கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2013.02

Page 1
விழி 09
பார்வை
- இl3
ஆசிரிய
பாடசாலைக் கல்விச் சுற்றுலா பயனுடையதாக ஒழுங்கு செய்தி
ஒரு கல்விச் செயற்பாட்டாளன் நாட்குறிப்பிலிருந்து.......
/ ஆசிரியர்களுக்கான வரவேற்பு
வெளியேற்றமும்
ஆசிரியர்களின் விழுமியம் மின் செயற்பாடுகள் தொடர்பான ஓ விழுமிய முறைமை மற்றும் பெ சட்டத் தொகுப்பு
கலாநிதி எஸ். ஜெபநேசன் - M. அபூபக்கர் நளீம் - A.A.Azees
www.viluthu.org

91
பெப்ரவரி - 2013
விடி
த்துவ நோக்கு..
க்களை
தல்
பின்
பம்
வழுக்க பாதுச்
H.M.A.Rafihu - எஸ்.எல். மன்சூர்
- இரா. விஜயராகவன்
விலை: 100/=

Page 2
இs:
கதி 108
அகவிடு
4G5」而行本
வியி 08
பார்படி ??
இகவி
ஆசிரியத்துவ நோக்கு.
அ ச ம் ன் 9. கந்தர் பாரதி நகர்
ஆகவில்
2012 ஆம் ஆண்டிற்கான அ
ஆசிரியர்கள் உடனடியாக

அகவி
அகவி6
பர் - 2012
அகவி6
ஆசிரித்துவ நோக்கு
காரார்
* Lal F3
vaweera
கவிழிகளை பெற விரும்பும் க தொடர்பு கொள்ளவும்.

Page 3
மாபைல் 91
விபி 99
இ3வி.
பாடசாலைக் கல்விச் சுற்றுலாக்களை 'பயனுடையதாக ஒழுங்கு செய்தல்
'வெருகல்விச் செயற்பாட்டாகrகளின்
நாட்குறிப்பிலிருந்து.....
' ஆசிரியர்களுக்கான வரவேற்பும் |
வெளியேற்றமும்
டர்களின் விழுமியம் மிக பல் தொடர்பாக இருக்க இவறனர் மற்றும் பொதுச்
| டேராசி!fiயர் சே1, சந்திரசேகரன் 2 கலாநிதி 9 சிதலா ருகமூர்த்தி | பாலசிங்கம் மாefதான் _ 1 சாந்தி சச்சிதானந்தம் 4) காபா சாம்பசிவம் M.H. மிiri.iான்- 44 A.A. Azees 2 இரா. விஜயராகவன் |
விலை: 100/=
AMANAVALHIlkattit,crg
AHAVILL 3, Torrington Avenue
Colombo 07
Tel: 011 250 6272 E-mail: ahavili.viluthu@gmail.com
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே
பொறுப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் “அகவிழி”
யின் கருத்துக்கள் அல்ல.

ISSN 1800-1246
உள்ளே,
1. பாடசாலைக் கல்விச் சுற்றுலாக்களை
பயனுடையதாக ஒழுங்கு செய்தல்
2. )
சிறுவர் உரிமைகளும் துஷ்பிரயோகங்களும்
16
ஒரு கல்விச் செயற்பாட்டாளனின் நாட்குறிப்பிலிருந்து.......
4. மொழிப்பாடத்தில் மாணவர்களை
மதிப்பீடு செய்தல்
ஆசிரியர்களுக்கான வரவேற்பும் வெளியேற்றமும்
6.
24
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்திய யாழ்ப்பாணக் கல்வி கலாச்சார ஊட்டம் - அமெரிக்க மிஷனின் பங்களிப்பு
28
மாணவர் இடை விலகலும்
அதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும்
பாடசாலைகளில் பிள்ளைகளை அறிதல் - 33 நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கியத்துவம்
36
ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைமை மற்றும் பொதுச் சட்டத் தொகுப்பு
10. அதுவும் பிள்ளை, இதுவும் பிள்ளை
39
11. மலத்தினால் மாசடைந்த கைகள்
43

Page 4
ISSN 1800-1246
அகவி6
ஆசிரியத்துவ நோக்கு...
மாத இதழ்
ஆசிரியர்: V.S. இந்திரகுமார்
நிர்வாக ஆசிரியர்: சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் திருமதி பத்மா சோமகாந்தன்
ஆலோசகர் குழு: திரு. து. ராஜேந்திரம்
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஓய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
திரு.தை. தனராஜ்
முதுநிலை விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் துரை மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் இரா.வை. கனகரட்ணம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு
திரு.கே. சாம்பசிவம்
தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம்
ஜி. போல் அன்ரனி முன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர்
அகவிழி | பெப்ரவரி 2013

ஆசிரியரிடமிருந்து...... கல்வியில் ஆளுமைகளைத் தீர்மானிக்கின்ற பரீட்சைகள் நமது நாட்டில் இன்று பல தரப்பினராலும் கேள்விக் குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இது புதிய விடயமன்று. காலம் காலமாகத் தொடர்ந்து வரும் ஓர் நிலைமைதான் என்றாலும் தற்போதைய நிலைமை பரீட்சைகளிலும் பரீட்சைப் பெறுபேறுகளிலும் நம்பிக்கையீனத்தையும் தோற்றுவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் (DOE) பிரதம பரீட்சை ஆணையாளரின் கீழ் இயங்குவதுடன் இத்திணைக்களத்தின் பல் வேறு செயற் பாடுகளை மேற் கொள் ள வென ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை கல்விசார் நிர்வாக சேவை (SLEAS) தரத்தினைக் கொண்டவர்களாவர்
பரீட்சைத் திணைக்களமானது பாடசாலைகளுக்கான பொதுப் பரீட்சைகளையும் உத்தியோகத்தர்களையும் நியமித்தல், பதவியுயர்வு தொடர்பான ஏனைய அரச முகவர்களுக்கான பரீட்சைகளையும் நடாத்துகின்றது. ஏனைய கல்விசார் நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட ஒரு சில விடயங்களுக்காக பரீட்சைகளை நடாத்துகின்றன.
தற்போது நமது நாட்டில் பரீட்சைகள் தொடர்பாகவும் அவற்றின் நம்பிக்கைத் தன்மைபற்றியும் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது. இலவசக் கல்வியின் அடிப்படையில் இலவசப் பாடநூல், சீருடை, மதிய உணவு, எனப் பல்வேறு சலுகைகளை வழங்கிவந்த அரசாங்கங்களை தொடர்ந்து இந்த அரசாங்கம் இலவசப் புள்ளியை வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
பரீட்சையை நடாத்தும் கல்விசார் நிறுவனங்களில் காணப்படும் ஓட்டைகளால் உட்புகுந்துவிடுகின்ற நபர் களால் வினாத்தாள்கள் கபளீகரம் செய்யப்பட்டு பெருந் தொகைப் பணத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் பரீட்சைக்கு முன்னரே வெளியான விஞ்ஞான வினாத்தாள் தொடர்பான விசாரணைகளும், சட்டக் கல்லூரி நுழைவும் பரீட்சையைத் தொடர்ந்து இனரீதியாக பிரதிநிதித்துவம் தொடர்பான விசாரணைகளும், தேசிய கல்வி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கல்வியியல் முதுமாணி (M.Ed) பரீட்சையில் கல்வி ஆய்வியல் (Educational Research) விடய விடைத் தாளில் ஒரே கையெழுத்தில் இருவரிற்குரிய விடைப் பத்திரங்கள் காணப்பட்டதனால் உயர் மட்ட கல்வி அதிகாரிகளின் விசாரணைகளும் பொலிஸ் விசாரணைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இவையனைத்திலும் தமது உழைப்பையும் காலத்தையும் செலவழித்து ஊண் உறக்கமின்றி கற்றலில் ஈடுபட்ட பரீட்சார்த்திகளினது நிலையை பரீட்சைகளில் சித்தியடையுமளவு ஆற்றல்களைக் கொண்டிராத பரீட்சார்த்திகளாலும் அவர்கள் சார்பாக

Page 5
மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்படும் ஒரு சில அரச .
அதிகாரிகளாலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.
மிகச் சாதாரணமாக விடைப்பத்திரங்களைத் திருத்தி புள்ளிகளை வெளியிட வேண்டிய அதே நேரம் மேலதிக விசாரணைக் குழுக்களை நியமித்து விசாரணை செய்யப் பெருமளவு அரச நிதியும் செலவிடப்படுகிறது. அத்துடன் அதி திறமையுடன் கற்பவர்களும் வெறுப்புக்கு உள்ளா கின்றனர். நெறி பிறழாது பரீட்சை எழுதிய போதும் முறைகேடான விதத்தில் பரீட்சையை எழுதிய பரீட்சார்த்தி களோடு விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது பெரிதும் மன உழைச்சலுக்கு உள்ளாகின்றனர். இந்நிலைமை தொடர்ந்தும் பரீட்சைகளில் இடம்பெறுவதால் பரீட்சையில் சித்தியடைவோமா? எனும் உறுதியற்ற நிலைப்பாடு உருவாவதுடன் பரீட்சை பற்றிய பயமும் நம்பிக்கையீனமும் பரீட்சார்த்திகளை நிர்க்கதிக்குள்ளாக்கி யிருக்கிறது.
கடந்த காலங்களில் பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தேசிய அளவில் அனைவரும் அறியும் வண்ணம் கடுமையான தண்டனைகள், பதவிப்பறிப்புக்கள் அல்லது பணிநீக்கங்கள் நிறைவேற்றப்படாமை பெரும் குறைபாடாக இருக்கின்றது.
32 R : 49
Sர்
R 2
24 24 87 2 24 2 EX
2 2 * * * * * * * * *
ஐ
M
சமூகத்தின் கல்
The Educational R சமூகம் தனது அங்கத்தவர்களின் நலன்கருதி கல்வியின் பல பரிமாணங்களைப் பொறுப்பேற்கின்றது. அவை சிறந்த இயக்கப்பாடுடையதாகவும் நேரடியானதாக அல்லது நேரில் முறையிலமைந்த வகிபங்குகளாகக் காணப் படுகின்றன. 1. கல்விக்கு நிதி வழங்கல் தனது இளம்பராயத்தினரின் எழுச்சியைக் கருத்திற்கொண்டு கல்வித்துறையின் குறைபாடுகளைக்களையும் பொருட்டு ஏராளமான நிதியுதவிகளை நன்கொடையாக வழங்குகின்றது. சிலவேளைகளில் அவை உபகரணங்களாகவோ, கட்டிட மாகவோ வந்தடையலாம்.
2. முறைசார் கல்வியை நிர்வகித்தல்
சமூகம் தனது கல்வித்தேவைக்காக கொண்டு நடத்தும் தளமாக பாடசாலை விளங்குகின்றது. பாடசாலை நிர்வாகிகளும், ஆசிரியர்களும் பாடசாலையை மேற் கொண்டு நடாத்துவதற்கு பல வழிகளில் சமூகமானது துணைபுரிகின்றது. கலைத்திட்டம் உருவாக்கம், வாழ்வியல் தத்துவங்களின் உள்ளடக்கம், பாடசாலையில் சிறந்த சூழ் நிலை உருவாக்கம் என்பவற்றில் பெருமளவு

ஆரம்பத் தொழில் வாய்ப்புக்களுக்கான புதிய நியமனங்கள் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. ஆனால் இன்று வசதியானதும் இலகுவானதுமான முறையாக அரசியல் ரீதியாக நியமனம் பெறுவது சாதாரணமாகிவிட்டது. இந்நிலைமைகளில் அரசியல் ஆதரவுடன் நியமனம் பெறுவோர் தமது தகுதியை மேம்படுத்தும் பொருட்டு பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கும் போது தன் இயலாமையை மற்றொ ருவரின் நெறிபிறழ் நடத்தை மூலம் இருட்டடிப்புச் செய்து தானும் பட்டம் பெற்றவர் என வெளிக்காட்ட முனையும் போது அரசியல் அதற்கான களமமைத்து கொடுப்பதும் இவ்வாறான பிரச்சினைகள் எழ அடிப்படையாகின்றது. நுண்மதியுடையோர் செயலாற்றும் போது பணம் படைத் தோரும் அரசியல் செல்வாக்குடையோரும் தமது கைங்கரியங்களை இலகுவாக நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
கல்வியால் ஆகாது ஒன்றுமில்லை என்பது போய்
கபடத்தனங்களால் ஆகாதது எதுவுமில்லை என்பதாயிற்று கல்வியின் ஆளுமைகள் மிக நேர்த்தியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டுமெனில் கபடத்தனங்கள் யாவும் மனித மனங்களில் இருந்து கபளீகரம் செய்யப்படவேண்டும். அம்மனங்களைத் தேடியே கல்வியுலகம் பயணிக்கிறது.........
V. S. இந்திரகுமார்
$4
路盟副盟認證
B?
2 2 2
路路站盟盟
34
விசார் வகிபங்கு Role of the Society
ஈடுபடுகின்றது. தேவைப்படுமிடத்து கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றது.
3. முறைசாராக் கல்வியூடகங்களை வழங்குதல்
பாடசாலையிலுள்ள வளங்களைப் போன்று பாடசாலைக்கு வெளியிலும் பல கல்வி வளங்களைக் கொண்டுள்ளது. தொல்பொருட்கலையகம், கலைக்கூடங்கள், நூலகங்கள், இசை, நடன நிறுவனங்கள் (கல்லூரிகள்), தாவர, வன விலங்குப் பூங்காக்கள், ஊடகங்களான அச்சு, வானொலி, தொலைக்காட்சி என்பவையும் இவற்றில் அடங்கும். 4. சமூக விழுமியங்களை இளைய
தலைமுறையிடம் கையளித்தல்
சமூக விழுமியங்கள் பிள்ளைகளில் நடத்தைகளில் பிரதிபலிக்கும். எனவே பாரம்பரிய ரீதியாக காக்கப்பட்டு வரும் மாண்புமிகு விழுமியங்களான, வாழ்க்கைக்கோலம், ஆடை அணிகலன்கள், அழகு, போக்கு என்பன சமூகத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. Reference: TK. Indrani (2006), Text Book of Sociology (1st ed), India Jaypee Brothers Publishers, (Pp. 37-38).
அகவிழி (பெப்ரவரி 2013

Page 6
பாடசாலைக் கல்வி பயனுடையதாக
ஆக்கம்: கலாநிதி இந்து
Ph.D.in Admin. M. Phil
(விரிவுரைக் குறிப்பு NIE)
தேசியக் கல்வி நிறுவனத்தினால் ஆசிரியர் கல்வி மேம்பாடு தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட பாட நெறியொன்றில் கற்பித்தலில் ஈடுபட்டிருந்தபோது கல்விச் சுற்றுலா பற்றிய வினாவொன்றை பயிலுனர் ஆசிரியர் (student teacher) பலர் குழுமியிருந்த மண்டபத்தில் வினவுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. தற்போது சிறிய, பெரிய அனைத்துப் பாடசாலைகளிலிருந்தும் ஆகக் குறைந்த ஒரு கல்விச் சுற்றுலாவேனும் வருடாந்தம் செல்கின்றனர். எனினும் நான் வினவிய வினாவிற்கு அவர்களளித்த விடைகளிலிருந்து
தெரியவருவது இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுப் பதற்கு ஆசிரியர்களிடம் காணப்படும் அறிவு மிகக் குறுகிய
வீச்சைக் கொண்டது என்பதாகும்.
பாடசாலை மட்டத்தில் கல்விச்சுற்றுலாக்களை ஒழுங்கு செய்யும் போது ஆசிரியர்களின் கவனம் சுற்றுலாவின் நிருவாகம் பற்றியதாகவிருந்ததே தவிர
அகவிழி | பெப்ரவரி 2013

பிச் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்தல்
திரா லீலாமணி கினிகே
Ed. PGDEM, PGDE, BSC
அதன் மூலம் ஏற்படவேண்டிய கல்வி மேம்பாடு பற்றியதாக விருக்கவில்லை. அவர்களிடம் பாடசாலைச் சுற்றுலா வொன்றை ஒழுங்கு செய்யும்போது அதில் கலந்து கொள்ளும் மாணவருக்கும் அவர்களது பெற்றோருக்கும் நீர் கூற விரும்பும் விடயங்களென்ன என நான் வினவிய வினாவிற்கு அவர்கள் தந்த பதில் கல்விச்சுற்றுலாவுடன் ஒன்றிக் கலந்திருக்கும் நிர்வாக விடயங்களைத் தவிர கல்வி மேம்பாடு பற்றிய எக்கருத்தும் காணப்படவில்லை. அவர்கள் அளித்த பதில்கள்,
சுற்றுலாப்பாதை வரைபடம் வரைதல். பெற்றோர் பங்களிப்பு. கல்வித்திணைக்கள அனுமதி. பஸ்வண்டியைப் பதிவு செய்தல்.
பகலுணவு.

Page 7
--0ரை.)
அவர்கள் இவ்விடயங்களை பல விதங்களில் இரசனை தரும் அடிப்படையில் எப்படி எடுத்துக் கூறினாலும் அவர்களின் திட்டமிடல் கல்விச் சுற்றுலாவை வினோதச் சுற்றுலாவிலிருந்து சற்றேனும் வேறுபடுத்தவில்லை. கல்விச் சுற்றுலாவின் கல்விப்பயன்பாட்டை முன்மொழிய அவர்கள் முழுமையாகத் தவறிவிட்டனர்.
திட்டமிட்டு செயற்படுத்தும் கல்விச்சுற்றுலாக்கள் பாடசாலை மாணவர்களின் பூரண சமநிலையான விருத்திக்கு பங்களிப்பு செய்யுமென்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அண்மைக் காலத்தில் அபிவிருத்தியடைந்த பாடசாலையொன்று கல்விச் சுற்றுலாவில் முன்னேறியிருக்கும் விதத்தை இவ் வாக்கத்திலிருந்து எடுத்துரைக்கலாமென எதிர்பார்க்கிறேன். அப்பாடசாலையின் அதிபர் அவரது ஆசிரிய வரலாற்றில் கல்விச் சுற்றுலா பற்றிய பல ஆய்வுகளைச் செய்தவர். அவ்வாய்வுகளின் பலாபலன்களை அடிப்படையாகக் கொண்டு ஈடுபாடு-திட்டமிடல் எண்ணக் கருவை உப் யோகித்து இப்பாடசாலையினால் திட்டமிடப்படும் கல்விச் சுற்றுலாக்கள் பாடசாலையின் பிரபல்யம் ஏற்படுவதில் கூட காரணமாயமைந்திருப்பதாக அதிபர் கருதுகின்றார்.
வெவ்வேறு வயதுப்பிரிவுகளையுடைய மாணவர்கள் கல்விச் சுற்றுலாவில் பங்கு பெறும்போது விரும்பும் விடயங்கள், விரும்பாத விடயங்கள் என்பவற்றை ஆராய்வதற்குக்கூட அதிபர் நேரம் ஒதுக்கியுள்ளார். ஒவ்வொரு சுற்றுலாவின் பின்னரும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வினாக்கள் சில முன்வைக்கப்பட்டு அவற்றிற்கான விடைகளைப் பெற்றுக்கொள்வதும் இப்பாடசாலையில் பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது.
அவ்வினாக்களிடையே,
சுற்றுலாவில் உங்களை மிகவும் கவர்ந்த இடம் எது?
சுற்றுலா இன்னும் நீடிக்குமாயின் நீர் தரித்திருக்க விரும்பும் இடம் யாது? நீர் பார்த்து இரசித்தவற்றில் பிரயோசனமற்றவையென நீர் கருதும் இடங்கள் யாவை? அடுத்த சுற்றுலாவின்போது நீர் பார்க்க விரும்பாத
இடம் எது?
ஆகிய ஒரே பிரச்சினையை பல கோணங்களில் ஆராய்ந்து மாணவர்களிடம் முன்வைத்து அவற்றிற்கான விடைகளைப் பெற்று அத்தரவுகளை பகுப்பாய்வு செய்து, தெளிவாக்கிக் கொள்ளும் பொருட்டு வரைபில் குறித்து குறித்த வயதுப் பிரிவினரை கவருமிடங்கள் யாவையென அறிந்து கொள்ள அதிபர் மும்முரமாய் ஈடுபடுகின்றார்.

சுற்றுலாவின்போது ஆசிரியர்கள் விஷேடமாகவும் அழுத்தமாகவும் குறிப்பிடுமிடங்கள் மாணவர் மனதில் ஆழமாய்ப் பதிவதாக மாணவர்களுக்கு வழங்கிய வினாக்களிற்கு விடையளித்திருக்கும் பாணியை ஆராய்ந்த அதிபர் அவர்களது விடைகளுக்கும் ஆசிரியர்கள் அழுத்திக் கூறியவற்றிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக தனது சுய ஆய்வு முடிவாக அதிபர் முன்வைக்கிறார். கல்விச்சுற்றுலாவின் போது விஷேடமாக தெரிவு செய்யப் பட்ட இடங்களின் மீதே மாணவர் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவசர அவசரமாக பல இடங்களைப் பார்க்கச் செல்வதால் மாணவர்கள் களைப்படைவதைத் தவிர கல்விப் பயன்களேதும் அவர்களுக்குக்கிட்டாது எனவும் அவர் ஆதாரபூர்வமாகக் கூறுகின்றார்.
பெரும்பாலான பாடசாலைகள் சுற்றுலா செல்லவென வருடத்தின் ஒரே தவணையையே தெரிவு செய்கின்றன. இக்காலப் பகுதியில் குறிப்பிட்டதோர் இடத்தைத் தரிசிக்கச் | செல்லும்போது அங்கு பல பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் வருவது புதுமையான விடயமல்ல. இவ்வாறு
ஓரிடத்தில் குவியும் பல குழுக்கள் பல்வேறு நடத்தைகளைக் கொண்டிருப்பதால் அவர்களில் அனேகமானோர் கலந்து சிறப்பித்திருக்கும் சுற்றுலா எனும் கல்வி நடவடிக்கையால் எவ்விதக் கல்விப் பெறுமதியையும் பெறுவதில்லை. இந்நிலை இல்லாதொழிக்கப்பட்டு கல்விப் பயன்பாடுடைய சுற்றுலாவை ஆசிரியர் குழாம் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டுமெனவும் அதிபர் கூறுகின்றார். அவர் கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் பெறுபேறுகளும், கல்வியியல் மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பாக இவர் பெற்றிருக்கும் சிறந்த அறிவும் கல்விச் சுற்றுலா என்னும் எண்ணக்கருவை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு சிறந்த போக்கொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு பெரிதும் உதவி புரிவதாக அவ்அதிபரின் கருத்தாக அமைகிறது.
சிறந்த முகாமைத்துவம் பாடசாலையின் கல்விச் சுற்றுலாவின் வெற்றிக்கு பெரும்பங்களிப்பு செய்யுமென்பதில் எந்தச் சந்தேகங்களுமில்லை. ஆசிரியர் குழாமின் அனைவரையும் இத்திட்டமிலிற்கு அதிபர் சமூகமளிக்கச் செய்வதுடன் ஆரம்பத்திலேயே பெற்றோர்-மாணவர்கள் ஆகியோரையும் அழைத்து முழுமையான செயற்பாட்டை விளக்கி சுற்றுலாவிற்குத் தேவைப்படும் அனைத்துப் பங்களிப்புகளையும் அவர்களிடமிருந்து பெறுவதில் அதிபர் கண்ணுங்கருத்துமாயிருப்பார். அது மட்டுமல்ல சுற்றுலாவில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களை முன்னரே அடையாளங் கண்டு அவர்களிடம் பிரயாணம் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை ஒப்பபடைக்கவும் அவர் தவறமாட்டார். அதற்கான பல தந்திரோபாயங்கள் அவரிடமுண்டு.
ஒவ்வொரு விடயத்தினூடாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய அறிவு, குறிக்கோள்களை பாடசாலை நடவடிக்கைகளுடன்
அகவிழி | பெப்ரவரி 2013

Page 8
ஈடுபாடு காட்டும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகிய அனைவருக்கும் நன்கு விளங்கியிருத்தல் வேண்டுமென அதிபர் கருதுகின்றார். பாடசாலையினபால் சுற்றுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும்போதே பாடசாலை நடவடிக்கைகளின்பால் அவர்களை வரவழைக்க முடியு மென அவர் நம்புகின்றார். சாதாரண வகுப்பறையில் மாணவர்கள் கற்கும் விதத்தை விபரமாக ஆராயும் இவர் மாணவர்களின் ஆக்கத்திறன் (creativity) வளர்ச்சிக்கான நடவடிக்கைள் எடுக்கப் படுவது மிகவும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதென கவலை கொள்கிறார். ஆக்கத்திறனை மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத போதிலும் புதியன படைப்பதற்குரிய வாய்ப்பை மாத்திரம் வழங்குவதன் மூலம் படைப்பாற்றலை வளர்த்தெடுக்க முடியுமென அவர் உறுதியாக நம்புகிறார். மாணவர்களை ஆக்க மனப் பான்மையின்பால் ஈர்த்தெடுப்பதற்கு கல்விச் சுற்றுலாக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அவர் மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்க கல்விச்சுற்றுலாக்களை அதிகமதிகமாக மேற் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.
பன்
11 5ே பப
எEEா
சுற்றுப்பிரயாணம் தொடர் பாக ஆசிரியர்களின் கவனயீர்ப்பை பெற்றுக்கொள்வதற்கு அதிபர், ஆசிரியர் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்வார். இக்கலந்துரை யாடலில் பாடசாலை ஏன் கல்விச் சுற்றுலாக்களை மேற்கொள்ள வேண்டும்? எனும் வினாவை ஆசிரியர்களிடம்
அகவிழி | பெப்ரவரி 2013

முன்வைக்கும் இவர் சுற்றுலாவின் முக்கியத்துவம் பற்றி அவர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்குவார். மாணவர்களை ஆக்கச் சிந்தனையின் பால் செலுத்துவதற்கு இவ்வாறான சுற்றுலாக்கள் பெருந்துணை புரிவதாகவும், வகுப்பறையில் முறையான (formal) கற்றலின் மூலம் மாத்திரம் வழங்க முடியாத அனேகமான விடயங்களை இதன் மூலம் வழங்க முடியுமென்பதை உணர்த்துவதற்கு அவ்வாசிரியர் குழுக்கூட்டத்தை அவர் பயன்படுத்திக் கொள்வார்.
எதிர்காலக் கல்விச்சுற்றுலா பற்றிய ஆசிரிய விருப்பு வெறுப்புக்களை அறிய அதிபர் பயன்படுத்தும் ஓர் உத்தியும் ஆசிரியர்குழுக் கலந்துரையாடலாகும். இவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் பாடசாலை நிர்வாகக் குழு வினரிடம் ஒப்படைக்கப்பட்டு. 1. அடுத்துவரும் சுற்றுலா எத்தனை பேர் கலந்து
கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்படும்?
2. இதில் கலந்து கொள்ளும் வகுப்புக்கள் யாவை?
ஆகிய அடிப்படை அம்சங்கள் அக் குழுவினரால் தீர்மானிக்கப்படும்.
அதன் பின்னர் ஏற்பாடு செய்யப்படும் ஆசிரியக் குழுக்கூட்டத்தில் நிர்வாகக் குழுவினரின் திட்டங்கள் ஏனைய ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டு அச்சுற்றுலா பற்றி ஆழமாக ஆராயப்படும். ஆசிரியர் குழாமின் உதவியுடன் செல்லவிருக்கும் சுற்றுலா பற்றிய பல அடிப்படை அம்சங்கள் அதிபரினால் மேலும் ஆராயப்படும். 1) இச்சுற்றுலாவின் "கருப்பொருள்” யாதாக அமைய
வேண்டும்? 2) இக்கருப்பொருளின் கீழ் அடையப்படவேண்டிய
குறிக்கோள்கள் யாவை?
எனும் வினாக்களை ஆசிரியர்களிடம் முன்வைக்கும் அதிபர் அவர்களிடமிருந்தே விடையையும் பெறுவதற்கு சிரமப்படுவார். இவ்வாறான பயனுடைய ஆசிரியர் கலந்துரையாடல்கள் மூலம் ஆசிரியர் அர்ப்பணிப்பைப் பெறும் அவர் "எமது சுற்றுலா” எனும் குழுச்சிந்தனையை ஆசிரியர்களிடையே ஏற்படுத்துவதில் பெரும்பாடுபடுவார். மேற்கூறிய பங்களிப்பு திட்டமிடல் செயன்முறைப்பாடசாலையின் அனைத்து செயற்றிட்டங்களினதும் வெற்றியில் நேரடியாக பங்களிப்பு செய்வதாக அவர் உறுதியான நம்பிக்கை கொண்டு செயற்படுகின்றார்.
கடந்த தவணைக்கான சுற்றுலாவின் கருப்பொருள் “சூழல்” எனும் அடிப்படையில் அமைந்திருந்ததாக அதிபரிடமிருந்து அறிந்து கொண்டோம். எங்கு செல்வது? என்பது செயற்றிட்டத்தின் அனைத்துக் குறிக்கோள்களும் ஆசிரியர் குழாத்துடன் பூரணமாக கலந்துரையாடப்பட்ட

Page 9
பின்னரே தீர்மானிக்கப்படும். நாட்டின் குறிப்பிட்டதொரு பகுதிக்குச் செல்லவேண்டுமென வேண்டுகோள்கள் அதிகரிக்கும்போது அப்பகுதிக்குச் செல்வதன் மூலம் எமது குறிக்கோள்கள் எந்தளவு நிறைவேற்றப்படும் என தீர ஆராயப்படும். பிரயாணப்பாதை, பார்க்குமிடங்கள், அவற்றிட்குச் செலவிடும் நேரம் என்பன குறிக்கோள்கள் நிறைவேறும் வகையிலேயே தீர்மானிக்கப்படும். வெயில் காரணமாக கடினநிலைகள் உருவாகக்கூடிய இடங்களின் கல்விப்பயன்பாடு கருத்திற் கொள்ளப்பட்டு அவற்றை பார்த்து இரசிப்பதற்குரிய நேரமும் முன்னரே தீர்மானிக்கப்படும்.
அடுத்ததாக சுற்றுலாவின் கருப்பொருளின் கீழ் மாணவர்கள் ஆக்கத்திறன்களை அதிகரிக்கும் செயற் பாடுகள் பற்றி கலந்துரையாடப்படும். அதிபர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆசிரியக்குழாமின் ஆணையுடன் இப்பாடசாலை மாணவர்கள் கடந்த வருடமும் “சூழல்” எனும் கருப்பொருளில் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளனர். அதில் பல ஆக்கத்திறன் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். கட்டுரையாக்கம், ஓவியம் வரைதல், சிற்பம் வடித்தல், புகைப்படமெடுத்தல், களநூல் தொகுப்பு (Feield book preparation), படங்களை சேகரித்து தொகுத்தல், சூழல் தொடர்பாக எழுதப்பட்டுள்ள பல நூல்களைப் பரிசீலனை செய்தல் மற்றும் சூழல் தொடர்பான நூல்களை எழுதுதல், சூழல் மாசடைதலை குறைப்பதற்கான தந்திரோபாயங்களை வகுத்தல் என்பன முன்னுரிமை பெறுகின்றன.
கல்விச் சுற்றுலாவை விஷேட அம்சங்கள் நிறைந்ததாக திட்டமிடுவதற்கு ஏற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பது அதிபரின் அடுத்த நடவடிக்கையாக இருக்கும். சுற்றுலாவில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் சிலர் இவ்வேற் பாட்டுக்குழுவில் அங்கத்துவம் வகிப்பர். (நிருவாகக் குழுவல்ல) இங்கு சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து நன்கு பரிச்சயமுடைய ஆசிரியர்கள் மட்டுமல்ல அனுபவம் பெற்றோரும், அனுபவம் பெறவிருப்போரும் கலந்ததாக இக்குழு அமைந்திருக்கும். இதன் மூலம் ஆசிரியர் சேவையில் புதிதாக இணைந்த பல தசாப்தங்கள் சேவையாற்றவிருக்கும் ஆசிரியர் களுக்கும் அறிவு (Knowledge), திறமை (Skills), போக்கு என்பன மேம்பாடு பெறுவதற்கு அது உபகாரமாய் அமையும்.
அதிபர்களின் அறிவுரையின் பிரகாரம் சுற்றுலா ஏற்பாட்டுக்குழு கலந்து கொள்ளும் மாணவர்களிற்கென மூன்று கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். சுற்றுலாவின்போது செல்லவிருக்கும் இடங்களைப் பற்றி மாணவர்களைத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பது எதிர்பார்க்கப்படும். பாடசாலை நேரத்தின் பின் நடை பெறும் ஒன்றுகூடல் சுற்றுலாவின்போது மாணவர்களின் நடத்தை (Behavior) எப்படியிருக்க

வேண்டும் என்பதைப் பற்றி பல முக்கிய விடயங்கள்
முன்வைக்கப்படும்.
அவ் ஒன்றுகூடல்கள் அனைத்தையும் கருத்தாழம் மிகுந்ததாக முன்னெடுப்பதில் அதிபர் கண்ணுங் கருத்து மாயிருப்பார். அவ் ஒன்றுகூடலிற்கு முன்னர் ஆசிரியர்களின் அறிவை உரசிப்பார்க்கும் இவர் குறைபாடுகள் தென்படு மிடத்து அவர்களுக்கு சிறந்த நூல்களையும் வழங்கி அறிவுத் தேடலில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவார்.
செல்லவிருக்கும் இடங்களைப்பற்றி மாணவர்களை அறிவூட்டும் பாடவேளை ஒரு ஆசிரியருக்கு மட்டுப்படுத்தப் படாது அதில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து ஆசிரியர்களும் குறிப்பிட்டதொரு தலையங்கத்தை தெரிவு செய்து அங்கு விளக்கமளிக்க வேண்டியிருப்பதுடன் அதிபரும் முன்மாதிரியாக ஒரு தலையங்கத்தை கலந்துரை யாடுவார். அதன் மூலம் ஆசிரியர் குழாமும் உற்சாகப் படுத்தப்படுகின்றனர்.
மாணவர்களுக்கான பயிற்சி நூல் (Activity book) தயாரிப்பது ஏற்பாட்டுக்குழுவின் மற்றுமொரு பணியாகும். சுற்றுலாவில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு மாணவரும் இந்நூலை நிறைவு செய்து ஆசிரியரிடம் ஒப்படைத்தல் வேண்டும். இந்நூலில் சுற்றுலாவின் மூலம் எதிர்பார்க்கப்படும் விடயங்களைப்பற்றிய வினாக்கள் அமைந்திருப்பதுடன் கலந்து கொள்ளாதோரால் அதற்கு விடையளிப்பதும் கடினமாக அமைந்திருக்கும். மூன்றாவது ஒன்றுகூடலில் இந்நூல் மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்படும்.
பிரயாணத்திற்கு செலவிட எதிர்பார்க்கும் நிதி, காலம் ஆகிய அடிப்படை விடயங்கள் கவனத்திலெடுக்கப்பட்டு இரு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். 1. செல்லவிருக்கும் இடங்களை மாணவர்களுக்கு
அறிவித்தல். 2. செயல்நூல் தயாரித்தல். அடுத்ததாக ஏற்பாட்டுக்குழுவினால் மேற்கூறிய இரு விடயங்களும் நிர்வாகக் குழுவினருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் நிர்வாக விடயங்களான, அனுமதி, வாகனம், தரிப்பிடம், உணவு என்பவற்றை ஒழுங்கு செய்வர். இங்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழுக்கள் சுற்று நிரூபங்கள், உரிய நூல்கள், சுற்றுலா வரலாற்று அறிக்கை, நிபுணர்களின் கருத்துக்கள், பாடசாலை மட்ட தீர்மானங்கள் என்பன உள்ளடங்கும் விதமாக செயற்படுவர்.
தனது வாழ்க்கையில் பல சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து சிறப்புற நடாத்திய அனுபவம் தனது ஆசிரியர் குழாமை சிறப்பாக வழிநாடாத்த உதவியாய் அமைவதாக அதிபர் கூறுகின்றார். பிரயாணத்திற்கு முன் பல தடவைகள் சுற்றுலாக்குழுவினரை அணுகி தன்னிடமுள்ள அறிவாற்றல்
அகவிழி | பெப்ரவரி 2013

Page 10
களை அவர்களுக்கு வழங்கி அவர்களை மேம்படுத்தவும் அதிபர் தவறமாட்டார். காலம், பணம் என்பன உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்படவில்லையாயின் அது சுற்றுலாவின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் பின்னடைவுகளை ஏற்படுத்துமென்பதால் அவற்றில் கண்ணுங்கருத்துமாயிருப்பதுடன் அக்காலப்பகுதியில் ஆகார, பானங்கள் தொடர்பாகவும் விஷேட கவனம் செலுத்தப்படும்.
சுற்றுலாவில் பெருமளவு மாணவர்கள் கலந்து கொள்வதால் கவனமாக தீட்டப்பட்ட திட்டம் அமுல்படுத்தப் படாவிடின் சுற்றுலாவின் பயன்கள் குறைவடையுமென்பதை அப்பாடசாலை ஆசிரியர்கள் நன்கு விளங்கியுள்ளனர். மாணவர்களின் கட்டுப்பாடுகளையும் பொறுப்புகளையும் தாமாகவே நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து குழுக்களாகவே பார்வையிடச் செல்வர். ஒரு குழுவில் எண்ணிக்கை 25ஐ மீறாதவாறு கட்டுப்படுத்துவதன் மூலம் மாணவர்கள் இலகுவாக விளங்குவதற்கு வழி வகைகள் செய்யப்படும்.
சுற்றுலாக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு சிறந்த உணவை வழங்குவதில் மாத்திரம் திருப்தியடையாத அதிபர் அவர்களுக்கு வினோதமாகக் குளிக்கவும் ஓரிடத்தை ஏற்பாடு செய்வார். அவர்களின் பாதுகாப்புக் கருதி ஆசிரியரொருவரை முன்கூட்டியே அங்கு அனுப்பி பிரதேசவாசியொருவரின் உதவியுடன் அங்குள்ள நிலையை உறுதிப்படுத்திய பின்னரே குளிப்பதற்கு அல்லது நீராட அனுமதிக்கப்படும்.
சுற்றுலாவில் பாடசாலைக்கு வெளியிலிருந்தும் அறிஞர் களை தொடர் பு படுத்திக் கொள் வது இப்பாடசாலையில் பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது. சுற்றுலாவின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வரவழைக்கப்படும் அதிகாரிகளும் வேறுபடுவர். "சூழல்” எனும் கருப்பொருளின் கீழ் பிரயாணம் ஒழுங்கு செய்யப் பட்டபின் பாடசாலையில் சூழல் நட்பு (Eco Friend) எனும் சங்கம் தாபிக்கப்பட்டு மூலிகைத் தோட்ட உருவாக்கம் மற்றும் நிர்வாகம் அக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இயற்கை வளங்கள் மற்றும் சூழல் தொடர்பாக எழுதப் பட்டுள்ள பல நூல்கள் சூழல் அதிகார சபையினரால் வழங்கப்பட்டு சிறந்த வழிகாட்டலும் வழங்கப்பட்டது. இவ்வாறான நூல்கள் மாணவர்களின் சூழல் தொடர்பான அறிவை வளர்த்ததுடன் அண்மையிலுள்ள பாடசாலை களுக்கும் சூழல் தொடர்பான செய்திகளைப் பரப்புவதற்கு (Eco Friend society) நடவடிக்கை எடுத்தது.
இப்பாடசாலையினால் மேற்கொள்ளப்படும் அனைத்துச் சுற்றுலாக்களும் மூன்று படிமுறைகளில் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீடு சுற்றுலாவின் ஆரம்பத்திலேயே
அகவிழி பெப்ரவரி 2013

தீர்மானிக்கப்படுவதுடன் அதற்கு போதியளவு நிதியும் ஒதுக்கப்படும்.
செயல்நூலில் காணப்படும் வினாத்தளை அடிப்படை யாகக் கொண்ட மதிப்பீடு முதற்கட்டமாகும். பிரயாணம் நிறைவுபெற்று மூன்று தினங்களுக்குள் இம்மதிப்பீடு செயற்படுத்தப்படும். விடைப்பத்திரங்கள் ஆசிரியர்களினால் விரைவாக திருத்தப்பட்டு அதிக புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு சுற்றுலா ஏற்பாட்டுக் குழுவினரால் பரசில்களும் வழங்கப்படும். இரண்டாவது கட்டமாக
விடையளிக்கப்பட்டுள்ள விதம் பகுப்பாய்வு செய்யப்பட்டு போதிய தரவுகளைக் கொண்டிராத, அதிகமானோரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வினாக்கள் மேலும் பகுப்பாய்வு செய்யப்பட்டு தெளிவான விடையளிக்காததன் காரணம் கண்டறியப்பட்டு அடுத்துவரும் சுற்றுலாக்களின்போது அவை நிவர்த்தி செய்யப்படும். மேலும் கலந்துரையாடல்கள் மூலம் வழங்கப்பட்ட ஆகாரபானங்களின் நிலை அறியப் பட்டு அடுத்த முறை இத்தவறுகள் வெற்றியின் படிக்கற் களாக மதிக்கப்பட்டு செயற்படுத்தப்படும். மூன்றாவது படிமுறையாக வருடத்தில் நடந்த அனைத்து சுற்றுலாக் களினதும் தொகுப்பாக ஓர் கண்காட்சி ஏற்பாடு செய்யப் படும். கண்காட்சி தொடர்பாக அதிபர் கூறிய வசனங்கள் வருமாறு,
“வருடத்திற்குரிய அனைத்து சுற்றுலாக்களையும் நிறைவு செய்து இரு மாதங்களில் இக்கண்காட்சி ஏற்பாடு

Page 11
செய்யப்படும். கண்காட்சிக்காக ஆக்கங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி, சிறு குழுக்களாக செயற்படுத்தப்படுவதன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு நாம் பழக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு குழுவுக்கும் ஆசிரியரொருவர் தலைமை தாங்குவதால் ஆக்கக்கமலர்ச்சியில் ஈடுபடும் மாணவர் களுக்கு போதியளவு அறிவுரைகள் கிடைக்கப் பெறும். அக் குழுவிலிருந்து வெளியிடப்படும் ஆக்கங்கள் அனைத்தும் அக்குழுவிற்குப் பொறுப்பான ஆசிரியர் மூலமே பெற்றுக்கொள்ளப்படும்.”
கண்காட்சியை ஏற்பாடு செய்வதற்கு மாணவர்கள் விரும்பும் தலைப்பைப் பெற சுற்றுலாக்குழு விரும்புவதுடன் ஒரே தலைப்பு மீள மீள பெறப்படாமலிருக்கவும் வழி வகைகள் செய்கின்றன. உதாரணமாக நான்கு மாணவர்கள் தமது சுய ஆக்கமாக தலதா மாளிகையை தேர்ந்தெடுப்பதாக வைப்போம். அப்போது நான்கு மாணவர்களுக்கும் தலதா மாளிகை பற்றிய வெவ்வேறு நான்கு தலைப்புகளாக,
தியவடன நிலமே.
கட்டிட வடிவமைப்பு.
நுழைவாயில்.
பெரகர ஊர்வலம் எனவேறுபட்ட தலைப்புகளின் கீழ்
வழங்கப்படம். பாடல் - செய்யுள் தொகுப்புக்கள் கண்காட்சியில் விஷேட இடம் பிடிக்கும் ஓர் அம்சமாகும். சுற்றுலா சென்றிருந்த பிரதேசங்களைத் தொடர்பு படுத்தி எழுதப்பட்டிருக்கும் பாடல்களும் செய்யுள்களும் மாணவர்களால் இசைக்கப்பட்ட பாடல்களும் இதிலடங்கும். சுற்றுலாவில் பார்த்த விடயங்களை சித்திரங்களாக வரையவும் மாணவர்கள் தவறுவதில்லை. பரவசமான கடற்கரை, சேனைப்பயிர்ச் செய்கை, இரத்தினக்கல் அகழ்வுச்சுரங்கம், விலங்கியல், பூங்கா என்பவற்றை வரைவதும் அவை தொடர்பாக ஆக்கங்களில் ஈடுபடுவதும் வர்ண முருகைக் கற்பாறைகள், கடற்சிப்பிகள் என்பவற்றை சேகரித்தல், சேகரித்த பொருட்களை உலர்த்தி நினைவுச்சின்னங்களை உரு வாக்குவதும் நிகழும். இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு களநூலாக (Field book) வெளியிடப்படும் நாளும் மாணவர் மிகவும் சேகரிக்கும் ஓர் நாளாகும்.
கட்டுரையாக்கங்கள், ஓவியம், சிற்பம், களஆய்வு நூல் என்பவை தவிர புகைப்படமெடுத்தல் மாணவர்களின் மற்றுமொரு விஷே அம்சமாகும். அதிபரின் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் “பின்னவல யானைகள்” பற்றிய விஷால புகைப்படம் ஆண்டு 8இல் கல்வி கற்கும் மாணவரொருவரின் கமராவில் எடுக்கப்பட்டதை பெருப்பித்து எடுத்ததாக அதிபர் கூறுகிறார். புகைப்படக் கலைஞர் களையும் விஞ்சிய ஆற்றல் படைத்தது அப்படைப்பு.

வருடாந்தம் கல்விச்சுற்றுலாவில் கலந்து கொண்டு பல புகைப்படக் கலைஞர்கள் உருவாகியுள்ளனர். முன்னர் அவர்கள் தனி, குழு (Group) என புகைப்படமெடுக்க ஆர்வம் காட்டிய போதும் தற்போது எமது வழிகாட்டலின் கீழ் அபூர்வ விடயங்கள், சூழல் என்பவற்றை இயற்கை யாகவே தென்படுவது போன்று படமெடுக்கத் தொடங்கி யுள்ளனர். மாணவர்களின் திறமைகளை ஆசிரியர்கள் தவறாது வெகுமதியளித்துப் பாராட்டுவது அவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாகவுள்ளது.
சுற்றுலா தொடர்பான செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு அவசியமான வளங்களை வழங்குவதும் ஏற்பாட்டுக்குழுவின் கடமையாகும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சுற்றுலா தெடங்கும் முன் வழங்கும் செயல்நூல் சிறந்ததொரு உதாரணமாகும். ஆரம்பத்திலேயே கையில் கிடைப்பதால் அவர்கள் செல்லுமிடங்களை கூர்ந்து நோக்கி ஆராயத் தொடங்குவர். அது மட்டுமல்ல ஆக்கத்திறன் தொழிற்பாடுகளுக்குத் தேவையான கடதாசி, வன்அட்டை, சாயம், பசை, இணைப்புப் பொருட்கள் என்பவற்றையும் வழங்க ஏற்பாட்டுக்குழு தவறமாட்டாது.
ஆக்கமலர்ச்சிச் செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களின் படைப்புகள் தரம் வாய்ந்ததாக அமைவதிலும் அதிபர் கண்ணுங்கருத்துமாயிருப்பார். மாணவர் குழுக்களுக்கு ஆசிரியர்கள் பொறுப்புதாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதுடன் அவர்கள் எழுதும் முன்னாயத்த எழுத்து வேலைகளின்போது அதிபர் சரிபிழை பார்ப்பதுடன் தேவையான பரிசீலனை நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றை வழங்கி அவற்றின் தரத்தை உயர்நிலையில் பேணுவதில் சிரமப்பட்டு உழைப்பார்.
பெற்றோர் பாரியளவில் பாடசாலையில் ஒன்றுகூடும் "சுற்றுலா தினம்” பாடசாலையில் நற்பெயருக்கு இன்றியமையாதது என்பதை நன்கு விளங்கியிருக்கும் அதிபர் அன்றைய தினம் பாடசாலையில் நிகழும் அனைத்து விடயங்களும் மிகக்கவனமான முறையிலேயே நிகழ்வதற்கு மிகவும் கஷ்டப்படுவார். ஆசிரியர் குழாமை வழிநடாத்துவார். அன்றைய தினம் பாடசாலைக்கு வரும் பெற்றோரையும் பிள்ளைகளையும் வரவேற்க மாணவ அணித் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மூன்று பஸ் வண்டிகளுக்குமுரிய மாணவர்களை மூன்று வெவ்வேறு கட்டிடங்களில் ஒன்றுசேர்ப்பது வழமையாக இடம்பெறுகின்றது.
கட்டிடங்களினுள் ஒன்று சேர்ந்திருக்கும் மாணவர்கள் மணியொலித்தவுடன் கடவுளை நினைவு கூர்ந்து நாளுக் குரிய வேலைகளை தொடங்குவர். அடுத்ததாக மாணவர் களை வண்டியினுள் அமரச் செய்வது இடம் பெறும். மாணவர் கள் சிறு குழுக்களாக ஒழுங்கு படுத்தப் பட்டிருப்பதுடன் அக்குழுவிற்கு ஒரு மாணவத்தலைவரும்
அகவிழி | பெப்ரவரி 2013

Page 12
நியமிக்கப்படுவதால் இது சுலபமான விடயம். குழுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் செயல்நூலில் மேலதிகமாக ஒருபக்கம் சேர்க்கப்படும். அதில் குழுவினரின் பெயர்ப் பட்டியல் அச்சிடப்பட்டிருக்கும். இவ் வண்டிகளில் மாணவர்கள் அமரும் ஒழுங்கு கூட மற்றயவர்களுக்கு ஓர் முன்மாதிரியாகக் கொள்ளலாம். இப்பாடசாலைச் சுற்றுலாக்களை திட்டமிடும்போது குறுகிய காலப்பகுதியில் அதிகமான இடங்களைப் பார்வையிடுவதற்கல்ல. பார்க்கு மிடங்களை ஆழமாக நோக்குவதற்குரிய ஏற்பாடுகளே செய்யப்படும். அத்துடன் வகுப்பறையில் போன்று சில வினாக்களையும் வினவுவதற்கும் ஆசிரியர்கள் தவற மாட்டார்கள். மாணவர்கள் ஊக்கத்துடன் செயற்படுவதால்
“சந்திரவட்டக்கல்லை பார்த்து இரசிக்கும் மாணவர் களிடம் தாமரை மலர்கள் அவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டிருப்பதன் நோக்கம் என்ன? என வினவும்போது அவர்கள் அதனை உற்று நோக்கி கருத்துக்களை முன்வைப்பர்.”
N
மாணவர்கள் கற்றறிய வேண்டிய கல்விசாரா விடயங்களைக் கற்கவும் இக்கல்விச் சுற்றுலாக்கள் துணைபுரியக்கூடிய வகையிலேயே திட்டமிடப்படுகின்றது. ஒவ்வொரு குழுவாக வேறுபடுத்தப்பட்டிருக்கும் மாணவர்கள் தமக்குப் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள விடயங்களை சரிவர நிறைவேற்றுவர். அவையாவன 1. பஸ் வண்டியை நிறுத்தியதும் ஒரு குழுவினர்
பொருட்களை இறக்குதல். மற்றுமொரு குழுவினர் பொருட்களை வைக்கு மிடங்களை துப்பரவு செய்தல். மாணவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு என்பன இங்கு கவனத்தி லெடுக்கப்படும். இவை இடம்பெற்றிருக்கும் அதே வேளை எஞ்சிய குழுக்களில் ஒன்று தேநீர் தயாரிக்க மற்றையது தேநீர் அருந்தத் தயாராயிருக்கும். தேநீர் அருந்தியதும்
அவர்கள் சமையல் நடவடிக்கைகளுக்காக தயாராவர்.
இவர்களிடையே கருத்து முரண்பாடுகளேதும் இடம்பெறு மிடத்து அவை கலந்துரையாடல் மூலமே தீர்த்து வைக்கப்படும். இதுவும் எதிர்கால வாழ்க்கையில் எழக்கூடிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்குமாற்றலை வளர்க்கும் வகையிலேயே அமைந்திருக்கம் ஒரு வகையில் அதுவும் ஓர் கற்பித்தலாகும்.
அத்துடன் இவ்வாறு சிறப்பாகத் திட்டமிடுவதன் மூலம் முறையாக வேலை செய்தல், ஒற்றுமை, குழுவுணர்வு, தலைமைத்துவ ஆற்றல் என்பன வளர்ச்சியடைகின்றது. மேலும் வெவ்வேறு மூலங்களிலிருந்து அறிவைப் பெற்று பகுப்பாய்வு செய்து வெளியிடுவதற்கு உற்றுநோக்கல் (Observation), நூல் பரசீலனை (Book reference), அறிஞர்
அகவிழி பெப்ரவரி 2013

மற்றும் நிறுவனங்களுடனான தொடர்பாடல் என்பன துணைபுரிகின்றன. அத்துடன் சென்ற முறை கடலோர பாதுகாப்பு அதிகாரசபை, சூழல் அதிகாரசபை, உப்பள நிறுவனங் கள் என் பன நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததாக குறிப்பிடுகின்றார்.
"ஒரு வெற்றி பல வெற்றிகளுக்கு மூலாதாரமாக அமையும்” எனும் கூற்றை கடுமையாக விசுவாசிக்கும் அதிபரவர்கள் மாணவர்களிடையே போட்டியை ஏற்படுத்தி பரிசில்களையும் வழங்குகிறார். களநூலின் (Field book) அட்டைப்படத்தை ஆக்குவதற்கு வேறு பரிசிலொன்றையும் ஒதுக்கியுள்ளார். மாணவர்களைத் தெரிவு செய்யும்போது தனிப்பட்ட விடயங்கள் தலையிடக்கூடாது என்பதற்காக வேறொரு நடுவர் குழுவையும் வரவழைப்பது அவரது வழமையாகும்.
இவ்வாறு ஆழமாகத் திட்டமிடப்படும் சுற்றுலாக்கள் இப்பாடசாலைக்கு ஆண்டு 06 இற்கு வரும் மாணவர்களிற்கே புதிய அனுபவம். ஏனைய ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் பொதுவான விடயம். அதிபரின் வசனங்கள்
வருமாறு,
"நான் இப்பாடசாலைக்கு வந்தபோது இவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை. நான் செய்த ஆய்வுகளின் பயனாக இவ்வாறான திட்டமிடல்களை முன்னெடுத்த போது இது பற்றிய போதிய தெளிவற்ற ஆசிரியர்களும் வெறுப்புடன் ஏன்? எனும் வினாவை எழுப்பினார்கள். நான் அவற்றிற்கு பொறுமையுடன் பதிலளித்து முன்னெடுத்தபோது அவர்கள் அனுபவம் மூலம் உணர்ந்த உண்மைகளால் இது வெற்றிகரமாக அமைந்தது. தற்போது எனது ஆசிரியர் குழாம் தானாகவே இதனைச் செய்யப் பழக்கப்பட்டுள்ளனர்.”
மேலும் நான் இப்பாடசாலைக்கு வரும் பயிலுனர் ஆசிரியர்களையும் இவற்றில் ஈடுபடுத்துவதால் அவர்கள் இவ்விடயங்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றனர். அத்துடன் எம்மிடம் விவரம் கேட்கும் எவருக்கும் நாம் போதிய விளக்கமளிக்க எப்போதும் தயாராகவுள்ளோம்.
இறுதியாக,
பாடசாலை மாணவர்களைக் கண்டறிவதற்கும். (Discovery) ஆக்கமலர்ச்சியின்பாலும்...
ஆசிரியர் மனப்பாங்கை நல்வழிப்படுத்துதல்.
பாடசாலைச் சமூகத்தில் நேர்நிலையை ஏற்படுத்தல். கல்விச் சுற்றுலாக்களை உமது பாடசாலையிலும் மேற்கொள்ள முடியும். ஆகவே இவ்வாறானதொரு இணையற்ற நற்செயலின்பால் மக்களைக் கவர்ந்து மனப்பாங்கு மாற்றமேற்படுத்தி தாய் மண்ணில் தரித்து நிற்க இன்றே எழுந்து வாருங்கள்.
10

Page 13
சிறுவர் உரிமை துஷ்பிரயோகம்
அபூபக்கர் நளீம் வருகை விரிவுரையாளர், இலங்கை திறந்
அறிமுகம்
இன்றைய நவீன உலகின் கவனக் குவிமையானது சிறுவர்களின்பாலும் அவர்களின் உரிமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவற்றின்பாலும் ஈர்க்கப்பட்டுள்ளது. சிறுவர் கள் மீது புரியப்படும் உரிமைமீறல்களும் துஷ்பிரயோகங்களும் அதிகளவு அதிகரித்துச் செல்லும் தன்மையானது சிறுவர் உரிமைகள் உரிமைமீறல்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பாரிய ஆய்வு முயற்சிகளுக்கு வழிகோலியுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான எண்ணக்கருவானது அண்மைக்கால தோற்றப் பாடாயினும் அதன் வரலாறு மிக பழமையானது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து முறைசார்ந்த அமைப்பில் வளர்ச்சிபெற்று வந்த இவ்வெண்ணக்கரு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் சிறுவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் சிறுவர் உரிமைகள் பற்றிய எண்ணக்கருவும் வலுவடைந்தது.
சிறுவர் உரிமைகள் - வரைவிலக்கணம்
சிறுவர் உரிமைகளை வரைவிலக்கணப்படுத்துவது கடினமானதொரு விடயமாகும்.உரிமைகளை வரைவிலக் கணப்படுத்த முன்னர் சிறுவர்கள் யார்? அவர்களது வயதெல்லை என்ன? என்பதை வரைவிலக்கணப் படுத்து வதிலும் நிர்ணயம் செய்வதிலும் பல்வேறு கருத்து
முரண்பாடுகள் நிலவுகின்றன.
சிறுவர் அல்லது பிள்ளை என்பதை Oxford Dictionary வரைவிலக்கணப்படுத்தும் போது "பருவவயதை அடை வதற்கு முன்னுள்ள ஒவ்வொரு மனிதப்பிறவியும் குழந்தை என்ற வட்டத்திற்குள் நோக்கப்படல் வேண்டும்” என்று
குறிப்பிடுகிறது.
1989ல் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தின் முதலாம் உறுப்புரை பிள்ளை என்பதை வரைவிலக்கணப்படுத்துகையில் “தற்போதைய சமவாயத்தின் நோக்கங்களின் பொருட்டு 18 வயதுக்குறைந்த மனிதப்பிறவி ஒவ்வொன்றும் ஒரு பிள்ளை எனக் கருதப்படும் சிறுவர் தொடர் பான சட்டத்தின்படி பராயம் அடையும் வயது முன்னதாகவே

களும் களும்
த பல்கலைக்கழகம்
வரையறுக்கப்பட்டிருந்தால் அன்றி மேற்படி வயதெல்லையே பிள்ளையைக் குறிக்கும்”.
இலங்கை 1991ம் ஆண்டு வெளியிட்ட சிறுவர் உரிமைகள் சாசனம் “பிள்ளை என்பது 18 வயதிற்குட்பட்ட எந்த ஆளையும் குறிக்கும் என குறிப்பிட்டுள்ளது”.
எனவே இவ்வயதெல்லைப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளனைத்தும் சிறுவர் உரிமைகள்
எனக்கொள்ளப்படும்.
சர்வதேச சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் அடங்கி யுள்ள சிறுவர் உரிமைகளை நான்கு பெரும் தொகுதிகளாக பிரித்து நோக்கலாம்.
1) உய்வு தொடர்பான உரிமைகள் உயிர்வாழ்வதற்கான
உரிமைகள்.
2) வளர்ச்சியும் விருத்தியும் தொடர்பான உரிமைகள்.
3) பங்குபற்றுதல் தொடர்பான உரிமைகள். 4) பாதுகாப்புப் பெறும் உரிமைகள்.
சிறுவர் துஷ்பிரயோகம்- அறிமுகம்
சிறுவர் துஷ்பிரயோகம் என்ற சொல்லாடல் இன்று அதிகளவு பலராலும் உச்சரிக்கப்படுவதை அவதானிக்கிறோம். சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் சிறுவர்கள் உள்ளாக்கப்படும் சந்தர்ப்பங்கள் உலகில் அதிகம் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பதை வரைவிலக்கணப் படுத்துவதிலும் பல கருத்துக்கள் நிலவுவதைக் காணலாம். ஹென்றி கெம்ப் (Hentry kemp) என்பவர் "தவிர்க்கக்கூடிய சாதாரண விருத்திப்போக்கு நிலைகுலைதல்” என்று சிறுவர் துஷ்பிரயோகத்தை வரைவிலக்கணப்படுத்தியுள்ளார். சாதாரண விருத்தி என்பது உடல் உள மன எழுச்சிகள் நுண்மதிகள் சமூகசார் விருத்திகளாகும்.
"அசட்டைத்தனமாக பிள்ளையின் உடற்சுகாதாரம் விருத்தி தொடர்பான விடயங்கள் மீதான பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் ஆகும். இச்செயற்பாடு தனிநபர் ரீதியாகவோ நிறுவனமயப்படுத்தப்பட்டதாகவோ
அகவிழி பெப்ரவரி 2013

Page 14
இருந்தாலும் பிள்ளையின் மீது நேரடித்தாக்கம் அல்லது நேரடியற்ற தாக்கமாகவோ இருந்தாலும் அவையனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் ஆகும்” என்ற முக்கியமானதொரு வரைவிலக்கணமும் உண்டு.
ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் காணப்படும் உரிமைகளை கொடுக்காமல் தடுக்கும் செயற்பாடுகளை சிறுவர் துஷ்பிரயோகம் எனலாம்.
- “ஒரு பிள்ளையின் மீது உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக அல்லது மனவெழுச்சி ரீதியாக மேற்கொள்ளப்படும் தீங்குகள் உபத்திரங்கள் அனைத்தும் சிறுவர்துஷ்பிரயோகம்” எனக் கொள்ளமுடியும்.
ஒரு பிள்ளை மீது இழைக்கப்படுகின்ற எல்லா வகையான தீய குற்றம் சார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகமாகும்.
சிறுவர் துஷ்பிரயோக வகைகள்
சிறுவர் துஷ்பிரயோகங்களை பல்வேறு வகைப்படுத்தி நோக்கப்படுவதுண்டு. இந்த வகையில் சிறுவர் துஷ்பிரயோக வகைகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
* உடல்சார்ந்த வன்செயல்கள் பிள்ளையின் உடலைப்பாதிக்கும் வகையில் பெற்றோர் அல்லது குடும்ப உறவினர்கள் அல்லது ஏனையோர் இழைக்கும் வன்செயல்கள் அனைத்தும் இப்பகுதியில் அடங்கும்.இவை உடலைமாத்திரமன்றி உள்ளத்தையும் பாதிக்கக் கூடியன. சிலவேளைகளில் உடல் சார்ந்த வன்செயல்கள் அங்கக்குறைபாடுகளைக் கூட ஏற்படுத்தி விடும். சிறுவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை வழங்குவதும் இதற்குள் உள்ளடக்கப்படலாம்.
உதாரணமாக:
பிள்ளையை தாறுமாறாக அடித்தல்.
எரிகாயங்களை ஏற்படுத்தல். அங்கச்சிதைவுகளை மேற்கொள்ளல். உடலின் முக்கிய உறுப்புக்களை அகற்றுதல்.
* பாலியல் துஷ்பிரயோகம்.
சிறுவர் துஷ்பிரயோக வகைகளில் மிக முக்கியமானதொன்றாக இது காணப்படுகிறது.சிறுவர்களை பாலியல் ரீதியாக ஈடுபடுத்தல் அல்லது பாலியல் ரீதியாக உழைப்பதற்கு பயன்படுத்தல் போன்ற நடவடிக்கைகளனைத்தும் இதில் உள்ளடங்கும்.பாலியல் ரீதியான நோய்கள் பிள்ளைகளுக்கு தொற்றும் நடவடிக்கைகளையும் இப்பகுதியிலேயே உள்ளடக்கவேண்டியிருக்கிறது.
அகவிழி | பெப்ரவரி 2013

பாலியல் துஷ்பிரயோகத்தால் பிள்ளைகள் பல்வேறு விதமான பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பாலியல் நோய்கள் தொற்றுதல் விரும்பத்தகாத கருத் தரிப்புக்கள் மனச்சோர்வு ஏற்படுதல் உளரீதியான பாதிப்பு ஏற்படுதல். சமூகக்களங்கம் (Social Stigma) ஏற்படல். போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
* பிள்ளைகளைப் புறக்கணித்தல்.
பெற்றோர்கள் அல்லது பராமரிப்பவர்கள் பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் ஒதுக்குதல் அல்லது மறுத்தல் பிறர் அவர்களை பல்வேறு அடிப்படைகளில் சுரண்டுவதற்கு இடம் வழங் குதல் ஆகியவையே இவ் வகையில் உள்ளடங்கும்.
பிள்ளைகள் பாதுகாப்புப் பெறும் உரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பம் இதுவாகும் மேலும் பிள்ளை பங்கேற்கும் உரிமையிலிருந்து அதனை புறக்கணித்து தள்ளிவிடுவதும் இதிலடங்கும்.
* உள் அல்லது மனஎழுச்சிசார் துஷ்பிரயோகம்.
பிள்ளையின் உளவியலை அல்லது மனதை பாதிக்கின்ற வகையில் இடம்பெறும் நடவடிக்கைகள் அனைத்தும் இவ்வகையைச்சாரும். பிள்ளைகளை இழிவாகப் பேசி மனதைப் புண்படுத்தல்.அவர்களால் ஏதாவதொன்றை நிறைவேற்ற முடியாத நிலையில் அவர்களை அவமானப் படுத்துதல் போன்ற அம்சங்கள் இதில் உள்ளடங்கும்
* சிறுவர் ஊழியம்.
சர்வதேச அளவில் சிறுவர் ஊழியமும் இன்று அதிகரித்துக் காணப்படுகிறது.பிள்ளைகளை நேரடியாக தொழிலுக் கமர்த்தல் அல்லது உழைப்பதற்காக அவர் களை பயன்படுத்துதல் போன்ற அனைத்து அம்சங்களும் இப்பகுதியைச் சாரும் சிறுவர் களை போராளிகளாக சேர்த்தல், பாலியல் ரீதியான தொழில்களுக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இன்றைய உலகில் அதிகம் இடம்பெறுகின்றது.
சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அண்மைக்கால மதிப்பீகளின் படி "5-17 வயதிற்கிடைப்பட்ட 246 மில்லியன் பிள்ளைகள் சிறுவர் ஊழியத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்களில் 70 வீதமான அல்லது 171 மில்லியன் பிள்ளைகள் சுரங்கங்களிலும் விவசாயத்தில் இரசாயனப் பொருட்களுடனும் பீடை கொல்லிகளுடனும் அல்லது அபாயகரமான இயந்திரங்களுடனும் ஆபத்துமிக்க சூழ்நிலைகளில் வேலை செய்கின்றனர். இவர்களுள் 73 மில்லியன் பிள்ளைகள் 10 வயதுக்கு குறைந்தவர்களாகும்”. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
12

Page 15
பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
பாடசாலைகளில் பல்வேறு வழிகளில் சிறுவர் துஷ் பிரயோகம் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சென்ற காலங்களில் பாடசாலைகளில் அதிகளவு சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் வழிகள் காணப்பட்டன. தற்காலத்தில் இந்நிலை ஓரளவு மாறியுள்ளது. சிறுவர் உரிமை தொடர்பான சட்டங்கள் இறுக்கமாகக் காணப்படுதல் இவை தொடர்பாக பிரபல்யப்படுத்தப்பட்டிருத்தல் சிறுவர் துஷ்பிரயோகங்களை மேற்கொள்வோர்க்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
தற்போது பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஓரளவு குறைந்துள்ள போதிலும் முற்றாக இடம்பெறவில்லை எனக் கூறமுடியாது.கிராமப்புற பாடசாலைகள் முதல் நகர்ப்புற பாடசாலைகள் வரை இன்றும் சிறுவர் துஷ் பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன.
மனப்பாங்குள் கலாசாரத் தாக்கங்கள் பொருளாதார நிலைமை தனிநபர் சுபாவங்கள் வளப்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகள் பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற வழிகோலுகின்றன.
பாடசாலைகளைப் பொறுத்தவரை சிறுவர் துஷ் பிரயோகம் இடம்பெறுவதற்கு முக்கிய அடிப்படையாக அதிகார மேலாதிக்கத்தைக் குறிப்பிடலாம்.அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களின் மீது அதிகாரத்தைப் பிரயோகித்து சிலவேளைகளில் துஷ்பிரயோகங்களை மேற்கொள்கின்றனர். மாணவர்களின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுதல், சுயவிருப்புத் தேர்வு புறக்கணிக்கப்படுதல் மாணவர்களுக்கு மனோவியல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் அதிபர் ஆசிரியர்கள் நடந்து கொள்ளல் போன்ற வழிகளிலும் பாடசாலைகளில் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.
பாடசாலைகளில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங் களுக்கு சிறந்த உதாரணங்களாக பின்வரும் உண்மைச் சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
சம்பவம்-01
அதிபர் ஒருவர் ஆரம்பநிலை மாணவி ஒருவரை பின்னேர வகுப்புக்கு வருமாறு அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
சம்பவம்-02
காலை உடற்பயிற்சியின்போது உடல்நிலை மோசமான நிலையிலிருந்த மாணவனை கட்டயாப்படுத்தி உடற் பயிற்சியில் ஈடுபடுமாறு பணித்தபோது அம்மாணவன் அதற்கு உடன்படாததால் அம்மாணவனை ஆசிரியர்
13

அடித்து காயப்படுத்தியிருக்கிறார். இச்சம்பவம் நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கிறது.
சம்பவம்-03
மெல்லக்கற்கும் மாணவன் ஒருவன் வழங்கப்பட்ட பயிற்சியை சரியாகச் செய்து உரிய நேரத்திற்குள் சமர்ப்பிக்காத போது ஆசிரியர் அம்மாணவனை கடும் வெயிலில் சுடுமணலில் முட்டிக்காலில் நிற்க வைத்ததால்
அம்மாணவன் மயங்கி விழுந்திருக்கிறான்.
சம்பவம் - 04
அதிபருடன் முரண்பட்ட ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குச் சென்று தன்னால் கற்பிக்க முடியாதென்று கூறி கற்பித்தலைப் பகிஷ்கரித்து பிள்ளையின் கற்கும் உரிமையை மறுப்பதன் மூலம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம்-05
வறுமையான ஒரு வளர்ந்த மாணவன் தலைமுடி வெட்டாமல் பாடசாலைக்கு சமுகளித்தபோது ஓர் ஆசிரியர் வகுப்பறையினுள் ஆண் பெண் மாணவர்கள் முன்னிலையில் கத்தரிக்கோலால் அம்மாணவனின் முடியை அங்குமிங்கும்
அசிங்கமாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறார்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு அரச அதிகார மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுத்தல் போன்றவற்றிற்கான நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் இன்று அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையிலும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் சட்ட ஏற்பாடுகளும் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கவும் துஷ்பிரயோகங்களைத் தடுக்கவும் மும்முரமாக செயற்படுவதை அவதானிக்க முடியும். அவ்வாறான பொறிமுறைகளாக பின்வருவனவற்றை இனங்காணமுடிகிறது.
சட்டரீதியான ஏற்பாடுகள்
அரசு பாராளுமன்றத்தினூடாக சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கவும் துஷ்பிரயோகங்களை தடுக்கவும் கூடிய பல சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தி வருகின்றது. இச்சட்ட ஏற்பாடுகள் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை
வருமாறு.
1939ம் ஆண்டின் 48ம் இலக்க சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச்சட்டமும் அதன் திருத்தமும்.
அகவிழி | பெப்ரவரி 2013

Page 16
1939ம் ஆண்டின் 31ம் இலக்க கல்விக்கட்டளைச்சட்டம்.
1939ம் ஆண்டின் 28ம் இலக்க இளம் குற்றவாளிகள் சம்பந்தமான கட்டளைச்சட்டமும் அதன் திருத்தமும்.
1944ம் ஆண்டின் 42ம் இலக்க குற்றவாளிகளை சிறைப் படுத்துதல் சம் பந் தமான சட்டமும் திருத்தங்களும். 1956ம் ஆண்டின் 47ம் இலக்க பெண்கள் இளைஞர் மற்றும் சிறுவர்களை சேவையிலீடுபடுத்தும் சட்டம்.
1964ம் ஆண்டின் 43ம் இலக்க 1973ம் ஆண்டின் 29ம் இலக்க 1984ம் ஆண்டின் 32ம் இலக்க திருத்தச் சட்டங்கள்.
1998ம் ஆண்டின் 50ம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச்சட்டம்.
மாவட்ட சிறுவர்பாதுகாப்புக் குழு (District Child Protection Committee)
சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய ஒரு குழுவாக இது காணப்படுகிறது. சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்துவதில் இக்குழு கவனம் செலுத்துகிறது. மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் சிறுவர் தொடர்பாக நியமிக்கப் பட்டிருக்கின்ற அதிகாரிகளை இணைத்து செயற்படுவதோடு யுனிசெப் நிறுவனமும் இதனுடன் இணைந்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்
1998ம் ஆண்டின் 50ம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தின் கீழ் இலங்கையின் 12 மாவட்டங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வுத்தி யோகத்தர் சிறுவர் உரிமைப்பாதுகாப்பு பொறி முறையின் மைற்கல் எனக் கருதலாம். இவ்வுத்தியோகத்தரின் செயற்பாடானது மிக விரிந்த தளங்களினூடாக நோக்கப் படுகின்றது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அவ்வுரிமை மீறல்கள் இடம் பெறுவதற்கான சமூக பொருளாதாரக் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்திப்பதற்கான உரிய நடவடிக்கைகளை தகுந்த அதிகாரிகளின் மூலம் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதாகும்.பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குதல் விழிப்புணர்வு ரீதியிலான கண்காட்சிகள் கருத்தரங்குகள் போன்றவற்றை ஒழுங்கு செய்து
அறிவுறுத்துவதாகும்.
(ன்.
அகவிழி | பெப்ரவரி 2013

பெண்கள் சிறுவர் பாதுகாப்புப் பிரிவு (பொலிஸ் நிலையம்)
சிறுவர் உரிமைப் பாதுகாப்பு பொறிமுறையின் முக்கிய பிரிவாக பொலிஸ் பிரிவின் ஒரு பகுதியாக இது இயங்குகின்றது. சிறுவர் உரிமைப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சட்ட ரீதியான அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரிவாக செயற்படுகிறது.சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற போது அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. நீதி விசாரணைகளுக்கு உட்படுத்துதல் சம்பந்தப்பட்டவரைக் கைதுசெய்தல் துஷ்பிரயோகத் திற்குள்ளாக்கப்பட்ட பாலியர்களுக்கு ஆறுதல் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றது. தமது பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களிலும் பாடசாலைகளிலும் மத நிறுவனங்களிலும் சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பான முன்னெடுப்புக்களை செயற்படுத்துகிறது.
மருத்துவ சுகாதாரக் காரியாலயம் (M.O.H. Ofnce)
சிறுவர் உரிமை மீறல்களில் மிக முக்கியமான விடயமாகக் கருதப்படும் சிசுமரணம் போசாக்கின்மை போன்ற காரணிகளை விட்டும் பாதுகாப்பது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்துகின்றன. இக்காரியாலயங்கள் பல்வேறு செயற்திட்டங்களை அதாவது சிறுவர் விழிப்புணர்வு கருத்தரங்குகளை கண்காட்சிகளை ஒழுங்கு செய்வதோடு பிள்ளை வளர்ப்புத் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகின்றன.குறிப்பாக சிறுவர்களின் உடல்ரீதியான வளர்ச்சியில் கவனம் செலுத்துவதோடு அதன் உளவியல் ரீதியான வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகின்றது.
இக்காரியாலயங்களில் பணிபுரியும் பெண்தாதிமார்கள் சிறுவர் நலனில் பெரும் அக்கறை செலுத்துவதோடு கர்ப்பிணிப் பெண்களின் நலன்களில் அக்கறை செலுத்து வதிலும் சிறுபிள்ளைத் தாய்மார்களின் நலன்களிலும் அக்கறை செலுத்துவதினூடாக சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பிரதேச செயலகக்கட்டமைப்பு
இப்பிரதேச செயலகங்கள் ஒவ்வொன்றிலும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பொன்று காணப்படுகின்றது. மாவட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு தொடர்பாக உதவிகளை மேற்கொள்வதோடு அதற்கான சிறுவர் உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தகவல்களை வழங்கி விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள் கின்றது. இந்தப் பிரதேச செயலக பிரிவுக் கட்டமைப்பானது பிரதேச செயலாளரைத் தலைவராகக் கொண்டு

Page 17
இயங்குகின்றது. இக்கட்டமைப்பானது பிரதேச செயலாளர் பிரிவிற் காணப்படும் ஒவ்வொரு கிராம சேவகர்களையும் சமூகசேவை உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆலோசனைகள்
எமது சமூகத்திலுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்களை இல்லாதொழிப்பதற்கு பல்வேறு சட்ட ஏற்பாடுகளும் நிறுவன அமைப்புக்களும் காணப்பட்ட போதிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் முற்றாக நிறுத்தப்படவில்லை. எனவே சமூகரீதியாக பல முன்னெடுப்புக்களை மேற்கொள்கின்ற போதே அதனை குறைத்துக் கொள்ள முடியுமானதாக இருக்கும்.
சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்கு சமூகரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
* மதஸ்தாபனங்களினூடான நடவடிக்கைகள்
ஒவ்வொரு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதஸ்தலங்களான பள்ளிவாசல்கள் கோயில்கள் விகாரைகள் தேவாலயங்கள் போன்றவற்றினூடாக திட்டமிட்ட செயற்பாடுகளை சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆன்மீக ரீதியாக மனமாற்றத்தை கொண்டு வரக்கூடிய உபதேசங்கள் போன்றவற்றையும் இவற்றினூடாக அமுல்படுத்தலாம்.
* வள ைக
வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
சமூகவியலோடு ஒன்றித்த ஒரு பிரச்சினையாகவே சிறுவர் துஷ்பிரயோகம் காணப்படுகிறது. சமூகவியல் பிரச்சினையை மிக வேகமாக ஒழிப்பதென்பது சாத்தியமற்றது. அதற்கான பின்னணிக் காரணிகளை இனங்கண்டு அவற்றை இழிவளவாக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகக் காணப்படும் வறுமையை ஒழிப்பதற்காக சமுதாய மட்டத்திலும் சில முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டும்.
*)
சமூகத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
பல அமைப்புக்களின் மூலம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கருத்தரங்குகள் துண்டுபிரசுரங்கள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை போதியளவிலில்லை என்றே கூற வேண்டியுள்ளது. குறிப்பாக கிராமப்புற பெற்றோர்களுக்கு சிறுவர் உரிமைகள் துஷ்பிரயோகங்கள் பற்றிய போதிய விளக்கமின்மை
15

பிள்ளை வளர்ப்புப் பற்றிய அம்சங்கள் சரியாகத் தெரியாமை போன்ற நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றை இல்லாமல் செய்து சமூகத்தில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்ட தொடர்ந்தேர்ச்சியான சமூக விழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
* தொடர்பூடகத் துறையை சரியாகக் கையாளுதல்.
இன்ரநெற் கணணி தொலைபேசி ஆபாசப்பத்திரிகைகள் போன்றவைகள் சிறுவர் துஷ்பிரயோகங்களை ஊக்கு விக்கின்றன. எனவே இவை தொடர்பாக முனைப்புடன் செயற்பட்டு சரியான விதத்தில் இவற்றைக் கையாள் வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முடிவுரை
சிறுவர் உரிமைகள் தொடர்பான கருத்தாடல்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக சர்வதேச ரீதியாக மிகப் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிறுவர் உரிமை மீறல்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. இவை திட்டமிடப்பட்ட நீண்டநாள் செயற்பாடுகளினூடாகவே கட்டுப்படுத்தப்பட வேண்டிய அம்சமாக இருக்கிறதென்றால் அது மிகையாகாது. சமூக விழிப்புணர்வு ஈடுபாடு என்பனவும் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மிக அவசியமாகும்.
உசாத்துணைகள்
01. )
இலங்கை திறந்த பல்கலைக்கழகம், (2002) சிறுவர் உரிமைகள் மானுடவியல் சமூக விஞ்ஞானபீடம் இலங்கை திறந்த
பல்கலைக்கழகம். 02. )
காமினி ஜெயகுரு, (1990) சிறுவர் விபச்சாரம்-வளர்ந்து வரும்
ஒரு தீங்கு, மக்கள் வங்கி, இலங்கை.
03. )
குணசேகர.எஸ்.டபுள்யூ.ஈ., (1998) சிறுவர் உரிமைகள் இலங்கை
அனுபவம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம். 04.
யுனிசெப், (1999) சிறுவர்களை இம்சித்தல் தொடர்பான கைந்
நூல், இலங்கை பொலிஸ் திணைக்களம் யுனிசெப் கொழும்பு. 05.
ஐ.நா., (1989) சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம், ஐ.நா.
வின் சிறுவர் நிதியம்.
06.
De Mel, Lal Pramanath(1998), Children Rights * Childrent Charter,
Godage, Colombo.
07.
Ariyapala, M.w. Chammi, S., (1999) Children Rights of Children Living in Stums, Colombo City INASIA, Colombo.
அகவிழி பெப்ரவரி 2013

Page 18
ஒரு கல்விச் செயற்பா
நாட்குறிப்பிலிரு
திருமதி சுஜாத்தா கமகே Ph
LIRNEAsia, 12, Balcombe Place, Colombo உபாலி சந்திரசிரி என்ற மனந்தளரா கல்வியியலாளரொருவர் அம்பாறை மாவட்டத்தின் ஆறு ஆரம்பப் பாடசாலைகளில் கடந்த ஒரு வருட காலமாகத் தான் பணி செய்ததன் பயனாக ஏற்படுத்திய முன்னேற்றத்தை நேரில் காணுமாறு கிழக்கு மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளரான திருமதி திலகா குமாரிஹாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார். நிறைய வற்புறுத்தல்களின் பின்னர் தயக்கத்துடன் அவர் வந்தாலும், அவர் நேரில் கண்ட காட்சிகள் அவர் கண்களில் நீரை வரவழைத்துவிட்டன. அவர் இதனை வேறொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடும்போது, "ஒருவர் தலையணையுறையைத் உட்பக்கம் வெளிப்பக்கமாக திருப்பிப் போட்டது போல ஆசிரியர்களையும் மாணவர் களையும் உபாலி மாற்றிவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு இப்பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் போக்குகள் மாற்றப்பட்டு ஆசிரியர் மாணவர் உறவுகள் வலுவடைந்திருந்தன. .
எங்கள் பிரபஞ்சத்தைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் பாடம் கற்பிக்க நேர்ந்தால், இரவில் நெருப்பு வெளிச்சத்தில் மாணவர்களுடன் கூடி சம்பந்தப்பட்ட பாடத்தை நேரிலே பார்த்துக் கற்கும் செயன்முறையில் ஆசிரியர்கள் கற்பிக்கத் தயாராக இருந்தனர். தண்ணீர் பற்றிய பாடம் ஒரு நீர்க்கரைக்குச் செல்லும் வெளிக்கள விஜயத்தை உள்ளடக்கியிருந்தது. இதற்குப் பெற்றோரின் உதவியும் அமோகமாகக் கிடைத்தது. மரத்தின் கீழ் அமர்ந்து படிக்க வேண்டிய பாடங்களுக்காக பெற்றோர் மரப்பலகைகளாலான மேசைகளையும் அமைத்துக் கொடுக்க உதவியிருந்தனர். முன்பு 70வீதமாக இருந்த மாணவர் வரவு இடாப்பு 100 வீதமாக முழுமை பெற்றிருந்தது. இந்த மாற்றம் எப்படி நடந்தது என்பது ஒரு உணர்வூட்டும் கதையாகும்.
இக்கதைக்கு மேலும் பல கதாபாத்திரங்கள் உள்ளன. கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சர் மாண்புமிகு விமலவீர திஸாநாயக்க அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திர மாகும். அவரின்றி இக்கதை நடந்திராது. தமது மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கான ஒரு எளிமையான தொலைநோக்கினை முன்வைத்து செயற்படும் மனிதரிவர். தங்களது கல்விச்சான்றிதழ்களை இறுகப் பற்றிக்கொண்டு, கூட்டிப்பெருக்கும் வேலையாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு அரசாங்க உத்தியோகம் வேண்டுமென்ற கீழ்நிலைக்குச் செல்லாத தன்னம்பிக்கையுள்ள இளைஞர் யுவதிகளை
அகவிழி | பெப்ரவரி 2013

ட்டாளனின்
ந்து...........
D, MPA 00800, Sri Lanka
உருவாக்கக் கூடிய கல்வி முறையொன்றுதான் அவர் விரும்புவது. உபாலியின் புதுமையான கருத்துக்கள் அவருடைய மனத்தை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. அவர் பின்னின்று தள்ளியிராவிட்டால் கிழக்கு மாகாணத்தின் கல்வி உத்தியோகத்தர்கள் உபாலியைக் கவனித்திருக்க மாட்டார்கள்.
பொதுக்கொள்கையின் வெற்றிக்கு மூவகையான நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர், சிவில் சமூகத்தினர் ஆகியோரே அவர்கள். தொலைநோக்கு கொண்டதோர் அரசியல்வாதியும் பற்றுறுதியுள்ள உத்தியோகத்தரும் இணைந்திருக்கும் போதுதான் எமக்குத்தேவையான எந்தவொரு சீரமைப்பும் நிகழக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறானதொரு அரசியல் வாதியும் உத்தியோகத்தரும் இல்லாத சந்தர்ப்பங்களில் ஒரு கொள்கை யன்னலின் திறப்புக்காகக் காத்திருப்பதேயன்றி சிவில் சமூகத்தினர் செய்யக்கூடியது வேறொன்றுமில்லையாகும். கொள்கை யன்னல் (Policy window) என்றால் என்னவென்று லிண்குவிஸ்ட் (lindquist) என்னும் அறிஞர் வரைவிலக்கணம் கொடுத்திருக்கிறார். கொள்கை யன்னல் என்பது பிரச்சினையும் கொள்கையும் அரசியலும் ஒன்றிணையும் ஒரு சந்தர்ப்பமாகும். ஒரு கொள்கைச் செயலாளர் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக ஒரு கொள்கையைத் தீர்வாக வைத்திருப்பார். ஆனால் சூழ்நிலை அதற்கு ஒத்து வராதபோது அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அப்பிரச்சினை முக்கியமானதாகத் தோன்றி அதற்கான அரசியற் சூழல், அதாவது அரசியல் வாதியும் அரசியல் முறைமையும் ஒரு கொள்கை யடிப்படையிலான தீர்வை நாடி நிற்கும்போதுதான் கொள்கை யன்னல் திறக்கப்படுகிறது. உபாலி சந்திரசிரி கொள்கை யன்னல் என்கின்ற கோட்பாட்டினை விளங்கிக் கொண்ட ஒரு சிவில் சமூகத்தலைவராக சிவில் சமூகத்தின் உண்மையான பங்களிப்பினை புரிந்து கொண்டுள்ளார். அதற்கு மேலாக நம்மில் சிலரிடையே மட்டும் இருக்கக்கூடிய பற்றுறுதியையும் கொண்டுள்ளார்.
நான் உபாலி சந்திரசிரியைப்பற்றி ராவய பத்திரிகையில் அவர் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்த பின்னர் தான் அறிந்து கொண்டேன். அவரது கட்டுரை ஒரு புதிய காற்றை சுவாசிப்பது போலிருந்தது. அதில் அவர் தமது சொந்த அனுபவத்தை ஒரு பொது முயற்சிக்கு திசை திருப்புவது பற்றி மனம் திறந்து பேசியிருந்தார். அவரது
மகள் அப்போது கொழும்பின் பிரபல பாடசாலை யொன்றில்
16

Page 19
6ம் தரத்திற்கு அனுமதி பெறத்தகுதி பெற்றிருந்த போது அவருக்கு எலும்பு சம்பந்தமான நோயொன்றிருப்பதாகவும் அதனால் குறித்த அப்பாடசாலைக்கு போக முடியாதெனவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி அவளை அயலிலுள்ள கொழும்பு 2 ன் விகாரமகாதேவி பெண்கள் பாடசாலையில் சேர்த்தார். அப்பாடசாலையில் பணி செய்த அதிபரும் ஆசிரியர்களும் அங்கிருக்கும் மாணவர்களை அசட்டையாக நடத்தியது அவருக்குத் தெரியவர ஆரம்பித்தது. தமது மாணவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர் களென்றும் அம்மாணவர்கள் தமக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு சட்டைகள் தைக்கக் கற்றுக்கொண்டால் போதும் என்றும் அவர்கள் நினைப்பது தெரிந்தது. அக்குழந்தைகளின் ஏழ்மையானன சமூகப்பின்னணி அப்படி.
இந்த ஆசிரியர்களை மனம் திரும்பச் செய்ய வேண்டும் என்று உத்வேகம் கொண்ட உபாலி 2006ம் ஆண்டு நொவம்பர் மாதம் கல்வி அமைச்சரிலிருந்து பள்ளி அதிபர் வரையில் பெயர் குறித்துரைத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 285 பிள்ளைகளினதும் 570 பெற்றோரதும் அடிப்படை உரிமை மீறப்படுவதாக வழக்கொன்றைத் தொடுத்தார். இவ்வழக்கில் அவர் பெற்ற வெற்றி பாடசாலை நிர்வாகத்தை மாற்றியமைக்க அவருக்கு உதவியது. தாம் பெற்ற அனுபவத்தை பரந்தளவில் பரப்புவதற்காக அவரும் சில நண்பர்களும் ஒன்றிணைந்து "சிறந்த கல்விக்கான இயக்கம்" (Campagn for Better Education) என்ற அமைப்பினை உருவாக்கினர். நான் உபாலியை தேடிக்கண்ட போது இந்தக் குழு ஜும்மா மஸ்ஜித் வீதியில் ஒரு சனசமூக நிலையத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.
அக்காலப்பகுதியில் சாந்தி சச்சிதானந்தம் எனும் இன்னுமொரு களைக்காத செயலாளி என்னை எனது கல்வி சம்பந்தமான வேலைகளுக்கு அமெரிக்கன் யூதர் உலக சேவை (American Jewish World Service (AJWS)) நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். இத னூடாக தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த கல்விக்கான இயக்கம் ஒரு மாதாந்த செய்தித்தாளை அச்சிடுவதற்கு AJWS நிதியுதவி செய்ய முன் வந்தது. சாந்தி அவர்கள் ஸ்தாபித்த விழுது நிறுவனம் சிறந்த கல்விக்கான இயக்கத்திற்கான அலுவலக இடத்தினை இலவசமாகத் தந்துதவியது. நாம் எமக்குக் கிடைக்கக்கூடிய சகல நிதிகளையும் செய்தித்தாளை அச்சிடவும் விநியோகிக்கவும் பயன்படுத்தினோம். உபரலி சந்திரசிரி சிங்கள செய்தித்தாளின் ஆசிரியராகவிருந்து தமது சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தினார். இவ்வுதவி 3 ஆண்டுகள் 2008 லிருந்து 2010 வரை நீடித்ததால் சிறந்த கல்விக்கான இயக்கம் கல்விச் செயலியக்கத்தில் ஒரு பலமான இடத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
2007ம் ஆண்டின் கடைப்பகுதியில் கல்வி அமைச்சு புதிய கல்விச்சட்டமொன்றுக்கான சட்ட வரைவினை
பல!
17

தயாரிக்கும் குழுவொன்றை அமைத்தபோது சிறந்த கல்விக்கான இயக்கம் இந்த செய்தித்தாளை மக்கள் விருப்புகளை கிளறி எடுக்கக் கூடிய ஒரு சிறந்த வாகனமாகப் பயன்படுத்தியது. இதன் பயனாகப் பல அறிக்கைகள் சட்ட வரைவுக் குழுவிடம் அனுப்பப்பட்ட போதிலும், காலப்போக்கில் சிறந்த கல்விக்கான இயக்கம் நிதிப் பற்றாக்குறை காரணமாகச் செயலிழந்தது. ஆனாலும் உபலி சந்திரசிரி தனது பணிகளைக் கைவிடவில்லை. அவரும் தேசிய கல்வி ஆணைக்குழுவிலிருந்த திரு ஆரியரத்ன டீ அல்விஸ் என்பவரும் சட்ட வரைவுக்குழுவின் தவிசாளர் கலாநிதி ஜி பி குணவர்தன அவர்களும் அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உந்து சக்தியாக இருந்தனர். சி. க. இயக்கத்தின் தொண்டர்கள் உபாலி சந்திரசிரியுடனிணைந்து இரவு பகலாக உழைத்து அறிக்கையின் நகல் சட்ட வரைவினை அச்சில் வரச் செய்தனர். சி. க. இயக்கத்தினர் செய்தித்தாள்களுடாக வேறும் பல விதங்களிலும் தொடர்ந்தும் வற்புறுத்தி சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரச்செய்தார்கள். அதன் விவைாகப் 2007ல் பாராளுமன்றம் ஒரு விசேட குழுவை அமைத்தது. இக்குழு 2010 ஆகஸ்டு 17 முதல் 2012 ஜூன் 20 வரை கூடியது. ஆயினும், தேர்தல்கள் சட்ட மாற்றங்கள் போன்ற பாரிய தேசிய நிகழ்வுகள் இப்பிரச்சனையைப் பின்னுக்குத் தள்ளி விட்டன.
தேசிய மட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் வரை மாகாண மட்டத்தில் இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் பற்றிய ஆராய முனைந்தோம். எமது சிந்தனைகள் உபாலி சந்திரசிரியின் அரசியல் தெளிவும் பற்றுறுதியும் இல்லா விட்டால் எழுத்து வடிவத்திலேயே இருந்திருக்கும். உபாலி கிழக்கு மாகாணத்தின் அமைச்சர் திரு விமலவீர திஸாநாயக்கவை சந்தித்து மறுசீரமைப்புக்குள்ள அனு கூலங்களை ஆராய முனைந்தார். தமது ஆத்மார்த்த மான நோக்கத்தை அமைச்சருக்கு உணர வைக்க உபாலிக்கு சிறிது காலம் எடுத்தது. முடிவில் அம்பாறை மாவட்ட கல்வி வலயத்தில் வெஹெரகல ஆரம்ப பாடசாலையில் தமது முயற்சியைத் தொடருவதற்கு உபாலிக்கு அமைச்சர் சந்தர்ப்பம் வழங்கினார்.
2010ன் ஜூலை மாதமளவில் உபாலி கிழமைக்கொரு முறையாக அங்கு சென்றதுடன் அதிக தருணங்களில் இரவுகளில் தங்கவும் தொடங்கினார். அமைச்சரால் நேரடியாக மாகாண அமைச்சிலிருந்து நிதி உதவி வழங்க முடியாது போனாலும் தமக்குக் கிடைக்கும் மேலதிக கொடுப்பனவிலிருந்து அவருக்கு தங்குமிட வசதியும் போக்குவரத்துச் செலவினையும் கொடுத்துதவினார். உபாலி எப்போதும் ஒரு மாற்றுடையைத தம்முடன் ஒரு காகிதப் பையில் எடுத்துச்செல்வார். தன்னுடன் வரும்படி பலமுறை அவர் என்னை அழைத்த போதும் நான் மறுத்து விட்டேன். இரவு எங்கு தங்குவது என்று தெரியாமல் பயணம் செய்யும் கால கட்டத்தை தாண்டிவிட்டதாக
அகவிழி | பெப்ரவரி 2013

Page 20
நான் உணர்ந்தேன். உபாலி அதனைச் செய்யக்கூடியதாக இருந்தமைக்கு நன்றி கூற வேண்டும்.
பள்ளிக்கூடத்தின் கல்வி உத்தியோகத்தர்களையும் கல்வியியலாளர்களையும் பெற்றோர்களையும் தமது
குழந்தைகளின் எதிர்ப்பார்ப்புகளுக்கேற்ற வகையில் தம்மை மாற்றிக்கொள்ளவும் இக்கட்டத்தில் தமது பங்களிப்பை மறு பரிசீலனை செய்யவும் ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு உபாலிக்கிருந்தது. கல்வி அமைச்சர் சில கூட்டங்களுக்கு சமூகமளிப்பார். அமைச்சரின் செல்வாக்கினை உபயோகித்து தேவைப்படும் சகல உத்தியோகத்தர்களையும் கூட்டங்களுக்குப் பங்கேற்க வைக்க உபாலிக்கு முடிந்தது. உபாலியின் பேச்சு பெற்றோரை மையப்படுத்தி அவரவர் குழந்தைகளின் பெறுமதியைச் சுட்டிக்காட்டி அவர்களது கல்வியில் ஏன் அக்கறை கொள்ள வேண்டும் என்று அமையும். கல்வி உத்தியோகத்தர்கள் தமது கடமைகளைச் செய்விக்க வைப்பதற்கு அவரால் முடிந்தது. அவர் நிலத்திற்கடியில் வாழ்ந்து மக்களால் நித்தமும் மிதிக்கப்படும் பரிதாபமான உயிர்களாகப் பார்க்கப்படும் "கல்பேரேத்தயா” என்று சிங்கள மக்களால் குறிப்பிடப்படும் உயிரினங்களை மேற்கோள் காட்டும் உத்தியைக் கையாண்டார். அவர்கள் தமது கடந்த பிறவியில் பௌத்த துறவிகளாக இருந்தும் துறவறத்தை தமது சொந்த நலனுக்காகப் பாவித்ததனால் இத்தகைய பாவிகளாகப் பிறப்பதற்கு ஏற்பட்டது என்றும் அடிப்படையில் இத்தகைய பிறவியே வரி கொடுப்போரின் பணத்தில் வாழ்ந்து வேலை ஒன்றும் செய்யாதிருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் காத்திருப்பதாக அவர் பூடகமாகக் கூறுவார்.
உபாலி கல்வி உத்தியோகத்தர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் புகட்டுவதற்கு எதிர்பார்த்த கல்வியின் தத்துவம் அவர்களுக்குப் புதியதல்ல. தேசிய கல்விப் பாடத்திட்டம் கற்றலை நடவடிக்கை சார்ந்தாகவும் அதனால் பிள்ளைகள் தாங்களே கற்றுக் கொள்வதற்கு உதவுமாறு மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறது. பாரிய அளவில் பற்றிப் பிடித்திருக்கும் பரீட்சை முறைகள் கல்வியின் முக்கியமான பிரயோகத்தில் சிக்குண்டு கிடக்கின்றன. அடுத்தபடியாக நாம் பார்ப்பது பாட விதானம் புத்தாக்கமான முறையில் முன்செல்வதற்கு தேவைப்படுவது அரசியல் தலைமைத் துவத்தின் வலுவூட்டல் மட்டுமேயாகும்.
2012ம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு மாகாண சபை உட்பட மாகாண சபைகள் யாவும் புதிய தேர்தலுக்காகக் கலைக்கப்பட்டபோது முன்னாள் கல்வி அமைச்சரான திரு திஸாநாயக்க உபாலியை அழைத்து தமது பெயரைப் பாவிக்காமலேயே தொடர்ந்தும் அவரது வேலைகளைச் செய்யும்படி பணித்தார். இத்தருணத்திலேயே திருமதி குமாரிஹாமியைத் தனது 6 பாடசாலைகளையும் வந்து பார்க்குமாறு கோரிக்கை விடுக்க நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர்
அகவிழி பெப்ரவரி 2013

பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக இந்த 6 பாடசாலைகளிலும் எடுக்கப்பட்ட புதிய முன்னெடுப்பு பற்றிய அறிக்கை யொன்றைக் கோருமளவிற்கு முனைந்தார். 2012 ஜூன மாதத்தில் மாகாண சபை கலைக்கப்பட்டு மீண்டும் 2012 செப்டம்பர் மாதம் நிறுவப்பட்ட காலகட்டத்திலும் இந்த பரீட்சார்த்தத் திட்டமானது தொடர்ந்தது.
மீண்டும் தெரிவாகி மீளவும் அமைச்சர் பதவி பெற்ற திரு திஸாநாயக்க மறுசீரமைப்பின் அமுலாக்கத்தில் தீவிரம் காட்டினார். அவருக்கு இந்த 6 பள்ளிக்கூடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட மாதிரித்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடியதொரு பொறிமுறையைக்காணும் ஆவல் ஏற்பட்டது. அவர் புதிய வழிமுறைகளை பரீட்சிக்கவும் கற்றலையும் அதனை மதிப்பீடு செய்தலையும் உள்ளடக்கியதாக மாகாணக்கல்விச் சட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு ஆலோசனைச் சபையை நிறுவியுள்ளார்.
மறுசீரமைப்பதற்கு முன் ஆற்ற வேண்டிய எத்தனையோ விடயங்களிருக்கின்றன. ஆனாலும் அரசியல்வாதியின் தொலை நோக்கும் தத்தமது அபிலாசைகளும் ஒருமுகப் படும்போது சகலரும் இயங்கத்தயாராக இருக்கிறார்கள் என்பதையிட்டு உபாலியும் சி.க .இயக்கமும் மகிழ்ச்சியடைகிறது.
இந்த வெற்றியை எட்டுவதற்கு உபாலியும் ஏனை யோரும் தமது நேரத்தையும் பணத்தையும் தனிப்பட்ட ரீதியில் அர்ப்பணித்துள்ளனர். 2008-2010 ல் வழங்கப்பட்ட நிதியுதவியைத் தவிர சிறந்த கல்விக்கான இயக்கம் எந்த விதமான நிறுவன ரீதியான அனுசரணையும் இல்லாமல் 2011 ஜனவரி முதல் இன்று வரை இயங்குகிறது. உபாலி தொடர்ந்தும் தனது மகளினதும் தனதும் வாழ்வாதாரத்திற்கு ஓரு முன்னணி இன்சூரன்ஸ் கம்பனியின் விற்பனவு முகவராகப் பணியாற்றுவதோடு நலன் விரும்பிகள் சிலரது ஆதரவுடன் வாழ்கிறார். 2010ல் கல்லீரல் நோய் காரணமாக அவர் தமது மனைவியை இழந்தவராவார்.
கல்வி சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி கிடைப்பது கடினமாகவே உள்ளது. பாரிய நிதி நிறுவனங் களான உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அரசாங்கங்களுடன் செயலாற்றவே விரும்புகின்றன. அதுவே சரியாகவும் இருக்கும். ஆனால் அரசாங்கக் கட்டமைப்புக்கள் புத்தாக்கமான தீர்வுகளை கண்டு பிடிக்க முடியாதன அல்லவா? உலக வங்கியின் படி இலங்கை $1,026 - $4,035 தலைக்குரிய மொத்த தேசிய வரு மானத்தைக் கொண்ட கீழ் நடுத்தர வருமான நாடாகும். இதன் காரணமாக அவை சமூக நிதிகளைத் தந்துதவுவதில் தயக்கம் காட்டுகின்றன. அதனால் உள்ளூர் நன்கொடை யாளர்கள், பெரியவர்களோ சிறியவர்களோ, தான தரும் நடவடிக்கைகளுக்கப்பால் சென்று படிப்படியான மாற்றங் களை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கும் உதவ முன்வரவேண்டும். அவ்வாறு உதவ விரும்புவோர் LIRNE Asia என்கின்ற எனது அமைப்புடனோ அல்லது விழுது நிறுவனத்துடனோ தொடர்பு கொள்ள முடியும்.
114 என்.டும். அ நடவடிப்படியா
- 18

Page 21
மொழிப்பாடத்தி
மதிப்பீடு
இரா. விஜ
சென்ற இதழின் தொடர்ச்சி..
தேர்வுகளைத் திட்டமிடும் போதும், தயாரிக்கும் போதும் பாடப்பகுதிகள் மற்றும் மொழியியல் பகுதிகளுக்குச் சமமான முக்கியத்துவம் தரப்படவேண்டும். தேர்வு எளிமையாக அமைய வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருத்தல் கூடாது. மொழி ஆசிரியர்கள் தேர்வை வடிவமைக்கும் போது கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.
தேர்வின் தேவையும் நோக்கமும் சோதித்தறிய வேண்டிய தகவல்கள் மொழியை வாழ்க்கையோடு ஒருங்கிணைத்தல் மொழி உரைக்கோவைக்கு (discourse) முக்கியத்துவம் அளித்தல் படித்தல், எழுதுதல், புரிந்து கொள்ளல், பயன்படுத்தல்
போன்ற மொழித்திறன்களை ஒருங்கிணைத்தல் ஒலியனியல், சொற்பெருக்கம், இலக்கணம், மொழியின் கட்டமைப்பு, மொழிப் பயன்பாடு போன்ற திறன்களைச் சோதித்தறிகின்ற வகையில் மொழித்தேர்வுகள் அமைய வேண்டும். மாணவர்கள் எந்த அளவு மொழியறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்பது மட்டுமன்றி, மொழியை ஒரு குறிப்பிட்ட சமூக - மொழியியல் சூழலில் எவ்வளவு எளிதாகவும் திறமையாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறியக் கூடியதாகவும் மொழித்தேர்வு அமைய வேண்டும்.
ஆசிரியர் மொழிப்பாடத்தை எவ்வளவு கவர்ச்சியாகக் கற்பிக்கிறாரோ, அவ்வளவு கவர்ச்சியாக மொழித்தேர்வையும் வடிவமைத்தல் வேண்டும். பாடநூல்கள், மரபுவழிப்பட்ட தேர்வு வடிவம் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், செய்தித்தாள்கள், விளம்பரங்கள், பயணக்கதை, கவிதை போன்ற புத்திலக்கியங்கள், கல்வித் திட்டத்திற்கும், பாடத்திட்டத்திற்கும் தொடர்புடைய பிறவற்றையும் ஆதாரமாகக் கொண்டு மொழித் தேர்வு அமைதல் நலம். எழுத்து மொழி, பேச்சு மொழி ஆகிய இரண்டையும், தேர்வில் மதிப்பீடு செய்ய வேண்டும். அதாவது மொழியைத் தெளிவாகப் பேசுதல், ஒப்புவித்தல், விவாதங்களில் பங்கேற்றல், தனியாகவும் இணைந்தும் மொழிச் செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை யெல்லாம் மதிப்பீட்டில் சேர்ப்பது சிறந்தது.
மொழித் தேர்வை உருவாக்கும் போது குழப்பத்திற்கு இடமிருக்கக் கூடாது. எளிமை, சருக்கம், ஒளிவு மறை

ல் மாணவர்களை செய்தல்
ஜயராகவன்
வின்மை ஆகியவற்றிற்கு முன்னுரிமை தரவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆசிரியர்கள் மாணவர்களுக் கென்று உருவாக்கும் தேர்வைக் குறிப்பிட்ட நேரத்திற்குள், சரியாகவும் முழுமையாகவும் தங்களால் எதிர்கொள்ள முடிகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்வில் மாணவர்களுக்குத் தரப்படும் நெறிமுறைகள், அறிவிப்புக்கள் ஆகியன தெளிவாகவும் புரியும் படியாகவும் இருத்தல் நல்லது. அவற்றை நன்கு படித்துப் புரிந்து கொண்டு பின்னர் மாணவர்களை விடையளிக்கச் சொல்ல வேண்டும். பொதுவாகத் தேர்வுகள் வெளிப்படையாகவும், மனித நேயத்தோடும், மாணவர்களின் நன்மை, முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுதல் இன்றியமையாதது. வினாத்தாள் வடிவமைப்பிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும். சொற்றொடர்கள் படிப்பதற்கு எளிமையாகவும், தேவையான இடங்களில் படங்களை இணைத்தும், கவர்ச்சியான எழுத்துருக்களைக் கொண்டு அச்சடிக்கப் பெற்றதாகவும், மாணவர்களின் தேர்வு எழுதும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் வினாத்தாள் அமைய வேண்டும்.
தேர்வு நடத்துவதைத் தனிப்பட்ட ஒருவரின் பணியாகக் கொள்ளாமல், ஒரு குழுப் பணியாகக் கருதி மேற்கொள்வது சிறந்தது. தேர்வுத் தாளைத் தயாரித்த ஆசிரியர் அதனை வேறொரு ஆசிரியரிடம் காட்டி, அவரின் விருப்பு வெறுப்பற்ற திறனாய்வை ஏற்றுக்கொண்டு அதற்கேற்பச் சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால், பழைய வினாத்தாள்களை மாணவர்களைக் கொண்டே திறனாய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய தேர்வுகளை வடிவமைக்கலாம். அடுத்து விடைத்தாளைத் திருத்துவதற்கு உரிய வழிமுறைகளைத் தெளிவாக வரையறுத்துக் கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை காண்பது சிறந்த தேர்வினை வடிவமைப்பதற்குத் துணைபுரியும் எனலாம்.
தேர்வின் நடுநிலைமை பற்றி மாணவர்களின் கருத்து என்ன? தரமற்ற தேர்வு முறையினால் உண்டாகும் பாதிப்பு எத்தகையது? தேர்வைத் தரமுள்ளதாக எவ்வாறு மாற்றியமைப்பது?
கற்பித்தல் குறைபாடுகள் தேர்வையும், தேர்வு
முடிவுகளையும் எவ்வகையில் பாதிக்கின்றன?
அகவிழி | பெப்ரவரி 2013

Page 22
பாட நூல்கள், மற்ற கற்பித்தல் கருவிகள் ஆகியன தேர்வு முடிவுகளுக்கு எவ்வாறு துணை செய்தன? தேர்வை எதிர்கொள்ளுவதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட இடர்கள் யாவை? அவற்றைக் களைய எத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்? கற்பித்தல்-கற்றல்-தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக் ஏதேனும் கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டுமா? ஆம் எனில் அவை என்னென்ன?
தேர்வு முடிவுகளின் பின்னூட்டாமாக வகுப்பறைச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்
யாவை?
தேர்வை எதிர்கொண்ட மாணவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து, அவர்களின் நியாயமான திறனாய்வை ஏற்றுத் தகுந்த சீர்திருத்தத்தை வகுப்பறையில் மேற்கொள்வது ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாட்டையும், மாணவர் களின் கற்றல் நிகழ்ச்சியையும் தேர்வின் தேவையையும் ஊக்குவிக்கத் துணைபுரியும் என்பதில் ஐயமேதுமில்லை.
மொழித் தேர்வு வினாக்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்
உச்சரிப்பு
மனிதனின் வெற்றியில் சொல்வன்மைக்குப் பெரும் பங்குண்டு. இச்சொல் வன்மை, மொழியைச் சரியாகத் தெளிவாகப் பொருளோடு உச்சரிப்பதில் அடங்கியுள்ளது. எனவே உச்சரிப்புத் திறனுக்குப் போதிய முக்கியத்துவம் தந்து மொழியைக் கற்பிப்பது மொழி ஆசிரியர்களின் இன்றியமையாத கடமை.
காட்சி ஒன்றை இரு மாணவர்களுக்குக் காட்டி அதைப் பற்றிப் பேசச் சொல்லலாம். ஒருவர் செய்த தவறை மற்ற மாணவர் திருத்துவார். தேவையானால், இரு மாணவர்களின் தவறையும் இறுதியில் ஆசிரியர் சுட்டிக் காட்டிச் சரிப்படுத்தலாம். இவ்வகையில் மாணவர் களின் மொழி உச்சரிப்புத் திறனை வளர்க்கவும் சரிப்படுத்தவும் இயலும். உச்சரிப்புப் பிரச்சினை கொண்ட நான்கு அல்லது ஐந்து சொற்களைக் கொண்ட ஒரு சொற்றொடரை உருவாக்கி மாணவர்களைக் கொண்டு அத்தொடரை உச்சரிக்கச் செய்யலாம். உச்சரிப்பில் தவறு நேரும் போது அவ்வப்போது அதனைச் சரிப்படுத்த வேண்டும்.
- உரையாடலின் போது மாணவர்கள் செய்யும் உச்சரிப்புப் பிழைகள் பற்றி அண்மைக்காலத்தில் பல்வேறு மொழிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மொழி கற்போரின் தெளிவற்ற உச்சரிப்பும், பிழையான சொற் பயன்பாடும் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன. ஆசிரியர்களின் மேற்பார்வையில், நாடகப் பாங்கில் உரையாடலை பேசச்
அகவிழி பெப்ரவரி 2013

செய்து, மாணவர் களின் உச்சரிப்புப் பிழையைக் களையலாம் என்று ஆய்வாளர்கள் கண்டனர். வாழ்க்கை யோடு தொடர்புடைய உரையாடலை வடிவமைத்து, நாடக உத்திகளோடு அவற்றைப் பேசச் செய்வதன் வாயிலாக மாணவர்களின் உரையாடல் திறனை வளர்க்க இயலும் என்றும் கண்டறியப்பட்டது. மொழியைக் கேட்டு அறிந்து சரியான உச்சரிப்பை உணர அதற்குத் தேவை யான கற்றல் கருவிகளும் வடிவமைக்கப்படவேண்டும் எனவும் கண்டனர். இவை வாயிலாக மாணவர்கள் பிழையின்றி சரியான உச்சரிப்புடன் பேசவும், உரையாடவும், மொழியைக் கையாளவும் இயலும் என்பது வெள்ளிடைமலை.
இலக்கணம் மருத்துவருக்கு உடற்கூறியலறிவு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாய்ந்தது மொழி கற்போருக்கு இலக்கணம். சொற்றொடர் அமைப்பு, சொல்லாட்சிமுறை, வழக்கு இயல்புகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு அவை மொழி கற்பதற்கு துணையாக இருக்குமாறு மாணவர்களுக்கு இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டும். பயன்பாட்டுத் தமிழைப் பொறுத்தவரை திணை, பால், எண், இடம், காலம் ஆகியவற்றைப் பிழையின்றிப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவை இடம்பெறும் முறையும் இன்றியமையாதது. சில எடுத்துக்காட்டுக்களை நோக்குவோம்.
கீழ்க்காணும் சொற்றொடரின் விடுபட்ட இடத்தில் பொருள் பொதிந்த எத்தனை சொற்களை வேண்டுமானாலும் நிரப்பித் தொடரை முழுமை அடையச் செய்க.
அவன் தன் வீட்டிலிருந்து
... சென்றான். கீழ்க்காணும் சொற்றொடர்கள் பிழையானவை. அவற்றிலுள்ள பிழைகளைக் கண்டறிந்து சரிப்படுத்துக.
அக்கா அடுத்த வாரம் ஊருக்குச் சென்றது. நாளை முதல் விற்பனை தொடங்குகின்றன. சின்னக் கண்ணன் நடந்தாள்.
வாசித்தலும் புரிந்து கொள்ளலும். செந்தமிழும் நாப்பழக்கம் என்றும், வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்றும் கூறப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இவையெல்லாம் வாசித்தலின் இன்றியமையாமையை உணர்த்தும் பழமொழிகள். மாணவர்கள் வாசிப்பதற்கென்று ஏதேனும் ஒரு பகுதியைக் கொடுத்து, அதனைப் படித்துப் பொருள் கூறுமாறு கேட்கலாம். அவ்வாறு தரப்படும் பகுதி, பாடப் பகுதியைச் சாராது இருத்தல் நலம். ஒரு கவிதையாகவோ, விளம்பரமாகவோ செய்தித் தாளில் உள்ள கட்டுரையாகவோ இருக்கலாம்.
2)

Page 23
நம்மைச் சுற்றியுள்ள அறிவிப்புச் சின்னங்கள், சமிக்கைகள், ஆகியவற்றின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அவற்றின் பொருளை மாணவர்கள் நன்கு அறிந்துள்ளனரா என்பதைக் கண்டறியலாம்.
அபாயம்
மருத்துவமனை பள்ளிக்கூடம் வேகத்தடை ஒலி எழுப்பாதே
அபாய வளைவு
எழுதுதல்
குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பார்த்தெழுதுமாறு பயிற்சி தரலாம். இது மாணவர்களின் கையெழுத்து மேம்படுவதற்குத் துணை செய்யும். பொதுவாக எல்லா ஆசிரியர்களும் இதனை மேற்கொள்ளுவர். அடுத்துப் பிழை மலிந்த, நிறுத்தற் குறிகள் இடப்படாத ஒரு பகுதியை மாணவர்களுக்குத் தந்து அதனைச் சரியான நிறுத்தற் குறிகளுடன், பிழை ஏதுமின்றி எழுதச் செய்யலாம். மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கின்ற வகையில், ஒரு சிறு கவிதையை எழுதச் செய்யலாம். ஒரு தலைப்பைக் கொடுத்து கட்டுரை எழுதுமாறு கேட்கலாம். நடந்த நிகழ்ச்சியைத் செய்தித்தாளில் வெளியிடுகின்ற வகையில் செய்திக் கட்டுரையாக எழுதச் செய்யலாம். மாணவர்களின் மொழி ஆர்வத்தை அறிந்து அதனை ஊக்குவிக்கின்ற வகையில் அவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கலாம்.
சொற்களஞ்சியப் பெருக்கம் பாடப் பகுதியில் வரும் சொற்களைக் கொண்டே மாணவர்களின் சொல்லாற்லை வளர்க்கலாம். சொற்களின் பொருள், அவை பயன்படும் விதம், ஒரு பொருள் குறித்த பல சொற்கள், பல பொருள் குறிக்கும் ஒரு சொல், சொற்களின் எதிர்ப்பதங்கள் இப்படிப் பலவிதமான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து அவர்களின் சொல்லாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்க்கலாம். சில எடுத்துக்காட்டுக்களைக் காண்போம்.
ஒரு பொருள் குறித்த பல சொற்கள்: தீ, நெருப்பு, அழல், அனல், கனல், பொழுது ஞாயிறு, பகலவன், கதிரவன், வெய்யோன். பல பொருள் குறிக்கும் ஒரு சொல்: திங்கள் (கிழமையின் இரண்டாம் நாள், மாதம், நிலா)
ஆறு (வழி, நதி, ஓர் எண்) பொதுவாக மொழி ஆசிரியர்களுக்குப் படைப்புத் திறனும் புதுமை காணும் போக்கும் இருத்தல் அவசியம். புதுமையான பயிற்சிகளை அறிமுகப்படுத்தி மாணவர்களின் மொழி கற்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். விளையாட்டு முறையிலும், மகிழ்ச்சியாகவும், எவ்விதச் சலிப்புமின்றி

மாணவர்கள் மொழிப்புலமை பெறவேண்டுமானால்,
ஆசிரியர்களின் பெருமுயற்சியே முக்கிய தேவை.
தேர்வுகளும் தேர்வு முடிவுகளும்
தேர்வுகள் எக்காரணத்திற்காக நடத்தப்படுகின்றனவோ, அதற்காக அத் தேர் வு முடிவுகள் பெரும் பாலும் பயன்படுவதில்லை. மொழித் தேர்வுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. (பேக்கர் 1989) எடுத்துக்காட்டாக இறுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாணவன் மேல் வகுப்பிற்குச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால் மாணவர்களின் தேர்வுச் செயற்பாடுகள் எப்படி இருப்பினும் ஏறக்குறைய அனைத்து மாணவர்களையும் மேல்வகுப்பிற்கு அனுப்பிவிடுவது என்பது உயர்நிலைப் பள்ளி வகுப்புக்களில் இன்றைய உண்மைநிலை. எனவே அடைவுத் தேர்வு என்பது இன்று ஒரு சடங்காக மட்டுமே உள்ளது. மாணவர்களிடம் பெரிய பாதிப்பு எதையும் உண்டாக்குகிறது என்று கூறுவதற்கில்லை. அதே போன்று மாணவர்களின் முன்னேற்றத்தை அறிய நடத்தப்பெறும் தேர்வு ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாட்டை அளவிடுவதற்கு உகந்ததாகக் கருதப்படுவதில்லை. மாணவர்களின் கடின உழைப்பிற்கும், ஊக்கமுடன் படிப்பதற்கும் இத்தேர்வு பயன்படுவதாய் அமைவது இன்றியமையாதது. பெரும்பாலும் தேர்வு பற்றிய அச்சம் மாணவர்களிடம் இருக்கும் வரை, மதிப்பீடு என்பது சரியாக அமையும் என்று சொல்வதற்கில்லை. எனவே தேர்வு என்பது இன்று இருப்பது போல் மன உளைச்சலையும் அச்சத்தையும் தருவதாக அமையக் கூடாது. மாணவர்கள் விரும்பும் போது தேர்வு நடத்தலாம் என்று கூடப் பல கல்வியாளர்கள் இன்று கருதுகின்றனர். இப்போது இருப்பது போல் மொழித்தேர்வு சோர்வையும், சலிப்பையும் ஊட்டுவதாக அமையாமல் இருக்கவேண்டுமெனில், மொழியாசிரியர்கள் தாமும், பிற ஆசிரியர்களுடன் இணைந்து குழுவாகவும் தேர்வை வடிவமைக்க வேண்டும். அப்போது சிறந்த தேர்வை நடைமுறைப்படுத்த இயலும் தனி மாணவ வேறுபாடுகளுக்குப் போதிய முக்கியத்துவம் தர வேண்டும். மேலும் மாணவர்கள் தாமே கற்றுக் கொள்வதற்கும் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்து கொள்வதற்குமான வழிமுறைகளைக் காண்பது முக்கியம். அடுத்து மாணவர்களின் மொழிக் கற்றல் திறனைத் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் முறைசாரா வகையில் மதிப்பீடு செய்வதா அல்லது இறுக்கமான முறையில் திடீரென்று, எவ்வித முன்னறிவிப்புமின்றி மதிப்பீடு செய்வதா என்பதையும் தீர்மானிக்க வேண்டும். தேர்வு என்பது நெகிழ்ச்சியுடையதாகவும் மனித நேயத்துடன் கூடியதாகவும், அச்சமூட்டுவதாகவும், காலத்திற்கேற்ப புது முறைக் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு இடமளிப்பதாகவும் அமைய வேண்டியது இன்றியமையாதது. அப்போதுதான் மாணவர்கள் கற்க வேண்டிய மொழித்திறன்களை எவ்வித இடரும் இன்னலும் இன்றி இனிதே கற்க வழிபிறக்கும்.
அகவிழி | பெப்ரவரி 2013

Page 24
ஆசிரியர்களுக்கான வரே
ஓய்வு பெற்ற ஆசிரிய
உலகில் முன்னுரிமை பெற்றோர் வரிசையில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒழுங்குமுறையாகும். இதில் குரு ஆசிரியரது வகிபாகம் (Role) ஆழ்ந்து நோக்கப்படுவதற்கான காரணம் இன்னொருவருக்கு அறிவைக் கற்றுக்கொடுப்பது மிகவும் புனிதமாக மதிக்கப்படுவதாகும். உண்மையாகவே அம்மதிப்பு தன்னை வந்தடைய வேண்டுமாயின் தன்னிடமிருந்து கல்விகற்ற சமூகமொன்று உருவாயிருத்தலும் வேண்டும். லீவு என்பது சலுகையென்பதை மறந்து வருடாந்த லீவுகளை முற்றுமுழுவதாக எடுத்து மேலும் தேவைப்படும்போது சம்பளமின்றிய (Nopay) லீவில் கொண்டுபோய் முடிப்பதும் நவீனகால செயற்பாடுகளாகும்.
கடமையில் கண்ணாயிருக்கும் ஆசிரியர் தனக் குரிய லீவுகளை உயரளவில் மீதப்படுத்தி, உரிய நேரத்திற்கு வகுப்பறைக்குச் சென்று உரிய காலத்தில் பாடத்திட்டத்தை நிறைவுசெய்வதுடன் மாணவர்களின் தார்மீக செயற் பாடுகளையும் மேம்படுத்துவதில் கண்ணுங்கருத்து மாயிருப்பார். அவரிற்கு பாடசாலை நேரத்தில் கற்பிப்பதும் ஓய்வுநேரத்தில் பாடக்குறிப்புகளைத் தயாரித்தல்,
அகவிழி | பெப்ரவரி 2013

வேற்பும் வெளியேற்றமும்
ர் ஒருவரிடமிருந்து..
அறிவைப்பெருக்கும் நூல்களை வாசித்தல், பாடசாலை நிர்வாக வேலைகளைச் செய்தல் என்ப வற்றிலும் சமூக சேவையிலும் நேரங்கழிந்து செல்வதால் அவரது வரு மானமாக மாதாந்த சம்பளம் மாத்திரமே காணப்படும். அவரது செலவுகள் வருமானத்தை மீறியும் சென்றுவிடுவதால் ஒன்று கடனாளியாக இருப்பார் அல்லது சிக்கனமாகச் செலவழிப்பவராகக் காணப்படுவார். அவரிடம் அரசியல் கூட்டங்களை ஒழுங்குசெய்யும் தேவை, நேரம், முதலீடு என்பன காணப்படாதிருப்பதுடன் அவர் அதிகாரம் படைத்தோருக்கு விருந்தழிப்பதிலும் பெருமை கொள்ள மாட்டார். என்றும் ஏழைகளின் தோழனாகவே செயற்படுவார். நிறைகுடம் தளம்பாது என்பதற்கு இவர் ஓர் சிறந்த உதாரணம். இந்த வகையினுள் அடங்கும் ஆசிரியர்கள்
பரீட்சைகளில் ஓரிலக்கம் கொண்ட நிலையைப் (இடத்தைப்) பெற்றிருப்ப துடன் பட்டங்களும் சிறப்பு அல்லது விஷேட பட்டங்களாகக் காணப்படும். துளித்துளிகளாக கவனமாக சேர்க்கப் பட்ட அறிவென்பதால் அது நிலையான தாகவே காணப்படும். ஆயிரம் தீபங் களை ஏற்றினாலும் அந்த அறிவு ஒரு துளியும் மங்காது.
ஆனால் பரீட்சைகளில் ஈரிலக்க அல்லது மூவிலக்க நிலைகளை, அதனையும் இரண்டாம், மூன்றாம் தடவைகளில் பெற்றோர் கற்பித்தலை விட திரவியம் தேடுவதிலே கண்ணும் கருத்துமாயிருப்பர். ஆரம்ப காலங் களில் திரவியம் தேடுவதற்காய் அதிக லீவுகள் எடுக்கப்படுவதுடன் பிற்காலங் களில் தான் தேடிய திரவியங்களை பேணிக் காப்பதற்குச், செல்வம் பெருகு வதற்குமென மேலும் தொடர்ச்சியாக
லீவு எடுக்கப் படுவதால் மாணவ சமுகத்தின் பாட நேரங்கள் தேய்ந்தொழிந்து அவரது பொருளாதாரம் உயர்ந்து செல்கின்றது. அவரது வருடாந்த பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவதன் மூலம் அவர் விரயமாக்கிய பாடவேளைகளின் எண்ணிக்கைகளை என்போன்ற அனுபவம் பெற்ற ஆசிரியர்களால் வாய்க் கணக்கின் மூலம் மிகவும் கற்பிக்காத ஆசிரியர் தனது
22,

Page 25
வயது 45யைத் தாண்டும்போது அதிபராய் வரவேண்டும் எனக் கனவு கண்டுகொண்டிருப்பார். அந்தக் கனவு நனவாக செயல்பட வேண்டிய குறுக்கு வழிகளையும் ஆராய்ந்த வண்ணமிருப்பார். இக்காலப் பகுதியில் அதிகாரம் படைத்தோர் தன்னுடன் அருகே அமரும் தோழமைகளாக மாறுகின்றனர். தான் தாய் மொழியிலேனும் தேர்ச்சிபெற்றிராத அதேவேளை அதிகாரிகள் மூலம் அதிபர் பதவியும் வந்து சேர்கின்றது. தான் அதிபர் ஆசனத்தில் அமரும் முன்னரே தனது பாடசாலையிலுள்ள மொழித்தேர்ச்சி பெற்றவர்கள் நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பவற்றை தீர ஆராய்ந்து அடையாளங் கண்டு கொள்கிறார். அமர்ந்த பின்னர் அறிவாளிகள் பணியாற்ற அவர் பதவியிலிருப்பார். இங்கு பரீட்சைகளில் ஒரிலக்க சித்திபெற்ற, நன்கு கற்பித்து அனுபவம் பெற்ற, தனது பதவியால் கிடைத்த பொறுமையாலும் பணிவினாலும் அவர்கள் செயலாற்ற இவர் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும், அதிபர் பதவியினாலும் பிரகாசித்து விளங்குகின்றார். காரொன்றை வாங்குவதுகூட அவரால் சுயமாக செய்யக் கூடியவிடயம்.
தெற்காசிய ஆசிரியர் அ
எந்தவொரு கல்வி முன்னேற்றமும் கல்வியின் எழுச்சி அபிவிருத்தியாகும். கல்வித் துறையின் எந்தவொ ஆசிரியர்கள் என்பதுடன் தெற்காசியாவின் பிரபல ஆரம்பிக்கப்படவுள்ள இப்புதிய வலய ஆசிரிய பயி உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி மற்று
தேசிய கல்விக் கல்லூரியின் வழிகாட்டலுடன் கல்வி நிர்மாணிக்கப்படும் இச் சர்வதேச ஆசிரிய பயிற்சி பயிற்சி மத்திய நிலையமாகும். இங்கு ஆசிரியர் பயி பிரவேசங்களை வலுப்படுத்துவதன் மூலம் அதியுயரிய ஏற்படுத்துவதும் இதன் அடிப்படை எதிர்பார்ப்பாகும்.
இவ்விரிவான நோக்கத்தினை எட்டுவதற்காக | பயிற்சிக்கான சந்தப்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விசேடமாக தெ பயிற்சி சேவைக்காலப் பயிற்சி, ஆசிரிய கல்வி : பாடவிதான அபிவிருத்தி, இலத்திரனியல் ஊடகம் முறைகள் மற்றும் ஆசிரிய பயிற்சியின் தீர்க்கமான தே ஆசிரிய கல்விக் கலாசாரத்தினை உருவாக்குவது
இவ்விசேட நோக்கத்திற்காக 2012.10.09 ஆந் மாலைதீவு, இந்தியா, நேபாளம் ஆகிய வலய நாடுக யுனெஸ்கோ போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் கட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
|23

ஆனால் கடமையை கண்ணுங்கருத்துமாய்ச் செய்தோர், வர்ணம் பூசப்படாத வீட்டில் வாழ்ந்தாலும், முச்சக்கரவண்டியில் பாடசாலைக்குச் சென்றாலும் அவர்களுக்கு ஈருலக ஈடேற்றமும் உண்டு என்பது நிச்சயம். எங்கு சென்றாலும் தன்னிடம் கற்று உயர் பதவிகளிலிருப்போர் கூட எழுந்து நின்று Sir என அழைக்கும் போது ஏற்படும் மனப்பூரிப்பு வேறு எவ்வகையினாலும் கிடைக்காத செல்வம்.
இறுதித்தருவாயிலும் நிம்மதியாய் தூங்கியெழும்ப அதுவே போதுமான மனத்திருப்தி. அது மட்டுமல்ல அதிக நேரத்தை தனது மனைவி மக்களுடன் செலவழித்திருப்பதால் அவர்கள் காண்பிக்கும் அன்பும், ஆதரவும், தான் கற்பித்த நெறியில் தவறாது வாழும் தனது பிள்ளைச் செல்வங்கள் தேடித்தரும் மதிப்பும் புகழும் ஏனையோருக்கு என்றுமே கிடைக்காதவை.
- இது முழுமையாகவே எனது அனுபவக் கருத்துக்கள். நீங்களும் கற்பித்தலில் கண்ணுங்கருத்துமாய் செயற்படுவீர் களானால் உங்களுக்கும் இந்த ஆறுதல் கிடைப்பது நிச்சயம்.
பிவிருத்தி மத்திய நிலையம்
சியினை தீர்மானிக்கும் காரணி பிள்ளைகளின் பண்புசார் ந மாற்றம் அல்லது அபிவிருத்தியின் முன்னோடிகள் ) ஆசிரிய பயிற்சி மத்திய நிலையமாக மீப்பேயில் ற்சி மத்திய நிலையத்திற்காக யுனெஸ்கோ அமைப்பு ம் தொழில்நுட்பப் பங்களிப்புக்கள் வழங்கப்படுகின்றன. பி அமைச்சின் முழுமையான செயற்பாடுகளின் ஊடாக மத்திய நிலையம் தெற்காசியாவின் பிரதான ஆசிரிய ற்சிகளுடன் இணைந்த கொள்கை விருத்தி, ஆராய்ச்சிப் 1 பண்புசார் தரத்துடன் ஆசிரிய அணியினை வலயத்தில்
மத்திய நிலையத்தினால் வலய நாடுகளுக்கு ஆசிரிய
இதற்காக பல்வேறுபட்ட உபாயங்களைப் பின்பற்ற தாடர்ச்சியான ஆசிரியர் அபிவிருத்தி, ஆரம்ப ஆசிரியர் ஆராய்ச்சி, ஆசிரிய கல்விக் கொள்கை அபிவிருத்தி, மற்றும் அதனுடன் இணைந்த கற்றல் தொழில்நுட்ப வைகள் தொடர்பாக கூடுதலான பெறுமதி கொண்டதாக விசேட அம்சமாகும். திகதி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், ளின் கல்வி அமைச்சர்கள், கல்வி உத்தியோகத்தர்கள், ரின் பங்கேற்புடன் இம்மத்திய நிலையத்தின் ஆரம்பக்
அகவிழி பெப்ரவரி 2013

Page 26
பத்தொன்பதாம் நூற்றாண்டி யாழ்ப்பாணக் கல்வி கலாக் அமெரிக்க மிஷனின்
கலாநிதி எஸ். ஜெபநே
ஓய்வுநிலைப் பேராயர், தென்னிந்தி
கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் பத்தொன்பதாம் நூற் றாண்டு மிஷன்களின் காலம் எனப்படுகின்றது. இக்காலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சலாந்து, ஜெர்மனி முதலிய புரட்டஸ்தாந்து நாடுகளில் இருந்து மதப் பிரசாரகர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு வந்து சமயத்தைப் பரப்பினார்கள். இவர்களுக்கு இந்தியா அரிய வாய்ப்புக்கள் கொண்ட பணிக்களமாகத் தென்பட்டது. 1757இல் நடைபெற்ற Plassey யுத்தத்திற்குப் பின்னர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கம் சிறிது சிறிதாக இந்தியாவின் பல பாகங்களிலும் பரவியது. இந்த மாற்றங்களைத் தொடர்ந்து மிஷன்கள் இந்தியாவில் பணியாற்ற முயற்சித்தன. ஆனால் ஆங்கிலேய
கிழக்கிந்தியக் கம்பனி, கிறிஸ்தவ மத பிரசாரகர், தமது பிரதேசத்தில் பணியாற்றுவதை விரும்பவில்லை. இந்தக் கம்பனியின் சாசனம் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை
அகவிழி | பெப்ரவரி 2013

டல் தென்னிந்திய ச்சார ஊட்டம் - - பங்களிப்பு
சன்
யத் திருச்சபை
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மீளாய்வு செய்யப்பட்டது. கிறிஸ்தவ மதப்பிரசாரம் கம்பனிக்கும் இந்திய மக்களுக்க்கும் இடையிலான உறவினைப் பெரிதும் பாதித்து விடுமெனக் கம்பனியின் தனாதிபதிகள் பயந்தனர். 1793இல் இதன் சாசனம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மீளாய்வு செய்யப் பட்டபோது மிஷன்களுக்கு முற்றாகத் தடை விதிக்கப்படது. 1813இல் மீளாய்வு செய்யப்பட்டபோது இங்கிலாந்து. மிஷனரிமார் மட்டும் பணியாற்றலாம் என்று விதி செய்யப்பட்டது. 1833ஆம் ஆண்டு தான் சகல நாட்டுக் கிறிஸ்தவ மி' னரிமார்களுக்கும் இந்தியாவில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது. 1813ஆம் ஆண்டுக்கு முன்னர் சில மிஷனரிமார் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினர் என்பது உண்மையே. 1805இல் வந்த இலண்டன் மிஷனரித் தொண்டர்கள் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ஒருவர் தான் தெல்லிப் பளையில் பணியாற்றிய பாலன் பாதிரியார் (Re, Mr: Palan). இவர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள் மத்தியில் தாம் கொண்டிருந்த தனிப்பட்ட செல்வாக்கினால் வந்து பணியாற்றியவர்கள்.
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி இப்படியான சட்டங்களை இந்தியாவிற்கு ஏற்படுத்தியிருந்தபோதும் இலங்கையைப் பொறுத்தவரை அச்சட்டங்கள், பாதிப்பை ஏற்படுத்தவில்லை, இலங்கைத்தீவு ஆறு வருடங்களே ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் இருந்தது. 1802ஆம் ஆண்டு இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாகியது. எனவே மிஷனரிமாருக்கு எதிரான சட்டங்கள் இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாகியது. எனவே மஷனரிமாருக்கு எதிரான சட்டங்கள் இலங்கையிற் செயற்படவில்லை. அது மட்டுமன்றி ஆரம்ப கால ஆங்கிலேய தேசாதிபதிகளான Sri Thomas Maitland, Sir Robert Brownrig ஆகியோர் கிறிஸ்தவ மதப்பிரசாரத்தை ஆதரிப்பவர்களாகவும் மிஷனரிமாருக்கு சகல உதவி களையும் செய்யும் வாஞ்சை பூண்டவர்களாகவும் காணப்பட்டார்கள். 1812இல் இந்தியாவில் பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்ட அமெரிக்க மிஷனரியாகிய சாமுவேல் நியூவெல் இலங்கைக்கு வந்தபோது தேசாதிபதி யாக இருந்த Sir Robert Brownrig அவரை மனமகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஆனால் தமது தலைநகராகிய கொழும்பில்

Page 27
அமெரிக்கர் பணியாற்றுவதனை அவர் விரும்பவில்லை. எனவேதான் இலங்கைத் தீவின் வட கோடியில் இருந்த யாழ்ப்பாணத்தை அமெரிக்க மிஷனரிமார் பணிக்களமாகத் தேர்ந்துகொள்ளும்படி ஊக்கமளித்தார். இக்காரணிகளால் 1812ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அமெரிக்க மிஷனின் பணிக்களமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அமெரிக்கன் மிஷன் தமிழ் மக்களின் மி'ன் ஆயிற்று. 1816ஆம் ஆண்டு ஒர் அமெரிக்கன் மிஷன் அனியும் 1820ஆம் ஆண்டு இன் னோர் மிஷன் அணியும் யாழ்ப் பாணத்தை வந்தடைந்தன. ஆனால் இதற்குப் பின்னர் 1833ஆம் ஆண்டு வரை புதிய அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணத் திற்கு வரவில்லை. இதற்குக் காரணம் 1820இல் Sir Edward Barnes என்ற துணைத்தேசாதிபதி அமெரிக்கர் வருகைக்குத் தடை விதித்தமையேயாகும். 1833ஆம் ஆண்டு கோல்புரூக் விசாரணைக் குழுவினர் இத்தடையை நீக்கும்படி சிபார்சு செய்தனர். ஆனால் அதே வருடம் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியும் இந்தியாவில் பிறநாட்டு மிஷனரிமாருக்கான தடையை இரத்துச் செய்தது. இதனால் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய தலைசிறந்த மிஷனரிமார் இந்தியாவிற்குச் செல்லத் தொடங்கினார். வட்டுக்கோட்டையிற் பணியாற்றிய டானியல் பூவர் மதுரைக்குச் சென்றார். உடுவிலில் பணியாற்றிய மைரன் வின்ஸ்லோ சென்னைக்குச் சென்றார். பண்டத்தரிப்பில் பணியாற்றிய டாக்டர் ஜோன் ஸ்கடர் ஆற்காட்டுக்குச் சென்றார். இவ்வாறு இந்தியாவுக்குச்சென்ற அமெரிக்கன் மிஷனரிமார், யாழ்ப்பாணத்தில் தாம் பயிற்றுவித்த ஆசிரியர் சிலரையும், மத போதகர் சிலரையும், இந்தியாவுக்கு அழைத்துச் சென்றனர். அது மட்டுமன்றித் தம்முடன் பழகிய தமிழ் அறிஞர்களை இந்தியாவிற்குச் சென்ற பின்னரும் கலந்தாலோசித்தனர். பிற்காலத்தில் வந்த அமெரிக்கன் மிஷனரிமார் மதுரையையும் யாழ்ப்பாணத்தை யும் ஒரே பணிக்களமாகவே கருதினார்கள். யாழ்ப்பாணத்தில் மணியாற்றிய அமெரிக்க மிஷனரிமார் மதுரைக்குச் செல்வதும் மதுரையில் பணியாற்றிய அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணத்திற்கு வருவதும் அடிக்கடி நடைபெற்றன. இதுவே அமெரிக்க மிஷனரிமார் தென் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கல்விசார் ஊடாட்டத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்ய வழிவகுத்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு போக்குவரத்துப் பாதைகள் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரதப்பாதை 1905ஆம் ஆண்டு தான் நிறுவப்பட்டது. அதற்கு முன்னர் மக்கள் காடுகளினூடாகவே கொழும்பைச் சென்றடைந்தனர். அப்படி சென்றடைய ஒரு மாதம் காலம் சென்றது. இதனால் யாழ்ப்பாணத்து மக்கள் தமது முக்கிய
| 25

கருமங்களைக் கொழும்பிலன்றித் திருவனந்தபுரம், திண்டுக்கல், நாகர்கோவில், சென்னை, மதுரை, திருவண்ணாமலை முதலிய பட்டணங்களிலே தான் செய்து வந்தனர். கொழும்பு நகர், சிங்கப்பூர், ரங்கூன், பீனாங் பொன்ற ஒரு தூரதேசத்துப் பட்டினமாகவே அவர்களுக்குக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்திற் பணி யாற்றிய அமெரிக்கரும் அமெரிக்காவில் இருந்து பம்பாய் கல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கு வந்து பாக்குத்தொடு கடலைக் கடந்து, ஊர்காவற்றுறை, காங்கேசன்துறை, பருத்தித் துறை, வல்வெட்டித்துறை முதலிய துறைமுகங் களினூடாகத் தமது பணிக்களங்களைச் சென்றடைந்தனர். சென்ற நூற்றாண்டில் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் ஒருவர் இளைப்பாறிய போது மக்கள் அராலித்துறை மட்டும் சென்று அவருக்கு பிரியாவிடை நல்கினர். அவர் அங்கிருந்து ஊர்காவற்றுறை ஊடாக சென்னை சென்று, தமது பயணத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும். 1905ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிரதப்பாதை திறக்கப்பட்டத்தை பற்றி வரலாற்று ஆசிரியராகிய அ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“யாழ்ப்பாணப் புகையிரதப் பாதை தொடங்கப்பட்டு 1902 இல் உள்ளூர் புகையிரதப்பாதையும் 1905ஆம் வருடத்தில் பொழும்பு புகையிரதப் பாதையும் திறக்கப்பட்டன. இந்தப் புகையிரதப் பாதையை நமக்காக்கிக் கொடுத்த நன்றிக்கு வெஸ்ட்றிச்வே பேரால் யாழ்ப்பாணத்தார், ஒரு மகாமண்டபம், நகர் மத்தியில் அமைத்திருக்கின்றார்கள். முந்நாளில் தரைமார்க்கமாக ஒரு மாததிற் சென்றடையும் கொழும்பு இப்போது ஒரு பகலில் அடையபோகின்றது."
யாழ்ப்பாணத் தென்னிந்தியக் கல்வி கலாச்சார ஊடாட்டம் - அமெரிக்க மிஷனின் பங்களிப்பு என்ற
விடயத்தை ஆறு தலைப்புக்களின் கீழ் ஆராயலாம்.
அவையாவன:
அ. கல்வி நிலையங்கள் ஆ. வேதாகம மொழிபெயர்ப்பு முயற்சிகள் இ. அகராதி முயற்சிகள்
ஈ. - கண்டன நூல்கள்
உ. பத்திரிகைகள்
ஊ. திருச்சபை இணைப்புக்கள்
கல்வி நிலையங்கள்
1816ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்துவைத்த அமெரிக்க மிஷனரிமார் 1823ஆம் ஆண்டு ஒரு பல்கலைக் கழகக் கல்லூரியை வட்டுக்கோட்டையில் நிறுவினர்.
அகவிழி பெப்ரவரி 2013

Page 28
வட்டுக்ககோட்டை செமினரி என அழைக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவில் நிறுவப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கல்லூரி எனக்கருதப்படுகின்றது. இலங்கையிலோ, இந்தியாவிலோ 1830ஆம் ஆண்டு வரை இதற்கீடான கல்வி நிலையங்கள் எதுவும் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆங்கில மொழி போதனா மொழியாக இருந்த போதும் தமிழ் மொழி, சமஸ்கிருதம் ஆகியன பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளுவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன் அதிபராக டானியல் பூவர் பணிபுரிந்தார். இந்தப் பல்பலைக்கழகக் கல்லூரி தென்னிந்தியாவிற்கும் யாழ்பாணத்திற்கும் இடையிலான ஊடாட்டங்களுக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்தது. இக்கல்லூரியிலே கற்பதற்கு தரங்கம்பாடி, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து சேர்ந்தனர். செமினரியில் கற்று அரங்கேறிய பலர் இந்தியாவில் செயற்பட்ட மிஷன்களிலும் அரசாங்கத்திலும் பணியாற்றினார்கள்.
2-12-09)
'' - பிரபம்
பாரா : பாகம் - 5
இ-புர் Ein E=} :* பு11:/AA111 AM
1835ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி டானியல் பூவர் மதுரையைச் சென்றடைந்தார். அவர் தம்முடன் செமினரியில் கற்று அரங்கேறிய சிலரையும் உதவிக்கு அழைத்துச் சென்றார் என்று தெரிகின்றது. டானியல் பூவர் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருமங்கலம் ஆகிய இடங்களில் பாடசாலைகளை அமைத்தார். யாழ்ப்பாணத்தில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் முதலில் ஆரம்பப்பள்ளிகளையும் பின்னர் விடுதிப் பள்ளிகளையும் இறுதியாக மதுரையில் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியையும் நிறுவினார். மதுரை மிஷன் கல்வி அமைப்பிற்கு அடித்தளமிட்டவராக டானியல்
அகவிழி | பெப்ரவரி 2013

பூவர் கருதப்படுகின்றார். ஆனால் டானியல் பூவரின் மனம் யாழ்ப்பாணத்தையே நாடியது. 1844ஆம் ஆண்டு இவர் யாழ்ப்பாணம் திரும்பி, 1855ஆம் ஆண்டு வரை மானிப் பாயில் வாழ்ந்து மறைந்தார். ஆனால் செமினரியில் கற்று அரங்கேறிய மாணவர்கள் தொடர்ந்து தென்னிந்தியா விற்குச் சென்று பணியாற்றினர். 1855இல் வட்டுக்கோட்டை செமினரி மூடப்ட்ட பின்னர் அங்கு கற்று அரங்கேறிய மாணவர்கள் பலரும், ஆசிரியர்கள் சிலரும், தென்னிந்தியா விற்குப் படிப்பைத் தொடரவும் உத்தியோகங்களைத் தேடவும் சென்றனர். 1857ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தனது முதலாவது பரீட்சையை நடாத்திய போது வட்டுக்கோட்டைச் செமினரியில் கல்வியை முடித்த சீ.டபிள்யூ. தமோதரம் பிள்ளை அவர்களும் செமினரியில் அவருக்குக் கற்பித்த டானியல் கறோல் விஷ்வநாதபிள்ளை அவர்களும் அப்பரீட்சையில் சித்தியெய்தினார்கள். இவர்களே சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- வட்டுக்கோட்டைச் செமினரியில் முதலாவது தமிழ் ஆசிரியராக விளங்கிய கபிரியேல் திரேசாவின் மகன் செளந்திரநாயகம் பிள்ளை இந்தியாவில் பிரபல வழக்கறிஞரானார். தென் னிந் தியாவில் ஆறுமுக நாவலருக் குத் துணை நின்ற வழக்கறிஞர் சௌந்தரநாயகம்பிள்ளை என்பது குறிப்பிடக்கப்பதாகும். யாழ்ப் பாணத்தில் இருந்து தென்னிந்தியா விற்குச் சென்று கல்விச் சேவை யாற்றிய குடும்பங்களில் பிரபல்யமான மூன்றினை ஈண்டு குறிப்பிடலாம். முதலாவது சீ.டபிள்யூ. தாமோதரம் பிள்ளை குடும்பம், இவர் பத்திரிகை ஆசிரியர், அரசாங்க உத்தியோகத்தர், நீதிபதி என்ற பல பதவிகளை வகித்தவர். பதிப்புத் துறையில்
ஆர்வத்தோடு ஈடுபட்டமையால் தென்னிந்திய கலாச்சார மையத்தின் மூல வேர்களுக்கே செல்லும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். இவருடைய மக்களில் ஒருவரான பிரான்சிஸ் கிங்ஸ்பரி அடிகளார் கிறிஸ்துவ மதப்போதகராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் நூல் ஆசிரியராகவும் இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார். 1926ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி 1947ஆம் ஆண்டு மறைந்தார். வட இந்தியா, தென்னிந்தியா, மெசப்பொத்தோமியா, கொழும்பு, யாழ்ப்பாணம் எனப் பல இடங்களுக்கும் சென்று தமிழ்ப் பணியும் மதப்பணியும் ஆற்றியவர். நீண்டகாலம் பசுமலை இறையியற் பள்ளியிலும்
- 26

Page 29
பின்னர் பங்களூர் இறையியற் பள்ளியிலும் பணியாற்றியவர். இவர் எழுதிய கண்ணன் கதை, புத்தர் சரித்திரம், History of Tamil Literature, இராவ்சாகிப் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் சரித்திரச் சுருக்கம் என்னும் நூல்கள் அச்சு வாகனம் ஏறும் முன்னரேயே அழிந்துபோனது. தமிழ் மக்களின் துர்ப்பாக்கியமேயாகும்.
வீரகத்தி விசுவநாதன் வட்டுக்கோட்டை செமினரியில் கற்று அரங்கேறியவர். 1839ஆம் ஆண்டு செமினரி அறிக்கையில் அவருடைய பெயர் வீரகத்தி விசுவநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொன்பூலோகசிங்கம் அவர்கள், வின்ஸ்லோ பாதிரியார் இவரை Bela Kellog என்று அழைத்ததாகவே குறிப்பிடுகின்றார். இவர் தென்னிந்தியாவுக்குச் சென்ற பின்னர் மிஷனரிமாரின் அகராதிப் பணிக்குப் பெரிதும் உதவி புரிந்ததாகத் தெரிகின்றது. இவருடைய மகனாகிய வி. கனகசபை பிள்ளை அவர்களே “1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்” என்ற சிறந்த நூலை இயற்றினார். வி. கனகசபைப் பிள்ளை 1855ஆம் ஆண்டு தென்னிந்தியாவிற் பிறந்து
1906ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.
ஹென்ஸ்மன் சகோதரர்கள் தென்னிந்தியாவிலே சிறப்புப் பெற்ற இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய பூர்வீகம் யாழ்ப்பாணத்தில் உள்ள வேலணை ஆகும். பெரிய தம்பி நாகநாதர் என்ற வேலணை வாசியின் மகனே ஜோன் ஹென்ஸ்மன் என்னும் அங்கிலிக்கன் மதகுருவானவர். இவருடைய 6 பிள்ளைகளில் மூன்று மக்கள் சென்னை பல்கலைக்கழக B.A. பரீட்சையில் சித்தி எய்தி தென்னிந்தியாவிலேயே பதவிகள் வகித்தனர். ஜொன் ஹென்ஸ்மன் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளரகவும், ஜேம்ஸ் ஹென்ஸ்மன் கும்பகோணம்
2013 ஆம் ஆண்டுக்காகத்
1000 இடைநிலைப் பாடசாலைகளின் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்
சகல பாடசாலைகளுக்காகவும் வி பொருட்களை வழங்குதல்.
வெளிக்களக் கல்வி மத்திய நிலைய கொள்ளளவு விருத்தி வேலைத்திட்டா
சிறிய பாட்டசாலைகளின் வகுப்பறைக்க தொகுதிகளை வழங்குதல்.

அரசினர் கல்லூரி அதிபராகவும் பதவி வகித்தனர். இவருடைய தயாளசிந்தனையைப் பற்றி அவரின் கீழ் தமிழ் பண்டிதராக இருந்த உவே. சாமிநாத ஐயர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“கும்பகோணம் காலேஜில் ஹென்ஸ்மன் என்பவர் பிரின்ஸ் சிப்பலாக இருந்தபோது ஒரு சேவகனை எதற்காகவோ கண்டித்தார். அவர் சிறிதும் அஞ்சவில்லை. அதிகமாகப் பேசவேண்டாம் நீங்களும் சர்க்கார் சம்பளக் காரன் நானும் சர்க்கார் சம்பளக்காரன். உங்களுக்குள்ள சுதந்திரம் எனக்கும் உண்டு என்று எதிர்த்துப் பேசத் தொடங்கினான். ஹென்ஸ்மன் தயவுள்ளவராகையால் ஒன்றும் செய்யவில்லை.”
தென்னிந்தியாவின் தலைசிறந்த தமிழ் அறிஞராகிய திரு.வி. கல்யாணசுந்தர முதலியாருக்கு யாழ்ப்பாணத்து கதிரவேற்பிள்ளை ஆசிரியராக வாய்த்தது போலவே இந்தியாவின் தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளராகிய (Silver Tongued Orator) மாகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரி யாருக்கு ஆங்கில ஆசிரியராக யாழ்ப்பாணத்து ஜோன் ஹென்ஸ்மன் வாய்க்கப்பெற்றார். மகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் ஜோன் ஹென்ஸ்மனைத் தமது குருவாகவே கருதினார். தமது குரு வயோதிபத்தை அடைந்திருந்த காலத்தில் அவரைப் பார்ப்பதற்காக மகாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் யாழ்ப்பாணம் வந்து திரும்பினார் எனத் தெரிகின்றது. யாழ்ப்பாணக் கல்லூரியின் துணை அதிபராக இருந்த ஜே.வி. செல்லையா பங்களூரில் மகாகணம் ஸ்ரீநிவாச ஐயரைச் சந்தித்தபோது அவர் தமது குருவைப் பற்றி மிகுந்த ஆர்வத்தோடு விசாரித்ததாக எழுதியுள்ளார்.
தொடரும்...
- திட்டமிடப்பட்டுள்ள பணிகள்
விஞ்ஞானக் கல்வியினை விருத்தி செய்தல். டடியினை நடாத்துதல்.
ஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இரசாயனப்
ங்களை விருத்தி செய்தல். ங்களை அமுல்படுத்தல். களுக்குக் கொண்டு செல்லக் கூடிய உபகரணத்
bறள்
அகவிழி பெப்ரவரி 2013

Page 30
மாணவர் இடை வி அதில் செல்வாக்குச் செலுத்,
M.H.M.A. Radhu, M.ed
இன்று உலகம் விஞ்ஞான, தகவல் தொழில்நுட்ப ரீதியாக வேகமான மாற்றத்திற்கு உட்பட்டு வருகின்றது. இம் மாற்றத்தின் வழி நின்று மனித வாழ்க்கை முறையையும் மாறிச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. உலக மாற்றத்திற்கேற்ப வாழவும், ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கவும் பொருத்தமான கல்வியை பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது. "கற்கமறுப்பவன் வாழ மறுப்பவன்” என்ற கூற்றுக்கு ஏற்ப கல்வியை கைவிடுவது கைசேதத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த வகையில் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகிச் செல்வது இத்தகைய ஓர் நிலைமைக்கே மாணவர்களை இட்டு செல்லும் என்பது திண்ணமாகும்.
이
கடந்த சில தசாப்தங்களாக உலக நாடுகளில் கல்வி வசதிகள் நன்கு விரிவுபடுத்தப்பட்டு, சகலரும் கல்வி எனும் நோக்கினை அடையும் வகையில், கல்விக்கான பௌதீக மற்றும் மனித வளத் தேவைகளும் அதிகரிக்கப்பட்டு
அகவிழி | பெப்ரவரி 2013

லகலும் தும் காரணிகளும்
வருகின்றன. ஓவ்வொரு நாடுகளும் கல்விக்காக பெருந் தொகையான நிதியை ஒதுக்கி வருகின்ற அதே வேளை கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பினை ஏற்படுத்த இந் நாடுகள் முயற்சித்து வருகின்றன.
முறைசார் கல்வியில் அரசானது அனைவருக்கும் பெருமளவிற்கு சம வாய்ப்பினை வழங்கியுள்ளது. இருந்த போதிலும் அச் சம வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் முறையாக பயன் படுத்திக் கொள்கின்றார்களா? என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. அந்த வகையில் தமது பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கை விட்டு விலகிச் செல்வதனால் சமூகத்தின் எதிர் பார்க்கைகள் சிதைந்து போகின்றன. பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடையில் விட்டுச் செல்வது
கல்வியில் ஓர் வீண் விரயமாவே கணிக்கப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஆரம்ப வகுப்புகளில் 25 சதவீதம் கல்வியில் வீண் விரயம் காணப் படுவதாக யுனெஸ்கோ (1980) மேற்கொண்ட ஆய்வு குறிப்பிடு கின்றது.
இடை விலகல் என்பது பாட சாலைக் கல்வியை பூரணமாக நிறைவு செய்யாமல் அதற்கு முன் பாடசாலையை விட்டு விலகுதல் ஆகும். இலங்கையைப் பொறுத்த வகையில் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான பாடசாலைக் காலப் பகுதிக்குள் கல்வியை தொடராக மேற் கொள்ளாது இடையில் விட்டுச் செல்வதாகும்.
"குட்” கல்வி அகராதியில்
இடை விலகல் என்பது ஆரம்ப அல்லது இரண்டாந் தரப் பாட சாலையில் தொடர்ச்சியான தவணையில் அங்கத்தவராக இருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக இடை நிறுத்துபவர். அல்லது வகுப்பு
- 28

Page 31
12 இல் அல்லது அந்த மட்டத்தில் கல்வியை பூரணப் படுத்தாமல் இடை நிறுத்துபவரைக் குறிக்கும்.
இடை விலகலை அளவிடுவதற்கான வழிகளை "குட்” அகராதி எடுத்துக் காட்டுகின்றது. ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் கல்வி கற்க பாடசாலைக்கு சேரும் மாணவர் களும், அதன் பிந்திய மட்டத்தில் கல்வியை திருப்திகரமாக பூரணபடுத்துபவர்களின் தொகையையும் ஒப்பிடும் போது இடை விலகலை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
பாடசாலைக்கு சீராக சமுகந்தராமையும், இடை விலகிச் செல்வதும் கல்வியில் வீண் விரயத்தை ஏற்படுத்தும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இடை விலகுகின்றவர்களாலும், வகுப்பில் மீளக் கற்பவர்களாலும் செலவிடப்படுகின்ற மாணவ வருடங்களின் மொத்தத் தொகை கல்வியில் விரயம் எனப்படுவதாக கல்விக் கலைக்களஞ்சியம் (1985) குறிப்பிடுகின்றது. இத்தகைய கல்விக் களஞ்சியத்தின் விளக்கத்திலிருந்து கல்வி வீண் விரயம் எனப்படுவது மாணவன் சார்பான காரணியாக கருதப்படுகின்றது.
1989 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின் படி ஆசிய நாடுகளில் 54 மில்லியன் பிள்ளைகள் கல்வியை இடையில் விடுவோர் என கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளுடன் மாணவர்கள் ஒரே வகுப்பில் திரும்பத் திரும்ப கற்கும் பிரச்சினைகளும் உண்டு. இவை யாவும் கல்வி மூலவளங்கள் விரயமாக்கப்படுவதையும், கல்வி முறைகளின் வினைத்திறன் குறைபாட்டையும் எடுத்தக் காட்டுகின்றன. (கல்வியல் கட்டுரைகள். பேராசியர் சோ.சந்திரசேகரம், பக்கம் 53)
வகுப்பின் தின வரவு இடாப்பிலிருந்து ஒரு மாணவன் பாடசாலைக்கு சமுகந் தராமையைக் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வகுப்பின் மாணவன் கல்வியை இடை நிறுத்தி விட்டாரா என்பதை தீர்மானிப்பது சிரமமாகும். இலங்கையில் இடை விலகலைத் தீர்மானிப் பதற்கு சில சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு மாணவன் மூன்று மாதங்களுக்கு சமுகந்தராவிட்டால் அம் மாணவனின் பெயர் அவ் வகுப்பின் தினவரவு இடாப்பிலிருந்து நீக்கப்பட வேண்டுமென அச்சட்டம் கூறுகின்றது. ஆனால் இச் சட்டத்தை பாடசாலைகள் முறையாக நடைமுறைப்படுத்துவது அரிதாகவே காணப்படுகின்றது.
மாணவர் இடை விலகலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
ஒரு மாணவன் தனது பாடசாலைக் காலத்தை பூரணப் படுத்தாமல் இடையில் விட்டுச் செல்வதற்கு அல்லது தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமுகந்தராமைக்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
29

1. மாணவன் தொடர்பான காரணிகள். 2. வீட்டுச் சூழலோடு தொடர்பான காரணம 3. பாடசாலையோடு தொடர்பான காரணிகர்.
சமூகக் கலாசார காரணிகள்.
1. மாணவன் தொடர்பான காரணிகள்.
மாணவன் தொடர்பான காரணிகளில் மாணவனின் உடல், உளம் சார்ந்த காரணிகளும், அவனின் தவறான எதிர்பார்க்கைகளும் இவற்றுள் அடங்குகின்றன.
அதிபர்கள், ஆசிரியர் கள் மீதும் அவர் களது நடவடிக்கை மீதும் உருவாகும் அர்த்தமில்லாத பயம், அச்சம் காரணமாக மாணவர்கள் கற்றலில் விருப்ப மின்மையை வெளிக்காட்டுகின்றனர். பரீட்சைகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள், விழாக்கள், மாணவ மன்றங்கள்,போன்ற பாட, இணைப்பாடவிதான செயற்பாட்டு முறையினால் ஏற்படும் பீதி நிலையும் உளம் சார்ந்த பிரச்சினைகளாக கொள்ளலாம்.
உடல் சார்ந்த பிரச்சினைகளாக கேட்டல் குறைபாடு, பார்வைக் குறைபாடு, உடல் அங்கக் குறைபாடு போன்றவற்றைக் குறிப்பிட முடியம். இத்தகைய காரணி களினால் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பூரணமாக ஈடுபாடு காட்டமுடியாத நிலை ஏற்படுகின்ற போது குறித்த மாணவன் பாடசாலையை விட்டு விலகிச் செல்லக் கூடியதாகவுள்ளது. 2009 ஆம் ஆண்டில் நிந்தவூர் கமு | அல் மதீனா மகா வித்தி யாலயத்தில் இடை விலகிச் சென்ற 29 மாணவர்களில் 03 மாணவர்கள் கேட்டல் குறைபாடு காரணமாக சீராக பாடசாலைக்கு சமுகந்தராமல் இடையில் பாடசாலையை விட்டு நீங்கிச் சென்றவர்களாவர்.
"படித்து விட்டு வேலையற்றிருப்போரை அவதானித்து தனக்கும் இவ்வாறானதோர் நிலைதான் ஏற்படும் என நினைத்து ஏனோதானோ என்ற நிலையில் கல்வியில் சிரத்தை எடுக்காது பாடசாலைக்கு சமுகந்தருவதில் ஒரு விருப்பமின்மையைக் காட்டுகின்றனர்.” (அப்துல் றஹீம் - 1996 )
மேலும், இன்று பாடசாலை மாணவர்களில் பெரும் பாலானோர் கையடக்கத் தொலைபேசிப் பாவனை யுடைவர்களாகக் காணப்படுவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு Reload செய்வதற்கு பணம் வீட்டிலிருந்து கிடைக்காத சந்தர்ப்பத்தில் மாற்று வழியாக, பாடசாலைக்கு சமூகந்தராமல் மேசன் தொழில், தச்சுத் தொழில் போன்ற கூலி வேலைகளில் ஈடுபட்டு அதற்கான பணத்தை தேடிக் கொள்கின்றனர். இவ்வாறு கையடக்கத் தொலைபேசிப் பாவனையில் மூழ்கிதலும், பணக்
அகவிழி | பெப்ரவரி 2013

Page 32
கவர்ச்சியும் சேர்ந்து அவர் களை நாளடைவில் பாடசாலையை விட்டு தூரமாக்கி விடுகின்றது.
இன்னும் இவ்வாறு வேலைகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் தங்களது பெற்றோருக்குத் தெரியாமலேயே செல்வது ஆய்வு மூலம் கண்டறியப் பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்த பணம் மூலம் புகை பிடித்தல், சக நண்பர்களுடன் அரட்டையடித்தல் போன்ற தீய செயற்பாடுகளில் ஈடுபட்டு கல்வியின்பாலான தமது நாட்டத்தை குறைத்துக் கொள்கின்றனர். இத்தகைய நிலைமைகளும் இடை விலகலுக்கு காரணமாக அமைகின்றன.
2. வீட்டுச் சூழலுடன் தொடர்பான காரணிகள்
வறுமை நிலை, குடும்பத்தின் பொருளாதார நிலை, பெற்றோரின் கல்வி நிலை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, பெற்றோர் மரணமடைதல், இடப் பெயர்வு, மேலதிக வேலைச்சுமை, குடும்பத்தின் ஒற்றுமை சீர் குலைவு, பெற்றோர் வேலை தேடி வெளிநாடு செல்லுதல், பெற்றோரின் தொழிலுக்கு உதவுதல் போன்ற விடயங்கள் மாணவனின் இடை விலகலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அமைந்துள்ளதாக அப்துல் றஹீம் (1996) எனபவராலும், ஏ. எம். ருமைஸா ( 2000 ) என்பவராலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது.
வீட்டுச் சூழலோடு தொடர்புடைய காரணிகளில் வறுமை நிலையானது ஒரு மாணவனின் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வறுமை யானது உடல் நலக் குறைபாட்டிற்கும், பாடசாலையில் குறைந்த வரவிற்கும் காரணமாக இருந்தது என ப்ளவுட் ஹல்ஸி, மார்டின் (1956) என்போர்கள் குறிப்பிடுகின்றனர்.
கல்முனை கல்வி மாவட்டத்தில் முஸ்லிம் பெண் பிள்ளைகளின் இடைவிலகலுக்கான பிரதான காரணம் வறுமை ஆகும் என சுல்பிக்கா (1995) சுட்டிக்காட்டுகின்றார்.
பிள்ளைகளின் நீண்ட காலக் கல்வி, அவர்களின் அறிவாற்றல் என்பன பெற்றோரின் தொழில் வாய்ப்போடும் அவர்களின் குடும்ப அலகோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாக க்ரெளதர் (1960) என்பவர் குறிப்பிடுகின்றார்.
எஸ், ஏ. சிறாஜுன் முனீர் (1998) என்பவர் மீன் பிடிக் கிராமமான அட்டாளைச்சேனை கோணாவத்தை பிர தேசத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி பெற்றோர் தமது பிள்ளைகளையும் மீன்பிடி தொழிலுக்காக அழைத்துச் சென்று மீன்பிடி வலையைக் காயப்போடல், வலை பின்னல், தோணிகளுக்கு வலையேற்றல் போன்ற வேலைகளுக்கும், பிடித்த மீன்களை விற்பனை செய் வதற்கும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்குக் காரணம் குடும்பத்தின் வறுமை நிலையே என ஊகிக்க முடிகின்றது.
அகவிழி பெப்ரவரி 2013

பொதுவாக வறுமை நிலையிலுள்ள குடும்பங்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக் குடும்பங் களிலுள்ள அதிகமான பிள்ளைகள் ஒரே நேரத்தில் பாடசாலை செல்ல வேண்டிய நிலை இருப்பதனால் அவர்கள் பாடசாலை செல்லத் தேவையான வசதிகளை செய்து தரவோ, கல்வியில் அவர்களை ஊக்கப்படுத்தவோ பெற்றோர்களினால் முடியாதிருப்பதனால் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடையில் விலகுகின்றனர். றஹீம் (1998 )
மாணவனின் பாடசாலை வரவில் அல்லது இடை விலகலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீட்டுச் சூழல் காரணியாக இடப் பெயர்வு, பெற்றோரின் மரணம், பெற்றோரின் கல்வி நிலை என்பன காணப்படுகின்றன. தொழில் காரணமாக அல்லது வேறு காரணங்களினால் குடும்பம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம் பெயர்கின்ற போது புதிய சூழலில் மாணவர்கள் தமது கல்வியினைத் தொடர்வதற்கு பொருத்தமான பாடசாலை, ஆசிரியர்கள், கற்றல் வளங்கள் கிடைக்காமல் போகின்ற சந்தர்ப்பங்களில் இடை விலகல் ஏற்படுகின்றது என றஹீம் (1996) தனது ஆய்வில் குறிப்பிடுகின்றார்.
கல்வி வீணாகுதல் தொடர்பாக இந்தியாவில் சர்மாவும் சுப்ராவும் (1971) செய்த ஆய்வின் படி பெற்றோரின் கல்வியின்மையானது பிள்ளைகளிடத்தில் இடை விலகலை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவ கால தொழில் வாய்ப்புக்களும் பாடசாலையின் வரவைக் குறைப்பதற்கும், இடை விலகலுக்கும் காரணமாக அமைவதாக அப்துல் றஹீம் (1996) குறிப்பிடுகின்றார். விவசாயக் கிராமத்தை சூழவுள்ள மாணவர்கள் அறுவடை, விதைப்பு போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதே போன்று சித்திரை வருடப் பிறப்பு, மற்றும் பண்டிகைக் காலங்களில் வியாபாரத்தில் ஈடுபட பாடசாலைக்கு சமுகந்தராமல் இருந்தனர் என்பதை தமது ஆய்வில் கண்டறிந்ததாக அப்துல் றஹீம் (1996) குறிப்பிடுகின்றார். படிக்கும் காலங்களில் பருவ கால் வேலைகளால் கிடைத்த பணக் கவர்ச்சி காரணமாக பாடசாலைக்கு சமுகமளிக்காமை இறுதியில் இடை விலகலுக்கு காரணமாய் அமைந்தது என இவ் ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ் ஆய்வின் அடிப்படையில் கல் முனைப் பிராந்தியத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது பின்வரும் விடயங்கள் கண்டு கொள்ளப்பட்டன. 01. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், தைப்
பொங்கல், தமிழ் - சிங்கள் சித்திரைப் புத்தாண்டு காலப் பகுதியில் சில மாணவர்களின் பாடசாலை வரவு மிகக் குறைவான மட்டத்தில் காணப்பட்டது.
ான் |
30

Page 33
குறித்த மாணவர்களின் வரவு ஏனைய மாதங்களை விட மேற்படி பண்டிகைக் காலங்களில் 35 வீதத்திற்கும்
40 வீதத்திற்கும் இடையில் காணப்பட்டது. 02. வருடா வருடம் கல்முனையில் குறித்த ஒரு காலப் பகுதியில் 12 நாட்கள் தொடராக இடம்பெறும் நாகூர் ஆண்டகைதர்ஹா கொடியேற்ற நிகழ்விலும், அதே போன்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய திரு விழா நிகழ்விலும் பாடசாலை செல்லும் மாணவர் வர்த்தக நடவடிக்கைகளிலும் வீண் பொழுது போக்கு அம்சங்களிலும் பெரும்பாலும் தமது இரவுப் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் இக்காலப் பகுதியில் இரவில் கண் விழித்து பகலில் தூங்குவ தால் பாடசாலைக்கு சமுகமளிப்பது குறைவாகக் காணப்படுகின்றது. மேற்படி நிகழ்வுகள் நிறைவுற்ற பின்பே அனேகமான மாணவர்கள் பாடசாலைக்கு
வருகின்றனர்.
இவ்வாறு பாடசாலைக்கு சமுகந்தராமல் மேற்படி நிகழ்வுகளில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக் காரணம் குடும்பத்தின் வறுமை நிலையே எனக் கண்டறியப் பட்டுள்ளது. இறுதியில் இம் மாணவர்களில் ஒரு சிலர் இத்திருவிழாக் காலங்களில் தாம் மேற் கொண்ட அத் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள ஆசைப்பட்டதனால் முற்றாகவே பாடசாலைக்கு சமுகமளிக்காமல் இடை விலகிச் சென்றதை ஆய்வாளரால் கண்டுகொள்ள முடிந்தது.
3. பாடசாலையோடு தொடர்பான காரணிகள் ஒரு மாணவனை பாடசாலைக்கு சமுகளிக்க வைப்பதில் அல்லது அம் மாணவனை இடை விலக வைப்பதில் பாடசாலை சார்ந்த காரணிகளும் முக்கிய இடத்தை
வகிக்கின்றன.
ஆசிரியர்களின் திறமையின்மை, வயது குறைந்த பிள்ளைகளுடன் வயது கூடிய பிள்ளைகள் ஒரே வகுப்பில் இருத்தல், அதிபர் ஆசிரியர்களின் தண்டனை, பாடசாலை சட்ட திட்டங்கள், குறித்த பாடசாலை கற்றலுக்கு ஏற்ற உகந்த சூழலைக் கொண்டிருக்காமை, தனது இருப்பிடத்தி லிருந்து பாடசாலை துார இடத்திலிருப்பதனால் ஏற்படும் போக்கு வரத்துப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு பாடசாலை சார்ந்த காரணிகள் இடை விலகலில் செல்வாக்குச் செலுத்துவதைக் கண்டு கொள்ள முடிகின்றது.
குறைந்த சமூகப் பொருளாதார பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் காட்டும் குறைவான மனோபாவங்களும், வள ஆயத்தங்கள் சம்மந்தமான காரணிகளான தரமான ஆசிரியர்களின்

பற்றாக்குறை, கற்பித்தலில் குறைவான ஊக்கப்டுத்தல், மாணவர்களின் கல்வியில் ஆசிரியர்கள், அதிபர்கள் காட்டும் குறைவான சிரத்தை, உடல் ரீதியான தண்டனை அளித்தல் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகளை சரியாகப் பயன்படுத்துவதில் குறைந்தளவு ஆர்வத்தை வெளிப்படுத்தல் என்பவைகள் பாடசாலை மீதான ஆர்வத்தையும், விருப்பத்தையும் குறைப்பதாக யுனெஸ்கோ சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உயர்வான மாணவர் ஆசிரியர் விகிதம், பாடசாலை முகாமைத்துவக் குறைபாடு, குறைந்த அறிவுறுத்தல்கள் என்பன அதிகரித்த இடை விலகலுக்கு காரணமாக அமைவதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
பொதுவாக பாடசாலையை விட்டு விலகுவோர் தொடர்பாக கல்வி அமைச்சின் முறைசாராக் கல்விப் பிரிவு 1984 ஆம் ஆண்டில் கொழும்பு நகரின் சேரி மற்றும் கொட்டில் குடியிருப்பாளர்களைச் சேர்ந்த 2337 குடும்பங் களை மாதிரியாகக் கொண்டு ஓர் ஆய்வை நடாத்தியது. இவ்வாய்வின் படி கொழும்பு நகரின் சேரி கொட்டில் பகுதிகளில் 6-8 வயதுத் தொகுதிப் பிள்ளைகளில் 22.3 சத வீதமானோர் கல்வியை விட்டுச் செல்பவர்களாக உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010 ஆண்டின் இலங்கை கணக்காய் வாளர் நாயகத்தின் அறிக்கையில் 2008 ஆம் ஆண்டில் 46,923 மாணவர்களும், 2009 ஆம் ஆண்டில் 46,854 மாணவர்களும், 2010 ஆம் ஆண்டில் 41,173 மாணவர்களும் பாடசாலையை விட்டு இடை விலகிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வைத்து அவதானிக்கின்ற போது குறைந்தது வருடா வருடம் 40,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. மேற்படி மூன்று ஆண்டுகளில் 2010 ஆம் ஆண்டில் ஏனைய இரண்டு ஆண்டுகளையும் விட மாணவர்களின் இடை விலகல் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. கடந்த 30 வருடங்களாக வடக்கு கிழக்கில் நிலவிய யுத்தம் 2009 இல் முடிவுக்கு வந்தமையால் இவ்வாறன இடை விலகல் வீழ்ச்சி யடைந்திருக்கலாம் என ஆய் வாளர் கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
கமல் அபேசிங்க (2010) மேற் கொண்ட ஆய்வில் கிட்டத்தட்ட 40 லட்சம் மாணவர்களில் 80 ஆயிரம் (18%) பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்திற்கு முதல் இடை விலகிச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Transparency International என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இலங்கையில் பெருந்தோட்டத் துறையில் உள்ள
அகவிழி | பெப்ரவரி 2013

Page 34
தொழிலாளர்களின் பிள்ளைகளின் மத்தியிலேயே ஆகக் கூடுதலான இடை விலகல் காணப்படுவதாக குறிப் பிட்டுள்ளது. வருடந்தோறும் 20 வீதமான பிள்ளைகள் இடை விலகிச் செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. தரம் 01 தொடக்கம் 05 வரையுள்ள பிள்ளைகள் மத்தியில் 8.4 வீதமாக பெருந்தோட்டப் பிள்ளைகளிடம் இடை விலகல் காணப்படுவதாக இவ் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. வசதி குறைந்த பாடசாலைகள், குறைவான போக்குவரத்து வசதி, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணிகள் இதற்கு தாக்கம் செலுத்துவதாக இவ் அமைப்பு கண்டறிந்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா வடக்கு போன்ற பிரதேசங்களில் மாணவர்களின் இடை விலகல் அதிகரித்துச் செல்வதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெற்றோரை விட்டு பிள்ளைகள் பிரிந்து செல்லல், வீட்டுப் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக கூலி வேலைகளுக்குச் செல்லல் போன்றன இதில் செல்வாக்குச் செலுத்துவதாக அறியப்பட்டுள்ளது.
இலங்கையின் பின் தங்கிய பகுதிகளில் 50 சதவீதம் அளவிற்கு இடைவிலகல் காணப்படுவதாக யுனிசெப் நிறுவனம் குறிப்பிடுகின்றது. குறிப்பாக, பெருந்தோட்டப் பகுதி, குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பம், அதி
2012 ஆம் ஆண்டு வேலை
போதைப்பொருள் பயன்பாட்டின் முன்னேற்றங்கள்
போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மாணவர்கள்
2012.08.31 ஆந் தினமன்று முன்னேற்றம் மற்றும் 2011
அல்கம மகா வித்தியாலயத்தில் தலைமைத்துவ தேசிய பாடசாலை மாணவர் செயலமர்வு மற்றும் எ அமுல்படுத்தப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை வேலைத்திட்டங்கள் நடாத்தப்படவுள்ளன.
புதிய போதைப்பொருள் தடுப்பு சுற்றறிக்கையினை ெ ஆண்டுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள பணிகள்
போதைப் பொருள் தடுப்புத் தொடர்பாக மா
கல்விக் கல்லூரி ஆசிரிய மாணவர்களை அ
வழிகாட்டல் கோவைகளை வகுத்தல்.
தேசிய போட்டிகள் மற்றும் கண்காட்சிகளை
அகவிழி | பெப்ரவரி 2013

கஷ்டமான கிராமப்புறங்கள் மற்றம் சுனாமி அனர்த்தத்தினால் அழிந்து போன பாடசாலைகளில் கற்ற பிள்ளைகள் மத்தியில் இத்தகைய இடை விலகல் காணப்படுவதாக யுனிசெப் அறிக்கைகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இலங்கையின் வட மாகாணத்தில் 38321 மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் 24614 மாணவர்களும் பல்வேறு காரணங்களால் இடை விலகிச் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு காரணங்களினால் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகிச் செல்வதனால் கல்வியின் மூலம் சமூகமும், நாடும் அடைய எதிர்பார்க்கும் இலக்கை எய்துவதில் பின்னடைவு ஏற்படுகின்றது. வருடா வருடம் கோடிக்கணக்கான ரூபாய்களை கல்விக்காக அரசாங்கம் முதலீடு செய்கின்றது. இந்த முதலீட்டின் மூலம் எதிர்பார்க்கும் விடயங்களை அடையச் செய்வதில் இத்தகைய பாடசாலை இடை விலகல்கள் தடையாக அமைகின்றன. எனவே, மாணவர்களின் இடை விலகலில் தாக்கம் செலுத்தும் மேற்படி காரணங்களை களைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இடை விலகலை இழிவளவாக்கி முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
மத்திட்டங்களின் நோக்கம்
ள் தொடர்பான அறிவினை விருத்தி செய்தல்.
களை அறிவுறுத்தல்
2.12.31 ஆந் திகதியன்று எதிர்பார்க்கப்பட்ட பயன்கள்
விருத்திச் செயலமர்வு மற்றும் கலவான ஆந்த விசேட போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்கள் களில் எஞ்சியுள்ள 18 பாடசாலைகளில் இவ்வாண்டில்
வளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2013 ஆம்
ணவர்களை அறிவுறுத்தல்.
றிவுறுத்தல்.
நடாத்துதல்.

Page 35
பாடசாலைகளில் பிள்கை நிகழ்ச்சித்திட்டத்தின் (
எஸ்.எல். மன்சூர் (கல்வி
இலங்கையின் புதிய கல்விச்சீர்திருத்தமானது கடந்த 1998ல் ஆரம்பமாகி 1999ல் நாடுமுழுவதும் அமுலுக்கு வந்தது. ஆரம்பகல்விச் சீர்திருத்தத்திற்கமைய புதிய நடைமுறைகளும், கொள்கைகளும் ஆரம்பமாகின. அந்த அடிப்படையில் ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்திலும் விசேட சிறப்புக்கள் அடங்கிய பின்வரும் விடயங்களும் உருவாக்கம் பெற்றன. புதிய கட்டமைப்பு, பிள்ளையை இனங்காணல், தேர்ச்சிமைய கலைத்திட்டம், அதற்கான
பாடங் கள், வாய் மொழியிலமைந்த ஆங்கிலம், இணைத்தலும் ஒன்று சேர்த்தலும், இணைக்கலைத்திட்டமும் விருப்பத் தெரிவு நடவடிக்கைகளும், கற்றல் கற்பித்தல் செயல்முறைகள், அத்தியவசியக் கற்றல் தேர்ச்சிகள், புதிய அடிப்படையிலமைந்த மதிப்பீடு, ஒவ்வொரு முதன்மை நிலைக்கும் கற்பிக்கவென ஓரே ஆசிரியர்கள், வயதான பிள்ளைகளுடன் குழுவேலைகளில் ஈடுபடல் போன்ற சிறப்புக்களை உள்ளடக்கியவாறு ஆரம்பமாகிய இக்கலைத் திட்டத்தில் புதிதாக பிள்ளைகள் தரம் ஒன்றில் (முதன்மை நிலை ஒன்றில்) சேருகின்ற பிள்ளைகளை ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்
133

ளகளை அறிதல் முக்கியத்துவம்
மாணி)
படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
அந்த அடிப்படையில் தரம் ஒன்றில் பிள்ளையைச் சேர்க்கும்போது ஆசிரியர் பயன்படுத்தக்கூடியவாறு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செயற்பாடுகள் கொண்ட இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் அறிந்திருத்தல் அவசியமாகும். பிள்ளைகளை தனித்தனியாகவும், அல்லது
சிறு குழுக்களாகவும் அச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்களின் விருத்திக்குத் தேவையான உதவி மற்றும் திறன்கள் ஆகியவற்றின் பரப்புக்களை ஆசிரியரால் இனங் கண்டு, பிள்ளையின் கல் வி சம்பந்தமான சுய தகவல்களும் சேகரிக்கப் படுவதுடன், ஒவ்வொரு பிள்ளையையும் தனித்தனியாக அறிந்து அவர்களுக்கு பொருத்தமான வகையில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளைத் திட்டமிடவும் இது உதவியாக அமைகின்றது.
பாடசாலைகளில் தரம் ஒன்றில் புதி தாக சேருகின்ற மாணவர்களை பாடசாலை மையத்தினுள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை, கல்வியமைச்சினது அறி வுறுத்தலின் பிரகாரம் 'வித்தியாரம்பம்' நிகழ்வு பாடசாலைதோறும் நடைபெறுவது அனைவரும் அறிந்த விடயமாகும்.
புத்தாண்டில் பாடசாலைகள் ஆரம்பித்து இரு வாரங்கள் கழிந்ததன் பிற்பாடு இவ்வாறான நிகழ்வினை அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து சமூகத்தின் துணையுடன் நடாத்துதல் வேண்டும். இத்தின மானது அந்தப்பிள்ளையின் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகவும், முதல் நாள் அனுபவம் என்பது பசுமரத்தாணிபோல பதியும்படியும், பாடசாலையானது வீட்டுச் சூழலின் அடுத்த கட்டத்திற்கான நகர்வாகவும் அந்த மாணவனுக்கு அமையும்படி பாடசாலையின் அன்றைய நாள் அமைய வேண்டும். இது மாணவனின் உள்ளத்தில் பாடசாலையைப் பற்றிய பயவுணர்வுகள்
அகவிழி | பெப்ரவரி 2013

Page 36
அற்ற நிலையைத் தோற்றுவிப்பதுடன், கற்கின்ற ஒரு சூழ்நிலைக்குள் தன்னை நிலைநிறுத்தவும் உதவும்படியாக இச்செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதற்காக தேசிய நிகழ்வாக இவ்விழாக்கள் நடைபெறுவது அவசியமாகும்.
இதற்கு முன்னோடியாக பாடசாலையில் சேர்கின்ற பிள்ளைகளை சில பாடசாலையின் அதிபர்களும், ஆசிரியர்களும் விழா நடைபெறுகின்ற தினத்திற்கே வரும்படி அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது ஒருபிழையான நடவடிக்கை என்பதை கல்வியோடு சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளல் வேண்டும். அண்மையில் ஒரு பாடசாலையின் அதிபர் தன்னுடைய பாடசாலையில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் அனை வரையும் வித்தியாரம்ப நிகழ்வு நடைபெறும் தினத்தில் வரும்படி பெற்றோர்களிடம் கூறியிருந்தார். அப்போது விடயத்தைத் தெரிந்து கொண்ட மாணவனின் பெற்றார் ஒருவர் "பிள்ளையை அறிந்து கொள்ளல்” எனும் செயற்றிட்டம் பாடசாலை தொடங்கிய இரு வாரகாலத்திற்கு ஆசிரியரால் அமுல் படுத்தப்படுவது பற்றி விசாரித்த போது ஆசிரியரும், அதிபரும் தன்னுடைய இயலா மையை எண்ணி தலை குனிந்து கொண்டனர். இவ்விடயம் பற்றி இன்னுமொரு ஆசிரியரிடம் வினவியபோது தனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது என்றும் கூறினார். ஆரம்பக் கல்விப் புலத்தில் கற்பிக் கின்ற இவ்வாசிரியரின் நடத்தைக் கோலத்தை என்வென்று கூறுவது.
கல்வி மறுசீரமைப்பின் பிரகாரம் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து பிள்ளையை அறிந்து கொள்ளல் எனும் புது அம்சம் நடைமுறையி லிருந்து வருகின்றது. இதற்கான வேலைத்திட்டம் அடங்கிய கைநூல் ஒன்றும் 1995 ஆண்டு வெளியிடப்பட்டு அதற்கான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் சில பாடசாலைகளின் ஆரம் பக் கல் வி
ஆசிரியர்கள் இதில் அதிக கவனம் செலுத்துவ தில்லை என்கிற குறைபாடுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதனை அறிந்து கொள்ளும் முகமாக இதுபற்றிய விளக்கத்தை விபரமாக அறிந்துகொள்வோம். அதாவது பிள்ளையை அறிந்து கொள்ளல் எனும் வேலைத்திட்டத்தை மேலும் விருத்தி செய்யும் நோக்குடன் 16 செயற்பாடுகள் இரசனைமிக்கதான அடிப்படையில் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும். கல்வியமைச்சினால் அறிவுறுத்தப்பட்டு தரம் 1இல் பிரவேசிக்கும் பிள்ளைகளை அறிந்து கொள்வோம் எனும் தலைப்பிட்டு முன்பள்ளிப் பருவ அபிவிருத்தியும் கனிஷ்ட நிலைக்கல்வித் திணைக் களம் தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்பட்டுள்ள
அகவிழி பெப்ரவரி 2013

நூலிலும் இது தொடர்பான விளக்கங்கள் தெளிவாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலைகளில் பதினாறு செயற்பாடுகளையும் முழுமையாக அந்த மாணவர்களிடையே மேற்கொள்கின்ற போது பின்வரும் குறிக்கோள்களை அடையும் நோக்குடன் திட்டமிடப்படுதல் முக்கியமாகும்.
முதலாந்தரத்தில் பிரவேசிக்கும் பிள்ளைகளிடத்தே பாடசாலை தொடர்பான விருப்பத்தை ஏற்படுத்தல். முதலாந்தரத்தில் பிரவேசிக்கும் பிள்ளைகளுக்கு இடையே நட்பை உருவாக்கல். மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையே நட்பை உருவாக்கல் மாணவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வருட ஆரம்பத்திலேயே இனங்காண்பதற்கு ஆசிரியருக்கு வாய்ப்பளித்தல்
முதலாந்தரத்தில் முறைசார் கல்விக்காகப் பிர வேசிக்கும் மாணவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை எதிர்காலக் கல்விச் செயன்முறையின் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தல் ஆகியன இதன்
நோக்காகக் கொள்ளப்படுகின்றது. இதுதொடர்பான திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பாகவும் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகும். பிள்ளையை அறிந்து கொள்ளல் எனும் வேலைத் திட்டத்தின் குறிக்கோள்கள், இவ்வேலைத்திட்டம்
34

Page 37
நடைமுறைப்படுத்தப்படும் விதம்.
ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தல்
முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுக்கு சுமார் இரு வாரங் களுக்கு முன்னர் இவ்வேலைத்திட்டத்தை நடாத்துதல் மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், இரசனை பெறத் தக்கதாகவும் அந்த இரு வாரங்களை உருவாக்கிக் கொடுத்தல்.
வகுப்பு மாணவர்கள் சகலருக்கும் கூட்டாகப் பங்குபெறத்தக்க வகையில் அமைத்தல்
முதலாவது செயற்பாடான விளையாட்டு வீடுகள் மூலம் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல் இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் பாடசாலைச் சீருடையிலன்றி சாதாரண உடையிலும் பிள்ளைகள் பாடசாலைக்கு வருதல்
இவ்வாறாக கவனம் செலுத்துகின்றபோது மாணவர்கள் தங்களது வீட்டின் சூழலில் இருப்பதுபோலவும், தனது தாய் தந்தையரிடமிருந்து பிரிந்துள்ளதை மறந்து பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் அன்பான பேச்சில், நடத்தையில் கட்டுண்டு போவார்கள் என்பதற்கு கீழே வரும் பதினாறு செயற்பாடுகளும் முக்கியத்துவமிக்கதாக அமைகின்றது. அந்தவகையில் பின்வரும் தலைப்புக்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும்
கூறப்பட்டுள்ளது. 01. விளையாட்டு வீடு 02. சுதந்திரமான செயற்பாடுகள் 03. குழு விளையாட்டு - 1 04. குழு விளையாட்டு - 11 05. ஆடல், பாடல், அபிநயம் 06. கதையில் வரும் பாத்திரங்களைப் பாவனை
செய்தலும் பல்வேறு ஒலிகளை எழுப்புதலும்
07. பாத்திரங்களைப் பாவனை செய்தலும் ஒலிகளை
எழுப்புதலும் 08. விளையாட்டு முற்றம் 09. வெட்டுதல் குறித்த எல்லையினுள் நிறந்தீட்டுதல்
10. ஆக்கச் செயற்பாடுகள்- 1
11. ஆக்கச் செயற்பாடுகள் - 11
|35

12. கதை-சித்திரம் வரைதல் 13. ஊர்வலம் 14. எண்ணுதல் 15. பொருள்களை எண்ணுதல்/எண் விளக்கம் 16. எண் விளக்கம் மேற்படி செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றபோது பின்வரும் குறிக்கோள்களை அடைவதும் முக்கியமாகும்.
பாடசாலையில் நண்பர்களுடன் விளையாடி மகிழ்ச்சி யாகச் செயல்படக்கூடிய ஓர் இடம் எனும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளல், குழுவாகவோ தனியாகவோ ஆக்கபூர்வமாக பொருட்களைக் கையாண்டு மகிழ்ச்சி யடைதல், இலகுவான கட்டளைகளைப் பின்பற்றி விளையாட்டில் ஈடுபடுதல், தெரிதல், பொருத்துதல் தொடர்பான குழு விளையாட்டில் ஈடுபடுவதையும், இசை யோடும், அபிநயத்துடனும் பாடல்களை பாடுவதையும், பாவனை செய்து விளையாடி மகிழ்வதையும், பாத்திரங் களையும், ஒலிகளையும் பாவனை செய்து மகிழ்ச்சி யடைவதையும், விளையாட்டு முற்றத்தில் விளையாடி மகிழ்வதையும், படங்களை வெட்டி ஒட்டும் கைத்திறன் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவதையும், கதையை செவிமடுத்து மகிழ்ச்சியடைவதையும், ஆக்கத்திறன்கள், அழகியல் ஆற்றல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதிலும், 1தொடக்கம் 5வரையில் எண்ணி விளையாடுவதிலும், பூக்களை எண்ணியவாறு விளையாடுவதிலும், உருவங் களின் எண்ணிக்கை தொடர்பாக விளையாடி மகிழ்வதையும் நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சிகள் அனைத்தும் ஆசிரியரால் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும். இதன் ஊடாக மாணவர்கள் காண்பிக்கும் நிலைமைகளை அவதானித்து அடிப்படைத் தகவல்களை உரிய படிவத்தில் பதிவு செய்வதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
எனவே, ஒவ்வொரு பிள்ளையினதும் ஆற்றல்களைக் குறிப்பாக இனங்காண முயற்சி செய்வதுடன் இறுதியாக 28நியதிகளைக் கொண்ட கணிப்பீடுகளையும் கணிப்பிடுதல் முக்கியமாகும். ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் கூறப்பட்டுள்ள உத்தேச குறிக்கோள்களை அடையத்தக்க வகையிலும் மாணவர்களின் ஆற்றல்களை இனங்காணும் வகையிலும் தாமாகத் தயார்படுத்தி செயற்பாடுகளை சுதந்திரமான முறையில் ஆசிரியர் செயற்படுதல் சிறப்பாக அமையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களை அடைவத னூடாக பாடசலையைப் பிள்ளைகள் விரும்பும் ஓரிடமாக மாற்றி கற்றல் கற்பித்தல் செயன்முறையை உருவாக்கு வதற்கு இவ்வேலைத் திட்டம் துணையாக அமையும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
அகவிழி பெப்ரவரி 2013

Page 38
ஆசிரியர்களின் விழுமி தொடர்பான ஒழுக்க வி
பொதுச் சட்ட
சென்ற இதழின் தொடர்ச்சி..
ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர் பான ஒழுக்க விழுமிய முறைமை மற்றும் பொதுச் சட்டத் தொகுப்பு
ஆசிரியர் முகாமைத்துவத்தின் பொறுப்பாளராக, தமது தொழிலுக்கப் பாதிப்புக்கள் ஏற்படாத சட்டங்கள், உயரிய முகாமைத்துவத்தில் தமக்குள்ள பொறுப்புக் கள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்குதல். பாடசாலை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கொள்கைகளை வகுத்தல் மற்றும் அமுல்படுத்த உதவுதல். முகாமைத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றல் மற்றும் பிரச்சினைகளுக்குரிய சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் அமைதியான செயற்பாடுகளை மேற் கொள்ளல்.
தமது தொழில்சார் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் பெறுபேறுகள் தொடர்பாகப் பரஸ்பர கௌரவத்தினை ஏற்படுத்தல். சகல கடமைகளையும் உரிய பொறுப்புடன் உரிய செயற்பாடுகள் ஊடாக நியாயமாக மேற்கொள்ளல்.
சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாகச் செயற்படல்
ஆசிரியர் தொடர்ந்தும் சமூகத்தின் மற்றும் தேசத்தின் முன்னோடியாகக் கருதப்படுவதனால்,
சமூகத்தின் பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் அப்பிரச்சினைகள் ஊடாக உருவான சவால்களை எதிர் கொள்ளக் கூடியவாறான செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தி தேசத்தை நேசிக்கக் கூடிய இளம் சந்ததியினரைச் சமூகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்தல். பல்வேறுபட்ட சமூகப் பிரிவுகள் சமய மற்றும் மொழிப் பிரிவுகளுக்கு இடையிலான சமாதானத்தினைக் கட்டியெழுப்பக் கூடியவாறு மாணவர்களிடம் சிறந்த பண்புகள் மற்றும் விழுமியங்களை விருத்தி செய்து
அகவிழி | பெப்ரவரி 2013

பம் மிக்க செயற்பாடுகள் ஜமிய முறைமை மற்றும் டத் தொகுப்பு
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தக் கூடிய வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
தமது பாடசாலைக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு மற்றும் தேசத்திற்கு மனப்பூர்வமாகச் செயலாற்றவதுடன் மாணவர்களையும் அவ்வழிக்கு இட்டுச் செல்லல்.
சட்ட ஒழுங்கு விதிமுறைகள் இவ் ஒழுக்க விழுமியங்கள் முறைமை சகலரினாலும் பின்பற்றப்பட வேண்டியதுடன் தேவையான ஆலோசனை களைத் தவறவிடுவோருக்கு எதிராக ஒழுக்காற்றச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியவாறு சட்ட முறைமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இச்சட்ட முறைமையில் கட்டளைகள் தொடர்பான செயற்பாடுகளின் போது அதற்கு வழங்கப்பட்டுள்ள இலக்கத்தினைக் குறிப்பிடல் வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்களினால் பின்பற்ற வேண்டிய விழுமிய முறைமையுள் நேர்மையுடன், பொறுப்புடன் தொழில் சார் தரத்துடன் முன்மாதிரியாகச் சமூகப் பொறுப்புக் கொண்டோராக ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சிந்தனைகள், அங்கீகாரங்கள், பழக்க வழக்கங்கள் உள்ளடங்கியுள்ளன. இலகுவான செயற் பாடுகளுக்காக பல்வேறுபட்ட தொனிப்பொருளின் கீழ் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஒரு தொனிப்பொருளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல.
ஆசிரியர் தனிநபர் என்ற அடிப்படையில் சிறந்த பழக்க வழக்கங்கள், ஒழுக்கங்கள் மற்றும் விழுமியங்கள் கொண்டவராக ஆசிரியரிடமிருந்து எதிர் பார்க்கும் சமூக அபிலாசைகளுக்கு அமைய அவர் கீழ்க்குறிப்பிட்ட கட்டளைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
மது விற்பனை நிலையங்கள், சூதாட்டங்கள் இடம்பெறும் அபகீர்த்திக்கு உட்பட்ட இடங்களில் நடமாடக் கூடாது.

Page 39
சூதாட்டம், போதை, புகைத்தல் ஆகிய பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவராக அபகீர்த்திக்கு உட்பட்ட வகையில் செயற்படக் கூடாது. சகல சந்தர்ப்பங்களிலும் நேர்மையான செயற்பாடுகள் மற்றும் உண்மையைக் கூறவும் கட்டுப்படுதல் வேண்டும்.
வட்டிக்கு நிதி வழங்குதல், உடற்சுகாதாரத்திற்கு மற்றும் சமூக நலனுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தக்
கூடிய செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல். மோதல்களைத் தவிர்த்தல், மனித உரிமை, சிறுவர் மற்றும் மகளிர் உரிமைகள் தொடர்பிலான மூலாம்சங் களைப் பின்பற்ற வேண்டியதுடன் சிறுவர்களை வேலைக்கமர்த்தல், அவர்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தல் போன்ற முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்பதுடன் அவ்வாறான செயற் பாடுகளுக்குத் துணை போகவும் கூடாது.
ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோரின் இடத்தில் ஆசிரியரும் கருதப்படுவதனால் ஆசிரியர் சகல சந்தர்ப்பங்களிலும்
மாணவர் ஒருவர் அல்லது ஒரு குழுவினருக்கு விசேட நபராக இருக்கக் கூடாது என்பதுடன் எதுவித பேதங்களும் இன்றி சமநியாயத்துடன் சகல பிள்ளைகளையும் கருத வேண்டியதுடன் மேலதிகமாகக் கவனம் செலுத்த வேண்டி யோருக்காக விசேட கவனம் செலுத்தவும் வேண்டும்.
ஆசிரியர் அறிவினை வழங்குபவராகத் திறமை மற்றும் சிந்தனை ஆற்றல் கொண்டவராக அறிவினை ஊட்டுதல், சிந்தனை மற்றும் திறமை விருத்தியினை தமது அடிப்படைப் பொறுப்புக்களாகக் கருதிக் கீழ்க்குறிப்பிட்டவற்றைக் கவனத்துடன் மேற்கொள்ள ஆசிரியர்கள் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
தமது பொறுப்புக்களை நிறைவேற்றச் சிறந்த முறையில் தயாராக இருத்தல். வழங்கப்படும் அறிவு, திறமை, மனப்பாங்கு சரியானது என்றும் உரியதானது என்றும் பயன் படுத்தும் முறைகள், மாணவ மாணவிகளின் தன்மைக்கு அமையப் பொருத்தமானது என்றும் உறுதிப்படுத்தல்.
பாடசாலையினைப் போன்று பாடசாலைக்கு வெளியே யும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர் களின் பாதுகாப்புத் தொடர்பாக முழுமையாக உறுதிப்படுத்தல்.
37

மேலதிகத் தகவல்கள் மற்றும் மேலதிகத் தகவல்களை வழங்கும் முறைகளை இனங்காண்பதற்கு எதிர் பார்க்கும் மாணவ மாணவிகள் தம்மிடம் அச்சமின்றி வருவதற்குத் தேவையான சந்தர்ப்பத்தினை வழங்குதல்.
நேரடியாக அல்லது மறைமுகமாக தமது பாடங் களுக்கு அல்லது பாடத்தில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள், மாணவர் ஒழுக்கம் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளைத் தவிர ஏனைய பயனற்ற விடயங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் இருந்து தவிர்ந்திருத்தல்.
ஆசிரியர் ஆக்கத்திறன்மிக்க வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராக இருத்தல்
தமது பொறுப்பிலுள்ள மாணவர்களின் வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகராக அதியுயரிய பணிகளை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்பதனைக் கருத்திற்கொண்டு
தமது மாணவரின் ஆத்ம அபிமானத்துக்கும் மற்றும் ஆத்ம கௌரவத்திற்கும் பாதிப்புக்கள் ஏற்படுத்தக் கூடிய அவர்களிடையே ஏற்படும் எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் வெளிப்பாடுகளை வெளியிடச் சந்தர்ப்பங்கள் வழங்காதிருத்தல் வேண்டும்.
ஆசிரியர் மதிப்பீட்டாளராக
மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் மேற் பார்வையைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாகக் கருத்திற் கொள்ளல். தம்மால் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள் மற்றும் மேற்பார்வைகளை நியாயமாகவும் பக்கச் சார்பின்றியும் உண்மையாகவும் உறுதிப்படுத்தல் வேண்டும்.
ஆசிரியர் வாண்மை மிக்கவராக
தமக்கு உத்தரவிடப்படும் மற்றும் தம்மால் பின்பற்றப்படும் உயரிய பண்புகளுக்கு அமைய ஆசிரியத் தொழிலின் கெளரவம் தங்கியிருப்பதனைக் கருத்திற்கொண்டு
பதவியுயர்வின் போது தமக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் வேளையிலும் கூடத் தமது உரிமையினை மாத்திரம் சமர்ப்பித்து தமது தொழிலுக்குப் பொருத்த மற்ற விடயங்களில் ஈடுபடாது இருத்தல் வேண்டும்.
ஆசிரியத் தொழிலின் கெளரவம் தங்கியிருப்பது சகல ஆசிரியர்களினாலும் தொழில் விழுமியங்களைப் பின்பற்றுவதனைக் கருத்திற் கொண்டு, தமது தொழில்சார் அபிமானத்துக்குப் பங்கம் ஏற்படாதவாறு செயற்படுவதன் மூலமாகும்.
அகவிழி பெப்ரவரி 2013

Page 40
ஆசிரியர் முகாமைத்துவத்தின் பொறுப்பாளாராக
நிர்வாக ஒழுங்கு விதிகள், உயரிய முகாமைத்துவம் தொடர்பில் தமக்குள்ள பொறுப்புக்கள் குறித்துச் சிறந்த அறிவினைப் பெற்று அம்முகாமைத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றல் மற்றும் பிரச்சினை களுக்குரிய சந்தர்பப்ங்களில் அவை தொடர்பில் விரிவான அடிப்படையில் அமைதியாக வினவுதல். தமது தொழில்சார் கெளரவத்தினைப் பாதுகாக்கக் கூடியவாறு தமது நிறுவனத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாக
ஆசிரியர் சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நிறைவேற்றுவதாகக் கருதி,
ஆரம்பப் பாடசாலை வலையம்
சிறுவர் நட்புறவுப் பாடசாலை மாதிரியை ஆரம்ப மொத்த ஆரம்பப் பாடசாலை முறைமையை ஆறு து எடுக்கப்பட்டுள்ளன. 1000 இடைநிலைப் பாடசாலைகள் பட்ட சகல ஆரம்பப் பாடசாலைகளிலும் பௌதீக 6 சகல பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு விசேட கல்வியினை மேம்படுத்துவதற்காக தற்போது அமுல்
குறிப்பிடப்பட்டுள்ளன.
சிறுவர் நட்புறவு பாடசாலை மேற்பார்வைக்கான காட் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்வதைப் போன்று புள்ளிவிபர முறைமையைத் ; மாணவர் தேர்ச்சி அபிவிருத்திக்காக 2011 ஆம் - மற்றும் மாணவர் முகாம்களை நடாத்த ஒழுங்குகள்
செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட வாய்மூல கல்வியின் பயன்களுக்கு அமைய 2012 ஆம் ஆண்டில்
5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பகுப்பா அறவுறுத்தப்பட்டுள்ளதுடன் இனங்காணப்பட்ட பிரச்சி மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் பல்தேர்வுக் கற்கை முறையின் முன்னோடி 6ே அமுல்படுத்தப்பட்டதுடன் இதன் பெறுபேறுகள் தெ திட்டமிடப்பட்டன.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு மத்திய மாணவர் அடைவு மட்டம் தொடர்பான தேசிய மதிப்பி செய்யப்பட வேண்டியதென இனங்காணப்பட்டுள்ள துன எடுக்கப்படும்.
அகவிழி | பெப்ரவரி 2013

தமது பாடசாலைக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு, தேசத்தின் மீது பற்றுள்ளவராக இருக்க வேண்டியதுடன் அவ்வாறான மாணவர் பரம்பரையினையும் கட்டி யெழுப்பப் பங்களிப்புச் செய்தல். தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்தக் கூடியவாறு மாணவர்களிடையே சிறந்த சிந்தனைகள், விழுமியங் களை விருத்தி செய்தல்.
சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு அப்பிரச்சினைகள் ஊடாக உருவாக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளக் கூடியவாறான செயற்பாடுகளில் ஈடுபடல் மற்றும் மாணவர்களையும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்தல்.
மைப்பை அபிவிருத்தி செய்தல்
கல்விப் பிரிவுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் துறைகள் ஊடாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் நடன் இணைந்த ஊட்டல் பாடசாலையாக இனங்காணப் வளங்களைப் போன்று பண்புசார் கல்விக்காக ஈடுபடும் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பக் படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் சுருக்கமாக கீழே
டி மற்றும் அளவையியல் கொண்ட மாதிரியைத் தயாரிக்கும் க மாகாண வளவாளர்களுடன் கற்கை ஆய்வுகளை விருத்தி தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆண்டில் மாகாண மட்டத்தில் ஆரம்ப கணித முகாம்கள் ர் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- ஆங்கில வேலைத்திட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட - இவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சாய்வு கற்கைகள் தொடர்பாக மாகாண வளவாளர் குழு னைகளைத் தீர்த்து 2012 ஆம் ஆண்டில் மாணவர் அடைவ டன.
வலைத்திட்டங்கள் 14 பாடசாலைகளில் 1ம் தரத்தில் தாடர்பாக ஆராய்ந்து வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த
ப நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட நான்காம் தரத்தின் பீட்டு பெறுபேறுகளுக்க இணங்க ஆரம்பக் கல்வி அபிவிருத்தி மறகளை விருத்தி செய்ய 2012 ஆம் ஆண்டில் நடவடிக்கைகள்
38

Page 41
அதுவும் பிள்ளை
T. K. சந்தி
52 வயதாகும் T. K. சந்திரசேகரன் ஒரு போராளி. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (MH.D.I) தன் ஆயுதமாக எடுத்துள்ளார். அதனைக் கொண்டு, கல்வித்துறை சார்ந்த சில தகவல்களை அவர் பெற்றுள்ளார். அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் அனைவரும் தம் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்க்கிறார்கள்? எத்தனை சதவிகிதம் பேர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்? பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டக் கல்வி அதிகாரிக்கும் கடிதம் எழுதி சந்திரசேகர் இந்தத் தகவலைச் சேகரித்திருக்கிறார்.
சந்திரசேகரன் ஏன் இந்தத் தகவலைச் சேகரிக்கத் தொடங்கினார்?
பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டவர் இவர். பின்னர் சில காலம் தனியார் துறையில் வேலை பார்த்துள்ளார். ஐந்தாண்டுகள் கனடா நாட்டில் வேலை செய்துள்ளார். பிறகு அதனை விட்டுவிட்டு இந்தியா வந்து, கல்வி சார்ந்த துறையில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க விரும்பினார். அதற்கு ஓர் உந்துகோல் இருந்தது. அவருடைய ஒரு மகன் சிறு வயதிலேயே மூளைக் காய்ச்சலால் இறந்துபோயிருந்தான்.
சந்திரசேகரன் தேர்ந்தெடுத்தது சென்னைக்கு அருகில் திருவள்ளுர் மாவட்டத்தில், விடியங்காடு பஞ்சாயத்தில் உள்ள தாமரைக்குளம் என்ற சிறு கிராமத்தை. அங்கு சென்று வசிக்கத்தொடங்கிய அவர் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். கணினிப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவினார். அதில் படிக்க யாருமே முன்வரவில்லை.
அந்த ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இவரது உதவியை நாடினர். பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க யாரும் இல்லை. சந்திரசேகரனால் பத்து, பன்னிரண்டு வகுப்பு மாணவர் களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர முடியுமா? சரி என்று செயலில் இறங்கினார் சந்திரசேகரன். அந்தப் பள்ளியின் சக ஆசிரியர்கள் சந்திரசேகரனை நட்புடன் வரவேற்றனர்.
பாடம் சொல்லித்தருவதோடு நிற்காமல், ஏன் ஆசிரியர்கள் இல்லை என்பதையும் ஆராயப் புகுந்தார் சந்திரசேகரன். அந்தப் பள்ளிக்கு நியமிக்கப்படும் பல
39

இதுவும் பிள்ளை
ரசேகரன்
ஆசிரியர்கள் பணிக்கே வருவதில்லை. சில மாதங்கள் அப்படியே இருந்துவிட்டு, மேலதிகாரிகளைக் கெஞ்சி எப்படியாவது டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வேறு இடத்துக்குச் சென்றுவிடுவார்கள். பிறகு அடுத்த ஆசிரியரை நியமிக்க வெகு காலம் பிடிக்கும். அப்படி ஒருவர் வந்தாலும் அவரும் இதேபோல் பள்ளிக்கு வரமாட்டார். கதை இப்படியே செல்லும்.
பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களைக் கலந்தாலோசித்து அவர்களுடைய அனுமதியுடன் சந்திரசேகரன் ஒரு பெட்டிஷனை மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பினார். அப்போது பிடித்தது சனி.
விவரம் தெரிந்த சில ஆசிரியர்கள் சந்திரசேகரனை அடிக்க வந்துவிட்டார்கள். நீ யார்கிட்ட வேணாப் போய் கம்ப்ளெயின் பண்ணிக்கோ என்று அசிங்கமாகப் பேசினார்கள். அத்துடன் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து அவரைப் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். மாணவர்களுக்குக் கிடைத்து வந்த ஆங்கிலப் பாடமும் ஒழிக்கப்பட்டது. இது சந்திரசேகரன் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது.
அப்போது தொடங்கியதுதான் இந்த MH.b.1 யுத்தம். ஏன் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? கை நிறையச் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அக்கவுண்டபிலிட்டியே இல்லையே? இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் படிப்பதால், இவர்கள் தம் பள்ளிகள் நாசமாகப் போவதைப் பற்றிக் கவலைப்படவே இல்லையா? இதற்கான தகவலைத் திரட்டிப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.
அவர் பெற்ற தகவல்கள் மிகத் தெளிவான உண்மையைச் சொல்லின. ஆசிரியர்களில் 73 பேர் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க, உயர்நிலைப் பள்ளிகளை விட்டுவிட்டு தொடக்கப் பள்ளிகளை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார் சந்திரசேகரன். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ஹல்லோ இங்க்லீஷ் என்ற ஆங்கிலம் கற்றுத்தரும் 20 மணி நேரப் பாடம் கொண்ட டிவிடி, ஒரு டிவிடி பிளேயர் ஆகியவை கொடுக்கப் பட்டிருப்பதை செய்தித்தாளில் பார்த்துத் தெரிந்துகொண்டார்.
அகவிழி பெப்ரவரி 2013

Page 42
அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று விசாரித்ததில் அந்த டிவிடியில் உள்ளதை மாணவர்களுக்குச் சொல்லித்தர ஒரு ஆசிரியருக்கும் தெரியவில்லை என்று தெரிந்து கொண்டார். ஆனாலும் குழந்தைகள் அந்த டிவிடியைப் போட்டுப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை அவர் பார்த்தார். எனவே பள்ளிகளிடம் அனுமதி பெற்று இவரே அந்த டிவிடி யில் உள்ள ஆங்கிலத்தை வரி
வரியாகச் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார்.
அப்போது அக்கம் பக்கம் ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஆசாமிகள் ஐ! இந்தப் பள்ளிக்கூடத்த கான்வெண்டா மாத்திட்டாங்களா! என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது இவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
ஒரு பக்கம் தனியார் கல்வி நிலையங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன அரசுப் பள்ளிகளின் படிப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. மறுபக்கம் அரசு விடாமல் மேலும் மேலும் பணத்தை அரசுப் பள்ளிகளில் கொட்டிக்கொண்டே இருக்கிறது.
ஒரு மேல்நிலைப் பள்ளியில் வெறும் 17 மாணவர்களே படிக்கின்றனர் என்கிறார் சந்திரசேகரன். இன்னொரு ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை சேர்த்து மொத்தமே 23 மாணவர்கள்தான். அதில் மேலும் மோசம் புது ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் ஒரு புதிய மாணவர்கூடச் சேர்க்கை இல்லை. ஓர் அரசுப் பள்ளியில் மொத்தமே இரண்டு மாணவர்கள் என்று தினமலரில் படத்துடன் செய்தி வந்துள்ளது என்கிறார் இவர்.
தனியார் பள்ளிகளில் மட்டும் கல்வியின் தரம் நன்றாக இருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டேன். நிச்சயமாக அரசுப் பள்ளிகளைவிடச் சிறப்பாகத்தான் உள்ளது என்கிறார் அவர். பள்ளிகளில் மட்டுமல்ல, கல்லூரியிலும் அப்படித்தான். வாலாஜாவில் அறிஞர் அண்ணா கல்லூரி என்று பெண்களுக்கான பிரத்யேக அரசுக் கல்லூரி உள்ளது. ஆனால் அங்கு லெக்சரர்களே கிடையாது. வாலாஜா, ராணிப்பேட்டை, ஷோலிங்கர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு 8,000 ரூபாய் கட்டணம் என்றாலும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஏதோ கொஞ்சமாவது சொல்லித் தருகிறார்கள். எங்கள் ஊரில் 12வது படித்தவுடனே பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். ஏன் என்றால் வேலை எதுவும் கிடையாது. ஆனால் இப்போது இந்தத் தனியார் கல்லூரிகள் இருப்பதால் பெண்களை பி.ஏ, பி.காம் என்று எதையாவது படிக்க அனுப்புகிறார்கள் என்கிறார் இவர்.
இந்த அளவு கல்வித்துறை சீரழிந்துவருகிறதே, இதற்கு என்னதான் மாற்று என்று நினைக்கிறீர்கள் என்று
அகவிழி | பெப்ரவரி 2013

அவரிடம் கேட்டேன். கீழ்க்கண்டவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்பது அவருடைய பதில். 1. அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஆகவேண்டும் என்றால்
அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கட்டாயம் அரசுப் பள்ளியில்தான் படிக்கவைக்கவேண்டும் என்று வேலை விதியை (Service Rule) உருவாக்கவேண்டும். மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் என்ன தெரிந்துவைத்திருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு எவால்யுவேஷன் பரீட்சை வைத்து, அதில் அவர்கள் தேறவில்லை என்றால், ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியரையும் காரணம் கேட்டு, அவர்களுக்குத் தண்டனை தர
வேண்டும்.
3.
சுற்றியுள்ள மாநிலங்களில் ஆசிரியர்களுக்கு என்ன சம்பளம் என்று பார்த்து நாம் அதிகமாகச் சம்பளம் தருகிறோமா என்பதை ஆராயவேண்டும். கிராமப்புறத்திலிருந்து வரும் பொறியியல் மாணவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்கள் என்பதாகப் பத்திரிகை களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அது கிராமப்புற மாணவர்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. ஆனால் இந்த நிலைமைக்கு யார் காரணம்? மாணவர்களா அல்லது ஆசிரியர்களா? குற்றம் முழுதுமே ஆசிரியர்கள் மீது தான். எனவே இதற்காகக் கடுமையாக நடவடிக்கை
எடுக்கவேண்டியது ஆசிரியர்கள்மீதுதான். 5.
ஸ்கூல் சாய்ஸ் சிஸ்டம் (School Choice System) என்ற ஐடியாவை Centre for Civil Society என்னும் அமைப்பு முன்வைத்துள்ளது. அதைக் கேள்விப்பட்டு அதனைப் பற்றிப் படித்துப் பார்த்தேன். அதுகுறித்து முதல்வருக்குக் கடிதமும் எழுதியுள்ளேன். (கீழே
இணைக்கப்பட்டுள்ளது.) ஸ்கூல் சாய்ஸ் சிஸ்டம் என்பது சரியாக வேலை செய்யும் என்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டேன். நாம் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கவேண்டியுள்ளது. ஏதாவது ஒன்று வேலை செய்யும் என்று நம்புகிறேன் என்று பதில் அளித்தார் அவர்.
அவர் இருக்கும் பகுதியிலிருந்து 28 கிமீ தொலைவில் அரசியல்வாதி ஒருவரால் ஒரு தனியார் பள்ளி ஆரம்பிக்கப் பட்டிருக்கிறதாம். ஏசி வேனில் இவருடைய கிராமம் வரை வந்து குழந்தைகளை அழைத்துப்போகிறார்கள். ஆனால் ஆண்டுக் கட்டணம் ரூ. 80,000- பணம் உள்ளவர்கள் எப்படியாவது படித்துப் பிழைத்துவிடுவார்கள். பிரச்சினையே ஏழைகளுக்குத்தான் என்றார்.
இவருக்குப் பெயரே பெட்டிஷன் மாஸ்டர் என்பது தானாம். சுற்றியுள்ள மக்கள் தன்னை பைத்தியக்காரன்
- 40

Page 43
என்று அழைக்கிறார்கள் என்றார். ஆனால் அவர்களுக்கு
ஈவது ஒரு சிக்கல் என்றால் இவரிடம் வந்து பெட்டிஷன் எழுதித் தரச் சொல்லிப் போவதுதான் அவர்களுடைய வழக்கம். உள்ளூரில் ஆங்கன்வாடிக்குச் சரியான நபரைப் போடாததை எதிர்த்து கிராம மக்கள் சார்பில் போராடி, மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் யார் தவறு செய்தாலும் அதனை இவர் எதிர்ப்பதால் இவருடைய பாபுலாரிட்டி அடி மட்டத்தில்தான் உள்ளது.
ஆனாலும் தைரியமாகத் தேர்தலில் நின்றுள்ளார். சென்ற ஆண்டு நடந்துமுடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் விடியங்காடு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நின்றார். தேர்தலில் நின்றது மொத்தம் மூன்று பேர். இவர் செலவு செய்தது ரூ. 4,100. கிடைத்த வாக்குகள் 181. கிடைத்த இடம் மூன்றாவது. இரண்டாவது இடத்துக்கு வந்தவர் ஒரு ரைஸ்மில் ஓனர். செய்த செலவு ரூ. 13 லட்சம். பெற்ற வாக்குகள் சுமார் 1,500. முதலிடம் வந்து பஞ்சாயத்துத் தலைவரானவர் செய்த செலவு ரூ. 9
லட்சம். பெற்ற வாக்குகள் சுமார் 1,700.
போட்ட செலவுக்குப் பணத்தை ரெட்டிப்பாகப் பெற வேண்டுமே. என்ன செய்தாரோ தெரியாது. ஆனால் பஞ்சாயத்துத் தலைவர் மீது ஏதோ குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, காசோலையில் கையெழுத்திடும் உரிமை அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. சந்திரசேகரனுக்கு வாக்களித்திருந்தால் அவர் ஒரு பைசா திருடியிருக்க மாட்டார் என்று பொதுமக்களே வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.
அப்படியானால் அடுத்த தேர்தலில் நீங்கள்தானே கட்டாயம் ஜெயிக்கப்போகிறீர்கள் என்றேன். உயிரோடு இருந்தால் என்று பதில் சொன்னார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டேன். தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் பெரும் விரக்தி ஏற்பட்டு, சென்ற டிசம்பரில் நெஞ்சு வலி வந்து, பை பாஸ் சர்ஜரி நடந்தது. இப்போதுதான் மீண்டு வந்துகொண்டிருக்கிறேன். இன்னும் முழுதாக வீட்டை விட்டு வெளியே போகத் தொடங்கவில்லை. மேலும் நான் எல்லோரையும் பகைத்துக்கொண்டுள்ளேன். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்றார்.
ஆனால் அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. மாற்றம் கட்டாயம் வரும் என்று நம்புகிறார். அந்த மாற்றம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்கிறார். தினம் தினம் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு ஜனநாயகம் முதிர்ச்சி அடையக் குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும் என்கிறார்கள். நமக்குச் சுதந்தரம் வந்து 65 ஆண்டுகள்தானே ஆகியுள்ளன. தொடர்ந்து அடிமேல் அடி கொடுத்துக்கொண்டே இருப்போம். மாற்றம் வந்துவிடாதா என்ன? என்கிறார்.
(41

மாற்றம் வந்துவிடாதா என்ன?
சந்திரசேகரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்
அனுப்புனர்: -
தா.கோ.சந்திரசேகரன், 5894, தாமரைக்குளம் கிராமம் அஞ்சல் (வழி) எரும்பி, பள்ளிப்பட்டு வட்டம்,
திருவள்ளுர் மாவட்டம், 631302
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தலைமைச்செயலகம் சென்னை 600009
பொருள்: கல்வி அளிக்கும் முறையில் ஒரு புதிய அணுகுமுறை.
தமிழக அரசு கல்வி அளிப்பது பற்றி பல்வேறு முறை களை ஆராய்ந்து அவைகளை செயல்படுத்தி வருகிறது. கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதிய வசதிகள் மாணவமாணவியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டும், நகரங் களில் உள்ள பள்ளிகளில் புதிய வசதிகள் மற்றும் மேலும் ஆசிரியர்கள்ஆசிரியைகள் நியமனங்கள் செய்தும் முயற்சிகள் பல எடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைக்க விருப்பம் உள்ளவர்களாக இருப்பதால்
அரசுக்கு வீண் செலவு தான் ஆகிறது.
இதற்கு மாற்றாக புதுடெல்லியில் உள்ள School Choice System முறையை தாங்கள் அறிந்து கொண்டு இது நல்ல முறையில் பயன்படுமா என யோசிக்கலாம். அவர்கள் கொடுத்துள்ள துண்டறிக்கையை இணைத் துள்ளோம். விலாசம் கீழ்க்கண்டவாறு:
School Choice Campaign Centre for Civil Society A-69, Hauz Khas, New Delhi 110 016 Ph: 011-2653 7456 26521882, Fax: 011-2651 2347
Email: schoolchoice@ccs.in www.schoolchoice.in இம்முறையை சுருக்கமாக சொன்னால் அரசாங்கம் ஒவ்வொரு குழந்தையிடமும் படிப்புக்கு செலவழிக்கும் பணத்தை கணக்கிட்டு ஒரு வவுச்சர் கொடுத்து விடும். அக்குழந்தையின் பெற்றோர்கள் அந்த வவுச்சரை தங்களுக்குப் பிடித்த பள்ளியில் கொடுத்துவிட்டு படிக்க வைப்பார்கள். சொல்லிக்கொடுப்பது சரியில்லை என்றால் வேறு பள்ளிக்கு அந்த வவுச்சரை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். எனவே பள்ளிக்கல்வியளிப்பதில், அதாவது அந்த வவுச்சரைப் பெறுவதில், (பணத்தைப் பெறுவதில்) போட்டிகள் உருவாகி நல்ல கல்வியளிக்கும் பள்ளிகள் பல உருவாகும். இம்முறை பல நாடுகளிலும் உள்ளது என அறிகிறோம்.
அகவிழி | பெப்ரவரி 2013

Page 44
தாங்கள் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பள்ளிக்குழந்தைகள் சிறந்த கல்வி பெற வழிமுறைகள் செய்திட வேண்டுகிறோம்.
இங்ஙனம் உண்மையுடன்,
தா.கோ. சந்திரசேகரன்
கல்விப் பிரச்சினைகளுக்க அபிவிருத்திப் பிரவேசத்திற்கான தேசிய ெ
கல்வி அமைச்சு தனது வரலாற்றில் முதற் தடவையா துரிதமாகச் செயற்படக் கூடிய செயற்பாட்டுப் பிரிவு புத
அநேகமான சிக்கல் மற்றும் விரிவான செயற்பாடுகள் நிறுவனங்களைப் போன்று அவற்றின் பல்வேறுபட்ட தேவை இணைந்த அமைச்சின் நிர்வாக முகாமைத்துவச் செயற்பாடுகள் மேற்கொள்ள இப்புதிய தேசிய செயற்பாட்டு அறையின் ஊ
இத்தேசிய செயற்பாட்டு அறை முழுமையான கல்விச் 6 விசேட பங்களிப்புக்களை வழங்குகிறது. அனேகமாக சிக்கல் செயற்பாடுகளைக் கொண்ட விரிவாக அமைந்துள்ள கல்வி இணைப்புச் செய்வதே தேசிய செயற்பாட்டுப் பிரிவின் பணிக கொண்டு அமுல்படுத்தப்பட்டள்ளன.
பொதுக் கல்வித்துறைக்குரிய அடிப்படை மற்றும் பிரத கான இணைப்பினை உறுதிப்படுத்தல். தகவல் ஊடக மூலங்களைப் பயன்படுத்தி அத்துறையில் விருத்தி செய்தல். நவீன தொழில்நுட்பப் பிரவேசங்கள் ஊடாக துரிதகதியில் ; ஈடுபடுத்தும் பிரவேசங்களை உருவாக்குதல். கவ்வி அபிவிருத்தியினை உறுதிசெய்யும் வகையில் விரிவான மற்றும் பயன்மிக்கதான செயற்பாடுகளை பே உள்நாட்டு வெளிநாட்டுத் தூதுக்குழுவுக்காக கல்வி -
ஊடாக எட்டுவதற்கான இயலுமைகளை விருத்தி செய் தேசிய செயற்பாட்டுப் பிரிவு அடிப்படையாக இரு செயற்பாடு
முறைமையில் எழக்கூடிய பிரச்சினைகளைத் துரிதகதிய உயரிய முகாமைத்துவத்தின் கவனத்தினை ஈர்க்கச் ெ பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் வழங்கப்படும் வரை
மேற்கொள்ளல்.
இதற்கமைய முறைமையின் கீழ் எந்தவொரு பிரிவிலும் எழக் இனங்கண்டு அவற்றை இலகுவில் தீர்ப்பதற்கு அடிப்படை 6 நோக்கி அவை விரிவடையாது இருக்கத் தேவையான நடவ
இதற்காக ஊடகங்கள், தொலைபேசி, மின்னஞ்சல், ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 1988 என்ற துரித அழைப்பு இலக்கமு
இதற்கமைய பிரச்சினைகளுக்கு செவிமடுத்து அதற்கு உ மற்றும் அதிசிறந்த முறையில் கவனயீர்ப்பினை துரிதகதியில் வழங்கும் புதிய கலாசாரம் கல்வி அமைச்சில் தாபிக்கப்பட்
அகவிழி | பெப்ரவரி 2013

இக்கட்டுரை மாறிவரும் கல்வி அமைப்பு முறைகளுக்கான திறவுகோலாக அமைகிறது. பல்வேறு நாடுகள் தமது கல்வி அமைப்பு முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்து முன்னேற்றங்களை அடையும் போது எமது நாடு இதுபற்றிய சிந்தனையில் ஈடுபடுமா?
தான துரித தீர்வுகள் மற்றும் சயற்பாட்டுப் பிரிவு (National Operations Room)
ாக மக்கள் பிரச்சினைகளை துரிதகதியில் இனங்கண்டு திதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ளைக் கொண்டுள்ள 9,000 பாடசாலைகள் மற்றும் ஏனைய கள் மற்றும் செயற்பாடுகளின் ஊடாக முழுச் சமூகத்துடனும் 1 ஒரு கேந்திர வியூகத்தின் ஊடாக அதிசிறந்த இணைப்புக்களை பாக எதிர்பார்க்கப்பட்டுள்ள பணிகளாக அமைந்துள்ளன.
செயற்பாடுகளை விரிவான அடிப்படையில் முன்னெடுப்பதற்காக லான அலகுகளைக் கொண்ட, சிக்கலான தேவைகள் மற்றும் அமைச்சின் நிர்வாகச் செயற்பாடுகள் ஒரே இடத்தில் இருந்தே ளாகும். இது பிரதானமாக ஐந்து நோக்கங்களை மையமாகக்
கான தகவல்களை சமகாலப்படுத்தும் விரிவான பயன்பாட்டுக்
எ பிரச்சினைகளை துரிதகதியில் தீர்ப்பதற்கான இயலுமைகளை
தகவல்களைப் பெற்று அவற்றை அதி சிறந்த தீர்மானங்களுக்காக
அறிக்கைகளைத் தயாரிப்பதனை அடிப்படையாகக் கொண்டு மற்கொள்ளல். அமைச்சுக்குரிய பிரதான தகவல்களுக்கு நவீன உபாயங்கள்
தல்.
நகளைக் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பில் இனங்கண்டு அவற்றுக்குத் துரிதமாகத் தீர்வுகளை வழங்க சய்தல்.
தொடர்ந்தும் பின்னூட்டல்கள் மற்றும் மேற்பார்வைகளை
கூடிய பிரச்சினைகள் அல்லது பிரச்சினைகளைத் துரிதகதியில் பழங்கப்படுவதுடன் பிரச்சினைகளை விரிவான அடிப்படையில்
டிக்கைகளை மேற்கொள்ளல்.
பெக்ஸ் ஆவணங்கள் உள்ளிட்ட சகல செயற்பாடுகளும் மம் நேரடித் தொலைபேசி வசதிச் சேவையும் வழங்கப்பட்டுள்ளது. ரிய வரவேற்புக்களை துரிதகதியில் வழங்கி தீர்வுகள் வழங்கல்
பெற்றுக்கொண்டு திருப்திகரமான சேவையினை மக்களுக்கு நள்ளது.
42

Page 45
மலத்தினால் மாசடை
Mr.A.A. Azees
உடல், உள்ளம், மனவெழுச்சி, அறநெறி ஆகியனவற்றில் முழுமையான முதிர்ச்சியைப்பெற வழிவகுப்பதே கல்வியின் குறிக்கோள் ஆகும். இதற்கு ஆசிரியர் மாணவரின் உள்ளாந்த திறன்களை அறிந்து அவற்றை மாணவர் விருத்தி செய்ய வழி வகுக்க வேண்டும்.
(முத்துலிங்கம் 2002.ப.14)
நோய் விபத்து ஆகியவற்றாலும் மூளை, நரம்புத்தொகுதி ஆகியன பாதிக்கப்பட்டு, உளச்செயற்பாடுகள் பாதிக்கப் படலாம். இக்காரணிகளால் நரம்புத்தொகுதியில் ஏற்படும் இரசாயன, மின்மாற்றங்கள் சீர்கேடு அடைந்து உள்ளத்தின் செயற்பாட்டை பாதிக்கின்றன.
(விமலா கிருஷ்ணபிள்ளை (2009) ப.148) ஒருவரின் அசாதாரண நடத்தை அவருக்கும் மற்றவர் களுக்கும் தீங்கும் ஆபத்தும் ஏற்படுத்துமெனில் அது பிறழ்நடத்தை எனப்படும்.
(விமலா கிருஷ்ணபிள்ளை (2009) ப.148)
Bad throat and septic tonsils reduce concentration.(Anthikad (2009) P.17).
என்ன? தலையங்கத்திற்கும் தரப்பட்டவற்றிற்கும் என்ன சம்பந்தம் எனப் பார்க்கீறீர்களா? உடலில் நோய்கள் ஏற்படாது தடுத்துக்கொள்வதற்கு நவீன விஞ்ஞானம் கற்றுத்தரும் தற்சுகாதார (Personal Hygiene) முறைகளை பதின்முன்று வருடங்கள் பாடசாலை சென்ற பிள்ளை அறியாமலிருக்குமாயின் அதன் குற்றச்சாட்டுக்கள் ஆசிரியர்கள் மீதும் சுமத்தப்படும். எனவே மலத்தினால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து மாணவர்களில் கைகளை தூய்மையாகப் பேணும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கிய மான உடலைப்பேணி கற்றலில் திறமைகளை வெளிப்படுத்த ஆர்வமூட்டமுடியும். உடற்கழிவுகள் என கணிக்கப்படும் போது சிறுநீர், வியர்வை, வெளிச்சுவாசவளியிலுள்ள CO2 வாயு என்பன சமிபாடடையாத மீதியாகவே கருதப் படுகிறது. அதாவது குடற்கழிவாகக் கருதப்படுகின்றது. கலங்களினால் வெளியேற்றப்பட்ட கழிவாக அமையா விடினும் அதில் அடங்கியிருக்கும் நோய்க் கிருமிகளின் (Pathogens) எண்ணிக்கையை நோக்கும் போது முதற்தர நோய்க்காரணியாக தொழிற்படுகின்றது. சிறுநீர் வியர்வை
43

அந்த கைகள்
என்பவற்றில் இயல்பாகவே நோய்க் கிருமிகள் காணப்பட மாட்டாது. மலம் ஏனையவற்றுடன் கலப்பதால் ஏற்படும் விளைவு Faecal Pollution என அழைக்கப்படுகின்றது. இது உணவு, நீர், கைகள் என்பவற்றில் நிகழ்கின்றது.
அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் பாவனையிலுள்ள கையடக்கத்தொலை பேசிகளில் 80% ஆனவற்றில் மலத்தில் காணப்படும் நோய்க்கிருமிகள் காணப்படுவதாகவும் இதற்கான காரணம் மலங்கழித்த பின் சவர்க்காரமிட்டு கை கழுவாமையே எனவும் கண்டறியப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் 80% ஆயின் அது நம்நாட்டில் எத்தனை சதவீதமாயிருக்கலாம்?
அண்மையில் கொழும்பு மாநகரசபை பிரதான வைத்திய அதிகாரியினால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் கொழும்பு மாநகரிலுள்ள கிணறுகளில் அனேகமாக அனைத்துமே மலத்தினால் மாசடைந்திருப்பதாக அதாவது Escherichia Coli எனும் பற்றீரியா காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட பின் நீர்வழங்களினால் கிடைக்கும் நீர் அல்லது குடிநீர்போத்தல்களை உபயோகிக்கும்மாறு அறிவுரை வழங்கப்பட்டது.
வெளியேற்றப்பட்ட கழிவுப் பொருளொன்று திரும்பவும் உடலினுள் செல்லக் கூடாதென்பது நியதி. நியதியை மீறி கைகளின் மூலமோ அது உடலினுள் செல்லுமாயின் அபாயமான நோய்களையேற்படுத்தும் வல்லமை படைத்தது.
மலத்தின்மூலம் பரவும் நோய்களில் மஞ்சட்காமாளை எனப்படும் Hepatitis - A பயங்கர நோயாகும். இது பொதுவாக தொற்றிட்குட்பட்டவரின் மலம் யாதேனுமுறையில் சுகதேகியின் வாய்மூலமாக உடலினுள் செல்வதால் ஏற்படுகின்றது. இவ்வாறு வாய்மூலம் மலம் உட்செல்லல் Oral-Faecal Route என அழைக்கப்படும். இது நோய்க் குள்ளானவரின் மலம் நீரில் கலத்தல், அவர் மலங்கழித்த பின் சவர்க்காரமிட்டு உரிய முறைப்படி கை கழுவாது உணவு விற்பனையில் or உரிய முறைப்படி கை கழுவாது உணவு பகிர்ந்தளிப்பதில் ஈடுபடுவாராயின் இது இலகுவாக ஏற்பட முடியும். இந்நோய் ஏற்படும்போது காய்ச்சல், வாந்தி, சாப்பிட முடியாமை, உடல் மஞ்சள் நிறமாதல் விஷேடமாக கண்கள், ஈரல் வீக்கமடைதல் என்பன
அகவிழி | பெப்ரவரி 2013

Page 46
நிகழும். குணப்படுத்த முடியுமாயிருப்பினும் கவனயீனமாக மருத்துவ ஆலோசனைகளைப் புறக் கணிக்கும் போது மரணமும் சம்பவிக்கலாம். இந்நோய் ஒருவருக்கேற்படும் போது அவரின் குழுவில் அடங்கும் அனைவருக்கும் பரவுவது வழமை. கடந்த சில வருடங் களில் படையினரிடையே பெருமளவில் பரவியதாக சுகாதார
அறிக்கைகள் கூறுகின்றன.
எனவே உணவு வகைகளைத் தொடுமுன் நன்றாக சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவிக்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையை இயன்றளவு தவிர்க்கலாம். இதன் முக்கியத்துவம்கருதி உலக கை கழுவும் தினம் (World Hand Washing Day) என ஒரு தினமும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இப்பயிற்சியை மாணவருக்கு வழங்குவதற்கு சிறந்தபருவம் பாடசாலைப் பருவமாகும். பிரயோகப்படுத்தப் படாத அறிவுரைகள் பயனற்றவை. எனவே சாப்பிட முன் கைகழுவிக்கொள்ளுமாறு பணிப்பதை விட கை கழுவ வேண்டியதன் முக்கியத்துவம் பூரணமாக விளக்கும் வகையில் விளக்கப்படுமாயின் அதனை ஏற்று நடப்பவர் களின் சதவீதத்தில் பெரிய மாற்றமொன்றை ஏற்படுத்தலாம். மேலும் ஆராய விரும்புவோருக்கு சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்விப் பணியக இணையத்தளத்தில் ஏராளமான Poster களும் Fact Sheet களும் மும்மொழியிலும் இடப்பட்டிருப்பதை வாசிக்கும் படி அறிவுரை வழங்கலாம்.
மேலும் ஒருபடி உயர்வாக நினைத்து மலத்தினால் ஏற்படும் மாசடைதலை ஓர் ஒப்படையாகவோ, குழுக் கலந்துரையாடலாகவோ முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் வெளியேற்றப்பட்ட மலம் சூழலில் சுழற்சியடைவதைத் தடுத்து நிறுத்த முடியும். வரும் முன் காப்பது சிறந்தது.
வலயக் கல்வி அலு
வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் ஆசிரியர்கள், அ சகல சேவைகளினதும் வினைத்திறன் உட்படப் ப அவ்வலுவலகங்களின் செயற்சாதனையை மேம்படுத் இதற்கமைய சகல வலயக் கல்வி அலுவலகங்களும் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் நோக்கு வழங்கல்களை வழங்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்
இதற்கு மேலதிகமாகத் தேவையான சகல நட முன்னணித் தேவையாகவும் இனங்காணப்பட்டுள்ளது. இ உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், பணியாளர் உத்தியோகத்தர்களின் தேவைக் குறைபாடுகளையும் நி விருத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட முன்னோம் அமுல்படுத்தப்படவுள்ளன.
அகவிழி | பெப்ரவரி 2013

பாடசாலைகளில் பாரியளவில் குடிநீர்ப் பிரச்சினை நிலவுவதில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட விவாதத்தின் போது பரவலாகக் கோஷமெழுப்பப்பட்டன. இவற்றில் மட்டு மாவட்ட பாராளமன்ற உறுப்பினனர் பொன் செல்வராசு கூறிய கருத்துக்களை 2012.11.22ம் அன்று வெளிவந்த திவயின நாளேடு தெளிவாக பிரசுரித்துள்ளது எனினும் வேறு யாதேனுமொரு மாற்றுவழியில்நீரைப் பெற்று இவ்வாறான சிறந்த சுகாதாரப் பழக்கவழக்கங்களை மாணவரிடையே ஏற்படுத்த முடியுமாயின் அதுவே வெற்றி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
சவர்க்காரமிட்டுக் கழுவிய கைகளே மாசடையாத கைகள்
பரிசீலனை செய்தவை,
1. -
கலாநிதி. ச. முத்துலிங்கம் (2002) கல்வியும் உளவியலும் (3ம் பதிப்பு)கொழும்பு. லங்கா புத்தகசாலை வெளியீடு.
2. -
கலாநிதி. விமலா கிருஷ்ணபிள்ளை (2009). வழிகாட்டலும் ஆலோசனையும் (4ம் பதிவு) கொழும்பு சேமமடு வெளியீடு.
Anthiked (2009), Body and Mind (4th Ed), India, Jaypee Brothers.
5,
5.
Seema Sood (2002), Microbiology (2nd Ed) India, Elsvier Publishers.
6.
Anand & Shika Goel (2009), Personal Hysiere (2nd Ed), India, AITBS Publishers.
7. -
www.Healtheducation.ors-Fact sheet.
8.
திவயின நாளேடுகள்.
வலக அபிவிருத்திகள்
திபர்கள் மற்றும் பாடசாலை முறைமைக்காக வழங்கப்படும் யன்பாட்டினை துரிதகதியில் மேம்படுத்துவதற்காகவும் துவதற்காகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மிகுந்த திருப்திகரமான சேவையை வழங்கும் மத்திய டன் இவ்வலுவலகத்தை வலுவூட்டக் கூடியவாறு நிதி என.
வடிக்கைகளும் தாமதமின்றி முன்னெடுக்கப்படுவதுடன் தற்காக வலயக் கல்வி அலுவலகங்களுக்குத் தேவையான சபையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் வர்த்தி செய்து உரிய உத்தியோகத்தர்களின் கொள்ளளவு எ. அதற்குப் பின்னர் வலயக் கல்வி அலுவலகங்களுக்காக டிச் செயற்பாடுகளுக்கென விசேட வேலைத்திட்டங்களும்

Page 47
சந்தா விண்ணப்பப் படிவம்
பெயர் (முழுப் பெயர்) கற்பிக்கும் பாடசாலை
பாடசாலை முகவரி
தொலைபேசி/தொலைநகல் இல. : மின் அஞ்சல் முகவரி கற்பிக்கும் பிரிவு அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி : - இத்துடன் ரூபா -க்கான காசோலை! இல -
இணைத்துள்ளேன்.
இல
கையொப்பம்
-
--
- - - -
- - - - - - - - - - - - -
சந்தா செலுத்த சில எளிய
வழிமுறைகள்
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழ வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்பு வோருக்கான சில எளிய வழிமுறைகள். அகவிழி, கொம்ஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளி லிருந்தும் அகவிழி கணக்கு எண்ணுக்கு சந்தா அல்லது புத்தகம் விலையை பணமாக வைப்பு செய்து அதன் பற்றுச்சீட்டை எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU AHAVILI பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் குறிப்பிட்டு உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலுத்தப் பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டு அகவிழி தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். சந்தா விபரம் தனி இதழ்
பி : 100/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 1200/=

அகவிடு
3, Torrington avenue, Colombo - 07 Tel : 011-2506272, Fax: 011-2585190
Email: ahavili.vilithu@gmail.com
ஆரம்பம்/இடைநிலை/உயர்தரம்
காசுக் கட்டளையை
திகதி:
இப்படிவத்தை போட்டோ பிரதி செய்து உபயோகிக்கவும்.
- - - - - - - - - - - - - - -
அகவிழி விளம்பரக் கட்டணம்
பின் அட்டை : 7000/- உள் அட்டை(முன்)
6000/- உள் அட்டை (பின்) : 5000/- உள் பக்கம்
4000/- நடு இருபக்கங்கள் : 6500/-
தொடர்புகட்கு
Colombo 3, Torrington Avenue, Colombo-07.
Tel: 011-2506272
Jaffna 167, Hospital Road, Jaffna. Tel: 021-2229866
Trincomalee 81 A Rajavarodayam Street, Trincomalee
Tel: 026-2224941
Batticaloa 37, Old Rest House Road,
Tel: 065-2222097

Page 48
இ.
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல.: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733 அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03
தொ.பே.இல.: 026-2236266 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல: 011-2688102 கவிதா ஸ்ரோஸ் இல:05 பஸ் தரிப்பிடம், வவுனியா தொ.பே.இல.: 024 - 2222012
Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
Easwaran Book Depot No. 143, 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820
Printe Kumaran Pre 39, 36th Lane,
kumbhlk@
Registered in the Department of Posts

வி.
டெங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல.: 4515775, 2504266 அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை தொ.பே.இல: 052-2258437 குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல.: 052-2223416 பிரியங்கா புத்தகக் கடை பிரதான வீதி, பருத்தித்துறை தொ.பே.இல.: 077-9303246 கொலேஜ் நீட்ஸ் புத்தகக்கடை 120, பிரதான வீதி,
அட்டாளைச்சேனை 14 கை.தொ.இல.: 077-3034469 புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல.: 077-1285749 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை
தொ.பே.இல: 066-3662228
Rajah's Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371 S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொ.பே.இல: 077-1270458
ISSN 1800-1246
ed by ess (Pvt) Ltd.
Colombo 06 gmail.com
Gll771, 8001, 24 005
bf Sri Lanka under 0D/16/News/2013