கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் புவிச்சரிதவியல்

Page 1
க. குணரா.

கையின் பதவியல்
சா B.A. Hons. (Cey.)
துநா வெளியீடு
தாம், இலங்கை,

Page 2
改,

/(22. உடபே
இலங்கையின் புவிச்சரிதவியல்
க. குணராசா B. As Hons (Cey.)
IெIப்5ை,

Page 3
0 > முதற்பதிப்பு : செப்டம்பர், 1970 0 க.குணராசா (c) 0 ஸ்ரீ லங்கா வெளியீடு;
விலை: ரூ. 2/75
விற்பனை உரிமை:
ஸ்ரீ லங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் : இலங்கை

இலங்கைப் பல்கலைக்கழகப்
புவியியற் பேராசிரியர்
கா. குலரத்தினம் B. A. Hons., B. A. (Geom.)., M. A. (London), Ph, D. (London)., Docteur De L' Universite
(Sciences) (Paries), Dip.in Gemmology., A, G, A. (London), Dip.in. Geog. (Madras), M, A, inst, min, E., F. R. G. S., P.S, S,
அவர்கள் வழங்கிய அணிந்துரை
திரு. க. குணராசா என து புவியியல் மாண வர்களில் மிகவும் சிறப்பானவர்: ஆக்கத்துறை யில் அவரது தனித்துவ ஆற்றலை நானுணர் வேன் : கல்லூரிப் புவியியல் மாணவர்களுக்கு அவரது புவியியல் நூல்கள் பெரிதும் பய னுடையனவாக விளங்கி வருவதைக் கேட்டும், நேரிலும் உணர்ந்துள்ளேன். 'புவியியல்' என்ற அவரது சஞ்சிகை புவியியலுலகிற்கு ஆற்றும் சேவை பெருமைப் படத்தக்கது. புவியியல் நூல் களை ஆக்கி புவியியற் கல்வியைத் தமிழில் இலகு வாக்குவதே அவரது திட நோக்கம்; வெற்றி யடைந்துள்ளார்.

Page 4
அவர் ஆக்கி வெளியிட்டுள்ள 'இலங்கை யின் புவிச்சரிதவியல்' என்ற இந்நூலை நோக்கும் போது உண்மையாகவே எனக்கு அளப்பரிய மகிழ்வு உண்டாகின்றது. இந்நூல் இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்து வெளிவந்திருக்கும் முதல் தமிழ் நூல்: கலாநிதி ஆனந்தக்குமார சாமி, அடம்ஸ், வாடியா முதலிய அறிஞர் களது மூலக்கட்டுரைகள் இன்றைய புவியியல் மாணவர்களுக்குக் கிடைப்பது அரிது. அவற்றை ஒருங்கே திரட்டி ஒழுங்கு படுத்தித் தொகுத்துத் தரும் இந்நூல் போற்றுதற்குரியது; பாராட்டு தற்குரியது. மாணவர்கள் அறிஞர்களது மூலக் கட்டுரைகளையும் படித்தல் கூடிய அறிவுக்குப் பயன்படும்; இந்நூலை ஆதார நூலாகக்கொண்டு கூடிய அறிவுக்குப் பயன்படும் கட்டுரைகளையும் படித்தல் பயனுடையது. இந்நூலிலுள்ள குறை களைக் களைந்து குணங்கொள்ளுமாறு அறிஞர் களை வேண்டுகின்றேன். பல்கலைக்கழகப் பட்டக் கல்வி மாணவர்களுக்கு இந்நூல் எவ்வளவு தூரம் பயனுடையது என்பதை நானுணர்வேன். இலங் கையின் தோற்றம் குறித்து எல்லாரும் நன் குணர இந்நூலுதவும்.
இத்தகைய நூல்கள் இன்றைய தமிழுலகிற்கு அவசியம் தேவையானவை. இத்தகைய ஆக்கப் பணியில் மேன்மேலும் ஈடுபட்டுழைக்க வேண்
டும் என்று ஆசிரியரை வாழ்த்துகின்றேன்;
புவியியற்பகுதி, பல்கலைக்கழகம், கொழும்பு. 18-8-70
கா. குலரத்தினம்

முன்னுரை
உயர்கல்விகற்கும் புவியியல் தமிழ் மாணவர்களுக்கு உதவி யாக அமையக்கூடிய புவியியல் தமிழ் நூல்கள் மிகக் குறைவா கும்; அதிலும், இலங்கைப் புவியியலின் ஓர் அம்சம்குறித்து எது வகை நூலும் இதுவரை வெளிவந்தது கிடையாது. புவியியலை விரும்பிக் கற்கின்ற மாணவர் தொகையும் வருடாவருடம் அதி கரித்து வருகின்றது. அவர்களது தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்குத் தமிழ் நூல்கள் இன்றியமையாதனவாக விளங்குகின் றன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டே இந்நூலை ஆக்கி யுள்ளேன்.
-- 2
நாளாந்தம் எனக்கு வருகின்ற நூற்றுக்கணக்கான கடிதங் கள், புவியியலின் எத்துறைக்கு நூல்கள் தேவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. என்னிடமிருந்து புவியியல் மாணவர்கள் எவற்றை எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும் அவை எடுத்துக் கூறுகின்றன. புவியியற் கல்வியைத் தமிழில் இலகுவாக்குவதே எனது நோக்கமாகும்: நாட்டின் பல பாகங்களில் வாழும் ஆசிரி யப் பெருந்தகைகள் எனது ஆக்கப்பணிக்குத் தங்களது அறிவு ரைகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றார்கள். இத்தகைய உந்தல்களின் விளைவாக இந்நூலை உருவாக்கியுள்ளேன்.
இலங் கையின் புவிச்சரிதவியல் குறித்துக் காலத்திற்குக் காலம் பல அறிஞர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவர்களது கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள் இன்றைய மாணவ உலகிற்குக் கிடைக்கக்கூடியனவாக இல்லை. திக்கிற்கு ஒன்றாக அக்கட்டுரை கள் பல்வேறு சஞ்சிகைகளில் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி, ஓர் ஒழுங்கின் கீழ் தொகுத்து புவியியலுலகிற்கு வழங்கவேண்டும் என்று பலகாலம் எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் இன்று நூலுருப் பெற்றிருக்கின்றது.

Page 5
- 3" " " " " " " , , ,
இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாற்றை மூன்று கட்டங் களாக வகுத்து ஆராய்ந்துள்ளேன்: முதல் கட்டம், கொண்டுவானா லாந்தின் எஞ்சிய பகுதியே இலங்கை என நிறுவ முயல்கின்றது; இதற்கு அறிஞர்களது ஆதாரங்களைக் காட்டியுள்ளேன். இரண்டா . வது கட்டம், இந்தியத் துணைக்கண்டத்தினின்றும் பிரிவுற்ற பகு தியே இலங்கை என நிறுவுகின்றது. ஒரே கண்டமேடை, ஒரே அடித்தளப் பாறை. ஒரே கல்லியல் , ஒத்தபாறைப் போக்குகள் என் பன இதற்கு ஆதாரமாக அறிஞர்கள் கருத்தாகக் காட்டப்பட்டிருக் கின்றன. மூன்றாம் கட்டம் புவியசைவுச் சக்திகளினதும் தின்னற் சக்திகளினதும் ஓயாத மோதலின் விளைவே இலங்கை என நிறுவி யுள்ளது. இதற்கு அடம்ஸ், வாடியா, குலரத்தினம் ஆகியோரது கருத்துக்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இறுதியில் இலங்கையின் தரைத்தோற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருக் கின்றது;
இந்நூலிற்குப் பேராசிரியர் கா. குலரத்தினம் அவர்கள் தக்க தோர் அணிந்துரை வழங்கியுள்ளார்; புவிச்சரிதவியலறிஞர் அவர். இந்நூலைத் தக்கமுறையில் ஸ்ரீ லங்கா புத்தகசாலை அதிபர் நா. தெய்வேந்திரம் வெளியிட்டுள்ளார், என் அன்பிற்குரிய திரு.எஸ். கனகசபை அவர்கள் இந்நூலைக் கவர்ச்சியான முறையில் அமைத் துத் தந்துள்ளார். இவர்கள் யாவருக்கும் என் நன்றிகள் என்று
முடையன.
இந்நூலிலுள்ள குறைகளை அறிஞர்கள் சுட்டிக்காட்டில் திருத் திக்கொள்வோம். இந்நூலிற்குப் புவியியல் உலகின் ஆதரவு பூரண மாகக் கிடைக்கும் என நம்புகின்றோம்.
40, கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம் 21-8-70
க.குணராசா

ஆராய்விற்குரிய சில கட்டுரைகள் F. D. Adams:
'The Geology of Ceylon' (Lon - don, 1681, and Ceylon Histori
cal Journal, Vol, 6, (1956-57) D, N. Wadia:
(1) 'The three Superposed Pene. plains of Ceylon', Ceylon Dept. Mineralogy Records, Prof Paper I (1945) (2) 'The Making of Ceylon'
Spo1. Zeylan. Vol. 23 (1941) A, K, Coomaraswamy,
in Admin. Rept. Ceylon Mineral Survey for 1905 & 1906 (Colom -
bo-1906) 3. S, Coates:
*The Geology of Ceylon' Ceylon
Journ. Sci. Vol: 19 (B) (1935) E, J, Wayland:
(1) - 'The Jurassic rocks of TabboWa' Ceylon Journ: Sci. Vol. 13 (1925) (2) 'The Miocene of Ceylon' Quart: Journ: Geol, Soc. Lond;
Vol. 79 (1923) P. G. Cooray:
"An Introduction to the Geology of Ceylon'. National museums
of Ceylon Publication, (1967) K, Kularatnam:
1. இலங்கையின் முகத் ேதாற்றம்; சமூகவியல் ' , இதழ்: 1. திரு. வெ? நடராசாவின் வெளியீடு : யாழ்ப்பாணம். (1964) 2. இலங்கையின் புவிச்சரிதவியல், புவியியல் சஞ்சிகை, இதழ்: 3. திரு; க.குணராசாவின் வெளியீடு. யாழ்ப் பாணம்: (1965)

Page 6
பிராணிகள்
யுகம்
(Era)
காலங்கள்
(Period of,
Systems)
அண்மை
(Recent)
ஆகூ.
மலை
யாக்கம்
தாவரங்கள்
இலட்
மரங்கள் குறைகின்றன. செடிகள் அதிகரிக்கின்றன.
மனிதன்
அண்மைக் காலம்
அல்லது
குவாற்றனறி யுகம் (Quarternary)
பிளைட்டோசின் .
(Plitocene)
முதல் மனித சமூகங்கள்
25
பனிப்பிரளயத்தில் பல்லா யிரக்கணக்கான இனங்கள்
அழிந்தன்"
காடுகள் அழிந்து புல்வெளி கள் அதிகமாயின-பூக்கும் செடிகள், வானஸ்பதிகள்
வளர்ச்சி
மனிதனின் தோற்றம்
- பிளேயோசீன்
(Pliocene)
மூன்றாம் யுகம்
அல்லது கயினோசோயிக் யுகம் (Tertiary or
Cainozoic)
14 சேர் j 11 - 111-11
- தே
பாலூட்டிகள் செழித்து
வளர்ந்தன
மயோசீன்
(Miocene)
--
அல்ப்பைன் மலையாக்கம்
ஒலிகோசியன் (Oliecocene)
*உயர்ந்த பாலூட்டிகள்
வளர்ச்சி
120
இயோசீன்
(Eoicene)
சோக்குக்காலம் (Cretacious)
காடுகள் செழித்து
வளர்ந்தன
பூவுள்ள தாவரங்களின்
வளர்ச்சி
புராதன பாலூட்டிகள் டைனோசார்களின் அழிவு. பறவைகள் வளர்ச்சி
120
இரண்டாம் யுகம்
அல்லது
மெசசோயிக் யுகம் (Secondary or
Mesozoic)
யுறாசிக்காலம்
(Jurassic)
பூவுள்ள தாவரங்களின்
தோற்றம்
முதற் பறவைகள்
தீரயாசிக்காலம்
(Triassic)
220
வானஸ்பதிகள் வளர்ச்சி
முதல் டைனோசார்கள்

வானஸ்பதிகள் தோற்றம்
ஊர்வனவற்றின் வளர்ச்சி
பேமியன் காலம் (Permian)
*
முதலாம் யுகம்
அல்லது
பலெயோசோயிக்
யுகம்
(Primary or Palaeezoic)
கேசினியன்
முதற்காடுகள்-லைகோபாட் குதிரை வால்கள்-வளர்ச்சி
நிலக்கரிக் காலம் (Carboniferous) (220
தவளைப் பிரிவு வளர்ச்சி ஊர்வனவின் தோற்றம்
* *-
மீன் கள், தவளைப் பிரிவு
தோற்றம்
*
டேவேனியன் காலம்
(Devonian)
நிலத்தாவரங்கள்
வளர்ச்சி
சிலூரியன் காலம்
(Silurian)
முதல் நிலத் தாவரங்கள்
கலிடோனியன்
முதல் மீன்கள், முதல்
நிலப்பிராணிகள் (முதுகெலும்பற்றவை)
ஒடோவிசியன் காலம் (Urdovician)
ஆல்காக்கள் வளர்ச்சி
பவளங்கள்-நட்சத்திர
மீன் கள்
கேம்பிரியன் காலம் (Cambriau)
கடல் ஆல்காக்கள்
ஓடுள்ள பிராணிகள்
11:12
ஓரணு ஆல்காக்கள்
ஓரணுப் பிராணிகள்
கேம்பிரியாவுக்கு முந்திய காலம்
அல்லது
தொல் காலம் (Pre-Cambrian
or Archean
சார்னியன்
பூமி தோன்றிய
காலம்
/2000
சுவடுகளில்லை. ஆனால்
உயிர் தோன்றி வளர்ச்சி அடைந்ததற்கு
ஆதாரமுண்டு
சுவடுகள் இல்லை. உயிர் தோன்றி
வளர்ந்ததற்கு
அத்தாட்சியுண்டு.
புவிச்சரிதவியற் கால அட்டவணை

Page 7
உள்ளே
1. புவிச்சரிதவியல் ஆய்வுகள்.
பக்கம்: 12-15
கல்லியலும் அமைப்பும் - பளிங்குப்பட்டைப் பாறை, கொண் டலைற் பாறை, - சாணோகைற், - யூறாசிக் பாறைகள், - மயோ சீன் பாறைகள், - பிளைத்தோசீன் கால வண்டல், - அண்மைக் கால வண்டல்.
பக்கம்: 16- 20
இலங்கை எவ்வாறு தோன்றியது?- (1) கொண்டுவானா லாந்தின் எச்சம் - தப்பிரபோனியன் மடிப்பு - கேம்பிரியன் மலையாக்கம் - கொண்டுவானலாந்து பக்கம்: 21-25
(2) இந்தியத் துணைக்கண்டத்தினின்றும் பிரிவுற்ற பகுதி -
ஒரே கண்டமேடை - ஒரே அடித்தளப்பாறை - ஒரே கல்லியல் ஒத்தபாறைப் போக்குகள் - வேறுபாடுகள். பக்கம் : 26- 33
(3) 'புவியசைவுச் சக்திகளினதும் தின்னற் சக்திகளினதும் ஓயாத மோதலின் விளைவே இலங்கை'
(i) அடம்ஸ் என்பாரின் கருத்துக்கள். பக்கம்: 34-40 6. (3) (ii) வாடியா என்பாரின் கருத்துக்கள் .
பக்கம்: 41-48
7. (4) (iii) குலரத்தினம் என்பாரின் கருத்துக்கள் - கண்டனங்
கள் - உருவவியல் அலகுகள் - மத்திய உயர் நிலம் - பிளவுச் சிக்கல் - அண்மையிற் புவியசைவுகள் தொழிற்பட்டதற்குரிய சான்றுகள்.
பக்கம்: 49 - 65
இலங்கையின் தரைத்தோற்றம்.
பக்கம் : 66-79

இலங்கையின் புவிச்சரிதவியல்

Page 8

புவிச்சரிதவியல்
ஆய்வுகள்
இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்த ஆய்வு, 1903 ஆம் ஆண்டிற்குப் பின்பே ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண் டில் இலங்கையின் புவிச்சரிதவியல் ஆய்வினை முதன்முதல் லண்டனிலுள்ள போரசு நிறுவனம் (Imperial Institute) இலங் கையில் தொடக்கி வைத்தது. இந்நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் முதல் தலைவராக இருந்தவர் கலாநிதி ஆனந்தக் குமாரசாமி ஆவார். இவரே இலங்கைப் புவிச்சரிதவியல் ஆய் வின் தந்தையாவார். இவர் இலங்கையின் புவிச்சரிதவியல், கனிப்பொருளியல் என்பனவற்றின் ஆய்வுகள் குறித்த, நிர் வாக அறிக்கைகளை வெளியிட்டார். முதன்முதல் இலங்கையின் புவிச்சரிதவியல் அட்டவணை ஒன்றினையும் இவர் தயாரித்து வெளியிட்டார். இவர் வெளியிட்ட நிர்வாக அறிக்கைகளே , இன்றும் இலங்கையின் புவிச்சரிதவியல் ஆய்வுகளுக்கு முன் : னோடிகளாகவுள்ளன.
1919ஆம் ஆண்டிற்குப்பின் நான்கு ஆண்டுகளாக இலங் கையில் புவிச்சரிதவியல் ஆராய்வுகள் எதுவும் நடைபெற்றிருப் பதாகத் தெரியவில்லை. அறிஞர் ஆனந்தக்குமாரசாமிக்குப் பின், 1923 ஆம் ஆண்டு, ஈ.ஜே. வேலாண்ட் (E. J. Wayland) என்பவர், இலங்கையின் மயோசீன் சுண்ணாம்புக்கல் பற்றி,

Page 9
14
இலங்கையின் புவிச்சரிதவியல்
ஒரு கட்டுரையை லண்டன் புவிச்சரிதவியற் சஞ்சிகையில் வெளியிட்டார். இக்கட்டுரையை ஆக்குவதற்கு ஏ. எம். டேவிஸ் (A. M. Davies) என்பாரும் உதவிபுரிந்திருந்தார்; 1925 ஆம் ஆண்டு, ஈ.ஜே. வேலாண்ட், புத்தளத்திலுள்ள யூராசிக் பாறை கள் பற்றிய ஒரு கட்டுரையை இலங்கை விஞ்ஞானக்கழகச் சஞ்சிகை பில் எழுதினார். இவரது கட்டுரைகள் இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்து முழுமையான விளக்கத்தைத் தராது போயின.
இலங்கையின் புவிச்சரிதவியல் பற்றி, முழுமையான ஒரு ஆய்வுக்கட்டுரையை முதன் முதல் வழங்கிய பெருமை கனடா வைச் சேர்ந்த எஃப். டி. அடப்ஸ் (F. D. Adams) என்பா ரையே சாரும். இவர் 'இலங்கையின் புவிச்சரிதவியல்' என்ற கட் டுரையை, கனேடிய ஆராய்ச்சிச் சஞ்சிகையில்(Canadian Journal of Research) 1929 ஆம் ஆண்டு எழுதி வெளியிட் டார். இலங்கைபற்றிய புவிச்சரிதவியற் படம் ஒன்றை முதன் முதல் வெளியிட்ட பெருமையும் அடம்ஸ் என்பாருக்கே உரி யது. இவரை அடுத்து ஜே. எஸ். கோட்ஸ் (C. S. Coates) என்பார் இத்துறை குறித்த ஒரு கட்டுரையை, 1935ஆம் ஆண்டு ஸ்போலியா சிலனிக்கா (Spolia Zeylanica) என்ற சஞ்சிகையில் வெளியிட்டார்.
இலங்கையின் புவிச்சரிதவியல் ஆராய்விற்குப் புத்துயிர் அளித்தவர் என பேராசிரியர் டி. என். வாடியா (D. N. Wadia) என்பாரைக் குறிப்பிடலாம். வாடியா இந்தியப் புவிச் சரிதவியற்றுறையைச் சேர்ந்தவர்; இலங்கையில் ஆறு ஆண்டு கள் புவிச்சரிதவியலாய்வுகள் நடாத்தி, பயனுள்ள சில கட் டுரைகளை எழுதினார். 1938 ஆம் ஆண்டு இலங்கையின் புவிப் பெளதிக வுறுப்பியல் பற்றிய இவரது கட்டுரை வெளியாகியது.
இவர்களைத் தொடர்ந்து இலங்கையின் புவிச்சரிதவியற் றுறையில், நீண்டகால ஆய்வுகளை நடாத்தியவர் பேராசிரியர் கா. குலரத்தினம் ஆவார். இவர் காலத்திற்குக்காலம் எழு

இலங்கையின் புவிச்சரிதவியல்
15
திய கட்டுரைகளில் இலங்கையின் புவிச்சரிதவியல் பற்றிய முழுமைதரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவரது ஆராய்வுக் கட்டுரைகள் யாவும் ஒருங்கே இணைக்கப்பட்டு, என் னால் வெளியிடப்படும் 'புவியியல்' என்ற சஞ்சிகையில் 1965 ஆம் ஆண்டு 'இலங்கையின் புவிச்சரிதவியல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. (புவியியல் - இதழ் : 3, 1965)
பேராசிரியரைத் தொடர்ந்து இத்துறையில் இன்று கலா நிதி விதானகே, திரு. கூறே என்போர் ஈடுபட்டு வருகின் றனர். பொலநறுவை மாவட்டம் பற்றி விரிவான புவிச்சரித வியல் ஆய்வினை விதானகே நடாத்தியுள்ளார். அம்மாவட்டம் பற்றிய புவிச்சரிதவியற் படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். திரு. கூறே அண்மையில் 'இலங்கையின் புவிச்சரிதவியல்' என்ற ஒரு நூலினை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். இந் நூலில் இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்து ஆராய்ந்த ஆரம்ப அறிஞர்களது கருத்துக்கள் நன்கு விமர்சிக்கப்படவு மில்லை; விளக்கப்படவுமில்லை.
இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்த ஆய்வுகள் இன் னமும் முழுமைபெறவில்லை என்றே கூறல் வேண்டும்.

Page 10
கல்லியலும் அமைப்பும்
இலங்கையின் நிலப்பரப்பில் பத்தில் ஒன்பது பகுதிக்கு மேல் தொல்காலப் பாறைகள் அமைந்துள்ளன. இத்தொல் காலப் பாறைகள் கேம்பிரியாவிற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தனவாகும். ஏறத்தாழ கொழும்பு - அநுராதபுரம் - வவு னியா - புல்மோட்டை எனும் இடங்களை இணைக்கும் கோட்டிற் குத் தெற்கே, ஏறத்தாழ முழுப்பகுதியிலும் கேம்பிரியாவிற்கு முந்திய காலப் பாறைகளே அமைந்துள்ளன. (Pre- Cambrian rocks) (படம்: 1) இக்காலப் பாறைகள் பூமியின் நிலப்பரப் பில் ஐந்திலொரு பங்கினைக் கொண்டிருக்கின்றன. தக்கண மேட்டுநிலம், பிறேசிலியன் - கயானா உயர் நிலங்கள், கனடாப் பரிசை என்பன இலங்கையின் தொல்காலப் பாறைகளையொத்த பாறைகளையே கொண்டிருக்கின்றன. இத்தொல்காலப் பாறை கள் சிறந்த கனிப்பொருட்களைக் கொண்டு விளங்குகின்றன.
பளிங்குப்பட்டைப் பாறை
இலங்கையில் காணப்படும் இத் தொல்காலப் பாறைகள் வானிலையழிதலினால் உருமாற்றத்திற்குட்பட்ட உருமாறிய பாறை களாக இன்று காணப்படுகின்றன. உருமாறிய இத் தொல்

இலங்கையின் புவிச்சரிதவியல்
17
காலப் பாறைகளில் பளிங்குப்பட்டைப் பாறைகளும் (Gneiss) *கொண்டலையிற் பாறைகளும் (Khondalite) தாம் இலங்கையின் பெரும்பகுதியை அடக்கியுள்ளன. உருமாற்றத்திற்குப் பாறை கள் உட்படும்போது, அப்பாறைகளிலுள்ள கனிப்பொருட்கள் பளிங்குத்தன்மை பெற்றுவிடுகின்றன. இவை ஒன்றன்மே லொன்றாகப் படைபடையாக அமையும்போது பளிங்குப் பட்டைப் பாறைகள் என வழங்கப்படுகின்றன. இலங்கையில் காணப்படும் பளிங்குப்பட்டைப் பாறைகள் இலங்கையின் தென் கீழ்ப் பாகத்தில், அம்பாந்தோட்டையையும் திருகோணமலையை யும் இணைக்கும் கோட்டிற்குத் தென்பாகத்தில் பரந்தளவிலும், தொல்காலப் பாறைப்படையின் வடவிளிம்பின் எல்லையோடு ஒடுங்கிய ஒரு படையாகவும் அமைந்துள்ளன.
கொண்டலையிற் பாறை
தென்கிழக்கேயும், வடமேற்கேயும் காணப்படுகின்ற பளிங் குப்பட்டைப் பாறைப்படைகளுக்கு இடை யே, தென்மேற்கு வடகிழக்குப் போக்கில், பரந்ததோர் பரப்பில் கொண்டலையிற் பாறைகள் பரந்துள்ளன. 'பழைய புவிக்கீழ் மடிப்புள் மடிப்பில் தொல்காலத்திற் கொட்டப்பட்ட படிவுகள் உருமாற்றத்திற்குப் பட்டதன் விளைவாகவே கொண்டலையிற் தொகுதி அனைத்தும் உருவாகியது' (கா: குலரத்தினம்) இலங்கையின் தென்மேல் பாகம், மத்திய பாகம் என்பன கொண்டலையிற் றொகுதியினுள்
அடங்குகின்றன.
சாணோகைற்
கொண்டலையிற் பாறைத்தொகுதியில், கருங்கற்றலையீடு களைக் காணக்கூடியதாகவுள்ளது. இத்தலையீடுகள் பல்வேறு

Page 11
18
இலங்கையின் புவிச்சரிதவியல்
காலங்களில் உருவானவையாகும். சாணோகைற் பாறை, கரி கண்ணாவை மக்மரைற், பளிங்குருச் சுண்ணக்கல் என்பன ) குறிப்பிடத்தக்கன. சாணோக்கைற்றும் தலையீட்டிற்குரிய கருங் கல்லேயாகும். சாணோகைற் பாறைகள் மத்திய உயர்நிலத்தின் மத்தியபகுதிகளில் அதிக அளவிற் காணப்படுகின்றன. அத் துடன் சாணோக்கைற் றலையீடுகளை இரத்தினபுரியிலிருந்து கிழக்குப்புறமான ஒரு ஒடுங்கிய படையிலும், வதுளை யிலிருந்து தென்புறமான ஒரு படையிலும், குருநாகலிலிருந்து தென்புற மான ஒரு படை யிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும், புத்தளத்தை அடுத்துக் காணப்படும் பளிங்குப்பட்டைப் பாறைத்தொகுதியின் மத்தியிலும் சாணோகைற்றலையீடுகள் காணப்படுகின்றன. (படம்: 1)
கடுகண்ணாவை மக்மரைற் பாறைகள் குருநாகலுக்கு மேற் கேயும், கேகாலைக்குத் தெற்கேயும் காணப்படுகின்றன. பளிங் குருச் சுண்ணக்கற்பாறைகள், கொண்டலையிற் றொகுதியில் பர வலாக வெளியரும்பிக் காணப்படுகின்றன. பளிங் தப்பட்டைப் பாறையிடையே அமைந்திருக்கும் கதிர்காமமலைத்திரளும் கொண்டலையிற் பாறையாகும். திருகோணமலைப் பகுதியில் அமைந்திருக்கும் கருங்கற் பாறைகளும் சாணோகைற் பாறைக ளாகும்.
கொண்டலையிற் பாறைத்தொகுதியில் சிறந்த கனிப்பொருட் கள் அமைந்துள்ளன; காரீயம், மைக்கா, இரத்தினக்கற்கள் என்பன கொண்டலையிற் பாறைத்தொகுதியில் விரவிக் காணப் படுகின்றன.
படிவுப்பாறைகள்
யூறாசிக்பாறைகள் கேம்பிரியாவிற்கு முந்தியகாலப் பாறைகளை விட , யூறாசிச் காலப் படிவுப்பாறைகள் இலங்கையில் காணப்படுகின்றன. இந்த இரு காலங்களுக்கும் இடைப்பட்ட காலப் பாறைகள்

இலங்கை
கொண்டலையிற்
யாழ்ப்பாண்ம்
அண்மைக்கால வண்டல்மண்
மயோசீன் காலச் சுண்ணக்கல் பிளைத்தோசீன் கால வண்டல்மண்
யூறாசிக் (மாக்கல்லும்
மட்கல்லும்) பளிங்குருச் சுண்ணக்கல் கடுகண்ணாவை மக்மரைற்
மன்னார்
பளிங்குப்பட்டைப் பாறை
2ாக,
13 வவுனியா
சாணோகைற்
திருகோணமலை
எN|
அநுராதபுரம்

Page 12
இலங்கை
கொண்டலையிற்
யாழ்ப்பாண்ம்
அண்மைக்கால வண்டல்மண்
மயோசீன் காலச் சுண்ணக்கல்) பிளைத்தோசீன கால வண்டல்மண்
யூறாசிக் (மாக்கல்லும்
மட்கல்லும்) பளிங்குருச் சுண்ணக்கல்
மன்னார்)
கடுகண்ணாவை மக்மரைற்
வரிம்
பளிங்குப்பட்டைப் பாறை
சாணோகைற்
உ.12
திருகோணமலை
1ாIேI
ஒஅநுராதபுரம்
புத்தளம்

--
> மட்டக்களப்பு
சிலாபம்
குருநாகல்
| மாத்தளை
கேகாலை ஐ
நீர்கொழும்பு 12
© கண்டி
1 ேவதுளை
உநுவரெலியா
கொழும்பு -
இரத்தினபுரி
களுத்துறை!
இலங்கையின்
புவிச்சரிதவியல்
40 மைல்
அம்பாந்தோட்டை
-காலி
60°
மாத்தறை
dio

Page 13


Page 14

இலங்கையின் புவிச்சரிதவியல்
|-19
எதுவும் இலங்கையில் காணப்படவில்லை. யூறாசிக் காலத்தைச் சேர்ந்த மாக்கல்லும் பட்கல்லும் இலங்கையில் இன்று மூவிடங் களில் காணப்படுகின்றன. அவை:புத்தளப்பகுதியில் தப் போவை, ஆண்டிகமம் எனும் இரு இடங்களும், மன்னார் பகுதியுமாகும். தப்போவை, ஆண்டிகமம் எனும் பகுதிகளில் யூறாசிக்காலப் பாறைகளை நன்கு அவதானிக்கக்கூடியதாகவுள் ளது. 'இந்த யூறாசிக் படிவுகள் கீழ்நோக்கியேற்பட்ட பிளவுப் படுக்கைகளுள் அமைந்து காணப்படுகின்றன. இப்பிளவுகள் ரேசறிக்காலத்தில் தக்கண எரிமலைக்குழம்பு வெளிப்பாடு, இம யம் மடிப்புறுதல், மேற்குக்கரையோர மலைத்தொடர் மேலுயர் தலிற்குக் காரணமாக இருந்த பிளவாக்கம் என்பவை நிகழ்ந்த காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும்' (கா. குலரத்தினம்) 'யூறா சிக் பாறைகள் அரிப்புக்கருவிகட்கு இரையாகாதவாறு பிளவுச் சுவர்கள் துணை செய்தன.' (ஈ. ஜே. வேலாண்ட்)
1964ஆம் ஆண்டு மன்னார்ப்பகுதியில் குழிகள் தோண்டிய போது யூறாசிக்கால மாக்கல்லும் மட்கல்லும் காணப்பட்டன. மன்னாரில் யூராசிக் படிவுகள் எவ்வளவுதூரம் பரந்துள்ளன என முடிவாகக் கூறுவதற்கு மேலதிக ஆய்வுகள் நிகழவேண் டும். மேலும், யாழ்ப்பாணக்குடாநாட்டின் சுண்ணக்கற் பாறை களுக்குக் கீழ், யூறாசிக்காலப் படி வுகள் காணப்படலாம். கேர எத்திலுள்ள சுண்ணக்கற் பாறைகளுக்குக்கீழ் யூராசிக் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், யாழ்ப்பாணக்குடா நாட்டுச் சுண்ணக்கற் பாறைகளுக்குக் கீழும் இப்படிவுகள் காணப்படலாம்.
மயோசீன் பாறைகள் புத்தளம் - பரந்தன் - முல்லைத்தீவு எனும் சிறு நகர்களை இணைக்கும் கோட்டிற்கு வடக்கேயுள்ள இலங்கையின் வட பாகத்திலும், 'வடமேற்குப் பாகத்திலும் சுண்ணக்கற் பாறைத் தொகுதி பரந்துள்ளது. இச்சுண்ணக்கற் பாறைகள் மயோசீன் காலத்தில், கடலின் கீழிருந்து மேலுயர்த்தப்பட்டவையாகும்;
இ. பு: ச. 2

Page 15
இலங்கையின் புவிச்சரிதவியல்
அம்பாந்தோட்டைக்கு அண்மையிலும் சுண்ணக்கற் பரப் பொன்றை அவதானிக்கலாம். இலங்கையின் மயோசீன்காலச் சுண்ணக்கற்பாறைகளை இந்தியாவில் வாரகாளி, காரைக்கால், சென்னை முதலிய பகுதிகளிலும் காணமுடிகிறது. (படம்: 6)
இலங்கையில் காணப்படுகின்ற சுண்ணக்கற் பாறைகள் பெரிதும் மேல் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபாகத்தில் இச்சுண்ணக்கற் பாறைகள் வெளியரும்பிக் காணப்படுகின்றன. நெடுந்தீவில் குண்டும் குழியுமாக இச்சுண்ணக்கல் வெளியரும்பி இருப்பதை
அவதானிக்கலாம்.
பிளைத்தோசீன்கால வண்டல் பிளைத்தோசீன் (Plitocene) காலத்தைச் சேர்ந்த செம்பரல் வண்டல்மண் படையொன்றும் இலங்கையில் குறிப்பிடத்தக் களவில் காணப்படுகின்றது. கொழும்பில் இருந்து முல்லைத்தீவு வரை, ஏறத்தாழ இருபதுமைல் அகலத்தில், பிளைத்தோசீன் கால வண்டல்படை பரந்துள்ள து. 'பிளைத்தோசீனுக்குப் பிந் திய காலத்தில் கடல், தரையினுள் நுழைந்ததன் விளைவாகவே செம்பரற்படிவுகள் தோன்றின' (டி: என். வாடியா)
அண்மைக்கால வண்டல் அண்மைக்கால அடையற் பாறைகளை இலங்கையின் கடற் கரை யோரங்களில் காணலாம். புத்தளம் தொட்டு நீர்கொழும்பு வரை; பருத்தித்துறை தொட்டு முல்லைத்தீவு வரை; நிலாவெளி தொட்டு திருக்கோவில் வரை அண்மைக்கால வண்டற்படிவு களைக் காணமுடியும். இவ்வண்மைக்காலப் படிவுகளில் இல் மனைற், மொனசைற், படிகமணல் என்பன பரந்து காணப்படு கின்றன.

3
இலங்கை எவ்வாறு | தோன்றியது?
இலங்கை எவ்வாறு தோன்றியது? இலங்கையின் பாறைத் தொகுதிகள் எவ்வெக் காலங்களில், எவ்வாறு உருவாகின? இலங்கையின் இன்றைய வடிவமும், அமைப்பும், தரைத்தோற் றமும் எப்படி உருவாகின ? - என்ற இன்னோரன்ன வினாக் களுக்கு விடைபெறவேண்டுமானால், இலங்கையின் புவிச்சரித வியல் வரலாற்றைச் சில கட்டங்களாக வகுத்து ஆராய்வதே வழியாகும்.
இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாற்றை மூன்று கட் டங்களாக வகுக்கலாம். அவையாவன:
1. கொண்டுவானாலாந்தின் எஞ்சிய பகுதியே இலங்கை. 2. இந்தியத் துணைக்கண்டத்தினின்றும் பிரிவுற்ற பகு
தியே இலங்கை. 3. 'புவியசைவுச் சக்திகளினதும், தின்னற் சக்திகளின
தும் ஓயாத மோதலின் விளைவே இலங்கை.' I. கொண்டுவானாலாந்தின் எச்சம்
கேம்பிரியனுக்கு முந்தியகால நிலம் கேம்பிரியனுக்கு முந்திய காலத்தில் இலங்கை எங்கே, எவ் வாறு இருந்தது என்று விளக்குவது கடினம். எனினும், இந்து

Page 16
22
இலங்கையின் புவிச்சரிதவியல்
சமுத்திரத்தில் முன்பு அமைந்திருந்த ஒரு கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதில் ஐயமில்லை. கேம்பிரியனுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த இக்கண்டத்தின் பகுதிகளாக, ஆபிரிக்கா, தென்னிந்தியா, அவுஸ்திரேலியா, அந்தாட்டிக்கா என் பன இருந்திருக்கலாம்; இவற்றின் பகுதியாக இலங்கை இருந்திருக்கலாம்.
தப்பிரபோனியன் மடிப்பு தொல்காலப் பாறைகளாக இலங்கையில் காணப்படும் கொண்டலையிற் பாறைகள் உருமாறிய அடையல்களாகும். தொல் காலப் படிவுகள் உருமாற்றத்திற்குட்பட்டுக் கொண்டலையிற் பாறைகளாக மாறவேண்டுமானால், ஒரு புவிக்கீழ் மடிப்புள் மடிப் பில்தான் (Geo Synclionorium) அது நிகழ்ந்திருக்க வேண் டும் என்று கருதப்படுகின்றது. ஆதலால், இலங்கை பழைய புவிக்கீழ் மடிப்புள் மடிப்பாக அமைந்திருந்தது என்று கொள் ளப்படுகின்றது. இப்புவிக்கீழ் மடிப்பிற்கு கலாநிதி ஆனந்தக் குமாரசாமி 'தப்பிரபோனியன் மடிப்பு' எனப் பெயரிட்டார்.
இத்தப்பிரபோனியன் மடிப்பு, கேம்பிரியனுக்கு முந்திய நிலத்திணிவின் விளிம்போடு பலநூறுமைல்களுக்கு அமைந் திருந்தது. தார்வாரியன் எனும் பழைய இந்திய மலைத்தொட ரின் அருகாக இம்மடிப்பு அமைந்திருந்தது. அதனால், இம் மடிப்பினுள் தார்வாரியன் மலையிலிருந்து உரிவுப்பொருட்கள் படிந்தன. நீண்டகாலப் படிதலின் பின், இப்படிவுகள் உரு மாறிக் கொண்டலையிற் பாறைகளாக மாறின. ''பழைய புவிக்கீழ் மடிப்புள் மடிப்பின் கீழ்நோக்கிய வளைவின் அச்சானது. தீவின் முதுகெலும்பு போன்றமைந்த உயர்சமவெளிகளாலும், ஹோட் டன் சமவெளியிலிருந்து வடவட மேற்காக அம்பவெல, எல்க், மூன், நுவரெலியாச் சமவெளிகளினூடும் பேதுருதாலகாலையினூ டும் சென்று, கண்டிக்குத் தெற்கே கந்தானைக்குன்றில் முடி வடையும் பல நீள்குன்றுத் தொடர்களாலும் பிரதிபலிக்கப்படும் கின்றது." (கா, குலரத்தினம்)

இலங்கையின் புவிச்சரிதவியல் சிர்
23
நிற்க, தப்பிரபோனியன் மடிப்பினுள் உருமாறிய கொண்ட லையிற் அடையல்கள், காலகதியில் மடிப்பிற்குள்ளாகின.
கேம்பிரியன் மலையாக்கம் கேம்பிரியனுக்கு முந்திய காலநிலத் திணிவை, கேம்பிரி யன் காலத்தில் நிகழ்ந்த மலையாக்கங்கள் (Orogenesis) பாதித் தன. இந்நிகழ்ச்சி 500 பத்திலட்சம் ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந் தது. கேம்பிரியன் காலத்தில் நிகழ்ந்த மலையாக்கம், சார்ணியன் மலையாக்கமாகும். இம்மலையாக்க காலத்தில் தென்னமெரிக்கா, அவுஸ்திரேலியா எனும் கண்டங்களில் மலையாக்கம் நிகழ்ந்தது. 'இம்மலையாக்க காலத்தில் மலையாக்கப் பாய்பொருள்களாக
(Fluid) வெளிவந்த சோடியம், பொட்டாசியம், குளோரின், - (நீர், வெப்பம் என்பன எல்லாம் பழைய பளிங்குருப்பாறைகளை
உருமாற்றின. அதனால், கொண்டலையிற் சாணோகைற் பாறைக ளாக இருந்தவற்றில் சில பகுதிகள் பளிங்குப்பட்டைப் பாறைக ளாகவும் (Gneiss), பல்வகைக் கருங்கற் பாறைகளாகவும் மாறின' (கூறே)
கொண்டுவானாலாந்து இலங்கையின் இன்றைய வடிவம் பலெயோசோயிக் காலத் தின் ஆரம்ப கட்டத்திற்கூட (Palaeozoic Era) அமைய வில்லை. இக்காலகட்டத்தில், அங்காராலாந்து, கொண்டு வானாலாந்து என்று இரு பெரிய நிலக்கண்டங்கள் புவியிற் காணப்பட்டன. இன்று இந்துசமுத்திரத்தைச் சூழவுள்ள நிலப் பகுதிகள் யாவும் அக்காலத்தில் கொண்டுவானாலாந்தின் பகுதி யாக அமைந்திருந்தன. தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, மட காஸ்கார், அராபியா, தக்கணம், இலங்கை, அவுஸ்திரேலியா, அந்தாட்டிக்கா என்பன கொண்டுவானாலாந்தாக விளங்கின, இந்நாடுகள் பொதுவான நிலவமைப்பு, கல்லியல் (Lithology), கனிப்பொருளியல் (Mineralogy), மண்ணியல் (Pedology), உயிர்ச்சுவட்டியல் (Palaentology) என்பனவற்றில் இன்றும் ஒற்றுமையுடையன. ஆதலால் முன்பு இவை கொண்டுவானா

Page 17
24
இலங்கையின் புவிச்சரிதவியல்
லாந்தாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வட அமெரிக்கா, ஐரோ - ஆசியா என்பன அங்காராலாந்தாக விளங்கின. அங் காராலாந்திற்கும் கொண்டுவானாலாந்திற்கும் இடையில் விரிந்த ஒரு சமுத்திரம் காணப்பட்டது; அது தெத்தீஸ் கடல் என வழங்கப்பட்டது. (படம்: 3)
அங்கர் ரா லாந் து
தெத்தீஸ்
கடல்
கொண்டு வன ல iநீது
படம்: 3 தொல்கால உலகம்
150 பத்திலட்சம் ஆண்டுகள் வரை இலங்கை கொண்டுவானா லாந்தின் ஒரு பகுதியாகவே விளங்கிவந்தது. கொண்டுவானா லாந்திலிருந்தும் அங்காராலாந்திலிருந்தும் அரிக்கப்பட்ட பருப் பொருட்கள் தெத்தீஸ் கடலினுள் அதிகளவில் படிவு செய்யப் பட்டன; இப்படிவுகள் கடலுக்குரிய மாக்கல் சுண்ணாம்புக்கல், மண்களி, மணற்கல் என்பனவற்றோடு கலந்து படிந்தன.
இவ்வேளையில் யுறாசிக்காலம் (Jurassic) வந்தது. யுறாசிக் காலத்தில் கொண்டுவானாலாந்தின் நிலப்பரப்பின் மீது, கடல் மேவியது. அதனாலேயே இலங்கையிலும் இந்தியாவிலும் புறா சிக்காலப் படிவுப்பாறைகள் அமைந்து காணப்படுகின்றன. (படம் : 6)

இலங்கையின் புவிச்சரிதவியல்
24 மெசசோயிக் யுகத்தின் (Mesozoic Era) இறுதிவரை நிலைத்திருந்த கொண்டுவானாலாந்து, புவியோட்டினுள் நிகழ்ந்த அகவிசைத் தாக்கங்களினால் பிளவுற்றது. பிளவுற்ற இக்கண் டம் நகர்வுற்று இன்றுள்ள தென்கண்டங்களாக நிலைபெற்றன. கொண்டுவானாலாந்து பிளவுற்று நகர்ந்த செயலிற்கு உவெக் னரின் கண்டநகர்வுக் கொள்கை மூலம் விளக்கம் தரமுடியும்.
நகர்வுற்றவேளையில், தக்கணப் பழம்பாறைத்திணிவின் பிரிவுறாத ஒரு பகுதியாகவே இலங்கை விளங்கியது.

Page 18
2. இந்தியத் துணைக்
கண்டத்தினின்றும் பிரிவுற்ற பகுதி
இலங்கையின் உருவாக்கத்தில், மயோசீன் காலம் (Miocene) மிக முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில்தான் இலங்கையின் வட மேற்குப் பாகம் உருவானதாகும். 'கொண்டு வானாலாந்திலிருந்து பிரிவுற்ற இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு விரிகுடாக்கடலாக தெத்தீஸ் இருந்தது.' (கூறே), (படம்: 6) இந்தத் தெத்தீஸ் விரிகுடாவில் அரிக் கப்பட்ட பருப்பொருட்கள் படிந்தன. இவ்விரிகுடாவில் முரு "கைக்கற்பார், சுண்ணக்கல், களி, மணல் என்பன படிந் திருந்தன. அல்பைன் மலையாக்கம் நிகழ்ந்தபோது, தெத் தீஸ் விரிகுடாப் படிவுகள் மேலுயர்த்தப்பட்டன; அதனால், இலங்கையின் சுண்ணக்கற் பிரதேசம் உருவாகியது. வாரகாளி, காரைக்கால், சென்னை முதலிய பகுதிகளில் சுண்ணக்கற்பகுதி களும் உருவாகின. இதே காலவேளையில்தான் இமயமலையும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வடபுறமாக நகர்ந்த தக்கணப் பழந்திணிவு, தெத்தீஸ் கடலில் படிந்தி நந்த திரையலான் அடையலை இமய இளம் மடிப்புமலைகளாக உரு வாக்கியது; அல்பைன் மலையாக்க விளைவிது. (படம்: 6)

இலங்கையின் புவிச்சரிதவியல்
27
இலங்கை, இந்தியாவினின்றும் பிரிவுற்ற ஒரு பகுதியே என்பதற்குப் பல ஆதாரங்களை இன்று காட்டமுடியும். புவிச் சரிதவியல், அமைப்பு, மண்ணியல், உயிர்ச்சுவட்டியல் முதலிய பல்வேறு ஆதார அடிப்படைகளில் விளக்கந்தர முடியும். இந் தியக் குடாநாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் புவிப்பௌ திகவுறுப்பியல் தொடர்புகள் பல காணப்படுகின்றன. அத் தொடர்புகளை முதலில் நோக்குவோம்; அவை:
(அ) ஒரே கண்டமேடை இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் ஒரே கண்ட மேடையில் அமைந்திருக்கின்றன. இலங்கையைச் சுற்றியுள்ள கண்டமேடையின் சராசரி அகலம் 12 மைல்களாகும். இக்கண்ட மேடை வடக்கே அகன்றதாயும் தெற்கே ஒடுங்கியதாகவும் காணப்படுகின்றது. இக்கண்டமேடையின் சராசரி ஆழம் 36 பாதமாகும். கண்ட மேடையின் விளிம்பில் இந்த ஆழம் சடுதி யாக 500 பாதம் கீழிறங்குகின்றது.
சோம வில்லி என்பார் (Somerville) இக்கண்டமேடை குறித்துச் சில புதிய விளக்கங்கள் தந்துள்ளார். அவரின்படி 'இலங்கை அமைந்திருக்கும் கண்டமேடை உருப்பெற்றதைத் தொடர்ந்தே இலங்கையின் உருவம் அமைந்தது; இக்கண்ட மேடையிற் சேர்ந்த படிவுகளே இலங்கையை உருவாக்கின' என்பதாகும்.
இலங்கையையும் இந்தியாவையும் இணைத்து அமைந்துள்ள , கண்டமேடை, மன்னார்குடாவினை அடுத்து வடபுறமாக உள் வளைந்து காணப்படுகின்றது. இவ்வளைவை பேராசிரியர் கா. குல ரத்தினம் 'தலைகீழாகத் திரும்பிய V வடிவம்' என வரு ணிக்கின்றார். இந்தத் தலைகீழாகத் திரும்பிய கண்டமேடையின் V வடிவத்தை ஆதாரமாகக்கொண்டு பேராசிரியர், புதியதொரு விளக்கத்தைத் தந்துள்ளார்:
இ.பு. ச: 3

Page 19
23
இலங்கையின் புவிச்சரிதவியல் 'இந்தியாவிற்குச் சரி தெற்கே முன்பு இலங்கை காணப் பட்டது; அதாவது, இன்று இலங்கை காணப்படுமிடத்திலிருந்து சற்று மேற்குப்புறமாக அன்று காணப்பட்டது. இப்பழைய இடத்திலிருந்து கிழக்குப்புறமாகப் பெயர்ந்து அமைந்ததையே, கண்டமேடையின் தலைகீழாகத் திரும்பிய V வடிவப் பிளவு
குறிக்கின்றது.' (படம்: 4) என்பதாகும்.
எவ்வாறாயினும், இலங்கையும் இந்தியாவும் ஒரே கண்ட மேடையில் அமைந்திருப்பது, முன்பு இவ்விரண்டும் ஒருங்கே இணைந்திருந்தன என்பதற்கும், இடையில் ஏற்பட்ட கடற் கோளினால் பிரிவுற்றன என்பதற்கும் ஆதாரமாகும்.
1 '11, 1',
''... 111 |
111
படம்: 4 ஒரே கண்டமேடையும், மலைத்தொடர்ப் போக்குகளும்

இலங்கையின் புவிச்சரிதவியல்
29
(ஆ) ஒரே அடித்தளப்பாறை இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் ஒரேவகையான அடித்தளப் பாறையிலேயே அமைந்திருக்கின்றன. தொல்காலப் பழம்பாறையில் இவ்விரு பிரதேசங்களும் அமைந்திருக்கின் றன; பளிங்குருப்பாறைகள் அடித்தளப்பாறைகளாக அமைந் துள்ளன. இலங்கையின் தென் விளிம்பிலிருந்து விந்தியம் வரை பழம்பாறையே அடித்தளப்பாறையாகவுள்ளது. விந்தியத்திற்கு வடக்கேயே இளம் வண்டற்படிவுகளும், இளம் மடிப்பு மலை களும் காணப்படுகின்றன. (படம்: 5)
5* 44 ம்
-- 5 € .
- 2. [ க
- 2.2 9
- 8.r8
இ ள் பி.
படம்: 5 இலங்கையும் இந்தியாவும் ஒரே அடித்தளப்பாறையில் அமைந்துள்ளன.
(இ) ஒரே கல்லியல்
இலங்கையிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் ஒரே மாதிரியான கல்லியல் தன்மைகளை அவதானிக்கமுடிகின்றது. இந்தியாவின் கிழக்குக்கரையோர மலைத்தொடரில் கொண்ட லையிற், சாஹோகைற் தொகுதி ஒன்றுள்ளது. அதனையொத்த கொண்டலையிற், சாணோகைற் உருமாறிய அடையல்களை இலங் கையிலும் காணமுடிகின்றது. (படம்: 6) யுறாசிக்காலப் படி வுப் பாறைகளை இந்தியாவில் மதுரை, சென்னை, பெஸ்வாடா, யனக்பூர், உமியா முதலிய பகுதிகளில் காணமுடிகின்றது; இவற்றையொத்த படிவுகள் இலங்கையில் ஆண்டிகமம், தப்

Page 20
30
இலங்கையின் புவிச்சரிதவியல்
வார பாறைத்தடுகின்ற
போவை, மன்னார் எனும் பகுதிகளில் காணப்படுகின்றன. (படம்: 6) மயோசீன்காலச் சுண்ணக்கற்பாறைகளை இந்தியா வின் மேற்குக்கரையோரத்திலும் (வாரகாளி), கிழக்குக்கரை யோரத்திலும் (காரைக்கால், சென்னை )காணலாம்; இலங்கை யின் வடமேற் பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், சிறி தளவு அம்பாந்தோட்டைப் பகுதியிலும் மயோசீன் பாறைகள் உள்ளன. இவ்வாறு கல்லியல் தன்மைகளிலும் இந்தியாவிற் கும் இலங்கைக்குமிடையே ஒற்றுமைகள் காணப்படுகின்றன்.
rf),
உமியா
பெஸ்வாடா
அசென்னை
மதுஞ்சி:
காரைக்கால்
7721 ஃ)
வாரகாளி!
தப்போவை 3/) ஆன்டிகம்
4
படம்: 6 கல்லியல் ஒற்றுமைகள் 1. கொண்டலையிற் - சாணோகையிற் பாறைகள் 2. யுறாசிக்காலப் படிவுகள்
மயோசீன் காலப் படிவுகள் 4. பிளைத்தோசீன்காலப் படிவுகள்

இலங்கையின் புவிச்சரிதவியல்
31
(ஈ) ஒத்த பாறைப்போக்குகள் தென்னிந்தியாவின் பாறைப்போக்குகள் இலங்கையிற் காணப்படும் - பாறைப்போக்குகளுடன் தொடர்புடையனவாக விளங்குகின்றன. (படம்: 4) எம். எஸ். கிருஷ்ணன் என்ற இந்தியப் புவிச்சரிதவியலறிஞர், இப்பாறைப்போக்குகளிலுள்ள ஒத்த தன்மைகளை விளக்கியுள்ளார். அவை:
1. கிழக்குக்கரையோர மலைத்தொடரின் வடகிழக்கு - தென்மேற்குப் போக்கினை, இலங்கையின் வடகீழ் பாறைப்போக் குடன் அவதானிக்கலாம்.
2. பம்பாய், ஹைத்திரபாத், மைசூர் ஆகிய பகுதிகளில் தார்வாருக்குரிய பாறைத்தொகுதியுளது. வட வடமேற்கு - தென் தென்கிழக்குப் போக்கினையுடைய தார்வாருக்குரிய போக்கை (Dharwarian strike) இலங்கையின் மேற்குப்பகுதியிலும் மத் திய பகுதியிலும் காண முடிகின்றது. இலங்கையிலுள்ள தார்வா ருக்குரிய போக்கை, விசயன் போக்கு (Vijayan Trend) என்பர்.
3. மகாநதிப் பள்ளத்தாக்கு, திருவாங்கூர், தென் சென்னை முதலிய பகுதிகளிற் காணப்படும் பாறைப்போக்கு மகாநதிப் போக்கு எனப்படும். இப்போக்கு வடமேல் - தென்கீழ்ப் போக் கினையுடையது. இப்போக்கினை இலங்கையின் காலிப்பகுதியில் நாம் அவதானிக்க முடிகின்றது. (படம்: 4)
'இந்தியாவிற்குச் சரி தெற்கே ஆரம்பத்தில் காணப்பட்ட இலங்கை, கிழக்கே பெயர்ந்தே இன்றைய இடத்தில் நிலைத் தது' என்ற தனது கருத்தை, தலைகீழாகத் திரும்பிய V வடி வக் கண்ட மேடையின் துணைகொண்டு நிறுவமுயன்ற பேரா சிரியர் கா. குலரத்தினம், அக்கருத்திற்கு மேலதிகச் சான்றாக, மகாநதி - தார்வார் போக்குகள் வந்து சந்திக்கின்ற தன் மையை எடுத்துள்ளார். அவர், 'தார்வார், மகாநதிப் போக்குகள் தென்னிந்தியாவில் சந்திப்பதாக அமைகின்றன. ஆனால்,

Page 21
3 2
இலங்கையின் புவிச்சரிதவியல்
அவை இலங்கையின் மத்திய பகுதியிலேயே சந்திக்கின்றன. இன்று இந்தியா விற் காணப்படும் இப்போக்குகளை நீட்டினால் அவை சந்திக்குமிடம் இலங்கையில் அமையாது பக்கவாட்டிற் பெயர்ந்து சற்று மேற்கே அமைகின்றது; இதையும் தலைகீழா கத் திரும்பிய V வடிவப் பிளவையும் நோக்கும்போது இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்தமைந்தது என்பதை ஏற்கக்கூடிய தாய் இருக்கின்றது' என்கிறார்.
- இத்தகைய புவிப் பௌதிகவுறுப்பியல் ஆதாரங்களி லிருந்து, இந்தியாவினின்றும் பிரிவுற்ற நிலத்திணிவே இலங்கை என்பது பெறப்படுகின்றது. 'மயோசீன் காலத்தில் நிகழ்ந்த கடற்கோளே இலங்கையை இந்தியாவினின்றும் பிரித்துத் தனி அலகாக்கியது. இன்றைய பாக்குத் தொடுகடலிலும் பார்க்க, ஆழமும் அகலமுமான மயோசீன்கடல் (தெத்தீஸ் கடல்) சென் னைக்கும் புத்தளத்திற்கும் இடையே பாய்ந்ததால், தக்கணத் தின் தென் கீழ் அந்தம் பிரிவுற்று இலங்கையாகியது.'(டி. என். வாடியா)
வேறுபாடுகள்
இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் புவிப் பௌதிக வுறுப்பியல் நிலைமைகள் பலவற்றில் ஒற்றுமையுடையனவாக இருந்தபோதிலும், இந்தியத் துணைக்கண்டத்திற் காணப்படுகின்ற மூன்று புவிச்சரிதவியல் நிலைமைகளை இலங்கையில் அவதானிக்க முடியாதுள்ளது. அவை:
1. கேம்பிரியன் காலத்திற்கு முற்பட்ட நிலத்திணிவு - அதாவது கொண்டுவானாலாந்திற்கு முற்பட்ட நிலத்திணிவு பனிக் கட்டியாறாதலுக்கு உட்பட்டிருக்கின்றது. இந்தியக்குடாநாட்டில் இதற்கு ஆதாரங்களுள்ளன.-தல்சீரிலுள்ள அறைபாறைப் படையை (Talchir Boulder Bed) பனிக்கட்டியாறாதலுக்கு ஆதாரமாகக் கூறலாம். ஆனால், இலங்கையில் இதற்கு ஆதா ரங்களில்லை.
கல்சீரிலுந்தியக்குடவு பனித்

83
இலங்கையின் புவிச்சரிதவியல் 2. 'தக்கணத்தில் நிகழ்ந்த எரிமலைக்குழம்பு வெளிப்பாய்த லின் தாக்கத்தையும் இலங்கையில் அவதானிக்க முடியாது. இலங் கையைப்போல பத்துமடங்கு பரப்பில் எரிமலைக்குழம்பு தக்கணத் தில் வெளிப்பாய்ந்தது; அதன் தாக்கம் இலங்கையில் காணப் படவில்லை.' (வாடியா)
3. அல்பைன் மலையாக்கத்தால் ரேசறிக்காலத்தில் இமய மலை உருவாகியது.1500 மைல்கள் நீளத்திற்கு 20,000 அடி உயரத்திற்கு நிகழ்ந்த இமாலய உருவாக்கத்தை இலங்கையில்
அவதானிக்க முடியாதுள்ளது.

Page 22
13. 'புவியசைவுச்
சக்திகளினதும் தின்னற் சக்திகளினதும் ஓயாத மோதலின் விளைவே இலங்கை'
குறிப்புரை இப்பகுதியைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, புவி வெளியுருவவியலில் (Geomorphology) நிலவுருவங்கள் (Land forms) பற்றிய ஆரம்பக்கருத்துக்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுதல் நன்று. புவி வெளியுருவவியலறிஞரான டபிள்யூ எம். டேவிஸ் என்பார், 'அமைப்பு (Structure), செய்முறை (Process), நிலை (Stage) ஆகியவற்றின் கூட்டு விளைவே நிலத் தோற்றமாகும்' என்றார். இவரின்படி 'ஓரிடத்தின் நிலத்தோற் றம் தொடர்ச்சியான வளர்ச்சியின், ஒரு கட்டம்' என்பதாகும்; அதாவது, நிலவுருவங்கள் தொடர்ச்சியான ஒரு வாழ்க்கை வர

இலங்கையின் புவிச்சரிதவியல்
35
லாற்றையுடையன' என்பதாகும். டேவிசின் கருத்துப்படி, இளமைநிலை, முதுமைநிலை, முதிர்ச்சிநிலை, அதிமுதிர்ச்சிநிலை எனும் நிலைகளுக்கு நிலவுருவங்கள் உட்படுகின்றன; இளமைநிலை யில் நிலம் மேலுயர்த்தப்படும்; அதிமுதிர்ச்சி நிலைவரும் மட்டும் அந்நிலப்பரப்பு அரித்தலுக்குட்படும். அதிமுதிர்ச்சி நிலையில், அந் நிலப்பரப்பு, ஆங்காங்கே எஞ்சிய பாறைகளைக்கொண்ட ('மொனாட்நொக்ஸ்) ஆறரித்த சம வெளியாக (Peneplain) உருமாறும்; இந்நிலையில் மீளவும் நில முயர்த்தப்படும்; மீண்டும் அரித்தல் ; மீண்டும் ஆறரித்தசமவெளி' என்பதாகும். இவர் நிலவுருவங்கள் 'அரிப்பு வட்டத்திற்கு' (Cycle of Erosion) உட்படுவதாகக் கூறினார். ஒரு அரிப்புமட்டம் முடியு மட்டும் சடுதியாக மேலுயர்த்தப்பட்ட நிலம் (Rapid Uplift), அசைவில் நிலையில் (Still stand) நிற்கும் என்றார். "
டேவிஸ் என்பாரின் இக்கொள்கை அடிப்படையிலேயே, இலங்கையின் நிலத்தோற்றத்தை விளக்கமுயன்ற அடம்ஸ், வாடியா என்போர் விளக்கந்தந்து போயினர். இவ்வுண்மை பின்னால் விபரிக்கப்படும்.
வால்ரர் பெங்க் எனும் புவி வெளியுருவவியலறிஞர், டேவி சின் கருத்துக்களை உவந்தேற்கவில்லை. அவர் கூறினார்: 'புவி யசைவுச் சக்திகளினதும் தின்னற் சக்திகளினதும் ஓயாத மோதலின் விளைவே ஓரிடத்தின் நிலத்தோற்றம்.'' தொடர்ச்சி யான வாழ்க்கை வரலாற்றிற்கு நிலம் உட்படமுடியாது. 'புவி யின் அகத்தே பிறக்கும் விசைகளும் (Internal tectonic), வெளிப்புறத் தின்னற் கருவிகளும் (External erosional process) ஒருங்குசேர்ந்தே நிலத்தோற்றங்களை உருவாக்குகின் றன.' மேலுயர்த்தப்பட்ட நிலம் அதி முதிர்ச்சிநிலை அடையுமட் டும் அசைவில்லாது இருக்கமுடியாது. காலநிலை மாற்றம், எரி மலைத் தாக்கம், புவியசைவுகள் என்பன இடையில் ஏற்பட லாம். அவ்வாறாயின் 'அரிப்புவட்டம்' எவ்வாறு செயற்படமுடி யும்? புவியசைவுகள் நிலத்தை மேலுயர்த்திக்கொண்டே இருக்
இ. பு.ச: 4

Page 23
36
இலங்கையின் புவிச்சரிதவியல்
கின்றன; அதேவேளையில் தின்னற் கருவிகள் நிலப்பரப்பை அரித்துக்கொண்டே வருகின்றன. இரண்டினதும் செயற்பாட் டின் விளைவே நிலவுருவங்கள்' என்றார் பெங்க்.
பெங்க் என்பாரின் இக்கருத்துக்களின் அடிப்படையி லேயே, இலங்கையின் முகத்தோற்றத்தைப் பேராசிரியர் கா. குலரத்தினம் அவர்கள் விபரித்துள்ளார்.
எனினும், 'நிலவுருவங்களின் தோற்றத்துக்கு வரையறுக் கக்கூடிய ஒரு தொடக்கமுமில்லை; எதிர்பார்க்கக்கூடிய ஒரு
முடிவுமில்லை.' (அட்டன்)
இலங்கையின் நிலத்தோற்றம் எவ்வாறு உருவாகியது? இலங்கையின் மத்தியிலே உயர்ந்த மலைநாடும், அதனைச் சூழ்ந்து கடற்கரைச் சமவெளிகளும் காணப்படுகின்றனவே? இத்தோற்றம் எவ்வாறு தோன்றியது?-- இவற்றிற்கு (1) அடம்ஸ், (ii) வாடியா. (iii) குலரத்தினம் என் போர் பல்வேறு விளக்கங்கள் தந்துள்ளனர். அவற்றை இனி ஆராய்வோம்.
இத்தோற்றதகரைச் சமவெளிகளால் மலைநாடும், அக2
(i) அடம்ஸ் என்பாரின் கருத்துக்கள்
இலங்கையின் இயற்கையமைப்பு, ஒன்றின்மேலொன்றாக அமைந்த மூன்று ஆறரித்த சமவெளிகளின் இயல்பைக் கொண்டுவிளங்குகின்றது. (படம்: 7) இலங்கையின் பாறை யமைப்பில் நன்கு அரிப்பிற்குள்ளான மூன்று ஆறரித்த சம வெளிகளின் இயல்பை முதன்முதல் விளக்கியவர் அடம்ஸ் ஆவார். ஆறரித்த சமவெளிகள் எல்லா மட்டங்களிலும் அமையுந் தன்மையன.
இலங்கையின் பக்கப்பார்வை ஒன்றினை நோக்கினால், இம் மூன்று ஆறரித்த சமவெளிகள் அமைந்துள்ள தன்மையைக் காணமுடியும்.

இலங்கையின் புவிச்சரிதவியல்
37
'மிகத்தாழ்ந்த ஆறரித்த சமவெளி, மத்தியமலைநாட்டைச் சூழ்ந்து, கடற்கரைவரை தட்டையாகவுளது. சிலவிடத்து அலை வடிவினதாயு முளது. இத் தாழ் ஆறரித்த' சமவெளியின் சரா சரி உயரம் 100 அடியாகும். ஆனால், உண்ணாட்டில் 300 அல்லது 400 அடிவரை உயர்ந்து முள்ளது. இத்தாழ் ஆறரித்தசமவெளி யின் எல்லையிலிருந்து ஏறத்தாழ 1000 அடி உயரமான ஒரு குத்தான சரிவின் மூலம் உயர்ந்து, 2500 அடிவரை மத்திய ஆறரித்த சமவெளி பரந்துள்ளது. இதனுள் பிறிதொரு குத் துச் சரிவின் மூலம் (ஏறத்தாழ 3000' - 4000') உயர்ந்து, சராசரி 5000 தொட்டு 6000 அடி வரை உயர் ஆறரித்த சம வெளி அமைந்துள்ள து இந்த உயர் ஆறரித்த சமவெளி சில விடங்களில் 8000 அடி உயரத்தினையும் கொண்டுள்ளது' (கூறே.)
'
படம்: 7 அடம் ஸ் என்பார் கருதிய மூன்று ஆறரித்த
சமவெளிகள் (மூலம்: அடம்ஸ் .) 1: தாழ் ஆறரித்த சமவெளி (100' மேல்) 2. மத்திய ஆறரித்த சமவெளி (1600/ மேல்) 3. உயர் ஆறரித்த சமவெளி (6000' மேல்)
'கடல் மட்டத்திற்குமேல் மூன்று ஆறரித்த சமவெளிகளும் அமைந்துள்ளன. இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கீழ் சம வெளியை (Submarine Plateau) நான்காவது ஆறரித்த சம

Page 24
3 8
இலங்கையின் புவிச்சரிதவியல்
வெளியாகக் கருதலாம்' என அடம்ஸ் கூறுகிறார். எனவே, இந்நான்கு ஆறரித்த சமவெளிகளும் உருவாக, நான்கு தடவை கள் இலங்கையில் மேலுயர்ச்சிகள் (Uplift) ஏற்பட்டிருக்கின் றன; மேலுயர்த்தப்பட்ட ஒவ்வொரு தடவையும் அரிப்பினால் ஆறரித்த சமவெளி, உருவாகும் வரையும் இலங்கையின் மேற் பரப்பு அசைவில் நிலையில் (Still Stand) நின்றிருக்கின்றது.
மேலுயர்ச்சிகள்
அடம்ஸ் கருதிய நான்கு மேலுயர்ச்சிகள் மேல்வருமாறு:
(i) கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குமுன், இத்தீவு
கடலிலிருந்து சிறிது உயரத்திற்கு மேலுயர்ந்தது. வெகுகாலத்திற்கு அவ்வாறே இருந்தது. அரிப்பிற் கும் பல்வேறு உரிவுகளுக்கும் இது உட்பட்ட து. உயர் ஆறரித்த சமவெளி உருவாகுமட்டும்
இந்த அரிப்பு நிகழ்ந்தது.
உயர் ஆறரித்த சமவெளி உருவாகியதும், இலங்கை மீண்டும் ஏறத்தாழ 4400 அடி உயரத்திற்கு மேலு யர்த்தப்பட்டது. மத்திய ஆறரித்த சமவெளி உரு வாகுமட்டும் இது அசைவில் நிலையில் இருந்தது.
மத்திய ஆறரித்த சமவெளி உருவாகியதன் பின்பே, மூன்றாவது உயர்ச்சி நிகழ்ந்தது. இந்த மேலுயர்ச்சி 1500 அடி உயரம்வரை ஏற்பட்டது. தாழ் ஆறரித்த சமவெளி தோன்றுமட்டும் இந்நிலம் நிலைத்திருந்தது, (படம்: 7)
(iv) நான்காவது மேலுயர்ச்சி இலங்கையின் கடற்கீழ்
மேட்டுநிலம் (கண்டமேடை) உருவாக உயர்ந்ததா கும். (படம்: 4)

இலங்கையின் புவிச்சரிதவியல்
39
தாழ் ஆறரித்த சமவெளியும் மத்திய ஆறரித்த சமவெளி யும் கடலரிப்பின் விளைவால் (Marine Denudation) உரு வானவை என வேலாண்ட் என்பார் கருதினார்; ஆனால், அடம்ஸ், அவை மேற்பரப்பு உரிவின் விளைவால் (Subaerial Denudation) உருவானவை என்கிறார்; (அதாவது நீரரிப்பின் விளைவு.)
மேலுயர்ச்சிகள் நிகழ்ந்தவேளைகளில் (Positive movement), சில சிறு கீழ்தாழ்வுகளும் (Negative movement) ஏற்பட்டன என அடம்ஸ் கூறியுள்ளார்; 'மூன்றாவது. நான் காவது மேலுயர்ச்சிகளுக்கு இடையில் தாழ் ஆறரித்த சமவெளி கடலினுள் ஆழ்ந்தது. அதனாலேயே, மயோசீன் சுண்ணக்கற் பாறை உருவானது. பிறிதொரு கீழ்தாழ்வு கடற்கீழ் மேட்டு நிலத்தைக் கடல்மூடிய நிகழ்ச்சியாகும்'
'மேலே விபரித்த மேலுயர்ச்சிகளும், கீழ்த்தாழ்வுகளும் எப் புவிச்சரித காலங்களில் நிகழ்ந்தனவென்று வரையறுக்கமுடி யாது; இதற்கு இலங்கையை மட்டும் ஆராய்ந்து விளக்கந் தரு வதும் கடினம். இலங்கையிலுள்ள மூன்று ஆறரித்த சமவெளி களின் ஒற்றுமையைத் தென்னிந்தியாவில் அவதானிக்க முடிந் தால், கண்டவாக்கவிசைகள் (Epeirogenic movement) எப்போது தொழிற்பட்டன என்று கூறுதல் இயலும். தென்னிந் திய அடையல் படி வுகளின் வயது கணிக்கப்பட்டிருப்பதால், இது இலகுவாகும். இலங்கையைப் பொறுத்தமட்டில் மயோசீன் சுண்ணக்கல், யுறாசிக் படிவுகள் என்பனவற்றின் காலவரை யறையில் மட்டுந்தாம் சந்தேகமில்லை' என்று அடம்ஸ் கூறி யுள்ளார்.
இலங்கையில் காணப்படுகின்ற மூன்று ஆறரித்த சமவெளி களை தென்னிந்தியாவில் அவதானிக்கமுடியுமா? இலங்கையின் மத்திய ஆறரித்த சமவெளியின் தொடர்ச்சியினைத் தக்கண மேட்டுநிலம் பிரதிபலிக்கின்றது என்றும், உயர் ஆறரித்த சம
னிலம் பிரதிபலிக்கின்றது' என்றும் அடம்ஸ் கூறுகிறார்.

Page 25
4)
இலங்கையின் புவிச்சரிதவியல்
ஆறரித்த சமவெளிகளில்
முதுமையானது எது? உயர் ஆறரித்த சமவெளியே முதன்முதல் தோன்றிய நில வுருவமாகும். ஆதலால், இதுவே மிகப் பழைய நிலவுருவமா கும். மிகப் பழைய நிலவுருவத் தன்மையை, உயர் ஆறரித்த சமவெளியே பிரதிபலிக்கின்றது என்று அடம்ஸ் கூறினார். அதற்கு ஆதாரமாக உயர் ஆறரித்த சமவெளியில் பல சான் றுகளை அவர் எடுத்துக்காட்டினார். உயர் ஆறரித்த சமவெளி யில் காணப்படுகின்ற எஞ்சிய குன்றுகள் (மொனாட்நொக்ஸ்) இப்பகுதிகளில் எவ்வளவுதூரம் உரிவு நிகழ்ந்திருக்கிறது என் பதையும், இவ்வாறரித்த சமவெளி மிகப் பழைமையானது என் பதையும் சுட்டி நிற்கின்றன. 'உயர் ஆறரித்த சமவெளியிற் காணப்படுகின்ற பேதுருதாலகாலை (8292') சிவனொளிபாத மலைபோன்றன மொனாட்நொக்சுக்களாகும்', என அடம்ஸ் கூறு ! கிறார்.
'தாழ் ஆறரித்த சமவெளி, இன்று பாறைத்துண்டுக் குவைகளினால் (Debris) மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் அரிப்புண்டு எஞ்சிய பாறைத் தொடர்களைக் காணமுடிகின்றது. அவை பாறைத் தொடர்களாகவும் குன்றுகளாகவும் இன்றுள் ளன. தென்மேல் தாழ்நிலத்தில் இவை கரையோரத்திற்குச் சமாந்திரமான பாறைத் தொடர்களாகவும், தென் கீழ் தாழ்நிலத் தில் இவை குன்றுகளாகவும் (கதிர்காமம் , இங்கினியக்கலை, வெஸ்மினிஸ்ரர் அபே குன்றுகள்) காணப்படுகின்றன. வட தாழ்நிலத்திலும் அரிப்பின் எஞ்சிய பாறைகள் உள்ளன; குரு நாகல் யானைப்பாறை, யாப்பகூவை, சிகிரியா, மிகிந்தலை, தம் 5 புள்ளை என்பன இத்தகைய எஞ்சிய பளிங்குப்பட்டைப் பாறைகளாகும். 10,000 அடி வரையிலான வன்மையான பளிங்குப்பட்டைப் பாறைகள் உரிவுகாரணமாக இத்தீவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன' என அடம்ஸ் கருதுகிறார்,
அடுத்து வாடியாவின் கருத்துக்களை ஆராய்வோம்.

| (ii) வாடியா
என்பாரின் கருத்துக்கள்
'ஒன்றன்மேலொன்றாய் அமைந்த தெளிவான மூன்று ஆறரித்த சமவெளிகளால் இலங்கையின் இயற்கையமைப்பு அமைந்ததென்ற முடிவிற்கே, அடம்சைப்போன்று வாடியா என் பாரும் வந்தார். வாடியாவின் ஆறரித்த சமவெளிகள் மேல்
வருமாறு:
1-வது ஆறரித்த சமவெளி (தாழ் ஆறரித்த சமவெளி) கடல்மட்டத்திலிருந்து 400 அடி வரை. 2-வது ஆறரித்த சமவெளி (மத்திய ஆறரித்த சம வெளி) அதி உயரம் 2500 அடி. 3-வது ஆறரித்த சமவெளி (உயர் ஆறரித்த சமவெளி) அதி உயரம் 8300 அடி.
இம் மூன்று ஆறரித்த சமவெளிகளும் கடல் மட்டத்தி லிருந்து நன்கு வெட்டுண்ட இரு சரிவுகள் அல்லது குத் துச் சரிவுகள் மூலம் உயர்ந்தமைந்துள்ளன. மிகத்தாழ்ந்த சரிவு

Page 26
42
இலங்கையின் புவிச்சரிதவியல்
தாழ் ஆறரித்த சமவெளியிலிருந்து 1000 அடி உயரத்திலும், இரண்டாவது சரிவு 3000 தொட்டு 4000 அடி உயரத்திலும் அமைந்துள்ளன' (படம் 8)
தோற்ற அடிப்படையில் அடம் சினது ஆறரித்த சமவெளி களுக்கும், வாடியாவினது ஆறரித்த சமவெளிகளுக்கும் இடை யில் வேறுபாடுகளுள்ளன. ஆறரித்த சமவெளிகள் உருவாக இலங்கையின் நிலம் மேலுயர்ச்சிக்கு உட்பட்ட ஒழுங்கில் இரு வருக்கும் வேறுபாடுகளுள்ளன. அடம்சின்படி, முதன்முதல் மேலுயர்ந்த நிலம் உயர் ஆறரித்த சமவெளியாகும்; வாடியாவின் படி, முதன் முதல் மேலுயர்ந்த நிலம் தாழ் ஆறரித்த சமவெளி யாகும்.
பே லுயர்ச்சிகள்
வாடியாவின் மேலுயர்ச்சிகள் வருமாறு:
1) முதன் முதல் கடல்மட்டத்திலிருந்து மேலுயர்ந்த நிலம், தாழ் ஆறரித்த சமவெளியுள்ள நிலமாகும். இந்நிலம் தாழ் ஆறரித்த சமவெளி உருவா குமட்டும் அசைவில் நிலையிலிருந்தது.
2) தாழ் ஆறரித்த சம வெளி உருவாகியதும், இன்று 1000 அடிச்சரிவு காணப்படுகின்ற விளிம்பில், வட்டித்த தி.ணி வுப்' பிளவாக்கம் (Circumscribed block-faulting) ஏற்பட் டது. (ஒரு நிலப்பரப்பின் மத்தியில் வட்டமாக ஏற்படும் பிளவுக்குறையே வட்டித்த திணிவுப் பிளவாக்கமாகும்.) இப்பிளவாக்கத்தினுள் அமைந்த நிலப்பரப்பு மேலுயர்ச்சிக்கு உட்பட்டது. இதுவே மத்திய ஆறரித்த சமவெளியாகும்.
3) மத்திய ஆறரித்த சமவெளி உருவாகியதும், இரண் டாம் தடவையாக இவ்வாறரித்த சம வெளியில் வட்டித்த திணி வுப் பிளவாக்கம் ஏற்பட்டது. இப்பிள வாக்கம் இன்றுள்ள 3000! - 4000! சரிவின் கீழ்விளிம்போடு ஏற்பட்ட து. இப் பிள

இலங்கையின் புவிச்சரிதவியல்
43
வுக் குறையினுள்ளமைந்த நிலப்பரப்பு மேலுயர்த்தப்பட்டு அரிப் பிற்குள்ளாகியது. அதனாலேயே உயர் ஆறரித்த சமவெளி உரு வாகியது (படம்; 8)
படம்: 8 வாடியாவின் ஆறரித்த சமவெளிகள்
(மூலம்: வாடியா) 1: தாழ் ஆறரித்த சமவெளி 2: மத்திய ஆறரித்த சமவெளி
3, உயர் ஆறரித்த சமவெளி இ. பு: ச: 5

Page 27
இலங்கையின் புவிச்சரிதவியல்
வாடியா, மேலே விபரித்தவற்றிற்குப் பல சான்றுகளைக் காட்டினார்: 'நதிப் பள்ளத்தாக்குகளால் ஆழமாக வெட்டப்பட்ட நிலையும், குன்றுகள், தொடர்கள், ஏனைய அரிப்பின் எச்சங்கள் என்பன யாவும் இம்மூன்று ஆறரித்த சமவெளிகள், ஒரு பொதுவான மட்டங்களில் அமைந்து இலங்கையின் அடிமட்டம் மூன்று நிலைகளில் அமைந்தது என்பதைச் சுட்டுகின்றன.'
மூன்று நிலைகள் படங்களில் அரை ஆறரித்த சம்ப்பின் எச்சங்கள் !
ஆதாரங்கள் 'மிகவுயர்ந்த குத்துச்சாய்வினின்றும் நோக்கும்போது இந்த மூன்று ஆறரித்த சமவெளித்தன்மையைக் காணலாம். இலங்கை யின் குறுக்கு வெட்டுமுகமும் இதனையே நிரூபிக்கின்றது' என்று கூறினார், வாடியா. மேலும் அவர், 'இக்குத்துச் சாய்விலிருந்து பல நீர்வீழ்ச்சிகள் கீழிறங்குகின்றன. இவை 100 அடி தொட்டு 500 அடி வரை வீழ்கின்றன. 20 பெரிய நீர்வீழ்ச்சிகளும், பல சிறிய நீர்வீழ்ச்சிகளுமுள்ளன. உயர் ஆறரித்த சமவெளியின் குத்துச்சாய்வின் தெற்கு, மேற்கு, கிழக்கு விளிம்புகளில் அமைந் துளள நீர்வீழ்ச்சிகள், ஒரு குறைவட்டமாக (Semi circle or Crescent) அமைந்துள்ளன. இக்குறைவட்டமான நீர்வீழ்ச்சிகள், வட்டித்த திணிவுப் பிளவாக்கத்திற்குத் தகுந்த சான்றாகும். (படம்: 10) கேம்பிரியனுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பாறை களில் இளமையான நீர்வீழ்ச்சிகள் காணப்படுவது, அண்மைக் காலத் திணிவு மேலுயர்ச்சியையே (block uplift) குறிக்கின் றன.' என்று கருதுகிறார்.
முரண்பாடுகள் 'பிளவுக்குறைகளே இலங்கையின் ஆறரித்த சமவெளிகள் உருவாகக் காரணங்களாகும்' என வாடியா வற்புறுத்தினார். அத னாலேயே அடம் சினது. சில கருத்துக்களை அவர் வன்மையாகக் கண்டித்தார். '800-1200 அடியிலும், 2000-4000 அடியிலும் அமைந்துள்ள குத்துச்சாய்வுகள், சாதாரண நீரரிப்பாலுருவான சாய்வுச் சரிவுகள் (Dip slope)' என அடம்ஸ் கூறினார். ஆனால், வாடியா 'அவை குறைச்சாய்வுகள்' (fault dip) என்கிறார். இலங் கையின் மத்தியதிணிவின் பிதிர்வுத் (horst nature) தன்மை யுடைய பகுதி, மேற்கு, கிழக்கு, தெற்கு எனும் பகுதிகளி லமைந்த குறைகளினால் மேலுயர்த்தப்பட்டதாகும். (படம்: 9

களுகங்கைப்
பள்ளத்தாக்கு 200 ஒசிவனொளிபாதமலை 7300
ooz8ாசலத1ை)
ஒமர்ஈரம்மபற்ற
பள்ளத்தாக்கு 300
- கே.
இலங்கை பின் புவிச்சரிதவியல்
210)
7 1
படம்: 9 வாடியாவின் குறைத்தளங்கள்
(மூலம் : வாடியா) (மேலுயர்ச்சிக் குறைகள் தோன்றிய இடங்கள்)
F குறைத்தளங்கள் 1. பளிங்குப்பட்டை 2: கொண்டலையிற் 3: கொண்டுவானா 4. மயோசீன்

Page 28
இலங்கையின் புவிச்சரிதவியல்
'உயர் ஆறரித்த சமவெளியிற் காணப்படுகின்ற பேதுரு தாலகாலை, சிவனொளிபாதமலை முதலியன, பழைய நிலத்தின் உரிவுண்ட எச்சமலைகள்' என அடம்ஸ் கூறினார். வாடியா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்,' 'இவை புவியசைவு காரணமாகக் குத்தாக மேலுயர்த்தப்பட்ட குறைமலைகள்' (fault mountains) என்கிறார்.
மகாவலி
ஐ நீர்வீழ்ச்சி என குறைச்சாய்வு
படம்: 10 உயர் ஆறரித்த சமவெளியிற் குறைவட்டமாக
அமைந்த நீர்வீழ்ச்சிகள். இவை அண்மையில் வட்டித்த திணிவுப்பிளவாக்கம் ஏற்பட்டதைக் குறிக்கின்றன. தடித்தகோடு குறைச்சாய்வாகும்,
(மூலம்: வாடியா)

இலங்கையின் புவிச்சரிதவியல்
47 !
ஆறரித்த சமவெளிகளில் முதுமையானது எது?
வாடியா தாழ் ஆறரித்த சமவெளியே மிகப் பழையது எனக் கருதினார். அடம்ஸ் கருதியவாறு, உயர் ஆறரித்த சம வெளி பழைமையானதல்ல; அது இளமையானது' என்றார். 'கரை யோர ஆறரித்த சமவெளி முதுமையானது என்பதற் தப் பல ஆதாரங்களில்லை; ஆனால், உயர் ஆறரித்த சமவெளி இளமை யானது என்பதற்குப் பல ஆதாரங்களுள்ளன.'
'தாழ் ஆறரித்த சமவெளி, மண்ணுள் புதையுண்ட எஞ் சிய பாறைத் தொடர்களையும் மொனாட் கொக்சுக்களையும் கொண் டிருக்கின்றது. 4000 சதுரமைல்களையுடைய வடசமவெளி, கிழக் குச் சமவெளியின் பெரும் பகுதி என்பன கொண்டுவானாலாந் தின் படிவுகளைக் கொண்டுள்ளன. ஆதலால், தாழ் ஆறரித்த சமவெளி பழைமையானது எனத் துணியலாம். மத்திய ஆற ரித்த சமவெளியின் குத்துச் சாய்வு தெளிவானது. முதிராத் தரைத்தோற்றத்தையும் வடிகாலமைப்பையும் உயர் ஆறரித்த சமவெளி பிரதிபலிக்கின்றது. உயர் ஆறரித்த சமவெளியின் குத்துச்சாய்வுகள் மிகத் தெளிவான இளம் ஆதாரங்களையுடை யன. இச்சமவெளியின் குறைப்பிளவுகளாக களுகங்கையும் மகாவலிகங்கையுமுள்ளன. மகாவலிகங்கை மத்திய - உயர் ஆறரித்த சமவெளிகளின் எல்லையோடு பாய்கின்றது. றக்கு வானைத் தென்மலைச் சுவரிடையே களுகங்கை ஓடுகின்றது. (படம்: 9) உயர் ஆறரித்த சமவெளியின் இடவிளக்கவிய லும் பள்ளத்தாக்கு அமைப்பும் புத்துயிர்பெற்ற அமைப்பினை யுடையன. எல்லையிலமைந்த நீர்வீழ்ச்சிகள் இளமைநிலைக்கு
ஏற்ற ஆதாரங்கள்.' - என வாடியா விளக்கம் தருகின்றார்.
'இலங்கை அடம்ஸ் கருதியவாறு மேலுயர இடமில்லை' என வாடியா கூறுகின்றார். 'அடம்ஸ் கருதியவாறு மேலுயர்ந்

Page 29
48
இலங்கையின் புவிச்சரிதவியல்
திருந்தால், நதிகள் அருவிகள் என்பனவற்றின் வடிகாலமைப் பில் மாற்றங்கள் ஏற்பட இடமில்லை. இலங்கையின் ஒவ்வொரு | பகுதியிலமைந்த மேலுயர்ச்சியே, நதிகளின் போக்கில் மாற்றங் களையும் திசைத்திருப்பங்களையும், சாய்வு விகிதத்தில் முறிவு களையும் ஏற்படுத்தியுள்ளது. ' என்ற கருத்தை வாடியா தெரி வித்துள்ளார். மகாவலிகங்கை மேற்குக்கடலில் விழாது. திசை திரும்பி கிழக்குக்கடலில் விழுவதற்கு வட்டித்த திணிவு மேலு யர்வுதான் காரணமோ?

y-hasாலாக .ar
N -
(i) குலாத்தினம்
என்பாரின் கருத்துக்கள்
'இலங்கையின் மேற்பரப்பு உருவங்கள், வேற்றுமைப் பட்ட பிறப்புக்களைக் கொண்ட சிக்கலான தன்மையானவை. வேறுபட்ட ஆக்கங்களால் தோன்றிய பல முகப்புக்கூறுகளை இலங்கை கொண்டுள்ளது. அடுத்தடுத்து உண்டாகும் வட்டத் தன்மைப் படிமுறை மாற்றங்களின் அடையாளங்களைக் கொண்ட ஒரு சுவடு என இலங்கையின் அமைப்பைக் கூறலாம். ' எனப் பேராசிரியர் கா. குலரத்தினம் என்பார் கருதுகிறார். அவர், 'இலங்கையின் உள்ளமைப்பே (Internal structure) வெளித் தோற்றமாகவும், பக்கப் பார்வையாகவும் பிரதிபலிக்கப்படுகின் றது' எனக் கூறுகிறார்: 'மட்டக்களப்பின் தெற்கேயமைந்த கரையின் கிழக்கு நோக்கிய புடைப்பானது அப்பகுதிக்குரிய பாறையமைப்பினையும், தரைத்தோற்றத்தினையும் பிரதிபலிக்கின் றது. இலங்கையின் தென்மேற் கரையின் மத்திய கோடு நோக் கிய நீட்சி றக்குவானைத் திணிவிற் பிரதிபலிக்கப்படுகின்றது. வடக்குநோக்கிக் குறுகிச்செல்லும் வடதாழ் நிலங்கள் அகன்ற தென்பகுதியையும், வடக்கு நோக்கிய மென்சரிவையும் கொண்ட கீழ்மடிப்புள் மடிப்போடு இயைவனவாக அமைகின்றன.'

Page 30
5)
இலங்கையின் புவிச்சரிதவியல்
கண்டனங்கள் அடம்ஸ், வாடியா என்போரது மூன்று ஆறரித்த சம -- வெளிகள் பற்றிய கொள்கைகளைப் பேராசிரியர் ஏற்றுக்கொள்ள வில்லை; வன்மையாக அவர்களது கருத்துக்களைக் கண்டித்துள் ளார். அவரின் விளக்கம் வருமாறு:
'பக்கப் பார்வைக்கு இலங்கையின் தரைத்தோற்றத்தில் மூன்றுபடிகளாக அமைந்த வெளியு நவம் புலப்படுமேனும், ஆழ்ந்து இதனை ஆராயின் இது பொருத்தமற்றதாகவும், மிக எளி மையாக்கப்பட்ட பாகுபாடாகவும், தொடர்பற்ற பகுதிகள் ஒருங்கே தொடுக்கப்பட்டிருப்பதாகவும் காணப்படும். தாழ் ஆறரித்த சம வெளியின்மேல் காணப்படும் இரு ஆறரித்த சமவெளிகளையும் சூழ்ந்துள்ளதென அடம்சினால் விபரிக்கப்பட்ட குத்துச்சாய்வு கள் தொடர்ச்சியானவையாக அமையவில்லை. தமது கொள்கை யைப் பலப்படுத்தவேண்டித் தொடர்பற்ற பல ஓங்கல்களை யும் (Cliffs', குத்துச்சாய்வு களையும் அவர் இணைத்து ஒன்றாகக்
கூறினார் என அஞ்சவேண்டியுள்ளது.'
'வாடியாவின் ஆறரித்த சமவெளிகளின் எல்லைகளி லமைந்து குத்துச்சாய்வுகளும் முன்னவர் போன்றே எளிமை யாக்கப்பட்ட வை. தரையிற் காணப்படும், ஒரு சில குத்துச் சரிவுகளோடுதான் அவருடைய படத்திற் குறிக்கப்பட்டுள்ள கோடுகள் ஒற்றுமைப்படுகின்றன. ஆனால், அவர் அமைத்த செயற்கைக்கோடுகளின் உள்ளும் வெளியும் அமைந்த குத்துச் சரிவுகள் கருத்திற்கு எடுபடவில்லை.'
'அடம்ஸ், வாடியா என்பவர்கள் போதியளவு காலத்தை இலங்கையில் கழிக்கவில்லை. ஆதலால், இலங்கையின் நிலத் தோற்றம்பற்றிச் சரியான விளக்கத்தை அவர்களாற் கூற முடி யாது போய் விட்டது' எனவும் குலரத்தினம் சாடுகிறார்.

இலங்கையின் புவிச்சரிதவியல்
51
உருவவியல் அலகுகள் 'இலங்கையின் இடவிளக்கவியற் படங்களை நன்கு ஆரா யின், மூன்று ஆறரித்த சமவெளிகளைக் காணமுடியாது' எனக் கூறிய பேராசிரியர், இலங்கையின் அமைப்பில் காணப்படு கின்ற உருவவியல் அலகுகளைப் பிரதேச அடிப்படையிலும் உயர் அடிப்படையிலும் 5 பிரிவுகளாக வகுத்துள்ளார்: (படம்: 11 ஐப் பார்க்க)
1. றக்குவானைத் திணிவுகள் உட்பட்ட மத்திய உயர்நிலம். 2. நன்கு விருத்தியடைந்த அளியடைப்பு வடிகாலமைப்
பைக் கொண்ட நீள் முகப் பள்ளத்தாக்குடன், மென் சரிவு - குத்துச்சரிவுப் பாறைகளைக்கொண்ட நீள்குன் றுத் தொடர்கள் (strike ridges), குவெயித்தாக்கள் (cuestas) பன்றி முதுகு வெற்புகள் (hogs backs) என் பனவற்றை இடவிளக்கமாகக்கொண்ட நன்கு நீர் பெறும் தென்மேல் பிரதேசம். 4
எச்சமலைகள் (residual hills), மொனாட். நொக்சுகள் (Monadnocks) தட்டையுச்சி விலங்கல்கள் (buttes) என பனவற்றையும், தளத்திடைக் குன்றுபோன்ற (inselberg) தனிக்கல்லால் அமைந்த குமிழ்வெளி யரும்பு களையும் (outcrop domes) கொண்ட வரண்ட கிழக்கு, தென் கிழக்குப் பிரதேசம்.
மத்திய மலையிலிருந்து விலகிச் செல்லச்செல்ல உயரத் திலும், பருமனிலும் குறைந்து சென்று கடற்கரை யோரத்தில் அண்மைக்கால வண்டல்களால் மூடுண்டு கிடக்கும் எச்சமலைகளும் குன்றுகளும் கொண்ட வட தாழ்நிலம்.
5. கடனீரேரிகளையும் (lagoons), மணற்றிடர்களையும்
(dunes) கொண்ட கரையோரத் தாழ்நிலவலயம். இ பு: ச3 6

Page 31
52
இலங்கையின் புவிச்சரிதவியல்
மத்திய உயர்நிலம் '', 'மத்திய உயர்நிலம் பல்திறப்பட்ட நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. அடம்ஸ் கருதியவாறு மத்திய உயர்நிலம், முதிர்ந்த நிலத்தோற்ற உறுப்புக்களையோ, வாடியா கருதிய வாறு இளம் நிலத்தோற்ற உறுப்புக்களையோ தனித்துக் கொண்டிருக்கவில்லை. அது முதிர்ந்த நிலவுருவங்களையும், முதிரா நிலவுருவங்களையும் கலந்து கொண்டிருக்கின்றது ' எனப் பேராசிரியர் கூறுகிறார்.
மத்திய உயர் நிலத்திற் காணப்படுகின்ற பல்திறப்பட்ட நில வுருவங்களை அவர் தொகுத்து, மேல்வரும் புவி வெளியுருவ வியல் அலகுகளாகப் பிரித்துள்ளார். அவை:
(அ) அதிமுதிர் தின்னல் மேற்பரப்புகள் (Late -
Mature erosion surface) இவை தேய் நிலையிலுள்ள சமதளங்களாகும்.
(ஆ)
வளரும் நிலையிலுள்ள சரிவுகள் - இவை அடித்தளத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகப் புத் துயிர் பெற்றுள்ளன. இச்சரிவுகள் இன்று தின்ன லுக்குட்படுகின்றன.
(இ) இளமையான குத்துச்சரிவுகள் - (escarp -
ments) - இவை தின்னற் சக்திகளால் அதிகம் பாதிக்கப்படவில்லை.
(ஈ) பழைய நிலவமைப்பிற் காணப்படும் எச்சங்
கள் - தோட்டப்பாலை, பேதுருதாலகாலை போன்ற மொனாட்நொக்சுகளும் இவற்றுள் அடங்கும்.
அதிமுதிர்தின்னல் மேற்பரப்புகள் மத்திய உயர்நிலத்தின் பல்வேறு உயர் மட்டங்களில், அதி முதிர் தின்னல் மேற்பரப்புகள் காணப்படுகின்றன. அடமஸ்,

இலங்கையின் புவிச்சரிதவியல்
53
வாடியா என்போர் கருதியவாறு குறித்த ஆறரித்த சமவெளி யில் மட்டும் காணப்படவில்லை எனப் பேராசிரியர் கூறுகிறார். 'சரிவுகளாலும் குத்துச்சாய்வுகளாலும் சூழப்பட்டுள்ள அதிமுதிர் தின்னல் மேற்பரப்புகள் மேல்வருமாறு:
1. ஹோட்டன் சமவெளி - சராசரி உயரம் 7000 அடி. 2. மூன், எல்க், கந்தப்பளை, அம்பவெலச் சமவெளிகள்.
சராசரி உயரம் 6200 அடி.
3. பாறைப்பிதிர்வான (horst) வைல்டான்ஸ் சிகரமும், பண்டார எலியச் சமவெளியும். சராசரி உயரம் 6000
அடி.
காட்மர் - ஸ்டாதெஸ்பே மேற்பரப்பு. சராசரி உயரம்
5900 அடி. 5. ராகலைப் பாறைமேடை. சராசரி உயரம் 4900 அடி. 6.
ஹோட்டன்ஸ் மேடையும் மதுள் சீமா மேடையும். சரா சரி உயரம் 4200 - 4500 அடி.
7.
ஊவாவடி நிலம். சராசரி உயரம் 4200 அடி.
8. தென்மேடை - கண்டி மேட்டுநிலம், வதுளை வடிநிலம்.
சராசரி உயரம் 2000 அடி.
9.
மாவலத்தன்ன - தஞ்சன் தன்னபடி (step). சராசரி உயரம் 1200 - 1500 அடி.
10. கிழக்குமேடை. சராசரி உயரம். 1200 - 1500 அடி.
அதிமுதிர் தின்னல் மேற்பரப்புகள் பல்வேறு உயரங் களில் காணப்படுவதனால், இலங்கையின் நிலத்தோற்றம், அடம்ஸ், வாடியா என்போர் கருதியவாறு மூன்று கண்ட வாக்கவிசைகளின் விளைவெனக் கொள்ளமுடியாது எனத்

Page 32
54
இலங்கையின் புவிச்சரிதவியல்
துணியலாம். எனவேதான் பேராசிரியர், 'பல்வேறு காலகட்டங் களில் ஏற்பட்ட பல்வேறு கண்டவாக்க விசைகளின் விளை வாகவே இலங்கையின் முகத்தோற்றம் அமைந்தது' எனத் துணிந்தார்.
பிளவுச்சிக்கல் 'எமக்குக் கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் நாம் கொள்ளக்கூடிய தர்க்கரீதியான முடிவுயாதெனில், இலங் கையின் பக்கப்பார்வையானது, அண்மையிற்றோன்றிய பிள வுச் சிக்கலினால் (Fault complex) ஆன து என்பதேயாகும்' எனப் பேராசிரியர் கூறுகிறார். அவரது கருத்துக்கள் வருமாறு:
'தப்போவையின் யூறாசிக்குரிய மேற்பரப்பு பிளவிற்குள் ளாகி மட்டமாக்கப்பட்டது என்பது அறிந்ததே. மத்திய உயர்நிலத்தின் குத்துச்சரிவுகள் பெரும்பாலும் அரிதாகவே தின் னற்குட்பட்டுள்ளன. எனவே, இவற்றை உருவாக்கிய விசை | கள் யூறாசிக்கு பிந்தியவையே; மிக அண்மைக்காலத்தவை பாக இருக்கலாம்.'
'நீண்டகாலமாக வானிலையழிதலுக்கும், தின்னலுக்கும் உட்பட்டு மட்டமாக்கப்பட்ட பின்னர், மேனோக்கி நெளிக்கப் பட்டு, குழிவுவடிவான கீழ்மடிப்புள்மடிப்பொன்றனுள், தின்னல் சக்திகள் தொழிற்பட்டதன் விளைவாகவே தற்போதைய தரைத் தோற்றம் ஏற்பட்டது என எண்ணவேண்டியிருக்கிறது. இம் மேல் நெளிப்பின்போது அது பிளவுக்குட்பட்ட பல திணிவுக ளாகவும், துண்டுகளாகவும் மாறிற்று; இத்திணிவுகளிற் சில சரிந்து அமைந்தன. இவை அனைத்தும் வடிகாலமைப்பைப் பெரிதும் மாற்றியமைத்தன. இதன் விளைவாகவே புறநடை போன்றமைந்த மகாவலிகங்கை பிழையான பாதையினூடே செல்கிறது.'
ID்

இலங்கையின் புவிச்சரிதவியல்
55
அண்மையிற் புவியசைவுகள் தொழிற்பட்டதற்குரிய சான்றுகள் 'பல சான்றுகள் இலங்கையில் அண்மையில் புவியசைவு கள் தொழிற்பட்டதைத் தெரிவிக்கும். இலங்கையின் புவிச்சரித வியலுக்குரிய ஆய்வுகள் தேவையான அளவு எழுகையைக் கொண்ட பிளவை விளக்கிக் காட்டக்கூடிய அளவிற்கு முன் னேறவிலலை. தனிப்பட்ட உள்ளூர் நிலைகளை, நேரடியான படையாக்க (Stratigraphical) அடிப்படையில் நிரூபித்தல் கடினம். உதாரணமாக உருமாறிய பாறைகள் சிக்கலாயமை தல், வரலாற்றுத் தொடர்ச்சியற்றுக் காணப்படல், அடித்தளப் பாறை வேறு பாறைகளால் அல்லது தாவரங்களால் மூடப்பட் டுக் கிடத்தல் என்பவற்றால் நிரூபித்தல் கடினமாகவுள்ளது. நேரடியான உறுப்பமைதிச் சான்றுகள் இல்லாதவிடத்து, சில தொடர்புகளைப் பெருமளவிற்கு உண்மையாகத் தெரிவிக்கக் கூடிய மட்டில் புவிவெளியுருவவியல் வளம் பெற்றுக் காணப் படுகிறது' என்று விபரிக்கும் பேராசிரியர், இலங்கையிற் புவி யசைவுகள் தொழிற்பட்டன என்பதற்குரிய சான்றுகளை விரி வாகக் கூறியுள்ளார். அவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்; அச்சான்றுகள் வருமாறு:
1. நீர்வீழ்ச்சிகள்
மத்தியவுயர் நிலத்திலும், அதனைச் சேர்ந்த பகுதிகளிலும் இருபதிற்கு அல்லது அதற்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் காணப் படுகின்றன. இவை 100 அடி தொட்டு 500 அடி வரையுள்ள உயரத்திலிருந்து விழுகின்றன. இவை குத்துச்சரிவுகளை ஒட் டியே அமைந்துள்ளன. குத்துச்சரிவுகள் இளமையானவை. எனவே, அவை அண்மையில் தாம் தோன்றியிருக்கின்றன, இந்நீர்வீழ்ச்சிகளில் பின் வாங்கல் (Recession). மலையிடுக்கை ஏற்படுத்தல் (Gorge) ஆகிய செயன்முறைகள் பெருமளவிற்கு நடைபெறவில்லை. இதற்கு கெகல்கமு, மஸ்கெலியா ஓயாக்கள் புறநடையாக அமைந்துள்ளன. தியலுமவீழ்ச்சி, றம்பொடை

Page 33
56
இலங்கையின் புவிச்சரிதவியல்
வீழ்ச்சி முதலியன வன்மைகுறைந்த பாறைகளை ஒட்டியும் அமைந்து காணப்படுகின்றன. ஹோட்டன் சமவெளியின் குத்துச்சரிவு விளிம்பு செம்மணி -சிலிமினேற் பாறையால் (Garnet) Sillimanite rock) ஆன து. சாணோகைற் வெளியரும்புகளை ஒட்டிக் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் வேறுபட்ட தின்னலின் விளை வாய் ஏற்படாது, புவியசைவுகளின் விளைவாய் ஏற்பட்ட சம தள முறிவையொட்டி அமைந்தன.
பின்வாங்கிச்செல்லும் இவ்வீழ்ச்சிகள் சாணோக்கைற் வெளி யரும் புப் பாறைகளினால் மேலும் பின்வாங்காது தடைப்படுத் தப்பட்டுள்ளன. அபர்டீன், லக்சபானா நீர்வீழ்ச்சிகள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. தர்க்கத்திற்குட்பட்ட அதிமுதிர்ச்சி யைக் காட்டும் மேற்பரப்புக்களைச் சூழ்ந்துள்ள குத்துச்சரிவு கள் புதியனவாய் அமைவதால் குறித்த மேற்பரப்புக்கள் பாறைப் பிதிர்வுகளின் உச்சிகளாய் (Tops of Horsts) அமைந்தன என்று கொள்ளக் கிடக்கின்றது. ஹோட்டன் சம வெளிபோன்ற சில பாறைப்பிதிர்வுகள் நன்கு உயர்த்தப்பட் டுள்ளன. பிளவுக்குட்பட்ட வடிநிலங்கள் போலச் சில அமையும். உதாரணமாக நுவரெலியா வடிநிலத்தைச் சூழவுள்ள குத்துச் சரிவுகளிலிருந்து நீர்வீழ்ச்சிகள் குறித்த வடி நிலத்தை நோக்கி வருதல் குறிப்பிடத்தக்கது.'
2. வெப்ப, குளிர் நீரூற்றுக்கள்
'தின்னலுக்குட்பட்ட மேற்பரப்புக்களோடு இயைந்த திட்ட வட்டமான ஒரு ஒழுங் தப்பாட்டுடன் வெப்ப, குளிர் நீரூற்றுக் கள் அமைந்துள்ளன.
(அ) லொக்கல் ஓயாவின் இரு மருங் தம்,
(ஆ) மதுள்சீமா மேடையின் வெ ட எல்லையைச் சூழ்ந்தும், (இ) தென் மேடையின் குத்துச் சரிவின் விளிம்புகளை
அடுத்தும்,

இலங்கையின் புவிச்சரிதவியல்
57 தங்கள் 4 வாரதம் நாள் (ஈ) றக்குவானையின் கிழக்கே சமநிலத்தை ஒட்டி மறை
யும் வளவகங்கையின் பிளவுத்தாழியை (Fault depression) ஒட்டியும், வெப்ப, குளிர் நீரூற்றுக்கள் காணப்படுகின்றன.
3. உப்புமூலக் குத்துத் தீப்பாறைகள் 'இலங்கையின் புவிச்சரிதவியற் படங்களிற் காட்டப்படும் தொலரைற் குத்துத் தீப்பாறைகள் (dolerite dykes) நீரூற்று வரிசைக்குச் சமாந்தரமாக அமைந்துள்ளன. அத்தோடு புவி யோட்டிற்குரிய நிலைகுலைதலோடும் தொடர்பு கொண்டுள்ளன. கல்லோடைக்குத் தெற்கில் அமைந்த குத்துத் தீப்பாறைகளை யொட்டி, சங்கிலித் தொடர்போன்று வெப்ப நீரூற்றுக்கள் காணப்படுகின்றன. இவற்றின் வெப்பநிலை (110 - 130°ப.) ஆழம்பதிந்த தன்மையையும், அண்மைய தோற்றத்தையும் குறிக்கின்றன.'
4, தப்போவையின் யூராசிக் பிளவு 'யூறாசிக் காலத்திற்குரிய மாக்கல் (shales), மட்கல் (sandstones) என்பவை தப்போவையில் குறுகிய பிளவு வடிநிலத்தி னுள் அமைந்து காணப்படுமாற்றை, வேலான்ட் என்பவர் விளக்கியுள்ளார். யூறாசிக்கிற்குப் பிந்திய பிளவுக்குரிய அசை வுகள் இலங்கையையும் பாதித்ததை இவை குறிக்கின்றன'.
5. இலங்கையிலும், இந்தியாவிலும்
அமைந்துள்ள போக்குக்கோடுகள் 'மகாநதி, தார்வாரியன், கிழக்குமலைத்தொடர் என்பன வற்றின் போக்குகள் இந்தியக் குடாநாட்டில் ஒருங்குவதுபோற் காணப்பட்டாலும், அவை இலங் கையில் தான் சந்திக்கின்றன. இப்போக்குக் கோடுகளை நீட்டினால் அவை இலங்கையின் கிழக் குப் பகுதியைச் சந்திக்கும். இத்தகைய ஒரு நிலை யிற்றான் வட அத்திலாந்திக்கின் இரு மருங்கும் அமைந்த ஹேர்சீனியன், கலிடோனியன் போக்குகளும், தென் அத்திலாந்திக்கின பிரே

Page 34
58
இலங்கையின் புவிச்சரிதவியல்
SITOLL]
சிலைற், கொண்டுவானைற் போக்குகளும் அமைந்துள்ளன. மன் னார்க் குடாவிற் காணப்படும் தலைகீழ் 'V' வடிவில் அமைந்த ஆழ்கடற் பிளவையும் இலங்கையிலும், தக்கணத்திலும் காணப் படும் யூராசிக் படுக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கில் யூறாசிக்கிற்குப் பிந்திய காலத்தில் தக்கணத்தில் நிகழ்ந்த புவியசைவுகளின் விளைவாக இலங்கை தக்கணத்தி லிருந்து பிரிவுற்றுப் பெயர்ந்தது என்று கொள்ளவேண்டி இருக்கின்றது இத்தகைய பக்க அசைவுகளுடன் (Lateia Movements) ஏதோ ஒரு வகையில் குத்து அசைவுகளும் Vertical Movements) தொழிற்பட்டு இருத்தல் வேண்டும்.
6. பளிங்குப்பட்டைப்பாறைக்கும்,
இ கொண்டலைற்றிற்கும்
இடையிலுள்ள தெளிவான எல்லை 'சாணோக்கைற்றுக்கும், கொண்டலைற்றுக்கும் இடையில் தெளிவான எல்லைகள் காணப்படுகின்றன. சில இடங்களில் இவை நேரியவையாகவும் ஏறத்தாழப் பத்து மைல்களுக்கும் அமைந்துள்ளன.
(அ) மாவலத்தன்னைத் தொட்டு வெள்ளவாயா வரை
அமைந்த குத்துச் சரிவுகளின் அடிவாரத்தில் பளிங்குப் பட்டைப் பாறை வெளிக்காணப்படுகின்றது.
(ஆ) இத்தகைய தன்மையே றக்குவானைக்குக் கிழக்கே
வளவகங்கையிலும் காணப்படுகின்றது.
(இ)
மகாவலிகங்கையின் நீள்முகப் பள்ளத்தாக்கின் கிழக்கே ஒரு நேரிய எல்லை காணப்படுகின்றது. இது ஆற்றின் மேற்கே காணப்படும் குத்துச் சரிவு களுக்கும், ஊற்றுநிரைக்கும் சமாந்தரமாக அமைந துள்ளது.'

இலங்கையின் புவிச்சரிதவியல்
50 '
7. கிடைக்கோட்டில் எதிர்பாராத முறையில்
சடுதியாகத் தோன்றும் மாற்றங்கள் (அ) வடக்கு நோக்கிய சாய்வுடன் அமைந்த மடிப்பிற்
குட்பட்ட புவிக்கீழ் மடிப்புப் பிரதேசத்தில் கிடைத் திசைகள் குதிரைலாட வடிவிலமைந்த வெளியரும் புப் பாறைகளுக்குச் சமாந்தரமாக அமைதலே இயல்பு. இத்தகைய அமைப்பிலிருந்து சடுதியான பிறழ்ச்சி காணப்படும் தன்மை குழப்பமேற்பட்ட தைக் குறிக்கும். கிழக்கு மேற்காய் அமையவேண் டிய றக்குவானைத் திணிவு தென்கிழக்கே பெயர்ந் தமைந்திருத்தல் இத்தகைய பிறழ்ச்சிக்கு ஓர் எடுத் துக்காட்டு. இம்மேட்டுநிலம் வளவகங்கையை யொட் டிச் சடுதியாக மறைதல், ஊற்றுக்கள் காணப்படல், அடித்தளப் பளிங்குப்பட்டைப் பாறைக்கும், கொண் லைற்றுக்கு மிடையில் தெளிவான எல்லை காணப்படு தல் ஆகிய தன்மைகளை நோக்கும்போது பாறை யுடைவு, குறைகள் என்பன நிகழ்ந்திருக்கவேண்டும் என்று துணியலாம்.
(ஆ)
கண்டிக்கு வடக்கில் அமைந்த கந்தானைக் குத்துச் சரிவின் படங்கள் கிடைத்திசை, சாய்வுத்திசை என் பனவற்றில் பெருங்குழப்பம் ஏற்பட்டிருத்தலைச் சுட டுகின்றன. இத்தகைய சிக்கலான அமைப்பிற்கு, பன் முறைக்குறையாதல், படிக்குறையாதல், பிளவுக்குறை யாதல் என்பனவற்றின் அடிப்படையில்தான் விளக் கம் தரமுடியும்.'
8. சாய்வின் செறிவிற் காணப்படும்
சடுதியான வேறுபாடுகள் 'சாய்வின் செறிவிற் காணப்படும் சடுதியான வேறுபாடு கள், தென் மலைச்சுவர், கந்தானைக் குத்துச்சரிவு, மதுள்சீமா மேடை போன்ற பல குத்துச்சரிவுகளையொட்டிக் காணப்படு கின்றன.'
இ. பு, ச, 7

Page 35
60
இலங்கையின் புவிச்சரிதவியல்
9, தலைகீழாக்கப்பட்ட பக்கங்களில்
மிகைமடிப்புகள் காணப்படல் 'இவற்றிற்கான சான்றுகள் பல காணப்படாவிட்டாலும் இவை இலங்கையின் பல பாகங்களிற் காணப்படுகின்றன. மஸ்கெலியாவிலிருந்து சிவனொளிபாதத்திற்குச் செல்லும் வழி யில் இவற்றை நன்கு காணலாம். கடுகண்ணாவையில் அமைந்த குத்துச்சரிவு, பிளவின் விளைவால் ஆனது என்பதை, அதன் சூழலிற் காணப்படும் மிலோனைற் (Mylonite) குறிக்கின்றது. சாணோக்கைற்றின் மைக்காத்தன்மைக்கும், லெப்னைற்றின் (Leptynites) தகடாகுப்பாறைத் தன்மைக்கும் (Schist) விளக் கம் தரமுயன்ற கோட்ஸ் என்பவர், அவை மடிப்பு, நெருக்கம் என்பனவற்றின் விளைவால் ஆனவை என்று குறித்துள்ளார்.
காரீய நரம்புகளின் சுவர்களை யொட்டி சிலிக்கன்சைடை ஒத்த (Slickenside) சிலேற் அமைப்புக் காணப் படுகின்றது. இது சுவர்களை யொட்டி அசைவுகள் தொழிற்பட்டதைக் குறிக்
கும்.'
10. நொருக்கப்பட்ட பெக்மற்றைற்றும்
மடிப்பிற்குட்பட்ட பாறையும் 'நொருக்கல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் பல் உள். அவை அசைவுகள் நிகழ்ந்ததைக் குறிப்பன. சாணோக்கற் திணிவுக ளாற் சூழப்பட்ட நிலையில் பிபிலைக்கு அண்மையில் சிர்கன், பெக்மற்றைற் வெளியரும்புப்பாறை ஒன்று (Outcrop of zicron Pegmatite) நொருக்கப்பட்ட நிலையில் அமைந்து காணப் பட்டதைக் கோட்ஸ் கண்டார். மிகப்பரந்த அளவில் இவை ஹப்புத்தளை, வெலிமடை குத்துச்சரிவுகளை யொட்டிக் காணப் படுகின் றன. இவையும் ஓரளவுக்கு நொருக்கப்பட்டே காணப் படுகின்றன. நக்கிள்சின் தென் மேற்கு எல்லையையொட்டி நுகே தன்ன என்ற இடத்திலும் நொருக்கப்பட்ட பெத்மற்றைற்

இலங்கையின் புவிச்சரிதவியல்
61
காணப்படுகின்றது. இவற்றுடன் சேர்ந்து மொனசைற் (Monazite) துணுக்குகளும் காணப்படுகின்றன. 'ஹோட்டன் சமவெளி யின் விளிம்பில் பல பெக்மட்டைற் நரம்புகள் காணப்படுகின் றன, இவற்றுள் ஒன் றில் பெல்ஸ்பா (Fledspar), கொறண்டம் (Corundum) என்பவை காணப்படுகின்றன.
உயர் நிலப்பகுதியில் கணிசமான அளவு மைக்கா நரம் புகள் காணப்படுகின்றன இவை 80-90%மைக்காச் செறிவைக் கொண்டிருப்பினும் முறுக்கல், நெளிதல் முதலிய அசைவுகளின் விளைவாய் பொருளாதாரப் பயன் குறைந்தனவாய் அமைந்துள் ளன.
நன்கு நறுக்குண்ட அமிலக் கருங்கற் தன்மையுள்ள பளிங் குப்படைப் பாறைகளில் காரீயம் காணப்படுகிறது. இலங்கை யின் பாரிய காரீயச் சுரங்கங்களிற் காணப்படும் காரீய நரம்பு கள் (Graphite Veins) நறுக்குண்ட பகுதிகளில் அமைந்துள் ளன.'
11. படி கநரம்பு * 'உருவவியல் புவியோட்டுவிருத்தி என்பனவற்றிற்குரிய பிறழ்ச்சியாய் அமைந்த பகுதிகளில் படிகநரம்புகள் பெருமள விற் காணப்படுகின்றன. பெருமளவில் இவை குருவித்த -இரத் தினபுரி வீதியில் வெளியரும் பிக் காணப்படுகின்றன. இவை படிகப் படிவுகளாக இருத்தல் வேண்டும் என அடம்ஸ் தவறா கக் கருதினார். ஆனால் இவை கொண்ட லைற்றைத் துளைத்துக் கொண்டு செல்கின்றன. எனவே இவை நரம்புகளே. கந்தானைக் குத்துப்பாறைக் கண்மையில் ஏறத்தாழத் தட்டை உச்சியைக் கொண்டதொரு படிகநரம்பு, செமனாரி நிலத்தில் அமைந்த குன் றிற் காணப்படுகின்றது. கண்டி மேட்டுநிலத்தின் இப்பகுதி யில் பெருமளவிற்குப் பெக்மெற்றைற், படிகப்பாறை என்ப வற்றிற்குரிய உரிய நரம்புகள் காணப்படுகின்றன. இவை பெருமளவில் கிழிக்கப்பட்டும், நறுக்கப்பட்டும் அமைந்துள் ளமை இப்பகுதி குழப்பத்துக்கு உட்பட்டதைக் காட்டும்.'

Page 36
62 .
இலங்கையின் புவிச்சரிதவியல்
12. பீடங்களுடனும், படிகளுடனும் அமைந்த புத்திளமைபெற்ற பள்ளத்தாக்குகளும்
- மேற் பரப்புகளும் : 'மேல்வருவன இவற்றுக்கு எடுத்துக்காட்டாக அமையும்':
(அ) தம்பகஸ்தலாவ ஓயாவில் எல்ஜின் நீர்வீழ்ச்சிக்குக்
| கீழ் அமைந்த மலை இடுக்கிற் காணப்படும் படிகள். (ஆ)
மகாதொட்டில், உமாஓயாக்களிற் காணப்படுபவை. (இ) கொத்மலி ஓயாவில் செயின்ற்கிளேயர் நீர்வீழ்ச்சிக்குக்
கீழ்க் காணப்படுபவை. | (ஈ) கெகல்கம, மஸ்கெலிய நதிகளில் அபடீன், லக்சபானா
வீழ்ச்சிகளின் கீழ்க் காணப்படுபவை. வளவகங்கையின் உற்பத்திப் பிரதேசத்தில் காணப்படு
பவை. (ஊ) வடக்காகப் பாய்ந்து மகாவலி கங்கையில் விழும் பெலி
குல்குருந்து ஓயாக்களின் விக்ரோறியா வீழ்ச்சியின் கிழக்கே காணப்படுபவை.'
(உ)
நதிகள் தொடர்பற்றிருத்தலும், அவை சமச் சீரியக்க நிலையை அடையாதிருப்பதும் அண்மையில் பிளவாக்கம் நிகழ்ந் ததையே குறிக்கின்றன. இவ்வுண்மை லிந்துள ஆற்றில் காணப்படும் வளைவுகளால் வலியுறுத்தப்படும்.'
13. உறுப்பமைதிக்குரிய பிரிவுக்கோடுகளும்,
முன்னரே விலக்கும் போக்கும் 'இலங்கையில் குறிப்பாக மத்திய உயர்நிலத்தில் மூன்று முக்கிய திசைப்போக்குகள் காணப்படுகின்றன.
(அ) வ. வ. மே: (வ. மே.) - தெ. தெ. மே. (தெ. மே.)
போக்கு. இது புவிக்கீழ் மடிப்புள் மடிப்பின் மேற் குப்பக்கமாக அமைந்துள்ளது. பழைய மடிப்புப் போக் குகளின் புத்துயிர்ப்பாக அமைந்துள்ளது.

63 -
இலங்கையின் புவிச்சரிதவியல் (ஆ) வ. வ. கீ. (வ. கீ.)-தெ. தெ. கீ. (தெ. கீ.) போக்கு.
இது மூட்டுக்களுக்கு உரியது. குறிப்பாக உள்ளூருக் குரிய மூட்டுக்களுக்குரியது.
(இ)
கி-மே. போக்கு. தென்மலைச் சுவரால் இது சுட்டப் படும். களுகங்கை மலையிடுக்காக இது கிரியெல் தொட்டு கோறண வரையும் தொடர்ந்து காணப்படு கின்றது. மகாவலி கங்கையின் குறுக்கு முகப் பள்ளத் தாக்கும் இதனை ஒட்டியே அமைந்தது. கினிகத்தேனைக் கும், எட்டியாந்தோட்டைக்கும் இடையிலமைந்த களனி கங்கையின் மலையிடுக்குகளையும் இங்கு உதாரண மாகக் காட்டலாம்.
தரைத் தோற்ற இயல்புகள் பலவற்றின் எல்லைகள் இந் நலிவுக் கோடுகளோடு ஓரிடப்படுகின்றன. வைல்டர்னஸ் சிகரம், நுவரேலியா வடிநிலம், தும்பலாத வடிநிலம் என்பனவற்றை உதாரணமாகக் காட்டலாம். வெம்பிளி - கெக்றுனாகல (1600) அலகெல்ல - கடுகண்ணாவைச் சரிவு (2000) என்பவை கிழக்கே படிக்குறைதல், பிளவு என்பனவற்றைக் குறிக்கும் போக்கு களாக உள்ளன. உருவவியற் சான்றுகளுடன் நோக்கின் இவை அரநாயக்காவில் அமைந்த மகாஓயாவினால் வடிக்கப் படும் பிளவுக்குட்பட்ட இறக்கங்கள் என்பது தெளிவுறும். ஆப்புகள் போன்று அமைந்த இத்திணிவுகள் காலப்போக்கில் ஏற்படும் அசைவுகளின் விளைவாகத் தமது சமதளத் தன் மையை இழக்கலாம்: சரிவுகளும் அசைவுகளும் நிகழலாம்.
கடுகண்ணாவைக் குத்துச்சரிவை மேற்கு எல்லையாகக் கொண்ட கண்டி மேட்டுநிலம் கிழக்கே சரிக்கப்பட்டபடியினால் மகாவலிகங்கை திருப்பப்பட்டிருக்கவேண்டும் என்று கொள்ள வேண்டும். இங்கு அமைந்த வடிகாலமைப்பு சரிவுக்கேற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளவில்லை. எனவே அசைவு வெகு அண்மையில்தான் நிகழ்ந்திருக்கவேண்டும்.

Page 37
இலங்கையின் புவிச்சரிதவியல்
ஆரம்பத்தில் வட வட மேற்காகவும், வடமேற்காகவும் தொடர்ந்தமைந்த பள்ளத்தாக்குகளின் ஊடு நதிகள் உயர் சம வெளியை ஊடறுத்துச் சென்றன. ஆனால், அவை இன்று துண்டிக்கப்பட்டனவாயும் கிழக்காயும், மேற்காயும் ஓடும் நதி களில் நீரைச் சேர்ப்பனவாயும் அமைந்து காணப்படுகின்றன. இதன் விளைவாகப் பல காற்றிடுக்குகள் (Wind gaps) தோன் றியுள்ளன.
கினிகத்தேனைக் கும், கட்டுகஸ்தோட்டைக்குமிடை யில் அமைந்து காணப்படும் மகாவலிகங்கையின் பகுதியை நோக் கில் அதன் இருமருங்கிலும் பல கிளை அருவிகள் இருப்பதைக் காணலாம் தென் கிழக்கே இருந்துவரும் கிளை அருவிகள் வட மேற்காகப் பாய்ந்திருத்தல் வேண்டும். இன்று தென்கிழக்காகப் பாயும் நதிகள் குறைப்பொருத்த அருவிகளாக அமைந்துள்ளன. அவற்றின் ஊற்றுக்கண்மையில் மலை இடுக்குகள் காணப்படு கின்றன. மலை இடுக்கிற்கு அப்பால் வடமேற்காகவும், மேற் காகவும் அருவிகள் ஓடி களனி, மகாஓயாப் பள்ளத்தாக்கு களில் விழுகின்றன. இவற்றை நோக்கில் கண்டி மேட்டுநிலம் திணிவாகவே அசைக்கப்பட்டுத் தென்கிழக்காகச் சரிக்கப்பட் டது என்பது புலப்படும்.'
14. பிளவுக்குரிய அசைவுகள், - தொழிற்பட்டதைக் குறிக்கும்
ஏனைய சான்றுகள் (அ) கருங்கற்றன்மை கொண்ட லெப்டினைற் லுனுகலப் பள்
ளத்தாக்கின் இருமருங்கிலும் பல்வேறுபட்ட உயரங் களிற் காணப்படுகின்றது. ஆனால் பள்ளத்தாக்கில் இது காணப்படவில்லை.
(ஆ) மயோசீனிற்குப் பிந்திய காலத்தின் 4 மடிப்பு, மேல்
உயர்த்துகை என்பன் கரையோரப் பகுதிகளில் நிகழ்
துள்ளன. (குதிரைமலை, மினிக்கல்கந்தை)
(இ)
றக்குவானைத் திணிவுக்குத் தென்கிழக்கில் பளிங்குருச் சுண்ணப்பாறைகள் (வெளியரும்புகள்) காணப்படுகின் றன.

இலங்கையின் புவிச்சரிதவியல்
65
(உ)
(ஈ) சென்ற்மாட்டீன் தேயிலைத் தொழிற்சாலை, கல்பொட,
நாவலப்பிட்டிக்கு அண்மையில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் சாய்வுச்சரிவுகளை ஒட்டி அருவிகள் பக்க வாட்டில் பெயர்ந்திருக்கின்றன. நுரைகற் (Pumice) பரல்கள் இலங்கையின் கிழக்குக் கரையில் தள்ளப்பட்டு வருகின்றன. கடற்கீழ் அமைந்த நுரைகல் நீள்குன்று ஒன்று முல்லைத்தீவுக் கரைக்கு அப்பாற் காணப்படுகின்றது எனக் கருதப்படுகின்றது. அங்கு வெடித்தற்பிளவு (Fissure eruption) நிகழ்ந் திருத்தல் கூடும்.
இவையாவும் அண்மையில் இலங்கையில் புவியோட்டு விருத்திக்குரிய அசைவுகள் தொழிற்பட்டதைக் குறிக்கும் சான் & றுகளாகும், எனப் பேராசிரியர் கா. குலரெத்தினம் அவர்கள்
தனது கட்டுரை ஒன்றில் விளக்கியுள்ளார்.
தொகுப்புரை இலங்கையின் புவிப்பௌதிக வுறுப்பியலை விளக்க இவ் வாறு பல அறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். 'இலங்கையின் நிலத்தோற்றம் தொடர்ச்சியான ஒரு வாழ்க்கைவரலாற்றின் ஒரு கட்டம் ; மூன்று அல்லது நான்கு கண்டவாக்கவிசைகளின் விளை வாலமைந்த மூன்று ஆறரித்த சமவெளிகளைக் கொண்டது' என்ற அடம்ஸ், வாடியா என்போரது கருத்துக்களும், பல் வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த பல கண்டவாக்கவிசைகளின் விளைவே என்ற பேராசிரியரின் கருத்துக்களும் பல்வேறு ஆதார அடிப்படைகளில் எழுந்தவையே. இக்கருத்துக்களைச் சீர்தூக்கி நோக்கும்போது, பேராசிரியர் கா, குலரத்தினத்தின் கருத்துக்களே ஏற்றுக் கொள்ளத்தக்கனவாகவுள்ளன. எனவே, புவியசைவுச் சக்திகளினதும், தின்னற் சக்திகளினதும் ஓயாத மோதலின் விளைவே இலங்கை என்று துணியலாம்.

Page 38
இலங்கையின் தரைத்தோற்றம்
ஒரு பிரதேசத்தின் தரையுயர்ச்சி வேற்றுமைகளை ஆராய்வதே தரைத்தோற்றத்தில் முக்கியமாகக் கொள்ளப்படு / கின்றது. ஏற்கனவே, விபரித்தவாறு இலங்கையின் தரைத் தோற்றம் புவியசைவுச் சக்திகளினதும் தின்னற் சக்திகளின தும் ஓயாத மோதலின் விளைவாகவே காணப்படுகின்றது.
1. இலங்கையில் இரு வேறுபட்ட தரைத்தோற்றங்களைக் காணலாம். இலங்கையின் மத்தியில் மலைகள், மேட்டுநிலங் கள், குன்றுகள் என்பன அடங்கிய உயர்நிலத் தோற்றத்தினை யும் அதனைச் சூழ்ந்து கடற்கரைச் சமவெளிகளைக்கொண்ட தாழ்நிலத் தோற்றத்தினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கையைத் தரைத்தோற்றப் பிரிவுகளாக வகுத்து விளக்கியவர்கள் என இருவரைப் பிரதானமாகக் குறிப்பிட லாம்; ஒருவர் எஸ். எஃப்.டி.சில்வா; மற்றவர் ஏ. டி பப்டிஸ்ற். இவ்விரு புவியியலாளர்களே இலங்கையின் தரைத்தோற்றத்தை இலகுவான, ஆனால் தெளிவான பிரிவுக ளாக வகுத்து ஆராயந்தவர்களாவார். எஸ். எப்.டி.சில்வா என்பார், இலங்கையின் மத்தியிலுள்ள மலைநாட்டை (அ) கண்டி

இலங்கையின் புவிச்சரிதவியல்
6;
மேட்டுநிலம், (ஆ) கற்றன் மேட்டுநிலம், (இ) வெலிமடை மேட்டுநிலம் என வகுத்து விளக்கியுள்ளார்; ஏ. டி. பப்டிஸ்ற் என்பார் மத்தியமலைநாட்டை (அ) மத்திய மேட்டுநிலம், (ஆ) வட கிழக்கேயுள்ள நக்கிள்ஸ் தொகுதி; (இ) தென்மேற்கேயுள்ள் றக் குவானைத் திணிவு என வகுத்து விளக்கியுள்ளார்; முனனவரின் தரைத்தோற்றப் பிரிவுகளிலும் பின்னவரின் பிரிவுகளே இன்று பெரிதும் உவந்தேற் கப்படுகி ன்றன. எஸ். எஃப்.டி: சில்வா, மத்திய மலைநாட்டைச் சூழ்ந்து அமைந்திருக்கும் கரையோரத் தாழ்நிலங்களை (அ) தென் மேல் தாழ்நிலம், (ஆ) தென்கீழ் தாழ் நிலம், (இ) வடதாழ்நிலம் என மூன்றாகப் பிரித்துள்ளார்.
இலங்கையின் தரைத்தோற்றத்தைப் பிரதேச அடிப்படை யிலும் உயர அடிப்படையிலும் ஐந்து பிரிவுகளாக வகுத்து ஆராயலாம். இப்பிரிவுகள் பேராசிரியர் கா. குலரெத்தினம் என் பாரின் 'உருவவியல் அலகுகளை' ஆதாரமாகக் கொண்டவை. அப்பிரிவுகள் வருமாறு:
1. மத்திய உயர்நிலம் 2. தென் மேல் தாழ்நிலம் 3. தென் கீழ் தாழ்நிலம் 4. வட தாழ்நிலம் 5. கரையோரத் தாழ்நில வலயம்
1. மத்திய உயர்நிலம் 1000 அடி சமஉயரக்கோட்டிற்கு மேற்பட்ட பகுதி பொது வாக மத்திய உயர்நிலம் எனக் கொள்ளப்படுகின்றது. இம் மத்திய உயர்நிலத்தின் மிகக்கூடிய உயரத்தை 8281 அடி உயர்சிகரமான பேதுருதாலகாலை மலை பிரதிபலிக்கின்றது. மத் திய உயர்நிலம் பல தரைத்தோற்ற அல்லது புவிப் பௌதிகவுறுப் பியற் பிரிவுகளையுடையது. அவற்றை ஒவ்வொன்றாக விபரிப் போம்.
இ. பு. ச. 8

Page 39
ܠ ܗܘܢ
P தா !ழ் 6
// 5
2)
ம காவலி.
நி
2* *
2 09
ல .
ய»166
படம் : 11 தரைத்தோற்றப் பிரிவுகள் (பேராசிரியரின் கருத்திற்குரிய படம்)

இலங்கையின் புவிச்சரிதவியல்
89
(அ) நங்கூரவடிவான உயர்பகுதி மத்திய உயர்நிலத்தின் சமவுயரக்கோட்டுப் படத்தினை அவதானித்தால், 5000 அடி உயரத்திற்கு மேற்பட்ட மலைப் பகுதி தெளிவானதோர் பௌதிகவுறுப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். (படம்: 12) இந்த 5000 அடி உயரத்திற்கு மேற் பட்ட மலைநாடு, நங்கூரவடிவானதாக (பப்டிஸ்ற்), அல்லது தலைகீழான T வடிவமானதாக (சில்வா) காணப்படுகின்றது. இந்த நங்கூரவடிவமான உயர்பகுதியிலேயே பேதுருதாலகாலை, கிரிகாலப்பொத்தை, தோட்டப்பாலை, சிவனொளிபாதம், நமுன குல முதலிய மலைகள் அமைந்திருக்கின்றன. நங்கூரவடிவ உயர்நிலத்தின் நடுமையமாகக் கிரிகாலப்பொத்தைமலை (7857) அமைந்துள்ளது; நங்கூரவடிவ உயர்நிலத்தின் மேற்குப்புற நீட்சி சிவனொளிபாதமலை (7360') வரை காணப்படுகின்றது. கிழக்குப்புற நீட்சி நமுனகுல (6679/) வரை அமைந்துள்ளது. நங்கூரவடிவ உயர்நிலத்தின் வடபுற நீட்சியில் தோட்டப்பாலை (7741'), பேதுருதாலகாலை எனும் மலைகளும், நுவரெலியாச் சமவெளி (6000/- மேல்), எல்க் சமவெளி (6000/- மேல்). கோட்டன் சமவெளி (7000/- மேல்) முதலிய உயர்சமவெளி களும் காணப்படுகின்றன. பேதுருதாலகாலைக்கு வடக்கேயும் ஒரு உயர்மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர், மகாவலிகங்கைப் பள்ளத்தாக்கினை நோக்கிப் படிப்படியாகச் சாய்கின்றது. கிரிகாலப்பொத்தையிலிருந்து நமுனகுலவரை காணப்படும் நங்கூரவடிவ உயர்நிலத்தின் கிழக்குப்புற நீட்சி யில் பல மலையிடை வெளிகள் காணப்படுகின்றன; அப்புத் தளைக் கணவாய், எல்ல கணவாய் என்பன இத்தகைய மலை யிடை வெளிகளே.
நங்கூரவடிவமான இந்த உயர்நிலம் பெரிதும் தின்னலுக் குட்பட்., மேற்பரப்புக்களையே கொண்டிருக்கின்றது. ஹோட் டன், மூன், எல்க் சமவெளிகள் அதிமுதிர்தின்னல் மேற்பரப்பு களாக விளங்குகின்றன. தோட்டப்பாலை, பேதுருதாலகாலை முதலிய மலைகள் அரிப்பிற்குட்பட்டு எஞ்சிய குன்றுகளாக (மொனாட்நொக்ஸ்)க் காட்சிதருகின்றன.

Page 40
70
இலங்கையின் புவிச்சரிதவியல்
நங்கூரவடிவான இந்த உயர்நிலம், மேற்கு, கிழக்கு, வடக்கு எனும் திசைகளில் படிப்படியாகச் சாய்வுறுகின்றது. ஆனால், தென்பாகத்தில் மட்டும் இது திடீரெனச் சாய்வுறுகின் றது; இத்தென்பாகம் 5000 அடி உயரத்திலிருந்து 3000 அடி உயரத்திற்குத் திடீரெனச் சரிகின்றது; இக்குத்தான சரிவினைத் 'தென்மலைச்சுவர்' என வழங்குவர். தென்மலைச்சுவர் சிவ னொளிபாதமலையிலிருந்து எல்லாகந்தைவரை, ஏறத்தாழ 60 மைல்கள் நீளத்திற்கு அமைந்திருக்கின்றது. (படம்: 12)
(ஆ) கற்றன் மேட்டுநிலம்
மத்திய மலைநாட்டின் நங்கூரவடிவமான உயர்நிலப் பகு திக்கு, மேற்கே கற்றன் மேட்டுநிலம் அமைந்திருக்கின்றது. இம்மேட்டுநிலம் 3000 அடிகளுக்கும் 5000 அடிகளுக்கும் உட் பட்டதாகக் காணப்படுகின்றது. இம்மேட்டுநிலம் பல சமாந்திர மான பாறைத்தொடர்களைக் கொண்டிருக்கின்றது. இப்பாறைத் தொடர்களுக்கு இடையே நதிகள் உற்பத்தியாகிப் பாய்கின் றன. மகாவலிகங்கை, களனிகங்கை எனும் இரு பிரதான நதி கள் கற்றன் மேட்டுநிலத்திலேயே உற்பத்தியாகின்றன. கற் றன் மேட்டுநிலத்தின் தென் மேல் பாகத்தில் களனிகங்கையின் கிளை நதிகளாகிய மஸ்கெலியஓயா, கெகல்கமுஓயா ஆகியவற் றின் வடிநிலங்களுள்ளன. நங்கூரவடிவமான உயர்நிலத்தின் மேற்குச்சாய்விலுற்பத்தியாகின்ற மகாவலிகங்கையின் தலை யருவிகள், கற்றன் மேட்டுநிலத்தில் இழிந்து, கங்கையுடன் இணைகின்றன. மகாவலிகங்கைப் பள்ளத்தாக்கையும், களனி கங்கைப் பள்ளத்தாக்கையும் கற்றன் மேட்டுநிலத்தில் பிரிக் கின்ற தெளிவான எல்லையாக, வட மேற்கு - தென் கிழக்குப் போக்கிலான பாறைத்தொடர் ஒன்று அமைந்துள்ளது. அத னாலேயே களனிகங்கை, கினிகத்தெனைக் கணவாய் ஊடாக மேற்கு நோக்கிப் பாய, மகாவலிகங்கை வடக்கு நோக்கிப் பாய் கின்றது .

இலங்கையின் புவிச்சரிதவியல்
71
கற்றன் மேட்டுநிலத்தில் 5000 அடி சமவுயரக்கோட்டை அடுத்து டேவன், றம்பொடை எனும் நீர்வீழ்ச்சிகளும், 3000 அடி சமவுயரக்கோட்டையடுத்து லக்சபானா, அப்டீன் எனும் நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன.
சீசர்
காவலி
22
32
5R0,
40
3005
3000
CoooL
படம்: 12 மத்திய உயர் நிலம்

Page 41
72
இலங்கையின் புவிச்சரிதவியல்
(இ) தொலஸ்பாகே மேனிலம் கற்றன் மேட்டுநிலத்திற்கு வட மேற்கே தொலஸ்பாகே மேனிலம் அமைந்து காணப்படுகின்றது. இம்மேனிலம் (upland) 2000 அடிகளுக்கு மேற்பட்டது; 3000 அடிகளுக்கு மேற்பட்ட பகுதிகள் இம்மேனிலத்தில் காணப்படுகின்றன. கற்றன் மேட்டு நிலத்திலிருந்து, தொலஸ்பாகே மேனிலத்தை மகாவலிகங்கைப் பள்ளத்தாக்குப் பிரிக்கின்றது. மேற்கே பாயவேண்டிய மகா வலிகங்கை, கற்றன் மேட்டுநிலத்தில் வடக்குப்புறமாகப் பாய் வதற்கு மேற்கே தொலஸ்பாகே மேனிலம் தடைச்சுவராக அமைந்ததும் ஒரு காரணமாகும்.
(ஈ) ஊவா வடி நிலம் நங்கூரவடிவமான உயர்நிலத்திற்குக் கிழக்குப்புறத்தில் ஊவா வடிநிலம் அமைந்திருக்கின்றது: இவ்வடிநிலத்தை வெலி மடை மேட்டுநிலம் எனவும் வழங்குவர். ஊவா வடிநிலம் சராசரி 3000 அடி உயரமானது. இவ்வடி நிலம் கிழக்கே மதுள்சீமா மலைத் தொடரினாலும், தென்கிழக்கே நமுன குலத் தொடரினாலும், தெற்கே அப்புத்தளைத் தொடரி னாலும், மேற்கே நங்கூரவடிவ உயர்நிலத்தினாலும் எல்லையிடப் பட்டிருக்கின்றது. ஆனால், வடபகுதி துப்பறைப்பள்ளத் தாக்கை நோக்கிச் சாய்ந்து அமைந்திருக்கின்றது. அதனாலேயே உமாஓயா, வதுளைஓயா, லொக்கல்ஓயா எனும் மகாவலி கங்கையின் கிளை நதிகள் ஊவா வடிநிலத்தில் உற்பத்தியாகி வடபுறமாக ஓடி, தும்பறைப் பள்ளத்தாக்கில் மகாவலிகங்கை யுடன் இணைகின்றன. நமுனகுல மலைத்தொட ருக்கும் மதுள் சீமா மலைத்தொடருக்கும் இடையில் பசறைக் கணவாயுளது; வதுளை ஓயாவில் துன்கிந்தை நீர்வீழ்ச்சியுளது.
(உ) கிழக்கு மேடை (Platform) ஊவா வடிநிலத்திற்குக் கிழக்கே கிழக்குமேடை (மேட்டு நிலம்) அமைந்துள்ளது, இம்மேடை கிழக்கேயும் தெற்கேயும்

இலங்கையின் புவிச்சரிதவியல்
73
நோக்கிய சாய்வினைக் கொண்டிருக்கின்றது : இம்மேட்டுநிலத் தில் லுனுகலத் தொடரே (மதுள் சீமா) உயர்ந்த பகுதியாகும்; இது 4000 அடிகளுக்கு மேற்பட்ட து. கிழக்கு மேடையில் மகா ஓயா, கல்ஓயா எனும் நதிகள் உற்பத்தியாகிப் பாய்கின்றன; தென்பாகத்தில் மாணிக்க கங்கை, கும்புக்கன்ஓயா, கிரிண்டி ஓயா எனும் நதிகள் உற்பத்தியாகின்றன. எல்லக் கணவா வாயூடாகக் கிரிண்டிஓயா பாயும்போது ராவண எல நீர்வீழ்ச்சி உருவாகின்றது.
(ஊ) தென்மேட்டுநிலம்
சிவனொளிபாதமலையிலிருந்து எல்லகணவாய் வரை அறு பது மைல் தூரம் நீண்டு காணப்படும் தென் மலைச்சுவருக்குத் தெற்கே, ஒடுங்கிய ஒரு மேட்டுநிலமாகத் தென் மேட்டுநிலம் காணப்படுகின்றது; இம்மேட்டுநிலம் 1000 அடிகளுக்கும் 3000 அடிகளுக்கும் உட்பட்டது. இத்தென்மேட்டுநிலத்தைக் கொஸ் லாந்தை மேட்டுநிலம் அல்லது மாவலத்தன்ன மேட்டு நிலம் என்றும் வழங்குவர். கொஸ்லாந்தையை அடுத்து வட புறமாக நிலம் இரு மைல்களுக்குள் 3000 அடிக்குக் குத்தாக உயர்கின்றது; இவ்விடத்திலேயே கிரிண்டிஓயாவில், தியா லுமா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கின்றது. வளவைகங்கை தென் மேட்டுநிலத்தினூடாகவே பாய்கின்றது. (படம்: 12)
(எ) கண்டி மேட்டுநிலம்
- கற்றன் மேட்டுநிலம் வடபுறமாக ஒரு தாழ்மேட்டு நிலத்தை நோக்கிச் சாய்கின்றது : இத்தாழ்மேட்டு நிலமே கண்டி மேட்டு நிலமாகும். இக்கண்டிமேட்டுநிலம் 2000 அடிகளுக்கு மேற்பட் டது; 3000 அடிகளுக்கு உட்பட்டது; இக்கண்டிமேட்டு நிலம் பெரிதும் மட்டமானது. எனினும், கற்றன் மேட்டு நிலம்போன்று பாறைத்தொடர்களை இங்கு அவதானிக்கலாம். இக்கண்டிமேட்டு நிலத்திலேயே மகாவலிகங்கை முழங்கை வளை வுடன் தும்பறைப் பள்ளத்தாக்கினுள் பிரவேசிக்கின்றது. இம்மேட்டு நிலத்தின்

Page 42
74
இலங்கையின் புவிச்சரிதவியல்
மேற்குப்பகுதியில் அளகல்லைக்குன்றும், கடுகண்ணாவைக் கண வாயும், கலகெதர, பலனை மலையிடைவெளிகளும் அமைந்திருக் கின்றன. இக்கண்டிமேட்டு நிலத்தில் மகாஓயா, தெதுறு ஓயா எனும் நதிகள் தோற்றம் பெறுகின்றன.
(ஏ) நக்கிள்ஸ் மலைத்தொகுதி கண்டி மேட்டுநிலத்திற்கு வடகிழக்கே நக்கிள்ஸ் தொகுதி காணப்படுகின்றது. நக்கிள்ஸ் மலைத்தொகுதி 3000 அடிகளுக்கு மேற்பட்ட தாகக் காணப்படுகிறது; இதன் அதி உயரம் 6112 அடிச் சிகரத்தினால் பிரதிபலிக்கப்படுகின்றது; நக்கிள்ஸ் மலைத் தொகுதி வடமேற்கு - தென்கிழக்குப் போக்கினைக் கொண்டிருக் கின்றது; ஊவா வடிநிலத்தோடு இணையவேண்டிய நக்கிள்ஸ் மலைத்தொகுதியின் வடக்கு-தெற்குப் போக்கினைத் தும்பறைப் பள்ளத்தாக்கு துண்டித்துள்ளது.
(ஐ) மாத்தளை மலைகள் கண்டி மேட்டுநிலத்திற்கு வடக்கே மாத்தளை மலைகளும் மாத்தளைப் பள்ளத்தாக்குகளுமுள்ளன. இவை 2000 அடி களுக்கு உட்பட்ட உயரத்தினையுடையன. மாத்தளை மலைகள் அம்பன்கங்கையின் நீர்பிரி மேடாகவுள்ளன; மாத்தளை மலைகள் வடக்கு-தெற்கான போக்கினைக் கொண்டிருக்கின்றன; விசிறி வடிவில் விரிந்துசெல்லும் தாழ்குன்றுத் தொடர்களை வட தாழ் நிலத்தில் அவதானிக்க முடியும்; இவை மாத்தளை மலைகளின் தாழ் தொடர்களே.
(ஒ) றக்குவானைத் திணிவு மத்தியமலைநாட்டின் தென்மேல் பாகத்தில், தனித்ததோர் தரைத்தோற்றவுறுப்பாக றக்குவானை மலைத்திணிவு அமைந் துள்ளது. இவ்வாறு இதனைப் பிரிந்திருப்பது களுகங்கைப் பள் ௗத்தாக்காகும். றக்குவானை மலைத்திணிவு 1000 அடிகளுக்கு மேற்பட்ட பகுதியாகும்; றக்குவானை மலைத்திணிவின் அதி

மாத்தளை
மலைகள்
நக்திளஸ்
*நேத்திள்ஸ்,
க ண டி.
மேட்டு நிலம் அளகல்லை
கேன்ஜ2
"ஒண்ணாம்கள்
தொலஸபாதே
மேனிலம்
97 பேதுருதால்காலை

Page 43
மாத்தளை
மலைகள்
நக்கிளஸ்
கண் .தொகுதிள்ஸ்
மேட்டு நிலம்
> அளகல்லை
கடுகண்ணாவ
கணவாய்
பி
தி
தொலஸபாதே
மேனிலம்
பேதுருதால்கலை
*•-கள்ளிக.

சிகை
முண்
/572/7/'>நங்கூர் ) //.வடிவான்
இ கிழக்ருத >
மேட்டு நில்லம்:
ஊள வா'
0 மேடை
நிலம் 0.
சிவனொளி/ பாகமலை
பல்ல கணவப்
பப்பு
(:'கிரிகாலப்பொதி தென்றலச்சுவர்
(அப்புத்தலை
ாலப் ெத ,
1கணவாய்
** தெ ன்
மேட்டு நிலம்
சப்பிரகமூவாப் - 1000
பாறைத் தொடர்
நக்குவானைத் திணிவு
மத்தியமலை நாட்டின் நிலவுறுப்புக்கள்

Page 44


Page 45

இலங்கையின் புவிச்சரிதவியல்
75
உயரம் 4545 அடி உயரமுடைய பெரகலச் சிகரமாகவுள் ளது. றக்குவானை மலைத்திணிவின் கிழக்குப்பாகத்தில் புளுத் தோட்டை மேட்டுநிலமுளது. றக்குவானை மலைத்திணிவிற்கு மேற்கே, வடமேற்கு - தென்கிழக்குப் போக்கில் சப்பிரகமூவாப் பாறைத்தொடர்கள் அமைந்துள்ளன. களுகங்கைப் பள்ளத் தாக்கு இத்தகைய பாறைத்தொடர்களுக்கு இடையிலேயே காணப்படுகின்றது. சப்பிரகமூவாத் தொடர்களிலேயே கினித் துமை எனும் சிகரமுளது.
2. தென்மேல் தாழ்நிலம் 'நன்கு விருத்தியடைந்த அளியடைப்பு வடிகாலமைப்பைக் கொண்ட நீள் முகப் பள்ளத்தாக்குடன், மென்சரிவு குத்துச்சரி வுப் பாறைகளைக்கொண்ட நீள்குன்றுத் தொடர்கள் (strick ridges), குவெயித்தாக்கள் (cuestas), பன்றி முதுகு வெற்பு கள் (hogs backs ) முதலியவற்றை இடவிளக்கமாகக்கொண்ட நன்கு நீர்பெறும் தென் மேல் பிரதேசம்' (கா. குலரத்தினம்) எனத் தென்மேல் தாழ்நிலத்தைச் சுருக்கமாகக் கூறலாம்,
இலங்கையின் தரைத்தோற்றப் பிரிவுகளில், கரையோரத் தாழ்நில வலயத்தையும் ஒரு பிரிவாக வகுத்திருப்பதால், தாழ் நிலங்களின் எல்லைகள் 'வழக்கமான' எல்லைகளிலும் சிறிது வேறுபடுகின்றன. தென் மேல் தாழ்நிலம் வடக்கே தெதுறு ஓயா விற்கும் தென் கிழக்கே வளவகங்கைக்கும், கிழக்கே 1000 அடி சமவுயரக்கோட்டிற்கும், மேற்கே 100 அடி சம வுயரக்கோட்டிற்கும் இடையில் அமைந் தி ருக் கி ன் ற து. (படம்: 10)
இத்தாழ்நிலம் வடக்கே அகன்றதாயும் தெற்கே ஒடுங்கிய தாயும் காணப்படுகின்றது. தென்மேல் தாழ்நிலத்தின் - மிக வுயர்ந்த பகுதிகள் றக்குவானை மலைகளைச் சூழ்ந்து காணப்படு கின்றன; றக்குவானை மலைத்திணிவிலிருந்து பாறைத்தொடர் கள் வடமேற்காயும் தென்கிழக்காயும் பிரிந்து செல்கின்றன.
இ: பு: ச: 9

Page 46
76
இலங்கையின் புவிச்சரிதவியல்
இப்பாறைத்தொடர்கள் தெதுறுஓயா வரை அமைந்திருக்கின் றன; தென்மேல் தாழ்நிலத்தில் காணப்படும் இப்பாறைத் தொடர்கள் கரையோரத்திற்குச் சமாந்திரமாக அமைந்திருக்கின் றன. இச்சமாந்திரமான பாறைத்தொடர்களுக்கு இடையே வடக் குத் தெற்கான நீள் பள்ளத்தாக்குகள் காணப்படுகின்றன. சமாந்திரமான இப்பாறைத்தொடர்கள் இத்தாழ்நிலத்தில் பாய் கின்ற நதிகளினால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மகாஓயா விற்குத் தெற்கே காணப்படும் பாறைத்தொடர்கள் வடக்கே காணப்படும் பாறைத்தொடர்களிலும் உயரமானவை. இப் பாறைத்தொடர்கள் மலைநாட்டினை அடுத்து உயரமானவையா யும், 500' சமவுயரக்கோட்டிற்கு மேற்கே தாழ்வானவையாயும் உள்ளன. இப்பாறைத்தொடர்கள் அரிப்பின் எஞ்சிய பகுதிக ளாகக் காட்சிதருகின்றன.
தென்மேல் தாழ்நிலத்தினூடாகப் பல நதிகள் பாய்கின் றன; மத்தியமலைநாட்டில் உற்பத்தியாகின்ற தெதுறுஓயா, மகாஓயா, களனிகங்கை என் பன முறையே சிலாபம், நீர் கொழும்பு, கொழும்பு எனும் நகர்களை அடுத்துக் கடலுடன் சேர்கின்றன. புளுத்தோட்டை மலைத்திணிவில் உற்பத்தியா கின்ற களுகங்கை, பெந்தோட்டை கங்கை, ஜின்கங்கை, நில் வளகங்கை என்பன முறையே களுத்துறை, அளுத்கம, ஜின் தோட்டை, மாத்தறை எனும் நகர்களை அடுத்துக் கடலுடன் சங்கமமாகின்றன. இந்நதிவடிநிலங்களில் செழிப்பான வண்டல் மண் படிந்துள்ளது; கரையோரம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் செம்பூரான் ஈரக் களிமண் (கபூக்மண்) பரந்துள்ளது.
3. தென்கீழ் தாழ்நிலம் மகாவலிகங்கைக்கும் வளவகங்கைக்கும் இடையே, மேற்கே 1000 அடி சமவுயரக்கோட்டிற்கும் கிழக்கே 100 அடி சமவுயரக் கோட்டிற்கும் இடையில் தென் கீழ் தாழ்நிலம் பரந்திருக்கின் றது. இத்தாழ்நிலத்தின் உயர்ந்த பகுதி மலைநாட்டை அடுத்

இலங்கையின் புவிச்சரிதவியல்
77
துள்ளது. 500 அடி சமவுயரக்கோட்டிற்கும் 1000 அடி சம வுயரக்கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதி ஒரு தாழ் மேடையாகக் காணப்படுகின்றது. இத்தாழ்நிலத்தின் வடபகுதி மகாவலி கங்கை வடிநிலமாகக் காணப்படுகின்றது. தென்மேல் தாழ் நிலத்தில் நீள்குன்றுகள் காணப்படுவதுபோல, தென்கீழ் தாழ் நிலத்தில் பல - குன்றுகள் காணப்படுகின்றன , இக்குன்றுகள் அரிப்பிற்குட்பட்ட எஞ்சிய குன்றுகளாக விளங்குகின்றன. மாணிக்க கங்கையை அடுத்துக் காணப்படும் கதிர்காமக் குன்று, இத்தாழ்நிலத்தில் காணப்படும் எஞ்சிய ஒரு குன்றே. இதனை விட நுவரகல்கந்தை, பிறேயஸ்கூட், வெஸ் மினிஸ்ரர் அபே முதலிய குன்றுகளும் காணப்படுகின்றன. (படம் : 10)
தென் கீழ் தாழ்நிலத்தில் பாய்கின்ற நதிகள் மத்திய மலை நாட்டில் உற்பத்தியாகி வடக்காயும், கிழக்காயும், தெற்காயும் பாய்ந்து கடலையடைகின்றன. வடக்காக மகாவலிகங்கையும், மதுருஓயாவும் பாய்கின்றன; கல்லோயா, கெட ஓயா, வில்ஓயா என்பன கிழக்காயும், கும்புக்கன் ஓயா, மாணிக்க கங்கை, கிரிண்டிஓயா, வளவகங்கை என்பன பெரிதும் தெற்காயும் பாய்கின்றன.
4. வட தாழ்நிலம்
தெதுறுஓயாவிற்கும் மாத்தளை மலைகளுக்கும் மகாவலி கங்கைக்கும் 100 அடி சமவுயரக்கோட்டிற்கும் இடையில் வட தாழ்நிலம் பரந்துள்ளது; வட தாழ்நிலமே இலங்கையின் மிகப் பெரிய தாழ்நிலமாகும். இதன் பெரும்பாகம் 500 அடி உயரத் திற்குக் குறைவானதாக இருக்கின்றது. உயரமான பகுதிகள் மாத்தளை மலைகளைச் சூழ்ந்து அமைந்திருக்கின்றன. மீஓயா, காலஓயா, அருவியாறு, யான்ஓயா, அம் பன்கங்கை என்பன மாத்தளை மலைகளிலுற்பத்தியாகின்றன.

Page 47
78
இலங்கையின் புவிச்சரிதவியல்
இச்சமவெளி வடமேற்குநோக்கியும், வடக்குநோக்கியும், வடகிழக்கு நோக்கியும் சாய்வாக அமைந்திருக்கிறதென்பது நதி களின் போக்கை அவதானிக்கும்போது புலனாகின்றது. இச் சமவெளியின் தென்மேற்குக் கரையில் உயரங்குறைந்த பாறைத் தொடர்கள் காணப்படுகின்றன.
வட தாழ்நிலத்திலுள்ள பாறைத்தொடர்களின் அமைப்பு ஏனைய இரு தாழ்நிலங்களிலும் வேறுபாடானது. மாத்தளை மலை களிலிருந்து விசிறிபோலப் பாறைத்தொடர்கள் வடமேற்கு நோக்கியும் வட கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன; இப்பாறைத் தொடர்களின் சில பகுதிகள் மண்ணுள் புதையுண்டு கிடக்க, வெளித் தெரியும் பகுதிகள் தாழ்பாறைத் தொடர்களாகக் காட்சி தருகின்றன. இப்பாறைத்தொடர்களுக்கு இடையிலே நதிகள் பாய்கின்றன; இந்நதிகள் கடலையடையத் திரும்பும்போது, இப் பாறைத்தொடர்களைத் துண்டித்துத் திரும்பிப் பாய்கின்றன; மகாவலிகங்கை, அருவியாறு என்பன இவ்வாறே பாய்கின்றன.
வட தாழ்நிலத்தில் செம்மண்ணும் சாம்பல்நிற ஈரக்களி மண்ணும், செம் பூரானல்லாத ஈரக்களிமண்ணும், நதிகளை
அடுத்து வண்டல் மண்ணும் காணப்படுகின்றன.
5. கரையோரத் தாழ்நிலவலயம் இலங்கையின் கரையோரத் தாழ்நிலவலயம் என, 100 அடி சமவுயரக்கோட்டிற்கு உட்பட்ட பகுதியைக் குறிக்கலாம்; இக் கரையோரத் தாழ்நிலவலயம் சராசரி 20 மைல்கள் அகலமான தாய் இலங்கையின் கரையோரத்தில், ஒடுங்கிய ஒரு வலயமாக வுள்ளது. இவை அண்மைக்காலப் படி வுகளைக் கொண்டிருக் கின்றன. நதிகளினாலும் கடலினாலும் சேர்க்கப்பட்ட படிவுகள் கரையோரங்களிலுள்ளன. மயோசீன்காலப் படிவுகளை வடமேற் குப் புறத்திலுள்ள சுண்ணக்கல் பிரதிபலிக்கின்றது. தென்மேல் கரையோரத்தில் வெண்களியும், வடகிழக்குக் கரையோரத்தில் படிகமணலும் புல்மோட்டை, திருக்கோயில் பகுதிகளில் இல்
குப் புறத்திலுள்ள வெண்களியும், வால் பகுதிகளில் இ®

இலங்கையின் புவிச்சரிதவியல்
79
மனைட்டும் படிந்து காணப்படுகின்றன. பொதுவாக இக் கரை யோர வலயம் கடனீரேரிகளையும் (lagoons)} மணற்றிட்டுகளை யும் (dunes) கொண்டிருக்கின்றன.
புத்தளத்திலிருந்து வடபுறக் கரையோரமாக அம்பாந் தோட்டைவரை கடனீனேரிகள் காணப்படுகின்றன. கற்பிட்டிக் கடனீரேரி. வடபுறமாக நீண்டமைந்த மணற்றிட்டினால் உரு வாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணக் கடனீரேரி, யாழ்ப்பா ணக் குடாநாட்டைத் தனித்ததோர் பிரிவாகப் பிரிக்கின்றது. முல்லைத்தீவுக் கடனீரேரி, கொக்கிளாய்க்கடனீரேரி, மட்டக்களப் புக் கடனீரேரி என்பன குறிப்பிடத்தக்கன. இக்கடனீரேரிகளில் நதிகள் பல கிளைகளாகப் பிரிந்து கலந்து படிதல்களைச் செய் கின்றன. நதிகளை அடுத்து வண்டல் மண்ணும், ஏனைய பகுதி களில் கரையோர மணலும் படிந்து காணப்படுகின்றன.
கரையோரத்திலிருந்து கடலினுள் ஏறத்தாழ 12 மைல்கள் அகலமான கண்டமேடை அமைந்துள்ளது. வடக்கே அகன்று தெற்கே ஒடுங்கிய இக் கண்டமேடையில் பல தீவுகள், பாறைத் தொடர்கள், பாறைத்தீவுகள் என்பன அமைந்துள்ளன. மன் னார்த் தீவையும் தனுஸ்கோடியையும் இணைத்து இராமர் அணை எனும் பாறைத்தொடருள்ளது; இதனை அடுத்து ஆங்காங்கே சிறுசிறு பாறைத்தீவுகள் தலைநீட்டுகின்றன. கொழும்பிலிருந்து தென்புறமாக மட்டக்களப்புவரை முருகைக்கற்பார் வெளி யரும்புகள் காணப்படுகின்றன. மாணிக்ககங்கை ஆற்றுமுகத் தில் பெரிய பாசு, சின்னப்பாசு எனும் இரு பாறைத்தீவுகள் உள்ளன; இவற்றை இராவணன் பாறைகள் என்றும் கூறுவர்,

Page 48
“2”,
| UMum,


Page 49


Page 50
300E80


Page 51
GEOLOGY
OF CEYLON
K. KUNARASAH, B. A.
Sri Lanka riny

- Hons. (Cey.)