கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2013.01

Page 1
விழி 09
பார்வை
இக
ஆசிரிய
- பேராசிரியர் சோ. சந்திரசேகரன் - கல - பாலசிங்கம் முரளிதரன் - சாந்தி சச்சின்
M.M. ஹிர்பஹான்
' A.A. Azees
'www.viluthu.org

ப 90
ஜனவரி - 2013
விடி
தத்துவ நோக்கு...
சாநிதி சசிகலா குகமூர்த்தி தானந்தம் - கணபதி சாம்பசிவம் - இரா. விஜயராகவன்
விலை: 100/=

Page 2
FWHEEEIE
24:28 பம்
எப்டிAL DE
இகவிடு
H555 5EE..
--1 FEE 1 - 4
மே 08
அகவிடி
ஆசிரியத்துல்
HாகH-4
விழி 08
பார்வை 88 - 2
நொவம்பர் - 20
அகவி6
ஆசிரியத்துவ நோக்கு...
NெDA பட் ய ச ந்தன.
கோரிபாடுற பக்.
R3 புள் ச தொகுபக்கம்-பக்கம்
sw.viluthப் பார்
4.பி,ம்:23 கலாநிதி?
சங்க்ச் பாப்பா
HH பார்
2012 ஆம் ஆண்டிற்கான அக
ஆசிரியர்கள் உடனடியாக

TEாசார்யகார 11:1111 எய
அகவிடு
ப1' 112 பார்
4 5 115
சிரியந்துவ நோக்குடி
கவிடு
ஆசிரியந்தும் நோக்கு..
4
இக்ர் :
எ க 11:02
18 .
சா: அ
அகவி6
ஆசிரியத்துவ நோக்கு.
=Tஜ - 4.பாபவக்க .. 1989etல் 5 க, ச, நகல்
எதோ :
நவிழிகளை பெற விரும்பும் - தொடர்பு கொள்ளவும்.

Page 3
உ
6 HEI614
இகவின்
தை. தன11ாம் - Lal Fonseka * சொ. உயிர்தலிங்கம் | 1.6.L, Jayaweera -: க, சனர் முகலிங்கம் | கலாநிதி கோ!ாமலை கோணேசர்
விலை: 100/=
MMEN \fitithux}}
AHAVILI 3, Torrington Avenue
Colombo 07
Tel.: 011 250 6272 E-mail: ahavili.viluthu@gmail.com
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே
பொறுப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் “அகவிழி”
யின் கருத்துக்கள் அல்ல.

ISSN 1800-1246
உள்ளே......
அறிவுசார் பொருளாதாரமும் வாழ்க்கை நீடித்த கல்வியும்
2.
பாடசாலைமட்டத்தில் வாண்மைவிருத்திச் செயற்பாடுகள்: ஓர் புதிய அணுகுமுறை
பாடசாலைகளில் எழும் முரண்பாடுகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான முகாமைத்துவ நுட்பங்களும்
14
வகுப்பறைகளில் க.பொ.த. உயர்தர மாணவர்களின் முகாமைத் திறன்களை மேம்படுத்தல்
5.
-- 16
பெண்கள் மீது தொடரும் வன்முறைக்கு எதிராக நூறு கோடி மக்கள் எழுச்சி கொள்ளும் உலகளாவிய பிரசாரத் திட்டம்
- 6.
மாணவர் கல்வி முகவராக பாடசாலை
20
7.
24
கல்வியிலாளர் பார்வையில் வினைத்திறனையும் விளைதிறனையும் கொண்ட பாடசாலைகள்
- 28
ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைமை மற்றும் பொதுச் சட்டத் தொகுப்பு
9.
32
மாணவர்களிடையே இயற்கை உணவுகளை தேர்ந்தெடுக்கும் பழக்கத்தை
வளர்த்தல்
10.
34
வன்னி பெருநிலப்பரப்பில் மீள்குடியேற்றப்பட்ட மக்களிடையே நிலவும் கல்விசார் பிரச்சினைகள்
- 11.
36
சமூக பொருளாதார நிலைமையும் கல்வியின் தற்போதய அமைப்பும்
- 39
12. மொழிப்பாடத்தில் மாணவர்களை மதிப்பீடு
செய்தல்
13.
பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும், பாது : 43
காப்பையும், கவனிப்பையும் உறுதிப்படுத்தல்

Page 4
ISSN 1800-1246
இகவி6
ஆசிரியத்துவ நோக்கு... - -
மாத இதழ்
ஆசிரியர்: V.S. இந்திரகுமார்
நிர்வாக ஆசிரியர்: சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் திருமதி பத்மா சோமகாந்தன்
ஆலோசகர் குழு: திரு. து. ராஜேந்திரம்
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்தப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஓய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
திரு.தை. தனராஜ்
முதுநிலை விரிவுரையாளர், இலங்கைத் திறந்தப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் துரை மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் - 5
திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்தப் பல்கலைக்கழகம்
திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்தப் பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதி - கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு
திரு.கே. சாம்பசிவம்
தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம்
ஜி. போல் அன்ரனி முன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர்
அகவிழி ( ஜனவரி 2013

ஆசிரியரிடமிருந்து......
வாண்மைத்துவம் என்ற சொற்பதம் ஆசிரியர் தொழிலில் மிக முக்கியத்துவம் மிக்க சொல்லாடலாக இன்று வலுப்பெற்றிருக்கிறது. ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வியி னூடாக தமது வாண்மைத்துவத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் தொழில் ரீதியான உன்னதத்தையும் பொதுமக்கள் தம்மீது கொண்டிருக்கும் மதிப்பையும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமது நடத்தையை ஒழுங்குபடுத்திக் கொள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்வி உதவுகிறது. ஆசிரியர் தமது பணி தொடர்பாக பெருமளவு தன்னாதிக்கத்தை கொண்டிருப்பதனால் அவர்களது நடத்தை தொடர்பான தராதரங் கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.
ஆசிரியர்களுக்கான சட்ட ஒழுக்கக் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிய ஒழுக்கக் கோவை சார்ந்த விடயங்களை கல்வி அமைச்சு சட்டக்கோவையாக வெளியிட்டிருக்கிறது. ஆசிரியர்கள், ஆசிரிய கல்வி யியலாளர்கள், கல்விமான்கள், ஆசிரியத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் பேறாக ஆசிரியர் களுக்கான ஒழுக்கக் கோவை விருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வொழுக்கக் கோவை ஆசிரியர் கள் மத்தியில் உன்னதமான தொழில்சார் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு சிறந்த ஆசிரியர் நடத்தைக்கும் வழிகாட்ட வேண்டும் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் ஆசிரியர் பின்வரும் மைய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஆசிரியர் ஒரு ஆள், பதில் பெற்றார் (Loco Parents), அறிவையும் திறன்களையும் விருத்தி செய்பவர், ஆற்றுப்படுத்துபவர், ஆசான், மதிப்பீடு செய்பவர், கண்காணிப்பாளர், ஒரு வாண்மையாளர். இந்த அடிப்படையில் வெளிவந்திருக்கும் ஆசிரியர் ஒழுக்கச் சட்டக்கோவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது கல்விசார் ஆளணியினர் அனைவரினதும் கடப்பாடாகும்.
அந்த வகையில் ஆசிரியர் என்று கருதப்படுவோர் மாணவ மாணவிகளின் கல்வி தொடர்பான பொறுப்புக்கள் கொண்ட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் உள்ள கல்விசார் உத்தியோகத்தர்களேயாவர்.
ஒழுக்கவிழுமியம் கொண்ட செயற்பாடுகள் தொடர்பான விழுமிய முறைமையாக அறிமுகப்படுத்தப்படுவது தம்மால் தமக்காக விதிக்கப்படவேண்டிய நேர்மை, பொறுப்பு மற்றும் முன்மாதிரி, சமூகப் பொறுப்புப் போன்ற நபர்கள்

Page 5
ரீதியிலான ஆசிரியர்களின் சமூகம் எதிர்பார்க்கும் சிந்தனை, பொறுப்புக்கள், பழக்க வழக்கங்களாகும். சட்ட முறைமை என அறிமுகப்படுத்தப்படுவது சகல ஆசிரியர்களினாலும் கட்டாயமாகப் பின்பற்றப் பட வேண்டிய சட்டக் கோட்பாடுகளாகும். இச்சட்டக் கோவையின் நோக்கங்களாக நேர்மை, பொறுப்புணர்ச்சி, தொழில் வாண்மையுடன் முன் மாதிரியான, சமூகப் பொறுப்புள்ள நபராகவும் ஆசிரியர்களினால் மேற்கொள்ள வேண்டிய விழுமியத் தரங்கள் ஒழுக்க விழுமிய முறைமையாகச் சமர்ப்பிக்கப்படுகின்றது. ஒழுக்கமிக்க செயற்பாடுகளுக்காகச் சகல ஆசிரியர் களுக் கும் பொறுப்புக்கள் வழங்கப்படும் வகையில் சட்ட முறைமை ஒன்றைச் சமர்ப்பித்தல் முக்கியமானதாகின்றது.
எனவே பின்பற்றப்பட வேண்டிய சட்டமுறைமைகள் கொண்ட ஒழுக்க விழுமிய முறையினைத் தயாரிப்பதன் நோக்கமாக அமைவது பெறுமதிமிக்க தொழிலின் அங்கத்தவர் என்ற வகையில் ஆசிரியரின் கெளரவப் பெயரினைப் பாதுகாப்பதாகும். மாணவர்களின் ஆளுமை இசைவான முறையில் நேர்மையான வளர்ச்சி பெற உதவுதல் கல்வியின் சிறப்பு நோக்கங்களில் முக்கியமானதாகும். இவ்விலக்கை எட்ட குடும்பம், பாடசாலை, சமூகம் ஆகிய பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. அவ்வகையில் பாடசாலை எனும் கல்வி அமைப்பியல் சார் நிறுவனமும் அந்நிறுவனத்தின் பங்காளரான ஆசிரியரின் பணிகளும் மேற்கூறிய விடயத்தில் முக்கிய பங்கேற்கின்றன. ஒருங்கிணைந்த இசைவான ஆளுமை (Integrated Personality) பெற்றுள்ளவன் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக்கொள்ளும் முறையில் நிறைவு செய்துகொள்ளும் திறனைப் பெற்றிருப்பான். ஒருமைப் பாடுடைய ஆளுமையினை பெற்றுள்ளவனிடம் இசைவு (Harmony) காணப்படும். முரண்பாடு காணப்படாது தற்கருத்து (Self concept) சமூக நியதிகளுக்கு இசைவாகக் காணப்படும். திறன்களுக்கும் ஆர்வத்திற்குமிடையே இசைவிருக்கும். சமூக முதிர்ச்சி, மனவெழுச்சி முதிர்ச்சி ஆகியனவும் அன்பு, பரிவு, ஒத்துழைப்பு போன்றனவும் மாணவர் ஆளுமை வளர்ச்சியில் ஆசிரியரிடத்துக் காணப்படும் பிரதான பண்புக் கூறுகளாகும். இவ்வாறான ஆசிரியர் வாண்மைத்துவச் சமூகத்தினரை இன்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே ஆசிரியர்களுக்கான ஒழுக்கக் கோவை முன்மொழியப்பட்டுள்ளது.
ஆயினும், இவ்விடயங்கள் தொடர்பில் நடைமுறைக்குச் சாத்தியமானவை அல்லது நடைமுறைக்கு வரும் போது எதிர்கொள்ளும் சவால்கள் என பல கேள்விகள் எம்முன் எழாமலில்லை. ஆசிரியர் தனிப்பட்ட ரீதியில் சிறந்த
மா.

நற்பழக்கவழக்கங்கள், ஒழுக்கங்கள் கொண்ட முன்மாதிரி மிக்க சமூக முன்னோடியாகச் செயற்பட வேண்டும். தாம் சிறந்த தேகாரோக்கியம் கொண்டவராக இருப்பதற்குத் தேவையான ஒழுங்குகள் பற்றி உடற்பயிற்சி மற்றும் சுத்தத்தைப் பேணுதல். சகல சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கம் மற்றும் விழுமியத்தைப் பாதுகாக்கக் கூடியவாறு சுத்தமாக எளிமையான முறையில் ஆடைகளை அணிந்திருத்தல், போதை, புகைத்தல், வெற்றிலை சாப்பிடல் போன்ற பழக்கங்கள் மற்றும் பல்வகையான முறைகேடான செயற்பாடுகளில் தவிர்ந்திருத்தல், ஏனையோரையும் தவிர்ந்திருக்க உதவுதல். அநீதிகள், முறையற்ற ரீதியில் இழிவுபடுத்தல் மற்றும் அச்சமூட்டல் போன்றவற்றில் இருந்து தமது சகோதர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஏனையோரைப் பாதுகாப்பதற்காகச் சகல சந்தர்ப்பங்களிலும் தயாராக இருத்தல் வகுப்பறை மற்றும் அதற்கு வெளியே மாணவர்களுடன் பழகும் சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டினைத் தவிர்த்துக்கொள்ளல் போன்ற அடிப்படையான விடயங்களில் கூட மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பல சவால்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும். மாறாக இவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்து செயற்படுத்தும் போது அவ்வாறான மாற்றங்களுக்கு உட்படாத ஆசிரியர்களுக்கு அல்லது கல்வியியலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று நடவடிக்கைகள் பற்றி எதுவித தீர் மானங் களும் இவ்வொழுக்க சட்டக் கோவையில் முன்மொழியப்படவில்லை.
எனவே இவ்விடயங்களில் ஆசிரியர்கள், கல்வியிய லாளர்கள் தாமாகவே முன்வந்து இவ்வாசகங்கள் மீது தங்களின் விசேட கவனத்தைச் செலுத்தி அதற்கமையச் செயற்பட்டாலேயன்றி முன்மொழியப்பட்ட சட்டக்கோவை வெறும் எழுத்துப் பிரதியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆகவே இதுவரை காலமும் பல சந்தர்ப்பங்களிலும் ஆசிரியர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் பாரியளவில் தண்டிக்கப் பட்டதாகவோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டதாகவோ நாம் அறியவில்லை. ஏனெனில், ஓர் சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் ஒழுக்கக்கோவை ஒன்று நடைமுறையில் இல்லாததேயாகும். தற்போது வெளிவந்திருக்கும் ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைமை மற்றும் பொதுச் சட்டத் தொகுப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே ஒத்துமொத்த சமூகத்தினரின் விருப்பமாகும். அகவிழியும் இவ்விடயம் தொடர்பில் கரிசனை கொள்கிறது.
V.S. இந்திரகுமார்
அகவிழி ( ஜனவரி 2013

Page 6
அறிவுசார் பொரு வாழ்க்கை நீடித்த
பேராசிரியர் சோ. சந்தி
முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும் மரபுவழிப் பொருளாதாரமானது மனித ஆற்றல், உழைப்பு, மூலப் பொருட்கள் என்பவற்றில் தங்கியிருக்கிறது. நவீன அறிவுசார் பொருளாதாரம் அறிவு, சிந்தனை, தொழில்நுட்பத்தின் பிரயோகம் என்பவற்றைப் பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் புதிய அறிவு உருவாக்கப்படல், பரப்பப்படல், உற்பத்திக்குப் பயன்படுத்தப்படல், அறிவுசார் பொருளாதாரத்தின் அடிப்படை அம்சம். உற்பத்தி வட்டங்கள் (cycles) சிறியவை. புத்தாக்கங்களின் தேவையும் அதிகம். புதிய அறிவுசார் பொருளாதாரமானது சகல நாடுகளின் பொருளாதார முறையின் உழைப்பினர் சந்தையில் புதிய கேள்விகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தமது நாளாந்த தொழில் வாழ்க்கையையும் சாதாரண வாழ்க்கையையும் சிறப்பாக நடத்த புதிய
அறிவும் திறன்களும் தேவைப்படுகின்றன.
இத்தகைய புதிய கேள்விகள், தேவைகள் என்பவற்றுக்கு அமைய புதிய கல்வி மாதிரி (Model) ஒன்று தேவைப்படுகிறது. ஒருவகையான வாழ்க்கை நீடித்த கல்வி ஏற்பாடும் தேவைப்படுகின்றது. பிள்ளைப் பருவம் தொடக்கம் இளைப்பாறுகின்ற காலம் வரை மனிதர்களுக்குத் தொடர் கல்வியை வழங்குவதற்கான புதிய ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான ஏற்பாடுகள் முறைசார் கல்வியிலும் (பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் முறைசாராக் கல்வியிலும் (வேலைத் தளப் பயிற்சி போன்றன) முறையில் கல்வியிலும் (குடும்ப உறுப்பினர்கள், சமூக உறுப்பினர்களிடமிருந்து பெறும் திறன்கள்) இருத்தல் வேண்டும். தேவைப்படும் போதெல்லாம் புதிய திறன்களைக் கற்கும் வாய்ப்புக்கள் மக்களுக்கிருத்தல் வேண்டும்.
வளர்முக நாடுகளின் கல்விமுறைகள் புதிய அறிவையும் திறன்களையும் வழங்காமையால் அந்நாடுகள் போட்டித் தன்மை வாய்ந்த அறிவுசார் பொருளாதார முறையுடன் இணைந்து கொள்ள முடியவில்லை. இப்பிரச்சினையை எதிர்கொள்ள புதிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தகவல்களை வழங்குதல், ஆசிரியர்களின் வழிகாட்டல், நெட்டுருப் பயிற்சி என்பவற்றைக் கொண்ட மரபுவழிக் கல்வி ஆக்கத்திறன், பிரயோகம், பகுப்பாய்வு, அறிவைத் தொகுத்தல், வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுடன் இணைந்து கூட்டாகக் கற்றல் என்னும் அம்சங்களைக் கொண்ட புதிய கல்வி ஏற்பாடுகள் இன்று தேவைப்படுகின்றன. அகவிழி ( ஜனவரி 2013

ளாதாரமும் கல்வியும்
சேகரன் புப் பல்கலைக்கழகம்
மரபுவழிப் பொருளாதார முறையில் நாளாந்தம் செய்யும் பணிகளைச் செய்வதற்கான திறன்களை ஊழியர்கள் ஒருமுறை கற்றுவிட்டால் நீண்டகாலத்திற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு காலந் தள்ளலாம். அறிவார்ந்த பொருளாதாரத்தில் அறிவும் திறன்களும் தொழில்நுட்பமும் துரிதகதியில் மாறிச் செல்லும் போது ஊழியர்கள் அதே துரித கதியில் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்கள் புதியவற்றைக் கற்றுக் கொள்ளக் கூடிய ஊழியர்களையே விரும்பும். வாழ்நாள் முழுவதும் திறன்களை இற்றைப்படுத்திக் கொள்ளும் உளப்பாங்குடையவர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும். இதற்கான கல்வி மற்றும் பயிற்சி ஏற்பாடுகளைச் சகல நாடுகளின் கல்வி முறைகளும் செய்தாக வேண்டும்.
இன்று நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் அரசாங்கத்தின் பொதுக் கல்விக்கு அப்பால் தனியார் துறையினரும் கல்வித்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை கல்வி முறையையே கொண்டிருந்த சீனாவில் 1999 அளவில் 500 புதிய தனியார் உயர்கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பிரேஸிலில் 70% உயர்கல்வி மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் பயிலுகின்றனர். போலந்தில் 195 தனியார் உயர்கல்வி நிலையங்கள், செக்குடியரசில் 29, ருமேனியாவில் 18.
மரபுவழியான அரசாங்கப் பொதுக் கல்வி முறைக்குப் போட்டியாக இன்று தனியார் கல்வி நிலையங்கள், இணையத்தளப் பல்கலைக்கழகங்கள், சர்வதேச கல்வி நிலையங்கள், ஊடகக் கம்பனிகள், கல்விப் பிரசுர நிலையங்கள் எனப் பல்வகைக் கல்வி நிலையங்கள் எழுச்சி பெற்றுள்ளன. மரபுவழிப் பொதுக் கல்வி முறை மீதான அதிருப்தியையும் தராதர வீழ்ச்சியையும் இது குறிக்கின்றது. இப்புதிய கல்வி ஏற்பாடுகள் மேலதிகக் கல்வி வாய்ப்புக்களையும் மரபுவழிக் கல்விமுறை வாங்காத கற்கை நெறிகளையும் வழங்குகின்றன.
அறிவுசார் பொருளாதாரத்தின் வெற்றி புதிய துறைகளில் பெறுகின்ற தேர்ச்சியிலேயே தங்கியுள்ளது. எழுத்தறிவு, வெளிநாட்டு மொழி, கணிதம், விஞ்ஞானம், தகவலைப் பயன்படுத்தும் திறன், தொடர்பாடல் தொழில்நுட்பத்திறன் என்பன இதில் அடங்கும். சமூக ரீதியாக வேறுபட்ட

Page 7
குழுக்களில் பணியாற்றும் உளப்பாங்கு, சுயாதீனமாகச் சிந்தித்தல் என்பனவும் தேவைப்படுகின்றன.
ஆசிரியர் கல்வி
இவ்வாறான புதிய கல்விச் சூழலானது ஆசிரியர்களின் வகிபாகத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஆசிரியர்கள் புதிய திறன்களைக் கற்க வேண்டும்.
இதனால் அவர்கள் கல்வியியல் துறை சார்ந்த புதிய சிந்தனைகள், போக்குகள், கற்பித்தல் முறைகள், தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
மாணவர்கள் கூட்டாகக் கல்வி பெறுவது (Collaborative) பெரிதும் வலியுறுத்தப்படுவதால் ஆசிரியர்களும் அவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் கூட ஆசிரியர்களுக்கான கற்றல் அமைப்புக்களாக (Learning Organizations) மாற வேண்டும். தங்களுடைய தொழிற் தகைமை மேம்பாட்டுக்கான ஏற்பாடுகளைச் (networks) செய்து கொள்ள வேண்டும்.
புதிய தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் (I.C.T) ஆசிரியர் கல்வியில் ஏற்படக்கூடிய இத்தகைய மாற்றங்களுக்குத் துணை புரிதல் வேண்டும். செய்து பார்த்து கற்றலுக்கு (Learning by doing) தகவல் தொழில்நுட்பம் நன்கு உதவும். கற்போருக்கான ஏராளமான கற்றல் வளங்களை I.C.T வழங்கும். இதனால் ஆசிரியர் மாணவர் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. I.C.T யானது மாணவர்கள் கூட்டாகக் கற்கவும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் படி சுயமாகக் கற்றல் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றது. கற்போருக்குத் துரிதமாகப் பின்னூட்டலையும் வழங்குகின்றது.
இந்நன்மைகளைப் பெறக் கணினிகளை வகுப்பறை களில் பொருத்திவிட்டால் மட்டும் போதாது. I.C.T யானது எவ்வாறு கல்விப் பிரச்சினைகளைக் கையாளப் பயன்படுத்தப்படல் வேண்டும்? ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் ஆகியோரின் அறிவையும் நடத்தைகளையும் மாற்றும் வகையில் பயிற்சி வழங்கச் செய்யப்பட வேண்டிய முதலீடு தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவிப் பணிப்பாளர்கள் என்போரை ஏற்பாடு செய்தல் கணினிகளின் பராமரிப்பு இணையத்தளங்களின் பெறுவழி (accees) என்பவை தொடர்பான முறையான கொள்கையாக்கங்களும் தேவை. வளர்முக நாடுகளில் இந்நிபந்தனைகள் சரியான முறையில் கவனிக்கப்படுவதில்லை.
நெகிழ்வுத் தன்மையுடைய முறைசார் கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட வயதுடைய மாணவர்களுக்கு இடமளித்து வந்த உயர்கல்வி நிறுவனங்கள் இன்று பகுதிநேரக் கல்வி, மாலைநேர, வார இறுதிக் கற்கை நெறிகள், கோடை காலக் கற்கை நெறிகள் என்பவற்றை

நடத்தி வருகின்றன. முழுநேரக் கல்வி பயிலும் மாணவர் தொகுதிக்கு அப்பால் தொழில்புரியும் வளர்ந்தோருக்கான கற்கை நெறிகள் இலங்கைப் பல்கலைக்கழகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள் தமது விரிவாக்க (Extension) சேவைகளினூடாகப் பரந்த சமூகத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளன.
உதாரணமாக
கொழும்பு பல்கலைக்கழகக் கல்விப் பீடமானது தனது முழுநேரக் கற்கை நெறிகளுக்கு அப்பால் வார இறுதியில் நடத்திவரும் கற்கை நெறிகள்
1. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பட்டப்பின் படிப்பு
கல்வி டிப்ளோமா (சிங்களம் / ஆங்கிலம்)
2. பட்டப்பின் படிப்பு சமுதாய அபிவிருத்தி டிப்ளோமா
3."
பட்டப்பின் படிப்பு ஆலோசனை (Counselling)
டிப்ளோமா.
4. |
கல்வி முதுமாணிப் பட்டக் கற்கை நெறி (M.E.d
பகுதிநேரம்) இவற்றில் சேர்ந்து பயிலும் ஆசிரியர்கள் அனைவரும் பகுதிநேர மாணவர்கள்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்புக் கற்கை நெறிகளுக்கான பீடத்தில் (faculty of Graduate | Studies) சகல மாணவர்களும் பகுதிநேர மாணவர்களே!
பின்லாந்தில் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் உள்ளக, முழுநேர மாணவர்களை விட தொடர்கல்வி பயிலும் பகுதிநேர மாணவர்களின் தொகை அதிகம்.
கல்வி வாய்ப்புக்களை நெகிழ்ச்சிப்படுத்துவதற்குத் தொலைக்கல்வி முறைகள் பெரிதும் உதவுகின்றன. இந்தியத் தொலைக்கல்விப் பல்கலைக்கழகங்களில் இலட்சக்கணக்கானோர் பயிலுகின்றனர். இலங்கையில் இத்தொகை 25000 வரை. இந்தியாவிலும் இலங்கையிலும் பாடசாலையிலிருந்து இடையில் விலகியோருக்கான திறந்த பாடசாலை முறைகள் உண்டு. மெக்சிக்கோ நாட்டில் 15% மான இடைநிலை மாணவர்கள் தொலைக்காட்சியினூ டாகப் பயிலுகின்றனர். 1990களில் தொலைக்காட்சியினூ டாகப் பயிற்சி பெற்றோர் தொகை வழமையான ஆசிரியர் கல்வி நிலையங்களில் பயிலுகின்றவர்களை விட அதிகம். 1999இல் 92% பெரிய அமெரிக்க வர்த்தகக் கூட்டுத்தாபனங்கள், இணையத்தளப் பயிற்சிகளைத் தமது ஊழியர்களுக்கு வழங்கின.
சிறந்த செயற்திறன் மிக்க வாழ்க்கை, நீடித்த கல்வி ஏற்பாடுகளைச் செய்யப் பொருத்தமான நிர்வாக (Governance) நிதி ஏற்பாடுகளைச் செய்தல் அவசியமானது. மேலை நாட்டு அரசுகள் இவ்விடயத்தில் அரசாங்க நிர்வாக
அகவிழி ( ஜனவரி 2013

Page 8
அமைப்புக்களையும் நிதி வளங்களையும் பயன்படுத்தி வந்தன. ஆனால் தற்போது அந்நாடுகள் ஏராளமான வெளி நிறுவனங்களின் பங்கேற்பையும் புதிய ஒழுங்குமுறை ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன. கல்வி மற்றும் பயிற்சிக்குப் பொறுப்பான அமைச்சுகளுக்கிடையேயான இயைபாக்கத்தையும் செய்து வருகின்றன. தனியார் துறை, சிவில் சமூகம், சார்ந்த நிறுவனங்களின் ஒத்துழைப்பும் நாடப்படுகின்றது.
ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகளில் கல்விக்கும் பயிற்சிக்கும் பொறுப்பான திணைக்களங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஆனால் வளர்முக நாடுகளில் உள்ள பல்வேறு அமைச்சுக்களும் அரிய வளங்களைப் பெறுவதற்குப் போட்டி இடுவதால் இவ்வாறான இயை பாக்கமும் ஒத்துழைப்பும் சாத்தியமாகவில்லை.
வாழ்க்கை நீடித்த கல்வியும் பயிற்சியும் பல்வகைப்பட்ட முறைசார், முறைசாரா நிறுவனங்களில் நடைபெறுவதால் அவற்றின் தராதரங்களை உறுதிப்படுத்தும் (Quality assurance) ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன. கற்போர் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் மாறிச் செல்ல வேண்டும். பல்வேறு கற்றல் வகைகளும் மாறிச் செல்ல வேண்டும். அதனை இலகுபடுத்தவும் தராதர உறுதிப்படுத்தல் ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன.
தென்னாபிரிக்காவிலும் பிரித்தானியாவிலும் தேசிய தகுதி ஏற்பாடுகள் உண்டு. வெவ்வேறு நிறுவனங்கள் வழங்கும் கல்வி மற்றும் பயிற்சித் தகுதிகளுக்கு உரிய சான்றிதழ் மட்டங்கள் (Levels) தீர்மானிக்கப்படுகின்றன. அமெரிக்கக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் தாம் பெறும் மதிப்பெண்களை பிற நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்லலாம். முழு ஐரோப்பாவுக்குமான தராதர உறுதிப்பாட்டு ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
சகல மேலை நாடுகளும் சில வளர்முக நாடு களும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் (Accredit) ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. முன்னர் நிறுவனங்களின் உள்ளீடுகள் (ஆசிரியர் தொகை, நூல் களின் தொகை) கருத்திற் கொள்ளப்பட்டன.
தற்போது வெளியீடுகள் (Output) அதாவது மாணவர் சித்தி, சித்தி அடைவோர் தொகை கருத்திற் கொள்ளப்பட்டு
அங்கீகாரம் வழங்கப்படுகின்றன. வங்களாதேசத்தில் தனியார் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பில் மாணவர் சித்தியும் ஆர்மீயாவில் உயர்கல்வி நிறுவனங்களில் 50% மாணவர் சித்தியும் கருத்திற் கொள்ளப்படுகின்றன.
சகல வளர்முக நாடுகளும் வாழ்க்கை நீடித்த கல்விக்கான முன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாது.
அகவிழி | ஜனவரி 2013

சர்வதேச தராதரங்களோடு ஒப்பிட்டுத் தற்போதைய நிலையைத் தெரிந்து கொண்டு வாழ்க்கை நீடித்த கல்விக்கான ஏற்பாடுகளை நோக்கி வளர்முக நாடுகள் முறையாக நகர்ந்து செல்ல வேண்டும்.
வாழ்க்கை நீடித்த கல்வியின் விளைவுகளை மதிப்பீடு செய்யத்தேவையான அளவைக் குறிகளை (Benchmark) வளர்முக நாடுகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வழமையாகக் கல்வி முறைகளின் முன்னேற்றங்களை அறியப் பயன்படுத்தப்படும் அளவீடுகளாவன
மொத்த மாணவர் சேர்வு வீதம்
மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கான செலவு
மொத்த அரசாங்கச் செலவில் கல்விச் செலவு போன்றன.
ஆனால் இவ்வாறான குறிகாட்டிகளைக் கொண்டு வாழ்க்கை நீடித்த கல்வியின் பரிமாணங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. குறிப்பாக, முறைசாராக் கல்வி ஏற்பாடுகளின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ள இவை உதவமாட்டாது. இதனால்தான் புதிய அளவை மட்டங்கள் தேவைப்படுகின்றன..
மரபுவழிக் கல்வி
வாழ்க்கை நீடித்த கல்வி ஆசிரியரே அறிவின் மூலா) ஆசிரியர்கள் கற்றல் வளங் தாரம்.
களுக்கு வழிகாட்டுபவர்கள். மாணவர்கள் ஆசிரியரிடமிருந்து செய்து பார்த்துக் கற்பர்.
அறிவைப் பெறுகின்றனர். மாணவர்கள் தாமே பணியாற்று மாணவர்கள் குழுக்களாகக் கின்றனர். மற்றவரிடமிருந்து கற்பர். கற்பர். மாணவர்கள் ஒரு தொகுதி கற்றல் உபாயங் களுக்கு திறன்களைக் கற்ற பின்னரே வழிகாட்டக் கணிப்பீடு பயன் பரீட்சை, அதன் பின்னரே படுத்தப்படும். எதிர்காலக் அடுத்த கற்றல் கட்டம்.
கற்றல் மார்க்கங்களை அவை
காட்டும். சகல மாணவர்களும் ஒரே
| மாணவர்கள் கற்பதற்கான பணியில் ஈடுபடுதல்
தனிப் பட் ட திட் டங் களை
ஆசிரியர்கள் விருத்தி செய்வர். ஆசிரியர்கள் ஆரம்பப் பயிற் ஆசிரியர் கள் வாழ் நாள் சியையும் பின்னர் அவ் வப் முழு வதும் கற் ப வர் கள் . போது சேவை காலப் பயிற்சி
அதனுடன் தொழிற்தகைமை யையும் பெறுவர்.
விருத்தி தொடர்படுத்தப்படும். நன்றாகக் கற் ப வர் கள்
மாண வர் கள் வாழ் நாள் இனங்காணப்பட்டு தொடர்ந்து முழுவதும் கற்கும் வாய்ப்புக் கற்க அனுமதிக்கப்படுவர்.
களைப் பெறுவர்

Page 9
பாடசாலை மட்ட வாண்மைவிருத்திச் .ெ
ஓர் புதிய அணுகு
கலாநிதி சசிகலா குகமூர்
சிரேஷ்ட விரிவுரையாள கல்விப்பீடம், இலங்கைத் திறந்தப் ப
அறிமுகம் வாண்மை என்பது மிக உன்னதமான சேவையாகும். தொடர் கல் வி, பயிற் சி என் பவற்றின் மூலம் வாண்மைசார் தகைமையுடன், உயர் ஒழுக்கங்களையும் உள்ளடக்கியவகையில் சேவைக்காலத்தில் அடையப் படுகின்ற ஒரு வளர்ச்சியென வாண்மையை குறிப்பிடலாம். ஆசிரியர்கள் வாண்மைக்குரிய பண்புகளை, தகுதிகளை உள்வாங்கிக்கொள்வது அவசியம். மாணவர்களின் முதிர்ச்சி, ஆற்றல்கள், தேவைகள், விருப்பங்கள் மற்றும் மாணவரது கற்றல்பாங்குகள் (Learning style) என்பவற்றை அறிந்து, பொருத்தமான கற்பித்தல் முறைகளைக் கையாண்டு கற்றலுக்கு உதவி, சமூகம் எதிர்பார்த்து நிற்கும் நற்பிரசைகளை காலத்திற்குப் பொருத்தமானவகையில் வழங்குவதற்கு ஆசிரியர்கள் வாண்மைவிருத்திச் செயன்முறைகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்றுதல் அவசியம்.
ஆசிரிய சேவையை வாண் மைத் தொழிலாக ஏற்றுக்கொள்வதற்கான நியமங்களுள் ஆசிரியரின் தொழில்சார்ந்த தேர்ச்சி முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. ஆசிரியர்கள் தொழில்சார் தேர்ச்சியை குறிக்கப்பட்ட தரநிர்ணயங்கள், காலவரையறைகள் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற ஆசிரியர்கல்வி நிகழ்ச்சித்திட்டங்களினால் மட்டும் அடையமுடியுமா என்பது இன்று விமர்சனரீதியாகச் சிந்திக்கப்படுகின்ற ஒரு எழுவினாவாக உள்ளது.
ஆசிரியர்கள் ஆசிரியர்கல்வி நிகழ்ச்சித்திட்டங்களைப் பின் பற்றிய பின் னர் வாண் மைவிருத்திக்கான கோட் பாடுசார் ந்த அறிவு, பயிற்சி என்பவற்றை குறித்ததொரு காலப்பகுதிக்குப் பின்னர் கற்றல் - கற்பித்தல் செயன்முறைகளில் தொடர்ச்சியாகப் பின்பற்றுவதில்லை என்றும், தமது தொழில்விருத்திக்கான பதவி உயர்வுகளைப் பெறுகின்ற தேவை கருதியே இவர்கள் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களைப் பின்பற்றுகின்றனர் என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

உத்தில் சயற்பாடுகள்:
முறை
பத்தி
ல்கலைக்கழம்
இதனை கற்பித்தற்பயிற்சியின் விளைதிறனை மதிப்பபீடு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிபுகளும் எடுத் துக் காட்டுகின்றன. இவ் வாறு சுட்டிக்காட்டப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் ஆசிரியர் வாண்மைவிருத்தி செயற்பாடுகளில் புதிய செல்நெறிகள் தோற்றம் பெறுவதற்கு காரணமாக அமைந்தன. இவ்வாறு எழுந்த செல்நெறிகளுள் ஒன்றே பாடசாலைமட்டத்தில் ஆசிரியர்களின் வாண்மைவிருத்திக்கான (School Based Professional Development) செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் வேண்டுமென்ற புதிய சிந்தனையாகும்.
பாடசாலைமட்டத்தில் வாண்மைவிருத்திக்கான செயன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெறல் வேண்டுமென்ற சிந்தனையானது சூழ்தளக் கோட்பாடுகளின் (Situativity Theories) அடிப்படையில் உருவானதாகும். இக்கட்டுரை சூழ்தளக் கோட்பாட்டின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட சூழலைத் தளமாகக் கொண்ட கற்றல் அணுகுமுறை பற்றியும், பாடசாலைமட்டத்தில் ஆசிரியர்களுக்கான வாண்மைவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெறவேண்டியதன் முக்கியத்துவத்தினையும், இதற்குத் தேவையான பாடசாலைமட்ட சூழ்நிலைகளையும் முன்வைப்பதாக
அமைகின்றது.
சூழ்தளக் கோட்பாடுகளும் ஆசிரியர் வாண்மைவிருத்தியும்
சூழ்தளக் கோட்பாடுகள் அறிதலும் கற்றலும் அவை இடம்பெறுகின்ற பௌதீக, சமூக சூழலமைவுகளில் இடம்பெறுகின்ற கலந்துரையாடல்களில் பங்குபெறுவதன் மூலம் கட்டியெழுப்பப்படுவதாகக் குறிப்பிடுகின்றன. சூழ்தளக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சூழலைத் தளமாகக் கொண்ட கற்றல் அணுகுமுறையானது (Situated Learning Approach) கற்றலானது குறித்ததொரு சமூகச் சூழ் நிலையில் இடம் பெறுகின்ற குழுக் கலந்துரையாடல் களில் ஒருவர் தனது அறிவு, அனுபவங்களை வெளிப்படுத்திக் கலந்துரையாடுவதாலும்,
அகவிழி ( ஜனவரி 2013

Page 10
பயிற்சிகளைப் புதிய கருத்துக்களுடன் நடைமுறைப்படுத்த முனைவதினாலும் இடம்பெறலாமெனக் குறிப்பிடுகின்றது. இவ்வணுகுமுறையின் படி ஆசிரியர் கள் தங்களது வாண்மையினைத் தாங்கள் சேவையாற்றும் பாடசாலைச் சூழலில் பல்வேறு வாண்மைசார் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் விருத்திசெய்யலாமென நம்பப்படுகின்றது. -
இன்டியானா தேசிய ஆசிரியர் கூட்டமைப்பு (Indiana State Teachers Association, 2004) வாண்மைவிருத்தி செயற்பாடுகள் என்பது 'ஆசிரியர் ஒருவர் குறித்ததொரு ஒழுங்குமுறையில் கற்று, வாண்மைசார்ந்த அறிவு, திறன், மனப்பாங்குகளை வளர்த்து, தனது தனிப்பட்ட, நிறுவனரீதியான குறிக்கோள்களை அடைவதற்கான தகைமைகளைப் பெறுவதும், மாணவர்களின் கற்றலுக்கு உதவுவதுமான ஒரு செயற்பாடு' எனக் குறிப்பிடுகின்றது. இந்த விளக்கம் ஆசிரிய வாண்மைவிருத்திபற்றிய பரந்ததொரு விளக்கத்தைத் தருவதாக அமைகின்றது.
அல் பேட்டா ஆசிரியர் கூட்டமைப்பு ( Alberta Teacher Association, 2002 ) ஆசிரிய வாண்மைவிருத்திச் செயன்முறை குறித்ததொரு அளவிலான செயற்பாடுகளை உள் ளடக் கியதாக இருத்தல் வேண் டு மெனக்
குறிப்பிடுகின்றது. அவையாவன:
அகவிழி ( ஜனவரி 2013

ஆசிரியர் கற்றல் புதியவிடயங்களின் தேடுகை தனித்து / குழுவாக மகாநாடுகளில் பங்குபெறல் வகுப்பறைகளில் செயல் நிலை ஆய் வுகளை மேற்கொள்ளல்
கலைத் திட் டத்தை நடை முறைப் படுத் தும்
செயற்பாடுகள் " தனி / குழு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல்
மேலே குறித்துக்காட்டியவாறு வாண்மைவிருத்தி என்பது ஒரு தொடர் நிகழ்ச்சியாக ஆசிரியர் ஒருவர் தனது வாண்மைசார் வாழ்விலே தனது அறிவினை இற்றைப் படுத்துவதற் கான பல் வேறு கல்விசார் செயற்பாடுகளிற் பங்கெடுக்கின்ற செயல் ஒழுங்குகளை உள்ளடக்கியதாகும் என்பதை உணர்ந்துகொள்ளலாம். பாடசாலைமட்டத்தில் ஆசிரியர்கள் வாண்மைவிருத்திச் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுப்பதற்கு கற்பிக்கின்ற பாடசாலைச் சூழலில் வாண்மைவிருத்திசார் செயற்பாடுகள் இடம் பெறுவதோடு, அவற்றில் பங்கெடுப்பதற்கான உகந்த சூழ்நிலைகளும் காணப்படுதல் வேண்டும்.

Page 11
(၉စာလဝံ ဗTLDT66 5 600L ဆံထံ ကလံ ၊ ( ၈ puj Lly @ Tuj ၆ ဤ LTLET 6စာ လDLL 5 ၏လံ
IT 60660LDui၈60 dbဗဲ၏GFiNထဲဗ် LITLET60လbဤလံ ၆ ထဲ က 5 5 T 61 က 5 5 T TEi ၆ ဤ B uu BIL 60 ,
FulDj4bit, b(.T TEl(၆၆, ub LLL၈၉ 66 L60INထံ စာက 5ITLb6 DLIT 515ဤBIT 60 Dလံလ Fb bj iubib(65 စံ UTLET စာလ (၉လံ ၅ ၆ ဗုံ ဗလံ
၂၆lub, 5@bbdp UTLET6စာလuပါလGu BTTIT |bb (၆Lu6စာက Eububbfd ဇာလဟံ BOubD T 60 ၆ b ဗj iLEi B ၆၈ ful lj m စ (၆ IT ၆ ( 5 လံ 86066 66 L5IL6 @ fluujj ၉ ဤစာ 600T [b 5! Fuuဤu၆၅ID BIT 60 IT uilub 5 6စာ UTLBIT 6စာလb
OIBIဗလံ ၀66GLDmb objLITIT bbLubbm၆.
ထဲကလျှbbIT60 F၄၆ လံu Dဤmb Sep်လံ @LLDGuboo Fuo6စာထ5 666LOဤလံ (6စာလ ၆TUDIT B GBT 6L B အလံ ၅ဝ၊(၈p b60ILပြဲ ၆ လျှ၆ Gl ထဲ က 5. ၅ % (5 ( စာ က ၉ (G ဤLuuစံ
5ITLGUIT B flbuly Bm ၉၆IT(D55(bub 5.jl၍b(56 b(6ဗ်555 (5ဤ556 FPUpbဝံဗလံ LibGumi၆op ၆ လ b 5' 60 IT uITL လံ ၆ ဤ စုလစံ Gu ရာစု ၈ 0T sd က ဂါ၀၈T6166စာ )sjuLISTSub, ၅၊၆8LITGom] Sep၆လဲ
Lbumထဲ က လblDTLITLလံ6 fuuLL BL] ၉၆alo 5ထဲကလျှစံ( စ ဗ၈IT bub mulbယ်om5. ၅ 5660 လက္ကဗ်515IT 5 Little (2002) 6f6dLIIT 5! uoolbb ထဲက IDDboom5..
“၆ လံ ၏ TEi 6၈ LDLuu ၉ ၏ ဤဖိလ စ္ဆ (6 ငါ d p ၈udDLDLD၆၆ IT6066DDITIb5 mmလ် GRDBLDT605 66၈60Tu၂
ijluul IT6006၈DBETig ဤ၍၈60 ၏ ဗုံး၏OFuuu ၀ ၆၈၂856 0IT 606၈Dပါ(65၆ Guu၆၈၉၆m b6၈L(6၈m II G (5စံ စ 5၏om5၊”
NIIISuu 60nlGဗဲ SUT 560Lt
၂yluul bloo 5IT ဂါလံ ၏(၆ တံ ၏ulလံ ဖလံ IT ဆံ GSID MIT Smilb60T TujD BEITHlgb, ဝါjujလဲ
[bbဖွဲ့ dlbဗLLIbib 6၈Tu T 600TLubဗ်51၈၂ဝါလံ ၅irluu LDT60OTaj 5 6 GBIT b၏uu 60LB 6စာ ရွှ60ITBBT 66 6၈builလျှစံ (56) (2009), BPI ၏ (2012)
alj BITလံ GDဏGBTiTuuLL ub ၅ ၆ijluu ၆m 5ib5 IT6066၈D6၈uu 16Gui%ဗလံ loo5LD SITIT 6f6f 56၈L၆ITTE ၅(bubb ၅601/blb60660.
6၈uuT0
6buu GurmLub၆ (၆၆LDubd.b၆ ၏စာL(စံ (၆၆၈၉IT60 5J , 5D5I ၏ 6၈၆ ၆လံ၏bbT ၆ IIIII 60
[b] ၈၆ လဤLလံ

என
குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் ஆற்றவேண்டிய வகிபங்குகளுக்கான நேரத்தை ஒதுக்குதல் தொழில் விருத்திக்கான குறிக் கோள் களைக் கொண்டிருக்காமை பாடசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்பற்ற நிலைமை
கற்கைவிடுப்புக்களைப் பெறுவதில் எதிர்நோக்கும் உத்தியோகபூர்வ நெருக்கீடுகள்
கற்றல் கற்பித்தல்சார் அனுபவங்கள் சக ஆசிரியர்கள் மத்தியில் பகிரப்படாமை
ஆசிரியர் கல்விக்கான வளங்கள் பாடசாலைகளிற் காணப்படாமை
ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெறுவதில் காணப்படும் பலத்தபோட்டி நிலைமைகள்
ஆசிரியர்களின் தொழில்விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இனங்காணும் வகையில் நடாத்தப்பட்ட பிறநாட்டு ஆய்வுகளும் மேலே குறித்துக்காட்டப்பட்ட காரணிகளை தங்கள் ஆய்வுமுடிபுகளாக வெளியிட்டுள்ளன. இத்தகைய ஆய்வுமுடிபுகளின் விளைவாக முக்கியத்துவம் பெற்றதொரு புதிய போக்காக பாடசாலைமட்டத்திலான வாண்மைவிருத்திச் செயற்பாடுகள் அமைந்திருக்கலாம். பாடசாலைமட்டத்திலான வாண்மைவிருத்திச் செயற்பாடுகள் மேலைத்தேய நாடுகளில் பரவலாகப் பல பாடசாலைகளில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலையே ஆசிரியர் கற்றலுக்கும் வாண்மை விருத்திக்கும் மிகச்சிறந்த இடமென்ற நம்பிக்கை வளர்ந்து அதிகரித்து வருகின்ற இக்காலகட்டத்திலே பாடசாலைகளின் கட்டமைப்பானது ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கற்பதற்கான வாய்ப்புக்களை அதிகம் வழங்குகின்றவகையில் மாற்றியமைக்கப்பட வேண்டுமென Daling Hammond, McLaughlin (1995) என்பவர்கள் குறிப்பிடுகின்றனர். Barab, Dufty (2000) ஆகியோர் பாடசாலைக் கட்டமைப்புகள் மட்டுமல்லாது பாடசாலைச் சமூகத்தின் செயற்பாடுகளை கற்றல்சார்ந்ததாக மாற்றியமைப்பதற்குத் தேவையான வகையில் பாடசாலைக் கலாசாரத்தையும் கற்றல் கலாசார மாக மாற்றியமைக்க வேண் டு மென குறிப்பிடுகின்றனர். ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கற்கின்ற கற்றல் கலாசாரத்தை விருத்தியடையச் செய்வதற்குரிய | சூழலை பாடசாலைகளில் உருவாக்கும் பொறுப்பு பாடசாலை நிர்வாகத்தினருக்குரிய புதிய கடமையாகக் கருதப்படுகின்றது.
IT 6
அகவிழி ( ஜனவரி 2013

Page 12
வாண்மைவிருத்திக்கான பாடசாலைச் சூழல்
பாடசாலைசார்ந்த கல்விசார் செயற்பாடுகளில் தனிப் பட்ட தலைவர் ஒருவரின் தரிசன நோக்குகையை (Individual Visionary) மட்டும் கருத்திற் கொண்டு முடிவுகள் எடுக்கப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும். பாடசாலைமட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அவ் விடயங்கள் தொடர் பாக ஆசிரியர்களின் கருத்துக்கள் அறியப்பட்டு, ஆசிரியர்களின் பங்களிப்புடன் பகிர்ந்தளிக்கப்பட்ட தரிசன நோக்குகையை (Shared Vision) முடிவுகளாக வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிப்புக்கள் இடம்பெறுதல் வேண்டும். பகிர்ந்
11!
தளிக் கப் பட் ட நோக் குகையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்ற நடைமுறையினை சிறந்த முறையில் அமுலாக்குவதற்கு பாடசாலைச் சூழல் கற்கின்ற சமூகத்தைக் கொண்டிருக்கின்றவகையில் உருவாக்கப்படுதல் அவசியம்.
ஆசிரியர்கள் வாண்மைசார்ந்த கற்றல் மற்றும் பயிற்சி என்பவற்றின் மூலம் நல்ல விளைதிறன்மிக்க பயன்பாட்டினைப் பெறுவதற்கு தொழிலில் இருந்தபடியே பெற்றுக்கொள்கின்ற அனுபவங்கள், பிரதிபலிப்புகள் முக்கியமானவை. பல்வேறு சமூகக்குழுக்களுள்ள பரந்ததொரு சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு குழுவினர் குறித்ததொரு விடயத்தில் ஈடுபடுவதினைப் பார்க்கின்ற சந்தர்ப்பங்களில், ஏனைய குழுவினர் தங்களிடமுள்ள புதிய கருத்துக்களை வழங்கி ஒன்றிணைந்தவகையில் ஈடுபடுகின்ற பொழுது உருவாகும் மீளவலியுறுத்தல்களினாலும் கற்றல் நிகழலாம். இதனையே Wenger (1998) சமுதாயத்தின் நடைமுறைகளுக்கு பங்களிப்புச் செய்கின்ற அங்கத்தவர்களது கருத்துக்களை
அகவிழி ) ஜனவரி 2013

அறிந்து செயலாற்றுகின்ற வகையில் ஒருவர் தனது ஆளுமைச் செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டு மெனக் குறிப்பிடுகின்றார்.
பாடசாலைக்கு வெளியே இருக்கின்ற கல்விப்புலம்சார்ந்த அறிஞர்கள் வழங்குகின்ற அறிவுசார்ந்த கருத்துக்களை பொதுவாக ஆசிரியர்கள் வரவேற்கின்றனர். எனினும் புதிய கருத்துக்களை வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்துகின்ற பொழுதே அவை மிகவும் பயன்பாடுடையதாக அமைய முடியும். இதனால் சூழ்தளக் கோட்பாடுகளின் அடிப் படையில் முன்வைக்கப்பட்ட சூழலைத் தளமாகக் கொண்ட கற்றல் அணுகுமுறையின்படி இருக்கின்ற இருப்பிடத்து
நிலைமைகளிலேயே கற்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுதல் வேண்டும். இதற்காக ஆசிரிய சகபாடிகளிடையே இடம்பெறுகின்ற தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், எல்லோரிலும் இடம் பெறுகின்ற கற்றல் செயற்பாடுகளாக அமையும் வகையில் பாடசாலைச் சூழலை கற்றல் கலாசார இயல்புகளைக் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டுமென Spillane (2002) என்பவர்
குறிப்பிடுகின்றார்.
பாடசாலைமட்டத்திலான வாண்மை விருத்தியானது கு ழுக் கற் பித் தல் , கலைத்திட்டத்தை வேலைத்திட்டமாக மாற்றுதல், பாடங்களுக்கான பொதுவான கற்பித்தல் துணைகளை உருவாக்கல் போன்ற சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் போன்ற செயற் பாடுகளோடு இணை ந் த தா க
இருக்கலாம். இவ்வாறு இணைந்து செயற் படும் வகையில் ஒரே வகையான பாடங் களைக் கற்பிக்கின்றவர்கள், பொதுவாகப் பின்பற்ற வேண்டிய கல்விசார் ந்த விடயங்களில் ஈடுபடுகின்றவர் கள் என்போரை ஒன்றிணைக்கின்ற வகையில் ஆசிரியர் வலைப்பின்னல் அமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வாண்மைவிருத்தியினை பாடசாலைமட்டத்தில் வளர்ப்பதற்கு உதவியாக அமையும் என்பதோடு இத்தகைய ஆசிரியர் வலைப்பின்னல் அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் சிறந்த ஆய்வாளர்களாகவும் மாறமுடியும். பாடசாலைமட்டத்தில் ஏற்படும் இத்தகைய ஈடுபாடானது வாண்மைவிருத்தியோடு தொடர்புபட்ட பிரதான எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்வதற்கும் உதவியாக அமையும்.
பாடசாலைமட்டத்திலான வாண்மைவிருத்திச் செயற்பாடுகள் பாடசாலையின் குறிக்கோள்களுடன் இணைந்த வகையில் இடம்பெறுதல் வேண்டும். இச் செயற்பாடுகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு

Page 13
பாடசாலைகள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்
பாடசாலை நிர் வாகம் தனது மனப்பாங்கை வாண்மைவிருத்திக்கு உதவும்வகையில் உருவாக்கல் பாடசாலையினதும் ஆசிரியரினதும் வாண்மைசார் தேவைகள் காலத்திற்குக் காலம் இனங்காணப்படல் ஆசிரியர்கள் தமது தொழில்சார் வளர்ச்சிக்கான திட்டம் அல் லது குறிக் கோள் ஒன்றினை தேசியமட்டத்திலும் பாடசாலைமட்டத்திலும் உருவாக்கி, அதனை அடையும்வகையில் செயற்பட உதவுதல், ஊக்குவித்தல் சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தேவைப்படுகின்ற தொழில் சார்ந்த திறன்களை வளர்ப்பதற்கான செயற்றிட்டங்களிற் கவனம் செலுத்துதல் கற்பதற்கு உதவும் வகையில் சகபாடிக் குழுக்களை ஆசிரியர்கள் மத்தியில் அமைத்தல் வாண் மைவிருத்தி தொடர் பான கலந்துரை யாடல்களுக்காக குறித்ததொரு நேரத்தை ஒதுக்குதல் நேரத்தை ஒதுக்கும் வகையில் கிழமையில் / மாதத்தில் குறித்ததொரு நாளுக்கான பாடசாலை நேரத்தைக் குறைத்தல் தொழில்விருத்திச் செயலமர்வுகளை ஒழுங்குசெய்தல் பாடசாலைக்கு வெளியே இடம் பெறுகின்ற மகாநாடுகளில் கலந்துகொள்ள ஊக்குவித்தல் மகாநாடுகளில் கலந்துகொண்டவர்கள் தாம் பெற்றுக் கொண்ட அறிவு, அனுபவம் மற்றும் வழங்கப்பட்ட ஆவணங்களை ஏனையோரும் அறியச்செய்யும்
வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளல். பாடசாலைகள் மேற்குறித்த விடயங்களில் கவனம் செலுத்தி பாடசாலைமட்டத்தில் ஆசிரியர்கள் இணைந்து செயற்படுவதற்கான ஒரு சூழலை உருவாக்குகின்ற பொழுது ஒவ்வொரு ஆசிரியரும் ஏனைய ஆசிரியர்களுக்கு உதவி, பாடசாலைமட்டத்திலேயே பாடம்சார்ந்த, வாண்மைசார்ந்த அறிவினை உடனுக்குடன் இற்றைப்படுத்தி தங்களது வாண்மைத் தகைமைகளை விருத்திசெய்து ஆற்றல்மிக்க ஆசிரியர்களாக மிளிரமுடியும் எனலாம்.
முடிவுரை
ஆசிரியர் களின் உயர் மட்ட செயலாற்றுகையை விருத்திசெய்தல் என்பது தனித்து குறித்ததொரு காலப்பகுதியில் மட்டும் பின்பற்றப்படுகின்ற ஆசிரியகல்வி நிகழ்ச்சித்திட்டங்களிளால் மாத்திரம் நிறைவேற்றமுடியாது என் பது உணரப்பட்ட உண்மையாகும். எனவே ஆசிரியர்கள் தமது உயர்மட்ட செயலாற்றுகையை
11 ,

விருத்திசெய்யும்வகையில் தாங்கள் பணியாற்றும் சூழலின் சமூக, கலாசார யதார்த்தங்களின் அடிப்படையில், பாடசாலை மற்றும் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்றவகையில், தங்களது ஆற்றல்களை காலத்திற்கு பொருத்தமானவகையில் விருத்திசெய்தல் வேண்டுமெனவும், பாடசாலைகளும் வாண்மைவிருத்திக்கான பொருத்தமான அணுகுமுறைகளை பாடசாலைமட்டத்தில் திட்டமிடுவது காலத்தின் தேவை என்பதை உணர்தல் வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
உசாத்துணைகள்
Alberta Teachers' Association (2002), Professional Development
Programs and Services Book, Alberta, Canada
Barab, S. & Duffy, T. (2000). From Practice Fields to Communities of
Practice, in Jonassen, D. and Land, S (eds), Theoretical Foundations of Learning Environments, London, Lawrence Erlbum Association.
Darling-Hammond, L. & McLaughlin, M.W. (1995). Policies that
Support Professional Development in an Era of Reform, Phi Delta Kappan, April, Vol96(8). From: http://globalvgw4.global.
epnet.com/get_xml.asp Indiana State Teachers Association (2004). Core Professional
Development Principles. From http://www.istain.org/sam. cfm?xnode=273.
Little, J. W. (2002). Locating learning in teachers' communities of
practice: Opening up
problems of analysis in records of everyday work. Teaching and Teacher
Education, 18(8), 917-946.
Kugamoorthy, S. (2009) Determinants of professional Mobility of
Women Teachers in Selected District of India and Sri Lanka, Annual Academic Sessions, 15-16 October, Open University of Sri Lanka.
Kugamoorthy, S. (2012) Managing Personal and Professional Roles:
Comparative Study on Professional Mobility of Women Teachers in India and Sri Lanka, International Conference on Capacity Development ina Post-War Context, 20-21st July, Jaffna University.
Spillane, J. (2002). Local Theories of Teacher Change: The Pedagogy
of District Policies and Programs. Teachers College Record, 104(3), April.
Wenger, E. (1998) Communities of Practice: Learning, Meaning, and
Identity, Cambridge, Cambridge University Press.
அகவிழி ( ஜனவரி 2013

Page 14
பாடசாலைகளில் எழும் |
அவற்றைத் தீர்ப்ப முகாமைத்துவ நுட்
பாலசிங்கம் முரளிதர விரிவுரையாளர், தேசிய கல்வியியற் கல்ல
முரண்பாடு என்பது பற்றி பல்வேறு துறைசார் அறிஞர்களும் வேறுபட்ட விளக்கங்களை முன்வைத்துள்ள போதிலும், பொதுமைப்படுத்தப்பட்ட ரீதியில் ஒருவரிடத்தோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் இடையே தோன்றும் உணர்ச்சி, கருத்து, நடத்தை வேறுபாடுகளின் பெறுபேறே
முரண்பாடாகும்.
முரண்பாடொன்றின் தோற்றுவாய் அதன் வளர்ச்சி தாக்கம் என்பவற்றின் அடிப்படையானது. உளவியலில் ஒருவரின் உள்ளத்தில் எழும் அறிதல், மனவெழுச்சி ஆட்சித்திறன்களினூடாகவே பரிணாமம் பெறுகின்றது. ஒவ்வொரு மனிதனும் அவனின் தேவை ஆற்றல்களுக்கேற்ற குறித்த செயற்பாடு தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட நடத்தைக் கோலத்தைக் கொண்டவனாகின்றான். இதுவே மனிதனின் நடிபங்கு (Role) என அழைக்கப்படும். ஒருவர் சமூகத் தேவைக்கேற்ப நடிபங்கினை ஒரே நேரத்தில் ஏற்பவராயும் காணப்படலாம். உதாரணமாக ஒருவர் கற்பித்தல் கடமையின் பொருட்டு ஆசிரியராயும் குடும்பத்தலைவராயும் வேறுபட்ட நடிபங்கினை ஏற்பவராயும் இருக்கின்றார். பொதுவாக முரண்பாட்டிற்கு உட்படும் நபர்கள் ஆரம்பத்தில் தமது துலங்கல்களின் போது கண் நேருக்கு நேர் நோக்காமை, பேச்சைத் தவிர்த்தல் போன்ற உடல் மொழி (Body language) பேறுகளை காட்டுவதுடன், இந்நிலையின் தொடர்ச்சியான வளர்ச்சியானது சந்தேகம் நம்பிக்கையின்மை போன்ற புரிந்துணர்வின்மை (lack of understanding) நிலைக்கும் புறங்கூறல், பயமுறுத்தல் போன்ற நெருக்கடி (crisis) நிலைக்கும் பின்னர் பசியின்மை நித்திரையின்மை, குருதியழுத்தல் போன்ற உடலியல் சார் நடத்தைகளைக் காட்டும் ஓர் குழப்பநிலைக்கும் (Tension) இட்டுச் செல்லலாம். முரண்பாட்டின் முத்தியபடி முறையாகக் கருதப்படும் இந்நிலையே விரக்தி, வன்முறை போன்ற அழிவுப்பாதைகளின் அடித்தள மெனவும் உளவியலாளர்கள் விளம்புகின்றனர். இந்நிலையிலுள்ளோர், தன்நிலை சார்ந்ததே சூழலை அவதானிப்பதால் தவறான புலக்காட்சி தவறான முடிவுகளுடன் கூடிய நடத்தை வெளிப்பாடுகளைக் காட்ட முயற்சிப்பர். எனவே நவீன முகாமை அறிஞர்களின் கருத்து எதுவெனில் அனாவசிய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான ஆரோக்கிய
அகவிழி ) ஜனவரி 2013

முரண்பாடுகளும்
தற்கான பங்களும்
ன்
லூரி, யாழ்ப்பாணம்
சூழலை ஆரம்ப அறிகுறிகளின் போதே அவதானித்து செயற்படின் விடுபட முடியும் என்பதாகும்.
முரண் பாட்டு முகாமைத்துவ நுட் பம் என் பது முரண்பாடு ஒன்று தொடர்பாக தற்கால முகாமைத்துவத்தை கடைப்பிடித்து வரும் தந்திரோபாயங்கள் ஆகும். ஆகவே ஓர் ஆள்வன முகாமை நோக்கு, முகாமை அணுகுமுறை, முகாமைத் தீர்வுகள் எனும் அடிப்படை நுட்பங்களாகும். முகாமைத்துவ நோக்கு என்பது நிறுவனத்தின் தாக்க விளைவுகளை உண்டாக்கும் ஓர் கருத்து நிலை அவதானமாகும். தலமைத்துவ திறனினூடாக முரண்பாடு பிரச்சினை தீர்க்கும் ஆற்றலை விருத்தி செய்து நிறுவன விருத்திக்கு உதவுதல் உடன்பாட்டு நோக்கமாகவும் அதன் வீழ்ச்சிக்கு காரணமாகும் எதிர்மறை நோக்காகவும் அமைகிறது. உடன்பாட்டு எதிர்மறை விளைவுகளினின்றும் சமநிலைப்படுத்தும் ரீதியில் சமநிலை நோக்காகவும் நிறுவனத்தின் பிற்சார்ந்த விடயமே அன்றி தனிநபர்களுடன் தொடர்பான பிரச்சினைகள் அல்ல என்ற நிறுவனங்கள் - நோக்காகவும் நோக்கப்படுகின்றது முரண்பாடு தொடர்பில் முகாமைத்துவமானது இரு வித அணுகுமுறைகளை கையாள்கிறது. அவையாவன.
1. அமைப்பாண்மை அணுகுமுறை
2. இடைத்தாக்க அணுகுமுறை இடைத்தாக்க அணுகுமுறையானது முரண்பாட்டை கருத்தில் எடுக்காது விடுதலாகும். இரு முரண்பாட்டுத் தரப்பினாலும் தீர்வொன்றை எட்ட முடியாத போது தீர்வொன்றை வழங்கும் முறை தீர்விடல் ஆகும். அடுத்து முரண்பாட்டுத்தரப்பினருக்கு அதுவொன்றும் பெரிய பிரச்சினையில்லை என முரண்பாட்டின் தாக்கத்தை மறைத்து கருத்துப் புலப்படுவது மிருதுவாக்கம் ஆகும். புதிய கல்விச்சீர்திருத்தத்தை எதிர்க்கும் ஆசிரியர்களை நோக்கி புதிய கொள்கை மாற்றத்திற் கேற்ப மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டியது பாடசாலையின் குறிக்கோள் என கூறுதல் அடுத்து முரண்பாட்டு "'தரபிரதிநிதிகளுடன் பேசல் போன்ற நுட்ப முறைகள் அமைப்பாண்மை அணுகுமுறைகளுள் அடங்குகின்றன.

Page 15
குறித்த முரண்பாட்டுத் தீர்ப்பில் நுட்பங்கள் பயனளிக்காது விடின் இடைத்தாக்க அணுகுமுறை நுட்பங்களான.
1. நிபந்தனையுடனான பேச்சுவார்த்தை 2. பேரம் பேசலும் பேச்சு வார்த்தையும் 3. மத்தியஸ்தம் வகித்தல்
4. ஒழுங்கமைப்பு மறுசீரமைப்பு போன்ற நுட்ப முறைகளும் நுட்ப முறைகளும் கடைப்பிடிக்கப்படலாம். இந்நுட்பமானது 1985ம் ஆண்டு Renert miles என்பவரது தீவிர ஆராய்ச்சி மூலம் இனங்காணப்பட்ட புதியதொரு நுட்பமுறையாகும். இவரின் கருத்துப்படி முரண்பாடொன்றின் எழுகைக்கு காரணமாவன
ஒழுங்கமைப்பு பருமன் தொழிநுட்பம்
புறச்சூழல்
என் பவற் றினுடனான பொருந்தாமையேயாகும். முரண்பாட்டு தீர்வு முயற்சியில் இறுதித்தீர்மானம் எடுத்தல் வழிமுறையொன்றை கையாளவேண்டிய நிலை முகாமைத்துவ நோக்குசார் அணுகுமுறை நுட்பங்கள் வெற்றியளிக்காதவிடத்து ஏற்படுகின்றது. இதற்காக நவீன முகாமை முன்மொழியும் இருவித தீர்வு முறைகள் பின்வருமாறு:-
1. முரண்பாட்டை படமாக்குதல் 2. பகுப்பு அடிப்படை கூறாக்கல்முறை
1. முரண்பாட்டை படமாக்குதல்
ஓர் நடைமுறை உதாரணம்
பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் நோக்கில் புதிய நியமனம் பெற்ற அதிபர், கலைநிகழ்ச்சி, கண்காட்சி, பரிசளிப்பு என்பன அடங்கிய ஒரு பாரிய நிகழ்ச்சியை திட்டமிடுகிறார். இது 3ம் தவணை காலப்பகுதி என்பதால் ஆசிரியர் குழாமில் ஒரு பகுதியினர் எதிர்க்கின்றனர். இம்முரண்பாட்டை தீர்ப்பதற்கான முரண்பாட்டுப்படம் கீழே உள்ளது.
யார் :- தேவைகள் அதிபர் :- பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறல் சிறந்த
பெறுபேறுகளைப் பெற்றுக் காட்டுதல். ஆசிரியர் :- கற்பித்தலுக்கே முதலிடம் வழங்கவேண்டும்
சிறந்த பெறுபேறுகளைப் பெறச் செய்ய வேண்டும் என்ற பயம்.
13

அதிபர் :- தனது தலமைத்துவம் சரியாக அமையாதோ
என்ற பயம் பிரச்சினை எழுந்தால் தனக்குப்
பாதகமாகிவிடுமோ என்ற பயம். ஆசிரியர் :- பொது விழாக்களால் பாடத்திட்டத்தை
நிறைவேற்ற முடியாது போகும் என்ற
பயம் சர்வதிகாரத்தலமைத்துவம் என்ற பயம்
தீர்வு
:- இரு தரப் பி ன ருக கு ம் பொது வான தேவைகளை இனங்கண்டு நீக்குவதால் முரண்பாட்டுச் செறிவு குறையும் அதாவது இரு முரண் பாட்டுத் தரப்பினதும் தேவை சிறந்த பெறுபேற்றைப் பெறல் என்பதை இனங்கண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தீர்வுக்கான நுட்பமாகும்
2. பகுப்பு அடிப்படைக் கூறாக்கல்
இதனையும் ஒரு நடைமுறை உதாரணம் மூலம் நோக்குவோமாயின் ஒரு கல்லூரி மாணவிகள் ரீயூசன் வகுப்புகளுக்குச் செல்வதை அதிபர் பின்வரும் காரணங்கள் காட்டி தடைசெய்தார்.
di ல் *
1.5
ஒழுக்கம் பாதிப்படைகிறது பயிற்சி பெறாதா ஆசிரியர்களால் பிழையாக வழிநடத்தப்படுகிறார்கள்
பாடசாலைப் பாடத்தை கவனிப்பதில்லை 3. வரவு ஒழுங்கின்மை
அதிபருக்கும் பெற்றோருக்குமிடையே வாதப்பிரதி வாதங்கள் எழுந்தது.
பெற்றோர் காரணங்கள்
கடந்த வருடப் பரீட்சைப் பெறுபேறுகள் திருப்தியாக இல்லை
பாடசாலை நற் பெயருக்காக பிள் ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கச் செய்ய முடியாது
பல்வேறு அணுகுமுறைகள் தீர்வுகள் பிரயோகிக்கப்படும் போது முரண்பாடு பற்றிய நவீன முகாமைத்துவ அறிஞர்களின் பயனுறுதியான தீர்வு சிறந்த மனிதத் தொடர்பு விருத்தி என்பதேயாகும்.
தனிநபர் தொடர்பு விருத்தி தொடர்பாக அறிஞர்களால் வெளியிடப் பட் ட கருத்துப் படி வாதத்தையும் மனவெழுச்சியையும் சமநிலைப்படுத்தல் சிறந்த தொடர்பாடல் போட்டிக்குப் பதில் நகைச்சுவை, நம்பிக்கைக்குரியவராதல் தனிநபர் அங்கிகரிப்பு போன்ற நடைமுறைகளினூடாக சிறந்த மனிதத்துவம் பேணப்படும்.
தொடரும்......
அகவிழி ஜனவரி 2013

Page 16
வகுப்பறைகளில் க.பொ.
முகாமைத் திறன்க
திருமதி இந்திராணி ( B.COM, MA (Sociology), PG
இன்று முகாமைத்துவம் என்ற எண்ணக்கரு ஒரு மனிதனின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஒரு மனிதன் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்கள் ஊடாக அவனது (மனிதனது) நடத்தைகள், செயற்பாடுகள் என்பவற்றைத் தொகுத்து வகைப்படுத்தினால் அதுவே ஒரு பெரிய முகாமைத்துவ கற்கையாகிவிடும். இந்தவகையில் இன்று கல்வித்துறையில் மாணவர்கள் மத்தியில் அபிவிருத்தி ரீதியானதும் மனிதத்துவம் பொருந்தியதுமான முகாமைத்திறன்களை மாணவர்களிடையே மேம்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் மாணவர்கள் நாட்டின் சிறந்த தலைவர்களாகவும் அபிவிருத்தியாளர்களாகவும் மனிதத்தன்மை பொருந்தியவர் களாகவும் உருவாக்குதல் என்ற கல்வியின் குறிக்கோளை அடைய வழிவகுப்பதற்கு பாடசாலைகளில் மாணவர்களின் முகாமைத்திறன்களை மேம்படுத்தல் அவசியமாகின்றது.
------ -------
91.
அண்மைக் காலங் களில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு, சிறந்த ஆளிடைத் தொடர்பு, தலைமைத்துவப் பண்புகள், விழுமியப்பண்பு, கட்டுப்பாடு, ஒழுங்கு முறைகள், இடைவிலகல் என்பன திருப்திகரமற்று இருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவேதான் இப்பிரச்சினைகள் இனங்காணப்பட்டு முகாமைத்திறன்களை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டிய தேவைப்பாடு பாடசாலை சமூகத்திற்கு உண்டு. எனவே எந்தவொரு
அகவிழி ஜனவரி 2013

த. உயர்தர மாணவர்களின் 5ளை மேம்படுத்தல்
முருகப்பா முரளிதரன், -DE, MEd, Sp.Trd(Commerce)
ஆசிரியரும் மாணவரைப் பற்றி அறிந்து கொண்டு அதற்கேற்ப கல்வி வழங்குவதுடன் அவர்களின் முகாமைத் திறன்களை மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு இன்றைய காலகட்டத்தில் முக்கியமாக உணரப்பட்டதொன்றாக உள்ளது. இன்று மாணவர்களிடையே நேரமுகாமைத்துவம், ஒழுங்கும் கட்டுப்பாடும், விழுமியப் பண்பு, குழு முயற்சி, சட்டத்தினை மதிக்கும் பண்பு, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, புத்தாக்கத்திறன், என்பன மாணவர்களிடையே அருகி வரும் தன் மையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் மாணவர்கள் பிறரது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதும் திருப்தியற்ற நிலையில் உள்ளது. அத்துடன் தேர்ச்சியை மையமாகக் கொண்ட பரீட்சைகள், கணிப்பீடுகள், போன்றவற்றில் மாணவர்கள் கூடுதலான அக்கறை செலுத்தும் தன்மை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் மாணவர்களின்
கல்வி பாடசாலையில் மட்டும் தங்கியிராது தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கி யிருக்கும் நிலையை அவதானிக்க
முடிகின்றது.
இணைப்பாடவிதான செயற்பாடுகள், காலைக்கூட்டம், வெளிக்கள் வேலைகள், சங்கங்கள், கழகங்கள் தாமாக முன்வந்து பங்கேற்கும் தன்மை குறைவாகவே உள் ளது. மேலும் மாணவர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் முகாமைத்திறன்களை மேம்படுத்தல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் அவசியமானதொன்றாகவே உள்ளது.
செயலூக்கமுள்ள பாடசாலையின் வகுப்பறையில் ஆசிரியரது செயற்பாடுகளில் ஒன்று மாணவர்களது முகாமைத்திறன்களை மேம்படுத்தல் ஆகும். இது ஆசிரியரிடம் இருக்க வேண்டிய விசேட திறன்களில் ஒன்றாகும். இன்று உலகமயமாக்கல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றின் மூலம் ஏற்பட்டு வரும் புதிய கற்றல் அணுகுமுறைகள் கற்றல் கற்பித்தலில் புதிய பண்பாடு நியமங்களை நோக்கி செல்ல வைத்துள்ளது. எனவே இந்நிலையில் மாணவர்களின் முகாமைத்திறன்களை

Page 17
வகுப்பறையில் ஊக்குவிப்பதற்கு வழக்கப்படும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். முகாமைத் திறன்களை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கப்படவேண்டும். எனவேததான் மாணவர்களிடம் முகாமைத்திறன்களை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் பல இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.
கற்றலில் இடர்படும் மாணவர்கள், மன அழுத்தத்திற் குட்படும் மாணவர்கள், மீய்த்திறன் மாணவர்கள் என தனியாள் வேறுபாடுகளை இனங்கண்டு அவர்களிற்கேற்ப முகாமைத்திறன்களை மேம்படுத்தல் என்பது ஆசிரியரின் முக்கிய கடமையாக கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்கள் காட்டும் ஆர்வத்தைப் பொறுத்தே ஆசிரியர் இச் செயற்பாடுகளை மேம்படுத்த முடியும். முகாமைத்திறன்களை மாணவரிடத்தில் மேம்படுத்துவதன் மூலம் கற்றல் பணியையும் இலகுவாக்க முடியும்.
மாணவர்களிடையே முகாமைத்திறன்களை
மேம்படுத்தல் என்ற தேவைப்பாடுகளை (நியாயப்படுத்தல்) பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.
மாணவர்களிடம் தேர்ச்சி மையக்கல்வியின் (SE Method) அடிப்படையில் கற்பித்தல் செயற்பாடுகளில் பின்னடைதல்.
மாணவர்களது புத் தாக்க சிந் தனைகள் மழுங்கடிக்கப்படல்.
பரந்துபட்ட விடய ஆற்றல் இன்மை. ஆசிரியரது மாணவர் மீதான கவன ஈர்ப்பு வலுக்குன்றல்.
மாணவர்கள் தம்மை சுயமதிப்பீடு செய்யமுடியாமை.
மாணவர்களது விழுமியம் பண்பு.............
மகிழ்ச்சிகரமான கற்றல் நிலைமை பெறாமை.
செயற்திட்ட நடவடிக்கையின் போது குழுச்
செயற்பாடுகள்........... போன்றன இன்றைய மாணவர்களிடையே காணப்படும் நியாயப்பாடுகள் ஆகும்.
எனவேதான் இவ்வாறான பிரச்சனைகளை நிவர்த்தி செய்து முகாமைத்திறன்களை மேம்படுத்தல் என்பது இன்றைய காலகட்டத்தின் தேவைப்பாடாக உள்ளது.
எனவே பின்வரும் முகாமைத்துவ நுட்பங்கள் முன்வைக்கப்படுகின்றது.
வகுப்பறைச் சூழலையும் முகாமைத்துவத்தையும் மேம்படுத்தல்.

வகுப்பறைத் தொடர்பாடலை தரமுயர்த்தல்.
உளச்சார்புக்கேற்ப வழிகாட்டலும் ஆலோசனையும்.
மாணவரின் ஒழுக்கமும் கட்டுப்பாடும். மாணவர்களது பாடசாலை வரவீனம் இடைவிலகல் என்பவற்றைக் குறைத்தல்.
மாணவர்களின் ஊக்கமும் தலைமைத்துவமும். எனவே இத்தகைய முகாமைத்துவ நுட்பங்கள் மூலம் முகாமைத்திறன்களை மேம் படுத்துதல் பின்வரும் விடயங்கள் துணையாக இருக்குமென (Brophy 1998) யுரோபி என்பவர் எடுத்துக்காட்டுகிறார்.
போட்டிக் கல்வியிலும் பார்க்க கூட்டுக் கல்வி.
அறிக்கை முரண்பாடுகளை எழுப்புதல். ஒரளவிற்கு ஆபத்தை எதிர்நோக்குதல். மாணவர்களின் நல்ல வேலைகளைப் பாராட்டுதல். கல்விப் பணிகளில் ஆர்வத்தை தூண்டல். கற்கும் விடயங்களுக்கான பின்னூட்டல். மாணவர்களின் சுயநம்பிக்கையை வளர்த்தல். மாணவர்களின் சுய கற்றல் திறன்களை அதிகரித்தல். மாணவர்களது துணிவாற்றலை ஊக்குவித்தல்.
இவற்றோடு சுதந்திரமாக கற்றல், நேர்ச்சிந்தனை, சமூகமயப்படல், சுயசிந்தனை, விளம்பிடல் தலைமைத்துவ பண்பை வளர்த்தல் போன்றன ஊக்கலுக்கான முக்கிய
காரணங்களாக அமைகின்றது.
மாணவர்களிடையே நேர முகாமைத்துவத்தை ஏற்படுத்துதல்.
நடத்தை மாற்றமும் மனப்பாங்கு மாற்றமும். போன்றன மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இன்றைய காலகட்டத்தில் பாடசாலைச் சமுகத்திற்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை.
உலகமயமாக்கலின் பால் ஈர்க்கப்பட்டு வேகமாக மாறிவரும் தகவல் தொழில் நுட்பக்கல்வி உலகில் அனுபவ வாயிலாக கல்வியைப் பெறுவதும் மாணவர்கள் கல்வி உலகிலிருந்து தொழில் உலகிற்கு பிரவேசிப்பதற்கு வேண்டிய புதிய வழிகாட்டல்களும் இம் முகாமைத்திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அடைய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
உசாத்துணை நூல்கள்
1. கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்களை வழிமுறைகள் (2008)
கருணாநிதி - மா. சேமமடு பதிப்பகம் - கொழும்பு கற்றலுக்கு ஊக்கமளித்தல் தொலைக்கல்வி நிறுவனம்.NIE (1988)
2. )
அகவிழி ( ஜனவரி 2013

Page 18
பெண்கள் மீது தொடரும் எதிராக நூறு கோடி மக்கள் 6
உலகளாவிய பிரசார
சாந்தி சச்சிதானந்தம் பிரதம நிறைவேற்றுப் பணிப் விழுது ஆற்றல் மேம்பாட்டு எ
பெண்கள் மீதான வன்முறைகள் நிகழும் காரணங்கள்
இரு மனிதர்களுக்கிடையிலோ அல்லது இரு குழு மனிதர்களுக்கிடையிலோ அதிகார அசமத்துவங்கள் நிலைகொள்ளுமிடங்களில்ெலாம் வன்முறை உதிக்கின்றது. அதி காரத்தையும் ஆதிக்கத்தையும் வன் முறை யொன்றினாலேயே தக்க வைத்துக்கொள்ளலாம் என்ப தனாலேயே வன்முறைக்கும் அதி காரசக்திகளுக்குமிடையே இவ் வகையான தொடர்பு ஏற்படுகின்றது.
வன் முறையின் ஒரே பயன் ஏனையோரை அச்சுறுத்தி அடக்கி வைத்திருப்ப தாகும். இந்த அடிப் படையில் நோக்கினால், எமது சமூகத்தில் வீட்டிலும் வெளியிலும் பெண்கள் பலவிதமான வன்முறைகளை எதிர்நோக்குவதற்கான காரணம் இங்கு ஆண்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சமூகக் கட்டமைப்புக்கள் நிலவுவதே என்பது புரியும்.ஆண்கள் சில சில சந்தர்ப்பங்களில் வன்முறைகளை எதிர்நோக்கினாலும், பெரும்பாலும் பெண்களே இதனால் பாதிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.
எமது சமூகம் ஆண்களுக்கு சலுகைகள் மிகக் கொடுத்திருக்கின்றது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்கிறது. ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவார்கள் என்று அளவற்ற சுதந்திரத்தை வேறு அவர்களுக்கு கொடுக்கின்றது. ஆண்களுக்குரிய குணம் வீரம் என்று
அகவிழி ) ஜனவரி 2013

வன்முறைக்கு எழுச்சி கொள்ளும்
த் திட்டம்
பாளர் மையம்
அவர்களை ஆதிக்கவாதிகளாகத் தட்டிக்கொடுக்கின்றது. இதற்கு நேரெதிராகப் பெண்களை நடத்துகின்றது. முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் தைத்தாலும் பங்கம் சேலைக்குத்தான் என்கிறது. பயமும் அடக்கமும் பொறுமையும் பெண்களின் இயற்குணங்கள் என்கின்றது. இவ்வாறு ஆண்களை ஆதிக்கவாதிகளாகவும் பெண்களை அடங்கிப் போகின்றவர்களாகவும் சமூகமயப்படுத்துகின்றது. ஆண்கள் வன்முறையில் ஈடுபடும்போழுதுகூட அதனை நியாயப்படுத்துகின்றது. இந்த நிலைமையே வன்முறையின் ஊற்றாகின்றது.
இங்கு சமூகம் ஆண்களின் வன் முறைக் குக் கொடுக்கும் அங்கீகாரத்தினைப் பற்றி விசேடமாக நோக்க வேண்டியதாகின்றது. வெளியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றவுடன் பெண்களை வீட்டில் பூட்டி வைப்பதற்கு எத்தனிக்கின்றனர். பாலியல் வன்முறைக்குப் பெண்கள் ஆளாகின்றனர் என்றவுடன் அவர்கள் உடல் மூடி உடை அணிய வேண்டும் என்று சொல்லுகின்றனர். கெட்டுப் போனவள் என்கின்ற அவப்பெயரும் பெண்களுக்கே ஏற்படுகின்றது. இப்படி எந்த உதாரணத்தைப் பார்த்தாலும் இங்கு பாதிக்கப்படுபவர்களே மேலும் கட்டுப்படுத்தப்பட்டு குற்றம் செய்தவர்களாகக் கூண்டில் நிறுத் தப் படுவதை அவதானிக்கலாம். பெண்களுக்கு ஆண்கள் அச் சுறுத்தலாகின்றனர், அவர்கள் அரைகுறை ஆடை உடுத்தினால் உணர்ச்சி வசப்படுகின்றனர் என்றெல்லாம் இருப்பதால் ஆண்களை அடக்கி வளர்க்க வேண்டும், வீட்டினுள் பூட்டி வைக்க வேண்டும் என்று யாரும் சொல்வதில்லையே. ஆண்கள் என்றால் அப்படித்தான் என்று பல சந்தர்ப்பங்களில் நியாயப்படுத்தவும் செய்கின்றனர். இது ஆண்கள் செய்யும் வன்முறைக்கான சமூக அங்கீகாரத்தினைச் சுட்டும் சந்தர்ப்பங்களாகும். சமூகம் தனக்கென வரித்துக்கொண்ட - ஆணாதிக்க விழுமியங்களினால்தான் வீட்டிலும் வெளியிலும்
வன்முறைகள் அதிகரித்துக்கொண்டு போகின்றன.
16)

Page 19
பெண்கள் மீதான வன்முறைகளினால் ஏற்படும் விளைவுகள்
பெண்கள் விசேடமாகப் பாதுகாக்கப்படவேண்டியவர்கள், அவர்கள்தாம் அனேகமாகப் பாதிக்கப்படுபவர்கள் என்று எமது சமூகம் சகஜமாகக் கருதுவதனால், வன்முறையினால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை ஆராய்வதில்லை. அதைக் கவனிப்பதும் கிடையாது.இவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
எமது நாட்டில் இலவச வைத்திய வசதிகளை எமது அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. எமது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வருகை தரும் பெண்களில் 60வீதத்திற்கு அதிகமானவர்கள் குடும்ப வன் முறையினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். உடலெங்கும் காயங்களுடன் வரும் பெண்கள் ஒருபோதும்
தமது கணவன் மார்களினால் தான் இது நேர்ந்தது என்று சொல்லுவதேயில்லை. குளியலறையில் சறுக்கி விழுந்தேன், சமைக்கும்போது கத்தி வெட்டிவிட்டது என்று இவ்வாறாக ஏதேனுமொரு கதையைச் சொல்லு வார்கள். தமது கணவன் மார்கள் செய்தது என்று சொல்லக் கூச்சப்படுகின்றனர். ஆனால் இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு எமது அரசாங்கத்துக்கு எவ்வளவு செலவாகின்றது என்பதைக் கணித்துப் பார்த்தால் மலைத்து விடுவோம். அவர்களைப் பார்த்து விடும் வைத்தியருக்கு, தாதியருக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டால் அதற்கும் ஒரு செலவு உண்டாகின்றது. இவ்வளவையும் நாம் ஒரு தனியார் வைத்தியசாலையில் மேற்கொண்டால் எவ்வளவு செலவழிப்போம்? ஒவ்வொரு வருகையின்போதும் குறைந்தது ரூ 10,000 ஆவது செலவு செய்ய மாட்டோமா? இதன் மூலம் வரி செலுத்துவோரான இலங்கையின் சகல பிரஜைகளும் வன்முறையினைத் தக்க வைக்க எவ்வளவு பணத்தை கரியாக்குகின்றோம் என்பது புரியும்.

அடுத்து, குடும்ப வன்முறையினால் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுகின்றது. இது சகலருக்கும் தெரிந்த உண்மையாகும். வகுப்பில் பின்தங்கியிருக்கும் பிள்ளைகளின் குடும்பப் பின்னயிணை ஆராய்ந்தால் அந்த வீட்டில் கிரமமாக வன்முறை நடப்பது தெரிய வரும். தனது அன்புக்குரிய அம்மாவுக்கு எப்பொழுது அடி விழுமோ என்று பயந்து பயந்து அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் செத்துப் பிழைக்கின்றன. இதனால் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் தமது முழு ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வாய்ப்பினை இழக்கின்றனர். அவர்களது படிப்பும் சீர்குலைகின்றது.
மூன்றாவதாக, பெண்கள் வன்முறையினால் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிப்படைவதனால் அவர்களின் உற்பத்தித் திறன், அதாவது வேலைத்தரம், கெடுகின்றது. பெண்கள் என்றுமே விவசாயிகளாகவும் உழைப்பாளிகளாகவும் இருந்திருக்கின்றனர். நடுத்தர வர்க்கங்களிலும் இன்று பெண்கள் வேலை பார்க்காத குடும்பங்களே இல்லை எனலாம். முன்தினம் இரவில் கணவனின் அடியும் உதையும் வாங்கிய பெண் அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்து சகஜமாக வேலை செய்ய முடியுமா? வீட்டுக்குப் போகும் வழியில் முன்பின் தெரியாத ஆணின் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண் எத்தனை நாட்கள் தாங்கிய வண்ணம் நாட்களைக் கடத்துவாள் என்று நினைக்கிறீர்கள்? இவ்வாறு பெண்களின் உற்பத்தித் திறன் குறைவடைவது எமது பொருளாதாரத்திற்குக் கோடிக்கணக்கான செலவுகளை ஏற்படுத்துகின்றது.
நான்காவதாக. பெண்கள் வன்முறையைப் பற்றிய பயம் கொண்டவர்களாக சதா சர்வகாலமும் வாழ்வதனால் பல சமயங்களில் உகந்த வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் அல்லல் படுகின்றனர். எத்தனை நல்ல வேலையானாலும் அதற்காகத் தூர இடத்துக்குப் போக வேண்டுமெனில் அதனைத் தவிர்க்கின்றனர். எங்கும் போய்த் திரிவதற்கு அவர்களுக்குத் துணை தேவைப்படுவதனால் பயணச் செலவு ஒன்றுக்கு இரு மடங்காகின்றது. குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்கள் வேலைகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு பெண்களின் துணைக்குப் போக வேண்டியதானால் அங்கும் ஒருவிதத்தில் நஷ்டம் ஏற்படுகின்றது. பெண்களின் துணைக்கு செல்வதற்கு ஆண்கள் நேரத்தை எடுத்துக்கொள்வதால் எவ்வளவு நேரம் விரயமாகின்றது என்று நாம் ஒரு போதும் நின்று சிந்தித்துக் கதைத்துப் பார்ப்பதில்லையல்லவா? ஒவ்வொருவரும் தத்தமது குடும்பங்களில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை இவ்வகையான ஆய்வுக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தால் பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகளினால் தமது குடும்பம் எந்த முறைகளில் எவ்வளவு பாதிப்படைகின்றது என்பதனைக் கண்டு
அகவிழி ஜனவரி 2013

Page 20
கொள்ளலாம்.
பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பில் பாடசாலை சமூகம் வகிக்கும் பங்கு
மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதனால் உலகத்தில் எந்த நன்மையையும் விட சமூக அங்கீகாரம் என்பதே அவனுக்கு அவசியமான பொருளாகின்றது. எவ்வளவு செல்வம் இருந்தாலும் கூட சமூகத்தின் ஆதரவும் அரவணைப்பும் மரியாதையும் இல்லா மனிதன் மனதளவில் இறந்து போகின்றான். அதனால் தான், சமூகத்தின் கருத்துக்கு முரணாக ஏதேனும் செய்ய பொதுவாகவே மனிதர்கள் மிகவும் பயப்படுகின்றனர். இதிலிருந்து சமூக அங்கீகாரத்தினை இல்லாதொழித்தாலே பெண்கள் மீதான வன்முறை என்னும் பிரச்சினையை ஒழிக்கலாம் என்பது தெளிவாகின்றது. புதிய விழுமியங்கள், கண்ணோட்டங்கள் ஆகியனவே வன்முறைக்கான சமூக அங்கீகாரத்தினை இல்லாதொழிக்கும். அந்த வகையில், பாடசாலைக் கல்வி வன்முறையை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் கருதலாம். குறிப்பாக, ஆசிரியர்களின் பங்கே இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சமூக வன்முறையைப் பற்றிய கல்வியும் அறிவுறுத்தலும் இரு அம்சங்களைக்கொண்டன. வன்முறை என்றால் என்ன, எவற்றை நாம் வன்முறையெனக் கருதலாம் என்பதே முதல் அம்சமாகும். அடுத்து, சமூக வன்முறையை ஒழிப்பதற்கு மனிதர்களாகிய நாம் என்னென்ன நடவடிக்கைகளைக் கையாள வேண்டும், என்ன நடத்தை முறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பது பற்றியதாகும்.
ஒருவருடைய சம்மதமின்றி அவருக்கு உடல் அல்லது உளத்தாக்கங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் வன்முறை என்போம். உடல்ரீதியான காயங்கள் ஏற்படுத்துவது மட்டும்தான் வன்முறை என்பதல்ல. ஒரு கணவன் தனது மனைவியை அடிக்கும்பொழுது அங்கு அவள் உடல் ரீதியாகக் காயமடைவது மட்டுமன்றி உள் ரீதியாகவும் கூனிக்குறுகிப் போகின்றாள். பிள்ளைகளுக் கும் இது நிகழும்போது பாதிப்பு பன்மடங்காகும். இந்த சந்தர்ப்பங்களில் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பெண்கள் பாதிப்படைகின்றனர். சில கணவன்மார்கள் சதா சர்வகாலமும் 'உனக்கு ஒன்றும் செய்யத் தெரியாது' என்று அவளுக்கும் வீட்டில் வருபவர்கள் போகின்றவர்கள் எல் லோருக்கும் சொல்லிச் சொல்லி மனைவியின் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் அழிக்கும் வேலையைச் செய்கின்றனர். அல்லது செலவுக்குக் காசைக் கொடுக்காமல் துன்புறுத்துவதும் கொடுத்த காசுக்குக் கணக்குக் கேட்டு அதைப் பற்றி சண்டை பிடிப்பதும் உளப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளாகும். இதெல்லாம் ஏதோ அந்தந்த ஆண்களின் இயல்பாகும் என்று நாம் சும்மா இருக்கின்றோம். ஆனால் இவையெல்லாம் தமது குடும்பப் பெண்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்காக
அகவிழி ஜனவரி 2013

ஆண்கள் கையாளும் யுக்திகள் என்பதை மறக்கக் கூடாது.
பொதுத் தளங்களில் பெண்கள் வன்முறையையும் பாலியல் தொந்தரவுகளையும் எதிர்நோக்கின்றனர். பேரூந்துகளில் பெண்களுடன் இடித்து சொறிந்து முட்டுவதெல்லாம் பாலியல் தொந்தரவுக்குள் அடங்கும். இவற்றைத் தவிர ஒருவருடைய சம்மதமின்றி பாலுறவு கொள்வது, 18 வயதுக்குக் குறைந்தவருடன் சம்மதம் பெற்றோ சம்மதம் இன்றியோ பாலுறவு கொள்வது எல்லாமே பாலியல் வன்முறையெனக் கருதப்படுகின்றது.
வன்முறை என்பது என்னவென்று மாணவர்கள் விளங்கிக் கொண்டார்களானால் அடுத்ததாக அது நடக்காமல் தடுப்பதற்கு எமது நடத்தைக் கோலங்களில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது தெரியப்படுத்தப்படவேண்டும். இதற்கு அடிப்படையான விழுமிய மாற்றம் தேவையாகும். ஒருவன் பலசாலியாக இருந்தால் அது பெருமையாகப் பார்க்கப் படும் விழுமியத்தினை நாம் மாற்ற வேண்டும். அதுவும் தனது உடல் பலத்தினை மற்றவர்களைத் தாக்கும் வகையில் உபயோகிப்பது இழிசெயல் என்பது உணர்த்தப்படவேண்டும். அன்பும் நேர்மையான உழைப்புமே உயரியன, பெருமை தரக்கூடியன என்னும் கருத்தினை அடிக்கடி வலியுறுத்த வேண்டும். அத்துடன் ஆண்களாகப் பிறந்தால் எதுவும் செய்யலாம் என்கின்ற கருத்தைப் போட்டு உடைக்கும் வகையில் கலந் துரையாடல் களை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும்.ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றோர் வளர்க்கும் விதத்தினை மாணவர்களே ஆராய்ந்து சொல்ல வையுங்கள். பின்பு பெண்பிள்ளைகளுக்கு என்னென்ன புத்திமதிகள் சொல்லி என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கின்றனரோ அதே போலவே ஆண்பிள்ளைகளுக்கும் செய்தால் அவர்கள் எப்படி வளர்ந்து உருவாகுவார்கள் என்பதனை அவர்களையே கூற வையுங்கள். மாணவர்களின் கருத்துக்களை அவர்களின் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுவதற்கு ஊக்குவியுங்கள்.
அடுத்து ஆணோ பெண்ணோ, வன்முறையை நிராகரிக்க வேண்டும் என்பதை நாம் எமது இளைய தலைமுறையினருக்கு வலியுறுத்த வேண்டியவர்களா கின்றோம். குறிப்பாகப் பெண்கள், வன்முறைக்கு இல்லை என்று சொல்லப் பழக வேண்டும் மேல்நாடுகளில் முன்பள்ளியிலிருந்தே பிள்ளைகளுக்கு 'நல்ல தொடுகைகூடாத தொடுகை' எனச்சொல்லிக்கொடுக்கின்றனர். இவற்றை விபரித்து அப்படித் தவறான முறையில் எவராவது தொடுவாராயின் எங்கு போய் முறையிடவேண்டும் என்பதெல்லாம் சிறு பராயத்திலேயே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. எமது பாடசாலைகளிலும் இதனைச் சொல்லிக்கொடுப்பது அவசியமாகும்.
மாணவர்களுக்கு சமூகக் கல்வி ஊட்டும் வேளைகளில்
- 18

Page 21
பொருத்தமான தருணங்களில் சமூக வன்முறை பற்றியும் அதன் பாதிப்புக்கள் பற்றியும் விழிப்புணர்வினைக் கொடுப்பதாலும் இந்தச் செய்தியை அவர்கள் மனதில் பதிய வைக்கலாம். வரலாறு படிக்கும்பொழுது நடந்த சம்பவங்களை பெண்கள் மீதான வன்முறை என்னும் கண்கொண்டு பார்ப்பதற்கு மாணவர்களைப் பழக்கலாம். உதாரணமாக, எதிரிப் படைகள் ஒரு நாட்டைக் கைப்பற்றும்பொழுது அவர்களிடம் அகப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாவதைவிட சாவதே மேல் என்று கூட்டங்கூட்டமாகப் பெண்கள் தற்கொலை செய்யும் சம்பவங்களைப் பற்றிய அபிப்பிராயங்களை மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அன்று தொடங்கி இன்றுவரை யுத்த காலத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வல்லுறவுகள் எவ்வாறு எதிரியை வெல்லும் ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றிப் பேசலாம். பெண்கள் 'மாசடைவது' ஒரு குடும்பத்தினதும் சமூகத்தினதும் கொளரவத்துக்குப் பங்கம் செய்கின்றது என்கின்ற விழுமியம் குறிப்பாக ஆசிய சமூகங்கள் மத்தியில் வழங்கி வருவதைக் காட்டலாம். உதாரணமாக, இந்தியப் பாகிஸ் தானியப் பிரிவினையின் பொழுது இந்து முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட, தமது பெண்கள் எதிரிகளினாலே வல்லுறவுக்குட்படுத்தப்பட்டால் தமது குடும்பத்துக்கு இழிவு என்று தமது குடும்பப் பெண்களைத் தாங்களே கொன்ற ஆண்கள் உண்டு.இம்மாதிரியான உதாரணங்கள் வன்முறையைப் பற்றிய ஆழமான அறிவை மாணவர்களுக்கு ஊட்டும்.
நூறு கோடி (பெண்கள்) எழுக பிரச்சாரத் திட்டம் One Billion Rising Campaign உண்மையான நாகரிகம் அடைந்த உலகில் நாம் மேற் கூறிய இழிசெயல்கள் நிகழுமா? 21ம் நூ ற்றாண்டிலாவது நாகரிகம் அடைந்த மனிதர்களாய் நாம் மாற வேண்டும் என்கின்ற நோக்கில் பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்கான செயற்திட்டங்களை உலகமெங்கும் ஊக்குவிப்பதற்காக 2012ம் ஆண்டில் நூ
று கோடி (பெண்கள்) எழுக என்னும் பிரசாரத்திட்டம் ஒரு குழுப்பெண்களினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த உலகில் 700க்கு மேல் கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 300 கோடி மக்கள் பெண்களா வார்கள். அவர்களில் மூன்றிலொரு பங்கினர் தமது வாழ்க்கையில் ஒரு தரமேனும் வன்முறையை எதிர் நோக்குகின்றனர் என்கின்ற உண்மையின் அடிப்படையில் 100 கோடி (பெண்கள்) எழுக என்னும் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. மக்களே வன்முறையே இல்லாத உலகம் பிறந்தது குறித்து நடனம் ஆடுங்கள் எழுச்சி பெறுங்கள் என்றெல்லாம் கோஷம் எழுப்பும் பிரச்சாரத் திட்டம் இதுவாகும். ஓவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு நிறுவனங்களிலும்

மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும்பொருட்டு இது கொண்டாடப்படவேண்டும் என்று கோரப்பட்டிருக்கின்றது. சின்னஞ் சிறியதாக மக்கள் நடவடிக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இப்பிரசாரத் திட்டம் 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ந் தேதி ஒரு விசேட தினமாகக் கொண்டாடப்படுவதுடன் முடிவடைய இருக்கின்றது. உலகின் சகல நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரசாரத் திட்டத்தின் விபரங்களை onebillionrising. com என்னும் இணையதளத்திற்குச் சென்று பார்வையிடலாம். இலங்கையிலும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் இணைந்து இருபதிற்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பு இப்பிரசாரத் திட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றன.
நூறு கோடிப் பிரசாரத் திட்டம் எமது பாடசாலைகளில் நாமும் பெண்கள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் தொடர் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு உகந்த வாய்ப்பினை வழங்குகின்றது. ப்ெபரவரி 14ந்திகதி வரை பாடசாலை அசெம்பிளி நேரத்தில் விசேட உரைகளை நிகழ்த்துவது, கலை நிகழ்ச்சிகளை எற்பாடு செய்வது போன்ற நடவடிக்கைகளுடன் ஆரம்பிக்கலாம். 2013ம் ஆண்டு நடக்கும் தமிழ்த் தினப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளில் இதனைக் கருப்பொருளாகக் கொண்டு அதற்கேற்ப நாடகங்களைத் தயாரித்து அரங்கேற்றலாம். பெப்ரவரி 14ந்தேதியில் சகல பாடசாலைகளும் விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். இவற்றிற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தையும் பெற்றோர் குழுக்களையும் அழைத்து அவற்றையும் பங்குபெற வைக்கலாம்.
பா ட சா லை க ளி ல - ம ா ண வர் க ளு ட னு ம மாணவர்களின் பெற்றோர்களுடனும் செயற்படுத்தும் இந்நடவடிக்கைகளைத் தவிர, கல்வியியலாளர்கள் செய்ய வேண்டியபல நடவடிக்கைகள் உண்டு. வகுப்புப் பாடங்களிலும் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் விசேட ஒப்படைகளிலும் எவ்வாறு பெண்கள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வினை உள்ளடக்குவது என்பதைப் பற்றி ஆராய்வதற்கான ஆசிரியர் கருத்தரங்குகளை நிகழ்த்துதல்; தேசிய கல்வி நிறுவகத்துடன் ஆசிரியர் பயிற்சி தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துதல்; நாடெங்கிலுமுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளிலும் ஆசிரியக் கல்லூ ரிகளிலும் இது பற்றிய கலந்துரையாடல்களை நிகழ்த்துதல் போன்ற நடவடிக்கைகள் இவையாகும்.
ஒரு சமூகத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவ்வளவு பாதுகாப்பாகத்தான் அந்தச் சமூகம் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. இலங்கையில் நாமெல்லோரும் பயமின்றிப் பாதுகாப்பாக வாழ்வதற்கு எங்களது சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதை உறுதிப்படுத்துவோம்.
அகவிழி | ஜனவரி 2013

Page 22
மாணவர் கல்வி முகவர
கணபதி சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகான
பிள்ளைகள் ஒவ்வொருவரிடத்தும் குறிப்பிட்டளவு உள்ளார்ந்த ஆற்றல்கள் இருக்கின்றன. இவற்றினை விருத்தி செய்வதற்கான அறிவாற்றல் சார்ந்த சூழல் இன்றியமையாததாகும். எனவே தான் கல்வியானது மாணவர்களது பூரண வளர்ச்சிக்கான வாய்ப்பினை வழங்குகிறது எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது. மாணவனது பூரண வளர்ச்சி எனும் பொழுது அது மாணவனது உடல், அறிவு, மனவெழுச் சி, சமய ஒழுக்கம் என்பவற்றை உள்ளடக்கிய ஆளுமை வளர்ச்சி கருதியதாகும்.
கல்வியானது ஒரு செயல்முறை சார்ந்ததும் விளைபயன் சார்ந்ததுமாகும். (Education is both process and product) அத்துடன் ஓர் தொடர்நடவடிக்கையுமாகும். கல்வியானது தாயின் கருவறையிலிருந்து கல்லறை வரை தொடரும் ஓர் தொடர் நடவடிக்கை எனக் கூறுவர். கல்வியில் உள்ளடங்குபவையாவன அறிவினைப் பெற்றுக்கொள்ளல், பரந்துபட்ட தெளிவான விளக்கம், திறன்களை வளர்த்தல், எண்ணக்கரு உருவாக்கம், சமூகப் பெறுமானங்கள் மற்றும் சாதக மனப்பாங்குகளை ஆழப் பதியவைத்தல் ஆர்வத்தைத் தூண்டுதல், சிறந்த பழக்க வழக்கங்களை உருவாக்கதல் மற்றும் ஒன்றன் மதிப்பை அறிந்து நுகர்தல், என்பனவாகும். இவற்றினைக் குறிப்பிட்ட காலப் பகுதியினுள் மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கைகள் ஊடாகவே சாத்தியமாகும். கல்வி விளைபயன் சார்ந்தது என்ற கண்ணோட்டத்தில் பார்ப்போமானால் கற்றல் செயற்பாடுகள் மற்றும் கற்றல் சந்தர்ப்பங்கள் வாயிலாக பெறும் திரள் பெறுமானமானது கல்வி விளைபயனாகும். இவ் விளைபயனானது தனியாள் தேவை, விழுமியங்கள் கருதியதாகவும், சமூகப் பெறுமானங்கள் பொருந்தியதாகவும் விளங்குதல் அவசியமாகும். எனவே கல்விச் செயற்பாடுகளில் மூன்று முக்கிய அடிப்படைக் கூறுகள் உள்ளன. அவையாவன பிள்ளை (கற்பவன்) ஆசிரியர், சமூகச் சீராக்கம், என்பனவாகும். இவை மூன்றும் மிக முக்கியமானதும் அத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதுமாகும். இம் மூன்றும் ஒன்றன் மீது ஒன்று செல்வாக்குச் செலுத்துபவையாகும். இவற்றிற்கிடையே சிறந்த புரிந்துணர்வு இன்மை அல்லது அரைகுறை புரிந்துணர்வு என்பன நிலவுமாயின் எதிர்பார்க்கும் சிறந்த கற்றல் விளைவுகளைத் தரமாட்டாது.
மெ
அகவிழி ) ஜனவரி 2013

(க பாடசாலை
மத்துவம்
பின்வரும் காரணிகள் கல்வியின் நோக்கங்கள், குறிக்கோள்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிப்பினைச் செலுத்துபவனவாகும்.
01. சமூக காரணிகள்
சமூகத்தின் சனத்தொகைப் பெருக்கம், அறிவுப் பெருக்கம், விஞ்ஞானத் தொழில் நுட்பத் தேவைகள் போன்றவை பல்வகை கல்வி நோக்கங்கள், முன்வைப்பு முறைகள், கணிப்பீடுகள், ஆகியவற்றை தீர்மானிக்கின்றன. அத்துடன் சூழல் தேவைகள் கிடைக்கப் பெறும் மூலப் பொருட்கள் போன்றவற்றையும் இதில் உள்ளடக்கும்.
02. பொருளாதாரக் காரணிகள் பொருளாதாரக் காரணிகள் கல்வியின் நோக்கங்கள், கலைத்திட்டம், கற்பித்தல் முறைகள், கால அளவு என்பவற்றைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி குன்றிய நாடுகளது கல்வி முறைமையானது வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகளினது கல்வி முறைமையிலிருந்து வேறுபடுகின்றது.
03. புவியியல் காரணிகள்
புகோளவியற் காரணிகள் தமது தேவைகளுக்கேற்ப கல்விக் குறிக்கோள்களை வகுக்கின்றன. தற்காலக் கல்வியானது தேசியப் பற்று, ஜனநாயகக் கோட்பாடுகள், தேசிய ஒற்றுமை, சர்வதேச புரிந்துணர்வு போன்றவற்றை நோக்காகக் கொண்டவையாகும்.
04. அரசியற் காரணிகள்
அரசியற் தத்துவங்களும் கொள்கைகளும் கல்விக் குறிக்கோள்களை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அரசியல் காரணிகளின் அடிப்படையிலே ஆங்கிலேயக் கல்வி முறைமையானது இந்தியாவிலும் இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
05. மொழியியல் சார்ந்த காரணிகள் ஒரு மொழி கொண்ட நாடு, பல மொழிகள் பேசப்படுகின்ற நாடுகள் ஆகியவற்றின் மொழிக் கொள்கைகள்

Page 23
கல்வியின் நோக்கங்களைத் தீர்மானிக்கின்றன. தேசிய மொழியில் போதிப்பது, பிராந்திய மொழிப் பிரயோகங்கள், மற்றும் சர்வதேச மொழிப் பிரயோகம் என்பன இதில் உள்ளடங்குபவையாகும்.
06. கல்வி தத்துவார்த்த காரணிகள்
பெருமைக்குரிய கல்வித் தத்துவவியலாளர் களது கல்வித் தத்துவங்களும் கல்வியின் நோக்கங்களைத் தீர் மானிக் கின் றன. பெருமைக்குரிய கல் வித் தத்துவவியலாளர்கள் சிறந்த கற்றுக் கொடுப்பவர்களுமாவார்.
07. சமயக் காரணிகள்
வேதாகமக் கல்வி, பௌத்த மதக்கல்வி, இஸ்லாமியக் கல்வி என்பன சமயம்சார்ந்த கொள்கைகளால் ஆதிக்கம் செலுத்தப்படுபவையாகும். ஐரோப்பிய நாடுகளில் புரட்டஸ்தாந்து சமயக் கோட்பாடுகளும் கத்தோலிக்கச் சமயக் கோட்பாடுகளும் கல்வியில் செல்வாக்கைச் செலுத்துகின்றன.
மேற்கூறப்பட்ட முக்கியத்துவம் நிறைந்த கல்வியினை தற் போதைய கல்வி அமைப்பு முறைமையில் வழங்குவன பாடசாலைகளேயாகும். ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, சிரேஷ்ட இடைநிலைக் கல்வி, ஆகியவற்றை வழங்கும் நிறுவனங்களாக பாடசாலைகள் விளங்குகின்றன. இப்பாடசாலைகள் நிலைத்த தன்மை வாய் ந்த சமூக நிறுவனங்களாகும். சமூகத்தின் விம்பங்களாக விளங்குவனவாகும். இப்பாடசாலைகளின் தொழிற்பாடுகளை கலாநிதி B.S. சர்மா அவர்கள் (2004) கல்வி மற்றும் ஆசிரியர் தொழிற்பாடுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.
01. பல்பக்க கல்வி (Many sided education)
மரபு சார்ந்த பாடசாலைகளின் தொழிற்பாடாக இருந்து வந்தது எழுத்து, வாசிப்பு, ஒப்புவித்தல் அல்லது கூறுதல் என்பனவாகும். இதனை ஆங்கிலத்தில் 3R என வழங்குவர். தற்போதைய பாடசாலை முறைமையின் பிரதான வாசகமாக விளங்குவது பாடசாலையானது வாசிப்பு, எழுத்து, கணிதம், ஓய்வு நேரப் பொழுது போக்குகள், உரிமைகள், பொறுப்புகள் மற்றும் தொடர்புகள் ஆகிய ஏழு விடயங்களில் கவனம் செலுத்ததல் என்பனவாகும். இதனை ஆங்கிலத்தில் 7R என அழைப்பர்.
02. ஜனநாயகத்திற்கான பயிற்சி வழங்குதல்
('Tranining for democracy) பாடசாலைகள் மாணவர்களுக்கு ஜனநாயக முறையி லமைந்த பயிற்சிகளைப் பாடசாலைக் காலத்தில் வழங்க வேண்டும் என்பதையே இக்கூற்று வற்புறுத்துகின்றது.

மாணவர்கள் ஒன்று பட்டு ஒற்றுமையுடன் வாழப் பழகிக் கொள்ளுதல், உரிமைகள் கடமைகளை அறிந்து கொள்ளல், போன்ற விடயங்கள் ஜனநாயக சமூக அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு அவசியம் என்பதை மாணவன் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் குடிமகன் என்ற வகையில் மாணவன் தனது பொறுப்புக்களையும் அறிந்து கொள்ளல் அவசியமாகும்.
03. கலாச்சாரத்தை பேணுதல் அல்லது பாதுகாத்தல்
(Conservation of Culture)
பாடசாலையானது சமூக வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், ஒழுக்கத் தத்துவம், ஆகியவற்றைப் பாதுகாத்து மாணவர்களுக்கு வழங்கும் பெறுமதிமிக்க தொழிற்பாட்டினை மேற்கொள்கின்றது. பாடசாலைகளே ஒரு பரம்பரையிலிருந்து இன்னொரு பரம்பரையினருக்கு இவற்றினை கடத்தும் கடப்பாடுகளை மேற்கொள்கின்றன.
04. சமூக மாற்றங்களுக்கான முகவராகச் செயற்படல்
(An agency of social reforms)
பாடசாலைகள் கலாசாரத்தைப் பேணுதல் அல்லது பாதுகாத்தலுடன் நின்று விடுதல் போதுமானதல்ல என றைபேர்ன் (Ryburn) அவர்கள் கூறுகின்றார். முன்னேற்றம் காணவிளையும் பாடசாலைகள் புதிய தலைமுறையினரை அவர்களது பெற்றோர்கள் இருந்த நிலையில் வைத்திருக்க விரும்பாது.
05. விஞ்ஞான மனப்பாங்கினை வளர்த்தல்
(Development of a scientific attitude) பாடசாலைகள் மாணவர்களிடத்து விஞ்ஞான ரீதியான விசாரணை முறையினை வளர்த்தெடுத்தல் வேண்டும். தகவல்களைத் திரட்ட, அவற்றிலிருந்து ஆதாரங்களைப் பெற, அவ் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் மாணவர்களுக்கு போதியளவு பயிற்சிகள் வழங்க வேண்டும். செயல் நடவடிக்கைகளின் சாதக பாதகங்களைப் புரிந்து கொள்ளல் முக்கியமானதாகும். ஆக்கபூர்வமான சிந்தனை ஊடாக தீர்வுகளைக் காணவேண்டும்.
06. பாடசாலை வாழ்க்கை பாடசாலைக்கு வெளியே
உள்ள வாழ்க்கையுடன் தொடர்புபட்டதாக இருத்தல்
(School Pile closely connected with tipe outside) பாடசாலை வாழ்க்கையானது சமூக வாழ்க்கையுடன் தொடர்பு பட்டதாக இருக்குமிடத்து மாத்திரமே மாணவன் தனது பிற்காலத்தில் சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
அகவிழி ஜனவரி 2013

Page 24
07. ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல் பெறுமானம்
(Value of interdependence) மாணவர்கள் சக மாணவர்களுடன், சமூகத்துடன், தனது நாட்டு மக்களுடன் மற்றும் உலக மக்களுடன் இணைந்து வாழும் பண்புகளை பாடசாலைகளிலே விருத்தி செய்தல் வேண்டும். இவ்வகையான சந்தர்பப்ங்களை பாடசாலைகளே உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
08. மாணவனின் பூரண வளர்ச்சிக்கு வாய்ப்பினை
வழங்கல் (Oppertunities for the full development of the child)
பாடசாலையானது மாணவர் மையச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. அதற்கான உளவியல் அணுகு முறைகளையே கையாளுகின்றன. மாணவர்களிடத்து உயர் ஆளுமையை விருத்தி செய்தல் அவசியமாகும். இதற்கான உடல், உள், அறிவுத் தொகுதிகள் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். முன்னேற்றம் கருதிய பாடசாலையானது இவற்றினது வளர்ச்சிக்கான வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்கி அவர்களது பூரண வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
09. தனியாள் வேறுபாடுகளை அங்கீகரித்தல்
(Recoganition of individual differeneces)
மாணவர்களிடையேயுள்ள தனியாள் வேறுபாடுகள் இனம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படல் வேண்டும். அவை பாராட்டப்படல் வேண்டும். அவர்களது தனிப்பட்ட திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும். அவர்களது இயல்புநிலை விவேகத்திற்கேற்ப கற்கை நெறிகளை வகுத்துக் கொடுக்க வேண்டும்.
10. சமூகரீதியின் மேலான பேரார்வம்
(Passion for social justice) இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பல் இனம், வெவ்வேறு சமயங்கள் நம்பிக்கைகள், கொள்கைப்பிடிவாதங்கள் (dogmas) போன்ற வேறுபாட்டுக் காரணிகள் உள்ளன. இவ்வகைக் சூழ்நிலைகளில் சமூகநீதிகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள், துஸ்பிரயோகங்கள் என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு, பாடசாலைகள் இவற்றின் தீய விளைவுகளை மாணவர்களின் உள்ளத்திலும் சிந்தனையிலும் உணரச்செய்து சமூக நீதியின் மேலான பேரார்வத்தை வளர்க்க வேண்டும்.
Iான்
11.
ஒழுக்கம் மற்றும் வாழ்வியம் சார்ந்த கல்வியானது தேவாலயங்கள் மற்றும் கோயில்கள், ஆதீனங்கள் ஊடாக வழங்கப்பட்டன, நன்நெறி சார்ந்த ஒழுக்க விதிகளை புகட்டுவதில் குடும்பமும் முக்கிய பொறுப்பை ஏற்றிருந்தது.
அகவிழி ) ஜனவரி 2013

தற்பொழுது சிறந்த நன்நடத்தைகளை மாணவர்களிடத்து உருவாக்குகின்ற பாரிய பொறுப்பும் பாடசாலைகளுக்கு உண்டு.
12. தொழிற்துறை சார்ந்த கல்வியை வழங்கல்
(Responsibility for Vocational Education)
வரலாற்றின் இடைக்காலப் பகுதிகளில் தொழிற்பயிற்சிகள் குடும்ப அடிப்படையிலேயே வழங்கப்பட்டன. மகன் தந்தையுடன் இணைந்து தொழிலாற்றுவதன் மூலம் இவ்வகை தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொண்டான். ஆனால் பொருளாதாரம் வளர்ச்சிகண்டுள்ள தற்போதைய நிலையில் இந்த நடைமுறை அருகி வருகின்றது. எனவே தான் பாடசாலைகள் தொழில்கல்வியையும் மாணவர்களுக்கு வழங்கும் கடப்பாடுக்கு உள்ளாகின்றன.
13. சுயவிருத்திக்கான சுதந்திரம்
(Freedom for life development) மாணவனின் ஆக்கபூர்வமான சிந்தனை விருத்திக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் மாணவனுக்கு போதியளவு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என கல்வியியலாளர்கள் கூறுகின்றார்கள். இது மாணவனுக்கு வழங் கும் கட்டுப்பாடற்ற சுதந்திர அனுமதியாக இருக்கக் கூடாது. மாணவன் தனது ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்தி செயற்படுவதற்கான சுதந் திரத்தையே இது கருதுகின் றது. இதற் கு ஆசிரியருடைய நெறிப்படுத்தல், வழிகாட்டல்கள் மிக அவசியமாகும். மாணவன் தனது சொந்த ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கு தடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
14. நற்பயன் விளைவிக்கின்ற ஆக்கச்
செயற்பாடுகளுக்கான இடம் (A place of productive activity)
பாடசாலைகள் நிகழ்ச்சித் திட்டங்களில் பாடசாலைச் சமூகத்திற்கு பயனுள்ளதான கருமங்களுக்கு செய்முறை சார்ந்த பயிற்சிகளை வழங் கும் நிலையமாகவும் விளக்குதல் வேண்டும்.
15. பாடசாலைச் சூழல் வாழ்வியலின் மாதிரி
எடுத்துக்காட்டாக விளங்குதல்
(School as an epitome of the outside) பாடசாலையானது சமூகக் செயற்பாடுகளை பிரதிபலிக்கும் இடமாக விளங்கவேண்டும் என கூறப்படுகின்றது. ஆனால் இச் சமூகச் செயற்பாடுகள் சுத்திகரிக்கப்பட்டவையாகவும், இலகுபடுத்தப்பட்டவையாகும் அதேநேரம் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் விளைவிக்காத வகையில் மிதப்படுத்தப்பட்டவையாகவும் இருத்தல் அவசியமாகும்.
22

Page 25
16. சமூக சேவை மையமாக வளங்குதல்
(Centre for community service) W.K. மக்கறன் (W.K.Mccharen) அவர்கள் 'சமூகப்பாடசாலை பற்றி பின்வறுமாறு கூறுகின்றார், சமூகப்பாடசாலையானது மாணவர்களைப் பொறுத்தவரை பயனுள்ளதும் விளைதிறன் மிக்கதுமான கற்றல் நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். சமூகத்தின் முழுத்தரப்பினர்க்கும் பயன் விளைவிப்பதாக சேவையாற்ற வேண்டும். சமூகப்பரிமாண வளர்ச்சியன்பால் இட்டுச் செல்லல் வேண்டும்.
6ை
17. நிகழ்ச்சித்திட்டங்கள் ஒத்திசைவுடன்
ஒருங்கிணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்தல்
(Programme of the school visualized as unity) பாடசாலை நிகழ்ச்சித் திட்டங்கள் யாவும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு அகபுற தூண்டல்களை ஏற்படுத்தக் கூடியவையாக இருத்தல் வேண்டும். மாணவர்களதும் பாடசாலைக் சமூகத்தினதும் அறிவு, திறன், மனப்பாங்கு களில் சாதகமான விருத்தி கருதிய மாற்றுத் தன்மைகளை ஏற்படுத்திக் கூடியவையாக இருத்தல் வேண்டும்.
கலாநிதி சர்மா அவர்கள் பாடசாலைகள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களைத் தொகுத்து கூறுகின்ற சந்தர்ப்பத்தில் T. றேமன்ட ('T. Raymont) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். ஆசிரியர்கள் மாத்திரம் தான் மாணவர்களுக்கு கற்பிப்பவர்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அதேபோன்று பாடசாலைகள் மட்டும்தான் மாணவர்களுக்கு கற்கும் மையங்கள் என முற்று முழுதாக கூறமுடியாது என்கிறார். இவரது கருத்தின் பிரகாரம் வேறு நிறுவனங்களும் மாணவர்களுக்கு கற்பிக்கும் நிறுவனங்களாக, மாணவர்கள் சில விடயங்களை கற்றுக்கொள்பவையாக விளங்குகின்றன என்கிறார். இங்கு மாணவன் கற்றுக் கொள்பவை அவனுக்கு நன்மை பயப்பனவாகவும் இருக்கலாம். தீமை விளைவிப்பனவுமாயிருக்கலாம். 'தீமை' என்ற பதம் பலரினது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. முறைசார்ந்த பாடசாலைகளை விடுத்து மாணவர் கல்வியில் செல்வாக்கு செலுத்தும் ஏனைய முகவர் நிலையங்களே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் பாடசாலைகளும் கல்லூரிகளும் தங்களது தார்மீகப் பொறுப்புக்களை திருப்திகரமான நிலையில் நிறைவேற்ற தவறியுள்ளன என்றும் கூறுவார் உள்ளனர். எவறோற் றீமன் (Everotte Remer) என்ற கல்வி ஆய்வாளர் 'பாடசாலை மரணித்துவிட்டது' (School is Dead) என்ற நூலை எழுதுமளவிற்கு விமர்சனப் பார்வையில் சென்றுள்ளார்.
சில கல்வியியலாளர்கள் மாணவர்களது கல்வி பற்றி பின்வருமாறு கூறுகின்றார்கள். நாம் மேற்கொள்ளும் கல்விச் செயற்பாடுகளில் நான்கில் ஒருபருதியை நாம் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்கின்றோம். புத்தகங்கள்

மூலமாக நாலில் ஒரு பகுதியையும், நாலில் ஒரு பகுதியை நாம் எதிர் கொள்ளும் சவால்களிலிருந்தும் (Challenge) எஞ்சிய நாலில் ஒரு பகுதியை சூழலில் இருந்தும் (Environment) கற்றுக்கொள்கின்றோம். இக் கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவெனில் நாம் விரும்பியோ அல்லது, விரும்பாமலோ மாணவர்களது கற்றல் நிகழ்வுகளில் பாடசாலைகள் மாத்திரமல்ல ஏனைய நிறுவனங் களும் கல் வி முகவர்களாக செயற்படுகின்றன என்பதாகும். இவற்றின் செல்வாக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கம் செலுத்துகின்றன. அதேபோன்று முறைசார்ந்ததாகவோ அல்லது முறைசாராததாகவோ நிகழலாம். அறிநிலை (Conscious) அல்லது அறியாநிலையில் (Unconscious) இடம்பெறலாம். இவை உயிர்ப்பானதாகவும் இருக்கலாம் உயிர்ப்பற்றதாகவும் இருக்கலாம்.
_சாை
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி புகட்டும் ஓர் முறைசார்ந்த நிறுவனமாகும். அத்துடன் செய்வினை நிகழ்வுகளுக்கான இடமுமாகும். பாடசாலைகளுக்கு அடுத்த நிலையிலே விளங் கும் முறைசார்ந்த நிறுவனங்களாக விளங்குபவை திருக்கோயில்கள் அல்லது மதவழிபாட்டு ஸ்தலங்கள், வீடு ஆகியவற்றையும் குறிப்பிடலாம். நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு சிரமமாக இயங்கும் முதியோர் கல்வி நிலையங்களையும் இதில் உள்ளடக்கலாம். மாணவர்களுக்கு நன்மைகளையும் அதேசமயம் தீமைகளையும் விளைவிக்கக் கூடிய கற்றல் நிறுவனங்களாக கலைநிகழ்ச்சிக் கூடங்கள், சினிமா, வாசிகசாலை, நூதனசாலை, விளையாட்டு மைதானம், பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி போன்ற முறைசாரா நிறுவனங்களைக் கூறலாம்.
மாணவர் கல்வியில் செல்வாக்கு செலுத்தும் மேற்கூறிய நிறுவனங்களை ஒர் இறுக்கமான வரையறைக்குள் உட் படுத்தமுடியாது. ஏனெனில் முறைசார்ந்த பாடசாலையினது மாணவர்கள் பல விடயங்களை முறைசாரா வழிகளினூடாக பெற்றுக் கொள்வது கண்கூடு. ஓர் பாடசாலைகூட முதியோர்கல்விக்கான நிகழ்வுகளை பாடசாலையில் ஒழுங்குபடுத்தும் போது அது முறைசாரா நிறுவனத்தின் பண்புகளை உள்வாங்குகின்றது எனலாம். அதேபோன்றே பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகளும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சிரமமான, கல்விசார் நிகழ்ச்சிகளை நிகழ்த்துமாயின் அவை முறைசார் முறைமைக்குள் உள்ளடங்குகிறது. எனவே முறைசார் நிறுவனமொன்றிற்கான அடிப்படை வரையறையை வகுத்தல் என்பது முழுமைபெறாத நிலையிலேயே உள்ளதென கூறவேண்டும். எனினும் மாணவனது கல்வியில் முதன்மைவாய்ந்த முறைசார் கல்விமுகவர் நிறுவனமாக விளங்குவது பாடசாலை என்பது கல்வியாளர்களால் எற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
அகவிழி ஜனவரி 2013

Page 26
கல்வியிலாளர் பார் வினைத்திறனையும் வி
கொண்ட பாடசா
M. M. ஹிர்பஹான் SLP B.A., P.G.D.E. (Merit), D.C.Sc. (M
முகாமைத்துவ சிந்தனைகளில் மிக முக்கித்துவம் வாயந் த எண் ணக் கருக் களே வினைத் திறன் விளைதிறன் என்பவைகள். இவை இரண்டும் சிறந்த முகாமைத்துவத்திலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களாகும். இவைகள் கற்றல் கற்பித்தலிலும் முகாமைத்துவத்திலும் மிக முக்கியமாக கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயங்களாகும். எனவே, இவை இரண்டையும் சுருக்கமாக நோக்குவோம்.
வினைத்திறன் ( Efficiency) மனிதவளம், பௌதீக வளம், நிதிவளம், கால வளம், போன்ற சகல வளங்களையும் சரியான செயல்களுக்கு சரியாகப்பயன்படுத்தி விரயத்தைத் தவிர்த்து அவற்றால் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்கின்ற செயற்பாடே வினைத்திறன் எனப்படும். சுருங்கக்கூறின் வளங்களை சரியாகவும், சிக்கனமாவும் பன்படுத்தி கூடிய பயனைப் பெற்றுக்கொள்ளும் செயன்முறை எனப்படும்.
அகவிழி ஜனவரி 2013

--- இ
வையில் ளைதிறனையும்
லைகள்
crit) ,M.Ed.
விளைதிறன் ( Effectiveness) இதனை செயற்றிறன் அல்லது பயனுறுதி என்றும் கூறுவர் தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளை அடைந்து கொள்வதுடன் தொடர்புடைய அம்சமே விளைதிறனாகும். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நோக்கங்களை உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்றிக்கொள்வதனை விளைதிறன் எனலாம். வேறு வகையில் கூறுவதாயின் குறித்த காலப் பகுதிக்குள் எதிர்பார்த்த நோக்கத்தை வெற்றிகரமாக அடைதல்
விளைதிறன் எனக் கூறலாம்.
விளைதிறன் எனப் படுவது வெளியீடுகளுடன் தொடர் புடையது. ஒருபாடசாலையில் கல்விப் பெறு பேறுகள், இணைப்பாட விதானச் செயற்பாடுகளின் அடைவுகள், மாண வர்களின் நடத்தைகள் என்பவைகளே வெளியீடகளாகக் காணப்படுகின்றன.
சிறந்த முகமைத்துவம் உள்ள இடத்தில் வினைத்திறன், விளைதிறன் ஆகிய இரண்டும் உயர்ந்த மட்டத்தில் இருக்கும். முகாமைத்துவம் பலவீன மடையும் போது இவை இரண்டும். அல்லது இவற்றில் ஒன்று குறைந்து காணப்படும். வினைத்திறன், விளை திறன் என்பவை உயர்ந்த மட்டத்தில் பேணப்படும் பாடசாலைகள் பல்வேறு சிறந்த பண் புகளை கொண் டி ருப்பதை காணலாம். அவ்வாறான
பாடசாலைகளில் முக்கிய இயல்பு களாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
சிறந்த தலைமைத்துவம்
வினைத்திறன் விளைதிறன் என்பவற்றை ஏற்படுத்துவதில் சிறந்த முகாமைத்துவம் அவசியமாகும். சிறந்த முகாமைத்துவத் திற் கு சிறந்த தலைமைத்துவம் இன்றியமையாத ஒன்றாகும். இந்தவகையில் தலைமைத்துவ
- 24)

Page 27
ஆளுமைகளை அதிகளவு கொண்டுள்ள அதிபர்கள் இப்பாடசாலையை தலைமைதாங்கி நடாத்திச் செல்வதை காணலாம். இவர்கள் எல்லா நடவடிக்கைகளையும் நன்கு திட்டமிட்டு வேலைகளைப் பகிர்ந்தளித்து ஒழுங்குபடுத்தி, கண்காணித்து நடைமுறைப்படுத்துபவர்களாகக் காணப் படுவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களின் திறமைகள், பலவீனங்கள், என்பவற்றை மதிப்பீடு செய்து அதற்கேற்ப தனது அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் பகிர்ந்து கொடுத்து உற்சாகப்படுத்தி இலக்கை அடையும் சாமர்த்தியம் கொண்ட தலைமைத்தும் இப் பாடசலைகளில் காணப்படும்.
வேறுபட்ட கருத்துக்கள் நிலவும் ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானத்திற்கு வந்து தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் அதிபரிடம் காணப்படும். இப்படியான சந்தர் பங்களிலே மற்றவர்களுடன் கலந்துரையாடி அபிப்பிரயங்களைப் பெறுதல், ஏதிர்க் கருத்துக்களையும் வரவேற்கும் பக்குவம் கொண்டவராகவும் முடிவுகளை எடுக்கும்போது பக்கம் சாராமலும் இருப்பார்.
அதிபர் தனது அறிவை இற்றைப்படுத்திக் கொள்ப வராகக் காணப்படுவார். கற்றல் கற்பித்தல், கல்வி முகாமைத்துவம், மேற்பார்வை, மதிப்பிடல், போன்ற விடயங்கள் தொடர்பாகவும், ஏனைய புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் வரும் புதிய விடயங்களை கற்றுக்கொள்வதற்கு தனது நிருவாகப் பழுக்களுக்கு மத்தியிலும் நேரத்தை ஒதுக்கிக் கொள்பவராகக் காணப்படுவார். முகாமைத்துவப் பயிற்சி நெறிகளில் தவறாது கலந்து கொள்பவராக அதிபர் காணப்படுவார். அதுமாத்திரமல்லாமல் தமது ஆசிரியர் களையும் வாண்மைத்துவப் பயிற்சி நெறிகளில் பங்குபற்ற ஊக்கப் படுத்துவார்.
ஒழுங்கான முகாமைத்துவக் கட்டமைப்பினைப் பேணல்
அதிபர் தலைமைதாங்க அவருக்கு உதவும், அவருடன் இணைந்து செயற்படும் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், தர இணைப்பாளர்கள் பாட இணைப்பாளர்கள், வகுப்பாசிரியர்கள், முகாமைத்துவக்குழு, தரவட்டக் குழுக்கள், ஒழுக்காற்றுக்குழு மாணவத் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள். என்று சிறந்த முகாமைத்துவக் கட்டமைப்பு இப்பாடசாலையில் காணப்படும் இது பாடசாலைகளின் தரத்திற்கேற்ப மிக விரிந்த அளவில் அல்லது குறுகிய அளவில் இருக்கும்.
பாடசாலையில் கற்றல் கற்பித்தல் சிறப்பான வகையில் நடைபெறுதல் பாடசாலைகளைப் பொறுத்த வரையில் கற்றல் கற்பித்தலே முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அடிப்படையில்
25

நோக்கும்போது வினைத்திறன் விளைதிறன் உள்ள பாடசாலைகளில் திட்டமிட்ட நேர அட்டவணைக்கேற்ப உரிய வேளைகளில் உரிய பாடங்கள் வகுப்பறையில் கற் பிக்கப்படுவதுடன் மாணவர் களும் கற்றலில் ஆர் வத்துடன் ஈடுபடுவதை அவதானிக்கமுடியும். ஆசிரியர்கள் உற்சாகமாகவும், அர்ப்பணிப்புடனும், கூட்டாகவும் பணியாற்றுவர். இப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களினதும், பாடசாலையினதும் நலனைக் கருத்திற்கொண்டு ஈடுபாட்டுடன் ஒன்றாக இணைந்து செயற்படும் தன்மையைக் காணலாம். இவ்வாசிரியர்கள் அதிபரினதும் முகாமைத்துவக் குழுவினதும் அறிவுறுத்தல்களுக்கேற்ப செயற்படுவர்.
பிள்ளைகளின் பாடசாலை வரவு உயர் மட்டத்தில் காணப்படும்
கல்வி முறையின் மையம் மாணவர்களே. அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை புத்தகங்கள் என்பன யாவும் மாணவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவையாகும். இன்று பாடசாலை அறிவூட்டும் நிலையம் என்ற நிலையில் மாறி சமுதாயத்தின் நற்பிரசைகளை உருவாக்கும் நிலையமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அந்தவகையில் பார்க்கும்போது சிறந்த பாடசாலை வீட்டு வாழ்க்கையின் தொர்ச்சியாக அமைகிறது. வீட்டில் கிடைக்கும் அன்பு பாடசாலையில் கிடைக்கிறது இதனால் இப்பாடசாலைகளில் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல் காணப்படுவதனால் பிள்ளைகளின் விருப்புக்குரிய இடமாகக் பாடசாலை காணப்படுகிறது. அதுமாத்திரமல்லாமல் பிள்ளைகளின் பாதுகாப்பு இப்பாடசாலைகளில் உறுதிப்படுத்தப்படுவதால் பெற்றோர்களின் விருப்புக்குரிய இடமாகவும் நம்பிக்கைக் குரிய இடமாகவும் இப்பாடசாலைகள் காணப்படுவதால் பெற்றோர்களுக்கும் இப்பாடசாலைக்கும் இடையிலான தொடர்பு மிக நெருக்கமடைகின்றது இதன் காரணமாகவும் இப்பாடசாலையில் பிள்ளைகளின் வரவு உயர் மட்டத்தில் காணப்படும்
மாணவர்களின் இடைவிலகல் குறைந்து காணப்படும்
மாணவர்களின் இடைவிலகும் தன்மை இப்பாடசாலைகளில் குறைந்து காணப்படுவதுடன் இப்பாடசாலைகளில் கற்கச் சேர்ந்த மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்கு விலகிச் செல்வதைக்கூடத் தவிர்த்து பெருமளவு இங்கேயே கல்வி நடவடிக்கைளைத் தொடர்வதைக் காணலாம்.
இடைத் தொடர்புகள் சீராகவிருத்தல்
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கிடையிலான இடைத் தொடர்புகள் சிறப்பாக இருப்பதுடன் இவர்களுக்கிடையில் நல்லுறவு
அகவிழி ( ஜனவரி 2013

Page 28
பேணப்படும். குறித்த விடயங்களில் இவர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் இணைந்து செயற்படுவதைக்காணலாம்.
மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் உயர்வாக இருத்தல் பொதுவாக பாடசாலை மட்டத்தில் நடை பெறும் பரீட்சைகளிலும் சரி, இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு பொதுவாக நடைபெறும் ஐந்தாந்தர புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.(சா/த) , க.பொ.த. (உ/த) பரீட்சைகளிலும் மாணவர்கள் பெற்றுள்ள பெறுபேறுகள் இப்பாடசாலைகளில் உயர்ந்த அளவிலேயே இருக்கும்.
இணைப்பாட விதானச் செயற்பாடுகளும் அடைவுகளும் உயர்ந்த நிலையில் இருத்தல்.
பி : 5 இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான விளையாட்டு, ஆக்கச் செயற்பாடுகள், தமிழ்த் தினம், ஆங்கில தினம், சித்திரப்போட்டிகள், மாணவர் மன்றம் போன்ற எல்லா விடயங்களிலும் இப்பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகத்துடன் ஈடுபடுவர். மேலும் இவ்விடயங்களில் இடம்பெறும் கோட்டமட்ட வலய மட்ட மாவட்ட மட்ட, மாகாண மட்ட, தீவு மட்டத்திலான
அகவிழி ஜனவரி 2013

போட்டிகளில் இப்பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வதுடன் அவற்றில் வெற்றி பெறக் கூடியவர்களாகவும் சாதனைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகவும் இருப்பர்.
மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் சிறந்த அடைவுகள், திறமைகள் பாராட்டப்படல்
இப்பாடசாலைகளில் திறமைகாட்டும் மாணவர்களும் ஆசிரியர்களும் வைபவங்கள் விழாக்களின் மூலம் பாராட்டப்படுவர். புலமைப் பரிசில் பரீட்சைகளில் சித்திபெறும் மாணவர்கள், க.பொ.த. சாதாரண தர, க.பொத. உயர்தர, பரீட்சைகளில் அதிகூடிய பெறுபேகளை பெறும் மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள், இணைப்பாடவிதானச் செயற்பாட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள், இவ்வாறான மாணவர்களுக்குக் கற்பித்த, பயிற்சி அளித்த ஆசிரியர்கள் பாடசாலைக் கு பலவழிகளிலும் புகழ் தேடித்தந்த மாணவர்கள் ஆகியோர் அடிக்கடி பாராட்டப்படுவர். இதற்காக பரிசளிப்பு விழக்கள், ஆண்டு இறுதி விழாக்கள் என்பன இப்பாடசாலைகளில் ஒழுங்கு படுத்தப்படுவதைக் காணலாம்.
LDT
4T013
சிறந்த ஒழுங்கமைப்பும் அழகிய சூழலும் காணப்படும்
இப்பாடசாலையின் வகுப்பறைகள் ஏனைய கட்டடங்கள் சரியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதுடன் இயற்கை நிலையைக்கொண்டும் உள்ள வளங்களைப் பாவித்தும் வகுப்பறைச் சூழலும் பாடசாலை வெளிச்சூழலும் அழகு படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
போதியளவு வளங்களும் வளப் பயன்பாடும் காணப்படும்
பாடசாலைக்குத் தேவையான வளங்களை பாடசாலை நிர்வாகம் பல்வேறுவழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு பெற்றுக்கொடுக்கும் இது அரசின் ஊடாக அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக அல்லது பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள் போன்றோரினூடாகப் பெறலாம். பாடசாலைகளின் தரத்திற்கும் தேவைக்கும் ஏற்ப வளங்கள் பெறப்படும் இதனடிப்படையில் விஞ்ஞான கூடம், கணினிப் பிரிவு, ஒலி, ஓளிஅறை, நூலகம், கற்றல் கற்பித்தல் சாதனங்கள் என வளங்களின் பட்டியல் நீண்டு செல்லும். இதே வேளை இவ்வளங்கள் உரிய முறையில் பயன்படுத்ப்படுவதையும் காணலாம். பௌதீக வளங்களுடன் போதியளவு மனித வளமும் இப்பாடசாலையில் இருக்கும்.

Page 29
பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நல்ல தொடர்பு காணப்படும்.
LUப் பாடசா
சமூகத்துடன் நெருங்கிய தொடர்புடைய பாடசாலையாக இது இருக்கும். பேற்றோர் இப்பாடசாலையுடன் நல்ல தொடர்பு வைத்திருப்பதுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர், ஆசிரியர் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றினூடாகவும் இப்பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு அதிகரிக்கும்.
பெற் றார் கள் தமது பிள் களின் எதிர் கால வளர்ச்சிக்காக கொண்டுள்ள அக்கறையைப்பயன்படுத்தி தமது பாடசாலையை வளர்த்துக்கொள்பவராகக் அதிபர் காணப்படுவார். பிள்ளைகள் தமது பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை பெற்றார்களிடம் எடுத்துக் கூறுகிறார்கள். எனவே பிள்ளைகள் தமது பாடசாலையை விருப்பம் கொண்டவர்களாக தமது கருத்துக்களை சொல்லும் அளவுக்கு பாடசாலை நிகழ்வுகள் அமைந்து காணப்படும். இதனால் சமூகத்திற்கும் பாடசாலைக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்துக்கொண்டு செல்லும்
விழுமியங்களும் ஒழுக்கப் பண்புகளும் பேணப்படல். இப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் களும் கற்கும் மாணவர்களும் நற்பண்புடையவர்களாகவும் விழுமியங்களைப் பேணுபவர்களாகவும் சிறந்த நடத்தை கொண்டவர்களாகவும் இருப்பர். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நல்லுறவு பேணப்படுவதைக் காணலாம்.
பாடசாலையின் தரவுகள் காட்சிப் படுத்தப்பட்டிருப்பதுடன் அறிக்கைகள் பேணப்படல் பாடசாலையின் முக்கிய தகவல்கள் மாணவர்கள் தொகை, ஆசிரியர் தொகை வரைபடம், முக்கிய குழுக்கள் இலக்கு பணிக்கூற்று, இலட்சினை போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுடன் பாடசாலையின் சகல நடவடிக்கைகளும், கணக்குகளும் சரியாக அறிக்கைப்

படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
சிறப்பான உள்ளக மேற்பவை காணப்படும்
கற்பித்தலை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு திட்டமிட்ட செயலே மேற்பார்வையாகும். இது ஆசிரியர் தமது பணியை செவ்வனே செய்வதற்கு உதவுவதாக அமைய வேண்டும் ஒரு அதிபர் சிறந்த தலைவர் மாத்திரமல்ல அவர் சிறந்த மேற்பார்வையாளருமாவார். இவரது மேற்பார்வை ஆசிரியர்கள் தமது தொழிலை திறம்படச் செய்ய உதவுவதுடன், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவவேண்டும். இது அதிபர் ஆசிரியர், மாணவர் ஆகியோரிடையே நல்லெண்ணம் பரஸ்பரம் உருவாக உதவும்
எனவே அதிபர் மேற்பார்வையை நன்கு திட்டமிட்டு அமைக்க வேண்டும். அத்திட்டத்தில் வகுப்றையைத் தரிசித் தல் ஆசிரியருடனும் , மாணவருடனும் கலந்துரையாடல், குழுக்களாக ஆசிரியர் களைச் சந்தித்தல் மாதிரி வகுப்பு நடாத்துதல், கட்புல செவிப்புலப் பிரயோகம் போன்ற பல அம்சங்களையும் உள்ளடக்குதல் அவசியமாகும். ஆசிரியர்களின் தனியாள் திறமை பாடசாலையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்க்கூடியதாக மேற்பார்வை இப்பாடசாலையில் அமைந்து காணப்படும். இதனால் இப்பாடசாலையின் கற்றல் கற்பித்தல், பொது முகாமைத்துவம், பௌதீக வளமுகாமைத்துவம், மனதவள முகாமைத்துவம், முறையான கலைத் திட்ட முகாமைத்துவம், இணைப்பாட விதானச் செயற்பாட்டு முகாமைத்துவம், மாணவர் அடைவு மட்டம், மாணவர் நலன்புரி சேவை, பாடசாலையும் சமூகமும், அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்திற்காக மாணவர் அபிவிருத்தி என்ற விடயங்கள் உயர்ந்த நிலையில் பேணப்படும்.
இவ்வாறான சிறந்த பண்புகள் வினைத்திறன் விளைதின் கொண்ட பாடசாலைகளில் காணப்படும். ஒரு பாடசாலையை வினைத்திறன் விளைதிறன் கொண்ட பாடசாலையாக மாற்றுவதற்கு அப்பாடசாலையின் அதிபர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முகாமைத்துவக்குழு, பாடசாலை அபிவிருத்திக்குழு, பாடசாலை அபிமானிகள், அப்பாடசாலையுடன் தொடர்புடைய சங்கங்கள், கல்வி அதிகாரிகள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும்.
அகவிழி ஜனவரி 2013

Page 30
ஆசிரியர்களின் விழுமிய தொடர்பான ஒழுக்க விழு
பொதுச் சட்ட
அறிமுகம்
சகல பிள்ளைகளிடமும் இருக்க வேண்டிய பண்புசார் கல்வியினைப் பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை உரிமையினைப் பாதுகாக்கக் கூடியவாறு சிறுவர் உரிமைக் கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப உரிய சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர் களது ஆளுமையை விருத்தி செய்யப் பங்களிப்புச் செய்வது சகல ஆசிரியர்களினதும் பொறுப்புக்கள் ஆகும்.
ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களின் இடம்சார் பெற்றோர்கள் (Loco - Parents) என்ற சட்ட ரீதியான யோசனைகளுக்கு அமைய மாணவர்களின் நலனுக்காகச் செயற்படச் சகல ஆசிரியர்களும் கட்டுப்பட்டுள்ளனர்.
தொழில்சார் உயர் தரத்தினை உறுதி செய்யக் கூடியவாறு மற்றும் பொதுமக்கள் தம்மீது காண்பிக்கும் கெளரவத்தினை உறுதி செய்யக் கூடியவாறு தொழில்சார் ஒழுக்க நெறிகள் தம்மால் தயாரிக்க்ப்பட்டு பின்பற்றப்படுவது தொழில்சார் தரத்தின் தேவையாகக் கருதப்படுகின்றது.
தமது செயற்பாடுகளை நிறைவேற்றும் போது எடுக்கப்படும் தீர்வுகள் ஊடாகத் தாம் அனுபவிக்கும் மட்டற்ற சுயாதீனத்தினை அடிப்படையாகக் கொண்டு விழுமியம் சார் தரங்கள் தம்மால் பேணப்பட்டு அதற் கமையச் செயற்படுவது மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
சமூக முறைமையின் நேரடிப் பங்காளர்களாக ஆசிரியர்களுக்குள்ள செயற்பாட்டுப் பணிகள் மற்றும் ஆசிரிய தொழில்சார் தரத்தினை இனங்காண்பதற்கும் வழிகாட்டுவதற்கும் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய சுய வழிகாட்டல்கள் மற்றும் சுய ஒழுக்கங்களின் முக்கியத்துவத்தினை அறிமுகப்படுத்துவதற்கும், பல் வேறுபட்ட கால எல்லைக்குள் எடுக்கப்பட்ட முயற்சிகளில் அடைவு மட்டங்கள் உட்பட சுய விழுமியங்கள், வழிகாட்டல் களுக்காகவும் இந்நால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனூடாகச் சகல ஆசிரியர்களினாலும் ஏற்றுக் கொள்வதாக எதிர்பார்க்கும் தொழில்சார் சட்டங்களும் விழுமியங்களும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
ஆசிரியத்துவத்திற்காகத் தாபிக்கும் தனியான நிறுவனம் ஒன்றை இவ்விழுமிய முறைமை மற்றும் சட்ட ஒழுங்குகள் தொடர்பில் ஆசிரியர்களை மதிப்பீட்டுக்குள்ளாக்கும் மற்றும்
அகவிழி | ஜனவரி 2013

ம் மிக்க செயற்பாடுகள் மிய முறைமை மற்றும் த் தொகுப்பு
கெளரவிக்கும் கருவியாகவும் பாடசாலை முறைமையின் பண்புசார் தரத்தினை விருத்தி செய்யும் உபகரணமாகவும் பயன்படுத்த முடியும்.
அங்கீகரிக்கப்பட்ட விழுமிய முறைமைச் சட்டக் கோவைகள் ஊடாக ஆசிரியர்களின் அபிமானத்தைப் பாதுகாக்கும் அச்சட்ட ஒழுங்குகளைத் தெரிந்தே மீறுவதற்கு எதிராக ஒழுக்காற்றுச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குமான அடிப்படையினைத் தோற்றுவிப்பதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களின் ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள் தொடர்பான விழுமியத் தொகுப்பு முறைமை மற்றும் சட்ட ஒழுங்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தரங்கள், நியாயங்கள் மற்றும் வாசகங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள இலக்கங்களுக்கு அமையத் தேவையானவாறு சுருக்கமான விளக்கங்களை வழங்க முடியும்.
உத்தியோகபூர்வ பெயர்
இவ்வாவணத்தைப் பண்புசார் கல்வியின் நோக்கத்தினை எட்டுவதற்காக ஆசிரியர்களின் விழுமியச் செயற்பாடுகள் தொடர்பான விழுமியக் கோவைகள் மற்றும் சட்டக் கோவையாக அறிமுகப்படுத்த முடியும். எதிர்காலத்தில் இதனைக் கூட்டாக இணைத்து அல்லது தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பொதுவான சட்டக் கோவையாக அல்லது விழுமியக் கோவையாகக் கருதப்படும்.
வரைவிலக்கணம் ஆசிரியர் என்று கருதப்படுவோர் மாணவ மாணவிகளின் கல்வி தொடர்பான பொறுப்புக்கள் கொண்ட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் உள்ள கல்விசார் . உத்தியோகத்தர்களேயாவர்.
- ஒழுக்கவிழுமியம் கொண்ட செயற்பாடுகள் தொடர்பான விழுமிய முறைமையாக அறிமுகப்படுத்தப்படுவது தம்மால் தமக்காக விதிக்கப்படவேண்டிய நேர்மை, பொறுப்பு மற்றும் முன்மாதிரி, சமூகப் பொறுப்புப் போன்ற நபர்கள் ரீதியிலான ஆசிரியர்களின் சமூகம் எதிர்பார்க்கும் சிந்தனை, பொறுப்புக்கள், பழக்கவழக்கங்களாகும்.
- சட்ட முறைமை என அறிமுகப்படுத்தப்படுவது சகல ஆசிரியர்களினாலும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய சட்டக் கோட்பாடுகளாகும்.

Page 31
நோக்கங்கள்
ஆசிரியர்களுக்கான இவ்விழுமியச் செயற்பாடுகள் தொடர்பான கோவை மற்றும் சட்ட முறைமை இரண்டு நோக்கங்களைக் கொண்டமைந்தது. 1. நேர்மை, பொறுப்புணர்ச்சி, தொழில்வாண்மையுடன்
முன்மாதிரியான, சமூகப் பொறுப்புள்ள நபராகவும் ஆசிரியர்களினால் மேற்கொள்ள வேண்டிய விழுமியத் தரங்கள் ஒழுக்க விழுமிய முறைமையாகச் சமர்ப்பிக்கப்படுகின்றது. ஒழுக்கமிக்க செயற் பாடுகளுக் காகச் சகல ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்கள் வழங்கப்படும் வகையில் சட்ட முறைமை ஒன்றைச் சமர்ப்பித்தல்.
பொது நோக்கங்கள் மற்றும் அடிப்படைத் தத்துவம் பின்பற்றப்பட வேண்டிய சட்ட முறைமைகள் கொண்ட ஒழுக்க விழுமிய முறையினைத் தயாரிப்பதன் நோக்கமாக அமைவது பெறுமதி மிக்க தொழிலின் அங்கத்தவர் என்ற வகையில் ஆசிரியரின் கெளரவப் பெயரினைப் பாதுகாப்பதாகும். இவ்விழுமிய முறைமை மூலம் ஆசிரியர்களினால் சுயமான அடிப்படையில் தனக்கு விதித்துக் கொள்ள வேண்டிய விழுமியத் தரங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும், இதனை இத்தரங்கள் சேவைக்கான பதவியுயர்வுகள் மற்றும் தேசிய ரீதியில் அங்கீகரிப்பதற்காகவும் மதிப்பீட்டுக்காகவும் பயன்படுத்த முடியும்.
ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைமை
ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள் தொடர்பான ஆசிரிய விழுமியக் கோவை விரிவான முறையில் அமைவது தம்மால் தமக்கு விதிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை நேர்மையாகவும் பொறுப்புடனும் முன்மாதிரியாகவும் சமூகப் பொறுப்புக் கொண்டவராக ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சிந்தனைகள், பொறுப்புக்கள் மற்றும் பழக்க வழக்கங்களாகும்.
இதன் போது எட்டுத் துறைகள் ஊடாக ஒழுக்க விழுமிய முறைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் தனிப்பட்ட ரீதியில்
சிறந்த நற்பழக்கவழக்கங்கள், ஒழுக்கங்கள் கொண்ட முன்மாதிரி மிக்க சமூக முன்னோடியாகச் செயற்பட வேண்டும். தாம் சிறந்த தேகாரோக்கியம் கொண்டவராக இருப்பதற்குத் தேவையான ஒழுங்குகள் பற்றி உடற்பயிற்சி மற்றும் சுத்தத்தைப் பேணுதல். சகல சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கம் மற்றும் விழுமியத்தைப் பாதுகாக்கக் கூடியவாறு சுத்தமாக
29.

எளிமையான முறையில் ஆடைகளை அணிந்திருத்தல் வேண்டும். போதை, புகைத்தல், வெற்றிலை சாப்பிடல் போன்ற பழக்கங்கள் மற்றும் பல்வகையான முறைகேடான செயற்பாடுகளில் தவிர்ந்திருத்தல், ஏனையோரையும் தவிர்ந்திருக்க உதவுதல். தனிப்பட்ட மற்றும் சமூகச் செயற்பாடுகள் தொடர்பான அபகீர்த்திக்கு உட்பட்டோருடனான பழக்கங் களிலிலிருந்து விலகியிருத்தல். தாம் பழகும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோரின் முன்னிலையில் தமது செல்வநிலை, குடும்பத் தரம் மற்றும் உயர் நிலைகளைக் கொண்டோருடனான பழக்கங்கள் தொடர்பாகப் பெருமையுடன் பேசாதிருத்தல். தமது செல்வம், குடும்பத் தரம், உயர் பதவிகள் கொண்டோருடனான நட்பு இருப்பதாகக் காண்பித்து ஏனைய ஆசிரியர்கள், மாணவர்களை அச்சத்துக்கு உட்படுத்த அல்லது அவர்களுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவாறான செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல் மற்றும் அவ்வாறு செயற்படும் நபர்களுக்கு முன்னிலையில் கட்டுப்பாடற்ற பழக்க வழக்கங்களைக் கொண்டிருத்தல். தமது சொந்த வாழ்க்கை மற்றும் சமயம், அரசியல் போன்றவைகள் தொடர்பாகத் தனிப்பட்ட கருத்தினை அங்கீகரிக்க மாணவர்களை வலியுறுத்துவதில் இருந்து விலகியிருத்தல். ஏதேனும் பாடங்கள், மொழி அல்லது ஏனைய துறைகள் தொடர்பாகத் தமது விசேட இயலுமைகளை ஏனைய ஆசிரியர்களை இழிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தாதிருத்தல். சிறந்த கொள்கைகள் கொண்டுள்ளோர் முன்னிலையில் தீவிரவாதக் கொள்கையினைக் கடைப்பிடிக்காது இருத்தல் மற்றும் தீவிரவாத நிலைப்பாட்டில் இருந்து சமநிலை கொண்ட நபராகத் செயற்படல்.
அநீதிகள், முறையற்ற ரீதியில் இழிவுபடுத்தல் மற்றும் அச்சமூட்டல் போன்றவற்றில் இருந்து தமது சகோதர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஏனையோரைப் பாதுகாப்பதற்காகச் சகல சந்தர்ப்பங்களிலும் தயாராக இருத்தல். வகுப்பறை மற்றும் அதற்கு வெளியே மாணவர்களுடன் பழகும் சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டினைத் தவிர்த்துக்கொள்ளல். சகல சந்தர்ப்பங்களிலும் சமூக அங்கீகாரங்களைக் கெளரவித்துப் பழக்க வழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியான கௌரவத்துடன் சகல முறைகளிலும் பிள்ளைகள் மற்றும் முழுச் சமூகத்திற்கும்
முன்மாதிரியாகச் செயற்படல்.
அகவிழி ( ஜனவரி 2013

Page 32
மனிதர்கள் மற்றும் மிருகங்கள் தொடர்பாக அநீதிகள் இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமது கவலையினை வெளிப்படுத்தி இயற்கையாக அல்லது மனிதனால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்படுவோரை இரக்கத்துடன் நோக்கி
அவர்களுக்கு உதவிகளைப் புரிதல்.
ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர், மாணவர் களின் இடம் சார் பெற்றோர் என்ற சட்டரீதியான சிந்தனையைக் கருத்திற் கொள்ளல். சகல சந்தர்ப்பங்களிலும் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையினைப் பாதுகாத்தல் மற்றும் பெற்றோர் பாதுகாவலர்கள் தொடர்பில் பிள்ளையின் நம்பகத் தன்மையினை உறுதிசெய்யக் கூடியவாறு செயற்படல். குலம், நம்பிக்கை, ஆண் - பெண் பால், சமூக நிலைமைகள், சமயம், மொழி, பிறப்பிடம் ஆகிய காரணிகளைக் கருத்திற் கொள்ளாது சகல மாணவர் களுக் கும் நியாயமாகவும் பக்கச் சார் பற்ற அன்பினையும், கருணை, பாதுகாப்பினையும் வழங்கல். தமது மாணவர்களைத் தமது பிள்ளைகள் போன்று அழைத்தல். மாணவர்களுக்கு இருக்கக் கூடிய விசேட தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புடன் இருத்தல் மற்றும் அவ்வாறான மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும் நிபுணத்துவ ஆலோசனைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
ஆசிரியர் அறிவு வழங்குபவர், திறமை மற்றும் சிறந்த மனப்பாங்கு விருத்தியாளராக.
அறிவினை வழங்குதல், திறமை மற்றும் சிறந்த சிந்தனையை விருத்தி செய்தலை ஆசிரியரின் அடிப்படைப் பொறுப்பாகக் கருதி ஆசிரியர் கீழ்க்குறிப்பிட்டவாறு செயற்படல் வேண்டும். ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைப் பிரகடனம் (1989) இற்கமைய சிறுவர்களிடம் இருக்க வேண்டிய உரிமைகளை (விசேடமாகக் கல்வி உட்பட) உறுதிப்படுத்தக் கூடியவாறான செயற்பாடுகள். சகல சந்தர்ப்பங்களிலும் சிறந்த தயாரிப்புக்களுடனும்
கூடியதாகப் பொறுப்புக்களை நிறைவேற்றல். வழங்கப்படும் அறிவு சரியானது என்றும் பொருத்த மானது என்றும் மாணவர்களுக்கு உரியது என்றும் உறுதிப்படுத்தல். விசேடமான கற்பித்தல் தொடர்பில் புனிதமான (Holistic) பிரவேசங்களைப் பிற்பற்றல்.
அகவிழி ( ஜனவரி 2013

கற்பித்தல், காலத்துக்குள் கேள்விகளைக் கேட்டல் மற்றும் கலந்துரையாட ஆர்வமூட்டி மாணவர்களின் விழுமியச் சிந்தனைகளை ஊக்குவிக்க சந்தர்ப்பம் வழங்குதல். பாடத்திற்குரிய மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளத் தேவையான மாணவர்களுக்கு அதற்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முறைகளைத் தெளிவுபடுத்தல் மற்றும் தம் மால் மேலதிக தகவல்களை வினவுவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல். மாணவர்களைச் சுய கற்கைக்கு ஆர்வமூட்டத் தேவையான வசதிகளை வழங்குதல். மாணவர்களின் சிந்தனை விருத்தியாளர்களாக மற்றும் அதற்காக ஆர்வமூட்டுபவராகச் செயற்படல். எச்சந்தர்ப்பத்திலும் தமது மாணவர்களிடம் நிதியினை அறவிட்டுக் கற்பிப்பதைத் தவிர்த்தல்.
ஆசிரியர் ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராகவும்
ஆக்கத்திறன் மிக்கவராகவும் மற்றும் வழிகாட்டுநர், ஆலோசகராகவும் தமது பொறுப்பின் கீழ்வரும் மாணவர்களுக்காக அதியுயரிய சேவையினை
ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இப்பொறுப்புக்களை நிறைவேற்றும் வகையில் அறிவினால், திறமையினால் மற்றும் சிறந்த சிந்தனைகளைக் கொண்டோராகச் செயற்படல். மாணவர்களிடம் இருக்க வேண்டிய பின்னடைவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனத்துடன் இருக்க வேண்டியதுடன் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்கத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தல். பிள்ளைகள் தொடர்பான பலவீனங்கள் அல்லது பிரச்சினைகள் தொடர்பான இரகசியத் தகவல்களை அப்பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் சட்டரீதியிலான பாதுகாவலர்களைத் தவிர வேறு எவருக்கும் வெளிப்படுத்தாதிருத்தல். பெற்றோருடன் நல்லுறவைப் பேணித் தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுக்குத் தமது பிள்ளை தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத் தம்மை இலகுவாக அண்மிப்பதற்குச் சந்தர்ப்பத்தினை வழங்குதல். எச்சந்தர்ப்பத்திலும் ஆசிரியர் மாணவர் தொடர்புகளை முறையற்ற ரீதியில் பயன்படுத்தாது இருத்தல் மற்றும் மாணவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படும் சந்தர்ப்பங்களில் இருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.

Page 33
சகல சந்தர்ப்பங்களிலம் மாணவரின் அறிவு, திறமை மற்றும் சமூக விழுமிய விருத்திக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
ஆசிரியர் மதிப்பீட்டாளராக
மதிப்பீடு மற்றும் கணிப்பீடு கற்றல் - கற்பித்தற் செயற்பாடுகளின் மிக முக்கியத்துவம் வாய்ந்த
அம்சமாகக் கருதி ஆசிரியர்களினால் தொடர்ந்தும் அதற்காகத் தேவையான அறிவினை இற்றைப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த அறிவு, சிந்தனை, ஆற்றல் விருத்தியினை ஏற்படுத்தல்.
மாணவர்களிடம் இருக்க வேண்டிய கற்றல் பின்னடைவுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புடன் இருந்து அவற்றுக்குத் தீர்வுகளைக் காண் பதற் குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
மாணவர்கள் தொடர்பில் எதுவித பேதங்களும் இன்றித் தனிப்பட்ட அழுத்தங்கள் இன்றி நெகிழ்வுத் தன்மையுடன் மற்றும் நம்பகத் தன்மையுடன் கட்டி யெழுப்பக் கூடியவாறான மதிப்பீட்டுச் செயற்பாடுகளைச் செய்தல்.
ஆசிரியர் தொழில்சார் உத்தியோகத்தராக
அறிவு மற்றும் திறமைகளைப் பெற்றுக் கொண்டுள்ளமையினால் ஆசிரியர் தொழில்சார் உத்தியோகத்தராகக் கருதப்படுவர்.
ஆசிரியத் தொழிலுக்குப் பொருத்தமான உயர் சம்பிரதாயங்கள் மற்றும் அதி உன்னத தரத்தினைச் சகல சந்தர்ப்பங்களிலும் பாதுகாத்தல். தமது தொழில்சார் மற்றும் திறமைகளின் செல்லு படியாகும் தரத்தினைப் பேணுவதனைப் போன்று கட்டாயமாகச் சமகாலப்படுத்தவும் வேண்டும்.
கற்பித்தலைத் தொழிலாகக் கருதுவதன் மூலம் ஆசிரியர் சமூகத்திற்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்குகளைக் கொண்டிருத்தல், ஆசிரியர் தமது அறிவுத் திறமைகள் சிந்தனைகளை ஏனையோருக் கிடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் சகல ஆசிரியர்களினதும் அறிவு, திறமை மற்றும் சிந்தனைகளை விருத்தி செய் வதற்காகவும் ஒத்துழைப்பு வழங்குவதில் தங்கியுள்ளது. ஆசிரியத் தொழிலுக்குத் தேவையான தகைமை இன்மை தொழிலை அபகீர்த்திக்கு உட்படுத்தும் ஆதலால் ஆசிரியர்கள் தமக்குத் தேவையான

தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்ளல் மற்றும் சகோதர ஆசிரியர்களின் சேவை முன்னேற்றத்திற்காகத் தேவையான உதவிகளை வழங்குதல். தேவையான தகமைகள் மற்றும் தேர்ச்சியற்ற ஆசிரியர் களின் தரத்தினை உயர் த்துவது தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஆதலால் அவரால் தொழிற் தகமைகளைப் பூர்த்தி செய்யும் வரை பதவியுயர்வினை எதிர்பார்க்காது இருத்தல் மற்றும் தகைமை கொண்டோருக்குப் பதவியுயர்வு வழங்கும் செயற்றிட்டங்களுக்கு உதவி வழங்கல். தமது தொழில் தொடர்பிலான அபிமானம் மற்றும் உணர்வுடன் செயற்படல்.
சகல மாணவர்களுக்கும் பண்புசார் கல்வியினை வழங்குவதன் மூலம் பொது மக்களின் நம்பிக்கையினை வெல்லுதல்.
சுயமான அல்லது தொழில் சார் நோக்கங்கள் பயன்களுக்காக மாணவர் சமூகத்தின் வாழ்வுக்கு அல்லது அவர்களது எதிர்காலத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளில் இருந்து தவிர் நீ திரு த் தல் மற் றும் அவ் வாறான செயற்பாடுகளுக்குத் துணைபோகாது இருத்தல்.
மாண வர் க ள் , ஏனைய ஆசிரியர் கள் , உத்தியோகத்தர்கள், பெற்றோர் முன்னிலையில் தம்முடன் சேவையாற்றுவோரை விமர்சிக்காது பாட மற்றும் பாட வெளிச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்குள் மற்றும் அதற்கு வெளியே சிறந்த ஒத்துழைப்புடனும் கூட்டுச் செயற்பாடுகளுடனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
எதிர்வரும் ஆண்டுக்கான செயற்பாடுகளுக்குத் தேவையான எழுத்து மூல அறிக்கைகள் மற்றும் வாய் மூலத் தகவல்களை உரியவாறு தமது பதிலீட்டாளருக்கு வழங்குதல்.
தொழில் சார் கெளரவத்திற்குப் பாதிப்புக்கள் ஏற்படுத்தக் கூடிய சம்பவங்களை உடனடியாக உரிய தொழில் சார் பொறுப் பாளர் களுக்கு
அறிக்கைப்படுத்தல்.
தொடர்ச்சி அடுத்த இதழில்......
நன்றி
கல்வி அமைச்சின் சுற்றறிக்கை 2012.10.05
சுற் . இலக்கம் 2012/37
அகவிழி ஜனவரி 2013

Page 34
மாணவர்களிடையே இயற் தேர்ந்தெடுக்கும் பழக்க
Mr. A.A. Azees (Dip
இலங்கையில் பரவலாக எல்லா இடங்களிலும் கால்நடை வளர்ப்பு இடம்பெற்ற வருகின்றது. இது தனிப்பட்ட பாவனைக்காக வீடுகளிலும் வியாபார நோக்கம் கருதி பண்ணைகளிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் அளவும் குறைவதாய்த் தென்படவில்லை. அதன் விலையிலும் போதிய வளர்ச்சி காணப்படாமலில்லை. பொதுவாக மாடுகளிலிலிருந்து கறக்கப்படும் பசுமையான தூய பால் சந்தையில் விற்கப்பட்டு அப்பணத்திற்கு பால்மாவை வாங்கி பிள்ளைகளுக்கு வழங்கும் குடும்பங்களை கிராமங்கள் தோறும் தாராளமாகக் காணலாம். பிள்ளைகள் பாலின் வாசத்தை விரும்புவதில்லை என காரணங்காட்டிப் பெற்றோர் அதனை விற்பனை செய்கின்றனர். இங்கு விஞ்ஞான ரீதியாக நோக்கும் போது இரு பிரச்சினைகள் தெளிவாகத் தென்படுகின்றன. 1. பாலின் பெறுமதியை அறியாமையும் பால் மா
வாங்குவதை நாகரீகமாகக் கருதுவதும் பாலின் வாசத்தை மறைக்க இதுவரை எதுவுமே கண்டு பிடிக்கப்படவில்லையா என்பதை
அறியாமை.
எனவே வெளிநாடுகளில் பல மாதங்களுக்கு முன் கறக்கப்பட்ட பால் செயற்கை சுவையூட்டிகளுடன் சுவை யூட்டப்பட்டு கவர்ச்சியான பைக்கற்றுக்களில் அனுப் பப்படும் போது அவற்றிற்கு ஏமாறாமல் சந்தையில் காணப்படும் தேயிலை, கொக்கோ பவுடர், வெனிலா என்பவற்றில் யாதேனு மொன்றைச் சேர்த்து மனம் விரும்பி அருந்தும் வகையில் பிள்ளைகளின் கையில் அது வழங்கப்படுமாயின் நெடுங்காலமாகப் பின்பற்றப் படும் ஏமாற்றம் நிச்சயமாக நிறுத்தப்படும். இயற்கையான பால் ஓர் நிறையுணவு என்பதை மறந்து விட வேண்டாம்.
பாலைவிற்று புகையை உறிஞ்சும் தகப்பன்மாரும் வெற்றிலை சுவைக்கும் தாய்மாரும் இவ்விடயத்தைப்
அகவிழி ஜனவரி 2013

வகை உணவுகளை
த்தை வளர்த்தல்
.in.Nursing)
புரிந்து கொள்வார்களாயின் மேலும் பல சுகாதாரப் பிரச்சினைகள் குறைவடையும்.
அடுத்ததாக பழவகைகளைப் பற்றி நோக்குவோம். வெளிநாடுகளிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களிற்கு எம்மிடையே அதிக கிராக்கி நிலவுவது வழமை. இது வெள்யைர்களிடமிருந்து பெறப்பட்ட தொற்றுநோயா எனச்சிந்திக்குமளவிற்கு வேரூன்றிவிட்டது. பிள்ளை சிறியவனாய் இருக்கும் போது அப்பா யிடநஇ ழுசயபெநஇ புசயிநள எனக் குளிர் குறையாத பழங்களையே வழங்கி அவனைப் பழக்கிக் கொள்வதால் பெரியவனாகும் போது நம்நாட்டுப் பழங்கள் அவனுக்கு உகந்ததாகவோ, கனியுப்புக்கள் செறிந்ததாகவோ அவனுக்குத் தென்படுவ தில்லை. எனவே சிறு பராயத்திலிருந்தே நம் நாட்டுப் பழங்களான மா, பலா, வாழை, தோடை, விளா, கொய்யா, ஆனைக்கொய்யா, பப்பாசி, அன்னாசி, பூசணி (Sugar melone) என்பன பற்றிய போதிய அறிவு பாடசாலை ஆசிரியர் மூலமாகவேனும் வழங்கப்படுதல் வேண்டும்.
மேலைநாட்டுப் பழங்களுடன் ஒப்பிடும் போது இவற்றிலும் போசணையில் வேறுபாடில்லை என்பதை அவர்களுக்கு விளங்க வைத்தல் வேண்டும்.

Page 35
மற்றைய மிக மோசமான பழக்கமாக பாடசாலை விட்டுச் செல்லும் போது ஐஸ்கிறீம் பைகள், மென்பானப் போத்தல் என்பவற்றை அதிகமாக மாணவர்கள் வாங்கு வதை காணலாம். அவற்றில் சீனியையும் நீரையும் தவிர எந்தவொரு ஊட்டச்சத்துக்களும் காணப்படமாட்டாது. ஆகவே அவற்றை விட இயற்கையாகக் கிடைக்கும் செவ்விளநீர் (King Coconut) பலமடங்கு சிறந்தது. இவ்வாறு
11ா: படபட 41 - 44 பாகம்
மென்பானங்களைக் குறைத்து செவ்விளநீர் போன்ற இயற்கையான பானங்களை அருந்த அவர்களைப் பழக்குவோமாயின் உள்நாட்டு உற்பத்திகள் அதிகரிப்பதுடன் மேலதிகக் கலோரிகளால் உடல் ஊட்டம் பெற்று அதிக உடல் நிறை பெறப்படுவதையும் கட்டுப்படுத்திக் கொள்ள
முடியும்.
அடுத்ததாக காலை உணவாக எடுப்பதற்கு நம் நாட்டில் ஏராளமான தானியங்கள் விளைகின்றன. பயறு, கவ்பி, கடலை, உழுந்து எனப் பல பெறுமதியான புரதச் சத்துமிகு தானியங்கள் விளையினும் கூட மாணவர்கள் உடனடி உணவுப் பண்டங்களை (Junk Food) நாடுவது மலிவாகிவிட்டது. கோதுமை மாவினால் செய்யப்பட்டு பலநாட்கள் குளிரூட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டு உடனே எண்ணெயில் பொரித்து விற்கப்படும் விரைவூண்களை விட நம் நாட்டு தானியங்கள் சிறந்தவையென்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
அன்றே அறுக்கப்பட்ட மாமிசங்கள் போதியளவு கிடைக்கப்பெறுகின்ற அதேநேரம் Sausages, Meat balls. Fishballs, Jack Mackeral என இரசாயன பழுதடையாமல் பாதுகாக்கும் பொருட்கள் (Chemical Preservatives) சேர்க்கப்பட்டவற்றை வாங்கிச் சமைப்பது என்பது பெற்றோர் செயற்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது மாதிரிகை (Model) யாக
33

செயற்படுவதற்கு ஆதாரமாயமைய பிள்ளைகளும் தொடர்ச்சியாக அதனையே பின்பற்றுகின்றனர்.
மாணவர்களுக்கு சிறு வீட்டுத்தோட்டமொன்றை அமைக்க உதவி செய்வதன் மூலம் வீட்டிலுள்ள அனைவருக்கும் பசுமையான மரக்கறிகள் கிடைப்பதுடன் அதன் இனிய தோற்றம் காட்சியின் மூலம் (Horriculture)
பிள் ளையின் உள விருத்தியும் சீராக இடம் பெறும். தலைநகரில் கூட வீட்டுத் தோட்ட மொன்றை அ  ைம க கு ம் மு றை க ள் - ப ல விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உரிய அதிகாரிகளை அணுகி போதிய தகவல்களைப் பெற்று பயனடைய முடியும்.
பாடசாலைகளில் சுகாதாரமும் உடற்கல்வியும் என தனியானதொரு பா ட ம க ற ப க க ப் ப டி னு ம அப் பாடத்திற் கென பயிற்றப் பட்ட ஆசிரியர்களின் தீவிர பற்றாக்குறையால் மாணவர்களுக்குப் போசணை பற்றிய அறிவு சென்றடைவது மந்தமாகவே நிகழ்கின்றது. அத்துடன் போசணை பற்றி போதிய அறிவுடையவர்களான
மருத்துவர்கள், போசணை விஞ்ஞானிகள், தாதியர், சுகாதாரப் பரிசோதகர் ஆகியோரின் வழிகாட்டல் வகுப்புக்கள் இடம்பெறாமையும் பெரும் குறைபாடாகவே கருதப்படுகின்றது. சுகாதாரப் பிரிவினரின் சிகிச்சைகள், தடுப்பூசியேற்றல், என்பன சரியாக நடைபெற்ற போதும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடைபெறுவது அரிது.
எனவே இயற்கையை நேசிக்கும் மாணவ சமூகமொன்றை ஆசிரியர்களால் உருவாக்க முடியுமாயின் அதன் மூலம் அவர் களது நலம் (Health) பெருகி நோய்நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ ஆசிரியர்கள் செய்த அரிய சேவையாகவும் அமையும்.
-- Anthikad (2009) Nutrition and Biochemisty For Nurses
(1st ed). India, Jaypee Brothers Mendical Publisher.
Open University of Srilanka (1995), Nutrition, (1st ed) Nawala, Open University Press. டாக்டர். சு. பேரின்பநாதன் (2008), வாழ்வியல்கல்வி (1ம் பதிப்பு) கொழும்பு, லங்கா புத்தகசாலை
வெளியீடு.
மொழிப்பாடத்தில் மாணவர்களை மதிப்பீடு செய்தல்
இரா. விஜயராகவன்
அகவிழி ஜனவரி 2013

Page 36
வன்னி பெருநிலப்பரப் மக்களிடையே நிலவும்
சிங்களத்தி Department of I
தமிழில் 1. நீங்கள் போர்நிகழ்ந்த காலந்தொடக்கம் வன்னியில்
சேவைசெய்பவர் எனும் அடிப்படையில், அங்கு மீள்குடி யேற்றப்பட்ட மக்களின் கல்வி பற்றி யாது கூற விரும்புகின்றீர்கள்?
2010ம் ஆண்டு தொடக்கம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. உணவு மானியங்கள், வீட்டுத்திட்டங்கள், அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் சேவைகள் என பல செயற்றிட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன. எனினும் கல்வித்துறையைப் பொறுத்தவரையில் பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு மீள இயங்கத் தொடங்கியுள்ளன என்று மட்டுமே என்னால் கூற முடியும். ஏனெனில் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் பாடசாலை செல்லவேண்டிய வயதுடைய சிறார்கள் கூட்டங்கூட்டமாக பாதைகளில் விளையாடித்திரிவது தென்படுகின்றது. அவர்களில் சிலர் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொலிஸாரினால் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதும் அவர்கள் செய்த திருட்டுச் சம்பவங்கள் அகப்படுவதும் அங்குமிங்குமாய் நடந்தவண்ணமுள்ளது. இவர்களை அறவே பாடசாலை செல்லாதோரும், இடைவிட்டு பாடசாலை செல்வோரும், வறுமையினால் புத்தகம், கொப்பி வாங்க வசதியின்றித் தவிப்போர் என பல வகைகளில் வகைப்படுத்த முடியும். அரச சார்பற்ற நிறுவனங்களினால் பாடசாலைப் பைகள், புத்தகங்கள், மிதிவண்டி என்பன வழங்கப்பட்ட பிள்ளைகள் கூட பாடசாலை செல்லாமலிருப்பதையும் அப்பகுதி மக்களுடன் உறவாடும் போது தெரியக்கிடைக்கின்றது.
2. இவ்வாறான கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களாக
நீங்கள் இனங்கண்ட விடயங்களுண்டா?
ஆம். இங்கு நிலவும் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமானதும் பாரதூரமானதுமான பிரச்சினை யாதெனில் பிள்ளைகளின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரும் அல்லது உறவினர்களும் சேர்ந்து யுத்தம் நிலவிய காலத்தில் இறந்து, காணாமல்போய், ஊனமற்று காணப்படும் நிலையாகும். இதனால் பெற்றோரின் மனப்பாங்கு இன்றும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைப்பற்றி சிந்திக்கின்றதே தவிர அவர்களதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப்
அகவிழி ஜனவரி 2013

பில் மீள்குடியேற்றப்பட்ட
கல்விசார் பிரச்சினைகள்
ல்ெ: Mr. Janaka Disaster Management
": A.A. Azeez
நேர்காணல்.....
பற்றி சிந்திக்குமளவு முன்னேறவில்லை. இதனால் பிள்ளை பாடசாலைக்கு சென்றாலும், செல்லாவிடினும் பெற்றோருக்கும், பாதுகாவலருக்கும் கவலையில்லை.
அடுத்ததாக இங்கு வாழும் பெற்றோரின் கல்வி மட்டமும் தாழ்நிலையில் காணப்படுவதால் கல்வியின் பிரதிபலன்கள் பற்றி பெற்றோருக்கும் போதிய அறிவில்லை. இதனால் பாடசாலை செல்லாத பிள்ளையை கண்டிக்க பெற்றோர் தவறிவிடுகின்றனர்.
அடுத்ததாக பெற்றோர் தற்போது ஆரம்பித்திருக்கும் விவசாய நடவடிக்கைகளின் போது உணவு - பானங்களை இடம் மாற்றிட பிள்ளைகளைப் பயன்படுத்தும் போது அவரால் அதிகளவு நேரம் வேலைசெய்ய முடியுமென்பதும், நேரவிரயம் குறைவாகையால் அதிக வருவாய் கிடைக்குமெனவும் நம்பி செயற்படல்.
கள், மதுபானம் என்பன உயரளவில் பயன்பாட்டிலுள்ளன.
மற்றுமொரு தீவிர பிரச்சினையாக கணவனை இழந்த மனைவிமார் (விதவைகள்) சட்டரீதியாக மறுமணம் புரியாமல் வேறோரு ஆணுடன் கூடிவாழும் நிலையும் காணப்படுகின்றது. கூடிவாழும் போது கர்ப்பமுற்ற செய்தியை பொறுப்பற்ற கணவன் தெரிந்து கொண்டதும் அவன் பிரதேசத்தை விட்டு வெறியேறிவிடுகிறான். இதனால் பிறக்கும் பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுக்க தகப்பன் யாருமில்லை. அதேபோன்று இளம் மங்கையரையும் ஏமாற்றி சில மணம்புரிந்த கயவர்கள் திருமணம் புரிய முன்னரே கூடி வாழ்கின்றனர். இவ்வாழ்வில்
34

Page 37
பிறக்கும் பிள்ளைக்கும் தகப்பனில்லை. பெட்டைக்கு கணவனுமில்லை. கடைசியாக, இப்பிள்ளைகளைக் கவனிக்க வேறு யாருமில்ல. இந்நிகழ்வு அநாதையாகும் வீதத்தை அதிகரிக்கின்றது. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்பட்டிருக்கும் நிலத்தினுள் அத்து மீறிப் பிரவேசிக்கும் பிரதேசவாசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. இவர் அத்துமீறி வேலியமைத்து தனது காணியென உரிமைபாராட்டும்போது அப்பெண் அதுபற்றி முறையிட பல இடங்களுக்குச் செல்லவேண்டியிருப்பதால் அவளது பிள்ளைகளின் கல்வி பெருமளவு பாதிப்படைந்துள்ளது.
- இதுபோன்ற நிகழ்வுகளை நீதிமன்றில் வருடக்கணக்கில் விசாரணை செய்வதைவிட அரச தரப்பு நேரடியாகத் தலையிட்டு உடனடியாக உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையும் பெரும் குறைபடாகும். இறுதியில் அப்பெண் வாழ வழியின்றி வசிக்க இடமின்றி அல்லலுறும்போது வயிற்றுப்பசியை விட கல்வி முக்கியம்பெறாமை நியாயமான விடயமுங்கூட.
3. பாடசாலை செல்வோருக்கு காணப்படும் பிரச்சினைகள் வேறு ஏதும் உண்டா?
ஆம். நாம் ஆய்வுரீதியாக எந்த செயற்றிட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி சென்றுவரும் போது சில பிரச்சினைகளை என்னால் இனங்காண முடிந்தது. அவற்றில் ஒருசில வருமாறு.
பாடசாலையிலுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை போதியளவில் காணப்பட்ட போதிலும் பாடங்களுக்கென பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் எனும் அடிப்படையில் நோக்கும் போது தீவிர பற்றாக்குறை நிலவுகின்றது. பாடசாலையில் வருடாந்தம் ஏற்பட வேண்டிய அபிவிருத்தியைக் காண முடியவில்லை. காணப்பட்ட கட்டடங்களும், வளங்களும் காணப்படுகின்றமை. அரச கல்வித்துறைக்கான கண்காணிப்பு சரிவர இடம்பெறத் தொடங்கவில்லை. பிள்ளைகளுக்கு தூர இடங்களிருந்து பாடசாலைக்கு வருவதற்கு அரச பஸ் எதுவும் சேவையிலில்லை. அதிபர் கற்பித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டியிருப்பதை அவரின் கடமையை சரிவர நிறைவேற்ற முடியாமை. இது பொதுவாக ஆசிரியர்களின் லீவு காரணமாக இடம்பெறுகின்றது.
4. பொதுவாக பிள்ளைகள் அனைவருக்கும் சம கல்வி
வாய்புக்களை வழங்குவதற்கு நீங்கள் முன்வைக்கும் யோசனைகள் யாவை?
முதலாவதாக பெற்றோரையும், பாதுகாவலர்களையும் கல்வியின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வை
35.

எற்படுத்துவதற்கு கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து அவர்களை தெளியப்படுத்தல் வேண்டும்.
அடு த் த தா க அ வர் கள் முன் வைக் கு ம் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை உரிய நேரத்தில், போதிய அளவில் வழங்குதல் வேண்டும். வசதிகள் வழங்கிய பின்னரும் கவனயீனமாய் இருப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கையெடுத்தல் வேண்டும்.
அடுத்ததாக இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு புள்ளிவிபரங்கள். கல்வித்திணைக்களம், அரச நிர்வாக சேவை, காவல்துறை என்பவற்றிடம் ஒப்படைக்கப்பட்டு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும். கல்விசார் பிரச்சினைகளை உருவாக்கும் மாற்று மூலமான கலாசார சீரழிவுகள், கூடிவாழ்தல், சிறுவர் துஷ்பிரயோகம், என்பவற்றைக் கட்டுப்படுத்தல் வேண்டும். இதற்கு ரயில் பாதை நிர்மாணிக்கும் பணிகள், பாதை அபிவிருத்திப் பணியில் ஈடுபடுவோர், வேறு பிரதேசங்களில் இருந்து வருகைதந்து இவ்விடயங்ளை ஒரு பொழுது போக்கக் செய்வோர் என்பவர்களைக் கண்டு நன்கு அவதானித்து முன்னர் பெறப்பட்ட பிடியாணைகள் (arrest warrant) மூலம் தீடிரென கைது செய்தல் வேண்டும். இதில் இந்தியப் பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.
5. கல்வி மேம்பாட்டில் தமிழ் கல்வி சங்கங்களின் செயற்
பாடுகள் எத்தகைய நிலையை அடைந்துள்ளன?
பொதுவாக தொண்டர் நிறுவனங்கள் பொதிகளைச் சுமந்து வந்து வழங்கிவிட்டு காட்சிப் படமாக்கிக் செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஆனால் எந்தவொரு கல்விசார் தொண்டர் நிறுவனமும் ஆய்வுகளையோ, அறிவுறுத்தல் கருத்தரங்குகளையோ, நிதியுதவிகளையோ செய்ததாக எந்தச் செய்தியும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே நான் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் விடுக்க விரும்புகின்றேன். அதாவது தமிழர் பிரதேசமென்பதால் தமிழ் நிறுவனங்கள் முன்வந்து இப்பிரச்சினைகளை தீர ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளையெடுப்பதற்கு ஒரு போதும் தளராத மனத்துடன் தாமதமின்றி செயலில் இறங்க வேண்டும். இவ்வாறான உடனடி செயற்பாட்டால் பிரதேச மக்களும் நாடும் நிம்மதியை அனுபவிப்பதுடன் அச்சிறார்களின் எதிர்காலமும் ஒளிமயமானதாக அமையும். ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் இலகுவாக இப்பணியை முன்னெடுக்க முடியும்.
அகவிழி ஜனவரி 2013

Page 38
சமூக பொருளாத கல்வியின் தற்பே
இதழ் 89இன் தொடர்ச்சி... தற்பொழுது பாடசாலைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன
தேசிய மற்றும் நவயோதயப் பாடசாலைகள் பிரதேசச் செயலாளர் பிரிவினடிப்படையில் பரம்பியுள்ள விதம் இலங்கைப்படத்தில் தரப்பட்டுள்ளது.
Distribution of National and Navedya" schools by divisional secretariat dislovas
இது08
பெ
தோற Prences
Nாத்தி7 மய்க உபரிர் நீgா திவர்
F%Aாதித்தது சி"tiy
இரு Sateregasiwa
இலக
அரசாங்கப் பாடசாலைகளின் வலைப்பின்னலமைப்பு ஆரம்ப மற்றும் இடை நிலைப் பாடசாலைகளில் எல்லோருக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. ஆரம்ப மற்றும் இடைநிலைகளில் மாணவர் சேர்வுவீதம் 2004 இல் முறையே 98 சதவீதமாகவும் 78 சதவீதமாகவும் எடுத்துக்காட்டபப் ட்டுள்ளது.
நாட்டின் சராசரி ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவானது (20.8:1); இது 19:1 இலிருந்து (மத்திய
அகவிழி ஜனவரி 2013

-ார நிலைமையும் பாதைய அமைப்பும்
மாகாணம்) 23.7:1 வரை (வடமாகாணம்) வேறுபடுகின்றது. பாடசாலையின் சராசரிப் பருமன் ஏறக்குறைய 410 மாணவர் களைக் கொண்டதுடன் இதுவும் கிராம மற்றும் சனஅடர்த்தி குறைந்த மாகாணங்களில் 290 மாணவர்களிலிருந்து சனஅடர்த்திமிக்க மேல்மாகாண நகரங்களில் 624 வரை வேறுபடுகிறது. ஆயினும், சராசரி மாணவர் தொகையானது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. ஏனெனில் இலங்கையில் சராசரியாக 20 சதவீதமான பாடசாலைகள் 75 இலும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன.
அட்டவணை 2-5.1: மாகாண அடிப்படையில் பாடசாலைகள், மாணவர்கள், ஆசிரியர்கள்
| மாகாணம்
பாடாகத் தோசை
மாணவர் தொகை
ஆசிரியர் தோகை
மாடசாலைக்கான )
மாணவர் ராசரி மாணவர்
ஆசிரியர்
|வீகிதம் 524
33.2
மேல்
1374
1,477 1,13!
19.. 20.0
887
மத்திய தென் வட, கிழக்கு வடமேல் |வடமத்திய
இனவா சப்ரகமுவ | இலகதை
961 1,229 789
356.??! 314,265 312431 257,377 754.841 459 679 155,942 284.!!! 359.631 3,874886
38.972 27,309 23,598 10.864 15.617 24:44 12.308 14.53 18731 185,9
349 437 29 880 374 328 343 332 397
23.4 18.9 20.8 19.6 19.7 20.8
1,314 9,766
ஆதாரம்: கல்வியமைச்சு பாடசாலை குடிமதிப்பு
மூன்றாம்நிலைக் கல்வி முறைமை அரச மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள், தொழிநுட்ப மற்றும் தொழிற் கல்லூரிகள், மூன்றாம்நிலை நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. க.பொ.த. உயர்தரத்தில் பரீட்சைப் பெறு பேறுகள் அரச பல்கலைக்கழக அனுமதிக்கு அடிப்படையாக அமைகின்றன. தரம் 13 இனைப் பூர்த்தி செய்யும் ஏறக்குறைய 34 சதவீதத்தினர் மட்டும் மூன்றாம்நிலைக் கற்கைநெறிகளுக்கான வாய்ப்பினைப் பெறுகின்றனர். எல்லாமாக 15 பல்கலைக்கழகங்கள், திறந்த பல்கலைக்ககழகம் (OUSL) உயர் தொழில் நுட்பவியல் கல்விக்கான இலங்கை நிறுவனம் (SLIATE), 17 தேசிய கல்விக் கல்லூரிகள், 31 தொழிற் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் மூன்றாம்நிலைக் கல்வியை வழங்குகின்றன. தொழிற்பயிற்சி முறைமை தற்பொழுது கல்வியமைச்சின் கவனிப்புக்கு அப்பால் உள்ளதுடன் இது கல்வியமைச்சு இரு பிரிவுகளாக பிரிந்தமை காரணமாக ஏற்பட்டது.

Page 39
பெறுபேறுகளின் தற்கால நிலைமை
| வருடாந்தம் கிட்டத்தட்ட 300,000 மாணவர்கள் தரம் 1 இல் சேர்ந்து கொள்கின்றனர். தேறிய சேர்வு விகிதம் 98 சதவீதமாகவும் தரம் 5 இல் தேறிய பூர்த்தி விகிதம் 95 சதவீதமாகவும் உள்ளது. கட்டாய ஆரம்பக்கல்வி வட்டத்தின் முடிவில் பூர்த்தி செய்வோர் 83 சதவீதமாகும் (MOE 2004).
- 2004 இல் க.பொ.த. சாதாரணதரத்திற்கு அமர்ந்த பாடசாலைப் பரீட்சார்த்திகள் தொகை 299,511 பேராவர். அவர்களில் 134,906 (45.04%) க.பொ.த. உயரத் ரத்திற்குத் தகுதி பெற்றனர். இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுவது யாதெனில் 54.96 சதவீதம் சாதாரணதரத்திற்கு அமர்ந்த பின்னர் பாடசாலை முறைமையைவிட்டு விலகுகின்றனர். 2004 இல் க.பொ.த. உயர்தரத்திற்குத் தோற்றியோர் 199,652 (சகல பரீட்சார்த்திகளும்) பேராவர். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 108,357 பேர் (54.2 சதவீதம்) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறுகின்றனர். 91,295 பேர் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறாமல் 13 ஆந் தரத்தில் விலகுகின்றனர்.
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிபெற்றோர் தொகையில் 11.54 சதவீதம் (12,500) அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுகின்றனர். இன்னொரு
2,500பேர் (2.31 சதவீதம்) தேசிய கல்விக் கல்லூரிகளில் முன்சேவை ஆசிரியராக அனுமதி பெறுகின்றனர். SLIATE ஆனது ஏறக்குறைய 2,000 (1.85) பேருக்கு வருடாந்தம் அனுமதி வழங்குகிறது. ஏனைய உயர்தொழில் மற்றும் ஒத்த - உயர்தொழில் கற்கைநெறிகளுக்கான உள்ளீர்ப்பு கிட்டத்தட்ட 12,000 (11.07) பேராவர். இதுபோன்று 34,000 (31.38) மாணவர்கள், க.பொ.த. உயர் தரத்தில் தகுதி பெற்று பல்கலைக்கழகங்களிலும் ஏனைய மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களிலும் சேர்கின்றனர்.
37)

மேலே கூறிய நிலைமைகளின்படி ஏறக்குறைய 165,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரணதரத்திலும் 74,000 மாணவர் கள் க.பொ.த. உயர் தரத்திலும் தகுதி பெறவில்லையென்றும் வருடாந்தம் பாடசாலை முறைமையிலிருந்து விலகுகின்றனர் எனவும் மதிப் பிடப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தொழிற்சந்தையில் சேர்ந்து கொள்கின்றனர். அதாவது, இவ்விரு குழுக்களையும், அரசாங்க உயர் கல்வி முறைமையிலும் பல்வேறு கட்டங்களில் பாடசாலையைவிட்டு விலகுவோரையும் மாறிவரும் வேலையுலகுக்குப் பொருந்தும் வகையில் ஆயத்தம் செய்தல் கல்வியமைச்சின் பொறுப்பாகும். நாட்டின் வளர்ந்து வரும் சமூக - பொருளாதார அந்தஸ்து உயர் அறிகைத்திறனுடைய ஆளணிகளை வேண்டிநிற்கிறது. ஆயினும் பாடசாலையை விட்டுச் செல்வோர் பலர் உயர் போட்டியுள்ள தொழில் சந்தைக்குப் பொருந்தும் அத்தகைய திறன்களைக் கொண்டிருப்பதில்லை. இது எடுத்துக்காட்டுவது யாதெனில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வசதிகள், கலைத்திட்டம் மற்றும் கற்றல் - கற்பித்தல் முறையியல்கள் நவீனமயப்படுத்தப்படுதல் வேண்டும்; பல்வேறாக்கம் செய்யப்படுதல் வேண்டும்; விரிவுபடுத்தப்படுதல் வேண்டும் என்பதாகும்.
ஆளுகைச் சட்டகம்
கல்வி ஆளுகைச் சட்டகமானது ஒரு வகையில் சிக்கலானது; மைய விளக்கம் கடமைகளையும்
அதிகாரங்களையும் மத்திய மற்றும் 8 மாகாண சபைகளிடையில் பகிர்தல் பற்றிய கூறுகளையும் இணைக்கிறது. மத்திய அரசாங்கம் சகல மட்டங்களிலுமான தேசிய கல்விக் கொள்கைக்குப் பொறுப்பானது. ஆயினும் மாகாண அதிகார பாடசாலை முறைமை நிருவாகத்தில் முக்கிய வகிபங்கினை ஏற்கின்றன. சகல மாகாணச்
அகவிழி ஜனவரி 2013

Page 40
செலவுகளில் அரைவாசிக்கு மேல் கல்வித் தேவைகளுக்குச் செலவாகின்றன.
பாடசாலை அதிபர்கள், பகுதித் தலைவர்கள், மற்றும் ஆசிரியர்கள் போன்ற முதல் நிலைச் சேவை வழங் கு வோரை வலுவூட்டுவதற் கு , விசேடமாக பாடசாலைகள் போன்ற தனிப்பட்ட கல்வி நிறுவனமட்டத்தில் கல்வி முகாமைத்துவத்தினை மேலும் பரவலாக்குதலும், பாடசாலை விளைதிறனையும் பெறுபேறுகளையும் அதிகரிப்பதற்கு உள்ளூர்ச் சமூகங்களை நெருக்கமாக ஈடுபடுத்துதலும் நடைமுறைக் கொள்கைச் சிந்தனையாகும்.
மத்திய அரசாங்கத் தொழிற்பாடுகள்
மத்திய அரசாங்கத்தில் கல்வித் தொழிற்பாடுகள் கல்வியமைச்சினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. அது பின்வரும் பொறுப்புகளை ஏற்றுள்ளது.
கொள்கைசார் வழிகாட்டல்களை வழங்குதல். நன்கொடையாளரை இயைபுபடுத்துதல். தேசிய மட்டத்தில் திட்டமிடல். கண்காணித்தல், மதிப்பிடுதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
தராதரத்தை உறுதிசெய்தல்.
ஆசிரியர் பயிற்சியும் அபிவிருத்தியும்
தேசிய பாடசாலைகளை நிருவகித்தல்.
பாடசாலைச் சீருடை, பாடசாலை உணவு மற்றும் போக்குவரத்து போன்ற மானியங்களை வழங்குதல். விசேட கல்வி, முறைசாராக்கல்வி, வளர்ந்தோர் கல்வி, நூலகம் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற பல கல்விசார் அபிவிருத்தி ஊக்குவிப்புகளை நடத்துதல். தேசிய கல்வி நிறுவகம் (NIE), பரீட்சைத் திணைக் களம் (DOE), கல்வி வெளியீட்டுத் திணைக்களம் (DEP) ஆகிய ஏனைய மத்திய அரசாங்க நிறுவனங்கள் முக்கியமான கல்வித் தொழிற்பாடுகளை மேற் கொள்ளும். மத்திய அரசாங்கத்தின் இத்தகைய தொழிற்பாடுகளாவன:
ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக் கலைத் திட்டத்தைத் தயாரித்தல்.
அதிபர்களுக்கும் ஏனைய கல்வி நிருவாகி களுக்கும் தொழின்மைசார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் கற்கை நெறிகளையும் நடத்துதல்.
அகவிழி ( ஜனவரி 2013

பொதுப் பரீட்சைகளை நடத்துதல். பாடநூல் களையும் துணைநூல்களையும் நேரடியாக அல்லது தனிப்பட்ட வெளியீட்டாளர் மூலம் பிரசுரித்தலும் அவற்றைச் சகல பாட சாலைகளுக்கும் பிரிவேனா மாணவர்களுக்கும்
இலவசமாக விநியோகித்தலும். இத்தகைய சேவை விநியோகமானது அநேகமாக மத்திய மற்றும் மாகாண அரசாங்கக் கல்வி உத்தி யோகத்தரின் கூட்டுமுயற்சியாகும். இவை மத்திய மற்றும் மாகாணப் பொறுப்புகளின் முகாமைத்துவ அமைப்பு நடைமுறைகளுக்குள் அடங்குகின்றன.
மாகாண மட்ட தொழிற்பாடுகள்
அரசியல் யாப்பின் 13வது சீர்திருத்தத்துடன், கல்வி ஒரு பரவலாக்கப்பட்ட தொழிற்பாடாக மாறியது. ஆகவே மாகாணசபைகள் பாடசாலை முறைமையில் முக்கிய வகிபங்கினை ஏற்கின்றன. மாகாணக் கல்வி அமைப்பானது மாகாணக் கல்வியமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், வலயக் கல்விப் பணிமனை மற்றும் கோட்டக் கல்விப் பணிமனைகள் என்பவற்றைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஏறக்குறைய 10,000 பாடசாலைகள், மற்றும் 9,727 அல்லது 97 சதவீதம் அரசாங்கப் பாடசாலைகள் முக்கிய அமைச்சினால் நிருவகிக்கப்படும். 324 தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் 8 மாகாண சபைகளால் நிருவகிக்கப்படுகின்றன. அவற்றுள் 94 வலயக் கல்விப் பணிமனைகளும் அடங்கும். மாகாண சபைகள் கல்வித் திட்டங்களையும் வரவு செலவுத் திட்ட ங்களையும் உருவாக்குகின்றன; கல்வி நிருவாகிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை மாகாண மட்டத்தில் நியமிக்கின்றன; பணிக்கமர்த்துகின்றன.
மாகாணக் கல்வித் திணைக்களங்கள் தமது பாடசாலைகளில் வலய, கோட்டக் கல்விப் பணிமனைகளின் உதவியுடன் சேவைக்காலக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வழமையான பாடசாலைக் கண்காணிப்பு, மேற்பார்வை என்பவற்றின் மூலம் கல்வித்தராதரத்தினை உறுதிசெய்ய முயற்சிக்கின்றன; இப்பாடசாலைகள் அவர்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை. ஏனைய விடயங்களைப் பொறுத்தவரையில், கல்வியிலும் கூட, நிதி ஆணைக்குழுவானது (FC) மாகாணங்களுக்கான வள ஒதுக்கீட்டினை உறுதி செய்கிறது.
நன்றி கல்வி அமைச்சு
கல்வித்துறை நிகழ்ச்சி திட்டமும் அபிவிருத்தி சட்டகமும்

Page 41
மொழிப்பாடத்தி
மதிப்பீடு
இரா. வி
தேர்வு அல்லது சோதனை என்பது அந்தரங்கமானது, மறைபொருளானது என்ற எண்ணம் பலரிடையே நிலவுகிறது. மேலும் கடினமான வழிமுறைகளை கையாண்டுதான், தகவல்களை, பொருள்களை, செய்திகளைச் சோதித்து அறிய முடியும் என்பது பரலரது எண்ணம். எப்படி இருப்பினும் வாழ்க்கையில் நாம் அனைவருமே தேர்வு அல்லது சோதனைக்கு உள்ளாவது தவிர்க்க இயலாது. அதே போன்று நாமும் பிறவற்றை சோதித்து தேர்ந்தெடுப்பதும் நடைமுறையில் உள்ளதே. உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவரிடம் செல்லும் போது அவர் நமது உடலைச் சோதிப்பதோடு, இரத்தம், சிறுநீர் போன்றவற்றையும் சோதித்து நோயினைக் கண்டுபிடிக்கிறார். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியையோ, கணினியையோ, துணிவெளுக்கும் எந்திரத்தையோ, மின்சாதனத்தையோ வாங்குவதற்கு முன்னர் பலரிடம் ஆலோசனை கேட்டு, தகுந்தவர்களைக் கொண்டு சோதித்தறிந்து அவற்றை நாம் வாங்குகிறோம். எனவே வாழ்க்கையில் தேர்வு, சோதனை ஆகியவற்றிற்கு நாம் ஆளாவதும் அவற்றை நாம் மேற்கொள்வதும் இயல்பானவை, தவிர்க்க இயலாதவை.
இனி மொழித்தேர்வு பற்றிச் சிந்திப்போம். மொழி தகவல் பரிமாற்றத்திற்கு உரிய ஒரு சாதனம் என்ற வகையில், உடல் அசைவு, முக மாற்றங்கள், கைகளைக் கொண்டு காட்டும் சைகைகள் ஆகியவற்றையும் மொழியாகக் கொள்ள இயலும். இருப்பினும் சாதாரண மொழி என்பதைக் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய முக்கியமான கூறுகளைக் கொண்டதாக நாம் கருதுகிறோம். இஃது உண்மையும் கூட. இவற்றில் தவறு நேர்ந்தால் அதன் விளைவுகள் நம்மையும் நாம் சார்ந்துள்ள சமூகத்தையும் பெருமளவு பாதிக்கும். எனவே மொழித் தேர்வு அல்லது சோதனை என்பது மேற்கூறிய மொழிக்கூறுகளில் தவறு நேராவண்ணம் அவற்றைச் செம்மைப்படுத்துவதாக அமைய வேண்டும்.
தேர்வு அல்லது சோதனை
கற்றல்-கற்பித்தல் செயல்களில் அல்லது அனுபவங்களில், தேர்வு மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆல்டெர்ஸன் (1987) கருத்துப்படி, மொழியைக் கற்பிக்கும் ஒவ்வொரு
39

ல் மாணவர்களை | செய்தல்
ஜயராகவன்
நிலையிலும் தேர்வு இன்றியமையாததாகிறது. துவக்கத்தில் கற்பவரின் முன்னறிவைச் சோதிக்கவும், கற்பிக்கும் போது கற்பவரின் முன்னேற்றம் பற்றி அறியவும் கற்பித்த பின்னர் கற்றது எவ்வளவு என்பதை அறியவும் தேர்வு பெருமளவு உதவுகிறது.
கற்பித்தலுக்கும் தேர்வுக்கும் இடையே உள்ள உறவு தவறான கற்பித்தல் முறைகளைச் சரிசெய்வதாக அமையவேண்டும். மேலும் கற்றல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதா, அதற்கேற்ப கற்பித்தல் செயற்பாடு பயனுற மேற்கொள்ளப்பட்டதா என்பதை அறியவும் தேர்வு துணை புரிகிறது. (ஹூக்ஸ் 1989)
50)
மரபுவழிப்பட்ட தேர்வு வகைகள்
கீழ்க்கண்டவற்றை சாதாரணமாக நடைமுறையில் இருந்து வரும் மரபுசார்ந்த தேர்வு முறைகளாகும்.
அடைவு சோதனை (Achievement / Attainment Test)
இத்தேர்வு முறை வழியே மாணவர்கள் தங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததை எந்த அளவுக்கு அறிந்து / புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய இயலும். தரப்பட்ட வினாக்களைக் கொண்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கற்பித்த பாடங்களில் இத்தேர்வு அமையும். பொதுவாக மாணவர்களின் கற்றல் வெளிப்பாடுகளை (Learning outcomes) அடைவுச் சோதனையின் வழியே அறிந்து கொள்ளலாம்.
முன்னேற்றச் சோதனை (Progress Test) இஃது ஒரு திட்டமிடப்படாத அடைவுச் சோதனை. கற்பிக்கும் நிகழ்ச்சியின் போதே பாடத்திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், நடத்தப்பெறும் ஒரு தேர்வு முறையாகும்.
தகுதிச் சோதனை (Proficiency Test)
மாணவர் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு பணிக்கு அல்லது கல்வித்திட்டத்திற்கு தகுதியானவரா என்பதை நிர்ணயிக்கும் தேர்வு இது. மொழிப்பாடத்தைப் பொறுத்த வரை மாணவரின் பொதுவான மொழித் திறன்களை அளவிட இத்தேர்வு நடத்தப்பெறலாம்.
அகவிழி ( ஜனவரி 2013

Page 42
நாட்டச் சோதனை (Aptitude Test) மாணவர் ஒரு குறிப்பிட்ட துறைக்கு அல்லது படிப்புக்கு எந்த அளவு தகுதியுள்ளவராக இருப்பார் என்பதை இச்சோதனை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
குறையறி சோதனை (Diagnostic Test)
மொழித்திறன்களில், மாணவர் எவ்வளவு அறிந்துள்ளார் இன்னும் அறிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு என்பவற்றை இச்சோதனை வாயிலாக அறிந்து கொள்ள இயலும். அஃதாவது மொழியறிவைப் பொறுத்தவரை மாணவரின் நிறை, குறைகளை இத்தேர்வு வெளிப்படுத்தும்.
மாண
Dள
தேர்வுகளால் மாணவருக்கு விளையும் பயன்கள். கல்வி கற்கும் காலத்தில் மாணவரின் முன்னேற்றத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்தல் மிகவும் முக்கியம். தேர்வின் முடிவுகள் மாணவர்களின் நன்மைக்காகப் பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும். கல்வித் திட்டத்தை வரையறுப்பதற்கு வேண்டிய தகவல்களை தேர்வு முடிவுகளிலிருந்து பெறலாம். மொழியாராய்ச்சி, மொழி கற்பித்தல், மொழித்திறன்களை அடைவதற்குத் தேவையான பயிற்சிகளை வடிவமைத்தல் ஆகியவற்றிற்குத் தேர்வுகளும் தேர்வு முடிவுகளும் பெருமளவு துணை புரியும். (பாச்மன் 1990) மாணவர்களுக்குத் தேர்வு பலவகைகளில் உதவி புரிகிறது. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.
தேர்வு மாணவர்களுக்கு வகுப்பறைச் சூழலில் ஆர்வத்தைத் தூண்டும். அவ்வப்போது தேர்வு சோதனைகளை எதிர் கொள்வதன் வாயிலாக மாணவர்கள் தமது தகுதியினை மேம்படுத்திக் கொள்ள ஈடுபாடும் முயற்சியும் மேற்கொள்ளுவார்கள். மொழித் தேர்வுகளின் வாயிலாக மாணவர்களின் மொழியாற் றலை, குறிப் பாக, பயன் பாட்டு மொழியறிவை மேம்படுத்த இயலும். மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை வைத்துக்கொண்டு விவாதிப்பதால் மாணவர்கள் தமது நிறை குறைகளை அறிந்து கொள்வர். பிழை உண்டாகும் இடங்களை அறிந்து திருத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது. மொழித்தேர்வுகள் பல்வேறு குறிக்கோள்களை எட்டுவதற்கு நடத்தப்படலாம். மாணவர்களின் மொழியாற்றலை / திறன்களை வளர்க்கவும், பிற பாடங்களில் மொழியை எவ்வாறு கையாள வேண்டும் என் பதை உணர்த்தவும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் மொழித்தேர்வுகள் பயன்படும்.
கயம்
அகவிழி ( ஜனவரி 2013

வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டின் வன்மை, மென்மைகளை அளந்தறியவும், மாணவர்களுக்கு மொழி கற்றலில் ஆர்வத்தைத் தூண்டவும் தேர்வு இன்றியமை
யாததாகிறது. இருப்பினும் சில நேரங்களில் தேர்வுகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. எனவே மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையடனும் நன்மையை உண்டாக்குகிற வகையில் மொழிப்பாடத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
தேர்வுகளால் ஆசிரியர் பெறும் பயன்கள்
பொதுவாகத் தேர்வுகள் ஆசிரியர், மாணவர் ஆகிய இரு சாரரின் முயற்சிகளை, அதாவது கற்பிக்கும் கற்கும் முயற்சிகளை அளவிடப் பயன்படுகின்றன என்பதே உண்மை. ஆசிரியர்களைப் பொறுத்தவரை கீழ்க்காணும் பயன்கள் விளைகின்றன எனலாம்.
கல்வித்திட்டத்தினைச் சீரமைக்கவும், பாடத்திட்டத்தின் குறிக்கோள்களை மதிப்பிடவும், கற்பிக்கும் முறைகளிலுள்ள நிறை, குறைகளை அறியவும், எந்தெந்த மொழித் திறன்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதைத் தீர்மானிக்கவும் தேர்வுகள் ஆசிரியர்களுக்கு வழி காட்டுகின்றன. மதிப்பீட்டு (Evaluation) முறைகளில் சீரமைப்பு செய்வதற்கும் தேர்வு உரிய பங்காற்றுகிறது. மேலும் கற்பித்தலில் தெளிவு/தெளிவின்மை, கற்றலில் மாணவர்களின் ஆர்வம்/ஆர்வமின்மை ஆகியவற்றைக்
காட்டும் கண்ணாடியாகத் தேர்வு விளங்குகிறது. எனவே கற்பித்தல், மதிப்பீடு செய்தல் ஆகிய இரண்டிலும் தேவையான மாற்றங்களை / சீரமைப்பை மேற்கொள்ளத் தேர்வு துணைபுரிகிறது எனலாம். மேலும் தன் மதிப்பீட்டின் வாயிலாக ஆசிரியர் தமது குறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களையவும், வகுப்பறையில் ஆசிரியர்-மாணவர் கருத்துப் பரிமாற்றம் சிறப்புற நடைபெறவும் தேர்வுகள் துணைபுரிய வேண்டும். அடுத்துப் பாடப் பகுதிக்கும் தேர்வுக்கும் இடையேயுள்ள தொடர்பு, கற்பித்தலுக்கும் தேர்வுக்கும் இடையேயுள்ள தொடர்பு ஆகியவற்றையும் ஆசிரியர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தேர்வுகளின் வாயிலாக ஆசிரியர் கீழ்க்கண்டவற்றிற்கு விடைகாண வேண்டியுள்ளது.
தேர்வுகள் கற்பித்தலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன? கற்பித்தலிலும் கற்பித்தல் முறைகளிலும் தேர்வுகளின் காரணமாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் யாவை?
40

Page 43
மொழி கற்றலில் தேர்வுகள் வாயிலாகப் பெற்ற - நன்மைகள் என்னென்ன? தேர்வுகளின் பின்னூட்டம் (feedback) ஆசிரியர், மாணவர் ஆகிய இருவருக்குமே பயனளிக்கிறது எனலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக நடத்தப்பெறும் தேர்வுகள், மாணவர், ஆசிரியர் இருவருக்குமே கற்றல்/ கற்பித்தல் முறைகளில் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளைப் பற்றிக் கூறும் வளர்முக மதிப்பீடாக (formative evaluation) அமையும். மாறாகத் தொகுப்பு மதிப்பீடானது (summative evaluation) ஆண்டின் இறுதியில் அல்லது படிப்பின் இறுதியில் மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பெண் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் அவர்களின் எதிர்காலக் கற்றல் திட்டத்தை வரையறுக்கவும் வகுப்பறைச் செயற்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன. ஆகவே தேர்வு, கற்றல், கற்பித்தல் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்றால் அது மிகையன்று. இதனால் தேர்வுகள் தேவையான சமயத்தில் அவ்வப்போது நடத்தப்பெறுவது இன்றியமையாததாகிறது.
மொழிப்பாடத்தின் தேர்வு அண்மைக்காலத்தில் மொழிப்பாடங்களைக் கற்பிப்பதில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் மொழியின் அமைப்பு மற்றும் இலக்கணக் கூறுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. ஆனால் தகவல் தொடர்பு வழிக் கற்பித்தல் முறைகள் பெருகிவிட்ட இக்காலத்தில் சமூக, உளவியல் முறையுடன் கூடிய மொழிப் பயன்பாடு பெரும் பங்கை வகிக்கிறது. இம்மாற்றம் மொழித்தேர்விலும் எதிரொலிக்கிறது எனலாம்.
மொழி அமைப்புக் கூறுகளை முதன்மைப்படுத்திய முந்தைய தேர்வு முறையை கரோல் (1961) தொடர்பற் பிரிநிலைத் தேர்வு (discrete - point test) என அழைக்கிறார். இவ் வகைத் தேர் வின் முக்கியமான குறைபாடு என்னவெனில் தேர்வில் ஒரு குறிப்பிட்ட வினாவை ஏன் வினவுகிறோம் என்பதற்குச் சரியான காரணம் கூற இயலுவதில்லை (ஸ்போஸ்கி 1985) பயன்பாட்டு நோக்கில் கற்பிக்கும் போது மொழியைக் குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்ய இயலும். இவ்வகைக் கற்பித்தலில் மொழியை எவ்வளவு பயன்பாடுகளில் ஈடுபடுத்த முடியும், மொழியின் வழியே எத்தகைய கருத்துக்களை எல்லாம் வெளிப்படுத்த முடியும் என்பவற்றைப் பட்டியலிட்டுக் காட்டக் கூடும். எனவே பயன்பாட்டு முறையிலான மொழி கற்பித்தல், தொடர்புத் தேர்வுகளுக்கு (communicative tests) வழிவகுத்து உள்ளது எனலாம்.
மொழித் தேர்வு என்பது மொழித் திறன்களைச் சுட்டிக்காட்டும் கருவியாக அமைகின்றது. இப்போதைய

தேர்வுகள், மொழியைப் பிறவற்றிலிருந்து தனிமைப்படுத்திக் காண்பதில்லை. கல்வி அமைப்பையும் சமூகத்தையும் மொழியுடன் இணைக்கின்ற வகையிலேயே இன்றைய மொழித் தேர்வுகள் அமைந்துள்ளன. மொழித் தேர்வில் மொழித் திறன்களையும் துணைத்திறன்களையும் சோதிப்பது முக்கியம். தற்போதைய தேர்வில் மொழியின் வடிவத்தை விட, மொழியின் பயன்பாட்டை மதிப்பீடு செய்வது முக்கிய பங்கை வகிக்கிறது எனலாம். அதாவது இன்றைய மொழித் தேர்வின் முக்கியமான குறிக்கோளாக விளங்குவது தகவல் தொடர்பில் மொழியின் பங்கை எத்தகையது என்பதை அளவிடுவதே. எனவே தனிப்பட்ட மொழித்திறன்களை அளவிடுகின்ற அதே நேரத்தில் தகவல் தொடர்புத் திறன்களை அளவிடுவதும் மொழித் தேர்வில் இன்றியமையாததாகிறது. சொற்கள், இலக்கணம், உச்சரிப்பு, தொடர்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருகிற அதே வேளையில் எண்ணங்களும் தகவல்களும் எந்த அளவிற்குச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதை அளவிடுவதும் மொழித்தேர்வின் மிக மக்கியமான குறிக்கோளாக விளங்குகிறது.
ஆசிரியர்களும் தேர்வும் கல்வித் திட்டத்தில் ஆசிரியர்களைப் பற்றிய முடிவு மேற்கொள்ளுவதற்கும் தேர்வுகள் துணைபுரிகின்றன. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கையில் அவர்களின் மொழித்திறன்களை உரிய தகுதித் தேர்வு (proficiency test) வழியே கண்டறிந்து, அவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு நடத்தப்பெறும் இத்தகுதித் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பெறும் தேர்விலிருந்து மாறுபட்டதாகும். மொழியின் எல்லாத் திறன்களிலும் பயன்பாட்டிலும் ஆசிரியர்கள் வல்லவர்களாக இருத்தல் இன்றியமையாதது. மேலும் கற்பித்தல் முறைகளிலும் சமூக - மொழியியல் அறிவிலும் ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சி இருக்க வேண்டும். அப்போதுதான் பாடம் தொடர்பாக மாணவர்களுக்குத் தோன்றும் ஐயங்களை அவர்களால் எளிதில் தீர்க்க இயலும். மொழித் தேர்வின் முடிவுகள் எதிர்காலக் கல்வி மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கும் துணை புரிபவை. ஒரு புதிய திட்டம் உருவாக்கப்படும் போது அதன் தேவை, பொருத்தம், அதனால் விளையும் பயன் ஆகியவற்றின் அடிப்படையில் அத்திட்டத்தை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. மொழித் தேர்வுகள் இதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எடுத்துக்காட்டாக அடைவுத் தேர்வுகள் (achievement test) பாடத்தின் குறிக்கோள்கள் எந்த அளவிற்கு அடையப்பெற்றிருக்கின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன. குறிக்கோள்களை அடைவதில் குறையேதும் இருப்பின்
அகவிழி ஜனவரி 2013

Page 44
அதை நீக்க மேற்கொள்ள வேண்டிய தொடர்பணியைத் தீர்மானிக்கவும் தேர்வுகள் துணை நிற்கும்.
ஒரு நல்ல தேர்வைத் தயாரிக்க, நிறைய நேரம் தேவைப்படும் என்பது உண்மையே. அதனால் தான் பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வு நடத்துவதைச் சுமையாகக் கருதுகின்றனர். சில ஆசிரியர்கள் தேர்வு என்பது மனிதநேயம் அற்றது என்ற எண்ணமும் கொண்டுள்ளனர். எது எப்படி இருப்பினும் பல ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த தேர்வை உருவாக்கி, வடிவமைக்கப் போதுமான பயிற்சி இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
மொழி பற்றியும் மொழி கற்றல் பற்றியுமான தற்போதைய புதிய கோட்பாடுகளை மொழி ஆசிரியர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். மாணவர்களிடம் விளைந்துள்ள மாற்றம், வளர்ச்சி, ஆகியவற்றை மதிப்பீடு
சிறுவர் நேயப் பாடசாலை அறிவுறுத் பாடசாலையொன்றின் சிறுவர் நேயத் தன்மையை விருத்தி செய் நேயப் பாடசாலை மாதிரியின் வெவ்வேறு அம்சங்களைச் சரிய வழிகாட்டும் வகையில் அறிவுறுத்தற் கோவையொன்றின் தேவை கைநூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் சிறுவர் ே தரமான ஆரம்பக் கல்வி தொடர்பாகச் செயற்படும் கொள்கை கொள்கை வகுக்கும்போது சிறுவர் நேயப் பாடசாலை அணுகும் செலுத்துவதற்கு இந்த அறிவுறுத்தல் கோவை வழிகாட்டும்.
அறிவுறுத்தல் கோவையின் குறிக்கோள்கள்
சிறுவர் நேயப் பாடசாலை மாதிரி தொடர்பான தத்துவம், ே
சிறுவர் நேயப் பாடசாலையின் சகல தரப்பினருக்கும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை அடைவதற்காகத் திட்ட
செயற்பாடுகளைச் ஒழுங்கமைப்பதற்காகச் சகல தரப்பினர்
சிறுவர் நேயப் பாடசாலைச் செயன்முறையைக் கண்காணி
அறிவுறுத்தல் கோவையின் உள்ளடக்கம்
சிறுவர் நேயப் பாடசாலையின் எண்ணக்கருக்கள் வெவ்வேறு பரிம கோவை ஏழு அத்தியாயங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட செயல் ரீதியான ஆண்-பெண் சமூக நிலைப்பாட்டுக்குத் துலங்குதல். பிள்ளைகளின் கற்றல் பேறுகளைப் பண்பு ரீதியில் விருத்தி பிள்ளைகளின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் காப்பையும் மாணவர்கள், குடும்பங்கள், சமுதாயம் ஆகியோரின் செயல் சிறுவர் நேயத் தொகுதிகள், கொள்கைகள், விதிமுறைகள் பாடசாலைச் சுய கணிப்பீடும் பாடசாலை அபிவிருத்தித் தி
சிறுவர் நேயப் பாடசாலைகளின் பிள்ளைகள் பெற்றோருக்
அர்ப்பணிப்பை மதிப்பர். ஆசிரியர்கள், மற்றும் பெற்றே
அகவிழி ( ஜனவரி 2013

செய்கின்ற வகையில் மொழித் தேர்வுகளின் பெரும்பகுதி அமைய வேண்டும் என்பது ஸ்கேஹன் (1989) கருத்து. மாணவர்கள் ஏற்கனவே அறிந்திருப்பதற்கு மேல் எந்த அளவுக்கு அவர்களை மேம்படுத்த முடியும் என்பதைத் தீர்மானிப்பதாகக் கல்வி முறை அமைய வேண்டும். இதற்குப் புதிய கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றின் நிறைகளையும் மதிப்பீடு என்பது கற்றல் - கற்பித்தலில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்குகிறது என்கிற உண்மையையும் ஆசிரியர்கள் நன்கு உணர வேண்டியுள்ளது.
தொடர்ச்சி அடுத்த இதழில்.............(மொழித் தேர்வுகளை வடிவமைத்தல்)
தற்கோவையொன்றின் அவசியம்
தல் என்பது ஒரு கூட்டான செய்முறையாகும். அதற்கு சிறுவர் பாக விளங்கிக் கொள்வது மிக முக்கியமானதாகும். இதற்கு வ ஏற்பட்டுள்ளது. இத்தேவையை நிறைவேற்றுவதற்காக இக் நயப் பாடசாலைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணமாகும். 5 வகுப்போரும், திட்டமிடுவோரும் வெவ்வேறு மட்டங்களில் முறை மூலம் முன்வைக்கப்பட்டுள்ள நியதிகளின்பால் கவனம்
காட்பாடுகள் உள்ளடக்கம் ஆகியவற்றை அறிமுகம் செய்தல்.
உணர்வூட்டல் சிறுவர் நேயப் பாடசாலையினால் அடைய மிடலும், தும் இயலுமையை விருத்தி செய்தலும்.
த்தல், மதிப்பிடலுக்காகச் சகல தரப்பினருக்கும் வலுவூட்டல்.
Tணங்களின் கீழ் பகுத்தாயப்படும் வகையில் இந்த அறிவுறத்தற்
உட்படுத்தல்.
 ெசெய்தல்.
உறுதிப்படுத்தல். > ரீதியான ஈடுபாடு. 1 மூலம் உதவி பெறல். ட்டமும் க்கும் ஆசிரியருக்கும் அன்பு காட்டுவர். ஆசிரியர்களின் றார் பற்றி உடன்பாடான வகையில் உரையாடுவர்.

Page 45
பிள்ளைகளின் அ பாதுகாப்பையும், கவனி
முதலாவது நியமம்
சுகாதாரம், கவனிப்பு, பாதுகாப்புத் தொடர்பாகப் பாடசாலை மட்டத்திலான கொள்கைகள் உண்டு
சிறுவர் நேயப் பாடசாலையொன்றில் சுகாதாரம், பாதுகாப்பு, கவனிப்புப் பற்றிய பாடசாலைக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கும். பாடசாலைச் சமூகத்தின் சுகாதாரப் பாதுகாப்பும் கவனிப்பும் உறுதிப்படுத்துவதைத் தடை செய்யும் அல்லது அவற்றுக்குத் தடையாக அமையும் காரணிகளைக் குறைவடையச் செய்து காணப்படும் சுற்றாடலை இணக்கமான சுற்றாடலாக விருத்தி செய்வதற்கு பாடசாலை சமூகத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் பாடசாலைக் சுகாதாரக் கொள்கைகள் எனப்படும்.
எடுத்துக்காட்டு
உக்காத பொலித்தீனின் உபயோகம் அதிகரித்தமையால் பாடசாலைச் சுற்றாடல் பாதகமான நிலையை அடைதல் ஒரு பிரச்சினையாகும்.
தீர்வுக்கான ஆலோசனைகள்
பொலித்தீன் உபயோகத்தைக் குறைத்துக் கொள்ளல்.
மீள உபயோகித்தல். மீள் சுழற்சிக்கு உட்படுத்தல் அல்லது மீள்சுழற்சிப் படுத்த வழிப்படுத்தல்.
- பொலித்தீன் ---0-29
பொலித்தீன்

ஆரோக்கியத்தையும், ப்பையும் உறுதிப்படுத்தல்
பாடசாலைக் கொள்கையாக அமையத்தக்கது
பாடசாலையில் ஒன்று சேரும் பொலித்தீனை மீள்சுழற்சிக்கு உட்படுத்தல் அல்லது, பயன்படுத்திய பொலித்தீனை மீண்டும் உபயோகிப்பதை வலியுறுத்தல் அல்லது, பொலித்தீன் பயன்படுத்தாதிருத்தல்.
இவ்வாறு ஒரே பிரச்சினையைத் தீர்க்கத்தக்க கொள்கைகளுள் பொருத்தமான கொள்கையைத் தீர்மானிக்கும் போது, அது பாடசாலைச் சூழலுக்கு இணக்கமான வகையில் தீர்மானிப்பது அவசியமாகும்.
இக்கொள்கை தொடர்பில் பாடசாலைச் சமூகத்தின் சகல தரப்பினர்களதும் பங்களிப்பு அவசியமாகும். இங்கு சிந்தனைக் கிளர்வு, கலந்துரையாடல் போன்ற முறைகள் மூலம் காணப்படும் நிலைமையைக் கண்டறிதலும், ஆலோசனைகளைப் பெறுதலும் இடம் பெறுதல் அவசியமாகும். இவ்வாறு யாவரும் ஒன்றிணைந்து தயாரிக்கும் கொள்கையை நடை முறைப் படுத்தல் இலகு வானதாகும். இவ் வாறு கொள்கையை நடைமுறைப்படுத்தப் பாடசாலையின் சகல சமூகத்தவர்களும் பங்குபற்றுவதனால் ஏற்படும் வலுப்படுத்தலானது பாடசாலைச் சூழலில் மாத்திரமல்லாது, அயற் சூழலிலும், வீடுகளிலும் இக் கொள்கை நடைமுறைப்படுத்தும் நிலைமையை ஏற்படுத்துவதைக் காணமுடியும்.
இரண்டாவது நியமம் --- உணவு, நீர், கழிவகற்றல் போன்றவை தொடர்பாகப் பாடசாலையில் போதுமானளவு வசதிகள் உண்டு.
மூன்றாவது நியமம்
உணவு, நீர், கழிவகற்றல் வசதிகளோடு பாடசாலைச் சூழல் பாதுகாப்பானதாகப் பேணிவரப்படுகிறது.
அண்மையில் செய்யப்ப்பட்ட பலவேறு பரிசோதனைகள் மூலம், பாடசாலை செல்லும் மாணவரிடையே பல்வேறு ஊட்டப் பிரச்சினைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
காலை உணவு உரியவாறு கிடைக்காமையும், பாடசாலை நேரத்தினுள் உடன் உணவு, குளிர்பானம் ஆகியவற்றைப் பருகுவதும் இதற்குக் காரணமாகியுள்ளது.
அகவிழி ஜனவரி 2013

Page 46
ஆகவே போசனசாலை தொடர்பாகத் தரநிர்ணயங்களும் பலவேறு போசணை வேலைத்திட்டங்களும் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளன. சிறுவர் நேயப் பாடசாலையில் மேற்படி தரநிர்ணயங்களையும் பொருத்தமான பிரயோகங்களையும் பேண எதிர் பார்க்கப்படுகின்றது. பாடசாலையில் போதியளவில் குடிநீர் மற்றும் கழிவகற்றும் வசதிகள் இருத்தல் மிக முக்கியமானதாகும். பாடசாலையிலுள்ள மாணவரின் எண்ணிக்கைக்கேற்பக் கழிவகற்றும் வசதிகள் போதாதிருத்தலும், போதிய நீர் வசதிகள் இல்லாதிருப்பது, அல்லது அவை அசுத்தமாக இருப்பதால் சிலசமயம் பிள்ளைகள் குறைவாக உண்ணவும், குறைவாக நீர் அருந்தவும் கூடும். இதனால் சிறுநீர்த் தொகுதி நோய்களும் தேவையான அளவு நீர் கிடைக்காமையால் உடலில் ஏற்படக்கூடிய வேறு பல சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
6 மணி நேரம் கழிவறைக்குச் செல்லாது இருப்பதால் மாணவர் உள அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடும். பாடசாலையில் சுத்தமான குடிநீர் இல்லாமையால், அசுத்தமான நீரை பருகுவதால், காய்ச்சல், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்க்கு ஆளாகக்கூடும். ஆகவே பாடசாலையில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டிய மலசல கூடங்களின் எண்ணிக்கையும் குடிநீர் வசதிகள் பற்றிய தர நிர்ணயங்களும் தேசிய ரீதியில் கணிப்பிடப்பட்டுப் பாடசாலைகளுக்கு அறிவூட்டம் செய்யப்பட்டுள்ளன.
போசாக்குள்ள உணவு, குடிநீர், கழிவகற்றும் வசதிகள் போதி
சுறுசுறுப்பாகக் கற்றல் - கற்பித்த
உலர் வலயத்திலுள்ள கஷ்டப் பிரதேச பாடசாலையாகி போதியளவு குடிநீர் வசதிகள் வழங்குவதில் சிரமங்கன எதுவும் பாடசாலைக்கருகில் இல்லை. ஆகவே கட்டாயம் எனினும் பாடசாலைத் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதற்கே நீர் இல்லாமை பெரும் பிரச்சினையாக உள்ளது. இதன் காண முடியவில்லை. மலசலகூடங்கள் அசுத்தமாகக் கா நீர்த் தட்டுப்பாடே காரணம் என எடுத்துக் கூறப்பட்ட ஒ
பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டத்தின் போது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஏதாவது நிறுவனத் வேண்டும் என பெரும்பாலானோர் கருத்துக் கூறினர். பின்வரும் ஆலோசனையைக் கூறினார்கள். தமது பிள்ன ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாளி நீரைக் கொண்டு வ அதனால் பாடசாலையின் நாளாந்தத் தேவை நிறைவே
இந்த யோசனையை யாவரும் ஏற்றுக் கொண்டன வருகை தருவோர் தமது பிள்ளையுடன் நீர் வாளியையும் மலசல கூடத்திற்கு அருகிலுள்ள நீர்த்தாங்கி காலை வே கழிவறைகளும் சுத்தமாக உள்ளன.
அகவிழி ( ஜனவரி 2013

மேற்படி வசதிகள் போதியளவில் இருத்தல் போன்றே அவை முறையாகப் பராமரிக்கப்படவும் வேண்டும். பாடசாலையின் மாணவர் எண்ணிக்கைக்கேற்பக் கழிவறை வசதிகள் ஏற்படுத்தல் கடமையும் பொறுப்பும் ஆகும். (இணைப்பு 02) போசன சாலையிலுள்ள உணவு வகைகள் நன்கு மூடி வைக்கப்பட்டிருத்தல், உணவு பரிமாறப் பொருத்தமான உபகரணங்களை உபயோகித்தல் எஞ்சிய உணவுகளை இடத்தக்கவாறு கழிவுக் கூடைகள் வைக்கப்பட்டிருத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணலாம். மேலும் போசனசாலையின் சுற்றாடலை அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் பேணமுடியும். நாளாந்தம் கிருமிநாசினி இட்டுக் கழிவறைகள் கழுவிச் சுத்த மாக்கப்பட வேண்டும். நீர் அருகிச் செல்லும் வளமாகும். ஆகவே நீர் வீண்விரயமாகும் வழிகள் இனங்காணப்பட்டு அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் இனங் காணப் பட்டு நடை முறைப்படுத்தப்படல் வேண்டும். உணவு வசதிகள், நீர் வசதிகள் மற்றும் கழிவகற்றும் வசதிகள் சரியான தரத்தில் பேணுவதும் பராமரித்தலும் சிறுவர் நேயப் பாடசாலையில் கட்டாயமாக இருக்க வேண்டிய நிலைமையாகும்.
நன்றி: கல்வி அமைச்சு பிள்ளை நேய அணுகுமுறை கையேடு
யளவு கொண்ட சிறுவர் நேயப் பாடசாலையில் மாணவர்கள் நல் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
ய நாமல்பெத்த பாடசாலையானது மாணவர்களுக்குப் ள எதிர்நோக்கியுள்ளது. நீரைப் பெறக்கூடிய வழிகள் மாக மாணவர் குடிநீரைக் கொண்டு வர நேர்ந்துள்ளது. T மலசலகூடங்களில் உபயோகிப்பதற்கோ போதியளவு னால் பாடசாலைத் தோட்டத்தில் ஒரு செடியையாவது ணப்பட்டன. மலசல கூடங்கள் அசுத்தமாக இருப்பதற்கு ரு விடயமாகும். 3 இது ஒரு பெரும் பிரச்சினையாக எடுக்கப்பட்டு இது தின் ஊடாக நீரைப் பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட
கூட்டத்திற்கு வருகை தந்திருந்த சில தாய்மார்கள் >ளயைப் பாடசாலைக்குக் கூட்டி வரும் தாய்தந்தையர் ந்து பாடசாலை நீர்த் தாங்கியில் ஊற்றுவார்களாயின் றும் எனக் கூறினர்.
ர். இன்றும் இப்பாடசாலைக்குக் காலை வேளையில் கொண்டு வருவதைக் காணலாம். இப்போது பாடசாலை பளையிலேயே நீர் நிரம்பி விடுகின்றது. பாடசாலையின்

Page 47
சந்தா விண்ணப்பப் படிவம்
பெயர் (முழுப் பெயர்) கற்பிக்கும் பாடசாலை பாடசாலை முகவரி தொலைபேசி/தொலைநகல் இல. :- மின் அஞ்சல் முகவரி கற்பிக்கும் பிரிவு அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி : இத்துடன் ரூபா) க்கான காசோலை/க
ணத்துள்ளேன்.
இல .
கையொப்பம்
- - - - - - - - - - - - - -
சந்தா செலுத்த சில எளிய
- வழிமுறைகள்
- A #க!''
- 11/11: ர்
இ-கு.
Fil#15
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி! வெளியீடுகளை நேரடி.டர்கப் பெறப் சாம் செலுத்த விரும்பத் வோருக்கான சில எளிய வழிமுறைகள். அகவிழி, கொமல்ஷல் வங்கி, வெள்ளவத்தை நடை-(மறைக் கணக்கு எTள் 1100023581 Cornrthercial வங்கியின் காந்த கிளைகளி லிருந்தும் அகவிழி கணக்கு எண்ணுக்கு சந்தா கல்கல் ஆர் க.தத்தக வில்ை263ய பணமாக வைப்பு செய்து அதன் பற்றுச்சீட்டை... எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வங்கி கக்கிவன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILLUTH4 - AFIAVL1 பெயருக்கு காசோலை) எழுதி அகவிழி அக்பர் என்னைக் குறிப்பிட்டு உள்ளூர் Cominicercial வாக்கில் வைit..
செய்யலாம். (மேற்.டி. வழிமுறைகளில் 4LINம் அனுப்புவர்கள் செலுத்தப் பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டு அகவிழி தலைமை அலுவலக முகவரிக்கு கட்டிடதம் எழுதவேண்டுகிறோம். அல்லது மின் setஞ்சல் முகவரியில்
தொடர்பு கொள்ளலாம். சந்தா விபரம் தனி இதழ்
| 100/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 1200/=
எ41-6
பக்கம் 4
សន្លឹះ
பப்
பாபர்ம்':-
சாரார்
எH:7 HT: ம்
EEEEr
பர்
அார்:-

அகவி
3, Torrington avenue, Colombo = 07 Tel : 011-2506272, Fax: 011-2585190
Email: ahavili.vilithu@gmail.com
- ஆரம்பம்/இடைநிலை/உயர்தரம்
எசுக் கட்டளையை
திகதி:
இப்படிவத்தை போட்டோ பிரதி செய்து உபயோகிக்கவும், - - - - - - - - - - - - - - - -
அகழிவிளம்பரக் கட்டணம்
பின் அட்டை
7000/- உள் அட்டை (மூன்) * 5000/- உள் அட்டை (பின்) : 2000/ ஆ.ள் .Fக்கம்
4000. நடு இருபக்கங்கள் : இ500ர்.
தொடர்புகட்கு
பற்பு
அகமதித்து
Hெal |
பிரியா
சி;
E, i, 11 EEE "ரத ந நா கா =
இப்பட
பம் பு:="
424:42:
டிப்.
Fாசியம்
- மரியப்பர்
பாரி)
=4t/FFEE, -
- பர்பயர்
பகரிப்யா
இர்:'
Colombo 3, Torrington Avenue, Colombo = 07,
Tel; (11-2506272
Jaffna 157, Hospital Road, Jaftina. Tel: 021-2229866
Trincomalee 81 A Rajavarodayam Streer, Trincomalee
Te: {026. 222494)
Batticaloa 37, Old Rest House Road,
Tel: 065-2222027
பன்Eாசி -
1-பால்
இ-its:
TTAH: *
பசி :
சு
தீப த்தம்:
- ஈழம் 5
தலயா;
-ந் பார்
| AW '')
10'ITா'

Page 48
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல.: 021-2226693
நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733 அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல.: 077-1285749 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல.: 011-2688102 கவிதா ஸ்ரோஸ் இல:05 பஸ் தரிப்பிடம், வவுனியா தொ.பே.இல: 024- 2222012
Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
Printe Kumaran Pr 39, 36th Lane,
kumbhlk@
Registered in the Department of Posts a

කිරිපි
தமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு தொ.பே.இல.: 4515775, 2504266 அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை
தொ.பே.இல.: 052-2258437 நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03
தொ.பே.இல: 026-2236266 குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல: 052-2223416 பிரியங்கா புத்தகக் கடை பிரதான வீதி, பருத்தித்துறை
தொ.பே.இல.: 077-9303246 கொலேஜ் நீட்ஸ் புத்தகக்கடை 120, பிரதான வீதி,
அட்டாளைச்சேனை 14 கை.தொ.இல.: 077-3034469 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை
தொ.பே.இல: 066-3662228 Rajah's Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371 S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொ.பே.இல: 077-1270458
பிபாரா TNTINATHTHANFEாகம்
ISSN 1800-1246
=d by 2ss (Pvt) Ltd. - Colombo 06 gmail.com
9771. 80.0"] 24 005"
of Sri Lanka under OD/16/News/2013