கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2012.12

Page 1
விழி 08
பார்வை
இக
ஆசிரிய
தை. தனராஜ் • Lal Fonseka 1.G.L. Jayaweera ) க. சண்முகலி கலாநிதி கோணாமலை கோணேசர்
www.viluthu.org

- 89
டிசம்பர் - 2012
வி6
த்துவ நோக்கு...
சொ. அமிர்தலிங்கம் ங்கம்
விலை: 100/=

Page 2
மருதானை தொழில் நுட் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி
மருதானை தொழில்நுட்பவியல் கல்லூரியில் (NVQ) நெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்க கோரப்பட்டுள்ளன.
கற்கை நெறி 1 இலத்திரனியல் (எந்திரவியல்சார் கைப்பணியாளர் பயிற்சி
தகைமைகள் க.பொ.த.(சா/த) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு டே ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களிடம் ( முழு நேரம் பகல், இரு வருடங்கள் வயதெல்லை 01.01 வேண்டும்.
கற்கை நெறி அனுகூலங்கள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யும் மாணவ, மாணவிகள் இ கற்கை நெறி முடிவில் 6மாத காலம் வேலைத்தல அனு
கற்கை நெறி 2 கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர்க்கான தேசிய சான்றி
முழு நேரம் பகல் இருவருடங்கள்
கற்கை நெறி 3 சுருக்கெழுத்து, தட்டெழுத்து மற்றும் கணினியில் தேசிய
முழு நேரம் பகல் ஒரு வருடம் கற்கை நெறி காலத்தில் வகுப்புகளுக்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபா 50 ( ரூபா 1000 இற்கு மேற்படாது வழங்கப்படும். அரசாங்க போக்குவரத்து, பருவகாலச் சீட்டு மற்றும் 6 செய்து கொடுக்கப்படும்.
தகைமைகள் க.பொ.த.(சா/த) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு டே ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களிடம் ! தமிழ்மொழியில் திறமைச் சித்தியினைப் பெற்றிருத்தல் ே இக்கற்கை நெறி ஒரு வருடப் பயிற்சி நெறி ஆகும்.
பயிற்சி நெறியின் நன்மைகள்
அரச வேலை வாய்ப்பினைப் பெற முடியும். இறுதிப் பு மாணவர்கள், அரச திணைக்களங்கள், நீதிமன்றம், பாரா வங்கிகள் ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்ப இப்பயிற்சிகான நாள் ஒன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்க
தொழில் வாய்ப்புக்கள் நீதிமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் சுருக்கெழுத்தாளர் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் தட் அத்துடன் அரச தொழிநுட்பக் கல்லூரிகளில் சுருக்கெழு பெற முடியும்.
விண்ணப்பங்கள் பணிப்பாளர், மருதானை தொழில் நுட்
முகவரிக்கு உடன் அனுப்பி வைக்கவும்.

பவியல் கல்லூரியில் புதிய முலம் நடத்தப்படும் கற்கை நெறிகள்
- தேசிய தொழிற்தகைமையுடனான பின்வரும் கற்கை ள் 2012.10.25 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம்
7) தேசிய தொழில்சார் தகைமையுடைய பயிற்சி
மற்படாத அமர்வுகளில் கணிதம், போதனா மொழி உட்பட இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. .2013 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டிருத்தல்
இத்துறையில் பட்டப் படிப்பு வரை தொடரலாம். பவப் பயிற்சிக்கும் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்
தழ்
சான்றிதழ். 5 தமது குடும்ப வருமான நிலைமைகளுக்கேற்ப கல்லூரி வீதம் மாணவர் உதவிக் கொடுப்பனவாக மாதம் ஒன்றிற்கு
எனைய கல்விசார் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு
மற்படாத அமர்வுகளில் கணிதம், போதனா மொழி உட்பட இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வேண்டும் - வயதெல்லை 18-25.
பரீட்சை முடிவுற்ற பின்னர் 06 மாத கால பயிற்சிக்காக ளுமன்றம், கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், இவர். ப்படும்.
ாகவும் மற்றும் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், டெழுத்தாளராகவும் வேலை வாய்ப்பை பெற முடியும், ஒத்து, தட்டெழுத்து போதனாசிரியராக வேலை வாய்ப்பை
பவியல் கல்லூரி, ஓல்கொட் மாவத்தை, கொழும்பு என்ற

Page 3
ISSN 1800 146
ஆகவி6
AHAVILI 3, Torrington Avenue, Tel.: 011 250 6272 E-mail: ahavili.viluthu
சிரியத்துவ நோக்கு---
உள்ளே........
இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிரியரின்
2.
விளைதிறன்மிகு கற்றலும், பரீட்சையும்
முன்பள்ளிப்பருவக்கல்வி
4. அறநெறிக்கல்வியை கட்டாயக்கல்வியாக்கு
கல்வியியல் எண்ணக்கருக்கள் மனிதவள
விஞ்ஞானத்துக்கும் கணிதத்துக்கும் விசேட
7.
பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளின்
கல்விப் புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல் :
9.
சகலருக்கும் கல்விக்கான சந்தர்ப்பத்தினை
10. சமூக பொருளாதார நிலைமையும் கல்வியி
11. கற்றலின் இரகசியங்கள்
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு ச
இடம்பெறும் கருத்துக்கள் “அக

இகவிடு
Colombo 07
@gmail.com
தேர்ச்சிகளும் வகிபங்குகளும்
வோம்
மூலதனம்
- பாடசாலைகள்
பின் நடைபெறுவதென்ன?
சார்ந்த பகுப்பாய்வு
விருத்தி செய்தல்
பின் தற்போதைய அமைப்பும்
அதன் ஆசிரியர்களே பொறுப்பு, கட்டுரைகளில் கவிழி”யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
ISSN 1000120
இகவி6
ஆசிரியத்துவ நோககு...
மாத இதழ்
ஆசிரியர்: V.S. இந்திரகுமார்
நிர்வாக ஆசிரியர்: சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் திருமதி பத்மா சோமகாந்தன்
ஆலோசகர் குழு: திரு.து. ராஜேந்திரம்
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஓய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் இரா.வை. கனகரட்ணம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திரு.தை. தனராஜ்
முதுநிலை விரிவுரையாளர், இலங்கைத்திறந்தபல்கலைக்கழகம்
திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்தபல்கலைக்கழகம்
திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு
திரு. கே. சாம்பசிவம்
தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
திருமதி. அருந்ததி ராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம்
ஜி. போல் அன்ரனி முன்னாள் பிரதிப் பரீட்சை ஆணையாளர்
27 அகவிழி - டிசம்பர் 2012

ஆசிரியரிடமிருந்து.......... 2012ஆம் ஆண்டின் டிசம்பர் இதழினூடாக ஆசிரியப் பெருந்தகைகளுக்கு எனது மிகப்பணிவான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாண்டில் எமக்கு நீங்கள் வழங்கிய ஆதரவு மிகப் பெரியது. அடுத்த ஆண்டிலும் உங்களது ஆதரவு தொடரும் என்பது எமது நம்பிக்கையாகும். தேசியளவிலான ஓர் கல்விச் சஞ்சிகையை (அகவிழி) விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வெளியிட்டு வருகிறது. கல்வியியலுக்கான ஓர் சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதென்பது சாதாரணவிடயமன்று. அதன் வளர்ச்சியின் விழுதுகள் ஆசிரியர்களாகிய நீங்களே.
விழுது நிறுவனம் கல்வி அமைப்பு முறைகளில் பல முறைசார் மாற்றங்களை கொண்டு வருவதில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது. பொதுக்கல்வியில் தனியார்துறை யின் வகிபங்கு அவசியமானது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்விசார் ஆளணியினர் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்திலும் வலுவான மாற்றங்களை விழுது வேண்டிநிற்கிறது.
கற்றல் கற்பித்தல் செயன்முறை சனநாயக மூலதத்து வங்களின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்படவேண்டும். வகுப்பறையிலும் பாடசாலையிலும் பிள்ளை மையமான கற்றல் - கற்பித்தலும் சனநாயக சூழலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். வகுப்பறையிலும் பாடசாலையிலும் பிள்ளை மீது நட்புறவு கொண்ட சூழல் ஏற்படுத்தப்படுவதோடு பிள்ளைகளின் உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். பிள்ளையின் உள்ளார்ந்த ஆற்றலை மேம்படுத்தக்கூடிய நட்புறவான சனநாயக ரீதியான சமூக சூழல் கொண்ட ஒரு பாடசாலைக்கலாசாரம் கட்டமைக்கப்பட வேண்டும். சகல கற்றல் கற்பித்தல் செயன் முறைகளும் பிள்ளைக்கு கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை அறிவுத்தாக்கம் கொண்டவர்களாகவும் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாகவும் உருமாற்ற வேண்டும்.
இவ்வகையான அடிப்படை மாற்றங்களை ஆசிரியர்களிடத்தில் கொண்டுவரவேண்டுமென்பதிலும் கல்வி முறையின் பல்வேறு மட்டங்களில் பங்கேற்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, என்பன உயர்ந்த அளவில் பேணப்பட வேண்டும் என்பதனையும் அகவிழி எதிர்பார்க்கிறது. தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள், விரிவாக்கம், பராமரிப்பு, கட்டுப்பாடு என்பவற்றிலிருந்து தராதரம், மாற்றம், அபிவிருத்தி என்ற பிரதான ஒழுங்கமைப்பு மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. எனவே சகல மட்டங்களிலும் உள்ள கல்வியாளர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் மேம்படுத்தி உயர் தொழில் மயமாக்கல் வகைக்குள் ஆசிரியத்தொழில் உள்வாங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியத் தொழிலை வாண்மைத்துவமிக்க தொழிலாக மேம்படுத்துவதற்கு முயற்சிக்கும் போது அகவிழி அதற்கு உறுதுணையாக நிற்கும். அவற்றுக்கான ஆக்கங்களை அகவிழி சுமந்து வரும். அகவிழியின் தூரநோக்கும் அதுவேதான்.
2013 ஆம் ஆண்டை புத்தாக்க சிந்தனைகளுக்கும் புதிய எழுச்சிகளுக்குமான ஆண்டாக வரவேற்போம். கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவருவோம்.
V.S. இந்திரகுமார்

Page 5
இருபத்தே ஆசிரியரின் தேர்
முதுநிலை இலங்ன
அறிமுகம் இந்த நூற்றாண்டில் பெருக்கெடுத்த அறிவுப் பிர வாகமானது 21 ஆம் நூற்றாண்டை அறிவுமைய நூற்றாண்டாக உருமாற்றியுள்ளது. மனித வாழ்வியலின் ஒவ்வோர் அம்சத்தினுள்ளும் அறிவுப் பெருக்கத்தின் தாக்கத்தை காணமுடிகிறது. மனிதனது பெளதீக சூழல் மாத்திரமல்லாத அவனது சமூக சூழலும் தீவிரமான மாற்றங்களுக்கு உட்படுகிறது. எனவே மனிதனது சிந்தனை, நடத்தை மற்றும் அவனது சமூகத் தொடர்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் இருபத்தோராம் நூற்றாண்டின் மாணவர்களும் புதிய பண்புக்கூறுகளைக் கொண்டுள் ளனர். தகவல் தொடர்பாடல் முறையியல் மற்றும் ஊடகங்களை அவர்களால் சிறப்பாகக் கையாள முடிகிறது. ஒன்றிணைந்து செயற்படுதல், நெகிழ்ச்சி, சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளல், புதியன புனைதல், உடனடி விளைவை எதிர்பார்த்தல் போன்றவை சமகால மாணவர் சமூகத்தின் பண் புக் கூறுகளாகவுள்ளன. மாணவர்களின் இயல்புகளின் மாற்றத்துக்கு ஏற்ப இந்நூற்றாண்டுக்குரிய ஆசிரியர்களின் வகிபங்குகள் எவ்வாறு மாற்ற முறவேண்டும், அவர்களது நவீன பண்புக்கூறுகள் யாவை, முதலியவற்றை இக்கட்டுரை சுட்டிக் காட்ட முயல்கிறது.
இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிரியரது வகிபாகங்கள்
ஆசிரியரின் வகிபாகத்தில் வரலாற்று ரீதியாக ஏற் பட்ட மாற்றங்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆசிரியர்கள் அறிவைக் கடத்துப்வர்களாக (Transmitter) இருந்தனர். அதாவது மாணவர்கள் வெறுமையான மூளையுடன் குருவிடம் வருவதாக ஊகிக்கப்பட்டு அந்த வெற்றிடத்தை நிரப்பும் கைங்கரியத்தை குரு (ஆசிரியர்) மேற்கொண்டார். இந்த அறிவைக் கடத்தும் வகிபங்கு காலப் போக்கில் அறிவுப்பரிமாற்றமாக

எராம் நூற்றாண்டின் ச்சிகளும் வகிபங்குகளும்
தை. தனராஜ் விரிவுரையாளர், கல்விப் பீடம் மகத் திறந்த பல்கலைக்கழகம்
('Transaction) மாற்றம் அடைந்தது. இந்த நிலையில் ஆசிரியர் மற்றும் மாணவராகிய இருசாராரும் கற்றல் கறப்பித்தல் செயல் முறையில் பொறுப்பாண்மையை கொண்டிருந்தனர். அதாவது மாணவரின் முயற்சி இல்லாமல் கற்றல் நடைபெற வாய்ப்பில்லை என்பது உணரப் பட்டது. இன்று மாற்றங்களே கல்விசார் வாழ்க்கையின் நியதியாகிவிட்ட நிலையில் ஆசிரியர் மாற்ற முகவராகவும் தொழிற்பட வேன்டியுள்ளது. எனவே மாணவர்களும் மாற்றங்களை உள்வாங்கி அவற்றுக்கு ஏற்ப துலங்க வேண்டும் எனில் ஆசிரியர் உருமாற்ற (Transformational role) வகிபங்கை ஏற்க வேண்டியுள்ளது.
இவ்வாறு கூறும்போது முன்னைய இரு வகிபங்குகளும் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என கருத வேண்டிய அவசியம் இல்லை.
அகவிழி - டிசம்பர் 2012 / 3

Page 6
இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய ஆசிரியர் கற்பித்தல் தொடர்பான புதிய பார்வைகளைக் கொண்டிருக்க வேண்டும். உலகளாவியரீதியில் விருத்தியடையும் தொழில்நுட்பவியல் வகுப்பறைச் செயல்முறைகளில் செல்வாக்கு செலுத்துகிறது. ஐபேட் (ipads) ஸ்மார்ட்போன் (smartphones), கணினிகள் மற்றும் இணையவலை பிரயோகங்கள் (web applications) இருபத்தோராம் நூற் றாண்டு கல்விச் செயன்முறைகளில் பிரயோகிக்கப்படும் புதிய தொழில்நுட்பக் கருவிகளாகிவிட்டன. உலகளாவிய ரீதியில் இன்று எற்பட்டுவரும் இப்புரட்சியை உள்வாங்கி அதற்கேற்றவகையில் வெற்றிகரமான ஆசிரியர்களாகத் துலங்கவேண்டுமெனில் ஆசிரியர்கள் பின்வரும் நவீன வகிங்குகளை எற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய புதிய வகிபங்குகளை பின்வரும் உருவம் ஒரேபார்வையில் காட்டுகிறது.
21ஆம் நூற்றாண்டு ஆசிரியர்
8. ஆபத்துக்கு துணிபவர்
1. சூழலுடன் இயைபவர்
Risk - Taker
The Adapter
2. தொடர்பாளர்
7. இணைந்து செயலாற்றுபவர்
The Communicator
The Collaborator
3. கற்போன்
6 முன்னுதாரணமானவர்
The Learner
The model
4. தரிசனநோக்குடையோர்
5. தலைவர்
The Visionary
The Leader
01. சூழலுடன் இயைபவர்
இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிரியர் சூழலுடன் இயைபு கொண்டு செயற்படவேண்டியவராவார். கலைத்திட்டத்தில் பொருத்தமான மாற்றங்களை எற்படுத்த வேண்டியுள்ளது. வர்த்தக மாதிரிகை (business model) க்காக உருவாக்கப்பட்ட மென்பொருள்களையும் வன்பொருட்களையும் தான் கற்பிக்கும் பல்வேறு வயதுப்பிரிவுகளும் வேறுபட்ட ஆற்றல் களும் கொண்ட மாணவர்களுக் கு ஏற்ற வகையில் வகுப்பறை செயன்முறைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலையும் நெகிழ்வுத் தன்மையையும் அவர் கொண்டியங்க வேண்டியுள்ளது. வகுப்பறையில் தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தும்போது அவை செயற்படுதிறனை இடை நடுவில் இழந்துவிட்டால் வகுப்பறைச் செயன்முறையை நிறுத்துவிடமுடியாது. எனவே அவ்வாறான சூழ்நிலையில் அறைகூவல்களை உவந்தேற்று அவர் சூழலுக்கு இயைந்து செயற்படவேண்டும். அத்துடன் பல்வேறு கற்றல் பாங்குகளையும் (Learning
47 அகவிழி - டிசம்பர் 2012

Styles) விளங்கிக் கொண்டு வேறுபட்ட கற்றல் சூழ்நிலை களுக்கு ஏற்ப ஆசிரியர் தனது கற்பித்தல் பாங்குகளை
மாற்றிக்கொள்ளுதலும் வேண்டும்.
02. தொடர்பாளர்
எவ்விடத்திலும், எந்நேரமும் கற்றல் (Anywhere, Anytime, Learning) என்பது இன்று பரவலாய் பயன் படுத்தப்படும் தொடராகும். எனவே இருபத்தோராம் நூற் றாண்டு ஆசிரியரும் எந்நேரமும் எவ்விடத்திலும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஆர்வத்தையும் ஆற்றலையும் கொண்டிருத்தல் அவசியம். தொடர்பாடலையும் ஒன்றி ணைப்பையும் எற்படுத்தக்கூடிய கருவிகள் மற்றும் தொழில்நுட்பவியல்களில் அவர் பரிச்சயம் கொண்டிருத்தல் வேண்டும். பல்வேறு உரித்தாளர்களுக்கிடையே தொடர் பாடலை எற்படுத்தவும், அதனை ஊக்குவிக்கவும் கட்டுப்படுத்தவும், முகாமை செய்யவும் எமது ஆசிரியருக்கு அறிவும் ஆற்றலும் இருத்தல் அவசியம். உதாரணமாக இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே நெருக்கமான தொடர்பாடலை ஏற்படுத்துவதில் சமூக வலையமைப்புக்கள் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றுடன் பரிச்சயம் இல்லாத ஓர் ஆசிரியர் இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய
ஆசிரியராக பரிணமிக்க முடியாது.
03. கற்போன்
சமகால அறிவுப் பிரவாகமானது மாணவர்களை மாத்திர மல்லாது ஒவ்வொரு குடிமகனையும் வாழ்நாள் நீடித்த கற்போனாக (Lifelong Learner) மாற வைத்துள்ளது. பாடசாலையுடன் அல்லது உயர்கல்வி நிலையத்துடன் "படிப்பு முடிந்தது” என்பது அர்த்தமில்லாத கூற்றாகி விட்டது. மாறாக "தொட்டில் முதல் சுடுகாடு வரை” யிலான கல்வி இன்று அவசியமாகிவிட்டது. இதற்கு உதவும் வகையில் மூடப்பட்ட கல்வி முறைகளை விட திறந்த கல்வி முறைகள் பிரபலமாகி வருகின்றன. கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் தொடர்ச்சியாக புதியவற்றைப் புகுத்த வேண்டும் எனில் ஆசிரியரும் வாழ்க்கை நீடித்த கற்போனாக உருமாறவேண்டியுள்ளது. அறிவுப் பிரவாகத்தினால் கல்விப் புலமும் தேவையான மாற்றத்திற்கு உள்ளாகும் போது அம்மாற்றத்தை உள்வாங்கக் கூடிய வகையில் தனது அறிவையும் தேர்ச்சியினையும் மாற்றிக் கொள்ள கூடிய ஆசிரியனே இருபத்தோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமானவனாவான்.
04. தரிசனநோக்குடையவர்
தரிசனநோக்கு (Vision) என்பது தனிநபருக்கும், சமூகத்திற்கும் நாட்டுக்கும் அவசியமானது. அதே போல அத்தகைய தரிசன நோக்கினை அடைவதற்கான

Page 7
செயற்றிறனும் முக்கியமானது. "செயற்றிறன் இல்லாத தரிசன நோக்கு வெறுமனே ஒரு கனவுதான், தரிசனநோக்கு இல்லாத செயற்றிறன் நேரவிரயமாகும். தரிசனநோக்கும் செயற்றிறனும் ஒன்றிணைந்தால் இந்த உலகினை வெல்ல முடியும்" என ஓர் அறிஞர் குறிப்பிட்டார். இன்றைய உலகின் தொழில்நுட்பவியலின் வளர்ச்சி வேகத்தையும் எதிர்காலத்தில் அதன் பரிணாமத்தையும் ஆசிரியர் விளங்கி அவற்றைச் செயலாற்றவும் வேண்டும். அத்தகைய நிலையை அடைய ஆசிரியருக்கு கற்பனைத்திறனும் கற்பனை வளமும் அவசியமாகும். புதிய புதிய தொழில் நுட்பங்களை வகுப்பறைச் செயன்முறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்குரிய கற்பனைத்திறன் இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிரியருக்கு மிகவும் அவசியமாகும். கற்பனைத்திறன் கொண்ட ஆசிரியர் தனது கற்பித்தல் துறைக்கு அப்பால் சென்று ஏனைய கற்றல் துறைகளிலும் கலைத்திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இனங்கண்டு தனது வகுப்பறைச் செயற்பாடுகளில் புதுமைகளைப் புகுத்த முயல்வார்.
05. தலைவர்
இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிரியர் ஒரு தலைவராகவும் மிளிரவேண்டியுள்ளது. ஒரு தலைவரின் வகிபங்கு யாது? ஒரு தலைவர் என்பவர் தனது நிறுவனம் அல்லது மக்களுக்குரிய தரிசனநோக்கினை உருவாக்குவார். அத்துடன் தன்னைச் சூழ உள்ளவர்கள் அந்தத் தரிசன நோக்கினை ஏற்றுக்கொள்ளவும் பாடுபடுவார். அதுமாத்திரமன்றி அத்தரிசன நோக்கினை அடையக் கூடிய வகையில் தன்னைச் சார்ந்துள்ளோரை அவர் ஊக்கப்படுத்துவார். இன்று கல்வி உலகினுள் குறிப்பாக வகுப்பறைச் செயன்முறைகளை வினைத்திறனுடனும்

விளைதிறனுடனும் முன்னெடுத்துச் செல்ல இத்தகைய தலைமைத்துவ தேர்ச்சியை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். விஞ்ஞானம், தொழில்நுட்பவியலில் ஏற் படும் வளர்ச்சியும் முன் னேற்றமும் கல் வி உலகிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவற்றை இனங்கண்டு வகுப்பறைச் செயன்முறையில் அத்தகைய புத்தாக்கங்களை உள்வாங்கி கற்றல் கற்பித்தல் செயன்முறையை நவீனமயமாக்குவதற்கு சிறந்த தலை மைத்துவமும் அவசியமாகிறது. இருபத்தோராம் நூற் றாண்டு ஆசிரியனிடையே இத்தகைய தலைமைத்துவம்
அவசியமாகும்.
06. முன்னுதாரணமானவர் ஆசிரியர் கள் தமது சொல்லாலும் செயலாலும் எப்போதுமே மாணவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து வந்துள்ளனர். மாணவர்கள் ஒரு நாளில் உயிர்ப்பான நேரத்தை தமது பாடசாலைகளிலேயே கழிக்கின்றனர். அந்நேரத்தில் ஆசிரியர்கள் விழுமியங்களையும் அற
வொழுக்கங்களையும் அவர்களுக்குக் கற்பிப்பதோடு தாமே மாணவர்கள் பின்பற்றக் கூடிய மாதிரிகளாகவும் திகழவேண்டிய நிலை உள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிரியர் பிரதிபலிப்பு நடைமுறையை (Reflective practice) பின்பற்றவேண்டியவராகிறார். வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் தொடர்பான சுய பிரதிபலிப்பை தானே அசை போட்டுக் கொள்ளாமல் blogs, twitter முதலான சமூக வலைத் தளங்கள் மூலமாக பிறருடனும் பகிர்ந்து கொள்ள முடியும். சமூக வலைத்தளங்களில் பலரது கருத்துக்களும் பகிரப்படுவதால் பொறுமைகாத்தல், பிறரது கருத்தை கெளரவித்தல், கருத்து மோதலில் உயர் பண்பாட்டை வெளிப்படுத்தல்,
சர்வதேசிய பார்வை முதலிய பண்புக் கூறுகளை இருபத்தோராம் நூற் றாண்டு ஆசிரியர் வெளிப்படுத்துவதோடு அப்பண்புகளின் நிலைக்களனாகவும்
அவர் செயற்பட வேண்டியுள்ளது. -
07. இணைந்து செயலாற்றுவார்
ஒரு காலத்தில் கற்றல் என்பது வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று கற்றல் செயற்பாடுகளுக்கு எல்லைகளில்லை. இணையத்துக்குள் பிரவேசிக்கும் ஒரு மாணவனோ அல்லது ஆசிரியரோ எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் கற்றல் வாய்ப்புக்களுடன் சங்கமமாகி விட
அகவிழி - டிசம்பர் 2012 / 5

Page 8
முடியும். Ning, Blogger, Wiki spaces, Bebo, MSN, My space, Second life முதலான இணைய வலையமைப்புக்கள் மிகச் சிறந்த கற்றல் தொடர்புகளையும் வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிரியர் புத்தறிவை உள்வாங்குதிறனும், நவீன உருவாக்கு திறனும் அவற்றைப் பிறருடன் பகிர்வதிலும் தனது மாணவர் களுடனும் ஏனையோருடனும் இணைந்து செயற்படுபவராக இருத்தல் வேண்டும்.
08. ஆபத்துக்குத் துணிபவர்
மேற்குறிப்பிட்ட பல்வேறு புதிய மாறுபட்ட வகிபங்குகளை ஏற்று செயற் படு வதில் பல ஆபத் துக் களும்
உள்ளன. ஆனால் இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிரியர் அவ்வித ஆபத்துக்களைத் துணிந்தேற்று செயற்படவேண்டிய நிலையிலுள்ளார். மாணவர்கள் நவீன தொழில்நுட்பவியலுக்குள் மிக எளிதாகப் பிரவேசிப்பதுடன் அவற்றைத் திறமையுடன் கையாளவும் செய்கின்றனர். அதனால் ஆசிரியர் பல சந்தர்ப்பங்களில் தமது மாணவரிடமே கற்கவேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. கற்றலை உறுதிப்படுத்துகின்ற உயரிய விளைதிறன் கொண்ட வழிமுறை பிறருக்கு கற்பிப்பதாகும். எனவே இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிரியர் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கற்பிக்கவும் வழிப்படுத்தவும் வேண்டிய நிலையிலுள்ளார். தரிசன நோக்கு, தெளிவான இலக்குகள், புதிய தொழில்நுட்பவியலில் நம்பிக்கை போன்றவை நவீன ஆசிரியர் ஆபத்தை ஏற்று வெற்றியடையும் துணிச்சலை அவருக்கு வழங்கக்கூடியன.
67 அகவிழி - டிசம்பர் 2012

முடிவுரை
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவருகின்ற கல்விசார்ந்த தொழில்நுட்பப் புரட்சியில் ஆசிரியர்கள் வெற்றிகரமாக இணைந்து கொள்ள வேண்டும் எனில் இருபத்தோராம் நூற் றாண்டு ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட புதிய வகிபங்குகளை ஏற்க வேண்டியதும் அவற்றைத் தமது நாளாந்த கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் வெளிப்படுத்த வேண்டியதும் தவிர்க்க முடியாததாகும். எனது மாணவர்கள் யார், அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் எவ்வாறு கற்க விரும்புகிறார்கள், தமது பாடசாலைக் கல்வியின் முடிவில் அவர்கள் அடைந்திருக்க வேண்டிய தேர்ச்சிகள் யாவை, அவர்கள் வேலை உலகிலோ அல்லது உயர் கல்வி
நிறுவனங்களிலோ பிரவேசிக்கும் போது ஏனையோரை விட முன்னிலை வகிக்க வேண்டும் எனில் நான் புதிய தொழில் நுட்பவியலில் வழங்கும் கற்றல் கற்பித்தல் கருவிகளையும் கற்பித்தல் தராதரங்களையும் எனது கற்பித்தல் முறைகளையும் எவ்வாறு ஒன் றிணைக்க வேண் டும் என் னும் வினாக்களுக்கு சரியான விடைகளைக் காணாமல் ஆசிரியர்கள் இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய ஆசிரியர்களுக்குரிய வேறுபட்ட பண்புக் கூறுகளை வெளிப்படுத்த முடியாது. நாம் வாழும் உலகம் தீவிரமான மாற்றங்களுக்கு உட்படுகிறது. 'மாற்றம்' என் னும் சொல்லைத் தவிர ஏனைய அனைத்தும் மாறிக் கொண்டிருக்கின்றன. இம்மாற்றங்களை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் மாற்றங்களுக்கு ஏற்ப எம்மை நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
மாற்றங்களுக்கு உடன்பாடான முறையில் எம்மால் துலங்கவும் முடியும். இருபத்தோராம் நூற்றாண்டு ஆசிரியர்கள் மேற்படி புதிய வகிபங்கினை ஏற்றுக் கொள்வதன் மூலம் மாற்றங்களுக்கு வெற்றிகரமாகத் துலங்க முடியும்.
"சிறப்பாகக் கற்பித்த ஆசிரியர்களை மாணவர்கள் வியப்புடன் நினைவில் கொள்வார்கள், ஆனால் அவர்களின் இதயங்களின் உணர்வுகளைத்
தொட்ட ஆசிரியர்களை நன்றியுடன் பூஜிப்பார்கள்” (யாரோ)
துலா.. "தன் மறுபடி புதுசு
நன்றி: இக்கட்டுரை www.wikipedia.com இல் உள்ள ஒரு கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

Page 9
விளைதிறன்மிகு கர
Mr. Lal கொழும்புப் ப6
ஒலிப்பதிவுக்கருவி - Sound Recorder
ஒலிப்பதிவுக் கருவியானது இக்காலத்தில் அனைத்து மாணவர் களினாலும் உபயோகிக்கப்படும் மலிவான உபகரணமாக அமைந்துள்ளமையைக் காணமுடிகின்றது.
எனினும் ஒலிப்பதிவுக்கருவி பாவிப்பதன் மூலம் மாணவர்களில் சோம்பலேற்படுவதாக ஒருசிலர் வாதமிட்டு வருகின்றனர். அதில் ஒரளவு உண்மையும் உண்டு. அதாவது உபகரணத்தின் மூலம் ஒலிப்பதிவு நடக்கிறது. எனும் ஆதங்கத்தில் வகுப்பறையில் கற்பிக்கும் விட யங்கள் மீது கவனம் செலுத்துவது அவசியமற்றது என மாணவர்கள் சிந்திக்ககூடுமாகையால் அது நிகழ்கின்றது. ஏனெனில் தற்போது கவனம் செலுத்தாவிடினும் வீடுசென்ற பின்னர் அவற்றை மீள் ஒலிக்கச்செய்து கேட்கக்கூடிய வசதியிருக்கிறது எனும் உணர்வு அவர்களிடத்திலிருப்பதாகும்.

ற்றலும், பரீட்சையும்
Fonseka 5கலைக்கழகம்
சென்ற இதழ் தொடர்ச்சி......
எனினும் சோம்பேறி சோம்பேறியேதான். சோம் பேறிகளுக்கு பரீட்சையில் சித்தியடைய முடியாது. ஒலிப்பதிவியந்திரம் சோம்பலற்ற பிள்ளைகளுக்கு கைகொடுக்கும். யாதேனுமொன்று திருத்தமாக விளங்காத வேளைகளில் அதனை மீள் ஒலிக்கசெய்து விளங்கிடக்கூடிய சந்தர்ப்பத்தை இது வழங்குவதால் உற்சாகமுடைய மாணவருக்கு பெருந்துணையாகும்.
- இன்று முழு உலகமும் நவீனமடைந்திருக்கும் இவ்வேளையில் அவ்வாறான கருவியொன்றின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு உம்மால் முடியுமாயின் அவ்வாறு செய்வதன் மூலம் உமக்கு நட்டங்களேதுமேற்படமாட்டாது. எனினும் வகுப்பறையில் கற்பிக்கும் விடயங்களில் கவனம் செலுத்தாது பின்னர் ஒலிப்பதிவிற்கு காதுகொடுக்க முடியுமே என நம்புவது புத்திசாதூரியமற்ற செயலென் பதையும் மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கின்றேன்.
அகவிழி - டிசம்பர் 2012 / 7

Page 10
குழுவாகச் சேர்ந்து கற்றல் தமது நண்பர்கள் சிலருடன் இணைந்து குழுவாகக் கற்றல் சிறந்த பெறுபேறுகளைத்தரும் கற்றல் முறையாகும். அப்போது உம்மால் கடினமான விடயங்களை அவதானிக்க முடிவதுடன் அவற்றை கிரகித்துக்கொள்ளவும் முடியும். இங்குகூட உம்மால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பொன்னான (Golden Rule) விதியொன்றுண்டு.
அதாவது குழுவாகச் சேர்ந்து கற்பதற்கு முன் அன்றைய தினத்தில் படிக்க திட்டமிட்டிருக்கும் விடயங் களைப்பற்றி குறைந்தது ஒரு நாளைக்கு முன்பேனும்
முன்னாயத்தம் செய்தல் வேண்டும்.
ஆலோசனை பெறல்
இங்கு உமது ஆலோசகர் வகுப்பாசிரியராயிருக்கலாம். அவ்வாறில்லையெனின் வெளியாலிருந்தும் ஆலோசனை பெறலாம். அதற்காக நீர் தயாராதல் வேண்டும். இங்கு ஆலோசகர்களிடமிருந்து நீர் எதிர்பார்க்கும் மாதிரி வினாக்கள் முதலிடம் பெறுதல் வேண்டும்.
பெரும்பாலான திறமையான ஆசிரியர்களுக்கும் ஆலோசகர்களுக்கும் வினாத்தாள்களை எதிர்பார்க்கை செய்யும் அதீத ஆற்றலிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. வகுப்பறையில் ஆசிரியர்கள் போதியதை கற்பிப்பார்களாயின் வெளி வகுப்புகளிற்குச் செல்ல வேண்டிய தேவையையும் தணித்துக் கொள்ளலாம்.
கடந்தகால வினாத்தாள்கள்
கடந்தகால வினாத்தாள்களிலும் அதிக கவனம் செலுத்து வது குறிப்பிட்ட பரீட்சையில் ஒரே தடவையில் சித்தி யடைவதற்கு நீர் மேற்கொள்ளும் மிகச்சிறந்த முறை களிலொன்றாகும். குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்குரிய வினாப்பத்திரங்களையாவது தேடியெடுத்து அவற்றிற்கு விடையளிப்பது உம்மால் செய்யப்படுதல் வேண்டும். இதற்கு மிகப்பொருத்தமான காலம் பரீட்சைக்கு இரு வாரங்கள் இருக்கும்போது ஆரம்பிக்கும் காலமாகும். அனைத்துப் பாடநூல்களையும் மூடிவைத்துவிட்டு வழங்கப் படும் நேரத்தினுள் ஒவ்வொரு வினாத்தாளாக விடை யளிப்பதற்கு ஆரம்பித்தல் வேண்டும்.
இது ஒத்திகை (Rehearsal) பார்த்தலாகும். இதனால் தான் நேர்மையுடன் செயற்படல் தனக்காக செய்து கொள்ளும் சேவையாக அமையும். விடையளிக்கும்போது உரிய நேரத்தில் நிறைவு செய்தல் வேண்டும். அது வரையான காலப்பகுதியில் உம்மால் அனைத்து வினாக் களுக்கும் விடையளிக்க முடியுமாயின் மகிழ்ச்சியடைய முடியும். அதனால் ஐந்து வருடங்களுக்கு முந்திய வினாப்பத்திரங்களுக்கு மேற்படி முறையில் விடையளியுங்கள்.
87 அகவிழி - டிசம்பர் 2012

எடிட் -படி El:HAபர்
-::-::-
HHHEார்14AH1:44
பக.,- பாட்டி1ாபெEE1:
பக்கம் 1
1. முன்னெச்சரிக்கை
கடந்தகால வினாப்பத்திரங்களுக்கு விடையளிக்க முடியுமாயமைந்தவுடன் அதனை படிப்பதற்கு மாற்றீடாகும் என சிந்திக்க வேண்டாம். தனது முயற்சிகளையும் குறைத்துக்கொள்ள வேண்டாம்.
திட்டமிடலிலேயே நடக்க வேண்டிய இரண்டாவது திட்டமிடல் படிப்பதற்குத் தகுந்த இடமொன்றைத் தெரிவு செய்து கொள்ளலாகும். இது முக்கியமாக இடையூறு மிகுந்த இடமாக இருக்கக்கூடாது. இவ்விடம் அடிக்கடி தனது கவனம் விடுபடுமிடமாக இருக்கக் கூடாது.
கடலின் இரைச்சல், நெடுஞ்சாலைகளிலிருந்து வரும் இரைச்சல் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் வெவ்வேறு ஒலித்தடை உம்மால் படிப்படியாக பழகிக் கொள்ள (இசைவடைய) முடியும். அவற்றிற்கு தழுவலடைய முடியும். எனினும் ஏனைய அனைத்து ஓசைகளும் உமது மனதை ஒருநிலைப்படுத்துவதில் இடர்களாக அமையும்.
பாதையில் நடமாடுவோர் உமக்குத் தென்படுமாயின் அது மிகவும் இடைஞ்சலாக அமையும். தொலைக்காட்சி, வானொலி என்பவற்றிலிருந்து வெளிப்படும் ஒலி உமக்கு மிகவும் இடையூறாக அமையுமாகையால் அவற்றிலிருந்து கொண்டு படிப்பது பயனற்ற விடயம்.
நாம் PDCA வட்டத்தின் இரண்டாம் கட்டதிற்கு செல்வோம். அதாவது செயற்படுத்துதல்.
2. Direction - வழிநடத்தல்
இதற்குரிய காலப்பகுதியை பரீட்சைக்குரிய முற்காலமென கருதுவதில் தவறில்லை. முற்காலப்பகுதியை நான்கு பகுதிகளாக வகுத்து வேறாக்கிக் கொள்ளலாம்.

Page 11
முறையான ஓய்வும் ஊட்டச்சத்து நிறைந்த உணவும் நேர்நிலை (Positive) மனப்பாங்கு (Attitude) தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளல்
நெடுங்காலத்தோடு பரீட்சை நிலையத்தையடைதல்.
முறையான ஒய்வும் ஊட்டச்சத்து நிறைந்த உணவும்
பரீட்சைக்கு முன்தினம் இரவு ஒருபோதும் விடியும் வரை படிக்க வேண்டாம். அனைத்து பாட விடயங்களையும் பரீட்சைக்கு முன்தினம் மாலை 4.00 மணியாகும்போது நிறைவு செய்தல் வேண்டும். அதன் பின்னர் சமயச் சடங்குகளில் ஈடுபடுவதற்கு ஓரிரு மணி நேரங்களை எடுக்கலாம். இதற்காக பெற்றோருடன் கோயில், பள்ளி, விகாரை என்பவற்றை நாடலாம்.
பெரும்பாலான மாணவர்கள் போதியளவில் பரீட்சைக்கு தயாராகாது மதவழிபாட்டுத்தலங்களின் துணையை வேண்டி நிற்பர். இதுபோன்ற முறைகேடான நடவடிக்கைகள் வேறேதுவுமில்லை. காணிக்கையொன்றைக் கட்டிவிட்டு நேர்ச்சை வைப்பதன் மூலம் மாத்திரம் பரீட்சையில் சித்தியடைய முடியுமாயின் எதையும் படிக்காமல் அனை வரும் காணிக்கை கட்டுவர் என்பது நிச்சயம்.
உரியமுறையில் படிப்பு வேலைகளை முடித்துவிட்டு பரீட்சைக்கு முன்தினம் சமயபூர்வமாக தமக்குரிய வழிபாடுகளில் ஈடுபடுவது மிகச்சிறந்த முறையாகும். அதன்மூலம் தனக்கு மன ஆறுதலைப் பெறலாம். எனினும் குறைந்த பட்சம் இரவு 8.00 மணிக்கேனும் நித்திரைக்குச் செல்லுதல் நீர் கட்டாயம் செய்ய வேண்டிய கடமையாகும்.
உண்மையிலேயே உமக்கு உமது கற்றல் நடவடிக்கை களை பரீட்சைக்கு இரு நாட்களுக்கு முன்னரேனும் நிறைவுசெய்ய முடியுமாயிருப்பின் அது மிகவும் பொருத்த மான முறையென்பதையும் இங்கு குறிப்பிடாது விட
முடியாது.
தகுந்த மனப்பாங்கு
இதன் மூலம் உமது மனத்திற்கு தைரியமளித்தல் எதிர்பார்க்கப்படுகின்றது. "நான் சித்தியடைவேன்” என்பதையே உமது மனதினுள் எப்பொழுதும் புகுத்த வேண்டும். ஐயோ, என்னால் சித்திபெற முடியுமா? இவ்வாறான நினைவுகளை முற்றாக நீக்குக.
"வழமைபோன்று நன்றாகப் படித்து இம்முறையும் சித்திபெறுவது நிச்சயம்” என நினைப்பவர்களுக்கு பரீட்சையில் சித்தியடைவது கடலை(Nut) சாப்பிடுவது போன்ற விடயம்.

பரீட்சைக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள
பரீட்சைக்கு முன்தினம் வரை காத்திருக்காமல் பரீட்சைக்கு வேண்டிய பொருட்களை முன்கூட்டியே தயார்செய்து கொள்ளல் சிறந்தது.
உமது வேலையை இலகுப்படுத்தும் பொருட்டு அவ்வாறான சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
1. தரம்சிறந்த கறுப்பு / நீல பேனைகள் இரண்டு
பென்சில் 3. கட்டர் 4. அழிறப்பர் 5. அடிமட்டம் 6. பசும்பி (பொருட்களை இட) : இவ்வாறு செய்வதன் மூலம் காலத்தை மீதப்படுத்த முடிவதுடன் மன ஆறுதலையும் பெற முடியும்.
ci ) + |
நேரகாலத்தோடு பரீட்சைநிலையத்தை அடைதல்
பரீட்சை நிலையத்தை முன்கூட்டியே அடைவதன் மூலம் பரீட்சை மண்டபத்தை, ஆசனத்தை இலகுவாய் அறிந்திட
முடியும்.
மேலும் மேலதிக மன இறுக்கங்களை தவிர்த்து மென்மையான மனதுடன் அமரலாம்.
ஒருபோதும் பரீட்சை மண்டபத்திற்கு முன் சென்று மீண்டும் குறிப்புகளைப் பார்ப்பது கூடாத விடயமாயினும் பெரும்பாலானவர்கள் அவ்வாறான கெட்ட பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருப்பது தென்படுகின்றது. பரீட்சை மண்டபத்தை நோக்கும் எவருக்கும் பொதுவாக பரவலாக தென்படும் ஓர் அம்சமுமாகும்.
தற்போது நாம் அடுத்த படிமுறைக்கு முகங்கொடுப் போம். அதாவது (check) பரிசோதனை என்பதாகும். இது எமது தலைப்பிற்கேற்ப "பரீட்சை நடைபெறும் வேளை” என மாற்றமடைவது சாலப்பொருந்தும்.
இங்கு உம்மால் பரீட்சிக்கப்படவேண்டிய அம்சங்கள் பலவுண்டு.
03. Check - பரீட்சித்தல்
பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அறிவுறுத்தல் களை வாசித்தல்
பெரும்பாலும் பரீட்சைகளில் செய்ய முடியுமானவை, செய்ய முடியாதவையென அறிவுறுத்தல் தொகுதிகள் பரீட்சைக்கு முன்னரே வழங்கப்படுதல் அனைத்துப் பரீட்சைகளிலும் பொதுவான விடயமாகும்.
அகவிழி - டிசம்பர் 2012 / 9

Page 12
அங்கு கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களிற்கு இணங்கிச் செல்லல் எதிர்பார்க்கப்படும். அவற்றைவிட வினாத் தாளிலும் விசேட அறிவுறுத்தல்கள் பதிக்கப்பட்டிருப்பது (அச்சிடப்பட்ட) பொதுவான அம்சம் விடையெழுத முன் இவற்றையும் பரீட்சித்தல் வேண்டும்.
பரீட்சகரின் அறிவுறுத்தல்களை செவிமடுத்தல்
பரீட்சை ஆரம்பிப்பதற்கு 5-10 நிமிடங்களுக்கு முன் அனைத்துப் பரீட்சார்த்திகளையும் பரீட்சை மண்டபத்தி னுள் நுழைய அனுமதிப்பது வழமை. அதன் பின்னர் வாய் மூல (oral) அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அவ்வாறான வாய் மூல அறிவுறுத்தல்களை செவி மடுப்பதும் உமது விளைதிறனை அதிகரிக்கும்.
உமக்குரிய நேரத்தை மதிப்பீடு செய்தல் (நேர மொதுக்கல்)
இது உம்மால் சிறப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடாகும். உதாரணமாக நீர் முகங்கொடுக்க விருப்பது கட்டாயமான வினா ஒன்றிற்கும், மற்றும் தரப்பட்டுள்ள 07 வினாக்களில் 05 இற்குமெனக் கொள்க. உமக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை பின்வருமாறு பாதீடு செய்வது பொருந்தும். முழுநேரம் 3 மணி நிமிடங்களாக்கும்போது 180 நிமிடம்.
வினாத்தாளை வாசிப்பதற்கு - 10 நிமிடம்
கட்டாயமான வினாவிற்கு
(புள்ளி - 25) - 60 நிமிடம்
ஏனைய வினாக்கள் 5இற்கும் ) (ஒரு வினாவிற்கு 20 நிமிடம்) - 100 நிமிடம்
மீள்பார்வை
- 10 நிமிடம்
மொத்தநேரம்
180 நிமிடம் விடையெழுதலை திட்டமொன்றிற்கமைய ஒழுங்க மைத்தல்
கட்டாயமான வினாவிற்கு விடையளிப்பது கட்டாய மானது. அதனை உம்மால் ஒதுக்க முடியாது. ஏனைய வினாக்கள் 7 இல் ஐந்தை தெரிவு செய்ய முடியுமென்பதால் தெரிவு செய்யும் போது இலகுவான வினாக்களைத் தெரிவு செய்வது கட்டாயமாக செய்யப்பட வேண்டும். அவ்வாறு 07 இல் 05 ஐ தெரிவு செய்த பின் அவற்றுள் உமது அறிவிற்கும் விருப்பிற்குமேற்ப முதலில் விடையளிக்கும் ஒழுங்கில் வரிசைப்படுத்திக் கொள்க. இவ்வாறு செய்வதன் மூலம் உமது மனதில்
107 அகவிழி - டிசம்பர் 2012

பெருமகிழ்ச்சியேற்படுவதுடன் தன்னுள் உயர் தன்னம்பிக்கையும் ஏற்படும்.
பிரதிபண்ணல் | பார்த்தெழுதுதல்
பார்த்தெழுதுதலை ஒருபோதும் செய்ய வேண்டாம். உம்மால் உமக்கும் அதேபோல் முழு சமூகத்திற்கும் செய்யப்படும் பெருந்துரோகமாகும். மறுபுறமாக பிரதிபண்ணும் போது நீர் பரீட்சகரின் கண்ணில் படுவீராயின் அது உமது முழு வாழ் நாளைக்கும் முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டதற்கு சமனாகும். விடைத்தாள்களில் சரியாக இலக்கமிடல், அனைத்துத் தாள்களிலும் பரீட்சைச் சுட்டெண்களை குறிப்பிடல், உமது நேரப்பாதீட்டில் மீளாய்விற்காக ஒதுக்கிய 10 நிமிட நேரத்தினுள் பரீட்சித்துப் பார்த்தல் மிக
முக்கியம்.
நாம் தற்போது இறுதிப் படி முறையை நோக்க
முடியும் அதாவது 'Action'.
04. Action - செயற்படுத்தல்
இங்கு முன்னர் தயார் செய்துகொண்ட ஆலோசனைகளிற்கும் திட்டங்களிற்கமையவும் விடையளித்தலை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வாரு வினாவிற்கும் ஒதுக்கிய நேரம் நிறைவுற்றதும் அடுத்த வினாவிற்கு விடையளிக்க தாமதமாயமையுமாயின் அவ்வினாவிற்கு விடையளித்தலை உடனே நிறுத்திக் கொள்க.
சில வினாக்களிற்கு விடையளிக்கும்போது அதற்கு வழங்கப்பட்டுள்ள காலம் அதிகமெனத் தோன்ற இடமுண்டு. அவ்வாறான நிலைமைகளில் எஞ்சிய நேரத்தையும் முன்னர் நிறைவு செய்ய முடியாது போன வினாக்களிற்காக ஒதுக்க முடியும்.
நீர் வெற்றிகரமாக தேர்விற்கு முகங்கொடுத்த ஒருவராயின் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறுவது நிறைந்த மனதுடன் மகிழ்ச்சியுடன் கூடிய ஒருவராய்
பெருமகிழ்ச்சியுடன்.
மேற்கூறிய விடயங்களனைத்தும் பரீட்சைக்கு முகங் கொடுக்கும் அனைவருக்குமாகும். கொழும்பு பல்கலைக் கழகத்தில் அரச நிதி, வங்கியாக்கம், தொடர்பாக தங்கப்பதக்கம் வெல்வதற்கு துணையாயிருந்தது மேற் கூறிய முறையேயென்பதை இறுதியாகக் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
- - - -

Page 13
முன்பள்.
கெ
கல்வி எனும் கட்டிடத்திற்கு அத்திவாரமாக அமைவது முன்பள்ளிப்பருவக்கல்வியாகும். முன்பள்ளிப்பருவமானது 3 வயது தொடக்கம் 5 வயதுவரையுள்ள காலமாகும். இந்தக்கல்விதான் முறைசார் கல்வியைப் பெறமுன் சிறார்கள் பெறும் அல்லது பாடசாலை புகுமுன் பெறும் கல்வியாகும். ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்க உறுதுணையாக இருப்பது முன்பள்ளிப்பருவக்கல்வியாகும். குழந்தைகளின் உடல், உள, ஆளுமை வளர்ச்சி என்பது அக்குழந்தையின் 3 முதல் 5 வயதிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விரிவடைவதாக ஆய்வாளர்கள் கூறுவர். எனவே இக்காலப் பகுதியில் சரிவர அத்திவாரமிடவேண்டிய பொறுப்பு முன்பள்ளிப்பருவக்கல்வியைப் புகட்டுவோருக்கு உரிய தாகும். குழந்தைகளின் அறிவு விருத்தியடைவதாகக் கூறப்படும் இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஏற்ற அடிப்படைக்கல்வியை ஊட்டவேண்டும். முன்பள்ளிகள் குழந்தைகளின் உடல், உள, ஆளுமை வளர்ச்சி, மொழித்தொடர்பாடல், சிந்தனையாற்றல், மனவெழுச்சியைச் சீராக்கும் நிலை என்பனவற்றைக் கையாள வேண்டியுள்ளது.
பிள்ளைகள் பிறந்த காலப் பொழுதிலிருந்தே கற்கத் தொடங்குகிறார்கள். பிள்ளையின் மூளை பிறப்பதற்கு முன்னரே விருத்தியடைவதாக ஆய்வாளர்கள் கூறுவர். இலங்கையில் ஏறக்குறைய 22 வீதம் தொடக்கம் 30 வீதம் வரையிலான பிள்ளைகள் ஒழுங்கமைக்கப்பட்ட

ளிப்பருவக்கல்வி
1. அமிர்தலிங்கம் ஆளுநரின் செயலாளர் | கிழக்கு மாகாணம்
முன்பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகளில் பங்குபெறுகின்றார்கள்.
குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புக்களும், செயல்களும், பொருள்களும், உடைய ஒரு இடம் பிள்ளைப்பருவப் பள்ளியாகும். சமூக, பொருளாதாரம் பின்னடைந்த நிலையில் மாற்றீடாக அமைவது இக்கல்வியாகும். பிள்ளையின் எதிர்கால வாழ்விற்கு அத்திவாரமிடுவதும் முன்பிள்ளைப்பருவக் கல்வியாகும். முன்பள்ளிப்பருவத்தில் பிள்ளை முழுவளர்ச்சியடைவது மிகமுக்கியமாக இன்று உணரப்படுகின்றது.
முன்பள்ளிப்பருவக்கல்வியின் குறிக்கோள்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:
1.
சிறுவர்களது அடிப்படைத் தேவைகளை இனங் கண்டு பூர்த்திசெய்தல். நல்ல சீரிய பழக்கவழக்கங்களை ஊக்குவித்தலும், வளர்த்தலும். குழந்தைகளின் முழுவளர்ச்சிக்கு ஊக்குவித்தல். குழந்தைகளின் வளர்ச்சிச் சக்கரத்தில் அடுத்த நிலைக்குத் தயாராக்குதல்.
இந்த நான்கு குறிக்கோள்களும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்துள்ளன. நான்கு பிரிவுகளில் ஒன்றில் தொய்வு ஏற்படினும் அதனால் ஏனையவை பாதிக்கப்படும். எனவே குழந்தைகளின் முழுவளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முன்பருவக்கல்வி அமையவேண்டும்.
| 1. சிறுவர்களது அடிப்படைத் தேவைகளை
இனங்கண்டு பூர்த்திசெய்தல்
குழந்தைகளின் அடிப்படைத்தேவைகள் உடல், உளம் சார்ந்த தேவைகளாகும். உடற்தேவைகள் - உணவு, உடை, உறையுள், நீர், காற்று என்பனவாகும். இவை உயிர்வாழ முக்கியமானவையாகும். உளத்தேவைகளாக அன்பும், பாசமும், சுதந்திர உணர்வும், துணிவாற்றலும், பாதுகாப்பும் முக்கியமானவையாகும். ஆசிரியர்களது அன்புடனான அரவணைப்பால் குழந்தைகளின் உளத்
அகவிழி - டிசம்பர் 2012 / 11

Page 14
தேவைகள் பூர்த்திசெய்யப்படுகின்றன. இப்படியாக இந்தப்பருவத்தில் அவர்களின் உடல், உளத்தேவைகளை இனங்கண்டு பூர்த்திசெய்ய முயலவேண்டும். இது முன்பள்ளி ஆசிரியர்களின் அத்தியாவசியமான பணியாகும்.
நல்ல சீரிய பழக்கவழக்கங்களை ஊக்குவித்தலும், வளர்த்தலும்.
நல்ல பழக்கவழக்கங்களை இப்பருவகாலத்தில் அவர்கள் மீது புகுத்த முற்படவேண்டும். உரிய நேரத்தில், உரிய கடமைகளைச் செய்தல், உரியநேரத்தில், உரிய இடத்தில் உண்ணும் பழக்கம், உறங்கும் பழக்கம், மலசலம் கழிக்கும் பழக்கம், காலந்தவறாமை, உண்மை பேசுதல், கீழ்ப்படிவு, ஒழுக்கம் என்பனவற்றை இப்பருவகாலத்தில் குழந்தைகளிடம் ஏற்பட வாய்ப்பு வழங்கவேண்டும். இப்பழக்கங்களை ஆசிரியரும், பெற்றோரும் எடுத்துரைத்துப் பழக்க வேண்டும். எனவே இப்படியான பழக்க வழக்கங் களை ஆசிரியர் முன்மாதிரியாகச் செய்து காண்பிக்க வேண்டும்.
3. குழந்தைகளின் முழுவளர்ச்சிக்கு ஊக்குவித்தல்.
உடல், உள வளர்ச்சி, சமூக அறிவு, மொழி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிமுறை களையும் சூழ்நிலைகளையும் உருவாக்கவேண்டும். பாடத்திட்டம், புறச் சூழ் நிலைக்கருவிகள் என்பன குழந்தையின் முழுவளர்ச்சியை உருவாக்க வழிவகுக்க வேண்டும். எனவே குழந்தைகளின் முழுவளர்ச்சிக்கு
வழிவகுக்கும் காலம் முன்பள்ளிப் பருவகாலமாகும்.
4. குழந்தைகளின் வளர்ச்சிச் சக்கரத்தில் அடுத்த
நிலைக்குத் தயாராக்குதல்
மேற்கூறிய மூன்று குறிக்கோள்களும் நிறைவேற்றப்பட்டால் தானாகவே அடுத்தநிலைக்குத் தயாராக முடியும். இப்படியாகக் குழந்தைகள் அடுத்தநிலையில் முறைசாரா கல்வி பெற வாய்ப்புள்ளதால் அதற்கேற்றவாறு முன்பள்ளிப் பருவத்தில் ஊக்குவிக்குப்படவேண்டும். இப்பருவத்தின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் குழந்தை அடுத்த நிலைக்குத் தயாராகிவிடுவார். குழந்தைகளுக்கு விளையாட்டுக்கள், கதைகள், பாட்டுக்கள், கலந்துரை யாடல்கள் போன்ற செயல்கள் மூலம் அவர்களை அடுத்த படிநிலைக்குத் தயார்ப்படுத்தவேண்டும்.
- இப்படியாக நான்கு குறிக்கோள்களும் பூர்த்தி செய்யப்பட்டால் குழந்தையின் கருத்தியல் சிந்தனைக்கான எண்ணுதல், எழுதுதல், படித்தல் போன்ற அடுத்தநிலையின் செயற்பாடுகளுக்கு முன்பள்ளிப்பருவம் வழிவகுக்கும்.
12 / அகவிழி - டிசம்பர் 2012

சுதந்திரசிந்தனை, சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், ஒத்துழைப்பு, மற்றவர்களை ஏற்றுக்கொள்ளல் போன்றவற்றைப் பிள்ளை களிடம் வெளிப்படுத்தவும், வலியுறுத்தவும் முன்பள்ளிப் பாடசாலைகள் மிகவும் உறுதுணையாகவுள்ளன.
* முன்பருவக்கல்வியின் தோற்றம்
முன்பருவக்கல்விக்குரிய தோற்றத்திற்குப் போர், கைத்தொழிற்புரட்சி, நகர்ப்புறமாதல், கூட்டுக் குடும்பத்தி லிருந்து பிரிந்து தனிமனித குடும்பமாதல், பெண்களின் மறுமலர்ச்சி, முன்பருவக்கல்வியின் முக்கியத்தினை உணருதல் என்பன முக்கிய காரணங்களாக அமைந் துள்ளன. இதன் மறுமலர்ச்சியே இன்றைய முன்பருவக் கல்வியாகும். ஆசிரியரின் பணி ஒரு வழிகாட்டியாக இருப்பதே. குழந்தை கற்பதற்கான நல்ல சூழ்நிலையை அமைத்துத்தருவதும், குழந்தைகள் தாமே பயன்படுத்திக் கற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பான கற்பித்தற்கருவிகளை வழங்குவதும் ஆசிரியரின் வழிகாட்டும் பணிகளாகும்.
*.
முன்பருவப்பள்ளிக்கேற்ற பாடத்திட்டமும் கற்பிக்கும் முறையும்
முன்னர் குறிப்பிட்ட நான்கு குறிக்கோள்களையும் நிறைவேற்ற பாடச்செயற்றிட்டமும், பயிற்றுவிக்கும் முறையும் அமையவேண்டும். பாடத்திட்டத்தினை ஏற் படுத்தும்போது பின்வருவனவற்றைக் கவனிக்கவேண்டும். பிள்ளையின் வயது, எண்ணிக்கை, ஆசிரியர் குழந்தைகளின் விகிதம், ஆசிரியப்பயிற்சியும் அனுபவமும், முன்பருவப் பள்ளியின் தத்துவம், காலநிலை, பள்ளிவேலைநேரம், கட்டட அமைப்பும் வசதியும், விளையாட்டுக்கருவிகள், பள்ளி அமைந்துள்ள இடமும், பெற்றோரின் தேவையும், நெகிழ்ச்சித்தன்மை என்பனவற்றின் விதிமுறைகளைத் திட்டமிடும்போது கவனிக்கவேண்டும். பள்ளிச்சூழலில் குழந்தையானது மதிப்பு, இணக்கம், ஆக்கமுயற்சி ஆகிய பண்புகளை ஆசிரியரின் நடத்தையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுமாறு பள்ளிச் சூழலை ஆசிரியர் அமைத்துத்தருதல் வேண்டும்.
* பாடச்செயற்திட்டமிடுதலின் வகைகள்
பாடச்செயற்றிட்டம் என்பது ஒருவழியின் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவதாகும். என்ன கற்பிப்பது என முதலில் முடிவு செய்து, கல்வித்திறனை ஒருங்கிணைக்கும் மையமாக இது செயற்படுகின்றது. எனவே இது முன்பருவப் பள்ளியின் மொத்த வாழ்க்கையைக் குறிப்பதாக உள்ளது. இது பள்ளியின் தேவைகளை நிறைவு செய்யவேண்டும்.இது தேவைகள், அறிவியல் அறிவு, அறிவியல் கற்பித்தல்கள், குழந்தைகளுக்கேற்படும் வளர்ச்சிகள் என்பனவற்றைக் கொண்டதாகும்.5

Page 15
இப்பாடத்திட்டங்களை நெடுங்காலத்திட்டம், குறுகிய காலத்திட்டம் என வகுக்கலாம். ஒரு ஆண்டு காலப் பாடத்திட்டத்தை நெடுங்காலத் திட்டமாக வகுக்கலாம். இத்திட்டத்தில் குறிக்கோள்கள், விதிமுறைகள் என்பன கவனத்தில் எடுக்கப்படவேண்டும். இந்த ஓராண்டு நெடுங்காலத்திட்டத்தினைப் பருவத்திற்கு, மாதத்திற்கு,
வாரத்திற்கு, நாளுக்கு எனப் பிரித்துத் திட்டமிடுதலையே குறுகிய காலத்திட்டமிடுதல் எனலாம். இப்படியாகத் திட்டங்கள் தீட்டும்பொழுது மொத்த வேலை நாட்கள், பள்ளிநேரங்கள், பருவநிலை என்பவற்றை நினைவுறுத்தி
அதற்கேற்ற வகையில் திட்டமிடலாம்.
* பாடக்குறிப்புக்கள் முதலில் பாடக்குறிப்புகளில் நோக்கங்கள், குழந்தை களின் முந்தைய அறிவு, பாடப்பொருள், கற்றல்செயல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்க வேண்டும். முன்பள்ளிப்பருவத்தில் பயன்படுத்தக் கூடிய விளையாட்டுக் கருவிகள், கற்பிக்கும் பாடல்கள், கதைகள், ஆக்கச் செயல்கள், ஆயத்தச் செயல்கள், அறிவியல் அனுபவம், சமூகவியல், களப்பயணங்கள் (FIELD TRIPS) ஆகிய அனைத்தும் அடங்கவேண்டும். குழந்தைகள் தங்கள் அனுபவங்கள் மூலம் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் கற்றுக்கொள்கின்றனர். இதனால்
குழந்தையின் முழுவளர்ச்சி தூண்டப்படுகின்றது.
முன்பள்ளிப்பருவப்பள்ளியில் நாளாந்த வருகை, இறைவணக்கம், ஆரோக்கியம், பரிசோதனை, சுதந்திர உரையாடல், வெளி விளையாட்டு, கை, கால் சுத்தமும், கழிப்பிடம் செல்லுதலும், கதை சொல்லுதல், பாடல்கள், ஆக்கச்செயல்கள், உள்விளையாட்டு, ஆயத்தச் செயல் கள், அறிவியல், சமூகவியல் அனுபவங்கள், சமயங்களின்

சிறப்புக் கூறும் விழாக்கள் என்பனவற்றின் மூலம் நெறிப்படுத்தல் வேண்டும்.
முன்பள்ளிப்பருவப் பள்ளிகளுக்கான கட்டடங்களும், மேசை, நாற்காலிகளும், விளையாட்டுக்கருவிகளும் முன்பள்ளிபருவக்கல்வியின் குறிக்கோள்களை நிறைவேற்ற
உதவ வேண்டும்.
முன்பள்ளிப்பருவக்கல்வியின் வளர்ச்சி
பள்ளிமுன்பருவக்கல்வி இங்கிலாந்தில் 1821 ஆம் ஆண்டு நியூலோனாக் (NEW LONARK) என்னுமிடத்தில் ரொபட் ஓவன் (ROBERT OWEN) என்பவர் பள்ளிமுன்பருவப் பள்ளி ஒன்றை நிறுவி சமூகச் சீர்திருத்தத்தைக் கல்வியின் மூலம் கொண்டு வந்தார். இதுதான் முதலாவது பள்ளி யாகும். மார்கறற் ரேச்சல் மக்மிலன் சிமர்ஸ் (MARGRET AND RAICHAL MACMILLAN) SIMERS கி.பி. 19ஆம் நூற் றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய பள்ளி முன் பருவப் பள்ளிக் கு மழலைப் பள்ளி (NURSERY SCHOOLS) என்று தொடங்கினார். இதில் குழந்தைகளின் உடல் நலனைப்
பேணுவது முக்கியமாக இருந்தது. பிரடரிக் புரொபெல் (FREDERICK FROBEL) கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் ஜேர்மனியில் பாலர் வகுப்பு (KINDERGARDEN) என குழந்தைப் பூங்கா என்ற கல்விமுறையைத் தொடங்கினார். இவர் கள் ' பின்வருமாறு செயற்பட்டனர்.
1. விளையாட்டுக்கருவிகளைப் (GIFT) பயன்படுத்தினர்.
2.
3.
அவர் இயற்றிய பாடலைப் பாடினர். கல்விப்பயனுள்ள விளையாட்டுக்களை, விளையாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி விளையாடினர்.
மாண்டிசோரியின் (Montessori) குழந்தை
மையக்கல்வி இத்தாலி நாட்டுப் பெண் மருத்துவர் மரியா மொண்டசொரி (MARIA MONTESSORI) அம்மையார் அறிவு வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து 1920 இல் சாதாரணமான குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கு ஒரு பள்ளியை ஏற்படுத்தினார். அதை (GASADIE BAMBINI) குழந்தைகளின் இல்லம் எனப்பெயரிட்டார். இது குழந்தைப்பருவக்கல்வித்திட்டம், மொண்டசொரி (MONTESSORI) பாலர் கல்வி முறை எனப்படும். மொண்டசொரி (MONTESSORI) பாலர் கல்வி முறை
மூன்று அடிப்படையான கொள்கைகளை உடையது.
அகவிழி - டிசம்பர் 2012 / 13

Page 16
பள்ளிச்செயல்கள் தனிப்பட்டவர்களது தனித்தன்மைக்
கேற்ப (INDIVIDUALITY) அமைதல்.
குழந்தைகளின் முழுச் சுதந்திரம்.
3. -
கட்புலப்பயிற்சி (SCENERY TRAINING).
அவர் குழந்தைகட்கு விளையாட்டுக்கருவிகளையும் கண்டுபிடித்தார். அவை தாமாகவே தவறுகளைச் சரிசெய்து கொள்ளக்கூடிய கருவிகளாகும். (DIDATIC APPARATUS) அதன் மூலம் குழந்தைகள் தாமாகவே கற்கும் திறனை (AUTO EDUCTION) வளர்ப்பதே அவரது குறிக்கோள். குழந்தைகளின் உளவியலை நன்கு அறிந்த ஆசிரியர்களால் இப்பள்ளி நடாத்தப்பட்டது. ஆசிரியர்களை அவர் இயக்குநர்கள் (DIRECTORS) என்றார்.அது ஒரு குழந்தை மையக்கல்வி முறையாகும்.
குழந்தையானது எதையும் எளிதில், விரைவில் புலன்கள் வாயிலாகப் புரிந்துகொள்ளும் தன்மை கொண் டது. குழந்தைக்குப் பிறப்புமுதல் ஆறுவயதுவரையும், பஞ்சானது நீரினை உறிஞ்சுவதுபோல் புறத்தேயுள்ள தூண்டல்களைக் குழந்தை எளிதில் கிரகித்துக்கொள்கின்றது. இவ்வயதுக்குழந்தையின் அறிவுவளர்ச்சி, அதனுடைய இயக்கச்செயல்கள், புறப்பொருட்களின் புலன்பயிற்சி, நாள்தோறும் வாழ்வியலில் பயன்படக்கூடிய செய்தொழில் திறன்கள் ஆகியவற்றைப் பொறுத்துள்ளது.
மாண்டிசோரியின் கற்பித்தல் விதிகள்
இதில் ஐந்து விதிகள் அடங்கும்.
குழந்தைகள் ஓரு வேலையில் ஈடுபடும்பொழுது, அக்குழந்தைகளால் அதில் தொடர்ந்து கவனத்தைச் செலுத்த முடியும்.
குழந்தைகள் எதிலும் ஒரு ஒழுங்கினை விரும்புவர். தான்கற்றதைத் திருப்பிச்செய்ய முற்படுவர். எழுதுதல், படித்தலிலும் பார்க்க விளையாட்டில் கூடிய நாட்டம் காட்டுவர்.
4.
பரிசுகள், தண்டனைகள் மூலம் குழந்தைகளை உற்சாகப்படுத்துவது தேவையற்றது.
ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னளவில் தன்மானம் உண்டு.
* மாண்டிசோரியின் கல்வி சம்பந்தமான திட்டமிடல்
இத்திட்டமிடலில் நான்குவகையானவை உள்ளன. அவையாவன:
இலவசமுறைக்கல்வி - இதில் வாழ்க்கையின் அடிப்படை யாகப் பயன்படக்கூடிய செயல்கள் உள்ளன.
14 / அகவிழி - டிசம்பர் 2012

2.
புலனுணர்வுக்கல்வி - குழந்தையின் ஐம்புலன்களில் ஒவ்வொரு புலனுக்கும் பயிற்சிதரும் வகையில் கற்பித்தற் கருவிகள் செயற்படும்.
- 4.
மொழிக்கல்வி - வகுப்பில் பொருளின் பண்பை மட்டும் கூறுவர். குழந்தை பொருளின் பெயரையும், பண்பையும் சொல்ல முயலும்.
பள்ளிக்கற்றல். - மேற்கூறியவை மூன்றும் குழந்தையின் படித்தல், எழுதுதல், கணக்குப் போடுதலிற்கு வழிவகுக்கின்றன. மாண்டிசோரி கல் விமுறை குழந்தையின் நடத்தை, வகுப்பறைக்கல்வி வளர்ச்சி என்பவற்றிற்கும் முக்கியமளிக்கின்றது. இதனால் இன்றும் நிலைத்து நிற்கின்றது.
கி.பி. 1887 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குழந்தைகள் கல்விக்கழகம் (ASSOCIATION OF EARLY CHILDHOOD EDUCATION) ஆய்வு நடாத்தி கி.பி. 1888 இல் சிறு குழந்தைகளின் முக்கியத்துவத்தினை வெளியிட்டது. 1933 ஆம் ஆண்டு குழந்தை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (THE SOCIETY FOR RESEARCH IN CHILD DEVELOPMENT) தேசிய மழலையர் கல்விக் க ழ க ம (ASSOCIATION FOR CHILDHOOD EDUCATION) பள் ளிமுன் பருவக் கல்விக் கழகம் (ASSOCIATION FOR CHILDHOOD EDUCATION) அனைத்துலகக் குழந்தைகளின் பூங்கா இயக்கம் (THE WORLD KINDERGARDEN MOVEMENT) போன்ற பல்வேறு இயக்கங்கள் தோற்ற மாயின. ஸ்பெல்மேன் ராக் பெல்லரின் நினைவு நிதி (SPELMAN ROCK FELLER MEMORIAL FUND) முன் பருவப்பள்ளிகளை நிறுவி நிதி உதவியளித்தது. கதறின் வைற்சைட் ரெய்லர் (KARTHERIN WHITESIDE TAILOR) என் பவர் பெற்றோர்களின் உதவியுடன் பெற்றோர் கூட்டுறவு முன் பருவப் பள்ளிகளை (PARENT COOPERATVE NURSERY SCHOOL) 1920 இல் கலிபோர்ணியாவில் தொடங்கினார். உருசியாவில் 1917 ஆம் ஆண்டு பள்ளி முன்பருவக்கல்வி இயக்கத்தினை (DIRECTORATE OF PRE SCHOOL EDUCATION) நிறுவினார்கள்.
இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தத்திலும் முன்பிள்ளைப்பருவக்கல்வியை தேசிய தரத்தில் விருத்தி செய்வதற்கு தெளிவான, உறுதியான பல சட்ட வலுவுள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்வித்திணைக்களம் முன்பள்ளி ஆசிரியருக்கு பயிற்சியளித்து வருகின்றது. எனவே முறைசார் கல்விக்குப் படிக்கல்லாகப் பயன் படுத்தப்படும் இம் முன்பள்ளிப்பருவக்கல்வியை வளர்க்க முற்பட வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்கள், பிள்ளைகள் ஆகியோரின் கூட்டு முயற்சி இன்றியமையாதது. குழந்தைகளின் வளர்ச்சிச்சக்கரத்தின் அடுத்தநிலைக்கு அவர்களைத் தயாராக்குவோம்.

Page 17
அறநெறிச் கட்டாயக்கல்
I.G.L. Ja
கல்வியென்பது நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாக பங்களிப்பு செய்யும் காரணியாகும். கல்விக்காக ஒவ்வொரு நாடும் பெருந்தொகைப் பணத்தையும் முதலிடுகின்றன. இது முன்னேற்றமடைந்த நாடுகளில் பெறுமதியில் பெரியதாகக் காணப்படுகின்றது. எமது நாடு பெருமளவு அபிவிருத்தியடைந்திராத வேளையிலும் கல்வியில் வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படாத நிலையிலுள்ளது. இலங்கையின் அதிக முதலீடுகள் இடப்படும் பத்துத் திணைக்களங்களில் (Department) கல்வித்திணைக்களமும் அடங்கியிருப்பது முழுத்தேசத்தினதும் அதிஷ்டமாய் அமைகின்றது.
1ா - - -
முழுமையான கல்வியில் தாய்மொழிக்கும் சமயத் திற்கும் விஷேடமானதொரு இடம் கிடைக்கின்றது. எனினும் தற்போது இப்பாடங்களை எதிர்கால சந்ததிகளுக்குக் கற்பிப்பதற்கு மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்புக்கள் போதுமானவையா என்பது கேள்விக்குரியது. - 'உலகில் எந்நாட்டில் வாழ்ந்தாலும் சிங்களப் பிள்ளைகள் சிங்களம் கற்க வேண்டும். தமிழ்ப்பிள்ளைகள் தமிழ் கற்க வேண்டும். இன்றேல் அவர்கள் பெயரளவில் மாத்திரம் சிங்களவர்களாகவும் தமிழர்களாகவும் காணப்படுவர்.'

க்கல்வியை வியாக்குவோம்
2yaweera
இது கடந்த பொதுநலவாய நாடுகளின் சம்மேளனத் திற்கு சமுகமளிக்கச்சென்ற எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேல்யாவில் சிங்கள - தமிழ் மாணவர்களை அழைத்தபோது கூறிய கருத்து அச்சு ஊடகங்களில் வெளிவந்ததை நாம் இங்கு தருகின்றோம். காலத்தின் தேவையைப் பொறுத்து ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
தற்போது மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு தாய்மொழி திருத்தமாக அமையாதிருப்பதால் அவர்களின் தாய்மொழி, சமயம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்கு நடவடிக்கை
யெடுத்தல் வேண்டுமென தொலைக் காட்சி நிகழ்ச்சியொன்றிற்கு கருத்துத் தெரிவித்த மருத்துவபீட விரிவுரை யாளரான விஷேட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
இது முக்கியமானதொரு கருத் தாகும்.இன்று உயர்தரப்பரீட்சையில் தாய் மொழியை ஒரு பாடமாகக் கற்காத மாணவர்களிடம் மொழியறிவு அறவே இல்லாதது போன்று.
சர்வதேசமொழியாக ஆங்கிலம் பிரபல்யம் பெற்று அத்தியாவசிய மொழி எனும் நிலையையும் தன்னகப்
படுத்தியுள்ளது. அதில் எந்தவித வாதங்களுமில்லை. எனினும் நன்மதி மேம்பாடின்றிய நிலையில் அல்லது தன்னிடம் சீரான கல்வி இன்றிய நிலையில் எம்மொழியில் புலமைபெறினும் அதனாலேற்படும் பயன்கள் குறைவாகவே காணப்படும். ஆங்கில அரிச் சுவடியை முழுமையாக அறிந்திருக்க எத்தனை மாணவர் கள் தமிழ் அரிச்சுவடியை முழுமையாக அறிந்து வைத்துள்ளனர். தாய்மொழி அரிச்சுவடியை அறியாதிருப்பது வெட்கப்பட வேண்டிதில்லையெனும் கருத்து நிலவிய போதும் ஆங்கில அசிச்சுவடியை அறியாவிடின் பெரியவர் களுக்கும் தன்மானப் பிரச்சினை போன்று தென்படுகின்றது.
அகவிழி - டிசம்பர் 2012 / 15

Page 18
உயர்தர வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தாய்மொழி, வரலாறு, சமயம் ஆகிய பாடங்களைப்பற்றிய தெளிவுடன் செயற்பட்ட ஒரு புத்திஜீவி Premadasa Udugama ஆவார். இன்றைக்கு பலவருடங் களுக்கு முன் உயர் தரப்பரீட்சை 'தேசிய கல்விப் பொதுத்தராதர சான்றிதழ்ப் பரீட்சை' என அழைக்கப்பட்டது.
சில மாணவர்கள் உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயின்ற போது கூட அவர்களுக்கு 'எமது பாரம்பரியம்' எனும் பெயரில் மேலுமொரு பாடத்தையும் கற்கவேண்டி யிருந்தது. அப்பாடத்திற்குரிய தலைப்புகளை முழுமையாக உள்ளடக்கிய பாடநூல்களும் அரசினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. நூறு நூல்களை வாசித்தாவது பெற முடியாத இரத்தினக் குறிப்புகளை அந்நூல் கொண்டிருந்தது. அதன் சிங்களப் பதிப்பிற்கான ஆசிரியர் ரூபன் பீரிஸ் அவர்களாவார். இதன் நோக்கம் கட்டாய பாடங்களிற்கு மேலதிகமாக எமது வரலாறு, பண்பாடு, சமயம், தாய்மொழி ஆகிய விடயங்களை அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் பூரண தெளிவுடையதாக அள்ளி வழங்குவதாகும். இதன்மூலம் கல்வியினுடாக நாட்டுப்பற்றுடைய, மனித நேயமுடைய, உணர்வுகள் நிறைந்த தலைமுறைகளை உருவாக்குவது எதிர்பார்க்கப்பட்டது. 'பணம் எவ்வளவு செலவு செய்யப்பட்ட போதிலும் அதன் மூலம் குணநலன், மதிநுட்பம் நிறைந்த பிள்ளை நாட்டிற்கு கிடைக்காது போகுமாயின் அம்முதலீட்டின் மூலம் கிடைத்த பயன் களேதுமில்லை'.
ஒரு சிங்களக்கவிதை.
அறிந்து, தெரிந்து கற்பவையே எமது செல்வம் அவர்களின், குணநலன், திறன் கண்டு போற்றிப்புகழும் முழுநாடும். இக்கவிதை எமக்குத்தரும் படிப்பினைகள் பல.
தற்காலத்தில் குற்றங்களோ குறைந்தபாடில்லை. நிகழும் குற்றங்களின் நுட்பங்கள், திட்டங்கள், கொடுமை கள் மிகவும் பயங்கரம். இன்று கொலையொன்று நிகழுமாயின் அது வெறுமனே கொலையாகவன்றி சித்திரவதைக்குட்படுத்தி, அவையங்களை வெட்டி வேறாக்கி, கழுத்தைத் துண்டித்து, கொல்ல, எரித்து இறுதியாக சாம்பலையும் மலசலகூடக் குழியில் போடும் காலமிது.
இக்குற்றவாளிகள் அவ்வாறு வழிதவறிச் செல்லும் முன் செல்ல வேண்டிய பாதையில் செலுத்துவதற்கு இப்போதே திட்டங்கள் வகுத்தல் வேண்டும். இதற்கென மத வழிபாட்டுத்தலங்கள், பாடசாலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விஷேட நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதன் மூலம் அனைத்துப் பிள்ளைகளுக்கும்
167 அகவிழி - டிசம்பர் 2012

குற்றத்திற்கும், பாவத்திற்கு பயமுடையவர்களாக ஆக்கு தல் வேண்டும். அதன்மூலம் மற்றையவரின் கருத்திற்கும் சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்கும் சமுகமொன்றை உரு வாக்கும் அடிப்படை அடித்தளத்தை திரும்பவும் ஆரம்பம் செய்ய முடியும்.
சிறு பிள்ளைகளை ஆணைகள் மூலமும், 15 வயதைத்தாண்டிய பிள்ளைகளை அறிவுறுத்தல்கள் மூலம் நல்வழிப்படுத்த முடியுமெனவும் முன்னோர் வாக்கொன்று கூறுகின்றது. அதனால் ஒருவரை நல்வழிப்படுத்த ஆணை களும், அறிவுரைகளும் ஒரேயளவில் முக்கியத்துவம் பெற்றவை.
நாளாந்தம் மின்ஊடகங்கள் கொண்டுவரும் செய்தி களை நோக்கும் போது சமூகம் ஒழுக்கமிழந்திருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் மாபெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கற்கும் பாடசாலையும் ஒழுக்கத்தில் பெருமளவு வீழ்ச்சியைக் கண்டிருப்பது தினசரி காணும் கேட்கும் விடயங்களிலிருந்து தெளி வாகின்றது. அதனால் கட்டாயப்படுத்திய நிலையிலேனும் மீண்டும் சமயத்தினூடாக சமூகத்தின் ஒழுக்கசீலத்தன்மையை மேம்படுத்த வேண்டிய காலம் எம்மருகே வந்துவிட்டது.
தற்போதைய மதவழிபாட்டுத் தலங்களின் நிலைமை பற்றியும் இங்கு குறிப்பிடுவது சிறந்தது. இன்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பாடசாலை முடிந்து வீடுவந்த பிள்ளைகள் சற்று நேர ஓய்வின் பின் மீண்டும் பள்ளி, கோயில், விகாரை என விறுவிறுப்பாய் சென்ற காரணம் மேலதிக கல்வியைப் பெறுவதற்காகும். அது அங்குள்ள மதகுருவிடமிருந்து பெறப்படுவது. ஊர்ப் பிள்ளைகள் தன்னிடம் வரும்வரை மதகுருவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். ஊரிற்கும் வழிப்பாட்டுத்தலத்திற்கு மிடையே மிகவும் நெருங்கிய ஒன்றிய வாழ்வு காணப்பட்டது. குருவும் தனக்கு தானமாகக் கிடைப்பவற்றில் மீதப்படுத்தி வரும் மாணவர்களுக்கு வழங்குவது அளவில்லா மகிழ்சி யுடன், அவ்வாறான நிலைமையொன்றை தற்கால சமூகத்துள் காணக் கிடைப்பது மிகவும் அரிது. - இன்று மதகுருமாரும் அலுவல்கள் நிறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். சிலருக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை மேலோங்கியுள்ளது. அனைத்தும் பணத்தினால் தீர் மானிக்கப்படும் இக்காலத்துள் 'எமது பாரம்பரியம்' எங்கேயென்பதை தேடியறிய வேண்டியுள்ளது.
அறநெறிக் கல்வியினூடாக மாபெரும் சேவையொன்றை வழங்க முடியும். அதனால் அறநெறிக்கல்வியை கட்டாயக் கல்வியாக்குதல் வேண்டும். எனினும் போட்டிநிறைந்த கடுகதி கல்வித் தேவைகள் காரணமாக அறநெறிக்கல்வி தீவிரமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. அறநெறிக்கல்வியால் தொழில்வாய்ப்புகள் கிடைக்காமையும் அதன் சான்றிதழ்கள்

Page 19
உயர்கல்விக்கு உதவாமையும் அதன் மதிப்பு குறை வடைவதற்கு காரணமாய் அமைந்துள்ளன.
இன்று பிரபல பாடசாலை பல பௌதீகவளங்களினால் நிரம்பி வழிகின்றன. சில பாடசாலைகளில் வைப்பிலுள்ள பணநிலுவை ஏழு எட்டுக் கோடிகளையும் தாண்டியிருப்பதாக அவற்றிலுள்ளோர் பெருமைப்படுவதைக் கேட்கக்கிடை கின்றது. அத்துடன் பாடசாலையின் கணக்கு நிலுவை களையும் அதிபர்மாரின் நடவடிக்கைளையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பரிசீலிக்குமளவு மோசடிகளும் மலிந்துவிட்டன. இவற்றை நோக்கும் சமுகம் அவர்கள்மீது
வைக்கும் கெளரவம் எத்தகையதாய் இருக்கும்?
இதனால் அறநெறிப்பாடசாலையில் கற்பிக்கும் குருமாரின் கல்வி மட்டத்தையும் நடத்தையையும் பற்றி மக்களுக்கு சிறந்த தெளிவு ஏற்படுதல் வேண்டும்.
அவையனைத் தும் இரு புறமும் தெளிவாய்த் தென்படும் வண்ணம் அமையுமாயின் பெற் றோர் தனது பிள்ளைச் செல்வங் களை அறநெறிப் பாடசாலை அனுப்ப முற்படுவர். இதற்கென அரசு சார்பிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதன் மூலம் அற நெறிக் கல்வியை கட்டாயக் கல்வியாக்க முடியும்.
அவையாவன.
ஆண்டு - 01 தொடக்கம் க.பொ.த. சாதாரணதரம் வரை சமய பாடத்தை பாடசாலைக் கல்வித் திட்டத்திலிருந்து ஒதுக்கி(நீக்கி) அப்பாடத்தைக் கற்பிக்கும், கற்கும் வசதிகளை அரச அங்கீகாரம் பெற்ற ஊரின் அறநெறிப்பாடசாலையிடம் ஒப்படைக்கப் படல் வேண்டும். தற்போது கூட சமயம் ஒரு கட்டாயமான பாடமாகும். எனினும், எதிர்காலத்தில் எப்பிரிவில் உயர்தரம் கற்பினும் சமயபாடத்தில் திறமைச் சித்தி பெறவேண்டு மென்பதை சுற்றுநிருபங்கள் மூலம் கட்டாயப்படுத்தல். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அதிலும் (அறநெறி) சமயபாடத்திற்குத் தோற்றும் மாணவர்களுக்கு அறநெறிப்பாடசாலை நடைபெறும் நாட்களில் குறிப்பிட்ட சதவீத வரவு காணப்பட வேண்டுமென்பது (நியாயமான அளவில், சுற்று நிருபங்கள் மூலம் அமுல்படுத்தல்.)
அறநெறிப்பாடசாலைகள் அனைத்தும் கல்வித் திணைக்களத்தின் கீழ் மற்றும் சமயப் பண்பாட்ட லுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு பூரண
3.

மேற்பார்வை செய்யப்படுவதுடன் அவற்றிற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அரசு தலையிடல். பிள்ளைகளுக்கு அறநெறிக்கல்வியை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை வழங்குவதுடன் அவர்களின் கல்வித்தகைமை பற்றி குறிப்பிட்ட நியாயமான கட்டுப்பாடுகளை விதித்தல். அறநெறிக் கல்வியின் இறுதி இலக்கை மனதில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் உபகாரமாய்
அமையும் பாடத்திட்டமொன்றைத் தயாரித்தல். பாடத்திட்டம் தயாரிக்கும்போது அத்துறையில் நிபுணத்துவம் பொற்ற, அனுபவப்பட்ட ஆசிரியர் குழாம் மூலம் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படல்.
6.
7.
- 8. -
தற்போது சில அறநெறிப்பாடசாலைகள் நிரம்பி வழிவதால் ஊரின் வழிபாட்டுத்தலங்களை மாணவர் தொகைக்கேற்ப வகுத்துக் கொள்வதன் மூலம் மாணவர் எண்ணிக்கையை மிகையாகாது பேணிக் கொள்ளல்.
ஒழுக்கம் இழக்கப்படும்போது தலைதூக்கும் பிரச் சினைகள் முழு மனிதகுலத்தையும் ஆட்டிப்படைக்கும். அல்லல் தரும். சிறைக் கூடங்களில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உணவு கூட அப்பாவி மக்கள் செலுத்தும் வரிப்பணம் மூலமே வழங்கப்படுகின்றது. அப்படியாயின் அரசியல் அர்ப்பணிப்புடன் செயற்படல் வேண்டும். அவ்வாறு இடம்பெறவில்லையாயின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப ஆசியாவின் மிகப்பெரும் சிறைக்கூடம் நம் நாட்டில் உருவாவதை தடுப்பது கடினமான காரியமாகிவிடும்.
அகவிழி - டிசம்பர் 2012 / 17

Page 20
பாடசாலை மாணவர்கள் மேலதிக வாசிப்புகளை மேற்கொள்ள வாழ்க்கை வழிகாட்டி நூல்கள் சிலவற்றை வாசிப்பதை கட்டாயப் படுத்தும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படல் வேண்டும். திறந்த பொருளாதாரத்திற்குச் சமாந்தரமாக வணிக உலகையும், தொழிநுட்ப உலகையும், எப்படியாவது வெற்றிகொள்ளும் முயற்சியில் உரிமைகளும் கடமைகளும் பின்தள்ளப்பட்ட வண்ணமுள்ளன. மக்கள் மனதில் சுயநலச் சிந்தனைகளை மூழ் கடித்து ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலை நாட்டுவதற்கு நெறி இன்றியமையாதது. சமயத்தை யும் நெறியையும் புறக்கணித்து சமூகத்தை கட்டியெழுப்ப முனைவது ஒருபோதும் கைகூடாத கனவு மாத்திரமே. அதனால் சிறுபராயத்திலிருந்தே கருத்துடன் கூடிய வகையில் சமயத்தை சமீபமாக்கு வதற்குரிய மிகவும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம் கையருகே வந்து விட்டது.
சட்ட திட்டங்களை வகுத்தல், ஞாயிறு நாட் களில் தனியார் வகுப்புகளைத் தடுத்தல் என்ப வற்றின் மூலம் மாணவர்களின் அறநெறிக்கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுவது இதுவரை கண் ணிற்குப் புலப்படா பிரச்சினைகளின் பலவற்றின் ஆரம்ப ஊற்றாக அது அமையலாம். அதற்கென பல்வேறு மாகாணசபைகள் பல்வேறு போலி நாடகங்களை நடிப்பினும் அதன் மூலம் தாக்கம் விளைவது இயலாமையாலும் வறுமையினாலும் வாழுபவர் களுக்கே. பணச்செழுமை பெற்றோர் ஞாயிறு காலை டியூசன் ஆசிரியரை வீட்டிற்கு வரவழைத்துக் கொள்வர். ஆயிரக்கணக்கில் பணமும் செலுத்திக் கொள்வர். இதனால் அனைவருக்கும் பொதுவான பிரயோகரீதியில் செயற்படுத்தக் கூடிய முறையான செயற்றிட்டமொன்றை வகுப்பது காலத்திற்கும் பொருத்தமானது.
அதனால் செய்ய வேண்டியது சமயபாடத்தை பாடசாலை கல்வித்திட்டத்திலிருந்து அகற்றி அறநெறிப் பாடசாலையிடம் ஒப்படைப்பதாகும் எனினும் இறுதித் தவணைப்பரீட்சை பாடசாலை மூலமே நடாத்தப்படல் வேண்டும். இது மிக முக்கியம்.
தனது பிள்ளையையே பாலியல் வல்லுறவிற்குட்படுத்தும் மனித உருவங்கள் ஒருபுறம். பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மறுபுறம். இவை யெல்லாம் பொதுவான நாளாந்த செய்திகள். பணத்தினால் பணம் பெருகுமென்பது உண்மை. எனினும் பணத்தினால் மனிதநேயம் படைத்தோர் உருவாகப்போவதில்லை. முதியோர் இல்லங்களில் வாடும் பெற்றோர்களை நோக்கும்போது தாயன்பு பிள்ளைகளிலிருந்து தூர மாகியிருப்பது தெளிவாகின்றது. வருடத்திற்கொரு
18 / அகவிழி - டிசம்பர் 2012

முறையேனும் ஞாபகப்படுத்த வேண்டுமென்பதால் முதியோர் தினம் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அத்தினமும் இல்லாதிருப்பின் சிலருக்கு பெற்றோரை முதியோரை ஞாபகம் வர வழியில்லை.
சிலர் முதியோர் இல்லத்திலுள்ள தனது பெற்றோரை நலம் விசாரிக்கச் செல்வது தனது அருமையான பிள்ளைச்
செல்வங்களையும் எடுத்துக்கொண்டு சுற்றுப்பிரயாணம் செல்லும் பாணியிலாகும். அங்கு சென்று வருவதும் வெறுங்கையுடனல்ல. செல்வம்படைத்தோர் மனமுவந்து முதியோருக்கு குறித்த அன்பளிப்புக்களையும் சுமந்தவர் களாக. வெட்கக்கேடு இந்நிலைமையின் காரணம் எமது கல்வித்திட்டத்தினூடாக பொறுப்புகள், பற்றி சொல்லித் தரப்படாமையா?
இதனால் மனிதநேயம் படைத்தோர் (புனிதர்) உரு வாவது அரிதாகிவிட்டது. அதேபோன்று அன்று பாடசாலை முடிந்து டியூஷன் வகுப்புகளை நோக்கி இழுபடும் நிலைமைகள் காணப்படவில்லை. அன்று படிப்பில் சற்று பின்னடைவானவர்களே டியூஷன் (Tution) சென்றனர். டியுஷன் போவது தன்மானப் பிரச்சினைகளை உண்டு பண்ணியது ஆனால் இன்று நிலைமை மறுபுறம் புரண் டுள்ளது. இன்று டியூஷன் செல்லாவிடில் அதுவே கற்றலுக்குப் பெருங்குறை.

Page 21
கல்வியி மனிதவள மூ
வடகிழக்
தொழிற்சாலைகள், வீதிகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதற்கு ஆகும் செலவை மூலதனச் செலவு என்றும் உணவு, சுகாதாரம், கல்வி ஆகியனவற்றிற்கான செலவுகளை நுகர்வுச் செலவு என்றும் கருதுவதுண்டு. மனிதவள மூலதனம் என்னும் எண்ணக்கரு உணவும் போசாக்கும், சுகாதாரம், நோய்த் தடுப்பு, நோய்ச் சிகிச்சை, கல்வி, பயிற்சி ஆகியவற்றிற்கான செலவுகளை மனிதவளத்தின் முதலீடு ஆகக் கருதவேண்டும் என்ற சிந்தனையை முன்வைக்கிறது. மக்களில் முதலீடு செய்தல் (Investing on People) என்னும் தொடர் இக் கருத்தை அழுத்திக் கூறுகிறது. சுகாதாரத்திற்கும் கல்விக்கும் செய்யப்படும் செலவு மக்களின் மீது செய்யப்படும் முதலீட்டுச் செலவு ஆகும். சுகாதாரம் மக்களின் சுக வாழ்வை உறுதி செய்கிறது. கல்வி மனிதனின் வாழ்க்கையை பயனுடையதாகவும் அர்த்த முடையதாகவும் ஆக்குகிறது. அது மனிதரிடம் உறைந் துள்ள ஆற்றல்களை மலரச் செய்து மேம்பாடுடைய வாழ்க்கையை அவர்கள் அமைத்துக் கொள்ள உதவுகிறது. மனிதவள மூலதனம் என்ற கருத்தாக்கம் பின்வரும்
மூன்று அம்சங்களைக் கொண்டது. 01. சுகாதாரம், கல்வி என்ற இரண்டும் ஒன்றாக
இணைத்து நோக்கப்படுகின்றன. 02. இவற்றுக்காகச் செய்யப்படும் செலவுகள் தனிநபர்கள்
மீது, நேரடியாகச் செய்யப்படும் செலவுகளாகவும்
முதலீடுகளாகவும் உள்ளன. 03. சுகாதாரமும், கல்வியும் அபிவிருத்திக்கான உள்ளீடு
(Input) என்பதோடு அபிவிருத்தியின் முடிவுப் பொருளாகவும் (Out put) உள்ளன. அபிவிருத்தியின் இறுதி இலக்குகளாகவும் இவை விளங்குகின்றன.
சுகாதாரமும் கல்வியும் ஒன்றாகவே நோக்கப்படுவதும் அவை இரண்டும் மனித மூலதனத்தின் இருவேறு வடிவங்களாக பார்க்கப்படுவதும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இவை ஒன்றையொன்று பாதிப்பன் வாயும் உள்ளன. சுகாதாரச் செலவு கல்வியை மேம் படுத்தும். மக்களின் கல்வி நிலை உயரும் போது அவர்களின் சுகாதார நிலையும் தானாகவே உயரும்.
மக்களின் சுகாதார நிலை மோசமடைவது ஏன்? பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியில் ஏன் அக்கறை

இயல் எண்ணக்கருக்கள்
லதனம் (Human Capital) க. சண்முகலிங்கம் முன்னாள் செயலாளர் க்கு மாகாண கல்வி அமைச்சு
காட்டுவதில்லை? ஆகிய இரு கேள்விகளுக்கு மக்களின் வருமானம் குறைவாய் இருப்பதுதான் காரணம் என்ற விடை ஒரு காலத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நச்சு வட்டம் செயற்படுவதாகவும் வருமானம் குறைவாக இருப்பதால் மக்களின் கொள்வனவு ஆற்றல் குறைகிறது. அவர்கள் போதியளவு உணவை உட்கொள்வதில்லை, போசாக்குக் குறைபாடு உள்ளது. இதனால் நோய்களால் பீடிக்கப் படுகின்றனர். நோயாளிகளான உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் குறைவு, இதனால் அவர்களின் வருமானம் குறைவு என்றவாறாக நச்சு வட்டம் பற்றிய விளக்கம் அமையும். நச்சு வட்டத்தை உடைப்பதற்குரிய வழி வருமானத்தை உயர்த்துவது தான். தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் தொழிற்துறை முதலீடுகளைச் செய்தல் வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் அபிவிருத்திச் செயற்திட்டங்களில் வருமான உயர்விற்கான திட்டங்கள், முதன்மை பெற்றன. காலப்போக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் சில அனுபவ உண்மைகளை வெளிப் படுத்தின. அவையாவன
வருமான உயர்வு காரணமாக மக்களின் சுகாதார நிலையும் கல்வியும் உயரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. வருமானம், செல்வம் என்பவற்றின் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் இருப்பது போல், சுகாதாரம், கல்வி என்பவற்றின் பங்கீட்டிலும் ஏற்றத்தாழ்வும் சமத்துவமின்மையும் இருக்கும். வறுமையைப் போக்குவதற்கு வருமானத்தை உயர்த் துதல் சிறந்த உபாயமாயிருப்பினும் சுகாதாரத்தையும் கல்வியையும் மேம்படுத்துவதன் மூலமும் வறுமையை நீக்கலாம். வறுமை நீக்கும் திட்டங்களில் இவை யிரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுகாதார சேவைகளினதும் கல்விச் சேவையினதும் பங்கீட்டில் சமத்துவம் காணப்படுவதோடு அச்சேவை களின் செயற்றிறன் உயர்ந்த மட்டத்தில் இருத்தல் வேண்டும்.
பௌதீக வாழ்க்கைத் தரச் சுட்டெண் (POLI) PQLI என்று அழைக்கப்படும் பௌதீக வாழ்க்கைத் தரச்சுட்டெண் 1970 களில் அறிமுகமாயிற்று. இச்சுட்டியின்
அகவிழி - டிசம்பர் 2012 / 19

Page 22
அறிமுகம் அபிவிருத்தி சிந்தனை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். மொறிஸ் டபிள்யு மொறிஸ் என்னும் பொருளியியலாளர் இதனை அறிமுகஞ் செய்தார்.
PQLI ஒரு கூட்டுச் சுட்டியாகும். சிசு மரணவீதம், ஆயுட்காலம், எழுத்தறிவு என்ற மூன்று சுட்டிகளின் சேர்க்கையாக இது வடிவமைக்கப்பட்டது. மொரிஸ் இதனை வடிவமைத்த காலத்தில் 100 வரையான பல்வேறு சுட்டிகள் உபயோகத்தில் இருந்தன. இவற்றுள் மொரிஸ் ஏன் இந்த மூன்றையும் மட்டும் தேர்வு செய்தார். இவற்றுள் முதலி ரண்டும் சுகாதாரம் தொடர்பானவை. மூன்றாவது கல்வி
தொடர்பானது. இச்சுட்டிகளைக் கொண்டு ஒரு நாட்டின் அபிவிருத்தி மட்டத்தை சரியாக மதிப்பிட்டு விடலாம் என்று மொரிஸ் கருதினார். உடல் வெப்பநிலை, இரத்தம், சிறுநீர் ஆகியவற்றின் பரிசோதனையைக் கொண்டு மருத்துவர்கள் நோய் அல்லது நோயின்மையை கண்டறி கிறார்கள் அல்லவா? அது போல் தான் சுகாதாரம், கல்வி என்ற இரண்டின் நிலையையும் காட்டும் சுட்டிகளின் உதவியுடன் ஒரு நாட்டின் அபிவிருத்தி நிலையை மதிப்பிடலாம். பிறநாடுகளோடு ஒப்பிட்டு அபிவிருத்தியின் அடைவு பற்றி மதிப்படலாம் என்று மொரிஸ் கருதினார். யோன் றிச்சார்ட்சன் என்ற பேராசிரியர் அபிவிருத்திச் சுட்டிகளின் ஒப்பீட்டு ஆய்வொன்றைத் தன் நூலொன்றில் தந்துள்ளார். (பார்க்க போரின் படிப்பினைகள் - 02, பக். 97 - 123) ஆளொருவருக்கான வருமானம் (Per Capital income) என்ற அளவு கோலின் போதாமையை விளக்கும் யோன் றிச்சார்ட்சன் PQLI என்ற சுட்டியும், அதன்பின்னர் அறிமுகமான HDI என்ற சுட்டியும் மேலானவை என்பதை விளக்குகிறார்.
PQLI சுட்டியின் படி நாடுகளை நிரல்படுத்தும் (Ranking) முறையானது ஆளொருவருக்கான மொத்தத் தேசிய வருமானத்தின் நிரற்படுத்தலை விட வித்தியாசமானது. இது வேறுபட்ட உலக நோக்கை (World view) வழங்கியது. இந்த வேறுபாட்டை மொறிஸ் இரு கூற்றுக்கள் மூலம் தெளிவுபடுத்தினார். அவையாவன, 01. பணம் தான் முக்கியமானதல்ல, யாவும் அதில்
தங்கியிருப்பதில்லை. 02. குறைந்த வருமானம் உடைய நாடுகள் குறைந்த
PQLI உடையனவாயும் இருப்பதில்லை. பணம்தான் முக்கியமானதல்ல, யாவும் அதில் தங்கியிருப்பதில்லை என்ற கருத்தை மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், லிபியா என்பனவும் பிறவும் விளக்கும் உதாரணங்களாக இருந்தன. இந்நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தி அதாவது GNP உயர்வாக இருந்தது. ஆனால் PQLI மதிப்பீட்டில் இவை தாழ்நிலையில் இருந்தன. மாறாக இலங்கை, கியூபா, கிரனெடா, கொரியா, மக்கள் சீனக் குடியரசு ஆகிய நாடுகள் மக்களின் அடிப்படைத் தேவை
20 / அகவிழி - டிசம்பர் 2012

களைப் பூர்த்தி செய்வதிலும், வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தியதிலும் உயர்ந்த அடைவைக் காட்டின.
(மேற்குறித்த நூல் பக். 103 ரூ 104) PQLI அபிவிருத்தி அடைவை அளவிடும் சிறந்த அளவு கோல் என்ற புகழைப் பெற்றது. ODC என்ற அமைப்பின் தலைவராகவும் பின்னர் 1980 களில் யுனிசெவ் நிறவனத்தின் செயலாளர் நாயகமாகவும் இருந்த யேம்ஸ் கிரான்ட் PQLI ஐ சர்வதேச மட்டத்தில் பிரபலப்படுத்துவதற்கு காரணமாக இருந்தார். இந்த அளவு கோல் மனிதவள மூலதனத்தின் விருத்திக்கு அழுத்தம் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியது.
மனிதவள அபிவிருத்திச் சுட்டி (H.D.I) 1990 ஆம் ஆண்டில் யு. என். டி. பி என்ற ஐ.நா துணை நிறுவனம் H.D.I என்னும் சுட்டியை அறிமுகம் செய்தது. மனிதவள அபிவிருத்திச் சுட்டி என்பதன் சுருக்கப் பெயரான H.D.I முன்னைய PQLI போன்றே சுகாதாரம், கல்வி என்ற இரண்டிற்கும் முதன்மை அளித்ததோடு ஆளொருவரின் வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. நீண்ட ஆயுள், கல்வி அறிவு, ஒருவரின் வருமானம் என்ற மூன்றையும் இணைத்ததாக இச்சுட்டி அமைந்தது. மனிதவள அபிவிருத்திச் சுட்டியின் படி நாடுகளை நிரற்படுத்தியபோது யப்பான், சுவீடன், சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து கனடா ஆகிய செல்வந்த நாடுகள் முன்னணியில் நின்றன. யப்பான் .996 என்ற அடைவையும் நைகர் .116 என்ற கீழ்மட்ட அடைவையும் காட்டின. வருமானத்தில் உயர்நிலையில் இருந்த லிபியா, சவுதி அரேபியா, ஓமான் ஆகியவை H.D.I அடைவில் பின்தங்கி யனவாய் காணப்பட்டன. கல்வி விருத்தி குறைந்த மட்டத்தில் இருந்தமையே இந்நாடுகளின் அடைவு மட்டம் குறைவாக இருந்ததற்கான காரணங்களாகும். ஆபிரிக்கா வின் சகாராப் பாலைவனத்தை அண்டிய நாடுகளில் இரண்டைத் தவிர ஏனையவை மனிதவள அபிவிருத்தி அடைவில் கீழ் நிலையில் இருந்தன.
சுகாதாரம், கல்வி என்ற இரண்டின் இணைவான மனிதவள மூலதனத்தின் முக்கியத்துவத்தை மூன்றாம் உலக நாடுகள் உணர்ந்து செயற்படுகின்றனவா என்பது
சந்தேகத்திற்குரியது. வறியோருக்குச் சார்பான கொள்கை கள் (Pro - poor policies) நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் சுகாதாரம், கல்வி என்பன அபிவிருத்தித் திட்டங்களில் முதன்மை பெறும்.
மேலதிக வாசிப்பிற்குரிய நூல்கள் 01. யோன் றிச்சார்ட்சன், போரின் படிப்பினைகள்
சமூக விஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு (2011) 02.
Micheal P. Todaro and Stephen . C. Smilth Economi Development Pearson (2003)

Page 23
விஞ்ஞானத்து
விசேட
கலாநிதி
B.Ed.(I M.A., |
திறமைசாலிகளை இனங்கண்டு அவர்களின் திறமையை விருத்தி செய்யக்கூடிய கல்வியை கொடுத்தல்வேண்டும் என்று சீன தத்துவ ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்துள்ளார்கள். திறமைசாலிகளின் அறிவை உச்ச நிைைலக்கு விருத்திசெய்தல் வேண்டும் என்னும் கருத்தை கிரேக்க தத்துவ ஞானியான பிளாற்ரோ (Plato) வலியுறுத்தினார். அரசு, இளமையிலேயே திறமை சாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அறிவை நன்கு விருத்திசெய்யக் கூடிய கல்வியமைப்பு கிரேக்க ஜன நாயகத்துக்குத் தேவையான அறிவு படைத்த தலைவர்களை உருவாக்குவதற்கு முக்கியம் என்னும் கருத்தையும் அவர் முன்வைத்தார். இவரது கருத்துக்கள் கிரேக்க கல்வி முறையில் பெரும் செல்வாக்குச் செலுத்தின.
X 40341.
|| He
x 461)
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் அல்பிறட் பினே (Alfred Bine) என்ற பிரான்ஸிய உளவியலாளர் நுண்ணறிவு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். இவர் 1902ஆம் ஆண்டு நுண்ணறிவுச் சோதனையை அறிமுகப்படுத்தி உளவியல் துறையில் ஒரு சாதனையை நிலை நாட்டினார். அவரது சோதனைகளின்படி சிலர் கூடிய நுண்ணறிவு உடையவர்களாகவும் வேறு சிலர் நுண்ணறிவு குறைந்தவர் களாகவும் அமைந்துள்ளார்கள் என்று உணரப்பெற்றது. இதன் அடிப்டையில் மீத்திறன் உடையவர்களுக்கு ஏற்ற சவாலாக அமையக் கூடிய விசேட வகுப்புகளை ஒழுங்கு

துக்கும் கணிதத்துக்கும்
- பாடசாலைகள்
கோணாமலை கோணேசர் First Class Hons.) (Colombo) A.Sc., Ed.D. (Columbia, USA)
செய்வது நன்று என்னும் கருத்தை அவர் முன்வைத்தார். ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஹங்கேரி (Hungary) உலகப்பிரசித்தி பெற்ற கணித வல்லுநர்களை உருவாக்கிய பெருமை பெற்ற நாடு ஜோர்ஜ் போல்யா (George Polya), ஜோண் வொண் நியூமன் (John von Newman); ஆகிய கணித விற்பன்னர்கள் ஹங்கேரியில் பிறந்தவர்களே. போல்யா ஆரம்பத்தில் சட்டக்கல்வி பயின்றார். பின்னர் அதைவிட்டு மொழிகள் கற்பதில் ஈடுபட்டார். இதையும் விட்டு கணிதம் பெளதிகம் ஆகிய கற்கை நெறிகளில் கவனத்தைச் செலுத்தி கணிதத்தில் உயர் பட்டம் பெற்று சுவிட்ஸ்லாந்து சென்று அங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் கணிதப் பேராசிரிய ராகப் பணியாற்றினார். இங்கு பணியாற்றும்போது றொக்பெல்லர் (Rockfeller Foundation) நிதியத்தின் புலமைப் பரிசு பெற்று இங்கிலாந்து சென்று அங்கு ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்திலும் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்திலும் கணிதம் தொடர் பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அங்கு பேராசிரியர் ஹாடி, பேராசிரியர் லிற்றில்வூட் முதலிய கணித விற்பன்னர்களுடன் சேர்ந்து கணித ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். மீண்டும் சுவிட்ஸ்லாந்து சென்று பேராசிரியராக பணியாற்றும்போது அவருக்கு மீண்டும் றொக்பெல்லர் நிதியம் புலமைப்பரிசில் வழங்கியது. இம்முறை ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற பிறிஸ்ரன் பல்கலைக்கழகத்தில் (Princeton University) கணித ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன்பின் சுவிட்ஸ்லாந்து சென்று பேராசிரியராகப் பணியாற்றும்போது கணிதத்தில் பிரச்சினை தீர்க்கும் (Problem Solving) முறைகளில் நூல்களை எழுதினார். இவரின் இந்த நூல்கள் கணிதத்தில் பிரச்சினை தீர்க்கும் முறையை சர்வதேச ரீதியில் பிரபலப்படுத்தின. இவர் சிறந்த கணித அறிவு படைத்தவர் மாத்திரமல்லாது கணிதம் கற்பிப்பதிலும் மிகத்திறமை பெற்றவராக விளங்கினார். இவ்வாறு செல்வாக்கு அடைந்துவரும் காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுதற்கு வாய்ப்புக்கிடைத்தது. ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்று உலகப்பிரசித்தி பெற்ற ஸ்ரன்போர்ட் (Stanford University)
அகவிழி - டிசம்பர் 2012 / 21

Page 24
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பதவியேற்றார். பேராசிரியராகப் பணியாற்றும்போது ஏற்கனவே தான் பிரச்சினை தீர்த்தல் தொடர்பாக ஜேர்மன் மொழியில் எழுதிய நூலை ஆங்கிலத்தில் (HOW TO SOLVE IT) 'பிரச்சினை தீர்ப்பது எவ்வாறு' என்னும் நூலை வெளி யிட்டார். இந்த நூல் பத்து லட்சம் பிரதிகள் விற்பைைனயாகி சாதனையைப் படைத்தது. மேலும் இவர் கற்பித்தலில் நன்கு ஈடுபட்டிருத்தமையால் தனது 91ஆவது வயதிலும் கணினி விஞ்ஞான வகுப்புகளை நடத்தி பெருமதிப்புப் பெற்றார். இவர் கணிதக் கல்வியில் ஈடுபட்ட காலகட்டத்தில் பல நாடுகளைச் சேர்ந்த இவரது மாணவர்கள் பலர் கணித விற்பன்னர்களாக உருவாகினார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரியில் பிறந்த ஜோண் வொண் நியுமன் மற்றுமோர் உலகப் பிரசித்தி பெற்ற கணித விற்பன்னர் ஆவார். இவர் இளமையிலேயே அபூர்வ ஞாபக சக்தி உடையவராகத் திகழ்ந்தார். ஒரே நேரத்தில் இரு பல்கலைக்கழகங்களில் படித்து ஒன்றில் கணிதத்திலும் மற்றையதில் ரசாயனத்திலும் பட்டம் பெற்றார். பின்னர் ரசாயனப் பொறியியலிலும் பட்டம் பெற்றதோடு தனது 22ஆவது வயதில் கணிதத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றார். ஜேர்மனியில் உள்ள பேர்லின் பல்கலைக்கழகத்தில் தனது 23ஆவது வயதில் கணிதப் பேராசிரியர் பதவியை ஏற்று சாதனை படைத்தார். பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். இவரது திறமையை அறிந்த ஐக்கிய அமெ ரிக்காவில் உள்ள பிறின்ஸ்ரன் (Princeton) பல்கலைக்கழகம் இவருக்கு பேராசிரியர் பதவி வழங்க முன்வந்தது. இப் பல்கலைக்கழகத்தில் உயர் தர ஆய்வுகளை மேற் கொள்வதற்கு உயர் கல்வி நிலையம் ஒன்று (Institute for Advanced Study) ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஆரம்பப் பேராசிரியர்களாக அறுவர் நியமிக்கப்பெற்றார்கள். இந்த நியமனம் பெற்ற அறுவரில் வொண் நியுமனோடு பிரபல விஞ்ஞானி அல்பெட் ஐயன்ஸ்ரையினும் அடங்குவர்.
நியுமன் கணிதம், பௌதிகம், புள்ளிவிபரவில் ஆகிய துறைகளில் 150 ஆய்வுக் கட்டுரைகளை வெளிட்டுள்ளார். கணனி அபிவிருத்திக்கு இவர் செய்த பங்களிப்பு மிகவும் மேலானது. இவர் நோய்வாய்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும்போது கணினி தொடர் பான நூலொன்றை எழுதினார். ஆனால் இந்த நூலை எழுதி முடிக்குமுன் தனது 53ஆவது வயதில் உலகைவிட்டு பிரிந்துவிட்டார். இவர் எழுதி முடிவு பெறாத நூல் “கணினியும் மூளையும்' (The Computer and the Brain) என்னும் தலைப்பில் வெளியிடப்பெற்றது. நோயினால் பாதிக்கப்பெற்றிருந்த போதும் கணினியின் விருத்தியின் சிந்தனையோடு செயல்பட்டிருந்த கணித விற்பன்னர் நியுமன். தற்போது பயன்படுத்தப்பெறும் கணினிகளின் வடிவமைப்புக்கும் பயன்பாட்டுக்கும் அத்தி வாரமிட்டவர்
22 / அகவிழி - டிசம்பர் 2012

வொண் நியுமன் என்பதனால் இவர் கணினி விஞ்ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்பெறுகிறார்.
இவ்வாறான கணித விற்பன்னர்களை உலகுக்களித்த ஹங்கேரி, கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் கூடிய திறமை காட்டியவர்களுக்கு அந்த நாட்டில் விசேட கல்வி நிலையம் ஒன்று தாபித்து சரித்திரம் படைத்தது. இது (EOTVOS JOSEF KELLEGIUM) என்று அழைக்கப்பெற்றது. இந்த கல்வி நிலையம் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் திறமைகாட்டிய மாணவர்களை அப்பாடங்களில் மேலும் மேன்மையடைய உதவியது. ஹங்கேரியின் விசேட கல்வி முறையின் வியத்தகு வெற்றி றஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, சீனா, கொறியா, வியற்னாம், கியூபா போன்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
ஹங்கேரி விசேட கல்வி நிலையத்தின் வெற்றியை நன்கு உணர்ந்த சோவியத் ரஷ்யா கணிதத்துக்கான விசேட பாடசாலைகளை ஆரம்பித்தது. ஒன்பது வயது தொடக்கம் 16 வயது வரையிலான மீத்திற மாணவர்கள் இப்பாடசாலைகளில் சேர்க்கப்பட்டார்கள். கணிதத்துடன் பெளதீகவியல் கணினிக் கல்வி ஆகியனவும் கற்பிக்கப்பட்டன.
ஐக்கிய அமெரிக்காவில் மத்திய அரசு மீத்திற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விசேட பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முன்வந்தது. இதன் பிரதிபலிப்பாக நியூயோக்கில் 1938ஆம் ஆண்டு கணிதத் திலும் விஞ்ஞாத்திலும் மிகத் திறமைமிக்க மாணவர்களுக்கு விசேட உயர்நிலைப் பாடசாலை தாபிக்கப்பட்டது. இது விஞ்ஞானத்துக்கான வொறொங்ஸ் உயர் நிலைப் பாடசாலை (Bronx High School of Science.) என்று அழைக்கப்பெற்றது. இதைத் தொடர்ந்து கணித விஞ்ஞானக் கல்வியை மேலும் மேம்படுத்த ஐக்கிய அமெரிக்காவில் கணிதமும் விஞ்ஞானமும் கற்பிக்க விசேட வதிவிட பாடசாலைகள் தாபிக்கப்பட்டன. வதிவிட விசேட பாட சாலைகள் மாணவர்களின் சகல விருத்திகளிலும் கவனம் செலுத்தின. தென் கரோலினாவில் (South Carolina) தாபிக்கப்பட்ட ஆளுனரின் கணித விஞ்ஞான வதிவிட விசேட பாடசாலை (Governor's Special School for Mathematics and Science) சர்வதேச செல்வாக்குப் பெறத் தொடங்கியது. இந்த விசேட பாடசாலையில் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களிலும் இவற்றைக் கற்பிப்பதிலும் மிகவும் திறமை பெற்ற ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அறிவையும் ஆற்றல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் பயன்படுத்துகிறது. ஆசிரியர்கள் சகலரும் முதுமாணி பட்டம் பெற்றவர்கள். பலர் கலா நிதிப்பட்டம் உடையவர்கள். இங்கு ஒன்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்னும் விகிதத் தில் ஆசிரியர் கள் பணியாற்றுகிறார்கள். ஒவ்வொரு மாணவரின் விருத்தியை கூர்ந்து கவனித்து ஏற்ற உதவி வழங்குவதற்கு வகுப்பில்
நினம்

Page 25
மாணவர் தொகை சிறிதாக இருத்தல் நன்று என்ற கருத்தின் அடிப்படையில் வகுப்பில் மாணவர் தொகை சிறிதாக உள்ளது. ஒவ்வொரு மாணவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்து அதை ஆராய்ச்சிக் கருத்தரங்கில் சமர்ப்பித்தலும் இங்கு பாடவிதானத்தின் ஒரு பகுதியாகும்
தென் அமெரிக்காவில் உள்ள கியூபா (Cuba) நாடு பொதுஉடைமை நாடாக இயங்க முற்பட்டபின் கல்வி விருத்தியில் கூடிய கவனம் செலுத்தப்பெற்றது. திறமை மிக்க மாணவர்களின் உச்ச விருத்தியை நோக்கமாகக் கொண்டு கணிதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் விசேட பாடசாலை ஒன்று (Lenin School) தாபிக்கப்பட்டது. இந்தப் பாடசாலையின் விசேட அம்சம் என்னவெனில் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதே.
கணிதம் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாது முன்னேற முடியும் என்பதை எடுத்துக்காட்ட முயல்கிறது கியூபா. இது மற்றைய நாடுகளுக்கு முக்கிய எடுத்துக்காட்டாகும்.
தென் கொறியா மீத்திற மாணவர்களின் கணித விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்காக கணித விஞ்ஞான பாடசாலைகளைத் தாபித்து இத் துறைகளில் மாணவர்களின் பூரண விருத்திக்கு வழி செய்ய முயல்கிறது. தென் கொறிய விசேட கல்வித்திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் மாணவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு முன்னேறிச் செல்வதே. அதாவது வகுப்பு முறை நீக்கப்பட்டு தனியாள் முன்னேற்றம் விருத்தி செய்யப்பெறுகிறது. தென் கொறியா கைத்தொழில் முயற்சிகளில் துரிதமாக முன்னேறி வருவதால் தொழிற்சாலைகளில் பணியாற்ற பொறியிய லாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். இத் தேவையை உணர்ந்தே கணித விஞ்ஞானக் கல்வியில் கூடிய கவனம் செலுத்தப் பெறுகிறது. இதன் பிரதிபலிப்பாக தென்கொறியா கைத் தொழில் விருத்தியில் துரிதமாக முன்னேறிவருவதும் அதன் பொருளாதாரம் மேல் நோக்கிச் செல்வதும் வெளிப்படை.
சிங்கப்பூர் கல்வியலாளர்கள் குழு ஒன்று கல்வி விருத்தியடைந்த நாடுகளுக்குச் சென்று அங்கு மீத்திற

மாணவர்களின் கல்வி தொடர்பான செயற்பாடுகளை அறிந்து வந்து சிங்கப்பூர் கல்வியில் மீத்திற மாணவர்களின் கல்வி தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்கள். இதன் பிரதிபலிப்பாக 1984 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மீத்திற மாணவர்களுக்கான கல்வி திட்டம் ஆரம்ப நிலையிலும் இரண்டாம் நிலையிலும் நடைமுறைக்கு வந்தது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் மாணவர் கல்வியை விரைவுபடுத்தல் அல்லாது அவர்கள் அறிவை செறிவுபடுத்தலாகும். அதாவது படித்தவற்றை தெளிவாக ஐயந்திரிபற அறிதலாகும். இந்தத் திட்டம் பல்கலைக் கழகங்களின் அனுசரணையோடு முன்னெடுத்துச் செல்லப் பெறுவதும் இது சிங்கப்பூரின் கல்வி அடைவில் வியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையும் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. அண்மையில் சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பாடசாலை மட்டத்தில் கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் அடிலெயிட் (Adelaide) நகரத்தில் அமைந்துள்ள பிளின்டஸ் பல்கலைக்கழக (Flinders University) வளாகத்தில் விஞ்ஞான கணித உயர் நிலை பாடசாலையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகக் கல்விக்கு தயார் செய்வதே இப் பாடசாலையின் நோக்கமாகும். மாணவர் மத்தியில் கற்றலில் விருப்பத்தை எற்படுத்தி அவர்கள் தாங்களே தங்களை கல்விக்கு வழிப்படுத்தக்கூடிய மனப்பாங்கை விருத்தி செய்வதில் இக் கல்வி நிலையம் வெற்றி கொண்டுள்ளது. கணிதம் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் சிறந்த சிந்தனையாளர்களை உருவாக்க முயலும் இக்கல்வி நிலையம் சர்வதேச செல்வாக்கை பெற்றது மாத்திரமல்லாது பல நாட்டு மாணவர்கள் இங்கு கல்விபெற முன்வருகிறார்கள்.
உலக ரீதியாக தற்கால முன்னேற்றத்தை நோக்கினால் ஒரு நாட்டின் விருத்திக்கு கணிதமும் விஞ்ஞானமும் அடிப்படையாக அமைந்துள்ளன. கைத்தொழில் விருத்தியும் தொழில் நுட்ப விருத்தியும் மேம்பட்டாலேதான் மக்களின் வாழ்வு மேம்படும் என்பதை உணர்ந்த நாடுகள் பல கணித விஞ்ஞானக் கல்விக்கு முக்கியம் அளித்து வருகின்றன. திறமை மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுத்து விசேட கல்வி அளிப்பதோடு உயர் கல்வி கற்ற திறமை மிக்கவர்களை ஆசிரியர்களாக நியமித்து கற்றல் முறைகளில் உளவியல் ஆய்வுகளை நன்கு பயன்படுத்தி கற்றலில் உச்ச நிலையை அடைய முயல்கின்றன. மனித வளத்தை உச்ச நிலைக்கு விருத்தி செய்ய முடியும் என்ற திடநம்பிக்கையுடன் செயல்படுகின்றன. மேலும் கணிதம் விஞ்ஞானம் ஆகியவற்றைக் கற்றலில் ஆண்பெண் வேறுபாட்டையும் குறைக்க முயல்கின்றன.
அகவிழி - டிசம்பர் 2012 / 23

Page 26
பாடசாலைகளில் தவளை
நடைபெறு
அதிபரொருவரின் கருத்து பாடசாலையில் தவணை இறுதிப் பரீட்சை நிறைவு பெற்றது. பிள்ளைகள் விளையாட்டு மைதானத்திலும், பாடசாலை வளவிலும், கட்டிட முன்றல்களிலும் விளை யாடுகின்றனர். காலையில் பாடசாலைக்கு வந்ததிலிருந்து பின்னேரம் வரையும் பிள்ளைகள் விளையாட்டிலேயே ஈடுபட்டுள்ளனர். இவற்றிடையே விளையாடும் போது காயமடையும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மாணவர் குழுக்கள் அதிபரின் அலுவலகத்திற்கு வருகின்றனர். காயமடைந்த பிள்ளைகளுக்கு மருந்திடுதல், முறைப் பாடுகளை விசாரித்தல் தவிர வேறு வேலைகளைச் செய்ய நேரம் இடம் விடாது. பின்னேரமாகும் போது பிள்ளைகளின் சீருடையின் வெண்ணிறம் மண்நிறமாய்ப் போய்விட்டது. உண்மையாகவே செங்கல் அரிந்தது போல், முழு பாடசாலை வளவிலும் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் குரலோசை தொடர்ச்சியான இரைச்சலுடன் கேட்ட வண்ணமுள்ளது. அதிபர் காரியால யத்திலிருந்து வெளியேறி வகுப்பறை வகுப்பறையாகச் செல்கிறார். சில வகுப்பறைகளில் மாணவர்கள் ஒருசிலர் காணப்படினும் வகுப்பறை பாழடைந்து தென்படுகிறது. ஆசிரியர்கள் குழுச் செயற்பாடாக நீண்ட நேரம் விடைப் பத்திரங்களைத் திருத்துகின்றனர்.
"சேர் (Sir) பிள்ளைகள் கொஞ்சப் பேர் வீட்டிற்குப் போயிட்டினம்” ஒரு பிள்ளை வந்து முறையிட்டது. பரீட்சை ஆரம்பித்த தினத்திலிருந்தே விடைப்பத்திரங்களைத் திருத்தும் பணி தொடங்கிய போதும் இதுவரையில் நிறைவுறாத பணியாய் தொடர்கிறது போல். வகுப்பறை யொன்றிலுள்ள ஆசிரியர் குழுவொன்றை நோக்கிச் சென்றதும் ஆசிரியர்களினாலும் முறைப்பாடுகள். சார், பிள்ளைகள் விடையெழுதுவதில்லை, இந்த இலகுவான வினாக்களுக்கும் சரியான விடையில்லை, புள்ளிகளும் மிகக் குறைவு, பெரும்பாலான ஆசிரியர்கள் முறை யிடுகின்றனர்.
தவணைப் பரீட்சைக்கும் ஒரு வாரமளவு காலமெடுத்தது. பரீட்சை முடிந்தும் இரண்டு - மூன்று நாட்களாகிவிட்டன. இன்னும் யாருமே விடைத்தாள் திருத்தி முடிந்ததாகத் தெரியவில்லை. பரீட்சையில் ஆரம்பத்தில் நிகழ்ந்த பாடங்களின் விடைத்தாள்களை அதே தினம் திருத்தத்
24 / அகவிழி - டிசம்பர் 2012

ணப் பரீட்சைகளின் பின் வதென்ன?
தொடங்கியிருப்பின் தற்போது நிறைவு செய்யக்கூடியதாய் இருந்திருக்கும். அப்படி எஞ்சுவதானாலும் இறுதியாக நடந்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களே எஞ்சுதல் வேண்டும். முன்னர் உதவி ஆசிரியராக இருந்தபோது தனது பாடங்களை பரீட்சை நடந்த அதே தினமே, நீண்ட நேரம் விழித்திருந்து சோர்வடைந்து விடைதிருத்தி மறுநாள் காலையில் பிள்ளைகளிடம் புள்ளிகளை வழங்கிய அனுபவங்கள் அதிபரின் நினைவில் மலர்கின்றன. இன்றும் அவ்வாறான ஆசிரியர்கள் இல்லாமல் இல்லை. எனினும் அனேகமானோர் பாடசாலை நேரத்திலேயே இவற்றைச் செய்கின்றனர். அத்துடன் முழுச் செயற்பாடாக இடம்பெறுவதால் விடைப்பத்திரம் திருத்துவதை விட கதையளத்தலே மேலோங்கியிருக்கிறது.
சில பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் பின்னர் விடைத்தாள் திருத்துவதற்காக பிள்ளைகளுக்கு விடுமுறை வழங்குவர். அப்பாடசாலைகளில் பிள்ளைகள் வருடத்தில் பாடசாலை செல்லும் நாட்களை விட விடுமுறைக்காலம் அதிகம். தவணைப் பரீட்சை முடிந்து உரிய விடுமுறையும் வழங்கப்படும். சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு பாட சாலைகளைத் தேர்ந்தெடுப்பதால் விடுமுறை வழங்குவர். அவற்றை விட விளையாட்டு நிகழ்ச்சி, மற்றும் பல நிகழ்ச்சிகளுக்கும் விடுமுறை வழங்குவர். பிள்ளைகள் தவணைப் பரீட்சையில் சரியாக விடையளித்திராவிடின் சரியாக விடையளிக்கக் கற்பிக்கப்பட்டதா? பிள்ளைகளுக்கு விடயங்களை ஒன்றி ணைக்க (தொகுத்தெடுக்க) கடினமா யிருக்கலாம்.

Page 27
அதனால் வினாப்பத்திரங்களை கலந்துரையாடி விளக்க மளிப்பின் அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும்.
தவணைப் பரீட்சையின் பின்னர் விடுமுறை வழங்கும் வரை வீணாய்க்கழியும் காலம் பரீட்சை வினாத்தாள்களை கலந்துரையாட உகந்ததென்பதால் (விளைவு மிகு செயலென்பதால்) பரீட்சையின் பின்னரும் நேர அட்ட வணைப்படி மணியொலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் பின்னர் பாடவேளைகளுக்குரிய ஆசிரியர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர். தனக்குரிய நேரத்தில் வினாப்பத்திரங்களை மாணவர்களுடன் கலந்துரையாட முடியும். மேலும் திருத்தும் பணிகளுக்கு காலம் அவசியப் படின் அவற்றையும் வகுப்பறையிலேயே செய்து கொள்ள
முடியும்.
முயற்சி மிகவும் வெற்றியளித்தது. பிள்ளை முழுநாளும் ஓடி ஆடிந்திரிந்தது நிறைவுற்றது. பிள்ளைகள் வகுப்பறை களில் தங்க வைக்கப்பட்டிருப்பதால் பேரிரைச்சலும் நின்றது. பரீட்சை வினாத்தாள்களை வகுப்பறைகளில் கலந்துரையாட ஆரம்பித்ததால் பிள்ளைகளுக்கு அவர்கள் விட்ட பிழைகளைக் கண்டுகொள்ள முடிந்தது.
தவணைப் பரீட்சையின் பின்னர் கழிந்து செல்லும் காலத்தை இவ்வாறான விளைதிறன் மிகுந்ததாக உப யோகிக்க முடியுமாயிருப்பினும் அதனை ஏன் செய்வதில்லை எனத் தோன்றியது. நாம் சிறுபிள்ளைகளாயிருந்த போதும் பரீட்சையின் பின் கற்பிக்கப்படவில்லை. அதனால்
சுகாதாரம் என்பது தனியே நோய்கள், ஊனங்கள் இல்ல
பூரணத்துவத்தை - உலக சுகா
உடல் ரீதியான நல்வாழ்வுக்கு.......
போசாக்கான உணவு பெறுவதற்கு வசதி வழங்குதல். செயற்படும் தன்மையை விருத்தி செய்தல். விளையாட்டு விருப்பை விருத்தி செய்தல். சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல். வயதுக்குப் பொருத்தமான தோற்றம் (வயதுக்குப் பொருத்தமான உயரம், உயரத்துக்குப் பொருத்தமான நிறை - உடல் திணிவுச் சுட்டியைப் பேணி வர வழிப்படுத்தல்.) ஓய்வு நேரத்தை விளைதிறனுடையவாறு கழிக்க வழிப்படுத்துதல். விபத்து, அனர்த்த முகாமை தனிப்பட்ட சுத்தம் தொடர்பாகக் கவனஞ் செலுத்துதல்.

பிள்ளைகள் குழுக்களாக நண்பர்களின் விடுதிகளுக்குச் சென்றனர். வாய்க்கால்களில் கங்கைகளில் குளித்தனர். தென்னை மரங்களிலேறி இளநீர் பறித்தனர். அவற்றில் எவற்றிலிருந்தும் கடவுள் துணையால் எந்த ஆபத்துக்களும் நிகழாதது இன்றும் மகிழ்ச்சி தருகிறது.
இன்றும் தவணைப் பரீட்சை நாட்களிலும் அதன் பின்னரும் பிள்ளைகள் தெருக்களிலே அங்குமிங்குமாய் நடமாடுவதைக் காணக்கிடைக்கிறது. அனைத்துப் பாட சாலைகளிலும் தவணைப் பரீட்சைகள் நிறைவுற்ற பின்னர் பரீட்சை வினாத்தாள்களை கலந்துரையாடுவது அமுல்ப் படுத்தப்படுமாயின் இந்நிலைமையினை மாற்றியமைக்க
முடியும்.
அதே போன்று மாணவர் மன்றம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் என்பவற்றை முறையாக ஒழுங்கு செய்வதன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் பெறுபேறுகள் அதிகமாகும். குறிப்பிட்ட வருடமொன்றில் தவணைப் பரீட்சையின் பின் எஞ்சியிருந்த காலப் பகுதி குறிப்பிட்ட கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. கழகங்களும் பொறுப்பான ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்திய அதே வேளை ஏனையோர் திருத்தும் பணிகளை நிறை வேற்றவென அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாணவர் களின் நாள் முழுதுமான நடமாட்டம் குறைக்கப்பட்டு பாடசாலையில் அமைதியும் அறிவும் பெருக வாய்ப்பேற் படுத்தப்பட்டது.
பாதிருத்தல் மாத்திரமன்று உடல், உள, சமூக நல்வாழ்வில் த அடைவதாகும். எதார தாபனம்
உள ரீதியான நல்வாழ்வுக்கு........
அன்பும் இரக்கமும் காட்டுதல். உள் அழுத்தத்தை இயன்ற அளவு குறைத்தல். பரஸ்பர ஒத்துழைப்புக்கு வழிப்படுத்தல். கருத்துத் தெரிவிக்க இடமளித்தல்.
அனைவரையும் சமமாகக் கவனித்தல். நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல்
பாதுகாப்பை உறுதிப்படுத்தல். சமூக ரீதியான நல்வாழ்வுக்கு.......
களிப்பூட்டும் தொடர்புகளை ஏற்படுத்துதல். உதவி ஒத்தாசை புரிய வழிப்படுத்துதல். தியாக மனப்பான்மையை விருத்தி செய்தல்.
ஆளிடைத் தொடர்புகளை உருவாக்க வழிப்படுத்தல். குழுவாக வேலை செய்யும் திறனை விருத்தி செய்தல். ஏனையோரின் கருத்துக்களைச் சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளல்.
அகவிழி - டிசம்பர் 2012 / 25

Page 28
கல்விப் புள்ளிவி தகவல் சார்ந்த
அறிமுகம் பொதுக்கல்வியின் முழு செயற்பாடுகளையும் சித்தரித்துக் காட்டக்கூடியவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களினூ டாகத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் பிரதானமாக கல்வி முறைமை தொடர்பான அடிப்படைப் புள்ளிவிபரத் தகவல்கள், மாணவர் அடைவுமட்டம் மற்றும் கல்விக்கான தேசிய வள முதலீடுகள் தொடர்பான தகவல்கள் இதன் மூலம் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொதுக்கல்வி தொடர்பான அடிப்படைப் புள்ளி விபரத் தகவல்கள்
இலங்கை அரசாங்கப் பாடசாலைகளின் புள்ளி விபரங்கள்
2005 - 2009
ஆண்டு மற்றும் பாடசாலைகளின் எண்ணிக்கை
வகவட-கட்டப்படிப்படியாக,
மாகங்கள்
சாக்ரடி4;பு கொம்புக்காரiடைய மாட்4ெE:யாவா11ாயர்
- 2005
ஆண்டு
2006 ஆண்டு
200 ஆண்டு
2008 ஆண்டு
2009* ஆண்டு
மேற்கு
1356
1353
1351
1340
1340
மத்திய
1466
1467
1464
1459
1460
பாடம்-Hin-laimrl-Tatar11-uyia:11பாயாமா1hristiHttாக ஈtata IPLா[1ாம்.
எப்டாபா--கி-ய-பதி-E-B-THE Aud-a4கா
பாய கட்டிட:34ய:1க்புரம்
தெற்கு
1097
1093
1096
1094
1098
வடக்கு
888
892
890
877
597
பாராபா- வாட்டர்
15ாடுசாடாம சொர ரர்க்காக்காய11கப்சராப்-7-ந்யாம்யதாரங்iக்காக்க் சாம்ரகாசாய+4ாடாயமாக்சர் யார்.
பாம்-வ-ராச்சார--
பாலிEெ-ரபு வயது.
கிழக்கு
972
971
948
969
985
வடமேல்
1224
1221
1220
1218
1219
வடமத்தி
781
782
776
774
176
ஊவா
830
831
831
832
831
----ா-ட்புபடித்திராதாரகா F-ரது
பராயர-----பு
மடிமடிபதரகராசாப்
சபரகமுவ
1109
1104
1102
1099
1104
மொத்தம்
9723
9714
9678
9662
9410**
போபாசாரd-ன்
*-12 மக்கா பசாச்சாரரயாடி--தாம்----- புர்ட்-பரங்-சேட்-யாங்-காய டிரம்.
பதபத் சாா-1 -ப்ரE-7-24டியடிகர1யாசர்சா-11:4,-காம-5-2--ரட் பு12ாபய
*தற்காலிக வெளியீடு மூலம்: வருடாந்த பாடசாலை புள்ளிவிபரம் - கல்வி அமைச்சு
267 அகவிழி - டிசம்பர் 2012

பரங்கள் மற்றும் த பகுப்பாய்வு
குறிப்பு: கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சகல அரச பாடசாலைகள் மற்றும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஒருசில அரச பாடசாலைகள் 2009 ஜூன் 01ஆம் திகதி புள்ளிவிபரம் மேற்கொள்ளப்பட்ட தினங்களில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
- மேற்கூறப்பட்ட தகவலுக்கமைய பாடசாலை எண் ணிக்கையில் கிரமமான குறைவைக் காணமுடிவதுடன் இவற்றில் மிகக்குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் இதற்கருகாமையில் அமைந்துள்ள மற்றுமொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டுள்ளதை இதன் மூலம் காண முடிகிறது.
அட்டவணை - தனியார் பாடசாலைகள் மற்றும்
பிரிவெனாக்களின் எண்ணிக்கை
நிறுவனங்கள்
2005
2006 ஆண்டு
- ஆண்டு
2007 ஆண்டு
2008 ஆண்டு
2009* ஆண்டு
பாபவ-ராமpunits:யாரிப்பு144hடியாரபாகர் பாரி11-Haqபபாபர்
85
91
94
92
98
தனியார் பாடசாலைகள் பிரிவெனா
114111111114rATH-14:10:14
653
654
658
691
697
*தற்காலிக வெளியீடு மூலம்: வருடாந்த பாடசாலை புள்ளிவிபரம் - கல்வி அமைச்சு
மேற்கூறப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு அமைய தனியார் பாடசாலைகளின் எண்ணிக்கை சிறிதளவில் வளர்ச்சி கண்டுள்ளதைக் காண முடிகிறது.

Page 29
அட்டவணை - அரசாங்கப் பாடசாலைகளின் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2005 - 2009
ப5-13THI 11:Hாக 19E ----------
200*
- சனாகான---------
பரபரப்ரகோரியனென
-=-=-=-=-=-=-FRA)
1114ாகராசாTHIக்கள்
HAgriEAE HE+பாக்கடி: தாசரியாகாரான 15t:ஈe=tbnksH:--பகtp=345xtrasseizASEntள்
கோவா பாறயாகராயர் ===:
-ர-கடிது யாராயமானதாக கருதாதக-பத்ரா
மாகாணங்கள் 2005
2006
2007
2008 ஆண்டு ஆண்டு
ஆண்டு
ஆண்டு
ஆண்டு மேற்கு
38038
41410
42033
41349
40217 மத்திய
27260
29760
32095
32035
30792 தெற்கு
26173
28408
29137
29565
29404 வடக்கு
11360
13363
12195
12387
11263 கிழக்கு
15760
17530
17233
17565
19861 வடமேல்
25105
26323
26808
26978
27417 வடமத்தி
11968
12570
12491
14138
14561 ஊவா .
14839
15646
16453
17339
18492 சபரகமுவ
18731
20819
21756
21856
21687 மொத்தம்
189234
205829
210201
213212
213694**
*தற்காலிக வெயீடு மூலம்: வருடாந்த பாடசாலை புள்ளிவிபரம் - கல்வி அமைச்சு
245 காடாப்..
ஓ0-1---02 AM1ெ1:20 FFEEaFFEFFEE பாபா NIGHNAHAsா#ெ1aFaHFeed எப்ய24/11En: MCATIAN
-ய-அர-ராறு
*கயை காதாைகையாகான.
குறிப்பு (1): கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங் களில் சகல அரசபாடசாலைகள் மற்றும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஒரு சில அரச பாடசாலைகள் 2009 ஜூன் 01ஆம் திகதி புள்ளிவிபரம் மேற்கொள்ளப்பட்ட தினங்களில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
குறிப்பு (2): 2009 ஆம் ஆண்டில் பாடசாலைபுள்ளி விபரஙக்ளை மேற்கொள்ளும்போது மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு கல்விக் கல்லூரியின் புதிய ஆசிரியர்கள் மற்றும் ஆங்கிலமொழி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்படா திருந்ததுடன் அவ்வெண்ணிக்கையும் உள்ளடக்கப்படும் பட்சத்தில் 2009ஆம் ஆண்டில் மொத்த ஆசிரியர் எண்ணிக்கை 21,66,14 ஆகும்.
மொத்த ஆசிரியர் எண்ணிக்கை வளர்ச்சி 2005 - 2009

713212
210,201
200829
ஆசிரியர்களின் எண்ணிக்கை
220,000 215,000 210,000 205,000 200,000 195,000 190,000 185,000 180,000 175,000
180. 234
2005
2008
2008
2009
2007 ஆண்டு
மூலம் : வருடாந்த பாடசாலை பள்ளிவிபாம் - கல்வி அமைச்சு
2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2009 இல் மொத்த ஆசிரியர் எண்ணிக்கையின் வளர்ச்சி 27,380 ஆகும். இது 14% வளர்ச்சியாகும். ஆசிரிய வழங்கல்களில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி காணப்படுவதுடன் ஆசிரியர்களின் உயர்ந்தபட்ச பயன்பாட்டை நோக்காகக் கொண்டு ஆசிரியர்களை நிலைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தப் பட்டுள்ளது.
தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் ஆசிரியர்
எண்ணிக்கை 2005 - 2009
2006
2008
2009*
2005 ஆண்டு
2007 ஆண்டு
ஆண்டு
ஆண்டு
ஆண்டு
5,000
5,266
5,414
5,454
5,701
ப-EHTHTwitார்4tIM HE-கடIHanாக்கப்-2-11-n-
தனியார் பாடசாலைகள்
ப-12-11/4AHAnuru-9-AriLHHHHHHHH:44:1-7471H
1a142-2411-கி-EHEAmiE-கடாHai4t:டிராடாக புரி:
Fii'டிரட் 14, பிடாரிபட்-டாடா:
E-ரரெடி-யம்-14714ா-11:44/11 444 4ார சொரசொ--14ாரியாபா4
பிரிவெனா
5,481
5,528
5,593
5,744
5,943
மூலம்: வருடாந்த பாடசாலை பள்ளிவிபரம் - கல்வி அமைச்சு மேற்கூறப்பட்ட தகவல்களுக்கு அமைய அரச பாடசாலைகளைப் போன்று தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்களின் எண்ணிக்கையில் கிரமமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதிதாக ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளல் 2010
சேர்த்துக்ெெகாள்ளப்பட்ட எண்ணிக்கை, 2011 சேர்த்துக்ெெகாள்ளவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப் 2011ஆம் ஆண்டு சேர்த்துக் கொள்ள 1பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை
வள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை
ஆசிரியர்களின்
சேர்த்துக் சேர்த்துக்
ஆசிரியர் களின் கொள்ளப்பட்ட
கொள்ளப்பட்ட வகை
வகை எண்ணிக்கை
எண்ணிக்கை கல்விக் கல்லூரி
கல்விக் கல்லூரி போதனாவியல்
2543
போதனாவியல்
3021 டிப்ளோமா
டிப்ளோமா
எய்nnH--பபுரninாக்-தரசாந்த்ரபாரதமெ ரர ராசாராரா+க-ம-H-Hi rாமாயminnlinா கஸ்ரப்ரப்ரllசராபடிப்பாயா Inirபம்பு
(171 -----------
பட்டதாரி ஆசிரியர்கள்
174
மேற்கத்தேய சங்கீதம்
200
11-րարուսեյս-ջյասատուալ սերիայուսասուլմազըլարովեյըարդանուատուսուցուհույսովոստթարավերակուոներնհարարերաբերում-բարատորոet,-լ
-------EHE-வ-வட 15-2-12 ட்ரொடாடாரொபர்ட்
#74-1-771-11-11150 5ெ:212121212TATA1ெ47-ெபரப்பு14-ம்-புட்டிப்பொக்ராபுல்-பேராதரைப்
212
மெளலவி ஆசிரியர்கள் ஆங்கிலமொழி ஆசிரியர்கள்
2267
பசய்ட்டிடிடிடியட்ரம் யட்டி-பட்-பகட்டிட்புப்ப
111
மெளலவி ஆசிரியர்கள்
சமய ஆசிரியர்கள் 410
அழகியற் கல்வி 3238
மொத்தம் மூலம் : கல்வி அமைச்சு
3174
47 ரோ4040ம்ப் யnHRLtaiஈHHEா
HEnங்க சராமாராரா
மொத்தம்
8814
-பாாாாாாாாாாா-அடாப் கபாப்
2010ஆம் ஆண்டில் சேர்த்துக்கொள்ளப்பட்ட புதிய
அகவிழி - டிசம்பர் 2012 / 27

Page 30
ஆசிரியர்களின் எண்ணிக்கை 3235 ஆகும். இவர்கள் ஆசிரியர் பற்றாக்குறைகொண்ட பாடங்களைத் தழுவக் கூடியவாறு சேர்த்துக்கொள்ளப்பட்டன. அத்துடன் 2011ஆம் ஆண்டுக்காக புதிதாக 8874 ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ள ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன் ஆட்சேர்ப்பு முறைமையில் பற்றாக்குறையாகவுள்ள பாடங்களுக்கமைய சேர்த்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கப் பாடசாலைகளின் ஆசிரியர்களின்
எண்ணிக்கை 2005 - 2009
ஆண்டு
பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை அபிவிருத்தி
மொத்த ஆசிரியர் எண்ணிக்கை விருத்தி
விகிதாசாரமாக
68705
33.57
2ாராரகராயாம்-------- ாயாச ராராபா------மாட்டுக்கறா எப்-3கா எயாரடா ------------Hாபக டாடா
2006 2007 2008
34.59
72374 73549 77223
34.67 35.75
2009
மூலம் : புள்ளிவிபர முகாமைத்துவக் கிளை - கல்வி அமைச்சு
முறைமையில் உள்ள சகல ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றியமைக்கும் கல்விப் பண்புசார் விருத்தியை மேம்படுத்தும் ஆரம்ப மற்றும் அடிப்படைத் தேவையாகக் கருதி செயற்படுவது அமைச்சின் முறையாக இருப்பதுடன் தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் எண்
ணிக்கை 35% தாண்டியுள்ளது.
மொத்த ஆசிரியர் எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதாசாரமாக
36
35
% 34
33
32
2006
2007
2008
2009
வருடம் மூலம்: வருடாந்த பாடசாலை புள்ளிவிபரம் - கல்வி அமைச்சு
28 / அகவிழி - டிசம்பர் 2012

அரச பாடசாலைகளின் மாணவர் எண்ணிக்கை 2005 - 2009
மாகாணங்கள்
005
2009*
மேற்கு
904263
மத்திய
879,838 519,564 512,834 266,448 377,129
519,778 505,558
தெற்கு
வடக்கு
177,252
144ா1111111111411411 -11/041 11+1401-44-1,
கிழக்கு
2006
2007
2008
857,985
394,752 |
1898,299 504,392
1519,123
517,630 494,554
508,293
5(6,471
264,926
267,856
261,499 372,523
379,072
378,317 456,325
468,778
469,084 248,610
253,132
252,482 277,330
282,232
28), 261 360,903 368,947
366,358 3,837,548 3,942,185 3,930,451
382,995
+2ா3;s:2:14:11:07:44ய- 4:4T11/11/11 11 11:44 INFTE ANTH-1
வடமேல்
4.33,747
471,063
வடமத்தி
252,771
ஊளவர்
279,832
255,833 287.448 374,236 3,942,077
சபரகமுவ
366,664 3,860,176
மொத்தம்
*தற்காலிக வெயீடு மூலம்: வருடாந்த பாடசாலை புள்ளிவிபரம்
- கல்வி அமைச்சு
அட்டவணை - தனியார் பாடசாலை மற்றும் பிரிவெனாக் களின் மாணவர் எண்ணிக்ைைக 2005 - 2009
நிறுவனங்கள்
2008
2003 ஆண்டு
2007 ஆண்டு
2008 ஆண்டு
2009* ஆண்டு
ஆண்டு
106,262
106,126
113,884
115,070
114,974
அக்டிங்-மாராரானாடா பாட்-பி-யா-ரிசா
தனியார் பாடசாலைகள் பிரிவெனா
55,173
55,292
54,935
56,065
58,098
*தற்காலிக வெயீடு மூலம்: வருடாந்த பாடசாலை புள்ளிவிபரம் - கல்வி அமைச்சு
அரச பாடசாலைகளுக்குச் சேர்த்துக்கொள்ளும் மாணவர் எண்ணிக்கை அண்ணளவாக கடந்த 05 ஆண்டுகளுக்குள் 3.9 மில்லியன் ஆக இருந்ததுடன் இதில் குறிப்பிடத்தக்களவு தளம்பல் காணப்பட்டது. இலங்கையின் பிறப்பு விகிதாசாரத்திற்கு அமைய பாடசாலை செல்ல வேண்டிய வயது கொண்ட சனத்தொகை விருத்தியில் குறைவு காணப்படுகின்றமை இதற்குப் பிரதான காரணமாகும். சமீபகாலத்தில் குறிப்பிடத்தக்களவு மாணவர் எண்ணிக்கையினர் அரச பாடசாலை வலைய மைப்புக்குப் புறம்பாக தனியார் பாடசாலைகளில் இணைந்தமையும் குறிப்பிடத்தக்க காரணிகளாகும்.
நன்றி:- கல்வி அமைச்சு, கல்வியின் புதிய நோக்கு

Page 31
சகலருக்கும் கல்விக்க
விருத்தி
கோளமய அமைவிடம், இன மொழி, சமய பேதங்களின்றி சகல மாணவர்களுக்கும் சம கல்விக்கான சந்தர்ப்பம் வழங்குவதனை உறுதி செய்வது அரசின் கொள்கையாகும். சகல செயற்பாடுகள் மீதும் தொடர்ந்தும் விசேட கவனஞ் செலுத்த வேண்டியுள்ள குழுக்களை இனங்கண்டு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைச்சு மட்டத்தில் விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பப்
வட மாகாண கல்வி அபிவிருத்தி வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த சிறார்களின் கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும் நிலைமையின் அடிப்படையில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் சகல பிள்ளைகளுக்கும் சகல வசதிகளையும் கொண்ட கல்விக்கான சந்தர்ப்பத்தினைக் கட்டியெழுப்புவது அரசின் நோக்கமாகும். இதன் கீழ் 2011 ஆம் ஆண்டில் அதிபர்கள், பிரதி அதிபர்கள் 24 பேர்களுக்காக முகாமைத்துவ பயிற்சி வேலைத்திட்டங்கள் நடாத்தப்பட்டன. 2012 ஆம் ஆண்டில் க.பொ.த. (சா.த.) 20 விஞ்ஞான ஆய்வுகூடங்களை நிர்மாணித்தல், 50 மாகாணப் பாடசாலைகளில் சுத்திகரிப்பு

கான சந்தர்ப்பத்தினை
செய்தல்
வசதிகளை வழங்க மற்றும் சிறுவர் மேசை கதிரைகள் 5000, ஆசிரிய மேசைகள் 500, கரும்பலகைகள் 250 மற்றும் தளபாடங்கள், உபகரணங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தோட்டப் பாடசாலை அபிவிருத்தி
தோட்டப் பாடசாலைகளின் கல்வி பண்புசார் விருத்தியை
ஏற்படுத்தல் மற்றும் உட் கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய் வதற்கான வேலைத் திட்டங்கள் அமுல் படுத்தப் பட்டுள்ளன. மத்திய, ஊவா, மேற்கு மற்றும் தென் மாகாண தோட்டப் பாடசாலை களில் ஆரம்ப மற்றும் இடைநிலை ஆசிரியர் களுக் கான கற் பித்தல் முறை தொடர்பான செயலமர்வும் மனோவியல் ஆலோசனை மற்றும் சுகா தாரக் கல்வி தொடர்பான செயலமர்வும், அதிபர்களுக் கான முகாமைத்துவ செயல மர்வும் 2011 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டது.
முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தி
முஸ்லிம் சமய, கலாச்சார விழுமிய அடையாளங்களைப் பாதுகாத்து தேர்ச்சியினைக் கட்டி கல்வியின் உயரிய இலக்குக்காக முஸ்லிம் மாணவர்களை ஈடுபடுத்த விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப் பட்டுள்ளன. 94 முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களுக்காக தலைமைத் துவ பயிற்சி வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல், சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நூலகங்களுக்கு மேலதிக மாக வாசிப்புப் புத்தகங்களை வழங்குவதன் மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறமைகளை விருத்தி செய்தல், வட மாகாண முஸ்லிம் ஆசிரியர்களின் ஆசிரிய பயிற்சிச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக கோப்பாய் ஆசிரிய கல்லூரிக் கிளையை மன்னார் மாவட்டத்தில் தாபிக்க
அகவிழி - டிசம்பர் 2012 / 29

Page 32
நடவடிக்கை எடுத்தல், வட மாகாணத்தில் மீள் குடி யேற்றப்பட்ட பிரதேசங்களின் பாடசாலைச் சிறார்களது கல்வியை மேம்படுத்த திட்டங்களை வகுத்தல் போன்றன 2011 ஆம் ஆண்டில் விசேடமாக அமுல்படுத்தப்பட்டன. 2012 ஆம் ஆண்டில் 1000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் முஸ்லிம் பாடசாலைகளில் அரபு மொழியை விருத்தி செய்யவும், குறைந்த அடைவுமட்டம் கொண்ட முஸ்லிம் பாடசாலை களுக்காக சுயதொழில் கற்கை உபகரணங்களை வழங்குவதற்கும், முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் கல்வி மட்டத்தை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கை களை எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அபிவிருத்தி
அறிவினைக் கேந்திரமாகக் கொண்ட பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக தமிழ் சமூகத்தின் பங்களிப்பினை உறுதி செய்வதற்கு தமிழ் மொழி மூல மாணவர்களின் கல்வியை மேம்படுத்த விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மொழி மூலப் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூல பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகளின் பிரதான எட்டு பிரச்சினைகளை இனங்கண்டு அதற்காக பொருத்தமான தீர்மான யோசனை களை அமுல்படுத்துவதற்காக உரிய தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. 1000 இடைநிலைப் பாடசாலைகள் உட்பட 175 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டங்களை அமுல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
மாற்றுக் கல்விக்கான சந்தர்ப்பமாக முறைசாராக் கல்வி
பாடசாலை செல்ல வேண்டிய வயதெல்லையில் உள்ள பாடசாலை செல்லாத பிள்ளைகளை கல்வியில் ஈடு படுத்துதற்கும் பாடசாலையை விட்டுச் செல்வோர் பாடசாலை இடைவிலகல், இளைஞர் யுவதிகள், முதி யோருக்காக கல்விக்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதன் மூலம் சகல மக்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பங்களிப்புச் செய் வது முறைசாராக் கல்வியின் நோக்கமாகும்.
கட்டாயக் கல்விக் கட்டளையை அமுல்படுத்துவதற்காக 8,400 கட்டாயக் கல்விக் குழு ஊடாக பெற்றோரை அறிவுறுத்தல், பாடசாலை செல்லாத பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு சகல ஆண்டு களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
307 அகவிழி - டிசம்பர் 2012

பாதகமான சூழல்களில் வாழும் சிறார்களுக்கு பொருத்தமானவாறு எழுத்தறிவு வகுப்புக்களை நடாத்துதல் மற்றும் 171 சமூக கற்றல் மத்திய நிலையங்களை அமுல்படுத்தல், 66 செயற்சாதனை இணைக் கற்கை மத்திய நிலையங்களை அமுல் படுத்தல், 220 தெருச் சிறார்களுக்காக கல்விக்கான சந்தர்ப்பத்தினை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் 2011 ஆம் ஆண்டில் அமுல் படுத்தப் பட்டது.
விசேட கல்வித் தேவைகள் கொண்ட பிள்ளைகளின் கல்வி
விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகளின் கல்விக் காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் கீழே குறிப்பிடப் பட்டுள்ளன.
விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகளின் ஆளுமை விருத்திக்காக 25 சிறுவர் முகாம்களை நடாத்துதல். கட்புலன் குன்றிய மாணவர்களுக்காக மூக்குக் கண்ணாடி வழங்குதல் மற்றும் செவிப்புலன் குன்றிய மாணவர்களுக்காக செவிப்புலன்களை வழங்குவதன்
மூலம் மாணவர் பங்கேற்பினை மேம்படுத்தல். விசேட கல்விக் கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகளை நவீன மயப்படுத்துவதன் மூலம் விசேட சந்தர்ப்பங்களை விருத்தி செய்தல். பிரெய்ல் அச்சு பாடப்புத்தகங்களின் ஆக்கத்தினை மேம்படுத்துவதற்காக பிரெய்ல் அச்சுக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல்.
கல்வி செயற்சாதனை மதிப்பீடு பாடசாலை மதிப்பீடு மற்றும் மேற்பார்வை பண்புசார் கல்வியினை உறுதிசெய்வதற்காக கல்வியின் தரத்தினை வகுத்தல் மற்றும் அதற்கமைய பாடசாலை மதிப்பீட்டுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை வெளி மதிப்பீடுகள் தொடர்பாக மதிப்பீட்டாளர் களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாரத்துக்கு குறைந்தபட்சம் 2 பாடசாலைகள் வீதம் சகல மாகாணங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் வேலைத்திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தரத்துக்கு அமைய மதிப்பீடுகளை மேற்கொண்டு பாடசாலையின் மொத்த பண்புசார் காட்டி யினை தயாரித்து அதனை 75% இனையும் விட உயரிய மட்டத்தை எட்டி பாடசாலையினை மதிப்பீட்டிற்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Page 33
கல்வி ஆராய்ச்சி மற்றும் தகவல் பயன்பாடு கல்வியின் ஆராய்ச்சித் துறையினை விருத்தி செய்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மற்றும் ஆராய்ச்சித் தகவல் பயன்பாட்டுக்கு பழக்குவதற்காக புதிய வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசின் சகல பாடசாலைகளினதும் புள்ளிவிபர வரைபு களைப் பெற்று தகவல் முறைமை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இடைநிலைப் பாடசாலைகளைத் தேர்ந்தெடுக்கும் வரைபு உள்ளிட்ட கல்வியின் திட்டமிடல் பணிகளுக்காக அத்தகவல்களைப் பயன்படுத்த ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
மாணவர் நலன்புரி வேலைத்திட்டம் மற்றும் பௌதீக
வள விநியோகம்
பா?
பாடசாலை சீருடைகளை வழங்குதல்
சகல அரச பாடசாலைகளின் மாணவர்களுக்கும் சீருடைத் துணிகள் மற்றும் பிரிவெனாக்களின் பிக்கு மாணவர்களுக்கு காவித் துணிகளையும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இதற்காக 2011 ஆம் ஆண்டில் 1595 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
பாடசாலை பாடநூல்களை வழங்குதல்
நாட்டின் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளின் 40 இலட்சம் மாணவர்களுக்காக 433 வகை பாடநூல்கள் ரூபா 1552 மில்லியன் செலவில் விநியோகிக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்களுக்காக புலமைப்பரிசில் உதவி வழங்குதல்
ஐந்தாம் தரத்தின் புலமைப்பரிசில் பரீட்சை தேர்ச்சி மட்டத்தை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் 15,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் புலமைப்பரிசில் நிதியை வழங்க இவ்வாண்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. உயர் தரத்தில் கற்கும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் தாரர்கள் புலமைப்பரிசில் கொடுப்பனவை ரூபா 500 இலிருந்து 1500 வரை அதிகரிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
பாடசாலை மதிய உணவு வேலைத்திட்டம்
மற்றும் சுகாதார ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் தேகாரோக்கியம் கொண்ட இளம் சந்ததியினரை உருவாக்கும் நோக்குடன் சுகாதார அமைச்சு ஏனைய உரிய நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்காக உணவு வழங்குவதன் மூலம் போசாக்கு மட்டத்தை விருத்தி செய்ய, பாடசாலைக்கு சமூகமளிப்பினை விருத்தி செய்து கல்விச் செயற்பாட்டில் உற்சாகமாக ஈடுபடுவதனை விருத்தி செய்ய, சிறந்த உணவுப் பழக்கங்களைப் பழக்குவதும், மந்த போசாக்கினை 8% வரை கட்டுப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் 6198 பாடசாலைகளில் 731,902 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இவ்வேலைத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் 8,000 பாடசாலைகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்காக இரும்புச் சக்தி கொண்ட வில்லைகளை வழங்குவதன் மூலம் சக்தியின்மை யினைக் கட்டுப்படுத்தி மாணவர்களின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்தவும் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவதை விருத்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சுகாதார ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்காக நீர் மற்றும் சுத்திகரிப்பு வசதிகளை வழங்குதல், நீர்த்தாங்கிகளை வழங்குதல் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்குவதன் மூலம் சுகாதார தரமிக்க பாடசாலை சூழலைக் கட்டியெழுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுகாதார ஊக்குவிப்பு சுற்றறிக்கை சகல பாடசாலை களிலும் அமுல்படுத்தப்படுவதன் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட 21 வலய பாடசாலைகளில்
அகவிழி - டிசம்பர் 2012 / 31

Page 34
சுற்றறிக்கைக்கு அமைய அமுல்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றை சுகாதார ஊக்குவிப்பு பாடசாலைகளாக உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாணவர் முகாம் மற்றும் ஆசிரிய முகாம்கள் ஊடாக மாணவர்களின் சுகாதாரம் தொடர்பான அறிவு மற்றும் தேர்ச்சியினை விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. - பாடசாலை உணவக சுற்றறிக்கையை சகல பாட சாலைகளிலும் அமுல்படுத்துவதன் மூலம் பாடசாலை மாணவர்களை சுகாதார தரமிக்க உணவுப் பயன் பாட்டுக்கு பழக்குதல். மேலதிக வாசிப்புப் புத்தகங்கள் மற்றும் கற்கை உதவிகளை வழங்குவதன் மூலம் சுகாதாரம் தொடர்பான அறிவு மற்றும் தேர்ச்சியினை விருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலை வைத்திய ஆராய்ச்சிகளை மேற்கொள் வதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கிடையே காணப்படும் சுகாதாரப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கும் செயற்பாடுகளை அமுல்படுத்தல். 2010 ஆம் ஆண்டில் 83% பாடசாலைகளில் இப்பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. சுகாதார ஊக்குவிப்பு மற்றும் எச்.ஐ.வீ. எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரிய மாணவர் களை அறிவுறுத்தல், மாணவர் முகாம்களை நடாத்துதல் மற்றும் மனோவியல் சமூக தேர்ச்சி விருத்தியின் மூலம் பாடசாலைகளுக்கிடையிலான பாதகமான பழக்க வழக்கங்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாடசாலை பற்சிகிச்சைச் செயற்பாடுகளை மறு சீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாடசாலை மாணவர்களுக்காக கண் சிகிச்சை முகாமை நடாத்துவதன் மூலம் மாணவர்களுக்கிடையே உள்ள கண்சார்ந்த பிரச்சினைகளை இனங்காணவும், மூக்குக் கண்ணாடிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பாடசாலைக் கட்டிடம்
தேசிய பாடசாலைகளில் இடைநடுவில் நிறுத்தப் பட்டுள்ள நிர்மாணிப்புக்களில் 98% நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு 80% மானவை பூர்த்தி
செய்யப்பட்டுள்ளன.
327 அகவிழி - டிசம்பர் 2012

சகல தேசிய பாடசாலைகளிலும் அத்தியாவசியமாக மேற்கொள்ள வேண்டிய பழுதுபார்த்தல்களை இனங்கண்டு அது தொடர்பான பணிகளில் ஆரம்பித்து சுமார் 60% பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் கொண்ட தேசிய பாடசாலைகளின் கட்டிடங்களைப் பாதுகாப்பதற்காகவும், வெள்ளப் பெருக்கு அனர்த்தங்களுக்கு உட்பட்ட பாடசாலை களைப் பழுதுபார்ப்பதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஹோமாகம பிட்டிபன மஹிந்த ராஜபகஷ கல்லூ ரிக்காக 36 வகுப்பறைகள் ஆசிரிய ஓய்வறை கொண்ட கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகளின் சுமார் 60% பூர்த்தியடைந்துள்ளது.
ஆசிரிய கல்லூரி மற்றும் கல்விக் கல்லூரிகளின் அத்தியாவசியப் பழுதுபார்த்தல்களின் 65% பூர்த்தி யடைந்துள்ளது.
பேராதனை தேசிய கல்விக் கல்லூரியில் உத்தேச கேட்போர் கூடம், நான்கு விரிவுரை மண்டபங்கள் கொண்ட 1200 மாணவர்களுக்கு வசதிகள் கொண்ட தாக கட்டிட நிர்மாணப் பணிகள் இவ்வாண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கற்றல் உபகரணங்களை வழங்குதல்
சகல பாடங்களின் கீழ் இவ்வாண்டில் கொள்வளவு செய்யப்பட்ட உபகரணங்கள் பாடசாலைகளுக்கிடையே உரியவாறு விநியோகிக்கப்பட்டன. இலத்திரனியல் பியானோக்கள் 1936 இவ்வாண்டில் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டதுடன் மேலும் 863 விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விசேட 30,000 கரும்பலகைகள் நாட்டின் பாடசாலை களுக்க விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 9,750 ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசின் நன்கொடையின் கீழ் மேசைகள் மற்றும் கதிரைகள் கல்விக் கல்லூரி மற்றும் சிறுவர் செயற்பாட்டு மத்திய நிலையங்களுக்கு விநியோகிக் கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட கட்டுரையில் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா? என்பதை அகவிழி தகுதியானவர்களிடமிருந்து எதிர் பார்க்கிறது.
நன்றி:- கல்வி அமைச்சு, முன்னேற்றங்களும் அண்மைக்கால போக்குகளும்

Page 35
சமூக பொருளாத கல்வியின் தற்போ
எமது சனத்தொகை, பொருளாதாரம், சமூக அமைப்பு ஆகியவற்றில் தோன்றி வரும் சில செல்நெறிகள் எமது கல்வி முறைமையில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை உணர்தல் முக்கியமானது. சுதந்திரத்தின் பின்னருள்ள காலத்தில் இலங்கையானது முக்கியமான சமூக, பொருளாதார மாறுதல்களை அடைந்தது. கடந்த ஆறு தசாப்த காலத்தில், இலங்கையின் சமூக பொருளாதார கட்டமானது முக்கிய மாற்றங்களுக்குள்ளானது. பின்வரும் பந்திகள், எமது கல்வி முறைமையில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சில முக்கியமான செல்நெறிகளையும் மாற்றமுறும் பிரமாணங்களையும் விளக்குகின்றன.
சமூக பொருளாதார நிலைமை சனத்தொகையும் குடிசனவியலும்
இலங்கையின் சனத்தொகை 2005 ஆம் ஆண்டளவில் 19.5 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வருடாந்தம் ஒரு சதவீதத்திலும் குறைந்த வீதத்தில் அதிகரிக்கிறது. இப்பொழுது நாடானது குடிசனவியல் மாறுநிலைக் கட்டத்தினை அடைந்துள்ளதுடன் 2020 ஆம் ஆண்டளவில் 21.5 மில்லியனாக இருக்குமென்றும் மதிப்பிடப்படுகிறது.

கார நிலைமையும் ரதைய அமைப்பும்
கடந்த ஆறு ஆண்டுகளில் எமது சனத்தொகை 16.2 மில்லியனிலிருந்து 19.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. எதிர்பார்க்கும் ஆயுட்காலம் 42 வருடங்களிலிருந்து பெண்களுக்கு 74 வருடங்களாகவும் ஆண்களுக்கு 72 வருடங்களாகவும் அதிகரித்துள்ளது. இது பல அபிவிருத்தி யடைந்த நாடுகளை ஒத்துள்ளது. குழந்தை இறப்பு 2005 இல் 1000 பேருக்கு 141 இலிருந்து 11 ஆகக் குறைந்துள்ளது. இதே காலப்பகுதியில் இறப்பு விகிதமானது 1000 பேருக்கு 20 இலிருந்து 06 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. சனத்தொகைப் பரிமாணங்களிலுள்ள இத்தகைய மாற்றங்கள் சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனத்தொகை வளர்ச்சி 1940 இல் 3.2 சதவீதத்திலிருந்து 2005 இல் 1 சதவீதத்திலும் குறைந்தளவில் வீழ்ச்சி யடைந்துள்ளதுடன் மேலும் வீழ்ச்சியடையுமென எதிர் பார்க்கப்படுகிறது.
சனத்தொகைக் கூட்டு
சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி யானது, இளம் வயதினர் தொகையைக் குறைத்துள்ளது. இது கல்வித்துறைக்குச் சாதகமானதொரு அபிவிருத்தி யாகும். ஏனெனில் அதிகமான வளங்களை கல்வியின் தராதர மேம்பாட்டுக்குப் பயன்படுத்த முடியும். இத்தகைய செல்நெறி தொடருமானால், சனத்தொகை வளர்ச்சியில் மேலும் வீழ்ச்சி ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. 50 வருடங்களுக்கு முன்னர் இருந்த சனத் தொகைப் பரிமாணங்கள் புதிய பரிமாணப் பெறுமானங்களை நோக்கி அசைகின்றன. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சனத் தொகையின் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 18 வயதிலும் குறைந்தோராகக் காணப்பட்டனர். இன்று 18 வயதிலும் குறைந்த சனத்தொகை 34 சதவீதம் மட்டுமே. கருவள வீதம் வீழ்ச்சியடைவதுடன், சராசரிக் குடும்பப் பருமனும் 7 இலிருந்து 3.5 ஆகக் குறைந்துள்ளது. எதிர்பார்க்கும் ஆயுட்கால விரிவாக்கத்துடன், முதியோர் சனத்தொகையும் அதிகரித்து வருகிறது. பரிமாணத்திலான மாற்றத்தில் இதன் பாதிப்பானது தங்கிவாழ்வோர் வீதம் குறைந் துள்ளமையாகும். வருமானம் ஈட்டுவோர்/உழைப்போர் தொகையும் அதிகரித்துள்ளது. 1940 களில் தங்கிவாழ்வோர் வீதம் 72 சதவீதமாக உயர்நிலையில் இருந்ததுடன் 2.6 மில்லியன் ஊழியர் மட்டுமே சில தொழில்களில்
அகவிழி - டிசம்பர் 2012 / 33

Page 36
ஈடுபட்டனர். 2003 ஆம் 11 ஆண்டு அறிக்கையின்படி, சனத்தொகையின் 49 சதவீதம் நன்மை தரும் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது, தங்கி வாழ்வோர் வீதம் 49 சதவீத மட்டத்திற்கு வீழ்ந்துள்ளது என எடுத்துக்காட்டுகிறது. அதாவது, ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு உழைக்கும் வளர்ந்தோர் இருக்கின்றார். கடந்த 40 ஆண்டுகளாக சராசரி (வீட்டு) குடும்பத்தின் பருமன் 6 பேரிலிருந்து 4.3 ஆக குறைந்துள்ளது (Central Bank 2004a). இச் செல் நெறியானது பாடசாலை முறையைப் பாதிக்கும்.
சனத்தொகையில் எழுத்தறிவும் கல்விநிலையும்
சனத்தொகை வளர்ச்சி வீத வீழ்ச்சியானது, எழுத்தறிவு வீத அதிகரிப்புடனும் எமது சனத்தொகையின் கல்வி மட்டத்துடனும் இணைந்துள்ளது. தேசிய எழுத்தறிவு மட்டமானது 1940 இல் 40 சதவீதமாக இருந்து 2005 இல் 93 சதவீதமாக உறுதியாக அதிகரித்துள்ளது. இளஞ் சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் முதியோர் சனத் தொகையிலும் பார்க்க மிகவும் உயர்வாக உள்ளது. மேலும், இடைநிலைக் கல்வியைப் பெற்ற சனத்தொகை விகிதாசாரமும் 1940 களில் 11 சதவீதமாக இருந்து 2004 அளவில் 62 சதவீதமாக குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பெற்றுள்ளது. பாடசாலை செல்லாதோர் தொகை 1940 இல் 68 சதவீதத்திலிருந்து 2004 இல் 08 சதவீதமாக இருந்தது. இலங்கையானது இன்று கற்ற சனத்தொகையைக் கொண்டிருப்பதுடன், கல்வியடைவு மட்டத்தில் அபிவிருத்தி யடைந்த நாடுகளுக்கு இணையாகவுமுள்ளது. மேலும் பாடசாலை செல்லும் வயதிலுள்ள சனத்தொகையில் 78 சதவீதம் இடைநிலைக் கல்வியில் சேர்கின்றதுடன் அவர்களில் பெரும்பான்மையினர் பெண்பிள்ளைகளாவர்.
34 / அகவிழி - டிசம்பர் 2012

ஆயினும் எழுத்தறிவும் கல்விநிலையும் ஒப்பீட்டளவில் பெருந்தோட்டத்துறையிலும் கிராமியத் துறையிலும் குறைவாக உள்ளன. குறிப்பாக மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இத்தகைய நிலை காணப்படுகிறது (மத்திய வங்கி 2004V).
பால்நிலை
கல்வித்துறையில் இலங்கையில் உயர்மட்டத்திலான பால்நிலைச் சமத்துவம் உண்டு. பால்நிலை எழுவினாக்கள் தொடர்பில் நாடு சிறந்ததொரு கொள்கையைப் பின் பற்றியது. எவ்விதகட்டுப்பாடுமின்றி 1931 இல் எல்லோருக்கும்
வாக்குரிமை வழங்கப்பட்டமை எவ்வித வேறுபாடுகளுமின்றி பெண்களுக்குக் கல்வி வசதிகள் வழங்கப்பட்டமை என்பன இலங்கையில் பால்நிலைச் சமத்துவத்தினை உருவாக்கின. மேலும் பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பும் இலங்கையில் ஆண்களிலும் பார்க்கக் கூடுதலாக உள்ளது. கல்வியின் சகல நிலைகளும் மாணவர் சேர் விலும் பால்நிலைச் சமத்துவம் உள்ளமையை எடுத்துக்காட்டுவதுடன், இடைநிலையில் ஆண்பிள்ளைகளிலும் பார்க்க பெண் பிள்ளைகள் கூடுதலாக உள்ளனர் என்பதையும் காட்டுகிறது. பல்கலைக் கழக உள்ளீர்ப்பிலும் அனுமதிக்குத் தகுதியானோர் தொகை (2003 இல் ஆண்கள் 33,722, பெண்கள் 54,954) ஆண்களின் தொகையிலும் பார்க்கக்
கூடுதலாக உள்ளது. இத்தகைய போக்கு பல ஆண்டு களாகத் தொடர்ந்து நிலவி வருகிறது. கல்வி வட்டங் களைப் பூர்த்தி செய்தல் மற்றும் பரீட்சைகளில் சித்தி யடைவோரில் பெண்களின் தொகை ஆண்களிலும் பார்க்கக் கூடுதலாக உள்ளது. பெண்களின் சராசரி எழுத்தறிவு வீதம் (90.7 சதவீதம்) ஆண்களின் எழுத்தறிவு வீதத்திலும் (94.5 சதவீதம்) குறைவானது. இத்தகைய வேறுபாடானது பிரதானமாக முதியோர் சனத் தொகையில் காணப்படும் குறைந்த எழுத்தறிவு மட்டத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளதுடன், இளைய வயதுக் குழுவினர் மத்தியில் வேறுபாடுகள் இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இலங்கையானது கற்ற பெண்கள் சனத்தொகையை அதிகளவில் கொண்டிருக்கும் என்பதுடன் அது எதிர்கால சந்ததியினரின் எழுத்தறிவுத் தோற்றப் பாட்டிலும் மாற்றங் களை ஏற்படுத்தும் எனலாம். பெண்களின் சராசரி வயது அதிகரிப்பதும் சனத்தொகை வீத வீழ்ச்சிக்கு உதவும் காரணியெனலாம்.

Page 37
நகராக்கம், கிராமம் மற்றும் பெருந்தோட்டச் சனத்தொகை இலங்கையின் நகரச் சனத்தொகை சிலகாலமாக ஏறக்குறைய 22 சதவீதமாக எவ்வித மாற்றமுமின்றிக் காணப்படுகிறது. இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடு களுடன் ஒப்பிடும்பொழுது இங்கு நகர இடப்பெயர்வு குறைவாகும். நிருவாக மாவட்டங்களுக்கு இடையில் நிலவும் வேறுபாடுகள் கொழும்பு மாவட்டத்தில் நகரச் சனத்தொகை 75 சதவீதமாகவும் மொனராகலையில் ஏறக்குறைய 2.2 சதவீதமாகவும் இருக்கின்றது. பெருந் தோட்டச் சனத்தொகை ஏறக்குறைய 6.3 சதவீதமாகும். இச்சனத்தொகையானது பிரதானமாக நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ளது. கிராமத்திலும் பெருந்தோட்டத்துறையிலும் காணப்படும் அடிப்படைக் கட்டுமான வசதிகளும் சனத் தொகைப் பண்புகளும் கல்வியில் செல்வாக்குச் செலுத்து கின்றன. இலங்கையில், நகரங்களில் அதிகரித்த வாழ்க்கை நிலைமைகளும் கிராமங்களில் குறைந்த வாழ்க்கைச் செலவும் காரணமாக நகரம் நோக்கிய பெயர்ச்சி குறைந்தளவில் இருந்தாலும் தனிமைப்பட்ட கிராமங் களுக்கும் சமூகங்களுக்கும் அவற்றின் கல்விப் பங்
கேற்பினை உறுதிசெய்யும் விசேட கவனம் தேவையாகும். கடந்த 5 தசாப்தங்களாக, பெரும்பாலான கிராமப் பிரதேசங்கள் நியாயமான கல்வி, சுகாதாரம், மற்றும் உட்கட்டுமான வசதிகளைப் பெறும் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு 6 சதுர கிலோ மீற்றருக்கும் ஒரு பாடசாலை அமைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 71 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு பாதுகாப்பான குடிநீர் பெறும் வாய்ப்புண்டு. மின்சார வசதியும் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது. 1971 இல் இருந்த 9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மின்சார வசதியைப் பெறும் வீடுகளின் தொகை 73 சதவீத மாகும் (2003). இது ஒரு முன்னோக்கிய பாய்ச்சலாகும் என்பதுடன் இலத்திரன் ஊடகத்தின் அடிப்படையிலான கல்விசார் வசதிகளைப் பல பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது. 2.1.5 பாடசாலை செல்லும் வயதுச் சனத்தொகை
வீழ்ச்சியடைதல்.
எதிர்காலத்தில் பாடசாலை செல்லும் சனத்தொகையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சிப் போக்குப் பற்றிக் கல்வித்துறை கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்பது முக்கிய மானது. இதனை வயதுக் குழுக்கள் பற்றிய சனத்தொகைத் தரவில் நன்கு காணலாம். அட்டவணை 2-1-1 இதனை எடுத்துக்காட்டுகின்றது. 2003 இல் 0-4 வயதுச் சனத் தொகையானது 1994 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் அல்லது அதற்கு மேலாகக் குறைந்துள்ளமையைக் காட்டுகிறது. இதன் மூலம் எடுத்துக்காட்டப்படுவது என்னவெனில், அடுத்துவரும் சில வருடங்களில், பாட சாலை அனுமதியை நாடுவோர் தொகை ஏறக்குறைய

2.0 - 3.0 சதவீதம் முன்னைய ஆண்டிலும் பார்க்க குறைவாக இருக்கும்: ஆயினும் தரவுகள் எடுத்துக்காட்டுவது யாதெனில் 2001 ஆம் ஆண்டிலிருந்து, 2003 வரை 0-4 வயதுக் குழுவின் தொகையில் சிறு அதிகரிப்பு ஏற் பட்டுள்ளது என்பதாகும். இருந்தாலும் வயதுக் குழுக்களின் அடிப்படையில் பார்க்கும்போது. குழந்தைகளின் தொகை குறைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் வீழ்ச்சியானது 1,884,000 இலிருந்து 1,663,000 ஆக இருந்தது. 2002 ஆம் ஆண்டில் 1,861,000 இலிருந்து 1,614,000 ஆகவும் குறைந்துள்ளது. இவை எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பப் பாடசாலைச் சேர்விலுள்ள வீழ்ச்சிப் போக்கினைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. மேலும் 13 வயதுக்குக் குறைந்தோர் சனத்தொகை 1953 இல் ஏறக்குறைய 53 சதவீதமாகவும் 2003/2004 இல் இத்தொகை 24 சத வீதமாகவும் குறைந்துள்ளது. இத்தகைய செல்நெறியானது, கல்விச் சீர்திருத்தங்களைத் திட்டமிடும்பொழுது, அடுத்து வரும் சில வருடங்களில் கவனஞ் செலுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வீழ்ச்சியடைந்து செல்லும் தொகை காரணமாக, பாரதூரமான கொள்கைசார் எழுவினாக்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன.
இளைய சனத்தொகையில் வீழ்ச்சி - வயதுக்குழு
வயதுக்குழு
ஆண்டு ரீதியான சனத்தொகை ('000) 1994
2001
2002
2003 | 0-4 வருடங்கள்
2235
1619
1643
1663 5-9 வருடங்கள்
2027
166)
1691
1712 | 10-14 வருடங்கள்
2035
1834
1728 | 15-19 வருடங்கள்
1932
1834
1861
1884 | 0-19 வருடங்கள் |
82029
6952
6923
6099 ஆதாரம்: மத்திய வங்கி, சமூக, பொருளாதார புள்ளி விபரங்கள், 2004
1994 - 2003 சதவீத வீழ்ச்சி
25.5% 15.5) 14.5% (02.4% 14.9%
1740
சனத் தொகை வளர்ச்சி வீதம் 0 சதவீதமாகும் வரை இத்தகையபோக்கு தொடரும். இத்தகைய பரிமாண மாற்றங்களின் பாதிப்புகள் கணிப்பிடப்படவேண்டும் விருத்தி செய்யப்படும் கொள்கைகளிலும் தலையீடுகளைத் தீர்மானிப்பதிலும் ஆராயப்பட வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தி
இலங்கையானது சுதந்திரம் பெற்ற காலத்தில் விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்ததுடன் தேயிலை, றப்பர், தென்னை என்பன தேசிய வருமானத்திற்குப் பங்களிப்பு செய்த முக்கிய பணப்பயிர்களாகவும் இருந்தன. உள்நாட்டு பெருந்தோட்ட விவசாயம்சாராத துறை பிரதானமாக ஜீவன உணவுப்பயிர்களை உற்பத்தி செய்தன. 1948 இல் தலா வருமானம் 120 டொலர் அல்லது ரூபா 397 ஆக மதிப்பிடப்பட்டது. கடந்த ஆறு தசாப்தங்களில் முக்கியமான பொருளாதார மாறுதல்கள் இடம்பெற்றன.
எமா க
அகவிழி - டிசம்பர் 2012 / 35

Page 38
தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தல்
இலங்கை ஒரு குறைவருமான நாடல்ல. தலா மொத்தத் தேசிய உற்பத்தி (GNP) 2005 இல் 1,100 டொலர்களாகியது. 2002 இல் இலங்கை கீழ் இடைத்தர வருமான நாடாக உயர்ந்தது. கடந்த தசாப்தங்களில் சனத்தொகை மாற்றங்களும் பொருளாதார மாற்றங்களும் இணைந்த வகையில் இடம்பெற்றன. இலங்கையானது ஆரம்ப உள்நாட்டுப் பொருளாதாரத்திலிருந்து உலகளாவிய பொருளாதாரமாகப் படிப்படியாக மாறி வருகிறது. விவசாயப் பொருளாதாரத்திலிருந்து சேவை அடிப்படை கைத்தொழில் பொருளாதாரமாக மாறி வருகிறது. வருமான மட்டம் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது. கடந்த 5 தசாப்தங்களில் எல்லோரது வருமானமும் அதிகரித்துள்ளது. திறந்த பொருளாதாரத்தின் அறிமுகத்துடன் குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. வருடாந்தச் சராசரி மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சி ஏற்பட்டது. இது 1950-1977 காலப்பகுதியில்3.8 சதவீதமாக மட்டும் இருந்தது வருடாந்தச் சராசரி வளர்ச்சி வீதம் 5.3 சதவீதமாகும்.
தலா மொத்தத் தேசிய உற்பத்தியின் தொடர்ச்சியான அதிகரிப்பும் பாடசாலை செல்லும் வயதிலுள்ள சனத் தொகையில் சடுதியான வீழ்ச்சியும் உருவில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையானது கல்வியில் நியாயத் தன்மை மற்றும் தராதரம் என்பவற்றில் அதிகம் முதலிடு வதற்கான புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.
மாறும் நிலைமைகள்: சனத்தொகை மற்றும் மொ.தே.உ
வளர்ச்சியின் உடன்பாடான செல்நெறி
PosITIVE TREND OF POPULATION AND
GDP GROWTH
ஈசன்
- N ( A பு.
S
S
3 1.6
2.G
2.4
1.2
1.2
% FCGrowth % GDP Growth
4.3
3.6
5.2
5.2
5. 2
1970 - 2004
--% Pop-Growth --% SDPGowth
வேலையின்மை வீதங்கள் குறைதல் வேலையின்மை பற்றிய எழுவினாக்கள் முக்கியமானவையாக இருந்தாலும் கடந்த தசாப்தத்தில் வேலையின்மை வீதம் குறிப்பிடத்தக்களவில் குறைந்துள்ளது. 2004 இல் வேலையின்மை 8.9 சதவீதமாகும். இது 1986/ 1987 இல் 15.5 சதவீதமாகவும் 1970 இல் 24 சதவீதமாகவும் இருந்ததுடன் இப்பொழுது வேலையின்மை நிலைமை
367 அகவிழி - டிசம்பர் 2012

குறைவடைந்துள்ளது. ஆயினும் வேலையின்மை 18-25 வயதுக் குழுவினரிடையில் உயர்வானதாகும். இது 25 சதவீதமளவில் இருப்பதுடன், கல்விச் சீர்திருத்தங்களில் முகங்கொடுக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாகவும் உள்ளது; ஏனெனில் பூகோளப் பொருளாதாரத்தில் கல்வித் தராதரம், அடைவுச் சோதனைகளில் சித்தியடைவோர் வீதத்தினைக் கொண்டன்றி பாடசாலை விட்டுச்செல்வோரை வேலைக்கமர்த்தும் வீதத்தினாலேயே அளவிடப்படுகிறது.
மாறும் மொத்த தேசிய உற்பத்தி அமைப்பு
விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகளின் மொத்தத் தேசிய உற்பத்திப் பரம்பலானது கடந்த நான்கு தசாப்தங்களாக, குறிப்பாக 1978 இல் திறந்த பொருளாதாரம் அறிமுகமானதன் பின்னர் மாறும் கோலத்தினைக் காட்டுகிறது. விவசாயத்தின் பங்கானது 1976 இல் 26 சதவீதமாக இருந்து 2003 இல் 19 சதவீதமாக வீழ்ச்சி யடைந்துள்ள வேளையில் கைத்தொழில் துறையின் பங்கு 23 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாகவும் சேவைத் துறை 50 சதவீதத்திலிருந்து 54 சதவீதமாக அதிகரித்துள்ளன. பொருளாதார மாறுதல்களின் புதிய செல்நெறி புதிய தலைமுறையினருக்குக் கல்வி வழங்கும்போது கவனிக்கப் படுதல் வேண்டும். ஏனெனில், தற்பொழுது பாடசாலையி லுள்ள பிள்ளைகள் தொழிற்சந்தையை அடையும்பொழுது புதிய மனத்தோற்றங்கள் (Vistas) இருக்கலாம். ஆகவே கல்வி பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டுவதற்கான சந்தைப்படுத்தக்கூடிய திறன்களை விருத்தி செய்தலுக்கும் பல்வேறு கட்டங்களில் பாடசாலைக் கல்வியை முடித்துச் செல்வோரின் வேலைக்கமர்த்துதலை உறுதிசெய்தலும் முக்கியமானது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வேலைவாய்ப்புக்கான பிரதான வழிகளில் ஒன்றாகும். நாள்தோறும் சராசரியாக 500 பேர் வேலைக்காக இலங்கையை விட்டு வெளி நாட்டுக்குச் செல்கின்றனர் என்பதுடன் இத்தொகை அதிகரித்தும் செல்கிறது. வெளிநாட்டில் வேலைசெய் வோரிடமிருந்து வரும் பணம் 1.4 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கிட்டத்தட்ட 7 சதவீதமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான கேள்வி அதிகரித்துச் செல்வதுடன் அரசாங்கமும் தனியார் துறையும், வெளிநாட்டில் வேலைசெய்ய விரும்பும் இலங்கையருக்குக் கூடுதலான வேலைகளை வழங்கும்பொருட்டு கைத்தொழில் நாடு களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கல்வி முறைமை யில் வெவ்வேறு கட்டங்களில் பாடசாலையை விட்டுச் செல்வோர் வேலைப்படை அபிவிருத்தி முயற்சிகளிலிருந்து நன்மையடைவதற்கு, பொது மற்றும் தனியார்துறை முயற்சிகள் மூலம் அவர்களுடைய தொழிற்றிறன்களை

Page 39
விருத்திசெய்வதற்கும் கல்வித்துறைகளைத் திட்டமிடுவோர் தொழில் வழிகாட்டல்களை வழங்குதல் முக்கியமானதாகும். இவை வெளிநாட்டு வேலைகளைச் சிறந்த சம்பளத்துடன் பெற்றுக்கொள்ள உதவும்.
வருமானப் பரம்பல் வேறுபாடுகள் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான செல்நெறிகள் காணப்பட்டாலும், வருமானப் பங்கீட்டில் முக்கியமான வேறுபாடுகள் நிலவுகின்றன. சராசரி மாதாந்த குடும்ப வருமானம் 17,114 ரூபாவாகவும், இடைத்தர குடும்ப வருமானம் 11,350 ரூபாவாகவும் உள்ளது (மத்திய வங்கி, 2004). 50 சதவீதமான குடும்பங்களின் மாதாந்த வருமானம் ரூபா 11,350/= இலும் குறைவு அல்லது நாளாந்த வருமானம் ரூபா 400/= இலும் குறைவு என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாளுக்குரிய வருமானம் 1 டொலரிலும் (ரூபா 100) குறைந்தளவில் பெறும் மக்கள் தொகை 1995 இல் 6.6 சதவீதமென மதிப்பிடப்பட்டதுடன் இப்பொழுது மேலும் குறைந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2 டொலரிலும் குறைவாகப்பெறும் சனத்தொகை 1995 இல் 45 சதவீதமாகும் என மதிப் பிடப்பட்டது; இதுவும் குறைந்து காணப்படுமென எதிர் பார்க்கப்படுகிறது. ஆயினும் குடிமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி, ரூபா 1423/= வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் 2002 இல் 22.7 சதவீதத்தினராவர். மேலும் 50 சதவீதமான சனத்தொகை மானியம் பெறும் நிலையில் உள்ளது. வருமானப் பங்கீடானது பெருமளவு வேறுபாட்டினை எடுத்துக்காட்டுகிறது இருப்பினும் கடந்த மூன்று தசாப்தங்களாக, கீழ்நிலையிலுள்ள 10 சதவீதத்தி னரின் வருமானம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது; உயர் நிலையிலுள்ள 30 சதவீதத்தினர் வருமானம் மிகக்கூடிய வீதத்தில் அதிகரித்து, வருமானப் பங்கீட்டில் பாரிய வேறுபாட்டினைத் தோற்றுவித்துள்ளது. சனத் தொகையில் 50 சதவீதமானது 17.64 சதவீத வருமானத்தைப் பெறுகின்ற வேளையில், செல்வந்தர்களான 30 சதவீதத்தினர் தேசிய வருமானத்தின் 65.6 சதவீதத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வருமானம் பெறுவோரின் வருமானப் பகிர்வு
2வது 3வது
குறைந்த - கூடிய
வருடம் வருமானம் பெறுவோர்
1953
1982)
1996 1வெது
151
1.17
1.27 3.56
2.45
2.77 3.16
3,41
3.86 4வத
4.37,
4.53
4 91 வது
5,71
5.53
61 6வது
6,31
6.86
7 44 7வது
7.94
8. 54
9.12 8வது
10.39
10,68
11.55 | 9வது
[14.16
14,87
15.68 10வது
42.49
41.93
37.28 1-5 வது
18.71
17.09
18.93 5-7 வது
14.25
15.04
16. 56 |8-10 வது
67.04
67.48
64.51 ஆசாரம் -
குடிமதிப்புப் புள்ளி விபரத் திணைக்களம் {வெவ்வேறு ஆண்டுகள் )
2003 1.07 3.52 3.60 4.69 3.76 2.13 9.00 11.05 1547 39.07 17.64 16.13 65.59

குறைந்த வருமானம் கிராம மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் அதிலும் குறிப்பாக பெருந்தோட்டத்துறையில் நிலவுகிறது (மத்திய வங்கி, 2004).
இத்தகைய பொருளாதார மாற்றங்களின் கவனிக்கத் தகுந்த விடயங்களில் கல்விசார் சீர்திருத்தங்கள் கவனமெடுக்க வேண்டிய தேவையுள்ளது. சிறந்த தரமான கல்வி வாய்ப்பினைப் பெறுவதற்கு 50 சதவீதத்தினைக் கொண்ட குறைந்த வருமானக் குழுவுக்கும் இடைத்தர வருமானம் கொண்ட 20 சதவீதத்தினருக்கும் அரசாங்க உதவி கூடுதலாகத் தேவைப்படுகிறது. ஏறக்குறைய 30 சதவீதமான உயர் வருமான வகையினர் அதிகரித்த வருமானத்தின் பெரும்பங்கினைப் பெறுகின்றனர். எனவே கல்விச் செலவினங்களை அவர்கள் தாங்கிக்கொள்ளும் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். எனவே அரசாங்க மானது சனத்தொகையின் வறிய 70 சதவீதமானோருக்கு கல்வி மானியங்களை மேலும் வழங்கலாம்.
இன்று, தேசிய வருமானத்தில் 65 சதவீதத்தினை அனுபவிக்கும் 30 சதவீதமானோரின் பிள்ளைகள் உட்பட எல்லோருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. உயர் வருமான வகையினரின் பிள்ளைகளுக்கு பெரு மளவில் உதவும் பாடசாலைகள் பெற்றோரிடமிருந்து சிறப்பான உதவிகளைப் பெற்றுக்கொள்வது மட்டுமன்றி பொதுநிதியிலிருந்து பெரும்பங்கினை எடுத்துவிடுகின்றன. இதன் மூலம் கல்விமுறைமையானது கல்வியின் மூலம் சமூக நகர்வினை வழங்குவதிலும் பார்க்க சமூகவகுப்பின்
அமைப்பினை உறுதிசெய்கிறது எனலாம்.
மனித அபிவிருத்தி அபிவிருத்திச் சுட்டெண்
1975 இல் 0.6 என்னும் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது இலங்கை 0.74 என்னும் பெறுமதியுடன் 177 நாடுகளில் 96 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை மனித அபிவிருத்தி மற்றும் கல்வியில் முக்கியமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. மனித அபிவிருத்திச் சுட்டெண் சுகாதாரம், கல்வி மற்றும் பெண்களின் அந்தஸ்து ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டுச்சுட்டியாகும். சுகாதாரத் துறையிலும் பால்நிலைச் சமத்துவத்திலும் இலங்கையின் உயர் பெறுபேறுகள் கல்வித்துறையில் உயர் அடைவுகளுக்குப் பெருமளவில் பங்களிப்புச் செய்துள்ளன. இருப்பினும், பொது சுகாதாரத் தலையீடுகள் நன்மை தரலாம். எதிர்பார்க்கும் ஆயுட்கால நீடிப்பு, மகப்பேற்று மற்றும் சிசு மரணத்தில் வீழ்ச்சி என்பன கல்விமட்டத்துடன் குறிப்பாக பெண்களின் எழுத்தறிவுடன் இணைப்பினைக் காட்டுகின்றன. அதிகரித்துவரும் மனித அபிவிருத்திச் சுட்டெண் இலங்கை யில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும் ஒரு காரணி
அகவிழி - டிசம்பர் 2012 / 37

Page 40
யாவதுடன் இலங்கையருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பினையும் வழங்குகிறது.
கல்வியில் அதிகரித்துவரும் முதலீடானது சிறந்த பொருளாதார விளைவுகளையும் சனத்தொகையின் சுகாதார நிலைமைக்கு உதவுவதையும் உறுதி செய்கின்றது.
இனத்துவம்
இலங்கை பல இன மற்றும் மதக்குழுக்களைக் கொண்ட ஒரு பன்மைச் சமூகமாகும். பன்மைக் கலாசாரத் தன்மை மற்றும் சமூகத்தில் வேற்றுமை காணப்படுதல் ஒரு சுமை என்பதிலும் பார்க்கப் பலமாகும். இன அடிப்படையில் சனத்தொகையின் 74 சதவீதம் சிங்களவரும், 12.6 சதவீதம் இலங்கைத் தமிழரும், 5.3 சதவீதம் இந்தியத் தமிழரும், 7.5 சதவீதம் முஸ்லீம்களும், ஏனையோர் 1 சதவீதமும் உள்ளனர். சமயரீதியாக பௌத்தர் 65 சதவீதம், இந்துக்கள் 15 சதவீதம், முஸ்லீம் 7 சதவீதம், கிறிஸ்தவர் 8 சதவீதம். ஒவ்வொரு கலாசாரக் குழுவும் தமது கலாசாரத்தினையும் நடைமுறைகளையும் பேணுவதுடன் தனித்துவ அடை யாளத்தையும் கொண்டுள்ளதுடன் ஒரு நாட்டின் பிரசை களாக இலங்கையர் என்ற அடையாளத்துக்கும் பங்களிப்புச் செய்கின்றது.
Tன
எதிர்பாராதவிதமாக, கடந்த 06 தசாப்தங்களாக இனத்துவ முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. கல்வியின் சகல அடைவுகளுடனும் கற்ற மற்றும் ஆரோக்கியமான நாடு என இனங்காணப்பட்டுள்ள வேளையில் உள்நாட்டு இன முரண்பாடுடைய நாடெனவும் நாம் இனங்காணப் பட்டுள்ளோம். இப்பொழுது எமது நாட்டில் இனத்துவ நெருக்கடி உண்டு. கடந்த 50 ஆண்டுகளாக நிலவிவந்த கல்விமுறையும் தற்போதைய இனநெருக்கடிக்குத் துணை போயுள்ளதெனப் பலர் நம்புகின்றனர். இலங்கை நல்ல நோக்கத்துடனேயே போதனாமொழியாகத் தாய்மொழியை கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேலாக அறிமுகம் செய்துள்ளது. ஆனால் எமது தேசிய பாடசாலை முறைமை இன மற்றும் மதப் பிரிவினைகளுக்கு வழிகோலியுள்ளது. எதிர்மறை விளைவுகளுடன் கல்வியில் ஏற்பட்ட துரித மற்றும் பாரிய விரிவாக்கமானது குறைத்து மதிப்பிடக் கூடியதன்று. எழுத்தறிவு வீதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பும் ஏனைய குறிகாட்டிகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் ஒரு கூரையின் கீழ் ஒரு வகுப்பறையில் சகல இனக்குழுவைச் சேர்ந்த மாணவர்களும் கற்பதனால் ஏற்பட்ட இனத்துவ இசை வாக்கம் இழக்கப்பட்டுள்ளது. சகல இனக் குழுக்களையும் சேர்ந்த பிள்ளைகள் சமூகமயமாதலுக்கும் ஒவ்வொரு வரினதும் பெறுமானங்களை இனங்காணுதலுக்கும் பரஸ்பர மதிப்பை விருத்தி செய்தலுக்கும் இருந்த வாய்ப்புகள்
38 7 அகவிழி - டிசம்பர் 2012

மறைந்துபோயின. சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் இனரீதியாக ஒன்றிணைந்த பாடசாலைகளில் ஒரே கூரையின் கீழ் கற்கும்போது, சகவாழ்வு யதார்த்தபூர்வமாக இருக்கும். இத்தகைய இசைவாக்கமும் இழக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதத்தில் சந்தேகம், பிரிந்துபோதல், இசைவாக்கமின்மை என்பன கலப்பின் மூலம் உண்டாகும் ஐக்கியம் மற்றும் இசைவாக்கம் என்பவற்றிலும் பார்க்கப் போஷிக்கப்பட்டுள்ளது.
இன்று, எந்தக் கல்விச் சீர்திருத்தமும் இடம்பெற்று வரும் இனத்துவ நெருக்கடியின் கசப்பான உண்மைகளை அசட்டை செய்யமுடியாது. கல்விச் சீர்திருத்தங்கள் இவ்வாறான யதார்த்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய துடன் இனத்துவ மற்றும் சமூக சகவாழ்வினை அடை வதற்குத் தேவையான மாற்றங்களையும் கொண்டு வருதல் வேண்டும். சகல இனக் குழுக்களும் சமயக் குழுக்களும் அரசியல் தொலைநோக்குனர்களும் இன ஒன்றிணைப்பினை அடைவதற்குச் சாதகமான சீர்திருத்தங்களை வழங்குவரென நம்பப்படுகிறது.
தற்பொழுதுள்ள கல்வியமைப்பு
பாடசாலை முறைமை
இலங்கை 13 ஆண்டுகால பாடசாலை முறைமையைக் கொண்டிருப்பதான பொதுக்கல்வியை வழங்குகிறது; ஆண்டு 1க்கு அனுமதிக்கும் வயது ஐந்தாகும். கல்வி முறைமையானது ஆரம்பநிலை, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலையென மூன்று பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இம் முறைமையானது, தரம் 1-9 வரை கட்டாயக் கல்விக் கட்டமொன்றினைக் கொண்டுள்ளது. பொதுத்துறையானது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் 93 சதவீதமான பாடசாலைகளையும் மாணவரில் 96 சதவீதத்தினரையும் பொறுப் பேற்கிறது. ஏறக்குறைய 4 மில்லியன் பாடசாலை மாணவர்கள் ஏறக்குறைய 9,800 அரசாங்கப் பாடசாலைகளில் (தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள்) சேர்க்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 600 அரசு நிதி வழங்கும் பிரிவேனாக்களும் (கோயிலை அடிப்படையாகக் கொண்ட கல்வி நிறுவனங்கள்) 25 விசேட கல்விப் பாடசாலைகளும் 80 தனியார் பாடசாலை களும் தேசிய கலைத்திட்டத்திற்கேற்ப கல்வியை வழங்குகின்றன; ஏறக்குறைய 150-200 சர்வதேசப் பாடசாலைகளும் 70,000 மாணவர்களைக் கொண்டிருப்ப துடன் அவர்களை வெளிநாட்டுச் சோதனைகளுக்கு ஆயத்தம் செய்கின்றன. மூன்றாம்நிலைக் கல்வி முறைமை யானது பல்கலைக் கழகங்களையும் உயர் தொழில் பாடசாலைகளையும் கொண்டுள்ளது.

Page 41
இலங்கையின் கல்விமுறையின் அமைப்பு வரைபடம் 2.5.1: இலங்கையின் கல்விமுறையின் அமைப்பு
பப்பபன் கல்வி
கல்வி அமைச்சுக்கு வெளியே
மூன்றாம்நிலைக் கல்வி, உயர்கல்வி |
பல்கலைக்கழக
- தொழில்முறை பட்டப்படிப்
பல்கலைக்கற்கமல்லாத -
முன்றாம் நிலைக்கல்வி
உயர் தொழிநுட்பக்
கல்வி
சிரேஷ்ட 1இடைநிலைக் கல்வி
பாபா கதை
தாதா ?
தொழிநுட்பக் கல்வி தொழிநுட்ப வல்லுனர்
தொழிற் பயிற்சி முறை
கொடை இடரியை கல்வித்
தங்கள் (1)
தொழிற் பயிற்சி வியாபாரம், கைவினை
கட்டாயக் கல்விக் கூட்டம்
கட்டாயக் கனிஷ்ட இடைநிலைக் கல்வி
கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைக் கரங்கள் - 1
கட்டாய ஆரம்பக் கல்வி
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி
முன்பள்ளி
ஆரம்பப் பாடசாலை தரம் 1-5 வரை வகுப்புகளைக் கொண்டுள்ளதுடன் ஏறக்குறைய 1.6 மில்லியன் மாணவர் களும் உள்ளனர். அவர் களில் அண்ணளவாக 50 சதவீதத்தினர் பெண்களாவர். 3,034 ஆரம்பப் பாடசாலைகள் உள்ளன. ஒரு சில 1AB பாடசாலைகள் தவிர, ஏனைய பாடசாலைகள் எல்லாம் ஆரம்பக் கல்வியை வழங்குகின்றன. ஆரம்பப் பாடசாலைகளில் ஆசிரியர்களை அமர்த்து வதற்கான நியமமாக 26 மாணவருக்கு 1 ஆசிரியர் என்பதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆரம்பப் பாடசாலைக் கலைத்திட்டம் ஒரு செயல்நிலைக் கலைத் திட்டமாகும். ஆரம்பப் பாடசாலை அடைவுமட்டத்தில் கணிசமான நியாயத்தன்மையும் உண்டு.
இடைநிலைப் பாடசாலையில் தரம் 6-13 வரை வகுப்புகள் உள்ளன; 6-11 வரை கனிஷ்ட இடைநிலைப் பாடசாலை எனவும், 12-13 வரை சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலை எனவும் கொள்ளப்படுகிறது. தரம் 6-13 வரை ஏறக்குறைய 2.3 மில்லியன் மாணவர் உள்ளனர் அவர்களுள் ஏறக்குறைய 50 சதவீதம் பெண்களாவர். 11 ஆம் தரத்தின் முடிவில் மாணவர்கள் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைக்கு அமர்வதுடன், அதில் ஆகக்குறைந்த தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் 12 ஆம் தரத்திற்கு அல்லது சிரேஷ்ட இடைநிலைக்குத் தகுதி பெறுகின்றனர். 13 ஆம் தரத்தின் முடிவில் மாணவர் க.பொ.த. (உயர்தரம்) பரீட்சைக்கு அமரவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர்.
கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்ட மானது தரம் 1-9 வரை கட்டாயக் கல்வியாக விளங்கு

வதுடன், ஒருவர் பாடசாலையைவிட்டு விலகுவதற்கு முன்னர் பெறவேண்டிய சகல அடிப்படைத் திறன்களையும் உள்ளடக்கியுள்ளது. 10 ஆம் 11 ஆம் தரங்கள் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு இட்டுச்செல்வதுடன் மையப் பாடங் களையும் தெரிவுப் பாடங்களையும் கொண்டுள்ளது. சிரேஷ்ட இடைநிலைக் கலைத்திட்டமானது துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம், தாராளக்கலைகள், மொழிகள் மற்றும் வணிகம் என்ப வற்றை வழங்குகிறது.
தற்பொழுது பாடசாலைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன
1 AB: சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள்; தரம் 1-13 வரை அல்லது 6-13 வரையுள்ளன க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தரத்தில் கலை, வணிகம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளைக் கொண்டவை. இவ் வகையில் 1.24 மில்லியன் பிள்ளைகள் 646 பாட சாலைகளுக்குச் செல்கின்றனர் இவ்வகையில் 282 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக இனங்காணப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. 1C: சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகள் 1-13 அல்லது
6-13 வரை வகுப்புகள் உள்ளன. க.பொ.த. சாதாரண தரத்தினையும் க.பொ.த. உயர்தரத்தில் கலை, வணிகப் பிரிவுகளையும் கொண்டவை. 1.26 மில்லியன் மாணவர்கள் இவ்வகையிலுள்ள 1810 பாடசாலைகளுக்குச் செல்லு கின்றனர். இவற்றில் 42 பாடசாலைகள் தேசிய பாடசாலை களாக இனங்காணப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. வகை 2: இடைநிலைப் பாடசாலைகள் தரம் 1-11 வரை அல்லது 6-11 வரையுள்ளவை. க.பொ.த. சாதாரணதர வகுப்புகள் உள்ளன. 1.09 மில்லியன் மாணவர்கள் இவ்வகையிலுள்ள 4,237 பாடசாலைகளுக்குச் செல் கின்றனர்.
வகை 3: ஆரம்பப் பாடசாலைகள்; தரம் 1-5 வரை. சில சந்தர்ப்பங்களில் தரம் 1-8 வரை காணப்படும். 34,252 மாணவர்கள் இவ்வகையைச் சேர்ந்த 3,034 பாட சாலைகளுக்குச் செல்கின்றனர்.
தேசிய மற்றும் நவயோதயப் பாடசாலைகள் பிரதேசச் செயலாளர் பிரிவினடிப்படையில் பரம்பியுள்ள விதம் இலங்கைப்படத்தில் தரப்பட்டுள்ளது.
தொடரும்.......
நன்றி:- கல்வி அமைச்சு, கல்வித்துறை அபிவிருத்தி சட்டகமும் நிகழ்ச்சித் திட்டமும்
அகவிழி - டிசம்பர் 2012 / 39

Page 42
கற்றலின் 8
Learnir
கற்றல், ஞாபகம், ஞாபகப்படுத்தல், நினைவில் நிறுத்தல் மற்றும் பரீட்சை (Learning memory,
Remember, Retention, Exam) நாம் ஏன் கற்க வேண்டும்?
இவ்வினாவை வகுப்பு மாணவர்களிடம் வினவப்படுமாயின் பல்வேறு விதமான விடைகள் கிடைக்கும்.
வாழ்க்கை மேம்பாட்டிற்கு உயர் தொழில்வாய்ப்புகளைப் பெறுவதற்கு
நற்பிரஜையாக வாழ்வதற்கு என பல்வேறு வசனங்களில் அவற்றிற்கான விடைகள் கிடைக்கும்.
உண்மையாகவே மரபுரிமையில் வந்த திறமைகள் பெருந்தொகையாக மனிதனிடமிருப்பதாக நாம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். திறமைகளிருந்தால் மாத்திரம் எமது வாழ்க்கைக்கு பெறுமதி சேர்க்குமா? வாழ்வில் பெருமை சேர்க்க வேண்டுமாயின் திறமைகளைப் பட்டை தீட்டி மேம்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதேபோல் இன்னும் புதிய திறமைகளையும் அறிவையும் பெறுமிடத்தும் வாழ்க்கை மேம்படும். அதன்படி கற்றலால் எமது வாழ்க்கைக்கு பெறுமதி சேர்க்கப்படும். அப்பெறுமதியால் வாழ்க்கையின் வெற்றிகள் பல எம்மைச் சாரும்.
40 / அகவிழி - டிசம்பர் 2012

இரகசியங்கள்
ng Secrets
கற்றலில் உடனடி பெறுபேறுகளுண்டா? கற்றலில் உடனடி பெறுபேறுகளுண்டு. அதனைவிட கற்றபின் பிரதிபலன் எமக்குக் கிடைப்பது எதிர்காலத்திலாகும். எதிர்காலம் பற்றி உமக்கு கனவும் உண்டு. சாதாரணதரம், உயர்தரம், ஏனைய உயர்கல்விப் பரீட்சைகள் என தடை தாண்டல்கள் உமது மனதில் மலரக்கூடும். அதன் பின்னர் தொழிலை எண்ணி வைத்தியர், எந்திரி, ஆசிரியர், ஊடகவியலாளர், விமானஓட்டி, விஞ்ஞானி என உமது சிந்தனை பரந்துவிரிந்து காணப்படும். இச்சிந்தனைகள் நிறைவேற வேண்டுமாயின் நீர் படித்தல் வேண்டும்.
கனவுகளை நனவாக்கும் போது உடைந்து விழுதல் வெறுப்பு, தடைகள், கஷ்டங்கள் பலவற்றிற்கு
முகங்கொடுக்க நேரிடுவது கட்டாயம். எனினும் இவை யனைத்தும் உமது வாழ்க்கைக்கு தேர்ச்சி களையே பெற்றுத் தருகின்றன. கல்வியின் மூலம் பெற்றுக்கொள்ளும் அடிப்படை விடய அறிவு மேம்படுவதற்கு வாழ்க்கைத் தெளிவின் ஒளிக்கற்றைகள் காரணமாயமையும்.
மாதிரிகள், உதாரணங்கள் மற்றும் குணப் பண்புகள்
நாம் கற்பது குறியிலக் கொன்றைப் பின் தொடர்வதற்கு என்பது நிஜம். அக்குறிக்கோள் உண் மையில் நிறைவேறும் எனினும் அப்படி நிகழாத சந்தர்ப்பங்களுமுண்டு. அவற்றில் நீர் கற்றுக் கொண்ட விடயங்கள் மட்டுமன்றி கற்பதற்குக் கற்றுக் கொண்ட நுட்பமுறைகளும் உமது வாழ்க்க்ைகு இராட்சத பலமாக அமையும். உலகில் உன்னத
கல்வியியலாளர்கள், விஞ்ஞானிகள், கணித மேதைகள், உலகை மாற்றியமைக்க மனிதர்களிடையே பெரும் பாலானோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கற்றவர்களாவர். மரபுரிமைத்திறமைகளாலும் இணையற்ற துணிச்சலாலும் உலகின் பெருந்தலைவர்களாக ஆனவர் களும் உள்ளனர். அவ்வாறான அறிஞர்களைப் பற்றி படியுங்கள், வாசித்தறியுங்கள்.
உமது பாடசாலையில் திறமைகாட்டும் ஏனைய மாணவர்களைப்பற்றி ஆராயுங்கள், அறிந்திருங்கள். சமூகக் கற்றலில் அர்ப்பணிப்பினால் கெளரவம் பெறும் மனிதப்பிறவிகள் பற்றி ஆய்ந்தறியுங்கள். விபரம் தேடுங்கள்.

Page 43
அவ்வாறு தேடும் போது அநீதி, வஞ்சகம், (கபடம்) என்பவற்றால் மேலுயர்ந்த சிலரைப்பற்றியும் உமக்கு தகவல்கள் கிடைக்கும். அவற்றிற்கு புன்னகை பூத்த வனாய் உமது விடயத்தில் மேலும் கண்ணாயிருக்குக. ஏமாற்றுவதென்பது உம்மையே ஏமாற்றிக் கொள்வதாகும்.
விளைதிறன்மிகு கற்றல் முறையொன்று
விளைதிறன்மிகு கற்றல் முறையொன்றிற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க முடியும்.
உறுதியான நுட்பமுறை, தொழிநுட்பங்களின்றி குறிப்பிட்ட பணியொன்றை விளைதிறன் மிகுந்ததாய் நிறைவேற்ற முடியாது. செய்முறையும் தொழில்நுட்பமும் ஒன்றாயிருப்பினும் அதனை உபாயோகிக்கும் முறை ஆளுக்காள் வேறுபட முடியும். தனக்கேயுரிய முறையிலான கற்றல் முறைத்திட்டமொன்றைத் தயார் செய்து கொள் வதற்கு உலகில் அங்கீகரிக்கப்பட்ட கற்றல் முறைகள் பற்றிய தெளிவு உம்மிடம் இருத்தல் வேண்டும்.
தச்சுவேலை, மேசன்வேலை, வர்ணம் பூசுதல், பயிர்ச்செய்கை போன்ற நடவடிக்கைகள் சிலவற்றைப் பற்றிச் சிந்திக்குக. முறைகளின்றியும் ஒழுங்கின்றியும் இவற்றைச் செய்ய முடியும். எனினும் இறுதிவிளைவு பற்றி உமக்குத் தெரியுமா? அரிதாகவே நற்பயன் கிடைப்பதுண்டு.
எனினும் அரிதாகக்கிடைக்கும் பெறுபேறு போதியதன்று. முறையான திட்டமின்றியபடியால் காலம், சிரமம் (உழைப்பு), வளங்கள் என்பன வீண்விரயமாகின்றன. அவ்வேளையில் ஒரே விடயத்தை மீண்டும் செய்யவேண்டியும் ஏற்படும். திடமற்ற செயற்பாடுகளைவிட திடமான முறையொன்றை
அறிந்து அதனுள் பிரவேசித்தல் மிகவும் சிறந்தது.
காலம்
காலம் பொன்னானது எனும் மூத்தோர் வாக்கொன்று உண்டு. எனினும் அதற்கு புதிய விளக்கமொன்றை வழங்க வேண்டியேற்பட்டுள்ளது. பொன்னை உருக்கினாலும் கரைத்தாலும் உலகில் எங்கேயாவது ஒரு பகுதியில்

அண்ணளவேனும் எஞ்சியிருக்கும். எனினும் காலம் அவ்வாறானதல்ல. போனால் போனதுதான். கழிந்து சென்ற காலம் உலகில் எங்கேயாவது எஞ்சியதில்லை அதனால் இவ்வுலகிலுள்ள மிகவும் பெறுமதி வாய்ந்த பொருள் காலமாகும்.
எமக்கு உயிர் வாழ்வதற்குரிய காலத்தைப்பற்றி சிந்திக்குக, நாம் பாடசாலை செல்லும் காலத்தைப் பற்றி சிந்திக்குக. நாம் பல்கலைகழகத்தில் கழிக்கும் காலத்தைப்பற்றி சிந்திக்குக அவையனைத்திற்கும் வரையறைகளுண்டு. வரையறுக்கப்பட்ட காலப்பகுதியினுள் உயர்பெறுபேறுகளைப் பெறுவது எமது குறிக்கோள். சாதாரண தரப்பரீட்சை, உயர்தரப்பரீட்சை போன்று எந்தவொரு உயர்பரீட்சைக்கும் முகங்கொடுப்பதற்கு திடமானதிட்டம், பாடத்திட்டம் என்பன உம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். அப்பரீட்சையைத் திட்டமிடுவோர் உம்மிடம் எதிர் பார்க் கும் அளவொன்று உண்டு. நீங்கள் அந்த அளவை அடைந்திருப்பதைக் காட்டும் சந்தர்ப்பம் பரீட்சையாகும். அச்சந்தர்ப்பம் வரை கடந்து வரும் வழியைத் திட்டமிட்டுக்கொள்வது உமக்குரிய அறைகூவலாகும்.
காலத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பான கடின நிலைகள்
“படிப்பு அவசியம் எனினும் சிறு பராயத்திலிருந்தே அதிகமாக விளையாடுவதற்கு, பிரயாணங்கள் செல்வதற்கு, திரைப்படம் பார்ப்பதற்கு, இசை நிகழ்ச்சிகள், கிறிகெட் ஆட்டம் ஆகியவற்றைப் பார்த்து இரசிப்பதற்கு சற்று கவர்ச்சியைக் காட்டுகின்றோம். அவை நினைவில் வரும் போதே அவற்றிற்கு செல்லத் தோன்றுகின்றது. பரீட்சையைப் பற்றி நினைக்கும்போதே பயம், அவ்வாறிருப்பினும் எனது விருப்பத்திற்கு அது அடிமை.”
காலத்தை சரிவரப் பயன்படுத்துவது மாணவர்கள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சினையாகும். மேற்கூறிய பழக்கங்கள் ஒன்றாவது வாழ்க்கைக்கு அவசியமற்றவையல்ல. பிரதான பிரச்சினை நீங்கள் முன்னுரிமை வழங்கவேண்டியவற்றை அறிந்து கொள்ளாமையாகும். இப்பழக்க வழக்கங்களை ஒரே தடவையில் நிறுத்த முடியாது. எனினும் ஒவ்வொன்றாகக் கட்டுப்படுத்த முடியும். தேவையற்ற பிரயாணங்களைக் குறைக்க முடியும். பார்த்து இரசிக்கும் திரைப்படங்களின் அளவை சிறிது காலத்திற்கு கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். அவ்வாறு செலவாகும் காலப்பகுதியை கற்றல் தொழிற்பாடுகளில் ஈடுபடுத்த முடியும்.
அடுத்தபடியாக “படிப்பது பெரிய கடினங்களையுடைய, முடியாத செயற்பாடு இதிலிருந்து விடுபடுவது எப்படி” என நினைபப்வர்களுக்கு அவ்வாறான பிரச்சினைகள் இருக்க முடியும். எனினும் படிப்பு என்பது மகிழ்ச்சியைக்
அகவிழி - டிசம்பர் 2012 / 41

Page 44
கொண்டுவரும். சிலவேளை வினோதமடையக்கூடிய செயற்பாடு என விளங்கும் போது உமக்கு கற்பதற்கு ஆசை, நெருக்கம் ஏற்படும். காலம் பற்றிய பிரச்சினைகளேதும் ஏற்படாது.
"நான் படிப்பதற்கு நேரத்தை செலவழிக்கிறேன். எனினும் வேலைகள் வந்து குவிகின்றன” இது மற்றுமொரு கசப்புணர்வாகும்.
உண்மையாகவே இங்கு பிரச்சினையிருக்கின்றதா? சிலர் தோடம் பழக் குவியலை அள்ளுவது போல் அனைத்தையும் அள்ளிக்கொள்ள முற்படுவர். எனினும் தோடம்பழங்களை ஒவ்வொன்றாக எடுப்பதுதானே சிறந்தது?
கால அட்டவணையின், தின அட்டவணையின் தேவை இங்குதான் மேலெழுகின்றது. விஷேடமாக சாதாரணதர, உயர்தரப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கத் தயாராகும்போது நீங்கள் திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது. உகந்த கற்றற் சூழலினுள் கால அட்டவணைக்கேற்ப கருமமாற்றுவதன் மூலம் இப்பிரச்சினைக்கு விடைகாண
முடியும்.
நீங்கள் படிக்குமிடத்தைப்பற்றி சற்று சிந்தித்துப்பார்க்க அது சிக்கல் நிறைந்த வலையமைப்பாயின் உமக்கு
மேலும் பல பிரச்சினைகள் மேலெழுவது நிச்சயம். இரசாயனவியல், பௌதிகவியல் ஒன்றாகக் கலந்து ஒன்றாவது ஞாபகத்திலில்லாத குளறுபடி நிறைந்த நிலை உருவாவது தடுக்க முடியாதது.
கற்றலின் இராட்சத பலமும் கற்கும் சூழலும் கற்றலுக்குகந்த சூழலைத் தயார் செய்துகொள்வது மிக முக்கியம். அச்செயற்பாடு பாரிய சிரமங்களுக்கு மத்தியில்
42 / அகவிழி - டிசம்பர் 2012

பெருமளவு பணத்தை முதலிட்டு செய்யவேண்டியதொன்றும்
அல்ல.
நீங்கள் வீட்டில் படிக்குமிடத்தைப்பற்றி சிந்தியுங்கள். அவ்விடத்திற்கு நீர் செல்லும்போது மனதில் மென்மை ஏற்படுகின்றதா? கடுமையான மனப்பாங்கு ஏற்படுகன்றதா? கற்றலில் நீர் செலுத்தவிருக்கும் கவனத்தைப்பறிக்கும் காரணிகள் எத்தனையிருக்கின்றன? சிலவேளை ஒழுங்கு குலைந்துள்ள புத்தகக் குவியல்கள், காகிதாதிகள், போத்தல், சுவரில் ஒட்டப்பட்ட பல்வேறுபட்ட உருவப் படங்களும் புகைப்படங்களும் உமது மனதைக் குழப்ப இடமுண்டு.
ஜன்னலிற்கு வெளியே விளையாட்டுத்திடல் காணப் படுமாயின் அங்கு நிகழ்பவைகள் உமது மனதைப் பறிகொள்ளும். இயன்றதை இத்தடைகளிலிருந்து வெளியே யிருக்க முயற்சிசெய்க. மனதைக் குழப்பும் விடயங்களைத் தவிர்த்து மனதை ஒருநிலைப்டுத்தும் காரணிகளை வரவழைப்பது பற்றி சிந்திக்குக. மன ஆறுதல் தரும் காட்சிப்படம், பூங்கொத்து, அறிவுபூர்வக் கருத்துக்கள், முன்மாதிரிக் கருத்துக்கள் இவற்றினால் உமக்கு ஆறுதல் கிடைக்கும். எனினும் இவையெதுவுமின்றிய அதிகஷ்டச்சூழல்களில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, படித்து அதன்மூலம் உயர் அடைவுகளைப் பெற்றவர்களும்
உலகிலிருப்பதைக் கவனத்திற் கொள்க. அவர்கள் அவ்வாறு உயர்வு பெற முடிந்தமைக்கான காரணம் விழுந்தவுடன் மீள எழும் பியதாகும். சூழலின் மேல் குற்றம் சுமத்துவதுடன் நின்றுவிடாமல் சகல சவால்களையும் வெற்றிகொள்ள, சூழலை மாற்றியமைக்ககூடிய வழிமுறையை நன்கு கற்க வேன் டு மென நினைத்ததன் காரணமாகவாகும். தனது கற்ற லிலுள்ள கவனத்தை திசை திருப்பும், திசைதிருப்பமுயலும் புற எதிரித்தடங்கல்கள் அதிகரிக்க அதிகரிக்க கற்றலின் விருப்பு, ஆர்வம், ஊக்கம், தைரியம்
அதிகரிப்பதால் மனிதனில் மறைந்து காணப்படும் திறமைகளும் ஆற்றல்களும் வெளிப்பட இச்சூழல்களிரண்டும் செல்வாக்குச் செலுத்தும். தீவிரகஷ்டநிலைச் சூழலிலும்கூட மனதிற்குப் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க முடியும். குடிசைவீட்டில், மெழுகுவர்த்தி ஒளியில் புத்தகம் வாசித்துப்படித்து வாழ்க்கைக்கு பெரும் அறிவுத்திரட்டுக்களை ஈட்டிக் கொண்ட சிரேஷ்ட புதல்வர் கள் இருப்பதனையும் நீங்கள்
அறிந்திருபீர்கள்.

Page 45
உமக்கு நன்கு ஞாபகமிருப்பது எந்த உடலமைப்பி லிருக்கும் (Body Position) போது எச்சூழலில்? எவ் விடத்தில்? இவ்வினாக்களை நீங்கள் உம்மிடமே வினவிக் கொள்க. ஒன்றிற்கொன்று கிடைக்கும் விடைகள்/ பதில்கள் வேறு படும். அது உமக்கு தனித்துவம் வாய்ந்தது.
நடைமுறையில் கற்றல் சூழலொன்றைத் திட்டமிடும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்கள்
படிப்பதற்கு உமது வீட்டிலுள்ள மிகவும் பொருத்தமான
இடத்தைத் தெரிவுசெய்துகொள்க
உமது மனதிற்கு அமைதி கிடைக்கும் வகையில் அவ்விடத்திலுள்ள வீட்டுப்பொருட்களை ஒழுங்கு படுத்திக் கொள்க.
காற்றோட்டம், சூரியஒளி என்பனவற்றையும் கவனத்திற் கொள்க.
வீட்டு உபகரணங்களைத் தவிர இருக்கவேண்டிய ஏனைய பொருட்களைப் பற்றி கவனம் செலுத்துக. (மனஅமைதி, படங்கள், பூமஞ்சரி, அறிவுக்கூற்றுக்கள்) உமது வாழ்க்கையில் வெற்றி நிலைகளை வெளிக் காட்டி மனதைப் பூரிக்க வைக்கும் புகைப்படங்கள், சான்றிதழ்கள், நினைவுச்சின்னங்கள் இருக்குமாயின் காட்சிதரும் வண்ணம் பொருத்தமான இடத்தில் வைக்குக. அவை உம்மை மனதிற்கு இறுமாப்பு தருபவையாகும். மனதை சாந்திப்படுத்தும் வகையிலான இசையைக் கேட்டு இரசித்தல், கேட்குமாறு வைத்தலும் பிரயோசன மளிக்கும். "பரொக்” சங்கீத உபகரணங்கள் இவற்றிற்குப் பொருத்தமானவை.
ஞாபகமும் ஞாபகத்தில் வைத்திருத்தலும்
ஞாபகசக்தியென்பது என்ன என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்போது உமக்கு நிறைய விடையங்கள் ஞாபகத்தில் வரும். ஞாபகம் என்பது அதுதான். மனிதனுடைய ஞாபகச்செயன்முறை புதுமையானது. தரவுகளைப்பெறுதல் ஞாபகத்தில் பதிதல் ஞாபகப் படுத்திக்கூறல்
ஞாபகத்திலிருப்பவை யாவையென ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க. அப்போதும் பலவிடயங்கள் ஞாபகத்திற்கு வரும். எனினும் அவையனைத்தும் ஒன்றாகக் கலந்த ஞாபகக்கலவை மாத்திரமே.
தற்போது விஞ்ஞானப்பாடத்துடன் தொடர்பாக ஞாபகமிருப்பவை யாவையென சிந்தித்துப் பார்க்குக. அப்போது விஞ்ஞானத்துடன் தொடர்பான எனும் கலப்பான ஞாபகசட்டம் உம்மால் உணரப்படும்.

|2
தற்போது சிந்தித்துப் பார்க்க விஞ்ஞான பாடத்தில் ஒளித்தொகுப்பு எனும் சொல்லுடன் தொடர்பான உமக்கு நினைவிலிருக்கும் விடயங்கள் யாவையென.
ஒளித்தொகுப்பு என்பது யாது? அது எவ்வாறு நிகழ்கின்றது?
அதற்கு அவசியமான காரணிகள் யாவை?
அதனை பரிசோதனை, அவதானிப்பு மூலம் தெளிவாக்கி கொண்டவிதம் ஆகிய விடயங்கள் உமக்கு ஞாபகம் வரும். ஒளித்தொகுப்பு பற்றிய அவதானிப்பின்போது உமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கூட உமக்கு ஞாபகம் வரும். உதாரணம்: எறும்புகள் கடித்தவிடயம்
மரத்தில் எறும்புகள் பயணித்த விதம்.
ஞாபகச் செயன் முறை எந்தளவு புதுமையான தென்பதை சிந்தித்துப் பார்க்க. ஞாபகத்திற்கும் கணினித் தொழிற்பாட்டிற்குமிடையே பெரிய வேறுபாடுகள் இல்லையல்லவா?
சிறந்த கற்றல் செயற்பாட்டில் ஞாபகமும் (Memory) , நிலைநிறுத்தலும் (Retention) மிகமுக்கியம் நிலைநிறுத்தல் என்பது ஞாபகத்தில் பற்றிப் பிடித்துக்கொள்ளலாகும். ஞாபகப்படுத்தலென்பது (Remember) நிலைநிறுத்திய விடயங்களை தேவைப்படும்போது மீண்டும் ஞாபகத்தி லெடுத்தலாகும். நன்றாகப் படிப்பதற்கும் அதன் விளைச்சலைப் பெறுவதற்கும் கல்விமானாவதற்கும் ஞாபகம், நிலைநிறுத்தல். ஞாபகப்படுத்தல் என்பன எளிமையாக நிகழ்வது முக்கியம். நாம் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது கற்றவர்களையா? புத்திக்கூர்மையானோரையா? சந்தர்ப் பத்திற்கேற்ற போக்கை உடையவர்களையா?
புத்திக்கூர்மையென்பது எவ்வாறாயினும் உகந்த போக்கு என்பதை விவரிப்பது மிகவும் சிக்கலான விடயம். கல்விமானின், விவேகமானோரின், உகந்த போக்குடையோரின் அடிப்படை அடித்தளம் ஞாபகசக்தி, ஞாபகப்பதிவுச்சக்தி, நினைவுகூறுமாற்றல் ஆகிய சக்தி களிலும் அச்சக்திகளை உபயோகித்து வாழ்க்கைக்கு முகங்கொடுத்தல் என்பவற்றிலாகும்.
ஞாபக வகைகள்:- ஞாபகத்தை பல்வேறு வகைப் படுத்தல்களுக்குட்படுத்த முடியும்.
1. உடன்ஞாபகம்
2.
குறுங்கால ஞாபகம் 3. நெடுங்கால ஞாபகம் சில விடயங்கள் எமக்கு சில நொடிப்பொழுதுகளை விட ஞாபகமிருப்பதில்லை. சில விடயங்கள் ஒருநாள்
அகவிழி - டிசம்பர் 2012 / 43

Page 46
மாத்திரமே ஞாபகமிருக்கும். எனினும் சில விடயங்கள் மீண்டும் வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் நிலையானதாக எம்மினுள் சேமிக்கப்பட்டிருக்குமாயின் அது நெடுங்கால ஞாபகமாகும்.
கல்விசார் ஞாபகசக்தியென்பது எமக்கு பிரயோ சனமளிப்பவற்றை நெடுங்கால ஞாபகத்தினுள் சேமித்துக் கொள்வதற்கும் தேவையானபோது இலகுவாக வெளியி லெடுப்பதற்குரிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாகும்.
ஞாபகம் பற்றிய முக்கிய விடயங்கள்
தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது எமக்கேற்பட்ட நிகழ்வுகள் நன்கு நினைவிலிருக்கும். கற்றல் தொழிற்பாட்டையும் எமக்குரியதாக அமைத்துக் கொள்வது முக்கியம் பெறுவது அதனாலாகும்.
நன்கு புலப்படுபவை நினைவிலிருப்பது ஞாபகத்தின் இன்னுமொரு இயல்பாகும். அதனால் சிறந்த ஞாபகசக்தியைப் பெறுவதற்கு நன்கு பார்த்தறிக. உமது பாடத்திற்குரிய உருக்கள், படங்கள், இயற்கைச்சூழல், விஞ்ஞானபரிசோதனை கணினி பெறுபேறுகள் இவையனைத்தையும் நன்கு பார்க்குக.
பொதுவான விடயங்கள் அல்லாதவை ஞாபகமிருப்பது பொதுவானது. அதனால் பொதுவல்லாத நிகழ்வு, பொதுவான பாடத்திலுள்ள பொதுவல்லாத சொற்கள், பிரயோகங்கள் என்பவற்றை ஞாபகம் வைத்துக் கொள்க.
முறையானதும் ஓர் ஒழுங்கமைவையுடையவையும் ஞாபகமிருப்பது பொதுவானது. கவிதைகள் ஞாபக மிருப்பது இதனாலாகும். பாடல்கள் ஞாபகமிருப்பதும் இதனாலாகும். எனினும் உமது பாடத்திலும் ஒர் ஒழுங்கமைப்பிருப்பதை நீர் அறிவீரா? அவ்வாறில்லை யெனின் உமது பாடத்திற்கு இழப்புகளின்றி தனக்கே யுரிய முறையையும் ஒழுங்கையும் தயாரித்துக்கொள்க. அவற்றை உமது ஞாபக வைப்பகத்தில் வைப்பிலிடுக.
ஞாபகமும் நிலைநிறுத்தலும் கற்றல் எனும் அடித் தளத்திற்கு அடிக்கல்லாகும். அங்கு குறை பாடுகள், குளறுபடிகள் காணப்படுமாயின் அவற்றைத் திருத்தி யமைப்பதில் கவனம் செலுத்துக.
TUL
ஞாபகத்திலிருப்பவற்றை அடிக்கடி உபயோகிப்பது முக்கியம். கற்ற விடயங்களை அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வது மிக முக்கியம். காலத்தினால் ஞாபகத்தை ஓரளவு தோல்வியடையச் செய்யமுடியும். அதனால் காலவோட்டத்தில் கரைந்து விடாது தடுப்பதற்கும் ஞாபகத்தில் தாங்கியிருப்பதற்கும் நீர் தொழிற்படுத்தல் வேண்டும்.
44 / அகவிழி - டிசம்பர் 2012

ஞாபகமும் முறைகளும்
15 -
நாம் நினைவில் வைத்திருக்கும் முறையைப் பொறுத்து
ஞாபகம் பல்வகைப்படும்.
- உருவமாக
சத்தமாக / ஒளியாக
புலனுணர்வு விடயமாக ஞாபகம் வைத்திருத்தல்.
உருவிற்கும் ஞாபகத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.
உருப்படங்கள் சித்திரப் படங்களிலுள்ள வர்ணங்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் ஆற்றல் அதிகம். அதிகமதிகமாக அவற்றை முடியுமான இடங்களி லெல்லாம் பிரயோசனப்படுத்துவது நவீன கற்றல் முறையின் விஷேட அம்சமாகும். தொலைக்காட்சியைப் பற்றி சிந்திக்குக. கல்வியூட்டியாக தொலைக்காட்சியால் பாரிய பணியொன்றை மேற்கொள்ள முடியும். உதாரணமாக எஸ்கிமோ இனத்தவர் பற்றிய பாடத்தில் அவர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய விளைதிறன்மிகு அறிவுத்திரட்டைப் பெற்றுக் கொள் வதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிக முக்கியம்.
ஒலிக்கும் ஞாபகத்திற்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு, கலந்துரையாடல், சத்தமிட்டு வாசித்தல், ஒலிநாடாக்களுக்கு காது கொடுத்தல் என்பன முக்கியம். பாடத்திற்குரிய நூல்கள் எவ்வளவு இருந்தபோதிலும் அவற்றிலுள்ள தகவல்கள் மனதில் பதிவது வகுப்பறைக்கு வரும் ஆசானின் குர லோசையின் ஆதாரத்துடனாக விருக்கலாம். கருணையுடன் கதைத்து, கலந்துரையாடியவண்ணம் விடயங்களை விளங்கவைக்கும் ஆசிரியர்கள் எமது மனதில் நிலைகொள்வர். அவர்களின் உருவமும் குரலும் அதேபோல் கற்பித்த விடயங்களும் எமது ஞாபகமெனும் வைப்பகத்தில் வைப்பிலிடப்பட்டிருக்கும். சிலருக்கு பிரயோகச் செயற்பாடுகளினூடாக, உறுப்புகளைத் தூண்டும் நடிப்பினால், பரிசோதனை, அவதானிப்பு, கருவிகளையும் பொருட்களையும் கையாள்வதால் ஞாபகத்திலிருக்குமளவு அதிகம். மிகவும் முக்கியத்துவம் பெறுவது அதிகமாக ஞாபகமிருப்பது எவ்விதத்திலென்பதாகும். இவ் அனைத்து முறைகளையும் மேம்படுத்திக் கொள்வது ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ளும் அத்தியாவசியப் படிமுறையாகும்.

Page 47
சந்தா விண்ணப்பப் படிவம்
பெயர் (முழுப் பெயர்) கற்பிக்கும் பாடசாலை பாடசாலை முகவரி தொலைபேசி/தொலைநகல் இல. : மின் அஞ்சல் முகவரி கற்பிக்கும் பிரிவு அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி : இத்துடன் ரூபா
க்கான காசோலை/க இல
இணைத்துள்ளேன்.
கையொப்பம்
- - - - - - - - - - - - - -
சந்தா செலுத்த சில எளிய
வழிமுறைகள்
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்பு வோருக்கான சில எளிய வழிமுறைகள். அகவிழி, கொம்ஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைக் கணக்கு எண் 1100022881 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அகவிழி கணக்கு எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமாக வைப்பு செய்து அதன் பற்றுச்சிட்டை எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வங்கி கமிஷன் இல்லை | பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU - AHAVILI பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் குறிப்பிட்டு உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு
செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலுத்தப்பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டு அகவிழி தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். சந்தா விபரம் தனி இதழ்
: 100/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 1200/=
ரியார்

၈၆
3, Torrington avenue, Colombo - 07 Tel : 011-2506272, Fax: 011-2585190
Email: ahavili.vilithu@gmail.com
Tbub/@Lဒါဆလui 5Jစံ
75LLu
s
လဒ်ဆန္ GurLLI saig Buursdb.
- - - - - - - - - - -
0) and ILwin
ဒါ |LL @၏ အL () : 6000/- စt LNL (Li) : 5000/-
D 64b
4000/- ၂၆၆ BL155ist
ILuL ( ၂
Colombo 3, Torrington Avenue, Colombo - 07.
Tel: 011-2506272
afna 167, Hospital Road, Jaffna. Tel: 021-2229866
Trincomalee 81 A Rajavarodayan Street, Irincomalee
Batricaloa 37, Old Rest House Road,

Page 48
இக
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் தொ.பே.இல.: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன்
தொ.பே.இல.: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல: 024-4920733 அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல.: 077-1285749 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல.: 011-2688102 கவிதா ஸ்ரோஸ் இல:05 பஸ் தரிப்பிடம், வவுனியா
தொ.பே.இல: 024 - 2222012 Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
Prin Kumaran P 39, 36th Lan
kumbhlk
Registered in the Department of Posts

விடி
தமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல.: 4515775, 2504266 அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை
தொ.பே.இல.: 052-2258437 நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03
தொ.பே.இல: 026-2236266 குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல.: 052-2223416 பிரியங்கா புத்தகக் கடை பிரதான வீதி, பருத்தித்துறை
தொ.பே.இல.: 077-9303246 கொலேஜ் நீட்ஸ் புத்தகக்கடை 120, பிரதான வீதி,
அட்டாளைச்சேனை 14 கை.தொ.இல.: 077-3034469 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல.: 066-3662228
Rajah's Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371
S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொ.பே.இல.: 077-1270458
ISSN 1800-1246
ted by ress (Pvt) Ltd. e, Colombo 06 @gmail.com
al771 800"124 005
5 of Sri Lanka under No.OD/96NEWS/2012.