலவரும் தமிழரின் இந்தியரின் பழமைச் சிறப்பை எடுத்துப்பாடவில்லை. தமிழ்மொழி தமிழினம் பாரதிபாடு ஆகிய யாவற்றிற்கும் விடுதலைவேண்டி உரைத்த பாரதி பெண்ணுரிமை, சாதிபற்றிய ஏற்றத் தாழ்வு முரண்பாடுகளின் ஒழிப்பு, வறுமை சாட்டுதல் என்றிவை பற்றிய பாரதியார் கவிதைகளும் கட்டுரைகளும் இந்த விடுதலை நோக்கின் பல்வேறு அம்சங்களே. இந்தியப்பழமையிற் காணப்படும் சீர் கேடுகள் பலவற்றைப் பாரதியார் ஆணித்தரமாகக் கண்டிக்கிறார். உலகம் பொய், ஆன்மீகத் தத்துவக் கருத்தை இந்துக்களின் உலகியல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாகச் இருப் பதைப் பாரதியார் உணர்கிறார்.
307 அகவிழி - நவம்பர் 2012

"காண்பது உறுதி கண்டோம் காண்பதல்லால்
உறுதியில்லை” காண்பது சக்தியாம், இந்தக் காட்சி நித்தியமாம்” என்று பாரதியார் பாடுகிறார். பாரத நாட்டுப் பழைய நாகரிகமும் மேனாட்டுப் புதிய நாகரிகமும் இந்தியாவிற் கலந்து கொண்டிருந்த வேளையில் தோன்றி பாரதி, மேனாட்டு நாகரிகத்திற் காணப்பட்ட சிறப்புடைப் பண்புகளைத் தமிழ் மக்கள் ஏற்கவேண்டு மென்று விரும்பினார். தீண்டாமை, பெண்ணடிமை முதலியன சமூகத்திலிருந்து ஒழிய வேண்டுமென்று பாரதி விரும்பினான். இக்குறைபாடுகளில்லாத மேனாட்டுச் சமூக வாழ்வு பலவகையிற் சிறந்திருக்கக் கண்டார். மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை என்று பாரதி பாடினான்.
"சாத்திரங்கள் ஒன்றுங் காணலர் - பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே" என்கிறார். 'கண்ணன் என் தந்தை' என்ற பாடற் பகுதியில் உங்கள் துன்பம் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்'' என்கிறார்.
“மேலவர் கீழவரென்றே - வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பனாம் போலிச் சாடியை எல்லாம் - இன்று பொசுக்கிவிட்டவெவர்க்கும் நன்மையுண்டாம்” என்று சாத்திரங்களிற் சிலவற்றைத் தீயிலிடும் படி முதன்முதலில் கூறியவர் பாரதியார். பாஞ்சாலி சபதத்திற் பாஞ்சாலி மூலமாக சாத்திரங்களைச் சாடுகிறார். அவர் இராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது அவன் செய்கை தருமத்திற்கு ஒத்தது என்று இராவணன் அழைத்த சாத்திரியார் கூறினாரென நையாண்டி செய்து
“பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்கிறாள் பாஞ்சாலி.
“சூத்திரனுக் கொருநீதி தெண்டச் சோறுண்ணும் பார்ப்பனுக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது சாத்திரமன்று சாதியென்று கண்டோம்” என்று சாதிப்பிரிவினருக்கு ஆதாரமாயிருந்த சாத்திரத்தைக் சதியென்று கண்டிக்கிறார்.
“சாத்திரங்கள் பல தேடினேன் - அதற்கச் சங்கையிலாதன சங்கையாம் - பழங் தோத்திரங்கள் சொல்லும் மூடர்தம் பொய்மைக் கூடையில் உண்மை கிடைக்குமோ”
எனச் சாத்திரத்தைப் பொய்மைக் கூடையெனக் கூறுகிறார். வடவர் செல்வாக்கினாலே தமிழ் நாட்டிற்

Page 33
காலூன்றி வேரூன்றிவிட்ட சாதிப்பாகுபாடு கல்லெறிபட வேண்டும் என்பது பாரதி கருத்தாகும்.
"செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பவர் பித்தமனிதர் அவர் - சொல்லுஞ் சாத்திரம் பேயுறையாமென்று இங்கூத்தடா சங்கம்” என்னும் பொழுது சமய நெறிக் காலத்திலும் தத்துவநெறிக்காலத்திலும் போற்றப்பட்ட கருத்துக்கள் சில பேயின் உரைகளென்றே கூறியிருக்கிறார்.
“பழமை பழைமையென்று பாவனை பேசலன்றிப் பாமரரேதறிவார்” என்ற கூற்றிலிருந்தே பழமையை ஆராய்ந்தறியாத பாமரரெல்லாம் பழமையைப் பற்றிப் பேசித் தம்முடைய மூடக் கொள்கைகளை நிலைநாட்ட பழமை வாதத்ததைத் துணை கொள்வது பாரதிக்குச் சினத்தை உண்டுபண்ணிவிட்டது.
"உண்மையின் பெயர் தெய்வமென்போம் - அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது உள்ளமறைகள் கதையெனக் கண்டோம்” புராணங்கள் பற்றி “கவிதை மிக நல்ல தேனும் - அக்கதைகள் பொய்யென்று தெளிவுறுக் கண்டோம் புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்” என்பது பாரதியின் விமர்சனம். கொள்கை. பாரதி பாடல்களிலே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்திற்குப் புத்துணர்ச்சியை உண்டாக்க வேண்டி சமூக ஊழல்களைத் தாக்கித் தூ
ண்டுகிற வடிவம் பெறுகின்றன. பாரதி பொதுவுடைமைச் சமுதாய அமைப்பு ஏற்படவேண்டுமென விரும்பினார்.
பாரதி கடவுளர் பலரையும் பாடியுள்ளார். பரா சக்தி அவரது உபாசனத் தெய்வமாகத் தெரிகிறது. ஞானப்பாடல்கள், தோத்திரப் பாடல்கள் பல அவர் பாடியவற்றைக் கொண்டு பாரதியார் பாரத நாட்டுப் பழைய மரபில் நிறையப் பாடியிருக்கிறார். அவர் ஒரு வேதாந்தி, என்று சிலர் கூறுவார். பாரதி சிவலோகம், வைகுந்தம் போக விரும்பிப் பாடவில்லை. இந்த உலகில் வாழ வேண்டுமென்றே வரம் கேட்கிறார்.
“நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை யெய்தவும்”
தாம் பாட விரும்புவதாகப் பாரதி கூறுகிறார்.
“தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்”

என்ற அடிகள் பாரதிக்கு உலகவாழ்விலிருந்து ஈடுபாட்டைக் காட்டுகின்றன. செல்வம், இன்பம், புகழ் என்பனவற்றை இவர் பராசக்தியிடம் வேண்டுகிறார்.
"எண்ணிலாத பொருட்குவை தானும் ஏற்றமும்
புவியாட்சியும் தரும் இன்றென தன்னையென் காளி மண்ணில் யார்க்குந்துயரின்றிச் செல்வேன் வறுமை என்பதை மண்மிசைமாய்ப்பேன்”
என்ற அடிகளில் தாம் உலகில் நன்றாக வாழ்ந்து மற்றவர்களை நன்றாக வாழச் செய்ய வேண்டுமென்று காளியை வேண்டுகிறான்.
துன்பமே இவ்வுலக இயற்கை என்றும், இவ்வுலக வாழ்விலிருந்து விடுபட்டாலே இன்பமென்றும் கூறிவந்த இந்திய தத்துவங்கள் சமண, பௌத்த கொள்கைகளை வெறுத்த பாரதி
"துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம் யாவும் தருவார்" என்ற பாடுகிறார். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - இறைவா, இறைவா, இறைவா. என்று வியக்கிறார். பொருட் செல்வத்திற்குத் தெய்வமான திருமகளைப் பாரதி சிறப்பாகப் பாடியிருக்கிறார். திருக்காதல், திருவேட்கை, திருமகள் துதி, திருமகளைச் சரண்புகுந்தார் என்ற பகுதிகளிலெல்லாம் இவ்வுலக வாழ்வு சிறப்பதற்கு வேண்டும் பொருட் செல்வத்தைப் பாரதி விரும்பிப் பாடுகிறார். பாரதி பாடிய ஆத்தி சூடியை ஒளவையார் | பாடிய ஆத்திசூடியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பாரதி புதுயுகக் கவிஞரென்பது புலப்படும். என்கிறார் மீனாட்சி சுந்தரன். (A Study on the poetical work, of subramanings bhanathi - K. Meena ..........P.28) எடுத்துக்காட்டியுள்ளார். பேராசிரியர் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை பாரதி இராசத குணத்தை இலட்சியமாகக் கொள்வது தெரிகிறது. (1985 அரசியல், சமூகம், இலக்கியம், சமயம், தத்துவம், கலைகள் முதலிய பல துறைகளைப் பற்றிய கட்டுரைகள் அவரது தெளிந்த சிந்தனையையும் நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களை அவர் உணர்ந்து கண்ட கோணத்தையும் நன்கு புலப்படுத்துகின்றன. பாரதியின் கவிதையூற்றின் வெளிப்பாட்டிற்குச் சொல்லவே ஆதாரம். சொல்லி மந்திரமாகவே குறிப்பிடுவர். "உண்மைச் சொல் ஷேமம். மந்திரபாகு பொய்ச்சொல் அழித்து விடும்'' என்கிறார். "தீயை நிகர்த்தொரு வீசும் தமிழ்க்கவி செல்குவனே” என்பர் நான்மணிமாலையில். பாப்பாப் பாட்டில் “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திட்டி பாப்பா” என்று பாடினார். இயன்றளவு தமிழே பேசுவேன், என்று தம்மிடையே சாலகற்பமாக அவர் எழுதுகிறார். தமிழபிமானி, யார் என்பதனைத் தெளிவாகவே
அகவிழி - நவம்பர் 2012 / 31

Page 34
விவரிக்கிறார். ஒருமைப்பாடு என்னும் உணர்ச்சியை மக்கள் உள்ளங்களில் விதைக்க அரும்பாடுபட்ட கவிஞர் பாரதி ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே என்று தமிழின ஒற்றுமையைச் சொல்கிறார்.
பாரதி வாழ்ந்தது 39 வயதுவரைதான். ஹிந்தி, வடமொழி முதலான மொழிகளைக் கற்றார். சர்வகலாசாலைப் பிரவேசப் பரீட்சையில் தேறினார். புதுவையில் பாரதி அனுபவித்த தொல்லைகள் ஒரு பாரதம்!. அரவிந்தர் வ.வே.சு ஐயர் நண்பர்களின் கூட்டுறவு ஆறுதலளித்தது. வறுமையின் கொடுமையைப் புதுவையில் அதிகமாகவே அனுபவித்தவர். அங்குதான் பாரதியின் கவிதைத்திறன் உச்சமடைந்தது. பாரதியின் இலக்கியப் பணிகளின் வீச்சுக்
குறித்து பி.ஸ்ரீ. மேல்வருமாறு கூறுவர்.
“பாரதியின் வசன நூல்களில் ஞானரதம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. இது ஓர் அருமையான வசன காவியத் துணுக்கு. சந்திரன் கதைக்கொத்து முதலிய வசன நூல்களையும் குறிப்பிட வேண்டும். நவதந்திரம், ஆறிலொருபங்கு என்ற இரண்டு வசன நூல்களும் முற்றுப்பெறவில்லை. பதஞ்சலி யோக தந்திரங்களைப் பற்றிக் குறிக்கும் வேதரிஷிகளின் கவிதைகளைக் குறித்தும் பாரதி விளக்கமும் விமர்சனமும் எழுதியிருக்கிறார்.
மணிவிழா நல்வாழ்த்துக்கள்
( சி ஒ ஒ ஒ 9 1% 9 ஏ (19 2) உ எ 9 5
4 5 (9 ந 2
327 அகவிழி - நவம்பர் 2012

கீதையை மொழி பெயர்த்திருக்கிறார். இந்தியா முதலான பத்திரிகைகளில் பாரதி எழுதியிருந்தவற்றைத் தொகுத்து 140 துணுக்குகளாக வெளியிட்டிருக்கிறார்கள். குயிற் பாட்டு ஒன்றே அரசியற் கலப்பு ஒரு சிறிதும் இன்றி அமைந்திருப்பதாகத் தோன்றுகின்றது. 250 அடிகளைக் கொண்டது. பாரதிக்கு தேசபக்தி வேறு. தெய்வபக்தி வேறு என்பதில்லை. பக்தி வேறு, சக்தி வேறு என்பதும் இல்லை. கவிதை வேறு, மதம் வேறு, என்றும் இல்லை. கவிதையே சமயம், சமயமே கவிதை என்று சொல்லும் படி இவ்விரண்டும் வாழ்க்கையில் ஒன்றுபட்டுக் கலந்திருந்தன. (பி.ஸ்ரீ.1970:44).
வ.ராமசாமி ஐயங்கார், (பாரதிக்கு நடக்கும் போதும் பாட்டுத்தான். வ.ரா.ப. என்கிறார். பாரதி அஷாடபூதி வேதாந்தியே அல்லர். அவர் மகாகவி, இணையற்ற கலைஞன், உலகத்தை ஆண்டு அனுபவித்த உத்தமன், பாரதியார் தான் தமிழ். பாரதியிடம் பக்தி செலுத்துங்கள். தமிழுக்கும் தேசத்திற்கும் தொண்டு செய்யத்தான் வேண்டும். "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே"
என்றபாடல் தமிழின் உச்சம்.
- முற்றும் -
நீலக் கடலின் மத்தியில் வடபால் புகழ் மண்டிக் கிடக்கும் மண்ணுக்கு உரித்தாய் அமைந்த சப்த தீவுகளில் ஒன்றாக பிளங்குவது நயினாதீவு. அத்தீவின் மைந்தன் மணிவிழாக் காணும் இந்நாளில் நாமும் மகிழ்வுறுகிறோம். எங்கும் தமிழ், திலும் தமிழ் எனும் அளவிற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஒங்கி வளர்ந்து நிற்கிறது தமிழ். இறைவனால் உருப்பெற்று அரசர்கள் மடி வளர்ந்து ஆலயத்தில் அடி எடுத்து வைத்து பெருஞ் செல்வந்தர்களிடம் நடமாடி போட்டிகளிலும் சமய பாதங்களிலும் புதுப்பொலிவு பெற்று தன்னுணர்ச்சிப் பாடல், திப்பாடல், இதிகாசம், காவியம், புராணம், சிற்றிலக்கியம், உரைநடை எனும் பல்வேறு அணிமணி பூண்டு நாம் வாழும் காலத்தில் உலக அரங்கில் நடனமாடிக் கொண்டிருக்கும் மிழ் அன்னையைப் போல் முனைவர், கல்விமான், வாகீச லாநிதி, அருட்கலைமாமணி, சித்தாந்த பண்டிதர் என லாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களது பன்முக அணிகலன்களைக் காண்கிறோம்.
தமிழியல் மட்டுமன்றி பல்வேறு துறைசார்ந்த அறிவைக் கெவரப் பெற்ற கலாநிதி நாகேஸ்வரன் அவர்களின் மணிவிழா றப்பாக நடைபெற அகவிழி ஆசிரியர் சஞ்சிகை சார்பிலும் விழுது அமைப்பின் சார்பிலும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தரிவித்துக் கொள்கிறோம். பல்கலைக்கழகப் பணி, தமிழ்ப்பணி, மூகப் பணி, ஆய்வுத் துறை, தமிழ்க்கல்வி மேம்பாடு பான்றவற்றில் அவர் பல சாதனைகளைப் புரிந்து நூறாண்டு ாலம் சிறப்புற வாழவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Page 35
வளரிளம் ப தமிழ் வா
செ. ரூபசி
சித்திவிநா
பூமியில் உயிரிகளது பரிணாமப் பாதையில் 1,000,000 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் மனித வர்க்கத்தினது தோற்றம் இடம்பெற்றிருந்த போதும் 8000 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே மொழியை உருவாக்கி மனிதன் கதைக்கத் தொடங்கியிருந்தான். உலகில் தோன்றிய புராதன மொழிகளில் தமிழும் ஒன்று என்பது வரலாற்றாதாரங்களால் நிரூபிக்கப்பட்ட விடயமாகும். எவ்வாறாயினும் அவ்வப்போது பாரிய புரட்சிகரமான மாற்றங்களுக்கும் அது உட்பட்டே வந்துள்ளது. இது மொழி வளர்ச்சிப் போக்குகளில் வழமையான நடைமுறையேயாகும். உலகில் பல மொழிகள் அழிந்தும் பேச்சுவழக்கிழந்தும் செல்லுமதேவேளை புதிதாக தோன்றிய வண்ணமும் உள்ளன.
பொதுவாக மொழிகளை வழக்கிழந்த மொழி, நாட்டு வழக்குடைய மொழி, ஆட்சி மொழி, உலகத் தொடர்பு மொழி, பள்ளிக் கல்வியியல் மொழி, மதரீதியிலான மொழி, கல்வி மொழி, உயர்கல்வி மொழி, பெரும்பான்மையினர் மொழிகள், சிறுபான்மையினர் மொழிகள், சிறப்புத் தகுதி மொழிகள் என பல்வேறுவகைகளாக வகுப்பதுண்டு.
மனித சூழல் மாறுபாடுகளின் போது வேடுவர்களாகவும் சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்து வந்தமை, கால்நடைகளை மேய்க்கும் இடையர்களாக வாழ்ந்தமை, விவசாயத்தினை மேற்கொள்ளத் தொடங்கியமை, குடியிருப்புகளை அமைத்து நகரங்களை உருவாக்கி நாகரிகம் மிக்கவர் களாக மாறியமை போன்றவை பிரதான திருப்பு முனைக ளாகும். இத்தகைய மாற்றங்களுள் ஏறத்தாழ 300 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதே விஞ்ஞானம் அல்லது அறிவியலினினது வெளிப்பாடு ஆகும். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அறிவியல்துறை ஆரம்பித்தது. கடந்த 60 வருடங்களாக விஞ்ஞானத்தினது பிரயோகரீதியிலான பகுதியாக தொழில் நுட்பம் வளர்ச்சி கண்டு வருகின்றது. கடந்த 3 தசாப்தங் களாக தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் பெருவளர்ச்சி கண்டுவருகின்றது. இவையனைத்துமே அறிவியல் தமிழினது வளர்ச்சிக்கும் பரிணாம மாறுபாடுகட்கும் காரணமானவையாகும்.

ருவத்து அறிவியல் மர சில குறிப்புகள்
பங்கம் BSc Dip in Ed MEd.
யகர் இந்துக் கல்லுாரி மன்னார்
தமிழ் மொழியை பேசுபவர்களால் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்ற மொழி அறிவியல் தமிழ் எனப் படலாம். இலங்கையில் காலனித்துவ காலப்பகுதியின் பின்னர் பொதுக்கல்வியில் ஆரம்பக் கல்வியும் இடை நிலைக் கல்வியும் தாய்மொழி மூலமானதாக இருப்பதற்கான வாய்ப்பு பெரிதும் உண்டானதைத் தொடர்ந்து அறி வியலிலும் பொருத்தமான அரும்பதங்கள் உருவாக்கப்பட்டு அறிவியல் சொற்களஞ்சியம் பெரிதும் வியாபித்து வளர்ந்து வருகின்றது. பலசந்தர்ப்பங்களில் மூன்றாம் நிலைக் கல்வியிலும் தமிழ்மொழி பெரிதும் பயன்படுத்தப்படக் கூடியதாக இருக்கின்றது. இந்தநிலையில் அறிவியல் ரீதியிலான பிறப்பினைக் கொண்ட பல்வேறு பதங்களும் ஏனைய துறைகளிலான மெருகூட்டல், செம்மையாக்கங்கள், மேம்படுத்துகைகள் போன்ற பல்வேறு தேவைகளின் பொருட்டும் கூட பயன்படுத்தப்படலாயின. பல்வேறு துாய அறிவியல் தமிழ்ப் பதங்களும் பல்வேறு இலக்கியப் புலங்களிலும் கையாளப்பட்டு வருகின்றன. அறிவியல் வளர்ச்சி மேலோங்கியுள்ள இக்காலப்பகுதியில் அதன் பலாபலன்களை சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் அனுபவிப்பதற்கு அறிவியல் தமிழ் இன்றியமையாத தாகின்றது.
விஞ்ஞானம் எப்பொழுதும் புறவயத்தன்மையை வலியுறுத்துவது நடுவண் நோக்குடைத் தானது. விஞ்ஞானம் தனக்கென ஒழுக்க நெறிகளையும் சமூகப் பெறுமானங்களையும் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். எனவே அறிவியல் தமிழும் அத்தகைய பண்புகளைப் பிரதிபலிப்பதாக காணப்படுவது தவிர்க்க முடியாதது. அதேவேளை கடுமையான இலக்கண நியமங்கள் அறிவியல் தமிழில் பின்பற்றப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லாத போதும் அது இலக்கண வரம்புகளையும் வரையறைகளையும் கடந்த ஒன்றுமன்று. மேற்படி நியமங்களால் கணிசமானளவில் பாதிக்கப்படாத ஒன்றாக இருக்கலாம்.
தமிழ்மொழி பழமையான இலக்கண இலக்கியப் பாரம்பரியங்களை கொண்ட மொழியான போதும் வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கத்தக்க வகையில் 20ம்
அகவிழி - நவம்பர் 2012 / 33

Page 36
நுாற்றாண்டில் அதன் வளர்ச்சி அமையவில்லை என்பதுவே பொதுவான கருத்தாகும். ஆயினும் காலத்தால் பிந்திய வேறு பலமொழிகள் அறிவியல் பரிமாணங்களைப் பெற்று துரிதவளர்ச்சி கண்டுள்ளன.
எந்த ஒருமொழியும் ஸ்திரமான கட்டமைப்பையும் மாறாத பிரயோகத்தையும் சதாகாலத்துக்கும் ஒரே மாதிரியாகக் கொண்டிருப்பதில்லை. சமுதாய மாற்றங் களுக்கிணங்க இவை வேறுபடுபவையாக இருக்கும். வளர்ச்சியடைந்த மொழிகள் கூட தொடர்ந்தும் வளர்ச்சி யடைய வேண்டியவையேயாகும். வளரிளம் பருவத்திலுள்ள அறிவியல் தமிழிற்கும் இது பொருந்துவதாகும். இதனால் மொழிவளர்ச்சியில் ஏற்படக்கூடிய தேக்கமும் தெளி வின்மைகளும் நீங்கும்.
எண்ணிறைந்த சொற்கள் புதிதாக உருவாகவும் பிறமொழிச்சொற்கள் உள்வாங்கப்படவும் செய்யும். சமுதாயத்தினது தேவைகளை அடியொற்றியே இம் மாற்றங்கள் உள்வாங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் உயர்வு தாழ்வு, முன்னேற்றமடைந்த பின்தங்கிய, பொருத்தப்பாடுடைய, பொருத்தப்பாடற்ற இன்னபிற வேறுபாடுகள் களையப்படும். முதலில் மொழிவழக்கில் தேர்வு செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பாக எழுத் தமைப்புக்களை உருவாக்கி அவற்றினை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி சமுதாயப் பணிபுரிகின்ற வேளை சமுதாய ஏற்புடமையும் அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவதாக இருக்கும். - மொழியின் பொருட்டான தேவைகளை தெரிவு செய்தல், அவற்றினை ஸ்திரப்படுத்துதல், கல்வியியல் மற்றும் எழுத்தியல் வாழ்வியல் தளங்களிலான பயன்
347 அகவிழி - நவம்பர் 2012

பாடு, சமுதாய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய மாற்றங்களை உள்வாங்கி வளருதல் போன்றவை மொழிவளர்ச்சிக் கட்டங்களுள் பிரதானமானவையாகும். வளரிளம் பருவத்திலுள்ள அறிவியல் தமிழ் பொருத்தமான முறையில் வளர்க்கப்படாத விடத்து குறுகிய சமுதாயக் கண்ணோட்டங்களினால் அதன் வளர்ச்சி ஸ்தம்பித நிலையை அடைந்துவிடும். மொழிவளர்ச்சியின் பொருட்டு சமுதாயத்தினது சூழலியல் தேவைகளின் அடிப்படையில் பொருத்தமான குறிக்கோள்கள் இனங்காணப்பட்டு அவை பொதுமைப்படுத்தப்பட்டு தெளிவான நோக்கங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இவற்றினடிப்படையில் மொழிவளர்ச்சித் திட்டங்களின் பொருட்டான கொள்கை கள் உருவாக்கப்பட வேண்டும். கொள்கைகளது அமு லாக்கத்தின் பொருட்டான திட்டங்கள் தனித்தனியாக
வகுக்கப்பட்டு அவற்றின் அமுலாக்கத்தின் பொருட்டான செயல்முறைகள் புத்தாக்கம், எழுத்துருவாக்கம், ஸ்திரப்படுத்தல் என்ற பல்வேறு அடிப்படைகளில் செயல்முறை ஒழுங்குகள் தீர் மானிக்கப்பட்டு சமு தாயத் தினது இயங் குகை நகர் வு களுடன் பிணைக்கப்பட வேண்டும். சொல்லாக்கத்தின் போது சொற்கள் மூலப்பொருளிலிருந்து வழுவாதவையாக அமைய வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் அவை நீடித்து வழக்கிலிருக்கும் காலப்பகுதி குறைவானதாக அமையும். சிலவேளைகளில் சொற்களை எழுமாறாக உருவாக்கிக் கொண்டு அவற்றிற்கு பொருள் வியாக்கியானம் செய்ய விழைவது சிலவேளைகளில் எதிர்மறை விளைவுகளை உருவாக் கு வ தாக
அமையலாம்.
அவ் வப் போது அறிவியல் தமிழ்
வளர்ச்சியின் பொருட்டான பொருத்தமான மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் துலங்கல்களது மறுமதிப்பீட்டினடிப்படையில் மீண்டும் செயலொழுங்குத் தொடரின் ஆரம்ப கட்டங்களிலிருந்து பரிகார, மற்றும் செம்மையாக்கல் நடவடிக்கைகள் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இச்செயற் பாடு இடையறாத வகையில் மீண்டும் மீண்டும் குறித்த இலக்கினை அடையும்வரை தொடர்வதாக இருக்க வேண்டும்.
பிறமொழிக் கலப்பில்லாத மொழிநடையே விரும்பப் படுகின்ற போதும் அக்காலப் பகுதியில் சமுதாயப் பிரிவினருக்கும் நாட்டு மக்களுக்கும் கருத்துப் பரி மாற்றத்துக்கு எளிதானதாகவும் வலுவானதாகவும் அமை யும் மொழிநடையே பெரிதும் நீடித்துநிலை பெறுவதாக இருக்கும்.

Page 37
நடைமுறையிலுள்ள அறிவியல் தமிழ் மேம்பாட்டின் பொருட்டான கொள்கைகள் வெற்றியளிக்காது பிரச்சினை கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றிற்கான காரணங்களை கண்டறிந்து வேண்டிய திருத்தங்களைச் செய்ய வேண்டியது இன்றியமையாதது. மொழிவளர்ச்சித் திட்டமிடலில் மொழிக் கொள்கைகள் அவற்றைச் செயல்படுத்தும் முறைகள், செயற்பாட்டினைத் தொடர்ந்து கொள்கைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மாற்றப்பட வேண்டிய செயல்முறைகள் போன்றவை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். மொழிவளர்ச்சித் தன்னிறைவை தற்காலிகமாகவேனும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக/ பெகுசன், ஹாகன/பிஷ்மன், ரூபின், நியூஸ்துப்னி போன்ற மொழியில் ஆய்வாளர்கள் பல்வேறு விடயங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
புதுமையாக்கம், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல், எழுத்துருவாக்கம் என்பன தவிர கலைச் சொல்லாக்கம், எளிமையான எழுத்து முறைமைகளை அறிமுகம் செய்தல், இலக்கண விளக்கங்களை கட்டியெழுப்புதல், அகராதிகள் அருஞ்சொற் கோவைகளை உருவாக்குதல், பிறமொழிச் சொற்களை தழுவிய சொல்லாக்கங்களை மேற்கொள்ளுதல், எளிமையான இலக்கண நூல்களை உருவாக்குதல், மேற்படி விடயங்கள் தொடர்பாக பேண்தகு நிலையிலான நீடித்து நிலைபெறத்தக்க வழக்குகளை நடைமுறைப்படுத்துதல் பொதுவான அடிப் படைச் சொற்களை உருவாக்குதல் போன்றவையும் அறிவியல் தமிழ்வளர்ச்சியில் உறுதுணையாயமையும் நடவடிக்கைகளாகும்.
அறிவியல்தமிழ் தொடர்பான விடயங்கள், நடைமுறைகள் போன்றவை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பாரிய இடைவெளியை கொண்டவையாகும். உதாரணமாக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் பதங்களும் இலங்கை யில் பயன்படுத்தப்படும் பதங்களும் வேறுபட்டவையாகும். இதற்கு வரலாற்று புவியியல் சமூக பொருளாதார அரசியல் முதலான பல்வேறு தளங்களும் காரணமானவையாகும். இவ்விடைவெளியை படிப்படியாக குறைத்து இல்லாமல் செய்யத்தக்க வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு இரண்டு தொகுதியாரினதும் சர்வ தேசரீதியிலானதுமான ஒன்றிணைந்த இயைபுபடுத்தப்பட்ட நடவடிக்கைகளும் புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புக் களும் அகவயப்படாத, முனைப்பு மிக்க மனிதமைய வாதங்களினின்று விலகிய வாதப்பிரதிவாதங்களும் ஈற்றில் அடையப்படும் மனமொப்பிய பொதுவான கருத்தொருமைப் பாடுகளும் வேண்டப்படுவனவாகும்.
இலங்கையில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம், யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், தேசிய விஞ்ஞான மன்றம், அடிப்படைக் கல்வி நிறுவனம், துறைசார்ந்த

இரசாயனவியல் கழகம், பௌதிகவியல் கழகம், மருத்துவர் சங்கம், கணக்காய்வாளர் சங்கம், பொறியியலாளர் சங்கம், பொருளியலாளர் சங்கம் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம், கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், நெல் ஆராய்ச்சி நிறுவனம், தாவர பிறப்புரிமை மூலவளநிலையம், தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனம், தேசிய நீரியல்வள ஆய்வு நிலையம், சர்வதேச நீர்முகாமைத்துவ நிறுவனம், என்பனவற்றுடன் பெரும்பாலும் சகல பல்கலைக்கழகங்களும், மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களுள் பலவும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்பவையாகும். இவற்றின் ஆய்வு முடிவுகள் மக்களிடையே சுதேச மொழிகளில் எடுத்துச் செல்லப்படும் போது அவற்றின் பயன்பாடு பெரிதும் வினைத்திறன் மிக்கதானதாயமையும். எவ்வாறாயினும் சிங்களத்தில் இது மேற்கொள்ளப் படுவதனைப்போல தமிழிலும் நடைபெறுகின்றதா என்றால் அதற்கான வாய்ப்புகள் பெரிதும் அரிதானவையேயாகும். அறிவியல் ஆய்வுகளில் தங்கியதாதலால் அறிவியல் தமிழினது வளர்ச்சிக்கும் விருத்திக்கும் மேற்படி ஆய்வுகளும் அவற்றினை மேற்கொள்ளும் நிறுவனங்களும் அவற்றில் பணிபுரியும் தேசிய தமிழ் உணர்வு மிக்கவர்களது பார்வைகளும் நோக்குகளும் முயற்சிகளும் கூட இன்றி யமையாதவையாகும்.
உசாத்துணைகள் 01. கருணாகரன். கி., மொழிவளர்ச்சி, அண்ணாமலைப்
பல்கலைக்கழகம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம் 1981.
02. பாலசிங்கம் ஆனந்தி, "அரசியல் கதைகள்,” பத்திரிகையியல்
வழிகாட்டி, இலங்கை பத்திரிகை பேரவை, 2009.
03.
Furguson, C. A., "Language Development" in Language Problems of Developing Nations, J. A. Fishman et al, Wiley,
Newyork, 1968. 04. Haugen, E., Linguistic and Language Planing in Socio
linguistic, Mouton, Hague, 1966. 05. Fishman, J.A. Haugen, Language Loyalty in United States
of America, Mouton: Hague, 1966. 06. Joan Rubin and Shuy , R., "Language Standardisation" in
Language Planing Processes, SUP: Stanford 1972.
07. Neustupny, N.J., "Basic Types of Treatment of Language
Problems," Linguistic Communications, 1970.
அகவிழி - நவம்பர் 2012 / 35

Page 38
மெ6 குறைபாடு
இலந்
ஒரு வகுப்பறையைப் பொறுத்தவரையில் மீத்திறன் கூடிய மாணவர்கள் மெல்லக்கற்போர், உடற்குறை பாடுடையவர் கள், உளக் குறைபாடுடையவர் கள், கற்றல் இடர்பாடுடையவர்கள் என்று பலவிதத்திலும் மாணவர்கள் காணப்படுவர். இங்கு மெல்லக்கற்போர் மற்றும் குறைபாடுடைய மாணவர்களின் பண்பியல்புகள் அவர்களை கையாள்வதற்கான நடைமுறைகள் என்பன பற்றி ஆராயப்படுகிறது.
மெல்லக்கற்போர்
மெல்லக்கற்கும் மாணவர்களை ஏனைய சராசரி அல்லது சராசரிக்கு மேற்பட்ட மாணவர்களிலிருந்து பிரித்து அறிந்து கொள்ள உள் ஆற்றல் கற்றல் பண்புகள் பொதுவான அபிவிருத்தி போன்றவற்றினூடாக நோக்கிப் பார்க்க முடியும்.அவற்றைப் பின்வருமாறு தனித்தனியே நோக்குவோம்.
மாணவர் வகைப்படுத்தலில் பிரதானமான ஒரு பிரிவாக மெல்லக்கற் போர் (Slow Learners) காணப் படுகின்றனர்.இப்பிரிவனரே தெளிவாக வரையறை செய் வதிலும் தெளிவான எல்லைகளை வரையறுப்பதும் கடினமாகும். சராசரி மாணவர்களிலிருந்து மெல்லக் கற்கும் மாணவர்களை பிரித்துக் காட்டும் உடல் உள் சமூக வளர்ச்சி தொடர்பான தெளிவான எல்லைகளை கூற முடியாதுள்ளபோதிலும் ஆய்வாளர்கள் பல்வேறு அடிப்படைகளில் இப்பிரிவினரை வரையறை செய்துள்ளதைக் காணலாம்.
மெல்லக்கற்போர் உள் ஆற்றல் கற்றல் பண்புகள் பொதுவான விருத்தி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்யப்படுகின்றனர். அதன்
விளக்கத்தினை பின்வருமாறு நோக்குவோம்.
உள் ஆற்றல் (Mental Ability)
மாணவர்களின் நுண்ணறிவு அளவினைக் கொண்டு மீத்திறன் உள்ளோர் சராசரி நிலையில் உள்ளோர் உள் ஆற்றல் குறைந்தோர் என வகைப்படுத்தலாம். இதேவேளை உள ஆற்றலை அளவிடுவதிலும் அள வீட்டுமுறைகளிலும் பல கருத்து முரண்பாடுகள் காணப்
367 அகவிழி - நவம்பர் 2012

ல்லக்கற்போரும்
டைய மாணவர்களும் அபூபக்கர் நளீம்
வருகைதரு விரிவுரையாளர் பகை திறந்த பல்கலைக்கழகம்
படுகின்றன. எட்டி.சி.கெனடி போன்றோரின் கருத்துப்படி பரிகார நடவடிக்கைகளுக்காக நுண்ணறிவு ஈவு குறைந்த மாணவர்களை உள ஆற்றல் அடிப்படையில் மெல்லக் கற்போராகக் கருதுகின்றனர்.
கற்றல் பண்புகள் (Learning Characteristics) மெல்லக் கற்போரின் கற்றல் பண்புகளை தெளிவாக வரையறை செய்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் தனியாள் வேறுபாடுகள் இவ்வாறான பொது வான பண்புகளை வரையறை செய்வதற்கு சவாலாய் உள்ளன.மேலும் சில பண்புகள் பல்வேறு வயது மட்டங் களில் உள்ளவர்களிடமும் வெவ்வேறு உள ஆற்றல் உள்ளவர்களிடமும் காணப்படுகின்றன. இருப்பினும் மெல்லக்கற்போரின் பெருவாரியான கற்றல் பண்புகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
கற்றலின் போது ஒரு விடயத்தை கிரகித்து துலங்குவதில் தாமதமாக இருத்தல். சாதாரண மாணவர்களைவிட கற்றலில் அதிக பயிற்சி தேவைப்படுதல். மொழியாற்றல் குறைவு. கற்றலில் புது விடயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறைவு. கேள்வி கேட்டல் பதிலளித்தல் என்பனவற்றில்
ஆர்வம் குறைந்து காணப்படல். அறிவுறுத்தல்களை சரியாக விளங்கிக் கொள்ளாமை யும் நேரத்திற்கேற்ப இயங்காமையும். ஆராயும் திறன் நியாயிக்கும் திறன் என்பன மிகக் குறைவு. குறித்த நேரத்தில் குறிப்பிட்ட சில விடயங்களையே கற்றுக் கொள்ள முடியுமாக இருத்தல். மன ஒருமைப்பாட்டுத்திறன் குறைவு.
முயன்று தவறும் நிலை அதிகம் காணப்படுவதுடன் முடிவெடுப்பதிலும் தாமதம். பொருட்களை கையாள்வதில் ஆர்வம் இருப்பினும் அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை அறிவதில் ஆர்வம் குறைவு.

Page 39
தனிப்பட்ட பாராட்டு தனிப்பட்ட கவனம் என்பவற்றை
அதிகம் விரும்புவர்.
பொதுவான விருத்தி (General Development)
மெல்லக் கற்கும் மாணவர்களின் பொதுவிருத்தியிலும் சில குறைபாடுகளை அவதானிக்கலாம். இவர்களின் பல் பண்புகளும் நடத்தைக் கோலங்களும் சாதாரண மாணவர்களிலிருந்து வித்தியாசப்படும். இவ்வித்தி யாசங்கள் மெல்லக் கற்கும் எல்லா மாணவர்களிடமும் இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது இருப்பினும் இவற்றில் பெருவாரியானவற்றை இவர்களிடம் காணலாம். அவ்வாறான பொதுவான விருத்தி தொடர்பான பண்புகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
உடல் வளர்ச்சியில் பின்னடைவும் உடலியக்க ஒருங்கிணைப்புக் குறைவும். சமூக நிலைமைக்கு சீராக்கம் அடைவதில் தாமதம். விடையளிக்கும் போது தயங்கும் நிலை காணப்படல் தனது வயதுப் பிள்ளைகளின் நடத்தையை விட சிறுபிள்ளைத் தன்மை அதிகம். நிலையற்ற மனவெழுச்சியும் இலகுவாக கலவரம்
அடையும் தன்மையும். மந்த நிலையும் கவனக் குறைவும். நினைவாற்றலும் கவனமும் குறைவு.
ஒப்படை பயிற்சி செய்ய ஏனையோரின் உதவி தேவைப்படல். சுயாதீனமாகக் கற்பதில் ஆர்வமின்மையும் வேலை களைப் பூர்த்தி செய்வதில் ஒழுங்கின்மையும் சொற்பிரயோகக் குறைவும் துண்டு துண்டாகப் பேசுதலும் பின்னோக்கிய செயற்பாடுகள் (உ-ம் - வலமிருந்து
இடமாக எழுதுதல்) பல தடவை அறிவுறுத்தல் சொல்ல வேண்டிய நிலைப்பாடு
உடற் குறைபாடுடைய மாணவர்கள் உடற்குறைபாடு எனும் எண்ணக்கரு மிகப் பரந்ததாகும் ஏனெனில் இப்பகுதியில் பல விதமான உடற்குறைபாடுகள் உள்ளடக்கபடுகின்றன. கல்விப்புலத்தில் பொதுவாக வழங்கப்படும் கல்விச் சேவைகளை சரியான விதத்தில் அனுபவிக்க முடியாத ஒரு பிரிவினராக இவர் கள் கணிக்கப்படுகின்றனர்.
பிறப்பின் போது அல்லது பிறப்பின் பின்னர் ஏற்பட்ட விபத்து பாரிய நோய் போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் உடற் குறைபாடு ஏற்படலாம். ஒருவரின் பொதுவான செயற்பாடுகளை சாதரணமாகச் செய்ய முடியாமல்

வரையறைப்படுத்தும் உடல் சார்ந்த ஊனங்கள் உடற் குறைபாடு எனப்படும். -ஹார்ட்மன் (Hardman) போன்றோர் குறிப்பிடுவது போல உடல் சார்ந்த இடைஞ்சல்கள் ஒருவரின் அசைவுக்கும் இயைபாக்கத்திற்கும் தடங்கலாக அமையும். மேலும் அது பிள்ளையினது தொடர்பாடல் கற்றல் இசைவாக்கம் ஆகியவற்றிலும் தாக்கம் செலுத்தும்.
பல்வேறு விதமான உடற்குறைபாடுகள் காணப் படுகின்றன. பொதுவான அடிப்படையில் உடற்குறை பாடுடைய மாணவர்களை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
பார்வைக்குறைபாடுடைய மாணவர்கள் ஒருவர் ஏதாவது ஒன்றை சாதாரணமாக காண்பதைத் தவிர்க்கும் வகையில் அவனது கண்ணில் அல்லது பார்வை நரம்பில் (Optic news) காணப்படும் ஏதாவது ஊனம் அல்லது செயற்பாட்டுக் குறைபாடு பார்வைக் குறைபாடாகும். இதன் உச்சநிலை குருட்டுத்தன்மையாகும்.
பார்வைக் குறைபாடுடைய மாணவர்களின் நடத்தை யாகப் பின்வருனவற்றைப் குறிப்பிடலாம்.
கண்களை அடிக்கடி துடைத்தல்.
அடிக்கடி கண் இமைத்தலும் ஒளிக்கு உறுத்துணர்ச்சி காட்டலும் வாசிக்கும் போது கண்களை கோணலாக்குதல் வாசிக்கும் போது மிக அருகில் வைத்து வாசித்தல் அல்லது தூரத்தில் வைத்து வாசித்தல். தவறாக வாசித்தலும் அனுமானித்துக் கூற
முனைதலும் இவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கற்றலில் ஈடுபடுத்துவது அவசியமாகும்.
செவிப்புல குறைபாடுடைய மாணவர்கள்
காதின் அல்லது கேள்வி நரம்பின் செயற்பாட்டுக் குறைபாடு காரணமாக ஒருவருக்கு சூழலில் ஏற்படும் ஒலிகளை கேட்பது தடுக்கப்படுமாயின் அது செவிப்புலக் குறைபாடாகும். இது செவிப்புலக் குறைவு நிலை செவிட்டுத்தன்மை என இருவகைப்படும். இது தற்காலிகமானதாக அல்லது நிரந்தரமானதாக இருக்கலாம். இவர்கள் வெளிக்காட்டும் நடத்தைகளாவன
செவிமடுக்கும் போது தலையைத் திருப்புதல் பிறர் பேசுவதை விளங்கிக் கொள்ள முடியாமை. கவனக் குறைவும் குழுச் செயற்பாட்டில் விருப்ப மின்மையும். வாய்மொழி மூல அறிவுறுத்தலுக்கேற்ப செயற்பட இடர்படல்.
அகவிழி - நவம்பர் 2012 / 37

Page 40
பேச்சுக் குறைபாடுடைய மாணவர்கள்
பேச்சுக் குறைபாட்டை வரையறுப்பது கடினமானதாகும். ஏனெனில் இதில் பலதரப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப் படுகின்றன. சொல் உச்சரிப்புச்சீரின்மை, குரல் சீரின்மை, சொல் வெளிப்பாட்டுச் சீரின்மை, திக்குவாய, சொற்கள் வரத் தாமதமாதல், ஒரு சொல்லை பல தடவை உச் சரித்தல் பேச விரும்பாமை அறவே பேச முடியாமை போன்றவை அனைத்தும் பேச்சுக் குறைபாட்டுக்குள்
அடங்கும்.
அங்கவீனமுடைய மாணவர்கள் உடல் உறுப்புக் குறைபாடுகள், உடல் ஊனங்கள் அசாதாரண உடலுறுப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட பிள்ளைகள் அங்கவீனமுடைய பிள்ளைகள் எனப்படுவர். இது பிறப்பின் மூலம் அல்லது பின்னர் ஏதாவது காரணங்களால் ஏற்படலாம். சில உடலூனங்களை வெளிப்படையாக அறிவது கடினமாகும்.அதேவேளை அம்மாணவர்களின் சில நடத்தைகளை வைத்து குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.
உளக்குறைபாடுடைய மாணவர்கள் உளக்குறைபாடுடையோர் சாதாரண நுண்மதித் தொழிற் பாட்டை விட குறைவான நுண்மதித் தொழிற்பாட்டைக் காட்டுவர். உயிரியல் சமூக பிற காரணிகளும் உளக் குறைபாட்டில் ஆதிக்கம் செலுத்தலாம். இவ்வாறானவர்களை இரு வகைப்படுத்தி நோக்கப்படுவதுண்டு.
குறைந்த உளக் குறைபாடுடையோர். நடுத்தர உளக் குறைபாடுடையோர். உளக் குறைபாடுடையவர்களுக்கு ஞாபகம் வைத்தல், பொதுமையாக்கம் செய்தல், கவனம் செலுத்துதல் பேச்சுத்திறன், உடலாரோக்கியம் போன்றவை குறைந் தளவிலேயே காணப்படும்.
ஆரோக்கியக் குறைபாடுடைய மாணவர்கள் ஆரோக்கியக் குறைபாடும் உடற் குறைபாடாகவே கருதப்படுகிறது. உடல் சார்ந்த ஆரோக்கியத்தில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் விடயமே ஆரோக்கியக் குறைபாடாகும். இருதய நோய்கள் கோளாறுகள் ஈழை இளம் பிள்ளை வாதங்கள், காசநோய், நீரிழிவு நோய், குஷ்டம், வலிப்பு, குருதிச்சோகை போன்றவையே விஷேட ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும் நோய்களாகும்.
மேலுள்ள உடற்குறைபாடுகள் ஒரு மாணவனின் கற்றல் நடவடிக்கைகளில் பெரிதும் தாக்கம் செலுத்துபவையாகும். எனவே அவற்றுள் தகுந்த பரிகாரங்களை காண்பது அவசியமாகும்.
38 / அகவிழி - நவம்பர் 2012

ஆசிரியரின் பங்கு
வகுப்பறையில் ஆசிரியர் பல்வேறு தன்மைகளையும் வகைகளையும் உடைய மாணவர்களோடு கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படுவது இயல்பானதே இச்சந்தர்ப்பங்களில் ஆசிரியர் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்வது அவசியமாகும்.
மாணவர்களை அறிந்து அவர்களை வகைப்படுத்தி அதற்கேற்ற விதத்தில் கற்பிக்கும் போதே கற்பித்தல் வெற்றிகரமானதாக அமையும். எனவே மெல்லக்கற்போர் கற்றல் இடர்பாடுடையோர் அதீத நடத்தை உடையோர் உடற்குறைபாடுடையோர் உளக் குறைபாடுடையோர் போன்ற மாணவர்களின் அசாதாரண நிலமைகளை அறிந்து கொள்வதற்கு இவ்வாறானவர்களின் நடத்தைகள் தன்மைகள் என்பனவற்றை ஆசிரியர் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
ஒவ்வொரு விதமான மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் பாடத்தைத் திட்டமிட்டுக் கற்பிப்பதும் அவசியமாகும். மேலும் சில குறைபாடுகளை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியுமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அம்மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு வைத்தியரின் ஆலோசனையைப் பெற வழிசெய்யலாம்.
சில குறைபாடுகளையுடைய மாணவர்களுக்கு அதிக கண்காணிப்புத் தேவைப்படலாம். உதாரணமாக உளவளர்ச்சி குன்றிய மாணவர்களைக் குறிப்பிடலாம்.இவ்வாறான மாணவர்களில் அதிக கவனத்தைச் செலுத்துவதும் ஆசிரியரின் கடப்பாடாகும்.
மெல்லக்கற்போரைப் பொறுத்தவரை அவர்களுடைய வேகத்திற்கேற்ற வகையில் கற்பித்தலை மேற்கொள்வது அவசியமாகும்.படிப்படியாகவும் சிறு சிறு அம்சங்களாக தொடராகவும் கற்பிக்கப்பபட வேண்டும்.
தற்காலத்தில் உள்ளடங்கல் கல்வி (Inclucing Education) என்ற எண்ணக்கரு வளர்ச்சி பெற்று அசாதாரண மாணவர்களையும் சாதாரண வகுப்பறைகளில் வைத்துக் கற்பிப்பதற்கான கருத்தாடல்கள் வலுப் பெற்றிருப்பதால் இவ்வாறான விடயங்களில் ஆசிரியர்களும் அதிக கவனம் செலுத்தி அது பற்றிய எல்லா அம்சங்களையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
உசாத்துணைகள்
02.
01. லத்தீப், எம்.ஐ, (2007) "பரிகார கற்பித்தல் நுட்பங்கள்”
சுதைஸ் அன் பிரதர்ஸ், பாலமுனை. இ.தி.ப.க, (2002) "கல்வி வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் தொகுதி-11” இலங்கை திறந்த பல்கலைக் கழகம்,
நாவல நுகேகொட. -
03.
முத்துலிங்கம், ச, (2002) “கல்வியும் உளவியலும்-பகுதி-11” கொழும்பு.

Page 41
மாணவர் அடைவும் அடிப்படை புள்ளி
5ஆம் தரத்தின் புலமைப்பரீட்சில் பரீட்சையில் 70 புள்ளிகள் அல்லது அதனை விடக்கூடுதலாகப் பெற்ற மாணவர்
விகிதாசாரம் 2007-2009
(ஒரு வினாத்தாளுக்காகக் குறைந்தபட்சம் 35 புள்ளிகள் வீதம்)
ஆண்டு
எண்ணிக்கை
விகிதாசாரம்
2007
166,934
53.33
13Կբնոնայttentinuts-յtlԿրիսդրոսովեյtlւյր-բորսմասվարեւդումյդմոկրատնելուներսեհիսլին ընդյայումրնջագուրինցեսս սարսափ:1միլմ:
ப-ahaHங்கன்பாபாசTI-EHLAHATitாபசாயி-EHtHE
TETsathi 1AHaasantas4uundாபெரியவாள்பியலயாயகப்பகம்11:ாய பட்டயப்
2008
108,545
20.45
300
167,802
47.63
முலம்: இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளி களை விடக்கூடுதலாகப் பெற்றமாணவர் எண்ணிக்கை 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 58மூ ஆக இருந்தது. ஆரம்பக்கல்வியில் உயரிய அடைவுமட்டத்தை உறுதி செய்யும் வகையில் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்காக பல வேலைத் திட்டங்கள்அமுல்ப்படுத்தப்பட்டன. 70 புள்ளிகளைவிடக் கூடுதலாகப் பெற்ற மாணவர்களுக்காக விசேட தகைமைச் சான்றிதழ்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த. உயர் தரம் பரீட்சையில் பாடசாலை விண்ணப்பதாரிகளின்
அடைவு மட்ட்டம் 2005 - 2009
க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்த க.பொ.த. உயர்தரம்) கற்க
தகைமை பெற்ற
பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்க தகைமை பெற்ற எண்ணிக்கை
எண்ணிக்கை
விகிதாசாரம் எண்ணிக்கை விகிதாசாரம்
2005
47.72
146,862
எந்+ெTAMாபாலன சபையாங்டிங்டிங்: பாதுகாப்பெறும்
102,854
59.20
ՍկիսաերոդիտղոսյviէկրոդուկտըՆյուկչյուսհեդյարուրադյարսկուրոյոկաոԱրտահոգ (լԱելլայ, Ասատլարովայրերում:
2006
144,348
48.70
103,557
52.40
WWWWWகையாளமாயAkasaRENTHEMFHEAMாயணாயாமாhகாகாசிங் பா4EMHNAMAMமயாயமாமWinL
2007
153,460
49.14
104.479
61.41
2008
175,399
55.65
112.866
62.89
սկHalյոր+ւսաyurrik-uԻՐՆորականերոկյաբաբիթայմ-բ
2009
150,797
48.51
108,725
61.21
மூலம்: இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்

பட்டம் தொடர்பான பிபரத் தகவல்கள்
க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சையில் மாணவர் அடைவு மட்ட்டம் விகிதாசரம்
2005 - 2009
1000
6000
5000
*க.பொ.த. (சா.த)]
பரிட்சையில் தோற்றி க.பொ.த. (உ.த.) வகுப்பிற்கு தகுதியுள்ளன வர்கள்.
40.00
30.00
தகைமை பெற்ற விகிதாசாரம்
20.00
"பல்கலைக்
கழகத்திற்ரு விண்ணப்பிக்க தகுதி உடையோர
10.00
000
2005 2006 2007 2008 2009
වසර மூலம்: இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
மேற்கூறப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு அமைய க.பொ.த. (சாதாரண தரபம்)பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த. (உயர்தரம்) ஐத் தொடர்வதற்காக 50 சதவீத மாணவர்கள் தகைமை பெறுகின்றனர். இதனைத் தொடர்ந்தும் விருத்தி செய்வதற்காகப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாதிரி வினாத்தாள்கள், கடந்தகாலப் பரீட்சை வினாத் தாள்கள், தவணைப் பரீட்சைகளை விரிவுபடுத்தல், பரீட்சையை இலக்காகக் கொண்ட கருத்தரங்குகளை நடாத்துவதும் இதன் பிரதான பணிகளாகும்.
க.பொ.த (உயர்தரம்) பரீட்சைப் பெறுபேறுகளை முறையாக விருத்தி செய்யப்படுகின்றமை மேற்கூறப்பட்ட எண்ணிக்கை மூலம் இனங்காணமுடியும். இதனால் உயர்தரக் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்தும் சவால் சமகாலத் தேவையாக மாற்றம் பெற்றுள்ளது.
க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சைக்காக பல பாடங்கள் தொடர்பாக (முதல் தடவையில் தோற்றிய) பாடசாலை விண்ணப்பதாரர்களின் அடைவு மட்டம் 2005 - 2009
90
கணிதம்
விஞ்ஞானம்
ஆங்கிலம்
சித்திபெற்ற விகிதாசாரம் 5 8 8 8 8 8 8 8 8
என சிங்கள மொழியும்
இலக்கியமும்
தமிழ்மொழியும் இலக்கியமும்
2005
2006 .
2007 2008 2009
ஆண்டு மூலம்: இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
அகவிழி - நவம்பர் 2012 / 39

Page 42
க.பொ.த. (உயர்தரம்) கற்பதற்குத் தகைமைபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதனால் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்த மாணவர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வேண்டும்.
பாடங்களுக்கமைய பெற்றுள்ள பெறுபேறுகளுக்கமைய மொத்தமாக அடைவுமட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. கணிதப் பாடத்தின் அடைவுமட்டம் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை தொடராக 44% தொடக்கம் 50% ஆக அதிகரித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம். விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களின் அடைவு மட்டம் தொடர்ந்தும் விருத்தி செய்யப்பட வேண்டும். தாய்மொழியாகசிங்களம் மற்றும் தமிழ்மொழியின் அடைவுமட்டம் உயரிய மட்டத்தில் காணப்படுகின்றது.
4 ஆம் தரத்தின் மாணவர்களின் கற்றல் அடைவுமட்ட ஒப்பீடு
மேடம் பள்ளிகளைவிடக்
அதகைய போர்
மானவர்களின் விகிதாசாரம் மாகாணங்கள்
தாய்மொழி
கணிதம்
ஆங்கிலம் 2003 2007
2009
2003 1 2007
2009
2003
2007
g மேற்கு
81.7
882
863
805
88.8
85.5)
53.11
80
41 மத்திய
77.0
794
85
635
90
768
31.5
446
55g தெற்கு
72.0
833 |
88.11
115
4.3
852
36.0)
54.8
524 வடக்கு
51.0
78.7 / 83.7 | 53.3 |
76.5
79.5)
22,9)
399
48 கிழக்கு
57.7
727- 73.7
523
74.6
219)
1443
419 வடமேல்
751
83537.1
740
&5.7
364
320
549
648 வடமத்தி
707
834 |
31
721
4.5
81.8
293
433
0.6 ஊவா
54.2
T74 |
8
625
78.1
808)
27.3
403
519 சபரகமுவ
70.8 1 814 ) 36.5
3.5
82.6
87.1 / 33.41 467 | 42 மொத்தம்
689
81.11,
829 / 6.5 | 81.5 - 8t.831.9 ) 43.5 | 534 மூலம்: மேற்கூறப்பட்ட காற்றில் என்றால் அடைவுட்டம் தொடர்பாக தேசிய மதிப்பிரு,
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு மத்திய நிலையம்
4ஆம் தரத்தில் மாணவர்களின் கற்றல் அடைவு மட்டத்துடன் ஒப்பீடு செய்யும்போது தாய் மொழி, கணிதம், ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களின் அடைவுமட்டம் 2003ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2009ஆம் ஆண்டில் வளர்ச்சியைக் காண்பிக்கின்றது. இது எவ்வாறாயிருப்பினும் ஆங்கிலமொழியின் அடைவுமட்டம் தொடர்ந்தும் விருத்தி செய்யப்பட வேண்டும். அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
8 மற்றும் 10ஆம் தரங்களின் மாணவர்களது கற்றல் அடைவு
மட்டம் - 2005 மற்றும் 2008
அகம் -
46.38
மேற்கு மத்திய தெற்கு
42.82
44.86
வடக்கு
தோ ம் காம்
கேரட்
ஆப்காழி
விருந்தார்
விஞ்ஞானம் மற்றும்
கவிதம்
மற்றும்
பர் தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் 2005 2006 2005 2006 2005 2008
20
2003 63.30 $4.13
56.7353.78
48.45 56.90 80.91
50,76 3,051.82
52.8557.5
44.8a 49,30 58, 80
4.9.09 58.40) 53.03
| 50.3353.3
44.27 48.54 / 60.75
54.32 53.45 -டி. 27
5,93 / 17.0)
57,75
0.50 57.79 57.14
53.15 / 4 3.?
144.753, 45. 98
58. ts
50.00 81.04 85.51 |
51.34 153.38
52.69
50.8
51.34 80. 43அ 68,37
47.20 | 5.12 45.34 48.35 3.52
49.59 5874i 6.39)
5235229
43.27 45.57 57.23 |
48.33 &g.65 $1.90
54.43| 58.36 44.48|50.42) 58,52
49.25
59.89) 59.87) 53.79 58.32
145.19
150.45)
58.61
43.87
48.18
44.94
கிழக்கு வடமேல்
44 18
வடமத்தி உளவா
43.83
சபரகமுவ
44.18
மொத்தம்
407 அகவிழி - நவம்பர் 2012

8ஆம் தரத்தில் மாணவர்களது தாய் மொழி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், கணிதம் ஆகிய பாடங்களின் அடைவுமட்டம் 2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2008ஆம் ஆண்டில் வளர்ச்சிகண்டிருப்பதைக் காண முடிவதுடன் மொழி ரீதியிலான புள்ளிகள் தொடர்ந்தும் அதிகரிக்கப்பட வேண்டும். 10ஆம் தரத்திலும் இந்நிலைமையை இதேவாறு காண முடிகின்றது. மாகாணங்களுக்கு அமைய ஒப்பீடு செய்யும்போது சிறிய முரண்பாடுகளை காணமுடியும். இந்நிலைமையை நிவர்த்தி செய் து மாகாணங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் குறைக்கக்கூடியவாறு மொத்த மாணவர் அடைவுமட்டத்தை மேம்படுத்த பல வேலைத்திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விச்சுட்டிக்கமைய கல்வியின் முன்னேற்றங்கள் மற்றும் பண்பு சார் விருத்தி ஒப்பீடு 1994,
2007, 2009
*-*-"போரோ?" -11 1ா -1சரி பா4ா' சமய-ச- மட்டிங் 1444 1144)சாமசl#டி:சேப்-டிசரிடா!
சொத்சாசாகர்பா எச்சtirாாாாாமோ
கல்விச்சுட்டி
10
200ர் 2009 க.பொ.த. (சா.த) சித்தியடைந்த விகிதாசாரம்
22 51
49 14
48 51 க.பொ.த. (உ.த) சித்தியடைந்த விகிதாசாரம்
44.91 61,41
51.21 எழுத்தறிவு
30. 10 / 4.அ) தகவல் தொழில்நுட்ப எழுத்தறிவு(5-69 வயதெல்லை
16.!
2003 சனத்தொகையை கருத்திற் கொள்ளும்போது) ஒரு மாணவனுக்கான கல்விக்கான செலவினம்
16620 18905 23,607 சுத்திகரிப்பு வசதிகள்கொண்ட பாடசாலைகளின் எண்
63.58 178.16
95.4, ணிக்கை மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையின் % நூலக வசதிகள் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 49.0
53.)
63.0 மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையின் 6 கணினி வசதிகள் கொண்ட 1AB மற்றும் 10
10.0 |
80.0
30.3 பாடசாலைகளின் எண்ணிக்கை விகிதாசாரமாக கணினி வசதிகள் கொண்ட 2 மற்றும் 3 வகையின்
20
80
16.? பாடசாலை மொத்த எண்ணிக்கையின் விகிதாசாரமாக ஆசிரியர் மாணவர் விகிதாசாரம்
2:1
18:1
17:1 1AB பாடசாலை எண்ணிக்கை
566 1 681700. 5ஆம் தரம் வரை தேங்கி நிற்கும் விகிதாசாரம்
37.7
38.2 9ஆம் தரம் வரை தேங்கி நிற்கும் விகிதாசாரம் -
32.2 மூலம்: இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், தடிசா புள்ளிவிபரத் திணைக்களம், கல்வி அமைச்சு
95.8
கபா(st:ார்141 ALEn in: யAIm1:15 A11:512 14:11pxil#14:11limbi11:41:11:56:41
குறிப்பு:
1 AB பாடசாலை - க.பொ.த. (உயர்தரம்) விஞ்ஞானம், கலை,வர்த்தகம் ஆகிய மூன்று பாட விதானங்கள் கொண்ட பாடாசலைகள்
1 C பாட சாலை க.பொ.த. (உயர்தரம்) கலை, வர்த்தகம் ஆகிய பாடவிதானங்கள் மற்றும் கொண்ட பாடாசலைகள்
வகை 2 பாடசாலை - க.பொ.த. (சாதாணர தரம்) மட்டும் நடைபெறும் பாடசாலைகள்
வகை 3 பாடசாலை - ஆரம்பத் தரங்கள் மாத்திரம் நடைபெறும் பாடசாலைகள்
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்விச் சுட்டியின் மூலம் காண்பிக்கப்பட்டிருப்பது கல்வி முறைமையின் திருப்திகரமான முன்னேற்றங்களாகும். இதற்கமைய

Page 43
1994ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சகல கல்விச் சுட்டிகள் மூலமும் குறிப்பிடத்தக்களவு விருத்தி காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்காகக் கல்விக்கான அரசின் முதலீட்டைப் பயன் மிக்கதாகப் பயன்படுத்தி இலங்கையின் மனிதவள விருத்தி செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்விச் செலவினம் ஒரு மாணவனுக்கான கல்விச் செலவினம் - பொதுக்
கல்வி (2007 - 2010)
30,000.00 -
2004.10
13 SLY)
25,000.00
பெ
18.05.12
20,000.00
15,000.00
ஒரு மாணவனுக்கான கல்விச் செலவு
10,000.00
5,000.00
0.00
2ப்பு
2009
201]
2008
ஆண்டு
மூலம்: கல்வி அமைச்சு
2007ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்போது 2010ஆம் ஆண்டின் ஒரு மாணவனுக்கான செலவினம் 37% வீதத்தினால் அதிகரித்துள்ளது. கல்விக்கான எதிர்கால முதலீடாகக் கருத்திற்கொண்டு கல்விக்காக ஒதுக்கப்படும் அரச நிதியின் அளவை தொடர்ந்தும் அதிகரித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
பொதுக்கல்விக்கான முதலீடு 2005 - 2009
கல்விக்கான செலவி, ரு.மி
ஆண்டு
மீண்டெழும் செலவினம்
முலதன செலவினம்
மொத்த கல்விக்கான செலவினம்
. மில்லியன்
2005
45,737.75
7,556.16
யா- IIHAாப்-1பாயாயாயாக
53,293.91
2008
58,872.57
5,308.35
64,181.52
2007
காட்டாங்கொட்டாடாடாடாடலாக்ராபானாயடிக்காட்டாபய டோக்காக கொப்பரெட் டாப்
64,822.68
9,705.09
74,527.75
2008
76,554.26
8,158.53
84,712.79
2009
83,447.85
7,743.53
91,191.38
மூபம்: அற்வி அமைச்சு
- 2 -3

பொதுக்கல்விக்கான முதலீட்டு அபிவிருத்தி (2005 - 2009)
100)
00
200)
1 மூங்தன முதண்டு
10th
இn,
கல்விச் (செலவி ரூபா. மில்லியன்
நடைமுறை
கொ
ஆm
20,ற
ர மொத்தக்
கலைவாண (செலவு ரூ.
n,
100
தி
ஆண்டு
பொதுக்கல்விக்கான அரச முதலீடு 2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 2009ஆம் ஆண்டின் அதிகரித்துள்ள விகிதாசாரம் 71% ஆகும். இம்முன்னேற்றம் மீண்டெழும் செலவினத்தில் காணமுடிகின்றது. அத்துடன் மூலதனச் செலவினத்தில் அம்முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக முடியுமான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் கல்வி மட்டம் தெற்காசியப் பிராந்தியத்தில் ஏனைய
நாடுகளில் கல்வி மட்டத்துடன் ஒப்பீடு செய்யும் போது
[பா-கடா4ாப்-கப்பட 4ாகாப்புக்கா14:
நாடு
ஆவணப்படுத்தப் | ஆரம்பப்
3ஆம் தரம் ஆரம்பத் தரங் பட்ட மாணவர்
பயிற்சி
வரை தேங்கி களில் மீளத் விகிதாசாரம்
ஆசிரியர்களின்
நிற்கும் தேங்கி நிற்கும் ஆரம்ப இடைநிலை "2 விகிதாசாரம் விகிதாசாரம்
- விகிதாசாரம் ... -------
பங்காளதேசம்
88
41
54
55
பூட்டான்
47
91
Ta1-TT-'மே1 In's!Tா ப-1Tu-ER TI'பொடாயTu-TATE
அடு
இந்தியா
96
HHHHHArthritiitt-144-4-1ாட்டப் - 11244. ம்.ப-12-ன்ட்ittlாப்ட்12:1tt=ய12ாடகொட பாஈETEாபீ-121212ார்: 1216-ரெயபுர்ரய-1Ettu Fெr-r:பாயம்1hiF14:41செபடே 117பயபடி-II-ஒய்-2121பப4-11யாபாரி
இ-Aெ+E-ட-சடி1443-5படியடி-14:14:15:54:11LHஒரி-14:24:2121ENAH1H-4 1ெ1யாப்போம்-12:14-1பராபடி படி11LIAHAri-Hirl-HLATIEாடியா-பெபபாசான் 16
பொ பாடாபாட்- ரெடாப்ாட்டப்படாபாயாம்.
மாலைதீவு
96
75
68
24
Mrt-TmThாக்-TE-TAT-ராகாசம்- mi-பைக்-ta-Ti-வா-T-TH-Tiாபக+E-mai4-1-1ாபாட்ரா-11--0--04-lாக =ெipt4jா-ர-ப்ரlizi--பகரா trEelா - Hign
நேபாளம்
69
74
4tirindendirsteinsteiridiumittiaktadkikritirtiestettir. Eurektori
ல் -
பாகிஸ்தான்
66
3
பி
அராரா--------
இலங்கை
99
4)
95
08
மூலம்
அகணருக்கும் கல்விச் சுட்டி - டி (Global Ection பாகம் - 200)
அகவிழி - நவம்பர் 2012 / 41

Page 44
கல்வி அமைச்சு கல்விசார் ந
தேசிய கல்வி நிறுவகம்
நோக்கு : பல்வகை இன சமூகத்துக்கு பண்புசார் கல்விக்கான தலைமைத்துவத்தினை வழங்கும் அதி சிறந்த மத்திய நிலையமாக மாற்றம் பெறல். மொத்த முதலீடு : 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடு செய்யும் போது செலவினம் 416 மில்லியன் ரூபாவாகும். - 2012 மதிப்பீடு செய்யப்பட்ட செலவினம்: ரூபா 74 மில்லியன் ஆகும்.
பாடவிதான நவீன மயப்படுத்தல் : கடந்த 5 ஆண்டு களுக்குள் மேற்கொள்ளப்பட்ட மொத்த பாடவிதான சீர் திருத்தச் செயற்பாடுகள் 2011 ஜூன் 30 ஆந் திகதி பூர்த்தி செய்யப்பட்டது. அதற்குரியதாக இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் வழிகாட்டிக் கையேடுகள் 101 இல் எஞ்சியிருந்த 12 ஐத் தயாரித்து அவற்றைப் பூர்த்தி செய்தல்.
க.பொ.த. உயர் தர விஞ்ஞான மற்றும் வர்த்தகப் பாடவிதானத்தைச் சீர்திருத்தல். க.பொ.த. (உ.த.) விஞ்ஞான பிரயோகப் பரீட்சை ஆலோசனை நூலைத் தயாரித்தல்.
க.பொ.த. (உ.த.) தொழிநுட்பப் பாடத்துக்கான கற்றல் நூல்களைத் தயாரித்தல்.
9 ஆந் தரத்தின் கணித செயல்நூல் மற்றும் 10 ஆந் தரத்தின் கணிதம் ஈ-உள்ளடக்கத்தைத் தயாரித்தல்.
6 - 11 ஆம் தரங்களின் சுகாதாரம் மற்றும் உடற் கல்விக்கான தகவல்கள் மற்றும் தொடர்புசாதனத் தொழிநுட்ப கற்றல் பொருட்களைத் தயாரித்தல்.
பாட இணைக் கற்றல் மென்பொருளாக்கம்.
ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் கொள்ளளவு விருத்தி.
ஆராய்ச்சிகளை வெளியிடல்.
பிரெய்ல் கற்கைப் பொருட்களைத் தயாரித்தல்.
427 அகவிழி - நவம்பர் 2012

சுடன் இணைந்த றுெவனங்கள்
கல்வித் தலைமைத்துவ விருத்தி மற்றும் ஆசிரியர் கல்வி :
கல்வி முகாமையாளர்களின் ஆசிரிய கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் அபிவிருத்தியை விருத்தி செய்வதற்கான பாடநெறிகளை நடாத்துதல். முன்னைய ஆண்டுகளின் சந்தர்ப்பங்கள் தவற விடப்பட்டிருந்த தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்கி 2011 ஆம் ஆண்டில் 1737 தமிழ் மொழி மூல ஆசிரிய கல்வியியலாளர்கள் பாடநெறிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பிப்பது தொடர்பாக மற்றும் சிறு பராய அபிவிருத்தி தொடர்பாக டிப்ளோமாப் பாடநெறி நடாத்தப்பட்டது.
நீடித்த நிரந்தர அபிவிருத்திக்கான கல்வி வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிரிய கல்வியலாளர்களுக்கு பயிற்சியளித்து அதன் மூலம் 3000 கல்விக் கல் லூரி ஆசிரிய மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப் பட்டன.
தேசிய கல்வி நிறுவகத்தின் பரீட்சை முறைகளைப் பலப்படுத்தியமை இவ்வாண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட
அதிவிசேட வெற்றியாகும்.
மாற்றுக் கல்வி :
பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள் மற்றும் வயது வந்த குழுக்களுக்காக திறந்த கற்கை யோசனைகள் மூலம் தொலைக்கல்வியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் 10 மத்திய நிலையங்கள் தற்போது அமுலில் உள்ளன. edr தொலைக்காட்சி வேலைத்திட்டம் ' தேர்ச்சி' வானொலி நிகழ்ச்சி 'நல்லிணக்கம்' இலத்திரனியல் சஞ்சிகைகள் மற்றும் இறுவெட்டுக்களைத் தயாரிப் பதன் மூலம் பல்வேறுபட்ட விடயங்கள் ஊடாக பாடசாலையைப் போன்று ஏனைய சமூகமும் கற்றல் சமூகமாக மேற்கொள்ள பாரிய பங்களிப்புக்கள்
வழங்கப்பட்டுள்ளன.

Page 45
பரிசோதனைகள் மற்றும் திட்டமிடல்கள் :
9 ஆந் தரத்தின் புதிய பாடவிதான மறுசீரமைப்பு தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையினை வெளியிடல். சார்க் கல்வி ஆராய்ச்சிக் கோவையின் 8வது பகுதியினை வெளியிடல் கலாநிதி கன்னங்கர அவர்களின் நினைவுதின உரையில் ஒரு பகுதியினைச் சேர்த்தல்.
உட்பட பல்வேறு ஆராய்ச்சி அபிவிருத்திக்கான பயிற்சிகள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. 2012 ஆம் ஆண்டுக்கான உத்தேச முக்கிய வேலைத்திட்டங்கள்.
1 - 13 தரங்களுக்கான பாடவிதானத்தின் இலக்கு மற்றும் 1, 2, 6, 10 ஆந் தரங்களுக்கான பாட விதானங்களைத் தயாரித்தல்.
பொதுக் கல்வி மற்றும் ஆசிரிய கல்வி பாடவிதானம் தொடர்பான கொள்கை ஆராய்ச்சிகளை மேற் கொள்ளல். தேசிய கல்விக் கல்லூரிகள் 18 மற்றும் ஆசிரிய கல்வியியலாளர்களுக்கான தொழில்சார் அபிவிருத்திப் பணிகள்.
1000 இடைநிலைப் பாடசாலைகள் மற்றும் அதிபர் களுக்கான கொள்ளளவு விருத்தி வேலைத்திட்டங்கள். விசேட கல்வித் தேவைகள் கொண்ட சிறார்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான வேலைத்திட்டங்கள். கல்வி முகாமைத்துவ பயிற்சிப் பாடநெறி
சீர்திருத்தங்கள்.
இலங்கை பரீட்சைத் திணைக்களம்
நோக்கு : தேசிய தேவைகளுக்கு ஏற்றவாறு நம்பகத் தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மையினைப் பாதுகாக்கக் கூடியவாறு தயாரிக்கப்படும் மேற்பார்வை உபகரணங்கள் மற்றும் வியூகங்கள் ஊடாக கல்வியின் அடைவு மட்டம் மற்றும் சம சந்தர்ப்பங்கள் தொடர்பான செயற்பாடுகளை அதி உன்னத இடத்துக்கு முன்னெடுத்தல். 5 ஆந் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.(சா.த) பரீட்சை மற்றும் க.பொ.த. (உ.த.) பரீட்சை ஆகிய பாடசாலைப் பரீட்சைகள் மற்றும் ஏனைய தேர்ந்தெடுப்பதற்காக, பதவியுயர்த்துவதற்கான, சான்றிதழ்கள், வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள் ஆகியவற்றை நடாத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பிரதான பொறுப் பாகும்.

2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆந் தர புலமைப்பரிசில் பரீட்சைகளின் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டு பெறுபேறுகளை துரிதகதியில் வெளியிட முடிந் தமையை விசேட அம்சமாகக் குறிப்பிட வேண்டும். பரீட்சைப் பெறுபேறுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அத்தகவல்கள் வினாத்தாள்களைத் தயாரிப்பவர்கள் மற்றும் ஏனைய உரிய நபர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. க.பொ.த. (உ.த.) இற்கான வழிகாட்டல் கோவைகள் தயாரிக்கப்பட்டன. உரிய வங்கியினைப் பயன்படுத்தி க.பொ.த. (உ.த.) இற்காக முன்னாயத்தப் பரீட்சைகளை நடாத்துதல் மற்றும் புள்ளிவிபரப் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு க.பொ.த. (உ.த.) மற்றும் க.பொ.த. (சா.த.) இற்காக உதவிக் கருத்தரங்குகளுக்குத் தேவையான வினாத் தாள்களைத் தயாரித்து அவற்றை இறுவெட்டுக்கள் மூலம் மாகாணங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பரீட்சைத் திணைக்களத்தின் 60வது ஆண்டு நிறைவை நடாத்துவதற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் கணினி முறைமையைத் திறப்பதற்கும் கலைக் கோவையினை வெளியிடல் மற்றும் ஞாபகார்த்த முத்திரையை வெளியிடும் பணிகளும் 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. 5 ஆந் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக தேசிய மட்டத்திலான கருத்தரங்கினை நடாத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 ஆந் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மூலம் 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் 70 புள்ளிகள் மற்றும் அதனை விடக் கூடுதலாகப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்காக சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நோக்கு : சர்வதேச கல்வி அபிவிருத்தி மற்றும் அதனுடன் இணைந்த உயரிய பண்புசார் தரங்கொண்ட பாடநூ ல்களைத் தயாரிப்பதன் மூலம் சகலருக்கும் கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தல். அரசினால் இலவசப் பாடநூல்களை வழங்கும் போது தேசிய கொள்கைகளை அமுல்படுத்துவதன் மூலமும் கல்விச் செயற்பாடுகளுக்காகத் தேவையான ஏனைய புத்தகங்கள், செயல்நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைச்சொல் அகராதிகள், மேலதிக வாசிப்புப் புத்தகங்கள், உச்சரிப்பு நூல்கள் மற்றும் கட்புல செவிப்புல உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய உதவி நூல்களைத் தயாரித்து வழங்குவதன் மூலமும்
அகவிழி - நவம்பர் 2012 / 43

Page 46
கல்வியின் பண்புசார் தரத்தினை விருத்தி செய்வதன் ஊடாக பயன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்வது இதன் நோக்கமாகும்.
2011 ஆம் ஆண்டில் நாட்டின் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளின் 40 இலட்சம் மாணவர்களுக்கு 433 பாடநூல் வகைகளைத் தயாரித்து நாடெங்கும் அமைந்துள்ள 1071 மத்திய நிலையங்களுக்காக (பாடசாலை, விநியோக மத்திய நிலையங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள்) 433 பாடநூல் வகைகள் கோரிக்கைகளுக்கு அமை வாக வழங்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. பாடநூல்களின் பண்புசார் தரத்தினை விருத்தி செய்வதற்காக நூல் ஆசிரியக் குழுவின் பங்கேற்புடன் 15 செயலமர்வுகள் நடாத்தப்பட்டன. ஹோமாகம பிட்டிபட பிரதேசத்தில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள களஞ்சியசாலைக் கட்டிடத் தொகுதியின் 2ம் கட்ட நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 33 மில்லியன் ரூபா செலவில் களஞ்சியசாலைக் கட்டிடத் தொகுதியின் III ஆம் கட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
பாடநூல் ஆக்கத்தில் ஈடுபட்டுள்ள 7 உத்தியோகத்தர் களுக்காக தாய்லாந்தில் AIT நிறுவனத்தின் e-பாட நூல் ஆக்கந் தொடர்பாக பயிற்சி வழங்குதல், தகவல் தொழிநுட்ப கற்றல் கற்பித்தல் செயற் பாடுகளுக்காக பயன்படுத்துவதனை ஊக்குவித்தல் மற்றும் மாணவர்களை சுய கல்விக்கு ஈடுபடுத்து வதற்காக இறுவெட்டுக்களின் உதவியுடன் பாடநூ ல்களைத் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் IBP நிறுவனத்தில் ஐந்து உத்தியோகத் தர்களுக்காக பாடநூல்களைத் தயாரிப்பது தொடர்பாக பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஊடக நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பாடநூல்களை சிறந்த முறையில் பயன்படுத்தி மாணவர்களுக்காக பரிசில்களை வழங்குவதன் மூலம் பாடநூல் பயன்பாடு தொடர்பான சிந்தனைகளை விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன..
2012 ஆம் ஆண்டில் 488 ஆசிரிய வழிகாட்டல் கோவைகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட வுள்ளனன. பல்வேறுபட்ட பிரச்சினைகள் கொண்ட இப்பாடநூல் வகைகளை மீள எழுதி அச்சிடல்.
க.பொ.த. (உ.த.) மற்றும் ஏனைய பாடநெறிகளுக்குத் தேவையான மேலதிக வாசிப்புப் புத்தகங்களைத்
44 / அகவிழி - நவம்பர் 2012

தயாரித்தலும், நியாயமான விலைக்கு விற்பனை செய்தலும்.
சர்வதேச மட்டத்திலான உயர் தரங்கொண்ட புத்தகங்களை வெளியிடும் உரிமையைப் பெற்று சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழி பெயர்த்தல்.
5 ஆந் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. (சா.த), க.பொ.த. (உ.த) பரீட்சைகளுக்குரிய வினாத்தாள்கள், விடைத்தாள்கள் மற்றும் கேள்விக் கொத்துக்களைத் தயாரித்து நியாயமான விலைக்கு விற்பனை செய்தல். பாடநூலின் பண்புசார் தரத்தை விருத்தி செய்ய உதவக்கூடிய பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள் அமுல் படுத்தப்படவுள்ளன.
தேசிய நூலக மற்றும் சுவடிக்கூட சேவைச் சபை நோக்கு
இலங்கை நூலக மற்றும் தகவல் துறையின் பிரதான தேசிய நிறுவனத்தைப் போன்று நாடெங்கும் விரிவடைந்துள்ள நவீன நூலகங்கள் மற்றும் தகவல் சேவை வலையமைப்பின் மத்திய நிலையமாகச் செயற்படல்.
2011 ஆம் ஆண்டில் புத்தகக் கண்காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
தேசிய நூலக வள மற்றும் சேவைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தேசிய நூலக விபரக்கொத்தினை வெளியிடல். சுவடிக் கூடப் பாதுகாப்புப் பணிகள். வெளியீட்டு உதவிச் செயற்றிட்டங்களை அமுல் படுத்தல். இலக்கிய நூல்களை வெளியிடல்.
நூலகப் பொறுப்பாளர்களுக்குப் பயிற்சியளித்தல்.
தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகளை அமுல்படுத்தலும் கிராமிய நூலகங்களை விருத்தி செய்தலும்.

Page 47
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியிலும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சார்பில் '. உத்தேச கல்விச்சீர்திருத்தம் - 2009' இறுதி அறிக்கை
இந்த பயங்கரம் :

| கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையிலும் அகவிழி சஞ்சிகையினர் ஏற்பாடு செய்திருந்த புதிய 5 தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டோர்.
- ா ம் ம் ம்

Page 48
அசு
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல.: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன்
தொ.பே.இல.: 051-2222504, 051-2222977 அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733 அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல: 067-2229540
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமனாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல: 077-1285749 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல.: 011-2688102 கவிதா ஸ்ரோஸ் இல:05 பஸ் தரிப்பிடம், வவுனியா தொ.பே.இல: 024 - 2222012 Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
Print
Kumaran Pr 39, 36th Lane
kumbhlk@
Registered in the Department of Posts

விடு
4ாரிக்கையாகபரவு11ாயாயாக்கராசாரியார்க=ேபுத்தாகti-i1யரை பாரா |
மிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல: 4515775, 2504266 அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை
தொ.பே.இல: 052-2258437 நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03
தொ.பே.இல.: 026-2236266 குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல: 052-2223416 பிரியங்கா புத்தகக் கடை பிரதான வீதி, பருத்தித்துறை தொ.பே.இல: 077-9303246 கொலேஜ் நீட்ஸ் புத்தகக்கடை 120, பிரதான வீதி,
அட்டாளைச்சேனை 14
கை.தொ.இல.: 077-3034469 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை
தொ.பே.இல: 066-3662228
Rajah's Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371 S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு
தொ.பே.இல: 077-1270458
==rாப்யாடியா1ாரி Futhாrயமாக42+மயொப்ரயாவாக --Trarா -TV-யாக 1ா-410MTrாகா
ISSN 1800-1246
ed by 2ss (Pvt) Ltd. - Colombo 06
gmail.com
Gl771. 800"124 005"
of Sri Lanka under No, QD/96NEWS/2012.