கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2013.10

Page 1
பிரதம ஆசிரி
கடு : 512
கலை இலக்கிய மாத
ஐப்பசி - 208

பர் 8 க.பரணீதரன்
சாகித்ய ரத்னா விருது பெறும் எழுத்தாளர் தெணியான்
ரிதுபர்ணோ கோஷின் “றெயின் கோட்?
தென் பிரதேச தமிழ் புனைக்கதைகள்
சஞ்சிகை
'தெணியானின்
ஆக்கங்களும் மார்க்சிய அழகியலும்
80/=

Page 2


Page 3
கட்டுரை
தென் பிரதேச தமிழ்ப் புனை கதைகள் திக்குவல்லைகமால்
தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்கள்... மா.செல்வதாஸ்
ரிதுபர்வேணா கோஷின் 'றெயின் கோட்'
அ.யேசுராசா
தெரியானின் ஆக்கங்களும் மார்க்சிய .
பேராசிரியர் சபா.ஜெயராசா
சொல்ல வேண்டிய கதைகள் - 09 (தொடர் முருகபூபதி
ஒரு வானம்பாடியின் கதை - 19 (தொடர்) அந்தனி ஜீவா
பேசும் இதயங்கள்
| ஏனையவை
க.பரணீதரன்

நதியினுள்ளே..
சிறுகதை
இ.இராஜேஷ்கண்ணன்
இ.சு.முரளிதரன்
கே.ஆர்.டேவிட் க.கோபாலபிள்ளை
ந.ஆதவன்
கவிதை
அழகியலும்
பத்மபிரஷன் வ.ஐ.ச.ஜெயபாலன்
ஆழியாள்
மீரா சிவகாமி நெடுந்தீவு மோகன்ராஜ் நெடுந்தீவு யோகேஸ் வன்னியூரான் ரமேஷ் வதிரி. சி. ரவீந்திரன்
விவாத மேடை
இ.சு.முரளிதரன்
அட்டைப்படம்
சு.பிரசாந்தன்

Page 4
ஜீவநத
2013 ஐப்பசி இதழ் - 61 பிரதம ஆசிரியர்
கலாமணி பரணீதரன்
துணை ஆசிரியர்கள்
வெற்றிவேல் துஷ்யந்தன் ப.விஷ்ணுவர்த்தினி
ஜீவநதியி
பதிப்பாசிரியர்
கலாநிதி த.கலாமணி
| பு | மய
தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு அல்வாய் இலங்கை.
இருமாத . ஆண்டுகள் ஒழுங்க மாற்றம் பெற்று - இதழ்களை நிரை ஆரவாரமின்றி, நி அறுபது இதழ்கன எமக்கு மகிழ்ச்சி ஆசிரியர் தலைய “ஜீவநதி”க்கு சந்த அவர்களுக்கு நன்றி
ஆலோசகர் குழு:
ஏழாவது திரு.தெணியான்
வேண்டிய மாற்றங் திரு.கி.நடராஜா
அவ்வகையில், வி
இ.சு.முரளீதரன் - தொலைபேசி : 0775991949
ஆரோக்கியமான 6 0212262225
அனுப்பலாம். தன
கருப்பொருள் குறி |E-mail : jeevanathy@yahoo.com
வகையில் ஆரோ
என்பது ஜீவநதியின் வங்கித் தொடர்புகள் K.Bharaneetharan
ஜீவநதி கு Commercial Bank
கின்றது. எழுத்தின் Nelliady
படைப்பாளியும் ஜீ. A/C - 8108021808 CCEYLKLY
இந்தவேன
ரான எழுத்தாளர் 6 இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து
கான “சாகித்ய ரத் ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை
பெரு மகிழ்ச்சி தரு எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள்.
அவர்கள், மேலும் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த
தொடர்வதற்கு இன ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர் -
02/ ஜீவநதி - இதழ் 61/ ஐ

ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி... புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
ன் வளர்ச்சிப்பாதையில் ...
இதழாக வெளிவரத் தொடங்கி, இரண்டு காகப் பயணித்து, அதன்பின் மாத இதழாக ஆறு வருடங்களில் மொத்தம் அறுபது றவு செய்துள்ளது, ஜீவநதி. எவ்வித தானமாக, ஒழுங்கு வரிசை தப்பாமல் >ள் வெளிக்கொணர்ந்தோம் என்பது தருவதே. ஆறாவது ஆண்டு மலரின் பங்கத்தை மதித்து, சில நண்பர்கள் நா சேர்க்க முயன்றிருக்கின்றார்கள்.
ஆண்டில் “ஜீவநதி”யில் மேற்கொள்ள பகள் குறித்து, சிந்தித்து வருகின்றோம். விவாதமேடை ஒன்றை இந்த இதழில் அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளார். எதிர்வினைகளை எழுத்தாளர்கள் எழுதி ரிமனிதத் தாக்குதல்களைத் தவிர்த்து, த்த சிந்தனைத் தெளிவை ஏற்படுத்தும் க்கியமாக விவாதம் தொடரவேண்டும் 7 எதிர்பார்ப்பாகும்.
கழுநிலை வாதத்தை முற்றாக நிராகரிக்
மீது விசுவாசம் கொண்ட எந்த ஒரு வந்திக்கு நண்பரே.
மளயில், ஜீவநதியின் பிரதான ஆலோசக தெணியான் அவர்களுக்கு இந்த ஆண்டுக் னா” என்ற விருது கிடைத்தமை எமக்கு தகின்றது. "சாகித்ய ரத்னா” தெணியான் சுகநலம் பெற்று, எழுத்துப் பணியைத் றஆசிவேண்டி ஜீவநதிபிரார்த்திக்கிறது.
- ஆசிரியர்
ப்பசி 2013

Page 5
தென் பிரதேச தமிழ்ப் புனைகள்
மலையகத் தமிழ் மக்களுக்கு
புனைகதைகள் உருவானதாகத் தென்னிலங்கைத் தமிழ் இலக்கியபெ
உலகின்றத்தின் இலக்கிய
ஒரு பிரதேசத்திலிருந்து வெளிவரும் இலக்கியங்கள் அனைத்தும் “பிரதேச இலக்கியம்” என்று வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்டதொரு பிரதேசத்தின் சூழல், அங்கு வாழ் மக்களின் கலாசாரக் கூறுகள், பேச்சு வழக்கு, வாழ்க்கை கோலங்கள் மட்டுமன்றி, குறிப்பாக அப்பிரதேசத்திற்கு மட்டுமே உரிய தனித்துவ அம்சங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் ஆக்க இலக்கியங்களே பிரதேச இலக்கியங்களாக அடையாளப்படுத்தப் படுகின்றன.
ஈழத்தின் பல பிரதேசங்களையும் சார்ந்த இவ்வாறான இலக்கியங்கள் தொகுத்து நோக்கப்படும் போது பொதுச் செல்நெறியைக் கண்டு கொள்ள முடியும். இங்கு எழும் முக்கிய பிரச்சினை சில பிரதேசம் சார் இலக்கியங்கள் பற்றிய சரியான ஆய்வும், பதிவும் காணப் படாமையே. அவ்வாறானதொரு பிரதேசமாக தென்னிலங்கை அமைகிறது. மரீனா இல்யாஸ் எழுதிய "தென்னிலங்கை முஸ்லிம் களின் தமிழ்ச் சிறுகதைகள் - ஓர் ஆய்வு” நூலையும், எம்.எச்.எம்.ஷம்ஸின் சில கட்டுரை களையும் தவிர்த்தால் தென்னிலங்கை தொடர்பான எந்த மதிப்பீடுகளும் இல்லை.
தென்னிலங்கையென்று இங்கு குறிப்
03/ ஜீவநதி - இ

தைகள்
திக்குவல்லை கமால்
ள்ளிருந்து இது காலவரையில் : தெரியவில்லை. மொத்தத்தில் மன்பது முஸ்லிம்களின் இலக்கியமே.
பிடும் போது அது நிர்வாக ரீதியான அல்லது புவியியல் ரீதியான தென்னிலங்கையைக் குறிக்கவில்லை. பேராசிரியர் கா.சிவத் தம்பியின் பகுப்பிற்கமைய களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியே இந்த இலக்கியத் தென்னிலங்கையாகும்.
இப்பிரதேசத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் மலையகத் தமிழர்களும், பரவ லாகத் தனித்தனிக் கிராமங்களில் முஸ்லிம் களும் வாழ்ந்து வருகின்றனர். எவ்வாறா யினும் மொத்த தமிழ்பேசும் மக்கள் பத்து வீதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.
மலையகத் தமிழ் மக்களுக்குள் ளிருந்து இது காலவரையில் புனைகதைகள் உருவானதாகத் தெரியவில்லை. மொத்தத் தில் தென்னிலங்கைத் தமிழ் இலக்கிய மென்பது முஸ்லிம்களின் இலக்கியமே.
சுதந்திரத்திற்கு முன்பு சமயம் சார்ந்த செய்யுள் இலக்கியமே இங்கு மேலோங்கி யிருந்தது. ஐம்பதுகளில் சமூகப்பிரச்சினைகளை கவிதை மூலம் ஆக்க இலக்கியத்திற்குள் கொண்டு வந்தவர் மாத்தறைகாஸிம்புலவரே.
அறுபதுகளிலிருந்து சிறுகதை எழுத்து மெல்ல மெல்லத் தீவிரமடைந்தது.
கழ் 61 / ஐப்பசி 2013

Page 6
முன்னைய செய்யுள்களைப் போல கதை களும் இஸ்லாமிய இலக்கியக் கதைகளாக அமைய வேண்டுமென்பது ஒரு சாராரின் கருத்தாக அமைந்திருந்தது. அதற்கு அந்நாட் களில் வெளிவந்த இந்திய இஸ்லாமிய சஞ்சிகைகளான பிறை, மணிவிளக்கு, முஸ்லிம் முரசு போன்ற சஞ்சிகைகளில் இடம்பெறும் சிறுகதைகளை ஆதர்ஷமாகக் காட்டவும் முனைந்தனர். எனினும் பிரசுரகளம் அதற்கு சாதகமாக இருக்கவில்லை.
- வாசிப்பதற்கு தென்னிந்திய பொழுது போக்கு, சினிமாச் சஞ்சிகைகள், இஸ்லாமிய சஞ்சிகைகள் கிட்டிய போதும் அவை பிரசுர களங்களாக அமையவில்லை. இலங்கைத் தேசிய பத்திரிகைகளும் ஒரு சில சஞ்சிகை களுமே பிரசுரகளங்களாக அமைந்தன. இதனால் பல்வேறு நோக்கிலும், போக்கிலும் புனைகதைகள் எழுதப்படலாயின. சமயம் சார்ந்ததாக, எவ்வித இலக்கும் அற்றவையாக, இணக்கப்பாடு கொண்டதாக, எதிர்ப்புணர்வு கொண் டவையாக அவற் றை வகைப் படுத்தலாம்.
- முதல் மூன்று போக்குகள் பற்றி பேசப் பட்ட போதும் அதுபற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எதிர்ப்பிலக்கியப் புனைவுகள் சமூகத்தில் கடும் வாதப்பிரதி வாதங்களை ஏற்படுத்தின. சில கால கட்டங் களில் எதிர்ப்பிலக்கியவாதிகள் மீது நேர்முக, மறைமுக வன்முறைகள் கூட பிரயோகிக்கப் பட்டதுண்டு. எம்.எச்.எம்.சம்ஸின் "கிராமத்துக் கனவுகள்” நாவல் வெளிவந்த போது எதிர் பலை உச்சகட்டத்தைத் தொட்டு நின்றது.
இத்தனைக்கும் அதன் மையக் கருத் திற்கோ அது வெளிப்படுத்தும் செய்திக்கோ சம்பந்தமில்லாத, ஒரு சில சம்பவங்களையும் வசனங்களையும் பிடித்துக் கொண்டு எதிர்ப்பு நடாத்த சனாதனவாதிகளும் வங்கிசக்காரரும்
கைகோர்த்துக் கொண்டனர்.
இருந்தும் என்ன, ஒரு நூற்றாண்டு கால தென் பிராந்திய மக்களின் வாழ்வையும் இருப் பையும் பேசுகின்ற படைப் பாக "கிராமத்துக் கனவுகள்” இன்று சிலாகிக்கப் படுகின்றது.
எவ் வாறு இந்த எதிர்ப்பிலக்கிய சாதகபாதக நிலை தோன்றியதென்பதை விளங்கிக்கொள்வதற்கு, சமூக கட்டமைப்பு
04/ ஜீவநதி - இத

பற்றி முதலில் தெரிந்து கொள்வது முக்கியம்.
- பெரும் பான்மை சமூகத்திற்கு மத்தியில் சின்னச்சின்னக் கிராமங்களாகவே முஸ்லிம் ஊர்கள் காணப்பட்டன. சகல மக்களும் பள்ளிவாசல் (மசூதி) நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டிருந்தனர். இப்பள்ளிவாசல்களில் நிர்வாக சபையொன்றுண்டு. இந்த நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் செல்வந்தர்கள், சொத்துடைமையாளர் தரப்பிலிருந்தே தெரிவு செய்யப்பட்டனர். பள்ளிவாசல் நடத்துகைக் கான நடைமுறைச் செலவு, ஊழியர் சம்பளம் போன்றவற்றையும் அவர்களே பகிர்ந்து கொண்டனர்.
இவர்கள் மதம், அரசியல், காவல் துறை சார்ந்தவர்களோடும் தொடர்புபட்டி ருந்தனர். பாடசாலை, சனசமூகநிலையம் போன்றவற்றிலும் அவர்களே முக்கியத்துவம் பெற்றனர். மேல் வர்க்கம் சார்ந்ததாகவே அவர் களது கருத்தியல், நட வடிக்கை, தீர்மானம் அனைத்தும் அமைந்திருந்தன.
- கல் லாமையும் இல் லாமையும் மத்தியதர கீழ் வர்க்க மக்களிடையே தாண்டவமாடியது. அதிகாரம், அடக்குமுறை, பெண்ணடிமை, சுரண்டல், உரிமை மறுப்பு... இப்படி அனைத்து கொடுமைகளும் அவர் களுக்குள் ஊடுருவின.
" இறைவன் தான் விரும்பியவர் களு க் கு மட் டு மே கொடுக் கிறான . வறுமையைப் பொறுமை மூலம் வெற்றி கொள்ள வேண்டும்.” இப்படியெல்லாம் கூலி மதவாதிகள் போதனை செய்தனர்.
- இந்நிலையில் சுயமொழிக் கல்வி, உள்ளூர் ஆசிரியர்களின் சேவை, தேசிய அரசியல் விழிப்புணர்வு போன்ற ஏதுக்களால், படித்தவர்கள் மத்தியில் சமூகநலச் சிந்தனை மேற்கிளம்பியது. மத்திய தரவர்க்கத்திலிருந்து தோன்றிய ஆசிரியர்கள் இதில் முனைப்பாக ஈடுபட்டனர். இதற்குள் இலக்கியச் சிந்தனை வயப் பட்டவர் களும் எழுத்தாளர்களும் ஒருமித்திருந்தனர்.
வாசிகசாலைகள் உருவாகின. அங்கு தேசிய சர்வதேச இலக்கியங்கள் பற்றிய வாசிப்பும் விவாதிப்பும் இடம்பெறலாயின. கலை, இலக்கிய அமைப்புக்கள் உருவாகின. சமூக விடுதலைக்கான மாக்ஸிய சித்தாந்தம் பற்றிய விவாதிப்புகள் நிகழ்ந்தன. அதனை
ழ் 6/ ஐப்பசி 2013

Page 7
ஒட்டிய இஸ்லாமிய மூலாதாரத் தேடல் இ  ெப ற ற து . இ ந ந ட வ டி க'  ைக க ள ம் இலக்கியவாதிகளின் சிந்தனையும் பார்வை கூர்மையடைந்து, பேனாவை சரியான திசை பயன் படுத்த வேண் டியதன் அவசியத் தெளிவாக விளங்கிக் கொண்டனர்.
அதிர்ஷ்டவசமாக 1965-1970கள் “இன்ஸான்” என்ற வாரப்பத்திரிகை வெளி வந்த அதில் மேற் சொன்ன சமூகக் கட்டமைப் கடுமையாக விமர்சிக்கும் விதமான சிறுகதை பரவலாக எழுதப்பட்டன. இதனால் திக்குமுக்கா போன, மேலாதிக்க வாதிகளும் அவர்க:ை சார்ந்த மார்க்க போதகர்களும் அதிர்ந்து போயி அதற்கு எதிர்வினையாக அவர்கள் மேற்கொல கீழ்த்தரமான நடவடிக்கைகள் ஆங்காங் பதிவாகியுள்ளன.
இவ் வெழுத்தாளர்கள் தவறாது : பணியை முன் னெ டுத்தனர். சமத் து வ சகோதரத்துவம், மனிதநேயம், சகவாழ் உழைப்பு, ஒற்றுமை, பெண் விடுதலை, மா உரிமை போன்றவற்றை வெளிப்படுத்தி, த புனைவுகளை முன்வைத்தனர்.
எழுபதுகளிலிருந்து “மல்லிகை” ! தேசியப் பத்திரிகைகளும் மேற் சொன எழுத்துக்களை தென்பிராந்திய மண்வாசல் யோடு வெளிவர உதவின. ஊக்கமூட்டி அத்தகைய போக்கின் தொடர்ச்சியான எழு தாளர்களே இன்று தலை நிமிர்ந்து வள துள் ளனர். ஏனைய போக்குகள் இருந்து இல்லாதநிலை.
தென்பிரதேசத்தின் சிறப்பான போக்கி அடையாளமாக எம்.எச்.எம்.சம்ஸின் கிராமத் கனவுகள் ” (நாவல் ), மொயின் சமீம் "புண்ணியத்தின் பாதுகாவலர்கள்” (சிறுகதைகள் திக்குவல்லைக்கமாலின் “ஒளிபரவுகிறது” (நாவ ஸனீராகாலிதினின் “ஒரு தீபம் தீயாகிறது” (நாவ போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.
மொத்தத்தில் சமூக மாற்றத்தை மு னெடுக்கும் சர்வதேச ரீதியான கருத்தியல்கள் இஸ்லாமிய மத பண்பாட்டுக்குள்ளிருந்து வெ படுத்தி, தேசிய தமிழ் இலக்கியச் செல்நெறியே கை கோர்த் துக் கொள் ளும் போகக் ை தென்னிலங்கைத் தமிழ்புனைகதை இலக்கிய வெளிப்படுத்துகிறதென்பது மிகத் தெளிவா உண்மையாகும். •
போன்றது மாத்தத்தில் ரீதியாக
05/ ஜீவநதி - இத

டம் Tல
எங்கள் வானம்
"யும்
யில் தை
அன்றைய பொழுதுகள் மறக்க முடியாத பதிவுகளாகியிருந்தன.
சில தது.
பை கள் சடிப் ளச்
அக்கினிப்பறவைகளின் வருகை..... அவை பீய்ச்சிய பல்லுலோக எச்சங்கள் ..... புகை படிந்த வானம். தீப்பிடித்த நிமிடங்கள்... அனைத்துமே ! எம் வரலாற்றுத் துளிகளில்
ஸ்தம்பித்துப் போயின
னர். ன்ட
கே
தம்
| / கப்பல் பாம்பு
இப்போதெல்லாம் அவை வருவதில்லை வருகைக்கான தேவையுமில்லை
ம் , வு, னித
06 •3 3 3 •8 & A 65
மது
யும் *ன
ஏனெனில் எங்கள் தேசம் கருகிவிட்டது எங்கள் பீனிக்ஸ் குஞ்சுகள் அக்கினிப் பறவைகளின் உதரங்களில் செமித்துப் போய்விட்டன
னெ
ன.
ர்ந்
தும்
ற்கு
துக்
ன
இன்னும் என்ன இருக்கிறது இங்கு துளிர்க்கும் பயிர்கள் கருமையாகின்றன.
மரங்களின் வெடிப்புக்களில் ஊனம் வடிந்து பிசின்களாகிறது...
செடிகளில் பிணங்கள் பூக்கின்றன... மகரந்தப் பொடிகளிலும் பிணவாடை... வண்டுகள் மூர்சையாகின்றன....
ள்), லி),
கல்)
மன் ளெ ளிப்
ாடு
இப்போதெல்லாம்
அக்கினிப்பறவைகள் வருவதில்லை ஆனாலும் வானம் தீப்பிடிக்கிறது
க, பம் என
- பத்மபிரஷன் (திருகோணமலை)
அன்றைய பொழுதுகள் எம் விழித்திரைகளில் உறைந்து போயிருக்கின்றன.
தழ் 61/ ஐப்பசி 2013

Page 8
2ஒரு புள்ளியாகச் சுருங்கிப்போனார் பரத்த ஊர்வலங்கள் எதுவும் இதுவரை அவரை இப்படிச் தில்லை; இதயத்தில் கனமேற்றியதில்லை. எத்தல் ஊர்வலங்களில் பறை ஒலியைக் கிழித்துக் சர்வஜனங்களின் காதுகளைத் திழைக்க வை அவர் பாடிய திருவாசக வரிகள். எத்தனை தரும் அவர்களின் பாடல்களை கேட்டிருக்கின்றேன்.
- தன் குரலோடு ஓங்கி ஒலித்த சோடிக் குரல் மாகிப்போன இழப்பின் வலி ஒரு புறம். தன் ந வாழ்வின் இறுதி நாள் குறித்த ஆசையை நிறை முடியாத ஏமாற்றம் - ஏக்கம் -மறுபுறம்.
காலம் ஒருவனது வாழ்வின் கனவுகளை எப்படி புரட்டிப் போட்டு விடுகின்றது? -
காதுகளைச் செவிடாக்கி இதயத்தின் ச அதிரவைக்கும் “பாண்ட்” ஒலியின் கொடூரம். ஊதித்தள்ளும் ஊமைக் குழல்களின் அபசுரம். ( தாரை தாரையாக வெடித்துச் சிதறிடும் "சீனா முன்னே ஒரு வாகனத்திலிருந்து கிளம்பிப் பரவும் ஓல ஒலி. ஊர் வலத்தின் அந்தலையில் போத்தல்கள் சுமந்துவரும் வாகனத்தின் க இரைச்சல். இவற்றின் நடுவே தன்னையே ! கொண்டு நகரமுடியாது முனகிச் செல்லும் அந் சேவைக்கான "வாகனம்” ஒன்று; இவை 4 பாதிப்புமின்றி உறங்கிக் கொண்டிருக்கும் முகத்தார்
பாடகனின் ரெ
“முகத்தானுக்கு முன்னம் நான் போய்ச் சேர்ந்திருக்கலாம். அவனுக்கென்ன கவலை. அறுவானின்ரை ஆசையெல்லாம் அலங் கோலமாப் போச்சுது. ஒரு பிள்ளை தன்னிலும் அவன்ரை ஆத்துமாவை புரியாமல் வளர்ந்து துலைச்சிட்டுதுகள். அதை நினைக்கத்தான்...
பரத்தாரின் மனம் நிலைகொள்ளவில்லை. தன்னுடைய நண்பனின் வாழ்வு அர்த்தமிழந்து விட்டதாக உணர்ந்து வேதனைப் பட்டுக் கொண்டார். ஊர்வலத்தில் வரும் மனிதர்க ளெல்லாம் இப்போது தசை எலும்புகள் கொண்ட மரங்களாகவே அவருக்குத் தெரிந்தனர்.
| “இந்த ஊரின்ரை பெரிய மனிசரெண்டு வெள்ளையுஞ் சொள்ளையுமாத் திரியிற ஒரு தனெண்டாலும் கதைச்சாங்களே. எனக்குச் சப்போட்டா கதைக்க வேண்டாம். அவன் பாவம்
06/ ஜீவநதி - இத

டார். மரண 5 கருக்கிய னை மரண கொண்டு ந்திருக்கும் ணங்களில்
• மெளன நண்பனின் வேற்றிவிட
த்தூக்கிப்
சவர்களை
அவர்கள் முகப்பிலே வெடிகள்”. > “சனாய்” சோடாப் கர்ண கடூர தனித்துக் திய கால எவற்றின்
ரணம்
" இ.இராஜேஸ்கண்ணன்
செத் துக் கிடக்கிற முகத் தானின ரை விருப்பத்தை மனசிலை வைச்சாதல்...'
பரத்தாரும் முகத்தாரும் “இரட்டையர்கள்”. நட்பினால் மாத்திரமன்றி பாடும் தொழிலி னாலும் தான். இந்த இரட்டையர்களுக்கு இவர் களின் சொந்த ஊரில் மட்டுந்தான் தொடர்புகள் என்று நினைத்து விடக் கூடாது. பல ஊர்களி லிருந்தும் அவர்களைத் தேடி வருவார்கள். தங்களுடைய வீடுகளில் நிகழும் மரணச் சடங்குகள், அந்தியேட்டிக் கிரியைகளில் பாடுவதற்கு தூர இடங்களிலிருந்து “கார்” கொண்டு வந்து இவர்களை ஏற்றிச் செல்லு மளவிற்கு மிகுந்த பிரபலஸ்தர்கள்.
இவர்களில் முகத்தார் தான் முதன்மைப் பாட்டுக்காரன். பரத்தார் துணைப்பாட்டுக் காரன். சண்முகசுந்தரன் என்று முகத்தாரின்
ழ் ன/ ஐப்பசி 2013

Page 9
முழுப் பெயரைச் சொன்னால் யாருக்கும் அவரைத் தெரியாது. பரமலிங்கம் என்ற பரத்தாரின் பெயர் அவர்முகத்தாருடன் இணைந்து பாடத் தொடங்கிய பின் அவ்வாறு சுருக்கப்பட்டு விட்டது.
- பரத்தாருக்கு பிள்ளைகளில்லை. முகத் தாரின் பிள்ளைகள் நால்வரையும் தன்னுடைய பிள்ளைகளாகத்தான் நினைத்து வாழ்ந்தார். பிள்ளைகள் பிறந்ததிலிருந்து அவர்களின் துடக்குக் கழிவு, முடியெடுப்பு, காதுகுத்து, பிறந்த நாட்கள், சாமத்தியம், கலியாணம் எண்டு எல்லாத்திலும் “பரம் மாமா” பிரசன்னமாகி யிருப்பார். அப்படி ஒரு குடும்பப் பிணைப்பு. முகத் தாரின் கடைசி மகளின் திருமணத்தின் போது ஏற்பட்ட பணக் கஷ்டத்தினை போக்க பரத்தார் தன்னுடைய மனைவியின் தாலிக்கொடியை அடகு வைத்துக் கொடுக்குமளவிற்கு அவர்களின் உறவு. இது எனக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும்.
- பரத்தார் அந்திய கால சேவை வாகனத்தில் தனது வலது கையை பிடித்தவாறு காரின் கண்ணாடி வழியே முகத்தாரின் உடலைப் பார்த்தார். பரத்தாரின் கண் கள் உடைப் பெடுத்தன. அவர் விக்கி அழும் சத்தத்தினை “பாண்ட்” ஒலி ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
"என்ரை முகத்தான் .... என்ரை முகத் தான்... என்ன மாதிரிக் கிடக்கிறான். வேட்டி, சால்வை, நஷனல் எண்டு... ஒரு சங்கீத வித்து வான் மாதிரி.... அவனும் சங்கீத வித்துவான் தானே. பட்டம் இல்லாட்டி என்ன...? அவனும் சங்கீத வித்துவான் தான். ஆர் மறுப்பினம்?...
வாய் விட் டே சொல்லி அழுகின்றார் பரத்தார்.
முகத்தாருக்கு பாட்டு என்றால் உயிர். இளமைக்காலம் முதல் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இந்தியப் பாடகர்களின் பாடல்களால் ஆகர்ஷிக்கப் பட்டவர். நண்பர்கள் மத்தியில் அவர்களின் பாடல்களைப் பாடி களிப்பூட்டி வந்த அவர் பாடக ரான தருணம் மிகவும் உணர்வு பூர்வமானது.
"முகத்தான் என்ரை தாய்க்கு மூண்டு நாள் தொடர்ந்து பாடினவன்ரா... என்ரை தாயைத் தன்ரை தாயெண்டுதான் நினைச்சவன். அவன் பிரேதம் போகேக்கை, தொடர்ந்து பாடிக் கொண்டு வந்தவன்ரா... அது எங்களிலை அவன் வைச்ச அன்படா.. அவ்வளவு பாசம்... வாழ் நாளிலை மறவன்ரா” என்று பரத்தார் எனக்கு ஒரு
முறை சொன்னது இன்றும்ஞாபகமிருக்கிறது.
பரத்தாரின் தாய்க்கு அந்தியகாலத்து பாடல்கள் பாடியதிலிருந்துதான் முகத்தார்
07l ஜீவநதி - இ

பாடகரானார். முகத்தாருக்கு கண்களில் ஒரு செல்லவாக்கு. கவிஞர் கண்ணதாசன் போல் அகன்ற நெற்றி. சௌந்தராஜனைப் போலத் தான் காதுகளில் நீண்டு வளர்ந்த முடி. மீசை இல்லை. பாடும் தருணம் தவிர்த்து எப்போதும் வாய் நிறைந்த வெற்றிலை. பின்னோக்கி பகவதர் பாணியிலே சற்று நீள வளர்ந்த முடி. மாறுகரை வேட்டி. நஷனலை ஒத்த அரைக்கை சேட். நெற்றியில் இடம்வலமாய் இழுக்கப்பட்ட சந்தன ரேகையின் நடுவில் மெல்லிய.குங்கும் ரேகை. பாடும் தருணங்களில் அவரின் இடது கையில் வரும் ஒரு வித நளின அசைவு மறக்க முடியாதது.
ஊ ரறிந்த வரை அவர் யாரிட மும் சங்கீதத்தை முறைப்படி கற்றவரல்ல. அது கடவுளின் கொடை என்று பலரும் கூறிக் கொள்வர். அந்தியேட்டியில் சுண்ணப்பாடல் பாடுகின்ற தருணங்களில் ராகமாலிகை செய்யும் அவரின் பாணியை இரசிக்காதவர்கள் யாருமில்லை. பிரலாபப் பாடல்களைப் பாடும் தருணங்களில் வி.வி.வைரமுத்துவின் மயான காண்டம் மனத்திடை விரிந்து காட்சியாய் வரும்.
மரண ஊர் வலங்களில் முகத்தாரும் பரத்தாரும் ஓங்கி ஒலிக்கும் குரலில் மாறி மாறித் திருவாசகப் பாடல்களைப் பாடும் போது கூட இராகங்கள் பிசிறுவதில்லை. இறந்துபட்டவர் எத்தகையவராயினும் அவர்களின் பாடல் களால் புனித ஆன்மாக்களாக மாறிவிடுவார். இதுதான் அவர்களின் பாடலுக்கான அந்தஸ்து.
முகத்தார் மரணவீட்டில் பாடுபவர் என்ப தால் ஊரில் அவரை யாரும் நிராகரிக்கவில்லை. கோயில்களில் நடைபெறும் கிரியைகளில் கூட இவர் ஒரு ஓதுவார் தான். சங்கீதத்தில் தேர்ந்தவர்களோடு சமதையாக இருந்து தேவார திருவாசக புராணப்பாடல்களை முற்றோதுவார்.
"அறுவான் என்னை விட்டிட்டுப் போறான். நான் இனி என்ன செய்யப்போறன். குரலடங்கிப் போய் போறான். இனி எப்ப அவன்ரை பாட்டைக் கேக்கிறது. தான் வித்துவான் இல்லையெண் டாலும் மூண்டு பெட்டையளையும் சங்கீதத் திலை பட்டம் எடுக்க வைச்சிட்டான். மூத்த வளின்ரை பிரியன் கூட இந்தியா வரை புகழுள்ள சங்கீதக்காரன்... பொடியன் ஒரு ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பு வேலை செய்யிறவன். எல்லாம் இருந்தும் என்ன பிரியோசனம். அவன் ஏமாத்தத்தோடைதான் போறான்... நான் என்ன செய் ய... விட்டாங்களே விடாப் பிடியா நிக்கிறாங்கள்... “ஸ்ரேற்ரஸ்” வேணுமாம்... “ஸ் ரேற்ரஸ் ”..... இந்தக் கோதாரிதான் “ஸ்ரேற்ரஸ்” எண்டால்?...”
ழ் 67 ஐப்பசி 2013

Page 10
பரத்தார் கொதித்துக் கொண்டே சொன்னா கொதிப்பு உள்ளத்தில் எரிமலையாய்க் கனன்றது.
தந்தையின் நண்பன் என்பதைவிட ஒரு ஸ்தானத்தில் நடந்தவர் பரத்தார். அவரின நியாயமானதுதான். உள்ளூர் மேடைகளில் அவர் பாடிய தருணங்களில் ஒருவர் மாறி ஒருவர் “ஹா. மீட்டுவார்கள். மூத்தபெண்பிள்ளைகள் இரண்டு அழகான பாவாடை சட்டை போட்டு அரங்கிலே இ வைத்து அழகு பார்த்தார்கள். அப்படி அழகுபார் பிள்ளைகளின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் மு தாரோடு பரத்தாரும் இருந்தார்.
“மூத்த பெட்டையள் ரண்டுபேரும் உப்பிடிப் பேசுவாளள் எண்டு நான் கனவிலையும் நினைக் கேல்லை. இப்ப அவைக்கு வசதி, புகழ் வந்திட்டுது. அந்த நேரம் அவன் பாவி செத்தவீட்டிலை அந்தியேட்டிலை பாடி வாங்கின கொஞ்ச கொஞ்ச காசிலைதான் உவேன்ரை படிப்புகளை பா போட்டான். அவ்வளவு லட்சியம் அவனுக்கு. உது விலை பாடக் கூடாதாம்... அது தகப்பன்ரை கெடு வருவினமாம் தங்களை ஒரு மாதிரி நினைப்பினமாம்.
எல்லாவற்றையும் பழையது பழையது என்று தனமாக ஏற்பதாக பாசாங்கு செய்கின்ற ஒரு அரை முகத்தாரின் பிள்ளைகள் குறித்த பரத்தாரின் சினம்
அவமானப்பட்ட அந்தத் தருணம் நானாகவிரு மாட்டன். பரத்தார் பாவம் நண்பனின் பாசத்தில் கட்டு
முகத்தாரின் உடல் காரில் ஏற்றப்பட்டவேலை அறையத் தொடங்கினர். அந்தியகால சேவை உறவுகளின் கூக்குரலின் நடுவே “தொல்லையிரு. பரத்தார் குரலெடுத்து கண்ணீரோடு அழுதழுது பாட
"மாமா... நிற்பாட்டுங்கோ... உது வேண்டாம்.. “பாண்ட்” இருக்கு. பறைமேளம் கூட நாங்கள் பிட் உள்ளுக்கை கிரியை நடக்கேக்கை பாடினீங்கள் பாடலாம் நிப்பாட்டுங்கோ...”
- பரத்தார் இடிந்து போனார். அவமானம். ஏமாற்ற அவருக்கு.
“பிள்ளையள் இப்ப நான் காசுக்குப் பாட வைச்சிருக்கிறான். நான் முன்னஞ் செத்தால் தான் பாடவேணுமெண்டு நான் என்ன செய்ய...”
ஓங்கி அழுதுகொண்டே கேட்டார் பரத்தார். “நிற்பாட்டுங்கோ...” ஒரு சொல்லில் யாவும் முடிவானது.
அப்போது தலைகவிழ்ந்தவர் தான். காரின் க கொண்டு நடக்கின்றார்.
- இடுகாட்டின் வாயிலில் “பாண்ட்” நிசப்தமான கொள்ளிக்குடம் உடைத்துக் கொள்ளி வைத்தா கலைந்தனர். பிணம் சுடுபவர்கள் தயாராகின்ற கைகூப்பியபடி தன் நண்பனை வளர்த்தியிருந்த சின. மிக ஒடுங்கிய ஸ்தாயியில் கேட்கின்றன.
08/ ஜீவநதி - இத

. அவரின்
சித்தப்பன்
கொதிப்பு கள் இருவரும் ர்மோனியம்”
பேருக்கும் நத்திப் பாட த்த பெண் கத்
சத்தான். கஷ்ரப்பட்டு கூலிவேலை செய்து சாப்பாடு கள் எல்லாத்தையும் மறந்து போட்டுதுகள். தெரு பரவத்தை குறைச்சுப்போடுமாம்... வெளியாக்கள் ... அதுகள் பழைய முறையளாம்...”
நிராகரித்துவிட்டு புதியதைக் கூட புத்திசாலித் ரவேக்காட்டு நிலையின் பிரதிநிதிகளாக இருக்கும் வெளிப்பட்டது. ந்தால் இந்த இடத்திலை தொடர்ந்து நின்றிருக்க பண்டு தலைகவிழ்ந்து நடந்து கொண்டிருந்தார்.
ள சீன வெடிகள் சிதறின. "பாண்ட்” குழுவினர் வாகனம் மெதுவாய் உருளத் தொடங்கியது. ம் பிறவி சூழும் தலை நீக்கி அல்லல்...” என்று டத்தொடங்கினார்.
. கவலையெண்டால் அழுங்கோ. பாடவேண்டாம் டிக்கேல்லை. மரியாதையா போகட்டும் அப்பா... - தானே. வேணுமெண்டால் அந்தியேட்டிக்குப்
மம். தோல்வி. இவற்றில் எது இது..? புரியவில்லை
வரயில்லை. கொப்பன் எனக்குச் சொல்லி பாடுவன் எண்டும், தான் முன்னஞ் செத்தால் நான்
ண்ணாடி வழியே நண்பனைப் பார்த்துப் பார்த்துக்
எது சோடாப் போத்தல்கள் மூடிதிறக்கப்பட்டன. யிற்று. வந்தவர்களும் உறவுகளும் படிப்படியாய் னர். பரத்தார் இடுகாட்டு நிழல் மண்டபத்தில் தயை பார்த்தபடி இருக்கிறார். திருவாசக வரிகள்
இ61/ ஐப்பசி 2013

Page 11
மா.செல்வதாஸ்
தமிழ் திரைப்படப்
பேசும் !
வெளிப்படுத்துவது பா! விரும்புகின்ற வடிவு இப்பாடல்கள் சொல்ல சேர்த்து அளிக்கின்ற மக்களின் வாழ்வி காணப்படுகின்றன.
பிறந்தநாள் | என அனைத்து நிகழ் தொன்றாகவே காண படுகின்ற நாதசுரங்க கின்றன. எமது பிரே இடைவேளை நிகழ் அசைவுகளைக் காட செய்து எண்ணற்றோ தக்கது. தீவிர இலக்கி வரை சினிமாப்பாடல் பாடல்களை ஒளிபர கொண்டிருப்பதும், ப புத்தகங்களை வாங். சினிமாப்பாடல்கள் ம வெளிக்காட்டி நிற்கின
“Lyric” என் பிறந்ததாகவே கான இசைக்கருவியாகும். இசைத்துப் பாடப்பட்ட
As We Cry We S and ringing the s andyouinme...
இதுவே 230 முதல் இசைப்பாடல் ஆண்டு பழமை வாய் வலம் வரும் நாயன் காணப்படுகின்றனர். - உள்ளது.
09/ வீவநதி - இ

பாடலாசிரியர்கள்.
சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை -லாகும். இப்பாடல் வகைகளில் மக்கள் பெரிதும் பமாக திரைப்பாடல்கள் காணப்படுகின்றன. இன்பம், பொருளின்பத்தோடு இசை இன்பத்தையும் ன. இவ்வாறான திரையிசைப்பாடல்கள் தமிழ் பலோடு இரண்டறக்கலந்த நிலையிலேயே
நிகழ்வு, திருமண வைபவம், பூப்புனித நீராட்டு விழா தீவுகளிலும் சினிமாப்பாடல்கள் தவிர்க்க முடியாத ப்படுகின்றன. கோவில் திருவிழாக்களில் வாசிக்கப் ளின் நாதமாகவும் சினிமாப்பாடல்கள் காணப்படு தசப் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி -வுகளில் கூட திரையிசைப்பாடல்களுக்கு ஆடி ட்டி மகிழ்கின்றனர். சினிமாப்பாடல்களை ஆய்வு “கலாநிதிப்பட்டங்களைப் பெற்றிருப்பதும் நோக்கத் ய விமர்சகர்கள் தொடக்கம் பட்டிமன்ற பேச்சாளர் கள் பற்றிப் பேசுவது இயல்பாகிவிட்டது. சினிமாப் எப்பவென தனி அலைவரிசைகளே இயங்கிக் பாடல்களை கேட்டு மகிழ்வதும், சினிமாப்பாட்டுப் கிப் படிப்பதும், கைபேசிகளில் ஒலிக்கவிடுவதும் க்களிடையே பெற்றிருக்கின்ற பெறுமானத்தையே றது. ற சொல் Lyre என்ற கிரேக்க சொல்லிருந்து எப்படுகின்றது. Lyre என்பது ஓர் மேற்கத்தேய ஏழு நரம்புகளையுடைய இவ் இசைக்கருவியால் பாடலே lyric எனப்பாடலாயிற்று. ng entiment in you
வருடங்களுக்கு முன்பு கிரேக்கத்தில் பாடப்பட்ட என ஆய்வுகள் கூறுகின்றன. இற்றைக்கு 2000 ந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவத்தோடு மார்களும் ஆழ்வார்களும் பாடலாசிரியர்களாகவே இவர்களை கவிஞர்களாகப் பார்ப்பது அரிதாகவே
கழ் ன/ ஐப்பசி 2013

Page 12
தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடலாசிரியர்கள் காலாதிகாலம் உலா வந்த வண்ணமே உள்ளனர். அவர் களில் உயிர்த்துடிப்புள்ள பாடல் களைப் புனைந்த ஆளுமைமிக்க பாடாலாசிரியர்களைப் பற்றி நோக்குவ தாகவே இக்கட்டுரை அமையப் பெற்றது.
I. பாவநாசம் சிவன்
கர்நாடக சங்கீத உலகில் மாமேதை யாக மதிக்கப்படும் பாவநாசம் சிவன் சினிமாவுக் காக ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தஞ்சை மாவட்டம் “பொலகம்” என்ற ஊரில் 1890 இல் பிறந்த இவரது இயற்பெயர் ராமய்யா என் பதாகும். தஞ்சை மாவட்டத்திலுள்ள பாவநாசம் என்ற ஊருக்கு சென்ற பின் பாவநாசம் சிவன் என புனைபெயரிட்டுக் கொண்டார். 1934 இல் “சீதா கல்யாணம்” என்ற திரைப்படத்திற்கு முதற் பாடலை எழுதினார். சாஸ் திரியப் புலமையோடு இவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் பிரசித்தி குறையாமல் விளங்கு கின்றன. இரண்டாவது உழவில் குழைவுறும் மணி போல் எளிய நடைக்கு திரையிசையை இட்டுச் சென்றவர் இவரே. “நான் நடிக்க வேண்டு மானால் சிவன் எழுத வேண்டும்” என தியாகராஜ பாகவதர் நிபந்தனை போடுமளவுக்கு நட்சத்திர அந்தஸ்துப் பெற்றவர். தமிழ்ப் புலமையால் அந்தஸ்துப் பெறுவது அக்காலத்தில் சாத்தியப் பட்டிருக்கின்றது.
பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல்...
தாவ அத கேக்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே காலமும் செல்ல மடிந்திடுமோ..
(படம் - அசோக்குமார்) என்றவாறு மானிட ஜென்மம் பூமியில் வாழும் மடமற்ற வாழ்வியலைப் பதிவு செய்துள்ளார்.
மன்மத லீலையை வென்றார் உண்டோ...?
இப்பாடலின் ஒற்றை வரிக்கு நிகர்த்த பொருளை வேறொரு பாடல் பெற்றிருக்கிறதா? என்னுமளவுக்கு திரையிசையைப் பட்டி தொட்டி யெல்லாம் பிரபல்யப்படுத்தியவர் சிவனே.
நின் மதி வதனமும் நின்மதி வதனமும் - நீள் விழியும் கண்டு என் மதி மயங்கினேன் நான்.
(படம்-ஹரிதாஸ்)
10/ ஜீவநதி - இதழ்

என வர் சந்தங் கொண ட பாடலுாடே மக்கள் மனங்களில் சொந்தங் கொண்டாடியுள்ளார்.
தாயிற் சிறந்த கோவிலு மில்லை தந்தை சொல்மிக்க மந்திர மில்லை என்ற யதார்த்த வாழ்வியலை தனது பாடலுக்கூடாக அழகுற சித்திரித்துக் காட்டியுள்ளார் பாவ நாசம் சிவன். அன்னையும் தந்தையும் தானே பாரில் அண்ட சராசரம் கண் கண்ட தெய்வம் அன்னையும் தந்தையும் தானே
தாயுடன் தந்தையின் பாதம் - என்றும் தலை வணங்காதவன் நான் தவறாமல் கோவில் சென்று என்ன காண்பான் நந்த கோபாலன் வேண்டும் வரம் தருவானோ...?
பொன்னுடல் பொருள் பூமி பெண்டிர் புத்திரரும் புகழ் இத்தனை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏதோ...?
(படம் -ஹரிதாஸ்) அறியாமை இருளில் அகப் பட்ட சமூகத்தை இறைசிந்தனையின்பாற் கொண்டு சென்று வாழ்வில் ஏற்றம் பெற வைக்கும் முயற்சிகளையும் தனது பாடல்களுக்கூடாக மேற் கொண்டுள்ளார்.
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமணிய சாமி உனை மறந்து அந்தோ அற்ப பணப்பேய் பிடித்து அறிவிழந்து அர்ப்பர்களைப் புகழ்வார்
நாவால் பொய் மொழிவார் பொருள் விரும்பி நாவால் பொய் மொழிவார்
தனது வாழ்நாள் எல்லாம் உந்தன் நாமமதை ஒரு பொழுதும் பாவனை செய்தறியார்.
(படம் - சிவகவி) பெண் களின் அழகை சொற்களை லாவகமான முறையில் கையாண்டு வெளிப் படுத்தியுள்ளார்.
வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ
ஆரணம் போல் நீள் விழியோ மதுர கானமோ
> 61 / ஐப்பசி 2013

Page 13
மின்றும் முகமே கொடியிடையாள் அன்னமும் மடப்பிடி நடையாள் புன்னகை தவழ் பூங்கொடியாள் புவன சுந்தரியோ
(படம் - சிவகவி) இறைவனைப் பாடலுக்கூடாக அர்ச்சித் திருப்பது ஆன்மாவை தொடும் வகையிலே அமைந்துள்ளது.
தீன கருணாகரனே நடராஜா நீல கண்டனே
உன் அருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி அருளும்
4 இல் 888%%82-84
மெளன குருவே கரனெ எனையாண்ட நீல கண்டனே
(படம்- திருநீலகண்டர்) சாஸ்திரிய சங்கீத சாம்ராஜ்யத்தில் சக்கரவர்த்தியாகத் திகழும் பாவநாசம் சிவன் எண்ணற்ற பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கின்றார். காலம்கடந்தும் உயிர்ப்போடு உலாவுகின்ற பல பாடல்கள் அவரது புகழை வெளிப்படுத்தி நிற்கின்றன.
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ
(அசோக்குமார்) மனமே கணமும் மறவாதே
(சாவித்திரி) அம்மா மனங் கனிந்து
(சிவகவி) ராதே உனக்கு கோபம் ஆகாதடி
(சிந்தாமணி) போன்ற அற்புதமான சொற்படிமங் களை அகம் குளிருமாறு அள்ளி வீசியுள்ளார் தமிழ்த்திரையுலகம் உள்ளவரை அன்னாரின் புகழ் கமழும் என்பதில் யாதொரு ஐயமும் தேவையில்லை.
2.உடுமலை நாராயண கவி
தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் நாடக எழுத்தாளருமாகிய உடுமலை நாராயண கவி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை என்ற ஊரில் 1899 இல் பிறந்தார் இவரது இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும் 1933 இல் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி ஆரம்பித்த பின் நாராயணகவி என புனை பெயரிட்டுக் கொண்டார். "சந்திர மோகனா என் ற திரைப் படத்திற்கு முதற் பாடலை எழுதினார். தமிழ்த் திரைப்படத்தில் அறிவை! புகுத்தி மக்களை பண்பட வைத்து நல்6 செய்திகளை மட்டுமே பாடலுக்கூடாக எடுத்துக்
n/ ஜீவநதி - இ

உடுமலை நாராயண கவி,
கூறி உலகை உயர்த்தப்பாடுபட்டவர் நாராயண கவி இதனாலேயே “பகுத்தறிவுக் கவிராயர்” என மக்களால் அமைக்கப்படலானார்.
பகுத்தறிவுச் சிந்தனையைத் தனது பாடலுக்கூடாக வெளிப்படுத்திய பெருமை நாராயண கவியையே சாரும்.
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க பட்சமாயிருங்க பகிர்ந்துண்டு வாழுங்க பழக்கத்தை மாத்தாதீங்க.
(படம் - பராசக்தி) நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தும் வாழ்வில் சுதந்திரம் கிடைக்காமையினை தனது பாடல் வரிகளில் நாராயண கவி பதிவு செய்துள்ளார்.
சுதந்திரம் வந்ததுன்று சொல்லாதீங்க சொல்லி சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க
(படம் -மணமகள்) உலகில் என்னதான் மாற்றங்கள் ஏற் படினும் அனைத்து செயற்பாடுகளும் பணத்திற்குப் பின்னாலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை நாராயணகவி தனது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி குதம்பாய்
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்குப் பின்னாலே குதம்பாய்
(படம் - பராசக்தி) உலகமயமாதலை தனது பாடல்களின் கருவாக்கி கருத்துச் செறிவுள்ள பாடல்களை வழங்கியுள்ளார்.
தழ் 67 ஐப்பசி 2013

Page 14
மழை வரும் என்றே மந்திரம் ஜெபிச்சது அந்தக் காலம் அது அந்தக்காலம்
மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது இந்தக் காலம்
(படம் - நல்லதம்பி)
காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு - இப்போ ஊசியைப் போட்டா உண்டாகுமென்ற உண்மை தெரிஞ்சு போச்சு
(படம் - டாக்டர் சாவித்திரி) இந்தப் பூமியை புதிப்பித்துக் கொண்டி ருக்கின்ற விடயங்கள் இரண்டு, ஒன்று காதல் இன்னொன்று உழைப்பு. அந்தக்காதலையும் உழைப்பையும் தனது பாடல்களில் இனிமை ததும்ப அலங்கரித்துள்ளார் நாராயணகவி.
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
(படம்-மஞ்சள் மகிமை)
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது
(படம் - எங்கள் வீட்டு மகாலட்சுமி) அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம் அம்புலியின் மீது நான் அணி பெரும் ஓரங்கம்
இன்பம் தரும் தேன் நிலவு இதற்குண்டோ ஆனந்தம்
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்
(படம்-தெய்வப்பிறவி)
பொன்னாள் இதுபோலே வருமா இனிமேல்
முன்னாள் வந்தது எத்தனையோ நன்னாள் - ஆ ஆ.. முன்னாள் வந்தது எத்தனையோ நன்னாளதிலே நல்ல பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே
(படம் - பூம்புகார்) இவ்வாறான காலத்தால் அழியாத பல பாடல்களை தந்து சமஸ்கிருதச் சொல்லலங் காரநடையிலிருந்து தமிழ்த்திரையிசைப்பாடல் களை மீட்டெடுத்து மக்களிடையே காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை தனது பல பாடல்களின் கருவாக்கி சொல்லோவியமாக்கிய உடு மலை நாராண யகவியின் புகழ் உலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
12/ கீவநதி - இதழ்

3. தஞ்சை ராமையா தாஸ்
தமிழகக் கவிஞரும் தமிழ்த்திரைப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவு மாகிய தஞ்சை ராமையாதாஸ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1914 இல் பிறந்தார். தஞ்சையில்
பிறந்ததனால் தஞ்சை ராமையாதாஸ் என பெயரிட்டுக் கொண்டார். "வச்சேன்னா வச்சது Tான் பள்ளி” என்ற தனது முதல் பாடலை "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” எனும் திரைப்படத்திற்கு எழுதி தமிழ்த்திரையுல கிற்கு அறிமுகமானார். பாமரர்களும் இரசிக்கு மாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துக்களை எடுத்துக் கூறிய பெருமை ராமையா தாஸையே சாரும். இவரது பாட்டெழுதும் வேகத்தை கண்டு அதிசயித்த நடிகர் எம்.ஜி.ஆர் இவரை "எக்ஸ்பிரஸ் கவிஞர்” என்று அழைத்து மகிழ்ந்தார்.
காதலையும் வானத்து வெண்ணில வையும் பாடாத கவிஞர்கள் மண்ணிடையே யில்லை. ராமையாதாஸ் காதலை அழகிய ஓவியமொப்ப தனது பாடல்களுக்கூடாக காட்சிப்படுத்தியுள்ளார்.
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே வந்தே கனியமுதம் தந்தே மகிழ்ந்திடவே வா கலாப மயிலே
(படம் - காத்தவராயன்) சமயக் கருத்துக்களை முன்னிறுத்தி காதல் உணர்வுகளை அழகுற தனது பாடல் களில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ...?
ஏனோ ராதா இந்த பொறாமை..? யார் தான் அழகால் மயங்காதவரோ...?
BI / ஐப்பசி 2013

Page 15
புல்லாங்குழலிசை இனிமையினாலே உள்ளம் ஜில்லென துள்ளாதா...?
- III
ராகத்திலே அனுராக மேவினால் ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா...?
(படம் - மிஸ்ஸியம்மா) கண வன் மனை விக்கிடையிலான ஊடலை வெண்ணிலாவை அழைத்து வெளிப் படுத்தியுள்ளார்.
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே அகம்பாவம் கொண்ட சதியால்அறிவால் உயர்ந்திடும்பதி நான் சதிபதி விரோத மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
(படம்-மிஸ்ஸியம்மா) மக்களை ஏமாற்றி வாழ்வியல் நடத்தும் மாந்தரை முன்னிலைப்படுத்தி நாட்டு நடப்புக்குப் பொருத்தமான பல பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் வழங்கியுள்ளார்.
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடக்கிறார் சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளைஅடிக்கிறார்.
(படம்-மலைக்கள்ளன்) தமிழ்ப் பெண்மைக்கான பண்பாட்டுடன் தங்கை இல்லற இன்பம் காணவேண்டுமெனக் கருதும் அண்ணனின் அறிவுரைகளை அழகான பாடலொன்றில் தஞ்சை ராமையாதாஸ் வெளிப் படுத்தியுள்ளார். இன்றுவரை வானொலியில் ஜீவிதத்தோடு ஒலிக்கும் பழைய பாடல்களில் இதுவும்ஒன்றாகும்.
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே
நூல் அறிமுகம்
காலம்
“காலம்” சஞ்சிகையின் 42 4 வெளிவந்துள்ளது. சேரன், அபிரா, சி.மோகன் ஆகியே லஷ்மி மணிவண்ணன், சி.( "துப்பாக்கியும் கணையாழிய பற்றி கருணாவும், “பிரசா கலிஸ்தீனோ மிகுந்தனும் லிங்கம், உதயணன், மு. மணிவேலுப்பிள்ளை, கண். ஆகியோர் அலங்கரித்துள் “சீனுவா அச்சுபே” பற்றிய யுள்ளார். ஜெயமோகன், ந "பொடுபொடுத்த மழைத்து “கரமசோவைப் பின்தொட குறிப்பும் காலம் சஞ்சிகையி
13/ ஜீவநதி - இது

அரசன் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் - அம்மா அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும் மாமனாரை மாமியாரை மதிக்கணும் - உன்னை மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
மேலாண்மை இல்லாத சுதந்திரமான வேளாண்மைத் தொழில் பற்றி பல பாடல்கள் திரையிசையில் ஒலித்துள்ளன. விவசாயத்தின் பெருமையூடாக பன்முகக் கருத்துக்களை விதைத்துள்ளன.
நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதைவிதைக்கணும் நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும் பார் முழுவதும் மனிதகுலப் பண்புதனை விதைத்து பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து போர்முறையை கொண்டவர்க்கு நேர்முறையை விதைத்து...
(படம் - விவசாயி) என்றவாறாக கருத்து விளைச்சல் களை ஏற்படுத்தும் வீரியமான விதைகளை தூவி மானுடப் பயிர் வளர நற்பணி செய்துள்ளார்.
• மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ (குலேபகாவலி) 0 கல்யாண சமையல் சாதம் (மாஜாபஜார்)
• அழைக்காதே நினைக்காதே அவைதனிலே (மணாளனே மங்கையின் பாக்கியம்)
•வாங்க மச்சான் வாங்க (மதுரை வீரன்)
- போன்ற சிறப்பான பாடல்களை எழுதி தமிழ்த்திரையுலகினை மேம்படுத்தியுள்ளார் அர்த்த அடத்தி மிகுந்த பாடல்களின் தாயகமாக தஞ்சை ராமையதாஸ் திகழ்ந்துள்ளார். காலங் கள் பல கடந்த பின்பும் நினைவுகளில் இனிக்கும் ஒப்பற்ற பாடல்களை எழுதி தமிழர்களின் இதயத் தில் நீங்காத இடத்தினைப் பெற்று விட்டார்.
(தொடரும்)
ஆவது இதழ் தனக்கேயுரித்தான தனிச்சிறப்புகளுடன்
பா.அகிலன், நபீல், லீனா மணிமேகலை, தேவ சரின் கவிதைகளும்; ஷோபாசக்தி, தாமரைச்செல்வி, மோகன், ரஃபேல் ஆகியோரின் சிறுகதைகளுடனும் ம் புலம் பெயர் திரைப்பட வரலாற்றில் ஒரு மைக்கல்” என விதானகேயின் 'with you without you' பற்றி எழுதியிருக்கிறார்கள். கட்டுரைப்பகுதியை அ.முத்து புஷ்பராஜன், ஷாஜி, சச்சிதானந்தம் சுகிர்தராஜா, னன், வெங்கட் ரமணன், நக்கீரன், ஆனந்த பிரசாத் ளனர். நைஜீரியாவின் தலைசிறந்த எழுத்தாளர் அஞ்சலிக்குறிப்பை செல்வா கனகநாயகம் எழுதி எச்சில் நாடன் இயல்விருது சிறப்புப் பக்கங்களும், த்தல் கிழக்கிலங்கை நாட்டார் காதற்பாடல்கள்”, நம் போது” ஆகிய நூல்கள் பற்றிய விமர்சனக் ல் இடம்பெற்றுள்ளன. ழ் ன/ ஐப்பசி 2013

Page 16
ண்டான் ஏற்றப் பகு தி யில் ஒடட் டி யிரு ந த தில்லையரின்ர நோட்டீசுக்கு மேல ஆரோ கழிவோயில் ஊத்தின நியூசை அறிஞ்ச வுட னே தில லை யாரின ர மனிசிக்கு முகம் இருண டு போச்சு. "கிலுசு கெட்ட மூதேசியள்... என்ர மனிசன் உ து க ளு க் கு எ வ வ ள வு நல்லதைச் செய்தது? நன்றி கெட்டதுகள்.... சந்நிதியான் எல்லாத்தையும் பாத்துக் கொண்டுதான் இருக்கிறான். கோதாரி விழுந்ததுகளின் ர கைரண் டும் குறண்டித்தான் போகும்” எண்டு தில்லையரின்ர மனிசி அரிசிமா வறுத்துக் கொண் டிருந்த அன் னாக் காளிடம் திட்டித் தீர்த்திச்சு. சூத்திரதாரி ஆரெண்டு தில்லை யருக்குச் தெரிஞ்சிருக்கும். நாலஞ்சு நோட்டீசில கழிவோயி லால மீசையும் கீறி விட்டிருந்த நியூஸ்தான் தில்லையருக்கு கடுப் பை உண டாக் கினது. மனிசியின்ர கதையள் காதில தில்லைநாதன் வாங்காதவர் போல் கனத்த சொல்லாமல் எ  ெம ள ன த  ேதா டு ஏ  ேதா எண்டு முந்தியெ யோசிச்சுக்கொண்டிருந்தார். பேசினது எனக்கு
"பங்கர் தில்லைநாதன்”
கரணவ எண்டா தெரியாத ஆக்களே / தோட்டம் வைச் வ ட மராட் சியில இல ல. ) தில்லைநாதன். அந்தளவுக்கு ஆள் வலு பேமஸ். போற ரோட்டு ம இப்ப "பங்கர்” எண்ட அடை தெற்க போக 4 மொழியை ஒருத்தரும் தில்லை
சோளங்கனுக்கு நாதன் நிக்கேக்க சொல்லு இருக்கு. போயில் றேல்ல. "பங்கர்” எண்டு கூப்பிட்டா / சின்னக் சோலி மனிசனுக்கு பத்திக் கொண்டு வெளிக்கிட்டுடுவ வந்திடும். இண்டைக்கு வட சனத்துக்கு உதவ மராட் சி மதில் சிவருகள்
தில்லை எல்லாத் திலயும் மனிசனர் திரிஞ்சார். படிக். படந்தான் சிரிச்சுக்கொண்டு அப்பாவிப் பொ கும்பிட்டபடி நிக்குது. இந்தாள் மாறியிட்டார். வா எலக்சனில நிக் குமெண் டு யளுக்கு சமூகம் ஆராவது நினச்சுப் பார்த்கத்தின்ர சமூக. திரு ப் பின மே ? " ப ங் கா "எல்லாத்தையும் 1
14/ ஜீவநதி - இதழ்

கழிவோயில்
- இ.சு.முரளிதரன் -
ரின் வாழ்க்கையில ஒரு பகுதியையாவது ங்கட தேசத்து வரலாற்ற எழுதுறது வலு கஷ்டம்” பாருக்கா வாசிகசாலைக் கூட்டத்தில் விதானையார் 5 இப்பவும் நினைவிருக்கு. பாய் தெற்கு அந்திரான் பகுதியில போயிலத் சிருந்த காத்தியேசுவின்ர கடசிப் பொடியன் தான் குஞ்சர்கடைச் சந்தியில் இருந்து தெற்குப் பக்கம் ண்டானுக்குப் போகுது. குஞ்சர்கடைச் சந்தியால் சின்னச் சந்தையொண்டு வரும். அதக் கடந்து 5 போறதுக்கு முன்னுக்குத் தான் அந்திரான் க் காத்தியேசு நல்ல நேர்மையான மனிசன். ஊரில சுரட்டு எண்டாலும் தட்டிக்கேட்டு ஞாயம் சொல்ல ர். வாயை திறந்தா மனுநீதிச்சோழன் வம்சம் தான். புறதிலயும் ஆள் வலுவிண்ணன்.
யர் ஏ.எல் வரைக்கும் படிச்சிட்டு சும்மா சுத்தித் கிற காலத்தில் சப்பாணிக் கமலஹாசன் மாதிரி டியன். திடீரென்று "ஆளவந்தான்” ரேஞ்சில சிகசாலையில எட்டாம், ஒன்பதாம் வகுப்புப் பொடி க்கல்வி படிப்பிக்கத் தொடங்கினார். அரசாங் க்கல்வி புத்தகமே பிழை எண்டும் சிங்களவன் மாத்திப் பொய் பொய்யா எழுதி வைச்சிருக்கிறான்
2 67 ஐப்பசி 2013

Page 17
எண்டும் பொடியளுக்குச் சொல்லிக் குடுத்தார் எக்ஸாமில அவங்கட பொய்ய எழுதினாத்தாள் "புல் மாக்ஸ் ” போடுவாங்கள் எண்ண டு ப தெளிவுபடுத்த பொடியளுக்கும் அவரிட்ட படிக்கிறதில ஒரு இன்ரெஸ்ட் வந்திடுத்து.
தில்லை யரின் ர வித்தியாசமான சிந்தனையள் அந்த நேரத்தில எங்கட ஊருக்கை சரங்கட்டிக் கொண்டு திரிஞ்ச இயக்கப் பொ யளுக்கும் பிடிச்சுப் போச்சு. தில்லையரும் தன் "ரலி சைக்கிள்ல” இயக்கப் பொடியள ஏத்தி கொண்டு திரியத் தொடங்கிற்றார். அந்திரான சனங்கள் கனக்க கதையளச் சொல்ல காத்தியேசுவின்ர வயித்தில புளியக் கரைச்சு போட்டினம். மனிசன் நல்லாப் பயந்து போச்ச உடனடியாத் தில்லையரை கொழும்புக் அனுப்பிப் போட்டுது. சனத்தின்ர வாய் மட்டும் ஓயேல்ல. கொழும்பில் நடந்த பெரிய பெரிய விநோதங்களுக்கு எல்லாம் தில்லையரின், மாஸ்ரர் பிளான்தான் காரணமெண்டு கதைச்சு திரிஞ்சுதுகள். தில்லையர் வெளிநாட்டுக்கு போக ரை பண்ணி ரண்டு மூண்டு தரம் பெயிலியரா போச்சு. கொழும்பிலயும் தமிழ்ப்பொடிய பிடிக்கத் தொடங்கீற்றாங்கள். லொட்ஜ் காரரே மாட்டிவிட்டுட்டு பிறகு சனத்தட்ட காசை வாங்க "பெரிய இடத்தில்” குடுத்து எடுத்தும் விட்டாங்கள் லொட்ஜ் காரங்களுக்கு கொளுத்த வருமானப கிடைச்சுது. தேப்பனுக்கும் அறிவிக்காமல் ஒரு நாள் தில்லையர் ஊருக்கு வந்திட்டார்.
- தில்லையர் வலு கலாதியாய்த்தான ஊருக்கை வந்திறங்கினார். "கிளின் சேவ் எடுத்து, “ஸ்ரைலா” தலை இழுத்திருந்தார் “பேப்பர் மாட்டின் சேட் “டின் பொக்கற்றுக்குள் வைச்சிருந்த ஆயிரம் ரூபாத்தாள் “பளிச்” எண்டு தெரிஞ்சுது. தில்லையர் கொழுப்பால் வந்ததில் யிருந்து எல்லாச்சனமும் ஒரு வித மரியாதை யாகத்தான் நடந்தினம். பெரிசுகளும் எழும்! நிண்டு கதைக்க தில்லையருக்கு புல்லரிச்சு
போச்சு. மரியாதைக்கான காரணத்தைக் கண்டு பிடிச்சாப் பிறகு அடிக்கடி பொடியளின் காம்ப்புக்கு போய்வரத் தொடங்கிற்றார். அடத்த யான மீசையும் வளத்திட்டார். கார்த்தியே. அண்ணை எவ்வளவோ சொல்லிப் பாத்து. தில்லையர் எதையுமே காதில வாங்கேல்ல கடைசியில... என்னத்தையாவது செய்யட் மெண்டு காத்தியேசண்ணையும் விட்டுட்டார்.
- ஜெகன் மாஸ்ரர் தான் வடமராட்சியில் சனத்தைக் கொண்டு பங்கர் வெட்டுவிக்கி திட்டத்துக்கு பொறுப்பாய் இருந்தவர். அந்தாடு
15 கீவநதி - 6

5
- Lon
5)
தில் லையரைப் பற்றிக் கேள் விப் பட்டு சனத்தோட மூவ்பண்ண தில்லையர் தான் சரியெண்டு "பங்கர்” வெட்டுற பொறுப்பை தில்லையரிட்ட குடுத்திட்டார். விதானமாரைப் பிடிச்சு எல்லாத் தகவலையும் எடுத்து இருபது வயசில இருந்து நாப் பத்தைஞ்சு வயசு வரைக்குமான ஆம்பிளையளின்ர "லிஸ்ற்” தயாரிச்சு, அந்த மாதிரி ஒரு ரைம்ரேபிளும் போட்டு தில்லையர் வேலையத் தொடங்கினார். எங்கட பகுதி முழுக்க இயக்கத்துக்கு தேவை யான எல்லா இடத்திலயும் பங்கர் ரெடி! அந்த ரைமில பங்கர் தில்லைநாதன் எண்டு அவரைக் கூப்பிடுறதில எல்லாருக்கும்ஒரு "இது”.
"என்ர காணிக்கை ஜ.பி.கே.எஃப் பனை தரிச்சவன். சிறீலங்கா ஆமி பனை தரிச்சவன். இயக்கப் பொடியளும் பனை தரிச்சவங்கள். ஆனா என்ர காணிக்கை நான் பனை தரிக்க பொமிற் தரமாட்டியள்... நீயும் தில்லையனுந் தான் இப்ப எல்லாத்துக்கும் முதலாளிமார்” எண்டு விதானயாரை ஏசிய தவராசாவை பொடி யளட்ட போட்டுக் குடுத்து ரண்டு நாள் பங்கருக் குள் வைச்சதில இருந்து தில்லையரின்ர அடைமொழிக்கு அழுத்தம் கூடியிடுத்து.
1 ஆனையிறவு அடிபாட்டு ரைமில தில்லையரிட்ட இயக்கம் பெரிய பொறுப் பொண்டை குடுத்திச்சு. பெட்டியில வாற "பொடிய” உரிய ஆக்களிட்ட ஒப்படைச்சு, வீர வணக்கக் கூட்டம் நடத்தி, ஊர்வலம் ஒழுங்கு செஞ்சு எள்ளங்குளத்துக்கு கொண்டுபோய்ச் சேர்க்கோணும். ஆள் ரொம்ப "பிஸியாய்” இருந்தது அந்த நேரத்தில தான்! அப்பவும் பங்கர் தில்லைநாதன் எண்டுதான் கூப்பிட்டினம். பெட்டித் தில்லைநாதன் எண டு பேரை ஒருத்தரும் மாத்தேல்ல!
எங்கட ஊர் குச்சொழுங்கைகளில் கூட "கடம்பன் வீதி”, “வின்சன் வீதி” எண்டு பேர்ப்பலகை நட்டிருந்திச்சு. இண்டைக்கு அந்தப்பேருகள் ஆருக்கும் நினைவிருக்குமோ தெரியாது. சந்தை தொடங்கி கொஞ்சத் தூரத்துக்கு பூநாறிச்செடிகள், ஆமணக்கு, வெள் பாவட்டை, இலந்தைமரங்கள் எல்லாம், பத்தையாய் வளர்ந்து கிடந்திச்சு. அநாதரவான நாய்களும் குட்டிகளும் அதுக்கை தான் படுத் திருக்கும். இயக்கப் பொடியள் கொண்டாடு கின்ற அந்தந்த தினங்கள் வரேக்க தில்லையர் ஊரில் இருக்கிற இளம்பொடியளப் பிடிச்சு எல்லாத்தையும் "கிளின்” பண் ணி நிறக் கொடியள் எல்லாம் கட்டி விடுவார். இப்ப
தழ் 6 7 ஐப்பசி 2013

Page 18
செடியள வெட்ட ஆக்களில்லை. அடர்ந்து வளருது.
மண்டான் ஏற்றத்து ராசய்யா அண்ணை யின்ர மேனன் இயக்கத்துக்கு போன நாளில இருந்து தாய் மனிசி எத்தின தரம் மேனைப் பார்க்க “ரை” பண ணிச்சு. ஒவ் வொரு “காம்ப்பு”க்கும் முன்னால போய் நிண்டு கெஞ்சி, அழுதது. மூண்டு வரியமாய்க் காட்டவே இல்லை. பொடியன் ஆனையிறவு அட்ராக்கில முடிஞ்சுது. தில்லையர் தான் “பொடி”யக் கொண்டு போனவர் பெட்டி இழைக்கயிறு போட்டுக் கட்டியிருந்திச்சு. பெட்டியத் திறக்க விடேல்ல. தாய்க்காரி கேளாத கேள்வியெல்லாம் கேட்டு குழறி அழத் தொடங்கீற்றுது. ஆவேச மாய் பிரதப் பெட்டியில் தலையால் அடிச்சு அடிச்சு அழ. பெட்டி விரிசல் விழுந்திருக்க வேணும். புழுத்த மணம் கிளம்பிச்சு. செத்த வீட்டுக்கு வந்த சனங்களெல்லாம் மூக்கைப் பொத்திக் கொண்டு தள்ளிப் போய் நிண்டு அழுதினம். அத்தர், ஓடிக்கலன், சென்ற் எண்டு எல்லாத்தையும் தெளிச்சும் மணம் குறையேல்ல. பதறிப்போன தில்லையர் ஓடிப்போய் ராசய்யா அண்ணையைக் கட்டிப் பிடிச்சு பிலத்த சத்த மாய்க் குழறி அழத் தொடங்கிற்றார். தாய் மனிசியே திகைச்சுப் போய்ச்சு. செத்த வீட்டுக்கு வந்த சனங்கள் தாய் மனிசிக்கும், தில்லையருக்கும் எப்படி ஆறுதல் சொல்லுறது எண்டு தெரியாம உறைஞ்சு போய் நிற்க... தில்லையரோட வந்த பொடியள் நிலமையைத் தங் களுக் குச் சாதகமாக்கி ஒரு மாதிரிப் பெட்டியத் தூக்கி வாகனத்தில வைச்சு எள்ளங்குளத்துக்கு ஊர்வல மாய்க் கொண்டு போய்ச் சேர்த்திட்டினம். அந்த சம்பவத்திற்கு பிறகு பங்கர் தில்லைநாதனில "அண்ணமார்” வைச்சிருந்த மரியாதை ஒரு படி கூடீட்டுது எண்டு தான் சொல்ல வேணும்.
- தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் எண்டு பேப்பரில் ஒரு லிஸ்ற் வந்திச்சு. அதில தில்லைநாதன்ர பேரும் இருந்திச்சு. பெரிய பள்ளிக் கூடமொண்டு கிடைக்க... ஆளுக்கு மூண்டு ரியூசனும் அமைஞ்சிடுத்து. நெல்லியடி ரியூசனில “கிளாக்” வேலை செய்த விமலாவைத் தான் லவ் பண்ணிக் கட்டினவர். கலியாணத் துக்கு பிறகு கொஞ்சங் கொஞ்சமாய் இயக்கப் பொடியளோட தொடர்பை குறைச்சிட்டார். ஜெகன் மாஸ்ரரின்ற வீரமரணத்துக்கு பிறகு முழுசாய் ஒதுங்கிற்றார். காலப்போக்கில அண்ணமாரும் வன்னிக்கு போட்டாங்கள்.
இண்டைக்கு எங்கட வீட்டு மதில்
16/ ஜீவநதி - இதழ்

நோட்டீஸில சில கிளின்சேவோட தில்லையர் கும்பிட்டபடி நிக்கிறார். பாக்கிஸ்தான் தீவிர வாதியைப் பார்த்து விஜயகாந் பேசுற பாணியில வீரத்தைக் கிளறி உசுப்பேத்திற வசனங்களும் எழுதியிருக்கு. முந்தியொருநாள் இந்தாள் நடுங்கின நடுக்கத்தை நீங்கள் பாத்திருக்க வேணும். ஆளின ர ர த தை அப் ப
அறிஞ்சிருப்பீங்கள்.
- அண்டைக்குப் புதன் கிழமை. இரவிர வாய் நாயள் குலைச்சுக் கொண்டேயிருந்திச்சு. விடிஞ்சா “ரவுண்டப்” எண்டு விளங்கியிடுத்து. காலம் ஆறுமணிக்கு வீடுகளுக்கு வந்தவங்கள் ஒவ்வொரு வீட்டிலயும் தெரிஞ்செடுத்த சீவன் களிட்ட ஐ சி யை வாங்கிக் கொண் டு, வெற்றியாட்டுக் கோயிலடிக்குப் போகச் சொன்னார்கள். விறுவிறு எண்டு எல்லாரும் கோயிலடிக்கு போட்டம். குளத்தைச் சுத்தியும்.. வைரவருக்கு பக்கத்திலயும் எங்கள் இருத்தி விட்டாங்கள். பின்னேரம் அஞ்சுமணிமட்டும் அங்கதான்! தண்ணி, சாப்பாடு ஒண் டும் தரேல்ல. மத்தியானம் போல எங்கட ஊர்ப் பொடியள் தினைப்புலத்து தென்னை மரங்களில இருந்த இளனி. குரும்பை, தேங்காய் எல்லாத் தையும் பிடுங்கினதால கொஞ்சம் பசியாறினம். ஆலமரத்துக்கு கீழேயிருந்த தில்லையர், - பிள்ளையாரையும் வைரவரையும் மாறிமாறிப் பார்த்தார். கையெடுத்துக் கும்பிட்டார். கைகளில நடுக்கம் தெரிஞ்சுது. வாய்க்குள்ள ஏதேதோ வெல்லாம் முணுமுணுத்தார். தூரத்தில இருந்த தவராசா அடிக்கடி தில்லைரைப் பார்த்து பக்கத்தில இருந்த பரமநாதனுக்கு என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். பின்னேரம் அஞ்சு மணிபோல ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு ஐ.சியைத் திருப்பித் தந்தாங்கள். கோயிலைச் சுத்திக் கொண்டு வீட்டை போகச் சொல்லிஓடர் போட்டினம். மேற்குப் பக்க மூலையில் பவள் கவச வாகனமொண்டு நிண்டது. அதுக்குள்ள தலையாட்டி இருக்கிறதை ஊகிக்க முடிஞ்சது. தில்லையர் பயந்த மாதிரி எதுவுமே நடக்கேல்ல. பத்திரமாய் வீட்டை போய்ச் சேர்ந்திட்டார்.
- இண்டைக்கு தில்லையர் வடமராட்சி - மதிலுகளில் சிரிச்சுக் கொண்டு நிக்கிறார். அவர் சேர்ந்திருக்கிற கட்சிக்கும் அவரின்ர முந்தின வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தமெண்டு ஒருத் தருக்கும் விளங்கேல்ல. எங்களுக்கேன் தேவை யில்லாத கதை. இந்த "ரைம்” மண்டான் ஏற்றப் பகுதியில் கழிவோயிலால மீசை கீறின ஆள் - சவுக்காரம் போட்டு கையை நல்லாக் கழுவி - யிருக்கும். கழிவோயிலின்ர பிசுபிசுப்பு கையை விட்டுப்போயிருக்குமோ என்னவோ தெரியேல்ல,
61 / ஐப்பசி 2013

Page 19
கவர் சற்று தெள் சல் பற்றி 30.05 ரிதுப்
RAINCOAT
கோ கலை பின் உண ஏற்பு பற்றி நிர்ப் போ எனி
வே. கால கதை
ரிதுபர்ணோ கோஷின்
'றெயின் கோட்”
செல் போ பண. வருட வில்
ஆை அ.யேசுராசா
நண்! யும் 2 மலே
எதிர் ரிதுபர்ணோ கோஷ் நெறியாள்கை செய்த
மறக் Noukadubi (பழுதடைந்த படகு), றெயின் கோட் (மழை
ஆறு அங்கி) ஆகிய இரண்டு திரைப்படங்களைச் சில
என்ப தினங்களின் முன்னர் பார்த்தேன். முதலாவது,
ஆத! தாகூரின் கதையைக் கொண்டமைந்த
மலே வங்காள மொழிப் படம்; இரண்டாவது, ஓ| பெய் ஹென்றியின் 'The gift of the magi' என்ற கொ
ஆங்கிலக் கதையைத் தழுவிய ஹிந்தி |
வீட்பு மொழிப் படம். இரண்டுமே நன்றாக அழு உருவாக் கப் பட் டுள் ளன. காட்சிப் |
வீட்டு படுத்தல், பாத்திர உருவாக்கம், இசை, கூப்பு சீரான படத்தொகுப்பு என்பன இரண்டிலும் மதில் சிறப்புற அமைந்துள்ளன; நெறியாளரின்
அவ கலை மேதைமையை அவை வெளிக்
வெ6 காட்டுகின்றன. எனினும், றெயின் பொ கோட் என னை க கூடு தலாகக் I செய்
17l கீவநதி - இத

ந்தது. காரணம், மற்றப் படத்தில் கதைப்பின்னல் ச் சிக்கல்தன்மை கொண்டதாயுள்ளபோது, இது வும் கூர்மையும் கொண்டு, ஆழ்ந்த உணர்வுச் ரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இப்படம் ப மனப்பதிவைப் பகிர விரும்புகிறேன்; இது, 2013 இல், தனது 50 ஆவது வயதில் காலமான ர்ணோ கோஷிற்குரிய எனது அஞ்சலியுமாகும்!
கதையையும் வசனங்களையும் ரிதுபர்ணோ ஷ் எழுதி உள்ளார். நீண்டநேர உரையாடல் ரக் கொண்டுள்ளபோதும், ஒன்றுடனொன்று னிப் பிணைந்ததாய்க் கவித்துவம் நிறைந்த ர்வுபூர்வமான உரையாடல்கள், ஈர்ப்பினை டுத்துகின்றன. நிறைவேறாத காதலைப் பதே இப்படம். தம் இயலுமைக்கு மீறிய சூழலின் பந்தம் காரண மாக உறவுகள் உடைந்து வதில், மனிதர்கள் துயரில் நசிபடுகின்றனர்; றும், மாறாத நேசமும் பரஸ்பர அக்கறையும் றொரு சூழலில் வெளிப்படுகின்றன. நிகழ் த்திலும் கடந்த காலத்தின் நினைவுகளிலுமாகக் 5 நகர்த்திச் செல்லப்படுகின்றது.
- மனோஜ் பகல்பூரிலிருந்து கொல்கொத்தா 5கிறான்; சணல் ஆலை வேலை இல்லாது அதில், புதிய வியாபார முயற்சிக்கு நண்பர்களிடம் ம் திரட்டுவதே அவனது நோக்கம் ; ஆறு டங்களின் முன் மணம்புரிந்து, கொல்கொத்தா வாழும் தனது முன்னாள் காதலியைக் காணும் சயும், அவனிடம் இருக்கிறது. ஆலோக் என்ற பனுடன் தங்குகிறான்; ஆலோக்கின் மனைவி உதவியாக இருக்கிறாள். காதலியைச் சந்திக்கும் Tாஜின் விருப்பத்தை ஆலோக் கோபமாக த்தபோதும் (அவளை இழந்த துக்கத்தை நீ கவேண்டும் என்பதற்காகத்தானே, ஒரு படத்தை தடவைகள் நண்பர்களெல்லாம் பார்த்தோம் தை நினைவூட்டுகிறான்.), அவளின் பரிவான ரவு காரணமாக ஏற்றுக்கொள்ள நேர்கிறது. ராஜ் வெளியே செல்லும் வேளை மழை கிறது.; அவள் மழை அங்கியை அவனிடம் நிக்கிறாள். ரிக்ஷாவில் சென்று நீர்ஜாவின் உன்முன் இறங்கி, அழைப்பு மணியை அவன் த்துகிறான். அப்போது, பகல்பூரில் நீர்ஜாவின் பிக்கு முதன்முதலில் சென்று, வாசலில் நின்று ட்டபோது, "பூட்டுத் திறக்குதில்லை - பக்கத்து வால் ஏறி உள்ளே வா” என்று அவள் சொல்ல, ன் மதிலில் ஏறுகிறான். உடனே அவள் சியில்வந்து, " இறங்கு.. இறங்கு... இல்லையேல் லீசில் பிடித்துக்கொடுப்பேன்” என்று கேலி தபடி நின்றது நினைவுக்கு வருகிறது. யாரும்
இ 61 ஐப்பசி 2013

Page 20
வராததில் மறுபடியும் அழைப்பு மணியை அழுத்துகிறான். "நான் மனோஜ்... மன்னு... பகல் பூரிலிருந்து....” என்று உரத்துச் சொல்கிறான். ஒரு பெண் - நீர்ஜா - இடை வெளியால் பார்த்துவிட்டுக் கதவைத் திறக்கிறாள். நீண்டகாலத்தின் பின் ஒருவரை ஒருவர் காண கின்றனர்; வியப்பு நிறைந்த கணங்கள்! ஹோலில் அவனை அமரச் செய்கிறாள். மழை அங்கியை அவனிடமிருந்து வாங்கியபடியே, “நீ மாறிவிட்டாய்... மெலிந்து கறுப்பாகிவிட்டாய். கன்னம் குழி விழுந்து... தலைமயிர் கொட்டுண்டு...” என்று மெதுவாகச் சொல்கிறாள்.
"உன்னைப்பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இங்கே, ஒரு இராணியைப் போல ஆடம்பரமாக நீ வாழ்கிறாய்!” என்று சொல்கிறான். ஹோல் எங்கும் உயர்தரமான தளபாடங்களும் வெவ்வேறு ஆடம்பரப் பொருள்களும் நெருக்கமாக. யன்னல்கள் எல்லாம் மூடியபடி; புழுக்கமாக இருக்கிறது... வெளிச்சமும் குறைவாக. மின்சார வெட்டு என்று சொல்கிறாள்; யன்னல்களைத் திறக்க அவள் விரும்பவில்லை. அழைப்பு மணி அடிக்கிறது; அவள் சும்மா இருக்கிறாள். மனோஜ் எழும்பி கதவைத் திறக்கச் செல்லத் தடுக்கிறாள். தேவையில்லாத பிரச்சினைகள் வரும் என் கிறாள்; இருவரைப் பற்றியும் தவறாகக் கருதுவார்கள் - உனக்கு இங்குள்ள வர்களைப் பற்றித் தெரியாது என்றும் சொல்கிறாள். தனது கணவன் அடிக்கடி வெளிநாடு செல்வதால் தான் தனிய இருப்ப தாகவும், இரண டு வேலையாள் களும் சொல்லாமல் அடிக்கடி வெளியே சுற்றுவதாக வும் சொல்கிறாள். உயர் குடும்பத்தில் மணம் செய்ததால், ஆடம்பரத்தையும் தனிமையை யும் தவிர்க்க முடியவில்லை என்றும் கூறு கிறாள். நீயும் கண வனுடன் வெளிநாடு களுக்குச் சென்று வரலாமே என்று அவன் கேட்க, "விமானத்தின் பாத்ரூம் கதவு திறக்காவிடில் சிக்குப்பட்டுவிடுவேன் என்ற பயம் ! ஆபத்தில் அழைக் க என க் கு ஆங்கிலமும் தெரியாதே...! அதனால்தான்” என் கிறாள். அவன் அதைக் கேட்டுச் சிரிக்கிறான்! பின்னர் அவனைப்பற்றி விசாரிக் கிறாள். தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாக நடத்துவதாகச் சொல்கிறான். "அது நல்லது” என்கிறாள்,
18/ கீவநதி - இத!

“திருமணம் செய்யவில்லையா?”
"அம்மா பெண் பார்த்துக் கொண்டி ருக்கிறாள்.”
“அந்தப் பெண்ணைப் பார்க்காமல் கட்டப் போகிறாயா?”
“திருமணத்துக்கு முன், நீயும் உன் கணவனைப் பார்க்கவில்லை!”
அவனுக கு ப் பழைய காட்சி நினைவுக்கு வருகிறது ...
* * *
இவனுடைய வீட்டுக்கு வந்தவள், இயலாமையுடன் அவனிடம் சொல்கிறாள் : “அவர்கள் இரண்டு நாளுக்கு முன்னர் திருமணம் பற்றி முடிவெடுத்துவிட்டனர். அடுத்த மாதம் கம்பனி அவருக்குக் கார் கொடுக்குமாம். இந்தா பார் தீபாவளி அன் பளிப்பு! (வைர மோதிரத்தைக் காட்டுகிறாள்).
| "கொஞ்சம் அவகாசம் கொடு. நானும் உனக்கு வைர மோதிரம் வாங்கு வேன்... காருக்கு எனக்கும் லோண் கொடுப் பார்கள்... நானும் அவனைப்போல், ஆறடி உயரம்...” எனத் துயரத்துடன் கெஞ்சுகிறான்.
***
"உனது மொபைலில் கதைத்தது யார்?”
“செக் ரெட்டரி” (உண மையில் கதைத்தது ஆலோக்கின் மனைவி).
“கவர்ச்சியானவளா?” "ஆம்.” “திருமணம் செய்தவளா?” "இல்லை!”
| "இக்காலப் பெண்கள் பற்றிக் கவனம்.” - அவளின் குரலில் பொறாமை உணர்வு தெரிகிறது!
| "வேலைக்காரர் இல்லையாதலால் சமைக்கவில்லை... சமைப்பது எப்படி என்பது எனக்கு மறந்தும் போய்விட்டது! வெளியே சென்று உனக்கு உணவு வாங்கி வருகிறேன்” என்று சொல்லி, அவனது மழை அங்கியை அணிந்துகொண் டே, “யன் னல்களைத் திறக்காதே... அழைப்பு மணி அடித்தால் கதவையும் திறக்காதே” என்றபடி வெளியே செல்கிறாள்.
அவன், பின்னாலுள்ள யன்னல் களைத் திறந்து விடுகிறான். தெருவில் நின்ற ஒருவர் இவனைக் கூப்பிட்டு, அவசரமாய்ப் பாத்ரூம் போகவேண்டும் எனக் கதவைத்
5 6 7 ஐப்பசி 203

Page 21
திறக்கும்படி கெஞ்சுகிறார்; தயங்கியபடி இரக்கத்தினால் திறக்கிறான். பாத்ரூமிலிருந்து சிரமம் நீங்கி வந்து ஷோபாவில் வசதியாக அமர்பவர் வீட்டுச் சொந்தக்காரன் என்பது, தெரிய வருகிறது. "எப் போது அழைப்பு மணியை அடித்தாலும் கதவைத் திறப்பதே யில்லை; யன்னல்களும் மூடியபடி” எனச் சொல்லிவிட்டு, இவனைப் பற்றி விசாரிக்கிறார்; சொல்கிறான்.
"இப்போது இங்கு என்ன அக்கறை?” "குறிப்பாக ஒன்றுமில்லை இப்போது!”
“அப்படியானால், 'முன்பு' அக்கறை இருந்தது! 'நினைவுகூரவேண் டிய ஒரு தொடர்பு?” ” என்று கேலியாகச் சிரித்தபடி கூறுகிறார்.
நாடகங்களுக்கும் திரைப் படப்பிடிப்பு களுக்கும் தளபாடங்களையும் பொருள்களை யும் விநியோகிப்பவருக்கு, உப வாடகைக்கு அவர்கள் முன் ஹோலைக் கொடுத்திருக் கிறார்கள் என்பதையும், கணவனுக்கு வேலை பறிபோய்விட்டதால் கடன் நெருக்கடியில் அவன் மறைந்து திரிந்து - நள்ளிரவில் வீட்டுக்கு வருகிறான் என்பதையும், அவன் ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்பதையும் சொல்கிறார். பத்துமாத வாடகை பாக்கி உள்ளதாகவும், இரண்டு மாதங்களாக மின்சாரம் வெட்டப் பட்டுள்ளதாகவும் சொல்லி - இன்னும் இரண்டு தினங்களில் நீதிமன்ற ஆணை கிடைக்கும்; பொலீசார் வீட்டை உடைத்து அவர்களைத் தெருவில் விடுவார்கள் என்றும் கூறுகிறார். 'பாக்கி' வைத்திருப்பவர்களைத் தனக்குப் பிடிப்பதில்லை என்றும் சொல்கிறார்.
“உங் களுக்குப் பணம் கிடைத் தால்..?”
"ஆறு மாதத்தில் எழுபத்தொரு தரமாக இதைக் கேட்கிறேன்!”
"பாக்கி எவ்வளவு?”
"நாலாயிரப்படி பத்து மாதங்கள்... நாற்பதாயிரம் ரூபா.”
"அவ்வளவு இல்லை.”ம். “எவ்வளவு இருக்கிறது?”
நண்பர்களிடம் உதவியாகப் பெற்ற 12,000 ரூபாவையும் கொடுக்கிறான்; மூன்று மாத வாடகைக்குரிய பற்றுச்சீட்டை அவர் எழுதிக் கொடுக்கிறார். அதை வாங்கிய படியே, "நீ உதவிசெய்ய வேண்டும். அவர்களை உட னே தெருவுக்கு விரட்டி விடாதே!
19/ கீவநதி - இ

கொஞ்சம் அவகாசம் கொடு. நான் கவனிக் கிறேன்.” என்று கேட்க, அவரும் சம்மதிக் கிறார். பின்னர் அவர், "நான் உன்னை ஒன்று கேட்கட்டுமா?” என்றபடி,
| “இது உனது பிராயச்சித்தமா அல்லது பழிவாங்கலா?” எனக் கேட்கிறார். மனோஜ் ஒன்றும் சொல்லாததில், அவரும் சென்றுவிடுகிறார்.
அவனுக்குப் பழைய நினைவு. . திருமணத்துக்கு முதல் நாள் அவளைத் தனிமையில் சந்திக்கிறான்.
* * *
“உன்னை ஒன்று கேட்கலாமா? உண்மையாகவே இந்தத் திருமணத்தை
ஏற்றுக்கொள்கிறாயா?”
ரிதுபர்ணோ கோஷ்
"நான் அவனைப் பார்த்ததே யில்லை. நான், அவனைத் திருமணம் செய்ய வில்லை ; ஒரு பாதுகாப்புக்காகத்தான் மணம் செய் யப் போகிறேன் . அ து என து. பெற்றோரைத் திருப்திப்படுத்தும்; எத்தனை தடவைகள் தான் நான் அவர் களைக்
குழப்பத்தில் விடமுடியும்?”
“பெற்றோர்..! அப்படியானால் நீ சந்தோஷமாகயில்லை?”
"எப்படி இன்று பதில் சொல்ல முடியும் மன்னு? நாங்கள் மறுபடியும் சந்தித் தால், என் மனசைத் திறந்து கதைப்பேன்... நான் உனக்குச் சொல்லுவேன்.”
"சிலவேளை நீ சொல்லமாட்டாய்... உனது திருமண உண்மையை மறைத்தது போல் அதையும் மறைத்துவிடுவாய்.”
****
ஒரு கடதாசியை எடுத்துக் கடித மொன்றை மனோஜ் எழுதுகிறான்.
தழ் 67 ஐப்பசி 2013

Page 22
(*. உ
எல்லாம் சரி!. நாங்கள் இருவரும் மணம் புரியவில்லை என்பது எனக்குந் தெரியும். அதனால், உனது கஷ்டங்களை எனக்குச் சொல்லக்கூடாது என்று ஆகி விடுமா ? அந்தளவுக்கு நான் அந்நியனாகிவிட்டேனா?
நல்ல காலம் - வீட்டுக்காரன் வந்தான்; எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். மூன்று மாத வாடகை கொடுத்துள்ளேன். பற்றுச்சீட்டு இங்கு உள்ளது. அவன் உங்களைத் தொல்லைப் படுத்த மாட்டான். இதை ஏற்கத் தயங்க வேண்டாம்.
விதிதான் எமது திருமணத்தைத் தடை செய்தது. இல்லையானால் உனது முழுப் பொறுப்பும் என்மீதுதான்.
உன்னுடைய.
மன்னு கட்டிலின் மூலையில் - மேலுள்ள விரிப்பின் கீழ் அக்கடிதத்தைவைக்கிறான்.
- சற்று நேரத்தில் நீர்ஜா “உனது றெயின் கோட்டுக்கு நன்றி மன்னு” என்று சொல்லியபடி வருகிறாள். யன்னல்கள் திறந்திருப்பதைக் கண்டு கோபித்தபடி,
அவற்றைச் சாத்துகிறாள்.
வீட்டுக்காரன் வந்து சென்றதை அவன் சொல்லவில்லை.
சாப்பிடுமாறு கேட்கிறாள்.
“கஷ்டப் படாதே” என்று அவன் சொல்கிறான் :
| "ஏன் உனது செக்ரெட்டரிதான் உன்னைப்பற்றி அக்கறைப்படலாமா?”
மெழுகுதிரியை ஏற்றிக் கொண்டு வந்து வைக்கிறாள்; சாப்பாட்டையும் மேசை யில் வைத்து, "வழமையாக கண்டில் டின்னர்!; இப்போது கண்டில் லஞ்ச்” என்கிறாள். அவன் சாப்பிட்டு, கோப்பையில் கையைக் கழுவுகிறான்.
அவள் சொல்லு கிறாள்;
"இந்த மழை நிற்காதா? நான் இங்கே அடைபட்டுக் கிடக் கிறேன் மன்னு. இந்த ஆடம்பரங்கள் தான் எல்லாமென்று நீ நினைக்கிறாயா?”
"உண்மைதான், குளியலறையில் |
20/ ஜீவநதி - இதழ்

ஒருவர் எப்போதும் அடைபட்டு இருக்க முடியாது. என்னை நம்பு... யாரோ ஒருவர் வந்து உனக்காகக் கதவைத் திறப்பார்.”
(துயரும் ஆர்வமும் கலந்த முகத் துடன் அவனைத் திரும்பிப் பார்த்து)
“உண்மையாகவா?” "ஆம்.”
"இனிமேலும் அதை நம்பியிருக்க மாட்டேன். உன்னைக் கெஞ்சிக் கேட் கிறேன்... புதிய கனவுகளைக் காட்டாதே!”
"அழாதே நிரு, அழாதே...!” | "உனது நாளை வீணாக்கிவிட்டேன்.”
“இல்லை! உன்னைக் கண்டேன்... பேசினேன்... இது அருமை!”
"உனது நிறுவனத்துக்கு Neerja என்று பெயர்வை; அது எனது முறையான பெயர்.”
சிறிய மெளனம்.
" இன்னும் சில நாளில் வேறு ஃவ்ளற்றுக்குப் போய்விடுவோம், அது மிகப் பெரியது.”
"அந்த முகவரி என்ன?” "தெரியாது.” “ரெலிபோன் நம்பர்?”
"உனது மொபைல் நம்பரைத் தா; நான் தொடர்புகொள்கிறேன்.”
"ஒரு நாள்ஃவ்ளற்றின் பெல் அடிக்கும். திறக்கும்போது... கண வனில்லை வேறு ஒருவர். அவர் உனக்குத் தெரிந்த, கறுத்த, தலைமயிர் அடர்த்தியில்லாத ஒருவர்!”
** *
மனோஜ் எப்படி இருக்கிறான் என, ஆலோக் மனைவியைக் கேட்கிறான். மனச்சோர்வுடன் இருப்பதாகச் சொல்கிறாள். நண்பர்களிடம் பெற்ற பன்னீராயிரம்
ரூபாவைப் பிக்பொக்கற்றில் இழந்துவிட்டான் எனச் சொல்ல, அவன் அதிர்ச்சி அடைகிறான் ; மனோஜ் வந்து, தன்னைக் காப்பாற்ற அவள் பொய் சொல் கிறாள் என் கிறான். இரவு மனோஜின் அறைக்கு வரும் அவள், தண்ணீரை யும் தூக்க மாத்தி ரையையும் வைத்து, "ஒருமணி நேரம்
517 ஐப்பசி 2013

Page 23
ROUCTR
08மறு:
MR, DATE SCENE
சும்மா இரு. அதற்குப் பிறகும் கஷ்டமென்றால் ஒரு மாத்திரையைப் போடு” என்று சொல்லி விட்டுச் செல்லும்போது, "உன்னை ஒன்று கேட்கலாமா?” எனக் கேட்க, அவள் நிற்கிறாள்.
“திருமணத்துக்குப் பிறகு அவனை நீ எப்போதாவது கண்டாயா?”
(அவளது காதலும் நிறைவேற வில்லை. அவள் சிறிய மௌனத்துக்குப் பிறகு) "இப்போது அவளது கணவன் வந்திருப்பான். அவனது வேலைகளில் அவள் பிஸியாக இருப்பாள். உன்னை, அவள் நினைக்க மாட்டாள்.” என்று கூறிச் சென்றாள். உடனே திரும்பி வந்தவள், றெயின் கோட்டில் இருந்ததென, சிறிய பக்கெற்றைக் கொடுத்துச் செல்கிறாள். அவன் பிரித்துப் பார்க்கும்போது, இரண்டு தங்க வளையல்களும் ஒரு தங்கச் சங்கிலியும்; கூடவே, கசங்கிய கடதாசித் துண்டில் சிறிய குறிப்பையும் காண்கிறான்.
கடவுளின் விருப்பத்தால் றெயின் கோட் கொண்டு வந்தாய். இல்லையென்றால் அதை அணிந்திருக்க மாட்டேன்: அதிலிருந்த கடிதத்தைப் படித்திருக்க மாட்டேன். நீ உனது கஷ்டங்களை ஏன் எனக்குச் சொல்லவில்லை? கணவர் ஞாபக மறதி யாகத் திறப்பைக் கொண்டுபோய்விட்டார். இல்லை யென்றால், 30 - 40 ஆயிரத்துக்காக நீ அலைய வேண்டி நேர்ந்திராது. என்னிடம் கையில் பண மில்லை: இத்துடனுள்ள நகையை மறுக்காதே மன்னு.
கடவுள் விரும்பி இருந்தால், நாம் மணம் செய்திருப்போம்.
உன்னுடைய,
நிரு
(நண் பர்களிடம் உதவி கேட்கும் பொருட்டு ஆலோக்கால் தயாரிக்கப் பட்டதே
அந்தக் கடிதம்)
2ll வீவநதி - இ

இத்துடன் படம் முடிகிறது.
மற் றெல் லோருக் கும் அவன் 'மனோஜ்'; அவள் 'நீர்ஜா.' ஆனால் அவளுக்கு மட்டும் அவன் 'மன்னு'; அவனுக்கு மட்டும் அவள் 'நிரு. நேசம் நிறைந்த அவ்விருவரின் அகவுலகைப் புறவுலகால் அழிக்க முடியவில்லை!
- ஆரம்பத்தில் - எழுத்தோட்டத்தின் போது ஒலித்த - “ஓ மதுராபுரி அதிபதி... கிருஷ்ணா! ஏன் என்னைவிட்டுச் செல் கிறாய்? இன்னொருவரின் மனைவி... உனது பழைய காதலி இங்கே வீட்டில்... வீட்டுப் பொருள்களுடன் தனிமையில்...” என்ற சோகப் பாடல், குறியீட்டுத் தன்மையைக் கொண்டுள்ளது. இசை படத்தில் முக்கிய பங் காற்றியிருக்கிறது; அவ்வாறேதான் அவீக் முக்கோபாத்யாயின் காட்சிப் படுத்தல்களும்!
மனோஜ், நீர்ஜா, வீட்டுக்காரன் ஆகிய பாத்திரங்களுக்கு முறையே - அ ஜ ய தேவ்கன், ஐஸ்வர்யா ராய், அனு கபூர் ஆகியோர் உயிரூட்டி யுள்ளனர்.
ஆலோக், மனைவி, மனோஜின் தாய் ஆகிய பாத்திரங்களும் நன்கு உரு வாகியுள்ளன.; நீர்ஜாவினது கணவனும் அவளது பெற் றோரும் காட்டப் படுவதே யில்லை!
படத்தின் பெரும் பகுதி உரையாடல்களைக் கொண்டதாக அமைக்கப்
அ.யேசுராசா பட்டுள்ளது. இவ்வாறான கட்டமைப்பைக் கொண்ட வெளிப்பாட்டுமுறையில், கலைத் துவத்தையும் அழகியல் ரீதியிலான ஒத்திசைவையும் பேணுவது மிகக் கடினமான தாகும்; ஆனால், ரிதுபர்ணோ கோஷ் இலகு வாக இச்சவாலை எதிர்கொண்டு வெற்றி காண்கிறார். சத்யஜித் ரேயின் 'நாயக்', இங்மார் பேர்க்மனின் 'வின்ர லைற்', கோவிந் நிஹலானியின் 'பார்ட்டி' ஆகிய படங்களும் - பெரும்பாலும் உரையாடல்களைக் கொண்ட மைந்தும் சிறப்பாக உருவாகியுள்ளவை என்பதும், நினைவுக்கு வருகிறது!
நன்றி : முகநூல்
04.06.2013
தழ் 611 ஐப்பசி 2013

Page 24
சொல்லவேண்டிய கதைகள் - 09
எங்கள் நாட்டின் தேர்தல்
- முருகபூபதி
| y - U v U மு v 9
UNDER NEW MANAGEMENT
0
real work begins now for Tony Abbott inter the Coalition won power in a landslide
0 டு 9
9) 9)
5)
தேர்தல் என்றவுடன் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றித்தான் ஏதோ சொல்லப் போகின்றேன் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
- அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றவுடனேயே எனது தாயகம் எனக்கு இரவல் தாய் நாடாகிவிட்டது. அதனால் இலங்கையில் நடக்கும் தேர்தல்கள் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையில்லை.
ஆனால் அங்கு வாழ்ந்த காலத்தில் தேர்தல் களை பார்த்தும் வாக்கு அளித்தும் இடதுசாரி களுக்காக மேடையேறிப்பேசியும் ஒய்ந்து ஓடி வந்து விட்டாலும், தாயகம் மீதான பற்றுதல் எள்ளளவும் குறையவில்லை.
அங்குவந்தால் நிற்பதற்கு ஒருமாதகாலம் தான் விசா. மேலும் தரித்து நிற்பதாயின் தின மொன்றுக்கு குறைந்தது 75 ரூபாயாதல் வாடகை செலுத்தவேண்டும். அதனால்தான் இலங்கை எனக்கு வாடகை செலுத்தும் இரவல் தாய் நாடாகி விட்டது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்று புகலிட நாடுகளில் வதிவிட உரிமை பெற்ற அனைத்து இலங்கையர் நிலையும் இது தான் . இலங்கையில் பல வருடங்களாக தாமதித்துக் கொண்டிருந்த வடமாகாண சபைத்
இ G R S 15 5 1
9 ஓ ஓ
6
22/ லீவநதி - இதழ் 6

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே அதாவது செப்டெம்பர் 7 ஆம் திகதி சனிக் கிழமை அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து லிபரல் கட்சியின் ரோனி அப்பட் 28 ஆவது பிரதமராக தெரிவாகி விட்டார்.
- இந்த நாட்டில் தேர்தல் வருவது பற்றியோ வெற்றி தோல்விகள் பற்றியோ பொது மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதனால்தான் இங்கு ஜனநாயகம் வாழ்கிறது, மதிக்கப்படுகிறது என நினைக்கின்றேன்.
அவுஸ் திரேலிய பிரஜை கள் வாக்களிக்கத் தவறினால் அதற்காக தண்டப் பணம் செலுத்த நேரிடும். தேர்தல் சமயத்தில் வெளிநாடுகளில் இருந்தால் அங்குள்ள அவுஸ் திரேலிய தூதரகம் சென்று வாக்களிக்க வேண்டும். சுகவீனமுற்று வாக்களிக்கத் தவறி னால் மருத்துவ சான்றிதழ் அனுப்பவேண்டும். அல்லது முன்னதாகவே தபால் மூலம் வாக்களித்துவிடவேண்டும்.
எவரும் "கள்ளவோட்”போட முடியாது.
இல ங்கையில் 1977 இல் நடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மத்தியில் நடந்த வேட்பாளர் தெரிவின்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பீட்டர் கெனமனின வாக்கினை அவர் தேர்தல் சாவடிக்கு வரு முன்னரே யாரோ வந்து போட்டு விட்டுப் போய் பிட்ட தகவலையும் இங்கு சொல்லி பிடுகின்றேன்.
சிங்கப்பூரில் நடந்த தனது மூத்த கோதரியின் மரணச்சடங்கிற்கு சென்ற எனது மனைவிக்கு நினைவூட்டி, அவரை அங்குள்ள ராதரகத்தில் வாக்களிக்கச்சொன்னேன்.
அ வுஸ் திரேலியாவில் நான' ற்பொழுது வாழும் புதிய பிரதேசம் மோர்வல் ன ற இடத்தில் எங்கே வாக்களிப்பு லையங்கள் இருக்கின்றன என்ற விபரத்தை ணினியில் கண்டுபிடித்தேன். தேர்தலுக்கு மதல் நாள் கண்ணில் லேசர் சிகிச்சை டந்தமையினால், வரைபடத்தில் வீதிகளை
ண்டு பிடிப்பதில் சிரமப்பட்டேன். - தெருவுக் குச் சென் று யாராவது ண்ணில் தென்படுபவர்களிடம் கேட்டுத் தரிந்து கொள்ளலாம் என்றால், எங்கள் தெரு ல் ஆட்களின் நடமாட்டமே இல்லை. பெயர் தரியாத படட் சிகள் தான பற்றந் து காண்டிருந்தன.
அடுத்த தெருவில் ஒரு பெரிய ட்டிடமும் மைதானமும் கண்களில் தென் ட்டது. பெரும்பாலும் அது ஒரு பாடசாலையாக
// ஐப்பசி 2013

Page 25
இருக்கலாம் என நம்பிக்கொண்டு அங்கே வாக்குச்சாவடி இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றேன். எனது கணிப்பு பொய்த்தது. டெனிஸ், உதைபந்தாட்டம் நடக்கும் இடத்துக்கு வந்துள்ளேன். சுற்றும் முற்றும் பார்க்கிறேன். பட்சிகள்தான் தென்படுகின்றன. அவை கொடுத்துவைத்தவை அவற்றுக்கு பிரஜா உரிமையும் இல்லை வாக்களிப்பும் இல்லை. வாழ்விடமும் இல்லை. என்னே சுதந்திரம்.
மைதானம் அருகே ஒரு கார் மாத்திரம் நின்றது. அருகே சென்றேன். உள்ளே ஒரு இளைஞன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். என்னைக்கண்டதும் காரின் கண்ணாடியை தாழ்த்தியவாறு தொலைபேசி யில் பேசியதையும் நிறுத்தினான்.
" தேர்தலுக்கு வாக்களிக்க வேண்டும். இடம் தெரியவில்லை.” என்றேன்.
தானும் இடத்தை தேடிக்கொண்டு வந்ததாகச் சொன்னான். யாரோ நண்பனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு இடத்தை தெரிந்துகொண்டிருப்பதாகவும் சொன்னான். பிறகு என்னை தனது காரில் ஏறச்சொன்னான்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவனது முகத்தில் கருணையிருந்த மையால் தயக்கமின்றி ஏறி அமர்ந்தேன்.
ஐந்து நிமிடத்தில் என்னை வாக்குச் சாவடி அமைந்துள்ள ஒரு பாடசாலைக்கு அழைத்து வந்துவிட்டு அவனும் என்னுடன் வரிசையில் நின்றான். அவனுக்கும் தேர்தலில் யார் வென்றாலும் மகிழ்ச்சியில்லை. எவர் தோற்றாலும் கவலை இல்லை.
தேர்தலில் வாக்களிக்கத்தவறினால் சுமார் $150 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் (இலங்கை நாணயத்தில் சுமார் பதினெட்டா யிரம் ரூபா) தண்டப்பணம் செலுத்த நேரிடும் என்ற கவலைதான் இருந்தது. -
அந்த வரிசையில் நிற்கும்பொழுது இறைச்சி வாட்டும் மணம் வந்தது. திரும்பிப்பார்க்கின்றேன். இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சிறிய கடைவிரித்து பாணுக்குள் வைத்துக்கொடுக்கும் ஹொட்டோக் வாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கோப்பி, தேநீர் குளிர் பாணமும் விற்பனைக்கு இருந்தன. வரிசையில் நின்ற சிலர் பணம் கொடுத்து வாங்கி உண்டவாறு உரையாடினார்கள்.
- தேர்தலில் போட்டியிடும் பிரதான தொழிற்கட்சி, லிபரல்கட்சி மற்றும் இதர கட்சிகளின் வேட்பாளர்களின் படங்கள் அச்சிடப்பட்ட பிரசுரங்களை அந்தந்தக்கட்சி
23/ கீவநதி - இ

களின் ஆதரவாளர்கள் விநியோகித்துக் கொண்டு நிற்கிறார்கள். தமது கட்சி பதவிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதுபற்றிய அவர்களது சுருக்கமான தேர்தல் விஞ்ஞாபனம் அந்தப்பிரசுரங்களில் அச்சாகியிருந்தன.
-- எல் லோருடை மு க ங் க ளிலும் புன்னகை. எதிர் எதிர் அணியினராகவிருந்தா - லும் பரஸ்பரம் சுகம் விசாரிக்கின்றனர். பருவ காலம் பற்றி உரையாடுகின்றனர். எவரும் அரசியலும் பேசவில்லை, தமதுகட்சிக்காரருக்குத் தான் வாக்களியுங்கள் என்று கோரவும் இல்லை. வாக்களித்துவிட்டு வெளியே வந்தால், வந்த தற்கு நன்றியும் சொன்னார்கள். எந்தவொரு வாக்குச்சாவடியிலும் பொலிசார் கண்களில் தென் பட வேயில்லை. தெருக்களிலும் பொலிசாரின் நடமாட்டம் இல்லை.)
- கடந்த 25 வருடகாலத்தில் இந்தப் பெரிய கண்டத்தில் பல பாராளுமன்ற மற்றும் மாநிலத்தேர்தல்களை பார்த்து விட்டேன். வழக்கம்போலவே அமைதியாக ஒவ்வொரு தேர்தலும் நடந்து முடிகிறது. தேர்தல் நடந்து நாளன்று இரவு தொலைக்காட்சியில் முடிவு களைப் பார்த்துவிட்டு மக்கள் நித்திரைக்குப் போகிறார்கள். பலர் அதனையும் பார்ப்ப தில்லை.
- தேர் தலுக்காக யாரும் உயிரை விட்டதும் இல்லை. இரத்தம் சிந்தியதும் இல்லை. எந்தவொரு தீவைப்புச்சம்பவமோ தாக்குதல் சம்பவமோ நடைபெறவும் இல்லை.
முன்னாள் பிரதமர் கெவின் ரட் தேர்தல் முடிவு தெரிந்ததும் வாக்காளர்களிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு, கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்தும் தாம் விலகுவதாகச்சொல்லி சிரித்த முகத்துடன் விடைபெற்றார். தேர்தலில் வெற்றிபெற்ற ரொனி அப்பர்ட், நாட்டை தொடர்ந்தும் அபி விருத்திப் பாதையில் அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.
அவர்களின் உரைகளை தொலைக் காட்சியில் பார்த்துவிட்டு நானும் உறங்கச் சென் றேன். மறுநாளும் வழக்கம்போல் விடிந்தது. பட்சிகள் எனது வீட்டு முற்றத்தில் எதனை யோ கொத் தி கொரித் து க் கொண்டிருந்தன.
இனி இந்தக்கதையை எமது இலங்கை யின் தேர்தல்களுடன் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள். இலங்கைத்தேர்தல்கள் பற்றி எனக்குச் சொல்ல அருகதையே இல்லைத் தானே. எனது தாயகமே... எனது இரவல் தாய்நாடே... உன்னை நினைத்து என்னால் மனதுக்குள் அழத்தான் முடிகிறது.
கழ் எ/ ஐப்பசி 2013

Page 26
பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்குகின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி
ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து "துழும்” என்னும் வரால்மீன்கள்.
என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்ச் சண்டையிட்டு துவைத்து நீராடிக் களிக்கின்றார்.
ஒரு கவிஞன் ஒரு ஆறு 45 வருடங்கள்
ஆனாலும் அமைதியாய்ப் பாலி ஆறு நகர்கிறது
24/ ஜீவநதி - இதழ் 6

அந் நாளில் பண்டார வன்னியனின் படை நடந்த அடிச் சுவடு இந்நாளும் இம்மணலில் இருக்கவே செய்யும் அவன் தங்கி இளைப்பாறி தானைத் தலைவருடன் தாக்கு தலைத் திட்டமிட்டு புழுதி படிந்திருந்த கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி ) வெள்ளையர்கள் பின் வாங்கும் வெற்றிகளின் நிம்மதியில் சந்றே கண்ணயர்ந்த தரை மீது அதே மருது இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால் அதே மறைப்பில் இன்னும் குளிக்கின்றார் எங்களது ஊர்ப் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல் பாலி ஆறு நகர்கிறது."
968
F பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன்.
803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
S17 ஐப்பசி 2013

Page 27
மருதப் பாட்டு
அம்ப தின்டு புல்ெ தார் 6 மைத ஓடுகி
கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது.
பள்ளி
| நாங்க பார்க்க
பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும்
போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன்.
தெரு விலை வயல் தொட வீட்டி எங்கு அம்ம ஓடின
நம் ஓ
விடுமு அம்ம
இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும்.
இலை வெல சருகுக் அம்ம!
தென்றலிலோ வரால் மீன்களின் இராப்போசனத்திலோ நாணல்கள் அசைகின்றன. வண்டின் பாடலில் மயங்கி மொட்டுகள் துகில் அவிழ்க்கிற மாலை.
காதே கிளை கொடு ஒரு சறு அம்மா
அழிக்கப்பட்ட காடுகளும் காடு மண்டிய வயல்களுமானதே
நீர்ப் பறவைகளை இழந்த என் மருத வழி.
அம்மா எப்பே நேரம், அமை ஏகோ பறவை அம்ம!
எனினும் நீர் ஓடி நெல்தழைத்து நீர்ப்பறவை வான் நிறைய ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய்
முட்டையாய் காத்திருக்கும் மண். 2013
அம்மா வசந்தம் தலைதி உன்னை புன்னல் அதோ
- வ.ஐ.ச.ஜெயபாலன்
25 கீவநதி - இ

தம்
வளியைக் கடந்து, வீதியைக் கடந்து, Tனத்தைக் கடந்து,
ன்றாள்.
க்கூடத்தில் வில், எயாட்டுத் திடலில், களில், டர்மாடி வேலைத்தளத்தில், டல் என
மா
பா சில்லுக்கட்டினாற் போல் -படியே இருக்கிறாள்.
ப்வுநேரங்களிலும், மறை நாட்களிலும், பண்டிகைக் காலங்களிலும் கூட
பா அவதியாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாள்.
"களைக் காணாது பாதையோரத்து மரங்கள் வெலத்து நிற்கின்ற நாட்களில், களைச் சலசலக்க வைத்தபடி
T ஓடுகிறாள்.
Tரச் சவ்வுகளில் வலிசுண்ட களாய் உறைந்து தொங்குகிற ம் பனியின் வெண்மையூடு, றுக்கு வித்தைக்காரியைப் போல் T குளிரில் ஓடுகிறாள்.
ாதும் ஓடிக் கொண்டே இருக்கிறாள். நேரம் என்று ஆலாய்ப் பறக்கிறாள். தியின் நிழற் பொழுதுகளில் ன் காய்கள் பொத் பொத்தென உதிரும் போதும் பக்கூட்டங்கள் ஜிவ்வென நீருள் இறங்கும் போதும் ரவின் கால்கள் மாத்திரம் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
( ஓடிக்கொண்டே இருக்கிறாள் ம் முளைகட்டி மலர்வதைப்போல் இருப்பி
எ மட்டும், உன்னை மட்டுமே பார்த்தபடி கைத்துக் கையசைத்த வண்ணம்
அம்மா ஓடுகிறாள்.
- ஆழியாள் -
தழ் 61/ ஐப்பசி 2013

Page 28
கே. ஆர். டேவிட்
வீதிகளில்
மட்டுமல்ல...?
(முருகையாவுக்கு இந்த உலகமே பொய்யாகி விட்டதைப் போன்றதொரு பிரமை ஏனென்றால், முருகையா குகதாஸனைத் தனது உலகமாகக் கருதி வாழ்ந்தவர். அவனது
வாழ்க்கைக்காக தனது சுகங்கள் அத்தனையை யும் துறந்து துறவுவாழ்க்கை வாழ்ந்தவர். இன்று அந்தக் குகதாஸன்...?
- குகதாஸன் இப்படியொரு முடிவுக்கு வருவானென்று அவர் எதிர்பார்க்கவில்லை. குகதாஸன் முருகையாவின் மகன், அதுவும் ஒரே ஒரு மகன், இப்போது அவன் ஒரு டாக்டர். சிந்திக்கக்கூடிய கல்வி அறிவும், பொருளாதார வசதியும் உள்ளவன். அவனால் இந்த முடிவுக்கு எப்படி வரமுடிந்தது என்ற கேள்விச்சுழிக்குள் முக்குழித்துக்கொண்டிருந்தார்.
“அப்பா உங்களுக்கு வசதியான ஒரு இடம் பார்த்திருக்கிறன்... அங்கை உங்களுக்கு சகல வசதிகளும் கிடைக்கும்... நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம்” சில தினங்களுக்கு முன்பு முருகையாவிடம் குகதாஸன் இப்படித் தான் கூறினான்.
“நான் இஞ்சை பேரப்புள்ளையளோட சந்தோஷமாய்த்தானே இருக்கிறன்... நான் பேரப்புள்ளையளை விட்டிட்டு இருக்கமாட்டன்... நான் இஞ்சைதான் இருக்கப்போறன்..” முருகையா வழமைபோல வஞ்சகம் இல்லாமல் கூறினார்.
“நாங்கள் இரண்டு பேரும் வேலைக்குப் போக, புள்ளையளும் ஸ்கூலுக்குப்போக நீங்கள் தனியத்தானே இருக்கிறியள்...” குகதாஸன் விழுங்கி, விழுங்கிக்கூறினான்.
“சரி என்னைக்கொண்டு போய் எங்கை விடப்போறாய்...” முருகையாவின் முகத்தில் பெரும் கேள்விக்குறி...!
26/ கீவநதி - இதழ்

- "அந்த இடம் நல்ல இடம்... அங்கை உங்களைப்போலை ஆக்கள் நிறையப்பேர் இருக்கினம்... அங்கை எந்தப்பிரச்சினையும் இருக்காது” குகதாஸன் இப்போதும் மழுப்பலா கவே பதில்கூறினான்.
"அந்த இடத்தைத்தான் கேக்கிறன்” முருகையாவின் முகத்தில் பெரும்கேள்விக்குறி!
- "சாந்தி நிலையம்... கைதடியிலே இருக்கு... அங்கைதான் உங்களை விடப் போறன், வயது போனவை தங்கிற இடம் ... நான் ஒவ்வொரு கிழமையும் வந்து பார்ப்பன்...” குகதாஸன் வயோதிபர் இல்லம் என்ற சொல்லைத்தவிர்த்தே பதில் கூறுகிறான்.
“கைதடி வயோதிபர் இல்லம்... எண்டு வெளியாய்ச் சொல்லன்” முருகையா முகத்தை மறுபக்கம் திருப்பியபடி கூறுகிறார்.
குகதாஸன் டாக்டர் ஆகும் வரை முருகையா ஒரு பேக்கரியில்தான் வேலை செய்தார். அப்போது சில சந்தர்ப்பங்களில் பாண் விநியோகம் செய்வதற்குச் சென்றிருக் கிறார். அப் போதெல்லாம் அங் குள் ள நடைமுறைகளை அவதானித்திருக்கிறார். சில
முதியவர்களோடு பேசியுமிருக்கிறார்.
- அனாதரவான வயோதிபர்களுக்கு சாந்தி நிலையம் பெரும் வரப்பிரசாதமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அங்கு வாழ்கின்ற முதியவர்கள் பாசநரம்புகளை உருவி எடுத்து விட்டுத்தான் இங்கு வந்தார்களா...?
6/ஐப்பசி 2013

Page 29
இந்தச்சம்பவம் நடந்தபின்பு முருகை யாவால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. பேரப்பிள்ளைகளைப் பார்க்கின்ற போதெல்லாம் அவருக்கு அழுகைதான் வந்தது... நெஞ்சுக் குள் சிரட்டைத்தணல் எரிவது போன்ற எரிவு...! -
தினசரி பார்த்துச் சந்தோசப் பட்ட குகதாஸ்னின் முகத்தை இப்போது அவரால் பார்க்க முடியவில்லை...!
நேற்றிரவு, குகதாஸன் சில பொருட் களோடு வந்தான். “நாளை காலைமை சாந்தி நிலையத்துக்குப் போறதுக்கு ஏற்பாடு செய்திருக் கிறன்” என்று மட்டும் கூறிவிட்டுச் சென்று விட்டான். அவன் வாங்கித் தந்த பொருட்கள்.... சாறம், சேட், பெனியன், துவாய், பெட்சீட், முருகையாவுக்கு பீடி புகைக்கிற பழக்க முண்டு... ஜந்துகட்டு பீடி... அத்தனையும் சாந்தி நிலையத்தில் முருகையாவுக்குத் தேவையான பொருட்கள்....!
முருகையாவுக்கு மரணத்தின் வலி.....! மறுநாள் விடிந்தது
குகதாஸனின் திட்டப் படி கைதடி நிலையத்தை நோக்கிப்புறப்பட்டனர். குமார், இவன் தான் கார்ச்சாரதி, அவன் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். றைவருக்குப் பக்கத்துச்சீற்றில் குகதாஸன் அமர்ந்திருந்தான். பின் சீற்றில் வலது பக்கமாக முருகையாவும் இடது பக்கமாக குகதாஸனின் மனைவி நேசம்மாவும் அமர்ந்திருந்தனர். அண்மையில் தான் குகதாஸன் இந்தக்காரை வாங்கினான். மிகவும் விலை உயர்ந்த கார். செம்மணி வீதியில் இறங்கி, செம்மணி மயானத்தையும் தாண்டி, செம்மணிச் சந்தியை நெருங்கிக் கொண்டி ருந்தது. புத்தம் புதிய கார்..." காப்பெற்” வீதி...
- "சேர்... எங்கை போகவேணுமெண்டு சொல்லயில்லையே” கார்ச்சாரதியான குமார் குகதாஸனிடம் கேட்கிறான். வீட்டிலிருந்து புறப் படும் போது வழமைபோல் குமார் குகதாஸனிடம் கேட்டான். " செம்மணி றோட்டிலே விடு” என்று மட்டும் குகதாஸன் சொன் னானே தவிர விபரமாக எதையும் கூறவில்லை. அதனால்தான் குமார் திரும்பவும் கேட்கிறான்.
- "கண்டி றோட்டிலே விடு சொல்றன்” குகதாஸன் இப்போதும் மளுப்பலாகவே பதில் கூறுகிறானே தவிர, கைதடி வயோதிபர் இல்லத்திலே அப்பாவைவிடப் போறம் என்ற செய்தியை அவனால் கூறமுடியவில்லை!
இந்தக்காருக்குள் இருக்கின்ற நால் வருள் கார்ச்சாரதியான குமாருக்குமட்டுந் தான் முருகையாவை வயோதிபர் இல் லத்திலே
27l கீவநதி - இத

விடப்போகும் செய்தி தெரியாது. இந்தக் குமார் என்பவன் யார்...! சாரசரியை விட குறைந்த சமூகத்தரமுடைய ஒரு மனிதன். குகதாஸனிடம் கைநீட்டிச் சம்பளம் வாங்குகின்ற ஒரு கூலி... இவனிடம் உண மையைக் கூறுவதில் குகதாஸனுக்கு என்ன கூச்சம்...?
கூச்சமா அல்லது குற்ற உணர்வா...?
வழமையாக வீட்டிலிருந்து புறப்படும் போதே எங்கே போக வேண் டும் என்ற செய்தியை குகதாஸன், குமாரிடம் கூறி விடுவான். ஆனால் இன்று அவன் கூற மறுப்பது பற்றிகுமார் அலட்டிக்கொள்ளவில்லை.
இ குமார் மிகவும் நல்லவன், தொழில் ரீதியான வல்லமையும் உள்ளவன். இதனால் இவனை எல்லோரும் விரும்பி அழைப்பார்கள். குகதாசனின் மனைவியான நேசம்மாவும் ஒரு டாக்டர். இவர்கள் இருவரும் வைத்திய சாலைக்குச் செல்லும் போது இவர்களே காரை ஓட்டிச் செல்வார்கள். தனிப்பட்ட பிரயாணங் களுக்கு மட்டும் குமாரைக்கூப்பிடுவார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிப்படை யாகவோ மறைமுகமாகவோ ஒவ்வொரு ஆசை இருக்கும். குமாருக்கும் ஒரு ஆசை இருந்தது. பல்லிமுட்டை அளவிலானதொரு சிறிய ஆசை. இலங்கை போக்குவரத்துச் சபையில் தான் ஒரு பஸ் சாரதியாக நியமனம் பெறவேண்டும். தான் குடியிருக்கின்ற பகுதிக்கூடாக பஸ்ஸைச் செலுத்த வேண்டும்.. தன் கிராமத்தவர்கள் அந்தக் காட்சியைப்பார்க்க வேண்டும். இது தான் குமாரின் ஆசை!
எப்படியோ பஸ் செலுத்துவதற்குத் தேவையான லைசென்சைப் பெற்றுவிட்டான் இ.போ.சபையில் பஸ் சாரதிக்காக நிய மனத்தை மட்டும் அவனால் பெறமுடியவில்லை. ஊர் பிரமுகரிலிருந்து அரசியல் பிரமுகர்கள் வரை சந்தித்துவிட்டான் ... சகல திணைக்களங் களிலும் சூக்குமமாக அமைந்திருக்கும் “பிற் கதவை” திறக்கின்ற கைப்பலம் அவனிடம் இருக்க வில்லை குமார் பாவம் என்ன செய்வான்...?
பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கனகசபையின் வீட்டில் இப்போது றைவராகக் கடமையாற்றுகின்றான். பேராசிரியர் கனகசபையின் குடும்பம் பருத்த குடும்பம் தினசரி வேலையிருக்கும். பேராசிரியர் கனகசபை குடும்பத்தினர். சென்றகிழமை இந்தியாவுக்குச் சென்றுவிட்டனர். கனகசபை வீட்டில் குமார் மட்டுந்தான் தங்கியிருந்தான். அதனால்தான் இன்று குகதாசனோடு வர முடிந்திருக்கின்றது.
தழ் 61 / ஐப்பசி 2013

Page 30
கார் ஓடிக் கொண் டிருக்கின்றது காருக்குள் பெரும் அமைதி...
"சேர் ... றோட்டைப்பார்த்தீர்களா.. சில வருடங்களுக்கு முன்னர் வரை முதலையி முதுகுபோல இருந்த அந்தப்பாழடைந்த அந் வீதியை குமார் ஒரு கணம் நினைத்து கொள்கிறான்.
“வீதியளின்ரை விதியள் மட்டுந்தால் மாறியிருக்கேதவிர, எங்கட விதி மாற்றப்படா விதியாகவே இருக்கு... தினசரி இடம்பெயர்ந்த கொண்டிருக்கிற எங்களுக்கு ஒரு காப்பற் வீ அவசியமா?” குமார் மனம் நொந்து போ பேசுகிறான்.
- “குமார் என்னட்டைக் கதைச்சதுபோல் வேறை ஆரிட்டையும் கதைக்காதை... உனக்கு ஆபத்து... இப்ப ஒட்டுக்கேக்கிறதுக்கு நிறைய. காதுகள் இருக்கு...” குகதாஸன் யதார்த் தத்தைக் கூறுகிறான்.
"நீங்கள் சொல்றதிலை உணடை இருக்குச் சேர்... ஆனால் மௌனமாய் இருக்க முடியாமல் இருக்குச்சேர்” குமாரின் பேச்சில் விரக்தி உணர்வு தென்படுகிறது.
கார் செம்மணிச்சந்தியை நெருங்கிச் கொண்டிருக்கிறது.
"சேர்... சேர்... இதிலைதான் சேர். கிருசாந்தியையும், அவள்ரை அம்மாவையும் கூடவந்த சொந்தக்காரரையும் கொலை செய்து புதைச்சிருந்தவர்கள்... அப்ப நான் தவராசா லோயருக்கு றைவராய் இருந்தனான்.. அவரோட வந்ததாலை பிரேதங்களை தோண்டி எடுக்கை யுக்கை நானும் பக்கத்திலை நிண்டனான் சேர்... கொடுமையிலும் கொடுமை சேர்...” குமார் கூறுகிறான்.
குகதாஸன் எதுவுமே பேசவில்லை குமாரை ஆச்சரியத்தோடு பார்த்தபடி மெளன மாய் இருக்கிறான்.
இவர் களின் உரையாடலை இடை யிடையே நேசம்மா அவதானித்துக் கொள் கிறாள். ஆனால், முருகையா .... தன்னை மறந்து செம்மணிவெளியை வெறிக்கப் பார்த்தபடி அமர்ந்திருக்கின்றார்.
இதுகாலவரை இரத்த உறவுகளோடு வாழ்ந்த முருகையா இன்றிலிருந்து... சாந்தி நிலையத்தில் “வயோதிபம்” என்றொரு சம நிலை உணர்வைத்தவிர வேறெந்த உறவுகளுமற்ற தொரு குழுமத்துடன் அவரது வாழ்க்கை தொடரப் போகின்றது. இ
- “சாந்தி நிலையம்” இதுதான் இந்த வயோதிபர் இல்லத்தின் பெயர் நிர்க்கதியான
28/ ஜீவநதி - 6

ச• அ.
ர் 5
U5
வயோதிபர்களின் வாழ்க்கை நலன் கருதி அமைக்கப் பட்ட ஒரு ஸ்தாபனம். இங்கு எத்தனையோ ஆதரவற்ற முதியவர்கள் வாழ் கின்றனர். ஆனால் முருகையாவைப் போன்ற வசதி படைத்த வயோதிபர்களும் இருக் கிறார்கள் என்பதும் உண்மை. |
செம்மணிச் சந்தியிலுள்ள வரவேற்பு வளையத்தைத்தாண்டி நாவற்குளிக்சந்தியை நோக்கி கார் ஓடிக்கொண்டிருக்கின்றது:
கண்டிவீதியில் இப்போது காப்பெற் வீதிதான் ...
றைவரின் தலைக்கு மேல் பக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும் நீள்சதுரகண்ணாடி யூடாகத்தகப்பனைப் பார்க்கிறான் குகதாஸன்...
உணர்வுகள் செத்து உலர்ந்து போன முகம்.....!
முருகையா வேதனைப்படுவதை குக தாஸன் உணராமலில்லை. முருகையாவுக்கு இப்போது எழுபத்தேழு வயது, குகதாஸனுக்கு இப்போது நாற்பத்தேழு வயது.. நாற்பத்தேழு வருடங்கள் முருகையாவோடு வாழ்ந்த அனுபவம்..! அனுபவங்கள் சாவதில்லை..!
முருகையா - தவமலர் தம்பதிகளுக்கு குகதாஸன் ஒரேமகன். காகத்திற்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு என்று கூறுவார் களே ... முருகையாவுக்கும் தவமலருக்கும் பிறப்போடு கூடிய வறுமை... இருந்தும் குகதாஸன் பொன் குஞ்சாகவே வளர்க்கப்பட்டான்.
முருகையா ஒரு பேக்கரியில் வேலை செய்தான். உள்ளங்கையை நிறைக்கின்ற சொற்ப சம்பளம்... பல்லிமுட்டையளவு வாழ்க்கை ...
குகதாஸனுக்கு அப்போது எட்டு வயது... மூன்றாந்தர மாணவன், பட்டம் கட்டிப் பறக்கவிடுகின்ற பருவம்.. வீதியில் நடந்து வந்துகொண் டிருந்த தவமலரை போட்டி போட்டோடிய மினிவானின் இடதுபக்கக் கண்ணாடி தவமலரின் தலையில் மோதி.. தவமலர் விழுந்து ...பிடரி அடிபட்டு ... இரத்தம் மூளைக்குள் இறங்கி ...... ஏழாம் நாள் தவமலர் இறந்துவிட்டாள்...!
முருகையா பேக்கரியில் பாணி போறணை வெக்கையில் வெந்து பெறுகின்ற சொற்ப சம்பளத்தில் முருகையாவை நோக விடாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவள் தவமலர்தான். அந்தத் தவமலரை இழந்து தாயைத்தின்னியான குகதாஸனோடு... திசை தெரியாமல் நின்றார் முருகையா..!
குகதாஸன் பச்சைமண ... தாயின் சிதைக்குத் தீமூட்டினான். தீநாக்குகள்
தழ் 617 ஐப்பசி 2013

Page 31
தவமலரின் உடலை எரிக்க... முருகையாவின் இதயத்தை வேதனை அவித்தது..!
"தவமலர்... நீ உன்ர புள்ளையையும் என்னையும் அனாதைகளாய் விட்டிட்டுப் போட் டாய்... நீ விட்டிட்டுப்போன உன்ர புள்ளையை நான் என்னை வித்தாவது படிப்பிச்சு ஆளாக்கு வன்...” இப்படியொரு சபதம் அவனை அறியாமலே அவனது இதயத்துள் ஜனனித்து... உறைந்தது.
க.பொ.த சாதாரணதரம் வரை கிராமப் புறப்பாடசாலையில் படித்த குகதாஸன், க.பொ.த உயர்தரவகுப்பை நகரப்புறப்பாடசாலையில் தொடர்ந்து, மாவட்டத்தில் முதல் தர மாணவ னாகச் சித்தியடைந்தான். நான்காம் தரம்வரை படித்த முருகையாவின் மகன் , பாண போறணையைத் தவிர வேறெதையும் விளங்காத முருகையாவின் மகன்... குகதாஸன் பல்கலைக் கழகத்தில் மருத்துவபீடத்திற்குத் தெரிவானது ."மெய்வருந்தக்கூலிதரும்” என்பார்களே அது தானா...?
| “இன்னும் நாலைஞ்சு வருசத்திலை உன்ரை மோன் ஒரு டாக்டர் .... அதுக்குப் பிறகு நீ மகராசன்மாதிரி வாழலாம்” இப்படி ஊரவர்களின் பேச்சைக்கேட்டு முருகையா உறைந்து போய் விட்டார்..!
"தவமலர் .. உன் ரை மகன் ஒரு டாக்டர்” அவரது மனத்தளத்தில் உறைந்திருந்த தவமலருக்கு அவரது இதயம் கூறியது! வெறுமையாகத் தொடர்ந்த அவரது வாழ்க்கை யில் இப்போது .... ஒரு அர்த்தம் இருப்பதை முருகையா உணர்ந்தார்...!
- "என்ன முருகையா.. குகதாஸனை எப்பிடிப்படிப்பிக்கப் போறாய்... அவன் இனிப் படிக்கப்போறது பெரிய படிப்பு... இனித்தான் சிலவு ...” அவன் வேலை செய்யும் பேக்கரி உரிமையாளர் அனுதாபத்தோடு கேட்டார்.
- “ என்னையா செய்யிறது, வேசம் போட்டால் ஆடத்தானே வேணும்... எனக் குள்ள ஒரேயொரு சொத்து நான்குடியிருக்கிற வீடும் ஒருபரப்புக்காணியுந்தான்... அதை வித்துப் போட்டு பொடியனைப் படிப்பிக்க வேண்டியது தான் நான் சத்திரம் சாவடியிலை படுத்தாலும் பொடியன் படிக்கவேணும்...” முருகையா உணர்ச்சிவசப்பட்டு, கண்கலங்கிக் கூறினார். அது
கார் நாவற்குளிப்பாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காருக்குள் மந்தமானதொரு அமைதி.
- குகதாஸன் ஏ.எல்.வகுப்பில் மாவட்டத் தில் முதல்தர மாணவனாகச் சித்தியடைந்த போது நடந்ததொரு சம்பவம் ... அவரது
29/ ஜீவநதி - இ

இதயத்தில் கல்வெட்டாய் உறைந்திருந்த அந்தச்சம்பவம், இப்போது முரல்மீனாய் அவரது இதயத்தைக் குத்துகின்றது..!
அந்தச்சம்பவம்....
குகதாஸன் மாவட்டத்தில் முதல் மாணவனாகச்சித்தியடைந்து அவன் படித்த கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவன் என்ற வகையில் கல்லூரி நிர்வாகம் அவனுக்கொரு பாராட்டு விழாவைஒழுங்கு செய்தது.
விழாவுக்கு, வெள்ளைஜீன்ஸ், வெள்ளை நீளக்கைசேட், வெள்ளைச் சப்பாத்துடன் வர வேண்டுமென கல்லூரி நிர்வாகம் குகதாஸனி டம் கேட்டிருந்தது. கல்லூரி முதல்வர் கேட்டவை களில் வெள்ளை ஜீன்ஸ், வெள்ளைசேட், ரை என்பன குகதாஸனிடம் இருந்தன. வெள்ளைச் சப்பாத்து மட்டும் அவனிடம் இருக்கவில்லை. கல்லூரிக்குப் போட்டு அடிப்பக்கம் தேய்ந்து கிழிந்த போனதொரு வெள்ளைச்சப்பாத்து வீட்டு வளையில் செருகி வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சப்பாத்தை முருகையா எடுத்துப் பார்த்தார்...
அது பாவிக்கக்கூடியதாக இருக்கவில்லை.
அவருக்கிருந்த ஒரேயொரு கைப்பலம் அவர் வேலைசெய்யும் பேக்கரி உரிமையாளர் தான், இதுகாலவரை அவர்தான் முருகையா வுக்கு கைகொடுத்தார். இன்று அந்தப் பேக்கரி முதலாளி “பைப்பாஸ்” சத்திரசிகிச்சை முடிந்து படுத்திருக்கிறார். அவரிடம் கடன் கேட்க முருகையாவின் மனம் துணியவில்லை.
குகதாஸனுக்கு ஒரு வெள்ளைச் சப்பாத்து வாங்கிவிட முருகையா எவ்வளவோ முயற்சித்தும் அவரால் முடியாமல் போய்விட்டது.
ஒரு வெள்ளைச்சப் பாத்து வாங்கி மகனுக்குக் கொடுக்க முடியாத வேதனையில் முருகையாவின் இதயம் கிழிந்து அவரது நெஞ் சாங்கூட்டுக்குள் தொங்கிக் கொண்டிருந்தது..!
கெளரவிப்பு விழாவுக்கு முதல் நாள் - பிற்பகல் மூன்று மணியிருக்கும்... எதுவுமே செய் யமுடியாத நிலையில் தலையைச் சொறிந்தபடி வீட்டுத்திண்ணை க்குந்தில் முருகையா குந்தியிருந்தார். இவர் குந்தி யிருந்த திண்ணைக்குந்துக்கு எதிராகவுள்ள வளையில்த்தான் கிழிந்த அந்தச் சப்பாத்து செருகிவைக்கப்பட்டிருந்தது. சில விநாடிகள் அந்தச்சப்பாத்தைப் பார்த்தவர் எழுந்துபோய் அந்தச் சப்பாத்தை இழுத்து எடுத்தார்... சப்பாத்தின் அடிப்பாகம் மட்டும் தேய்ந்து கிழிந்திருந்தது.... திருப்பித்திருப்பிப் பார்த்தார் ...
- பேக்கரியில் வேலை செய்யும் போது. ஒரு பனிசுக்கு மா போதாமல் விட்டால்
தழ் 61 / ஐப்பசி 2013

Page 32
பக்கத்திலுள்ள பனிசில் சிறிதளவு மாவைக் கிள்ளி எடுத்து மா போதாத பனிசுக்குப் பொருத்திச் சரிப்படுத்திக்கொள்வார். இது தினசரி பேக்கரியில் முருகையாவுக்கு ஏற்படு கின்ற தொழில் அனுபவம்..!
அந்தத் தொழில் அனுபவம்... பனிசி லிருந்து சப்பாத்துக்கு இடமாறியது... சப்பாத்தைத் திருப்பிப் பார்த்தார். அவரது நெற்றித்தோல் சுருங்கிகண்புருவங்கள் துடித்தன ...
சில தினங்களுக்கு முன்பு பேக்கரியி லிருந்து கொண்டுவந்த காட்போட் பெட்டியை எடுத்துக் கிழித்து விரித்தார். அதன் ஒரு பக்கத்தில் கிழிந்து போன அந்தச்சப்பாத்தை வைத்து பென்சிலால் கோடுபோட்டார். சப்பாத்தின் அடிப்பக்கவடிவம்... சேவ் எடுத்த பின் செத்தையில் செருகி வைக்கப்பட்டிருந்த பிளேட்டை எடுத்து போடப்பட்ட அந்தக் கோட்டின்மீது வெட்டினார் ....
சப்பாத்தின் அடிப்பக்க வடிவிலான காட்போட் துண்டு..! அடிப்பக்கம் கிழிந்த சப்பாத்தினுள் அந்த மட்டையைச் செலுத் தினார்... காட்போட் செலுத்தப்பட்ட சப்பாத்தை தனது காலில் போட்டு நடந்து பார்த்தார். அவரது முகத்தில் சிறிய பிரகாசம்.. “வெட்டப்பட்ட துண்டுபோல் இன்னுமொரு துண்டை வெட்டி வைத்தால் இன்னும் பலமாக இருக்கும்” முருகையாவின் அனுபவம் பேசியது! வெட்டிச் சப்பாத்தினுள் செருகப்பட்டிருந்த காட்போட் மட்டையை இழுத்தெடுத்து அதேயளவில் இன்னுமொரு துண்டை வெட்டி எடுத்து இரண்டு மட்டைகளையும் சப்பாத்தினுள் செலுத்தினார். அந்தச்சப்பாத்தைத் தனது காலில் போட்டுப் பார்த்தார்... முகத்தில் திருப்தியின் ரேகைகள்..!
இரண' டு சப் பாத து க ளை யும் கிணற்றடிக்கு எடுத்துச்சென்று பூவரசமிலையில் சுற்றிவைக்கப்பட்டிருந்த சன்லைற்சோப்பை எடுத்து சப்பாத்துக்குள் இரண்டையும் கழுவிக் காயவைத்தார்.
குகதாஸன் சப்பாத்தோடு விழாவுக்குச் சென்றான் ... விழா மிகவும் சிறப்பாக நடந்தது.
குகதாஸனின் பல் கலைப் படிப் பு ஆரம்பமானது... முருகையாவின் பொருளா தாரப் பிரச்சினை றப்பரைப்போல் இழுபட்டு... றப்பர் அறுந்து போகும் நிலைக்குள்ளாகி... முருகையாவின் குடிநிலம் விற்கப்பட்டது..!
ஒல்லித்தேங்காய் தண்ணீரில் அடி பட்டு கரைசேர்வது போல்... குகதாஸனின் படிப்பு முடிந்து டாக்டரானான்.
வழமைபோல் திருமணப்பேச்சுக்கள்
30/ ஜீவநதி - இதழ்

ஆரம்பமாகின .. நேசம்மா, அவளும் ஒரு டாக்டர் ... இவள்தான் குகதாஸனுக்கு மனைவியாக வந்தாள். நேசம்மாவோடு, நல்லூர் செட்டித் தெருவில் வசதியானதொரு வீடும் சீதனமாகக் கிடைத்தது... இதுகாலவரை பாண்போறணை யின் உடல்வெக்கையிலும், வறுமையின் மன வெக்கையிலும் வெந்து வெடித்த முருகையா ... இப்போது வசதியான வாழ்க்கை... முருகையா இப்போது வீடியை மகனுக்கும். மருமகளுக்கும் தெரியாமல் ஒழித்தொழித்துத்தான் பத்தினார்...!
- சொந்த வீட்டைவிற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியிருந்த போதும் அந்தச் சப்பாத்தைத் தன்னோடுதான் முருகையா வைத்திருந்தார். அந்தச்சப்பாத்து அவரின் வறுமையின் குறியீடு.! இப்போது இந்தச்சீதன வீட்டுக்கு அந்தச்சப்பாத்தை அவரால் கொண்டு வர முடியவில்லை... அதைக்கொண்டுவர குகதாஸன் சம்மதிக்கவில்லை.. அதையொரு பெரும்பிரச்சினையாக முருகையாவும் எடுத்துக் கொள்ளவில்லை...!
அந்தச் சீதன வீட்டிலிருந்துதான் முருகையாவின் சாந்தி நிலையம் நோக்கிய பயணம் ஆரம்பமாகியுள்ளது..!
கார் நாவற்குளிச்சந்தியை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் கார் சாந்திநிலையத்தை அடைந்து விடும்
காருக்குள் அமைதி முருகையாவால் பேசமுடியவில்லை ....
குகதாஸனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை ....
மருமகளின் துாண டலால் த்தான் குகதாஸன் தகப்பனை சாந்திநிலையத்தில் விட்டான் என்ற அவப்பெயருக்குள்ளாகப் போகி றேனே என்ற பிரமையில் நேசம்மா இருந்தாள்....
குமார் - இவன் என்றுமே கலகலப் பானவன் அவன்கூட இப்பொழுது மௌனமாக
இருக்கின்றான் ...
கார் ஓடிக்கொண்டே இருக்கின்றது...
குகதாஸன் - நேசம்மா தம்பதிகளுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், மூத்தவன் செயோன் பதின்மூன்று வயது, இரண்டாமவன் மேவின், அவனுக்கு எட்டு வயது, கடைக்குட்டி காவியன் ஆறு வயது... குகதாஸனும், நேசம்மாவும் ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட வேலைக்காரி யோடு சேர்ந்து முருகையாதான் மூவரையும் வளர்த்தெடுத்தார். பாலர் பாடசாலைக்கு கூட்டிச் சென்றதிலிருந்து இரண்டாம் ஆண்டு - வரை பாடசாலைக்குக் கூட்டிச்சென்றதும், உணவூட்டியதும் மட்டுமல்ல, அவர்களின்
67 ஐப்பசி 2013

Page 33
கக்கா எடுத்ததும் முருகையாதான்.
இரவு படுக்கப்போகும் வரை அவர்கள் மூவரும் முருகையாவின் அறைக்குள்தான் நிற்பார்கள். முருகையா கதை சொல்வார், பாட்டுப்பாடுவார், நொடி சொல்லுவார், எப் பொழுதுமே அவர்களைக் கலகலப்பாக
வைத்திருப்பார்....
பின்னேரங்களில் மூத்தவன் கிரிக்கற் விளையாடச் சென்று விடுவான் மற்றைய இருவரும் முருகையாவின் கைகளைப்பிடித்துக் கொண் டு நல்லுார் கோவிலடிக்கு வந்து
விடுவார்கள்.
பிள்ளைகளின் நடவடிக்கைகளை குகதாஸன் அவதானித்தான் ... தனது பிள்ளை களின் படிப்பிற்கு முருகையா இடையூறாக இருப்பதாகவே அவன் கருதினான்.
- பா ண' போறணை வெக்கையில் வதங் கிய முருகையாவின் மகனான தான், இன்று குளிரூட்டப்பட்ட அறையில் படுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கல்வி தான என பதை அ வ ன முழுமையாக நம்பினான் . தனது நம்பிக்கைக்கூடாகவே தன து ப ள'  ைள க ள ன' எதிர் காலத்தையும் அவன் பார்த்தான் ...! அவனது சிந்தனை கல்வியிலும், ஆஸ்பத்திரிச் சூழலிலும் வளர்ந்திருந்ததால் அதற்கு மேலால் அவனால் சிந்திக்கமுடியாமல் போய்விட்டது!.
இந்நிலையில்தான் முருகையாவுக்கும் தனது பிள்ளைகளுக்குமிடையில் இருந்த உறவைத் துண்டிக்க அவன் விரும்பினான்.
பாண போறணை க குள் வெந்த ஒருவனின் மகன் டாக்டராகலாம். ஆகாமலும் போகலாம். ஆனால், டாக்டர் குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒருவன் .... டாக்டர் ஆகத்தான் வேண்டும்.!
குகதாஸனின் சிந்தனை கெளரவம் என்ற வட்டத்துள் துடித்தது ...!
ஆறு ஓடிக்கொண்டிருக்கும் வரை அது ஆற்றுநீர்தான்... அது கடலில் கலந்து விட்டால் அது கடல் நீர்தான்! அதேபோல.. குகதாஸன் தகப்பனாகும் வரை முருகையாவுக்கு மகன் என்ற நிலையில் இருந்தே சிந்தித்தான். இப்போது அவன் மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகிவிட்டான். ஆற்றுநீர் கடலில் கடல்நீராவது போல்.... அவன் இப்போது
3il லீவநதி - இதழ்

தந்தையாகவிருந்தே சிந்திக்கின்றான்...!
கார் நாவற்குளிச்சந்தியைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் சில நிமிடங்களில் சாந்தி நிலையத்தை அடைந்து விடும்.
| "பேராசிரியர் தாற சம்பளம் உங்கடை குடும்பத்திற்குப் போதுமா” காருக்குள் நிலவிய அமைதியைக் கலைக்கும் நோக்கத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறான் குகதாஸன்.
- "அதை ஏன் சேர் பேசுவான் ... விடிஞ்சால் இன்டைக்கு எப்படிக் கடத்தப் போறன் என்ட மரணபயம்... எங்கடை குடும்பத் திலை மொத்தம் பத்துப் பேர் ... பெரிய குடும்பம் ... நான், என்ர மனிசி, ஐந்து புள்ளையள், வயது போன என்ர தாயும், தகப்ப னும் என்ரை மனிசியின்ரை வயதுபோனதாய் ...
தினசரி பத்து வயித்துக்குச் சாப்பாடு போட வேணும் குமார் மனந்திறந்து கதைக்கிறான்.
அ " மூ ண' டு வ ய து போனதுகளை ஆர் பராமரிக் கிறது ....” குகதாஸன் சிரித்தபடி கேட்கிறான். கேட்டவன் கண் புருவங்களைச் சுருக்கி குமாரின் பதிலை கூர்மையாக அவதானிக் கின்றான்.
" அ ைவ க கெண' டு விசேசமாய் எந்த ஏற்பாடுகளும் வீட்டிலே இல்லை சேர் எல்லாரும் சேர்ந்துதான் பாக்கிறம்... என்ரை மனிசி அவை யின்ரை உடுப்புக்களைக்கழுவிப் போடுவா... நான் குளிக்கிறதுக்கு தண்ணீர் நிரப்பி விடுவன். நாங் கள் சாப் பி டே க் கை அவையும் சாப்பிடுவினம்... வீட்டுவசதி தான் போதாது... ஒரு அறை இரண்டு சின்ன விறாந்தை, சின்னொரு குசினி... அவ்வளவு தான் நெருப்புப் பெட்டி மாதிரி வீடு... படுக்கிற தெல்லாம் கஷ்டம்” குமார் சர்வ சாதாரணமாகக் கூறுகிறான்.
குகதாஸன் மெளனமாக இருக்கிறான்.
"வயது போனதுகளை ஏதோ வித்தி யாசமான பிறவியளாய் சிலபேர் பாக்கினம். அது ஏனெண்டு எனக்கு விளங்கயில்லை சேர்... நான் இப்ப வேலைசெய்யிற வீட்டுப் பெரிய சேர் இப்ப பென்சனிலை நிக்கிறார்... இப்பவும் வீட்டிலை வளர்ந்த பெரிய புள்ளை யளுக்குப் பாடம் சொல்லிக்குடுப்பர்.” குமார் காரை ஒட்டியபடி கதைக்கிறான். குமார் வேலை செய்கின்ற வீட்டுக்காரர் ஒரு பேராசிரியர்... அவரைப் பேராசிரியர் என்று அவனால் கூற
61 / ஐப்பசி 2013

Page 34
முடிவதில்லை, "பெரிய சேர்” என்று தான் கூறுவான்.
கு மார' த ன' ரை  ேப ச  ைச த தொடருகிறான்,
"எங்கடை பெரிய சேர். பெரிய படிப் பெல்லாம் படிச்சவர் சேர்... அவர் சின்னப் புள்ளையளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிற தில்லை சேர்... பெரிய பெரிய மீசை முளைச்ச பெடியளுக்கும், கலியாணவயதிலை உள்ள பொம்பிளைப்பிள்ளையளுக்குந்தான் பாடம் சொல்லிக்குடுப்பர்... உளவியல் எண்டொரு பாடம்... நான்பின்னாலை இருந்து கேட்டுக் கொண்டிருப்பன் சேர்... ஒருநாள் வயதுபோனது களைப் பற்றி அவர் படிப்பிச்சார்... அவர் சொன்ன அவளவும் என்ரை மனசிலை பதிஞ்சு போச்சுச்சேர்...
அவர் இப்படித்தான் சொன்னவர் ....
நாங்கள் வாழ்க்கையைத் தேடி ஓடுபவர்கள் .. முதுமை அடைந்தவர்கள் வாழ்க்கையைத் தேடி ஓடி... பொய்மைகளை யும், மெய்மைகளையும் அனுபவித்து ஓய்ந்தவர் கள்... அவர்களிடம் எந்த ஆவலாதிகளும் இருப்பதில்லை... ஒருவகையில் அவர்கள் குழந்தைகளாகி விடுகின்றனர். குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்புக்களைத்தான் விரும்புகிறார்கள். பிறக்கின்ற குழந்தைகள் அனுபவம் பெறாத குழந்தைகள்... முதுமை அடைந்தவர்கள் அனுபவம் பெற்ற குழந்தைகள்.
- "நாம் சிந்திப்பதுபோல் முதியவர்களும் சிந்திப்பார்களென்று நாம் எதிர்பார்க்கக்கூடாது ... நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது, நமது பெற்றோர் எங்களை அனுசரித்து. அரவணைத்து நடந்தார்கள், நம்மோடிருக்கும் முதியவர்கள் என்ற குழந்தைகளை நாம் பெற்றோராகி அரவணைத்து ... அனுசரித்து நடந்தால் ... அவர்கள் எங்களுக்கு சுமையாக இல்லாமல் சுவையானவர்களாக இருப்பார்கள்” .... இப்படித்தான் சேர் அவர் சொன்னவர் ... என்ரை நெஞ்சிலை ஆணி இறுக்கினது போலை இப்பவும் ஞாபகம் இருக்குது சேர் ...
- அவர் சொன்னதிலை எவ்வளவோ உண்மை இருக்குச் சேர்... இப்ப மாசிமாதம் பனிகாலந்தானே... எங்கடை வீட்டிலை கட்டில் வசதி இல்லைச் சேர்... போத்துக்கொண்டு படுக்க பெட்சீற் வசதியும் இல்லைச் சேர். குறண்டிக்கொண்டுதான் சேர் படுப்பம்... எங்கட சின்னவன் என்ரை அம்மாவோடதான் படுப்பான் ... இந்தக்குளிருக்கை என்ரை அம்மா .. தன்ரை சீலைத்தலைப்பாலை என்ரை மகனைப்போத்தி
32/ ஜீவநதி - இதழ்

விட்டு தான் குறண்டிப் போய் படுத்திருப்பா... சேர்... அந்தக்காட்சியைப் பார்த்தால் அழுகை தான் சேர் வரும் இது மட்டுமில்லைச் சேர்.
... எங்கடைவீட்டிலை சாப்பாட்டுத் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படும்.... பத்துப் பேருக்குச் சாப்பாடு முடியுமா... சிலவேளை வீட்டிலை ஒரு பருக்கை அரிசி இருக்காது அப்படியான நேரங்களிலை அம்மா என்னட்டை வந்து சொல்லுவா "தம்பி குமார் நாங்கள் பட்டினி கிடந்து பழக்கப்பட்ட ஆக்கள். என்ரை புள்ளையள்... பாவங்கள்... பசைக் கடல்... பட்டினியைத் தாங்க மாட்டுதுகள்... கடன் பட்டாவது ஏதாவது வாங்கிக் கொண்டு வா” எண்டு சொல்லுவா. நான் வேறை எங்கை போவன்... நேரை பேக்கரி முதலாளியிட்டைப் போவன்... “பாண் இருக்கு எடுத்துக் கொண்டு போ... இல்லாட்டி... ஸ்ரோரிலை மாக்கிடக்கு எடுத்துக் கொண்டு போய் புட்டவிச்சுக்குடு” என்று சொல்லுவார் சேர்... பத்துப்பேருக்கும் ஐஞ்சு றாத்தல் பாணாவது தேவைப்படும் இலவசமாய்த்தாற மனிசனிட்டை ஐஞ்சு றாத்தல் பாணை எப்படிச்சேர் எடுக்கிறது ... நான் ஒரு மூண்டுறாத்தல் பாணை எடுத்துக் கொண்டு போவன் அந்த மூண்டு இறாத்தல் பாணையும் என்ரை ஐந்துபுள்ளையளுக்கும் புறிச்சுக்குடுத்திட்டு மிச்சப்பாணையும் பாண் கருக்கல்களையும் வயது போன மூண்டும் சாப்பிடுங்கள் சேர்... அந்தக் காட்சியைப் பாக்க நெஞ்சு வெடிக்கும் சேர் ...
- " இதுகளை எங் களு க் கு ச் சுமை யெண்டு நாங்கள் நினைக்கலாமா” மனம் நெகிழ்ந்து கூறுகிறான்.
குகதாஸன் மெளனமாக இருக்கிறான் ... அவனது முகம்... காற்றுப்போன பந்து போல சுருங்கிவிட்டது ...!
கார் பனை ஆராய்ச்சி நிலையத்தை யும் தாண்டி ... சாந்தி நிலையத்தையும் தாண்டி ... கைதடிச்சந்தியை நெருங்கிவிட்டது ...
“குமார்... கைதடிச்சந்தி “றவுண்ட் எபவுட்டிலை” காரைத்திருப்பு வீட்டைபோவம்” குகதாஸன் கூறுகிறான்.
“ஏன் சேர்” ஆச்சரியத்தோடு குமார் கேட்கிறான்.
"நான் சொல்றன் நீ காரைத்திருப்பு வீட்டை போவம்”
கைதடி “றவுண்ட் எபவுட்டில்” றவுண்ட் டடித்துக்கார் திருப்புகின்றது... வீதிகளில் மட்டு மல்ல... மனிதவாழ்க் கையிலும் - எத்தனையோ “றவுண்ட் எபவுட்டுகள்”
பாதைகளை நாங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்...!
5 617 ஐப்பசி 2013

Page 35
தனித்திருப்பவளின்
தவிப்பு
ஒழுக்கு குடிசையும் ஓட்டப்பானையும்தான் "வாழ்க்கை தாரை வார்த்தது
உனக்கு
அடுப்பில் நெருப்பாகி அடிமைப்பிறப்பாகி வெந்து போகிறது உயிர் மனசில் கரிமண்டி ஆசை சருகாகி இத்துப்போகிறது இளமை உறவு விஷமாகி உயிரும் கனமாகி சாவின் கண்ணுக்கு தொலைவில் கிடக்கிறது ஆயுள் செருப்புக்கும் சீப்புக்கும் கடன் காரி செத்துப்போகின்ற இளமையின் சொந்தக்காரி
புலன்கள் ஊனமாகி பூமி வெறும் பொருளாகி இருட்டுக்குடிசை முலையில் குறண்டிக்கிடக்கிறது எதிர்காலம் சில பெண்களை வாழ்கை பிச்சைப்பாத்திரம் தூக்க வைக்கிறது சில பெண்கள் தங்களையே பாத்திரமாக்கி விடுகின்றனார்
கண்ணீரை நெரு காய வைக்கிறாய் விதவைகளே விழ கைதிகளே காலம் தந்த ஒற்ன காலம் போக்கும் கண்ணீர் குழந்தை
உங்கள் பக்கம் ப வறுமை பிசாசை வழி சொல்லாத க உங்கள் குரல்வை நசிக்கும் கொடுன விலங்கிடத் துணி சமுதாயமிது இந்த சமுதாயம் இந்த நாடு உங்களுக்கு என்ன நிறைய வறுமை த வயிறு நிறைய பட விதவைக்கு இன் விபச்சாரி என்ற ப இவர்கள் கறுத்த 6 தீக்குச்சி கிளிக்கத் மனிதனே வா... மின்மினிப்பூச்சியி வெளிச்சமாவது க
- நெடுந்தீ
மெளனத்துணியுடுத்தி அதற்குள் எத்தனை காலம் கண்ணீரை புதைக்கப்போகிறாய்
அகப்பை பிடித்துக் . கொண்டே அழுது தொலைகிறாய்
33/ ஜீவநதி - இ

வலியை உணரும் எழுத்துக்கள்!
என் எழுத்துக்கள் வலியை உணர்கின்றது....
பூமியில் எல்லாக் கேவலங்களும் இருப்பாகின்றன...! வாழ்வு பற்றிய மிருகக் கோட்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாகின்றன கண்ணீர் ஒன்றும் உவப்பில்லை என்ற தீர்ப்பு
அங்கீகரிக்கப்பட்டது பல புதிய தீர்ப்புகளும் கலப்பட நியாயங்கள் மனித புழுக்களால் ஏற்றுக்
ப்பிலே
ஜி நீரின்
bற சிறகோடு
தகளே
நித்திருக்கும்
துரத்த சமுதாயமிது
ள் எலும்புகளை மக் கரங்களுக்கு பியா வரட்டு
கொள்ளப்பட்டன. மானிட நியாயம் புதைந்து போயின
இப்போ செவ்வாயில் மற்றக் தந்தது
கிரகங்களிலும்... கந்தது
-- மனித ஆந்தைகள்...! ட்டினி தந்தது
அதனால் அண்ட வெளி எங்கும் னொரு பெயராய்
ஓசோன் படைகளைத் தாண்டிய ட்டம் தந்தது
துர்நாற்றம் - வீசும் வாழ்வுக்குள்
என் எழுத்துக்கள் வலியை தொரியாத
உணர்கின்றது.
மெளனத்தின் சத்தமாய் பின்
பெருமூச்சின் புயலாய் காட்டுவோம்.
என் எழுத்துக்கள் மீண்டும் வுே மோகன்ராஜ் வலியை உணர்கின்றது.
- மீரா சிவகாமி
தழ் 6 7 ஐப்பசி 2013

Page 36
தனிமரம்
“குஞ்சன், இண்டைக்கு பள்ளிக்குடம் விட்டோண்ணை அங்கை, இஞ்சை மினக் கெடாம ஓடி வந்திடப்பு” என்றாள் கனகம்.
"ஏனம்மா, என்ன அவசரம்” என தாய் கனகத்திடம் பதில் கேள்வி கேட்டான், குஞ்சன் என செல்லமாக அழைக்கப்படுகின்ற தனபாலன்.
“இண்டைக்கு ஆறுமுகத்தாற்றை வயலிலை அருவிவெட்டு நடக்கப்போகுது. உங்கத்தை வயல்காரரிலை வாறவைக்கு பொலியிற நெல்லிலை பாத்துப்பாக்காம குடுக்கிறது அந்த மனிசன் ஒண்டு தான். நீ வீட்டை வந்ததும் பறனில கிடக்கிற குஞ்சுப் பெட்டியையும் தூக்கிக்கொண்டு வயலுக்கு வந்திடப்பு. நானும் அங்கைதான் அருவி வெட்டுக்குப் போகப்போறன்”
வயலில் அருவி வெட்டுக் காலங்களில் அருவி வெட்டி, சூடு அடித்து, தூத்தல் முடிந்ததும் பொலியும் நெல்லில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி, ஓலைப் பெட்டிகளுடனும் குஞ்சுக் கடகங்களுடனும் காத்திருக்கும் வறுமைப்பட்டவர்களை வரிசையாக இருக்க வைத்து வயல் சொந்தக்காரர் தனது இரு கைகளாலுமோ அல்லது நெல் அளக்கும் "கொத்து”க்களின் மூலமோ பங்கிடுவது காலாதிகாலமாக நிலவி வரும் வழக்கமாக இருந்தது.
கனகம் சொல்லி முடித்ததும் “அம்மா, நான் இண்டைக்குப் பள்ளிக்கூடம் போகாமை நிக்கட்டேணை. வயலுக்கு வந்தா எலிப்புத்து வெட்டி நெல்லும் எடுக்கலாம். அகிழானும் பிடிக்கலாம் எல்லேணை” என தனது ஆவலை வெளிப்படுத்தினான் தனபாலன்.
வயல்களில் நெல் விளைந்து முற்றும்
34/ ஜீவநதி - இத

காலத்தில் நீரும் வற்றி நிலம் வரட்சியடையும் போது, தமது எதிர்கால உணவுத் தேவைக்காக அகிழான்கள் எனப்படும் வயல் எலிகள் நெற் கதிர்களை வெட்டி எடுத்து தமது புற்றுக்களில் சேமித்து வைத்துக் கொள்ளும். அறுவடை முடிந்ததும் சிறுவர்களும் பெரியவர்களுமாக அந்தப் புற்றுக்களை அடையாளம் கண்டு மண்வெட்டிகளால் அகழ்ந்து அகிழான்களால் சேமிக்கப்பட்ட நெற்கதிர்களைச் சேகரித்துக் கொள்வர். அப்படி அகழும்போது புற்றுக் களில் மறைந்திருக்கும் அகிழான்களையும் உணவுத் தேவைக்காகப் பிடித்துக் கொள்ளும் வழக்கமும் நிலவி வந்தது. அதனை மனதில் வைத்தே தனபாலன் பள்ளிக்கூடம் போவதைத் தவிர்க்க எண்ணினான்.
“சீச்சீ... பள்ளிக்கூடம் போகாமை நிக்காதை. அருவி வெட்டி முடிஞ்சு உப்பெட்டி யளை சூடு மிதிக்கிற இடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வரைக்கும் வயலுக்கை
- க.கோபாலபிள்ளை -
இறங்க விடாயினம். புத்தும் வெட்ட ஏலாது. அருவி வெட்டி முடியவே ரெண்டு மணியா கிடும். நீ பள்ளிக்குடத்தால் வரக் கணக்கா இருக்கும்”
மகனின் படிப்புக் குழம்புவதை விரும் பாத கனகம் இவ்வாறு கூறியதும் தனபாலனும் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டு விட்டான்.
அவன் பள்ளிக்கூடத்துக்குப் போனானே தவிர, அவன் எண்ணமெல்லாம் எலிப்புத்து வெட்டு வதிலும், பிடிக்கும் எலியை இரவு பொரித்துச் சாப்பிடுவதிலுமே இலயித்திருந்தது.
கனகம், தனது இருபத்தைந்து வயதிலேயே கணவனை இழந்துவிட்ட இளம்
61/ ஐப்பசி 2013

Page 37
விதவை. கணவன் மாணிக்கம் இருந்தபோது செல்வச் செழிப்பில் மிதக்காவிடினும், குறைகளின்றி குடும்ப வண்டி ஓடிக்கொண்டி ருந்தது. கனகம் உழைப்புக்காக வெளியே செல்ல வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஒரு நாள் வழக்கம் போல வேலைக்குச் சென்ற மாணிக்கம் வேலைமுடிந்து முட்டாஸ்கடைச் சந்தியில் வந்துகொண்டிருந்தபோது தான் அந்தக் கோர நிகழ்வு நடந்தேறியது.
இரைதேடித் திரிந்த பறவைகள் மாலையானதும் தமது கூடுகளை நோக்கி விரைவது போல் காலையில் தொழிலிடங் களுக்குச் சென்றவர்களும் தத்தமது வீடுகளை நோக்கி விரைந்துகொண்டிருந்த நேரம். வடபகுதிக்கான மின்சாரத் தடையும், பொருளா தாரத் தடையும் அமுலில் இருந்ததால், வர்த்தக நிலையங்கள் யாவும் நேரகாலத்துடன் பூட்டப்பட்டுவிடும். இருள் சூழ்ந்ததும் வீதிகளும் வெறிச்சோடி மனிதர்களும் வீடுகளுக்குள் முடங்கி விடுவது வழக்கமாகி இருந்தது. அதனால் இயந்திர வேகத்தில் இல்லிடங்களை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர்களில் ஒருவனாக மாணிக்கமும் வந்துகொண்டிருந்தான். கோட்டைப் புறமிருந்து கிளம்பிய உஷ்..ஷ்..ஷ்... என்ற இரைச்சலைத் தொடர்ந்து ஸ்ரான்லி வீதிப்பக்கமாகவும் முட்டாஸ் கடைச் சந்திப் பக்கமாகவும். சிவன்கோவிலடிப் பக்கமாகவும் வேறும் சில இடங்களிலுமாக ஷெல் குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. குண்டுகள் மட்டுமா சிதறின. மனிதர்களும் கட்டிடங்களும் சில வாகனங்களும் அல்லவா சிதறின. அன்று சிதறிய உடல்களில் ஒன்றாக மாணிக்கனின் உடலும் அடையாளம் காணப்பட்டது.
மாணிக்கம் - கனகம் திருமண வாழ்க்கை யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பை மீறிய ஒன்றானதாலும் அவர்கள் விரும்பி முடிவெடுத்த வாழ்க்கையாதலாலும் இரு பகுதிப் பெற்றோரும் அவர்களை ஒதுக்கி விட்டிருந்தனர். எனவேதான் கணவனை இழந்தபின் எவ்வித ஆதரவோ, அரவணைப்போ இல்லாத போதும் எப்படியாவது ஒரே மகனை இந்தச் சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவந்து, தலைநிமிர்ந்து வாழவைக்க வேண்டும் என்ற உறுதியுடன் அவனது கல்வி யில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தாள்.
தனபாலன், ஒழுக்கமுள்ளவனாகவும் கல்வியில் சிரத்தையுள்ளவனாகவும் தாயின்
35/ கீவநதி - 6

மனம் கோணாதவனாகவும் இருந்து வருவது அந்தத் தாயுள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்தியது.
குடும்பச் சுமையும் கனகத்தின் மேல் விழுந்ததால் வருமானத்தைத் தேடவேண்டிய தேவையும் அவளை அழுத்தவே, ஊரில் மா இடித்தல், கிடுகு பின்னுதல் போன்ற வேலை களையும் காலத்துக்குக் காலம் வயல்களில் நாற்று நடுதல், புல்லுப்பிடுங்குதல், அருவி வெட்டுதல் போன்றவற்றையும் செய்து வந்தாள்.
தனபாலன் பள்ளிக்கூடம் சென்ற கையோடு, இரவு உறியில் நீர் ஊற்றி வைத் திருந்த சோற்றை எடுத்து பழைய கறியுடன் குழைத்து சிறு உருண்டையாக்கிச் சாப் பிட்டாள். சோறு ஊறிய பழந்தண்ணியைக்
குடித்தாள். கறிச்சட்டியையும் பானையையும் அவசர அவசரமாகக் கழுவி முற்றத்து அட்டாளையில் காயவைத்தாள். பழைய துணியொன்றை எடுத்து தலையை மூடிக் கட்டிக்கொண்டாள். வீட்டுத் தாவாரத்தில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்துக் கொண்டாள். இயந்திர வேகத்தில் இத்தனையையும் செய்துமுடித்தபின் ஆறுமுகத்தாருடைய வயலுக்கு ஓட்டமும் நடையுமாகப் போய், அருவி வெட்டுக்காக வந்திருந்தவர்களுடன் கலந்துகொண்டாள்.
அருவி வெட்ட வந்தவர்களில் சிலர் வயல் வரம்பில் குந்தியிருந்து வெற்றிலை பாக்கை வாயில் போட்டுக் குதப்பத் தொடங்கினர். வயலில் இறங்கிவிட்டால் ஓர் இடைவேளையின்போது தான் அவர்களால் மீண்டும் புதிதாக வெற்றிலை பாக்கை வாயில் போட முடியும். இதனை அவர்கள் ஓர் உற்சாக மருந்தாகக் கருதிக்கொள்கின்றனர்.
நெற்பயிர்கள், முற்றிய நெல்மணிக் கதிர்களின் பாரத்தினைத் தாங்க முடியாமலும் மாசிமாதத்தில் மூசிப் பெய்யும் பனித் துணி களின் தாக்கத்தினாலும் தரையை நோக்கிச் சாய்ந்து காணப்பட்டன. எழுந்து வரும் சூரியக் கதிர்கள் பனித்துளிகளில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன.
வயல்காரரான சொத்தி ஆறுமுகம் அவரது வயலின் ஓர் எல்லையிலிருந்து கெந்திக் கெந்தி வேகமாக வந்துகொண்டி ருந்தார். அவரது வலது கால் சற்றுக் குட்டை யாக இருந்ததால் அவ்வாறு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்படி நடப்பதால் பெயருடன் சொத்தி என்ற அடைச் சொல்லும் சேர்ந்துவிட்டிருந்தது.
தழ் 61 / ஐப்பசி 2013

Page 38
வந்தவர், “ஏனடாப்பா பாத்துக் கொண்டு நிக்கிறியள். வெட்டத் தொடங்க வேண்டியது தானே” எனச் சத்தமிட்டார்.
"முதலாளி வரட்டுமெண்டுதான் பாத்துக் கொண்டு நிண்டனாங்கள்” எனச் சொல்லியபடி, “பொலி, பொலி” என ஒரே குரலில் வாழ்த்திக்கொண்டு வரிசையாக வயலில் கால்பதித்து அருவி வெட்டத் தொடங்கினர்.
பக்கத்துப் பக்கத்து வயல்களிலும் அருவிவெட்டு வேலை தொடங்கிவிட்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல வெட்டு வேகமும் அதிகரித்தது. சூரியனும் தனது பொற்கதிர் களால் வெப்பத்தை அதிகரிக்கத் தொடங்கினான்.
அப்போது நேரம் பதினொன்றாகி விட்டிருந்தது. யாழ்நகர் பகுதியிலிருந்து ஷெல் வீச்சுக்கான குத்தும் சத்தத்தைத் தொடர்ந்து தட்டாதெருச் சந்திப்பக்கமாக விழும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. சற்று நேரத்துக் கெல்லாம் வானில் உயரத்தில் சுற்றத் தொடங்கிய "ஆட்காட்டிகள்” என அந்நாட் களில் மக்களால் அழைக்கப்பட்ட "ஹெலி”கள் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர் களைக் கண்டுவிட்டதாலோ என்னவோ தாளப்பறந்து வந்து வயல் பகுதியை நோட்ட மிடத் தொடங்கின. -
“எல்லாரும் கையளை மேலை தூக்கிக் காட்டுங்கோ” என ஓர் அனுபவஸ்தர் சத்த மிட்டுச் சொன்னதும் எல்லோரும் அவ்வாறே கைகளை மேலே உயர்த்தினர். சிலர் நிலத்தில் விழுந்து படுத்துவிட்டனர். மூன்று, நான்கு தடவைகள் வட்டமிட்டுவிட்டு அவை தூரப் பறந்து சென்றன. இந்த ஆரவாரங்களிருந்து இவர்கள் மீளவும் ஆறுமுகத்தார் வீட்டிலிருந்து இரட்டை மாட்டு வண்டிலில் கஞ்சிப்பானை கொண்டு வரப்பட்டு இறக்கவும் சரியாக இருந்தது. கஞ்சியை வார்த்துக் குடிப்பதற்கான பாத்திரமாக பச்சைப் பனையோலையில் தயாரிக்கப்பட்ட தட்டுவங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.
“வந்ததுகள் போட்டுதுகள். இனி அதைப்பற்றி யோசியாமல் எல்லாரும் வாருங்கோ மோனை, கஞ்சியைக் குடிச்சிட்டு திரும்பத் தொடங்கலாம்” என ஆறுமுகத்தார்
குரல் வைத்தார். எல்லா வயல் சொந்தக்காரர் களும் இப்படியான பழக்கத்தைக் கொண்டிராத போதும், ஆறுமுகத்தார் மட்டும் இதனை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பணத்திமிர் இருந்தாலும் அவரிடம் சிறிது இரக்க சிந்தையும்
36/ ஜீவநதி - இதழ்

இருந்தது.
இதைத் தான் கல்லுக்குள் ஈரம் என்பார்களோ!
- வெட்டுக்காரர்கள் வயல் வரப்பில் வரிசையாக இருந்து எவ்வித ஏற்றத் தாழ்வுகளு மற்ற, தொழிலாளர் வர்க்கம் என்ற பொதுமை யுடன் இஞ்சிச் சம்பலோடு கஞ்சியை உருசித்துக் குடித்தனர்.
"தாராளமாக் குடியுங்கோ, இனி எல்லா வேலையும் முடியும்வரை இது தான் சாப்பாடு” என ஆறுமுகத்தார் சொன்னபோது,
“என்ன முதலாளி நாலு மணிக்கு கடிக்க ஏதும் இல்லையே” என வெட்டுக் காரரில் ஒருவனான முருகேசு கேட்டு வைத்தான்.
"அதைப் பிறகு பாப்பமடாப்பா, இப்ப இதைக் குடிச்சிட்டு வேலையை முடிக்கப் பாருங்கோ... நெடுகச் சாப்பாடு... சாப்பாடு...” எனப் புறுபுறுத்தவாறு ஆறுமுகத்தார் அந்த இடத்தைவிட்டு விலக முற்பட்டார். ஆனால், முருகேசனோ விடுவதாயில்லை.
"இந்த வயித்துப்பாட்டுக்குத்தானே முதலாளி மழையிலும், வெய்யிலிலும் நனைஞ்சும் காய்ஞ்சும் கஷ்டப்படுறம்...” என தமது உழைப்பின் அவசியத்தை அவன் கூறி யதைக் கேட்டும் கேட்காததுமாக ஆறுமுகத் தார் நகர்ந்தபோது, றோட்டுப் பக்கமிருந்து பெரு வரம்பில் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
"ஷெல் எங்கினேக்கையாம் விழுந்தது” என தனது ஆவலை அடக்க
முடியாமல் அவரிடம் கேட்டான் முருகேசு.
“ஐயனார் கோவில் தெற்கு வீதி வீடொண்டிலை ஒரு ஷெல் விழுந்திருக்கு. அந்த வீட்டிலை இண்டைக்குக் கலியாண மாம். மணமேடையிலை இருந்த பொம்பிளை மாப்பிளையிலை, மாப்பிளை அந்த இடத் திலையே சிதறிப் போனாராம். பொம்பிளைக் கும் படுகாயம்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டினமாம். அதோடை அங்கை நிண்ட கனபேருக்கும் காயமாம்” எனத் தான் அறிந்த
வற்றைச் சொல்லிக்கொண்டே தொடர்ந்து அவர் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார்.
கஞ்சி குடிப்பதற்காக வாயில் இருந்த வெற்றிலைக் குதப்பலை துப்பியவர்கள், திரும்பவும் வெற்றிலையை கொடுப்புக்குள்
அதக்கியபடி வயலுக்குள் இறங்கினர். சீரான வேகத்தில் வெட்டு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
6 / ஐப்பசி 2013

Page 39
ஓலைப் பெட்டிகளுடனும் குஞ்சுக் கடகங்களுடனும் மண்வெட்டிகளுடனும் நெல் சேகரிக்க வந்தவர்கள் ஆங்காங்கே வயல் வரம்புகளில் வந்தபோது, “உப்பெட்டி எடுக்கிற வரைக்கும் ஒரு பிள்ளையும் வரம்பை விட்டு வயலுக்கை இறங்கக்கூடாது. ஒரு பக்கமா இருங்கோ, எல்லாருக்கும் நெல்லுத் தருவன்” என ஆறுமுகத்தார் சொன்னதும் சிலர்
வரம்புகளில் இருந்துவிட, சிலர் அடுத்தடுத்த வயல் பக்கமாகச் சென்றுகொண்டிருந்தனர்.
அருவி வெட்டு ஒருவாறு முடிந்து சூடு அடிக்கத் தீர்மானிக்கப்பட்ட இடத்தில் படங்குகள் விரிக்கப்பட்டன. உப்பெட்டிகளைக் கொண்டுபோய் அதில் அடுக்கத் தொடங்கினர்.
வேலையினூடே கனகத்தின் கண்கள் தனபாலன் வருகிறானா என அடிக்கடி தேடிக் கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாக தனபாலன் வருவது கனகத்தின் பார்வையில் விழுந்தபோது, மனத் திருப்தியுடன் வேலையைத் தொடர்ந்தாள்.
தனபாலன் வந்ததும் வராததுமாக “இப்ப வயலுக்கை இறங்கலாம்தானே அம்மா?” எனக் கேட்டபடியே உப்பெட்டி அள்ளப்பட்ட பகுதிக்குள் இறங்கினான்.
"டேய், ஆர்ரா அது வயலுக்கை இறங்கிறது. காலை முறிச்சுப்போடுவன், வடுவா” என உரத்துச் சத்தமிட்டார் ஆறுமுகத்தார்.
“குஞ்சன் வயலுக்கை இறங்காதை அப்பு” என மகனைக் கடிந்து கொண்ட கனகம், ஆறுமுகத்தாரைப் பார்த்து, "அது என்ரை மோன் முதலாளி. தெரியாமை இறங்கி யிட்டான்” என அவரைச் சமாதானப்படுத்தினாள்.
- "உன்ரை பொடியே, எல்லாம் அள்ளி முடியும்வரை பொறு மோனை” என்றவர் அவனைக் கூப்பிட்டு “படிக்கிறியே மோனை. நீ தான் கொம்மாவுக்கு உதவியா இருக்க வேணும். பாவம், அவள் கஷ்டப்படுறாள்” என
அறிவுரையும் சொல்லி வைத்தார்.
ஒரு சில பாத்திகளிலிருந்து உப்பெட்டி கள் எடுத்து முடிந்ததும் வரம்பில் காத்திருந்த வர்கள் அந்தப் பாத்திகளில் புத்துகளைத் தமக்கென அடையாளமிட்டு வெட்டுவதிலும், விடுபட்டுப்போன நெற்கதிர்களைப் பொறுக்கு வதிலும் ஈடுபடத் தொடங்கினர். தனபாலனும்
இரண்டு பெரிய புத்துக்களைத் தனக்கென அடையாளமிட்டு ஒன்றில் குஞ்சுக்கடகத்தையும் மற்றையதில் ஓலைப் பெட்டியையும் வைத்துவிட்டு மற்றொரு புத்தை வெட்டத்
37l வீவநதி - இ

தொடங்கினான். அவனுடன் அவனது பள்ளித் தோழர்கள் இருவரும் சேர்ந்துவிட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேற்பட்ட உப்பெட்டிகள் சூட்டிக்கும் இடத்திற்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில், “இனி
அடிக்க ஆயத்தப்படுத்தலாம்” என ஆறுமுகத் தார் பச்சைக்கொடி காட்டினார். அங்கிருந்த வர்களில் மூத்தவரான சரவணையால் படங்கின் கிழக்கு மூலையில் கற்பூரம் கொழுத்தப்பட்டு தேங்காயும் உடைக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து வைக் கோலைச் சேர்த்து கயிறு போலத் திரித்தனர். அதேவேளை, நெல்லை மூட்டைகளாகக் கட்டுவதற்குச் சாக்குகளும் நெல்லைத் தூற்றுவதற்காக இரண்டு குல்லங்
களும் மாட்டு வண்டியிலிருந்து கொண்டுவரப் பட்டன. முருகேசன் முதல் உப்பெட்டியை எடுத்துக் கொடுக்க திரிக்கப்பட்ட கயிற்றினால் சுற்றி அணைத்துப் பிடித்து “பொலி... பொலி...” எனச் சொல்லி ஒருபுறமும், “பொலி..பொலி...” எனச் சொல்லி மறுபுறமுமாக இரு தடவைகள் ஓங்கி நிலத்தில் சரவணை அடித்தபோது நெல்மணிகள் கதிர்களிலிருந்து உதிர்ந்து படங்கில் சிதறிப் பறந்தன. மூன்று தடவைகள் இவ்வாறு அடித்தபின் இளைஞனான ஞான வேலிடம் கயிற்றைக் கொடுத்துவிட்டு சரவணை சூடு வைப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடலானார்.
சூடு அடிக்கும் வேலை ஒருபுறம்
தழ் 61 / ஐப்பசி 2013

Page 40
நடந்து கொண்டிருக்க புத்துவெட்டி நெல் சேகரி போரின் முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டிருந்தன. ஒரு புத்து வெட்டியபோது நிறைய நெற் கதிர்கள் தனபாலனுக்கும் நண்பர்களுக்கும் கிடைத்தது. அந்தப் புற்றின் எல்லையைத் தொட்டபோது, போக்கிடமின்றி அகிழான் பாய்ந்தோடத் தொடங்கவே, தனபாலனும் நண்பர்களுமாக துரத்திச் சென்று
அதனை அடித்துக் கொன்றனர்.
இரண்டாவது புற்று வெட்டத் தொடங்கியபோது தனபாலனின் நண்பன் தான வெட்டுவதாகவும் வெடிப்புத்து சற்று தூரத்தில் இருப்பதால் அகிழான் அதன்மூலம் வெளி யேற ஓடிவிடாமல் அந்த இடத்தைக் கவனிக்கு மாறும் தனபாலனிடம் சொன்னான்.
வெளியே தென்படும் புற்று வாய் களையே அகிழான்கள் தமது போக்குவரத்துக்
குப் பாவிக்கும். மழை நீர் புகுந்தாலோ வேறு காரணங்களினாலோ சிலவேளை அந்தப் புற்றுவாயிலைப் பாவிக்காது வேறொரு பக்க மாக புதிய வாயிலை உண்டாக்கிப் பாவிக்கத் தொடங்கும். அப்படி முன்னர் பாவித்த வாசலைக் கைவிட்டபின் அவை உலர் மணலால் அரைகுறையாக மூடப்பட்டு இருக்கும். இதனையே வெடிப்புத்து என்பர். அவசர தேவையின்போது அகிழான்கள் இந்த வெடிப்புத்து ஊடாக வெளியே தப்பிச் சென்றுவிடுவதுண்டு.
- வெட்டும்போது நெற்கதிர் சேமிப்புக் கள் தென்பட்ட போதெல்லாம் அவற்றைக் குஞ்சுக்கடகத்தில் சேர்ப்பதையும் தனபாலன் கவனித்துக்கொண்டான்.
உப்பெட்டிகள் எல்லாம் கொண்டு வந்து சேர்த்ததும் நாலரை மணியளவில் ஆறுமுகத்தார் வீட்டிலிருந்து கொண்டுவரப் பட்ட வாய்ப்பனும் தேனீரும் வெட்டுக்காரருக்கு வழங்கப்பட்டது. கனகம் தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்பன்களைக் கொண்டுவந்து மகனிடம் கொடுத்தாள். இதைக் கண்ட ஆறுமுகத்தார்,
| "உனக்குத் தந்ததை நீ மோனிட்டை குடுத்திட்டாய். இந்தா இதைத் தின்” என்று மற்றொன்றை கனகத்திடம் நீட்டினார்.
இடைநேரப் பசியாறல் முடிந்து திரும்ப வும் சூட்டிப்புத் தொடங்கி வேகமாக வேலை தொடர்ந்துகொண்டிருந்தது. மறுபக்கம் புத்து வெட்டும் நடந்துகொண்டிருந்தது.
“வெடிப்புத்துக்கு கிட்ட வந்திட்டம். இனித்தான் கவனமா இருக்கவேணும்.
38/ கீவநதி - இ

அகிழான் வெடிப்புத்தாலை தான் பாயப்பாப்பார்.” என்றான் ஒருவன்.
“இந்த அகிழானை ஓடவிடாமல் நான் கையாலை தான் பிடிக்கப்போறன்” என்ற தனபாலன், வெடிப்புத்துக்கருகில் அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் உலர் மணல் இருந்த பக்கத்தில் ஓர் அசைவு தென்பட்டது.
அகிழான் வெளியேறப்போகிறது எனத் தீர்மானித்த தனபாலன் தனது இரு கரங்களாலும் அவ்விடத்தைப் பொத்தி மூடிக்கொண்டு, “அகிழான் பிள்ளை வரப் போறார், நீ வெட்டு மச்சான்” என நண்பனிடம் கூறிக்கொண்டிருந்த போது, அவனது கைகளை தள்ளிக்கொண்டு வெளிவர முயற்சிப்பதை உணர்ந்து இன்னும் பலமாக அழுத்தி வெளியே வருவதைப் பிடிப்பதற்கு ஆயத்தமானான். ஆனால், அவன் மூடிக் கொண்டிருந்த பகுதியை விலக்கிக் கொண்டு மூர்க்கமுடன் வெளியேறிய பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது கழுத்தில் தீண்டிவிட்டு ஓடத்தொடங்கியது.
நண்பர்கள், "தனபாலனை பாம்பு கடிச்சுப்போட்டுது” எனக் கத்தத் தொடங்கியதும் பதறியடித்து ஓடிவந்த கனகம், மகனைத் தன் மடியில் கிடத்தியபடி குளறத் தொடங்கி விட்டாள். "அம்மா, அம்மா” எனத் தாயை அணைத்தபடி ஈனஸ்வரத்தில் தனபாலன் ஏதோ சொல்ல முற்பட்டான். வார்த்தைகள் தெளிவாக வெளிவரவில்லை.
| “றோட்டுக்குத் தூக்கிக்கொண்டு போய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவம்” என யாரோ சொன்னார்கள். ஆனால், தன பாலனின் வாயிலிருந்து வெண்நுரை வெளி
வரத் தொடங்கி, கண்கள் சொருகி, உடலெல் லாம் நீல நிறமாகிக் கொண்டிருந்தது.
"ஆஸ்பத்திரியைவிட கொட்டடி சித்தம்பல வாத்தியார் தான் விஷக்கடிக்குத் திறமான வைத்தியர். அவரிட்டை கொண்டு போங்கோ” என ஒருவர் தெரிவித்தார்.
- "அது பொல்லாத விஷப் பாம்பு. அதோடை கோவத்திலையும் கொத்தியிருக்கு. கொண்டுபோய் பிரயோசனமில்லை” என
முதியவர் ஒருவர் சொன்னபோது, தன பாலனின் மூச்சும் அடங்கியது.
பாம்பைத் துரத்திச் சென்றவர்கள் அதனை அடித்துத் தூக்கிவந்து போட்டனர். அதன் வெண்ணிறமான உடலின் கீழ்ப்பகுதி மேலே தெரிய பாம்பும் சலனமற்றுக் கிடந்தது.
நழ் ன/ ஐப்பசி 2013

Page 41
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் - நடாத்தும் |
இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளருக்கான
சிறுகதைப்போட்டி
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், தனது பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தும் சிறுகதைப்போட்டி. இப்போட்டி இலங்கை வாழ் எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி நடை பெறுகின்றது. போட்டிக்கான கதைகளில் தெரிவு செய்யப்படும் 3 சிறுகதைகளுக்கு பணப்பரிசுடன் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் 12 சிறுகதைகளுக்குச்சான்றிதழ்கள் வழங்கப்படும். முதலாவது பரிசு 25000/= இரண்டாம் பரிசு 15000/= மூன்றாம் பரிசு 10000/= போட்டியில் பங்குபற்றவதற்கான விதிமுறைகள் 1. இந்த போட்டியில் பங்குபற்றுபவர் இலங்கை யில் வாழ்பவராக இருக்க வேண்டும். வய தெல்லை கிடையாது. 2. இந்த போட்டிக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் சொந்த ஆக்கமாக இருப்பதுடன் இதுவரை எந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது.
3. சிறுகதைகள் ஏ4 தாள்களில் கணனியில் பதிவு செய்யப்பட்டு 5-6 பக்கங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். 4.கணனியில் பதிவு செய்து அனுப்ப முடியாதவர் களின் சிறுகதைகள் கையெழுத்துப் பிரதியாக அமையும் பட்சத்தில் அவை 8 பக்கங்களுக்குள் அடங்கலாக இருக்கலாம். 5. மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் உங்கள் சிறுகதைகள் கீழே தரப்பட்டிருக்கின்ற முகவரி ஏதாவது ஒன்றிற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும். 6. சமுதாய சீர்திருத்த கருத்துக்களுக்கும் விழிப் புணர்வுகளை ஏற் படுத்தும் வகையிலான சிறுகதைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 7. சிறுகதைகளில் மனிதநேயத்திற்கு முரணான கருத்துக்களை தவிர்த்தல் விரும்பத்தக்கது. 8. போட்டி முடிவுத்திகதி 31.12.2013. 9. பங்குபற்றுவர்களின் பெயர் முகவரி மற்றும் சுய விபரங்களை தனியாக ஒரு தாளில் பதிவு செய்ய வேண்டும். 10. பரிசுத் தொகை பணமாக அனுப்பி வைக்கப் படுவதுடன் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நற்சான்றிதழும் வழங்கப்படும். உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய
முகவரி: திரு:வ.சிவராசா
திரு.பொன்.புத்திசிகாமணி Amwildovel-18a
Mescheder str -19 47249 Duisburg
59846 Sundern Germany
Germany v.sivarajah@arcor.de
ponmani@hotmail.de
39/ ஜீவநதி - இத

அட்டைப்பட ஓவியல்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த சுந்தர லிங்கம் பிரசாந்தன் (BFA (2" Upper) , PGDE, MA, Med) ஓவியம் வரைதல் , சிற் பம் உருவாக்குதல் அட்டைப்பட வடிவமைப்பு செய்தல், புத்தக அட்டை ஓவியம் வரைதல் போன்ற கலைத்துறை வேலைகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். தற்போது “இலங்கைப் பண்பாட்டில் கட்புலக்கலைகளின் இருப்பு” பற்றிய ஆராச்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் “எழுத்தாக்க ஆரம்பநிலையில் வரைதல் கலையின் செல்வாக்கு” பற்றிய செயல்வழி ஆய்வு நடவடிக்கை யிலும் ஈடுபட்டுள்ளார். இவரது ஓவியத்தை ஜீவநதியின் அட்டைப்பட ஓவியமாக பிரசுரிப்பதை யிட்டு ஜீவந்தி மகிழ்ச்சி கொள்கிறது.
இராத்திரிகளை விரும்பாத காதலனுக்காக
ஒரு ரகசியம் காக்கும் இளைஞனுக்காக
பூக்கள் தூவிச்செல்லும் பாடகனுக்காக
புன்னகை கேட்கும் பயில்வானுக்காக
பெண்மையின்
அமுதங்கள் சிந்தச்சிந்த பொறுத்திருந்தேன்
யோகேஸ் -நெடுந்தீவு
எல்லாம் உலர்ந்தபின்னரே வந்தன வரன்கள்
தழ் / ஐப்பசி 2013

Page 42
தெணியானின்
ஆக்கங்களும் மா
மார்க்சியத்தின் நடைமுறை மற்றும் கே அறிந்தவர் தெணியான். கடந்த அரைநூற்றாண வரும் மார்க்சிய எழுகோலங்களை நிதானித்து 6 காணப்படுகின்றன. சமூக அடுக்கமைவும் அத புலக்காட்சியைக் கொள்வதற்கு தெணியான் உ நெறியே துணை நின்று வருகின்றது. அதனால் < காட்சிகளையும், உள்ளடக்கங்களையும், ஆழ் கொண்டு வர முடிந்தது.
நாவல், சிறுகதை என்ற இரு புை எழுத்தாக்கங்களிலும் தனக்குரிய தனித்துவமா நிலைகளிலே அடையாளப்படுத்த முடியும். தொடர்புகள், முற்போக்கு எழுத்தாளர்கள் அனுபவப் பகிர்வுகள், கல்விச் சமூகத்துடன் மக்களாகி நின்று இயங்கிய பட்டறிவுப் பதிவு புனைவுகளின் கட்டுமானத்து வினைப்பாடுகளா
| கரு; மலர்ச்சியை தெளிவுபடுத், விடுதலைக்க தேவரையா வளர்ந்து வந் விடுபட்டு மா! (தெணியான்
மனி களும், உரா. இருப்பிலிருந் பாட்டினை ே புனைவுக்கும் இணைப்புக்க பெறத்தொட
யாழ் டிணைந்த ஒ யடைந்து 6 மேலெழுந்த அடுக்கமைப்பு பரிமாணத்தில் 40/ ஜீவநதி - இ

- பேராசிரியர் சபா.ஜெயராசா
சர்க்சிய அழகியலும்
ாட்பாட்டு வழித்தடங்கள் பற்றிய அறிகை நிலைப்பாடு டுக்கு மேலாக உலகிலும், இலங்கையிலும் நிகழ்ந்து தாக்கும் பாங்கு அவர் பேச்சிலும் எழுத்தாக்கங்களிலும் னோடிணைந்த அவலங்களும் பற்றிய தெளிவான ள்ளிட்ட சமூக நோக்கு எழுத்தாளர்களுக்கு மார்க்சிய ஏனைய எழுத்தாளர்களது தரிசனங்களுக்கு உட்படாத Dன உசாவல்களையும் தெணியானால் வெளிக்
னவுத்தளங்களில் மட்டுமன்றி, புனைகதைசாரா ன விபரிப்புக்களைக் கொண்ட தெணியானைப் பல - மார்க்சிய ஆசான்களிடத்து அவருக்கிருந்த
மற்றும் திறனாய்வாளர்களுடன் இடம்பெற்ற ர் மேற்கொண்ட இடைவினைகள் மக்களோடு கள் என்ற பல நிலைகளின் தெறித்தல் அவரது கின்றன. ந்தியல் நிலையிலே தெணியானிடத்து ஏற்பட்ட படி
அல்லது கூர்ப்பினை பின்வரும் அளிக்கை துகின்றது. "சைவமும் காந்தியமும் தான் சமூக ான ஓரே மார்க்கம் என்று கருதிக் கொண்டிருந்த ரிச் சமூக முன்னோடிகளின் வழிகாட்டலில் த நான் அவர்களது கருத்தியல் நிலையிலிருந்து க்சியக் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தேன்” மணிவிழாமலர், 2003) த உளக்கோலங்களும் உளச்செயலமைப்புக் சிக் கொண்டிருக்கும் உணர்வுகளும், சமூக து மேலெழலை உற்றறியும் கலைச்செம்மைப் நாக்கிய பயணிப்புக்கு உறுதுணையாகின. கலைப் , கருத்தியல் நெறிப்பாட்டுக்குமிடையேயுள்ள ள் தெணியானுடைய ஆக்கங்களிலே வலிமை ப்கின. பாணத்துச் சமூக அடுக்கமைப்பும் அதனோ க்கு முறைகளும் இருபரிமாணங்களில் வளர்ச்சி ருதலினுாடே தெணியானின் ஆக்கங்கள் 7. ஒரு பரிமாணத்தில் சமூகத்தின் இறுகிய த், தளர்வது போன்ற புலக்காட்சிநிலை மறு மரபுவழியற்ற வகையிலும், மாற்று ஒழுங்குகள் ழ் எ/ ஐப்பசி 2013

Page 43
என்ற வகையிலும், சமூக அடுக்கமைப்பு, தகர்ந்து விடாது தொடர்ந்து நிலைபேறு. கொண்டு புலப்படும் வகையிலும், வெளித் தோன்றா வகையிலும் சுரண்டல் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலை - இந்த இருவகைப் பரிமாணங்களுடனும் தொடர்பு கொண்டு மேலெழுந்த காட்சிகளைத் தரிசித்த எழுத் தாளர்களுள் தெணியான் தனித்துவமானவர். அந்தத் தனித்துவம் வடமராட்சியின் வாழ்க்கைக் கோலங்களோடு இணைந்த தனித்துவமாகின்றது.
கலையாக்கங்களின் சமூகப் பயனை நிராகரிப்போர் வாழ்க்கை வழி எழும் மன வெழுச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஆழ் மன உறுத்தல் களையும் “முழுப் பொருளாகவும் முதன்மைப் பொருளாகவும்” கருதுகின்றனர். உணர்ச்சிகளை முன்னி றுத்தும் வேளை அதனை உருவாக்கும் சமூக இருப்பை மறந்து விடுகின்றனர். ஆனால் தெணியானுடைய எழுத்தாக்கங் களை ஆராயும் பொழுது அவர் உணர்ச்சிகளையும் மனவெழுச்சிகளையும் “இலக்கிய எடுமுறை களாகக்” (Literary Devices) கொள்ளும் நிதானம் காணப்படுகின்றது. அந்த நிதானம் மார்க்சிய தரிசனத்தின் வழியாக புடமிடப்படுகின்றது. "நசுக்கப்படும் பாத்திரங்களின் பங்காளன் தெணியான் ” (டானியல், 1981) என்று குறிப்பிடப்படுதல், உணர்ச்சிகளுக்கும் அப்பாற் சென்ற சமூக வகிபங்கு கொள்ளலை எடுத்துக் காட்டுகின்றது. தெணியானுடைய எழுத் தாக்கங்கள் “சமூக வினைப்பாடு” (Social Act) என்ற எண்ணக்கருவுடன் இணைந்துள்ளன. அந்த இணைப்பு அழகியற் சமநிலைக்கு ஊறு செய்யா இணைப்பாக இருத்தல் குறிப்பிடத் தக்கது. சமூக உணர்வு மேலோங்கும் வேளை சமூகத்தைப் பொறி முறையான நிழற்பட மாக்கும் செயல்முறைக்குள்ளே கொண்டு வருதல் கலைப் படைப்பாக மாட்டாது. நேரடி யான தெறிப்பும் சுலோகங்களை உட்புகுத்து தலும் என்ற தவறான அணுகுமுறைகளுக்குள் தற்செயலாகவேனும் தெணியான் சென்று விடவில்லை. புனைவுகளை நிமிர்ந்தெழச் செய்யும் கலை முனைவுத் தேவை (Artistic Necessity) அவரால் ஆழ்ந்து உணரப்பட்டுள் எமை ஆக்கங்கள் வழியே வெளிப்படுகின்றன.
சோசலிய நடப்பியற் கோட்பாடு மொழியின் கட்டற்ற பரிமாணங்களை ஏற்றுக் கொள்கின்றது. கலை வெளிப்பாட்டு வகை
41/ ஜீவநதி - இதம்

களின் பன் முகப்பாடுகளுக்கு உற்சாகமளிக் கின்றது. படைப்பு மலர்ச்சியின் உன்னதங் களுக்கு இடமளிக்கின்றது. அவ்வாறான பரிமாணங்களின் பிரக்ஞை தெணியானது நாவல், குறுநாவல், சிறுகதைகள் அனைத் திலும் வெளிப்படுகின்றது.
யாழ்ப்பாணத்து வாழ்வின், சிறப்பாக வடமராட்சி வாழ்வின் எண்ணரிய எடுத்தி யம்பல்களை தமது எழுத்தாக்கத் தடங்களில் உலாவச் செய்துள்ளார். மோதல்களும் முரண் பாடுகளும் கொண்ட வாழ்வியல் நுண ண னு ப வ ங் களும் எழுத தா க க அனுபவங் களும் அவரின் அளிக்கை முனைப்புக் குறியீடுகளை வளமாக்கியும் செறிவாக்கியுமுள்ளன.
சிறந்த படைப்புக்கள் அழகியல் வினைப்பாட்டுடன் கருத்து வினைப்பாட்டை யும் (Discourse) முன்னெடுக்கின்றன. அழகியல் வினைப்பாட்டுடன் இணைந்த கருத்தி யல் வினைப் பாடு சமூகத்திலே தனது தடத்தை ஆழப் பதித்துக் கொள் கின் றது. அத் தகைய செறிவையே மார்க்சிய அழகியல் வலியுறுத்துகின்றது. சமூக நீதி, அறவொழுக்கம், “தூய” அழகியல் என ற எண ண க கருக் களை அடி யொற் றி மேலாதிக்கம் செலுத்துவோரின் அழகியல் நோக்கு நிலைபேறு கொண்டு உள்ள நெடிய மரபுக்கு எதிரான ஆக்கங்களை முன் னெடுத்தவேளை, மேலாதிக்கமரபு களைப் பாதுகாப்போரிடத்து மட்டுமன்றி தூய அழகியல்வாதிகளாகிய நவீன எழுத்தாளர் களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. அந்த எதிர்ப்பு இன்றும் தொடர்ந்த வண்ண முள் ளது. அந்நிலையில் நிஜமான சமூக நேயம் கொண்டோர் தூய அழகியல் எதிர்க்குரலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒடுக்குமுறை தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு வெளித் தோன்றாத, தென்படாத நுண் அலகு களுடன் இணைக்கப்பட்டிருக்கும். கலை வழியான சிந்தனைத்தூண்டல் அழகியல் ஆக்கத்துக்கு விரோதமானது என்ற விபரிப்புக் குரல் புதிய புதிய வடிவங்களில் மேலெழு கின்றன.
ஒடுக்கப்படுவோரின் அழகியற் சுவை யும், சிந்தனைச் சுவையும், மனவெழுச்சிச் சுவையும் வேறு பிரிக்க முடியாதவை. ஒடுக்கு
ஓ 6 / ஐப்பசி 2013

Page 44
முறை என்பது பல நிலைகளிலே பல தளங் களிலே நிகழ்ந்தவண்ணமுள்ளது. பொருள் நிலை, பால்நிலை, சாதிய நிலை, அரசு நிலை இனத்துவநிலை என்றவாறு பலவகைப்பட்டது. தெணியானின் ஒடுக்குமுறைப் புனைவுகள் தனித்து ஒரு தளத்தில் மட்டும் நிற்கவில்லை. நுண்ணிலை ஒடுக்குமுறைகளையும் அவர் தமது ஆக்கங்களின் கருப்பொருளாக்கியமை கருத்தியலில் நிகழ்ந்த "பெயர்ச்சி” அல்ல "நீட்சி” என்றே கொள்ள வேண்டும். சாந்தன், செ.யோகநாதன், யோ.பெனடிக் பாலன் முதலிய சமகாலத்தவர்கள் சமூக ஒடுக்கு முறை தளத்திலிருந்து அரசியல் வழியான ஒடுக்குமுறைகளை ஆழ்ந்து ஊடுருவி நோக்கும் ஆக்கங்களை நீட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. சுரண்டலும், பறிப்பும், ஒடுக்குமுறையும் எவ்வடிவில் வந்தாலும் அவற்றைச் சமூக நோக்கம் கொண்ட எந்த எழுத்தாளராலும் புறக்கணித்துவிட முடியாது.
புனைகதையாக்கத்தின் அழகியற் பரிணாமம் இணக்கற் செயற்பாட்டினோடு (Improvisation) இணைந்தது. கதையாக்கமே இணக்கல் முறையாகின்றது. கதையின் நுண் அலகுகளும், விரிந்த அலகுகளும் இணக்கல் வழியாக நெட்டாங்குவழியாகவும் அகலாங்கு வழியாகவும் பின்னப்படுகின்றன. புனைகதைக் குரிய மொழிக்கட்டமைப்பும் இணக்கல் முறையோடு இணைந்தது. இதனை மேலும் விளக்குவதனால், முன்னர் கண்டறியாத அனுபவங்களை வெளியிடுவதற்கு முன்னைய மொழியின் பரிமாணம் போதாத நிலையில் இணக்கலை மேற்கொள்ளும் நிலைக்குக் கலைஞர்கள் உந்திவிடப்படுகின்றனர்.
தெணியானது எழுத்தாக்கங்களிலே பின் வரும் பரிமாண ங்கள் தெளிவாகப் புலப்படுகின்றன.
1. வடமராட்சியின் சமூக அடுக்கமை வின் வழியாக எழும் முரண் பாடுகளும் அழுத்தங்களும். - 2. சமூக அடுக்கமைப்பின் மேலுயர்ந் தோரிடத்து நிலவும் போலித்தனங்களும், அந்தஸ்தை அடையாளப்படுத்தும் உபாயங் களும், பலவீனங்களும்.
3. திக்கத்திலிருந்து மண்டான் வரையான புலத்தில் வேறு எழுத்தாளர்கள் தரிசிக்காத அல்லது வேறு கோணத்திலே தரிசித்த நுண் காட்சிகளை வெளிக் கொண்டு வந்தமை.
4. தேவரையாளிச் சமூகத்தை மார்க்சியக்
42/ கீவநதி - இத

கருத்தியலின் வழியாக மீள்வலுவூட்டலில் நம்பிக்கை கொண்டமை.
5. சமூக மாற்றத்திலே எழுத்தாக்கங் களின் வகிபாகத்தை ஏற்றுக் கொண்டமை.
6. தமது ஆக்கங்கள் வாயிலாக உருவாக்கி மேலெழச் செய்யும் மனவெழுச்சி வலுவினூடாக வாசகரை வினைப்பாட்டு நிலைக்கு உள்ளாக்க முனைதல்
7. தாம்கூறவந்தகருத்துக்களைப் பிரசாரத் திசைகளுக்குள்ளே கொண்டு செல்லாது அழகியல் நிதானத்துடன் இயக்குதல். நாவலில் இந்தப் பணியை கச்சிதமாகச் செய்யும் பணியை டானியல், கணேசலிங்கன் முதலி யோரும் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
8. சமூகஒடுக்குமுறையை ஆக்கமலர்ச்சித் துலங்கலுக்குள் கொண்டு செல்கையில் தமது கற்பித்தல் அனுபவங்களை உட்போந்தமை.
தெணியானுடைய ஆரம்ப காலத்து எழுத்தாக்கங்களிலே (முதற் சிறுகதை “பிணைப்பு”) திட்டவட்டமான கருத்திய லாக்கம் முனைப்புப் பெறவில்லை. நிருத்தன் என்ற புனை பெயரில் எழுதிய கவிதைகளிலும் அந்த முனைப்பு மேலெழவில்லை. இங்கே ஒரு முக்கியமான கருத்தைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. மார்க்சியக் கருத்தியலின் உள் வாங்கலைத் தொடர்ந்தே அவர் ஆக்கங் களின் கலைத்துவம் எழுச்சி கொள்ள லாயிற்று. கருத்தியல் அர்ப்பணிப்பு கலைத்து வத்தை ஊறுபடுத்தி விட மாட்டாது என்பதை "கானலில் மான் ”, “மரக் கொக் கு”, "கழுகுகள்”, "பொற் சிறையில் வாடும் புனிதர்கள்”, "காத்திருப்பு” முதலிய படைப்புக் கள் வெளிப்படுத்துகின்றன.
தெணியான் டானியலின் "ஆக்க நிழல்” என்ற கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்தியல் நிலையில் இருவருக்குமிடையே ஒப்புமைகள் காணப்பட்டாலும் இருவரதும் எழுநடைக்(Style) கோலங்கள் வேறுபட்டவை. டானியலிடத்து அதி தீவிரமான புலக்காட்சி யும் தெணியானிடத்து முரண்பாடுகளின் வேர் களைத் தேடும் புலக்காட்சியும் மேலோங்கி யுள்ளன. டானியல் ஒடுக்கு முறையின் வெளிப்பாடுகளை நோக்கினார். தெணியான் அவற்றின் தளங்களைத் தேடு கின்றார். கணேசலிங்கன் அவற்றின் தருக்கத்தைத் தமது படைப்பக்கள் வழியாக நோக்குகின்றார். இவற்றை அடியொற்றியே அவர் களுக்குரிய தனித்துவங்கள் மேலெழுகின்றன. தழ் எ / ஐப்பசி 2013

Page 45
பள்ளியும் வாடியும்
வம்சம் வளர அம்சமாய் வந்துதித்த எம் மகனே. தங்க மகன் தரணியில் ஒளிர மங்காமல் மிளிர சங்கையுடன் பங்கமின்றி உன்னைப் பாடசாலைக்கு அனுப்பினோம்.
மகனே, உன் அப்பன் “போடி” எனும் உசுப்புகையில் "வாடி”களில் மட்டுமே உன் நண்பன் உருத்திரனுக்கு வேலை. உருத்திரன், உன் வயதே உடையவன் எனினும் வேலைக்காரன் என்பதால்....! மகனே, நீ சென்றது பள்ளிக்கு உருத்திரன் சென்றது வாடிக்கும் வயலுக்கும்.
மகனே, என் பொன் வியர்வையில் நீ வளர்ந்தாய் உருத்திரனைக் கசக்கி வளர்த்தேன் எம் இன்பம் நீ என்று எண்ணிய வேளை உன் இன்பம் மேல் நாடு எனச் சென்று கண்ணோர நீரைத் தந்து விட்டு வெள்ளைப் பெண்ணோடு வாழ்கின்றாய். நான் கசக்கிய உருத்திரன் - எம்மோடு பிசகாமல் உள்ளான்.
மகனே நீ,
முகப்புத்தகத்தில் மூழ்கியிருக்கும் போது - எம் முகம் மறைந்த சேதி அறிவாய்.
மகனே, எங்கள் கண்மூடியதும் இறுதியாக
மண்மூட நீ வராத போதும் மகனாக, உருத்திரன் இருக்கிறான்.
- வன்னியூரான் ரமேஷ்
43/ ஜீவநதி - இ

எங்கு அநீதி நடக்குதோ அங்கு என் குரல் ஒலித்தது! எனது பார்வைக்கு தவறானது பலருக்கு நிறைவானது! கருத்து முழக்கம் என்னை பின்னோக்க வைத்தது கற்றுத்தேறிய கல்விகூட - என்னை காணாமல் செய்தது.
நேர்மை வழியை நின்று பார்த்ததால் கூர்மையுள்ளோர் குறுக்கு வழியில் கை வெளிச்சத்தில் பாதை தாண்டினர்! கற்ற அறிவு என்னோடு இருந்தது. பார்த்து பார்த்து ஏக்கம் கொண்டேன். வியர்வைசிந்தி உழைத்துக்கொண்டேன். வாழ்க்கை ஒன்று அமைந்த போதும் எந்தன் போக்கில் மாற்றம் இல்லை. எதிர்வாதம் என்னை ஆட்டியது. உறவினர் என்னை புறம்தள்ளினர். வாழ்க்கையில் அமைதி கொண்டேன் ஆமாப் போட்டேன். அனைவரையும் அரவணைத்தேன் செல்லப்பிள்ளையாய் போற்றப்படுகிறேன்! இன்றைய நாட்கள் போல் அன்று நான் இருந்தால் கிளாக்கர் வேலை கிடைத்திருக்கும் பென்சனோடு வாழ்க்கை போகும். இன்று போல் அன்று... நான் இருந்திருந்தால் நோய் நொடியும் என்னை நோக்கா மறைந்திருக்கும்!
- வதிரி.சி.ரவீந்திரன்
இன்றைய நாட்கள் போல்...!
தழ் 61/ ஐப்பசி 2013

Page 46
புதுப்புனல்
| நல்ல நாள்
ந.ஆதவன்
13 உங்க
"ஜனா, சேர் சந்திரன் மாஸ்
நான் அவர் ( இறங்குகிறேன்.
ஜனா பத்தாம் பாடசாலை, ரியூசன் இர குறிப்பிட்ட பாடங்களுக் களுக்கு ஓழுங்கு செய்
விட்டது.
“வாங்கோ சேர்
சந்திரன் மாஸ் வேற்பு இற்றைக்கு மூ6 சந்திரன் மாஸ்ரருக்கு இ ஜனா. சாயினி ஓ.எல் < பிரத்தியேக வகுப்பு எடுப் எடுத்து வைத்தேன். அ6 ஒருவராகவே நினைத்து 4 வந்து விட்டது. எனது ஒருவருக்கு சந்திரன் ம எனக்கு சந்திரன் மாஸ்ரர் விஞ்ஞானப்பட்டதாரிக பட்டப்படிப்புக்கு ஏற்ற வகுப்புக்களுக்குக் கற்பி வருகின்றோம். இன்றை உத்தியோக வேதனம் பே
சந்திரன் மாஸ் பிள்ளைகளின் கற்றலில் பிள்ளைகளின் குறைகள் அத்துடன் தன் பிள்ை வைப்பேன் என என்ம் சாயினியின் பெறுபேற்றி அவர்கள் இருவருக்கும் சாயினி ஓ.எல் என்பதை மிகுந்த அக்கறை எடுத்து சாயினி ஓ.எல் பரீட்சை அவளின் பெறுபேறு ச நம்பிக்கையை ஊட்டியது ஜனாவுக்கு கணிதம் கற்பு
“ஜனா! சேர் நிற் படிக்க ரெடி பண்ணு”
- சந்திரன் மாஸ்ர வீடும், மற்றது அவரது ம அக்கா லண்டனில் வ வகுப்பு நடைபெறுகின்றது
ஜனா வகுப்புக்கு பின்னரும் என்னுடன் க அவர் பல தரப்பட்ட 6
ந.ஆதவன் யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான மானிப்பட்டம் பெற்றவர். இவர் தற்போது கரவெட்டி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றி வருகின்றார். இவர் சிறுகதைகள், கவிதைகளை எழுதும் முயற்சிகளில்
ஈடுபட்டு வருகின்றார். இவரது சிறுகதைகள் புதிய தரிசனம், மல்லிகை
ஆகிய சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. கலாசார அலுவல்கள் அமைச்சு நடாத்திய சிறுகதைப் போட்டிகளில் கரவெட்டி
பிரதேச மட்டத்தில் பரிசுச்சான்றிதழ்களைப் பெற்றவர் என்பதோடு இவர் பிரபல எழுத்தாளர்
தெணியானின் இலக்கிய வாரிசு. இவரை ஜீவநதியில் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
4al கீவநதி - இத

வந்திட்டார்” ர் மகன் ஜனாவைக் கூப்பிடுகின்றார். பீட்டு வளவுக்குள் மோட்டார் சைக்கிளில் போய்
ஆண்டில் கல்வி கற்கும் மாணவன். தற்பொழுது ண்டிற்கும் மேலதிகமாக கணிதம், விஞ்ஞானம் போன்ற த பிரத்தியேக? தனி வகுப்புக்கள் தங்கள் பிள்ளை கின்ற ஒரு வழக்கம் நம்மவரிடையே அதிகரித்து
ரர் என்னை அன்புடன் வரவேற்கின்றார். இவ்வர ஏறு வருடங்களாக எனக்கு கிடைத்துவருகின்றது. ரண்டு பிள்ளைகள். மூத்தவள் சாயினி .இளையவன் வகுப்புக் கற்கும் போது அவளுக்கு கணிதத்திற்கு பதற்கே சந்திரன் மாஸ்ரர் வீட்டுக்குள் நான் காலடி ன்று முதல் என்னையும் அவர்கள் தங்கள் வீட்டில் என்னுடன் பழகுகிறார்கள். எனக்கும் அந்த நெருக்கம் அலுவலகத்தில் கடமையாற்றும் சக அலுவலர் எஸ்ரர் குடும்பம் நெருங்கிய உறவு. அவர் மூலமே -வீட்டுக்கு வகுப்பு எடுப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. ளாகிய அவரும் நானும் பெற்றுக் கொண்ட தொழிலை மேற்கொள்ளாவிடினும், பிரத்தியேக ப்பதனால் எமது மனக்குறையைச் சற்று தீர்த்து ய வாழ்க்கைச் செலவுக்குத் தனியே அரசாங்க ரதுமானதன்று இன்னொரு காரணம். ரர் ஆசிரியத் தொழிலில் இருந்து வருவதனால் உள்ள குறைகளை நன்கு அறிந்திருந்தார். தனது ளை எனக்குத் தெளிவாகத் தெரிவித்திருந்தார். ளகளை தான் எதிர்பார்க்கும் பெறுபேற்றை பெற 'து நம்பிக்கையும் கொண்டிருந்தார். முதலில் > மிகுந்த எதிர்பார்ப்பு மனதில் வைத்திருந்தார். நான் பகுப்பு ஒன்றாக எடுக்கும் வேளையில் மூத்தபிள்ளை
எனக்கு அடிக்கடி நினைவுபடுத்துவார். நானும் | சாயினிக்கு கற்பித்தேன். அதற்கேற்றால் போல் பில் கணிதத்தில் “ஏ” பெறுபேற்றைப் பெற்றாள். ந்திரன் மாஸ்ரருக்கு மேலும் என்மீது மிகுந்த . இப்பொழுது பத்தாம் ஆண்டு படிக்கும் மகன் த்து வருகின்றேன். கிறார்.நேரம் ஆகிறது. பெரியம்மா வீட்டைத் திறந்து
i வீட்டு வளவுக்குள் இரண்டு வீடுகள். அவரது னைவியின் அக்காவின் வீடு. அவரது மனைவியின் ப்பதால் வெறுமையாகவுள்ள அவ்வீட்டிலேயே
ஆயத்தமாகும் நேரம் வரையிலும், வகுப்பு முடிவுற்ற லந்துரையாடுவது சந்திரன் மாஸ்டரின் வழக்கம். டயங்களை என்னுடன் உரையாடுவார். அவரது
p 6 / ஐப்பசி 2013

Page 47
சந்
தெ
அ கே
அ
உரையாடல்களிலிருந்து அவர் சாஸ்திரத் தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டி ருந்ததை என்னால் உணர முடிந்தது. எதையும் நாள் பார்த்து தொடங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாயினிக்கு, முதல் நாள் வகுப்பு ஆரம்பித்தபோது இராகு காலம் தொடங்கும் முன்னர் வகுப்பை ஆரம்பித்து முடிக்குமாறு எனக்கு அன் புக் கட்டளை இட்டது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. அதோடு சதுர்த்தி, அட்டமி, நவமி போன்றவற்றை நாட்காட்டி பார்க்காது நாள், நேரம் சொல்வதில் அலாதியான அனுபவம் அவருக்கு இருந்தது. சமயம் தொடர்பான பல விடயங்
இ களையும், ஆலயங்கள் தொடர்பான சில வரலாறுகளையும் அவர் மூலமாக நான் | அறிந்து கொண்டேன்.
கு படிக்கும் அறையை ஆயத்த . மாக்கியதும் ஜனா எனது பார்வையில் விழு வண்ணம் அறை வாசலில் வந்து நிற்பது
வே வழக்கம். இன்றும் வாசலில் அவன் நிற்கின்றான்.
தெ “ ஜ னா ரெடியா?” நான
கே கேட்கிறேன்.
“ஓம் சேர்” "சரி, சேர்” என்று சந்திரன்
வகு மாஸ்ரருக்குக் கூறி விட்டு வகுப்பறைக்குச்
மும் செல்கின்றேன்.
அங்கே வகுப்பறையில் ஜனா
கன எழுந்து நிற்கின்றான்.
வகு “இருங்கோ ஜனா” என்றேன்.
எப் “இல்லை சேர்” என இழுத்த வண்ணம் அவன் நிற்கின்றான். -
நான் கதிரையில் உட்காரு கின்றேன். அதன் பிறகு அவன் அமரு
வந் கின்றான். சந்திரன் மாஸ்ரர் பிள்ளை களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை
தவ கற்றுக் கொடுத்திருக்கின்றார் என்பதைத்
இல தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.
கூட ஜனா, சாயினி போல் கெட்டித் தனம் உள்ளவன் தான். இருந்தாலும்
செ அவனிடம் சற்று அவசரக்குணம். "கணித
பிடி பாடத்திற்கு அவசரக்குணம் கூடாது” என்று அடிக்கடி அவனிடம் நான் சொல்வ துண்டு. இதனால் நல்லாகத் தெரிந்த |
அது கேள்விகளையும் அவசரத்தினால் அவன் பிழையாகச் செய்து விடுவான். நான்
மும் அவனிடம் என து தொலை பேசி பார்
போ
யும்
தில்
நன்
புள்
கெ
45/ ஜீவநதி - இ

பக்கத்தையும் கொடுத்திருந்தேன் .ஏதேனும் தேகங்கள் கேட்பதற்கும், வகுப்பு நேர மாற்றம் பற்றி ாடர்பு கொள்வதற்கும் அது தேவைப்பட்டது. அவசர னம் இருப்பினும் படிப்பில் அக்கறை கொண்ட வன் அடிக்கடி தொலைபேசியில் சந்தேகங்கள் ட்பதுண்டு. சில நாட்களில் அலுவலகத்தில் லைப்பளு காரணமாக சற்று நான் தாமதமானால் வனது வீட்டுக்கு சீ.டி.எம்.ஏ யிலிருந்து அவனது ாலைபேசி, "சேர் வகுப்புக்கு வருவீங்களோ?” என்ற
ள்வியுடன் அழைப்பு வருவதுமுண்டு.
வகுப்பு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் எது எனக்கு ரீ, பிஸ்கட் கொண்டு சந்திரன் மாஸ்டர் தப்பறைக்குள் வருவார்.அது அவரது வழமை.மாதம் டிவு நாள் என்றால் அன்றே மாதக் கொடுப்பனவை - வழங்கிவிடுவார். நாள் பார்க்கின்ற அவர் மாதக் மடசி நாள் வெள்ளிக்கிழமை என்றால் அதற்கு முதல் தப்பிலேயே கொடுப்பனவை வழங்கி விடுவார்.அவர் பொழுதும் எனக்கு எவ்வித சிரமமும் கொடுப்ப
லை.
அவருக் கும் ஜனாவின் அவசரகுணம் றாகத் தெரியும். அன்று வழமை போல் ரீ கொண்டு த அவர்,
"சேர் இந்த முறை ஜனாவின் மூன்றாம் -ணைப்பரீட்சை புள்ளிகள் எனக்குத் திருப்தி மலை. அடுத்த முறை ஓ.எல் எடுக்கிறார்.கொஞ்சம் - கவனியுங்கோ சேர். இவன் அவசரக் குணத்தாலே ளிகள் குறைய எடுக்கின்றான் என்று நீங்கள் எல்லுறது சரிதான். இனிகொஞ்சம் இவரை இறுக்கி புங்கோ! இந்தாங்கோ சேர்” என்று சொல்லி மாதக் Tடுப்பனவை வழங்கினார்.
"ஏன் சேர் , இன்னும் மாதம் முடியவில்லை துக்குள்ளே ஏன் காசுதாறியள்” என்றேன் நான்.
- "அது பரவாயில்லை சேர் ! இன்னும் மாதம் டிய ஐந்து நாள் தானே இருக்கு. நான் கலண்டர் த்தனான்.வளர்பிறை டிசம்பர் 08 இற்கு பிறகு தான்
தழ் 61 / ஐப்பசி 2013

Page 48
வருகுது. ஜனாவுக்கு பதினைந்து நாள் ஓய்வு கொடுத் திட்டு 10 ம் தேதி நல்ல நாள். மார்கழி பிறக்க முன்னம் புது ஓ.எல் வகுப்பு ஜனாவுக்கு தொடங்க வேணும் 10ம் தேதி பின்னேரம் வாங்கோ! பஞ்சாங்கத்திலேயும் பார்த்தனான் நல்ல நாள் ! கட்டாயம் அண்டைக்கே தொடங்குங்கோ சேர்” என்று சந்திரன் மாஸ்டர் சொல்லி முடித்தார்.
வகுப்பு முடித்து மோட்டார் சைக்கிளில் செல்ல நான் ஆயத்தமான போது அருகில் வந்து சந்திரன் மாஸ்ரர் “இன்னும் பதினைந்து நாள் இடைவெளி இருக்கு, வகுப்பு தொடங்கிறதுக்கு முதல் நாள், ஞாபகப்படுத்த போன் பண்ணிறேன்” என்றார். நானும் சம்மதித்து தலையாட்டி விட்டு புறப்பட்டேன்.
அவர் சொல்லி வைத்தது போல 09 ம் தேதி இரவு “நாளைக்கு நல்ல நாள். மறக்காமல் பின்னேரம் ஜனாவுக்கு வகுப்பு எடுக்க வாங்கோ” என்று போன் பண்ணினார்.
10 ம் தேதி பின்னேரம் அலுவலகத்தி லிருந்து வீட்டுக்கு வந்து பின்னர் ஜனாவுக்கு நாள் வகுப்பு எடுப்பதற்கு புறப்பட்டு சென்றேன். செல்லும் வழியில் ஜனா வீட்டு சீ.டி.எம்.ஏ போனிலிருந்து அழைப்பு வந்தது. நான் எனது தொலைபேசியை அழுத்தமுற்பட, எனது போன் சார்ஜ் குறைவாக இருந்ததால் சுவிஜ் ஓவ் ஆகி அழைப்பை ஏற்க முடியாது போனது. ஜனா தான் வழமை போல “வகுப்புக்கு வர்றீங்களோ” என கேட்க எடுத்திருப்பான் என நினைத்து வேகமாக நாள் வகுப்பு எடுப்பதற்கு சந்திரன் மாஸ்ரர் வீட்டுக்குச் சென்று மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கிறேன்.
வீட்டு வாசலில் இதுவரை நான் காணாத சிலர் நின்றிருந்தனர். அவர்கள் என்னை ஒரு மாதிரி நோக்குகிறார்கள். சிலர் வீட்டுக்குள் ளிருந்து கதிரைகளை தூக்கி வந்து முற்றத்தில் வைக்கின்றார்கள். அங்கு ஒரு நிசப்தம் நிலவு கிறது. எனக்கு எதையும் தெளிவாக உணரமுடிய வில்லை. அங்கு நின்ற, எனக்குத் தெரிந்த அடுத்த வீட்டுபெண்மணி என்னை நோக்கிஓடிவருகின்றார்.
"நீங்கள் ஜனாவின் சேரெல்லோ?” என்று பதற்றத்துடன் கேட்கின்றார்.
நான் “ஓம்” என்கின்றேன்.
"நான் தான் இப்ப உங்களுக்கு ஜனா சொல்லி போன் எடுத்தனான். உங்கடை போன் ஓவ் ஆனதாலே கதைக்க முடியாமல் போச்சு. என்னென்டால் சேர், சந்திரன் மாஸ்ரர் காட் அற்றாக்கிலே அரை மணித்தியாலத்திற்கு
46/ ஜீவநதி - இ

முன்னம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியிலே மோசம் போய்விட்டார். உங்களை வகுப்புக்கு வரவேண்டாம் என்று சொல்லத்தான் நான் போன் எடுத்தனான்” என்கிறாள்.
எனக்கு தலை சுற்றுவது போல் இருக் கிறது. நிலைதடுமாறிய நான் என்ன செய்வ தென்று தெரியாது அருகிலிருந்த கதிரையில் தொப்பென்று அதிர்ச்சியுடன் உட்கார்ந்து உறைந்து போகின்றேன். ஜனா வீட்டுக்குள் ளிருந்து வெளியே வரவில்லை. உள்ளிருந்து அவன் தேம்பி தேம்பி அழுகின்றான். அவன் முகத்தைப் பார்க்கும் திராணி எனக்கில்லை. கதிரையினுள் அசையாது கல்லாகச் சமைந்து போனேன். பூந்தோட்டத்திலிருந்து நறுமண முள்ள நல்ல மலர்களை பறிப்பது போல் ஆண்டவனும் சந்திரன் மாஸ்ரர் போன்ற நல்லவர்களை பறித்துக் கொள்வது ஏனென்று என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனது வீடு நோக்கி புறப்படும் எண்ணமின்றி உட்கார்ந் திருப்பதை அவதானித்த அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் என்னருகே வந்து “Body வீடு வர இரவு பன்னிரண்டு மணியாகும். நாளைக்கு தான் எடுப்பினம் போலிருக்கு” என்கிறார்.
இரவு எனக்கு எப்படித் தூக்கம் வரும். இதயம் வலிக்கிறது. கட்டிலில் புரண்டு புரண்டு படுக்கிறேன்.
"10ம் திகதி நல்ல நாள்! மறக்காமல் கட்டாயம் வாங்கோ” என்று அவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் செவி களுள் வலியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. •
நாமக்கல் கு.சின்னப்பபாரதி விருது பெறும் இலங்கை எழுத்தாளர்
இந்தியாவின் நாமக்கல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை அமைப்பு இந்த
ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத்தொகுதியாக ஈழத்து எழுத்தாளர் கே.ஆர்.டேவிட்டின்
"மண்ணின் முனகல்” சிறுகதைத் தொகுதியை தெரிவு செய்துள்ளது. இவரை
ஜீவநதி பாராட்டி வாழ்துகின்றது.
தழ் 67 ஐப்பசி 2013

Page 49
இ.சு.முரளிதரன்
எதிர்வினை
“ஜீவநதி” வாசகர்களில் மொழியறிவு மிக்க தமிழ இத்தகையோரிடம் எ வெளிப்படுத்தி மேதமைமி
முதலாம் வேற்றுமைக்கு உருபோ, சொல் "அடிப்படைத்தமிழ் இலக்கணம்” தெளிவுபடுத்துகி இலவசப் பாடநூலும் எம்.ஏ.நுஃமானின் கருத்தை திணைக்களத்தின் ஆசிரியர் அறிவுரைப்பு வழ சொல்லுருபுகள் உண்டெனப் (ஆனவன், என்ப சொல்லுருபு உண்டெனக் கற்பித்தலா? இல்லையெ இத்தகைய ஐயம் எழுந்திருந்தால் சீதையின் இடை கம்பன் உவமித்திருப்பான்)
தரம் 11 தமிழ்மொழியும் இலக்கணமும் இ வினை விகுதி, வேண்டுதல் பொருளில் வருவதில் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியோ வியங்கே "பொழியட்டும்” என்ற உதாரணத்தினை குறிப்பி எவ்வாறு?
-- "இலக்கணம் மொழியின் அளவையியல் 6 சார்ந்தது. எனவே அளவியற்றன்மை வாய்ந்த இ சிந்தனையின் பாற்பட்ட தாகாது” என கலாநிதி - தற்காலத் தமிழ் அகராதி பட்டினம் - பட்டணம், க கருப்பு - கறுப்பு, ஏற்கனவே - ஏற்கெனவே என் கலாசாரம் என்ற சொல் கலாச்சாரம் என்றே 6 அடிப்படையில் தவறுகளைச் சரியென ஏற்றல் தகுதி
• தரம் 11 தமிழ்மொழியும் இலக்கியமும் (இல் செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன.
“ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தே கூடுவருகுதென்று கூறுங்கள் - நா நந்திச்சீராமனுடைய நல்நகரில் )
சந்திச்சீர் ஆமாகில் தான்” என்ற வெண்பாவில் "தேரில் வெறும்” என்னும் . கனிச்சீருக்கு இடமில்லை. மூலபாடம் ஏதேனும் மாற
• காரண இடுகுறிப்பெயர் என்ற பாகுபாடு இடுகுறிப்பெயர் குறித்த எடுத்துக் காட்டுக்களோடு வில்லை. அதாவது நாற்காலிக்கு நான்கு கால்கள் ! பொருந்தியமையும்? இத்தகைய முரண்தன்மைமிகு
47l ஜீவநதி - இத

விவாதம் மேடை
அவாவும் கேள்விக்கணை
| தீவிர இலக்கியத்தேடலும், அலாதியான ராசிரியர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர். ன்னுள் நிகழ்ந்த சில நெருடல்களை
கு விடையினை அவாவி நிற்கிறேன்.
லுருபோ கிடையாதென்று எம்.ஏ.நுஃமான் எழுதிய றது. தரம் - 10 தமிழ்மொழியும் இலக்கணமும் - யே வழிமொழிகிறது. ஆனால் கல்வி வெளியீட்டு கொட்டி(தரம் - 12) முதலாம் வேற்றுமைக்கு து, முதலியன, என்பவன்) பட்டியலிடுகின்றது. பனக் கற்பித்தலா ஏற்படையது? (சோழர் காலத்தில் யை முதலாம் வேற்றுமையின் சொல்லுருபு என்றே
லெவசப்பாடநூல் “அட்டும்” என்னும் வியங்கோள் தலை என்று குறிப்பிடுகின்றது. ஆனால் தரம் 12 காள் வினை வேண்டுதல் பொருளில் அமைய டுகின்றது. இத்தகைய தவறுகளை களைவது
என்பர். அளவையியல்(-) சிந்தனையோடு லக்கணத்தை எவ்வித காரணமுமின்றி மீறுதல் க. சொக்கலிங்கம் குறிப்பிட்டுள்ளார். க்ரியாவின் த்தரிக்காய் - கத்திரிக்காய், மங்கலம் - மங்களம். னும் சொற்களில் இரு வழக்கினையும் ஏற்கிறது. கையாளப்படுகிறது. மொழியின் நெகிழ்வு என்ற யானதா? லக்கியத் தொகுப்பு) பாடநூலில் நந்திக்கலம்பகச்
பரில் வெறும் டியே கன்நுதலை
சீரில் கனிச்சீர் இடம் பெறுகிறது. வெண்பாவில் யுெள்ளதா?
முரண்பாடுடையதாகத் தோன்றுகிறது. காரண > “இடுகுறி” என்ற கருத்தியல் பொருந்தியமைய உள்ளபோது “இடுகுறி” என்ற கருத்தியல் எவ்வாறு
இலக்கணங்கள் தேவைதானா?
ஓ 61 / ஐப்பசி 2013

Page 50
அந்தனி ஜீவாவின் அை ஒரு வானம்பாடியில்
விடியற்காலையி நிலையத்தில் வந்து : எங்கள் வருகைக்காக அழைத்து சென்று ரா எங்களுக்கு ஏற்பாடு செ அழைத்துச் செல்வதாக - நாங்கள் இருவ காத்திருக்கையில் ஸ்ட சென்றார். போகும் வழி முடித்துக்கொண்டு, நூலகத்திற்கு அழைத்; உள்ள அம்மையார் எ காட்டினார். ஓரிடத்தி
வைக்கப்பட்டிருந்தன. அந்தனிஜீவா -
தோழர் ஸ்டாலின் மகாகவி பாரதியார் கா அவர் எந்த இடத்தில்
நின்றவாறு மெளனமா. எனது “பார்வையின் பதிவுகள்” நூலையும் - கெ கொடுத்துவிட்டு விடைபெற்று திரும்பினோம்..
பின்னர் பெரியார் ஈ.வே.ரா அவர்களின் நிலை ஈரோடு என்றால் பெரியார் தான் நமது நினைவிற்கு நினைவு இல்லமாக அரசு பராமரித்து வருகின்றது. பெரியார் அவர்களுக்கு ஓர் இடமுண்டு. தீண்டா அம்பேத்காரும் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். 6 தேர்தலை புறக்கணித்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை அரிய தகவல்களை அந்த நினைவாலயம் பாதுகா அறிஞர் அண்ணா பணியாற்றிய பொழுது அவர் சென்று பார்வையிட்டோம். பெரியாரின் புகைப்பு செல்வநாயகம் அவர்கள் பெரியாருடன் இருக்கு மணிநேரம் நினைவாலயத்தை பார்வையிட்டு பல த
பின்னர், ஈரோடு பாரதி புத்தாலயம் சென்று நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர் இலக்கிய சந்திப்புக்கு கூட்டிச் செல்வதாகவும் விடைபெற்றார். மாலை 5 மணியளவில் மக்கள் எழுத்தாளர் உபாலி லீலா ரட்ணாவையும் அழை; இலக்கிய அமைப்பு மாதந்தோறும் இலக்கிய ச மக்கள் சிந்தனை பேரவை மூலம் “ஊர் கூடி தேர்
48/ ஜீவநதி - இத

ர நூற்றாண்டு அனுபவங்கள்
ன் கதை
ல் நானும் நண்பர் உபாலியும் ஈரோடு ரயில் இறங்கினோம். அங்கே ஸ்டாலின் குணசேகரன் 5 காத்திருந்தார். அவர் எங்களை வாகனத்தில் ஜராஜேஸ்வரி ஹோட்டலில் இரண்டாம் மாடியில் சய்திருந்த அறையில் விட்டுட்டு பத்துமணிக்கு வந்து ககூறிவிட்டுச்சென்றார்.
ரும் காலைக் கடமைகளை முடித்துவிட்டு டாலின் குணசேகரன் வந்து எங்களை அழைத்துச் யிெல் சுவையான காலை உணவை நாங்கள் உண்டு கருங்கல் பாழையம் என்ற இடத்தில் உள்ள துச் செல்லப்பட்டோம். நூலகத்திற்கு பொறுப்பாக ங்களை அன்போடு வரவேற்று நூலகத்தை சுற்றிக் ல் முப்பதுக்கு மேற்பட்ட தமிழக சிற்றிதழ்கள்
குணசேகரன் ஓர் மண்டபத்தைக் காட்டி இங்குதான் டைசியாக உரையாற்றிய இடம் என்று காட்டினார். ல் நின்று உரையாற்றினாரோ அந்த இடத்தில் க மகாகவிக்கு அஞ்சலி செலுத்தினோம். பின்னர் எழுந்து சஞ்சிகையின் சில பிரதிகளை நூலகரிடம்
எவு இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். வருவார். பெரியார் ஈரோட்டில் வாழ்ந்த வீடு அவரது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் மைக்கு எதிராக குரல்கொடுத்தவராக பெரியாரும், பெரியாரின் தன்னலமற்ற பொது வாழ்வு; முற்றாக த விட்டு விலகி நின்றது; போன்ற பெரியாரைப்பற்றிய க்கின்றது. பெரியாரின் " விடுதலை” பத்திரிகையில் குடும்பத்துடன், அவர் தங்கியிருந்த அறையையும் படங்களை பார்வையிட்ட பொழுது எஸ்.ஜே.வி. ம் புகைப்படமும் காணப்படுகிறது. சுமார் இரண்டு கவல்களை தெரிந்து கொண்டோம். வரும் வழியில் பகல் உணவை முடித்து கொண்டு எந்தோம். மாலை வந்து மக்கள் சிந்தனைபேரவை
கூறி ஸ்டாலின் குணசேகரன் எங்களிடமிருந்து ர் சிந்தனை பேரவை கூட்டத்திற்கு என்னையும் த்துச் சென்றார். மக்கள் சிந்தனை பேரவை என்ற ந்திப்புக்களை நடத்துகின்றது. அது மாத்திரமல்ல Fழுப்போம்” என்ற உன்னத நோக்கத்தோடு 2005ம் தழ் 61 / ஐப்பசி 2013

Page 51
ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. வருடந்தோறும் டிசம்பர் 11ம் திகதி மகாகவி பாரதி விழாவை நடத்தி அறிஞர்களுக்கு பாரதி விருது வழங்கி கெளரவித்துள்ளது.
அறிஞர் பாரதி, ஆய்வாளர் பெ.சு.மணி எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், பொன்னீலன், எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான சிதம்பர ரகுநாதன், கல்வியாளர் வசந்திதேவி போன்றவர் கள் பாரதிவிருது வழங்கி கெளரவிக்கப் பட்டுள்ளனர்.
மக்கள் சிந்தனை பேரவையின் இலக்கிய சந்திப்பு ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. முதலில் சிங்கள எழுத்தாளரான உபாலி லீலாரட்ண சிங்கள் இலக்கிய வளர்ச்சி பற்றியும் தான் மொழிபெயர்த்த கு. சின்னப்பாரதி, ஜெயகாந்தன், பிரபஞ்சன் பற்றியும் சொன்னார். அவரை அடுத்து மலையக இலக்கிய வளர்ச்சி யைப்பற்றியும் ஈழத்தில் வெளிவரும் சிற்றிதழ்கள் பற்றியும் நான் உரையாற்றினேன். ஏழுமணி வரைக்கும் எமது இலக்கிய சந்திப்பு தொடர்ந்தது. இறுதியில் எங்கள் இருவருக்கும் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கினார்கள். எல்லோரிடமும் விடைபெற்று தோழர் ஸ்டாலின் குணசேகரனுடன் ஹோட்டலுக்கு சென்று எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஈரோடு ரயில் நிலையம் வந்தோம். சென்னைக்கு புறப்படும் ரயிலில் படுக்க வசதியான இருக்கை களை கொண்டவைகளை ஏற்பாடு செய்திருந் தார். அத்துடன் இரவு உணவையும். தண்ணீர் போத்தல்களையும் வாங்கித் தந்து ரயில் புறப்படும் போது எங்களிடமிருந்து ஸ்டாலின் குண சேகரும் இலக்கிய நண் பர் களும் விடைபெற்றனர்.
அந்த இனிய இலக்கிய சந்திப்பு மறக்க முடியாத ஓர் நிகழ்வாகும். விடியற்காலை சென்னை வந்து சேர்ந்தோம். சென்னையில் மறு நாள் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் அரசு அவர்களை சந்தித்து திரும்பிய பொழுது எனக்காக ஒருவர் காத்திருந்தார். அவர் வேறுயாருமல்ல எனக்கு நன்கு அறிமுகமான கிரிக் கெட் வர்ணணை யாளரான நடிகர் எஸ்.எம்.ஏ.ஜபார். அவரோடு பழைய நினைவு களை இரைமீட்டி உரையாடியதன் பின்னர் விடை பெற்றார். மறுநாள் காலை நானும் நண்பர் உபாலியும் கொழும்பு வந்து சேர்ந்தோம்.
கடந்த ஆண்டும் நாமக்கல் சென்று
49/ ஜீவநதி - இ

கு.சின்னப்பாரதி அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்ட பின்னர் கேரளாவில் சங்கரர் பல்கலைக்கழகத்தில் புலம்பெயர் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள லண் டனில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் உதயணன், கவிஞர் அகளங்கன், ஓ.கே. குணநாதன், உபாலி லீலாரட்ண, நான் உட்பட, கேரளாவில் காலடி என்ற இடத்தில் அமைந்துள்ள சங்கரர் பல்கலைக்கழக ஆய்வக விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். இரவு டென்மார்க் ஜீவகுமாரன் அவரது துணைவியார் திருமதி கலாநிதி அவரது இரண்டு பெண் பிள்ளை ஆகியோர் வந்திருந்தனர். இதற்காக ஏற்பாடுகளை சங்கரர் பல்கலைக்கழகத்தில் மலையாள பேராசிரியராக கடமையாற்றும் பரமேஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார். இவரது சகோதரர்தான் டில்லியில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றும் பேராசிரியர் பாலசுப்பிரமணியம்.
பேராசிரியர் பரமேஸ்வரன் வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு சங்கரர் பல்கலைக் கழகத்திற்கு 9.45க்கு வந்து சேர்ந்தோம். பல்கலைக்கழக வளாகத்தில் கனகதாரா கேட்போர் கூடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டோம். கருத்தரங்கின் போது இலங்கை எழுத்தாளர்களின் நான்கு நூல்கள் மலையாள மொழியில் வெளியிடப்பட உள்ளன என்ற தகவலை நண்பர் உதயணன் சொன்னார்.
சங்கரர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பிரசாந்தகுமார் அனை வரையும் வரவேற்று தலைமை உரை நிகழ்த் தினார். திரைப்பட இயக்குனரான கே.மணிப் பால் டென்மார்க் ஜீவகுமாரனின் “சங்கானை சண்டியன்”, வவுனியூர் உதயனின் “பனிநிலவு” உபாலி லீலா ரட்ணாவின் "விடைபெறும் வசந்தம்” திருமதி கலாநிதியின் "இப்படிக்கு அன்புள்ள அம்மா” ஆகிய நான்கு நூல்களின் மலையாள மொழிபெயர்ப்பை வெளியிட்டார். இந்த நான்கு நூல்களையும் பேராசிரியர் பத்ம நாதன் மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார்.
நூல்களை வெளியிட்ட எழுத்தாளரும் திரைப்பட இயக்குனரான கே. மணிப்பால் பேசும் போது “விடை பெறும் வசந்தம்”, “பனிநிலவு” நாவல்களை வாசித்த பொழுது அதனை திரைப் படமாக தயாரிக்கலாம் என ஆசைப்படுகிறேன் என்றார்.
நூல் அறிமுக விழாவுக்கு பின்னர் இரண்டா
தழ் 67 ஐப்பசி 2013

Page 52
வது நிகழ்வாக “புலம் பெயர் குரல்” என்ற தலைப் பில் கருத்தரங்கு பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இடம்பெற்றது. நூலாசிரியர் நால் வரும் தங்கள் அனுபவங் களையும் தங்களின் படைப்புக்களையும் பற்றி கருத்து தெரிவித்தனர். இறுதியில் எனது உரை இடம்பெற்றது. “இந்தியர்கள் இங்கு புலம் பெயர்ந்து வந்து அவர்கள் வாழ்வியல், அவர் களின் படைப்புக்கள் இலங்கை தமிழ் இலக்கியத் தில் மலையக இலக்கியமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளதாக” எடுத்துச் சொன்னேன். எனது உரையை பேராசிரியர் பரமேஸ் வர ன
மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.
இந்த கருத்தரங்கில் பேராசிரியர்கள். விரிவுரையாளர்கள், நூற்றுக்கணக்கான பட்ட தாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பகல் உணவுக்கு பின்னர் அனைவருடன் கலந்து உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. மாலை : மணிக்கு கருத்தரங்கு நிறைவு பெற்றது. எல்லோரிடமும் விடை பெற்று அறைக்கு திரும்பி பின்னர் நகருக்கு சென்று எட்டுமணிவரை சுற்றி பார்த்துவிட்டு கேரளாவில் சுவையான அசைவ உணவுகளை சுவைப்பதற்கு றோயல் உணவு விடுதிக்குச் சென்றோம். சுவையான மீன், இறால், உணவு. இரவு பத்து மணிக்கு அறைக்குத் திரும்பினோம். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு சுற்றுலா பயணிகளை கவரும் படகு வீட்டிற்கு பயணமானோம். ஏற்கனவே எங்களுக்காக இரண்டு படகு வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தன. ஒரு நாள் முழுவதும் படகு வீட்டு பயணம். ஒரு படகு வீட்டில் ஜீவகுமார் தம்பதியினர் இரண்டு மகள்கள், பேராசிரியர் பத்மநாதன் தம்பதியினர், பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மற்ற படகில் வவுனியூர் உதயணன், அகளங்கன், குணநாதன், உபாலி, நான் உட்பட
ஜீவநதி ச
தனிபிரதி - 80/= ஆண்டுச்சந்தா
மணிே அல்வாய் தபால் நிலை அனுப்பி வைக்கவும். அனு K.Bharaneetharan, Kalaiał
வங்கி மூலம் சந்தா K.Bharaneetharan Comme
A/C No.- 810802
50/ ஜீவநதி - இ

ஜவர். இந்த படகு வீட்டைப்பற்றி சிறிது சொல்ல வேண்டும். படகு வீட்டில் இரண்டு குளிர் ஊட்டப் பட்ட அறைகள், இரண்டு அல்லது மூன்று பேர் தங்கலாம். விருந்தினர் மாளிகை போல படகு அமைக்கப்பட்டிருந்தது. 24 மணிநேரம் படகில் உல்லாசமாக இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. படகில் பகல் சுவையான விருந்து அதன் பின்னர் ஏரியில் படகு ஒரு சுற்று சுற்றி வந்து ஓரிடத்தில் நிற்கிறது. படகில் இருந்து இறங்கி மீன் விற்கும் சந்தைக்குப் போய் வந்தோம். சிங்கி இறால்கள் எங்களை பார்த்து சிரித்தன. கொழும்பில் இவ்வித ஒரு சிங்கி இறால் ஆயிரம் ரூபாய். ஆனால் பன்னிரண்டு சிங்கி இறால்களை இந்திய பணத்தில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினோம். அதனை கொண்டு வந்து இரவு உணவுக்காக அதனை தயாரிக்கும் படி கூறிவிட்டு அருகிலிருந்த ஆயுர்வேத நிலையத்தில் தலையையும் உடலையும் மசாஜ் செய்து கொண்டோம். மலையாள முறைப்படி மருந்து எண்ணை தடவி உடலை அழகாக மசாஜ் படுத்தினார். பின்னர் திரும்பிவந்து, படகில் அருகில் உள்ள ரம்மியமான இடங்களைப் பார்த்து விட்டு இரவு சுவையான இறால் பொரியலை, பியருடன் உண்டோம்.
- காலை 5 மணியளவில் எழுந்து சுவை யான தேநீர் அருந்தி கொழும்பு திரும்புவதற்கு கொச்சின் விமான நிலையம் வந்தோம். பசுமை நிறைந்த பார்க்கும் இடம் எல்லாம் சித்திரச் சோலைகளாக காட்சியளிக்கும் கேரளாவிற்கு மீண்டும் ஒருமுறை வர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்ரீலங்கா விமானத்தின் மூலம் கொழும்பு திரும்பினோம். நெஞ்சில் அந்த இனிமையான நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டோம்.
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)
ந்தா விபரம் - 1200/= வெளிநாடு - $ 50U.S யோடரை
யத்தில் மாற்றக்கூடியதாக ப்ப வேண்டிய பெயர்/முகவரி 1am , Alvai North west, Alvai.
செலுத்த விரும்புவோர் rcial Bank – Nelliady Branch
1808 CCEYLKLY
கதழ் 61 / ஐப்பசி 2013

Page 53
-பேசும் இதயங்கள் -
1) ஜீவநதி ஆவணி இதழில் வெளியாகிய
2) திரு.லெ.முருகபூபதி அவர்களின் முற்போக்கு
"இலங் எழுத்தாளர் பற்றிய கட்டுரை மிகவிரிவான ஒரு -
நடந்த செய்தியை எமக்குத் தந்தது. அதேவேளை,
பார்க்க ஊரை, இனங்களை, உலகை வழிநடத்தப் புறப்
களும்” பட்ட இந்த எழுத்தாளர்கள் அப்பொழுதும்,
கட்டுன இப்பொழுதும், எப்பொழுதும் முரண்பட்டு முட்டி
அஸீல மோதிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்
தொட! களா? ஒருவரை ஒருவர் வசைபாடுவதும், சேரி
பாடுக வார்த்தைகளால் திட்டுவதும் தான் இவர்களின்
அவ்வ எழுத்தூழியத்தின் பின்னணியா? முரண்பாடு
இக்குற இன்றி வளர்ச்சியில்லை. ஆனாலும் இவர்
1. அ.! களுடைய முரண்பாடுகளோ வளர்ச்சி விருட்சத்
யாற்ற தின் வேர்களுக்கு விஷமல்லவா பாய்ச்சுகின்றன.
2. அர அடுத்து, திரு.ச.முருகானந்தன் அவர்
சம்ஸ், களின் “விழுதுகளைத் தேடும் விருட்சம்”,
ஆகிபே சிற்றிதழ்களை நடத்துபவர்களை மட்டுமல்ல,
நூல் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் இலக்கியப்
எழுத்த படைப்புகளையும் சிந்திக்க வைக்கிறது.
"நூல் பொதுவாக இலாபந்தரும் தொழில் (அரசியல்
வெளிய போன்றவைகளில் வாரிசுகள் வாஞ்சையுறுவது
3. கா. போல் அல்லாது இலக்கியத்துறையில் “ஏனடா
உரை இந்தத் தொல்லை” என விழுதுகளே தாமாக்
மூவரு. ஒதுங்கிக் கொள்கின்றனர் அதுவே மல்லிகைக்கு
எழுதிய நடந்தேறியுள் ளது என எண்ணுகிறேன் .
4. நூல் ஆனாலும் ஜீவநதிக்கோ, ஞானத்துக்கோ அந்த
எதிர்வி நிலை எழுவதற்குச் சாத்தியமில்லை. அவ்விதழ்
அம்சம் களின் தூரநோக்குச் செயற்பாடுகள் அதனை
தமிழும் இப்பொழுதே கட்டியம் கூறுகின்றன. -
விரைவ மேலும், இ.சு.முரளிதரனின் வாலி
புதுக்ே பற்றிய மதிப்பீடு யதார்த்தமாக அமைந்திருந்தது.
இந்திய ஆகா ஓகோ என கவிஞரை புகழ்ந்து விடாமல்,
'சங்கை உண்மைத் தன்மையை நக்கீரத் தனமாய் சுட்டிக்
மேலும் காட்டியிருப்பது அருமையிலும் அருமை. திரு.முரளிதரனுக்கு எனது பாராட்டுக்கள்.
தொன் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்களின்
முப்பத் நேர்காணல் அவர் பற்றிய பல தகவல்களை
எழுதப் அறியக்கூடியதாக அமைந்திருந்தது.
முஸ்லி மொத்தத்தில் 59வது இதழில் இடம்
பற்றி வ பெற்றுள்ள சிறுகதை, கவிதை, ஏனைய
அறிஞர் விடங்களும் குறிப்பிடக் கூடியனவாய் அமைந்
பாங்கி திருந்தன.
வர்த்த - ஷெல்லிதாசன்
பட்டிரு! (திருகோணமலை)
ஒருவர்
இl வீவநதி - இதழ் 65 / ஐப்

ஜூவந்தி ஆவணி 2013 இதழில் ப்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கெளரவிப்பும் - பாராட்டு விழா திரும்பிப் கிறேன். சில நினைவுகளும் சிந்தனை * என்ற தலைப்பில் முருகபூபதி எழுதிய ஓரயில் எச்.எம்.பி.முஹிதீனின் "அறிஞர் ல்... சில நினைவுகள்” என்ற நூல் ர்பாக எழுதியதில் சில தகவல்கள் குறை களுடன் காணப் படுகின் றன. அது 7றே தொடரப்படாமல் திருத்தி வாசிக்க திப்பை எழுதுகிறேன்.
ந்த நுாலுக்கு எவரும் எதிர் வினை வில்லை. ந்நூலுக்கு கா.சிவத்தம்பி, எம்.எச்.எம்.
எம்.எஸ்.எம். இக்பால், ஏ.இக்கபால் யார் வெவ்வேறு பத்திரிகைகளில் எழுதிய மதிப்புரைகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் 5ாளர் மக்லிஸினால் இன்னொரு நூலாக விமர்சனம்” என்ற பெயரில் தொகுத்து பிடப்பட்டது.(சபீனா பதிப்பகம்: 1975)
சிவத்தம்பி முன்னுரையோ வேறெந்த யோ அதில் எழுதவில்லை. ஏனைய ம் இணைந்து தொகுப்புரையொன்று புள்ளனர். 5 விமர்சனம் என்ற அந்த நூலே கடும் னைக்கு உள்ளாகியது. அதில் ஓர் மாக எஸ்.பொன்னுத்துரை "இஸ்லாமும் B” என்ற நூலை எழுதினார். அதனை காகவும் விறுவிறுப்பாகவும் எழுதுவதற்கு, காட்டையில் நிலை கொண் டிருந்த | வர்த்தகர்கள் எஸ்.பொவிற்கு சகல களையும் செய்தனர்.
"நூல் விமர்சனம்” என்ற இருபத் பது பக்க உள்ளீடு கொண்ட நூலுக்கு தொன்பது பக்க தொகுப்புரை யொன்று பட்டிருந்தது. அதில் சில இந்திய ம் அறிஞர்களின் இஸ்லாமிய நூல்கள் மெர்சனமும் அடங்கியிருந்தது! “இந்திய ஈகளை விமர்சிக்க இவர்கள் யார்?” என்ற ல் கொதித்துக் கொண் டிருந்த மேற்படி கர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப் ந்த தமிழ்... முஸ்லிம் எழுத்தாளர்களில் ான எஸ்.பொ.வை சந்தித்தனர்.
பசி 2013

Page 54
அவர்களிடையே காதல் மலர்ந்தது கனிந்து பிறந்தது தான் “இஸ்லாமும் என்ற நூல்.
- திக்குவல்லை கம் பண்டாரகம
3)
ஜீவநதி 6 ஆவது ஆண்டுமலர் : தயாரிக்கப் பட்டு பதிப் பிக்கப் பட்டு இலங்கையில் ஒரு சில சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவது மகிழ்ச்சி நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது. ஜீ. சிறப்பான பின்னணி உண்டு. ஜீவ பதிப்பாசிரியர் கலாநிதி த.கலாமணி,
ஆசிரியர்கள் வெ.துஷ்யந்தன், ப. வர்த்தினி, ஆலோசகர்கள் நாடறிந்த பன. தெணியான், கி.நடராஜா ஆகியோ பெயர்கள் சஞ்சிகை வரலாற்றில் செய்யப்படும். ஆசிரியர் பரணீதரனின் - பான உழைப்பு, மூத்த எழுத்தாளர்களை பாராட்டுக்குரியது.
மலரில் சிறுகதைகள், கவி கட்டுரைகள், நூல்விமர்சனங்கள், குறு நேர்காணல் என பல விடயங்கள் பெற்றுள்ளன. ஆனால் என்னை மிகவு ஷித்தது "அலை” யேசுராசாவின் நேர்
இலங்கை இலக்கியப்பேரவை சிறந்த
நூல்களில் விருது பெறும்
ஆய்வு - “பருத்தித்துறையூராம்” - பா.இரகுவரன் நாவல் - “உப்புக்காற்று” - கலையார்வன் சிறுகதை - "தெணியானின் ஜீவந்திச் சிறுகதை கவிதை - “குறியிடல்” - தில்லைநாதன் பவித்தி சிறுவர் இலக்கியம் - “செல்லமே” - எம்.ரீ.சஜாத் பல்துறை - “பொருள் வெளி” - லறீனா அப்துல் அறிவியல் - “ஓர் ஈரநெஞ்சனின் உளவியல் உலா சமயம் - “யாழ்மண்ணில் சைவமும் தமிழும் வள் நாடகம் - “முத்துக்குமாரன் நாடங்கள்” - எஸ்.மு மொழியெபர்ப்பு - “சுடுமணல்” - திக்குவல்லைக்கட
ஆய்வு - 1. "அல்குர் ஆன் ஓர் ஆய்வு கூடம்” -( நாவல் - “மாமன்னன் சங்கிலியன் ” - செங்கை, சிறுகதை - 1. “நிமிர்வு” - மு.அநாதரட்சகன் 2.” கவிதை - 1. “நீயுருட்டும் சொற்கள்” - நா.மயூரல் பல்துறை - 1. “பூத்திடும் பனந்தோப்பு” - வே.தபே அறிவியல் - 1. "காசநோய்” -டொக்டர் சி.யமுன சமயம் - 1. “பெரியபுராண சூசனத்தில் சைவசித்தார் மொழிபெயர்ப்பு - "எங்கள் கிராமம்” - இரா.சடகோ
52/ லீவா

து. அது அவர் நடத்திய அலை, கவிதை, தெரிதல் தமிழும்”
மூன்று சஞ்சிகைகளும் இலக்கிய வளர்ச்சிக்கு
பெரும் பங்களிப்பு செய்துள்ளது என்பது மால்
யதார்த்த பூர்வமான உண்மையாகும். 35 இதழ்கள் வரை வெளி வந்த "அலை” என்றும்
பேசப்படும். “கவிதை” இரு மாத இதழ் இளைய சிறப்பாக
தலைமுறை கவிஞர்களுக்கு உந்து சக்தியாக ள்ெ ளது.
இருந்துள்ளது. அதே போல "தெரிதல்” களாவது
எட்டுப்பக்கங்களில் காத்திரமான கட்டுரைகளை யாகவும்,
தந்துள்ளது. அது தொடர்ந்து வந்திருந்தால் வந்திக்கு
இலக்கிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக நதியின்
அமைந்திருக்கும். எழுத்தாளர் யேசுராசா துணை
வெறும் சஞ்சிகையாளர் மட்டுமல்ல. ஆக்க விஷ்ணு
இலக்கிய படைப் பாளி. அவரது பத்தி ஓடப்பாளி
எழுத்துக்கள் சிறப்பானவை. நல்ல சினிமாவை சர்களின்
பார்த்து ரசித்து அதனை மற்றவர்களும் பார்க்க 5 பதிவு
வேண்டும் என்று செயற்பட்டவர். சுறுசுறுப்
ப யாழில் நடைபெற்ற “மானுடத்தில்” மதிப்பது
ஒன்று கூடலின் போது அவரை சந்தித்து
உரையாடியது என் நெஞ்சில் பசுமையாக தைகள்,
உள்ளது. அவருடைய இலக்கிய செயற்பாடு பங்கதை,
களை கலந்த சுய வரலாற்றை எழுதும்படி கேட்டு - இடம்
பிரசுரிக்க வேண்டும். ம் ஆகர்
- அந்தனி ஜீவா காணல்.
கொழும்பு
தது என தெரிவு செய்த 2012ம் ஆண்டு வெளிவந்த தமிழ் ம் நூல்களும், சான்றிதழ் பெறும் நூல்களும்
விருது பெறுபவை
கள்” - தெணியான் ரென்
ஹக் -” - புண்ணியாமீன் அர்த்த சான்றோர்கள்” - மு.சிவலிங்கம் மத்துக்குமாரன் மால்
சான்றிதழ் பெறுபவை மெளலவி காத்தான்குடி பௌஸ் 2. “சம்பூர்” - கோ.திரவியராசா
ஆழியான் முடிவில் தொடங்கும் கதைகள்” - கெக்கிராவ சஹானா நபன் 2. “பாயிஸா அலி கவிதைகள்” - எஸ் பாயிஸா அலி ந்திரன் 2.”பகிர்வு” - சீ.உதயகுமார் Tனந்தா 2. “மனிதவள முகாமைத்துவம்” -ந. கெங்காதரன் ந்தம்” -கு.றஜீபன் 2. “சைவநற்சிந்தனைக் களஞ்சியம்” - கு.சோமசுந்தரம்
பன்
நதி - இதழ் 61 / ஐப்பசி 2013

Page 55


Page 56
ஜீவநதி ெ
அமோபில், 2லாம்
நலிவு
நினைவு
த.கலாமண 1
சிலந்தி மாரிய்டு,
விபரநரகை
இரோ
- இவIெL) பி
- த.கலivணி
வநதி வெளியிடு
இச் சஞ்சிகை அல்வாய் கலையகம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி!

வளியீடுகள்
வரி453 பநல்லது வேண்டும்
புதிய கண்ணோட்டங்களும்
புதிய அர்த்தங்களும்
தகலாமணி
கீவநதி வெளியீடு
மாற்றம் காணும் கண்விவாகுடன் இணைதல்
கலாநிதி த.கலாமணி
சிவந்தி வெளியீடு
தத் தேவ{¢ யுத்தம்
ஆகவே என்னை நீங்கள் |
கொலை குற்றவாம்.
இ 3 3 3 3 3 3 2
காமணி
தொடர்புகளுக்கு : க.பரணீதரன்
0775991949
5. கலாமணி அவர்களால் மதி கலர்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு
வெளியிபர்பம்